கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பழிக்குப் பழி

Page 1


Page 2


Page 3
|× 麴
 
 

añoGJIT
என்னும்
ஆங்கில நாவலின் தமிழ் ஆக்கம リエ
Sir E.
扈
ஓய்வுபெற்ற ஆசிரியர்
திரு.
。
ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஆசீர்வாதம் அச்சக அதிபருமான
55. M. V. ஆசிர்வாதம், J. P. அவர்கள்

Page 4
முதற்பதிப்பு 1 பெப்ருவரி 1976
யாழ்ப்பாணம், 1ண்டிவீதியில் g2. GTIGT ஆசிர்வாதம்
அச்சகத்தில் அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டது.1976
 
 
 
 
 
 

P
A
-----
llKKU PAl.
A TRANSLATION OF
MO N T E CRIST
BY
ALEXANDER DUMAS
Translated by :
Mr. V. P. MARHAMPILLAH
(Retired Teacher)
Pub Ahed by :
M. V. ASEERv ATHAM, y. P.
Proprietor Aseers than Press, Jafna

Page 5
பதிப்புரை
ஆங்கில நாவலான கிறிஸ்ரோ என்னும் நூலின்கண் அமைந்த வீரம், காதல், வஞ்சம் தீர்க்கும் பண்பு என்பவற்றை இரசித்த ஆசிரியர் திரு V. P. மரியாம்பிள்ளை அவர்கள் அதனைத் தமிழாக்கம் செய்து உதவிஞர்கள்
நல்ல நாவல் என்ற தினுல் மாணவரும் மற்ருேரும் படித் துப் பயன்பெறவேண்டும் என்னும் ஆசையினுல் அதனை நான் நூல் வடிவமுறச் செய்து வெளியிட்டுள்ளேன்.
திரு. மரியாம்பிள்ளை ஆசிரியர் இதுபோன்ற வேறு பல நூல்களையும் மொழிபெயர்த்து, தமிழ் மக்களுக்கு உதவ வேண்டு மென்பது எனது விருப்பமாகும்.
அவர் முயற்சி உயர்ச்சி பெறுவதாக
மு. வி. ஆசிர்வாதம், J. P.
கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
2-2-76
 
 
 

முன்னுரை
சிறுகதைப் பிரியர்களுக்கு மேல்நாட்டுக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து உதவவேண்டுமென்பது எனது ஆவலாகும்,
அதனுல் அலெக்சாந்தர் டூமாஸ் ஆங்கிலத்தில் எழுதிய "கவுண்ட் மொன்ரே கிறிஸ்ரோ? என்னும் நாவலை முதல் முதல் தமிழில் மொழி பெயர்த்து உதவியுள்ளேன்.
சதிகாரர் வலையில் சிக்கி இதயம் குமுறும் ஓர் இளைஞ னின் இணையிலா வீரம், அவனது இரத்தத் துடிப்பு மதிநுட்பம் பழிக்குப்பழி வாங்கியபோதும் மன்னிக்கும் பண்பு யாவும் இக் கதையில் சித்திரம்போல் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நூல் இளைஞரால் மட்டுமன்றி முதியவர்களாலும் வர வேற்கப்படும் என்பது எனது துணிபு.
கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு வேண்டிய வகை யில் சீர்ப்படுத்தி, அழகுற அச்சேற்றி உதவிய நண்பர் திரு. M. V. ஆசீர்வாதம் J. P. அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றி உரியதாகும்.
913, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.

Page 6
உள்ளடக்கம்
1. நீ ஓர் கைதி
2. தீர்ப்பு
3. தீவில் சிறை
4. இலக்கம் 34, இல, 27
5. புதையலின் புதினம் . - - - - - 23 6. இடுகாடு 29 7. ஆபத்து நீங்கியது . - 33 8. புதையல் வேட்டை . 38 9. வைரக்கல் 。 43
10. நான் உன் விரோதி . ... . - - 52 11. வங்கி முதலாளி - a 60 12. அவன் கொலைகாரன் . 63 13. அடிமைப் பெண் 66 14. சவால் . 72
15. சந்திப்பு · · · 78 16. தற்கொலை ༈ ། - 8 1 17. ஐம்பது இலட்சம் s
18. கள்வர் கூட்டம்
19. பசிதீர்க்கப் பணம் 20. நீயின்றேல் நானில்லை .
 
 

(மொன்ரே கிறிஸ்ரோ)
(1) நீ ஓர் கைதி t T '<' },
*உன்னைக் கைது செய்யக் கட்டளை இதோ!'
எதிர்பாராத இக்கட்டளையைக் கேட்டதும் எட்மண்ட் டான்ரே ஏங்கினன். இகைப்புற்றவன் திரும்பிப் பார்த்தான்.
நீல நிற உடை தரித்த பொலிசாரை எதிரில் கண்டான்.
அவன் கண்கள் கலங்கின. மனமோ பதறியது. உள்ளம் உறைந்தாற்
போல் அசைவற்று நின்ருன். இதுவரை மலர்ந்திருந்த அவன் முகம்
மங்கி வாடியது. எனினும் சிறிது நேரத்தில் பிரிந்த உயிர் மீண்டும்
ஒன்று சேர்ந்தாற்போல், அவன் நிலைமை பழமைபோல் ஆகியது.
அதிசயப்பட்டானுகிலும், எதற்காகத் தன்னைக் கைது செய்ய இவர்கள் இங்குவந்துள்ளனர் என்பதை அறிய ஆவல் கொண்டான். தனக்குத்தானே அன்றேல் வேறுயாருக்குமோ இக்கட்டளை அனுப்பப் பட்டுள்ளது எனச் சந்தேகித்தான். குற்றம் ஒன்றுமே இல்லாத தனக் கெதிராகப் பிறப்பிக்கப்பட்ட கட்டளை, எவரின் குறும்போ எனத் தன்னையே : கொண்டான்.
பிரான்ஸ் தேசத்தில் பத்தொன்பதாம் நூற்றண்டின் முற் பகுதியில், எவரையும் திடீர் எனக் கைது செய்வது வழக்கம். இவ் வித அடக்குமுறைச் சட்டங்கள், அன்றைய பிரான்சிய அரசியலில் சர்வ சாதாரணம். தற்பாதுகாப்பிற்காக அற்ப சந்தேகத்தின் மீது முதலாய், எவரையும் எவ்விடத்திலும் கைது செய்ய அரசனுக்கு அதிகாரம் இருந்தது. இதுபோன்ற அநீதி வரம்பு மீறிச் செய லாற்றிய அநாகரிககாலமும், பழிபாதகங்கள் மலிந்து நாட்டுமக்கள் பலவழிகளிலும் துன்புறுத்தப்பட்ட துயர் நிறைந்த காலமும் அது.
பொலிசார் டான்ரே தங்கிய ஒட்டேல் அறையை அ ை

Page 7
A) R
வதற்கு முன், அங்கே ஒரே ஆரவாரம், எங்கும் கல கலப்பு நிறைந் திருந்தது. விருந்தினர் பலர் குழுமியிருந்தனர். விழாக்கோலம் பூண்டு ஒட்டேல் முழுவதும் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். ஆடல் பாடல்களில் திளைத்தனர் சிலர். மது போதையில் மயங்கி வாய் புலம்பினர் வேறுசிலர். சீட்டாடுவோர் கும்பல் ஒருபுறம் கும்மாளம் s போட்டுக் கொண்டிருந்தது. மறு புறத்தில் சொட்டைக் கதை சொல்லிச் சொக்கட்டான் ஆட்டத்தில் ஆனந்தித்தனர் இன்னும் சிலர். இடையிடையே மின்னல் போலும் கிளம்பிய அன்னர் சிரிப் பொலி, முகட்டையே பிளப்பதுபோல் முழங்கியது. நாலாதிக்கும் எதிரொலி தொனித்தது.
திடீரெனத் தோன்றிய பொலிசார் அவர்கள் களியாட்டங் களுக்கெல்லம் முற்றுப்புள்ளி இட்டனர். பெரும் மழை பெய்து ஒய்ந்தாற்போல எங்கும் ஒரே அமைதி. யமனைக் கண்டவர் போல் பரக்கப்பரக்க விழித்தனர். நிகழ்ந்தது யாதோவெனத் தங்களையே தாங்கள் கேட்பதுபோல் இருந்தது அவர்கள் முகபாவனை, மூச்சுத் திணற அங்கும் இங்கும் வெறித்துப் பார்த்தனர். அச்சம் அதிகரிக் கவே அசைவற்றுச் சிலைபோல் ஒதுங்கி நின்றனர்.
ஆனல் டான்ரே பயந்தெளிந்தான். 'இக் கட்டளை எனக்கல்ல." நான் ஓர் கப்பற்காரன், நேற்றுத்தான் என் கப்பல் மார்சேல் துறையை அடைந்தது. இன்ருே, எனது திருமண விழா. கலியான விருந்து நடபெறுகின்றது. விருந்தினர், உறவினர் எல்லாம் இங்கு கூடியிருக்கின்றனர். என்னைப் பெருமைப்படுத்தி, தங்கள் ஆசியை அளித்துப்போக என் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளனர். இது போலும் சுபதினம் என் வாழ்க்கையில் இனிமேல் ஒரு போதும் வரப்போவதில்லை. 。
இன்னும் ஒரு மணி நேரத்தில் என் திருமணம் இனிது நிறை வேறும். ஆவலுடன் சுயவேளையை எதிர்பார்த்து நிற்கும் இப் பருவமங்கைக்கு மாலை சூட்டி மணஞ் செய்யவிருக்கிறேன்.' என்று தன் எதிர்ப்பை எடுத்துக்காட்டிய டான்ரே, தனக்கு மனைவியாக வர விருக்கும் இள மங்கையைத் திரும்பிப்பார்த்தான். அனுதாபம் ததும் பும் புன்முறுவல் தவழ்ந்தது அவள் உதடுகளில்,
பெண்ணுே மணக்கோலத்துடன் நின்ருள் ஒருபோதுமே எதிர் பாராத இச் சம்பவம் அவளத் தடுமாற்றமடையச் செய்தது. டான் - ரேயின்முன் எடுத்தடி வைத்தாள் அவள், தன்னை விட்டுப் போகாது தடுப்பவள் போல், அவன் மார்பில் சாய்ந்தாள். அவன் கரங்களை இறுகப்பற்றினுள்.
இவையெல்லாம் எங்களுக்கேன்? தேவையில்லாதவை உனது பேச்சு அரசனின் ஆணை இது, உடனே புறப்படு என்றனர் சற்றேனும்
இரக்கமின்றி. *
 
 
 

பாரோன் கப்பலின் இரண்டாவது தளபதி எட்மண்ட் டான் ரேயைக் கைதுசெய்துவர இடப்பட்ட கட்டளை இது. இனியும் தாம திக்கவேண்டாம், புறப்படு சீக்கிரம்' என மேலும் வற்புறுத்தினர் (G) y fir 65 gefir fj, .
**ஆம்! வருகிறேன்.' என்பான் போல் தலையை அசைத்தான். பொலிசார் படிகளில் இறங்கினர். தன் காதலன் பிரிவு பொறுக்க இயலாத அப்பாவிப் பெண், ஒ என அலறிஞள் தன் உயிரையே மாய்ப்பதுபோல் பெரும் கூச்சலிட்டாள். பைத்தியம்பிடித்தவள் போல் தன் ஆடையைக் கிழித்தெறிந்தாள். மளார் எனத்தரையில் வீழ்ந்து புரண்டாள்.
*மேசீட் கதருதே! மனம் வருந்தாதே அமைதிகொள். இது போன்ற ஏமாற்றங்கள் வாழ்வில் அனந்தம். அவற்றில் இதுவும் ஒன்று என மனதிற்கொள். வீணுக உன்னை மாய்க்காதே, அதனுல் பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லே, பெண்ணே! எல்லாம் வியர்த்தம். கவலைப்படாதே' என்ருன் டான்ரே தளுதளுத்த குரலில்
'நான் ஒர் உத்தம தேச பக்தன். இன்று வரை யாவராலும் மதிக்கப்படும் உண்மைத் தேசத் தொண்டன் பழி எதுவும் என்னில் இல்லை. பாதகம் எதுவுமே நான் அறியேன். எனவே நான் விரைவில் திரும்புவது திண்ணம். அதுவே என் முழு நம்பிக்கை, மேசீட், நான் திரும்பியதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திருமணம் முறைப்படி நிறைவேறும். எங்கள் காதல் முற்றிக்கனியும். நீண்டநாட்கள் நாம் கண்ட இனிய கனவுகள் எல்லாம் நனவாகும்.
*அப்பா! நான் வோய் வருகிறேன். வருமளவும் என் பெண்ணைப் பார்த்திருங்கள். இயன்ற உதவிகளை அவளுக்கு மறுக்காது செய்யுங்கள். சீக்கிரம் நான் திரும்பி வருவேன் அப்பா!'
தகப்பனுரோ தள்ளாப் பராயத்தினர். பஞ்சுபோல் நரைத் திருந்தது அவர் தலைமயிர். அதற்கேற்ருற் போன்ற நீண்ட தாடி வளர்ந்திருந்தது; பள்ளத்தாக்குகள் போன்ற சுருக்குகள் அவர் முகத் தில் படர்ந்திருந்தன. பெலனற்ற மெலிந்த தேகம் பொருந்தியவர். அறுபதிற்கும் எழுபதிற்கும் இடைப்பட்ட வயதுடைய முதியவர் அவர். "மகளே! வா. தம்பி கெதியில் திரும்புவான் அழாதே கவலைப் படாதே' என முணுமுணுத்தவர், அவள் கரங்களைப் பிடித்து தனக் கருகில் ஓர் ஆசனத்தில் அமர்த்தினர்.
'போகலாம் வாருங்கள்' என்ருன் டான்ரே பொலிசாரிடம் அவர்கள் முன்செல்ல அவன் பின் தொடர்ந்தான்.
'நான் நிரபராதி எனப் பல முறை தனக்குள் சொல்லிக் கொண்டான் நிமிர்ந்த தலையுடன் என்றுமே இல்லாத உற்சாகத் துடன் விருந்தினரிடம் விடைபெற்றுக் கம்பீரமாக வெளியேறினுன்
டான்ரே (கதவு தாளிடப்பட்டது.)
。

Page 8
ஒட்டேலில் தங்கிய விருந்தினர்க்கு ஒன்றுமே புரியவில்லை. அன்று நிகழந்தது அவர்களுக்குப் பேர் அதிர்ச்சியாயிற்று. கைதி யான டான்ரேக்கு அனுதாபம் தெரிவித்தனர் பலர். அவனது துர் அதிட்டத்தை நினைந்து துக்கப்பட்டனர். அவனைக் காப்பாற்றத் தங்கள் பலம் போதாதே என மனம் வருந்தினர். இருந்தாற்போல் ஏற்பட்ட இப் பயங்கர திருப்பம் எதனுலோவெனத் தங்களுக்குள் ஆராய்ந்த னர். காரணங்கள் பல தத்தம் அறிவுக்கேற்ப எடுத்துக்காட்டினர். ஆளுல் மூடிவு ஒன்றும் கண்டிலர். அவர்கள் தர்க்கம் படிப்படியாக விரிவடைந்தது. விவாதம் வளர்ந்து பெரும் கலவரத்தில் முடிந்தது.
ஆணுல் அவர்களில் இருவர் மாத்திரம் புறம்பே தனித்து நின் றனர். தங்களுக்குள் ஏதோ இரகசியம், மறைவினில் பேசிக் கொண்டிருந்தனர்.
'டாங்கிளே! உன் கடிதம் செய்த வேலையைப் பார்த்தாயா? நான் இதனை விரும்பவேயில்லை. நிரபராதியான ஒருவன் நிர்ப்பந்தப் படுவதை நான் ஒருபோதும் அனுமதியேன். இது பெரும் கழி! மன்னிப்பே இல்லாத மாபெரும் பாதகம்! அநீதி! அநீதி!
'டாங்கிளே! நேற்றிரவு எனக்குக் குடி கூடிவிட்டது. உன் சூழ்ச்சியை எனக்கு நீ வெளிப்படுத்தினய், அப்போது எனக்கு மதுபோதை தலைக்கேறிவிட்டது. நீ சொல்லியதும் எனக்கு விளங்க வேயில்லைg அல்லாவிடில் உன் சதித் திட்டத்தை உடன் மறுத் திருப்பேன்.' எனத் துக்கத்தினுல் உள்ளம் உருகியவன்போல் சொன்
னுன் கண்டருே.
டாங்கிளே ஓர் இளம் வாலிபன், கருணை சிறிதும் இல்லாதவன். அரக்கனின் நெஞ்சம் படைத்தவன். இம்மியளவும் அவனில் இரக்கமே கிடையாது.
தன் இரு கைகளாலும் அவனை அழுத்தி இழுத்தான் டாங்கிளே. அப்பால் அவனை அழைத்துச் சென்ருன் மறைவில் அவனைநிறுத்தியவன், * வாய் பொத்து கண்ட்ருே' எனச் சிங்கம்போல் சிறிப் பாய்ந்தான்.
அல்லாதுபோனுல் பார் இதோ இது உன் நெஞ்சைப் பிளப் பது நிச்சயம். இன்று என் கையால் நீ இறப்பது சத்தியம். என்னைக் கண்டுகொள்ள ஒருவராலுமே முடியாது. துப்புத்துலக்கும் வீரராலும் என்னே ப் பிடிக்க இயலாது. நியாய துரந்தரர் தானும் என் சதியை நிரூபிக்க முடியவே முடியாது',
ஆகா! தொலைந்தான் டான்ரே! அவன் பிழைக்கவேமாட் டான். அவன் பினம்தான் விடுதலை பெறும் என வெற்றிமுரசு கொடினுன் TÄGGGT. 10 ܐ¬ 4 17
 

இவ்வாறு வீர முழக்கம் போட்ட டாங்கிளேயின் கண்கள் திசை மாறின. டான்ரேயின் காதலி மேசீட் நின்ற இடத்தைச் சுட் டிக்காட்டி :
**கண்டறே! அதோபார்! நாடகம் நடக்கிறது. டான்ரே இல் லாத தருணம் நடிக்கிருன் பேணுட் கதாநாயகனுக.
மேசீட் தன் விருத்தாப்பிய மாமனுரின் அருகில் இருந்தாள். அவள் விழிகள் வீங்கியிருந்தன. விக்கல் இன்னும் அகலவேயில்லே. முகமோ சோகத்தில் மூழ்கியிருந்தது. என்ரூலும் இயற்கை எழில் பொருந்திய் அவள் வதனம் சோகத்தில் முதலாய்ச் சோதி குன்ருது விளங்கியது.
அவள் பின்னுல் ஓர் இளம் வாலிபன், கரையின்றிப் புரண்டோ டும் காளேப் பருவத்தினன். அவனது உயரியதோற்றம், பரந்ததோள் கள் எவரையுமே இலகுவில் கவரும் பசுமை பொலிந்திருந்தன. செம் படவன் உடை தரித்திருந்தான். அதுவும் அவன் செப்பமான செந் நிற மேனிக்குச் சாலப் பொருந்தியது.
தன் பலநாட் திட்டம் நிறைவேறச் சந்தர்ப்பம் கிடைத்தாற் போல், அவளேயே சுற்றி வளைந்தான் பேணுட் இன்றுவரை தன் காதலுக்குத் தடையாயிருந்த டான்ரே இறந்தான் என்றே தீர்மா னித்தான். அவன் இனித் திரும்பப் போவதுமில்லை, என்னுடன் போட்டி இடப் போவதுமில்லையென உறுதிகொண்டான்.
தன் கரங்களை அவள் கைகளில் மெல்ல அழுத்தினன். அவனே விட்டகல மனமில்லாது தவியாய்த் தவித்தான். தன்னைச் சூழவுள்ள விருந்தினரைக் கண்ணிருந்தும் அவன் காணவில்லை. காதலுக்குக் கண்
ணில்லை என்பது பொய்யாகுமோ?
அவள் அழகைப் பருகுபவன்போல் தன் கண்களை அவளில் ஊன்றிப் பதித்தான். அறிவு மயங்கியவன் காதல் அனல் பொறிக் கும் தன் கண்களால், அவள் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை வற்றச் செய்வான்போல், இமைவெட்டாது அவளையே பார்த்து நின் ஜூன்.
டாங்கிளே அவன் காதல் நாடகத்தைப் பார்த்து ரசித்தான். தன்னையறியாமலே தன்னுள் நகைத்தான். நெஞ்சிலிருந்து நஞ்சைக் கக்குவான் போன்று உதட்டைச் சுளித்தான்.
'நன்ருயிருக்கு பேணுட் உனக்கு வாய்த்தது வாய்ப்பு விடாதே தொடர்ந்து நடத்து உன்னை எதிர்க்க எவருமே வரப்போவதில்லை. உன் எதிரி டான்ரே ஒழிந்தான். அவனுக்கு மீட்சி இவ்வுலகில் இல் லேயே இல்லை" ി

Page 9
(2) தீர்ப்பு
'கைதியை உள்ளே விடுங்கள்,' என்ருர் மாவட்ட நீதிபதி. பொலிசார் எட்மண்ட் டான்ரேயை உள்ளே கூட்டிச் சென் றனர். அவன் உள்ளே சென்றதும், பொலிசாரை வெளியே போகும் படி பணித்தார் நீதியரசர். அவர்கள் வெளியேறியதும், தன்முன் தனித்து நிற்கும் வாலிபனைக் குறிப்பாகக் கவனித்தார். உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவனின் ஒவ்வொரு அங்கத்தையும் அவதானித் தர்ர். எல்லாக் கோணங்களிலும் வைத்து, அவனை அளந்தறிந்தவர் 'ஆ என்ன வசீகர தோற்றம். அவன் ஆணவம், துணிபுதான் என்னே' எனத் தனக்குள் வியந்தார் வில்பேட்.
'நீ எட்மண்ட் டான் ரே தானே' எனக் கேட்டார்.
1ஆம் நான் தான்.' *வாலிபனே எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. இன்று காலைதான் அதனைப் படித்தேன். அதனை வாசிக்கிறேன் கவனமாய்க் கேள்' என்ருர்,
*கனம் நீதியரசர் அவர்களே ! பிரான்சிய அரசனின் அன் பன் என்ற முறையில், இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர முன்வந்துள்ளேன். இதனை அறிவிப்பது எனது கடமை எனவும் உணர்ந்துள்ளேன். நான் எழுதுவது எல்லாம் உண்மையென நம் பும் இன்றைய அரசியற் சூழ்நிலையில் நான் குறிப்பிடப் போவது மிகவும் காத்திரமான ஒரு முறைப்பாடு.
"பாரோன் கப்பல் இரண்டாவது தளபதி எட்மண்ட் டான் ரே கடிதமொன்று வைத்திருக்கின்ருர் . அது நம் அரசனின் விரோதி யொருவரால் எழுதப்பட்டுள்ளது: அக்கடிதம் பிரான்சிலுள்ள மற்று மோர் இரஈச துரோகிக்குச் சேர்க்கும்படி அவனிடம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை எழுதியவர் நெப்போலியன் பொனபாட் என் பது எனக்கு நன்ருகத் தெரியும் பாரோன் கப்பலிலுள்ள அறையி னுள் தளபதியின் மற்றைய பத்திரங்களுடன் அதனைக் காணலாம்.' வாசித்து முடிந்ததும் வில்பேட் டான்ரேயை ஏற இறங்கப் பார்த்தார்.
■,
 

"டான்ரே இம் முறைப்பாட்டில் தவறு ஏதும் உண்டா?" * தவறு ஒன்றுமே இல்லை. கடிதம் ஒன்று உண்டென்பது உண்மை. ஆணுல் அரசனின் விரோதி நான் என்பதை மறுக்கிறேன். இக்கடிதம் எனக்குக் கிடைக்கப் பெற்றவரலாற்றை, நீர் அறிவி ரானல் நான் சொல்வதின் உண்மை உமக்குத் தெளிவாகும் ஐயா ! ஒன்றுமே ஒளியாது நான் சொல்லப்போகும் விபரங்களைத் தயவு கூர்ந்து கேளும்,
"எங்கள் வழமையான கப்பற் பிரயாணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிக்கொண்டிருந்தோம். வழியில் கப்பற் தளபதி லக்லே" கடும் நோய் கண்டார். கப்பலில் வைத்தியர் எவருமே யில்லை. அவரின் நிலைமை கவலைக்கிடமாயிருந்தது. அவர் இறக்கு முன் கப்பலை ஒர் துறையிற் சேர்ப்பது புத்தி எனவும் தீர்மானித் தோம். நாம் நின்ற இடத்திற்கு அண்மையில் தெரிந்தது எல்பா" தீவு.
‘ஓகோ நெப்போலியன் சிறை வாசஞ் செய்யும் தீவுதானே' எனக் கேலியாகச் சொன்னுர் நீதிபதி,
'அவ்விடம் செல்லுமுன்னரே அவர் முடிபு நெருங்கியிருப் பதை அவதானித்தோம். கடைசி மூச்சு விடுமுன், அவர் என்னைத் தன் அருகில் அழைத்தார். கப்பல் ஒட்டும் பொறுப்பை ஏற்கும்படி சொன்னுர் . தன்னை எல்பா தீவிற்கே கொண்டுபோகும்படியும் கேட் டுக்கொண்டார். அவ்விடத்தில் நெப்போலியனுக்குக் கொடுக்கும்படி ஒரு கடிதமும் தந்தார். அன்றியும் அக்கடிதத்திற்கு அவர் தரும் பதிலை பரிசிலுள்ள அவர் நண்பனுக்கு தவருது சேர்த்துவிட வேண் டுமெனவும் என்னை வற்புறுத்தினூர்,
இவ்விரு கருமங்களையும் தாமதமின்றிச் செய்து முடிப்பேன் எனச் சத்தியம் செய்யும்படியும் சாதித்தார். அதே சமயம் அவர் ஆவிபிரியும் நேரம் சமீபித்தது. தகுந்த இறுதி மரியாதை அவருக் குச் செய்வது என் கடமை என உணர்ந்தேன். அவர் கோரிக்கை களுக்கு இணங்கினேன். முறைப்படி சத்தியமுஞ் செய்தேன். அடுத்த நாளே லக்லே விண்ணுலகம் அடைந்தார்.
ஐயா! மரணப் படுக்கையில் அவதிப்படும் நண்பனும் என்
தலைவனுமான அவருக்கு, நான் அளித்த வாக்கைக் காப்பாற்றக் கருதினேனே அன்றி, எவ்வித இராச துரோகமும் செய்யத் துணிந் திலேன்' என்றவன் நீதிபதியின் மேசைமீது பல பத்திரங்கள் அடங் கிய கட்டொன்றைக் கண்டான்,'அது கப்பலில் தான் பக்குவமாய்
வைத்துப் போன காகிதக்கட்டு எனவும் தெரிந்து கொண்டான்
டான் ரே - 7

Page 10
நீதிபதி கையை உயர்த்திஞர் ஆம், நீ சொல்வது உண்மை பாகவிருக்கலாம், ஆஞல் உன் தலைவன் லக்லே பொனப்பாட்டேயின் ஆதரவாளன், அவனிலும் பார்க்க மேலதிகாரிகள் உண்டு உனக்கு அவர்களின் கட்டளையை அல்லவா நீ நிறைவேற்றியிருக்க வேண்டும். உன் கப்பலே நான் சோதனையிட்டபோது அக்கடிதம் எனக்குக் கிடைத் தது. எங்கே அது?
"ஐயோ! அதோ! அந்தக் காகிதம் மற்றும் காகிதங்களுடன் இருக்கின்றது' என்ருன் மேசையைச் சுட்டிக் காட்டி.
நீதிபதி ஒவ்வொன்ருகப் பிரித்துப் படித்தார். ஆராய்வுடன் துணுகி வாசித்தார். அவற்றில் ஒன்றைக் கையில் எடுத்து 'இது யாருக்கு முகவரி இடப்பட்டிருக்கிறது என்ருர்,
* திரு. நோட்டியர், றுகொக் ஹெரன், பரீஸ், எனப்பதிலளித் தான் டான்ரே.
வில்பேட் சட்டெனத் தன் தலையை உயர்த்தினர். வெடுக் கென வாலிபனை நோக்கினுர், அவர் முகம் ஒடிக்கறுத்தது. டான்ரே அவரில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை அவதானித்தான். வில்பேட்டின் அன்றைய பார்வை, அவன் மனதில் ஆழப்பதிந்தது. மனதில் என்று மே அழியாததழும்பு ஏற்பட்டாற் போல அவன் மனதை விட்டு அகலாதிருந்தது.
"ஐயா! முகவரி மாத்திரமே எனக்குத்தெரியும். அதன் உள் ளுறை என்னவென்பது எனக்குத் தெரியாது. முன்னமே நான் இதனைச் சொல்லியு முள்ளேன்' என்ருன்.
'இல்லை, எப்படி இதனை நான் நம்புவது? முகவரி தெரிந்தது தானே உனக்கு, வேறு யாருக்காவது இதனைக் காண்பித்தாயா எனக் கடுகடுத்தார் நீதிபதி,
"ஐயா! இல்லையே இல்லை. நிசமாகவே " என்ருன் டான்ரே நீதியரசர் ஆசனத்திலிருந்தும் ஆத்திரத்துடன் எழுந்தார். *இளைஞனே! சிலமணி நேரம் உன்னைத் தடுப்புக்காவலில் வைக்கப்போகிறேன். உனக்கெதிரான முறைப்பாட்டிற்கு முக்கிய காரணம் இக்கடிதம். ஆகவே இதனே இந் நிமிடமே சாம்பராக்கப் போகிறேன்' எனச் சொன்னவர் தீயை மூட்டினர் கடிதத்தை அத னுள் எறிந்து அது எரிந்து சாம்பராகுமட்டும் அசையாது அவ்விடத் திலேயே நின்ருர்,
"யாராவது இது சம்பந்தமாக விசாரித்தால் ஒன்றுமே தெரி யாதெனச் சொல். நீ தப்புவதற்கு அது தான் ஒரே ஒரு வழி' என் ரூர் நீதிபதி
என்ருண் டான்ரே களைப்பு நீங்கியவன்போல்,
8 懿
"அப்படியே செய்வேன். ஐயா! தங்கள் பேருதவிக்கு நன்றி
 

'இன்னுங்கேள்! நீ நிரபராதி என நிரூபிப்பது என்னைப் பொறுத்தது' என்றவர் மணியை அழுத்தினர்.
பொலிசார் உள்ளே நுழைந்தனர். அவர்கள் காதுகளில் வில் பேட் ஏதோ மெதுவாகக் கூறிஞர். பொலிசார் டான்ரேயை வெளியே கூட்டிச் சென்றனர். கதவும் சாத்தப்பட்டது.
வில்பேட் அவனைப் போகவிட்டு பின்னுல் ஆராய்வுடன் நோக்க மிட்டார். கதவு தாளிடப்பட்டதும் சிந்தனையில் மூழ்கினர். அவர் தலே சுழன்றது. 'தீர்ப்புத் தீவிரமாக வழங்கப்படவேண்டும், தாமதிப் பேணுகில் அதன் விளைவு என் தலையையே கொண்டுபோகும்' என்ற வர் பொத்தெனத் தன் நாற்காலியில் விழுந்தார். கைகளில் முகத் தைப் புதைத்தார்.
தீர்க்கமான முடிபு கண்டவர் தலையை நிமிர்த்தினர். 'த: கையால் மேசையை அறைந்தார்' நான் அவனை விடுதலை செய்யவே மாட்டேன். அப்படிச் செய்வேனுகில் நான் மாத்திரமன்றி, என் சந் ததி முழுவதுமே பழிவாங்கப்படும். காலமோ பயங்கரமானது, அதி காரம் நிலையற்றது, நீதி தவறியது. அவன் கூறியவை உண்மையா ஞலும், அக்கடிதம் ஆ! கடவுளே! அக் கடிதம், என் தகப்பணுருக்கே அது எழுதப்பட்டுள்ளது. எவருக்காவது அதன் உள் உறை தெரிய வந்தால், ஐயோ! என் கதி என்னுகும்! என் குடும்பம்! என்சுற்றம் தான் என்ணுகிப்போம். அழிவு அழிவு' எனக் கதறிஞர் தனி மையில்,

Page 11
。 10
(3) தீவில் சிறை
சின்னஞ் சிறிய ஒர் அறை. பொலிசார் டான்ரேயை அதனுள் தள்ளித் தாளிட்டனர். அதற்குச் சாளரங்கள் சில இருந்தன. இரும் புக்கம்பிகள் மாட்டப்பட்டிருந்தன. மணியுமோ மாலே நாலு அடித் தது. சிறிது நேரத்தில் இருள் அவன் தங்கிய அறையை மூடியது. அவனுே தீர்ப்புத் தனக்குச் சாதகமாக அளிக்கப்படும் என நம்பினுன் , ஆவலுடன் விடுதலை எப்போ, எப்போவென எதிர்பார்த்தான். இருளையும், தனிமையையும் பொருட்படுத்தாது பொறுமையாக இருந் தான். ஆனல் எவரும் அவனை விடுவிக்க வரவில்லை. எட்டியும் பார்க்க வில்லை. நேரமோ வேகமாய் ஓடியது.
இரவு பத்து மணியாகியது. சத்தம் சஞ்சடி காணப்படவேயில்லே. அறையைச் சுற்றி நடந்தான். சாளரங்கள் வழியே பார்த்தான். ஒரே கும் மென்ற இருள் குவிந்திருந்தது. அவன் தேகம் சில் எனக் குளிர்ந்தது. ஆந்தை அலறும் சத்தம் அவன் காதுகளைத் துளைத்தது. மனம் களை கொண்டு தடுமாறியது. கவலை கொள்ள ஆரம்பித் தான் டான்ரே.
ஏதோ சத்தம் தொலையில் கேட்டது செவிகளே அத்திசை திருப்பினுன் இருளையே துளைப்பது போல் கண்களைத்திறந்து நோக் கிஞன். யாரோவரும் காலடி ஓசை எட்டியது. அது தன் அறைப் பக்கம் நோக்கி வருவதை அறித்தான். விடுதலே தனக்கும் கிட்டிய தென நினைத்துக் திடங் கொண்டான். கவல் நீங்கி மனம் பூரித்தான். இரவு பத்து மணி. கதவு திறக்கப்பட்டது. வாசலில் பொலி சார் நின்றனர். எத்தனைபேரென அந்நேரம் அவனுல் மதிப்பிட முடியவில்லை.
'நீ உடனே எங்களுடன் வரவேண்டும்' என்ருன் ஒருவன். *திரு. வில்பேட்டின் கட்டளை' என்ருன் மற்றவன்.
இவற்றைக் கேட்டதும் டான்ரே பெருமூச்செறிந்தான். விடு தலை அடைந்தாற்போல் நிம்மதி கொண்டான், வெளியில் தெரு வோரத்தில் ஒர் குதிரை வண்டி ஆயத்தமாகவிருந்தது. பொலிசார் வண்டியில் ஏறும்படி அவனைப் பணித்தனர். ஒரு வார்த்தையுமின்றி
 

ஏறிக்கொண்டான். அவனைச் சூழ நாலு பொலிசாரும் வண்டியில் அமர்ந்தனர். வண்டி நகர ஆரம்பித்தது. படிப்படி அதன் வேகம் அதிகரித்தது. வண்டிக் கதவு சாத்தப்பட்டிருந்தது. அதனுல் போகும் வழி அவனுக்குத் தெரியாதிருந்தது. தன்னை தானிருந்த ஒட்டே லுக்குத்தான் கொண்டு செல்கின்றனர் என நினைத்தான். ஆனல் வண்டி குறித்த இடத்தை அடைந்தாற்போல் திடுமெனத் தரித்தது. அது ஒர் துறைமுகம். அங்கு நாலா பக்கமும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. பூரண சந்திரன் போல் துறைமுகம் பூராகவும் அவை ஒளி பரப்பின. கடல் அலைகள் விளக்கொளியில் பளீர், பளிர் என மின்னின. வண்டியிலிருந்து இறங்கும்படி டான்ரேயைக் கட் டாயப் படுத்தினர். வண்டியில் இருந்தவன் அங்கு வீசிய காற்றை உணர்ந்தான். அலைகளின் மோதலையும் கேட்டான். அது ஒர் துறை முகம் என, அவன் அனுபவம் அவனுக்கு வெளிப்படுத்தியது.
ஆச்சரியம் அவனைத் திகைப்புறச் செய்தது. எனினும் அமைதி யுடன் கீழிறங்கினன். துறையில் சிறிய கப்பலொன்று நிற்பதைக் கண்டான். மாலுமி அக்கப்பலைத் தாங்கி பயணத்திற்கு ஆயத்தமான நிலையில் நிறுத்தி வைத்திருந்தான். பலவந்தமாய்க் கப்பலில் அவனை ஏற்றினர் பொலிசார், கப்பல் நீரைப் பிளந்து விரைந்து சென்றது.
"என்னை எங்கே கொண்டுபோகின்றீர்கள்' என்ருன் டான்ரே
"கெதியில் இடம் தெரியவரும். அதற்குமேல் நாம் ஒன்றுமே சொல்லப்படாதென்பது நீதிபதியின் எச்சரிக்கை" என்றனர்.
டான்ரே மெளனமானுன், கடும் காற்றுவீசியது. அலைகள் மோதும் சத்தம் அவன் மோனத்தைக் கலைத்தது. சுப்பலை வலிக்கும் தண்டுகளின் ஒசை மள மள வென அவன் செவிகளில் ஒலித்தது. அதே சமயம் கடல் அலைகள் போன்று அவன் மனதில் எண்ண அலைகள் உருண்டோடின. ஒன்றன் பின் ஒன்ருய் மலைபோலும் குவிந் தன. ஒன்ருே டொன்று மோதி பெரும் இரைச்சலை உண்டாக்கின. அவன் செல்லும் கடல்போல் அவன் மனமும் கொந்தளித்தது. அலைகள் வாய்ப்பட்ட மரக்கிளை போன்று அவன் தன் எண்ண அலை களில் சிக்கி அவதிப்பட்டான்.
கப்பல் துறையைக் கடந்ததும் கப்பலோட்டி, வலிக்கும் தண் டுகளை உள்ளே போட்டான். நிதர்னமாகப் பாயை விரித்தான். கப்பல் காற்று வேகத்தில் குறித்த இடம் நோக்கிப் பறந்தது. தரை யும் கண்ணுக்குத் தெரியாது மறைந்தது. டான்ரே தன்னச் சூழ்ந்துள இருள் வழியே, உற்றுப்பார்த்தவண்ணம் இருந்தான். எவ்வி டம் தன்னைக் கொண்டு செல்கின்றனர் என்பதையறிய ஆசித்தான்.
ஆனல் போகும் திசை அவனுக்குத் தெரியவில்லை. மேலே அண் ணுந்து வானத்தை நோக்கிஞன், ஒரே இருள் போகும் ಆಲ್ರೌಢಿ
1. -

Page 12
கருமேகங்கள் கவிந்திருந்தாற்போல் தோன்றியது அவன் கண்களுக்கு மனம் நொந்தான். துன்பம் அவனே துடிதுடிக்கச் செய்தது.
கப்பல் திசை திரும்பியதைக் கவனித்தான். அவன் அமைதி மீண்டும் கலைந்தது. மங்கிய ஒளியில் கூர்ந்து பார்த்தான். உண்மையைக் கண்டே கொண்டான். தான் செல்லும் இடம் எதுவென அறிந்தும் விட்டான். இதுவரை தான் கொண்டிருந்த நம்பிக்கை வீண் போகி யதே எனப் பதை பதைத்தான், விடுதலை அடைவேன் எனக் குடித்த மனப்பால் கசக்கும் காடியாக மாறியது. பைத்தியம் பிடித்தவன் போல் பிதற்றினன். தன் இதயம் நின்றுவிடுமோ எனவும் பயந்
தான். பாவம் அவன் கைதி, என் செய்வான்? ஒ! என அலறியும்
விட்டான்டு பேயைக் கண்டவன் போல் துள்ளிப்பாய்ந்தான் தேகம் நடுங்கியது 'அதோ அந்தச் சிறைச்சாலே!' எனக் கரங்களை உயர்த்தியவாறு உரத்துக் கத்தினன், -
ஆம். அது ஆயுள் கைதிகள் வதியும் சிறை, உலகிலேயே பயங்கரமிக்க மறியற்சாலை அரசியல் விரோதிகள், அதிகாரத்துரோ கிகள், இறுதிமட்டும் அடைத்து வைக்கப்படும் அப்போதைய அரசி யல் அநீதிகளின் ஞாபகசின்னம், அதன் பெயர் சாற்முேடிசில் '
பிரான்ஸ் தேசத்தில் அதிபழமையான சிறைச்சாலை இதுவே. சிறைக்கோட்டை எனவும் அழைப்பர். கற்பாறை யொன்றில் கல் லால் கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய தனித்தீவில் நிரந்த மாய் அமைந்த பாரிய கட்டிடம் எவருமே அதிலிருந்து தப்பியோட முடியாது, அரண் செய்யப்பட்ட அதிபலம் வாய்ந்த கோட்டை பல பயங்கர செய்திகள், அதனைப் பற்றி மக்களிடையே பரவியுள்ளன. காண்போர் திகில் கொள்ளும் கொடுர நிகழ்ச்சிகள் பல இங்கு நடந் துள்ளனவாம். கைதிகள் அனுபவித்த அநீதிகளுக்கே அளவில்லை. அந்நூற்ருண்டில் பிரான்சில் விதிக்கப்பட்ட அநீதித் தீர்ப்புகள் செயற்படும் செயலகமாக இருந்தது இக் கோட்டைச் சிறை
என் செய்வான் டான் ரே! நிரபராதி அவன். கொடுமையின்
சின்னம் போலும் வானளாவி நிற்கும் சிறைச்சாலையை நெருங்கிச்
செல்லச் செல்ல, அவன் மன்ம் புழுங்கியது. தேகமோ வியர்த்துக் குளிர்ந்தது, பொறுதி இழந்தவன் தன்னை யறியாமலே கோபா வேசங் கொண்டான் தீப்பொறி கக்கும் கண்களால் பொலிசாரை வெறித் துப் பார்த்தான். அவன் மன நிலையை அறிந்துகொண்ட பொலிசார்,
நண்பனே ! நீ போகும் இடம் அதுதான். (உன்) விேய காலம் முழுவதும் நீ தங்கவிருக்கும் சிறைச்சாலை, உன் புதிய இருப் பிடம்" என்றனர்.
இதனைக் கேட்டதும் டான்ரே ஆத்திரம் கொண்டான். கோபம்
கட்டுக்கு மீறியது. தன்னையே அடக்கும் சக்தி இழந்தான்கு 12
 
 
 
 
 

• ' நான் சுத்தவாளி. பாதகம் ஒன்றும் நான் செய்யவில்லையே. நான் புரிந்த குற்றம் தான் என்ன? எனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு இதுதானா? விதிக்கப்பட்ட ஆயுள் சிறைவாசம் நீதியுளதா? ஆ ! கடவுளே ! இது போலும் அநியாயம் உலகிலுண்டா? இப்பாழடைந்த சிறைச்சாலையில் நான் புகப் போவதேயில்லை'' என்றான் டான்ரே.
எழும்பியவன் தன் பெலமெல்லாம் கொண்டு, கடலில் பாய உன்னினான். கப்பல் ஓரமாக ஓடிக் கடலில் குதிக்க முயன்றான். அவர்கள் பிடியிலிருந்து தப்ப வழிதேடினான். -
ஆனால் வழி பிறக்கவேயில்லை. விதி அவனுக்கு விரோதி. பழியொன்றும் அறியாதவன். உண்மைத் தேசபக்தன்.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய சீரிய குணங்கள் மூன்றும் பொருந் திய உத்தம குணசீலன். ஆனால் இப்போது, ஓர் கைதி அவன் ." தப்ப முடியாது தவித்தான், சிறை, அவனுக்கு அளிக்கப்பட்ட சன்மானம்.
இருகைகள் அவன் தோள்களைப் பற்றின. உதறினான் பிடியிலி ருந்தும் விடுவிக்க முயன்றான். இரும்புப்பிடிகள் அவன் இடுப்பிலும் தாவின. ஒரு தள்ளுத் தள்ளினர் பொ லி ச ா ர். தொம் மெனக் கப்பல் அடியில் மல்லாக்காய் விழுந்தான் டான் ரே. அவன் வயிற்றில் ஒருவன் தன் முழங்காலை ஊன்றி அசையாது அவனை அமத்திக்கொண்டான். மற்றவன் துப்பாக்கி யொன்றை அவன் மார் பிற்கு நேரே நீட்டிக் குறி பார்த்தான்.
* " அசைந்தாயானால் உன் மூளையைச் சன்னம் சிதறடிக்கும் " என்றான்.
வலையில் அகப்பட்ட மான்போலானான் டான்ரே. கப்பலும் குறித்த இடம் சேர்ந்தது. பாயும் இறக்கப்பட்டது. ஓர் ஒதுங்கு குடாவில், சிறைச்சாலை வாசற்பக்கமாய் நங்கூரம் போட்டனர்.
சிறைக்காவலர் அங்கே காத்து நின்றனர். பொலிசார் டான் ரேயை அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர் கள் அவனை சிறைச் சாலைக் கதவுக்குச் செல்லும் படிகளால் இழுத்துச் சென்றனர். பாதையோ மிகவும் ஒடுக்கம். செப்பமற்ற கற்களால் ஆகியது. டான் ரே தன் இரு கால் களாலும் மாறி மாறி உதைத்தான், மூர்க் கங் கொண்ட வன விலங்கு போல் காவலரைத் தாக்கத்துணிந்தான். எனினும் காவலர் அவனை மேற் கொண்டனர். அவர்கள் பிடி தவ ற வில்லை. மரக்கட்டையை இழுத்துச் செல்வது போல் கொர கொர வெனக் கொண்டு சென்றனர்
கதவுதிறக்கப்பட்டது. இருப்பினால் செய்யப்பட்ட உறுதியான பழைய கதவு, திறப்பு பூட்டினுள் அசைந்தும் ஓர் அவலச் சத்தம் எழும்பியது. டான்ரே நடுங்கினான். உள்ளே எங்கும் ஒரே பசுமை முற்றம் முழுவதும் பச்சை பசேலென க் குளிர்ச்சியாக விருந்தது • சுவர்கள் தானும் வெளிப்புறச் சுவர் களிலும் வெண்மை பொருந்தி
13

Page 13
யன உள்முற்றத்தைக் கடந்ததும் காவலர் கைதிகள் அடைக்கப் பட்டிருக்கும் அறைகளுக்குச் செல்லும் இன்னுமோர் பாதை வழி யாக டான்ரேயைக் கொண்டு சென்றனர். பாதையோரத்தில் ஓர் வெளிச்சம் தரையில் ஏற்றப்பட்டிருந்தது. அவ்வெளிச்சத்தண்டை வந்ததும்,
'இதுதான் உன் இரவு விடுதி" உண்பதற்குப் பாணும், குடிப் பதற்குத் தண்ணீரும், உறங்க வைக்கோலும் நிரம்ப இங்குண்டு. ஒருகைதி இவற்றிலும் அதிகம் எதிர்பார்க்க முடியாதல்லவா?
டான்ரே ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தான். ஆணுல் அதற் குள் ஒரு கை அவனைப் பின்பக்கம் நின்று அறைக்குள் தள்ளியது, கதவும் டக்கெனப் பூட்டப்பட்டது. காவலர் தரையில் இருந்த
விளக்கை எடுத்தனர். ஒன்றுமே பேசாது அப்பால் விரைந்து மறைந்
தனர். -
டான்ரே தட்டந் தனியனஞன், இருள் அவன் சிறிய அறையை
மூடிக்கொண்டது. ஆதரவற்றவன் ஆயுட் கைதியுமானுன்
 
 

(4) இலக்கம் 34 இல, 27
வாரம் ஒன்று கழிந்தது. தன்னந்தனியே ஒர் ஒடுங்கிய அறை யில், டான்ரே ஒதுங் கி வாழ்ந்தான் வெளியுலகம் அவனுக்கு வெறுமையாகவிருந்தது. விண்ணுலகமும் கிட்டாதுபோல் தோன்றி யது. நாலா பக்கமும் அறையைச் சுற்றிப் பார்த்தான். மேலே அண்ணுர்ந்து பெருமூச்சு விட்டான். கீழே தரையைத் தன் காலால் உரத்து மிதித்தான். தன்னைச் சூழ்ந்துள்ள சுவர்களே ஒவ்வொன்ரு கக் கைகளால் தாக்கிப் பெலம் பார்த்தான். அவன் எப்படிச் செய்தபோதும், பயன் ஒன்றும் அவனுக்குக் கிடைக்கவில்லை.
அமைதி நிலவியது. சத்தம் சிறிதேனும் கிடையாது. காவ லாளர் காலடி ஓசை மாத்திரம், இடையிடையே அவன் காது இளுக்கெட்டியது. ஆண்டவனே அடிக்கடி நினைப்பான் தனிமையின் வேதனை தாங்கமுடியாது இறைவனை வேண்டினுன் சிறு வயதில் தன் தாயார் கொடுத்த செபங்கள் இப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தன. மனதால் அன்றி வாய்விட்டும் உன்னத கட் வுளை உரத்துக் கூப்பிட்டான். கரங்கள் கூப்பி உருக்கத்துடன் தொழுதான். வானுேக்கி வாராயோ ! எனக்குதவி தா ரா யோ இறைவா! என இரந்தான். கண்களில் நீர் வழிய அழுது புலம் பிஞன். பாவம் அவன் 1 என் செய்வான். கைதியே கைதியானுன்
G|Taip Gori அவன் அறைப்பக்கம் வந்த்தும், கதவண்டைஓடுவான். அவர்களைப் பெரும் சத்தமாக அழைத்திடுவான்.
"நான் குற்றமில்லாதவன் எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு நீதியற்றது. தேசாதிபதியை நேரில் நான் காண வேண்டும் நிரப் ராதி நான் என அவருக்கு நிரூபிக்க வேண்டும்' என முறையிடு வான்; காவலாளரோ அவனைக் கேலி பண்ணினர். அவனை வெறுப் புடன் பார்த்து நகைத்தனர். 。 சகிக்க முடியாத சஞ்சலம் கொண்டான் டான்ரே, உலகமே தன்னை வெறுத்தாற்போல் அவன் உணர்ந்தான். கடவுளுமே தன்னக் எண்ணினன். நம்பிக்கை முற்றும் இழந்தவன் தன்

Page 14
னுள் சீறிச் சினந்தான். காவலருடன் கலகஞ் செய்தான் வாயில் வந்தபடி அவர்களைத் திட்டினுன் எல்லோரையும் சபித்தான். தற் கொலை செய்யவும் தீர்மானித்தான். ஆனல் அவன் உயிர் என்றும் போல் அவனுடனேயே தங்கியது.
வருடங்கள் பல உருண்டோடின. காலம் அவன் மனதைத்
தேற்றியது. அவனின் மனக்காயம் ஆறிக்குணமாகியது. துன்ப
மெல்லாம் தணிந்து துணிவு ஏற்பட்டது. வாழ்க்கையின் உண்மைக் கோலத்தை தனிமையில் உணர்ந்தறிந்தான் 'எல்லாம் விதி, அவன் சித்தம்' எனச்சொல்லி முற்றிலும் இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஏழு வருடங்கள் இவ்வாறு கடந்தன. ஓர் நர்ள் நிகழ்ந்த ஒரு சம்பவம், அவன் வாழ்வில் புதிய திருப்பத்தை உரு வாக்க உதவியது. அவன் எதிர்காலம் முதன்மை பெற்று விளங்க வழி வகுத்தது. மாலை ஒன்பது மணி தன் அறையில் செப்பமற்ற மரக்கட்டிலில் படுத்திருந்தான் டான்ரே. எங்கிருந்தோ ஒரு சத்தம் இருந்தாற் போல் கிளம்பியது. ஓசை எழும்பிய திசையை படுக்கை யில் கிடந்தபடியே கவனித்தான். மெல்லத் தலையை உயர்த்தி ஒரு காதில் கைவிரித்து உற்றுக் கேட்டான். 'எலிகளாக இருக்கும்" என்ருன் தனக்குள்
கல்வில் இரும்பினுல் அடிப்பது போன்ற ஒசை அடுத்தாற் போல் கறக் கறக் என சுவரைச் சுரண்டும் சத்தம் மாறி மாறி எழும்பியது. படுக்கையில் தன்னை நிமிர்த்தி, கால்களைத் தரையில் ஊன்றி, சுவர்ப்பக்கமாய் கட்டில் ஒரத்தில் அமர்ந்தான். சத்தம் வரும் திசையை மீண்டும் அவதானித்தான். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவ்வோசை தொடர்ந்து நீடித்தது. விஞ்ஞானியொருவன், வானத்தில் புதிய விண்மீனென்றைக் கண்டவன்போல் துள்ளிக்குதித் தான் டான்ரே. கைகளே விரித்து ஆகா! என ஆர்ப்பரித்தான்.
'இது யாருமன்று. என்னைப் போலும் ஒரு கைதி அவன். தப்பியோட வழி தேடுகிருன் சுவரைக் குடைந்து கள்ளப்பாதை யொன்றைத் திறக்கத் திட்டம் வகுத்துள்ளான். பலகாலம் விடாதும் முயற்சித்துள்ளான்" என்ருன்.
அந்த எண்ணம் அவனுக்குத் துணியைக் கொடுத்தது, உற்சா கத்தைத்தூண்டியது. அறையின் ஓர் மூலையை நோக்கி விரைந்தான், சுவரின் கற்களைப் பதம்பார்த்தான், ஒவ்வொன்ருகப் பரிசோதித்தான். தளத்திலிருந்தும் ஓரடிக்குமேல் ஆட்டம்கண்ட கல்லொன்றைக் கவ னித்தான். காலால் ஓர் உதை போட்டான். பொத்தெனத் தரை யில் கல் வீழ்ந்தது. அக்கல்லை எடுத்தான். தன்படுக்கை ஒரமாயுள்ள சுவரின் ஒரு பகுதியைத் தாக்கினுன் மும்முறை ஊன்றி அடித்தான்.
அக்கணமே தான் முன் கேட்ட சத்தம் நின்றுவிட்டதை வியப்புடன்
அறிந்தான், பலமணித்தியாலங்கள் கழிந்தும், அச்சத்தம் திரும்பக் Get .511 ll Goluflóða).
16
 

"அவன் ஓர் மறியற்காரன். நிச்சயமாகவே" என்முன் டான்ரே பெரும் மகிழ்வுடன், அடுத்தநாளும் அச்சத்தத்தை எதிர்பார்த்த்ான். ஆளுல் பெரும் ஏமாற்றம் அடைந்தான். நாட்களும் மூன்றுகின. மணித்தியாலங்களோ எழுபத்திரண்டாகின. சத்தம் எழும்புவதின் அசுகை எள்ளளவும் புலப்படவில்லை.
காவலர் நடமாடும் அரவம் கேட்டது. கதவுப்பக்கம் திரும் பியவன், சூப் நிரம்பிய பாத்திரத்தை காவலாள் தன் அறைக்குக் கொண்டுவருவதைக் கண்டான்.
"என் கோப்பை உடைந்துவிட்டது' என்ருன் டான்ரே தயக் கத்துடன்,
காவலாள் அவனை வேண்டியமட்டும் ஏசிஞன்.
'நீ கொடுப்பதெல்லாம் உடைத்தே தள்ளுகிருய், கோப்பைக்கு நாங்கள் எங்கே போவது" எனக் கடிந்தான்.
'இனிமேல் உனக்குக் கோப்பை கிடையாது. இப்பாத்திரம் தான் கொடுபடும்" என்ருன் தொடர்ந்து.
அப்பாத்திரம் கைபிடியுள்ளது. காத்திரமான இரும்பினுல் செய் யப்பட்டது. மிகவும் பாரமும் உள்ளது. அதுவும் ஆண்டவன் அளித்த பேருதவியென எண்ணினுன் டான்ரே. அதே நேரத்தில் அவன் ஆவலுடன் எதிர்பார்த்த சத்தம் மீளவும் கேட்கத் தொடங்கியது. அவதியாக உணவை அருந்தினன். பானத்தின்று சூப்பையும் பருகி முடித்தான். தன் படுக்கையை சற்றுத் தள்ளினுன், பாத்திரத் தைக் கையில் எடுத்தான். சுவர்ப்பக்கம் மெதுவாகச் சென்ருன். அதிலுள்ள சாந்தையெல்லாம் சத்தப்படாது சுரண்ட ஆரம்பித்தான். ாவராவது வருவரோ எனவும் பயந்தான். நாளாந்தம் சொற்பம் சொற்பமாகச் சிறிதும் சலியாது. சுரண்டினுன், எடுக்கப்பட்ட சாந்தையெல்லாம், தன் அறையின் மூலை யொன்றில் பரவி, மண் ணிஞல் மூடி மறைத்தான்.
சுவரிலுள்ள சாந்து முழுவதையும் மூன்று நாட்களில் அகற்றி விட்டான். கற்கள் மெல்ல நழுவத் தொடங்கின. அவனின் விடா முயற்சி ஈற்றில் பயனளித்தது. ஓர் அடிச்சதுரமான வெளியொன்று பூர்த்தியாகியது, அதுகண்டு ஒருகால் களித்தான், மறுகணம் பயந் தான் டான் ரே.
வேகமாய் மூச்சு வாங்கினன். அத் துவாரத்தின் வழியால் தன் தலையை நீட்டிப் பார்த்தான். எவரையும் அவன் காணவில்லை. சத்தம் எதுவும் கேட்கவுமில்லே. ஆனுல் பூமியின் கீழிருந்து ஒரு குரலொலி கேட்பது போல் நினைத்தான்.
* நீ யார் ?' எனக் கேட்டது அக்குரல். 4. 17

Page 15
" நான் ஒர் கைதி. எனது இலக்கம் முப்பத்தினுலு நான் ஒர் பிரான்சியன் எனதுபெயர் எட்மண்ட் டான்ரே " என்ருன்,
* நீ செய்த குற்றம்தான் என்ன ? "
* நெப்போலியன் பொனப்பாட் நாடு திரும்புவதற்கு ஆத ரவளித்தவன் என்ற பழி என்மேல் சுமத்தப்பட்டுள்ளது. ஆளுல் அது தவறு. அப்படி ஒன்றும் நான் செய்யவேயில்லை. நீர் எவ்வளவு காலம் இங்கு சிறையிருக்கின்றீர்?' என்ருன் டான்ரே.
* பதினுெரு வருடங்கள் ' என நினைக்கிறேன். ' உனது அறையின் வழியால் எவ்விடம் செல்லலாம் ? '
* ஒர் பாதை அதன் பின் சிறைச்சாலை முற்றம் ' என்ருன் டான்ரே
" ஆகா! அப்படியா ! எனது பலகாலத்திட்டம் தவிடுபொடி யாகிவிட்டது. எனது முயற்சி யாவும் வீணுகியது. என் எண்ணங்கள் எல்லாம் பிழைத்துவிட்டன. உன் அறைச்சுவரை சிறைச்சாலை வெளிச்சுவரென இவ்வளவுநாளும் கருதினேன். கடலுக்கண்மையில் உள்ளதெனவும் உத்தேசித்தேன்'
*நீ யார்?' என டான்ரே விணுவினுன்,
"நான். நான். இலக்கம் இருபத்தினுலு பொறு! நான் வருகிறேன். நீ நேரில் என்னைக் காண்பாய்' எனத் தடுத்தது அக் குரல்.
சில நிமிடங்களில் டான்ரே நின்ற தரையின் ஒரு பகுதி பெயர்ந்தது. சட்டெனப் பின் வாங்கினன் டான்ரே. மண்ணும் கற்களும் பொலுபொலுவெனக் கீழே விழுந்தன அவன் நின்ற இடத்தில் ஒரு வெளி உண்டானது. அதன் வழியாக ஒரு மனிதன் மெல்லத் தவழ்ந்து ஏறிஞன்.
அவன் உருவத்தில் குள்ளன். எலும்பும் தோலுமாகத் தோன் றியது அவன் தேகம். நீளமான அவன் தலைமயிர் நீண்டு நரைத் திருந்தது. ஆனல் அவன் தாடியோ கறுத்து மார்பு மட்டாய் நீண் டிருந்தது. கண்கள் கருமை நிறம் பொருந்தியவை. அளவிலோ மிகப் பெரியன. அவன் முகம் அவனின் அகத்தைப் பிரதிபலித்தது. மனத்தூய்மை, ஆழ்ந்த அறிவு, நுண்ணிய புத்திக் கூர்மை யாவும் பளிங்குபோல் எடுத்துக் காட்டியது. அவன் நெற்றியில் படர்ந்தி ருந்த கோடுகள், அவனின் முதுமைப் பருவத்தை வெளிக்காட்டின. அவன் அணிந்திருந்த ஆடையோ அலங்கோலம், பார்ப்போர் கண் களுக்கு அருவருப்பு பொத்தல்கள் பொருத்துக்கள் பல பொருந்தி பன அவன் வயது அறுபதுக்கும் அறுபத்தைந்துக்கும் இடையில் இருக்கலாமெனக் கணித்தான் டான்ரே.
8
y

முதன் முறை அவனைக் கண்டதும் பயந்தான் இறந்தவர் ஆவி தன் முன் தோன்றினுற்போல் மனங்குழைந்தான். சிறிது பின் வாங்கினுன் -
'நீ யார்?' என உரத்துக் கேட்டான். அந்த அந்நியன் மெதுவாகச் சிரித்தான் உள்ளக் களிப்பால் எழுந்த உண்மைச் சிரிப்பன்று, ஆணுல் தன் நெடுநாட் துன்பம் துடைத்தற்கு, நண்பனுெருவன் கிடைத்தான் என்ற நினேவில் பிறந்த இன்னல் நிறைந்த புன்முறுவல்.
"என் பெயர் அபேபாரியா. நான் ஓர் இத்தாலியன் நண்பா ! நானும் உன்னைப்போல ஒர் அரசியல் கைதி. பதினுெரு வருடங்க
ளாக இச் சிறையில் தங்கியிருக்கிறேன். தப்பி ஓடுவதற்கு இவ் வளவு காலமும் என் னு லான முயற்சி செய்தேன். இன்னும் தொடர்ந்தே வழி தேடுகிறேன்' என்றவன் சிறிது தாமதித்தான்,
'தம்பி என் முயற்சியெல்லாம் வீணுகியது. இனிமேலும் எனக்கு வெற்றி கிடைக்குமென்பது சந்தேகம் என் வாழ் நாள் முற்றும் பாழாகியது. இனிமேலும் எனக்கு மீட்சி வரப்போவதே யில்லை' எனத் துக்கத்துடன் சொன்னன்.
*ളൂ :) { இல்லை எடுத்துக்கொண்ட முயற்சியைக் கைவிடா தேயும் தப்புவதற்கு வழி இன்னும் உண்டு காலமும் எமக்கானுல் காரியம் சித்தியாவது திண்னம். விடாமுயற்சி நிச்சயம் வெற்றி அளிக்கும். நான் இறுதிவரை உமக்கு உறுதுணையாக இருப்பேன்" என்ருன் டான் ரே.
"என்னைப் பொறுத்தவரை எனக்கு விடுதலை இவ்வுலகிலில்லை, என் திட்டங்கள் கைகூடவே கூடாது. நான் தப்பவேண்டிய காலம் கடந்து விட்டது. வயதுமோ போய்விட்டது தம்பி என்னைப்பார் இனிமேலும் நான் தப்பி உலகில் வாழ முடியுமோ என நீயே (2)F for Gay ?
'ஆனல் நீ இளைஞன். உனக்கு வயதுண்டு வாழ வழியு முண்டு, காலமும் உன்னுடையது. எனினும் நண்பா ! இவைகளைப் பற்றி நாம் பின்னல் ஆறுதலாக ஆலோசிப்போம். உமது வர லாற்றை எனக்குச் சொல்லும் அதனை அறிய எனக்கு ஆசையாக இருக்கின்றது' என்ருன்,
'அதெற்கென்ன' என்ற டான்ரே தனக்கு நேர்ந்த யாவை யும் நேர்மையுடன் சொன்னுன் ஒன்றுமே ஒழியாது, ஆதி தொடக் *- கம் அந்தம் ஈருக நடந்தவையெல்லாம் எடுத்துக் கூறினுன் தான் சிறைச்சாலைக்கு வர வேண்டிய வரலாற்றையும் விரிவாக விளக்கிஞன். "அவன் சொல்லுமளவும் மெளனமாகவே கேட்டுக்கொண்டிருந்
தார் அபேபாரியா டான்ரே முற்றும் சொல்லி முடித்ததும், அவ் வயோதிபர் பல கேள்விகளைக் கே. ர் மரேலில் இடுள்ள
9.

Page 16
நண்பர்களைப்பற்றி விசாரித்தார். வெளிநாட்டு வியாபார விவகாரங் களில், அவனுடன் தொடர்பான தோழர்கள் பலரையும் தொடர்ந்து விசாரணை நடத்தினுர், துப்பறிபவன் போன்று அவனது பங்காளி கள் பாவரையும் ஒவ்வொருவராக நெடுநேரம் ஆராய்வு செய்தார். உண்மையைத் துலக்கும் உகந்த வினுக்கள் பல, ஒன்றன்பின்னுென் முய்ப் பொறித்தார். அவரின் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தகுந்த
பதில் கொடுத்தான் டான்ரே.
அபேபாரியா மேலும் தன் விசாரணையைத் தொடர்ந்தார். * பாரோன் கப்பலில் உள்ள உனது சகபாடிகளில், எவராவது உன் சத்துராதியாக இருந்திருக்கலாம் என நினைக்கின்றீரா? என்ருர் அவ்வமயம் டான்ரேயின் மனம் பாரோன் கப்பலுக்கோடியது, அநேக ஆண்டுகளின் முன் நிகழ்ந்தனவெல்லாம் நினைவிற்கு வந்தன. தனக்குப் பல காலம் விரோதியான ஒருவன் அங்கு இருந்தான் என்பது ஞாபகத்திற்கு வந்தாற்போல்,
**ஆம் ஒருவன் இருந்தான். என்னில் மனக்கசப்புக் கொண் டிருந்தான் அவன். காரணம் எதுவோ என்பது அன்று எனக்குப் புரியவில்லை. தளபதி லெக்லே நெப்போலியனுக்குக் கடிதம் தரும் போது, அவன் நாங்களிருந்த இ டத் தை ச் சுற்றி உலாவியது நினைப்பாயிருக்கிறது" என்ருன்,
அபேபாரியா சிரித்தார். "லெக்லேக்குப் பின் பார் போன் கப்பல் தளபதியாக யார் பொறுப்பேற்க வேண்டும்?" எனக் கேட்
Tř
பதிலளிக்க வாய் திறந்தவன் மெளனமானுன் முன் அறிந்தி ராத உண்மையொன்றைக் கண்டுபிடித்தவன்போல் தடுமாறினன். இகைப்படைந்தவன் சிறிது நேரம் சிந்தித்தான்.
வேறு யாருமன்று, டாங்கிளேதான் பொறுப்பை ஏற்க வேண்டியவன். அவனே அப்பதவிக்கு அடுத்த உரிமையாளன்' என்ருன்.
அபேபாரியா தலையை அசைத்தார். உண்மையை விளங்கியவர்,
*" எனக்கு மனிதரைப்பற்றி நன்ருக விளங்கும். அவர்கள்
நினைவு செயல்களை ஆராய்ந்து அறிவதில் அனுபவம் இயற்கையா ஆவே உண்டு. இறைவன் அருளிய அரிய கொடை. எனவே நான் சொல்லப் போவதுதான் உண்மையான முடிபு. 'தம்பி நீ இறையில் அடைபடுவதற்கு டாங்கிளேயின் சூழ்ச்சி முதற்காரணம்' என்ருர் .
உன் திருமணத்திற்கு தடையாக யாரும் இருந்தார்களா?"
மேஉேடை மணஞ் செய்ய உன்னுடன் எவராவது போட்டி போட்
டார்களா?' என்று மற்றுமொரு கேள்வியைக் கேட்டார் அ:ே
20
 
 

"ஆம், உண்மையாகவே ஒருவன் இருந்தான். அவன் ஓர் செம்படவன். அவன் பெயர் பெணுண்ட், மார்சேலுக்கு நான் திரும் பிய அன்று மாலை, அவன் டாங்கிளேயுடன் ஒரு சத்திரத்தில் இருந்தது எனக்கு ஞாபகம்.
அவர்களுடன் கண்டருே என்ற இன்னுமொருவனும் இருந்தான். ஆஞல் அவன் ஒரு பயந்தவன். சோம்பித் திரிபவன். என் தகப்பனுரின் வீட்டிற்கு அண்மையில் வசிப்பவன். அவர்கள் இருந்த மேசையின் மத்தியில் பேணு ஒன்றும் காகிதம் ஒன்றும் இருந்ததை நான் அறிவேன் என்ற டான்ரே ஏதோ வேறு யோசிப்பவன் போல் பேசாதிருந் தான். பழைய சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்ருய் படத்திரையில் போன்று அவன் மனதில் ஒடின. உண்மையைக் கண்டவன் போல், தன் நடுங்கும் கரங்களைத் தலையில் ஊன்றிய வண்ணம் ஆ அந்த மிருகங்கள்!" எனக் கதறினன்.
'தம்பி! பொறுத்திரு, அந்தக் கடிதம் பரீசிலுள்ள திரு. நோட் டியருக்கு எழுதப்பட்டதெனச் சொன்னுயல்லவா? இப்போது எனக்குப் பட்டப்பகல் போல் வெளிக்கிறது சதி. உன்னை விளங்கிய நீதிபதியின் பெயரென்ன?
'திரு டி வில்பேட்' என்ருன் டான்ரே.
"ஆகா, எனக்கு பரீசிலுள்ள நோட்டியர் என்ற பெயருடைய ஒருவரை நன்கு தெரியும், அவர் நெப்போலியன் பொனுப்பாட்டே யின் ஆதரவாளர் என்பதும் நான் அறிந்திருந்தேன். அன்ஞரின் முழுப்பெயர் திரு நொட்டியர் வில்பேட், உண்மையில் இந்த நோட்டியர் உனக்குத் தீர்ப்பளித்த வில்பேட்டின் தந்தை" என்ருர் திடமாக
இதனைக் கேட்டதும் டான்ரே வீரிட்டுக் கதறிஞன். அவன் மனம் அவனை, அன்று அவனை விளங்கிய, நீதிபதி வில்பேட்டின் முன்னிலையில் நிறுத்தியது. விசாரணையின் போது திடீர் மாற்றம் அடைந்த வில்பேட்டின் முகம், டான்ரேயின் மனதில் பூரண சந் திரன் போல் உதித்தது. அக்கடிதத்தை வாசித்ததும் அவன் முகம் ஒடிக்கறுத்ததும் ஞாபகத்திலிருந்தது. தாமதமின்றிக் கடிதத்தைத் தீயில் இட்டுச் சாம்பராக்கியதும், இரவிரவாய்த் தன்னைக் & ப்பலில் ஏற்றி, சிறைச்சாலைக்குக் கடத்திச் சென்றதும் என்ன காரணத்தினுல் என்பது, இப்போது அவனுக்குத் தெளிவாயிற்று வில்பேட்டின் சுய நலமும், தன்மீது அவன் கொண்ட சந்தேகமும்தான், தன்னை இக் கதிக்கு ஆளாக்கியது எனத்துணிந்தான் டான்ரே. அவன் உதடுகள் ஆத்திரத்தினுல் துடித்தன. தன் எதிரிகள்மேல் வன்மம் கொண்ட வன், டாங்கிளே பேணுட் வில்பேட் எனப் பல முறை உச்ச ரித்துப் பற்களை நறுமினுன்
2.

Page 17
அபேபாரியா எழுந்தார். அவன் தோள்களில் தன் கரங்களைத் தாவினுர் ,தாளைக்கு நிலைமை சரியாகும். என் அறையில் என்னைச் சந்திக்கவும்" என்ருர்,
டான்ரே தலையை அசைத்தான். இருவரின் அறைகளையும் இணைக்கும் இரகசிய பாதை வழியாக நுழைந்து தன் அறைக்குச் சென்ருர் அபே,
டான்ரே தன் படுக்கையில் சரிந்தான். அவன் தேகம் சோர் வுற்றது. களைப்பு மிகுதியால், பல மணி நேரம் அசைவின்றிப் படுத் திருந்தான். ஆணுல் அவன் மனமோ வேகமாய் ஓடிக்கொண்டிருந் 'தது; அவனின் பழையகால விேய நாட்களைத் துரிதமாகக் dras) போட்டது அவன் மனம், அசைபோடும் ஆப்போல் தன்னைக் கைதி யாக்குவதற்கு ஏதுவாயிருந்த சம்பவம் அனைத்தையும் ஒவ்வொன்ருக மென்ருன் அவற்றிற்கெல்லாம் அத்திவாரமான காரணங்கள், வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்த தன் எதிரிகள் யாவரையும் ஆறுதலாய் ஆராய்ந்தான்.
கட்ந்த ஏழு ஆண்டுகளாக விளங்குவதற்குக் கடினமாகவிருந்த நிகழ்ச்சிகள், அன்று அவனுக்குப் பூரணமாகப் புரிந்தன. அமைதி யில் பிறந்த அவன் நெடுநேரச் சிந்தனைகள், அவனுக்குப் புத்து ணர்வு அளித்தாற்போல் உண்மையைக் கண்டுகொண்டான். அதே
痺
சமயம் தன்னைக் குற்றவாளியாக்கிப் பெரும் துன்பத்திற்காளாக்கிய தன் விரோதிகளில் வெறுப்புக் கொண்டான். வெறுப்பு என்றுமே * தணியாத பகைமையாக மாறிற்று
காலம் வரும் அது சீக்கரம் வரும். அப்போது பழிக்குப்பழி வாங்குவேன்' என ஆணையிட்டான். "ஆகா! டாங்கிளே! பேணுட்! வில்பேட் ! உங்களுக்கு விடுக்கும் சவால் இதோ!" எனத் தனக்குள் |சொல்லிக்கொண் டான்,
 
 

(5) புதையலின் புதினம்
அடுத்த நாள் டான்ரே அபேபாரியர் வின் அறைக்குச் சென்ருன்? 1'. உள்ளே நுழைந்தான், அவன் வருகையை எதிர்பார்த்தவர்போல்,
அன்புடன் அவனை வரவேற்ருர்,
சிறிது நேரம் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.
யோசிக்கிருய் என்ருர் அபே, மெளனத் தைக் கலைத்து. Y 'Y
"ஐயா! இப்பொல்லாத சிறையினின்றும், தப்பியோட நான் தீர்மானித்துள்ளேன். நிரபராதியான எனக்கு இறைவன்துணை ஒரு நாள் கிடைக்கும். அந்த நன்ஞள் அண்மையில் என்க்குக் கிட்டும் என்பது என் முழு நம்பிக்கை'
" ஆளுல் பெரியவரே !. நான் செல்லவிருக்கும் வெளியுலகம் எனக்குப் புதியதாகவே தோன்றும் அங்கே எனக்கு கிடைக்கவிருக்கும் பதவி, எத்தன்மையானதோ என்பது, ஒரு பெரும் பிரச்சனையாக என் மனதில் எழுந்துள்ளது. கண்ணியம்மிக்க மனிதனுய், நாகரிக சமுதாயத்தில் சமத்துவம் பெறத்தகுதி வாய்ந்த பெரியவனுய், அன் றேல் முதன்மை வகிக்க உரிமையையுடைய முதல்வனுய், நான் திரும் பப் போகும் உலகில் வாழவேண்டு மென்பது, என் உள்ளத்தில் பிறந் துள்ள ஆசை, அடுத்த பிரச்சனையாகும். எனது இவ்விருப்ப்ை பூர்த்தி செய்ய, எனக்குப் போதிய அறிவில்லை. கையில் பொருளுமோ இல்லை ஒர் எளிய கப்பற்காரன் நான், என்பது உமக்குத் தெரிந்தது தானே. " நீரோ வயதில் முதியவர். கற்றுத் தேர்ந்த பண்டிதர். அறிவு மிக்க கல்விமான். ஆற்றல், அனுபவம் ஒருங்கே அமையப் பெற்ற சிறந்த ஆசான் ஞானம்நிரம்பிய தத்துவஞானி. உலகையே முற்றும் உணர்ந்த உத்தமர் என்னை உமது மகன் எனவே எண்ணும். என் அப்பாவைப் பார்ப்பதுபோலவே உம்மையும் காண்கிறேன். அவரை நேசிப்பது போன்று உம்மிலும் அன்பு கொண்டுள்ளேன்.
எனவே ஐயா ! நான் உம்மைக் கேட்கப் போவது ஒன்றே ஒன்று தான். எனக்கு நீர் கல்விபோதிக்க வேண்டும். அதனுல் என்
23);

Page 18
அறிவு அதிகரித்து விரிவடைய வழி காட்டவேண்டும். ஒரு தனி மனிதனய் பெருமையுடன் வாழ என்னைத் திருத்தி அமைக்க உம் மைத் தயவுடன் வேண்டுகிறேன்.
இவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டிருந்த அபேபாரியா சிரித்தார்.
' மகனே ஒன்றுக்கும் அஞ்சாதே, இவையெல்லாம் இலகு வில் உனக்காகும். எனக்குத் தெரிந்தவையாவும் உனக்குத் தெரிய வரும். நான் செவ்வனே பாடம் சொல்லியுந் தருவேன். ஒய்வு நேரம் எங்களுக்குப் போதியனவு உண்டுதானே, அவற்றைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது, எனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக் கின்றது.
* நீ புகப்பேகும் புதிய உலகில் மேலான பதவி ஏற்கத்தகமை பெற்ற பெரும் மேதை ஆக்குவேன். கிஞ்சித்தும் கவலைப் படாதே தம்பி. பிரபுக்கள் குழுவில் முதலாய் முதலிடம் தாங்கும் பெருமை உனக்குக் கிடைக்கும். நான் நிச்சயமாகவே, நீ விரும் பியதைச் செய்து முடிப்பேன் என வாக்குப் பண்ணுகிறேன். என்ருர், அன்று மாலையில் கைதிகள் இருவரும், கல்வி கற்பதற்குத் திட்டம் போட்டனர். நாளாந்தம் கற்கும் பாடங்களின் அட்டவணை ஒன்றையும் தயாரித்தனர்; அடுத்தநாளே கற்பித்தல் ஆரம்பமாகும் எனவும் தங்களுக்குள் ஒழுங்கும் செய்தனர்.
டான்ரே நல்ல ஞாபசக்தி வாய்ந்தவன். எதையும் இலகுவில் கிரகிக்கும் ஆற்றல் கொண்டவன். தீவிர சிந்தனை, அதிசய நிதானம் அபூர்வ ஞானம் அவன் இயற்கைக் கொடைகள் இத்தாலி, ஸ்பா னியா, ஜேர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முதலில் பயிற்றப் பட்டான். பன்னிரண்டு மாதங்களில் இம் மொழிகளில் தேர்ச்சியும் அடைந்தான். தடங்கல் எதுவுமின்றிப் பேசவும், பிழையின்றி வாசிக் கவும் அவஞல் முடிந்ததுஇ
அத்துடன் நில்லாது, இதிகாசம் அரசியல் துறைகளிலும் இறங்கினர். விஞ்ஞானம் விரிவாகப் போதிக்கப்பட்டது. டான்ரே அதனைக் கற்பதில் காண்பித்த ஆர்வம் வியக்கத்தக்கது.
அவன் படிப்பு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற் றது. வயதில் சிறியோனும், எளிய கப்பலோட்டியுமான டான் ரே இப்போது ஒர் புதிய பிறவியானுன் இதுவரையில் அவன் கல்வி அறி வில்லாதவன். பண்பும் உலக ஞானமும் சிறிதும் இல்லாதவனுயி ருந்தான். ஆனல் அபேபாரியாவின் ஆதரவின் பயனுய், அவனின் இரு குறைகளும் நீங்கி நிறைவுடைய ஆண்மகனுஞன். மெருகு பெற்று மதிப்புடைய பெரும் மேதையுமானுன் டான்ரே.
மேலும் வருடங்கள் சில சிறையில் கழிந்தன. வழமை போல்
ஓர் நாள் அபேயின் அறைக்குள் சென்றன். என்றுமில்லாத அழு 24
 
 
 
 

கைக் குரல் எங்கிருந்தோ எழும்பியது. அபேயின் கட்டிலை உற்று நோக்கிஞன் டான்ரேஜ் அதில் அறிவு மயங்கியவர் போல், அவர் படுத் திருப்பதை அவதானித்தான். அவர் முகம் நிறம் குன்றிப்போயி ருந்தது. கண்கள் ஒளி மங்கியிருந்தன. அவர் தேகமோ நடுங்கியது. அனுங்கிய குரலில் ஏதோ முணுமுணுத்தார்.
" என்ன நடந்தது ? ' எனக்கேட்டான் டாண்ரே அங்கலாய்ப் Վւ-65r.
அவனின் குரல் கேட்டதும் அபே கண்களைத் திறந்தார்.
" மகனே ஆ என்மகனே நான் இறக்கப் போகிறேன். என் இறுதி கிட்டியிருப்பதை நான் உணருகிறேன். டான்ரே ! என் கடைசி வேளையில், எனக்கு ஆறுதல் அளிக்க இறைவன்தான் உன்னை இவ்விடம் அனுப்பியுள்ளார். உன் கையை நீட்டு. நான் சொல்வ தைக் கேள். நீ விடுதலையடையும் நாள் வரும். அப்போது நீ உலகி லேயே சிறந்த செல்வந்தனவாய்' என்ருர் அபே மெல்லிய குரலில்
கட்டிலில் மீண்டும் சரிந்தார், மெதுவாக மூச்சும் இழுத்தார்.
டான்ரே பயந்தான். எனினும் கண்கள் அகலாது அவரையே பார்த்து
நின்ருன் சுய அறிவு இழந்து விட்டாரோ செல்வம் என்ருரே
அதன் பொருள் தானென்ன ? இதுபோன்ற பல கேள்விகள் அவன்
மனதில் பிறந்தன.
அபே சிறு நகைகொண்டார். தலையை மெதுவாக அசைத்தார்.
* எட்மண்ட்! நான் இன்னும் சுய அறிவில் தான் இருக்கி றேன். நான் செல்வம் என்றேனே! அது உண்மையான புதையல், இன்று தொடக்கம் அது உனக்கே சொந்தம் ' என்ருர்,
* புதையல் உமது பாரிய சொத்து 1 ஆகா சொந்தமா எனக்கு?' என நம்பிக்கையில்லாது திரும்பவும் அவரின் காதுகளில் சொன்ஞன்.
அபேபாரியா ஆம் என்ருற்போல் தலையை ஆட்டினர். மீண் டும் தொடர்ந்தார்.
" நான் முன்னுெரு நாள் சொல்லியது உனக்கு ஞாபக மில்லையா? இத்தாலியில் சீசர்பாடா என்ற சீமான் ஒருவர் இருந்தார். அவர் என் நெருங்கிய நண்பர். அவருக்கு நான் அந்தரங்க காரிய தரிசியும் உற்ற நண்பனுமாக இருந்தேன். அவர் பெரும் செல்வந்தர் அல்லர்,
"ஆணுல் ஒரு நூற்றுண்டுகளுக்கு மூன், இத்தாலியில் வசித்த அவர் மூதாதையர் கோடி சீமான்கள். பணம் மாத்திரமன்றிப் பொருளும் சொத்துகளும் அவர்களிடம் ஏராளம், பாடா குடும்பத் தினர் பெருங் குபேரர். அன்னர் சொத்து மதிப்பிட முடியாதது என்ற 5 25

Page 19
செய்தி அகிலமும் பரவியிருந்தது. இத்தகவலைக் கேள்வியுற்ருன் ஒரு இளவரசன். அவர்கள் பொருளையெல்லாம் சூறையாடப் புறப்பட் டான், பெரும்படையுடன் அவர்கள் மாளிகையை அடைந்தான்.
பாடா குடும்பத்தினர் இச் செய்தியை ரலவே அறிந்திருந்த னர். அவர்களுக்கு முன்னதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. போர்வீரர் அரண்மனையை அடைந்ததும், பெரிதும் ஏமாற்றம் கொண் டனர். அவர்கள் பாவித்த தளபாடங்கள் தவிர, வேறு ஒன்றும் அகப்படவில்லை, இளவரசன் ஆத்திரங்கொண்டான். என் நண்பனின் மூதாதையான அன்றைய சேர்பாடாவை பலவந்தமாய் எடுத்துச் சென்றன். அவனைச்சித்திரவதை செய்தான். அவர்கள் பணப்புதை யல் எங்கே என அறிய அவனைக் கொடிய துன்பத்திற்குள்ளாக்கி ஞன். ஆஞல் பாடா இறுதிமட்டும் வாய் திறக்கவேயில்லே. அவர்கள் கையில் வீரமரணம் அடைந்தான். புதையல் இன்றுமே ஓர் மர்மம்.
"என் ஆருயிர் நண்பனும் அவர் மரபில் தோன்றியவருமான சீசர் பாடா, பிள்ளைகள் இன்றியே இறந்தார். தனக்குச் சொந்த மான அற்ப சொத்தை எனக்கே விட்டுச் சென்ருள். அவர் சொத் துகளில் முக்கியமானது, அவர் மூதாதையர் அருமை பெருமை பாய்ப் பேணிவந்த ஓர் நூல் நிலையம், அன்று அவர்கள் பொழுது போக்கிய அறிவுக் களஞ்சியம்,
"ஆயிரத்து எண்ணுாற்றுப் பதினுேராம் ஆண்டு, நான் கைதி யாவதற்கு முன் ஒர் நாள் அந்த நூல் நிலையத்திலுள்ள, மிகப் பழமையான செபப் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென தலை தானுகவே என் கைகளில் சரிந்தது. ஆழ்ந்த நித் திரை என்னை மேற்கொண்டது. மணி மாலை மூன்றரைதானிருக்கும்.
மணி ஆறு அடித்தது. எழும்பிப் பார்த்தேன். எங்கும் ஒரே இருள் சூழ்ந்திருந்தது. (என்) வெளிச்சத்தை ஏற்ற கடதாசித் துண் டொன்றைத் தேடினேன். நான் வாசித்துக்கொண்டிருந்த செபப் புத்தகத்தினுள், பழைய கடதாசியொன்று இருந்தது என் நினை விற்கு வந்தது. அது மிகமிகப் பழையது. பழுத்த இலேபோலும் மஞ்சள் நிறம், புத்தகக் குறிப்பாக அநேக நூற்ருண்டுகள் இருந் திருக்க வேண்டும் அக்கடதாசி. அதனைத் தேடி எடுத்தேன். சுருட்டி நெருப்பில் பற்றவைத்தேன்.
'ஆ என்ன அதிசயம் ! எட்மண்ட்! அது நெருப்புப் பற்றி பதும் அதிலுள்ள எழுத்துக்கள் தெளிவாகின. நெருப்பை உடனே அணைத்தேன். சூடு ஏற்றினுல்தான் அக்கடதாசியிலுள்ள எழுத்துக் களை வாசிக்க முடியுமென விளங்கிக்கொண்டேன். கடதாசியின் ஓரங்கள் மாத்திரம் எரிந்துள்ளன என்ருலும் மகனே! மீந்திருப் பதை உன்னுல் வாசித்து விளங்க முடியும். சிறைக்கு வரும்போது
 
 
 

நான் அதனையும் என்னுடன் எடுத்து வந்துள்ளேன். இன்று வரை அதனைக் கவனமாகக் காப்பாற்றியுமுள்ளேன்' எனக்கூறி முடித் தவர், தன் வலக்கையை நீட்டினுர், டான்ரே அவர் முன் குனிந் தான், தன் முழங்கால்களில் இரு கைகளையும் ஊன்றியபடி, அவர் கையிலிருந்த படிவத்தைப் படித்தான்:
'பல இலட்சங்கள் பெறுமதியான எனது பணப் புதையல்
மொன்ரே கிறிஸ்ரோ என்னும் சிறிய தீவில், குகையொன்றில் புதைக்கப்பட்டுள்ளது. பொன், வெள்ளி நாணயங்களும், தாள் காசுகளும், தங்கப்பாளங்கள் விலையுயர்ந்த வைரக்கற்களும் அதில் அடங்கியுள்ளன.
*தீவின் கிழக்கில், கரையோரமாக நீரோடையொன்று ஒடுவ தைக் காணலாம். அதிலிருந்தும் கற்பாறைகள் பல ஒரே நிரையில் கடலுக்கண்மையில் படர்ந்து செல்கின்றன. முதலாவது பாறையிலி ருந்து எண்ணி இருபதாவது பாறைக்குச் செல்லவும். அப்பாறையின் அடியில் குகைகள் பலவுண்டு குகைகள் ஒவ்வொன்றிற்கும் இரு வாசல்கள் இருப்பது தெரிய வரும் முதலாவது குகையின் வெளி வாசல் வழி உள்ளே சென்று, அதன் இரண்டாவது சிறிய வாயில் ஊடாக நுழைந்தால் இரண்டாவது குகையை அடையலாம். இக் குகையின் அதி அந்தலையிலுள்ள மூலையில் எனது புதையில் பாது காக்கப்பட்டுள்ளது. இதனை என் மருமகனுன சீசர் பாடாவுக்கு, நன்கொடையாக விட்டுச்செல்கிறேன்"
25 சித்திரை 1498
6?geri Luri (T
டான்ரே வாசித்து முடித்ததும் பேரதிசயத்துடன்,
நிமிர்ந்து மேலே பார்த்தான்,
அபேபாரியா தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
புதையலின் இப்புதினத்தை நான் அறிந்ததும், அவ்விடம் செல்லச் 8 சல ஆயத்தங்களும் செய்தேன் புதையல் எப்போது எனக்குக் கிட்டும் எனவும், ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆஞல் துரதிட்டம் குறுக்கிட்டது. என் முயற்சிகளையெல்லாம் முறியடித் தது என் ஆசையும் அவம்போகியது. புறப்படுவதற்கு சில நிமிடங்
கள் முன்னதாகவே நான் கைது செய்யப்பட்டேனே!
போனது போகட்டும் மகனே! நீயாவது அதனைக் கண்டுபிடி. எனது சொத்தையெல்லாம் நீயே அனுபவித்துச் சுகமாய் வாழ் இன்றுமுதல், அப்புதையல் உனக்கே உரியது. உனது பூர்வீக தேட் படம் என மனதிற்கொள் எனக்கு எட்டாத பணம், என் நண்ப ஞெருவனுக்குக் கிடைத்துள்ளதேயென், நான் நிம்மதி அடைகிறேன்.
ക്',

Page 20
"எட்மண்ட்! நீ சிறையிலிருந்து தப்பி ஒடிஞல், எளியேனுகிய உன் ஆருயிர் நண்பன் அபே பாரியாவையும் நினைவிற்கொள், சிக்க ரம் தம்பி சீக்கிரம்போ! மொன்ரே கிறிஸ்ரோ ஞாபகம் இருக் கட்டும்!" என்ருர்,
அவர்தேகம் முன்னிலும் அதிகமாக நடுக்கங்கொண்டது. டான்ரே அவர் தலையை உயர்த்திஞன். கண்களே மூடியவர் எதுவுமே பேசாதிருந்தார். மரணத்திரையில் சரண் புகுந்தார் அபேபாரியா, மொன்ரே கிறிஸ்ரோ! என்ற அசரீர வாக்கு செவிகளில் தொனித் தாற்போல், தோள்களை நிமிர்த்தித் தொலையில் தன் பார்வையைச் செலுத்தினுன் டான்ரே.
 
 

(6) இடுகாடு
தனது வயோதிப நண்பனும், ஆசிரியருமான அபேபாரியா
இறந்து கிடப்பதைப் பார்த்துக் கலங்கினன். கண்களைத் தன் இரு கரங்களாலும் இறுக மூடிக் கொண்டு, நெடுநேரம் அவர் படுக்கை
அருகில் நின்றன். முழங்கால் மடித்துஇறைவனே இறஞ்சினுன் எதிர்
பாராத இத் துக்கமுடிபு அவனைத் தூக்கிவாரிப் போட்டது. அவ் இடத்திலிருந்தும் வெளியேற அவனைத் தூண்டியது. -
எழும்பினுன் டான்ரே, வந்த வழியே தவழ்ந்து தன் அறை யினுள் புகுந்தான். அச்சமயம் காவலர் காலடிச் சத்தம், அபேயின் அறை நோக்கிச் செல்வது கேட்டது. சுவர் மறைவில் ஒழித்து நின்று நடப்பதை அவதானித்தான். அவர்கள் கதைத்தன யாவும் அவன் செவிகளுக்கு எட்டின. அவர்கள் அறையில் கலவரப்பட்ட தையும் உணர்ந்தான். வேறு பல காவலர்களைக் கூவி அழைத்த குரலொலியும் தெளிவாகக் கேட்டது. அவர்கள் கூச்சலேக் கேட்டுப் பல காவலர்கள் ஓடி வந்தனர்.
'மெத்த நல்லது. கடைசியாய் அபே கிழவனும் முடிந்தான்' என்ருன் ஒருவன்.
" அப்படியா ஆச்சரியம் என்ன ? அவருக்கும் தஞ்சம் கடல் தானே ! என்ருன் மற்றவன்.
* ஒகோ கிழப்பிள்ளையா இறுதிச் சடங்குகள் சாற்ருேடி இவ்" சிறையில் மிகவும் சுருக்கம் அப்படித்தானே ? ? என்ருன் இன்னுமொருவன்.
இப்படியே காவலர் சில மணி நேரம் கேளிக்கையில் வீண் பொழுது போக்கினர். பெருங் கூச்சலிட்டுச் சிரித்தனர். சிறைச் சாலையே இடிந்து விழுவதுபோல் இருந்தது, அவர்கள் அசட்டுச் Garfu'r Go). ATT GÓ).
*" தாமதியாது அவனே ஒரு சாக்கில் திணிப்பது தானே' என்றது ஒரு குரல்
+ 9X مجھے

Page 21
* இன்றே அவனை , மாலையானதும் இடுகாடு கொண்டு செல்வோம்,' என்றது மற்ருெருகுரல்
அவர்கள் நகைப்பும், நளினப் பேச்சுக்களும் வரவர விரிவடைந் தன. இன்னும் வேறு பலரின் நடமாட்டம், தெரிந்தது. சிறிது நேரத் தில் அபேயின் கட்டில் கீறீச், கீறிச் என்றது. பிணத்தைக் கீழே இறக்கினர். தாமதியாது சாக்கொன்றில் திணித்தனர். கால்களால் மிதித்து இறுக்வரிந்து கட்டினர், சாக்கு வாயைத் தைத்தும் விட்டனர். அந்தோ! பண்பில்லாத அப்பாமரரின் நெஞ்சம் தான் என்னே !
'இன்று சாயங்காலம் வரை இங்கேயே சாக்கினுள், அவன் உறங்கட்டும்' எனச் சொல்லியவர்கள், ஒருவர் பின் ஒருவராய் வெளியேறினர். அவர்கள் சொல்லியவை யாவும், பதுங்கி நின்று ஒட்டுக்கதை கேட்ட டான்ரேயின் இதயத்தை, வாள் போலும் ஊடுருவிப் பாய்ந்தன.
'இறந்தவர்களுக்கு முதலாய், இச்சிறையில் இறுதி மரியாதை எள்ளளவும் கிடையா வாம். ஆண்டவனின் படைப்புகளில், ஆறறிவு படைத்த மனிதரின் மனுத்தன்மை இவ்வளவுதான?' எனத் தன்னையே கேட்டுக் கொண்டான் டான் ரே
அபேபாரியாவின் அறையில் மீண்டும் அமைதி இரசசிய வழி யாய்க் குதித்திறங்கினுன் அபேயின் குச்சறையைச்சுற்றி ஒர் முறை பார்த்தான். அவர் கட்டில் மீது ஒர் சாக்குமூடை இருந்தது. கண்களே அகலவிரித்துப் பார்த்தான் லியா குலம் நிரம்பிய விழிகளால், சாக் கினுள் திணிக்கப்பட்ட அபேயின் சடலத்தை நோக்கினன். சாக்குமோ ஒர் மிகப் பழைய சாக்கு, அவர் உயிரற்ற உடல், நீட்டி நிமிர்த்தி வளர்த்தப்பட்டிருந்தது. அவன் கண்களிலிருந்தும் கண்ணிர் பொலு பொலுவெனச் சொட்டியது. துயரம் தாங்காதவனுய் அப்பயங்கர கட் டில் விளிம்பில் அமர்ந்தான். ஆணுல் அபே வழமைபோல் அன்று பேசாதிருந்தார். டான ரே தனித்த மனிதனுஞன்.
"என்னுயிரையே மாய்ப்பேன் நான். அபேயுடன் இடுகாடு செல்வேன்,' என எண்ணியவன் ஏதோ புதிர் கண்டவன் போல் உள்ளம் பூரித்தான். புதியவோர் எண்ணம் அவன் மனதில் உதித்தது. உணர்ச்சிவசப்பட்டவனுய் தேகம் பதறினன். ஆபத்தான தன் திட் படத்தை செய்துமுடிக்கும் துணிபு தன்னிடம் உண்டா? முடிபுகாணு மட்டும் தொடர்ந்து முனேயும் சக்தி தன்னிடம் உள்ளதா? எனத் தன்னைத்தானே ஆராய்ந்தான் ஈற்றில் திடம் கொண்டவன் செயற்பட ஆரம்பித்தான்.
அபேபாரியாவின் கட்டிலின் கீழ் செப்பமற்ற கத்தியொன்றைக் கண்டான். அது அவர் சிறைவாசத்தின்போது, இரகசியமாய் காப் பாற்றி வந்த இரும்புக்கத்தி, அதனைக் கையில் எடுத்தான் இரு
ஆக்கங்களையும் புரட்டிப் பார்த்தான். இரும்புப் பிடியொன்று
30
 
 

இத் தி யாக மாற்றி அமைக்கப்பட்டிருந்ததை அவதானித்தான். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்" என்ருற்போல் டான்ரே தன் னில் நம்பிக்கை பூரணமாகக் கொண்டான்: "அபே ! என்ன விட்டுப்பிரிந்தும் நீர் என்னை மறந்ததேயில்லை, நண்பா ! இக்கத்தி எனக்குப் பேருதவி. என்றுமே நான் உம்மை மறக்கப்போவதில்லை. அபே அபே எனச் சொல்லிக் கொண்டு சாக்கு மூடையை அணு கினுன் டான்ரே.
அதன் கட்டுக்களைக் கணமும் தாமதியாது வெட்டி எறிந் தான் தன் திட்டம் முற்ருய் நிறைவேற அபேயின் சடலம் தன் அறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமென்பது அவன் வகுத்த திட்டத்தின் முக்கிய அம்சம். எனவே சாக்கிலிருந்தும் பிணத்தைப் பிரித்தெடுத்தான். பெலமெல்லாம் கொண்டு, தோள்மேல் பக்குவ மாய்ச் சுமந்து தன் அறைக்குள் நுழைந்தான். ஆசாரத்துடன் தள் கட்டிலில் வளர்த்தி விடை பெற்றன். அபேயின் அறைக்குள் சென் றவன் இரு அறைகளையும் இணைத்த பாதையை அடைத்தான்.
அபே பாவித்த ஊசியையும் நுஃலயும் எடுத்துச் செருகிஞன். சாக்கினுள் புகுந்தவன் அபேயின் சடலம் திணிக்கப்பட்டதுபோல் தன்னையும் அதனுள் அடக்கிக்கொண்டான் உள்ளிருந்தபடி சாக்கு வாயைத் தைத்தும் முடித்தான் அச்சமயம் காவலானர் அறையி னுள் வந்திருந்தால், அவன் இருதயத்துடிப்பை எட்டத்திலிருந்தே அவர்கள் கேட்டிருப்பர். அங்கம் பதறினுன். அவன் இதயமோ பயத்தால் உறைவதுபோலிருந்தது. கதவு திறக்கப்பட்டது. டான்ரே மூச்சை அடக்கிக்கொண்டான் இரு நிழல்கள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தான். ஒன்று விளக்குடன் வாசலில் நிற்பது அவனுக்குத் தெரிந்தது.
'ஆ இதென்னட பாரமாயிருக்கே, கிழவன் இவ்வளவு பாரமா ? நான் நம்பவே மாட்டேன்' என்ருன் ஒருவன்,
"அவனின் எலும்புகள் பெரியன அல்லவா ? நீ சொல்வது எனக்கு ஆச்சரியமாயிருக்கே. இறந்தவர் பிணம் நிறை கூடும் என்பது உனக்குத் தெரியாதா? அதுவும் அபேயின் முற்றிய எலும்பு கள், முன்னிலும் பாரம் அதிகமாகும் என்பது நியாயம்தானே' என்ருன் மற்றவன்.
காவலர் சாக்கு மூடிையைத் தூக்கினர். கைகளில் பினத் தைத் தாங்கி, சிறைச்சாலை வெளிப்புறம் போகும் ஒடுங்கிய பாதை வழியாய் மெல்லப் படிகளில் ஏறிச்சென்றனர். வெளிப்புறத்தைத் தாண்டி, சிறிது துரம் சென்றதும் தொப்பெனத் தரையில் சாக் கைப் போட்டனர். அப்போது டான்ரேக்கு உயிர் போவதுபோலிருந் தது. குளிர் காற்று வீசியதையும் உணர்ந்தான். எனினும் பிணம் போல் பிழையின்றி நடித்தான். ஐயம் எவருமே கொண்டிர்

Page 22
அவர்களில் ஒருவன் சற்றுத் தூரஞ்சென்று திரும்பினன். அவன் திரும்பியதும் ஏதோ பாரமான பொருள் ஒன்று தன் பக் கத்தில் விழுவதைப் பரிசித்தான்.
'இதுதான் எங்களுக்குத் தேவை' என்றது ஒருகுரல். அக் கணமே தன் கால்கள் பிணைக்கப்படுவதை உணர்ந்தான், வலி பொறுக்க இயலாது பொருமினன் டான்ரே.
காவலர் மீண்டும் சாக்கு மூடையைத் தூக்கினர். காற்று பெல மாக வீசுவதையும், அலைகள் மோதுவதையும் அவதானித்தான், கடல் சமீபத்திலுள்ளதெனவும் தெரிந்துகொண்டான்
'கடும் காற்று. காலநிலை நன்ருயில்லை. கடற் குளிப்பிற்கு ஏற் றதல்ல" என்ருன் ஒருவன் கேலியாக,
'பாவம் கிழட்டுப்பயல் அபே நீரில் நனையப் போகிருனே சுவாத்தியம் அவன் வயதிற்கு சுகமாயிராது' என்ருன் மற்றவன், அதனைத் தொடர்ந்து காவலர் எல்லோரும் பெருங்குரல் எழுப் பினர் ஒ! வென நீண்டநேரம் கத்தினர்.
"அண்ணே! இடம் வந்துவிட்டது' என்ற அறிவித்தல் கேட் டதும் தங்கள் சுமையை மீளவும் தொப்பென்று தரையில் போட் L„GW ff.
டான்ரேயின் தேகம் புல்லரித்தது. காவலர் சற்று நேரம் இளைப்பாறினர். நேரமாகியது. சாக்கைக் கடைசி முறையாக உயர்த் தினர். ஒருவன் காலிலும் மற்றவன் தலையிலும் பிடித்தான். ஏனை யோர் அவன் முதுகுப் பக்கத்தைத் தாங்கினர்.
ஒன்று, இரண்டு, மூன்று என ஒரே குரலில் உச்சரித்தனர்" மூன்றென்றதும் டான்ரே கடலின் மேல், ஆகாயத்தில் ஊசலாடினன். அவன் காலில் கட்டப்பட்ட பாரியகல், அவனைக் கடலின் அடித் தளத்தில் வீழ்த்தியது. அந்தரத்தில் ஆடிய போது அவன் ஆவியே பிரிவது போல் பெரும் அவலச் சத்தமிட்டான். ஆனல் அதற்கு மேலாக ஒலித்தது கடல் அலைகள் மோதும் சத்தம்,
சில்லெனக் குளிர்ந்தது'அவன் தேகம், காற்றும் நேரம் செல்லச் செல்ல மும்முரமாய் வீசியது. முப்பத்தாறு இருத்தல் எடையுள்ள கல் அவன் கால்களை அசையாது அழுத்திப் பிடித்தது . முற்றும் மூழ்கிஞன் டான் ரே. 'சாற்முேடிஇவ்" சிறைச்சாலைக் கைதிகளின் இடுகாடு கடல். "、

(7) ஆபத்து நீங்கியது
டான்ரே கடலில் புதைக்கப்பட்டான். இறந்த கைதிகள் இத் தகைய அடக்கம் செய்யப்படுவது சாற்ருேடிஇவ்" சிறை யில் இருந்து வந்த வழக்கம்.
ஆபத்து நிகழ்ந்த போதும் அவன் நிதானம் தவறவில்லை. அறிவு இழக்கவுமில்லை. அப்படியான அரிய சமர்த்தன் டான்ரே. அஞ்சா நெஞ்சம் படைத்தவன் எதையும் துணிந்து செய்யும் செயல் வன்மை கொண்டவன். எதிர்காலத்தையே கணிக்கும் நுண்ணிய புத்தி அவனுக்குண்டு.
அவன் வலக்கையில் தாங்கிச் சென்ற கத்தி அவனைக் காப் பாற்றியது. இவ்வளவு நேரமும் அதன்பிடி விடாது விழிப்பாயிருந் தான். சிறிதும் தாமதியாது கட்டுப்பட்ட தன் கைகளை முதலில் விடுவித்தான். உள்ளிருந்தே சாக்கை வெட்டிக்கொண்டு வெளியேறி ஞன். மேலெழுந்தவன் நீர் மட்டத்திற்கு வர முடியாது திணறி ஞன். அப்போது அவன் கால்களில் கட்டப்பட்ட கல் ஞாபகத்திற்கு
வந்தது. பின் வளைந்து கத்தியால் இலக்குத் தவமுது வெட்டினன்;
கல் பொத்தெனக் கீழே விழுந்தது. அத்துடன் நில்லாது பிணைக் கப்பட்ட தன் கால்களையும் விடுவித்தான். மீன் போலும் மேலெ ழுந்தான். இதுவரையும் அவன் சுவாசித்திராத சுத்தமான காற் றைப் போதியளவு சுவா சித்தான். .."
திரும்பவும் நீரில் மூழ்கிக் சுளியோடினுன் டான் ரே. இரண் டாவது முறையும் மேலே வந்ததும் திரும்பிப் பார்த்தான். ஒரு தனித் தீவில் பெரும் பாறையொன்றில் கட்டப்பட்டுள்ள சிறைக் கோட் டையைப் பார்த்தான். அதன் பயங்கர தோற்றம் அவனை அச்சுறுத் தியது. முகத்தைத் திருப்பியவன், ஏதோ பயங்கர பூதமொன்றைக் கண்டாற்போல் விரைந்து முன் நீந்திச் சென்ருன் அதிசய நீச்சல் வீரன் அவன் சிறுவயது தொட்டே நீந்துவதில் அவனுக்கு நிகரா னவர் எவருமே இல்லை. Ε
6 33

Page 23
தொலையில் விண்மீன்போல் பிரகாசமுள்ள வெளிச்சமொன்று தெரிந்தது, அது மின்னல் போல் நாலா திக்கும் தன் ஒளியைப் பரப்பியது. அதனைக் கண்டதும் டான்ரே அது பிளானியர் வெளிச்ச வீடு என மதிப்பிட்டான். தான் செல்லும் திசை எதுவெனக் கணித் தான். தானிருக்கு மிடத்திலிருந்து திபிலோன் தீவு இடது கரையில் இருக்க வேண்டும் எனவும் தீர்மானித்தான். மலைபோல் எழுந்து தன்னில் மோதும் கொடிய அலைகளை எதிர்த்து முன்னிலும் வேகமாய் நீந்திச் சென்றன். சிறைச்சாலையும் ஒடி மறைந்தது. இருள் அவனைச் சூழ்ந்து கொண்டது.
ஆனல் அவன் சலியாது கருமமே கண்ணுயிஞன். தொடர்ந்து ஒரு மணி நேரம் கடலிலே நீந்தினுன் மூச்சுப்பிடித்து தன் கைகால் களைத் தக்கவிதமாய் அடித்து, தாவிப் பாய்ந்து சென்ருன் நீர்மேல் எனினும் அவன் முழங்காலில் தாங்க முடியாத வலிப்பு உண்டானது. அப்பால் செல்ல முடியாது என நினைத்தான் கொண்டிருந்த நம் பிக்கையும் இழக்க ஆரம்பித்தான். இருந்தாற்போல் அவன் கைகள் கடினமும் காத்திரமுமான ஒன்றை முட்டியது போல் கவனித்தான், அதிட்டம் அவன் வசம் அவன் முன் ஒர் கற்பாறை படர்ந்திருந்தது. அது நூதனமான இயற்கை அ  ைம ப் பு ப் பொருந்தியுள்ளது. அதனைக் கண்டதும் திபிலோன் தீவு அது தான் என நிச்சயித்தான். கரங்களால் அப்பாறையை இறுகப் பற்றினுன், தன் முழுப் பெல மெல்லாம் கொண்டு, நீரிலிருந்தும் உன்னிப்பாய்ந்தான் அப்பாறை மேற் சரிந்தவன் அறிவற்றவன் போல் மல்லாக்காய்க் கிடந்தான். அந் நேரம் கடினமான அப்பாறை பஞ்சு மெத்தையிலும் மிருது வாகத் தோன்றியது. அவனுக்கு வீசிய உரமான காற்றையோ அலைகளின் பேரிரைச்சலையோ அவன் பொருட் படுத்தவில்லே களேப்பு மிகுதியால் கண்களை மூடி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கினுன்
மின்னல் பளிர் பளீரென மின்னியது. அவன் கண்களைத் துளைப்பது போல் தோன்றியது. வானம் மும் முறை முழங்கியது மழையுமோ சோவெனப் பொழிந்தது. டான்ரே விழித்தான். ஒதுக்கிடம் தேடிப் பார்த்தான் பாறையின் அடியில் அகன்ற வெடிப்பு . இருந்தது தெரிந்ததுg இருந்த டியே மெதுவாக நழுவி அவ்வெடிப் பினுள் புகுந்தான். அவன் தேக அலுப்பு மீண்டும் அவனேத் தூங்க வைத்தது.
அடுத்தநாள் அதிகாலையில்துயிலெழுந்தான். கதிரவன் கதிர்கள் குகையைக் குடைவது போல் ஒளி பரப்பியது. காற்றுவேகம் தணிந்தது. கடல் அலைகள் அமைதி கொண்டன. மழையும் ஒய்ந்தது. ஆகாயம் வெளித்தது. ஒரே நீலக் கடல் போல் காட் சியளித்தது. டான்ரே களைதேறியவனுய், இங்கிருந்தும் தப்ப மார்க் கம் தேடிஞன், தன் முன் தரையே தெரியாது பரந்து கிடக்கும் ஆழ் 34
 
 
 
 

கடலே ஆவலுடன் நோக்கினன். அவன் கண்கள் கலங்கரை விளக் குப்போல் நாற்திசையும் சுழன்றன.
திடீரெனத் துள்ளியெழுந்தான். பாறைமேற் குதித்து நின்றன். வெகு தொலையில் ஏதோ வருவதைக் கண்டவன், தன் கண்களையே நம்பாதவன் போல், கப்பல் கப்பல்! என ஒலமிட்டான். பலமுறை தன் பலமெல்லாம் கொண்டு உரக்கக் கத்தினன். ஆனல் அவனை எவரும் கேட்கவில்லை. மார்சேல் துறையிலிருந்தும் ஒரு கப்பல் ஓடிக்
கொண்டிருந்தது. ஆவலுடன் கப்பலேயே பார்த்தவன் அதனை அடை
யும் வழி தெரியாது தடுமாறினன்
*, அதே சமயம் தன் தலையைக் குனிந்தர்ன். பாறையின் அடி யில் பலகைத் துண்டுகள் பல மிதந்து வருவது அவன் கண்களில் பட்டது. அவன் அடைந்த ஆனந்தத்திற்கோ அளவில்லை. அந் நிமிடமே அவன் திட்டம் போட்டான். அதனைத் துணிந்தும் நிறை வேற்றினுண்.
) நீச்சல் வீரனைப் போன்று, நீச்சல் குளம் எனக்கருதியவன்
ஆழ்கடலில் குதித்தான். மறுகணம் பலகையைத் தாவிப்பிடித்தான், கப்பல் வரும் திசையை நோக்கி நீந்திச் சென்ருன் அதனைத் தவற விடப்படாதெனவும், எவ்விதமும் அக்கப்பலை அடையவேண்டுமென வும் மன உறுதி கொண்டான். எவராலும் நம்ப முடியாத நேரத் தில் கப்பலே அணுகிச் சென்ருன் காற்றும் அவனுக்கு உதவியாக இருந்தது. கப்பலுக்கு இன்னும் நூறு யார் மாத்திரமே போக வேண்டியிருந்தது. தன் தலையை உயர்த்திக் கையினுல் சைகை காட்டினன், சத்தமுமிட்டான். கப்பலையே கண் கள் அகலாது பார்த்து நீந்தினுன்
கப்பல் மாலுமிகள் சிலர் அவன் கூக்குரலைக் கேட்டனர். அவன் படும் அவதியையும் கவனித்தனர். அலைகள் அவனைத் தூக்கி மேலும் கீழுமாக எறிவதை அவதானித்தனர். அனுதாபம் கொண் டனராய்க் கப்பலை அவன் வரும் திசை திருப்பினர். அதனைக் கண் டதும் டான்ரே முகம் மலர்ந்தான். அவன் இதயம் இலேசானது, அவன் உதடுகள் விரித்து உரக்கச் சிரித்தும் விட்டான்.
சில விநாடிகளில் டான்ரே, கப்பல் மேற்தளத்தில் மாலுமிகள் மத்தியில் நின் முன், நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்ட வன விலங்கைப் பார்த்து வியப்பதுபோல், அவனையே குறிப்பாகப் பார்த் தனர் மாலுமிகள். தங்களுக்குள் ஏதோ அவனைப் பற்றி குறிப்புரை களும் பேசிக்கொண்டனர்.
கருமையான தாடியுடையவனும் இராட்சத தோற்றம் கொண் டவனுமான ஒருவன் இத்தாலிய மொழியில் 'நீ யார்?" என்ருன்
35

Page 24
'நான் ஒர் மாலுமி, எங்கள் கப்பல் சிரக்கூன் நகரிலிருந்தும் புறப்பட்டது. வழியில் கடும்புயல் எழும்பியது, கும் என்ற இருள் மூடிக் கொண்டது. திக்குத்திசை தெரியாது ஏங்கினுேம், கப்டில் நாம் நினைத்திராத மாதிரி திமிலோன் தீவிற்கு அண்மையில் கற்பாறை யொன்றில் மோதியது. கப்பற்காரர் ஒருவர் பாக்கியில்லாது எல்லா ருமே கடலில் மாண்டனர். ஏதோ ஆண்டவன் என்னில் கருணை கொண்டான் போலும், உடைந்த கப்பல் பலகையொன்றின் உதவியால் கடலில் மிதந்து கொண்டிருந்தேன்."என்ருன் டான்ரே சமயோசிதமாக
' எப்படியிருந்த போதிலும் உண்மையை அறிய முடியாது இருக்கின்றது. நீ யாரென்பதைத் தீர்மானிக்க கடினமாயிருக்கிறது. நீண்ட தாடி, நன்முக வளர்ந்த தலைமயிர், யாவும் நீண்டகாலச் சிறைவாசஞ் செய்தவர் போல் காணப்படுகின்றது'
தப்பியோடிய கைதி தான் என்பது அவன் நினைவுக்கு வந்தது. கப்பற் தலேவன் குறிப்பைக் கேட்டதும் நீண்ட பெரு மூச்சு விட்டான். * அது நான் செய்து கொண்ட ஒர் நேர்த்தி. எனக்கு நேரிட்ட ஆபத்தொன்றிலிருந்தும் தப்பிய போது நான் செய்து கொண்ட விரதம் ' என்ருன் டான்ரே,
'போகட்டும் நாங்கள் உனக்கு செய்யக்கூடியது என்ன" என்ருன் கப்பற் தலைவன்.
‘என்னையும் உங்கள் கப்பலில் சேர்த்துக் கொள்ளும், மற்றும் கப்பற்காரர்களுடன் என்னையும் ஒருவனுக நீர் ஏற்றுக்கொள்வது தான் எனது விருப்பம்' என்ருன் டான்ரே.
'நான் திறமைமிக்க கப்பலோட்டி, மத்தியதரைக்கடல் என் உள்ளங்கைபோன்று ஒர் அந்தம்முதல் மறு அந்தம்வரை எனக்கு நன்
போதிலும், குருவளி கடல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நான் கப்பலை சேதம் யாதுமின்றிச் சேமமே துறை சேர்க்கும் சாதுரியம் எனக்குண்டு'
'ஒகோ! அப்படியானுல் உன்னை நாம் பயன்படுத்த பின்நிற் கவே மாட்டோம்,' என்ருன் தலைவன். -
"ஆணுல் கள்ளக்கடத்தல் எங்கள் தொழில், அதுவே எங்க ளுக்குப் போதியவருவாய் அளிக்கும்வணிகம், உனக்கு அதுபிடிக்குமா?" என்ருன் தன் இடுப்பில் செருகியுள்ள கத்தியைச் சுட்டிக்காட்டி,
டான்ரே சிரித்தான். வானத்தை மேலே அன்னர்ந்து பார்த் தான் சுற்றிலும் கரையே தென்படாத விசாலித்த கடலேக் கவனித் தான்.
"ஆம் பரவாயில்லே அது எனக்கும் பிடிக்கும்' என்ருன், 36
ருகத் தெரியும். எந்த இருட்டிலும், காலநிலை எப்படித்தான் இருந்த
 
 
 
 
 
 
 
 
 
 

டான் ரே கள்ளக் கடத்தல் காரர் கப்பலில் ஒரு மாலுமி யானுன், பதினெட்டு மாதங்களாக அவர்களுடன் பல இடங்களுக் கும் சென்ருன் அவர்கள் வியாபாரத்தில் கிடைத்த இலாபத்தின் ஓர் பங்கையும் பெற்றுக் கொண்டான் அநாவசிய செலவின்றிச் சிக்கனமாக வாழ்ந்து வந்தான். செலவுபோக மீதியான ஒவ்வொரு சதத்தையும் சேகரித்தான். ஈற்றில் அவன் சேமநிதி அளவில் பெரு கியது. தன் எதிர்காலத் திட்டத்தை நிறை வேற்றப் போதிய நிதி தன்னிடமுள்ளதெனத் திடங் கொண்டான். கப்பல் ஓர் நாள் இத்தாலியிலுள்ள லெக்கோன் என்ற துறையை அடைந்ததும், அங்கு கப்பலை விட்டு வெளியேறிய டான்ரேயை இன்றுமே கடத்தல் கார மாலுமிகள் கண்டுபிடிக்கவில்லே,

Page 25
8. புதையல் வேட்டை
லெக்கோன் இத்தாலியின் கிழக்குக் கரையிலுள்ள ஒர் துறை முகம், கடத்தல்காரர் கப்பலிலிருந்தும் விலகிய டான்ரே, அவர்கள் பிடியிலிருந்தும் மாயமாய் மறைந்தான்.
அங்கிருந்தும் ஜெனுேவாவிற்குப் பயணமானுன் , லெக்கோ னுக்கு வடக்கே, சில மைல் தூரத்திலுள்ளது ஜெனேவா. அக் காலத்தில் மத்தியதரைக் கடலில் நடைபெற்ற வணிகத்தின் மத்தி பாய் விளங்கிய துறைகளில் அதுவும் ஒன்று. அல்லாமலும் இயற்கை அழகும், கப்பல்கள் எல்லாக் காலத்திலும் பாதுகாப்புடன் தங்கு வதற்கு சகல வசதிகளும் வாய்ந்த ஒதுங்கு துறையாகவும் அறியப் பட்டது.
கப்பல் ஒன்றை அவ்விடத்தில் வாங்குவது அவனின் முக்கிய நோக்கம். எனவே ஜெனேவாவை அடைந்ததும், தான் விரும்பிய கப்பலொன்றை விலைக்குக் கொண்டான். அது அளவிற் சிறியது. ஆனுல் காத்திரமான அமைப்புப் பொருந்தியது. பல வேலைப்பாடு
கள் நிறைந்தது. அதன் வெளித்தோற்றம் பார்ப்போர் கண்களைக்
கவரும் தன்மை வாய்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் தனித்து மேற்கொண்ட தூரப்பிரயாணத்திற்கு, முற்றும் உகந்தது அச்சிறிய கப்பல். -
நேரமோ விலையேறப்பெற்றது. இதன் உண்மையை உணர்ந்த வன், ஒரு விநாடியும் தாமதித்திலன். தன் யாத்திரைக்குப்போதுமான பொருள்கள் யாவும் சேகரிப்பதில் துரிதமாய் முயன்றன். கப்பல் வாங்கி இருபத்துநாலு மணித்தியாலங்கள் மாத்திரமே சென்றிருக் கும். அதற்கிடையில் சகல ஏற்பாடுகளும் மூடித்து வெளிக்கிளம்புவ தற்குத் தயாரானுன் டான்ரே.
பொழுது புலர்ந்தது. வானத்தைப் பிளந்து, தன் வான ஊர் தியில் பவனி வந்து கொண்டிருந்தான் சூரிய பகவான். கடலும்
அவனுக்குத்துணை புரிவது போல், கொந்தளிப்பின்றி அமைதியாக
விருந்தது. காற்றும் ஆதரவளித்தது. அவனுக்கென்றும் இல்லாத
 
 
 
 

தான் .
பேரதிட்டம், முன்னெரு போதும் தனியே கப்பலை ஒட்டியிராத பாதையில் காற்றுவேகத்தில், 'மொன்ரே கிறிஸ்ரோவை நோக்கி விரைந்து சென்ருன் துணை எவருமின்றித் தன் கையே தனக்குதவி யென நம்பியவன், புறப்பட்டான் புதையல் வேட்டைக்கு.
கரையோ தெரியாத ஆழ் கடலில் இரு நாட்கள் இ ர வு பகலாய்த் தொடர்ந்து கப்பலைச் செலுத்தினன். அவன் தங்கி ஆறு வதற்கும் பரந்த அக் கடலில் ஒதுக்கிடமே கிடையாது. புதையலின் எண்ணம், அவனுக்குப் புதிய மனக்கிளர்ச்சியைத் தூண்டி, குத்து விளக்கின் திரியன்ன கொழுந்து விட்டு எரியச் செய்தது. எனவே அவன் தனக்குண்டான பசி, தாகம், களைப்பையே பொருட்படுத்த வில்லை. சிறிதும் மனம் தளரவுமில்லை.
அவனின் யாத்திரை இரு நாட்கள் நீடித்தன. இரண்டாம் நாள் பொழுது மறையும் நேரம், தரையிலிருந்து அநேக மைல் களுக்கப்பால், கடல் மட்டத்திதிலிருந்து பல கற்பாறைகள், மேலு யர்ந்து நிற்பதைக் கண்டான். நகர காவலர் போன்று அவை அத் தீவை பாது காத்தன என எண்ணிஞன். தீவைக் கைப்பற்ற எதிரிகள் எவரும், வருவாரோ என்றஞ்சிய, போர் வீரர் எதிர்பாராத தாக்குதலே சமாளிக்க ஆயுத்தமானவர் போல் நிமிர்ந்து நின்றன அப்பாறைகள்.
"ஆகா! மொன்ரேகிறிஸ்ரோ அபேபாரிய சொலில்ய தீவு அதுதான் எனத் தீர்மானித்தான். கப்பலும் தீவை அடைந்தது. அதனே நிறுத்துவதற்கு ஒதுக்கிடம் ஒன்றைத் தேடினன். கவனமாகத் தன் கண்களால் கரையைச்சுற்றி நோக்கமிட்டான். அண்மையில் ஒர் சிறிய நீரோடை தெரிந்தது. அதனுள் கப்பலைச் செலுத்தி நங்கூர மிட்டான், கதிரவனும் மேற்கே முற்றும் மறைந்தான் அப்பால் செல்ல மனமில்லாதவன், அன்றிரவைக் கப்பலிலேயே கழித்தான்.
நித்திரை கொள்ள விரும்பினுன் கண்களை இறுக மூடிப் படுத் தும் பார்த்தான் ஆணுல் நித்திரைத் தேவதை அவனைப் புறக்கணித் தாற்போன்று இரவிரவாய் விழித்திருந்தான். புதையலைக் கண்டுபிடிக் கும் முயற்சியில், பொல்லாத பூதங்கள்,பாதாள லோகத்திலிருந்தும், குறுக்கிடுமோவெனவும் எண்ணிஞன். விடிந்ததும் தான் செய்யப் போவன எவையெனத் தன்மனதில் நிக்ழ்ச்சி நிரலொன்றைத் தயாரித்
மறுநாட்காலை தன் சீவிய காலத்தில் முதன் முறையாய், அமெரிக்காவில் கொலம்பஸ் போலும் எடுத்தடிவைத்தான். சன
சஞ்சாரம் அற்ற பற்றைக் காடாக இருந்தது அதன் நிலவியல்.
இடையிடையே புல் பூண்டுகள் இல்லாத சமவெளிகள் காணப்பட்
டன. அவற்றைச் சுற்றிப் பெரும் மரங்களும் ஓங்கி வளர்ந்திருந்
85ᎧᏡᎢ .
39

Page 26
டான்ரே தீவின் கிழக்குக் கரையை நோக்கினன். அதன் தன்மையைத் தானுகவே ஆராய்ந்தான், கரையோரமாய்ப் படர்ந் துள்ள கற்பாறைகளை அவதானித்தான். அபே கூறிய நீரோடை யைக் கண்டுபிடித்தவன், அதற்கருகிலுள்ள சிறிய பாறையையும் தெரிந்து கொண்டான். தான் கொண்டு வந்த பிக்கானைத் தோளில் இட்டான். லாந்தரொன்றைக் கையில் எடுத்தான். அதிலிருந்தும் துண்டில் குறிப்பிட்டதுபோல், பாறைகளை எண்ணியவாறு மெல்ல நடத்து சென்ருன்கு இருபதாவது பாறையை அடைந்ததும், சிறிது நேரம் வியப்புடன் அதனையே வேறித்துப் பார்த்தான்.
பந்துபோல் உருண்டை வடிவத் த னி க் க ல் ஒன்று, பல வருடங்களாகத் தரையில் விளைந்து பொருமிய தோற்றமுடையது அப்பாறை சூரிய ஒளியில் வெண்தலை போலும் மினுங்கியது. அநேக தொன் நிறையுடையதென மதித்தான். அரைவாசி பூமியில் மறைந்த பழைய டகோபா போலும் கவிந்திருந்தது. எவர் கையும் படாது அசைவின்றி ஒரே அழுத்தமாகவிருந்தது அதன் வெளித்தோற்றம், தீவின் கரையிலிருந்தும், கடல் நோக்கி சரிந்திருந்த அப்பாறையை, ஆச்சரியத்துடன் கண்கள் அசையாது பார்த்தான்.
அதனே ஒரு முறை சுற்றிவந்து பிக்கானல் தட்டி, அகழ் வதற்கு வசதி தேடினன். சிற் சில இடங்களில் அதன் அடித்தளத் தில் சிதைவு ஏற்பட்டுள்ளதைக் கவனித்தான். வசதியான ஒரு வாயி லில் தன் பிக்கான விட்டு அகழ ஆரம்பித்தான் தீவின் கரைப் பக்கமாகவுள்ள பகுதியைப் பெயர்த்தான். அவன் உட்செல்லக் கூடிய தூவாரமொன்றை பத்து நிமிடங்களில் துளைத்து விட்டவன், அதனையே ஆவலுடன் நோக்கினன்.
சூழவுள்ள நிலமும் மெல்லப் பெயர்வதைக்கண்டான். அருகா மையில் நின்ற மரமொன்றில் ஏறிக் கொப்பொன்றை வெட்டி
வீழ்த்தினன், அதிலுள்ள தளிர்களையெல்லாம் அகற்றி கையில் ஏந்'
திக்கொண்டு மீண்டும் பாறையை அடைந்தான் அதனே நெம்புக் கோல் போல் பாறை அடியினுள் புகுத்தித் தன் பெலமெல்லாம் கொண்டு தெண்டினுன் தன்கைகள் கால்களாலும் மிதித்து அழுத் திஞன், பாறை அடியோடு பெயர்ந்தது. ஈற்றில் கடல் பக்கமாய்ச் சாய்ந்து கரையின் சரிவு வழியாய் பந்து போல் உருண்டு குதித்தது கடலில் அது விழுந்த அதிர்ச்சியில் கடல் மலே போல் மேலெழும் பியது. உணர்ச்சி வேகத்தில் அகப்பட்ட டான்ரே ஓ ! எனக் கூவிஞன், வெற்றியின் ஆரம்பம் என எண்ணி ஆனந்தம் பொங்கப் பெரு விரல்களில் நின்றன்.
பாறை இருந்த இடத்தில் ஒரு சதுரக்கல், அதன் மத்தியில் ஒரு இரும்பு வளையம் பொருத்தப்பட்டிருந்தது, அவ்வளையத்தைப் பற்றி இழுத்தான். மிக்க இலகுவில் அவன் கையுடன் வந்தது அக் 40,。 A.
 
 

கல் மூடி, குனிந்து உள்ளே பார்த்தான், படிகள் பல வரிசையாகக் கீழ் நோக்கிச் செல்வதை அறிந்தான். அதனுள் வெளிச்சம் சிறிதும் கிடையாது. ஒரே இருள் கவிந்திருந்தது.
அபே பாரியாவின் நினைவு அக்கணமே அவன் மனதில் உதித் தது. அவர் சொல்லியவை யாவும் மெய்யென நம்பிஞன், புதை யல் நிச்சயமாகவே தன் சொத்தெனச் சொந்தம் பாராட்டிய டான்ரே முகம் மலர்ந்தான்.
விளக்கை ஏற்றினன், படிகள் வழியாய்ப் பதட்டமின்றிக் கீழி றங்கினன். நிதானமாக ஒருகையில் லாந்தரும் மறுகையில் பிக்கா னுங் கொண்டு சென்றவன் கடைசிப்படியைக் கடந்ததும் ஒர் பெரிய குகை அவன்முன் குறுக்கிட்டது. அப்பால் சென்றதும் இரண்டாவது குகைக்குப்போகும் வாயிலொன்று தெரிந்தது. அதனுள் புகுந்தான். அதன் அடிமூலையிலுள்ள குகைப்பக்கம் மெல்லச் சென்றன். பிக்கான ஓங்கி அம்மூலைப்பக்கத்தைத் தகர்த்தான். பிக்கான் அப்போது அவன் கையில் ஒர் இறகுபோல் இலேசாகவிருந்தது, முதலடியிலேயே தான் தாக்கிய இடம் கோது போன்றதெனக் கவனித்தான். திரும்பவும் இரு தடவைகள் தாக்கினன். ஓர் துளை ஏற்பட்டது. அதன் ஊடே தன் பிக்கானின் ஒரு நுனியைச் செலுத்தி பிக்கானின் கைபிடியை பெலம் கொண்டு இழுத்தான். அவன் காலடியில் கற்களும் மண் ணும் சொரு சொருவெனச் சரிந்தன.
வேகமாய் மூச்சுவாங்கினுன் உண்டான துவாரத்தை துருவிப் பார்வையிட்டான். மூன்றடி நீளமும் இரண்டடி அகலமும் கொண் டது அத்துவாரம், அதனுள் உருக்குக் கம்பிகளால் வரிந்து கட் டப்பட்ட ஒரு மரப்பெட்டியைக் கண்டான். பாதி பயித்தியம் பிடித் தவன்போல் கத்தினுன் கைபிடியைப்பற்றி பெட்டியை வெளியே எடுக்கப் பல முறை முயன்றன். ஆணுல் அவன் முயற்சி பயனளிக்க
பெட்டியின் கனமே காரணம்.
பிக்கான எடுத்து பெட்டிக்கும் அதன் மூடிக்கும் இடையில் விட்டுத் தெண்டினன், மூடியை உடைக்கத் தெண்டித்தான். தன் கொண்டு ஊன்றி அமத்தினுன் இரு விநாடிகளில் படார் என மூடிபறந்தெழும்பியது. தடுமாறிய டான்ரே அ ம் மூ டி  ைய ஏந்த எண்ணியவன் போல் துள்ளிக் குதித்தான். ஆச்சரியத்தால் பெலத்த கூக்குரலிட்டான்,
திறந்த பெட்டியை, அதிசயம் நிரம்பிய தன் கண்களால் ஆராய்ந்தான், பல அறைகளாகப் பெட்டி பிரிக்கப்பட்டிருந்தது. முதலாவதில் தங்க நாணயங்கள் குன்று போல் குவிந்திருந்தன. இரண்டாவதில் சுத்தம் செய்யப்படாத தங்கப்பாளங்கள் படை படையாய் அடுக்கப்பட்டிருந்தன. டான் ரே மூன்ருவதிலிருந்தும் வைரக் கற்கள், முத்துக்கள், சிவப்பு, நீல நிறமுள்ள பல விலையுயர்ந்து
7 4.

Page 27
கற்களைத் தன் கைகளில் மாறி மாறி எடுத்து மகிழ்ந்தான். அவற்றின் பன பளப்பைப் பார்த்து வியந்தான். கணிர்! கனிர்! என்ற அவற்றின் ஓசை கேட்டு மெய்மறந்தான்.
பல இலட்சம் பெறுமதியானவை எனத் தன் மனதில் மதிப் பிட்டான். அவையெல்லாம் தன்னுடையவையெனச் சொல்லி அகம் குளிர்ந்தான். அந்நிமிடமே டான்ரே பெரும் தனவந்தனுஞன், அபே பாரியாவின் ஆசியின் விளைவால், அகப்பட்ட புதையல், அவனை இலட் சாதிபதியாக மாற்றியது. பாடா குடும்பத்தினர் புதைத்து வைத்த பணம் முழுவதும், அவனையும் அவர்கள் மரபில் பிறந்தவன் போல்
பெருங் குபேரனுக்கியது.
என்ருலும், அவன் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல, அவன் திட்டத்தில் அடங்கியிருந்தன. அவற்றை யெல்லாம் வெற்றியுடன் செய்து முடிக்க, அவனுக்கு இது வரையும் இருந்து வந்த பணக் குறைவும் நீங்கியது. அத்துடன் அறிவும் நிரம்பப் பெற்றிருந்த டான்ரே ஒரு புத்தம் புதிய பெரும் புள்ளியானுன்
மூவரின் நாமங்கள் என்றும் அவன் மனதை, விட்டகலவேயில்லை.
மும் மூர்த்திகள் போல் அவர்கள் அவன் மூளையில் ஆழப்பதிந் துள்ளனர். அவர்களைப் பழிவாங்குவது, அவனின் மாற்ற முடியாத சபதம். இம்மியும் தளர்த்த இயலாத திடமுள்ள தீர்மானம், எங்கிருப்பினும் உங்களை நான் தேடிப் பின்தொடர்வேன். எனது பிடி யினின்றும் தப்பியோட உங்களால் முடியவே முடியாது. பழிக்குப் பழி பல்லுக்குப் பல்லும், கண்ணுக்குக் கண்ணும், வாங்கியே தீரு வேன்; இது நிச்சயம், ஆகா! டாங்கிளே! பேணுண்ட்! வில்பேட் 56,169rhl
 
 
 

R
9. வைரக்கல்
இத்தாலியில் போகே என்ற நகருக்கும், பெல்காட் என்ற கிராமத்திற்குமிடையில் ஓர் சத்திரம். வழிப்போக்கர் இங்கு இர வைக் கழித்துச் செல்வது வழக்கம். சிலகாலம் பிரான்சிலுள்ள மார்சேல் பட்டணத்தில் வசித்த கண்டருே என்பான், அதன் உரிமை MILITZT GOTTGOT
சத்திரமோ மிகச் சிறியது. ஒரு சிறு குடிசை அளவுதாணி ருக்கும். எளிமையான கோலம், அதன் வெளிப்புறத்தோற்றம் தூர தேசப் பிரயாணிகள், அகதிகள், அலைந்து திரியும் அஞதைகள் தங்கும் மடமென்று சொல்வதுதான் பொருத்தமானது. அதன் வாச லில் தகரமொன்று தொங்கியது. அதனில் நரியின் தலை உருவம் தீட்டப்பட்டிருந்தது. சாவடியின் வியாபார விளம்பர அடையான மாய் விளங்கியதுபோலும் அச்சின்னம். காற்று வீசும் போதெல் லாம் ஆடி அசைந்து கிளிங் 1 கிளிங் 1 என வாசற்கதவில் மோதி 2/5/e
சத்திர முதலாளி ஒர் நாட்காலை வெளிவாசலில் நின்றன். விருந்தினர் எவரும் வருவார்களோவென, தெருவின் இரு ஓரங்களை யும், தூக்கம் கலையாத கண்களால் பார்த்து நின்றன். 'ஒருவரை யும் காணவில்லையே இன்றும் எவரும் வரத்தான் மாட்டார்கள், என்பாடு என்றும் ஒரே மாதிரி' எனத் தன்னுள் நொந்தான்;
இன்னுஞ் சிறிது நேரம், வாசலில் தாமதித்திருப்பாளுகில் மனம் தேறியிருப்பான். தொலேயில் ஒரு உருவம் விரைந்து வருவதைக் கண் டிருப்பான். அது குதிரையில் சவாரிசெய்து சத்திரத்தை நாடிவரும் நாடோடி மனிதனுக விரிவடைந்தது. குதிரையோ வாயுவேகத்தில் ஒடியது. அதன் பாய்ச்சல் பார்ப்பதற்குப் பயங்கரமாயிருந்து. சத்திரத்தைக் கிட்டியதும், அஃது ஒரு குரு, அன்றேல் குருவானவர் வேடத்தில் தன்னை மாற்றி அமைத்த சாதாரண மனிதன் எனத்
தெளிவாகியது. " 43

Page 28
அப்பாழடைந்த சத்திரத்தின் முன் தன் குதிரையை நிறுத்தி ஞர். குதிரையினின்றும் குதித்திறங்கினர், கையில் சவுக்கை ஓங்கிய வண்ணம் பக்குவமாய்த் தன் குதிரையைக் கட்டி வைக்க ஓரிடத் தைத் தேடியவர், பாதி சரிந்த கதவொன்றைக் கண்டார். அதன் நீண்ட கைபிடியில் குதிரையைக் கட்டினர். சவுக்கால் மும்முறை
கதவில் டாம், டாம் எனத் தட்டினர். காவிபடிந்த தன் பற்களைக்
காட்டியவாறு, வெளியே வந்தான் சத்திர முதலாளி கண்டருே.
"ஐயா வணக்கம் 1 வாருங்கள் காத்திராத தங்கள் வரவு இன்றுவரை எனக்குக் கிட்டாத அதிட்டம். தங்களுக்கு என்னதான் வேண்டுமோ' என்ருன்,
குருவானவர் உடையில் வந்தவர் நெடுநேரம் அவனை ஆராய் வுடன் பார்த்தார்.
'நீ திரு. கண்டருே தானே' என்ருர், "ஆம்" எனப் பதிலளித்தான்.
இல காலம் மார்சேலில் வசித்தாயல்லவா?"
சத்திர முதலாளி சற்றுத் திகைத்தான். ஆச்சரியமடைந்த
வன் பரக்க விழித்தான்.
**ஆம், அங்குநான் வசித்தேன்' என்ருன் :
நல்லது இப்போது குடிக்க இரசம் ஒரு போத்தல் கொடு" ானப் பணித்தார் . ".
தன் முக்கோணத் தலேப்பாவைக் கையில் எடுத்தார். அவர் தலை மயிர் நன்முகக் கறுத்திருந்தது. புருவங்களில் மாத்திரம் நரைமயிர், தெட்டந் தெட்டனுகக் காணப்பட்டது.
இரசத்தை பாத்திர மொன்றில் நிரப்பி, ஒருகையால் நீட்டி " ஞன் கண்டருே களைதீரக் குடித்து முடிந்ததும், மீண்டும் குறிப்பாக
அவனைப் பார்த்தார்.
* 1815 இல் மார்கேலில் உள்ள உன் 'வீட்டிற்கு அருகா மையில் வசித்த, எட்மன் டான்ரேயைத் தெரியுமா?" என்ருர்,
**ஆம் நிசமாகவே அவனை எனக்குப் பலகாலமாகத் தெரியும்" என்றவன்,
* ஆ! பாவம் அவன் டான்ரே உயிருடன் இன்னும் இருக் கிருனு ? விடுதலையாகி விட்டதா அவனுக்கு," என வியப்புடன் விசாரித்தான்.
குருவானவர். அவன் மரணிக்குமுன் சிறைச்சாலையிலுள்ள அவனது "
அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்; அவனின் படுக்கையை அடைந் 鐵4
 

தீதும் அவன் கண்களில் நீர் வடிய என்னை வரவேற்ருன், 'சுவாமி நீான் குற்றமில்லாதவன். நிரபராதி எனக்கும் இக்கதி ஏற்பட்டுள்ளதே என அழுது புலம்பினன்."
"தம்பி குற்றமில்லாதவர் தண்டிக்கப் படுவதும், குற்றம் புரிந்தவர் தப்பி விடுதலை அடைவதும் உலக இயல்பு. ஆனல் கடவுள் ஒருவர் இருக்கிருரல்லவா? அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்ற றுக்கும் என்பது தெரியாதா? அரசனின் தீர்ப்பு உனக்குக்கிடைத் துள்ளது. அதுவும் உன் ஆயுள்காலம் மட்டும் தானே8 அதன் பின் நித்திய சீவியம் உனக்கு ஆரம்பமாகும். அப்போது கிடைப்பது பேரின் பம், வாழ்வின் இலக்கு அதுவல்லவா? எனக் கூறி அவனை சமாதா னப் படுத்தினேன்' என்ருர்,
**ஆம் உண்மையாகவே அவன் குற்றவாளி அல்ல. அவனில் பாதகம் எதுவுமே கிடையாது, குற்றமோ அவனில் அணுவுமில்லை. ஆஞல் என் செய்வான் அவன். பாவி எட்மண்ட் அநியாயமாகவே மாண்டான்' என மெல்லக் கூறினன்.
'நீ சொல்லியவை எல்லாம் மெய், சிறையில் டான்ரே சாகு முன், வன்மையாய்ச் சாதித்த உண்மையும் இதுவே. இவ்வுண்மையை நேரில் தெரிந்து கொள்ளவே, இவ்விடம் நான் வந்ததின் முதற் காரணம். இன்னும் சொல்லுகிறேன் கேள், அவன் என்னிடம் ஆவ லுடன் விடுத்துள்ள வேண்டுகோள் ஒன்றுண்டு தான் கைதியாவ தற்கும், சிறையில் அடைபடுவதற்கும் ஆதாரமாக அமைந்த மர்ம காரணத்தை, துப்புத்துலக்குமாறும் கவலையுடன் கேட்டுக்கொண் டான்' என்ருர்,
இவற்றையெல்லாம் விளக்கமாய்க் கேட்டுக்கொண்ட கண்ட ருேவின் கண்கள், இரவில், பூனையின் விழிகள் போலாயின. அயே புசோன் அவனை அலட்சியம் செய்வதுபோன்று மீண்டும் தொடர்ந் தார்.
'தனவந்தஞன ஆங்கிலேயர் ஒருவர் டான்ரேயுடன், சிறை யில் தங்கிஞர், சிலகாலத்தின் பின் இருவரும் நெருங்கிய நண்பர்களா ஞர்கள். பணக்காரக் கைதிக்கு ஒரு முறை கடும் நோய் உண்டானது.
டான்ரே அவரை எவரும் அறியாமல் அன்புடன் பராமரித்து வந்தான். அவர் குணப்பட்டதும், அவருக்கு விடுதலை அளிக்கப்பட் டது. சிறைச்சாலையை விட்டுப்போகுமுன், அவர் தன்னிடமிருந்த விலைமதிப்பதற்கரிய வைரக்கல் ஒன்றை அவன் தனக்குச் செய்து வந்த அரிய சேவைகளைப்பாராட்டி, அன்பளிப்பாகக்கொடுத்துச் சென்ருர் ஐம்பதினுயிரம் பிராங் பெறுமதியானது அக்கல்"
"ஆ"கடவுளே! அப்படியானுல் அக்கல் எவ்வளவு பெரிதாக
இருக்கவேண்டும்' என ஏங்கினன், " 45

Page 29
"அதனை நீ பார்க்கலாம். என் சட்டைப் பையில்தான் அது இருக்கிறது" என்றவர்
தன் பைக்குள் கையை விட்டார். செந்நிறச் செப்பொன்றை எடுத்தார். அவன் பார்க்கும்படி அதனைத் திறந்தார். மூடியை எடுத்ததும் பளிச்சென உள்ளிருந்த வைரக்கல் பிரபை வீசியது. அவன் கண்கள் கூசின. பிரமிப்படைந்த கண்டருேவுக்குண்டான” பிரேமை, அவனைத் திகைக்கச் செய்தது.
அபேபுசோன் செப்பை மூடித் திரும்பவும் பைக்குள் திணித் றார்.
"டான்ரே இக்கல்லை நான் "சாற்றேடிஇவ்" சிறைச்சாலைக்குச் சென்றிருந்தபோது எனக்குத் தந்தார். ஆணுல் என் சொந்தப் பாவ னைக்காகவல்ல. தன் வாலிப வயதினில், ஆருயிர் நண்பர்கள் நால் வர் இருந்தனராம். அவர்களில் ஒருவர் கண்டருே, மற்றவர் டாங் கிளே. மூன்ருவது நபர் பேணுண்ட் என்பான். நாலாவதோ ஓர் இளம் பெண். அவளைத் தன் அன்பு மனவியாக மாலை சூட்டி மகிழ விருந்தாராம். கண்டருே அவள் பெயர் உனக்குத் தெரிந்தது தானே?
'அவளா? மேசிட் அவள் பெயர்' என்ருன் கண்டருே.
"நிச்சயமாகவே அவள்தான்' என்ற வரி ன் முகம் ஒடிக் கறுத்தது. கண்கள் சிவந்தன. நெஞ்சம் வெடித்து அலறுவார்போல் தெரிந்தது. துக்கம் அவர் சிந்தனையைக் கலேத்தது, ஒன்றுமே பேசா தவர் மனம் பல ஆண்டுகளுக்கு முன் மார்சேலில் அவர் கலியான விருந்து நடைபெற்ற ஒட்டேலில் தங்கியது. தூக்கத்திலிருந்தும் விழித்தவர்போல் தொடர்ந்துசெல்ல ஆரம்பித்தார்.
** இன்றே நீ மார்சேலுக்குப் புறப்படு', ** இன்ரு என்னைக் கிளம்பச் சொல்லுகிறீர்கள், ' எனத் துடித்தான் கண்டருே. நடப்பது என்ன வெனத் தெரியாது தடு மாறினன்.
* ஆம் இன்றேதான். டான்ரேயின் விருப்பம் இது. அவர்
இறுதி ஆசையை நீயே நிறை வேற்றி முடிக்க வேண்டும் என, அவரே என்னிடம் வற்புறுத்தியுள்ளார்.
"இதோ பார் 1 இக்கல்லை எடுத்துக் கொள். இதனை மார் சேலில்
விற்று அதன் கிரயத்தை ஐந்து சம பங்குகளாகப் பிரித்தல் வேண்டும். ஒவ்வொரு பாகத்தையும், தான் உயிரோடு இவ்வுலகில் வாழ்ந்து
போது, தன்னை உயிருக்குயிராய் நேசித்த ஐந்து நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்பது அவர் விடுத்த இறுதி உயில்? என்ருர்
அபே புசோன். 46
 
 
 
 
 
 
 

* பங்குகள் ஐந்தா? நாலுதானே சொன்னீர்கள்! " என்மூன் கண்டருே விளங்காது.
"மன்னிக்கவும் அது தவறு. நான் மறந்தேபோனேன். நான் குறிப்பிட்ட ஐந்தாம் ஆள் காலஞ் சென்று விட்டாரெனக் கேள் விப்பட்டேன். எட்மண்டின் தந்தை அவர். உண்மைதான? "
'ஆம் எட்மண்ட் சிறைக்குச் சென்ற அடுத்த வருடமே கால மாளுர்"
‘எப்படி அவர் இறக்க நேரிட்டது?"
"ஐயா! நான் உங்களுக்கு மறைப்பானேன். எல்லாம் உங்களுக்குத் தெரியும் போலிருக்கே. சுருங்கச் சொல்லுகில் அவர் இறந்தது பசிக் கொடுமையால் தான்'
"என்ன சொன்னுய் ! அவர் தகப்பனுரா பசிக்கொடுமை யாலா மரணமானுர்? ஒ என்ன கொடுமை! இதுபோலும் அதர்மம் உலகிலுண்டா? வீடு வீடாய்ச் சுற்றித்திரியும் நாய்களை முதலாய்
அன்புக்கரங்கள் நீட்டி, அமுதளிக்கும் சீவகாருண்ணியர் பலருண்டேg
அவரை எவருமே கவனிக்கவில்லையா??
* மேசிட் அவருக்கு ஆதரவாயிருந்தாள். அன்பாய்ப் பரா மரித்தும் வந்தாள். ஆணுல் ஆகாயத்தில் வட்டமிடும் பருந்து போல் r அவளைப் பின்னும் முன்னும் சுற்றித்திரிந்தான் பேணுண்ட், நிதமும் அவளை விட்டகலாது, காதற் கதைகள் கொல்லி, தன் மனதை அவளில் பறிகொடுத்தான் காதல் அனல் முன்னிலும் மும்முரமாய்ச் சுடர் பரப்பியது, அவன் உள்ளத்தில் கதைகள் சொல்லி அவள் மனதை மாற்ற முயன்ருன், தன்னமுற்றும் அவள் அழகில் பறி கொடுத்தவன், கொழு கொம்பு அற்ற கொடிபோல் துவண்டான். முன்னிலும் மும்முரமாய் காதல் அனல் அவன் உள்ளத்தில் சுடர் பரப்பியது. பாவம் அவள்! பரிதாபம் அவள் மன நிலை! அவன் பிடியிலிருந்தும் தப்ப முயன்ருள். ஆனல் அவள் முயற்சியெல்லாம் இல்லிக் குடத்தில்வ்ார்த்த நீர்போல் பயனில்லாது போயிற்று.
அவன் போக்கு டான்ரேயின் தகப்பனுக்குப் பிடிக்கவேயில்லை. அவன் அவளிடம் நடந்து கொண்டமுறையைத் தயங்காது கண்டித் தார். அவனுக்கு நல்லறிவு புகட்டவும் முனைந்தார். ஆனல் அவன் காதல்வெறி அவன் கண்களை மறைத்தது. புத்தியை மயக்கியது. அவர் சொல்லிய அறிவுரையை அவன் மனது ஏற்க மறுத்தது. எனவே அவர் அவன் மேல் வெறுப்புக்கொண்டார். அவன் யாரென உமக்குத் தெரிந்ததுதானே. டான்ரேயின் நம்பிக்கையுள்ள நண்ப ரென நீர் கூறிய பேணுண்ட்தான்' என்ருன் கண்டருே.
47

Page 30
'ஒகோ! அப்படியா ஏன் அவன் டான்ரேயின் விசுவாசமுள்ள நண்பன் இல்லையா?" எனச் சொல்லிக்கொண்டு மீண்டும் வைரக்கல் இருந்த செப்பைத் திறந்தார். சத்திர முதலாளி மகிழ்ச்சிபொங்க அதனேயே கண்வெட்டாது விழித்தான். அதன் ஒப்பில்லா ஒளியை தன் கண்கள் ஒரத்தால் பார்த்து வியந்தான். அவன் உள்ளத்தையே கொள்ளை கொண்டது அவ்வைரக்கல். பேராசை கொண்டவன் பெரு மூச்சும்விட்டான். தனக்கல்லவோ அது கிடைக்குமென ஆசித்தான்.
'இல்லை. பேணுண்டோவுமன்று, டாங்கிளேயுமன்று அவன் நண் பர்கள். அவர்கள் அவனின் சத்துராதிகள் இருவரும் தம்முள் ஒவ் வொரு நோக்கம்கெர்ண்டு அவனைப் பகைத்தனர். பேணுண்ட் அவன் காதலியான மேசீட்டைக் களவாட முயன்ருன், டாங்கிளே பாரோன் கப்பல் தளபதியாக சூட்சி செய்தான். இவர்கள்தான் டான்ரேயை பொனப்பாட்டின் ஆதரவாளர் எனப் பொய்க் குற்றத்தை அவன் மேற் சுமத்தினர். முந்தியவன் முறைப்பாட்டை எழுதிஞன், பிந்திய வன் அதனைத் தபாற் பெட்டியில் சேர்த்தான்.
"காகிதம் எப்போது எழுதப்பட்டது தெரியுமா?"
"டான்ரே மணம் முடிப்பதற்குக் குறித்தநாளுக்கு முந்திய நாட்பிற்பகல் நல்ல நினைப்பாயிருக்கிறது எனக்கு அவ்வமயம் நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் பேசிக் கொண்டதும், எழுதி யதும். எனக்கு அரைகுறையாக விளங்கியது. ஏனெனில் வழமை யிலும் அதிகமாக மது அருந்தியிருந்தேன். அவர்களே இரசம் வாங் கித் தந்தனர். குடி குடியெனவும் தூண்டினர். அளவிற்கு மிஞ்சிய குடி என்னே மயக்கியபோதும், அவர்கள் அப்போது செய்வது தவறு என அறிந்தேன். அவர்கள் சதியைத் தடுக்கவும் முயன்றேன். ஆனூல் நான் என்ன சொல்லிய போதும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
என்னை அதட்டினர். பேசாது தடுத்தனர், 'இதெல்லாம் பாதக
மில்லாத ஒர் பகிடி வுளையாட்டு ' எனச் சமாதானமும் கூறினர்."
என்ருன்.
"டான்ரே கைது செய்யப்பட்ட்தும், syarakar ஆதரித்துப் பேச
வில்லையா நீ ?"
'ஐயா ! அப்படிச் செய்ய நான் துணியவில்லை. அவர்க% எதிர்க்க எனக்குப் போதிய செல்வாக்குமில்லை. அவன் சார்பாகு ஏதும் சொல்வாயானல் உனக்குச்சாவு, எனவும் விரட்டினர். அவர்கள் பெரும் முட்டாள்கள் என்பது எனக்கு நன்ருகத் தெரிந்திருந்தது, இயல்பிலேயே பொல்லாதவர்கள் எத்தகைய பாதகமும் செய்யச் சிறிதும் தயங்க மாட்டார்கள். கொடுமை அவர்களது பிறவிக் குணம், பலம் என்னை நடுங்கச் செய்தது. அப்பால் சென்று ஒதுங் கியிருந்தேன். 48

'கடவுளே! என்ன மன்னியும் அன்று எனக்குத் துணிவு இல்லாது போனதே என, என் மனம் வருந்துகிறது. என்ன நினைக் கவே எனக்கு வெட்கமாகிறது. என் உடன் பிறவிபோலும், நான் டான்ரேயை நேசித்தேன். இது சத்தியம்' என்ருன்,
தன் கோளைத்தனத்தை எண்ணிச் சோர்வுற்றவன் போன்று, தலையைக் கீழே போட்டான் கண்டருே சிறிது நேரம் மெளனம், "சரி அதெல்லாம் போகட்டும். முடிந்தது முடிந்ததுதான். திரும்பிவரப் போவதில்லை. துக்கப்படுவதால் துன்பம் அதிகமாகும். இனிமேலும் எமக்கு நடக்கப்போவன பலவுண்டு. அவற்றையாகி லும் சிந்தித்துச் செயலாற்றி சித்தி பெறவேண்டுமல்லவா?
**கண்டருே டாங்கிளேபாடு எப்படி?" இக்கேள்வியைக் கேட்டதும், தலையை நிமிர்த்திஞன், துரக்கம் தெளிந்தவன்போல் கண்களைக் கையால் துடைத்தான்.
'டாங்கிளேயா? ஐயா அவன் பெரும் அதிட்டசாலி இப்போது, ஸ்பானிய யுத்தத்தின்போது போர்வீரனுகச் சேர்ந்து, போருக்குச் சென்ருன் அங்கே பெரும் பொருள் திரட்டி நாடு திரும்பியுள்ளான். இன்று பிரான்சிலுள்ள செல்வந்தருள் அவனும் ஒருவன். பேர்போன ஒரு வங்கி முதலாளியுமாக இருக்கிருன், சீமான்' என்ற பிரபுப் பட்டமும் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.'
பிரபுவா டாங்கிளேயா! ஆகா என்ன அதிசயம். பேணுண் டின் சேமம் எப்படி?"
"அவனும் வாழ்வில் ஒருபடி உயர்ந்துதான் இருக்கிருன்: பிரான்சில் பிரசித்திபெற்ற வேர்வழிகளில், இப்போது அவனும் ஒரு வளுக விளங்குகிருன் ஏராளமான பணமும் சோத்தும் சொந்தமாக வுள்ள தனவந்தன்'. யுத்தத்தின்போது அரசனின் சேனையில் சேர்ந் தான். அவனின் தீரச் செயல்களே அறிந்த அதிகாரிகள் படைத்தலை வளுக்கினர்" என்றதும், டான்ரே குறுக்கிட்டார்.
"அது எப்படியாகும்? என்னுல் நம்ப முடியவில்லையே. அவ்வ ளவு பராக்கிரமமா அவனுக்கு, பேணுண்ட்! நீயும் படைத்தலைவனு? சரி அதுவும் அப்படியே ஆகட்டும். மேசீட் என்ன செய்கிருள்? அவ ளுக்கு அதிட்ட தேவதை தாராளமாய் அள்ளிக்கொட்டியிருக்குமே' என்றர். o
'நீங்கள் சொல்லியதுபோல், அவள் பரிசில் இன்று ஒர் சீமாட்டி, உலகின் நாகரிக உடை நடையில் முதலிடமாய் போற்றப்படும் பரீஸ் நகரில் வதியும் சிறந்த பெண்மணிகளில் அவளும் ஒருத்தி, மேசீட் இப்போது திருமதி மோசோல், பேணுண்டையே மணஞ்செய்தாள். அவன் பிரபு மோசோல் என இன்று அறியப்படுகிருன் பிரபுக்கள் சபையில் பிரதான பதவியும் அவனுக்குக் கிடைத்துள்ளது." என்ருன், ,8 49

Page 31
அபேபுசோன் முகம் ஒடிச் சுண்டியது. எனினும் அதனை வெளிக் காட்டாது அடக்கியவர் மெல்லச் சிரித்தார். அது கசப்பு நிரம்பிய வரண்ட சிரிப்பு.
"டான்ரே சிறையில் அடைக்கப்பட்டபின் எவ்வளவு காலம் காத்திருந்தாள்?"
"ஐயா! பதினெட்டுமாதங்கள் மாத்திரமே கன்னியாய் கண் ணிரும் கவலையுமாக இருந்தாள்'
"ஐயா! எனத் தொடர்ந்தான் கண்டருே. "நான் கல்வி அறிவு இல்லாதவன். பள்ளிக் கூடவாசல் முது லாய் தெரியாதவன். ஆஞல் உலக ஞானம் எனக்குண்டு. அவள் டான்ரேயை அளவு கடந்து நேசித்தது நான் அறிவேன். ஆணுல் அடிக்க அடிக்க அம்மியும் நெகிழும் தானே. அவன் ஆசை வார்த் தைகள் அள்ளிச் சொரிந்தான். அவன் அன்புமொழிகள் காலகதியில் அவள் துன்பத்தைப் போக்கின. தன் காதலன் பிரிவால் மாறுக் கவலையுற்ற அவள் மனம் ஈற்றில் திரு. மோசோவ் நீட்டிய (அன்புக் காதற்) கரங்களில் ஆறுதல் கண்டது. இது புதினமன்று, மனிதரின் இயற்கைக்குணம். அவளால் அவனை வெறுத்துத்தள்ளவேமுடியவில்லை. அவனில்லாது வாழ்வு தனக்கில்லை என்ற வைராக்கியமும் கொண்டாள். அவர்கள் மணமுடித்துத் தம்பதிகளாக மாசேலிலிருந்தும் கிளம்பியவர்கள் திரும்பியதேயில்லை. அவர்களுக்கு இப்போது வளர்ந்த மகன் ஒருவன் இருப்பதாக அறிகிறேன்' என்முன்,
அபேபுசோன் சிறிது நேரம் விறைத்தவர் போல் நின்ருர், கண்டருே தன் கைகளை விரித்து வாயைச் சுளித்தான்.
"ஐயா! நான்தான் என்றும் ஒரேமாதிரி. முன் எப்படியிருந் தேனே, அப்படியே என் வாழ்கை இன்றும் இருக்கிறது. ஒருவர் ஆதரவும் எனக்குக் கிடைக்காது' என அழாக்குறையாக முறையிட்
அபேபுசோன் அதிர்ச்சியுடன் அவனேப் பார்த்தார். இரங்கி யவர் வைரக்கல் இருந்த பெட்டியை அவனுக்கு நீட்டிஞர்.
"இந் தா இதை எடுத்துக்கொள் இது உன்னுடையது' ଶT67@IT • E",
"என்னப்பா ! எனக்கா ! இக் கல் என்னுடையதா பரி காசஞ் செய்யாதீர்கள்' என்மூன்.
**ஆம் கண்டருே இது உனக்கே உரியது. டான்ரேயின் தோழர்களுக்குப் பங்கிடப்பட வேண்டிய வைரக்கல் இது. ஆனும் இன்று நான் அறிந்தது, அவனுக்குத் தோழன் ஒருவனேதான். அது யாருமன்று நீதான் இந்தா இதனைப் பெற்றுக்கொள். இதஐ விற்று அதன் கிரயத்தை நீ அனுபவி ஆனந்தமாய் உன் ஏனைய சகபாடிகள்போல் உலகில் வாழ்' என்ருர், 50
 
 

ஒரு கையால் பெட்டியை வாங்கியவன், மறு கையால் அவன் நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தான்.
"ஐயா! நீர் மெய்யாகவே கடவுள். கடவுட்தன்மை உறைந்த உத்தமர்' என்ருன்.
அபேபுசோன் அவனை வெறுப்புடன் பார்த்தார். அவன் சொல்லியதைக் கேட்டும் கேளாதவர் போல், சட்டெனக் குதிரை மேற் பாய்ந்தார்.
கண்டருே அவரைப் பின்தொடர்ந்தான். 'நன்றி நன்றி எனத் தடதடத்தான்.
எதுவுமே பேசாது, அவனைத் திரும்பியுமே பாராது, குதிரை யில் ஏறியவர் தன்வழி விரைந்தார். சத்திரம் மறைந்தது. ஓரிடத்தி லிறங்கியவர் தன் போலிவேடத்தைக் களைந்தார். தொப்பியையும் குருவானவர் உடையையும் அப்பால் எறிந்தார். அபேபுசோன் இப்போது பழைய எட்மண்ட் டான்ரேயானுர், எ னினும் அவர் இத்தாலியில் மாத்திர மன்றி, பிரான்சிலும் பிரபு மொன்ரெ கிறிஸ்ரோ என அறிப்பட்டார்.
5.

Page 32
(10) நான் உன் விரோதி
எட்மண்ட் டான்ரே சிறையில் இருந்தும் தப்பியோடி சில வரு டங்கள் சென்றன. 1838ஆம் ஆண்டு வைகாசித்திங்கள், இருபத்தோ ராம் நாள், அவன் பிரான்சில் மீண்டும் கால்வைத்தான். ஆனூல் அவனது சொந்தப்பெயரை எவருமே அறிந்திலர். 'பிரபு மொன்ரே கிறிஸ்ரோ" என்ற புகழ் பெற்ற புனை நாமத்துடனேயே அகிலமும் அறியப்பட்டான்.
அவன் பரீஸ் நகரை அடையுமுன்னரே, அவன் கீர்த்தி நகரம் முழுவதும் பரவியுள்ளது. பல அபூர்வ கதைகள் அவனைப் பற்றி வெளியாகியுள்ளன் அவனது மதிப்பிட முடியாத செல்வம், பரந்த சொத்துக்கள் யாவும் நகர மக்களைப் பரவசமாக்கியது. கடலில் அவன் சுற்றித்திரிந்த அழகிய படகு, ஏறிச் சவாரி செய்த அரா பிய குதிரைகள் யாவும் அவர்களை வியக்கச் செய்தன. வாள்வீச்சு, துவக்கு வெடி, முதலான போர்க் கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள் ளான் என்பதைக் கேட்டுப் பிரமிப்படைந்தனர். இவை எல்லாவற்
றுக்கும் மேலாக, அவன் கீழ்த் திசையில் விலைக்கு வாங்கிய அழகிய .
அடிமைப் பெண்ணின் புதினம் அவர்களுக்குப் பெரும் புதிர். அடிமை எனிலும், தன் மகள் எனச் சொந்தம் பாராட்டிப் பாதுகாத்து வந் தான் என்ற செய்தியும் அவர்கள் செவிக்கெட்டியது.
பிரான்ஸ் தேசத்தில் முதன் முதலாய் இவ்வதிசய Fř36JIž 5čT பரப்பியது, இளைஞன் அல் பேட் மோசோவ். பிரபு மோசோவ் தம்ப திகளின் ஏகபுதல்வன் அல்பேட் சிலகாலம் ரோமாபுரியில் தங்கியிருந் தான். ஏதோ அவனது அதிட்டம் பிரபு மொன்ரே கிறிஸ்ரோவும் அதே ஒட்டலில், அவன் இருந்த அறையின் அருகிலுள்ள விசா லமான அறையில் வசிக்க நேரிட்டது. இருவரும் தினமும் உணவுச் சாலையில் சந்திப்பது வழக்கமாகிவிட்டது. இரவில் விருந்தினர் உல் லாசமாய்ப் பொழுதுபோக்கும் மண்டபத்தில் கூடி, உறவும் பாராட் டினர். நெருங்கிய நன்பர்களுமானுர்கள். எனினும் ஒருவரை பொருவர் அறியாமலே நாள்கள் கழிந்தன.
52
 
 

ولايا)) அல்பேட் பிரான்ஸ் திரும்பியதும், பிரபு மொன்ரேயின் பரந்த மன நோக்கையும், சிறந்த அவன் பண்புகளையும் தன் நாட்டினர் அறியப்பண்ணினுன் அவன் புரிந்த வீரச் செயல்களையும் தன் நாட்டு மக்கள் வியக்கப் பறைசாற்றினுன் மொன்ரே எவ்விதம் தன்னைக் கொள்ளைக்காரக் கும்பலிலிருந்தும் காப்பாற்றினுர் என்ற துணிகரச்
சம்பவத்தை, விளம்பரப்படுத்துவதில் ஒரு தனி ஆர்வம் கொண்டான்.
"ஒரு நாள் மாலை நேரம், ரோமைக்கணித்தாயுள்ள கிராம மொன்றில், குதிரையில் சுற்றி உலாவி வந்தேன். இடமோ தனிமை மனிதர் எவருமே அந்நேரம் அவ்விடத்தில் கிடையாது. ஒரு தெருவின் வளைவைத் தாண்டியதும், கள்வர் கூட்டம் என்னை வழி மறித்தது என்னைப் பிடித்து, தங்கள் ஒதுக்கிடம் கூட்டிச்சென் றனர். நான் விடுதலை பெற வேண்டுமானல், நாலாயிரம் கிறவுண் இறுக்கப்படுதல் அவசியமெனவும் விதித்தான் கள்வர் தலேவன் லூயி வம்பா என்னிடம் பனமோ இல்லை. அதற்கீடாகக் கொடுக்க பொரு ளும் என்னிடம் இருக்கவில்லை எனக்குண்டான பயத்திற்கோ எல்லை யில்லை; துப்பும் மார்க்கம் டிரியாது தவித்தேன் பிரபு மொன்ரே எனது நினைவுக்கு வரவே, தாமதியாது அவருக்குச் செய்தி அனுப்பினேன்.
ஆ என்ன புதுமை என்ன துணிவு! அவர் தனித்தே என்னைத்தேடி,
ஒடோடி வந்தார். அச்சம் சிறிதுமின்றி, கள்வர் குகையினுள் நுழைந்தார். தலைவனின் காதில் ஏதோ ஒதினர் அந் நிமிடமே நான் விடுதலையானேன். அதுமாத்திரமா, அவர் நண்பனைக் கடத் திச்சென்றதற்காகவும் அவரிடம் மன்னிப்புக்கோரி நின்ருன் லூயி G) JE DA JET
"கள்வர் கூட்டத்தில், அவர் செல்வாக்கு கொண்டிருந்ததற்கு காரணம் இல்லாமலில்லை. இதனைப் பின்னுல் அவரிடமிருந்து அறிந்து ஆச்சரியப்பட்டேன். லூயிசும்பா சிலகாலமாய்க் கள்ளக்கடத்தல்
வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் கப்பலில் அல நாடுகளுக்
குஞ் சென்று தன் சட்டவிரோத கடத்தல் தொழிலைத் திறம்பட நடத்தி வந்தான். ஓர் நாள் ஆழ்கடலில் அவன் ஆபத்தில் சிக்கி
ஞன். நீரில் தற்செயலாய் மூழ்கியவனைத் தப்புவிக்க வழி எதுவு
மில்லையெனக் கைவிரித்தனர் மற்றும் மாலுமிகள். ஆனுல் மொன்ரே எதிர்நோக்கும் ஆபத்தைப் பொருட்படுத்தாது, இறத்தல் அன்றேல் பிழைத்தல் என்ற இலக்கினணுய் அவன் உயிரைக் காப்பாற்ற கட லில் குதித்தார். குற்றுயிராயிருந்தவனிேச் சேமமே கப்பலிற் சேர்த் தார். முதலுதவி கொடுத்து அவனைக் குணமாக்கினர். அவர் செய்த அப்பேருதவிக்கு, கயவனுயிருந்தபோதும், அவர் சொல்லைக் கடப்பனுே கள்வர் தலைவன்' எனச்சொல்லி முடித்தான் அல்பேட்
பிரடி மொன்ரே பிரான்சில் தங்கிய நாட்களில், ஒர்நாள் அல் பேட்டுடன், அவன் இல்லம் சென்றிருந்தார். திருமதி மோசோவ் - முந்திய ம்ேசீட் - அவரைக்கண்டதும், சவக் குழியிலிருந்தும் 9 ,53
ܥܼܲܢ

Page 33
ასწასგდ^( ...( الدولي التي
கிளம்பிய ஆவியென எண்ணிப் பயந்தாள். | ; }}}} பகறிஞள். அவள் சுய உருவம் மாறிப் பேயறைந்தவள் போல் தோன்றினுள். ஆளுல் பிரபு மொன்ரே அவள் தன்னுள் நினைத்ததுபோல் காணப் படவில்லை. எனினும் நெடுங்காலச் சிறைவாசம், அவரின் முகத்தை வாட்டமடையச் செய்தது. பழைய ஒளி குன்றிக் கறுத்திருந்தது அவர் முகம்.
திரு. மோசோவோ தன் மகனின் விருந்தினரில் வித்தியாசம்
எதுவும் காணவில்லே, சந்தேகம் சிறிதும் கொள்ளவில்லை. தன் சீவிய வரலாறுகளை யெல்லாம், ஒன்றும் ஒழியாது முதற்சத்திற்பின் போதே எடுத்துக் கூறிஞன் என்ருல், அவன் பிரபு மொன்ரேயை இன்னுரென அறியாதிருந்தான் என்பதில் ஐயமில்லே. அவன் சொல்லியவற்றைக் கேட்பதில், ஆர்வம் காட்டினுர் மொன்ரே. தன்னைப்பற்றியும் தன் நண்பண் டாங்கிளேயைப் பற்றியும் திரு மோ சோவ் நீண்ட மதிப்புரைகள் கூறினுன் அவற்றையெல்லாம் தன் மனதில் ஆழப்பதித்தார் மொன் ரே.
தேரமாகியதும் அவர்களிடம் விடைபெற்று தன் வீடு திரும்பி ஞர் பிரபு மொன்ரே "சாம் எல்சி என்ற இடத்திலுள்ள பெரிய வீட் டில் விடுதி அமைத்திருந்தார் பிரபு அவர் சொத்துக்களே மேற்பார்வை யிடவும், வங்கிக் கணக்குகளே விபரமாய் தயார் செய்யவும், புட்டோ சியோ என்ற பெயருடைய கோசிக்கன் ஒருவன் இருந்தான் அவனே அவரின் காரியதரிசியுமாகக் கடமையாற்றினுன்
ஒரு நாள் பிற்பகல் தன் காரியதரிசியை அழைத்தார் பிரபு, வழமையான முக மலர்ச்சியுடன் உள்ளே வந்தான் புட்டோசியே
"புட்டோசியோ ! இன்னுமோர் வீடு புதிதாக வாங்கவுள்
ளேன். அதன் விளம்பரத்தை பத்திரிகையொன்றில் படித்தேன். அமைதியான சுற்ருடலில், அழகாய் அமையப் பெற்றுள்ளது அவ் வீடு, அதனை நேரிற் சென்று பார்க்க விரும்புகிறேன். நீயும் என் னுடன் வரவேண்டும்' என்ருர்,
'பிரபு அதற்கென்ன. நான் வர ஆயத்தம், அது எவ்விடத் தில் உள்ளது?" என்ருன்
"ஏன், அது ஒட்டில் என்ற இடத்தில்தான் பல காலம் திரு. வில்பேட்டிற்குச் சொந்தமாக இருந்ததென்பது கேள்வி. வா. போகலாம்' என்ருர் .
ஒட்டில்" என்றதும் புட்டோசியோவின் முகம், முகமுடி போட்டதுபோன்று முற்றும் மாறியது. வில்பேட் என்ற தும் விறைப்புற்றது அவன் தேகம்.
'திரு. வில்பேட் அவர்களின் வீடா? ஒட்டிலிலுள்ளதா?' என மெதுவாகச் சொல்லியவன்
"ஐயா! அங்கு நான் வரவே மாட்டேன் கொலை அங்கே தான் நடந்தது', 54
 
 

'பயித்தியம் பிடித்துவிட்டதா உனக்கு நீ ಙ್ என்பது ன். நீ
எனக்குத் தெரியும். சிறையிலிருந்ததையும் நா செய்த களவின் குற்றத்திற்காக நீ சிறைத்தண்டனை இதுவரை நினைத்தேன். ஆனுல் இப்போது என்ன சொல்லுகிருய் கொலை, கொலை என்கிருய்'
'ஐயா பிரபுவே! என் மீது மிக்க அன்புள்ள நீர் தாரா ளமாய் தானம் வழங்கியுமுள்ளீர், இவ்வளவு காலமும் என்னுடன் அன்பாய் பேசிப் பழகியுள்ளீர், எனவே நான் மறிைத்து வைப்பது எனது மனச்சாட்சிக்கே மாறு.
'நான் கள்வன் அல்லன் என்ருலும் கள்ளக்கடத்தல் காரன். நீர் நினைப்பதுபோல் களவு எதுவும் நான் செய்ததில்லை. நான் சொல்லப்போவதெல்லாம், இந்த வில்பேட்டைப்பற்றியவை அவன் அப்போது 'நைம்ஸ் இல் நீதிபதியாக விருந்தான்.
மார் சேலிலும் இருந்தான்' எனக் குறிப்பிட்டார் மொன்ரே. 'நீ சொல்வது அவன் சம்பந்தப்பட்டதாகில் அது எனக்கு மிகவும் பிடிக்கும், அப்பால் என்ன? சொல்லேன்' என்ருர்,
'எனக்கு ஒரு சகோதரன் இருந்தான், என் பெற்gேர் இறந்தனர். இருவரும் அஞதைகளானுேம் எனக்கு வயது ஐந்து, அண்ணுவுக்குப் பதினெட்டுத் தானிருக்கும். அவர் விவாகஞ்செய்தார். அண்ணியும் அவரும் என்னைத் தம் பிள்ளே போல் வளர்த்துவந்தனர். 'நெப்போலியன் எல்பாவிலிருந்தும் தப்பி பிரான்ஸ் திரும் பினுன் அவர்சேனையில் சேர்ந்து கொண்டார் அண்ணு யுத்தத்திற் குச் சென்றவர், ஒ நாள் கடிதமொன்று அனுப்பியிருந்தார். தான் வீட்டிற்குத் திரும்புவதாகவும், என்னிடம் பணம் ஏதும் இருப்பின், அதனை நைம்சிலுள்ள சத்திரமுதலாளி ஒருவரிடம் ஒப்படைக்கும்
படியும் எழுதப்பட்டிருந்தது.
'குறிப்பிட்ட சத்திரத்தை நோக்கி விரைந்தேன் அண்ணுவைப் பார்க்கவேண்டு மென்ற அவா ஒரு பக்கமும், அவர் பணமில்லாது அவதிப்படுகின் ருரோ என்பது மறுபக்கமுமாக என்னைத்துரிதப்படுத் தியது. ஐயோ! பிரபு நான் சத்திரத்தை அடைந்ததும், கண்ட பரி தாபக் காட்சியை என்னென்று சொல்வேன். கா லடிவைத்த இட மெல்லாம் ஒரே இரத்த வெள்ளம். எப்பக்கம் திரும்பினுலும் பினம். கொலைகாரர் பலர் வெறி கொண்டவர் போல், கொல்லுவதும் கொள்ளேயடிப்பது மாகவே இருந்தனர். ஆவேசம் அளவிற்கு மீறி யவர்கள், பினங்களையே படிகள் போல் காலால் மிதித்து, நெப் போலியனின் ஆதரவாளர்களைத் தாக்கினர். இதுவே பிரான்சிய புரட்சியின் போது நேர்ந்த அசாம்பாவிதம், பலர் படுகொலைச் சரித்திர
FlbLollb.
'என் அண்ணுவை நினைத்து நெஞ்சம் பதைத்தேன். அவர் கதி என்னுகிற்ருே என ஏங்கினேன். சத்திர முதலாளியிடம் தாமதி 55

Page 34
யாது சென்றேன். முதல்நாள் மாலையில், அவர் சத்திர வாசலிலேயே கொல்லப்பட்டாரென அறிந்தேன். அவரைப் படுகொலை செய்தது யாரெனப் பலரையும் கேட்டேன். ஆஞல் எவருமே அவன் பெயரை வெளியிடத் துணியவில்லை. சத்திர முதலாளியும் மூடி மறைத்தான்.
'உடனே மாவட்ட நீதிபதி வில்பேட்டிடம் சென்றேன். என் அண்ணு சத்திரத்தில் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை புரிந்தவன் யார்? இத்துரோகம் யார் செய்தான்? என்பது தெரி யாது. ஆனல் அதனேத் துப்பறிவது அதிகாரிகளின் கடமையல்லவா?" என்றேன்.
"ஆஞல் அவன் சொல்லியது என் முகத்தில்ே அறைந்தாற் போலிருந்தது. நெப்போலியனின் கட்சியினர், எவருமே இல்லாது கொல்லப்படுவது ஒரளவிற்கு நல்லதுதானே எனச் சிரித்தவாறு சொன்னுன் அத்தோடு நில்லாது கோசிக்கராகிய நீங்கள் பணி பிடித்தவர்கள் என் முன் நில்லாதே போ! ஓடிப்போ, அல்லாது போனுல் இவ்விடத்திலிருந்தும் பலவந்தமாய்த் தூக்கிச் செல்லப்படு
வாய் என்ருன்'
'அவன் சொல்லியவை என் மனதையே துளேத்தது என் காது களே நம்பவில்லே என் துன்பத்தையே பன்மடங்கா க்கீயது அவன் சொற்கள். அவனையே உற்று நோக்கினேன். கல்லால் சமைக்கப்பட்ட விக்கிரசும் அவன் என்ருற்போல் என் கண்கன் அவனேவிட்டகலவே பில் இல
"நல்லது கோசிக்கரை நன்முக உங்களுக்குத் தெரியுந்தானே அவர்கள் சொல்லிய சொல் தவருதவர்கள், சொல்லியதைச் சாதிக்கும் சக்திவாய்ந்தவர்கள் என்பதும் உமக்குத் தெரியுமா? என் அருமை அண்ணு வைக் கொன்றது நல்ல காரியம் என்று தானே சொன்னீர்கள். மெத்தச்சரி. நான் உன்னைக் கொல்வேன். இன்றே ஆணையுமிட்டேன் இந் நிமிடமுதல் நீ என் விரோதி என்பதை பகிரங்கமாகத் துணிந்தே கூறுகிறேன் என்றேன்' எனச் சொல்லி முடித்தான் புட்டோசியோ,
அவன் கண்கள் அக்கினி உருண்டையோல் சிவந்தன். கட்டு மீறிய வனவிலங்குகளென்ன விரக்தி கொண்டான், வெருண்டான். அவனைச் சமாதானப்படுத்துவபர் போன்று பிரபு சொல்லத்தொடங் கினுர்,
" அப்படியா விரோதி என்றது அவருக்கு விளங்கவில்லையா? என்ருன் மெதுவாக
'அவனுக்கு விளங்காமலில்லே. பொலிஸ்காரர் அவன் கட்ட ளைப்படி, என்னைப்பிடிக்கத் தேடித்திரிந்தனர். ஆனல் நல்ல பாது காப்பில் ஒளித்திருந்தேன் நான் என்னைக்கண்டுகொள்ள அவர்களால் முடியவில்லை. 56
 
 
 

*அதனுல் அவன் பிதிகொண்டான். தன் உயிருக்கே ஆபத்து நேரிடுமோவெனப் பயந்தான், நைம்சில் இன்னும் தாமதித்தால் தொடர்ந்து தங்கினல், நினையாத நேரத்தில் தனக்கே தீர்ப்பு வழங் கப்படுமேர் எனவும் அச்சம் கொண்டான். எனவே அங்கிருந்தும் மாற்றலாகி, மூட்டை முடிச்சுகளுடன், வேர்சேலில் பதவி ஏற்ருன்
'நானே இட்ட சபதத்தை தீர்த்து முடிக்கவே தீர்மானித் தேன். ஆகவே சற்றும் தாமதியாது, அவனைப் பின் தொடர்ந்தேன். அவன் சென்ற வண்டியோ மிக்க வேகமுள்ளது. எனினும் கால் நடையாகச் சென்ற என்னை அரைநாள் முந்தியே போய்ச் சேர்ந் தான் அங்கு அவன் நடமாட்டத்தை இரவு பகலாய் அவதானித் தேன். அவன் செல்லுமிடம் எல்லாம், விடாது மறைவில், அவன் நிழல் போலும் சென்று, அவ்வப்போது தேவையான குறிப்புகளைச் சேகரித்தேன்.
மாதங்கள் மூன்ருகின. மாலை வேளைகளில் தினமும் ஒட்டி லுக்கு ஒடி மறைந்திடுவான் என்பதைத் தெரிந்துகொண்டேன். அங்கே ஒரு குறித்த வீட்டிற்கு அடிக்கடி போவதும் வருவதுமா யிருந்தான். வீடோ அளவிற் பெரியதும் விசாலமுள்ளது. அதனைச் சூழவுள்ள தோட்டம் சோலை போலும் பரந்திருந்தது. அதனைச் சுற்றி ஐந்தடி உயரமான மதில் போடப்பட்டிருந்தது. இரு வாசல்கள், முன்னும் பின்னுமாய் அதிலிடப்பட்டிருந்தன. திரு வில்பேட்டிற்கே சொந்தமான வீடெனவும், ஒரு இளம் விதவைக்கு அதனை வாட கைக்குக் கொடுத்துள்ளாரெனவும், விசாரித்துத் தெரிந்து கொண் டேன். சிறிய பின் வாயில் வழியாகவே அவன் வீட்டினுள் செல் வது வழக்கமாயிருந்தது. இதனையும் மறவாது. எனது குறிப்பில் சேர்த்துக்கொண்டேன்.
*ஓர் நாள் சாயங்காலம் வீட்டு மதில் மேல் எட்டிப் பார்த் தேன். அழகிய பெண் ஒருத்தி தோட்டத்தில் தனிமையாய் உலரவி வருவதைக் கண்டேன். சில நிமிடங்கள் சென்றதும் வில்பேட் பின் வாயில் வழியாய் நுழைந்து வருவதையும் பார்த்தேன். சத்தப் படாது ஒளித்திருந்து நடக்கப்போவதை அறிய என்னைத் தயார் செய்தேன். வில்பேட் வந்ததும், இருவரும் ஒருவரையொருவர்
கட்டித் தழுவிக் கொண்டனர். அரவணைத்தபடியே வீட்டினுள்
புகுந்தனர். நிச்சயமாகவே அவர்கள் காதலர் என்பது எனக்குத் தெளிவாகியது.
என் சபதம் நிறைவேற இதுவே தக்கதருணம், இன்றே செய்து முடிக்கவேண்டுமென்றும் திடம் கொண்டேன், மெதுவாக மதில் மேல் ஏறிக்குதித்தேன். தோட்டத்திலுள்ள பற்றை மறைவில் அவன் வரவை எதிர்பார்த்து ஒளித்திருந்தேன். சில மணி நேரம் போனதும் வில்பேட் வெளியே வந்தான். தான் பதுங்கிக் காத்திரும் கும், பற்றை ஒரமாகவே மெல்ல நடந்து வந்தான் கத்தியை O 57

Page 35
விரித்து, இலக்குத் தவருது ஒரே வீச்சில் அவனைக்கொல்லுவதற்கு ஆயத்தமாக ஏந்தி வைத்திருந்தேன். அவன் என்னைக் கிட்டியதும், அவன் மேற் பாய்ந்தேன். அவ்வனவு தான், அவன் மல்லாக்காய் உயிரற்றவன் போல் சத்தமின்றித் தரையில் வீழ்ந்தான்.
"திரும்பிப் பார்க்கத்திடமில்லாது ஒட்டம் பிடித்தேன். அவ் விடத்திலிருந்தும் வெகு தொலைவில், முயல் வேகத்தில் போய்ச் சேர்ந்தேன். இரு கிழமைகளில் பிரான்சிலிருந்தும் தப்பி கோசிக் காவை அடைந்தேன். அங்கே கள்ளக் கடத்தல் வியாபாரம் ஆரம் பித்தேன். எனினும் நான் பிடிபட்டுச் சிறையில் பலமாதங்கள் அடைக் கப்பட்டேன். பிரபு என் வாழ்க்கையின் இரகசியம் இதுவே. நான் கள்வஞ? அன்றேல் கொலைகாரனு? என்று நீரே தீர்ப்புக்கூறும்" என்ருன் புட்டோசியோ .
அமைதி நிலவியது. எவருமே வாய் திறக்காது மெளனமா பிருந்தனர்.
'இல்லை புட்டோசியோ ! நீ கொலைகாரன் அல்ல, என்பது தான் என் கடைசித் தீர்ப்பு' என்ருர் பிரபு சிறிது நேரத்தின் பின்
'நீ அன்று வில்பேட்டைக் கொலைசெய்யவேயில்லை. அவனை நீ காயப்படுத்தினுய் தவிர, அவன் உயிரைப் பறிக்கவில்லை. அவன் இப்போது, காயல்கள் குணமாகி, பரிசில் முன்போல் நீதிபதியாயிருக்கி முன், அவன் வீடு சென்கோனுவிலிருக்கிறது. நூறு வருடங்களில் பிரான்சில் தோன்றிய நீதிபதிகளில் திறமையும், பறித்த ஆண் டிப்பும் வாய்ந்த ஒருவணுய், பெருமையுடன் அறியப்படுகிறன்' என்ருர்,
"புட்டோசியோ முழுசிப் பார்த்தான். நம்ப முடியாதது போல்
தன் செவிகளையே சபித்தான். அவனின் கருமைவிழிகள் ஒளி குறைந் தன. முகமோ சுருங்கியது.
"நீர் சொல்வது உண்மைதானு? பிரபு நான் அவனைக் கொல்ல வில்யென்பது நிசமா?
பிரபு தலையை அசைத்தார். அவன் என் விரோதி. அவன் என் கையால் மடியவே வேண்டும் என் சபதம் அதுவே"என ஆவேசம் கொண்டவன் தீடீரெனத் தன் பேச்சை நிறுத்தினுன்
'பிரபு என்னை மன்னிக்கவும், சுகம் எனக்கு போதாதுபோலி ருக்கிறது" என்ருன். Y
"இவையெல்லாம் உன் மனதில் ஏற்பட்ட திடீர் தாக்குதலின் விளைவு. புட்டோசியோ நீ அதிர்ச்சி அடைந்துள்ளாய். அதுவே உன் உடம்பு சுகவீனப்படுவதற்குக் காரணம். அன்பா இதற்கு மருந்து ஒய்வு லிவு எடுத்துக்கொள் மூன்று நாட்களுக்கு மூன் இவ்விடம் எட்டியும் பார்க்கக்கூடாது. -
58
*
 

"நீ போகும் இடத்தில் பல பிரச்சனைகள் குறுக்கிடும். அங்கு நீ செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் பல உன் கருத்திலிருக்கும். ஆகவே வழிச் செலவிற்குப் பணம். ஏதாவது வேண்டுமானல். என ஆதரவோடு கேட்டார் மொன்ரே.
'இல்லைப் பிரபு ! நீங்கள் வழங்கும் வேதனமே, எனக்குப் போதுமானது. என் தேவைகளுக்குத் தாராளம்' எனப் பளிச்சென பதிலளித்தான் புட்டோசியோ,
"அப்படியானுல், போய்வா, விடுமுறை நாட்களை வீணுக்காதே.
எவ்வளவிற்குப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவிற்கு மனம் தள ராது முயற்சிசெய், நெடுங்கால உன் சபதம், இம் முறை பிழையாது நிறைவேற வேண்டும்' என்ருர் பிரபு,
புறப்பட்டான் புட்டோசியோ, ஆத்திரங்கொண்டவனுய், தன் வன்மத்தைச் சாதிக்க, வெறிகொண்ட வேட்டை நாய் போலும் ,
அறையைக் கடந்து சென்ருன் மொன்ரே நாற்காலியில் இருந்த
படியே, அவன் வெளியேறுவதை அவதானித்தார். அவர் அழகிய முகத்தில் என்றுமில்லாத அபூர்வ பார்வை அம்பலமாகியது.
மூன்று நாட்கள் கழிந்தன. புட்டோசியோதிரும்பவில்லை. மூன்ரும்
நாள் காலையில் பரிசிலுள்ள பத்திரிகைகள் திடுக்கிடும் தகவலொன்றை
வெளிப்படுத்தின. ஓர் மர்மக் கொலே! "பயங்கர பாதகச் செயல்' என்ற தலைப்பின் கீழ் பிரசுரிக்கப் பட்டிருந்தது. முந்திய நான் மிாலே, யாவராலும் அறியப்பட்டவரும்,நீதிபதிகளில் முதன்மையானவரெனப் போற்றப்பட்டவருமான, திரு வில்பேட் தமது இல்லத்தில் வைத்தே, குத்திக் கொலை செய்யப்பட்டார். வெளிப்புறத் தோட்டத்தில், அவர் நேஞ்சமே பிளந்து குருதி வெள்ளத்தில் குப்புறக் கிடந்தார். கத்தி அவர் இருதயத்தையே ஊடுருவியது, பார்ப்பதற்குப் பரிதாபம். 'இம்முறை பிழை எதுவுமே இல்லை. என் சகோதரன் சாவிற்கு
நான் விடுத்த சவால் முற்றுப்பெற்றது' என்ற சிறுகுறிப்பும் ஒரு
துண்டில் எழுதப்பட்டு அவர் மேலங்கியில் தொடுக்கப்பட்டிருந்து.
புட்டோசியோ அன்று காலேயே திரும்பினுன் அவன் முகம் வெளிறிப் போயிருந்தது எனினும் மன அமைதியுடன் காணப்பட்டான் 'ஒ! புட்டாசியோ! இப்போது உனக்கு நல்ல சுகம் தானே' என்ருர் பிரபு,
**ஆம் ஐயா! இப்போது எல்லாம் சரியாகிவிட்டது" 'மிகவும் நல்லது. இப்புதினம் என் உள்ளத்தையே பூரிக்கச் செய்கிறது" என்ருர்,
அவர் முழங்கால்களில் பத்திரமாய்ம் பரப்பியிருந்த புதினப் பத்திரிகையை நோக்கினுன் புட்டோசியோ, பெருமூச்செறிந்தவன், தன் அலுவல்களைக் கவனிக்க வெளியேறினுன்
'ஒன்று முடிந்தது என்ருர் பிரபு தனக்குள் சட்டென அவர் முகம், தூக்குத்தண்டனை விதிக்கும் நீதிபதியின் முகம்போல் கண்டிப்பும் காத்திரமும் கொண்டது ஒரு மர்மம்,
59

Page 36
(11) வங்கி முதலாளி
'பிரபு மொன்ரே உம்மைக் காணக் காத்து நிற்கிருர்" என் ருன் இலிகிதர்.
வங்கி முதல்வர் டாங்கிளே, தன் மேசை முன் இருந்தபடியே நாற்காலியில் சுழன்றன். சுண்டிய முகத்துடன் நிமிர்ந்து பார்த் தான்.
'உள்ளே அவரை வர விடு' என்ருன். பிரபு மொன்ரே உள்ளே வந்ததும் தலையைத் தாளக் குனிந்து வணக்கம் தெரிவித்தார். ஆனல் டாங்கிளேயோ கர்வத்துடன் உட் காரும்படி ஆசனத்தைத் தன் கையால் சுட்டிக்காட்டினன். அவர் அவன் காட்டியபடி கதிரையில் அமர்ந்தார்.
*திரு. மொன்ரே ! உரோமாபுரியிலுள்ள தொம்சன் பிரான்ஸ் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது' என்ருன் டாங்கிளே. -
*மிகவும் மகிழ்ச்சி. அதனை நான் எதிர்பார்த்திருந்தேன். பணம் எனக்குத் தேவையாகவிருக்கிறது' என்ருர் மொன் ே அமைதியுடன்.
"ஆஞல் அக்கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி ஒன்று எனக்கு விளங்கவில்லையே' என்ருன் டாங்கிளே.
அவனை உற்சாகப்படுத்த எண்ணிய மொன்ரே, 'சொல்லுங்கள், அதனேக் கேட்கலாம்' என்ருர் அமைதியாக,
"இதோ பாருங்கள் அந்தக் கடிதம். பிரபு மொன்ரேக்கு வரை யறையில்லாத கடன் கொடுக்கும்படி எழுதப்பட்டிருக்கிறதே. அதென்ன 'வரையறையில்லாத கடன்' என்ருன் டாங்கிளே.
'விளக்கம் கொடுப்பதற்கு அதில் ஒன்றுமில்லையே. இதனே விளங்குவதில் வில்லங்கம் எது என்பதை, நான் உம்மைக் கேட்க விரும்புகிறேன்' என்ருர் மொன்ரே. 60
 

'வரையறையில்லாத என்ற சொற்தொடரைத்தான்' என் முன் டாங்கினே
பிரபு மொன்ரே ஆச்சரியப்பட்டார்.
"அச்சொல் பிரான்சில் வழக்கத்தில் இல்லேயா? அன்றேல் தொம்சன் பிரான்ஸ் வங்கி பாதுகாப்பான நம்பிக்கையுள்ள வங்கி யில்லேயா ?' என ஆச்சரியத்துடன் கேட்டார்.
'தொம்சன் பிரான்ஸ் வங்கி அதி மதிப்புக்குரிய தாபனம். அவர்கள் நம்பிக்கையுள்ள வங்கியாளர்கள் என்பதில் சிறிதும் சந்தே கமில்லே அவர்களின் நற்பெயரை நான் மறுக்கவில்லை. ஆனுல் நான் கேட்பது 'வரையறையில்லாத என்ற சொல்லின் பொருளைத் தான்' என்ருன் டாங்கிளே மெல்லச் சிரித்து,
நன்முகப் புரிகிறது உமது உள்ளக்கருத்து வரையறையுள்ளது. போலும் உமது வங்கி அதஞல் உமது மனதில் குழப்பம் ஏற்பட்டுள் ளது எனக்குத் தெரிகிறது,' என்ருர் மொன்ரே.
இதனைக் கேட்டதும் புண்ணிலே புளிபட்டது போலானுன் டாங்கிளே அவன் கர்வம் அவனே ஆட்கொண்டது. தன் தோள் களே உயர்த்தி தேகத்தையே ஒரு குலுக்குக் குலுக்கினுன் தன்
அறையைச் சுற்றி நோட்டமிட்டான்.
'பிரபு, இதுவரையில் என் முதலே ஆட்சேபித்தவர் எவருமில்லே. அதன் அளவை மதிப்பிட முன்வந்தவர் ஒருவருமில்லை. அதுபோகட் டும், இப்போது என்னிடமிருந்து நீர் எடுக்கவிரும்பும் தொகை எவ் வளவு?' என்ருன் காரியத்தில் கண்ணுகி.
'நான் கேட்டுக்கொண்டது வரையறையில்லாத கடன் ஏனெனில் இவ்விடத்தில் நான் தங்கும் நாட்களில் எனக்கு எவ் வளவு பணம் தேவைப்படுமோ என்பதை வரையறுத்துக் கூறுதல்
என்னுல் முடியாத காரியம்' என்ருர் மொன்ரே.
நாற்காலியில் தன்னை நிமிர்த்திக்கொண்டான் டாங்கிrே. சில நிமிடங்கள் பின்னும் முன்னுமாகச் சரிந்தான். ஏதோ தனக்குள் சிந்தித்தான் ஒரு முடிபு அண்டவன்போல்,
"பிரபு நீர் விரும்பிய தொகையைக் கொடுக்க எனது வங்கி தயார், ஒரே முறையில் பத்து இலட்சம் பிராங் வேண்டுமானுலும் பெற்றுக் கொள்ளலாம்' என்ருன் பெருமையுடன்,
| σταδίου), சொன்னீர்கள், என்ருர் மொன்ரே அதிசயப்பட்ட
அதுகண்டு மெல்ல நகைத்தான் டாங்கிளே
'நான் திரும்பவும் சொல்லுகிறேன் கேளும் எனது வங்கி,
நானே சொந்த முதலிட்டு, நானே தலைமை வகிக்கும் வங்கி, பத்து இலட்சம் பிராங் கொடுக்கவும் ஆயத்தம்' என்ருன்
1. 61

Page 37
'பத்து இலட்சமா எனக்குப் பத்து நாளுக்கும் போதாதே. ஆ இச்சிறிய தொகை எனக்கேன்? போதவேபோதாது இச் சொற்! பணம். பத்து இலட்சமாம்! நான் சாதாரணமாக என் சட்டைப் பையில் கொண்டு செல்வது எவ்வளவு தெரியுமா? என்றவர் தன் சட்டைப் பையினுள் கையை விட்டார். இரு காசோலேகளே வெளியே எடுத்தார். ஒவ்வொன்றும் ஐம்பது இலட்சம் பெறுமதியானவை பிரான்ஸ் வங்கிக்கு விடுக்கப்பட்ட கட்டளைகள் அவை,
டாங்கிளே திகைப்பூண்டில் மிதித்தவன் போலா ஞன். தன் கண்களையே அவன் நம்பவில்லே. காசோலைகளையே வாய் பேசாது பார்த்து நின்றன். - 'நேரமாகிறது. இனிமேலும் தாமதிக்க என்னுல் இயலாது. வங்கியில் எனது கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவென்து உறக் குத் தெரியுமா? என்தேவையைச் சமாளிக்க உமது வங்கி நிதி நிலைமை போதாது. என் அபிப்பிராயம் இதுவே, உம்முடன் பேசிய இச்சில மணி நேரத்தில், நான் அளந்தறிந்து கொண்டேன். இவ்வுண்மையை ஒப்புக் கொள்வீரா நீர்? வேறு வங்கிகள் உண்டு தானே நான் போய் வருகிறேன்' என்றவர் எழும்பினர்.
அப்போதுதான் டாங்கிளேயின் மமதை அடங்கியது. ஆசனத் திலிருந்தும் குதித்தெழும்பினுன் தலை குனிந்து வணக்கம் தெரிவித்
தி .ே
மன்னிக்க வேண்டும். நான் இதுவரை தாமதித்ததை மறக்க
வேண்டும். இப்போது உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும்'
6 . 'அறுபது இலட்சம்' என்ருர் ." 'அறுபது இலட்சமா' எனத் தடுமாறியல்ன் சேரி நீர் விரும் பிய தொகையை நிச்சயமாக எடுக்கலாம்' என்ருன்.
'இன்னும் அதிகம் தேவைப் பட்டால் பிறகு
என்ருர் மொன்ரே
நாளே முற்பகல் பத்து மணிக்குப் பணம் உமது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படும். என்ன மாதிரிப் பணத்தை அனுப்புவது. பொன் வெள்ளியாகவா அல்லது நோட்டுக்களாகவா?' என்ருன்
'விரும்பினுல் அரைப்பங்கு நோட்டுக்களாகவும் மீதி தங்க மாகவும்' எனச் சொல்லியவர் அறைக்கு வெளியேசெல்ல நடந்தார். "பிரபு கணக்கிட முடியாத உமது செல்வம், எனக்கு இன்று வரை தெரிந்ததில்லை. என் அறியாமையை மன்னிக்க வேண்டும். நீர் பெரும் தனவந்தர் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்' என்ருன் 1 froo (3Gir.
சீக்கிரம் என்னைப் பற்றியும் , என் சொத்துக்கள் பற்றியும் நீர் அறிய வருவீர்' என்ற பிரபு, என்றுமேயில்லாத புன்னகை யுடன் தலை குனிந்து வணங்கிவிட்டு வெளியேறிஞர். 62
 

(12) அவன் கொலைகாரன்
அன்றிரவு ஓர் நாடகம் திறமான நடிகர் நடிகைகள் நடிக்கும் சுவையான காட்சிகள் பல அடங்கியனவாம் அந் நாடகம். நாடக சாலையில் பெரும் ஆரவாரம். ரசிகர்கள் கொடிவிட்டுக் கும்பல் கும் பலாய் சென்று கொண்டிருந்தனர். மண்டபமோ சனத்திரன் நிரம்பி வழிந்தது. மொன்ரேக் கிறிஸ்ரோவும் தன் வளர்ப்பு மகளுடன் பொழுதுபோக்க அங்கு சென்றிருந்தார்.
திடீரென ஒரு சத்தம் 'பாருங்கோ அம்மா பாருங்கோ!' என்ற அதிசயக் குரல், பிரத்தியேகமான ஆசனங்கள் அமைக்கப்பட்ட இடத் திலிருந்தும் கிளம்பியது. அது அல்பேட் மோசோவ், தன் தாயாருக்கு யாரோ ஒருவர் நாடகம் பார்க்க மண்டபத்தில் நுழைவதை சுட்டிக் காட்டிய எச்சரிக்கையின் எதிரொலி, அவர்கள் மாத்திரமன்றி அண் குள்ள அனைவரின் கண்களும், அவன் காட்டிய திசையை நோக்கின
முதல் வகுப்பில் பிரத்தியேகமான இடத்திற்கு பிரவேசிக்கும் வாயிற்கதவு திறக்கப்பட்டது. முப்பத்தைந்து அல்லது நாற்பது வய துடைய ஒருவர், கறுத்த உடையில் உட்புகுவதைக் கண்டனர். அவர் கரங்களில் தொங்கிய வண்ணம், தோகைவிரித்தாடும் மயில் போலும், தொடர்ந்தாள் ஒர் இளம் பெண். கீழைத்தேசிய உடை அணிந்திருந் தாள் அப்பேரழகி அவள் ஆபரணங்கள் விலையேறப் பெற்றவை அவள் நடை, உடை, அழகு இம்மூன்றும், நாடகம் பார்க்கவந்தோர் அனைவரையுமே கவர்ந்தன.
திரு. மோசோவ் குடும்பமும் அன்றிரவு நாடகத்திற்குச் சமுக மளித்தது. திருமதி மோசோவ், பிரபு மொன்ரேயை உற்று நோக்கி ஞள். தன் தலையை துயருடன் அசைத்தாள்.
ஆ எவ்வளவு மாற்றம் மிகவும் வெளிறியிருக்கிறதே அவர் முகம்' என்ருள் தனக்குள்,
63

Page 38


Page 39

அன்று கூட வேண்டிய பிரபுக்கள்சபை வழமையிலும் முன்ன தாக ஆரம்பித்தது. என்றுமில்லாததுபோல், சபை முழுமையாக விருந்தது, திரு மோசோவ் மாத்திரமே, வழமைபோல் குறிப்பிட்ட
வும் காணப்படவில்லை. சிலசமயம் அவன் புரிந்த துரோகச் செயலே வெளியாக்கிய பத்திரிகையை அவன் படித்திலன் போலும்.
உள்ளே சென்ற திரு. மோசோவ் வழக்கம் போல், தன் ஆச னத்தில் அமர்ந்தான். அதே வேளை, அவனின் எதிரியான ஒரு பிரபு எழும்பினர். சபையில் சத்தமில்லாது நிறை அமைதி நிலவியது. பிரபுக்கள் பார்வையில் பரிதாபக்குறி, குறிப்பாகத் தோன்றியது .
* பிரபுக்களே! இன்று காலையில் வெளியான "எல் இம்பாஷல் பத்திரிகையை வாசித்திருப்பீர்களென நான் நம்புகிறேன். காத்திர மானதும், யாவர் கவனத்தையும் பறித்ததுமான கவலேக்குரிய புதின மொன்று அதில் பிரசுரமானதும் நீங்கள் அறிவீர்கள். அதனை நான் வாசிக்க விரும்புகிறேன்' என்றவர் பத்திரிகையைக் கையிலெடுத்துப் பிரித்தார். சபைமுன்னிலையில் ஆத்திரத்துடன் அறுத்துறுத்து உரக்க வாசித்தார்.
'யானினு, பேர்ணுன்ட் என்ற பெயர்களைக்கேட்டதும், திரு. மோசோவின் முகம் பழுத்த இலைபோல் நிறம் மாறியது. அவன் உடல் உதறியது. வாசித்து முடிந்ததும், அவைத்தலேவர் சபையை விழித்து, வாசிக்கப்பட்ட செய்தியின் உண்மையை ஆராயும்படி
போல் நோக்கினர். அவர் முகத்தில் காணப்பட்ட கேள்விக் குறியை உணர்ந்த திரு. மோசோவ் எழும்பினன்.
* பிரபுக்களே! இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட அறிக்கையின் உண்மை, பொய்யைப் பொறுமையுடன், அலசி ஆராய்வது அவசியம். பொதுநலன் கருதி அது விவாதிக்கப்படுவதும் நியாயம். ஆணுல் சபையோர் மனதில் முன்னதாகவே முரண் ஏற்படுமாகில், உண்மையை உள்ளபடியே அறிய முடியாது. தீர்ப்பும் பாரபட்சமின்றி வழங்க இயலாது. எனவே இன்று பிற்பகல்வன்ேர விசாரணையை ஒத்திவையுங் கள். எனது மானத்தைப் பறிக்க, நற்பெயரைப்போக்க, பரப்பப் பட்ட இந்த அறியாய அறிக்கையை நான் எதிர்க்கப் போதிய அவ காசம் கொடுப்பது நீதியல்லவா?" என்ருன்.
அவனின் வேண்டுகோளேச் சபையினர் ஏற்றனர். அன்று பிற் பகல் எட்டு மணிக்கு மீண்டும் சபைகடுமெனத் தலேவர் அறிவித் 岛TT。
பிற்பகல் எட்டுமணி சபையோர் அனைவரும் குறித்த நேரம் தவருது சமுகமாயிருந்தனர். பல பத்திரங்களடங்கிய கட்டுடன் மோசோவ் சபையினுள் புகுந்தான். அவன் அமைதியாகவும், நிதான மாகவும் எடுத்தடி வைத்தான் .
67

Page 40
அதே நேரத்தில் வாயில்காப்போன் ஒரு கடிதத்தை அவைத் தவேரிடம் நீட்டிஞன். அக் காகிதத்தைப் பிரித்துக்கொண்டே,
'திரு. மோசோவ் அவர்களே! உம்மில் சுமத்தப்பட்ட குற்றம் எதுவெனத் தெரியும்தானே. அதனே மறுத்து சுற்றவாளி என நிரூபிக்க முடியுமா? அப்படியானுல் சொல்லுங்கள்' என்ருர்,
'பிரபுக்களே! இக்குற்றச்சாட்டு பொய்யானது தவறுதலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது அதற்கத்தாட்சியாக எனது இப்பத்திரங்களே எனக்குச் சாட்சி சொல்லும் என்றவன், ஒவ்வொன்முகப்படித்துக் காட்டினுன் தன் பாதுகாப்பிற்காக விவரங்கள் ஒன்றன்பின்னுென் எடுத்துரைத்தான் ஆராய்வுடன் தனக்கெதிரான குற்றத்தை எதிர்த்து சான்றுகளுடன் மறுப்புக்கொடுத்தான் அது பிழையான வதந்தி எனவும் சபையோருக்கு விளக்கினுன் 'அலிபாச்சே தன்னில் நம்பிக்கைவைத்திருந்தவர் என்பது உண்ம்ை' அதற்கு அடையாளமாக அவர் எனக்களித்த வெகுமதி இதோ' என்றவன் அவர் கொடுத்த ஒரு தங்கக் கணையாழியை கையில் ஏந்திச் சபையோர் பார்க்கச்
அன்றியும் அவர் என்னில் வைத்த நம்பிக்கை மிக்க உறு தியானது. அதஞற்தரன் அவர் மரணிக்குமுன், தன் மனைவியையும், மகளேயும் என் பொறுப்பில் விட்டு, நிம்மதியாகப் பரலோகஞ் சேன் முர்' என்ருன் தொடர்ந்து.
நீட்டப்பட்ட காகிதத்தைப் பிரித்துப் படித்த சபைத் தலைவர் முகம் முற்றும் உருமாறியது.'
'திரு மோசேவ் அவர் மனைவிக்கும் பிள்ளைக்கும் என்னுகியது தெரியுமா?
'ஐயா! எனக்குத்தெரியாது, அலிபாச்சா இறந்ததும், அவர்களும் ஒடிமறைந்தனர். அவர்களைத் தேடுமளவும் தேடிஞன். ஆஞல் அவர்கள் அகப்படவில்லை. மிகவும் கவலைக்குள்ளாகினேன். AN அப்படியா' என்ற தலைவரின் முகம் கடினமாயிற்று வெறுப் புடன் நோக்கியவர், சபையைப் பார்த்து,
சீமான்களே! எனக்கொருகடிதம் இடைத்துள்ளது எங்கள்
விசாரனை சம்பந்தமான கடிதம் அது முக்கியமான சாட்சி ஒரு
வரிடமிருத்து வந்துள்ளது. அவியாச்சா மரணிக்கும் போது, அவர் அருகில் இருந்தவராம் சாட்சியம் சொல்வதற்கு அனுமதி கோரி இங் கேயே வாயிலண்டை நிற்கின்றர்
பார்த்தபடி,
சீக்கரம் யாரெனத் தெரியவரும் என்றவர், வாயில் காப்போன் பக்கம் திரும்பினுர்
68
அந்தச் சாட்சி யாரோ?" என்ருன் (Strofy (33 frei Jssińrsji கீழே
*அந்த அம்மையாரை உள்ளேவிடு' எனக் கட்டளையிட்டார்
*、
 

அம்மையாரென்றதும் ஒரே முணுமுணுப்பு சபையில் கிணு ணுெத்தது. எல்லோர் கண்களும் உள்ளே வரும் இளம் பெண்ணின் பக்கம் திரும்பின. அவள் இளமையும், அழகும் காந்தக்கல் போன்று அவர்களைக் கவர்ந்தன. அவள் ஒரு கிரேக்கப் பெண். எனவே அவர் களுள் அநேகர் அவளே அறிந்திருந்தனர். பல முறைகளில் படமாளி கையில் மொன்ரே கிறிஸ்ரோவுடன் கண்டிருந்தனர்.
அவளைக்கண்டதும், கால்கள் நிற்க மறுத்தன போல் மோசோவ் கதிரையில் வீழ்ந்தான். வீழ்ந்தவன் மனதைப் பயங்கர எண்ணங்கள் ஏங்கச் செய்தன.
'அம்மா! யானினுவில் நேர்ந்த சில சம்பவங்கள் சார்பாகச் சாட்சியமளிக்க வந்திருக்கிறீர்களல்லவா?" எனக்கேட்டார் தலைவர்
'ஆம் என்ருள் அந்த அம்மையார். 'அச்சம்பவங்கள் நடக்கும் போது நீர் சொற்ப வயதுடைய வராக இருந்திருக்க வேண்டுமே"
'எனக்கு அப்போது வயது நாலு ஆணுல் நடந்ததை நான் p கவில்லே. என் ஞாபகத்தில் பசுமையாகவிருக்கின்றன. என் பெயர் கெயிடி, அலிபாச்சாவின் மகள் நான். என் பிறப்புப் பத்திரம் இதோ இருக்கிறது. பெணுன்ட் மெனண்டெகோ என்ற பிரான்சிய சேனைத் தளபதி, என்னையும் எனதருமை அம்மாவையும் எல்கொபீர் என்ற அடிமை வியாபாரிக்கு விலை பேசி விற்று, வாங்கிய நாலு இலட்சம் பிராங்கின் பற்றுச் சீட்டும் இங்கேயே இருக்கின்றது' என ஆத்திரம் பொங்கக் கூறியவள், பல பத்திரங்களைத் தலைவரிடம் கொடுத்தான், கெயிடி சொல்லியவற்றைச் செவி சாய்த்த மோசோவ், காற் றிலகப்பட்ட இலைபோலும் ஆடினன். தப்புவதற்கு வழி இனிமேலில்லே என நினைத்து நினைத்து நெஞ்கம் புண்ணுனன்.
இதற்கிடையில் அரேபிய மொழி தெரிந்த பிரபு ஒருவர் கொடுக்கப்பட்ட புத்திரங்களில் ஒன்றின் மொழிபெயர்ப்பை, எழுந்து நின்று வாசித்தார்.
"கொன்ஸ்தாந்திநோப்பிளில் வசிக்கும் அடிமை வியாபாரி எல் கபீர் ஆகிய நான் சொல்வது முற்றும் உண்மை. பிரான்சிய தளபதி யொருவர், ஏழு வருடங்களின் முன் யானினுவிலிருந்த அலிபாச்சா வின் மனைவியையும் மகளையும் எனக்கு விலைபேசி விற்று, நாலு இலட்சம் பிராங் பெற்றுக்கொண்டார். கொன்ஸ்தாந்தி நோப்பிளை யடைந்ததும், அவர் மனேவி இறந்தாள். நான் அவர் மகளை பிரபு மொன்ரேகிறிஸ்ரோவுக்கு விற்று அவரிடமிருந்து எட்டு இலட்சம் பெறுமதியான வைரக்கல் ஒன்றைப் பெற்றுக் கொண்டேன்"
ஒப்பம் : எல்கொபீர் 12 69

Page 41
இப்பற்றுச் சீட்டின் வாசகத்தைக் கேட்டதும், சடிையோர் என்ருமே பேச்சுக் கொடுக்கத் துணிந்திலர் பெரும்புயல் வீசி முடிந் தது போல் அமைதி நிலவியது, பிரபுக்கள் சபையில், ஆணுல் திரு மோசோவோ அவர்களிலும் மோசம் இறந்தவர் ஆவி தன் முன் தோன்றினுற் போல் தலே கீழே தொங்கிய வண்ணம், அறிவிழந்து செய் வதறியர்து ஊசலாடினன் தன் ஆசனத்தில் இருந்தபடியே.
'திரு. மோசோவ்! இங்கு நிற்கும் பெண், அலி பாச்சாவின் மகளென அடையாளம் கண்டுகொண்டீரா?' எனக் கேட்டார் சபைத் தலைவர்.
ஆசனத்திலிருந்தும் எழும்ப உன்னினன் திரு. மோசோவ், ஆளுல் மூடியவில்லே.
'இல்லை 1 இல்லை இதெல்லாம் என் எதிரிகளின் சூழ்ச்சி என உரத்து இருந்தபடியே சொன்ஞன்.
‘என்னை உனக்குத் தெரியாதா? நீ ஒர் துணிந்த ஆண்மகனுயின்
நிமிர்ந்து பார். அதற்கும் சக்தி உனக்கில்லே, பேடி நீ. நீ தான் பெணுன்ட்மொண்டெகோ திரு மோசோவ் என்ற பெயரை நீயே உனக்கு வழங்கி ஒரு பிரபுவுமானுய், நன்று ! நன்று! என் அருமைத் தந்தையைக் காட்டிக்கொடுத்த துரோகி நீ என் அம்மா அகால
மரணம் அடைவதற்கு காலாயிந்த காடை நீ என் அப்பா உன்னில்
வைத்திருந்த நம்பிக்கைக்கு மாருய், அவரை அவர் எதிரிகளுக்குக் கையளித்த வஞ்சகன் நீ. (என் அப்பாவின்) சகபாடிகளான சகலரை யும் சதிசெய்து இயமலோகம் அனுப்பிய சதிகாரன் நீ. ஏளுே என்னை மாத்திரம் தப்பிப் பிழைக்க விட்டாய் பாதகா ? ! உன் முகத்தை எப்படி நான் மறக்க முடியும்? சிறியவளாய் இருந்தபோதும் என் ஞாபகம் குன்றவில்லை. கண்டுகொண்டேன் உன்னை அன்றேநாடக மண்டபத்தில் பழிகாரப் பயலே என்னையும் என் அம்மாவையும் விற்ரு பல்லவா விலைக்கு அடிமைகளாக அந்நியர் கையில் ஒப்படைத்தாயல் லவா? உன் மனச்சாட்சிதான் என்ன? நீ புரிந்த கொடுமை என் மனதில் பதிந்துள்ளது. அது என்றுமே அகலாத தளும்பாகத் தங்கி யுள்ளது பார்! பார் ' எனக் கதறினுள் கெயிடி,
சபையோர் உண்மையை விளங்கினர். இதற்கு மேலும் விரி
நெல்லிக்கனிபோல் திருமோசோவின் மோசடிகள் அவர்களுக்குத் தெரிந்தன. கெயிடியின் பேச்சே, அவனே வாய் திறவாது மனம் கெலிக்கச் செய்ததை, அவர்கள் அறிந்தனர்.
 

சபைத்தலைவர் சபையைப் பார்த்து 'பிரபுக்களே! திரு. மோசோவ் தேசத்துரோகியும், அரச துரோகியுமாவான். அவனின் இவ் இழிசெயல் எங்கள் நாட்டிற்கே பேர் அவமானம், உங்கள் அபிப் பிராயம் என்'ை எனக் கேட்டார்.
**ஆம். துரோகி அவன். ஒரு நிமிடமும் இத் நாட்டில் தங்க அவனே அனுமதிக்கக் கூடாது." என ஒரே குரலில் தலைவர் பிரேரணையை ஆமோதித்தனர். இத் தீர்ப்பைக் கேட்ட மோசோவ் பயித்தியம் பிடித்தவன் போல எழும்பி ஓடோடிச்சென்ருன்
கெயிடியோ, சபையிலுள்ள பிரபுக்களே வணங்கிவிட்டு அறையி லிருந்து வெளிக்கிளம்பினுள் வழியில் யாரோ அவளை இடித்துக் கொண்டு செல்வதை உணர்ந்தாள் கெயிடி அது யாருமன்று திரு. இம பூ சோவின் மகன் அல்பேட் மோசோவ் தான்.
| η

Page 42
(14) சவால்
தனது தந்தைக்கு நேர்ந்த அவமானத்தை, அல்பேட்டால் முடியவில்லை. சபையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளேயெல்லாம் கவனித்தவன், தன் தகப்பனுர் படும் மனவேதனையை அவதானித் தான். விசாரணை முடிவில் அவர் விசர் பிடித்தவர் போல், வெளியே ஓடி மறைவதையும் பார்த்து மனமுடைந்தான்.
கள்வணுகிலும் சரி, கொலேகாரனுகிலும் சரி அவன் தன் அப்பா அல்லவென, அவனுல் மறுக்க முடியுமா? அன்றியும் தந்தையில் கொண்டுள்ள அவனின் இறற்கையானபாசம், அவனுக்கு அளிக்கப் பட்ட தீர்ப்பு நீதியானதென ஏற்க மறுத்தது. சரி பிழை தேர்ந்தறியும் அவன் பகுத்தறிவு தேய்ந்து குற்றமெதுவும் தந்தையில் இல்லையெனச் சாதித்து வெகுண்டான். யார் செய்த சூழ்ச்சியோ என் தந்தையை வலை வீசி இக்கட்டுக்குள்ளாக்கியது எனத் தன்னையே கேட்டுக் கொண் டான் அல்பேட், சாட்சியம் சொல்லிய அடிமைப் பெண், அவன் மன திற்கு வந்தாள். அடுத்தாற்போல் அவள் கூடிக்குலாவித் திரியும் பிரபு மொன்ரேயின் நினைவு இயல்பாகவே தோன்றியது. அவன் மனதில் இவர்களாகத் தானிருக்கவேண்டுமெனத் தீர்மானித்தவன் கடும் கோபங்கொண்டான். நல்லறிவு இழந்தவன் ஆவேசம் பிடித்தவன் ப்ோல், தன்னையே மறந்து தான் செய்வது இன்னதென அறியாது மனம் போன போக்கில் பிரபு மொன்ரேயின் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டான். தன்னுயிரையே காப்பாற்றிய பேருபகாரி யென் பதைப் புறக்கணித்தான்,
*செல்லாவிடத்துச் சினம் காக்க" என்ற அருள்வாக்கு அறியா தவன்.
விட்டில் பிரபு இல்லை. அவர் வேலைக்காரன் மட்டுமே அங்கிருந் தான்.
"எங்கே மொன்ரே?' என்ருன் அடிக்குமாப்போல்,
"அவர் இங்கில்லை படம் பார்க்கச் சென்றுள்ளார்' என்ருன் (36) žuá;48 Tigrdr.
72
 

'ஆகா படமா” என்றவன் திரும்பினுன், வண்டியிலேறியதும் சீக்கிரம் படமாளிகை" என்ருன் சாரதிக்கு. அவன் குறிப்பிட்ட பட மாளிகைக்கு வண்டி விரைந்தது.
மூன்ருவது காட்சி முடிந்தது. மொன்ரே ஆசனத்திலிருந்தும் முன்குனிந்து கைகளை உதறிக் காலேநீட்டித் தன் அலுப்பைப் போக் கினர். பின் கதவு திறக்கப்பட்டது. அல்பேட் அதன் வழியாய் உள்ளிட்டான். பிரபுவிற்குப் பின்ஞல் அவர் சிநேகிதன் ஒருவனிருந் தான். அவன் பெயர் புக்காம். அல்பேட்டைக் கண்டதும் புக்காம் கலக்கமடைந்தான்.
பிரபுவோ அல்பேட்டின் மிரட்டும் விழிகளைப் பார்த்தார், அமைதியுடன், "வணக்கம் அல்பேட்' என வரவேற்ருர்,
*வணக்கம் தெரிவிக்க இங்கு நான் வரவில்லே. ஆனுல் சவால் விடுக்கவே இவ்விடம் இந்நேரம் வந்துள்ளேன்' என்ருன் வெறுப் புடன். நீர் என்னுடன் சமர் புரிய வரவேண்டும். இருவரும் ஒரு தனிமையான இடத்தில் சந்திக்க வேண்டும். யாராவது ஒருவர் மடிந்து தரையில் விழுமட்டும் விடாது தொடரவேண்டும் எனப் பெருங் கூச்சலுடன் சண்டை செய்ய அழைத்தான் அல்பேட் மண்டபத்தில் படம் பார்க்க வந்தவர்கள் எல்லோர் பார்வையும் அவர்கள் கலவரப்படும் இடத்தை நோக்கின.
*நல்லது. அல்பேட் ஏன் என்னுடன் சமர் தொடுக்க விரும் பினுய்' என்ருர் பிரபு மெதுவாக அல்பேட் ஒரு கையில் தன் கை உறையைப் பற்றினன். மறுகையை அடிக்கப் போவான்போல் உயர்த் தினன். பின்னுல் இருந்த புக்காம், அவன் கரங்களைப் பிடித்து நிறுத் தினுன், தக்க தருணத்தில்,
"புக்காம் பரவாயில்லை. அவன் பிடியை விடு' என்ருர் பரந்த நோக்குடைய பிரபு.
'தம்பி அல்பேட் உன் சவாலே நான் இந்நிமிடமே ஏற்றுள் கொள்ளுகிறேன். ஓர் துவக்கு வெடிதான் இதற்குப் பதில் இப்போது என்னைச் சும்மாவிடு, நாம் இருப்பது எவ்விடம் என்பது உனக்குத் தெரியாதா? உனது கண் கோபத்தினுல் கெட்டுப்போயிற்ரு? இன் னும் ஏதும் சொல்வாயாளுல் என்காவ்லர் உன்னைத் தூக்கி அப்பால் எறிவர். நிச்சயம்" என எச்சரித்தார் கடைசிமுறையாக
அல்பேட் பின் வாங்கிஞன், சிறு பிள்ளை அவன். விபரம் விளங்காது சிக்கிக் கொண்டான் வீண் விவாதத்தில்,
'திரு. புக்காம்! எங்கள் இருவர் சமருக்கும் சகல ஏற்பாடுகளுஞ் செய்' எனக் கூறியவன் அவ்விடத்தை விட்ட கன்ருன்.
பிரபு மொன்ரே கவலைப்பட்டார். 'புக்காம்! அவனுக்கு நான் செய்த தீமை என்ன? அவன் எண்ணில் பகை பாராட்டுவதற்கு faauiT யம் ஏதுமுண்டா?" எனக் கேட்டார்.

Page 43
'பிரபு காரணம் உண்டு. தன் தகப்பன் திரு. மோசோவிற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நீர் முதற் காரணம் என நம்புகிருன், யானினுவில் நிகழ்ந்த, சகல சம்பவங்களும் அம்பலமாவதற்கு நீர் தான் கால் எனவும் கருதுகிருன், நீர் பரிசிற்கு அழைத்து வந்த அந்தப் பெண், கெயிடியே, தன் தந்தையின் அழிவிற்கு அடி கோலி யவள் எனவும், தீர்மானித்துள்ளான்' என்ருன் புக்காம்,
'அதனுற்தான் என்னைப் பகிரங்கமாகப் பரிகசித்தான் போலும் புக்காம், நான் சொல்லப்போவதைக் கேள். அவனுக்கு நிதா னமாகச் சொல்லும் நானே சொன்னதாகவுஞ் சொல் தாளேக் காலை மணி ஒன்பது அடிக்கமுன்னதாகவே, அவனேச் சுட்டுக் கொல்வேன். இது சத்தியம்' என்ருர்,
"துவக்குகள் தயாராக வேண்டும். சரியாக எட்டு மணிக்கு பொய்ஸ்டெவின்சென்' என்ற தனிமையான வெளியில்தானே". என்ருன் புக்காம் அவர் நினைப்பது தெரிந்தாற்போல் பிரபு மொன் ரேயோ ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலேயை அசைத்துவிட்டு சலனமுமின்றிப் பளிங்குபோல் முகம் மிளிர, அமைதியுடன் படம் பார்த்து ரசித்தார்.
படம் முடிந்ததும் மொன்ரே மெளனமாய் தன் வண்டியில் ஏறிக்கொண்டார். ஐந்து நிமிடங்களில் தன் இருப்பிடம்போய்ச் சேர்ந்தார். வீட்டினுள் பிரவேசித்ததும் புட்டோசியோவை அழைத் தார்.
"சிலுவை வடிவமான தந்தப் பிடியுள்ள எனது சிறு துப் பாக்கியை எடுத்துவா' எனப் பணித்தார்.
அவன் சிறிதும் தாமதியாது, துப் பா க் கி யை ப் பெட்டி யுடன் கொண்டு வந்தான். மொன்ரே அதனை நுணுகி ஆராய்ந் தார் பல காலம் பாவிக்கப்படாத துவக்கு அது. அதிலேயே தன் சீவன் தங்கினுற்போன்று, அதன் அமைப்பைக் கவனித்தார். தன் அரங்களில் ஏந்தி ஒவ்வொரு பகுதியையும் தட்டித்தட்டிப் பார்த்தார். சரியாகத் தொழிற்படும் முறையில் இருக்கின்றதோவெனவும் பரீட் சித்துப் பார்த்தார். அதனை நிமிர்த்தினர். தன் தோள்களுக்கெதிரில் வைத்து இலக்குப் பார்த்தார். ஆகாயத்தை நோக்கி வெடித்தும் கவனித்தார். அப்போது புட்டோசியோ அவர் இருந்த மாடிக்கு வந் தான்.
* ஐயா ! யாரோ ஒருவர் உம்மைத் தேடி வந்திருக்கிருர் அவசியமாக உம்மைச் சந்திக்க வேண்டுமாம். நான் என்ன சொல் லியும் கேளாது நின்ற இடம் அசையாது நிற்கின்ருர்' என்ருன்.
மேல்மாடியிலிருந்தும் யன்னல் வழியாக விருந்தினர் காத்தி ருக்கும் அறையை எட்டிப்பார்த்தார் மொன்ரே. ஒரு பெண் நிற்பது தெரிந்தது அவளும் அவனைக் கண்டுகொண்டாள். அக்கணமே படிகள் 74.
 

மேல் விரைந்து ஏறிச்சென்ருள். அவள் வருவதைக் கண்ட பிரபு, புட்டோசியோவை அப்பால் விலகி நிற்க சைகை காட்டிஞர். ஒடி வந்தவளோ, மொன்ரேயின் கரங்களைப் பற்றினுள்.
'எட்மண்ட், ஆ எட்மண்ட், நீ என் மகனைக் கொல்லவா போகின்முய் இல்லை, இல்லே ஒருபோதும் கொல்லவே மாட்டாய் என் மகனே' என்றுள் திருமதி மோசோவ். அவள் கண்களில் நீர் வழிந்தோடியது.
மொன்ரே! அதிர்ச்சியடைந்தார். அவர் நிதானம் இழந்தார் கைகள் பதறின, துப்பாக்கி தானுகவே நழுவிக் கீழே விழுந்தது. *ஆ என்ன பெயர் சொன்னுய்' என வியப்புடன் கேட்டார்? 'உம்முடைய பெயரைத்தானே சொன்னேன். எட்மண்ட்! முதன் முதல் என் மகனின் விருந்தினராய் நீர் என் வீட்டிற்கு வந்த அன்றே நான் அடையாளம்கண்டுகொண்டேன். நீர் யாரெனவும் அறிந்து பயமும் அடைந்தேன். எட்மண்ட். என் மகனை விட்டுவிடு அவனைக் கொல்லாதே' என மன் முடினுள்.
'உன் மகனுக்குத் தீங்கு விளைவிக்கப் போகிறேன் என்பதை உனக்குச் சொன்னது யார்?
1 திரு. புக்காம் அவர்கள்தான். தன் தந்தையின் மானத்தைக் கெடுத்து, அவரின் அழிவுக்கு வழிதேடியது நீர்தான் என நினேக் கிருன் அல்பேட், நானும் அப்படியே, ஆதலினுற்ருன், உம்மைச் சண்டைக்கு அழைத்துள்ளான்' என்றவன்,
"எட்மண்ட்! வேணுண்ட் மொண்டெகோ, உமக்கு என்ன துரோகம் செய்தார். அவர் வீழ்ச்சியை ஏஞே விரும்பினீர் என்ன பழிதான் இழைத்தார் உமக்கு அவரின் துரதிட்டம், எங்களையும் தானே படுகுழியில் தள்ளியுள்ளது" எனத் தன் மனதைத் திறந்து (3di trait.
மேசீட் ! நான் சொல்லப்போவதைக்கேள். உண்மையை உனக்குக் சொல்லி ஆகவேண்டும். நான் உன்னை மணஞ்செய்யவிருந் தேன் அல்லவா? அன்று மாலை நாமிருந்த ஒட்டேலில் நிகழ்ந்தவை ஞாபகமில்லையா? நான் கைதியானேன். ஆயுள்சிறை எனக்கு விதிக்கப் பட்டது. இதுயாரின் சூட்சி தெரியுமா? டாங்கிளே, பேணுண்ட் என் பவர்களின் கிட்டமிட்ட சதியின் விளைவு என்பதை நிச்சயமாய் நம்பு அநேக வருடங்களாக நாள் அநுபவித்த இன்னல்களோ அனந்தம். இன்றும் அப்படியே, மேசீட்! இவர்கள் இருவரும் சேர்ந்து, பிரதம நீதிபதிக்குப் பொய்க்குற்ற மொன்றை என்மேற் சுமத்தி, கடிதம் விடுத்துள்ளனர். அக் கடிதமே என்னே குற்றவானியாக்கி அப்பயங்கர சிறையினுள் அடைத்தது.
"மேசை இலாச்சியை இழுத்தார் பிரபு அதிலிருந்து கடித
மொன்றை எடுத்தார். அது காலத்தால் பழுப்பு நிறமடைந்திருந்தது. - 75

Page 44
"இந்தா, நீயே இதனை வாசித்துத் தீர்ப்புச்சொல்' என்றவர் தொடர்ந்தார்.
'சிறைச்சாலை அதிபரிடம் இக்கடிதம் இருந்தது. அ த னை அவரிடமிருந்து பெறுவதற்குப் பல நாட்கள் பெரும்பாடுவட்டேன். அவர் மனதைத் திருப்புவது கல்லில் நார் எடுப்பதுபோலிருந்தது. அப்படியிருந்தும், பெருந்தொகை லஞ்சம் மறைவில் வழங்கிய பின் னரே என் கைக்கு வந்தது' என்ருர்,
மேசீட் தயக்கத்துடன் கடிதத்தைப் படித்தாள், படிக்கப் படிக்க அக்கடதாசியின் வரிகள்போல், அவள் நெற்றியிலும் கோடு கள் விழுந்தன. வாசித்து முடிந்ததும், அவள் கைகள் தானுகவே தலைமேல் உயர்ந்தன. "மோசம் ஆ பெரும் மோசம்' எனக் கதறி குறள்.
'எட்மண்ட் நீ இறந்துவிட்டாயென்றே என்ன நம்பச் செய் தனர். நான் அழுதேன். பலநாள் தனிமையில் புலம்பினேன். வேறு என்னதான் என்னுல் செய்ய முடியும் ? என்னை நம்பும் எட்மண்ட் நான் சொல்வது மெய்.
'எனினும் நான் குற்றவாளியே குற்றவாளி. அதனை நான் மறுக்கவில்லை. அதற்காகவே நான் இன்று அனுபவிக்கும் இன்னல் கள் என்னைத் தொடர்ந்துள்ளன' என்ருள்.
மேசீட் இன்னும் கேள், "உனக்கு உயிருடன் தகப்பனுெருவன் இருந்திருப்பானஞல் அவனைப் பசி பட்டினியினுல் இறக்கச் செய்வாயா? நீ ஒர் உண்மைப் பத்தினியாய் இருந்திருந்தால் உன்னைக் காதலித்துக் கரம்பற்றியவர், துரதிட்டவசமாய் சிறையில் அடைபட்டதும், அவரின் விரோதி ஒருவனை விவாகஞ் செய்திருப்பாயா? என்ருர் பிரபு,
'இல்லை, இல்லே எல்லாம் முடிந்து விட்டதே. பேசியாவதென்ன? ஆணுல் எட்மண்ட் 1 இன்று நான் காதலித்த ஒருவர், என் ஒரே ஒரு மகனைக் கொல்லும் தருவாயில் இருக்கிருரே, ஐயோ எம்மண்ட் ' எனத் தேம்பித் தேம்பியழுதாள். -
நீண்ட நேரம் மெள்னம் இருவரும் ஆளையாள் பார்த்து நின்றனர். ஆணுல் அவன் முகம் வேதனையால் திரும்பியது. தன்னுள் எழுந்த உணர்ச்சியை அடக்கியவன் ,
'நீ என்னைக் கேட்பது என்ன? உன் மகன் உயிர்ப் பிச்சை தானே. சரி இதோ தந்தேன்! அவன் உயிர் பிழைத்தான் ” என்ருர்
மேசிட் அவனே ஏறிட்டுப் பார்த்தாள். ஏணி வைத்தும் அவனின் உதார குணத்தை அவளால் அறிய முடியாது. என்ருலும் அவள் வாள் விழிகள் நம்பிக்கையுடன் ஒளிர்ந்தன. உள்ளம் களிப்ப டைந்தது இழந்த தன் செல்வத்தை மீண்டும் கண்டடைந்தவள் மன்ம் குளிர்ந்தது, அவன் கரங்களை தன் கைகளில் ஆசாரமாய் எடுத்து முத்தமிட்டஈள். - 76
 
 

'நன்றி! எட்மண்ட்! நான் ஒரு காலம் காதலித்த எட்மண்ட் தான் நீ அதில் ஐயமேயில்லை' என்றவள் ஏதோ எண்ணியவள் போல்,
'அப்படியானுல் இனிமேல், சண்டைபோட மாட் டீ ர் கள் தானே' எனக்கேட்டாள்.
"சவால் சவால்தான். சமர்புரிந்தே தீருவேன். ஆணுல் உன் மகன் கொல்லப்படமாட்டான். காயப்படவுமே மாட்டான். ஆணுல் அல்பேட்டின் இரத்தத்திற்குப் பதிலாய், என் இரத்தம் தரையில் ஒடும்' என்றுன் ,
"மெல்லக் இத்தினுள். ஆனல் அவள் கண்ணிர் நிறைந்த கண் களால் மெல்ல நகைத்தும் விட்டாள்.
'எட்மண்ட்! என்னைப் பார் என் அழகு குன்றிப்போய் விட் டது. கண்களும் முந்திய ஒளியை இழந்துவிட்டன என்ருலும் என் இதயமோ அன்றுபோல் இன்றுமுள்ளது. நன்றி! நான் போய் வருகிறேன், எட்மண்ட் '
மொன்றே ஒன்றுமே சொல்லவில்லை, மேசிட் வெளியேறினுள் தன் ஆசனத்தில் சரிந்தவர் நெடுநேரம் தன்முன்னே முழு சிப் பார்த்தார். அன்று நிகழ்ந்தவையெல்லாம், கனவோ நனவோ என எண்ணித் தனக்குள் துடித்தார்.

Page 45
(15) சந்திப்பு
சமருக்குக் குறிக்கப்பட்ட நேரம் நெருங்கியது மணியும் காட்டு அடித்தது. மொன் ரே ஒரு நிமிடமும் தாபதியாது, சொல்லப்பட்ட இடத்தில் வண்டியை விட்டு இறங்கிஞர். அதற்கு முன்னதாகவே , பிறிதோர் வண்டி வந்து நிற்பதை அவதானித்தார். நீண்ட கறுத்த உடைதரித்த இருவர் அதனுள் இருப்பதையுங் கண்டார்.
மொன்ரேயைக் கண்டதும் புக்காம் எழுந்து, அவரிடம் ஒடிப் போனுன்
"அல்ரேட் மோசோவ் இன்னும் வரவில்லை' என்ருன்.
'பரவாயில்லை நேரம் இருக்கிறது தானே. ஒன்பது மணி அல்
லவா? " என்ருர் பிரபு
"ஐயா! அதோ பாரும், யாரோ ஒருவன் தொலேயில் மிக விரைவாய் குதிரையில் வருகிருன்' என எதிர்த்திசையைச் சுட்டிக் காட்டினுன் புகாம்,
அவர்கள் நிற்கும் இடத்தை நோக்கியே குதிரை பாய்ச்ச லில் ஒடிக்கொண்டிருந்தது. அல்பேட் குதிரையிலிருந்தும் அவசர மாய்க் குதித்தான். அவன் முகம் களைப்புற்றிருந்தது. இரவு முழு வதும் உறங்காதவன் போல் வாட்டம் கொண்டிருந்தது.
புக்காம் நேரத்தைப் பார்த்தான். இன்னுமிரு வினுடிகள்
மாத்திரம் இருக்கிறதைக் கண்டான் இரு கைத்துப்பாக்கிகளைக் கையிலெடுத்தான், தன் கடமையில் கிரமம் உடையவன் போன்று. அல்பேட் அதனைக் கண்டதும் "பொறு' எனத் தடுத்தான்.
'முதலில் நான் பிரபுவுடன் ஒருவார்த்தை பேசவேண்டும்' என்றவன் மொன்ரே நின்ற இடத்தை நாடிச் சென் முன் இருவரும் அவனே அதிசயத்துடன் உற்றுப் பார்த்தனர்.
78
 

ஐயா பிரபுவே காரணம் யாது மின்றி, அன்று நான் உங் கள் மனதைக் காயப்படுத்தினேன். பகிரங்கமாகத் தங்களை நிந்தித்து விட்டேன். என் தகப்பனுரில் குற்றம் இல்லையென்றே எண்ணியிருந் தேன். எனவே நீர் அவரைத் தண்டிப்பது நியாயமற்ற தெனவும் தீர்மானித்தேன். இப்போது எனக்கு விளங்குகிறது பழைய சம்பவங் ள்ை. நீண்ட காலமாக நீங்கள் அனுபவித்த துன்பங்கள் யாவும் அறிந்து கொண்டேன். தாங்கமுடியாத வேதனைக்குள்ளாகியிருந்தீரெ னவும் சொல்லக் கேள்விப்பட்டேன். என் தகப்பஞரின் வஞ்சனையே இவற்றிற்கெல்லாம் காரணம் எனவும் தெளிவாகியுள்ளது.
'பிரபு நீர் செய்வன யாவும் செம்மையானவை. பழிவாங்க முனைந்ததும் நீதியானது. மோசோவ் மொண்டெனோ உமது வாழ் வில் குறுக்கிட்டுப் புரிந்துள்ள மோசடிகளுக்கெல்லாம் அவர் பதிலுக் குப் பதில் பழிவாங்கப்படுவது, முற்றும் தகுந்தது. நான் அதனே ஆதரிக்கிறேன். மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
'ஆளுல் ஐயா! என்னை மன்னிக்கவும். அறியாமையால் செய்த என் குற்றத்தை மறந்து விடும்' என மன்ருடினுன் அல்பேட்
'அல்பேட்! நீ மிகவும் துணிந்தவன். நான் உன்னை மெச்சினேன் என்றவர் அங்கு நின்ற இருவரையும் பார்த்து
* அன்பர்களே! நான் அல்பேட்டுடன் தனிமையில் கதைக்க விரும்புகிறேன் என்ருர்,
அவர் விருப்பத்தின் படி இருவரும் அப்பால் சென்றனர். நிகழப்போவது என்னவெனத்தெரியாது ஆச்சரியத்துடன் காத்து நின் றனர்.
'அல்பேட் இவையெல்லாம் பழங்கதைகள் நடந்து வருடங்கள் பலவாகின. இவற்றை உனக்குச் சொல்லியது யார்? ஓகோ ! எனக்கு விளங்குகிறது. உன் அம்மாவாகத்தானிருக்க வேண்டும்.
'எனினும் கேள். எனக்கு உன்னில் குரோதம் ஒன்றுமேமில்லை உன் குற்றத்தை மண்ணித்தேன். ஆளுல் முன்போல் நாமிருவரும் நண்பர்களாயிருக்க முடியாது. ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நினேவு கொள்வோம்' என்றவர் தன்கைகளே நீட்டினர். அல்பேட் அவர் கரங்களை ஏந்தி தன்றி தெரிவித்தான்.
சிறிது நேரம் மெளனம், "அல்பேட் நீ என்ன செய்யப் போகிருய்? உன்னம்மா பாடு என்னுகப் போகிறது?" என விசாரித் தார் மொன்ரே
'அம்மா உலகையே துறக்கத் தீர்மானித்துள்ளார். அவர் மனம் அதில் பதிந்துள்ளது. யமனுலும் மாற்ற முடியாது. டூக்கரம் ஒரு கன்னியர் மடத்தில் புக விருக்கிருர்' என்ருன்.
"அப்படியாயின் நீ ?' என்ருர்,
79

Page 46
*நான் பிரான்சிலிருந்தும் வெளியேறப்போகின்றேன். அயற் தேசங்களைச் சுற்றிப்பார்ப்பது என் தற்போதைய திட்டம், அதனுல் எமக்கு நேர்ந்த துன்பங்களையெல்லாம் மறந்து, நிம்மதியடையலா மென நினைக்கிறேன். புதிய வாழ்வொன்றைத் தோடங்கவும் உத் தேசித்துள்ளேன்' பிரபு நான் போய்வருகிறேன் எனச் சொல்லி விடைபெற்ருன் அல்பேட்
அவன் அவ்விடத்தை விட்டு வெளிக்கிளம்புவதை, அனுதாபக் கண்களால் நோக்கினர் மொன்ரே பிரபு,
*ஆ! அவன் என் மகனுகவல்லோ இருந்திருக்கவேண்டியவன்' எனத் துக்கத்துடன் சொல்லிக் கொண்டார்.
80
 

(16) தற்கொலை
அன்று பிற்பகல் மொன்ரே தனது இல்லத்தில், கெயிடியுடன் இன்பமாய் பொழுது போக்கிக்கொண்டிருந்தார். அன்று பகல் நடக் கவிருந்த சமர், சமரசமாய் முடிந்த விதத்தை வேடிக்கையாகச் சொல்லி மகிழ்ந்தனர் இருவரும், திடீரென அவர்கள் இருந்த அறைக் கதவு திறக்கப்பட்டது. புட்டோசியோ அவர்கள் முன்
தோன்றினுன்
'பிரபு திரு மோசோவ் வந்திருக்கிருர்" என்ருன். அதனைக் கேட்டதும் கெயிடி ப ய த் தா ல் கூச்சலிட்டாள். ஆணுல் மொன்ரேயின் முகமோ சூரியனின் முன் தாமரை மலர்வது போல் மலர்ந்தது. -
*அந்த மனிதனு? " எனக் கத்தினுள் கெயிடி, பிரபு அவள் கரங்களைப் பற்றிஞர். "அவன் என்னைக் காயப்படுத்த முடியாது. இச் சந்திப்பினுல் அசம்பாவிதம் ஏற்படுமானுல் பாதிக்கப்படுவது நானல்ல. அவன் தான்' எனத் திடமாகச் சொன்னுர்,
கெயிடி அவர் கண்களை உற்றுப் பார்த்தாள். அதில் வன்மம் நிறைந்திருந்தது. அவர் உள்ளம் உறுதி கொண்டதைப் படம் பிடித் துக் காட்டின.
'நான் உம்மை நம்புகின்றேன்' என அவர் காதுகளில் கூறி யவன், ஆம் என்பவள் போல் தலையை அசைந்தாள்.
அறைக்கதவைத் தாளிட்டார் மொன்ரே, "பயப்படாமல் இருந்து கொள் கெயிடி’ என்றவர், விருந்தினர் வரவேற்புச்சாலையை நோக்கி நடந்தார்.
8.

Page 47
சாலையின் மத்தியில் பெரியதோர் நீளமான மேசை, அதன் மேற்புறம் மெருகு படுத்தப்பட்டுப் பளபள வென, மாலை வெய்யிலில் மின்னியது. அதன் ஒரு பக்கவிளிம்பில் கரங்களை ஊன்றிய வண் னம் நின்ருன் பேணுன்ட். அதன் மேல் அவன் மேலங்கி குவிந்திருந் தது. அதனருகில் இரு வாள்கள் உறையிலிடப்பட்டிருந்தன.
மொன்ரே அம்மேசையின் மறுபக்கத்தை அடைந்ததும், பேணுன்ட் அவரை வெறித்துப் பார்த்தான். அவன் கண்கள் வேட்டை நாயின் கண்கள் போல் அவர்மேற் பதிந்தன. அவன் முகம் அவர்மேற்கொண்ட பகையிஞல் சுண்டியது. வஞ்சகம் நிறைந்து வழி
யும் அவன் உதடுகள் வெறுப்புடன் சுளித்தன.
பேரீசிற்கு அந்தப்பெண்ணை அழைத்து வந்தது நீதானே? எனது குற்றங்களையெல்லாம் அம்பலமாக்கி, அனைவரும் என்னை அவ மதிக்க, படுகுழியில் என்னே வீழ்த்தி என்வாழ்வையே பாழாக்க, pë செய்த திட்டமல்லவா ? படுபாதகா! நீ என் விரோதி என்பதை நம்பு. ஆன்னை என்றும் எனதுசத்துராதி யென்றே, நான் சாதித்து வந்துள்ளேன். இதனைத் தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன்.
'இன்னும், பிரபு மொன்ரே கிறிஸ்ரோ வாள் விச்சில் வீரன் னப் பலர்சொல்லக் கேள்வி. அவர்கள் சொல்வது உண்மைதானு? அப்படியாளுல் வா, பார்ப்போம் உன் சமர்த்தை' என அறை கூவி
அவன் கை தானகவே வாள் உறையைத் தேடியது. அதனைப் பார்த்து மொன்ரே மெல்லென நகைத்தார்.
*நான் எதிர்பார்த்தது இதைத் தான். தருணம் தானுகவே இடைத்திருக்கிறது' என்ருர் மொன்ரே.
இருவரில் ஒருவர் மடியுமட்டும் போர் தெரிகிறதா' என் முன் பேணுன்ட் தன் பற்களை நறுமியபடி
éguiʼiLy Lq.e8aLI ஆகட்டும்' என அமைதியாகக் கூறியவர், தன் மேற்சட்டையைக் கழற்றி எறிந்தார். காற்சட்டையை இறுக்கித் தயார் பண்ணிஞர்.
ஆயத்தம், தொடங்கட்டும்' என்ருர்,
இருவரும் வா8ளக் கையில் எடுத்தனர். தலைமேல் உயர்த்திச் சுழட்டினர். அவர்கள் கண்கள் ஒருவரையொருவர் விட்டகலாது ர்த்தன. மேலும் கீழுமாக வாள்களை வீசினர் பக்கம் பக்கமாய் பாய்ந்து ஆளேயாள் தாக்க முயன்றனர். ஒன்ருே டொன்று மோதின. mr på 1 LÍTIš ! எனக் கிளம்பியது அவர்கள் வாள்வீச்சின் சத்தம் வரவர விரைந்தது அவர்கள் தாக்கு இல் தத்தம் இலக்கில் பிழை ஏதும் நேரிடில் அது அவர்களின் முடிபு எனவும் எண்ணினர்.
52

போர் மும்முரமாகியது. உச்ச நிலையை அடைந்தது, பல மணி நேரம் நீடித்தது. ஓநாய்கள் போல் இரத்தம் குடிக்கக் கொதித்தனர் இருவரும் தம் வாளைத் தக்க இடத்தில் புகுத்தி, இரத்தம் காண முயன்றனர். தம் பெலமெலாங் கொண்டு பேணுன்ட் முன் துள்ளிப் பாய்ந்தான். மொன்ரே அவன் வீசிய வாளே ஒரு தட்டில் தடுத்துப் பின்னல் பாய்ந்தார் சிரிப்புடன்.
அவர் ஓங்கிய வாளின் அடி, அவன் வாளைச் சரித்தது. அக் கணமே பிரடி சிங்கேறுபோல் அவன் முன் பாய்ந்தார். கையிலிருந்த அவன் வாளைப் பறிக்க, அவன் மணிக்கட்டை அமத்திப் பிடித்தார். அவர் பிடி அவனுல் அசைக்க முடியவில்லை. இரும்பு போலும் உறுதி யாக விருந்தது அவர் கை, அவன் கையிலிருந்தும் வாளைப் பறித் தெடுத்தவர், அவனை சுவர்ப்பக்கம் தள்ளினர். சுவருடன் மோதிய பேணுன்ட் மொன்ரேயின் வாள் தன் தொண்டை ைசக் குறிபார்ப் பதைக் கண்டு கலங்கிஞன்.
கொல்லப்படும் தருவாயில் தானிருப்பதைப் பார்த்து அச்சம் கொண்டான். அவன் முகம் வெள்ளை வெளிரென மாறியது. ஆணுல் மொன்ரே வாளால் குறிபார்த்த வண்ணம், நிதானமாகத் தன் வாளே அவன்முன் நீட்டிநின்ருர் சில விநாடிகள் அப்படியே நின் றனர் இருவரும் பேணுன்ட்டின் தேகம் பதறியது. அவன் கால்கள் மடிந்து கீழே விழுவன போலிருந்தன. மொன்ரே சிறிது பின்னல் எடுத்தடி வைத்தார்.
'பேணுன்ட்' என மெல்லக் கத்தினுர்,
'என்னை உனக்குத் தெரியா கா? மேசிட்டை மண்முடிக்க என் னுடன் போட்டி போட்டாயல்லவா? அவள் என் மனைவியாகவல் ல:ோ இருந்திருப்பாள் அப்போது உன் சதி உனக்கு வெற்றியைக் கொடுத்தது. மணமுடித்து மகிழ்ந்தாய். ஆனுல் இப்போது உன் விதி என்னுடன் போராடச்செய்தது. உன்விளையாட்டே உனக்கு வினை QJIT tij முடிந்தது. கனவில் பலமுறை என்முகத்தைக் கண்டு வெருண்டிருப்பஈயே' என்ருர்,
பேணுன்ட்டின் தலை சுவரின் பின் தொங்கியது. கைகள் விரித்த படி சுவரை இருபுறமும் தாவின. அக்கினி கக்கும் பிரபுவின் கண் களே ஒரு முறை முழுசிப் பார்த்தான்.
'பேணுன்ட்! நான் தான் அந்த எட்மண்ட் டான்ரே ! இப்போது தெரிகிறதா? என்சத்தம் புரிகிறதா? உங்கள் சூழ்ச்சி யால் என் வாழ்க்கையே சூறையாடப்பட்டது ஞாபக மில்லையா ?
இவற்றைக் கேட்டதும் பேணுண்ட் பூதத்தைக் கண்டவன் போல்பயந்து, மெல்ல மெல்ல சுவர் ஒரமாய் நகர்ந்தான். சுவரைத்
தாவிப்பிடித்து கதவண்டை சென்ருன்.
83

Page 48
"எட்மண்ட் டான்ரே' எனத் தனக்குள் சொல்லியவன் திரும் பியே பாராது வெளியேறினன்.
அவன் காத்து நின்ற வண்டியில் ஏறினன். 'வீட்டிற்கு" என்ருன் வண்டிக்காரனுக்கு,
வீட்டை அடைந்தவன் கனவில் நடப்பவன் போல் வண்டியை விட்டு இறங்கிஞன், வீட்டின் கதவுகளெல்லாம் திறக்கப்பட்டிருப் பதைக் கண்டான். வேருேர் வண்டி வீட்டு முற்றத்தில் ஆயத்தமாய் நிற்பதையும் கவனித்தான். பயத்துடன் அதனைப் பார்த்தவன், உள்ளே விரைந்தான்.
படிகள் வழியாய் உள்ளிருந்தும் இருவர் இற ங் கு வ  ைத க் கண்டவன், விலகி தன்னறையினுள் மறைந்தான். அவர்கள் தன் னறைப் பக்கமாகச் செல்வதை கதவோரமாக ஒ வித் து நின்று பார்த்தான். 'அம்மா வாருங்கோ இது இனிமேலும் எங்கள் வீடல்ல" எனத் தன் மகன் அல்பேட் சொல்லிக் கொண்டு போவதையும் கேட்டான். அவர்கள் காலடிச்சத்தம் மறைந்தது.
அவன் மனம் குழம்பியது. தன் அறையின் பன்னல் அண்டை சென்ருன் வண்டியும் தொலேயில் ஒடி மறைந்தது. அவர்களோ திரும் பியும் பார்க்கவில்லை, தன் வீட்டைச் சுற்றி கடைசி முறையாகப் பார்த்தான் பேணுன்ட்.
ஐந்து நிமிடங்கள் தான் சென்றிருக்கும். கைத் துப்பாக்கி பொன்று வெடித்தது. பேரும் சத்தம் வீட்டிலிருந்தும் கிளம்பியது. துப்பாக்கியிலிருந்து எழும் பிய புகை யன்னல் வழி யா ய் முகில் போலும் மேலெழுந்து ஆகாயத்தையே மூடிமறைத்தது.
பேணுன்ட் மொன் டெகோ தன்னுயிரையே மாய்த்துக் கொண் R. Presës.
 
 
 

(17) ஐம்பது இலட்சம்
டாங்கிளே வழமைபோல் தன் வங்கிக் காரியாலயத்தில், கணக்குப் பார்ப்பதில் கவனமாக விருந்தான். பிரபு மொன்ரேக்கு அறுபது இலட்சம் பிராங் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருந்தான். அதனுல் எழுதுவதாகவும், விரல்களை மடித்து எண்ணுவதாகவுமிருந் தான். அவன் எப்படித்தான் கணக்கைத் திரும்பத்திரும்பப் பார்த்த போதும் ஒரே விடையே கண்டான். 'மோசம் போனேன்! என் அழிவுகாலமும் நெருங்கியுள்ளது!" என்ருன்.
அழிவின் அறி குறி க ன் பல தோன்றின. சமீப காலத் தில் இரண்டொரு கிழமைகளில் தன் வியாபாரம் வீழ்ச்சியடைந் துள்ளதை அவதானித்தான். இலட்சக்கணக்கான பிராங்குகள் இழந் ததைக் கண்டுகொண்டான் இனம் தெரியாத பெரிய கோடி சீமா னும், தன் எதிரியுமான ஒருவர், தன் அழிவை விரும்பி, சூழ்ச்சி செய்து வருகிருர் எனவும் நம்பினுன் அவர் தன் முயற்சியில் முற் றும் வெற்றி பெற்றுள்ளார் எனவும் தீர்மானித்தான். ஆணுல் அது ய்ார்? அப்படிச் செய்ய, செய்யக்கூடிய நபர் யாராயிருக்கலாம்? எனத் தன்னையே கேட்டுக்கொண்டான்.
டன் டக் எனக் கதவைத் தட்டும் சத்தம். 'பிரபு மொன்ரே கிறிஸ்ரோ', எனத் தெரிவித்தான் பிரதம
வங்கி விகிதார்.
பிரபு உள்ளே நுழைந்ததும் டாங்கிளே வில்லங்கமாகச் சிரித் நான்.
“என்னை ஒரு நிமிடம் மன்னிக்க வேண்டும். இப்போதுதான் ஐந்து உறுதிப்பத்திரங்களுக்கு கைச்சாத்திட ஆயத்தமாக இருந்தேன். அவையெல்லாம் பிரான்ஸ் வங்கிக்கே உரித்தானவை. பெரும் தன வந்தனுன உம்மிடத்தில், இவைபோலும் ஒவ்வொன்றும் பத் து இலட்சம் பெறுமதியான காசோலைகள் உண்டா?' என்ருன்.

Page 49
பிரபு அக்காசோலைகளைக் கையில் எடுத்தார். படித்துப்பார்த்
'வங்கி முதல்வருக்கு, எனது கணக்கில் வங்கியிலுள்ள பணத் தில் பத்து லட்சம் பிராங் கொடுக்கும் படி விடுக்கும் எனது கட்டளை"
GFL DIT 6ãT LITT LÉG) G3ar
ஐம்பது இலட்சம் ஆகா நீர் பெ ரும் வங்கியாளர்தான் உமது வியாபாரத்திற்கு ஒப்பில்லைப் போலும்' என்ருர் பிரபு.
காசோலேகள் ஐந்தையும் பத்திரமாய் மடித்தார். 'உமது அலுவல் இலகுவாய் முடிந்தது' என்றவ்ர் தொடர்ந்தார்.
'நீர் எனக்கு அறுபது இலட்சம் பிராங் தருவதாக வாக்குத் கொடுத்துள்ளீர். ஒன்பதினுயிரமே இது வரையில் நான் எடுத்துள் ளேன். நான் இக் காசோலேகளை என்னுடன் வைத்துக்கொண்டு அறுபது இலட்சத்திற்குப் பற்றுச் சீட்டுத் தருகிறேன். இங்கு வரு முன்னரே சீட்டுக்களைத் தயார் செய்தேன். ஏனெனில் இப்போது பணம் அவசியம் தேவை.'
மடித்த காசோலைகளைச் சட்டைப் பையினுள் ஒரு கையால் திணித்தவர், மறுகையால் பற்றுச்சீட்டுக்களை நீட்டினர். டாங்கிளே முன்னிலும் அதிக மனக் குழப்பம் அடைந்தான்.
"இவற்றைக் கொண்டா போகப் போகின்றீர்? என்னை மன் னிக்கவும். இவை நான் வைத்திய சாலேகளுக்குக் கொடுக்குமதியான பணம், இன்று சாயங்காலே அனுப்புவதாக உறுதிகொடுத்திருந்தேன்' என்ருன் டாங்கிளே மிக்க விசனத்துடன்,
"அப்படியாஞல் உங்கள் வங்கிப் பெருமையை எப்படிக் காப்பாற்றப் போகின்றீர். அப்படியின்றி உடனடியாகவே உங்கள் வங்கி ஒரே முறையில் எனக்கு ஐம்பதினுயிரம் அளித்துள்ள தென் றல்லவா நான் பிரசித்தம் செ ய் யப் பே ஈ இ றேன். அதஞல் உங்களுக்கு ஏற்படப்போகும் கிராக்கி, முன்னிருந்ததைவிட அதிக மாகும்' என்ருர்,
மனமுடைந்த டாங்கிளே தன்னைத் தட்டி எழுப்பிஞன் மீண்டும் உசார் அடைந்தவன், "உமது பற்றுச்சீட்டுகள் என்பனத் திற்குப் பெறுமதியுள்ளவை தானே' என்ருன்.
"ஆம், நிசமாகவே. ரோமாபுரியிலுள்ள தொம்சன் பிரான்ஸ் வங்கி, தடையின்றி அவற்றிற்குப் பணம் கொடுக்கும்"
"அப்படியானுல் கவனம் என் கா சோ லை கள் . அவற்றை உமது சட்டைப்பையினுள் வைத்துக்கொள்ளும்' எனச்சொன்னவன் சொண்டுகளில் புன்னகை விளையாடியது.
* மெத்தச்சரி' என்று கூறி அவன் சொல்லியவண்ணம் செய்து, வேளிக்கிட்டவரை டாங்கிளே மறித்தான். 86
 
 
 
 
 

'இன்னும் உம்முடைய பணத்தில் ஆயிரம் பிராங்குகள் என்னி டமுண்டே' என்ருன்.
'அது பேரவாயில்லே, நீரே வைத்துக்கோள்ளும் மிக்க சொற்பந் தானே' என்றவர் வெளியேறினர். கதவு சாத்தப்பட்டது.
சிறிதுநோரம் டாங்கிளே அசைவற்று நின்றன் சாத்தப்பட்ட தன் அறைக்கதவைப் பூட்டித் திறப்பை எடுத்தான் மேசை லாச்சி யிலுள்ள பத்திரங்கள் அனைத்தையும் கொழுத்திச் சாம்பராக்கினுன், தன்சட்டைகள் நிறைய நோட்டுக்களைத் திணித்தான்.
இது நடந்து இரு மணித்தியாலங்களின் பின், புட்டோ யோ இரைக்க இரைக்க ஓடிவந்தான்.
"ஐயா! சீமான் டாங்கினே பரிசிலிருந்தும் கம்பி நீட்டி விட் டான். உமறு லண்டி அதோ! ஆயத்தம்' என்ருண்.
பிரபு சிரித்துக்கொண்டு தலையை அசைத்தார். **நல்லது. அவன் செல்வது எங்கேயென்பது எனக்குத் தெரியும் ரோமாபுரியில் சந்திக்கலாம்தானே அவனை'
87

Page 50
(18) கள்வர் கூட்டம்
சில நாட்கள் ஓடிமறைந்தன. ருேம் நகரின் வீதி வழியே வண்டியொன்று சென்றுகொண்டிருந்தது. டிஎஸ்பா" ஒட்டேலின் முன் அவ்வண்டி நிறுத்தப்பட்டது. அதனுள்ளிருந்தும் ஓர் பிரான்சியன் அவசர அவசரமாக இறங்கினன். மறு நிமிடமே ஒட்டேலுக்குள் புகுந்தான். முதற்தரமான போசனம் போடும்படி அங்கு நின்ற பணியாளனைப் பணித்தான். வேறுபல விருந்தினரும் அவன் இருந்த மேசையில் சுற்றியிருந்தனர். தொம்சன் பிரான்ஸ் வங்கி எங்குள்
ரதென அவர்களிடம் விசாரித்தறிந்து கொண்டான்.
உணவு அருந்தி முடிந்ததும் களேப்பு நீங்கி அவ்விடத்தை விட்டு எழுந்தான். வெளியே சென்றவன் அவனைக் காத்துநின்ற வண்டியில் ஏறிக்கொண்டான். 'தொம்சன் பிரான்ஸ் வங்கி' என் முன் சாரதிக்கு வண்டி சிறிதும் தாமதியாது விரைந்தது குறிப்பிட்ட வங்கிக்கு. அவனுக்குத் தெமியாமலே இவ்வளவு நாட்களும் அவனேப் பின் தொடரும் ஒருவனே அறியாதிருந்தான் சமுசயம் கொள்ளாது மிருந்தான்.
ஒருசில மணித்தியாலங்கள்தான் சென்றிருக்கும். அதற்குள் அவன் விரைந்து சென்ற வண்டி, வங்கி வாசலில் தரித்தது. வண் டியை விட்டுக் கீழ் இறங்கிளுன் சிறிதும் தாமதியாது. அக்கம்பக் கம் பாராது நேரே கையால் கதவை அழுத்தினன். கதவு ஓசை ஒன்றுமின்றித் தானகவே இறந்தது அவன் உள்ளே நுழைந்ததும், முதல் அறையிலுள்ள வங்கி இலிகிதர் ஒருவர், மரியாதையுடன் எழும்பி அவனை வரவேற்ருர்,
'நீங்கள் யார்?' என்ருர்,
நான்தான் சீமான் ரங்இளே'
88
 

"ஐயா! அப்படியா! வாருங்கள் என்னை மன்னிக்கவும்” என்
றவர் டாங்கிளேயை உள்ளே கூட்டிச் சென்ருர், அதே நேரத்தில் அவன் நடமாட்டத்தை நீண்டநாட்கள் கவனித்து, அவனேயே செல் லும் இடமெல்லாம், விடாது பின் சென்றவன் அதே வங்கியினுள் பிரவேசித்தான். வங்கி வெளிச் சாலேயில் போடப்பட்டிருந்த நாற் காலி ஒன்றில் அமைதியாக அமர்ந்தான்.
உள்ளே சென்ற இலிகிதர் தன் அறைக்குத் திரும்பிஞர். தன் மேசை மேலிருந்த பேணுவை எடுத்தார். ஏதோ எழுதுபவர்போல் தலையைக் குனிந்தார்.
'பெப்பினுே! ஒரு சங்கதி தெரியுமா! இம் முறை தொகை மிகவும் பெரியது. இது போன்ற தொகை என்றுமே கிடைக்கவில்லே என லூயிவம்பாவுக்குச் சொல். சுணங்காதே பெப்பினுே!" எனத் தன் வாயோரத்தால் சொன்னுர் இலிகிதர்.
'ஐந்து, இல்லை ஆறு இலட்சம் அல்லவா? அதுவும் மொன்ரெ கிறிஸ்ரோவின் பற்றுச்சீட்டின் பெயரால் கொடுக்கப்பட்டுள்ளது. நான் சொல்வது சரியா' என்ருன் பெப்பினே,
'ஆகா! தொகை முன்னதாகவே தெரித்திருக்கிறது உனக்கு." 'ஆம் எல்லாம் ஏலவே அறிவிக்கப்பட்டுள்ளது. லூயிவம் பாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெரிந்ததா?”
"ஐம்பது இலட்சம் பெப்பினே ஐம்பது இலட்சம்! நல்ல தொகையடா!' எனச் சிறிது உரக்கச் சொன்னுர் இலிகிதர்.
'சத்தம் போடாதே! அவன் வந்தல்லோ கொண்டிருக்கிருண். பார்த்தாயா!'
இலிகிதர் அவன் திரும்புவதைக்கண்டதும், மேசையில் இருந்த பத்திரங்கள் சிலவற்றைப் படிப்பதுபோல் பாசாங்கு பண்ணிஞர் அவன் வருவதைக் கவனியாதவர் போல் தன் தலையைக் கீழே போட்டுக்கொண்டார்.
டாங்கிளே வங்கியின் உள் அறையிலிருந்தும் வெளியே வந் தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. அவனுக்குண்டான ஆனந்தத்தால் பொருமியது. உள்ளமோ கணிப்பால் பேருவகை கொண்டு குமுறியது. தெருவோரத்தில் அவன் வண்டி ஆயத்தமாக நின்றது. சாரதி வண்டிக் கதவைத் திறந்ததும், இருபது வயது வாலி பன்போல் துள்ளி ஏறிக்கொண்டான் வண்டியினுள்
'அன்கோன தெரு, தெரிகிறதா?' எனச் சாரதிக்கு உரத்துச் சொன்னன் வண்டியில் பூட்டப்பட்ட குதிரைகள், அந்நிமிடமே வழி தெரிந்தாற்போல் பாய்ச்சலில் ஒடத்தொடங்கின. வண்டியின் பின் ஆசனத்தில் குசாலாய்த் தன்னை அமர்த்திக் கொண்டான். நீட்டி நிமிர்ந்து படுத்தவன், தன்னை அறியாமலே கண்களை மூடி நித்திரையானுன்
89

Page 51
கதிரவன் மேற்கில் மறைந்தான். எங்கும் ஒரே இருள். அவன் சென்ற வண்டி திடீரென நின்றது. அவனேக் குலுக்கி ஆசனத் திலிருந்தும் கீழே வீழ்த்தியது. கைகளால் தன் கண் களைத்துடைத்துக் கொண்டு எழும்பினன். யன்னல் வழியே தலையை நீட்டிப் பார்த்தான். ஏதோ ஒரு நகரம் அல்லது கிராமம் கிட்டியிருப்பதென எண்ணினன். ஆனல் என்ன ஆச்சரியம்? அவன் பாழடைந்த வீடொன்றைக் கண்டான். நாலு பேரின் நிழல்கள் இருளில் போவதும் வருவது மாகத் தெரிந்தன. அடுத்த கணமே வண்டிக் கதவு திறக்கப்பட்டது.
*வெளியே வா!' என ஒரு குரல் கட்டளை கொடுத்தது. அது எவருமன்று காலையில் வங்கியில் அவனுக்கு வழி காட்டி, அவனை அறிமுகப் படுத்திய பெப்பினுேதான். அக்குரலொலி அவன் நித் திரையை முற்றும் கலந்தது. யாதொன்றும் பேசாது மெளனமாயி ருந்த டாங்கிளே, சொல்லியபடியே வண்டியைவிட்டு இறங்கினுன், அவன் வெளியே வந்ததும் நாலு பேர் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
*என்பின்னல் வா!' என்ருன் பெய்பினே மீண்டும். ஆத்திரம் கொண்டான் டாங்கிளே. துணை தனக்கு இல்லையே எனத் துடித்தான் அவர்கள் பிடியில் இருந்தும் தப்புவதற்கு வழி வேறு இல்லே என் பதையும் நன்ருய் அறிந்தான். அவன் கட்டளைப் படியே அவனைப் பின் சென்ருன் டாங்கிளே.
அவர்கள் செல்லும் வீடோ மிகப்பழையது. அதற்கண்மையில் வேறு வீடுகள் தென்படவில்லை. சனசஞ்சாரம் இருப்பதாகத் தெரியவு மில்இல உள்ளே செல்லச் செல்ல வீட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒடிந்து விழுவது போல் தோன்றியது. அவன் கண்களுக்கு, அவன் தரையில் வைக்கும் காலடி தட்தட வென எதிரொலி கிளம்பியது. பாதையோ சுற்றுவழி பாதாள உலோகம் செல்லும் பயங்கர சுரங்
கப்பாதை அவன் தலையும் சுழல ஆரம்பித்தது. எனினும் அவர்களே
எதிர்க்க ஒருகால் எண்ணிஞன். ஆனல் எதிர்க்க அவன் கரங்கள் எழவில்லை. பேச வாயெடுத்தான் நாவும் அசையவில்லை. அவனுக் குண்டான அச்சம் அளவு கடந்ததே காரணம்
ஒக்கிரம் வா!' என்ருன் பெப்பினே அதிகாரத்துடன்,
பயத்தினுல் தேகம் பதறிய டாங்கிளே முன்னிலும் G. E.
அவனைப் பின் தொடர்ந்தான். சிறிது தூரம் போனதும் இடையில் தரித்தனர் அவர்கள்முன் தரையில் ஒர் அகன்ற வேடிப்பு காணப் பட்டது. மரப்பொந்து போலும் அது விரிந்திருந்தது ஒரு முறையில் ஒருவர் மாத்திரம் செல்லக் கூடிய வெளி பெப்பினுே பழகியவன் போல் தடை ஏதுமின்றி உள்ளே சறுக்கி விழுந்தான் பின்னல் நின்ற ஒருவன் ாங்கிளேயை ஒரு தள்ளுத்தள்ளினுன் அவனும் அப் பாதை வழியே வழுக்கி பெப்பினுே நின்ற இடத்தை அடைந்தான்.
90
 
 
 

பந்தமொன்றைப் பற்றவைத்தான் பெப்பிஞே. அவன் வழி காட்டிச்செல்ல, மற்றும் இருவர் டாங்கிளேயை இழுத்துச்சென்றனர். அவர்கள் செல்லும் வழியோரமாய் பல நில அறைகள் இருந்தன. அவைமிகச் சிறியன. கற்பாறைகளைக் குடைந்தே ஆக்கப்பட்ட காத் திரமான அறைகள் பெப்பினே ஒரு அறைக்கதவைத் திறந்தான். மூவரும் சேர்ந்து டாங்கிளேயை உள்ளே தள்ளித் தாளிட்டனர்.
அவர்கள் கொள்ளைகாரர் கூட்டத்தினர் என்பது டாங்கி ளேக்குத் தெளிவாயிற்று. கதவைப் பூட்டும் சத்தம் அவனுக்குக் கேட்டது. தப்பமுடியாத மறியற்காரன் தான் எனத் தன்னுள் முடிபு செய்தான் ஆஞல் கொள்ளேக்காரர் செய்வதுபோல் என்னை ஏன் உடனேயே கொலே செய்யவில்லை? பணத்தையும் பறிக்காது விட்டார் களே. இதில் மர்மம் ஏதோ இருக்க வேண்டும். சில சமயம் என்னை மீட்பதற்குப் பணம் கேட்பார்களாக்கும். ஒரு குறித்த தொகைப் பணம் கொடுத்தாகவேண்டுமென விதிப்பார்கள் போலும், அப்படி யானுல் எவ்வளவுதான் அறவிடுவர்? ஆகக்கூடியது ஒரு இலட்சம் தான். அவ்வளவுதானே. அதனேக் கொடுத்ததும் தனக்கு விடுதலை. மீதி ஐம்பது இலட்சமும் தனக்குரியது எனத் தன்னேயே தேற்றிஞன்.
அவனிருந்த அறை மிகவும் சிறியது. என்ருலும் துப்புரவான வைக்கப்பட்டிருந்தது. செப்பமற்ற மரக்கதிரையொன்றும் அதன் முன் ஒரு மேசையுமிருந்தது. சுவர்க்கரை யோரமாய் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது. அது மெருகு அற்று கரடு முரடாகவே காணப் பட்டது. பல இரவுகள் நித்திரையின்றி விழித்திருந்த அவனை யறி யாமலே களை மேற்கொண்டது. படுக்கையில் தன்னை நீட்டி நிமிர்த நிஞன். இருபுறமும் புரண்டான். மரண நித்திரையில் ஆழ்ந்தான்

Page 52
(19) பசிதீர்க்கப் 6 to
கதிரவன் கிழக்கில் அடிமேல் அடிவைத்து எழ ஆரம்பித் தான். அவன் கதிர் ஒளி ஆகாயத்தில் அலைபோல் அசைந்தாடியது. பறவைகளின் பாட்டொலி பகலவன் ஒளியில் மிதந்தது பரந்தது. முதல் நாள் இரவு கள்வர் கையில் அகப்பட்ட டாங்கிளே அறை யில் அமைதியாக நித்திரை செய்தான். யன்னற்கம்பிகள் வழியே தவழ்ந்து உலாவிய ஒளி அவன் உடலே வாட்டவே திகைப்புடன் எழுந்திருந்தான். கண்களைக் கைகளால் கசக்கியவன் தான் எங்கிருப் பதெனத் தடுமாறினன். கனவுலகில் வசிப்பவன் போல் தன்னுள் பல எண்ணினுன் சுற்றும் முற்றும் ஏக்கத்துடன் பார்த்தான். யன் னல் பக்கம் எட்டிப் பார்த்ததும் தன் நிலேமையைப் புரிந்துகொண் டான் டாங்கிளே தான் கள் வரால் வழிமறிக்கப்பட்டதும், பாழ டைந்த வீடொன்றினுள் இழுத்துச் செல்லப்பட்டதும் அவன் நினை விற்கு வந்தன.
கைகள் இரண்டாலும் யன்னற்கம்பிகளை இறுகப்பற்றியவன்
வெளியே கூர்ந்து அவதானித்தான். அண்மையில் பெப்பினுே கோழி
இறைச்சித் துண்டொன்றைத் தன் பற்களால் கடித்துப் பதம் பார்ப்பதைக் கண்டான். அவுன் அருகில் உவையின் நிரம்பிய போத் தல் ஒன்றும் இருந்தது. இரவு முழுவதும் பட்டினியால் வாடியவன் வயிறு குமுறத் தொடங்கியது. புகைந்தது அவன் உள்ளம். நாவை அழுத்தி வாயால் பொச்சடித்தவன், நீண்டதொரு பெருமூச்சு விட் டான். அவனுக்கோ பசி மேலும்மேலும் அதிகரிக்க வாயில் இருந்தும் நீர் சுரக்க இமைவெட்டாது கண்கள் கலங்க பெப்பிளுேவை வெறித் துப் பார்த்து நின்றன். திடீரென ஏதோ எண்ணியவன் தன் இரு கரங்களே உயர்த்தி கம்பிகளைப் பெலமாகத் தட்டினன், உரக்கக்கூவி அழைத்தான்.
'எனக்கு சாப்பிட ஒன்றுதுமே இல்லையா?' எனப் பெப்பிளுே
வைப் பார்த்துக்னேக்டான் டாங்கிளே,
92
**

பற்களின் இடையில் அகப்பட்ட இறைச்சித் துண்டு அரை வாசி உள்ளுக்கும் மீதி வெளியிலும் இருந்ததால் பெப்பிளுேவால் உடனே நிமிரமுடியவில்லை. இறைச்சி அரைக்கும் இயந்திரம்போல் அவன் வாய் இயங்கத்தொடங்கியது. ஒரே மூச்சில் முண்டி விழுங் கிகுன் கையால் வாயை அழுத்தித் துடைத்தான். ஆச்சரியம் கொண்டவன் போல் துள்ளியெழுந்து நின்முன் கண்களைச் சிமிட்டி நகைப்புடன் சத்தம் வந்த திசையை நோக்கினுன்
"சாப்பாடு எனக்குத் தரமாட்டீர்களா?' என மீண்டும்
'ஓகோ தம்பி உனக்கும் பசியா? நான் எப்படி நம்புவது? சரி போகட்டும். உனக்குச் சாப்பிட என்ன வேண்டும் சொல்'
என்ருன் பெப்பினுே.
"கோழிக்குஞ்சுக் கறிதான் எனக்கும்"
நிச்சயமாகத் தரலாம்' ஆயத்தமாயிருக்கிறது. ஆனுல் தம்பி ஒரு நிபந்தனே பணம் பணம் வேண்டும். இவ்விடத்தில் எதற்கும் பணம் தெரிந்ததா?
பணம் என்றதும் டாங்கிளேயின் தேகம் சில் எனக் குளிர்ந் தது, இதயம் நழுவிக் கரங்களில் குதிப்பது போன்ற உணர்வு கொண் டான். மனம் கோணியது. தலே குனிந்து தரையைக் காலால் தட விஞன் என்ருலும் சிறிது தன்னைச் சமாளித்தவனுய் தலையை நிமிர்த்தி,
'எவ்வளவு பணம் வேண்டும்' என்ருன்,
"அதுவா! அதிகமில்லை சொற்பந்தான். ஒரு இலட்சம் கொடு படவேண்டும். இன்றேல் சதாபட்டினிதான், கவனம்."
'இலட்சம்! இலட்சம் 1 என வாயினுள் முணுமுணுத்தான் டாங்கிளே மூச்சு நிற்பதுபோல் திணறிஞன்.
(، )Barr! அப்படியா சங்கதி. உங்கள் சூழ்ச்சி இதுதாஞ. விளங் குகிறது உங்கள் நாடகம், என்னுடன் விளையாடவேண்டாம். பட்டி னியால் த்ெதால்கூட ஒரு தம்பிடியும் நான் தரப்போவதேஇல்லை.
'தம்பி நீ இவ்விடத்திற்குப் புதியவன். நாங்கள் யார் என்ப தும் உமக்கு நன்ருகத் தெரியவில்லை. எங்கள் பிடி அழுங்குப்பிடி சொன்னசொல் தவறுவதில்லே, சாப்பிடவிருப்பமாயின் பணம்கொடு அன்றேல் பட்டினி' என்றவன் மறுபடியும் நின்ற நிலையில் டாங்கிளே பார்க்கக் கூடியதாக நாயின் வேகத்தில் நாக்கால் தக்கி இறச்சியை விழுங்க ஆரம்பித்தான்.
15 93

Page 53
'தொண்டைக்குள் அடைக்காதா முள் விக்கி விக்கல் எடுக் காதா! ஆ1 படுபாவி எனச் சபித்தான் ட்ாங்கிளே.
நாலு மணித்தியாலங்கள் பறந்தன.
பசியால் வாடிஞன் டாங்கிளே அவன் உடல் பதறியது. வியர்வை ஆறுபோல் வழிந்தோடியது. முகம் வெளிற கைகால்கள் சோர்வெடுத்தன. தாங்க முடியாதவனுய் மீண்டும் யன்னற் பக்கம் வந்தான்.
என்னைப் பசியால் வதைப்பது உங்கள் திட்டம் உயிரைப் பறித்துப் பணத்தை எடுப்பது உங்கள் முடிபு ஆகட்டும் உங்கள் அக்கிரமம்' என இரைந்தான்.
'ஒருபோதும் இல்லே! விருப்பம் எதுவோ அதனைத் தாராள மாய்க் கொடுப்போம். என்னவேண்டுமானுலும் பயப்படாது கேட்டுப் பெறலாம். தாமதமில்லாமல் உணவு கொடுப்பதற்காகவே நான் இங்கு தங்கியிருக்கிறேன்' இது எங்கள் தலைவனின் ஆணை என்ருன் பெப்பினுே.
ஆt ஐயோ! பசி என்னே வாட்டுதே. பேசவும் நா எழவில் லேயே ஒரு துண்டு அப்பம் என்கிலும் கொடுங்கோ என மன்ருடினுன்
குளறுவதில் பயனே இல்லை. தம்பி இவ்விடம் விலை நிதா னம் ஒரே குறித்தவிலை இலட்சம் பிராங்ஸ் கொடுத்தால்தான் ஏதும் நடக்கும்'
டாங்கிளே இதனைக் கேட்டதும் காறித் துப்பினுன் கம்பியை ஆத்திரம் தீர தன் பற்களால் கடித்தான் கைகளால் ஓங்கி அடித் தான் சபித்தான்.
என்னைக் கொல்வதா உங்கள் தீர்மானம், கொலை கொலை ,
என உரக்கக் கத்தினுன்
'இல்லையே இல்லே இது சத்தியம். ஆளுல் தம்பி எதற்கும் பணம் கொடு. சீக்கரம் கொடு. இனியும் தாமதியாதே இலட்சம்! ஒரேஒரு இலட்சம் மட்டுமே”
பசி பொறுக்க முடியாத டாங்கிளே கடைசியில் சம்மதித் தவஞய் "பணம் எப்படித் தரவேண்டும்' எனக் கேட்டான்
"இலகுவான முறை தொம்சன் பிரான்ஸ் வங்கிக்கு ஒரு ஒட்டு மட்டுமே எழுதித் தரவேண்டும். ஒரு லட்சம் கம்பி மறந் இடாதே ஒருலட்சம் மட்டுமே'
ஈற்றில் டாங்கிளே சீட்டை எழுதிக் கொடுத்தான். *கோழிக்கறி உடனே வரட்டும்’ என கோபத்துடன் உறு
94.
 
 

மிஞன், "இதோ வருகிறேன் ஐயா' எனச் சொல்லி டாங்கிளே
முன்னுல் ஒரு தட்டில் எண்ணெயில் வாட்டிய கோழிக் குஞ்சொன்றை
வைத்தான். கறியோ பழையது. பக்குவமாய் பாகம் செய்யப்படாதது
பதம் அற்றது. சுவை குறைந்ததான கறி. ஆறி அலர்ந்த நிலைமை. கொடுத்த பணத்திற்கு போதாத உணவு. எனினும் என் செய்வான் 【】 டாங்கிளே. பசிக்கொடுமை தாங்காது அவாவுடன் அதட்டி விழுங் கினுன் இனிமேல் பணம் கொடுப்பதில்லே எனச் சாப்பிடும் ஒவ் வொரு முறையும் தீர்மானிப்பான். ஆளுல் பசி பொறுக்க இயலாத போது மனம் தளர்ந்து உணவிற்காக மன்ருடுவான்.
கடைசியில் அவன் கட்டிக்காவிய பணம் முற்றும் அவன் பசி தீர்ப்பதில் கரைந்து வோயிற்று. அதன் பின் அவனுக்கு உண்ண ஒன்றுமே கொடுக்கப்படவில்லே. கடவுளை நினைத்தான். கரங்களை உயர்த்தினன். தெய்வத்தை நொந்தான். அழுது புலம்பினுன் உரக்கக் கத்தினுன் தன்னேயே சபித்தான். அறையின் நாற்புறமும் ஆவேசங் கொண்டவன் போல் ஒடிஞன். தப்பி ஓட வழி ஏதும் உண்டோ வெனத் தேடி அலைந்தான். அவன் சுவரிகளில் முட்டி மோதிஞனே தவிரத் தன்னை விடுவிக்க வழிகாணுது தவித்தான். பரிதாபம்! அவன் பட்ட வேதனையோ பயங்கரம்.
மூன்று நாட்கள் இவ்வண்ணமே ஓடி மறைந்தன. நல்லறிவு அற்ருன், புத்தி தடுமாறியது. சித்தசுவாதீனம் இல்லாத சுத்த பயித் திகமாஞன். நிலத்தில் புரண்டு புலம்பினுன் நிதானம் இழந்து தடு மாறினுன் கதவுப்பக்கமாக அரைந்து சென்று தன் கால்களால் கதவைப் பலமாக உதைத்தான். தடார்! தடார்! என்ற ஒரே சத்தம் அவலக் கூக்குரல் அறை முழுவதையும் பரப்பி, அவன் காதுகளையே அடைக்கச் செய்தது அதன் எதிரொலி
. 'தலைவன்! உங்கள் தலைவன் எங்கே? கூட்டிவாருங்கள் தலே வன. ஒ! தலைவா!' என ஒலமிட்டான். அந்தவேளை அறைக் கத வடியில் ஒரு உருவம் வந்துநின்றது.
"நான்தான் தலைவன் லூயிவம்பா என்னவேண்டும்? சொல்" ' என்றது அந்த உருவம் ,
"இரக்கம்! ஐயா என்மேல் இரங்குங்கள். என் உயிரே எனக்கு வேண்டும். இன்னும் உலகில் வாழவே துடிக்கிறேன்" என்ருன்
my v GGG,y .
லூயிவம்பா கதவை மெல்லந் திறந்தான் உள்ளே நுழைந்து அவன் அருகில் சென்மூன். , 16 95

Page 54
'நண்பா உனக்கு என்னதான் நடந்துவிட்டது? ஆக்கினே அதிகமாயிற்றே" என்ருண்.
'ஆம் ஆக்கினே! இதுபோலும் கொடும்ை நான் இதுவரை அனுபவித்ததில்லையே' என்ருன் தாழ்ந்த குரலில், அதே சமயம்
"இதிலும் கொடிய ஆக்கினைகளுக்கு ஆளாகிய மனிதரும் உண்டோ' என்றது வேறேர் உருவம்,
டாங்கிளே கண்களை அகல விரித்தான் ஏறிட்டு சத்தம் வந்த திசையை நோக்கினுன் கள்வர் தலைவனின் பின்னல் மேலங்கியால் இறுகப் போர்த்து மூடி மறைந்து நின்ற ஒரு மனிதனேக் கண்டான்.
'நீ புரிந்த அக்கிரமங்கள் அதந்தம். அவற்றை நினைத்துப்பார். இப்போது அவற்றிற்காக துக்கப்படுகிருயா?
"ஆம் ஆம்! நான் துக்கப்படுகிறேன். செய்த கொடுமைகளை நினைக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன்' என நம்பிக்கை இழந்த வணுய் சொற்கள் தடுமாறப் பணிவுடன் சொன்னுன் டாங்கிளே.
'அப்படியானுல் உன்னே மன்னித்தேன்' எனச் சொல்லியவன் மேலங்கியைக் களைந்து டாங்கிளேயின் எதிரில் வந்து நின்றன்.
"ஓ! பிரபு மொன் ரேயா? பிரபு பிரபு என ஆச்சரியத்துடன் மெல்லச் சொன்ஞன்.
'டாங்கிளே நீ நினைப்பது தவறு. நான் யார் தெரியுமா? உங் அள் மொட்டைக் கடிதம் ஞாபகமிருக்கிறதா. உங்கள் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்டவனே நினைவிருக் கிறதா? நான்தான் எட்மன்ட் டான்ரே! தெரிந்ததா'
இவற்றைக் கேட்டதும் டாங்கிளே அறிவிழந்து, விழுந்து அசைவற்ற பிணம் வோல் கிடந்தான்.
'எழும்பு உன் உயிருக்குப் பழுதில்லே. நீ பிழைத்தாய். ஆஞல்
திருந்து வைத்தியசாலையில் நீ திருடிய பணத்தை திரும்பவும் அதற் குரிய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளேன் எழுந்திரு சாப்பிட்டதும் உனக்கு விடுதலே' என்ருர் பிரபு,
குணிந்த தலேயுடன் நாணிக் கோணித் தரையில் கிடந்த டாங்கிளே கண்விழித்துப் பார்த்தான். நிழலொன்று தோன்றி மறை வது போல் தோன்றியது அவனுக்கு பால் பழம் விரும்பியபடி தாராளமாய்ப் பரிமாறப்பட்டது. வயிருர உண்டான் உள்ளங்குளிர உவைன் அருந்தினுன், விரும்பிய வாழ்வு தனக்கு அளிக்கப்பட்டதை எண்ணி அகம் மகிழ்ந்தான் என்ருலும் இன்றுவரை அனுபவித்த துன்பத்தின் குறிகள் அவன் முகத்தில் அம்பலமாயின.
96
 
 
 
 

உணவு முடிந்ததும் கள்வர் தலைவன் அவனை வெளியே அழைத்துச் சென்ருன் தெருவோரத்தில் நின்ற மரத்தடியில் விட்டு விட்டுத் திரும்பினுன் வம்பா. நேரமோ இரவு எங்கும் கும்மென்ற இருண். எங்குநிற்பதென அவனுக்கே தெரியவில்லை. அரைமயக்கக் துடன் அதேமரத்தடியில் சாய்ந்த வண்ணம் இரவைக் கழித்தான்.
பொழுது புலர்ந்ததும் கண்களைத் திறந்து பார்த்தான். ஒர் சிற்ருறு தன் முண்ணுல் ஒடிக்கொண்டிருப்பதைக் கண்டான். காலே வெய்யிலில் ஆற்றின் நீர் பள பளவென மின்னி அவன் கண்களைக் கூசச் செய்தது. நீரைக் கண்டதும் தாகம் அவனுக்குண்டானது, தாகம் மேலிடவே மெல்ல நகர்ந்து ஆற்றங் கரைக்குச் சென்ருன், நீர் அருந்து ஆற்றில் தலையை குனிந்தவன், தன் உருவத்தைக்கண்டு மருண் டான். முற்ருய் மாறி உருக்குலைந்து தோன்றிய தன்கோலத்தை பார்த்து வருந்திளுன் வெள்ளே வெளிரென இருத்தது அவன் முகம், குழிவிழுந்த கண்கள் கருங்கிய கன்னங்கள், நரைதிரை கண்டதலை யாவும் அவன் இதயத்தைப் புண்படுத்தின. மானமிழந்து மனமொ டிந்த டாங்கிளே, உயிர்தப்பினதே போதும் என்று தன்னுள் முணு முணுத்தவாறு தன்வழி நடக்கலானுன்

Page 55
(20) நீயின்றேல் நானில்லை
கள்வர் குகையை விட்டுவிலகிய டான்ரே தன் அழகிய படகில் மொன்ரேகிறிஸ்ரோ தீவிற்குப் பயணமானுன் தீவின் ஓர் அந்தத்தில் சிறிய துறையொன்றிருந்தது. வனப்பும் இயற்கை வள மும் நிரம்பிய கப்பற்துறை, பாதுகாப்பான இடத்தில் படகை நங்கூரமிட்டான், கப்பலின் மேற்தளத்தின் மத்தியில் கைகள் பின் கட்டி தலைநிமிர்ந்து தன் சொந்தப் பூமியான தீவின் நாலாபக்க மும் பார்த்தான். பளிங்குபோலும் அவன் விழிகள் நண்பகல் ஒளி யில் மிளிர்ந்தன. சுழல் விளக்குகள் போல தீவின் எத்திக்கும் அவன் கண்கள் உருண்டன.
இதமான காற்று வீசியது. அவன் தலைமயிர் காற்றில் அங்கு மிங்குமாக ஆடியது. ஓரிரண்டு அவன் அகன்ற நெற்றியில் தவழ்ந்து விளையாடியது. மத்தியானவேளே. எனினும் அவன் முகத்தில் களை தோன்றவில்லை. அவனின் கம்பீரதோற்றத்தைக் கண்டு அலைகள் முத லாய் அஞ்சினுற்போல் அமைதி கொண்டன. இடையிடையே சள் சள்! சல சல! என்ற ஓசையே ஒலித்தது அந்த ஆழ்கடலில், தான் : குடிபுகப்போகும் தீவின் இயற்கை வனப்பை கண்களால் கண்டுகளித்து R | காதாற் கேட்டு மகிழ்ந்த போதும் அவன் மனமோ பறந்து வேதனை தரும் பழைய நினைவுகளில் தாவியது.
மாலுமியாக இருந்தபோது தன் மண விழாவுக்கென விருந் தொன்று ஒட்டேலில் நடைபெற்றது அவன் ஞாபகத்திற்கு வந்தது. அன்று கயவர் மூவர் செய்த சதியின் விளைவால் காவலர் குறுக் கிட்டு தன்னைக் கைதுசெய்த மர்ம நிகழ்ச்சி நினைவிற்கெட்டியது. மனக்கோலம் கொண்டு மணமுடிக்க நின்றபெண் தினமுருகக் கண் ணிர் வடித்து சோகத்தில் மூழ்கிய கோரக்காட்சி அவன்முன் தோன்
றியது. நிரபராதியாகிய தனக்கு விடுதலை அளிப்பதாக வாக்களித்து, 鄭 அநியாயத்தீர்ப்பு வழங்கி சிறைக்கூண்டிற்கு அனுப்பிய நீதிபதியைக் கண்டான், அவன் மனம் கசத்தது. வெறுப்புற்றது அவன் உள்ளம்,
98. *
 
 
 
 
 

எனினும் தான் சிறையில் இருந்த நாட்களில் உற்ற நண்பனும் ஆசிரியனுமாயிருந்த அபேபாரியாவின் உன்னத உருவம் அவன்முன் தோன்றவே முகம் மலர்ந்தான். அகம் குளிர்த்தான். அன்புடன் தனக்கு உபதேசஞ் செய்த அந்த உத்தமனின் நினைவு அவனுக்கு மனநிறைவைக் கொடுத்தது, தன் சொத்தான அத்தீவையும் அதனுள் புதைக்கப்பட்ட விலை மதிப்பதற்கரிய புதையலேயும் அன்பளிப்பாகத் தனக்கு அளிக்கப்பட்டதையும் நினைத்துப் பிரேமை கொண்டான். நன்றிப் பெருக்கால் பெருமூச்செறிந்து, கண்கள் அகல விரிய அந்தரத்தில் ஆடுபவன்போல் மெய்மறந்து நின்றன் டாண்ரே.
திடீரெனத் திசை திரும்பியது அவன் மனம். ஏதோ ஒன்றைத் தவறவிட்டவன் போல் ஏங்கியது அவன் உள்ளம் கையில் இருந்த கருந்தனம் நழுவியது போன்ற உணர்வு அவனுக்கு உண்டானது. மடியிலிருந்த மாணிக்கம் மறைந்ததோவென்ற விழிப்பு எழுந்தது அவன் மனதில், இன்றுவரை தன்னுடன் நிழல்போல் பின்தொடர்ந்து, உறவு கொண்டாடிய உயிரொன்று தன்னைப்பிரிந்து எங்குதான் சென் றதோ என்ற பீதி அவனைப் பிடித்தாட்டியது. உண்மையாகவே அவன் உள்ளத்தை உலுப்பிய, ஒன்றன் பின் ஒன்ருய் அலேபோல் எழும்பிய இவ் எண்ண அலைகள் ஒரு கணம் மாத்திரமே.
மறுகணம் கீழே குனிந்து பார்த்தான். அவன் காலடியில் பொற் சிலைபோல் காத்திருந்தாள் அடிமைப் பெண் கெயிட்டி சூரி பனும் மேற்கில் மறைந்தான். இவ்வளவு நேரமும் அவளைப் பற்றி எண்ணம் இல்லாதிருந்தவன், அவளே உற்று நோக்கினுன் கீழைத்தேச உடை அணிந்து, கிரேக்கதேச கெலன் அன்ன நிலாவொளியில் அழகு டன் விளங்கினுள். அவள் மேல் அவன் கொண்டிருந்த அளவு கடந்த அன்பு அவன் பார்வையில் புலனுயிற்று. எனினும் தன் ஆசையை
மறைக்க முயன்றவன்,
"கெயிட்டி எழுந்திரு, இனியும் நீ அடிமையில்லை. எங்கு விரும்
பிஞலும் போகலாம்' என்றன்.
அவளோ அசையாது அருகில் நின்றிருந்தாள். பேசுவதற்கோ நா எழ மறுத்தது.
"கெயிட்டி பல வருடங்களாக என் மகள் போல் நீ இருந்தாய் இனி நீ உன் ஊருக்கே திரும்ப விரும்பினுல் போகலாம். உன் தந் தையின் செல்வம் செல்வாக்கு சொத்து யாவையும் மீண்டும் நீ அடைந்து உன் சொந்த நாட்டிலேயே சுகவாழ்வு வாழ வழி செய் வேன்' என்ருன்,
சிறிது நேரம் மெளனம் நிலவியது. அவன் அவளேயே இமை வெட்டாது கண்கள் குளிர ஆவலுடன் பார்த்து நின்முன் அவளோ
99

Page 56
குனிந்த தலே நிமிராது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவா எளியைப்போல் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினுள்,
"கெயிட்டி" என மறுபடியும் கனிவுடன் அழைத்தான் டான்ரே,
*உன் விருப்பம் என்ன? எதுவோ சொல்லி விடேன்' என இதயத்தின் ஆழத்தில் இருந்தும் அன்பு சுரக்க கண்கள் கலங்க பரிவுடன் திரும்பவும் கேட்டான். அதே வேளையில் அவன் பார்வை அவளில் பதிய, அவள் பதில் எதுவாகுமோவென அறியத் துடித்தான்.
'என்னே முற்ருகக் கைவிடவா நினைக்கிறீர்கள். தசையில் தைத்த முன்ளை எடுத்தெறிவது போல், னன்னேயும் துரக்கி எறிவதா உங்கள் தீர்மானம், ஐயா! நான் ஓர் அநாதை. தாயுமில்லை எனக் கோ தந்தையுமில்லை. எவருமே இல்லாத அகதிதான். இனிமேலும் எனக்குச் சொந்தம் சுற்றம் என அழைக்க இவ்வுலகில் யார் உளர்? சொந்த நாடெனச் சொல்லிப் பெருமைப்பட எனக்கு நாடுதான் ஏது?" எனத் துயர் தொண்டையை அடைக்க கம்மிய குரலில் மெது வாகக் கூறினுள் கெயிட்டி,
அவள் கண்களில் நீர் மல்கியது. இமைகள் ஒடி மடல்போல் வீங்கின. விழிகள் கொவ்வை போல் சிவக்கக் கண்ணீர் கன கண வென அவன் பாதங்களில் சொரிந்தன. புண்ணில்பட்ட புளிபோல் அவள் கண்ணிர் அவன் கால்களில் விழ, அவன் ஒரு கணம் வீரிட்டான். திடுக்கிட்டான் டான்ரே!
'ஒ கெயிட்டி! என்ன! ஏன் அழுகிருய்? சொல்' என அவன் நெஞ்சம்பதற, உதடுகள் துடிக்க தான் சொல்லியவை தகாத னவோ எனத் தனக்குள் சிந்தித்தான். தன் பதட்டத்தை வெளிக் காட்டாது ஒருவாறு தன்னைக் சமாளித்தவன், அவள் கண்ணிரை நடுங்கும் தன் கைவிரல்களால் ஒற்றித் துடைத்தான். அதே சமயம் அவன் உள்ளம், 2.
'கண்ணே! அழாதே! எல்லாவற்றிற்கும் தான் இருக்கிறேன்' எனக் கூறியதை உணர்ந்தான் டான்ரே,
அவளோ அவன் கைகள் நெஞ்சை அழுத்தியதை அறிந்தாள் அவன் மனுேநிலையைப் புரிந்தாள் சிறுமி கெயிட்டி, அவள் கன்னங் கள் நாணத்தால் செக்கச் சிவந்தன. நெஞ்சம் விம்மி அலைபோல் அசைந்தாடியது. அவள் மனம் காயம் யாவும் புயலில் அகப்பட்ட மரக்கலம்போல் ச்ெல்லும் மார்க்கம் தெரியாது சுழன்றன. இவற்றை யெல்லாம் அவதானித்த டான்ரே, "கெயிட்டி இல்லை. உன்னைக் கைவிடுவது என் நோக்க மன்று. அப்படி அநாதையாய் நீ அந்தரிக்க நான் ஒருபோதும்
சம்மதியேன். என்ருலும் நான் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேன்.
OO
 
 
 

"கெயிட்டி நீயோ இளம்பெண் வயது வந்தவள். அழகுமிக்க வள் வாழவிரும்பும் வயதினள். ஆனல் நாஞே உன் தந்தைக்குச் சமன் வயதில் முதியவன் இவ்வளவு காலமும் பட்டு அனுபவித்த * பாடுகளின் வடு இன்னும் முற்ருக நீங்காடு பெரும் முட்டாள் நான்
'எனவே என்னை மறந்துவிடு கெயிட்டி! என்னை மன்னித்து N விடு. நீ மகிழ்வுடன் எங்காவது வாழவேண்டும் என்பதே என் ஒரே ஆசை' என்றவன் அவளை மீண்டும் தன் ஒரக் கண்களால் பார்த் தான் அவள் மனதை அறிய ஆவல் கொண்டான்.
"கெயிட்டி ஏன் மெளனம் உன் விருப்பம் என்ன? என்னை விட்டுப் பிரிய மனமில்லையா?' என்ருன்.
ܓ
"நான் சிறு பெண். உம். உண்மைதான் நீங்கள் சொல்லியவை
எல்லாம், ஆளுல் நான் எங்குமே போகமாட்டேன். இன்றுவரை உங்கள் அன்பின் வளர்ப்பில் வாழ்ந்தேன். நீங்கள் நினைப்பதையே என் நினைவாகவும், போகும் வழியே என் பாதையாகவும் போற்றி, கருணைமிக்க தங்கள் கண்காணிப்பில் காலங்கழித்துவந்தேன். தங்கள் அன்புததும்பும் சொற்கள், பாசம் சொரியும் பார்வை, பரிவு நிறைந்த போக்கு என்னை இவ்வளவு காலமாக இன்புற்று வாழ வைத்தன.
அதே வாழ்வையே நான் இன்றும் விரும்புகிறேன். என்றுமே அப்படி யிருக்க இறைவனை வேண்டுகிறேன்' எனத் துணிவுடன் பதிலளித்தாள் கெயிட்டி.
'சரி நான் உன்னைத் துரத்திவிட்டால்"
'அப்படியானுல் பெருந்துயரம் தாங்க இயலா ஏமாற்றம், ஒ! இறைவா என்னைக் காப்பாற்று. இல்லை! இல்லை என் இதயமே வெடிக்கும். நான் இறப்பேன் இந்நிமிடமே. இது சத்தியம்' என்ற | alii சடக்கென அப்பால் எடுத்தடி வைத்தாள்.
'நில்! நில்! கெயிட்டி நில்! அவ்வளவுதூரம் நீ என்னேக் காதலிக்கிருயா? சொல் சீக்கிரம்
ஆம் ஆம்! இன்றல்ல நேற்றல்ல. என்று நான் பக்குவ மடைந்து விபரம் தெரிந்தேஞே அன்று தொடக்கமே உம்மை முழுமையாகக் காத்திருந்தேன். எனக்கு எல்லாம் நீங்களே. தந்தை யும் தாயும், மாத்திரமல்ல தாரம் முதலாப் நீங்களே. நீங்கள் இன்றேல் தானில்லை என்றவள் அவனையே நிமிர்ந்து ஆவலுடன் நோக்கினுள்.

Page 57
டான் ரேயின் ஆனந்தத்திற்கோ அளவில்லை. அவள் வார்த் தைகன் அவன் என்புகளேத்தாவி நெருப்பிலிட்ட நெய்யென்ன உரு கச் செய்தன. அக்கணமே அவன் தன் மன்மத மார்பை அகல
விரித்து தன் அன்புக் கரங்களை நீட்டினுன்
அதே விநாடி அவன் அணைப்பில் துவண்டாள் கெயிட்டி, காதலர் களிப்பில் தானும் பங்கு கொண்டாற்போல் கடல் கொந்தளித்தது. அலைகள் மோதி முரசு கொட்டின. தென்றல் மெல்லென வீசி இன் னிசை பாடியது. மேகமோ இருண்டு பன்னீர் தெளிக்க இருவரும் இல்லற இன்பவாழ்வில் இணைந்தனர்.
ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பானம்.
 
 
 
 
 
 
 
 

S S S

Page 58


Page 59