கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆக்கம் 1988.04

Page 1
நியாயத் தொடைவாதமும் வெண்பட
விஞ்ஞானக் கருதுகோள் ஆக்கத்தில்
19ஆம் நூற்றண்டில் இலங்கையின்
திருமுருகாற்றுப்படை
இடைய ஆகார அளவீடும் அதனுடன்
:) 1 、 、
 
 
 
 
 

1988 gTargi سے کسے 2 R T
வரை முறையும் - விளக்கமும்
சான்று எனும் முறையும்-அதன்பங்கும்
கறுவா வர்த்தகம்
ன் தொடர்புடைய சில அளவைகளும்
|
புகள் கல்லூரி
9) արքնարհներն

Page 2

||-|-|-
· |- | -----|-*· |- |-|- |-|!||-* |- |-: ||- - , !|-|-|- |--|-| || .
·|- |-|- !-|· |--
-----|- * ----'.|- † |-|- ( ) }! !|-· · · · - |-; -·· |-|-·· }·?
·|- *、 ·| -s. į.*..., ,#|- ; ·

Page 3
ஆக்கம்
Ds) இதழ்: 2
ஆசிரியர் :
திரு. வே. சிவயோகலிங்கம், B, A (Hons)
முகாமை இயக்குனர் :
திரு. இரா. சத்தீஸ்வரன்
ஆலோசனைக் குழு :
திரு. S. சிவராஜசிங்கம், B. A. (Hons.)
(உதவி விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்)
Soj. A. sysiologi, B. Com. (Hons.)
(உதவி விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்)
Sg5. Gg5, Gguu JITLDsăT, B. Com. (Hons.) (டெல்கிப் பல்கலைக்கழகம்)
திரு. வே. யுகபாலசிங்கம்
B. A. (Hons.) Dip-in Ed. திரு. ந. பேரின்பநாதன் M. A.
(விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்) திரு. S. T. B இராஜேஸ்வரன் M.A.
(விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)
பிரசாரப்பகுதி உத்தியோகத்தர்கள் :
திரு. பொ. அமிர்தலிங்கம் செல்வி ந. குமுதினி 霹雳 க. மாலினி
ந. மங்கையர்க்கரசி
எண்
ଜTଜଙ୍ଘିନ୍ବା திருப்தியை ஆக்கத்தில் முயற்சியின் ளோமர என்பதே விளம்பரம் பில் இருந் தமிழர்
呜éT●季
ஆவலுடை
SITa 6 TLD களிலும் ெ
திரTதர உ முக்கியத்து குழாமினே களின் அபி களும் தெ யிடப்படும் முதற் கச் (Sylabus) விற்பனை அ பதிப்பாக வரத்து எ4 மாவட்டத்
மானவர்க
மானவர்த
மற் போய ஆக்கம் ப எதிர்பார்க்

6. It
எம் எப்போதும் எளிமையானதாக இருக்கவேண்டும். ஒருபோதும் அளவிட முடியாது. மாணவர்கள், எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதே எமது முதற் பரிசோதனை. இதில் நாம் வெற்றி கண்டுள் ன்பதற்கு விடை ஆம் என்பதுதான். எந்தளவு தூரம் அடுத்த வினு ? விளம்பரப்படுத்தாமல் அதாவது மிகை செய்யாமலே கணிசமான அளவு பிரதிகள் கையிருப் து போய்விட்டன. எமது அடுத்த இதழான இம்மலர் புதுவருடத்தின் 4ஆம் திங்களில் வெளிவருகின்றது. ஆக்கத்தின் அத்திபாரத்தில் கற்கள் அடுக்கப்படுகின்றன. ய மாணவர்களின் ஆர்வத்தினேப் பூர்த்திசெய்வதற் து ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட ஒவ்வொரு மாதங் வளிவரும். இனிவருகின்ற மலர்களில் கல்விப் பொதுத் யர்தர வகுப்பு மாணவர்களின் தேவைகளுக்குக் கூடிய வம் அளிக்கப்படும். எமது ஆக்க கட்டுரை ஆசிரியர் ராடு மாத்திரம் நின்றுவிடாது வெளியிலும் மாணவர் விமானத்தினைப் பெற்ற விரிவுரையாளர்களின் கட்டுரை ாடர்ந்து வருகின்ற இதழ்களில் வெளிவரும். வெளி தலையங்கங்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரம், லத் தகுதித் தேர்வுக்குரிய பாடவிதானங்களோடு தொடர்புடையனவாகவே இருக்கும். பிரதிகளின் திகரித்ததும் கூடியளவுக்கு இதனை இன்னும் மலிவுப் வெளிக் கொண்டுவர முயலுவோம். அஞ்சல், போக்கு ன்பன பூரணமாகச் சீரடையாத காரணத்தினுல் வெளி தில் இருந்து சந்தாதாரராகச் சேர்ந்து கொண்ட ளுக்கும் தபால் மூலம் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ளுக்கும் உடனே இம் மலரை அனுப்பி வைக்க முடியா ப்விட்டது. அதற்காக வருந்துகின்ருேம். அத்தோடு ற்றிய விமர்சனங்களையும் மாணவர்களிடம் இருந்து
கின்ருேம்.
- ஆசிரியர்

Page 4
எமது வெளியீடுகள்
6.
குறியீட்டு அளவையியல் கேள்வியும் நிரம்பலும் கேள்வி நிகழ்ச்சி நிரம்பல் கெகிழ்ச்சி விமான ஒளிப்பட விளக்கங்களுக்க விவரணப் புள்ளி விபரவியல்
அரச நிதி
அளவையியலும் விஞ்ஞான முறையும்
' விஞ்ஞானிகளும் விஞ்ஞான விளக்
அடுத்து வெளியிட விருப்பவை
.
விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும் அளவையியல் பகு வே. யுகபாலசிங்க
நடைமுறை விடயங்கள்
தே. ஜெயராமன், B. C
வெளிகாட்டு வியாபாரம்
மா. சின்னத்தம்பி, B, A,
வர்த்தக மாற்றுவிகிதம் (திருத்திய ப ந. பேரின்பநாதன், M.
சந்தைப்படுத்தல்
W. . சூசைரட்ணம்
பொதுஉளச்சார்பும், பொது அறிவு
வே. யுகபாலசிங்கம்,
அரச அறிவியல் மூலத் தத்துவங்க
அம்பலவாணர் சிவ

சி பற்றிய தத்துவங்கள்
ான மூலாதாரங்கள்
கங்களும்'
தி 11
sie, B. A. (Hons)
Com. (Hons.)
(Hons.)
திப்பு)
A.
üd
B. A. (Hons.)
ଗାଁt
『雷哥『

Page 5
பட்டப்படிப்புக்கு மெய்யியலை ஒரு பாடநெறி யாகப் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஒரு அலகாக வெண்வரைபட முறை உளது இன்று இவ் அலகினைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் அளவை யியலை ஒரு பாடநெறியாகப் பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவருகின்றனர். நீண்டகாலமாக இம் மட்டத்தில் எடுப்புக்களை வரைபட முறையில் அமைக் கும் கற்கைநெறியே கற்பிக்கப்பட்டுவந்துள்ளது. பழை யன கழிதலும் புதியன புகுதலும் என்ற மரபுக்கு ஏற்ப நியாயத் தொடைவாதங்களை வெண் வரைபட முறைமூலம் அமைத்து வாய்ப்பினைத் துணியும் கற்கை நெறியும் மெல்ல இடம்பெற்றுவருகின்றது. அளவை யியலைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் தம் பட்டப் படிப்பிற்கு மெய்யியலை ஒரு பாட நெறியாகப் பயிலா ததால், இக் கற்கை அலகினை அறிந்திருக்கவில்லை. அறிந் திருப்பவர்களிற் சிலர் இதில் போதிய பயிற்சி பெற் றிருக்கவில்லை. அதனுல் இவ் விடயம் பற்றிப் பல தவ ருண கற்பிதங்களே மாணவர் களத்தில் விதைத்து வரு கின்றனர். இன்று கல்வி உலகில் எவரும் மேளம் தட்டலாம் என்ற வர்த்தக மனப்பாங்கு தெரியாததைத் தெரியாது என்று கூறவும், தெரிந்தவரிடம் அணுகித் தெரிந்துகொள்ளவுமான மனப்பக்குவத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டது. இதனுல் வெண் என்ற கணித அறிஞர் படும்பாட்டை எழுத்தில் வடிக்க (1pւգ-Ամո &l.
எடுப்புக்கள் மொ ழி வடி வி ல் இருக்கும்போது எழுவாய் பயனிலைப் பதங்களுக்கிடையிலான தொடர் பைத் தெளிவாக இனங்காண முடிவதில்லை. எல்லா மலர் களும் அழகானவை. எல்லா உயிரினங்களும் இறப்பவை, மாணவர்கள் மாத்திரம் விவேகிகள் என்ற மூன்று எடுப் புக்களும் நிறைவிதி எடுப்புக்களே. ஆணுல் இவற்றில் உள்ள எழுவாய் பயனிலை ஆகிய உறுப்புக்களின் தொடர்பு ஒத்ததல்ல. அதனுல் எடுப்புக்களைத் தெளிவாக இனங் காணவும், வரையறுக்கவும் வகுப்பு அடிப்படை பிலான படவரைமுறை அவசியம் என்ற கருத்தும், தேட்டமும் கணித அளவை அறிஞர்களிடையே பல மாக நிலவியது. இதில் ஒயிலர், வெண் போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஒயிலரின் படவரை முறை ஆரம்பகாலப் படவரைமுறையாகும். அதில் பல குறைபாடுகள் காணப்பட்டதால் அவற்றினைச் சுட்டிக் காட்டி வெண் தெளிவான படமுறை வரைபடம் ஒன்றை அமைத்துத் தந்தார்.
- 3
நியாயத் தொடைவாதமும் வெண்பட
 

வரைமுறையும்-விளக்கமும்
வே. யுகபாலசிங்கம், B. A. (Hons), Dip in ed.
இங்கு நியாயத் தொடைக்கான வெண்ணின் பட வரைமுறையை நோக்குவோம்
A= ഥa്ട്
C = குழந்தை
AEニo CA = ol *。CE=o
மேலே உள்ள படத்தைஅவதானியுங்கள். அங்கு காட் டப்பட்டுள்ளவாறே வரைபடத்தினை அமைத்துக் கொள்ளவேண்டும். வகுப்புக்களை A, B, C என வகுப் பதே பொது மரபு. சில ஆசிரியர்கள் நியாயத்தொடை வாத அமைப்பிற்குரிய பெரும்பதம், சிறு பதம், நடுப் பதம் என்ற ஒழுங்கில் P. S. M எனவும் குறிப்பிடுவர் வாதங்களை வகுப்புக்களின் அடிப்படையில் குறியீட்டில் மேலேயுள்ளது போல் குறிப்பிட வேண்டும். அதற்கருகில் அவ்வாதத்திற்குரிய சமன்பாட்டையும் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். குறைவகுப்பை X என்ற அடை யாளத்தாலும் வெற்றுவகுப்பைச் சமாந்தரக் கோடுக ளாலும் குறித்துக்காட்டுதல் வேண்டும். வரைபடத்தை ஒரு சதுரக் கூட்டிற்குள் அடக்கவேண்டும்.அதனே அகிலத் தொடை என்பர். அதற்கான குறியீடாகிய U அதஐ மேலே காட்டியதுபோல் குறித்தல் வேண்டும். வகுப் புக்களை வகுக்கும்போது முடிபுக்கூற்றின் எழுவாறு பதத்தை Aவகுப்பு என்றும் பயனிலையை B வகுப்பு என்றும் நடுப் பதத்தை C வகுப்பு என்றும் சில ஆசி ரியர்கள் குறியிடுவர். எவ்வாருயினும் வகுப்புக்களின் அடிப்படையில் அமைந்த குறியீட்டுவிளக்கம் இடம் பெறவேண்டும். 2- g5 7. T600TLDITs நியாயத்தொடை வாதங்களுக்கான படவரைமுறையையும் அவற்றுக்காலு விளக்கங்களையும் நோக்குவோம்.

Page 6
(4) எல்லா மலர்களும் அழகானவை ஆகும் எல்லா மழழைகளும் மலர்களாகும் ஆகவே எல்ல மழழைகளும் அழகானவை
ஆகும் றின் இவ்வாதம் வலிதான ாகம் ஆகும். முடிபுக் கூற் றனபடி 8 வகுப்புத் தவிர்ந்த, C வகுப்பு வெற்று
குெப்பாக அமைவதைப் பட ஒன்றில் அவதானிக்க GWtrth.
)ே எல்லா மாணவர்கள்
- இரும் விவேகிகள் ஆவர் விஷேஇகள் அனைவரும் தியாகிகள் ရွှံ့နှီးနီ ஆகவே மாணவர்கள் யாவரும் தியாகிகள் ஆவர்
இவ்வாதம் வலிதான "ெதமாகும். முடிபுக் கூற்றின் படி C வகுப்புத் தவிர்ந்த A வகுப்பு வெற்று வகுப்பாக அமைவதைப் படம் இரண்டில் அவதானிக்கலாம்.
(iii) எல்லா மனிதர்களும் நடப்பவர்களாவர்
எல்லா விலங்குகளும் நடப்பனவாகும் ஆகவே எல்லா விலங்குகளும் மனிதர்களாகும்.
இவ்வாதம் வலிதற்ற வாதமாகும் முடிபுக்கூற் பின்படி A வகுப்புத் தவிர்ந்த 6 வகுப்பு"வெற்று வகுப்பாக அமையவில்லே, படம் மூன்றில் மாணவர்கள் 9ே44க்கூற்றுக்கு உரிய சமன்பாட்டை அவதானிப்பு இன்மூலம் தெளிவுபடுத்தலாம்.
(iv) GrGiGnom வீரர்களும் பட்டதாரிகளாவர்
சில வீரர்கள் பட்டதாரிகளாவர் ஆகவே சில வீரர்கள் விஞ்ஞானிகளாவர்,
இவ்வாதம் வலிதற்றதாகும் முடிபுக்கூற்றின்படி C வகுப்பும் B வகுப்பும் குறைத் தொடர்பினைக் கொண் டதான விளக்கப் படத்தில் அமையவில்லை. A வகுப்பு ஒரு கூற்றின்படி முழுமைத் தொடர்பைக் கொண்டிருக் கும்போது முடிபு பொருந்தாததாய் அமைவதையும் சுட் டிக் காட்டலாம்,
(w) சில நூல்கள் அறிவுடையனவாகும்
எல்லா நூல்களும் பயனுடையனவாகும் ஆகவே பயனுடைய சில அறிவுடையனவாகும்.
இவ்வாதம் வலிதான வாதமாகும். முடிபுக் கூற் றின்படி 8 வகுப்பு A யுடன் கொண்டுள்ள தொடர்பை, C வகுப்போடும் கொண்டுள்ளதால் X அடையாளம் மத்தியில் இடம்பெறுகின்றது.
(wi) சில மலர்கள் அழகானவை ஆகும்
அழகானவை சில மகிழ்ச்சியைத் தருவனவாகும் ஆகவே சில மலர்கள் மகிழ்ச்சியைத் தருவனவாகும்

இவ்வாதம் வலிதற்றது ஆகும். முடிபுக்கூற்று A யும் Cயும் குறைத் தொடர்பைக் கொண்டுள்ளதை விளக்கப்படம் (wi) காட்டவில்லை. அதேவேளை A வகுப் பிற்கும், B வகுப்பிற்குமான தொடர்பு மலிவினத் தொடர்பாகவும் அமைவதை அவதானிக்கலாம்.
1 எந்த விலங்கும் ஊர்வண அல்ல
எல்லா ஊர்வனவும் பாலூட்டிகளாகும்
ஆகவே எந்தப் பாலூட்டியும் விலங்கல்ல
இவ்வாதம் வலிதற்றது, முடிபுக்கூற்றை அவதானி யுங்கள், அதன்படி C வகுப்பும், A வகுப்பும் ஒன்றை ஒன்று. விலக்குதல் வேண்டும். ஆனல் பட விளக்கம் அவ்வாறு அமையவில்லை.
2. நேர்மையானவன் எவனும் பிறரைத்
தூற்றுவதில்லை பிறரைத் தூற்றுபவர்கள் சிலர் சிறந்த
ஆசிரியராய் இருப்பர் ஆகவே இறந்த ஆசிரியர் சிலர்
நேர்மையானவர் அல்ல.
இவ்வாதம் வலிதானது. முடிபுக் கூற்றை அவதானி யுங்கள் A வகுப்பிற்கு வெளியே C வகுப்பு குறை வகுப்பாக அமையவேண்டும். அதேவேளை B வகுப்பிற் கும் C வகுப்பிற்குமான தொடர்பு குறைத் தொடர் பாகவும் அமையவேண்டும் என்பதற்கு ஏற்ப பட விளக்கம் தெளிவாக அமைகின்றது.
இவ்வாறு நியாயத்தொடை வடிவங்களை வெண் வரைபட முறைமூலம் அமைத்து வாய்ப்பினைத் துணிய லாம். மாணவர்கள், வெற்றுவகுப்பு, நிறைவகுப்பு, முழுநிறை எழுவாய் வகுப்பு, வகுப்புப் பெருக்கம், வகுப்புச் சுருக்கம், அகிலத்தொடை போன்ற பதங்க ளுக்கான விளக்கங்களை மேலே உள்ள படங்களை உதார னங்களாகக் காட்டி விளக்கலாம். வெண்ணினது படவரைமுறையில் சமன்பாடு முக்கிய அம்சம். அதை அமைக்கும் போதே வாதத்தின் வலிமை வலிமை யின்மையைக் கண்டு கொள்ளலாம். வாதங்கள் பந்தி பந்தி வடிவத்தில் தரப்படும்போது பேரெடுகூற்று சிற்றெடுகூற்று என ஒழுங்குபட அமைத்தபின் வகுப் புக்களாகக் குறியிடலாம். சில ஆசிரியர்கள் எடுப்புக் களின் முதல் எழுத்தையும் குறியீடாகப் பயன்படுத்து வர். இதில் போதிய பயிற்சியைப் பெறும்போது இயல் பாகவே பல அம்சங்கள் தெளிவாவதைக் காணலாம்.

Page 7
l, Ví.
 
 


Page 8
விஞ்ஞானக் கருதுகோள் ஆக்கத்தி சான்று எனும் முறையும் - அதன்
விஞ்ஞானம் தெளிவான திட்டவட்டமான அறி வைப் பெற்றுத் தருவதையே நோக்கமாகக் கொண் டுள்ளது. ஆய்வாளன் ஒரு விஞ்ஞான முடிபு முன் வைக்கப்பட்டகாலத்தில் மட்டுமன்றி, எக்காலத்திலும் அது நிச்சயமான அறிவாக விளங்கவேண்டுமெனவும் அக்கறைகொள்கின்றன். அதற்காகப் பல முறைகளே யும் உத்தினளேயும் பயன்படுத்தித் தனது கருதுகோளை வாய்ப்புப்பார்க்கின்றன். இவ்வாறு பயன்படுத்தப் படும் முறைகளில் ஒன்றே சான்று.
சான்றினைச் சாட்சிகள் அல்லது ஆதாரங்கள் என்பர். இவை கருத்தியல்பான ஆதாரங்களாகவோ, சடஇயல்பான ஆதாரங்களாகவோ அமையலாம். இம் முறை சமூக விஞ்ஞான ஆய்வுகளிலும், இயற்கை விஞ்ஞான ஆய்வுகளிலும் நன்கு பயன்படுகின்றது. குறிப்பாக வரலாறு, மானிடவியல் அரசியல் போன்ற சமூகத் துறைகளிலும், புவியியல், உயிரியல், தாவர வியல் போன்ற இயற்கைத்துறைகளிலும் இம்முறை செறிவாகப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். வரலாற்று விஞ்ஞானம் இம்முறையிலேயே பெரிதுந் தங்கி இருக்கின்றது. பொதுவாகக்கூறின் எந்தத் துறை யாக விருப்பினும் அந்தத் துறையின் வரலாறுபற்றி விளக்குவதற்கும், ஆராய்வதற்கும் சான்று என்ற முறையையும் பயன்படுத்தவேண்டியுள்ளது. ஒரு ஆய் வாளர் தனது கருதுகோளை வாய்ப்புப்பார்க்கவும், செம்மையாக அமைத்துக்கொள்ளவும் சான்றின் உத வியையும் பயன்படுத்தவேண்டியுளது. ஒரு ஆய்வாளன் தனது கருதுகோளை வாய்ப்புப்பார்க்கவும், செம்மை யாக அமைத்துக்கொள்ளவும் சான்றின் உதவியை யும் நாடவேண்டியது அவசியம், தனது அறிவும், அனுபவமும் எப்போதும் போதுமானதாக அமைவ தில்லை என்பதை விஞ்ஞான உளப்பாங்குடைய ஒவ் வொருவரும் உணர்வர். ஆய்வுகளின்போது கால இட வசதிகள் சீராக, கிட்டியதாக அமைவதில்லை. இதனுல் சான்றுகளின் உதவியை ஆய்வாளன் நாடுகின்ருன்.
பண்டைய நாகரீகங்கள்பற்றி, சமூக அமைவுகள், அரசியல் நிர்வாகங்கள்பற்றியளமது அறிவிற்கு சான்று என்ற முறையின் பங்களிப்பு பேரளவிலானதாகும். மிகத் தொன்மை பொருந்திய ஆதிதிராவிட நாகரீகத் தைக் கண்டு அறிந்து இன்றைய உலகம் வியப்பதற்கு அகழ்வுகள்மூலம் கிடைக்கப்பெற்ற சான்றுகளே துணை நிற்கின்றன. இவ்வாறு நான் பகர்வது ஒரு வரலாற்று

பங்கும்.
வே, யுகபாலசிங்கம் (B. A.)
ஆய்வாளர்க்கு நகைப்பாக இருக்கும். ஏனெனில் அவ ரிடம் சான்றுகள் இன்றி எந்த வரலாற்றையும் ஆக்க முடியாது என்ற அறிவு ஒரு சாதாரண உண்மையாகும். உயிர்ச் சுவடுகள் பலவற்றைப் பல்வேறு பகுதிகளிலும் சான்றுகளாகத் தேடிச் சேகரித்ததன்மூலமே டார்வின் தனது பரிணுமக் கோட்பாடுபற்றிய விஞ்ஞானக் கருது கோளை உறுதியாக அமைத்தார். புவிச் சரித வியலா ளர்கள் இப்பிரபஞ்சம்பற்றித் தரும் வியத்தகு விஞ்ஞான அறிவுக்குத் துணைநிற்பன சான்றுகளே. இவ்வாறு எம்மைச் சூழநடக்கும் நிகழ்வுகள்பற்றி அடுத்துவரும் சந்ததியினரின் ஆய்வுக்கு இவையே சான்றுகளாக அமையப் போகின்றன. இவ்வாறு விஞ்ஞானக் கருது கோள் ஒன்றின் ஆக்கத்தில் இம்முறையின் பங்களிப்பை அவதானிக்கலாம்.
முறையியலாளர்கள் சா ன் று களை அவற்றின் இயல்பு நோக்கி இருவகைகளாகப் பிரித்து விளக்குவர்.
(i) நேர்முறைச் சான்று (ii) நேரல்முறைச் சான்று.
ஒரு நேரிவோடு, நிகழ்வோடு அல்லது விளைவோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்-பங்குகொண்டவர்கண்டவர் ஒருவரினுல் தரப்படும் ஆதாரங்களையே நேர்முறைச் சான்று என்பர். காலம், இடம், பதிவு என்பவற்றைத் தெளிவாகக் காட்டும் ஆதாரங்களையும் நேர்முறைச் சான்று என்ற வகைக்குள் உள்ளடக்கலாம் எனச் சில முறையியலாளர்கள் குறிப்பிடுவர். ஆய்வு களின்போது இவ்வாருண நேர்ச்சான்றுகள் கிடைப்பது அரிது. ஆய்வாளன் தனது ஆய்வுகளுக்கு ஆதாரமாக நேர்முறைச் சான்றுகளையே பெரிதும் நாடுகின்றன். தாவரவியலாளர் உயிரியலாளர் புவிச்சரிதவியலாளர் தமது ஆய்வுகளின்போது, தொன்மைக்காலத் தாவரங் கள் உயிரினங்களின் தோற்றப்பாடுகளைப் பதிவுகளாகப் பெற்றுள்ளனர். இன்று நாம் பார்க்கின்ற பண்டைய உயிரினங்களின் உருவ அமைப்புக்கள் முற்ருகக் கற்பனை அன்று. ஓரளவு அப்பதிவுகளில் அவதானிக்கப்பட்ட தோற்றங்களே. அகழ்வுகள்மூலம் கிடைக்கப்பெற்ற எலும்புகள், எலும்புக்கூடுகள் போன்ற எச்சங்களின் ஆதாரங்களோடு அமைக்கப்பட்டனவே. பல கல்வெட் டுக்கள், நாணயங்கள், இலக்கியங்கள் போன்றனவும் நேர்முறைச் சான்றுகளாக அமைந்திருக்கின்றன. வர லாற்று விஞ்ஞானத்தை அமைக்க ஆய்வாளர்களுக்கு
سیس 6

Page 9
இவை பெரிதும் உதவுகின்றன. பண்டைத் தமிழரின் சிறப்புமிக வரலாறுகள், அகப்புற வாழ்க்கைக்கோலங் கள் உலகவரலாறுகள் காணுத பல வீரம் செறிந்த சம்ப வங்கள் போன்றவற்றை அறியச் சங்ககால இலக்கியச் சான்றுகளே பெரிதும் உதவின. மூவேந்தர்களின் சிறப்பு மிகு ஆட்சியை, வீழ்ச்சியை அக்காலக் கல்வெட்டுக்கள் பல ஆதாரம் இாட்டின எனினும் நேர்முறைச் சான்றுகள் என்பதனுல் இவை நிச்சயமான தெளி வான செம்மையான ஆதாரங்களாகக் கொள்ளப்படு வன அல்ல. நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களினுல் தரப்பட்ட ஆதாரங்கள் என்பதாலோ, காலம், இடம், பதிவு என்பவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன என்பதாலோ அவை உறுதியான, பக்கசார்பற்ற, செம் மையான ஆதாரங்கள் என ஏற்றுக்கொள்ளப்படுவ பல காரணங்களினுல் இவ்வாதாரங்கள் செம்மைகுறைந்தனவாக அமையலாம். பக்கசார்பான, பொய்யான தகவல்களைத் தருவதாக அமைந்திருப்ப துண்டு. போதிய அறிவும், அனுபவமும் உடைய ஆய்வாளர்கள், இவ் ஆதாரங்களே நன்கு சீர்தூக்கிப் பார்த்து, ஆராய்ந்தே ஏற்றுக்கொள்கிருர்கள்.
நேரல்முறைச் சான்றுகள் என்பன குறித்த நிகழ்வுக ளோடு அல்லது விளைவுகளோடு நேரடியாகத் தொடர் புகள் எதுவுமற்ற, மூன்ரும் நபர் மூலம் பெறப்பட்ட தாகத் தரப்படும் ஆதாரங்களைக் குறிக்கும், இன்னர் கூறினர், இவரால் கூறப்பட்டது இன்னர் பங்கு கொண்டதாக இவரால் கூறப்பட்டது எனத் தரப் படும் ஆதாரங்களாகும். சில முறையியலாளர்கள் காலம் இடம் என்பவற்றைத் தெளிவாகக் காட்டாத ஆதாரங்களையும் நேரல் முறைச் சான்றுகள் எனக் கொள்ளலாம் என்பர். இதுபற்றி முறையியலாளர்க ளிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பா லான ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் நேரல்முறைச் சான்றுகளாகவே அமைகின்றன. இறந்த கால நிகழ்வுகள், சம்பவங்கள் பற்றிய தகவல்கள் நேரல் முறைகளாகவே கிடைக்கப்பெறுகின்றன. கல்வெட்டுக்கள், புதைபொருட்கள், சுவடுகள், இலக்கி யங்கள் போன்ற நேரல்முறை ஆதாரங்களாகவே காணப்பட்டுள்ளன. வரலாற்று விஞ்ஞானத்தை ஆக் கும் ஆய்வாளர்களுக்கு இக்கூற்று ஆச்சரியத்தை அளிக் காது. அவர்கள் இத்தகைய மறை ஆதாரங்களின் ஊடாகவே வியத்தகு உண்மைகளை முன்வைக்கின் றனர். நேரடியாகப் பெறப்படாத ஆதாரங்கள் என் பதற்காக இவற்றை வலிமை குறைந்த நிச்சயமற்ற ஆதாரங்கள் என ஒதுக்குவதில்லை. பல காரணங்களி ஞல் நேர்முகச் சான்றுகளிலும்பார்க்க நேரல்முறைச் சான்றுகள் உறுதியானதாக அமைந்துவிடுவதுண்டு. வரலாற்று விஞ்ஞானத்திற்கு உதவும் சான்றுகள் இவ் வாறு அமைவதாலேயே வரலாறு எந்தளவுக்கு விஞ் ஞான இயல்பு வாய்ந்த துறை? என்ற சந்தேகம் முறை யியலாளர்கள் மத்தியில் நிலவுகின்றன. காள் பொப் பர் என்ற முறையியலாளர் வரலாற்றை விஞ்ஞான
- 7

இயல்புவாய்ந்த துறை அல்லவென்றும் வாதிடுவர். நேரல் முறைச் சான்றுகளை வைத்துக்கொண்டு ஆய் வாளன் வரலாறு பற்றிய ஊகத்தைச் செய்கின்றன். இந்த ஊகம் அவனது அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. அவனது அனுபவம் இம் முடிவினைப் பெறப் போதிய உரைகல்லாகுமா என்ற நியாயமான சந்தேகமே இதற்குக் காரணமாகும். ஆணுல் இதற் காக நேரல் முறைச் சான்றுகள் பொருந்தாத வலிமை குன்றிய ஆதாரமென்று கொள்ளமுடியாது. பல விஞ்ஞான கருதுகோள் ஆக்கங்களுக்கு இவ் ஆதாரங் களே உதவியுள்ளன.
ஆய்வாளர் தனது கருதுகோள் ஆக்கத்திற்கு ஆதா ரங்களைச் சான்றுகளாகச் சேர்த்துக்கொள்ளும்போது மிகவும் அவதானத்துடனேயே செயற்படுகின்ருர், நேர் முறைச்சான்று என்பதால் அதனை முற்முக ஏற்றுக் கொள்ளவோ நேரல்முறைச் சான்று என்பதால் அதனை முற்ருக ஒதுக்கிவிடவோ அவன் முயல்வதில்லை. ஆதா ரங்களைச் சான்றுகளாகச் சேர்த்துக்கொள்ள முயலும் ஆய்வாளன் அவற்றைப் பின்வரும் நிபந்தனைக்குள் பொருத்திப்பார்க்கின்றன். இந் நிபந்தனைகளுக்கு ஏற் றதாக அவை அமையும்போதே அவன் அதனை ஏற் றுக்கொள்கின்றன். ஒரு ஆய்வாளன் பல்துறை அறி வும் ஆற்றலும் உடையவனுய் இருப்பினும் அவன் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஒரு ஆதா ரத்தை நிச்சயமானது என ஏற்றுக்கொண்டுவிட முடியாது. அறிவின் பரப்பு விரிந்ததாக அமைந்தி ருப்பதைப்போல், நாம் பெற்ற அனுபவங்களும் அதனடிப்படையில் மேற்கொள்ளும் தீர்மானங்களும் விரிந்ததாக, பூரணமானதாக எப்போதும் அமைவ தில்லை. அதனுல் ஆய்வாளன் ஆதாரங்களேச் சான்று களாகச் சேர்த்துக்கொள்வதில் விழிப்புடையவனுகின் முன்,
(1) முதலில் யாரால், யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது என அவதானிக்க வேண்டும்.
(i) ஒருபாற் கோடலற்றதாக அமைந்திருக்கின்
றதா என நோக்கவேண்டும்.
(i) முற்றிர்பற்றனவாக அமைந்துள்ளதா என
அவதானிக்க வேண்டும்.
(ty) தேவைக்கு ஏற்ப விஞ்ஞான முறைகளால் பரிசோதித்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இந் நிபந்தனைகள் முக்கியமானவையாகும். இதில் இரண்டாவது நிபந்தனை மிகமிக முக்கியமானதாகும். தனக்குக் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை முதலில் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது என்பதை அவதானிக்க வேண்டும் நேரல் முறையான ஆதாரங்களையே இவ்வாறு அதிகமாக அவதானிக்க வேண்டியுள்ளது. ஒரு துறையில் அநுபவமும், அறிவு முடைய ஒருவர் நடுநிலை நின்று தரும் செய்தி செம்மை

Page 10
யான ஆதாரமாக அமையலாம். ஒரு கொலையை நேரடியாக அவதானித்த நீதிபதி ஒருவருக்கும், சாதா ரண மனிதனுக்கு மிடையில் அத் தகவலைத் தருவதில் வேறுபாடு காணப்படலாம். நடுநிலை நின்று பயிற்றப் பட்டவர் நீதிபதி. சாதாரண மனிதனோ அவ்வாறு பயிற்றப்படாதவன், எளிதில் விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படுபவன் என்பதால் தகவலின் தரம் சீர்தூக் கிப் பார்க்கப்படுகின்றது. விஞ்ஞான முறைகளில் அதி காரப் போலிகள் இவ்வாறே ஏற்படுகின்றன. எதுவித தொடர்புமற்ற ஒருவர் ஒரு நிகழ்வுபற்றி- பொருள் பற்றித் தெரிந்தவர்போல், உண்மைபோல் தகவல்களைத் தரலாம். இவ்வாறே கல்வெட்டுகள் தரும் தகவல்கள் பொய்யான தாக, காலம் இடம் பொருந்தாத்தாக அமையலாம். வரலாறு பற்றிய ஆய்வுகளில் இதற்குப் பல் உதாரணங்கள் உள்ளன. இலக்கியம் கூறும் தகவல் களுக்கும், கல்வெட்டுகள் அதுபற்றிக் கூறும் தகவல் களுக்குமிடையே பொருந்தாத தொடர்பு காணப் படலாம்.
ஆதாரங்களைச் சான்றுகளாகச் சேர்த்துக் கொள் ளும் போது அவை ஒருபாற் கோடலற்றனவா என நோக்குதல் அவசியம். ஒருபாற்கோடல் என்பது ஒரு பக்கச் சார் பினைக் குறிக்கும். பல காரணங்களினால் ஒரு பக்கச் சார்பு ஏற்படும், அதிகாரம், பற்று, விருப்பு, வெறுப்பு, ஆசை போன்றனவற்றால் ஒருபக்கம் சாரும் நிலை ஏற் படுகின்றது . அரசன் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி, தன் புகழைப் பாடும்படி கட்டளை இட்டிருப் பான். கல்வெட்டில் தன் வீரத்தையும், கொடையை யும் பொழியுமாறு பணித்திருப்பான். இதேபோல் பற்று விருப்புக் காரணமாக சிறு உதவி செய்த குடிமகன் ஒருவரைப் புலவன் அரசனுக்கு நிகராகப் புகழ்ந்து பாடி இருப்பான். இதேபோல் வெறுப்புக் காரணமாக மிகத் தாழ்வாக வர்ணிக்கப் பட்டிருக்கலாம். இனப் பற்று, மொழிப்பற்றுக் காரணமாக இவ்வாறான போலி இள் ஏற்படுவதை அவதானிக்கலாம். செய்தித் தாள் களயும் அவைதரும் செய்திகளையும் ஆதாரங்களாக ஆய்வாளர்கள் சேர்த்துக்கொள்ளத் தயக்கம் காட்டுவ தற்கு இதுவே காரணம். அவ்வாறு சேர்த்துக்கொள்ள வேண்டி ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஆய்வாளன் நிதா னத்துடன், விழிப்புடன் நன்கு தகவல்களை அவதா னித்தே சேர்த்துக் கொள்கின்றான். அகழ்வுகள் மூலம் பெறப்பட்ட. புதை பொருள்கள் பற்றி ஒரு பக்கச் சார்பாகத் தகவல்கள் தரப்படுவதையும் அதிலிருந்து மிகுந்த சிரமத்துடன் உண்மையைக் கண்டுபிடித்த அநுபவங்கள் வரலாற்று ஆய்வாளர்களிடம் நிறைய உண்டு. அண்மையில் கந்தரோடையில் அகழ்வுகள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் ஒருபக்கச் சார்புடையதாகத் தரப்பட்டதையும் அத னால் நடுநிலையான சில வரலாற்று ஆய்வாளர்கள் மத்தி யில் அதிருப்திகள் நிலவியமை யையும் அறிந்திருப்பீர்கள். கண்டனங்களுக்கு அஞ்சி அரசே ஆய்வுகளை இடை நிறுத்தி வைத்துள்ளமை இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். நாணயங்கள் காலம் இடம் என்ப

வற்றை நாணயமாகத் தருவதால் வரலாற்று ஆய் வாளர்களிடம் அவ்வாதரத்தின் மீது காதல் உண்டு.
இதே போன்றே ஆதாரங்கள் முற்றீர்பற்றனவாக வும் அமைதல் வேண்டும். அனுபவத்திற்குப் பொருந் தாதி, வாய்ப்புப் பார்க்க முடியாத கருத்துக்களையே முற்றீர்பு என்பர். இவை அனுபவமுதலான தீர்ப்புக ளாகும். உதாரணமாகப் புராணங்கள், இதிகாசங்கள் கட்டுக்கதைகள், கற்பனைக் கதைகள், மதங்களில் சில கருத்துக்கள் போன்றன அனுபவத்துக்குப் பொருந்தா தவையாகவும், பகுத்தறிவுக்கு உடன்பாடற்றனவாக வும் அமைவதால் அவற்றைச் சான்றுகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. புரானங்களில், இதிகாசங்களில், பறவைகள், விலங்குகள், மனிதரோடு கதைப்பதும், வாழ்வதும் சாதாரணம். தேவர்களும், தேவதைகளும், மனிதர்களும் ஒன்ருக வாழ்ந்தனர், உறவு கொண்டனர். இவை அழகிய கற்பனை, அபத்தமான சான்றுகள், விஞ்ஞானம் வலியுறுத்தும் நடைமுறை அனுபவத் துக்கு. இத்தகவல்களும், கூற்றுக்களும் பொருந்தா தவை. விஞ்ஞானக் கருதுகோள் ஆக்கத்திற்கும் இவற் றிற்கும் இடைத்தூரம் வெகு தொலைவு,
இறுதியாக, பெறப்படும் ஆதாரங்கள் மேலும் வாய்ப் புப் பார்க்கப்பட்டு, நிறுவப்படக்கூடியனவாக அமைதல் வேண்டும் ஆய்வாளனும், ஆராயப்படும் விடயமும் ஒன்ருக அமையும்போது பக்கச்சார்பு ஏற்படலாம். அஃதுபோல் புலன்களாலும் ஏமாற்றப்படலாம். விரைவு காரணமாக அவதானிக்க வேண்டிய யாவற்றை யும் அவதானிக்காதும் விடலாம். கலாநிதிப் பட்டங்க ளும், நோபல் பரிசுகளும் கூட நீண்டநேரம் தரித்து நிற்காது என்பதால் சில ஆய்வாளர்கள் ஆய்வின் போது அவதானிக்கவேண்டிய யாவற்றையும் அவதானி யாதும் விட்டுவிடுவர். இதனுல் பரிசோதனை முறைகள் அவசியமாகின்றன. அவை பொய்சொல்லா. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் காலம், இடம், பண்பு என்பவற்றை விரைவாகக் கணிக்கக் கூடிய கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நுண் னிய ஆய்வு முறைகளும் அதற்கான கருவிகளும் அளவறிசாதனங்களும் உள்ளதால் ஆதாரங்களை மேலும் வாய்ப்புப் பார்ப்பர், ஆய்வு கூடங்களில் வைத்துக் கருவிகளின் துணையுடன் மேலும் அவதானிக்கலாம். அண்மையில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் அகழ்வுமூலம் கண்டெடுக்கப்பட்ட சாம்பற் குடுவை ஒன்று யாருடையது, எக்காலத்துக்குரியது என அறி வதற்காக பிரான்ஸ்தேசத்துக்கு அனுப்பப்பட்ட செய் தியை அறிந்திருப்பீர்கள். கிணறு ஒன்றில் கண்டெடுக் SLu Lu L * எலும்புத்துண்டு ஒன்றை வைத்துக் கொண்டே அதற்குரியவர், அவர் எவ்வாறு இறந்தார், எப்போது இறந்தார் போன்ற பல தகவல்களைத் தந்த மேலேத்தேய ஆய்வு நிபுணர் ஒருவரைப்பற்றிய செய்தி யும் கருத்திற்குரியது. இவ்வாறு திரட்டப்படும் ஆதா
-س-8

Page 11
ங்கள் மேலும் பரிசோதனைமுறைகளுக்கு உட்படுத்திக் கருதுகோளைச் செம்மையாக அமைப்பர். அமைக்க வேண்டும்.
இந்நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஆதாரங்களையே கருதுகோளாக்கத்திற்குச் சான்றுகளாகச் சேர்த்துக் கொள்வர். அவை நேர்முறையோ, அன்றி நேரல் முறைச்சான்றுகளாகவோ அமையினும் இந்நிபந்தனைக ளுக்குப் பொருந்துவதாக அமைதல் வேண்டும். ஒரு சான்று பலதுறைகளுக்கு ஆதாரமாகலாம். உதாரண மாக இலக்கியச் சான்று ஒன்று அக்கால மொழிவளம், அரசியல்நிலை, சமூகப்பண்பாடு போன்ற ஆய்வுகளுக் கும் அக்கால இலக்கியநயம், அழகியல் உணர்வு போன்றனபற்றியும் ஆராய உதவலாம். அதேபோல பல ஆதாரங்கள் ஒருதுறைக்குச் சான்றுகளாகவும் பயன் படலாம். உதாரணமாக வரலாற்று விஞ்ஞானத்தை அமைக்கும் ஆய்வாளனுக்கு பல ஆதாரங்கள் அவசிய மாகின்றன. கல்வெட்டுக்கள், நாணயங்கள், இலக்கி யங்கள், புதைபொருட்கள், கலாச்சாரச் சிதைவுகள், குடியமைப்புக்கள், சுவடுகள், ஏடுகள் போன்றவற்றை அவதானிக்கவேண்டும். இவை பொதுவான ஆதாரங் களுமாகும். இவற்றைவிட இன்று பத்திரிகைகள் ஆவணங்கள், வங்கி அறிக்கைகள், ஆய்வு அறிக்கை கள் போன்றனவும் ஆதாரங்களாக அவதானிக்கப்படு
涤
வரலாறு ஒரு வி
வரலாற்றுத்துறை எந்தளவுக்கு விஞ்ஞ பல முறையியலாளரிடம் காணப்படுகின்ற தும் பல விளக்கங்களை முறையியலாளர்க ஊகமும், நிர்மாணமும் வரலாற்றுக் கருது வதாலும் - அவர்களால் திரட்டப்படும் ப லானவை பொய்யான, கற்பனையான, ஒரு தாலும், இவ்வாருன சந்தேகம் முறைய பொப்பர் (Karl Popper), காள் மாக்சி கருத்துக்களையும், அணுகுமுறைகளையும் விய பினர். ஆய்வாளனின் அறிவு, அனுபவ முதி போன்ற பண்புகளைப் பொறுத்தே வரலா தங்கியுள்ளது. தொகுத்தறிமுறை, பகுப் போன்ற விஞ்ஞானமுறைகள் இங்கு பயன் நேரல்முறைமூலம் நன்கு நிறுவப்படுதலாலு நவீனமுறையியலாளர்கள் வலியுறுத்துவர். Kuhn), 9u 9ga Girl (Bear Brand) Gul
வர்கள்.
9 س
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றன. தொல் பொருளியல், அகழ்வாராய்ச்சியியல் போன்ற துறைகளின் அபிவிருத்திக்குச் சான்றுகளே இாரணம்,
காலமாற்றமும், அறிவின் அபிவிருத்தியும், 39ಠಿ 0 களின் பெருக்கமும், விஞ்ஞானமுறைகளையும், புதிய உத்திகளையும் வேண்டிநிறகின்றன. தனிமனிதனின் அறிவு மட்டும் போதுமானதல்ல. கூட்டுமுயற்சிகளும், பகிர்ந்து கொள்ளலும் அவசியமாகின்றன. தீனது கருத்தை உரைத்துப்பார்க்கவும், விருத்தி செய்யவும் தன்னைப்போன்ற, தன்னிலும் மேலான ஒன்று அவசியூ மாகின்றது. சான்றுகள் இந்தவகையில் மிகவும் பய னுடையதாக அமைகின்றன. கருதுகோள் ஆக்கத்துக்கு மட்டுமன்றிக் கருதுகோள்களை நிறுவவும் உதவுகின்றன. கால, இடப் பிரச்சினைகளைச் சான்றுகள் தவிர்க்கின்றன. தேடி அலையவும், காத்திருக்கவும், ஒப்பிட்டு நிறுவவும் வேண்டிய இடர்களை, காலச் செலவைச் சான்றுகள் தவிர்க்க உதவுகின்றன. தமது கருத்துக்களை நடுநில்ை நின்று செம்மையாக முன்வைப்பதற்குச் சான்றுகள் உதவுகின்றன. விஞ்ஞானக் கருதுகோளை நிறுவுவதற்குப் பல விஞ்ஞான முறைகள் உதவுகின்றன. பயன்படுத் தப்படுகின்றன. அவற்றில் இன்று சான்றின் முக்கியத் துவமும் அதிகரித்து வருவதற்கு மேற்கூறிய பண்புகள் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
—
ஞ்ஞானமா ?
ான இயல்பு வாய்ந்தது? என்ற ցաւի ன, இதனை நியாயப்படுத்தியும், மறுத் ள் அளித்துள்ளனர். ஆய்வாளனின் கோள்களை நிறுவுவதில் இடம்பெறு ல்வேறு ஆதாரங்களில் பெரும்பா க்க சார்பான சான்றுகளாக அமைந்த 'யலாளர்களிடம் எழுகின்றன. காள் (Karl Marx) வரலாறு பற்றிய ர்சித்தபோதும் இவ் ஐயத்தை 6TCքւն ச்சி, நேர்மை, துணிபு, பக்கம்சாராமை ற்று முடிபுகளின் நிச்சயத்தன்மை பாய்வுமுறை, விதி உய்த்தறிமுறை டுத்தப்படுவதாலும், கருதுகோள்கள் ம் வரலாறு ஒரு விஞ்ஞானமே என
இதில் தோமஸ் கூன் (Thomas ன்ற முறையியலாளர் முக்கியமான
لیجیح
ഭ്ബ
,برنمبرxبیبرxحمحم^صر^میxجسمم یجمعین^محرم

Page 12
19ஆம் நூற்றண்டில் இலங்கையி
ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனியின் தனியுரிமை !
19ஆம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களில் இலங் கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் கறுவா பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் 1832 வரை குடியேற்ற நாட்டரசாங்கம் பெற்ற வருமானத் தில் பெரும்பகுதி கறுவா வர்த்தகத்தின் மூலமே கிடைத்தது. இலங்கைக் கறுவா மிகவும் தரமுயர்ந்த தாக இருந்ததால், உலக சந்தையில் அது தனியுரிமை யைப் பெற்றிருந்தமை காரணமாக தறுவா வர்த் தகத்தில் உரிமை பெற்றிருந்தவர்கள் அதிக இலாபம் சம்பாதித்தனர். இதன் காரணமாகவே ஆங்கில கிழக் கிந்தியக் கம்பனி இலங்கையைக் கைப்பற்றியபோது இறுவா வர்த்தகத்தினைத் தனதுரிமையாக்கிக்கொண்டது. 1795இல் கைப்பற்றப்பட்ட ஒல்லாந்தக் கப்பல்களில் இருந்த கறுவாவிலும், கொழும்பு தானியக் களஞ்சி யங்களில் இருந்த கறுவாவிலும் 732,885 இருத்தல் களே 180,000 ஸ்டேர்லிங் பவுண்களுக்கு கிழக்கிந்திய கம்பனி கொள்வனவு செய்தது. மேலும் 1797இல் 440,542 இருத்தல்கள் 1798இல் 412,022 இருத்தல்கள் 1799இல் 49,591 இருத்தல்கள், 1800இல் 406,438 இருத்தல்கள், 1801இல் 280,285 இருத்தல்கள் என்ற வகையில் 1797க்கும் 1801க்கும் மிடையில் 2,084,859 இழுத்தல்கள் கறுவாவின இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்தது. இவற்றின் மூலம் கம்பனி பெருமளவு வரு வாயைப் பெற முடியும் என எதிர்பார்த்தபோதும் அது ஏமாற்றத்தினையே அடைந்தது.
உலக சந்தையில் கறுவாவுக்கான கேள்வி வருடத் திற்கு 400,000 ருத்தல்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இக்கேள்விக்கேற்றவகையில் ஒல்லாந்தர்கள் கறுவா நிரம்பலை சந்தையில் ஒழுங்கு படுத்தி விலைகளைச் செயற் கையான முறையில் ஏற இறங்கச் செய்து சராசரியாக ழுத்தலுக்கு 11 சிலிங் 6 பென்ஸ் என்ற விலையைப் பெற்று வந்தார்கள். ஆணுல் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி 1798-1802க்கும் இடைப்பட்ட வருடங்களில் லண்டன் சந்தையில் வருடாவருடம் சராசரியாக 511,972 முத்தல்களை நிரம்பல் செய்தது. அதேசமயம் அம்ஸ்ர டாமில் ஒல்லாந்தக் கம்பனியும் தன்னிடம் மிகுதியாக இருந்த கறுவாவில் 175,000 ருத்தல்களை வருடாவருடம் சராசரியாக விற்பனை செய்தது. இதன் காரணமாக

ன் கறுவா வர்த்தகம்
ந. பேரின்பநாதன் விரிவுரையாளர் பொருளியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
உலக சந்தையில் மிகை நிரம்பல் ஏற்பட விலைகள் விரைவாக வீழ்ச்சியுற்றன. கிழக்கிந்தியக் கம்பனி தனது கறுவா விற்பனை மூலம் ருத்தலுக்கு 4 சிலிங் 7 பென்ஸ் கும் 4 சிலிங் 10 பென்ஸ்-சகும் இடையிலான விலையி னேயே பெற்றது. எனினும் கறுவாவின் உற்பத்திச் செலவு ருத்தலுக்கு 5 பென்ஸாக இருந்தமை குறிப் பிடத்தக்கது. மேலும் கப்பல் கூலி, காப்புறுதி, சுங்கவரி என்பவற்றையும் சேர்த்துக் கணிப்பிட்டாலும் ஒரு ருத்தலுக்கான செலவு 19 பென்ஸாகவே இருந்தது. இதன் காரணமாக கம்பனி இலாபம் பெறக்கூடியதாக இருந்தது. இவ்விலாபத்தின் அளவு வருடத்திற்கு 30,000 ஸ்டேர்லிங் பவுண்களாக இருந்திருக்க வேண்டும் எனச் சிலர் மதிப்பிட்டுள்ளனர்.
குடியேற்றநாட்டு அரசாங்கத்தின் பகுதி ரீதியான தனியுரிமை :
1802இல் இலங்கை குடியேற்ற நாடாக்கப்பட்ட போது கறுவாவின்மீது முதலீடு செய்தல், கறுவா பயிரிடுமுரிமை, கறுவா சேகரிக்கும் உரிமை என்பன கம்பனியின் கைகளில் இருந்து குடியேற்றநாட்டர சாங்கத்திடம் சென்றது. இலங்கைக் கறுவா உலக சந்தையில் தனிபுரிமையைப் பெற்றிருந்ததால், அதன் மூலம் பெறக்கூடிய இலாபத்தினத் தானே அனுபவிக் கலாம் எனக் கருதியே இந்நடவடிக்கையைக் குடியேற்ற நாட்டரசாங்கம் மேற்கொண்டிருந்ததெனலாம். கறுவா ஒரு பருவகாலத் தொழிலல்ல. வருடம் முழுவதும் கறுவா மரங்களில் இருந்து பட்டைகளை உரிப்பதன் மூலம் நிரம்பலைச் செய்ய முடியும், கறுவா சேகரிப்பை யும் உற்பத்தியையும் தனியுரிமையாகப் பெற்றவுடன் குடியேற்றநாட்டரசாங்கம் உற்பத்திச் செலவைக் குறைக்கு முகமாகச் சிறிய தோட்டங்களின் எண்ணிக் கையைக் குறைத்து பெரும் தோட்டங்களாக மாற்று வதற்கும் நடவடிக்கை எடுத்தது. இவ்வாறு பெருந் தோட்டங்களாக மாற்றின் பேரளவுத் திட்டசிக்கனங் களே அனுபவிக்க முடிவதுடன் தனியுரிமையைப் பேணு வதற்கும் இது சுலபமாக இருக்கும் எனக் கருதப் பட்டது. உற்பத்தி, சேகரிப்பு ஆகியவற்றையே குடி யேற்றநாட்டு அரசாங்கம் தனது கையில் வைத்திருந்த போதும், விற்பனை உரிமையை ஒப்பந்தங்கள் மூலம் கம்பனியிடமே விட்டது. இதனுல் கிழக்கிந்தியக்கம்பனி தொடர்ந்தும் உலக சந்தையில் தனது தனியுரிமையைப் பேண முடிந்தது.
ہے۔ 0]

Page 13
கறுவா ஒப்பந்தங்கள் :
1802இலும் 1806இலும் செய்யப்பட்ட ஒப்பந்தங் கள் மூலம் ஐரோப்பிய சந்தையில் கறுவாவின விற்பனை செய்யும் முழு உரிமையும் கிழக்கிந்தியக் கம்பனி யிடமே விடப்பட்டது. இவ்வொப்பந்தங்கள் மூலம் குடியேற்ற நாட்டரசாங்கத்திற்கு வருடாவருடம் 60,000 ஸ்டேர்லிங் பவுண்கள் வருமானமாகக் கிடைக்குமென உறுதி செய்யப்பட்டபோதும் ஒப்பந்தத்தில் காணப்பட்ட பல சரத்துக்கள் கம்பனிக்கே அதிக நன்மையளிப்பன வாக இருந்தன. இக்காலத்தில் ஐரோப்பாவில் இலங் கைக் கறுவாவுக்கான சந்தை தளம்பலுடையதாக இருந்தது எனினும் அரசாங்கத்திடமிருந்து பெற்ற கறுவாவினை கம்பனி ஒழுங்கான முறையில் சந்தையில் நிரம்பல் செய்வதன் மூலம் அதிக இலாபத்தினப் பெற்றது. இக்காலத்தில் கறுவாவின் விலை சராசரி முத்தலுக்கு 8 சிலிங் 3 பென்ஸாக இருந்தது. ஆணுல் அரசாங்கத்திடமிருந்து கம்பனி மேற்கூறிய ஒப்பந்தங்கள் மூலம் ஒரு ருத்தல் கறுவாவினை முறையே 3 சிலிங், 2 சிலிங் 8 பென்ஸ் என்ற விலைப்படியே கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆணுல் ஒப்பந்தங் அளில் கூறப்பட்டபடி முழுத் தொகையையும் குடியேற்ற நாட்டரசாங்கத்தினுல் கம்பனிக்கு வழங்க முடியவில்லே என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
1802இல் 340,316 முத்தல்கள், 1803இல் 247,000 இருத்தல்கள், 1804இல் 247,715 இருத்தல்கள், 1805இல் 224,388 இருத்தல்கள் என்ற வகைப்படி முதலாவது ஒப்பந்த காலத்தில் 1,059,404 இருத்தல்கள் கறுவா மொத்தமாகக் கம்பனிக்கு விற்கப்பட்டது. ஆனல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதிலும் பார்க்க இத்தொகை ஏறக்குறைய 33 வீதத்தினுல் குறைவானதாகும். இதற்குப் பொறுப்பாக பல காரணங்கள் இருந்தன. கறுவா உரிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த " சலகம்" எனப்படும் சாதியிர்ை புதிய எஜமானர்களான ஆங்கி லேயர்களுடன் ஆரம்பத்தில் ஒததுழைக்க மறுத்தனர். கறுவாத் திணைக்களத்தில் தொழிலாளர் பற்ருக்குறை காணப்பட்டமை, பெருந்தோட்ட முறையில் உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் ஒழுங்கான முறை யில் உற்பத்தி நடைபெருமை, சிலர் தமது நிலங் களில் இருந்த கறுவா மரங்களை அழித்தமை, கம்பனி யின் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்தபோது கறுவா மரங்கள் கண்டபடி வெட்டப்பட்டமையால் வள மிழந்திருந்தமை, ஏற்றுமதி செய்யப்படும் கறுவா தர மானவையா என மேற்பார்வை செய்வதற்கு இலங் கையில் கிழக்கிந்திய கம்பனியால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி கண்டபடி கறுவாப்பட்டைகளைத் தரமற்றவை என ஒதுக்கியமை போன்றவற்றை கறுவா நிரம்பல் குறைவாக இருந்தமைக்கு உரிய காரணங்களாகக் குறிப் பிடலாம். 1806இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப் பட்ட தொகைகளைக் கூட இலங்கை அரசாங்கத்தால் கம்பனிக்கு வழங்க முடியவில்லை.
- 11
 

மேற்கூறிய இரு ஒப்பந்தங்கள் முடிவடைந்ததும் 814இல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது குடியேற்ற நாட்டு அரசாங்கமே ஐரோப்பிய சந்தையில் கறுவா வினை நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு குடியேற்ற நாட்டு அலுவலகத்தில் முக்கி பத்துவம் கொடுக்கப்பட்டபோதும் அரசாங்கம் அதில் தான் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. கம்பனியே தொடர்ந்து விற்பனையாளனுக இருந்தது. எனினும் இவ்வொப்பந்தத்தின்போது அரசாங்கம் சில கூடிய நன் மைகளைப் பெறுவதற்கு இக்கருத்து உதவியதெனலாம். இவ்வொப்பந்தப்படி கம்பனி இலங்கை அரசாங்கத்திட மிருந்து 450,000 இருத்தல்கள் கறுவாவின வருடா வருடம் இருத்தல் 4 சிலிங் 6 பென்ஸ்படி கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 101000 ஸ்டேர்லிங் பவுண்கள் வருமானமாகக் கிடைக்கும் எனக் கணிப்பிடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் மூலமும் கம்பனி அதிக இலாபத் தினை அனுபவித்தது. ஐரோப்பிய சந்தையில் நிரம்பலை ஒழுங்குபடுத்தி விற்றமையே இதற்குக் காரணமாகும். எனினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி இலங்கையரசி னுல் கம்பனிக்கு கறுவாவினை நிரம்பல் செய்ய முடிய வில்லை. 1815இல் 385,725 இருத்தல்கள், 1818இல் 393,217 இருத்தல்கள், 1817இல் 486,750 இருத்தல்கள், 1818இல் 526,845 இருத்தல்கள், 1819இல் 323,102 இருத்தல்கள், 1820இல் 376,660 இருத்தல்கள், 1821இல் 498,302 இருத்தல்கள் என்ற வகையில் மொத்தமாக 2,965,421 இருத்தல்களைக் குடியேற்ற நாட்டரசாங்கம் கம்பனிக்குக் கறுவாவினை வழங்கியது. இது ஒப்பந்தத் தில் குறிபபிட்ட தொகையிலும் பார்க்க 5சத வீதத்தி ணுல் குறைவானதாகும். 1814ஆம், 1815ஆம் ஆண்டு களில் பலர் இறந்தமை, சுகவீனம் காரணமாகத் தொழி லாளர் பற்ருக்குறை ஏற்பட்டமை போன்றனவும் ஒப் பந்தத்தில் கூறப்பட்ட தொகையினை வழங்க முடியா மைக்குக் காரணமாகும். 1,000 ஏக்கர்களுக்கு மேலான பரப்பில் கறுவா பெருந்தோட்ட அடிப்படையில் உற் பத்தி செய்யப்பட்ட போதும், அதற்கும் மேலாகக் கைவிடப்பட்ட கிராமியத் தோட்டங்கள், காடுகள் போன்றவற்றிலிருந்தும் கறுவா நிரம்பலைப் பெற்ற போதும், ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி கறுவாவினை நிரம்பல் செய்வது இலங்கையின் கறுவா வளத்திற்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் பூரண தணியுரிமை:
1822இல் ஒப்பந்தம் முடிவடைந்தபோது குடியேற்ற நாட்டரசாங்கம் ஒப்பந்தம் திரும்பவும் கம்பனியுடன் புதுப்பிக்கப்படலாகாது என்பதிலும், இலங்கை அரசாங் கமே உலக சந்தையில் கறுவாவின நிரம்பல் செய்யும் தனியுரிமையாளனுக நேரடியாக ஈடுபடவேண்டு மென்பதிலும் உறுதியாக நின்றது. முன்னெச்சரிக்கை புள்ள குடியேற்ற நாட்டலுவலகம் கம்பனியுடன் ஒப்

Page 14
பந்தங்களைச் செய்வதால் ஒழுங்கானமுறையில் இலர் கைக்கு வருடாந்தம் குறிப்பிட்டளவு வருமான கிடைக்குமென்றும், இது இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வரவு செலவுத் திட்டப் பற்ருக்குறைக்கு ஒரளவு நிவாரணமளிப்பதாக இருக்கும் என்றும் கருதியது. இதனுல் இலங்கை அரசாங்கத்தின் கருத்தினையேற்க குடியேற்றநாட்டலுவ லகம் சிறிது தயக்கம் காட்டியபோதும், குடியேற்ற நாட்டரசாங்கம் விடாப்பிடியாக இருந்ததால் 1822இல் வெளிநாட்டுச் சந்தைகளில் கறுவாவினை விற்குமுரிமை குடியேற்றநாட்டு அரசாங்கத்தின் நேரடியான கட்டுட் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட கறுவா மிகவும் தரம் உயர்ந்ததாக இருந்ததால் உலக சந்தை யில் "இயற்கையான தனியுரிமையை அது பெற்றிருந் தது. இதன் காரணமாகத் தான் உற்பத்திசெய்யும் கறுவாவினை நேரடியாகச் சந்தைப்படுத்துவதில் எவ் வித பிரச்சனையும் ஏற்படாது எனக் குடியேற்ற நாட் டரசாங்கம் எண்ணியதெனலாம். இலங்கைக் கறுவா வின் தரம் மிக உயர்வாக இருந்தபோதும், அதனை ஐரோப்பிய சந்தையில் ஒழுங்குபடுத்தி விற்பனை செய் வதன்மூலமே கம்பனி அதிக இலாபம் பெறக்கூடியதாக இருந்தது என்ற உண்மையை இலங்கை அரசாங்கம் உணரத் தவறியதால் ஐரோப்பாவில் கறுவாவினைச் சந்தைப்படுத்துவதில் குடியேற்ற நாட்டரசாங்கம் தோல்வியடைந்ததென்றே கூறுதல் வேண்டும்.
கொழும்பில் ஏலவிற்பனை
புதிய அமைப்பின்கீழ் ஆரம்பத்தில் அரசாங்கம் தனது கறுவா நிரம்பலைக் கொழும்பில் பொது ஏலத் தில் விற்பனை செய்தது. கொழும்பில் ஏலத்தில் கறுவா வினைக் கொள்வனவு செய்தவர்கள் அங்கிருந்து எவ்விடத் திற்கும் ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கழிக்கப்பட்டு கறுவாவை அனுப்புவதற்கு அனுமதி யளிக்கப்பட்டனர். இம்முறையின்கீழ் முதலாவது விற்பனை 2-12-1822இல் நடைபெற்றது. இவ்விற்பனையின்போது 18500 இருத் தல்கள் சராசரி ஒரு இருத்தல் கறுவா 6 சிலிங் 10 பென்ஸ்படி விற்கப்பட்டது. இதன்பின்னர் அடுத்த விற்பனை 3-3-1828இல் நடைபெற்றபோது ஒரு இருத் தல் 5 சிலிங் 34 பென்ஸ்படி 31,000 இருத்தல்கள் விற்கப்பட்டன. இதன்பின்னர் 1824இல் 55,000 இருத் தல்கள் கறுவா பிரஞ்சுக் கப்பலொன்றிற்கும், 40000 இருத்தல்கள் கறுவா கல்கத்தாவில் உள்ள நிறுவன மொன்றிற்கும் விற்கப்பட்டன. இவ் விற்பனைகளின் போது சராசரி விலை இருத்தலுக்கு 3 சிலிங் 5 பென்ஸாக இருந்தது. எனவே இலங்கையரசாங்கம் நேரடியாக விற்பனையை ஆரம்பித்தது தொடக்கம் அது பெற்ற விலை தொடர்ந்துகொண்டு செல்வதையே நாம் காணமுடியும். இதற்குப் பல காரணங்கள் பொறுப்பாக இருந்தன. இலங்கையிலிருந்த வணிகர்க

ளிடையே வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான் மூலதனம் இருக்காமை, கொழும்பில் கொள்வனவுசெய்ய முயன் ருேரிடையே போட்டியிருக்காமை, கொள்வனவா ளர்கள் குறிப்பறிந்து ஏலத்தின்போது அரசாங்கம் எதிர்பார்த்த விலையிலும் பார்க்கக் குறைந்த விலையைக் கேட்டமை, இலங்கைக் கறுவாவினைக் கொள்வனவு செய்வதற்காக ஆங்கில வணிகர்களாலோ, அல்லது அந்நிய நாடுகளாலோ எந்த ஒரு பிரதிநிதியும் நியமிக் கப்படாமை, ஒப்பந்தம் திரும்பவும் புதிப்பிக்கப்படாத தால் கொள்வனவு செய்பவராக சந்தைக்குள் புகுவ தற்கு கிழக்கிந்திய கம்பனி விரும்பாமைபோன்றவை அக்காரணங்களில் சிலவாகும். இதனுல் குடியேற்ற நாட் டரசாங்கம் கொழும்பில் ஏலத்தில் கறுவாவினை விற் பனை செய்வதை விடுத்து, தானே கறுவாவினை லண் டனுக்கு ஏற்றுமதி செய்து அங்கு விற்பனை செய்ய முற் பட்டது. 1832இல் கறுவாவின்மீது அரசாங்கம் கொண்டிருந்த தனியுரிமையினை நீக்கும்வரை இம் முறையே தொடர்ந்து இருந்தது.
இலண்டனில் ஏலவிற்பனை
இலண்டனில் கறுவாவினை நேரடியாக விற்கத் தொடங்கியபோதும், எதிர்பார்த்ததைப்போன்று அதிக இலாபத்தினை இலங்கை அரசாங்கத்தினுல் பெற முடிய வில்லை. அரசாங்கம் வர்த்தகத்துறையில் போதிய அறிவைப் பெற்றிருக்காமையும் இதற்குக் காரணமா கும். இதனைவிட ஆங்கில கிழக்கிந்திய கம்பனி தான் வைத்திருந்த இருப்புகளை லண்டன் சந்தையில் படிப் படியாக நிரம்பல் செய்தமையும் இதற்குரிய காரணங் களில் ஒன்ருகும். 1827இல்தான் கிழக்கிந்தியக் கம்பணி யிடம் இருந்த கறுவா இருப்புக்கள் முடிவடைந்தன. மேலும் இலங்கைக் கறுவாவிற்கு உலக சந்தையில் யில் தனியுரிமை உண்டு எனக் கருதி ஒல்லாந்தர் செய்த தைப் போன்றே உற்பத்தியைக் கட்டுப்படுத்தி சந்தை யில் இலங்கைக் கறுவாவின் விலையை உயர்வாக வைத் திருந்தமை, ஜாவா, மற்றும் இந்தியாவின் இல பகுதிகள் பிலிப்பைன்ஸ், தென்சீனு, டச்சுக் கிழக்கிந்திய தீவுகள் போன்ற இடங்களில் விளைந்த தரம் குறைந்த ஆணுல் மலிவான கசியா' எனப்படும் கறுவா சந்தையில் போட்டியாக நுழைவதற்கு வழி வகுத்தது. இப் போட்டியின் காரணமாக இலங்கைக் கறுவாவின் விலையும் விற்பனையும குறைவாக இருந் தது. 1828இல் ஒரு இருத்தல் இலங்கைக் கறுவாவின் விலை இலண்டனில் 6 சிவிங் 6 பென்ஸாகவே இருந் தது. எனினும் 1820 களின் பிற்பகுதியில் கிழககிந் தியக் கம்பனியின் இருப்பு முடிவடைந்தமை காரண மாகவும், சுசியாக் கறுவாவின் மீதிருந்த கவர்ச்சி குறைந்ததலுைம் விலை ஏற்றம் ஏற்பட்டது. இவ் விலை யேற்றம் மெதுவானமுறையில் ஏற்பட்டு 1830ல் இருத்தல் 10 சிலிங்காக இருந்தது. 1830இல் இலண்ட னில் இருந்த இலங்கைக்கான குடியேற்ற நாட்டுப் பிரதிநிதி - குடியேற்ற அரசாங்கத்தின் சார்பாக கறுவா விற்பனையை நிருவகித்து வந்தவர் - தரமான
12 -

Page 15
கறுவாவைக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் கறுவா வின் விற்பனையில் ஏற்படும் விரைவான அதிகரிப்பு இலங்கைக்கு வருடாந்தம் 100,000 ஸ்டேர்லிங் பவுண்களுக்கு மேலான வருமானத்தினைக் கொடுக்கு மென முற்கூறல் செய்திருந்தார். இக்காலத்தில் விலை யில் ஏற்பட்ட அதிகரிப்பு தற்காலிகமானதாகவே இருந்தது. 1833இல் விலை குறைவடைந்து இருத்த லுக்கு 8 சிவிங்காக அமைந்திருந்தது. இவ்விடத்தில் அரசாங்கம் கறுவாவின்மீது வைத்திருந்த தனியுரிமை யால் ஏற்பட்ட சில பாதக விளைவுகளைக் கூறுதல் அவ சியமானதாகும்.
கறுவாவின்மீதான தனியுரிமையைப் பாதுகாப்ப தற்கு அரசாங்கம் பல்வேறு ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தி யிருந்தது. பெரும்பாலான ஒழுங்கு விதிகள் ஒல்லாந்த ரிடமிருந்து பெறப்பட்டவையாக இருந்தன. கறுவா மர்ம் எங்கு வளர்ந்தாலும் அது சட்டப்படி பாதுகாக் கப்பட்டது. அதற்குக் காயம் விளைவிப்போர் கடுந்தண் டனைக்காளாகினர். கறுவா மரத்தை அழித்தல், சட்ட உரிமை பெருதவர்கள், கறுவாப் பட்டை உரித்தல், கறுவாவைத் தனியார் வர்த்தகர்கள் விற்றல், கறுவா வைக் கடத்தல் போன்றவற்றுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட்டது. கறுவாவினைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் ஆர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள், உள்நாட்டுப் பொருளாதாரத் தின் மீது எத்தகைய பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் எண்ணிப் பார்க்கவில்லை. இச் சட்டங்களால் ஏற்பட்ட இரண்டு பாதக விளைவுகளை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.
(1) இறுவா மரத்தைப் பாதுகாத்த சட்டங்கள் கறுவா மரங்கள் வளர்ந்த நிலங்களின் பெறுமதியைக் குறைத்தன. சட்டங்களின் காரணமாக அந்நிலங்களைச் சொந்தக்காரர் விருத்திசெய்ய முடியாதிருந்தது. அத்து டன் சேனைப் பயிர் மேற்கொள்பவர்கள், மற்றும் வீட்டு மிருகங்கள், பறவைகள் போன்றவற்றை வளர்க்கும் கிராமிய மக்களின் பொருளாதார நடவ டிக்கைகளுக்கும் இச் சட்டங்கள் ஊறுவிளைவிப்பனவாக இருந்தன.
(2) கறுவாத் தொழிலில் ஈடுபட்டிருந்த 'சலகம எனப்படும் சாதியினரை மேலும் மேலும் பெருமளவு கறுவாவைப் பெற்றுத்தரும்படி அவர்களது இயலள வின் எல்லைவரைக்கும் அரசாங்கம் தூண்டிக்கொண்டே இருந்தது. இதனுல் அச்சாதியினர் கடுமையாக வேலை செய்யவேண்டியிருந்தது. அரசாங்கத்தின் முயற்சி இறு தியில் பொருளாதார ரீதியில் விரயமாகவே முடிந் தது. “சலகம சாதியினரைச் சார்ந்த பலர் அத்தொழி லைக் கைவிட்டனர். பலர் காடுகளில் கறுவாப்பட்டை உரிக்கும்போது, காய்ச்சலால் இறந்தனர். இதனுல் அரசாங்கம் மேலும் மேலும் திறமை குறைந்த தொழி லாளர்களிலேயே தங்கியிருக்கவேண்டியேற்பட்டது. கட் TLD (TGF இலவச உழைப்பைப் பயன்படுத்தி
- 13

கறுவாத் தொழில் மேற்கொள்ளப்பட்டபோதும் கறு வாத் திணைக்களத்தின் செலவு அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் காரணமாக தனியுரிமையிலிருந்து பெற்ற இலாபம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட பெருமளவுக்குக் குறைவாகவே இருந்தது.
தனியுரிமை நீக்கப்படல்
அரசாங்கம் கறுவா வர்த்தகம், உற்பத்தி ஆகிய வற்றின்மீது கொண்டிருந்த தனியுரிமை நீக்கப்படுதல் வேண்டுமென கோல்புறுக் பிரேரித்தார். தனியுரிமை யைப் பாதுகாக்க வைத்திருந்த சட்டங்கள் மக்களுக்கு குறிப்பாகக் கிராமமக்களுக்குத் துன்பம் விளைவிப்பன வாக உள்ளன என்று கூறி அதனைக் கண்டித்து அரசாங் கத்தின் தனியுரிமை உடனடியாகக் கறுவா உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றில் இருந்து நீக்கப்படுதல்வேண்டு மெனப் பிரேரித்தார். கறுவா பயிரிடும் நிலங்கள் குத்தகைக்கு விடப்படவேண்டும் அல்லது விற்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். கறுவா பயிரிடுவதற் கும் வர்த்தகம் செய்வதற்குமான உரிமை சகலருக்கும் விடப்பட்டது. கறுவா ஏற்றுமதி செய்யுமுரிமை சகல ருக்கும் வழங்கப்படின் பலர் வர்த்தகத்தில் ஈடுபட குறைந்த விக்லயில் தரமுயர்ந்த இலங்கைக் கறுவா விற் கப்படும். இதனுல் இழந்த சந்தையினை மீண்டும் பெற் றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே கோல் புறுரக் இச்சிபார்சினைச்செய்தார். மேலும் இச்சீர்திருத் தங்கள்மூலம் இலங்கைக் கறுவாவிற்கான சந்தை நிலை யான ரீதியில் விரிவடைந்து செல்லுமெனவும் இதனுல் இலங்கை அரசாங்கத்திற்கு வருடாவருடம் 100,000 ஸ்டேர்லிங் பவுண்கள் லாபம் கிடைக்குமெனவும் எண் னப்பட்டது. (1829க்கும் 1832க்கும் இடையில் கறுவா மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த சராசரி வருவாய் 115,000 ஸ்டேர்லிங் பவுண்களாக இருந்தது.)
கோல்புறுரக் இலங்கைக் கறுவாவிற்குத் தற்போது உலக சந்தையில் உள்ளநிலை தெரியாமல்தான் இப் பிரேரணையைச் செய்திருந்தார் என்றே கூறவேண்டி புள்ளது. உண்மையில் அரசாங்கத்தின் தனியுரிமையைப் படிப்படியாகவே நீக்கியிருத்தல் வேண்டும். எனினும் 1840ஆம் ஆண்டில்கூட முக்கியவருமானம் தரும் தொழி லாகக் கறுவா விளங்குமென எதிர்பார்த்தமை, பிரித் தானிய திறைசேரியின் கருத்திலும்பார்க்க கோல்புறுரக் கின் கருத்திற்குச் செல்வாக்குக் கூடுதலாக இருந்தமை காரணமாக கோல்புறுரக்கின் எண்ணம் நிறைவேறியது. கோல்புறுரக்கின் பிரேரணையைச் செயற்படுத்தின் அர சாங்கம் பெறும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படுமெனக் கருதிய பிரித்தானிய திறைசேரி, ஏற்றுமதி செய்யப் படும் கறுவாமீது இருத்தலுக்கு 3 சிலிங் வரி விதிக்க வேண்டுமென வற்புறுத்தியது. உண்மையில் ஏற்றுமதி வரியை விதிப்பது கோல்புறுரக்கைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியுடைய காரியமாக இல்லாவிடினும் அரசாங்கத்

Page 16
தனியுரிமை இருப்பதிலும் பார்க்க தனியார் வர்த்த கத்துடன் இணைந்த ஏற்றுமதி வரி இருப்பதை விரும்பி ஞர் எனக் கூறலாம். உண்மையில் இவ்வரிவிதிப்டே இலங்கையின் கறுவா வர்த்தகம் உலக சந்தையில் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்ததென சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். எல்லாத்தரக் குறுவா பொறுத்தும் இருத்தலுக்கு 3 சிலிங் வரிவிதிக்கப்பட்டதால் இலங் கைக் கறுவாவின் விலை உலக சந்தையில் உயர்ந்தது. கோல்புறுக் உலகசந்தையில் இலங்கைக் கறுவாவின் நிலையை அறியாது, தனியுரிமை இருக்கின்றது எனக் கருதி வரியினுல் விலையுயர்ந்தாலும் மக்கள் அதனைக் கொள்வனவு செய்வார்கள் எனக் கருதியிருந்தார். மேற்கூறிய ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருக்காவிட்டால் தரமுயர்ந்த இலங்கைக் கறுவாவுடன், ஜாவாவில் விளைந்த தரம் குறைந்த கசியாக் கறுவா (அதன் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிவரி இருத்தலுக்கு : பென்ஸ் மட்டுமே) போட்டியிட்டிருக்க முடியாது. இதனையறியாது இலங்கைக் கறுவாவின் தனியுரிமைச் சக்தியை தவருகப் பாவித்து பெருமளவு சுரண்டலை மேற்கொள்ள முனைந்தமை அதன் அழிவுக்கே வழி வகுத்ததெனலாம்.
இலங்கைக் கறுவாவுக்கு வரிவிதித்த நிலை ஒரு புறமிருக்க ஜாவாவில் கசியாக் கறுவாவின் உற்பத்தி துரிதமாக அதிகரித்துக் கொண்டு சென்றது. 1835இல் 2ே00 இருத்தல் கறுவாவை உற்பத்தி செய்த ஜாவா 1845ஆம் ஆண்டளவில் 134,500 இருத்தல்களையும் 1848இல் 250,500 இருத்தல்களையும் உற்பத்தி செய்தது இதனுல் உலக சந்தையில் கசியாக் கறுவாவின் நிரம்பல் அதிகரிக்க அதன் விலை குறைந்தது. இலங்கைக் கறுவா விலும் பார்க்க கசியாக் கறுவாவின் விலை பெருமளவு குறைவாக இருந்ததால் மக்கள் அதனை வாங்கி நுகர முற்பட்டு அதன் ருசிக்கு தம்மை பழக்கப்படுத்திச் கொண்டனர். இதனுல் 1838க்குப் பின் இலங்கைச் இறுவாவிற்கான சந்தையை மீண்டும் கட்டி எழுப்புவி தென்பது கடினமாயிற்று.
உலக சந்தையில் கறுவா நிரம்பல் அதிகரிக்க அதற்கேற்ப கேள்வி அதிகரிக்காததால் தரமுயர்ந்த முதலாம்தரக் கறுவாவின் விலைகூட வீழ்ச்சியடையத் தொடங்கியது. பின்வரும் அட்டவணை முதலாம்தரக் கறுவாவின் விலை வீழ்ச்சியினை காட்டி நிற்கின்றது.
ஆண்டு விலை (இருத்தலுக்கு) 1835 9 சிவிங் 9 பென்ஸ் 1841 5 சிலிங் 1 பென்ஸ் 1846 3 இலிங் 9 பென்ஸ் 1855 1 இலிங் 3 பென்ஸ்
கோல்புறுரக்கின் சிபார்சையடுத்து நிலங்கள் தனி யாருக்கு விற்கப்பட்டன. உலக சந்தையில் கறுவாவின் விலை குறைந்து வந்ததால் பலர் கறுவா நிலங்களை வாங்குவதில் தயக்கம் காட்ட நில விற்பனை உறுதி யற்றதாகவும், நிச்சயமற்றதாகவும் இருந்தது. இதனல்

கறுவாத்தோட்டக் காணிகள் விற்கப்பட்டபோது அரசாங்கத்திற்கு நட்டமே ஏற்பட்டது. இடைசிக் காலங்களில் அந்நிலங்களுக்கு என்னவிலை கிடைத்ததோ அதன்படியே விற்கப்பட்டது. பெரும்பாலான காலங் களில் விற்கப்பட்ட நிலங்களின் பெறுமதி அந்நிலங்க ளின் வருடாந்த உற்பத்திப் பெறுமதியின் 4 பங்குக்கும் குறைவாக இருந்தது. 1884க்கும் 1839க்குமிடையில் கைவிடப்பட்ட கறுவா நிலத்தில் 2000 ஏக்கர்களே விற்கப்பட்டன. இவற்றைக் கொள்வனவு செய்தவர் கள் கறுவாவுக்குப்பதிலாக கோப்பி, தென்னை போன்ற பயிர்களை அவற்றில் நாட்டினர். 1840ஆம் 1841ஆம் ஆண்டுகளில்தான் நிலவிற்பனை சரியானமுறையில் இயங்கத்தொடங்கியது. 1843ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னர் எக்கல, மொரட்டுவ, கதிரான ஆகிய இடங் களில் இருந்த நிலங்கள் விற்கப்பட்டன. 1843ஆம் ஆண்டில் மருதானையில் இருந்த கறுவா நிலமானது வர்த்தக நிறுவனமொன்றுக்கு 9 வருட குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் 1849இல்தான் அதனை விற்க முடிந்தது.
ஏற்றுமதி வரியைக் குறைத்தல்
கோல்புறுரக்கின் சிபார்சினை அடுத்து 1833ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கறுவா வர்த்தகத்தில் ஈடுபடத்தொடங்கினர். அக்காலத்திலிருந்து கறுவா வின் விலையும் குறையத்தொடங்கியதால் கறுவாவின் மீதுவிதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிவரியை நீக்குமாறு அல்லது குறைக்குமாறு அவர்கள் கோஷமிட்டனர். இவர்களது கோரிக்கைக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம், குடியேற்றநாட்டலுவலகம் என்பன இருந்தபோதும் பிரித்தானிய திறைசேரி இதற்கு இணங்க மறுத்தது. இக்காலத்தில் கறுவா ஏற்றுமதி வரி மூலமே அதிக வருமானத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டிருந்தால் அதனை நினைத்தவுடன் மாற்ற முடி யாமலிருந்தது. லண்டன் சந்தையில் விலை குறைந்து கொண்டுவர வர இலங்கைக் கறுவா உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி வரியைக் கழித்தபின் பெற்ற இலாபமும் குறைந்துகொண்டு வந்தது. தொடர்ந்து விலை குறைந்து வர ஆரம்பத்தில் எல்லே நிலை உற்பத்தியாளர்கள் பாதிக் கப்பட்டனர். மேலும் தொடர்ந்து கறுவாவின் விலை வீழ்ச்சியடைய உற்பத்தியாளர்கள் பலர் நட்டமடையும் நிலைக்குள்ளானதால் ஏற்றுமதி வரியைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 1833இல் எல்லாத்தரக் கறுவாவிற்கும் இருத்தலுக்கு 3 சிலிங் வரிவிதிக்கப்பட்டிருந்தது. 1837 இல் 1ஆம் 2ஆம் தரக் கறுவாமீது இருத்தலுக்கு 2 சிலிங் 6 பென்ஸ் 3ஆம்தரக் கறுவாமீது 2சிலிங் எனவும் வரியினளவு குறைக்கப்பட்டது. மேலும் 1841இல் எல்லாத்தரக் கறுவாமீதும் இருத்தலுக்கு 2 சிலிங்கும் 1843இல் இருத் தலுக்கு ஒரு சிலிங்கும் என வரியினளவு தொடர்ந்து குறைக்கப்பட்டது. கறுவாவின் மீது விதிக்கப்பட்ட வரிக்குறைப்பின் காரணமாக கறுவா வர்த்தகம் மீட்சி யடையும் அறிகுறிகள் காணப்பட்டாலும், அது தற்.
14. --

Page 17
காலிகமான விருத்தியாவே இருந்தது. இருத்தலுக்கு ஒரு சிலிங் என்ற ஏற்றுமதி வரியினளவு லண்டன் சந் தையில் அப்போது காணப்பட்ட கறுவாவின்பெறுமதி யில் 100 சதவீதமானது என்பதை உணர அதிக நாட் கள் செல்லவில்லை. இதனுல் மேலும் வரியினளவு குறைக் கப்பட்டது. 1848இல் இருத்தலுக்கு 4 பென்ஸே வரியாக விதிக்கப்பட்டது. இது முன்னேய வரியின் அளவுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப் பினும் 1848இல் இருந்த விலையுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பினும் 1848இல் காணப்பட்ட அறுவா வின் விலையுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்ததாக இருந்தது. இதனுல் இறுதியில் 1853இல் கறுவாமீது விதிக்கப்பட்டிருந்த வரி முற்ருக நீக்கப்பட்டது. எனி னும் இக்காலத்தில் இலங்கைக் கறுவா வர்த்தகம் மீண்டும் மீட்சியடையும் என்ற நிலையைக் கடந்து விட்டிருந்தது.
கறுவாத் தொழிலின் வீழ்ச்சி :
ஒவ்வொரு முறையும் வரிக்குறைப்பு மேற்கொள் ளப்பட்ட போதும் அது காலம் பிந்திய நடவடிக்கை யாகவே காணப்பட்டதால் கசியாக் கறுவாவுடன் போட்டியிட்டு வெற்றியடையும் நிலையில் இலங்கைக் கறுவா இருக்கவில்லை. இலங்கைக் கறுவா உலக சந்தை யில் கொண்டிருந்த தனியுரிமையை இழக்கத் தொடங் கிய காலத்திலிருந்தே, கறுவாத் தொழிலில் அதிக முதலிட்டு நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாண் டிருந்தால் இலங்கையின் கறுவாத் தொழிலில் வீழ்ச்சி யேற்படாமல் மீட்டிருக்கலாம். ஆணுல் 1840ஆம் ஆண் டின் இறுதியில்கூட இலங்கையின் பொருளாதாரத்தில் கறுவாவே பிரதான இடம் வகிக்கும் என்றும், அரசாங்க வருமானத்திற்கு களிசமான அளவினை தொடர்ந்து அதுவே வழங்கும் என்றும் கோல்புறுரக் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனல் கறுவாவின் விலை வீழ்ச்சி யடைந்து கொண்டிருந்ததால், முயற்சியாளர்கள் கோப்பி, தென்னை போன்ற அதிக வருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த பயிர்களிலேயே முதலிட விரும்பினர். இதனுல் கறுவா ஒரு சில இலங்கைப் பெருந்தோட்டச் சொந்தக்காரரதும் சிற்றுடைமை யாளர்களதும் நிலங்களிலேயே பயிராக தொடர்ந்தும் வாழ்ந்தது.
இலங்கையின் கறுவாத் தொழில் வீழ்ச்சியடைந் தமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுமதி வரிகளின் மீது சுமத்துவது நியாயமானதாகத் தெரியவில்லை என சிலர் கூறுகின்றனர். பின்னர் தொடர்ந்து வந்த சிக்கல்க ளுக்கான விதைகள் இலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் தனியுரிமை யிருந்தபோது செயற்கையான முறையில் வெளியீட்டைக் கட்டுப்படுத்தி விலையினை உயர்வாக வைத்திருந்த காலத்திலிருந்தே விதைக்கப் பட்டிருந்தது. இவ்வுயர்ந்த விலைகள் ஏனைய பிரதேசங் களில் தரக்குறைவான கறுவா உற்பத்தி விரிவடையக் காரணமாயிற்று. அவை சந்தைக்குள் புகத் தொடங்கி
- 15
 

பதும் விலைகள் வீழ்ச்சியடைந்தன. தரக்குறைவான கறுவா உற்பத்தி அதிகரித்தமைக்கு இலங்கைக் கறுவா வின் தனியுரிமை சக்தியை தவருகப் பயன்படுத்திய மையே முக்கிய காரணமாகும். முன்னர் வரி விதிக்கப் படாமலிருந்த நிலையிலும் பார்க்க, தனியுரிமை நீக்கப்பட்ட பின்னர் விதிக்கப்பட்ட வரி, தன்னியல் பாகவே உற்பத்தியாளர்கள் பெறும் இலாபத்தினக் குறைத்திருந்தது. இவ்வகையில் இலங்கையின் கறுவா உற்பத்தி விரிவடைவதற்கு தடை ஏற்பட்ட அதே சமயத்தில் வெளிநாட்டில் கறுவாவினை உற்பத்தி செய் தவர்கள் ஒப்பீட்டு ரீதியில் பெருமளவு இலாபத்தினைப் பெற்று உற்பத்தியை அதிகரித்தனர். இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது யாதெனில் லண்டன் சந்தையில் தறுவாவின் விலை வீழ்ச்சியடைவதற்கு ஏற்றுமதி வரி காரணமாக இல்லாவிட்டாலும், அதிகரித்துக் கொண் டிருந்த உலக கறுவா வர்த்தகத்தில் இலங்கையின் பங்கு கணிசமான அளவு குறைவடைவதற்கு வழி வகுத் திருந்தது என்பதையேயாகும். 19ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் :
19ஆம் நூற்றண்டின் இறுதி ஐந்து தசாப்தங்க விலும் உற்பத்தியாளர்கள் வருடாந்தம் சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்ட கறுவாவின் எண்ணிக்கை, அதற்கு முந்திய தசாப்தங்களில் சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாகவே இருந்தது. இதனைப் பின்வரும் அட்டவணையில் இருந் தும் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டு கறுவா ஏற்றுமதி (இருத்தலில்)
வருடாந்த சராசரி 429,949 221 ہے۔ l816 .7826 - 30 5 17,760 1837 - 4. 452,0岛9 237。565 511 ہے۔ 1847 1857 - 6 Ꭶ07 ,Ꮾ88 .7867 - 7:7 1,838,132 1877 - 81 1,570,466 1887 - 91 2, 361,023
ஆணுல் பிற்காலப் பகுதிகளில் சந்தையில் கறுவா பின் விலை மிகக் குறைவாகவே இருந்தது. எனினும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட தரம் குறைந்த கறுவாவுடன் போட்டி பிடுவதற்காக இழிந்தரக கறுவாவையும் உற்பத்தி செய் தனர். இதனுல் ஏற்றுமதித் தொகை அதிகரித்த போதும் அதன் பெறுமதி 19ஆம் நூற்றண்டின் முத லரைப் பகுதியில் இருந்ததைப் போன்று அல்லது அதி லும் பார்க்க குறைவாக இருந்தது.
1852ஆம் ஆண்டிற்குப்பின்னர் இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகத்தில் கறுவாவின் பங்கு ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்த ஒன்ருகவே இருந்தது. வர்த்தகத்தில் இடம்பெறும் பொருட்களில் அதுவும் ஒன்று என்று கூறத்தக்களவிலேயே இருந்தது. இன்று கூட இந் நிலைமையே இருந்து வருவதைக் காணலாம்.

Page 18
திருமுருகாற்றுப்படை
தமிழ் இலக்கியப்பரப்பிலே ஆற்றுப்படைப் பாட் டுகள் பண்டுதொட்டே வழங்கிவருகின்றன. பத்துப் பாட்டிலே ஐந்து ஆற்றுப்படைப் பாட்டுக்கள் உள்ளன. அவையாவன: திருமுருகாற்றுப்படை, சிறுபாணுற்றுப் படை, பெரும்பானற்றுப்படை, பொருநர் ஆற்றுப் படை, கூத்தர் ஆற்றுப்படை (மலைபடுகடாம்). இவ் வைந்து ஆற்றுப்படைகளில் முதலாவதாக அமைந்துள் ளது திருமுருகாற்றுப்படையேயாகும்.
தொல்காப்பியம் புறத்திணை இயல், ஆற்றுப்படை பற்றிப் பின்வருமாறு கூறும்:
* கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெருஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும். '
(தொல் புறம் 36) பிற்காலத்தில் எழுந்த பாட்டியல் நூல்களிலும் ஆற்றுப்படைப் பாட்டிற்கான இலக்கணம் உண்டு. வெண்பாப் பாட்டியல் ஆற்றுப்படைப் பாட்டுப்பற்றிப் பின்வருமாறு கூறும்.
" ஒன்ரு மகவலா லொண்புலவர் யாழ்ப்பாணர்
குன்ருத சீர்ப்பொருநர் கூத்தரே-என்றிவரை ஆங்கொருவ னுற்றுப் படுத்தப் பரிசறைந்தால் பாங்காய ஆற்றுப் படை." பரிசில் பெற்ற கலைஞர்குழாம் பரிசில்பெற விரும் பிய கலைஞர் கூட்டத்திற்கு வள்ளல் ஒருவனிடம் செல்லும்படி வழிகாட்டுவதாக அமைந்த பாட்டே ஆற்றுப்படைப் பாட்டாகும். ஆறு - வழி. படை - படுத்தல் (சேர்த்தல்). ஆற்றுப்படையெனில் வழிப் படுத்தல் என்று பொருள். சங்ககாலக் கலைஞர்கள் தாம் பெறற இன்பததைத் தம்மைச் சார்ந்தவர்களும் பெற வேண்டும் என்ற நன்னுேக்கத்துடன் வாழ்ந்தனர் என்பதை ஆற்றுப்படைப் பாட்டுக்கள் காட்டுகின்றன. சிங்க இலக்கியங்களான புறநானூறு, பதிற்றுட் பத்து என்பவற்றிலும் ஆற்றுப்படைப் பாட்டுக்கள் சில காணப்படுகின்றன. புறப்பொருள் பற்றிய பாட்டால் ஆற்றுப்படைப் பாட்டுக்கள் ஆரம்பத்திற் சிறு சிறு தனிப்பாடல்களாக அமைந்து பின் படிப்படியாக நெடு. பாடல்களாக வளர்ந்திருக்கக்கூடும். உதாரணமாக பின்வரும் புறநானூற்றுப் பாடலைச் சுட்டிக்காட்ட 6ծո լիք
" வணர்கோட்டுச் சிறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பான கேளினி நயத்திற் பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ

எம். சிவலிங்கராஜா, எம். ஏ.
ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங் கிலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் காணத்துக் கிழவன் தண்டா ரகல நோக்கின் மலர்ந்தே" (புறம், 155)
மோசிகீரனூர் என்னும் புலவர் கொண்கானங் கிழான் என்னும் வள்ளலிடம் பாணன் ஒருவன மேற் காட்டியவாறு ஆற்றுப்படுத்துகிருர், இதன் துறை பாணுற்றுப்படை எனப்படும். இப்பாடலின் பொருள் பின்வருமாறு:
" வளைந்த கோட்டையுடைய சிறிய யாழை உலர்ந்த மருங்கிலே தழுவிக்கொண்டு அறிவோர் யார்தான் எனது துன்பத்தைத் தீர்க்கவென்று நயத்திற் சொல்லும் பாண1 யான் சொல்லுகின்றதனை இப் பொழுது கேட்பாயாக; பாழுரின்கண் நெருஞ்சியி னது பொன்றித்தை யுடைய வாலியபூ எழுகின்ற ஞாயிற்றை எதிர்கொண்டாற்போல, வறுமையுற்ற யாழ்ப் புலவரது ஏற்குமண்டை, விளங்கிய புகழை யுடைய கொண்பெருங் காணங்கிழானது குளிர்ந்த தாரையுடைய மார்பத்தை மலர்ந்து நோக்கின."
மேற்காட்டிய பாட்டும் உரையும் ஆற்றுப்படை யின் தோற்றத்தினைத் தெளிவாக விளக்குகின்றன. புறநானூற்றிலே பல ஆற்றுப்படைப் பாட்டுக்கள் காணப்படுகின்றன.
திருமுருகாற்றுப்படை யென்பது முருகக்கடவு ளின் அருளைப்பெற்ற ஒருவர் அந்த அருளைப் பெற விரும்பும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்த பாட்டு. இது 317 அடிகளைக் கொண்டது. இதனை நக்கீரர் என்னும் புலவர் பாடினர்.
தமிழ் இலக்கிய சரிதத்திலே நக்கீரர் என்ற பெய ரிலே புலவர்கள் பலர் வாழ்ந்திருக்கிருர்கள், திருமுரு காற்றுப்படையைப் பாடிய நக்கீரரும், நெடுநல் வாடை யைப் பாடிய நக்கீரரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்கள் என்று கூறப்படுகிறது நக் கீரர் என்ற பெயரிலே பல புலவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்திருக்கிருர்கள் என்று ஆராய்ச்சி அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை பல ஏதுககளைக் காட்டி விளக்கியுள்ளார். (இலக்கியதீபம்)
சங்க இலக்கியங்களிலே முருகன், திருமால் முத லியோரைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன ? எனினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பகதிப் பாடலாகச் சங்க இலக்கியத்துள் இடம்பெற்றுள்ளது. முருகாற்றுப்படையே அதன் சிறப்புநோக்கித் திரு என்ற அடையுடன் சேர்ந்து திருமுருகாற்றுப்படை
16 -

Page 19
என அழைக்கப்படுகின்றது என்பர். இவ் வாற்றுப் படையைப் புலவர் ஆற்றுப்படை என்றும் அழைப் பர். முருகனை வழிபடுவோரின் பாராயணத்திற் குரிய நூலாக திருமுருகாற்றுப்படை இன்றும் பயன் படுகின்றது.
திருமுருகாற்றுப்படை திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலவரை உள்ள முருகப்பெருமானது ஆறு படை வீடுகளிலும் அப்பெருமான் உறைந்து அடி யார்க்கருளும் இயல்பையும் அவனைவழிபடும் முறையை யும் விளக்கும்.
முதற்பகுதியாகத் திருப்பரங்குன்றத்தின் மலைக் கோயில் பற்றியும், அதனைச் சூழ்ந்த இயற்கைவளம் பற்றியும், முருகன் திருக்கோலம் பற்றியும் சூரனுடன் செய்த போர்பற்றிய விளக்கங்களும் உள்ளன.
' உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டா அங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி'
எனத் திருமுருகாற்றுப்படை தொடங்குகிறது.
பொதுவாகச் சமயச்சார்புடைய இலக்கியங்கள் பல உலகம் என்ற அடியுடனேயே தொடங்குகின்றன. உதாரணமாகப் பெரிய புராணம் 'உலகெலாம் உணர்ந் தோதற்கரியன்" என்றும், இராமாயணம் "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்றும் தொடங்குவ தைக் குறிப்பிடலாம். இத்தகைய தொடக்கத்திற்குத் திருமுருகாற்றுப்படையும் ஒரு காரணமாகலாம்.
திருப்பரங்குன்றம்பற்றிய பகுதியில் ஆசிரியர் தாம் பெற்ற முருக தரிசனத்தின் அனுபவத்தைத் தெளிவுற எடுத்து விளக்குகிருர், ஒளிப்பிழம்பாய்த் தோன்றி உலகு புரக்கும் முருகனின் திருவுருவ வருணனை பக்தி யனுபவம் பொதிந்ததாக உள்ளது. ஆற்றுப்படை களுக்கே இயல்பான இயற்கை வருணனை திருப்பரங் குன்று பற்றிய பகுதியிலே சிறப்பாக இடம்பெற் றுள்ளது.
"இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனமலர். எனும் பகுதியை வகைமாதிரியாகச் சுட்டிக் காட்டலாம்.
திருச்செந்தூர்பற்றிய பகுதியில் முருகனுடைய ஆறு திருமுகங்களின் குறிப்புக்களும், பன்னிருகைகளின் தொழில்களும், தலச்சிறப்பும் விரிவாகப் பேசப்படு கின்றது.
திருவாவின் குடிபற்றிய பகுதியில் முருகனே வழி படும் முனிவர்கள் பெருமையும், வழிபாட்டுக்கு வரும் மகளிரின் இ ய ல் பும் கூறி முருகன் தெய்வானை யம்மையாரோடு உறைதல் விளக்கப்பட்டுள்ளது.
= 17 میسس

திருவேரகம்பற்றிய பகுதியில் முருகனை அனுதின மும் வணங்கிப் பூசனைபுரியும் அடியார்களுக்கு அருளல் விளக்கப்பட்டுள்ளது.
குன்றுதோருடலில் மலைநாட்டு மக்கள் குரவைக் கூத்து ஆடி வழிபடும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
பழமுதிர் சோலை என்னும் பகுதியில் முருகன் எழுந் தருளும் இடங்களும் அவனிடம் சென்று அருள்பெறும் முறைமையும், அத் தலத்தின் சிறப்பும் விளக்கப்பட் டுள்ளன. பல்வேறு வகையினராய அடியார்கள் வெவ்வே றிடங்களில் தாந்தாம் அறிந்தவாறே ஆற்றும் வழி பாட்டினை முருகன் ஏற்றருளும்விதம் சிறப்பாக விளக் கப்பட்டுள்ளது. முருகனின் சிறப்பினைப் பலவழியிலும் குறிப்பிட்ட நக்கீரர் பழமுதிர்சோலையிடத்து மிகவும் விறுவிறுப்பாகவும், சிக்கனமாகவும் எடுத்து விளக்கு கிருர்,
* அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வர் மால்வரை மலைமகள் மகனே! மாற்றேர் கூற்றே! வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பின் பழையோள் குழவி வானுேர் வணங்குவில் தானத் தலைவ! மாலை மார்ப நூலறி புலவ! செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. முருகன் உறையும் ஆறுபடை வீடுகளையும் அவ னது அருட் திறனையும், தோற்றப் பொலிவையும், அடி பார்களின் தன்மைகளையும் திருமுருகாற்றுப்படை நிறப்பாகக் கூறுகின்றது.
திருமுருகாற்றுப்படையின் தோற்றம்பற்றிக் கூறப் படும் கதை, இவ்வாற்றுப்படையிலிடம் பெறும் புரா ணக் கதைகள், வடமொழி மரபுகள், சிற்சிலதொடர்கள் முதலியவற்ருேடு இதன் பொருள் மரபினையும் மனங் கொண்டு, இதனைச் சங்க நூல்களின் காலத்துக்குப் பிந்தியது என அறிஞர் முடிவு செய்வர்.
உலகியல் பற்றி எழுந்த ஆற்றுப்படை வடிவத்தை ஆற்றல்வாய்ந்து கவிஞரான நக்கீரர் பக்திநெறிக்குப் பயன்படுத்திச் சிறப்பான வெற்றியையும் கண்டிருக்கிருர் ான்று துணிந்து குறிப்பிடலாம். தமிழ் இலக்கியப் பரப்பிலே இத்தகைய மரபு மாற்றங்கள் நிகழ்ந்துள் ாமையை இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அவ தானிப்பர். பக்திநெறியை வலுப்படுத்தத்தோன்றிய திருமுருகாற்றுப்படையிலே அக்கால மக்களின் வாழ்க்கை முறை, வழிபாட்டுமுறை, கூத்து முறைகள் முதலியன நன்கு விளக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தின் * நாடி " ஒட்டத்தை நன்கு அறியத் திருமுருகாற்றுப் படை உதவுகிறது எனலாம்3

Page 20
செய்முறைப் புவியியல் ஆரம்பப் புள்ளிவிபரவியர்
இடைய ஆகார அளவீடும் அத6 சில அளவைகளும்
இடையம் (median) எண்கணித சராசரி அல்லது கூட்டலிடை போல மையநாட்ட அளவை முறைகளில் ஒன்ருகும். ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுத் தொகுதி ஒன்றின் பெறுமானங்களை இருபுறமும் 50%மாகப் பிரிக்கும் புள்ளிவிபர மாறியின் பெறுமானம் இடையம் என்று வழங்கப்படுகின்றது.
கூட்டலிடை (meam) போலல்லாமல் இடையத் தைக் கணித்தல் வித்தியாசமானது. குறைந்த எண்ணிக் கையிலான தரவுத் தொகுதிகளாக இருப்பின் அவற்றை ஏறுவரிசையாகவோ இறங்குவரிசையாகவோ ஒழுங்கு படுத்தியபின் அவ்வொழுங்குகளில் மத்திய ஒழுங்கில் அமைந்த பெறுமானமே இடையம் என அல்லது நடு எண் என அழைக்கப்படும். தொகையான எண்ணிக் கையில் தரவுகள் இருப்பின் பொருத்தமான வகுப்பு ஒன்றில் அவை அடைக்கப்பட்டு மீடிறன் (Frequency) அட்டவணை தயாரிக்கப்பட்டு சில சமன்பாட்டு பிர யோகம் மூலம் இடையம் காணப்படும்.
இடைய அளவீட்டுடன் தொடர்பாக காலணப் பெறுமானங்கள், தசமனைகள், சதமனைகள் என்பனவும் கணிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டுரை யில் காலனைப் பெறுமானங்களான மேற்காலணை, கீழ்க்காலணை என்பன வகுப்பாக்கப்படாத தரவுகளுக்கும் வகுப்பாக்கப்பட்ட தரவுகளுக்கும் அணிக்கப்படும் முறை களும் விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.
இப்பெறுமானங்கள் புவியியல் ஆய்வுகளில் முடிவு இளே எடுப்பதற்குப் பெரிதும் பயன்படுகின்றன.
வகுப்பாக்கப்படாத தரவுகளுக்கு
இடையத்தைக்கணித்தல்
கணிப்புக்குப் பயன்படுத்தும் தரவுகள்:
1901 - 1930க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்
நிகழ்ந்த கம்பளைப் பிரதேசத்தின் மே மாத மழைவீழ்ச்சி அங்குலத்தில் அட்டவணை இல் தரப்பட்டுள்ளது.
ஆண்டு மழை வீழ்ச்சி
1901-------- 5。夏 9.8 سبة 1902 1908 - 110.3

பிரயோகம் - 2 லுடன் தொடர்புடைய
S. T. B. இராஜேஸ்வரன், M. A. விரிவுரையாளர், புவியியற்துறை யாழ்ப்பாணம், பல்கலைக்கழகம்
1904 = 1905 - 1906 - 19071908 - 1909 - ہے۔ 1910 سے 1911 92 - 1913 - 1914 = 951916 - 1917س-1918 1919 - ?7920 - 1921 - سے 1922 :7923 - 1924 - 1925 - 1926 - .7927 - 1928 - 1929 - 1930=
2
கணிப்பு முறை :
முதலில் அட்டவணை இல் தரப்பட்ட தரவுகள் ஏறு வரிசையாகவோ அல்லது இறங்குவரிசையாகவோ ஒழுங்குபடுத்தல் அவசியம். தரவுகள் ஒழுங்குபடுத்தும் பொழுது ஆண்டுகளின் ஒழுங்கு மாற்றம் பற்றிக் கருத் தில் எடுக்கத் தேவையில்லை.
தரவுகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னர் பின்வரு tԹfrԱg -916ծtDնվւք ,
ஒழுங்கு தரவுகள் ஒழுங்கு தரவுகள்
167. 3. 19. 20. 21. 22. శ్రీ,
18 -

Page 21
9. 4. శ్రీ 墨。 3.8 0. 釜。莎 蠶。 4.4 1. 5。麗 26. 1む。麗 2. 芭。岱 27. 19.7 荡。@ 28. 200 6.7 29. 20, 2 5. 7.3 30. 26.6
இங்கு தரவுகள் ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளது என்பதைக் கவனிக்குக.
மேற்கண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுக் கூட்டத் தில் இடையம் மத்தியில் இருப்பதாகக் கருதப்படுகின் றது. உதாரணத்தில் 30 தரவுகள் ஒழுங்குபடுத்தப் பட்டு இருப்பதனுல் 15ஆவது ஒழுங்கிற்கும் 18ஆவது ஒழுங்கிற்கும் இடையில் இடையம் இருப்பதனுல் இவ் வொழுங்குக்கு உரிய பெறுமானங்கள் இரண்டையும் கூட்டி இரண்டினுல் பிரிக்கும்பொழுது கிடைக்கும் பெறுமானமே இடைபமாகும்.
15ஆம் ஒழுங்குத் தரவு 7. 16ஆம் ஒழுங்குத் தரவு 7.7
互50 இடையம் = --- 7.5ஆகும்
குறிப்பு: தரவுகளை இறங்கு வரிசையில் ஒழுங்குபடுத்தி இடையத்தைச் செய்து பார்க்குக. இடையப் பெறுமானம் மாருது
சில சந்தர்ப்பங்களில் ஒற்றைப் பெறுமானங்களில் தரவுகள் கிடைக்குமாயின் வழமைபோல ஒழுங்கு படுத்திய பின்னர் மத்திய ஒழுங்கில் எப்பெறுமானம் கிடைக்கின்றதோ அதுவே இடையம் ஆகும். உதாரண மாக 25 தரவுகள் தரப்படின் அவற்றை ஒழுங்கு படுத்திய பின்னர் 13ஆவது ஒழுங்கில் இடையம் அமை வதை நோக்கலாம்.
அட்டவணை 2ல் மாவட்ட ரீதியாது கிராம வங்கி இளின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. இங்கு 13 தரவு கள் இடம் பெற்றுள்ளன. இடையம் 7ஆவது ஒழுங்கில் இடம் பெறுவதை நோக்கக்கூடியதாகவுள்ளது.
அட்டவணை 2
மாவட்ட ரீதியிலான ரோமவங்கிகள்
கொழும்பு 67 அம்பாறை 夏感 களுத்துறை 罗罗 யாழ்ப்பாணம் 33 கண்டி 30 மன்னுர் 06 மாத்தளை 4. வவுனியா 04 நுவரெலியா 09 மட்டக்களப்பு 1 இாலி 37 அம்பாறை 14 மாத்தளே 8
இத் தரவுகளே ஒழுங்குபடுத்தினுல் அவை பின் வருமாறு அமையும்.
19 سے

ஒழுங்கு START GRufálkaunas
— 4.
罗 s 6
3. - 9
参 1----------- ہے۔} } - 2 份 - 团 - 14 8 = 18 9 - 22
10 30 == حب۔
nosas 33
l 37----- ہے۔
13 -- 6:37 -- ܕ
இடையம் 7வது ஒழுங்கில் 14ஆக அமைகின்றது. வகுப்பாக்கப்பட்ட தரவுக் கூட்டங்களுக்கு இடையத்தைக் கணித்தல்
எண்ணிக்கையில் அதிகமான தரவுகளுக்கு இடை யத்தைக் கணிக்கவேண்டுமானுல் சுருக்கமான வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன. முதலில் இத்தரவுக் கூட்டங்களை ஒரு பொருத்தமான வகுப்பிற்குவி உள் ளடக்குதல் வேண்டும். அதன்பின்னர் சில சமன்பாடு களே பயன்படுத்துவதன்மூலமும், இடைச் செருகல் முறைமூலமும் இடையத்தைக் காணமுடியும்.
'X' என்னும் பிரதேசத்தில் 1880-1987வரை நிகழ்ந்த மழைவீழ்ச்சிப் புள்ளி விபரங்கள் அட்டவனை ல்ே வகுப்பாக்கப்பட்டுள்ளது. இங்கு 187 தரவுகள் 7.8 அங்குலத்திற்கும் 9.5 அங்குலத்திற்கும் இடைப் பட்டதாகக் காணப்பட்டபொழுது வகுப்பாயிடை 0.2 அங்குலம் என்ற இடைவெளியில் அட்டவணை தயாரிக் கப்பட்டுள்ளது.
அட்டவனே 3
வகுப்பு நிகழ்தரம் அல்லது மீடிறன் திரட்டு மீடிறன்
7.8-7.9 Ol 0. 8.0-8. 07 08 5.2-5。3 13 2. 84-85 23 44
86-87 47 9. 8 8-8.9 89 130 9.0-9. 19 A9 92-93 05 4. 94-95 03 157
157
அட்டவணை 3இல் காணப்படுவது போன்ற தரவு குளுக்கு இடையம் காண்பதற்குப் பின்வரும் சமன்பாடு பயன்படுத்தப்படும்.

Page 22
இடையம் (Me) = L+ (Ν- 台罗F, c
Fm இங்கு, L = இடையம் அமைகின்ற வகுப்பின் கீழ்ட் பெறுமானத்திற்கும் அதற்கு முன் உள்ள வகுப் பின் மேற் பெறுமானத்திற்குப் இடையே உள்ள பெறுமானம். N = நிகழ்தரங்களின் மொத்தம். 2F = இடையம் அமைகின்ற வகுப்பில் நிகழ் இரத்திற்கு மேல் உள்ள வகுப்புகளின் நிகழ் தரங்களின் கூட்டுத்தொதுை. Fm = இடையம் அமைகின்ற வகுப்பின் நிகழ்தரம் C = வகுப்பாயிடை,
குறிப்பு: 157 தரவுகளையும் சாதாரணமாக ஏறு வரிசையில் ஒழுங்குபடுத்தியிருந்தால் 79வது ஒழுங்கில் உள்ள பெறுமானம் இடையமாக இருக்கும். வகுப் பாக்கப்பட்ட தரவுகளில் மீடிறன் அட்டவணை, திரட்டு மீடிறன் அட்டவணை காணப்பட்டுள்ளது. திரட்டு மீடிறன் அட்டவணையில் 79வது ஒழுங்கு வரும் வகுப்பு எது என்பதை அறிய முடியும், திரட்டு மீடிறன் 91க்குள் 79 அடங்குவதனல் அவ் வகுப்பிலேயே இடையம் அமைந்துள்ளது என ஊகிக்க முடியும், இடையம் காண்பதற்கு சமன்பாட்டில் பிரதியிடும்பொழுது ୧୭ ଡିପ୍ସି ର பின்வருமாறு அமைகின்றது.
L = 8,55
(இடையம் உள்ள வகுப்பு 86-87. ஆகவே இடையம் உள்ள வகுப்பின் கீழ் எல்லை 8.6 அதற்கு முதல் உள்ள வகுப்பு 8.4.-8.5. ஆகவே இடையம் உள்ள வகுப்பின் மேல் எல்லை. 8.5 ஆகவே இவற்றிற்கு இடையே
త్రీ*తీల్ _్య
உள்ள பெறுமானம் 2
N sa 157
李F = 44(1+7+13+25) FM is 47
C = 0.2.
തുള്ള On 2 ஆகவே, இடையம் = 8.55 + (擎兰)
47
0.2 = S。55 +(霹°)
= 8.55 -- 0.147 = 8,697 ஆகும். குறிப்பு: 8,697 அங்குல மழைவீழ்ச்சியே 157 தரவு களுககும் மைய நாட்ட அளவாக அல்லது பொதுப் பெறுமானமாகக் கொள்ளலாம்.

இடைச் செருக்கல் முறைமூலம் இடையத்தைக் கணித்தல்
இடைச் செருகல் முறைமூலம் இடையத்தைக் காணமுடியும், இங்கும் தரவுகள் வகுப்பாக்கம் செய் யப்பட்டு மீடிறன் திரட்டு மீடிறன், சதவீதத் திரட்டு மீடிறன் காணப்படல் அவசியம். சதவீதத் திரட்டு மீடிறனில் 50 ஆவது சதமானம் (50th Percentile) இடையமாகும். இது P50 என்றும் குறிப்பிடப்படும்.
உதாரணத்திற்கு அட்டவணை - Aல் உள்ள தரவு கள் பயன்படுத்தப்படுகின்றது.
அட்டவனே 4
வகுப்பு மீடிறன் தி. மீடிறன் சதவீதத்திரட்டு மீடிறன்
- 5 5 10% 6ள10 10 5 30% 11-15 20 35 70% 16-20 s 4 86% 2丑一25 7 50 100%
இவ் அட்டவணையில் 50% சதமானமே இடையம் ஆகும். இங்கு 70ஆவது சதமானத்தின் வகுப்பு 11-18 ஆகவும் 30ஆவது சதமானத்தின் வகுப்பு 6-10 ஆகவும் உள்ளது. எனவே 50 ஆவது சதமானத்தை இடைச் செருகல்மூலம் அறியலாம்.
70வது சதமானத்தின் வகுப்பின் உயர் எல்லை 1535 30வது சதமானத்தின் வகுப்பின் உயர் எல்லை 10.5
ஆகவே 50ஆவது சதமானம் 15.5க்கும் 10.5க்கும் இடையே அமைந்துள்ளது. 50% க்குரிய புள்ளி 10.5க்கு சற்று மேற்பட்டதாக இருக்கும். எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்பதையே இடைச் செருகல் (Interpoation) மூலம் பெறலாம். சதவீதத் திரட்டு மீடிறன் 50, சதவீத திரட்டு மீடிறன் 30இலும் 20 சதவீதம் கூடியது. ஆகவே 20 சதவீதத்துககுரிய பெறுமானத் தைக் கணிககவேண்டும். இவற்றைப் பின்வருமாறு இTனலாம்,
தேவைப்படும் சதவீத பெறுமானம் Xவகுப்பாயிடைப் பருமன்
இரு வகுப்புக்களின் சதவீத வித்தியாசம்
இங்கு,
தேவைப்படும் சதவீத பெறுமானம் = 20%
இருவகுப்புக்களின் வித்தியாசம் =70%-30% = 40%
வகுப்பாயிடைப் பருமன் =5
και 20 Χ 5 æ 25
40
ஆகவே இடையம் 10.5 இன்மேல் 2.5 புள்ளி கூடியுள்
ளது. அதாவது 10.5 + 2.5 = 13.0ஆகும்.
- தொடரும்
20 -

Page 23
ಘೆಟ್ತಿ
CITY A
1@@, 雪電邑mley F
உங்கள் வீட்டுக் அத்தியாவசிய உை
அரிசி, மாவு, சீனி,
சோப்
மொத்தமாகவும்
பெற்றுக்
இன்றே
நம்பிக்கை, நான
N
易
போன்:
சிற்றி ஏ
158, ஸ்ரான்லி வீதி

リ 23%
GENCY
Road), JAIFFINA.
குத் தேவையான னவுப் பொருட்களான
LII ÎLD IT AIGD55r றும் வகைகள்
சில்லறையாகவும் கொள்ள
நாடுங்கள்
|jüd, உத்தரவாதம்
24817.
(ஜென்சி
யாழ்ப்பாணம்
και
魏 藏 器
影 魏 魏 魏
魏
魏
魏
影
魏 魏
器
藏 刻
魏
薇 器

Page 24
EXPO FUNTI
翰
貂
For all
High Quality
இ.- ܦ
V
O LONG LIFE
O BEAUTIFUL DESIG o WARIETY OF CHOI
O FREE DELIVERY W
س ്ടു
4.90 3 илийи
44 I. K. K. S. R.
திருமகள் அழுத்

PE (P4) LTD.
Type of
| Furniture
SIT
NS
CE
THN 3 MILES RADIUS
vine (Mot.) atd.
oad, JAFFNA.
கம், சுன்னகம் தகி0 g