கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பார்வையின் பதிவுகள்

Page 1


Page 2

பார்வையின் பதிவுகள்
PARVAIEN PATHIVUGAL

Page 3
11.
12.
13.
4.
15.
16.
அந்தனி ஜீவாவின்
நூல் வடிவில் வந்த ஆக்கங்கள்
ஈழத்தில் தமிழ் நாடகங்கள் அன்னை இந்திரா
காந்திநாடேசையர் சுவாமி விபுலானந்தர் The Hill Country. In Sri Lanka Tamil Literature மலையகமும் இலக்கியமும் LD6D6 ou85 LDIT600fissilies6ff இவர்கள் வித்தியாசமானவர்கள் அக்கினிப்பூக்கள் இசாஹித்ய விருது பெற்ற நாடக நூல் சி.வி சில சிந்தனைகள் மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு மலையக கவிதை வளர்ச்சி திருந்திய அசோகசன் (சிறுவர் நாவலி நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் மலையக தொழிற்சங்க வரலாறு சிறகு விரிந்த காலம் அ.ந.க. ஒரு சகாப்தம்
(198) (1985) (1990) (1992) (1995) (1995) (1999) (1999) (1999)
(2OO)
(2OO2) (2003) (2OO3) (2004) (2OO5) (2OO7) (2009)
 

பார்வையின் பதிவுகள்
PARVAIEN PATHIVUGAL
அந்தனி ஜீவா Anthony Jeewa
எஸ். கொடகே சகோதரர்கள் அரச விருது பெற்ற வெளியீட்டாளர்கள் 675, பி. டி எஸ் குலரத்ன மாவத, கொழும்பு 10.

Page 4
பார்வையின் பதிவுகள்
C) அந்தணி வீவா முதற் பதிப்பு
பக்கங்கள் அட்டைப்பட வடிவமைப்பு கணினி வடிவமைப்பு
தொலைபேசி அச்சகம்
66uoຕົuff@
PARWAIEN PATHIVUGAL
(C) Anthony Jeewa
ISBN
First Edition
Pages
Cover Designing
Type setting
Published by .
Printed by
13402/1609/350
: 65F 6LL5ur 2010 : 128
கே.எஸ். அனுர்ஜன்
டிசைன் லெப், 190, ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தை,
கொழும்பு-13.
: O114 575 777 சத்துர அச்சகம்
69, குமாரதாஸ் பிளேஸ், வெல்லம்பிட்டிய,
எஸ். கொடகே சகோதரர்கள்
675, பீ.டி.எஸ். குலரத்ன மாவத்தை, கொழும்பு - 10.
: 978-955-30-2814-3
: September 2010
: 128
: K.S. Anurjan
Design Lab No. 190, George R. De Silva Mawatha, Colomb0-13, Tel: 011.4575777
: S. Godage & Brothers
No. 675, Pde S. Kularatne Mawatha, Colombo 10, Sri Lanka.
: Chathura Printers
No 69, Kumaradasa Place, Wellampitiya, Sri Lanka.
 

தமிழ் இலக்கிய உலகில் இலக்கிய "சாம்ராட்” ஆக திகழ்ந்த பிரேமிள் என்ற
தருமுசிவராமலிங்கத்துக்கு
g-LDfTIL600TLib.....

Page 5
ത്ത
 
 
 

முன்னுரை
தமிழ் இலக்கிய துறைக்கு ஒரு சிறந்த ஆவணம் எழுத்தாளர் அந்தனிஜிவா ஞாயிறு தினக் குரலில் தொடர்ச்சியாக எழுதிவரும் "பார்வையின் பதிவுகள்” என்ற பத் தியரில் வெளிவந் திருக்கும் கட்டுரைகளில் தெரிந்தெடுக் கப்பட்டவை தொகுக் கப்பட்டு நூலாக வெளியிடப்படுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். இதன் மூலமாக ஈழத்து தமிழ் இலக்கியத் துறைக்கு மற்றுமொரு சிறந்த ஆவணம் கிடைத்துள்ளதென நிச்சயமாக கூறலாம்.
பார்வையின் பதிவுகள் என்ற தன்னுடைய பத்தியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஞாயிறு தினக்குரலில் ஆரம்பித்த அந்தனிஜீவா அதனைத் தொடர்ந்தும் வாசகர்களின் வரவேற்பைப் பெறத் தக்க வகையில் எழுதிவருகிறார். இலக்கியத்துறைச் சார்ந்த பல விடயங்கள் ஞாயிறுத் தினக்குரலில் வெளிவருகின்ற போதிலும் அதில் இருந்திருக்கக் கூடிய ஒரு முக்கியமான ஒரு வெற்றிடத்தை நிரப்புவதாகவே அந்தனிஜீவாவின் இந்தப் பத்தி எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. அச்சு ஊடகத்தை பொறுத்தவரையில் வாசகர்களை கவரக்கூடிய ஒன்றாக இந்த பத்தி எழுத்துக்கள் (ஊழடரஅ றுசவைெைப) அமைந்திருக்கின்ற போதிலும், தமிழ் தேசிய பத்திரிகையில் அவ்வாறான இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அல்லது இல்லையென்றும் கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால், ஒரு சில தமிழ் எழுத்தாளர்களே இலக்கியத்துறை சார்ந்த பத்தி எழுத்துக்களில் தம் பெயரை பதித்துள்ளார்கள்.
அந்த வகையில் குறிப்பிடக்கூடிய ஒருவராக அந்தனிஜீவா உள்ளார். இதற்கு அவரது பார்வையின் பதிவுகள் என்ற இந்தப் பத்தி எழுத்துக்களே உதாரணமாக உள்ளது. இலக்கியத்துறையுடன் சம்பந்தப்பட்ட பல விடயங்களையிட்டு தன்னுடைய இந்தப் பகுதியில் அந்தனிஜீவா ஆராய்ந்துள்ளார். மற்றைய வழமையான கட்டுரைகளில் சொல்ல முடியாத சில விடயங்களைச் சொல்வதற்கு இதனை ஒரு களமாக அந்தனிஜீவா பயன்படுத்தியுள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார் என்றும் சொல்லலாம். அந்தனிஜீவா நாடறிந்த ஒரு எழுத்தாளர் என்பதற்கு அப்பால், இலங்கை, இந்திய எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம், சமூகம்

Page 6
சார்ந்த அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிவருபவள். இலக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடைப்பெற்றாலும் அதில் கலந்து கொள்ளத் தவறாதவர். இந்தியாவில் நடைபெறும் முக்கிய இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமிழ் எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுபவர்.
இதன் மூலம் கிடைத்துள்ள தொடர்புகளும் அவரது தேடலும் பரந்து பட்டதாக இருப்பதுடன் அவரது பத்தி எழுத்துக்களிலும் அவை பிரதிப்பளிப்பதைக் காணலாம். ஒரு பத்தி எழுத்தாளர்க்கு அல்லது ஒரு ஊடகவியலாளர்க்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பண்பு பரந்து பட்ட தொடர்புகளும் அதன் மூலமாக கிடைக்கக் கூடிய தகவல்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதும்தான்.
அந்த வகையில் அந் தனிஜிவாவும் பரந்துபட்ட தொடர்புகளைக் கொண்டவராக இருப்பதுடன் அவற்றின் மூலமாக கிடைக்கக்கூடிய தகவல்களை தன்னுடைய பத்தியில் வாசகர்களுக்கு பயனுள்ள வகையில் சுவையாகதருகின்றார். இதன் மூலம் ஆரோக் கரியமான விசயங்கள் தமிழ்வாசகர்களுக்கு கிடைக்கின்றது.
இந்த நூலில் ஈழத்து எழுத்தாளர் பலரைப் பற்றியும் அவர் தந்திருக்கும் தகவல்கள் ஆவணமாகப் பேணி பாதுககாக்கப்பட வேண்டியவை. குறிப்பாக பிரேமிள் என்ற தருமுசிவராமு பற்றிய அவரது குறிப்புகள் ஈழத்து வாசகர்கள் பலரும் அறிந்திருக்காத ஆனால் அறிந்திருக்கவேண்டிய பல புதிய தகவல்களை தருவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுப்போலவே அவரது ஏனைய கட்டுரைகளும் ஆரோக்கியமான தகவல்களைத் தருகின்றது.
ஈழத்து எழுத்தாளர்களில் குறிப்பிட வேண்டிய சிலரைப் பற்றிய தகவல்களை தருவதாக இந் நூல் அமைந்திருப்பது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஈழத்து இலக்கியப் போக்குகள் மற்றும் ஈழத்து இலக்கியத் துறையின் ஜாம்பவான்கள் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்வதற்கு ஒரு உசாத்துணையாக அமையுமெனக் கூறலாம். ஈழத்து இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவக்கூடிய நூலொன்று இல்லையென்ற குறையை போக்குவதாக இந் நூல் அமைந்திருக்கின்றது.
அந்தனிஜீவாவின் இந்தப் பணி மேலும் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
பாரதி இராஜநாயகம். ஆசிரியர், ஞாயிறுதினக்குரல், 68, எலி ஹவுஸ் வீதி, கொழும்பு-15.
 

என்னுரை
சில வார்த்தைகள்
“தேhழுனே! இன் ஒடு புத்தம்ை அல்ல. இதைத் தெரிடுபவன் ஒடு மனிதனைத் தெ\டுகிறnன்” என உலகப் புகழ்பெற்ற கவிஞன் விட்மன் உறியதை என்றும் என் மனதில்பதித்ைேவத்ள்ேவேன்.
tOBTOBB BBBLLLsLLOT TMTrTG MLBOMOeksseLE GrrLLMsssseLG TTGTS SML0OTB இதிuத்தைத் தெ\டவேண்டும் என்று எண்ணத்தில் எனa எண்ணங்ைைலn"பத்தி” எழுத்தக்கnைa உங்கள் UWவையில் பதிய வேண்டும் என்பதற்காகவே பதிவு (జాజీ8d.
நீண்டanலமhனவே தினன்ைமஞ்சரியில் எழுதிவந்த நன்கெAழும்பில் இடுத்த புலம்பெயர்த் ைகண்டியில் வாழ்விடத்தை ஜமைத்ரேக் ைெnண்டuெnழுe சமுக பணிகளில் Aடுபட்டப்பெnழுeuத்திரிகைகளில் என்னழுத்oக்கள் மிகக் குறைவhனவே வெளிவந்தத8.
மிண்டும் நரின் ைெAழும்புக்கு வந்தப்பின்னல் ஞnயிறு தினக்குதல் இதழில் பிரதம ஆசிரியல் இghஆநhuம்ை என் எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் 6ைnம் அமைத்த்ெதந்தW. “uwவையின் பதிவுள்ை” என்ற மகுடத்தில் வngத்தோறும் தேடித் தெரிந்தவைக6ைnuதிவுசெய்வேத்தேன்.
எனa ஈற்றுக்கணக்hைன பத்தி எழுத்oக்களில் நம்மவல்கள் சம்பந்தப்பட்ட நhப்பguதிவுைைலnnாலnaவெளியிடனெnட8சைைேnதரிளிைன் நிறுவனத்தில் நிறுவனல் அமன (நீ ைெnடனே அவர்கள் வெளியிட முன் வந்ததற்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன். இதற்குக் angணமna அமைத்தல் சிங்oைn தமிழ் எழுத்தhoh ஒன்றியம்,
என்னை உயிரிப்புடன் செயல்பட வைத்த தினகுறள் குடும்பத்தினடுக்கும், இதனை ஒட்டைப்படம் முதல் அனைத்தையும் கணனியில்Uதிவுசெய்தேந்தடிசைன் லெப் நிறுவனத்தினடுக்கும் எனa நன்றிகள்.
இல, 57,மஹிந்த பிளேஸ், என்றும் தோழமையுடன் கொழும்பு -06. அந்தனிஜீவா
kolundu(agmail.com.
Mobile. 0776612315

Page 7
01. 02. O3. 04. 05. O6. 07. O8. O9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40.
நூலின் உள்ளே. பிரேமிள் என்ற மேதை அ.ந.க. என்ற அறிவுலக மேதை காலத்தை வென்றவர் கலாநிதி கைலாசபதி இலக்கிய முன்னோடிகள் இருவர்! சிங்கள இலக்கியத்தின் சிகரம் இசை நாடகமேதை மலைநாட்டுக் காந்தி கலையரசைக் கண்டேன் கே. டானியல் நினைவாக பிரேம்ஜி என்ற ஞானாசிரியன் இயக்கமும் இளஞ்செழியனும் நாட்டுக்கூத்து கலாநிதி ! தமிழன்பர் எஸ். எம். ஹனிபா திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் நூலகள் என். செல்வராஜாவின் நூல் தேட்டம் எம்.சி.என்ற போராளி காற்று வெளியினிலே. காற்றலையில். வலம் வந்த பெண்மணி ஓர் இலக்கிய ஆளுமை புரவலர் சில பதிவுகள் இரு கலா மேதைகள் இலங்கையின் இலக்கிய இதழ்கள் உழைப்பால் உயர்ந்தவர் "வானொலி சுந்தா" கலைஞனின் கதையல்ல நிஜம் நந்தவனத்தில் நம்மவர் புது வசந்தம் கனகலதாவின் கதைகள் அயலகத் தமிழறிஞர்கள் காலத்தை வென்ற கலைஞர்! மலையகக் கல்வி குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் இது ஒரு இலக்கிய ஆவணம் படைப்பாள்யின் பன்முக ஆளுமை தனித்துத் தெரியும் திசை கலைவேந்தன் பூரீசங்கள் "பரதேசி” என்ற..! புலம்பெயர் இலக்கியம் தமிழ்ச் சீரிதழ்கள் மூன்றாவது கண்
11 14 17 20 23 26 29 32 35 38 41 44
47 50 53 56 59 62 65 68 71 74
77 79 82 85 88 91. 94 97 100 103 106 109 12 115 18 121 124 127

பிரேமிள் என்ற மேதை
西 மிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தனுக்கு பிறகு புகழ்ந்து கொண்டாடவேண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதையைதமிழ்ச் சமூகம் மறந்துவிட்டதுஎன்றுதான்கூறவேண்டும். இலங்கைதிருகோணமலையில் பிறந்துதமிழகத்து இலக்கிய உலகில் சிம்மமாக திகழ்ந்த பிரேமிள் என்பது அனைவரும் அறிந்ததருமூசிவராமு.
இலங்கை வடக்கில்வேலணையில் பிறந்து,திருகோணமலையில்கல்வி கற்று பின்னர் தமிழகத்தில் வாழ்ந்த இலக்கியப் படைப்பாளி, இன்று நம்மோடு இல்லாவிட்டாலும், பிரேமிளின் இறுதிக்காலத்தில் அவருக்கு மிகவும் உதவியாக இருந்த அவரது நண்பர் கால சுப்பிரமணியம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவரது எழுபதாவது பிறந்த நாளை சென்னையில் சிறப்பாக நடத்தியுள்ளார். அத்துடன் அவர் பற்றிய ஒரு குறுந்திரைப்படமும் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.
நம் நாட்டின் மின் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சிகள் சினிமா நடிகர் நடிகையர்கள், இசையமைப்பாளர்களின் நினைவு தினங்களை ஞாபகப்படுத்துகின்றன. ஆனால் எழுத்தாளர்களை மறந்து விடுகின்றன.
ஆனால், நமது மண்ணை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும், நீண்ட
காலம்தமிழகத்தில் வாழ்ந்து மறைந்ததருமுசிவராமு என்றபிரேமிளை நாம் நினைவுகூற வேண்டியது அவசியமாகும்.

Page 8
12 அந்தனி ஜீவா
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீரா பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
என்று எழுதிய பிரேமிள், தன் கவிதையை போலவே எங்கே பிறந்த காற்றின் திசைவழி சென்று, தமிழகத்தில் வாழ்ந்து பல இலக்கிய வாதிகள் நெருங்க முடியாத சுடும் நெருப்பாக திகழ்ந்தார். இவரின் விமர்சனப் பார்வையை கண்டு பலர் பயந்தார்கள்.
பிரேமிள் என்றதருமுசிவராமலிங்கம்பள்ளியில் இறுதிவரை கல்வியை தொடர்ந்து படிக்கும் பொழுது, தமிழ் நாட்டின் இலக்கிய முயற்சிகளை அறிந்து கொண்டு, எழுத ஆரம்பித்தவர், 19 வயதிலேயே இவரது எழுத்துக்கள் பத்திரிகைகளில் சஞ்சிகைகளின் வெளிவரத்தொடங்கிவிட்டன.
ஓவியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஒரே ஒரு உறவான அம்மாவும் இறந்த பிறகு இந்தியா பிரேமிள் மதுரை, சென்னை, டெல்லி என சுற்றி சென்ற திரிந்து சென்னையில் தங்கிவிட்டார்.
1960களில் வெளிவந்தசி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில்பிரேமிள் எழுதினார். இவருடைய கவிதைகள், விமர்சன கட்டுரைகள் பலரின் பார்வையை இவர் மீது திருப்பியது.
“கண்ணாடியுள்ளிலிருந்து”. என்ற நெடுங்கவிதைகள் நவீன தமிழ் கவிதையின் சிகரமாக திகழ்ந்தது, இவருடைய ஆரம்பகால கவிதைகளில் படிம அழகியல் கவிஞராக தனித்துவமிக்கவராக அடையாளம் காட்டியது. “கண்ணாடியுள்ளிருந்து”, “கைப்பிடியளவு கடல்", ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
எழுத்து பிரவேசத்தின் தொடக்கத்திலேயே கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எனதன் பன்முக பார்வையை விசாலமாக்கிக் கொண்டவர். தயவு தாட்சணியமின்றி நக்கீரப் பார்வையுடன் இவர் எழுத்துக்கள் வெளிப்பட்டன. சிறுகதையுலகில் சிறப்பாக பேசப்பட்ட மெளனியின் சிறுகதை தொகுப்புக்கு இவர் எழுதிய முன்னுரை இன்று வரை பேசப்படுகிறது.
 

பார்வையின் பதிவுகள் 13
இவரது "எழுத்து” கால கட்டுரைகள் "தமிழின் நவீனத்துவம்” என்று தொகுப்பாக வெளிவந்துள்ளது.
கவிதை விமர்சனத்தோடு படைப்பிலக்கியத்திலும் தம் கை வண்ணத்தைக் காட்டினார். இவர் எழுதிய சிறுகதைகள் "லங்காபுரி ராஜா” என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. "நகூழ்த்தரவாசி" என்ற நாடகம் புத்தகமாக வெளிவந்துள்ளது.
"காசுக்காக எழுதமாட்டேன்" என்று பிடிவாதமாக வாழ்ந்தவர் நண்பர்களின் துணையுடன் ஒரு துறவியைப் போல வாழ்ந்தார். ஜோதிடத்திலும், எண் ஜோதிடத்திலும் அபரிதமான நம்பிக்கை உடையவர். அடிக்கடி எண்ஜோதிடத்தில் இவருக்கு இருந்தஈடுபாடு அவரது பெயரையே முன் வைத்து, பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்க்க வைத்திருக்கிறது. தருமுசிவராமு, தர்முசிவராம், டி. அஜீத்ராம், பிரேமிள் என்று அடிக்கடிதன் பெயரை மாற்றிக்கொண்டே எழுதுவார். பிரேமிள் என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
"தர்முசிவராமு தீவிரமான மனோ பாவத்துடன் நிகழ்வுகளை எதிர்கொள்பவர். எந்த ஒரு கால கட்டத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலை இலக்கியநிறுவனங்களின் அதிகாரப்பிரதிநிதிகளுடன் மருந்துக்கும் உறவு வைத்து கொள்ளாதவர். அவருடைய கலை இலக்கிய மனோபாவம் மதிக்கப்பட வேண்டியது, போற்றப்பட வேண்டியது, தமிழின் மகத்தான படைப்புக்குரல் இவருடையது” என்கிறார் இவரை நன்கறிந்த நண்பர் சி. (ELDIT856t.
பிரேமிள் என்று தமிழ் இலக்கிய உலகம் அறிந்த இந்த மேதை, தனது 56 ஆவதுவயதில் (O6.01.97) அமரரானார். ஆனால் அவரை மதித்த அவரும் மதித்த கால சுப்பிரமணியம் போன்றவர்கள் அவர் நினைவை என்றென்றும் போற்றி வருகிறார்கள்.
1O.O8.2OO8

Page 9
அ.ந.க. என்ற அறிவுலக மேதை
Tெலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகர கல்லூரிக்கு வந்துவிட்டு மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும் தூரத்துத்தொடுவானத்தையும் உற்றுநோக்கும். உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும்,துடிதுடிப்பும் நிறைந்தகாலம். உலகையே என்சிந்தனையால் அளந்துவிடவேண்டுமென்ற பேராசை கொண்டகாலம்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும் சிந்தனையாளரும் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார்.
ஈழத்து இலக்கிய வானில் சுடர் நட்சத்திரமாகத்திகழ்ந்த அ.ந.கந்தசாமி 1968ஆம் ஆண்டு அமரானார். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம், வானொலி உரைகள், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத் துறை என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் எடுத்துக் காட்டக்கூடிய சர்தனைகளை நிலைநாட்டியுள்ளார்.
அ.ந.க.என்ற அறிவுலக மேதை இலக்கியத்தின் எல்லாத்துறைகளிலும் தன்னிகரில்லாத்தலைவனாகதனிக்காட்டு ராஜாவாக விளங்கினார்.
அ.ந.க.யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவயதில் தனது பெற்றோரை இழந்த அ.ந.க. அளவெட்டியில் தனதுபாலியகாலத்தின் சிறுபகுதியைகழிக்கநேர்ந்தது. அதன்விளைவாக
 

பார்வையின் பதிவுகள் 15
அம்மண்ணின் மீது கொண்ட பற்றுதலினாலும் அளவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பதைக்குறிப்பதற்காகதனது பெயருக்குமுன்னாள் அ.ந.வைச் சேர்த்துக்கொண்டார்.
அநக. ஆரம்பகாலத்தில்ஈழகேசரி இலக்கியப்பண்ணையில்வளர்ந்தவர். சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியில் ஆசிரியராக இருந்த பொழுதுதான் அந.கந்தசாமி, அ.செ. முருகானந்தம் போன்றவர்கள் பள்ளிப் பருவத்தினரா யிருந்தனர். ஈழகேசரி மாணவர் பகுதியில் நடைபெற்ற போட்டியில் பரிசு பெற்று இலக்கியத்துறையில்நிலையான ஈடுபாடுகொள்ளஆரம்பித்தார்.
இலக்கிய விமர்சகர்களின் கூற்றுப் படி 1930ஆம் ஆண்டளவில்தான் இலக்கிய உலகில் இளைஞர் பலர் தோன்றினார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு எழுதினார்கள். அந.க.அந்த இளைஞர்வரிசையில்முன்னோடியாகதிகழ்ந்தார். அநகந்தசாமிகாலத்தில் எழுத்துலகில் ஈடுபட்டவர்களில்முக்கியமானவர்களாக அ.செ.முருகானந்தம், வரதர் என்ற தி.சு.வரதராசன், சு. இராஜநாயகம், தாழையடி சபாரத்தினம் ஆகியோரைக்குறிப்பிடலாம்.
இந்தக்காலத்தில் இளைஞர்பலர் ஒன்றுகூடி'மறுமலர்ச்சி என்ற இலக்கிய இதழினை வெளியிட்டனர். இஃது இலக்கிய வட்டத்தின்மணிக்கொடியாகத் திகழ்ந்தது. இந்த மறுமலர்ச்சி குழுவினர் இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும்தம் கைவண்ணத்தைக்காட்டினார்கள்.
யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சி குழுவின் முன்னோடியாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி கொழும்பு வந்தார். சிறிது காலம் அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்துவிட்டுபின்னர்ஒப்ஷர்வர் ஆங்கிலப்பத்திரிகையின் Proof reader ஆக பணியாற்றினார்.
தமிழகத்து பெரியார் ஈ.வே.ராவின் பகுத்தறிவுத் கருத்துகளில் ஈடுபாடு கொண்டார். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையில் அ.ந.க. அக்கறை காட்டினார். இதனால் அ.ந.க. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்அங்கத்தவரானார். மார்க்ஸியதத்துவநூல்களைவிரும்பிப்படித்தார்.
பத்திரிகைத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த அ.ந.க. வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகிய கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான தேசாபிமானியின் ஆசிரியரானார். தேசாபிமானியில் அ.ந.க. சிறுகதைகள், அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதினார்.

Page 10
6 அந்தனி ஜீவா
உழைப்பையேநம்பிவாழும் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். சிலகாலம் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டார். கொழும்பில்நடைபெற்றபிரசித்திபெற்றடிராம்தொழிலார்ளின் பொராட்டம் வெற்றி பெற முன்னின்று செயற்பட்டார்.
பின்னர் சுதந்திரன் பத்திரிகையில் இணைந்தார். தினசரிபத்திரிகையாக வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். சுதந்திரனில்பண்டிதர்திருமலைராயர் என்றபெயரில் சிலப்பதிகாரம் பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதினார். அதனை தமிழகத்தில் பெரியார் நடத்திய குடியரசு" பத்திரிகை மறுபிரசுரஞ் செய்தது.
சுதந்திரனிலிருந்து வெளியேறிய அ.ந.க. அரசாங்கத்தகவல் பகுதியின் வெளியீடானழுநீலங்காபத்திரிகையில்ஆசிரியராகபணியாற்றினார். தகவல் பகுதியில் 12 வருட கால சேவையுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் முழுநேர எழுத்தாளராக இயங்கினார்.
அறிஞர் அ.ந.க.வின் அறிமுகம் அறுபதுகளின் பள்ளி மாணவராக இருந்த பொழுது ஏற்பட்டது. அவர் மரணிக்கும் வரை அவரை வாரம் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சந்திப்பது வழக்கம். என் எழுத்துகளை படித்து எனது வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் காட்டினார். அ.ந.க.தான் எனது இலக்கிய வாழ்வின் வழிகாட்டி, அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றிமல்லிகை" சஞ்சிகையில் அட்டைப்பட கட்டுரை எழுதினேன்.
அறிஞர் அ.ந.க. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னோடிகளில் ஒருவர். கொழும்பில் மேடையேற்றப்பட்ட இவரது மதமாற்றம்" என்ற நாடகம் தமிழ்நாடக மேடையில் ஒருமைக்கல் என்று பாராட்டப்பட்டது. பின்னர் இது நூலாகவும் வெளிவந்துள்ளது.
அறிவுலக மேதையான அ.ந.க.வின் ஆற்றல் மிகுந்த கவிதைகள், நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வுக் கட்டுரைகள் நூலாக வெளிவராததால் இன்றைய தலைமுறை இந்த அறிவுலக மேதையின் ஆற்றலை அறிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
2O.1O.2OO8

காலத்தை வென்றவர் கலாநிதி கைலாசபதி
ஆண்டுகளுக்கு முன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எண்பதுகளில் தமிழ் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள மதுரை சென்றிருந்தேன். கருத்தரங்கின் இடைவேளையின் போது எழுத்தாளரும் பேராசிரியருமான இந்திரா பார்த்த சாரதி வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது பேராசிரியர் தி.சு. நடராசன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.
இலங்கையிலிருந்தா வந்திருக்கீர்கள் என அன்புடன் விசாரித்து, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு என்னை அறிமுகப்படுத்து பொழுது இவர் கைலாசபதியின் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்" எனக் கூறி அறிமுகப்படுத்தினார்.
அங்கிருந்த வெளிநாட்டு ஆய்வாளர்கள் கலாநிதி கைலாசபதியை நன்கறிந்தவர்கள். தமிழகத்தில் கலாநிதி கைலாசபதிக்கு பெரும் செல்வாக்குண்டு. அவரது ஆய்வுநூல்கள் பலருக்கு வழிகாட்டுகின்றன. கைலாசின் பழக்கம் நான் மாணவனாய் படித்துக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்டது. இன்றைய என்னுடைய எழுத்துக்கு அவர்தான் முழுக்காரணம். அவரே எனக்கு புது உலகத்தை திறந்து விட்டவர்." என்கிறார் இன்று தமிழ்நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் இலங்கை எழுதுத்தாளரான அ. முத்துலிங்கம்.

Page 11
18 அந்தனி ஜீவா
கனடாவில் வாழும் அ. முத்துலிங்கம் தமிழகத்தில் வெளிவரும் காத்திரமான இலக்கிய இதழான தீராநதியில் மேலும்கலாநிதி, கைலாசபதி பற்றி எழுதும்பொழுது'. புதுமைப்பித்தனையும் ஜேம்ஸ் ஜெய்ஸையும் அவர்தான் அறிமுகப்படுத்தினார். அவருடைய வீடு எனக்கு எப்பொழுதும் திறந்திருக்கும். புத்தகங்களை நான் கேட்காமலேயே தூக்கிக்கொடுப்பார். அதைப் படித்ததும் எனக்கு இன்னொரு கதவு திறக்கும். புத்தகத்தை திருப்பிக் கொடுக்கும் பொழுது ஒரு விவாதம் நடைபெறும் என்கிறார்.
இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் பல இலக்கிய கர்த்தாக்களுடன் கலாநிதிகைலாசபதிதொடர்புகொண்டிருந்தார். பலருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார். தமிழ்பல்கலைக்கழகங்களும் இலக்கிய இயக்கங்களும் அவரை பெரிதும்மதித்துள்ளன. இன்றும் மரியாதைசெய்து வருகின்றன.
இந்திய சாஹித்திய அக்கடமி இந்திய இலக்கியச்சிற்பிகள் என்ற வரிசையில் இந்தியாவின் இலக்கியமேதைகள் பலரைப்பற்றிய நூல்களை வெளியிட்டுள்ளன. மகாகவி பாரதியார், கவி ரவீந்திரநாத் தாகூர், புதுமைப்பித்தன், தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை இப்படி பல அறிஞர்களின் நூல்களை வெளியிட்டு அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் நம்மவரான கலாநிதி கைலாசபதியைப் பற்றிபேராசிரியர்இரா.சுந்தரம் எழுதிய நூல் சாஹித்திய அக்கடமி வெளியீடாக 2007ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
தஞ்சாவூர்தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அறிவியல்தமிழ்வளர்ச்சித்துறை தலைவராக இருந்தவர் இரா. சுந்தரம். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளியான பேராசிரியர்வையாபுரிப்பிள்ளை நூலின் ஆசிரியர் ஆய்வுநூல்கள் பலவற்றின் ஆசிரியர். கலாநிதி கைலாசபதியைப் பற்றிய நூலை ஏன் எழுதினார் என்பதற்கு அவரே விளக்கம் தருகிறார்.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு (198) மதுரையில் நடந்த பொழுது கலாநிதி கைலாசபதியைச் சந்தித்து சில மணித்துளிகள் பேசியதாக நினைவு. ஆனால், அவரது எழுத்துகளோடு எனது உறவு 1970களில் தொடங்கியது. என்னுள் இருந்த மார்க்சியச் சிந்தனை, தமிழக மார்க்சியக் கருத்தாளர்களோடு கொண்டிருந்த நட்பு, மார்க்சிய போக்குகளில் கொண்டிருந்த அக்கறை ஆகியன அவரை என்னோடு மிக நெருக்கத்தில் வைத்தன. அவரது ஆய்வுரைகள் இந்த நெருக்கத்தை வலுப்படுத்தின.

பார்வையின் பதிவுகள் 19
வையாபுரிப் பிள்ளையின் தாக்கம் எங்கிடத்தே ஓரளவு உண்டு. நான் தொடக்கத்தில் படித்த அவரது ஒப்பியல் இலக்கியம் பண்டைத்தமிழர் வாழ்வும், வழிபாடும் ஆகிய நூல்கள் அவரது எழுத்து வன்மை, அறிவுத்திறன், அறிவுப் பரப்பு கியவற்றை புரிந்து கொள்ள உதவின. தொடர்ந்து படித்தேன். பயனடைந்தேன். பலருக்கு அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தினேன்.
"தஞ்சாவூரில் கைலாசபதி இலக்கிய வட்டம் ஒன்றை நண்பர்களின் முயற்சியோடு தொடங்கி (1983) சில மாதங்கள் சிறப்பாக நடத்திவந்தது இன்றும்பசுமையாக உள்ளது. பரந்துகிடக்கும்தமிழிலக்கியத்தைமார்க்சிய அணுகுமுறையில் திட்டநுட்பத்துடன் அலசி ஆராய்ந்து பல முடிவுகளை, கருத்துகளை முன்வைத்தவர். இவர் அளவுக்கு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் மிகக்குறைவே”என்கிறார் நூலாசிரியர் இராம. சுந்தரம்.
பேராசிரியர் இராம. சுந்தரம் நமது பேராசான் கலாநிதி கைலாசபதிக்கு ஆட்டிய'இலக்கியமகுடம் என்றநூலை எழுதுவதற்காக எழுபதுக்கு மேற்பட்ட நூல்களை படித்துள்ளார். கலாநிதிகைலாசபதியின் 23 நூல்களை ஆய்வு செய்துள்ளார்.
மகாகவிபாரதியாரை இலங்கையில் சுவாமி விபுலானந்த அடிகளாரும் தேசபக்தன் சோ. நடேசய்யரும் அறிமுகம் செய்தார்கள். ஆனால், ஆய்வு ரீதியில் மகாகவி பாரதி பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர் பேராசிரியர் கைலாசபதி, தமிழகத்தில் பாரதி ஆய்வாளர்கள் இவரது கட்டுரையை விரும்பிப் படித்துள்ளனர். இவரது பாரதி ஆய்வுகள் என்ற நூல் தமிழகத்தில் வெளிவந்துள்ளது. இருமகாகவிகள் என்றநூல் தமிழக கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. மகாகவிபாரதியைப் பற்றி0n Bharathi என்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.
காலத்தைவென்ற கலாநிதிகைலாசபதிவாழ்ந்தகாலத்தில் நாங்களும் வாழ்ந்தோம். அவரோடு பேசி மகிழ்ந்தோம். இளங்கீரன் எழுதி, நான் மேடையேற்றிய மகாகவிபாரதி நாடகம் பற்றி அவரோடு பேசியது இன்றும் என்நெஞ்சில் பசுமையாக உள்ளது. கலாநிதிகைலாசபதிஒரு யுகபுருஷர்.
Ο1, Ο1.2OO7

Page 12
இலக்கிய முன்னோடிகள் இருவர்!
LDலையகத்தில் தொழிங்சங்கம், அரசியல், பத்திரிகைத்துறை ஆக்க இலக்கியம் என பிதாமகனாய், சிகரமாய் முன்னோடியாய், முதல்வராக காட்சியளிப்பவர் கோ. நடேசய்யர். 1930களில் அவரது செயற்பாடுகளால் பெருந்தோட்டத்துறைமக்களின் வாழ்வில் ஒரு நூற்றாண்டுக்குப்பின்னரே நம்பிக்கை பிறந்தது. அதற்கு ஆதாரமாக கோ. நடேசய்யரும் அவரது துணைவியாருமான மீனாட்சிஅம்மையார் திகழ்ந்தார்.
இவர்களைத் தொடர்ந்து நாற்பதுகளில் இவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி மத்திய மலைநாட்டில் ஒரு சிலர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
கோ.நடேசய்யரின் ஆற்றலையும் ஆளுமையையும் அவரின் எழுத்துப் பேச்சு, சட்டசபை உரைகள் மூலம் அறியக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால், நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து சாதனை புரிந்து மறைந்த இரு மேதைகளைப் பற்றிய நேரடி அனுபவமே அவர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல முடிகிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து பேசி, கூடி மகிழ்ந்தோம் என பெருமைப்பாட முடிகிறது.
மலைநாட்டில் மலையக இலக்கியத்தின் முன்னோடிகளான இருவரில் ஒருவர் தலவாக்கலைக்கு அருகில் உள்ள வட்டகொடையில் பிறந்த சி.வி. வேலுப்பிள்ளையாவார். மற்றவர் கண்டி தலாத்து ஓயாவைச் சேர்ந்த கே.கணேஷ் ஆவார். முதலாவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதியவர். மற்றவர் ஆங்கிலத்திலிருந்துதமிழுக்குத்தந்தவர்.
 

பார்வையின் பதிவுகள் 21
சி.வி. என்று இரண்டு எழுத்துகளால் அறியப்பட்ட சி.வி.வேலுப்பிள்ளை இன்றுநம்மோடு இல்லை. அவர் மறைந்து இந்த ஆண்டுடன் (9.11.1978) 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கையில் ஆங்கில மொழியில் எழுதிப் புகழ்பெற்ற அழகு. சுப்பிரமணியம், டி. ராமநாதன், ராஜாபுரக்டர் போன்ற இலக்கிய கர்த்தாக்களுடன் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்.
சி.வி. என்ற மானிட நேயமிக்க கவிஞரோடு பழகியவர்களுக்கு அவருடைய ஆளுமையைப் பற்றி தெரியும். அவர் உயிர் வாழ்ந்தபோது அவருடன் கால் நூற்றாண்டுகளுக்கு அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. வாரம் ஒரு தடவையாயவது எங்களில் இலக்கிய சந்திப்பு நிகழும். அவரோடு உரையாடுவது அற்புதமான சுகானுபவமாகும். தான் பிறந்தசமூகத்துக்கு தொண்டாற்றவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர் தொழிலை துறந்து முழு நேர தொழிற்சங்கவாதியாக மாறினார். சி.வி. In Ceylon Tea Garden என்ற தேயிலைத் தோட்டத்தில் என்ற கவிதை நூல் தோட்டத் தொழிலாளர்களின் துன்ப துயரங்களை, சோகப் பெருமூச்சுக்களை, உழைப்பு ஒன்றைத்தவிர வேறொன்று அறியாதஊமை ஜனங்களைப் பற்றி ஆதிகாலத்தில் எழுதி உலகம் அறியச் செய்தார்.
1963ஆம் ஆண்டு ஆசியஆபிரிக்ககவிதைகளின்முதலாவது தொகுப்பு வெளிவந்த பொழுது இலங்கை, இந்தியா, சீனா, ஹொங்கொங், இந்தோனேசியா, கொரியா, சூடான்,தன்சானியா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த 70 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. இதில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ்க் கவிஞனின் கவிதை மலையக"மக்கள் கவிமணி" சி.வி.யின் படைப்பாகும்.
மலையக"மக்கள் கவிமணியுடன் இரட்டையர் என வர்ணிக்கப்பட்டகே. கணேஷ், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றவர். தமிழகம் சென்றுதம் கல்வியை தொடர்ந்தவர்தமிழ் இலக்கியத்தில்சிறப்பாக பேசப்படும் மணிக்கொடி சஞ்சிகையில்சிறுகதைஎழுதியவர். மணிக்கொடிக் கால எழுத்தாளர்களான சிறுகதை மன்னன் எனப்போற்றப்படும் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.பா. ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் போன்ற இலக்கிய மேதைகளுடன் பழகியவர்.
சென்னையில் இருந்த பொழுது 1936இல் 'லோக சக்தி' என்ற பத்திரிகையை வெளியிட்டார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ப. ஜீவானந்தர் அடிகளாரைத் தலைவராகவும்

Page 13
22 அந்தனி ஜீவா
சிங்கள இலக்கியத்தின் முன்னோடி மார்ட்டின் விக்கிரமசிங்க உபதலைவராகவும் கே. கணேஷ், பேராசிரியர் சரத்சந்திரா இணைச் செயலாளராகவும் செயல்பட்டனர்.
அது மாத்திரமல்ல, இலங்கையின் முதல் முற்போக்கு சஞ்சிகையான பாரதி என்ற இலக்கிய சஞ்சிகையை கே. இராமநாதனோடு இணைந்து நடத்தினார்.
கே.கணேஷ் அவர்களோடுமுப்பது ஆண்டுகளுக்கு மேலாகநட்புறவாடி வந்துள்ளேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது எழுத்துலக வழிகாட்டியான அறிஞர் அ.ந.கந்தசாமியாகும்.
கே.கணேஷ்பலசிறுகதைகளையும் நாவல்களையும் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். முல்க்ராஜ் ஆனந்தின் தீண்டாதவன் நாவல், கே. ஏ. அப்பாஸின் சிறுகதைகள், சீன இலக்கியத்தின் பிதா என வர்ணிக்கப்படும் லூசுன்னை சிறுகதைகளை போர்க்குரல்" என்ற பெயரிலும் ஹோசிமன் சிறைக்குறிப்புகள் என்ற பெயரில் ஹேரசிமின் சிறையிலிருந்து எழுதிய கவிதைகளை மொழிபெயர்த்து பதிப்பித்துள்ளார்.
இலங்கைதமிழ் எழுத்தாளர்களின் ஏகபிரதிநிதியாக சீனா, ரஷ்யா, பல வெளிநாடுகளின் எழுத்தாளர்களின் இலக்கிய மாநாடுகளில் கலந்து சிறப்பித்துள்ளார்.
மூத்தனழுத்தாளரும் மூதறிஞருமான கே.கணேஷ் 05.06.2004இரவு கண்டியில் தலாத்து ஓயாவில் தமது வீட்டில் இறுதிமூச்சைநிறுத்திவிட்டார்.
நான் கண்டியில் வாழ்ந்த நாட்களில் மாதத்தில் ஒரு தடவையாவது அவரைச் சந்தித்துநீண்டநேரம் உரையாடுவது வழக்கம்.
மத்தியமலைநாட்டில்நம்மிடையே வாழ்ந்து மறைந்த இருமேதைகளை நினைவு கூறவேண்டியது நமது தலையாய கடமையாகும்.
21.12.2008
 

சிங்கள இலக்கியத்தின் சிகரம்
முதுகிறவன் கலைஞர்களில் சிறப்பானவன்” என்று ஒரு தடவை தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டார்.
மேலும், அதுபற்றிஅவர்விளக்கம்தருகையில்,"ஒருகலைஞன்என்பவன் சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போல நலிந்து கிடப்பவன் மாறாக சமூகத்தில் பெண்ணை விட பரிதாபத்திற்குரிய ஐந்து கிடையாது. மாறிய சமூகத்தில் எழுத்தாளனை விட மாபெரும் சக்தியும் இல்லை என்கிற கருத்து இந்த நூற்றாண்டில் மனித ஜாதிக்கு வந்திருக்கிறது. அதனால்தான் எழுத்தாளனை அதுவும் எழுதுகிற படைப்பாளியை கலைஞர்களில் சிறப்பானவன் என்று நான் கண்டு கொண்டேன்.
"பிகாஸோவின் ஓவியங்களை விடவும், பீதோவனின் இசைக் காலங்களை விடவும், ஹபியூகோவின் ஒரு வாக்கியம், கதையின் ஒரு கடைச்சொல் உலக மக்களை எல்லாம் ஆட்டிபடைத்துவிடும். எழுத்தாளன் படைக்கும் இலக்கியம் காலாகாலத்துக்குநிலைக்கும்"
இவ்வாறுஎழுத்தாளன் சொன்ன சத்தியமான வார்த்தைகளை நேரடியாக பார்த்துகேட்கும்சந்தர்ப்பம் எனக்கு பலதடவைகிடைத்தது. அதற்கு காரணம் சிங்கள இலக்கியத்தின் சிகரம் என வர்ணிக்கப்படும் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் நூறாவது ஜனன தினம் (29.05.89) மாலை வரக்ஹாலை மண்டபத்தில் பார்த்து, கேட்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் ம் ஆண்டு எனக்கு கிடைத்தது. அதனை எனது டையரியில் குறித்து ாவத்துள்ளேன்.

Page 14
24 அந்தனி ஜீவா
அதனை புரட்டிப்பார்க்க வேண்டிய வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் ஒருசனிக்கிழமை காலைதொலைக்காட்சி செனலை ஒவ்வொன்றாக நல்ல நிகழ்ச்சி போகிறதா என்று மாற்றி மாற்றி பார்த்தேன். சுயாதீன தொலைக்காட்சி (ஐ.டி.என்) யில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி இளையதலைமுறையினரே பங்குபற்றினார்கள்.
அந்த அரை மணித்தியாலநிகழ்ச்சியை சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்கவை நினைவு கூறும் நிகழ்வாக, நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியை இளைஞர்களே நடத்தினார்கள். மார்ட்டின் விக்கிரமசிங்கவை நன்கு அறிந்த பேராசிரியரும், மார்ட்டின் விக்கிரமசிங்கவோடு பழகிய எழுத்தாளருமான ஒருவரும் கலந்துகொண்டார்.
இளம் வயதினரான ஆணும், பெண்ணுமாக எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்கவைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு பேராசிரியரும்,எழுத்தாளரும்பதில் சொல்லும், போது அவர்களின்பதிலுடன் விஷவலாக மார்ட்டின்சிங்கவைப்பற்றிஅவர் வாழ்ந்தவீடு, அவரது நூலகம் என்று காட்டினார்கள்.
அதுமாத்திரமல்ல, எழுத்தாளர்மார்ட்டின் விக்கிரமசிங்கவின்ஞாபகார்த்த குழு அகில இலங்கைரீதியில் மாணவர்களிடையே மார்ட்டின் விக்கிரமசிங்க படைப்புகளை பற்றிநடத்திய விமர்சன போட்டியில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களையும் அறிவித்தார்கள்.
எழுத்தாளர்கள் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் புகழ்பெற்ற நாவலான "கம்பெரலிய"வைநம்நாட்டின் மிகச்சிறந்ததிரைப்படஇயக்குநராக லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் திரைப்படமாக இயக்கியிருந்தார். அந்ததிரைப்படத்தின சில காட்சிகளையும் நிகழ்ச்சியின் போது காட்டினார்கள். இவர் வெறும் படைப்பாளியாக மட்டுமில்லாமல் சிங்கள இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்தார். உண்மையானகலாசாரம் என்பதுநகரத்தை அடியொட்டியது அல்லது. அது கிராமத்தில் தான் தோன்றுகிறது என்பதை கண்டறிந்தார். அதனால் அவரது படைப்புகளில் கிராமிய மணமே அதிகம் வீசியது.
அதனால் தான் இவரே படைத்த “கம்பெரலிய” என்ற நாவல் இவர் வாழ்ந்த காலப்பகுதியை நமக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நாவலில் கிராம மக்களின் வாழ்க்கையை மண்வாசனையுடன் உயிர்த்துடிப்பாக காணப்படுகின்றது. இந்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்ததால் அதனால் கிராம புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது.

பார்வையின் பதிவுகள் 25
கம்பெரலிய நாவல் திரைப்படமாகவும், தொலைக்காட்சி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டது.
எழுத்தாளர்மார்ட்டின்முதலாவதுலிலா என்றநாவல் அவரது 22வயதில் பிரசுரமாகியது. அவரது சிறுகதை நாவல், கட்டுரை, விமர்சனம் என்று நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.
எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் எழுத்துக்கள் சிறப்பாக அமைவதற்கு அவர் பத்திரிகையாளராக பல ஆண்டுகள் பணியாற்றியமை காரணம் என்று கலாவிமர்சகர்கள் குறிப்பிடுவார்கள். அதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
அவர் 1918ஆம் ஆண்டுலேக்ஹவுஸ் நிறுவனத்தில் தினமினசிங்கள தினசரியில் பணியாற்ற தொடங்கியுள்ளார். கால் நூற்றாண்டு காலம் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் வெறும்படைப்பாளியாக மட்டும் இருக்காமல் பழம் பெரும் சிங்கள
கலாசாரபண்பாட்டியல் ஆய்வாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான பணியாற்றியுள்ளார்.
O6.O7.2OO8

Page 15
இசை நாடகமேதை
திமிழ்நாடக வரலாற்றில் இசைநாடகங்கள் பெயரும், புகழும் பெற்றுத் திகழ்ந்தன. நம்மிடையே இசைநாடக மேதைகள் பலர், தங்களின் ஆளுமையையும் ஆற்றலையையும் வெளிப்படுத்தி மக்களிடையே செல்வாக்குப்பெற்றுவிளங்கியுள்ளனர்.
அத்தகைய இசைநாடக மேதைகளில் ஒருவர் நாடக கவிமணி எம்.வீ.கிருஷ்ணாழ்வார். கிருஷ்ணாழ்வாரின் கவி ஆற்றல் மகத்தானது. அதனால் கவிமணி எனப்புகழ் பெற்றார். நடிப்பதிலும் ஆற்றல்மிக்கவர். அதனால் நாடக கவிமணி என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.
இசை நாடக மேதையாக எம்.வீ.கிருஷ்ணாழ்வார் பற்றித் தெரிந்தவர்கள் ஒருசிலர்தான்நம்மிடையே வாழ்கிறார்கள். அவர் பிறந்தகரவெட்டியில்தான் பேராசிரியர்கா.சிவத்தம்பியும் வாழ்ந்துள்ளார்.
"கரவெட்டியைச் சேர்ந்தவன்என்றவகையிலும் அவர் வாழ்ந்த இடத்திற்கு ஓரளவு அயலில் வாழ்ந்தவன் என்ற வகையிலும் நான் அண்ணாவியாரை அறியத் தொடங்கியது 40களின் நடுக்கூற்றிலிருந்தே. ஐம்பது, அறுபதுகளின் முன்கூறுவரை அவரை அறியும் வாய்ப்பு இருந்தது.
"இந்தக் காலகட்டத்தில் அவர் யாழ்ப்பாணத்து ஸ்பெஷல் நாடக மரபின் உச்ச "ஸ்திபோர்ட்" என்ற நிலையைக் கடந்து மிகச் சில ஸ்திபோர்ட் வேஷங்களையும் (கண்டியரசனின் குமாரிஹாமி) பிரதானமான ஆண் வேடங்களையும் (அம்பிகாபதியில் கம்பர், வள்ளி திருமணத்தில் நாரதர், கோவலன் கண்ணகியில் டாப்பர் மாமர்) ஆடுகின்ற ஒரு மூத்த கலைஞராக காணப்பட்டார்.
 
 

பார்வையின் பதிவுகள் 27
நான்அறிந்தநாட்களில்அண்ணாவியார்எமதுகிராமத்தின்முக்கியநாடக பயிற்றுநகராக விளங்கினார். கூட்டுறவு இயக்கத்தை வியந்துபோற்றுகின்ற டுருநாடகத்தை பழக்கி விக்கினேஸ்வராக் கல்லூரியில் அரங்கேற்றினார். (940)அந்தநாடகனழுத்துஒருசிறுநாடகநூலாகவும்வந்தது. அதன்பின்னர் சில வருடங்கள் கழித்துஐம்பதின்பின்பகுதியில்எனதுஉறவினரைச்சேர்ந்த இளைஞர்களுக்குமந்திரிகுமாரிநாடகம் பழக்கினார். மந்திரிகுமாரிநாடகம் சினிமாவாக முக்கிய பெயர் பெற்றுப் பின்னர் மேடை நாடகமாக்கப்பட்டது.
இதை அவர் பயிற்றும்பொழுதுதான் அவரது நடிப்புப் பயிற்சி பற்றி அறியமுடிந்தது. அவரது நடிப்பில் குரல் பயிற்சி பிரதானமானது. தெளிவு, உணர்ச்சிஆகியனவும் அதேநேரத்தில் உரத்த குரல்நிலைப்பட்டனவாயும் இது அமையும். அதன் பின்னர் அங்க அசைவுகள் வீச்சுகள் ஆகியன முக்கியம் பெறும். வேடம் புனைவில் அதிகம் கவனம் செலுத்துவார் என்று பேராசிரியர் க. சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.
இசைநாடகமேதைஎம்.வீ.கிருஷ்ணாழ்வார்பன்முக ஆற்றல் கொண்ட நாடகமேதையாக வாழ்ந்துள்ளார். கரவெட்டிமேற்கின்ஆஸ்தானகவிஞராக விளங்கியுள்ளார். அவர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் கவிஞராக சமரகவிவாழ்த்துக்கவிஎன்பவற்றை அவர் இயற்றிக்கொடுப்பார். அவர் கவிதைக்கு சன்மானமாக வேட்டி, சால்வைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கிருஷ்ணாழ்வார்சிறுவனாக இருந்தபொழுது தென்னிந்திய கலைஞர்கள் அடிக்கடியாழ்ப்பாணம் வந்து இசைநாடகங்களை நடத்திச் சென்றுள்ளனர். இந்தநாடகங்களைப்பார்த்துஉள்ளுர் இளைஞர்களும் இந்ததென்னிந்திய கலைஞர்களிடம் பயின்று, நாடகங்களை மேடையேற்றத் தொடங்கினார். விவாறு நாடகங்களைப் பயின்று, நாடகங்களை பயிற்றுவித்து மேடையேறிய கலைஞர்தான் கிருஷ்ணாழ்வார்.
கிருஷ்ணாழ்வார் நடித்த முதலாவது நாடகம் "சுபத்திரையாகும்" இதில் சுபத்திரை பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்த காரணத்தால் சுபத்திரை ஆழ்வார்' என்று அன்போடும் மரியாதையோடும் இவரை அழைக்கத் தொடங்கினார்கள். பிற்காலத்தில் அரிச்சந்திரன் நாடகத்தில் சந்திரமதியாகவும் நடித்துள்ளார்.
இயற்கையாகவே அழகும், சாரீர வளமும் கொண்ட ஆழ்வார் பெண்கள் போலவேபேசிநடித்தகாரணத்தால் எந்தநாடகமாயினும் ஸ்திரிபாட்டாகவே இவர் விரும்பிநடிப்பதுண்டு. கிருஷ்ணாழ்வார் பெண் பாத்திரம்மட்டுமன்றி, ராஜபார்ட் ஏற்றுநடித்துள்ளார்.

Page 16
28 அந்தனி ஜீவா
இசைநாடகமேதைகிருஷ்ணாழ்வார் வாழும் காலத்தில் போற்றப்பட்டார். மதிக்கப்பட்டார். 1959ஆம் ஆண்டு அவர் வாழ்ந்த மண்ணில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. நெல்லியடிச் சந்தியலிருந்து கரவெட்டிதச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் வரை ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விழாவில் கலையரசு சொர்ணலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார். பின்னர் கலைக்கழக நாடகக்குழு தலைவராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் இருந்த அறுபதுகளின் கொழும்பில்நடைபெற்றநாடக விழாவிற்கு கிருஷ்ணாழ்வார் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.
ஈழத்து இசைநாடக மேதை அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு கலை சொத்தாகவே மதிக்கப்பட்டார்.
O1.O3.2OO9
 
 

மலைநாட்டுக் காந்தி
இலங்கையில் சிறிது காலம் இருந்து பழக்கப்பட்டவர்களின் முன்னால் கடவுள் தோன்றி" உனக்கு இலங்கையின் ஒரு தேயிலைத் தோட்டமும் அதன் நடுவில் ஒருபங்களவும் வேண்டுமா? அல்லது சொர்க்கலோகத்தில் இடம் வேண்டுமா என்று கேட்டால் 'சொர்க்க லோகத்தில் இடம் வேண்டாம் இலங்கையில் ஒரு தேயிலை தோட்டமே போதும் ' என்று தான் பதில்
LiesLib. தீனர்களின் தொண்டரான கே. இராஜலிங்கம் அவர்களிடம் அதே கேள்வியை கேட்டால்"எனக்கு சொர்கமும் வேண்டாம் தேயிலை தோட்டமும் வேண்டாம்றப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தால் பாதும்" என்றுகணமும்தயங்காமல் பதில் சொல்வார்தமிழ்நாட்டிலிருந்து இலங்கை தோட்டங்களில் வேலை செய்ய சென்றவர்களின் மூன்றாவது லை முறையில் பிறந்தவர் கே.இராஜலிங்கம்.இலங்கை அரசாங்கத்தின் 0ணமயான சட்டத்தின் படிபார்த்தாலும் இராஜலிங்கம் இலங்கை நாட்டில் வம்சாவளிப்பிரஜைஎன்றஉரிமையைப் பெறுகின்றார்சிங்ககளவர்களுக்கு ால்லா விதத்திலும் சமமான சகல உரிமைகளும் அவருக்குண்டு கல்வி கள்வியும் பேச்சுத்திறனும் தீட்சண்யமான அறிவும் படைத்தவராதலால் லங்கை அரசாங்கத்தோடு ஒத்துழைக்க மனம் கொண்டால் பெரிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பெறலாம் அத்தகைய சுய ாலப்பாதையில் அவர் செல்ல விரும்பவில்லை.
இவ்வாறு 1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம்திகதி"கல்கி' இதழில் பனா மன்னர் கல்கி கிஷ்ணமூர்த்தி அமரர் கே. இராஜலிங்கத்தின்

Page 17
30 அந்தனி ஜீவா
திருவுருவப்படத்தை அட்டையில் பிரசுரித்து"தீனர்களின் தொண்டர்" என்று ஆசிரியர்தலையங்கமே எழுதியுள்ளார் அந்த ஆசிரியத்தலையங்கத்தின் சில வரிகளையே மேலே படித்தீர்கள்.மலையக மக்களால் மாத்திர மன்றி மக்கள் அனைவராலும் " மலை நாட்டுக்காந்தி" என்று அன்புடன் அழைக்கப்பட்டபெரியார்கே, இராஜலிங்கம் அமரராகி இந்தபெப்ரவரி மாதம் 11ஆம் திகதியுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன.
இன்று மலையகத்தில் வாழும் இளைய தலை முறையினரிடம் "மலைநாட்டு காந்தி" இராஜலிங்கம் என்று ஒறுவரை தெரியுமா? என்றால் அவர்கள் வியப்புடன் எம்மைப்பார்ப்பார்கள். மலையக மக்களுக்காக தம் வாழ்நாளை அர்பணித்த மலை நாட்டுக் காந்தி இராஜலிங்கத்தின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். தான் வாழ்ந்த காலம் முழுவதையும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த உத்தம தலைவர்தான் கே இராஜலிங்கம் மலை நாட்டுக்காந்தி என்றழைக்கப்பட்ட கே.இராஜலிங்கம் புசல்லாவை சங்குவாரித் தோட்டத்தில் பிறந்தஅவர்.தனது ஆரம்பக்கல்வியைத்தோட்டப் பாடசாலையிலும் பின்னர் கம்பளை அன்றுஸ்சென் கண்டி சென். அந்தனிசிலும் கல்வியை தொடர்ந்து கற்று முடித்தார்.
அவர் தனது ஆரம்பக்கல்வி கற்றதைப்பற்றி ஒருமுறை குறிப்பிடுகையில் அதிகாலை நான்கு மணிக்குநான் எழுந்து ஏதோதின்று விட்டு வண்டி கூடாரத்திற்கு பின்னால் ஏழு மைல் செல்வேன். நடந்து கொண்டே பாடங்களைப்படிப்பேன். மாலையில் வெகுநேரத்திற்கு பின்னரே வீடு வந்து வயிறார உணவருந்துவது வழக்கம்.
1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்தார் அவரது சந்திப்பு இராஜலிங்கத்திடம் ஒறு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. “மக்களின் சேவையே மகேசன் சேவை" எனக்கருதினார். தம் வாழ்க்கையை மக்கள் சேவைக்கென அர்பணித்தார். சிலநண்பர்களுடன் இணைந்து இலங்கை இந்தியர் வாலிபர் சங்கத்தை அமைத்தார். அதன் மூலம் 'சூரியமல் இயக்கத்திலும் பங்குபற்றினார். மகாத்மா காந்தியை போன்ற எளிமையான வாழ்க்கையே இராஜலிங்கம் மேற் கொண்டார் . தோட்டம் தோட்டமாக கால்நடையாகச் சென்றார். இருண்ட மலையக சமுதாயத்தை கல்விமூலம்தான் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் எனதிட்டமிட்டார்.
 
 

பார்வையின் பதிவுகள் 31
மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு புசல்லாவையில் சரஸ்வதி வித்தியாலத்தை நிறுவினார்.வாலிபர் சமாஜம் ஒன்றையும் அமைத்தார். அவற்றின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். சரஸ்வதிபாடசாலையின் வளர்ச்சிநிதிக்காக பாடசாலைக்கு நிதி திரட்டுவதற்காக அவர் மேற் கொண்ட பயணங்களில் இரவை எங்கே கழிப்பது. பகலில் உணவு எங்கு கிடைக்கும் என்பன பற்றி கவலையின்றி அலைந்தார் தலவாக்கலையிலிருந்து குயின்ஸ்பெரி தோட்டத்திற்கு O7 மைல் தூரம் கால்நடையாகவே இரவு பகலென்று பாரது நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கை. இந்திய காங்கிரஸாக ஆரம்பிக்கபட்டபொழுது அதன் ஸ்தாபக அங்கத்தவர்களில் டுருவர் 1947இல் சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இராஜலிங்கம் நாவலப்பிட்டி தொகுதியில் பாரளுமன்றம் சென்றார். பாரளுமன்றத்தில் அங்கத்தவராக இருந்த பொழுது தோட்ட தொழிலாளர்களின் ஜீவாதார உரிமைகளைப்பற்றிதாம் தயாரித்தமகஜரை சமர்பிப்பதற்காக ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்திற்கு சென்றார் மலையகத்தலைவர்களில் தனக்கென வாழாத அரும்பெரும்தலைவர் அமரர் இராஜலிங்கம். இவரதுநினைவாகபுசல்லாவ சரஸ்வதிவித்தியாலயம் தலைநிமிர்ந்துநிற்கிறது. மலைநாட்டுகாந்தியை வருடந்தோறும் நினைவு கூர வேண்டியது மலையக மக்களின்
loodu Telb.
15.O2.2OO9

Page 18
கலையரசைக் கண்டேன்
இலங்கைத் திருநாட்டில்"கலையரசு" என்றால் ஒருவர்தான் அவர்தான் "கலையரசு" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கலையரசு க.சொர்ணலிங்கம். நாடகத்துறையில் 1880 ஆம் ஆண்டு ஒரு மாற்றம் ஏற்பட்டது. இலங்கை வந்த பம்பாயைச் சேர்ந்த எல்பின்ஸ்டன் நாடகக்கம்பெனியார் பார்லி இசைவடிவ நாடகத்தை இங்கு நடத்தியதால் இந்தமாற்றம் ஏற்படுத்தியது.இந்தபார்லிகுழுவினரதுநாடகங்கள் உள்ளுர் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
பார்லி நாடகக்குழுவினரது நாடகங்களின் தாக்கமானது டவர் மண்டப நாடக சகாப்தத்தை உருவாக்கியது. ஜோன் டி. சில்வாவின் டவர் மண்டப நாடகங்களைச்சிங்களமக்கள்திரண்டுவந்துபார்த்தார்கள் ஜோன்டிசில்வா என்ற வழக்கறிஞரான நாடகக் கலைஞர் பண்டைய பெருமைகளை ஒதுக்கிய நகர்புற நாகரிக மக்களைத் தமது நாடக படைப்புகள் மூலம் தாக்கிக்கொண்டேயிருந்தார்கள். ஜோன். டீ. சில்வா நாடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.
ஜோன்.டி.சில்வாவுக்குநிகராக தமிழ்நாடகமேடையில் முன்னோடியாக கலையரசுக. செர்ணலிங்கத்தை நவீன நாடக மேடையின் பிதாமகர் எனக் குறிப்பிடலாம். 1911 ஆம் ஆண்டு இலங்கையின் பம்மல்சம்பந்தமுதலியாரின் சென்னை சுகுண விலாச சபையார் கொழும்பிலும் யாழ்பாணத்திலும் நாடகங்களை நடத்தினார்கள். இதனால் புதியதாக்கங்கள் ஏற்பட்டன.
இதைப்பற்றிஎல்லாம் கலையரசு"ஈழத்தில்நாடகமும் நானும்” என்னும் நூலில் இது நடந்தது 1911 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி ஈழத்துநாடக
 

பாவையின் பதிவுகள்
உலகில் புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்றுது. எனலாம் அன்றுதான் நாடகம் என்றால் எப்படி அமைக்கப்பட வேண்டும். நடிப்பு என்றால் எவ்வாறு இருக்க வேண்டும். பாட்டு பாடுவதன் நோக்கம் என்ன என்பன போன்றவை எல்லாம் புரிந்தன பார்லி கம்பனியின் தாக்கம் சுகுணவிலாச சபையாரின் இரண்டுமுறை விஜயம் இது தமிழ் நாடக மேடைக்கு அத்திவாரமிட்டன எனக் கூறலாம் என்கிறார் கலையரசு
கலையரசு க. சொர்ணலிங்கம் தனது நாடக அனுபவங்கள் ஈழத்தில் நாடகமும் நானும் ' என்ற தலைப்பில் எழுதி 1968 ஆம் ஆண்டு வெளியிட்டார் அதன் பிறகு 41 வருடங்களுக்கு பிறகு கலையரசுவின் கலையுலக வாரிசுகளில் ஒருவரானலண்டன் வாழும் பாரிஸ்டரான எஸ். ஜே. ஜோசப் ஈழவர் திரைகலை மன்றம் மூலம் இதனை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். நான்காண்டுகளுக்கு முன்னால் நான் அவரை லண்டனில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிய பொழுது. தலையரசுவின் இந்த படைப்பு மறுப்பதிப்புக்காக வெளிவர வேண்டும் என்றும் கலையரசு பெயரால் ஆண்டு தோறும் ஒறு கலைஞருக்கு விருது வழங்க வேண்டும் என்றேன் அது இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கலையரசை யாழ்பாணத்தில் அவரது வீட்டிலும் கொழும்பிலும் பல தடவைகள் சந்தித்து உரையாடியுள்ளேன். அவரது “ஈழத்தில் நாடகமும் நானும்” நூலை கையெழுத்திட்டு தந்தார் அதனை நண்பர் மாத்தளை கார்த்திகேசு வாங்கித் சென்றார். திருப்பித் தரவில்லை. எனது நாடகம் சம்மந்தமான வரலாற்று தேவைக்காக தேடிய பொழுது எங்கும் கிடைக்கவில்லை நல்ல நூல்களை தேவைகருதி மிகச்சிறப்பாக மறுபதிப்புச் செய்து வரும் எழுத்தாளர் செ.கனேசலிங்கத்தின் மைந்தர் குமரனிடம்
கூறினேன் அவரும் விரைவில் செய்வதாக கூறினார்.
நூலைப்பார்த்ததும் ஒரு புதையலே கிடைத்தது போன்ற மகிழ்ச்சி. அது மாத்திரமல்ல அந்தநூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் எனது அன்பு நண்பரும் ஒன்றாக நாடக மேதை பாதல் சர்காரிடம் நாடகப்பயிற்சி பெற்றவரும் புதுவை நிகழ்கலை பல்கலைகழகத்தின் முதன்மை பேராசிரியராகப் பணிபுரிபவருமான முனைவர் கே. ஏ. குணசேகரன். அத்தோடு கலையரசர் புகழ் காலமெல்லாம். பரவட்டும் என கலையரசு கலையுலக வாரிசுகளில் ஒருவரான ஏ. ரகுநாதன். இவர் தற்போது பாரிஸில்

Page 19
34 SS அந்தனி ஜீவா
வாழும் முதுகலைஞர். இவர் இலங்கையில் வாழ்ந்த காலங்களில் நாடகம் சினிமா என்றுதன்னையே ஆகுதி ஆக்கிக்கொனண்டவர்.
இன்று பிரபல நாடகக்கலைஞர்கள் பலர் கலையரசு சொர்ணலிங்கம் ஐயாவை முழுமையாக அறிந்திருப்பார்களா என்பது ஐயமே. இந்த நிலை மேலும் தொடரவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஈழவர் திரைக்கலை மன்றம் 2006 ஆம் ஆண்டு கலையரசு விருது என்ற விருது ஒன்றை உருவாக்கி, ஆண்டு தோறும் ஈழத்துக் கலைஞர் ஒருவருக்கு அவ்விருதை அளித்துகெளரவித்துவருகிறது.அப்பணியை மேலும் விரிவுபடுத்துவதற்காக அன்னாரது நூலை மீள்பதிவு செய்ய எண்ணியது என்கிறார் நூலை பதிப்பித்த பாரிஸ்டர் ஜோசப்.
"இலங்கைநாடக வரலாற்றையும்தமிழ்நாடக வரலாற்றின் நீட்சியையும் பதிவு செய்துள்ள இந்நூல் நாடக உலகின் முக்கிய பதிவு ஆகும். பம்பல் சம்மந்த முதலியாரைச் சந்தித்தது. நாடகமன்றம் தொடங்கி செயற்பட்டது. தமிழ் இசைநாடகங்களை இலங்கையில் பரவலாகியதுபோன்ற பலதகவல் அடங்கிய நூல்" என பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். V
காலம் அறிந்து கலையரசு ஐயாவின் நூலை மறுமதிப்பை கொண்டு வந்தபாரிஸ்டர்ஜோசப்கலைஞர்நன்றிக்குறியவர். இதனைவாங்கிவாசித்து பாதுகாக்க வேண்டிய நாடகக் கலைஞர்களின் கடமையாகும்.
 

கே. டானியல் நினைவாக
LDணல் விடு என்ற சஞ்சிகையைப் பார்த்ததும் என்விழிகள் வியப்பால் விரிந்தன. இந்தச் சஞ்சிகையை எங்கே பார்த்தேன் என்று கேட்கிறீர்கள், இந்தசஞ்சிகையைதிருச்சியிலுள்ள பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவாவின் வீட்டில் இந்த மணல் வீடு' என்ற சிற்றிதழில் என்ன சிறப்பு என்று பார்க்கிறீர்களா ஆம். என்னை வியக்கவைத்த செய்தி சேலத்திலிருந்து வெளிவரும் இந்த மணல் வீடு ஆறாவது இதழ் நம்மவரான எழுத்தாளர் கே. டானியலின் சிறப்பிதழாக வந்துள்ளது.
நம்மவரானதலித் இலக்கிய முன்னோடி எனதமிழக எழுத்தாளர்களால் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்படும் டானியலின் படைப்புகள் தமிழக இலக்கிய உலகில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. எழுத்தாளர் கே. டானியல் ல ஆண்டுகளுக்கு முன்னால் கண் சிகிச்சைக்காக தமிழகம் சென்ற பாழுது, சுகவீனமாகி கும்பகோணத்தில் பேராசிரியர் அ. மார்க்ஸின் ல்லத்தில் அமரானார்.
அவரது உடலை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி செய்தும் பின்னர் பம்பகோணத்தில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அப்பொழுது தமிழகத்தில்தங்கியிருந்தஎழுத்தாளர் செ. கணேசலிங்கம்கே. டானியலின்
திச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார்.
டுரு தடவை நான் தமிழகம் சென்ற பொழுது, எழுத்தாளர் கே. ானியலின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியது மாத்திரமன்றி பராசிரியர் அ. மார்க்ஸ் இல்லம் சென்று கே. டானியலைதன்தந்தையைப்

Page 20
36 அந்தனி ஜீவா
போல பராமரித்த பேராசிரியர் மார்க்ஸின் துணைவியாருக்கு நன்றியும் சொன்னேன்.
எழுத்தாளர் கே. டானியல் மீது எனக்கு எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. நான் யாழ்ப்பாணம் சென்ற வேளையெல்லாம் ஸ்ரான்ஸி வீதியிலுள்ள அவரது ஸ்ரார் கராஜூக்குச் சென்று அவரைச் சந்திப்பது வழக்கம்.
மக்களிடம் கற்பது, மக்களுக்கு கற்பிப்பது என்றகொள்கையில் உறுதியானவர் கே. டானியல். வடமாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதில் டானியல் முன்னணியில் நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் எல்லாக்கிராமங்களிம் இவரது காலடிச் சுவடுகள் பதிந்திருக்கும். தானும் ஒரு சலவைத் தொழிலாளிகுடும்பத்தில் பிறந்தவர் என்பதை இவர் மறப்பதில்லை.
இவரால் எழுதப்பட்ட 'பஞ்சமர் நாவலின் முதல் பாகம் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் போராடிய குற்றத்திற்காகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த பொழுது எழுதியது. அந்த நாவலை எழுதி முடிக்கும் வரை, அக்கிராம மக்கள் குடிக்கொருவராக நாள் வீதம் உணவளித்து ஒவ்வொருநாள் பாதுகாப்பையும் கிராமத்தவர்கள் கூட்டமைத்து நேரம் வைத்துச் செய்த அந்தப் பணி தனக்காக அளிக்கப்பட்டதல்ல என்றும் தான் சார்ந்த கொள்கைக்காக அளிப்பட்டதுவே." என்று என்னிடம் நேரில் தெரிவித்தார்.
"நடுத்தரமான உயரம், வெள்ளை வேட்டி, சிமிண்ட கலர் சேர்ட், கண்ணாடிக்குள் மின்னும் சாம்பல் நிறக் கண்கள், தீர்க்கமான பார்வை, சிவந்த நிறம், தளர்ந்த உடல் அசைப்பில் பார்க்கும் பொழு மிகுந்த கோபக்காரனைப் போன்ற தோற்றம். பேசினால், சிரித்தால் பச்சைக் குழந்தை, இயக்கம்பற்றியும், இலக்கியம் பற்றியும் பேசத் தொடங்கினால் முகம் இறுகிவிடுகிறது. கம்பீரமானதோற்றத்துடன்ஆனால், மிகமிக எளிய வார்த்தைக்ளில் ரொம்பவும் சிக்கலான பிரச்சினைகளையெல்லாம் அலசுகிறார் இவர்தான் டானியல்"என்று இவரை மணல்வீடு சஞ்சிகையில் அறிமுகப்படுத்தும் பேராசிரியர் அ. மார்க்சு "மேலும்" எழுதுகிறார்.
"உலகங்கள் வெல்லப்படுகின்றன என்கிறசிறுகதைத்தொகுதிக்காகவும் "பஞ்சமர்” என்றநாவலுக்காகவும் ஈழத்தில் மிகப்பெரிய இலக்கியப்பரிசாகிய சாகித்திய மண்டலப்பரிசு இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசு மட்டுமா
 

பார்வையின் பதிவுகள் 37
கொடுத்தார்கள். பதினொரு மாதம் சிறையிலும் அடைத்தார்கள். தனிக் கொட்டடி - சக்கரை வியாதி. இத்தனைக்கு மத்தியில் பஞ்சமர் நாவலில் இரண்டாம் பாகத்தை எழுதத் தொடங்கினார் டானியல். டானியலைப் போன்று ஒரே சமத்தில் இயக்கவாதியாகவும் இலக்கியவாதியாகவும் இருக்கிறவர்களை சமாளிப்பது என்பது ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சினைதான். வெளியே விட்டால் இயக்கம் அமைத்து மக்களைத் திரட்டுகிறாரே என்று உள்ளே பிடித்துப் போட்டால் அங்கே உட்கார்ந்துகொண்டு இலக்கியம் எழுதி அதே காரியத்தைச் செய்கிறார், இவரை என்ன செய்வது? இவ்வாறு அ. மார்க்ஸ் கே. டானியல் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
தமிழ்நாட்டில் தலித்தியம் உருவாவதற்கு ஒருதலைமுறை காலத்திற்கு முன்பாக இலங்கையில் தலித் சிந்தனை தோன்றிவிட்டது. அத்தகைய சிந்தனையினூடாக வெளிக்கிளம்பிய இலக்கியப் போராளிகளில் முக்கியமானவர் தோழர் கே. டானியல். அவர் ஒரே சமத்தில் இலக்கியக் காரராகவும் செயல்பட்டார். சாதிய விடுதலையையும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையையும் ஒரே தளத்தில் வைத்து செயல்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் என்று பொ. வேல்சாமி என்பவர் டானியல் எனும் கலைஞன் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இவரும் நம்பகோணத்தில் கே. டானியலுடன் நெருங்கிப் பழகியவர்.
சேலத்திலிருந்துவெளிவந்த மணல்வீடு என்ற இலக்கிய சஞ்சிகையின் க. டானியலின் சிறப்பிதழில் 'இலங்கை எழுத்தாளர் டானியலின் படைப்புகளை படிக்க வாய்த்தது வதைகளையும் துயரங்களையும் பகடிகளாக்கி அவர் வடித்துள்ள படைப்புகளை மீண்டும் வாசிப்பிற்கு
டப்படுத்தி ஒரு சிறுமுயற்சி இந்த சிறப்பிதழ்
நாம் நம்மவரான கே. டானியலை மறந்துவிட்டோம். அதனால் அவரது எழுத்துகளை படித்தவர்கள் அவரைப் போற்றுகிறார்கள்.

Page 21
பிரேம்ஜி என்ற ஞானாசிரியன்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றவுடன் எல்லோருடைய நினைவிற்கு வருவது "பிரேம்ஜி என்ற பெயர்தான். பிரேம்ஜி என்றவுடன் இ.மு.எ.ச. என்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தான் நினைவிற்கு வரும்.
இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சாதனைகள் வரலாற்றுபதிவுக்குரியதாகும்.
இவை எல்லாம் ஏன்நான் சொல்கிறேன் என்றால்.சிலவாரங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பிரேம்ஜியின் சொற்பொழிவு இடம்பெற்றது. பேராசிரிர் சபா. ஜெயராசாதலைமையில் இடம்பெற்ற இந்த உரையாடலைகேட்டதும்,நீண்டநாளைக்கு பின்னர் பிரேம்ஜியைசந்தித்தும் மனதிற்கு மகிழ்வாக இருந்தது.
ஏனென்றால் ஒரு காலத்தில், அவரது திட்டவட்டமான எண்ணங்கள், தீர்க்க தரிசனமான கருத்துக்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சிறப்பான முறையில் வழிநடத்தியது.
“பிரேம்ஜி" என்ற அந்த மகத்தான மனிதரின் பெயர் ஞான சுந்தரம் என்பது எல்ல்ோருக்கும் தெரியும். அவரை அவருக்கு நெருக்கமான தோழர்கள் “ஞானா" என்று அன்புடன் அழைப்பார்கள், சிரித்த முகமும், இனிய சுபாவமும் கொண்ட “ஞானசுந்தரம்” எங்களுக்கு எல்லாம் ஒரு “ஞானாசிரியனாகவே"எங்களை வழிநடத்தினார்.
பிரேம்ஜி என்ற மனித நேயமிக்கவருடன் பழகியவருக்கு எல்லாம் தெரியும் அவர் ஒரு அற்புதமான மனிதாபிமாணி,
 

ார்வையின் பதிவுகள் 39
தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி பிரேம்ஜி கொண்டிருந்த தீர்க்க ரிசனமான நோக்கை, இற்றைக்குநாற்பது ஆண்டுகளுக்குமுன்னர் அவர் ட்டமிட்டு, வகுத்தளித்தவேலைத்திட்டத்தைநிறைவேற்றியிருந்தால், இன்று நமது மண்ணில் சுபிட்சம் நிலவிசமாதானம் மலர்ந்திருக்கும்.
இத்தகைய நம்ப முடியாத உண்மைகள் இன்றைய இளைய தலை முறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால். இத்தகையை த்தியமான உண்மைகள் வரலாற்று பதிவாக இருக்க வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் "பிரேம்ஜி” என்ற ஞானாசிரியனின் உரைகளை இப்பொழுது "பிரேம்ஜி கட்டுரைகள்” என்ற மகுடத்தில் நூலாக கொண்டு வந்துள்ளனர்.
"இலங்கை முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் சுமார் அரை ாற்றாண்டு கால வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, அவ்வியக்கத்தின் செயற்பாடுகளும், சாதனைகளும் பாராட்டத்தக்க அளவு கணிசமானவையாகவும் உற்சாகமளிப்பவையாகவும் விளங்குவதை உணரவியலும். "ஈழத்து தமிழ் நவீன இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் பரிமாண விசாலிப்புக்கும் பெரும் பங்களிப்பு நல்கிய முற்போக்கு இலக்கிய இயக்கத்துடன் தன்னை இரண்டறப் பிணைத்துக் காண்ட பிரேம்ஜிஞானசுந்தரன், முற்போக்கு இலக்கியத்தின் கோட்பாட்டு தியான விளக்கத்துக்கும்,செயற்பாட்டுக்கும்பலவற்றாலும் உதவியவர். என பிரேம்ஜி கட்டுரைகள் நூலின் அணிந்துரையில் பேராசிரியர் சி.
ல்லைநாதன் குறிப்பிடுகின்றார்.
பிரேம்ஜி என்ற ஞானாசிரியனை என் மாணவப் பருவத்திலிருந்து அவரை அறிவேன். அறிஞர் அ.ந. கந்தசாமி, பேராசிரியர் சு. தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, கே. கணேஸ், வரதர், பாசிரியர் சிவத்தம்பி, பாக்டர்நந்திபோன்றவர்கள் இவரின்தீட்சண்யமான ாத்துகளுக்குமதிப்பளித்தனர். சிங்கள இலக்கிய கர்த்தாக்களும் இவரின் ாத்துக்களை கேட்டறிந்தனர்.
"பிரேம்ஜி கட்டுரைகள்” என்ற நூலில் இடம்பெறும் கட்டுரைகள் கலை, லக்கியம், சமூகம், அரசியல், சர்வதேசியம், தேசியம், தேசிய இனம் றியவற்றில் எனது கருதுகோள்களையும் நிலைப்பாடுகளையும் திட்டவட்டமாக வெளிப்படுத்துகின்றன. இவை ஒரு அரைநூற்றாண்டு ாலப்பகுதியை உள்ளடக்கியதாக விரிந்து சென்ற போதிலும் கருதுகோள்களில் ஒரு முரண்பாடற்ற நிலைப்பாட்டையும், "ஒரு டையறாத தொடர்ச்சி போக்கையும் வாசகர்களால் அவதானிக்க முடியும்" ாள்கிறார் பிரேம்ஜி

Page 22
40 அந்தனி ஜீவா
பிரேம்ஜி கட்டுரைகள். என்ற நூலில் 34 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரே ஒரு கட்டுரை பின்னிணைப்பாக ராஜழுநீகாந்தண் எழுதிய “வாழ்க்கைச் சுவடுகள்" என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராக, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த பிரேம்ஜி தன்னுடைய குடும்பத்தின் வேண்டுகோளை தட்டமுடியாமலும், தமது சுகவீனம் காரணமாக கனடாவிற்கு சென்ற பிறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டன. ஞானாசிரியராக விளங்கிய பிரேம்ஜி அவர்களின் வேண்டுகோளை, அவரது எண்ணத்தில் உதிக்கும் திட்டங்களை செயல்படுத்திய செயல்வீரர், எழுத்தாளர் என். சோமகாந்தன். அவர் எங்களை விட்டு மறைந்தது மற்றும் பிரேம்ஜியின் நிழலாக நின்று அவரது கருத்துக்களை, செயல்திட்டங்களை செயற்படுத்த உறுதுணையாக விளங்கிய ராஜருநீகாந்தனும் நம்மை விட்டு பிரிந்தது பேரிழப்பாகும்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றில் ஞானாசிரியராக திகழ்ந்த பிரேம்ஜியின் கருத்துக்களை, எண்ணங்களை மிகப் பிரபாண்டமான முறையில் செயற்படுத்திய சோமகாந்தனின் மறைவு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்படாது போனதற்கு முக்கிய காரணியாகும்.
மீண்டும் இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்படப்போகிறது. நாடு திரும்புவதற்கு முன்னர் பிரேம்ஜி அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கின்றார். பிரேம்ஜி. என்ற ஞானாசிரியரின் செயற்பாடுகளை முன்னெடுக்க பேராசிரியர் சபா ஜெயராசா மல்லிகை டொமினிக் ஜீவா, திக்குவல்லை,திருமதிபத்மாசோமகந்தரன், மேமன்கவி, அந்தனிஜீவா, இரா. சடகோபன், பூபாலசிங்கம், ருரீதரசிங் அனோஜா ருநீகாந்தன், கே. பொன்னுத்துரை, ப. ஆப்டீன் ஆகியோர் தயாராக உள்ளனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் “பீனிக்ஸ்” பறவை போல சிறகடிக்கப் போகின்றது.
w
24.08.2008
 

இயக்கமும் இளஞ்செழியனும்
LDலையக மக்களின் வரலாற்றில் பல உண்மைகள் எழுதப்படாத வரலாறாகவே இருக்கின்றன. வரலாற்றைத் தேடி எழுதும் ஆய்வாளர்கள் கூட இன்றும் அவற்றைத் தேடி பதிவுசெய்வில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
மலையக மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதராக வாழ்ந்து மறைந்தவர் கோ. நடேசய்யர். 1930களில் எழுதியும், போராடியும் வந்தவர். அந்தமக்களுக்காகபத்திரிகைநடத்தியும், நூல்கள்எழுதியும்,சட்டசபையிலும் குரல் எழுப்பினார்.
1947இல் அவர் மரணிக்கும் வரை இந்திய வம்சாவளிமக்களுக்காகவே குரல் கொடுத்தார். அதன் பிறகு மலையக மக்களிடையே பெரும் பணியாற்றியவர்களில் மிக முக்கியமானவர் நாவலர் ஏ. இளஞ்செழியன்.
மலையக மக்கள் பெருந்தோட்டத் துறையில் ஒடுக்கப்பட்டவர்களாக, அடக்கப்பட்டவர்களாக இருந்த வேளையில் அந்த மக்களிடையே சீர்திருத்த கருத்துகளையும் பகுத்தறிவு பிரசாரத்தையும் முன்னெடுத்துச் சென்றவர் நாவலர் ஏ.இளஞ்செழியனாகும்.
நாவலர் ஏ. இளஞ்செழியன் பெரியார் ஈ.வே. ராவின் கருத்துகளால் பெரிதும்ஈர்க்கப்பட்டு அவரதுசுயமரியாதைக்கருத்துகளைநாடுமுழுவதிலும் முன்னெடுத்தார். பெரியாரைதன்வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு 1946இல் திராவிட இயக்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். அதே ஆண்டில் கண்டி மாவட்டத்தில் கிரிமெட்டியா தோட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு அவர் வருகை தந்தார். அன்றோடு அவரது மலையகத் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

Page 23
42 அந்தனி ஜீவா
1950களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இவரது பகுத்தறிவு பிரசாரம் தொடர்கிறது. சுயமரியாதைக் கருத்துகள் விதைக்கப்படுகின்றன. மலையக மக்களிடையே மாத்திரமன்றி இவரது செயற்பாடுகள் வடக்கு, கிழக்கிலும் பரவுகிறது. இவரது பணிகள் தொடர்வதற்கு இந்தியாவில் தமிழகத்திலிருந்துவெளிவரும்திராவிடக்கழகபத்திரிகைகள், சஞ்சிகைகள், பிரசார நூல்கள் துணைபுரிகின்றன.
மகாகவி பாரதியாரை விட புரட்சிக்கவி பாரதிதாசனே நன்கு அறிமுகமாகிறார். பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகள், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி எழுத்துகள் மலையக மக்களிடையே வெகுவேகமாகப் பரவுகின்றன.
இது மாத்திரமல்ல. பராசக்தி, ஓர் இரவு, வேலைக்காரி போன்ற திரைப்படங்களின் வருகையும் தமிழகத்தில் மேடையேற்றப்பட்ட தூக்குமேடை, மணிமகுடம், எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் போன்ற நாடக நூல்களும் மலையக இளைஞர்களிடையே ஓர் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்குத் தூண்டுகோலாக அமைகிறார் நாவலர் ஏ. இளஞ்செழியன்.
நாவலர் ஏ. இளஞ்செழியனின் பிரசாரத்தால் இளைஞர் பலர் எழுதவும், மேடைகளில் பேசவும், நாடகங்களை நடத்தவும் முன்வந்தனர்.
நாவலர் இளஞ்செழியனின் வழிநடத்தலில் இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் மலையகமெங்கும் பரவலாக கிளைகள் அமைத்து செயல்பட்டது. நாவலர் ஏ. இளஞ்செழியன் தன் முழுவாழ்வையும் பணியையும் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டார்.
1960களுக்குப்பின்னர் இலங்கைதிராவிடர் முன்னேற்றக்கழகம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டியது. 1962இல் இலங்கை திராவிடர் முன்னேற்றக்கழகம் அட்டனில் நடத்திய மாநாட்டில் தமிழரசுக்கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
தந்தைஎஸ்.ஜே.வி.செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டது இனவாத அரசியல்வாதிகள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தியது. இதனால் பாராளுமன்றத்திலிருந்த இனவாத அரசியல்வாதிகள் இதி.மு.க.வைதடைசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.
1962இல் ஜூலை மாதம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா இ.தி.மு.க.வை தடைசெய்தார்.
 

பார்வையின் பதிவுகள் 43
இதி.மு.க. தடைசெய்யப்பட்ட சில மாதங்கள் நாவலர் இளஞ்செழியன் தலைமறைவுவாழ்க்கைநடத்தினார்.
1963ஆம் ஆண்டு அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் இதி.மு.க.வின் தடையும் நீங்கியது. நாவலர் ஏ. இளஞ்செழியனின் இன்னுமொரு முக்கிய செயற்பாடு 1963இல் பண்டாரவளையில்நடத்தியநாடற்றவர்மறுப்புமாநாடு நாவலர் இளஞ்செழியன் தனது செயற்பாடுகளை எழுபது வரை தமிழ் பேசும்மக்களின்நலனுக்காக முன்னெடுத்தார்.
எழுபதுகள் வரை இயக்க பணிகளை முன்னெடுத்த இளஞ்செழியன் பின்னர் தன்னை ஒரு சமதர்ம வாதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். சமசமாஜக்கட்சியிலிருந்து பிரிந்து செயற்பட்ட தொழிற்சங்கவாதிபாலா தம்பு, எட்மன் சமரக்கொடி, பிரின்ஸ் ராஜகரியர், மல்லவராச்சி போன்றவர்களுடன் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் தனது அமைப்புக்கு புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயர் மாற்றிக் கொண்டார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக தனது அரசியல் வாழ்வை மேற்கொண்டநாவலர் இளஞ்செழியன்செயற்பாடுகள்காரணமாக அவரோடு செயற்பட்ட பலர் அரசியல், கலை, இலக்கியம் தொழிற்சங்கத் துறைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அரைநூற்றாண்டுகளாக இயக்கத்துடன் இணைந்துசெயல்பட்டநாவலர் இளஞ்செழியனின் வாழ்வே இயக்கமாக அமைந்துவிட்டது.
மலையகம்" என்ற சொல்லை முதன் முதலில் மக்களிடையே எடுத்துச்சென்றமுன்னோடிகளில்ஒருவராக இளஞ்செழியன்கருதப்படுகிறார். நாவலர் ஏ. இளஞ்செழியன் அவரது 95ஆவது வயது வரையிலும் வாழ்ந்து 09.09.2007 அன்று கண்டியில் காலமானார். அவரது இறுதிக் காலத்தில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், அவரின் கொள்கைக்காக இறுதிவரை பராமரித்தது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் பணியாற்றிய அனைவரும் அவருக்கு உதவினார்கள்.
O7.Ο9.2OO8

Page 24
நாட்டுக்கூத்து கலாநிதி !
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் உலகநாடகதினமென்ற ஒருநாள் வரும், கலாசார அமைச்சின்கீழ் இயங்கும்திணைக்களம் இந்ததினத்தை சிறப்பாக விழா எடுத்துகலைஞர்களை கெளரவிக்கும். ஆனால்தமிழ்நாடக கலைஞர்களை மறந்துவிடும்.
தமிழ் நாடகக் கலைஞர்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியாது. இந்த நாட்டில் சகோதர சிங்கள கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும் தமிழ் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. பாராளுமன்றத்தில் இருக்கும் நம்மவர்கள் கூட இது பற்றி அக்கறைப்படுவதில்லை. அறிந்து கொள்ளவும் முற்படுவதும் இல்லை.
நம்மிடையே வாழ்ந்து மறைந்த நாடகக் கலைஞர்களான கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து, நடிகவேள் லடிஸ் வீரமணி என்று தேடிய பொழுது நம்மவர் பலரும் மறந்து விட்ட நாட்டுக் கூத்துக் கலைஞர் பூந்தான் யோசேப்பு என் நினைவிற்கு வந்தார்.
பூந்தான் நாட்டுக் கூத்துக் கலைஞன், நாடக சிரோன்மணி, நாடகக்கலாநிதி, நாட்டுக் கூத்துச் சக்கரவர்த்தி, நாட்டுக் கூத்துப் பேரொளி, கலைவேந்தன், கலைஞான பூபதி, இசைப்புலவர், நாடக மாமன்னன், தசவிருதுநாட்டுக்கூத்துக்கலைக் காவலன், கலைக்குரிசில், நாட்டுக்கூத்து மாமேதை,நாட்டுக் கூத்துத்தந்தை,நாட்டுக்கூத்துக்கலாநிதி.
இத்தகைய புகழ்பெற்ற பட்டங்களைப் பெற்ற கலைஞன் வேறு யாருமில்ல, நம்மிடையே வாழ்ந்து மறைந்த நாட்டுக கூத்துக் கலைஞர் பூந்தான் யோசேப்புதான்.
 
 

பார்வையின் பதிவுகள் 45
நமதுபாரம்பரிய செல்வமான நாட்டுக்கூத்துக்கலையை, இலங்கையில் சுமார் ஐம்பதாண்டுகளுக்குமுன் யாழ்ப்பாணத்திலிருந்துதிருகோணமலை, மன்னார் வரை கொண்டு சென்று அதனுடைய மகிமையை எழுபதுக்கு மேற்பட்ட கிராமங்களில் அறிமுகப்படுத்தி, அங்குள்ள கலையார்வமுள்ளவர்களுக்கு கூத்தைப் பழக்கி, அந்த கலையை அழிந்துவிடாமல் பாதுகாத்த கலைஞர் தான் நாட்டுக் கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு.
நாட்டுக்கூத்து கலாநிதி மூந்தான் யோசேப்பு அவர்களை 1974 ஆம் ஆண்டு சந்தித்து உரையாடஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. வைத்தியகலாநிதி ஆனந்தராஜன் தலைமையில் இயங்கிய இலங்கை முத்தமிழ் கழகத்தில், திரு. சில்லையூர் செல்வராசன், செழியன் பேரின்பநாயகம், நான் உட்பட பலர் அங்கத்தவர்களாக இருந்தோம் முத்தமிழ்கழகம் கொழும்பில் இரண்டு நாட்கள் முத்தமிழ் விழாவை நடத்தியது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக பூந்தான் யோசேப்புவின் "சங்கலியன்" நாட்டுக் கூத்து இடம்பெற்றது.
நாட்டுக் கூத்து நடைபெற்ற அன்று காலையில் நிகழ்ந்த நாடகக் கருத்தரங்கில் "ஈழத்தில் தமிழ் நாடகம்" என்ற தலைப்பில்" நான் உரையாற்றுகையில் நாட்டுக் கூத்துப் பற்றியும் எனது உரையில் சிறப்பாக குறிப்பிட்டேன்.
இந்தக் கருத்தரங்கு நடைபெற்றபொழுது முன்வரிசையில் அமர்ந்திருந்தபூந்தான்யோசேப்புகூர்ந்து அவதானித்துக்கொண்டிருந்தார். நான் பேசிமுடிந்ததும், என்னைத்தன்னருகே இருந்த இருக்கையில் அமரச் செய்து என்னைப் பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்தார். பின்னர் கருத்தரங்கு முடிந்ததும் நாட்டுக் கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அவரின் கலையுலக சேவையைப் பற்றித் தெரிந்து கொண்டதுடன் அன்று முழுவதும் அவருடன் இருந்து மாலை நடந்த நாட்டுக் கூத்து நிகழ்ச்சியை மேடையில் திரைமறைவில் இருந்தவாறு அவர் எவ்வாறுதன் ஆற்றலை வெளிப்படுத்தினார் என்பதை அறிந்து கொண்டேன்.
நாட்டுக்கூத்து கலைஞரான பூந்தான் யோசேப்பு தமது கலைக்குழுவினருடன் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தடவைகள் பல நாட்டுக்கூத்துக்களை நாடெங்கும் மேடையேற்றிப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அபிமானத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

Page 25
46 அந்தனி ஜீவா
நாட்டுக் கூத்தில் நடிகனே பாடி நடிப்பது. மரபு நாடகத்தில் இரவு முழுவதும் அரசன், கதாநாயகன், கதாநாயகி ஆகிய மூன்று பாத்திரங்களையும் ஒருதனிநடிகர்நடிக்கவேண்டும். இதுவே மரபு. இதனை பூந்தான் தகர்த்து எறிந்தார். நாட்டுக் கூத்து கலையில் புதிய மரபுகளை புகுத்தினார். அதாவது ஒவ்வொருபாத்திரத்திற்கும் ஒருவர் என்ற முறையை வகுத்து நடிக்கும் முறையை கூத்தில் கையாண்டார். இதில் வெற்றியும் பெற்றார்.
இதனால் தான் முத்தமிழ் விழாவில் அரங்கேறி "சங்கிலியன்’ நாட்டுக் கூத்தில் முதலில் சில்லையூர் செல்வராசன், மூத்த மைந்தன் திலிபனும், இடையில் சில்லையூர் செல்வராசனும் கடைசியாக பூந்தான் யோசேப்பும் முறையே தோன்றி மிகச்சிப்பாக பாடி நடித்தார்கள்.
நாட்டுக்கூத்து கலைஞரான பூந்தான் யோசேப்பு போன்றவர்களின் அயராத உழைப்பினாலும், ஆற்றலினாலும் இக்கூத்துகள் அழியா வண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சங்கிலியன், ஞான செளந்தரி நாடகங்களில் பூந்தான் பாடி நடித்த பாங்கு பாராட்டக்கூடியது என்று சக கலைஞனைப் பற்றி நடிக மணி வி.வி.வைரமுத்து பொருமையுடன் குறிப்பிடுவார்.
பூந்தான் யோசேப்பு அவர்கள் கலையுலகில் தனி ஒரு வரலாறு
12.O4.2OO9
 

தமிழன்பர் எஸ். எம். ஹனிபா
இன்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி நிலைக்கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் ஊடாகச் செல்ல வேண்டியிருந்து பாதையில் செல்லும் பொழுது எட்டிப் பார்த்தாலே நெஞ்சு திடுக்கிடும் செங்குத்தான மலைககளினூடே பாதைகள் சென்றுகொண்டிருந்தன.ஸ்
இத்தகைய பாதைகளில் புதிதாகச் செல்லும் எம் போன்றவர்களுக்கு அபாயகரமானதாகத் தோன்றினாலும் அப்பிரதேச மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு சர்வசாதாரணமாக அப்பாதைகளைப் பயன்படுத்துவர். இத்தகைய செங்குத்தான மலைகளினூடாகப் பாதைகள் சென்று கல்ஹின்னை கிராமத்தை அடைந்தோம்.
அன்று அந்த ஊர் கிராமத்திற்குரிய சிறப்பியல்புகள் அனைத்தையும் கொண்டு விளங்கியது. அங்கு அனைத்தையும் கொண்டு விளங்கியது. அங்கு முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அங்குள்ளவர்களில் அநேகர்கல்வி கற்று தேர்ந்த பட்டதாரிகளாகவும் வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் அரச ஊளியர்களாகவும் விளங்குகின்றன. அத்துடன் சிறந்த எழுத்தாளர்ககையும் ஆற்றல்மிக்க கலைஞர்களையும் நாணயமுள்ள வணிக மக்களையும் தோற்றுவித்த பெருமை கல்ஹின்னைக்கு உண்டு.
தமிழ்கல்ஹின்னைபிரதேசம் இந்தப் பிரதேசத்தைப்பற்றிபேராசிரியர்உவைஸ்

Page 26
48 அந்தனி ஜீவா
பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த தமிழ் வளர்க்கும் கிராமத்தில் தமிழ் iறம் என்ற பதிப்பகத் உருவாக்கி இலங் பில் மாத்திரமன்றி தமிழ் நாட்டிலும் அறியச் செய்த பெருமைக்குரிய அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா.
ஏன் இங்கே இதைக்குறிபிடுகிறேன் என்றால், தமிழ் மன்றம் மூலம் நூற்றுக்கு அதிகமான நூல்களை பதிப்பித்து வெளியிட்ட சட்டதரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா கடந்த வெள்ளிக்கிழமை (23.05.2009) நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
எல்லோருடனும் இனிமையாக சிரித்த முகத்துடன் உற்சாகமாக உரையாடும் தமிழன்பார் அல்ஹாஜ் எஸ் எம். ஹனிபா. ஒசைப்படாமல் அமைதியாக எந்த வித சலசலப்புமின்றி இலக்கிய பணி செய்தவர்.
தமிழன்பர்ஹனிபாவிடம் ஒருதடவை உரையாடிக்கொண்டிருந்த பொழுது கல்ஹின்னைதமிழ் மன்றம்எப்படி உருவாகயிற்று என்றுகேட்டேன். அதற்கு அவர் முதலாவது ஆண்டில் கொழும்பிலும் இரண்டாது, மூன்றாவது ஆண்டில் பேராதனை பல்கலைகழகத்தில்பட்டப்படிப்பை மேற்கொண்டபொழுது அதிக நேரம் நூல் நிலையத்தில் புத்தகங்கள் படித்துக்கொண்டடிருப்பேன்.
ஒரு நாள் நூல் நிலையத்தில் புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த பொழது தட்டெழுத்தில் இருந்த பிரதி ஒன்றை எடுத்து வாசித்த பொழது இதிலுள்ள அருமையான தகவல்கள் எத்தனை பேர் அறிவார்கள். இது ஏன் அச்சில் வெளிவரவில்லை. சரி இதனை நாமே அச்சிடுவோம் என எழுதியவரை தொடர்புகொண்டேன் என்றார்.
பல்கலைக்கழக பட்டதாரி மாணவராக இருந்த தமிழன்பர் ஹனிபா முதலில் பதிப்பித்தது 'முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ற நூல். இதனை கண்டியில் உள்ள அச்சகத்தில் அச்சிட கொடுத்த பொழது. நூலைவெளியிட பிரசுரத்திற்கு ஒறு பெயர் வைக்கநினைத்தார் மறுமலர்ச்சி மன்றம் என்று பெயர் வைக்க விறும்பாமல் பேராசிரியர் சு.வித்தியானந்தனிடம் கேட்டார் அவர் தமிழ் மன்றம் என்ற பெயரை வைக்கும்படி ஆலோசனை வழங்கினர் தமிழ்மன்றம் இப்படிதான் பிறந்தது.
பல்கலை பட்டதாரி மாணவரான எஸ்.ஏம்ஹனிபா 1953ஆம் ஆண்டு கலாநிதி உவைஸின் நூலை வெளியிட்டார். அதன்பின்னர் அதே ஆண்டு பேராசிரியர் சு. வித்தியானந்தன் எழுதிய இலக்கியத் தென்றல் ' என்ற நூலை வெளியிட்டார்.
தமிழன்பர் ஹனிபா இளம் வயதிலேயே இலக்கியத்தில், ஈடுபாடு கொண்டவர். 1948ஆம் ஆண்டு ‘சமுதாயம்" என்ற சஞ்சிகையை
 

பார்வையின் பதிவுகள் 49
வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக கல்வியை முடித்துக்கொண்டு வெளியேறிய ஹனிபா பத்திரிகைத் துறையில் ஏழாண்டு காலம் தினகரன் பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பின்னர் இலங்கை வானொலியில் செய்திப் பிரிவில் பொறுப்பாசிரியராக பணியாற்றி பின்னர் சட்டத்தரணியானார்.
பாரதி நூற்றாண்டை முன்னிட்டு தமிழன்பர் ஹனிபா ஓர் அரிய பணியினை செய்தார். மகாகவிபாரதியாரைப் பற்றி சிங்கள மொழிபேசும் மக்கள் அறியும் வண்ணம் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சிங்கள மொழியில் வெளியிட்டார். இந்த நூலின் பிரதிகளை தமிழகம் சென்று தமிழக முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடமும் மேலவைத் தலைவர் திரு.மா.பொ.சியிடமும் நேரில் கையளித்தார்.
தமிழன்பர் ஹனிபாவின் இலக்கிய சேவைகளை பாராட்டி பல அமைப்புகள் கெளரவம் அளித்துள்ளன. கொழும்பு கலைச்சங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம் கெளரவித்துள்ளது. கடல் கடந்து தமிழகத்தில் சென்னையில் 1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் நாட்டு முஸ்லிம் கவிஞர் மன்றம் இவருக்கு விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. கலைமாமணிகவிஞர்கா.மு.ஷெரிப்தலைமை வகித்தஇப்பாராட்டுவிழாவில் தமிழ் நாட்டு முஸ்லிம் லீக் தலைவர் ஆ.க. அப்துஸ்ஸமது எம்.பி. பொன்னாடை போர்த்தி, பாராட்டுரை வழங்கியுள்ளார்.
படைப்பாளியான தமிழன்பர் எஸ்.எம்.ஹனிபா தனது தமிழ் மன்றம் மூலம் தன்னுடைய எழுத்துகளை அதிகம் வெளியிடாமல் ஏனைய எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டவர். ஆனால், அவரின் இறுதிச் சடங்கில் அந்த எழுத்தாளர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதையை தெரிவித்தார்களா? என்பது வேதனைக்குரியதாகும். அவர் பதிப்பித்த நூலாசிரியர்களின் இரண்டு பேர்களைத் தவிர வேறு எவருமே கலந்து கொள்ளவில்லை.
ஆனால், மறைந்த எழுத்தாளரின் நிகழ்வில் கலந்துகொள்ளாதவர்கள் சங்கங்கள் தவறாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடதவறுவதுஇல்லை. இனிமேலாவது இதயசுத்தியுடன் ஒரு எழுத்தாளரின் மறைவின்போதுமற்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தவேண்டும்.
31.O.5.2OO9

Page 27
திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்
இன்றைய இளந்தலைமுறையினர் நம்மிடையே வாழும் ஆற்றலும் ஆளுமையுமிக்கபடைப்பாளிகளை தெரிந்துவைத்திருக்கவேண்டும். அச்சு ஊடகங்களைத் தவிர, மின் ஊடகங்களுக்கு இலக்கிய ஆளுமைமிக்க நம்மவர்களைத் தெரியாது. அவர்கள் தகவல்களை தேடித் தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
நமது தலைமுறையில் ஆற்றலும் ஆளுமையும் கொண்ட தமிழ் பேசுபவர்கள் ஆங்கில ஊடகவியலாளர்கள் நன்கு அறிந்துவைத்துள்ள ஒருவர்திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன். இணையத்தளத்தில் இவரைப் பற்றியும் இவரது ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. அண்மையில்'லக்பிம என்ற சிங்கள தினசரியில் அரைப் பக்கங்களுக்கு மேல் கே.எஸ். பற்றிய மிகச் சிறப்பான கட்டுரை வெளிவந்தது.
இன்றுநமது எழுத்தாளர்கள் அனைவரும் திறனாய்வாளர் கே.எஸ்.க்கு நன்றிக் கடன்பட்டுள்ளார்கள். ஆங்கில பத்திரிகைகளில் தமிழ் படைப்பாளிகளின்படைப்புகளை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார். அது மாத்திரமல்ல கலைத்துறையைச் சார்ந்தவர்களில் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
எனது இருபது வயது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனை நன்கு அறிவேன். எழுபதுகளில் எனது முதல் நாடகம் 'முள்ளில் ரோஜா அரங்கேறியது. அதனைப் பற்றி
 

பார்வையின் பதிவுகள் 51
ஆங்கிலப் பத்திரிகைகளில் விரிவான திறனாய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். நாடக குறைநிறைகளை சிறப்பாக சுட்டிக்காட்டி, இவருடைய அரங்கநிர்மாணம் நேர்மையானது என்று குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பில் மேடைநாடகங்கள் பற்றிதமிழும் ஆங்கிலத்திலும் எழுதிய தமிழ் தெரியாத வாசகர்களுக்கு தமிழில் நடைபெறும் அரங்கியல் முயற்சிகளை அறிமுகப்படுத்திய சிறப்பு இவரையே சேரவேண்டும். கொழும்பில்நாடக முயற்சிபற்றியும் நாடக வரலாற்றுஆய்வுக்காக இவரின் திறனாய்வு கட்டுரைகளை அவசியம் படிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் ஆய்வுக்காக தேடும்பட்டப்படிப்பு மாணவர்கள் யார்யாரை எல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால் திறனாய்வாளர் கே.எஸ். பற்றி ஆய்வுசெய்திருக்கலாம் அல்லவா?
இலங்கையில் வெளிவரும் ஒன்பதுக்கு மேற்பட்ட ஆங்கில பத்திரிகைகளில்திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனின் பத்திஎழுத்துகள் இடம்பெறுகின்றன. 2007ஆம் ஆண்டில்சிறந்தஅபூங்கிலபத்திஎழுத்தாளர் என்ற விருதினைப் பெற்றுள்ளார். நமது எழுத்தாளர்கள் சிலர் யார் யாரையோ பிடித்து பாராட்டும் பட்டமும் பெறும் பொழுது, நமது திறனாய்வாளர் ஒதுங்கியே போய்விடுவார். ஆனால் ஒசிஐசி(OCIC) என்ற நிறுவனம் ஆங்கில மொழியிலான சிறந்ததிரைப்படதிறனாய்வாளர் என்ற விருதினை வழங்கியது.
திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்தமிழ், ஆங்கிலபத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். தி ஐலண்ட் என்ற ஆங்கில தினசரியிலும் ஞாயிறு இதழிலும் பிரதிபத்திரிகை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். வீரகேசரியில் இணை பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளார். நவமணி என்ற வார இதழில் ஆரம்பகால பிரதம ஆசிரியர் கே.எஸ். தான் என்பது பலருக்குத் தெரியாது.
பன்முக ஆற்றல் கொண்ட அனைவராலும் திறனாய்வாளர் என்று அறியப்பட்ட கே.எஸ். சிவகுமாரன் அச்சுஊடகங்களில் மாத்திரமன்றி மின டகங்களிலும் தன் ஆற்றலையும் ஆளுமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

Page 28
52 அந்தனி ஜீவா
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை வானொலி என்று அறியப்பட்ட காலம் முதல் இன்று வரை வானொலியோடு தொடர்பு இவருக்குண்டு. அறிவிப்பாளராக செய்திப் பிரிவு ஆசிரியராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பல்வேறு பணிகளை தமிழில் மாத்திரமன்றி ஆங்கில மொழியிலும் செய்திவாசித்ததுடன் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியுள்ளார்.
எழுபது வயதைத் தாண்டிய திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன், இருபது வயது இளைஞனைப்போல ஆர்வமுடன் இலக்கிய கருத்தரங்குகளிலும் நூல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்துகொண்டு இளைய தலைமுறை இலக்கியப் படைப்பாளிகளின் கருத்துகளை ஆர்வமுடன் கேட்கிறார். தன்மனதில் பட்ட கருத்துகளையும் தெரிவிக்கிறார்.
உலக சினிமா பற்றியும் உள்ளுர் சிங்கள சினமா பற்றியும் நன்கு அறிந்துவைத்துகே.எஸ். சினிமா ஓர் அறிமுகம்'அசையும்படிமங்கள் என்ற நூலையும் "சினிமா சினிமா ஓர் உலகம் வலம்” என்ற நூலையும் எழுதியுள்ளார். சினிமா பற்றி அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள இந்த இரண்டு நூல்களையும் அவசியம் படிக்க வேண்டும். கே.எஸ். பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது சில நூல்கள் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளன. தமிழக இலக்கியவாதிகள் மத்தியிலும் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் நன்கு அறிமுகமாகியுள்ளார். எழுத்தாளர் அசோக மித்திரன் போன்றவர்கள் இவரை மிகவும் மதிக்கின்றனர்.
திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் பழகுவதற்கு இனிமையானவர். அமைதியாகவும் ஆழமாகவும் பேசக்கூடியவர். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதம் பேசவும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது பன்முக ஆற்றலை அனைவரும் அறிந்துகொள்ள இவர் தனது "வாழ்வும் பணியையும் பற்றி ய வரலாற்றை எழுத வேண்டியது காலத்தின் தேவையாகும்.
12.09.2OO9

நூலகள் என். செல்வராஜாவின் நூல் தேட்டம்
நூல்தேட்டம் என்ற நூல் தொகுப்பு படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிசமாகும். தனி மனித முயற்சியாக தனது தேடுதல் முயற்சியின் மூலம் நூலகர் என். செல்வராஜா நூல் தேட்டம்" என்ற மகுடத்தில் ஐந்து தொகுதிகளை இதுவரை கொண்டு வந்துள்ளார்.
நூல் தேட்டத்தின் முதல் தொகுப்பு 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. “நூல்கள்" எமது இனத்தின் பண்பாட்டை, கலாசார விழுமியங்களை, அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அறிவேடுகளின்பதிவு எமது தலைமுறைக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் வல்லமைபடைத்தன. அத்தகைய ஒரு வரலாற்றுப் பதிவை ஈழத் தமிழர் தேசியத்தின் அறிவுத் தேட்டத்தின் கனதியை பதிவாக்க முனையும் முடிவில்லாதவொரு நீண்ட பயணத்திற்கான முதல் காலடித்தடம் இங்கே பதியப்பெறுகின்றது.
இது ஈழத் தமிருக்கான ஒரு தேசிய நூல் விவரப்பட்டியல் அல்ல, அத்தகைய ஒரு தேவைக்கான, சிந்தனைப் போக்கின் ஒரு வெளிப்பாடு என்று கொள்ளலாம். ஈழத்துத் தேசியத்துக்கான தனித்துவமானதொரு ஆவணக்காப்பகம், ஈழத் தமிழருக்கான ஒரு தேசிய நூலகம் போன்ற நிறுவன மயப்படுத்தப்பட்ட சிந்தனைகள் வலுப்பெற்ற நூல்தேட்டம் ஒரு வித்தாக அமையுமெனில் அதுவே நம் முயற்சிக்குக் கிட்டிய வெற்றியாகக் கருதுவோம்.

Page 29
54 அந்தனி ஜீவா
இவ்வாறு நூலகர் என். செல்வராஜா நூல்தேட்டம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நூலகர் என். செல்வராஜாவுக்கு பல கனவுகள் உண்டு. இது சம்பந்தமாக இலண்டன் சென்றிருந்தவேளை அவரைச்சந்தித்து உரையாடிய பொழுது அவர் என்னிடம் தெரிவத்த எண்ணங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
நூலகர் என். செல்வராஜாவின் கனவு யாழ்ப்பாண நூலகம் எரியூட்டிய நிகழ்வு அவரை மிகவும்பாதித்தது. விலைமதிக்க முடியாத நூல்களை இழந்து விட்டோம். அதனால் ஈழத்தமிழர்களின் ஏட்டுச் சுவடிகளையும் நூல்களையும் கொண்டதொரு ஆவணகாப்பகம் ஒன்று ஐரோப்பியநாட்டில் அமையவேண்டும் என்பதே இதற்கு புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் உதவ வேண்டும் என்பதேதனிமனிதரால் இதனை சாதிக்க முடியாது. ஒரு கூட்டு முயற்சியாக இதனை செயல்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
இன்று உலகெங்கும் நம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். நூல்கள் சஞ்சிகைகள் என்று வெளியிடுகிறார்கள். பலர் தமிழகத்தின் பதிப்பகங்கள் மூலம் தங்கள் நூல்களை பதிப்பிப்பிக்கிறார்கள். அது மாத்திரமல்ல இங்கு வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை என்று வாரம் ஒரு நூலாவது வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இவ்வாறு வெளிவந்துகொண்டிருக்கும் நூல்களை பற்றி எவ்வாறு தெரிந்துகொள்வது நூலகர்செல்வராஜின்நூல்தேட்டத்தின்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நூல்தேட்டம் தொகுதி ஒவ்வொன்றிலும் ஆயிரம் நூல்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. முதலாவது தொகுதியைத் தொடர்ந்து தொகுதி இரண்டு 2004 இலும் மூன்றாவது தொகுதி 2005இல், நான்காவது தொகுதி டிசம்பர் 2006இல் வெளிவந்துள்ளது. இப்பொழுது ஐந்தாவது தொகுதி வந்துள்ளது.
நூலகள் என்.செல்வராஜாநம்மவர்களின்நூல்விவரங்களைக்கொண்ட நூல்தேட்டத்தை மாத்திரமல்ல'மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் ஒன்றை தொகுத்து வெளியிட்டுள்ளார். மலேசிய சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்கான நூல் விவரப்பட்டியலான முதலாவது தொகுதி. இதில் மலேசிய சிங்கப்பூர் 2081நூல்கள்பதிவுசெய்யப்பட்டுள்ளன. நிறுவனமோ பல்கலைக்கழகமோ செய்யவேண்டிய பணியை நம்மவரான நூலகர் என். செல்வராஜா செய்துள்ளார்.
நூலகர் என். செல்வராஜா தொகுத்துள்ள நூல் தேட்டம் தொகுதிகள் ஒவ்வொரு நூலகத்தில் மாத்திரமல்ல,தனிநபர்களின் நூல் சேகரிப்பிலும், தேடுதல் முயற்சி உள்ளவர்களிடமும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

பார்வையின் பதிவுகள் 55
ஈழத்தில் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நூல் தேட்டம் தொகுதியானது எவ்வகையில் இதுவரை இல்லாத இலகுத் தன்மையை ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதென்பது முக்கியவிடயமாகும். ஏனெனில், எமது இலக்கியச் சூழல் என்பது தனியே யாழ்ப்பாணத்தையோ மட்டக்களப்பையோ மன்னாரையோ வவுனியாவையோ மட்டும் கொண்டதல்ல. அவை யாவற்றோடும் மலையகம் தமிழ் பேசும் முஸ்லிம் என அனைத்தையும் உள்ளடக்கியதுடன், அரசியல், சமூக பொருளாதார கல்வி நெருக்கடிகளினால் தாய் நாட்டை விட்டு நாடோடிகளாகிப் போன புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அனைவரையும் உள்வாங்கியதாக அமைகின்றது.
நூலகள் என். செல்வராஜா தேடல்மிகுந்தவர். நூல்தேட்டம் தொகுதியை தொகுக்கும் பணியினை மட்டும் செய்துகொண்டிராமல், அயோத்தி நூலக சேவைஸ்தாபனத்தின் ஸ்தாபகரான இவர் அந்நிறுவனத்தின் வெளியீடாக பல நூல்களை வெளியிட்டு வருகின்றார். ஆரம்ப - நூலகள் கை நூல், கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும், உருமாறும் பழமொழிகள், "யாழ்ப்பான பொது நூலகம்” ஒரு வரலாற்று தொகுப்பு, சன சமூக நூலகங்களுக்கான கைநூல், நூலக பயிற்சியாளர் கைநூல் இப்படி நூலக கல்விக்குத் தேவையான பல நூல்களை எழுதிபதிப்பித்திருக்கிறார்.
அது மாத்திரமல்ல இலண்டனில் ஒளிபரப்பாகும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன "காலைக்கலசம்" நிகழ்ச்சியில் இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறார். இலண்டன்சுடரொளி சஞ்சிகையில் பயனுள்ள படைப்புகளை எழுதிவருகிறார்.
நூலகர்செல்வராஜ் அவர்களுக்குமலையக எழுத்தாளர்கள்மீது பரிவும், பாசமும் உண்டு. அதனர்ல்மலையகனழுத்தாளர்களைப்பற்றிய"மலையக இலக்கிய கர்த்தாக்கள்” என்ற நூலை வெளியிட்டுள்ளார். நூல்தேட்டம் தொகுதிக்காக இதுவரை பல இலட்சம் இழந்துள்ளார் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே ஓர் இலக்கியதுதுவராக என், செல்வராஜா உலாவருகிறார்."
O2.11.2OO8

Page 30
எம்.சி.என்ற போராளி
ம்ெ.சி.என்று இரண்டெழுத்துகளால் அனைவராலும் அறியப்பட்ட ஒரு சமூகத்தின் அதுவும் சிறுபான்மை சமூகத்தின் விடுதலைப் போராளியாகத் திகழ்ந்த எம்.சி.சுப்பிரமணியம் அமரராகி இரண்டு தசாப்தங்களாகப் போகின்றன.
எம்.சி.இலங்கையில்தோன்றிய சமூகப்போராளிகளுள் ஒருமுன்னோடி முதன்மையானவர். யாழ்ப்பாணமாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டுசமூக வரலாற்றைஎழுதமுயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச்சிரத்தையிற் கொள்ளது.தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலது.
இருபதாம் நூற்றாண்டில் முதல் மூன்று கந்தாயங்களின் வரலாறு இலங்கை வாழ் யாழ்ப்பாண வேளாளர்களின் அதிகாரத்திலும் அந்த அதிகாரத்தினை என்றும் தம்முடன் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளினதும் உபவிளைவான அரசியல் நிலைப்பாடுகளினதும் வரலாறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
இந்த வரலாறு சேர். பொன்னம்பலம் இராமநாதன் படித்த இலங்கையருக்கான ஏப்பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது. தமிழர்களுடைய தலைவர்களெனத் தலைநிமிர்த்தியோர் சைவ வேளாளர்களுடைய அதிகார மையங்களை சிக்காராகப் பிடித்துக் கொள்வதற்கான முயற்சிகளையே தமது அரசியலாக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் தான் எம்.சி.முக்கியத்துவம் பெறுகின்றார். இலங்கைத் தமிழர்களுள் மிக ஒடுக்கப்பட்ட ஒரு பகுதியினரின் விடுதலை நோக்கிய
 

பார்வையின் பதிவுகள் 57
அனைத்து செயற்பாடுகளிலும் கலகங்களிம் எம்.சி.முன்னுதாரணமான ஆழத்தடம் பதித்துள்ளார். என்கிறார்எஸ்.பொ.என்றனஸ்.பொன்னுத்துரை. எம்.சி.யின் சமூக வாழ்வின் போராளித் தன்மையை விரிவாக்கும் எடுத்துக்காட்டும் தொகுப்பு நூலாக எம்.சி.ஒரு சமூக விடுதலைப் போராளி என்ற நூல் படித்து பாதுகாக்க வேண்டிய ஆவணமாகும்.
அகில இலங்கை சிறுபான்மைத்தமிழர் மகாசபையிலும் இவர் முக்கிய பங்கு கொண்டு பல பணிகளை ஆற்றியுள்ளார். தன்னுடைய சமூகத்தினருக்குத்தொண்டாற்றுவதிலேயே தன்னுடைய வாழ்நாளை இவர் செலவிட்டுள்ளார். நான் யாழ்ப்பாணக் கல்லூரியிலேயே படிப்பித்த காலத்தில் அடிக்கடி இவருடைய வீட்டிற்கு செல்வதுண்டு. இவரை வீட்டில் சந்திப்பது அரிது. பலருடைய விடங்களுக்ககாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது இவருடைய வழக்கம். மகன் சந்திரபோஸ் மூலமாக அவருடைய பல்வகைப்பட்ட சமூகத் தொண்டுகள் பற்றியும் அறிய வாய்ப்பேற்பட்டது. இலங்கைதமிழ்தலைவர்களுடையவரலாறுஎழுதப்படும் பொழுது அமரர் எம்.சி. சுப்பிரமணியத்துடைய பெயரும் அவ்வரலாற்றில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை என்கிறார் பேராசிரியர் சண்முகதாஸ்.
எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி என்ற நூலில் அவர் பற்றியும் அவரின் போராட்ட உணர்வு பற்றியும் சமூகத்திற்காக அவர் செய்த சேவை பற்றியும் அவரோடு தொடர்புள்ள பலர் எழுதியுள்ளனர். பொய் வுேஷம் போடும் அரசியல்வாதிகள் மத்தியில் கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடியவர் எம்.சி. சுப்பிரமணியம் என்பதை தொகுப்பில் இடம்பெற்ற எழுத்துகள் ஆதாரமாக அமைகின்றன.
வடபகுதியில்பிறந்துஒருசிறுபான்மை சமூகத்தின்தலைவராக உயர்ந்து, நாடறிந்த அரசியல்வாதியாக, பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராகி உழைக்கும் வர்க்கத்தின் குரலாக, சமூக விடுதலைப் போராட்டங்களில் முன்னணி வீரராக வாழ்ந்து வரலாறானவர் எம்.சி.
எம்.சி.யின் செயற்பாடுகளை, சேவைகளை சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய கடமைகளை நினைவுகூர வேண்டியது அவசியமாகும். அவரது சேவையை பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்த சிங்கள அரசியல்வாதிகள் கூட அங்கீகரித்தனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கூட எம்.சி.யை

Page 31
58 அந்தனி ஜீவா
பெரிதும் மதித்துசிறுபான்மைச்சமூத்தின் முன்னேற்றத்திற்காக எம்.சி.யின் வேண்டுகோள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளார்.
சிறுபான்மைத் தமிழர் மகா சபையை ஸ்தாபிக்கும் பணியில் முக்கியஸ்தராக இருந்தார் எம்.சி. இவர் பின்னர் இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மைத்தமிழர்மகாசபையின்ஊடாகவும் தொழிற்சங்க இயக்கத்தின் ஊடாகவும் கள்ளிறக்கும் தொழிலாளர்களை உரிமைக்காகப் போராட வைத்தார். இத்தகைய போராட்டங்களினால் இவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்தார்கள். இது வடக்கில் வாழ்ந்த சிறுபான்மைத்தமிழ்மக்கள் அங்குநிலவிய சாதிமுறைகளிலிருந்துவிடுபட்டு சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்துவிடுபடவழிவகுத்தது.
நீண்டநெடுங்காலமாக ஒடுக்கப்பட்டுவந்தமக்கள்தாங்கள் அனுபவித்து வந்த சமூக பொருளாதார நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை கொண்டுவர இவரால் வழிநடத்தப்பட்ட புரட்சிகர போராட்டம் பெருமளவு உதவியது.
சிறுபான்மை தமிழ் மக்களுக்கு இவர் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு 1970இல் ஆட்சிக்கு வந்த முீலங்கா, சமசமஜ, கம்யூனிஸ்ட் இடதுசாரி முன்னணி அரசு இவரைப் பாராளுமன்றத்திற்கு நியமன அங்கத்தவராகநியமித்தது இவர் தனதுபாராளுமன்றநடவடிக்கைகளினால் சிறுபான்மைத்தமிழர்களின் உரிமையை மாத்திரமன்றி ஒட்டுமொத்தமான தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலும் முன்னேற்று வதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜகொலுரே குறிப்பிட்டுளார்.
எது எப்படியிருந்த போதிலும் ஒரு சமூக விடுதலைப் போராளியைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணத்தை கொண்டு வந்த எம்.சி.யின் மைந்தர் எஸ். சந்திரபோஸ், தந்தைக்கு செய்ய வேண்டிய கடனை மட்டுமல்ல தாம் சார்ந்தசமூகத்திற்கு செய்யவேண்டிய வரலாற்றுகடமையை செய்துள்ளார்.
28.12.2OO9

காற்று வெளியினிலே.
தலைநகரில் தமிழ் நாடக மேடைக்குத் தங்களை அர்ப்பணித்த கலைஞர்களின்பங்களிப்புஅவர்களின்ஆற்றல்மிகுந்தசாதனைகள்சரியாக பதிவு செய்யப்படவில்லை. இவை இன்றும் எழுதாத வரலாறகவே
இருக்கின்றன.
ஒரு காலகட்டத்தில் கொழும்பில் வானொலியும், மேடையும் போட்டி போட்டுக் கொண்டு நாடகங்களை வளர்த்தன என்பன இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. நாடக அரங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு கூடதேடுதல்முயற்சி இல்லை. இதனால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவில்லை.
வானொலியிலும், மேடையிலும் சாதனை நடத்திய ஓர் இளைஞன், பின்னர்,தமிழகம் சென்றுஅங்கும்வானொலிநாடகத்தில்கால்பதித்து, அதன் பிறகு எண்பதுகளிலிருந்துகிரிக்கெட்நேர்முகவர்ணனையாளனாக உலகமே போற்றும் ஒலிபரப்புக் கலைஞராக கொடிகட்டிப்பறந்தார்.
அவர்வேறுயாருமல்ல. அகல இந்தியவானொலிசுதந்திரதினவிழாவை ஒட்டிமிகச்சிறந்தஒலிபரப்புகலைஞன் என்கிறவிருதுபெற்றசாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் பன்முகம் கொண்ட பண்பட்ட ஒரு கலைஞர். இவர் எஸ்.எம்.ஏ. ஜப்பார் என்கிற நாடகக் கலைஞராகத்தான் இலங்கை வானொலிநேயர்களும், மேடைநாடகக்கலைஞரை அறிவார்கள்.
இத்தகைய ஆற்றல்மிகுந்த கலைஞரை இலங்கையில் நான் சந்தித்தது மிகவும் குறைவு. அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அமைச்சராக இருந்த

Page 32
60 அந்தனி ஜீவா
காலத்தில் கலை, இலக்கியத் துறையின் சாதனைக்குரிய முஸ்லிம் கலைஞர்களை கெளரவித்தபொழுது இவரை இலங்கைக்கு அழைத்துவிருது வழங்கிக்கெளரவித்தார். அந்தச்சந்தர்ப்பத்தில்வெறுமனேவார்த்தைகளின்றி கைலுக்கிக்கொண்டோம்.
மீண்டும் இந்தக் கலைஞர் ஜப்பார் அவர்களை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப்பல்கலைக்கழகமானிடவியல்பிரிவின் அழைப்பை ஏற்று கட்டுரை வாசிப்பதற்காக சென்னை சென்ற பொழுது, இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதே நரத்தில் அங்கு நடைபெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் திருமணத்தில் கலைமாமணியம், நண்பருமான வி.கே.டி.பாலனுடன் கலைஞர் ஜப்பாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்த நாட்களில் கலைஞர் அப்துல் ஜப்பாருடன் நெருக்கமாக பழகவும் நீண்ட நேரம் இலங்கையின் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பற்றி உரையாடவும் வாயப்புக் கிட்டியது. பின்னர் நான் நாடு திரும்பும் பொழுது சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எழுதிய "காற்று வெளியினிலே என்ற நூலை கையெழுத்திட்டுத் தந்தார். விமானத்தில் பயணித்தபொழுதே ஜப்பார் தந்த நூலை ஆர்வமுடன் படித்தேன்.
பின்னர் காற்றுவெளியினிலே'நூலை இரண்டுமூன்றுதடவைபடித்தேன். அரிய தகவல்கள்.படித்து முடித்ததும் பாதுகாப்பாக எனது நூல்களுடன் வைத்திருந்தேன்.
கொழும்புநாடக அரங்கின் வரலாற்றை எழுதுவதற்காக படித்தபொழுது, சாதனைக்குரிய கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கலையுலக பங்களிப்பை பற்றிய சுயவரலாற்றை பதிவு செய்தால் அஃது எத்தகைய பயனுள்ள முயற்சியாக இருக்குமென நினைக்கிறேன்.
"அன்றுநாடக அரங்கில் இடம்பெறுவது என்பது பெரிய விடயம். பிரதான பாத்திரம் என்பது லேசுப்பட்ட சங்கதி அல்லது. சினிமாசாயல் இருந்ததோ தொலைந்தோம் சானாவுக்குபிடிக்காது.தங்களைபெரியசினிமாநிஜங்களின் நிழல்கள்என எண்ணிக்கொண்டு ஒடிசனுக்கு”வந்தகொலைக்கொம்பன்கள் காரணம் அடித்துகுப்புற விழுந்திருக்கிறார்கள் காரணம் நாடக அரங்கில் நடிப்பின்தரம் அவ்வளவுஉயர்வாக இருந்ததுஅன்று'
இன்று இலங்கையில் பிரபலமாக விளங்கும் இளம் கலைஞர் ருரீதர் பிச்சையப்பாவின்தந்தைஎஸ்.பிச்சையப்பாநாடக உலகில்கொடிகட்டிப்பறந்த காலம் அது ஓ.எத்தகைய அற்புதமான கலைஞன்பிச்சையப்பா"மைக்"கின் முன்மாஜாஜாலம்சிருஷ்டிக்கும்.அந்தக்குரல். இவருக்குவாய்த்தஅற்புதமான

பார்வையின் பதிவுகள் 61
ஜோடி ஃபிலோமினா சொலமன். இவர்கள் இருவரும் சேர்ந்து படைத்த சாதனைகள் சினிமா ஜோடிகளைவிட அதிகமாக இவர்கள் பெற்ற பேரும் புகழும்.
பிச்சையப்பா என்கின்ற அந்த கலைஞனுக்கு என் உள்ளத்திலே ஏற்பட்ட மதிப்பு அவர்மறைந்துவிட்டாலும்என்உள்ளத்திலிருந்துமாறாது. மறையாது.
பிச்சையப்பாவைப் போலவே இன்னொரு உன்னதமான கலைஞன் எல்லோரும் பிரியமுடன் "ரொசி' என்றழைக்கும் ரொசரியோ பீரிஸ் இலங்கையர்கான் எழுதிசானாவுக்கு சாகாப்புகழ் தேடிக் கொடுத்த"லண்டன் கந்தையா’வில் இவர் காசிம் காக்கா, ராமதாஸ், ஜவாஹிர் ஆகியோருக்கெல்லாம் முன்னோடி அவர் விதைத்தார் இவர்கள் அறுவடை செய்தார்கள். ரொசி ஒருமுழுமையான கலைஞர்.
இவ்வாறு காற்றுவெளியினிலே என்ற சுயதரிசனத்தில் வானொலியிலும் மேடையிலும் சாதனைபடைத்த கலைஞர்களைப்பற்றி அப்துல் ஜப்பார் அற்புதமாக எழுதியுள்ளார்.
இன்றும் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் அறிமுகமாகியுள்ள ஊடகவியலாளரான அப்துஜப்பார்எழுதியுள்ள காற்றுவெளியினிலே."என்ற நூல் ஒரு வரலாற்று ஆவணமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கலைஞர்களும் எத்தகைய சாதனையாளர்களாக திகழ்ந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.
ஒலி ஊடகத்தின் மூலம் மட்டுமே மக்கள் அறிந்திருந்த அப்துல் ஜப்பார் அவர்களை காட்சி வடிவமாகக் காணும் வாயப்புக்குக் களம் அமைத்தது லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சி. இன்று அவரது நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கு ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்றால் இணையத்தளத்தில் வலம்வரும் வானொலி வேர்ல்ட் தமிழ் நியூஸ் டொட்கொம் லட்சோப லட்ச ரசிகர்களை இவருக்குப்பெற்றுத்தந்துள்ளது. கலைமாமணிவீகே.டி.பாலன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அந்த இணைய வானொலியின் அமைப்பாளரும் இவரே என்று அப்துல் ஜப்பார் பற்றி மற்றும் ஒரு சாதனையாளரான பி.எச்.அப்துல் ஹமீத். ஊடகங்கள் பற்றி தேடுதல் நடத்துபவர்கள் இந்நூலை தேடிப்படிக்க வேண்டியது அவசியமாகும்.
28.09.2008

Page 33
காற்றலையில். வலம் வந்த பெண்மணி
இலங்கை வானொலியில்பகுதிநேர அறிவிப்பாளராகப்பல்லாண்டுகள் பணியாற்றிய தமிழ் நேயர்களின் உள்ளங்களில் அழியாத இடம் பெற்றிருப்பவர்திருமதி விசாலாட்சிஹமீத்.
இவர் பிற்பால்மலையாளியாக இருந்தாலும்,தமிழைப்படித்துவளர்ந்தவர் தமிழ்மொழியின்மேல் அவருக்கிருந்தஅபூழ்ந்தபற்றும்புலமையம் ஆர்வமும் அவரை வானொலிஅறிவிப்பாளராக மிளிரச்செய்தன.
வானொலி அறிவிப்பில் தண்குரல் வளத்தாலும், ஆழ்ந்த அறிவுத்திறத்தாலும் நிகழ்ச்சிகளை வித்தியாசப்படுத்தித் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியில்காற்றலையில்வலம்வந்தபெருமைக்குரியவர்.
இவ்வாறு கவியரசு வைரமுத்து அவர்கள் காற்றில் கதைபேசும் திருமதி விசாலாட்சிஹமீது அவர்களை பற்றி பாராட்டுகிறார்.
"யார் இந்த விசாலாட்சி ஹமீது?" இவரைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் 'பாரதி க்ண்ட புதுமைப்பெண் என்று கூறிவிடலாம். மேடைகளில் பெண்ணியம் பேசி முழக்கமிட்டு விட்டு, வீடுகளில் போலி வாழ்க்கை வாழும் பெண்மணிகளிலிருந்துவேறுபட்டவர், வித்தியாசமானவர் திருமதிவிசாலாட்சிஹமீது.
இலங்கைவானொலிஒருகாலத்தில்மிகசிறப்பானகலைஞர்களை, சிறந்த அறிவிப்பாளர்களை அறிமுப்படுத்தியது. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜபார், இவர் வானொலி மேடை
 

பார்வையின் பதிவுகள் 63
என தனது நடிப்பாற்றல் மூலம் சாதனை புரிந்தவர். இவரோடு வானொலியிலும், மேடையில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வானொலிஅறிவிப்பாளராக அரை நூற்றாண்டு சாதனைபுரிந்தவர்திருமதி விசாலாட்சி ஹமீத். இப்பொழுது இலங்கை வானொலியான ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மலையாள மொழி அறிவிப்பாளராக பணிபுரிகிறார்.
இலங்கை தமிழ் நாடகத்துறைப் பற்றிய பதிவுகளில் பெண்களின் பங்களிப்புகள் சரியாக பதிவு செய்யப்படுவதில்லை. வானொலி, மேடை திரைப்படம், தொலைக்காட்சி என நடிகைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவை எல்லாம் வெறும் காற்றோடு பேசிய கதைகளாகிவிடுகின்றன.
“முதன் முதலாக இலங்கை வானொலியில் நான் பங்கு பற்றிய நிகழ்ச்சி பாலர்நிகழ்ச்சியாகும். கொழும்புவிவேகானந்தவித்தியாலயத்தில்அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் வித்துவான் ஆர்.எஸ். சோதிநாதன் மாஸ்டர். அவர் இலங்கை வானொலியில் பாலர் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். வாரம் ஒருமுறை இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அதனால் அவரது மாணவ மாணவர்களுக்கு அந்தநிகழ்ச்சியில் பங்குபற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அப்பொழுது சங்கீதமும் பயின்றுகொண்டிருந்தபடியால்எனக்குநிகழ்ச்சியில் பாடுவதற்குசந்தர்ப்பம்கிடைத்தது"இவ்வாறுதிருமதிவிசாலாட்சிஹமீத்தனது ஆரம்பகாலஅனுபவங்களை சொல்கிறார். ஆம்அவரதுஅனுபவங்களைஒலி அலையில்..' என எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் திருநெல்வேலியில் இலங்கை வானொலி ரசிகர் மன்றத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
காற்றிலே கலை படைத்ததிருமதி விசாலாட்சிஹமீது அவர்களுக்கு ஒரு பின்னணிஉண்டு. அதை அவரின் எழுத்துக்களிலேயே பார்ப்போம்.
“பாரதத்தாயின் மடியில் பிறந்தன இரு குழந்தைகள். அரபிக் கடல் அரவணைக்கும் சேரநாடு என்றழைக்கப்பட்ட கேரள மாநிலத்தில் ஒரு குழந்தையும் இந்து சமுத்திரம் தழுவிச் செல்லும் சோழ நாடானதஞ்சையில் ஒரு குழந்தையும் வறுமைக்கோட்டின் எல்லையில் நின்று வாடித்தவித்து நின்றன. பாசம் நிறைந்த பாரதத்தாய் பரிவோடு இருகரம் நீட்டிவாரிஎடுத்து உடன் பிறந்த சகோதரியான இரத்தினங்களின் இளவரிசி குபேர அரசி என்றழைக்கப்படும் ஈழத்தாயிடம் வளர்க்கும்படி கொடுத்து விட்டாள். இந்தியத்தாயின் காலடியில் சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி நிற்கும் சிற்றன்னையாம் இலங்கை அன்னை இருவேறு திசைகளில் இருவேறு

Page 34
64 அந்தனி ஜீவா
மதங்களில், இருவேறு மொழிகளில் பிறந்து வளர்ந்த அந்த இருவரையும் வளர்த்து வாழ்வில் ஒன்றாக இணைத்து விட்டாள். இருவேறு மதங்களின் பெயர்களுடைய இரண்டு சமுத்திரங்கள் இந்தியத்தாயின் காலடியான கன்னியாகுமரியில் சங்கமிப்பது போல் இரு வேறு திசை என்றாலும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரே கடலில் அங்கே காட்சிகொடுக்கும் ஆதவனைப்போல் ஒன்றாக சேர்த்து விட்டாள். பாரத்தாய் ஈன்றெடுத்து, ஈழத்தாய் வளர்த்தெடுத்த அந்த இரண்டு உயிர்கள் வேறு யாருமல்ல. விசாலாட்சி, ஹமீது இருவரும்தான்."
இவ்வாறு விசாலாட்சிஹமீதுதன்னைப்பற்றிய விவரங்களை கூறுகிறார். இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வது ஒரு புரட்சிகரமான செயல்பாடு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி, பாரதி கண்ட புரட்சிப் பெண்மணியாக வாழ்ந்து காட்டியுள்ளார்திருமதி விசாலாட்சிஹமீது.
கலைத்துறையில் தனது முன்னேற்றத்திற்கு காரணமானவர் 'சானா என்ற சண்முகநாதன் அவர்களை குறிப்பிடுகின்றார். "கலாநிதி கே.எஸ். நடராஜா எழுதிய கவிதைநாடகம் அந்த கவிதைநாடகத்தில் பேராசிரியர்கா. சிவத்தம்பி அவர்கள்தான்'தோன்றிகவிராயரான”சில்லையூர்செல்வராசன், பிரதியைஏழுதிய கலாநிதிகே.எஸ்.நடராஜா அவர்கள் இவர்களோடுசேர்ந்து இனியகவிதைத்தமிழில்நானும்பேசிநடித்தேன். அந்தமூவரின் பாராட்டை பெற்றேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம். அந்தஅரியசந்தர்ப்பத்தைஎனக்குஏற்படுத்திகொடுத்த'சானா அவர்களுக்கு என்றென்றும் "நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்” என்று இந்த சம்பவத்தை எழுத்தில் பதிவுசெய்துள்ளார்.
இதேபோல நாட்டுக்கூத்து மேதை வி.வி. வைரமுத்து குழுவினரோடு கோவலன்கண்ணகிவானொலியில் ஒலிபரப்பாகியபொழுதுகண்ணகியாக பாடிநடித்துள்ளர். மேடைநாடகமான"பதியூர்ராணி,என்.எஸ்.எம்.ராமையா எழுதி"ஒரு மின்னல்" ஆகிய மேடைநாடகங்களிலும் சிற்பாக நடித்துள்ளார்.
நாடறிந்தபன்முக ஆற்றல்கொண்டதிருமதிவிசாலாட்சிஹமீதுஅவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக ஆரவாரமின்றி அமைதியாக தனது ஊடகப்பணியை தொடர்கிறார்.

ஓர் இலக்கிய ஆளுமை
நம்மிடையே இலக்கிய ஆளுமை மிக்க சிலர் இருக்கின்றனர். அவர்களை நாம் இனங்கண்டுகொண்போமா என்றால் இல்லைஎன்றுதான் சொல்ல வேண்டும். இலக்கியத்துறையில் பன்முக ஆற்றல் கொண்ட ஓர் இலக்கிய ஆளுமைதான் ஏ. இக்பால் என்ற மூத்த இலக்கியவாதி. இவரைப்பற்றி இன்றைய தலைமுறையினர்க்கு சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தும் வண்ணம் "ஏ. இக்பால் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்" என்ற ஒரு படைப்பு வெளிவந்துள்ளது. பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தர்கா நகர் படிப்பு வட்டம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட ஏ. இக்பால் இன்று தன் வாழ்விடமாக தென்பகுதியை சேர்ந்த தர்காநகரை கொண்டிருந்தாலும் இவரது இலக்கிய பங்களிப்பை கடல் கடந்தநாடுகளில் வாழும் நம்மவர்கள் அறிந்து வைத்துள்ளனர். இவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் என்றே கூறவேண்டும்.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏ. இக்பாலை நானறிவேன். அவரது இளமைக்காலம் முதல்முற்போக்கு இலக்கியவட்டத்துடனே அவரது தொடர்பு முகிழ்ந்தது. அவர் தொடர்பு கொண்டிருந்த இலக்கிய ஆளுமை மிக்கவர்களுடன் எனக்கும் தொடர்பு இருந்தது. அவர்களில் மிகமுக்கியமானவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. இலக்கியத்துறையில் ஆர்வமிக்க இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்ந்தார்.

Page 35
66 அந்தனி ஜீவா
"இக்பால் பூசி மெழுகிப் பேசத்தெரியாதவர். உறவினர்களாக இருந்தாலென்ன, உற்ற நண்பராக இருந்தாலென்ன நியாயத்தை தான் பேசுவார். தனக்குச் சரியென்று படுவதை யாராக இருந்தாலும் திடீரென்று சொல்லி விடுவார். அதன் பின்னர் ஒழுங்காக மூச்சு விடுவார். இதனால் அவரைப்பிழையாக விளங்கிக்கொள்வோர் அதிகம். இது அவரது பலமா? அல்லது பலவீனமா? என்று வைத்தியகலாநிதி நஜிமுதீன் அவர்களின் மதிப்பீடு ஒன்றைகல்வியாளர் அல்ஹாஜ்எம்.வை.எம். முஸ்லீம் ஏ. இக்பால் பற்றி எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மதிப்பீட்டில் பல யதார்த்தமான உண்மைகள் உள்ளன. கலை இலக்கியஉலகில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல்,முதுகுசொறியாமல் உள்ளதைஉள்ளபடி எடுத்துச் சொல்ல ஒரு துணிவுவேண்டும். அத்தகையதுணிவுமிக்கவராக ஏ.இக்பால் இலக்கிய உலகில் உலாவந்துள்ளார். அதுவே அவரது பலமாகும்."
எழுபதுகளில் ஏ. இக்பால் எழுதிய மறுமலர்ச்சிதந்தை என்ற வரலாற்று நூல் 1972 ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. இதனால் இலக்கிய உலகில் ஓர் அங்கீகாரம் கிடைத்தது. இக்பால் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. மாணவமணிகளுக்கு வழிகாட்டும் ஆசானாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆசிரியர் பணியோடு இலக்கிய செயற்பாட்டாளராகவும் திகழ்கிறார்.
இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ள இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய புள்ளியாக ஏ.இக்பால் செயற்பட்டுள்ளார். "முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியமான கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் இக்பாலும் வந்திருந்தார். இக்கட்டத்தில் முற்போக்குஎழுத்தாளர்சங்கத்தினுள்ளேநிலவியகருத்தொருமைப்பாட்டையும் அத்தியந்த நட்புணர்வையும் பற்றிக் குறிப்பிட வேண்டும். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுள்ளே சிரேஷ்டர், கனிஷ்டர்களென்றோ பெரிய எழுத்தாளர், சிறிய எழுத்தாளரென்றோவித்தியாசம்கிடையாது. எல்லோரும் சமமாக பேசுவோம். சமமாக (சண்டை போடுவோம்)" விவாதிப்போம், இதனால் முற்போக்கு எழுத்தாளர்களிடையே மிக நெருங்கிய தோழமைப் பண்பு காணப்பட்டது. 1961இல் ஸாஹிராவில் நடந்த மு.போ.எ.ச.மாநாடு அதற்கு ஒரு நல்ல உதாரணமாகும் அம்மாநாட்டின் போது இக்பால் ஒடியாடித்திரிந்து ஓர் இளைஞனாகவே தொழிற்பட்டார். இக்பால்நம்மவருள் ஒருவரானார். எச்.செம்.பி, சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, கைலாசபதி, சமீம் கணேசலிங்கன், சோமு, ஞான, நான் என விரியும்.

பார்வையின் பதிவுகள் 67
சிலவேளை செயற்குழுக்கூட்டம் காலி முகத்திடலில் நடப்பதுண்டு. அப்படியாதொரு கூட்டத்தில்..? இக்பாலின் ஆவணத்தொகுப்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். -
இலக்கிய ஆளுமைமிக்க இக்பால் அவர்களைப் பற்றி நினைக்கையில் எனக்குள் ஓர் பெருமிதம் ஏற்படுகின்றது. வெறுமனே பேனா பிடித்து படைப்பிலக்கியம் மாத்திரம் படைக்காமல் சமூக போராளியாகவே அன்று முதல் இன்று வரை இக்பாலின் செயற்பாடுகள் ஆளுமைகள் அமைந்துள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் அவரை அறியேவன். நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே என சொல்லத் தயங்காதவர் தனக்கு சரியெனப்பட்டதை சொல்லத் தயங்கமாட்டார். இதனால் ஒரு சில இலக்கிய போலிகள், வாய்ச்சொல் வீரர்கள் அவரைக்கண்டு ஒதுங்கி போய்விடுவதுண்டு. இலக்கிய உலகில் பல எதிரிகளை சம்பாதித்தவர் ஏ. இக்பால், அதனால், இன்றும் உயிர்த்துடிப்புடன் இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருப்பவர்.
"ஏ. இக்பால் அய்ம்பது வருட இலக்கிய ஆவணம்" இன்றயை இளைய தலைமுறையினர் படிக்கவேண்டிய ஒருவரலாற்றுஆவணமாகும். இக்பால் என்ற ஆளுமைமிக்கவர் எப்படி உருவானார். பேராசான் கா. சிவத்தம்பி முதல் எழுத்தாளர் மொயின் சமீன் வரை எழுதியிருக்கும் கட்டுரைகளில் வெளிப்படுத்தும் வண்ணங்களும் எண்ணங்களும் வாழும்தலைமுறைக்கு ஒருவழிகாட்டியாகும்.
சமகால இலக்கிய உலகில் சாதனைமிக்கவராக நிகழும் ஏ. இக்பால் தன்னைப் பற்றி, தனது இலக்கிய பங்களிப்பு, செயற்பாடுகள், தான் உருவாக்கியவர்கள் என்று அக்கரைப்பற்று முதல் தர்காநகர் வரை தனது சுயவரலாறை எழுத வேண்டியது மிக அத்தியாவசியமாகும். அதனை அவரிடமிருந்து இலக்கிய உலகம் எழுதிபார்த்துகாத்துக்கொண்டிருக்கிறது.
13. O9.2OO9

Page 36
புரவலர் சில பதிவுகள்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வார இறுதி நாட்களில் புத்தக வெளியீடுகள் அறிமுகங்கள் நடைபெறுகின்றன. தமிழ்ச் சங்கம் ஒரு கலைக்கோவிலாகவே திகழ்கின்றது. கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகம் நமக்கு கிடைத்பெரும்புதையலாகும். நமதுமாணவச்செல்வங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
"இன்றைய உலகின் மனிதன் காலத்தோடு ஒன்றியனவாக இருக்க வேண்டும். அவன் நாளாந்தம் குறைந்தது நான்கு புதினப் பத்திரிகைகளையும் வாராந்தம் இரண்டுவாரசஞ்சிகைகளையும் மாதாந்தம் ஒரு மாதவெளியீட்டையும் வாசிக்கவேண்டும்”
என்று இலங்கையின் புகழ் பூத்த விஞ்ங்ானி கலாநிதி ஆர்தர் சி.கிளார்க் கூறியுள்ளார்.
இவரது இந்தக் கூற்றை வாசித்த பொழுது, எனக்கு முதலில் நினைக்கு வந்தது, நமது புரவலர்தான். புரவலர் காலை எழுந்தவுடன் நான்கு தமிழ் பத்திரிகைகளையும்பார்க்கிறார்படிக்கிறார். ஒருஆங்கிலப்பத்திரிகையையும் ஒருசிங்களப்பத்திரிகையும் புரட்டுகிறார். தமிழ்ப்பத்திரிகைகளில்வெளிவராத செய்திகளைப் படிக்கிறார், படித்துக்கொண்டே தொலைக்காட்சி செய்திகளையும் கேட்கிறார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் புரவலர் ஒருவித்தியாசமான மனிதர். ஒவ்வொருவரையும் புரிந்து வைத்திருப்பவர். ஆனால், எல்லாருடனும் சிரித்துப் பேசுவார். ஒவ்வொரு மனிதரையும் எடைபோட்டு வைத்திருப்பார். ஒருவருக்குஉதவிசெய்யவேண்டும்என்றுநினைத்தால்ஓசைப்படாமல்உதவி செய்துவிடுவார்.
 

பார்வையின் பதிவுகள் 69
ஏன். எதற்காக இதை எல்லாம் எழுதுகிறேன் என்றால் புரவலர் போல இன்னும்பலர்நம்மத்தியில்உருவாகவேண்டும்என்றஆர்வத்தில் புரவலரை தூரத்திலும் இருந்து பார்த்திருக்கிறேன், அவருடன் நெருங்கியும் பழகியிருக்கிறேன். அண்மையில்மலேசியாவிலிருந்துஎழுத்தாளர்மார்க்ரெட் செல்லத்துரை, அவரதுதுணைவர்,தலைநகள்கண்ணன்,இனியநந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் இலங்கை வந்திருந்தார். அவர்களின் நூல்வெளியீட்டிற்கு உதவவேண்டியபொறுப்பு என்மீதுசுமத்தப்பட்டிருந்தது. அதேவேளையில், தமிழக எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எனது
மலேசியாவில் இருந்து வந்தவர்கள் வசதியானவர்கள் அவர்களுக்கு விருந்து ஒன்று கொடுக்கும்படிநண்பர் கலைச்செல்வன் மூலம் புரவலருக்கு தகவல் அனுப்பியிருந்தேன். புரவலர் மெளனமாக இருந்து விட்டார். அவர் இதனை விரும்பவில்லை என நினைத்தேன். திடீரென்று தொலைபேசி அழைப்பு மாலை ஏழு மணிக்கு மலேசியாவிலிருந்து வருகை தந்தவர்களுடன் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வாருங்கள் என்ற அழைப்பு புரவலரிடமிருந்து நானும்நண்பர்கலைச்செல்வனும்மலேசியகுழுவினருடன் ஹோட்டலுக்கு சென்றோம். சிறப்பான விருந்தளித்து அசத்திவிட்டார். அது மாத்திரமல்ல நூல் வெளியீட்டுக்கும் வருகைதந்து பணம் கொடுத்துசிறப்புப் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இப்படிப்பட்ட அரிய பணிகளைச் செய்யும் புரவலரின் இலக்கியப்பணிகள் காற்றோடு காற்றாக, வெறும் செய்தியாக போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் கலைஞர் கலைச்செல்வன் புரவலர் சில பதிவுகள் என்ற தலைப்பில் ஒரு நூலைதொகுத்துள்ளார். 'இலக்கியமுற்றம் என்ற அமைப்பு இந்தநூலைவெளியிட்டுள்ளது. இந்தநூலின்அச்சு, அமைப்பு, அட்டைப்படம் நூலைப் படித்து பாதுகாக்க தோன்றும். நாமும் இது போன்ற ஒரு நூலை வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்,நமதுதமிழ் அமைச்சர்களுக்கு இதுபோன்ற ஒரு நூலை வெளியிட்டால் என்ன என்ற ஆவலைத்தூண்டும்.
"புரவலரிடத்தில் ஓர் அலாதியான குணம் உண்டு. தான் வறுமையோடு கழித்தநாட்களைதீராமகிழ்ச்சியுடன்திரும்பிப்பார்ப்பதுதான்அது நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்தாளர்கள் சிலரின் நூற்களின்முதல்பிரதிகளை வாங்கச் சென்றவருக்குதனது ஆக்கத்தை, நூலுருவப்படுத்துவதில் ஒரு படைப்பாளி படும் அவஸ்தையை அறியமுடிந்தது. உழைப்பால் இருப்புக்கரமாக இருந்த அவர் கைகள் கரும்புக்கரமாக மாறுகிறது. முதற் பிரதிகளின் எண்ணிக்கை

Page 37
70 அந்தனி ஜீவா
470 ஆக உயர்கிறது. என்று குறிப்பிடும் பதிப்பாளர் குறிப்பு இன்னொரு விடயத்தையும் தொட்டுக்காட்டுகிறது
"அடுத்த திட்டம். புரவலர் கலைக்கூடம் அதுவும் ஒரு அற்புதமான ஓர் அறக்கட்டளை நிறுவனமாக சொன்னதை செய்யக்கூடியவர் புரவலர் இரண்டாம் பட்ச கருத்துக்கு இடமில்லை. எனவே 2010ஆம் ஆண்டில் விடியலின் அதிர்வுகள் கலை, இலக்கிய வாதிகளை விழிக்கப் போகிறது" என்கிறது பதிப்பாளரின் குறிப்புகள்.
"புரவலரின் சில பதிவுகள்” எனும் இந்நூல் முத்துக்கள் பத்து என்ற உள்ளடக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. புரவலரின் பூர்வீகம், புரவலரைப் பற்றிய ஆக்கங்கள், புரவலரும் புகைப்படங்களும், புரவலருடனான நேர்காணல்கள், புரவலருக்காக சில கவிதைகள், புரவலருடைய எழுத்தாக்கங்கள், புரவலரின் மார்க்க சிந்தனைகள், புரவலரின் மேடைப் பேச்சுகள், புரவலரின் மறுபக்கம், புரவலரின் அரசியல் கருத்துகள்" என 149 பக்கங்களில் நூல் வெளிவந்ததுள்ளது. நூலில் இடம்பெற்றுள்ள படங்கள் வர்ணத்திலும் கறுப்பு வெள்ளையிலும் இடம்பெற்றுள்ளன.
"தமிழ் எழுத்தாளர்களே வெளியீட்டாளராயும் விநியோகிப்பவராயும் சந்தைப்படுத்துபவராயும் இருக்கும் அமைப்பியலின்தகர்ப்பை முன்னெடுத்த புரவலரின் பணிகள், வெளியீட்டுக் களத்தில் உருவாக்கம் பெற்றுவரும் உருமலர்ச்சியிலும்உருப்பெருக்கஉறுவிசைப்பாட்டிலும்புரவலரது பங்களிப்பு தனித்துவமான பதிவுகளை உள்ளடக்கிநிற்கின்றது”என்கிறார்அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சபா ஜெயராசா.
புரவலரின் சில பதிவுகள் என்ற நூலின் முதற் பிரதியை நாட்டின் முதல்வரான ஜனாதிபதியிடம் வழங்கியபுரவலர், இதன் வெளியீட்டுவிழாவை இலக்கியமுற்றத்திடம்நடத்தும்படிசமர்ப்பித்துள்ளார். இந்தநூல்வெளியீட்டு விழாநடத்தும்வரை மிக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த நூலின்ஆக்கங்களை எழுதியஊடகவியலாளர்களுக்கும் புகைப்படங்களை எடுத்தபுகைப்படப்பிடிப்பாளர்களுக்கும்பலஅபூச்சரியங்களும்அதிசயங்களும் காத்திருக்கின்றன. புரவலர்எப்படிவித்தியாசமானவரோ அதேபோலநூலின் வெளியீட்டுவிழாவும்வித்தியாசமாக இருக்கும்.
15.11.2OO9.

இரு கலா மேதைகள்
bமது சகோதரசிங்களகலைஞர்களின்நாடகங்கள் சர்வதேசதரத்திற்கு உயர்வடைந்துள்ளன. அரங்கின் வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றிய இரு கலாமேதைகள் அண்மையில் நம்மைவிட்டு பிரிந்து விட்டார்கள். காலன் அவர்களை கவர்ந்துவிட்டான்.
அரங்கின் வளர்ச்சிக்கு நான்கு தசாப்தங்களுக்கு மேல் ஆளுமைமிக்க கலைஞர்களாக, பலகலைஞர்களைஉருவாக்கியநிறுவனமாகதிகழ்ந்தஅந்த இருவரின் பங்களிப்புநாடக வரலாற்றில் சிறப்பான பதிவுகளாகும்.
ர்ஆங்கிலபேராசிரியர்மற்றவர்ஆசிரியராகதன்பணி bij
பின்னர்அரசஉத்தியோகத்தராககடமையாற்றிஉயர்ந்தவர். ஆனால்.இந்த இருவரையும் அறிமுகப்படுத்தியதும் அடையாளங்காட்டியதும் நாடக அரங்குதான். இந்த இவருடைய பங்களிப்பை மிகக் குறைவாக மதிப்பிட (plQu IIIgl. -
இரு கலாமேதைகளில் ஒருவர் வீதி நாடக தந்தை என்றழைக்கப்பட்ட கலைஞர்பேராசிரியர்காமினிஅத்தொட்டுவகம,இவர்29.10.2009அன்றுஇரவு அமரரானார். நடிகர், நாடகாசிரியராக இருந்த இவர், இலங்கையில் வீதி நாடகத்தின் முன்னோடிகளனிப்பல்கலைக்கழகத்திலும் பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்திலும் ஆங்கிலபேராசிரியராக பணியாற்றியுள்ளர்.
கலைஞர்காமினி அத்தொட்டுவகம என்பவர் 1938ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம்திகதிகாலியில்பிறந்துள்ளர். காலிரிச்மண்ட்கல்லூரியில்கல்விகற்று தனது பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆங்கில பட்டதாரியாக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி ஆங்கில விரிவுரையாளராக வித்தியாலங்காரபல்கலைக்கழகத்தில்பணியாற்றினார்.

Page 38
72 அந்தனி ஜீவா
ம்பத்தில்நாடகே ஷேக்ஷ்பியரின்மெக்பாத் ரிஸ் நகர வணிகனன், சிங்கிலியர் ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களை விட மக்களிடம் சென்று கருத்துக்களை பரப்ப்கூடிய வீதிநாடகம்என்றஅடிப்படையில்தனதுகுழுவினருடன்வீதிநாடக முயற்சியில் ஈடுபட்டார்.
இவரது வீதி நாடகங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை முன்வைத்தது, மக்கள்கூடும் இடங்களில்பஸ்நிலையம்,சந்தைகளில் இவரது வீதி நாடகங்கள் மக்களிடையே நடித்துக் காட்டப்பட்டன. இவரது வீதி நாடகக் குழுவில் மிக முக்கிய நடிகர்களாக பெயர் பெற்ற நாடக இயக்குநர் பராக்கிரம நெறியல்ல, எச்.ஏ.பெரேரா, பாலித்த சில்வா, நடிகை தீபானி சில்வா போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களோடு சமானிய மனிதராக கலைஞர்காமினியும்பங்குற்றிநடிப்பார்.
கலைஞர்காமினியின் வீதிநாடகங்களைப் பார்த்த பின்னரே எனக்கு வீதி நாடகங்களில் அக்கறையும் ஆர்வமும் ஏற்பட்டது. பின்னர் இந்தியாவின் வீதி நாடக முன்னோடி பாதல்சர்காரிடம் பயிற்சிபெற்று திரும்பியதன் பின்னர் மலையகத்தில்வீதிநாடகமுயற்சிகளில்ஈடுபட்டபொழுது இவரிடம் பலதடவை அறிவுரையும்ஆலோசனையும்பெற்றேன். இவருடன்இணைந்துஒருதடவை அட்டனில்மேதினத்தன் லிழிலும்சிங்கத்திலும்வீதி த்தைநடத்தினேன்.
இரண்டுஆண்டுகளுக்குமுன்னர்2007ஆம்ஆண்டுதேசியகல்வியியல் கல்லூரிமாணவர்களுக்காகதேசியகல்விநிர்வகம்நடத்தியபயிற்சிபட்டறையில் கலைஞர்காமினியுடன் இணைந்து பயிற்சிப்பட்டறையை நடத்தினோம்.
கலைஞர் காமினியின் மறைவு கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவரதுபுதவுடல்கொழும்புகலாபவனத்தில்இறுதிமரியாதைக்காக வைத்திருந்தபொழுதுகலைஞர்கள்திரண்டு வந்து இவருக்கு இறுதிஅஞ்சலி
இவரைப் போன்று சிங்கள நாடக அரங்கின் சிகரமாக திகழ்ந்த ஹென்றி ஜயசேனனன்றகலாமேதைநவம்பர் 11ஆம்திகதிநம்மைவிட்டுபிரிந்துவிட்டார். நடிகர், நாடகத்தயாரிப்பாளார். திரை, மேடை, தொலைக்காட்சி என்று ஆளுமைமிக்க்கலைஞராக, சிங்களஅரங்கின்சிகரமாகத்திகழ்ந்துள்ளார்.
இவர் 1931ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி கம்பஹ மாவட்டத்தில் ஒரு கிராமத்தில்பிறந்தவர். கம்பஹவில்உள்ளலோறன்ஸ்பாடசாலையிலும்பின்னர் நாலந்தாக் கல்லூரியிலும் கல்வி கற்று ஆங்கில ஆசிரியராக நுவரெலியா மாவட்டத்தில்பதியபெலல்வில்பணியாற்றினார். அங்குபணியாற்றியபொழுது

பார்வையின் பதிவுகள் 73
பாடசாலை வளர்ச்சி நிதிக்காக ஜானகி என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றினார்.
பின்னர், உயர்தர தேர்வு எழுதி அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். கொழும்பில் பெருந்தெருக்கள் திணைக்களத்தில பணியாற்றிய பொழுது பல நாடகங்களை எழுதி, தயாரித்து நடித்தார். ஜேர்மன் நாடகாசிரியர் பேர்போல் பிரக்ட்டின் ‘சுண்ணம் வட்டம்’ என்ற நாடகத்தை சிங்கள மொழியில் மொழியாக்கம்? செய்துபிரதானபாத்திரத்தில்நடித்தார். இவரது துணைவியார் மானல்ஜயசேன.முக்கியபாத்திரத்தில்பாடிநடித்தார். இந்தநாடகம்நாடெங்கும் மூவாயிரம்தடவைமேடையேற்றப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்குமாகாணங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.
இன்று அரங்கியல் கற்கும் மாணவர்களுக்கு இவரது "சுண்ணம் வட்டம்" ஹனுவட்டயகதாவு பாடநூலாக உள்ளது.
இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தரமான சிங்களத்திரைப்பபங்களில் நடித்துள்ளார். இலங்கையின் மிக முக்கிய படைப்பாளியான மார்ட்டின் விக்கிரமசிங்களழுதிய'கம்பரலிய என்றநாவலைடைரக்டர்லெஸ்டர்ஜேம்ஸ்பீஸ் தயாரித்தபொழுது அதில்பியால் என்ற முக்கிய கதாபாத்திரத்திலநடித்தார்.
இலங்கைஅரசதொலைக்காட்சியில்தொடராக ஒளிபரப்பப்பட்ட"தூதருவே" என்ற நாடகத்தில் "சுதுசிய்யா" என்ற வயது முதிர்ந்த பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டைப்பெற்றார்.
கலாமேதையானஹென்றிஜயசேனாபத்துக்குமேற்பட்டதிரைப்பபங்களில் நடித்துள்ளர். இந்தத்திரைப்படங்கள்சிலசர்வதேசவிருதுகளைபெற்றுள்ளன. இவருடைய கலைத்துறை வெற்றிக்கு எல்லாம துணை நின்றவர் துணைவியார்மானல் ஜயசேன, சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் துணைவியாரின் மறைவு இவரை பெரும்பாதிப்புக்குள்ளாக்கியது.
இவரதுகலைத்திறமைக்காக இலங்கைபல்கலைக்கழகம்'கலாநிதிபட்டம் வழங்கிக்கெளரவித்தது. இன்றுநாம்சிங்களஅரங்கின்சிகரங்களகதிகழ்ந்த இருகலாமேதைகளை இழந்துள்ளேம்.
22.11.2O09

Page 39
இலங்கையின் இலக்கிய இதழ்கள்
இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அதுவும் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்கள் என்ற சிறு சஞ்சிகைகளே பெரும் பங்காற்றியுள்ளன. இந்த வகையில் இப்பொழுது. வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை முதல் இன்றைய தலைமுறைக்கு பார்க்கக் கிடைக்காத மறுமலர்ச்சி வரை பெரும் பங்காற்றியுள்ளன.
தமிழகத்தில் இலக்கிய வளர்ச்சி காத்திரமான பங்களிப்புச் செய்த ‘மணிக்கொடி இதழைப்போல இங்கு மறுமலர்ச்சி " என்ற சஞ்சிகை இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளது.நாங்கள் மணிக்கொடி பரம்பரை என்று தமிழக முன்னோடி எழுத்தாளர்களான புதுமைப் பித்தன் முதல் பி. ஏஸ். ராமையா போன்றோறை குறிப்பிடுவது போல இங்கும்'மறுமலர்ச்சி'பரம்பரை என்றுவரதர், அ.செ.முருகானந்தம். பஞ்சாட்சரசர்மா போன்றோர்களை குறிப்பிடுவது உண்டு.
தமிழகத்தில மணிக்கொடி எத்தகைய பணிகளை செய்ததோ அதேபோன்று இங்கு மறுமலர்ச்சி ' சஞ்சிகையும் செய்துள்ளது என்று வரலாற்று பதிவுகளாகும். 1940களில வெளி வந்த மறு மலர்ச்சி சஞ்சிகையைப் பற்றி பல இலக்கிய ஆய்வாளர்கள் தாங்கள அறிவுபூர்வமான கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். மறுமலர்ச்சி குழுவினர்கள். வெளியிட்ட 24 இதழ்கள் மட்டும் வெளிவந்த மறுமலர்ச்சி இலக்கிய இதழ் இன்றும் பேசப்படுகிறது.
மறுமலர்ச்சி குழுவினர் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்ட சுவாமி விபுலானந்தர் மண்வாசனை கொண்ட ஆக்க
 

பார்வையின் பதிவுகள் 75
இலக்கியங்களை இலங்கை எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஈழத்து சிறுகதை வரலாற்றை ஆராய்கின்ற அறிஞர்கள் மூல கதையை வாசிக்கலாமயே காலம் காலமாக அச்சிறுகதை பற்றிய தமது கருத்துகளை கூறி வருகின்றனர். தம்மையே கவனத்ததிற்கு கொண்டேன். 1946-1948 கால கட்டத்தில வரதர் என்ற வரதராஜர் குழவினரால் வெளியிட்ட மறுமலர்ச்சி " என்ற சஞ்சிகை ஈழத்தின் சிறுகதைத்துறைக்கு தமிழ் நாட்டின் மணிக்கொடி சஞ்சிகை போன்று பெறும் தொண்டாட்டியது என்பது பல விமர்சகர்கள் கூறி வந்தர்கள் ஈழத்து சிறுகதைத்துறையில் மறுமலர்ச்சி காலம் என்று ஒரு காலம் உருவாகி இருந்தது என்கிறார் எழுத்தாளர் செங்கை ஆழியான்.
அவர் இவற்றை கூறியதுமாத்திரமின்றி சும்மா இருந்து விடவில்லை மறுமலர்ச்சி'குழுவைச் சார்ந்த பஞ்சாட்சர சர்மாவின் மைந்தன் கோப்பாய் ப. சிவத்திடமிருந்து மறுமலர்ச்சி இதழ்களைப்பெற்று அவற்றில் வெளிவந்த 52 சிறுகதைகளைப் படித்து அவற்றல் இருந்து 25 சிறு கதைகள் என்ற தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டார்
இதே போன்று பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரான செ. சுதர்சன்மறுமலர்ச்சி சஞ்சிகைகளில் வந்தகவிதைகளைத்தொகுத்து மறு மலர்ச்சி கவிதைகள் என்ற மகுடத்தில் தொகுத்து பதிப்பித்துள்ளார்.
தமிழக சிறுசஞ்சிகைகளான மணிக்கொடி சரஸ்வதி. கசடதபர. மனிதன் கணையாழி, சிகரம் போன்ற இதழ்கள் தொகுப்புகளாக வெளிவற்துள்ளன. இதைப்போல'மறுமலர்ச்சி 24 இதழ்களையும் ஒரு தொகுப்பாக கொண்டு வந்தல் அதன் முழுப்பரிமாணத்தை அந்த காலகட்டத்தின் இலக்கிய வளர்ச்சியை இன்றையதலைமுறையினர் முழமையாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மறுமலர்ச்சியைப் போல மலையகத்தில் வெளிவந்த மலை முரசு “
பெரும் பணியாற்றியது. இதன் இதழ்களும் பேராதனை பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிட முடியும். இதேபோன்று மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'மலர்' சஞ்சிகையின் பங்களிப்பு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஈழத்தில் வெளிவந்த இதழியல் பற்றி எழுத வருகிறவர்கள் தங்கள் கண்ணில் பட்டதை அடுத்தவர்கள் எழுதியதையும் வைத்துக் கொண்டு

Page 40
76 அந்தனி ஜீவா
ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகிறார்களே தவிர அவற்றைத் தேடிப் பார்த்துப் படித்து எழுதுவது கிடையாது.
ஈழத்துதமிழ் இலக்கிய இதழ்களில் மறுமலர்ச்சி. கலைச்செல்வி. பாரதி மலர், மரகதம்,மல்லிகை. வசந்தம், விவேகி சிரித்திரன், தொண்டன்.குமரன். குங்குமம். தமிழமுது, கற்பகம். மலைமுரசு. தீர்த்தக்கரை, களனி, பூரணி. தாயகம், கொழுந்து. நந்தலாலா. அலை, புதுமை இலக்கியம் என்று குறிப்பிடலாம். இதில் ஒரே இதழ்கள் விடுபட்டு போயிருக்கலாம். - ஒரு சில
இப்பொழதுமல்லிகை"என்ற சஞ்சிகை தொடர்ந்துவெளிவந்த 44 ஆம் ஆண்டு மலரை ஜனவரி2009 இல் வெளியிட்டுள்ளது. ஞானம் ' என்ற சஞ்சிகை பத்தாண்டுகளுக்கு மேலாக மாதந் தவறாமல் வெளியிடுகிறது. இதன்10 ஆவது ஆண்டுமலர் ஒர் இலக்கிய ஆவணமாகும்.
இன்றுநமதுபார்வைக்குதாயகம், யாழ்ப்பாணத்திலிருந்து கலைமுகம், அம்மபலம், ஜீவநதி, மட்டக்களப்பில்லிருந்து சுவைத்திரல், செங்கதிர், தொண்டன், தென்றல், கதிரவன், பெருவெளிதிருகோணமலையிலிருந்து நீங்களும் எழதலாம் அநுராதபுரத்திலிருந்து படிகள். வவுனியாவிலிருந்து மாருதம் கலைமுகம் என்பது தொடர்ந்து வருகிறது. இதனைத்தேடிப்படிக்க வேண்டியது இலக்கிய சுவைஞர்களின் கடமையாகும்.

உழைப்பால் உயர்ந்தவர்
இரண்டு வாரங்களுக்கு முன்னால் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது. யார் யாருக்கு எல்லாம் மாலை சூட்டுவது. பொன்னாடை போர்த்துவதும் நடைபெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த நான் திரும்பிப் பார்த்த பொழுது நான்கு வரிசைகளுக்குப் பின்னால் ஒருவர் அமைதியாக தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார். எனது விழிகள் வியப்பால் விரிந்தன.
மீண்டும் அவரை திரும்பிப்பார்த்தேன், எதுவும் நடக்காதது போல புன்னகை பூத்த வண்ணம் விழா நிகழ்வுகளை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். விழா முடிந்ததும் பலர் அவரை சூழ்ந்து கொண்டு உரையாடுவதையும் கண்டேன்.
அவர் வேறுயாருமல்ல, பெரியாரின் பெருந்தொண்டர் என்றமதிப்புக்கும் மரியாதைக்குமுரியவர். பெரியார் ஈ.வே.ரா., அறிஞர் அண்ணா ஆகியோரின் சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கைகளின்மீது இறுக்கமான பற்றுக்கொண்டவர். அந்த கொள்கைகளின் வழிநடக்கும் குணக்குன்று.
நான் ஏடு தூக்கிபள்ளிசென்றகாலம் முதல் அவரை அறிவேன். அன்று முதல் இன்றுவரை பெரியார் ஈ.வே.ராவின் சுயமரியாதைக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு அதன் வழிநடப்பவராக வாழ்ந்து வருகிறார்.
இவர் வேறு யாருமல்ல, பிறவுண்சன் என்று சொன்னால் போதும், அனைவருக்கும் இவர் பெயர் தெரிந்துவிடும். அவர் பிறந்த மண்ணின் பெருமை எடுத்துச் சொல்லும் பெயருக்கு முன்னால் வேலணை என்ற பெரும் புகழுக்குரிய பெயரை கடியுள்ள வேலணை வீரசிங்கமாவார்.
வேலணை வீரசிங்கம் என்றால் இலங்கையில் கலை, இலக்கிய பத்திரிகை உலகம் நன்கறிந்தபெயர். இங்குமாத்திரமல்லதமிழக முதலவர் கலைஞர் கருணாநிதி, பெரியாரின் பணிகளை முன்னெடுக்கும் கி.வீரமணி போன்றதிராவிட இயக்கத்தவர்கள் இவரை நன்கு தெரிந்துவைத்துள்ளனர்.

Page 41
78 அந்தனி ஜீவா
வரலாற்று சிறப்புமிக்க வேலணை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மண்ணின் மைந்தர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் வேலணை வீரசிங்கம், மற்றவர் ‘சாமி ஐயா" என்றழைக்கப்படும் தினக்குரலின்நிறுவனரான எஸ்.பி.சாமியாகும்.
வேலனைமண்ணின் மைந்தரானவீரசிங்கம் உழைப்பால் உயர்ந்த ஒரு பெருமகனாவார். வாழ்வின் சகல மேடு பள்ளங்களையும் அறிந்தவர். ஆரம்ப காலங்களில் கடை லிகிதராக தன் பணியினைத் தொடர்ந்த இவர் அயராத உழைப்பின் காரணத்தால் சிகரத்தை தொட்டவர்.
இளம்வயதிலேயே பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்து அன்று முதல் இன்று வரை பெரியாரின் தொண்டராக ஏனையோருக்கு வழிகாட்டியாகதிகழ்பவர்.
அறுபதுகளில் வெளிவந்த இன முழக்கம்', 'தென்மராட்சி, பகுத்தறிவு போன்ற பத்திரிகைகளுக்கு பொறுப்பாசிரியராகவும் தாய்நாடு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராக செயற்பட்டதுடன் மறைமலைஅடிகள் மலர், அறிஞர் அண்ணா பிறந்தநாள்மலர், பாவேந்தர் பாரதிதாசன் மலர் வெளியீட்டு விழாக்களை முன்னின்றுநடத்தியுள்ளார்.
நாடகக் கலைஞர் எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் யாழ் கலை அரங்கம் என்ற நாடக மன்றத்திற்கு புரவலராக வேலணை வீரசிங்கம் துணையாக செயற்பட்டதுடன் புளுகர்பொன்னையா, ஆபிரகாம்கோவூரின்நம்பிக்கை ஆகிய நாடகங்களை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளார்.
இலக்கியப் பணிகளிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுத்தாளர்களுக்கு ஓசைப்படாமல் உதவி செய்பவர். முகிலன் என்ற கவிஞரின் கவிதைகளை முகிலன் கவிதைகள்’ என்ற மகுடத்திலும் மண்டூர் அசோகாவின் சிறுகதைகளை 'கொன்றைப்பூக்கள் என்ற பெயரிலும் அ.பொ.செல்லையாவின் காலத்தின் விதி, ஜீவா நாவுக்கரசனின் கழ்வினைச் சிலம்பு, தில்லைச் சிவனின் தில்லைச்சிவன் கவிதைகள், வரணியூரானின் இரை தேடும் பறவைகள் போன்ற வெளியீடுகளுக்கு பின்னணியாக செயல்பட்டவர். ஒவியமாமணி வி.கே.க்கு விழா எடுத்து சிறப்பான மலர் ஒன்றையும் வெளியிட்டு கெளரவித்தார்.
பெரியாரின் சுயமரியாதைக்கொள்கைகளை கடைப்பிடிக்கும் வேலணை வீரசிங்கம் கொழும்பில் பெரியார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முன்னின்று செயற்பட்டவர். தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக? கலந்து கொண்டார். தமிழகத்தில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் "பெரியாரின் பெருந்தொண்டர்' என விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டார்.
இத்தகைய புகழுக்கும் பெரும் மதிப்புக்கும் உழைப்பின் உயர்விற்கும் வேலணை வீரசிங்கத்தின் நிழலாக செயல்பட்டவர் இவரது துணைவியார் அன்னலட்சுமி. உழைப்பால் உயர்ந்த பண்பாளராக, பகுத்தறிவு சிந்தனையாளராகவேலணை வீரசிங்கம் விளங்குகிறார்.

வானொலி சுந்தா
(ର 5Tழும்பு நாடக மேடையின் வரலாற்றை எழுதவேண்டும் என்பதற்காக தகவல்களையும் தரவுகளையும் தேடிய பொழுது வானொலியிலும் மேடையிலும் சாதனை புரிந்த கலைஞர்களைப் பற்றி அறிந்த பொழுது, அந்தக் கலைஞர்களைப் பற்றி தகவல்கள் இன்றைய இளந்தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நாடக வானில் சிறகடித்த மேதைமைமிக்க கலைஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால்பேராசிரியர்கா.சிவத்தம்பியைத்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் ஒருவரே நமக்குச் சாட்சியாக இருக்கிறார்.
வானொலி நாடகத்திற்கு உயிரோட்டம் தந்த சானாவின் காலத்தில் பல கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அப்படி ஒரு அற்புதமான கலைஞர் அறிவிப்பாளர் ரேடியோ சிலோன் சுந்தா என்று அன்போடு அழைக்கப்பட்ட வீ.சுந்தரலிங்கமாகும். இலங்கை வானொலியிலும் இலண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் பணியாற்றிபலரின் பாராட்டைப் பெற்றவர்.
இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக இருந்த வேளையில் அவருக்கு மிகவும் பிடித்தமான நாடகத்துறையில் நடிகராகப் பங்குபற்றி கலாஜோதிசானாவின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
வானொலி சுந்தாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் 'பரா என்று எல்லோராலும் அறியப்பட்டஎஸ்.கே.பரராஜசிங்கம், ஒருதடவைதமிழகத்தில்

Page 42
80 அந்தனி ஜீவா
தங்கிருந்த வீ. சுந்தரலிங்கம் இலங்கைக்கு வந்த பொழுது சோ. சிவபாதசுந்தரத்தின் வேண்டுகோளின் படி, அவரது ஆய்வுக்காக பல ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதை சிறுகதைத் தொகுதிகளை தேடிக் கொடுத்தேன். பின்னர்ஒருதடவைசுந்தாவை சென்னையில்பெசண்டநகரில்அவரதுவீட்டில் சந்தித்து உரையாடினேன்.
ஒலிபரப்புக்கலையைப்போலவேநாடகக்கலையையும்நான் அதிகமாக நேசிக்கிறேன். வானொலி நாடகங்களில் என் நாடகத்துறை ஈடுபாடு தொடர்ந்தது. எனதுநாடகவழிகாட்டிகலையரசு சொர்ணலிங்கம்அவர்களிடம் நாடகம் பயிலும் போதும் நாடகங்களில் நடித்து எனது நாடக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன் என்றார்.
"கலையரசு ஐயாவிடம் நாடக பயிற்சி பெற்ற பொழுது, எங்களது நாடக ஒத்திகையின் போது தனது நாடக அனுபங்களை நட்புரிமையுடன் பகிர்ந்து கொள்வார். அதுமாத்திரமல்ல, நாடக நடிகர்கள் வெறுமனே நடிப்பது மாத்திரமன்றி அரங்கியலுக்குத் தேவையான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்” என்பார்.
இதனால்தனியே நடிப்புடன் மட்டுமன்றிநாடகக்கலைசார்ந்த ஒப்பனை, மேடை நிர்வாகம் என பல துறைகளிலும் அனுபவம் பெற எனக்கு வாய்ப்புக்
இலங்கை பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் நாடகங்கள் போடுவதுண்டு. பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால்,கொழும்புபல்கலைக்கழகத்தில்விஞ்ஞானப்பிரிவுமட்டும் இருந்தது. அங்கே பயின்றவர்கள் தமிழ் நாடகம் நடத்த வெளியில் இருந்து சிலரை அழைப்பதுண்டு.
அப்பொழுது நான் இலங்கை வானொலியில் பணியாற்றினேன், நாடகத்துறையில் இருந்த அனுபவம் காரணமாக அ.ந.கந்தசாமி எழுதிய 'மதமாற்றம் அ. முத்துலிங்கம் எழுதிய 'சுவர்கள் போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்ட இந்த நாடகங்களில் ஒப்பனையாளராக பணியாற்றினேன். ஏற்கனவே, நான் பெற்றிருந்த ஒப்பனை அனுபவம் எனக்கு கைகொடுத்தது என்று சுந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
 

பார்வையின் பதிவுகள் 81
சுந்தாவின்கலையுலகவாழ்வில்மறக்கமுடியாதஒருமுக்கியமானநண்பர் எஸ்.கே.பரராசிங்கம். அவருடைய இசை ஆற்றலையும் ஆளுமையையும் பற்றி சுந்தாவெகுவாக எடுத்துச்சொன்னார்.
இலங்கையின் மெல்லிசையின் மூலவர்களில் முக்கியமானவராகப் புகழ்பெற்றபராவின்அனுபவங்கள்,செயற்பாடுகள்மிகமுக்கியமானவைகள். பராவின் இசை சார்ந்த வானொலிப் படைப்புகள் தமிழக வானொலி, தொலைக்காட்சிகளுக்கும் முன்னோடியானவை. இலங்கையின்முதல்தமிழ் மெல்லிசை தட்டான "கங்கையாளே” பராவின் மெல்லிசைப் பாடல்களிலான ஒலிஓவியம் என மனந்திறந்துதிறமைமிக்கநண்பரை பாராட்டினார் சுந்தா.
சுந்தா என்றழைக்கப்பட்ட வீ. சுந்தரலிங்கம் இலங்கை வானொலியிலும் மேடையிலும் பெற்ற அனுபவங்கள் தமிழ்நாட்டிலும் தொடர்ந்தன.
பின்னர் இலண்டன் பி.பி.சி.யில் தமிழோசை நிகழ்ச்சி தயாரிப்பாளராக சிறப்பாக சேவைசெய்தார். நம்மிடையே வாழ்ந்து மறைந்தகலைஞர்களை நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாகும். இன்றைய தலைமுறையினர்க்கு அவர்களைப் பற்றிய தகவல்களை தெரியவைப்பது நமது கடமையாகும்.
29.03.2009

Page 43
கலைஞனின் கதையல்ல நிஜம்
ஒரு நாடகம் நடக்கும்பொழுது.அந்த மேடையில் அதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட கலைஞரைப் பேட்டி காணும் புதிய நிகழ்ச்சியொன்றை தொலைக்காட்சி சுவைஞர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.
கலாஜோதி சண்முகம் அவர்களே உங்கள் கலை வாழ்க்கையின் ஆரம்பத்தைசுருக்கமாகக் கூறுங்களேன்.
இப்படி தொலைகாட்சி போட்டியாளர் கேட்க "நாடகத்தை கே.பி. இராஜேந்திரம் மாஸ்டருடைய மனோரஞ்சித கான சபாதான் என்னோட குருகுலம் அப்போ உள்ள சபாக்கள் இப்போ உள்ள நாடக மன்றங்கள் மாதிரி"லெட்டர்பேட்"ருல இருக்கல்ல. அப்பா உடைய சபாவுல."
அப்பா.. என்றால்.
மாஸ்டரை நாங்க எல்லாம் அப்பா என்றுதான் கூப்பிடுவோம். அங்கே ஒரு கட்டுக் கோப்பும். கட்டுப்பாடும் இருந்தது. இசை கருவிகள் சீன் செட்டிங்ஸ் உடைகள் ஒப்பனை சாதனங்கள் எல்லாம் மன்றத்திலயே இருக்கும். சாதரணமாக ஒரு நடிகளால் கூட ஒரு வாத்தியத்தை வாசிக்க முடியும், சீன் கட்ட நெருஞ்சி இருப்பாங்க ஒப்பனைகளையும் தாங்களே செய்துகுவாங்க. அதுமட்டுமல்லாமதன்னோட'கெடக்டரை மட்டுமில்லாம. மற்ற கதாபாத்திரங்களோட வசனங்களையும் மனப்பாடம் பண்ணி இருப்பாங்க.ஒரு நடிகருக்கு சுகமில்லாம போயிட்டாக் கூட. சக நடிகர்கள் அந்தப் பாத்திரத்தை செய்யிறதுக்கு தயாராக இருப்பாங்க மொத்தத்திலே நடிக்கிறததுல மட்டுமில்லநாடக சம்மந்தமான எல்லா அம்சங்களிலேயும் தேர்ச்சி பெற்று இருப்பாங்க.
 

பார்வையின் பதிவுகள் 83
இவ்வாறு தொலைக்காட்சியில் ஒரு கலைஞரின் பேட்டி தொடர்கிறது இங்கே நீங்கள் படடிப்பது. அண்மையில் புரவலர் புத்தக பூங்காவினால் வெளியிடப்பட்ட “ஒருகலைஞனின்கதை" என்றநாடகநூலில்ஒருகாட்சியில் இடம் பெற்ற சில வசனங்களே. அவைகள், கலைஞர். கலைச் செல்வன். எழுதி தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றிய "ஒரு கலைஞனின் கதை என்றமேடைநாடகம்சிலஅபூண்டுகளுக்குமுன்அரசநாடகவிழாவில் மேடை யேற்றப்பட்டு பல விருதுகளை வென்றது.
அரை நூற்றாண்டாக கலைத்துறையில் மேடை, வானொலி, தொலைக்காட்சி திரைப்படம் வில்லிசைநிகழ்ச்சி என்றுதன் பங்களிப்பை செய்துள்ளார். இவர் இருபதுக்கு மேற்பட்ட மேடை நாடகம் எழுதியுள்ளார். அரசு இவரது கலைச் சேவையை பாராட்டி முது கலைஞர் விருது வழங்கி கெளரவித்துள்ளது. இது ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கெளரவமாகும். இதுவரை நான்கு கலைஞர்களுக்கே இவ்விருது விழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர்கலைச்செல்வனின் மேடைநாடகப்பிரதிஒன்று "புரவலர்புத்தக பூங்கா"வால் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. “ஒரு கலைஞனின் கதை" என்ற இந்தநாடகநூலில் ஒருகலைஞரின்கதை மாத்திரமல்லகலையுலகில் வாழ்ந்த பலரின் கதைகள் கலையுலக வாழ்வில் நடந்த பல உண்மைகள். கசப்பான சம்பவங்கள் பல வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனை ஒருநாடக மேடையின்வரலாற்றுஆவணமாக கூடகொள்ளலாம்.
இந்த நாடக நூலில் "கதை பிறந்த கதை" என்ற மகுடத்தில் தன் எண்ணத்தைஎழுத்துவடிவில்வண்ணமாகபடைத்துள்ளார்கலைஞர் “கலைச் செல்வன் "இதிலே வரும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களும் நம்மோடு வாழ்ந்தவர்கள். வாழ்ந்து மறைந்தவர்கள். கலையரசு க. சொர்ணலிங்கம், நடிகவேள் லடீஸ் வீரமணி. கலைவேந்தன் முரீசங்கள். நடிக மணி கே. ஏ. ஜாவாஹர், கலாபூஷணம் டீன்குமார் ஆகியோரின் கூட்டு கலவைதான் கலாஜோதிசண்முகம் என்னும்பாத்திரப்படைப்பு. இந்தபாத்திரத்தில்நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது நிஜம்.
அது மாத்திரமல்ல.இந்த நாடக நூலை நாடகத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த கலைத்தியாகி நடிகவேள் லடீஸ் வீரமணி அவர்கட்கு, தான் வாழ்ந்த காலத்தில் மூத்த கலைஞரும் தலை நகரில் தமிழ்நாடக மேடையில் "விஸ்வரூப தரிசனம்" தந்தவர் லடீஸ் வீரமணி. இவருடைய பல நாடகங்களில் கலைஞர் கலைச்செல்வன் நடித்துள்ளார். இவருடன் நாடெங்கும் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

Page 44
84 அந்தனி ஜீவா
கவிஞர் மஹாகவியின் 'கண்மனியாள் கதை “ கவிஞர் பெரியசாமியின் "வாழ்வில் வசந்தம்" போன்றவை பலதடவைகள் மேடையேறியவில்லிசை நிகழ்ச்சிகள்.
கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் அவர்களில் கலைத்துறை பணிகள் பதிவுசெய்யவேண்டியது.காலத்தின் தேவையாகும். இவற்றைதேடி பதிவுசெய்ய வேண்டியது. ஆய்வாளர்களின் கடமையாகும்.
தலை நகரான கொழும்பில் நடைபெற்ற நாடகமுயற்சிகள். நாடகக் கலைஞர்களின்வரலாறுஎழுதப்படாதவரலாறாகவே இறுக்கிறது.நாடகமேதை பம்பல் சம்மந்த முதலியார், டீ. கே.சண்முகம் குழுவினர், கலைவாணர என்.எஸ். கிருஸ்ணன், எம்.ஆர். ராதா, ஆர். எஸ். மனோகர் குழுவினர்கள் இங்கு வந்துநாடகங்களை மேடையேற்றியுள்ளனர்.
இதேகாலகட்டத்தில்சகோதரசிங்களகலைஞர்கள்'டவர்ாஹோல்" நாடக கலைஞர்கள் என அறியப்பட்ட ஜோன், டி. சில்வா டொன் பஸ்ரியன். சார்ள்ஸ் டயஸ் போன்றவர் ஜம்பதுகளில் நாடகங்களை மேடையேற்றிய பொழுது, கொழும்பில் வடக்கில் வாழ்ந்த இராஜேந்திரம் என்ற இளைஞனை ஊக்குவித்தது. ஜோன்.டி.சில்வாஎன்றகலைஞருடன் தொடர்புகொண்டிருந்த இராஜேந்திரம்மாஸ்டர்தலைநகரில்தமிழ்நாடகமேடையின்முன்னோடியாக விளங்குகிறார்.
கலைஞர் இராஜேந்திரம் மாஸ்டர் தனது கலை முயற்சிகளை முன்னெடுக்க 1912 -இல் " மனோரஞ்சித கான சபா" என்ற அமைப்பை நிறுவினார். அதனை ஒறு குறுகுலம் போல நடத்தினார். இந்த கலைகூடத்தில்தான் நடிகவேல் லபீஸ் வீரமணி, கலைஞர் கலைச்செல்வன் போன்ற கலைஞர்கள்முகிழ்ந்தார்கள்.
தலை நகரில் தமிழ் நாடகத்துறைக்கு தங்ககளை அர்பணித்த கலைஞர்களின் வரலாறாக பதிவு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோட்டமாக கலைஞர் கலைச் செல்வன் எழுதிய “ஒரு கலைஞனின் கதை "என்றநூல் அமைகிறது.
கலைஞர்கலைச்செல்வன்தனதுகலையுலக வரலாற்றைசுயதரிசனமாக எழுத வேண்டும். கலைத்துறையில் அரை நூற்றாண்டு காலமாகதனது நாடகப்பணியை இன்று வரை தொடர்ந்துவரும் கலைஞர் கலைச்செல்வன் எழுதினால் அதில் பலதகவல்கள் வெளிச்சத்திற்கு வரவாய்ப்புண்டு.

நந்தவனத்தில் நம்மவர்
ழுெதும் கை எழுதிக் கொண்டேதான் இருக்கும். புகலிடம் தேடி புலம் பெயர்ந்தவர்கள், அதுவும் பேனா பிடித்தவர்கள். பத்திரிகையாளர்கள் எங்கு சென்றாலும் சும்மா இருக்கமாட்டார்கள். அவர்களின் எழுதும் கைஏதாவது எழுதிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அத்துடன் பிறந்தமண்ணையும், தங்களுக்கு வாழ்வளித்த பத்திரிகை துறையையும் மறக்கவே மாட்டார்கள்.
பத்திரிகைத்துறை ஒரு சுகமானதுறைஎன்று அடிக்கடி தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு குரல் பழம் பெரும் மூத்த பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா 2.60Luigi.
நான் பேனா பிடித்து எழுதிய ஆரம்ப காலங்களில் யாழிலிருந்து வெளிவந்த ஈழநாடு, பத்திரிகையில் கொழும்பு நிருபராக பணியாற்றிய பொழுது என் எழுத்துக்களுக்கு களம் அமைத்து தந்தவர் மகான் என்று நாங்கள் அன்போடு அழைக்கும்பத்திரிகையாளர் கே.ஜி. மகாதேவா.
பத்திரிகையாளர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அவசியமானவை. அவர்களின் பத்திரிகைத்துறை பணிகள், அனுபவங்கள் போன்றவை. பத்திரிகைத்துறையில் பணிபுரியவருகின்ற இளையதலைமுறையினருக்கு உதவியாக, வழிகாட்டும் ஒளி விளக்காக அமையும். பத்திரிகையாளரான கே.ஜி.மகாதேவாதனது பத்திரிகைத்துறை அனுபங்களை நினைவலைகள் என்ற தலைப்பிலும், தனது பத்தி எழுத்துக்களை "கதையல்ல நிஜம்' என்ற தலைப்பில் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.
பத்திரிகையாளரான கே.ஜி. மகாதேவா புலம் பெயர்ந்து இன்று திருச்சியில் வாழ்ந்தாலும் தனது பத்திரிகைத்துறை பணியை மறந்து

Page 45
86 அந்தனி ஜீவா
விடவில்லை. "தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா" என்ற மகுடத்தில் தினக்குரல் ஞாயிறு மலரில் அரசியல் கட்டுரைகள் ஒரு மூத்த பத்திரிகையாளரின் தெளிவான அனுபவத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.
இந்த மூத்த பத்திரிகையாளரைதிருச்சியிலிருந்து வெளிவரும் "இனிய நந்தவனம்" என்றமக்கள் மேம்பாட்டு மாதஇதழாக கடந்தபல ஆண்டுகளாக வெளிவருகிறது. இனிய நந்தவனம் இதழின் டிசம்பர் இதழின் அட்டையில் கே.ஜி. மகாதேவாவின் படத்தை பிரசுரித்து அவரைப்பற்றிய ஆவணமாக நந்தவனம் இதழை வெளியிட்டுள்ளது.
"இவரைப்பற்றியும், இவரது பத்திரிகை அனுபவங்கள் பற்றியும் நந்தவனத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாகவே முயற்சி செய்து வந்தேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிக் கொண்டே போனது. அதுவும் நல்லதுக்குத்தான் என்று இப்போது புரிகிறது. வெறும் நேர்காணலை மட்டுமே வெளியிடாமல் அவருக்கான ஒரு சிறப்பிதழாக இந்த இதழை வெளியிடுவது பெருமையாக இருக்கிறது” என்கிறார் நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரன்.
நந்தவனத்தில்நம்மவரான மகாதேவாவைப்பற்றிநம்மவரான எஸ்.பொ. என்னசொல்கிறார்என்றுபார்ப்போம். இன்று இவர் எழுதும்பத்திரிகைகளில், தமிழ்நாட்டில்ஈழம் குறித்துஎழக்கூடியவாதப்பிரதிவாதங்களை நேர்மையாக அறிந்து கொள்வதற்கு கே.ஜி.மகாதேவாவுடைய பத்திரிகையாளர் பணியே துணை நிற்கிறது என்பது உண்மை. தமிழ் நாட்டில் வாழும் "செந்தமிழ் ஞாயிறு" கோவை ஞானியும், முற்போக்கு இலக்கியத்தை முன்னெடுக்கும் தலைமை எழுத்தாளர் பா. செயப்பிரகாசமும், ஈழத்தமிழர் சம்பந்தமான பிரச்சினைகள்குறித்துதமிழ்நாட்டின்நாடித்துடிப்பை மகாதேவாமிகஅழகாக கொழும்பு பத்திரிகைக்கு எழுதுகிறார் என்று என்னிடம் பல தடவைகள் பலர் பாராட்டியிருக்கிறார்கள்.
"இன்றையகாலகட்டத்தில் ஓர் பத்திரிகையாளராக இருந்து ஈழத்துக்கும், தமிழ்நாட்டுக்குமிடையே உள்ள இனப்பிரச்சினை குறிந்தஉணர்வுகளையும் முரண்பாடுகளையும் தமிழ் வாசகர்கள் முன்பாக நேர்மையாக வைக்கும் அவருடைய பணி சிறப்பாக உள்ளது." என்று மகாதேவாவின் பத்திரிகைப் பணிகளை படம் பிடித்து காட்டுகிறார் எம்மவரான எஸ்.பொ.
பத்திரிகையாளரான மகாதேவா கிழக்கின் உதய சூரியனாக திகழ்ந்த சுவாமி விபுலானந்தரின் மண்ணில் பிறந்த வடக்கிலிருந்து வந்த ‘ஈழநாடு

பார்வையின் பதிவுகள் 87
பத்திரிகையில் பணியாற்றி, மலையக மண்ணிலிருந்து வந்த செய்தி பத்திரிகையில் பிரதம ஆசிரியராக பணியாற்றி மீண்டும் யாழ்ப்பாணத்தில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஈழநாடு’ பத்திரிகையில்பணியாற்றி இந்திய அமைதிபடையினர் காலத்தில் புலம்பெயர்ந்து தமிழ் நாட்டை வாழ்விடமாகக் கொண்டுவிட்டார்.
இவர் செய்தி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் கலைஞர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், சி.பா.ஆதித்தனார், மா.பொ.சி. கலைமகள்கி.வா. ஜகந்நாதன், எழுத்தாளர்கு.அழகிரிசாமி,நாடகக்கலைஞர் டி.கே. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து பேட்டியும் கண்டுள்ளார். இவரது நேர்காணல்கள் பரபரப்பான தகவல்களையும், சுவையான செய்திகளையும் கொண்டவைகளாக அமையும். விறுவிறுப்பான நடை இவருக்கு கைவந்த கலையாகும்.
“யாழ்ப்பாணம்மானிப்பாய் வீதியில் அமைத்த"ஈழநாடு கட்டிடத்துக்குள் நாங்கள்எல்லோரும் ஒரு குடும்பமாகச்சீவித்ததைஎன்றுமேமறக்கமுடியாத பசுமையான நினைவுகள்” என இவரது பத்திரிகையுலக நீண்ட கால நண்பரான லண்டனில் வதியும் "புதினம்” ஆசிரியர் ஈ.கே.ராஜகோபால் கூறுகின்றார்.
"செய்தி” ஆசிரியராக பொறுப்பேற்குமாறு மகாதேவாவை 1967இல் அழைத்தேன் ‘ஈழநாடு ஏழுவருட அனுபவம் அவருக்கு கை கொடுத்தது" என்று செய்தி நிறுவனர் மதுரைவாழும் முதியவரான ரா.மு. நாகலிங்கம் குறிப்பிடுகின்றார்.
நந்தவனம் இதழில் மகாதேவாவைப் பற்றி பலர் எழுதியுள்ளார்கள். நீண்டகாலம் பத்திரிகத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஈழத்து மூத்த பத்திரிகையாளரை பற்றிய இந்த பதிவுகள் ஒரு வரலாற்று ஆவணமாகும்.
2O.12.2OO9

Page 46
புது வசந்தம்
தேசிய கலை,இலக்கியப்பேரவையின் 36ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஆய்வரங்கு, ஈழத்து எழுத்தாளர்களின் நூல் கண்காட்சி, புத்தக விற்பனை என பேரவையின் தலைமை நிலையத்தில் பேராசான் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதல் நாள் புது வசந்தம்' என்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் முருகையன்சிறப்பிதழை வெளியிட்டார்கள். நாம் வாழும்காலத்தில்வாழ்ந்து மறைந்தகவிஞர்முருகையன்கொடுத்துவைத்தவர். தேசியகலை,இலக்கியப் பேரவை அவருக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தியது அனைவருக்கும், அதுவும் இலக்கியவாதிகளுக்குத் தெரிந்த விடயம். அது மாத்திரமல்லதேசியகலை,இலக்கியபேரவைவெளியிடும்தாயகம் அவரைப் பற்றிய கட்டுரைகளுடன் அட்டையில் அவரின் உருவப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
கவிஞர் முருகையனின் இந்த சிறப்புக்கு என்ன காரணம். தேசிய கலை, இலக்கியப் பேரவையோடு மரணிக்கும்வரை சேர்ந்து செயற்பட்டுள்ளார். அவர் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனும் பேராசிரியர் கைலாசபதியின் அன்புக்குரியவராகவும் அவரது நெருக்கமான தோழராகவும் இலக்கிய பணிகளில் இணைந்தும் செயல்பட்டுள்ளார்.
'கவிஞர் முருகையனை நினைவு கூரும் பொழுது நாம் ஈழத்து கவிதையின் கொடுமுடியை மட்டுமன்றி நிதானமான ஒரு
 

பார்வையின் பதிவுகள் 89
திறனாய்வாளரையும் மக்கள் சார்பாகவே உலகை நோக்கிய ஒரு சமூகப் பற்றாளரையும் நாடகம், மொழி, விருத்தி, மொழி பெயர்ப்பு எனப் பலதுறைகளிலும் ஆழத்தடம் பதித்த ஒரு தெளிவான ஒரு சிந்தனையாளரையும் நினை கூருவதற்கும் மேலாகச் சுயநலத்தையும் பிரசித்தியையும்தன்முனைப்பையும் நிராகரித்ததன்னடக்கம் மிகுந்த ஒரு உயர்ந்த மனிதனை நினைவுகூறுகிறோம். எனவேதான் கவிஞர் முருகையன் தனியே எவருக்கும் உரியவரல்ல, எல்லாருக்கும் உரியவர். மனித நேயடைய நல்லோர் எவருங்கூசாமல் முருகையனுக்கு உரிமை கொண்டாடலாம்" இவ்வாறு புது வசந்தம் சிறப்பிதழில் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவிஞர் முருகையன் மனிதநேயமிக்க, மென்மையாக நண்பர்களுடன் உறவாடுவார். அவருடன் பழகிய காலங்களில் அவரது உணர்வை புரிந்து கொண்டுள்ளேன். அவரிடம் ஒரு போராளி மறைந்து இருந்ததை அறியமுடிகிறது. சிறுமை கண்டு பொங்கி எழும் குணம் அவருடையது. மற்றவர்களைப் போல "பொய்மை கொண்டவரல்ல, உண்மையை எந்த இடத்திலும் சொல்லத்தயங்காதவர். அதனால் அவரது படைப்புகளைப்பற்றி சரியான விமர்சனங்கள், திறனாய்வுகள் தேவை அமைதியாக எந்தவித சலசலப்பும் இன்றிதனது இலக்கியப்பணியை செய்த முருகையனை பலர் சரியாக இனங்கண்டுகொள்ளவில்லை.
ஆனால், இப்பொழுது அவரது செயற்பாடுகள், பங்களிப்புகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. தேசிய கலை, இலக்கியப் பேரவையின் ஆய்வரங்கில் உரையாற்றிய ஓ.கோகுலரூபனின் உரை நவீன தமிழ் காப்பியங்களின் முன்னோடி.." என முருகையனை மிகச் சிறப்பாக சுட்டிக்காட்டினார். கவிதையுலகின் முத்தான மூவர்களான மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகியவர்களில் முருகையன் எப்படி முதன்மையானவராக திகழ்கிறார் என்பதை மிக அழகாக, காத்திரமாக எடுத்துக்காட்டினார்.
இந்த மூன்று ஆற்றலும் ஆளுமைமிக்க கவிஞர்களில் மஹாகவியே அதிகம் பேசப்பட்டவர். இதற்கு மிகமுக்கியகாரணம், கவிஞரான எம்.ஏ.நுஃ மான் போன்ற பேராசிரியர்கள் மஹாகவியைப் பற்றி உயர்வாக பேசியதே. அதனை பல்கலைக்கழக மட்டத்தைச் சார்ந்த புதிய ஆய்வாளர்களுக்கும் இளந்தலைமுறையினரும் ஒரே வாய்பாடுகளாக பின்பற்றினார்கள்.

Page 47
90 அந்தனி ஜீவா
இப்பொழுது புதிய வசந்தமாக சில இளந்தலைமுறையினர் தங்கள் கருத்துகளை முன்வைக்க வந்திருப்பது நம் கவனத்தை கவரக்கூடியதாக உள்ளது. தேசிய கலை, இலக்கியப் பேரவையின் ஆய்வரங்கில் இளையதலை முறையினருககு ஆய்வுரைகள் நிகழ்த்த வாய்ப்பளித்ததும் பாராட்டக்கூடியது.
இரண்டு நாட்கள் நடந்த ஆய்வரங்கில் பயில் நிலம் பற்றி கருத்துரை வழங்கிய கிருஷ்ணப்பிரியன் இணையத்தில் கலைச்சொல்லாக்கம் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தி மு. மயூரன், மரபும் இலக்கியமும் பற்றி பேசிய வெ. மகேந்திரன், மொழி பெயர்ப்பு பற்றி உரையாற்றிய பொ. கோபிநாத் போன்றவர்களின் உரைகளை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மற்றது இந்த ஆய்வரங்கில் மெள.மதுவர்மன், ச. தனுஜன், ச. சுதாகர், மோகன்ராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தியுள்ளனர். 'புது வசந்தம்", 'பயில்நிலம் போன்ற இதழ்கள் இந்த ஆய்வரங்கின் பொது வெளியிடப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஆய்வரங்குகள் இல்லாதுபோனதால்தான்நமது இலக்கிய முயற்சிகள் தடம் புரண்டு போகின்றன. தனிநபர் வழிபாடுகள் மிகுந்து விட்டன. ஆண்டின் இறுதியில் தேசிய கலை இலக்கியப் பேரவை புதுவசந்த வரவாக நடத்திய இந்த ஆய்வரங்கு தொடர வேண்டும். நடத்தி முடிந்த ஆய்வரங்கு கட்டுரைகள் சபையோர் சொன்ன கருத்துகளை உள்ளடக்கியதாக கட்டுரைகள் நூலாக வரவேண்டியதுமிக அவசியமாகும். கவிஞர் முருகையனின் பன்முக ஆளுமைகள் பற்றி ஒருமுழு கருத்தரங்கு நடத்துவது மிக அவசிமாகும். தேசிய கலை, இலக்கியப் பேரவை முக்கியஸ்தர்களான முனைவர் சி.சிவசேகரம், செயற்பட்டாளர் சோ. தேவராஜா மற்றும் இவர்களோடு இணைந்து செயல்படும் இளையதலைமுறையினர்-பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மறைந்த மக்கள் கவிஞர் முருகையன் சிறப்பிதழாக வெளிவந்த புதுவசந்தம் படித்து, பாதுகாக்க வேண்டிய ஆவணமாகும்.
3O.O1.2O1O

கனகலதாவின் கதைகள்
அண்மையில் தமிழகம் சென்றிருந்த வேளையில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் அழைப்பின் பேரில் ஓர் இலக்கிய சந்திப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்கு பாரதி நூலகத்தில் இலக்கிய சந்திப்பு இடம்பெற்றது. மலையக இலக்கியம். இலங்கைத் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக என பேட்டி ஒன்றை அங்கு வெளிவரும் புது விசை என்ற சிற்றிதழுக்காக பதிவுசெய்தார்கள்.
பின்னர் எங்கள் உரையாடல் பற்றிய கருத்துகள் இடம்பெற்றன. நான் ஏற்கனவே, தொகுத்து தமிழகத்து கலைஞன் பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'அம்மா என்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது ஒருவர். அயல் நாடுகளில் வாழும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்திருக்கிறீர்களா என்றார். எனக்குத் தெரிந்த விபரங்களை சொன்னேன்.
பின்னர்திருச்சியில் புத்தகக்கடை ஒன்றில் வேறொரு மனவெளி என்ற சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் என்ற தொகுதியை வாங்கினேன். விமானநிலையத்தில் அந்தத் தொகுதியை புரட்டிப் பார்த்த பொழுது, நான் தேடிய எழுத்தாளர் ஒருவரின் கதை அதில் இடம்பெறவில்லை. என்ன காரணமோ அந்தபெண் படைப்பாளியின்கதை இடம்பெறவில்லை. அவர்தான் லதா என்றழைக்கப்படும் கனகலதா என்ற பெண் எழுத்தாளர்.
இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்தவர் கனகலதா. சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிய இவர், இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர் தேசிய

Page 48
92 அந்தனி ஜீவா
நாளிதழான தமிழ் முரசில் துணை ஆசிரியராக பணியாற்றி, தற்போது செய்தி ஆசிரியராக பணிபுரிகிறார். கவிதை, சிறுகதை என்று தன் ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இவரது சிறுகதைகள் நான் கொலை செய்யும் பெண்கள் என்ற தலைப்பில் தமிழகத்தில் "காலச்சுவடு” பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்றறிந்து எனது எழுத்தாள நண்பரான பா.ஜெயப்பிரகாசம் மூலம் இந்தத் தொகுதியைப் பெற்றுப் படித்தேன். கனகலதாவின் கதைகள் மூலம் அவரைப்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இலங்கைத் திருநாட்டில் பிறந்த பெண் படைப்பாளியான கனகலதா இன்று சர்வதேசம் அறிந்த ஒரு எழுத்தாளர். இந்திய சாகித்திய அகடமி வெளியிட்ட 'கனவும் விடிவும்" என்றதற்கால பெண் கவிஞர்கள் தொகுப்பில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு தீவெளி 2003இல் வெளிவந்தது. இரண்டாவது கவிதைத் தொகுப்பான பாம்புக் காட்டில் ஒருதாழை 2004 இல் வெளிவந்தது. நான் தற்கொலை செய்யும் பெண்கள் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
இவரது முதலாவது சிறுகதைத்தொகுப்பிற்கு 2008ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருது கிடைத்துள்ளது. இது நமது தேசிய சாகித்திய விழா விருதைப் போன்றது. நான் கொலை செய்யும் பெண்கள் எனும் சிறுகதை தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
“கவிஞர்கள் கதாசிரியர்களாக மாறும் பொழுது, கதையின் மொழி மாறுகிறது. அதன் உருவமும் ஓட்டமும் பல புதுப்பிரதேசங்களும் இட்டுச் செல்கின்றன. உறவுகள், பிரிவுகள் நட்பு, மதம், வன்முறை, மரணம் என்று வாழ்க்கையின் பல தளங்களில் புதைந்திருக்கும் கொடூர உண்மைகளை சிங்கப்பூரை களமாக்கி எழுதுகிறார் கனகலதா. நிதர்சனமாக தெரியும் பிரம்படித் தழும்புகளும் பசியும் ஐயுங்களும் தனிமையும் அலைச்சலும் உளைச்சலும் சோர்வும் கதைகளாகின்றன. வறுமை, வேலை, குடிஉரிமை, மதஅடையாளம்ப்ோன்ற பல்வேறு விடயங்களால் செலுத்தப்பட்டுதரையில் கால்பதிக்க முடியாத ஓர் அறுபட்ட தன்மையுடன் நடமாடுகிறார்கள். இவர் படைப்பில் வரும் நபர்கள், கர்வத்துடன் எல்லாவித வாழ்க்கை நிலைகளுக்கும் தீர்வுகளைக் கூறும் படைப்பாளியாக இல்லாமல் தன் கதாபாத்திரங்களை அத்திரத்திலேயே உழலவிடுகிறார் கனகலதா. இந்த இருண்மை உலகிலும் பெண்களிடையே நட்பு நயத்துடன் கூடிய சில

பார்வையின் பதிவுகள் 93
உரையாடல், எதிர்பாராத கணத்தில் வெளிப்படும் அன்பு உன்று சில ஒளிகீற்றுகள் உள்ளன. அவை இருளிலிருந்துவெளியே வரும்பாதையைச் சுட்டிக்காட்டுகின்றன." என்று மூத்த பெண் படைப்பாளியான அம்பை இவ்வாறு கனகலதா கதைகள் பற்றி குறிப்பிடுகின்றார்.
கனகலதாவின் கதைகள் பெண்ணின் மனஉணர்வுகளை மிகநுட்பமாக வெளிப்படுத்துகின்றன. இவரது அடையாளம் என்ற முதலாவது கதையில் சிங்கப்பூரில் வாழும் ஓர் இந்தியப்பெண்தன் அடையாளத்தைநிலைநிறுத்த அவள் படும் துன்பம் சித்தரிக்கப்படுகின்றன.
“இங்கே ஏன் யாருமே தனக்கு நெருக்கமாயில்லை. ஒரு வேளை தன்னால்தான் இந்த ஊர் மக்களை, அவர்கள் வாழ்க்கையை நெருங்க முடியவில்லையோ. இந்த மண்ணோடு ஒட்ட முடியவில்லையோ என்று யோசித்துக்கொண்டே மணிபர்சைத்திறந்தாள். சிவப்புநிறத்தில் சிங்கப்பூர் குடியுரிமை அட்டை வாய் நிறைய புன்னகையோடு அவர் படம் "ஐ யெம் சிங்கப்பூரியன் அவளால் மன உணர்வுகளை வெளிப்படுத்துவது மிக சிறப்பாக உள்ளது" நாளைக்கு திங்கட்கிழமை இரண்டு நாள் விடுமுறை சுகத்தில் பிள்ளைகள் வழக்கத்தை விட அடம்பிடிப்பார்கள். அவர்களை கிளப்பி அனுப்புவதற்குள்ளாகவே சக்தி எல்லாம் தீர்ந்து விடும். இப்படி கதையை நகர்த்திச் செல்கிறார். இன்னொரு கதையில் என் தமிழ் எழுத்துகளின் வடிவப் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. என்னால் அவற்றை ஓரளவு வாசிக்க முடியும். நீங்கள் அதைப் பழகிக் கொண்டு எனக்கும் என் மகளுக்கும் அவற்றை எழுதச் சொல்லித் தரவேண்டும். எழுந்து வந்து வெளியை நோக்கினால் அறையின் குளிர் ஜன்னல் கண்ணாடியில் படர்ந்திருந்தது. நீர்ப் படிவத்தில் தன் பெயரின் முதல் எழுத்தை சுட்டு விரலால் எழுதிப்பார்க்கத்தொடங்கினாள். என்கிறார்
தமிழுக்கு அமுதென்று பேர் என்ற கதையில்
நான் கொலை செய்யும் பெண்கள் என்ற கதைகளை படித்த பொழுது இவரது கவிதைத் தொகுதிகளைத் தேடிப் படிக்க வுேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.
O6. O9.2OO9

Page 49
அயலகத் தமிழறிஞர்கள்
முன்று மாதங்களுக்கு முன்பு தமிழகம் சென்றிருந்த பொழுது எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்தின் அழைப்பை ஏற்று புதுச்சேரிக்கு சென்றிருந்தேன். புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த மண். மகாகவி பாரதிநடமாடிய பூமி. அங்கு இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கியசந்தியில் இலங்கைதமிழ் இலக்கிய வளர்ச்சிபற்றியும் இங்கு வெளிவரும் நாளிதழ்கள். இலக்கிய சிற்றேடுகள் பற்றியும் கலந்துரையாடலின் போது சொல்லவேண்டிய தேவை ஏற்பட்டது.
இலக்கியசந்திப்பிற்கு பின்னர் மறுநாள் கலாநிதி மு.இளங்கோவனும் சீனு தமிழ்மணி என்பவரும் என்னைச் சந்தித்தனர். புதுச்சேரிபாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுரியில் தமிழ் விரிவுரையாளராக பணிபுரியும் முனைவர் (கலாநிதி) மு.இளங்கோவன்தான்நடத்தும் வலையத்தளத்தில் பதிவுக்காக என்னை பேட்டி கண்டதுடன் அவர் எழுதிய இரண்டு நூல்களும் படித்து பாதுகாக்க வேண்டியவை.
அவர் தந்த நூல்களில் ஒன்று" ஆலயத்தமிழறிஞர்கள்" என்ற நூல். அந்தநூலில் 30 தமிழறிஞர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 11பேர் நம்மவர் தாயகத்தைசார்ந்ததமிழறிஞர்கள்.
அயலகத் தமிழறிஞர்கள் என்னும் பொருளில் பல ஆண்டுகளாக எண்ணிய எண்ணம் செயல் வடிவம் பெற்று இன்று நூல்வடிவம் கண்டுள்ளது. பல இரவுகள் உழைத்து எழுதிய இந்தஅபூக்கங்கள்எதிர்காலத் தமிழினத்திற்கு ஒரு கருவி நூலாய் அமையும் என்று நம்புகின்றேன். அயலகத்து அறிஞர்கள் சிலரின் வாழ்வியலை முற்றாக எழுதநினைத்தும்
 

பார்வையின் பதிவுகள் 95
சில பொழுது தரவுகள் கிடைக்காததால் சுருக்கமாக எழுத நேர்ந்துள்ளது. அரும்பெரும் பணிகள் செய்த அவ்வறிஞர் பெரு மக்களின் வாழ்வியலை முழுமையாகப் பதிவேறாமல் போனமைக்கு மிகவும் வருந்துகிறேன் "இவ்வாரு நூலாசிரியர் மு.இளங்கோவன்முன்னுரையில்குறிப்பிடுகின்றார்.
அயலகத்தமிழறிஞர்கள் என்றநூலில் முதலாவது இடம்பெற்றிருப்பது இராபர்ட்டு கால்டுவெல் (89) என்ற அறிஞர் " உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன என்கிறார்.
கார்ல்மார்க்சின்"மூலதனம்" எனும்நூல். அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அது போலத் தமிழக வரலாற்றில் தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட்டு கால்டுவெலின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் "எனும் நூலாகும். அந்நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்கு காரணம்தமிழர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தையும் அந்நூல் பாச்சியமையே ஆகும் என்கிறார்.
அதேபோல இரண்டாவது கட்டுரையில் அயல் நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு வந்து தமிழ் தொண்டு செய்தவர்களுல் அறிஞர் போப் அடிகளார் குறிப்பிடத்தகுந்தவர் என்கிறார். அடுத்து அமெரிக்காவுக்கு கல்வியின் பொருட்டும். பணியின் பொருட்டும் சென்று தமிழை அமெரிக்க உள்ளிட்ட பிற மொழியினர்க்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ்இலக்கியம் பரவ காரணமாக இருந்த ஏ. கே. இராமனுஜத்தின் பணிகளை அறிமுகப்படுத்துகிறார்.
இந்த நூலில் ஐந்தவதாக நாமெல்லோரும் நன்கறிந்த உலக தமிழாராய்ச்சிக்கு வித்திட்ட நம்மவரான வணக்கத்திற்குரிய சுவாமி தனிநாயகம் அடிகளரை அறிமுகப்படுத்துகிறார்."இனிது அறியப்பட்டுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழிப் பயிற்சியுடையவர்களே ஆவார்.அப்பெருமக்களைத்தமிழின் பால் ஈடுபாடு கொள்ள அதற்குறிய வாய்ப்புகளை சூழல்களை உருவாக்கியவர்களுள் தலைமையானவராகத்தனிநாயகம் அடிகளாரை குறிப்பிடலாம்."
உலகமெங்கும் சென்று தமிழபரப்பிய அடிகளாரின் இறுதிபுத்தாண்டு வாழ்கை இலங்கையில் அமைந்தது. தனிநாயகம் அடிகளார்நினைவாகத் திருச்சிராப்பள்ளியில் அருட்திரு.அமுதன் அடிகளார் அவர்களே இதழியல்

Page 50
96 அந்தனி ஜீவா
கல்லுரி நடத்திவருகின்றமையும் அவர்தம் புகழை நிழைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
அயலகத்தமிழறிஞர்கள் ' என்ற இந்த நூலின் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வாழ்கின்ற ஈழத்து பூராடனர்.தமிழகம் நன்கு அறிந்த பேராசான் க. கைலாசபதி,பேராசிரியர் கா.சிவதம்பி கலாநிதிநா.சுப்பிரமணியன். பேராசிரியர் அ. சண்முகதாஸ், மனோன் மணி சண்முகதாஸ் பேராசிரியர். சி. மெளனகுரு. அறிஞர் சிவகுருநாதப் பிள்ளை. ஆ. வேலுப்பிள்ளை கலாநிதி எம். ஏ. நுஃமான் போன்றதம் ஈழத்திருநாட்டைதாயகமாக்கொண்டதமிழறிஞர்கள் இந்நூல் இடம்பெற்றுள்ளது.
இந்நூலில் இடம்பெற்ற இலங்கையில் பிறந்த தமிழறிஞர்களை நான் நேரடியாகவே அறிவேன். அவர்களுடன் உரையாடியும் உள்ளேன். ஆனால் ஒரேஒருவரை மட்டும் அறிமுகம் இல்லை அவர்தான் அறிஞர் சிவகுருநாதப்பிள்ளை. இவரைப்பற்றிய குறிப்புகளை ஆர்வமுடன் வாசித்தேன்.
"அறிஞர் சிவகுருநாதப்பிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியில் 1942 இல் மே மாதம் பிறந்தார். 1980 இல் லண்டன் கோல்டு சுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றார் 1985 இல் ஆசியர்களுடன் கணிப்பொரியைப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டார். பல நாடுகளுக்குச் சென்று தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பது தொடர்பில் பல கட்டுரைகளைக் கருத்தரங்குகளை வழங்கியவர் என்கிறார் நூலாசிரியர் இளங்கோவன்.
"அயலகத்தமிழறிஞர்கள்” என்றநூலை தந்துள்ள மு.இளங்கோவன் உலக மொங்கும் வாழும் தமிழர்களுடன் இணையம் மூலம் தொடர்பு உள்ளவர். இவர் எழுதிய எழுதும் கட்டுரைகள் இவரது மின்தமிழ் இதழிலும் வெளியிடுவது வழக்கம். அதனை வேறு இணைய வலைத்தள பதிவாளர்களும் தங்கள் இணையதத்தளங்களில் மறுபதிவுசெய்து உலக அளவில் பரப்புகின்றனர். முனைவர் மு. இளங்கோவனின் இலக்கிய பணிதொடர வாழ்த்துவோம்.
O9.O.5.2OO

காலத்தை வென்ற கலைஞர்!
5லைஞர்கள் காலத்தை வென்றவர்கள். கலைத்துறையில் அதுவும் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் ஒரு தலைமுறையினரின் முன்னோடியாக, அரை நூற்றாண்டுக்கு மேலாக அரங்கியல் கலைஞராக விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகவேள் லடீஸ் வீரமணியாகும். கலையரசு சொர்ணலிங்கத்தால் 'எனது வாரிசு" எனப் பகிரங்கமாக பாராட்டப்பட்டவர் என்ற பெருமையும் இவரையே சேரும்.
தலைநகரான கொழும்பில் தமிழ் நாடக மேடையின் முன்னோடியும் முதல்வருமான கலைஞர் இராஜேந்திரமாஸ்டரின் மனோரஞ்சிதகானசபா என்ற குருகுலத்தின மூலம் உருவானவர் நடிகவேள் லடீஸ் வீரமணி.
அரை நூற்றாண்டு காலமாக தமிழ் நாடக மேடையின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்த நடிகவேள் 1994ஆம் ஆண்டு 5ஆம் திகதி அமரானார்.
கொழும்பு 13இல் ஜிந்துப்பிட்டி என்றழைக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் கலைவளர்த்த மனோ ரஞ்சித கானசபா விருந்து பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். அவர்களில் முதன்மையானவர் நடிகவேள் லடீஸ் வீரமணி என்பவர்.
இவரதுமுதல்நாடகமானமல்லிகா 1945ஆம் ஆண்டு அரங்கேறியதாக அறிகிறோம். ஆரம்ப காலங்களில் வாடகைக்கார் ஓட்டும் பணியினை செய்தாலும்பிற்காலத்தில் நாடகத்தையேதன் வாழ்வாகவும் தொழிலாகவும் கொண்டிருந்தார். நாடகமேடையின் சகல நுட்பங்களையும் அறிந்த அவர் ஒப்பனை முதல் காட்சி அமைப்பது வரை சகல துறைகளிலும்

Page 51
98 அந்தனி ஜீவா
கைதேர்ந்தவராக இருந்தார். இன்றுசிறந்தநடிகராகத்திகழும்பலர் இவரின் நாடகப் பாசறையில் பயின்றவர்களே என்பது வரலாற்றுப் பதிவாகும்.
நான் கொழும்பில் பம்பலப்பிட்டி சென்.மேரிஸ் பாடசாலையின் இறுதி வகுப்பில் படிக்கும் பொழுது நடிகவேள் லடீஸ் வீரமணி எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் வாடகை காரோட்டும் சாரதியாக பணியாற்றிக் கொண்டு நாடகங்களில் நடித்து வந்தார்.
ஒருதடவை அவரோடுபேசிக்கொண்டிருக்கையில் அவரதுகலைத்துறை ஆர்வம் எவ்வாறு எனக் கேட்டேன்.
சிறுவயதில் எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நடிக்க வேண்டும் பாடவேண்டும் அதைப் பார்த்து பிறர் பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதனால் யாரையாவது இமிடேட் பண்ணி , அவரைப்போலப் பேசி நடித்துக் காட்டுவேன். இதனால் என்னைத் தட்டிக் கொடுத்து பலர் உற்சாகப்படுத்துவார்கள். இந்தஅபூர்வமேஎன்னுள்ளத்தில்வளர்ந்துவந்தது. எனது கலையார்வத்தை எப்படி வளர்த்துக் கொள்வதென்று தெரியாது. கொழும்பில் மேடையேறும் நாடகங்களைப் பார்ப்பேன். அது எனக்கு உற்சாகம் தராது. சினிமாவையே பிரதி பண்ணி நாடகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள் அதனால்.எனது கலைப் பசியை தீர்க்க நானே சுயமாக நாடகங்களை எழுதினேன். நடித்தேன்.என்றார்.
"நாடக மேடையில் உங்கள் முன்னேற்றத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "சிப்பியிலே முத்து, சேற்றிலே செந்தாமரை, குப்பையிலே குன்றுமணி, பாதையிலே வீரமணி என்றிருந்த என்னை உயர் மட்டத்திற்குக் கொண்டு வந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. இன்னும் இருவரையும் நான் நினைவுகூறவேண்டும். அவர்தான் நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் மற்றவர் இலங்கையில் வாழ்ந்த பெரியாரின் "பெரும் தொண்டர் நாவலர்” ஏ. இளஞ்செழியன். இவர்களின் வழிகாட்டலில் நான் வளர்ந்தேன் என்கிறார்."
ஆரம்ப காலங்களில் நாவலர் இளஞ்செழியன் நடிகவேள் லடீஸ் வீரமணியின் நாட்கங்களான நாடற்றவன், கங்காணியின் மகன் ஆகிய நாடகங்களை அரங்கேற்ற மலையகத்தில் பல இடங்களிலும் முன்னின்று செயற்பட்டதுடன் இவரின் நடிப்பாற்றலுக்காக நடிகவேள்” என்ற பட்டத்தையும் வழங்கி கெளரவித்தார்.
நடிகவேள் லடீஸ் வீரமணி தாய்நாட்டு எல்லையிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன், சலோமியின் சபதம், கலைஞனின் கனவு, மனிதர் எத்தனை

பார்வையின் பதிவுகள் 99
உலகம் அத்தனை, குடுமிஅங்கிள், ஊசியும் நூலும் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தியும் நடித்தும் உள்ளார்.
நடிகவேளின் ஆளுமையின் வெற்றிக்குக் காரணம் நாடகநெறியாளர் சுஹைர் ஹமீடின் தொடர்புநடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்பாற்றலைக் கண்டு அதனை சரியான முறையில் நெறிப்படுத்தினால் அவரின் ஆற்றலையும் ஆளுமையையும் சிறப்பாக வெளிப்படுத்தவாய்ப்பு ஏற்படும் என நம்பினார்நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட்முறையாக அரங்கியலை பயின்றவர். ஆங்கில மொழியிலும் புலமையுள்ளவர்.
நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட்டின் நெறியாள்கையில். பொம்மலாட்டம், வாடகைக்கு அறை, நந்தவனத்தில் ஆண்டிகள், வேதாளம் சொன்ன கதை, ரகுபதி ராகவா போன்ற நாடகங்களில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார்.
1960களுக்குப் பின் மேடையேறிய நாடகங்களில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் மதமாற்றம் ஒரு மைல்கல் எனப் பாராட்டப்பட்டது. அதனை இரண்டாவது தடவை சிறப்பாக நெறியாள்கை செய்தவர் நடிகவேள் லடீஸ் வீரமணி, இந்த நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்தவர் கவிஞர் சில்லையூர் செல்வராசன்.
இவரிடம் இன்னொரு மிகப்பெரிய ஆற்றல் வில்லிசைத்துப் பாடுவது. அறிஞர் அ.ந. கந்தசாமியின் வேண்டுகோளுக்காக மகாகவி லடீஸ் வீரமணிக்காக 'கண்மணியாள் காதை என்ற காவியத்தை எழுதினார். இதனை வில்லிசைத்து அவர் முன்னிலையில் பாடி வில்லிசைக்கு ஓர் வீரமணி எனப் பாராட்டு பெற்றதுடன் இலங்கையின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் வில்லிசை நிகழ்ச்சிநடத்திபாராட்டுப் பெற்றுள்ளார்.
கலைத்துறையில் காலத்தை வென்ற கலைஞராக நடிகவேள் லடீஸ் வீரமணிவிளங்குகிறார். இவரைப்பற்றி முழுமையாக ஒருவரலாற்றுப்பதிவு வெளிவர வேண்டும்.
16.O.5.2010

Page 52
LD606)uesds 856)6.
உலகளாவிய வகையில் கல்வி வளர்ச்சியே மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தகுதி எனும் கருத்து ஏகோபதித்த முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்துள்ள ஆங்கில அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய யாவும் நமது மக்களின் கல்வியில் பெரிதும் வளர்ச்சிகண்டுள்ளநாடுகள். கல்விவளர்ச்சியுடன்வருமானமும் அதிகரித்து வருகின்றது என்ற உண்மை பல்வுேறு ஆய்வுகளின் விளைவாக தெரிய வந்துள்ளன.
கல்வி கற்ற சமூகத்திற்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை உணர்ந்த தலைநகரில் தொழில் நிமித்தமாக வாழும் இளைஞர்கள் ஒரு காலத்தில் வசதியின்றி உயர் கல்வியை தொடர முடியாமல் வாழ்க்கை வசதியை தேடி பொருளாதார நிமித்தம் தொழில் வாயப்புகளை தேடி தலைநகரான கொழும்பிற்கு வந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களின் சுய முயற்சியால் முன்னுக்கு வந்த இளைஞர்கள் தொழில் வாயப்புகளில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டவுடன் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் என்ற அமைப்பை மூன்றாண்டுக்கு முன்னால் உருவாக்கினார்கள்
இந்த மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டுதங்களை அடையாளம்காட்டவும் இதுவரைக்கு மன்றம் எத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பதனை தங்களை போஷித்து வரும் போசகர்களுக்கும் அங்கத்தவர்களுக்கு ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு கடந்த போயா தினம்
 

பார்வையின் பதிவுகள் 101
செவ்வாய்க்கிழமை) மாலை கதிரேசன் வீதியிலுள்ள விஸ்வகர்ம சங்க மண்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருக்கும் மலையக கல்வியில் ஆர்வமும் அக்கறையும் உள்ளபோசகர்களை அழைத்திருந்தார்தங்கதேரோடும்செட்டியார்தெருவில் பிரபலமான நகைமாளிகைகளின் உரிமையாளர்கள் விடுமுறை தினமாக போயாதினத்தில் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதைகழிக்காமல் இந்த மலையக கல்வி அபிவிருத்திக்காக எத்தகையை பணிகளை செயல்படுத்துகிறார்கள் என ஆர்வத்துடன் விழா ஆரம்பமாவதற்கு முன்னமே மண்டபத்திற்கு வருகைதந்துவிட்டார்கள்.
இத்தகையநல்ல உள்ளம் படைத்தமனிதமாணிக்கங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். கெளரவ போசகர்களான டி.நமசிவாயம் குபானி ஜூவலர்ஸ்), ஆர். சீதாராமன்பொபி ஜூவலர்ஸ்), எம்.இராமஜெயம் பொபி ஜூவலர்ஸ்), ஆர்.பாலசுப்பிரமணியம் (சரிட்டா ஜூவலர்ஸ்), பி. ஜெயபாலன் ஜே.பி. ஜூவலர்ஸ்), ஆர். கிருஷ்ணசாமி (கிரவுன் ஜூவலர்ஸ்), ஆர். மகேஸ்வரன் (ரவி ஜூவலர்ஸ்), கே. பழனிசாமி (அன்னபூர்ணா), என்.சீனிவாசகம் தேவி ஜூவலர்ஸ்), என். ரெங்கராஜன் ரவி ஜூவலர்ஸ்) இவர்கள்தான் இந்த அமைப்பின் அச்சாணிகள்.
அது மாத்திரமல்ல இந்த அமைப்பில் 200இற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள். இந்த அங்கத்தவர்கள் மலையக கல்வி வளர்ச்சி கருதி மாதந்தவறாது 200 ரூபாவை அங்கத்துவ பணமாக செலுத்திவிடுவார்கள். அப்படி என்றால் தங்கதோடு தொடர்புடைய தங்கமான போசகர்கள் ஓசைப்படாமல் உதவி செய்கிறார்கள். 'கிள்ளி கொடுக்காமல் ‘அள்ளி கொடுப்பார்கள்.
இந்த மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினார்கள் இப்படி கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை என்ன செய்கிறார்கள். வங்கிகளில் வைப்பில் இடுகிறார்களா? வங்கிகளில் வைப்பில் இட்டு கிடைக்கும் தொகையைவிட அதிஅற்புதமான, நமது மாணவமணிகளில், அதுவம் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக செலவழிக்கிறார்கள். தற்போது57 மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா வீதம் வழங்குகிறார்கள்.

Page 53
102 அந்தனி ஜீவா
நாளை நமக்கொரு மலையக பல்கலைக்கழகம் தேவை அதற்காக இப்பொழுதே அத்திபாரமிடுகிறார்கள்.
மலையக பட்டதாரிகளுக்கு மட்டுமல்ல பெருந்தோட்டத்துறையில் வசதி வாய்ப்பின்றி வாழும் வறிய பிள்ளைகளின் கல்விக்கு தேவையான உபகரணங்களை மலையகத்தில் பல மாகாணங்கள் உள்ள பாடசாலைகளுக்கு நேரில் தேடி சென்று வழங்கியுள்ளார்கள்.
இந்திய வம்சாவளி என்ற அடிப்படையில் பத்துக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அரை மந்திரி, முழு மந்திரியாகவும் உள்ள இவர்கள் பத்திரிகை படிப்பது இல்லையா? இவரது பொதுசனத் தொடர்பாளர்கள் இந்த மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணிகள் பற்றி இவர்களின் காதுகளில் போட்டு வைப்பது SS606)urt?
மலையக பாராளுமன்ற பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணியை இந்த அபிவிருத்தி மன்றத்தினர் செய்து வருகின்றனர். நாளைய வரலாறு இவர்களை மறந்துவிடக்கூடாது.
இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவராலயம் செய்து வருகின்ற சேவையை கெளரவிக்க வேண்டும். இந்த அபிவிருத்தி மன்றத்தின் ஆலோசகர்களாக கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீடத் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன், முதுநிலை விரிவுரையாளர் தை. தனராஜ் போன்றவர்கள் ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.
மலையக அபிவிருத்தி மன்றத்தின் மூன்றாவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது, நான் கூறிய ஒரு கருத்தை மாத்திரம் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறுேண்.
மலையகக் கல்வி அபிவிருத்திமன்றத்தின் பணிஉலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினர் அறியும் வண்ணம் இவர்கள் ஓர் இணையத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனை இந்த தங்க' மனங்கொடை போசகர்களின் துணையுடன் புத்தாண்டின் ஆரம்பத்தில் பொங்கல் திருநாளில் நடைமுறைப்படுத்தவேண்டும்.
O6.12.2OO8

குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள்
ஒரு கவிஞனின் வாழ்க்கை, அவன் வாழ்ந்த ஆண்டுகளை கணக்கில் கொள்ளாமல், அவருடைய நூல்களாலே எடைபோடப்படுகிறது. இதைவிட வேறு அளவுகள் இல்லை என்கிறார் ஓர் மேல்நாட்டு விமர்சகர்.
எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஒன்று உண்டு. நல்ல கவிதைகள் என்பவை உங்களுடைய அம்மாவிற்கும், சகோதரிக்கும் குழந்தைகளுக்கும் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றார் ஒரு கவிஞர்.
அவரது கூற்றுப்படி எல்லாரும் படிக்கக் கூடிய கவிதைகளை நம் காலத்தில் எழுதிய ஒரு கவிஞர் குறிஞ்சித் தென்னவன். இவர் இப்பொழுது நம்மிடையே இல்லை. இவர் நம்மை விட்டு பிரிந்து பத்தாண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இவரை மறந்துவிடாமல் எழுத்தாளரும் ஆய்வாளருமானசாரல்நாடன் குறிஞ்சித்தென்னவன்கவிச்சரங்கள் என்ற கவிதைத் தொகுப்பை தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆனால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் "மலையக வெளியீட்டகம்" என்ற அமைப்பு, இவரின் கவிதைகளை "கவிஞர் குறிஞ்சித்தென்னவன்” என்ற தலைப்பில் ஒரு தொகுதியை வெளியிட்டது. ஆனால் அவரது முழுமையாக கவிதைகள் அடங்கிய தொகுதி "குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
"நமக்குத்தொழில் கவிதை” என்றான் பாரதி.கவிதை புனைதலைப்பலர் தொழிலாகக் கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு கவிதை தொழிலல்ல. எனது இரத்த நாளங்களில் ஓடும் உயிர்த் துடிப்பு, தீமையைக் கண்டு

Page 54
104 அந்தனி ஜீவா
கொதித்தெழும்பும் உணர்வின் வடிகால், பொழுது போக்காக மனக் கிளர்ச்சியின் உந்துதலால் எழுதப்பட்டவையல்ல. மலைகள் அவைகளில் ஓய்வு கொள்ளும் முகில்கள், அதன் மேனியெங்கும் பட்டோளி வீசிப் பரிமளிக்கும் தேயிலைப்பசுமைகள், அம்மண்ணின் அடியில் புதைக்கப்பட்ட இம்மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைச் சரித்திரங்கள், இவை யாவும் எனது கவிதைகளின் கருக்கள் என்கிறார் கவிஞர் குறிஞ்சித் தென்னவன். அவரது முதலாவது தொகுப்பில் மலையகத்தில் மிக முக்கியமான கவிஞர் குறிஞ்சித் தென்னவன்.
கவிஞர் குறிஞ்சித் தென்னவன் தன் சுயமுயற்சியால் முன்னுக்கு வந்தவர். நுவரெலியாலபுக்கலை தோட்டத்தில் வாழ்ந்தவி.எஸ்.வேலு என்ற இயற்பெயர்கொண்ட கவிஞர். அட்டன் நோர்வுட் சென். ஜோன்ஸ் தோட்டத்தில் 1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார். தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுள்ளார். பொருளாதார நிலை காரணமாக கல்வியை தொடர முடியாத கவிஞர் தோட்டத் தொழிலாளியானார்.
“உழுதுண்டு வாழ வழியில்லை” “தொழுதுண்டு பின் செல்லவும் மனமில்லை தோட்டத்தொழிலாளியானேன்.” என்கிறார் கவிஞர் குறிஞ்சித் தென்னவன். இயல்பாகவே இலக்கியதாகம் கொண்ட கவிஞர் குறிஞசித் தென்னவன் சிறுவயதிலேயே பாரதம், இராமாயணம் போன்ற நூல்களை தம் அயலவர்களுக்கு படித்துக் காட்டி தமது அறிவினை விருத்தி செய்து கொண்டார். மகாகவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் போன்றவர்களின் கவிதைகளில் மனதை பறிகொடுத்தார்.
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களே இவரை பெரிதும் கவர்ந்தது. அவரின் சாயலிலே பல கவிதைகள் எழுதினார். குறிஞசித் தென்னவனின் முதல் கவிதை 1957ஆம் ஆண்டு மாணவ மலர் ஏட்டிலே வெளிவந்தது. “666ões 2 filooLDLGBLITiro என்ற மகுடத்தில் வெளியானது.
மலையகத்தில் தோட்டத் தொழிலாளர் படும் துயரங்களை பார்வையாளராக இல்லாமல் பங்காளியாக ஒரு தோட்டத் தொழிலாளியாக தோட்டங்களில்நடக்கும்தில்லுமுல்லுகளைதோட்டத்துரைமார்களின் மனித நேயமற்ற அதிகாரம் காட்டுத்தர்பார் போன்றவற்றை நேரடியாக கண்ட கவிஞர் அவற்றை தம் எண்ணங்ளாக சந்தகக் கவிதைகளாக வடித்தார். இதன் காரணமாக அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகி அவதிப்பட்டு தொழிலையும் இழந்து துன்புற நேர்ந்தது.

பார்வையின் பதிவுகள் 105
கவிஞர் குறிஞ்சித் தென்னவனின் ஆற்றலையும் கவிதை ஆளுமையையும் அறிந்த நானும், நண்பர்களான சாரல் நாடன், கவிஞர் முரளிதரன் இணைந்துநூலுருவில் 1986ஆம் ஆண்டு கவிஞர் குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்' என்ற மகுடத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம். அதன் பின்னரே பாமரர் முதல் பல்கலைக்கழகம் வரை அவரது ஆற்றலை அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
"தமிழ் இலக்கிய உலகில் குறிஞ்சித் தென்னவனைப் போன்றோர் மிக அரிதாகவே உள்ளனர் என்பதைநாம்மனங்கொளல் வேண்டும்” என்கிறார் பேராசிரியர்க. அருணாசலம். இவர் கவிஞர்மீதுபேரன்புகொண்டவர். தனது நூலொன்றை கவிஞர்க்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
கவிஞனை நினைக்கும் பொழுது ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. கவிஞர் மறைந்தபொழுது அவரின் இறுதிச்சடங்கில்உரையாற்றியவர்கள் அவரின் வெளிவராதகவிதைகளை அச்சில் கொண்டு வருவோம். அவரது குடும்பத்தினர்க்கு துணைபுரிவோம் என்றெல்லாம் முழங்கியவர்கள். பின்னர் அவரது குடும்பத்தினர்க்கு என்ன நடந்தது என்று எட்டியும் Linfréseiss606).
கவிஞர் உயிர்வாழ்ந்த பொழுது அவரது மணிவிழாவை சிறப்பாக கொண்டாடவேண்டுமென்றுகலாசார அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த யோகநாதன் அவர்களிடம் நேரில் சென்று கூறிய பொழுது அவர் உடனடியாக அந்த ஆண்டு 'கலாபூஷணம்’ விருதுக்கு கவிஞரின் பெயரை சிபார்சு செய்து விருதும் பணப்பரிசும் வழங்கி கெளரவிக்க முன்னின்று செயல்பட்டார் என்பதை பதிவுசெய்ய வேண்டும்.
இன்று கவிஞர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது கவிதைகளை தொகுத்து குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் என்று கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள எழுத்தாளர் சாரல் நாடனுக்கு நன்றி செலுத்த இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது.

Page 55
இது ஒரு இலக்கிய ஆவணம்
அண்மையில் ஒரு பாடசாலைக்கு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி உரையாற்றச் சென்றிருந்தேன். இலங்கையில் தமிழ் இலக்கியத்திற்கு பங்களித்தவர்கள் பற்றிய பலதகவல்களை கூறியபொழுது அவர்கள் மிக அக்கறையுடன் பல கேள்விகளைக் கேட்டார்கள்.
பின்னர், ஆசிரியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது "நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மாணவர்களுக்குஏதாவது நூல்வெளிவந்திருக்கிறதா? என்று கேட்டார்கள். பல நூல்களை தேடிப் படிக்க வேண்டும்" என்றேன்.
ஆனால், இப்பொழுது உயர் வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரமல்ல, தமிழ் படிப்பிக்கும் ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஓர் அற்புதமான நூல் வெளிவந்துள்ளது.
"சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியம், இலக்கியப் படைப்பாளிகள், தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தமிழ் இலக்கியக் களஞ்சியம் என்னும் இந்நூல் அவருடைய தொடர்ச்சியான தமிழ்ப் பணியைச் சுட்டிக்காட்டும் ஒரு பயனுள்ள படைப்பாகும். சமூக அறிவியல்,தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவு எவ்வாறு வாழ்க்கை பயனுடையதோ அவ்வாறே மனித பண்பியல் துறை சார்ந்த இந்நூல் பண்பாட்டுப்பனுள்ளது. இதனை ஒருவகையில் ஒருசிறுதமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியம் அல்லது தமிழ் இலக்கிய அகராதிஎன்று கூறிவிடலாம்"
 
 
 

பார்வையின் பதிவுகள் 107
என்கிறார் இந்நூல் பற்றி அணிநதுரை வழங்கிய பேராசிரியர் சோ. சந்திரசேகரன்.
இலக்கியநூல்பற்றிகூறுகிறேன். ஆனால், நூலின் பெயரை இதுவரை தெரிவிக்கவில்லை என்று பார்க்கிறீர்களா தமிழ் இலக்கியக் களஞ்சியம்' என்பதே நூலின் பெயர்.
இந்த நூலை தந்திருப்பவர் வேறுயாருமல்ல ஈழத்து இலக்கிய உலகம் நன்கறிந்த புலமையாளர், கல்வியாளர் கவிஞர் அது மாத்திரமல்ல ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அலுவலராக, மாவட்ட கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய கவிஞர் த. துரைசிங்கம் ஒரு மிகப்பெரிய தலையாயதமிழ் இலக்கியப் பணியை செய்துள்ளார்.
தமிழ் இலக்கிய களஞ்சியம்' என்னும் மகுடத்தில் வெளிவந்துள்ள இந்த நூல்'சங்ககாலம் முதல் இக்காலம்வரையானதகவல்களின் தொகுப்பாகும் ஒவ்வொரு தமிழ் ஆசிரியர்களிடமும் உயர் வகுப்பு மாணவர்களிடமும் இருக்கவேண்டிய இக்காலக் கலைக்களஞ்வியமாகும்.
"நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சொற்பொருள் விளக்கக் குறிப்புகள், அருஞ்சொல் விளக்க நூல்கள் என்றவாறு காலந்தோறும் தமிழ் மொழி தன்னாலியன்ற அறிவுப் பணிகளை உலகினுக்கு அளித்துவந்தள்ளது. வீரமாமுனிவர் தொடங்கி இச்செயற்பாடு தொடரும்நிலையில் புதியதேவைளை அடிப்படையாகக்கொண்டு இந்நூல் படைக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியதே. கலைக் களஞ்சியப் பண்புகளுடன் அகர முதலாக ஆயிரக்கணக்கான சொற்கள், சொற்றொடர்கள் போன்றவற்றிற்குப் பொருள் விளக்கத்தினை இந்த அரிய நூல் அளித்துள்ளது. தமிழ் மொழி, இந்து சமயம் ஆகியவை சார்ந்த சொற்கள் இங்கு பெரும்பான்மை பெற்றுள்ளன. தமிழர் வாழ்வியற் கோலங்களுடன்பின்னிப்பிணைந்துள்ளதமிழ்வடமொழிசொற்களுக்கான பொருள்களைக் கூறு முகத்தால் புலம்பெயர் தமிழர்கள் தமது பண்பாட்டு பெறுமானங்களை கைநழுவவிடாது கற்றுணர்ந்துகடைப்பிடிக்கவேண்டும் என்ற ஆவல் மீதூரப்பெற்றே இந்நூல் படைக்கப்பட்டிருப்பதை நாமுணரலாம். தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பயன்பெறத் தக்க முயற்சி இதுவாகும்.” இவ்வாறு கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு இந்நூல் பற்றி நயவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Page 56
108 அந்தனி ஜீவா
தமிழ் இலக்கியக் களஞ்சியம் 322 பக்கங்களில் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. 'அ'கர வரிசை முறைப்படி விளக்கங்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. "அம்பி. ஈழத்து கவிஞர்களில் ஒருவர். அறிவியல் கவிதை நூல்கள் பல எழுதியுள்ளார். இவரது இயற்பெயர் அ. அம்பிகைபாகன். இலங்கை அரசின் சாகித்திய மண்டலவிருது பெற்ற பெருமைக்குரியவர்.”
இப்படிப் பல எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் இன்றைய தலைமுறைக்குத் தெரியாத ஈழத்து சிறுகதை முன்னோடிகளில் ஒருவராக கருதப்பட்ட இராஜ அரியரத்தினம், 'ஈழநாடு நடத்திய நாவல் போட்டியில் பங்குபற்றிய மறுமலர்ச்சி எழுத்தாளர் சு. இராஜநாயகன், இலங்கையர்கோன், கே.எஸ்.சிவகுமாரன், முகம்மது சமீம், சி.வைத்திலிங்கம், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,அறிஞர் அ.ந.கந்தசாமி, வண.தனிநாயகம் அடிகளார், தாவீது அடிகளார், தாழையடி சபாரத்தினம், சில்லையூர் செல்வராசன், செ.கணேசலிங்கன், ந. பாலேஸ்வரி, எஸ்.பொன்னுத்துரை, அ.செ.முருகானந்தம் என்று அமரர்களாகிவிட்ட அறிஞர்களும் எழுத்தாளர்களும் இன்றுநம்மத்தியில்வாழும்பலனழுத்தாளர்களின் படமும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
இது மாத்திரமல்ல தமிழகத்து கலைஞர் கருணாநிதி எழுத்தாளர் ஜெயகாந்தன் வரை பலரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்த நூலில் இலங்கை அறிஞர் எழுத்தாளர்களை மாத்திரம் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக ஒரு ஆவணமாக இருந்திருக்கும். அட்டையில் கூட நம்மவர் ஒருவர் மாத்திரமே இடம்பெற்றுள்ளார்.
கவிஞர்துரைசிங்கத்தின் அயராதஉழைப்புதமிழ் இலக்கிய களஞ்சியம் மூலம் தெரிகிறது. w

படைப்பாளியின் பன்முக ஆளுமை
பெ ற்றோர்களுக்குநல்ல மகனாக, மனைவிக்குநல்லதுணைவனாக, பிள்ளைக்குநல்லவழிகாட்டியாக,நண்பர்களுக்கு பழகுவதற்கு இனியவராக, இலக்கியத்துறையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக பன்முக ஆளுமைமிக்க படைப்பாளியாக ஆரவாரமின்றி இலக்கியப் பணியை தொடரும் தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தாளரின் பவள விழா கடந்த ஞாயிறு கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பவளவிழாவை முன்னிட்டு "ஞானம் இலக்கிய சஞ்சிகை ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டிருந்தது. அந்த விழாவில் பல படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் காணக்கூடியதாக இருந்தது.
அது மாத்திரமல்ல, தெளிவத்தை ஜோசப்பின் பிறந்த ஊரான பதுளையிலிருந்து பலர் வந்திருந்தனர். ஜோசப் பதுளையில் ஹாலி எல ஊவா கட்டவளை தோட்டததில் பிறந்தவர். பின்னர் தெலிபத்த என்ற தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி, பின்னர் கொழும்பிற்கு வருகைதந்து ஒருதனியார் தொழில் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றியவர். மலையகத்திலிருந்து வெளிவந்த மலைமுரசு’ என்ற சஞ்சிகையில் நாமிருக்கும் நாடே எனற தலைப்பில் எழுதிய கதை பரிசுபெற்ற கதையாக இடம்பெற்றது. இந்தக் கதையின் தலைப்பே இவரது முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு மகுடமாக அமைந்தது.

Page 57
110 அந்தனி ஜீவா
மலையகப் படைப்பாளி என்று தெளிவத்தை ஜோசப் அடையாளப்படுத்தப் பட்டாலும் அவரது ஆற்றலும் ஆளுமையிக் காரணமாக ஈழத்து இலக்கிய உலகில் பெயர் சொல்லக்கூடிய எழுத்தாளராக அடையாளப்படுத்தப்படுகிறார்.
சிறுகதை மூலம் இலக்கிய உலகில் காலடிச் சுவடுகளை பதித்த ஜோசப் சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், வானொலி, நாடகம், திரைக்கதை வசனம், மேடை பேச்சாற்றல் என பன்முக ஆளுமை கொண்டவராக இலக்கிய உலகில் வலம் வருகிறார்.
மலையக இலக்கிய உலகில் முன்னணி படைப்பாளிகளாக மூவருக்கு முக்கிய இடம் ஒன்று உள்ளது. மலையக சிறுகதை சிற்பி வர்ணிக்கப்பட்ட பதுளையைச் சேர்ந்த என்.எஸ்.எம்.ராமையா, அவரது சகாவான தெளிவத்தை ஜோசப், மலையக ஆய்வாளராக பேசப்படும் எழுத்தாளர் சாரல் நாடன் முதலாமவர் அமரராகிவிட்டார். மிகவும் குறைவாக எழுதி மலையகச் சிறுகதை வரலாற்றில் தனி இடத்தைப் பெற்றுக் கொண்டார். இப்பொழுது வாழும் இருவரில் மூத்தவர் தெளிவத்தை ஜோசப், அடுத்தவர் சாரல் நாடன். இந்த மூவரையும் மறந்து மலையக இலக்கியம் பற்றிப் பேச முடியாது.
மூவரது எழுத்துகள் இந்த இலக்கிய உருவாக்கத்தில் மிக முக்கியமான இடத்தைபெறுவனவாகும். என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன் ஆகியோரே இவர்களாவர். என்.எஸ்.எம்.ராமையாவானொலி நாடகங்கள் முதல் சிறுகதைகள் வரை எழுதியவர். ஆனால், மக்கட் பொது நிலைச்செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டாதவர். சாரல்நாடன் சிறுகதைகளை எழுதியதோடு பெரும்பாலும் மலையகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு காட்டியவர். தெளிவத்தை ஜோசப்போ மக்கட் பொதுநிலைச் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டியவர்.
ஜோசப்பின் ஆக்கங்களை இலக்கிய வரலாற்றுக் கண்கொண்டு நோக்கும் பொழுது தவிர்க்க முடியாதபடி மேற்கிளம்பும் இக்கருத்து இவரது தனிப்பட்டவாழ்க்கையையும் இவரது ஆக்கங்களையும் மீள நுண்ணியதாக நோக்குவதற்கு உதவுகின்றது. இதனால் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துகளில் அகநிலை எதார்த்தமும் புறநிலைப்பார்வை தெளிவும் காணப்படுகின்றன என்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.

பார்வையின் பதிவுகள் 111
தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தாளனை அறுபதுகளில் முதல் அறிவேன், அவரோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது, மலையக எழுத்தாளர் மன்றத்தின் கொழும்பு கிளை அமைக்கப்பட்ட பொழுது, அங்குதான் என்.எஸ்.எம். ராமையாவையும் சந்தித்தேன். அந்தக் கூட்டத்தை ஒழுங் செய்திருந்தவர் பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம் மற்றும் வீரகேசரி தியாகராஜா, முத்துராசன், செய்திஆசிரியர் சுந்தரலிங்கம், ஜோவலன்வாஸ், டேவிற் ராசையா என கலந்துகொண்டோம். அன்றுதான் தெளிவத்தை எனக்கு அறிமுகமானார். அன்றுமுதல் இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது.
இன்று மலையகம், மலையக மக்கள், மலையக இலக்கியம் என்ற பெருந்தோட்ட்துறையைச் சேர்ந்த மக்களுக்கு தன்படைப்புகள் மூலம் அடையாளத்தை தேடிக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இவர் வெறுமனே படைப்பாளியாக மட்டும் இல்லாமல் இலக்கிய ஆவணகாப்பகமாகவே விளங்குகிறார். கடல்கடந்தும் கெளரவிக்கப்பட்டவர் என்பதிலே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நம் காலத்தில் வாழும் சாதனையாளரான தெளிவத்தை ஜோசப்புடைய எழுத்துகள் அனைத்தும் அச்சில் வரவேண்டும். அவரது சாகித்தியபரிசு பெற்றசிறுகதைத்தொகுதியான"நாமிருக்கும்நாடே"மறுபிரசுரம் காணாதது வேதனைக்குரியது. இன்றைய இளைய தலைமுறையினர் எங்கேயாவது நூலகத்தில்தேடி. ஒருகாலகட்டத்தைஅந்தக்கதைகள்நமக்குபடம்பிடித்துக் காட்டுகின்றன.
மலையகத்தின் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் இன்றும் சுறசுறுப்பாக எழுதுவதும் இலக்கிய கூட்டங்களில்உரையாற்றுவதும் வாழ்கின்றதலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றார்.
23. O6.2010

Page 58
தனித்துத் தெரியும் திசை
நவீன இலக்கிய வளர்ச்சி இலக்கிய சஞ்சிகைகளுடன் பின்னிப்
பிணைந்ததொன்று என்று பலரும் கூறுவதுண்டு. அதில் உண்மையுண்டு. அதேவேளை அத்தகைய இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகளுக்கும் பங்குள்ளமை குறிப்பாக ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது புலனாகின்றது ஆதலின் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழத்துபத்திரிகைகளின் பங்கு எந்நிலையிலுள்ளது என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமானது இவ்வாரு கலாநிதி செ.யோகராசா ஈழத்து இலக்கியமும் இதழியலும் என்ற நூலில் குறிப்படுகின்றார்.
அவரது கூற்று எத்தகைய உண்மையானது என்பதை ஈழத்து. இலக்கிய வளர்ச்சிக்கு எத்தகைய பங்களிப்பை ஆற்றியுள்ளது என்பதை அறிய முடியும்.
இலங்கையின் காத்திரமான இலக்கியபங்களிப்புக்கு சிறுசஞ்சிகைகள் மாத்திரமன்றி பத்திரிகைகளும் பெருபங்களிப்பு செய்துள்ளது என்பதை அன்றைய ஈழகேசரி முதல் இன்று வெளிவரும் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளைப் பார்த்தல் தெரிந்து கொள்ள முடியும்.
பத்திரிக்கை சிறுகதை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளன. பத்திரிகைகள் மூலம் பல எழுத்தாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள் அவர்களின் சிறப்பான சிறுகதைகள் பின்னர் தொகுதிகளாக வெளிவந்த பொழுது அவர்களின் படைப்பிலக்கிய ஆற்றலை அறிய முடிந்தது.
 
 

பார்வையின் பதிவுகள் 113
நமது ஈழகேசரிமுதல் ஈழநாடு. வீரகேசரி தினகரன்.தினபதி, சுதந்திரன் செய்தி,தினக்குரல் சுடர் ஒளி என்று நமது பத்திரிகைகள் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்களிப்புச்செய்துள்ளன.இத்தகைய சூழ்நிலைதமிழ் நாட்டில் கூட இல்லை என்றே கூறமுடியும் அங்கே சிறு சஞ்சிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியது அனால் நமது தாயகதத்தில் சிறுசஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இணைந்தே இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.
இதே போல பிராந்திய ரீதியாக வெளிவந்த பத்திரிகைகளில் ஈழகேசரி. ஈழநாடு. திசை முரசொலி போன்ற வடபுலத்து பத்திரிகைகள் சிறுகதைதுறைக்கு பெரும்பங்களிப்புச் செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அத்தகைய பத்திரிகைகளின் Lunti 8561fL 60oLu ஆய்வுக்கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது.
வடபிரதேசத்திலிருந்துவாரப்பத்திரிகையாக வெளிவந்ததினசரி என்ற பத்திரிகையின் சிறுகதைப் பங்களிப்பை தனித்துத் தெரியும் திசை என்ற தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் த. அஜந்தகுமார் எழுதிய ஆய்வுக்கட்டுனரகளாக வெளிவந்துள்ளன.
பல்கலைக்கழக படப்பிடிப்பிற்காக காத்திரமான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவைகளில் ஒருசில ஆய்வுகள்தான் நூலுருவில் வெளிவருகின்றன. ஆதனால் பல காத்திரமான ஆய்வுகள் பார்வையில் படாமல் போய்விடுகின்றன.த.அஜந்தகுமாரின் இந்த ஆய்வு பயனுள்ள ஒரு மிக முக்கிய வரலாற்று ஆவணமாகும்.
யாழ்ப்பாணத்தில் 1989 முதல் 1990 வரை 'திசை’ இதழ் வெளியிடப்பட்டது.முதலாம் வருடத்தில் 51 இதழ்களும் இரண்டாம் வருடத்தில் 18 இதழ்களும் மொத்தம் 69 இதழ்களே திசை வெளிவந்தது திசைதன்நோக்காக வரித்துக்கொண்டதை வெளிவந்தத 69 இதழ்களிலும் கடைப்பிடித்து ஆக்க பூர்வமாக செயற்பட்டு உள்ளதை அதன் உள்ளடக்கங்களேளமக்கு உணர்த்திநிக்ற்கின்றனஉருளும் உலகில்திசை முகம், தோழி, சமுகம், கலைச்சாரல், தூவானம், திசையின், சிறுகதை, இளவட்டம், கவிதைகள் என்ற முக்கியமான பகுதிகளைத் திசைதன் உள்ளடக்கங்களாய் கொண்டடிருந்தது அவ் உள்ளடக்கங்கள் தீவிரமான பிரக்ஞையோடு இயங்கின என்பதையும் நூலாசிரியர் திசையில் பணியாற்றிய சு. யேசுராசாவின் கூற்றை முன்வைக்கின்றார்.

Page 59
114 அந்தனி ஜீவா
முக்கியமானவற்றை வெளிப்படுத்துகின்ற எவருக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.மாறுபட்ட அபிப்பிராயங்களையும் அதுபற்றியதனதுநிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி இருக்கிறது.கருத்துப் பரிமாற்றத்துக்குரிய தளமாக அது செயற்பட்டிருக்கிறது” என்கிறார்.
"திசையில் வெளிவந்தசிறுகதைகள் தாம் வாழ்ந்தகாலத்துச்சமுகத்தின் தர்க்கத்தோடும் அதன் இயல்போடும் விமர்சனத்தோடும் எள்ளலோடும் வெளிவந்துள்ளன. அக்காலத்தில் மேலோங்கியிருந்த இனப்பிரச்சனையும் அதன்வழியாக கிளைத்தெழுந்த பிரச்சினைகளையும் அவை உள்ளடக்கங்களாக கொண்டன” என்கிறார் நூலாசிரியர்.
திசையில் வெளிவந்த ஒவ்வொரு சிறுகதைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.திசையில் 47 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மொழி பெயர்ப்புச் சிறுகதைகள், தேசிய இனப்பிரச்சினைக் கதைகள் திசை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள் ஞாபகார்த்த சிறுகதைகள் எனமதீப்பிடும் செய்யும் நூலாசிரியர்த அஜந்தகுமார்திசையின் இதழியல் வரலாறு சிறுகதை வரலாற்றோடு பின்னிப் பிணைந்து மாத்திரமல்லாமல் அக்காலத்தைய சமூக வரலாற்றோடும் வெளிப்பட்டு நிற்கின்றது எனின் மிகையில்லை.
இந்த 'தனித்துத் தெரியும் திசை' இதழ்களை தேடிப்படிக்க ஆசைப்படுவார்கள். திசையில் வெளிவந்த சொர்க்கம் என்ற நாவல் என்னைப்பெரிதும் கவர்ந்தது. அதனை யாராவது நூலாக வெளியிட மாட்டார்களா? என்ற எண்ணம் என் நெஞ்சில் நீண்டநாட்களாக கனவாக இருக்கிறது. கனவு என்றாவது நனவாகுமா? நல்ல மனங் கொண்ட ஒரு பதிப்பாளர் இதனை பதிப்பிக்க முன்வர மாட்டாரா? பொருத்திருந்து பார்ப்போம் நூலாசிரியர் த.அஜந்தகுமார் இதுபோன்ற ஆய்வுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
27.O6.2O1O

கலைவேந்தன் பூரீசங்கள்
உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள்" என்றால் உலகம் போற்றும் நாடகமேதைஷேக்ஸ்பியர். அந்தமேதையின் நாடகங்களுக்காகதன்னையே அர்ப்பணித்துச் செயற்பட்ட ஒருநடிகர் சேர். லோறன்ஸ் ஒலிவியர் அந்தநடிகருக்கு ஒரே ஒரு ஆசை, லோறன்ஸ் ஓவியர் தான் நடிக்கும் பொழுதே உயிர் போய் விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதேபோல நம்மத்தியில் வாழ்ந்த ஒரு நடிகருக்கும் அதே ஆசை, ஆர்வம் நம்மத்தியில் வாழ்ந்த ஒரு கலைஞருக்கு இருந்து வந்தது. அவர் தான் நாடறிந்த கலைஞர் கலை வேந்தன் முறிசங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி இவரது நினைவு வந்து விடுகிறது. அது மாத்திரமல்ல, காலை எழுந்ததும் "யுனிலங்கா தினசரி கலண்டர் தாளை கிழிக்கும் பொழுது 20ஆம் திகதி கலைஞர் - முரீசங்கர் நினைவு என்று ஞாபகமூட்டுகின்றது. அது மட்டுமல்ல, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கலைஞர் ருரீசங்களின் நினைவு தினத்தை மறக்காமல் நடத்தி வருகிறார் சண்முகராஜா என்பவர்.
கலையரசு சொர்ணலிங்கத்தினால் பாராட்டப்பட்ட கலைஞர் ருரீசங்கர் வடமராட்சி மண் தந்த பருத்தித்துறையில் பிறந்தவர். தலைநகரான கொழும்பில் தனியார் துறையில் உயர்ந்த பதவி வகித்தவர்.
அறுபதுகளின் இறுதியில் இந்த கலையார்வமிக்க நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் முறிசங்கரோடு எனக்குத்தொடர்பு ஏற்பட்டது.

Page 60
116 அந்தனி ஜீவா
அது அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது. என்னை நாடகம் எழுதும்படி ஊக்கமளித்தமுற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அ.ந.கந்தசாமி. ஆனால் என்னைத் துணிந்து நாடகத்தை மேடையேற்ற உற்சாகமூட்டி ஊக்கமளித்தவர்கலைஞர் முரீசங்கள்.
நாடகத்துறையில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணம், ஒரு தடவை நடிகவேள் லடீஸ் வீர மணியின் நாடக ஒத்திகை ஒன்றை பார்க்கப்போயிருந்தபொழுது அந்தநாடகத்தில்நடிகர்Uநீசங்கள் நடிப்பதைப் பார்த்தேன். அந்தநாடகத்தின் பொழுது, ஏனையநடிகர்களைப்போல்கேலி, கிண்டல் அரட்டைகளில் ஈடுபடாமல்தனதுநாடக வசனங்களை உருபோட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதே அவர் மீது எனக்குமதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
பின்னர் சிங்களத்திரைப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் எம்.வி.பாலன், சிங்களத் திரையுலகின் முன்னணி நடிகரான காமினி பொன்சேகாவை பிரதானமான பாத்திரமாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கினார். அப்பொழுது அவரோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் எம்.பி. பாலனின் நெறியாள்கையில் லயனல் வென்ற் அரங்கில் ஒருநாடகம் மேடையேறியது. அந்தநாடகத்தில் முக்கியபாத்திரம் ஒன்றில்கலைஞர்ருநீசங்கள் நடித்தார். அவருடன் உதயகுமாரும் நடித்தார். அந்த நாடக தயாரிப்பின்போது கலைஞர் ருரீசங்கருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிக்கப்பட வேண்டும். திறமைமிக்கநாடகநடிகர்கள் அந்ததிரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்று செயல்பட்ட கலைஞர் ருநீசங்கரின் முயற்சியால் எம்.வி.பாலனின் டைரக்ஷனில்'மஞ்சள் குங்குமம்' என்றதிரைப்படம் உருவானது. இதற்காகத் தயாரிப்பாளர்களை தேடிக்கொடுத்தவர் கலைஞர் முரீசங்கர். இந்தத் திரைப்படத்தின் ஆரம்ப முதல் இறுதிவரை இணைந்து செயல்பட்டேன்.
மஞ்சள் குங்குமத்தின் கதாநாயகனாக நடித்தவர் கலைஞர் முரீசங்கர். கதாநாயகியாகநடிகை ஹெலன்குமாரிமற்றும் முக்கியகதாபாத்திரங்களில் நடிகர் உதயகுமார். மேடை, வானொலி நாடகங்கள் சாதனையாளரான ரோஸாரியோ பீரிஸ், ஏ. நெய்னார், பண்டாசேசையா, மணிமேகலை என
நாடகக் கலைஞர்கள் பலர் நடித்தனர்.
 

பார்வையின் பதிவுகள் 117
இந்தத் திரைப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக புகைப்படக் கலைஞர் கிங்ஸிலி எஸ். செல்லையாவின் 'மஞ்சள் குங்குமம்' என்று அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப்படத்தின் சில அவதானித்த நடிகர் முரீசங்கள்தான் நடிப்பதற்கு ஒருநாடகம் எழுதும்படி தூண்டினார்.
இப்படித்தான் எனது முதல்நாடகம்'முள்ளில் ரோஜா உருவானது. ஒரு எழுத்தாளனைப் பற்றியது கதை இது எழுதுபதுகளில் இந்த நாடகம் மேடையேறியது இந்த நாடகத்தில் எழுத்தாளர் பாத்திரத்தில்நடித்தவர் கலைஞர் ருரீசங்கள்.
அதன்பிறகு எனது பறவைகள், தீர்ப்பு, அக்கினி பூக்கள் ஆகிய நாடகங்களில் நடித்தார். அதுமாத்திரமல்ல கலைஞர் கலைச்செல்வன், நடிகவேள் லடீஸ்வீரமணி, ஜீவாநாவுக்கரசன், வரணியூரான் ஆகியோரின் நெறியாள்கையில் நடித்தார்.
கலைஞர் கலைச்செல்வன் நெறிப்படுத்திய 'கொள்ளைக்காரன்' இவருக்கு பெரும்புகழீட்டிக்கொடுத்தது. பத்திரிகை உலக ஜாம்பவான்எஸ்.டி. சிவநாயகம் இவரது நடிப்பை பெரிதும் பாராட்டி எழுதினார். அது மாத்திரமல்ல தமிழகத்தில் சென்னையில் எஸ்.டி.சிவநாயகம்தங்கியிருந்த ஹோட்டலில் கலைஞர் ருரீசங்கரும் தங்கியிருந்தார். அப்பொழுது எஸ்.டி. சிவநாயகத்தைப் பார்க்க 'கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் வந்திருக்கிறார். அவரிடம் கலைஞர் முரீசங்கரை அறிமுகப்படுத்தி எங்கள் நாட்டின் நடிகர் திலகம்" எனக் கூறி கலைஞர் ருரீசங்கள் நடித்த நாடகம் ஒன்றின் வசனங்களைப் பேசி நடிக்க வைத்துள்ளார்.
கலைஞர் ருரீசங்கரின் நடிப்பாற்றலைக் கண்டு வியந்த தமிழ் வாணன் கல்கண்டு அட்டைப்படத்தில் கலைஞர் ருரீசங்கரின் படத்தை பிரசுரித்து அவரைப்பற்றிஅற்புதமான அறிமுகத்தைஎழுதியிருந்தார். அதுநம்நாட்டு கலைஞர்களுக்குக்கிடைத்தகெளரவமாகும்.
கலையரசு முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரை பாராட்டிய கலைஞர் முறிசங்கர், என்றும் நினைவுகூரப்பட்டவேண்டியவர்.
25.O1.2OO9

Page 61
"பரதேசி" என்ற..!
L லம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்ற நம்மவர்கள் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் நூல்கள் குரும்படங்கள் என்று ஊடகங்களில் தடம்பதிக்கிறார்கள் இத்தகைய ஊடகங்களில் வெளிவரும் படைப்புக்களை ‘புலம்பெயர் இலக்கியம்'என்கிறோம். புலம்பெயர் இலக்கியம் அனைத்தும் புலம் பெயர் இலக்கியம் என்றும் கூறிவிட முடியாது.அவர்கள் எந்த மண்ணில் வாழ்ந்தாலும் அவர்களின் கனவுகளும் நினைவுகளும் தாயகமண்ணயே சுற்றிச் சுழலுகின்றன.
ஆனால் .சில புதினங்களில் அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் பதிவாகியுள்ளன என்பதற்கு மறுப்பதற்கில்லை. நோர்வே நாட்டில் ஒஸ்லோவில் வாழும் இ.தியாகலிங்கம் என்பவரின் பரதேசி'என்ற பெயர் அந்த நாவலை படிக்கும்படி என்னைத் தூண்டியது.
பொதுவாக யாழ்பாணத்தார் ஆசீர் வதித்து நடத்தும் திருமண ஒப்பந்தங்களிலே கடைப்பிடிக்கப்படும் தரநிர்யணய அளவுககோள்கள் இன்றைக்கும் பெருத்தமானதா? சீதனம். சாதி குலம் கோத்திரம் என எத்தனையோ விடயங்களை அக்கறைக்கு எடுத்துக் கொள்ளும் யாழ்ப்பாணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனப் பெருத்தம் உண்டா என்பதைஏன் அக்கறக்குள் எடுத்துக்கொள்வதில்லை.
பெண்ணின் தனிப்பட்ட உணர்ச்சிகள் ஆசைகள் தேவைகள் ஆகிய அனைத்துமே நிராகரிக்கப்படுகின்றன. பணத்தற்கும் போலி கெளரவங்களுக்கும்மட்டுமே முதல்மரியாதையும் ஆராதனையும் அளித்தல் பத்தாயிரம் கனம் பண்ணும் பண்பாடுகளுககக்கு பொருந்துவனவாக இல்லை என்கிறார் பரதேசிநாவலை எழுதியதியாகலிங்கம்.
 


Page 62
120 அந்தனி ஜீவா
அற்றவன். எதுவென்றாலும் சமாளித்துச் சமாளித்து எல்லா சுதந்திரத்தையும் விட்டுக் கொடுத்து அடிமையாய் இருப்பது வாழ்க்கையும் அல்ல. குடிகாரனுக்கு வெறிமுறிந்த பின்பாவது நிதானம் பிறக்கும். அறிவு சூனியமான முட்டாளை எப்பொழுதும் அறியாமை வெறியே பிடித்திருக்கும்.
வெளிநாட்டில்சிறப்பாக வாழலாம்என எண்ணிவாழ்ந்தவளின் வாழ்வில் எண்ணற்ற துன்பங்கள். கணவனாக இருக்க வேண்டியவன் காம வெறியனாக இருந்தான் பெண்ணின் உணர்வுகளை பற்றி கவலைபட வில்லை அவளின் உடலைதீண்டுவதில்தான் கண்ணும் கருத்துமாக.
நாவலின் நாயகி நிம்மி ஒரு முடிவுக்கு வந்தாள் நான் எனது வாழ்க்கையை எண்ணி எண்ணி அழுதேன். இனி இவருடன் வாழ்வதில் அர்த்தம் இல்லை எனத் தோன்றியது. அப்படியென்றால் ஏன் தயங்க வேண்டம். நடப்பது நடக்கட்டும் எனத் துணிந்துவிட வேண்டியதுதான். அந்த மிருகம் திரும்பி வருவதற்குள் வெளியேறிவிட வேண்டியதுதான். 'மனிதன் மிருக வெறியில் துன்புறுத்துவது கண்டு - நிம்மி நோர்வேயிலிருந்து வெளியேறி, தனக்குத் தெரிந்தவர்கள் உதவியுடன் அவள் தங்கை இருக்கும் கனடாவுக்கு வந்துவிடுகிறாள்.
பின்னர் அங்கு புதுவாழ்வு கிட்டுகிறது. நாவலைப் படித்து முடித்தது - இப்படி எத்தனை பெண்கள் புலம்பெயர்ந்து போய் துன்பமடைகிறார்கள் என்ற எண்ணமே எனக்கு வந்தது. பெற்றோர்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையை யாரென்று பாராமல் சரியான பின்னணி தெரியாமல் மகளை ஏதோ பொருட்களை அனுப்புவதைப்போல அனுப்பினால் இந்த நிலைதான் ஏற்படும். பரதேசி நாவலில் இத்தகைய உண்மைகளை வெளிச்சத்திற்குகொண்டுவந்த இதியாகலிங்கத்தின்நாவலைநம்மவர்கள் தேடிப் படிக்க வேண்டும்.

புலம்பெயர் இலக்கியம்
புகலிட இலக்கியம் விவாதத்திற்கான புள்ளிகள் என்ற தலைப்பில் ஆதவன்தீட்சண்யா என்ற எழுத்தாளர் பிரான்ஸில் இருந்துவெளிவருகின்ற உயிர்நிழல்' என்றசஞ்சிகையில் எழுதியிருந்தார். இந்தகட்டுரைஏற்கனவே தினக்குரல் ஞாயிறு பதிப்பில் இணையத்தளத்திலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அப்பொழுதே இந்தக் கட்டுரை படித்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். மீண்டும் உயிர் நிழல் என்ற சஞ்சிகை என்னைத் தேடி வந்தபொழுது ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரையை மீண்டும் ஒரு தடவை ஆறுதலாகப்படித்தேன்.
ஆம், தலைப்பின் படி விவாதத்திற்குரிய கட்டுரைதான். புலம்பெயர் இலக்கியம்' பற்றி பேசுவதற்கு முன் நிபந்தனையாக புலம்பெயர்ந்தவர்கள் குறித்துப் பேச வேண்டியுள்ளது. பொதுவாக ஒருவரது முன்னோர், சந்ததியினர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே அவருக்குச் சொந்தமான புலம் எனப்படுகிறது. காலாகாலமாய் ஒருவர் வாழ்ந்த மண்ணிலிருந்து சுயவிருப்பத்துடன் இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்துபோகிறவரைநாம் புலம்பெயர்ந்ததாக கொள்ள முடியாது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் பெற்ற பட்டங்களைக் காட்டி டொலரிலும் பவுண்ட்ஸிலும் பிச்சை எடுத்து கொழுப்பதற்காக செட்டில் ஆவதற்கா அயல்நாடுகளுக்கு ஏகியவர்களைப் பற்றிபேச இங்கொன்றுமில்லை. எனவே, தமதுவாழிடத்தில் தொடர்ந்துவாழ முடியாதஅக,புறவய நெருக்கடிக்கடிக்காளாகிவந்துகட்டாயமாக அங்கிருந்து வெளியேறுகிறவரை வெளியேற்றப்படுகிறவரை புலம்பெயர்ந்தவராக 65T66T6) Tib.

Page 63
122 அந்தனி ஜீவா
இப்படி தன் கட்டுரையை தொடரும் ஆதவன் தீட்சண்யா புலம்பெயர் இலக்கியம் என்பது எவ்வாறுஉருவாகிறது. எதனை புலம்பெயர் இலக்கியம் என்று அழைக்கலாம் என விரிவான விளக்கத்தைத் தருவதுடன் விவாதத்திற்குரிய பொருளாக அதனை விரித்தெடுக்கிறார்.
இலங்கையின் மலைப் பகுதிகளில் கோப்பி, தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்துவரப்பட்ட இம்மக்கள் புதிய வாழிடமான புகலிடத்திற்குள் பொருந்த முடியாத தமது துயரங்களைபாடல்கள்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
உயிருக்கு உத்தரவாதமற்றதாய் கடற்பயணம் இருந்ததை பாய்க்கப்பல் ஏறியேவந்தோம் அந்நாள்பலபேர்கள் உயிரினையிடைவழிந்தோம் என்னும் மீனாட்சியம்மையின் பாடல்வரிகளிலிருந்தே அறியமுடிகிறது.
அந்ததந்தகாலத்தின்பதிவாகவெளிப்படுத்தும் இலக்கியப்படைப்புகளும் நிகழ்கலைகளும் மலையக இலக்கியம் என்ற தனிவகையாக வளர்ச்சி கண்டுள்ளது. வாய்மொழிப் பாடல்கள் தொடங்கி கதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் எனச் செழித்து நிற்கும் மலையக இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாக நமக்கு தோன்றாதிருக்கக் காரணம் என்ன? அவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு சாதியினர் என்பதால் தன்னியல்பாக உருவாகியுள்ள புறக்கணிப்பு மனப்பான்மை தான் காரணம் என்று சொன்னால் அதைக் குறுகிய சாதியப் பார்வை என்று ஒதுக்கிவிடத் துணிபவர்கள் வேறுநியாயமானதை முன்வைக்க வேண்டும்.
தமிழின் புலம்பெயர் இலக்கியம் என்றதும் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது இலங்கைத்தமிழர்களின் எழுத்துகள்தான். அதிலும் உக்கிரமான அந்தகவிதைகள்தான் உடனே நினைவுக்கு வருகின்றன.
கோரப்பனிக்குளிரில் உதடுகள் வெடித்து உதிரம் கொட்ட உறக்கமிழந்தஅந்த இரவில் இஸ்ரேலிய பவுண்களை எண்ணுகிற போது உனது நினைவுகள் என்னை ஓலமிட்டு அழவைக்கும் எனக்கு இன்றும் ஞாபகமிருக்கு
 
 

பார்வையின் பதிவுகள் 123
அப்போது எனக்கு 12 வயதிருக்கும்
நம் வீட்டு மூன்றிலிலே நான்தடுக்கி விழுந்து
என் உதட்டின் மெல்லியதான கீறலுக்கே
நீஓவென்று அழுதாயே
இங்கே எனக்காய் அழுவதற்கு யாளிருக்கிறார்
இந்த ஐரோப்பிய நாட்டில்
அகதியாய் அநாதையாய்
வெந்து போகிறது மனது
எப்போது என் நாட்டில்
எப்போது என் வீட்டில்
எப்போது உன் மடியில்
உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்படைப்புகள் வழியேதம்மையே கண்டனர். தன்நாட்டைப்பற்றிய ஞாபகங்களை ஒருவர் பகிர்ந்து கொள்வது கூடகேள்விகளுக்குள்ளாகும் இன்றைய நாளில் புலம்பெயர் இலக்கியம் என்று எவற்றைக் குறிப்பிடுவது. புகலிடத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுத்து தன்னை தகவமைத்துக் கொள்கிற போராட்டத்தினூடே ஊர் பற்றிய ஞாபகங்களால் அலைக்கழிக்கப்படும் மனதின் வெளிப்பாடுகள் அனைத்தும்புலம்பெயர் இலக்கியமாககாலத்தின் முன்னே வைக்கப்பட்டு விட்டதா?
லம்பெயர் இலக்கியம் என்றவகைமையை ஆழமும் விரிவுகொண்டதாக மாற்றியமைக்கும் பொறுப்பு:தமிழக படைப்புலகத்தின் முன்னே இருக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகள் மட்டுமேயல்லாது மலையகத் தமிழர், தமிழ் முஸ்லிம்கள், தலித்துகளிடமிருந்து வெளியாகும் மாற்றுக்குரல்களையும் இதற்குள் இணைக்கவேண்டியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்துபிரிட்டிஷ்மற்றும்பிரான்ஸ்காலனியாட்சியாளர்களால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அயலகத்தமிழர், இந்திய வம்சாவளியினர் என்ற அலங்கார வார்த்தைகளைப் பூசி இவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட வரலாறுமறைக்கப்பட்டுவருகிறது. இவர்களதுகலை,இலக்கிய வெளிப்பாடுகளையும் வாழ்வனுபவங்களையும் உள்ளடக்கும் போதுதான் இந்தபுலம்பெயரும் இலக்கியம் என்பது முழுமைபெறும்.

Page 64
தமிழ்ச் சீரிதழ்கள்
நமது நாட்டில் சிற்றிதழ்கள் என அழைக்கப்படும் சீரிதழ்கள் மல்லிகை, தாயகம், ஞானம், கொழுந்து, செங்கதிர், ஜீவநதி, தென்றல், படிகள், நீங்களும் எழுதலாம், பெருவெளி, தொண்டன் என பல இதழ்கள் இந்த இதழ்கள் நமது பார்வையில் பட்டவை. ஆனால், தமிழகத்திலிருந்து பல சிற்றிதழ்கள் வெளிவருகின்றன.
நமது புத்தக கடைகளில் அதுவும் பூபாலசிங்கம் புத்தகசாலையில் மாத்திரம் தமிழக சிற்றிதழ்களை பார்க்க முடியும். காலச்சுவடு, உயிர்மை. அதற்கு முன்னர் புதுவிசை என்ற சிற்றிதழ்கள் இவைகளில் ஓரிரண்டு வணிகமயமான நிலையில் கம்பீரமாக காட்சிதருக்கின்றன.
ஆனால். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வருகின்றன. ஒருசில நெஞ்சுக்கு நெருக்கமான இலக்கிய உறவு காரணமாக நம்மவர்களை வந்தடைகிறது. ஆனால், அவைகள்எல்லோருக்கும்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
நான் கடந்த ஏழு நாட்கள் ஒரு முக்கிய விடயமாக திருச்சியில் இருந்த பொழுது, ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த சிற்றிதழ் சேகரிப்பாளர் தி.மா.சரவணன் என்ற நண்பரை தொடர்புகொண்டேன். அவரும்என்னைத் தேடிவந்தார். அவரிடம கொண்டு சென்றிருந்தமல்லிகை முலர் மல்லிகை இதழ்கள், தாயகம், படிகள், ஞானம், செங்கதிர், எங்கள் நூலகம் போன்ற ஒரு தொகை சஞ்சிகைகளையும் புரவலர் புத்தக பூங்கா வெளியீடுகளை, எனது வெளியீடுகளை, மலைய இலக்கியம் சம்பந்தமான நூல்களையும் அவரிடம் கொடுத்தேன். அவரிடம் அவரின்சேகரிப்புகளைபார்க்கவேண்டும்.
 
 

பார்வையின் பதிவுகள் 125
அவரும் என்னை மிக்க அன்போடு தனது நூல்கள், சஞ்சிகைகளை சேகரித்து வைத்திருக்கும் கருணாநிதி நகரில் உள்ள கலைநிலா பதிப்பகத்தில் அழைத்துச் சென்றார்.
கலைநிலா பதிப்பகத்தில் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும்
நூல்களையும் சேகரித்துவைத்திருந்தார். அப்பொழுதுபட்டப்படிப்புபடிக்கும் மாணவிஅவரைதேடிவந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்புக்காக ஆய்வை மேற்கொள்வதாகக் கூறினார். அவர் இலங்கையில் வெளிவரும் சிற்றிதழ் சம்பந்தமான ஆய்வைமேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். நான்வெளியிட்ட "கொழுந்து இதழ்களை படித்திருப்பதாகவும் ஞானம் இதழ்கள் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்த்ததாகவும் பல தகவல்களை சொன்னார்.
கலைநிலா பதிப்பக சரவணன் தன்னிடமுள்ள இலங்கை இதழ்களை அவருக்கு பார்வையிடக் கொடுத்தார். ஒரு தனி நபராக, போதிய பொருளாதார வசதியின்றி இருந்த நண்பர் சரவணனின் செயற்பாடுகளை பார்த்து வியந்தேன். அது மாத்திரமல்ல, அவர் சிற்றிதழ் வெளியிடுபவர்களுக்கு அவற்றைவிற்பனை செய்து உதவியும் செய்கிறார். அவர்களிடமிருந்து எழுத்தாளர் கே. டானியல் சிறப்பிதழான மணல்வீடு ஐந்து பிரதிகளை பெற்றுக்கொண்டேன். அது மாத்திரமல்ல சிற்றிதழ்கள் சேகரிப்பாளரானதி, மா.சரவணன் தமிழ்ச்சீரிதழ்கள்-நோக்கும்போக்கும் தமிழில் இதழியல் நூல்கள், சிறுவர் இதழ்கள் என்று மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். இதழியல் படிப்பவர்களுக்கு பயனுள்ள நூல்கள்.
நாம் சிறு சஞ்சிகைகளை சிற்றிதழ்கள் என குறிப்பிடுகின்றோம். ஆனால், தமிழகத்தில் உள்ள சிற்றிதழாளர்கள் பலர் சிற்றிதழ்களை சீரிதழ்கள் என்றே குறிப்பிடுகின்றனர். இது ஒரு நல்ல சொல்.
"புதுச்சேரிநண்பர்தமிழ்நெஞ்சன் தனது புதிய இல்லத்தில்தமிழ்ச்சீரிதழ் காப்பகம் தொடங்க இருப்பதாகதெரிவித்தார். அவரது இந்தச் சீரிதழ்" என்ற தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்துதிருச்சியில் நடைபெற்ற இதழாளர் சந்திப்பு கருத்தரங்கில் வாழும் இதழ்கள் என்ற தலைப்பில் சிற்றிதழ்கள் எனக்கூறலாம் என்றுகட்டுரை வாசித்தேன், பின்னர் பல்வுேறு சிற்றிதழ்களிலும் இதுகுறித்துகட்டுரைக் எழுதினேன். எனது இந்த கருத்தை பல சீரிதழாளர்களும் வரவேற்றனர். இவ்வாறு தனது நூலில் தி.மா. சரவணன் குறிப்பிடுகின்றார்.

Page 65
126 அந்தனி ஜீவா
கலைநிலா பதிப்பகம் தி.மா. சரவணன் 20 ஆண்டுகளாக சீரிதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் பல்வேறு கல்லூரிகளில், கருத்தரங்குகளில் இதழியல் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இவரது சேகரிப்பில் இலங்கையில் வெளிவந்த பல சஞ்சிகைகளையும் பாதுகாத்து வருகிறார். தமிழில் இதழியல் நூல்கள்-நூலடைவு என்றநூலில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் சிறுவர் இதழ்கள்
என்ற மகுடத்திலும் ஒரு நூலை சரவணன் வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுப்பில் 1840ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை வெளிவந்துள்ள ஏறக்குறைய 290இற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான இதழ்கள் குறித்த விவரங்கள், அதன் நோக்கங்கள், அதன் இலக்கியப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல, திருச்சியில் இன்னொருவரான க.பட்டாபிராமன் தமிழ் இதழ்களை சேகரித்துவருகிறார். தற்போதுதமிழ் செம்மொழி திட்டமத்திய நிறுவனத்திற்காக தமிழ் இதழ்களை அட்டவணைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். திருச்சியில் வாழும் இதழ் சேகரிப்பாளர்களான தி.மா. சரவணனும் க.பட்டாபிராமனும் இணைந்து காப்பகம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்றுதிருச்சியில் எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய சந்திப்பில் தெரிவித்தேன். பலரும் இதனை வரவேற்றனர். இதழியல்காப்பகம் உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மூன்றாவது கண்
Tெசிப்பு என்பது மிக முக்கியமானது, மனிதனை வாசிப்புதான் உயர்த்தும் ஊக்குவிக்கும் என்பதனை நான் உணர்ந்துள்ளேன். எனது பாடசாலை காலத்திலிருந்து வாசிப்பதில் அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்துள்ளேன். நூல்களை தேடித்தேடி வாசிப்பது என்பதுஎன் இரத்தத்தோடு ஊறியபழக்கம், ஒருவேளை சாப்பிடாமல்கூட இருந்துவிடுவேன். ஆனால், படிக்காமல் இருக்கமாட்டேன்.
அதனால்தான் எழுத்து என் வாழ்வாகவும் தொழிலாகவும் அமைந்தது. அதனால் எனக்குப்பிடித்தபுத்தகங்களை உடனே கண்டவுடன் எப்படியாவது வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அண்மையில் எனது பார்வையில்பட்டபுத்தகம் உலகின் மூன்றாவது கண் என்றநூல். அதனை பார்த்தவுடன் வாங்கிப் படிக்க வுேண்டும் என்ற ஆர்வம் தூண்டியது.
ஊடகவியல் சம்பந்தமான நூல் காவலூர் இ. விஜேந்திரன் என்பவர் எழுதியுள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது கண் என தனித்துவமாக குறிப்பிடப்படும் ஊடகத்துறை மூன்றாவது கண் என அறிஞர்கள் அழைக்கின்றனர். அதனை நூலாசிரிய தனது ஊடகத்துறை நூலுக்கு மகுடம் சூட்டியுள்ளார். இந் நூல் ஊடகத்துறை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என பரந்துவிரிந்துசெல்கிறது. அச்சுஊடகம், மின் ஊடகம் என போட்டியும் சாதனையும் மிகுந்துள்ளது.
"பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து எழுச்சிகொள்ளத் தொடங்கிய அதிவேக ஊடகச் செயற்பாடுகள் இருபத்தோராம் நூற்றாண்டில் பெரும் பிரிவாகப்பாய்ச்சலை ஈட்டத்தொடற்கியுள்ளன. அந்நியிைல் தொடர்பாடல் விழியாக முன்னெடுக்கப்படும் உள்ளடக்கம் தொடர்பான 'மீள்வாசிப்பு” அல்லது கட்டுமானக்குலைவு தொடர்பான கருத்துகள் மீளவலியுறுத்தப்படு கின்றன. தொடர்பாடல் வளர்ச்சியில் பிறிதொரு பரிமாணம் அது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஒரு கற்கை நெறியாக

Page 66
அந்தனி ஜீவா
வளர்ச்சியடைந்து வருவதாகும் என பேராசிரியர் சபா. ஜெயராசா முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 'உலகின் மூன்றாவது கண்‘ என்ற நூலில் இருபத்தெட்டு அத்தியாயங்கள் காணப்படுகின்றன. பத்திரிகையின் தோற்றம் என்ற அத்தியாயத்தில் இலங்கையின் பத்திரிகைத்துறை வரலாற்றில் முதலாவது வெளிவந்ததமிழ்ப்பத்திரிகை என்ற சிறப்பை"உதயதாரகை பெற்றுள்ளது. உதயதாரகை முதல் இலங்கையில் வெளிவந்த பத்திரிகை முதல் தமிழ், ஆங்கில இதழ்களின் பெயர், வெளிவந்த ஆண்டு பிரதம ஆசிரியர், நிறுவனம் என பலதகவல்களைதந்துள்ளார் நூலாசிரியர்.
உதயதாரகை முதல் அண்மையில் வெளிவந்த'விடிவெள்ளிவார இதழ் வரை 260 பத்திரிகைகளின் பெயர், பத்திரிகையின் பெயர், ஆரம்பிபத்த ஆண்டு பிரதம ஆசிரியர் என விவரங்களைத் தந்துள்ளார். இதில் பல சஞ்சிகைகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் இலக்கிய வரலாற்றில் பேசப்படும் மறுமலர்ச்சி, மலைமுரசு போன்றவை விடுபட்டுள்ளன. இன்றுமல்லிகை முதல் இருபதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகள் வடக்கு, கிழக்கு, மலையகம், அநுராதபுரம் என வெளிவருகின்றன. இவைகளையும் நூலாசிரியர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
"உலகின் மூன்றாவது கணி" என்ற நூலில் "ஊடகத்துறைக்கு உரமிட்டோரும் உரமானோரும் என்ற அத்தியாயம் மிக முக்கியமானது.
"தமிழ்ப்பத்திரிகைத்துறை நீண்ட வரலாற்றையும் பல புதுமைகளையும் சாதனைகளையும் தன் வசப்படுத்தியுள்ளது. உலகறிந்த பத்திரிகையாளர்களும் தமிழ்ப் பத்திரிகைத் துறை வளர்ச்சியிலும் வரலாற்றிலும் புதிய மெருகுடன் பலர் வரலாறுகளைத் தந்த பத்திரிகைச் செம்மல்கள் பலர் உள்ளனர். இதில் சிலர் முதன்மையானவர்களும்கூட, இதழியற் பரப்புடன் தம்மை இரண்டறக் கலந்து இன்புற்ற இவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை என்கிறார் நூலாசிரியர் காவலூர் இ. விஜேந்தின்."
ஊடகத்துறைக்கு உரமிட்டோரும் உரமானோரும் என்ற அத்தியாயத்தில் இறந்தவர்களை, இருப்பவர்களைபதிவுசெய்திருக்கிறார். முதலில் மறைந்த வீரகேசரி ஆசிரியர் கே.வி.எஸ்.வாஸ், இரண்டாவதாக தற்போது நம்மோடு வாழும் ஈழநாடு ஆசிரியர் எஸ்.எம். கோபாலரத்தினத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். அதேபோல மறைந்த சில பத்திரிகையாளர்களைப் பற்றி எழுதியதன் பின்னர் கொழும்பில் முன்னாள் பத்திரிகையாளரான கலாகரி ஆ.சிவநேசச்செல்வன் பற்றியும் தற்போது லண்டனில் வாழும் பொன். பாலசுந்தரம்போன்றவர்களைப்பற்றி எழுதியுள்ளார். வீரகேசரி,தினக்குரல் போன்றவைகளில் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராக இருந்த பொன். இராஜகோபால்பற்றிஒரேவரியில்முடித்துக்கொள்கிறார். அமரர் பேராசிரியர் க. கைலாசபதி பற்றி தினகரன் ஆசிரியராக இருந்தவர் என்று மாத்திரமே காணப்படுகின்றது. இத்தகைய தவறுகள் இனிவரும் பதிப்பில் நீக்கப்பட G36600rGBLb.
 


Page 67
அந்தனி
அந்தனி ஜி குப் புத்துயின் மறைந்து கிட இலக்கியப் பை நினைவூட்டியல் பெற்ற அக்கின் அன்னை இந்த இலக்கியமும், முஸ்லிம் எழுத் வளர்த்த கவிை திய அசோகன்,
மலையக தொ பிடத் தகுந்த நூ
197O 966 இதுவரை 14 198O8566b De
பெருமை இவன
2501- Parrweyn Padiugal- Anthony, எஸ். கொடகே சகோ
675, பீ. டி எஸ். குலரத்ன மாவத்தை
தொலைபேசி: (011) 2685369, 2686 LJp60TUI JLJE5b529;6 TL6)l. LLD BBB. Lup godageem(a)sit.lk www.god.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீவா.
வா அவர்கள் மலையக இலக்கியத்துக் அளித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவள். ந்த மலையக இலக்கியங்களையும், டப்பாளிகளையும் இலக்கிய உலகிற்கு வர். இவள் சாகித்திய மண்டலப் பரிசில் ரிப்பூக்கள், ஈழத்தில் தமிழ்நாடகம், திரா, காந்தி நடேசையர், மலையகமும் மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு ந்தாளர்களின் பங்களிப்பு, மலையகம் மத மலையக மாணிக்கங்கள், திருந் நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம், ழில் சங்க வரலாறு உள்ளிட்ட குறிப் ல்களை எழுதியவர். பில்நாடகத்துறையில் கால் பதித்த ஜீவா நாடகங்களை மேடையேற்றியுள்ளார். லையக வீதி நாடகங்களை அளித்த ரையே சாரும்.
பேராசிரியர் மு. இளங்கோவன் புதுச்சேரி
ISBN 978-955-30-2814-3
Jeeva
bᎫᎢᏧ56lI
கொழும்பு 10. 25, 4-614904 னயபந.உழஅ
age.com 7A 55328, 143
Design by Design Lab, Colombo