கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாம் 2013.07

Page 1

ழ் இலக்கியக் குவியம்

Page 2

கவிதை SSLþ - O3 ebug 2013
ஆசிரியர்: வேலணையூர் தாஸ்
அட்டைப்படம்: நிலாந்தன்
தொகுப்பு ஜெ. வினோத், யோகேஷ்
அச்சாக்கம் நோபிள் பிறிண்டேர்ஸ் 817, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்பு முகவரி நாம் யாழ். இலக்கியக் குவியம் 37, 2ம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை யாழ்ப்பாணம்.
6îleDo6O: 50 BLITT
தொலைபேசி இல: O776284.687
மின்னஞ்சல்:
yarlelakiyakuviyam(a)gmail.
/
09ம் திறந்து.
"நாம்" மூன்றாவது இதழோடு சந்திக்கின்றோம். கவிதைக்கு சிறந்த பாரம்பரியம் ஒன்றை கொண்டவர் "நாம் இன்று அனேகமானோர் எழுதும் துறையாக விளங்குவது கவிதையாகும். ஆனாலும் தரமான கவிஞனும், கவிதையும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த "நாம்". அடுத்த இதழ் வெளியாவதற்கான இடைவெளி மிக நீண்டுவிட்டது. தடையாக இருந்தது பொருளாதார காரணங்கள் மட்டுமே. நூல் அமைப்பில் மூன்று இதழ்களிலும் பரீட்சார்த்தமாக மூன்று வடிவங்களை கையாண்டுள்ளோம். தற்போதைய வடிவத்தை தொடர்ச்சியாக தரமுடியும் என நம்புகிறோம். உங்கள் ஆதரவுடன் நாம் 6llIBG6)]mLib.

Page 3
அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் அலைகளாக தீர்ந்துபோகாத நினைவுகள்
வாழ்வின் இறுதி மணித்துளிகள் அந்த விழிகளுக்குள் இறுகிப்போயின சிறகடிக்கும் ஆசைகள் மண்ணோடு மண்ணாய் இற்றுப்போயின.
தளர்ந்து செதிலாகிப் போன கால்களை நீட்டியபடி இன்னமும் தீர்ந்து போகாத அந்த நினைவுகளோடு காத்திருக்கிறாள் முதுமரத் தாயொருத்தி
அறுந்துபோன செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல் எல்லோரும் அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
 

இழந்துபின்
Sea
நெற்கொழு தாசன்
நீலம் பாரித்து கிடக்கிறது நெடுவானம் அமைதியாக, மிதக்கும் சிலபருந்துகளும் தாழபறக்கும் காகங்களும் தம்பண்பிலிருந்து விலகாது செல்வனவே.
முற்றிய நுணாகுலை, கட்டாத கயிறென கறுப்பியாடும். கட்டையில் நின்ற கன்றுக்கு கறக்காது பால்கொடுத்த சிவலையும். சந்தோசமாக வழமையைவிட சந்தோசமாக.
யாழோசையில் பக்கத்துவீட்டார் பெயர் ஒலிக்கிறது பாடலுக்காக
கேட்டு மகிழ இயலவில்லை. கோயில் பூட்டி போகும் ஐயரின்
懿

Page 4
சைக்கிள் செயினின் சத்தம் நேரத்தை நினைவூட்டியது
வரும்நேரங்கடந்ததால் ஆற்றியபால் ஆறி ஆடை படிந்து சுற்றிலும் சில எறும்புகள் திரிய கிடக்கிறது
நெற்றியில் அச்ச வியர்வை துளிர்க்க கைபிசைந்து வரவுக்காக வாசலை நோக்கியிருக்கிறாள்.
நேற்று மறவர்களின் நடமாட்டம் பார்த்ததாக காற்றுவழி வந்த கதை அந்தரத்தில் நின்றது அவளுக்குள்.
காத்திருந்து சலித்துப்போய் முற்றத்தில் அங்குமிங்கும் நடந்தவள் அண்ணாந்து பார்த்தாள்.
ஆந்தையொன்றின் அலறலை தவிர எந்த அசமாத்தமும் இல்லாமல் முழுநிலவில் வானம் நீலம் பாலித்து கிடந்தது
சிலநேரம்
அடுத்த கணத்தில் தெரியவும் வரலாம் அவளுக்கு மகள் சிதைக்கப்பட்ட கொடூரம்//
蔷
 

1 ஒரு தூக்கனாங்குருவியிடம் கூடு கட்டக் கற்றேன்.
குஞ்சுகள் பொரித்த ராவில் கூட்டை மின்மினிப்பூச்சிகளைப் பொறித்து ஒளியேற்றும் வித்தையைக் கற்றுத்தர மறுத்து பறந்து போயிற்றென் குருவி.
இருண்டு போயுள்ளதென் கூடு எங்குமில்லை எனது குருவி.
2 ஒரு கொட்டைப்பாக்குக் குருவியிடம் சங்கீதம் கற்றேன். பாடலின் இறுதி வரியில் வரும் சோகத்தின் பொருளைக்கூற மறுத்து பறந்து போயிற்றென் குருவி.
நிசப்தமாயுள்ளதென் கூடு எங்குமில்லையெனது குருவி.
LDsbGOne: 2OO1

Page 5
Θάώουμουυ 6υιυάύ όής.
க்கியங்கள் சமூக வாழ் (?၏။ပူ၏ရုံ இடம்பெறும் சம் பவங்களை கலை உணர் வோடு நயம்பட எடுத்துரைத்து வாழ்வியலை இன்புறுத்துவதோடு அறமும் போதித்து நெறிப்படுத்து கின்றன. மனித வாழ்வியலில் இன்ப, துன்ப நிகழ்வுகளோடு அமைவது காதல்.
ஒத்த அன்புடைய, வயது டைய இரு உள்ளங்களுக்கிடை யேயான அக ஒழுக்கத்தையே காதலாக சங்க காலத்து அகம்சார் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆயி னும் அக்காலப் பகுதியில் இருந்த மரபானது அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் அவ்வாறேதான் அமைய வேணி டும் என்பது
(குறுந்தொகை)
கட்டாயம் அன்று. காலமாற்றத்துக் கேற்ப அவை மாற்றம் பெறலாம்.
ஒத்த அன்புடைய வெவ் வேறு குலத்தைச் சேர்ந்த இரு உள் ளங்களுக்கிடையேயான அன்பு குறித்த களவுக் காலத்து நிகழும் குறுந்தொகைப் பாடல்.
யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யாதும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே"
அன்பு வயப்பட்ட தலைவனும் தலை வியும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிற போது தலைவியிடம் தலைவன் கூறுகிறான். நாம் இருவரும் அன்பு செய்வதற்கு முன்னர் என்தாயும் உன் தாயும் யார் யாரோ. என் தந்தையும் உன் தந் தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இலர். இருந்தபோதிலும் நானும் நீயும் எப்படி அறியாமல் இணைந்தோம். இப்போது எம் அன்பானது செம் மண் நிலத்தில் விழும் மழைநீர் தான் சென்ற இடத் திற்கேற்ப தன் இயல்பு விடுத்து அம்மண்ணின் நிறத்தை ஏற்பதுபோல நாம் இருவரும் அன்பால் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்கின்றார். உண்மை அன்புடைய கள்ளம் அற்ற உயர்ந்த காதல் ஒழுக் கத்தை இப்பாடல் உணர்த்துகிறது. ஆயினும் இப்பாடல் காலப்போக்கில் பல புதிய பொருண் மைகளைப் பெற்று மாற்றமடைந்திருக்கிறது. ஒரு முறை கட்டமைத்திட்ட இப்பாடலை நவயுகக் காதல் எனும் தலைப்பில் எளிமைப்படுத்தி மறுவாசிப்புச் செய்த மீரா
 
 

உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லூர் நீயும் நானும் ஒரே மதம் திருநெல்வேலி சைவப்பிள்ளைமர்
வகுப்புங்கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள் மைத்துணன்மார்கள்
(ஊசிகள், பக்.50)
என்றுகூறி இறுதியில் செம்பு லப் பெயல் நீர்போல அன்புடை நெஞ் சம்தான் கலந்தனவே என முடிக்கி றார். சாதி, சமூக அமைப்பு முறை பொருளாதாரப் பிரச்சினைகள் என்ப வற்றைக் கூறி இன்றைய காதல், காதல் சுயநலம் சார்ந்தது என்பதனை சுட்டிக் காட்டி இன்றைய இளைஞர் களை எள்ளிநகையாடுவதாக இவரது இப்பாடல் மறு வாசிப்புப் பெற்றிருக் கிறது.
இருவர் படத்தில் இடம்பெறும் ஓர் பாடலுக்காக சங்க இலக்கியப் பாடலை இணைத்துக்கொண்ட கவி ஞர் வைரமுத்து அப்பாடலின் இறுதிப் பகுதியில் யாயும் ஞாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தால் உயிர்க்கொடி பூத்ததென்ன செம்புலம் சேர்ந்த நீர்த்துளிபோல் அன்புடைநெஞ்சம் கலந்ததென்ன"
என காதலர் இருவர் பாடும்
காட்சியாக அமைக்கப்பட்ட இப்பாட லின் இடையில் சங்க இலக்கியத்தில்
சுட்டப்பட்ட "காமக் கூட்டம்" என்பதனை வைத்து நோக்குமிடத்து காதலில் உள்ள தீண்டலை சேர்த்துக் கொண்டார். "ஒரே ஒரு தீண்டல் செய்தால் உயிர்க் கொடி பூத்த தென்ன” என்கிறார். சினிமாத்தனத்திற்கான விரசமில்லாத தீண்டலது.
ஒத்த வயதுடையவரிடத்தே நிகழ் வது காதல் என்ற தொல்காப்பியர் கருத்து காலமாறுதலில் வயது வித்தியாசத்தை உணர்த்துவதை எளிமையாக எடுத்துரைத்த கவிஞர் பனித்துளிசங்கர்
"உனக்கு முன்பிறந்தேன் நான் எனக்கு பின்பிறந்தாய் நீ ஆனால் நம் இருவருக்கும் ஒன்றாய் பிறந்தது காதல்" என்கிறார்.குமரி சு. நீலகண்டன் தனது கவி தையில் காதலித்து திருமணமாகி ஆறே மாதத்தில் விவாகரத்தில் போய் நிற்க அடுத்த காதலுக்கு மனம் தயாராக நிற்பது டன் அன்பு செய்ய இங்கு ஒரு இடமுண்டு காதல் செய்ய தயாராக இருப்பவர்கள் யாரும் விண்ணப்பிக்கலாம் என்கிறார். "ஈருடல் ஒருள்ளம் செம்புலப்பெயல்நீர்போல அன்புடைநெஞ்சம். காதல். கனவு எல்லாமே கல்யாணமாகி ஆறே மாதத்தில் (ouTC3uu (3urša"
காதலென்பது சமகாலத்தில் உண் மையாக இல்லை. புராதன ஒழுக்கநெறி வளர்ச்சியடையாததே இந்நிலைக்கு காரண மாகும். பல்வேறு படைப்பாளிகளின் வழி கட்டுடைத்து நின்றுவிடும்போது பழம் கவி தையின் பொருண்மைகள் மாறுபடுகின்றன. பழமை அடித்தளப் பொருண்மை ஆட்டம் கண்டாலும் சமகாலத்தோடு ஒப்புநோக்க வழிவகுக்கின்றது. காலத்திற்கேற்ப இடத் திற்கேற்ப உளநிலைக்கேற்ப நிகழ்கால மாற்றங்களைப் பதிவுசெய்கிறது.

Page 6
தேடப்பட்டவனைக் காணவில்லையென கேட்டுக்கொண்டே செல்பவர் நேற்றுமுழுவதும் கதவை பூட்டியிருந்தார்
வாடகைக்கு தங்கியிருந்த ஒரு கவிஞனிடம் வார்த்தைகள் மட்டுமேயிருந்தன
ஓரிரவில் பூட்டப்பட்ட கடையின் முன்பாக நாய்கள் சலம் கழிக்குமிடத்தில் உறங்கவிருக்கும் மனிதனுடன் பேசிக்கொண்டே ஒரு இரவை முடித்திருக்கும் சிலநேரங்களில் குழந்தையைப்போல அழுதுகொண்டே நடக்கையில் யாருமில்லை.
வார்த்தைகளுக்காய்த் தண்டிக்கப்படும் ஒரு கவிஞன் திறக்கப்படாத கதவுகளைத் தட்டுகையில் வைக்க இடமற்றிருக்கும் பொருட்களைவிடவும் மிகப் பாரமாயிருந்தது இதயம்
அழைக்க விரும்பாத நண்பர்கள் வெளியேறிச் செல்லும்பொழுது பார்த்துக்கொண்டே நின்றனர் வி ைபெறும்பொழுது u Iதொரு கையும் அசைத்தனுப்பவில்லை.
குடியேறிச் சிலநாட்களிலேயே வெளியேறச் சொல்லும்பொழுது ஒருநாள் கூட அவகாசம் கொடுக்கக்கூடாதவன் என்று வாசலில் வெளியேற்றக் காத்திருக்கும் யாரோ ஒரு அம்மா தன் பிள்ளையைப் போலவும் நினைக்கவில்லை.
சூரியன் உதித்திராத அதிகாலையில் கையில் கிடைத்த பொருட்களுடன் பூமியில் ஓரிடம் தேடி
யாருமற்றவனாய் நகரத்தைவிட்டு பெயர்ந்து செல்லும்பொழுது எதிரில் யாதெரு வண்டியுமில்லை ஒரு கவிஞன் நட்டைவிட்டுத்தப்பியோடினான்
*
நன்றி, மே - 2013, கணையாழி.
 

என் உயிர்
நீண்ட என் கனா எரிந்து போயிற்று
சாம்பல் மேடுகள் எங்கும்
உங்கள் பாதணிகள்
சாபங்களை தின்றவளை, நீங்கள்
அர்த்தப்படுத்தவோ, அடையாளப்படுத்தவோ முடியாது
சாம்பல் உதிர்ந்து கரையாது
உருமாறும்; வலுப்பெறும்
எலும்பாய் எழுந்து தசை கொண்டு
உங்கள் குருதி குடிக்கும் கால மாற்றத்தில் காலனாய் என் கனா
எழும் எலும்பாய்
தசைகொண்டு உங்கள் குருதி குடிக்கும்
மதுஷா மாதங்கி
தின்றவர்களுக்கு

Page 7
பரீஸ்கந்தராஜா
நதியோரம் இளந்தென்றல் தவழ்ந்து வர! நாணலது வளைந்தங்கே நடனமிட நங்கையவள் செந்தூர முகம் சிவக்க நல்ல தமிழ் சொல்லெடுத்து நானெழுத
தேவதைகள் பறந்து வந்து பூச்சொரிய திக்கெட்டும் செவ்வானம் குடைபிடிக்க திங்களது திரை விலக்கி பால்பொழிய! தங்கநிறத் தாமரையாள் தலைகுனிந்தாள்!
மருளுகின்ற மானினங்கள் துள்ளியோட மயங்குகின்ற அந்திவானில் பொழுதுசாய மல்லிகையின் மடிமீது வண்டுறங்க மங்கையவள் மயங்கிநின்றாள் மன்னன் தீண்ட
 

இன்று நேற்று
LDGLD6b6) a5nT6DL b a5nT6DL Dmab நிலம் தின்னிக் கழுகுகள் நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
முகங்களில் ஆயிரம் ஆயிரம் கொலை வெறிகளோடும் மனங்களில் லட்சோப லட்ச வக்கிரங்களோடும் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன இப்போதுகளிலும்
ருசி பேதம் பார்த்துத்தான் ஒருவேளை
நம்மை துரத்திக் கொண்டிருக்கின்றனவோ? மனம் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது நம் ஓட்டத்திற்கு சரி சமாந்தரமாய்
அவ்வளவு ருசியோ எங்கள் நிலம்? கேள்விகள் திரும்பத் திரும்ப திரிபுபட்டுக்கொண்டிருக்கின்றது.
எந்தவிதமான பரிவுகள் எதுவுமின்றி பரந்து கிடக்கும் எங்கள் நிலத்தை புசித்து அண்டவெளியில் இருந்தே அகற்றிட வேண்டும் என்ற இறுமாப்பில் நிலம் தின்னிக் கழுகுகள் வெகு குறியாய் இருக்கின்றன.
நிலம் தின்னும்
சாட்டுகளில் எங்கள் மயில்களையும் குயில்களையும் அவ்வப்போதுகளில் சீண்டிக்கொண்டே இருக்கின்றன கொடும் கழுகுகள்.
கூடுகட்டி குடியேறியிருக்கும் சின்னஞ் சிறிய குருவிகளின் கூட்டுக்குள் கழுகுகள் தமக்கான இடங்களை தேடிக்கொண்டிருக்கின்றன வலுக்கட்டாயமாக
ஒட்டகமும் எஜமானும் கதையை

Page 8
நிஜ விம்பங்களாக நாம் இப்போது தானே காண்கின்றோம்.
வீங்கிப் புடைத்த சரீரத்தினோடும் மனவெளி எங்கினும் நிறைத்திருக்கும் குரூரத்தினோடும் துரத்திக்கொண்டிருக்கின்றன நிலம் தின்னிக் கழுகுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் எல்லா நிலங்களையும் தின்று உமிழ்ந்திடவேண்டும்
- வெற்றி துஷ்யந்தண் -
கற்பனை ஒரு கத்திக்குச் சமானமானது
அல்லது உளிக்கு நிகரானது
மனிதனுக்கு கற்பனை சமனிலைப்படுத்தலாகிறது கற்பனைக்கு மனிதன் மேடையாகிறான்.
கற்பனையில்தான் வெற்றி இலகுவாகிறது
தோல்வி தோற்றுப் போகிறது நான்
என்ற இறுமாப்பில்
விரைவாக இயங்கிக்கொண்டிருக்கின்றன நன்கு பயிற்றப்பட்ட நிலம் தின்னிக் கழுகுகள்
என்ன செய்துவிட முடியும்? எதுவுமே செய்துவிட முடியாதா என்று பெருமூச்சுக்கள் மாத்திரம்தான் ஒன்றாய் ஓங்கி ஒலிக்கின்றன சபிக்கப்பட்டுக் கிடக்கும் இந்த நிலம்தின்னிகளின் காலத்தில்
மதுஷா மாதங்கி
கற்பனையை காதல் செய்கிறேன் கற்பனையை வெறுத்து விலக்குகிறேன் கற்பனைகளால் ஒரு முகமூடி செய்கிறேன்
கற்பனை ஒரு கர்ப்பத்தில் இருக்கும் உணர்வைத் தருகிறது எனக்கு அமிர்தத்தில் விஷத்தை பிரித்தெடுக்க கற்றுத்தருகிறது மருந்திற்கு ஏற்ப காயத்தை அடையாளம் காட்டி நிற்கின்றது இறுதியாக கற்பனை ஒரு கவியாகிறது.
慕
 
 
 
 

fiĩILILL JĩIIĩ
இந் நாளில் என் அன்பின் ஊற்று வற்றிக்கொண்டிருக்கிறது
வெளிறியிருக்கிறது காலம் நாளெலாம் வாமன் மண்மீது இறங்கியிருக்கிறது.
இப்போது மழையாய் எரியும் தேகம் எனக்கு குத்திடும் பனிப் பாறையாய் பிளந்து வெடித்திருக்கும் கண்களும் நுரைத்துப் புளித்தது கண்ணிர் இனி எனக்கு உடலெங்கும் ஊரும் சவவாடை
இசைத் தட்டு குழம்பி குரல்கள் தேங்கி நாறும் அறை
ໂ6ຫ້ சுவர்கள் கரைந்து உலோகம் கனத்து எஞ்சியது
வெளியில் எறிகிறேன் என் முதல் அடியை எங்கோ இரண்டு மேகங்களுக்கிடையில் விழுந்து தொலையுது நிலா -

Page 9
கவிஞர் சண்முகம் சிவலிங்கம்
ன்று நாளும் பொழுதும் கவி தைகளும் கவிதை எழுது பவர் களின் எண்ணிக்கையும் பெரு கிக்கொண்டே வருகின்றது. அதற்கான களங்களும் அதிகரித்திருக்கின்ற
வம் அதிகரிக்கின்றபோதிலும் ஆரோக்
கியமான கவிதைச் சூழல் 捻》 கேள்வி எழுப்புவோமேயாயின் ஒரு
கணம் யோசிக்கவேண்டிய நிலைக்கே ஆளாகுவோம். எனவே வளர்ந்து வரும் இளங்கவிஞர்கள் நல்ல கவிதைகளை அடையாளம் காணவும், அவற்றைப் பரிச்சயப்படுத்திக்கொள்ளவும் முயற்சி எடுக்கவேண்டும். நல்ல கவிஞர்களை இனங்கண்டு அவர்களது கவிதைகளு டான விரிந்த தரிசனத்தைக் காண்பதன் மூலமே, கவிதை மனதை விசாலித்துக் கொள்ள முடியும்,
அந்தவகையில், அண்மையில் காலமாகிய கிழக்கிலங்கையைச் சேர்ந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் bறிய அறிமுகத்தை இளங்கவிஞர் களுக்கு இக்கட்டுரை மூலம் வழங்க லாம் என நினைக்கிறேன்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை என இருவேறு துருவங்களுக்கிடையே, சிக்கிக் கிடக்கிற இன்றைய கவிஞர்களி டையே மரபு எனும் நீரோட்டத்தோடு நவீனத்துவமாய்க் கவிசொல்லிய கவிஞ ராய் சண்முகம் சிவலிங்கம் அவர்களை இனங்காட்ட முடியும், 1939 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையிலுள்ள பாண்டிருப்பு எனும் கிராமத்தில் பிறந்த கவிஞர் கேர விாவில் உயர் கல்வியைப் பெற்று, விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றினார். 1960 களிலிருந்து கவிதை எழுதத் தொடங்கிய சண்முகம்
兼证
தாட்சாயணி
சிவலிங்கம் பல சிறு கதைகளையும் பிரசுரமா காத இரு நாவல்களையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் பலவும்
எழுதியுள்ள இவர் பிறமொழிக் கவிதைகள்
பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தும் &.j.
இவ்வாறு பலதுறைகளில் அவர் தடம் பதித்தபோதிலும். ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் ஒரு தீவிர பாய்ச்சலை நிகழ்த்தியவராக இவரை இனங்காணமுடி கிறது. முற்போக்கு இலக்கியவாதம் முனைப்
புக்கொண்டிருந்த 1960களில் கவிதை எழுதத்
தொடங்கியமையாலோ எண்னவோ 1960 களில் எழுதிய இவரது கவிதைகள் சமூகப் பிரக்ஞையும், புரட்சிகர அரசியல் நோக்கும் கொண்ட கவிதைகளாக உருவாகி இருக்கின் றன. இதற்கு உதாரணமாக புதைத்து வரு கின்றோம். எகிப்தின் தெருக்களிலே, ஆக் காண்டி, வெளியார் வருகை போன்ற கவிதை களைக் குறிப்பிடமுடியும். அவரது கவிதை
களிலே சிறப்பாக அவரை நினைவுபடுத்தும்
கவிதைப்பாடலாக "ஆக்காண்டி" திகழ்வது. இங்கு நினைவுகூரற்பாலது. 1970 இன் பின் ஏற் பட்ட அரசியற்குழல் ஏற்படுத்திய தாக்கமும் கவிஞரின் கவிதைகளில் பிரதிபலிப்பதைக் காணமுடியும், பாடாத பாடல்கள் இப்போது பிள்ளைக்கறி போன்றன மனதை உறுத் தும் படிமங்களாக கவிதையில் உலா வருகின்றன.
கவிஞரின் கவிதைகளின் சிறப்பம்ச மாக சாதாரணமான மொழி அமைந்திருப்ப தைக் காணலாம். ஆனாலும் அந்தச் சாதாரண மான மொழியினுடு வெளிப்படுகின்ற கனதி வாசகனைப் புதியதொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
“சந்தியில் நிற்கிறேன் பகல் சாய்கிறது.*
 
 
 

"வல்லம் முடிந்தது.
என்பன, மேற்சொன்னசாதாரண மொழி கவிதையாய் உயிர்ப்பதற்கான உதாரணங்கள்.
நீர்வளையங்கள்
என்கின்ற தனது கவிதைத் தொகுப்பிலே அவர் தனது கவிதை களைப் பற்றிப் பின்வருமாறு சொல்கி றார:
"இந்தக் கவிதைகளில் இன்ப
மும் உண்டு. துன்பமும் உண்டு. வேத னைகளும், விரக்திகளும் உண்டு. அவை தந்த வெளிச்சங்களும் உண்டு. இந்த வெளிச்சங்களைத் தான் நான் முக்கியமானதெனக் கருதுகிறேன். இன் பத்தினூடும், துன்பத்தினூடும் வரும் எனது வெளிச்சத்தைக் காணுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை, வெளிச் சம் ஒன்றைத் தருவதுதான் ஒரு கலைப் படைப்பின் வாழ்தலுக்கானநியாயம் என நான்கருதுகிறேன்."
ஆம். அவர் சொன்னதுபோல இன்பங்களையும் துன்பங்களையும், வேதனைகளையும், விரக்திகளையும் கொண்ட அவரது கவிதைகளுடு ஏதோ ஒரு வெளிச்சம் பொசிந்து கொண்டே இருப்பதைநாம் உணரமுடியும்.
அவரது உணர்வுகளைப் பகிர்ந்து வெளிச்சம் தருகின்றது அவ ரது கவிதை ஒன்று
உனக்கு எதை
வாங்கி தருவதென நினைக்கும்போது தோற்றுப் போகிறது
உன்னிடம் எல்லாமே
இன்னுமொரு காடு
பறக்கிறது இந்தக் காட்டையும்விட்டு பறவை.
புழு அரித்துப்போன இலை நுனிகறுத்துப்போன அரும்புகள் சாவட்டையாய் வதங்கி சலித்துப்போன நோய்த்தாவரங்கள் குச்சும், காம்புமாய் பிரட்டை பற்றித் தெரிகிறது காடு
மனவருத்தந்தான் குருவிக்கு எனினும், வாழ்வை மறுதலிக்கமுடியவில்லை இன்னுமொரு காடு இன்னுமொரு காடு பறக்கிறது பறவை
(2002)
முடிவில் சண்முகம் சிவலிங்கம் எனும் பறவை இன்னுமொருகாட்டை நோக்கிப் பறந்துவிட்டது.
தன் அழகிழந்து

Page 10
உற்பத்தி மற்றும்
நிர்வானத்தை உடுத்திய நாளொன்றில் தம் சுயத்தின் சிதிலங்களை ஒட்டி பிரசவித்த ஒன்றை
"நான்" என்றனர்
துயரப் பேரிழையில் நெய்த மகிழ்வாடை அணிவித்த கற்பூர பொம்மைகளால் நிறைந்தனர் எனதறையை
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இரவிற்கும் சூரியன் அணைந்துபோன பகலிற்கும் இடையான எனதொரு நாளில் காற்றுக் குடித்த சுடர்களின் மிச்சத்தில் கண்ணிர் கழுவிய புன்னகையின் ஓரத்தில் ஒட்டியிருந்தனர். எனக்கான வாழ்வின் இனிய கனவுகஜைல்
LDIT60Dupilsop6bp ஒற்றைப் புள்ளியில் பற்றி எரிந்த கவிதைகளில் எஞ்சியிருந்தன. கருகிய காதை நெடியும் என் உணர்வுகளின் சாம்பரும் இப்போது
நான்
එ|gl
எதுவுமேயில்லை காற்றில் எறிந்த சில சொற்களைத்தவிர.
 
 
 
 
 

சங்கம் புழைக்கும் மாயாகோவ்ஸ்கிக்கும்.!
Flabb புழை உன்நெஞ்சை முட்கள் கிழித்த கதையறிவேன் "குளிர்ந்துபோனஎன் நிராசைநித்தமும் மூடுபனியாக உன் வீதியிற்படரும்" என்றபடிதுயரில் நீசெத்துப் போவாய் உயிர்தின்றது உன் காதல்
".நொறுங்கியது காதற் படகு வாழ்வும்நானும் பிரிந்தனம்."
ஓ! மாயாகோவ்ஸ்கி." துயரினிலாழ்ந்தாய், குண்டுகளால் அதை வெல்லப்பார்த்தாய்.
காதலின் வளிகரக்
கடுமைதாக்க நானும்உம்போல மனமழிந்த கவிஞன்தான் இந்தவண்ணமெல்லாம் நமக்கேன் நிகழ்கிறது?, மெல்லிதயங்கொண்டிருந்தோம் என்பதாலா?
முதிரா இளைஞர் செயலென்று 9 Libéool D6hu6DITub எள்ளுவார் அணி சேரேன், என்றாலும், உமது வழி தொடரேன் N செய்வதற்கு இன்னும் பணிகள் மிக உளதே! செயலற்று வாழ்வில் ஒதுங்கமுடியாது: பிறத்தியானெல்லாம்" உள் நுழையுங் காலம்!
அ. யேசுராசா

Page 11
முள்முடி குத்தும் சிலுவை உறுத்தும்தான் என்றாலும் சாவு வரை வாழ்வேன்! சாவுக்கு அப்பாலும் என் செயலிற் கவியில் உயிர்த்தெழுவேன்; உயிர்த்தே எழுவேன்!
1. சங்கம்புழை ஒரு மலையாளக் கவிஞர்; காதலித்த பெண் வேறொருவனை மணந்த துயரில்
தற்கொலை செய்தார்
2. மாயாகோவ்ஸ்கி ரஷ்யக் கவிஞர், நிறை வேறாக் காதற்துயரில், கைத்துப்பாக்கி யினால் சுட்டுத்
தற்கொலை செய்து கொண்டார்.
3. LSD55urgor - outsider
அழகாய் பேசுகிறாய் செவியில் தேனி நிறைய ஏனோ அடிக்கடி என் இதயம் துளைக்கிறாய் வார்த்தையில் விடம் தடவி உன்னை நேசிக்கிறேன் என்பதால் பொறுக்கிறேன் வலி.
உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற தயக்கத்திலேயே புன்னகையும் மெளனமுமாய் மென்று முழுங்குகிறேன்: என்னுள் நிறைய வார்த்தைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மின்மினிக்கோ,
இடமில்லா உனதறையில்
பிரபஞ்ச வெளிச்சம் பற்றி பிதற்றிக் கொண்டிருந்தாய்.
அமைதிச் சிறைகளில் விரும்பியே நான் அடைபடும் வேளையில் பிள்ளையாரை துணைக்கழைத்து பெரியார் கொள்கை பேசிக்கொண்டிருப்பாய்.
வெளியில் பெருமிதம் கொள்கிறார்கள்
சிறந்த சிந்தனைச் சிற்பியாம்;
ராமன் பாதம் பட்டுவிடக் கடாதென்றே உன்னால்
- ஆழ் கிணற்றில் ஒளிக்கப்பட்ட அகலிகை என்னைத் தவிர யாரறிவார் உந்தன் அறிவின் ரகசியம்
டுஷாந்திக்கா சுகுமார்

Page 12
நான் வெறும் பிண்டப் பிறப்பு உலக அநியாயங்களை நாசமாக்கப் பிறந்தவன் நான் பூக்களின் சினேகிதன் ரத்தங்களின் காதலன்
கொடுமைகளை கொளுத்த என் எச்சில் துப்பலே போதும். நீதி வழி தவறினால் அதை தூக்கிலிடத் தயங்காது என் கவிதை.
ஏழையின் வயிற்றை எரிக்கும் பசியும் ஒரு சமூக சேவகனின் மனதிலே கருவாகும் சிந்தனையும் நான்.
சுயமரியாதைக்காரனின் உண்மையும் கண்ணிர் சிந்துபவர்களின் கருணையும் நான். நான் உலகமாதாவின் போராளிப் புதல்வன் ஆயுதம் ஏந்துபவர்களுக்கு எதிரான அரககன நான சாது மனிதர்களின் கோபவெறியும் வறுமைப் பெண்ணின் புன்னகையும் நான். அதிகார அரக்கர்களுக்கு எதிராக முளைத்த ரெளத்திர விருட்சம் நான். ஏகாதிபத்தியனின்
ஆட்சி வேருக்கு நஞ்சுமிழ வருபவனும் நான். அவலத்தின் கூக்குரல் அடங்கும்வரை அடங்க மறுக்கும் துணிச்சல்காரன் நான்.
 
 
 

86D6Dunarabofar öFIfö55 fð
என் குறட்டையின் இனிமைக்கு செருப்பாகக்கூட வராத உன்னுடையதை சங்கீதம் என்கின்றாய்.
என் மலர்ப் படுக்கை வரை வந்து s.
உமா வரதராஜன்
காதுகளில் கிணு, கிணுத்து நுழையவும் பார்க்கின்றாய். என் முக சலனம் அறிய சுற்றிச் சுற்றி வருகின்றாய்.
குவளையில் அளளாகித் ததும்பும் "வைன்" தந்த கதகதப்பில் போர்வைக்குள் புகுந்து அந்தப் பணிநிலப் பாவையுடன் கனவுப் பெருவெளியெங்கும் தேங்காய்த் துருவல்கள் சொரியும் குளிரில் கால்கள் புதைய காதலின் மூச்சு ஆவியாய் சூழ நான் அலைவதை உன்னால் என்ன செய்ய இயலும்? தன் உயிரைச் சுருக்கி, ஒரு காகிதமாக்கி, கழுத்தில் முடிந்து அவள் பறக்க விடும் மாடப் புறாவை எதிர்பார்த்து புரண்டு கொண்டிருக்கும் எனது காதருகில் இலையானே நீ வந்து கிணு கிணுக்கின்றாய் ஒரு யானையின் பாதத்தடி புழுவைப்போல. கொத்து ரொட்டிக்காரனின் தடதடப்பினிலும், அகால வேளைகளில் வாகனங்களின் அலறல் ஒலியினிலும் தூங்கப் பழகியவன் நான். முட்டாளே, உன்னால் முடியுமா என்னை எழுப்ப? யார் யாரினதோ கழிவுகளில் குந்தி எழும்பி வரும் நீ ஊஞ்சல் ஆட அறை மூலையில் தொங்குகின்றது என் கோவணம் போய் எடுத்துக்கொள்!
O7. O1.2O11
懿

Page 13
சிலம்புச் சத்தங்கள்
மீண்டும் கேட்கிறது . ఈ தாலாட்டுச் சத்தம் / முனகலுக்கிடையில் ఛీ
தவிப்புகள்
தீர்த்தமாடுகின்றன தெய்வீக தர்ப்பணம் தொடர்கின்றது.
குங்குமம் சிதறும் குனித்த புருவம் கவிதை கேட்கும் போதும் என்று எதுவும் இங்கு செப்புதற்கில்லை
மழலையாக்கும் மலர்விரிப்புகளின் சீண்டல் தூரிகைகள் சிற்றிலக்கியம் * எழுதும்
அற்புத நேரம்
ஸ்வரங்கள் நிர்க்கதியாகின்றது சிருங்காரம் சிந்துபைரவியாக செவியில் விழுகின்றது வேர்வை உலர்கின்றது.
தவில் சத்தங்கள் அடங்கி ஒடுங்கி தாலாட்டுச் சத்தம் கேட்கிறது.
செங்கீறல் விழுந்த கன்னத்தை மறைக்கும் வெக்கத்தாமரைகள்
வீரிட்டு அழுகின்றது.
எங்கும் படித்திராத இந்தக் கல்விக்கு எவன் சொந்தக்காரனோ! அவனுடைய பாதங்களுக்கு வணக்கங்கள்
சூரியன் அழைக்க
இன்னும் சில மணித்தியாலங்கள்! அன்பான முத்தங்களுக்காய் காத்திருக்கிறது
எல்லாம் மறந்து ஏதேதோ எழுதிவிட்டது இந்த முதலிரவு
ஆசை அறுந்தும் ஓசை பொலிவிழந்து ஓய்ந்த வேளையிலும் மீண்டும் கேட்கிறது தாலாட்டுச் சத்தம் தாயாகிவிட்டாள் என் தேவதை எனக்கும் என் பெயர் சொல்ல போகின்ற ஜீவனுக்கும்.
நெடுந்தீவு யோகேஸ்
 
 
 

கவிதை வரலாற்றில்
மரபும் புதுசும்
மிழ்க் கவிதையானது நீண்ட
வரலாறு கொண்டது. சிறந்த
பண்புகளைப் பெற்றும் அள வற்ற நலன்களைக் கொண்டும் தமிழ்க் கவிதைப் பரப்பானது பல்வேறு வடிவம் பெற்று விளங்கி வருகிற்து. இங்கு மர புக் கவிதை, புதுக்கவிதை என்ற இரு பிரிவுகளாக கால ஓட்டத்தை அடிப் படையாக வைத்து பிரித்து நோக்கப் பட்டு வருகிறது. தமிழிலக்கிய வரலாற் றில் சங்ககாலம் முதற்கொண்டு நாயக் கர் காலம் வரையான ஏறத்தாள 18 நூற்றாண்டுகளை உள்ளடக்கிய காலப் பகுதிகளில் பெருமளவிலான மரபுக் கவிதைகள் ஊற்றெடுத்தன. அக் காலகட்டத்தில் காணப்பட்ட மொழி அமைப்பும் மக்களின் தமிழ்ப் புலமையும் மரபுக் கவிதைகளின் பிர வாகத்திற்கு அடித்தளமிட்டன என லாம். ஆனால் காலமாற்றத்திற்கேற்ப மொழிப் பிரயோகங்களும் தமிழ்ப் புல மையும், நவீன அறிவியற் சூழலும் புதுக்கவிதைகளின் தோற்றத்திற்கு ஊற்றுக் கண்ணாக திகழ்ந்தன. குறிப் பாக 19ம் நூற்றாண்டு காலத்தில் அதி களவான புதுக் கவிதைகள் தோற்றம் பெற்றன. தமிழ்க் கவிதை உலகில் புரட்சியினை ஏற்படுத்தியிருந்த பார தியின் காலத்திலே புதுக்கவிதைகள் படைக்கப்பட்டன. புதுக்கவிதைகளின் எழுச்சிக்கு பிள்ளையார் சுழி இட்ட பெருமையும் பாரதிக்கே உரியது.
பரீ நதிபரன்
இங்கு புதுக்கவிதை, மரபுக்கவிதை ஆகிய இரு கவிதைகளுக்குள்ள பண்பியல் ரீதியான ஒற்றுமைகள், வேறுபாடுகளை எடுத்துநோக்கினால் மரபுக் கவிதைகளில் காலம்காலமாக பொருள்கோள் முறையும் அணியிலக்கணங்களும் சிறந்த உத்திக ளாக காணப்படுகின்றன. புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம்பெறுவ தில்லை. இருந்தும் அணியிலக்கணங்கள் சிலவற்றைக் காணமுடிகிறது. பொருளை நேரடியாக அணுகுதல் கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளி மையை பின்பற்றுதல் போன்றன புதுக் கவிதைகளுக்கான சிறந்த உத்திகள் ஆகும். இவ் இருவகை கவிதை வடிவங்களில் கையா ளப்படுகின்ற உத்திகள் அணியிலக்கணங் களாக உள்ளன. இங்கு உவமை, உருவகம், முரண் அங்கதம், சிலேடை, தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற் பாங்கு, இருண்மை, ஆகிய அணிகளின் அடிப்படையில் கவிதை களில் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு ஒவ்வொன்றையும் பற்றி சுருக்கமாக விளக்கலாம்.
9 உவமை - தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை விளங்கவைப்பதற்கு உவமை பயன்படுத்தப்படுகின்றது. அணி நயத்தின் பொருட்டு பயன்படுத்தப்படும் இவ் அணியானது எல்லா அணிகளுக்கும் தாயாக விளங்குகிறது எனலாம்.
9 உருவகம்:- உவமையும் பொருளும்
懿

Page 14
ί και
ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடை யனவல்ல, முழுமையும் ஒன்றா னவை என்பதாக அமைகின்ற அணியாகும். உவமையினும் செறி வும் நெருக்கமும் உடையது.
9 முரண் - சொல்லாலோ பொரு ளாலோ முரண்பட அமைவது முரண் ஆகும். இதனை தொடை வகையுள் ஒன்றாக யாப்பிலக் கணம் கூறுகிறது. ஆனால் அணி வகையுள் ஒன்றாக அணியிலக் கணம் கூறும்.
அங்கதம் :- அங்கதம் என்பது நகைச்சுவையும் புலமைநுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது சமூக மேம் பாட்டை நோக்கா கொண்டு தீங் கையும் அறியாமையையும் கண்ட னம் செய்வது.
0 சிலேடை. ஒரு சொற்றொடர் பலவகையான பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை uist (5lb.
9 தற்குறிப்பேற்றம் :- இயல்பாக உள்ள ஒரு பொருளின் மீதோ இயல்பாக இயங்கும் ஒரு பொரு ளின் மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப் பேற்றம் ஆகும். இங்கு இயற்கை நிகழ்வுகளை தற்குறிப்பேற்றத்
திலே பெரும்பாலும் கூறப்படும்.
0 தொன்மம் - புராண இதிகாச வர லாறுகளை உடன்பாட்டு நிலை யிலோ, எதிர்மறை நிலையிலோ எடுத்துரைப்பது தொன்மம் ஆகும்.
 ேஉரையாடற் பாங்கு:- உரைநடையில் அமையும் நாடகம் நாவல் மாத்திரமின்றி செய்யுள்களிலும் உரைநடை அமைவ துண்டு. கலித்தொகை, காப்பியங்களி லும், தனிப்பாடல்களிலும் உரையாடற் பாங்கை காணமுடியும்.
இருண்மை: கவிஞனுக்கும் வாசகனுக் கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டும். இதற்கு கவிஞனின் சோதனை முயற்சியும் வாசகனும் காரணமாகும்.
இவ்வாறு அக்காலக் கவிதைகளில் உத்தி முறைகள் சிறப்பாகக் கையாளப்பட் டுள்ளமையை காணமுடிகிறது. ஆனால் தற்காலத்தில் அதிகமாக எழுச்சிபெறும் புதுக்கவிதைகளில் மேற்சொன்ன உத்தி கள் சிறப்பாக கையாளப்படவில்லை என்றே கூறவேண்டும். காரணம் தற்கால கவிஞர் களிடம் கவிதை பற்றியதான பூரணத்து வமான புரிதல், இலக்கண அறிவு இன் மையே பிரதான காரணமாகும். இந்தநிலை மாறி வாசகர்களுக்கு தரமான புதுக்கவிதை களுடன் அதற்கு சமாந்தரமாக மரபுக் கவி தைகளும் எழவேண்டும்.

அம்மான் ஆண்ட நிலம் அவன் அப்பன் சொந்த நிலம் சீரணியைக் கைப்பிடிக்க சீதனமாய் தந்த நிலம் மணியாரன் காணி என்பார். மந்திர தென்றல் வரும் கடல் அருகே இருந்த நிலம்
கண் கொள்ளாக் காட்சியது.
கிழுவையை கிண்டி நட்டு கிடுகு வேலி செய்து தகரப் படலை போட்டு பார்த்திருப்பேன் அதன் அழகை மனிசியும் நானும் மகிழ்ந்திருந்த பூமி அது.
காலப் பிரளயமோ கண்பட்டுப் போனதுவோ போர் வந்து தான் துரத்த பிரிந்தேன் தாய் நிலத்தை
பாலைவெளி கடந்து படாத துயர் உழன்று
- வேலனையூர் தாஸ் -

Page 15
உற்ற துணை இழந்து உயிர் ஒய்கின்ற வேளை ஊர் மீண்டேன்.
ஓடி வந்தேன் என் நிலத்தில் உருண்டழுது உயிரை விட ஐயகோ! தென்னை எங்கே! தென்றல் எங்கே!
சுற்றிவர முட்கம்பி இரும்புத்துாண் அரண்கள் விளங்கா மொழியினிலே பெயர்ப்பலகை.
இன்று இது எனது நிலம் இல்லையென்றார் சமதர்ம நாட்டினிலே சட்டம் இதுவென்றார்
தலையை சுற்றுதடி கண்பார்வை மங்குதடி என் நிலமே.

புதிய வரவு
காற்றிடைவெளியே நெடுந்தீவு யோகேஸ் வெளியீடு - இசைத்துறை வளாகம் யாழ் பல்கலைக்கழகம்
ந. மணிகரன்
:
|
அண்மையில் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் இக் கவிதைத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டது. தன்னைப் பாதித்த வாழ்வியல் அனுபவங்களை அழகிய கவிதைகளாக தொகுத்தி ருக்கிறார் யோகேஸ். படித்ததும் மனிதில் ஒட்டிவிடுகிற கவிதைகள் இத்தொகுப்பில் நிறைய உண்டு. அவற்றுள் எனக்கு பிடித்த கவிதை வரிகள் சில:
y
ஒவ்வொரு கவிதைக்கு பிறகும் பாடலிற்கு பிறகும் நீகொடுக்கும்
முத்தம்தான் எனக்கு தேசிய விருதுகள்.
நான் இடையில் முத்தமிடும் நேரம் நீசெய்கின்ற அபிநயம் ஆடல் வகை சார்ந்ததா நம் காதல் வகை சார்ந்ததா?
எனக்கு சங்கீதம் வேண்டும் ஒருமுறை பேசு எனக்கு கவிதைவேண்டும் உன் கண்ணுக்குமையிடு.
விலை 15O/= நூலாக்கம் நோபிள் பிறிண்டேர்ஸ், யாழ்ப்பாணம். முகவரி 13ம் வட்டாரம், நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு 絮

Page 16
※差。 சேற்று வயலாடி - சிந்திய வியர்வைகள் நேற்றுப்போல் இருக்கிறது.
காற்றுவெளி தாண்டி சோத்தி மரமேறி
கடல் நீந்தி வரும் நினைவுகள் நெஞ்சில் அலை மோதுகிறது.
காட்டுக் கோழிக்கறி கடவாயில் வழிவது போலிருக்க கைப்பின்புறமும் முகம் தடவுகிறது.
கொந்திய கொய்யாப்பழப் பாதிக்கு அடிபட்டு குடும்பப் பந்தி கூட்டிய தங்கையின் பிஞ்சு முகம் மூச்சில் முட்டிப் போகிறது.
பாட்டி சேலை நுனிப் பணம் கடாபி இனிப்புக்காய் கையில் இன்றும் குலுங்குகிறது.
அத்தனை சுகம் தாங்கி எத்தனை ஆண்டுகள் தாண்டி எந்தன் ஊர் வரும்போது. என் வாசலில் தொங்குகிறது. எதுக்கோ ஒதுக்கப்பட்டதாய் 6.Rc5 6060DE5 குறைத்தமிழில்.
 
 
 

கும் இருட்டில் - நீளும் இரவுகளின் காவலில் அருந்ததிகளின் ஆசீர்வதிப்புக்களுடன் மெல்ல அசைகிறது - இசை
சாளரங்கள் மூடப்பட்ட - பின்னும் முற்றுப்பெற மறுத்து கனவுகளில் வழிந்தோடும் நீர்ச் சொரியலாய் - என்னுள் புகுந்து தாவுகின்றது. கனவின் இசை நான் தேடும் என்னவனாய்.
அவனுக்கு தெரியுமோ என்னமோ? இசைக்குத் தெரியும் வெற்றிடமான - என் இதயத்தில் கனவை நிரப்புவது எப்படியென்று.
தொலைதூரம் நான் காணும் என்னவனின் சிரிப்பொலியை மென்றுவந்து இரைமீட்டு செல்கின்றது. என் கனவில் தினமும் - இசை
தகிக்கும் முத்தங்களின்
நினைவுகளின் வெப்பக் கனதி படுக்கையை நனைக்க. இரவுக்குளிரின் இதங்களைப் பறித்து வெப்பம் தனித்து சென்றது காற்றாகி என் கனவின் இசை.
என் மெளனங்களை உடைத்த அவன் வெற்றுப் பார்வையை சத்தமற்ற ஒலிக்கசிவாக்கி. "இசைக்கத் தொடங்கியது இதமாக."
பரந்து கிடந்த என் உணர்வுகளை நொருங்கி சிதைந்த என் ങ്കങ്ങTഖങ്കങ്ങാണ് இசையின் வயிற்றில் உருவாகி அழகிய பாடலென்று வைகறையில் பிறக்கின்றது.
அதே விடியலிலே நரம்பறுந்த வீணையின் இசையாகி சுருதியில் பேதமடைகின்றது என் கனவின்
இசையெல்லாம்.
懿

Page 17
வான் றேட்டு மடி படுத்த நிலப் டென்னின் |് ഞd' || ഞഖ நீண்டு கிடக்கிறது.
காசியப்பனின் காதல் புகழிடம் அந்நிய வருமானம் அள்ளும் அகழ்விடம் - இது உலகின் அதிசயம்
என்ன அழக -ஒ! நிலமகளின் இளமை நிமிர்ந்து படுத்திருக்க நீலக்கண்கள் - அதை தேடிவந்திருக்க பாடிக்கொண்டன பாறைத் தேனிக்கள்
தேசIDள்ை பிள்ளை tரும்ை வந்த சேதியை நாடிச் சொல்லினவோ? உலகின் காதுகளில் forhléb TUI DIFE5
d5!T (Bä ä566 மலையிடையில் அல்லி மங்கை ஒவியங்கள்
இவள் அஜந்தாவின் தங்கையா? இல்லை அவளின் Đllus60)|DU III o புரிகிறது - ஒ வரலாற்று நண்பிகள்
இவள் ஒரு தேவதை இவளிலும் தேவதைகள் - உள்ளே காசியப்பனின் கலைஞர்கள் அன்று ஒவியத்திலே பிறந்தனர் என்று இன்றும் சொல்கிறது.
éfléÉflu ||T
இவள் மட்டும் எழுந்து நடந்து வரில் இளைஞரின் நிலை என்ன? இவளைப் பார்க்க விரையுங்கள் அவள் மோகம் படமுன்.
 

ட்எஸ் மதி
கனவுகளில் கூட கம்பீரமாய் தெரிகிறது என் வீடு.
நான்
தவழ்ந்து விழுந்து எழுந்து இடி நடைபழகிய நாற்சாரம் எல்லாவற்றையும் தனக்குள் புதைத்து சிநேகிதமாய் சிரிக்கிறது என்னைப் பார்த்து.
அ, ஆ,
எழுதி படித்த பெரிய சுவர்கள் சித்திரம் வரைய பழகிய நிலங்களும் இப்போதும் அப்படியே
கதைபேசிச் சிரிக்க ஊஞ்சல் ஆட
சடுகுடு விளையாட
கிட்டிப்புள்ளடிக்க என் கனவுகள் பட்டாம்பூச்சியாய் பறக்க எல்லாவற்றிற்கும் போட்டிபோட்ட என் முற்றத்து வேப்பமரமும் இன்னமும் அப்படியே
,韌 懿

Page 18
உப்புக்கும்
தூளுக்கும்
வித்தியாசம் புரியாமல் திகைத்த
சமையல் அரிச்சுவடியும் நானும் தங்கையுமாய் போட்டிபோட்டு பழகிய சமையல் வாசம்
இன்னும் மணக்கிறது.
தடுக்கி விழுந்த படிக்கட்டுகள் நான் விழிவிரிய பார்க்கும் மான்கொம்புகள் யானைப் பொம்மைகள்
சிற்பங்கள்
அலுமாரிகள்
எல்லாமே அப்படியே
பார்த்துப் பார்த்து செய்யும் கிருஷ்ண ஜெயந்தியும் என்னோடு மல்லுக்கட்டும் குட்டிப்பட்டாளமும் அப்படியே நான் மட்டும் வெளியே.
மெளனங்கள்
சில பொழுதுகளில் உன் வதனய் புன்னகையை நினைத்துப் பார்க்கையில் கவி வரைய தோன்றுகிறது என் இதயம் கரைத்து எழுதும் வார்த்தைகளை - உன் மெளனங்கள் படிக்க மறுப்பது ஏன்?
 
 
 
 
 
 
 
 
 

மாறிப்போன பெ/ஆண்மை (தறிகெட்டுப் போனவர்களுக்காய்)
பார்வைக்கு அஞ்சி பயந்தொளியும் பெண்மை இன்று
பூவுக்கு ஏங்கி
புதுசுரம்
பாடுகிறது.
தொட்டிலில் ஆடும் குட்டிக் குழந்தையைக் கூ! தொட்டுப் பார்க்கும் வஞ்சக நெஞ்சம்.
கட்டி விட்டு தொட்டுச் சென்ற கணவன் தொலைவாகி விட எரியும் நெருப்பை
சீதைகளான பெண்கள் சிதைகளில் மாண்டுபோக போதைகளாய் கண்கள் சீர்கெட்டு அலைகிறது.
பத்தாம் வகுப்பில் பாலியல் சீர்கேடு. பற்ற வைத்தது
கொழுந்தன் அணைக்கின்றான்.
-a. бlappilon
பள்ளியின் ஓர் கிழடு. விதவைகள் கூட இங்கே விற்பனை பொருட்கள்தான். கலவைகளில் அவை கலக்க விதியெங்கே.? கதிuெIங்கே.?
சொந்த மகளின் ċji ċibLb ċ560ör (B சிதைத்த கதை
சுட்டுவிடும் சூரியனும் இதைக்கண்டு கடமறந்து கண்ணிர் விடும்.
சித்திர பாவையவள் சீவிமுடிக்க மறந்திட்டாள்.
உறுத்தலில்லை காணிரோ.?
பெண்ணும் இன்று பெண்ணாயில்லை. ஆணுமின்று ஆணாயில்லை. அபலைகளின் வாழ்வு மட்டும் அந்தரத்தில்.
懿

Page 19
6D666OTD
பிறக்கும்போதே இறத்தலதோ மெய்யாழாத மெய்மை. பொய்சூழா முறைமை என்றும் இதுவே.
அத்விகா
காலம் நெடுகிலும் கைக்கோர்க்கவே இந்த ஞாபகப்பாலம். ஒர்துளி விழிநீர் விழினும்
சிந்தா ஞானமும் இதுவேயன்றோ.
உண்மையிது உன்னை தேடினும் கிடைக்காத அஞ்ஞானமதும் உந்தன் அனுபவம் கற்றுத்தரும் மெஞ்ஞானமே.
தேடு தேடு தேடலுன் ஆளுமையில் பிரமிப்பாய், என்றோ உனக்கே தெரியாமல் நீ இயங்கவிருக்கும் வாசகத்தின் ஒரு சொல் கண்டு.
 
 
 
 
 
 

QQIGOxji
G660óróOLDசமாதானத்திற்கு பெயர்போனது சிறகுகளை விரித்து இங்கும் அங்குமாய் சமாதானம் பேசியது வெள்ளைப்புறா
யுத்தவில்லன் இடங்களை மட்டுமா பாழாக்கினான் மனங்களையும் தான். குண்டுத்தாக்குதலுக்கு பயந்து கோவணத்துண்டோடு ஓடியவர்கள். குழந்தைகளை நெஞ்சோடு அணைத்து தம்மையே தூக்கமுடியாமல் ஓடியவர்கள். மனங்கள் எங்கும் ரணங்கள்
மஞ்சள் முகம் வெளிறலாக மனைவிமார் சிலர் கன்னி கழியாமலே விதவைப்பட்டம் ஏற்றனர். வெண்மை விரித்து வந்த வெள்ளைப்புறா வெளிறலாய் போன முகங்களுக்கு வெள்ளைச்சேலை கொண்டு வந்து
ஏ!
வெண்புறாவே மஞ்சள் கடதாசியில் சேதி சொல்வாயென இருந்தோம் வெள்ளைக் கடதாசியில் சோதனையையே நடத்தி விட்டாயே!
எப்போது மாற்றிக் கொள்வாய் உன் நிறத்தை?

Page 20
இதுவரை உன்னுடன் பேசாத சொற்கள் இயலாமையால் நெஞ்சை அடைக்கின்றது இளையவனே உன்னை அடிக்கடி சந்தித்தும் இனிமையான நினைவுகளை யாசித்தும் இதுவரை நாம் பேசாத வார்த்தைகள் - நாம் இன்றி தனிமையில் தாமே இளைப்பாறிப் பேசுகின்றன நமக்காக.
இதுவரை நாம் பேசாத வார்த்தைகளை இன்றுவரை மறக்காமல் வைத்திருக்கின்றேன் பொக்கிஷமாக இராக்கனவில் உன்னுடன் இருளில் மணிக்கணக்கில் பேசுவேன்.
இருண்ட இரவில் இனிய கனவில் இடைவேளையற்று உன்னுடன் பேசுவேன்
இது உனக்குக் கூட கேட்டிராது.
இதுவரை உன்னைப் பார்க்கும்போது இயலவில்லை பேசுவதற்கு. இன்றுவரை நீயும் இயல்பாக பேசியதில்லை என்னிடம். இனியும் என்னுடன் பேச இல்லை உனக்கு நேரம்.
இதுவரை பேசாத சொற்களுடன் இருண்ட இரவில் வரும் இனிய கனவிற்காய் இன்றும் காத்திருக்கின்றேன்
x孪 褒 兹 இன்பமான உன் நினைவுகளுடன். இனிய காலைப்பொழுதில்தான் பேசமுடியவில்லை. இருண்ட இரவின் இனிய கனவிலாவது.???
 
 
 
 
 
 
 
 

ப்ேபா
அப்பா
என கூப்பிட்ட
நீ இப்போ யாரப்பா என்கிறாய். go—6бт
மனைவி வந்தபின் யாரோ என பார்க்கிறாய்.
வயிற்றில்
சுமந்தாள் அன்னை, அவளுக்கு
வலிக்கவில்லை. தோளில் தினம் சுமந்தேன் எனக்கும் வலிக்கவில்லை. என்னை நீசுமக்கவில்லை. இருந்தும் எனக்கு வலிக்கிறது.
மாதாந்தம்
பத்தாம் திகதி
தினம் வராதா 6)ëFT6ö6)JTuuT...? பத்தாயிரம் பென்சனுக்கு எங்கிருந்து வருகிறது திடீரென அன்ழெல்லாம்.???

Page 21
முதுமை வந்த பின்னால் என் முகம் பார்த்தும் நீஉன் முகம் திருப்பி போகையில் துடிக்காத என் இதயமும் நொடிக்கு இருதரம் துடிக்குதடா.
சிறுவயதில் உன் இரவு திருவிழாவை ஒரு வயதில் நான் கூற சிரித்திருக்கிறாய். ஒருநாள் கட்டிலில் போனதற்காய் கடிந்து விழுந்தாய்.
d 600TLC36) 666)ItLD6) தான் போகுதடா இது கூட புரியலையா..!!
ஆறு வயதில் ஒன்றை அறுபதுதரம் கேட்டும் சொல்லியிருக்கிறேன். ஆறுதரம் தான் அன்பாய் கேட்டிருப்பேன். அறுபது வயதுதான் ஆகிறது. "உனக்கு அறளை பேந்துவிட்டது, அறநாயே" என்கிறாள் உன் மனைவி. உங்களுக்கு ஆடை வாங்குகையில் எனக்கும் ஒன்று வாங்குங்கள். குளிப்பது சிரமமாக இருக்கிறது. அடிக்கடி 9d 60L60Du Junelg
兼
மாற்றிக்கொள்கிறேன். குழந்தைகள் கூட நெருங்கவிட மறுக்கிறாய் முதுமை தொற்றிவிடும் என்றா? முன்பு எங்கள் வீட்டு பூனையை அனைத்து மகிழ்ந்திருக்கிறாய் நினைவிருக்கிறதா..??? தொழுவத்தில் மாடுகளுக்கு வைக்கும் களுசி கலராய் இருக்கிறது தினம் தரும் தேநீரை விட. சத்து உணவு கேக்கவில்லை சாகடிக்க தந்தால் போதும் செத்துவிடுகிறேன். வங்கியில் காசிருக்கு. காப்புறுதியும் செய்திருக்கு. அதுபோதும் உனக்கு சுடலை வரைக்கும்.
குழந்தாய் um6nILib 2. Iris éluLun தாங்கமாட்டார்.
இதுபோல் செய்துவிடாதீர்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் LD60T6af66ortLib மெசின் ஆகி போனாலும். முதியோர் இல்லம் இருக்கும். அங்கே விட்டுவிடுங்கள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டும்.I
oifigenfilon O
 

மூலை முடிச்சுக்கள் விலக்கப்பட்டன.
ஒவ்வொரு செல்லிலும் புத்தணர்ச்சி.!!
மீண்டுமோர் ஞாபகப்படலம் தொடர்கிறது.
புதுமைகளில் புலமை பெற்றிருந்ததென் உணர்ச்சிகள் காட்டாற்றில் வீழ்சருகாய் பெருக்கெடுத்த டயறிக் குறிப்புகள்
ஒற்றை எண்ணத்தில் பைத்தியக்காரனாய்
தாக்கியெறியப்பட்ட கிழிந்த கடிதங்கள்.! மூலையில் சிதறிய தகள்களாய் கனவு உடைசல்கள்.!
இன்னும் பல ஆற்றாமைகளும் ஆளாமைகளும்.!
தீர்க்கமில்லா நினைவுeளல் - மறுகணம் தாங்கி வந்திருக்கிறத எனக்கான. எதிர் நிழலுருவை.!!!

Page 22
ஒளியெனவந்து
தவா பரமேஷ்
LD60T6LDrtile, b இருளடைந்த நிசப்த கட்டமாய் நான்
ஜன்னல் வழி ஒளிக்கீற்றின் ஜென்மமாய்
S
இருளடைந்த மனவறை ஒளி பெறும் உயிர்பெறும் உணர்வென எதிர்பார்த்தேன்.
உயிர் பெற்றது உணர்வு உடன் வளர்ந்தது சின்னஞ் சிறு ஒளிக்கீற்றாய் 2 -60r 6) Inaflb.
திடீரென ஜன்னல் வழி ஒளியைக் காணோம் மணவறை இருளில் மீண்டும்.
ஒளிக்கீற்றாய் ஜெனனித்தது வானமாய் வளர்ந்து வாசம் உன் நேசத்தை வாங்கச் சொல்லி
விரட்டுகின்றது வளர்ந்துவிட்டேன்
இருளில் வாழ்ந்து விடுகின்றேன் அதனுள் என்றபடி நான்.
 

வானத்தில் வலம் வரும் நிலா வாய்கால் நீரில் நீந்தும் நிலா வடிவங்கள் மாறும் நிலா வண்ணமாய் மனதை கவரும் நிலா மாலையானதும் மலரும் நிலா மாதம் தோறும் பூரணமாய் பூரிக்கும் நிலா கவிஞர்களின் காவியநிலா காதலர்களின் உவமை நிலா கடவுளாய் வணங்கும் நிலா
நீல்ஆம்ஸ்ட்ராங் நின்ற நிலா எட்வின் ஆல்ட்ரின் எட்டிய நிலா எல்லையில் எதிரியின் வரவை காட்டிய நிலா எல்லாம் ஒரே நிலாவென நித்தமும் நினைத்திருந்தோம்
விஞ்ஞானம் நேற்று வியம்பியது விந்தையான தகவலை
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமிக்கு இரண்டு நிலாக்கள் இருகோள்கள் மிதமானவேகத்தில் மோதிக் கொண்டதினால் இரண்டாவது நிலாவை சுற்றிவந்த நிலா ஈர்த்துக்கொண்டது கல்லிபோனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு இது
அன்று பார்த்தது இரு நிலா இன்று பார்ப்பது இணைந்த நிலா.

Page 23
Աբեսոեմնվ
பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன. என்னை
மேகத்திற்குள்ளும் மண்ணிற்குள்ளும் மறைக்க எண்ணிய வேளையில் வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் அவர்களின் குரோதம் நிறைந்த பார்வையும் வஞ்சகம் நிறைந்த சிரிப்பும் என்னைச் சுட்டெரித்தன.
எனத ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன. அவர்களின் மனம் மகிழ்ச்சி கொண்டது. அவர்களின் பேரின்பம்
慕
சி. சிவரமணி.
என் கண்ணீரில்தான் இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு நான் அடிமையில்லையே அவர்களின் முன் கண்ணீர்க் கொட்ட
எண் வேதனை கண்டு ரசித்தனர் அவர்கள் எண்றைக்குமாய் என் தலை குனிந்த போனதாய்க் கனவு கண்டனர்.
ஆனால் நான் வாழ்ந்தேன் வாழ்நாளெல்லாம் நானாக இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக நான் வாழ்ந்தேன் இன்னும் வாழ்கிறேன்.
நன்றி. சொல்லாத செய்திகள்
 
 
 
 
 
 

காலத்தின் மீதான
O O சூனியப் பரப்பில் சிறகு தாததிԱ5ԼIԼ! ேே
மனப்பறவை!
இளைப்பாறலுக்கான மரத்தில்,
660)6086fsbourFLD6b, கூடுகளில் சிதைந்துபோன குஞ்சுகளின் எச்சங்களும் என்றோ கட்டப்பட்ட இளங்கொடி பொதிகளும்,
அனாமதேய குரல்களின் ஒலிப்புகள் எரிச்சலூட்டினாலும், துனையிருப்பின் ஆறுதலை துண்டுகிறது உள்ளுக்குள்.
அமைதிப்பிரவாகத்துள் மூச்சுக்கான சப்தம் மட்டும் மெல்லிதாக. அச்சத்துடன் அலைகிறது இருதயத் துடிப்பொலி காற்றில்.
உனடு)வுக்கான தனக்கான உணடு)வுக்கான பறத்தலை நியதியாக்கி, இருப்புக்காக தனக்கான இருப்புக்காக போராட்டத்தை வழமையாக்கி காத்திருக்கிறது இறைப்பாற்றலிலும்.
தூரத்தில் மிக தூரத்தில் பிரசவ வேதனையோடு ஒரு கரியமேகம்.
செத்துக்கொண்டிருக்கும் செஞ்கரியன் கடைசி கதிர்களால் தடவிச் செல்கிறது தினமும்.!
இருகாட்டான் இதயமுள்ளவள்

Page 24
ക്രിയ്യ ആതരധ്രുമ്
終 தரமான 22 கரட் தங்கநகைகளுக்கு
8 நாடவேண்டிய ஒரே இடம்
ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும். தொ.இல-0779525392
TP-021-2262841, Fax-0212262842 Mobile-0777297476 E. mail-abinetcafe2011 Gyahoo.com
கொடிகாமம் வீதி நெல்லியடி கரவெ
 
 
 
 
 
 
 
 
 


Page 25
பாழில் நகர்கிறது காலம் - பண்ணிசைப்பதற்கான யாரும் இன்றி: அறுந்து போய்விட்ட நரம்புகளின் தொலைந்து போன பாடல்களின் மீதி அலைந்து கொண்டிருக்கின்ற வெங்க மொட்டைப்பனைகளதும், தென்னைக நெட்டைப்பெருமுச்சில் வலம் வருகின்ற யாருமற்ற கிராமங்களின் பாலைவெளி
- விடுதலை முகம் /சு வில்
email - yarielakiyak Web - http://facebo

ல்லை
றாவெளியில்
எதும்
D60
க்கனவுகள்.
ல்வரத்தினம்
uviyam Ogmail.Com ok.com/yarlelakkiyakuviyam