கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரவு நேரப் பயணிகள்

Page 1


Page 2


Page 3
-
ܐ ܢ .
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செங்கை ஆழியான்

Page 4
0 முதற் பதி4ே44 ஜனவரி 1889
(C) திருமதி கமலா குணராசா,
B. A. (Cey. ). , Dip-in Ed., S. L.P.S., II 82 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் o ஆச்சுன் துதிவு: யாழ் ப. நோ கூ ச . பதிப்பகம்
261, மின்சாரநிலைய வீதி யாழ்ப்பாணம்
ஐ பதிப்பகம் 3 கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், o அட்டை நிழற்படம்: செங்கை ஆழியான் o gígs); eli L.T.
釁
da I RA VUNE RAP PAYA NAT K A سيسهم يا
: ' (NIGHT TIME TRAVELLERS) -
Collection of short Stories by SEN GAIAALIYAN (Dr. K.: Kuna ras » Be A. Hons. (Cey) e M A零。
pm, D., S. L. A Ss) (c) Kamala. Kunarasa, b, Brown Road, Jaffna, Sri lanka First Edition: January, 1995 Printed by: J. M. P. C. S. Printers
affa 3. Published by Kamalam Pathippakam, Jaffna Cover Photo; The Auther Title Photo: A. Manekara Inside Title Photos; M/s. C. N. R. Rasi ka Tarn
T. Thave p.lan, T. Rajarata ëm. ^ yar, K. KATON IN & Auther, Pages: 8 - 1.0 s to 8
விற்பனையாளர்
பூபாலசிங்கல் ஆத்தகசாலை, urbo urgest as" (lit.
ரீ லங்கா புத்தகசாலை யூாழ்ப்பாணம் கொழும்

சமூகப் பிரச்சினைகளிலிருந்து கதையம்சத்தைத் தேர்ந்து கொள்வதில் சிலரைப் போலக் கோட் பாட்டு ரீதியான அணுகுமுறைகளை அவர் (செ. ஆ.) கடைப்பிடிப்பதில்லை. சமூக மாந்தரின் சராசரி உணர்வுகளினடியாகவே அதைத் தேர்ந் தெடுப்பார் .
- பேராசிரியர் சுத் வித்தியானந்தன்
தான் கடமையாற்றிய பகுதியின் சமூக உறவு களையே தனது படைப்பிலக்கியங்களின் பிரதான குவிமையமாகக் கொண்டு காட்டுவதில் செங்கை ஆழியான் முன்னணியில் நிற்கின்றார்."
- பேராசிரியர் கா சிவத்தம்பி
* சமூக அறிவியல் தரவுகளைச் செவ்வனே உணர்ந்து கொண்டு ஆக்க இலக்கியம் படைப் பவன் அவ்விலக்கியத்துக்கு ஒரு புதிய பரி மாணத்தை வழங்குகிறான். ஒரு சமூக அறிவிய லாளனாகிய செங்கை ஆழியானுடைய ஆக்க இலக்கியங்கள் பல இவ்வகையிலே புதிய பரி மாணத்தைப் பெறுகின்றன."
- பேராசிரியர் அ. சண்முகதாஸ்

Page 5
- iv -
சமூகப் பிரக்ஞையும் பொறுப்பும் இருப்பதனால் காத்திரமான விஷயங்களை எளிய முறையில் அவரால் கூறிவிடமுடிகிறது.
- கே. எஸ். சிவகுமாரன்
ஒரு கையால் நாடிந்துடிப்பைப் படர்த்துக் கொண்டு மறுகையால் மருந்து எழுதும் வைத்தியர் போன் றவர் செங்கை ஆழியான், மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து பேனாவை நகர்த்துவார்.
- சிரித்திரன் சுந்தர்
செங்கை ஆழியான் சமூக வரலாற்றை மனிதநேய நோக்கில் காண முற்பட்டவர். தனி மனிதரை யும் சமூக மாந்தரையும் அவர்களது இயல்பான உணர்வோட்டங்களுடன் இனங்காட்ட விழைந்த வர் காட்டியவர்.
- கலாநிதி நா சுப்பிரமணியன்
ஈழத்து இலக்கிய வானில் தனக்கென்று ஒரு வலுவான இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட செங்கை ஆழியானின் சிறுகதைகள் சுமந்துவரும் சமூகச் செய்திகள், சாதாரண மக்கள் படும்
தாங்கொணா இன்னல்களுக்கிடையில் அவர்கள் மனதில் ஏற்படும் கலக்கங்களுக்கு எதிர்காலத்தைப் பொறுத்த நம்பிக்கை ஒளிக்கீற்றுகளாகவுள்ளன.
- து வைத்திலிங்கம்

மூத்த எழுத்தாளர், முற்போக்காளர், மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா வழங்கும் முன்னுரை
நூல்களுக்கு முன்னுரை எழுதுவதையோ அல்லது படைப்பு களுக்கு முன்னால் என்னுடைய நிஜ முகத்தை நீட்டுவதையோ நான் பொதுவாகவே தவிர்த்துவிடுவதுண்டு கூடியவரை தட் டிக் கழிப்பேன். காரணம் சகலவற்றையும் உன்னிப்பாகப் பார்த்து அவை பற்றி எனக்குள் நானே மதிப்பீடுகளைச் செய்து ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதோடு நின்றுவிடுவது எனது இயல்பான வழக்கமாகும். அதிலும் சஞ்சிகையாளனாக மாறிய இந்த இடைக்காலத்தில் மிகக் கவனமாக இந்த நத்தை ஒட்டுக்குள் என்னை நானே சுருட்டிக் கொள்ளும், ஒதுங்கும் முறையை அனுசரித்து வந்திருக்கின் றேன். பல்வேறு வகைப்பட்ட படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழக வேண்டியது எனது தொழில்முறை நட்பு கூடியவரை சொந்த அபிப்பிரரியங்களை மனதிற்குள் புதைத்துவிட்டுத்தான் காரிய மாற்றி வருகின்றேன். அதற்காக எனக்கென்றொரு கருத்து இல்லை என்பது இதற்கு அர்த்தமன்று. எனக்கேயான சொந்தக் கருத்துக்களுக்காக நான் யாருடனும் மோதிக் கொள்வது இல்லை. அது இந்தக்காலகட்டத்திற்குத் தேவையு மில்லை.
நண்பர் செங்கை ஆழியான் என்னைப் பாதித்துவிட்டார்: அதற்குக் காரணம் அவரது பழகும் எளிமை, பந்தா இல்லாத பழக்கவழக்கங்கள், இலக்கிய நேசிப்பு. இவை தவிர, இவரது இடையறாத உழைப்பு. "இந்த மனிதனால் எப்படி இப்படிச் செயல்பட முடிகிறது" என விழிகள் அகல நான் வியப்ப துண்டு. அதன்மூலம் என்னை நெறிப்படுத்துவதுமுண்டு ஒரு வேளை அந்தப் பிரமிப்பின் விளைவுதான் இந்த முன்னுரையோ என எனக்குச் சொல்லத் தோன்றுகின்றது.
ஒருவர் உழைக்கும் விதம்தான் அவருடைய உண்மையான
தகுதிகளைக் காலக்கிர மத்தில் நிர்ணயிக்கும் அளவுகோலாகும்2

Page 6
ܝܘ v1 ܝܐ
இந்த "இரவுநேரப் பயணிகள்' நூலில் பதினொரு கதைகள் அடங்கி உள்ளன. இந்தப் பதினொன்றில் ஏழு கதைகள் மல்லிகையில் பிரசுரமாகியவை பிரசுரிப்பதற்கு முன்னர் இவரது கதைகளை ஆற, அமர படித்துப் பார்ப்பது வழக்கம் . அத் துடன் அச்சுக்குப் போகின்ற படிகளை ஒப்புநோக்கிப் பார்க் கின்ற வேலையும் எனதே. எனவே கருத்தூன்றிப் படித்து விடுவேன்.
எனவே இதிலுள்ள கதைகளைப் பற்றி மாத்திரமல்ல, இவரது பல்வேறு கதைகளை - அநேகமாக அவை யாவும் மல்லிகையில் வெளிவந்தவையே, எல்லாவற்றைப் பற்றியுமே எனக்கு நன்கு பரிச்சயம் இலக்கியக் களத்தில் பன்முகக் கருத்தோட்டங்கள் மலிந்துள்ள சூழலில் இவரது படைப்புகள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு மலர்ந்தவை யாகும். நமது நிகழ்காலத்தில் கருமையான - கடுமையான - வாழ்க்கையின் உக்கிரமான இரவுகளை இவரது இக்கதைகளில் தரிசிக்கின்றோம். இந்த வழிதெரியா மையிருட்டில் பாமர மக்கள் எனப் படித்தவர்களால் நம்பப்படும் மனிதர்கள் இதய வெளிச்சத்தில் நம்பிக்கையுடன் நடை.போடுகின்றனர் . வாழ்க் கையை அத்தியாந்த வாத்சல்யத்துடன் நேசிப்பதன் காரணத் தினால் தமது வாழ்க்கைக்கு எதிராகத் தம்முன்ன ல் முகம் காட்டும் பாரிய இடர்களுக்கு எதிராக இவர்கள் மன வலிமை யுடனும், ஆன்ம பலத்துடனும் போராடுகின்றனர்; முகம் கொடுக்கின்றனர். இங்கே தனிமனித வெற்றியல்ல முக்கியம். மானுடம் இந்தச் சிரமங்களுக்கு மத்தியிலான சூழ்நிலையில் நிமிர்ந்து நிற்க முனைகின்றதே அதுதான் முக்கியம் . இன் றைக்கு இந்த மானுடப் பெரும் முயற்சி நமக்கெல்லாம் வெகு இயல்பானதாகத் தெரியலாம். நாளை என்றொருநாள் வரும் . அன்று இந்த மானுடத்தைப் பேணிய சாமானிய மனிதர்கள் நிச்சயம் காவிய புருஷர்களாகப் பேசப்படுவார்கள் .
அந்நிய ஆக்கிரமிப்புக்குட்பட்ட வியட்நாமில் நெல்வயல் களூடே வலம் வந்த விவசாயி எப்படி அந்த மண்ணிற்கு நடந்த கொடுமைகளைக்கூட வாழ்வின் சுவையாகக் கருதி தனது தினசரி வாழ்வைச் செப்பனிட்டு வாழ்ந்த னோ அப்படி வாழ்ந்து காட்டுகின்றான் "நம்மிவன்" புரட்சிக்கு உள்ளாகிய ரஷ்ய நாட்டில் ஒரு மில் தொழிலாளி தற்காலிக சிரமங்களைப்
 

y a
பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நின்று வாழப் பழகினரினோ அப்படி வாழ்ந்து காட்டிவருகின்றான் நமது மண்ணைச் சேர்ந்த இந்தச் சாதாரணன், இது எவ்வளவு பெரிய அதி சயிக்கத்தக்க விஷயம்.
இந்தச் சாமானியன் ஈழத்து இலக்கியத்திற்கே ஏன் தமிழிலக்கியத்திற்கே - புதியவன். மிகமிகச் சாதாரண மனி தனை - முன் எப்பொழுதுமே காணமுடியாத கதாநாயகனை இவரது கதைகளில் பார்க்கின்றோம் . பாமரர்களாகக் கருதப் பட்ட இவர்கள் பிரச்சினை என்று நேர்கொள்ளும்போது காட் டும் பெறுமை, நிதானம், அதேசமயம் வீரியம் என் நெஞ்சைக் கவர்ந்ததுண்டு. அதுதான் இத்தொகுப்பின் வெற்றியாகக் கணிகின்றது
இந்த இலக்கியப் புதியவனை நமக்கு இனங்கர்ட்டித் தந் திருக்கிறார் செங்கை ஆழியான். அவரது பாத்திரப் படைப்புக் களில் என்னைக் கவர்ந்த அம்சமே இதுதான். இந்தச் சோகச் சூழ்நிலையிலும் வாழ்வின் நேசிப்புத்தான் இச்சிறுகதைகள் அனைத்தினதும் மையக் கருவாகும். இவரது பேனாவுக்குள் ஒரு துயரம் கலந்த வீரம் வெளிப்படுகின்றது.
*அடிக்கடி நிறைய எழுதுகின்றார்" என்றொரு குற்றச் சாட்டு இவர் மீது சொல்லப்படுவதுண்டு . இதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று எதுவுமே சமீப காலங்களில் எழு தாதவர்கள் சொல்வது. இது கையாலாகாத்தனத்தின் வாய் வெளிப்பாடு. அடுத்தது உணர்ந்து சொல்வது. இதில் ஒரளவு நியாயம் உண்டு. அதேசமயம் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; படைப்புக்கும் ஒரு காலம் உண்டு. படைப்பாளிக் கும் ஒரு நேரம் உண்டு. படைக்கலாம், படைக்கலாம்" எனக் காலம் கடத்திக்கொண்டே போனால் முடிவில் அந்தப் படைப் பாளி மந்தித்துப்போய் மரத்துவிடுவான் இறைக்க இறைக்கத் தான் நீர் ஊறும் பல பிரெஞ்சு, ஆங்கில, இத்தாலிய எழுத் தாளர்கள் சம நேரத்திலேயே பல நாவல்களை சிருஷ்டித்தனர் என்பது இலக்கிய உண்மை, அடிக்கடி எழுதுகிறார் என்று குற்றம் சாட்டுவதைவிட என்ன எழுதுகிறார், அது இலக் கியத் தனமாக மிளிர்கின்றதா என்பதையே நாம் பார்க்க வேண்டும்.

Page 7
நான் நினைக்கின்றேன், செங்கை ஆழியானின் இயல்பான முயற்சிகளின் வெளிப்பாடுகளின் ஒர் அம்சம்தான் இந்தப் படை புத் தொழிலும் என்று, அவர் சொல்வதைப்பே ல அவரால் எழுதாமலே இருக்க முடியவில்லை; ஆகவே எழுது கின்றார். பெர்னாட்ஷா கூடத் தினசரி பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதி வந்தவர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஒரு படைப்பாளி எழுதுவதெல்லாம் உயர்ந்த சிருஷ்டியாக வந்து விடுவதில்லை, சில வகைதான் தேறும் . எனவே அதிக மாக எழுதுகின்றாா என்ற குற்றச்சாட்டை நான் ஓங்கி நிராகரிக்கின்றேன். கற்பனை வளம் இருக்கும்போது தொடர்ந்து எழுதுவதுதான் சரி. இதில் ஒரு சுயநலமும் உண்டு மல்லிகை இவரது படைப்புக்களை விரும்பி வரவேற்கக் காத்திருக்கின் றது. "ஒரு ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்' என்ற ஒரு சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் மல்லிகை பிவ் வெளி வந்தது. அதே கதை பின்னர் சுபமங்களா'விலும் வெளி யிடப்பட்டது. இக்கதை பற்றி பலரும் தமிழகத் ஜீல் விதந் தோதிப் பாராட்டினார்கள். இக்கதை மல்லிகையில் வெளி வந்த காலத்தில் நான் எனது நெருக்கமான இலக் கய நண்பர் களுக்கு மனம் திறந்து சொன்னதுண்டு: இக் கதை சர்வதேச தரம் வாய்ந்த சிறுகதை, இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் அது சர்வதேசப் பெருமை பெறும் என அப்போதே சொல்லி வைத்தேன். அது பின்னர் நிதர்சன மாகியது. பலரும் பேசினர்.
ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் குறை உண்டு என அடிக்கடி நான் சிந்திப்பது உண்டு. "நமது படைப்புக்கள், கருத்துக்கள். சிந்தனைகள் இன்னமும் வெளி உலகத்திற்கு எட்டாமல் இந்த மண்ணிற்குள்ளேயே புதைந்து போயிருக் கின்றன" என நான் கவலைப்படுவதுண்டு. மலையாள எழுத் தாளர்கள், வங்கத்துப் படைப்பாளிகள், சர்வதேச புகழ் பெறுவதற்கு அந்த அந்த நாட்டு ஆங்கில மொழி அறிஞர் ள் பாரிய தொண்டு செய்துள்ளனர்; இயன்றளவும் செய்து வரு கின்றனர். ஆனால் ஆசியாவிலேயே கல்வித்தரம் உயர்ந்த நாடு எனப் போற்றப்படும் நமது நாட்டில் அதிகம் படித்த வாகளில் தமிழர்களில் அநேகர் உளர் என கல்வித்தகைமை பேசும் நமது மண்ணில் நமது படைப்புக்களை மொழி ஆக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்ய ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் அருகிப்போயுள்ளனர் என்பது மெத்த விசனிக்கத் தக்கதொன்றாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலப்புலமை மிக்க தண்பர் எ. ஜே கனகரட்னா இந்தப் பாரிய பணியைக் செய்து வந்த வர். அவர் செய்து வந்த பணியால் தமிழர் அல்லாதவர்கள் ஒரளவு நமது படைப்புத் திறமையைத் தெரிந்து வைத்திருக்க வழி ஏற்பட்டது. ஆனால் இன்று அப்படியான வாய்ப்பு நமது படைப்பாளிகளுக்குக் கிடையாது. நண்பர் கனகரட்னாவும் ஒய்ந்துபோய்விட்டார்.
மற்றவர்கள் மூலம் நமது படைப்புக்களின் குறைநிறைகளை அறிவதன் மூலம்தான் எம்மைச் செப்பனிட முடியும். தமிழகத் தில் இருந்து கூட ஓர் இலக்கியக் குரல் கேட்கின்றது. நாடகம், கவிதை, வளர்ந்துள்ள அளவுக்கு நாவல், சிறுகதை வளர வில்லை என்ற குரல் மேலும் தொடர்ந்து சொல்கின்றது. "இதைச் செரல்லும்போது ஈழத்துப் படைப்பாளிகள் ரோசப் படுகின்றனர்; கோபமடைகின்றனர்" என நம்மீது குற்றம் *ாட்டுகின்றனர். இக்கருத்து உண்மையாக இருக்கலாம். இக் கருத்து உண்மையென்றால் நாம் நம்மை நெறிப்படுத்தி வளர்த் துக் கொள்ள பின்னிற்க மாட்டோம். தயங்கவும் மாட்டோம். இக்கருத்தை நாம் எதிர்ப்பது இக்கருத்தைச் சொன்னதற்காக வல்ல. இக்கருத்தை மொத்தமாகச் சொல்ல நமது நாட்டில் இருந்து எத்தனை படைப்பு நூல்களைப் படித்துள்ளீர்கள், னத் தனை எழுத்தாளர்களின் மனவோட்டங்களை உணர்ந்துள்ளீர் கள்' என்பதுதான் நம்முடைய கேள்வி. கிட்டத்தட்ட வ.வே. சு. ஐயர் காலத்தில் தொடர்ந்து புதுமைப்பித்தன் ஊடாக ஜெய் காந்தன் வரை வந்துள்ள ஈழத்துப் படைப்புக் காலத்தில் தோன் றிய நூல்களில் எதனைப் படித்துப் பார்த்துவிட்டு இக்கருத்தைச் சொல்கின்றீர்கள் என்றே நாம் கேட்க வேண்டியவர்களாக வுள்ளோம். அதற்கு அனுசரணையாகச் செங்கை ஆழியான் மேலே சொன்ன கதையையும் அவரது காட்டாறு நாவலையும் படித்துப் பார்க்குமாறு சிபாரிசு பண்ணுகின்றேன்.
- மிகவும் ஆச்சரியப்படத்தக்க விதமாகச் செங்கை ஆழியான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்நூலிலுள்ள கதைகளை எழுதி

Page 8
யுள்ளார். ஓர் எழுத்தாளனை அவனுடைய தத்துவப் பார்வை யில் இருந்து பிரித்துவிட முடியாது. அவனுடைய சொற்களுக்கு உணர்ச்சியும், எழுத்திற்கு எழுச்சியும், வாழ்க்கைக்கு அர்த்த மும் தருவது அவனுடைய தத்துவப்பார்வையே. செங்கை ஆழியானுக்கு அவருக்கேயுரித்தான ஒரு தத்துவப் பார்வை உண்டு. எனக்கும் அப்படியே. இரண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது இங்கு தேவையேயில்லை. ஆனால் பரஸ் பரம் ஒருவரையொருவர் நன்கு விளங்கிக்கொண்டிருக்கின் றோம். அவர் என்னை வென்றுவிட்டாரா, அல்லது அவரை வெற்றி கொண்டுவிட்டேனா என்பது இங்கு கேன்வி அன்று. அல்லது இருவருமே இடையில் சமரசம் செய்து கொண்டுள் ளோமா என்பது இங்கு ஆய்வுக்குரியதன்று. இருந்தும் நாங்கள் பரஸ்பரம் நெருங்கி வந்துள்ளோம் என்பதே யதார்த்தமாகும். வயது ஒரு காரணம், அனுபவம் வேறொரு காரணம் . இந்தப் போர்க்கால அவலங்களைப் பார்த்துப் பார்த்து இருவருமே பரிதவித்து நாம் தவிப்பதும் இன்னோர் காரணமாக இருக்க லாம். ஆனால் ஆரோக்கியமான திசைவழியில் நாம் இணைந்து விட்டதுதான் உண்மை. இந்த முன்னுரையே அதற்குச் சாட்சி சொல்லும், மலரும் மல்லிகையில் செங்கை ஆழியானின் படைப் புக்கள் தொடர்ந்து வருவது எனது ஒப்புதல் வாக்குமூலத்தை உண்மைப்படுத்தும்.
பல காலங்களுக்கு முன்னர் செங்கை ஆழியானுக்கும் அவரது இலக்கிய பாதையைப் பின்பற்றுபவர்களுக்கும், எனக் கும் - எனக்கும் என்று சொல்வது இந்த இடத்தில் பொருத் தாது - எனது இலக்கியக் கொள்கையைத் தமது கொள்கை யாகக் கொண்டிருந்தவர்களுக்குமிடையே இலக்கிய உறவுகளில் கருமை படர்ந்திருந்ததுண்டு. ஒருவரையொருவர் அந்நியர் களைப் போலப் பார்த்து விலத்திப்போனதுண்டு. ஆனால் அதிசயம் என்னவென்றால் இன்று நாம் அனைவரும் நமது நமது சொந்த்க் கோட்பாடுகளை, கொள்கைகளைச் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் இணைந்து செயலாற்றி வருகின்றோம். இந்த இணைவுக்கு செங்கை ஆழியான் பெரிதும் பங்காற்றிய துண்டு எழுத்தாளர்களுக்கென்றே ஒர் இடத்தைக் கட்டிடத் துடன் பெற்றுத் தருவதில் அவர் ஆற்றிய பங்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்
 
 
 
 

3.
சமீப ஆண்டுகளாக மக்களிடையே நமது படைப்புக்களை வாசிக்கும் வழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதற்கு நமது மக்களின் பாரிய அனுபவங்களும், அரசியல் விழிப்புணர்வு களுமே அடிப்படை காரணங்களாகும். இப்படி அதிகமாக வாசிப்புப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படைப்புக்களைத் தந்துள்ள நம்மவர்களில் முதன்மையானவர் செங்கை ஆழியான் ஆவார். நமது படைப்பாளிகளில் அதிக நூல்களை வெளியிட்டவரும் அவரே தான். இதன் மூலம் அண்மைய ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மீது கணிசமானளவு தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வாக்கை அவர் பெற்றுள்ளார். இவரது படைப்புக்களில் சில காலத்தையும் மீறிப் பேசப்படும் என மெய்யாகவே நம்புகின்றேன். சில கதைகள், நாவல்கள் மொழி மாற்றம் செய்யப்படுவதன் மூலம் இவரது பரிமாணம் வேறு பல கட்டங்களை அடையும் எனவும் நம்புகின்றேன்.
புதிய வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் வசிக்கின்றோம்."
இந்தக் காலகட்டத்திற்குரிய அடி ஆதாரமான மனிதனை - அவனது மானிட உள்ளுணர்வுகளை - எழுத்தாளர்கள் என் கின்ற முறையில் நெடு நோக்காகச் சிந்தித்துப் புதிய புதிய கோணங்களில் தரிசித்து எழுத்தில் வடித்து வைக்க வேண்டும். அவை வெறும் பிரச்சாரக் கோஷங்களாக அமைந்து விடாது ஆழமான கலை இலக்கியப் படைப்புக்களாக வருங்காலச் சந்ததியினருக்கு நமது பரம்பரையின் முதுசமாக விட்டுச்செல்ல வேண்டும்.
செங்கை ஆழியான் என்கின்ற படைப்பாளியிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. சாதிக்கப் பிறந்தவர் என்கின்ற எதிர்பார்ப்புகளும் உண்டு. வருங்காலத்தில் இந்த எழுத்துக்கள் அதற்குச் சாட்சி சொல்லும்,
மல்லிகை, யாழ்ப்பாணம். - டொமினிக் ஜீவா -
亚莎-0& 95。

Page 9
என்னுரை --
செங்கை ஆழியான் நிறையவே எழுதுகிறார்" எனப் பலர் கூறக்கேட்டிருக்கிறேன். அவர்கள் என்ன அர்த்தத் தில் இதனைக் கூறுகிறார்கள் என்பது எனக்குப் புரியாம வில்லை . இறைத்தால் தான் ஊற்று நன்கு வரும். என் னைப் பொறுத்தவரையில் இரு விடயங்கள் சத்திய DITGST66 ஒன்று மற்றவர்கள் நிறைய எழுதுவதற்கு நான் தடையல்லன் . இரண்டு: என்னால் எழுதாமல் இருக்க முடியாது. எழுதுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு பயிற்சி; அதேவேளை ஒரு தவம்.
யாழ்ப்பாணத்து இராத்திரிகள்" என்ற எனது இரண் டாவது சிறுகதைத் தொகுதியில் ஏன் எழுதுகின்றேன் என்பதற்கு, சமூகத்திற்குப் பயன் தரும் என்று நான் நம்புகின்றவற்றையும், எனக்குத் தெரிந்தவற்றையும் சலிக் காமல் பிறருக்கு எடுத்துக்கூற விழையும் அவாவின் உந்து தலே என் ஆக்கங்கள்" என உணர்ந்து எழுதியிருந்தேன். அரை நூற்றாண்டு கழிந்த அகவையில் கால் நூற்றாண்டிற் கும் மேலாக எழுதி வருகின்ற நிலையில் நான், தொடர்ந்து எழுதுவதற்கு இன்னொரு முக்கிய காரணமிருப்பதாகவும் படுகின்றது. நான் நித்தம் தரிசிக்கின்ற சமூக வாழ்க்கை யில் மனிதகுலத்தின் காயங்கள் மிகமிகப் பெரிதாகத் தெரிகின்றன. அவை நாளாந்தம் என் எழுத்தாள/ ஆசிரிய/ நிர்வாக வாழ்வில் என்னையும் காயப்படுத்துகின்றன. அத் துயரிலிருந்து விடுபட ஒரு வடிகாலாக ஆக்கவிலக்கியப் படைப்பு எனக்கு உதவுகின்றது. அதாவது என்னை நான் சமாதானப் படுத்துவதற்கும். அமைதி காண்பதற்கும் என் படைப்புக்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. என் அமை திக்கு என் வார்த்தைகள் தேவைப்படுகின்றன" என மூத்த சிறு கதை எழுத்தாளர் சம்பந்தன், சாகுந்தல காவியத்தை ஆக்கிக்கொண்டிருந்த கால வேளையில் ஒரு தடவை என் னிடமும் செம்பியன் செல்வனிடமும் கூறினார். அதே
 

வார்த்தையை இஸ்ரேலிய எழுத்தாளரான எகுதா அமிச்சாய் தனது யுனெஸ்கோ க்ரியர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவற்றை நோக்கும்போது, நிறைய எழு வதன் நோக்கம் எனக்குப் புலப்படுகின்றது. ஆ
Åh, å
எனது இந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியில் எனது அண்மைக்காலச் சிறுகதைகளில் பதினொன்று இடம் : பெற்றுள்ளது. இச் சிறுகதைகளில் சில மாஜிக்கல் றியலி சம்’ உத்தி முறைச் சிறுகதைகள், ஏனையவை ஓ ஹென்றிப் பாணிச் சிறுகதைகள் என்பதை முதலிலேயே கூறிவிடுகின் றேன். ஆனால், இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்களையும் , அந்த அவலங்களைச் சந்திப்பதனால் வன்மம் பெறுகின்ற உள்ளங்களையும் சித்திரிக்கின்றன. அதன் மூலம் என்ன கொடுத்தும் இழந்துபோன உன்னத வாழ்வை மீட்டெடுக்கும் உணர்வை ஏற்படுத்த முயல்வன என நம்புகின்றேன். -
". . . . இச் சிறுகதைத் தொகுதிக்கு என் இனிய நண்பர் ہ டொமினிக் ஜீவா முன்னுரை' வழங்கியுள்ளார். அவருக்கு என் மனம் நிறைவான நன்றிகள். ,'','','','', ............ب۔ ڈئی
இக் சிறுகதைகளை விரும்பிப் பிரசுரித்த் மல்லிகை, R
வீரகேசரி, வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு (LinTiflaño) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி ஒவ்வொரு சிறுகதைக்கும் ஏற்ற நிழற்படங்களின் புள்ொக்குகளைத் தந்துதவிய நங்கூரம் ஆசிரியர் பொ. ஐங்கரநேசனுக்கு மிக்க நன்றிகள்.
கமலம், " . ,;、 82, பிறவுன் வீதி, செங்கை ஆழியான் யாழ்ப்பாணம். ན། །ཁ་ན་མ་)་
10.-62. 1995

Page 10
Gaurageords as ais
பக்கம் தெரு விளக்கு மல்லிகை / ஈழநாடு (பாரிஸ்) ... 0 9
படம் சி. என். கே. சசிதரன்
ஊசியான் பாதை மல்லிகை / ஈழநாடு (பாரிஸ்) . 18
படம் தி. தவபாலன்
விறகு மல்லிகை ஈழநாடு (பாரிஸ்) 227 م
படம் சி. என். கே. சசிதரன்
தாவுக் குஞ்சுகளும் வீரகேசரி لك في په
படம்: செங்கை ஆழியான்
கஞ்சில் போழுது கணையாழி 。 4鬱
படம்: ரி. ராஜரத்தினம்
எங்க இாஜபம் மல்லிகை ஈழநாடு (டாரிஸ்) 56
Υ படம்: சி. என். கே. சசிதரன்
இரவுப் பூச்சிகள் மல்லிகை / ஈழநாடு (பாரிஸ்) 63
படம் தி. தவபாலன்
சிறுபிள்ளை வேளாண்மை வெளிச்சம் | ஈழநாடு , 71 படம் சி. என். கே. சசிதரன் (பாரிஸ்)
புடையன்குட்டி மல்லிகை / ஈழநாடு (பாரிஸ்) ... 80
படம்: ரி. ராஜரத்தினம்
மேதிைர விரல் ஈழநாதம் / ஈழநாடு (பாரிஸ்) 。86
2. u L. Liib: gy. Lo G3 GUST rregistris&r
மேற்கும் கிழக்குல் மல்லிகை / ஈழநாடு (பாரிஸ்) . சி3
படம்: அ. மனே கரன்
'தாயும் குஞ்சுகளும்" என்ற சிறுகதை தவிர்ந்த ஏனைய அனைத்துச் சிறுகதைகளுக்குமுரிய புகைப்பட "புளொக்கு களைத் தந்துதவியவர் திரு. பொ. ஐங்கரதேசன், ஆசிரியர், நங்கூரம் ,
 

தெருவிளக்கு
கிடைத் தெருவுக்கு வந்த செல்வராசன் சந்தியில் அப் படியே நிலைகுத்தி நின்றுவிட்டான். அவன் விழிகள் இரண் டும் வியப்பால் விரிய, தாங்கமுடியாத அதிசயத்தால் அவன் வாயும் சற்று அகலத் திறந்துகொண்டது.
"சந்தியில நிண்டு கொண்டு என்ன விடுப்பே பாக்கிறாய்? பாரத்தோட சயிக்கிலில வாறன், விலகாமல் மாடுமாதிரி நடுச் சந்தியில. அங்கால போடா' என்று சத்தமிட்டு ஏசியவாறு ஒரு சயிக்கில்காரன் விறகுச் சுமையோடு அவனைக் கடந்து சென் றான். பின் கரியரில் ஆளுயரக் கம்புகளுக்கிடையில் அடுக்கிக் கட்டியிருந்த விறகுத்தடிகள் அவனை உராய்ந்தபடி சென்றன. ஏசியவன் விறகுச்சுமைக்குள் மறைந்து போனான்:
அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சந்தியிலிருந்து விலகி நடந்தான். என்றாலும் அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி சென்றான். அவன் தனது பத்துவயதுக் கழிவில் இப்படியான ஒன்றை எங்கும் கண்டவனல்லன்.

Page 11
το செங்கை ஆழியான்
மின்சாரக் கம்பத்தில் வளைந்த குழாய் நுனியில் மின்குமிழ் கள் தாம் தொங்கி ஒளிகொடுக்கும். பாதுகாப்பு வலயத்தின் நான்கு மூலைகளிலும் ஐசிஆர்சிகாரர் சிலுவை வடிவில் வானத்தை நோக்கி இரவில் ஒளிரவிடும் ரியூப் லையிற்றுகளும் மின்கம்பங்களில் தாம் உள்ளன. மின்கம்பங்களில் மின்சார விளக்குகள் தர்ம் எரியும். இதென்னவென்றால் கண்ணாடிக் கூடுக்குள் மேசைலாம்பு எரிகிறது .
நான்கு ஆண்டுகளாக இருண்டு கிடக்கிற யாழ்ப்பாணத் தெருக்களுக்கு ஒளியூட்ட முன் வந்தவர்கள் யார்? இருட்டுக்குப் பழக்கப்பட்டுவிட்ட மக்கள். மாலை கவியத் தொடங்கும் போது கூடுகளுக்குத் திரும்பிவிடும் பறவைகள் போல வழக் கற்றுக் கொண்டார்கள் ஏழு மணிக்குள் வெறிச்சோ டிப் போ கின்ற வீதிகள் கடைத்தெருக்கள். இரவில் விளக்கு ஏற்றாமலேயே படுக்கைக்குப் போகின்ற மக்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றது.
அவன் வீட்டு முடக்கில் இப்படியொரு கெருவிளக்கு இருந் தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? முன்னிருட்டில் விறகுச் சுமையோடு சயிக்கிலில் வந்த சண்முகம் கம்பத்தே டு மோதி மண்டையை உடைத்திருக்க நேர்ந்திருக்கர்து. மாரிமுத்தர் காணுக்குள் விழுந்து காயப்ப்ட்டிருக்க வேண்டி வந்திருக்காது.
செல்வராசன் வீட்டில் ஒரு சிக்கன விளக்கு இருக்கின்றது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் நூறு ருபாவிற்கு மேல் விற் கின்ற வேளையில் அரிக்கன் லாம்பும் மேசை விளக்கும் எரிக்கவா மூடியும்? ஒரு கரண்டியில் பக்குவமாக மண்ணெண்ணெயை வார்த்து சிக்கன விளக்கின் பஞ்சுப் பொதியில் விட்டு நனைத்து, அதனுள் திரியைப் புதைத்து எரிக்கின்ற தொழில்நுட்பம் பல ஏழைமக்களின் குடிசைகளில் இரவில் சிறிது நேரமாவது மினுங் கல் வெளிச்சத்தைத் தர உதவியிருக்கின்றது. அந்த வெளிச் சத்தில் தன் செல்வராசன் இரவில் சிறுபொழுது பாடசாலைப் பாடங்களைப் படித்தும் வருகிறான்.
அந்தக் கரையோரக் குடிசைகளின் கூரைகளைக் கிடுகுகளால் தான் வேய்ந்திருந்தார்கள். ஆனால் பகலில் வெயிலும், மழை யில் வெள்ளமும், இரவில் வானத்து நட்சத்திரங்களும் எது விதச் சிரமுமின்றி உள்நுழையக்கூடியவிதமாகக் கரையில் ஈக்
 

இன்றைய யாழ்ப்பாண இளம் பிள்ளைகளுக்குப் பல சங்கதிகள்
இரவுநேரப் பயணிகள்
கில்கள் மட்டுந்தாம் இன்று இருக்கின்றன. அவ்வளவு செல்
வந்தர்கள் அவர்கள்.
வீட்டுக் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் கடலிற்குப் போன செல்வராசனின் தந்தையின் உடல் கூடக் கிடைக்க வில்லை. மண்டைதீவிலிருந்து ஏவப்பட்ட ஷெல்லிற்குச் சிதறிக் கடலோடு கரைந்து காணாமற் போய்விட்டார்.
தாயும் அவனும் எஞ்சினர். இருவரும் பசிக்கு உண்டு சீவிப் பதே பெரும்பாடாகி விட்ட வேளையில், மண்ணெண்ணெய் யைக் குளிர வார்த்து மேசை விளக்கா எரிக்க முடியும்? ஒரு சிக்கன விளக்கைத் தேடுவதற்கே அவன் சிரமப்பட்டுவிட்டான்.
அவனது குடிசைக்கு நான்கு வீடுகள் தன்னி தகரவேலை செய்யும் அப்பு ஒருவர் இருக்கிறார். அவர் வேலைவெட்டி இல்லாதவர். ஊர்ப் பையன்களுக்கு அவர் ஒரு தோழர் பட்டங் கட்டிக் கொடுப்பது, குரும்பட்டியில் தேர் செய்து கொடுப்பது, உரபாக்கில் பள்ளிக்கூடப் பை தைத்துக் கொடுப்பது என்று எல்லா வேலையும் செய்து உதவுவார். தனிக் கட்டை அவ ரிடம் செல்வராசன் ஒருநாள் போய்த் தயங்கி நின்றான்.
என்னடா பேரா?"
"அப்பு, எனக்கொரு சிக்கன விளக்கு வேணும்."
'செய்தால் போகிறது. போய் ஒரு ஜாம் பேர்த்தல் எடுத்துவா' என்றார் அப்பு. செல்வரர்சன் மூளையைக் கசக்
கியபடி நின்றான்.
o "G" GöITGÖTT? * *
'ஜாம் போத்தல் என்றால் என்ன?"
நீ ஜாம் சாப்பிட்டிருக்கிறியா?"
அப்பு தலையைச் சொறிந்தார். தன் தவறு அவருக்குப் புலப்பட்டது. கடற்கரையே சரக் குடிசைகளில் வாழ்கின்ற ஏழைப் பையனிடம் ஜாயி பற்றிக் கதைத்திருக்கக் கூடாது.
தெரியாது.

Page 12
2 ਨੌ60) ஆழியான்
**@岳珂ór விளக்குப் பார்த்திருக்கிறாயா?"
"அதுமாதிரிப் போத்தல் ஒன்று கொண்டுவா."
அப்படியொரு போத்தல் தேடி எடுப்பதிலுள்ள கஷ்டம் நான்கு நாட்களாக அலைந்து வீடுவீடாக விசாரித்தபோது தான் தெரிந்தது. சிலர் இல்லை" என்றார்கள். எங்காவது அகப்பட்டால் தங்களுக்கும் ஒன்று எடுத்துவா" என்றனர் சிலர். ஒரு வீட்டார் இப்பட்ஜசம் போத்தல் சரியான விலை. ரேஸ்ரியே பத்து ரூபா கொடுக்கிறது" என்றார்கள். கடைசியில் அவனோடு படிக்கிற அன்ரனி ஒரு போத்தலைத் தன் வீட்டிலிருந் ஈ எடுத்து வந்து கொடுத்து உதவினான்.
அப்புவிடம் எடுத்துச் சென்றபேர்து, " சரி . இப்ப ஒரு சயிக்கில் ரியூப் அடிக்கட்டை ஒன்று கொண்டு ஒடிவா" என் றார். அவன் சந்திக்கடை இராசதுரையிடம் ஒடிச் சென்றான். அவர் சயிக்கில் கடை வைத்திருந்தார்.
"அண்ணை. ஒரு ரியூப் வால்ப் அடிக் கட்டை."
*அது எங்கயடா இப்ப கிடைக்கிறது? சிக்கன விளக்கு வந்ததும் ஒண்டும் கடையில இருக்க விடுகிறான்களில்லை"
'அண்ணை. நான் இராவில படிக்க."
இராசதுரை அவனை ஏறிட்டுப் பார்த்தார். செல்வராச னின் விழிகள் அவரிடம் இரக்கத்தோடு யாசித்தன. படிக்கக் கேட்கின்றான்,
"பொறு." என்றபடி எழுந்து சென்று பழைய சயிக்கில் சர்மான்கள் போட்டிருந்த பெட்டியைக் கிளறி ஒரு ரியூப் அடிக்கட்டையை எடுத்துவந்து அவனிடம் கொடுத் தபோது செல்வராசனின் விழிகள் நன்றியுடன் பெற்றுக்கொண்டன.
அப்பு அகன்பின்னர் வேகமாகச் சிக்கன விளக்குச் செய் வதில் ஈடுபட்டார். அவன் அவர் அருகில் அமர்ந்து அவதர்ன மாகப் பார்த்தான். கம்பியொன்றினைப் 'ப' வடிவில் வளைத்து ஜாம்போத்தலினுள் வைத்து ஆழம் பார்த்தார். ஒன்றரை அங்
 
 
 

இரவுநேரப் பயணிகள்
குலம் போத்தலின் அடித்தளத்திலிருந்து இருக்கவிட்டு கம்பியை போத்தல் விளிம்பில் செவியாக மடித்துவிட்டார். வால்ப் கட் டையில் பஞ்சுத் திரியை நுழைத்து அதனைக் கம்பியின் "ப" நடுவில் பிணைத்தார். பஞ்சைப் போத்தலின் அடித்தளத்தில் இட்டார். 'ப' வடிவக் கம்பியைப் போத்தலினுள் வைத்தாரி
* பொடி, ஒடிப்போய் அடுப்படிக்கை மண்ணெண்ணெய் போத்தல் இருக்குது, கவனமா எடுத்து வா'
அவன் எடுத்துவந்த் போத்தலிலிருந்த மண்ணெண்ணெயில் ஒரு கரண்டியளவு கவனமாகப் பஞ்சில் விட்டார்.
"இது காணுமே, அப்பு?"
"ஒரு மனிததியாலம் வடிவா எரிக்க இது காணும். கனக்க விட்டிடாதை. திரியும் பஞ்சும் எரிஞ்சிடும். இந்திரி எடுத்துக் கொண்டு ஒடு. இராவில படி.."
அவன் சிக்கன விளக்கைக் குதூகலத்துடன் வீட்டுக்கு எடுத்து வந்தான். அதன் மங்கிய வெளிச்சத்தில் அவன் இர வில் ஒழுங்காகப் படித்தான்.
அதில் படிப்பது கடினமாக இருந்தது. "கொஞ்சம் பெரிய விளக்கு இருந்தால்
曹 象
மின்கம்பத்தில் எரிந்தபடி தொங்கிய தெருவிளக்கு அவன் ஆசைக்குத் தூபமிட்டது. அப்படியொரு மேசைவிளக்கிருந் தால் நன்றாகவிருக்கும். இராவிராவாய்ப் படிக்கலாம். கில் வீட்டுக் கணேசைக் கூட படிப்பில் வெல்லலாம்:
கடைத்தெருவில் வாங்கிய பானைத் தாயிடம் கொடுத்து விட்டு அவன் அப்புவிடம் ஒடிச் சென்றான். அவன் ஓடிவருகிற வேகத்தைக் கவனித்த அப்பு, என்னடா பொடி? என்ன என்ன? எங்கையாவது குண்டு போட்டிட்டான்களே?' என்று elu. Li á sit, Tri .
'இல்லை அப்பு. கடைத் தெருச் சந்தியில மின்கம்பத் இல."

Page 13
14 செங்கை ஆழியான்
'ஆரையும் சுட்டுக் கட்டியிருக்குதோ?"
"விசர். அதில்லையணை அப்பு. இப்ப அப்படி நடக் கிறதே?" என்றவன் தான் கண்ட தெருவிளக்கைப் பற்றி விபரித்தான்.
* நல்ல வெளிச்சம் அப்பு."
剔 飘
**ള. என்று அப்பு பெரிதாகச் சிரித்த்து அவனுக்கு எரிச்சலைத் தந்தது.
'அந்தக் காலத்தில எங்கட ஊருகளில இப்படித்தான் சந்திக்குச் சந்தி, கோயிலுக்குக் கோயில் தெருவிளக்கு இருக் கும். எங்கட வீட்டிற்கு முன்னிருந்த வயிரவர் கோயில் தெரு விளக்கை நான் தான் கொழுத்துகிறது."
அவர் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை :
'உங்கட காலத்தில இப்படியோ?"
" ஒமென்னிறன் தம்பாமல் கேக்கிறாய்?"
எப்படியிருக்கும்?."
'ஆளுயரத் தூணின் உச்சியிலே கண்ணாடிக் கூடு. அதுக் குள்ள விளக்கு."
* 4 (306 ogray1 th63 r. 2 **
**இல்லையடா பொடி சிக்கன விளக்கு மாதிரி தேங்கா யெண்ணெயில் எரியிற விளக்கு தேத் தண்ணி குடிக்கிற கிளாசில செய்தது. உந்த லையிற்று வந்தவுடன் அப்படியான தெரு விளக்குகள் எல்லாம் இல்லாமற் போச்சுது. இப்ப திரும்பவும் தெருவிளக்கு வந்திட்டுது. அப்ப நாங்க ஒரு ஐம்பது அறுபது Gnuff) un uzb || L. 9) GÖTGOT nr 6ão G3 Lim u G) "LLħ .. * *
"போ, அப்பு. உங்கட காலத்தில இப்படிக் குண்டு போட்டவன்களே? ஷெல் அடிச்சவங்களே? ஏகே 47 இருந் ததே? வீதியில, வீடுகளில, கோயில்களில ஆக்கள் உடல் சிதறிக் கிடந்தவையே?"
அப்பு பேரனை ஆழமாகப் பார்த்தார்.
 

இரவுநேரப் பயணிகள் 5
"அப்ப பொடி, நாங்க இன்னமும் ஒரு ஆயிரம் வரியம் முன்னால போயிட்டம் என்கிறர்ய்?"
அவர் சொன்னவை அவனுக்கு விளப்பமாகவில்லைெ மெளனமாகக் கடற்கரைப் பக்கம் பர்ர்த்தான் கடற்கரை வெறிச்சிட்டுக் கிடக்கின்றது. எப்படியிருந்த கடற்கரை? சோகம் கப்பிக் கிடக்கிறது.
வாழ்க்கையே சுமையாகிவிட்டது. உணவு முத்திரைகள் இல்லாவிட்டர்ல் பல நூறு குடும்பங்கள் வாழ்ந்தவிடத்தில் புல் முளைத்திருக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு அவை இருந்தாலும் அவற்றை வாங்க ஏழை பாழைகளிடம் பணமில்லாத அவலம்.
"அம்மா, இம்முறை பங்கீட்டுக்கு மூன்று லிற்றர் மண் ணெண்ணெய் கொடுக்கின மாம். சங்கக்கடை மனேச்சர் போட் எழுதிப் போட்டிருக்கிறார், சீனியும் கொடுக்கினமாம்" என்று முந்தா நாள் செல்வராசன் தாயிடம் செய்தி கூறினான்.
அவள் மனதிற்குள் அழுதுகொண்டாள்.
** மலிவெல்லோ அம்மா. வெளியில மண்ணெண்ணெய் லீற்றர் நூற்றிப்பத்து. இது இருபைத்தைந்து'
"அதுக்கும் வாங்கக் காசு வேணுமே ராசா? சயிக்கில்கடை இராசதுரை காசு தாறன் எண்டவர். வாங்கி அவருக்குக் கொடுத்தால் ஒரு அரை முக்கால் லிற்றர் சும்மா தருவார்."
அவன் திக்கித்துப்போய் நின்றிருந்தான். அப்பு அவனை உசுப்பினார்: "என்னடன. யோசித்துக் கொண்டு நிக்கிறாய்?"
சி"ஒண்டுமில்லை, அப்பு." என்ற அவன் அவரை ஏறிட்டுப் பரீர்த்தான்.
* விசயத்தைச் சொல்லு பொடி.." அவன் அவரை வியப்புடன் பார்த்துவிட்டுக் கேட்டர்ன்: "அப்படியொரு விளக்குச் செய்யவேணும், அப்பு, அதுக்கு என்னென்ன வேணும்?'

Page 14
6 செங்கை ஆழியான்
"அப்படி எனக்குச் செய்யத் தெரியாது; அதுக்குப் பால சிங்கத்தைத்தான் கேக்கவேணும்."
**அது ஆர் பாலசிங்கம்?"
"அவர் தான் எங்கட மாநகரசபை ஆணையாளர். அவர்
அப்பு பெரிதாகச் சிரித்தார்.
* அப்படி எல்லனத் தெருவிலும் வைத்தால் என்ன?" 'ஆர் வைக்கிறது?." "எங்கட வீட்டிற்கு முன்னால இருக்கிற மின்கம்பத்தில ஒரு விளக்கு இருந்தால். முந்தர் நாள் மாரிமுத்தர் கச இருட் டில றேர்ட்டுக் காணுக்குள்ள விழுந்திட்டார். அதுக்கு முதல் நாள் விறகுச் சுமையோட வந்த சண்முகமண்ணை பிரண்டு விழுந்து பாவம் அப்பு சரியான காயம், எல்லாவிடத்திலும் தெருவிளக்கிருந்தால் சனத்துக்கு நல்லது என்ன அப்பு?" என்றான் சிறுவன். அப்பு அவனைக் கவலையோடு பார்த்தார்" அவன் தொடர்ந்தான்: "அந்தக்காலத்தில் வயிரவர் கோயில் முகப்பில விளக்குக் கொழுத்தினமாதிரி நீங்களும் இப்ப தெருவில கொழுத்துங்களன் அப்பு."
அவர் சிந்தனையில் ஆழ்ந்தார் செல்வராசன் தன் வீட் டிற்கு ஒடிப்போவதைப் பார்த்தபடி அவர் நின்றிருந்தார்:
அவன் சென்றதன் பின்னரும் அவன் வீசிய சொற்களின் வாசனை அவ்விடத்தில் நிரம்பியிருப்பதாகப் பட்டது:
அவர் படுக்கைக்குப் போகும்வரை அவன் கூறிவிட்டுச் சென்றவற்றையே எண்ணமிட்டார்.
நல்ல பெர்டியன், கெட்டிக்காரனா வருவான்." வாங்கில் கிடந்தவாறு இருளை ஊடுருவிப் பார்த்தார். அப்புவுக்கு நித்திரை வரவில்லை. தன் வங்கிலிருந்து எழுந்து வெளியில் வந்தவர் செல்வராசனின் குடிசைப் பக்கமா கத் திரும்பிப் பார்த்தார். அவர் அப்படியே விறைத்துப்போய் சிலையா விெட்டார். உண்மை தானா?
 
 

இரவுநேரப் பயணிகள் 夏*
செல்வராசனின் குடிசைக்கு எதிரிலிருந்த தெரு மின்கம்பத் தில் சிக்கன விளக்கொன்று மினுங்கிக் கொண்டிருப்பது தெளி வாகத் தெரிந்தது. அணைந்துவிடும்போல ஒளி அடங்கி மினு மினுத்தது. அவர் அடுக்களைக்குள் பேர்ய் மண்ணெண்ணெய்ப் போத்தலைக் கையிலெடுத்துக் கொண்டார்.
செல்வராசன் ஏற்றிவைத்த தெருவிளக்கை நோக்கித் திருப்தியுடன் நடக்கத் தொடங்கினார்.
- மல்லிகை, செப்டம்பர், 1994,
O. O.

Page 15
ஊரியான் பாதை
இயக்கச்சிக் கரையில் தலையில் கைகளை வைத்தபடி அப்படியே உவர்நிலத்தில் "போத் தெனச் சிவசம்பர் இருந்து விட்டார். அவரைக் கடலேரியின் மத்தியிலிருந்து ஏற்றிவந்த வள்ளக்காரன், ஏனனை அப்பு உனக்கிந்த விசர் வேலை?" என்று ஏசிவிட்டுக் கணக்குக் கொடுக்கும் நிலையத்திற்குச் சென்றான். அவருடன் வள்ளத்தில் வந்தவர்கள் அவரைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அவ்விடத்தை விட்டு விரைவில் வெளியேறிவிட வேண்டுமென்ற அவசரத்துடனும் பயத்துடனும் பொதிகளைத் தலையிலும் தோளிலும் சுமந்தபடி விரைந்து கொண்டிருந்தார்கள்.
ஊரியான் கரையிலிருந்து பயணிகளையும் பொருட்சளையும் ஏற்றிக் கொண்டு வரவேண்டிய வள்ளங்கள் எல்லாம் இயக் கச்சிக் கரைக்கு வந்துவிட்டன. இன்னும் சில பொழுதில் ப்ொழுது விடிந்துவிடும். கிழக்கில் சூரியன் எழுவதற்கு அத் திாட்சியாகக் கிழக்கு அடிவானம் மெல்லிதாக வெளுக்கத் தொடங்கியிருந்தது.
 

இரவுநேரப் பயணிகள் 9
இனிக் கிழக்கு வெளுக்கத் தொடங்கினால் ஊரியானுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் வள்ளங்கள் பயணப்படா. யாழ்ப் பாணத்தில் பகல்வேளைகள் பயணத்துக்குரியவையல்ல. இரண் டாவது ஈழ யுத்தத்துடன் ஆனையிறவுப் பாதை தடைப்பட்ட தும் ஊரியானுக்கும், இயக்கச்சிக்கும் இடையிலமைந்த கடல் நீரேரி தவிர்க்க முடியாத பாதையாக மாறிவிட்டது. யாழ்ப் பாணத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் இயக்கச்சித் தோட்டங்கள், பற்றைகளுக்கிடையில் தம்மை மறைத்தபடி இருள் பரவுவதற்காகக் காத்திருப்பார்கள். அதே போலக் கொழும்பிலிருந்தும் வன்னிப் பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணத் திற்கு வருபவர்கள் ஊரியா ன் பற்றைக் காடுகளில் காத்திருப்
L1frf5蚤。
சூரியன் மேற்கில் சரிந்து இருள் பரவத் த்ொடங்கியதும் இருவிடங்களையும் இணைத்து வள்ளங்கள் தள்ளப்படும். ஆனை யிறவுப் பாலத்திலிருந்து கிழக்காகச் சுண்டிக்குளம் வரை குடாநாட்டையும் பெருநிலத்தையும் பிரித்தபடி கடல்நீரேரி பரந்து கிடக்கின்றது. மழைகாலத்தில் நீர் பரவிக் கிடக்கும். சிலவிடங்களில் முழங்கால் அளவிற்கும், சிலவிடங்களில் இடுப் பளவிற்கும், அரிதாகக் கழுத்தளவிற்கும் நீர் காணப்படும் அவற்றிற்கிடையில் சதுப்புநிலத் தர்வரங்களோடும் ஈச்சம் பற்றைகளோடும், முட்செடிகளோடும் மேட்டுப்பாங்கான பகுதி கள் நீருக்குமேல் தலையை நிமிர்த்திக் குட்டிக் குட்டித் தீவு களாகக் காட்சி தரும்.
அந்தக் குட்டித் தீவுகளை ஏக்கத்துடன் சிவசம்பர் பார்த்த படி தரையில் அமர்ந்திருந்தார். கடல் நீரில் நனைந்த வேட்டி, சால்வை . அதிகாலைக் குளிர் உடல் மெதுவாக வெடவெடத் தது. மடியிலிருந்த புகையிலையும் தீப்பெட்டியும் நனைந்து விட்டன. சுருட்டுப் புகைத்தால் குளிருக்கு இத்மாகவிருக்கும்3 அவர் கொண்டுவந்த துணிப்பையும் அதிலிருந்த சொற்ப பண மும் ஹெலியிலிருந்து பயணிகளையும் வள்ளங்களையும் நோக் கிச் சுட்டுத்தள்ளிய பிப்ரிகலிவர் குண்டுகளின் சத்தத்தில் அல மலக்க நீரில் விழுந்ததால் கடலோடு சென்றுவிட்டன.
இப்பொழுது நினைத்தாலும் உடல் பதறுகிறது: அந்தக் கணத்தில் அவர் தன்கதை முடிந்துவிட்டதாகவே எண்ணினார்.

Page 16
20 செங்கை ஆழியான்
நிலவு வானத்தில் எதுவித முகில் மறைப்புமின்றி ஒளியைப் பால்போல கடல்நீரேரியில் பாய்ச்சிக்கொண்டிருந்தது. நள்ளிர வைத் தாண்டிய அவ்வேளையில் தென் திசைப் பக்கத்திலிருந்து காலன்போல ஹெலியெ ன்று வானத்தில் இரைந்தபடி வரும் என்று எவரும் எண்ணவில்லை.
O
இவரியானிலிருந்து வள்ளங்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒன்றன்பின்னொன்றாக வந்து கொண்டிருந்தன. வற்றுத்தண்ணீரில் அவ்வள்ளங்களை இவ்விரு ஒட்டிகள் நீரில் நடந்தபடி தள்ளிக்கொண்டு வந்தனர். சேற்றுக்குள் கால்கள் புதையப் புதைய குளிரில் வள்ளங்களை மூன்று மணிநேரம் கரையை அடையும்வரை தள்ளிச் செல்வதென்பது எவ்வளவு சடினமான செயல்?
வள்ளம் நகராது தரை தட்டும்போது, "எல்லாரும் இறங் கித் தள்ளுங்கோ' என ஒட்டி குரல் கொடுப்பான். சிலர் இறங்கித் தள்ளுவார்கள். மற்றவர்கள் எதையும் கவனியாதது போல வானத்தையும் குட்டித் தீவுகளின் பற்றைகளையும் பார்த்தபடி இருப்பார்கள்.
"எல்லாரும் இறங்கித் தள்ளுங்கோ. நாங்கள் தள்ள அவயள் இருந்துகொண்டு. * 脚
" எனக்குச் சுகமில்லைத் தம்பி. 'எனக்குக் காலில எக்சிமா ராசா. தண்ணியில நிக்க முடியாது."
"எனக்கு பிரசர் பிள்ளையள், தள்ளினால் மூச்சு வாங் கும்."
சிலர் கூறுகின்ற காரணிகள் சரியானவை பலர் கூறுகின்ற காரணங்கள் சாட்டுக்கள் .
எப்படியோ வள்ளங்கள் நகர்ந்து கரையை அடைந்து விடுகின்றன.
சிவசம்பர் முழங்கால்களைக் கட்டிக்கொண்டார்.
 

இரவுநேரப் பயணிகள் 蠶置
* அப்பு, உனக்கேனனை இந்த விசர் வேலை:' வள்ளக் காரன் அவரைத் தரையில் இறக்கிவிட்டு ஏசிவிட்டுச்சென்ற வஈர்த்தைகள் இப்பெர்ழுதும் நெஞ்சைக் குடைந்தன
அவர் செய்தது விசர் வேலைதர்ன்.
வலக்கன் சிவலையையும் இடக்கன் முகக் கறுப்பனையும் இராமநாதபுரத்திலிருந்து இந்தக்காலச் சூழ்நிலையில் ஏழாலைக் குக் கொண்டுவர அவர் நினைத்திருக்கக் கூடாது. அவருடைய மகள் ஏழாலையில் திருமணம் முடித்திருந்தாள். மருமகன் அற்புதமான கமக்காரன். அவன் கலியாணம் முடித்தி கையோடு இராமநாதபுரத்துக்கு வந்தபோது உழவிற்கும், வண்டியிழுக்க வும் அவர் பழக்கிக் கொண்டிருந்த வலக்கன் சிவலையிலும் இடக்கன் முகக்கறுப்பனிலும் விருப்புக் கர்ட்டிவிட்டான்.
'தம்பி இந்த இரண்டு எருதுகளும் உங்களுக்குத்தான்' என்று வாக்குக் கொடுத்துவிட்டார்.
'இப்பொழுது அந்த எருதுகள் இங்கிருந்தால் உழவுக்கும் வண்டிக்கும் பெருத்த உதவியர்க இருக்கும்' என மகள் கடிதம் போட்டிருந்தாள்.
** இதிலை என்ன கஷ்டம் சிவசம்பு, நடத்திக் கூட்டிக் கொண்டு போறதுதானே? எத்தனைபேர் பட்டி மாடுகளையே அங்கால கொண்டு போகினம், இந்த மாடுகளைச் சோக்கா அங்கால கெர்ண்டு போகலாம். இடையிடையே தீவு நிலங்களு மிருக்கும். ஏறி இளைப்பாறிச் செல்லலாம்." என்று கந்தையர் வழில்ாட்டிவிட்ட பிறகு சிவசம்பரால் இருக்க முடியவில்லை.
வழிமாறி ஆமிக்காம்ப் பக்கம் போயிட்டா..?"
ஊரியா னிலிருந்தும் கொம்படியிலிருந்தும் தொடர்ந்து வள்ளங்கள் போய் வந்து கொண்டிருக்கும். வழிமாறாமல் செல்லலாம். இப்ப நிலவுகாலம் கண்டியோ? பயப்படாமல் போகலாம். பெரிய தண்ணியே . முழங்காலளவுதான். மாடு களை முன்னால் நடக்கவிட்டியெண்டால் அவை வழிகாட்டிப் போகும். நீ பின்னால கயிறுகளைப் பிடித்த்படி நடக்க வேண் டியதுதான் சில சிலவிடங்களில் கொஞ்சம் சேறு தான்'
台

Page 17
易易 செங்கை ஆழியான்
கடலேரி ஊடாக மர்டுகளைக் கடத்திச் சேன்றவர்பேர்ல கந்தையர் விளக்கம் தந்தார்,
அதை நம்பி வலக்கன் சிவலையையும் இடக்கன் முகக் கறுப்பனையும் அழைத்துக் கொண்டு, அதிகாலையில் புறப் பட்டு வயல்கள். சதுப்புக்கள், கண்டல்கள், சிற்றாறுகள், பற்றைகள், பாம்புகள் என்பனவற்றைக் கடந்து ஊரியான் கரையை மாலை வந்து சேர்ந்தார்.
எவ்வளவு கடினமான பாதை? சற்று மழை பெய்திருந்ததால் ஊரியான் கரைக்கு வரும் சதுப்புப் பாதை இளகிக்கிடந்தது. நாய்க்களி நீர்பட்டதும் சேறாகி, அவலங்களோடு அவ்வழி யாகப் பயணப்பட்டவர்களைப் புரட்டி எடுத்தது. சறுக்கி விழுந்த்வர்கள், விழுகின்ற நிலையில் அபிநயம் பிடித்தவர்கள், நடக்கமுடியாமல் திண்டாடிக் கதறியவர்கள், எவர் எவரையோ வெல்லாம் திட்டியவர்கள். வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டி அழைத்த்வர்கள். அப்பாதையின் கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்:
அவரும் எருதுகளும் ஒருவழியாக ஊரியான் கரையை அடைந்தபோது மேற்கில் சூரியன் சரிந்துகொண்டிருந்தான். ஆனையிறவுக் காம்பில் மின்னொளி தெரிந்தது.
அவருக்குத் தெரிந்தவர்களைவிடத் தெரியாதவர்கள்தான் சைக்கிள் வியாபாரிகளாகவும், பயணிகளாகவும் அக்கரையில் கூடுதலாகக் குழுமி நின்றார்கள். எல்லாருடைய முகங்களிலும் 556. GOD GIN), LJULJI LÎD...
என்ன அம்மர்ன், மாடுகளோடை. அங்கால கெர்ண்டு போகப் பேர்றியளே?" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது வல்லிபுரம் நின்றிருந்தான்.
"ஒமோம். ஏழாலைக்குக் கொண்டு போறன்." "சோக்கான எருத கள் அம்மான், கள்ளன்ர. கையில கொடுத்தாலும் இருபதினாயிரம் தேறும்'
அவன் வார்ததைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் பக்குவமாக வளர்த்துப் பழக்கிய எருதுகள், கழுத்துகளில் சத்ங் கைகள் குலுங்க நின்றிருந்தன. அவர் அவற்றின் முதுகு எளில்
 

இரவுநேரப் பயணிகள் 2獻
தடவிக்கொடுத்தபோது அவை பாசத்துடன் தலையை ஆட்டிக் கொண்டன.
"அம்மான், நீங்கள் இறங்குங்கோ, அப்படியே நேரே போங்கோ. வள்ளங்கள் போற பக்கத்தால நடவுங்கோத்ண்ணி அவ்வளவில்லை. கொஞ்சம் சேறு.'
அவர் தன் மாடுகளைக் கடலில் இறக்கினர்ர். முதலில் இறங்க முரண்டு பிடித்த சிவலையும், முகக்கறுப்பனும் அவர் அதட்டியதுல் இறங்கி நடக்கத் தொடங்கின. அவர் கயிறு களைக் ரத்தில் பற்றியபடி நடக்கத் தொடங்கினார். எருது களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடப்பது சற்றுச் சிரமமாக விருந்தது. அடிக்கடி கயிறுகளை இழுத்து அவற்றின் வேகத் தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். குறுக்கிட்ட தீவில் எருதுகள் ஏறிச் சற்று நின்றன. அவருக்கும் சற்று ஒய்வு தேவைப்பட்டது. களப்புச் சேற்றில் நடப்பது கடினமானது தான்.
வள்ளங்கள் பயணிகளைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டு விட்டன. அவர் நின்றிருந்த குட்டித் தீவுக்குச் சற்றுத் தூரத் தில் அவை சென்றன.
ஒரு கூட்டம் செங்கால் நாரைகள் நீரிலிருந்து மேலே எழுந்தன. குறைந்தது இருநூறாவது இருக்கும். சற்று நேரம் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். தெற்கே திரும்பிய போது ஆனையிறவு இராணுவமு காம் தெரிந்தது. உற்றுப் பார்த்தால் தட்டுவன்கொட்டி வீதியில் றக் ஒன்று செல்வது தெரிந்தது. மாடுகளை அழைத்துக்கொண்டு தீவைக் கடந்து நீரில் இறங்கி நடக்கத் தொடங்கினார். வழியில் குறுக்கிட்ட நான்கைந்து தீவுகளைக் கடந்து அரைவழியில் பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது தான் வானத்தில் திடீரென ஹெலி ஒன்று எழுந்தது,
"காம்பில் இறங்கப்போறானாக்கும்.' என அவர் எண்ண மிட்டார். ஆனால் ஹெலி காம்பைக் கடந்து வள்ளங்கள் வந்துகொண்டிருந்த கடலேரிப் பக்கமாக விரைந்து வந்தபோது அவர் பதட்டத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார். வள்ளங்கள் நாற்பது ஐம்பது நிரையாக வந்து கொண்டிருந்தன. ஐம்பது அறுபது மண்ணெண்ணெய் றம்களை ஒன்றாகக் கயிற்றிற்

Page 18
செங்கை ஆழியான்
பிணைத்து மித்க்கவிட்டு ஐந்தாறு மனிதர்கள் இழுத்துக் கொண்டிருந்தார்கள். அவை சிலவிடங்களில் தரைதட்டிய பேர்து அவற்றை மிகக் கஷ்டப்பட்டு இழுத்துச் சென்றுகொண் டிருந்தார்கள். சீவியம் எவ்வளவு கஷ்டமாகிவிட்டது?
ஹெலி திடீரெனச் சுட்டபடி வந்தது. மாலைக் கருக்கலின் அமைதியைக் குலைத்தபடி பிப்ரிகலிவர் குண்டுகள் நீரில் தெறித் தன. கடல்நீரில் மிதந்துகொண்டிருந்த கடற்பறவைகள் வெருட் சியுடன் படபடவென விண்ணில் கிளம்பின, வள்ளங்களில் வந்த வர்களிடையே அவல ஒலங்கள். வள்ளங்களைவிட்டு நீரில் குதித்தனர். கூச்சலிட்டனர்.
ஹெலிக்கொப்டர் அவர்களை வட்டமிட்டது.
ஹெலி சுட்ட சத்தத்தில் சிவசம்பரின் கைக் கயிறுகள் தளர்ந்தன. குண்டுச் சத்தத்தில் மாடுகள் இரண்டும் இழுத்துக் கொண்டு எதிர்ப்பட்ட தீவில் கரையேறிப் புகுந்துகொண்டதை அவர் கவனிக்கவில்லை .
அவரைக் கடந்து தலைக்கு மேலாகக் ஹெலி விரைந்தது. அவர் அப்படியே நீரினுள் தன்னை மறைத்துக் கொண்டார். ஐந்து நிமிடங்கள் கடலேரி அல்லோலகல்லோலப்பட்டது. காயமடைந்தவர்கள். தலைக்குள் குண்டு பாய்ந்து சரிந்த வர்கள். அப்பாவி மக்களின் குருதி ஊரியர்ன் கடலேரியில் கலந்தது.
சடலங்களையும் காயப்பட்டவர்களையும் தூக்கி வள்ளங் களில் போட்டனர். நெஞ்சைப் பிழியும் அவலம். ஒரு கணத் தில் பலரின் கனவுகள் சிதைந்துபோயின.
鼎 鼻
* தம்பிமார் என்னையும் கூட்டிப்போங்கேரி . சிவசம்பர் எழுந்து நின்று சத்தமிட்டார்.
என்று
O
கிரையில் சிவசம்பர் அமர்ந்திருக்கிறார். வள்ளமோட்டி யின் வார்த்தைகள் சாதுகளைக் குடைகின்றன.
'ஏனனை அப்பு உனக்கிந்த விசர் வேலை?"
 

இரவுநேரப் பயணிகள் 盛飘
வள்ளத்தில் வந்திருந்தால் ஹெலியின் சூட்டிலிருந்து தப்பி யிருக்க முடியுமோ? வயதுசென்ற காலத்தில் ஏன் இப்படிக் கஷ்டமான காரியத்தில் இறங்கினீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பான். மாடுகளை கடலேரியூடாக நடத்தி வந்த தைக் கண்டிருப்பான்.
சிவலைக்கும் முகக்கறுப்பனுக்கும் என்ன நடந்திருக்கும்? அவை ஏதாவது தீவில் ஏறியிருப்பினம் எவ்வளவு கவனமாக அவற்றை வளர்த்தன். அவற்றை உழவுக்கும் வண்டி இழுக்க வும் பழக்குவதில் அவருக்கு அவ்வளவு கஷ்டம் இருக்கவில்லை. வெகு புத்திசாலிகளான எருதுகள், துவரம்கம்பின் தண்டிப்
பின்றியே அவை அவர் விருப்பப்படி பழகிவிட்டன:
எத்தனை பேருக்குச் சிவலையிலும் முக்கறுப்பனிலும் ஆண்? வாயில் நுரை தள்ளாது இராமநாதபுரத்திலிருந்து கிளிநொச்சிவரை நி  ைற ந் த பாரத்துடன் துளைப்பின்றி வண்டியை இழுத்து வருவன:
அவருடைய மருமகன் எவ்வளவு ஆசைப்பட்டுக் கேட்டான்? பாவிகள், வராமலிருந்திருந்தால் அவர் இப்பொழுது இயக்கச்சிச் சந்தியைக் கடந்திருப்பார்.
"அப்பு வீட்டை போகவில்லையே?" என்று திரும்பிவந்த வள்ளமோட்டி கேட்கிறான்.
" என்ர எருதுகள் தம்பி." சுட்டிக் காட்டினார்.
என்று கடலேரியை அவர்
'அது கள் அங்கினேக்க நிக்கும். இனி இரவுக்குத்தான் பார்க்க முடியும்."
அவர் எதுவுமே பேசவில்லை. அவற்றை எப்படி விட்டு விட்டுச் செல்வது?
இயக்கச்சிக் கரையில் எவரையும் காணோம். எல்லோரும்
சென்றுவிட்டார்கள் கரையில் இழுத்துக்கட்டிய வள்ளங்கள்
மட்டுந்தாம் நின்றிருந்தன. இனி இன்று இரவுதான் மீண்டும் இந்தக் கரை இலக் லப்பாகு
7.

Page 19
26 செங்கை ஆழியான்
அவர் ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்தார் தான் வந்த பாதையை மனதில் பதித்தவராக நீரில் இறங்கி எதிர்ப்பட்ட தீவை நோக்கி நடக்கத் தொடங்கினார். சூரியன் கிழக்கு வானில் ஏறிக்கொண்டிருந்தர்ன், கூழைக் கடாக்களும் வெண் கொக்குகளும் கடலேரியில் திரள் திரளாக விழுந்தன. நீரினுள் முக்கி மூழ்கி வாய்களில் மீன்களை அதற்கிக் கொண்டன.
நான்கு ஐந்து தீவுகளில் ஏறிப்பார்த்தார். உடல் களைப்பு, வெறும் வயிறு. எருதுகளைக் காணவில்லை. குரியன் உச்சியில் ஏறியிருந்த வேளையில் சிவலை தூரத்தில் ஒரு குட்டித்தீவின் கரையில் நிற்பதைக் கண்டார்.
"அப்பாடா' சிவசம்பரின் இதயத்தில் நிம்மதி குளிர்ச்சியா கப் பரவியது. விரைந்து சென்றார். தீவை நெருங்கியபோது முகக்கறுப்பன் நிலத்தில் சரிந்து கிடப்பதம் அதன் அருகில் விழிகளில் நீர்கோர்க்கச் சிவலை நின்றிருப்பதும் தெரிந்தது.
"ஐயோ" என்று சிவசம்பர் அலறினார்.
மூகக்கறுப்பனின் உடலில் பிப்ரிகலிபர் குண்டொன்று பாய்ந்திருந்தது. அவரைக் கண்டதும் சிவலை தலையை ஆட்டி எதையோ கூற முயன்றது.
தீவின் கரையில் ஏறித் தலையில் கைகளால் அடித்துக் கொண்டார் சிவசம்பர்,
O
சென்ரியில் நின்றிருந்த பண்டாரவுக்குத் திடீரென விழிப்பு வந்தது. காவலுக்கு நின்றபடி தூங்கிவிட்டான். கடலேரியை உற்றுப் பார்த்தான். சினைப்பரின் தொலைகாட்டியூடாகக் கடலேரியை அளவிட்டபோது, எதிர்த்தீவின் கரையில் நின் றிருந்த ஒரு புலி"யின் தலை தெரிந்தது. அது ஓர் எருதின் அருகில் நின்றிருப்பதும் தெரிந்தது.
"கொட்டியா" என்றபடி சினைப்பரின் விசையை இழுத் தான்.
- மல்லிகை, மே, 19 24
CT)
 

விறகு
களப்பினுரடாக உருட்டிச் செல்வ
G2) IT இ
சிரமமாகவிருத்தது. இரவு மழை பெய்ததால் களப்பு நிலக்களி
இழகிச் சேறும் சகதியுமாகக் கால்களில் ஒட்டியது.
**சும்மா சயிக்கிலையே உருட்ட முடியவில்லை. இரா சையா, விறகுகளைக் கட்டிக்கொண்டு சுமையோட எப்பிடி இதால வாறது?" என்று பரிதாபமாகச் சுந்தரம் கேட்டர்ன் நெஞ்சுச்சளி தா னிருப்பதாக அரித்தது. இருமிக்கொண்டான். காலையில் சயிக்கிளைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டபோது, தையல் கவலைப்பட்டாள்.
*ராசாவா இருமினியள் சரியான சளிபோல, உதோடை எப்படி சயிக்கில் ஓடப்பேர்றியள்?"
மனைவியின் கவலை அவனுக்குப் புரித்தது.

Page 20
28 செங்கை ஆழியான்
"உதைப் பார்த்தால் இண்டைக்கும் பிள்ளைகள் பட்டினி தான். மூத்தவன் பள்ளிக்கூடத்திற்குக் கொப்பியள் வேணு மெண்டவன். கூப்பன் அரிசி எத்தனை நர்ளுக்குக் காணும்? மெல்ல மெல்லப் போட்டு வர்றன். 》歇
பனிக்குளிரில் சயிக்கிளில் ஏறி அமர்ந்தபோது தேகம் ஒரே அலுப்பர்கவும் வருத்தமாகவும் இருந்தது. சயிக்கிள் "கிறீஸ்" காணாது கறள் ஏறி முனகியது. சுமை ஏற்றக்கூடியளவு ரயர்கள் பூத்த்ேயர் தவையல்ல. அன்று ஒரு சிரட்டையில் கொஞ்சம் மண்ணெண்ணையும் தேங்காயெண்ணெயும் கலந்து துடைத்தபோது பின்சில்லின் கம்பிகள் இரண்டு மூன்று தளர்ந்து ஆடியது தெரிந்தது.
அவன் கூலிவேலைக்குச் செல்லும்போது அவனைச் சுமந்து செல்கின்ற சயிக்கில், வஞ்சகமில்லாமல் பதினைந்து வருடங் களாக உழைத்து வருகின்றது. இன்று அந்தக் குடும்பத்தின் முழுச் சுமையையும் அதுதான் சுமக்கிறது போல அவனுக்குப் பட்டது. சக்திக்கு மேற்பட்ட விறகுக் கட்டைகளைக் கரியரில் ஏற்றி, அவை சரியாதிருக்கவும் சயிக்கிலின் பார்கள் உடைந்து விடாதிருக்கவும் மேலதிகக் கம்புகளின் பிணைப்புகளோடு தள்ளுவண்டில் ஒன்றின் சுமையைத் தாங்கி, இருபது மைல் களுக்கு மேல் ஒன்றைவிட்டொருநாள் சென்று வருகிறது.
அவனைப் போல எத்தனை நூறுபேர் இந்த அவல வாழ்வு வாழ்கின்றனர்? அவனுடைய சயிக்கில் போன்று எத்தனை சயிக்கில்கள் இன்று யாழ்ப்பாணத்தின் குண்டுங் குழியுமான பாதைகளில் பாரச் சுமைகளோடு வாலாட்டிக் குருவிகள் போல தத்தளித்தபடி நகர்கின்றன? அவை நகர்ந்தால்தான் யாழ்ப் பாணத்தின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நகர முடியும்.
"என்ன சுந்தரம், கடும் யோசனை?' என்று இராசையா கேட்டான்.
"ஒண்டுமில்லையண்ணர், எங்கட வாழ்க்கையை நினைச் சுக்கொண்டன்' என்று சுந்தரம் சலித்துக் கொண்டான்.
"கொட்டடி கனகு ஆஸ்பத்திரியில...'
ஏன்?"
 

இரவுநேரப் பயணிகள் 盛歇
"வேறெதுக்கு. நெஞ்சால சயிக்கில் இழுத்தால் என்ன தான் வராது? இரத்தம் இரத்தமாக வர்ந்தியெடுத்தானாம். ஆசுப்பத்திரியில விட்டிருக்கினம். எல்லாம் குஞ்சு குருமான் 356ff... ''
* பாவம். எப்படிக் குடும்பம் போகுதேர்?."
"அந்தப் பரிதாபத்தை ஏன் கேக்கிறாய்? கனகுவின்ர மூத்தவன் இப்ப விறகு இழுக்கிறானாம்."
"ஐயோ ..!" என்றான் சுந்தரம் . முன்னால் சயிக்கிலை உருட்டிக் கொண்டிருந்த இராசையா திடுக்கிட்டு, சயிக்கிலை உருட்டுவதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான்
" என்ன சுந்தரம்?"
* அந்தப் பிள்ளைக்குப் பன்னிரெண்டு வயசுதா னிருக்கும்.
அது எப்படி இந்க எதிர்க்காத்தில சயிக்கிள் சுமையை. பிஞ் சுக்கால்கள் அண்ணை எங்களாலையே உழக்க முடியவில்லை
நரம்புகள் இழுக்குது. அந்தப் பிள்ளை." சுந்தரம் தன் மகனை எண்ணிக் கொண்டான். அவனுக்கும் கனகுவின் மகனின் வயது தா னிருக்கும்.
'வயிறெண்டு ஒண்டிருக்கும் வரை வேறு வழியில்லை."
வானத்தில் ஹெலி ஒன்றின் இரைச்சல் எழுந்தது. அவர்கள் இருவரும் சயிக்கிலை நிலத்தில் போட்டுவிட்டு பற்றைகளுள் மறைந்து கொண்டார்கள். களப்பு வெளி இலகுவில் ஆள் அடையாளம் காட்டிவிடும் ஹெலியில் செல்பவனுக்கு நிலத்தில் நடமாட்டம் தெரிந்தால் போதும், சபிப்ரிகலிவரால் முழங்கித் தள்ளிவிடுவான்.
ஹெலி கடந்து சென்றபின்னர் அவர்கள் சயிக்கிலை உருட் டிக் கொண்டு நடந்தனர். * வரேக்க மற்றப்பாதையால போவம் கொஞ்சம் தூரம் எண்டாலும் இப்படி அலைக்கழி வில்லை' என்றான் இராசையாடு
*" வீதியில வெட்டி வைச்சிருக்கிறவையிட்ட வாங்கிக் கொண்டு போயிருக்கலாம்' என்றான் சுந்தரம், அவர்கள்

Page 21
செங்கை ஆழியான்
களப்புவெளியில் இறங்குவதற்கு முன்னுள்ள பாதையில் கன்னா மரங்களையும் கண்டல் தடிகளையும் பூவரசக் குத்திகளையும் விற்பதற்காகச் சிலர் குவித்து வைத்திருந்தனர். சயிக்கில்காரர் களுக்கு விற்பதற்காகக் காத்திருந்தார்கள்
"உவங்கள் இப்ப சரியான விலை சொல்லுவாங்கள்: எங்கடயாக்கள் பழக்கிப்பேர்ட்டான்கள். அந்த விலைக்கு வாங்கி யாழ்ப்பாணத்தில விக்க முடியாது. நாங்களாக கண்டல்காட்டில சேகரித்தால் கஷ்டப்பட்டதுக்கு ஏதாவது கிடைக்கும்."
அவர்கள் ஒரிடத்தில் சயிக்கிளை நிறுத்திவிட்டு கண்டல் மரக்கிளைகளைச் சேகரிக்கத் தொடங்கினர். பச்சை மரங் களின் பட்ட கிளைகளை ஒடிக்கவேண்டும். அவர்களுக்கு முன் வந்தவர்கள் பச்சைக் கிளைகளின் அடியில் வெட்டுவாய் வைத்திருந்ததால் அவையும் கருகியிருந்த்ன இரண்டு மணி நேரத்திற்குமேல் ஆங்காங்கு திரிந்து தேடிக்குவித்த பின்னர் தான் ஒரு சயிக்கில் சுமை பாரம் கிடைத்தது.
விறகுகளைச் சேகரிக்கும்போது சுந்தரத்திற்கு ஆஸ்பத்திரி யில் கிடக்கும் கனகுவின் நினைவுதான் வந்தது. ஒரு பத்து ரூபாவாவது கொண்டுபோய்க் கொடுக்க வேணும். என்ர மூத்தவனுக்கு ஒரு காற்சட்டை வாங்கிக் கொடுக்க வேணும். பள்ளிக்கு ஒரு காற்சட்டையைத் தோய்த்துத் தோய்த்துப் போடுகிறான். படிப்பில நல்ல கெட்டிக்காரன் இரண்டாவ தாக வகுப்பில வாறான். எப்ப்ாடுபட்டாவது அவனைப் படிப் பித்துவிடவேணும். அவன் உருப்பட்டிட்டால் எனக்குக் கஷ்ட மில்லை. ஒழுங்கான பிள்ளை. குடும்பக்கஸ்டம் புரிந்து பிள்ளை அவனுடைய குடும்பமும் பெரிய குடும்பம்தான். முகஞ் சுழிக்காமல் தையல் பெத்துப்போட்டிருக்கிறாள்."
இப்பொழுதும் வயிற்றில் சுமை. பக்கத்துவிட்டுப் பரிமளம், "ஏன்ரி உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? மீண்டும் வாங்கிக் கொண்டு. ' என்று கேட்டபோது அவன் குடிசைக் குள் இருந்தான்
'கஷ்டப்பட்டு உழைக்கிற மனிசன், ராப்பகலாகப் பாடு படுகுது. "
அது க்கு.?"
 

இரவுநேரப் பயணிகள் 調麗
வேறை என்ன இருக்குது ' என்று தையல் சொல்லிய போது அவன் நேகிழ்ந்து போனனன் விழிகள் சுரந்தன
'இராசையாண்ணை என்ன கஸ்டப்பட்டாலும் பிள்ளை யளைப் படிப்பிச்சு ஆளாக்கிவிட வேணும் ."
அவர்கள் சயிக்கில் கரியர்களில் விறகுகளை அடுக்கிப் பக்குவமாகக் கட்டிக் கொண்டார்கள். சயிக்கில் காண்டில் பாரிலும் சற்றுப் பருமனான கட்டைகளைப் பொருத்திக் கொண்டனர். புறப்பட்டபோது மதியம் கழிந்திருந்தது. இரவு வீட்டைபோய்ச் சேரலாம். மழையும் தூறத் தொடங்கி யிருந்தது.
வெகு சிரமத்துடன் சயிக்கில்களைத் தள்ளிக்கொண்டு வீதியில் ஏறினர். நெஞ்சுக்குள் சளி இரைந்தது. எங்காவது ஒரு பிளேன்ரி குடிக்க வேணும். நல்ல சூடாகக் குடிச்சால் தான் உசார் வரும்."
சயிக்கில்களில் ஏறி அமர்ந்தபோது சமநிலை வரும்வரை சயிக்கில்கள் வாலாட்டிக் குருவிகளாகத் தள்ளாடின. சுந்தரம் தன் இயலாமையை உணர்ந்தான், என்ன செய்வது? அவர்கள் கை தடியைக் கடந்து நாவற்குழிப் பாலத்தில் ஏறியபோது சுந்தரம் சயிக்கிலுடன் சரிந்து விழுந்தான். அவனால் எழ முடியவில்லை. இராசையா பாலத்துடன் தனது சயிக்கிலைச் சார்த்தி வைத்துவிட்டு ஓடிவந்தான். வீதியால் சென்றவர்கள் ஒடி வந்து சுந்தரத்தைத் தூக்கிவிட்டனர். அவன் உடல் மெதுவாக நடுங்கியது .
விழுந்துவிட்டதற்காக வெட்கப்பட்டான்.
**இவர்களுக்குக் கடும் ஆசை. இப்படியே வண்டிற் சுமை யைச் சயிக்கிலில் கட்டுகிறது' என்றபடி ஒரு லோங்ஸ்காரன் மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றான்.
சயிக்கிலை ஒருவிதமர்க நிமிர்த்தினர் விறகுகள் கட்டி லிருந்து சளிந்திருந்தன. இனி மீண்டும் அவிழ்த்து அடுக்கிக் கட்ட வேண்டும். இல்லாவிடில் ஓடமுடியாது. மழைத் தூறல் சாறம் தெப்பமாகிக் கொண்டிருந்தது.

Page 22
壽 密 செங்கை ஆழியான்
இராசையா மீண்டும் கட்டிக் கொடுத்தான்,
'அண்ணை, உனக்கு என்னர்ஸ் இண்டைக்குக் கஷ்டம்."
**விசரா. உது மனிசனுக்கு மனிசன் செய்யிற உதவி கவனமாக ஏறு, மெதுவா ஒடு. மெல்ல மெல்லப் போய்ச் சேருவம். @ 劇
இரவு படர்ந்தது. அவர்கள் த்ம் கிராமத்திற்கு வரும் போது பின்நிலவு காலித்திருந்தது. இராசையா நேரர்கப் போகச் சுந்தரம் தன் வீட்டு ஒழுங்கைக்குள் சயிக்கிலைத் திருப்பினான். வீட்டு வாசலையடைந்தபோது கண்கள் இருன் வது போல. அப்படியே சரிந்து படலையோடு விழுந்தான்.
தையலும் பிள்ளைகளும் அலறியடித்தபடி ஒடிவந்தனர்.
அவன் கண்களை விழித்தபோது ஆஸ்பத்திரிக் கட்டில் ஒன்றில் படுத்திருப்பதை உணர்ந்தான். அவன் நெற்றியில் வழிந்த வியர்வையை தையல் ஒத்தி எடுத்தபடி அவனை மகிழ்ச்சியோ டு பார்த்தாள்.
鶯》
"என்னப்பா..?" என்று அவள் முகம் விரியக் கேட்டாள்.
"எனக்கென்ன நடந்தது?"
"ஐஞ்சாறு நாளா நினைவில்லாமல் கிடக்கிறியள். இப்ப தான் முழிச்சிருக்கிறியள். பிள்ளைகள் பயந்து போச்சுதுகள் நான் பயப்படவில்லை. எனக்குத் தெரியும், உங்களுக்கு ஒண்டும் ஆகாதெண்டு' என்று அவள் அழுதாள். அவன் அவள் கரத்தை ஆதரவாகப் பற்றிக்கொண்டான்
"அழாதையும் . கனகு எப்படி?"
அவன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பின்னர், "அவர் முந்தா நாள் செத்துப்போனார்" என்றபடி விசும்பினாள்.
சுந்தரம் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றான். முடிய வில்லை, அவன் முகத்தில் பயம் படர்ந்த்து ஏக்கம்.
"படுத்திருங்கோ..!"
 

இரவுநேரப் பயணிகள் 33
* தையல் மூத்தவன் எங்கை? சயிக்கில விறகு கட்ட இராசையாண்ணையோட போயிட்டானா?"
தையல் வியப்புடன் அவனைப் பார்த்தாள் "ஏன் அப்பிடிக் கேட்கிறியள்?"
'அவன் எங்கை?.
'பள்ளிக்குப் போட்டான். அந்தப் பிஞ்சை விறகு கட்ட விடமாட்டன். நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதையுங்கோ. நாங்க ரெண்டு பேரும் இருக்கிறம், பிள்ளையளைப் பார்க்க."
அவன் மனதில் இனந்தெரியாத சுகம். அப்படியே கண்ணை மகிழ்வோடு மூடிக்கொண்டான்.
- மல்லிகை, நவம்பர், 1993
O

Page 23
தாயும் குஞ்சுகளும்
புறப்பட்டாகி விட்டது. இனி யோசித்து ஆவதெரின் றில்லை. அவளுடைய மனம் கலங்கிக் குழம்ப, மார்பு படபட வேனக் கூடுதலர் கத் துடித்துக்கொள்வதாகப்படுகிறது.
சிஎல்லாரும் கண்டிக்குப் போவோம்’ என்று மு டி வு எடுத்த நாளிலிருந்து ஆரம்பமான கலக்கத்தை, வாசலில் ஒட்டோ வந்து நிற்கின்ற சத்தமும், மண்ணெண்ணெய்ப் புகை யின் நாற்றமும் கூட்டிவிடுகின்றன.
'அம்மா ஒட்டோ வந்திட்டுது' என்று குரல் தந்தபடி உள்ளே வந்த ரமணன் இரண்டு பயண சூட்கே சுகளையும், தண்ணிர் சாப்பாடு அடங்கிய கூடையையும் வாசலுக்கு எடுத் துச் செல்கிறான்.
* அம்மா. ஒட்டோ வந்திட்டுது. வந்திட்டுது. ' அவ ளுடைய அடுத்த நான்கு பிள்ளைகளும் ஆரவாரமிட்டனர். அவர்கள் சிறுபிள்ளைகள் என்ன புரியும்? கலா வயது வந்த குமர்ப்பிள்ளை. அவளும் தம்பி தங்கைகளுடன் கூச்சலிட்டாள். அவர்கள் முன்னர் எப்போதாவது கண்டி சென்றவர்களல்
 
 
 

இரவுநேரப் பயணிகள் 85
லர்8 அதனால்தான் அவர்கள் நட்த்தையில் கு துர கல ம் கொப்பளிக்கிறது,
தவமணி க ட் டி லி ல் சற்றுநேரம் சிலையாக அமர்ந் திருந்தாள், பிள்ளைகள் வாசலில் ஒட்டோவைச் சுற்றி நின் றிருந்தனர். ரமணன் பொருள்களைத் தூக்கிக் கொடுக்க அவற்றை வாங்கி, ஒட்டோ கரியரில் வைத்துக் கட்டுவதில் சாரதி ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
சின்னத்துரை கவலையோடு உள்ளே வந்தான். மனைவி கட்டிலில் திக்பிரமை பிடித்தமர்ந்திருப்பது தெரிந்தது ஆதர வோடு மனைவியின் தோளில் கரம்பதித்தான். அவள், அவன் கரத்தில் கன்னத்தைச் சாய்த்துக்கொண்டு விம்மினாள்
'போகத்தான் வேணுமா? எனக்குக் கலக்கமாக இருக் குது.
'தவம். இதென்ன சின்னப்பிள்ளையாட்டம், சும்மர் அழுது பிள்ளைகளைப் பயமுறுத்தாதையப்பா. அதுகள் எவ் வளவு ஆரவாரத்தேர்டை பயணப்பட்டிருக்குதுகள் பார் கண்டிக்குப் போறதுக்குப் பயமே?'
அவள் கணவனை ஆழமாக ஏறிட்டுப் பார்த்தாள்? அவள் விழிகளில் தெறித்த கனலை அவனால் சந்திக்க முடியவில்லை முன்னைய காலப் பயணமா? யாழ்ப்பாணம் இருபதாண்டுகள் பின் தங்கிப்போய்விட்டது. காலையில் யாழ்தேவியில் ஏறி, நண்பகல் கொழும்பில் இறங்கிய காலமா இன்று? கிளாலிக் கரையை அடைந்து, இருள் பரவும் வரை காத்திருந்து வள் ளங்களில் தட்டுத் தடுமாறி ஏறி, உப்புநீரில் முற்றாக நனைந்து பயணப்பட்டு நட்சத்திர ஒளியில் தூரத்தில் அசைவது டேற் படையினரின் ரோறாப்படகுகளா, அல்லது தம்மைப்போலப் பயணப்படும் வள்ளங்களா என இனந்தெரியாமல் உயிரைக் கையில் பிடித்தபடி பயந்து நடுங்கி, வியர்த்து விறுவிறுத்து. இருளைக் கிழித்தபடி சங்குப்பிட்டி முகாமிலிருந்து பாயும் துப்பாக்கிச் சன்னங்களின் தீக்கோடுகளைக் கண்டு சகலதும் அடங்கி.
தவம். எழும்பும் நேரமாகுது.'

Page 24
器剑 செங்கை ஆழியான்
அவள் கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந் தாள் பயணத்தைத் தவிர்க்க முடியர்து
ஐந்து பிள்ளைகளுக்கும் அவனுக்கும் அவளுக்கும் தமிழீழ விசர் எடுப்பதற்காகச் சின்னத்துரை அலைந்த அலைச்சல் அவளுக்குத் தெரியும்,
என்னுடைய கடைசித் த்ம்பிக்கும், என்ரை மனிசியின்ரை கடைசித் தங்கச்சிக்கும் கலியாணம். இதோ கலியாணக்காட்3 இன்னும் ஒரே ஒரு மாசம்தான் இருக்குது. தம்பி கனடாவி விருந்து இதுக்காக வர்றான், மனிசியின்ரை தாய் தேப்பன் சகோத்ரங்கள் நெடுக கண்டியில்தான். பத்துவருடத்திற்குப் பிறகு சந்திக்கப் போறம்.'
"நீங்க இரண்டுபேரும் போயிட்டு வாருங்கோ பிள்ளைகள் இங்க இருக்கட்டும்.'
'வயது போனதுகள். சாகிறதுக்கிடையில பேரப் பிள்ளை களை ஒருக்காப் பார்க்க ஆசைப்படுகுதுகள். நாங்கள் கல் யாணம் முடிஞ்சதும் திரும்பி வருவம் நானும் அவவும் இங்கு படிப்பிக்கிறம், ரீச்சர்மார் வருவம்."
6 சரி. ரெண்டு நாள் கழிச்சு வாருங்கோ, நாங்கள் விசாரிக்க வேணும்."
இரண்டு நாள் கழித்துச் சென்றபோது கோழும்புக்குச் செல்ல அனுமதி கிடைத்தது.
நீங்கு சொன்னவையெல்லாம் உண்மையெண்டதால
தாறம்.'
C
, ܦ
ஏழுபேர் அந்த ஒட்டோவில் எப்படி அடைந்து ஏறிக் கெர்ண்டனர் என்பது பார்த்தால் தர்ன் தெரியும், சின்னத் துரையும் மனைவியும் மகள் கலாவும் சீற்றில் இருக்க, மூவரின் மடிகளிலும் பிள்ளைகள் மூவர் ஏறிக்கொண்டனர். ரமணன் றைவருக்கு அருகில் ஒரு மாதிரியர்கச் சமாளித்து இருந்தான்
 

இரவுநேரப் பயணிகள் 37
கவனம், ரமணன்." ஒட்டோ குலுக்கியடித்து நெளிந்து சரிந்து ஒழுங்கையில் நகர்ந்து வீதியில் ஏறியது. தவமணி எதுவும் பேசர்மல் அமர்ந்திருந்தாள் அடி வயிற்றில் கிளை விட்ட கலக்கம் உடலெங்கும் பரவிப் படர்ந்தது.
"அண்ணி, நீங்க க்ட்டாயம் வரவேண்டும். அம்மர் எனக்கு இல்லை. நீங்களும் அண்ணரும்தான் வசந்தியை எனக்குத் தத்தம் பண்ணித் தரவேண்டும்." இராசு எழுதியிருந்தான்:
'அக்கா. கட்டாயம் வாக்கா உன்னைப் பார்த்து பத்து வருசமாகுது. என் கலியாணத்துக்காவது பிள்ளைகள் எல்லா ரையும் கூட்டிக்கொண்டு கட்டாயம் வாக்கா, நீ வந்தால்தான் நான் மணவறையில் அமர்வேன்.' வசந்தி எழுதியிருந்தாள்.
பாச அழைப்புக்கள் அவளது பிடிவாத்த்தைத் தளர்த்தி விட்டன. 1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் வெடித்த புரட்சிக் குண்டின் எதிரொலி தென்னிலங்கை எங்கும் இனக் கலவரமாக எரிந்தது. யாழ்ப்பாணத்திலும் அதன் தாக்கம் பலரைக் கா வுகொண்டது. பலாலி வீதியில் இராணுவ துப்பாக் கிச் சூடுகளுக்குப் பலியானவர்களில் ஒருவராகச் சின்னத்துரை யின் தம்பி ஐயாத்துரை இருந்துவிட்டான். அந்த இழப்பின் தாக்கம், சின்னத்துரையை ஆனையிறவு த்ாண்டவிடவில்லை.
இன்று அவன் குடும்பத்தோடு கிளாலிக்கரை நோக்கிப் பயணப்பட்டதற்குக் காரணம் வலுவானது. சம்பிரதாயச் சிறைக்குள் சிக்கியவர்கள். அவனும் மனைவியும் பெற்றோர் களாக இருந்து அவனது தம்பிக்குக் கடமை செய்ய வேண்டி யுள்ளது. வசந்தி எவ்வளவு திடமாக எழுதிவிட்டாள்: "அத்தான்கு நீங்க வராவிட்டால் நான் மணவறையில் அமரமாட்டேன்." செய்யக்கூடியவள். பிடிவாதக்கர்ரி, இல்லாவிட்டால் நாற்பத் திரண்டு வயதில் சனடாவிலிருந்து திரும்பி வரும் மச்சான் இராசுவுக்காக, முப்பத்தெட்டு வயது வரை காத்திருப்பாளா?
கண்டிக்குச் செல்வோம் என்ற முடிவை அவர்கள் எடுப்பதற்குப் பல நாட்கள் சென்றன.
"கிளாலியைக் கடப்பதை நினைக்க எனக்கு அடிவயிற் றைக் கலக்குதுங்க..' என்று தவமணி கலங்கினாள் :
O

Page 25
செங்கை ஆழியான்
என்ன பயம்? எல்லாரும் தான் போய் வருகினம்."
"ஒமோம். சொல்லுவியள். நடுக்கடலிலை அவங்கள் வெட்டியும் சுட்டும் சரிச்சவங்கள், எத்தனை பேர் தெரியுமே? சாவகச்சேரிக்கு வயதுபோன பேரன் பேத்தியைப் பார்க்க வந்த ஒரு இளங் குடும்பத்திற்கு என்ன நடந்தது? மூன்று பிள்ளையஞம், எல்லர்ம் கொஞ்ச வயது. தாய் தேப்பனும் எல்லாரையும் சுட்டுத் தள்ளிப்போட்டாங்கள். பேப்பரிலை ஐஞ்சுபேற்றை படங்களும் வந்தது. குடும்பமே சரி கடைசி இதுகள் ஒரே போட்டில வராமல் வெவ்வேறு போட்டிலர்வது வந்திருக்கலாம். குடும் பத் தி ல ஒன்றிரண்டாவது தப்பி யிருக்கும். '
* அப்ப தப்பியிருப்பினமோ, அது கர்லம் அப்பா ஒரு வராலும் தடுக்கேலாது .'
சின்னத்துரை கூறிய சமாதானத்தைத் தவமணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாவகச்சேரிக் குடும்பம் அவர் களுக்குத் தெரிந்த குடும்பமன்று. ஆனால் அக்குடும் பத்தின் பரிதாப அழிவுக்கு அவள் இதயம் கலங்கியழு இது. அவளது மனக்களத்தில் ஐந்து பேரினதும் சடலங்கள் வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் சாட்சி விரிந்தது. உற்றார் உறவினர் கதறிக்குழறும் அவலம் தெரிந்தது. ஐந்து சடலங்களும் வைக் கப்பட்டிருக்கும் சவப்பெட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவு மூன்றுவயதுக் குழந்தையிலிருந்து. நாற்பது வயது வரை தலைமர்டுகளில் ஐந்து குத்துவிளக்குகள். சாம்பிராணிக் குச்சிகளின் புகைக்கோடுகள்! .
ஒட்டோவில் செல்லும் போது, தவமணிக்கு அக்காட்சி மனதில் விரிந்தது. தன்னை ஒதுக்கி அந்த நினைவை அழித்துக் கொள்ள முயன்றாள்.
என்னம்மா, மடி நோகுதா?' என்று தாரணி கேட்டாள். 'இல்லைப் பொண்ணு' என்றபடி அவளை இழுத்து மடியில் வளமாக இருத்தி தன்னோடு இறுக்கி அணைத்துக்
கொண்டாள். மனக் கலக்கம் சற்று விலகியது போன்ற உணர்வு! "என்ரை குஞ்சுகள் 11
 
 

இரவுநேரப் பயணிகள் 剔 இரவுநேர
.േ இறங்கியபோது, அவர்களை வியப்பு ஆட் கொண்டது. கடற்கரையை ஒட்டிப்பரந்து விரிந்து கிடந்த அத் தென்னந்தோட்டத்தில் திருவிழாச் சனம் ஆயிரம் பேருக்கு மேல் பயணத்திற்காகக் காத்திருந்தார்கள்.
சூரியனின் கதிர்கள் இன்னமும் ஒடுங்கவில்லை. மேற்கு வானில் சரியத் தொடங்கியிருந்தவேளை, த்ென்னைமர நிழல் களில், விழுந்த தென்னங்கீற்றுக்களில் இருந்தும், படுத்தும் இரவுக்காக அவர்கள் கர்த்திருந்தனர். எத்தனை மனிதர்? எத்தனை முகங்கள்? எத்தனை விதம்? எல்லார் முகங்களிலும் ஒருவித அவசரமும், பயமும் கலந்து அப்பிப் படர்ந்திருந்தன. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள். ஏதேதோ காரணங்களுக் காகக் கிளாலியைக் கடக்க அவர்கள் காத்திருந்தார்கள்
சின்னத்துரை அவர்களை ஒரிடத்தில் நிறுத்திவிட்டு, நீண்டு நின்ற "கியூவில் பேர்ய்ச் சேர்ந்துகொண்டான். ஒரு மணி நேரத்தின் பின்னர் திரும்பி வந்தான் கரத்தில் ஏழு பயணச் சீட்டுகள் இருந்தன.
"சரியர்ன சனம்." என்றாள் தவமணி,
'இப்படித்தானாம். எங்களுக்கு 92ஆவது வள்ளமாம். நள்ளிரவுக்குப் பிறகுதான் கிடைக்கும்" என்ற என் சின்னத் துரை. குரலில் சோர்வு,
நிச்சயம் கிடைக்குமா?"
1119 வள்ளம் வரை போகுமாம் நம்பரின் படிதான் ஏற்று வினம்."
தவமணி எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள் பிள்ளைகள் அவளைச் சுற்றி அமர்ந்தன,
* ஒட்டோவுக்கு எவ்வளவு அப்பா குடுத்தியள்?' என ரமணன் கேட்டான்.
"ஆயிரத்து நூறு."
'ஆ ' என்று கலா வாயைப் பிளந்தாள்

Page 26
4 Ο செங்கை ஆழியான்
"வள்ளத்துக்கு எவ்வளவப்பா."
"ஒராளுக்கு இருநூறு."
"அப்ப ஏழுபேருக்கும் ஆயிரத்துநானூறு' எனத் தாரிணி கணக்குப் போட்டாள்
'கண்டிக்குப் பேர்ய்வர அப்ப எங்களுக்குச் சுளையாகப் பத்தாயிரம் முடியும்' என்றாள் கலா:
அவர்கள் அந்தத் தென்னைமரத்தடியில் அமர்ந்திருந்தனர்; கலா எல்லாருக்கும் கொண்டு வந்திருந்த பிளாஸ்கிலிருந்த கோப்பியை ஊற்றிப் பகிர்ந்து கொடுத்தாள் மிக்சரையும் பங்கிட்டுக் கொண்டார்கள்.
'எனக்கு ஒண்டும் வேணாம் பிள்ளை.' என்றாள் தவமணி.
"சும்மா உம்மென்றிருக்காமல் குடியுமப்பா. ' அவன்
தம்ளரைக் கலாவிடமிருந்து வாங்கி மனைவியிடம் நீட்டிய போது அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"பருக்க வையாதையும் " * ஒ.' என்று தாரிணி பெரிதாகச் சிரித்தாள். *சிரிக்காதை, எல்லாரும் எங்களைப் பர்ர்க்கினம்."
தவமணி, கணவனிடமிருந்து புன்சிரிப்புடன் தம்ளரை வாங்கிக் கெ எண்டாள்
'உமக்குச் சிரிக்கவும் தெரியும் ' "எவ்வளவு நேரம் செல்லும்?"
'எதுக்கு ?' "
* கடலைக் கடக்க. அங்காலை பூநகரிக் கரைக்குப் (Burrá. "
'மூன்று மணித்தியாலம் செல்லுமாம்."
அவளுடைய மூகம் மீண்டும் இறுக்கமடைந்துகொண்டது. விழிகளில் கலக்கம், நெஞ்சில் படபடப்பு.
 
 
 

இரவுநேரப் பயணிகள் 4】
மேலைவான் சிவக்கத்தொடங்கியிருப்பது தென்னைமரக் கீற்றுக்களுடாகத் தெரிகிறது.
வள்ளமோட்டிகள் சயிக்கிள்களிலும், தோள்களிலும் அவுட்போட் மோட்டர்களைக் காவிச் சென்றனர்; தூரத்தில் ஓரிடத்தில் சனம் முன்டியடிப்பது தெரிந்தது.
ஆயத்தம் போல..' என்றபடி சின்னத்துரை எழுந்தரின்
C
பயணச்சிட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட வரிசைப்படி பயணிகள் ஒழுங்காக இருத்தப்பட்டனர்.
"முதலாம் இலக்கக்காரர் இருங்கோ அவர்களுக்குப் பின் னால் இரண்டர்மிலக்க வள்ளக்காரர் இருங்கோ இடையில போகவே ண்டாம். செக்பண்ணேக்க கண்டுபிடிச்சர்ல் பிறகு கடைசி போட்டிலதான் அனுப்புவம்."
அவர்களும் தங்களுக்குரிய வரிசையில் அமர்ந்துகொண்ட னர். ஒருவர் பின் ஒருவராகத் தவமணி அங்கு அமர்ந்திருந்த வர்களை நோட்டமிட்டாள் எல்லாரிலும் களைப்புத் தெரிந் தது, கலக்கம் தெரிந்தது. அவசரம் தெரிந்தது.
மூன்றாவது வரிசையில் இடம்பிடித்திருந்த பொன்னப்பர் எழுந்து நின்று தான் கொண்டுவந்திருந்த உரப்பையைப் பிரித்து, அதனுள் சூட்கேசைத் திணித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் செய்வதைப் பார்த்த பலர் தாங்கள் கொண்டுவந்திருந்த உரப்பைகளை விரித்தாாகள்.
உதேன், அப்ப ?' என்றான் ரமணன் மெதுவா இ
கடலில் போ கேக்க. தண்ணி எத்தும் பாக் ஊறி உடுப்புகள் பழுதாகிப்போகலாம் . அதுக்குத்தான்."
நாங்கள் கொண்டு வரவில்லை."
முன்னைப் பின்னை போயிருந்தால் தானே த்ெரியும்.'

Page 27
42 செங்கை ஆழியான்
பொன்னப்பர் சுற்றிச் சுழன்று பார்த்தபோது தவம ணியும் அவளுடைய குடும்பமும் பயணத்துக்காக அமர்ந்திருப்பது தெரிந்தது வர் யெல்லாம் பல்லாகச் சிரித்தார்.
என்ன எல்லாரும் ஒண்டாப் போகப்போறியளே?' என்று பெருங்குரலில் கேட்டார். அவர் கேட்டவிதம் தவ மணிக்கு இனந்தெரிந்த கலக்கத்தைத் தந்தது. அவள் எதுவும் பேசாது கணவனைப் பார்த்தாள் விழிகளில் மிரட்சி
"என்ன தவம், உன்னைத்தான் பிள்ளை. இந்தக் கோதாரி யில போற பயணத்துக்கு எல்லாரும் ஒண்டாகவே வந்தனிங் கள்? ஒன்னு ரெண்டையாவது வீட்டில விட்டிட்டு வந்திருக்கலா (LDi)(3)P
'உந்த விசரன் கத்தட்டும். நீ கேளாததுபோல இரு தவம்
தவமணியின் மனக் களத்தில் காட்சிகள் விரிந்தன. வரிசை யாக ஐந்து சடலங்கள் வளர்த்தப்பட்டிருக்கின்றன. மூன்று வயதிலிருந்து. ஐந்து சடலங்களர்? அவை எப்படி ஏழாயின?
அவள் திகிலடைந்து பேர்ய் தன்னை உலுக்கிக்கொண்டாள். 'என்னம்மர் ?' என்று கலா கவலையோடு தாயை விசாரித்தாள், "ஒண்டுமில்லை."
"நீங்கள் கொஞ்ச நாளாகச் சரியாகவே இல்லை அம்மா."
நவமணி கலாவை ஆதரவாகப் பார்த்தாள் அவள் மனம் படுகின்ற வேதனை யாருக்குத் தெரியும்3
O
கடற்கரை நேர்க்கி ஒழுங்காக அனுப்பத் திெ டங்கியபோது வானத்தில் விமானம் ஒன்று சத்தம் எழுப்பியது. பயணிகளிடையே சலசலப்பு.
"அப்படியே பேசாமல் இருங்கோ, அது சீ பிளேன். போயிடும். '
 

இரவுநேரப் 4、
வானத்தில் அது ஒரு புள்ளியாக மறைந்து, அதன் இரைச் சல் அற்றுப்போகும் வரை அவ்விடத்தில் பதற்றம் நிலவியது கிளாலியில் வீசப்பட்ட விமானக் குண்டுகள் ஏற்படுத்தியிருந்த அனர்த்தங்கள் நினைவில் தோன்றிக் கிலியை ஏற்படுத்தின
தவமணி மீண்டும் கலங்கிப் போனாள் .
பயணத்தை நிறுத்திவிடுவோமா?"
வரிசையாக மக்கள் படகுக்கரையை நோக்கி நடந்தார் கள் கடற்கரையை அடைய நீண்ட தூரம் நடக்க நேர்ந்தது இருள் வேகமாக கவிந்துவிட்டது.
வளர்பிறையின் ஏழாம்நாள். நிலம் தெரியும் நிலவு ஒளி அவர்கள் படகுத்துறையை நோக்கி நகர்ந்தார்கள்
தவம ணியின் நடை சற்றுத் தடைப்பட்டது. சின்னத்துரை யும் ரமணனும் கலாவும் வேகமாக நடந்தார்கள் தவமணியும் பிள்ளைகள் மூவரும் பின் தங்கி வருவது அவர்களுக்குத் தெரிய
வேகமாக வாம்மா." என்றாள் தாரிணி.
"அங்கபார் அவர்கள் கெதியாகப் போகினம்.'
* Gl Jg fri på Strål (33; fr. " *
தவமணியின் நெஞ்சத்து ஒலி தெளிவாகக் கேட்கிறது. பட குத் துறையை அடைந்ததும் மீண்டும் வரிசையாக நின்றனர்,
* 92ஆவது வள்ளக்காரர் முன்னுக்கு வாருங்கேர் இவர் தான் உங்கட வள்ளமோட்டி, கவனமாக அவருக்குப் பின்னால போய் வள்ளத்தில் ஏறுங்கோ." என்றான் ஓர் இளைஞன்,
சின்னத்துரை ர மணனையும் கலாவையும் அழைத்துக் கொண்டு திரும் பிப்பார்த்தபோது சற்றுத் தூரத்தில் வரிசையில் தவம ணியும் பிள்ளைகளும் நிற்பது தெரிந்தது.
'கேதியா வர்ருங்கோ." என்று சின்னத்துரை கத்தினரன்.

Page 28
44 செங்கை ஆழியான்
'அம் மா. வாங்கோ. ' கலாடு
தவமணி நாக்கில் ஊறிய எச்சிலை மென்று விழுங்கிக்
'நீங்க மூண்டுபேரும் முதல் வள்ளத்தில் போங்கோ, நாங்கள் அடுத்த வள்ளத்தில் வாறம்.' தவமணி திடமாகக் கூறிய த கிளாலிக்காற்றில் மிதந்து சின்னத்துரையைக் குளிரேற வைத்தது.
சின்னத்துரைக்கு அவளின் மனவுணர்வு சற்றுநேரக் கழிவில் புரிந்த்து அவளை ஆழமாகப் பார்த்தார்.
"அம்மாவை வரச் சொல்லுங்கோ. ' என்று கலா பதறினாள்.
* 'இல்லை. அவை அடுத்த வள்ளத்தில வரட்டும்.'
"ஏனப்பா? " என்று கலா கலக்கத்துடன் கேட்டாள்;
அப்பா. நான் அம்மாவுடன் வாறன். தாரணியை உங்களுடன் அனுப்புகிறன்' என்றபடி ரமணன் தாயை நோக்கி ஒடிவந்தான். அவனது நடத்தை சின்னத்துரைக்குப் பிடித்த மாயிற்று.
"தாரிணி, நீ அப்பாவுடன் போ. நான் அம்மாவுடன் வாறன்."
தாரிணிக்கு எதுவும் புரியவில்லை . சின்னத்துரைக்குப் பரிந்தது.
'92 வள்ளக்கர்ரருடன் 93 இல் நாலு பேர் போங்கோ.' என்று இளைஞன் குரல் செர்டுத்தர்ன். அவனுக்குக் கிளாலிக் கரைப் பயணி எளின் மனவுணர்வுகள் அத்துப்படி போலும்.
கிளாலிக்கடலில் படகுகள் இருளில் கடலலைகளில் தர்விப் பயணப்பட்டன.

இரவுநேரப் பயணிகள் 45
சிங்குப்பிட்டிக் கடற்படை ரேடாரின் திரையில் திசை மாறிய நிலையில் ஒரு வள்ளம் கடலில் தத்தளித்தபடி நகர் வது தெரிகிறது. அதன் சுற்றாடலில் வேறு விசைப்படகுகள் எதையும் கர்னோம்,
மறுகணம், கடல் நீரைக் கிழித்தபடி விசைப்படகுகள் நான்கு, சங்குப்பிட்டிக் கடற்படை முகாமிலிருந்து புறப் பட்டன.
- வீரகேசரி, மே, 1994
O O.

Page 29
கஞ்சிப் பொழுது
கீட்டின் அமைதி மெல்லியதாகத் தூரத்தில் எழுந்த இனந்தெரியாத சத்தத்தால் அழிந்தது தொடரும் வறட்சி யால் பசுமையிழந்து கபில நிறம் பெயரத் தொடங்கியிருந்த புற்களை மேய்ந்துகொண்டிருந்த கலையன் கம்பீரமாகத் தலையை உயர்த்தியது. அதன் செவிகள் சத்தம் எழுந்த திக்கில் திரும்பிக் கிரகித்தன.
சத்தம் வெகு தூரத்தில் கேட்கிறது. அபாயமில்லை:
கலையன் தலையைத் திருப்பி ஆங்காங்கு கருகத் தொடங்கி யிருந்த புற்களை மேய்ந்துகொண்டிருந்த தன் கூட்டத்தைப் பார்த்தது. இளங்காலை வெயிலில் அவற்றின் செம்பழுப்பு நிறமும் அவற்றிலிருந்த வெண்மையான புள்ளிகளும் அச்சூழ லிற்குத் தனிச் சோபையைத் தந்தன. கம்பீரமாகத் தலையை நிமிர்த்தியபோது கலையனின் கவர்க்கொம்புகள் எதிரிகளை எச்சரிப்பது போல உயர்ந்தன. அது நின்றவிடத்திலிருந்து அவத்ானத்துடன் சுற்றிப் பார்த்தது.
 
 

இரவுநேரப் பயணிகள் 47
அடர்ந்த காடு மூன்று பக்கங்களிலும் பரவிக் கிடந்தது, ஒரு பக்கம் முறிப்புக் குளக்கட்டொன்றின் உயர் மேடு, அதில் அடி பருத்த மருதமரங்கள் வளர்ந்திருந்தன. குளக் கட்டின் மத்தியில் மழை நீரைத் தேக்காது வெளியேற்றிவிடும் பாரிய முறிப்புக் காணப்பட்டது. அந்த முறிப்பை மண்கொட்டிக் கட்டினால் அக்குளத்தில் வருடம் முழுவதும் நீர் தேங்கி நிற்கும். காரணத்தோடுதான் அதனைக் கட்டாது விட்டிருந் தனர்.
இங்கிருந்து வடக்காக நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குஞ்சுக்குளத்திற்கு இந்த முறிப்பினூடாகத்தான் நீர் செல்கின்றது. குஞ்சுக்குளத்தில் நீரில்லையென்றால் அக்கிரர் மத் தில் வாழ்கின்ற இருநூற்றியாறு குடும்பங்களும் தவிக்க வேண்டியதுத்ான்.
கலையன் முறிப்பினூடாகப் பார்த்தபோது சில காட்டு எருமைகள் குளத்தின் மத்தியில் தேங்கியிருக்கும் நீரைக் குடித் துக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஒரேயொரு நீர்நிலை தான் அந்தக் காட்டிற்குரிய தாகத்தைத் தீர்த்து வருகிறது. ஒரு காலத்தில் பரந்து விரிந்து கிடந்த காடு இன்று குறுகி விட்டது. மக்களின் குடியிருப்புகள் காட்டின் பரப்பினைச் சுருக்கிவிட்டன.
கலையனின் உடலில் அமர்ந்த ஈக்கள் மேய்ச்சலிற்குத் தொல்லை தந்தன குட்டை வாலால் அவற்றினை விரட்ட முடியாது. தோலைச் சுருக்கி விரித்த அதிர்ச்சியில் ஈக்கள் விலகிச் சென்றன. ஆனால் ஒரு மாட்டு ஈ மாத்திரம் கலை யனின் அடிவயிற்றைப் பலமாகப் பற்றிக்கொண்டிருந்தது, வலுவான பின்னங்கா லொன்றால் கலையன் இட்ட குறிதப்பா அடியால் குழம்பாகி அது சிதைந்தது.
"பட்டென எழுந்த அந்த ஒசையால் அமைதி கலைந்த மான்கள் தலைகளை நிமிர்த்தின. தம் தலைவனைக் கவலை யோடு பார்த்தன.
பெரிதும் சிறிதுமாக முப்பது மான்கள் வரை அக்கூட்டத் திலிருந்தன. அவற்றினை அவதானமாகப் போ சிக்கின்ற கடமை கலையனுக்குரியது. மேய்ச்சல் தரைகளின் பரப்பு மக்களின்

Page 30
星& செங்கை ஆழியான்
இடப்பரவலால் குறுகி வருகின்ற போதிலும் ஆபத்தான கட் டத்தை இன்னும் நெருங்கவில்லை. ஆனால் நீர்ப்பற்றாக் குறைதான் பெரிதாக இருக்கின்றது. ஒரேயொரு முறிப்புக்குளம் காட்டின் தாகத்திற்குப் போதுமானதாகவில்லை. வறட்சி ஆரம்பமாகிவிட்டது. குளத்தின் மத்தியில் தேங்கியிருக்கும் நீரும் வற்றி வருகின்றது. இருமர்தங்களுக்கு முன் இக்குளத்து நீரில் குவிந்து கிடந்த கூழைக் கடாக்களும், சைபீரியன் வாத்துக்களும் இவ்விடத்திலிருந்து வடபுறமாக வலசை சென்றுவிட்டன.
நீருக்காகக் குஞ்சுக்குளத்தை நெருங்க முடியாது. மணி தர்கள் விடமாட்டார்கள். அவர்களின் அகோரப்பசிக்கு நீரில் வாய் பதிக்கும் விலங்கு பலியாகிவிட வேண்டியதுதான். கொஞ்சமும் இரக்கமில்லாதவர்கள். கட்டுத்துவக்குகளும், பொறிகளும் விடாயால் அலைந்த விலங்குகளை இரை கொண் டிருக்கின்றன.
கலையன் தன் கூட்டத்திற்குத் திடமாகக் கட்டளையிட் டிருக்கின்றது: "எக்காரணம் கொண்டும் குஞ்சுக்குளம் பக்கம் செல்லக்கூடாது."
காட்டின் அமைதியைக் குலைத்த சத்தம் இப்பொழுது நெருங்கிவருவது இரைச்சலிலிருந்து புலனாகின்றது. கனத்த வாகனங்கள் முறிப்புக்குளத்தின் பக்கமாக வருகின்றன; ஆட் காட்டியொன்று "அவக் அவக்கென ஒலியெழுப்பிக் காட்டினை எச்சரித்தது.
மேய்ச்சல் முடிந்து நீர் அருந்தி, விடாய் தீர்க்கவேண்டிய வேளையில் இப்படியொரு இரைச்சலா? குளக்கட்டிற்கு அப் பால் அலைகரைப் பக்கமாக்த்தான் வர்சனங்களின் இரைச்சல் கேட்டது. கலையன் தலையைத் தூக்கி நர்சிகளால் காற்றை மோப்பம் பிடித்தது. அதற்குப் பரிச்சயமான மணம் காற்றில் மிதந்து வந்தது.
- மனிதர்கள், மனிதர்கள்.
கலையனின் விழிகளில் பயம் கவ்வியது. தனது கூட்டத்தை எச்சரித்தபடி வடக்குப் பக்கமாக மெதுவாக நடந்து, ஏனை பன தன்னைப் பின் தொடர்கின்றன என்பதை உறுதிப்படுத்
 

இரவுநேரப் பயணிகள் 曇鸞
இக்கொண்டு ஆாவியோடி அடர்காட்டிற்குள் புகுந்துகொண் டது. அவற்றின் மெல்லிய வலிமையான கால்கள் வெட்டை வெளியின் புற்களையும், செடிகளையும் துவம்சம் செய்தபடி பலமாக ஊன்றின. துள்ளித் தரவி காற்றில் மிதந்து குதித்து ତୁl4@@t.
வெட்டையின் (வெளி) காட்டோர மறைப்பில் மறைந்த படி கலையன் முறிப்புக்குளப்பக்கமாகப் பாாத்தது. கனரக வாகனங்களின் இரைச்சலுடன் மனிதர்களின் வாடையும் தெளி வாகக் காற்றில் கலந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே குளக் காட்டில் 'கரு' மென மூன்று நான்கிடங்களில் இரைச்சலுடன் ஏதோ ஏறின. யானைகளோ?
இல்லை. அவை குண்டு பொழிகின்ற மனிதரின் இயந் திரங்கள். சிறிது காலமாகக் கலையனுக்கு அவை தெரிந்திருந் தன. காட்டோர மரங்களுக்கிடையே மறைந்திருந்த சில மனிதர்களை நோக்கி இவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் குண்டுகளைக் கக்கின. அதனால், பற்றைகளுள் மேய்ந்தப்டி பதுங்கிக்கிடந்த காட்டெருமைகள் இரண்டு சித்றி வானில் சதைத் துண்டங்களாகத் தெறித்ததைக் கலையன் கண்டிருக் கிறது.
எச்சரித்தபடி கலையன் நடுக்காட்டிற்குள் விரைந்தபோது வானில் இரைந்தபடி விமானம் ஒன்று குஞ்சுக்குளப் பக்க மாகச் சென்றது. இதுவும் குண்டு வீசும் நினைத்து முடிப் பதற்குள் பெரும் சத்தத்துடன் குண்டொன்று நிலத்தில் வெடித்துச் சிதறியது, அதன் அதிர்வை அவை உணர்ந்தன.
எத்தனை பேர்கள் குஞ்சுக்குளக் கிராமத்தில் உடல் சித
றிப் பலியானார்களோ? எத்தனை கட்டிடங்கள் பொருமி
நிலைகுலைந்து மண்ணில் சரிந்தனவோ? வெகுகர்லமாக அக் கிராமம் குண்டுகளால் தாக்கப்படுகிறது. எண்பத்தேழுகளில் தரை வழியாக வந்த இராணுவ மனிதர்கள் அக் கிராமத்தில் பலரைச் சுட்டுக்கொன்று சில வீடுகளைக் கொளுத்திச் சென் றனர். சில இளம் பெண்களைக் காட்டோரம் இழுத்து வந்து பெண்டாழ்ந்து திருகிக் கொன்றனர். தற்போது சில ஆண்டு
3

Page 31
50 செங்கை ஆழியான்
களரிக வேறு சிலர் வானவழி வந்து குண்டுகளைப் பொழிந்து அக்கிராமத்தை அழித்து வருகின்றனர்.
மனிதர்களுக்கு என்ன பிடித்துவிட்டது?
காட்டில் உணவுக்காகத்தான் மிருகங்கள் வேட்டையாடும். இப்படிக் காரணமின்றி ஒன்றினையொன்று அழித்துக்கொள் வதில்லை. எவ்வளவு அழிவுகள்? இவை ஏன்? கலையனுக்கு இவை புரியவில்லை.
காட்டில் எழுந்த இரைச்சல் நின்றுவிட்டது. வர்கனங் களின் இரைச்சல் அடங்கிவிட்டது. கலையனை எல்லா மான் களும் கவலையோடு பார்த்தன. அவற்றின் விழிகளில் தேங்கிக் கிடந்த கோரிக்கையை அது புரிந்து கொண்டது.
தாகம். விடாய். மாலை கவிந்து இருள் சூழ்கின்றது. அவற்றின் நாக்குகள் வறண்டன. காலையில் மேய்ந்த உணவு S ன் அசைபோடப்பட்டு தாகத்தின் கடுமையை உணர்த்தின.
கலையன் வளியில் மோப்பம் பிடித்தபேர்து மனிதரின் கெட்ட வாடை இன்னமும் இருந்தது. அவர்கள் குளத்தின் அணைக்கட்டில் இருக்கிறார்கள். குளத்திற்குச் சென்று நீரருந் தித் தாகம் தீர்க்க வேறு மார்க்கம் இருக்கின்றதா? பார்க்க லாம். அவை காட்டின் ஒரத்திற்கு வந்து வெட்டையில் இறங் காமல் தூரத்தில் தெரிந்த குளக்கட்டினை நோக்கின. காட் டோரத்தில் நரிகள் பல குந்தியிருப்பதும், அவற்றிற்கு அப் பால் காட்டுப் பன்றிகள் மெதுவாக உறுமுவதும் தெரிந்து கேட்டது. மான்களின் வருகையை உணர்ந்த நரிகள் பசியோடு அவற்றினைப் பார்த்தன. கலையன் தலையை ஆட்டித் தன் கலைக் கொம்புகளின் பலத்தை உணர்த்தியதும் நரிகள் மெது வாக அவ்விடத்தைவிட்டு அகன்றன.
குளக்கட்டில் மனிதர்கள் நின்றிருந்தார்கள். குண்டு பொழி யும் யந்திரங்கள் காட்டுப்பக்கமாக எவரையோ எதிர்பார்த்தி நீண்டு முழங்கத் தயாராக நின்றன. அவர்கள் முட்கம்பி களைச் சுருள் சுருளாகக் குளக்கட்டின் நீளத்திற்குப் பரப்பிப் பிணைப்பதும் தெரிந்தது.
கலையனின் உள்ளத்தில் சங் ட உணர்வு. அவர்கள் இவ் விடத்தை விட்டு இலகுவில் செல்லப்போவதில்லை. அப்படியா
 

இரவுநேரப் பயணிகள் 51
னால், குளம். நீர். தாகம். ? சற்றுத் தூரத்தில் காட்
டோரப் பற்றையொன்றில் சிறு சலசலப்பு இருந்தாற்போல
எழுந்தது. அது என்னவென்று அவதானிப்பதற்கு முன்பே குளக்கட்டிலிருந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சன்னங்கள் அப் பற்றையை நோக்கி தீக்கோடுகளாகப் பாய்ந்தன. "அம்மா" என்று அலறியபடி ஓர் இளைஞன் நிலத்தில் சரிந்தான். அதே வேளை குளக் கட்டில் நின்றிருந்த ஒரு மனிதன் "அம்மே” என்று கூக்குரலிட்டபடி பின்னால் சரிவது தெரிந்தது. பற்றைக் குள் மறைந்திருந்த இன்னொரு இளைஞன் காயம் பட்டுச் சரிந்த தோழனை இழுத்தபடி நிலத்தில் ஊர்ந்து பின்வாங்கிக் காட்டுமரம் ஒன்றின் பின்னால் மறைந்து கொண்டான்,
தோழனின் மார்பிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து மற்ற வனின் உடலில் ஊறியது.
"சத்தியா, நீ போயிடு. என்னை இப்படியே விட்டிட்டுப் போ , ' காயம் கட்ட இளைஞனின் கரம் கழுத்தில் எதையோ தேடியது. வேண்டாம். சசி." என்றபடி நண்பனின் கழுத் தில் கட்டியிருந்த ஏதோ ஒன்றைப் பற்றி அறுத்து சத்தியன் எறிந்தான். பின்னர் தோழனைத் தோளில் போட்டபடி விரை வாக வடக்குநோக்கி நடககத் தொடங்கினான்.
குளக் கட்டுப்பக்கமாகப் பெரும் அமர்க்களங்கள் எழுந்தன குண்டுகள் இடைவெளியின்றிக் காட்டுப்பக்கமாகத் தீப்பிளம்பு 45 GMT IT si 'றந்துவந்தன.
கலையன் தன் கூட்டத்தினரை அழைத்துக்கொண்டு அடர் காட்டிற்குள் புகுந்துகொண்டது. சற்று நேரத்தில் வானத்தில் ஹெலி ஒன்றின் இரைச்சல், குஞ்சுக்குளக் கிராமத்தை ಆ9ಿ சுட்டுத் தள்ளியது.
இரவு கழிந்து பகல் படர்ந்தது. மேய்ச்சலிற்குக் குள் வெட்டைக்கச் செல்ல முடியாது. தன் கூட்டத்தினர் சோர்ந்து காணப்படுவகைக் கலையன் கண்டு கொண்டது. எல்லாம் அமைகியின்றித் தவித்தன. அவர்களின் காட்டிற்கும் ஆபத்து வந்து விட்டது. மனிதர்கள் வீடுகளை விட்டுக் காடுகளுக்கு வந்து விட்டார்களோ? மிருகங்களாக மாறி விட்டார்களேது?

Page 32
莎器 செங்கை ஆழியாவி
* கனட்டில் வர் ழ்ந்த மனிதர்களை எவ்வளவு கஷ்டப்பட்டு நாகரிக வசமாக்கிக் கிராமங்களுக்கு அனுப்ப நேர்ந்தது. அதனால்தான் காட்டில் இந்த அளவிலாவது மிருகங்கள் எஞ்சி யிருக்கின்றன. அந்த நிலைமாறி மனிதன் காடுகளுக்கு வந்து விட்டால் ஒன்றும் எஞ்சாது. மனிதன் தனது தேவைக்காக அடிமைப்படுத்திக்கொண்ட விலங்குகளோடு கிராமங்களில் இருந்துவிடட்டும். அது எல்லாருக்கும் நல்லது." எனக் கலை யன் எண்ணலாயிற்று.
எதுவும் மேய்ச்சலில் ஈடுபடவில்லை. அசைபோடுவதற்கு வயிற்றில் செமியாது எதுவுமில்லை. அவற்றிற்கு இப்பொழுது தேவை, தண்ணிர்.
மாலைக் கதிரவன் காட்டின் உயர் மரங்களுக்கு அப்பால் சரிந்தான் -
தூரத்தில் குஞ்சுக்குளத்தின் அலைகரை, நீர் கேங்கிக் கிடப் து நீர்ப் பறவைகளின் ஆரவாரத்திலிருந்து தெரிந்தது. அங்கு போவே மா? மிகுந்த ஆபத்து அது கிராமத்து மக்கள் கட்டுத்துவக்குகளுடன் காத்திருப்பார்கள். பொறிகளைப் புதைத்திருப்பார்கள். ஆள் மாறி ஆள் மாறி இரவும் பகலும் கிராமத்தின் எல்லைப் புறங்களில் எவர்களையோ எதிர்பார்த் துக் காத்திருப்பதைக் கலையன் அவதானித் இருக்கின்றது. ஒரு தடவை முறிப்புக் குளக்கட்டில் இன்று முகாமிட்டுள்ள * அம்மேக்களில் ஒரு பங்கினர் குஞ்சுக் குளம் பக்கமாகக் குண்டு பொழியும் யந்திரங்களுடன் வந்தார்கள். வானத்தில் விமானங் கள் கூடவந்தன. கிராமத்து எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மறைவிடங்களிலிருந்து பாய்ந்து வந்த குண்டுகளுக்குப் பலர் பலியாக எஞ்சியவர்கள் திரும்பி ஓடி விட்டனர்.
கிராமத்துப் பக்கம் செல்லமுடியாது. காவல் இருக்கும்.
இரவு படரத் தொடங்கியது. அவற்றைத் தர்கம் வாட்டி வதைத்தது. என்ன செய்வது? எங்கு செல்வது? வானத்தைக் கலையன் பார்த்தது. தூரத்தில் கருமேகத்திரள் ஒன்று மன லாற்றுப் பக்கமாக விரைவது தெரிந்தது. மழை பொழியக் கூடிய காலம் அல்ல. இருக்கின்ற தண்ணிரைக் குடிக்கவும் இந்த மனிதர்கள் விடுவதாக இல்லை.
 

*
இரவுநேரப் பயணிகள் వీటి
அவை சோகத்துடன் குஞ்சுக்குளம் பக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தன.
கலையனின் விழிகள் திகைப்பில் நிலைத்தன. குளத்தின் அலைகரையை நோக்கி நகர்வது யார்? சந்தேகமேயில்லை. பழுப்பிதான். அதன் கூட்டத்தில் துணிச்சலான பிடி பழுப்பி தான். கன்றுத்தாய்ச்சி. விடாய் தாங்காது கூட்டத்தின் கட்டுக் கோப்பைக் குலைத்தபடி அது குளத்தை நேர்க்கிச் செல் கின்றது.
'பழுப்பி போகாதே." என எச்சரிக்கக் கலையன் முயன்றது. முடியவில்லை,
பழுப்பி அலைகரையில் கால் வைத்தபோது "தொம்" என ஏதோ வெடிக்க பழுப்பி அப்படியே தூக்கி வீசப்படுவதைக் கலையன் கண்டது, நிலத்தில் தூக்கி வீசப்பட்ட பழுப்பி எழுந்து நிற்க முயன்றது. அதனால் முடியவில்லை. அதன் பாதக் குளம்பு மிதிவெடியில் காணாமல் போயிருந்தது. மூன்று கால்களில் அது தன் கூட்டத்தை நோக்கித் தடுமாறி வந்தது .
"மிதி வெடியில் கால் வைச் சுட்டுது. of Gill, பிடிப்பம்."
மனிதர்கள் அதனை விரட்டி வந்தனர். கலையன் தன் கூட்டத்தினரை எச்சரித்தது. அவை காட்டிற்குள் நகர்ந்து விரைந்தன. கலையன் ஏக்கத்துடன் பழுப்பியைப் பார்த்தது விழிகள் நீரைச் சிந்தின.
பழுப்பியால் நடக்கமுடியவில்லை. காட்டோரத்தில் அப் படியே சரிந்து விழுந்தது. மூச்சிரைத்தது. மூன்று கால்களில் ஓடி வந்த களைப்பு. சிதறிப்போன கால். காயம் தந்த வேதனை. முக்கி முனகியது. பெருங்குரலில் அலறியது. கன்றுத்தாய்ச்சி. கலையனுக்கு நிலைமை புரிந்தது. அதன் அருகில் செல்ல விரும்பியபோது மனிதர்கள் வேகமாக வந்தனர்.
* பழுப்பி பழுப்பி." மனிதர்கள் நெருங்கினர். "N." 7 kg. -

Page 33
செங்கை ஆழியான்
"சுடாதையடா. அது விழுந்து கிடக்குது." பழுப்பி யின் அருகில் அவர்கள் வந்தனர். ஒருவன் தன் கரத்திலிருந்த பொல்லால் அதன் மண்டையில் ஓங்கி அடித்தான். அந்த அடி யோடு அதன் உயிர் பிரிய அதேவேளை கன்று ஒன்று வெளியே தள்ளப்பட்டது
"குட்டி போட்டிட்டுதடா." என்று ஒருவன் கத்தினான்.
அவர்கள் வேதனையோடு தயங்கி நின்றார்கள். பின்னர் பழுப்பியைத் தூக்கிக் கொண்டு கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
மேலும் ஒருநாள் கழிந்தது. காட்டின் மூலை முடுக்கெல் லாம் அலைந்தும் ஒரு துளி நீர் கிடைக்கவில்லை. கலையனின் கூட்டம் தாங்கமுடியாத விடாயால் தவித்தது. சூரியன் மேற்கு வானில் சரிகின்ற வேளையில் வெட்டைவெளியில் இடையறாத குண்டுச் சத்தம் எழுந்தது அதனைத் தொடர்ந்து வானில் தோன்றிய விமானங்கள் கிராமத்தையும் காட்டையும் நோக்கிக் குண்டுகளை வீசின. கிராமத்து மக்கள் கூக்குரலிட்டார்கள், வீடுகள் சரிந்து விழுந்தன. உடல்கள் வீதயில இறைச்சித் தண்டங்களாகச் சிறிக் கிடந்தன. மனிதர் கள் சாரிசாரியாக உயிர் ளைக் காப்பாற்ற அக்கிராமத்தை விட்டு வடக்குப் படிகமாக நகர்ந்தனர். கைகளில் அகப்பட்டவற்றைத் தூக்கிக் கொண்டு அவர்கள் ஓடினார்கள்.
வெட்டை வெளியெங்கும் உடலங்கள் சரிந்து கிடந்தன. முறிப்புக் குளக்கட்டில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலான வர் உள் குளத் தற்குள் சரிநது கிடந்தனர். நரிகள் சுற்றிவரத் தொடங்கியிருந்தன.
அனைத்தும் அடங்கின. மனிதரின் உயிர்வாடை காற்றி வில்லை. நள்ளிரவு வேளையிற் கலையன் தன் கூட்டத்தை அழைத்துக் கொண்டு குஞ்சுக்குளம் கிராமத்தை நோக கி நடக்கத் தொடங்கியது.
அலைகரை வழியாகச் செல்லக்கூடாது, அங்கு பொறிகள் இருக்கும். கிராமத்தின் ஊடாகவே செல்ல வேண்டும். மனித இறைச்சியின் அழுகிய நாற்றம் எங்கும் நிறைந்திருந்தது.
 

இரவுநேரப் பயணிகள் , ".
வர்ணத்தில் சந்திரன் சோதியாக வெளிப்பட்டான். மு நிலவு அமைதி. இந்த உலகம் எவ்வளவு அழகானது? இனிமை யானது? எனக் கலையன் எண்ணிக்கொண்டது.
மனிதர்கள் இந்த உலகத்தை நரகமாக்கிக்கொள்கிறார்கள்
கிராமததிற்குள் பிரவேசித்தபோது ஒரு குழந்தையின் அபு குரல் கேட்டது. இறந்துபோன பெற்றோரின் அருகில் குந்தி யிருந்து, "அம்மா பசிக்குதம்மா. எழும்பி வாம்மா." என இரந்து இரங்கி அழுதது.
கலையன் கூட்டம் அக்குழந்தையைக் கடந்து சென்று குளத்தில் இறங்கின. தாகம் அடங்க நீரை அருந்தும்போது கலையன் எண்ணிக் கொண்டது : “இக்கிராமத்திலேயே இனி இருந்து விடுவோம். இது ஒரு அழகான காடு."
- அணையாழி, மார்ச், 1994
O O

Page 34
எங்கட கிராமம்
இரவு படரத் தொடங்கிய வேளையில் அவர்கள் இரு வரும் அக்கிராமத்துக்குள் புகுந்தார்கள். அக்கிராமம் ஆள் அரவம், ஓசை ஒலியின்றி மயான அமைதியில் ஆழ்ந்து கிடந் தது. யுத்தத்தால் சிதைந்து போன விட்டிடங்கள், கோயில் என்பன அக்கிராமத்துக்குள் பிரவேசித்தபோதே கண்களில் பட்டன.
மாணிக்கம், தன்னுடன் சயிக்கிளை உருட்டிக்கொண்டு வந்த சிவராமனை அர்த்தத்துடன் பார்த்தான்.
இங்கு ஆமி வந்திருக்குது."
"அப்படித்தான் தெரியுது. விமானக் குண்டு வீச்சால கிராமமே அழிந்துபோய்க் கிடக்குது. ஒருத்தரையும் கண்ணோம்.
நேர காலத்தோடு கதவுகளைப் பூட்டிக்கொண்டு படுத்து விட் டார்களோ?' என்றான் சிவராமன்.
 
 
 

இரவுநேரப் பயணிகள் 葛7
அவர்கள் இருவரும் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தார்கள் மன்னாரில் இராணுவத் தனக்குதல் தொடங்கியதும் அவர்கள் சயிக்கில்களைத் தூக்கிக்கொண்டு காட்டிற்கூடாகப் புறப்பட்டவர்கள் தாம். காட்டுப் பாதையில் கடினமாகப் பயணப்பட்டு, இரவு கவியும் நேரத்தில் இக் கிராமத்தில் நுழைந்தார்கள். எப்படியாவது யாழ்ப்பாணத்திற் குச் சென்றுவிட வேண்டுமென்ற வே கம் அவர்களிடம் இருந்தது.
யாழ்ப்பாணத்தில் அவர்களின் குடும்பங்கள் என்ன பாடோ?
* குண்டு வீச்சும் துப்பாக்கிச் சூடுந்தான் எங்கள் வாழ்க்கை யாகிவிட்டது. இந்த மண்ணிற்கு அமைதியும், சமாதானமும் வரவே வராதா?" என ஏக்கத்துடன் மாணிக்கம் கேட்டான்
சிவராமன் பெருமூச்சொன்றை விட்டான்.
எவ்வளவு அழிவுகள்? பஞ்சம்பசி. நோய்கள். ஏழை பாழைகள் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிப் பார்களோ? பசியால குழந்தை ஒன்று எச்சில் தொட்டியில ஏதாவது கிடைக்குமா என்று தேடுவதை ஊரில் கண்டன். சாமான்களின்ர விலை.? நினைத்துப் பார்க்க முடியாது."
தேவையான சாமான்களும் இல்லை. இங்கால வர விட்டால்தானே?
இருவரும் சோர்ந்து காணப்பட்டனர்.
"இனி என்னால் சயிக்கிள் உழக்க முடியாது. டைனமோ லைற்றும் இல்லை. இந்தக் கிராமத்தைக் கடந்தால் காட்டுப் பாதை. இரவில் அதன் ஊடாகப் பயணம் செய்ய முடியாது. இங்கை எங்காவது தங்கிவிட்டுக் காலை பேர்வோம்."
சிவராமன் கூறியவை சரியாகவே மாணிக்கத்துக்குப் பட்டது. கால்கள் வலியுடன் உளைந்தன, பசி வேறு வயிற்றை எரித்தது.
எங்கு தங்குவது? சாப்பாட்டுக் கடை ஏதாவது தென் படுமா?

Page 35
5& செங்கை ஆழியான்
எதுவுமில்லை. தூரத்தில் ஒரு கல்விட்டில் விளக்கெர்ளி யன்னலூடாக வெளியிற் சன்னமாகத் தெரிந்தது. இருவரும் மகிழ்வுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். நாய் ஒன்று அவர்களைப் பாாத்துவிட்டுக் குரல் தந்தது; அதனைத் தொடர்ந்து பல குரைத்துச் சத்தமிட்டன.
அவர்கள் அந்த வீட்டை நெருங்கினார்கள். கிட்ட வந்த போது அந்த வீட்டின் முன்பக்கம் முற்றாக விமானக் குண்டு வீச்சில் தகர்ந்திருப்பது தெரிந்தது. பின்பக்கம் எப்படியோ தப்பி நின்றிருந்தது. ஒடுகள் சிதறிக் கிடந்தன.
சயிக்கிளை ஒரமாக நிறுத்திவிட்டு, சிதறிக்கிடந்த உடைவு களைப் பக்குவமாகக் கடந்து, கதவைத் தட்டினர்.
* திறந்துதான் கிடக்குது. வாருங்கோ. ' என்று ஒரு வயோதிப ஆளின் குரல் ஒலித்தது : நீங்கள் ஆர்?'
"நாங்க மன்னாரிலிருந்து வாறம். இருண்டு போச்சுது அதுதான்."
"தாராளமாகத் த்ங்கிப் போங்கோ." எ ன் ற ர ர் பெரியவர். உடலில் தளர்ச்சி ஒட்டிக் காய்ந்து வரண்டிருந்தது. கைவிளக்கின் அருகில் ஏக்கமே உருவாக அமர்ந்திருந்தார்.
"சாப்பிடுவதற்கு இங்க எதுவுமில்லை, பிள்ளையன்3 வேணுமென்றால் தேத்தண்ணி வைச்சுக் குடியுங்கோ. அடுப் படியில் சீனி, தேயிலை இருக்குது. எனக்கு வேண்டாம் நான் குடிக்கிறதில்லை." என்றார்.
மாணிக்கம் அடுக்களைக்குள் நுழைந்து அடுப்பை மூட் டினான். சிவராமன் அவரின் முன் அமர்ந்து கொண்டான்.
"கிராமத்தில் ஒருததரையும் காணோமே பெரியவர். '
"எப்படியிருப்பினம் ? ஒரு கிழமையாகக் குண்டு வீச்சு பார்த்தீங்கள் தானே? கிராமத்தில் எதுவும் மிச்சமில்லை, எல்லாரும் அடுத்த ஊருக்கு ஓடிவிட்டினம். நான்கு நாட்களுக்கு முன் என் வீட்டிலும் குண்டு விழுந்தது. முன்பக்கத்தில் படுத் திருந்த என் மகளும் பேரப்பிள்ளைகளும் உடனே சரி." அவர் குரல் தளுதளுத்தது, நீர் முட்டியது.
 

இரவுநேரப் பயணிகள் 59
சிவராமனால் எ து வும் பேசமுடியவில்லை. அவர் சொன்னார்:
"ஏன் இப்படி அநியாயம் செய்யிறான்கள்? பொதுமக்கள் இவங்களுக்கு என்னத்தைச் செய்தினம்? அருமந்த உயிர்கள். கணப்பொழுதில் துடிக்கத்துடிக்க உடல் சிதறிக் கருகி. குடல் கிழிந்து . மூளை சிதறி. ஏன்? இவை ஏன்?" என அவர் உடல் குலுங்கக் கேட்டார்.
சிவராமன் மெளனமாக அவரைத் துயரத்துடன் பர்ர்த் $fTତof .
'இந்த அநியர்யங்களைக் கேட்பார் இல்லையா?"
அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. மாணிக்கம் தேநீர்ப் பேணிகளுடன் வந்தான். சிவராமனிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு அவ ன் அரு கி ல் அமர்ந்து கொண்டர்ன்,
"இந்த வீட்டில ஒருத்தரும் இல்லையா?" என மாணிக்கம் அவரைக் கேட்டான்
'இருந்தார்கள். குண்டடிபட்டு உடல் சித்றிச் சிலர் சிெத்துப்போனதும் பயத்தால் எஞ்சியவர்கள் அடுத்த கிராமத் திற்கு ஓடிவிட்டினம்"
'நீங்கள் போகவில்லையா?"
'இல்லை. இது நான் பிறந்து வளர்ந்த கிராமம். இது என் வீடு. ஒட மனசு வரவில்லை. இங்கேயே கடைசிவரை இருக்கிறதாக முடிவு கட்டிவிட்டன்."
அவருடைய விழிகள் மெதுவாக மூடிக்கொண்டன. எதையோ மனதில் அசைபோடுபவராக மோனத்துள் இருந் தார். பல நூற்றாண்டுகளாக மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சி யுடனும் வாழ்ந்துவந்த கிராமம். இன்று அழிந்து, சிதைந்து மண்மேடாகிக் கொண்டிருக்கின்ற அவலம். மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றார்கள்? யுத்த வெறி மனிதருள் காலம் காலமாக ஊறி, இரத்தத்துடன் கலந்துவிட்ட உணர்வு.

Page 36
6 O செங்கை ஆழியான்
அந்தக் கிராமத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஓரிட மில்லை. ஒயாது கழுகுகள் வட்டமிடுகின்றன. காரணமின்றியே குண்டுகளை வீசுகின்றன. எல்லைப்புற வேலிகளைத் தகர்த்துக் கொண்டு ஓநாய்கள் எந்நேரத்தில் கிராமத்திற்குள் நுழை யுமோ? வெறிகொண்ட ஒநாய்களின் கண்களிற் படுவது மனித அசைவாகவிருந்தாற் போதும் பலியாகி மண்ணினைச் சிவப் பாக்கிச் சரிய வேண்டியதுதான். அவர் கண் முன்னால் அப் படிச் சரிந்தவர்கள் எத்தனை பேர்? வாழ வேண்டிய உயிர்கள் சவமாக மண்ணில் சரிந்து புதைந்து அழிந்து போயின.
இந்த மண்ணில் இந்த யுத்தமேகங்கள் என்று கலையும்? நிம்மதியும் அமைதியும் இந்த மண்ணிற்கு என்று விடியும்?
அவர் தன்னுள் ஆழ்ந்திருந்தார்.
"கிராமத்தில் ஒருத்தரும் இல்லை. நீங்கள் தனிய இருக் கிறியள் ???
அவர் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் கழிவின் பின் G3LGFAGOT ITri .
'தம்பிமாரே, இந்தக் கிராமத்தில் கயிலாசம் என்றால் தெரியாதவர் இல்லை. அது நான்தான். இந்தக் கிராமத்திற்கு முதன் முதல் வந்து குடியேறியதும் நான்தான். காடாகக் கிடந்த நிலத்தைத் திருத்திக் கழனியாக்கினோம். குளம் கட்டினோம். நாமுண்டு நமது வயலுண்டு என்றிருந்தோம். எல்லாம் போச்சுது, கிராமம் அழிந்து மயானமாகிவிட்டது. எல்லாரும் ஒடிவிட்டார்கள் இந்தக் கிராமத்தின் ஆத்மாவே அழிந்துவிட்டது."
"பெரியவர் இனி நீங்க இங்க இருக்கவேண்டாம். விடிந் த்தும் எங்களுடன் வாருங்கள். உங்களைச் சயிக்கிலில் ஏற்றிச் சென்று அடுத்த கிராமத்தில் உங்கட ஆட்களோடு விட்டு விடுகிறம்."
கயிலாசம் அவர்களை ஏறிட்டுப் பார்த்துவிட்டுச் சிரித் a Tri.
 

இரவுநேரப் பயணிகள் 岱五
இந்த வீட்டில் முந்தநாள்வரை ஒருவர் இருந்தர்ர். நேற்று அவன்கள் மீண்டும் வந்தாங்கள். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தார். சந்தேகத்தில் சுட்டுவிட்டான்கள்."
"செத்துப்போனாரா?' என மாணிக்கம் கேட்டான்
"செத்துப்போனார். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்."
அவர்கள் அவரை ஏறிட்டுப் பார்த்தனர்? "சொல்லுங்க பெரியவர். '
"அந்த அறைக்குள் பாருங்க்ள் ஒரு பிரேதம் கிடக்கிறது: அது அவருடையது. என்னால் அவர் சடலத்தைப் புதைக்க முடியவில்லை. ஆராவது வருவார்களா எனப் பார்த்து இருக்கிறன்."
இருவரின் உடல்களில் குளிரேறியது அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் பார்த்தார்கள். ஒரு சடலத்தின் கால்கள், மூடிய போர்வையைத் துருத்திக்கொண்டு வெளித்தெரிந்தன.
* "பயப்படுகிறீர்களா?"
* 'இல்லையில்லைப் பெரியவர். வழி நெடுக இவற்றைப் பார்த்தபடி வந்தோம். நீங்க கேட்டபடி செய்யிறம்." என் றான் சிவராமன், சடலத்திற்குப் பயப்படுவதா? அப்படியொரு காலம் இருந்தது. இன்று அப்படியல்ல. குண்டு வெடித்துச் சிதறிப்போன சடலத் துண்டுகளை அவன் தன் கரங்களால் வாரியள்ளிக் குவித்திருக்கிறான்.
C
அன்றிரவு அவர்கள் பலவற்றையும் பேசிக்கொண்டார் கள். எப்படி, எப்பொழுது கண்ணயர்ந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நன்கு விடிந்தபிறகு துடித்துப் பதைத்து மாணிக்கம் எழுந்து சிவராமனை எழுப்பினான்:
6

Page 37
@2 செங்கை ஆழியாே
'அம் நேரமாகி விட்டது. புறப்படுவம். எங்கை பெரிய வரைக் காணவில்லை."
"எங்காவது கொல்லைக்குப் போயிருப்பார். 雳 அந்தப் பிரேதத்தைப் புதைத்துவிட்டுப் போவம்."
அவர்கள் கொல்லைப் பக்கத்தில் ஆழமாகக் குழி தோண்டினார்கள்.
பின்னர் சடலம் கிம்ந்த அறைக்கு வந்தர்ர்கள் மூடியிருந்த போர்வையைத் தூக்கிவிட்டுப் பார்த்தபோது .
கயிலர்சம் அங்கு செத்துக் கிடந்தனர்!
良。、
to
ട്ടീ R. リ。 *、 ݂ ݂ ݂ ݂ - டில்லிகை, ஜூலை 1993
LS uuuS S SSS SZSSS S S A S S AAA S
I * * IKU I | R || A
അപ്പി ( : (; 起、 、
και η της και το ί οι
SuGSMMSSS SSYSSS SS SS SS SS LLLLS S
YZYK LtL M S S S S tTu uS T L S LSLS SLLtSM MT SuM SuSYSuS **、* 。。。。。○。。。。一ー cm、○。
. ܠܠ ܐܓܪܝ ܕܪ ܢ
 
 
 
 
 
 
 
 

இரவுப் பூச்சிகள்
'%') பிராணிகள் எவ்வாறு தலைகீழாக நிற்கின்றன? மண்ணிற் கால்களைக் ஊன்றிக்கொண்டு எப்படி விண்ணில் தொங்குகின்றன? என்ற ஐயத்திற்குரிய வினாவிற்கு நீண்ட காலமாக நெடுஞ்செவியனுக்கு விடை கிடைக்கவில்லை. அந்த
இருண்ட கட்டிடத்தின் உட்கூரைச் சட்டங்களைப் பின்கால்
விரல்களால் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கியபடி
தரையில் நடமாடும் அவர்களைப் பர்ர்க்கும்போது அடிக்கடி
இப்படியான சந்தேகம் அதற்கு வரும் அந்தப் பழைய காலக் கட்டிடத்தின் பெரும் பரப்பு அவர்கள் வாழ உகந்ததாக மாறி நெடுங்காலமாகின்றது. ஆரம்பத்தில் சுவர் மட்டத்துடன் சீலிங் அடிக்கப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் எதுவிதமான பயமு மின்றி நிம்ம்தியாக வாழ முடிந்தது. இன்று இரண்டு மூன்றிடங் களில் சீலிங்குகள் உடைந்து விழுந்துவிட்டன. அதனால் பகல் வேளைகளில் பரவுகின்ற'இருள்" உறக்கத்தைக் கலைத்து விடுகின்றது.
அத்துடன் இருந்துவிட்டாற் பரவாயில்லை தாங்கள் பல நூறாகப் பெருகி வாழ்ந்துவரும் மறைவிடத்தையும் அந்தத்

Page 38
θ 4 செங்கை ஆழியான்
தலைகீழாக நடக்கும் பிராணிகள் கண்டுகொண்டன. அப் பிராணிகள் மிகவும் ஆபத்தானவை என்பது நெடுஞ்செவிய னுக்கு நன்கு அனுபவபூர்வமாகத் தெரிந்திருந்தது. தான் தொங்கிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது கூரையின் விட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றிலும் அதன் உற வினர்கள் தொங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. எவ்வளவாகப் பெருகிவிட்டார்கள்? ஒரு பகுதியினரை வேறு இடத்திற்கு அகற்றவேண்டும்.
'மூதேசி வெளவால்கள். இங்கிருந்து வேலை செய்ய முடியாது. ஒரே நாற்றம். மேசையெல்லாம் எச்சம். மணியம், எப்படியாவது அதுகள் வாற துவாரத்தைப் பார்த்து முள்ளுக் கொப்புகளை வைத்து அடைச்சுவிடடா, ' - எவனேர் ஒருவன் தலைகீழாக நின்றபடி சொல்வது கேட்கிறது.
"எத்தனை தடவை அடைக்கிறது?" என்று மணியம் அலுத்துக்கொண்டான்.
நெடுஞ்செவியனுக்கு முன்னைய அனுபவம் நினைவுவர உடல் மெதுவாக நடுங்குகிறது.
மரிலைக்கருக்கலில் நெடுஞ்செவியன் வழிகாட்டி முன்னே புறப்பட ஏனையவையும் தொடர்ந்தன. கட்டிடத்தின் வடக்குப்பக்கத்தில் பெரியதொரு துவாரம். அத்துவாரத்தின் ஊடாக நெடுஞ்செவியன் முதலில் வெளி வந்து காற்றில் மிதந்தது. எவ்வளவு இனிமை? பறப்புச்சவ்வுகளால் உருவான பெரியதோல் சிறகுகள் காற்றில் அசைந்தன. நீண்ட கைவிரல் களை விரித்தபோது, விரல்களிற்கு இடையே இழுத்துப் பரப்பப் பட்டுள்ள பறப்புச் சவ்வுகள் காற்றைக் குவித்துக் கீழே உந்தி, இலேசான அதன் உடலை மேலே உயர்த்தின.
அவை சற்று வேளை தமது இருப்பிடத்தின் வானில் அலைந்தன. பின்னர் இரு குழுக்களா தப் பிரிந்து, ஒன்று மேற்குப் பக்கமாகவும் மற்  ைற ய து தென் பக்கமாகவும் விரைந்தன.
அவை கட்டிடத்தைவிட்டு வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மணியம் கூரையில் ஏறி, அவை வெளிவந்த
 
 

இரவுநேரப் பயணிகள் 65
து வாரத்தினை முட்கொப்புகளை வைத்து அடைத்த்தை நெடுஞ்செவியன் காணவில்லை. அவ்வேளை அது தன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு ஐயனார் கோயிலைத் தாண்டியிருந்தது.
மிகையொலியை எழுப்பிப் பறப்புத்திசையில் பரவவிட்டு, எதிர்ப்படும் தடைகளில் அந்த மிகையொலிகள் மோதி எதி ரொலிப்பதிலிருந்து தடைகளை இனங்காணும் திறன் அவற் றிற்கு இருந்தது. நெடுஞ்செவியனுக்கு அத்திறன் மிகுதி. இரவு முழுவதும விட்டில் களையும், வண்டுகளையும், பூச்சிகளையும், பழங்களையும் வேட்டையாடிவிட்டு கீழைவானில் வெளிச்சம் படரத்தொடங்கிய வேளையில் அவை திரும்பிவந்தன. கட் டிடத்தை நெருங்கியதும் நெடுஞ்செவியன் சற்றுத் தாமதித்தது, தன் கூட்டத்தினர் அனைவரும் உள்ளே நுழையும்வரை பார்த் திருப்பது அதன் வழக்கம்
வழக்கம்போல நீள்சிறகன் விேர்ரென அவசரத்துடன் துவாரத்தினுள் புகப் பறந்தான் அவசரம் எதிலும் அவசரம்: மிகையெர்லி எழுப்பாது பழகிய பாதையினுள் புகுந்தபோது தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. துவாரத்தை மூடி வைத் திருந்த முட்களில் அது சிக்கிக்கொண்டது. வீல் வீல்" என்ற அதன் அலறல் கூட்டத்தைக் கலக்கியது. நெடுஞ்செவியன் அருகில் வந்து பார்த்தது. தோல் சிறகுகளில் முட்கள் குத்திப் பற்றியிருந்தன. பொத்தல்கள் விழுந்துவிட்டன. இனி அது தப்பியும் பயனில்லை.
"என்னைக் காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங் கள்." மரண ஒலம்,
முட்களின் பிடியிலிருந்து அதனால் விலகமுடியவில்லை? தப்ப எடுத்த முயற்சிகள் அதனை முட்களில் இறுகப்பற்ற வைத்தன. முகம் கீறி இரத்தம் பீறிட்டது எல்லாம் பயத்தின் அலறி ஒலமிட்டன.
நீள்சிறகன் இறக்கும்போது கிழக்கில் சூரியன் எழுந்திருந் தான்.
y

Page 39
66 செங்கை ஆழியான்
இன்னமும் இங்கு தங்குவதில் பயனில்லை என்பதை
உணர்ந்த நெடுஞ்செவியன் தன் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பியது. எங்கு செல்வது? இருள் " வேகமாகப் பரவுகிறது. அருகி லுள்ள சோலையின் பாரிய மலைவேம்பின் கிளைகளில் தங்கு வதைத் தவிர வேறு மார்க்கமில்லை, அம்மரத்தின் கிளை களின் காய்களாக அவை தொங்கியபோது, நீள்செவியனின் மரண ஒலம் கேட்பதுபோன்ற பிரமை.
'மூதேசிகள்." என்று எவரோ தலைகீழாக நின்று திட்டினார்கள், கொக்கைச்சத்தகம் பிணைத்த கொக்கைத் தடியை உயர்த்திப் பட்டமரக் கிளைகளை விறகுக்காக முறித்த போது எழுந்த சத்தத்தில் நிலைகுலைந்த அவற்றில் சில வானில் கிளம்பியலறின. இந்த இடமும் சரிவராது" என நெடுஞ்செவியன் எண்ணமிடலாயிற்று.
மீண்டும் கருக்கல் பிறந்தது. நெடுஞ்செவியன் தன் கூட் டத்தினரை இரைதேட அனுப்பிவிட்டுத் தாம் வாழ்ந்த பழைய கட்டிடத்தை அவதானமாக நெருங்கியது. எதிர்ப்படும் பொருட்களின் வடிவினை ஒலியுணர் உறுப்பால் புரிந்துகொண்டு பறந்தது. அக்கட்டிடத்திற்குள் மீண்டும் குடியேற வேண்டும். பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்து பெருகிய இல்லம் எப்படி விட்டுவிடுவது? வெளியிடங்கள் பாதுகாப்பானவை யல்ல. வேட்டவெளியில் கடும்வெப்ப இருளுள் சீவிக்க முடி யாது. மரநாய்கள் சத்தமின்றி ஒன்றிரண்டை அமுக்கிவிடு கின்றன. தலைகீழாக நடக்கும் பிராணிகள் கற்களால் த7 க்குவார்கள்.
கட்டிடத்தைச் சுற்றி வந்தது. நீள்செவியன் இறந்து கிடந்த துவாரம் முக்கொப்புகளுடன் அப்படியே அறுக்கையாக இருந் தது. அதில் தொங்கிக்கொண்டிருந்த நீள்செவியனின் உடலைத் தான் காணவில்லை. மணியம் எடுத்துச்சென்றிருப்பானோ? சுற்றி வந்தபோது கட்டிடத்திற்குள் நுழைய இன்னொரு துவாரம் இருப்பது தெரிந்தது. முன்னதிலும் பார்க்கச் சிறிது.
ஆனால் பாதுகாப்பானது.
நெடுஞ்செவியனுக்கு அளவிலாத மகிழ்ச்சி.
 

இரவுநேரப் பயணிகள் 葛7
மீண்டும் அவை பழையவிடத்தில் குடிபுகுந்தன)
மீண்டும் வந்திட்டுதுகள்." என ஒரு தலைகீழ்ப்பிராணி சத்தமிட்டது.
"இனி என்னால் முடியாது." என்றான் மணியம்
பின் கால்விரல்களால் விட்டத்தைப் பற்றியபடி அன்று நெடுஞ்செவியன் நிம்மதியாகவுறங்கியது; எனினும் இடை தூக்கம் கலைந்தது. இளசுகளின் சேட்டைகள் மட்டும் தூக்கக் கலைப்பிற்குக் காரணமன்று. உடைந்து கிடக்கின்ற சீலிங் வெளிகளால் கீழிருந்து நுழையும் இருள் கதிர்களும் தூக்கத்தைக் கலைக்கின்றன. முன்பு எவ்வளவு அறுக்கையாக அவ்விடம் இருந்தது? ஒரு பொத்தல் கிடையாது. இன்று ஐந்தாறு இடங்களில் சீலிங்குகள் உடைந்து விழுந்துவிட்டன. சிலிங்குகள் உடைய நேரிட்ட.
அந்த நாள் நெடுஞ்செவியனுக்கு நினைவிற்கு வருகின்றது. இரவு வேட்டை முடிந்து அப்பொழுதுதான் அவை தமது வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டங்களில் தொங்கி இளைப்பாறத் தொடங்கின. அவ்வேளை அருகில் எங்கோ இரைச்சலுடன் ஏதோ ஒன்று தாழ்ந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து பயங்கரச் சத்தத்துடன் ஏதோ வெடித்தது. அந்த அதிர்வில் அக்கட்டிடம் ஒரு கணம் சிலிர்த்துக்கொண்டது. கூரையின் விட்டங்களில் பற்றியிருந்த அவற்றின் பிடிகள் எப்படிக் கழன் றன? அவை தொப் தொப்' பென எப்படிக் கீழே விழுந்தன? நெடுஞ்செவியன் உட்பட அனைத்தும் பிடிகழன்ற இலுப்பம் பழமாக சீலிங்கின் மேல் விழுந்து எழும்பின. இனந்தெரியாத பயம் என்ன சத்தம்? ஏன் இந்த நடுக்கம்?
அதன் பிறகுதான் ஐந்தர்று இடங்களில் சீலிங்குகள் உடைந்து சரிந்துபோயின. வெடித்துத் தொங்கியவற்றை மணியம் முற்றாக உடைத்து நீக்கிவிட்டான்.
இப்பொழுதும் அடிக்கடி அப்பக்கத்தில் அதே வகையான இரைச்சல் எழும்போது அவை இப்பொழுது தாமாகப் பிடி களைக் கழற்றிக்கொண்டு பறப்பதன் மூலம் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்கின்றன, தன்னைவிடப் பிரமாண்டமான ஒன்று

Page 40
68 செங்கை ஆழிபான்
பறந்தபடி இந்த இரைச்சலை எழுப்புவகை நெடுஞ்செவியன் கண்டது. இந்தத் தலைகீழாக நடக்கும் பிராணிகள், அந்தப் பறவையைக் கண்டதும் திக்குத்திசை தெரியாமல் ஒடுவதையும், அலறுவதையும் அப்படியே நிலத்தில் சரிவதையும் காணும் போது வேடிக்கையாக இருக்கிறது:
அது என்ன பறவை? ஏன் இவர்கள் மீது முட்டைகளை இடுகின்றது?
தென்புறமாகக் கருக்கலின் பின்னர் செல்லும் குழுவினர் புதியதொரு பிரச்சினையைச் சொன்னார்கள். தலைகீழாக நிற்கும் பிராணிகள் நிலத்திலிருந்து பிரகாசமான இருளை' த் தெர்டர்ந்து பாய்ச்சுகிறார்களாம். அதனால் அவர்களால் உணவுதேட முடியாதிருக்கிறதாம். நெடுஞ்செவியன் அவ தானித்தபேர்து தெற்குப் பக்கமிருந்து அப்படியான "இருள்" பாய்ச்சல் நடப்பது தெரிந்தது.
இந்தத் தலைகீழாக நடக்கும் பிராணிகள் எல்லாம் தமக்கு எதிராக ஏதோ சதி செய்கின்றன என அது எண்ணியது.
அடிக்கடி இரவிலும் பகலிலும் அப்பக்கமிருந்து வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணமிருக்கின்றன. சுற்றாடல் அமைதி குலைந்து போனது.
"நாங்கள் எங்காவது போய்விடுவோம். இந்தவிடம் நாம் வாழத் தகுந்ததல்ல. என்ன சொல்லிறியள்?" என தென் விக்கக் குழுவிற்கு வழிகாட்டும் அகல்விரலன் கேட்டபோது, நெடுஞ்செவியன் திகைத்துவிட்டது.
"இங்கிருந்து ஓடுவதா? இது நாம் பிறந்த இடம் வாழ்ந்து பெருகிய இடம். இங்கிருந்து ஒடுவதா?" என மறுத்து விட்டது.
வானில் மிதந்து செல்லும்போது நிலத்தில் சீறிக்கொண்டு சன்னங்கள் தீப்பிழம்பாகக் கோட்டைப்பக்கம் பாய்ந்தன. சில வானில் கிளப்பின எங்கும் ஒளிவெள்ளம் இருளைப்" பரப்பியது. அவற்றின் இரவுப்பயணம் இரைதேடல் - இவற் றினால் வாதிக்கப்பட்டன. அகல்விரலனின் வாதம் சரிதானோ
 

இரவுநேரப் பயணிகள் | βρ. Elis, " 4 \
என அது சிலவேளைகளில் எண்ணவுந் தலைப்பட்டது; வெடிச் சத்தங்கள் தலைகீழாக நடக்கும் பிராணிகளின் ஒலங்கள். வெற்றி முழக்கல்கள்.
என்ன நடந்தாலும் இங்கிருந்து ஓடுவதில்லை. இது எங்கள் பிரதேசம், எங்களது ஜன்மபூமி,
இங்குள்ள நிம்மதி எங்கு வரும்? இங்குள்ள சுதந்திரம் எங்கு வரும்?
கிழக்கு வானம் வெளிக்கத் தொடங்கியதும் அவை தம் மிடத்திற்குத் திரும்பின.
* நிம்மதியில்லை போதிய உணவு கிட்டவில்லை. உணவு தேட முடியவில்லை' என அகல்விரலன் குற்றம் சாட்டியது; நெடுஞ்செவியன் எதுவும் பேசவில்லை;
"எங்காவது போய்விடுவோம்."
நெடுஞ்செவியனின் மெளனம், அகல்விரலனுக்குக் கலக் கத்தைக் கொடுத்தது. அமைதியானது.
அவை தம் வீட்டில் கூரை விட்டங்களில் தொங்கத் தொடங்கின. பின்னங்கால்களால் பற்றியபடி தொங்கும் அவற் றினை நெடுஞ்செவியன் கவலையுடன் பார்த்தது. அங்கு பசியினால் அமைதியின்மை நிலவுவதைக் கவனித்தது என்ன செய்வது?
தூரத்தில் அதற்குப் பழக்கப்பட்ட இரைச்சல் மெதுவாக எழுந்தது. தலைகீழாக நடக்கும் பிர னரிகள் மீது முட்டை யிடும் பறவை இரைச்சல் நெருங்கி வந்தது. மட்டிடத்தின் தளத்தில் நின்றிருந்த மணியம், 'பொம்பர்" என்று அலறிய படி வெளியே ஒடுவது தெரிந்தது. இரைச்சல் மிகமிக அருகில் பெரிதாகப் பயங்கரமாகக் கேட்டது. நெடுஞ்செவியன் கால் பிடிப்பைத் தளர்த்திக்கொண்டு பார்த்தது. ஏனையனவும் காற்றில் மீதந்தன. பெரும் இரைச்சலுடன் விரைந்து தாழ்ந்த பறவை பெரும் முட்டையொன்றினை அக்கட்டிடத்தின் மீது இட்டது என்ன பயங்கரம்? என்ன சத்தம்? அவர்கள் வாழ்ந்த
】岛

Page 41
70 செங்கை ஆழியான்
கட்டிடத்தின் கூரை சிதறியது. கட்டிடத்தின் பகுதிகள் இடிந்து சரிந்தன. எங்கும் ஒலம். மரண ஒலம். பாவிகளே? நர்ங்கள் என்ன செய்தோம்?
நெடுஞ்செவியன் ஒரு மூலையில் தூக்கியெறியப்பட்டது. தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பார்த்தபோது தன் கூட்டத் தில் நூற்றுக்கணக்கானோர் உடல் சிதறி. கிழிந்து. அடை யாளம் தெரியாமல் போயிருப்பதைக் கண்டதுடு தப்பியவை வானில் ஒலமிட்டவாறு சஞ்சரித்தன.
அகல்விரலன் அதன் அருகில் வந்தது. "இனியும் இங்கு இருக்கத்தான் வேண்டுமா?" "இனியும் இங்கு இருக்கத்தான் வேணுமா?"
* இங்குதான் எங்கோ இருக்க வேண்டும்" என்றது நெடுஞ் செவியன்: "இது எங்கள் பிரதேசம். முட்டையிடும் பறவை யைத் தாக்கியழிக்காது அதற்குப் பயந்து ஓடிப்போவது."
மீண்டும் அதே இரைச்சல் எழுகிறது. அவை ஒரு பக்க மாக ஒதுங்கிச் சென்றபோது, நிலத்தில் நேராக நின்ற பிராணி கள் அந்தப் பறவையை நோக்கி ஏதோ ஒன்றினால் தாக்குவது தெரிந்தது. தாழ்ந்த பறவை பயத்துடன் வானில் கிளம்பிப் புள்ளியாக மறைவதும் தெரிந்தது.
"இனி இந்தப்பக்கம் வரா." என்றது நெடுஞ்செவியன்.
ட மல்லிகை, மார்ச், 1993
C CO
 

சிறுபிள்ளை Gas Taoist of
தீம்பி இன்னமும் வரவில்லையே, பிள்ளை?
வேலுப்பிள்ளை அம்மான் பத்தாவது தடவையாகக் கேட்டு விட்டார். மாலைக் கருக்கலில் வானத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வெளவால்கள் பறக்கத் தொடங்கியதும் அவர் இருப்புக்கொள்ளாது தவிப்பார். பேரனை இன்னமும் காண வில்லையே? எங்கு போய் வரறான்? அவன் சென்றவிடத்தை எப்படிக் கூறுவது? துடித்துப்போய் விடுவார்."
திண்ணைக் குந்தில் அமர்ந்து சட்டையொன்றின் கிழிந்த பகுதிகளைத் தைத்துக்கொண்டிருந்த தவமணிக்குக் கிழவனா ரீன் தீவிப்புக்குக் காரணம் புரியும். அவர் சுபாவத்தில் அப்படித் தான். எதற்கும் பதட்டமும் பயமும்
* 'இல்லை மாமா . ஏதோ வாசிகசாலைக் கூட்டம் என்ற
வன். வந்திடுவான். கெதியா வந்திடுவான்." - மனமறிந்த G) Jfr Biču.

Page 42
72 செங்கை ஆழியான் "பார்த்துக்கொண்டு வாறன் ' என்றபடி அவர் கைத் தடியை எடுத்துக்கெர்ண்டு புறப்பட்டபோது தவமணிக்குத் திக்கென்றது. அவர் நிச்சயம் வாசிகசாலைக்குத்தான் போகி றார். அவள் ஒரு வார்த்தைக்குச் சொன்ன பொய். சரவணன் அங்கேயா இருப்பான்?
முற்றத்தில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் மாமரத்தின் பதிந்த கிளைக்கு உந்திப்பறந்தன. தாழ் கிளையிலிருந்து மறு கிளைக்குத் தாவி வசதியாக அமர்ந்து கொண்டன
'தம்பி இன்னமும் வரவில்லையே பிள்ளை?' கிழவனாரின் குரல் கர்துகளில் ரீங்காரமிடுகின்றது. மாலைவேளைகளில் அவள், அதற்கு முன் அவள் மாமி - கிழவனாரின் மனைவி கேட்டுவரும் விச ரிப்பு உண்மையில் வேலுப்பிள்ளையருக்கு மாலைவேளைக்குப் பின்னர் எவரும் வெளியில் தங்கிவிடக் கூடாது. செல்லவும் கூடாது. அவரும் அப்படித்தான்.
தவமணியின் கணவன் சுப்பிரமணியம் அந்தக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரதான பேச்சாளன். கட்சியின் எந்தக் கூட்டத்திலும் அவன் குரல் ஒலிக்கும். அவனது பேச்சைக் கேட்பதற்கென்றே ஒரு சனத்திரள் இருந்தது. வன்னிப் பிர தேசத்தின் பட்டிதொட்டிகளில் எங்கும் நிகழும் கூட்டங்களில் அவன் இருப்பான். கட்சியின் பலம் அவன் எனப் பலர் கூறு வதை அவன் கேட்டிருக்கிறான்.
வந்ததும் கிழவர், 'தம்பி வந்திட்டானே?" என மனைவியைக் கேட்பார். அந்தக் கேள்வியில் கவலையும் பாசமும் கலந்தொலிக்கும்.
"இல்லை அப்பா, இண்டைக்கு வாடியடியில கூட்ட Lorry..."
கிழவனாரின் முகம் கறுத்து வாடிவிடும்.
golf கெட்டுக்கிடக்குது. இவன் இப்படித் திரியிறானே?
வீட்டில பொஞ்சாதி பிள்ளையிருக்கிறதும் தெரியாமல்." என அவர் கவலைப்படுவார்.
 
 

இரவுநேரப் பயணிகள் 75
அவருடைய உலகம் மிகச் சிறியது. அவர் குடும்பம், அவர் வளவு அவர் தேர்ட்டம், அவர் வயல். இவ்வளவும் தாம் அவரின் உலகம், அதற்கப்பால் அவருக்கு எதுவும் தெரியாது
சுப்பிரமணியம் பேசிப் பேசியே தெர்ண்டனாகவிருந்து செத்துப்போனான். கிளிநொச்சித் தொகுதிக்குப் பாராளு மன்றப் பிரதிநிதியாகத் தேர்தலில் நிற்பதற்கு, நீண்டகாலத் தொண்டனான சுப்பிரமணியத்தை நிறுத்த வேண்டுமென மத்திய செயற்குழுவில் பண்டிதர் கேட்டபோது " சுப்பிர மணியம் ஒரு தமிழ் வாத்தி ' எனக் காரணம் காட்டித் தட்டிவிட்டுக் கறுப்புக்கோர்ட் ஒன்றிற்கு அவ்விடம் வழமை போல ஒதுக்கப்பட்ட அநிய யம் நிகழ்ந்தது. அதன் பின்னர் சுப்பிரமணியம் நொந்துபோனான். அந்த நிகழ்ச்சிக்குப் பின் னர், தம்பி வீட்டிற்கு வந்துவிட்டானே? " எனக் கிழவர் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
பேரன் இப்பொழுது நேரம் கழித்து வீட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறான். கிழவனாரின் அடி வயிற்றில் மீண்டும் திகில் பற்றிப்படர்ந்து கொண்டது. மீண்டும் பழைய கேள்வி அங்கு ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
படலையைத் திறந்துகொண்டு அவள் திரும்பி வருவது தெரிகிறது. தவம ணிக்குச் சற்றுக் கலக்கமாக இருந்தது அவளுடைய பொய் தெரிந்துவிட்டது. அதற்காக அவர் ஏச மாட்டார். அவருக்கு எவரையும் கோபத்துடன் ஏசத் தெரி யாது தனக்குத் தானே சலித்துக்கொள்வார். ஏச்சிலும் பார்க்க அவர் சலிப்பு வேதனையைத் தரும்.
'வாசிகசாலையில் ஒரு கூட்டமுமில்லையாம், பிள்ளை. அவன் உனக்குப் பொய் சொல்லியிருக்கிறான்.'
அவள் எதுவும் பேசவில்லை. லாந்தரைக் கொளுத்தி வளைக்கம்பியில் மாட்டிவிட்டாள்
"எப்படியிருந்தம்? இப்படியாச்சுது. வீடுவாசல் காணி பூமியளை அப்படியே விட்டுவிட்டு இங்க ஓடி வந்திருக்கிறம் கடல்போல வீட்டைவிட்டிட்டு இப்படி இங்க ஒரு திண்ணையில ஒதுங்கவேண்டி வந்திட்டுது, அகதியாகக் கையேந்தி. என்ரவிடு

Page 43
74. செங்கை ஆழியான்
இப்ப எப்படியோ? ஆச்சியின்ர தோட்டம் கொத்தாத்தை வயலெல்லாம் பற்றைக் காடாகியிருக்கும். பாவியள். நிம்மதி யாக இருந்த எங்களை அடிச்சுத் துரத்திப்போட்டான்கள்."
தவமணி எதுவும் பேசவில்லை. பூநகரியில் அவர்கள் எவ் வளவு மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தார்கள். அவள் ஒடி விளையாடிய பூமி. அவர்களை வாழவைத்த வயல் கள். திடீரென ஒரு நாள் கெளதாரிமுனைப் பக்கமிருந்து வந்து புகுந்த இராணுவம், அவர்களை அந்தக் கிராமத்தை விட்டுக் கடல்கடந்து ஓடி யாழ்ப்பாணத்தில் அகதி நிவாரணத துடன் வாழ வைத்துவிட்டது
'பிள்ளை. என்ர வீட்டில நான் சாகவேணும்.' என்று கிழவனார் கண் கலங்கினார்.
அதையே எண்ணிக்கொண்டு ஏன் மாமா கவலைப்படு கிறியள். அங்க திரும்பிப் போகாமலே இருக்கப்போறம்?"
'இனி எங்கை போறது? அரசாங்கத்தோட சண்டை பிடிக்க முடியுமே? உந்தப் பொடியள் தேவையில்லாமல் அர சாங்கத்தோட கொளுவிப்போட்டு இப்படி எல்லாரையும் தவிக்கவிட்டிருக்கிறாங்கள். இவங்களிட்ட நாங்க கேட்டனாங் களே எங்களுக்கொரு நாடு வேணுமெண்டு?"
அவர் இந்தவாறு பேசத் தொடங்கிவிட்டால் அவரை நிறுத்த முடியாது. எண்பது வயதுப் பழைமை,
அவர் ஏக்கம் அவளுக்குப் புரிந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்ததும் மண்வெட்டியுடன் தோட்டத்திற் சென்று மண்ணைப் பிரட்டி உழைத்துவிட்டு வந்தவர். பாரி மழையின் முதல் துளி நிலத்தில் விழுந்ததும் கலப்பையையும் மாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பவர் ஒரு பெரும் மழையுடன் ஆடி உழவைத் தேடி ஒடுபவர். மாலைவரை தோட்டத்திலும் வயல் வரம்பிலும் உழைப்பின் நிறைவுடன் திரிந்தவர். இப்படி முடங்கிக்கிடப்பதென்றால் ?
சிலவேளைகளில் கிழவனாருக்கும் பேரன் சரவணனுக்கும் பலத்த வாக்குவாதமே நடக்கும்,
 

இரவுநேரப் பயணிகள் 75
ஏன்ரா இப்படித் திரியிறாய்? படிப்பை விட்டிட்டு. கடைசி உன்ர கொப்பர் மாதிரி ஒரு வாத்தியாகவாவது வரு வாய் எண்டு நினைச்சன், சரி அதுதான் வேண்டாம். இருக் கிற காணி பூமிகளையாவது ஒழுங்கா எனக்குப்பிறகு பார்க்கக் கூடாதே?"
"அப்பு, உங்களுக்கு ஒண்டும் புரியாது. நீங்கள் அப்படிப் பழக்கப்பட்டிட்டியள். நீங்கள் பிறந்ததே அடிமை நாட்டில. பிரித்தானியர் ஆடசியில. உங்களுக்குச் சுதந்திரத்தின் மதிப்புத் தெரியாது." என்பான் சரவணன்: "படிச் சாப்போல இங்க பல்கலைக்கழகமும் உத்தியோகமும் தேடியே வரப்போகுது? அப்பு, முதலாம் ஆண்டு படிக்கிற பிள்ளைகளில ஒரு இரண்டு சதவீதம் கூட யூனிவே சிற்றிக்குப் போறதில்லை."
"அந்தக் கதையளை விடு, பேரா. உன் கொப்பன் மாதிரிப் பேசாதை . அவன் இவ்வளவு கத்துக்கத்தியும் என்ன என்ன கிடைச்சது? தமிழரசு மேடையில என்ன பேச்சுப் பேசினான்? கொழும்பில சத்தியாக்கிரகம் செய்து அடிவாங்கிக் கொண்டும் வந்தான். சிங்களவங்கள் பொல்லாதவங்கள் கண் டியோ? அப்படியே உன்ர கொப்பரைத் தூக்கிப் பக்கத்தில இருந்த குளத்துக்குள்ள வீசினவங்களாம். அருந்தப்பு. அவ னாலயே எதையும் சாதிக்க முடியவில்லை; இப்ப உந்தப் பொடியளே சாதிக்கப்போகுதுகள்."
'அப்பு அப்பாவும் அவரோட சேர்ந்தவையும் வேசிப் பேசியே காலம் கடத்திவிட்டினம். இவர்கள் பேசிப்பேசி தலைவர்மாரின் பாராளுமன்றக் கதிரைகளைக் காப்பாற்றிக் கொடுத்தினம். இப்பத்தைப் பொடியள் பேசுறதில்லை."
போடா பேரா. சிறுபிள்ளை வேளாண்மை."
"சரவணா, அப்புவோட என்ன சண்டை. சாப்பிடவா." என்று தவமணி அடுக்களைக்குள்ளிருந்து குரல் கெர்டுப்பாள்? அவன் அப்புவைப் பார்த்துச் சிரித்துவிட்டு எழுந்து செல்வான்
* அப்புவோட ஏன்ரா வாதாடுறாய். பாவம் அந்த மனிசன், பூநகரியை விட்டிட்டு இங்கு ஒடி வந்ததிலயிருந்து கலங்கிப்போய் அமைதியிழந்து தவிக்கிறார். உன்ரை அப்பம்மர் செத்தபோதுகூட இப்படிக் கலங்கியிருக்கமாட்டார் அந்த

Page 44
7萄 செங்கை ஆழியான்
மனிசனுக்கு தான் பிறந்து வாழ்ந்த வீட்டில, காணியில சாகவேனுமெண்டு ஒரு விருப்பம். அது சரிவராதோ என்ற பயம் இப்ப கொஞ்சநாளா.."
'ஓம் அம்மா, முந்தநாள் கூட கனவில சங்குப்பிட்டி, வாடியடி என்றெல்லாம் புசத்தினவர். விட்டிட்டுப் போங்கடா போங்கடா என்றும் கத்தினவர்."
சாப்பிட்டுவிட்டுப்போன சரவணன் இன்னமும் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவன் இனி மூன்று நான்கு மாதங்கள் திரும்பி வரமாட்டான் என்று கிழவரிடம் எப்படிச் சொல்வது? துடித் துப்போய்விடுவார், ஏக்கத்தில் ஏதாவது நடந்துவிடலாம்.
'தம்பியை இன்னமும் காணவில்லை. நேரம் பத்துமணிக்க மேல இருக்கும். எங்கயாவது போறன் எண்டு சொன்னவனே
தவமணி எதுவும் கூறாமல் அவரைப் பார்த்தாள். அவள் விழிகளில் அப்பிக்கிடந்த சங்கதியை அவர் புரிந்து கொண்டார்.
"உண்மையைச் சொல்லு பிள்ளை, எனக்கு மறைக் காதை - ??
அதற்குப் பின்னரும் அவளால் அவரிடம் மறைக்க முடிய
'இயக்கத்திற்குப் போட்டான், மாமா."
வேலுப்பிள்ளையர் அப்படியே நிலைகுலைந்து திண்ணை யில் அமர்ந்துவிட்டார். எதுவித கலக்கமுமின்றி, இயக்கத்திற் குப் போட்டான், என்று கூறிய மருமகளை ஏறிட்டுப் பார்த் தார். இவளுக்குக் கவலைப்படவே தெரியாதா?
"கொழும்பில பாராளுமன்றத்துக்கு முன்னர்ல் சத்திய சக் கிரகம் இருந்தவைக்குச் சரியான அடியுதையாம் சுப்பிமணி யத்திற்கு மண்டையும் உடைந்து கையும் கழண்டு போச்சு தாம். பெயிரா ஏரியில தூக்கி எறிஞ்சிட்டாங்களாம் '
இப்ப்டிச் செய்தி வந்தபோதுகூட தவமணி கலங்கா திருந் திரிள்.
 
 

இரவுநேரப் பயணிகள் 77
என்ன பிறப்போ' என்று கிழவர் எண்ணிக்கொண்டார்: இன்று எவ்வளவு பெரியவிசயம் இந்தக் குடும்பத்தில் நடந் திருக்கிறது. ஆசையாக அன்பைக்கொட்டி வளர்த்த அவரின் பேரன் இயக்கத்திற்குப் போட்டான்
அவரின் மனதில் பல்லேறு நிகழ்ச்சிகள் பயங்கரமாக விசுவரூபமெடுத்தன. தினசரிப் பத்திரிகைகளில் வருகின்ற வீரமரணப் படங்கள். செய்திகள்.
"எனக்குத் தெரியும் எதிர்பார்த்தன்." என்றார் கிழவர் நீண்ட மெளனத்தின் கழிவில்: "அவற்றை போக்கு எனக்குத் தெரிந்திருந்தது. அதுதான் கவனமாகப் பொத்திப் பொத்தி வளர்த்தன். தகப்பனைப்போல இவனும் ஊருக்கு உழைக்கப்
* அப்படியில்லை மாமா " என்றாள் தவமணி, அவர் பேச்சினை ஒருபோதும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசாதவள். இன்று அப்படியில்லை" என்கிறாள். விழிகளில் தேங்கிய கண்ணிர் ஊடாக அவளை அவர் நிமிர்ந்து ஆழமாக் ஏறிட்டுப் பார்த்தார். அவளுக்கு அதற்குமேல் பேசத் தெரியவில்லை
விம்மலை மறைக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள்
"எங்களை ஒட ஓட விரட்டியடித்தான்கள் எத்தனை பேரைச் சுட்டுத் தள்ளினான்கள். எத்தனை பேரை வெட்டிக் குவித்தான்கள். எத்தனை வீடுகள் அழிந்தன. எத்தனை பிஞ்சுகள் இன்று எவருமின்றி அநாதைகளாகத் தவிக்கின்றன, இவற்றை யார் கேட்பது? குட்டக்குட்டக் குனியக்கூடாது."
கிழவர் அதற்குப் பின்னர் அதிகம் பேசவில்லை முகாம் முகாமாக நான்கு மாதங்களாகத் தன் பேரனைத் தேடி அலைந்தார்.
"அப்பு அவன் இங்க இல்லையணை " " - ஒரு நாள் "அப்பு அவன் பயிற்சிக்குப் போட்டான்." - இன்னொரு நாள்.
"அப்பு அவன் இப்ப உங்களைப் பார்க்கமாட்டானாம்." 20

Page 45
78 செங்கை ஆழியான்
கிழவர் துடித்துப்பேர்ய்விட்டார்: "நான் தூக்கி வளர்த்த பிள்ளை என்ர மார்பிலும் முகத்திலும் பிஞ்சுக்கால்களால் உதைத்த பிள்ளை இன்டைக்கு என்ர நெஞ்சில மெய்யாகவே உதைச் சிட்டான்."
அப்படியே திரும்பி வந்து வாங்கில் சாய்ந்துகொண்டார். கண்கள் இருண்டு கொண்டு வந்தன; அப்படியே மயங்கிப் GLITT GOT narri.
O
அவருக்கு மயக்கந் தெளிந்தபோது அவர் அருகில் பேரன் அமர்ந்திருந்தான். அவர் வியப்புடன் அவனைப் பார்த்தார். அவன் தான் சரவணன் தான். எப்ப வந்தான்?
* தம்பி பேரா. அவர் வலக்கரம் வாஞ்சையுடன் அவனைத் தடவிக் கொடுத்தது. அவன், அவர் கரத்தைப் பாசத்துடன் பற்றிக்கொண்டான்.
அவன் கரம் கல்போல இருந்தது. மென்மையான அக் கரத்திற்கு இப்படியொரு வன் ைம எப்படி வந்தது? உடல் சற்று முறுக்கேறிப் பருத்திருந்தது.
" அப்பு.'
"எப்ப வந்தனி, ராசா?"
"ஒரு வாரமாகுது "
"ஒரு வாரமோ?"
"ஒமோம். நீங்கள் அறிவு நினைவில்லாமல் கிடந்தியள். ஒரே பிசத்தல்தான் அப்பு. வாடியடி. பூநகரி. கொத்தா வில் வயல். ஆச்சியின்ர தோட்டம் என்று ஒரே பிசத்தல், அப்பு.' என்று அவன் சிரித்தான்.
கிழவருக்கு அப்பொழுதுதான் தனது நிலை புரிந்தது. ஒரு வாரமாகப் படுக்கையில் கிடக்கிறேனா?
"அப்பு." என்றர்ன் சரவணன்: "என்ன வேணும் அப்பு.?"
அவர் கண்கள் மீண்டும் கலங்கித் தவித்தன. அவனுடைய முகத்தை வாஞ்சையுடன் தடவிக்கோடுக்க முயன்றார். அவன்
 

இரவுநேரப் பயணிகள் *9
குனிந்து கிழவரின் கரத்தைத் தூக்கி தன் கன்னத்தில் பதிய வைத்தான்.
"எனக்கு ஒண்டும் வேண்டாம், ரர்சா, நீ நல்லா இருக்க வேணும் "
"நாங்க நல்லா இருக்கிறம், அப்பு. உங்களுக்கு என்ன வேணும்?."
"எனக்கு என்ன வேணும்." அவருடைய விழிகள் எங்கோ வெறித்துப் பார்த்தன: "ஆச்சியின்ரை தோட்டத்தில காலாற நடந்து, கொத்தியாத்தை வயல் வரம்பில நிம்மதியாகச் சற்று நேரம் இருந்து இளைப்பாறி. என்ரை வீட்டுத் தலைவாசல் வாங்கில நிம்மதியாகப் படுக்க வேணும். பேரா. ஒரு வரிசமா நான் இங்க நிம் மதியாகத் துரங்கவேயில்லை." என அவர் விம்மினார். உடல் குலுங்கியது.
மாமா என்றபடி தவமணி அருகில் வந்து அவா மனர் பைத தடவிவிட்டாள் : "இனி நாங்கள் அங்கை போகலாம். i pri Lр fr., “ “
"அப்பு .' என்றான் சரவணன்: "அவங்களைத் துரத்திப் போட்டம். இனி நீங்கள் விரும்பியபடி அங்கேயே போகலாம். ஆசைப்பட்டபடி.."
அவர் வியப்புடன் பேரனின் கரத்தை அழுத்திப் பற்றிக் கொண்டு எழுந்திருக்க முயன்றார். அவரால் அவன் சொல் வதை நம்பவே முடியவில்லை.
* நீங்கள் அவங்களைத் துரத்திப்போட்டியளோ?" "ஒமனை அப்பு.' 'உண்மைதான் மாமா.' என்றாள் தவமணி.
கிழவரின் முகத்தில் மலர்ச்சி பரவியது. நிறைவுடன் சிரிக்க முயன்றார்.
நான் தான் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை." கொததாவில் வயல் வெளியில் கதந்திரக் காற்றைச்
சுவாசித்தபடி நடப்பதுபோன்ற நிம்மதி கொப்பளிக்கிறது:
- வெளிச்சம், ஜனவரி, 1994
C. C.)

Page 46
புடையன் குட்டி
இர ண்டாண்டுகளாகின்றன.
இருளின் போர்வையில் சந்திரனின் ஒளியில், வானில் அது இல்லாதபோது நட்கத்திரங்களின் ஒளியில் நிழல்களாக மணி தர்கள் பயணம் செய்யும் அவலம் தொடங்கி, யந்திரக் கழுகு கள் பகலில் வானில் வட்டமிடும்போது நீண்டதூரப் பயணங் கள் சாத்தியமற்றவையாகி விட்டன. யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான ஆனையிறவுப் பாதை மூடப்பட்டு விட்டது. அதனால் இரண்டு பிரதேசங்களையும் இணைக் 3 ம் கடல் நீரேரியை இருளில் வள்ளங்களில் கடக்க வேண்டிய நிர்ப்பந்தம்,
மணியத்திற்கு அந்தப் பாதை பழக்கப்பட்டுவிட்டது. மாதத்தில் ஒரு நாள் இரவு ஏழு மணியளவில் வீட்டிலிருந்து புறப்படுவான். மனைவி பிள்ளைகள் கவலையுடன் அவனுக்கு
 
 

இரவுநேரப் பயணிகள் {
விடை தருவர். காபரேற்றரை இணைக்கும் ரியூப்பிற்குள் இரண்டு மூன்று துளிகள் பெற்றலை விட்டு ஸ்கூட்டரை ஸ்ராட் பண்ணி, மண்ணெண்ணெய்க்கு மாற்றிச் சற்று நேரம் ஒட விடுவான். சுற்றாடல் மண்ணெண்ணெய்ப் புகையுள் அமிழும்.
*எக்ஸ்ரர் புளொக் இருக்கா?" மனைவி கேட்பாள்
*இருக்கிறது, இரண்டு மூன்று புளொக்கை நெருப்பிலிட் டுக் கொழுத்தியும் வைத்திருக்கிறன், கவனம். போயிட்டு வாறன், திரும்பிவர ரெண்டுகிழமை செல்லும்."
விடைபெறுவான். "லையிற் போட்டு ஒட முடியாது. பழக்கப்பட்ட வீதியில் மெதுவாக ஸ்கூட்டர் வரும். எதிரில் யாராவது பாரம் ஏற்றிய சயிக்கிலுடன் வகுவது தெரிந்தால் "லையிற் போட்டு எச்சரிக்கை செய்வான்.
சங்குப்பிட்டியை வந்தடையும்போது அரைக்கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணிகள் வள்ளங்களுக்காகக் காத்திருப்பார்கள் சயிக்கில் வியாபாரிகள் பாரச் சுமைகளுடன் ஒரு பக்கத்தில் நிற்க மறுபக்கத்தில் கால்நடைப் பயணிகள்
அவனையும் அவன் பஜாஜ்யையும் எல்லாருக்கும் தெரியும். 'நீங்க போங்க சேர்."
வள்ளத்தில் ஸ்கூட்டரைத் தூக்கி ஏத்தும்போது, "என்ன பாரம் இது. சின்னதாக வாங்குங்கோ." என்று வள்ள ஒட்டி முணுமுணுப்பர்ன், வள்ளத்தில் நெருங்கியபடி அமர்ந் திருப்பார்கள். வானத்தில் சப்தரிசி மண்டலம் கண் சிமிட்டும்
[ിക്കു சற்றுப் பலமாகப் பெய்ததால் புற்றுக்கள் வெள்ளம் புகுந்து விட்டது. புடையன் குட் டியால் புற்றின் பக்க அறையில் சுருண்டு கிடக்க முடியவில்லை . மெதுவாகத் தலையை நிமிர்த் - திப் பார்த்தது. புற்றுக்குள் நீர் தொடர்ந்து கசியும் போல இருந்தது. மெதுவாக ஏறிப் புற்றின் வாயில் தலையை வைத்த படி படுத்துக் கொண்டது.
2

Page 47
葛2 செங்கை ஆழியான்
ஒரு வாரத்திற்கு முன்னரும் இப்படித்தான். புற்றைவிட்டு வெளியில் வந்து இப்படித்தான் படுத்திருந்தது. வீதிக்கு மறு பக்கத்தில் வயல் எலிகள் துள்ளி ஒடுவதும் புடையனின் மணத்தை மோப்பம் பிடித்ததும் வளைக்குள் புகுந்து கொள் வதும் தெரிந்தது.
மெதுவாகப் புற்றைவிட்டு வெளியில் வந்து வீதியைக் கடந்து ஊர்ந்த போதுதான் அந்த அவலம் நிகழ்ந்தது. பார மூடையைக் கரியரில் கட்டிக்கொண்டு சயிக்கில் பாரிலும் சிறிய தொரு சீனி மூடையைச் சமன்படுத்தி வைத்தபடி வந்து கொண்டிருந்த சயிக்கில் ஒன்றின் முன் சில்லு புடையன் குட்டி யின் வாலில் ஏற, புடையன் குட்டி பயந்து நிமிர்ந்து கோபத் துடன் கொத்த
அவனுடைய பாதத்தில் பற்கள் படிந்தன. படிந்த பற் களைக் கழற்றிய வேகத்தில் நஞ்சு ஏறியது. அவன் "ஐயோ " என அலறியபடி நிலத்தில் சரிந்தான். நீலம் பாரித்து வாய7 ல் நுரை தள்ளிய அவனது சடலத்தை மறுநாள் காலை சிலர் தூக்கிச் சென்றனர்.
'பாவம் ' போலப் புடையன் குட்டிக்கு இருந்தது.
"நானும் எவ்வளவு வேகமாக வீதியைக் கடக்க முயன் றேன். தார் என் வேகத்தைக் கட்டுப்படுத்திவிட்டது. நல்ல வேளை சயிக்கில் என் நடு முதுகில் அல்லது தலையில் ஏறி யிருந்தால் என் கதை முடிந்திருக்கும். அவை சயிக்கில் வண்டிகளா? அல்லது பார வண்டில்களா?"
புற்றின் வாயிலில் தலை வைத்துப் படுத்திருக்கும்போது தூரத்தில் ஸ்கூட்டர் ஒன்றின் இரைச்சல் கேட்டது. பாதை தெரிவதற்காக இடைக்கிடை லையிற் வெளிச்சம் பளீரிட்டது.
குளிர் காற்று வீசியது. வெதுவெதுப்பாக ஒதுங்குவதற்கு ஏதாவது பொந்து தேவை எனப் புடையன் குட்டி எண்ணிக்
கொண்டது.
 

இரவுநேரப் பயணிகள்
66 .
ਫr வாழ்க்கை' என மணியம் அலுத்துக் கொண் டான்.
வீதியில் லொறிகள் இருளில் பாரச் சுமைகளுடன் சென்று வருவதால் பரவலாக வீதி தகர்ந்திருந்தது. மேடு பள்ளங்கள் குண்டும் குழிகளும், அவதானமாக ஓடாவிடில் சரிந்து விழ வேண்டியதுதான்.
வெண்புகாராகப் பணி பெயா நீதிருந்தது.
எதிரில் லொறி ஒன்று இரைந்தபடி மெதுவாக வந்தது. தூரத்தில் வரும்போதே, வெயிற் ற பிள் ஒயிலின் வாசனையும் . மண்ணெண்ணை நாற்றமும் இனங்காட்டின. இரண்டையும் கலந்து டீசலாக உலகில் எங்கு இப்படி லொறிகள் ஒடு கின்றன?
அவன் ஒரு கரையில் ஒதுங்கி நின்று லொறிக்கு வழி விட்டான்.
வழிவிட முயன்ற சயிக்கில்காரர் ஒருவர் பாரச் சுமையுடன் வீதிக் காணுக்குள் சரிந்து விழுந்தார்.
எவ்வளவு அவலங்கள்!
தூங்குகின்ற இரவில் தூரப் பயணங்கள். ஆந்தைகள்போல இரவில் சஞ்சரிக்க வேண்டிய நிலை இரவுப் பயணிகள் ஆகி ଶ୍ll କୋtit .
ஸ்கூட்டரின் முன் இடைவெளியில் கிளிப்பில் மாட்டியிருந்த சேர்க்கட் பாக் சற்று இடைஞ்சலாக இருந்தது. சில வேளை களில் பிரேக்கில் கால் வைக்கத் தடைப்படுத்தியது. தூக்கி சீற்றினையும் ஸ்கூட்டரின் முன் பெட்டியையும் இணைத்துப் பாலமாக வைத்துக் கொண்டான். பயணம் செய்வது சுக மாகியது.
கிளிநொச்சியைச் சென்றடைய எப்படியும் இன்னமும் இரண்டு மணி நேரம் எடுக்கும். அதிகாலை ஒரு மணிக்குத் தன் குவாட்டர்ஸ்சிற்குச் சென்றுவிடலாம். தேகம் கெஞ்சுகிறது. அப்படியே போய்ப் படுக்கையில் சரிய வேண்டும்.

Page 48
84 செங்கை ஆழியான்
ஸ்கூட்டர் பள்ளமொன்றில் இறங்கி ஏறியது. நல்லவேளை சமாளித்துக் கொண்டான். சற்றுத் தூரம் ஓடியதும் ஸ்கூட்டர் சற்றுத் தள்ளாடுவதுபோலப் பட்டது. முன் சில்லு காற்றை இழந்துவிட்டது என்பது புரிந்தது.
வீதியருகில் கவலையுடன் ஸ்கூட்டர் நிறுத்தப்படுவதைப் புடையன்குட்டி கவனித்தது. சேர்க்கிட் பாக் கினைத் தூக்கி வீதியோரத்தில் வைத்தான். அது சரிந்து நிலத்தில் விழுந்தது. "கிடக்கட்டும் ' என்றபடி முன் சில்லைக் கழற்றி, * ஸ்பியர் வீலை மாட்டும் முயற்சியில் ஈடுபட்டான். அதுவொன் றும் கடினமான காரிய மன்று இருட்டில் தடவித் தடவிக் கழற்று வதும் பூட்டுவதும்தான் சிரமமானது முற்காலத்தில் 'ரோச் லையிற்' கையில் எப்பவும் இருக்கும். ஒரு சோடி பற்றறி ஸ் நானுரறு விற்கும்போது சூள்தான் கொழுத்தலாம்.
குளிர் காற்று வீசியது.
புடையன் குட்டி புற்றை விட்டுக் கீழ் நோக்கி ஊர்ந்தது. மணியம் சில்லை மாற்றிக் கொண்டிருந்த பக்கமாக ஊர்ந்து வந்தது .
வெதுவெதுப்பாகத் தங்குவதற்கு ஒரு பொந்து தேவை, சரிந்து கிடந்த சேர்க்கிட் பாக்" கின் மூடல் இடைவெளி அதன் கண்ணில் பட்டது. "அப்பாடா' சரசரவென அதற் குள் நுழைந்து சுருண்டு முடங்கிக் கொண்டது.
மணியம் ஸ்கூட்டரை ஸ்ராட் பண்ணினான், சேர்க்கிட் பாக்கைத் தூக்கிக் கால்களின் இடைவெளியில் வைத்துக் கொண்டான். தூக்கும்போது பாக் சற்றுக் கனத்த மாதிரி இருந்தது: "களைத்து விட்டன்; அதுதான். கனக்குதாக்கும்."
O
fonul, குவாட்டர்சை வந்தடைந்தபோது விடியற் காலைச் சேவல் ஒன்று கூவியது. ஸ்கூட்டரை ஏற்றி முன் விறாந்தையில் விட்டுவிட்டுக் கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்தான் , சேர்க்கிட் பாக்கை மேசையில் வைத்துவிட்டு, உடை மாற்றிக்
 

இரவுநேரப் பயணிகள் 85
கொண்டான். முகம் கழுவிவிட்டு நிமிர்ந்த போதுதான் துவாய் சேர்க்கிட் பாக்கிற்குள் இருப்பது நினைவு வந்தது. பழைய துவாயை வீட்டில் விட்டுவிட்டு சலவை செய்த துவாய் ஒன் றினை எடுத்து வந்திருந்தான்.
(3) ri.i, GL". Lunti, GaoGOTL' பிணைத்திருந்த கிளிப்புகள் இரண்டையும் மெதுவாகக் கழற்றித் திறந்தான் உள்ளே சுருண்டு கிடந்த புடையன் குட்டிக்கு இவை எதுவும் தெரிய வில்லை. அது சுருண்டு முடங்கிக் கிடந்தது;
மணியம் வலக்கரத்தை உள்ளே நுழைத்தான் துவாயைப் பற்றி வெளியில் இழுத்தெடுத்தான். அப்பொழுதுதான் புடை யன் குட்டிக்குத் தன் பயப்படும்படியான ஒரிடத்தில் மாட்டிக் கொண்டது புரிந்தது.
மணியம் படுக்கையில் அப்பாடா எனச் சரிந்தபோது மேசையிலிருந்த சேர்க் கிட் பாக்" பொத்தென நிலத்தில் விழுந்தது. கிடக்கட்டும் காலமை பர்ர்ப்பம்" என்றபடி மறு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான்.
புடையன் குட்டிகலங்கிப் போய் விட்டது. உயரத்திலிருத்து விழுந்த அதிர்வு மெதுவாகத் தலையை முன் நீட்டி வெளியில் வந்தது. திறந்திருந்த கதவினூடாகப் போவோமா? அல்லது கட்டிலில் ஏறுவோமா எனச் சிந்திக்கத் தொடங்கியது,
ட மல்லிகை, ஏப்பிரல், 1994

Page 49
மோதிர விரல்
சிந்தனக்கும்பாவில் தன் மோதிர விரலைப் பக்குவமாக நீட்டி விரல் நுனியில் சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட உயர்த்தியபோது, அதனை அல்பிறட் கண்டான் பன்னீரில் கரைக்கப்பட்ட சந்தனத்தின் மணம் அவன் நாசிகளில் அரு வருப்பாக நுழைந்தது. அந்த மோதிர விரல் துண்டிக்கப்பட்டுத் தனித்து நெற்றிக்கு உயர்ந்தது, மஞ்சள் நிறச் சந்தனக்குழம்பு செந்நிறமாக கப்படி மாறியது? விரலில் இடப்பட்டிருந்த மோதிரம் எப்படி கழன்று நிலத்தில் விழுந்தது? கலீரென்ற சத்தம் சீமெந்து நிலத்தில் எழுந்ததுபோல உணர்வு, தன் மோதிர விரலை அல்பிறட் அழுத்திப் பிடித்துக்கொண்டான்.
சண்முகம்பிள்ளை நெற்றியில் சந்தனப் பொட்டினை இட்டுக்கொண்டு உள்ளே நுழைந்து அவன் பக்கத்தில் அமர்ந்து Q5/Teža LTri.
** என்ன அல்பிறட், நேரத்திற்கு வந்திட்டாய் போலை? மாப்பிள்ளை அழைக்கப் போயிட்டினம் போலிருக்குது."
 
 

இரவுநேரப் பயணிகள் 8了
"உங்கட மோதிரம் நிலத்தில் விழுந்ததோ?* அவனைச் சண்முகம்பிள்ளை வியப்புடன் பார்த்தார். பின்னர் தன் மோதிர விரலைப் பார்த்துக்கொண்டார். மோதிர
விரல் அப்படியே இருக்கிறது. மோதிரம் அப்படியே அழுத்த மாக விரலில் இருக்கிறது. அப்ப விழுந்தது என்ன?
"என்ன கேட்டியள் அண்ணை?" என்று அல்பிறட் கேட்டான்.
* * L DIT L’IL G76ŷr Goar அழைக்கப் போட்டினமோ எ லண் டு கேட்டன்."
"நானும் கொஞ்சம் பிந்திப்போனன். நான் வரேக்க போயிட்டினம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவினமாம், மாப்பிள்ளை ஊரெழுவாம்."
"மாணிக்கத்தாரை எப்படி உனக்குப் பழக்கம்?"
உதென்ன கதையண்ணை. நானும் அவரும் கச்சேரியில ஒன்றாக வேலை பாக்கிறம் அந்தப்பழக்கம் உங்களுக்கு.?"
"மாணிக்கத்தார் எனக்குத் தூரத்து உறவு."
கலியான எழுத்து வீடு. பலர் வந்து கதிரைகளில் அமர்ந் தனர். பெண்கள் காஞ்சிபுரத்திலும் மணிப்புரியிலும் அலங்கார மாக வந்தனர். எல்லாரதும் மோதிர விரல்கள் பக்குவமாக இருக்கின்றன.
அல்பிரட் மெளனமாக அமர்ந்திருந்தான். அவன் வாழ்க்கை யில் எவ்வளவு துயரங்கள், மாற்றங்கள். மயிலிட்டிக்கு இராணு வம் வந்ததும் இரவோடிரவாக அகதியாக யாழ்ப்பாணத்திற்கு ஓடிவந்தான், குடும்பத்துடன், அரசாங்க உத்தியோகத்தன் என்பதால் அகதி நிவாரணமுமில்லை. மயிலிட்டி வீடு தரை மட்டமாகிவிட்டதாகத் தகவல் எவ்வளவு அற்புதமான கல் வீடு. அவனது மனைவிக்குச் சீதனமாக மனமுவந்து வழங்கிய மாமன் அதிர்ஸ்டவசமாக உயிருடனில்லை. இருந்திருந்தால் சிறுகச்சிறுகச் சேர்த்துக் கட்டிய அந்தக் கல்வீடு தரைமட்ட மாகத் தகர்க்கப்பட்ட வேதனையைத் தாங்கிக்கொண்டிருக்க lt) frt't-frri .

Page 50
灣& செங்கை ஆழியான்
வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண் வெரியில் வந்தாள் நிறை குடம் விளக்குகளுடன் வாசலில் இருந்த மேசையில் வைத் திருந்த சந்தனக் கும்பாவை எடுத்துக் க தி  ைர களி ல் அமர்ந்திருந்தவர்கள் முன் வந்து வினயமாக நீட்டினர்ள். கதிரைகளில் அமர்ந்திருந்தவர்கள் மேர்திர விரல்களால் சந்தனக் குழம்பில் தோய்த்தெடுத்தனர். துண்டித்த விரல் மட்டும் பொட்டிடுமா? அவன் கண்களை நன்கு கசக்கிக் கொண்டு பார்த்தான். சந்தனக் கும்பாவில் தனித்த விரல்கள் நுழைந்தன. நெற்றியில் புருவத்திருக்கிடையில் பொட்டிட்டன. சிலருடைய மோதிர விரல்களில் மோதிரமில்லை. கழன்று விழுந்துவிட்டனவோ?
ஒமோம் நிலத்தில் விழும் சத்தம் தெளிவாகக் கேட் கிறது.
அந்தப் பெண் அல்பிறட் முன் வந்து நின்று அவன் நெற்றி யைப் பார்த்தாள். நெற்றியில் சந்தனப்பொட்டில்லை. அவன் முன் சந்தனக் கும்பாவை மரிய தையுடன் நீட்டினாள் அல் பிறட் ன் தேகம் மெதுவாக நடுங்கியது. தன் மோதிர விரலை அழுத்திப் பிடித்துக்கொண்ட ன். அவன் விரலும் அதிலிருந்த மோதிரமும் பக்குவமாக இருப்பது தெரிகிறது.
எடுங்கேர அங்கிள்."
விரல். மோதிர விரல்.
"அவர் பொட்டுப் போடுறதில்லை" என்றார் சண்முகம் பிள்ளை.
'இல்லையில்லை நான் பொட்டுப் போடுகிறனான். பொட்டுப் போடுகிறனான்." என்று அல்பிறட் முணுமுணுத் தர்ன், ஆனால் மோதிர விரல் எழவில்லை. இடது கரத்தால் வலதுகர மோதிர விரலைப் பற்றிப் பிடித்துக்கொண்டான்
േ பெண் அவனை ஒருவிதமாகப் பார்த்துவிட்டு நகர்ந்து பின்னர்தான் பதட்டம் நீங்கியது. உடல் மழையில் நனைந்தமாதிரி வியர்த்துவிட்டது.
 

இரவுநேரப் பயணிகள் &9、
அவள் என்ன நினைத்திருப்பாள்? மரியாதை தெரியாத மனிசன். பண்பாடில்லாத பிறவி. பொட்டுப் போடுவதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்?
வாசலில் பரபரப்பு எழுந்தது. மாப்பிள்ளையை அழைக்கச் சென்ற கார் வந்துவிட்டது. எஞ்சினின் வித்தியாசமான பொருமல் சத்தமும் மண்ணெண்ணெய்ப் புகை கக்குதலும் யாழ்ப்பாணத்து வாகனத்து நிலையைப் புலப்படுத்தின. வீட்டிற்குள்ளிருந்து பெண்கள் இருவர் ஆரத்தித் தட்டத்துடன் விரைந்து வந்தனர். தட்டத்தில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து செந்நிறமாகக் கிடந்தது. உரித்து நறுக்கிய கதலி வாழைப்பழத் துண்டங்கள் மூன்றில் சேலைத் திரிகள் புதைக் கப்பட்டிருந்தன. குத்துவிளக்கில் அவற்றை எரியவைத்து கம்பீர மாக நின்றிருந்த மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தனர்.
ஒரு முறை சுற்றி. இரண்டு. மூன்று.
எரிந்த திரிகளைத் தட்டத்துச் செந்நிறக்குழம்பில் அணைக் கிறார்கள். இதோ. இரு பெண்களும் தங்களது மோதிர விரல்களை அக்குழம்பில் தொட்டு மாப்பிள்ளையின் நெற்றியை நோக்கி உயர்த்துகிறார்கள்.
கடவுளே இதென்ன. அந்த விரல்கள் துண்டித்திருக்கின் றன. விரல்களின் நுனிகளிலிருந்து இரத்தம் வடிகின்றது. துண்டித்த விரல்களிலிருந்து கழன்ற மோதிரங்கள் ஏந்திய தட்டத்தில் "னோங்" என்ற ஒசையுடன் விழுகின்றன.
அல்பிறட்டின் காதுகளில் அச்சத்தம் தெளிவாக விழுந்தது. அவன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டான்.
"மோதிரங்கள் விழுந்திட்டுது." சண்முகம்பிள்ளை அவனை ஒருவிதமாகத் திரும்பிப்பார்த் தார்.
"என்ன அல்பிறட் .?"
ஒண்ணுமில்லை. அண்ணை." 2、

Page 51
90 செங்கை ஆழியான்
தலையை அழுத்திக்கொண்டான். விண்விண்ணென்று வலி, இடக்கரத்தல் வலக்கரத்தை அழுத்திக்கொண்டான்.
* சுகமில்லையா, அல்பிறட்?" "இல்லை அண்ணை இலேசர்கத் தலைவலி.'
மறுப்பிள்ளையை உள்ளே அழைத்துச்சென்று இடப்பூட்டிருந்த அலங்கார மேசையின் முன் கதிரையில் அமர்த் தினர். ஒரு மூலையில் சிதT உறுதி எழுதுவதற்காகப் புறக்ரரும் மறு முலையில் கலியான எழுத்தினை எழுதுவதற்காகப் பகிவுக் காரரும் வந்திருந்தனர். பெண்ணை அழைத்துவந்து மாப் பிள்ளை அருகில் அமர்த்தினர் அவள் நாணிச்சிரித்தபடி உலகத்தினை வெற்றிகொண்ட பெருமிதத்துடன் அவன் அருகில் அமர்ந்து கொள்கிற ள்
அல்பிறட்டினால் தான் ஆமர்ந்திருக்கும் இடத்திலிருந்து அவர்களைத் தெளிவாகப் L)雳。 முடிகின்றது. கலியாணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எவ்வளவு அற்புதமான உன்னதமான நிகழ்ச்சி? இந்த் நாட்டில் கலியான வயதில் அவமாகச் சாகின்ற பிள்ளைகள் எத்தனை? தாலிகட்டி மாப்பிள்ளை வீட்டிற்கு வந்ததும் ஷெல் விழுந்து கணப் பொழுகல் விதவையாகிய பெண்கள் கூட்டங்கூட்டமாகப் பெடிடிஆர் குண்டுக்குப் பலியாகிப்போன பள்ளிக்கூடச் சிறார் கள் :ாதையில். தெருவில், வீட்டில் அலுவலகத்தில் குடல் சரியச் செத்துப்போன இளைஞர்கள்.
ποθήτω η ευθειάστησή பெண்ணையும் மாப்பிள்ளையை ULL JILħ எழுந்து நிற்குமாறு பணித்துவிட்டு வாசிக்கிறார்.
' கட்டிய புருசனாக ஏற்றுக்கொள்கின்றேன் என்று." - பத்திரங்களில் கையொப்பமிடுகின்றனர்.
மேசையில் தட்டத்தில் வேட்டி சேர்ட் , சால்வை, சேலை, சட்டைகளுடன் மோதிரங்கள் பெட்டிகளில் இருக்கின்றன. மோதிரம் மாற்றப்போகின்றார்கள்.
விவாகப்பதிவுக்காரர் ஒரு மே 1 தி ரத்  ைத எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்கிறார். அவன் வாங்கிக்கொளள பெண் தன் மோதிர விரலை நீட்டுகிறாள்.
 

இரவுநேரப் பயணிகள் 9.
துண்டித்த விரலில் மோதிரழ் ப்ோடுகிறான். அது எப்படி விரலில் நிறகும்? மோதிரம் நிலத்தில் விழுகின்றது. அதனைக் கவனியாமல் பெண் மற்ற மோதிரத்தைக் கரத்தில் எடுத்து மாப்பிள்ளையின் மோ திர விரலில் இடப்பார்க்கிறாள். பைத் தியக் காரி அந்த விரலும் துண்டித்திருப்பது தெரியவில்லை? போட்டால் எப்படி நிற்கும்?
அல்பிறட்டிற்குப் பெரிதாக அலறவேண்டும் போலிருந்தது. "மோதிரம் விழுந்துவிட்டது.' என்றான் அல்பிறட். சண்முகம்பிள்ளை இப்பொழுது அவனை வித்தியாசமாகப் பார்த்தார். - 1 கலியாணப்பதிவு முடிந்துவிட்டது. மாணிக்கம் வெளியில் வந்தார் வந்தவர்களைப பார்த்துச் சிரித்துத் தன் அன்பைத் தெரிவித்துக் கொண்ட்ார். அல்பிறட்டின் முன் வந்தார்.
"அல்பிறட் ஓடி விடாதே. சாப்பிட் விட்டுத்தான் போக வேணும். இதென்னடாப்பா, நெற்றியில் சந்தனப்பொட்டில் லாமல் " என்றவர் சந்தனக் கும்பாவை எடுத்து மோதிர விரலைத் தோய்த்து உயர்த்தியபோது.
துண்டித்த விரல் மோதிர விரல்.
அல்பிறட் கதிரையைத் தள்ளிவிட்டுத் திடீரென எழுந் தான். பொட்டிட உயர்ந்த கரத்தை வெறி கொண்டவன் போலத் கட்டிவிட்டான். மாணிக்கத்தின் கரத்திலிருந்த சந் தனக் கும்பா சிதறித் தெறித்தது.
எல்லாரும் திகைத்து நிற்க அல்பிறட் விருட்டென எழுந்து வெளியேறினான். அவன் உடல் பதறியது.
வீதியில் ஒருவன் குடும்பு'பாரத்துடன் சயிக்கிலில் வந் தான். விறகு கட்டுகிற கரியரில், தாங்கு கம்புகளைப் பற்றிய படி மூன்று அரை நிர்வாணப் பிள்ளைகள். சயிக்கில் பாரில் அவனுடைய மனைவி, தன் ஒரு குழந்தையைக் "கான்டி" லில் இருத்திப் பிடித்திருந்தாள். அவள் முக்கி முனகிச் சயிக்கிலை அழுத்தி உழக்கினான். "குடும்ப சுமை" என்பதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்திருக்கும்.

Page 52
9
2
செங்கை ஆழியான்
அல்பிறட் அவர்களை மிக ஆழமாகப் பார்த்தான். நல்ல வேளை எவரினதும் மோதிர விரல்களில் மோதிரங்களில்லை. காகமும் தூக்காது. மோதிரம் கழன்றும் விழாது.
O
ug: ஏறியபோது வானத்தில் பொம்பர்கள் இரைந்தபடி விரைந்து வந்தன. மெயின் வீதி பாதுகாப்பான இடம் வேறு எது? யாக்கப்பர் தேவாலயம் அதோ இருக்கிறது. விரைந்து ஒடி வந்தான். அதற்குள் குண்டுவீச்சு விமானம் குத்தித் தாழ்ந் தது. கணப்பொழுதில் அப்படியே தார் வீதியில் படுத்துக் கொண்டான். தாழப்பறந்த விமானம் தேவாலயத்தின் மீது குண்டொன்றினை வீசிவிட்டு விரைந்தெழுந்து மறைந்தது.
அல்பிறட் எழுந்து நின்றான். எங்கும் மரண ஒலம் தேவாலயத்தினுள் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் அனை வரும் உடல் சிதறி. குடல் சரிந்து. சின்னாபின்னமாகி. தசைப்பிண்டங்களாக இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தேவாலயம் கற்களாகச் சிதறிக் கிடந்தது
ஒலம். மரண ஒலம்.
அவன் பார்த்துச் கொண்டு நிற்கத் தக்கதாக ஒரு காகம் விர்ரெனத் தாழ்ந்தது. நிலத்தில் சிதறிக்கிடந்த எதையோ கொத்திக் கொண்டு எழுந்தது. எழுந்த வேகத்தில் அது கொத்தித் தூக்கிய மோதிர விரலில் இருந்த மோதிரம் கழன்று
அவன் முன் தார் வீதியில் "னொங்' கென்று விழுந்து தெறித்தது.
"ஐயோ " என்று அல்பிறட் அலறினான். தூக்கிய
விரலோடு காகம் பறந்து செல்வது தெரிந்தது. (இப்பொழுது மீண்டும் கதையைப் படியுங்கள்.)
O C.
 

மேற்கும் கிழக்கும்
கி. பயணத்துக்காக நல்லூர்க் கரையில் தனித்து நின்ற நூற்றுக்கணக்கான பயணிகளில் சூழலிற்குப் பொருந் தாத ஒருத்தியாக அவள் நின்றிருந்தாள். அவளுடைய நிறம், நீலவிழிகள், செம்பட்டையும் கருமையும் கலந்த தலைமயிர், மெலிந்த உயர்ந்த தோற்றம், அவள் இந்த மண்ணிற்குரிய வளல்லி ஸ் எனக் கூறுவதற்குப் போதுமானவை, மாலை வேளையில் பூநகரி நல்லூர் க் கரையில் கொட்டிவிடப்பட்ட பயணிகளில் காணப்பட்ட பதற்றம், பயம் என்பன அவளில் காணப்படவில்லை. வெகு சாதாரணமாக நடந்துகொண்ட ஸ்.
தோளில் ஒரு கான்பாக்" தொங்கியது. வலக்கரத்தில் ட்ர லியுடன் கூடிய பெரியதொரு சூட்கேஸ் எல்லாரும் . அவளையே அடிக்கடி பார்த்துக் கொண்டனர்.
மேலைவானில் சூரியன் மை றவதை இரசனையே ஈடு அவள் பார்த்தாள் வானத்தில் சீராகச் சிறகடித்துப் பறந்து செல்லும் கடற்காக்கைகளைக் குழந்தையொன்றின் களிப்புடன் வியத்

Page 53
锣4 செங்கை ஆழியான்
தாள். அவளின் செய்கைகளை வியந்தபடி நின்றிருந்த குண சேகரம் பொறுக்க முடியாமல், மேடம். நான் உங்களுக்கு உதவ முடியுமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டு வைத்தான். வவுனியாவிலிருந்து அவனுடன் அவள் பயணப்பட்டு வருகிறாள். தாண்டிக்குளம் இராணுவ முகாமில் அவளைக் குடைந்தெடுத் தனர். ஜே. ஒ. சியிடம் வடக்கே செல்வதற்கு அவள் பெற் றிருந்த விசேட பத்திரத்தைத் துருவித்துருவி ஆராய்ந்தனர்.
யப்னா. நோ குட். எல் ரி ரி றெறறிஸ்ற் டோன் ற் கேர்.' என்று அங்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவளிடம் கூறியபோது குல சேகரம் அவளுக்குப் பக்கத்தில்தான் நின்றிருந்தான்.
நல்லூருக்குச் செல்லும் மினி வானில் ஏறியபோது அவள் முன் சிற்றில் அமர்ந்திருந்தாள், வயோதிப மாது ஒருத்தி ஏறி இருக்க இடமின்றித் தவித்தபோது எவரும் முகத்தைப் பாராத வர் போலத் திருப்பிக் கொண்டபோது, அவள் விருட்டென்று எழுந்து, "யு சிற் ' என அந்தக் கிழவியை மறுக்க மறுக்க இருத்தியபோதும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
வவுனியாவிலிருந்து நல்லூர் வரை அவள் நின்றபடியே பயணம் செய்தாள். ஓர் இளைஞன் எழுந்து அவளுக்கு இடம் தர முன் வந்த போது புன்முறுவ லோடு மறுத்து விட்டாள்
நல்லூர்க் கரையில் இறங்கியபோது அவளிடம் ஒரு கேள்வி எஞ்சி நின்றது.
இந்த வெள்ளைக்கர்ரப் பெண் ஏன் இங்கு வருகிறாள்?
இவளுக்கு யாழ்ப்பாணத்தில் என்ன வேலை? ஸ்பையோ?"
அவளுடன் பேசிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலை அவ னால் அடக்க முடியவில்லை கனடாவில் ஆறாண்டுகளைக் கழித்துவிட்டு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்து கொண் டிருக்கிறான். அவனை ஆவலுடன் பெற்றோரும் சகோதரங்
களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அம்மா இப்பொழுது
எப்படியிருப்பாள். தங்கச் சிமார் எப்படியிருப்பினம்? இருவருக் கும கலியாணம் முடிந்துவிட்டது. ஒருத்திக்கு இரண்டு குழந்தை
களும் இருக்கின்றன. தம்பிமாரை இம்முறை திரும்பும்போது
கனடாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்
 

இரவுநேரப் பயணிகள் 93.
வவுனியாவைக் கடந்தபோது பிறந்த மண்ணின் இனிமை புரிந்தது. எல்லைகளில் எதிரியின் ஆக்கிரமிப்பு அழுத்தங்களும் புரிந்தது.
மேடம். நான் உங்களுக்கு உதவ முடியுமா?" மிகக் கஷ்டப்பட்டு இந்தக் கேள்வியை அவன் அவளிடம் கேட்டர்ன் அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் நீலவிழிகள் அவனை அளவிட்டன.
தாங்ஸ் .' என்றாள்: "எத்தனை மணிக்கு இக்கரை யிலிருந்து கிளாலிக்குப் போட் புறப்படும்?" -
'என் பெயர் குலம். கனடாவிலிருந்து ஆறாண்டுகளுக் குப் பின்னர் இங்கு வருகின்றேன். என் பெற்றார் சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். ஆ. என்ன கேட்டீர் கள். போட் புறப்படும் நேரமா? இருள் கவிந்ததும் புறப் படும், மேடம்."
"ஒ ஐ சி. மிஸ்ரர் குலம். இப்படிக் கஷ்டப்பட்டா யப்னா விற்குப் போக வேணும். வேறு நேரான பாதை இல்லையா?"
'முன்னர் இருந்தது. இப்பொழுது பூரீ லங்கா இராணுவம் அப்பாதைகளை மூடி விட்டதாம். முன்னர் கொழும்பிலிருந்து நேராக றெயிலில் யாழ்ப்பாணத்திற்குப் போகலாம். இன்று நிலை மை மாறிவிட்டது. பயந்து பயந்து இரவில் இருளில் கள்ளரைப் போல இந்தக் கடலேரியைக் கடந்து செல்ல நேர்ந்துவிட்டது. ஏன் எனத் தெரியுமா?"
எனக்குத் தெரியும். ஐ நோ." "யூ ஆர் பிறம்?. நீங்கள் எங்கிருந்து?" *ஜேர்மனியிலிருந்து, நான் ஒரு ஜேர்மன்.' "ஈஸ்ரா. வெஸ்ரா?." அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
* மேற்கு ஜேர்மனியில் என் பிரண்ட்ஸ் பலர் இருக்கிறார் 高动了。””

Page 54
93 செங்கை ஆழியான்,
அவள் மீண்டும் புன்னகையை உத்டுகளில் மலரவிட்டாள்.
அவள் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை.
' எங்களுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"
எனக்கு ஒரளவு தெரியும் என்று நினைக்கிறேன். நீர் எத்தனை ஆண்டுகள் கனடாவில் கழித்தீர்?"
'சிக்ஸ் இயேர்ஸ்." என்றான் பெருமிதத்துடன் குல சேகரம்.
ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் அவர்களைக் கடந்து சென்றனர்.
லிபறேசன் பையிற்றேர்ஸ் ." *யாழ்ப்பாணத்தின் நிம்கதியே அழிந்துவிட்டது.'
அவனை அவள் வியப்புடன் பார்த்தாள். பின்னர் உதடு களுக்கிடையில் சிரித்துக் கொண்டாள்; "உழைப்பும் உணவும் தான் வாழ்க்கை என்றால் . நீர் ஆறாண்டுகள் கனடாவில் அப்படித்தான் கழித் திருக்கிறீர், நாங்க எங்கள் நாட்டின் சுதந் திரத்தைப் போராடிப் பெற்றோம் அநியாயமாக ஜேர்மனி யைப் பிரித்தழித்தவர்களின் ஆதிக்கத்தைக் கலைத்து இன்று ஒன்றுபட்டிருக்கிறோம்.'
நீங்கள் ஒன்றுபட்டிருக்கிறீர்கள், நாங்க பிரிகிறதென நிக்கிறோம்."
நீங்கள் எப்பொழுது ஒ ன்றாக இருந்தீர்கள், பிரிவதற்கு?
குலசேகரத்திற்கு எதுவும் புரியவில்லை. இருள் மெது வாகப் பரவத் தொடங்கியிருந்தது இருந்தாற்போல மெல்லிய தொரு தற்றம். அவ்விடத்தில் எழுந்தது பழக்கப்பட்ட பயணிகளின் கா துகளில் பொம்பர் விமானம் ஒன்று விரைந்து வருகின்ற ஒலி பதிந்தது.
என்றான் ஒருவன். அவன் கூறி முடிவதற்
கிடையில் வானத்தில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு விமானங்
கள் தோன்றின. s

இரவுநேரப் பயணிகள் @烈
பெரும் இரைச்சலுடன் அவை வர்ணத்தில் வட்டமிட்டன. நல்லூர்க் கரையில் நின்றிருந்த பயணிகள் பயத்துடன் விழுத் தடித்து ஓடினார்சள். பொருட்களைத் தூக்கிக் கொண்டும் எறிந்துவிட்டும் கூக்குரல் எழுப்பியவாறு பாதுகாப்பான இடங் களை நோக்கிப் பதறியடித்துக்கொண்டு ஓடினர். குழந்தைகள், பெண்கள், பயம், பயம் பதட்டம்,
ஜெட்பொம்பர் திடீரெனக் குத்திப்பதிந்தது. காதுகளைப் பிளப்பது போன்ற பேரிரைச்சல் ஒடியவர்கள் அத்தனை பேரும் நிலத்தில் குப்புற விழுந்து படுத்தார்கள்.
"மேடம் மேடம். ஒடிவாங்கோ பொம்பர். பொம் பர் " என்று அலறியபடி குலசேகரம் திக்குத்திசை தெரியாமல் ஓடினான்.
அவள் அவ்விடத்தைவிட்டு அசையவில்லை. வானத்தில் சிறகடித்துப் பறந்த கடற் காக்கைகளைப் பார்க்கும் ஆவலுடன் குத்தித்தாழ்ந்து எழும்பிய பொம்பரையும், வட்ட மிட்ட பொம்பரையும் பார்த்தாள்.
முதல் தடவை குத்திப்பகிந்த பொம்பர், மறுதடவை குத் 8 ப் பதிந்தபோது வேகமாக ஓடிவந்த ஒர் இளைஞன்
அவளைக் குப்புறத் தள்ளி விழுத்திவிட்டான்.
காதுச் சவ்வுகள் சிதறி வெடித்துவிடுமாப்போல குண்டு விழுந்து வெடித்துச் சிதறியது.
என்ன நடந்தது? எது நடந்தது? அவள் எழுந்து பாாத்த போது கண்களை மூடும் புழுதி சூழப்படிந்திருந்தது. பொம்பர் விமானங்கள் மேலும் இரண்டு குண்டுகளை அவ்விடத்தில் விசி விட்டு விலகிச் சென்று மறைந்தன.
அவள் நின்றவிடத்திற்கு நூறுயார்களுக்கு முன்னால் உடல் சிதறி ஆறுபேர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கால்கள் ஒடிந்து கைகள் விலகி, குடல் சரிந்து, மூளை கக்கி.
* "GI?... σωμο (34 π. , என்று அவள் துடித்துப்போனாஸ்,
"பாபேரியன்ஸ். பாபேரியன்ஸ்."

Page 55
98. செங்கை ஆழியான்
அவளால் அந்தக் கொடூரத்தைப் பார்க்க முடியவில்லை.
(! 1:ኑ $ *w ) 4ነ காயம் பட்டவர்களை வாகனங்கள் அவசரம் அவசரமாகி
ஏற்றிச் சென்றன. எஞ்சியவர்கள் வள்ளங்களில் ஏறுவதற்குக்
கியூவில் ஒழுங்குபட்டனர். நிகழ்ந்துபோன பயங்கரம் வழமை
யான ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. **
குலசேகரம் வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்.
மேடம் வாங்க போயிடுவோம்."
**G6u山rf? ö齿Gö?”°
"கொழும்புக்குப் போயிடுவோம். யாழ்ப்பாணத்திற்குப் போக முடியாது. இப்படிக் குண்டுவீசுகிற நாட்டில எப்படி யிருக்கிறது? வாங்க போயிடுவோம்."
நீர் யாழ்ப்பாணத்திற்குப் போகவில்லையா?" இல்லை "
ஆறு வரியத்துக்குப் பின்னர் வந்திருக்கிறீர். பெற்றோரை சகோதரர்களைப் பார்க்காமலா திரும்பப் போகிறீர்?"
'என்னென்று பார்க்கிறது, மேடம்? இப்படிக் குண்டு களை வீசி அழித்தால். நான் கொழும்புக்கு வாருங்கோ என்னைப் பார்க்க என்று எழுதினன். அவர்கள் கேட்க
"இப்படிப்பட்ட கஷ்டமான நிலமையிலதான் உங்கள் பெற்றோர் சகோதரர்கள் சீவிகதினம் ."
"அவர்களுக்கு அது பழகிவிட்டது. என்னால் இங்கிருக்க முடியாது, மேடம், ஜேர்மனியிலிருந்து இங்கு வந்து வீணாகச் சாகப் போறியளே? வாருங்கோ திரும்பிப் போயிடுவோம்."
அவள் அவனை ஆழமாக ஏறிட்டுப் பார்த்தாள். * நோ. நான் ஜ ப் னா விற்கு ப் போகாமல் திரும்ப jfr. G3 és Gör” o
"யூ ஆர் மாட்." என்றான் குலசேகரம்: 'உங்களுக்கு விசர் அங்கு என்ன இருக்கிறது? மனிசன் அங்கிருப்பானா?"
 

இரவுநேரப் பயணிகள் 99
அவள் எதுவுமே பேசவில்லை. பயணப் பொதியைத் தூக்கிக் கொண்டு கியூவை நோக்கி நகர்ந்தாள்,
மேடம். ஆல் ரைட் விஸ் யூ குட் லக். மே ஐ நோ யுவர் நேம், உங்கள் பெயரை நான் அறியலாமா?" ; * y.
அவள் சற்றுத் தரித்து நின்றாள். தன் வலக்கரத்தை அவனை நோக்கி நீட்டினாள்.
"ஐ ஆம் ஆன் சடாசிவம் என் கணவனின் பெற்றாரைப் பார்ப்பதற்காக ஜப்னாவிற்குப் போகிறேன்."
அவள் வள்ளத்தை நோக்கிக் கம்பீரமாக நடந்து செல் வதை அவன் வெகு நேரம் திக்பிரமை பிடித்தவன் போலப் பார்த்து நின்றான். அவன் கால்கள் அவனிடம் கேட்டன: "வள்ளத்திற்குப் போவோமா, மினிபஸ்சிற்குப் போவோமா?"
- மல்லிகை, நவம்பர் 1994
O O

Page 56
t
ஆசிரியரின் ஏனைய நூல்கள்:
நந்திக்கடல் O ஆச்சி பயணம் போகிறாள் அக்கினிக்குஞ்சு O தீம்தரிகிடதித்தோம் வாடைக்காற்று O இரவின் முடிவு
பிரளயம் (சாகித்யமண்டலப் பரிசில் பெற்றது) காட்டாறு (இலங்கை இலக்கியப் பேரவை பரிசிலும்
சாகித்யமண்டலப் பரிசிலும் பெற்றது) கனவுகள், கற்பனைகள் , ஆசைகள் கங்கைக் கரையோரம் 0 அலைகடல்தான் ஒயாதோ? சித்திரா பெளர்ணமி 0 முற்றத்து ஒற்றைப் பனை இதயமே அமைதிகொள் 0 நடந்தாய் வாழி வழுக்கியாறு LIFT (60) (607 O 24 மணி நேரம் 0 12 மணி நேரம் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
(சாகித்தியமண்டலப் பரிசு பெற்றது) மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது 0 மழைக்காலம் மண்ணின் தாகம் / இந்த நாடு உருப்படாது அக்கினி (இலங்கை இலக்கியப்பேரவை பரிசில் பெற்றது) கந்தவேள் கோட்டம் (கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசில் ஜன்மபூமி 0 யாக குண்டம் பெற்றது) ஆறுகால்மடம் 0 செங்கை ஆழியான் நாவல்கள் கிடுகு வேலி (தகவம் பரிசில் பெற்றது) ஒ. அந்த அழகிய பழைய உலகம் கொக்தியின் காதல் O செங்கை ஆழியான் கதைகள் காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் 0 ஒரு மைய வட்டங்கள் க ல்கோட்டை (கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசில் நல்லை நகர் நூல் பெற்றது) குவேனி (சாகித்யமண்டலப் பரிசில் பெற்றது) யாழ்ப்பாணத்து இராத்திரிகள் (தமிழ்நாடு லில்லி தேவ நாயகம் நினைவுப் பரிசிலும், இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசிலும் இலக்கிய (சாகித்ய) பரிசிலும் பெற்றது) சாவோலை O இரவுநேரப் பயணிகள் களம்பல கண்ட கோட்டை
8
 

. .

Page 57


Page 58