கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரங்கம் 1982

Page 1

------: } }

Page 2
உள்ளே.
சத்தியம்
(ஆசிரியர் தலையங்கம்)
நெஞ்சை நேரவைத்தி செய்தி மனித நவரத்தினர்
2 65 5TLC5 9Jńł5 AJGUT)
J5TLöf GTI 515ä
G3, futsai STL5 is fig,
(தொடர் கட்டுரை)
 
 
 
 

9 JJ TJ5) நாடக சஞ்சிகை
தாயகம்"
திருநெல்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம்.
c
AR ANKAM
DRAMA MAGAZINE
*Thayaham” Thirunelvely North, Jafna,
பொய்யகலத் தொழில் செய்தே - புவி போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் - பாரதி
நாடக அரங்கக் கல்லூரி வெளியீடு - 5
X
ஆசிரியர்:
வீ. எம். குகராஜா
துணை ஆசிரியர்: எஸ். ஜே. குமார்
A
நிர்வாகப் பொறுப்பு:
ம. சண்முகலிங்கம்
A
நிர்வாக உதவிகள் செல்வ. பத்மநாதன் சோ. தேவராஜா
தனிப்பிரதி 2.00
சத்தியம் OOOOOOO.
புதிய வாய்ப்புக்களும் முறையான பயன்படுத்தல்களும்
கலை, இலக்கியக்காரர்களுக்குள்ள இயல் பான நெருக்கடிகளைத் தவிர, வேறு பல நெருக்கடிகளும் இடைஞ்சல்களும் அண் மைக் காலங்களில் இருந்துவருகின்றன. மக்களிடமும் அகலாத பதட்டம் குடிகொண் டுள்ளது.
இதேவேளை, ரூபவாஹினியும், டவர் மண்டப நிர்வாகமும் தமிழ் நாடகங்களுக்கு வாய்ப்பளிக்க முன் வந்துள்ளதாகச் செய்தி கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்த நாடக இயக்கங்கள் தவறிவிடக் dialsTigil.
அதேபோல, ரூபவாஹினியும், டவர் நிர் வாகமும் தம்மை அணுகும் தரமான நாடக
இயக்கங்களை உதாசீனம் செய்துவிடவும் கூடாதென்பதைக் கூறி வைக்க விரும்பு 6aä GCmpub. -
நேரம் நல்ல நேரமா கட்டும். ஒளி பரவட்டும்.
- ஆசிரியர்

Page 3
அட்டைப்படம்
நெஞ்சை நெகிழவைத்த செய்தி
6 s
நிடிகர் நவரத்தினம் மார டைப்பால் அகால மரணமாஞர்" எந்த நவரத்தினம்? ஓ! சுன்னுகத் தின் "பெரிய நவமா?' 'கூடி விளையாடு பாப்பா" என்ற நாடக அரங்கக் கல்லூரியின் நாடகத்தில் *தரி வேடம் போட்டு எல்லோர் உள்ளங்களிலும் தன் ஆற்றலைப் பதித்த அந்த உயரிய நடிகன? ஒ நண்பனே! உனது அசைவுகளும் பேச்சுக்களும் நளினமும் நாம் மறக்கக் கூடியவைகளா?
*கந்தன் கருணை"யிலே சூரர் களில் ஒருவராக வேடமேற்ற நீ, உனக்கே உரித்தான, "சுட்டுவிரல் காட்டி எச்சரிக்கும் பா வனை யோடு 'வாசற்படி தாண்ட வந் தால் காலடிச்சு முறிப்பன்' என்ற பாடலைப் பாடி நடித்த விதம் இன்றும் எ மது மனத்திரையில் அழியாத ஒவியமாகிநிற்கின்றதே! மாசி மாதம் 22ந் திகதி நீ மறைந் தாய். ஆணுல், இதே மாதம் 15ந் திகதி நீயும் நாமும் யாழ். வீர சிங்கம் மண்டபத்தில் கூடினுேமே. * 49in ug. 69 ăbiT du mot G3) Lu Into Lü L u mo” *பொறுத்தது போதும் ஆகிய எமது இரு நாடகங்களையும் வெற் றிகரமாக மேடையேற்றினுேமே? * கூடிவிளேயாடு பாப்பா”விலே நீ உருவகப்படுத்திய "நரியையும், *" பொறுத்தது போதும்' நாட கத்தில் நீ உருவகித்த "மன்ருடி யையும் அத்தனை சிறப்போடு உரு
வகிக்கத் தக்க நடிகன் ஒருவன நாம் சந்திப்போமா?
காரைநகரில் மின்சார அத் தியட்சகராகக் கடமை யாற்றி வந்த உன்னை, நாட்டின் தென் பகுதிக்கு பதவி உயர்வோடு இட மாற்றம் தந்தனுப்ப உன து திணைக்களம் கருதிய செய்திகேட்டு உன்னை எம்மிடமிருந்து பிரிக்கப் போகிருர்களே என்று நாம் அங் கலாய்த்துக் கொண்டிருந்தோம். அந்தத் தற்காலிகமான பிரிவு மட்டும் எமக்குப் போதாதென்ரு உனக்கிந்தப் ப ய ண த்  ைத க் கொடுத்துவிட்டார்கள்?
நண்பனே! நீயிருக்கும் இடம் கலகலப்பு நிறைந்ததாக இருக் கும். கேலியும் கிண்டலும், பிற ரைப் பாவனைசெய்து காட்டு கின்ற அற்புத சக்தியும் உன்னிடம் நிறைந்திருக்கும். தூரப் பயணங் களின் போது எமது சோர்வை அகற்றுபவை ஆசிரியர் சண்முக லிங்கம் அவர்களும் நீயும் பொழி
கின்ற நகைச்சுவை மாரிகளல் லவா?
நாடக, அரங்கக் கல்லூரிக்
குப் பயிற்சிக்கென வந்து, அங்கு தமதாற்றல்களால் முக்கியமான வர்களில் நீயும் ஒருத்தனல்லவா? நீ வழங்கிய நாடகப்பயனை இழந்து விட்டோம் என்பதற்காக மட்டு மல்ல, பண்பான நண்பன் ஒரு
 
 

徽
வனை இழந்துவிட்டோம் என் பதற்காகவும் நாம் கலங்கி நிற் கின்ருேம்.
உனது பிரிவை சுன்னகத்தில் வாழுகின்ற உன் உயிர்த்தோழர் கள் எவ்வாறு தாங்கிக்கொண் டிருக்கிருர்கள்? சமூக உள்ளடக் கத்தோடு, தெளிவான தீர்வுகளைக் கூறுகின்ற பல நாடகங்களைச் சுன் னகம் இளந்தென்றல் மன்றத் தில் நீயும் உனது நண்பர்களும் சேர்ந்து தயாரித்தீர்களே.
நீ மேடையில் தோன்றுகின்ற போதெல்லாம் "பெரிய நவம்' என்று சுன்னகத்தில் உனது ரசி கர்கள் கூறிக் கரகோஷமெழுப் புவதை யார் மறப்பார்? சுன்னு கம் இ ரா ம நா த ன் கல்லூரித் திறந்தவெளி அரங்கிலே 1974ம் ஆண்டு நிகழ்ந்த சர்வதேசக் கூட் டுறவாளர் தினவிழா மேடையிலே உனது நண்பர்களுடன் சேர்ந்து நீ நடித்த நாடகத்தில் உனது பங்களிப்பை எண்ணி வியக்கின் ருேம். ஒரு முழுப்புகையிலையுடன் ஒரு வாங்கில் இருந்தபடியே நாட கம் முழுவதும் நடித்து உனது பாத்திரத்தை நீ உருவகித்தவிதம் வளர்ந்துள்ள இன்றைய நாடகக் காலகட்டத்திலும் போற்றுதற் குரியதல்லவா?
இளந்தென்றல் மன்றத்தின் தலைவராகப் பலமுறை தேர்ந் தெடுக்கப்பட்டு கலைப்பணியும், சமுதாயப் பணி யு மாற்றிய நண்பனே!
கடந்த தைப்பொங்கல் தினத் தன்று "பொறுத்தது போதும்'
3
நாடகத்தைச் சு ன் ஞ கத் தி ல் மேடையேற்ற வேண்டுமென்றும், கலைஞர்களே அப்பொழுது கெளர விக்க வேண்டுமென்றும் நீ எடுத்த முயற்சிகளும், அவை நிறைவேற முடியாத நிலையில் அரசியல் பதட் டங்கள் இருந்ததையும் நினைத்துப் பார்க்கின்ருேம். நீ நடித்துவந்த இதே நாடகத்தை நீயில்லாத நிலையில் பிறிதொரு தடவை சுன் ஞகத்தில் மேடையேற்ற எம்மால் முடியுமா? கலக்கமின்றி உனது நண்பர்கள் மேடையில் இயங்கு alsTriasantit?
வாழுகின்றபோதே கெளர விக்கப்படவேண்டிய கலைஞர்க ளில் உன்னையும் ஒருவனுக நாம் எண்ணியிருந்தோம். O 607 5) வாழ்க்கை இவ்வளவு குறுகியதாக அமையுமென்பதை எவ்வாறு நாமறிவோம்?
நெறியாளர் தாசீசியஸ்போல் பேசிக்காட்டி, அதிபர் சண்முக லிங்கம் போல் நடந்து காட்டி, எம்மை மகிழ்வித்த நண்பனே! இன்று பேச்சிழந்து, நடையிழந்து கண்ணிர்கூட வரமறுக்கும் கவலை நிலையை எமக்குத் தந்தனையே!
மனந்தேறி ஆறுதற்படுங்கள் என்று உனது துணைவியாருக்கும், ஐந்து பிள்ளைகளுக்கும் நாம் எவ் வாறு நண்பனே கூறமுடியும்? உனது குடும்பத்திற்கு நீயில்லை; சுன்னுகம் இளந்தென்றல் மன்றத் துக்கு நீயும் இல்லை, உன்னேடு கூடப்பாடுபட்ட நண்பன் சபா. சுப்பிரமணியமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவன் போக

Page 4
4
தொடர்ந்து நீ யும் போய்விட் அனுதாபத்தைத் தவிர வேறென் டாய், ஆணுலும் இளந்தென்றல் ணத்தை நண்பனே நாம் வழங்கப் மன்றம் தூங்கக்கூடாது. உன்னைப் போகின்ருேம்? போன்ற பல  ைர உருவாக்க
வேண்டுமென்று நாம் ஆசைப் போதும்!
படுகின்ருேம். உன்நாமம் நிலைக்கட்டும்!
சென்றுவா!
உ ன து குடும்பத்தார்க்கும்
நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த (ஆசிரியர்)
ஈழநாடு 17-2-80 பத்திரிகையில் வந்த * பொறுத்தது போதும் ' நாடக விமர்சனத்திலிருந்து -
** நசுக்கப்படும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து சிறு சலுகை யுடன், சம்மாட்டியாரிடம் நேரடியாக கடமை புரியும் மன்ருடியாக வரும் க. நவரத்தினம், அனுதாபம் ஒரு புறம், கடமை ஒரு புறம், தன்னே சம்மாட்டியிடத்திலும், தொழிலாள நண்பர்களிடத்திலும் இருந்து காப்பாற்றும் நிலை ஒரு புறமாக, மூன்று கோணத்தில் நின்று நடித்த நடிப்பு பலே ஜோர். சம்மாட்டியை தன்மீது தாங்கியபின் நிமிர்த்து தன் நாரியைப் பிடிக்கும் பாவனை வரவேற்கத்தக்கதுமல்லா மல், சம்மாட்டியின் அநியாயத்தை தன்மூலம் வெளிப்படுத்திக் காட்டும் சித்தரிப்பும் நன்று.”*
kLkkk kOO O O DL OO kk Ok k k DkyOOYOOLOOOy
 

VV, O ?\ ހޗް& -> மனித நவரத்தினம் <- D. சண்முகலிங்கம் (நா. அ. கல்லூரி அதிபர் ) LLLLLLLLS LS LLLGLL S SLGLGJSG L SMSS LLLLLLLLJLS LLGLLL SLGLGLS LGLS LG
நல்ல நண்பன், நல்ல சக பாடி, நல்ல ஆலோசகன் நல்ல உரையாடல் பண்புகொண்டவன் நல்ல நெ ஞ் சு  ைடயோ ன், நிமிர்ந்த நோக்குடையோன், நேர் கொண்ட பார்  ைவ யி ன ன், நிமிர்ந்த ஞானச் செருக்குடை யோன், எதற்கும் அஞ்சாப் பண் புடையோன், நகைச்சுவையாளன் நல்ல நடிகன், பொதுநல நோக் குக் கொண்டவன்; சுருங்கக்கூறின் நல்ல மனிதன்; இவை அனைத்தும் அன்பன் நவரத்தினத்தின் அரும் பண்புகள்.
இச்சீரிய பண்புகளால் தன்னை நினைக்கவைத்து, அந் நினைவுகளை எம்நெஞ்சங்களில் நிலைக்கவைத்து நெஞ்சங்கள் நெக்குருகி நயனங் களே நனைக்கவைத்து, ஆற்றது அழுது புலம்பவைத்து, வையத்து வாழ்வதனை முடித்துக் கொண்டு, போர்க்களத்தே மாண்ட வீரனைப் போல், பொன் நெல் மணிக் களத்தே, நண்பன் பொன்னுயிர் நீத்தான்.
இடுகுறிப் பெயராய் வைக்கப் பட்ட "நவரத்தினம்’ எனும் தன் நாமத்தை, உயர் பண்புகளாலும் சி ற ந த எண்ணங்களாலும், உயர்ந்த செயல்களாலும், "கார ணப் பெயரோ என நாம் கருதும் வண்ணம் பண்பாள னுய் வாழ்ந்து *வையத்துள் வாழ்வாங்கு வாழ் தல்' எனும் தத்துவத்துக்கு இலக்
கணம் வகுத்துவிட்டுச் சென்றுள் ளார் நண்பர்.
உயிர் பிரியுமுன்னர், கலையு லகிலிருந்து பிரியாவிடை பெறு வதுபோல் அவர் 22-2-82 திங் களன்று, தாம் எம்முடன் கூடி ந டி த் த இரு நாடகங்களிலும் நடித்துச் சிறுவரின் நெஞ்சங்களி லும் பெரியோர் இதயங்களிலும் நிலேயான இடத்தைப் பிடித்துக் கொண்டு பிரிந்துவிட்டார். முதல் திங்கள் மேடை முழுவதும் ஆடித் திரிந்த உடல் அடுத்த திங்கள் பெட்டிக்குள் கட்டையாய் அடங் கிக்கிடந்த காட்சி கல் நெஞ்சை யும் நெக்குருகச் செய்தது.
ம ர ன த்  ைத யு ம் எட்டிக் காலால் உதைக்கக்கூடிய நெஞ் சுரங் கொண்ட நவ ரத் தினம், மரணத்தைத் தழுவிக்கொண் டார் என்ற செய்தி இப்போது தான் எம் இதயங்களில் "உண்மை, என்ற நிலையில் உ  ைற க் கத்
தொடங்குகிறது.
நாடக, அரங்கக் கல்லூரியின் முதலாவது இழப்பு, இத்தகைய தோர் பேரிழப்பாக அமைந்து விட்டதே! ஈடுசெய்யமுடியாத இழப்பாய்விட்டதே ஒரு நடிக னுக்கு ஈடாக எவரும் ஒருவர் வரலாம், ஆனல் ஒரு "மனிதனை" ஈடுசெய்ய இன்னுமொரு வெறும் மனிதஞல் முடியாது. -
நாடகத்தின் பால் இருந்த பற்றுதலாலும் ஆர்வத்தாலும்

Page 5
6
நாற்பது வயதில், தன்னிலும் இளைஞராக இருந்த திரு. அ தாசீசியரிடம் நாடகப் பயிற்சி பெறுவதற்கு நாடக, அரங்கக் கல்லூரியோடு தன்னை இணைத்துக் கொண்ட பண்பாளன் நவரத் தினம், இதற்குமுன்னரே நடிக ஞக, நாடக ஆசிரியனுக, நெறி யாளனுகத் தன்னுரரில் பெயரும் பெருமையும் பெற்றிருந்தும், "கற்றது கைமண்ணளவு" என்னும் உயரிய பண்பு இருந்தமையால், புகழில் பூரித்து இருக்காது, கால டியிலிருந்து கற்கும் உளப் பக் குவத்தோடு வந்தார்டு உள்ளத்து உயர்வால் தான் கற்றும், உயரிய செயல்களால் கற்பித்தும் எம் மோடு இரண்டறக்கலந்தார்.
நாடக, அரங்கக் கல்லூரியின் முதல் இழ ப் பு இதுவென்ருல், நாம் இழப்பதற்கும் பெறுவதற் கும் இன்னும் பல உண்டு என் பதை நாம் அறிவோம். ஆணுல் அவரது குடும்பத்தைப் பொறுத்த வரையில் இது முதலும் முடிவு மாண இழப்பு. கணவனை இழந்த கைம்பெண்ணுக நிற்கும் இல்லத்
★
தரசியும் தந்தை யை இழந்த ஐந்து தனையரும் இனி இழப்ப தற்கு என்ன இருக்கிறது? நிழல் மரமாக நி ன் று ஆதரவுதந்த அவர்களது ஒரே செல்வம் சரிந்து, எரிந்து சாம்பலாகிவிட்டது.
"தலைவன் இறந்தால் குடும் பம் அஞதை" என்னும் நிலையினை உடைய அமைப்பு எம்மத்தியில் இருக்கும்வரை, இன்னும் ஆயி ரம் ஆயிரம் நவ ரத் தினங்கள் அஞதைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கும் அவலநிலை நீடிக் கத்தான்செய்யும்.
அவல நிலையைக்கண்டு அங் கலாய்த்து ஆவதென்ன? கூடிக் குழறி அழுதும் கூட்டம் கூட்டிப் பேசியும் பயனில்லை. கொடுங்கூற் றென வரும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் கலைஞர்களும் மனிதர்களும் ஒன்றுகூடி, மேலும் ஒரு 'அஞதை இல்லம்" தோன் ருது தடுக்க முயல்வோம்.
நண்பன் நவரத்தினம், நாமி ருக்கும் வரை, அவரது இல்லம் இருக்கும்வரை வாழட்டும்.
நிதி சேகரிக்கப்படுகின்றது
நவாலி தெற்கைச் சேர்ந்த நாடகக் கலைஞரான ராம் சின்னத் துரை அவர்கள் மறைந்ததையொட்டி அன்னரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குமுகமாக அவரது நண்பர்களால் நிதிசேகரிக்கப் படுகின்றது. நிதியுதவி செய்ய விரும்புகின்ற நண்பர்கள்,
க. நாகலிங்கம் அல்லது ஐசாக் இன்பராசா அவர்களுக்கு
நவாலி தெற்கு,
LDT6yisi. Tuli.
என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்
றனர்.
-ஆசிரி ur.jrif*

※灘談談談談灘談談談談談灘談談灘談談談談談談談談談
செட் டி குளத் தி ல் -
5 GT III uis) fusi 3505.j5J 1515 sh
செட்டிகுளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் வசிக்கும் கலைஞர் களுக்கான மேடை நாடகக் களப் பயிற்சி செட்டிகுளம் மகாவித்தி யாலயத்தில் கடந்த 6-1-1982 தொடக்கம் 10 - 1 - 1982 வரை நடைபெற்றது.
முப்பத்தைந்துக்கு மேற்பட்டோர். பயிற்சியாளர்களாகக் கலந்து கொண்ட இக்களப் பயிற்சியின்போது விரிவுரையாளர்களாகவும், செய்முறையாளர்களாகவும், திரு. ம. சண்முகலிங்கம், இ. முருகையன் இ. சிவானந்தன், சி. மெளனகுரு, வீ. எம். குகராஜா, ந. வீரமணி ஐயர், எல். எம்.றேமன், அ. பிரான்சிஸ் ஜெனம், க, சிதம்பரநாதன், ஆகியோர் கலந்துகொண்டனர். பயிற்சிகளுக்கு அனுசரணையாக பொன் பூரீ வாமதேவன் இசைக்கருவிகளை மீட்டி உதவிஞர்.
செட்டிகுளம் உதவி அர சாங் க அதிபர் பதிவுக் கலாசாரப் பேரவை இக்களப் பயிற்சியை ஒழுங்கு செய்திருந்தது.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில்.
நாடக, அரங்கக் கல்லூரியின் தயாரிப்புக்களான சி. மெளன குருவின் "சங்காரம்', நா. சுந்தரலிங்கத்தின் "அ ப சுர ம் ஆகிய இரு நாடகங்களும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட அரங்கில் தை மாதம் 17-ம் 18-ம் திகதிகளில் நடைபெற்றன.
பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களின் தமிழ் நாடகச் சங்கம் சங்காரத்தையும் சங் கீத, நடன சங்கம் அபசுரத்தையும் மேடையேற்றுவித்தன.
"சங்காரம் மட்டக் களப்பு வடமோடி ஆடல் பாடல்களைக் கொண்டது "அபகரம் மேற்கத்தைய அபத்த நாடகச்சாயலைக் கொண்டது. இருவேறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் இந் நாடகங்கள் இரண்டும் பல்கலைக்கழக மாணவர்களால் வரவேற்று ரசிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இவ்விரு நாடகங்களையும் சி. மெளனகுரு நெறிப்படுத்தியுள்ளார்.
濠 添 # 濠 ※※ ※※ 濠 濠 濠 ※ 濠濠港 畿 濠 濠 濠梁 နိူင္ခဲ့ဒွို 濠 727 ဒို့နွှဲန္နီနွှဲ LY YYLLS 0Y 0LL 0LL 0LL LSL 0LLS 0LLY0LLL S 0LLSLS0LLLLL 0L 0LLSL 0LS 缀游 浣乙等、苓名 缀 ÑS 7ZNNS

Page 6
談潑談談談談談談談談際際灘灘灘灘灘灘談談際灘激激撥 LQIŤ ID6ĎTLIlj5Šá.
டவர் நாடக அரங்க நிர்வாகத்தினர் தை மாதம் 10-ம் திகதி தொடக்கம் 26-ந் திகதி வரை, தமது மூன்ருவது ஆண்டு தேசியக் கலைப் பெருவிழாவை நடாத்தினர். இவ்விழாவில் இம்முறை நான்கு தமிழ் நாடக நிகழ்ச்சிகள் முதல்முறையாக இடம்பெற்றன.
நடிகமணி வி.வி. வைரமுத்து குழுவினரின் 'அரிச்சந்திர மயான காண்டம்' நாடக, அரங்கக் கல்லூரியின் "சங்காரம் வேல் ஆனந் தனின் தேரோட்டி மகன் (நாட்டிய நாடகம்) விஜயா ம் பி ைக இந்திரகுமாரின் "சண்டாளிகா' (நாட்டிய நாடகம்) ஆகிய தரமான நிகழ்ச்சிகள் மேடையேறின.
56jTG)I QIij56i - 65T2aj3.Tijui.
இலங்கைத் தொலைக்காட்சிச் சேவைகள் அண்மையில் ஆரம்பிக் கப்பட்டுள்ளதை வாசகர் அறிவர்.
ரூபவாஹினி அதன் பெயர் என்பதும் தெரிந்தவிடயமே. இச்சேவையின் நாடகங்களை ஒளிபரப்புகின்ற திட்டத்திற்கமைய இலங்கை அவைக்காற்றுக் கலைக்கழகத்தினரின் ‘கண்ணுடி வார்ப்புக்கள்" ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடக ஒளிபரப்புக்குப் பொறுப்பாக பிரபல சிங்கள நாடகத் தயாரிப்பாளர் தம்மஜாகொட அவர்களும், தமிழ் நாடகப் பகுதித் தயாரிப்பாளராக பி. விக்னேஸ்வரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள் ளார்கள்
வானதாதன் வருகின்ருன்
கடந்த 27-12-81-ம் திகதி அளவெட்டி அலுக்கை சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்ற ஒளி விழா நிகழ்ச்சியில் "வானதூதன் வருகின்ருன்' என்னும் நாடகம் மேடையேற்றப்பட்டது. ஜே. ஜோசேப் பி. விமலன், ஆ. ஜோசேப், ஜீ. பீ. வில்லியம், எஸ். ஜோன், எஸ். நாதன், ஜே. கிறிஸ்ரி, ஜே பிரான்சிஸ், பிற்றர் கீதா, எம். ஜாக் குலின் ஆகியோர் சேர்ந்து இந்நாடகத்தை திறம்பட நடித்தார்கள். நவீன உத்திகள் கையாண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தை அள வெட்டி அலுக்கை கத்தோலிக்க இளைஞர் மன்றத்திற்காக எஸ். ஜே. குமார் நெறிப்படுத்தியிருந்தார்.
※ ※ ※ ※ 濠 濠 ※ 濠 濠 濠 濠 S熬 濠 ※ 濠 濠 S藻 S繁 S ※ ※ al ※ LLLLLLLLS LLLLLLO OLLL LLLLLLLLS LL LOLOLS LLLLLLLLYL LLLLL OLLL 0LSL0LLLL0LLLLLLL LLLLLLL cLOLcL 0Lc cL 0LcLL0 S2A72S 7
 

9) _G)35 J5TL_35 9IJTßI35 Q)IJIG) T1)I |
ம. சண்முகலிங்கம்
கிரேக்கத்தின் நாடக விழாக்கள்:
உலகில் முதன்முதலில் ஒழுங் கான முறைமையில் நாடகங்களே எழுதித் தயாரித்து, மக்கள் முன் னிலையில் மேடையேற்றி வந்த நாடாகக் கிரேக்கம் விளங்குகிறது. அவ்வாறு நாடகத்துக்கு முக்கி யத்துவம் கொடுத்து, அக்கலையை வளர்ப்பதற்கு அந்நாட்டுக்கு உத வியது. ஆண்டுதோறும் அதென்ஸ் நகரில் நடைபெற்றுவந்த தயோ னிசிய விழாக்களாகும். இவ் விழாக்களில் நாடகங்கள் மேடை யேற்றப்பட்டன.
அ தெ ன் ஸ் மக் களை ப் பொறுத்தமட்டில் அரங்கம் மிக இன்றியமையாத ஒன்ருக இருந் தது. காரணம் சம ய, சமூகக் கரணத்தின் 2éféré5L Dr5 நாடக அரங்க நிகழ்ச்சிகள் விளங் கின. நா ட க ம் தினமும் நடை பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறித்த சில நாட்களில் மட்டுமே நாடகங்கள் நடிக்கப்பட்டன.
தயோனீசியஸ் விழாக்கள் தை மாதப் பிற்பகுதியிலும் மாசி முற்பகுதியிலும் பின்னர் பங்குனி இறுதியிலும் சித்திரை ஆரம்பத் திலும் நடத்தப்பட்டன. "லெனே' (Lenaea) விழா:
தை - மாசியில் நடைபெறும் விழா பழமையானதாகும். இவ் விழா "லெனே' என அழைக்கப்
பட்டது. காலப்போக்கில் இவ் விழா மகிழ்நெறி நாடகங்களை நடத்துவதற்கென ஒதுக்கப்பட்
l-gil.
தயோனீசியப் பெருவிழா: (Great or City Dionysia)
பங்குனி - சித்திரையில் நடை பெறும் இரண்டாவது விழாவே மிக முக்கியமானதாகக் கருதப் பட்டது. இது தயோ னீசியப் பெருவிழா' அல்லது "தயோனி சிய நகரவிழா" என அழைக்கப் பட்டது. இவ்விழாவில்தான் அவ லச்சுவை நாடகங்கள் முதன்மை பெற்றன. ஈஸ்கலஸ், சோபோகி லிஸ், யூரிபிடிஸ் போன்ற கிரேக்க நாடகாசிரியர்கள் தோன்றுவதற் கும் இவ்விழாவே வழிவகுத்தது. இவ்விழாவில் நாடகாசிரியர்கள் பரிசுக்காகத் தமது நாடகங்களைத் தயாரித்துப் போட்டியிட்டனர்.
இவ்விழாவின் மேன்மையும் அழகும் ஆடம்பரமும் கிரேக்கத் தின் சக ல பகுதிகளிலிருந்தும் மக்களைக் கவர்ந்தது. இவ்விழா நடைபெறும் ஒருவாரம் முழுவ தும் விடுமுறை காலமாகக் கருதப்
பட்டது. வர்த்தக நடவடிக் கைகள் நிறுத்தப்பட்டன; நீதி மன்றங்கள் உட்பட, அரசாங்க
அலுவலகங்கள் யாவும் மூடப்
பட்டன.

Page 7
O
A. ஆரம்பத்தில் பார்வையாளர் இவ்வரங்கிற்கு இலவசமாக அனு மதிக்கப்பட்டனர். பின்னர் சிறு தொகை அறவிடப்பட்டபோது, பனம் செலுத்த வசதியற்றவர் களுக்கு இலவசமாக நுளை வு ச் சீ ட் டு கள் கொடுக்கப்பட்டன: (எமது நாட்டில் இலவசக் கூப்பன் பின் உணவு முத்திரையாக மாறிய வரலாற்றை இச் சந்தர்ப்பத்தில் நினையாது இருக்கமுடியாது)
அரசு நடிகருக்கு வேதனம் கொடுத்தது. தனித்தனி நாடகத் துக்கான தயாரிப்புச் செலவை ஒவ்வொரு செல்வந்தர் பொறுப் பேற்றனர். அத்தகைய கொடை
யாளிகளுக்கு " கோ றி க ஸ் (Choregus) GT Gör p L Ł - L Lh கொடுத்துக் கெளரவித்தனர்.
(இத்தகைய தேவதைகள்' இன்று எம் நாட்டில் தோன்றினுல் எம் வதை பாதிகுறையும்.)
இப்பெருவிழா ஐந்து அல்லது ஆறுதினங்கள் ந  ைட பெறு ம். முதல்நாள் விழாவில் தயோனி சியசுக்குரிய குருக்கள் தலைமை தாங்கித் தமது, கப்பல் வடிவில மைந்த ஊர்தியில் முன்செல்ல ஒரு பெரிய ஊர் வல ம் நடை பெறும். அத்துடன் பலவகை யான விளையாட்டுக்களும் பொது வான கேளிக்கைகளும் நிகழ்த்தப் படும். இரண்டாவது நாளில் அல்லது மூன்ருவது நாளில் "டித் திரும்' போட்டிகள் (கூட்டுப் பக்திப்பாடல்கள்) நடைபெறும். இறுதி மூன்று தினங்களும், ஆண்டு தோறும் பரிசுக்காகப் போட்டி யிடும் நாடகங்கள் நடைபெறும். (இது 2500 ஆண் டு களு க் கு
முன்னர் கிரேக்கத்தில் நடந்தது. எமது நாட்டில் 1979-ம் ஆண்டுக் கான நாடகப் போட்டிகள் இவ் வாண்டில் நிச்சயமாக நடக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.)
விழா வின் இறுதி மூன்று நாளும் ஒவ்வொரு நாடகாசிரியர் மூன்று அவலச்சுவை நாடகங்களை
யும் ஒரு "சட் டயர்' (Satyr) நாடகத்தையும் மேடையேற்ற வேண்டும். இந்த நான்கு நாட
கங்களும் ஒரே ஐதிகத்தைக் கூறு வதாக அல்லது ஒரே பாத்திரத் தொகுதியைக் கொண்டதாக இருந்தால் அவை ஒரு "டெட்ரா லொஜி" (Tetralogy) எனப்படும். நான்கு நாடகத்தின் தொகுதி அல்லது "நாநாடகம் ' என்பதே இதன் பொருளாகும். 'சட்டயர்' நாடகம் தவிர்ந்த ஏனைய மூன்று அ வ லச் சு  ைவ நாடகங்களைக் கொண்ட தொகுதி 'ட்ளாலொஜி" எனப்படும். மூ ன் று நாடகங் களின் தொகுதி என்பது இதன் பொருள்.
போ ட் டி யி ல் பங்குபற்று
வதற்குத் தகுதிபெறும் நாடகா சிரியர்களைத் தெரிவுசெய்யும் பொறுப்பு "ஆர்க்கன்" (Archon) என அழைக்கப்படும் ஒரு அதி காரியிடம் உண்டு. அ தெ ன் ஸ் நகரில் இருந்த ஒன்பது பிரதான நீதிபதிகள் "ஆர்க் க ன்" என்று அழைக்கப்படுவர். அவர்களில் ஒருவரே நாடகாசிரியரைத் தெரி யும் பணியைப் புரிந்தார்.
மூன்றுநாள் நடைபெறும் நாடகங்களையும் கடுமையாகவிமர் சிப்பதற்கும் பரிசுகளைத் தீர்மா
 

னிப்பதற்கும் ஒரு நடுவர் சபை தெரியப்படும். இந்த நடுவர்குழு திருவுளச் சீட்டுமூலமே தெரியப் படும். நாடகங்களை விமர்சிப்பதற் கும் தீர்ப்புக் கூறுவதற்கும் இக் குழுவுக்குப் போதிய அவகாசம் கொடுக்கப்படும். அரசின் தலை யீடோ, பிரதேசப் பிடுங்கல்களோ இருக்கவில்லை.
அவலச்சுவை நாடகங்களுக் கான போட்டிகளை ஆரம்பித்து
அரை நூற்ருண்டின் பின் ன ர், அதென்ஸ் மகிழ்நெறி நாடகங்க ளுக்கான போட்டியையும் இணைத் துக் கொண்டது. ம கி ழ் நெறி நாடகங்களுக்கான முதலாவது போட்டி கி. மு. 486-இல் ஆரம் பித்தது. ஆரம்பத்தில், வெவ் வேறு நாடகாசிரியர் தயாரிக்கும் ஐந்து நாடகங்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. பின்னர் ஒவ் வொருநாளும் அவலச்கவை நாட கங்கள் நடைபெற்று முடியப் பிற்பகலில் ஒரு மகிழ்நெறி நாட கம் வீதம் நடத்தப்பட்டது.
அதீனிய நாடக விழாவில் பகற்பொழுதில்தான் நாடகங்கள் நடத்தப்பட்டன. அ தி கா லே யிலேயே நாடகம் ஆரம்பித்து விடும். பொழுதுபடுமுன் நாடகம் நடித்து முடிக்கப்படும். ஒளி வச திகள் அற்ற புராதனகாலத்தில், நாட்டு மக்கள் அனைவரும் கூடி யிருக்கும் சனத்திரள் மத்தியில் பகற்பொழுதே பயனுடையதாக அமைந்தது. "ஊர்ப்புற தயோனீசியா" (Rural Dionysia)
இவ் விழ ஈ அட்டிக்காவின் (Attica) மாகாண நகரங்களில்
மார்கழி மாதத்தில் நடத்தப்பட டது. அதென்சில் பரிசுபெற்ற நாடகங்கள் இங்கு நிகழ்த்தப் பட்டன. அத்துடன் புதிய நாட காசிரியர்களும் தமது நாடகங்களை மேடையேற்ற இது வாய்ப்பணித் தது. இதஞல் புதிய நாடகங்களும் நாடகாசிரியர்களும் தோன்றுவ தற்கு வாய்ப்பேற்பட்டது. நாடக ஆசிரியர்கள்:
தயோனீசிய விழ r க்க ள் மூன்று தலைசிறந்த அவலச்சுவை நாடகாசிரியர்களைத் தோற்றுவித் தன. இவர்கள் மொத்தத்தில் முன்னூறு நாடகங்களை எழுதி யிருந்தனர். அவற்றில் இ ன் று முப்பத்திமூன்று மட்டுமே கிடைக் கப் பெற்றுள்ளன. ஈஸ்கலஸ் என் பார் எழு தி ய நாடகங்களுள் ஏழும், சோபோகிலிஸ் எழுதிய வற்றுள் எட்டும், யூரிபிடிஸ் எழு தியவற்றுள் பதினெட்டும் எஞ்சி யுள்ளன. இவர்களைவிட மகிழ் நெறி நாடகங்களை அரிஸ்டோ பேன்ஸ் என்பாரும் பின்னர் மெனுன்டர் என்பாரும் எழுதி யுள்ளனர். இவர்களது நாடக ஆக்கங்கள் பற்றிச் சிறிதேனும் அறியாது நாம் கிரேக்க நாடக வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அ த் துட ன் உ ல க
நாடக, அரங்க வரலாற்றின் அடித்தளத்தையும் அறியமுடி t! Ifrgi).
F6iv3, 5vaiv (Aeschylus) &G). Gyp. 525 - 4 5 6:
இவர் கிரேக்கத்தில் எலூசிஸ் (Eleusis) எனும்மிடத்தில் பிறந்து அ தெ ன் ஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். இவர் தொண்ணுாறு

Page 8
2.
நாடகங்கள் எழுதினர். அவற் றுள் ஏழுமட்டுமே எஞ்சியுள்ளன. ஒரே கதைப்பொருளைக் கொண்டு மூன்று நாடகங்களாக எழுதிய வற்றுள் "ஒறெஸ்டியர்" என்னும் * ட்றைலோஜி (மூன்று தொடர் நாடகம்) மட்டுமே உள் ளது. அதோடு இணைந்த "சட்டயர்' நாடகமும் கிடைக்கவில்லை.
" ஒறெஸ்டியா முக்கூட்டில் "9 & G) ud ib sat går ’ (Agamemnon) 'd G. FirGunth” (The Choephori) og Gud Gofu "Giv” (The Eumenides) ஆகிய மூன்று நாடகங்களும் உள் ளன. இவற்றைத் தவிர அவரது முதலாவது நாடகமான "சப்ளை ugör a 6in) (The Suppliants) "Guri 6Əu 16öz 6jo” (The Persians) (6). Gyp. 472) "ப்ருேமீதியஸ் பவுண்ட் " 6G). (p. 470 (Prometheus Bound) த செவிண் எகென்ஸ்ட் தீபிஸ் S. Qp. 467 (The Seven Against Thebes) ஆகிய மட்டுமே எஞ்சி யுளளன.
கிரேக்கத்தின் அவலச்சுவை நாடக மரபைப்பேணி நாடகம் எழுதிவந்த ஈஸ்கலஸ், சமகாலப் பிரச்சினையை வைத்தும் ஒரு நாட கம் எழுதினர். இவர் வாழ்ந்த காலத்தில் அதீனிய அரசு பகை நாடுகளின் தாக்குதல்களைப் பல தடவை வலிமையோடு எதிர்த்து வெற்றி கொண்டதன் காரணமா கவும், ஈஸ்கலஸ் நேரடியாகவே யுத்தத்தில் ஈடுபட்டுத் தீரத்தோடு போரிட்டதன் பயஞகவும், இவ ரது நாடகங்கள், ப க ட் டு ம், ஆடம்பரமும், கம்பீரமும் இயல் பாகப் பொருந்தப்பெற்ற உயர் LD nr * 6F6DD கொண்டவையாக
*த பேரீசியன்ஸ்" என்னும் நாடகத்தில் ஈஸ்கலஸ், அக்காலக் கிரேக்க மக்களுக்கு மிக அணித் தான சமகாலப் பிரச்சினையை, உயர் நிலையிலிருந்து ஐதிக ஆடம் பரச் செழுமையோடு கூறுகிருர், அதாவது, தம்மைத் தாக்கிய பார சீகக் கடற்படையை அதீனியர், ‘சாமிஸ்" என்னும் இ ட் த் தி ல் எதிர்த்துத் தீரத்தோடு போராடி நாட்டைக்காத்த வீரத்தை விப ரிக்கின்ருர்,
இருப்பினும் அக்காலமரபின் படி, ஈஸ்கலஸ் தெய்வத்துக்கும் மனிதனுக்கு மிடையிலுள் ள தொடர்பினைக் கூறுவதிலேயே முக்கிய நம்பிக்கை கொண்டிருந் தார். கிரேக்க அ வ ல ச் சு  ைவ நாடகம் அதனையே தனது இலக் கணமாகக் கொண்டிருந்தது. ஈஸ் கலஸ் எழுதிய "ப்ருெமீதியஸ் பவுண்ட்" என்னும் நாடகம் மனி தனுக்கும் இறைவனுக்குமிடை யில் உள்ள தொடர்பினை யே காட்டுகிறது. அண்டசராசரங்க ளின் மத்தியில் மனிதனை நிறுத்தி அவற்றுடன் மனிதனுக்குள்ள தொடர்பைக்கூறும் கதைப்பொரு ளைக் கூறுவதே அவலச்சுவை எனக் கருதினுர், அவலச்சுவை, சமூக உறவுகள் சம்பந்தப்பட்டதல்ல, அது தர்மத்துக்கும் அதர்மத்துக் கும் இடையில் உள்ள நிலையான பிரச்சினையைக் கூறுவது எனக் கருதினர். அது அற்புதங்களை உள் ளடக்கியதாக இருக்கும். அவலச் சுவையில் அதிமானுடங்கள் இயற் கையின் ஒர் பகுதியாக எண்ணப் பட்டன் : ம னி த னு ம் விதியும் பிரிக்கமுடியாப் பிணைப்புக்கொண் டனவாக இரு கீ கு ம். இதுவே

கிரேக்க அவலச்சுவை நாடகங் களின் அடிப்படை இயல்பாகும். இதனைப் புரிந்து கொண்டால் தான் கிரேக்க அவலச்சுவை நாட கங்களின் பிறபண்புகளை நாம் பூரணமாகப் புரிந்து கொள்ள (Մ)ւգեւյւհ.
எனவேதான் "விதி" சாபம்" என்னும் ஐதிகங்களை மையமாகக் கொண்டு பல கிரேக்க அவலச் சுவை நாடகங்கள் எழுதப்பட் டுள்ளன. "விதி தலையிடும்போது அதிமானுடங்களும் தெய்வங்க ளும் தேவதைகளும் உலகிற்கு வந்து மக்களோடு மக்களாகக் கலந்து, உலவி, மக்களைக் காப் பதையும் வதைப்பதையும் காண் கிருேம். கிரேக்கத்தின் அவலச் சுவைப் பாரம்பரியம் எமக்குப் புதியதாகவோ புரியாததாகவோ இருக்கமுடியாது. எமது இதிகாச புராண நாயகர்கள் யாவரும் அதி மானுடர்களாகவே உள்ளனர். அவர்களும் அதர்மத்தை அழித் துத் த ர் மத்  ைத நிலைநாட்டத் தானே தோன்றுவதாகக் கூறி ஞர்கள். இன்று உலகில் எங்கும், எல்லாவற்றிலும் அதர்மம் அள வுக்கு அதிகமாகிவிட்டதாலோ என்னவோ, அந்த அதிமானுடர் கவி அவதரிக்கக் காணுேம்:
நாட்டில் வழிவழி வந்த ஜதி கங்களே நாடகமாக்கும்போது நாடகாசிரியர்களுக்கும், மக்களுக் கும் சில வசதிகள் கிட்டிவிடுகின் றன. இதனைக் கருத்திற்கொண்டே ஒரு கிரேக்க மகிழ்நெறி நாட காசிரியர் பின்வருமாறு கிண்ட லாகக் கூறி அங்கலாய்க்கிருர்:- "அவலச்சுவை நாடகம் எழுது
3
பவர் அதிட்டக்காரர். நாடகம் தொடங்கும்போதே பார்வையா ளருக்குக் கதை ப் பொருள் தெரிந்துவிடும். அவர்களின் ஞாப கத்தைச் சற்று உலுப்பிவிட்டால் போதும். நாடகாசிரியர், ஈடிப் பஸ் என்றதும் பார்வையாள ருக்கு மிகுதி அனைத்தும் நினைவில் ஓடிவரும்; அவனது தாய், தந்தை, பிள்ளைகள் அனைவரையும் நினைத் துக்கொள்வதோடு, ஈடிப்பசுக்கு" நடந்தவற்றையும் இனி நடக்க இருப்பவற்றையும் அறிந்தவராக வீற்றிருப்பர். ('இவ்வாறுதான் எமது பாரம்பரியக் கூத்துக்களும் நிரபுவழிவந்த ஐதிகங்களை நடித் ததஞல் மக்களுக்கும் நடிகருக்கு மிடையில் நெருக்கம், பிணைப்பு ஆகியன இருந்ததை நாம் அறி வோம்.)
அந்தக் கிரேக்க மகிழ்நெறி நாடகாசிரியர் தொடர்ந்து பின் வருமாறு கூறுகிருர்: "ஆணுல் மகிழ்நெறி நாடகங்களை எழுது வோர் அனைத்தையும் புதிதாகக் கண்டுபிடித்து எழுதவேண்டும்; புதிய பெயர்கள், செயல்கள், களம், உச்சக்கட்டம், ஆரம்பம் ஆகிய அனைத்தையும் தாமாகவே கண்டு பிடிக்கவேண்டும். மகிழ் நெறி நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்கும் நடிகன் தனது பகுதியில் சிறிதளவேனும் மறந்தால், சபை யோர் சத்தமிட்டு அவனை வெளி யேற்றிவிடுவர். ஆனல் ஒரு அவ லச்சுவைப் பாத்திரமாக நடிப் பவர் தான் விரும்பிய அ ள வு மறக்கலாம். '
எனவேதான் அவலச்சுவை நாடகங்களை எழுதியோர் வல்

Page 9
4
லமைமிக்க க வி  ைத வடிவில் அவற்றை எழுதிப் பார்வையாள ரைப் பரவசத்தில் ஆழ்த்தினர். கவித்துவம், க ற் பனை, நாடக வியல், பாத்திரப்படைப்பு, இயக் கம் ஆகியவற்றைச் சிறந்த முறை யில் அமைத்து உயர் நாடகங் களைப் படைத்தனர். உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பி யர் பாரம்பரியத்திலும் வரலாற் றிலுமிருந்தே தமது அவலச்சுவை நாடகங்களுக்கான கதைப்பொரு ளைப் பெற்ருர், கி ரே க்க நாட காசிரியர்களும் இதற்கு விதிவிலக் காக அமையவில்லை. கிரேக்கப் பாரம்பரியமே உலகெங்கும் பர வியது என்பதை நாம் இதன் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
இன்றுள்ள கிரேக்க அவலச் சுவை நாடகங்களின் பழைய அமைப்பினை ஈஸ்கலசின் நாடகங் களில் நாம் காணக்கூடியதாக உள்ளது. இவர் அவலச்சுவையின் வடிவத்தை நோக்கிற்கொண்டு, கிரேக்க நாடக மரபுக்குள் நின்று, நாடகத்தின் அமைப்பினைப் பின் வரும் முறையில் வளர்த்தார்:-
1. ஏற்கனவே தெ ஸ் பி ஸ் "கோரசிலிருந்து முதலாவது நடி கனத் தோற்றுவித்திருந்தார். ஈஸ்கலஸ் இரண்டாவது நடிகனைத் தோற்றுவித்தார்.
2. நாடகத்தில் கூடிய அளவில் மாறுபாடுகளையும் முரண்பாடுக ளையும் வளர்த்தார். இம்முரண் பாடுகளே முதலில் "கோரசுக்கி டையிலும் பின்னர் கோரசுக் கும் ந டி கருக்கு கிடையிலும் வளர்த்தார்.
3. வெறுமனே பரி தா ப உணர்வை அல்லது கழிவிரக்க வுணர்வை (Pathos) காட்டுவதற் காக நாடக நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தாது, பரிதாப உணர்வுக்கு இட்டுச் செல்வதாக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அமைத்தார்.
4. பரிதாப உணர்வின் காத் திரத்தை நன்கு உணர்ந்திருந்த ஈஸ்கலஸ், அதற்கு இட்டுச் செல் லும் நாடக நிகழ்வுகளை ஆழ்ந்த துன்பியல் நிறைந்த ன வாகத் தெரிவு செய்து அமைத்தார்.
5. இடுக்கண் நிறைந்த அவல நிலையானது, மிகுந்த ஆழமான முறையில் வளர்த்துச் செல்லப் படும் அதேவேளையில், தெளிவான தோர் முடிவுக்கான நம்பிக்கை யும் வளர்க்கப்படுகிறது.
6 அவரது “முக்கூட்டு" நாட கத் தொகுதியான "ஒறெஸ்டியா" வில் (Oresteia) காணக்கூடியதாக வுள்ள காத்திரமான துன்பியல் பண் பு, அவலச்சுவை நா ட க விலக்கணமாக அமைகிறது.
7. ஐதிகங்களுக்கு நாடக வடி வம் மூலம் சிறந்த வியாக்கியா னங்களைக் கொடுத்தார். கரண அமைப்பிலிருந்து பூரணமாகவும் தீவிரமாகவும் "திறஜெடியைப் பிரித்தார். நா ட க அரங்கைச் சமயச்சார்பற்றதாக்கினர்,
8. மேடையைக் கூடுதலாக வும் பயன்தருவகையிலும் பயன் படுத்தினூர், வர்ணந்தீட்டிய காட் சிகளை அமைக்க ஊக்கமளித்தார்.

9. கால தேச வர்த்தமானங்க ளால் நா ட க க் காட்சியையும் கதையையும் பரந்ததாக்கினர்.
10. நாடகவியல் மெளனத் sudi(5 (Dramatic Silence) (upé6. யத்துவம் கொடுத்தார். ஒலியிலா அமைதியும் உரிய இடத் தி ல் உயர்ந்த இசையாகும் என்பதை அவர் நன்கு உணர்ந்து கடைப் பிடித்தார். காத்திரமான முறை யில் கருத்தை வெளிப்படுத்த உதவும் சிறந்த மொ ழி யாக மெளனம் சிலசமயம் உதவும்.
ந | ட கி முன்னேடியாக இருந்தபோதிலும், அரங்க மரபுக ளால் பிணைக்கப்பட்டிருந்த ஈஸ் கலஸ் பெருமளவில் கி ரே க்க மரபுக்கேற்ப "கோரசில் தங்கி யிருந்தார். அவரது "அகமெம் னன்' நாடகம் பாதி கவிதையா
5
கவே உள்ளது. இக் கவிதைகள் "கோரசை' நம் பி யே எழுதப் LÈ L Gö7 .
இவரது கதைக்கரு மரபுதழு வியதாகவும் ஆழ்ந்த சமயப்பண்பு கொண்டதாகவும் இரு ந் த து. கதைப்பொருள் எளிமையான தாக இருக்க உத்திகள் கடூரமான வையாக இருந்தன. "குற்றங் கடிந்து அரசைக் காத்தல்" என்ற பண்டைய 'ஒலிம்பிய சட்டத்தை அங்கீகரித்த உலகிலேயே அவரும் வாழ்ந்தார்.
உலகின் முதலாவது நாட காசிரியரான ஈஸ்கலஸ் உண்மை யிலேயே தன்துறையில் ஒரு வல் லமை மிக்க தலைவனுகவே இருக் கிருர்,
(தொடரும்)
جولا”مجھے Y/,
g) liflogo) LDULUTGTiflir:
கண்டி வீதி,
拉
IEEEEEEEEEEIIIg
(B) iffiċji (85 TI Jin Ġi) LI TT fi
53f6) 916) Difi LD) OG I DTÍ lju Jin âIITÍ உங்களை அழைக்கிறது
B) Úlö651 őn.6)LITi
LLLLLLLLLLLKLKLLLKKLKLLLLLL
K. குணசிங்கம்
சாவகச்சேரி,

Page 10
YLLLLLTLYrTYrLYYlLTrlmLTlLLlrYrrLLYYYLr lr lLLLlLLLTllY
5 T | 5 || 6I IJl 56
வீ. எம். குகராஜா
(്
ஒர் நாடக நிகழ்வுக்கு மிக முக்கியமான மூலப் பொருள் நாடக எழுத்துப் பிரதியே. இன் றைய நிலையில் த மிழ் நாடக இயக்கங்களைச் சார்ந்த பலரும் நாடகப் பிரதிகளுக்காகவே ஒப் பாரி வைப்பதை நாமறிவோம்.
போதிய நாடக எழுத்துப் பிரதிகள் தமிழுக்குத் தேவை. இத்தேவையைப் பூர்த்திசெய்ய இறக்குமதியை நம்பி எவ்வளவு காலத்திற்கு நாமிருக்க முடியும்?
த மி ழ் நாடகப் பிரதிகளை உள்ளூரிலேயே"அறுவடை செய்ய வும், மீண்டும் மீண்டும் விதை தூவவும் தேசிய நாடக மலர்ச் சியின்மீது அக்கறை கொண்டவர் களே உ ரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
எனினும், எமது 'அறிவு' மட்டத்தில் நின்று, இன்றைய எமது நாடகத்தேவைகளையும், நாடகத்தின் மூலமாக நம்மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளையும், பூர்த்தி செய்யத்தக்க, ஆளுமை மிக்க நாடகப் பிரதி களை எவ் வாறு உருவாக்கலாம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
நா ட கம் என்னும் போது எல்லாம் ஒரே அச்சில் உருவா னவையல்ல. வித்தியாசமான பல
வடிவங்களைக் கொண்டவை. எம் மைப் பொறுத்த வரை எமது பாரம்பரியக் கூத்து க்களும் , யதார்த்த நாடகங்களும், அண் பைக் காலங்களில் விசாலிப்புப் பெற்றுவரும் நவீன, அல்ல து மோடியுற்ற நாடகங்களுமே எமக் குப் பரிச்சயமானவை. மேற்கத் தைய ஆபத்த நாடகவகையைச் சேர்ந் த  ைவ க ளு ம் இரண் டொன்று நாம் பார்க்க நேர்ந் தவைகள் .
இவற்றை விடவும் நாடக வடிவங்கள் பல உலகில் உள்ளன என்பதை நாடக வரலாறு கூறு வோர் கூறக்கேட்கின்ருேம்.
எ ன வே , பலவகையான நாடக வடிவங்களுள் எமக்குப் பொருத்தமான வடிவத்தை எழு தப்போகும் நா ட க த் தி ற் கு வழங்க முதலில் நாம் திட்டமிடு கின்ருேம்.
பொருத்தமான நாடக வடி வம் என்னும்போது, நாடகம் மேடையேறவுள்ள பிரதேசத்தை யும், கிடைக்கவுள்ள மேடைகளை யும், பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளக்கூடிய மக்களின் ரசனையையும் கருத்திற்கொண்டு பொருத்தமான நாடக வடிவத் தை எழுத்தாளன் தீர்மானித்துக் கொள்ளலாம்.

பார்வையாளர்களின் ரசனை யின் தரத்தை உயர்த்தவேண்டி பரிச்சயமில்லாத நாடக வடிவங் களையும் மெல்லமெல்ல பார்வை யாளர் மட்டத்திற்கு வழங்கிவர, தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி, எழுத்தாளர்களும் தமது சிந்தை யைச் செலுத்த வே ண் டி ய வர்களே,
பரிச்சயமில்லாத நாடக வடி வங்களாயிருந்தாலும், 960) all பார்வையாளர்களால் வரவேற் கப்பட்டு மீ எண் டு ம் மீண் டு ம் மேடையேறக் கூடிய சூழ்நிலை இருக்குமாயின், அந்நாடகங்கள் வெற்றியாக அமைந்தவை என்று கருதவும், மக்கள் அந்த வடிவத் தைப் புரிந்துள்ளார்கள் என்று நினைக்கவும் வழியேற்படுகின்றது. இன்னுமொரு விவாதம் நம் மத்தியில் இருந்து வந்துள்ளது. 'நாடகக் கதைக்கேற்ற வடிவ மா? அல்லது வடிவத்திற்கேற்ற கதையா?" என்பதே. கதைக் கேற்ற வடிவ த் தை எடுத்து நாடகத்தை வெற்றியாக்குவதி லும், வடிவத்திற்கேற்ற க  ைத யை எடுத்து வெற்றியாக்குவதி லும் படைப்பாளியின் ஆளுமையே முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஒன்றிற்காக ஒன்றை எ டு த் து, ஒன்றைக்கொன்று மற்றதை வாழ வைத்தானுயின் அது வடிவத் தினதோ, கதையினதோ பெலயி னமாக இருக்காது. படைப்பாளி யின் ஆளுமையின்மையைப் புலப் படுத்துவதாக இருக்கும்.
கதைப்போக்கினதும் வடிவத் தினதும் செம்மை சிதைவுருமல் நாடகத்  ைத க் கட்டியெழுப்ப
தமாகிருன் ,
7
எழுத்தாளன் முனைகிருன். அவ் வாறே பின்னுல் அந்நாடகத்தைத் தயாரிக்கப்போகின்றவனும்.
நோக்கமும் தாக்கமும்:
நாடகமொன்றை எழுதுவ தற்கு வடிவ மும் க  ைத யும் தேவைப்படுவதற்கு மு ன் ன ல், அதனை எழுதுவதற்குரிய நோக் கம் ஒன்று அவசியமொன்று தேவைப்படுகின்றது.
முன்னர் கூறியதுபோல அதிக நாடகப் பிரதிகளைத் தமிழுக்குத் தரவேண்டுமென்பதற்காகவகைக் கொன்ருக பல வடிவங்களிலும் எழுதுவதும்கூட நோக்கங்களில் ஒன்று தான். இதனைப்போன்று வேறுபல நோக்கங்களும் நாடக மொன்றை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருக்கின்றன என் பதை நாமறிவோம்.
எனினும் மிக முக்கியமான நோக்கம், அந் த நாடகத்திற் கூடாக மக்களுக்கு ஓர் செய்தி யைக் கூறப்போகிருேம் என்பது தான்.
ஒர் எழுத்தாளன் தான் சார்ந் துள்ள மக்கள் கூட்டத்திற்கு எதையோ சொல்வதற்குத் துடிக் கிருன். அவனது இதயத்தை அரிக்கின்ற விடயத்தை நாடகத் திற்கூடாகச் சொல்வதற்கு ஆயத் த இன து துடிப்பை ஏனைய மனிதர்களோடு பரிமாறி ஆறுதல்பட, அ ல் லது மேலும் வேகங்கொள்ள விழைகின்றன். இதுதான் உண்மையாக நாடகத் தினது நோக்க மா யிருத்தல் வேண்டும்.

Page 11
8
இத் த கை ய நோக்கத்தை எழுத்தாளன் எவ்வாறு பெற்றுக் கொள்கிருன் என்பதும் சிந்திக்க வேண்டியதே. எழுத்தாளன் மக் களின் வாழ்வைத் தரிசிக்கவேண் டியவன். மக்களின் வாழ்வோடு மிக நெருக்கமாக நிற்கவேண்டிய வன். வாழ்க்கை அனுபவங்கள் தரக்கூடிய கலை வீரியத்தைப் புத் தகங்கள் தந்து வி டு ம் என்று சொல்லமுடியாது.
நாடக எழுத்தாளன் படிக்க வேண்டிய மிகமுக்கியமான புத்த கம் மனிதனும் அவனது அற்புத மான மன உணர்வுகளுமே.
உணர்வுகளால் - நடைமுறை களால் முரண்பாடு கொள்கின்ற சமுதாயத்தை, எழுத்தாளன் தனது ஊடுருவிப்பார்க்கும் கலைத் துவக் கண்களினல் தரிசிக்கிருன், அவன் மனதில் சில சம்பவங்கள் நிலைகொள்கின்றன. உணர்வுக ளைத் தாக்குகின்றன. அந்த உணர் வுத்தாக்கம் பற்றியும், அந்தச் சம்பவங்களின் இழிவு சிறப்புக் களைப் பற்றியும் தனது கருத்தை வெளியிட மு ற் ப டு கி ன் ரு ன். நாடகம் எழுதுவதற்கான நோக் கம் பிறக்கின்றது.
சம்பவமும் பாத்திரங்களும்:
நாடகமொன்றை எழுது வதற்கான நோக்கம் ஒர் சம்ப வத்திலிருந்து பிறக்கின்றதென்று வைத்துக்கொண்டால். அல்லது நாடகமாக்குவதற்கு ஓர் சம்பவம் தேர்ந்தெடுக்கப் படுகின்றதென்று கொண்டால், அந்தச் சம்பவத் தோடு சம்பந்தப்பட்டவர்களே நாடகப் பாத்திரங்களாக மேடை யில் உலவப்போகின்றவர்கள்.
இவ்வாறு சம்பந்தப்பட்டவர் கள் சம்பவத்தின் தன்மைக்கேற்ப தொகையின் அளவில் கூடியும் குறைந்தும் இருக்கலாம். சில சம்பவங்களின் ஆயிரக்கணக்கா ஞேரும், சிலவற்றில் ஒரிருவரும் என்று சம்பவத்தோடு தொடர்பு பட்டவர்கள் இருப்பார்கள். இந்த இடத்திலும் எழுத்தாளன் சிந் திக்க வேண்டியவனே. குறிப் பிட்ட நாடக நிகழ்வுமூலம் அந் நாடகத்தின் கதையை வளர்த்துச் செல்வதற்கு மிக முக்கியமான உசாத்திரங்கள் எவையென்பதை இனங்கண்டுகொள்ளுதல் எழுத் தாளனது தலையாய பணி.
நா ட கத்தி ன் மூலம் நிலே நிறுத்த விரும்புகின்ற கருத்தை ஒவ்வொருபாத்திரமும்ஒவ்வொரு விதமாக முகங் கொள்ளுதலே நாடகத்தின் சிறப்புக்கு உதவக் கூடியதாகவிருக்கும்.
இந்த வகையில் எழுத்தாளன் படைக்கின்ற பாத்திரங்களை (அ) கருத்தை ஆதரிக்கும் சக்தி க ள் (ஆ) எதிர்க்கும் சக்திகள் (இ) நடுநிலை வகிக்கும் சக்திகள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித் தும், இந்த ஒவ்வொரு பிரிவுக் குள்ளும் தேவைக்கேற்ப வேறு சில பிரிவுகளைக் காட்டியும் பிரி வுக்கொரு பாத்திரத்தையோ, அல்லது மிகக்குறைந்த தொகை யான பாத்திரங்களை ஒவ்வொரு பிரிவுக்கும் நிறுத்தியோ பாத்திரப் படைப்புக்களைச் செ ம்  ைம ப் படுத்திக்கொள்ளலாம்.
நவீன நாடக முன்னேடிகள் பாத்திரங்களின் தொகையைக் குறைப்பதற்கும், தயாரிப்பின்

வசதியையும், பார்வையாளரின் சிந்தனை  ையக் கிளறுதற்குமாக *" குறியீட்டுப் பாத்திரங்களைப்' படைத்து வெற்றிகண்டு வருகின் முர்கள்.
மேடை உணர்வுடைய எழுத் தாளஞயிருந்தால், தான் சொல் லவுள் ள கரு த் தை எவ்வளவு அழுத்தந் திருத்தமாகச் சொல்ல முற்படுகின்ருணுே அவ்வளவு அக் கறையோடு நாடகத் தயாரிப்பின் செம்மையையும் கரு த் தி ல் கொண்டு பிரதியாக்கத்தில் ஈடு படுவான்.
பார்வையாளர்கள் குழப்ப மடையா விதத்திலும், மேடை தெளிவான அசைவுகளை ஏற் படுத்தக்கூடிய வி த த் தி லும், தயாரிப்புச் செலவு, மேடையேற் றப் பயணங்கள் என்பனவற்றில் தேவையற்ற உண்டுபண்ணத வி த த் தி லும் பாத்திரங்களின் தொகை அமை வது வரவேற்கக்கூடியதே. சம்பவங்களும் களமும்:
நாடகக் கதையின் சம்பவங் கள் பல இடங்களில் நிகழ்ந்ததாக இருக்கலாம். அவை நாடகமாக நிகழ்வது மேடையில் என்பதும், அந்நிகழ்வுக்கு ஒர் குறிப்பிட்ட கால எல்லை (நேர அளவு) உண்டு என்பதும் எமது க வ னத் தி ல் இருக்கவேண்டிய சில முக்கியமான விடயங்களில் அடங்குகின்றன.
எழுத்தாளனது எண் ண க் கருவில் நிழலாடுகின்ற நாடகத் தின் கதை அல்லது சம்பவங்களின் தொடர், பல களங்களில் நிகழ் வதாகச் சலன மிட்டுக்கொண்டி ருக்கலாம். இவைகளைக் குறித்த
அசெளகரியங்களை
9
நேர அளவிற்குள், கொடுபடக் கூடிய மேடையின் பரப்பிற்குள் நாடகத்தின் நோக்கமும், பார் வையாளரின் கவனமும் திசை திரும்பாத வகையில் எவ்வாறு எழுத்துருவில் தரப்போகின்றன் என்பது மிக முக்கியமான விடயந் தானே?
பல களங்களில் நிகழ்ந்ததா கக் கருதப்படுகின்ற சம்பவங்களை பார்வையாளர் நம்பத்தக்க விதத் தில் மிகக்குறைந்த களங்களில் நிகழச்செய்வதும், அடிக்கடிகாட்சி மாற்றங்களுக்கு இடமளித்து, திரைப்படங்களைப் பார்வையா ளர்களுக்கு நினைவூட்டாமலும், களங்களுக்கும் சம்பவங்களுக்கும் மிக இறுக்கமான தொடர்பிருக் கத்தக்கதாகவும் பி ர தி  ைய அமைத்துக்கொள்ளுதல் காட்சி யமைப்பிற்கான செ ல வினை க் குறைப்பதோடு, மேடையேற்றத் திற்கு இலகுவானதாகவும், பார் வையாளர்களுக்கு தொடரிபறு படாத முறையில் க  ைத  ைய நிகழ்த்திச் செல்லவும் வசதியாக இருக்கும்.
கதைப் பின்னல்:
நாடகப் பிரதியாக்கத்தின் போது - பாத்திரங்களும் களமும் சம்பவங்களும் எவை எவையென் தீர்மானிக்கப்பட்டுவிட் டால், அவற்றை உதவியாகக் கொண்டு நாடகக் கதையை எவ் வாறு ஒழுங்குபடுத்தப் போகின் ருேம் என்பதே அடுத்தபடி நிலை யாக இருக்கலாம்.
சிறுசிறு சம்பவங்களை உள் ளடக்கியதே முழு நாடகத்தின

Page 12
20
தும் கதையாக இருக்குமென்ப தால், இந்தச் சம்பவங்களை நாட கத்தினது  ைம ய க் கருத்  ைத நோக்கி, பார்வையாளர்களை வழி நடத்திச் செல்லத்தக்க வகையில்
ஒழுங்காக வைக்கத் தெரிந்திருக்க
வேண்டும். கதைப்பின்னல் என்று இதனையே கூறுகிருர்கள்.
ஒரு காட்சியில் நிகழ்ந்த கதைச் சம்பவத்திற்கும் அடுத்த காட்சியில் நடக்கப்போகின்ற சம்பவத்திற்குமிடையில் osir ளார்ந்த தொடர் பொன்றும், நாடக உச்சத்தை நோக்கி பார் வையாளர்களை ஒ ர டி எடுத்து வைக்கச் செய்வதாகவும் இருக்க வேண்டும். நா ட க க் கருவின் புதிரை கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கும் தன்மைகள் நிச்சய மாகக் கதைப்பின்னலின் போது கவனிக்கப்படவேண்டியவை.
இத்தகைய கதை"வைப்பு" நாடகத்திற்குத்தானன்றி ஏனைய புனைகதை வடிவங்களான நாவல் சிறு க  ைத போன்றவற்றிற்கும் வெற்றியைத் தேடித்தருவதே.
உரையாடல்:
நாடகத்திற்கு உரையாடல் ஏன்?
மேடை நாடகம் கட்புலனுக் கும் செவிப்புலனுக்கும் விருந் தளிப்பது.
மேடையிலுள்ள நடிகனின் அசைவுகள், ஒப்பனை, உடை, மேடைப்பொருட்கள், காட்சிய மைப்புக்கள், ஒளியூட்டல் என் பவை யாவும் க ட் புல னு க் கு விருந்தாகின்றன.
நடிகனின் பேச்சு, பாட்டு, வாத்தியக்கருவிகளின் ஒசை என் பவை செவிப்புலனுக்கு விருந்தாக் கப்படுபவை.
மேலே கூறப்பட்ட பார்வைக் குரியவையும், கேள்விக்குரியவை யுமாகிய பல விடயங்கள் இருக் கும்போது கதை சொல்வதற்கு உரையாடலை மட்டும் நாம் நம்பி யிருக்கத் தேவையில்லை.
அசைவுகளாலும், ஒப்பனை, உடை, காட்சியமைப்பு, ஒளியூட் டல், பின்னணி இசை என்பன வற்றலும் பார்வையாளர்களுக் குத் தெளிவுபடுத்த முடி யா தென்று நினைக்கின்ற விடயங்க ளையே உரையாடல் மூலம் சொல் வதற்கு நா ம் ஆரம்ப நிலையில் முயலுவோமாயிருந்தால்அனுபவ மு தி ர் ச் சி யி ன் பெறுபேறும் கிடைக்க உரையாடல் மட்டு மல்ல, எ த னை யு ம் அளவாகச் சேர்த்துக்கொள்ளப் பயிற்றப் பட்டு விடுவோம்.
கையாளப்படும் உரையாடல் கள், அர்த்தம் பொதிந்ததாகவும், பார்வையாளர் கருத்தில் தங்கக் கூடியதாகவும், பாத்திரங்களின் இயல்பைப் புலப்படுத்தக்கூடிய தாகவும், இறுக்கமும் சுருக்கமும் நிறைந்ததாகவும், கதையைச் சொல்வதற்காகவும் எழுதப் படல் வேண்டும்.
நாடக முழுமை:
மேலே பல பிரிவுகளிலும் கூறப்பட்டவாறு சம்பவங்கள், பாத்திரங்கள், களங்கள், கதைப் பின்னல், உரையாடல் ஆகிய யாவும் செம்மையாகக் சீர்செய்

யப்பட்டு முடிக்கப்பட்ட நாடகப் பிரதியில், அதன் முழுமைச் சிறப் பைப் புலப்படுத்தி - ஐந்துபடி நிலைகள் இருக்கும் என்று கூறப் படுவதைக் குறிப்பிடாமல் இருக்க (ԼpւգԱյո Ֆ].
நாடகக் கதை ஆரம்பித்து,  ெம ல் ல வளர்ச்சியடைந்து, கருத்து மோதல்களால் முரண் பாடு கொண்டு, முரண்பாடுகள் வலுவடைந்து உச்சக்கட்டத்தை எய்தி, அதற்குப் பின்னுல் பார் வையாளருக்கு ஒர் தெளிவை ஏற்படுத்தத்தக்க தீர்வைக்கூறி. அல்லது, உரிய தீர்வை பார்வை யாளரே எய்தக்கூடிய திசையைத் தொட்டுக் காட்டுதல் ஆகியவை களே இந்த ஐந்து படிநிலைகளா கும்.
நாடக எழுத்தாளனும் புரிந்து கொள்ளல்களும்:
முழுமையான நாடக எழுத் துப் பிரதியைத் தரவல்லவன் வாழ்வியலோடு மிக நெருக்கமாக
2.
நிற்க வேண்டியவன் என்பதை ஆரம்பத்திலேயே பார்த்தோம்3
அவ்வாறு நெருக்கமாக நிற்க வேண்டியவன், சமூகத்தின் இயல் புகளை, மொழியின் இயல்புகளை, உளவியல் ரீதியாக மக்களின் வெளிப்பாடுகளை மக்களைப் பரி
பாலிக்கின்ற நாட்டு நிர்வா கத்தை (அரசியலை), நாடகம் பற்றியும், அதனை ஒர் சாதன மாக வெற்றிகரமாகப் பயன்
படுத்தித் தன் கருத்தைக் கூறக் கூடிய நுணுக்கத்தையும் நன்ரு கப் புரிந்துகொள்ள வேண்டிய வணுக இருக்கிருன்.
உலகைப் புரிந்துகொண்ட, வாழ்வைப் புரிந்து கொண்ட படைப்பாளியால் தான் உயிர்த் துடிப்பான, மொழியினதும், வாழ்வினதும் தே  ைவ களை ப் பூர்த்தி செய்யத்தக்க நாடகப் பிரதிகளை அறுவடை செய்ய முடி யும் என்பதில் எவ்வித ஐயப் பாடுகளுக்கும் இடமிருக்க முடி
Ամո Զ: ,
எமது நன்றி
6-ந் திகதி நாம் நடாத்திய வுக்கு நிதியுதவி நல்கிய
அரங்கம் சஞ்சிகையின் வளர்ச்சி நிதிக்காக மாசி மாதம்
LDLIT605 IT667 Lib' பெரியோர்களுக்கும் உறுதுணையாக நின்றுதவிய நண்பர்களுக்கும், நா ட கத்  ைத மேடையேற்றி உதவிய ந டி க ம ணி வி. வி.  ைவர முத் து குழுவினருக்கும் அரங்கத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும்3
நாடக விழா
- ஆசிரியர்கள்

Page 13
.
சென்ற இதழ்த் தொடர்ச்சி
Gjis fail
5 TIL 35 அரங்கு
ஆக்கியோன் சேரற்
எக்காலத்திலும் அடையாததாகிய அந்தரங்க உலகு ஒன்று மாந்தருக்குள் புதைந்து கிடக்கின்றதென்றும் அதனை மேடையிற் படம் பிடித் துக் காட்டுதலையே தமது புல மைத்திறனின் பெருங்குறிக்கோ ளாகச் செகப்பிரியர் கொண்டிருந் தார் என்பதையும் சென்ற இத ழிற் பார்த்தோம். ஒரு இலக்கிய கர்த்தா வாழ்த்த காலதேயப் பின்னணிகள், அவனுடைய ஆக்க ஆளுமையின் தனித்துவம் ஆகிய வற்றின் சேர்க்கையே, அன்னரது படைப்புகளுக்கு முக்கிய காரணி
கண்கூடு. எனவே இத்தொடரில் செகப்பிரியரது வாழ்க்கை வர லாறு காலப் பின்னணி பற்றிச் சிறிது நோக்குவாம்.
மாறுதல்
1454 ல் கொன் ஸ்ராந்தி நோபிள் மாநகரம் வீழ்ச்சியுற்ற பின்பு, ஐரோப்பா அடங்கிலும் ஏற்பட்ட கல்வி கலாசார மறு மலர்ச்சி தென்மேற்குத் திசையா கச் சென்று இறுதியில் இங்கிலாந் தினை அடைந்தது என வரலாறு கூறும் முதலாம் எலிசபெத் மகா ராணியின் ஆட்சியில் மறுமலர்ச் யும் விழிப்பும் தலைதூக்கிநின்ற காலகட்டத்திற்கான செகப்பிரி யன் 1564ல் இயற்கையின் எழில் வனப்புற வாய்த்து மிளிரும்
மத்திய இங்கிலாந்தின் மாகாண மாகிய "உவரிக்சையரில் அழகிய "எவன் நதியோரத்தில் அமைந்த நாட்டுப்புற நகரமாகிய ஸ்ருட் போட்"டில் பிறந்தார். ஆங்கில இலக்கிய வளர்சிச்யின் ஆரம்ப காலத்தின் இறுதிக் கட்டம், ஆங் கில இசையின் தோற்றமும் அதன் பரிம வளிப் பும் , நாடக இலக்கியத்தின் தோற்றம், கடல் கடந்த வியாபாரம், விஞ்ஞானத் தின் புதிய கண்டுபிடிப்புக்கள், கடல் மூலம் எத்திசையிலும் பரந் தோங்கி நின்ற ஆங்கிலேய புஜ பல பராக்கிரமம், பண்டைய கிரேக்க, உரோம எகிப்திய சாம் ராஜ்யங்களைப் பற்றிக் கேள்வி யுற்று வியந்து தாமும் தந்தேய மும் அந்நிலையினை எய்திட வேண் டுமென்ற அபிலாஷைக் கனவு இன்னுேரன்னவை - இவர் தோன் றிய காலத்தில் ஆங்கிலேய நாட் டின் பண்புகளாகும். மறுமலர்ச் சியும் விழிப்பும் உத்வேகமும் எ ங் கும் பெருக்கெடுத்தோடும் ஆங்கில தேயவளர்ச்சியின் ஆரம்ப சகாப்தத்திற்ருன் செகப்பிரியர் தோன்றினர். -
இன்னுெரு உலக ம காக வி யாகிய நாடகக் கவிஞன் காளி தாசன், குப்தமன்னர் ஆட்சியின் உச்சகால கட்டத்திலும், காவி யக் கவிஞணுகிய உலக மகாகவி

கம்பன் சோழப் பேரரசின் வீழ்ச் சிக் காலத்திலும் தோற்றமெடுத் திருந்தனர் என்பதை, ஆங்கில நாடு விழித்தெழுகிற காலகட்டத் தில் செகப்பிரியர் வாழ்ந்தார் என்பதனேடு ஒப்புநோக்கி, அவ ரது இலக்கியப்பண்புகளை ஆராய் தல் சுவைபயக்கும் ஓர் இலக்கிய "ஒப்புநோக்கு ஆராய்ச்சியாகும்.
செகப்பிரியரின் வாழ்க்கையும் வரலாறும், புதிரிகள் பல நிறைந் தவை. இற்  ைற கீ கு நாநூறு ஆண்டுகால எல்லைக்குள் வாழ்ந்த வராயினும், அன்ஞரது வாழ்க் கை வரலாறு பற்றிய குறிப்புகள் எமக்குச் சிலவே கிடைத்திருக் கின்றன. மேலும் அவரின் குண வியல்புகள், உள்ளார்ந்த விருப்பு வெறுப்புகள் அஃதாவது அவரது ஆளுமைபற்றியாம்பெரும்பாலும் அறிந்து கொள்ள முடியாமலிருக் கிறது. நா ட க க் கர்த்தாவின் ஆளுமை பெரும்பாலும் நாடகங் கள் மூலம் வெளி ப் படாத தொன்று என்பது செகப்பிரிய ரைப் பற்றிய கருத்துக்களில் நூற்றுக்கு நூறு உண்மையான தொன்ருகும்.
ந டு த் த ர வர்க்கத்தைச் சேர்ந்த தாய் தந்தையர்க்கு இவர் முதலாவது புத்திரனும் மூன்ரு வது குழந்தையுமாவார். கடின உழைப்புடைய இவர் தந்தை, செல்வச் செழிப்போடு வாழ்ந்து "ஸ்ருபோட்’ எனும் தமது சிறிய நகரினுடைய நகரபிதா என்ற அளவிற்கு சமூகத்தில் உயர் அந் தஸ்தினைப் பெற்றிருந்தார். எனி னும், செகப்பிரியர், ஏறக்குறைய பன்னிரண்டாவது வயதினை எய்
23
தியபோது, இவர் ஏழ்மை நிலைக் குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்க வேண்டியிருக் கிறது. ஏனெனில் தமது பதிமூன் முவது வயதிலேயே செகப்பிரியர் பாடசாலை வாழ்வினைத் துறக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.
செகப்பிரியரின் ச ம க ர ல நாடக ஆசிரியருள் ஒருவர் பிற் காலத்தில் இவருடைய ஏட்டுக் கல்வியின் ஏழ்மையினைச் சுட்டிக் காட்டுமுகமாக "அவருக்கு லத் தீன் மொழியோ சூன்யம். அது வும் கிரேக்க மொழியோ அதி சூன்யம்' என்று கூறுமளவிற்கு அவருடைய ஏட்டுக்கல்விபூரணப் படவில்லை. எனினும் உலக மாக கவியாக மலர்ந்த இவர் வளமற் றிருந்த தமது மொழியை வள மார்ந்த விழுமியதொரு மொழி யாக மாற்றிப் படைக்கவும். எடு த்த இடமெல்லாம் செழும் பொருள் பொதிந்த செந்நடை யினை நாடகங்களிற் கையாளவும் தமக்கு உதவிய அரிய இச்சக்தி யினை எங்கிருந்து பெற்ருர் என் பது உலக இலக்கிய அரங்கில் என்றைக்கும் நிலைத்து நிற்கும் புதிராகும். உலகமெனும் பள்ளி யிலே முறைசாராக் கல்வி கேள்வி களிற் கற்றுத்துறைபோகிய மா மேதை அவர் போலும்!
பள்ளிப்பருவத்தின் பின்னர் இவரைப்பற்றி நாம் உறுதியாக அறியக்கூடிய செய்தி இவருடைய திருமணம் பற்றியதாகும். இவ ருக்கு அப்போது வயது பதினெ ட்டு. வாய்த்த காதலிக்கு வயது இருபத்தியாறு. மணமகனிலுப் எட்டு வயது மூத்த மணமகள்

Page 14
/ 3 και ο ό 8
24
குடியானவர் சமூகத்தைச் சேர்ந்த *ஆன்காத்வே' என்ற மங்கை,
த ம் பதிகள் களவு மணம் செய்திருந்தனர் என்பது ஸ்ரு போட் தேவாலயப் பதிவேட்டி லுள்ள குறிப்புக்களிலிருந்து தெளி வாகின்றது. இவர்களுடைய திரு மணம் 1582-ம் ஆண்டு டிசெம் பர் மாதம் பதியப்பட்டிருக்கிறது. இவர்களுக்குப் பிறந்த "சுசன்னு’
என்ற பெண் குழந்தை தேவால
யத்தில் ஞானஸ்நானம் பெற்ற நாள் 1583 மே மாதம் ஆரும் திகதியாகும். இருவருக்கும் அடு த்து 1585 பெப்ருவரி இருபத்தி ரண்டாம் நாள் இரட்டைக் குழந் தைகள் பிறந்தன. “ஹம்லெற்? என்ற ஆண் மற்றது "ஜூடித்" என்ற பெண்.
இதற்கடுத்தபடியாகச் செகப் பிரியரை நாம் அவருடைய இரு பத்தி எட்டாவது வயதில் லண் டன் மாநகரிற் சந்திக்கின்ருேம். அங்கு நா ட க ச ரீ லே ஒன்றில் 1592ம் ஆண்டு "ஆரும் ஹென்றி. என்ற செகப்பிரியருடைய நாட கம் மேடையேற்றப்பட்டுத் தயா ரிப்பாளர்களுக்கு ம க த் தா ன வெற்றியை ஈட்டிக்கொடுக்கிறது: சமகாலத்தில் வாழ்ந்த "ருெபேட் கிறீன்" என்ற நாடகக் கவிஞனெ ருவன் தன் மரணப்படுக்கையி லிருந்தவாறே மற்றைய நாடகக் கவிஞர்களாகிய தன் ந ண் பர் குழாத்திற்கு செகப்பிரியரைப் பற்றிய எச்சரிக்கை மடலொன்று வரைகிருன்: 'உங்களையும் என் னையும் போல் செந்நடையில் வசனம் எழுத முடியுமென்று எண்ணுகின்ற "செகப்பிரி' என்ற
மேலோங்கிக் காகமொன்று உங் கள் எல்லோரையும் மண்கள்வ வைக்கப்போகிறது' என்று அழுக் காருேடு காய்கிருன். தமது நண் பர்கள் கண்டு ஆற்ருமை எய்தக் கூடிய அளவிற்கு செகப்பிரியர் நாடக விற்பன்னராகத் தமது இருபத்தெட்டாவது வயதிலேயே தோற்றமளிக்கத் தொடங்கி விட் டார் என்பதை இது தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது.
இவை தவிர, செகப்பிரியரின் இளமைப் பருவம் பற்றிய வேறு குறிப்புக்கள் எதுவும் எமக்குக் கிடைத்தில. சிலநாள் இறைச்சிக் கடை வியாபாரியாக இருந்தார்; பள்ளிக்கூட ஆசிரியராகக் கடமை
யாற்றினர்; ஒரு வக்கீலுக்கு விகி தராகப் பணிசெய்து ஊ தி யம் பெற்ருர் என்றெல்லாம் பல ஐதி கங்கள் இவரைப்பற்றி உண்டு. மற்றும் சேர். தோமாஸ் லூசி என்ற பிரபுவுக்குரிய வனப்பிர தேசத்திலே மானுென்றினைக் கள வாடிய குற்றத்திற்காக சவுக்கடித் தண்டனை ஏற்கப்பயந்து லண்டன் மாநகருக்குத் தப்பிச்சென்ருர் என்ற பலத்ததொரு கர்ணபரம் பரைக் கதையுமுண்டு.
தம் மு ட் பொதிந்திருந்த மேதாவிலாசத்தைத்தவிர வேறெ துவுமின்றி, திக்கற்றவராய், லண் டன் மாநகரத்திற்கு வந்த செகப் பிரியர் முதலில் அங்கு என்ன தொழிலில் ஈடுபட்டிருந்தார் என் பது எமக்குத் தெரியாது. அங் கிருந்த ஒரிரண்டு நாடகசாலை கட்கு 'நாடகம் பார்க்கவரும் பிரபுக்களின் குதிரைகளை சிறு பொழுது பராமரித்துக் கொடுக்

t
கும் குதிரைப் பாதுகாவலனுஇக் கடமையாற்றினர் என்று நம்பப் படுகின்றது' பின் கும்பல் நடி கர்' (Extras) ஒரு வர் வராத விடத்து அவ்வேடத்தைத் தாங்கி நடித்தும் பின்னர் பெரும்பாகங் கிளேத் தாங் கி நடிக்கவேண்டி அவர் நாடகசாலைக்குள் காலெ டுத்து வைத்திருக்கவேண்டும். சிறு வேடங்கள்தாம் செகப்பிரிய ருக்குக் கைவரும். எனவே சிறு வேடங்களிற்ருன் நடித்தார் என்றே ஒரு காலத்தில் நம்பப்பட் டது. ஆணுல் ருேமியோ, மேர்க் கியூடியோ போன்ற பெருவேடங் களையும் தாங்கி நடித்தார் என் பதை அண்மையிற் கிடைத்த தகவல்கள் சில ருசுப்படுத்துகின்
2.5
கக் கம்பணி,நாடகசாலை உரிமை யாளராகவும் மாறி பெருஞ் செல் வத்தினையும் புகழினையும் ஈட்டத் தொடங்கிஞர்,
எனவே எண்ணற்ற மனிதர் களையும், அவர்களது தனித்தனி இயல்புகளையும் வெவ் வேறு
தொழில்களில் அமர்ந்தவர்களது அந்தரங்க விருப்பு வெறுப்புகள்
ஆகியவற்றையும் தமது நாடகங் களின் கரு ப் பொருளாகச் சமைத்து, உயிர்த்துடிப்பெய்திய கதாபாத்திரங்களை வடித்த செகப் பிரியர், தமது வாழ்நாளின் முற் பகுதியினை தாம்பிறந்த நாட்டுப் புற நகரிலும் அதன் அண்மை யிலுமே கழித்தார் என்பதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியா
றன. நடிகனுகிய செகப்பிரியர் நாடக ஆசிரியராகவும், நாடகத் திருக்கிறது: தயாரிப்பாளராகவும், பின் நாட (வளரும்)
- புதிய சந்தர - S SSSSSSMLSSS
கடந்த ஆண்டுச் சந்தாவை அனுப்பாதவர் இள் உடனடி
கேட்டுக்கொள்கிருேம்,
யாக அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிருேம்.
அடுத்த் இதழிலிருந்து அரங்கம் அளவில் பெரியதாகவும் அதிக விடயங்களை உள்ளடக்கியதாகவும் வெளிவரும். எனவே, புதிய சந்தாவை 22/- ஆக உயர்த்தியுள்ளோம்.
அன்பர்கள் புதிய சந்தாவை அனுப்பியும் நண்பர்களைச் சந்தாதாரர்களாக்கியும் எமது பணிக்கு உதவ வேண்டுமென்று
ஆசிரியர்கள்

Page 15
அரங்கம் = நாடக சஞ்
ভািঙ্খং উল্লেং ভঙ্গুং ভক্সং ভক্ত
鷲
தானாற்றித் தந்த பெர் வேளாண்மை செய்தற்
சிக்கனமான 22 ܀ கலவைக்கு மில்க்இவற்
filji filia)01) கொடுக்கு 5 TILQGÖT HÖJLIGIJOf If â 3. JG) | J5 di TJ J
யாழ்ப்
நாடக அரங்கக் கல்லூரிக்காக யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தி
 

Fjod, AR ANKAM
* ருளெல்லாத் தக்கர்க்கு
- - հի: - பொருட்டு (3) sit 212)
݂ ݂ ݂ .  ̄ܝ ݂ ܬ ܼ
ܐܸܠܵܬ
क्ल्
தயாரிப்புக்களுக்குக்
ஆதரவு
க்கே உதவுகிறது. வைற்
5T is a 5
JJ joog jib.
స్టాక్ష్
跌一苓、 எஸ். ஜேகுமார் அவர்களால் ல் அச்சிட்டு வெளியிடப்பெற்ற்து
黑