கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பதிற்றுப்பத்தந்தாதி

Page 1
ஆக்கியோன்: புராணவி
வண்ணார்பண்ை
 
 
 

2) - )|LDLjJLĎ
ற்பெருமான் பத்தந்தாதி
விளக்கமுடன்)
韃
த்தகர். மு. தியாகராசா
ணை, யாழ்ப்பாணம்.

Page 2

2 -
dojLDub
கொழும்பு மாநகள், பம்பலப்பிட்டி பூனி புதிய கதிரேசன் கோயிலில் எழுந்தருளியுள்ள கதிர்வேற்பெருமான் மீது பாடப்பெற்றதான
பதிற்றுப்பத்தந்தாதி
(அரும்பத விளக்கமுடன்)
ஆக்கியோன் புராணவித்தகர். மு.தியாகராசா ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர் வண்ணார்பண்ணை.

Page 3
2) -
பதிற்றுப்பத்தந்தாதி
பதிப்புரிமை ஆசிரியருக்குரியது.
முதற்பதிப்பு : ஐப்பசி 2000
பிரதிகள் 1000
கிடைக்குமிடம் : (1) மு.தியாகராசா,
இல. 3/14 - 1/1, பின்வத்தை வீதி, தெகிவளை.
தொலை பேசி இல, 074-202342
(2) பூரீராம் புத்தக நிலையம்,
இல.4, முதலாவது மாடி,
பஸல்ஸ் ஒழுங்கை(Fussels Lane) வெள்ளவத்தை, கொழும்பு - 06. தொலைபேசி இல. 591644,
விலை ebLum. 40/=
அச்சிட்டவர் சாம்பவி கிறயிக்ஸ்,
இல.108, முஹந்திரம் வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு - 03. தொலைபேசி இல.: 543223.

9d
சிவமயம்
காணிக்கை
கட்டளைக் கலிப்பா
கந்த சட்டி விழவயர் காலையி லெந்தை கந்தனை யேத்திப் புகழ்ந்திடுங் கந்தன் காதை படனஞ் செயவெனக் காத லாலிந்த வாலயஞ் சேர்ந்தனன் விந்தை யொன்றினைக் கண்டன னிவ்விடை விளம்ப வென்றென துள்ளம் விழைந்தது அந்த ரங்கமா யானதொன் றல்லவே யாத லாலதை யன்பர்க்குச் சொல்லுகேன்.
கச்சி யப்பர் கவிதையின் சித்திரம் காட்சி யாகநம் கண்முன் நிறைந்தது மெச்சி யேத்த வருடம் வருடமாய் மேன்மை மிக்கவிக் காதை நிகழுமால் செச்சை மெளலிக் கதிர்வே லரசரைச் சிறிய னாயினன் செஞ்சொற் கவிகளால் இச்சை யாற்சில பாடியுள் ளேனிவை இனிய காணிக்கை யெந்தை யடியர்க்கே.
3/14, 1/1, பின்வத்தை வீதி, புராண வித்தகர்.மு.தியாகராசா தெகிவளை. இலங்கை. (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) தொ.பே. எண். O74 -202342.
iii

Page 4
பம்பலப்பிட்டி பூணீபுதிய கதிரேசன் கோயில் பிரதமகுரு சிவழீரீ ஜெ. நாகராஜாக் குருக்கள் அவர்கள்
வழங்கிய
ஆசியுரை
கலியுகத்தின் முழுமுதற் கடவுள் முருகன். முருகனுக்கு மறுபெயர் அழகு. இந்த அழகைத் தமிழ்ப் புராணங்களில் உருவமைத்து அகிலமெங்கும் பரவச்செய்த சான்றோர் பலர். புராணங்கள் பாட்டாக வெளியிடப்பட்டாலும் அந்தப் பாடலை ஒருவர் பாட இன்னொருவர் பயன் சொல்லுவார். இதனால் கைவிரல் விட்டு எண்ணத் தெரியாத பாமரமக்கள் முதல் படிப்பறிவுள்ள சான்றோர் வரை புராணங்கள் மனதில் பதிக்கப்படுகின்றன. இப்படியாக் உரைசொல்லி வந்த சான்றோர்களில் ஒருவராக, யாழ். வண்ணை மாதா பெற்றெடுத்த திருமகனாய் மு. தியாகராசா திகழ்கிறார்.
கலியுகத்திலே கணனியுகத்துக்கு ஏற்றவாறு உவமான உவமேயங்களுடன் கந்தப் பெருமானின் கந்தபுராணம் , திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், திருவாதவூரடிகள் புராணம் போன்றவற்றைத் திறம்படக் கூறும் அறிவாற்றல் பெற்றவர். எமது ஆலயத்திலேயே மேற்கூறப்பட்ட புராணங்களையெல்லாம் இலகுவாக விளங்கக்கூடிய முறைகளில் கூறிப் பலருடைய அன்புக்கும் பாத்திரமானவர்.
கொழும்பு மாநகர், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் எழுந்தருளியுள்ள கதிர்வேற் பெருமான் பேரில் திரு. மு. தியாகராசா அவர்களால் பாடப்பெற்ற இந்தப் பதிற்றுப்பத்தந்தாதி சைவப் பெருமக்கள் யாவரும் படித்து நற்பயன் பெறவேண்டுமென்பது என் அவா ஆகும். மேலும் திரு. மு. தியாகராசா ஐயா அவர்களுடைய சேவை மேலோங்கி வளர வேண்டுமென்றும், கதிர்வேலாயுத சுவாமியின் ஆசிகள் கிட்ட வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.

வித்தகபுரம்
விழிதீட்டி
பண்டிதர் க. உமாமகேசுவரன் அவர்களது
அணிந்துரை
முன்னைப் பிறவித் தவப்பயனோ
முழுதும் அறியா மூடனிவன் என்னக் கருத்தில் எண்ணியோ
யாதோ அறியேன் இரவுபகல் கன்னற் பாகிற் கோற்றேனிற்
கனியிற் கனிந்த கவிபாட அன்னத் தொகுதி வயற்கருவை
ஆண்டான் என்னை ஆண்டதுவே.
என்கிறார் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி என்ற குட்டித் திருவாசகம் தந்த அதிவீரராமபாண்டியர். திரு.மு.தியாகராசா அவர்களும் “இரவு பகல் கன்னற்பாகிற் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவிபாட’ வல்லவராய்த் திகழ்கிறார்.
இவர் புராணங்களுக்கு உரை விரிக்கும் நேர்த்தியிலே தோய்ந்து திளைத்து இரசித்தோர் இவரைப் புராணவித்தகர் என்று கொண்டாடு கின்றனர்.
முன்னைப் பிறவித் தவப்பயன்தான், கொழும்பு, பம்பலப்பிட்டிப் புதிய கதிரேசன் கோயிலிலே எழுந்தருளும் கதிர்வேற் பெருமான் மீது பதிற்றுப்பத்தந்தாதி பாடும்படி இவரைத் தூண்டியிருக்க வேண்டும். கதிர்வேற்பெருமான் தண்ணருள் இவரை ஆட்கொண்டு அப்பணி செவ்வனே நிறைவேறத் துணைபுரிந்திருக்கிறது.
அதை அவரே சொல்கிறார,
“எந்தனையோ பிறவிகளில் இயற்றியநல் வினைகளினால் அத்தனேயென் றுன்கழலே அடைந்தேன்யான் கதிர்வேலா பித்தனிவன் பேயனிவன் பிதற்றுகின்றா னென்னாதே நித்தநித்தம் பூச்சொரிந்து நினைப்பணியச் செய்வாயே’

Page 5
கடைசி அடியிலே "நித்தம்பாப் பூச்சொரிந்து நினைப்பணியச் செய்வாயே’ எனச் சிறிய மாற்றஞ் செய்து விட்டால் இன்றவர் செய்யும் பணியின் விளக்கமாக அது அமைந்திடக் காண்போம். தமக்கு மட்டும் வரங்கள் வேண்டும் சுயநலமியாக இவர் பாடவில்லை. உலக மக்கள் அனைவருமே சுபீட்சம் வேண்டிப் பிரார்த்திக்க உதவும் வகையில் பரநலமிக்கவராய் நின்று பாடுகிறார்.
"கதிர்வேலா நீயேதான் காசினியோர்க் கொருதெய்வம் விதியோடு திருமாலும் விண்ணவரும் போற்றிசைப்பர் நதிசேரும் சடைமெளலி நம்பரருள் மைந்தனேநற் கதிசேரும் வழியெமக்குக் காட்டுபவன் நீயன்றோ’
உள்ளத்தைத் தொட்டு உயிரை ஊடுருவும் மெல்லென்ற ஒசை விழுமிய பொருள் நலம் மிக்க பாடல்களால் ஆன இந்நூல் சைவத்
தமிழ் உலகாலே கொண்டாடப்படும் என்பதற்கு எதுவித ஐயமும் இல்லை.
பல்லாண்டு வாழ்ந்து இத்தகைய வாடாமலர் மாலைகளாகிய பாமாலைகள் பல சூட்டி இறைவனை இவர் ஆராதித்து இன்புற முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் அந்த முருகன் நிச்சயம் அருள் புரிவான்.
கதிர்வே லாயெங் கண்ணிறை யொளியே
காக்குமோர் கலியுகத் தேவே துதிசெயு மன்பர் தோத்திர மேற்றுத்
துன்பமே துடைத்தருள் தூயோய் பதியினை நீத்தோம் பாவிகள் ஆனோம்
பார்த்தருள் கொழும்புவாழ் ஐயா புதியதோர் வாழ்வு பொற்புறக் காட்டாய்
புங்கவர்க் கருளிய வாறே.
vi

முகவுரை
கொழும்பு பம்பலப்பிட்டி புதுக்கதிரேசன் கோயிலில் புத்தாயிரமாம் இந்த ஆண்டில், உத்தராயண காலப் பகுதியிலேயே சிவபுராணங் களான பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவை முழுமையாகவும் விரிவாகவும் படனஞ் செய்யப்பட்டமை சைவ அபிமானிகள் பலரும் அறிந்திருப்பார்கள். இந்தச் சம்பவத்தை என்றும் நினைவுகூருமுகமாகக் கோயிலில் எழுந்தருளியுள்ள கதிர்வேற் பெருமான் மீது, பெரும்பான்மை கந்தபுராணத்திற் காணப்படும் வரலாறு தத்துவ உள்ளடக்கம் ஆகியவற்றோடு, சிறுபான்மை மற்றைய புராணங்கள் கர்ணபரம்பரை வரலாறுகள் ஆகியவற்றையுஞ் சேர்த்துப் பரவவிட்டுப் பாடப்பட்டது இப்பதிற்றுப்பத்தந்தாதி.
சங்க இலக்கியத்திற் காணப்படும் பதிற்றுப்பத்து என்ற நூலுக்கும் இதற்கும் எண்ணிக்கையைத் தவிர வேறு தொடர்பு இல்லை. இப்பதிற்றுப்பத்தந்தாதி பிரபந்தவகையைச் சார்ந்ததாகும். இவ்வகையில் பழைமையானதாகக் கிடைத்திருப்பது அதிவீரராம பாண்டிய மன்னனால் ஆக்கப்பட்ட திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியாகும். ஒரு இன யாப்பில் பத்துப் பாக்கள் என்னப், பத்து வெவ்வேறின யாப்புக்களில் பத்துப் பத்தாக உள்ள தொகுதிகள் பத்துச் சேர்த்து, நூறு பாக்கள் அந்தாதி முறையில் அமைந்ததே பதிற்றுப்பத்தந்தாதியாகும்.
கதிர்வேற் பெருமானின் பதிற்றுப்பத்தந்தாதி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகைகளுக்குமுரிய இனங்களாய நேரிசை வெண்பா மற்றும் விருத்தங்கள் என்பனவற்றால் இயன்றுள்ளது. மரபுக் கவிதைகள் சொற்களைப் புணர்த்தி ஆக்கி னாலே சீர் தளை ஆதியன பிழையற நிலைக்கும். இக்காலத்தில் விளக்கத்திற்காக இந்நடைமுறை தளர்ந்து விட்டது. ஆனால் இந்த அந்தாதியில் ஒரோவழி தளர்வு காட்டினாலும் அது யாப்பு அமைவுகளை விட்டு நீங்காது கவனிக்கப்பட்டுள்ளது. யாப்பிலக்கண ஒழுக்குக்கு மாத்திரமேயல்லாது ஓசை நயத்துக்காகவும் பெரும்பாலும் சொற்புணர்ச்சி வேண்டப்படுவதாகிறது. வெண்பா, கலிவிருத்தம்,
V 11

Page 6

இந்நூலின் யாப்பு அமைவில் ஒருகண்ணோட்டம்
முதற் பத்து
இரண்டாம் பத்து :
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ية
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து
அடியொன்றில் முதலும் நான்கும் விளவீற்றுச் சீரும், இரண்டும் ஐந்தும் மாவீற்றுச் சீருமாக, மூன்றும் ஆறும் தேமாச்சீராகவே ஆய அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்.
அடியொன்றில் மூன்றும் ஆறும் காயிற்றுச் சீராக, மற்றை நான்கும் மாவீற்றுச் சீராகிவந்த அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்.
அடியொன்றில் முதற் சீரும் இரண்டாஞ் சீரும் நேரொன்றாசிரியத் தளையாக அமைய, ஏனையவை வெண்டளையிலாலான கலிவிருத்தங்கள்.
அடியொன்றில் எல்லாச் சீர்களும் காயீற்றுச் சீர்களாயமைந்து, வெண்டளையும் கலிந்தளையும் விரவிய தரவு கொச்சகக் கலிப்பாக்கள்.
மாவீற்றுச்சீர் விளவீற்றுச்சீர் காயிற்றுச்சீர் ஆகியவற்றால் அமைந்து, இயற்சீர்வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்த நேரிசை வெண்பாக்கள்.
அடியொன்றில் ஈரசைச்சீர்கள் மூன்றாயமைந்த, நான்கு அடிகளைக்கொண்ட வஞ்சிவிருத்தங்கள்.
அடிதோறும் ஈரசைச்சீர்களாலியன்று, முதலாம் மூன்றாம் ஐந்தாம் ஆறாம் சீர்கள் விளவீற்றுச் சீர்களாகவும், இரண்டாம் நான்காம் ஏழாம் சீர்கள் மாவீற்றுச் சீர்களாகவும் கொண்ட எழுசீர் ஆசிரிய விருத்தங்கள்.
அடிதோறும் நான்காம் எட்டாம் சீர்கள் மாவீற்றுச் சீர்களாகவும் ஏனையன எல்லாமே காயிற்றுச் சீர்களாகவும் அமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.
அடிதோறும் முதலும் இரண்டும் ஐந்தும் ஆறும் காயீற்றுச் சீராக, மூன்றும் ஏழும் மாவீற்றுச்சீராக, நான்கும் எட்டும் தேமாச்சீராகவுள்ள எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.
ஈரசைச் சீர்களும் காயிற்றுச் சீர்களும் விரவி வெண்டளையால் வந்த கட்டளைக் கலித்துறை.
ix

Page 7

சிவமயம்
கொழும்பு மாநகர் பம்பலப்பிட்டி பூனிபுதுக்கதிரேசன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் கதிர்வேற் பெருமான் பேரில் பாடப்பெற்ற
பதிற்றுப்பத்தந்தாதி
காப்பு
திருநிறை கதிர்வே லண்ணல்
சீர்த்தியைப் போற்றி நல்ல அருள்மிகு பதிற்றுப் பத்தந்
தாதியான் பாடு தற்குப் பொருள்செறி பிரண வத்தின்
பொலிவுறு தோற்றங் கொண்ட கருணையின் வைப்ப தாகுங்
கணபதி காப்ப தாமே.
காசிலிங்க விசாலாட்சி துதி
மூடிநின்று வருத்துகின்ற வினைகள் தீர்த்து
முத்தியெனும் பேருலகிற் கிட்டுச் செல்ல நாடியெமைத் தெரிந்தெடுத்து மடியில் வைத்து நன்மைபெற விசாலாட்சி தானை வீசக் கூடியரு கேயிருக்குங் காசி லிங்கம்
கோதில்லா வைந்துபத முபதே சிக்கும் நீடியநல் லருள்பொழியு மிருவர் பாதம்
நீங்காதே யுளத்திருத்திப் போற்று வோமே.
நூல்
1. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
உலகெலாம் பரந்த சோதி ஒருருக் கொண்டு மேவி
அலகிலா வுயிர்கட் கெல்லாம் ஆறுத லளித்தற் கெண்ணித்
தலைநகர் கொழும்பு நாப்பண் தண்ணளி சுரந்து மிக்க
நிலவுமிழ் கதிர்வே லண்ணல் நித்தம்வீற் றிருக்கு மாதோ l

Page 8
மாதுடன் கயிலை வெற்பில் மகிழ்ந்துடன் கூடி நின்ற தீதுகு கொன்றை வேணித் தற்பர சிவனின் முன்னால் மேதகு குழவி யாக மேவிய கதிர்வேற் கந்தன்
காதல்ா லாட லுன்னிக் கடிநகர் கொழும்பி லுற்றான்.
உற்றவர்க் குதவி யாவான் ஒதிடும் வேத மாவான் கற்றவர்க் கின்ப மாவான் கருதுவோ ரிதயத் துள்ளான் நற்றவர்க் கினிய னாவான் நலிந்தவர்க் கன்னை யாவான் சொற்றமி ழாள னாகுஞ் சுடர்க்கதிர் வேலோன் றானே.
தன்னிகர் ரில்லாத் தேவே தந்தையுந் தாயும் நீயே நின்னையே நினையு மன்பர் நினைவிலே நிலைத்து நிற்பாய் பன்னுறு பனுவல் கேட்டே பரிவுட னருளே செய்வாய் முன்னையின் முன்னே யென்றும் முடிவிலாக் கதிர்வேல் நீயே.
நீயெம துயிரில் மேவி நிற்பதா லொன்று பட்டும் ஒவற வுதவ லாலே உடனுமாய் நின்று மேலும் நாயக னாகி வேறாய் நண்ணலால் வேற தாயும் மூவகை நிலையிற் காக்கும் முருகனே கதிர்வேல் நாதா.
நாதனே நாத விந்தாய் நலிந்துள வுயிர்க ளுய்யப் பேதமாய் வேறு வேறு பேதநல் லுருவும் கொண்டு ஏதமில் தொழில்க ளைந்தும் இயற்றியெம் வினைகள் தீர்த்துப் பாதபங் கயங்கள் நல்கும் பண்புசேர் கதிர்வேல் வாழ்க.
வாழ்வினி லின்ப துன்பம் வருவது நாஞ்செய் கின்ற ஊழ்வினை தீர வன்றோ ஒப்பிலாக் கதிர்வேற் பெம்மான் தாழ்வினை யகற்றி யெம்மைத் தலையளி கொள்வ தல்லாற் பாழ்பட வையான் எம்மைப் பன்னிரு கரத்தன் றானே.
பன்னருங் கதிர வேலான் பரமனின் நெற்றிக் கண்ணில் துன்னிய சுடராய்த் தோன்றிச் சூழ்ந்துவா னெழுந்து போந்து பின்னரும் மருத்து வன்னி பெயர்த்துநற் கங்கை மேவி மன்னிய பொய்கை சேர்ந்து மதலையா யுதித்தா னன்றே.
 

9. உதித்திடுங் கதிர்வே லண்டல் ஒளிமிகு நாண்மீ னாக
மதித்திடும் ஆரற் பெண்கள் வளர்த்தலின் வளர்ந்து தேவர் துதித்திட வங்கும் நீங்கித் தொல்கயி லையிலே சேர்ந்து விதித்திடும் அயனும் போற்ற வீற்றிருந் தருளி னானே.
10. அருளுரு வாய வம்மை யப்பனோ டிருக்க வங்ங்ண்
முருகனாங் கதிர்வே லையன் முன்னையர் நடுவ ணாகத் திருவொடுந் தோற்று மந்தத் திவ்விய காட்சி கண்டோர் கருவினில் வாரா ரென்கை கழறவும் வேண்டுந் தானோ.
2. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (வேறு)
11.
தானே யான தனிமுதல்வன்
தனக்கு வேறா யில்லாத தேனார் காந்தட் கண்ணியனைத்
திகட்டா வின்பத் தேனமுதை மானேர் வள்ளி மகிழ்ந்தானை
மதிக்க' வொண்ணாக் கதிர்வேலை வானோ ரேத்த வெடுத்தானை
மகிழ்ந்து போற்றத் தந்தானே.
12.
[ ! ! !
58 1
தந்த வீச னருளாலே
தரணி யோருந் தாபதருஞ் சிந்தை நொந்த தேவர்களுந்
தெளிவு பெற்று மனமகிழ வந்து சூழ்ந்த வசுரகிளை
மடிய முன்னர்க் கதிர்வேலை எந்தை கந்தன் தொட்டனனால்
எவரு மன்னார்க் கிணையுண்டோ.
13.
உண்டே சுட்ட பழமீதென்
றுதிர்க்க வூதி யவள் நாணக் கண்டே கண்க ளருள் சுரக்கக்
கனியே யான கதிர்வேலா பண்டே மாவின் பழத்திற்காய்ப்
பறந்து வந்தே யேமாந்தாய் தண்டேன் பில்கு தாரோயே
தணிகை யாயுன் விளையாட்டே.

Page 9
14.
15.
16.
17.
ஆடுந் தோகை மயில்மிதே
அணங்கின் நல்லார் அருகிருக்கக் கூடுந் தேவர் மலர்தூவக்
குறைவில் வேத வொலிமுழங்கப் பாடுந் தொண்டர் பரவலுறப்
பரந்த பூத நிரைபோற்றப் பீடு பெற்ற கதிர்வேல்நாம்
பெறுதற் கில்லை வேறொன்றே.
வேறு வேறு சிறுதெய்வம்
விரும்போ மையா நினையல்லால் ஊறு மூற்றா யருள்சுரக்க
வுளவோ மற்றைத் தெய்வங்கள் நீறு மெய்யிற் பொலிந்தவனே
நிமலா செந்திற் கதிர்வேலா ஆறு பாயுஞ் சடையுடையான்
அருமை மைந்தா முருகாவோ.
முருகா வென்னும் மொழியொன்றால்
முகிழ்க்கும் மெய்யின் ரோமமெலாம் ஒருகால் நாவு முரைதளரும்
உடலு மெல்ல விதிர்விதிர்க்கும் உருகா வுள்ள முருகிவிடும்
உலையி லிட்ட மெழுகென்னக் கருகா நிற்கும் வினைகளெலாங்
கதிர்வே லாவுன் கருணையெனே.
கருணா மூர்த்தி யெனநின்னைக்
கருதி யேத்து மடியார்க்கே அருண சோதி சொரூபமுடன்
அவர்க ளுள்ளத் திருப்பவனே பொருநை யாற்றின் கழிமுகத்தே
பொருந்து செந்திற் பதியானே தருண மீதே கதிர்வேலா
தக்க வாறே யருள்புரிவாய்.

18.
19.
20.
21.
22.
புரிந்து கொள்ள முடியாத
புதிரே யன்றோ நின்னாடல் பரிந்து நீபோய் வள்ளிபதம்
பணிந்தா யென்றா னருணகிரி விரிந்த ஞான வான்களுக்கும்
விளங்க வொண்ணாக் கதிர்வேலா தெரிந்து யானு மீடேறச்
சிறிதே யேனுந் தெளிவிப்பாய்.
தெளிதே னாகத் தித்தித்துத்
தெவிட்டா நிற்குந் தெள்ளமுதே அளியே னுக்கு மொருசிறிதே
யதனிற் கொள்ளத் தருவாயோ வெளியாய்க் காற்றாய்த் தீநீராய்
விளங்கு மண்ணாய் நின்றாலும் நளினப் பாதங் கொண்டுதிரு
வுருவங் காட்டுங் கதிர்வேலா.
கதிர்வே லோனே நீயல்லாற்
கதிவே றில்லை நமக்கென்று விதியால் நொந்து சிறைபுக்கு
வெதும்பு விண்ணோர்க் கரசளித்தாய் பதிபேர்ந் தின்னற் படுமெங்கள்
பரந்த பாவந் தீர்வதென்றோ நதியின் மைந்தா நங்கைவள்ளி
நலமே வாராய் வாராயே.
3. கலி விருத்தம்
வாரி ருங்குழல் வள்ளியை வேட்டனன் வேரி யார்ந்த வெறிமலர்க் காந்தளன் பாரி னைக்கதிர் வேல்கொடு காப்பவன் நேரி லாணிவ னாமெனும் வேதமே.
வேதத் தின்பொருள் வேட்டனன் வேதனை நாதத் தின்னுரு நங்கதிர் வேலவன் ஒத வொண்ணல னுள்ள மறுகினன் மாத வன்மகன் வன்சிறை கண்டனன்.
5

Page 10
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
கண்டு மாதவர் போற்றுங் கதிரவேல் விண்டு கூறி விளக்க வமைகிலன் பண்டு மேருவிற் பேருருக் காட்டினன் அண்ட ராற்ற வதிசய மாயினர்.
ஆயின் நங்கதிர் வேலனு மான்றசீர் தூய னாஞ்சிவ ரூபனும் வேறலர் நேய மோடு நினையின் வினையெலாம் வீயு மென்பதை வேதம் மொழியுமே.
மொழியு மெய்யு மனமு மெனவிவை கழிய வன்பு கசியக் கலந்திடில் ஒழியுந் துன்பம் உறுதி கதிரவேல் பொழியு மின்பப் பொலிவை யளிப்பனே.
அளிப்பன் காப்ப னழிப்பன் கதிரவேல் களிப்ப னன்பர் கனிந்த மொழிகளால் தெளிப்ப னன்னவர் சிந்தை மயக்கினை தளிர்க்கு மவ்வழி ஞானத் துணர்வெலாம்.
எல்லா மன்னான் செயலா மெனப்பல சொல்லால் மட்டுஞ் சொலலிற் பயனிலை பல்லோ ரேத்தும் பரமாங் கதிரவேல் நல்லோ ராகிட நாஞ்சர ணாகுவம்.
வம்மின் யாவரும் வள்ளல் கதிரவேல் எம்மை யேன்றருள் செய்குவ னின்றையே விம்மி வேதனைப் பட்டு மருள்வதேன் செம்மை யாம்நெறிச் சீர்பெறச் சேர்மினீர்.
நீரிற் றண்மை நெருப்பிடை வெப்பெனத் தேரி லிவ்வணஞ் சேருதல் போலவே பாரிற் சீவனிற் பாங்காய்க் கதிரவேல் சீரி தாகச் சிவணி யிருப்பனே.
இருந்தா னென்னுளம் ஏந்தல் கதிரவேல் கருந்தா தென்னுங் கடுவினை நீங்கிட விருந்தாய்த் தன்னருள் வேண்டிய தந்தொரு மருந்தா கும்மிவன் போற்பிற ரில்லையே.
6
 

31.
32.
33.
34.
35.
36.
37.
4. நான்கடித் தரவு கொச்சகக் கலிப்பா
இலைமுகத்த கதிர்வேலோ னென்னுள்ளத் திணிதிருக்க அலையெறியுங் கடல்போல அலைத்ததனைத் தடுப்பதென்ன நிலையில்லாப் பொருள்களின்மேல் நீவைக்கு மாசைகளே விலையில்லை மடநெஞ்சே விட்டுவிட்டா லவன்வருமே.
வருவதுவும் போவதுவும் வாழ்க்கையிலே நிகழ்வவெலாந் தருபவனு மெடுப்பவனுந் தயாநிதியாங் கதிர்வேலே கருவினிலே தோற்றமுதற் கதிபெறுநா ஸ்ரீறாகத் திருவருளால் நிகழவிடின் சிந்தைதளிர்ப் புற்றிடுமே.
புற்றீசல் போற்பரந்த பொருள்தேடி யுழலாதே கற்றோர்வாழ் கொழும்புநகர்க் கதிர்வேலா னருள்பெற்றால் சற்றேனுங் குறைவில்லைத் தாழ்வில்லை மடநெஞ்சே எற்றேறி யிவையெல்லா மெண்ணாதே யிருப்பதுவே.
இரும்பெனவன் மனங்கொண்டே யித்தனைநா ளகந்தையினால் கரும்பெனவின் னருள்பொழியுங் கதிர்வேலைக் காணாதே திருந்துநிலை தெளியாதே சிறுதேவர் பின்சென்றேன்
வருந்தியில்வா றெய்த்தொழிந்தார் வாழ்நாளி லெத்தனையோ,
எத்தனையோ பிறவிகளில் இயற்றியநல் வினைகளினால் அத்தனேயென் றுன்கழலே யடைந்தேன்யான் கதிர்வேலா பித்தனிவன் பேயனிவன் பிதற்றுகின்றா னென்னாதே நித்தநித்தம் பூச்சொரிந்து நினைப்பணியச் செய்வாயே.
வாயார வாழ்த்தவைத்தாய் மனதார நினையவைத்தாய் தாயாக வெமையென்றுந் தண்ணளிசெய் கதிர்வேலா ஓயாத அலையாக வுடன்றுவரு துயரெல்லாம் நீயாக நீக்கினல்லால் நீக்குவர்யார் எங்கோவே.
கோவலனும் நான்முகனுங் குடைந்தெழுந்துங் காணாத மூவருக்கும் முதலான மூர்த்தியின்சேய் நீயன்றோ தேவரிறை யரசாட்சி செயவைத்தாய் கதிர்வேலா யாவருனக் கிணையாவர் நாங்களுனக் கடைக்கலமே.

Page 11
38.
39.
40.
41.
42.
43.
44.
அடைக்கலமாய் வந்தேநாம் அப்பாநின் சரணடைந்தோம் கடைக்கணிப்பா யெம்மைநின கருணையினாற் கதிர்வேலா மிடைத்தெழுந்த வவுனர்களை வேரறவே வதஞ்செய்து துடைத்தழித்துத் தூய்மைசெய்தாய் தொல்லோய்நின் பேரருளே.
பேரருளின் பெட்டகமே பெருமானே நீயன்று சூரனுர மூடுருவச் சுடரிலைவேல் தொட்டருளி ஆரிருள்சேர் சிறைப்பட்ட அமரருக்கு வாழ்வளித்தாய் தாரகத்துக் கொருபொருளே சண்முகனே கதிர்வேலா.
கதிர்வேலா நீயேதான் காசினியோர்க் கொருதெய்வம் விதியோடு திருமாலும் விண்ணவரும் போற்றிசைப்பர் நதிசேருஞ் சடைமெளலி நம்பரருள் மைந்தனேநற் கதிசேரும் வழியெமக்குக் காட்டுபவன் நீயன்றோ.
5. நேரிசை வெண்பா
நீயன்றோ வெந்தெய்வம் நின்னைக் கதிர்வேலா தாயென்றே யெண்ணித் தளர்வகன்றோம் - சேயென்றே எண்ணோ மிருநிலத்தி லெல்லாமே நீயென்று கொண்டோங் குறைவிலரே நாம்.
நாங்க ளுனதடிமை யாவும் நினதுடைமை ஈங்குநீ துன்னிற் கதிர்வேலா - தீங்குளவோ நானென தென்னுமது நாமமற வேயகன்று தானாக வேபோகுந் தான்.
தாயே யிலாத தனித்தோற்றங் கொண்டவன்நீ ஆயோ ரெனக்கோ ரளவில்லை - மாயமே பன்னிப் பலவே சொலல்வீண் கதிர்வேலா நின்னி லதிக மெனக்கு.
எனக்குக் குறைவிலை யெந்தை கதிர்வேல் மனத்துக் குகையில் வருவன் - வனத்தினிடை தேடித் தவத்திற் றியங்கா துளத்துளே நாடித் தனித்திருந்தக் கால்.

45.
46.
47.
48.
49.
50.
51.
காலொன்றி மேகங் கலையுங் கதிர்வேலா மாலொன்று முள்ளம் மருளாதே - வேல்கொண்டு சேர்த்தவினை காய்த்தேபின் சேரும் வினையேற்றே யார்த்துவிடு நின்னருளி னால்.
அருளே கதிர்வேலா னாற்ற லதலா தருளே யுயிர்களி னுாற்றம் - அருளேதான் அண்ட சராசர வாக்கமு மாட்டமுங் கொண்ட ததுவன்றோ கூறு.
கூறுபட்ட பாகமவை கூவுசேவல் மஞ்ஞையென மாறுபட்டு வந்தெதிர மற்றவற்றை - ஏறுகொடி ஏறுபரி யாமாற்றி யெந்தைகதிர் வேலவனார் வீறுகெட வைத்தான் வினை.
வினையினாற் றோன்றி வினையிலே மாழ்கி வினையையே யாற்றும் வினையேன் - இனையாது காத்தருள வேண்டுங் கதிர்வேலா நின்கழலே சேர்த்தருள வேண்டு மினி.
இனியனவே செய்வோ மெவர்க்கு மதனா லினியனவே நாமடைவோ மென்றுங் - கனியாம் கதிர்வேல னாலே கனிவுண்டா மாங்கே யெதிரில்லை யென்று தெளி.
தெளிவந்த சிந்தையுடன் தேடின் கதிர்வேல் எளிவந்தே யெம்முனே நிற்பன் - களிவந்தே யாடலாம் பாடலா மாடி யுளத்துருகி நாடலாம் நீள்கழலே நன்கு.
6. வஞ்சி விருத்தம்
குமரன் கதிர்வே லுடையன் சமரி லவுணர்க் கடந்து அமரர் சிறைமீட் டருள்வன் தமரே யடியா ரவற்கே.

Page 12
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
அவனே யாதிக் காதி அவனே நீதிக் கிறைவன் அவனே சோதி சொரூபன் அவனே கதிர்வே லரசே,
சேந்தன் கதிர்வே லவனே ஏந்த லெவர்க்கும் மேலோன் சாந்த மூர்த்தி யவனால் வீந்து போகும் வினையே.
வினையே பிறவி வேராம் அனைய தகழ வேண்டின் நினைமின் கதிர்வே லடிகள் தினையுங் கவலை யிலையே
இலைபோற் கதிர்வேல் முனையால் 960)6u)un u5pb.605 uabuppbgbl நிலையா யருளைப் பொழிவான் தலைவன் பதமெஞ் சரனே.
சரவண பவகுக கதிர்வேல் தரமுள குருவென வாகி யரவணி சடையனுக் கன்று பிரணவ முணர்த்தின னன்றே.
அன்று கதிர்வே லையன் நன்று கீரன் பாடக் குன்றிற் பூதம் வீடச் சென்ற பூழித்த தென்னே.
என்ன வரினும் வருக அன்னை நிகரும் கதிர்வேல் தன்னை நினைவ தல்லா லுன்ன வொருவ ருளரோ,
உள்ளத் தொளியா யொளிர்வன் வெள்ளக் கருணை பொழிவன் வள்ளற் பெருமான் கதிர்வேல் தள்ளற் குரிய னலனே.
1O
 

60.
61.
62.
63.
நலனே வேண்டின் நமர்காள் திலமே நினையின் கதிர்வேல் கலமாம் பிறவிக் கடற்கே யிலதா மிவன்போ லிறையே.
7. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இறைவனே கந்தா எம்முயிர்க் குயிரே
யென்றுதம் மிருகையும் நீட்டி நறைமல ரேந்தி நாளுநின் னடியர்
நன்னகை முகத்தின ராக நிறைபுக ழேத்தி நின்றுநின் றுருகி
நின்னடி வழுத்துகின் றார்கள் அறைகழ லார்க்கு மப்பனே கதிர்வே
லார்வமோ டருள்வதெந் நாளே.
நாளென வொன்று காட்டியே நமரை நன்குற அறுத்திடும் பொல்லா வாளென எண்ணல் வேண்டுமென் றறிவன் வள்ளுவன் வகுத்தது மெய்யே ஆளெமைக் கொண்டாய் ஐயனே கதிர்வேல்
அல்லலு மகலுவ தென்றோ தாளெமக் கீவா யென்றுனை யடைந்தோம்
தாங்குவ துனகடன் றானே.
கடலலை யோங்கி யாலவாய் வளையக்
கந்தனே கதிரவேல் தொட்டாய் அடல்கெழு சீற்ற வேள்விநா யகனை
ஆங்கொரு வளையெறிந் தார்த்தாய் மிடல்மிகு மேரு செண்டினா லடக்கி
வேண்டிய நிதிக்குவை பெற்றாய் படர்புக ழோடு பஞ்சவ னெனவே
பாண்டிநா டளித்ததற் புதமே.
ll

Page 13
64.
65.
66.
67.
அற்புதத் தேனே கற்பகக் கனியே
ஆறுமா முகனுடை யையா புற்புத வாழ்நாள் போற்றிடு சிறியேன்
புண்ணியா புகழ்தலு மாமோ சொற்பதத் தப்பாற் தூயமெய்ஞ் ஞானச் சோதியே கதிரவே லுன்றன் நற்பதத் தேயான் அற்பமாந் தூசாய்
நண்ணவை யெமதிளங் கோவே.
கோடலின் கண்ணி சூடிய பெரும
கொன்றைவார் சடையனின் மைந்தா பாடலி னின்ப வுற்றெனும் பொருளாய் பைத்தொடைக் கடம்பணி மார்ப கூடலி லந்நாள் ஊமையா யிறைவன் கூறுநூற் கமைதிகண் டாய்நின் னாடலி னாட்டம் யாரறி வாரே
ஐயனே கொழும்புவா ழரசே,
அரசிலை தர்ப்பை தோய்த்தநீர் தெளித்து ஆசிகள் புகன்றனர் மேலோர் விரவிய வேத வாய்மைய ரெவரும்
வீசினர் பொரிமலர் சுண்ணம் கரமிசைத் தங்க நீர்க்குட மெடுத்துக்
கன்னிய ரருகரு காகச் சிரமசைத் தேநம் தெய்வமாங் கதிர்வேல் சிங்கவா சனத்துமேற் கொண்டான்.
கொண்டலைக் கண்ட தோகைமா மயிலாய்த்
துள்ளியே நடனமா டுவனோ தண்டலை மேய கானமாங் குயிலாய்த்
தாவிலா விசைமழை பொழிகோ மண்டிய அன்பாற் கன்றினை நக்கும் மாசிலாக் கபிலையா குவனோ தொண்டனே லுன்னைக் கண்டபோ துணர்வு
கூடுமோ கதிரவே லவனே.
12
 

71.
68.
69.
70.
கதிரவே லாயெங் கண்ணிறை யொளியே காக்குமோர் கலியுகத் தேவே துதிசெயு மன்பர் தோத்திர மேற்றுத்
துன்பமே துடைத்தருள் தூயோய் பதியினை நீத்தோம் பாவிக ளானோம் பார்த்தருள் கொழும்புவா ழையா புதியதோர் வாழ்வு பொற்புறக் காட்டாய் புங்கவர்க் கருளிய வாறே.
ஆறெழுத் தான மந்திரப் பொருளே
ஐயனே கதிரவே லோனே பேறெனக் கொள்ளின் நின்னையே கொள்வோம்
பின்னொரு கடவுளர் கொள்ளோம் ஈறென வாகி ஏதிலா முதலாய்
எந்தையே யெவரினும் மேலோய் மாறெது மில்லாய் மாற்றுதல் செய்வாய்
மன்னிய பொருளெலாம் நீயே.
பொருளலா தொன்றைப் போற்றுவா ருளரோ
பூரணா நினபுக ழன்றிக் கருதவே றுண்டோ கங்கையின் மைந்தா
கந்தனே கதிரவே லவனே மருவலா ரான மாயையின் மக்கள் வாட்டிய வமரரை யெல்லாம் அருளினாற் காத்த வண்ணலே யுன்ற
னம்புயப் பதங்களே சரணம்.
8. எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சரணடைந்தார்க் கருள்சுரக்குந் தற்பரனார் நெற்றித்
தலக்கண்ணி லன்றெழுந்த தழற்பொறிக ளாறும்
சரவணப்பூம் பொய்கையிலே தனிக்குழவி யாகித்
தாயர்களாய்த் தாரகைகள் தாம்வளர்த்த சேயாய்
அரவணைத்த வம்பிகையால் ஆறுமுகங் கொண்டு
அன்னையுடன் சேர்ந்திருந்தே யன்பர்களைக் காத்து
வரமருளி வருகுறைகள் தீரவெமை யாளும்
வள்ளல்கதிர் வேலவராய் வாழ்வளிக்கும் மாதோ.
13

Page 14
72.
74.
75.
மாமேரு மலையிடத்தே வந்தெதிர்ந்த சுரர்க்காய்
மகேச்சுவர மாம்வடிவைக் காட்டியருள் செய்தாய் கோவேயாம் மசுரேசன் மாயங்கள் மாற்றிக்
கோலமிகு பேருருவங் கொண்டவன்முன் நின்றாய் தாவேயில் வீரனுக்கு யுகாந்தத்தி னெல்லை
தனித்தவுரு கொண்டநிலை காட்டுவன்நா னென்றாய் பூமேலே கதிர்வேலா பொருந்துமடி யார்க்காய்ப்
புகழ்கொண்ட வவ்வுருவங் காட்டுவது மென்றோ.
காட்டுகின்ற பேருருவங் காலமெலாங் காணக்
கார்கால வைப்பசியிற் சட்டிதிதி யன்று தீட்டுசுடர்க் கதிர்வேல்நின் திருக்கோயிற் கண்ணே
தித்திக்குந் தேனாகத் தெவிட்டாவுன் காதைப் பாட்டிசையும் பயன்விரிப்பும் பக்தியுடன் கேட்டுப்
பரவசமாய்ப் பரவலுறு மடியவர்கள் மிகவே காட்சியிதைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமையாக் காண்பார்தங் கண்ணன்றோ கண்ணே.
கண்ணகன்ற ஞாலத்தி லுயர்ந்தெழுந்த மலைகள்
காலிடத்த வுள்ளடியைக் காட்டுவதாய் நிற்கத் தண்ணெனச்சூழ் கடல்களெல்லாம் புறங்கால தாகத்
தகுவிரல்கள் நாள்கிரக மிடிகளவை யாக வண்ணமிகு பரடுகளில் வருணனொடு குபேரன்
வலிமையுடை யரக்கர்களும் நிருதியுடன் சேர புண்ணியராம் முனிவர்களு மரதனமுங் கணுக்கால்
புலவர்களும் விஞ்ஞையரும் முழங்கால தாமே.
தாழ்வில்லாத் தொடைகளவை சயந்தனொடு மகவான்
தன்னிகரில் தொடைமுடிவில் தருமனொடு காலன் சூழ்ந்துள்ள நாகங்கள் ஞாண்களெனச் சுற்றச்
சொல்லரிய வமுதமது கோசவெல்லை யாக ஆழ்ந்துள்ள வுந்தியிலே யுயிர்வர்க்கம் மல்க
அழகியநன் மார்பகலம் கலைகளவை யென்ன வீழ்ந்தொளிரும் முந்நூலே மிகுபோத மாக
வெகுரோம விடமெல்லா மண்டங்கள் மிகுமே.
l4

76.
77.
78.
79.
மிக்கபெருந் தேவர்களாம் விரிஞ்சனொடு மாலும்
மேன்மைமிகு திருத்தோளில் வீற்றிருந்து கொள்ள தக்கபல போகங்கள் அங்கையதே யாகத்
தனிவிரல்க ளரம்பையரின் தாவிலிட மாகச் செக்கர்நிற வங்கியொடு நல்லொலியுங் கண்டம்
செம்மையுள வாயதுவே வேதமென லாகும் பக்கமுள பல்நிரைகள் பல்லெழுத்த தாகப்
இதழதிலே மநுநீதி எழில்நாசி பவனன்
இரவோனும் பகலோனு மிலங்குகண்க ளாகக் கதகளிற்றின் திக்கெல்லாங் காதுகளாய்ப் பொலியக்
கவின்மிகுத்த நெற்றிநடு பிரணவத்தின் நிலையாம் பதமளிக்கும் பரப்பிரமம் படர்சென்னி மிசையே
பாங்காகப் பண்டைநிலை காட்டியருள் கின்றான் மதமழித்து வாழ்வளிக்குங் கதிர்வேலன் கதையில்
மகேச்சுவர வடிவழகைக் கண்டுகளிப் போமே.
களிகொண்ட வண்டாகக் கதிர்வேலைக் கண்டோம்
ககனத்தோர் கருதரிய காட்சியிது வன்றோ அளிகொண்டு நம்முன்னே அறுமுகவன் நண்ணி
ஆனந்தப் பேரமுதை யள்ளுறத் தந்தான் வெளிவந்து வேல்கொண்டு வேதனைகள் தீர்க்கும்
வேலவனா ரெனுந்தெய்வம் போற்பிறிது முண்டோ தெளிவந்த சிந்தையுட னவனடிகள் போற்றின்
சேந்தனவ னருள்புரிவன் திண்ணமிது தானே.
திண்ணெனுனற் செழுமணியின் றிகழ்சோதி யென்கோ
திரையலைக்கும் பாற்கடலி னமுதமிது வென்கோ பண்ணமைந்த பாடல்தரும் பரவசமீ தென்கோ
பண்டிதர்கள் பரவுகின்ற பைந்தமிழ்தா னென்கோ கண்ணெதிரே தோன்றுகின்ற கதிரொளியோ வென்கோ
கார்த்திகையார் பால்வளர்ந்த கதிர்வேல னென்முன் வண்ணமயில் மீதிவர்ந்து வருகின்ற காட்சி
மனத்தகத்தே யுதித்தெழுந்து மகிழ்ச்சிதரும் போதே.
5

Page 15
80.
81.
82.
83.
மனத்தகத்தே யுதித்தெழுந்து மகிழ்ச்சிதருங் கதிர்வேல்
மாமுனிவ ரகத்தியர்க்குப் பொருளுரைத்த வள்ளல் புனத்தகத்தே புள்ளோப்பித் தினைகாத்த பேதை
பொருவிலொரு சத்தியெனக் கொண்டபெருந் தெய்வம் வனத்திடத்தே வனசரனாய் வழிமறித்துப் பொய்யா
மொழிப்புலவ னிடம்பாடல் மூர்க்கமுடன் கேட்டோன் அனைத்துயிரு மனைத்துலகு மவனாகி நின்றும்
அவனாடு மாடல்பல அளவில்லை ஐயே.
9. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (வேறு)
ஐவகையா யமையுமனி மகுடம் மின்ன
அசையுமிகு மகரகுண்ட லம்வில் வீச தெய்வவொளித் திருமுகத்தி னருளி னுாடே
திருமுறுவற் றிகழொளியுந் திகழ்ந்து தோன்ற துய்யமுந்நூற் புரியினொடு மதாணி தானுந்
தொங்கலொடு மார்பகத்திற் றுவண்டே யாட உய்யவெமை யாளவருங் கதிர்வேற் கந்தா
உபயபதக் கமலமெம துள்ளத் துள்ளே.
உள்ளமெனுங் குகையினுள்ளே குகனாய் நிற்பாய்
ஒருங்கிணைந்தே யிடர்களையக் கதிர்வே லாவாய் தள்ளரிய பிரமமெனத் தனித்தே நிற்பாய்
தன்னிகரில் நீதியெனச் சார்ந்து நிற்பாய் எள்ளலிலா வாதார மாவ தல்லால்
எப்பொருட்கு மாதேய மாயும் நிற்பாய் கள்ளமிலா மனத்தார்க்கே யெளிய னாகுங்
காங்கேயா வுன்பெருமை கழறற் பாற்றோ.
கழறுற்ற மூத்தவளின் சொல்லிற் காகக்
கதிகலங்கி மனம்வெதும்பி வுயரே யேறி விழவென்று பாய்கின்ற வேளை தன்னில்
வீழாமே கையேந்திக் காத்துப் பின்னும் கழல்வீழ்ந்த வருணகிரிக் குபதே சித்துக்
காணமழைத் திருப்புகழைக் கேட்டு வந்த அழலேந்து கரத்தவனி னருமை மைந்தா
அறுமுகனே கதிர்வேலா வபயம் நீரே.
16

84.
85.
86.
87.
நீரேறு சடைமுடியான் முனிகைப் பெற்ற
நிகரில்லா மாங்கனியை யிழந்த தாலே போரேறு போல்முடுகிக் கதிர வேலா
பொறிமயிலை விரைவுடனே கடாவிச் சென்று காரேறு பழனிமலை யதனில் மேவி
கலனிக்கிக் கெளமீன தாரி யாகி வாரேறு பூண்முலையுன் னம்மை காண
வளர்கோபக் கனலழகைக் காட்டி னாயே.
காட்டிலலை வேட்டுவனா ரெச்சில் பண்ணிக்
களித்தளித்த வுனமுது செய்த தன்றி மீட்டுமவர் கண்ணிடந்தே யப்பத் தாதை
மிகவுறவு வவரிடத்தே வைத்த தாலோ வேட்டுவனாய் வேங்கையதாய் விருத்த னாகி
விரும்பியவர் வளர்த்தெடுத்த வேடப் பெண்ணை நாட்டமுற்று மணம்புணர்ந்தாய் கதிர வேலா
நாணமிக வாகிறதே சொல்ல வையே.
ஐந்துகரத் தானைமுகற் கிளையோன் றன்னை
ஆறெழுத்து மந்திரத்துட் பொருளா னானை கந்தவிதழ்க் கடம்பணியுங் கதிர வேலைக்
கற்றவர்த மிதயத்தைக் கனிவிப் பானைச் செந்தமிழின் றெய்வமெனத் திகழ்கின் றானைச்
சீர்கெழுமிக் கொழும்புநக ருகந்துள் ளானை வந்துதொழு மடியவரை வாழ வைக்கும்
வள்ளிமண வாளனையே வாழ்த்து வோமே.
மேன்மைமிகு கந்தகோட் டத்தி லன்று
மிக்குநிறை சபையின்முன் கச்சி யப்பர் தான்வகுத்த கந்தபுரா ணத்தின் மேன்மைக்
கவின்விரிக்கத் தடைசெய்து நவைகண் டார்க்கு வான்வணங்கத் திருவருளின் தோற்றங் கொண்டு
மாவீர சோழியத்தாற் றெளிவு காட்டுந் தேன்பிலிற்றும் நீபமலர்க் கதிர வேலா
தென்றமிழின் பற்றுனக்கே யிருந்த வாறே.
7

Page 16
88.
89.
90.
91.
92.
ஆறுமுகப் பெருமானே யமரர் வாழ்வே
ஆறுதலைத் தரவல்ல வமுத வுற்றே மாறுமுகத் தாரகனாம் மாயை தன்னை
மதர்த்தெழுந்த வரிமுகனாங் கன்மத் தோடு நீறுபட வழித்தொழித்து நின்ற தான
நிகரில்லாச் சூரனெனு மாண வத்தை வீறுகெட வடக்கியரு ளாட்சி செய்தாய்
வீங்குபுகழ்க் கதிர்வேலா வெற்றி தானே.
வெற்றரைகொள் பைரவனா ருச்சி கிள்ளி
மிகுகர்வ மடக்கியுமல் வேதா பின்னும் மற்றுமுள நான்காகுந் தலைகு லுங்க
மலர்க்கைகொடு நீகுட்டிச் சிறையி லிட்டும் உற்றதொரு வகந்தையது நீங்க வில்லை
உண்மையிது வென்தலையி னெழுத்துச் சொல்லும் நற்றவனே கதிரவேலா வ.த பூழித்து
நல்லகதி யவனுக்குக் காட்டு வாயே.
காட்டகத்தே குறவள்ளி மானுக் காகக்
கவலைகொளும் வேடனென வேடங் கொண்டாய் நாட்டகத்தே யவ்வைதமிழ் சுவைத்தற் கெண்ணி நல்லதொரு பாலகனாய் நண்ணி நின்றாய் வீட்டகத்தைத் தரும்பெருமான் வேண்டி நிற்க
மிக்கவுயர் குருவாகி யுபதேசித்தாய் வாட்டமுறு மெமைக்காக்கக் கதிர வேலா
வருகைதருந் திருவுருவ மெதுசொல் வாயோ.
10. கட்டளைக் கலித்துறை சொல்லா லடங்காச் சுயநிலைச் சோதீ சுகநிறைவே கல்லா மிதயங் கதிர்வேல் கனிய வருடருவாய் அல்லும் பகலு மகலா துனைப்பெற வாதரிப்பாய் புல்லும் படியொன்றி வள்ளியோ டென்றும் புணர்பவனே.
பவமறுத் தென்ன்னநீ யாண்டுகொண் டுன்றன் பதமலர்க்கீழ் நவமுறு மின்ப நலங்கொளு காலம் நணுகுவதோ அவவினை செய்து கதிர்வே லறியா தழுங்குவதே தவநிலை யெய்தத் தகுதி தருவாய் சரவணனே.
18
 

93.
94.
95.
96.
97.
98.
99.
OO.
சரவண சண்முக சற்குரு வென்ன வுனையடையும் அரனடி யாருக் கருள்பவ சத்தி யுமைமகனே சுரர்களுங் காணவச் சூருரங் கீண்டு கயமகளின் வரனென வாகுங் கதிர்வே லவனை வழுத்துவனே
வழுக்கியே வீழின் கதிர்வே லிறையினை வாய்குளிர இழுக்கிலா தேத்திடி னேறுவ ரின்னற் கடலினின்றும் மழுக்கொளும் பெம்மான் மனமகிழ் மைந்தா மழகளிறே புழுக்கடை யேனும் பொருந்துவ னோநின பூங்கழலே.
பூங்கழ லேத்தித் தொழுதிடு மன்பர் தொகுதியெலாம் ஓங்கி யுயர்ந்தது கண்டு மகிழ்ந்தே யுவகையினால் தாங்குவை யென்று கதிர்வே லுன்றன் சரணடைந்தேன் நீங்குத லின்றி யெதனிலு மாய நிறைபொருளே.
பொருளே யிவையென வெண்ணிய விந்தப் புவியிடத்தே மருளே விளைவாய் மயங்கிய வென்னை மயக்கறுத்தே யிருளே துரக்குங் கதிர்வே லரசே இதயமதில் அருளே சுரக்கும் பெருநா ஞளதோ அசைவிலனே.
நேரொன்று மில்லாத நின்மல நின்விளை யாட்டுமென்னே பாரென்று நீரென்று தீயென்று வாயு வெளியதென்று ஏரொன்று வெய்யோன் மதியுயி ரென்ன விரித்தியங்கித் தாரொன்று சூடுங் கதிர்வே லெனவுந் தனித்தவனே.
தனித்துவ முள்ள தலைவா கதிர்வேற் கடவுளெனும் இனித்த முடைய வுணைநினைந் தேத்து மியல்புடைத்தாய் மனித்தப் பிறவியைத் தந்தெனை யாளும் வகைதெரியின் பனிப்பன கண்கள் படர்வன ரோம புளகமதே.
தேவாதி தேவன் கதிர்வே லரசு செகமுழுதும் நாவார வாழ்த்தும் நலமிக்க மேலோன் நமதகத்தில் ஒவாது வீற்றிருந் துற்றுமி காக்கு முயர்வதனால் மூவாத வொன்றே யிதுதெய்வ மென்ற மொழியுளதே. உள்ளத்தி னுள்ளே யொளியா யொளிரு மொருபொருளை பள்ளத்தி லேகும் புனலாய் நிறைந்த பரங்கருணை வெள்ளத் தழுத்துங் கதிர்வே லரசனின் மேன்மையெலாம் தெள்ளத் தெளிய வறிந்து மகிழுவ திவ்வுலகே.
வேலும் மயிலும் துணை.
19

Page 17
அரும்பத விளக்கம்
காணிக்கை: விழவயர்-விழவு+அயர் = விழாச்செய்யும், காலையில்-காலத்தில், கந்தன் காதை - கந்தபுராணம், அந்தரங்கமான -மறைவான, செச்சை-வெட்சிமலர், மெளலி - கிரீடம்,
காப்பு : திரு - கண்டாரால் விருப்பப்படும் தன்மை நோக்கம், சீர்த்தி -
மிகுபுகழ், பதிற்றுப்பத்து - நூறு, அந்தாதி - முதற்பாவின் இறுதியில் உள்ள அசை, சீர், எழுத்து போன்றவற்றை அடுத்த பாவில் முதலாகக் கொள்வது, பிரணவம் - ஓங்காரம், வைப்பு - சேமநிதி, காசிலிங்க விசாலாட்சி துதி : மூடி - ஆக்கிரமித்து, வினைகள் - நல்லவினை தீவினை, தெரிந்தெடுத்து - பக்குவநிலையை ஆராய்ந்து எடுத்து, தானை - சேலைத் தலைப்பு, கோதில்லா - குற்றமில்லாத, ஐந்துபதம் - (ஐந்தாகிய எழுத்துக்கள் கொண்ட சொல்) சிவமந்திரம்.
IMI ல்
1 1. அலகிலா - அளவு இல்லாத, நாப்பண் - நடுவே, தண்ணளி - கருணை, நிலவு
-ഉണി, 2. மாது - உமை, வெற்பு - மலை, ததுகு - (தாதுஉகு) மகரந்தம் சொரியும்,
வேணி - சடை, தற்பரன் - பரம்பொருள், மெதகுகுழவி - மேன்மைத் தன்மையுடைய குழந்தை.
3. நலிந்தவர் - வருந்துபவர்,
4. பன்னுறு - சொல்லப்படும், பனுவல் - பாடல்,பரிவு - அன்பு, முன்னையின் முன்னே - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே.
5. ஒவற - விட்டுநீங்காது, நண்ணலால் - இருப்பதால்.
6. நாதன் - தலைவன், நாதம் விந்து - சிவம் சக்தி, உய்ய - மேல்நிலையடைய, பேதம் - ஒவ்வாமை, பெதமாய். கொண்டு - வேறுவேறான உருவத்
திருமேனிகளைக் கொண்டு, ஏதமில் - (ஏதம், இல்) குற்றமில்லாத, தொழில்களைந்து - படைத்தல் ஆதிய ஐந்து தொழில்கள், நல்கும்
கொடுக்கும். 7. தலையளி - கருணை, 8. துன்னிய - பொருந்திய, மருத்து - காற்று. வன்னி - தீ. பொய்கை - (இங்கு)
சரவணப் பொய்கை, பெயர்த்து - மீண்டு. 9. நாண்மீன் - நட்சத்திரம், ஆரல் - கார்த்திகை, தொல் - பழைய, அயன் -
பிரமன். 10. முன்னையர் - அம்மையப்பன், கழறவும் - சொல்லவும்.
2 11. தனிமுதல்வன் - சிவம், தேனார் - தேன் நிறைந்த, கண்ணி - தலைமாலை, 12. தரணியோர் - மக்கள், தாபதர் - முனிவர்.
13. ஊதியவள் - (ஊதிய + அவள்) ஒளவை, தண்டேன் - (தண்மை + தேன்) குளிர்ந்ததேன், பில்கு - சொரியும், தார் - மாலை, தணிகை - திருத்தணிகாசலம்.
14. அணங்கின் நல்லார் - தெய்வயானையம்மையாரும் வள்ளியம்மையாரும்,
5G - GLC,60LD,
2O
 

21.
22,
23.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
45.
நிமலா - சுத்தனே. - முகிழ்க்கும் - அரும்பும், விதிர்விதிர்க்கும் - நடுங்கும், உலை - உலைக்களம். அருண - சிவந்த, சொரூபம் - உருவம், பொருநை - தாமிரவருணி ஆறு, புதிர் - தெளிவின்மை, அளியேன் - எளியன், நளின - தாமரைமலர் போன்ற. கதிவேறு - போகுமிடம்வேறு.
3 வாரிருங்குழல் - நீண்ட இருண்ட கூந்தல், வேட்டனன் - விரும்பினான், வேரி - தேன், வெறி - வாசனை, பாரினை - உலகத்தை, நேரிலான் - நிகரில்லாதவன். வேதன் - பிரமன், ஒண்ணலன் - முடியாதவனாய், உள்ள மறுகினன் - மனம் கலங்கினான், மாதவன் - நாராயணன். மாதவர் - முனிவர், விண்டு - விபரித்து, விமலன் - மலமற்றவன், அண்டர் - தேவர். ஆயின்-ஆராயின், ஆன்ற-மாட்சிமைப்பட்டதுாயன் - பரிசுத்தன்,வீயும் - அழியும் கழிய - மிக்க. தெளிப்பன் - தெளிவாக்குவான். எல்லாமன்னான்-(எல்லாம்+அன்னான்)எல்லாம்அவனது,சொலலில் - சொல்லுதலில். ஏன்றருள் செய்குவன் - (ஏன்று + அருள் + செய்குவன்) வரும்படி அழைத்து ஏற்று அருள் பாலிப்பான், செம்மையாம் நெறிச்சீர் - சிவத்தன்மை பொருந்திய வழியிலே நிற்கும் முத்திச்சிறப்பு. சிவணி - பொருந்தி. கருந்தாது - கருமை நிறமான மகரந்தப்பொடி, கடுவினை - கொடியவினை.
4 இலைமுகத்த - இலைபோன்ற வடிவிலுள்ள முனையையுடைய, விலையில்லை - மதிப்பில்லை.". தயாநிதி - அருட்செல்வம், கதி - முத்தி எற்றே - எதற்காக எய்த்து - களைத்து. தண்ணளி - கருணை, உடன்று - கோபித்து கோவலன் - நாராயணன், நான்முகன் - பிரமன், மூவர் - பிரமவிட்டுணுருத்திரர், சேய் - மகன், மிடைந்து - நெருங்கி, தூய்மை - பரிசுத்தம் ஆரிருள் - நிறைந்த இருள், தாரகம் - பிரணவம். காசினி - பூமி, விதி - பிரமன், விண்ணவர் - தேவர், மெளலி - முடி
5 நீயன்றோவெந்தெய்வம் - நீ + அன்றோ + எம் + தெய்வம் துன்னில் - நெருங்கிவரின், என்னுமது - (என்னும் + அது) என்னும் செருக்கு, நாமமற - பெயரில்லாது. ஆயோர் - அப்படிப்பட்ட தாய்மார்,பன்னி - விபரித்துச்சொல்லி, நின்னிலதிகம் எனக்கு - உன்னிலும் பார்க்க பிறவிகள் தோறும் என்னைப் பெற்ற தாய்மார் அநேகர். தியங்காது - சஞ்சலப்படாது, நாடி - விரும்பி, தவத்திற்றியங்காதுளத்துளே நாடி - தவத்தில் + தியங்காது + உளத்து + உள்ளே + நாடி. காலொன்றி - (கால் + ஒன்றி) காற்றுடன் சேர்ந்து, மால் - மயக்கம்,
மருளாதே - வெருளாதே, சேர்த்தவினை - பல பிறவிகளில் சேர்த்த வினைகளின்,
21

Page 18
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
65.
66.
கூட்டாகிய சஞ்சிதவினை, காய்த்து - அதன் வலிமையைக்கெடுத்து, சேரும்வினை - இனிச் சேர்க்கப்படும் ஆகாமியவினை, ஏற்று - (கதிர்வேலா நீயேயதனை) ஏற்றுக்கொண்டு, ஆர்த்துவிடு நின்னருளினால் - ஆத்மாவை நின் திருவளினாற் பிணைத்துவிடு. ஆற்றல் - வல்லமை, ஊற்றம் - பற்றுக்கோடு, அண்ட. வன்றோ - சகல அண்டங்களும் அவற்றிலுளவாம் நிலையியற்பொருள் இயங்கியற்போருள் ஆகியவற்றின் தோற்றமும். இயக்கமும், ஒடுக்கமும் திருவருட் செயற்பாடே. கூறுபட்ட - (சூரனது தேகம்) இரண்டாகப் பிளக்கப்பட்ட, மஞ்ஞை - மயில், மாறுபட்டு - எதிர்த்து, ஏறுகொடி - ஏற்றப்படும்கொடி, ஏறுபரி - தான்ஏறும் வாகனம், வீறுகெட - வலிமைகெட. மாழ்கி - மயங்கி, இணையாது - வருந்தாது, கழல் - (இங்கு) பாதம். எதிரில்லை - நிகரில்லை. களி - மகிழ்ச்சி
6 சமர் - போர், கடந்து - வென்று, தமர் - சுற்றம் சொரூபன் - தோற்றத்தையுடையவன். சேந்தன் - செந்நிறத்தன், ஏந்தல் - தாங்குபவன், வீந்துபோகும் - அழிந்துபடும். அனையதகழ - (அனையது + அகழ), அதைநீக்க, தினை - சிறிய அளவைக்குறிக்கும். முனை - கூர், அகந்தை - அகங்காரம். அரவணி - பாம்பையணிந்த இது நக்கீரர்திருமுருகாற்றுப்படை பாடிப் பூதத்தினால் அடைக்கப்பட்ட குகையினின்றும் முருகனால் விடுவிக்கப்பட்ட வரலாறு. உன்ன - நினைக்க, ஒளிர்வன் - பிரகாசிப்பான் நமர்-எங்களவர், திலம் - (எள்ளு) சிறுபொழுதைக் குறிப்பது. கலம் - தோணி.
7 நறைமலர் - வாசனையுள்ளழ, நன்னகை - சிரித்த, ஒளிபெற்ற, அறைகழல் - ஒலிக்கின்ற வீரர்கழல், ஆர்க்கும் - ஆரவாரிக்கும், ஆர்வம் - விருப்பம். நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். என்னும் குறளைக் குறிப்பது. ஆள் - அடிமை, அல்லல் - துன்பம், தாள் - திருப்பாதம். முருகன் உக்கிரபாண்டியனாகி மதுரையை ஆண்ட போது, கடல்சுவற வேல்விட்டமையும், இந்திரன் முடி சிதற வளை விட்டமையும், மேருவைச் செண்டாலடித்துப் பொற்குவை பெற்றமையும் குறிப்பது. ஆலவாய் - மதுரை, வேள்விநாயகன் - இந்திரன், வளை - சக்கராயுதம், படர்புகழ் - பரந்தபுகழ், பஞ்சவன் - பாண்டியன். புற்புதம் - நீர்க்குமிழி, சொற்பதத்தப்பால் - சொல்லால் விபரிக்கும் எல்லைக்கும் அப்பாலே, தூய - பரிசுத்த, தூசாய் - பூதூளியாய், நண்ணவை - சேரவை. கோடல் - காந்தள், கொன்றைவார்சடை - கொன்றை மலரணிந்த நீண்ட சடை, பைந்தொடைக்கடம்பு அணி - அன்றலர்ந்த கடம்பமலராலாய மாலையணியும், இறைவன் கூறுநூல் - இறையனார் அகப்பொருள், முருகன் மதுரையில் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகத் தோன்றித் தமிழ்ச் சங்கப் புலவர்களின் கலக்கந்தீர்த்தமை குறிப்பிடப்பட்டது. மேலோர் - முனிவர், விரவிய - பரந்த, வேதவாய்மையர் - வேதியர், கரமிசை - கையில், சிரமசைத்து - தலையசைத்து.
22
 

67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
.7ך
78.
79.
80.
கொண்டல் - மேகம், தண்டலை - சோலை, மேய - மேவிய, தாவிலா - குற்றமிலாத, மாசு - குற்றம், கபிலை - சிறந்தபசு. பொற்புற - அழகுபெற, புங்கவர் - தேவர் பேறு - சிறந்ததொன்று, ஈறு - முடிவு, ஏதிலா - காரணமெதுவுமில்லாத, மாறெதுமில்லாய் - உன்நிலையில் மாறுதல் இல்லாதவன், மாற்றுதல் செய்வாய் - உன் கீழ் இயங்குபவற்றை மாறும்படி செய்வாய், மன்னிய - நிலைபெற்ற, மருவலார் - எதிரிகள், அம்புயம் - தாமரை.
f 8
முருகன் தோற்றமும் கயிலையையடைதலும் கூறப்பட்டது. நெற்றித் தலக்கண்ணில் - நெற்றியிடத்ததான கண்ணில், தாரகை - நட்சத்திரம், இங்கு கார்த்திகைப் பெண்கள். மேருமலையில் தேவருக்காக விசுவரூபமான பேருருவைக் காட்டினாய், அசுர தலைவன் சூரனுக்குப் போர்க்களத்தில் அவ்வுருக் காட்டினாய், வீரவாகு தேவருக்கு இந்த யுக எல்லையில் அவ்வுருவத்தைக் காட்டுவேன் என்றாய், கதிர்வேலனே உனது அடியவர்களுக்கு அந்தப் புகழ்பெற்ற வடிவத்தை என்றுதான் காட்டப் போகிறாய் என்பது. தாவேயில் - குற்றமில்லாத, யுகாந்தம் - யுக எல்லை, பூ - பூமி இந்த விசுவரூபக் காட்சியானது எமது மனதில் என்றென்றும் நிலைத்திருக்க, ஐப்பசி மாதக் கந்தசட்டி விழாக்காலத்தே நின்னுடைய கந்தபுராணத்தைப் படிப்பதையும் பயன் சொல்வதையும் கேட்டுப் பரவசமாய் உருகும் அடியவர்களைக் காணும்படியாகக் கிடைத்த எம் கண்களே கண்களாம் என்பது. பரவலுறும் - போற்றுகின்ற. இந்த 74ம் பாமுதல் 77ம் பாவரை விசுவரூபக் காட்சியானது பாதத்திலிருந்து சிரசுவரை கந்தபுராணத்திற் கண்டபடி விவரிக்கப்பட்டுளது. ஞாலம் - உலகம், நாள் கிரகமிடிகள் - (நாள் + கிரகம் + இடிகள்) நட்சத்திரம் கிரகம் இடிகள், அரதனம் - இரத்தினம், புலவர்கள் - தேவர்கள், விஞ்ஞையர் - வித்தியாதரர். ஞாண் - அரைஞாண், உந்தி - வயிறு, போதம் - ஞானம், வெகுரோமம் - மிகுதியான ரோமம், இடமெல்லாமண்டங்கள் - இடம் + எல்லாம் + அண்டங்கள். விரிஞ்சன் - பிரமன், மால் - நாராயணன், போகம் - அநுபவ இன்பம், அரம்பையர் - தேவப் பெண்கள், அங்கி - அக்கினி, நல்லொலி - நல்லசத்தம், பரமவாக மாமதுவே பதுமவிதழ் நாவே - பரம + ஆகமாம் + அதுவே + பதுமம் + இதழ் + நாவே) மேலான ஆகமமாகிய அதுவே தாமரை இதழ் போன்ற நாவாகும். இதழ் - உதடு, எழில் நாசிபவனன் - அழகிய மூக்கே வாயுபகவான், இரவோன்
சந்திரன், பகலோன் - சூரியன், கதகளிற்றின்திக்கெல்லாம் - (கதம் + களிற்றின் + திக்கு + எல்லாம்) பூமியைத்தாங்கும் உக்கிரம் கொண்ட யானைகள் நிற்கும் திக்குகளெல்லாம், மதம் - அகங்காரம். ககனத்தோர் - தேவர், அளி - கருணை, அள்ளுற - வாயூற திண்ணெனும் - திண்ணிதாய் உள்ள, மீதிவர்ந்து - மேலே ஆரோகணித்து. அகத்திய முனிவருக்குப் பிரணவப் பொருள் உபதேசித் தமையும், தினைப்புனங்காத்த வள்ளிநாயகியாரைத் தன் சத்தியாகக் கொண்டமையும், வேடனாகி வந்து பொய்யா மொழிப்புலவரிடம் அவருக்கு அச்சமூட்டிப் பாடல் கேட்டமையும் கூறப்பட்டன. பொருவில் - நிகரில்லாத, வனசரன் - வேடன்.
23

Page 19
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
91.
92.
93.
94.
96.
97.
98.
99.
9 ஐவகையா யமையுமனிமகுடம் - ஐந்து வகையான உருவ அமைப்புடன் கூடிய இரத்தின கிரீடம், மகரம் - சுறா, மதாணி - மார்பில் தொங்கும் பதக்கம், தொங்கல் - பூமாலை, துவண்டு - புரண்டு, உபயபதம் - இருபாதங்கள். ஆதாரம் - பிறபொருள்களைத் தாங்கி நிற்பது, ஆதேயம் - பிறபொருள்களில் தங்கிநிற்பது. கழறுற்ற - கூறிய, மூத்தவள் - தமக்கை, உயரே - (கோபுரத்தின்) மேலே, கழல் வீழ்ந்த - காலடியில் வணங்கிய, கேட்டுவந்த - (கேட்டு + உவந்த) கேட்டு மகிழ்ந்த, அழல் - அக்கினி, அபயம், அடக்கலம். நீரேறு - கங்கைசூடிய, முனி - நாரதர், போரேறு - போர்செய்யும் செருக்குள்ள சிங்கம், பொறி - புள்ளி, கடாவி - செலுத்தி, காரேறு - முகில் படித்த, கலன்நீக்கி - ஆபரணாதிகளைக் களைந்து, கெளமீனதாரி - கோவணந்தரித்தவன், வாரேறு - கச்சணிந்த, கோபக்கனலழகு - கோபமாகிய அக்கினியோடு கூடிய .56)94pھک களித்தளித்த - மகழ்ந்து கொடுத்த, ஊனமுது - தசையுணவு, தாதை (இங்கு) சிவன். கந்தவிதழ் - வசனையுடையமலரிதழ். கந்தபுராண அரங்கேற்ற நிகழ்வின்போது அங்குள்ளார்க்கு முருகன் அவர்களது சந்தேகம் தீர்த்தமை குறிக்கப்பட்டுள்ளது.கந்தகோட்டம் - காஞ்சி முருகன் கோயில், கவின் விரிக்க - புராணபடனஞ்செய்ய, நவை - குற்றம், வான் (இங்கு) தேவர், நீபமலர் - கடம்பமலர். மாறுமுகம் - அசுரமுகத்துக்கு மாறான யானை முகம், அரிமுகன் - சிங்கமுகன், சூரன் - சூரபத்மன், வீறு - வலிமை. வெற்றரை - நிர்வாணி, உச்சி - உச்சித்தலை, வேதா - பிரமன், அகந்தை - செருக்கு, என் தலையினெழுத்து - பிழைபட என்தலையிலெழுதிய எழுத்து, அ.து அழித்து -அந்த எழுத்தை அழித்து, நல்லகதியவனுக்கு - எவருக்கும் பிழை படத்தலையிலெழுதாதபடி அவனுக்கு ஒரு உயர்ந்த எண்ணங்கொண்ட நிலையைக் கொடு. வீட்டகம் - முத்திப்பேறு, பெருமான் - சிவன், வாட்டமுறும் - வாடியிருக்கும்.
10 சுயநிலைச் சோதீ - சுயம்பிரகாச ஒளியே, கல்லாம் - கல்லாலாகிய, அருடருவாய் - அருள் + தருவாய், புல்லும் - தழுவும். நவம் - புதுமை, அவவினை - வீணானசெயல், அழுங்குதல் - மிகவருந்துதல். அரனடியார் - சிவனடியார், கீண்டு - கிழித்து, கயமகள் - தெய்வயானையம்மை. வரன் - கணவன். இன்னல் - துன்பம், மழு - பரசு, பெம்மான் - சிவன், மழகளிறு - இளம்யானை, பூங்கழல் - மென்மையான பாதங்கள். புவி - உலகம். நேர்-சமானம், நின்மலன்-மலமற்றவன், பார்-பிருதிவி, ஏர்-சிறப்பு. தார்-மாலை, பனிப்பன - நீர்துளிக்கின்றன. உற்றுபூழி - தக்க சமயத்தில், மூவாத - மூப்பில்லாத.
வேலும் மயிலுந்துணை.
24.
 


Page 20
Design 8. Printed by: ஒ sÁMPA

VY GRAPHICS Colombo-3, reti 54.3223