கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொடுத்தல்

Page 1


Page 2


Page 3

சுதாராஜ்
G)g.055], ༧༧བ་1 - དག། དང་། ༢ () ༢.མིན་
l 7[ܕܪܰܒ݁ܟ݂ ¬ܡܘ 召 அதிஇ) 导 k8。nég。
சிரித்திரன் பிரசுரம் 550, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,

Page 4
கொடுத்தல் பேன்னிரண்டு சிறுகதைகள்) _
வெளியிடுபவர்: சுந்தர் s
எழுதியவர்: சுதாராஜ்
முகப்போவியம்: ரமணி
’ম { ܪܳܠ ܐܝܵܐ, ܪܹܐ ܬܝ ܐܬܝܬ ܨܐ
ஓவியங்கள்: ரகன் ·
அச்சுப் பதிப்பு: சிரித்திரன் அச்சகம்
பதிப்புரிமை சுதாராஜ்
முதற்பதிப்பு: 19-6-1983
விலை ரூபா 14-00
 

சுவைத்தேன்
bடகம் பார்க்க வந்த என்னை தலைமை உரை வழங்கும்படி மேடையில் ஏற்றிவிட்ட கதையே என் கதை, சிறுகதை ரசிகனன என்னைச் சுதாராஜ் தனது சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதும்படி பணித்து விட்டார். எனது சிறிய தலைக்குப் பெரும் தலைப்பாகை. இது கோமாளித் தனமாகக் கூடத் Go56šTL GTib. -
நாடகத்தில் புகழ் மகுடம் கதாநாயகனுக்கேயுரியது. முன்னுரை மொழிபவருக்கல்ல அதே போன்று புத்த கப் பிரசுரப் பண்பிலும் புகழாரம் படைப்பாளிக்குரி யது. அணிந்துரை வழங்குபவருக்கல்ல.
கலை கடைச்சரக்கல்ல. எடை பார்த்து மதிப்புக் கூறுவதற்கு தங்கமுமல்ல உரைத்துப் பார்த்து தரம் கூறுவதற்கு. கலை ஒரு ஆத்ம தரிசனம். இந்த ஆத்ம தரிசனத்திற்குக் கூட எமது கலாவைத்தியர்கள் சட்டமிட்ட கண்ணுடி வைத்திருக்கின்றர்கள்.
கவர்ச்சித் தன்மை முரண்பட்டது ஒருவரின் அறு சுவை மற்றவரின் அறுவையாகும். கார் மேகத்தில் வெள்ளைக் கொக்கு பறப்பதை பார்த்து ராமகிருஷ் னர் பரவச நிலையடைந்து வீழ்ந்தார். அதே வெள் ளைக் கொக்கைக் 'கசரப்புக்" கண்ணுேட்டத்தோடு ஒருவன் பார்த்தால் அதை வேட்டுவைத்தே தீருவான்.
ஒவ்வொருவரின் பக்குவத்தைப் பொறுத்தே கலைப்
பர்ர்வை அமையும். பிக்காசோவின் தூரிகையைத்
துடைப்பங்கட்டை என்று விமர்சனங் கூறியவர்களு
முண்டு.
பண்பான உள்ளங்களின் நெகிழ்ச்சியில் கிளர்ந்தெ (yppö AB GAug. Gutši 35GBGMT siðav Lurregiștið. A certain hospitality of the mind is culture 67 Gör go ásöögi 6A (GPT Gasfi TrTST கிருஷ்ணன் கூறுகின்ருர், பண்பில்லாதவன் கையில் உள்ள பேணு பயங்கரமான ஆயுதம் எனக் கூறப்படுவ துண்டு.

Page 5
புத்தக உலகம் இன்று பணம் சுரண்டும் துச்சா ஆன சாத்தான்களின் சதுக்கமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையிலும் துகில் கொடுத்து மானங்காக்கும் கண்ணன் போன்றேரும் இல்லாமல் போகவில்லை. சுதாராஜின் கதைகளில் தர்மாவேசம் சுடர்விட்டெரி கின்றது.
சதாராஜ் அவர்களின் "பலாத்காரம்" என்ற சிறு கதைத் தொகுப்பும், asu (Eso (f) (0)6Nuovflufft FGF 'இளமைக் கோலங்கள்" என்ற நாவலும் பண்புமிக்க ஒரு பெண் முற்றத்திலிட்ட வண்ணக் கோலங்களாய் மனதில் நிறைந்திருக்கின்றன. அவரின் ஆக்கங்களேப் படித்த ஓர் இலக்கிய தரிசி கூறியதை இங்கு குறிப்பி டுவது பொருத்தமாக இருக்கும். "சீறிவரும் நாகத்தை யும் நோகாமல் கொல்லும் பண்புடையவர். அவரின் மென்மையே அவரின் கதைகளின் மேன்மைக்குக் காரணம்."
'கொடுத்தல்" தொகுப்பில் வரும் நன்றியுள்ள மிருகங்கள் என்ற கதைக்கு அவரின் மிருதுவான உள் ளமே மெருகூட்டுகின்றது. ஒரு காலம் வாரி அஃணத துத் தாலாட்டப் பட்ட சடை நாய்க் குட்டி இன்று குட்டை பிடித்த ஜென்மமாகிவிட்டது. சகோதரிகளுக் காக வாழ்ந்த அண்ணு இன்று இருமலில் குலுங்கும் கிழமாகி விட்டார். குட்டை நாயையும் கிழட்டு
மாமாவையும் மருமக்கள் கோடியிலுள்ள கொட்டிலுக்
குள் தள்ளி விட எடுக்கும் முயற்சியை இதயம் நெகிழ அவர்சித்தரிக்கின்ருர்.
மென்மையான சுதாராஜின் கதைகள் தன்மான மெனும் வைரம் பாய்ந்த மனதில் பூத்தவை என்றே கூறத்தோன்றுகின்றது. "கொடுத்தல்" என்ற கதையில் தன்மான்ம் தணலாய்க் காய்கின்றது. சொந்தக்காரர் எல்லோரையும் வாழவைத்த ஆறுமுகத்திற்கு இன்று வறுமைதான் சொந்தம். பெற்ருேல் விலை ஏறியதால் சாரதி வேலையை இழந்தார். ஆறுமுகத்தையும் மனைவி மக்களையும் பசித்தீயின் நாக்கு கார்ந்துகொண்டிருந் தது. இந் நிலையில் ஆறுமுகம் தான். ஆளாக்கிய தேனீர்கடை முதலாளி முத்துராசாவிடம் கடன்
N

உதவி கேட்டுப் போகின்ருர், முதலாளி முத்துராசா தேனீர் ''split'' செய்து கொடுக்கின்ருர். ஆனல் கடன் உதவி செய்ய மறுக்கின்றர். ஆறுமுகம் தன் வேட்டி முடிச்சிலிருந்த ஒரே ஒரு ரூபாய்க் குத்தியை தன்னை உபசரிக்க வழங்கிய தேனீருக்குக் கொடுத்து விட்டு மானமிழக்காதவராக வீடு திரும்புகின்ருர்,
சுதாரrஜின் கதைகள் சமூகப் பிரச்சினை கனத்த கதைகள். ஒவ்வொரு கதையும் பிரச்சினைக்கு ஓர் அர்ச் சனை. அறைக்கு வாடகைப் பணம் கொடுக்க முடி யாது ஒளித்து விளையாடும் கிளறிக்கல் உத்தியோகத் தன், பட்டப்படிப்புப் படித்துவிட்டு மவுசுள்ள மன மகனுக்குக் காத்திருக்கும் கமலம், தொழிற்சாஃலயில் முதுகெலும்பாய் உழைத்த பியரத்னவை ஈவிரக்க மின்றி வேலையிலிருந்து நீக்கும் அதிகாரி, ஹோட்ட லில் விசுவாசமாக வேலை செய்தும், தனது பிள்ளைக்கு நாலு வடை கொண்டு போக முடியாது ஏங்கும் சேர்வர் வைத்தி, எல்லோரையும் யதார்த்தமாக எமது மனதில் வாழவைக்கின்ருர் சுதாராஜ்.
ஒவியத்தில் துடிப்பில்லா இடங்களை "Dead Spots" என்று கூறுவார்கள். சிறுகதை, நாவலிலும் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி ஆளப்படாத நிலையில் இந்த மையப் புள்ளிகள் ஏற்படலாம். சுதாராஜின் கதைகள் புழுதிச் சொற்களால் புனையப்பட்டவை. 'பாரதியின் கவிதைகள் வாழும் சொற்களால் வடிக்கப்பட் டவை. ஒரு சொல்லே வெட்டினும் குருதிகொப்பளிக் கும்" என்கிருர் மகுடியார். சுதாராஜின் படைப்பிற்கு இந்த பெருமை உண்டு.
நீண்ட காலம் எமது கதைகள் செம்பாட்டு மாங் கனியாகவே இருந்து வந்தன. இன்று எமது எழுத்தா ளர்கள் அந்நிய நாடுகளில் வேலை செய்வதால் அந்நிய நாட்டு அநுபவங்களும் இணைந்து கதைகளில் ஒட்டு மாங்கனி ரசத்தை அனுபவிக்கக் கூடியதாக இருக்கின் [[D0ğil m
எழுத்தாளராகிய சுதாராஜ் குவைத்தில் பொறியிய
லாளராகக் கடமையாற்றுகிருர், சிறு க  ைத க ளே அணிசெய்யும் நவீன பாணி ஓவியங்களை வரைந்த

Page 6
ரகன் சுதாராஜின் சகோதரணுகிய குணசிங்கமவர்களே . கட்டடக் கலைப் பட்டதாரியான இவர் சிறந்த நடிக னும் கூட. ரகன் என்ற புனை பெயரில் மறைந்திருந்து ஒவியங்கள் வரைபவர். ரமணியமான அட்டைப் படத்தை வரைந்தவர் பிரபல ஓவியர் ரமணி. இவை எல்லாம் ஒருங்கிணைந்து கதைத் தொகுப்பு ஒரு மலர்க் கொத்தாகப் பரிணமிக்கின்றது.
ஒவ்வொரு எழுத்தாளனும் எழுதும் செம்மையான புத்தகங்கள் அறிவாலயம் எழுப்புவதற்கு வைக்கப்ட டும் செங்கல். இதற்கு "கொடுத்தல்" தொகுதியும் தனது பங்கைக் கொடுத்துப் பெருமை அடைகின்றது.
சுந்தர்
550, கே. கே. எஸ் வீதி பாழ்ப்பாணம்.
 

8ያ(Ù
சந்திப்பு
இச் சிறுகதைத் தொகுப்பு மூலம் இன்னுெரு முறை உங்கள் முன் வரும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
சக மனிதர்களுடன் சேர்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்க்கை நடத்துகிருேம். வாழ்க்கை. இன்பம் நிறைந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைகிறது. சிலருக்கு, இன்னும் சிலருக்கு ஒன்றுமே இல்லாதது போல விரக்தியும் வெறுப்பும் மிகுந்து தோற்றுகிறது. சுகமாகவும், சொகுசாகவும் சீவிப்பதற்காக மற்றவர் களை இம்சிக்கின்ற நிறையப் பேரை எங்கும் காணக் கூடியதாயிருக்கிறது. மனிதர்களே மனிதர்களின் கவ லைக்கும் காரணமாகிருர்கள். மானிடரை நேசித்து வாழ்வதென்பது பெரிய கஷ்டமான காரியமல்ல என் பது அப்படியானவர்களுக்கு ஏனே தெரியவில்லை? இதைத்தவிர முன்னுரை என்று சொல்வதற்கு விசே டமாக ஒன்றுமில்லை. மற்றப்படி சொல்லவேண்டிய வற்றை எனது கதைகளிலேயே சொல்லிவிடுகிறேன்.
இத்தொகுப்பிலுள்ள பன்னிரண்டு கதைகளில் ஏதாவது ஒன்றையாவது என்னுல் எழுதாமலிருந்திருக்க முடியாது. அத்தனை உக்கிரத்தோடு அவை என்னை உலுக்கின. சும்மா இருக்கவிட்டதில்லை. வேறு அலுவல் களில் ஈடுபட்டிருக்கும்போது.சிப்பிலியாட்டின. படுக் கைக்குப் போனல் உறக்கத்தைத் தடை செய்தன.
எழுது" "எழுது அதஞல், எப்போதாவது நேரத்தை ஒதுக்கி எழுத அமர்ந்துவிட்டாற், சரி- அப்பாடா, தலையிலிருந்து ஏதோவிடுபட்ட சுகம்.விடுதலைகிடைத்த மாதிரி ஆறுதல். என்னை எழுத வைக்குமளவிற்குத் தூண்டிய இக்கதைகளுக்கு நிட்சயமாக உங்கள் மனதை யும் தொடுகிற சக்தி இருக்கிறது. எனது ஏனைய கதை களும் இவ்வாறே!
எழுதவேண்டுமென்பதற்காக சும்மா விதவிதமான கலவைகளை ஒரே அச்சில் வார்த்தெடுப்பது போன்ற கதைசெய்யும் காரியத்தில் எனக்கு உடன்பாடில்லை. பலவித தூண்டுதல்களால் அவை தாமாகவே உருவா கின. அவற்றின் உயிர்ப்பு கெடாமல் சொல்லியிருக் கிறேன், அவ்வளவுதான்.
அன்புடன் ‘தமிழ்ப் பணிமனை" 28, 4ம் ஒழுங்கை, சுதாராஜ் அரசடி வீதி, s யாழ்ப்பாணம்

Page 7
இக் கதைகளைத் தொகுத்து வெளியிடும் சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும், கதைகளே யும் அவற்றின் விமர்சனங்களையும் அவ்வப்போது t பிரசுரிக்கும்.
சிரித்திரன் 6 g (355 fil
மல்லிகை
தினகரன்'
ஈழநாடு
சிந்தாமணி
கதைகளைத் தட்டெழுதித்தந்த சகோதரி
ஒவியங்களை வரைந்த தம்பி ரகன்
'
முகப்போவியம் வரைந்த நண்பர் ரமணி
புத்தக அமைப்பில் உதவி புரிந்த சகோதரி வால தி, நண்பர் ராதேயன், * 聆。 t
புததக முன்னுறையப் பதித்து
தவி ய நண்பர் குலேந்திரன் rt
 
 
 
 
 
 
 

கொடுத்தல்

Page 8

கொடுத்
குல்
சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விட வேண்டுமென்பது அவரது எண்ணம். இன்னும் பொழுது புலரவில்லை. அந் தக் குருவிக்கு என்ன மகிழ்ச்சியோ? இப்படி விடி வதற்கு முன்னர் வந்து பாடத் தொடங்கிவிடுகி றது அதற்குச் சாப்பாட்டைப் பற்றிய கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் பறந்து போனல் எங்காவது கொட்டிக்கிடக்கும்.
நேற்றைய இரவும் அவர் வீட்டுக்குவந்த பொழுது நேரம் கடந்துவிட்டது. வெறும் கை யோடு தான் வந்தார். "இஞ்சரும். ஏதாவது இருக்கே?" ஒ1 வயிறும் வேறுமையாகவே இருக் கிறது- அவளுக்கு அழுகை பொங்கியது. பிள்ளை கள் வெறுவயிற்ருேடு கிடந்ததைக் கூடப் பெர்றுத் துக் கொண்டிருந்தவள்.
“இப்ப இந்த மனிசனும் அலேஞ்சுபோட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் வருகுதே!- தங்களது இயலாமை நெஞ்சை வருத்தியது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவரது சுகதுக்கங்க ளில் சமபங்கு கொண்டு அவருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பவளத்திற்கு அவர் பசியோடு கிடக்கப் போகிருரே என்ற வேதனை தொண்டையை உடைத்துக் கொண்டு வந்தது.
ஆறுமுகம் மனைவியைத் தேற்றினர். “சரி
சரி. ஏனப்பா இப்ப அழுகிருய்?. நான் சாப் பிட்டிட்டுத்தான் வந்தனுன். உங்கடை பாடு

Page 9
-- 10-سس
எப்பிடி எண்டுதான் கேட்டஞன்." அவர்களுடைய பாடு எப்படி இருந்திருக்கும் என்பது அவர் அறியாத தல்ல.
பிள்ளைகளின் வயிறு காய்வதைப் பார்த்துக் கொண்டு ஒரு தாயினுல் எப்படித்தான் சும்மாயிருக்க முடியும்? வெளியிலே சொன்னுல் வெட்கக்கேடு- மத் தியானம் ஒரு பேணி அரிசியில் (அதுகூடக் கடன் பட்டு) கஞ்சியாகக் காய்ச்சி ஊற்றினுள் இரண்டு குமர், மூன்று சிறுசுகள், நடுவில் இரண்டு படிக்கிற வயசுப் பெடியள் எத்தனை நாட்களுக்கு இப்படி மற்றவர்களை இரந்து கொண்டு போவது, அவர்களது சொட்டைக்கதைகள் ளைக் கேட்பது? பவளத்திற்கு நெஞ்சு பொறுக்காத கவலை முட்டியது.
“இஞ்சருங்கோ. பிள்ளையஞக்கெல்லாம் நஞ்சைக் குடுத்திட்டு நாங்களும் சாவமே?”
*உனக்கென்ன விசரே?. இப்ப என்ன குடிமுழு
கிப் போச்செண்டே இந்தக் கதை கதைக்கிருய்? மனைவியே தனது தன்மானத்துக்குச் சவால் விடுே
தாக நினைத்துக் கொண்டு ஆறுமுகம் சீறிப் பாய்ந் தார்.
அவள் அதற்குமேற் பேசவில்லை, “அந்த மனிசனும் தான் என்ன செய்யிறது?"
ஆறுமுகம் பாயைத் தட்டிப் போட்டுக் கொண்டு படுக்கப்போனபொழுது பவளம் ஒரு பேணியிற் சுடு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள், "இத் தாங்கோ. வெறுவயித்தோடை கிடக்கக்கூடாது.' அவர் ஒன்றும் பேசாமல் தண்ணிரை வேண்டி மொடு மொடென்று குடித்துவிட்டுப் படுத்தார்.
பவளம் திண்ணையில் சேலைத்தலைப்பை விரித்து
"சிவனே!" எனப் படுத்துக் கொண்டாள்.
பர்வம், தன்னிடம் வந்த காலத்தில் அவள் என்ன சுகத்தை கண்டிருக்கிருள் எனக் கவலை தோன்றியது.
"மெய்யே?. இந்தக் குளிருக்குள்ளை. ஏன் வெறும் திண்ணையிலை படுக்கிறீர்?. பாயை எடுத்துப் போட்
 
 
 
 
 
 

V
سس-11--
டுக்கொண்டு படுமன்' அடங்காத இரக்கத்தோடு தான் சொன்னர். அவர் சொல்வது கேட்காததுபோல பவளம் படுத்திருந்தாள்.
அவரும் பேசவில்லை. இரக்கப்படத்தான் முடிகி றது- அவர்களது தேவைகளையெல்லாம் பூரணமாகக் கொடுக்க முடியாத தனது இயலாமையை எண்ணி வருந்தினர். பிறகு சொன்னுர், “நாளைக்கு எப்படியா வது ஒரு வழியைப் பாப்பம்." ஒரு ஆறுதலுக்காக வாவது அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. ஆனல் நாளைக்கு என்ன செய்யப்போகிருர் என்பது கடவுளுக் குத்தான் வெளிச்சம்!
நித்திரை வரமறுத்தது. நாளைக்கு என்ன செய்ய லாம்? எங்கே போகலாம்? யாரைப் பிடிக்கலாம்? மனை வியும், குழந்தைகளும் கூட உறங்காமலிருக்கிற அசுகை தெரிகிறது. என்னவென்று புரியர்த வேதனை மனதை அலைத்தது. ஒரு வேலை கிடைத்து விடுமென்று நம்பிக் கையில் அவரும் அலையாத இடமில்லை. கார் சாரதி யாக முப்பது வருடங்களாகக் காலத்தைக் கடத்திய வர். கடைசியாக ஒடிய இடத்தில் கணக்குத் தீர்க்கப் பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. பெற்ருேல் விலை ஏறியதும், இனிக் கட்டுப்படியாகாது என முதலாளி வாகனத்தை விற்கப் போகிருராம்.
நன்கு அனுபவமுள்ள கார் டிறைவர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரப் படுத்துகிருர்கள்நேரில் வரவும்! குழந்தை குட்டிகளையும், பொறுப்புக்க ளையும் மறந்து கொழும்பிற்கு போகமுடியாது. என் னப்பா, யாழ்ப்பாணத்தில் அப்படியொரு பணக்காரன் இல்லாமற் போய்விட்டாணு எனக் காரணமற்ற எரிச் சலும் ஏற்பட்டது. ஒரு வேலை கிடைக்கும்வரை என்று சொல்லிக் கொண்டு பெண்சாதி பிள்ளைகளின் காதில், கழுத்தில் தப்பியொட்டிக் கிடந்த வற்றையும் விற்றுச் சுட்டுச் “சரிக்கட்டிய" நாட்களும் போய்விட்டன. பல நினைவுகளோடும் விடியப்புறமாகத்தான் உறங்கியிருக்க வேண்டும். மீண்டும் விடிய தன் பிள்ளைகளின் முகத் திலே விழிக்கக்கூடக் கூச்சமடைந்தவராய் நேரத்தோடு போய்விட எழுந்தார். ...

Page 10
- 12
ஆறுமுகம் வெளியே போக ஆயத்தமாக வந்த பொழுது பவளம், ஏற்கனவே எழுந்து வீடுவாசலைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நிற்பதைக் கண்டார். அன்றுதொட்டே அவளிடம் உள்ள பழக்கம் இது. நிலம் விடிவதற்கு முன்னரே எழுந்து பாத்திரங்களைத் துலக்கி, வீடுவாசலைத் துப்பரவு செய்து அவளும் தூப் 60)LDJ T35.
-அதற்கு மேல் அவரால் நினைத்துப்பார்க்க முடி யவில்லை (அதற்குப் பிறகு அவள் கைச்சுறுக்காகச் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடக் கொடுப்பாள்).
வெறும் தேயிலைச் சாயத்தை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள் பவளம், சூடாக இருந்ததால் அவ்வளவு கசப்புத் தெரியவில்லை.
“எப்பிடியும் பத்துப்பதினுெரு மணிக்கு முதல் ஏதாவது பார்த்துக் கொண்டு வாறன்' எனச் சமா தானம் கூறிவிட்டு நடந்தார் ஆறுமுகம். அவள் சேலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய்க் குற்றியை அவிழ்த்து அவரிடம் கொடுத்தாள்
“இந்தாங்கோ. நேற்று முழுக்கச் சாப்பிட்டி ருக்க மாட்டியள். முதல்லை ஏதாவது சாப்பிட்டிட்டு போற இடத்துக்குப் போங்கோ!'
அவர் ஏன், ஏது என்று ஒன்றுமே கேட்காமல் காசை வேண்டிக்கொண்டு போனுர்,
வேலையொன்று இல்லாமல் கணவன் அலைவதையும் குடும்ப நிலைமையையும் பொறுக்காமல் நேர்த்திக்கட ஒக இந்த ஒரு ரூபாயை நினைத்து வைத்திருந்தாள் • * அப்பனே! அவருக்கு கெதியிலை ஒரு வேலை கிடைக்க வேணும்." இன்றைக்கு மனது கேளாமல் அதையும் எடுத்துக் கொடுத்துவிட்டாள். 'எனக்கு அவர்தான் கடவுள், எல்லாம்!” என மனதுக்குச் சமாதானமும் சொல்லிக்கொண்டாள்.
அவரைப் போகவிட்டு அழுவாரைப்போலப் பார்த் துக் கொண்டு நின்ருள் பவளம், “ஏன்தான் இந்தக்
 
 

--13-سے
கண்கெட்ட கடவுள் இப்பிடி மணிசனைப் போட்டு அலைக் குதோ!"
மூத்தபெண் கமலா எழுந்து அம்மாவைத் தேடிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்துவிட்டுத் தாங்களும் சாகிற கதையை இரவு அம்மா சொன்ன பொழுது அவளும் கேட்டுக்கொண் டே படுத்திருந்தாள். அம்மா அப்படி ஏதாவது ஏறுக் குமாருய் செய்து விடுவாளோ என்ற பயம்.
‘ஆரையம்மா பாத்துக் கொண்டு நிக்கிருய்?"
"நான் ஆரைப் பாக்கிறது?. கொய்யாவைத்தான் அனுப்பிப் போட்டு நிக்கிறன் மோனை."
'இப்ப இதிலை யோசிச்சுக் கொண்டு நின்று என்ன செய்யிறது?. எங்களைப் படைச்ச கடவுள் ஒரு வழி யையும் காட்டாமல் விடப் போருரே. வாணை உள் ளுக்குப் போவம்!”
தம்பிமார் பாடசாலைக்குப் போக ஆயத்தமான பொழுது கமலா தாயிடம் சொன்னுள்.
“வீட்டிலை இருக்கிற நாங்கள் சும்மா இருக்கலாம். பள்ளிக்குப் போறபெடியள் என்னெண்டணை பசி கிடக்கேலும்?"
அம்மாதான் என்ன செய்வாள்?
“எடேய், ராசா சின்னத்தம்பி கடையிலை ஒடிப் போய் ரெண்டு ருத்தல் பாண் கேட்டுப் பார்ப்பு1. பின்னேரம் ஐயா வந்தவுடனை காசு தரலாமெண்டு’
“எனக்குத் தெரியாது போ!. இவ்வளவு நாளும் வேண்டின காசு குடுக்கயில்லை. அவன் அங்கை ஆக் களுக்கு முன்னலை தாறுமாருய்ப் பேசினன்."
"என்ரை குஞ்செல்லே! போட்டுவாடி. பிறகு அப்புவவைக்குத்தானே பசிக்கும்?"
'பசி கிடந்து செத்தாலும் பறவாயில்லை. அவ னிட்டைப் போய் உந்தப் பேச்சுக் கேக்கமர்ட்டன்!"

Page 11
"இவன் உரிச்சுப் படைச்சுத் தேப்பன்தான். சரியான ரோசக்காறன்’ என ஒருவித பெருமையுணர் வோடு சொன்னுள் அம்மா. அவனுக்கு அடுத்தவனைக் கூப்பிட்டு அனுப்பினுள் கமலா, யார் சொல்லா விட் டாலும் போய்க் கேட்கின்ற நிலையிற்தான் அவன் இருந்தான்.
ஆனல் போனவன் தோல்வியோடு திரும்பி வந்
தான்.
"நான் எவ்வளவோ கேட்டுப் பாத்தன். அவன் தரேலாதெண்டிட்டான். குடுக்க வேண்டிய கடனைக் குடுத்துப்போட்டு பிறகு வரட்டாம். ஆக்களுக்கு முன்னுலை பெரிய லோ எல்லாம் பேசினுன் . இனி உன்ரை கடைப்பக்கம் வரமாட்டன் எண்டு சொல்லிப் போட்டுத்தான் வந்தனன். அவன் உணர்ச்சி வசப் பட்டுப் போயிருந்தான். "பர்வம், பிள்ளை பசிக் கொடு மையிலை அவனுேடை சண்டை பிடிச்சிருக்குப்போலே" என அம்மா நினைத்துக் கொண்டாள்.
"உதுக்குத்தான் அப்பவே சொன்னனன். போக வேண்டாமென்று!" என வெடித்துக் கொண்டு புறப்
பட்டுப் போனுன் மூத்தமகன்.
“போட்டு வாங்கோடி ராசா. மத்தியானம்
ஐயா ஏதேன் கொண்டு வந்திடுவார். சமைச்சு வைக்
கிறன்.”*
இனி விடிய எழுந்த நேரம்முதலே சிணுங்கிக் கொண்டிருக்கும் சின்னவனைச் சமாளித்தாக வேண்டும்.
---14-س
சந்தியில் இன்னும் சனநடமாட்டம் அதிகரிக்க வில்லை. சில கடைகளும் திறக்கப்படவில்லை, தேநீர்க் கடை முருகேசு மாத்திரம் கடையைத் திறந்து தண் ணிர் தெளித்து வாழைக் குலையை எடுத்து வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். வீட்டிலிருந்து
 

வெளியேறி வந்த ஆறுமுகம் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு நின்ருர், இதே சந்தியிற்தான் /* முன்னர் அவர் கார் வைத்து ஓடியவர். அதனுல் இவ்விடத்தில் உள்ளவர்கள், கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கம். பழைய ட்றைவர்மார் களில் இன்னும் இரண்டொருவர் கார் வைத்திருக்
I கிருர்கள். என்ருலும் உழைப்புக் குறைவுதானம்எப்பொழுதாவது இருந்துவிட்டுத்தான் ஒரு சவாரி கொத்தும்.
கடைதிறக்க வந்த சலூன்காரப் பெடியன் ஆறு முகத்தின் கோலத்தைக் கண்டு “என்னண்ணை இந்தப் பக்கம் மறந்து போச்சோ?' என்ருன் , கஷ்டப்பட்டு அவனுக்கு ஒரு சிரிப்பை வெளிப்படுத்திக் காட்டினர். "எங்கை தம்பி நேரம் கிடைக்குது?' ஆஞல் இப் பொழுது கொஞ்ச நாட்களாக அவர் எந்த நேரமும் இங்கு வந்து "சும்மா" நிற்கிருரே! பல நாட்களாகச் “சேவ் எடுக்கப்படாததால் முட்களாகக் குற்றிவளரு கிற மயிர்கள்! நாடியைச் சொறிந்தவாறு வீதியைவெறித் g5 ITT
பாடசாலைக்குப் போகின்ற சிறுவர் சிறுமியர்கள்அவருக்கு அந்தப் பாக்கியம் கூடக்கிடைக்கவில்லை. பதினேழு வயசாயிருக்கும் பொழுதே ( அவரோடு சேர்ந்த இரண்டு சகோதரிகளையும் இரு சகோதரர்களை யும் தாயையும் அவரது பொறுப்பில் விட்டு தந்தை காலமாகினர். ஆறுமுகம் படிப்பை இடைநிறுத்தி உழைப்பாளியாக மாற வேண்டியிருந்தது. கதிரவேலு வின் லொறியில் கிளீனராகச் சேர்ந்து, கொழும் டிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஒடியகாலங்களில் சாரத்தியம் பழகி, லொறிச் சாரதியாக இரவு பகல் பாராது உழைத்து உழைத்து ஓரளவு கடனும்பட்டு ஒரு காருக்குச் சொந்தக்காரணுகி சகோதரிகளை ஒவ் வொருத்தனின் கையில் ஒப்படைத்து, தம்பிமாரைப் படிப்பித்து ஆளாக்கி - அப்பொழுதெல்லாம் அம்மா சொல்லுவாள்.
'தம்பி. இந்தக் குடும்பத்துக்காக இந்த வயசி லையே. உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போருய். கட வுள் உன்னைக் கைவிடமாட்டார். பின்னடிக்கு நல் லாய் இருப்பாய்!" ஒர் ஆசிர்வாதம்போல தனது மன
-- 15-سي

Page 12
-س-16 --
ஆறுதலுக்காகவோ அல்லது அவரது மன ஆறுதலுக் கிாகவோதான் அப்படிச் சொன் னு ள | பதும் தெரியாது. அந்த அம்மாவே அவரைக் கைவிட்டு இறைவனடி சேர்ந்தபின்னர் இறைவனுக்கு அவர்பால் என்ன கவலை?
இப்பொழுது குடும்ப சமேதராகி கொழும்பு வாழ்க்கை நடத்துகிற தம்பிமார்களும் வருவது குறைவு அரசாங்க உத்தியோககாறர் - பல தொல்லைகள் இருக்கும். ஒரு நல்லநாள் பெருநாளில் அக்கா, தங்கை தம்பிமார் எல்லோரும் வந்து நிற்பார்கள் எவ்வளவு கலகலப்பாயிருக்கும்! அந்த நாட்களின் இனிமையை நினைத்து ஏங்கினர். எவ்வளவு சுமையென்ருலும் மனதை அழுத்தாத சுகம் இருந்தது. இப்பொழுது, 'அண்ணை பாவம்1. கஷ்டப்பட்டுப் போச்சுது. நெடுகலும் நாங்கள் போய்த் தொல்லை குடுக்கக் கூடாது!" என்ற பெரிய மனசு அவர்களுக்கு
கார்க்காரச் சண்முகம் அவரிடம் கார் பழகியவன் ரெளனுக்குப் போகிருன் போலிருக்கிறது. அவரைக் கண்டதும் ஸிலோ பண்ணி வெளியே தலையை நீட்டி என்னண்ணை ரெளனுக்கோ?' என்று கேட்டான். குருவுக்குக் கொடுக்கிற மரியாதை! அவர் " இல்லை " எனச் சொல்லிவிட்டு நின்றர். சொந்தமாக இருந்த காரையும் தனது கடைசித் தங்கையின் திருமணத்தின் போது விற்றது எவ்வளவு மடைத்தனம் என எண்ணி ணுT.
தன்னிடம் இப்பொழுது எதுவுமே இல்லை எனவும் நினைத்துக் கொண்டார். இப்படி ஒரு கஷ்டம் அவருக்கு ஒருநாளும் வந்ததில்லை. இல்லையென்று சொல்லாமல் எத்தனை பேருக்கு அள்ளிக் கொடுத்த கை வரண்டு
போய்விட்டது. எப்பொழுதுமே அவர் தனக்காக எதையும் சேர்த்தவரல்ல. நிறைய இல்லாமலே உழைப்பதையெல்லாம் கொடுத்தவர் - அவரிடம்
கொடுப்பதற்கு ஒன்றுமில்லையென்றதும் விலகிவிட்ட
உறவுகள்!
விருத்தெரிந்த காலம் முதலே தனக்கு வாழ்க்கை ஒரு சவாலாக அமைந்துவிட்டதை நினைத்துப் பார்த் தரர். ஒரு போராளியாகவே வாழ்க்கையை எதிர்

-17
கொண்ட நெஞ்சும் வேறு யாருக்கு வரும் எனத் தன்னை எண்ணிப் பெருமையும் அடைந்தார். இப் பொழுது சோர்ந்துபோய் விட்டேன அல்லது தோல் வியா எனப் பயம் கொண்டு, அடுத்த கணமே, இது தோல்வியல்ல தற்காலிகமான சிறு தடங்கலே என மனதைத் தேற்றிக் கொண்டார்.
வீதியில் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. வாக னங்கள், சைக்கிள்காரர், சம்பாதிக்கப் போகின்ற அலுவலர்கள் ஆசிரியர்கள் இன்னும் கூட்டம் கூட்ட மாகப் போகிற பாடசாலைப் பிள்ளைகள்- "கடவுளே! பிள்ளையஸ் சாப்பிடாமற்தான் போகுதோ என்னவோ?
தான் இப்பொழுது இறைவனைப் பற்றியெல்லாம் நினைக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது அவருக்கு " அதிசயத்தை அளித்தது. நண்பர்களோடு சேர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து திரிந்த நாட் " கள்! அந்த இளமைக் காலங்கள்- கோபால், மணி, சுந்தரம், முத்துராசா.
கோபாலும் மணியும் கrர் சாரதிகள். கோபால் சொந்தமாகக் கார் வைத்திருந்தான். மணி சம்பளத் துக்கு ஓடியவன். சுந்தரம் தேநீர் கடையில் நின்றவன் நன்ருக ரீ போடுவான். நல்ல பாட்டுக்காரன் (என்று ஒரு நினைவு) எல்லோருமாகச் சேர்ந்து சினிமா செக் கன்ட் ஷோவிற்குப் போவார்கள். அதற்குத்தான் நேரம் ஒத்துவரும். அடுத்தநாள் சுந்தரம் பாடிக்காட் டுவான். ஆறுமுகம் ‘சபாஷ்" போடுவார் அது ஏளன மா அல்லது புகழ்ச்சியா என்று புரியாமல் தன்னை மறந்து பாடுவான் அவன். முத்துராசா விழுந்து விழுந்து சிரிப்பான்.
முத்துராசாவிற்கு அப்பொழுது ஒரு முயற்சியும் இல்லை. வறிய குடும்பத்துப் பெடியன். நோய்க்காரத் தந்தை. அன்ருடம் சாப்பாட்டுக்கே இல்லாத குறை பாடு அவனை அவர்களோடு சேர்த்து வைத்தது. அவ னென்ருல் அவர்களது புண்ணியத்தில் ஏதாவது போட்டுக் கொள்வான். வீட்டிலே பட்டினிதான்ஆறுமுகத்திற்கு ஒரு "ஐடியா தோன்றியது.
3 . .

Page 13
--1883 س
அதன்படி, ஒரு சுபநாளில் யாழ்ப்பாண நகரத்தில் முத்துராசாவிற்கு சொந்தமாக ஒரு "ரீ றுரம்' திறக் கப்பட்டது. பணமாகவும் வேறு வகையிலும் எல்லா உதவிகளையும் நண்பர்களின் ஒத்தாசையோடு ஆறுமுகம் செய்து வைத்தார். இன்றைக்கு அது ஒரு "ரீ றுாம்' அல்ல! தங்குமிட வசதிகள், அறுசுவை உணவுகள்
வழங்கும் பெரிய ஹோட்டலாக வளர்ச்சியடைந்திருக்
கிறது.
மின்னலைப் போல ஒர் உணர்வு தட்டியது. முத்து ராசாவிடம் சென்ருல் என்ன?
அந்த நினைவு வந்ததுமே பெரிய சந்தோஷமடைந்
தவராய் நடக்கத் தொடங்கினர். பிரச்சனைகளெல்லாம் தீர்ந்துவிட்டது போல மனசு பறந்தது. புதிய உற்சா கம் பிறந்துவிட்டது. அவர் ஒடியே போயிருப்பார். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நடக்க வேண்டியிருந்தது.
“என்ரை கெட்டகாலத்துக்கு. முத்துராசா இருக் கிருனே. இல்லையோ தெரியாது. கடவுளே அவன் இருக்க வேணும்!" என மனது பிரrர்த்தனை செய்தது.
ஹோட்டல் வாசலில் முத்துராசாவின் கார் நின் றது- அப்பாடா! ஆள் இருக்கிருன்! வாசல் வரை சென்று சற்றுப் பின்வாங்கி நின்ருர் ஆறுமுகம். எந்த
முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது? எப்பவுமே
கைநீட்டி அறியாத சுபாவம்'
வெறும் கஞ்சித்தண்ணிய்ோடு கிடக்கின்ற குழந் தைகளின் நினைவு குபிரென்று அவரை உந்தித் தள் ளியது.
காசு மேசையில் முத்துராசா ராசாவென இருந் தான். (மன்னிக்கவும். இருந்தார்) ஒருமையிலா பன் மையிலா சம்பாஷிக்கலாம் என்ற சங்கடம் ஏற்பட் டது. முன்பென்ருல் ஒருமை- அவன் தனிமையாக இருந்தான். இப்பொழுது பொருள் பண்டம் சொத்து எனப் பெருகிப் பன்மையாக இருக்கிருர்,
வியர்க்க விறுவிறுக்க வந்து நிற்கிற ஆறுமுகத் தைக் கண்டு முத்துராசாவின் முகத்தில் மலர்ச்சி ஏற்

--19-س۔
பட்டது. அல்லது. அந்த முகத்தில் இயற்கையாக உள்ள மலர்ச்சியோ தெரியாது.
'என்ன ஆறுமுகம் இந்தப் பக்கம்?’ 'ஒன்றுமில்லை. சும்மாதான்."
உணவருந்திவிட்டு வெளியேறுகிற சிலர் பணம் செலுத்துவதற்காக இவர் ஒதுங்கி நின்ருர், பிறகு கேட்டார்.
"ஒரு மு க் கி ய மா ன அலுவலாத்தான். வந்தனன். கடைசியாய் ஓடின இடத்தாலே. நிண்டும் ஒரு மாதத்துக்கு மேலையாகுது. வேறை இடமும் கிடைச்சபாடில்லை. கையிலை மடியிலை இருந்ததுகளும் க ரைஞ்சுபோச்சு. வீட்டிலையெண்டால் பெரிய கஷ் டம். ஆரிட்டையும் கைநீட்டிப் போகவும் விருப்ப மில்லை. ஒண்டுக்கும் வழியில்லாமல்தான் இஞ்சை வந்தனுன்...”*
முத்துராசாவின் முகம் இதைக்கேட்டு இருட்சி அடைந்தது. கவலையோ? ஆறுமுகமே தொடர்ந்து பேசினுர்.
“..ஒரு நூறு ரூபாயெண்டாலும் தந்தால் பெரிய உதவியாயிருக்கும்!”
முத்துராசா சமாதானமாகச் சிரித்தார்.
'இது தானே?. நீ முதல்லே உள்ளுக்குப் போய் ஒரு ரீ குடிச்சிட்டு வாவன். களைச்சுப்போய் நிக்கி ருய்." என்றவாறு உட்புறம் திரும்பி ஒரு ‘ரீ க்கு ஒடர் கொடுத்தார்.
ஆறுமுகத்தின் கண்கள் பனித்தன. அது உதவி என்று கேட்டு வந்தபொழுது மணிசத் தனத்தோடு தன்னைக் கெளரவிக்கின்ற முத்துராசாவின் பெருந்தன் மையை நினைத்தா அல்லது பெண்சாதி பிள்ளைகள் வயிறு குளிர இன்றைக்குச் சாப்பிடப் போகிருரர்கள் என்ற சந்தோஷத்திலா என்று புரியவில்லை.
தேநீர்ைக் குடித்ததும் அரைவாசி உயிர் வந்தது போலிருந்தது.

Page 14
-- 269 سس
முத்துராசாவிற்கு முன்ல்ை போய் வலிந்து சிரிப் பை வெளிப்படுத்தினுர் ஆறுமுகம்.
"என்ன ஆறுமுகம். நிலேமை விளங்காத மாதி ரிக் கதைக்கிருய்?. நூறு ரூபாய்க்கு. இப்ப நினைச் சவுடனே நான் எங்கை போறது. நீ வந்து நின்ற கோலத்தைப் பாத்திட்டுத்தான். என்னென்று சொல் லுறதெண்டு தெரியாமல் ரீயைக் குடிச்சிட்டு வா எண் டனுன்.""
அவர் ஆளாக்கிவிட்ட பழைய முத்துராசாவா பேசுகிருன்? "இவனிட்டைப் போய்த் தேத்தண்ணியை வேண்டிக் குடிச்சனே' என்ற தாழ்வுணர்வு மனதை அழுத்திய பொழுது, மனைவி கொடுத்துவிட்ட ஒரு ரூபாய் நினைவில் வந்து தலையை நிமித்தியது.
"இந்தா. தேத்தண்ணிக் காசை எடு!" என்று காசைக் கொடுத்தார். காலையில் இரக்கத்தோடு வழி யனுப்பிவைத்த அந்தப் புண்ணியவதியின் தோற்றம் அவளது துனே நெஞ்சிற் தைரியத்தைக் கொடுத் 0.01.
சிரித்திரன் தை 1980

-سسس
·
务 sV

Page 15
சுகங்களும், சுமைகளும்
- 22 -
தலைக்கு மேல்ே சுழற்சி.
தயவு தாட்சண்யமில்லாமல் கொழுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்தியானம் சாப் பாட்டுக்காச "முருகன் கபேக்"குச் சென்று வந்ததால் ஏற்பட்ட உடலின் அயர்ச்சியைப் போக்குகின்ற காற் றின் சுகமான விசுறல்- மின்விசிறியின் சிரமதானம். கதிரவேலுவின் மனதில் யாருக்கென்று புரியாத நன்றி யுணர்வும் அற்பப் பெருமிதமும் ஏற்பட்டது; "கெளவன்மேன்ட் சேவன்முய் இருக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யிது. பெரிய மனித தோர ணையுடன் கால்களை நீட்டி நிமிர்ந்த கதிரையின் சார் மனையில் தலையைப் பதித்து மின் விசிறியை சொகு சாக அனுபவித்தான். அயர்ச்சியைப் போக்குவதற்காக காற்றை அதிகமாக உள்ளிளுத்த பொழுது, அது பெருமூச்சாக வெளிப்பட்டது.
"அரசாங்க உத்தியோகத்தணுய் இருந்து கண்ட பலன் இதுதான் - மீண்டும் சலிப்படைகின்ற மனது . இது அடிக்கடி மனதை அரிக்கின்ற வியாதிதானென்ரு லும், அதிகாலையில் கிடைத்த மிஸிஸ் அருள்நாயகத் இன் "முளுவியளத்திற்குப் பிறகு சற்றுக் கடுமைப்ப டுத்தி விட்டது.
மாதா மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் அறை வாடகையான ரூபா நாற்பத்தைந்தை மனுசிக்குப் பசியாற வேண்டும். அது தவறினல் மனுசியின் கண்ணிற் படவே தேவையில்லை. கண்களிற் படாமல் கழன்று விடவேண்டும், என்று இரகசியமான திட்டத்துடன் அதிகாலையிலேயே எழுந்தான் கதிரவேலு. அவசர அவ சரமாக கருமங்களை முடித்துக் கொண்டு வெளியேறிய பொழுதுதான் திட்டமெல்லாம் தவிடுபொடியாகி விட் டதை உணர முடிந்தது.

-سه 23---
வாசற் கதவருகில் மகராசி விளக்குமாறும் கையுமாகக்" காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவைக் காணுதவன் போல கதிரவேலு நழு விக் கொண்டிருந்த பொழுது.
"மிஸ்டர் கதிரவேலு" - மிஸிஸ் அருள்நாயகத் தின் அழைப்புத்தான். அந்தக் குரலுக்கு எவ்வளவு சக்தி மந்திரத்தாற் கட்டுண்டவை போல அவனது கால்கள் சட்டென நின்றன.
'இன்றைக்கு என்ன திகதி?’ கேட்கப்பட்ட தொ6ணி அதட்டல் நிறைந்திருந்ததாயிருந்தது. பதில் தெரியாத ஒரு மொக்கு மாணவனைப் போல இவன் மெளனம் சாதித்தான். 'பதினெட்டாம் திகதியாச் சுது. இன்னும் காசு தரவில்லை?” எசமானியின் குரலை யும் அவளுடைய சன்னதமான பார்வையையும் கண்டு
பக்கத்தில் நின்ற சடைநாய் (செல்லக் குஞ்சு ) "வாள்'
"வாள்? எனக் கத்தல் போட்டு தனது செஞ்சோற் றுக் கடனைச் செலுத்தத் தொடங்கியது.
கதிரவேலு தனது சமாதானப் பேச்சு வார்த் தையை ஆரம்பித்தான்.
'எனக்கு எந்த நியாயங்களும் தேவையில்லை." அடிக்காத குறையாக, அம்மா அடித்துக் கூறினுள். கடமைப்பட்டவன் போல இவன் கேட்டுக் கொண்டு
நின்ருன் O
"...நீங்களெல்லாம் வெக்கமில்லாமல் லோங்ஸ் சைப் போட்டுக் கொண்டு திரியிறீங்களே?'. அதற்கு மேல் இவனுக்கு எதுவுமே கேட்கவில்லை.
"மிஸ்டர் கதிரவேலு!. இன்றைக்கு ஒரு முடிவு தெரியவேணும். எத்தனையோ பேர் அறைகேட்டு வருகினம். நர்ன் உங்களுக்குப் புண்ணியத்துக்கு இடம் தரேலாது'
இவன் சோர்வுடன் நடக்கத் தொடங்கிஞன்.

Page 16
-24
"இன்டைக்கு என்ன பாடுபட்டாவது ஆரிட்டை யேன் வேண்டிக்கொண்டு வந்து மனிசியின்ரை மூஞ் சையிலை எறிஞ்சு போட்டுத்தான் மற்றவேலை பார்க் கிறது.
“எத்தினை வருசமாய் இருக்கிறன். நாலு வரு சத்துக்கு மேலையிருக்கும். இன்னும் இவளுக்கு என் னிலை நம்பிக்கையில்லையே. ஒரு மனேஸ் தெரியாத சனங்கள். மனிசன்ரை கஷ்டநஷ்டம் விளங்காத சனி யன்கள். மனிசனைத் தேவையில்லை. காசு தான் முக்கியம்!
"பெரிய திறமான அறையே 1. நானெண்டபடி யால் இருக்கிறன்!. ரெண்டு கட்டில் போட இடம் காணுது. அதுக்குள்ளை ரேண்டு பேரை இருத்தி ஆளுக்கு அம்பது ரூபா கறக்கிருள். வாடைக்கு விட் டிருக்கிற ஐஞ்சு அறையிலையும் நாங்கள் எடுக்கிற ஒரு மாதச் சம்பளம் கிடைச்சிடும்.
“முகத்திலை அடிச்சமாதிரி இந்த அறையை விட் டிட்டுப் போயிடலாம். விட்டிட்டும் எங்கை போறது? வெள்ளவத்தையிலே ஒரு அறை எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட காரியமே.
“சீ... என்ன கேள்வி கேட்டாள்! இந்த பெல் பொட்டம், சப்பாத்து எல்லாம் சும்மா பேருக்குத் தானே. உண்மையிலேயே இதையெல்லாம் கழட்டி எறிஞ்சு போட்டுத் தான் நடக்க வேணும். கிளின் சூட். எம்ரி பொக்கற்!"
-மன வெதுவெதுப்புடன் காலைச் சாப்பாட்டை யும் மறந்து அலுவலகத்தையடைந்து தனது கதிரை யில் தஞ்சமடைந்தான். மாலைநாலுமணி வரைக்கும் தான் அந்தக் கதிரையும் தஞ்சமளிக்கும். அதற்குப் பின்னர் எந்த முகத்துடன் அறைக்குப் போவது?
ஒவ்வொரு மாதமும் 'சலறி அட்வான்ஸ்’ எடுத் தவுடன் வர்டைக்காசைக் கொடுத்து விடுவது வழக்கம் இம்முறை சம்பள முற்பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குப் போய்வந்த குற்றத்துக்காக மனிசத் தன் மையில்லாத ஒருத்திக்கு முன்னல் தலையைக் குனிந்து கொண்டு நிற்க வேண்டியேற்பட்டுவிட்டது.
th
 

لیبر
s
ノ
ܛ
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு சுபநாளில் கதிரவேலுவுக்குத் திருமணம் நடந்தேறியது. பெரி யோர்களால் நிட்சயிக்கப்பட்ட திருமணம் கொழும் பிலே உத்தியோககrறஞய் இருக்கின்ற மாப்பிளைக்கு சீதனங்கள், சீர்வரிசை கொண்டாட்டங்கள் எல்லாம் வெகு தடல் புடல் தான் இதற்கெல்லாம் தகுதியு டையவன்தானு என நினைக்கத் தோன்றுகின்ற அள விக்கு புது மாப்பிளைக்கு ஒரு ராசாவைப் போல வர வேற்பு உபசாரங்கள், எக்கச்சக்கம்!
"சுவீப் அடிச்ச மாதிரித்தான். டொம்பிளையும் நல்ல வடிவு. சீதனமும் பிழையில்லை’ என கதிரவேலு மகிழ்ச்சிக் கடலில் மூழ்க ஆரம்பித்தான். ஆனல் தகப்பனுக்குக் கிடைத்த 'டொனேசன் அவரது கடன் தொல்லைகளைப் போக்குகின்ற பணியில் கரைந்தது. இவனுடைய பெயரில் பொருள் பண்டமாகவும் காசா கவும் இருந்த தொகையில் கைவைக்க முடியாது. கொழும்பிலே கொளுத்த சம்பளம் வாங்குகின்ற βρOE, மாப்பிள்ளை (அப்படித்தான் பெண் வீட்டாருக்குச் சொல்லப்பட்டது!) சுயகெளரவத்தையும் மறந்து சீத னப் பணத்தைத் தொடலாமா? அதுதான் கைக்கெட் டவில்லை, அழகான மனைவியையாவது கொழும்புக்கு அழைத்து வரலாமென்மூல். கொழும்பிலே வீடு எடுப் பது குதிரைக் கொம்பு தேடுவதுபோல. அப்படியே ஒரு வீடு கிடைத்தாலும் அது முழு உழைப்பையும் விழுங்குகிற வாடகையைக் கேட்கிறது.
சுட்டிய மனைவியை ஊரிலே விட்டு இங்கு எத்தனை நாட்களுக்குக் கடைச்சாப்பாட்டை நம்பிக் கொண்டி ருக்க முடியும்? அதனுல் ஊருக்குப் போக வேண்டு மென்ற பொல்லாத ஆசை இந்தப் புது மாப்பிளேக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இளம் மனைவியைப் பார்க்க வென்று வெளிக்கிட்ட பின்னர் வெறுங்கையுடன் போக மனம் வருமா?
V சம்பள முற்பணத்தை எடுத்துக் கொண்டு (வீட் - டுச் சொந்தக்காரியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு) மனைவியை மகிழ்விக்கின்ற பண்டங்களுடன் "றெயின் எடுத்தாயிற்று (மனைவியை மகிழ்விக்கின்ற பொருட்களில் மாமா மாமிக்கும் ஏதாவது வேண்டி யாக வேண்டும்! “மருமோன் எங்கள்ளே நல்ல பட்சம்!"
-25- 4.

Page 17
-26
என அவர்கள் சொல்வதை அவள் வந்து ,அவருடைய" காதுகளில் போடுவதைக் காது குளிரக் கேட்கலாம். பாவம் அம்மா, பெற்றுப் பேர்ட்டு ஊனுறக்கமின்றி வளர்த்து ஆளாக்கிவிட்ட குற்றத்துக்காக அவள் மனம் மகிழ என்ன செய்திருக்கிருன்? அன்றைக்கும் இல்லை, இன்றைக்கும் இல்லை)
ஊருக்கு வந்தாலே ஒரு புது உலகம் போல எல்லாப் பிரச்சனைகளுமே மறந்து விடுகிறது. விருந்து கொண்டாட்டங்கள் , சினிமா இத்தியாதி கைகளின் வரட்சியை மனைவிக்குக் கூடக் காட்ட விரும்பாமல் (பெரிய இடத்துச் சம்பந்தம்) ஊரிலே பிஸ்னஸ் " செய்கின்ற நண்பர்களிடம் “ருேலிங்' அனுமதி பெற் றுக் கொண்டு வந்த "லீவு நாட்கள் முடிவடைந்ததும் அலுவலகத்துக்கு ஒரு "சிக்-பெக் லீவ்-கதிரவேலு
இப்படியாக ஒரு சொர்க்கலேர்க சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு பதினேழாம் திகதி இரவு பூனை யைப் போல வந்து அறையில் நுழைந்தாயிற்று!
*வாடகைக் காசைக் குடுக்க வக்கில்லை. மனிசி யிட்டைப் போட்டாரோ. வரட்டுக்கும்!” என வழி மேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டு நின்ற அருள் நர்யகம் (மிஸிஸ்) அசுகை அறிந்தவுடன் அடுத்தநாள் அதிகாலையிலேயே எழுந்து வந்து கையும் களவுமாகப் பிடிப்பதற்கு வாசற்கதவருகில் வந்து நின்ற சங்கதி
இந்தப் பூனைக்குத் தெரியாது. அப்பாவியைப் போல
வந்து அம்மாவின் புலிப் பாய்ச்சலில் மாட்டிக் கொண் ه il -ا
அலுவலகத்துக்கு சக ஊழியர்கள் வந்து கொண் டிருந்தார்கள், ஒடுமீன் ஓடி உறுமின் வரும் வரைக் கும் இவன் வாடியிருந்தான். மத்தியானம் வரைக்கும் எந்த மீனும் அகப்படவில்லை. இவனிடம் உச்சி விளை யாடிய மீன்கள், எப்படி அகப்படும்?
கூடவேலை செய்கின்ற பரமலிங்கம் மதியச் சரிப் பாட்டுக்குப் போய்விட்டு வருவதைக் கண்டதும் இவ ரிட்டைக் கேட்டுப் பார்த்தாலென்ன?’ என்ற எண்ணம் கதிரையில் வந்து அமர்ந்து விரலிடுக்குகளில் பொடியை
எடுத்து, மூக்கில் வைத்து பெரிய ஓசையுடன் உறுஞ்சி

ངའི་
علمی
- 27 -
அதன் தொடர்ச்சியாக வெளிப்படுகின்ற தும்மல்களை கைலேஞ்சியினல் தடுத்தாட் கொள்கிற தனது வழக் கமான சடங்கை ஆரம்பித்தார், பரமலிங்கம்.
'மனுசன். வைச்சிருந்தால் தரும். மறுப்புச் சொல்லாது. முந்தி ஒருநாளும் கேக்கயில்லைத்தர்னே" சிலவேளை இல்லையெண்டிட்டால். எவ்வளவு பரிசு கேடு!. அங்கை போய் அவளுக்கு முன்னலை தலை குனிஞ்சுகொண்டு நிக்கிறதைவிட இது பரவாயில்லை. ஆக்களும் இல்லைத்தானே. கேட்டுப்பாப்பம்.
“என்ன தம்பி. கதிரவேலு?. நல்லாய் யோசிக் கிருய். மனிசியைப் பிரிஞ்சு வந்த கவலையோ?" அவ இனுடைய மனதைச் சீண்டி விட்டதாக நினைத்துக் கொண்டு அட்டகாசமாகச் சிரித்தார் பரமலிங்கத்தார். இ வன் பொடி வைத்தான்,
“இல்லை அண்ணை. உங்களுக்குச் சொன்னுலென்ன ? சிநேகிதப் பொடியனுெருத்தன் இப்ப சாப்பாட்டுக் கடையிலே கண்டாப்போலை கேட்டான். ஏதோ அவ சர தேவையாம். அம்பது ரூபா வேணுமாம். நானும் ஊருக்குப் போனுப்போலை கையிலை கிடந்த காசெல்லாம் சிலவழிச்சுப் போட்டு வந்திட்டன். இருந்தாப் போலை அவசரத்துக்கு பாங்கிலை இருந்து எடுக்கேலுமே?. பின்னேரம் எப்பிடியும் தாறனெண்டு சொல்லிப் போட்டு வந்திட்டன். உங்களிட்டை
இருந்தால்."
பரமலிங்கத்தார் மீண்டும் தன் உடல் குலுங்கச் சிரித்தார்.
“என்ன தம்பி. பகிடி விடுறியே?. இருந்தால் உனக்கு இல்லையெண்டு சொல்லுவேனே." தொடர்ந் தும் அவர் சொன்ன நியூாயங்கள் இவனுக்குக் கேட் கவில்லை.
*சீ1 என்ன மானம் கெட்ட சீவியம். போயும் போயும் இந்த மனிசனிட்டைக் கேட்டேனே.”
மதிய இடைவேளை நேரம் முடிந்து விட்டது. மீண்டும் அலுவல்கள் ஆரம்பித்தன. கதிரவேலும் சில விபரத்தாள்களை எடுத்து மேசைமேல் வைத்தான்.

Page 18
--28 --س۔
கடமைக்காக, விசிறுகின்ற காற்றுடன் பறந்துவிடத் துடிக்கின்ற தாள்கள் சுலபமான வாழ்க்கையை விரும் பும் மனிதனின் மனநிலையை உணர்த்தின. தாள்கள் பறந்து விடாதவாறு ஒரு பாரத்தை எடுத்து வைத் தான்.காற்றேடு சேர்ந்து தாள்கள் படபடத்தாலும், அவற்றின் சக்திக்கு மீறிய சுமையைமீற முடியவில்லை.
பிற்பகல் இரண்டு மணியைப் போல பீயோன் பொடியன் புஞ்சிபண்டா வந்து, கதிரவேலுவை யாரோ தேடி வந்திருப்பதாகக் கூறினுன், "யாராக இருக்கும்?" என்ற யோசனையுடன் எழுந்து நடந்தபொழுது நெஞ்சில் *ரைப்றைட்டரின் தட்டல்கள்.
'எட பாஸ்கரனே!. என்ன இருந்தாப்போலே வந்திருக்கிருய்?’ சம்பிரதாயத்துக்காக முகத்தில் ஒரு சந்தோஷ உணர்வைக் காட்டியாயிற்று. இனி இருந்தாப் போலே வந்து நிற்கிருன். என்னவோ. ஏதோ "நாளைக்கு ஒரு இன்ரவியூ. நேற்றுப் பின்னேரம் போல தான் தந்தி கிடைச்சுது. அதுதான் வந்தனுன் !" பாஸ்கரன் மகிழ்ச்சியோடு சொன்னன்.கொழும்பு உத்தி யோககாறனுகப் போகின்ற உற்சாகம்.
வந்திருப்பவன் கதிரவேலு மணம் கொண்ட மனைவியின் சகோதரன். கனம்பண்ணி அனுப்பவேண்டிய கடமை."கையிலை ஒரு சதத்துக்கும் வழியில்லாமல் நிக் கிறன்.இவனும் வந்து நிக்கிருண். இப்ப எங்கை கொள் ளைக்குப் போறது? மனதை அரிக்கின்ற வெட்கம் கலந்த பய உணர்வு.
பாஸ்கரன் எடுப்பான உடையுடன் மிடுக்காக நின்முன், “பசை"யுள்ள இடத்துப் பிள்ளை. வெறும் சுை யாக வந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கை சற்று தெம் பளித்தது.
* அத்தான். அக்கா உங்களுக்கு ஏதோ சாப்பாடு தந்து விட்டவ" அத்தானுடைய மாருட்டத்தை பாஸ் கரன் கவனித்து விட்டானே என்னவோ, அவரை மகிழ் விக்கனண்ணிப்போலும் அக்கா தந்தனுப்பிய"ஸ்பெசலை? நினைவூட்டிஞன், சகதர்மினி நினைவுக்கு வந்ததும் கதிர வேலுவுக்கு ஒரு தலைகால் புரியாத சந்தோஷம், "பாவம்
 
 
 

سیار
--29سے
எவ்வளவு கரிசனை யோடை செய்து அனுப்பி விட்டு
இருக்கிருள்."
"சரி பாஸ்கரன். இதிலே இருந்து கொள்.நான்
ஷோட் லீவ் போட்டிட்டு வாறன்."
கதிர வேலுவுக்கு இந்தநேரம் புதுயோசனை ஒன்று தோன்றியது. பாஸ்கரன் சிலவுக்குக் காசு கொண்டு வந் இருப்பான். அவனிட்டை வேண்டி வாடகைக் காசைக் குடுத்திட்டு.நாளைக்கு எப்பிடியாவது ஆரிட்டையேன் மாறி இவனுக்குக் கொடுக்கலாம். அடுத்த கணமே,"சீ அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?" என்ற கெளரவப் போராட்டம்.
அலுவலக ‘ரைப்பிஸ்ட் மிஸ் மென்டிஸ் இவனைக் கண்டதும் புன்முறுவல் பூத்தாள். அவளிடம் எப்பொழு துமே இதற்குக் குறைவிருக்காது- புன்னகை மலர்த்துவ தற்குத் தவருத பண்பாடு. இப்பொழுது அவளது சிரிப்பைக்கண்டதும் எரிச்சல் ஏற்பட்டது. பின்னர்தான் "இவளிட்டையும் ஒருக்கால் கேட்டுப்பார்த்தாலென்ன?*
என்ற எண்ணம் தோன்றியதும் வலிந்து சிரித்துக் கொண்டான்.
* மிஸ்". "அவள்பார்வையைக் கேள்வியாக்கினுள்
இவன் பல்லவியைத் தொடங்கினன், இப்பொழுது பல்லவியில் சிறிது மாற்றம் - ஊரிலிருந்து சடுதியாக மைத்துனன் வந்து நிற்பதால் உடனடியாககாசு தேவை படுகிறதென்றும் இந்த நேரத்தில் பாங்கில் காசு எடுக்க முடியாமலிருக்கின்றதென்றும்.ஐம்பது ரூபா தந்துவின பெரிய காரிய மென்றும் சாரப்படக் கூறினன்.
இவனுடைய சங்கடத்தை அனுதாபத்துடன்
உணர்ந்து கொண்ட மிஸ்.மென்டிஸ், சினேகிதி சுவர்ணு
விடம் சென்று கதைத்து ஐம்பது ரூபா பெற்று வந்து கொடுத்தாள்.
"மிஸ் என்னுல் உங்களுக்குத் தேவையில்லாத சிர மம்? இவன் அசடு வழிந்தான். அவளது புன்னகை, பரவாயில்லை என்றது"
*அப்பாடா! பெரியதொரு பாரம் தலையைவிட்டு இறங்கிய சுகம்.
' ';',

Page 19
-30
பாஸ்கரனை அழைத்துக் கொண்டு நேரடி யாக "எக்கவுன்ட் கடைக்குப் போனுன் கதிரவேலு. வந்தவ னிற்கு ஒரு ரீ யாவது வேண்டிக் கொடுக்க வேண்டும்.
தேநீரை அருந்திக் கொண்டிருந்த பொழுது கதிர வேலு சொன்ஞன், "பாஸ்கரன்!. பாய்க்கை இஞ்சை கடையிலை வைப்பம். பிறகு இரவைக்கு அறைக்குக் கொண்டு போகலாம்."
-அறைக்கு ‘விசிற்றேஸ் எவரையும் அழைத்து வரக்கூடா தென்பது மி ஸிஸ் அருள்நாயகத்தின் கடுமையான கட்டளை.
பாஸ்கரன் புரியாமல் கேட்டான், "ஏன் அத் தான். எங்கையாவது போக வேண்டியிருக்கோ?'
“இல்லை. றுரம் மேற்றிட்டைத்தான் திறப்பு இருக்குது. அவன் நிப்பானே தெரியாது. இல்லாட்டி அலைய வேண்டி வரும். இஞ்சை வைப்பம் பிறகு வந்து எடுக்கலாம் தானே?*
பயணப்பையுடன் அறைக்குச் செல்வது தங்குவ தற்கு யாரோ வருகிருர்கள் என்பதைச் சுலபமாகப் புரிய வைத்துவிடும். இரவில் வீட்டுக்காறர் உறங்கிய பின்னர் தந்திரமாகக் கொண்டு போகலாம் என்பது கதிரவேலுவின் திட்டம்.
பாஸ்கரனுக்கு 'சப் பென்று போய்விட்டது. அவனைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கியமான விஷயங்களுக்காக இப்பொழுது அறைக்குச் சென்ருக வேண்டும் ஒன்று அத்தானுக்கு அக்கா ஆசையோடு செய்து தந்துவிட்ட பலகாரத்தைச் சமர்ப்பித்து அவ ருடைய மகிழ்ச்சியில் பங்குகொண்டு நல்லபெயர் எடுக் கவேண்டும். அடுத்தது, புகையிரதப் பயணத்தால் உடல் வியர்த்துக் களைத்துவிட்டதால் நன்முக ஒரு குளிப்பு எடுக்க வேண்டும்.
* அதுக்கென்ன?. இது பெரிய பாரமே?.போய் பார்ப்பம். இல்லாட்டி திருப்பிக் கொண்டு வரலாம் Ꮿ5ᎢᏣ6Ꮝr?Ꮙ
t
N

一31一
'இல்லை .ஏன் கரைச்சலை. வைச்சிட்டுப் பிறகு போவம்” கதிர வேலு பரிதாபமாக மறுத்தான்.
*ஏனத்தான்?. போட்டு வருவம்.உங்கடைஅறை யையும் பார்க்கலாம் .நான் ஒருக்கர்ய்க் குளிக்கவும் வேணும்' பாஸ்கரனது விஷயம் புரியாத பிடிவாதம்.
அடுத்த குண்டு அவன், குளிக்க வேண்டுமாம். இனிச்சரணடைய வேண்டியதுதான்,
“இல்லை.பாஸ்கரன். அங்கைவிட்டுக்காறிசொல்லி இருக்கிருள். விசிற்றேஸ் ஒருத்தரையும் கூட்டி வரக் கூடாதெண்டு! இப்ப போனுல் விளங்கியிடும். பிறகு அவள் பத்திரகாளிதான் அதுதான். இரவைக்கு அவை யள் படுத்தாப்பிறகு போவம் எண்டஞன்.'"
பாஸ்கரனுக்கு கவலை பொங்கியது. அத்தானதுநிலை புரியாமல் வற்புறுத்தி விட்டதை யுணர்ந்து வேதனைப் பட்டான்.
"அப்ப சரி அத்தான்.இஞ்சை வைப்பம். *
இப்பொழுது கதிரவேலுவுக்குக் கவலையாயிருந்தது.
பயணக் களை ப்புடன் பாஸ்கரன் நிற்கிருன். அவனுக்கு
முகம் கழுவுவதற்காவது வசதி செய்து குடுக்கமுடியா விடில் தான் என்ன மனிசன் என நினைத்தர்ன்.
"பாஸ்கரன். அப்பிடியெண்டால் பாய்க்கை இஞ்சை வைச்சிட்டுப் போவம். சத்தமில்லாமல்
போய் முகத்தைக் கழுவியிட்டு வந்திடலாம்."
‘'வேண்டாம் அத்தான். போறது பிரச்சனை யெண்டால். பிறகு என்னத்துக்கு???
"பறவாயில்லை. பாய்க்கை வைச்சிட்டுத்தானே போறம். அவையஞக்கு விளங்காது."
வீட்டினுள் இருவரும் நுழைந்த பொழுது ஒரு புதிய முகமும் வருவதைக் கண்ட பியூட்டி (நாய்) "இங்கிலீசில் குரைத்துக் கொண்டு ஓடிவந்தது.
* *

Page 20
w வீட்டின் கோடிப்பக்கமாகச் சென்று அறைக்கத வைத் திறந்தான் கதிர்வேலு, உள்ளே சென்று கட் டிலைக்காட்டி பாஸ்கரனே அமர வைத்தான்.
“பாஸ்கரன்!. இருந்து கொள். முகம் கழுவத் தண்ணி எடுத்துக் கொண்டு வாறன்."
தனக்காக அத்தான் கஷ்டப்படுவது இவனுக்கு சம்மதமில்லை, 'ஏன்!. பாத்றுTமுக்கு போய்க் கழுவு வம் , '
"அது கொமன் பாத்றுாம். வீட்டுக்குள்ளாலே தான் போகவேணும். அவையள் கண்டால் வில்லங் கம். தண்ணியை இஞ்சை எடுத்துக் கொண்டு
'வாறன்.”*
இவனது தலை ஏதோ நியதிக்குட்பட்டது போல அசைந்து சம்மதித்தது.
குடிநீருக்காகப் பாவிக்கின்ற கூசாவை எடுத்துச் சென்று தண்ணிர் நிரப்பிக் கொண்டு வந்தான் கதிர வேலு, "தண்ணி எடுத்துத் தர வேறை ஒண்டும் இல்லை. நான் ஊத்துறன். கழுவு. "" எனறவாறே அறைக்கு வெளியே கூட்டிச் சென்றன். உடையை மாற்றுவதற்குக் கூட வசதியில்லாமற் போனது பாஸ் கரனுக்கு பெரிய மனக்குறை சேட்டைக் கழற்றி வைத் துவிட்டு தண்ணிரை ஏந்தி முகத்தைக் கழுவினுன் ,
“நாளைக்கு விடியப்புறத்தோடை ஒருத்தரும் எழும் பமுதல் எழும்பினுல் குளிக்கலாம். ' தனது விருந் தோம்பலில் உள்ள குறைபாட்டை உணர்ந்து கதிர வேலு சமாளிப்பாகக் கூறினுன் ,
பாஸ்கரன் சிரிப்பை உதிர்த்து அத்தானைச் சமா தானப்படுத்தினன். தனது தலைவிதியையா அல்லது அத்தானின் தலைவிதியையா எண்ணி நோ வது என்பது புரியவில்லை.
"கொழும்புச் சீவியமெண்டால் இப்பிடித்தான்.
எதிலையும் ஒரு சகிப்புத்தன்மை இருக்க வேணும்." என உபதேசித்தவாறே சீப்பையும் பவுடரையும் நீட்
டிஞன் கதிரவேலு.
|

የነX
○
அறையைவிட்டு வெளியேறி காலி வீதியில் வந்து ஏறும்வரை அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு திட்டமும் இல்லை.
"பாஸ்கரன். நீ எங்கையேன் போக வேண்டியி Kao j, (335 IT?’”
'இல்லை’ s
சற்றுநேர யோசனை. பின்னர்
"அப்ப இப்பிடியே கோல்பேஸ் வரையும் நடப் பம். பின்னேரம் தானே பொழுது போக்காயிருக் கும்." வெள்ளவத்தையிலிருந்து காலிமுகம் வரை நடந்து செல்வதென்பது கதிரவேலுவுக்கு இலகுவான காரியமல்ல, இருந்தும் நிலைமையைச் சமாளிக்க இதை விட்டால் வேறு வழியும் இல்லை.
இருவருமாக நடக்கத் தொடங்கினர்கள். கடைக ளில் கண்ணுடிகளினுள் பார்வைக்காக வைக்கப்பட் டுள்ள விற்பனைப் பொருட்களையும், கடைகளையும் ஆவலோடு பார்த்துக் கொண்டே வந்தான், பாஸ்க ரன். சில இடங்களில் நின்றும் பார்த்தான். ஒர் இடத்தில் அவன் கேட்டான்.
"அத்தான் நல்ல வடிவான சேட்டு, என்ன?”
“ஒ1. நல்லாய்த்தான் இருக்கு!" "என்ன விலையாயிருக்கும்?"
“கொன்ற்ருேல் பிறைஸ்தான். நாப்பத்தைஞ்சு
ரூபா!'
“என்ரை. சைசிலை இருக்குதோ. தெரியாது?"
೨೨
“வேணுமெண்டால் கேட்டுப் பாப்பம்
கடையினுள் நுழைந்து விசாரித்தபொழுது அவர் கள் கேட்ட அளவில் பல அழகான நிறங்களில் சேட்
டுக்கள் மேஜைக்கு வந்தன.
பாஸ்கரனுக்குக் கொள்ளை ஆசை,

Page 21
سےسے 34 =
"யாழ்ப்பாணத்திலையெண்டால். இப்பிடி எடுக் கேலாது.”*
“விருப்பமெண்டால். எடன்!’
பாஸ்கரன் ஒரு சேட்டை எடுத்துக் கொண்டான்.
"அத்தான்!. அவசரத்திலை வந்ததாலே மேலதிக மாய் கர்சு கொண்டு வரயில்லை. உங்களிட்டை இருந் தால் குடுங்கோ. போனவுடனே அனுப்பி விடுறன்.'
கதிரவேலுவின் தலை சுழற்சியடைந்தது போல. “ஒ. அதுக்கென்ன?’ கை மானத்துக்குப் பயந்து 'பொக்கட்"டினுள் நுழைந்து ஐம்பது ரூபா நோட்டை இழுத்தது.
கடைக்காரன் கொடுத்த மிகுதி ஐந்து ரூபாவை கதிரவேலு வேண்டிய பொழுது, "இரவைக்கு நேரம் சென்ற பிறகு அறைக்குப் போறதெண்டால் செக் கண்ட் ஷோ படத்துக்குப் போக வேணுமே" என்ற கனதியான நினைவு நெஞ்சில் ஏறிக்கொண்டது.
(சிரித்திரன் வைகாசி 1978)
*


Page 22
ஏகபத்தினி விரதம்
-36
வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டனவா? இரவு வந்துவிட்டது. ஒட்டை விழுந்த மேகம், பொய் யான மினுக்கங்கள்.
ஜன்னற் கம்பிகளின் வெளியே நிலா சிரிக்கின்றது. மயக்குகின்ற சிரிப்பு. விடிவதற்கு முன்னர் மறைந்து போய்விடும். ஜன்னற் கம்பிகள். உள்ளேயும் ஒரு சிறைத் தன்மையை உணர்த்துகின்றன.
அவளும் இந்த இதயத்தினுள் சிறைப்பட்டிருந் தாள். அவளுடைய நினைவு வந்த பின்னர் இந்த வானத்தையும் நிலாவையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அந்த நிலவுக்கு முன்னுல் அவள் மிதந்து வருவாள். அப்படியே ஜன்னற் கம்பிகளை ஊடறுத்து" நுழைந்து கொண்டு இந்தக் கண்களினுள்ளும் வந்து விடுவாள் - கண்கள்தான் இதயத்தின் கதவுகளோ? இதயத்தில் அவள் நினைவுகள் ஏறுகின்ற பொழுது ஒர் இதமான சுமை. அது சுமையா, அல்லது சுகமா?
முகத்தைப் புதைத்துக்கொண்டு குப்புறப்படுப் பதற்காக ஒரு பக்கமாகக் சரிந்தபொழுது. ("கிறிச்? -கட்டில் தனது வேதனையை வெளிப்படுத்துகிறது. இப்படி எத்தனைபேரைச் சுமந்திருக்கும்?) அழுக்குத் தலையணை முத்தம் பெறுகின்ற அதிர்ஷ்டத்தைத் தட் டிக் கொள்கிறது. அநியாயமாக அவளுடைய சொந் தம் இந்த அழுக்குத் தலையணைக்குக் கிட்டி விட்டது.
அட, இந்த மலிவான ஹோட்டலில் மெல்லிய காற்றுக்கூட வந்து உடலைத்தழுவிக் கொள்கிறதே! அதிசயமான சங்கதி!
வாழ்க்கையில் அதிசயங்களுக்குக் குறைவில்லை.
ஜயதிலக, நாணயக்கார, சிவபாதம், நசூர்டின் எல் லோரும் மாலையில் அறையை விட்டு வெளியேறும்
 

امیر
(
سے 37ے
சிரித்துக் கொண்டே போனர்கள்- மேய்ச்சலுக்கு! இலங்கையிலிருந்து கிளம்பும்பொழுதே அவர்களுடைய திட்டம் இது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல்முறையாக பர்க்கிஸ்தானுக்குச் சென்றபொழு தும் இப்படி இரண்டோ மூன்று தினங்கள் புதுடில்லி யில் தங்குமடம் போட்டுத்தான் வந் தா ர் க ள் . (ஹோட்டல் தீனில் அவர்களுக்கு அவ்வளவு பிரியம்!) இரவு வெகுநேரம் கழித்து நல்ல "கலை"யில் சிரித்துக் கும்மாளமடித்து கொண்டே வருவார்கள்!
இவர்கள் மட்டுமல்ல! இலங்கையிலும் கூட த் தான் - கொழும்பிலே அறை நண்பர்களாக இருந்த வர்களுடைய திருகுதாளங்கள் கொஞ்சநஞ்சமா? வீட் டுச் சொந்தக்காரனுடைய கண்களில் மண்ணைத்தூவி இரவோடிரவாக எத்தனை கள்ளக்கடத்தல்கள் செய்தி ருக்கிருர்கள். முற்றும் துறந்த ஒரு சந்நியாசியைப் போல (முனிவர்கள் அப்படித்தான் பற்றற்று இருப் பார்களாம்!) பக்கத்தில் நடக்கின்ற கூத்துக்களைக் கண்டு கொள்ளாமல் நிஷ்டையில் இருப்பதைக் கண்டு அவர்களும் அதிசயித்திருக்கிருர்கள்.
சுமாரான இளைஞர்கள் எல்லோரும் அப்படித் தான் இருப்பார்களோ? ஆண்களெல்லோரும் ஏன் இப்படி ஏதோ நியதிக்குட்பட்டவர்கள் போல கேடு கெட்டுப் போகிருர்கள்? பண்பான வாழ்க்கை நெறி களை வெறுக்கிருர்கள்? சமூகத்திலுள்ள சட்டங்களுக் கும் கட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் விதிவிலக்கானவர் களா? இப்படியெல்லாம் நடந்துகொள்ள அவர்களால் எப்படி முடிகிறது? எப்படிச் சிரிக்கிருர்கள்?
அவர்களுக்கென ஒவ்வொருத்தி- ஒரு காதலி. இருக்கமாட்டாளா? எந்தப் பெண்ணுமே அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்க மாட்டாளோ? அ ல் லது பசித்த நேரத்தில் போடுகின்ற சாப்பாட்டைப் போல அந்த உறவுகளையும் சாதாரண விஷயங்களாகக் கருதுகின்ற மரக்கட்டைகளா இவர்கள்? இந்த அழுக் கான அறையினுள் நுழைகின்ற இதமான காற்றைப் போல ஏன் ஒருத்தி அவர்கள் மனங்களினுள் புகுந்து கொள்ள மறுக்கிருள்?

Page 23
--38 مس
இந்த இதயத்தினுள் புகுந்துகெர்ண்ட அவளது நினைவுவந்த மாத்திரத்தில் மின்னலைப்போல ஒர் இன் பக் குமுறல் தோன்றும். மல்லிகையின் நறுமணத்தை அள்ளி வருகின்ற தென்றல் தரும் இதமான சுகத் தைப் போல.
இரண்டு வருடங்களுக்கு முந்திய கதை இதுபாக்கிஸ்தானுக்குச் செல்வதற்காக அவளைப் பிரிகின்ற நேரம் - மனதை வாட்டுகின்ற பெரியகவலை - அவ ளது நினைவுகள். அழகான சிரிப்பு. ஆதரவான கண் கள். அவற்றை ஒரு நாளைக்காவது தரிசிக்காமல் இருக்க முடியாதே! இனி நான்கு வருடங்கள் - அந்த சுகங் களையெல்லாம் மறந்து சந்நியாசியாகி விடவேண்டும் எனும் நினைவின் கசப்பு. நான்கு வருடங்கள் - படிப்பு முடிந்து வருகின்றபொழுது அவள் காத்திருப்பாளோ என்னவோ. நிறைகுடம் தழும்பத் தொடங்கியது. உள்ளத்தின் கலக்கத்தை உணர்த்துகின்ற கண்களின் கலக்கம்.
"...படிப்பு முடிஞ்சு திரும்பிவர நாலு வருசங்கள் செல்லும். அதுவரையும் எப்படித்தான் இருக்கப் போகிறேன்?. தனிமை எவ்வளவு மோசமாய் வாட் டும் எண்டு நினைக்கவே பயமாய் இருக்கு1. ஏன்தான் இந்த ஸ்கொலர்ஷிப் கிடைச்சுதோ? உன்னை விட்டுட்டு எப்படி இருக்கப் போறேன்? ஒரு நாளைக்குப் பாக்காட்
டியும் எனக்குச் சாப்பாடு இறங்காது. இந்த விசித்
திரத்திலை அங்கை சாப்பாடோ நித்திரையோ இல்லா மத்தான் இருப்பன் போலையிருக்கு. நீயெண்டால் அம்மா, ஐயா, சகோதரங்களோடை இருப்பாய். தனிமை அவ்வளவாய் தோற்றது. சொந்தபந்தங்கள் கோயில் திருவிழாக்கள். என்னை நினைப்பியோ தெரி பாது - சிலவேளை வீட்டுக்காறர் கலியாணமும் பேசு வினம் நீயும் இவன் எங்கை இனிவந்து என்னைக்கட்
டப் போருன் எண்ட நினைவோடை ஒமெண்டிடு வாய் - நான் வந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு நிக்க வேண்டியதுதான்'- முகத்திற் தழும்பி வடி
கின்ற கண்ணிர்த் துளிகள்.
அவள் இரக்கத்தோடு பார்த்தாள். முகத்திலே கருமை - சோகத்தின் வாட்டம்.
 

است.
*-நீங்கள் ஆம்பிளை- எல்லர்த்தையும் வெளிப்
படையாய் சொல்லிப் போட்டியள்- பொம்பிளை யாய்ப் பிறந்த நாங்கள்- மனதுக்குள்ளேயே எல்லாத் தையும் அடக்கி வைச்சு - கவலைப்பட வேண்டியது
தான். என்ரை மனவருத்தத்தை எப்பிடிச் சொல் லுறதெண்டே தெரியயில்லை - உங்களை விட்டிட்டு நான் இருப்பணு? - ஒண்டை மாத்திரம் நிச்சயமாய்ச் சொல்லுறன். ஒரு பெண்ணைக் காதலிச்சுப் போட்டுப் பிறகு வேறை யொருத்தியை கட்டுறது- ஆம்பிளைய ளுக்குச் சுலபமாய் இருக்கலாம் - ஆனல் பொம்பிளை யளுக்கு அது கஷ்டம்."
அதற்குமேல் அவளால் கதைக்க முடியவில்லை. அழுகை வந்திருக்க வேண்டும். அவளாகவே வலிந்து இந்த மார்பில் சாய்ந்து கொண்டாள். நெடுநேர மெளனம் கைகள் அணைத்துக் கொன்டன. அவளு டைய சூடான கண்ணிர் நெஞ்சிலே கசிந்தது. ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.
நீண்ட பிரிவின் ஆரம்பம்.
இரண்டு வருடங்கள் நீட்சியடைந்தன. அதற்கி டையில் பாக்கிஸ்தான் அரசியல் வானில் கருமேகங் கள் சூழத் தொடங்கின. பெரு மழையைப் போல கட் சிக் குழப்பங்கள், மக்கள் போராட்டங்கள். வெளி நாட்டு மாணவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமை ஒரு வித மகிழ்ச்சியை அளித்தது. இலங்கை - சொந்தபந் தங்கள் - அவள்!
தலையணையின் அணைப்பைக் கைவிட்டு நிமிர்ந்த பொழுது மேகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த நட்சத்தி ரமொன்று தனது உறவைக் கழட்டிக் கொண்டு விழு வது போல- ஒளிப்பொட்டொன்றின் வீழ்ச்சி - அது மறைந்து விட்டது.
அவள் இன்னும் மறையாமல் இந்த மனத்தில் ஓர் ஒளிப்பொட்டாக இருக்கின்ருள் இலங்கைக்குச் சென்றி ருக்கவே தேவையில்லை - அப்படியான ஒரு மனமுறிவு, அந்தச் சோகமான கதை

Page 24
一40一
வீட்டுக்குச் சென்ற பொழுது அவள் "ரியூற்டரி"க் குச் சென்றிருக்கிருள் என அறிய முடிந்தது. ஆவலின் உந்துதல் அவ்விடத்தைத் தேடிப்போக வைத்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பஸ்ஸை விட்டு இறங்கு முன்னரே அவள் இன்னெரு இளைஞனுடன் சோடி சேர்ந்து வந்த காட்சி கண்களைக் குற்றியது. மனதிலே ஒரு 'திக்” ஒருவேளை அவளுடைய நண்பனுகவும் இருக் கலாம் அல்லது- அடுத்தும் சில "திக்" "திக்’-
"அவள் காணக்கூடியதாக முன்னே சென்றுவிட் டால் எல்லாம் புரிந்து விடுகிறது" என்ற மனதின் சமாதானம் ஆனல்- அவள் அந்த நேரத்தில் இப்படி யொரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை.
முதலில் அதிர்ச்சி - பின்னர் அலட்சியம். அலட் சியமென்ருல் கண்களில் கனல் பறக்கின்ற கோபம் - தலையை "சட்" டென மறுபுறமாக வெட்டுகின்ற புறக் கணிப்பு, நெஞ்சிலிருந்து ஒரு நட்சத்திரத்தின் வீழ்ச்சி. அதையும் பொருட்படுத்தாமல் அவள் வீட்டுக்குச் சென்றபொழுது அங்கேயும் அந்தப்புலி தன் பசுத் தோலை மாற்ற விரும்பவில்லை. தாயாரின் முன்னிலையில் காரசாரமான திட்டல்கள்.
காதலென்பது பாலுணர்வுகளின் பண்பான பிரதி பலிப்பு மாத்திரம்தானென அவள் கருதுகிருளா? அது தான் காதலென்ருல் அதைச் சுலபமாக ஜெயதிலகா வும், சிவபாதமும் மூலை முடுக்கெல்லாம் காசை வீசி எறிந்து விட்டுப் பெற்றுக் கொண்டு போகிருர்களே அவர்கள் புத்திசாலிகளா? ஆண்களில் எத்தனையோ பேர் நச்சுப்பாம்புகளாக இருப்பது உண்மைதான். ஆனல் இப்படியான பெண்களை எந்தவகையில் சேர்ப் பது?
இதமாக வந்து உடலை அணைத்துக் கொள்கின்ற தென்றலைப்போல, மலர்கின்ற பருவத்திலுள்ள ஒரு மொட்டின் புனிதம்போல இதயத்தோடு இழையோடி யுள்ள அந்தப் பாசத்தைச் சிதைக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது?
அதிர்ச்சிக்கு மருந்துபோல ஒரு தந்தி- பாகிஸ் தானில் குழப்ப நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து
حكمة

()
سے 41 سے
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதும் பாடநெறி யைத் தொடர்வதற்காக அழைப்பு வந்தது:
'சம்சாரம் தேடிக்கிறதிலை ரொம்ப அவதானம் வேணுங்கிறன். உங்களுக்கு இஷ்டப்படுகிற பொண் ஃனத்தான் கட்டிக்கணும். அப்பன்னுத்தான் சீவியம் சந்தோஷமாயிருக்கும்."
பக்கத்து அறையில் யாருக்கேரி ஞானம் பிறந்தி ருக்கிறது. இவர்கள் எந்த ஊர்க்காரர்கள்? இவர்கள்ை யும் யாரே ஒருத்தி ஏமர்ற்றி இருப்பாளோ? ஊர் ஏதாக இருந்தாலும் மனிதர்கள் எல்லோருடைய பிரச்சனைகளும் ஒரே மாதிரியானதுதானு?
எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு இயக்கங்க ளையும் நிர்ணயிக்கின்ற அவளது உயிர்த்துடிப்பான நினைவுகளை அகற்ற முடியவேயில்லை. இது பெரிய குறை இந்த மனது ஏதோ பாவம் செய் தி ருக் க வேண்டும். நண்பர்களைப் போல தறிகெட்டுத் திரியா மல் அவள் ஒருத்திக்காகவே இந்த மனதைப் பொத் திப் பொத்தி வைத்திருந்ததற்கு இதுதான பரிசு? படுக்கையை விட்டு எழுந்து நின்று இந்த அறையே அதிரும்படி "ஒ" வெனக் கதற வேண்டும். அப்பொ ழுது இந்த மனம் வெடிக்கும். அவளுடைய நினைவுக ளெல்லாம் அகன்று விட்டால் தலை சுகமடையும்.
ஒன்பது மணியைப் போல சிவபாதம் வந்தான்.
“என்னடாப்பா அதுக்கிடையிலை திரும்பியிட் டாய்?"- "உனக்காகத்தான்!'
“எனக்காகவோ ஏன் ???
*சாப்பாடு வேண்டித்தர!”*
"எனக்கென்ன சுகமில்லை எண்டு நினைச்சியே?.
உதவிக்கு வந்திருக்கிருய்?"
"அப்படித்தான் தெரியுது. விசரா!. அவளொ
6 -

Page 25
- 42
ருத்தியை நினைச்சு ஏன் தான் இப்பிடி அழி ஞ் சு
போறியோ தெரியாது?. எவ்வளவு கெட்டிக்காற
ணுய் இருந்தனி? உன்ரை படிப்பை வீ ஞ க் க ப் போருய். இதுக்கெல்லாம் வடிகால் அதுதான். יל ( வருத்தத்துக்குப் பரிகாரம் சொல்கின்ற வைத்தியரின் கரிசனை அவனிடம்.
இதற்குப் பரிகாரம் அதுவல்ல நூறுவீதம் நிச்ச யமாகத் தெரியும். ஆனுல் அவளையே நினைத்து வாடு கின்ற இந்த மனதுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். "
சிவபாதத்தின் கையில் மாலைப் பத்திரிகை ஒன்று இருந்தது. (அன்றைய இரவு நடனங்கள் எங்கெங்கே நடைபெறுகின்றன, என்ற விபரங்கள் இதில் அடங்கி யிருக்கும்.) இந்த விஷயங்களில் நல்ல ச ர் வீசு " உள்ள அவன் தகுதியான இடத்தைத் தெரிந்தெடுத் தான். "சந்துகள் பொந்துகள்" போன்ற பல இடங்க ளிலெல்லாம் திரும்பி அலுப்புத்தட்ட ஆரம்பிக்கும் பொழுது ஒரு வீட்டின் முன்னல் நின்றன். தட்டப் பட்டதும் கதவு திறந்து கொண்டது. வெளியே அலங்கோல தெருவுடன் இருந்த வீடு உள்ளே கம்ப ளமும் அலங்காரமும் கண்களைக் கவரும்படி இருந் தது. தனக்குத் தெரிந்த இந்தியில் “சாகிப், டான்ஸ் தெக்கி னேஉற,?’ எனக் கேட்டான். வேறு "கஸ்ட
மர்ஸ்ஸும் இருந்தனர். நடனம் ஆரம்பித்தது*
இடையில் ஒரு பணியாள் வந்தாள்.அவளேர்டு நண்பன் கதைத்தான். பணம் கைமாறியது.
ஒரு தனி அறைக்குள் மனைவியைப் போல அந் தப் பெண் வந்தாள். கதவைச் சாத்தினுள். மெது வாகச் சிரித்தாள் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனல் சிரிப்பு தொண்டைக்குள்ள அ ைடத் துக் கொண்டது. வியர்வையில் சேர்ட் நனைந்தது.
அவள் விசித்திரமான பார்வையுடன் "அப்னே பஸ்டைம் ஜீ?" என்ருள். வெட்கத்தால் தலை கவிழ்ந் தது. இந்த ஆண்மை எங்கே போயிற்று? தடுமாற் றம் சில உண்மைகளை ஒப்புவிக்க நிர்ப்பந்தித்தது.

அமைதியாக யாவற்றையும் கேட்டுக் கொண்டி (15,556 air Lair 60Tii 'Oh, I Suppose this is going to be your first night?' 67 Got Glitia. It did Sif).5 தாள். சந்தோஷமா? அல்லது ஏளனமா?
உண்மையும் அதுதான்! பெரிய பொக்கிஷமாகக் கட்டிக்காத்து வந்த ஏகபத்தினி விரதம் முதல் முறை யாக புதுடில்லியில் வைத்துக் கலையப் போகிறது. மனதிலே ஒருவித படபடப்பு. உடலை /அண்மித்துக் கொண்டு சென்ற பொழுது 'தம்பி!" என்ருள்.
ஆச்சிரியத்துடன் திரும்பியபொழுது தொடர்ந்து ஆங்கிலத்திலே கதைத்தாள். ('தம்பி" என்ற ஒரு சொல்தான் தமிழில் தெரிந்திருக்கிறது.) த லே முடியை ஆதரவுடன் கோதிவிட்டாள். முகத்தில் பனித்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டாள்.
"இங்கு பசியோடு வருபவர்களுக்குச் சாப்பாடு
இருக்கிறது. உங்களுக்குப் பசியில்லை. வெறி யார் மேலேயோ வெறுப்பை வைத்துக் கொண்டு உங்க ளையே அழித்துக்கொள்ளப் பார்க்கிறீர்கள். உண்மை யைப் பார்த்தால் அவள் உங்களைக் காதலிக்கவில்லை. நீங்கள் தான் காதலித்திருக்கிறீர்கள். அவள் இது போன்ற ஹோட்டல்களுக்குக் கூட லாயக்கில்லாதவள். இது உங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஒரு விபத்து விபத் திலே காயம் ஏற்பட்டால் தங்களையே அழித்துக்கொள் வார்களா ? காலப்போக்கில் இந்த வடு ஆறிவிடும். உங்களுக்காக நிச்சயம் இந்த உலகத்தில் ஒருத்தி இருக் கிருள். துணிவு வேண்டும். கோழையாக இருக்கக் gill-IT gil's
• பூரீலங்காவிலிருந்து எவ்வளவு நம்பிக்கையோடு உங்களை அனுப்பியிருக்கிருர்கள். சாதாரண ஒருத்திக் காக உங்கள் நாட்டுக்கு நீங்கள் அளிக்க வேண்டிய பங்கை துச்சமாக நினைத்து விட்டீர்களா? இந்த ஸ்கொ லசிப் எல்லாம் பயனற்றுப் போய்விடுமோ? இதற்கா சுத்தான பூரீலங்காவிலுள்ள அவ்வளவு மக்களினுள்ளும் உங்களைத் தெரிவு செய்து அனுப்பினர்கள் ? '

Page 26
=44ܚ-
அவள் சொல்லிக் கொண்டே போளுள். ஒரு தா யின் பரிவு. இப்பொழுது மனதிலுள்ள வேதனைகளெல் லாம் கரைந்து காலியாகி காற்றிலே மி த ப் ப து போன்ற சுகம்,
ஒரு பெண்ணின் செய்கையினல் பெண்ணினத்தின் மேலுண்டான வெறுப்பும் அதனல் ஏற்பட்ட விரக்தியும் இன்னெரு பெண்ணின் செய்கையில் துடைக்கப்பட்டு விட்டசுகம். உலகத்தில் மனிதர்கள் எல்லாம் கெட்டுப் போய் விட்டார்கள் என்று யார் சொன்னது ?
உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருத்தி நாடு. இனம், மொழி, சாதி, பேதங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன? அவளது இரக்கம் நிறைந்த பார்வை பரிவான தேற்றுதல்,
*" ரேக் இற் ஈஸி : '
அவளிடமிருந்து நிறைவான மனதுடன் விடை பெற்று வெளியேறிய பொழுது டிநிய தொரு வெறி
-- அது எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என்பது.
வீரகேசரி 23-07-78:
-

ஒரு தேவதையின் குரல்
- 45

Page 27
ஒரு தேவதையின் குரல்
- 46
தாக்குதலுக்குப் பயந்து ஒடுகின்ற அப்பாவியைப் போல புகையிரதம் ஒடிக்கொண்டிருந்தது. அருணசலம் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு மூலையில்
அமர்ந்திருந்தார்.
இறங்கவேண்டிய இடம் அண்மித்துக்கொண்டுவர அவரது மனதில் பதட்ட உணர்வும் அதிகரித்தது. இந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியிலும், அநுராத புரத்தில் இறங்க வேண்டியேற்பட்டது தனது கஷ்ட காலமே என எண்ணிக்கொண்டார்.
எதிர்பாராமல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங் களினுல் தத்தமது சொந்த இடங்களுக்கு "ஏற்றுமதி செய்யப்பட்ட விசித்திர அனுபவம் பெற்றவர்களில் அவரும் ஒருவர். (அவர் வேலைசெய்கின்ற சிங்களக் கிராமத்திலிருந்து கொழும்பிற்கு அரசாங்க லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டவர்.) அந்த நேரத்தில் கடவுள்மாதிரி வந்து காப்பாற்றி அரச பாதுகாப்புடன் அனுப்பி வைத்தவன் அவருடைய சிங் கள நண்பன் ஒருவன்தான்; மனிதர்களில் இயமன் களும் இருக்கிருர்கள், கடவுள்களும் இருக்கிறார்கள்.
நாடு சகஜநிலைமைக்குத் திரும்பிவிட்டதால், இடம் பெயர்ந்த அரசாங்க ஊழியர்கள் தங்களது வழக்கமான அலுவல்களுக்குத் திரும்பிவிடுமாறு வானெலி அறிவிப் புச் செய்தது.
தப்பிப் பிழைத்து வீட்டிற்கு வந்த நேரத்தில் "சாப் பிடாமல் கிடந்து செத்தாலும் பரவாயில்லை. இனி
அங்கை போகவேண்டாம்!" என அன்புக்கட்டளையிட்ட
ஸ்

شعر۔
()
ཡང་མ་ 47--
அவரது துணைவிகூட, "இப்பிடியே நெடுகலும் இருந் தால் என்ன செய்யிறது. சம்பளத்தையெண்டாலும் எடுத்தால் ஒரு மாதிரிச் சமாளிக்கலாம்." என நச் சரிக்கத் தொடங்கிவிட்டாள். உண்மையிலேயே சமா ளிக்க முடியாத நிலைமைதான்.
ஆரம்பத்தில் ஐந்தைப்பத்தைக் கொடுத்துதவிய அக்கம்பக்கத்தவர்களும் கையை விரிக்கத்தொடங்கிவிட் டார்கள். நிலைமை சுமுகமாகும்வரை அது எவ்வளவு காலம் சென்ருலும் வேலைக்குத் திரும்புவதில்லை என அரச ஊழியர் ஆங்காங்கே கூடி முடிவெடுக்கவும், அந் தரமாபத்திற்கு உதவியவர்களும் கைவிடத் தொடங்கி விட்டார்கள்.
"என்ன?. அப்ப இனி வேலைக்குப் போகமாட் டீங்களோ?. இந்தப்பக்கத்துக்கும் மாற்றம் எடுக்கேலா தாக்கும்?. அவங்களும் என்னெண்டுதான் எல்லாரை யும் மாத்திறது?’ என சிலர் அனுதாபம் தெரிவித் தrர்கள்.
‘'வேலையைவிட்டிட்டு. ஏதாவது கடையைத்தன் னியைப் போட்டுக்கொண்டு ஊரோடை இருங்கோ வன். ' -இன்னும் சிலர் இப்படி இலவச ஆலோசனை வழங்கினர்கள்.
நிரந்தரமான ஒரு சேமிப்போ வேறு வருவாய் களோ இன்றி மாதாந்த சம்ப்ளத்தை எடுத்து (கெளர வமான) வாழ்க்கை நடத்துகிற நடுத்தரவர்க்கத்தின ரில் ஒருவர்தான் அருணசலமும்,
பலசரக்குக் கடைக்காரனுடைய கணக்கை இந்த 40ாதம் "செற்றில்ட்" பண்ணமுடியவில்லை. அவனும் நிலைமை புரியாமல், 'ஐயா, அந்தக் கணக்கு.?’ எனக் கேட்டவாறு ஒரு மாதிரிச் சிரிக்கத்தொடங்கிவிட்டான். அது சுத்தமான சிரிப்பல்ல, அவனது கடையிலுள்ள பொருட்களைப் போலவே கலப்படம் நிறைந்தது, அந் தச் சிரிப்பை அவரால் தாங்கமுடியாது.
தொட்டம் தொட்டமாக வேண்டிய சில்லறைக் கடன்களும் பல. அறிஞ்சவன் தெரிஞ்சவனக் கண்டு

Page 28
سے 48 سے
வெட்கத்தையும் விட்டுப் பல்லைக்காட்டிப் பார்த்தால் அந்த வித்தைகளும் பலனளிக்கவில்லை.
பெண்சாதியின் கழுத்தில் தப்பியொட்டிக்கிடந்த தாலிக்கொடிதான் அவரது கண்களைக் குத்தியது. மெது வாகக் கதை விட்டுப் பார்த்தார். கண்மணியின் கண் கள் கலங்கிவிட்டன.
"முந்தி வைச்ச நகையளெல்லாம் வருசக் கனக் காய் மீளாமல் இருக்குது. இதையும் கொண்டுபோய் வைக்கப் போறியளோ?*
அந்தக் கண்ணிர் அவரது இதயத்தைத்தொட்டது. கவலை மேலிட்டது. ஒரு பாவமும் அறியாத குழந்தை குட்டிகள் நாளைக்குச் சாப்பாடு என்று கையை நீட்டும் பொழுது என்ன செய்வது?
"எப்படியாவது வேலைக்குத் திரும்பியிடவேணும் " என முடிவெடுத்துக் கொண்டார்.
அருணசலம் வேலைசெய்கிற சிங்களக் கிராமத்திற் குப் போவதாஞல் அநுராதபுரத்தில் இறங்கி கண்டி பஸ் எடுக்க வேண்டும். இந்த இடங்களெல்லாம் கல வரத்தின்போது கடுந்தாக்குதலுக்குள்ளான இடங்கள். இவரோடு வேலைசெய்த செல்லத்தம்பி அந்த அதிர்ச்சி யில் வேலையையே "றிசைன்" பண்ணிவிட்டார்!
- மீண்டும் அங்கு வேலைக்குப் போவதற்கு, முதல் நாட்களிற் கண்டு சம்மதம் செய்தவர்களில் கத்தசாமி மாத்திரம்தான் இப்பொழுது கூடவந்திருக்கிருர், வருவ தாக ஒப்புக்கொண்ட மகேசு கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட சங்கதி புகையிரதத்தில் ஏறிய பின்னர் தான் தெரியவந்தது.
*அவனும் வந்திருந்தால். சேர்த்து அடிவேண்டு வான். எங்களுக்குக் கொஞ்சமாவது குறையும்!" என புகையிரத்தினுள் “ஜோக்” அடித்த கந்தசாமியும் அலங்க மலங்க விழித்தவாறு இருந்தார். இறங்குவதற்கு முன் னர் கடிகாரத்தைக் கழட்டி காற்சட்டைப் பைக்குள் வைத்தார்,
 
 

گا۔
"அடிக்கிறவங்கள் காற்சட்டையையும் கழட்டிக் கொண்டுதான் விடுவாங்கள்!' என இரகசியமாகப் பகிடிவிட்டார் அருணசலம்.
அந்த நகைச்சுவையை அனுபவிக்குமுன்னரே புகை யிரதம் நின்றது. இதயங்களே நின்றுவிட்டதுபோல.
பஸ்நிலையம் வரை உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும். மெளன விரதம் மேற் கெர்ண்டவர்களைப் போல நடக்கத்தொடங்கினர்கள்.
கந்தசாமி சற்று விலகியே நடந்துவந்தார். அருணு சலத்தாரைப் பார்த்தால் "அசல் தமிழன்’ என முகத் தில் அச்சடிக்கப்பட்டிருக்கிறதாம்! தன்னைப் பார்த்து யாரும் மட்டுக்கட்ட முடியாது என அந்தரங்கமாக நினைத்து மகிழ்ந்து கொண்டே நடந்தார்.
*வன் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுவிட்டார்கள்" எனப் பத்திரிகைகளில் வந்த செய்தி களை நினைத்து சற்று நிம்மதியுடன் நடந்துகொண்டிகுந் தார் அருணுசலம்.
அந்த நிம்மதி நீடிக்கவில்லை, "அடோ1?" என அட்டகாசமாக எங்கிருந்தோ ஒருகுரல் வந்தது. நெஞ் சில் இடிவிழ, அருணசலத்தாரின் இரத்தம் உறைந்து விட்டது போலிருந்தது. திரும்பிப் பார்த்தார். வீதி யோரத்தில் சில காடையர்கள் நின்றுகொண்டு தங் களுக்குள் யாரையோ அழைப்பதுபோலப் பாவனை செய்தார்கள். ஏதோ புதினமான பிராணிகளைப்பார்ப் பது போல அவர்களது கண்கள் தங்களை ஊடுருவுவ தைக் கவனித்தபோது நடுக்கம் இன்னும் அதிகரித்தது.
இப்படியொரு பரிதாபமான நிலையை நினைக்க அரு ணுசலத்தாருக்கு பெரிய வேதனையாக இருந்தது. நாங் கள் பிறந்து வளர்ந்த இந்தமண்ணிலேயே - எங்கள் நாட்டிலேயே இப்படி உயிருக்குப் பயந்து சீவிப்பதை எண்ணி அழவேண்டும் போலிருந்தது. பூமியில் காலைப் பதித்து நடப்பதே ஏதோ பாவமான செயலைச் செய் கிருேமோ எனக் கசப்பையளித்தது. ஒரு தாயின் வயிற் றில் பிறந்த குழந்தைகளைப்போல ஏன் நாங்களெல்

Page 29
۔ 59--سے
லாம் சகோதரத்துவமாக வாழமுடியாது? பிரச்சனை களைப் பரந்த மனப்பான்மையுடன் அணுகித் தீர்வுகாண எல்லோருமே தயங்குவதேன்?
நெடுநேரம் காத்துநின்ற பின்னர் அவர்களுக்குரிய பஸ் கடவுளைப்போல வந்தது. உள்ளே அடைக்கலம் புகுந்தபின்னரும் வாயைத் திறக்க மனமில்லை-மெளன விரதம் நீடித்தது. அந்த இடத்திலே சம்பாசித்து தங்
களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கு இருவருமே
விரும்பவில்லைப் போலும்,
அவர்களிருந்த இருக்கைக்குப் பின் இருக்கையில் மூன்றுபேர் - காடையர்கள்போல அருணுசலத்தாரின் கற்பனையிலிருக்கும்கோலம் கொண்டவர்கள் வந்து அமர்ந்தனர். அவர் மீண்டும் நம்பிக்கை இழந்தார். பின் னர் தான் கவனித்தார், அவர்களும் தமிழில் கதைத் துக் கொண்டிருந்தனர். இப்பொழுது தெம்புடன் திரும்பிப் பார்த்தார் அருணுசலம். அவர்களது கையில் ஒரு தமிழ்த் தினசரியும் இருந்தது,
இது அவருக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
அகங்காரமான இரைச்சலுடன் விரைந்து கொண் டிருந்தது பேரூந்து. சில இடங்களில் நிறுத்தப்பட்டு மட்டில்லாமல் ஜனங்கள் அடைக்கப்பட்டனர். இன் னேரிடத்தில் பெண்கள் மூவர் தமது கைக்குழந்தைக ளுடன் ஏறிக்கொண்டார்கள்.
தனது இயல்பான உறுமலுடன் பேரூந்து கிளம்பி யது. குழந்தைகளுடன் நிற்பதால் யாராவது இருப்ப தற்கு இடம் தருவார்களென்ற எதிர்பார்பில் இவர்க களது பார்வை ஒவ்வொருவர் மேலும் படர்ந்தது. ஆனல் என்ன அதிசயம் - அங்கு இருக்கை கொண் டிருந்தவர்களில் எவரும் இவர்களைக் காணவில்லை! கந்த சாமிக்கு இந்த நேரமாகப் பார்த்து உறக்கம் பிடித்துக் கொண்டதால் முன் இருக்கையில் தலையைச் சாய்த்துக் கொண்டார். இந்கத் தந்திரம் தெரியாத அருணுசலம் தனதுமுறை வருமுன்னர் யாராவது இடம் கொடுப் பார்கள் என நிம்மதியுடனிருந்தார்.

سس۔ 51-سے
அந்தத் தாய்மார்கள் சில இருக்கைகளைக் கடந்து நெருக்கத்தில் நுழைந்தவாறு யாராவது தானம் செய் யப்போகும் இருக்கைகளை எதிர்பார்த்து வந்து கொண் டிருந்தபொழுது அந்த இளைஞர்கள் (காடையர்கள்) எழுந்து இடம் கொடுத்தார்கள். தோற்றத்தைக் கருத் திற் கொண்டு அவர்களைக் காடையர்கள் என எண்ணி யிருந்தவர் அருணசலம் இப்பொழுது அவர்கள் தன்னை
விடவே உயர்ந்துவிட்டவர்கள் போலத்தோன்றி ஞர்கள்!
பஸ்சினது இரைச்சலையும், கண்டக்டருடைய
"ஈஸ்ஸரட்ட யன்ட' குரலேயும் மீறிக்கொண்டு சடுதி யாக இன்னெரு குரல் வெடித்தது.
"ஈஸ்ஸரட்ட யனவாவோய்!" (முன்னுக்குப் போம்
காணும்)
'தம்ச யனவா ஐசே1. அபிற்ட கியன் ட ஒணனே!" நீர் போம்காணும்! .எங்களுக்குச் சொல்லத் தேவை யில்லை.)
அருணுசலம் பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தார். பார்த்ததுமே நெருப்பை மிதித்துவிட்டது போன்ற உணர்வு. இந்தத் தர்க்கத்தில் எதிராளியாக நிற்பவன் அந்த இளைஞர்களில் ஒருவன்-தமிழன்! ஒரு சிறுபான்மை இனம் துணிவுடன் வாய்திறந்து பேசுவதே குற்றமல் லவா!
பிரச்சனை என்னவென்று சரியாகப் புரியவில்லை, அந்த இளைஞனை முன்னுக்குப் போகுமாறு அவர் உறுமு கிருர் அவனே தைரியமாக மறுக்கிருன்.
அருவருப்பான (அழுக்கான) தோற்றத்தோடு அவன் தன்னேடு முட்டிக்கொண்டு நிற்பது அவருக்குப்பிடிக்க வில்லை, அல்லது நேற்ருே முந்தநாளோ தான் மூட்டுமூட் டாக கழட்டப்பட்டவர்கள் இன்றைக்கு இவ்வளவு துணிவோடு உரசிக்கொண்டு நிற்பது பிடிக்கவில்லை என் பது சீக்கிரமாகவே புரிந்தது. இப்படியான பதட்ட மான காலத்திலும் அவனுக்கிருக்கும் துணிவை எண்ணி வியப்பதா அல்லது தவிப்பதா என்று புரியவில்லை.

Page 30
-52
அவருக்கு வியர்த்தது - பயத்தில் 'நியாயம் ஒருபக் கம் இருக்கட்டும். இப்ப இவன் தமிழன் என்றதுக் காகவே போட்டு உழக்கத் தொடங்கிவிடுவாங்களே. தொடங்கினல் அது அவனேடு மாத்திரம் நிற்காமல் எல்லாத் தெமளர்களையும் பார்த்துத்தானே நடக் கும்?"
அவர் பயந்தது போலவே ஒருவன், "இவ்வளவு நடந்தபிறகும் இதுங்களுடைய துணிவைப் பற்றிக்கூறி வகுப்புவாதத் தீயை மூட்டிவிட்டான். மின்வேகத்தில் அது பற்றிப்பரந்தது-பலர் சேர்ந்து கெர்ண்டனர்.
தனித்த இளைஞனது அவலநிலையைக் கண்டதும் முன்னே நின்ற மற்றஇரு இளைஞர்களும் பாய்ந்து தங் கள் நண்பனுக்கு அருகில் வந்தனர். அத்தேைபர் மத்தியில் அகப்பட்டு விட்டுக்கொடுக்காமல் வாதித்துக் கொண்டு நின்ற அவனுக்காக அவர்களும் குரல் கொடுத்தனர்.
அருணுசலம் திகைத்துப் போய்விட்டார். பயம் அதிகரித்தது. இனிக் கையைக்காலை மாறுகிற வைபவம் தொடங்கிவிடும்.
அந்த இளைஞர்களின் குரல்களும் உயர்ந்து கொண் டிருந்தன. ஆணுல் பெரும்பான்மையாக இருக்கிற எதி ராளிக்கு முன்னுல் இது எம்மாத்திரம்? இந்த அமர்க் களத்தில் குழந்தைகள் அழுதன. பஸ் நிறுத்தப்படா மல் ஓடிக்கொண்டே இருந்தது.
கந்தசாமி முன் இருக்கையில் மீண்டும் சரிந்துஉறங் கத் தொடங்கினர். அவருக்கு இங்கு நடப்பது ஒன் றுமே தெரியாதாம்!
நிலைமை முற்றியது! சமாதானப்படுத்துவது போல இரு சூரர்கள் முன்னே வந்தார்கள். 'தம்சலா உறிற் டப்பு தெனற்ட யனவா!'" (நீங்கள் நின்ற இடத்துக் குப் போங்கடா) என உதவிக்குவந்த இரு இளைஞர் களின் நெஞ்சிற் பிடித்துத் தள்ளினர்கள்.
*அபி மெதனதமாய் உறிற்றியே!" (நாங்கள் இதிலேதான் இருந்த நாங்கள்) என முதலில் அமர்ந்

س-53--
திருந்த இருக்கையைக் காட்டி அங்கே குழந்தைகளு டன் இருந்த பெண்களை எழும்புமாறு கேட்டுக்கொண்டு அவ்விடத்தில் அமரச் சென்றனர்.
இது அங்கிருந்த சில மனிதாபிமானிகளுக்குப் பிடிக்கவில்லை. 'உங்களுக்கு ஒரு மனிசத்தன்மை இருக் குதா?. பிள்ளைகளுடன் இருக்கும் பெண்களை எழுப்ப எப்படி மனம் வந்தது?" என (சிங்களத்தில்) ஏசிய வாறு ஒருவனது சேட்டைப் பிடித்து இழுத்தார்.
மற்றைய கைகளும் உயர்ந்தன.
இவர்கள் நாய்க்குட்டிகளைப் போல பரிதாபமாக தலையைக் குனிந்தனர் - சமாளிக்க முடியாத நிலை.
உயர்ந்த கைகள் அவர்கள் உடம்பில் விழுவதற்கு முன்னரே அவ்விடத்து இரைச்சல்களையும் ஊடறுத்துக் கொண்டு ஒரு குரல் வெடித்தது.
*"எங்களுடைய சிங்கள ஆக்களும் எத்தனையோ பேர் இருந்தனிங்கள் தான். ஒருவர் கூட எழுந்து எங் களுக்கு இடம் தரவில்லை. அந்தத் தமிழ்ப்பிள்ளைகள் தான் மனிசத் தன்மையுடன் இடம் தந்தார்கள். இவ் வளவு நல்லது செய்த பிள்ளைகளுக்கு நீங்களெல்லாம் செய்யிறது நியாயம்தான?
அவள் கோபாவேசம் கொண்டு நின்ருள். கனல் கக்குவது போலிருந்த அவள் கண்கள் பின்னர் கலங் கின. மற்றப் பெண்களும் அவளுடன் சேர்ந்து கொண் டனர்.
எழுந்த கைகள் குறிதவறி விழுந்தன. சூரர்களெல் லோரும் தலையைக் கீழேபோட்டார்கள்.
எதிர்பாராமல் தோன்றிய அமைதியில் கந்தசாமி யும் உயிர்பெற்றெழுந்தார்! அருணுசலம் அந்தப்பெண் கூறிய வார்த்தைகளை எண்ணி நன்றிப் பெருக்குடன் அவளை நோக்கிஞர்.
அக்கிரமங்களை அழித்தொழித்து உலகை உய்விக் கும் பத்திரகாளி தெய்வத்தைத் தரிசிக்கின்ற பக்தி நெஞ்சில் முட்டியது.
ஒக்டோபர் 197 ஈழத்துச் சிறுகதை மஞ்சரி 1980
7

Page 31
பாதைகள் மாறினுேம்
ہے۔ 54یسے
 

VN
பாதைகள் மாறினுேம்
-55
வீட்டினுள்ளே இருக்கப் புழுங்கி அவிந்தது. கதி ரையை எடுத்து வெளியே முற்றத்திற் போட்டுவிட்டு அ10ர்ந்தேன். முற்றத்து வேப்பமரம் காற்றை அள்ளி வீசியது. அந்தச் சுகத்தில் அப்படியே நீட்டி நிமிர்ந்து கதிரையிற் சாய்ந்தேன். மூத்தமகன் ஓடிவந்தான்.
"என்ன ஜெயந்தன்?"
"கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போறனெண்டு சொன்னிங்களெல்லே?"
"கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருக்க விடமாட்டு துகள்," என எரிச்சலேற்றட்டது.
அவன் தலையையும் கண்களையும் திருப்பித் திருப்பி ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துச் சொன்னவிதம் அந்த எரிச்சலைப் பறக்கடித்தது. அவனை அப்படியே கட்டியணைத்தேன். இப்படித்தான், சிலவேளைகளில் பிள்ளைகளுடன் எதற்காவது எரிந்து விழுந்துவிட்டு கொழும்புக்குச் சென்றபின்னர் கவலைப்படுவதுண்டு: அதனுல் ஒவ்வொரு முறையும் லீவில் வரும்பொழுது பிள்ளைகளுடனுே மனைவியுடனே கடிந்து கொள்வதில்லை என எண்ணிக்கொண்டுதான் வருவேன். 7 ܢ
பிள்ளைகள் என்றதும் பத்துப் பிள்ளை பெற்ற பின் னும் எட்டுமாதக் கதையல்ல. அளவான குடும்பத்தில் ஆனந்தம் அதிகமாம். அதனல் கட்டுப்பாடானவன் என்றும் அர்த்தமில்லை. அழகான மனைவியை வைத்துக் கொண்டு அதைப்பற்றி நினைக்கத் தைரியம் ஏது? கொழும்பிலிருந்து இரண்டொரு நாள் லீவு கிடைத் தால் ஒடிவந்துவிட்டுப் போவதுண்டு. இந்த விசித்தி ரத்தில் என்ன கட்டுப்பாடு வேண்டியிருக்கிறது?

Page 32
-56
மூத்தவனுக்கு வயது நாலு. அடுத்தது இரண்டும் பெட்டைகளாகவே பிறந்துவிட்டன. அது எனக்குப் பெரிய மனக்குறை - ஆனல் கவிதா அடிக்கடி சொல்லு வாள், "அதுக்கென்ன எனக்கு உதவியாயிருப்பாளவை தானே? என்று இந்த விஷயத்தில் சிலவேளை எங்களுக் குள் தகராறு ஏற்படுவதுமுண்டு. அப்பொழுதெல் லாம், "நீ இஞ்சை கொண்டுவந்து குவிச்சிருக்கிற தொகையிலை இன்னுமின்னும் பெட்டையளையே பெத் துப்போடு!" என அவள் வாயை அடக்கிவிடுவேன்,
அவளுடைய முகம் 'உம்'மென்று மாறிப்போகும். சாலக்கண்ணிர் வரும். பிறகென்ன? அது சொல்ல வேண்டிய கதையில்லை; ‘சரி. சரி. இப்ப என்ன வந் தது. இன்னும் ரெண்டு பெடியளைப் பெத்துப் போட் டால் போச்சு!. அவங்களே உழைச்சுக் குடுப்பாங் கன்." என நானே மீண்டும் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். கவிதாவின் அழகைக் கண்டு, காத லித்து, சொத்துப்பத்து இல்லாவிட்டாலும் பரவா யில்லை, அவள்தான் வேண்டும் என்று ஒற்றைக்காவில் நின்று மணம் செய்து கொண்ட குற்றம் அவளுடைய தல்லவே?
"ஐயா கூட்டிக்கொண்டு போறிங்களே? ஜெயந் தன் தனது பிஞ்சுக் கரத்தினல் எனது முகத்தைத் திருப்பிக் கேட்டான்.
சரி. போய் அம்மாவைக் கொண்டு கால், கை
முகம் கழுவி வெளிக்கிடுங்கோ!"
'ஐயா, அம்மாவையும் கூட் டி க் கொண் டு போவமே?..”*
அஓம்! எல்லாரும்தான் வெளிக்கிடுங்கோ' ஜெயந்தன் துள்ளிக்கொண்டு ஓடினன். அம்மாவும் சேர்ந்து வரப்போவதில் இரட்டிப்பு சந்தோஷம்.
இன்றைக்கு வெள்ளிக்கிழமையானபடியால் வசதி யாகப் போய்விட்டது. புதுவருடப் பிறப்போடு வந்த தால் கூடிய நாட்கள் லீவு எடுத்தேன். கூடிய செல வும் ஏற்பட்டுவிட்டது.
 
 

m57
நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டுதான் இன்று கோயிலுக்குப் போகலாம் எனப் பிரகடனப்படுத்தி
னேன். அதுதான் தற்போதைக்கு மலிவான பொழுது போக்கு
"அவனுக்கென்ன உத்தியோககாரன்" என்று ஊருக் குள்ளே பெயர். உத்தியோக காறனுடைய பொட்டுக் கேடுகளை உடைத்தாற்தானே தெரியும் ஒரு பெரு மூச்சு விட்டவாறு (அது என்னை யறியாமலே வெளிப் பட்டுவிட்டது-) நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
ஒழுங்கையில், தூரத்தில் யாரோ வருவதுதெரிந் தது. வீதியிலிருந்து இறங்கும் ஒழுங்கை நேரடியாக எங்கள் வீட்டுக்குத்தான் வந்துமுடிகிறது. இதனல் முற்றத்தில் நின்ருல் ஒழுங்கையில் வருபவர்களைக் காண (Մ)ւգսկմ).
வருவது யாராக இருக்கும் - "சிலவேளை என்னட் டைத்தான் ஆரேன் வருகினமோ?’ என எண்ணிய வாறே, "எட மாஸ்டர் கிழவன் போலையிருக்குது!" பார்த்துக்கொண்டிருந்தேன். தள்ளாடித் தள்ளாடி இப் படி ஒருபக்கம் கழுத்தையும் தலையையும் சரித்துக் கொண்டுதான் அவரும் நடப்பார் -"மாஸ்டர் கிழவன் தான்!"
* கிழவன் மத்தியானம் வந்திட்டுப் போனது” என்று கவிதா சொன்னது நினைவுக்கு வந்தது, "இப்ப என் னட்டைத்தான் வருகுது போலை!"
கிழவன் எங்களுக்குத் தூரத்து உறவுமுறை. தூரத்து" என்ருல் அம்மாவின் அப்பாவுடைய தம்பி யின். இப்படி பல சிக்கல்களை எடுக்கவேண்டும். முன்பு வர்த்தி உத்தியோகம் செய்தவர். அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களைப் பற்றிக் கிழவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 'அந்தக் காலத்து எட் டாம் வகுப்பு'ப் படிச்ச மனுசன். அதற்குப் பின்னர் இந்த அரசாங்கச் சட்டங்கள் வந்துதான் தனக்கு உத்தியோகம் இல்லாமற் போனதென்று "வாய் வாயாக" அடித்துக் கொள்ளும் கிழவன் மாஸ்டர் பட் டத்தைச் சுமப்பதற்கே இதுதான் காரணம்.

Page 33
- 58
மாஸ்டருடைய சரித்திரம் சோகமானது. அதை அடிக்கடி புலம்பி அவர் அங்கலாய்க்கின்ற விதம் அதை விடச் சோகமானது, “பதைக்கப் பதைக்க என்ரை ராசாத்தியைத் தின்னக்குடுத்தன். அது இருந்தால். இப்பிடி என்னை அலைக்கழிஞ்சு திரிய விடுமே. அவள் தான் கண்ணை மூடினள். மூத்தவன் ஆரோ ஒருத்தி யைக் கூட்டிக்கொண்டு ஒடினவன். ஒடினவன்தான். பெத்த தேப்பன் கிடந்து சாகுதெண்டு கவனிக்கிருனே. கையிலை மடியிலை இருந்ததைப் போட்டு பெட்டையை ஒருத்தன்ரை கையிலை பிடிச்சுக் குடுத்தன். ஒரு தகப்ப னெண்டு இருந்து இந்தக் கடமையாவது செய்யாட்டி ஊர் என்ன சொல்லும்?. நல்லாய் வைச்சிருக்கிரு னம். எண்டாப்போலை கையேந்திக் கொண்டு போகே லுமே. ஏதோ அதுகளாவது நல்லாயிருக்கட்டும்."
மாஸ்டர் கிழவன் என அழைக்கப்படும் இந்தக் கிழவன் முழுக் கிழமடைய முன்னரே எங்கள் வீட் டோடு வந்து விட்டார். தனிய இருந்து கஷ்டப்படுவா ரென ஐயாதான் தனது தோட்ட வே%லகளுக்கு ஒத் தாசையாக வைத்திருப்பதற்குக் கூட்டிவந்தார்.
கிழவனும் லேசுப்பட்ட ஆளில்லைத்தான்!மரவள்ளிக் கட்டைகள், மிளகாய்க்கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல், புல்லுச் செருக்குதல், மிளகாய்ப்பழம் பிடுங்கி பதமா கக் காயவைத்துப் பக்குவப்படுத்தல் போன்ற வேலை களை அலுக்காமல் செய்யும். 'அந்தக்காலத்துச் சாப்
பாட்டிலை வளர்ந்த உடம்பெல்லோ தம்பி!' எனஅடிக்
கடி பெருமையுடன் சொல்லாவிட்டால் கிழவனுக்கு வேலையும் ஒடாது,
ஏழோ எட்டு வருடங்களுக்குப் பின்னர் கிழவ னுக்கு வேலை ஒடாமற் தான் போய்விட்டது. வேளைக்கு வேளை சாப்பிட்டுவிட்டு ஒரு மூலையில் 'சிவனே’ என்று விழுந்து படுத்துவிடும்.
நான் மணமுடித்து வந்தபொழுது கிழவனையும் என்னேடு கூட்டி வந்துவிட்டேன். இதனுல் பெற்றே ருக்கு ஒரு பாரம் குறையும் என்பது மாத்திரமல்ல, கிழ
வன் மேல் எனக்கு மாருத பற்று ஏற்பட்டிருந்ததும்.
தான் காரணம். இரண்டு வருடங்களுக்கு மேல் நான்

-59 -
கிழவனை ஆதரித்து வந்தேன். பின்னர் மெதுவாக என் தர்மபத்தினியின் நச்சரிப்புத் தொடங்கியது. துாரத்து முறையிலோ அல்லது நெருங்கிய விதமாகவோ என் மனைவியின் உறவுக்காரணுய் இல்லாமற் போய்விட்டது கிழவனின் துரதிர்ஷ்டம்,
என் சீவியம் முழுதும் அவளுடன் ஒத்து வாழ்வேன் என்று கையெழுத்துப் போட்டவன் நான், பத்தினி யின் சொல்ஃப்க் கேட்காவிட்டால் பத்தினி பத்ரகாளி யாக மாறவும் கூடும். எந்தக் குடும்பத்திற்தான் இது நடக்காத சங்கதி? என் குடும்பத்தில் ஆரம்பிக்கு முன் னரே நான் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டுமே? அப்படியொரு தந்திரத்தைக் கையாண்டு கிழவனிடம் "சிம்பிளாக" விஷயத்தை அவிட்டேன்.
கிழவனுக்குப் புரிந்துவிட்டது. ரோசக்கார மனு சன் , போய்விட்டது.
* தம்பி!...”*
"ஒம்1. மாஸ்டரே. வாங்கோ. வாருங்கேர்.
இதிலை. இஞ்சாலை இருங்கோ’ முகஸ்துதி.
கிழவன் நான் காட்டிய திண்ணைக் குந்தில் அமர்ந்து கொண்டது.
"என்ன மாஸ்டர்?. கனகாலத்துப் பிறகு இந்தப் பக்கம்?. சுகமாயிருக்கிறியளே?' சம்பிரதாயம்.
"ஒம் ராசா. சுகத்துக்கு என்ன குறை?. கன காலமாய் தம்பியைக் காணயில்லை. பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தனுன்.”
எனக்கு ‘திக்கென்றது. அந்தப் "பார்த்துவிட்டுப் போவது" என்பதற்கு ஒரு தனி அர்த்தம் இருப்பதாக மனதிற்பட்டது. வருவாய் இல்லாத கிழவன். போகும் பொழுது சும்மா விடலாமா? கையில் ஏதாவது கொடுத்துத்தானே அனுப்ப வேண்டும்? கிழவனும் அந்த நோக்கத்தோடுதான் வந்திருக்கும். எனது நிலை மையேர் படுமோசம் 'இந்தக் கிழவனும் இந்த நேர மாய் வந்து நிக்குதே!’

Page 34
-60
'மத்தியானம் வந்தனன். தம்பி எங்கையோ போட்டுதெண்டு பிள்ளை சொன்னவள். இருந்து பாத் தன். காணயில்லை. பிள்ளை சாப்பாடும் தந்துதான் அனுப்பினவள்."
-போன கிழவன் அப்பிடியே துலையவேண்டியது தானே? ஏன் திரும்ப வந்து கழுத்தை அறுக்குது? என் னைப் பார்க்க வேண்டுமென்று அவ்வளவு கரிசனையோ?. ஏதாவது "சுருட்டிக்" கொண்டு போகலாமென்றுதான் வந்திருக்கும்.
"ஒருக்கால் என்ரை மோளையும் பாக்கவேணு மெண்டு ஆசையாயிருந்திது. அதுதான் தின்னவேலிப் பக்கம் போட்டுவாறன். கடவுளேயெண்டு நல்லாயிருக் கிருள். ஒரு பிள்ளையும் பெத்து. அங்கை. அதுநடக் கவும் தொடங்கியிட்டுது!"
-கிழவனுக்கு நான் குடுக்காததாலை குறைவா? முன்பு என்னேடிருந்தபொழுது சாப்பாடும் போட்டு அவ்வப்போது கைச்சிலவுக்கும் கொடுத்திருக்கிறேன்.
கிழவன் சுருட்டுக் குடிக்கும், வெத்திலை பர்க்கு -எப்படியாவது கொடுப்பதென்ருல் ஒருபத்து ரூபாயா வது கொடுக்க வேண்டாமா? கன நாளைக்குப் பிறகு கண்டிருக்கிறேன்.
"..என்ன தம்பி ஏதோ யோசினையிலை இருக்கு மாப் போலையிருக்கு?."
எனது பஞ்சப்பாட்டில், கிழவனேடு கதைப்பதற்கே மறந்து போயிருந்தவன் ஒரு சமாளிப்புச் சிரிப்புடன் கதைக்கிறேன்.
"ஒம் மாஸ்டர்1. தெரியாதே. உங்களைக் கண்ட வுடன. பழைய ஞாபகங்கள் வந்திட்டுது. இப்ப எப்பிடி மாஸ்டர் உங்கடை பாடு?. மகனிட்டைப் போறனிங்களே..?
"அவனிட்டை ஆர் தம்பி போறது?. உதவாக் கரை, அவையிவையளைப் பிடிச்சு இப்ப இந்த வயோதி பர் மடத்திலை சேர்ந்திருக்கிறேன்."

s
- 6 -
என் மனதில் அரும்பும் அனுதாபம்.
"அங்கை, எப்பிடி வசதியே?’’
'கடவுளேயெண்டு ஒரு குறையுமில்லைத்தம்பி அந்தந்த நேரத்துக்குச் சாப்பாடு தருவினம். இனி அயலட்டை யிலே உள்ள சனங்கள் இடியப்பம் கிடியப்பம் கொண்டு
வந்து விக்குங்கள். வாய்க்கு வப்புத் தேவையெண்டால்
அதிலே இடைதரம் வேண்டிச் சாப்பிடலாம்"
"அதுக்குக் கையிலை காசுமெல்லே இருக்க வேணும்.? -நாைெரு சுத்த மடையன் கேட்கக் கூடாத கேள்வி யைக் கேட்டுவிட்டேன்.
'ஓம் தம்பி!. இப்பிடித்தான் எங்கி%னயாவது வெளிக் கிட்டால், தெரிஞ்ச சனம் ரெண்டொரு ரூபாயைத் தருங்கள்." கிழவனும் சொல்ல வேண்டிய பதிலைச் சொல்லிவிட்டது.
சம்பள முற்பணம், பண்டிகைக்கால முற்பணம் எல் லாம் எடுத்து, ஏதாவது அவசரம் வந்தாலுமென்று அதற்கு மேலாகவும் ஒரு நூறு ரூபா ருேளடித்துக் கொண்டுதான் வந்திருந்தேன் . இந்த எட்டு நாட்களில் அது போன வழி தெரியாது. 'பொக்கெற்"டில் இருப் பது இப்பொழுது இரண்டே இரண்டு ரூபாய்தான். அதை நம்பித்தான் கோவிலுக்குப் போகின்ற "பிளானை' யே போட்டேன். பிள்ளைகளுடன் போவதால் இனிப் பைக் கடலையை வேண்டிக் கொடுக்காமல் வரமுடி
til i forgy.
கிழவனுக்குக் கொடுக்காமலும் விடலாம். எனது கெளர வம்? “உத்தியோககாறன் வந்து நிற்கிருன்?" என்ற எண்ணத்தில் கிழவன் வந்து நிற்கிறது. நான் கையை விரித்தால் நம்புமா? எப்படிச் சொல்லிப் புரியவைக் கலாம்? பேசாமல் அந்தக் கதையை எடுக்காமலே கடத்தி விடலாம் - கிழவன் என்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைக்கும்?
*தம்பியின்ரை பாடு எப்பிடி?. இப்பவும் கொழும் பிலைதானே ராசா?. கொப்பரிட்டைப் போறனியே?.

Page 35
அவனும் பாவம் இனி ஏலாது. நீங்கள் தானே. பிள்ளையஸ் கவனிக்க வேணும்?"
"பெரிய கஷ்டம்தான் மாஸ்டர் என்ன செய்கி றது? இது முந்தின காலமே? சாமான்கள் விக்கிறவிலே யிலை. மனிசன் சீவிக்கேலுமே?"
"ஒமெண்டுறன்! ரெண்டு சதம் வித்த சீ6ரி இப்ப என்ன விலை விக்கிருங்கள்!. முந்தியெண்டால் எங் கடை காலத்திலை. பத்து ரூபாவை வைச்சுக்கொண்டு ஒரு மாதத்துக்கு ஒரு குடும்பம் சீவிக்கலாம்.'
-பத்து ரூபாயென்றதும்தான் நினைவுக்கு வருகி றது. நாளைக்கு ஏதாவது "மச்சத்தைக் கிச்சத்தை" வேண்டலாமென ஒரு பத்து ரூபாவை "பொத்திப் பொத்தி வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொடுத் தாலென்ன?
அதற்கும் மனமிசையவில்லை. நாளை மறுதினம் நான் பயணமாவதால் நாளைக்கு இந்த "ஸ்பெசல் "- அதையும் கிழவனிடம் தாரை வார்த்துவிட்டு என்ன செய்வது? செல்வராசனிடம் இருபது ரூபாய் கைமாற் றுக் கேட்டிருந்தேன் - பயணச் செலவுக்கு அவனும் நாளைக்குப் பின்னேரம் தான்கொண்டுவந்து தருவதா
கக் கூறினன். அல்லது அவனிடமாவது கொஞ்சம்
கூடக் கேட்டுப் பார்க்கலாம்.
'தம்பி எப்ப பயணம்?"
""நாளையிண்டைக்கு மாஸ்டர். அதுகும் இஞ்சை கொண்டு வந்த காசையெல்லாம் சிலவளிச்சுப் போட்டு வெறுங்கையோடை நிக்கிறன். இனிப் போறதுக்கு ஆற்ரை கையை ஏந்திறதெண்டுதான் தெரியவில்லை."
மெதுவாக எனது துடுப்பை இறக்குகிறேன்.
“வந்துவந்து போறது கஷ்டமெண்டால் பிள்ளையை
யும் அங்கை கூட்டிக்கொண்டு போகலாம் தானே தம்பி???

--......... 63 س.........ہ
"எங்கை மாஸ்டர் வீடு கிடைக்குது? . அதுசரி. நீங் கள் விடியத்தானே போறியள்?. நான் உதிலையொருக் கால் கோயிலடிக்குப் போட்டு வரப்போறன் ."
'இல்லைத்தம்பி. என்ரை மகள் வந்துஇண்டைக்கு தன்னுேடை நிண்டிட்டுப் போகச் சொன்னவள். நாளைக்கு நான் மடத்துக்குப் போயிடவேணும்."
-நாளைக்குக் காலைவரையாவது பிரச்சனையை ஒத் திப் போடலாமென்று பார்த்தேன். அந்த எண்ணமும் காலைவாரிவிட்டது.
".அதுகும் பெரிய கஷ்டப்பட்டுத்தான் தம்பி சேர்ந்தது. அவங்கடை நூளின்படி நடக்கவுமெல்லே வேணும்?. கோப்பாயிலை ஒரு ஆளைப் பிடிச்சு. பிறகு ஒரு டாக்குத்தரிட்டைப் போய் . இவராலே இனி வேலை செய்யேலாது" எண்டு சேர்டிபிக்கட் எடுத்துக் குடுத்துத்தான் சேர்ந்தது.”*
- 'பொக்கெற்றில் இருக்கின்ற இரண்டு ரூபா
வைக் குடுக்கலாம் என்னடா இவன் இதுதான் தாரு?ன்"
என்று கிழவன் நினைக்கக்கூடும். அதைவிட கோவிலுக்கு
வருகின்ற பிள்ளைகளை ஏமாற்ற வேண்டிய சங்கடமும்
இருக்கிறது. வயிற்றுக்கு வஞ்சகம் செய்து அந்தப் பத்து ரூபாவை எடுக்கலாம். நாளைக்கு கவிதாவின்
முகத்தில் விழிக்க முடியாது.
சிலவேளை செலவுக்குக் கொடுத்த காசில் அவள் மிச்சம் பிடிச்சு வைச்சிருக்கக்கூடும், கேட்டுப் பார்க்க லாம்; " " கவிதா!"
*.வயோதிபர் மடத்திலை சேரிறதெண்டால் போலை லேசுப்பட்ட காரியமில்லைத் தம்பி. என்ரை பழைய கட்டிலொண்டும் ஒரு கதிரையும் மேசையும் மகள் வீட்டிலை இருந்தது. அதையெல்லாம் நாப்பத் தைந்து ரூபாய்க்கு வித்துத்தான் அலுவல் பாத்த ஞன்."
கிழவனுடைய நிலைமை பெரிய பரிதாபமாகத் தோன்றியது. நான் வீட்டைவிட்டு அனுப்பியபடியாற்
தானே இவ்வளவு கஷ்டமும் பட்டிருக்கிறதென்ற கவலை

Page 36
is 64
யின் அரிப்பு மனதில். அதற்குப் பிராயச்சித்தமாக: நிறைய ஏதாவது கொடுக்கலாமென்ருலும் முடிய வில்லை. வருஷப்பிறப்போடு வந்த மனிசனை வெறுங் கையோடு அனுப்பலாமா?
"கூப்பிட்டனீங்களே?". என்றவாறு கவிதா வந் தாள்.
*உன்னட்டை ஏதாவது காசு இருக்குதே கவிதா?.
** என்6ாட்டை ஏது?. காலமை நாலுரூபா இருந்து நீங்கள்தானே வேண்டினனிங்கள். இப்ப ஒரு அம்பே சம் இருக்குது. கற்பூரம் கொழுத்தலாமெண்டு வைச் சிருக்கிறன் -"
கிழவன் எழுந்து போகவில்லை
* "எங்கை பிள்ளை. எங்கையோ வெளிக்கிடுமாப் போலை இருக்குது?"
"ஒமப்பு உதிலை நல்லூரடிக்குப் போட்டு வரப் போறம்."
"ஐயா! கெதியிலை வாங்கோவன் போக!' இது ஜெயந்தன்.
"ஒம். இஞ்சை அப்புவோடை கதைச்சுப்போட் டுப் போவம்.
அதுகளுக்கென்ன தெரியும் மாஸ்டர்? இஞ்சை வா அங்கை வா. எண்டு கத்துங்கள். எங்கடை கஷ்டம் விளங்கப் போகுதே.?
'கவிதா!. மாஸ்டருக்குத் தேத்தண்ணி கொண்டு வrவன்! "
"ஏன் தம்பி இப்ப?. பிள்ளையின்ரை அவசரத் துக்குள்ளை.'
**வருஷத்தோடை மனிசியின்ரை ஆக்கள் வந்து நிண்டினம். பின்னத் தெரியாதே? வந்தவைய8
 
 

سس-65 ہے۔
ரெண்டு படமும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டி னது. சமையல் அது இதெண்டு பெரிய செலவுதான்'
** @! 196డి7. இனசனமெண்டால் சிலவைப் பார்க்கேலுமே?. நான்தான் தனிக்கட்டையாய்ப் போய் ஒருத்தரும் வேண்டாமெண்டிட்டுக் கிடக் கிறன்."
ச போனமுறை வந்து நிக்கயிக்கை இவன் ஜெயந் தனுக்குச் சரியான காய்ச்சலாப் போச்சு" கடைக்கா றக் கந்தசாமியிட்டைதான் அம்பது ரூபா மாறினன். இந்தமுறை வந்தவுடனே அதைக் குடுத்திட்டுத்தான் மற்றவேலை பார்த்தது.”
ஓம் தம்பி இல்லாட்டி அயலட்டையிலே மரியா தையே?. வேண்டினதைக் குடுத் தாத்தான் பேந்தும் அந்தரமாபத்துக்கு வேண்டலாம்.'
**.மணிசிக்கும் இந்தமுறை வருஷப்பிறப்புக்குச் சீலை. எடுத்துத் தரயில்லையெண்டு மன்னதான். நான் என்ன மாஸ்டர் செய்யிறது?. எங்கையேன் கொள்ளைக் குத்தான் போகவேணும்.”
மாஸ்டர் வீசுகின்ற பந்தை நான் சாதுரியமாகத் தடுத்து விளையாடிக் கொண்டு நின்றேன்.
*.அதுக்காக?. பேசாமல் விடுறதே தம்பி?. இப்படியொரு நல்லநாள் பெருநாளிலேதானே அதுக ளும் ஆசையோடை கேட்கிறது.' கிழவன் என் மனை விக்காகப் பரிவுகொண்டது.
'இந்தாங்கோ அப்பு தேத்தண்ணி!"
"ஏன் பிள்ளை?. சீனி இந்த விலை விக்கயிக்கை சும்மா சும்மா தேத்தண்ணியைக் குடிப்பான்.'
"எங்கை சீனி கிடைக்குது. பணங்கட்டியோடை தான் குடியுங்கோ!'
"ஐயா!. கெதியிலை வாங்கோவன்." அடம்பிடிக் கும் குழந்தைகள்,

Page 37
--- 66 س--
"ஒமடா! கத்தாமல் இரு அப்பு போஞப் பிறகு போவம். நீ இப்ப கோயிலுக்குப் போற கரிசனையி லையே கத்துருய்? ஏதேன் சொட்டைத் தீன் தின்ன வெல்லோ!. அதுக்கும் இஞ்சை என்னட்டை ஏது காசு?." கிழவனுக்கும் கேட்கக் கூடியதாக சற்று உரக்கவே ஜெயந்தனை ஏசுகிறேன்.
கிழவன் தேனீரை உறிஞ்சத்தொடங்கியதும் கவிதா வைக் கண்ணற் சாடைகாட்டி அறையினுள் அழைத் துச் சென்று,
"இப்ப மனுசனுக்கு ஏதாவது குடுத்துவிட வெல்லே வேணும்?. அந்தப் பத்து ரூபாவை எடுத்துக் குடுப்பமே?*
"உங்களுக்கென்ன விசரே?. ஒண்டையும் யோசிக் காமல் தூக்கி நீட்டுங்கோ! பெரிய கை1 பிறகு நாளைக் குக் கிடந்து வத்துங்கோ போனலும் நல்ல சாப்பாடு இல்லாமற் கிடந்து காயுறது. இஞ்கை நிக்கயிக்கை யெண் டாலும் ஏதும் நல்லதாய்ச் சாப்பிட வேண் டாமே? கிழவன் மத்தியானம் சோறு சாப்பிட்டது தானே? போதும்1. பேசாமல் விடுங்கோ!'
கட்டளை பிறந்து விட்டது. வெளியே வந்தேன். ஜெயந்தனுடன் கதைத்துக் கொண்டிருந்த கிழவன்
என்னைக் கண்டதும்,
**அப்ப. பிள்ளையஞக்குக் கோயிலுக்கு நேரம் போயிடும். வேளைக்குக் கூட்டிக்கொண்டு போ ராசா!. என்றவாறே எழுந்தது.
"ஒம்! மாஸ்டர் போவம்' நான் அலுத்துக் கொண்டேன்.
இதென்ன தர்மசங்கடம்? கிழவன் இன்னும் போகா மல். நின்று வேட்டியை சரிசெய்து கட்டுவது போல, நேரத்தைக் கடத்துகிறதே!
இடுப்பினுள் செருகியிருந்த வேட்டித் தலைப்பை இழுத்து. மடியினுள் வைத்திருந்த எதையோ கசங் கிப் போயிருந்த இரு இரண்டு ரூபாத்தாள்களை எடுத்து

سسه 67 سم
மிகக் கவனமாகத் தன் நடுங்குகின்ற கரத்தில்ை விரித்து அதை ஜெயந்தனுடைய கையினுட் திணித்த வாறே. என்னைப் பார்த்து,
'தம்பி. பிள்ளையஞக்கு ஏதாவது வேண்டிக்குடு ராசா. அதுகளுக்கு எங்கடை கஷ்டம் தெரியுமே?” என்ற பொழுது ஏனுே அவருடைய கண்கள் கலங் கின.
s
**மாஸ்டர் இதென்ன?..' என்று மாத்திரம் கேட்டேன். எனது வாய் அடைத்துப் போய்விட்டது. ஆஞல் எனது கண்ணிரை அடைக்க முடியவில்லை.
வீரகேசரி: 9-4-78

Page 38
一6°一
パ
 
 

உதிரிகள் அல்ல
سے 69 ساس۔
தொழிற்சாலையின் கஷ்டமான பகுதிகளிலெல்லாம் அவர்கள் வேலை செய்யவேண்டும். இயந்திரங்களின் காதைச் செவிடாக்குகின்ற இரைச்சல், காற்று வாரி யிறைக்கின்ற புழுதி, கடும்வெயில், மழை, பனி எல் லாம் அவர்களுக்குப் பழகிப்போய்விட்ட சங்கதி.
தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது எங்காவது ஒரு இயந்திரத்தில் கோ6ாாறு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாகப் பிரசன்னமாகி திருத்தவேலே களை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களின் மிகச் ஒறிய உதிரிப்பாகமொன்று பழுதடைந்தாலும் அல்லது கழன்று போய்விட்டால் அவ்வியந்திரமும் அதனல் அத் தொழிற்சாலையும் நின்றுவிடும். உற்பத்தியைப் பாதிக் காதவாறு எந்த ஒரு திருத்தவேலைகளையும் சீக்கிரமா கச் செய்துமுடிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அவர்களது உதிரங்களோடு கலந்திருக்கிறது. தங்களுக் குச் சோறுபோட்டு வாழவைக்கிற தெய்வமாக அத் தொழிலகத்தைக் கருதி அத்தனை விசுவாசமாக உழைத் தார்கள்.
அப்புலிங்கம் ஒரு நோஞ்சான், மெலிந்த உடம்புக் காரன். சாதாரணமான வேளைகளில் அவ்வளவு உற் சாகமாகக் காணப்படமாட்டான். நூற்றுச்சொச்ச மைல்களுக்கு அப்பாலிருக்கும் பெண்சாதி பிள்ளைகளின் நினைவுதான் இப்படி மனதைப் பாதிக்கிற காரணம்? ஆனல் வேலையென்று வந்துவிட்டால் பெரியதுணிச்சல் வந்துவிடும். சகல பிரச்சனைகளையும் மறந்து வேலையில் ஒன்றிப் போய் விடுவான். உயரமானதொரு ஏணியில் நின்று சர்க்கஸ் புரிபவனைப் போல வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு என்ன நேர்ந்ததோ. "தொப்" பென்று விழுந்துவிட்டான்.

Page 39
-70
கூட வேலைசெய்து கொண்டிருந்த பியரத்ன பதறிப் போஞன். ஏணியைப் பிடித்திருந்த சுனில் அதை அப் படியே ஒரு பக்கம் போட்டுவிட்டு ஓடிவந்தான். "அப்பு. அப்பு " என அழைத்தவாறு அப்புலிங்கத்தின் முகத்தைத் திருப்பிப் பார்த்தார்கள். அப்டி பேசாமல் சுருண்டு போய்க் கிடந்தான். கண்கள் மூடிக் கிடந்தன. வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த மற்றைய தொழி லாளர்களும் அண்மையில் ஓடிவந்து குழுமினர்கள்.
சுனில், ஒரு வாகனத்தைக் கொண்டு வருவதற் காக தொழிற்சாலையின் போக்குவரத்துப் பகுதிக்குக் குடல் தெறிக்க ஓடினன். ஒடுகின்ற பொழுது கார ணத்தைக் கேட்பவர்களிடமெல்லாம் ஒரிரு வார்த்தை களில் விஷயத்தைச் சொல்லிக் கொண்டு போனன். அதைக் கேட்டவர்களும் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஒட, அதைப் பார்த்து இன்னும் பலர் ஓடிவர, சற்றுநேரத்தில் பெரிய கூட்டமே கூடிக் கொண்டிருந் திது.
பாத்திரமொன்றில் தண்ணீர் கொண்டுவந்து அப்புலிங்கத்தின் முகத்திலே தெளித்தார்கள். பிய ரத்னவும் இன்னெருவருமாகச் சேர்ந்து அவனை அரை த்துத் தூக்கிஞர்கள். அப்பொழுது அப்பு கண்விழித்து எல்லோரையும் புதினமாகப் பார்த்தான். பெரிய அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவன் போலத் தெரிந்தது. இருபக்கமும் அணைத்தவாறு அவனை நிறுத் தினர்கள். அவன் நிற்க முடியாதவனுய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சோர்ந்தான்.
குழுமி நின்று அவனை எட்டி எட்டிப் பார்ப்பவர் க%ள் இன்ஞெருவன் ஏசி விலக்கினன்- காற்றுப்பட் டால் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். பொதுவாக எல்லோருமே அவனுக்காக அனுதாபப் பட்டுக் கதைத்தார்கள்-"பாவம், அருமையான பெடி பன்? சிலர் அவனது நெருக்கமான நண்பர்களிடம் அவன் தனிஆளா அல்லது குடும்பஸ்த்தணு என விசா ரித்தார்கள் - இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பணுகவும் இருப்பதாகப் பதில் வந்தது,

-71
இன்னேர் இயந்திரத்தைப் பரீட்சித்துக் கொண் டிருந்த இவர்களது அதிகாரிக்குச் செய்தி எட்டியதும் அதிர்ச்சியடைந்தார். அவருக்கு, அப்புலிங்கம் விபத் தில் மாட்டிக்கொண்டது ஒரு கவலை. அது இனித் தன்னையும் ஒரு பிரச்சனையில் மாட்டப்போவது இன் னெரு கவலை,
அத்தொழிலாளி வேலைசெய்யும் பொழுது தற் காப்பு வசதிகள் வழங்கப்பட்டிருந்தனவா, அவனுக் குரிய வேலையைத்தான் செய்யுமாறு பணிக்கப்பட்டிருந் தான) என்பது பற்றியெல்லாம் இனிமேற்தான் மேலதி ாரிகள் அக்கறைப்படப் போ கிருர்கள். அந்த அக்கறை கூட விசாரணைகளிலிருந்து தங்கள் தங்களைக் காப்பாற் றிக் கொள்கிற முயற்சிதான். தொழிலாளர்களின் தேவைகளைப்பற்றி எவ்வளவு வற்புறுத்திச் சொன்னு லும் சிரத்தை கொள்ளாமல் சந்தர்ப்பத்திற்கேற்ற வாறு பேசி தங்களது தேவைகளைச் சாதித்துக்கொண்டு போகிற மேலதிகாரிகள், இது போன்ற சந்தர்ப்பங்க ளிலும் இரண்டும்கெட்டான் நிலையிலுள்ள நடுத்தர அலுவலர்களின் தலையில் பழியைப் போட்டுவிட்டுத்
தப்பித்துக் கொள்வார்கள்.
"தலைவிதி" என முணுமுணுத்தவாறு அவர் விபத்து நடந்த இடத்துக்கு ஓடினர். ‘என்ன?. என்ன நடந் தது?" எனப் பதட்டம் அடங்காதவராய் கேட்டார். சிவா மஹாத்தயாவைக் கண்டதும் பியரத்னவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. விஷயத்தைக் கூறமுடியாமல் நாத் தழுதழுத்தது. சகோதரனைப் பறி கொடுக்கப் போகின்ற நேரத்தில் தந்தையைக் கண்ட மகனைப்போல உணர்ச்சி வசப்பட்டான்.
சிவாவின் தொழிலாளர்கள் அவர்மேல் நிறைய மரியாதை வைத்திருந்தார்கள். தொழிற்சாலையில் இப் படி ஒர் அதிகாரி வந்து கிடைப்பதே அபூர்வம்தொழிலாளரது பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களது நலனில் அக்கறைப்படவும், அவர்களோடு

Page 40
سس-72--
சுகதுக்கங்களில் கலந்து கொள்ளவும் யாருக்குத்தான் மனசு வருகிறது?
அதிகாரிகள் என்ருல் தொழிலாளர்களின் வசதி யீனங்களைக் கருதாமல் அவர்களிடம் சக்திக்கு மேற் பட்ட வேலை வாங்குவதையே கண்ணுகக் கொண்டு மேலிடத்தில் நல்ல பெயர்களைச் சம்பாதித்துக் கொள் பவர்கள் என இவர்கள் அர்த்தம் கொண்டிருந்தார்
56T.
இயந்திரங்களில் பெரிய திருத்தவேலைகள் நடக்கும் பொழுது மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். இப்படி இரவுபகலாக தொடர்ச்சியாக வேலை செய்தாலும் இடையில் குளிப் பதற்கோ, உறங்குவதற்கோ சந்தர்ப்டம் கிடைப்ப தில்லை. பெண்சாதி பிள்ளைகளுக்கு ஒரு வருத்தம், துன் பம், அவசரம் என்ருற்கூட விட்டுவிலக முடியாது.
தங்களுக்குப் பணியாத தொழிலாளர்களைப் பற்றி யும் போட்டி மனப்பான்மையில்ை சக அலுவலர்களைப் பற்றியும் மேலிடத்துக்கு இல்லாதது பொல்லாததுகளை முறையிட்டுக் குழிபறிக்கின்றசெயல் பலருக்குக் கைவந்த கலையாயிருந்தது. தொழிற்சாலையின் முன்னேற்றத்தி லும் உற்பத்திப் பெருக்கிலும் அக்கறையுள்ளவர்கள் போல "நடிக்கின்ற" அவர்களுக்கு "அக்ட்டிங் புறமோ சன்"கள் கிடைக்கும். பதவி உயர்வுக்குத் தேவையான ஆகக்குறைந்த தகுதியேனும் இல்லாவிட்டாலும் அவர் கள் சம்பாதித்து வைத்திருக்கிற "நல்ல பெயர்கள்
பெரிய தகுதியாகக் கருதப்பட்டன. தொழிலாளர்கள்
மாடாக உழைத்தபொழுது அந்த அதிகாரிகளுக்கு சம் பள உயர்வுகளும், பதவி உயர்வுகளும் வழங்கப்பட் டன. தொழிலாளர்களது உழைப்பைச் சுரண்டித் தாங் கள் உயர்ச்சியடைகின்ற சுகத்துக்காக இவர்களை மணி தாபிமானமற்ற முறையில் நடத்துவதை சாதாரண மாகக் கருதினர்கள்.
எவ்வித பொருளாதார அடிப்படையும் இல்லாத இவ் ஏழைத் தொழிலாளர்கள், மாதாந்த சம்பளத்தை
மாத்திரம் நம்பியே சீவிக்க வேண்டியிருந்ததால் தங்
களது குடும்பப் பொறுப்புக்களை நினைத்துக் கொண்டு

-73
அடங்கிப் போனது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.
சுனிலின் அவசரத்தை உணராததுபோல "அம்பு லன்ஸ்" இயங்க மறுத்தது. சாரதி, பெரும் முயற்சி யின் பின்னர் ஓடாது' எனக் கையை விரித்தான். இதுபோன்ற அவசர சந்தர்ப்பங்களிற் கிடைக்கின்ற வழக்கமான பதில்தான். வருடம் முழுதும் திருத்த வேலைகளை மேற்கொண்டாலும் வருத்தம் தீராத புராண காலத்து வண்டி அது. இப்பாரிய தொழிற்சாலையின் அதிகரிக்கின்ற உற்பத்தியைக் காட்டி, மேலிடத்தி லிருந்து ஒவ்வோர் உயர் அதிகாரிகளுக்கும், புதிய வாக னங்களைத் தருவிக்கின்ற நிர்வாகம், ஏன் இன்னும் ஒர் அம்புலன்ஸ் வண்டியைப் புதிதாக வேண்டவில்லை? மூச்! அதைப்பற்றி யாருமே பேசக்கூடாது.
விபத்து நடந்த இடத்துக்கு வேருெரு வாகனத் தைக் கொண்டு வந்தார்கள். பியரத்ன பின் இருக்கை யில் ஏறி இருக்க அப்புலிங்கத்தை அவனது மடியிற் கிடத்தினர்கள். பெரிய பிரயத்த6எப்பட்டு அப்புவின் கால்களை மடக்கிவைத்துக் கதவை மூடினர்கள். சிவா மஹாத்தயாவும், சுனிலும் முன் இருக்கையில் ஏறிக் கொண்டதும் வாகனம் விரைந்தது. சம்பிரதாயப்படி தொழிற்சாலையின் வைத்திய நிலையத்திற்கு முதலில் அப்புலிங்கம் கொண்டு செல்லப்பட்டர்ன் இப்பொழுது இருவரின் கைத்தாங்கலில் அவனுல் நடக்க முடிந்தது. வைத்திய நிலையத்தினுள்ளிருந்த கட்டிலில் அவனைப் படுக்க வைத்தார்கள். வைத்திய அலுவலர் சோதனை செய்தார். வெளிக்காயங்கள் ஒன்றும் இல்லை. உட் காயங்களைப்பற்றி அறியும் ஆற்றல் அவருக்கு இல்லை. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. துண்டு தருகிறேன். அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதியுங்கள். இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்" எனத்தனது வழமை யான பணியை முடித்தருளினர். அவனைக் கொண்டு போய் ஆஸ்ப்பத்திரியிற் போடுவதோடு தொழிற்சாலை நிர்வாகத்தின் பணியும் முடிந்துவிடும்.
அப்புலிங்கத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்தவாறு வாகனத்துக்குக் கொண்டு வந்தார்கள். வாகனம் நக ரத்துக்குப் போவதில் வைத்திய அலுவலருக்கும் ஒரு

Page 41
-- 7 4 --
சந்தோஷம் காத்திருந்தது - அவரது வாகனத்துக்குப் பெற்ருேல் தேவை. போகின்ற பொழுது தனது விடுதிக் குப் போய் பெற்ருேல் கல%ன எடுத்துச் சென்று நக ரத்திலிருந்து ஒரு கலன் பெற்ருேல் வேண்டிவருமாறு சாரதியிடம் பணித்தார். பன்னிரண்டு மைல்களுக்கு அப்பாலுள்ள நகரத்துக்கு, பெற்ருேலுக்காக சொந்த வாகனத்திற் போய்வருவது கட்டுப்படியாகாத விஷ
அப்புலிங்கத்தை வாகனத்துள் ஏற்று கி ன் ற பொழுது அவன் மீண்டும் மயக்கமடைந்தான். உயரத் திலிருந்து விழுந்த ஒருவனை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் பொழுது படுக்கவைத்துக் கொண்டு செல் லும் வசதியுள்ள அம்புலன்ஸ் போன்ற வாகனங்களைத் தான்பாவிக்க வேண்டுமென தொழிலாளர் பிரச்சனைகள் பற்றி கருத்தரங்கு நடத்திய தொழிற்சாலைப் பரிசோத கர் முன்னர் கூறியது சிவாவிற்கு நினைவு வந்தது. அதை இப்பொழுது சொன்னல் யார் கான் கவலைப்படப்
போகிருர்கள்? இருக்கின்ற வாகனத்தையாவது நேர
காலத்துக்குவிடலாமென்ருல் ஆயிரம் தொல்லைகள்பாதுகாப்பு அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒடி வந்து நியாயம் கதைத்தார் - விபத்தடைந்த நோயாளி யோடு சகதொழிலாளி வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதென தொழிற்சாலை நிர்வாகம் விதித்திருக் கின்றது. அதனுல் பியரத்னவை இறங்குமாறும் தங்களில் இருவர் துணைக்குச் செல்வதாகவும் கூறினர். பியரத் னவிற்கு கோபம் நெருப்பாகப்பற்றியது. " "உங்களுக்கும் நகரத்தில் ஏதோ அலுவல் இருப்பதாற்தான் இப்படிக் கரிசனைப் படுகிறீர்கள். அப்புலிங்கத்திற்கு என்ன நடந்தது எங்கே அடிபட்டது என வைத்தியர் விசா ரித்தால் என்ன பதிலைச் சொல்ல முடியும்? நிர்வாகத் தோடு கதைக்க எனக்குத் தெரியும்."என முகத்தில டித்ததுபோலக் கூறினன். பின்னர் 'நீ வாகனத்தை எடு!” என சாரதியோடு எரிந்து விழுந்தான்.
வாகனம் உறுமலெடுத்து நகர்ந்தது.
வைத்தியசாலையை அடைந்ததும் சுனிலும் பியர
த்னவும் அப்புலிங்கத்தை மிகவும் பக்குவமாக அணைத்து இறக்கினர்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களின் உதவி

-75
யுடன் தள்ளு வண்டியிற் கிடத்தி வைத்தியரிடம் கொண்டு சென்ழுர்கள்.
அப்புலிங்கம் "வார்ட்"டில் அனுமதிக்கப்பட்டான். அவrேச் சோதித்துப் பார்த்த வைத்தியர் உடனடி யாக சேலைன் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு ஒழுங்குகள் செய்தார். அவனேடு யாரும் தங்கிநிற்பதற்கு அனு மதி மறுக்கப்பட்டது.
பியரத்னவிற்கு மனசு கேட்கவில்லை. அறிமுகமான ஆஸ்பத்திரி ஊழியர்களின் உதவியுடன் அப்புவிற்குப் பணிவிடை செய்வதற்காக தங்களில் ஒருவர் நிற்பதற் குரிய அனுமதியைப் பெற்ருன் ,
சுனிலைத் தங்கவைத்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்றன். பியரத்ன வெந்நீர்போத்தல், தலையணை, பெற்சிற், சீனி போன்ற பொருட்களைக் கொண்டு வந் தான். மாலையில் வந்த சக தொழிலாளாகள் ஹோர் லிக்ஸ், பிஸ்கற், சிகரட் போன்றவற்றைக் கொண்டு வந்தனர். அப்புலிங்கத்தோடு யாரும் கதைக்க முடிய வில்லை. உறக்கத்திலிருந்தான். அவனுேடு கதைகொடுத் துக் குழம்பக்கூடாது என்பது வைத்தியரின் உத்தரவு என சுனில் மற்றவர்களுக்கு விளக்கினன்.
இரவு ஏழு மணியாகிவிட்டது. காலை பத்துமணிக்கு வந்த பயணம். தொழிற்சாலைக்குப் போகவேண்டும் என்ற உணர்வு அப்பொழுதுதான் பியரத்னவிற்குத் தோன்றியது. அங்கு என்னபாடோ தெரியாது. செய்த வேலையை போட்டது போட்டபடியே விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. சிவா மஹாத்யா வேறுயாரை யாவது அவ்வேலைக்கு ஒழுங்கு செய்திருப்பார். மாலை யில் அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனல் வரவில்லை. வந்திருந்தால் நிலைமையைக் கேட் டறிந்திருக்கலாம்.
சுனிலிடம் விஷயத்தைக் கூறிவிட்டு பியரத்ன தொழிற்சாலைக்குச் சென்றன். அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது,
வாசலிலேயே பார்த்திருந்த பாதுகாப்பு அதிகாரி இவனைத் தொழிற்சாலைப் பெரியவரிடம் கூட்டிச்

Page 42
சென்ருர், தொழிற்சாலையில் தொழிலாளரை சேர்ப்ப திலும் நிறுத்துவதிலும் மட்டும் பெரியவராகக் கணிக் கப்படும் அவர் நாயை விரட்டுவது போல இவனே ஏசினர் -"கெற் அவுட்".
அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டான்.
செய்துகொண்டிருந்த வேலையை அரைகுறையாக விட்டு யாருடைய அனுமதியுமின்றி வெளியே சென் றது குற்றம். தொழிற்சாலேயில் நடக்கும் மற்றைய சம்பவங்களோடு ஒப்பிடும் பொழுது இதுவும் ஒர் அற்பவிஷயம் தான். சிவா மஹாத்தயாவினுலும் சமா ளிக்கமுடியாத ஒரு நிலையாகப் போயிருக்கும் என அவனுல் நிச்சயமாக நம்பமுடிந்தது.
வெளியே வந்தான். உடலிலிருந்து தசைப்ப குதியைப் பிய்த்தெடுப்பது போன்ற வேதனைத்துடிப்பு. மனைவி, பிள்ளை குட்டிகள் - வைத்தியசாலை சுனில்? பாவம், அவனுக்கும் இந்தக் கதிதான? பிரக்ஞையற்ற நிலையிற் கிடக்கும் அப்புலிங்கம்.
பியரத்ன வைத்தியசாலையை நோக்கி நடக்கத் தொடங்கினன். தொழிற்சாலையில் அதிகாரத்தில் உள்ள வர்களின் சதிராட் டங்க ளி ல் வெளியேற்ற ப் பட்ட எத்தனையோ தொழிலாளர்களுள் ஒரு வகை தானும் சேர்க்கப்பட்டதில் ஒரு தெம்பு. அவர் களெல்லாம் இன்றைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லா
மலா இருக்கிருர்கள்? அவர்கள் தெரிந்து வைத்திருக்
கிறதொழில் - தெய்வம் போல மதிக்கிற தொழிலுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் சாப்பாடு போடுகிற சக்தி இருக்கிறது.
ஆணுல், இப்பாரிய தொழிற்சாலையின் முதுகெலும் பாக இருக்கின்ற தொழிலாளர்கள் வெளியேற்றட்படு வதால் தொழிற்சாலைக்கு ஏற்படுகின்ற இழப்பைப்பற்றி ார்தான் கவலைப்படப் போகிருர்கள் என நினைத்துக் கொண்டே நடந்தான்.
மல்லிகை 1979 ஒக்டோபர்.

நன்றியுள்ள மிருகங்கள்
----77س
... O

Page 43
நன்றியுள்ள மிருகங்கள்
--78حست
ஒரு நாய்க்காகக் கவலைப்படுகிறவன் யாராவது இந்த உலகத்தில் இருப்பான? இருப்பான். யார் அந் தப் பெரிய மனிசன்? நான்தான். (பெரிய மனிசன் தான், வயது ஐம்பத்தாறு, ஒய்வுபெற்ற உத்தியோ கத்தன்.) எனது கதைக்குப் பிறகு வரலாம். இப் பொழுது இந்த நாயைப் பற்றி! அதாவது இவ்விட் டில் அடியும் உதையும் பட்டுக்கொண்டு தனது வாழ்க் கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறதே, அந்த அற்ப சீவனைப்பற்றி,
இந்த நாயைக் குட்டியாக வீட்டிற்குக் கொண்டு வந்ததே நான்தான். அதை நான்கொண்டு வந்து சேர்த்தபொழுது பார்க்க வேண்டுமே வெள்ளையாக நல்ல சடைக்குட்டி. பார்த்தால். அப்படியே தூக்கிக் கொள்ளவேண்டும் போலிருக்கும். பிள்ளைகள் (எனது மருமக்கள்) ஒருவர் மாறி ஒருவராக அதைத் தாலாட்டு வார்கள். இரவில் அவர்களின் கட்டிலில் ஏறி அது சொகுசாக உறங்கும். அவ்வளவு செல்லமாக வளர்த்த குட்டி, இப்பொழுது பாவம், உடுக்கத் துணிகூட இல் லாத ஒரு வறிய நோயாளியைப் போலப் படுத்திருக் கிறது.
படுத்திருக்கிறதா? ஏதோ சத்தம். ஒ நாய்தான் குளறுகிறது. நன்ருக வேண்டிக் கட்டியிருக்கும் -அது தான் இந்தக் கத்தல் போடுகிறது.
*"உஞ்சு உஞ்சு!" கூப்பிட்டதும் ஒழுங்கான பிள்ளை யைப் போல ஓடிவந்து கட்டிலின் கீழ் சுருண்டு படுத்து விடுகிறது.
சாப்பாட்டு நேரமென்ருல் இப்படித்தான் அவர் களது வாயைப்பார்த்து வீணிர் வடித்துக் கொண்டிருக்

-79 -
கும். பிறகு என்ன? விறகுக் கட்டையால் குடுத்திருப் பார்கள். தொண்டை கிழியக் கத்தல் போட்டுவிட்டு தலையைப் பதித்து வாலை ஆட்டி மன்னிப்புக் கோரிய வாறு அங்கேயே படுத்திருக்கும். (வெட்கம் கெட்ட ஜென்மம்) ஆனல் அது மன்னிக்க முடியாத குற்றமா யிற்றே? பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து முகத்தில் ஊற்றியிருப்பார்கள். அல்லது நெருப்புக் கொள்ளியால் குறிவைத்திருப்பார்கள். இது, ஒரு காலைத் தூக்கி நொண்டியவாறே எனக்குக் கிட்ட ஒடி வரும் - முறைப்பாடு. நான் அதன் தலையைத் தடவிக் கொடுப்பேன். ஆறுதல் சொன்னதும் அப்படியே கட் டிலின் கீழ் படுத்துவிடும். சிலவேளைகளில் அடிபடுமுன் னரே இது காலைத் தூக்கிக் கொண்டு சாலத்துக்கு ஓடி வருவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.
சிறுவயதிலே படித்த ஒருநாயின் சுயசரிதை' நினை
விற்கு வருகிறது. (கவனியுங்கள். படித்திருக்கிறேன்!)
படிப்பென்ருல் ஐயாவுக்குத் தண்ணிபட்ட பாடு. அப் பொழுது பள்ளிக்கூடத்தையும் எங்கள் ஊரையும் ஒரு கலக்குக் கலக்கியவன் நான். ஆணுல் கலக்கத் தெரிந்த வர்களுக்குக் கதியில்லைப் போலும். எனது கல்வியை தொடரும் வாய்ப்பில்லாமல் அப்பு தலையைப் போட்ட சங்கதி அடுத்து வருகிறது.
அப்பு பிள்ளைகளைப் பெற்றுப்போட்டார். பொருள் பண்டத்தைச் சேமித்து வைக்கவில்லை. ஐந்து பெண் களைப் பெற்ருல் அரசனும் ஆண்டியாவானும், எங்கள் தரவளிக்கு இரண்டு போதாதா? அப்புவுக்கு ஆண்டி யாகிற பலன் கிடைக்கவில்லை. ஒருநாள் இருளப்போ கின்ற நேரத்தில் கண்களை மூடினர்.
' oള്ള தங்கைகளின் ஒப்பாரி, "எங்களையெல்லாம் தவிக் கவிட்டுப் போயிட்டீங்களே!" (ஒருசநீதேகம் , எங்கள்? என்பதிற் சுயநலம் தொனிக்கிறதேr ?) மூத்தவன் நான் இருக்கிறேன் மலையைப்போல, தவிக்கவிடலாமா? என் சகோதர பாக்கியங்களை ஒவ்வொருத்தனின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டுத்தான் எனது பாட்டைப் பார்ப்பதென்று அன்றைக்கே சபதமெடுத் துக் கொன்டேன். (மகன் தந்தைக்காற்றும் உதவி)

Page 44
-89
வேலை தேடுவதற்கு ஒரு படலம் தேவையில்லா மற் போய்விட்டது. எங்கள் நிலைக்கு இரங்கிய தந்தை யின் நண்பரொருவர் தனது கடைகளில் கணக்கு எழுது கிற வேலையைத் தந்தார். பிறகுதான் தெரிந்தது, அது அவரது வருமானத்தைப்பற்றி "கணக்கு விடுகிற வேலை என்று! ஆனல் எனது வருமானத்துக்கு அவர் கணக்கு விடத் தொடங்கினர். அவ்வேலையில் இருந்துகொண்டே அரச வெற்றிடங்கள் பலவற்றிற்கு விண்ணப்பித்து காலப்போக்கில் ஓர் அரசாங்க லிகிதராக மாறிவிட் டேன்.
மாப்பிளை தேடும் படலத்தில் இறங்கி, செருப்புத் தேய அலைந்து இரண்டு திருமணங்களையும், ஒப்பேற் றிய பொழுது எனது கைகளும், மடியும் வரண்டுவிட் டன. சீர் கொடுத்ததில் கடன் பழு வேறு. வாழ்க்கை யின் மிகுதி உழைப்பெல்லாம் அதைச் சீர் செய்யத் தான் சரிவரும் போலிருந்தது. எனது திருமணத்தை நிட்சயிக்கப் பெரியோர்கள் இல்லாத புண்ணியத்தினு லும் பருவம் கடந்துவிட்ட காரணத்தினுலும் பிரமச் சாரியாகவே வாழ்க்கையைத் தொடரலாம் என முடிவு செய்தேன்.
மீண்டும் நாயின் குளறல், ரோசம் கெட்ட சவம். எப்படி வேண்டிக்கட்டினுலும் புத்தி வராது. நான் கூப்பிட்ட பொழுது வந்து கட்டிலின் கீழ் படுத்துவிட்டு எனக்குத் தெரியாமலே நழுவிப்டோயிருக்கிறது.
மனசு கேட்கவில்லை, "உஞ்சு உஞ்சு" -என்ன
இருந்தாலும் அதற்கு நான்தானே துணை? (அல்லது எனக்கு அது துணையோ?)
**மாமாவின்ரை பிறண்ட்தானே? அது தா ன் அதுக்கு அடிச்சவுடன அவருக்குக் கோபம் வருகுது. ஆவாவென்று கூப்பிடுகிறர்." - குசினியிலிருந்து வெளிப்படுகின்ற குரலையடுத்து கலகலச் சிரிப்புக்கள். மருமக்களின் கேலிப் பேச்சு "நக்கல்" எனக்கா அல்லது நாய்க்கா என்று புரியவில்லை.
அது வாழ்ந்த வாழ்வுக்கு இப்படியும் ஒரு நிலை என எழுதப்பட்டிருக்கிறது போலும் ஊருக்கு அது
 

سم-31-سے
தான் ராஜா சண்டித்தனமாக ஊர்மேயப் போகும். சாப்பாட்டு நேரத்துக்கே வீட்டுக்கு வருவது அருமை: அதற்கு ஊரெல்லாம் சாப்பாடு இருந்தது. இப்பொழுது பாவம், கிழடு தட்டிவிட்டது. அதனுலோ என்னவோ காது கேட்பதும் குறைவு-எத்தனை தரம் கூப்பிட்டு
விட்டேன் - "உஞ்சு உஞ்சு!" அது அசைந்தால் தானே?
- அதற்குள்ளே சனியன் பிடித்த இருமல் வந்து பிடித்துக் கொண்டது, இருமல் பிடித்தால் ஒரு முடிவே இல்லை. நெஞ்சும் தொண்டையும் பச்சை இறைச்சி யாக வலியெடுக்கின்றன. படுக்கையிலே எழுந்திருந்து நெஞ்சைப் பலமாக அழுத்திப் பார்த்தாலும் சுகமில்லை. இருமலை நிறுத்தும் முயற்சியாகக் காறல் எடுத்துத் துப்பினேன். அது எனது சகோதர பாக்கியத்துக்குப் பிடிக்கவில்லை.
'அண்ணை உதென்ன வேலை செய்யிருய்? பிள்ளை யள் பிளங்கிற இடத்திலை சும்மா சும்மா துப்பாதை' ("அண்ணை’ என அழைத்ததே பெரிய காரியம் எனத் திருப்தியடைந்தேன். "அது இது" என அஃறிணை பிற் தான் என்னைக் குறிப்பிடுவது வழக்கம்.)
தொண்  ைட  ையக் கொஞ்சம் நனைத்தால் சரிவரும் போலிருந்தது. சுடுதண்ணிர் குடித்தால் நல் லது. எனக்காக அந்த அளவுக்குக் கரிசனைப்பட யார் இருக்கிருர்கள்? பச்சைத் தண்ணிராவது குடிக்கலா மென்ற நினைவில் விருந்தையில் விளையாடிக் கொண் டிருந்த தங்கச்சியின் கடைக்குட்டியைக் கேட்டேன்.
'தம்பி ராசா. இஞ்சை வாணை1. உனக்குப் புண் னியம் கிடைக்கும். இந்தப் பேணியிலை கொஞ்சம் தண்ணி எடுத்தானை” என ஆதரவாகக் கேட்டவாறே எனது பேணியை நீட்டினேன். (எனக்கென ஒரு மூக் குப் பேணி ஒதுக்கப்பட்டிருக்கிறது) இவ்வளவு பணி வன்பேரிடு கதைத்தாற்ருன் எனது கோரிக்கைகளுக்குத் தற்செயலான செவிசாய்ப்பாவது இருக்கும். அதை எனது அனுபவத்திற் கண்டிருக்கிறேன். ஆனல், இப் போது அந்த அதிசயமும் நடக்கவில்லை. அவன் துள் ளிக் கொண்டு எழுந்து தனது உடலை முதுகுப்பக்க
**

Page 45
-82
மாக எனக்குத் திருப்பிருவிஸ்ட் ஆடுவதுபோல ஒரு நெளிப்புக் காட்டிவிட்டு ஓடினன். இனி இப்படித்தான் போவோர் வருவோரை எல்லாம் இரந்து இரந்து வரம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும்.
என்னைக் கண்டதும் "மாமா' என வாய் நிறைய அழைத்துக் கொண்டு வருகின்ற குழந்தைகளா இவர் கள்? முன்னர் அப்படி ஒரு நடப்பு இருந்தது.
அலுவலகம், நண்பர்குழாம், அறைவாழ்க்கை, சாப்பாட்டுக்கடை என வீடுவாசலின்றிச் சுற்றித் திரிந் தாலும் இடைக்கிடை ஒரு மாறுதலுக்காக இங்குதான் வருவேன். எனது மற்றத் தங்கைக்குப் பிள்ளைகள் இல்லை. அதனலோ அல்லது அவளது அந்தக் கவலை யைத் தாங்க முடியாமலோ நான் அங்கு செல்வது குறைவு. குழந்தைகள் என்ருல் எனக்கு உயிர். எனது
சகல பிரச்சனைகளையும் கவலைகளையும் மறக்கடித்து மகிழ்
விக்கின்ற சக்தி இந்தப் பிள்ளைகளின் சிரிப்புக்கு இருந் தது. வருகின்ற பொழுது விளையாட்டுப் பொருட்கள் தின் பண்டங்கள் என அள்ளிக்கொண்டு வருவேன்.
அவர்களோடு நானும் ஒரு குழந்தையாகி விடுவேன்.
தங்கச்சிக்கு நான் தேடிவைத்த மாப்பிள்ளையின் உத்தியோகம் பெரிய வருமானம் இல்லாதது. பிள்ளை குட்டிகளோடு அவர்கள் படுகிற கஷ்டத்தைக் காண மனது பொறுக்காமல் அவ்வப்போது பணமாகவும் உதவியிருக்கிறேன். பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள் வரை என்மேல் உயிரையே வைத்திருந்த இரகசியங் கள் இவைதானு?
மாப்பிளைக்கு என்மேல் அலாதிப் பற்று இருந்தது **கொண்ணருக்குச் சாப்பாடு குடுத்தனியோ?* **கொண்ணரைக் கவனிச்சியோ?' 'அந்தாள் பாவம் .தணிக்கட்டை, நாங்கள்தான் ஒரு குறையுமில்லாமல் பார்க்கவேணும்". இந்தக் கரிசனை வாாத்தைகளெல் லாம் என் காதுபடும் பொழுது எப்படி மனசு குளிர்ந்து போகும்! இப்பொழுது, "இந்தாளுக்கு மதியில்லையோ?. சுருட்டைக் குடிச்சுக் குடிச்சு இருந்த இடத்திலேயே துப்பி வைக்குது. பிள்ளையஸ் பிளங்கிற இடம்."

ܚ-83ܚ-
'யெஸ். டடி1. மாமாவாலை பெரிய கரைச்சல் தான். என்னட்டை வாற பிரன்ட்ஸெல்லாம் கேக் கிருங்க. அந்த மனிசன் ஆர் என்று. எப்படிச் சமா ளிக்கிறதென்றே தெரியயில்லை. இப்பிடிக் கிளின் இல் லாமல் குப்பை மாதிரிக் கிடந்தால் எங்களுக்குத் தானே வெக்கம்?' நான் தூக்கி வளர்த்த குழந்தை -என் நெஞ்சில் கால்களைப் பதித்து வளர்ந்த பெண் பெற்ருேருடைய மூத்த கும(ா)ரி சொல்கிறது! இப் படி வார்த்தைகளால் நெஞ்சில் அடிக்கிற வலி இயற் கையாக நெஞ்சைப் பிய்த்துக் கொண்டு வருகிற இரு மலைவிட மோசமானது.
குளித்து முழுகி துப்பரவாக இருக்கவேண்டுமென்ற விருப்பம் எனக்கு இல்லையோ? மாற்றி உடுக்கத் துணி கள் வேண்டுமே? குளிர் நீரிற்கு உடல் இடம் தர மறுக்கிறது. நோய் முற்றினல் மருந்து வேண்டித்தரவும் கவனிக்கவும் மணிசரில்லை. இருமல் வரும்பொழுது ஒதுக்காகப் போய்த் துப்பலாமென்றல் இருந்த இட
த்தை விட்டு எழுந்து நடப்பதே கொல்லக் கொண்டு /
போவது போலிருக்கிறது.
**போதாக்குறைக்கு அந்தக் குட்டைநாயையும் கூப்பிட்டுத் தன்னேடை வைச்சிருக்குது. எப்பிடிச் சொல்லியும் 'அது'க்குப் புத்தி வருகுதில்லை." என். சகோதர பாக்கியம்தான்.
*" என்ன சவத்துக்கு வந்து இஞ்சை கிடந்து இழு படுகுது. எங்கையாவது கோயில்லை. மடங்களிலை. போய்க் கிடக்க வேண்டியதுதானே." இது அவர்.
19டடி. ஒன்று செய்தாலென்ன?. வீட்டுக்குப் பின்பக்கமாய் மாமாவுக்கு ஒரு கொட்டில் போட்டுக் குடுத்தால். நாயும் அவரோடை போயிடும் தானே?"
"அதுகும் நல்ல யோசிரை தான்!"
நாயின் அவலமான அலறல் கேட்கிறது.
அப்பிடியும் நடந்து போய்விடுமோ? பிரேரணைக்கு
முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டு விட்டது. இனி, ஏக மானதாக நிறைவேற்றியும் விடுவார்கள்-எனது பிரச்

Page 46
சனையில் கரிசனைப் படாமல் அவர்கள் எல்லோருமே கையை உயர்த்துவதற்குத் தயார்தான். என்மூலம் அவர்களது வாழ்க்கை வளம் பெற்றது என்பதை எங்கே நினைத்துப் பார்க்கப் போகிருர்கள்? பெரும் பான்மையான மனித சுபாவம்! இப்பொழுது நான் படுத்திருக்கும் உள் விருந்தையிலேயே இரவில் பணித் தொல்லை தாங்க முடியாது கஷ்டப்படுகிறேன். கோடி யிலே ஒரு கொட்டிலென் ருல் எப்படி இருக்கும்? நாலு பக்கமும் அடைப்புக்கள் இல்லாத ஒரு கூடாரமாக இருக்குமோ? எப்படியாவது போகட்டும் அந்தப் பிரச் சனையை இப்போதைக்கு விடுவோம்.
ஒரு விஷயம் என்னைப்பற்றிய பிரச்சனைகளை ஒர ளவு எனக்கும் கேட்கக்கூடியதாக அவர்கள் கதைப்ப திலிருந்து அதைக் கேட்டென்ருலும் எங்கேயாவது போய்த் தொலையட்டும் எனக் கருதுகிருர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. அல்லது எல்லாவற்றையுமே இப்படிக் கரவாக நினைப்பது, நான் தனிமனிதன் என்ற தாழ்வு மனப்பான்மையினலோ? எப்படியாயினும் மற் றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் வீட்டைவிட் டுப் போய்விடுவதுதான் சரி என முடிவு கட்டினேன்.
பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றபின்னர் கோயி லுக்குப் போய்வருவதாகத் தங்கச்சியிடம் கூறிவிட்டு எனது கைத்தடியைத் துணைக்கு எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். நாய் வாசல்வரை வந்து ஊழையிட்டு அழுதது. கொஞ்ச தூரம் பாதையிலும் ஓடிவந்தது. பிறகு அதுவும் போய்விட்டது!
கோயில் வாசலில் இரண்டு நாட்கள் தவம். வயிற் றுப் பாட்டுக்காக மற்றவனிடம் கை நீட்ட வேண்டிய நிலை இங்கும் இருந்தது. ஆனல் இது வீட்டு நிலைமையை விடக் கேவலம். போகிறவனெல்லாம் ஒரு மாதிரியா கப் பார்க்கிருரன். "இந்த ஆளுக்கு என்ன குறை?. உழைத்துச் சாப்பிட முடியாதா?. கொள்ளையா பிடிச் இட்டுது?" நியாயமான கேள்வி! எனது உருப்படியைப் பார்த்தால் யாரும் அப்படித்தான் சொல்லுவான். ஆனல் உடல் நோய் இடம் தராத சங்கதி தெரிய வராது. மனதிலே தனிமையின் பயம் படிப்படியாக

-85
பட, படக்கத் தொடங்கியது. இதற்குள்ளே ஒரு காணக்கிடைக்காத அற்புதக் காட்சியும் கிடைத்தது,
ஒரு வயோதிபத் தம்பதிகள் கோயிலுக்கு வந்திருந் தனர், கோயில் சந்நிதானத்தில் சடுதியாக அந்த ஆளுக்கு மார்புவலி வந்துவிட்டது. நெஞ்சைப் பிடித் துக் கொண்டு நிலத்தில் விழுந்துவிட்டான். அந்த நேரத்தில் உதவிக்கும் யாருமில்லை. கிழவி பட்டுவிட்ட பாட்டைப் பார்க்க வேண்டுமே செய்வதறியாத திகைப்பு, தவிப்பு. கணவனைத் தனது மடியிலே தூக்கி அணைத்து மார்பை வருடத் தொடங்கினள். அவளது கண்ணிர் அவனது உயிரை மீட்டுக் கொண்டிருந்தது. என்ன அற்புதம்!
எனது நெஞ்சு நிறைந்துவிட்து. ஒரு மனிதனுக்கு இதுதான் வேண்டும். இப்படி ஒரு துணை. நான் விட்ட மாபெரும் தவறு மனதிலே பட்டது. ஒரு துணைவி யைத் தேடாமல் விட்டு விட்டேன்! அதற்கு ஈடான ஆதரவு வேறு எங்கே இருக்கிறது? காலம் கடந்து தானே எனக்கும் இந்த ஞானம் பிறந்திருக்கிறது. ஒரு வருக்கு ஒருவர் துணையாக வாழ்வதற்கு ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் இயல்புள்ள இரண்டு உள்ளங்கள் தேவைப்படுகிறது. இப்பொழுது எனது வயது ஒரு பிரச்சனையல்ல, பெண்ணைத் தரப் போகிறவர்களுக்கும் அது ஒரு பிரச்சனையாக இருக்காது- நான் ஒரு உத்தி யோககாரணுக இருந்திருந்தால் மூன்று வருடங்களுக்கு முன்னராவது இந்த எண்ணம் தோன்றியிருந்தால் எனது உத்தியோகத்தைக் காட்டியே கலியாணச் சந் தையில் ஒரு கலக்குக் கலக்கியிருப்பேன்! உடல் ஒத் துழைக்காத காரணத்துக்காக அப்பொழுது வேலையி லிருந்து ஓய்வுபெற்றுவிட்டது தான் நான் செய்த மடைத்தனம். இனிக் கவலைப்பட்டும் என்ன பயன்?
என்னைப் புறக்கணிப்பது போலத் தோன்றிய தங் கச்சியின் செய்கைகளும் இப்பொழுது அவ்வளவு பார தூரமானதாகத் தெரியவில்லை. அவளால் அப்படித் தான் இருக்கமுடியும். அவளுக்கு அவள் கணவனும் குழந்தைகளும்தானே உலகம்? இப்படி யாரும் இல் லாத இடத்தில் இருப்பதைவிட வீட்டிலே போய்
11
"ހ/

Page 47
سے 86خ-
ஏச்சுப்பேச்சுகளைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது கிடப்பது மேல் எனத் தோன்றியது.
மீண்டும் பழைய குருடனுகக் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். முதலில் வர வேற்றது நாய்தான்! அதன் மசிழ்ச்சி! ஏதோ பல நாட்களுக்குப் பின் தூரப்பயணத்தால் வந்தவனே வர வேற்கிற குதூகலம். வாலை ஆட்டித் துள்ளித்துள்ளி உடலிற் பாய்ந்து கால்களால் தடவி ஊளையிட்டு
அழுது வீட்டுக்குள் அழைத்து வந்தது, "எங்கை யண்ணை ரெண்டு நாட்களாய் போயிருந்தனி?' என்று தங்கச்சி கேட்டாள். அதுகூட மாதாமாதம் பென்
சணுக எனக்குக் கிடைக்கிற சொற்ப தொகையைக் கருத்திற் கொண்ட கரிசனையோ?
கட்டிலில் விழுந்தேன், நாயும் பக்கத்தில் சுருண்டு படுத்துக்கொண்டது.
சிலநாட்களுக்குள்ளேயே பழைய பிரச்சனை தொ டங்கியது - தூது வந்தது மூத்தமருமகள் . ஆதர வான சிரிப்பு, 'மாமா ஒன்று சொல்லுறன் கோபிக் காதையுங்கோ. இந்த நாயை எப்பிடிக்கலேச்சாலும் போகுதே இல்லை. உங்களை விடமாட்டன் எண்டு நிக்குது. நீங்கள் படுத்திருக்கிறபடியாத்தான் நெடு கலும் விருந்தைக்கு வருகுது என்ரை பிரண்ட்ஸ்
வாற நேரமெல்லாம். இந்தக்குட்டை நாயைப் பார்த்துப் பகிடி பண்ணுதுகள். எனக்கு வெக்க மாயிருக்கு. ஆனபடியால் மாமா. கோபிக்காதை யுங்கோ நாளையிலை இருந்து. கோடிப்பக்கம் ஒரு கொட்டில் போட்டி ருக்கி றம். அதிலை போய்ப் படுங்கோ!"
* சரியம்மா!. என்னலை உங்களுக்குத் தொல்லை வேண்டாம். நான் போறன்!" என்று மாத்திரம் சொன்னேன் அழாக்குறையாக,
* 'இல்லை மாமா!. உங்களுக்காக இல்லை. இந்த நாய்க்காகத்தான்."
இரவு முழுவதும் உறக்கமே இல்லை. இந்த இடத் தைவிட்டுப் போவது பெரியகவலையாக இருந்தது.

இப்படி விருந்தையில் கிடந்தால் பிள்ளைகளின் துடி யாட்டங்களைப் பாாத்துக் கொண்டே "பிராக்காக” க் கிடக்கலாம். கோடிக்குப் போய்விட்டால் ஒரே தனி மைதானே? இப்பொழுது இருக்கிற ஓரளவு கவனிப் பாவது அற்றுப்போய்விடுமோ என்னவோ?
காலைச்சாப்பாட்டு நேரம் முடிந்த பின்னர் பிள்ளை களுக்கும் விடுமுறை நாளாதலால் எல்லோருமாகச் சேர்ந்து எங்களை அப்புறப்படுத்துகிற பணியில் இறங் கினர்கள். முதலில் எனது பழைய கட்டிலைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இதற்குள் "எங்கை நாயின்ரை சிலமனைக் காணவில்லை?" என்ற பேச்சும் அடிபட்டது. உண்மைதான், காலையிலிருந்தே நாயைக் காணவில்லை. எங்கேயாவது ஒடியிருக்குமோ?
என்னை இறக்கித் திண்ணையில் இருக்கச் சொல்லி விட்டு கட்டிலைத் தூக்கினர்கள், அங்கே, அது பாவம்
செத்துப் போய்க் கிடக்கிறது!
அப்பாடா தொல்லைவிட்டது போ! இதுதான் மனிச மனம்! நாய் செத்துப்போய் கிடப்பதைக் கண்டதும் தோன்றிய இரக்கத்தையும் மீறிக் கொண்டு ஒரு நிம் மதி தோன்றியதே, அது இனி என்னை அப்புறப்படுத்த மாட்டார்கள் என்ற சந்தோஷம்தான். இந்தப்புத்தி மணிசனுக்கு இல்லாமல் வேறு எதற்கு வரும்? எப்படி யாயினும் கோடிக்குப் போகவேண்டிய அவசியம் இல் லாமற் போய்விட்டதே - அது பெரிய காரியம்தான்! ஆனல் அதுகூட தப்புக் கணக்காகப் போய்விட்டது. நாயின் சடலத்தை அப்புறப்படுத்தப் போகிழுர்கள் என நினைத்தேன். அதற்கு முதலே எனது கயிற்றுக் கட்டிலைத் தூக்கிக்கொண்டு கோடிப் பக்கமாகப் போகி றர்கள்! அடுத்தது நிட்சயமாக நாளுகத்தான் இருக் Ꮆ95ᏞᎥ0 . ()
சிரித்திரன் (பங்குனி 1979)

Page 48
கணிகின்ற பருவத்தில்
-
,
−−
- 2. - • ܥ
s
-
-
, ', -
༽
 

கணிகின்ற பருவத்தில் -ም
*காத்திருத்தல்' என்பது அவனைப் பொறுத்த வரை பொறுக்க முடியாத விஷயம். ஆணுல் சில வேளை களில் மனதைச் சோதிப்பதுபோல, தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டு விடுகின்றன. அப்பொழு தெல்லாம் தனது அப்போதைய தேவையை மறந்து இயற்கையோடு ஒன்றிப்போய் மனதை இதப்படுத்திக் , கொள்வான் .
மதியம் கொழும்பிலிருந்து கிளம்புகிற புகையிர தம், மழை காரணத்தினற்போலும் வழக்கத்தை விடத் / தாமதமாகவே அனுராதபுரம் வந்து சேர்ந்தது. அது வரை காத்திருந்தவர்கள் சொற்பநேர இடத்துக்காக முண்டியடித்து இடித்துக்கொண்டு ஏறினர்கள். அந்த அமளி முடிந்தபிறகு அவன் ஏறிஞன், இருக்க இடமில் லாததால் நின்றன். வெளியே மழை பெய்துகொண் டிருந்தாலும் சனவெக்கையில் வியர்க்கத்தொடங்கியது. வடக்கிலிருந்து கொழும்பு செல்கிற புகையிரதமும் தாமதமாகவே வருகிறதாம். "குருேசிங்"கிற்காக இது காத்திருக்க வேண்டும். வியர்வையையும் சனவெக்கை யையும் சகித்துக்கொள்கிற ஆற் ற லி ல் லா த வன ய் இறங்கி மேடைக்கு வந்தான்.
மழையைக் கண்டு சுவரோரமாக ஒதுங்கியிருக்கிற மனிதர்களின் அடக்கத்தையும், ரெயினிலிருந்து குதித்து தண்ணீர் எடுப்பதற்காக போத்தலோடு ஒடுகிற சில ரையும் பார்த்துக்கொண்டு நின்றன். பின்னர் தற் செயலாகத் திரும்பியபொழுது புகையிரதத்துள்ளிருந்து அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
ஒர் அழகிய ரோசாமலரைப்போல அவளது முகம் தோற்றமளித்தது. அவன் கவனிப்பதைக் கண்டதும்
سے 89ے

Page 49
--۔ 909حے
அவள் பார்வையைத் திருப்பினுள்-அவளது தடுமாற் றத்திலிருந்து, அவள் தன்னைச் சற்று நேரமாகவே பார்த்துக் கொண்டிருந்திருக்கிருள் என நினைத்தான். எதற்காக அப்படிப் பார்த்திருக்க வேண்டும் என எண் னிய பொழுது ஒரு வேளை மீண்டும் பார்ப்பா6ோா என்ற சபலமும் தோன்றியது. அவள் திரும்பவும் பார்த்தாள். தrன் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை அவள் அறியக்கூடாது என அவசரமாக வேறு பக்கம் திரும்பினுன்.
மழையில் நனைந்துகொண்டு நிற்கிற செம்மறியாட் டைப்போல டிகையிரதம் சூடு சுரணையில்லாமல் நிற் கிறது. மழைநீர் கூரையிலிருந்து வழிந்து ரெயிலின் மேல் விழுந்து சிறிய பூச்சிகளைப்போலத் தெறித்துப் பறக்கிறது, பூட்டப்பட்ட கண்ணுடியில் முத்துமணிக ளாக உருள்கிறது. தூரத்தே உரத்துப் பெய்து கொண்டு ஒரே புகை மூட்டமாகத் தெரிகிறது. ஆவி யாக மேலே செல்கிற நீர் ஒரு 'ஷவரைத் திறந்து விட் விழுகிற தூறல்களாகக் கொட்டும் அழகை வியப் பவன்போல வானத்தையே பார்த்துக் கொண்டு நின்
முன்.
அப்படி நின்றபோதும், அவள் தன்னையே பார்த் துக் கொண்டிருப்பாள் என அவனது மனது கற்பனை
செய்தது, அந்த எதிர்பார்ப்போடு திரும்பினன். ஆணுல்
அவள் பார்க்காமலே இருந்தாள். தன்னேடு இருப்பு வர்களோடு கதைத்து எதற்காகவோ சிரித்தவாறு ஒரு முறை திரும்பினள். அந்தக் கணமே அவனுக்கு ஏமாற் றத்தை அளித்து மறுபக்கம் திரும்பினள். தன்னைப் பார்ப்பதற்காகவே திரும்பிய அவள், கூச்சத்திஞற் தான் பார்வையை மீட்டிருக்கக்கூடும் என அவன் நினைத்தான். அதற்குப் பிறகு நெடுநேரமாகவே அவள் பார்க்கவில்லை. ஆனல் நெற்றியில் விழுகிற கேசங்கரை ஒதுக்கி, தன்னை அழகுபடுத்துகிற முயற்சியில் அவள் கூச்சத்தோடு ஈடுபட்டிருந்தாள். தனது பார்வையைத் தரிசித்த பின்னர்தான் அவளிடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என அவன் திருப்தியடைந்தான். அந்தப் பெட்டியிலேயே தனது பயணப்பையை வைத்து விட்டு இறங்கிய புண்ணியத்தை நினைக்க இப்பொழுது
ܢܼܐܸM
 

سے 91-۔
மகிழ்ச்சியேற்பட்டது. இனி, யாழ்ப்பாணம் போகும் வரை பார்த்துக்கொண்டே போகலாம்!
அவள் நெடுநேரமாகப் பார்க்காமலிருப்பதால் கர் வக்காரியாக இருப்பாளோ என எண்ணினன். அல்லது, தானே விணக எதையாவது கற்பனைசெய்து மனதை அலட்டிக் கொள்கிறேனே என்ற சமசியமும் தோன்றி யது. அவசரமாக உள்ளே ஏறி, அவளது முகத்தைப் பார்த்து ஒருபதில் அறிந்துவிட வேண்டுமென்ற துடிப் பும் ஏற்பட்டது. அவள் இனிப் பார்ப்பாளோ, அல் லது பார்க்காமலே விட்டுவிடுவாளோ எனக் குழப்ப மடைந்தான், பார்க்கவே மாட்டாள் என்ற இழப்பை மனது ஏற்க மறுத்தது.
காங்கேசன்துறையிலிருந்து வருகிற புகையிரதம் இன்னும் சில நிமிடங்களில் மேடைக்குவரும் என அறி விக்கப்பட்டபொழுது "அப்பாடா” எனப் பெரிய நிம் மதி தோன்றியது அவனுக்கு. இனி இந்தப் புகையிரத மும் புறப்படும், உள்ளே ஏறி அவளது முகத்துக்கு / நேரே நின்றுகொண்டான்.
அவள் தன்னைக் கள்ளமாகப் பார்ப்பதைக் கவனித் தான். அந்தக் கள்ளமும், அழகும், அவளது நாணமும் அவன் முன்னர் கண்டிராத விஷயங்கள்! தனது மனசை அசைக்கிற மாதிரி இப்படியொரு சக்தி ஒரு சாதாரண பெண்ணிடம் இருக்கிறதே என ஆச்சரியப்பட்டான். மற்றவர்களின் கண்களில் மண்ணைத் தூவிக் கொண்டு அவனும் அடிக்கடி அவளைப் பார்த்தான். சொல்லி வைத்தது போல சந்திக்கிற கணங்களில் ஒரு பரவசம் தோன்றியது.
அவளுக்குப் பக்கத்தில் ஒர் இளைஞன் இருந்தான்அவளது சகோதரனுக இருக்கலாம், முன் இருக்கையில் அவளது பாட்டியும் இரு சிறுவர்களும் இருந்தனர். பாட்டி, எதற்காகவோ அவளை 'சாந்தா!" என அழைத் தாள். அவளது பெயர் அவனை மிகவும் கவர்ந்தது. அவளைப் போலவே அமைதியான பெயர் "சாந்தா" என மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிப் பார்த்தான், ஒரு வீட்டில் அவளோடு வாழ்க்கை நடத்துவது போலவும் அலுவலகம் முடிந்து களைப்பாக வருகிற தனக்கு அவள்

Page 50
அன்பான பணிவிடைகள் செய்வதுபோலவும், கற்பனை வளர்ந்தது- "ஒ" எனது மனைவி சாந்தா!" என இத யம் நிறைவுகொள்ள, அவன் விழித்திருந்த நிலையி லேயே அந்த இன்பக் கனவில் மூழ்கிப்போனன். அப்
படியே அவளது கையைப் பிடித்துக் கொண்டு விட்
டுக்குப் போவதாக அந்தக் கனவு சுபமடைந்தது.
Χ Χ X X Χ சே! இதென்ன விசர்க்கதை? கல்யாணம் என்றல் சும்மாவா? அவனுக்கு இப்பொழுது என்ன வயசாகிறது? இருபத்தைந்து வயசு, ஒரு வயசா? இந்த வயசிலேயே ஒருத்தியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனுல் அப்பா பொல்லுத்தூக்கிக் கொண்டுவர மாட்டாரா?
அவனுக்கு அக்கா ஒருத்தியும் இருக்கிருள் - இரு பத்தொன்பது வயசில் அவளும், உத்தியோகம் பார்க் கிருள். குடும்ப நிலையைச் சீர் செய்வதற்கு அக்காவும் உழைக்கவேண்டியிருக்கிறது. அப்பாவும் கஷ்டப்பட்டு உழைத்தவர்தான். தன் குழந்தைகளை கஷ்டமில்லாமல் வளர்த்தெடுப்பதற்கு அவரது கஷ்டமான உழைப்பும் போதவில்லை. போதாததற்கு கடன், கடன், கடன் . பின் னர் அன்ருடச் செலவுகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டே ஈடு வைத்த வீடு வளவை மீட்க முயன் முல். ப்ளஸ் வட்டி, வட்டி, வட்டி. அவரது சக்திக்கு அப்பாலே சென்றது கடன்சுமை, பிள்ளையை உத்தி யோகத்துக்கு அனுப்பினர். “பெண்பிள்ளை - பக்குவமாக
வீட்டிலிருக்க வேண்டியவள்" என வேதனைப்பட்டுக்
கொண்டே அனுப்பினர். அவள் குடும்ப பாரத்தை ஓரளவாவது குறைத்து, தனக்கு அடுத்து வருபவளின் கையில் ஒப்படைத்து ஒதுங்குவதானல் இன்னும் ஐந் தாறு வருடங்களாவது செல்லவேண்டும்.
அதற்குப் பிறகு, "அழகும் நற்குணமும், பொருந் திய முப்பத்தைந்து வயது நிரம்பிய அரசாங்க உத்தி யோகத்தில் மாதம் எண்ணுாறு ரூபா வருமானம் பெறும் பெண்ணுக்கு மணமகன் தேவை, மணமகன் குடிப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும்" என ஒரு விளம்பரம். சீதன விபரத்தை அறிந்தோ அறியா மலோ குறிப்பிடாமல் விடுவது விரும்பத்தக்கது. பிறகு தொடர்பு கொள்பவர்களோடு பேரம் பேசிப் பார்க்க 6). D.

s
-93
ஆனல் அவளை மணக்க வரப்போகிறவனுக்கு அவ ளது சரித்திரத்தில் அக்கறை ஏற்பட்டுவிடும். அவள் பிறந்து வளர்ந்து போய் வந்த இடங்களிளெல்லாம் புலனய்வு செய்து-அங்கெல்லாம் மற்றவர்களின் வாழ்க் கையில் குழி பறிக்கவென்று நாலுபேர் இருக்காமலா போய்விடுவார்கள்? அற்லீஸ்ட், அவள் தன்னைப்பார்த்து சிரிப்பதில்லை, கதைப்பதில்லை என்ற மனக்குறையேர்டு ஒருவன் அவளது அலுவலகத்தில் இல்லாமலா போய் விடுவான்?
ஆக, இந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்வதற்கு வருகிறவன் இப்பொழுது தயாராயில்லை. இவர்களுக்கு ஒருத்தி சொந்தமாகத் தேவைப்படும்பொழுது அழகும் நற்குணமும் நிறைந்தவளாகத் தேவைப்படுகிறது! தாங் கள் வழியில் கைவிட்டு வந்த ஒருத்தி யாரையோ கைப்பிடிக்கப் போவதைப் போல தங்களையும் இன் ஞெருத்தி பற்றிக் கொண்டுவிடுவாள் என்ற பயமோ? ஏன், நிர்ணயிக்கிற விலையிலே தீர்க்கப்படுவதை மனது ஒப்புக் கொள்ளவில்லை.
முள்ளில் நடப்பதுபோல எவ்வளவு அவதானமாகப் பெண்கள் வாழ்கிருர்கள்! ஒருவயீேப் பார்த்து வஞ்சக மில்லாமற் சிரித்துப் பழகிய (குற்றத்)திற்காகவே அவ் வாழ்க்கை பறிபோய்விடுகிறது. அவளது எதிர்பார்ப் புக்களெல்லாம் ஏமாற்றமாகிவிட "மணமகன் குடிப் பழக்கம் அற்றவராக இருத்தல்வேண்டும். என்பதைத் தவிர்த்துவிட்டு "தாரமிழந்தவரும் விண்ணப்பிக்கலாம்" என்பதைப் புகுத்தி இன்னுெரு விளம்பரம்! இது, அவள் தந்தைக்கோ தாய்க்கோ தாங்கள் கண்மூடுவ தற்கு முன் அவளது (திரு)மணத்தைப் பார்த்துவிட வேண்டுமென ஆசையேற்பட்டதஞல் வந்தவினை.
அவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவள் இனி யாராவது ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டி யாக வேண்டும். அவள் இவ்வளவு காலமும் தன்வாழ் வில் கட்டிக்காத்து வந்த இலட்சியக் கனவுகளைச் சிதைத்து எப்படியாவது இருக்கிற ஒருவனுக்குக் இனித் தன் வாழ்வை அடிமைப்படுத்த வேண்டும். அவள், உழைப்பவள், படித்தவள், அழகி, பண்பான
2

Page 51
--94–ے
வள் என்ற காரணங்களுக்காகவாவது விட்டுக்கொடுப் பானு வரப்போகிற தியாகி?
அவளது இரக்கமான தந்தை ஒன்றுக்கும் வழியில் லாமல் இன்னெரு கடனை (அற வட்டியில்)ப் படப் போகிறர். அந்தக் குடும்பத்தில் இந்தக்கதை தொட GULD. . .
Χ Χ Χ Χ Χ
இப்படி ஓர் அப்பாவி அக்காவின் வாழ்க்கை மாத் திரமா பாழாகிப் போகிறது என அவன் நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லை. தனது வாழ்க்கைக் காலத்தில் அவன் சென்றுவந்த இடங்களில், பழகிய குடும்பங்களில், அலுவலகத்தில் எல்லாம் காணநேர்ந்த பெருமூச்சோடு நிட்சயமற்ற வாழ்க்கை வாழும் பெண் களைப் பற்றி தனித்தனியே வெவ்வேறு நேரங்களில் சிந்தித்துப் பார்த்திருக்கிருன், பெண்களின் வாழ்க் கைக்கு இப்படி ஒரு சமூக நியதி ஏற்பட்டு விட்டதை எண்ணும் பொழுது மனிதர்கள் மீது பொல்லாத வெறுப்புத் தோன்றும். பிறகு, யார்மீது குறிப்பாகக் கோபப்படுவது என்று தெரியாமற் குழப்பமடைவான். இந்த நியதிகளையெல்லாம் உடைத்தெறிந்து ஒவ்வொரு பெண்களுக்கும் நியாயமான வாழ்க்கையை எப்படி உறுதி செய்து கொள்ளலாம் என நீண்ட நேரங்களா கப் பல நாட்கள் சிந்தித்து ஒரு தீர்வும் புத்திக்கு எட் டாமல் போகவே தன் மீதும் சினங்கொண்டிருக்கிருன். தன்னைச் சார்ந்த ஆண் வர்க்கத்தின் இந்த முறைகே டான செயல் அவர்களுக்குப் பெருமையையல்ல பெரிய தலைகுனிவையே ஏற்படுத்தியிருக்கிறது எனப் பொரு மிக் கொள்வான்.
இதற்கெல்லாம் பிராயச்சித்தமாக தானே ஒருத் தியை இலவசமாகக் கையைப் பிடித்துக்கொண்டு போவது ஒரு தீர்வாக இருக்க முடியுமா எனச் சிந்தித் திருக்கிருன் . அதை ஒரு வழிகாட்டலாகக் கருதிக் கொண்டு எத்தனைபேர் வருவதற்குத் துணிவார்கள்? எவளோ ஒருத்தியை கிளப்பிக்கொண்டு ஓடிவிட்டான்" என்றுதானே வாய்கிழியக் கதைக்கப் போகிருர்கள். அப்படி ஒருத்திக்கு வாழ்வளிப்பது. (இல்லை. ஒருத்தி யிடம் வாழ்வு பெறுவது என்பதே சரி) அவனைப் பொறுத்தவரை தான் சுயநலங்கொண்டு செய்யப்

«li
--95ــــــــــــ
போகிற ஒரு செய்கையாகவே பட்டது. பிரச்சனைகளி லிருந்து தப்பித்துக் கொள்ள, தன்னை விடுவித்துக் கொண்டு மனதைச் சமாதானப்படுத்தி வாழத்தான தானும் விரும்புகிருன்? அப்படியாஞல் என்னதான் செய்வது? இந்தக்கேள்வியைப் பலமுறை தன்னிடமே கேட்டுப்பார்த்துவிட்டான். தன் நண்பர்களிடமெல்லாம் இவ்விஷயத்தை விவாதித்துப் பார்த்தும் இருக்கிருன். சுமாரானவர்களெல்லாம் முகஸ்த்துதிக்காக எதையா வது சார்பாகக் கதைத்துவிட்டு, தான்இல்லாத இடத் தில் "அவனுக்கு விசர்’ எனச்சொல்லி விட்டுப்போகிற துரோகத்தனத்தையும் எ ண் ணி ப் பலமுறை மனம் வெதும்பியிருக்கிருன்,
ஆல்ை, தான் ஒரு விசர்த்தனமான முடிவைத் தான் எடுத்திருக்கிறேன் என்பது மனதை ஆக்கிரமிக் கும் பொழுது அவனிடத்தில் ஒரு புன் ன  ைக யும் வைராக்கியமும் தோன்றும். தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாகவே இருப்பது என்பது அவனது முடிவு. ஆண்வர்க்கத்தின் சுயநலத்திற்காக, அவன் இப்படித் தன்னை வாட்டுவதற்கு ரெடி!
★ー★ー★ー★ー★
வவுனியா புகையிரத நிலையத்தில் ஒருவர் இறங்கி யதால் சாந்தா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் இருக்கையில் ஓர் இடம் கிடைத்தது. இனி அவளைப் பார்க்கவே கூடாது என்ற தீர்மானத்துடன் அவ்விடத் தில் அமர்ந்து கொண்டான் அவன்.
அவளை மறப்பதற்காக சிறுவர்களின் துடினமான விளையாட்டுக்களில் கவனத்தைச் செலுத்தினுன் , கண், அவளுக்கு பக்கத்தில் இருக்கின்ற இளைஞனை மேயச் சென்றது.
அந்த இளைஞன் மெளனமாக இருந்தான். புகை யிரதத்தின் குலுக்கத்தோடு. அவனது உடல் அவ ளோடு ஸ்பரிக்கிறதா? அல்லது அது தற்செயலாகத் தான் சம்பவிக்கிறதா என இவன் தலையைப்போட்டு உடைத்தான். அவனை அவளது சகோதரனுக இருக்கும் என கருதியிருந்தஅவனுக்கு "அப்படிஇருக்கமுடியாதோ' என்ற சந்தேகமும் தோன்றியது. அவன் வேறு யாரோ வாக இருந்தால், அவள் அனுமதிக்கின்ற ஸ்பரிசத்தை

Page 52
--96-س-
இவனது மனது தாங்கிக்கொள்ள முடியாமல் துணுக் குற்றது. அல்லது. அவ (ர்க) ள் அறியாமலே நிகழ்கிற ஒரு தற்செயல் நிகழ்வுக்கு ஒன்றுமேயில்லாத ஒரு விஷ யத்துக்கு, தானே விரசமாக கற்பனை செய்வதாக எண்ணினன். இதற்காக, அவன் தன்னை நினைத்து வெட்கமுமடைந்தான். ஒரு பெண்ணைச் சந்தேகிக்கிற குறைப்படுகிற வர்க்கத்தைத்தானே தானும் சேர்ந் திருக்கிறேன் என எண்ணிக் குறுகிப் போனன்.
அடுத்த புகையிரத நிலையத்தில் அந்த இளைஞன் ஒன்றுமே பேசாமல் இறங்கிப்போனன் - அட, அவன் வேறு யாரோதான்!
இவன் மிகக் கவனமாக அவளோடு தனது கால் கள் தட்டுப்படாமல் ஒதுக்கமாக இருந்தான். ஆரம் பத்திலிருந்தே இவ்விஷயத்தில் கண்ணும் கருத்துமா கத்தான் இருந்தான். ஒரு தற்செயலான நிகழ்வுக் கேனும் அவள் தன்னை மட்டமாகக் கணித்துவிடக் கூடாது என்ற பயம் மனசிலிருந்தது.
ரெயில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. சிறு வர்கள் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந் தார்கள். அவர்களது விளையாட்டிற்கு அவள் கவனிக் கும் படியாக அவன் சிரித்தான். அவளைக் கவரவேண்
டுமென்பதற்காக தேவையில்லாத நேரங்களிலும் சிரிக்க -
வேண்டியிருந்தது. அவனுக்கு அவளோடு கதைக்க வேண்டும் போலவுமிருந்தது.
பாட்டி யோடு முதலிற் கதைத்து, சிறுவர்களோடு கதைத்து, அவர்களிடம் ஒரு நட்புரிமையை ஏற்படுத் தினன். ரொபி விற்கிற சிறுவன் வந்த பொழுது வேண்டி சிறுவர்களுக்குக் கொடுத்து அவளிடமும் (வேண்டுவாளோ மாட்டாளோ) நீட்டிய பொழுது அவள் வெடுக் கென மறுபக்கம் திரும்பினுள், "என்ன பெண் இவள்? அவளது அலட்சியமான புறக்கணிப்பு இதயத்தைச் சூடாக வருத்தியது. வாழ்க்கையில் பெரிய விரக்தி அடைந்துவிட்ட ஒருவனைப்போல அவன்மனது சோர்வடைந்தது. நெடுநேரம் அவளைப் பார்க்காமலி ருக்கிற வைராக்கியமும் ஏற்பட்டது. பிறகு அவள் பக்கம் திரும்ப அப்பொழுதெல்லாம் அவள் தன்னையே
V,
y

-97
பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான். அவளது பார்வை தனது செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட் பதாக அவன் கருதிக்கொண்டான். அதையெல்லாம் அலட்சியமாகப் புறக்கணித்துக் கொண்டே மறுபக்கம் மறுபக்கமாகத் திரும்பினன். தனது அலட்சியம் அவளி டம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத் துக் கொண்டு பார்க்கிறபொழுது, ‘என்னை மன்னித்து விடுங்கள்" என அவள் மன்ருட்டமாகக்கேட்பதுபோலிரு ந்தது. அந்தப்பார்வை அவன் மனதை அசைந்தது. அவள்பால் அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது. அதற்கு மேலும் அவளை வருத்த விரும்பாமல் அவளேப் பார்த்து ஒருபுன்முறுவல் பூத்தான்.
அவள் சிரிக்காமல் இருந்தாள். ஆனல் கோபப்ப டாமல் அந்தச்சிரிப்புக்குப் பதிலாகத் தலையைக் குனிந் தாள். அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் திரும்பவும் த ன் னே ப் பார் க் கும் பொழுது கதைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அவள் நிமிர்ந்தாள். அவனது மனசு படபடப்படைந் தது. கதைக்கவேண்டும் என்று சுலபமாக நினைத்தா யிற்று! என்ன கதைப்பது? எ ப் படி க் கதைப்பது: 'நீங்கள். படிக். கிறீங்களா? அல்லது படிச்சு முடி ஞ்சு வீட்டிலே. அம்மாவுக்கு உதவியாக?...”*
"உங்களுக்கேன் அதெல்லாம்?' என்ருள் அவள். அவன் திடுக்குற்றுப் போனன். அவளது தோற்றத்தி லும் பெயரிலும் லயித்துப் போயிருந்தவனுக்கு இந்த எதிர்மாருண் செய்கை அதிர்ச்சியை அளித்தது. பின் னர் அவளைப் பார்ப்பதையும் பிடிவாதமாய் தவிர்த் துக் கொண்டான்.
இந்த மடைத்தனமான மனசு ஒன்றும் நடக்காத து போல திரும்பவும் அவளையே அசைபோடுகிறதே என அலுத்துக் கொண்டான், சரியான கர்வக்காரி யாக இருப்பாளோ? இல்லை, அவள் நடந்து கொண்ட விதம்தான் சரி. பெண்கள் இப்படி இருந்தாற்ருன் இந்த உலகத்தில் தப்பிப் பிழைக்கலாம். என்ன இருந் தாலும் அவள் தன்னைப் புறக்கணித்ததில் கவலையும், தன்னையும் மட்டமாகக் கருதியிருப்பாளோ என எண் ணியபொழுது வெட்க உணர்வும் மேலிட்டது.

Page 53
ش-983-س-
கொடிகாமம் புகையிரத நிலையத்தில் அவர்கள் இறங்கப்போவதை அறிந்ததும் சிறிது துடிப்படைந் தான், சனநெரிசலோடு பயணப் பெட்டியையும் எடுத் துக் கொண்டு இறங்குவது சிரமமாகையால் அவர்களே இறங்குமாறும் தான் யன்னலூடு பெட்டியைத் தருவ தாகவும் பாட்டியிடம் கூறினன். அதை அவளுக்கும் கேட்கக்கூடியதாகத்தான் சொன்னன். ஆனல் அவள் எதுவுமே கேட்காதவள் போல தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கினுள். தனது கட்டுப்பாட் டை மீறி அவளிடம் மனதைப் பறிகொடுத்த பலவீ னத்தை நினைக்க தன்மீது எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
கீழே இறங்கி வந்த அவள், யன்னலின் ஊடாக அவனை அழைத்தாள் உள்ளே இருக்கும் இன்னெரு பெட்டியைக்காட்டி அதை எடுத்துத் தருமாறு கேட் டாள். அவன் அதை நம்பமுடியாதவஞய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை உண்மையிலேயே புறக்கணித்திருந்தால் அவள் இப்படி வலிந்து கதைத் திருக்கமாட்டாள் என்ற சந்தோஷம் தோன்றியது. அந்தப் பெட்டியை எடுத்து ஆதரவோடு அவளைப் பார்த்தவாறு கொடுத்தான். ஆண்மைக்கேயுரிய பெரு மிதம் தோன்றியது. அவளது கண்கள் தன்னிடம் அடங்கிப் போவதை உணர்ந்தான்.
புகையிரதம் கிளம்பியது, புகையிரதம் ஒடத்
தொடங்கியதும் அவள் அவனைப் பார்த்தவாறு கையை
அசைத்தாள். கண்ணிலிருந்து மறைக்கின்றவரை அவள்
அப்படியேநின்ருள். அவனுக்கு அடக்கமுடியாத சோகம்
பொங்கிக் கொண்டு வந்தது, "இவ்வளவு தானு?"
மனது அமைதி குலைந்து தவித்தது: “ சாந்தா’- சற்று நேரம் இயற்கை வசப்பட்டுப்டோன குற்றத்திற் காக அன்றைய இரவின் உறக்கம் பறிபோய்க் கொண் டிருப்பதை உணர்ந்தான்.
வீரகேசரி 11-11-1979
 
 

பொழுதுபட்டால் கிட்டாது
-99- :}; ; , .

Page 54
பொழுதுபட்டால் கிட்டாது
- (0-
ஆலயமணி ஒலித்தது, சுவாமி வெளிக்கிட நேர மாகிவிட்டது.
கமலம் தனது நடையை விரைவுபடுத்தினுள். நாலு வயதுகூட நிரம்பாத மூத்த மகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தாள். இரண்டே வயது நிரம்பிய இளைய மகனைத் தூக்கிக் கொண்டு நடப்பது சற்றுச் சுமையா கத்தான் இருந்தது.
"கெதியிலை நட தங்கச்சி. சாமி வெளிக்கிட நேரமாச்சுது. மணி கேக்குது." என மகளையும் விரைவு படுத்தினுள், அம்மாவின் பேச்சு பிள்ளையின் காதில்விழவி ல்லை. பாதையோரங்களில்இருந்த விளையாட்டுச் சாமான் களையும், தின்பண்டங்களையும் விற்பனை செய்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள் சிறுமி.
கமலம், கோபம் மேலிட, “பிராக்குப் பார்க்காமல் வா தங்கச்சி!” என மகளை அதட்டியவாறே நடந் தாள்.
அரசடிச் சந்தியை அண்மித்துச் சென்ற பொழுது சுப்பிரமணியத்தார் தனது பெண்சாதியுடனும், நான்கு பிள்ளைகளுடனும் வந்துகொண்டிருந்தார். கமலத்தைக் கண்டதும் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டுச் சென் முர். கமலமும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டாலும் மனத்திலே ஏதோ ஒருகுறை உறுத்தியது.
சுப்பிரமணியத்தார் தனது இரு புதல்வர்களையும் இரு கைகளிலும் பிடித்தவாறு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சென்ருர். அவருடைய இரு பெண்பிள்ளை களும் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்
தார்கள். பிள்ளைகளும் சரி, பெற்முேரும் சரி எவ்வளவு
را
أخير

--س-1091-س--
கலகலப்பாக சந்தோஷமாகக் கதைத்துச் சிரித்துக் கொண்டு வந்தார்கள்! அந்தக் குடும்பமே இப்படி இணைந்து செல்வது எவ்வளவு நிறைவாகவும் அழகாக வும் இருக்கிறது!
கமலமும் "அவரைத் திருவிழாவிற்கு வந்து நிற்கு மாறுதான் எழுதினுள். ஆனல் அவரோ லிவு கிடைக் காதபடியால் வாமுடியவில்ஃப் என்று எழுதிவிட்டார். சிலவேளை கடைசித் திருவிழாவிற்கு வரக்கூடும்.
சுப்பிரமணியத்தார் பட்டுவேட்டி, சருகைச் சால்வை, தங்கச் சங்கிலி சகிதம் எடுப்பாக இருந் தார். அவருடைய மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ, எந் தக் குறையையும் அவர் வைக்கவில்லை. மனைவி உயர்ந்த ரகச் சேலையும் அதற்கேற்ருற் போல் ரவிக்கையும் அணிந்து கூந்தல் நிறைந்த மலர்களுடன் தனது கன வணுேடு இணைந்து சென்றதைக் கமலத்தினுல் நினைத் துப் பார்க்கவே முடியவில்லை.
சிறுவர்கள் இருவருக்கும் பத்துப் பன்னிரண்டு ' வயது மதிக்கலாம் - அழகாகப் பட்டுவேட்டி உடுத்து நெஞ்சிலே தங்கச் சங்கிலிகள் தவழ அப்பாவின் செல் லங்களாக மிடுக்குடன் சென்ருfகள். அவர்களே அடுத்த பெண்பிள்ளைகளும் இதேபோலத்தான் எவ்வித குறையு Islai),
கமலம் தன் பிள்ளைகளை ஒருமுறை நோக்கினுள் இந்த விஷயத்தில் அவளுடைய பிள்ளைகளுக்கும் ஒரு குறையும் இல்லைத்தான். ஆணுல் சுப்பிரமணியத்தார் குடும்பத்தைக் கண்ட பொழுது இவள் பொருமைப் படுமளவுக்கு அவர்களிற் தென்பட்ட "நறிச் ஆக்’ தன் னிடத்தில் இல்லையே என்பது பெரிய ஏக்கமாக மனதை வருத்தியது.
கோயிலடிக்குச் சென்றதும் வீதியின் ஒரு பக்கமா கச் சென்று ஒதுங்கி நின்று கொண்டாள் கமலம், இந்த சுப்பிரமணியத்தைத் தான் முன்பு ஒரு காலத்தில் - கந் தையா புருேக்கர் இவளுக்குச் "சம்பந்தம்" பேசிக் கொண்டு வந்தார். அப்பொழுது அதை முழுமூச்சு டன் எதிர்த்தவள் கமலத்தின் தாயார் செல்லமணி
, ! ! !
தான்.
13

Page 55
- 102
"உதென்ன புருேக்கர் கண்டறியாத சம்பந்தமெல் லாம் பேசிக்கொண்டு வாறிர்? இவள் பிள்ளையின் ரை படிப்புக்கு அவன் எந்த மூலைக்கு?. எண்டா )ம் ஒரு தராதரம் வேண்டாமே?”*
**இல்லைப் பாருங்கோ. அப்படிச் சொல்லக் கூடாது பொடியன் முயற்சியுள்ளவன். வீட்டிலை உள்ள கஷ்டங்களாலை உத்தியோகத்துக்குப் போனலும் இன் னும் படிச்சுக் கொண்டுதான் இருக்கிருன். இண்டைக் கில்லாட்டியும் ஒரு நாளைக்கு அவன் கட்டாயம் ஒரு நல்ல நிலைக்கு வருவான்." எனப் புருேக்கர் சமா தானம் சொல்லிப் பார்த்தார்.
* உதெல்லாம் பேய்க்கதை புருேக்கர். சுப்பிர மணியத்தின்ரை தேப்பன் இப்பவே அங்கை கடன் தனி யிலை கிடந்து கஷ்டப்படுகிருர். இனி எங்கடை பிள்ஃா யைக் கொண்டுபோய் உழைப்பிக்கப் போகினம்போலை. அதுக்குத்தான் அந்தரப்படுகினம்.”*
**நல்ல நியாயம் சொன்னியள் அவங்கள் சகோ தரங்கள் ஐஞ்சு ஆம்பிளைப் பிள்ளையன் இருக்கிருங்கள். தாங்கள் உழைச்சுக்கடனே அழிக்கேலாமல் உங்களிட்டை வாருங்களே? உங்கடை இனஞ்சனந்தானே எண்டுதான் பேசிக்கொண்டு வந்தனுன் " புருேக்கர் சற்று எரிச் : லுடன் சொன்னுர்.
கமலத்துக்கு அம்மாவின் நியாயங்கள் சரியாகவே பட்டன.
*அவர் உழைக்கிற காசு எனக்கு ஒரு சீலை வேண் டக் காணுமோ எண்டு கேளம்மா!' என்று கேலியா அவே கேட்டாள்.
புருேக்கர் மேற்கொண்டு கதைக்கவில்லை.
அவையள் சொந்தக்காரர் எண்டாப்டோலே அவளை கொண்டு போய் அந்தப் பாழுங்கிணத்திலை தள் ளாமல் வேறையொரு நல்ல இடமாய் பேசிக்கொண்டு வாங்கோ புருேக்கர்!" என அவரை அனுப்பி வைத் தாள் செல்லமணி.
'

t
--.103! ۔۔۔
அப்பொழுது கச்சேரியில் ஒரு சாதாரணக் "கிளாக்" ஆக இருந்த சுப்பிரமணியம் இப்பொழுது உதவி அர சாங்க அதிபராக உயர்ந்துவிட்டார்.
கமலம் கந்தசுவாமிக் கோவில் கோபுரத்தை நிமிர் ந்து பார்த்தாள். அவளேயறியாமலே, "அப்பனே முருகா! ' என மனது எதையோ யாசித்தது.
அப்பொழுது கமலம் ஒரு பட்டதாரி ஆசிரியை. இருபத்துமூன்று வயதில் பல்கலைக்கழகப் பட் டம் பெற்று வெளியேறியவளுக்கு ஆசிரியை நியம னமும் கிடைத்தது. கமலத்துக்கும் தாய் செல்லமணிக்கும் பெருமை பிடிபடவில்லை.
கமலத்தை பட்டதாரியாக்க வேண்டுமெனப் படாதபாடுபட்டவள் செல்லமணி. சிறுவயதில் அவளு டைய திறமையைப்பற்றி ஆசிரியர்கள் கூறும் போ தெல்லாம் எப்படியும் அவளைப் படிக்க வைத்து ஆளா க்கிவிட வேண்டுமென்றுதான் கனவு காண்பாள். அவளு டைய அயரா முயற்சியில் அந்தக் கனவும் பலித்தது.
கமலத்தின் தந்தை முருகேசர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், தானுண்டு தன் பாடுண்டு என இருந்துவிடுவார்.
* பெடியங்களே படிச்சுப் போட்டு உத்தியோக மில்லாமல் இருக்கிரு?ங்கள். இவள் படிச்சு என்ன செய்யப் போருள்? . ஒருத்தனிட்டைப் போளூல் அடுப்பு மூட்டிக் கொண்டு குசினியிக்கை கிடக்க வேண் டியவள் தானே?" என்பது அவருடையவாதம் இதனுல் தந்தையின்மேல் கமலத்துக்கு சற்று வெறுப்பும்கூட. செல்லமணி கணவனுடைய முகத்திற்கே சொல்வாள் **இந்த மனுசன் இருந்துதான் என்ன சுகத்தைக் கண் டன்?. நான் ஒரு பொம்பிளை கிடந்து உலையுறன் அந்தாள் அம்மிக்கல்லுமாதிரி வீட்டுக்குள்ளை குந்திக்
கொண்டிருக்குது!” முருகேசு சூடு சுரணையில்லாமல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார், பழக்க தோஷம்!
கமலத்தின் திருமண விஷயத்திற்கூட முருகேசர் பின்னுக்குத்தான் நின்ருர், 'தாய்க்கும் மோளுக்கும்

Page 56
-104
ஏத்த மாப்பிள்ளை தேடுவதெண்டால் இனி நான் செய் தெல்லோ கொண்டு வரவேணும்!"
** அப்புசாமி!” என இளைய மகள் கும் பிட்டதைக் கண்டதும்தான் சுவாமி விதிவலம் வந்து கொண்டிருப் பதைக் கமலமும் கவனித்தாள். மிகவும் பயபக்தியுடன் மனதை ஒரு நிலைப்படுத்தி தனது கவலையையெல்லாம் இறைவனிடம் முறையிட்டாள்.
* கவலைப்பட வேண்டிய காலமெல்லாம் கடந்து விட்டதே' என்ற எண்ணமும் கூடவே எழுந்து வருத் தியது.
இளம் தம்பதியர்கள் பலர், கைகோர்த்துக் கொண்டு செல்கிருர்கள். கணவனுடைய கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டு அவனேடு அணைந்த வாறு ஒருத்தி செல்கின்ருள். அவன் அவளுக்குத் தகுந் ஆ துணையாக, அவளை எவ்வளவு பாதுகாப்பாக அழைத்துச் செல்கின் முன்! தனது மனேவியையும், பிள்ளேகளேயும்
அப்பா ஒருவர் எவ்வளவு பக்குவமாக சனத்தினுள் இடி
படாமல் கூட்டிச் செல்கிருர். பார்த்துக்கொண்டு நின் முல் இந்தக் காட்சிகள்தான் கமலத்தின் கண்களே குத்துகின்றன.
அவளுக்கு யார்தான் துணை? கமலம் கண்களை மூடிக் கொண்டாள், 'அப்பனே முருகா.நீதான் எனக்குத்
துணையிருக்க வேணும்! "
*" காலத்தோடை பயிர்செய்ய வேணும்.பொம் பிளையஞக்குத் துணைதான் முக்கியம். உத்தியோகம் பெரிசில்லை. இப்ப ஒவ்வொரு நொட்டை சொல்லி. வர்ற சம்பந்தங்களையெல்லாம் தட்டிக் கழிச்சால் பின் னடிக்குத்தான் கவலைப்படவேண்டி வரும்.இப்ப தெரியாது. எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடியே இருக்கப் போருய்?" கமலத்தின் அண்ணன் பரமநாதன் இப்படித்தான் முன்பு சொன்னன், அண்ணனுடைய வாதம் அப்பொழுது அவளுக்கு வேடிக்கையாக இருந்
திது .
எனக்கு ஒருத்தற்றை உதவியும் தேவையில்லை. என்ரை காலிலை நிக்க ஏலும்! நான் உழைச்சு அம்மா
- *Nఖ్న N

as 105
வின்ரை கடனை அழிச்சு. கடைசிவரைக்கும் அவவை வைச்சுக் காப்பாற்றுவன்'
அப்பொழுது கமலத்துக்கு இருபத்தேழு வயது, அண்ணனுக்கு முப்பது வயது, பரமநாதனும் படிப்பு முடிந்து உத்தியோகம் செய்து கொண்டிருந்தான்.
அம்மா இரகசியமாக கமலத்தின் காதில் ஒதி ஞள். "அவருக்கு அவசரமாயிருக்குது போலை. அது தான் உந்தக் கதை கதைக்கிருர்."
அதைக்கேட்டு அவளும் அண்ணனுடைய முகத்தை முறிப்பது போலச் சொல்லி விட்டாள், "உனக்கு அவசரமெண்டால் போய்முடி! என்ரை விஷயத்திலே ஒருத்தரும் தலையிடத்தேவையில்லை!"
அவனும் முடித்துக் கொண்டு போய்விட்டான்.
கந்தையாப் புருேக்கர் பேசிக்கொண்டு வந்த கச் சேரியடிச் சம்பந்தத்திற்தான் அண்ணனையும் முறிக்க வேண்டிவந்தது.
‘கச்சேரியடியிலை ஒரு மாப்பிளை இருக்கு பெரிய உத்தியோகக்காறன். நாலைஞ்சு பேருக்கு பெரியவனுய் இருக்கிருன். நாப்பது, ஐம்பது பவுண் உழைக்கிருன். இனி குடும்பக் கரைச்சல் பொறுப்பு ஒண்டும் இல் லாத பெடியன். பிள்ளைக்கு நல்ல தோதான Lorry Sait? T.'
செல்லமணி தீவிரமாக யோசித்தாள். பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவள் போலக் கேட்டாள்,
"புருேக்கர் ஆரைச் சொல்லுறீர்? வேலுப்பிள்ளை யற்றை பெடியனையே?
"ஓ! அங்கை உங்களுக்கு ஆக்களேயும் தெரியும்! பிறகென்ன? டேசி முடிக்க வேண்டியதுதானே?"
* புருேக்கர்! ஆக்களை விளங்காமல் கதைக்கிறீர்!. உ  ைவ ய ஸ் ஆர் ஆக்கள் தெரியுமே?. உவை யோடை நாங்கள் எந்தக் காலத்திலே உறவாடினனங் கள்?. வேலுப்பிள்ளையற்றை தங்கைக்காறி ஒருத்தி

Page 57
-- 6{)1 س--
யெல்லே. முந்தி ஒருத்தனுேடை கூடிக் கொண்டு ஒடினவள்? அவன் என்ன சாதி எண்டு தெரியுமே அதுக்குப் பிறகுதானே. உவையளைச் சந்தி சபைக்கு வேண்டாமென்று விட்டஞங்கள்!"
"இப்படிக் கொண்டு வர்றதுக்கெல்லாம் ஒவ் வொரு குறை சொன்னூல். நான் எங்கை மாப்பிளை பிடிக்கப் போறது?. இன்னும் நீங்கள் உங்கடை காலத்திலை தான் நிக்கிறீங்கள்!. பிள்ளையளின் ரை காலத்திலே உதெல்லாம் ஆர் பாக்கப் போகினம்: . குழப்பாமல் செய்து வையுங்கோ!'
"புருேக்கர்! இந்தச் செல்லமணியை உமக்குத் தெரியாது. தின்னவேலி நடராசற்றை குடிபூரலுக்குக் கச்சேரியடியார் வந்திட்டின மெண்டெல்லே. நான் எல் லாரையும் கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டனன். அப் பிடிக்கொத்த செல்லமணி இனி அந்த வாசற்படி ஏறு வாள் எண்டு நினைக்கிறீரோ?" பெருமையுடன் கூறி ஞள் செல்லமணி.
அம்மாவின் "விசர் ஞாயங்களைக்" கேட்க பரமநாத னுக்கு எரிச்சலாயிருந்தது.
“வேலுப்பிள்ளையின்ரை தங்கச்சி ஆரோடை ஒடி ஞத்தான் உனக்கென்னணை அம்மா?. இப்ப அவற்றை மகனைத்தானே பேசப்போறியள்?’ என அம்மாவிடம் சொல்லிப் பார்த்தான்.
"உனக்கு ஒரு கோதாரியும் தெரியாது. கச்சேரி யடியாரோடை சம்பந்தம் செய்தால் பிறகு உன்rே ஒரு சந்தி சபைக்கு எடுப்பினமே?"
பரமநாதனுக்கு ஆத்திரம் எல்லை மீறியது. "எங் களை ஒருத்தரும் கூப்பிடத் தேவையில்லை! கண்டறியாத சாதிபேதம் கதைக்கிறனிங்களெல்லாம் பெரிய திறமான ஆக்களே?. அவரவற்றை நடத்தையைக் கொண்டு தான் மனிசனக் கணிக்க வேணும்!"
* தம்பி சொல்றதும் ஞாயம்தான்" என்ருர் புருேக்கர்.

سے 107 ص
செல்லமணி சினங்கொண்டவளாக, 'அவளுக்குக் கலியாணம் முடிச்சு வைக்க எனக்குத் தெரியும்! நீங் கள் ஒருத்தரும் இதிலை தலையிடத் தேவையில்லை" என வெடித்தாள்.
புருேக்கருக்கு முகம் கறுத்துப் போய்விட்டது.
பரமநாதனுக்கு ஆத்திரத்தில் இன்னும் முகம் சிவந்து
விட்டது. நல்லகாலமாகத் தான் இந்த விவாதத்தில் பங்குபற்றவில்லை என மகிழ்ந்து கொண்டார் முரு கேசர்,
பரமநாதனுக்கு அம்மாவின் போக்குப் பிடிக்க வில்லை. தங்கையுடனவது கதைத்துப் பார்க்கலாமென நினைத் தான்,
"கமலம்! நீயும் எவ்வளவு காலத்துக்குத்தான் அம்மாவின்ரை எண்ணத்துக்கு நிண்டு ஆடப்பேrறுய்? நீ படிச்சனி. நீயே சிந்திச்சு நல்ல முடிவுக்கு வர வேணும். ஏனெண்டால் இதாலை வர்ற கஷ்டநஷ்டங்
களை அனுபவிக்கப் போறவள் நீதான்! அம்மா உன்
னேடை நெடுகலும் இருக்கமாட்டா."
கமலத்துக்கு அண்ணனுடைய நியாயம் ஏறவில்லை. அவள் அம்மாவின் பக்கம் தான். அம்மாவினுடைய சுயகெளரவத்தில் அவளுக்குப் பெருமையும் கூட தனது தரத்துக்கு ஒரு விதக்குறையுமில்லாத மாப்பிளை தான் தேவைஎன நினைத்தாள் கமலம். அப்படி ஒரு மாப்பிளேயை அம்மாவினுற் தான் தேர்ந்தெடுக்க முடியு மென்பதும் அவளுடைய நம்பிக்கை.
'எனக்காக ஒருத்தரும் கஷ்டப்படத் தேவை யில்லை! நான் இப்பிடியே எவ்வளவு காலத்துக்கும் இருப் Lu667 ... ... அம்மா சொல்லுறதும் சரிதானே?"
இதைப்போய் யாரிடம் சொல்லி அழுவதென்று அவனுக்குப் புரியவில்லை.
'இவளுக்கு உத்தியோகம் பாக்கிறனெண்ட திமிர்! இப்ப தெரியாது. பிறகுதான் கவலைப்படுவாள்' எனத் தந்தையிடம் ஏசிக்கொண்டு போய்விட்டான் பரமநாதன்.

Page 58
--- 1088 س
கமலம் கவலை மேலிடத் தன் குழந்தைகளைப் பார்க் கிருள். அவர்கள் மகிழ்ச்சி யாகக் கோயில் மணலில் விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். அவர் களுடைய சந்தோஷத்தில் குறுக்கிட விரும்பாமல் கவனத்தைத் திருப்பினுள்"
கமலத்தின் மூத்த மகளே மூன்று வயதுவரை தனது கட்டுப்பாட்டிலேயே வளர்த்த செல்லமணிக் கிழவியும் இறந்து ஒரு வருடமாகிவிட்ட்து.
கமலத்தின் கண்கள் கலங்கின. அது அம்மாவின் மறைவை நினைத்தோ அல்லது, அம்மாவின் எண்ணப்படி நின்று ஆடியதனுல் தனது வாழ்வு நிறைவில்லாத ஒன்ருகி விட்டதஞலோ என்று புரியவில்லை.
கமலத்துக்கு முப்பது வயது கடந்துவிட்டது பின் னர்தான் தனது கலியாணத்தின் அவசியத்தைப்பற்றி உணரத் தொடங்கினுள்.
கணவனும் மனவியுமாக இளம் தம்பதியர் கை கோர்த்துச் செல்வதைக் காணுகின்ற பொழுது ஏற்படு கின்ற ஒருவித கிளர்ச்சிகள் தான் இன்னும் செல்வி யாக இருப்பதல்ை பாடசாலையிற் சக ஆசிரியர்கள் - திருமணமானவர்களும் கூட, தேவையில்லாமல் வந் திருந்து அரட்டையடிக்கின்ற சம்பவங்கள், உயர் வகுப்பு மாணவர்களின் சிலேடையான பேச்சுக்கள், மாணவி யரின் கேலி வார்த்தைகள். பாதையிற் சில ஆடவ ரின் வித்தியாசமான பார்வைகள், "பஸ்" சிலே பிரயா ணம் செய்கின்ற போது சில வாலிபர்களின் தவறுத லான அல்லது குறும்பான ஸ்பரிசத்தினுல் கிளர்கின்ற உணர்ச்சிகள். பல இரவுகளை உறக்கமின்றியே கழியச் செய்தன. அப்படி உறக்கமில்லாத இரவுகள் அவளுக்கு ஒரு துணையின் அவசியத்தை வலியுறுத்தின. கழுத் திலே ஒரு தாலிக்கொடி இருந்தால் அவர்களெல்லாம் இப்படி நடந்து கொள்வார்களா?
கமலத்தின் நச்சரிப்பு” செல்லமணிக்குப் பெரிய தலையிடியாகப் போய்விட்டது. கந்தையாப் புருேக்கர் கொண்டு வந்த எத்தனை சம்பந்தங்களைத்தான் அவள் ஒவ்வொரு நொட்டை சொல்லித் தட்டிக் கழித்திருக் கிருள்.
h

- 99
கந்தையாப் புருேக்கரும் இப்பொழுது இந்தப் பக் கம் வராமல் விட்டு விட்டார்: " கமலத்துக்கு பேசி GJ (549, Gribor, %37 Gau ir un rru'r Gai 36YT udrt rii இப்ப கலியான மும் முடிச்சு பிள்ளைகுட்டியோடை இருக்கிருங்கள்."
கச்சேரியடி வேலுப்பிள்ளையின் மகன் சதாசிவம் இன்னும் மணமாகாமல் இருக்கிருன் , செல்லமணி வேலுப்பிள்ளையின் வாசற்படி ஏறிச் சென்ருள், வேலுப் பிள்ளை கையை விரித்து விட்டார்.
செல்லமணி இடிவிழுந்தவள் போலானுள், ஏறி இறங்காதபடிகளும் இல்லை. திறக்காத கதவுகளும் இல்லை
இப்படியே நான்கு வருடங்கள் வரையில் கழித்து - கொண்டிருந்த பொழுதுதான் "கடவுள் செயலாக” ஒரு சம்பந்தம் வீடு தேடி வந்தது.
கச்சேரியடி சதாசிவம் தான்
அவன் ஏற்கனவே திருமணமாகி, மூன்று வருடங் கள் முடியுமுன்னரே இரு பிள்ளைகளுக்கும் தந்தையாகி மனைவியையும் பறிகொடுத்த பின்னர் இப்பொழுது
"இரண்டாம் தாரமாகக்" கமலத் ைதக் கேட்டு வந்தான்
*ஏதோ கடவுள் விட்டவழி' என செல்லமணியும் ஒத்துக்கொண்டாள். செல்வியாக இருந்த கமலம் தனது முப்பத்தைந்தாவது வயதில் திருமதியானுள்,
"மிஸ்ஸிஸ் சதாசிவம் நிற்கிரு!” என்றவாறே சொர்ணம்ரீச்சரும் கணவரும் அண்மையில் வந்தார்கள்.
"என்னப்பா தனிய நிற்கிறீர்?
"ஒம் என்ன செய்கிறது?" என விரக்தியுடன் பதிலளித்தாள்.
நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருந்து அண்மையிற்தான் தாய்மை அடைந்தவள் சொர்ணம். மிஸ்டர் "தில்லைக்கூத்தன்" எடுத்ததற்கெல்லாம் தனது மனைவியைத் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு
4

Page 59
-1 10
கதைத்தார். சற்று நேரம் கதைத்துக் கொண்டு நின்று விட்டு அவர்களும் விடைபெற்றனர்.
கமலம் பெருமூச்செறிந்தாள்.
சதாசிவம் அவளை மணந்து கொண்டாலும் அத ல்ை என்ன சுகத்தைத்தான் கண்டாள் உண்மையான பிரியமும் பாசமும் உள்ள ஒரு கணவனுக அவர் எப் பொழுதாவது நடந்திருக்கிருரா? ஐந்து வருடங்கள் அவருடன் வாழ்ந்து விட்டாள். ஒரு கடமைக்காகத் தான் இவள் மனைவியாகவும் அவர் கணவனுகவும் இருக்க வேண்டியிருக்கிறது!
தினமும் குடிப்பார். ‘முதலாம் தாரத்து" ! $%] ଜ, கள்தான் அவரை வாட்டுகின்றன போலிருக்கிறது. (குடிவெறியில் வந்து சதா அவளைப்பற்றியே பிதற்று வார்) வீட்டுக்கு நேரம் கழித்தே வருவார்.
கமலத்துக்கு அழவேண்டும் போலத் தோன்றும்,
ஏக்கமாக இருக்கும். ஒரு புதுமணப் பெண்ணுக்குரிய
ஆசைகளுடனும், ஏக்கத்துடனும் தான் கமலம் மணம் முடித்தாள்.
நேரம் தாமதித்து வீடுவந்த கணவனிடம் ஒரு நாள் நேரடியாகவே கேட்டாள்.
"வீட்டிலை, நான் ஒருத்தி உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது தெரியவில்லையோ?. ஒவ்வொரு நாளும் இப்பிடி மதியில்லாமல் குடிச்சுப்பேர்ட்டு வந்தால் என்ன முடிவு?"
அவர் நிதானமாகச் சொன்னர்,
*கமலம் நான் எனக்கொரு மனைவி தேவையெண்டு உன்னைக் கலியாணம் கட்டயில்லை. இந்தப் பிள்ளே யளுக்கு ஒரு அம்மா தேவையெண்டுதான் கட்டினெ ஞன்."
சனநெருக்கடி குறையவே பிள்ளைகளையும் அழைத் துக்கொண்டு கமலம் வீட்டுக்குப் புறப்படத் தொடங் கினுள்.
)

س---- 111 س--
ஆறுமாதத்துக்கு முன்னர்தான் சதாசிவத்துக்கு மன்னருக்கு மாற்றம் கிடைத்தது. கமலத்தையும் மன் ஞருக்கு மாற்றம் கேட்டு விண்ணப்பிக்குமாறு சதா சிவம் வற்புறுத்தினுர் கமலம் மறுத்துவிட்டாள்.
சதாசிவம் மன்னுருக்குச் சென்று இரண்டு மாதத் திற்குள்ளேயே தனது முதலாம் தாரத்துப் பிள்ளைகள் இரண்டிற்கும் பாடசாலையொன்றில் இடம் எடுத்து அங்கேயே அழைத்துக் கொண்டுவிட்டார்.
கமலம் தன் இருபிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலே இருந்துவிட்டாள்.
வீதியோரத்தில் எதையோ விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் 'போனுல் கிடை : '
யாது. பொழுதுபட்டால் கிட்டாது' என சத்தமிட் டுக் கொண்டிருந்தான்
கமலத்தின் நெஞ்சிலும் அதே உறுத்தல்; 'பொழுது
பட்டுத்தான் போச்சுது" குழந்தைகளை அணைத்தவாறு நடந்தாள்.
வீரகேசரி 16-10-1977

Page 60
படுக்கை
- 12
 
 

{
படுக்கை
سے 113 -----
"இனிப் படுக்கலாம் ' என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினன். கட்டிலில் தலே யணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக் கொண்டிருந்தவன் நேரம் கடந்துவிட்ட படியாற் தான் நித்திரை கொள்ளலாம் என நினைத் தான். பத்தரைமணி ஒரு பெரிய நேரமில்லைத்தான். ஆனல் இப்படியான குளிர்கால இரவுகளில் நித்திரை சரியாக வருமுன்னரே போர்த்து மூடிக்கொண்டு மெத் தைச் சூட்டில்கிடப்பது நல்ல சுகமாக இருக்கும். மேஜையில் எட்டி புத்தகத்தை வைத்தான். பின்னர்தலை
யணையைச் சரிசெய்து கொண்டு கையை நீட்டி "ரேபிள் ,
லாம்?பை அணைத்தான். படுத்திருந்து வாசிப்பதற்கு விசேடமாக ஒரு மேஜை விளக்கையும் வேண்டி வைத்திருந்தான். அறை முழுவதற்கும் பொதுவாகவும் ஒரு விளக்கு இருக்கிறது. படுக்க ஆயத்தமானதும் மேஜை விளக்கை ஒன்" பண்ணி விட்டு பொதுவான விளக்கை அனைத்துவிட்டு வாசிக்கலாம். பிறகு நித்தி ரை வரும்பொழுது கையை மெதுவாக உயர்த்தி அதையும் அணைத்துவிடலாம். எழுந்துகிழுந்து அசைய த்தேவையில்லை. போர்வைக்குள்ளே போய்விட்டால் சுகம், சொகுசு.
தும்புமெத்தை. அதற்குமேல் இரண்டு விரிப்புக்கள் இதமான சூடு. கதவில்லா யன்னலூாடு குடி குபுவென்று வீசுகிற குளிருக்குத் தாக்குப் பிடிக்கும் கணகணப்பு. மாதாமாதம் வாடகையை ஒழுங்காக வேண்டிக்கொள் ளும் போடிங்காரனுக்கு யன்னலுக்குக் கதவுபோடும் கரிசனையில்லை,
அது ஒரு வசதிபோலவும் தோன்றியபடியால் கதவு போட்டுத்தருமாறு இவனும் வற்புறுத்தவில்லை. நிலவுக்காலங்களில் கட்டிலிற் படுத்திருந்தவாறே, நஇ
്

Page 61
- 4 -
இரவில் வெளியே சந்திரனைப்பார்க்கும் பொழுது நல்ல சுதியாக இருக்கும்!
படுக்கையில் கிடந்தவாறே அந்த நிலாவைத் தேடியபொழுது மனது எதற்காகவோ தவிப்பதையும் உணரமுடிந்தது. என்னகுறை? s
முதலில் வாசித்துக்கொண்டிருந்தபொழுதே ஒருவித சஞ்சலம் இருக்கத்தான் செய்தது. நீரில் மிதக்கிற ஏதோ ஒரு பொருள் அலைகளோடு கொஞ்சம் கொஞ்சமாக த் தலையைக் காட்டி மறைவதுபோல நெஞ்சினுள் அமிழ் ந்து கொண்டிருந்து வெளிப்பட மறுத்தது. வாசிப் பதைக்கூட இடையிடையே நிறுத்திவிட்டு யோசித்துப் பார்த்தான். பிடிபடவில்லை. போய்த் தொஃகிறது என விட்டிருந்தான்.
ஆணுல் இப்பொழுது போர்வையுள் நுழைந்துவிட்ட இந்த அமைதியான இருளில் அந்தக்கவலை விசுவரூபம் எடுத்துக் கொண்டு வந்து என்னவென்று புரியாத பூதமாக நிற்கிறது. புரண்டுபுரண்டு படுத்தான். என்ன? என்ன?
சில இரவுகளில் இப்படி மனது காரணம் புரியாத கவலையில் வருந்துவதுண்டு வீட்டில் கஷ்ட நஷ்டங் கள், குடும்பபாரத்தைச் சுமக்க முடியாத அப்பா, நினைக் கிற அளவிற்கு தன்னுல் உதவமுடியவில்லையே என்ற ஆற்றுமை, அவசரமாகக் காசு தேவை என்று தம்பி எழுதியிருப்பான் - உடனடியாகப் பிரட்ட முடியாது சங்கடம், இப்படி ஏதும் கூட இன்றைக்கு இல்லை.
மற்றவர்களிடமிருந்து தான் தனிமைப்பட்டு இருப் பது தான் மனதை அரிக்கிறதோ என நினைத்துப் பார்த்தான்.
தனியாருக்குச் சொந்தமான இந்த போடிங்? இல் எட்டு அறைகள் இருக்கின்றன. பத்தொன்பது பேர் குடியிருக்கிருர்கள், இளைஞர்கள், குடும்பங்களை ஊரில் விட்டு வந்திருக்கும் நடுவயதினர். எல்லோருமே உத்தியோக நிமித்தம் நகருக்கு வந்தவர்கள். மற்ற அறைகளில் இருவர், மூவராகத்தான் குடியிருக்கிறர்
/*

-115=
கள். அவன் மாத்திரம் தனியான அறை. காசைச் செலுத்த விரும்பாத சிலருக்கு அது நக்கலான விஷ யம். தான் என்ன மனிதர்களை வேண்டா மென்று ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறேனு என நினைத் தான். ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலவீனங்கள். கூத்து கும்மாளங்கள், அகத்தில் பகையும் முகத்தில் நகையும் கொண்ட வஞ்சக உள்ளங்கள், தனக்கொரு நீதி பிறர்க்கொரு நியாயம் பேசுகிற சுயநலமிகள். மன சுக்கு ஒத்து வரவில்லை. அதனுல் சற்று ஒதுங்கி இருக் கிருன். இல்லாவிட்டால் எல்லோருக்குமே பாவமன்னி ப்பு அளிக்கின்ற தேவபிதாவாக அவனுல் எப்படி மாற முடியும்?
- காரணம் அதுதான், இரவு ஏழுமணியைப் போல அறைக்கு வந்தபொழுது, பொது விருந்தையில் சாராயம் அடித்துக் கொண்டிருந்த சக அறைவாசிகள் இவனையும் அழைத்தார்கள். இவன் மறுத்துவிட்டு வந்தது அவர்கழுக்குப் பெரிய கேலியாக இருந்தது. "இவர் பெரிய மகாத்மா." என் - அரைகுறையா கக் காதில் விழுந்தது-பிறகு நாலு அறைகளுக்கு கேட்கக் கூடியதாகச் சிரித்தார்கள். இவனுக்கு நெஞ் சுக்குள் ஏதோ எரிந்தது - தங்களைப் போல விட்டில் பூச்சிகளாக வந்து நெருப்பில் விழச் சொல்கிருர்களா?
அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியமேயில்லை யென இப்பொழுது தோன்றியது. சஞ்சலத்தைவிட்டு நிம்மதியாகப் படுக்கலாம் என மீண்டும் போர்வைக குள் நுழைந்தான். "இல்லே இது வேறு ஏதோ ஒன்று" என அந்தப்பூதம் மீண்டும் விசுவரூப மெடுத் துக் கொண்டு வந்தது. *இது என்னடா தொல்லை யாகப் போய்விட்டது. கதை சொல்லுகிற வேதாளம் மாதிரி. மனதைக் கலைத்துக் கொண்டு என சலிப் படைந்தவாறே மீண்டும் புரண்டான், எழுந்து யன் னல்கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்று யோசிக்க லாமா என எண்ணினன், போர்வையை கால்களினூல் உதறி விட்டான். குளிர் வந்து உரசியது. திரும்பவும் போர்வையை இழுத்துமூடினுன்,
எல்லாவற்றையும் சொகுசாக, விளக்கு ஸ்விச்சைக் கூடக் கையுக்குள்ளே கொண்டுவந்து வைத்திருக்கிற

Page 62
தனது சோம்பல்தனத்துக்கு சரியான தண்டனை தான் கிடைத்திருக்கிறது என எண்ணிஞன். படுக்கையை விட்டு எழுந்து சுவர்வரை போனுல் இடுப்பு முறிந்து விடுமென்ரு, மேஜை விளக்கு வேண்டி தலைமாட்டில் வைத்திருக்கிறேன் - எனச் சினமும் ஏற்பட்டது. நாளைக்கு இந்த மேஜைவிளக்கிற்கு ஒரு பிரியாவிடை கொடுக்க வேண்டும். அதோடு சோம்பலுக்கும் சேர்த்து.
"சீ என்ன இருந்தாலும் நித்திரை வருகிற பொழுது கையை உயர்த்தி இருட்டிற்குள் நுழைகிற சுகத்தை அனுபவிக்கமுடியாது. வேண்டாம் இந்த சிறிய சலுகையை மன்னித்து விடலாம்.
ஓ! அதுதான் சஞ்சலத்திற்குக் காரணமோ? எல் லோரையும் போல குடித்து வெறித்து, ஆடிப்பாடி துடினமாகத் திரியாமல் இப்படி இரவு வந்ததும் கதி ரைக்கோ அல்லது கட்டிலிற்கோ சுமையாகிப் போகிற சோம்பலா? நோ பகல்முழுதும் உழைத்து அலுத்துப் போகிற உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதலாக இர வைப் பயன்படுத்துவது தவருன விஷயமில்லையே!
ஆனபடியால் அந்தக் காரணமும் இல்லை. அப்போ?
அவனுக்குத் தனது மனதைப் பார்க்கப் பெரிய பரிதாபமாக இருந்தது. தலையணையில் நெஞ்சைப் பதித்து அதையே அணைத்தவாறு குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடினன். சரியான கார ணத்தைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும். இல்லாவிட் டால் தூக்கமே வரப்போவதில்லை. காலைமுதல் இரவு படுக்கைக்கு வரும்வரை சென்றுவந்த இடங்கள், சந் தித்த மனிதர்கள். எல்லாவற்றையும் நினைக்கத் தொடங்கினுன் , டிக். டிக். டிக். என மேஜை மணிக் கூடு எண்ணிக் கொண்டு வந்தது.
தலையினுள்ளே அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று படாரென உடைந்து வெளிப்பட்டதைப் போன்ற சுகம்
.மாலையில் காண நேர்ந்த அந்தக் காட்சிதான். அவனுடைய அந்தப் பார்வைதான்.

-س-117 -- ,
மாலை வாசிகசாலைக்குப் போய்விட்டு திரும்பிவந்து கொண்டிருந்தபொழுது இருளப் போகின்ற அந்த மைம் மல் பொழுதில் அதைக் கண்டான். பஸ் நிலையத் திற்கும் அப்பால் பின் விதியில், ஒதுக்குப்புறமான ஒரு பெரிய பூவரசு மரத்தின் கீழ் அந்தக் குடும்பம் குடி யிருக்கிற கோலம்!
தாய் தந்தையரையும் இரண்டு குழந்தைகளையும் கொண்ட அளவான குடும்பம்தான். ஆ ஞலும் ஆனந்தம் அதிகமில்லாத குடும்பம்! நெடுநாட்களாக அவர்கள் அங்கு வாழ்கிறதடையங்கள் தென்படுகின்றன - ஒரு பக்கத்தில் அவர்களது உடமைகள் பழைய துணிகளில் சிறுசிறு பொதிகளாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. பழைய குடைகள், குடைக் கம்பிகள், அறுந்த செருப்புக்கள்.கல்லிலேஅடுப்பு,அடுப் பில்சிறியபானையில்ஏதோ அவிகிறது. சமையல் நடக்கிறது எரிகிற அடுப்பைக் காற்று குழப்பாமல் மறைப்பாக வைத்திருக்கிருர்கள். பாத்திரங்களாகப் பயன்படும் தகரப்பேணிகள் பக்கத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்' கின்றன. குழந்தைகள் இரண்டும் பசியிற்போலும் . சிணுங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தாய் பகல்முழுதும் உழைத்த அசதியில் ஒரு பொலித்தீன் தாளின்மேல் தலைக்கு அணைவாகக் கையைக் கொடுத்துப் படுத்திருக்கிருள். அவன் அடுப்பை எரித்து சமைத்துக் கொண்டிருக்கிருன் ,
அவர்களது மரநிழல் வீட்டிற்குள் சென்ற குட்டி நாயொன்று செம்மையாக வேண்டிக்குளறிக் கொண்டு வருகிறது. இன்னுமொரு நாய் அண்மிக்கிற துணிவு இல்லாமல் எச்சரிக்கையாய் துார நின்ருலும் ஏக்கத் தோடு அவர்களையே பார்த்தவாறு நிற்கிறது. பசி, அவனது அழைப்பை ஆவலோடு பார்த்துக் கொண் டிருக்கும் பணிவான பார்வை, அவன் "உஞ்சு" என்று அழைத்ததுமே வாலை ஆட்டிக்கொண்டு ஒடிப் போய் தூக்கி எறிவதை சாப்பிடுவதற்குத் தயாரான மரியா ைெதி ,
அவர்கள் எப்பொழுது இங்கு வந்து குடியேறினுர் களோ தெரியாது. அந்த வீதிப்பக்கம் செல்லண்ேடிய
5

Page 63
- 18
அவசியமே இவனுக்கு இருந்ததில்லை. இன்றைக்கு சும்மா ஒரு "நடை" க்காகத்தான் போனன்.
இப்படி உழைப்பிற்காகப் போகிற நகரங்களிலெல் லாம் எங்காவது ஒர் ஒதுக்குப்புறத்தில் சீவித்து மாள்கிற பரிதாபம். இங்கிருந்து சற்றுத் தொலைவில் தான் பொதுமலசல கூடம் அமைந்திருக்கிறது. அந்த நாற்றம், அருவருப்பை கூடக் கருதாமல் அவர்கள் எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகிமுர்களா?
அவர்களையே பார்த்துக் கொண்டுஇவன் நிற்பதை அந்தக் குடுப்பத்தஃலவன் கண்டான். அவனது பார்வை யிலும் கணப்பொழுதில் ஆவல் கலந்தது - இந்த ஐயா கூப்பிட்டு ஏதாவது தருவாரோ, புண்ணியவான்?
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது இவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவனேடு கதைத்து ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றுதான் மனது சொல்லியது. ஆணுல், அந்தப் பள்ளத்தில் இறங்கி அவஞேடு கதைத்துக் கொண்டு நின்முல் பார்க்கிறசனம் என்ன சொல்லும்? இவன் யோசித்துக் கொண்டே நின் முன். இன்னும் கொஞ்சநேரம் நின்முல் அவனே வந்து விடுவான் போலிருந்தது. அதனுல் மெதுவாக நடந்து வரத் தொடங்கினுன், விட்டுவருகிற போதிலும் திரும் பத்திரும்பப் பார்த்தான் அவனும்-இவலேயே ஏக்கத் தோடு பார்த்துக் கொண்டு- அந்த நாயைப்போல - எப்பொழுது அழைப்பானுேஎன்ற ஆவலுடன் நின்முன். அறைக்கு வந்து வயிறு நிறையச் சாப்பிட்டு படுக்கை க்குப் போன பொழுதுதான் அந்தப் பார்வையின் தாக் கம் நெஞ்சிலே 'சுருக்” கிடுவதை உணரமுடிந்தது. அவனுக்கு ஒரு உதவியுமே செய்யாமல் வந்து விட்டமை பெரிய தவிப்பாக மனதை அலைக்கிறது. இந்தமனச் சாந்திக்கவேனும் (சுயநலம்!) அவனுக்கு இரண்டு ரூபாபை விட்டெறிந்துவிட்டு வந்திருக்கலாம்
தான்.
பிரச்சினை என்ன என்பதை அறிந்துவிட்டால் மனசு அமைதிடையும் என்றுதான் தம்பியிருந்தான். ஆளுல் அதற்கு ஒரு தீர்வு இன்றி உறங்கமுடியாதென்பதை இப்பொழுது உணர்ந்தான்.

--- 9!}س-
சரிதான் போகிறது, உலகத்தில் இப்படி எத்தனை பேர்கள் இருப்பார்கள். தானுெருவன் நினைத்துவிட்டால் அவர்களுடைய பட்டினிக்கும் பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது என மனதுக்குச் சமாதானம் சொல்லி க்கொண்டு உறங்க நினைத்தான்.
போர்வையை இழுத்து சரிசெய்தவாறு மறுபக்கம் புரண்டான். யன்னலூடு குபுகுபுவென வீசிய பணி கட்டிலைக் குளிராக்கியிருப்பதை உணர்த்தியது-சுருக்திரும்பவும் வேதாளம் விசுவரூபமெடுத்துக் கொண்டு வந்து மனதை கலைத்தது. "இங்கேயே இப்படிக் குளிர் கிறதே." அவர்கள் இப்பொழுது எப்படிப் படுத்திருப் L} f'TITUS (OIT,...
பஸ் நிலையத்தில் வேடிக்கை விளையாட்டுக் காட்டு கிற அந்தப் பிள்ளைகளை நினைக்கப்பரிதாபமாக இருந்தது. பால்குடி மாறுமுன்னரே தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக தாங்களே உழைக்கிற அந்தக் குழந்தைகளுக்குப் படுப் பதற்குக்கூட ஒரு வசதியான இடம் இல்லை. வீதி ஒரத்தில், வெறும் நிலத்தில், கடும் குளிரில், இருக்கின்ற பழசுகளால் உடலைச்சுற்றிக் கொண்டு படுத்திருப்பார் களோ? பாவம், படுப்பதற்குக் கூட ஒரு இடம் இல்லா விட்டால் என்ன சீவியமப்பா?
தான் அவர்களது படுக்கையைப்பற்றி யோசித் கிறேன்-அவர்கள் தங்கள் வயிற்றைப்பற்றி யோசித் துக்கொண்டு கிடப்பார்களோ எனவும் வயிற்றெரிச்ச லாயிருந்தது.
இரவு சும்மா அமைதியாகக் கிடப்பதுபோல நடிக் கிறது. இந்த இரவிலேயே எத்தனையோ மனிதர்கள் உறங்குவதற்குக் கூட ஓர் இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிருர்கள். அதையெல்லாம் மூடிமறைத் துட்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது இரவு. பொல்லாத இரவு. இவ்வளவு ஒரவஞ்சனையாக நடக்கலாமா?
**இந்த விசித்திரத்தில் எனக்கொரு போர்வை!" எனப் போர்வையைக் கால்களால் உதைத்துவிட்டான். குபுகுபுவென்று வருகிற பணி நன்முக உடலை அள்ளிக் கொண்டு போகட்டும். படுக்கை அருவருப்பைத் தரு கிற விஷயமாகத் தோன்றியதும் எழுந்து யன்னற் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றன்.

Page 64
-120
போடிங் சொந்தக்காரரின் மாளிகை - (அந்தப் பெரிய வீட்டை வேறு எப்படிச் சொல்வது?) முன்னே விரிந்து கிடக்கும் பரந்த பூமியில் நிமிர்ந்து நிற்கிறது. அந்த மாளிகைக்கு ஆடம்பரப் பூச்சுக்கள், பூச்செடி கள், நிழல்மரங்கள், இரண்டொரு மனிதர் சீவிப்ப தற்கு ஏன் தானே இந்தப் பெரிய வீடு உலகத்தில் இப்படி எத்தனை வீடுகள் இருக்கும்? வீதி ஓரங்களையே தஞ்சமென்றிருப்பவர்களுக்கு இவை ஒரு பொருட்டா கவே தெரிவதில்லையா? அன்ருடம் காண்கிற மனிதப் பிரபுக்களும், அவர்களது ஆடம்பர வாழ்க்கையும், கப் பல் வாகனங்களும் இவர்களது மனதிலே எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதேயில்லையா?
எத்தனையோ பிரச்சனைகள் தலைக்குமேல் இருக்கின் றன- இதற்குப் போய் என்ன சவத்துக்குக் கவலைப் படவேண்டுமென எண்ணியவாறு திரும்பவும் படுக்கைக் குச் சென் முன்.
சும்மா, படுக்கவேண்டும் என நினைத்துவிட்டால் போதுமா? பூதம் விடவேண்டுமே- அங்கே அவர்கள் கடும் குளிரிற் கிடந்து விறைக்க நீ மெத்தை தேடிக் கொண்டிருக்கிருயா - என்று கேட்டது
இவன் நடுநடுங்கிப் போனன். எழுபத்தைந்து ரூபாய்க்கு ஒரு அறையை எடுத்துக்கொண்டு அதில் தான்மட்டும் குடியிருப்பது எவ்வளவு அநியாயம்? வரு ஷக்கணக்காக உழைத்தும் மிகவும் குறைந்த பட்ச தேவைகளைத்தானே தேடியிருக்கிறேன் என நினைத்தான் - ஒரு மேஜை, ஒரு கதிரை, ஒரு கட்டில்-மெத்தை தும்புமெத்தைதான், "சியெஸ்ரா?" ஒன்று வேண்ட வேண்டுமென்ற எண்ணம் முன்பு இருந்தது. பின்னர் அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஆனல் இப் பொழுது உள்ளதே அதிகம் எனத் தோன்றியது.
அதை நினைத்துக்கொண்டு சிரித்தான். தன் மனதை நினைத்தும் சிரித்தான்- "இப்ப இந்த மண்டையைப் போட்டு உடைக்காமல் படுத்துத் தூங்கு"
நோ? இந்த நேரத்தில் அவர்கள் எப்படித் தூங்கு கிருர்கள் என்ருவது பார்த்துவிட்டு வரவேண்டும். இல்லாவிட்டால் மனசு தூக்கம் கொள்ளாது.

سے 121۔
மாலையில் அவனைக் கண்டபொழுதே கதை கொடுத் திருந்தால் சகலத்தையும் அறிந்திருக்கலாம். இரவுகளில், மழை, பனிநாட்களில் எங்கே உறங்குவார்கள் என் பதையாவது கேட்டிருக்கலாம். பேசாமல் வந்தது மடைத்தனம்
நேரத்தைப் பார்த்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறி நடந்தான்.
சில்லிடுகிற குளிர். கடமையே என விழித்துக் கொண்டு தூங்கி வழிகிற வீதி விளக்குகள். அமைதி யான ஒன்றேகால் மணித்தெரு. ஊரைக் கூப்பிடும் சாமக்கோழிகள். எங்கேயே தூரத்தில் சில நாய்களின் அழுகை - யாரை நினைத்தோ?
பஸ் நிலையத்தையும் தாண்டிச் செல்கிறபொழுது யாரோ தூரத்தில் வருவது தெரிகிறது. யாராக இருக்கும்?
அவர்கள் அண்மித்துக் கொண்டு வர. இவன் குறிப்பாக பார்த்தான். அவர்களே முதலில் இவனை அடையாளம் கண்டு சைக்கிளிலிருந்து குதித்தனர்.
"ஹலோ. மச்சான்" - சக அறைவாசிகளில் இருவர்.
இந்த நேரத்தில். எங்கை போட்டுவாறியள்?" இவன் வியப்போடு கேட்டான்.
அவர்களிடமிருந்து கள்ளச்சிரிப்பு வெளிப்பட்டது. வேறை எங்கை?. நீ போற இடத்துக்குத்தான். கள்ளா, எங்களுக்குப் புத்தி சொல்லிச் சொல்லி இப்ப
ங்கை போழுய்?" - சாராய நெடி குப்பென முகத்திலடித்தது:
அட அநியாயமே!’ என இவன் விறைத்துப் போய் நின்ருன்
6.சரி.சரி. நாங்கள் ஒருத்தருக்கும் சொல்ல உடம்.நீ போட்டு வா!" அவர்கள் மீண்டும் சைக் இ%ள உளக்கத் தொடங்கினர்:

Page 65
பெருமூச் செறிந்தவாறு மேற்கொண்டு நடந்தான்.
ஒருநாய் - ஒரு கடைவாசலில் சாக்குக் குவியலின் மேல் படுத்திருந்தது, இவனது காலடிஒசையில் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. சில கட்டாக்காலி மாடுகள் தார் ரோட்டின் சூட்டிற்கு வந்து படுத்திருக்கின்றன.
இவன், அவர்களை நிஃசுத்துக்கொண்டு கால்களை விரைவுபடுத்தினுன் ,
வீரகேசரி 13-4-1980
, , , , , , ( " '
 
 
 


Page 66
திருப்பங்கள்
-124
வெளியே சைக்கிள் மணி ஒலித்தது. சற்றுநேரத் தில் வீட்டுக்காரி அவன் பெயருக்கு வந்திருந்த தந்தி யொன்றைக் கொண்டுவந்து நீட்டினுள். யாழ்ப்பாணத் தில் காலையில் அடித்த தந்தி இரவு நேரம் கடந்த பின்னர்தான் கிடைத்திருக்கிறது. படபடப்போடு Sigg, Tair; "Your father expired funeral tomorrow." - (உனது தகப்பனர் காலமாகிவிட்டார், ஈமைக்கிரியை கள் நாளையதினம்) சுவர்ப் பல்லியொன்று அடித்து வைத்துச் சொல்லியது.
ரவீந்திரன் அதிர்ந்து போனன். "ஐயா!" என்று ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. கால்கள் நடுக்க மெடுத்தன. பக்கத்திலிருந்த கட்டிலில் அமர்ந்தான். கண்களில் சுழற்சி. அறையிலுள்ள சகல பொருட்க ளும் - “யாமிருக்கப் பயமேன்?" என அபயமளித்துக் கொண்டிருக்கும் சுவாமிப்படம் முதல் அடுக்கி வைக் கப்பட்டிருக்கும் புத்தகங்கள் ஈருக-பார்வையிலிருந்து வெகுதூரத்திற்கு விலகிக்கொண்டிருந்தன.
அவன் நாளைக்குச் சமூகத்தில் மதிக்கப்படக்கூடிய பெரிய மனிதனுகப் போகிருன் என்ருல் அது ஐயா இட்ட பிச்சைதானே?
நன்முக நினைவிருக்கிறது, சின்ன வயதில் அவனை விடியப்புறமே எழுப்பிவிடுவார் ஐயா, (தம்பி. படி ராசா. படி!”) இவன் சினத்தோடு எழுந்து கண்களை வேண்டா வெறுப்புடன் கழுவுவான், புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு (படிக்கிருஞம்) கைவிளக் கோடு சேர்ந்து துரங்குவான். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஐயாவுக்கு இங்கேதான் கரி சனை படிக்கிருனே என்னவோ என்ற தவிப்பு, அடிக் கடி வந்து பார்த்து, "படிக்கச் சொல்லி எழுப்பிவிட்

டால்.நித்திரை கொள் கி ரு ய் ?. பஞ்சி யைப் பாராமல் படிராசா.நல்லாய்ப் படிச்சால் தான் முன்னுக்கு வரலாம்." அந்த ஆதரவான வார்த்தைகள் இன்றும் செவிகளில்ஒலிக் கின்றன. இனி, இப்படியெல்லாம் வழிகாட்ட யார் இருக்கிருர்கள்?
அப்பொழுதுதான் அறைக்குள் நுழைந்த நண்பன் சிவலோகநாதன் GBGL Lim Gö7 ; “ “ GT 6ö7 60Sr Lt j g Tsist விஷயம்?. ஒரு மாதிரி இருக்கிருய்?"
கதைக்க முடியவில்லை. முயன்று கதைத்தால் அழு கை வெடிக்கும் போலிருந்தது. தந்திக் கடதாசியை அவனிடம் நீட்டினன். விஷயத்தை அறிந்த பின்னர் ரவிந்திரனின் முகத்தையே பார்க்க முடியாதவாறு கவலை பொங்கியது நண்பனுக்கு, 'இப்ப கவலைப்பட்டு என்ன செய்யிறது ரவி?. எல்லாருக்கும் ஏற்படுகிற முடிவு இதுதானே?.என்ன சுகமில்லாமல் இருந் தவரோ?
༢) g
அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. நல்லாத் தானே இருந்தார். சடுதியாக என்ன நேர்ந்துவிட்டது?
கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னர்ஊருக்கு சென்று வந்தபொழுது புகையிரத நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்த அந்தப் பரிவான முகம் நினைவை ஆக்கிரமிக்கிறது. பிரிய மனமில்லாமல் எவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்! 'தம்பி. கெட்ட சகவாசம் கூடாது. நல்ல குணமுள்ள பெடியளோடை சேரவேணும். பீடி சுருட்டுக் குடிக்கிறவங்கள் உன்னை யும் ஏமாத்திக் குடிக்கப் பழக்கிப் போடுவாங்கள். கண்டகண்ட பழக்கங்களுக்கு மனத்திலை இடம் குடுக் காமல் போனகாரியத்தைக் கெட்டித்தனமாய் முடிச்சுக் கொண்டு வரவேணும். எங்கடை குடும்பம் இருக்கிற நிலைமை உனக்குத் தெரியும். குடும்பம் சீரளியிறதும். நல்லாய் வாறதும் பிள்ளையளின்ரை கையிலைதான் இருக்கு" இப்பொழுதும் ஒரு சிறுவனுக்குப் புத்தி சொல்வது போலத்தான் அவரது நினைவு! அவர் கதைப் பதை எவ்வளவு நேரமென்ரு லும் கேட்டுக்கொண்டிருக் கலாம். அவ்வளவு பாசம் நிறைந்த வார்த்தைகள்,
16

Page 67
سے 126-س۔
கடினமாகப் பேசத் தெரியாது. பக்குவமாகத் தடவு வது போலக் கதைப்பார்.
அவன் பயணப்படும் பொழுது, ஐயா சைக்கிளில் ஏற்றி வந்து ஸ்டேசனில் விடுவார்- கொஞ்சமும் நோக விடமாட்டார். அவனுக்கு ஒரு தலையிடி காய்ச்சலென்
முல் துடித்துப் போவார். பாவம், ஐயா சும்மாவா
இருந்தார்? விடிந்தாற் பொழுதநிதியும் தோட்டவேலே வேலையென்று. மண்வெட்டியும் கையுமாக. மண் ணுேடு மண்ணுக,
-அவனது கண்கள் கலங்கின. அழுகை பொங்கிய பொழுது சொண்டைக் கடித்துக் கட்டுப்படுத்த முயற் சித்தான்.
"இப்ப என்னெண்டு போகப்போருய் ரவி?. மெயில் றெயினும் பேர்யிருக்கும்.” நண்பன் கேட்டான்.
* எப்பிடியாவது போகத்தானே வேணும் சிவா?'
"பஸ் இருக்குதோ தெரியாது. அப்பிடிப் போற
தெண்டாலும்.இரவிரவாய் அலைக்கழிவாய் இருக்கும். மோனிங் றெயினிலை போகலாம்தானே?"
ரவீந்திரன் சீறிஞன், “வளர்த்து ஆளாக்கிவிட்ட மனிசன் செத்துப்போய்க் கிடக்குது. இஞ்சை என்னை
நிம்மதியாய் படுத்து நித்திரை கொள்ளச் சொல்லு
gó)Guum?'''
-ஐயாவை அவரது கயிற்றுக் கட்டிலிற் கிடத்தி யிருப்பார்கள். அம்மாவும். அக்காவும், தங்கைகளும் கட்டிலைச் சுற்றி நின்று அழுது குளறுவார்கள். அது லெல்லாம் கூடியிருந்து ஒப்பாரி வைக்கும். அந்தநிலையை உணர்ந்ததும் அவனுக்கு உடனடியாக வீட்டில் நிற்கு வேண்டும் போலிருந்தது. அவர்களோடு சேர்ந்து கொண்டு தானும் குளற வேண்டும் போன்ற ஆவேசம்.
சிறுவயதிலிருந்தே ஐயா நாளும் பொழுதும் ஊட்டி வந்த உற்சாகம்தான்ே படிப்பில் பெரிய ஆர்வத்தை
யும் ஆசையையும் தூண்டியது? உயர் வகுப்பில் சக

ـــ 127 سم
மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு கல்
லூரி. ரியூசன் என அல்லும் பகலும் அயராத படிப்பு.
படிப்பதென்ருல் சும்மாவா? எவ்வளவு செலவு எதையுமே, தனது அசுர உழைப்பினுல் ஐயா தள ராது எதிர் நோக்கிஞரே!
இரவு வெகுநேரம்வரை அவன் படித்துக் கொண் டிருந்தால் தம்பி. இனிக்காணும் ராசா. படு! விடிய எழும்பிப்படிக்கலாம்" -அவனது உடல் பாதிக்கப் படுமாம்! அதிகாலை இரண்டு மூன்று மணிவரை படிப் பை முடித்து அவன் படுக்கைக்குப் போகும்வரை ஐயா வும் விழித்துக்கொண்டே இருப்பார். நண்பர்களோடு சேர்ந்து படிப்பதற்காக அவன் வெளியே சென்றுவிட் டால் திரும்பும்வரை 'தம்பி எங்கை போனவன்?? என அம்மாவிடம் நச்சரித்துக் கொண்டு வழியைப் பார்த்திருப்பார். எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் அடுத்தனுள் விடியப்புறமே - தோட்டவேலைக்காக - அலுக்காமல் சலிக்காமல் எழுந்து விடுவார். "பாவும் ஜயாவைக் கதிரையில் இருத்தி வைத்து உழைத்துப் போடவேணும்" என ரவி அடிக்கடி நினைத்துக் கொள் வான். அந்த எண்ணத்தில் இப்பொழுது ஏன் இடி விழுந்தது?
இருந்தாற்போல் தலையணையில் விழுந்து முகத் தைப் புதைத்துக்கொண்டு குமுறிக்குமுறிஅழத்தொடங் கினன் . சிவலோகநாதன் ஓடிவந்து பக்கத்தில் அமர்ந்து அவனது தலையை நிமிர்த்தினுன் , ஆதரவோடு அணைத்து முகத்தைத் தடவியவாறு ஆறுதல் கூறினன். 'ரவி என்ன இது?. குழந்தைப் பிள்ளை மாதிரி?. டோன்ற் கிறை. எழும்பு எப்பிடியாவது இப்ப ஊருக்குப் போகலாம்."
2
இரவு பதினெரு மணியளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து அநுராதபுரம் செல்கிற பஸ் கிடைத் தது. அநுராதபுரம் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் போகிற வழியைப் பார்க்கலாம், என்ற நினைவில் ஏறிக் கொண்டார்கள். நண்பனது மடியில் அழுது தீர்த்த பின்னர், பஸ்சிற்குக் காத்துநின்ற ஓரிரு மணித்தியா

Page 68
-128
லங்களில் ரவீந்திரனது அதிர்ச்சி ஒரளவு குறைந்தது போலக் காணப்பட்டது. எதையாவது, தேவையான பொழுது கதைத்தான். கூடியகெதியில் வீடுபோய்ச் சேர வேண்டுமே என்ற தவிப்பு மேலோங்கியிருந்தது.
இரவுப் பயணம். சிலரைத் தூக்கம் அனைத்துக் கொண்டது. இன்னும் சிலர் பக்கத்திலிருப்பவர்களை அணைத்துக் கொண்டிருந்தார்கள். ரவீந்திரன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகாமை யில் ஒரு பெரியவர்.அவர், அவனது மனநிலையை அறி யாமலே சம்பாஷிக்கத் தொடங்கினர். அவர் வலிந்து கதைக்கும் பொழுது பேசாமலிருப்பது பண்பற்ற செய லாகவும் பட்டது, பலவிஷயங்களையும் விடுத்து விடுத் துக் கேட்டார். சொன்னன்.
'நீர் என்ன செய்கிறீர்?"
இதற்கு என்ன பதிலைச் சொல்வது? பல்கலைக்கழக மாணவன் என உள்ளதை உள்ளபடியே கூறிவிடலாமா? எப்படி முடியும்?
இதற்கு முன்னர் ஒருநாள் கொழும்பில் அறிமுகம்
ஆகிய கனவான் ஒருவரிடம்பட்ட அனுபவம் இன்னும்
மறந்து போகவில்லை. அவர் இவனது "ஏ , எல். றிசல்ட்" டைக் கேட்டார். சொன்னன் -பெருமை தொனிக்க. அவர் ஏளனமாக சிரித்தார் "தமிழ் ஸ்ரு டன்ஸ்சுக்குப் பரீட்சைகளில் மாக்ஸ் அதிகம் போடுகி
முர்களாம்!" பத்திரிகைகளில் வெளிவந்த தலையங்கச்
செய்திகள்,பெருந்தொகையான தமிழ் மாணவர்களுக்கு உயர்தர வகுப்புப் பரீட்சையில் மேலதிக புள்ளிகள்!" அவன் தங்கியிருக்கும் வீட்டுக்கார நோனு கூட அன் றைக்கு அதை தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்து கேட் டாள் -"சரியில்லாத வேலை தானே? அவன் அதற் குச் சமாதானம் கூறமுடியாமற் சங்கடப்பட்டான். அப்படி இன்னெரு தலைகுனிவா?
ரவி மெளனம் சாதித்தான். என்ன பதிலைச் சொல்வது? பெரியவர் திரும்ப்வும் கேட்டார், ‘நீர் உத்தியோகம் செய்கிறீரா?' பதில்சொல்லாவிட்டா, மனிசன் விடமாட்டார் போலிருந்து. ஏன் இப்பது திருகுகிருர்?
)
 
 

--129 -سه
*சொல்வதைச் சொல்லட்டும்" என மனதிலே திடத்தை ஏற்படுத்திக்கொண்டு உள்ளதைக்கூறினுன் ,
"ஒழுங்காக விடைத்தாள்களைத் திருத்தியிருந்தால் ஒருவேளை உமக்கும் யூனிவேசிற்றியில் இடம் கிடைத் திருக்காது-" திட்டவட்டமான தீர்ப்பு!
அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது. அல் அ/ம் பகலும் அயராது படித்தது இப்படி ஒரு கெட்ட பெயரைச் சம்பாதிப்பதற்குத்தான? LJlgájöggil ou u rf po__ டத்திலிருக்கின்ற கனவான்களே இப்படி யென்ருல் பத் திரிகைச் செய்திகளைப் பார்க்கின்ற சாதாரண மக்கள் எம் மாத்திரம்? தமிழ் மாணவர்கள் கல்விமுறையில் உள்ள பலவித திட்டங்களினுல் தாங்கள் பாதிக்கப்படு வதாக எதிர்ப்புக்குரல் தெரிவிப்பதை அமுக்குவதற்கு மேலிடத்திலுள்ளவர்கள் கிளப்பவிட்ட புரளிதானே
இது?
மூன்று வருடங்களுக்கு முன்னர் தரப்படுத்தல் , போன்ற தடைகளைக் கடந்துதானே அவன் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முடிந்தது. இப்பொழுது இப் படியொரு பழியா? இந்தப் பழியைச் சுமந்துகொண்டு எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது? இப்படி, படித்ததற்காக வெட்கப்படவேண்டிய நிலைமை வேறு எந்த நாட்டிலாவது இருக்குமா?
இனம்புரியாத ஒருவித வேதனை மனதைக்குடைய ஆரம்பித்தது. இதுஐயா இறந்து போய்விட்ட கவலையை விடப் பெரியதாக வருத்தியது.
அந்த ஏழைத் தந்தை அவனை கல்விமானுக உயர்த்து வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார். உயிரை வெறுத்து உடலை உருக்கிக் கல்விச் செல்வத்தை அளித்த ஐயா, இப்பொழுது இருந்தால் இந்தப் பழியை எப்படித் தாங்கிக் கொள்வார்?
பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரயாணி கள் உறங்கிக் கொண்டிருக்கிருர்கள். கவலை இல்லாத மனிதர்கள். சாரதியைப் பார்க்க பாவமாக இருக் கிறது. இவ்வளவு பேரையும் பாதுகாப்பாகக் கொண்டு

Page 69
- 1šo
போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவனுடையது. இந்த நடுநிசியிலும் விழிப்போடு ஒடுவதைப் பார்த் தால் அவனுக்காகவே விழித்திருக்க வேண்டும் போலிருந்தது.
3.
ஒடிக்கொண்டிருந்த பஸ்சை கும்மிருட்டில் நின்று ஒருவன் மறித்தான். பஸ் சடுதியாக நிறுத்தப்பட்டது. அந்தக் குலுக்கத்தில் பலருக்கு உறக்கம் கலேந்தது. ‘இவன் இப்படி நிறுத்திப் புறப்பட்டால் எத்தனை மணிக்குத்தான் போய்ச் சேருவது" - முணுமுணுப்புக் கள் அவ்வளவு அவசரமாக போகவேண்டிய ஏதோ தலைபோகிற அலுவல்கள் இருக்கிறது. அவர்களுக்கு
சாரதி கண்ணுடியினூடாக வெளியே பார்த்து, **மொக்கத?" என்ருன் , பஸ்சை மறித்தவன் அண்மை யில் வந்து விபரம் சொன்னன்.
வீதியின் குறுக்கே விழுந்து கிடக்கும் தென்னை மரத்தையும், மறுபக்கமாகப் பள்ளத்தில் பிரண்டு கிடக்கும் லொறியையும் கவனித்த பிரயாணிகள் விபத் தொன்று நடந்திருப்பதை ஊகிக்கின்றனர். வீதியில் ஒருவன் பிரக்ஞையில்லாமற் கிடந்தான்.
தூக்கங்கள் பறந்துபோக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வெளியே குதித்தார்கள், நொந்துபோய்க் கிடக்கிறவனுக்கு உதவி செய்வதில் இவ்வளவு ஆர்வம் இருக்கிறதே!
y பிணத்தைப்போலக் கிடந்தவனைச் சூழ்ந்துகொண்டு
விசாரணை ஆரம்பிக்கின்றது.
**பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிருனே??? - "என்ன நடந்தது?"
பஸ்சை மறித்தவன் விஷயத்தைச் சொல்கிருன்
சற்று முன்னர் அடித்த பெரியகாற்றில் மரமொன்று
வீதியின் குறுக்கே சாய்ந்திருக்கிறது. வேகமாக லொறியை ஒட்டி வந்த சாரதி மிக அண்மையில் வரும்
2
 
 

سے 1431-=
வரை அதைக் கவனிக்கவில்லை. கண்டபின் பாரத்
தோடு வந்த லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாதளவு நெருக்கம். மரத்தோடு லொறி பலமா, அடிபட, சறுக்கி வீசப்பட்டு Leறுபக்கமாக பள்ளத்தில் பிரண்டுவிட்டது. சாரதி தருணத்தில் வெளியே பாய்ந்து தப்பிவிட்டான். சிறுகாயங்கள். அவனது நண்பன் "கிளினருக்கு பலமான அடி இருளில் எல்லாமே அதிர்ச்சியாக நடந்து முடிந்துவிட்டது. சிரமத்தோடு அவனை இழுத்துத் தூக்கிவந்து வீதி ஓரத்திற் கிடத்தி விட்டு "யாராவது வரமாட்டார்களா?" என்ற ஏக்கத் தோடு நின்றிருக்கிருன்,
“வெறியிலை வந்திருப்பான்? - ஏன் ஒரு நிதான மாக ஓடக்கூடாது?’ பஸ்சிலே வந்தவர்களின் அபிப் பிராயமும், அனுதாபமும், “இப்பொழுது என்ன செய் யப் போகிருய்???
எப்படியாவது கொழும்புக்குக் கொண்டு செல்வது தான் நல்லது - அங்கே எங்கள் கடையும் இருப்பதால் கவனிப்பதற்கு வசதியாயிருக்கும்” என அவன் பதி லளித்தான். '
4.
சிங்காத்தில் எழுத வாசிக்க அவ்வளவு தெரியா விட்டாலும் சிங்களக் குடும்பங்களுடன் இரண்டறக் கலந்திருக்கிற புண்ணியத்தில் பேசவும் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் ரவீந்திரனுக்கும் நண்பனுக்கும் முடியுமாகையால் அவர்களது சம்பாஷணை விளங்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் கதைப்பதிலிருந்து அது முந்தல் எனும் இடத்துக்கு அண்மையான ஓர் g)l-ti என அறிந்து கொண்டனர். முந்தலில் ஒர் அரசினர் வைத்தியசாலை இருக்கிறதாம். ஆனல் அங்கு வைத்திய வசதிகள் குறைவு எனக் கதைத்துக் கொண்டார்கள்.
'நீ சொல்வது போல எப்படியாவது கொழும்புக் குக் கொண்டுபோவது தான் நல்லது. எப்பிடிக் கொண்டு போகப் போகிருய்?’
"கொழும்புக்குப் போகிற சாமான் லொறிகளில் போகலாம். இப்பொழுது ஒன்று போனது. ஆணுல்

Page 70
அவர்கள் ஏற்ற முடியாது என்று சொல்லிவிட்டார் 956, ''
"ஏன்? 9 p.
'இடமில்லையாம். அவர்கள் தமிழ் ஆக்கள்!'
"கொஞ்சம் கூட மனிசத் தன்மை இல்லாதவர்கள், !
சிவலோகநாதனுக்கு அவர்களது இந்த அபிப்பிரா
யம் கொதிப்பை ஏற்படுத்தியது, "பார் மச்சான் இந்த
விஷயத்தையும் துவேசமாய்த்தான் கதைக்கிருங்கள். ' என் முன்,
"ஆணுல் இப்படி ஆபத்திலை கைவிட்டுப் போறதும் பிழைதானே?. இவர்களும் அவங்களைப் போலை ராவி ருட்டியிலை வீதியிலை ஒடித்திரியிற தொழிலாளியள் தானே?. நாளைக்கு இதே நிலைமை அவனுக்கு நடந் தால் ஆர் பாக்கிறது?" என ரவீந்திரன் நியாயத்தைக் கூறி அவனைச் சமாதானப்படுத்தினன்.
அவர்களது குறுக்கு விசாரணை தொடர்ந்து கொண் டிருந்தது.
"வேறை லொறிகள் வராதா?’
'சாமான் லொறிகள் வரும்.”*
இதற்குள்ளே சிலரி எப்படி பஸ்சை மறுபக்கம் எடுக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்கள்.
*"சரி அப்ப இனி வருகிற லொறியை மறித்துக் கொண்டு போ! நாங்கள் போகிற வழியிலை வந்தால் சொல்லி அனுப்பிவிடுறம்." ஒரு நோயாளிக்கு ஆலோ சனை வழங்குகிற வைத்தியரின் கரிசனை!
தென்னைமரம் சாய்ந்து வீதியின் குறுக்கே கிடப்ப தால் பஸ்சை மறுபக்கம் எடுப்பது சிரமம், கலந்தா லோசிக்கப்பட்ட பின்னர், எல்லோருமாகச் சேர்ந்து மரத்தை இன்னும் சற்று உயர்த்திஞல், ஒரமாகத் திருப்பி, மறுபக்கம் எடுத்து விடலாம் எனத் தீர்மானிக்
கப்பட்டது.
}»

- 133
அந்த மனிதன் இறந்தவன் போலக்கிடந்தான். கண்கள் மூடிக்கிடக்கின்றன- என்ருலும் மூச்சு இருக் கிறது.
அனைவரும் ஒன்று சேர்ந்தனர், கைகள் உயர்ந்தன. சரிந்திருந்த மரம் மெதுவாக உயர்ந்தது.
"லொறியிலை போனவங்கள் தமிழர் என்றபடி யால்தான் தங்களை விட்டுட்டுப்போனவங்கள் என்று அவன் சொன்னுன் -இவங்கள் துள்ளியடிச்சதைப் பார்த்தால் ஏதோ வெட்டிப் புடுங்கப் போருங்களாக் கும் எண்டு நினைச்சன். இப்ப இவங்களும் விட்டிட்டுத் தானே போகப் போருங்கள்!” சிவலோகநாதன் சினங் கொண்டு கேட்டான்.
இப்பொழுது பஸ் மறுபக்கம் வந்துவிட்டது. "இனிக் காலைவரை போகமுடியாது தானே?" என ஏக்கம் படர்ந் திருந்த முகங்களெல்லாம் மலர்ச்சியடைந்தன. ஒருவரை ஒருத்தர் முந்திக்கொண்டு ஏறத்தொடங்கினர்.
"மனிசன் ஐக்கியப்பட்டால் என்னதான் முடியாது? எல்லாரும் ஒன்று சேர்ந்த படியால்தான் இந்தப் பெரிய மரத்தையே நொடிப்பொழுதில் உயர்த்தி வாக னத்தை மறுபக்கம் எடுக்க முடிந்தது. இப்படித்தான் Lo Gof SF rif ஒருத்தருக்கொருத்தர் உதவியாயிருக்க வேணும்.’’ முன்னர் அறிமுகமாகிய பெரியவர் ரவீந் திரனேக் கண்டதும் இப்படிக் கூறிக்கொண்டு பஸ்சில் ஏற ஓடினர்.
"ஐக்கியம், ஒற்றுமை எண்டு சொல்லுறதும் சந் தர்ப்பவாதம்தான். கெதியிலை போய்ச் சேரவேணு மெண்ட எண்ணத்திலைதான் அவங்களெல்லாம் இந்த மரத்தைத் தூக்கிறதுக்கு ஒண்டு சேர்ந்தார்கள். இல் லாட்டி ஒருத்தரையும் பிடிச்சிருக்கேலாது.”* -பெரிய வர் மேல் ஏற்பட்ட சீற்றத்தை ரவீந்திரனிடம் காட் டிஞன் சிவா.
அதிகம் பேசாமலிருந்த ரவீந்திரனுக்கு இப்பொழுது சிவாவை சமாதானப்படுத்த வேண்டும் போலிருந்தது,
17

Page 71
سے134-۔
"எந்தப் பிரச்சரேயையும் வகுப்பு வாதமாக்கிற திலை ஒரு பலனும் கிடைக்கப் போறதில்லை. தன்ரை இனத்தவன் எண்டபடியால் நிச்சயம் உதவுவான் என்று லொறிக்காரன் நினைச்சான். ஆனல் இவங்கள் அந்தக் காரணத்துக்காவது தங்கடை அற்ப தேவைகளைக்கூட விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை! மணிசரிலே ஊறிப் போயிருக்கிற சுயநல உணர்வுதான் இது சிங்களவ னயோ தமிழனயோ இருக்கிறதாலே எந்தவிதமாக விஷேச குணமும் தோன்ருது. மனிச வர்க்கத்திலை சுய நலம் கருதாத ஒற்றுமையுணர்வு இருந்தாத்தான் உண்மையான ஐக்கியம் பிறக்கும்.'
பஸ் "ஸ்ராட் செய்யப்பட்டது.
"கிட்ட இருக்கிற ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் முதலுதவியெண்டாலும் செய்திருக்கலாம் தானே?" சிவலோகநாதன் அபிப்பிராயப்பட்டான்.
-ஐயாவைக் கட்டிலில் கிடத்தியிருப்பார்கள். அம்மாவும், தங்கைகளும், அக்காவும் உயிரை:ாய்த் துக் கொள்வது போலக் குளறிக்குளறி. ரவிக்கு அவர் களோடு சேர்ந்து குளறவேண்டும் போலிருந்தது.
"இனி ஏதாவது லொறி வருமோ தெரியாது!" -திரும்பவும் சிவாவின் நச்சரிப்பு. அவனுல் இருப்புக் கொள்ள முடியவில்லை.
-பஸ் ஒடுகிறது!
பின்னே திரும்பிப்பார்த்தான் ரவி. இருள் ட போகவா நிற்கவா? எனத்தனித்துக் கொண்டிருக் கும் ஒரு உயிர் - அவனது அடிபட்ட உடல் - "செத் துப்போய் விடுவானு?"
அந்த ஏழைத்தொழிலாளியின் மகன் எங்கையா வது ஒரு பாவமும் அறியாமற் படித்துக்கொண்டிருப் பான். தனது தந்தையை ஒரு நாளைக்காவது சொகு சாகி இருத்தி உழைத்துப் போட வேண்டும் என்று
)

-135
5 GITGI, 9; for Gior Lyfr Gör. “Your father expired funeral tomorrow' என ஒர் இடி விழும்.
இப்பொழுது ரவீந்திரனுக்கும் இருப்புக் கொள்ள முடியவில்லை. இருக்கையை விட்டு எழுந்தான்.
மணியை அடித்ததும் பஸ் நிறுத்தப்பட்டது. பிர யாணிகள் சினத்தோடு திரும்பிப் பார்த்தனர் - நடத் துனர் கேட்டான், "என்ன விஷயம்?"
ரவி தனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதில் சொன் ஞன், 'உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறவrை இப்படி விட்டுப் போறது சரிதானு?’
- சரியான கேள்வி, இனி அவர்கள் எல்லோருமே திரும்ப வேண்டும்.
சிரித்திரன் டிசம்பர் 1980

Page 72
தயவு செய்து கை போடாதீர்கள்.”
',
 

தயவு செய்து கை போடாதீர்கள்'
سیسے 137-سے
இரண்டு மணிக்குப் பிறகான இந்த நேரம்தான் சற்று ஓய்வாயிருக்கும் - ஓய்வு எனக்கல்ல. கடைக்கு சாப்பிட வருபவர்கள் தொகை குறைவாயிருக்கும் என்று அர்த்தம். கதிரை மேசைகளை ஈரத்துணியிஞற் துடைத்து கடையை கூட்டித் துப்பரவு செய்யத் தொடங்கினேன். காலையில் ஒருமுறை கடை திறப்ப தற்கு முன் கூட்டினுல்-பிறகு இப்பொழுது,
'வயித்திI. என்னப்பா அனுங்கிக்கொண்டு நிக்கி ருய்?. கெதியாய் அலுவலைச் செய்துபோட்டு. வடையை எடுத்தந்து அலுமாரியிலை போடன்!' - இது முதலாளி. அவரது பாணியே அதுதான், அதட்டல். எனக்கு எரிச்சலேற்பட்டது. அவர் "வயித்தி" என்று கூப்பிடுவதிலேயே நக்கல் இருக்கிறது. வயித்தி என்ப தில் வயிறு" என்ற பதம் அடங்கியிருக்கிறதாம்! - முதலாளிதான் சொல்லுவார், "நல்லபேர் வைச்சாங்க ளடா உனக்கு1. வயித்தியெண்டு. நீ சாப்பாட்டைக் குறைச்சுப் பிடிச்சியெண்டால் உந்த வயிறும் குறையும்!"
எனக்கு ஊதியமாக நூற்றிமுப்பது ரூபாயும் மூன்று
வேளைச் சாப்பாடும் கிடைக்கிறது, தெரியாதா. அந்த மூன்று வேளைச் சாப்பாட்டுக்காகத்தான் இந்தக் கதை யெல்லாம்! ஆனல் இதை ஒரு கதையாகப் பெரிசுபடுத் தக்கூடாது.
வடைகளை எடுத்துவர பின்கட்டிற்கு ஓடினேன்முதலாளி. பெரிய முதலாளி. என மனசு எரிந்தது, எதையும், அவர் சொல்லுமுன்னரே செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறவன் நான் . அடுத்ததாக நான் செய்ய இருந்த அலுவலே இது தான். ஆனல், அந்த மனுசன். ஏதோ தான் இல்லா
விட்டால் இங்கு வேலையே நடவாது என்பது போலத்
தான் கத்தும், - - -

Page 73
سس-1388 - سه
சமையற்காரன் மணியம், மாவைத்தட்டையாக உருட்டி நடுவிலே துழையிட்டு. அவன் வடை சுடுவ தில் வலுவிண்ணன்! நின்ற நிலையில் ஒவ்வொன்முக மாவை உருட்டி உருட்டி எண்ணெயில் போட்டு நூற் றுக்கணக்கான வடைகளைச் சுட்டுத் தள்ளுவான். எவ் வளவு சுறுக்காகச் செய்தாலும் அளவு பிசகாது. ஒரு கையாற் பொத்திப் பிடிக்கக்கூடிய சைஸ் , ஒரு புளு கம் வந்தால். மணியம், ஒவ்வோரு வடையிலும் இம்மியளவு மாவைக்குறைத்து உருட்டி வடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவான். பிறகு முதலாளியிடம் போய், "இவ்வளவு மாவில் இத்தனை வடை சுட்டேன்' எனக் கூறி நல்ல பெயர் சம்பாதிப்பான். பந்தக்கா ரன்! இது எனக்கு எரிச்சலையூட்டினலும் அவனுேடு ஒன் றும் பேசுவதில்லை. மணியம் வயதிற் குறைவானவனு ஞலும் கொஞ்சம் தோற்றமான ஆம்பிளை, மட்டு மரி யாதை யில்லாமற் கதைப்பான், அவன் கதைப்பதைப் பார்த்தால் சிலவேளைகளில் கையைக் காலை மாறி விடு
வானே என்றும் தோன்றும்.
வடைகளைக் குவியலாகக் கண்டதும் அடி மனதில் அமிழ்ந்து போயிருக்கும் ஆசை யொன்று கொதியெண் ணெயிலிட்ட அப்பளமாகப் பொங்கியெழுந்தது-வடை கள். சின்னச் சின்ன. குண்டு குண்டான. குண்டு மணியைப் போன்ற வடைகள்.
."ஒரு நாளைக்கெண்டாலும் அதுகளுக்குக்கொண்டு போய்க் குடுக்கவேணும். சுப்புறு நினைவில் வந்தான், (எனது ஒரே மகன், ஐந்து வயது. பதிவுப் பெயர் சுப் புரமணியம். இவள் கனகம்- அவனது அம்மா கூப்பிடு கிற சுகத்திற்காக... "சுப்புறு"...ஆக்கினுள்.)
"என்னப்பா. யோசிச்சுக் கொண்டு நிக்கிருய்?. எடுத்துக் கொண்டு போவன்!" மணியம் அடுப்புவெக் கையை என்ளுேடு தீர்த்தான். இவங்களுக்கு கொஞ்ச மென்ருலும் அன்பு ஆதரவாகப் பேசவராதோ?
வடைகளை கூடையிற் சுமந்துகொண்டு வந்தபொ ழுது. மீண்டும். "ஒரு நாளைக்கெண்டாலும் அஞ்
சாறு வடை கொண்டுபோய் அதுகளுக்குக் குடுக்கவே
ணும் ’-மனசு. மன்ருட்டமாக. பயபக்தியாக -
 

سے 139--
"சரி..பாப்பம்'- ஒவ்வொருநாளும்தான் இத்து பார் பம்" என்று பதில் கிடைக்கிறது,
எப்பொழுதுதான் பார்க்கலாம்-என்கிற மனசு.
நெடுநாளாகத்தான் இந்த ஆசை மனசைப்போட்டு அலைக்கிறது. ஒரு வடைப் பார்சலே கனகமும் சுப்புறு வும் கண்டால் கண்கள் எப்படி ஆச்சரியத்தால் விரிந்து பிரமிக்கும்! ஆனல் ஐந்தாறு வடை வேண்டுவதென்றல் சாதாரண காரியமா? இப்பொழுது வடை முன்னரை விட விலை இரண்டு மடங்காகி விட்டது - வெளியே பெற்ருேலின் விலை ஏறியதால் இங்கு வடைகளின் விலை யும் ஏறியது. அதற்குக் கொடுக்கிற காசிற்கு ஒரு நாளையச் சீவியத்தைக் கொண்டு போகலாம். இந்த விசித்திரத்தில் சொட்டைத் தீன்களுக்கு செலவு செய் வதைப் பற்றி நினைக்கத்தான் முடியுமா? "பரவாயில்ஆல? என நினைத்துக்கொண்டு ஒரேஒரு நாளைக்கு வேண்ட லாம். ஆணுல், இதற்குள்ளேயே கிடக்கிறவன். எத்தனை பேருக்கு இந்தக்கையாலேயே வடை டார்சல் கொடுக்கிறவன் . காசு கொடுத்து வேண்டுவதென் முல் மனசுபின் வாங்குகிறது.
முதலாளியிடமாவது வாயை விட்டுக் கேட்கலாம் ‘விடிந்தாற் பொழுதறுதியும் அவருக்கென்றே உழைத் துக் கொடுக்கிறேன்- (இது கனகத்தின் குற்றச்சாட்டு) கேட்டால் இல்லையென்ரு சொல்லிவிடுவார்? கனகம் அடிக்கடி ஏசுவாள் - "உங்களுக்கு ஒரு நேரகாலம் இல் லையோ" "வீடுவாசல் இல்லையோ?" - "பெண்டில் பிள்ளை யில்லையோ?" - "இப்படி விடிஞ்சாற் பொழுதறுதியும் அந்தக் கடையே கதியெண்டு கிடக்கிறியள். அந்த மனிசன் உங்களுக்கு என்னத்தை அள்ளிக் கொட்டுது? அவள் மடைச்சி அவளுக்கு என்ன தெரியும்? முதலாளி எவ்வளவோ நல்லவர். சந்தர்ப்பங்களில் சீறிச்சினந் தாலும் அவருக்கு எவ்வளவோநல்ல மனசு இருக்கிறது. இல்லாவிட்டால் மூன்று வருடங்களுக்கும் மேலாக எ ன் னை "நிரந்தரமாக! வைத்திருப்பாரா? இந் தச் சாப்பாட்டுக் கடைக்கு வேலைக்கெனவரும் பெடி யள் வந்த சுவடு தெரியாமல் திரும்புகிற (அல்லது திருப்பப்படுகிற) சங்கதியெல்லாம் அவளுக்கு எப்மடித் தெரியும்?

Page 74
ஆளுல் எனக்கென்னவோ அவரிடம் கேட்கவே மனசு வராது. அவரது கண்டிப்பான பேச்சுக்களாலும் அதட்டல்களாலும் அவரிடம் ஒருவித பயம் கலந்த மரியாதையே ஏற்படுகிறது. கையை நீட்டிச் சம்பளம் வேண்டும் மனிசனிடம் எப்படி இதையெல்லாம் போய்க் கேட்டுக்கொண்டு நிற்பது என்ற எண்ணமும்,
ஒரு நாளைக்குஎப்படியும் கேட்கத்தான் வேண்டும். இதிலே கூச்சப்பட என்ன இருக்கிறது? "இன்றைக்குக் கேட்கலாம்" "இன்றைக்குக் கேட்கலாம்" என்று ஒவ் வொரு நாளும் நினைத்துக் கொண்டாலும் அலுவல் முடிந்து போகும் நேரத்தில் அநேகமாக வடை முடிந்து போயிருக்கும், அல்லது முதலாளியின் "மூட்" குழம்பிப் போயிருக்கும்.
கூடையிற் கொண்டு வந்த வடைகளை கடையின் முன்
பக்கத்திலிருந்த கண்ணுடி அலுமாரியிற் கொட்டிய பொழுது, சில வடைகள் கால் முளைத்த கோழிக் குஞ்சுகள் போல "கீர்ர்" ரென மறுபக்கத்திற்கு உருண் டோடின. இதைப் பார்க்கும் பொழுது தப்பிப் பிழை ப்பதற்காக அவை ஒடுவதைப் போல சிரிப்பாக இருந் தது. பாவம், அவற்றின் ஒவ்வொரு நாட் பிறப்பும். இறப்பும் வருடக் கணக்காக அவற்ருேடு உள்ள பரிச்சயம்தான் இப்படி, உயிருள்ள சீவன்களோடு பழ குவதைப் போன்ற உணர்வைத் தருகிறது போலும்
அல்லது ஒரு பார்சலை பிள்ளைக்குக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டுமென்ற ஆசைதான் நாளுக்குநாள்
வளர்ந்து அப்படி அவற்றின் மேல் ஒரு காதலும் இரக்கமும், பிரமையும் ஏற்படுகிறதோ என்றும் புரிய
வில்லை.
கண்ணுடி அலுமாரியில் கதவைப் பூட்டி விட்டு வந்து பார்க்கும் பொழுதும், பன்றிக்குட்டிகளை அடைத் துவிட்டு வந்தது போல. அவை ஒரு பக்கமாகக் குவிந்து கிடப்பது போல. ஒரு மூலைக்கு வந்து ஒன்றை யொன்று இடித்துக்கொண்டு வெளியேறத் துடிப்பது போல இரக்கமான தோற்றத்தையே அளிக்கிறது. ஆணுல் முதலாளியே அவற்றில் கரிசனைப்படுவது மாதிரி
கதவின் மேல் “தயவு செய்து கை போடாதீர்கள்
என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்
கட்டுப்பாடு எனக்குப் பொருந்தாது என்பதும், கதவைத்
- 40
திறந்து கைபோடும் உரிமை எனக்கு மாத்திரம் இருப்

- 41 -
பதும்.நினைக்கையில் ஏதோ கொம்பு முழைத்த மாதிரி உற்சாகம்! י ן
இந்த யோசனைகளில் நின்றபொழுது முதலாளி யின் அதட்டற்குரல் மீட்டது, "வயித்தி!. எங்கைய ப்பா ஏமலாந்திக் கொண்டு நிக்கிழுய்?.வந்த ஆக்களைக் கவனியாமல்?”
அப்பொழுதுதான் கவனித்தேன் - வந்திருப்பவர் இராமச்சந்திரன் ஐயா. அவரிடம் "என்ன வேண்டும்?? "என்று கேட்டு நேரத்தைச் சுணக்காமல் ஒடிப்போய் தட்டிலே வடைகளை எடுத்து வந்தேன். எனக்குத் தெரியும் - இப்படி ஆட்களையும் அவர்கள் வருகிற நேரத்தையும் கொண்டே அவர்களது தேவையை அனுமானிக்க. என்ருலும் ஒரு சம்பிரதாயம் போல வரு பவர்களிடமெல்லாம் முகத்தை மலர்த்தி."ஐயாவுக்கு?" என்று கேட்கவேண்டும்.
<ی
ஆட்கள் வருகை ஒரளவு கூடிக்கொண்டிருந்தது. அலுவலகங்கள் முடிகிற நேரமாதலால், இனி சற்று அதிகமாகத்தான் இருக்கும். எல்லோரையும் மூகம் கோணுமல் சுழன்று சுழன்று கவனிக்க வேண்டும்.
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாய்ச்சலை என்னிட த்தில் தீர்த்துவிட்டுப் போகிறவர்களும் உண்டு. அத ஞல் சற்றும் சுணக்கம் ஏற்படாமல் சுழலவேண்டும். இப்படி, வாடிக்கையாக வருபவர்கள், எப்போதாவது ஒருநாளைக்கு வருபவர்கள். கிராமப்பக்கத்திலிருந்து ரெளனுக்கு அலுவலாக வரும்பொழுது சாப்பாட்டுக்கு வருபவர்கள். எல்லோருக்கும் முகத்தைச் சுளிக்கா மல் சேவை செய்ய வேண்டும். ' )
இதற்குள்ளே "ரீமேக்கர்’ வந்து "சீனி இல்லை” என முறைப்பாடு செய்தான். முதலாளியிடம் சொல்லி விட்டு பக்கத்திலுள்ள கடைக்குச் சீனி வேண்டுவதற் காக ஒடினேன். இது எனக்குச் சந்தோஷத்தைத் 7ரு
கிற விஷயம். (இதில் எனக்கு ஏதோ வெட்டு இருப்
பதாக மணியம் சந்தேகப்படுவான். ஆனல் பக்கத்துக் கடையில் கடனுக்குத்தான் சாமான் வேண்டுவது. பிறகு முதலாளிதான் கணக்குத் தீர்ப்பது. ஒரு வெட் டுக் கொத்துக்கும் இடம் கிடையாது. சக தொழிலா
18

Page 75
-14
ளர்கள் என்ேேய ஒரு பெரியவனுகக் கணித்து முறை யிடுவதுதான் சந்தோஷத்தைத் தருகிற விஷயம் என் றேன்.) இதல்ை குசினிப் பக்கத்தை அடிக்கடி கவ னித்து, முதலாளியிடம் கூறி தேவையானவற்றை நேரத்துக்கு நேரம் வேண்டிப்போடுவேன். இப்படிச் செய்வதால் இந்த சாப்பாட்டுக் கடையை நானே நிர் வகிப்பது போன்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஆனல் மணியம் சில வேளைகளில் நேரே முதலா ளியிடம் போய் இன்ன சாமான் வேண்டும்" என்று கூறிவிடுவான். எனது தலேமையைப் பறிப்பதற்குத் தான் அவனுக்கு இந்தக் குறுக்கால் போகிற புத்தி வருகிறது. ஆனல் யார் சொன்னலும் முதலாளி என் னையே கூப்பிட்டனுப்புவார். இது, அவருக்கு என்மே லேயே நிறைந்த நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது?
இதனற்தான். மறந்தும்கூட. கடையிலிருந்து எதையும் ஒருபோதும் சுருட்டிக்கொண்டு போனதில்ஃ. அது பெரிய துரோகமான செயல். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல. சில சமயங்களில்.
*அஞ்சாறு வடையை தெரியாமல் எடுத்துக் கொண்டு
போனுல் என்ன" என்ற சபலமான எண்ணமும் தோன் றும். அடுத்தகணமே என்னை நினைத்துக் கூசிப்போ வேன். "சீ! என்ன மனசப்பா இது" என்று அடங்டுப் போவேன்.
ஒருவடைப் பார்சலைக் கொண்டுபோய் சுப்புறுவிடம் கொடுக்க அவன் காணுததைக் கண்டவன் போல அந்தப் பார்சலைப் பிரித்து, ஆவலோடு ஆசையோடு, சாப்பிடு வதை மனசார நினைத்து. நினைத்து.
எப்படியாவது ஒரு நாளைக்குக் கொண்டுபேரீய்க் குடுக்க வேணும். காசைக் குடுத்தெண்டாலும் வேண்ட வேணும். "-காசைக் கொடுத்துக் கேட்டால் முத லாளி, "என்னடா?. என்னட்டையே காசு நீட்டி வேண்டிற அளவுக்கு நீ பெரிய ஆளாகியிட்டியோ?" என்று நினைக்கவும் கூடும். அதைத் தவருக, தன்ன அவமதிப்பதாகக் கருதவும் கூடும்.
| r
 

۔۔۔۔۔143-س۔
ஐந்து மணியளவில் கனகேந்திரன் ஐயாவும் சிற் றம்பலம் ஐயாவும் வந்தார்கள். முதலாளியைப் பrர்த்து முகஸ்துதிச் சிரிப்புடன் படியேறினர்கள்.
"என்ன?. சம்பளமெல்லாம் கூட்டியிருக்கிருங்க வாம்.!” என முதலாளி அவர்களிடம் கேட்டார்பெரிய மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக்கொண்டு.
‘என்னத்தை. எழுபது ரூபாவைத்தானே கூட்டி யிருக்கிருங்கள். அது எந்த மூலைக்குக் காணும்?" எனக் கனகேந்திரம் ஐயா கூறியவாறு உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தார்.
- என்ன? எழுபது ரூபாய் கூட்டப்படுகிறதா? தட்டிலே வடை எடுத்துவந்து அவர்கள் முன்ஞல் வைத்துவிட்டு அவர்களது கதைக்குக் காது கொடுத்துக்
கொண்டு நின்றேன்.
'வைத்தி. ரெண்டு ரீ கொண்டு வா! --வஉை களைச் சாப்பிட்டுக் கொண்டே சிற்றம்பலம் ஐயா ஒடர் தந்தார்.
**ரெண்டு.கப் ரீ' எனது கத்தலேக் கேட்டதும் கனகேந்திரன் ஐயா காதைப் பொத்தினர். "பயப்பிட வேண்டாம். இனிக் கத்தமாட்டன். ஒருக்கால் கத்தி ஞலே அவனுக்கு கேட்டிடும்” என்றேன். "என்ன ரீ மேக்கர் பக்கத்துக் கடையிலேயோ நிக்கிருன்?" என சிற்றம்பலம் ஐயா பகிடிவிட்டார், சிரிக்க முயன்றேன்;
ரீயை அவர்கள் முன் கொண்டு வந்து வைத்து விட்டு மனதுக்குள் குமைந்து கொண்டிருந்த ஒரு சந் தேகத்தைக் கேட்டேன்:
"ஐயா!. எல்லோருக்கும்தான் சம்பளம் கூட்டு ருங்களோ அல்லது உங்களைப் போல பெரிய உத்தி யோகத்தருக்கு மட்டும்தானே?"
'ஆர் சொன்னது எங்களுக்கு மட்டு மெண்டு?. எல்லாருக்கும் தான்!. சாதாரண ஒரு லேபருக்கும் இது கிடைக்கும்.’’

Page 76
一1集4一
ஒரு சாதாரண லேபரராக என்னை நினைத்துக் கனக் குப் போட்டுப் பார்த்தேன். அப்பாடி! எனது சம்ப ளத்தில் சரி அரைவாசியளவு சடுதியாகக் கூடுமானுல்.: அதிசயமாக இல்லையா? அதைக் கற்பனை செய்து பார்க்கவே இன்.மாக இருந்தது. அதற்குப் பிறகு நான் நினைத்தபடி வடைப்பார்சல் வேண்டலாம். கன கத்துக்கும் சுப்புறுவுக்கும் வயிறு நிறையச் சாப்பிடக் கொடுக்கலாம். உடுதுணிகள் வேண்டிக் குடுக்கலாம் • இப்பொழுது கிடைக்கும் நூற்று முப்பது. அதிலும்
கழிவுகள் போக நூறு அளவில் கிடைக்கும். இதை . வைத்துக் கொண்டு அன்ரு டச் சீவியத்தைக் கொண்டு
போகிற ரகசியம் என்னைவிட கனகத்திற்குத்தான் தெரி யும். இந்த அளவிற்காவது புருஷலட்சணத்தைக் காப் பாற்ற முடிகிறதென்றல். அது முதலாளியின் புண் னியம் தானே?
என் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கன
கேந்திரன் ஐயா, என்ன நினைத்தாரோ. 'ஏன் வைத்தி
. தனியார் துறைக்கும் தான் சம்பளம் கூட்டுருங் களாம். உனக்கும் கிடைக்கும்' என்ருர்,
அந்தக் கணத்தில் ஒரு தலைகால் புரியாத சந் தோஷம் தோன்றியது. எனக்கு இது புதுமையாகவும் இருந்தது. உண்மையாக இருக்குமோ? பிறகு நினைத் தேன்; கனகேந்திரன் ஐயா என்னேடு பகிடிதான் விடு கிருர், எனக்கு சம்பளம் கட்டப்படுவதென்ருல் அது நம்பக்கூடிய கதையா? ஒரு வேளை அப்படியும் நடந் தால்?. இந்த முறை சம்பளம் எடுக்கும் பொழுது முதலாளி அதையும் சேர்த்து இருநூறு ரூபாயாகக் கணக்குப் போட்டுத் தருவாரோ? ஒ! அப்படியென்ருல் எவ்வளவு அருமை ஒரு நாளைக்குச் சுடுகிற அவ்வளவு வடைகளையும் வேண்டிக் கொண்டு போய் வீட்டிற் படைக்கலாமே!
ஆனல். பொய் அப்படி ஒருபோதும் நடக்காது. அதை நினைத்து வீணே மனக்கோட்டை கட்டுவா னேன்? முன்னரும்தான் சம்பள உயர்வு. சம்பள உயர்வு என்று கடைக்கு வந்து போகிறவர்களெல்லாம் கதைத்தார்கள். ஆணுல் எனது சம்பளத்தில் ஒரு வெள்ளைச் சல்லியும்" கூடவில்லையே? நான் இதற்கெல்
 

-- 145 س
லாம் லாயக்கானவனில்லை; விடியற்காவை ஐந்துமணிக்கே வேலைக்கு வந்து. இரவு பத்துப் பதினுெரு மணிவரை வேலை செய்கிறேனே. நல்லநாள் பெருநாள் என்று கூட இல்லாமல். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் பாரா மல். உழைக்கிறேனே. இதைப்பற்றி யார் கவனிக் கிமுர்கள்? - நினைப்பதோடு சரி. அதற்குமேல் மூச்சு வெளிப்படாது. கடையில் ஒரு வெத்திலை பாக்கு எடுத் தாலே கணக்கில் குறித்துவிடுவார் முதலாளி, பிறகு சம்பளத்தில் கழிக்கப்படும். இந்த விசித்திரத்தில் சம் பள உயர்வா?
எனக்குப் பெரிய கவலையாயிருந்தது. பத்து வயதி லேயே ஆச்சி இறந்துபோக அப்பு இன்ைெருத்தியை மணந்துகொள்ள. வீட்டைவிட்டு வெளியேறியவன் நான். பல கடைகளில் எடுபிடி வேலைக்காரணுக, சைக் கிளில் சென்று கொமிசனுக்கு வியாபாரம் செய்பவ னக மிட்டாய், ஐஸ்பழம் விற்பவகை. இப்படிப் பல விதமான தொழில்கள். எல்லாமே நிரந்தரமற்ற தொழில்கள். நாற்பது வயதுக்குப் பிறகு. இருபது வயது அழகியாக. ஏழ்மையின் பிடியிலிருந்த கனகம்மது? வைச் சந்திக்க நேர்ந்து. அவளைக் கைப்பிடித்து. இப்பொழுது ஐந்து வயதில் ஒரு சுப்புறு!
இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தபொழுது இனம் புரியாத வேதனையொன்று நெஞ்சை அலைக்கத் தொடங்கியது. கனகத்தையும் சுப்புறுவையும் நினைக் கையில் அழுகையே வந்துவிடும் போலிருந்தது. அநா தையாக ரோட்டு நாய் போலத் திரிந்த எனக்கு வந்து சேர்ந்த பந்தங்கள்! பாவம், அதுக்ளோடு எப்பொழுது
தான் சந்தோஷமாக இருந்திருக்கிறேன்?
விடிய, சுப்புறு எழுவதற்குமுன்னரே வெளிக்கிட் டால் பிறகு, அநேகமாக அவன் உறக்கத்திற்குப் போன பின்னரே படுக்கைக்குப் போகிறேன். படுக்கை யில் கனகம் குறைநிறைகளைச் சொல்லுவாள். கஷ்ட நஷ்டங்களை சொல்லுவாள். மெளனமாகவே கிடப் பேன். அவளது பிரச்சனைகளுக்கு என்னுல் தீர்வு காண முடிவதில்லை. எனது பிரச்சனைகளுக்கு அவள்தான் தீர்வு காணவேண்டும். நான் கொடுக்கும் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு எப்படித்தான் சமா ளிப்பாளோ?

Page 77
- سه مال، 1--
பொழுது இருட்சியடைந்து கொண்டிருந்தது. கடைக்கு எத்தனையோ பேர் வந்து போகிருர்கள். எல் லோரையும் கவனிக்கிறேன். ஆணுல் வேதனைச் சுமை யொன்று நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கிறது. என்னவென்று தெரியாதவலி, ஏதோ ஒருபயம். அது பயமா அல்லது கவலேயா? எதுவோ இல்லாமற்போய் விட்டமாதிரி.ஏதோ ஒரு தவறு செய்துவிட்ட மாதிரி. எதையோ இழந்துவிட்ட மாதிரி.
எவ்வளவோ முயன்று பார்த்தும் கவலையை
அடைக்க முடியவில்லை. பிருகு, ஒரு முடிவெடுத்துக் கொண்டு முவலாளியிடம் போனேன்.
காசு மேசையில் இருந்த முதலாளிக்கு அண்மை யாகச் சென்று, கதைக்கத் தோன்ருததால் பேசாது நின்றேன். எனது வித்தியாசமான தோற்றத்தைப் புரிந்துகொண்டு போலும்,
"என்ன வயித்தி?. ஒரு மாதிரி நிக்கிருய்?" எனக் கேட்டார் முதலாளி.?.
பதில் பேசமுடியாமல் இருந்தது. தலையையும் நிமிர்த்த முடியாமலிருந்தது. துக்கம் முட்டிக் கொண்டு நின்று தொண்டையில் நோவெடுத்தது. கதைப்பதற் காக வாயைத்திறந்தால் அழுகை பொத்துக் கொண்டு வந்துவிடுமோ என்றும் தோன்றியது.
எேன்ன வேணும்?. சொல்லு1. பயப்பிடாமல் கேள் வயித்தி!'
அப்பொழுதுதான் முதலாளியை நிமிர்ந்து பார்த் தேன். கண்ணிர் முத்திக் கொண்டு வந்தது.
(அவர் "பயப்படாமல்!" என்று சொன்னது தான் கண்ணிரை வரவழைத்தது. வழக்கத்திற்கு மாருக நினைத்ததற்கும் மாருக அவர் ஆதரவாகக் பேசியது தான் என்னை உருக்கியது.)
*" என்ன வயித்தி. என்ன நடந்தது?. மணியத் தோடை ஏதாவது புடுங்குப்பாடே?” முதலாளியும் பதட்டப் படத் தொடங்கினர்.
h

என்னையறியாமலே தலை திரும்பவும் குனிந்து கொண்டது. அவரது முகத்தை எதிர்கொள்ள முடிய வில்லை. முகத்தில் குத்திட்டு வளர்ந்து நிற்கிற மயிர் களுடு கைவிரல்களை விட்டுக் கோதினேன். அப்படிச் செய்வதால் நான் உணர்ச்சிவசப்படாமல் நிற்பதற்கு முயன்றேன்.
'வயித்தி! நிமிர்ந்து என்னைப்பார்!. விசயத்தை என்னெண்டு சொல்லடாப்பா!”
நிமிர்ந்து பார்காமலே சொன்னேன்! "சரியான நெஞ்சுநோவாய் இருக்குதையா!" நெஞ்சைக் கையி ஞல் அழுத்தத் தொடங்கினேன்.
**அதென்ன?. இருந்தாப்போலை நெஞ்சுக்குத்து?" 'இல்லை ஐயா. கொஞ்சநாளாய் இருந்தது. நீங்கள் பேசுவியளெண்டு நான் சொல்லவில்லை. இப்ப கடுமை யாயிருக்குது'
'எனக்கென்ன விசரே. பேசுறதுக்கு?. நெஞ்சுக் குத்தெண்டால் கவனமாயிருக்க வேணும். டொக் டரிட்டைக் காட்டினனியே???
* 'இல்லை." தாடியைச் சொறிந்த கையால் தலை யைச் சொறிந்து கொண்டு ஏதோ பிழைசெய்தவனைப் போல முதலாளியை அரை குறையாகப் பார்த்தேன்.
'வயித்தி. நெஞ்சில வருத்தமெண்டால் சும்மா விட்டுக் கொண்டிருக்கக்கூடாது. டொக்டரிட்டைக் காட்டினுல். அவையள் சோதிச்சுப் பார்த்து என்ன வருத்தம் எண்டு சொல்லுவினம்.'
"எங்கை ஐயா நேரம் கிடைக்குது?"
"நீ என்னப்பா மடைக்கதை பேசிருய்?. என் னட்டைக் கேட்டால் விடமாட்டேனே?" அவர் கடிந்து கொண்டதும் அடங்கிப்போய் நின்றேன்.
எனது குடும்பத்தைப் பற்றி முன்னரே ஓரளவு
தெரிந்திருந்தும் இப்பொழுது திரும்பவும் கனகத்தைப்
பற்றியும் மகனைப்பற்றியும் அக்கறையாக சுகநலன் களை விசாரித்தார். பிறகு,
"நீ. இப்ப வீட்டுக்குப் போகப் போறியோ?"
- 147

Page 78
一酪一
"போ ஞ ல் கொஞ்சம் ஆறுதல் எடுத்திட்டு நாளைக்கு விடிய வரலாம்??
"சரி. இப்ப போயிட்டு நாளைக்குக் காலமை சுகமாய் இருந்தால் வா!. இல்லாட்டில் டொக்டரிட் டைக் காட்டி மருந்து எடுத்திட்டு. மத்தியானத்துக்குப்
opp (5 Gnurr !”
"சரி ஐயா!"
முதலாளி என் மேல் இவ்வளவு கரிசனையும் வைத் திருப்பதை நினைக்கப்போகாமல் நிற்கலாமா என்றும் தோன்றியது. நன்றி பெருகியது. அவர் போகச்சொன்ன பின்னரும் போகாமல் நின்றேன். அவரை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தேன்.
'பிறகென்ன யோசனை. போவன்!”
"இல்லை ஐயா.ஒரு அஞ்சு வடை தந்தியளெண் டால் நல்லது."
'நெஞ்சுக்குத்துக்கு என்னப்பா வடை?"
ந G“5516G
இதற்கு என்ன காரணத்தைச் சொல்லலாம் என்று தெரியாமல் ஒரு புதுமணப் பெண்ணைப் போல நாணி னேன். பிறகு சமாளித்துக் கொண்டே, "பிள்ளைக்குக் கொண்டு போய்க் குடுக்கலாமெண்டு.?? எனமென்று விளுங்கினேன்.
முதலாளி மணியத்தைக் கூப்பிட்டார்- ஓடிவந் தான்.
“இவனுக்குஒரு அஞ்சுவடைபாசல் பண்ணிக்குடு! ?
நல்ல போஷாக்கில் வளர்ந்த குழந்தைகளைப்போல குண்டு குண்டாக முழியைப் பிதுக்கிக் கொண்டு கிடக் கும் வடைகளை ஒரு முறை பார்த்தேன்.
மணியம் என்னை விசித்திரமாகப் பார்த்தான். அவனை ஏறிட்டுப்பார்க்க முடியாதபடி கூச்சமாயிருந்தது,
3.

எத்தனையோ பேருக்கு. எத்தனையோ வடைகள் பார்சல் பண்ணிக் கொடுத்திருக்கிறேன். எனக்கு மணி யம் வடை பார்சல் பண்ணுவதைப் பார்க்கையில் அவ னிடமே பணிந்து போய் விட்டதைப் போன்ற ஆற்ரு மையுணர்வு குற்றியது. அவன் பார்சல் பண்ணி கொண்டு வரும்வரையும் யாருக்கோ மெளன அஞ்சலி செலுத்துபவனைப் போல நின்றேன்.
- "இந்தா'
மணியத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் பார் சலை வேண்டினேன். முதலாளியைப்பார்த்து நன்றி யோடு, "அப்ப. வாறன் ஐயா!"
முதலாளி சரி என்பது போலத் தலையை ஆட்டிஞர்
வடைப்பார்சல் கைக்கு வந்துவிட்டது! நேரத் தோடு வீட்டிற்கு போகவும் கிடைத்திருக்கிறது சந் தோஷம் பெருகியது வீறு நடை போடப் போகிறேன்.
دري" . د -எனக்கு நெஞ்சுக்குத்தும் இல்லை, ஒரு மண்ணுங் கட்டியும் இல்லை. தலைகால் புரியாத மகிழ்ச்சியில் நடக் கத் தொடங்கினேன். பிறகு, ஒரு சமயத்தில் முத லாளியைத் திரும்பிப் பார்த்தேன்"
முவலாளி எனது கணக்குப் கொப்பியில் கை போடு வது தெரிந்தது.
-இப்பொழுது உண்மையிலேயே நெஞ்சுக்குத்து வந்துவிடும் போல.ஏதோ எரிவு.ஏதோ அடைப்பு. ஏதோ இழப்பு நேர்வது போன்ற உணர்வு.
(யாவும் கற்பனை)
சிரித்திரன் செப்டம்பர் 1981

Page 79
”مبر,
(
 
 
 


Page 80


Page 81


Page 82
1 ܝ ܕ
鄞 羹
,<
e
லிபெக்சிம் சீமென்ற் சர்வ நிறுவனத்தில் மின் பொறியி ளராக குவைத்தில் கடமைய கிருர் ' ܓ .
- ஏற்க
இது ஒரு சிரித்திரன்
KODUT HITH
下 *
 
 

தேச 7ܨ U GÖTT ாற்று
எனவே வெளியான நூல்கள்:
ாத்காரம் து சிறுகதைகளின் தொகுப் ழ்ப் பணிமனை வெளியீடு es
மைக் கோலங்கள் கநாவல் Utt 6rú y si, 1981)
Abl –
by Stars