கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுகொம்பு

Page 1

அ. இராசரத்தினம்

Page 2


Page 3

- சுன்னுகம் : வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்
பதிவுரிமை) 1959 விலை: ரூ. 3.50

Page 4
முதற் பதிப்பு வ1959 ( "স্পী ".
.
مج&ممبر۔جمہو۔
ஜோதி அச்சகம், யாழ்ப்பாணம்
ܘܟ݂ܠܡܶܓ݂ܒܼܐ
உரிமை பதிப்பகத்தார்க்குரியது.
 
 
 

முன்னுரை
எனது முதலாவது நாவலான கொழுகொம்பை எழுதுகையில், என்றைக்காவது ஒருநாள் இதற்கு ஒரு முன்னுரையும் எழுதவேண்டியிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனுலும் இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள லாம் என்று எண்ணுகிறேன்.
சிறுகதையோ நாவலோ எதுவாக இருப்பினும் கதைக்கு அழுத்தமான ஒரு மூலக்கருத்து இருக்க வேண்டும் ; ஈழத்துச் சூழ்நிலையில் எழுதப்படவேண் டும் என்ற இரண்டு கொள்கைகளும் எழுத்துலகிற் பிரவேசம் பண்ணிய ஆரம்பகால முதலே எனக்கு உண்டு. M
மனிதமனத்தின் இன்பம், துன்பம், கோபம், ஏமாற்றம், வெறுப்பு, பச்சாத்தாபம் போன்ற பல் வேறு உணர்ச்சிகளும் உலகப்பொதுவானுல், என் கிராமத்து மக்களும் கதாபாத்திரங்களாவதற்குத் தகுதியானவர்கள்தான் என்று இப்போதும் திட்ட மாக நம்புகிறேன்.
அந்த நம்பிக்கையிற்ருன் என் கிராமத்துச் செல்லனையும், நடராஜனையும், அம்பலவாணரை யும், கனகத்தையும் உங்களோடு நடமாட விடுகி றேன். அவர்களால் உங்களோடு ஒட்டிப்பழக முடியுமானல் கான் நிச்சயமாக ஆனந்தப்படுவேன்.

Page 5
1ν
இந்நாவலே ஈழகேசரி வார இதழ்களில் வெளி யிடுவதற்காக என்ன எழுதத் தூண்டிய அதன் ஆசிரியர் திரு. இராஜ அரியரத்தினத்திற்கும், இத னேப் புத்தக ரூபமாக, அழகாக வெளிக்கொணர்ந் திருக்கும், சுன்னகம், வட-இலங்கைத் தமிழ்நூற். பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
வணக்கம்,
முதுரர், தங்கள் 1-10-59 வ. அ. இராசரத்தினம்

அணிந்துரை
ஈழத்தில் நாவல் இலக்கிய வளர்ச்சி தவழுங் குழந் தைப் பருவத்திலுள்ள தென்பதை மறைத்துப் பயனில்லே. அது, இன்னும் தன் காலில் நிலைத்துகின்று, ஒடியாடிப் பாடி, வாசகர்களின் சிந்தனைக்குணவீந்து மகிழ்விக்கும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. குறிப்பிடத்தக்க சில அறிஞர்கள் நாவல் இலக்கிய வளர்ச்சிக்குத் திடமான அத்திபாரம் அமைத்துத் தந்தனர் என்பது உண்மையே பாயினும், அம் முயற்சியே வளர்ச்சி என எண்ணி இறு மாந்திருத்தல் அறிவுடைமையாகாது. அந்த அடிப்படை முயற்சியின்மீது நமது சமுதாயப் படப்பிடிப்புக்கள், வள மான வளர்ச்சிக்குரிய நவநவமான கருத்துக்களோடுகூடி, பலபல கோணங்களிற் பரந்துசென்று, ஈழத்து மண் னின் புனித மணத்தைக் கமழ்ந்துகொண்டு உருவாக வில்லை. அதனுல் நம்மிடையே நிலவிவரும் ஓரிரு மொழி பெயர்ப்புக்களையும் சொந்தப் படைப்புக்களையும் நீக்கிப் பார்த்தால் ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெரியதொரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பதை உணரலாம். இங்கிலேக்கு ஈழநாட்டு வாசகர்களது மனப்போக்கும் ஒரு காரணமென்பதை மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அயல் நாட்டிலிருந்து இறக்குமதி யாகும் நாவல்களை - அவை சொந்தப் படைப்புக்களா யினுஞ் சரி, மொழிபெயர்ப்புக்களாயினுஞ் சரி - தலை மேல் வைத்துக் கொண்டாடி, நமது நாட்டுப் படைப்புக் களே அலட்சியபாவத்தோடு - கும்பகோணத்திற் கோதா னஞ் செய்கிற தம்பியின் மனுேபாவத்தோடு - வாசகர் கள் நோக்குவதனல் நாவலிலக்கியம் ஈழத்திற் செழித்து வளரவில்லை. அன்றியும் இலக்கிய சேவையைத் தலையாய நோக்கமாக்கி, துணிவுகொண்டு நாவல்களை வெளிக்

Page 6
vi
கொணர இந்நாட்டுப் பதிப்பகத்தார் முயல்வதுமில்லை. எனவே, ஈழத்திற் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்த சிறு கதை இலக்கியச் செழிப்பில் நூறில் ஒரு பங்குதானும் நாவல் இலக்கியம் வளர்ச்சிபெறவில்லை யென்றல் 'ஆது குற்றமாகாது.
இத் தேக்கநிலையைப் போக்கி, வளர்ச்சிப் பாதை யில் அடியெடுத்துவைக்கத் துணிந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே யாவர். அவர்களில் திரு. வ. அ. இராசரத்தினம் அவர்க ளுக்கு ஒரு தனியிடமுண்டு என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். அவர் சிறுகதையுலகிலே பிரபலம் வாய்ந்த வர். அவர் தாம் காணும் எப்பொருளையும் எச் சிறு சம்பவத்தையும் புதுமைப் பொலிவுடன், தமக்கே இயல் பான அழகிய நடையிலே, பல்வேறு உணர்ச்சிகளைத் துடிக்கவிட்டுக் கதை நடத்திச் செல்பவர். அவரது சிறு
கதைகளிலே ஈழத்து மண்வாசனை மிகவுண்டு. அவரது
கன்னிமுயற்சியே கொழுகொம்பு என்னும் இந்நாவல். கன்னிமுயற்சியேயாயினும் நன்முயற்சி. இது, ஈழகேசரி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து இரசிகப் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்றது. Ν
மூதூர் அம்பலவாணரின் மகனன நடராஜன் என் னும் கொழுகொம்பும் முறைப் பெண்ணுன கனகம் என் னும் இளங்கொடியும் தூய அன்புகொண்டு ஒன்றை
யொன்று தழுவத் துடித்தபோது, ஒரு சிறு சம்பவத்தி
ல்ை இரு குடும்பத்தலேவர்களது ‘நான் முளைத்தெழுந்து, அந்தஸ்துப் போராட்டத்தை உண்டாக்கிப் பிளவை ஏற் படுத்துகிறது. பிளவைப் பெரிதாக்கும் திருப்பணியில் ஈடுபட்ட கிராமத் * தொண்டர் சிலரால் அது பெரும் பிளவாகிக் காதலர்களைப் பிரித்துவிடுகிறது. நடராஜன்,
தன் சமூகக்கண் காணுத இடத்திலே காதல் வாழ்வு
 
 
 

நடத்தக் கனகத்தை யழைத்தபோது, தமிழ்க்குலப் பெண்மை அவளைத் தடுக்கிறது ; சந்தர்ப்பமும் அவன் மனதிற் சந்தேகத்தை விதைக்கிறது. அதனல், தன்னையும் ஊரையும் உறவையும் வெறுத்துவிட்ட அவன் மலைநாட்டுத் தீோட்டமொன்றிலே புகலடைந்து அங்கே துணையற்று வாடுங் கொடியாகக் கிடந்த பிலோமினுவுக்குக் கொழுகொம்பாகிருன், அத் தளர்கொடி, தான் படரும் அக் கொழுகொம்பு, காலாகாலமாகப் பிறிதொரு இளங் கொடிக்குச் சொந்தமானது என அறிகிறது. கொழு கொம்பை உரிய இளங்கொடிக்கே சேர்த்துவிட எண் "ணரிய பிலோமினு மன நிறைவுடன் தியாகத்தீயிற் குதிக்
கிருள் - இதுவே விளக்கமான கதைக்கரு.
கதை, மகாவலிகங்கையின் அரவணைப்பிலே வளங் கொழிக்கும் மூதூரிலே பிறந்து, கல்முனேயையும் கொழும்பையுந் தொட்டு, மலைநாடு சென்று முடிகிறது. இப் பகைப்புலங்கள், கதையைச் சுவைகுன்றவிடாமல் நடத்திச் செல்கின்றன. இப் பகைப்புலங்களிலே அடக்க மும் அதனேடு அறிவை வென்று மேலோங்கும் உணர்ச் சித் துடிப்பும், காதலும் அதனேடு பிறர்துயர்கண்டு இரங்கும் பண்பும் ஆகிய இவைகள் கொண்டு உரு வான நடராஜன் ; அவன்மீது காதல்கொண்டு வாடித் தளர்ந்தபோதினும், பண்பு தவருத கனகம்; அந்தஸ்து ஆசையும் பிள்ளைப் பாசமும் போட்டியிட, சிலசமயம் நிமிர்ந்தும் சிலசமயம் தளர்ந்தும் நடக்கும் அம்பலவாணர்; அவரோடு போட்டியிடும் கனகத்தின் தந்தை கங்தையா பிள்ளை ; இருவருக்கும் பகைமை மூட்டி வேடிக்கை பார்க் கும் பெருந்தொண்டர் சண்முகம்பிள்ளை; தியாகச் சுட ரான பிலோமின, இன்னும் பலர் உலாவிக் கதையை வளர்க்கின்றனர். அவர்களது பார்வையிலே, பேச்சிலே, செயலிலே, நடத்தையிலே உணர்ச்சி இழையோடிக் கதைக்கு உயிர்க் களை ஊட்டுகிறது.

Page 7
z å å V
ஈழத்திலே நாவலிலும் சிறுகதையிலும் நல்லதொரு வளர்ச்சியை எதிர்பார்க்கும் இத் தருணத்தில், தான் தோன்றித்தனமான விமர்சகர்கள் குத்தூசிகளாக மாறி, எழுத்தாளர்களின் உள்ளங்களைத் துன்புறுத்தப் LTಗೈಲಿ பது வரவேற்கத்தக்கதன்று. பண்பட்ட முறையிற் செய் யப்படும் விமர்சனம் இலக்கியத்தை வளர்க்க உதவுமே யன்றி, தங்கள் தங்கள் மனத்து விளைந்த எண்ணங் களை அளவுகோல்களாகக்கொண்டு செய்யப்படும் விமர் சனம் நிச்சயமாக வளரும் இலக்கியத்துக்குக் குந்தகம் விளேக்கும். விமர்சகன் எழுத்தாளனுக்குப் புதுப் புதுச் சோதனைகளிலும் முயற்சிகளிலும் ஊக்கமளித்து உயர்த்த வழிகாட்டவேண்டுமேயன்றித் தான் ஒரு தடைக்கல்லா யமைதல் அழகன்று. எனவே பண்பட்ட முறையி லமைவதும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நற்பயன் விளைக்கக்கூடியதுமான ஒரு விமர்சனப் போக்கு ஈழத்தில்
உருவாகவேண்டும். அந்தவிதமான விமர்சனத் தராசில்
இக் கொழுகொம்பு தக்க நிறை காட்டும் என்பது எனது எண்ணம். திரும்பவும் வாசகனுக்கும் விமர்சக னுக்கும் ஒரு வார்த்தை : ஈழத்து மண்ணில் அரும்பிய ஒரு கொழுந்து இக் கொழுகொம்பு,
நாவற்குழி, சு.வே. 31-10-59
 

கொழுகொம்பு
*,丑
தேர்தல்
திருக்கொட்டியர்புரப்பற்று மூதூரைச் சேர்ந்த சித்திராவி அம்பலவாண பிள்ளையவர்கள் எ ச் சி ற் கையாற் காக்கை துரத்தியதை எவரும் கண்டிருக்க முடியாது; ஒட்டாததையும் கண்டிருக்க முடியாது. இதற்குக் காரணம் அவர் சாப்பிடுவதையே யாரும் காணுததுதான் v−
அவர் சாப்பிடுவதேயில்லை என்று நீங்கள் எண் ணக்கூடாது. உயிரைப்பிடித்து உடம்புள் வைத்திருக்க மட்டுமல்ல, அதற்கும் மேலாகத் தெம்பாயும் திட மாயுமிருக்க அவர் கன்முகச் சாப்பிடுபவர்தான். ஆனுல் பெரிய வைதீகம். அடுக்களைக் கதவைச் சிக்கா ராகச் சாத்திக்கொண்டு, பூசி மினுக்கிய சேர்வைக் காலின் மேலிருக்கும் வெண்கல வட்டிலில் கிராமத்துப் பசுகெய்யும், வீட்டுக் கொல்லையில் வளரும் காயும் பிஞ்சு மாகச் சேர்த்து, அரைப்படி ஊர் அரிசிச் சோற்றை மூக்கு முட்டப் பிடிக்கிறவர் என்ற இரக சியம் நான் கதாசிரியனுதலால் எனக்குத் தெரியும். ஆனுல் அவரைத் தெரிந்த மற்றவர்கள் அவரைப் பிசினி என்று சொன்னுல், அவர் தன் பணத்தை அகியாயமாக மற்றவர்களுக்குச் செலவழிப்பதில்லை என்றுதான் அர்த்தம்.

Page 8
கொழுகொம்பு 忍
பிள்ளையவர்களுக்கு ஐம்பது வயதிருக்கும். பள பள என்று மினுங்கும் ஏறு கெற்றிக்குமேலே, அழுத்த மாக வாரிய தலையின் பின் சரிவில், வாழைப்பொத்தி யைப்போல இருக்கும் குடுமியில் ஓரிரண்டு வெண் மயிர்கள் இழையோடியிருந்தாலும், நிமிர்ந்த நெஞ் கிலே வாலிபத்தின் மிடுக்குத்தான் விறைத்து நிற்கும். வட்டித்து நீண்ட சிறிய முகத்திலே அகன்று விரிந்த காசி, தலையிற் கேசத்தை வளர்க்க எத்தனை பிரயத் தனப்பட்டிருப்பாரோ அத்தனை முயற்சி முகத்து மீசையைச் சவரம் பண்ணவும் எடுத்துக்கொண்டிருப் பார்போலும் முகம் வழவழ வென்றுதான் இருக் கும், அரைக்குமேலே அவர் இயல்பான நிறத்தைச் சொல்ல முடியாது ! வெய்யிலடித்ததாற் கறுத்துப் போயிருக்கும். ஏனென்ருல் அவர் மேலுக்குச் சட்டை போட்டதே கிடையாது. தூய வெள்ளை வேட்டியை இரண்டாக மடித்து 15ாலுமுழத் துண்டை உடுத்துவது போல ஒற்றைப்பட்டாகவே எப்பொழுதும் தரிப்பார். வேட்டிக்குக் கீழே, முழங்காலின் அடியிற் குதிரைச் சதையில் 5ரம்புகள் முறுக்கேறியிருப்பது தெளிவாகத் தெரியும்.
அவர் உள்ளமும் உடலும் உரம் பெற்றிருந்ததற் குக் காரணம் உண்டு. வினுேபாஜியைப் போன்ற ஒரு மகானுபாவன் இலங் ைகயிற் தோன்றுமட்டும் தன்னது என்று பெருமைப்படக்கூடியபடி அவர் மூதா தையர் மாவலிப் பாய்ச்சல் காணும் பெரும் பரப்பு நிலத்தை அவருக்கு என்று வைத்து விட்டுப் போயிருக்
தார்கள். அந்த வயலில் மாடுவிட்டுச் சேருக்குவது
தொடக்கம் அறுத்து அடித்து கெல்லைப் பட்டடைக்
குக் கொண்டுவருவதுவரையுள்ள அத்தனை வேலையையும்
 
 
 
 
 
 
 

8 கொழுகொம்பு
அவர் கைகளும் செய்தே தீரும். இந்த வேலைகளினல் வந்த உடலுறுதியும், கெல் எறிந்தாற் பொன்னுக விளையும் அவர் வயலின் செழிப்பினுல் ஏற்பட்ட உள்ளத்து விம்மிதமும் அவரை ஒரு வணங்காமுடி யணுகவே ஆக்கிவிட்டன.
வேலைக்காரர்களுக்குக் கூலி கொடுப்பதிலோ, அல்லது வேலை வாங்குவதிலோ எவனும் அவரைக்
குறைசொல்ல முடியாது ஆனுல் உள்ளுருக்குள் ரூபாய்
சதக்கணக்கில் முடிந்துவிட்ட இந்தக் கூலி விவகாரம்,
விளைவின் பின்னுற் பருத்தித்துறை வியாபாரியோடு
சிங்கப்பூர் 'கத்தை கோட்டு க்களாக மாறும்போது ஊரவர்கள் மனமெல்லாம் வேகும். இந்த வேக்காடு தான் அவருக்குக் கருமி என்ற பெயரை நிரந்தர மாகக் கொடுத்துவிட்டது. இதற்கு ஒத்தூதுபவரைப் போலத்தான் பிள்ளையவர்களும் வயலிலே கூட மற்ற வர்களோடு சாப்பிடமாட்டார். ஏன் ? திருகோண மலைப் பட்டினத்துக்குப் போக கேர்ந்தாற்கூடக் கட் டுச் சோறு கொண்டு போவது தான் அவர் வழக்கம்! மாளிகை போன்ற பென்னம் பெரிய வீட்டிலே, இரா ஜப் பிரதிநிதி மாளிகை ராஜாஜியைப்போலத் தன் வேஷ்டியைத் தானே தோய்த்து மான் தோலின் மேலேயிருந்து இராமாயணத்தையும் படித்துக்கொண் டிருந்தால் அந்தக் கிராமம் அம்பலவாணபிள்ளையைக் கருமி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லும்?
அம்பலவாணபிள்ளையிடம் பணம் குவிவதைக் காணக் காண ஊரில் இருக்கும் சின்னப்பணக்காரர்
களுக்கு ஒரு வயிற்றெரிச்சல்; பொருமை ! பாவி
இடிந்து கிடக்கும் கண்ணகியம்மன் கோயிலைத் திருத்த

Page 9
கொழுகொம்பு 4.
ஒரு கால் ரூபாய் கொடுக்கிருன? இப்படிச் சேர்த்து
வைக்கிருனே! இவனுக்கென்ன பத்துப் பன்னிரண்டு
பிள்ளை குட்டியா? மருந்து போல் ஒரே ஒரு மகனுச்சே! ஏன் தான் இப்படிக் கருமித்தனம் பண்ணுகிருனுே' என்று பேசியவர்களும், பிறரைப் பேசவைத்தவர்களும் வாயலுத்துப் போகும்வரைக்கும் ' கம் மென்றுதான் இருந்தார் அம்பலவாணபிள்ளை அவர்களும்.
ஆணுற் கடைசியில் அவர் சரியாக மாட்டிக் கொண்டு விட்டார். ஆம், அம்முறை கிராமச்சங்கத் தேர்தலிற் போட்டியிடுவதென்று அம்பலவாணபிள்ளை தீர்மானித்துவிட்டார். எதிரிகளின் வலையிற் சரியாக விழுந்து விட்டார் அம்பலவாணபிள்ளையவர்கள்!
பற்றற்ற துறவிக்கும் தான் ஒரு தூய்மையான, எல்லோராலும் போற்றப்படத்தக்க, துறவியாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கின் றது. அம்பலவாணபிள்ளைக்கும் ஆசை பிடித்துக் கொண்டது! கிராமச்சங்கத்தவராக மட்டும்; ஏன் ? அதன் தலைவராகவும் வரலாம். அதன் பின்னல் தன் பேரோடு கிராமச் சங்கத் தலைவர் என்ற பதங்களையும் சேர்த்தே எழுதலாம். மந்திரிக்குக் கை கொடுக்கலாம். எண்பது இருத்தல் மாலை போட்டால் அந்தக் காட்சி பத்திரிகைகளில் எல்லாம் வெளிவரும்.
* சனகாயகம், சனநாயகம்' என்று கத்துகிருர் களே. 8 வாக்குரிமை, வாக்குரிமை என்று வாய்வலிக் கப் பேசுகிருரர்களே இந்த வாக்குரிமையினுலும், சன காயகத்தினுலும் காம் கண்ட பலன் என்ன? சிங்களர் அதிகமாக உள்ள கிராமத்தில் தமிழர் அவதிப்படுகிறர்

5 கொழுகொம்பு
கள். தமிழர் அதிகமாக உள்ள இடத்தில் முஸ்லீம்
மக்கள் அடங்கி வாழ்கிறர்கள். வலியவன் எளியவன்
குடிசைக்குத் தீ மூட்டுகிமூன். வாக்குரிமையினுல் இங்
தக் கொடுமைகள் நீங்கியிருக்கிறதா ? நீங்கத்தான்
போகிறதா? ஆனல் இந்தப் பொதுசன வாக்குரிமை யினுல் ஒரேயொரு கன்மை ஏற்பட்டுத்தான் இருக் கிறது. சாப்பிடுவதையே பிறர் காண விரும்பாத அம் பலவாணபிள்ளையைப் போன் ற வை தி க ர் களும், அவரைவிடப் பெரிய பெரிய பணமூடைகளும், ஆகக் குறைந்தது தேர்தல் காலத்திலாவது ஒவ்வொரு ஏழை யின் குடிசையிலும் மண்டியிடுகின்றனர். தேர்த லன்றைக்காவது ஒவ்வொரு ஏழை வாக்காளனும் நிமிர்ந்து நடக்கிருன் சிறிது குடித்துக் குதூகலமாக இருக்கிருன், கெஞ்சு முறியாமலே பத்துப் பதினைந்து ரூபாய்களைப் பெற்றுக்கொள்கிறன். நம் காட்டுச் சன5ாயகம் ஏழை வாக்காளனுக்கு இந்தச் சலுகையை யாவது ஒரு நாளைக்குக் கொடுக்கிறது என்பதற் காவது நாம் சனநாயகத்தைப் பாராட்டித்தான் திர வேண்டும்.
அம்பலவாணபிள்ளை அவர்களும் தான் அரும் பாடுபட்டுச் சேர்த்த காசை இறைத்தார். ஆம், இங் கிலாந்தில் தேர்தல் கொள்கைக்காக நடக்கலாம். ஆனல் நம் காட்டில் அது கடக்கிறதா ? அதுவும் கிராமச் சங்கத் தேர்தலாக இருந்துவிட்டால் அது தனிப்பட்டவர் செல்வாக்கிலேதான் நடைபெறும். இப்படித்தனிப்பட்ட இருவருக்கிடையிற் பூசல் கிளம்பி உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் அதன்பிறகு கிராமச் சங்கத் தேர்தலைப் போன்ற இரசமான சம்பவம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒரு தொகுதியில்

Page 10
கொழுகொம்பு 6
இருக்கும் நூறு வாக்காளர்களுக்காக ஆயிரக்கணக்கிற் காசு செலவழியும், கலன் கணக்கிற் சாராயம் அழியும். தேர்தல் நாள் நெருங்குகையிலே தான் இந்த அபாய்ம் அம்பலவாணபிள்ளையவர்களுக்குத் தெரிந்தது! ?
அதனுல் என்ன ! அம்பலவாணபிள்ளையும் தமிழ னல்லவா ? ? முன் வைத்த காலைப் பின்வைக்கமாட் டானுமே தமிழன்; துணிந்து இறங்கியாய் விட்டது. இனி என்ன ? என்ற வைராக்கியத்துடன் தேர்தலில் ஈடுபட்டார் அம்பலவாணர், பணம் தண்ணீராய்ச் செலவழிந்தது. ஆனல் இந்தப் பணம் முழுவதும் வாக்காளனுக்குச் சேர்ந்தாற்கூட நன்ருயிருக்கும். ஆனல் அதுதான் கடக்கவில்லையே. பிள்ளையின் வீழ்ச்சியிற் கண்ணுயிருந்த புல்லுருவிகள் அவரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டேயிருந்தன.
முடிபாகத் தேர்தலிற் படு தோல்வியடைந்தார் பிள்ளையவர்கள். அவரை ஒட்டிப் பிடித்திருந்த
உண்ணி'களும் விட்டுக் கழன்றன.
தேர்தலிற் தோற்றுப்போன பிள்ளையவர்கள் தான் இப்போது அவர் வீட்டு ஊஞ்சற் பலகை யிலே குந்திக்கொண்டு தன் சிறிய தலைக்குள்ளிருக் கும் மூளையினல் இப்பெரிய உலகத்தையே அளக்க முயல்கிறர்.
தன்னே அடுத்துக் கெடுத்த கயவஞ்சகர்கள், சிநேகங்காட்டி வினையஞ் செய்தவர்கள் எல்லாருமே அவர் மூளையில் வந்து போனுர்கள். தன் பணப் பெட்டியிலே இருந்து கற்றை கற்றையாக இழுத் தெடுத்த பணத்தைக் கணக்கிடுகையில் அவர் அடி
 
 
 

கொழுகொம்பு
வயிறு பகீர் என்றது, வீட்டுமூலையிலே வெறுமையாக் கிடக்கும் சாராயப் போத்தல்களைப் பார்க்கையில் அவர் உள்ளம் உணர்வு எல்லாமே "சூன்யமாகி விட்ட்தைப் போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. செல வழிந்துபோன அத்தனை ரூபாய்களுக்கும், காலியாகிக் கிடக்கும் அத்தனே போத்தல்களுக்குமாகச் சேர்த்து, அவரின் சின்னமாகிய த ரா சிற்குப் பத்துப்பேர் மட்டுமே அடையாளமிட்டிருந்தார்கள் ஆ! இதற்கா கத்தான அவர் தம் பரம்பரைப் பெருமையை உதறித் தள்ளிவிட்டு, எத்தனையோ எளிய பயல்’களின் காலடியில் மண்டியிட்டார் ? சை துரோதிகள் ! உண்டவீட்டுக்கு இரண்டகஞ் செய்த காதகர்கள் !
அம்பலவாணபிள்ளை யவர்களின் சிந்தனை இந்த மாதிரியாகக் கொதிப்பேறிக்கொண்டு செல்கையிற் தன் மனைவிகூடத் தனக்கு வாக்களித்திருக்க மாட் டாளோ என்று அவர் மனம் ஐயுற்றது. அவள் உடன்பிறந்த அண்ணனும் அந்தப் பயல்கூட எனக்கு வாக்குப்பண்ணியிருக்க மாட்டான்' என்று அவர் மனம் திட்டமாகச் சொல்லிற்று. வரட்டும் அந்தத் துரோகி; என்னிடம் மாப்பிள்ளை கேட்டாகுதல் வரு வான்தானே ! அப்போது அவனைப் பார்த்துக்கொள் கிறேன் என்று அவர் மனம் வஞ்சினமுரைத்தது.
பிள்ளையவர்கள் இப் படித் தீர்மா னித் துக் கொண்டிருக்கையிலேதான் நடராஜன் பிருந்தாவன மும் நந்தகுமாரனும் என்ற பாட்டை முணுமுணுத் துக்கொண்டு மண்டபத்துள்ளே கா லடி எடுத் து வைத்தான்.

Page 11
22ع
g, GU j, Y',1)
' எங்கேடா போய் வாரு ?' என்ற முழக்கத் தைக் கேட்டு நடராஜன்திகைத்து நின்ஞன், அப்பா தன்னைத்தானு இப்படிக் கேட்கிருர் என்ற வியப்பில் அவன் மனம் ஒரு கணம் காலேத் தூக்காமல் மலைத் துப் போனன், -
அவனுக்கு இருபத்து மூன்று வயதாகிவிட்டது. அம்பலவாணபிள்ளையின் ஒரே மகன் அவன், அது வும் புதுமைப்பித்தன் சொன்னது போல ஆசைக் கென்று காலங் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுங் தல்லவா ? இந்த இருபத்து மூன்று வருடகாலத்தில் ஒரு 5ாளாவது அம்பலவாணபிள்ளை அவனைக் கடிக் துரைத்ததில்லை. இன்றைக்கு ' எங்கேடா போய் வாரு ?' என்று ஆக்ரோஷத்தோடு அவர் கேட்ட போது அவன் காதுகளையே அவனுல் கம்பமுடியவில்லை.
திகைத்துப் போய் நின்ற கடராஜன் அப்பா வேறு யாரையாவது கேட்கிருரா என்று எண்ணிய வகைச் சுற்றுமுற்றும் திரும்பிப்பார்த்தான்.
* உன்னைத்தாண்டா கேட்கிறேன்' என்று மறு படியும் இரைச்சலிட்டார் அம்பலவாணபிள்ளை.
நடராஜனின் ஒல்லியான நீண்ட உடம்பு அவமா னத்தின ற்குன்றிப்போய் ஒரு சாணுயிற்று அரை
 

9 கொழுகொம்பு
யில் தொத்திக்கொண்டிருந்த நீண்ட காற்சட்டை கழன்று கீழே விழுந்து விட்டதைப்போல இருந்தது. இன்பமான மெல்லிய நினைவுகளில் மலர்ந்துபோ யிருந்த அவன் வட்டமுகம் திடீரென்று சுருங்கி க் கறுத்துப்போயிற்று. அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணிக் கொண்டிருக்கையில் ‘இந்த நிலையில் என்ன பதிலைச் சொன்னுலும் அவர் கோபிப்பாரே ஒழியச் சமாதானமடையமாட்டார்' என்று அவன் மனம் சொல்லிற்று. ஆனலும் 'மாமா வீட்டிற்குப் போய்வாறேன் அப்பா' என்று தான் அவன் பதில்சொல்லி வைத்தான்.
"யாருடா உனக்கு மாமா ?” என்று இரைந்தார் அம்பலவாணர்; இந்தக் கேள்விக்குப் பதில் அவருக்கே தெரியும். ஏனென்றல் நடராஜன் எப்படி அம்பல வாணரை அப்பா என்று அருமையாக அழைக்கிருனே அப்படியேதான் அவர் மனைவியின் சகோ த ரனு ன கங்தையாவை மாமா என்று அருமையாக அழைப் பான். ஆனல் இன்றைக்கு இந்த விதண்டாவாத OfT6OT வினுவை அம்பலவாணபிள்ளையவர்கள் கேட் கையில், ஆசிரியரின் வினவிற்கு விடைதெரியாத மாணவனைப்போல நடராஜன் பயந்துபோய்த் தலை யைக் குனிந்துகொண்டு நின்றன்.
அவன் மெளனத்தைத் தொடர்ந்து அம்பல
வாணர் மறுப்டியும் சொன்னுர்: 'உனக்கு மாமாவும்
இல்லை, இனி நீ அந்தப்பக்கம் போனுல் நான் உனக்கு
அப்பாவும் இல்லை, நீ என் மகனுமில்லை' என்ருர்,
அவர் குரலிற் சப்தம் தணிந்திருந்தாலும் வேகமும்
கடுமையும் அதிகமாகவேயிருந்தன.
3

Page 12
கொழுகொம்பு 10
தான் ஏதும் பேசினல் அதனல் எந்த கன்மை யும் ஏற்படாது என்று எண்ணிய கடராஜன் மெல்லத் தன் அறைக்குள் கழுவினன்.
ஆம், அவன் சிறிது படித்தவன். அப்பா ஏன் கோபமாயிருக்கிமூர் என்பது அவனுக்குத் தெரியும். இந்த நேரத்தில் 'மெளனம் கலககாஸ்தி' என்பதை யறிந்த நடராஜன் யோசித்தவாறே அறைக்குட் சென்று உடுப்புகளைக்கூடக் கழற்ருமற் கட்டிலிற் சாய்ந்து கால்களைத் தரையில் தொங்க விட்டபடி கிமிர்ந்து வீட்டு முகட்டைப் பார்த்தவாறே எண்ண மிடலானுன்
கொழும்பில் அப்போதிக்கரி உத்தியோகத்துக் குப் படித்துக் கொண்டிருந்த நடராஜன், தன் தகப்ப னரின் தேர்தலுக்காக ஒரு வார லீவு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்திருந்தான். வந்த சில காட் களிலேயே அவன் தன் தகப்பனர் தேர்தலில் தோற் றுப் போய்விடுவார் என்பதை விளங்கியிருந்தான். அப்பாவை மட்டந்தட்டத்தான், எந்த விவகாரத் திலும் அணுவசியமாகத் தலையிட விரும்பாத தன் தகப்பனுரைச் சூழ்ச்சிக்காரர்கள் சிலர் கிளப்பிவிட் டிருக்கிருர்கள் என்பது அவனுக்குத் தெ ரிங் து போயிற்று.
ஆனல் உணர்ச்சித் திரை அப்பாவின் கண்களை மறைத்திருந்தது. தன் கையை விட்டுப்போன கற்றை கோட்டுக்களின் பலத்திலேதான் தேர்தலின் வெற்றிக் கொடி காட்டுவேன் என்று திட்டமாக கம்பியிருந்தார் அவர், அந்த நம்பிக்கையின் முறிவு, அந்த எதிர்பாராத
 
 
 

தண்டனை? அவன் இனி மாமாவீட்டுக்குப் போகக்
--
11 கொழுகொம்பு
ஏமாற்றம், அவர் மனதையே பேதலிக்கச்செய்து விட்டது. அதனுற்றன் தங்தையார் சிறிவிழுகிருர்,
ஆனல் அவர் ஏமாற்றத்திற்காக அவனுக்கா
கூடாதா?
அப்பா கோபத்தில் இப்படிச் சொல்லிவிட்டார். நாளடைவில் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்ற எண்ணம் இருண்ட அவன் மனதில் மின்னலாக நெளிந்து பளிச்சிட்டது ஒரு கணந்தான் மறுகணம் அவன் மனதில் தான் மாமனர் வீட்டுக்குப் போகக் கூடாது என்ற அந்தகாரம், சந்திரனை மறைக்கும் பூமியின் நிழல்போல அவன் மனத்தை இருளா யடைத்தது. அறைக்கு வெளியிலே திறந்திருந்த யன் னலுக்கூடாக உலகம் இருளடைந்து கொண்டு வரு வது தெரிந்தது. அன்றைய கடமையை முடித்து விட்ட சங் தோ ஷ த் தி ல் வானப் புட்கள் கானம் பாடிக்கொண்டு கூட்டையடைந்து கொண்டிருந்தன.
நடராஜனும் அந்தப்பறவைகளில் ஒன்றைப்போ லத்தான் பாடிக்கொண்டு அவைகளுக்கு முன்னதா கவே வீட்டுக்கு வந்தான். ஆனல் அவன் வரும்போ
திருந்த மனநிலைக்கும் இப்போதிருக்கும் மன நிலைக்கும்
தான் எவ்வளவு வித்தியாசம் 1 வானவெளியில் ஜில் லென்று பறந்து செல்லும் சிட்டுக்குருவி போன் றிருந்த அவன் யெளவன உள்ளம், இப்போது பாருங் கல்லாகக் கனத்து அமுக்குகிறதே! அது ஏன் ? சிரித்து மிதந்த அவன் உள்ளம், அழுது ஆழ்கிறதே! அது ஏன் ? ஏன் ? ஏன் ?

Page 13
கொழுகொம்பு 12
இந்தக் கேள்விகளுக்கு விடை அவனுக்குத் தெரி யாது. ஏனெனில் இப்படியொரு கட்டளை தன் தகப் பனரிடமிருந்து பிறக்கும் என்பதை அவன் எதிர் பார்த்தவனல்ல. எதிர்பாராத அந்தக் கட்டளை பிறந்தபோது, அதன் கனத்தை அநுப்விக்க மட்டும் அவன் மனத்துக்குத் தெரிந்திருந்தது. இந்த மனதின் கனந்தான் அன்பின் கனமா? அல்லது தன் மாமனு ரிடம் அவர் குடும்பத்திடம் அன்பாக இருந்தான் என் பதை இப்போதுதான் உணருகின்றன? அவன் வைத் திருந்த அன்பை இப்போதுதான் தெரிந்து கொண் டானே என்னவோ, நடராஜனுல் தன் தந்தையின் கட்டளையைத் தாங்கிக்கொள்ள முடியவேயில்லை. அவன் மனத்தில் இறந்துபோன, இறந்துகொண் டிருக்கிற, சம்பவங்கள் எல்லாம் திரை போடத் தொடங்கின.
5டராஜனைப் பொறுத்தவரை தன் தங்தையின் பிரமாண்டமான வீட்டில் அவன் தனியன், பால்யத் திலோ, அல்லது வாலிபத்திலோ அவனது விளையாட் டுத் தோழர்கள் எல்லாம் மாமாவின் வீட்டிலேதான் இருந்தார்கள். ‘அத்தான் ‘அத்தான்' என்று காலைக் கட்டிக்கொண்டு திரியும் சந்திரனும், நடராஜனின் பாடசாலைத் தோழன் செல்லனும் மாமாவின் வீட் டிலேதான் இருந்தார்கள். இத்தனைக்கும் மேலாகத் தன்னைக் கண்டதும் காணிக் குழைந்துகொண்டு, அங் தக் குழைவிலும் ஒரு தைரியத்தோடு, ஓர் உரிமை யோடு, சதா தன்னேடு பேசிக்கொண்டிருக்க விரும் பும் கனகமும் அங்கேதான் இருக்கிருள். அவளையுமா இனிமேற் பார்க்க முடியாது?
நடராஜனின் சிந்தனைகள் இந்த இடத்தில் முடிக் தே போய்விட்டன. அதற்குமேல் தொடர்வதற்கு அவ
னுல் முடியவில்லை. அதை அவன் விரும்பவுமில்லை.
கடைசியாக அவன் பிரிந்து வரும்பொழுதுகூடக் கனகம் கேட்டாள்.
 
 

13 கொழுகொம்பு
'ஏன் அத்தான் அவசரமாகப் போகிறீர்கள்?"
* நேரமாகிவிட்டது; போகத்தானே வேண்டும் '
என்ருன் அவன்.
8 ஏன் வீண்சாட்டுச் சொல்லுகிறீர்கள்? இங்கே
இருப்பதற்கு விருப்பமில்லை என்றுசொல்லுங்களேன்?"
o TGOTENIRGIT KH56Os T5 ILO.
* இன்றைக்கு மட்டுமா இங்கே இருக்கிறவன்? காளைக்கும் வரத்தானே வேண்டும்' என்று விட்டுத்
/0
தான் வந்தான் நடராஜன். ஆனல் இனிமேல் அங்கு
(2. போகவே an t-IT "HTTP. και του ήτλ.
வார்த்தைகள் இலேசானவைதான்; ஆனல் கடல் ராஜனின் மனநிலையில் அவ்வார்த்தைகளின் உட் பொருள் உலகமே அஸ்தமித்தது என்று சொல்லும் படியிருந்தது. -
வெளியே பொழுது கன்முக அஸ்தமித்து உலகை இருள் சூழ்ந்துகொண்டது. வீட்டுக்குள் வந்த கட ராஜனின் தாயார் மூலையிலிருந்த குத்துவிளக்கை ஏற்றி,
விட்டுத் திரும்பியபோது, அவள் அருமை மைந்தன் படுத்திருந்த நிலை அவள் வயிற்றைப் பிய்த்தது." N, ! o o ,。、 பொன்னம்மாவிற்கு கடந்த விஷயங்கள் எல்
லாமே தெரியும். ஆனுலும் அவள் எதையும் வெளிக்
காட்டிக் கொள்ளாமல் " மாலை படும் கேரத்திலே ஏன் படுக்கிருய்? எழுந்து வா, கோப்பி போட்டு வைத்தி ருக்கிறேன். குடியப்பா' என்ருள் ஆதுர்த்தேர்டு'
o 4 - 16 الحي يقة أن عدم القرن 'எனக்குக் கோப்பியும் வேண்டாம், கீப் t வேண்டாம் என்று வெறுப்போடு செரில்லிவிட்டுப்
o 副 wn புரண்டு படுத்தான் 15டராஜன், USCGCA A AVOKO CENS
ཡིན་ : ཧུའུ་ཞིའི་ཚིའི་
'زیچ) بنwik (منڈل
traverčia se vroeë, סbo wa 16:Sts &\f ,

Page 14
அழைப்பு
நடராஜன் படுக்கையிலிருந்து எழுந்தபோது பாதி திறந்துகிடந்த யன்னல்களுக்கூடாகச் சூரியனின் இளங்கதிர்கள் வந்துகொண்டிருந்தன. இரவில் கெடு நேரம் வரையும் கித்திரையின்றித் தவித்தவன் நேர மானபிறகுதான் நித்திரை கொண்டிருக்கிருன் அப் போது அவனுக்கு அலுப்பாயிருந்தது. உடம்பெல் லாம் சூடேறியிருப்பதுபோல் ஒரு நினைவு. கண்ணிமை கள் கனத்து அழுந்தின; சோம்பல் முறித்துக் கொண்டே யன்னலூடாக வெளியே பார்த்தான்.
வீட்டிற்கு வெளியே தூரத்திற் கணுவிற் கட்டப் பட்டிருந்த பசுவிற் பால் கறந்து கொண்டிருந்தார் அவன் தகப்பனுர், துலாம்பரமாகத் திருநீறு பூசியிருக் கும் அவர் பரந்த5ெற்றி ஏறுவெயிலில் மின்னிற்று.
தகப்பனுரைக் கண்டதும் அவனுக்குள் பழைய
எண்ணங்கள் தலைதூக்கின. யாரோ ஒர் அறிஞன் சொன்னனும் ' படிக்கவேண்டியவைகளைப் படித்து மறந்தபின் மிஞ்சியிருப்பதுதான் கல்வி' என்று. மனித எண்ணங்களுமே இப்படித்தான். எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி அந்த எண்ணங் கள் எல்லாவற்றையுமே மறந்தபின் மீந்திருக்குஞ் சிந்தனைதான் மனிதனின் செயலுக்கும் காரணமா யிருந்தது.
 
 
 
 

15 கொழுகொம்பு
நடராஜனுக்கும் கேற்றைய எண்ணங்கள் இன்று தோன்றினுலும் நேற்று என்ன எண்ணினுன் என்பது இன்று அவனுக்கே தெரியாமலிருக்கலாம். ஆனல் எழுந்து அப்பாவைக் கண்டதும் அவன் எண்ணத் தொடரில் மிஞ்சிநின்றது இதுதான். "இன்றைக்கே கொழும்புக்குப் போய்விடவேண்டும்.'
இப்படித் தீர்மானித்த நடராஜன் படுக்கையை விட்டு எழுந்து மூலையிற் கிடந்த பெட்டியை எடுத்துத் திறந்துவைத்துக் கொண்டு தன் உடுப்புகளை அடுக்கத் தொடங்கினன். உள்ளிலும் வெளியிலுமாகக் கிடந்த ஒவ்வொரு பொருளையும் உடுப்புகளையும் ஒழுங்காகப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்கையிற் கொழும் புக்குப் போகும் போதாகிலும் கனகத்தைக் காண்ப தில்லையா ? என்ற கேள்வி அவன் மனத்துள் எழுங் தது. இந்த எண்ணம் வந்ததும் தன் வேலையைக் கைவிட்டுவிட்டு அப்படியே பிரமித்துப் போய் இருங் தான் நடராஜன்.
தாழ்ப்பாளிடப்படாத கதவைத் திறந்து கொண்டு அவன் தாயார் அவனுக்குக் கோப்பி கொண்டுவந்ததுகூட நடராஜனுக்குத் தெரியவில்லை.
கோப்பி கொண்டுவந்த பொன்னம்மா, மகன் இருந்த நிலையைக்கண்டு திகைத்தாள். தன் மகன் இரவு சாப்பிடவேயில்லை என்று எண்ணியபோது அவள் கண்கள் கலங்கின. ஆனுலும் சமாளித்துக் கொண்டு கேட்டாள். ' ஏன் பெட்டியில் அடுக் ଜଏyu], '' ? ۔۔۔۔۔۔۔۔

Page 15
கொழுகொம்பு 16.
நடராஜன் எதிர்பாராத இந்த வினவினுல் திடீ ரென்று தலைநிமிர்ந்து கொண்டே ‘இன்றைக்குக் கொழும்புக்குப் போகவேண்டும்' என்று சுருக்கமாகப் பதிலளித்தான்.
'ஏன், ஒரு வாரத்திற்கு லீவு இருக்கிறது என்று சொன்னுயே போகிறதற்கு இப்போ என்ன அவ சரம்?' என்று கேட்டபடியே கோப்பியை நீட்டினுள் பொன்னம்மா.
* இங்கேதான் ஒரு வேலையும் இல்லையே. வீனுக ஏன் படிப்பைப் பாழாக்க வேண்டும்? நான் இன் றைக்கே போக வேண்டும் ? என்று ஆத்திரத்தோடு சொன்னுன் நடராஜன்.
'போகிறபோது போய்க் கொள்ளலாம். இப்போ கோப்பியைக் குடி' என்று அன்போடு கூறியவாறே மகனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள் பொன் GOT LħL DIT. Wg "": k ; , . Y
பொன்னம்மா உலகங் தெரிந்தவள். முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்ட அவள் மணவாழ்க்கையில் அவளுக்குத் தன் கணவனின் பிடிவாதமும் நன்முகத் தெரியும். அவளுக்கு மகனின் ரோசமும்கூட 5ன்னுகத் தெரியும், எவரையுமே கண்டிக்காத படி, தன் கோபத்தைகஞன் துக்கத்தையும் வெளிக் காட்டாத எல்லாவற்றையும்:பொறுமையாக மெளனமாகச் சரிப்படுத்திவிடவும் அவளுக்கு வழி தெரியும்.எந்தக் காரியத்திற்கும்iஅவள்:வெடுசுடு என்று நிற்பதில்லை. இந்தக் குணத்தினுல்தான் அவள்
 
 
 
 

17 கொழுகொம்பு
வாழ்க்கையில் வெற்றி கூட அடைந்திருக்கிருள். தந்தையின் கண்டிப்பும் மகனின் கோபமும் காலகதி யிற் சரியாகப் போய்விடும் என்றுதான் அவள் கருதி ள்ை. அவள் மகனை அவளது அண்ணணின் வீட்டுக் குப் போக வேண்டாம் என்று உத்தரவிட்டிருப்பதில் அவளுக்கும் பிடிப்பா, என்ன ?
15டராஜன், தன் தாயின் அன்பான அணைப்பி லிருந்தபடியே கோப்பியைக் குடித்து முடித்தான். குடித்து முடிந்ததும் மறுபடியும் பெட்டியை அடுக் கத் தொடங்கினுன்,
பொன்னம்மா அவனே இடைமறித்து, 'திரி கோணமலை பஸ் இரண்டு மணிக்குத்தானே வரும், நீ போய்க் குளித்துவிட்டு வா' என்று தடுத்தாள்.
அந்த அன்பான வேண்டுகோளை மீற நடராஜ ஞல் முடியவில்லை. அவனுக்கு எதிலும் எரிச்சலாகவே இருந்தது. இப்போதைக்கு இவ்விடத்தை விட்டுப் போனுற் போதும் என்று எண்ணியவனுகக் கட்டிலிற் கிடந்த தவாயை எடுத்துத் தோளிற் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினுன்,
கால்போன போக்கில் கடந்து ஆற்றங்கரை யடிக்கு வந்து விட்டான் 5டராஜன். அப்போது ஆவணி மாதத்துக் கடைசிப் பகுதியாக இருந்ததினுற் செத்துப்போக இருக்கும் கச்சான் காற்று, தன் குறுகிய வாழ்க்கைக்கிடையில் முழுப்பலத்தையும் காட்டிவிட வேண்டுமென்ற ஆத்திரத்தோடு அந்த அதிகாலையிலும் பலமாக அடித்துக்கொண்டிருந்தது. அந்தக் காற்றி ணுல் ஆற்றின் நீர்த்திவலைகள் அள்ளுண்டு அவன் மேற் தெறிக்கையில் அவன் உடல் நடுக்கமெடுத்துக்
3

Page 16
  

Page 17
கொழுகொம்பு 20
தூரம் வங் துவிட்டு வருடத்தில் ஒரே ஒரு தடவை வரும் வெருகல் திருவிழாவைத் தவறவிடுவதா ?”
உண்மையில் நடராஜனுக்கும் அந்தத் திருவிழா வைத் தவறவிட மனமேயில்லை. தன் சீவியத்தில் அந்த உற்சவத்தில் ஒன்றைக்கூட அவன் தவற விட்டது மில்லை. ஆனல் இந்த வருடம் அந்த ஆசைக்கே மனதில் இடங்கொடுக்க முடியாதோ என்னவோ ! இந்த எண்ணத்தில் அவன் சொன்னன், ' கமக்குத் திருவிழாவை விடப் படிப்புத்தானே முக்கியம்?"
* யார் இல்லையென்றர்கள் ? அடுத்தவருடம் உன் அப்போதிக்கரி சோதனை முடிந்தபிறகு எங்கேயோ கண்காணுத ஊருக்கு உத்தியோகம் பார்க்கப் போகி குய். அப்படிப் போனல் இனிமேல் வாழ்க்கையில் எத்தனை வெருகல் திருவிழாக்களை நீ காணமுடியுமோ ? உனக்கு இந்த வருடத் திருவிழா மிகவும் அருமை யானது, நீ வரத்தான் வேண்டும்' என்று கடகடத் துப் பேசினுன் செல்லன்.
இருவரும் பேசிக்கொண்டே கடந்து செல்லன் வீட்டிற்கு வந்துவிட்டனர். சம்பாஷணையின் போக் கிலும் தன் நிலையை வெளிக் காட்டக் கூடாதே என்ற ஆசையிலும் நடராஜன் தங்தையின் கட்டளை யையும் மறந்து தன் மாமன் வீட்டிற் காலடி எடுத்து வைத்தே விட்டான். வீட்டினுள்ளே கனகமும் அவள் தாயாரும் எங்கோ புறப்படுவதற்கு ஆயத்தமாகச் சாமான்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உயர்ந்த கூடாரம் கட்டிய இரட்டை மாட்டு வண்டி பிர யாணத்திற்குத் தயாராக நின்றது.
நடராஜனைக் கண்ட கனகம் சடாரென்று எழுந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் இதுவரையில்லாத ஆதங்கம் ஒன்று தேங்கி நின்றது,
 
 
 
 
 
 
 
 
 

- كيه .
இருவர்
அந்த அவன் வீடுதான்; இதுவரை அந்த வீட் டுக்கு வருவதிலோ, அல்லது விட்டுப் போவதிலோ எந்தத் தடங்கலுமோ இருந்ததில்லை. மாமனுர் வீடு என்று இயற்கையாக ஏற்படும் வெட்கம்கூட 5ட ராஜனிடம் இருந்ததில்லை, ஆனல் அன்று என்னவோ மனதிலே ஒரு வெட்கம், ஒரு கூச்சம். அந்த வீட்டி லுள்ளவர்கள் எவரையுமே அவனுல் நிமிர்ந்து பார்க் கக்கூட முடியவில்லை
அவனுடன் வந்த செல்வராஜனும் பிரயாணத் துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவனை விழுங்தையிலேயே விட்டுவிட்டுத் தோட்டத்துக்குள் போய்விட்டான். கடராஜன் ஒன்றுமே செய்யத் தோன்ருதவனுக விருந்தையிற் கிடந்த கதிரையில் இருந்தான்.இருந்தான். புது வீட்டுக்கு வந்த
குழங்தை, வீட்டிலுள்ளவர்களை அறியுமட்டும் மிரள விழித்துக் கொண்டிருப்பதைப் போலப் பேச்சு மூச் சின்றி அப்படியே இருந்தான்.
அவன் முன்னுற் தலையைக் குனிந்தபடி கனகம் நின்று கொண்டிருந்தாள் வெளியே குருவளியாய் அடித்த கச்சான் காற்றுக் கூடத் தன் செயலை மறந்து மயங்கி நின்றது,

Page 18
கொழுகொம்பு 22
சில நிமிடங்களுக்கு மயங்கிகின்ற கச்சான் காற்று மறுபடியும் தன் பழைய வேகத்தோடு அடிக்கையில், மேசையின் மேலே அனுதியான கடவுளைப் போல முன்னும் பின்னுமற்றிருந்த பழைய வார இதழ் ஒன்று, அடிபட்ட குருவியைப் போலப், படபட வென்று தன் இதழ்களே அடித்துக்கொண்டு கீழே விழுந்தது.
நடராஜன் அந்தப் பத்திரிகையை எடுக்கக் கீழே குனிந்தான். கனகமும் குனிந்தாள். இருவர் தலையும் முட்டிக் கொண்டன இருவரும் தலையைத் தடவியபடியே நிமிர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கை யில், இருவருமே சிரித்தனர். அந்தச் சிரிப்போடே 15டராஜன் கேட்டான். 'வீட்டுக்கு வந்தவரை மியூ சியத்தை பார்க்கிறது போலப் பார்க்கிறதுதான இப்போ நாகரிகமா ?”
* இல்லை; ஏன் பேசாமலிருக்கிறீர்கள் ? என்று கேட்கிறது போலத் தலையை உடைத்துக்கொள்வது தான் நாகரீகம்' என்றுள் கனகம். அதைச் சொல்லிய வாறு அவள் நாற்காலியின் சட்டத்தைப் பிசைந்து கொண்டு நெளிகையில் சுவரிலே மெதுவாக அசையும்
குத்துவிளக்கின் நிழல் போல இருந்தாள் கனகம்.
அழகிதான்; ஆனல் அந்த அழகு இத்தனை காலமாக நடராஜனின் கண்களிற் பட்டதோ என்னவோ தெரி யாது. அழகாயிருக்கிறது' என்று சொல்லக்கூடத் திராணியற்ற தமிழ் காட்டு ரசிகன் தானே நட ராஜனும், ஆனல் இன்றைக்கு அவன் கண்களிலே கனகம் ஒரு அப்சரஸியாகவே தோன்றினுள். இளங் கதிர் சிலிர்க்கையில், தானும் மென்னகை காட்டிச்
சிரிக்கும் பூப்போன்ற அவள் முகமும், அசைந்தாடும்
 

33 கொழுகொம்பு
---
தெளிந்த நீரின் அடியிற் தோன்றும் பவளப் பூச்சி போன்ற அவள் நிறமும் அவனைக் கவர்ந்தன. ஒடிந்து விழுவது போன்றிருந்த இடையைக் கதிரையிலே முட்டுக் கொடுத்தவாறு வளைந்து நின்ற தோற்றமும் அவனைக் கவர்ந்தன. அவள் பிறை நெற்றியின் மத்தி யிலே, தீட்டியிருந்த குங்குமப் பொட்டுக்கூட அவன் மனதை என்னவோ செய்தது. அவள் சிரிப்பு அடங்கி, அடங்கிய சிரிப்பே ஒரு குறுககையாக அவள் இதழ்க் கடைகளில் ஒடிக் கொண்டிருக்கையில், அந்தச் சிரிப் பையே கவனித்துக் கொண்டிருந்த நடராஜன் கண் களுக்கு, அந்தச் சிரிப்பு அவள் இதழ்களிலல்ல; ஆனல் கண்களிற் தான் இருக்கிறது என்று தெரிந்தது. அவள் கண்களை அவன் பார்த்தபோது, கனகம் தலை யைக் கவிழ்ந்து கொண்டாள்.
என்னத்தைப் பேசுவதென்று தெரியாமலே, 15டராஜன் கேட்டான், 'வெருகலுக்குப் போக ஆயத் தமோ ? *
* ஏன் ? நீங்களும் வருகிறீர்களா ? என்ருள் கனகம். -
* வரவேண்டும் என்று விருப்பந்தான். ஆனல் இன்றைக்குக் கட்டாயம் கொழும்புக்குப் போக வேண்டும்' என்ருன் நடராஜன்,
கனகம் வெடுக்கென்று கேட்டாள் " ஏன் பொய் சொல்லுகிறீர்கள்? உண்மையைச் சொன்னுல் உங் களை யாரும் கடித்துத் தின்றுவிடப் போவதில்லையே? ஆம்; அவளை மறைந்திருந்த காணத்திரை விலகிவிட்டது. அந்தத்திரையகன்றதும், நடராஜனேடு எப்படி உரிமை யோடு துடுக்காகப் பேசுவாளோ அப்படியே பேச

Page 19
கொழுகொம்பு 24
முனைந்துவிட்டாள் கனகம். ஆனல் அவள் பேச்சிற் துடுக்குத்தனத்தைவிட ஆத்திரமும் அவநம்பிக்கையும் தான் அதிகமாயிருந்தது. ஆனுல் அவள் பேச்சின் அவ 15ம்பிக்கையை நடராஜன் விளங்கிக் கொள்ளவில்லை. ஆகவே அவன் தொடர்ந்தான். " பொய் செல் வதற்கு என்ன இருக்கிறது. உண்மையாகவே கான் இன்றைக்குக் கொழும்பிற்குப் போகிறேன்"
* போகாமல் இருந்தாற்கூட நீங்கள் எங்களோடு வரமாட்டீர்களே ' என்ருள் கனகம்.
* உண்மைதான். இந்த இருபதாம் நூற்ருண்டு இயந்திரயுகத்திலும் கடகடவென்று சப்தம் போட்டுக் கொண்டு, மணிக்கு ஒரு யார் நகரும் கட்டை வண் டியில் ஏறிக்கொண்டு செல்லும் உங்களோடு கான் வரத்தான் மாட்டேன். எனக்கத் தெம்மாங்கு பாட வும் தெரியாது' என்று சொல்லிச் சிரித்தான் 15டராஜன்.
* கட்டை வண்டியில் என்ன ? ஆகாயக் கப்ப லிற் போவதாயிருந்தாற்கூட வரத்தான் மாட்டீர்கள்' என்ருள் கனகம்,
* வெருகலுக்குப் போக ஆகாயக் கப்பலே கிடையாது என்ற தைரியத்திற்தான் இப்படிச் சொல் கிருய் '
' கன்முகப் பேசுகிறீர்களே. இவ்வளவு பேசத் தெரிந்த நீங்கள் ஒரு அப்போதிக்கரிக்குப் படிப்பது தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. ஒரு புருெக் ரருக்குப் படித்தால் எவ்வளவு கல்லாயிருக்கும் ?"
' படித்திருக்கலாம். ஆனல் உன்ளைப்போல ஒரு எதிரி நீதிஸ்தலத்துக்கு ஒவ்வொரு5ாளும் வந்துகொண் டிருக்கமாட்டான். அதனுற் தான் படிக்கவில்லை' ଘTଜ0୮@ର0T [51-J (T୫gଗ0T.
 
 
 
 
 
 
 

25 கொழுகொம்பு
- " " " /ov/ ov
அவன் சம்பாஷணையின் சுவையிலே தான் இப் படிச் சொன்னுல், இந்தப் பேச்சில் மனவருத்தப்படக் கூடியதாக எதுவுமே இல்லைத்தான். ஆனுல் இந்தச் சழ்ப்ாஷணையின் இடையிலேயே தான் சொல்லவந்த தைச் சொல்லிவிடவேண்டும் என்று அவாவிய கனகம், மறுபடியும் ஆத்திரத்தோடு சொன்னுள், 8 ஆமாம், காங்கள் எல்லாரும் உங்கள் எதிரிகள் ஜன்ம விரோ திகள். அந்த எதிரிகளோடு நீங்கள் ஏன் எங்காவது வரப்போகிறீர்கள் ? நீங்கள் இங்கே வந்தது தெரிக் தாற்கூட உங்கள் தங்தையார் தலையைச் சீவிவிடு வாரே'. உணர்ச்சியோடு பேசிமுடிக்கையில் கனகத் தின் கண்களில் கண்ணிரே ததும்பி நின்றது. கனகம் சேலைத் தலைப்பாற் கண்களைத் துடைத்துக் கொண் டாள்.
நடராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் தங்தையார் தன்னை இந்த வீட்டுக்குப் போகவேண் டாம் என்று கட்டளையிட்டது தனக்கும் தன் தாயாருக்கும்தான் தெரியும் என்று இதுவரை எண் ணிக்கொண்டிருந்தான். அந்தக் கட்டளையை மறைப் பதற்காகத்தான் செல்வராசனிடமும், கனகத்திட மும் எங்கெங்கோ எல்லாம் சுற்றிவளைத்துக் கொண்டு பேசினுன், அதற்காகத்தான் காலையில் இந்த வீட்டு க்குக் கூட வந்தான். ஏன் இதற்காகத்தான்; இன்றைக்குக் கொழும்புக்குக்கூடப் போகத் தயா ராக இருந்தான். எதை மறைக்க இத்தனை பிரயத் தனங்களும் பண்ணினனே, அதே நிலத்தைப் பீறிக் கொண்டு வரும் முள்ளையைப்போல் வெளிவந்த போது அவனுல் ஆச்சரியப்படாமலிருக்க முடிய
4.

Page 20
கொழுகொம்பு 26
സ്സ
வில்லை. பாவம் ! கிராமத்தில் இதுபோன்ற சம்பவங் கள், பரம இரகசியமாகக் காப்பாற்ற எண்னும்
விஷயங்கள் எல்லாம் எப்படிப் பரவுகின்றன என்பது
அவனுக்குத் தெரியுமா ? கம்பியில்லாத் தந்தியைக்
கண்டு பிடித்த மார்க்கோனியைப் பொது அறிவுப்
பாடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் தொ
டக்கம் பெருத்த பெருத்த விஞ்ஞானிகள் எல்லாம்
போற்றிப் புகழ்கிமூர்கள். என்னே க் கேட்டால்
ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் குறிக்கப்பட்ட இரண்டு
மூன்று பெண்களுக்கும் 5 * LITUL DIT a posT if $35 IT GOffl5ODIL
விட மேலதிகமான மரியா  ைத காட்டப்படல்" வேண்டுமென்று சொல்வேன். ஏனென்ருல் மார்க்
கோனியின் வானுெலிச்செய்திகளை வெறும் பிண்ட
மாகத்தான் பிறருக்குப் பரப்புகிறது. ஆனல் இந்தப்
பெண்களின் தந்திச் செய்திகளுக்குக் கண், காது,
மூக்கு எல்லா அவயவங்களுமே இருக்கும். கனகத்
தின் செவியில் இப்படி அடியுண்ட இந்தச் செய்தி,
அவள் தங்தையின் காதிலும், தாயின் செவிகளிலும்
என்ன உருவில் விழுந்திருக்குமோ என்பது ஆண்ட
வனுக்குத்தான் தெரியும் !
ஆச்சரியத்தில் மூழ்கிய நடராஜன் அழுதுகொண் டிருந்த கனகத்தைப் பார்த்தபோது அவனுக்குத் துக்கமாகவும் இருந்தது. ஒரேநேரத்தில் ஆச்சரியம், துக்கம், அப்பாவின்மேல் வெறுப்பு எல்லா உணர்ச் களுமே அவள் உள்ளத்தில் முட்டி மோதுகையில் அவன் உள்ளம் சட சட வென்று எரியும் சிகை யைப் போல அவனுள் எரிந்தது. கனகத்திடம் அந்த இரகசியத்தைச் சொன்னவர்களை அப்படியே
 
 
 

2? கொழுகொம்பு --- "N-N-N-N-o-N-N-^-S-S-S
கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போல இருங் தது அவனுக்கு. தன் மெய்ப்பாடுகளைச் சமாளித்துக் கொண்ட அவன் 'உனக்கு யார் இதை சொன்னுர் கள்' என்று சாந்தமாகக் கேட்டான்.
*சொன்னவர்கள் எதற்கு? 'போகவேண்டாம் என்று சொன்னது, உண்மைதானே'
நடராஜன் அதற்குப் பதில் பேசவில்லை கெஞ் சறியப் பொய் சொல்ல அவனுக்குத் தைரியமில்லை !
'அந்தக் கட்டளையினுற்தானே இன்றைக்குக்
கொழும்புக்குப் போகப்போகிறேன்' என்கிறீர்கள் ? 'அதற்காக அல்ல; ஆனல்." 惑。、 ‘என்ன ஆனல். ஒருவார விடுமுறையில் வந்திருக்
கும் தாங்கள் அதற்குள் திடுதிப்பென்று புறப்பட
வேறு என்னதான் காரணம்?' -
நடராஜன் கனகத்தை நெருங்கிக் கலங்கும் அவள் கண்களைப் பார்த்தவாறே குழைவோடு சொன்னன், “தேர்தலிற் தோற்றுப் போனதினுற் தந்தையார் எல்லாரிலும் எல்லாவற்றிலுமே கோபமாயிருக்கிருர், அதிலும் இந்தத் தேர்தலில் தமக்கு விரோதமாயிருங் தார் என்று எண்ணிக்கொண்டு மாமாவின்மேற் பெருங் கோபமாக இருக்கிறர். அவர் மன உழைச் சலிலேதான் எனக்கும் இங்கே வரவேண்டாம் என்று கட்டளை யிட்டிருக்கிருர் போலும். எல்லாம் காலப் போக்கிற் சரியாகிவிடும். அதுவரை நான் தூரமாகப் போய் இருப்பது கல்லதுதானே?
அவன் சமாதானத்தைக் கேட்கக் கனகம் ஆயத்தமாயில்லை. தலையிலடித்தாற் போலச் சொன் னுள் “போக விருப்பமாயிருந்தாற் போகிறதுதானே. அதற்கு ஏன் இந்த வர்ணம் பூசிய பேச்செல்லாம்.'

Page 21
கொழுகொம்பு 弈 28
'இப்போது கான் போவதினுல் இருவருக்கும் 15ன் மைதான். உண்மையாகவே இந்த வெருகல் திரு விழாவை விட்டுப்போக எனக்கும் மனம் இல்லை. ஆணுல் நிலைமை என்னைப் போகச் சொல்லுகி றது',
கனகம் கடராஜனை நிமிர்ந்து பார்த்தாள். குருவிப் போயிருந்த அவன் முகத்தைப் பார்த்த போது அவளுக்குத் தன் வார்த்தைகளின் கூர்மை தன்னையே திருப்பித் தைத்ததுபோல இருந்தது. இத்தனை நேரமும் அவள் பேசிக்கொண்டிருந்த வார்க் தைகளின் ஒவ்வொரு அட்சரமும் அவனைத் தாக்கு கையில் அவள் தன் சுயநலத்தை, மற்றவரின் மன தையும் நிலைமையும் அறியாத தன் தப்பிதத்தை கொக்தாள். அந்த மன வேதனையில் அவள் இதயம் பேசிற்று. ‘என்னை மன்னித்து விடுங்கள், அத்தான்'. 15டராஜன் அவளை அணைத்தபடியே, 'யார் யாரை மன்னிப்பது? நீ ஒரு குற்றமும் செய்யவில்லையே' என்ருன்.
'கொழும்புக்குப் போனல் எப்போது வருவீர் கள் ?' அவன் பிடியிலிருந்து தன்னைச் சடாரென்று விடுவித்துக்கொண்டே கனகம் கேட்டாள்.
*வீவு விட்டதும் வந்து விடுவேன். ஏன் வர மாட்டேன் என்று எண்ணமா ? -
'இல்லை எப்போது விடுமுறை கிடைக்கும்? மார்கழி மாதந்தான் என்று நினைக்கிறேன். இன்னமும் மூன்று மாதங்கள். அதுவரையும்.' -ൾ
'சரி, போய் வரட்டுமா ?
கனகம் ஒன்றுமே பேசவில்லை. 15டராஜன் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே வாயிற் படியிலிறங்கித் தெருவிலே கடந்தான்,
 

5
தந்தையின் ஆத்திரம்
சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும் என்பது பழமொழி. மனிதர்களிற் சிலர் இருக்கிறர்கள், சமூ கத்தில் அவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கிடையாது. சனசமுத்திரத்தில் ஒரு துளியாக ஏதோ வாழ்கிருர்கள். ஆனல் இத்தகைய மனிதர் சிலரால் அவர்களை யறியாமலேயே பெரிய உற்பாதங்கள். எல்லாம் நிகழ்ந்து விடுகின்றன. வேண்டும் என்று கூடச் செய்பவர்களும் உண்டு. கூனியை எடுத்துக் கொள்ளுங்களேன். அவள் இல்லாவிட்டால் இராமாய ணமே இல்லை. கண்ணம்மாவும் இப்படித்தான்,
கண்ணம்மாவிற்கு அறுபது அல்லது அதற்கும் அதிகமாகத்தான் வயதிருக்கும். காலதேவனின் பாதச் சுவடுகள் போல அவள் முகத்திற் சுருக்கம் விழுந்து கிடந்தது. வெற்றிலையைச்சப்பிச் சிவந்து கிடக்கும் அவள் உதடுகளின் வழியாக, மூதூரின் எல்லா முக்கியமான விஷயங்களுமே வெளிவரும். அதி காலையில் எழுந்து அப்பஞ்சுடத் தொடங்கினல் பத்து மணிக்கெல்லாம் அவள் அப்பக்கடை முடிந்துவிடும். மதியந்திரும்பியதும் அவள் தன் நிலுவையைத் திரட்டு வதற்காக ஊரைச் சுற்றி ஒரு வளையம் வருவாள். ஊரிலே எல்லா வீட்டிலும் கடக்கும் விஷயங்களும் அவளுக்குத் தெரியும் 。

Page 22
கொழுகொம்பு 30
خیبرح صحمحصبر حصصح^
மனிதர்களுக்கும் ஒரு விசித்திரமான ஆசை இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயம், அது அவர்களுக்கு இன்பத்தைக் கொடுத்தாலும் சரி, அதை இரகசிய மாக இரண்டாம் பேருக்குச் சொல்வதில் ஏதோ ஒரு அவா இருக்கிறது. ஊரிலே கண்ணம்மா, இந்த இரகசியமான விஷயங்களே எல்லாம் தாங்கும் சுமை தாங்கியாக இருக்கிருள். அதிகச் சுமையைத் தாங்க முடியாததாலோ என்னவோ, அவளும் தான் சுமந்த இரகசியங்களை இன்னுெருவரிடம் இரகசியமாக இறக்கி வைத்தும் விடுகிருள். இதனுல் யாருக்கு என்ன கெடுதல் வரும் என்பதை அவள் எண்ணிப் பார்ப்பதேயில்லை.
அம்பலவாணர் தன் மகனை, மாமனுர் வீட்டுக் குப் போகவேண்டாம் என்று கட்டளையிட்டபோது, கண்ணம்மா அவர் வீட்டிலே தான் இருந்தாள். அவர் இரைச்சலைக் கேட்ட கண்ணம்மா' 'என்ன புதினம்? என்று விசாரிக்க, அம்பலவாணரின் மனைவி பொன்
னம்மாவும் "இரகசியமாக அந்த விஷயத்தை விளக்
கினுள்.
கையிலே இரண்டு தேங்காய்களை எடுத்துக் கொண்டு அம்பலவாணரின் வீட்டைவிட்டு வெளி யேறிய கண்ணம்மா, ஊரை அளந்து விட்டுக் கங்தையா வீட்டுக்கு வந்தபோதுதான் அம்பலவாணர் வீட்டிற் கண்ட கேட்ட, அத்தனையையுமே அங்கே சொல்லிவிட்டு அவள் பாட்டிற்குப் போய்விட்டாள்.
இதைக்கேட்ட கங்தையா மனத்திற்குள்ளே உறு மினர். அம்பலவாணருக்கு எதிலும் சளைத்தவரல்ல
 
 

31 கொழுகொம்பு
கங்தையா. தன் தங்கைக்கு வந்த கணவன் என்ப தால் முறையாகத் தலை வணங்கினரே தவிர அவர்
முறைத்து நின்ருல் இவரும் விட்டுக் கொடுக்கவே
மாட்டார். 'அவர் மகனை வரவேண்டாம் என்று விட்டாராமே, வைத்துக்கொள்ளட்டும். ஆயிரத்துக் குப் பத்தாயிரத்தை விட்டெறிந்தால் என் மகளுக்கு மாப்பிள்ளையா கிடைக்கமாட்டான் ? என் அப்பா உழைத்ததை எல்லாம் சீதனமாகக் கொட்டிக் கொடுத் தார். இப்போது நான் அவன் மகனுக்குக் கொடுக்க வேண்டுமா ? பரம்பரை பரம்பரையாக அவனுக்கு நாம் என்ன அடிமைகளா ?' என்று வீரம் பேசினர் தன் மனைவியிடம்.
என்னதான் வீரம் பேசினலும் கங்தையாபிள்ளை நல்லவர். அதாவது நல்லவனுக்கு நல்லவர். யாராவது அவரிடம் வாலைக்காட்டினுற் பிறகு அவர் ரெளடிக்கு ரெளடிதான். அத்தகைய கங்தையாபிள்ளை தன் அத்தான் கிராமச்சங்கத் தேர்தலில் அபேட்சகராக நின்றபோது தேர்தலில் அவர் வெற்றியடைவாரா என்பதை கோட்டம் விட்டுப் பார்த்தார். நியமனப் பத்திரங்களைக் கொடுத்த சில நாட்களுக்குள் அவர் தம் மைத்துனர் தோற்றுப் போய்விடுவார், என்ற மகத்தான உண்மையைக் கண்டுபிடித்து விட்டார். எனவே அவர் அம்பலவாணரிடம் 8 அநியாயமாகக் காசைச் செலவழிக்க வேண்டாம் ' என்று சொல்லிப் பார்த்தார். அவர் கேட்கவில்லை. எனவே தான் வெளிப்படையாக நின்று வேலைசெய்து தன் முகத்திற்
தானே கரியைப் பூசிக்கொள்ள அவர் விரும்பவில்லை.
தேர்தலில் மெளனமாகவே இருந்துவிட்டார். இந்த

Page 23
  

Page 24
கொழுகொம்பு 34
* எனக்கு எல்லாம் தெரியும் அம்மா ! நீ போய் உன் வேலை  ையக் கவனி' என்று சாந்தமாகச் சொல்லிவிட்டுத் தோட்டத்தினுள் போனுர் கங்தையா, வெளியே சுள்ளென்றடித்த காலை வெய்யில், சூரியனே மறைத்த முகிலொன்றினல் தணிந்து மந்தாரமாக இருக்கையில் அந்தக் குளுமை தாயின் மடியிலே தலையை வைத்துப் படுப்பது போல இதமாக இருந்தது. கனகத்திற்குத் தன் தந்தையின் வார்த்தைகள் இத மாகவே இருந்தன. எப்போதுமே தன் சகோதரனை விடத் தன் தங்தை தன்னிடம் தான் அதிகம் அன்பு காட்டுகிருர் என்ற பெ ரு மை கனகத்திற்குண்டு. * எனக்கு எல்லாம் தெரியும் ' என்ற வார்த்தைகளைச் சிந்தித்துக் கொண்டே கனகம் வீட்டினுள் போகை யில், தன் தங்தை தம் மனதைத் தெரிந்திருக்கிருர் என்ற எண்ணம் அவள் சிங்தையில் ஒடி நெளிகையில், அந்த எண்ணத்தினுல் கவலையடைந்திருந்த அவள் காணத்தாற் சிவக்கையில் அவள் முகம் அழகாகவே யிருந்தது. வீட்டுக்குட் சென்ற கனகம் ஏனுே நிலைக் கண்ணுடியின் முன்னுல் நின்றுகொண்டு தன் கெளிந்த கேசத்தை அழுத்தமாகத் தடவிப் பதித்துக் கொண் டாள். அதற்குள் இந்தத் தேர்தல் இழவினுல் இரு குடும்பங்களும் கீரியும் பாம்புமாகப் போய் விடுமே என்று அவள் எண்ணியபோது அவளுக்குத் திகிலா யிருந்தது. உடனே அவள் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று தழுவிக் கூம்ப, சுவரிலே மாட்டப்பட்டிருந்த தில்லைத்தாண்டவனின் படத்திற்கு முன்னுல் நின்று மானசீகமாகப் பிரார்த்தித்தாள். அப்போது 'கணகம், கனகம் !" என்று அவள் தாயார் அழைத்தது அவள் காதுகளில் விழுந்தது, கனகம், 88 வருகிறேன்' என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டுச் சென்ருள்.

6
எதிர்பாராதது
உமையைத் தன்னிடம் அடக் கி ைவத் துக் கொண்டதால் பரமன் அர்த்த5ாரீஸ்வரனுக் இருக்
கிருன். அந்தப்பரமனின் கனவின் கனவான இலட்சி
யத்தின் இலட்சியமான மனிதனும் ஏதோ ஒருவழியில் ஒரு ‘அர்த்தனுக இருக்கிருரன். அதிலும் ஈழத்துக் கீழ்க் கரைகளில் மலைகாட்டில் மழையைப் பொழிந்து விட்டு வரண்டு போய்வரும் க ச் சா ன் காற்று அடிக்கையில் மனிதனின் ஓர் அர்த்தபாகம் காற்றுப் பட்டுக் குளிர்ந்து இதமடைய மற்றச் செம்பாதி கோடைகாலப் புழுக்கத்தில் அவிந்து கொண்டே யிருக்கும். வெயில் ஏற ஏற 5டராஜனின் உடல் மட்டுமல்ல, உள்ளங்கூட மென்மையான, இனிமை யான, வார்த்தையிலே வடித்தெடுக்க முடியாத மெல் லிசையின் இழைபோன்ற எண்ணங்களில் புளகாங் கிதம் அடைய மறுபக்கம் பிரிவு என்ற துயரிற் புழுங்கிக் கொண்டேயிருந்தது.
மூதூரிலிருந்து திருகோணமலைக்குப் போகும் ஒரே பஸ்ஸான தபால்வண்டி இரண்டுமணிக்குப் போய்விட்டது. இனிமேல் திருகோண மலைக் குப் போவதானுல் மூன்றுமணிக்குப் புறப்படும் யந்திரப் படகிலேதான் போகவேண்டும். அதையும் தப்ப விட்டால் அதன் பிறகு காளைக்குத்தான் போக வேண்டும். 5டராஜன் புறப்படுவதற் காயத்தமா ன் தாத்க இருந்தான். பெட்டி தயாராக இருந்தது!

Page 25
கொழுகொம்பு 36
அம்மாவின் நச்சரிப்பினுற் சாப்பிட்டுவிட்டு வங் தவன், தன் கட்டிலிற் படுத்தவாறே எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். தேர்தலிலே தோற் றுப்போனதால் ஏற்பட்ட வெறுப்பை, அந்த வெறுப் பினின்று பிறந்த அசாதாரண அமைதியை, அந்த அமைதியின் செயலற்ற தன்மையைப் பிரதிபலித்துக் கொண்டு இமயம் போல எழுந்து நிற்கும் அந்தப் பழைய வீட்டிலே தனிமையான அறையிலே கடரா ஜனின் இதயத்திலிருந்து பிறந்த ஒலி அவனையே பைத்தியமாக ஆட்டிவைத்தது. அந்த ஒலி இப் போதுதான் கேட்கிறது, “உன் தந்தையார் உன்னை அவள் வீட்டுக்குப் போகக் கூடாது என்று கட்டளை யிட்டது கனகத்திற்கு கன்ருகத்தெரியும். இந்தநிலையில் திடீரென்று அவளை விட்டுப் போவதாயிருந்தால் அத னல் உன்னிடம் அவளுக்கு வெறுப்பு ஏற்படாதா? சங் தேகம் வராதா ? இந்த விஷயத்தில் அவன் தங்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தான் நடக்கவேண் டுமா ? அந்த அளவிற்கு அவன் ஒரு கோழையா ?
அவன் இதய ஒலிக்கு அவனுற் பதில் சொல்லவே முடியவில்லை. ஏனென்ருல் அவன் கோழையுமல்ல வீரனுமல்ல. அவன் இப்போது ஒரு காதலன். காதலும் வீரமும்தான் தமிழர் பண்பாக இருந்தால் இந்தக் காதலனிடமும் வீரம் இருக்கலாம். ஆணுல் இருபதாம் நூற்றண்டில் எல்லாக் காதலர்களிடமும் அவர்கள் தமிழர்களாயிருந்தாற்கூட வீரம் இருக் கும் என்று நாம் ஏன் நம்பவேண்டும்?
களேத்துப்போன கடராஜன் மறுபடியும் இன்ப மான நினைவுகளிற் சாந்திகொள்ள விரும்பினுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3? கொழுகொம்பு
ܐܝܓܬܐܓܖ
கம்பனுக்குக் கைகட்டி நின்ற தமிழ்ச் சொற்கள் போல எண்ணங்களும் அவன் விருப்பத்திற்குப் பணிக் திருக்கையில் அவன் வெருகற் திருவிழாவைப் பற்றி எண்ணமிடலானுன் a
அந்தத் திருவிழாவைப்பற்றி நினைக்கத் தொடங்கு கையிலேயே அவனுக்கு மாணிக்கமள்ளிப் பிச்சை கொடுத்திடும் மாவலி நதி வெருகல் கங்கை என்ற பெயருடன் மென்னடை (கடப்பதுதான் அவன் மனக் கண்களிற் தோன்றிற்று, கடப்பைப் பூக்களைத் தன் மேனி முழுவதம் போர்த்துக்கொண்டு சீராக ஓடி வரும் அங்கதி, வளையும் திருப்பத்தில் பால் வெண் மணலைப் பரவிக்கொண்டு மேலே வேகமாகச் செல் கையில், அந்த வெண் மணலிற் தன்னை மறந்த நிலை யில் இருந்து கொண்டு கனவு காண்பதிற்தான் எத்தனை ஆனந்தம் 1 அந்த வளைவிலேதான் சித்திர > வேலாயுதர் கோயில் இருக்கிறது. வேலன் குறிஞ்சித் தெய்வம் என்று சொல்கிருர்கள். ஆனல் கங்கா தீரத்திலே, மருதமரத்துச் சூழலிலே எந்தப்பெண்ணை மயக்குவதற்கு இத்தனே காலமாகத் தனியணுய் இருக் கிருனே தெரியாது. ஆனல் அவனுக்கென்று விழா வெடுக்கத் தொடங்கியதும் கீழ்க்கரைக் கிராமங்கள் முழுவதுமே கோயிலடியிற் திரண்டுவிடும். ஆம்; அந்த விழாத் தொடங்குகையில், பெரும் போகம் முடிந்த நிலையிலிருக்கும். கங்காதேவியின் அருளால் கெல்விதைத்துப் பொன் விளைவிக்கும் அங்காட்டு மக்கள் எல்லாரும் அக்கங்கைக் கரையிற் கோயில் கொண்டிருக்கும் வேலாயுதனுக்கு நன்றிக் கடன் செய்ய அங்கே திரண்டுவிடுவார்கள். அப்பாடா! அங்கே திரளும் கூட்டத்திற்தான் எத்தனை வகையான

Page 26
கொம்புகொழு 38
மனிதர்கள் மடிசஞ்சி வைத்துக் கட்டிய வேஷ்டி யோடு ஆனையாய் அசைந்து கடக்கும் நிலம் படைத்த பிரபுக்கள், திறந்த மார்பின் தங்கச் சங்கிலியைப் புரளவிட்டு நிமிர்ந்து நடக்கும் புதுப் பணக்காரர்கள், உழைத்து உரம் பெற்ற தேகத்திலே கைத்தறிச் சேலையைச் சுற்றிக் கொண்டு வெற்றிலையை மென்று கொண்டேயிருக்கும் கிராமத்துப் பெண்கள், இரட் டைப் பின்னலை மார்பின் மேல் எடுத்து விட்டுக் கொண்டு சன க் கூட்டத்தில் அசுரசாதனையோடு மிதந்து செல்லும் படித்த பெண்கள், மணிக்கட்டுக்குக் கீழே, ஆனுல் முழங்கைக்கு மேலே, தங்கள் சேட் கையை மடித்துவிட்டுக் கொண் டு பம்பரமாகச் சுழன்று திரியும் மாணவர்கள், ! சில்க் சேட் டுக் காடையர்கள், புஷ் கோட்'டுக் காவாலிகள்.
மஞ்சட் கடலேயைக் கொறித்தவாறே முட்டி மோதும் அந்தச் சனக்கூட்டத்தில் கெருக்குண்டு தள்ளுண்டு திரியும் அந்த உரசற் சுகத்திற்தான் எத்தனை இன்பம் இருக்கிறது. அதை விடக் கூட் டத்தை விட்டுச் சற்று ஒதுங்கிகின்று, அமைதியான கிராமத்து 5ாகரீகமும், ஆர்ப்பாட்டமான பட்ட
ணத்து 15ாகரீகமும் முட்டி மோதுவதைப் பார்த்துக் கொள்வதிற்தான் எத்தனை இன்பம் !
நடராஜனைப் போலச் சிந்திக்கத் தெரிந்தவனுக்கு அது இன்பமாகவும் இருக்கலாம். துன்பமாகக்கூட இருக்கலாம். ஆனல் எந்தக் காலத்திலும், அந்தச் சனக்கூட்டத்திற்கூட கனகம் அவனேடே இருக்
தாலோ என்ற இன்ப நினைவாகவே இருந்தது,
 

-
39 கொழுகொம்பு
சென்ற வருடம் கூட முண்டியடிக்கும் அந்தச் சனக் கூட்டத்திலே, பிரகாசமாய் எரியும் மின்சார விளக்குகளின் புழுக்கமான ஒளியில் கோ யி லின் மேற்கு வீதியிலே நெருக்கி நிரைத்திருந்த கடைத் தெருவிலே கனகத்திற்கு றிபன் வாங்கியதை எண் னியபோது அவனுக்கு மனது புல்லரித்தது. உலைக்கு வைக்கும் சருவப் பானையைக் கனகத்தின் தாயார் கிண் கிண் ணென்று ஐந்தாறு தடவை தட்டிப் பார்த்து, அந்தக் காத்தான்குடி வியாபாரியோடு பேரம் பேசியதை எண்ணியபோது 15டராஜனுக்குச் சிரிப்பு வந்தது. அண்ணு, அண்ணு என்று அவன் வாலைப் பிடித்துக்கொண்டு திரிந்த அவன் ஒன்று விட்ட தம்பி சித்திவினுயகன் அப்போதுதான் வாங்கிக் கொடுத்த பப்பா மம்மா' ஊதி டப்பென்று வெடிக்க வைத்து விட்டு அழுததை எண்ணியபோது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அப்படியே சுற்றிக்கொண்டு வந்தவன் கிடீரென்று தன் பாடசாலை நண்பர்கள் ஐந்தாறு பேரைக் கண்டபோது அவர்கள் ‘என்னப்பா கையோடேயே கொண்டு போரு' என்று கனகத் தைக் குறித்து அவனைக் கேலி செய்ததும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த நண்பர்களே எ ல் லா ம் இன்னுெரு தடவை பார்க்க வேண்டும் போல இருங் தது (5டராஜனுக்கு.
திருகோணமலைப் பகுதியிலுள்ள மாணவர்கள் மட்டக்களப்பிற்குக் கல்வி கற்கப்போவது உண்மை தான். ஆனல், தங்கள் படிப்பை முடித்துவிட்டு வந்த தும், மட்டக்களப்பிற்கும் அவர்களுக்கும் அதிகமாக எந்தத் தொடர்புமே இருப்பதில்லை. யாழ்ப்பாணத் திற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு ஏன் மட்டக் களப்பிற்கு இல்லை என்பது ஒரு ரசமான கேள்வி கான், பிரயாண வசதிகள் இல்லாதது ஒரு காரண மாக இருக்கலாம். வேறு சமூக அரசியல் முறையான காரணங்களும் இருக்கலாம். ஆனல் எப்படியிருக்

Page 27
கொழுகொம்பு 40
سےصحسیہہسپ^سمبر^
தாலும் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலே எல்லையில் இருக்கும் சித்திரவேலாயுதர் இவர் களை இணைத்துவைக்கிருர், அங்கே தான் அவர்கள் சந்திக்கிருர்கள். நடராஜனும் தன் மட்டக் களப்பு நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணியது ஒருவேளை தெய்வ சங்கற்பமாகத்தான் இருக்குமோ என்னவோ எப்படியும் அவன் கடைசி யாய்த் தன் கொழும்புப் பயணத்தைக் கைவிட்டு வெருகலுக்குப் போயே தீருவது என்று தீர்மானித்து விட்டான்,
மனிதன் தன் பலவீனங்களுக்குச் சமூகத்தைக் குறைசொல்கிருன், சந்தர்ப்பத்தைக் குறை சொல் கிருன் தற்கொலை செய்ய எத்தனித்துப் பயத்தினுல் அந்த யத்தனத்தைக் கைவிட்டவன், கடைசியாய் என் குழந்தைக்காகத்தான் வாழ்கிறேன் என்று சொல்லிக் கொள்கிருன், அப்படித்தான் நடராஜனும் தன் மட்டக்களப்பு நண்பர்களைச் சந்திப்பதற்காகத் தான் வெருகலுக்குப் போவதாகச் சொல் லிக் கொள்கிறன். இதில் இன்னுெரு வசதி என்னவென் முல், இது தன் தந்தையின் கட்டளையை மீறிய தாகவும் இருக்காது. ஆகவே அவன் வெருகலுக்குப் போயே தீருவது என்று தீர்மானித்த போது ஆயிரம் சங்குகளுக்கிடையே முழங்கும் பாஞ்சசன்யச் சங்கு போல அவன் எண்ண, ஒலிகளுக்கு மத்தியில் அவன் இதய ஒலி கேட்டது, கனகம் அங்கே வருவாள்'.
தீர்மானித்த நடராஜன் அறைக்குள் இற்றை வரை தேடுவாரற்றுக் கிடந்த சைக்கிளைத் தள்ளு கையில் தெருவாசலிலும் சைக்கிள் மணிச்சப்தம் கணகணத்துக் கேட்டது!
கடிதமோ, தந்தியோ வந்திருக்கும் என்று கலவ ரப்பட்டுக்கொண்டே கடராஜன் தெருப்படலைக்கு விரைந்து சென்றன்.
 
 
 
 
 

போகும் வழியில்
நடராஜன் கலவரத்தோடு தெருப் படலைக்கு வந்தபோது அங்கே செல்வராஜன் நிற்பதைக் கண் டான். வேகும் வெயிலிலே தலை கலைந்து குெற்றியில் வெயர்வை கொட்ட, உடம்போடு தோல்போல் ஒட்டித் தெப்பமாக கனேந்திருந்த சேட்டோடு களைப் புற்று நிற்கும் தன் மைத்துனன்ன ? வங் தி ரே ன் என்று சம்பிரதாயத்திற்குத் தானும் சொல்ல கட ராஜன் மனதிற் திராணியில்லை. அவன் பார்த்த பார்வை ஏன், இங்கே வந்தாய்? என்று செல்லனைக் கேட்பது போல இருந்தது.
'கொழும்புக்குப் போவதாகச் சொன்னுயாமே; ஏன் போகவில்லையா ? அந்த மெளனத்தைக் கலைத் தான் செல்லன்.
'நான் இங்கே இந்நேரம் நிற்பதைப் பார்த்தால் போகவில்லை என்றுதானே பொருள் ' என்ருன் நடராஜன் சிரித்துக்கொண்டே, ஆம், மணமற்ற பூவும் தன் சிரிப்பினுல் மானத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது. மனிதனும் தன் சிரிப்பினல் தன் உள்ளத்தை மறைத்து மற்றவர்களுக்குமுன் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிருன் 5 ட ரா ஜனும் த ன் உள்ளத்தை மறைக்கத்தான் அப்படிச் சிரித்தான்.
*நீ போகமாட்டாய் என்று எனக்குத் தெரியுமே” என்ருன் செல்லன்.
6

Page 28
கொழுகொம்பு 43
o-“-“-o.“--* *
محےحمحمحےحمحم
15டராஜனுக்கு அவன் பேச்சு நெருஞ்சி முள்ளைப் போலச் சுருக்கெனத் தைத்தது. தன் நிலையற்ற மனதின் இளப்பத்தைச் செல்லன் கேலி செய்தது போல இருந்தது. அவனுக்கு கனகத்தின் காலடியில் காய்போலச் சுற்றிக் கொண்டு திரிபவன்தானடா நீ என்று செல்லன் தன்னை நையாண்டி செய்பவன்
போலத் தோன்றிற்று. அடுத்த கணம், இதற்காகத்
தான இன்றைக்குக் கொழும்புக்கப் போகாமல் கின்ருேம் என்று தன்னையே நொந்து கொண்டான்.
அடுத்த கணம் இந்தச் சிங் த னை கள் எல்லாம்
அவன் மனதில் ஒடிக்கொண்டிருக்கையில் நடராஜன் வேண்டா வெறுப்புடன் சொன்னன், ' போக என்று தான் புறப்பட்டேன், ஆனல் பஸ் தவறி விட்டது'.
" கான் பஸ்ஸடியில் உன் னைக் காணவில்லையே' என்
முன் செல்லன்.
15டராஜன் தன் பொய்யை மறைக்க மேலும் ஒரு பொய் சொல்லவேண்டியதாயிற்று. ' சாப்பாடு முடியும்போதே நேரம் ஆகிவிட்டது. அதன் பிறகு நான் பஸ்ஸடிக்குப் போகவேயில்லே "
'அதனல் என்ன குறைந்துவிட்டது ? இப்போது
வா; திட்டமிட்டபடி வெருகலுக்குப் போய்வரலாம்' என்ருன் செல்லன். -
* சரி? பார்ப்போம்' என்றிழுத்தான். ' என் னத்தைப் பார்க்கிறது. நான் போய்ச் சிறிது பொழுது தாழ்ந்ததும் வருகிறேன். ஆயத்தமாக இரு' என்ற செல்லன், அவன் பதிலை எதிர்பார்க்காமலே சைக்கிளில் ஏறிக்கொண்டு விரைந்தான்.

கொழுகொம்பு
ܓ ܐ ܓ
~~~~~~~
صبیح۔
அந்தி மயங்கி இருட்டாகி விட்டபோது பிச்சைக் காரனின் முதுகைப்போல மேடும் பள்ளமுமாக ஒடும் அந்த வீதியிலே இரண்டு துவிச்சக்கரவண்டிகள் வேக மாகச் சென்று கொண்டிருந்தன. தெருவின் இரு கரையிலும் நிமிர்ந்து சடைத்து நின்ற காட்டுமரங் களின் நிழல், கிழக்கே அடிவானத்திலிருந்து வெண்கல உருண்டையாகக் கிளம்பிக்கொண்டிருந்த சந்திரனின் தெளிவற்ற ஒளியை விழுங்கிக் கொண்டிருக்கையில் அந்தப் பாதை இருண்டு தான் கிடந்தது அந்த இருளில் தூரத்தே மரங்களற்றிருக்கும் வெறுமையான இடத்தில் சந்திர ஒளி, பிய்க்து விழுந்த தங்கப் பாளம் போலத் தெருவிலே தேடுவாரற்றுக்கிடக்கையில், அந்த ஒளியே ஒரு பயப் பிராந்தியைக் கொடுத்தது. தெரு ஒரத்திலே, மழைத் துளிக்காக வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் முத்துச்சிப்பியைப் போலக் கடுங் கோடையில் அடியுண்ட தரை, பாளம் பாளமாக வெடித்துக் கார்காலத் துளிக்காக ஏங்கி நின்றது. பகல் முழுவதும் சுழற்றியடித்த கச்சான் காற்று வலியற்றுச் சோர்ந்து, நாளைக்கும் உலகில் வந்து உலவுவமா அல்லது இப்படியே ' கம் என்று இருந்து விடுவோமா என்றெண்ணுவது போலப் பூதா கார மாகத் தெரியும் மரங்களின் மேலே இலைகளின் பின் ணுல் ஒளிந்துகொண்டது. இயற்கையின் இந்த மந்த கதிக்குப் பின்னணி போலத் துரத்தே கடபுட' என்ற சப்தத்தோடு மாட்டு வண்டிகள் அணியாகச் சென்று கொண்டிருந்தன. இடையிடையே அலறல் ஒசையை எழுப்பிக் கொண்டு பறந்து சென்ற மோட் டார் வண்டிகள் அந்த அமைதியான சூழலின் இதயத்தைப் பிளந்து கொண்டிருந்தன.

Page 29
கொழுகொம்பு 44
நெடுந்தூரம் ஓடிவந்து விட்ட அவ்விரண்டு துவிச் சக்கரவண்டிகளும் தெருவின் இரு கரையிலும் கட்டு வளர்க்கப்பட்டன போல நிரைத்து இருந்த வேப்ப மரங்களிடையே வந்த போது நிலவும் சிறிது மேலே கிளம்பியிருந்தது. ஆனுலும் அங்கிலா தாவளையமாக எறிக்கும் சித்திரைப் பெளர்ணமி அல்ல திட்டுத் திட்டாக மேகங்கள் மண்டியிருக்கும் கார்கால ஆரம் பத்திலே எறிக்கும் பிரபையற்ற நிலவுதான். அந்த நிலவொளியில் தெளிந்த நீரிற் பிரதிபலிக்கும் மர நிழலைப்போலத்தான், வேப்பமரங்கள் தோன்றின. அந்த வேப்பமரங்களின் உச்சியிலே ஊசலாடிக் கொண்டிருந்த தூக்கணங்குருவிக் கூண்டுகளிலே மின் மினிப் பூச்சிகள் மின்னிக்கொண்டிருந்தன.
சிறிது கேரமாக எதையுமே பேசிக்கொள்ளாத இருவரும் இப்போது ஒரு கேரத்திற் பேச ஆசைப் பட்டனர் போல இருந்தது. முதலிற் செல்லன்தான் கேட்டான். 'மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னு கின்றன மச்சான் !'
* எப்படி மின்னுகின்றனவா ? எல்லாம் இயற் கையின் அற்புதந்தான் ' என்ருன் நடராஜன். -
* இயற்கையின் அற்புதம் என்று எழுந்தமான மாகச் சொல்லிவிட்டாயே. எஸ். எஸ். சி. க்கு எல் லாச் சயன்ஸ் பாடமும் எடுத்த உனக்கு அதன் விஞ்ஞான இரகசியம் ஒன்றும் தெரியாதா?
' என்னவோ அப்போது எல்லாவற்றையும் படி 蹄 தேன். ஆணுல் இப்போது இந்த மின்மினிப் பூச்சிகள்
 
 

f5 கொழுகொம்பு
صبر^سمبر^*
மின்னுகிறதைக் காணும்போது எனக்கு ஒரு பாட்டுத் தான் ஞாபகம் வருகிறது. பாடுகிறேன் கேளேன். ' என்று 15டராஜன் தன் இனிமையான குரலில் அந்த
மட்டக்களப்புக் கிராமியப் பாடல் ஒன்றைப் பாடி
னன்.
கன்னிக் கிரான் குருவி கடுமழைக்கு ஆற்ருது மின்னி மின்னிப் பூச்செடுத்து
விளக்கேற்றும் கார் காலம்,
அந்தப் பாட்டு முடிந்ததும் செல்லன் கேலியாகச் சொன்னன்: ' எதையுமே விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கத் தமிழனுக்குத் தெரியாது. பாட்டுப் பாடத் தான் தெரியும். தமிழனின் இழிநிலைக்கு இதுவும் ஒரு காரணங்தான்.'
* ஏன், அணுக்குண்டைக் க ண் டு பி டி த் து உலகையே காசம் செய்யாதது தமிழனின் குற்றமா ?”
* அதில்லை, அணுக்குண்டு செய்யத் தெரியா விட்டாலும் ஒரு ஆணிதானும் செய்யத் தமிழனுக் குத் தெரியாதே. தமிழ்காட்டுப் பாடசாலைகளில் இத்தனே விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களிருந்தும் என்ன பயன் ?' என்ருன் செல்லன்.
* தமிழன் அழிவைத் தேடுபவனல்ல ஆக்கத் தைத் தேடுபவன். செத்த பிறகும் வாழ எண்ணு பவன். அதற்காகத்தான் அவன் இயற்கை நிகழ்ச் சிகளைப் பாட்டாகப் பாடுகிருன். அதிலும் இந்தக் கிழக்குக் கரைத் தமிழன் இருக்கிருனே ; அவன் கல்வியறிவில்லாமலே பாடுவான். வயலிலே கெல்லும்

Page 30
கொழுகொம்பு 46
MNMNMMN
வாவியிலே மீனும், தென்னையிலே காயும் இருக்கும் போது அவனுக்கு விஞ்ஞானமேன் ? விஞ்ஞானப் பட்டம்பெற்ற கமது சுவாமி விபுலானந்தர் கூட இன்றும் தம் 'நீரரமகளிர் என்ற பாட்டிலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிருர் ' எ ன் று 5 ட ரா ஜ ன் சொன்னபோது சைக்கிளிலே கூனிக்கிடந்த அவன் உடல் நிமிர, நெஞ்சு பெருமிதத்தால் நிமிர்ந்து நின்றது. அந்தப் பெருமிதத்தில் மீண்டும் அந்தப் பாட்டையே பாடினன். பாட்டு முடிந்ததும் மறுபடியும் செல்லன் சொன்னன், ' இப்போது கார் காலமில்லையே'
'ஏன் இல்லை ? சுழன்றடிக்கும் கச்சான் காற் றுச் செத்துவிட்டதே இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மழைபெய்யத் தொடங்கிவிட்டால் கார் காலமில்லையா ? என் முன் 5டராஜன்,
அவர்களிருவரும் பேசிக்கொண்டே போகையில் அந்த அமைதியான இரவின் மோன அலைகளில் மணிச்சப்தம் மிதந்துகொண்டு வந்தது. மென்மையும் இனிமையும் குழைந்து வரும் அந்த 5ாதம் பழக் கப்பட்ட குரல்போல அவர்களுக்கு ஒலித்தது. அந்த ஒலியை அவர்கள் நெருங்கிப் போய்த் தெருவின் வளைவிற் திரும்பியபோது எதிரே வண்டி ஒன்று போய்க்கொண்டிருந்தது.
15டராஜன் வண்டியைக் கவனமாகப் பார்த்தான். வண்டிக்குள்ளிருந்து அந்த ஒரு சோடிக் கண்கள் அவனைக் கூறுகுறிப்பாகப் பார்த்தன அந்தக் கண் களிற்தான் என்ன ஆச்சரியம் ! என்ன ஆவல்! கொழும்புக்குப் போகிறேன் எ ன் ற வர், ஏன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4? கொழுகொம்பு
محص۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
போகவில்லை ? என்னத் தேடிக் கொண்டுதான இங்கு வருகிறர் ? அப்படியாயின் ஏன் அவர் என் னிடம் பொய் சொன்னர் ? என்று கனகம் எண்ணமிடுகையிலே நடராஜன் அவளைப் பார்த்துச் கிரித்தான். தன் சிந்தனைகளை மறந்து, ஆச்சரியத் தையும் தோற்றுக் கனகமும் சிரித்தாள் ! மேலே முகில்களுள் மறைந்திருந்த சந்திரனும் தன் திரையை நீக்கிவிட்டுச் சிரித்தது.
அந்தப் புன்சிரிப்புக்குப் பின்னல் கனகம் தன் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டாள், 5ட ராஜன் வண்டியைத் தாண்டி மேலே செல்ல எத் தனிக்கையில் பின்னல் மோட்டார் வண்டி ஒன்று அலறியது. அவசரத்தில் 5டராஜனின் சைக்கிள் ஒரு கல்லின் மேல் ஏறிப் பள்ளத்தில் விழுந்தது,
பின்னுல் வந்த மோட்டார் நடராஜனைத் தள்ளி விட்டுச் செல்கையில் வண்டிக்குள் ஐயோ!' என்ற குரல் தினமாக ஒலித்தது.

Page 31
S
விபத்து
நடராஜன் மெதுவாகக் கண்களைத் திறந்த போது அவன் ஒடும் காருக்குள் இருப்பதைக் கண்டான். கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் தன் தலை செல்வராஜனின் மடிமீதிருப்பதைக் கண் டான். உடனே நடந்தவைகளை எல்லாம் அவதா னிேத்துக் கொண்டான். விபத்தினுல் ஏற்பட்ட அதிர்ச்சியையும் வலியையும் வெட்கம் திரையிட்டு மறைத்தது. திரும்பவும் கண்ணே மூடிக்கொண்டு விஷமத்துக்காகத் தானும் இருக்கவேண்டும் என்று தோன்றிற்று அவனுக்கு ஆணுற் கால்மாட்டிலே தன் மாமனரின் மறுபக்கத்தில் கலங்கிப்போயிருந்த அந்த நீள்விழிகள் பரிவோடும் பாசத்தோடும் அவனேயே பார்த்துக் கொண்டிருக்கையில் அவனுல் விழித்திருக் கவும் முடியவில்லை : கண்களை மூடிக்கொள்ளவும் மனமில்லை.
' உடம்பில் எங்காவது நோகிறதா ?' என்று கம்மிய குரலிற் கேட்டான் செல்லன்.
தன் பலவீனத்தைக் கனகத்தின் முன்னுற் காட் டிக்கொள்ளக் கூடாது எ ன் ற க வ லை மே லிட, ' இல்லையே, பலமாக அடிபடவில்லையே' என்றவாறு எழுந்திருக்க முயன்முன் கடராஜன்,
 
 

49 கொழுகொம்பு
ASqSqSqESqSqSqSASASASAS SSASSASSASSASSASSASASA SqLS SAAAAS SqqS SSAS SqqSqSqSqSqASMMMSLASqMLLeSLSLSLSASSSLSALAqq
محب۔۔۔۔۔۔۔۔۔۔۔ ܣ ܓܡܗ
' வேண்டாங் தம்பி! அப்படியே படுத்துக்கொள்' என்று ஆதங்கத்தோடு அவனே த் தடுத் தார் கங்தையா.
நிலவின் குளுமையில் திறந்திருந்த கண்ணுடி யன்னலுக்கூடாக எதிர் காற்று முகத்திற் சில்லென்று அடித்துக்கொண்டிருந்த அந்த வ ண் டி க்குள் ளே, கனகம் அப்போதுதான் விட்ட பெருமூச்சு கணநேரம் அனலாய்த் தகித்து நின்றது
கார் ஒடிக் கொண்டிருந்தது. பாவம்! வாடகைக் கார்க்காரன் அல்விஸ் கல்லவன்தான். விபத்து கடந்த கணத்திலேயே காரைத் தரிக்கவைத்துத், தா ன் கொண்டுவந்திருந்தவர்களேயெல்லாம் நடுவழியிலிறக்கி, அவர்களைக் கங்தையாவின் வண்டியிற் போக ச் சொல்லி விட்டு இவர்களைத் திருப்பி ஏற்றிக்கொண்டு மூதூருக்கு வருகிருரன். இவர்களைக் கொண்டு போய் அங்கே விட்டதும் திரும்பி வந்து நடுவழியில் விட்ட வர்களை ஏற்றிக்கொண்டு திரும்பவும் வெருகலுக்குப் போகவேண்டும். எனவே பகிரங்க வேலைப் பகுதி யினரின் அசட்டுத்தனத்தைப் ப ைற ய டித் து க் கொண்டு கல்லாய்க் கலட்டியாய்க் கிடக்கும் அந்தப் பாதையில் அ சு வ க ம ன த் தி ற் காரையோட்டிச் செல்கிருன்.
கார் அந்த வளைவிற் திரும்பிய போது, எதிரே பரந்து விரிந்துகிடக்கும் வயல் வெளிக்குப் பின்னல், தென்னமரங்கள் நிலவொளியிற் தங்கள் நீண்ட குருத் துக்களை விகCக்க விட்டுக்கொண்டு நின்றன. அத் தென்னைமரங்களின் கீழே திட்டுத் திட்டாய்க் கூரை
?

Page 32
  

Page 33
கொழுகொம்பு 52
-o-o-
* உங்களை யார் அவனேக் கூட்டிப் போகச் சொன்னது?’ என்று வீடே அதிரும்படி இரைந்தார் அம்பலவாணர்,
* அவர்கள் கூட்டிப் போகவில்லையப்பர் நான் தான் என்பாட்டிற்குச் சைக்கிளிற் போனேன்'
என் முன் நடராஜன்.
* போனவன் செத்துத் தொலைகிறது தானேடா.
இந்தத் துரோகியை ஏன்டா என் வாசலுக்குக்
கூட்டி வந்தாய்?" என்றுகொண்டே கையை ஓங்கிய வாறு 5டராஜனை நெருங்கினர் அ ம் பல வா ண ர். அதற்குள் அவர் மனைவி இடையில் விழுந்து ' கொஞ்சம் ஆறுதலாய்ச் சொல்லுங்களேன்' என்று கெஞ்சினுள்.
* உன்ரை இளக்காரந்தான் இந்தப் பயலுக்கு இத்தனை கொழுப்பு’ என்றுகொண்டே மறுபடியும் மதர்த்துக்கொண்டு நிமிர்ந்தார் அம்பலவாணர்.
* மரத்தால் விழுந்தவனே மாடேறி மிதித்தது போல நீங்கள் அவனைக் கொல்லவா போகிறீர்கள்?" என்று சிறிது கோபத்தோடு கேட்டாள் பொன் GOT LħL DIT. -
சற்றுத் தரித்த அம்பலவாணர், தன்முன்னு லிருந்த சுவரைப் பார்த்தவாறே " இந்த கயவஞ்ச கர்கள் எல்லாரும் ஏன் என் வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள் ? நான் போ என்று சொல்லமுன்
 

53 கொழுகொம்பு
yaan ana.
மரியாதையாய் உன் அண்ணனைப் போகச்சொல்லி விடு' என்ருர்,
? ஏன் நீங்கதான் சொல்லுங்களேன்' என்ருள் பொன்னம்மா. தன் கணவன் வீட்டுக்கு வந்தவர் களைப் பிடரியைப் பிடித்துத் தள்ளும் அளவுக்கு அத்தனே கொடுமை நிறைந்தவரல்ல என்பது அவ ளின் நம்பிக்கை.
ஆனுல் இந்த கம்பிக்கை சரியானதா, பிழை யானதா என்று பரிசோதனை பண்ணிப் பார்க்கக் கங்தையா அவகாசம் கொடுக்கவில்லை. அம்பல வாணர் சகோதரியைக் கட்டிய மச்சானகவே இருக் கலாம். ஆணுற் கங்தையாவும், இன்னமும் அத்தா னிடம் சலுகையாய் ஐந்துசதம் கேட்டுக் கச்சான் கொட்டை வாங்கித்தின்னும் சிறு பிள் ளே ய ல் ல. அவருக்கும் தோளுக்கு மேலே தலையிருந்தது; உள்ளத் திலே உணர்ச்சியிருந்தது. மனத்திலே தானும் மனிதன் என்ற நினைவு இருந்தது. காய்ந்த ஒட்டி டிலே பட்டுச் சிலுசிலுக்கும் எண்ணெயைப்போல அவர் உள்ளத்து உணர்வுகள் சிலுக்கையில் ' இந்த வீட்டிலே இனி என் காய்கூட மிதிக்காது' என்று உரத்துச் சொல்லி விட்டு நடையிலிறங்கி வெளியே கடந்தார்.
'போகாதே அண்ணு' என்று கதறிக்கொண்டே ஓடிவந்தாள் பொன்னம்மா. தன்னைப் பிடித்த தங்கையின் கைகளை உதறிவிட்டுக்கொண்டே ஆக் ரோசத்தோடு நடந்தார் கங்தையா.

Page 34
கொழுகொம்பு อั4
கையைப் பிய்த்துக்கொண்டு பாய்ந்து செல்லும் வளர்த்த காயைப்போல, கங்தையா சென்ற பிறகு, பொன்னம்மா திரும்பியதும் கனகம் அவள் கைக ளுக்குள் தன் ஒல்லியான உடலைப் புகைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள், மிருதுவாயிருந்த அவள் தலைமயிரைத் தடவிக்கொண்டே பொன்னம்மா " நிற்கையில், அவள் கண்ணிரே அவள் புறங்கையில் விழுந்து சுட்டது.
இந்தக் காட்சியைக் காணவிரும்பாதவர் போல அம்பலவாணர் தன் அறைக்குள் புகுந்துகொண்டு கதவைப் படீர் என்று சாத்திக் கொண்டார்.
ஏதோ அருமையான தொன்றைப் பறிகொடுத்த வன் போல நடராஜன் சுவரிலே சாய்ந்து கொண்டு சிலைபோல நின்மூன். அவன் பக்கத்திலே செல்வ ராஜனும் கல்லாய்ச் சமைந்த நின்றன். ஆனுல் அவ ணுல் இன்னமும் அப்படியே நிற்கமுடியவில்லை. அதற் குள் வெளியே யிருந்து ' செல்வா ! இன்னும் வரவில்லையா ?' என்ற அதிகாரத்தொனி கேட்டது.
 
 
 

9)
சண்முகத்தின் தூது
மூதூரிற் கூத்தாடுபவர்கள் இல்லை. ஆனல் ஊர் இரண்டுபாட்டாற் கூத்தாடிக்குத் தாயம்' என்ற பழ மொழி இன்னமும் இருந்து வருகிறது. இந்தப் பழ மொழி இருப்பதிலிருந்தே இங்கே இன்னமும் ஆகக் குறைந்தது, வேஷமிட்டு ஆடாத கூத்தாடிகளாவது
இருக்கிருர்கள், என்பது தெரிகிறதல்லவா ?
அன்றிரவு அம்பலவாணருக்கும் அவர் மைத் துனர் கங்தையாவுக்குமிடையில் நடைபெற்ற வாக்கு வாதம் ஊரில் எல்லாருக்கும் விடிவதற்குள் தெரிந்து விட்டது. இரவில் சுவர்களுக்கும் காதுகள் இருக்கு மாமே, ஆனல் சுவர்களுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக அவர்கள் வாக்குவாதம் இருக்கவில்லையே, அம்பல வாணர் இரைந்த இரைச்சல், இரவின் மெளனத்தில் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லாருக்கும் தெளி வாகத்தான் கேட்டது. எனவே விடிந்ததும், வேஷ மிடாமற் கூத்தாடி, இரு மைத்துனர்களுக் கிடையி லுள்ள பகைமையை வளர்த்து இலாபம் பெறக் கருதிய சண்முகராசா அவர்கள், கங்தையாவின் வீட்டைத் தேடிக்கொண்டு வந்தார்.
உயர்திரு சண்முகராசா அவர்களுக்குத் தொழிலே இது தான். அவருக்கென்று சொந்தமாக வேறு வேலையே கிடையாது. ஊரிலே வரும் நன்மை தின்மை

Page 35
கொழுகொம்பு 56
1 ~~~ a i
களுக்கு எல்லாருக்கும் ஆபத்பாந்தவனுக இருப்பதினு லேயே அவர் காலம் கடந்து கொண்டிருந்தது. ஊரில் ஒரு கல்யாணம் 5 டக் க வேண்டுமா ? அதற்குக் கட்டாயம் சண்முகம் அவர்களின் உதவிவேண்டும் ! இழவு வீட்டுச் சாப்பாட்டிற்கு இலை வெட்ட வேண்டு மாயிருந்தாலும் அதற்குஞ் சண்முகத்தின் உதவி அவ சியம். இப்படியே எந்தக் கல்யாணத்தைக் குழப்பு வதாக இருந்தாலும் அதற்கும் அவர்தான் வேண்டும். ஆனல் நாரதரின் கலகம் கடைசியில் நன்மையாக முடிவதுபோல, சண்முகராசா அவர்கள் ஒரு கல்யா ணத்தைக் குழப்பினுல் அந்த மாப்பிள்ளைக்கு அடுத்த சுபமுகூர்த்தத்திலேயே வேருெருத்தியைக்  ைக ப் பிடித்து வைத்துச் சுபமாகவே முடித்தும் விடுவார்.
இத்தகைய ஒரு புனிதமான தொண்டைச் செய்யும் நோக்கத்தோடுதான் சண்முகம் இன்றைக் கும் இங்குவந்திருந்தார். அவரா வந்தார் ? அடுத்த தெருவிலே குடியிருக்கும் அகிலேச பிள்ளையல்லவா அவரையனுப்பியிருக்கிருர்,
அகிலேசபிள்ளையும் ஊரிலே ஒரு காலத்தில் * பத்தும்பெற்றுப் பாக்கியமாக வாழ்ந்தவர்தான். ஆனல் ஒன்றின் பின் ஒன்ருகப் பிறந்த மூன்று பெண்கள், தன் ஒன்றுவிட்ட சகோதரியின் கண வனேடு நெடுங்காலமாக ஆடிய சிவில் வழக்கு இவை களினுற் கைகொடித்துப் போயிருந்தார். ஆனல் இவைகள் எல்லாம் அவருக்குக் கவலையாகத் தோன்ற வில்லை அவருடைய இளைய மகன் சுந்தரலிங் கத்தை எல்லாரையும் போலத்தான் அவரும் மட்டக் களப்புச் சிவானந்த வித்தியாசாலைக்குப் படிக்க
 
 

கொழுகொம்பு
அனுப்பிவைத்தார். ஆனுல் அவன் நாலைந்து வருடங்க ளாக எஸ்.எஸ். சி. யிற் குட்டிக்கரணம் போட்டுக் கொண்டே வீட்டோடு இருப்பதுதான் அவருக்குப் பெருங்கவலையாக இருந்தது! கொடித்துப்போன தன் குடும்பத்தைக் கை தூக்கிவிடத் தன் ஒரே கம்பிக்கை யாக இருந்த அவன் இன்றைக்கு உத்தியோகமும் பார்க்க முடியாமல், அதே நேரத்தில்தன் பரம்பரைத் தொழிலையும் செய்ய முடியாமல் வாழா வெட்டி' யாக இருப்பதுதான், பூவைக் குடையும் வண்டைப்போல அகிலேசர் அவர்களின் மண்டையைக் கு  ைடங் து கொண்டிருந்தது. சுந்தரம் என்னவோ நீட்டுக் காற் சட்டை போடவும், அழகாகத் தலையை வாரிவிட்டுத் தெரு அளக்கவுங்தான் படித்திருந்தான் ! பரம்பரை யாக வந்த தன் குடிப் பெருமையையும் கெளரவத் தையும் மறுபடியும் நிலை காட்டுவதற்கு அகிலேச பிள்ளைக்கு அவனை விட்டாலும் வேறு கதியே இல்லை. இந்த மகனே இப்படித் திரிந்தால்.
இந்த நிலையில் அவனைச் சிறிது பச்சையுள்ள இடத்திற் கல்யாணம் முடித்து வைத்தால், தன் கஷ்டங்கள் சிறிது தீரும்; மகனும் உருப்படுவான் என்று அகிலேசர் எண்ணினுர்,
ஆணுல் தன் மகனுக்குப் பெண் கொடுக்கப் பசை யுள்ளவர்கள் சம்மதிப்பார்களா ? என்ருலும் கங்தை யாவின் வீட் டிலே அகிலேச பிள்ளையவர்களுக்கு எப்போதும் ஒரு கண் இருந்தது. இன்றைக்குக் கங்தை யாவும் அம்பலவாணரும் தீராப் பகைவர்களாகி விட் டனர் என்று கேள்விப்பட்டதும் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கங்தையாவிடம் பெண் கேட்க
8 -

Page 36
கொழுகொம்பு 58
விரும்பினர். அந்த எண்ணத்திலேதான் உயர்திரு சண்முகராசா அவர்களையும் கங்தையாவிடம் அனுப்பி வைத்தார்.
கங்தையா அவர்களுக்குச் சண்முகராசா அவர் களின் திருவுருவமே பிடிப்பதில்லை. ஆனலும் வீட் டுக்கு வந்த தூதுவன க் கடிந்து பேசுவது தமிழ னின் பண்பாடல்ல என்று அவர் எண்ணினரோ என்னவோ திரு. சண்முகம் அவர்கள் தன் உச்சிக் குடுமி ஸ்பஷ்டமாகத் தெரிய, வெற்றிலைக் காவியேறிய தன் தெத்துப் பற்களைத் திறந்தபடி சிரித்துக் கொண்டே வீட்டு விருங்தையிற் கால் வைத்தபோது கங்தையா அவர்களும் சிரித்தார். சிரித்ததுமட்டு மல்ல, ' ஏது! இந்தப்பக்கம்?' என்று அன்போடு கேட்கவும் கேட்டார்.
* சும்மா வங்தேன்' என்றிழுத்த சண்முகம் அவர் கள் " ஏது கவலையாயிருக்கிறீர்களே! என்ன இருந் தாலும் சகோதரியைக் கட்டின மச்சான்தானே, எல் லாம் சரியாகிவிடும் ' என்றுகொண்டே கங்தையாவின் முகத்தில் கெளியும் உணர்ச்சி ஒட்டங்களை எடை (3LIT L.L.Tff.
* அந்த எளிய சாதிப் பயலோடா இனிமேற் சமாதானம் ?' என்று எரிந்து விழுந்தார் கங்தையா அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
நிலைமை தனக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. தன் மாத்திரை சரியாகத்தான் வேலைசெய்கிறது என் பதை கொடிப்பொழுதில் விளங்கிக்கொண்ட சண்
 
 

59 கொழுகொம்பு
முகம், "ஆமாம், என்னதான் இருந்தாலும் உங்களை * வீட்டை விட்டு வெளியே போ' என்று சொல்லி யிருக்கக்கூடாது ஊரெல்லாம் இதைப்பற்றித்தானே பேச்சாயிருக்கிறது' என்ருர்,
"எல்லாம் எங்கப்பா சீதனமாகக் கொடுத்த, பணம் செய்த திமிர், பயலின் வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் என் பேரை மாற்றிக்கூப்பிடுங் காணும்' என்ருர் கங்தையா.
* எல்லாம் இலேசாகச் சொல்லிவிடலாம். ஆனல் இன்னம் இன்னமும் நாம் அவரிடந்தானே போக வேண்டும். நம்ம காலங்தான் போச்சு, இருக்கிற பிள்ளை குட்டிகளுக்கிடையிலேயுமா உறவு விட்டுப் போய் விடும்?' என்ருர் சண்முகம்.
* இனி ஒரு உறவுதான், என் வம்சத்துக்கே அவன் வீட்டு உறவு ஒன்றும் வேண்டாம் ' என்று கத்திய கங்தையா ஆக்ரோஷத்தில் தன் இருக்கையை விட்டே எழுந்து நின்ஞர். அவர் உடலம் முழுவதுமே ஆவேசத்தாற் துடிதுடிக்கையில் உரோமங்கள் குத் திட்டு நின்றன.
"ஆமாம், என்னதான் இருந்தாலும் அவர் அப் படிச் சொல்லியிருக்கவே கூடாது. சும்மாவா சொன் னர்கள், ! சினந்துகொண்டு அறுத்த மூக்கைச் சிரித் துக் கொண்டு ஒட்டினுல் ஒட்டுப்படுமா ? என்று. அதிலும் கம்ம கனகத்திற்கா மாப்பிள்ளை கிடையாது? அவர் மகன் மட்டுந்தான வைத்தாற் குடுமி, சிரைத் தால் மொட்டை'

Page 37
கொழுகொம்பு 60
* அப்படித்தான் அவன் எண்ணிக்கொண்டான் போல இருக்கிறது ? அவன் தலை குனிகிறதற்கு, இந்த மாரி விதைப்புக்கு முன் கனகத்தை வேறு யாருக் கர்வது கல்யாணம் பண்ணி வைக்காவிட்டால் நீர் இருந்து பாரும் ? என்ருர் கங்தையா,
* அதுதான் சரி. மாப்பிள்ளை துரும்பைக் கையில் வைத்துக் கொண்டு தானே அவரும் இத்தனை வீராப் புப் பேசுகிருர், பெண்ணைப் படைத்த கடவுள், அவ ளுக்கு எங்கேயோ ஒரு மாப்பிள்ளையையும் சிருட்டித் துத் தான் இருப்பார், ஏன்? நம் அகிலேசபிள்ளை மகன் சுந்தரம் இருக்கிருனே. அவனேச் செய்து வைத்தால் என்ன ?' என்று சாதுரியமாக விஷயத்தில் இறங்கி னர் சண்முகம்.
* சுந்தரமா? அவனுக்குத்தான் ஒரு தொழிலும் இல்லையே' என்ருர் கங்தையா,
* தொழில்தான் தொழில்; கட்டுவன் பிள்ளைக்கு 5ொட்டியா காட்டவேண்டும் ? ஏதோ விளையாட்டுப் புத்தியில் திரிகிறன். குடும்பத் தொல்லைமட்டும் இருக்குமானுல் எவன்தான் அப்படித் திரிய முடியும்? 15ம் நிலத்தையாவது பார்த்துக் கொண்டு வீட்டோடு இருப்பான்.'
* என்ருலும் ஒரு சின்ன உத்தியோகமாவது இருக் தாற்தான் மரியாதையாக இருக்கும்.'
'அடடா உத்தியோகத்திற்கென்ன ? எங் கெங்கோ அலைந்து உத்தியோகம் பார்த்துக்கொண்டு கண் காணுத இடத்திலா கம்பிள்ளை இருக்கவேண்டும்?

61 கொழுகொம்பு
n-ajaa
அவனுக்கென்ன? படித்திருக்கிருன் இப்போது ஊரில் இருக்கும் விதானேக்கப் பென்சன் காலம் வந்து விட்டது. ஊரிலேயும் வேறு படித்தவர்கள் இல்லை. ஏதேர் கொஞ்சம் பணத்தைச் செலவுசெய்து அந்த விதானையார் உத்தியோகத்தை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டால் அவனுக்கு உத்தியோகமுமாய் விட்டது. 15ம் பிள்ளையும் வீட்டோடு இருந்ததாய் விட்டது' என்ருர் சண்முகம்.
கங்தையாவிற்கு இது கியாயமாகவே தோன் றிற்று. அதற்கும் மேலாகத் 'தனக்கு மூக்கறுபட் டாலும் சத்துராதிக்குச் சகுனப் பிழையாக இருக்க வேண்டும்' என்ற வைராக்கியம் மேலோங்கி நின்றது. எனவே 6 சரி யோசித்துப் பார்க்கிறேன் ' என்ருர்,
1 யோசிப்பதென்ன ? இதைவிட வேறு நல்வழி இருப்பதாக கான் எண்ணவில்லை. அம்பலவாண பிள்ளையின் கொழுப்பை அடக்க இதை விட்டால் வேறு வழியே இல்லை' என்ருர் சண்முகம்.
" சரி, பிறகு எப்போ வருவீர்கள் ? ? என்று கேட்
டுக்கொண்டே எழுந்தார் கங்தையா .
* பின்னேரம் வருகிறேன்' என்று சிரித்துக் கொண்டே சண்முகம் வெளியேறுகையில், இந்தச் சம்பாஷணைகளையெல்லாம் வீ ட் டு க்குள் ளி ரு ங் து கேட்டுக்கொண்டிருந்த செல்வராஜன் தன் மனத்துள் இப்படியா சங்கதி என்று கருவிக்கொண்டான்.
實 實 寅

Page 38
O
கனவின் நனவு
வீட்டிலே சண்முகத்திற்கும் தன் தங்தையா குக்கும் நடைபெற்ற சம்பாஷணைகளில் ஒன்றுமே கனகத்திற்குத் தெரியாது. ஏனென் ருல் அந்தச் சம்பா ஷ்ணைகள் கடந்துகொண்டிருக்கையில் கனகம் கிணற் றடியில் இருந்தாள்.
நேற்று ரோசத்தோடு வெளியேறிய தங்தையின் பின்னல் கனகமும் மற்றவர்களும் அம்பலவாணர் வீட்டைவிட்டு வெளியேறித் தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அர்த்தராத்திரியாகி விட்டது. அந்த அர்த்தராத்திரியிலும் கங்தையா அவர்கள் சட்டியிற் காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயைப் போலச் சிலு சிலுத்து வெந்து கொண்டிருக்கையில் கனகமும் அவள் தாயாரும் அமைதியாக நித்திரைக்குப் போனுர்கள். ஆனல் கன்னங்கரிய இருளில் வெறியாட்டம் போடும் பேய்க் கூட்டம் போலக் கனகத்தின் மனதிலே இறந்து போன, இறந்து கொண்டிருந்த, எண்ணங்கள் ஆடிக் கொண்டிருக்கையில் அவளுக்கு நித்திரை வருமா ?
ஐயோ! அத்தான் தான் வெருகலுக்கு வர மாட்டேன் என்று சொன்னரே அப்படிச் சொல்லி விட்டுப் போனவர் ஏன் திரும்பவும் வந்தார் ? வந்த வருக்கு ஏன் இந்த அபாயம் நேரிட வேண்டும் ?

63 கொழுகொம்பு
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
தெய்வமே எங்கள் உறவைத் துண்டிக்கவேண் டும் என்பது போலல்லவா அவருக்கு இடைவழியில், விபத்து கேர்ந்திருக்கிறது? என்றெண்ணியபோது கனகத்திற்குப் பயமாக இருந்தது. இருண்ட அறைக் குள்ளே தனிமையின் கொலுவில் அந்தப் பயங்கர எண்ணம் மனதிற் தோன்றியபோது கனகத்தின் மூளை அதற்குமேற் சிந்திப்பதையோ எண்ணிப்பார்ப் பதையோ செய்யும் சக்தியை இழந்துபோய் மலை முகட்டில் ஏறி ஏறிப் போனவன் திடீரென்று ஒரு மலைக்கணவாய்க்கு வந்ததும் செயலற்று நிற்பதுபோல நின்றுவிட்டது. கைக்கோலைப் பறிகொடுத்த குருட்டுப் பிச்சைக் காரனைப்போல அவள் எண்ணங்கள் செய லற்று நிற்கையில், அவள் சடலத்திற்கு உறக்கமும் விழிப்பும், சலனமும், நிர்ச்சலனமும் எல்லாம் ஒன்று போலவே இருந்தன. இப்படி அவள் எத்தனே கேரம் இருந்திருப்பாளோ தெரியாது. ஒரு கனக்கண்டது மட்டும் அவளுக்குத் தெரியும் அவள் கண்ட அந்தக் கனவு. -
தங்கள் தோட்டத்திலே கடப்பட்டிருந்த இராச வள்ளிக் கிழங்குக் கொடிகள் முளைவிட்டு கன்முக வளர்ந்து கொழுகொம்பைச் சுற்றிப் பிடித்துக் -- கொண்டு அழகாக நின்றன. ஆனல் திடீரென்று மாமனர் வந்து தன் தங்தையுடன் சண்டையிட்டுத் தான் கொடுத்த கொழுகொம்புகள் எல்லாவற்றை யும்ே பிடுங்கிக்கொண்டு செல்கிருர் இராசவள்ளிக் கொடிகள் நிலத்தில் வீழ்ந்து சோர்ந்து போய்க் கிடக்கின்றன.
கனகம் விழித்துக்கொண்டபோது வி டி ந் து போயிருந்தது. பிராய்ட் தொடக்கம் சாகப் போகும்

Page 39
கொழுகொம்பு 64
صحصیہ ہے۔^محصےح*
பாட்டிவரை கனவின் தத்துவங்களைப்பற்றிக் கதை கதையாகச் சொல்கிருர்கள். ஆனல் கனகத்திற்குத் தான் கண்ட கனவின் பொருள் என்ன என்பதே தெரியவில்லை. இராட்சதன் போலத் தன் மாமனர் வந்து நாட்டப்பட்டிருந்த கதியாற் கம்புகளைப் பிடுங் கிக்கொண்டு போன படம் மட்டும் அவள் மனதில் கன்முகப் பதிந்திருந்தது.
எனவே எழுந்திருந்த தம் அவள் இராசவள்ளிக் கொடிகளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணினுள் சிந்தனையினுலும் மனே வேதனையி ஞலும் உடல் சோர்ந்து போயிருந்தது. இரவு தூக்க மில்லாததினுற் கண் இமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனலும் கிணற்றடியிலே மென்சிவப் பாய்த் தளிர்விட்டுக், கொழுகொம்பை இறு க ப் பற்றிக்கொண்டு பூரிப்போடு நிற்கும் கிழங்குக்கொடி களைப் பார்த்தபோது அவளுக்குத் தன் கனவையிட்டுச் சிரிக்கத்தான் வேண்டும் போல இருந்தது. ஆனல் அவள் சிரிக்க முடியுமா ? )
எதிலுமே பற்றற்றவளாகத் தன் முன் இருந்த எல்லாப் பொருள்களிலும் இலட்சியமற்ற ஒரு பார் வையைச் செலுத்திக்கொண்டு உயர்ந்திருந்த கிணற் றக் கட்டிற் சாய்ந்தவாறே வாளாவிருந்தாள் கனகம். அவள் இலட்சியமற்ற பார்வையில் வேலியோ ரத்தே யிருந்த வற்ருளைக் கொடிகள் தோன்றின. இந்த வற்றளைக் கொடிகள் இராசவள்ளியைப் போலல்ல. கொழுகொம்பின் துணையின்றித் த ரை யிலேயே படர்ந்து விடுகின்றன" என்று அவள் எண்ணுகையில் அவளுக்குக் காண்டேகருக்குப் போலப் புதிய தத்து வம் ஒன்று தெளிவாயிற்று.

65 கொழுகொ ம்பு
حصص برح صبرح"۔
محصيحصبر حصہ
* எந்தப் பெண்ணும் வளர்ந்த பிறகு வற்ருளைக் கொடியைப் போலத் தான் பிறந்த நிலத்திலேயே படர முடியாது. வள்ளிக் கொடியைப்போலப் பிறந்த நிலத்தைவிட்டு வேருெரு கொழுகொம்பிற்தான் படர வேண்டும் ? . . . . . .
ஆம். கனகமும் இந்த வள்ளிக்கொடி போன் றவள்தான். அவளின் வாழ்வு இனிமேலும் தன் பிறந்த வீட்டிலே படர முடியாது ஏதாவது ஒரு கொழுகொம்பிலேதான் படரவேண்டும். ஏற்கனவே ஒரு கொம்பை அவள் தங்தை தாயர், மாமனர் எல்லாருமே அந்தக் கொடி பருகில் கட்டுவைத்தார்கள். இன்றைக்கு எல்லாருமே அந்தக் கொடி படர்ந்த கொம்பை வெளியே பிடுங்கிக்கொண்டால் அந்தக் கொடி வாடி வதங்கி மடிவதைத் தவிர வேறு வழி?
கனகம் இப்படியே சிந்தித்துக் கொண்டிருக் கையில், தன் வீட்டிலே நடராஜனும் இதைப் போலத்தான் என்னவோ எல்லாம் எண்ணிக்கொண் டிருந்தான், ' என்ன தான் நேர்ந்திருந்தாலும் தன் தங்தையார் மாமனுரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கக்கூடாது என்பதுதான் அவன் எண் ணம். அவனுக்குத் தன் தங்தையின் மேல் எரிச்சலாக் இருந்தது, அவரைக் கடிந்து கொள்ள அவன் எண்ணி ஞன். ஆணுல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி எல்லாவற்றையும் நிர்மூல மாக்கிவிட அவன் விரும்ப வில்லை. இந்தக் கொதிப்பு காலப்போக்கில் ஆறிவிடும் என்றே அவன் நினைத்தான். அப்படித்தான் இவர்கள் சண்டை பிடித்தாலும் பிடித்துக்கொண்டேயிருக் கட்டுமே. கனகம் என்னே விட்டு எங்கே போகப் போகிருள் ? என்ற நம்பிக்கையுணர்ச்சி நடராஜன் மனதில் மிஞ்சியிருந்தது. ; : . . . . . . .
9

Page 40
  

Page 41
கொழுகொம்பு 68
Ao,o-zoo-zos-A-R-o-o-oo.
இனிமேல் நீங்களும் இங்கு வரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியுமே ' என் முள் கனகம், அதைச் சொன்னவள் முகத்தை வேறு பக்கம் திருப் பிக் கொண்டு அழுதாள்.
* அப்படி நினைத்தாற் திரும்பத் திரும்ப ஏன் இங்கு வருகின்றேன் ?' என் முன் நடராஜன்.
' வந்துவிட்டீர்களே. அப்படியானுல் வந்த காரி யம் முடிந்துவிட்டது, இனிப் போகலாமே ' என் ருள் கனகம். ஆம் இந்த கம்பிக்கை என்ருெரு சுமைதாங்கி இருக்கிறதே, அதனுற்தான் உலகமே 15டக்கிறது. மனிதனுக்கு ஏதாவதொன்றில் - அது தெய்வமாக இருக்கலாம், விதியாகவும் இருக்கலாம், அவன் மனிதனுகவே இருக்கமுடியாது. சகலத்தை யுமே இழந்து நிர்க்கதியாக நிற்கிருேம் என்ற மன நிலையிலும் கனகத்திற்கு இன்னும் கம்பிக்கை இருக் தது. போகச் சொல்லித் துரத்தினுற்கூட நடராஜன் போகமாட்டான் என்பது அவள் கம்பிக்கை. இந்த கம்பிக்கையிற் கனகம் தன் பேச்சு முடிந்ததும் (5டராஜனேயே, வளர்த்த காய் முகத்தைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'ஏன், என் தந்தையார் சொன்னதற்கு கீ இப்போது பழிவாங்குகிருயா ? என்று கேட்டுக் கொண்டே சிரித்தான் நடராஜன்.
கனகமும் சிரித்தாள். சிரிக்கவேண்டும் என்பதற் காகச் சிரித்தாள். காலைச் சூரியனின் மஞ்சட் கிர ணங்கள் கட்டாங் தரையிலும் பசுமையான பயிர்
 

un MNMNMMNMN
,~~~
களின் மீதும், தூரத்தே பால் குடித்துக் கொண் டிருந்த பசுக்கன்றின் மீதும் சுள்ளென்று எறிக்கையில் அந்தச் சூழலே சிரித்தது. -
5 ட ராஜன் வே லி ஆமணக்குகளுக்கூடாகப்
புகுந்து கிணற்றடிக்கு வந்தான். கிணற்றுக் கட்டில்ே
சார்ந்து கொண்டிருந்த கனகம் அவன் தன் முன்னுல் வந்தபோது நிமிர்ந்து நின்ருள். வள் கைகளைப்
பிடித்துக்கொண்டே “ கோபமா கன்கம்!" என்ரு
கனகம் ஒன்றுமே பேசவில்லை. அவளுக்குக் கூச்ச மாக இருந்தது. கனகம் படித்தவளாக இருக்கலாம்.
ஆலுைம் அவள் கிராமத்துப் பெண். 15டராஜன்
அவள் உறவுமுறையான அத்தானுயிருந்தாற்கூட உடலோடு ஒட்டிய எத்தகைய சிறிய தொடர்பும் அவர்களுக்குள் ஏற்பட்டி க்க அந்தக் கிராமியப் பண் பில் இடமே இல்லை. ஆ றல் இன்று கடராஜன் திடீ ரென்று அவளைத் தொட்டபோது அவளுக்கு நடுக்கமே எடுத்துவிட்டது. ஆனலும் தன்மேல் வந்து மோதும் கடல் அலைகளை விருப்பத்தோடு ஏற்றும் பின் உதறித் தள்ளியும் கலங்காமலும் கரையாமலும் நிற்கும் கடற்கரைபோல அவளும் அப்படியே நின்ருள். 15டராஜன் மிருதுவான அந்தக் கையைக் கொஞ்சிக் கொண்டே ' நான் போய்வரட்டுமா ?’ என் முன்:
அவள் பேசவில்லை,
*நீ ஏன் கவலைப்படுகிருய் ? காலம் எல்லாவற் றையுமே சரிப்படுத்திவிடும்' என்ருன் நடராஜன் மறுபடியும். *ー上、 , *ー

Page 42
கொழுகொம் பு ? ()
* நீங்கள் மட்டும் என்றைக்கும் என் பக்கம் இருந்தால் எல்லாமே சரிதான் '
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. அந்த ஒசை கேட்கையில் இருவரும் தங்கள் வீட்டிலேயே திருடர் களாக இருக்கும் உணர்வோடு மிரண்டனர். அவர் கள் எதிரே கனகத்தின் தந்தையர் இருவரையும் எரித்துவிடுபவரைப் போலப் பார்த்துக்கொண்டு ქმaმrფpf.
அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவர், சிறிது தணிந்ததும் ' தம்பி! உன் அப்பா இத்தனை கோப மாயிருக்கையில் நீ ஏன் இங்கு வந்தாய் ? என்ருர்,
நடராஜன் பேசாமல் நின்றன்.
* சரி; இனிமேல் நீ இங்கு வரவே வேண்டாம் ?" என்ற கங்தையா, அந்தச் சொற்களின் கொடுமையைத் தாமே தாங்க முடியாதவராக அவ்விடத்தை விட்டு கடந்தார்.
நடராஜனின் எண் சாண் உடம்பும் ஒரு சாணுகக் குறுகியது போல இருந்தது. மாமனுரின் வார்த்தைகள் அவன் உள்ளத்தைத் தைக்கையில் அவன் ' சரி: இனிமேல் கான் வர மாட்டேன்' என்று விட்டே வெளியேறினன்.
கனகம் ' அப்பா " என்று பென்னம் பெருஞ்
சத்தமாக அழுது கொண்டே தன் தங்தையைப் பின் தொடர்ந்தாள்.
 

Lu u jgib
உள்ளமும் உடலும் ஒருங்கே குன்றிப்போய் விட்ட நடராஜன் சுள்ளென்றெறிக்கும் காலை வெய்யில் முதுகைத் தீய்த்துக் கொண்டிருக்கையிற் சித்தன் போக்குச் சிவன் போக்காக கடந்துகெரண்டிருந்தான். தனது தங்தையாரும், மாமனுரும் ( காட்களாக ஆளுக்காள் மனத்தாங்கலாக இருக்கும் போது, அதைக்கண்டால் கடராஜனுக்கு இருவர்மேலும் அநு தாபமாகத்தானிருக்கும். இந்தச் சிறிய விஷயத்தை இவ்வளவு தூரம் தூக்கிப் பிடித்துக்கொண்டு மன வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிருர்களே எ ன் று அவனுக்கு வருத்தமாயும் இருக்கும். அவர்களே வெ றும் மடையர்கள் என்றுகூட அவன் நினைத்ததுண்டு. ஆனல் அதேபோன்ற ஒரு சிறிய விஷயத்தால் தன் மனம் இத்தனை சஞ்சலப்பட கேரிடும் என்று அவன் எதிர்பார்த்திருக்க முடியாது. ஏனென்ருல் மனித உள்ளம் விசித்திரமானது. தாயுமானவர் பாடிய தைப்போல அதற்குச் சும்மாவிருக்கின்ற திறமை கிடையாது. தன் மாமனுர் சொல்லிய அந்த வார்த் தைகளையே திருப்பித் திருப்பி எண்ணிக் கொண்
டிருந்தது அவன் மனம் 1 ஆம், எந்த விஷயமாயினும்
அது மானமோ அவமானமோ தனக்கு நேரிடும் போதுதான் அதன் பலாபலன்களை ஒருவனுல் கன்கு உணர முடிகிறது.

Page 43
بصرہ سیہہ ہی خ^سمیمہ^
கொழுகொம்பு 72
அவன் மாமனர் அவனிடம் இத்தனே காலமும் அன்பாகத்தான் இருந்தார். அத்துடன் மரியாதை யாகவும் இருந்தார். அப்படியிருந்த அவரே, இன்று அவனை இங்கே வரவேண்டாம் என்று சொல்லி யதை அவன் எண்ணிப்பார்க்கையில் அவமானத்தினுல் அவன் உள்ளம் சுக்குநூருக வெடித்துவிடும்போல் இருந்தது. முன்னங்கால்களுக்குள்ளே த லே யை ப் புதைத்துக்கொண்டு நடக்கும் தெருகாயைப்போல அவன் கடக்கையில், காயைத் துரத்துவதைப்போல தானும் துரத்தப்பட்டு விட்டேனே என்று அவன் எண்ணமிடுகையில், இன்பக்கனவுகளின் உச்சியிலே பூரித்திருந்த அவன் இதயம் இப்போது அவனுள்ளே மெளனமாகக் கண்ணிர் வடித்துக்கொண்டிருந்தது. ஆனல் கல்லகாலமாகத் தான் துரத்தப்பட்டது வேறு எவருக்குமே தெரியாது என்று அவன் எண்ணு கையில் அந்த எண்ணமே அந்தகார இருளில் தோன்றும் மின்னற் கீற்றைப்போல அவனுக்கு ஒர் ஆறுதலாக இருந்தது. அந்த விஷயம் மூன்ரும் பேருக்குத் தெரிந்திருந்தால் அவன் தற்கொலை செய் யத் துணிந்துவிடுவான்போல இருந்தது, அவன் மனநிலை !
ஆனல் இந்தச் சம்பவத்தை வேறு எவருக்குமே தெரியாமல் மூடி வைக்கவேண்டும் என்று அவன் திட்ட மிட்டுக்கொண்டே கடக்கையில், பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்ட இனிமையான திராட்சை ரசம், போதையைக் கொடுக்கும் மதுவாக மாறு வதைப்போல, அவன் சோகமான, வெறுப்பான எண்ணங்கள் பயங்கரமாய்ப் பழிவாங்கி யே திர வேண்டும் என்ற வஞ்சினமாய் விஸ் வ ரூப ம்
 
 
 

?:3 கொழுகொம்பு
qSAS SSASASASASLSSAS SLSLSASLSSASASSSLS
அவமானம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் சேர்ந்து அவன் மனம் குழம்பிக் கொண்டிருக்கையிலும், அம் ம ன த் தி ன் எங்கோ ஒரு மூலையில் கனகத்தின் எண்ணம் தோன் றத்தான் செய்தது. இதற்கு முன்னெல்லாம் கனகம், நடராஜன் மனதில் பாரதியார் மங்கியதோர் நில வினிலே கனவிற் கண்ட பதினறு வயது இள மங்கை யாக, இன்ப நினைவுகளாக, ஆனந்தக் கனவாக, அழகு வடிவாகத்தான் தோன்றுவாள். ஆனல் இப்போது அவன் மனத்திலே கனகம் ஒரு சோக சித்திரமாகத் தான் தோன்றினுள். அணையவிட்ட நெருப்புத் தணல்போல அவள் நிறமே சாம்பர் பூத்து (ଚନ୍ଦ) ତାମିறிப் போயிருந்தது. கட்டாந்தரையிலே பசுங் தழையைத் தேடியலையும் வெள்ளாட்டின் கண்கள்போல அவள் கண்களும் கலங்கி வட்டமாய் வெளிறிப்போயிருங் தன. அந்தச் சோக சித்திரத்தைப் பார்க்கையில் அந்த வெறுப்பான எண்ணங்களிடையேயும் அவன் மனம் கனகத்துக்காக இரங்கியது. அந்த இரக்கத் தில் நடராஜன் கடையே தளர்ந்தது. அவன் மெது வாக - மிகவும் மெத வாக - கடந்துகொண்டிருக்கை யில் * அத்தான் ! என் மீதா பழிவாங்கப் போகிறீர் கள் ? என்று கனகம் கேட்டது அவன் காதுகளில் விழுந்தது. நடராஜன் மேலே கடப்பதை விட்டு அப்படியே கல்லாலடித்த சிலைபோல அசையாமல் நின்று பின்னுற் திரும்பிப் பார்த்தான்.
வீட்டிலே கனகத்தின் தங்தை கங்தையாவும்
கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஆம், அவர் தன்
மைத்துனன் மேலிருந்த கோபத்தில் எப்படியோ
நடராஜனே, ! நீ இங்கு வரவேண்டாம்' என்று
10 -

Page 44
கொழுகொம்பு 74
சொல்லியே விட்டார். ஆனல் அதைச் சொல்கிற போது நடராஜன் முகத்தைப் பார்க்கவே அவருக் குத் திராணியில்லை. அதைச் சொன் ன துதா ன் தாமதம், தன் தோளிற் கிடந்த துண்டினுல் நீரை புகுக்கும் தன் கண்களையே துடைத்துக்கொண்டு ஒட்டமாகவே வீட்டுக்குள் வந்தவர், மனமிடிந்து பேர்ய்க் கதிரைக்குட் சரிந்துவிட்டார். மனிதரிற் சிலர் இருக்கிருரர்கள், மேலே பாறையாய் வைரித்து உள்ளே அனற்குழம்பாய் உருகிக்கொண்டிருக்கும் பூமித் தாயைப்போல அவர்கள் மனத்திலே இரக்கம் உள்ளவர்களாக இருக்கிருரர்கள். போலிக் கெளரவமும் வரட்டு உணர்ச்சியும் அவர்கள் வெளித் தோற்றத் தைக் கடுமையாக்கி விடுகின்றன. கங்தையாவும் இப் படியான மனிதர்களில் ஒருவர் தான்.
மனமிடிந்து போய்க்கிடந்த அவரினுள்ளே அவர் வாலிபப் பருவத்து எண்ணங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்முக ஒடி நெளிகையில் அவருக்கு வாய்விட்டு அழவேண்டும்போல இருந்தது.
அப்போது மழைக்காலம். அவர் தங்கை பிரவச வேதனையில் இருக்கிருள். இருட்டிலே அரிக்கன் லாங் தரைக் கையில் எடுத்துக் கொண்டு கங்தையா மருத்துவிச்சியைக் கூப்பிட ஒடுகிறர். ஒடும்போது தெருவிலே கிளம்பியிருந்த கல் பெருவிரலிற் தாக்க அதிலிருந்து இரத்தம் கசிகிறது. அதையும் பொருட் படுத்தாமற் பறந்து சென்றவர் மருத்துவிச்சியை அ  ைழத் து வந்ததும், உடனே திரும்பி என் னென்னவோ கடைச் சரக்கு எல்லாம் வாங்க ஓடுகிருர்,
 

?5 கொழுகொம்பு
حصيح صيح صيح صيح صبر
வெளி விருங்தையில் என்ன ஆகுமோ என்று ரங்கிக் கொண்டிருக்கையில் அறைக்குள்ளே குழந்தை ("U)ʻo)] II". (U5ʻô)J AT என்று வீரிட்டலறுகிறது. "ஆண்பிள்ளை, ஆண்பிள்ளை' என்று மகிழ்ச்சி மிகுதியில் அந்த வீடே அலறுகிறது. அர்த்த இராத்திரியில் எல்லாரும் கங்தையாவிடம் 'உனக்கு மருமகன் பிறந்திருக்கிருந்ன், என்று புன் சிரிப்போடு சொல்லுகையில் அவருக் குத்தான் எத்தனே மகிழ்ச்சி! எத்தனை பெருமிதம் !
கைக்குழந்தையாயிருக்கும்போது டு டராஜன் செக்கச் செவேரென்று அழகாக இருப்பான், அவனைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதே கங்தையாவுக்கு முழுநேர வேலையாக இருக்கும். அதுவும் அவன்ேப்
பிறந்த மேனியோடேயே வைத்துக்கொண்டால்.
அத்தனை அழகானவன் தான் 15டராஜன்.
கங்தையாவிற்குக் கலியாணமானபோது நடராஜ னுக்கு மூன்று வயதுதானிருக்கும். அவனேயொத்த பிள்ளைகள் எல்லாருமே முகூர்த்த கேரத்தில் நித்திரை யாய் விட்டார்கள். ஆனுல் கடராஜன் மட்டும் முகூர்த்த 5ேரத்திற்கூடத் தன் மாமனரின் பக்கத்தில் மணையிற்தானிருந்தான். தாலி கட்டும் வேளையில் அவனே, அவன் தாய் பொன்னம்மா வலிந்து துரக் கிக்கொண்டு போன போது அவன் அழுத அழுகை.
அடுத்த வருடம் அவனுக்கு அவராகவே வித்தியா ரம்பம் பண்ணி வைத்தார். கம்பனின் வெள்ளைக் கலேயுடுத்து' என்ற வெண்பாவை ஒரு தடவை சொல்

Page 45
கொழுகொம்பு ?6
லிக் கொடுத்துவிட்டு அன்று ஊர் முழுவதற்குமே ஒரு விருந்து கடத்தினர் கங்தையா.
அதன் பிறகுதான் என்ன ? எப்போதாவது அவன் தந்தையார் அவனைச் சிறிது கடிந்து கொண் டாலும் அவன் மாமனுர் வீடே கதி என்று பழி கிடந்து விடுவான் அதன்பிறகு தன் தோளில் ஏற்றிக் கொண்டுதான் அவன் வீட்டுக்குப் போகவேண்டும்.
காலப் புழுதியில் மக்கி மடிந்துவிட்ட சம்பவங் கள் எல்லாம் எண்ணப் புழுதியைத் தட்டிவிட்டுக் கொண்டு பளிங்காறு போலத் தெளிவாக ஒடிக் கொண்டு வருகையில் கந்தையா, தன் மைத்துன னின் அகம்பாவத்தை வெறுத்தார். தன் முன்னுல் அழுதுகொண்டு நிற்கும் தன் மகள் கனகத்தை வெறுத்தார். ' ஏனப்பா ! நீங்கள் அப்படிச் சொன் னிர்கள் ? என்று ஆத்திரமாகவும் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டுக் கொண்டுகிற்கும் தன் மகளை வெறுத்தார். இச்சம்பவங்களே எ ல் லா ம் கண்டும் காணுதவளைப் போன்று அடுக்களைக்குள் அமைதியாக இருக்கும் தன் மனைவியை வெறுத்தார். கான் ஏன் நடராஜனிடம் இப்படிச் சொன்னேன். என்றெண்ணியபோது தன்னையே வெறுத்தார். அவரே அவரை வெறுக்கையில் அவரால் வெறுக்கப்படாதது ஒன்றுமே இல்லாமல் இருந்தது.
உலகையே வெறுத்துக் கொண்டிருந்த அவர், இன்னமும் தன் முன்னுல் கனகம் அழுதுகொண்டே நின்றபோது, ' எல்லாம் உன்னுற்தான் வந்தது; போ உள்ளே' என்று கனகத்தின்மேற் சிறினர். மேலும்
 
 
 
 

2? கொழுகொம்பு
sمحمحمحےحمحمحصبر
நின்முல் அனர்த்தந்தான் என்று அவள் எண்ணிக் கொண்டே அறைக்குட் சென்று தலையணைகட்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுத்ாள் !
அப்போதுதான் உயர்திரு சண்முகம் அவர்களும் மெதுவாகச் செருமிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து தன் தெத்துப் பற்கள் வெளியே துலாம்பரமாகத் தெரியும் படியாகச் சிரித்தார். அவர் சிரிப்பதைக் கண்ட கங்தை பா, ' நீர் எங்கே வந்தீர்?' என்று ஆத்திரத்தோடு கேட்டார்.
* ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டு மறுபடி யும் சிரிக்க முயன்ருர் சண்முகம்,
' உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை இந்த ஊரே சமாதானமாயிராது. உங்களுக்கு இங்கே ஒரு அலுவலுமில்லை; போய்விடும்' என்று சண்முகத்தின்மேல் எரிந்து விழுந்தான் செல்லன்.
சண்முகம் 15ல்ல புத்திசாலி தருணமறிந்து விலகி விட வேண்டும் என்பது அவருக்கு அனுபவ ஞானத் திற் தெரியும். எனவே ' சரி தம்பி’ என்று சிரித் துக்கொண்டே அவ்விடத்தை விட்டுப் போகையில், மனத்துக்குள்ளே 'இந்தப் பயலுக்குச் ச ரி யா ன பாடம் படிப்பிக்காவிட்டால் நான் சண்முகமல்ல' என்று சொல்லிக்கொண்டார் ! - -
தான் சொல்ல வேண்டியதைச் செல்லன் சொல்லி விட்டான் என்றெண்ணினரோ, அல்லது அவரால்

Page 46
கொழுகொம்பு 28
صحیح صحیح صحیح
ஒன்றும் பேசவே முடியவில்லையோ, என்னவோ கக் தையா பிடித்து வைத்த சிலைபோல அப்படியேதான் இருந்தார்.
செல்வராஜனுக்கு உடனே சென்று நடராஜனைப் பார்க்கவேண்டும் மென்று தோன்றிற் று மேலும் தன் தந்தையின் கலங்கிய கண் களைப் பார்த்துக் கொண்டு நிற்கவும் அவனுல் முடியவில்லை. அப்படியே நிற்பதால் ஏதும் பயன் வரும் என்றும் அவனுக்கு கம்பிக்கையில்லை. எனவே அவன் திடீரென்று தெருவி லிறங்கி கடந்தான்.
நடராஜனின் வீட்டை நோக்கி வேகமாக வந்த போது தெருவில் 5டராஜன் கொழும்புக்குப் புறப் பட்டுப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டான்.
வேஷ்டியைச் சண்டிக்கட்டுக் கட்டிக்கொண்டு ஒட்டம் ஒட்டமாகத் துறைமுகத்துக்கு வந்து பார்த்த போது நடராஜன் திருகோணமலைக்குப் புறப்பட்டுப் போய்விட்டது தெரியவந்தது. செல்லன் எ ன் ன செய்வது என்று அறியாமல் யோசித்துக்கொண்டு
 

நீத்தல்
தெருவிலிறங்கி கடந்த சண்முகராசாவின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. கங்தையா கவலைப் பட்டுக்கொண்டிருந்தது ஏன் ? செல்லன் தன்மேல் எரிந்து விழுந்தானே, அது ஏன் ? தன்னே வீட்டை விட்டுத் துரத்தினுனே; அது ஏன் ? அதற்குப் பின்னர் செல்லன் எதற்கோ அவசர அவசரமாக முகத்துவாரப் பக்கமாக ஓடுகிருனே; அது ஏன் ? என்றெல்லாம் அவர் மண்டைக்குள்ளே பல 'ஏன் ?'கள் குத்திட்டுக் கொண்டு நின்றன.
ஏதோ ஒரு அசாதாரணமான குழப்பம் கங்தையா வீட்டில் ஏற்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் திட்டமாகத் தெரிந்தது. இதற்கு அம்பலவாண ருக்கும் அவருக்கும் ஏற்பட்ட இலெக்ஷன் பூசல் தான் காரணமாயிருக்கலாம் என்பது வெட் ட வெளிச்சம். ஆனுல் இதற்கும் (5டராஜனுக்கும் ஏதா வது நேரடியான சம்பந்தமிருக்குமா ? அகிலேச பிள்ளையின் விருப்பத்தைப் பூர்த்திசெய்து கனகத் துக்கும் சுந்தரத்திற்கும் முடிச்சுப்போட்டு வைப் பதற்கு இந்தப் பூசல் அநுகூலமாகவிருக்குமா ? என் பதை அறியவேண்டும் என்ற ஆவலில் அவர் முதலிற் செல்லன் எங்கே போகிருன் என்று பார்ப்பதற்குத் தான் எண்ணினுர்,

Page 47
கொழுகொம்பு 80
ஆகவே பொலிஸ் நாயைப்போல மோப்பம் பிடித்துக்கொண்டு அவரும் முகத்துவாரத்திற்கு வந்தார்.
செல்வராஜன், நடராஜன் போய்விட்டானே என்று சிலையாகி நின்றனல்லவா ? ஆனுல் சிறிது நேரத்தில் அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். *நடராஜா திருகோணமலையிற்தானே நிற்பான். இரவு எட்டுமணிக்குத்தானே கொழும்புக்குப் புகையிரதம் இருக்கிறது. அதற்குமுதல் அவன் எவ்வழியிலும் கொழும்புக்குப் போக முடியாது. ஆகவே திருகோண மலைக்குப் போனுல் அவனைச் சந்திக்கலாம், என் றெண்ணிக்கொண்டான்
தான் உடுத்திருக்கும் உடை, வைத்திருக்கும் பணம் எதைப்பற்றியுமே அவன் கவலைப்படவில்லை. நடராஜனேச் சந்திக்கவேண்டும் என்கிற ஏகாக்கிர சிங்தையனுய்ச் செல்லன் திருகோணமலைக்குப் புறப் பட்ட அடுத்த மோட்டார் படகில் ஏறிக்கொண் டான்.
சண்முகராஜா செல்லனை இயந்திரப்படகிலே கண்டபோது நடராஜன் திருகோணமலைக்கு ஏற்க னவே போய்விட்டான் என்பதை ք լ_{365 6ñ: மானித்துக்கொண்டிருந்தார் அத்தோடு அபாரக் கற்பனைகளைச் செய்யும் அவர் மூளையில் நடராஜ னுக்கும் கங்தையா குடும்பத்தினருக்கும் ஏதோ வாக்குவாதம், பிணக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று பட்டது,
 
 
 
 
 
 
 
 
 
 

81 கொழுகொம்பு
இயந்திரப்படகும் மாரித்தவளையைப்போல ‘ரீம் ரீம்' என்று இரண்டு மூன்று தடவை அலறிவிட்டுப் புறப்பட்டது. தன் அடுத்த திட்டத்தை மனதில் எழுதிக்கொண்டே சண்முகராசாவும் திரும்பி நேராக அம்பலவாணரின் வீட்டுக்கு நடந்தார்.
காலே எழுந்து, மாட்டிற் பால் கறந்து, தொழு வத்தைச் சுத்தமாக்கிக் கிணற்றடியிலிருந்த பயிர் களுக்கு எல்லாம் தண்ணிரிறைத்துவிட்டு அதன்பின் தன் தலையிலும் தண்ணிரை ஊற்றி நெற்றியிலே துலாம்பரமாகத் திருநீறு சாத்திக்கொண்டு வந்திருந்த அம்பலவாணர் விருந்தையிலே சாவகாசமாக உட்
கார்ந்துகொண்டிருந்தார்.
பொதுவாக அவருக்குச் சண்முகராசாவை - ஏன் எந்த இராசாவையுமே - பிடிக்காது. ஆணுற் சண்முகம் இலேசில் விடுபவரா? யாருக்கும் தன்னைப் பிடிக்க வைத்துக் கொள்வதிற்தான் அவர் அசகாய சூரர் ஆயிற்றே!
மேலும் அம்பலவாணர் தன் வயல் வேலைகளுக் காகச் சில எருமைக் கடாக்கள் வாங்க இருக்கிருர் என்ற விஷயம் சண்முகத்திற்குத் தெரிந்திருந்தது. எனவே அழையா விருந்தினகை அம்பலவாணர் வீட்டிற் கால்வைத்த சண்முகம் தம்பலகாமத்து அருணுசலம் தன் எருமைகளை விற்கப் போகிருராம்" என்ற பேச்சைத் தொடங்கினர். . . . . .
... " \ ' அப்படியா ? எனக்கும் சில தேவையாகத்தா, னிருக்கிறது' என்ருர் அம்பலவாணர்.
11

Page 48
கொழுகொம்பு 82
سمےےحصحصیحح سمسح
சண்முகம் தன் பேச்சைச் சுருக்கமாக முடிப் பதற்காக " அருணுசலம் இன்றைக்கு இங்கே வருகி மூர். என்னிடம் ஏற்கனவே இவ்விஷயமாகச் சொல்லி யிருந்தார். அவர் வந்ததும் கான் தங்களிடம் கூட்டிக்கொண்டு வருகிறேனே' என்ருர், இதற்கு அம்பலவாணர் பதில் சொல்லுமுன்னே 'தம்பி லீவில் வந்து நின் முற்போல இருந்ததே ' எங்கே ஆளைக் காணுேம்' என்று கேட்டார்.
சண்முகம் இதைக்கேட்டதும் அவர் மனைவி, * கடராஜனைக் காணவில்லையே! அவன் பெட்டி புத் தகங்கள் கூட இல்லையே' என்று கேட்டுக்கொண்டே அறைக்குள்ளிருந்து வந்ததும் சரியாகவிருந்தது.
* காலையில் நின்றனே ' என் ருர் அம்பலவாணர்,
சரியான சந்தர்ப்பம் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்ட சண்முகம் ' எப்படியும் மீசை முளைத்த ஆண்பிள்ளையல்லவா ? அவனுக்கும் ரோசமிருக்கத் தான் செய்யும் ' என்று சொல்லிவைத்து அம்பல வான ரைட பாTததாா.
* நீர் என்ன காணும் சொல்கிறீர்?' என்று ஆத்திரத்தோடு கேட்டார், அம்பலவாணர், ஆம், அம்பலவாணர் சிவபக்தர்; அவர் பூசையறையிலே * காலைத்தூக்கி நின் குடும் தெய்வம் சகல ஆசார அனுட்டானங்களோடும் இருக்கிறது. அந்த ஆடிய பாதனைச் சதா சேவிக்கும் அம்பலவாணரும் கோபம் வந்த நேரத்தில் எல்லாம் தன் இஷ்ட தெய்வத்தைப் போல ருத்திரமூர்த்தியாக மாறிவிடுவார்.
 
 

83 கொழுகொம்பு
بحصیحح عليحصبر حصصبرح
ஆனல் அம்பலவாணர் கோபம் சண்முகத்தை என்ன செய்ய முடியும்? அவர் கோபம் கங்தையாவை எரிக்கட்டும், 5டராஜனே முேக்கட்டும். அதனல் சண்முகத்துக்கு இலாபங்தானே. புயற்காற்றுக்கு மடிந்து கொடுத்து நிற்கும் தருப்பையைப்போல எவர் கோபத்திற்கும் தன் வெற்றிலேக் காவி படிந்த பல்லைக்காட்டிச் சிரிக்கும் சண்முகம், அம்பலவாணர் கோபத்தைக் கண்டும் எப்போதும்போலவே சிரித் துக்கொண்டு, ' நான் என்ன சொல்ல இருக்கிறது; ஊர்முழுக்கத்தான் சொல்லுகிறது. தங்கள் மைத் துனர் கங்தையா, கடராஜனைப் போடா வெளியே என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டாராம். அந்த அவமானம் பொறுக்கமாட்டாமற் தான் அவன் எவரிடமுஞ் சொல்லாமற் கொழும்புக்குப் போய் விட்டானும் என்னதான் இருந்தாலும் அவன் தங்கள் மகனல்லவா ?’ என்ருர் சண்முகம்.
‘என்ன ? அப்படியா ?' என்று உறுமினுர் அம்பல வாணர். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்த அவர் உடல், கணப்புச் சட்டியைப்போலச் சூடேறித் தகித்தது. உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்து விட்டன. தடாலென்று கதிரையில் இருந்து எழுந்து கொண்டே, 'ஏன், உனக்கு ஒன்றுக் தெரியாதா ? என்று தன் மனைவியின்மேற் பாய்ந்தார்.
தன் கடமையைச் சரிவரச் செய்த திருப்தியோடு மேலும் தான் அங்கே இருக்கவேண்டியதில்லை என்று தீர்மானித்தவராய்ச் சண்முகம் எவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் மெதுவாக அவ்விடத்தை விட்டு 15ழு வினுர்,

Page 49
கொழுகொம்பு 84
தன் மகன் எங்கெங்கே போனுனே' என்று ஏங்கியவாறே தன் கணவனின் கேள்விக்கு விடை சொல்லத் தெரியாமல் தவித்து நின்ருள் பொன் னம்மா, ‘என்னதான் இருந்தாலும் தன் அண்ணன், கடராஜனை இப்படி அவமானப்படுத்தியிருக்கலாமா ? என்று அவள் மனம் அவளையே கேட்டுக் கொண் டிருந்தது. எல்லாவற்றிற்கு முன்னல், தன் மகன் எங்கே போய்விட்டான் ? என்று தேடிப்பார்க்க விரும்பியது அவள் தாயுள்ளம். ஆணுல் இதை அம் பலவாணரிடம் சொல்ல அவளால் முடியுமா ?
ஒன்றுக்கும் ஆற்ருத அம்பலவாணர், ' பயலுக்கு இதுதான் வேண்டும்; நன்முக அனுபவிக்கவேண்டும்' என்ருர் மெதுவாக,
அவர் கோபம் தணிக்ததைக் கண்ட பொன் னம்மா ? அவன் எங்கே போயிருக்கிமூன் என்று பார்க்க வேண்டாமா ?' என்ருள் மெதுவாக,
'வேணுமென்ருற் போய்ப்பார்; உன் அண்ணனை யும் கூட்டிக்கொண்டு போய்ப்பார்; இனி அவன் எனக்கு மகனுமல்ல; கான் அவனுக்கு அப்பாவுமல்ல. அவன் எங்காவது தொலையட்டும் ' என்ருர் அம்பல வாணர். சற்றுத் தணிந்திருந்த அவர் ஆத்திரம் திரும்ப வும் தன் பழைய வேகத்தில் வந்தபோது அவரைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
இங்கே இப்படியிருக்கையில், திருகோணமலை யிலே நடராஜனைத் தேடிக்கொண்டிருந்தான் செல்வ ராஜன். நடராஜன் எங்கெங்கெல்லாம் போயிருப்
 
 

ெ
沙
85 கொழுகொம்பு
ܓܗܗ ܓ
۔۔۔۔۔صیبی۔سی۔سی۔
பான் என்று எண்ணினுனுே அங்கெல்லாம் தேடினுன் ஆனுல் நடராஜனேக் காணவில்லை. செல்லனுக்குப் பயமாயிருந்தது! இதன் விளைவு ஊரிலே என்னவாக இருக்கும் என்றெண்ணியபோது அவன் உடல் முழு வதுமே நடுக்கமெடுத்தது. எனினும், கெருப்பாய்த் தகிக்கும் திருகோணமலைத் தார் ரோட்டுக்களிலெல் லாம் அலைந்து அவன் 15டராஜனைத் தேடிக்கொண்டு தானிருந்தான்.
கடைசியாய்க் கொழும்புக்குத் திருகோணமலை யிலிருந்து சென்ற புடைவைக்கடை வான் ஒன்றிலே 15டராஜன் போய்விட்டான் என்று அறிந்தபோது அவனுக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. அவனைச் சந்தித்துச் சமாதானப்படுத்த முடியவில்லையே என்று அவனுக்குத் துக்கமாகவும் இருந்தது. இனி என்ன செய்வது? என்ற கேள்வி அவன் மனத்தைக் குழப்பியது.

Page 50
l3
தீர்மான n
கொழும்பை நோக்கி வான் போய்க்கொண் டிருந்தது. காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் சிட்டு (கருவியைப்போற் பறந்து கொண்டிருக்கையில், உள்ளே குளிர்ந்த காற்று முகத்தில டித்துக் கொண் டிருந்தது ஆனுல் நடராஜனின் உள்ளம் எரிமலை யாய்க் கனன்றுகொண்டிருக்கையில், உட்லில்மோதும் குளிர்காற்றினுல் என்ன பயன் ?
இந்த வான் பிரயாணம் இருக்கிறதே; இது புகையிரதப் பிரயாணத்தைவிட எத்தனையோ செள கரியமானது. திருகோணமலைக் கடைக்காரர்கள் சிலர் வசதிக்காகவும் 5ேரச் சுருக்கத்திற்காகவும் இந்தப் பயணத்தைச் செய்கிருரர்கள் இதிற் பிரயாணம்
செய்யும் எல்லாருமே நடராஜனுக்கு நன்கு தெரிக்
தவர்கள்தாம் நினைத்த இடத்தில் வானே நிறுத்திச் சிரமபரிகாரம் செய்துகொண்டும், வானுக்குள் குதுர கலமாகப் பேசிக்கொண்டும் அவர்கள் எல்லாரும் பிரயாணம் பண்ணுகிருர்கள். ஆனுற் கலகலப்பாக இருக்கும் அவர்களோடு ஒட்டி உறவாட 5டராஜனல் முடியவில்லை. பிரயாணிகள் அவனைப் பலதடவை துளைத்துக்கேட்டுக் கடைசியாய் அவர்களும் அலுத் துப் போய்விட்டார்கள். செழுமையான காட்டிலே இலையுதிர்த்துக் காய்ந்து நிற்கும் பட்டமரம்போல நடராஜன் அவர்களிடையே காணப்பட்டான். வான்

t
8? கொழுகொம்பு
ܥ- ܓ -- ܓ - ܝܓܬ-ܚܝ
AqASASLSASAASASASASASASASASASASASASS
ஒடிக்கொண்டேயிருந்தது. நடராஜனுக்கு மகாவலி கங்கை பாயும் தன் கிராமத்தைப்பற்றி எப்பொழு துமே மனதில் ஒரு பெருமை. அதைவிட முத்தமிழ் வித்திகரான விபுலானந்த அடிகளார் மீது ஒர் அபாரமான பக்தி, அவன் கல்லூரியில் மாணவனுக இருக்கையில் அவரைப்பற்றி அதிகமாக அறியும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது. அப்பேர்து, அவரது பாட்டுக்களை விரும்பிப் படித்திருக்கிருன் அவரின் நீரரமகளிர் என்ற LITT I GG3G)
மாவலியின் பேரால் வழங்கு மணிநதியும் காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கி இரத்தினத் துவீபமென ஆரியர் போற்றும் அணிசால் இலங்கை
என்ற அடிகளைப் படி க்கும் போதல்லாம், அடிகளார் பொதுவாக இலங்கையைப் பற்றியல்ல, மகாவலி நதி நீர்பாய்ச்சும் செழிப்பான தனது கிராமமான மூதூரைத்தான் சிறப்பாகப் பாடியிருக்கிருர் என்று எண்ணிக்கொள்வான். ஏன், அதற்காகக் கல்லூரி நண்பர்களோடு அடித்துப் பேசுவான். மகாவலி
கங்கை மூது ரிலேதானே பாய்ந்து அ வ்வூரை ச்
செழுமைப் படுத்துகிறது என்று பெருமையோடு பேசுவான். தேசியமே ஒரு மாயை என்று சொல் லிச் சர்வ தேசியம் பேசும் இந்தக்காலத்தில், நடரா ஜனைப் பொறுத்தவரை அவன் தேசி:ம் பேசியது கிடையாது. கிராமியம் தான் பேசுவான். அத் தனை பற்று அவன் கிராமத்தின் மீது,
இந்தப்பற்றுக்கு என்ன காரணமோ அதைப்
பற்றி காம் கவலேப்பட வேண்டியதில்லை. ஆனல்

Page 51
கொழுகொம்பு 88
கனகம் மூதூரிலேதான் இருக்கிருள் என்பது, ஆழக் கடலில் முத்தைப்போல அவன் மனதிலே அவனுக்கே தெரியாமலிருந்த ஒரு காரணமாகும்.
ஆகவே, அவன் படிப்புக் காரணமாகத் தன் கிராமத்தை விட்டுப் போக கேரிடும் போதெல்லாம் சொல்லொணுத வேதனையை அனுபவிப்பான், தீவாங் தரசிட்சைக்கு அனுப்பப்படும் கைதியைப் போலத் தான் ஊரை விட்டுப் போகும் போது அவன் மனநிலை இருக்கும். ஆனல், அந்தகார இருளிலே தோன்றும் மின்னல்போல, இன்னும் மூன்று மாதங் களில், தொண்ணுாறு நாட்களில் வீட்டுக்கு வரலாம் என்ற நினைவு அவன் மனதுக்கு ஆறுதலாக இருக் கும். திரும்பிவரப் போகிருேம் என்ற பற்றுக் கோட் டிலே தான் அவன் தன் பிரிவின் துயரைச் சகித்துக் கொள்வான்.
ஆனல், இம்முறை அப்படி ஒரு கம்பிக்கையுமே
மனதில் இல்லை. ஏன்? இனிமேல் மூதூரிலே அடி யெடுத்தே வைப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண் டான். ஊரைப்பற்றிய செழுமையான எண்ணங் களையும், கனகத்தைப்பற்றிய இனிமையான நினைவு களையும் படரவிடாததினுல் அவன் மனக்கொடி வேரைக் கிண்டிக் கொதிநீர் விடப்பட்டதைப் போலக் கருகிப்போய்க் கிடந்தது. அந்தக்கொடியில் ஏற்கனவே இருந்த இலைகளும் முகைகளும் கருகத் தொடங்கி விட்டன. புதிதாகத் தளிர்விட அதனுல் முடியாது.
'தன் அழகான கிராமத்தைக் காணமுடியாது; அந்தப் புண்ணிய பூமியில் இனிமேல் மிதிக்கமுடியாது'
 
 
 
 
 
 
 
 
 
 
 

89 கொழுகொம்பு
என்றெல்லாம் நடராஜன் நினைத்தபோது, கருகிக் கொண்டிருக்கும் அவன் மனக் கொடியிலிருந்து, காய்ந்த இலைகள் கீழே பொட்டுப் பொட்டென்று விழுவதைப்போல அவன் உணர்வுகள் சோர்ந்து சோர்ந்து விழுந்தன. அவன் தலையை நிமிர்த்த முடிய வில்லை. கால்களை ஆட்ட முடியவில்லை. முகத்திற் சிரிப்பை அழைக்க இயலவில்லை.
ஆனல் ஊரையே பாலைவனமாக வெறுத்துவிட வேண்டிய அளவுக்கு என்ன கேர்ந்துவிட்டது. 'தம்பி! நீர் இங்கு வருவது நல்லதல்ல என்று சாதாரண மாகத்தான் அவன் மாமனுர் அவனிடம் சொன்னுர், இந்த நேரத்தில் அவர் இப்படிச் சொன்னது நல்லது தான் என்ற முடிவுக்கு மூளையைப் பிரயோகித்திருக் தால் அவன் வந்திருக்கலாம். அதுவும் வேண்டாம். * மாமா கெட்டார் ' என்று அலட்சியமாக எண்ணிக் கொண்டு உலுத்தத்தனமாகவும் இருந்துவிட்டிருக் கலாம். ஆனல் (5டராஜனின் மனம் கற்பனைக் கொடி களே மிக மிக அதிகமாகவே படரவிட்டது. மகாகவி மில்டன் சொல்லியிருப்பது போல இந்த மனம் தன். கற்பனையிற் சொர்க்கத்தை 5ரகமாகவும் நரகத்தைச் சொர்க்கமாகவும் மாற்றிவிடும். மனித வாழ்க்கையை அவன் உள்ளமும் உடலும் மட்டுமல்ல, மனுேதர்மம் என்ற கற்பனையும் சேர்ந்துதான் தீர்மானிக்கின்றன. ஏன் ? கற்பனேதான் மனிதனின் த ரத்  ைத யும் குணத்தையும் உருவாக்குகின்றது. இந்தக் கற்பனை ஒரோர்வேளை சூழவிருக்கும் சொர்க்கத்தையே 5ரக மாக்கி விடுவதனுலேதான், சிறந்த கற்பனையாளர்கள் பலர் உலகில் வாழ முடியாதவர்களாக, வாழத் தெரி யாதவர்களாக, இருக்கிருர்கள். தன் அதீதமான
12

Page 52
கொழுகொம்பு 90
கற்பனையினுல் நடராஜனும் வாழத் தெரியாதவனுக, வாழ முடியாதவனுக, ஆகிவிட்டானு?
ஒரு மணியளவில் வான் குருநாகலை அடைந்தது. சாரதி வானை நிறுத்த உள்ளேயிருந்தவர்கள் எல்லாரும் ஒரு கடைக்குள்ளே மதிய போசனத்துக்காகப் புகுக் தனர். நடராஜனும் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களும் தனக் குத் தொந்தரவு தந்ததற்காக, அங்கே புகுந்து ஏதோ சாப்பிட்டான்,
மறுபடியும் புறப்பட்ட போது 15டராஜனின் மனம் தன் திடீர்ப் புறப்பாடு ஊரிலேயே என்ன விளைவுகளை உண்டாக்கியிருக்கும் என்று எண்ண மிட்டது. கனகம் கலங்குவாள் என்று அவன் மனம் சொல்லிற்று. மாமனுர் துக்கப்படலாம் என்று எண்ணினன். அப்படி நினைத்தவன், துக்கப் படுபவர் ஏன் என்னே முகத்திலடித்தது போலப் போ என்று சொல்ல வேண்டும் என்று தன்னையே கேட்டான். அந்தக் கேள்வியின் விடையே பரிணும வாதத்தில் வளர்ந்த ஜீவராசி போலப் படிப்படியாய் வளர்ந்து உருவமற்ற வெறுப்பாய் அவன் மனதை நிறைத்துக்கொண்டு நின்றது. கடைசியாகத் தன் தாயாரைப்பற்றி எண்ணினன். ,
வெறுப்புப் புகைபடிந்து இருண்டுகிடந்த அவன் மனம் தான் குடியிருந்த கோயிலை எண்ணிப்பார்த்த: போது சிறிது இலேசாயிற்று. பாவம் ! அவள் தனக்காக அழுவாள். அதுவும் தன் த க் தைல் யாருக்குப் பயந்து மெளனமாக அழுவாள் மகனேக்
ہندو;&3

9.1 கொழுகொம்பு
காணவில்லையே என்ற ஏக்கம் அவள் மனதை ஈரச் சேலையை முறுக்கிப் பிழிவது போலப் பிழிந்து கொண்டிருக்கையில், அவள் கண்கள் நீரை க் கொட்டும். ஏக்கத்தில் அவளுக்குக் கசம் பிடித்தாலும் பிடித்துவிடலாம். ஊனேயும் உறக்கத்தையும் துறந்து அவள் தன் நினைவாக வே அழுதுகொண்டிருக் திT)ெ. -
شهر ܨ“
நடராஜனுக்குப் பயமாக இருந்தது. புகையிற் சிக்குண்ட கண்கள் கண்ணிர் வடிப்பதுபோல, அவன் கண்கள் கண்ணிர்வடித்தன. சகப் பிராயாணிகளுக் குத் தெரியாமற் கண்ணிரைத் துடைத்துக்கொண் டான். மனதில் மீண்டும் கனகம் தோன்றினுள்.
அவள் உடலே வெளிறிப்போயிருந்தது. அழுத ழுது கண்கள் கலங்கிப்போய் முகம் வீங்கியிருந்தது. அவள் நடராஜனின் காலைக் கட்டிக்கொண்டு கேட் டாள், ! அத்தான்; எவரெவரோ செய்த குற்றத் திற்காக என்னையா வதைக்கிறீர்கள் ? என்று,
15டராஜன் தன் காலை உதறிக்கொண்டு கோப மாய்ச் செல்கிருன், போ, போ; உன் அப்பனைப் போலத்தானே நீயும் இருப்பாய், விடு என் காலே.
கனகம் தேம்பித்தேம்பி அழுதுகொண்டே, தன் மாமியாரின் - நடராஜனின் தாயாரின் - மடியில் வீழ்ந்து அன்று வெருகலுக்குப்போய் இடையிற் திரும்பி வீட்டுக்கு வந்தபோது, தன்தகப்பனுர் மாம னரைக் கடிந்தபோது அழுததைப்போல விம்மிப் e பொருமி அழுகிருள். தாயார் நடராஜனின் முகத்தைப் பரிதாபகரமாகப் பார்க்கிருள். அவள் பார்வையில் நீ என் மகன்தான். அதைப்போலக் கனகமும் என்

Page 53
கொழுகொம்பு 92
மகள் தான் நீங்களிருவரும் என் இருகண்களைப் போலத்தான்' என்ற பேசாத பேச்சுத் தேங்கிக் கிடக்கிறது.
இல்பொருளாகிய மாயையிலிருந்து இந்தப் பிர பஞ்சத்தையே சிருட்டித்த கடவுளைப்போல நடரா ஜனும், தன் மனக் கண்களில் இந்தக் காட்சியைத் தனக்குத்தானே சிருட்டித்துக் கொண்டபொழுது அவன் மனம், கனகத்துக்காக ஏங்கியது; இரங்கியது; அழுதது; விம்பியது; பொருமிற்று. அவன் தாயருக் காகவும் கண்ணிர் வடித்தது, கலங்கியது, கதறிற்று
இந்த நிலையில் நடராஜன் தனக்குள்ளே ஒரு தீர்மானத்துக்கு வந்தான் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்ததும், தான் சுகமாக வந்து சேர்ந்ததாகவும், தன்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம் எ ன்று ம் தாயாருக்குக் கடிதம் எழுதவேண்டுமென்பது ஒன்று.
இரண்டாவது என்ன தான் கஷ்டம் வந்தாலும் கனகத்தைக் கைவிடுவதில்லை. ஆனல் அதே 5ேரத் தில் தன் மாமனுர் வீட்டில் அடியெடுத்தே வைப்ப தில்லை
இதற்குள் வான் கொழும்பையடைந்து விட்டது. நடராஜன் தன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு இறங்கினுன் ' தன் தந்தையாருக்கு என்ன செய் வது? தன் தலை போகிற காரியமாக இருந்தாற்கூடக் கனகத்திற்கும் தனக்கும் கல்யாணம் ஆவதை அவர் அனுமதிக்க மாட்டாரே' என்றெண்ணியபோது 5ட ராஜனின் தலை மீண்டும் சுற்றியது. மனங்குன்றிப் போய் அந்த விடுதியின் விருந்தையிலிருந்த கதிரைக் குள்ளேயே ஒடுங்கிவிட்ட கடராஜனுக்குத் தந்திச் சேவகன் தந்தி ஒன்றைக் கொண்டுவந்து கொடுத் தான,

4
அபசகுணம்
டுரல்வராஜன் திருகோணமலையிலிருந்து வீட்டுக் குத் திரும்பி வந்தபோது ஐந்துமணிக்குமேலாகி விட் டது. உள்ளமும் உடலும் சோர்ந்துபோய் வந்தவன், வீட்டினுள்ளே அடியெடுத்து வைத்தபோது வீட்டிலே ஓர் அசாதாரணமான அமைதி நிலவியிருப்பதைக் கண்டான்.
சாதாரணமாகக் கிராமத்து வீடுகள் இந்த நேரங் தான் கலகலப்பாக இருக்கும். காலையில் எழுந்தால் மூன்றுமணிவரையிற் கிராமப் பெண்களுக்குத் தோட் டத்திலும் அடுக்களையிலுமாக ஒரே வேலை யாக இருக்கும். இந்த வேலைகளினுல் அலுப்படைந்த வர்கள் உச்சிவெய்யிலிலும் சில்லென்று குளிர்ந்து கொண்டிருக்கும் சீமெந்துத் தரையிலே, முந்தானேயை விரித்துக் கொடுங்கையிற் தலையை வைத்துக் கொக் கைப்போல ஒரு சிறு தூக்கம் தூங்கி எழுந்துவிட் டார்களானல், அதன்பின் முகத்தை அலம்பி வெற் றிலையைச் சுவைத்தபடியே விளக்கேற்றும் வரையிலும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
செல்வம் வீட்டிற் புகுந்தபோது இந்தச் சுவா ரஸ்யமான பேச்சைக் கேட்க முடியவில்லை. இயல் பாகவே சிவந்த உதடுகளைத் தாம்பூலத்தால் மேலும் செம்பவளமாக்கிக்கொண்டு இலட்சுமீகரமாகத் தோன் றும் எந்த முகத்தையும் காணவில்லை.

Page 54
கொழுகொம்பு 94
கனகம் என்றைக்கும் தன் வீட்டையும் பொருள் களேயும் ஒழுங்காகவே வைத்திருப்பாள். பொருள் கள் எல்லாம் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு, அந்த ஒழுங்கு முறையினல் அந்த வீடே ஒரு கலை யழகோடுதான் இருக்கும். ஆனல் இன்றைக்கு, முன் விறக்தையில் இருந்த கதிரைகள் மேசைகள் எல் லாமே முதல் நாள் இராத்திரிப் படுக்கைக்குப் போகும் போது என்ன நிலையில் இருந்தனவோ அந்த நிலை யில் ஒழுங்கற்றுக் கிடந்தன. காலையிலிருந்து கூட்டப் படாததுபோல நிலமெல்லாம் தூசும் தரும்புமாகக் கிடந்தன. மேலே சுவரிலிருந்த நடராஜர் படத்துக்குக் கூட அன்றைக்குப் பூ வைக்கப்பட்டிருக்கவில்லை ஆடிய பாதனின் காலடியிற் கிடந்து நசுங்கும் குழந்தை யைப் போல நேற்று வைத் த பூக்கள் படத்தின் காலடியிலே நசுங்கிக் கிடந்தன.
செல்லன் ஒரு கணம் யோசித்தான். எல்லாம் நடராஜன் போனதன் விளைவாகத்தான் இருக்கும் என்று அவன் மனம் சொல்லிற்று. வீட்டிலுள்ளார் இருக்கும் கலவரமான நிலையை மேலும் கொந்தளிக்கப் பண்ணுமல் தான் நடராஜனைத் திருகோணமலையிற் சந்தித்து அவனைச் சமாதானமாகக் கொழும்புக்கு அனுப்பி வைத்ததாகப் பொய் சொல்ல வேண்டும்" என்று அவன் தீர்மானித்துக் கொண்டே விருந்தை மூலையில் கதவு நிலையில், கயிற்றில் தொங்கும் மாவிலை களேப் போல் காய்ந்து சுருங்கிப் போய்ப் படுத்திருந்த தன் தாயாரை அம்மா ' என்று எழுப்பினன்.
தன் அண்ணனின் குரலைக் கேட்ட கனகம் அறைக்குள்ளிருந்து வெளியேவந்தாள். ஆடிக் காற்றி லடிபட்டு மெலிந்த இதரை வாழைக்குலையைப் போல
 
 
 

95 கொழுகொம்பு
அவள் களையிழந்து தோன்றினுள். அவள் முகத்திலே ஒரு வாட்டம். கை கால்களிலே ஒரு சோர்வு. ஆனல் வெளிறிப் போயிருந்த அவள் நீண்ட கண்களில் மட்டும் ! அண்ணன் என்ன சொல்லப் போகிருர்' என்பதையறியும் ஆவல் தேங்கி நின்றது. அண்ணன் சொல்லுவது நல்லதாக இருக்க வேண்டும்' என்று கனகம் மெளனமாகக் பிரார்த் தித் தாளோ என்னவோ; தன் கண்களில், ஏன், சர்வாங்கமுமே பொங்கியெழும் ஆவலை வார்த்தைகளாக்கிக் கேட்கக் கனகத்தினுல் முடியவில்லை. அவளைப் பார்க்கையிற் செல்வத்திற்கு அழவேண்டும் போல இருந்தது.
இதற்குள் அவன் தாயார் திடீர் என்று எழுந்து கண்ணைக் கசக்கிக்கொண்டே “ இப்போதான் வரு கிருயா?"
"ஆம், அம்மா! அப்பா எங்கே? s
* இவ்வளவுநேரமும் பைத்தியம் பிடித்தவரைப் போல இங்கேதான் இருந்தார். நானும் இப்போ தான் கண்ணயர்ந்தேன், ஏன் ? அவர் இங்கே இல் லையா ? என்ருள்.
* காணவில்லையே' என்ருன் செல்லன்.
கனகத்திற்கு ஆத்திரமாக இருந்தது. வந்த அண்ணனிடம் அம்மா ? கடராஜாவைக் காண வில்லையா ? என்று கேட்காமல் ஏதேதோ எல்லாம் பேசிக்கொண்டிருக்கிருளே. அண்ணனும் நடராஜனைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் அப்பாவைப்பற்றிக் கேட்கிருரே ' என்று அவளுக்கு எரிச்சலாகவும் இருக்

Page 55
  

Page 56
கொழுகொம்பு 98
MTNUTNMNNMMNMNY
ணமாக உணரமுடிந்தது. ஆம், நடராஜன் போன தோடு அவன் வீட்டின் கலகலப்பும் போய்விட்டது. மகிழ்ச்சி போய்விட்டது. குடும்பத்தினர் எல்லார் உள்ளத்திலும் இருந்த பெருமிதம் போய்விட்டது. அதுமட்டுமா ? பசிவந்தாற் பத்தும் பறக்கும்? என்று பாடியவரைத் தன் தோல்வியை ஒப்புக்கொள் ளும்படி நிர்ப்பந்தித்து அவ்வீட்டிற் பசியே பறந்து போய்விட்டது!
அப்படியானுல், இழவுவிழுந்த வீட்டைப் போலச் சூன்யமாகக் கிடந்த அந்த வீட்டின் எல்லா இன்பத் துக்கும் கடராஜன் தான் காரணமா ? கனகம் கலங் கினல் அதற்குக் காதல் என்று காரணம் சொல்ல லாம். ஆனல் அந்த வீட்டின் ஒவ்வொரு மனிதனும் மனிஷியும் நீரின்றி வாடிக் கிடக்கும் பயிர்கள் போலத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பது ஏன் என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஏன் ? தானே 5டராஜனுக்காக இத்தனை கவலைப்படுவது அவனுக்குப் புதிராகவே இருந்தது.
அப்போது அவன் தகப்பனர் அங்கே வந்தார். அவரின் கடையிலே மிடுக்கு இல்லை. முகத்திலே களே யில்லை. செல்லனைக் கண்டதும் கேட்டார் 'கடராஜன் எங்கே?" என்று. -
அவர் குரலிற்தான் எத்தனே சோகம், 'டேய் எண்ருல் இரண்டு மைலுக்குக் கேட்கும் தன் தகப் பணுரா இப்படித் தாழ்ந்த குரலிற் கேட்கிருர் ? ‘எல்லாரும் நடராஜனைப் பற்றிக் கவலைப்படுகிறர்களே. நாம் எல்லாரிடமும் அவனைக் காணுமலே கண்ட தாகப் பொய் சொன்னுேமே. இதனுல் என்ன ஆகுமோ? என்று எண்ணினுன் செல்லன். எல்லாருடைய கவலேயையும், எல்லாருடைய பயத்தையும் கண்ட
 

حز.
99 கொழுகொம்பு
محر uNoNMNM*N .^محی^سمبر^محيحسمبرۂ*
போது அவன் உள்ளத்தையும் பயம் பிடித்து ஆட்டத் தொடங்கிற்று. ஆனலும் அப்பாவிடமும் எப்படியோ அம்மாவிடம் சொன்ன பொய்யைத்தான் சொன்னன். கேட்டுக்கொண்டே தங்தை ஏதும் பேசாமலே உள்ளே சென்றுவிட்டார்.
செல்வராஜன் சவர்காரத்தை எடுத்துக் கொண்டு
சிந்தித்தபடியே கிணற்றடிக்குச் சென்ருன், அண்ண
னிடம் தனிமையாகப் பேசவேண்டும் என்று விரும் பிய கனகமும் குடத்தை எடுத்துக்கொண்டு அவன் பின்னுற் சென்ருள்.
அவள் வைத்த குடத்திலே தண்ணிரை நிரப் பினுன் செல்லன். கையைப் பிசைந்து கொண்டு நின்ற கனகம் அவனிடம் கேட்டாள்: 'உண்மை
யாகவே அவரைக் கண்டீர்களா ? அண்ணு' ஆசை
வெட்கமறியாது என்று சொல்கிருர்கள், பயங்கூட வெட்கமறியாதுதான். நடராஜன் என்ன ஆணுனே எங்கே போனுனே என்ற பயத்திற்தான் கனகமும் தன் அண்ணனிடம் இப்படிக் கேட்டாள்.
* உண்மையாகத்தான் பார்த்தேன். நாளைக்குப் போய்ச் சேர்ந்ததும் அவன் எனக்குக் கடிதம் எழுது வான்' என்ருன் செல்லன்.
அதற்குமேல் ஒன்றுங் கேட்காமல் கணகம் திரும்பி வரும்போது யோசனையிற் தள்ளாடிக்கொண்டிருந்த கால்கள் ஒன்றை ஒன்று இடறின. அவள் இடுப்பி லிருந்த குடம் பொத்தென்று கீழே விழுந்து உடைந்து முற்றமெங்கும் வெள்ளக்காடாகியது.
சப்தத்தைக் கேட்ட கங்தையா வெளியில் வந்து கனகத்தின் நிலையைக் கண்டதும் இதேதடா அப சகுனம்' என்று பயந்தார். அவர் மனது நிலை கொள்ளவில்லே,

Page 57
鲨。、、 -
: ';
பிட்டுக்கு மண் சுமந்த பெம்மானின் முதுகிலே பட்ட அடி, சர்வஜீவராசிகளின் மீதும் விழுக்தது. 15டராஜனின் மனதைத் துளைத்த செல்லம்பும் கக் தையாவின் வீட்டில், எல்லார் மனன்தயும் உட்லை யும் கூட, வெள்ளெருக்கஞ் சடை முடியான த் துளைத்துத் தடவிய இராமபாணம்போல வதைத்துக் கொண்டிருக்கையில் கடராஜன் கொழும்பிலே தன் விடுதியிற் பைத்தியம் பிடித்தவனைப்போல இருக்
சாயந்தரம் ஆறுமணியாகியபோது அவன் கண்பன் தியாகராஜா, கொழும்பை ஒருவளையம் வளைத்துவிட்டுவந்தான். கடர்ாஜனைக் கண்டபோது அவன் ஹல்லோ" என்று சத்தம்போட்டு ' ஏன் திடுதிப்பென வந்துவிட்ட்ரீய்?" என்ருன்
| ჯ X ჯt}\ჯ. 13 % და წმ. ზ. - . : , “ „“: {୍ ଫ୍; ଧ୍ରୁଷ୍ଟ ; ". Stசும்மா வந்துவிட்டேன்'ஸ் என்ருன் 5டராஜன். தேன்உேருவைக் கர்ந்து எவர்க்குங் தெரியாமல் இருக் குேம் இன்ற்வன் ஆபத்ப்ர்ந்தவன் ' என்ப்ார்கள் அடியார்கள். இந்தச் 'சும்மா'என்ற சொல்லையும், ஆதி சிஒன்:தமிழைப் பெற்று அகத்தியனுரிடம் கொடுக்தையில் ஆச் கொல்லிற்குத் தன் தேவாம் சத்தையும் சேர்த்தே கொடுத்துவிட்டான் போலும்,
இல்லாவிடின் இக்கட்டான நேரங்களில் இந்தச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ձ101 கொழிகொம்பு
*சும்மா' என்றசொல் தமிழனுக்குக் கைகொடுத்து ஜிதேவமுடியுமா? தியாகுவின் கேள்விக்கு நேரடியfகன விடையளிக்க இயலாதபோது5டராஜனுக்கும் இந்தச் * சும்ம்ா' என்றசொல் ஆபத்பாந்தவனுக:ஆ.
*ஆதவிற்று. , \: , " با پایهٔ نیازی نیز با این نت . தியாகுவும் சிரித்துக்கொண்டே "சும்மா, தான் சொல்லேன், திங்கட்கிழம்ைதானே வருவேன் என்று எழுதியிருந்தாய். அதற்குள் ஏன்? வந்துவிஃக்ர்ய்: தேர்தலில் தோல்வியடிைந்ததால்ா? :) :
* தேர்தற்காகவா கான்போனேன்! என்று திருப்
s -
リ بن ثالثة
பிக் கேட்டர்ன் 5 ராஜன்.
' கனகத்துக்காகத்தான் நீ போனுய் என்பது எனக்குத் தெரியும், அதுதான் கேட்கிற்ேன். ஏன் இன்ற்ைக்கே திரும்பி வந்துவிட்டாய் ? கனகம் துரத்திவிட்டாளா?' என்று கேட்டுக்கொண்டே சிரித்தான் தியாகு 鹫、。。。蕊* °
ஆம், திய்ர்கு சிரிக்கப்பிறந்தவன்; சிரிப்பதுதான் அவன் தொழில், மெடிக்கல்' கல்லூரிப் பிரவேசப் பரீட்சையில் மூன்ருந்தடவையும் தோல்வியடைந்த போது அவன் தகப்பனர் 15ாயூே, பேயே’ என்று அவனைப் பேசினர், ஆப்போது அவன் சிரித்தான். அடுத்த வருட்ம் வைத்தியக் கல்லூரியிற் புகுந்தவன் மூன்று வருடங்களுக்குப் புேரனநிலையிலேயே அசை
யாமலிருந்ததைக் கண்டு அவன் தங்தையார் இப்படி * உருப்படாத பிள்ளையைப் பெற்றதற்காகத் தன்னைத் தானே கொந்துகொண்டபோதும் அவன்*சிரித்தான்.

Page 58
கொழுகொம்பு 1 ር?
ஒரு அப்போதிக்கரியாகவாவது ஆகித் தொலை என்று அவனை ஆசீர்வதித்தபோதும் சிரித்தான். 5டராஜன் ஏதோ சோகமாக இருக்கிருண் என்று அவன் முகத்தைப் பார்த்து அறிந்திருக்தாலும், இப் போதும் தியாகு சிரித்தான்.
நடராஜனுக்கு அவன் சிரிப்பதைப் பார்த்ததும் எரிச்சலாக இருந்தது. ' என்னைத் தொந்தரவு செய் யாமற் போடாப்பா' என்று சலித்துக்கொண்டான்.
* ஏன் வந்தாய்? என்பதைச் சொல்லிவிடேன். 15ானும் தொந்தரவு செய்யமாட்டேன் ' என் முன் தியாகு.
* பிறகு சொல்கிறேன்; இப்போ எ ன் னே க் கரைச்சல் பண்ணுதே' என்ருன் நடராஜன்.
"ஏன் இப்ப சொன்னுல் என்ன ?' என்று கொண்டே தியாகு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
தியாகுவின் குணம் கடராஜனுக்குத் தெரியாதா? இனி விஷயத்தையறியாமல் அவன் விடப்போகிற தில்லை என்றெண்ணிய கடராஜன், தான் ஏன் முன்னுடியே வந்துவிட்டேன் என்பதற்கு கேரான விடையை, தன் மாமனர் தன்னை அவர் வீட்டிற்கு வரவேண்டாம் எ ன்று சொன் ன தை மட்டும் சொன்னன்.
அவன் சொன்னதைக் கேட்டதும் தியாகு அலட் சியமாகக் கேட்டான். ' வரவேண்டாம் என்று

திருக்கிருனே' என் மூன்.
103 கொழுகொம்பு
சொன்னர். வரமாட்டேன் என்று நீயும் வந்து விட்டாய்? அதற்காக ஏன் இப்படிப் பைத்தியம் பிடித்தவனைப்போல இருக்கவேண்டும்?"
*அப்போது கனகம் ? சோர்ந்து கிடந்த கட ராஜன் கதிரையிற் சற்று நிமிர்ந்து உட்கா ர் க் து கொண்டே ஆவலுடன் கேட்டான். தியாகு ஏதாவது நல்லவழி சொல்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு.
தியாகு மறுபடியும் சிரித்துக்கொண்டே “ கன கமா ? அவள் கூடப் போய்விட்டால் உனக்கென்ன கட்டம் ? கிடைத்தவரை இலாபங்தான் என்றெண் னிக்கொள். விட்டுத்தள்ளு கழுதையை' என்ரூன்.
தியாகு கூறிய சுருக்குவழி நடராஜனுக்கு ஏமாற் றத்தைத்தான் கொடுத்தது. அவன் சு பாவ மே தனக்குத் தெரிக்கிருந்தும் தியாகுவிடம் ஏன் இப் படிக் கேட்டோம் என்றிருந்தது அவனுக்கு, அவன் மெளனமாகவேயிருந்தான்.
தியாகுவுக்கு மேசையின் மேலேயிருந்த தந்தி அப் போது கண்ணிற் படவே அதை எடுத்துப் படித்தான்.
* திருகோணமலைக்கு வந்தும் சந்திக்க முடியவில்லை.
விரிவான கடிதம் தொடர்கிறது" என்று செல்வ
ராஜன் அடித்த தங்தி அது. அதைப்படித்ததும் கியாகு
5டராஜனைப் பார்த்து மச்சான் தந்திகூட அடிக்
நடராஜன் அப்போதும் மெளனமாகத்தான் இருந்தான். உள்ளுக்குள்ளே யுகாந்தகால அக்கினி போலப் பெரு நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்

Page 59
கொழுகொம்பு $104
கிையில் அதன் செங்காக்குகள் தழுவிக் கருகிய மலர் போல்ஜ் அவன் முக்ழ் இருண்டு கிடந்தது, '
AA) RAKEGA
. . . . 。 *2エ 、蒸 انڈ,3.,, தியாகுவுக்கு அவன் மேற் பரிவுண்டாயிற்று. எப்படிந்த்அேவன்ைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே,3:மச்சான்தடங் தது'க், ங்து விஃடது; அதை எண்ணித் துக்கப்படுவ அர்த்தமில்ல்ே கடக்கப்பேர்கிறதைப் பிரமாதப் படுத்தி எண்ணிக் கலங்குவதிலும் கருத்து இல்லை. W Wri a ... ' ሳነ' இன்றைக் ஆன்ந்தாக்
அலுத்துக் க்ெர்ள்ளாமல் வா! SASSeTySe e Seee yS yse ese Se STTSAAA AS S AAAAA SAsS 夺
. . . " ."مية
கான் வரவில்லை; என்ன்ைக்கப்பிடாதே."
எரிந்து விழுந்தான் நடராஜன்,
தியாகு அப்படியே கொஞ்சநேர்ம் இருந்துவிட்டுத் தன்பாட்டிற்குப் பாடினன்.'
... ... ܄܌ ..'; १'
|- இறந்த நாளுக் கிரங்குவதேன் பின்னுள் எண்ணிக் கலங்குவதேன் ' yySKS S A S SS S SS SS SS , , , , ,
KINI "X’K
பெண்ணே கிண்ணம் நிறையம்மா :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

105
கொழுகொம்பு
அதற்தாகக் கனகத்தைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அவள் இருந்த மாதிரித்தானே இருக் கிறாள்?'' என்று கேட்டான்.
'' அவள் அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் நான் அவள் வீட்டில் இனி அடி எடுத்துவைக்கமாட் டேன்'' என்றான் நடராஜன்.
''உன்னை யார் இப்போது அங்கு போகச் சொல் கிறார்கள். ஆனந்தாக் கல்லூரிக் காணிவலுக்குத் தானே வரச் சொல்கிறேன். அது உன் மாமாவின் காணி இல்லையே'' என்றான் தியாகு.
நடராஜனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அந்தச் சிரிப்பு உதய சூரியனைக் கண்டு மலரும் தாமரையின் செழுமையான சிரிப்பல்ல. மின்சார விளக்குகளின் ஒளியிலே மின்னும் கடதாசிப் பூவின் காய்ந்த சிரிப் புத்தான், ஆனாலும் தியாகுவுக்கு இது ஒரு வெற்றி தானே.
ஆனால் அதற்குள் நடராஜன் '' நான் வரவில்லை; எனக்கு அலுப்பாயிருக்கிறது. நாளைக்குப் போக லாமே" என்றபோது தியாகுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. எந்த விஷயத்திலுமே ஆழ்ந்த சிரத்தை எடுத்தறியாத அவனுக்கு அலுத்துப்போயும் விட்டது. நீரை விலக்கிப் பாலைமட்டும் பருகும் அன்னத்தைப் போல், வாழ்வின் துன்பத்தை மறந்து, இன்ப மொன்றையே அனுபவிக்கத் தெரியாத நடராஜனைப் போன்ற பிரகிருதிகளைப் பார்த்துச் சிரி சிரி என்று சிரிக்க எண்ணினான். ஆனாலும் தன் நண்பனுக்காக
14

Page 60
கொழுகொம்பு 106
அந்தச் சிரிப்பையும் அன்றிரவு அவனுக்கு இருந்த மற்றைய திட்டங்களேயும் கைவிடத் தீர்மானித்துக் கொண்டான்,
5டராஜனே வலுவில் இழுத்துக்கொண்டுபோய் இருவரும் சாப்பிட்ட பிறகு படுக்கையில் வீழ்ந்தனர். சில நிமிடங்களில் தியாகு விட்ட குறட்டை நிசப்த மான அந்த இரவைக் காலத்துண்டங்களாக அறுக்கத் தொடங்கியது.
நடராஜன் 1 கனகம் எப்போதும்போலத்தானே இருக்கிருள்' என்று தியாகு சொன்னதை நினைத்துக் கொண்டே படுத்தவன் நித்திரையாகிப் போய்விட் LIT air.
அப்போது ' நடராஜன் இங்கேதான் இருக் கிருன?' என்று கேட்டுக்கொண்டே அவன் மாமனர் கங்தையா வந்தார். -

6
6) )
நடராஜன் காலையிற் கண் விழித்தபோது அன் றிரவு கண்ட கனவுதான் நினைவுக்கு வந்தது. அவன் மாமனுர் வந்து ' வா ஊருக்குப் போவோம்' என்று அழாக் குறையாகக் கூப்பிட்டதை எண்ணியபோது அவனுக்கு ஆத்திரங்தான் வந்தது.
மனத்துள்ளே இருக்கும் கதையைக் கோவைப் படுத்தி எழுத்துரூபமாகக் கொண்டுவர முனையும் கதா சிரியனின் பிரசவ வேதனையோடு அவன் கஷ்டப் பட்டுக்கொண்டு இருந்தான்.
வெளியே மருதானைப் புகைவண்டி நிலையத்தி
லிருந்து வந்த புகையிரதங்களின் கூவென்ற சப்தம்
டிராம் வண்டிகளின் கணகணப்போடு கலந்து விந்து
காதைப் பிளந்தது, அடுத்த அறையில் இருப்பவன்
யாரென்று அறியாத பட்டணத்து 5ாகரீகத்தில்,
15டராஜனைப்பற்றிக் கவலைப்பட எவருமே இருக்க
வில்லை, தியாகுவும் இன்னமும் தூங்கிக்கொண்டிருக் தான,
யன்னலுக்கூடாகத் தெருவைப் பார்க்கையில் ஆண்களும் பெண்களும் அவசர அவசரமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள். இந்தப் பட்டினமே இப்படித்தான் எதிலும் ஓர் அவசரம்; வேகம். மனித நாகரீகத்தின் அளவுகோல் வேகங்தானே !

Page 61
கொழுகொம்பு 108
ஆனல் 15டராஜன் மனம்மட்டிலும் மந்தமாகத் தான் இருந்தது. மேலே என்ன செய்வது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அறுபத எழுபதுபேர் அடைந்து கிடக்கும் அந்த விடுதியில் அவன் ஒரு அசாதாரணமான தனி  ைம யில் கொந்துகொண் டிருந்தான். −
எட்டு மணியாகக்கூட ஆகிவிட்டது அப்போது தான் தியாகு எழுந்தான். சோம்பர் முறித்துக் கொண்டே “ இன்று வகுப்புக்குப் போறதில்லையா ? என்ருன்,
“ இன் றைக்குப் போகும் உத்தேசம் இல்லை எனக்கு அலுப்பாக இருக்கிறது. சிறிது வேலையும் இருக்கிறது ' என்ருன் நடராஜன்.
' அப்படியா சற்று இரு, வருகிறேன் ' என்று கொண்டே தியாகு பற் பசையைத் தேய்த்தவாறு வெளியிற்போனன்,
5டராஜன் இந்தத் தனிமையைப் பயன் படுத் திக்கொண்டு தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினன். தான் சுகமாகக் கொழும்புவந்து சேர்ந்ததாகவும், சொல்லிக்கொள்ளாமற் புறப்பட்டுவந்ததைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் படியும் அந்தக்கடிதத்தில் எழுதினன் அந்தக் கடிதம் எழுதியபோது அவன் மனம் இலேசாகியதுபோல இருந்தது. ஆனல் அவன் மனம் உண்மையில் இலேசாகத்தான் ஆகிவிட்டதா ? தாயார்மட்டும் கவலைப்படாமலிருந்தால் அவனுக்கு எந்தக் கவலையுமே இல்லை என்ற நிலைக்கு அவன் வந்து விட்டானு ?
 
 

109 கொழுகொம்பு
محے.
~~L^N_wN_wNLrN
பாலைவனத்து வியாபாரிகள் ஒட்டகத்தின் மீது பொதிகளைச் சுமத்துவார்களாம். பாரம் பொறுக்க மாட்டாமல் ஒட்டகம் படுத்துக் கொள்ளுமாம். உடனே வியாபாரிகள், ஏதாவது ஒரு சிறிய பொருளை அதன் முதுகிலிருந்து ஒட்டகத்தின் கண்ணுக்குத் தெரியும்படியாக எடுத்து விடுவார்களாம். தன் முதுகிலே பாரமே கிடையாது என்று எண்ணிக் கொண்டு ஒட்டகம் 5டக்குமாம். அந்த ஒட்டகங்களில் ஒன்றைப் போலத்தான் தாயாருக்குக் கடிதம் எழுதிய உடனே தன் மனப்பாரம் குறைந்ததாகக் கற்பித்துக் கொண்டு, 5டராஜனும் குளிக்கும் அறைப்பக்கமாக கடந்தான். மூட்டை தூக்கிப் பழக்கமானவன் தன் மேற் சுமையே இல்லை என்றவாறு கை வீசிக்கொண்டு 5டப்பதுபோல மனத்தின் பாரத்தை இரண்டு மூன்று 15ாட்களாகச் சுமந்து பழகியபோது அவனுக்கு அதன் அழுத்தம் தெரியவில்லைப்போலும் !
குளித்துவிட்டுத் திரும்பியபோது அவன் கண்கள் எரிந்தன ஆணுல் ஒரு உற்சாகம் உடலிலே ஏறிற்று. தன் உடைகளை அணிக்து தாயாருக்கு எழுதிய கடி தத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
புறப்பட்டவன் முன்னே தபாற்காரன்தான் நின்றன். விடுதி விலாசத்திற்கு வந்திருந்த எல்லாக் கடிதங்களையும் கடராஜனிடமே கொடுத்தான் தபாற் காரன்
கட ரா ஜூன் கடிதங்களின் விலாசத்தைப் பார்வையிட்டான், அவனுக்கு இரண்டு கடிதங்கள் வந்திருந்தன.
மற்றக் கடிதங்களை எல்லாம், வழக்கமாகக் கடிதங்களை வைக்கும் மேசையின்மேல் பரப்பி வைத்துவிட்டுத் தன்னுடைய இரண்டு கடிதங்களேயும்

Page 62
x/1^a->

Page 63
கொழுகொம்பு 113
ணியபோது அவன் கண்கள் மறுபடியும் கண்ணி ருகுத்தன. அப்பா ! கானுங்களே இனிமேலும் கலங் கப்பண்ணமாட்டேன்' என்று அவன் அந்தராத்மா முறையிட்டது.
மறுபடியும் கடிதத்தைப் படித்தான். தன் அப்பாவா இத்தனை குறைவாக எழுதியிருக்கிருர் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் ஆண்மையைத் தான் கொன்றுவிட்டதாக எண்ணி ஞன். மனஉறுதியைக் குலைத்துவிட்டதாக எண்ணி குறன். தன்னுல் அவர் மனிதத் தன்மைக்கே இழுக்கு வந்து விட்டது என எண்ணினுன்,
உடனே நடராஜன் தன் தங்தையாருக்குக் கடிதம்
எழுதத் தொடங்கினன்.
அன்புள்ள தந்தைக்கு
தங்கள் கடிதமும் காசும் கிடைத்தன. தங்கள் மனதைத் துன்பப்படுத்தியதற்காக வருந்துகிறேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். ஆனல் இனிமேலும் தங்கள் மனம் என்னுற் கலங்காது. ஆம்: என் னைப் பெற்றுவளர்த்த தங்கள் மீதானே. இனி எந்தக் காரணத்துக்காகவும் நான் மாமனுர் வீட்டில்
- அடியெடுத்து வைக்கமாட்டேன்
எழுதிக்கொண்டிருந்த நடராஜன் மறுபடியும் சிந்தித்தான். அப்பா இதைத்தானு தன்னிடமிருந்து எதிர்பார்க்கிருர் ? எல்லாப் பந்த பாசங்களையும் விட்டு விடும்படியல்லவா கேட்கிருரர். தான் கனகத்தைக் கூட விட்டுவிடத்தான் வேண்டுமா? - -
 
 

113 கொழுகொம்பு
ܕܐܫܝܓ ܐܝܓ
இப்படி எண்ணியபோது அவனுல் மேலே கடிதத் தைத் தொடர முடியவில்லை. தங்தைக்காகப் பெற்ற தாயையே கொன்றுவிட்ட பரசுராமனைப் போல, அவனும் கனகத்தைக் கொல்லா மற் கொல்ல வேண்டுமா ? என்ற கேள்வி அவன் இதயத்தை அடைத்துக்கொண்டு நின்றது. ' அத்தான் ! யாரு டையதோ குற்றத்திற்காக கானு தண்டிக்கப்படுவது? என்று கனகம் கேட்டது அவன் நினைவில் அந்தகார இருளிற் பளிச்சிடும் மின்னலைப்போல நெளிந்தது. கனகம் சரியாகத்தானே இருக்கிருள்' என்று தியாகு கேட்டது அவன் காதுகளில் ஒலித்தது.
நடராஜன் அடுத்த கடிதத்தின் ஞாபகம் வந்தவ குகை, அதை விரித்துப் படித்தான். அவன் மனம் குமுறியது. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. உடனே கடதாசி ஒன்றை எடுத்துக் கிறு கிறு என்று எழுதத் தொடங்கினன்.
15

Page 64
7
ஏமாற்றம்
நடராஜனின் கடிதத்தைப் படித்த அம்பல வாணர் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். தான் தேர்தலில் அடைந்த அவமானம் அப்படியே தன்னை விட்டுக் கழன்றதுபோல இருந்தது அவருக்கு. தன் மகன், தங்தை மகற் காற்று முதவியைச் செய்து விட்டான் என்று பெருமிதமடைந்தார். கடதாசி விளையாட்டிலே ' துரும்பு' வைத்திருந்தவன் கட தாசியை ஓங்கியடித்து, எதிரிகளின் மூல பலத்தை அடித்துப் பறிப்பதுபோலத் தன் மைத்துனன் தனக் குச் செய்த துரோகத்திற்குத் தன் மைந்தன் என்ற துரும்பை'ப் பிரயோகித்துக் கங்தையாவின் கொட்டத்தை அடக்கி விட்டதாக எண்ணினர். ‘என்ன இருந்தாலும் நடராஜன் என் மகன்; புலிக்குப் பிறக் தது பூனேயாகுமா ? என்று தனக்குத் தானே பெருத்த சத்தமாகச் சொல்லிக்கொள்கையில் அவர் மனைவி *நடராஜன் கடிதம் எழுதியிருக்கிருன?' என்று கேட்
IT Gr.
* ஏன், எழுதமாட்டான் என்ரு எண்ணினய் ? அவன் என் மகனல்லவா ?" என்ருர் அம்பலவாணர்,
* யார் இல்லை என்று சொல்லியது ?" என்ருள். Got Iraot GOTfLDIT.
' இல்லை, நீ அவன் உன் அண்ணனின் மருமகன் என்றுதானே சொல்வாய்?" என்ருர் அம்பலவாணர்,
 

115 கொழுகொம்பு
* உங்களுக்குள் என்னதான் பகை இருந்தாலும் அவன் அண்ணனுக்கு மருமகன்தானே' என்ருள் பொன்னம்மா.
' அடடே, இன்னமும் இப்படித்தான எண்ணிக் கொண்டிருக்கிருய் ' என்று குறும்புத்தனமான சிரிப் போடு சொன்ன அம்பலவாணர், பின்னர் தன் வெண் கலக் குரலில் உரத்துச் சொன்னர்: “ இந்தா, அந்த எண்ணத்தை மட்டும் விட்டிடு. கான் இருக்கும் வரை அந்த எண்ணமே உனக்கு இருக்கக்கூடாது. உன் அண்ணனுக்கும் இதைத் திட்டமாகச் சொல்லிவிடு".
பொன்னம்மா எப்போதும் போல அவர் கோபத் தைக் கண்டதும் அடங்கி விட்டாள். இப்போதைக்கு நடராஜன் கொழும்பிலே சுகமாக இருக்கிருன் " என் றது மட்டுமே அவளுக்குத் தேவையாயிருந்தது. அந்த நற்செய்தி கிடைத்துவிட்ட பிறகு, மூன்று காட்களாக மெளனமாக விம்மிக்கொண்டிருந்த அந்த்த் தாயுள் ளம் வேறெதையுமே எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. தன் வேலைகளைக் கவனிக்கப் புறப்பட்டாள்.
அம்பலவாணர் தன் மகனின் கடிதத்தை மறு முறையும் திருப்பிப் படித்தார். ' என்னைப் பெற்று வளர்த்த தங்கள் மீதாணே, இனி எந்தக் காரணத்துக் காகவும் கான் மாமனர் வீட்டில் அடி எடுத்து வைக்க மாட்டேன்' என்ற வரிகள் அவர் மனதில் இன்பத் தேனுகப் பெருகிப் பாய்ந்தன. அந்த இன்பப் போதை யின் கிறுக்கத்தில் கனகத்தைப்பற்றியோ, அல்லது தன் கல்யாணத்தைப்பற்றியோ எதையுமே எழுதா கதையிட்டு அவர் மனம் எண்ணிப்பார்க்க முடியாத தாக விருந்தது.

Page 65
கொழுகொம்பு 1 16
ܐ
ஆனந்தத்தில் அம்பலவாணர் இப்படித் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கையில், கங்தையாவின் வீட் டார், விசேடமாகச் செல்வராஜன், கடராஜன் கடிதத் தைக் கணத்துக்குக் கணம் எதிர்பார்த்துக் கொண்
டிருந்தான்.
கடராஜனைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்ததாக வீட்டிலே பொய்யும் சொல்லி விட்டான். 5டராஜன் தான் எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் எழுதப் போகிருனுே என்பதை அறிவதில் அவனுக்கு ஒரு பயங்கலந்த ஆர்வம் இருந்தது. மேலும் நடராஜன் ஆத்திரத்தில் ஏதும் ஏறு மாருக எழுதினுற்கூட அதையும் இம்முறை மறைத்து வைத்துவிட வேண்டும் என்று எண்ணினுன் ஏனென்மூல் கனகத்தைப் பார்க் கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபகரமாக இருங் தது!
கனகத்தைப் பொறுத்தவரையில் நடராஜன் போனபின் அவளுக்கு எல்லாமே சூன்யமாக இருந்தது. அவள் கன்னிகாஸ்திரி மடப் பாடசாலையிற் படித்ததி ல்ை பைபிளிற் சிறிது பரிச்சயமிருந்தது. கடவுள் உலகத்தைச் சூன்யத்திலிருந்து படைத்ததாக அந்த வேதம் கூறுகிறது. இன்று அப்படிப் படைக்கப்பட்ட உலகம் தான் சூன்யமாகி விட்டதோ அல்லது ஒன்று மில்லாமைதான் அவளுடைய உலகமாகிவிட்டதோ ? அந்த வெறுமையில் உருவமற்ற அவள் சிந்தனைகள், அத்வைதமாகக் கலந்து, அவள் சிந்தனையை வென்று விட்ட சடமாய்ப் போனுள். ஊணில்லை; உறக்கமில்லை. சரீரத்தின் எல்லா உபாதைகளையுமே வென்றுவிட்ட யோகியாய், மனித மங்தையிலிருந்து தனியணுய் விட்ட
 
 
 
 
 

*
117 கொழுகொம்பு
N ^سمصیح۔سمعی حسمبرہمحیخحجبرح
صح^محیح^محیح
சித்தனுக அவள் மாறியிருந்தாள். கிணற்றுக்கட்டில் குங்தினுள் என்ருல் ஒரு அசைவா ? ஆட்டமா ? அவள் கண்கள் எதைத் தேடின ? மேற்கே செம்பஞ்சுக் குழம்பாகிக் கிடக்கும் வானத்திலே தன் கடைசிக் கிரணங்களை வீசியவாறு மறைந்துகொண்டிருக்கும் குரியனையா ? அல்லது அந்தக் கிணற்றடியிலே நின்று விர்' என்று மறைந்து போய்விட்ட 15டராஜனையா ? மறைக்துகொண்டிருக்கும் சூரியன் அடி பேதைப் பெண்ணே இப்போது மறைகிறேன். ஆனல் எனக் காகக் காத்துக்கொண்டிரு கட்டாயமாக நாளைக் காலையில் வந்து விடுவேன்' என்று சிரித்துக்கொண்டே சொல்வதை அவள் காதுகள் கேட்கவில்லையா? பாவம்! அவள் அத்தானே எதிரில் வந்து நின்று அப்படிச் சொன்னுலும் அவள் காதுகளுக்குக் கேட்டிருக்குமா ? என்னவோ சூரியன் இருக்கிருன் என்ற பகல், அவன் மறைந்துவிட்டான் என்ற இரவு, இவைகள் கூட அவ ளுக்குத் தெரிந்திருந்ததா? சுற்றும் பாழ்வெளியாய்த், தோற்றமில்லாச் சூனியத்தில் பற்றிப் படரும் அவள் பகற் கனவு, மனக்கொடிகள் கூட அடியோடு கருகி விட்டனவா ? -
நேற்றிரவு இப்படியிருக்கையிலேதான் ' கனகம், இன்னமும் என்ன செய்து கொண்டிருக்கிருய் ? என்று அம்மா கேட்டாள். கனகத்திற்கு அவள் கேட்டது காதில் விழவில்லை.
tር:
அம்மா அவள் தோளைப் பிடித்துக் குலுக்கிக் கனகம்' என்முள்.
தன் நிலையை உணர்ந்த கனகம் 'அம்மாவின் கைகளிற் புதைக்துகொண்டு விம்மினுள். ஆம்:

Page 66
கொழுகொம்பு 118
மதுரையை எரித்த கண்ணகிக்கக் கோயில் கட்டி விழாவெடுக்கும் தனிச் சிறப்புப்படைத்த இந்தக் கீழக் கரை இலங்கையிற்கூட இன்னமும் கல்யாண வய தடைந்ததும் பெண் அழுதுதான் ஆகவேண்டியிருக் கிறது. ஒருத்தி தனக்குச் சீதனம் இல்லாததற்காக அழுவாள். இன்னுெருத்தி தான் அழகாயில்லையே என்பதற்காக அழுவாள். வேருெருத்தி தான் அழகி யாகப் பிறந்ததற்காக அழுவாள். வேருெருத்தி தன் பெண்மைக்குக் கயவர்களால் மாசு கற்பிக்கப்பட் டதை நினைத்து அழுவாள். ஆணுற் கனகம் இவை களில் எதற்காக அழுதாள் ? ஒன்றிற்குமில்லாவிட் டால் கல்யாணம் என்ருல் பெண்கள் அழுதுதான் ஆகவேண்டும் என்பதுதான் விகியா ? இந்த விதியை மாற்ற எவராலுமே முடியாதா ?
அழுதழுது உருகிப்போன கனகம் அன்று காலை யில் எழுந்த போது அவள் மனத்தில் இன்றைக்கு அத்தான் கடிதம் எழுதுவார்' என்ற ஒரு நம்பிக்கை பிறந்தது. மழைபோலப் பெருகிய கண்ணீர் வெள்ளத் தின் ஈரத்திலே இந்த கம்பிக்கை வித்து முளை விட்ட தற்குக் கனகத்தின் உள்ளத்தின் அடித் தளத்திலே * அத்தான் என்னைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட மாட்டாரா?' என்ற அவள் எண்ணந்தான் காரணம்,
அதனுல் என்ன? எதுவாயிருந்தாலும் இருக்கட் டும். மனிதன் மனிதனுக வாழ்வதற்கு இப்படி ஏதாவது ஒரு கம்பிக்கைதான் பற்றுக்கோடு, அந்த கம்பிக்கை தெய்வமாகவும் இருக்கலாம்; அல்லது தெய்வத்தின் சாயலான மனிதனுகவும் இருக்கலாம். ஆனல் இப்படி ஏதாவது ஒரு கம்பிக்கைமட்டும் இல்லாமலிருந்தால்,

119 கொழுகொம்பு
உலகில் 5டக்கும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் கண்டு சிந்திக்கத் தெரிந்த எவனுலும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க முடியாது !
கனகம் இப்படி கம்பிக்கொண்டிருக்கும் போது, செல்வம், 5டராஜனின் கடிதத்தை அது வீட்டுக்கு வர முன்னமே தான் இரகசியமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தபாற் கங்தோர்ப் பக்க மாகப் போனன். அந்தக் கடிதத்தில் ஏதும் சுபமாக இருந்தால் அதை வீட்டிலுள்ளவர்களுக்குக் காட்டு வது; அல்லது கடிதத்தையே மறைத் து கடராஜன் கடிதமே அனுப்பவில்லை என்று சொல்லிவிடுவது என் றெண்ணிக்கொண்டான்.
அவன் எதிர்பார்த்தபடி 5டராஜன் கடிதம் அவனுக்குக் கிடைத்தது. செல்வம் பரபரப்போடு அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தான். பத்தி பத்தியாக எழுதும் நடராஜன் ஓரிரண்டு வரிகள் தான் எழுதியிருந்ததைக் கண்டபோதே அவனுக்குத் திகிலாயிருந்தது.
அந்தக் கடிதத்தில் கடராஜன் எழுதியிருந்தான்: * உமது கடிதம் கிடைத்தது. அங்கிருந்து எந்த உப சாரத்தையும் கான் எதிர்பார்க்கவில்லை. கனகத்தைப் பற்றி நீரோ உமது தங்தையோ இனி எந்தவிதமான கடிதமும் எனக்கு எழுதவேண்டாம்.'
கடிதத்தைப் படித்த செல்வராஜன் பலியாடு போல முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

Page 67
கொழுகொம்பு 120
அவனைக் கண்டதும் கனகம் கேட்டாள் " தபாற் காரன் வந்திற்ருனு அண்ணு '
'எனக்குத் தெரியாதே' என்று சிரமப்பட்டுத் தன் உணர்ச்சிகளை மறைத்துச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்,
கனகம், தாகூரின் குழந்தைத் தபாற்காரன் என்ற பாடலில் வரும் தாயைப் போலக் கடிதத்துக்காகப் காத்துக்கொண்டு யன்னலோரமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆணுல் அந்தக் கல் கெஞ்சனுன தபாற்காரன், கவியரசர் தாகூரின் தபாற் காரனைப்போலவே கடராஜன் கடிதங்களை மட்டும் தான் படிப்பதற்குப் போலும் எடுத்துக்கொண்டு கனகத்தின் வீட்டைத் தாண்டிச் சென்ஞன், கன கத்தின் முகத்தைச் சோகம் கப்பிக்கொள்ள வைகறை யின் தண்மையில் வெண்பனி தோய்ந்து இள நகை காட்டி நிற்கும் மல்லிகையைப்போன்ற அவள் எழில் முகம் இருண்டு கறுத்தது. தாகூரின் பெண்ணுக் காவது “ அம்மா, அப்பா கடிதம் எழுதாவிட்டால் என்ன ? எனக்கு எழுதத் தெரியும். கான் கடிதம் எழுதி அப்பாவைப்போலத் தபாற்காரனிடம் கொடுக் காமல் 15ானே உன்னிடம் கொண்டுவந்து தருகிறேன்' என்று தன் மழலை மொழியால் அவள் முகத்தை மலரச் செய்ய ஒரு குழங்தையாவது இருந்தது. ஆணுற் கனகத்தைத் தேற்றுவார் யார் ?
நடராஜன் கடிதம் இல்லாததைக் கண்டு அந்த வீடே மறுபடியும் துக்கத்திலாழ்ந்தது. மாலையான போது, கடராஜன் அம்பலவாணருக்குக் கடிதம் எழுதி
 
 
 
 

121 கொழுகொம்பு
யிருந்த செய்தி உருமாறித் திரிந்து அந்த வீட்டுக்கும் வந்து சேர்ந்தது. ' நடராஜனுக்கும் கனகத்திற்கும் மேற்கொண்டும் எந்தத் தொடர்புக்குமே இடமில்லை' என்றவாறு அந்தச் செய்தி கனகத்தின் காதுகளில் விழுந்தபோது கனகம் துடித்தாள். வீட்டுக்குள்ளே யிருந்துகொள்ளமுடியாமல் கிணற்றடிப் பக்கமாக வந்தவள் கிணற்றுக் கட்டிற் சாய்ந்துகொண்டிருந்த செல்வராஜனிடம் 8 அண்ணு அவர் உண்மையாகக் கடிதமே எழுதவில்லையா ?” என்ருள்,
செல்வனுக்கு என்ன தோன்றிற்ருே சட்டைப் பையில் மறைத்த வைத்திருந்த அந்தக் கடிதத்தை அவளிடம் நீட்டினன். அதைப் படித்த கனகம் * ஐயோ!' என்று பென்னம் பெருஞ் சப்தமாக அல றிய அலறல் அந்தச் சுற்றுப்புறத்தையே திடுக்கிட வைத்தது.
வீட்டுக்குள்ளிருந்தவர்கள் எல்லோரும் விழுக் தடித்துக்கொண்டு கிணற்றடிக்கு ஓடினர்கள்,
6

Page 68
S காதல் உள்ளம்
(5ாட்கள் சில சென்றன. காலம் மனத் துக்கத் தையும் ஆத்திரத்தையும் ஆற்றிவிடும் என்று சொல் வார்கள். ஆணுல் காதல் நினைவுகள் மட்டும் சங்கிலிப் பின்னல்போலத் தொடர்ந்து கற்ப காலத்துக்கு, யுக யுகாந்திரமாய் நிற்குமாம் ஏன் ? பாரதியாரின் சின்னக் குயிலி, தன் முற்பிறப்புக் கதைகளைச் சொல்லவில்லையா ? கடல் கொண்ட கபாடபுரத்து அணங்கு, எத்தனையோ காலத்திற்குப் பிறகும் புது மைப்பித்தனின் காதலை நினை வைத் தெளிந்து வைத் திருக்கவில்லையா ? இவையெல்லாம் கற்பனை எனினும், மனித மனத்தின் இயல்புகள்தாம் !
வாழ்வைச் சுகிப்பதையே கலையாகக் கொண்ட தியாகு ஓரளவிற்கு கடராஜனின் துக்கத்தை ஆற்றித் தான் விட்டான் 1 ஆனல் கனகத்தைப் பற்றிய எண்ணங்களை மாற்றிவிட அவனுல் முடியவேயில்லை,
கனகம் ஒருத்தியோடுதான் 15டராஜனுக்கு கட்பு, மானசீகமான அன்பு இருந்தது. தியாகுவை எடுத் துக்கொண்டால் அவன்கூட எத்தனையோ பெண்க ளோடு 15ட்பாகத்தான் இருந்தான். வகுப்பு முடிந்து வெளிக்கிளம்பியதுமே அவன் யாராவது ஒருபெண் ணுேடு விக்ரோறியாப் பூங்தோட்டத்திலோ, குதிரைப் பந்தய மைதானத்திலோ சுற்று வான். அந்தப் பெண்ணுேடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவான். அவர்
 

123 கொழுகொம்பு
களேப் பார்த்தால் அறியாதவர்கள் எவருமே ஆ! என்ன ஒற்றுமையான தம்பதிகள்' என்றுதான் சொல்லவேண்டியிருக்கும்படி அத்தனே அன் னி யோன்னிய மாகத்தான் இருப்பார்கள். அவன் அவர்களுடன் திரிந்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அதிகமாகப் பன்னிரண்டு மணிக்கு மேலாகியிருக்கும். வந்ததும் எந்தக் கவலையுமே இல்லாதவனுக நித் திரையில் ஆழ்ந்து விடுகிறன். ஆனல் அவர்களில் எந்தப் பெண்ணுக்காகவாவது தியாகு இரக்கப்பட் டிருக்கிருஞ ? - . . . . .
காம் எல்லோருமே தியாகுவுக்கு எந்தப் பெண் னின் மேலேயும் காதல் இல்லை என்று திட்டமாகக் சொல்லிவிடலாம். எந்தப் பெண்ணுக்காகவும் தியாகு இரக்கப்பட்டதில்லை; கவலைப்பட்டது கிடையாது.
ஆனல் ஆயிரம் சங்குகட்கிடையே முழங்கும் பாஞ்ச்சன்னியச் சங்குபோல, நடராஜனின் வெறுப்பும், பழிவாங்கும் வஞ்சமும், தங்தையின் மானத்தைக் காப்பாற்றவேண்டிய கடமையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளிடையே கனகம் இதற்கெல்லாம் என்ன செய்வாள்? என்ற இரக்கவுணர்ச்சி தலை தூக்கு கிறதே. அது என்ன? கொழும்பு அவசரத்திற் தன்னை மறந்தும், கேளிக்கைகளிற் திளைத்தும் வந்த வன், மோனமாம் தனிமையில், நிசியின் அந்தகார இருளிற் கனகத்துக்காகக் கண்ணிர் வடிக்கிருனே, அது ஏன் ? வாழ்க்கையின் பலதிறப்பட்டவர்கள் ஒருங்கே குழுமியிருக்கும் அந்த விடுதியில், கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட குழந்தையைப்போலத் தனிமையிலே தவிக்கிருனே, அது ஏன் ?

Page 69
  

Page 70
கொழுகொம்பு 126
இருளிலே வெள்ளித்திரையிற் படம் ஒடத் தொடங்கிற்று. இளமைதொட்டுப் பழகிய காதலர்கள் பிரிக்கப்படுகிமூர்கள் திரையிலே. காதலன் தனிமை யிலிருந்துகொண்டு அமரகவி பாரதியாரின் பாட லொன்றைப் பாடுகிறன்:
கன்னி வயதிலுன்னைக் கண்டதில்லையோ - கன்னம் கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண் டாவியுமொன் ருகும்எனக் கொண்டதில்லையோ
கடராஜனுக்கு அழுகையே வந்துவிட்டது. அதற் குமேல் அவனுற் படத்தைப் பார்க்கவே முடிய வில்லை திடீரென்று எழுந்து வந்தவன் 5ேராகத்தன் விடுதிக்கு வந்து படுக்கையிற் பொத்தென்று சாய்ங் தான்.
அவனைப் பின்தொடர்ந்து வந்த தியாகு 1 ஏன் எழுந்து வந்துவிட்டாய்?' என்று கேட்டான்.
* எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை.”
" ஏன் கன்ருகத்தானே இருக்கிறது. அதுவும் கலாதேவி கற்பகம் கடிக்கும் படமல்லவா ?”
* யார் நடித்தாலும் நடிக்கட்டும்; என்னைத் தொங் தரவு செய்யாதே' என்ருன் நடராஜன்.
தியாகுவுக்கும் அவன்போக்கு அலுத்துவிட்டது. இப்படியும் ஒரு பைத்தியம் இருக்க முடியுமா என்று தான் அவனுக்குப் பட்டது. எனவே வெறுப்போடு கேட்டான்: ' நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக் கிருய் நடராஜா ? .

12? கொழுகொம்பு
* இனி என்னத்தை நினைக்கிறது. நான் இனி எவருக்குமே தொங்தரவாக இருக்கிறதில்லை என்று தான் ' என்ருன் 5டராஜன்.
* அப்படியென்ருல் ?" * இனி உலகிலேயே இருப்பதில்லை என்றுதான்."
தியாகு சிரித்தான் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே “மடையா ! இத்தனை தூரத்துக்கு வந்து விட்டாயா ? உலகத்துக்கே வெறுக்கும் அளவுக்கு உனக்கு என்னதான் கடந்துவிட்டது' என்ருன் தியாகு,
நடராஜன் எதையோ எண்ணிக்கொண்டு 8 இப் போது மணி என்ன?’ என்ருன்.
* ஏழேகால், ஏன் ?' என்ருன்.
* நான் இப்போதே ஊருக்குப் போகப் போகி றேன். திருகோணமலை வண்டி எ ட் டு மணிக் குத் தானே ?
* சரி தாராளமாகப் போ. வேண்டுமானுல் கானும் வருகிறேன்' என்ருன் தியாகு.
நடராஜன் எழுந்திருந்து சில உடுப்புகளைப் பார் சலாகச் சுற்றி எடுத்துக்கொண்டு கோட்டைப் புகை யிரத நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான். .

Page 71
19 வழி
கிணற்றடியில் மூர்ச்சையாகிவிட்ட கனகத்தைக் கைத் தூக்காகத் தூக்கிக்கொண்டு வீ ட்டுக் குள் கொண்டுவந்தார்கள். ஏன் அந்தக் கடிதத்தை அவ ளிடம் காட்டினேன் என்றிருந்தது செல்வராஜனுக்கு.
கனகம் போட்ட கூச்சலிலும் சந்தடியிலும் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோருமே அங்கு வந்து விட்டார்கள் வந்தவர்கள் அரை குறையாக விஷயத்தை விளங்கிக்கொண்டு அநுதாப வார்த் தைகள் பேசுகையில் அந்த வார்த்தைகள் கங்தை யாவின் காதில் ஈயத்தைக் காய்ச்சி வார்ப்பதுபோல இருந்தன. துன்பத்தின் கடை சிக் கோட்டிலே நின்றவர் மனம் திடீரென்று கொதித்தபோது அவர் மறுபடியும் தன் சுயரூபத்தைக் காட்டினர். அம்பல வாணருக்கோ நடராஜனுக்கோ அவர் எதிலே இளக்க மானவர் ? I *
கனகம் மூர்ச்சை தெளிந்துவிட்டாள். அப் போது கண்ருக இருண்டுவிட்டது. இருளிலே தனி மையில் கடந்து கடந்து, கங்தையா மேலே கடக்க வேண்டியதற்குத் திட்டம் போட்டுக் கொண் டிருந்தார்.
குட்டோடு சூடாகக் கனகத்தை யாருக்காவது கல்யாணஞ்செய்து வைத்தாற்ருன் தன் மைத்துனர்

139 கொழுகொம்பு
கொட்டத்தை அடக்கலாம் என்று அவர் நினைவுகள் ஓடின.
திடீரென்று அறைக்குள்ளே வந்தவர் புத்த கத்தை விரித்தபடியே சிந்தித்துக்கொண்டிருந்த செல் லனிடம் ' ஏண்டா அவன் என்ன எழுதியிருந்தான்? என்ருர். அவர் கேள்வியை எதிரொலித்து அந்த அறைச்சுவர்கள் அலறின.
* ஒன்றும் எழுதவில்லையே அப்பா !” என்ருன் செல்லன்,
* ஏண்டா பொய் சொல்லுகிருய் ? உனக்கென் னடா அவனுக்கு அவ்வளவு பயம் ?
* ஏனப்பா நான் பயப்படவேண்டும் ?' என்ருன் செல்லன். ஏதாவது விடை சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற இக்கட்டில் அவன் வாய் இப்படி உளறிற்று.
* பிறகு ஏன் அவனுக்குப் பின்னல் வால் பிடித்துக்கொண்டு போனுய்?"
செல்லன் அதற்கு விடை சொல்லாமல் நின்றன். அப்பாவின் பேச்சுக்கு என்ன தான் பயந்தாலும், தன்னுல் கனகத்துக்கும் 5டராஜனுக்கும் உள்ள சம் பந்தம் எவ்விதமாயினும் அறுந்து விடக்கூடாது என்ற வைராக்கியம் அவன் மனதிலேயிருந்தது,
மெளனமாக நின்ற செல்லனிடம் * நீ எப்போ
பாடசாலைக்குப் போகிறது?’ என்ருர்,
1?

Page 72
கொழுகொம்பு 130
* அடுத்த வாரம் போகவேண்டும் அப்பா' என்ருன் செல்லன்.
* சரிதான் அத ற்குள்ளாக இதற்கெல்லாம் ஒரு முடிவு காணவேண்டும்; கனகத்துக்குக் கலியாணம் கடத்தவேண்டும்' என்ருர்,
* அப்பா" என்ருன் செல்லன். * என்னடா அது ?" என்று அ த ட் டி ன ர் கங்தையா, -
* அப்பா ! உங்கள் கோபம் எத்தனை காலத் துக்குத்தான் இப்படி இருக்கப் போ கின்றது ? கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள் அப்பா !” என்ருன் செல்லன்.
'அட உன்னிடந்தான் யோசனை கேட்கவேண்டு மாக்கும் கான் போடா போ அந்தப் பயல் மட்டும் தன் அப்பாவுக்காக இத்தனை குதி குதிக்கையில் நீ என்னடா, இடையிலே யோசிக்கச் சொல்கிருனும் யோசிக்க..' என்று ஏளனமாகப் பேசினர் கங்தையா.
* அப்பா ! அந்தப் படுபாவி சண்முகம் உங்கள் மனத்தை கன்ருகக் கெடுத்துவிட்டானப்பா ! உங்கள் தனிப்பட்ட குரோதங்களுக்குக் கனகத்தின் உணர்ச்சி களைப் பலியிடுவது தகாது' என்ருன் செல்லன்.
வளர்த்த கடா மார்பிற் பாய்ந்த கதையாக, அருமையாக வளர்த்த, அந்தப் பெருதபிள்ளை' கட ராஜன் அவரைத் தாக்குகையில், தான் பெற்ற பிள்ளைகூட அவனுக்காகப் பரிந்து பேசு வ தைப்
 

13 கொழுகொம்பு
݂ ݂
பார்க்கையில் கங்தையாவுக்குப் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை, பற்களை நறகறவென்று கடித்துக்கொண்டே “ போடா போ " உன்னிடம் கேட்டுக்கொண்டுதான நான் எல்லாக் காரியங்களையும் கடத்துகிறது, செய்யவேண்டியது எனக்குத் தெரியும். பேசாமல் வாயைப் பொத்திக் கொண்டு பாடசாலைக்கு ஒருவாரம் லீவு எழுதிக் கேட்டுக்கொள் ' என்று சொல்லிக்கொண்டேபோக
முயன்ருர் கங்தையா,
ஆணுல் இயந்திரத் துப்பாக்கிக்கு முன்னே ராம காமபஜனையுடன் தன் மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு நிற்கும் உள்ளொளியும், தன் கம்பிக்கையும் படைத்த இலட்சியவாதியான சத்தியாக்கிரகியைப் போலச் செல்லன் அவர் கோபத்துக்கும் மிரட்ட லுக்கும் பயப்படாமல் 'அப்பா நீங்கள் செய்ய இருக்கும் காரியம் தகாது. ஒருக்காலும் அது 15டக்கக் கூடாது கடக்கவும் கான் விடமாட்டேன்' என்ருன்.
* நீ என்னடா செய்துவிடுவாய்?" என்று முழங் கினர் கங்தையா.
* அப்பா கான் கோழையல்ல. தீமையை எதிர்த்து நிற்க எனக்குத் தைரியம் உண்டு ' என்ருன் செல்லன். அவனுக்குத்தான் எத்தனே துணிவு கிணற்றடியிலே நிற்கும் கமுகுபோல நீண்டுமெலிந்த அந்தச் சிறிய உடலுக்குள்ளா இத்தனை மனத்திண்மை அடங்கிக் கிடக்கிறது? தன் மைந்தனின் மனவுறுதியைக்கண்டு தங்தைக்கே ஆச்சரியமாக இருந்தது.
தங்தைக்கும் மகனுக்கும் கடந்த இந்தச் சம்பா ஷணைகளை அடுத்த அறைக்குள்ளேயிருந்து கனகம்

Page 73
கொழுகொம்பு 1ვ2
கேட்டுக்கொண்டு இருந்தாள். அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கிரெளஞ்ச மிதுனத்தில் அன்றிற் பறவையைக் கொன்ற கிராதகனன வேடனைப்போலத் தன்னையும் பிரிவுத் துயருள்ளாக்க எண்ணும் தந்தை யாரிடம் சூடாக இரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று அவள் துடித்தாள்.
வெளியே சோ க மே உருவெடுத்தாற்போன்று வந்த கனகம் தன் தங்தையாரின் 'நீ எங்கே வந்தாய்?" என்ற குரலைக் கேட்டதும் திடுக்கிட்டாள்.
* அவள் வரத்தான் வேண்டும். அவள் எதிர் காலத்தைப்பற்றி காம் பேசுவதையெல்லாம் அவளும் கேட்கத்தான் வேண்டும் ' என்று ஆத்திரத்தோடு சொன்னுன் செல்லன்.
அண்ணன் தனக்கு ஆதரவாகப் பேசுவதைக் கேட்ட கனகத்திற்குத் தெம்பு வந்தது “ அப்பா நீங்கள். ' என்று ஏதோ சொல்லவாயெடுத்தாள்.
கங்தையா குறுக்கிட்டு ' ஏன்? இரண்டுபேரும் சேர்ந்து திட்டமிட்டுத்தான் எல்லாம் கடத்துகிறீர் களா ?” என்ருர்,
* எந்தத் திட்டம் போடுவதற்கும் இப் போ அவசரம் ஒன்றும் ஏற்படவில்லையே அப்பா. நீங்கள் ஆத்திரப்படுகிறீர்கள்' என்ருன் செல்லன்.
கொதிக்கிற கொதிப்பு உனக்கென்னடா தெரியும் ? என்னல் வெளியிலே தலையைக்காட்ட முடியவில்லை.
" ஏனடா அவசரம் ஏற்படவில்லை. உன் LorLDIT :
 
 
 
 
 

133 கொழுகொம்பு
என்ருர் கங்தையா. அவர் உணர்ச்சி தட்டைப்பீங் கானிலே ஊற்றப்பட்ட சுடுகழைப்போல ஆறிக் கொண்டு வந்தது.
"15மக்கென்னப்பா அவமானம் வந்துவிட்டது? அவர் தராவிட்டால் கடராஜனை வைத்துக்கொள் ளட்டுமே. அதனல் 15மக்கு என்ன குறைந்துவிடப் போகிறது ? காம் என்ன அவர் வீட்டிலேயா மண்டி யிடப்போகிருேம்? இத்தனை ஆடுமேய்கிற இடத்திலா ஒருகுட்டி மேய இடமிராது ? அதற்காகக் கனகத் தைப் பாழுங் கிணற்றிலா தள்ளவேண்டும்?' என்ருன் செல்லன். அப்பாவின் மனமாற்றத்தை விளங்கிக் கொண்டு இளகின இரும்பிலே மேலும் மேலும் அடிக்கும் கொல்லனைப்போலப் பாட்டிமார் பாணியிற் பேசிய பேச்சுக்கள், தங்தையாரின் நெட்டிருப்புப் பாறையாகிய மனத்துள்ளே பசுமரத்து வேர்கள் போலத் துளைத்துச் சென்றன. கோட்டிலே வாய்ச் சாலமான நியாயதுரந்தரரை ஏற்படுத்திவிட்டு அவர் வாதத்திலே தன்னை மறந்து நிற்கும் வழக்காளியைப் போலக் கனகம் அண்ணனின் பேச்சுக்களைக் கேட் டுக்கொண்டு நின்ருள்.
மகனின் வாதத்திற்கு எதிர்கிற்க மாட்டாத கங்தையா 'ஆனல் என்னதான் இருந்தாலும் இனி கான் அவனிடம் மாப்பிள்ளை கேட்கப் போகமாட்டேன். அதைமட்டும் இருவரும் மனதில் வைத்துக்கொள் ளுங்கள் ' என்று ஆற்ருமையாற் கதறினர்.
* நீங்கள் போகவேண்டாம் அப்பா. ஆனல் அதற்காக அந்த உதவாக்கரைச் சுந்தரத்திற்கும்

Page 74
கொழுகொம்பு 134
sonaaaaaaaa
நமக்கும் உறவு வேண்டாம். அதைத்தான் நானும் சொல்கிறேன்" என்ருன் செல்லன்,
* அப்போது, ஒருவரும் சாப்பிடுகிறதில்லையா ?” என்று கேட்டுக்கொண்டே கனகத்தின் தாயார் அங்கு வந்தாள். - -
* எனக்கு பசிக்கவில்லையம்மா' என்ருள் கனகம், *நீ போய்ச் சோற்றைப் போடு' என்ருர் கங் தையா. அவருக்குப் பசி வயிற்றைக் கிள்ளிக்கொண்டு தானிருந்தது.
* பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் ' எ ன்பது பாட்டு. ஆனற் கங்தையாவிற்குப் பத்தும் பறந்தது பசியினல் அல்ல. ஆனல் பசியடங்கிச் சுயமான போது பறந்துவிட்ட எல்லாமே அவருக்குத் திரும்பி வந்ததோ என்னவோ !
கனகமும், செல்லனும் அவரை கன்ருகக் கனிய வைத்துத் தங்கள் வழிக்கு கொண்டுவந்து விட் டார்கள். அந்த வழி கல்லும் முள்ளுமற்ற இராஜ பாட்டையாகத்தான் இருந்தது. ஆனலும் அந்தப் பாதை எங்கே முடியப்போகிறது? தார் ரோட்டு
வழ வழவென்று அழகாக இருந்தாலும் அதன் இரு
கரையும் என்றைக்குமே சக்திக்காது அப்படியேதான் போய்க்கொண்டிருக்கும். அந்த ரோ ட்டின் ஒரு கரையில் கனகமும் மறுகரையில் நடராஜனும் நின்முல்..? ஆனல் (5டராஜன்தான் கண்ணுக்குத் தெரியாமல் முன்னே வெகுதூரம் போய்விட்டானே? * காம் நிற்கும் கரைப்பக்கமாகவே கடந்துபோவமே .
என்று கனகமும் கடராஜனும் தீர்மானித்தனர்.
 
 
 

நடராஜன் மூதூருக்குப் போவதெனப் புறப் பட்டவனல்லவா? தன் விடுதியிலிருந்து புறப்பட்ட வன், மருதானே எல்பின்ஸ்ரன் தியேட்டர் 'ச் சந்தி யிலே ட்ராமுக்காகக் காத்துக்கொண்டு நின்றன்.
தியாகுவுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. கிளித் தட்டு மறிக்கையில் எதிர்க்கட்சிக்காரனைக் கோட் டைத் தாண்டவிடாது மறிப்பவன், தன் எதிரி நடந்தால் தானும் கடப்பான்; அவன் தரித்தால் இவனும் நிற்பானல்லவா ? அப்படிக் கிளித்தட்டு விளையாடுபவனைப்போலத் தியாகுவும், டு டராஜன் கடந்தபோது கடந்து, அவன் தரித்தபோது தரித்து
நடராஜனை மூதூருக்குப் போக விடக்கூடாது என்று கொழும்பு டராம்வண்டி நினைத்திருக்க, வேண்டும் அரைமணித்தியாலமாகியும் வண்டி ஒன் றுமே வரவில்லை. ட்ராம் வண்டிக்காகக் காத்துக் கொண்டுகின்ற நடராஜன் மனத்திலே மறுபடியும் பள்ளத்துட் தேங்கிய மழைத்தண்ணிருக்குள்ளே குறுக்கும் மறுக்கும் ஒடித்திரியும் வாற்பேத்தைகள் போலப் பல வினக்கள் ஒடிக்கொண்டிருந்தன. மூதூ ருக்குப்போய் என்ன செய்வது? யாரைச் சந்திப்பது ? அப்பாவுக்கு என்ன சொல்வது ? உலைவாயால் மூட முடியாத ஊர் வாய்க்குத்தான் என்ன சொல்வது?

Page 75
கொழுகொம்பு 136
۔۔۔۔۔۔محصے۔۔۔--محصے
மழைக் காளான்போன்று திடுதிப்பென்று எழுந்த கேள்விகளுக்கு விடைகள்தாம் அவனுக்குத் தெரிய வில்லை, ஆராய்வுணர்வோடு குழந்தை கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாத தாய், குழங் தையைக் கோபிப்பது போன்று அவனுக்குள் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் அவனுக்கு விடை தெரி யாதபோது அத்தனை கேள்விகளையும் கேட்க இருக்கும் தன் ஊரையே வெறுத்தான். கோப்பிக்கொட்டை வறுத்த சட்டியிலே மிஞ்சியிருக்கும் குட்டைப்போல, நினைவுகள் உருண்ட அவன் மனதிலே வெறுப்புத் தான் மிஞ்சியிருந்தது !
நடராஜன் தன் கையிலிருந்த மணிக்கூட்டைப் பார்த்தான். எட்டு மணிக்கு மேலாகி விட்டது. 15ட ராஜன் வந்த திக்கிற் திரும்பிக்கொண்டே ' வா போவோம் ' என்றன்.
* எங்கே?' என்ருன் தியா கு. இதுவரையும் வாய்விட்டுச் சிரித்துப்பழகிய தியாகுவுக்கு, வந்த சிரிப்பை அடக்கிக் குறுநகையாக முகத்திற் படர விட்டபோது அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.
* விடுதிக்குத்தான் போவோம்' என்ருன் கட ராஜன்.
* ஏன் ஊருக்குப் போகவில்லையா?" என்ருன் தியாகு. அவனுல் இன்னமும் சிரி ப்பை ய டக் கி க் கொள்ள முடியாமற் போகவே வாய்விட்டே சிரித் தான்.
* ஏன் சிரிக்கிருய்?" என்று கோபத்தோடு கேட் LLIT Gör. - -
 

13? கொழுகொம்பு
' இல்லை. தீ ஊருக்குப் புறப்பட்ட கெதியும் திரும்பிய வேகமும். நினைத்தால் யாருக்குத்தரன் சிரிப்புவர்ாது? என்ருன்தியாகு: ஃr ' ஊர்: சை! அந்த ஊரில் "இனிமேல் அடி ப்ெடுத்துவைக்கிறதே இல்லை" என்ற நடராஜன் மேலே வேகமாக கடந்தான். '
&
நடராஜன் என்ன ? கல்வியிற் பெரிய கம்பன் கூடத் தன்னை நன்கு மதிக்காத கொங்கு காட்டை * நீரெலாஞ் சேற்றின் காற்றம் நிலமெலாம் கல்லும் முள்ளும்' என்று இகழ்ந்துரைத்து, அங்காட்டைக் கனவிலும் நினைக்கொணுது என்று வெறுத்து ஒதுக்கி விடவில்லையா ? தன் மாமனுரோ தன்னைச் சரியாக மதிக்கவில்லை என்று நடராஜன் எண்ணியபோது அந்த ஊரே அவனே இனி மதியாது என கடராஜன் எண்ணினன். இந்த எண்ணம் அவனைப் பிறந்த நாட்டையே வெறுக்கச் செய்துவிட்டால், அதில் ஆச் சரியப்பட என்ன இருக்கிறது ?
கேரே விடுதியை அடைந்ததும், நடராஜனிடம் தியாகு கேட்டான் 'இனி என்னதான் செய்யப் போகிரூய்? என்று. $: ' ' .. ' ' : '',
* முதலில் எனக்கு ஒருவேலை தேடவேண்டும்?" என்ருன் 5டராஜன்.
'வேலையா? மூன்று மாதத்திற் பரீட்சை முடிந்து விட்டால் வேலை தானுகவே வந்துவிடுமே, அதற்குள் என்ன, தேடுவது?" என்ருன் தியாகு. ".
'அதுவரையும் பொறுத்திருக்க முடியாது?
என்ருன் நடராஜன், /ーマ
*எதற்காக ! β) 9
18

Page 76
கொழுகொம்பு 138
* எதற்காகவா? அப்பாவின் சம்மதத்தைப் பெற் றுக்கொண்டு கன க த்தைக் கலியாணம்செய்து கொள்ளலாம் என்பது இனிமேற் கனவுகூடக் காண முடியாத விஷயம்" என்ருன் நடராஜன். அவன் வார்த்தைகளை முடிக்க முன்னமே தியாகு இடை மறித்துச் சொன்னன் “ அவர் சம்மதத்தைப் பெற முடியாமலே இருக்க லாம். அப்படியிருந்தாலும் படிப்பை முடித்துக்கொண்டு அவர் இஷ்டத்தை மீறிக் கனகத்தைக் கலியாணம் முடித்துக் கொள் வதுதானே. அதற்கு இப்போது என்ன அவசரம்."
* அவசரந்தான். இந்தச் சூட்டோடு சூட்டாகக் கல்யாணத்தை முடித்து, நாங்களிருவரும் இந்தப் பரந்த உலகின் எங்காவது ஒரு மூலையில் இன்பமாக வாழ்வதன் மூலம் இந்த நாசகாரக் கும்பல்களுக்குச் சரியான பாடம்படிப்பிக்க வேண்டும்' என்ருன் நடராஜன்.
தியாகு சிரித்துக்கொண்டே சொன்னன் ' என் னப்பா பெரிய ஹீரோ " மாதிரி உணர்ச்சிகரமாக வெளுத்து வாங்குகிருயே; யாரப்பா அந்த நாசகாரக் கும்பல்?" -
"எல்லோருங்தான். உலகமே நாசகாரக் கும்பல் வாழுமிடங்தான். ஏது! என் தங்தையார், மாமா எல்லோருமேதான். இளம் உள்ளங்களின் உணர்ச்சி களேத் தங்கள் அரசியற் குதிற் பகடைக் காயாக உருட்டி விளையாடும் எல்லோருமே நாசகாரக் கும்பல் தான்' என்ருன் நடராஜன், உணர்ச்சி மிகுதியில் அவன் உடல் முறுக்கேறி நிமிர்கையில், இரத்தம்

139 கொழுகொம்பு
-
போலாகிவிட்ட முகத்தின் மேலே முன்னெற்றியி லிருந்தகேசங்கள் அலங்கோலமாகப் புரள்  ைக யில் அவனைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
* நாசகாரக் கும்பல்களுக்குப் பாடம் படிப்பிக்க வேண்டுமானுற் படிப்பி. ஆனல் அதற்கும் படிப்பை இடையிலே குழப்பிக் கொள்வதற்கும் என்னப்பா சம்பந்தம் ?
* படிப்பாவது மண்ணுங்கட்டியாவது? சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல மனிதனைக் கோழை யாக ஆக்கிக்கொண்டிருக்கும் இந்தப் படிப்பு ஏது? இந்தப் புத்தகங்களையும் பட்டதாரிகளையும் மூழ்க டிக்கக் கூடிய நீர் இந்துசமுத்திரத்திலே இல்லாமலா போய்விட்டது? எனக்கு இந்தப் படிப்பேவேண்டாம். சுதந்திரமாக இருக்கவேண்டும்?" என்ருன் நடராஜன்,
தியாகு அமைதியாகச் சொன்னன்: *15டராஜா உனக்கு என்னமோ புத்திபேதலித்துத்தான் விட்டது கனகத்தோடு உலகத்தின் ஏதாவது மூலையில் இன் பமாக வாழப்போகிறேன்' என்கிருய் இதற்கு உன் தகப்பனர் சம்மதம் பெற்றுக்கொள்ளவும் உன்னல் முடியாது? உன் மாமனர் விருப்பத்தையாவது பெற முடியுமா ? கன்முக யோசித்துப்பார்."
* அவருடைய சம்மதத்தை யார்கேட்டார்கள் ? எனக்கும் கனகத்துக்குங்தான் இனி எந்தத் தொடர் பும், அதனுற்தான் சொல்கிறேன். கான் அவளைக் கூட்டிக்கொண்டுவந்து த னியா க வாழவேண்டும்

Page 77
கொழுகொம்பு 140
حمحصےح>محصحیح صحیحs"محصے
அதற்குத்தான் முதலில் கான் ஒரு வேலை தேட வேண்டும் " ჯ კy. წ. ''
* ஏன் சம்மதிக்கமாட்டாள் ?'
' அட, சம்மதிக்கமாட்டாள் என்று வைத்துக் கொள்வோம்; அப்போது என்ன செய்வாய்?"
இருளின் அமைதியிலே கிறிச்சென்று சப்தமிட்டுக் கொண்டிருக்கும் சுவர்க்கோழியின் இரைச்சல் திடீ ரென்று நின்றுவிட்டதைப்போல, ஆவேசமாகப் பேசிக் கொண்டுவந்த 15டராஜன் அப்படியே வாயடைத்துப் போய் நின்றுவிட்டான். தியாகு மேலே தொடர்ந் தான். ' எனக் குத் தெரிந்ததைச் சொல்கிறேன் : பெண்கள் அது வும் தமிழ்காட்டுக் கிராமத்துப் பெண்கள் வீட்டை விட்டுத் திடீரென்று கிளம்ப அவ்வளவு இலகுவாக இணங்கிவிட மாட்டார்கள். காலங்காலமாகக் கண் ணி ர் விட்டுக்கொண்டிருங்
தாலும் பிறந்த வீட்டை விட்டுப் புறப்பட அவர்
களுக்கு அதிகமாக மனமிராது. கல்யாணவிஷயத்தில் ஆண்களுக்கு இருக்கும் ஆத்திரமும் அறிவீனமும் அவர்களுக்கு இல்லை. எதற்கும் நான் சொல்வதைக் கேள். முதலில் அவள் தனிமையாக உன்னேடு வரு வாளா ? என்பதை அறிந்துகொண்டு மற்றவைகளை யோசி, வேலை வேண்டும் என்ருல் மிகவும் இலேசாக அதைச் செய்துதர என்னல் முடியும்"
i
 
 
 

141 கொழுகொம்பு
ܖܐ,ܓܐ,ܓܖܐ,ܓܖ ܓܪ, ܓܘ
' முதலில் உன் கடமையைச் செய். அவள் வருகிருளா இல்லையா என்பதை கான் பார்த்துக் கொள்ளுகிறேன்' என்ருன் கடராஜன். ஆனுலும் தியாகு சொல்லியதுபோல அவள் இணங்காவிட்
டால்..' என்றெண்ணியபோது அவன் தலை சுற் றியது. "。
* "வ்ராவிட்டாற் பிறகு. 15டராஜன் உறுமினுன் மனத்துட் கறுவிக்கொண்டான். :
钛,

Page 78
2
ஆடுகொடி
கனகம் கல்முனைக்கு வந்துவிட்டாள். அவள் படித்துக்கொண்டிருக்கையில் வகுப்பிலே என்றைக் குமே முதன் மாணவியாகத்தான் இருந்தாள். கிரா மத்துப் பாடசாலையிற் படிக்கையில் தனக்கு இரண்டு வருடங்கள் மூத்தவனுண செல்லனே ஆரும் வகுப்பிற் பிடித்துவிட்டாள். அடுத்த வருடம் அவள் ஆங்கிலப் படிப்பிற்காகக் கல்முனைக்கு அனுப்பப்பட்டாள். அங்கே அவள் கிறுகிறு' என்று படித்து ஐந்து வருடங்களுக்குள்ளாக ஆங்கிலத்திலும் எஸ். எஸ். சி. சித்தியடைந்து விட்டாள்.
வகுப்பில் அவள் காட்டிய திறமையும், இயல் பாகவே அவளுக்கேற்பட்டிருந்த அடக்கமும் அந்தக் கன்னியர்மடத் தலைவியைக் கவர்ந்தன. சர் வத் தையுமே துறந்து, எங்கோ ஆருயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு காட்டிலிருந்து வந்த அவளுக்குக் கனகத்தின்மேல் ஒரு அன்பு, பாசம் ஏற்படலாயிற்று. இந்தப் பாசம் கனகத்தையும் தன்னைப்போல ஒரு உத்தமத் துற வியா க ஆக்கிவிட்டாலோ என்று அந்தக் கன்னியின் மனத்திலே ஒர் ஆசையை உண் டாக்கியது.
இதனுற்றன் கனகம் பரீட்சையிற் சித்தியடைக் ததும் அந்தப் பாடசாலையிலேயே ஓர் ஆசிரியையாக இருக்கும்படி அவள் கனகத்தை வேண்டினுள், கன

歌”
143 கொழுகொம்பு
கத்துக்கு ஓரளவு அது விருப்பமாக இருப்பினும் கங்தையா தன் மகள் ஒர் ஆசிரியையாக இருக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. அதற்குமேலே படிப்பதையும் அவர் விரும்பவில்லை கனகத்தை வீட் டோடு வைத்துக்கொண்டு அப்போதிக்கரி' யாக உருவாகிக் கொண்டிருக்கும் 15டராஜனுக்காகக் காத் துக்கொண்டிருந்தார். ஆனல் அதற்குள்தான் எத்தனை காரியங்கள் கடந்துவிட்டன !
இப்படியிருக்கும்போதும் கனகத்துக்கு அந்த மடத்துத் தலைவி கடிதம் எழுதிக்கொண்டே இருங் தாள். சென்ற வாரங்கூட அவளிடமிருந்து கடிதம் வந்தது! ஆனற் கனகம் அந்தக் கடிதத்தையிட்டு எந்தச் சிரத்தையும் எடுக்கவில்லை. -
ஆனல் மனிதன் என்றைக்கும் தன் தாயை நினைத்துக்கொண்டிருக்கிருன? கடவுளைத் தா ன் நினைத்துக்கொண்டிருக்கிருன? ஆனல் ஆபத்து வங் ததும் தன்னையறியாமலே 'அம்மா' என்று அலறு கிருன். ' கடவுளே " என்று கதறுகிருன், ஆம்; * படைக்கப்பட்ட சிருட்டிகளில் மனிதன் ஒப்புயர் வற்றவன் ' என்பது வேதாந்திகளும் விற்பன்னர் களும் ஒருமித்துச் சொல்லும் வாக்கியம். ஆனல் மனிதன் மரத்தைவிட மட்டமானவன் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்ருல் மரத்திற்குக் கூடச் சுயமாகத் தனித்து நிற்கும் திராணி இருக் கிறது. ஆனல் இந்த மனிதனல் தனித்து நிமிர்ந்து நிற்க எந்தக்காலத்திற்தான் முடிந்தது? ஏதாவ தொன்றைச் சார்ந்துதான் அவன் நிற்கமுடிகிறது. விதி, கொள்கை, இலட்சியம், நண்பன் என்பன

Page 79
கொழுகொம்பு 144 வென்று எத்தனையோ, மனிதன் தான் சார்ந்து
கொண்டிருப்பதற்காகச் சிருட்டித்துக் கொண்ட்
,, . . .e. e. e * துரண்கள்தாம்.
\ , ( , ; స్క్ £. “....ነ ̆; 「 「リ、。
கன்கத்துக்கும் துேக்கம்மேலிட்டிபொழுது அவள் அக்தத் துறவியின் கடிதத்தை நினைத்தாள். இந்தத் துன்ப்பத்திலிருந்து மனம் விரும்பாத ஒருவனேடுதன் வாழ்வு முழுவதுமே இணைத்து வைக்கப்பட்டுவிடுமோ என்ற கலவரத்தில் முதலில் அங்கேயிருந்து தப்பி விடவே எண்ணினுள், -
செல்லனும் பக்கபலமாக இருக்கவே, தன் தங் தையின் நெகிழ்ந்த மனத்தை மேலும் இளகப் பண்ணி இங்கே வந்து விட்டாள். இப்போது ஆசிர மத்தொழில் என்று தான் சிருட்டித்த ஒரு புனிதமான இலட்சியத் தூணிலே சார்ந்து நிற்க முயன்ருள்.
கல்முனைவரையும் அவளைக் கொண்டு வந்த செல்லன் அவளைத் தைரியமாக இருக்கும்படி தேறு தல் சொல்லிவிட்டு மட்டக்களபிற்குத் தன் பாட சாலைக்குப் போய்விட்டான். - •
கனகம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பாடசாலைச் சூழலிற் பழகி ய வ ள், கலகலப்பாக இருக்கும் மாணவர்கள் மத்தியில் தன் கவலையை மறக்க முயன்ருள் கனகம். ஆனற் தாமரையிலைத் தண்ணிர்போல அவளால் அந்தச் சூழலில் ஒட்ட முடியவில்லை. -
எந்த நினைவுகளை அவள் மறந்துவிட எண்ணி ணுளோ, அதே எண்ணங்களும் நினேவுகளும், இறைத்த
 
 
 

1245 கொழுகொம்பு
கிணற்றிலே குயீர் குபிரென்று கிளம்பும் ஊற்றுக் களைப்போல அவள் உள்ளத்திற் கிளம்பிக் கொண் டிருந்தன. அங்நினைவுகளை அவளாற் தடுக்க முடிய வில்லை; மறைக்க முடியவில்லை. முடியாக நூற்றுக் கணக்கான மாணவிகளும், பல ஆசிரியை களும் இருக்கும் அந்தச் சூழலிலே அவள் தனிமையாகவே ஆகிவிட்டாள். ரிஷிகளும் முனியுங்கவர்களும் தனி மையை விரும்பிக் காட்டிற்குச் சென் ரு ர் க ள். என்பும், தசையும், உள்ளமும் உணர்ச்சியும் சேர்ந்த மாந்தர் நடுவில், விசுவாமித்திரர் திரிசங்கு சுவர்க் கத்தைச் சிருட்டித்தது போல அவர்களாற் தனி மையைச் சிருட்டித்துக்கொள்ள எந்தக் காலத்துமே முடியவில்லை. ஆனல் கனகத்துக்குத் தனக்குத்தான்ே ஒரு தனிமையைச் சிருட்டித்துக் கொள்ளமுடிந்தது. எப்படி? ஆதலினுற் காதல் செய்வீர் உலகத்திரே ! என்று பாடிய கவிஞனும், காதல் தனிமையைச் சிருட்டிக்கும் என்று ஏன் எழுதவில்லை ?
கல்முனை அழகான சிறிய பட்டினங்தான் ; மன எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பாட்டாகவே சொல்லிவிடும் மட்டக்களப்புத் தென்பகுதிக் கவி புள்ளம் படைத்த மக்களின் முக்கிய பட்டினமல் லவா? அது அழகாயில்லாமல் வ்ேறு எப்படியிருக்கும்?
கனகத்துக்கும் இப்போதுதான் மாண வியர்
யிருந்த காலத்தைப் பார்க்கிலும் அதிக சுதந்திரம்
இருந்தது. ஆனற் தேசிய சுதந்திரம் கிடைத்தும்
பொருளாதார சுதந்திரம் பெருத புதுகாட்டைப்
போல அவளால் அந்தச் சுதந்திரத்தைப் போற்றிப்
பேண முடியவில்லை. தன்னைத்தானே அடிமையாக்
19

Page 80
கொழுகொம்பு 146
கிக்கொண்டு தன் அறையிலேயே அடைந்து கிடக் தாள். மாணவியாக இருக்கையில் அடைக்கலாங் குருவியைப்போல இலேசாக அடைப்புக்களைப் பிய்த் துக்கொண்டு பறக்கவேண்டும் என்று விரும்பிய அவள்மனம், இன்று பாறையாகக் கனத்துத் தன்னைத் தானே அமுக்கிக்கொண்டு அடைந்து கிடக்க எண் ணிற்று,
அறைக்குள் அடைந்து கிடந்துகொண்டே கட ராஜனைப்பற்றி எண்ணுவாள். அவள் சிந்தனை கழு தையைப்போலப் பின்னங்காலாற்ருன் உதைக்கும். இறந்துபோன, இறந்துகொண்டிருக்கும் காலங்களின் மேற் படரும் அவள் பிரதியுற்பத்திக் கற்பனை அவ ளுக்குக் கலக்கத்தைத்தான் கொடுத்தது. அவள் இளவயதின் இனிமையான எண்ணங்களிற் பிரிவு என்ற ஏக்கம் இருளாய்ப் படிந்தது. அந்த இருளில் அவள் உள்ளத்தின் உள்ளொளி மடியவே அந்த அந்தகாரம் சூழ உள்ளம் உலகத்தையே இருளச் செய்தது.
இருளில் ஓடிப் படர்ந்த அவள் எண் ண க் கொடிகள். 15டராஜன் போயே விட்டான்' என்ற இடத்தில் மேலே படர முடியாமல் அந்தரத்தில் கின்றுவிடும். வெளிச்சத்தை கோக்கித்தான் கொடி படரமுடியும், மனித எண்ணங்களும் இன்பத்தை கோக்கித்தான் படரமுடியும். ஆணுல் எல்லோருமே இருண்டு கிடந்தபோது. மட்டக்களப்பு எழுத்தறி யாக் கவிஞன் அவள் எண்ணங்களை எவ்வளவு அழ காகப் பாடி வைத்துவிட்டான் 1 அன்று இருட்டிக் கொண்டிருக்கையில் அடுத்த அறையில் இருந்த ரேடி
 

147 கொழுகொம்பு
யோவில் கிராம நிகழ்ச்சியின்போது அந்தப் பாட்டுத் தான் ஒலி பரப்பப்பட்டது. கனகம் அந்தப் பாட்டை உற்றுக் கேட்டாள்,
* ஆடு கொடியானேன்
அந்தரத்திற் காயானேன் வாடும் பயிரானேன் - மச்சான் வண்ணமுகம் காணுமல் " கனகத்திற்கு அந்தப் பாட்டைக் கேட்க எரிச் சலாக இருந்தது. அந்தப் பாட்டை இரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியை கமலாவை வாய் ஒயாமற் திட்டவேண்டும் என்றிருந்தது. தன் உணச்சி களை அடக்கிக்கொண்டு கடராஜனை எண்ணிப்பார்த் தாள். அவனுக்குக் கடிதம் எழுதுவோமா என்று யோசித்தாள். உடனே கடதாசியை எடுத்து வைத் துக்கொண்டு எழுதத் தொடங்கினுள், கடதாசியிற் கண்ணீர்த் துளிகள் விழுந்து கனைத்தன.
ஒரு வரியைத் தொடங்கிய கனகம், அதற்குமேல் எதையுமே எழுதத் தோன்ருதவளாக அப்படியே இருந்தாள். நான் அவருக்கு என்ன செய்தேன் ? போனவர் எனக்கு ஒரு கடிதம் ஏன் எழுதக்கூடாது. நான் மட்டும் ஏன் எழுதவேண்டும்? என்ற வெறுப் புணர்ச்சி அவள் உள்ளத்தில் ஒடிப் படர்கையில் அவள் அந்தக் கடதாசியை எடுத்துக் கிழித்து எறிந்து விட்டுப் படுக்கையிற் பொத்தென்று சாய்ந்தாள்.
அப்போது அடுத்த அறைக்குள் இருந்த கமலா கேட்டாள்? ? கனகம் கடற்கரைக்குப் போவோம் வருகிருயா? கனகம் எதையுமே எண் ணு மல் * போவோம்' என்ருள்.

Page 81
கொழுகொம்பு 148
கனகமும் கமலாவும் வெளியே போகையில் விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன. கெடுந்தூரம் நீண்டுகிடந்த வீதியின் வழியாக இருவரும் கடற் கரையை அடைந்தபோது:எதிரே வங்காளக் கடலிற் கனகத்தின் கெஞ்சின் அலைகள்ைப்போல அலையாடிக் கொண்டிருந்தது. வெண் மணல் பரந்து கிடக்கும் அந்த அழகான கடற்கரையிலே தனிமையில் மணலில் இருந்து கொண்ட இருவரும் எதையெதையோ பேசிக்கொண்டனர். இடையிற் கமலாகேட்டாள் :
* முன்பெல்லாம் உன்னைத் தேடிவருவாரே 5 - ராஜன், அவர் இப்போது என்ன செய்கிருர் ?"
கல் விழுந்த குட்டையாய்க் கலங்கிய கனகம் கடலைப் பார்த்தபடியே சொன்னுள்: “ இப்போது அப்போதிக்கரிக்குப் படிக்கிருர்.'
* எப்போது வெளிவருவார்?" * மார்கழி மாதம் வருவார்" என்ருள் கனகம், * அவர் வந்ததும் நீ போய்விடுவாய்?' என்று கொண்டே சிரித்தாள் கமலா,
கனகத்திற்கு வேதனையாக இருந்தது. ' கமலா எனக்குத் தலையிடிக்கிறது; வா போவோம்’ என்றே எழுந்தாள்.
விடுதிக்கு வந்ததும் கனகம் நடராஜனுக்குக், கடிதம் எழுதினுள்.
 
 

༦ * 22 ܨ : ,
வடவாக்கினி
A \ ,
கடுங் காணகத்திடையே நெல்லி ஏன் நிற்கிறது? என்று கேட்ட கம்பன் வெல்லா வழக்கை விலைகூறி வீழ்ந்திட்ட வல்லாளன் சுற்றம் போல் மாண்டு ' என்று தானே விடையு மிறுத்துக் கொண்டான். தேர்தலில் தோற்றுப்போய்க் கம்பனின் கெல்லி மரத்தைப்போல நின்ற அம்பலவாணர் தன் ஆத்திரத்தை எல்லாம் தன் மைத்துனன் மேற்தான் காட்டத் தொடங்கினர். -
ஆனலும் கங்தையா என்ன கத்தரித்தோட்டத்து வெருளியா? வேண்டிய இடத்தில் கட்டு தலையிற் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிட, அம்பலவாணரால் முடியுமா? கங்தையாவைப் பழிவாங்க ஒரே ஒருவழி தன் மகனே அவர் மகளுக்குக் கொடாகிருப்பதுதான். இந்த எண்ணத்திற்தான் அம்பலவாணர் மகனுக்கு ஏற்கனவே ஒரு கடிதம் எழுதினர். அதற்கு மகன் எழுதிய பதில் அவர் மனது க்கு ஒரு சாக்தியைக் கொடுத்தது.
ஆனல் திடுதிப்பென்று கனகம் ஊரைவிட்டுப்
போனதையறிந்தபோது அவர் மனம் 'ஒரு வேளை
கனகம் கொழும்புக்குத்தான் போகிருளா? " என்று எண்ணிற்று. -

Page 82
கொழுகொம்பு 150
தனக்குள்ளே, எ ன் ன தா ன் வைராக்கியமிருங் தாலும் அம்பலவாணர் தன் மகன் மனப்போக்கை விளங்காதவரல்ல. கடராஜனுக்கும் கனகத்துக்கும் எத்தனை 5ெருங்கிய உறவு இருக்கிறது என்பதை அவர் கன்ருக அறிவார். இலகுவாக 5டராஜனின் மனத்தைத் திருப்ப முடியாதென்பதும் அவருக்குத் தெரியும். இந்த நிலையிற் கங்தையாவே தன் மகனே
வீட்டை விட்டுப் போகச்சொன்னது அவருக்கு ஒரள
விற்குத் திருப்தியாகத்தான் இருந்தது. ஆணுல் இந்த நிலையிற் கனகமும் கடராஜனும் திரும்பச் சந்தித் தால்.
ன்பின் அறிந்திரா (p. தராத ஒரு கு
மகாரிஷி விசுவாமித்திரர் மனத்தைப் பறிகொடுக்க வில்லையா? கனகம் மறுபடியும் கடராஜனைச் சந்தித் தால் அவன்மனம் மீண்டும் அவளை காடும் என்று திட்டமாக கம்பினர் அம்பலவாணர், இப்படி 15ம்பிய தினுற் கனகம் எங்கே போயிருக்கிருள் என்பதைத் திட்டமாக அறிய விரும்பினுர் அம்பலவாணர்.
ஆனல் அவர் மனைவியோ இதற்குள் கனகம்
எங்கே போய்விட்டாள் என்பதைத் திட்டமாக அறிந்தே வைத்திருந்தாள். இத்தனை காலமாக அவள் வெளியூருக்குப் போவதாக இருந்தாய், தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் போவாள். ஆனல் இப்போது
கனகம் சொல்லாமலே-சொல்ல முடியாமலே-போய்
விட்டாளே என்பற்காக அவள் மனம் வேதனை
யுற்றது. இந்த வேதனையிற் பொன்னம்மா தன்
மருமகள் எங்கே போய்விட்டாள் என்பதை அவசர அவசரமாக விசாரித்து அறிந்து வைத்திருந்தாள்.
 

151 கொழுகொம்பு
ஒருநாள் அம்பலவாணர் அகாரணமாகத் தன் மைத்துணனை அவர் குடும்பத்தினர் எல்லாரையுமே நிந்தித்தபோது பொ ன் ன ம் மா அழுதுகொண்டே சொன்னுள். ' கனகம்தான் உங்க கண்முன்னுல் இருக் கப்படாது என்று போய்விட்டாளே. இன்னமும் ஏன் அவளைக் கரிந்து கொட்டுகிறீர்கள்?"
அம்பலவாணரும் வீட்டுக் கொடுக் காம ற் சொன்னர் 1 ஆடிப் பறந்து மாப்பிள்ளை பிடிக்கக் கொழும்புக்கே போய்விட்டாளாக்கும்?"
பொன்னம்மாவும் சிறிது கோபமாகவே சொன் ள்ை: “ அவள் கல்முனைக்குத்தான் போயிருக்கிருள் : உங்க ம க னரி ட் ட பிச்சைக்குப் போகவில்லை." இதைச் சொன்னதும் பொன்னம்மா தன் கணவனின் முன்னுல் நிற்கமனமில்லாமல் அப்பாற் போய்விட் டாள்.
அம்பலவாணரின் மூளை தீவிரமாக வேலைசெய்தது, கல்முனையில் இருந்துகொண்டு கனகம் தன் மகனுக்குக் கடிதம் எழுதுவாள். தன் மகனும் எழுதுவான் ஏன்? தனக்குத் தெரியாமற் கல்முனைக்குப் போய் அவளைச் சந்தித்தாலும் சந்திப்பான். மார்கழிமாதம் பரீட்சை முடிந்ததும் தனக்குத் தெரியாமல் அவளை * விவாகப் பதிவு பண்ணினலும் பண்ணிவிடுவான்.
இதை எண்ணிய அம்பலவாணரின் உடல் முழு
வதுமே கொதித்தது. உதடுகள் துடித்தன. அவர் உணர்ச்சிகள் அடங்கியபோதுதான் கொழும்புக்குச் சென்று கடராஜனைக்கண்டு பேச வேண்டும்' என்று எண்ணினுர்,

Page 83
கொழுகொம்பு 153
ஆனல் அவரால்போகக்கூடியதாக இருக்கவில்லை. முன்மாரி வயலுக்கு உழவு தொடங்க வேண்டியிருந் தது. எவரையுமே நம்பாமல் எல்லா வேலைகளையும் தானே கண்காணித்துச் செய்யும் அம்புலவாணர் அந்த வேலைகளை எல்லாம் விட்டுக் கொழும்புக்குப் போக முடியுமா? ஆகவே அம்பலவாணர் மறுபடியும் தன் மக்னுக்குக் கடிதம் எழுதினர். را به بده
நடராஜனின் மன உளைச் சல் சிறிது தண்க் திருத்தது. வழக்கம்போல அவன் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தான். ஆணுற் தண்ணென் றிருக்கும் சமுத்திரத்தினடியிலே உள்ள உலகையே சுட்டுப்பொசுக்கவல்ல வடிவாக்கினிபோல அவ ன் மனத்துள்ளும் கனகத்தைப்பற்றிய எ ண் ண ம் இருந்தது, ‘எப்படியும் கனகத்தைக் கல்யாணம் செய்துகொள்வது. காரியம் மிஞ்சி வந்தால் தன் படிப்பையே விட்டெறிந்து விட்டு ஓர் உத்தியோ கத்தைத் தேடிக்கொண்டு கனகத்தையும் கூட்டிக் கொண்டு வந்து கண் காணுத இடத்தில் வாழ்வது என்று அவன் தீர்மானித்திருந்தான், ... . «os
இந்த நிலையில் கனகத்துக்குக் கடிதம் எழுத வேண்டும் என அவன் விரும்பியதுண்டு, உடனே தன் மாமனுரைப்பற்றிய எண்ணம் அவனுக்கு வரும். தன் கடிதம் அவர் வீட்டுக்கா போவது?" என்ற எண்ணம் அவன் மனத்தை உறுத்துகையில், அவன் கனகத்துக்குக் கடிதம் எழுதவேண்டும் என்ற எண் ணத்தையே விட்டுவிட்டான். ... .
 

153 கொழுகொம்பு
ܓܖ ܓܖܓܗ
செல்லனுக்காவது எழுதலாம் என்று எண்ணு வான் முதலிற் தான் செல்லனுக்கு எழுதிய கடிதம் அவன் நினைவுக்கு வரும். இனிமேல் எந்த முகத்தைக் கொண்டு அவனுக்குக் கடிதம் எழுதுவது? என்ற கேள்வி அவனுள்ளே விடையிறுக்க முடியாததாகக் குத்திட்டு நிற்கும். ஏன் செல்லனுக்கு அப்படி எழுதினேன் ' என்று த ன் னை த் தா னே நொந்து கொள்வான். ஆனுல் தன் மன உளைச்சலைச் செல்ல னுக்குத் தெரிவிக்க மட்டும் அவன் விரும்பவில்லை. பாம்பின் குட்டி பாம்பல்லவா நடராஜன் !
இந்த நிலையில் இருக்கையிலேதான் தந்தையின் கடிதம் வந்தது. கனகம் கல்முனேக்குப் போய்விட் டாள் என்றும் எக்காரணத்திற்காகவும் 5டராஜன் அவளைச் சந்திக்கக்கூடாதென்றும், மார்கழி மாதம் பரீட்சை முடிந்ததும் அவனுக்கு ஊரிலே யாரை யாவது கல்யாணம் செய்துவைக்க இருக்கிருர் என்றும் அம்பலவாணர் அதிலே எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைக் கையில் வைத்தபடியே டு டராஜன் யோசிக்கத் தொடங்கினன்.
புரட்டாசி மாதப் பிற்பகுதியிலே வாடைக்காற்று ஆரம்பமாகும், காலையில் மெதுவாக அசையும் சோழகக் காற்று மதியம் திரும்பியதும் அசைவற்று நிற்க, வடக்கே வானத்திற் படிந்து கிடக்கும் மப்பி லிருந்து திடீரென்று வாடைக்காற்றுச் சீறியடித்து மழையையும் புயலையும் கொண்டுவரும். இந்தக் காற்றில் அமைதியாகக் கிடந்த வங்காளக்குடா, ஆயிரம் ஆயிரம் கரு5ாகங்களாகப் படம் விரித்துச்
20

Page 84
கொழுகொம்பு
154
சீறியடிக்கும் அலைகளை எழுப்பிக்கொண்டு ஊரையே அழிக்க முனைந்ததுபோற் குமுறும். அமைதியாகக் கிடந்த நடராஜன் மன திலும் வடக்கேயிருந்துவந்த அந்தக் கடிதம் ஆயிரமாயிரம் எண்ண அலைகளைக் கிளப்புகையில் அந்த மனத்தின் குமுறுதல் பயங்கர மான தாகவேயிருந்தது.
தந்தையிடமிருந்து இந்தக் கடிதத்தை நடராஜன் எதிர்பார்த்துத்தான் இருந்தான். என்றாலும் அவன் மனது கொந்தளித்ததைத் தடுக்க அவனால் முடிய வில்லை. அந்தக் கொந்தளிப்பின் உச்சநிலையில் அவன் மனக் கடலில் அடங்கிப் போயிருந்த வடவாக்கினி தன் செந்நாக்குகளை நீட்டிற்று.
' அப்பா கனகத்தைத்தான் அடைய விரும்பமாட் டார்; விடமாட்டார் என்பது சர்வ நிச்சயம். அதற் காகக் கனகத்தைத் தான் விட்டுவிடத்தான் வேண் டுமா? அவள் இப்போது கல்முனைக்கு வந்துவிட்டாள். எனவே அவளைத் தனியே என் கூடக் கூட்டிவரலாம்.
முதலில் உத்தியோகம்.......
நடராஜன் இப்படி எண்ணிக்கொண்டிருக்கையில் தியாகு சிரித்துக்கொண்டே அங்கு வந்தான். நட ராஜனைக் கண்டதும் ' என்ன ஒருமாதிரி இருக்கிறாய்;
அப்பா கடிதம் எழுதியிருக்கிறாரா?'' என்றான்.
நடராஜன் பேசாமலே இருந்தான். '' எனக்குத் தெரியுமே'' அப்பாதான் கடிதம் எழுதியிருக்கிறார். கனகம் கடிதம் எழுதியிருந்தால் இப்படியா இருப் பாய்?'' என்றுவிட்டு மறுபடியும் சிரித்தான்.

I55 கொழுகொம்பு
محرح محرN"ئی۔ صبر۔۔۔۔۔۔۔۔
5டராஜன் அவனை முறைத்துப் பார்த்தான். * ஏனப்பா இப்படிப் பார்க்கிருய்? கனகத்தின் கடிதத்தை 5 ர ன் பத்திரமாகத்தான் வைத்திருக் கிறேன்' என்றுவிட்டு மேலும் சிரித்தான்.
" என்ன கேலியா ? பண்ணுகிருய்?' என்று இரைந்தான் 15டராஜன்.
'சை கேலியா? உனக்கு முன் வந்து கடிதத் தைப் பார்த்த கான், கனகத்தின் கடிதத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். அதற்கு இவ்வளவு கோபமா ? இந்தா கடிதம்' கடிதத்தைக் கொடுத்தான்.
என்றுகொண்டே
5டராஜன் அந்தக் கடிதத்தைப் பரபரப்பாகப் பிரித்து வாசிக்கத் தொடங்கினன். அதை வாசித்து முடிந்ததும், தியாகு இன்னெரு கடிதத்தையும் நீட் டினன். நடராஜன் அதையும் வாசித்தான்.
போர்க்களத்தில் இந்திரஜித்து வீழ்ந்தபோது
கம்ப மதத்துக் களியான காவற் சனகன் பெற்
றெடுத்த, கொம்பும் எ ன் பா ற் குறுகிற்றென்று' இராமன் திருப்தியடைந்தானும்,
இரண்டு கடிதங்களையும் வாசித்தபோது அந்த இராமனைப் போலவே நடராஜனும் கனகம் தனக்குக் கிடைத்துவிட்டாள் என்று திருப்தியடைந்தான்.

Page 85
23
கயிற்றரவு
கலை கலைக்காக என்கிருரர்கள் ஒருசிலர். வேறு சிலர் கலே பிரசாரத்திற்காக என்கிறர்கள், கலையின் கோக்கம் எதுவாயிருந்தாலும் கலைஞன் தன் சிருட் டியை, தான் எழுதியதை மற்றவர்கள் ஒப்பு க் கொண்டே ஆகவேண்டும் என்று மறைமுகமாக வேனும் விரும்புகிருன் இந்தக் கலைஞனை விட்டாற். கடிதம் எழுதும் எவனும், தன் கருத்தை வாசிப்பவன் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று முழுக்க முழுக்க எண்ணுகிருன், கடிதம் எழுதுவது ஒரு கலை என்ருல் அந்தக் கலை முழுக்கப் பிரசாரத்திற்காகவே என்பதிற் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டியதில்லை !
கனகத்தின் கடிதம் ஒரு கலா சிருஷ்டியாகவும்
இருக்கலாம். இதய சம்பூரணத்திலிருந்துதான் வாய் பேசுகிறது' என்று பைபிள் சொல்கிறது. கனகத்தின்
வாய் என்ன? கையும்கூட அவள் மனத்திற் தோன்றிய
எண்ணங்களையும் அனுபவிக்கும் வேதனைகளைத்தான் அந்தக் கடிதத்தில் எழுதியது. மேலும் கனகம் தன்மேல் நடராஜன் இரக்கப்பட வேண்டும் என்று எண்ணியதால் பிரசார கோக்கில்' தன் வேதனே களைச் சிறிது மேலதிமாகவே ஒரு கலைஞனின் கற் பனையோடுதான் எழுதியிருந்தாள்.
அந்தக் கடிதத்தை வாசித்தபோது கடராஜனின் மனம் இளகிற்று. அவன் மனம் அவனுள்ளே கன

157 கொழுகொம்பு
கத்துக்காக அழுதது. இந்த இரக்கவுணர்ச்சி இருக் கிறதே அதைமட்டும் தட்டி எழுப்பிவிட்டால் அதைத் தணியச் செய்வது மிக மிகக் கஷ்டமானதுதான். மேலும் மனிதனின் உள்ளத்தை இந்த வுணர்ச்சி யைப்போல கவரசங்களில் எதுவுமே தொடுவதில்லை. அந்த வுணர்ச்சி மனித மனத்தைவிட்டுக் கெதியில் மறைவதுமில்லை. இராமனைப் பிரிந்த சீதை யி ன் சோகமும், மை ங் த னே ப் பறிகொடுத்துக் கதறும் சந்திரமதியின் அழுகையும் யுகாந்த காலம்வரை மனித இதயங்களில் மறையாமல் இருந்து கொண்டுதான் இருக்கும் !
தன்பொருட்டு அசோகவனத்துச் சீதையாக ஆகி விட்ட கனகத்தை எண்ணியபோது அவன் உள்ளம் அனல்மேல் மெழுகாக உருகியது. கைந்து கொந்த அவன் உள்ளத்தின் உருக்கம் நயனத்தின் வழியே ஒடிற்று. (5டராஜன் திடீரென்று கண்களைத் துடைத்
துக்கொண்டு மறுமுறையும் அங் த க் கடிதத்தை
வாசித்தான். 'கவில்தொறும் நூ ன யம்' என்று பண்டிதர்கள் சொல்வார்கள். காதற் கடிதங்களும் அப்படித்தான் இருக்குமோ என்னவோ? ஆணுற் கன கத்தின் கடிதம் 5டராஜனுக்கு அப்படித்தான்
இருந்தது.
5டராஜனின் போக்கை எதிரேயிருந்து கவனித் துக் கொண்டிருந்த தியாகுவுக்குக்கூட அவனில் அனு தாபமாக இருந்தது. சிரிப்பைத் தவிர வேறெதையுமே அறியாத தியாகு மறுமுறையும் கடிதத்தை வாசித்து முடித்த 5டராஜனிடம் கேட்டான்: ' என்ன எழுதி

Page 86
கொழுகொம்பு 158
ܓܒܐܫܝܢܓ ܕ ܐ
யிருக்கிருள் ?' தியா குவின் குரல்தான் எத்தனை வலி யற்றிருந்தது!
நடராஜன் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னன்: ' என்னத்தை எழுது வாள்? முதலில் நான் அக் த வேலை க்கு அப்ளிகேசன்' எழுத வேண்டும்.'
"வேலை விஷயம் இருக்கட்டும். தோன் அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்தாயே. என் நண்பன் அவன். இன்றைக்குக் கூட நீ விரும்பினுல், அந்தத் தோட்டத்து டிஸ்பென்சரிக்கு வேலையாகப் போக லாம். ஆனல் அதற்கு என்ன அவசரம். உன் தங் தையாரைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்க வேண் டாமா?' என்ருன் தியாகு.
புத்தி சொல்ல முற்பட்டால் தியாகுமட்டும் என்ன, மனிதன் எவனுமே பெரிய அநுபவசாலியைப் போல வும் அப்பழுக் கற்றவன் ' போலவுந்தான் பேசத் தொடங்குகிறன். தன் தந்தையைப்பற்றி ஒரு5ாளுமே கவலைப்படாத தியாகுகூட, நடராஜனுக்கு அவன் தந்தையைப்பற்றிப் பிரமாதமாகப் புத்தி சொல்கிறன். ஆம், போதனை செய்ய யாராலேதான் முடியாது ?
ஆனுல் அவன் போதனையை ஏற்கும் நிலையில் கடராஜன் இல்லை. மேலும் தங்தையாரைப்பற்றிய பேச்சே அவனுக்கு ஆத்திரத்தைத்தான் கொடுத்தது. அன்று வந்த தங்தையின் கடிதம், அவன் இதயத்துக் காதலுணர்ச்சிகளை வேரோடு பிடுங்கி எறிய முயற் சிக்கும் பிசாசுபோல அவனுக்குத் தோன்றியபோது,
 

159 கொழுகொம்பு
அந்தப் பிசாசைத் தன் முழு இதயத்தோடும் அவன் வெறுத்தான் ப ைக த் தா ன். அந்தவெறுப்போடு அவன் வாய் பேசிற்று ' எதைப்பற்றியுமே இனி யோசிக்க இடமில்லை, வேலை கிடைத்ததும் கனகத்தை அழைத்துக்கொண்டு வருவதுதான் எனது முடிவு'
தியாகு சொன்னன்: 'நீங்க ள் எல்லோருமே நெருங்கிய உறவினர்கள். இப்போதில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு 5 1ா ஸ் சமாதானமாகத்தான் போவீர்கள், அதுவரைக்கும். -
நடராஜன் அவனே இடைமறித்து ஆத்திரத்தோடு சொன்னன்: ' சமாதானம், என்னே ப்பற்றிய வரையில், என்றைக்குமே என் மாமனுரோடு சமாதானம் என்ற பேச்சேயில்லை. அப்பா சம்மதித்தாற்கூடச் சமா தானமாக எனக்கும் கனகத்திற்கும் கல்யாணம் கடக்காது. ஆனுல் எனக்கும் கனகத்திற்கும் கல்யா ணம் கடந்துதான் ஆகவேண்டும். அதற்கு அப்பா வின் சம்மதமும் ஒரு5ாளும் கிடைக்கப்போவதில்லை."
'இதென்னடா விதண்டாவாதமாக இருக்கிறது? கனகத்தைத்தான் கல்யாணம் செய்வதென்ருல் உன் தங்தையாரைப் பகைத்துக்கொண்டு படிப்பை முடித் தக்கொண்டு செய்கிறதுதானே ' என்ருன் தியாக ராஜன்.
' அதன்வரையும் கனகத்தை அவள் தங்தையார் விட்டுவைப்பாரென்று 15ான் எண்ணவில்லை. இந்தா, இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்' என்று நீட் டினன் நடராஜன்.

Page 87
கொழுகொம்பு 160
தியாகு அதை வாங்கிக் ன் க யி ல் வைத்துக் கொண்டே ‘ எனக்கென்ன ? எப்படியாவது செய். கான் என் நண்பனுக்கு இப்போது கடிதம் எழுதுகி றேன் ; அடுத்த மாதம் முதற் திகதியிலிருந்தே நீ வேலைக்குப் போகலாம்” என்ருன் தியாகு.
* சரி' என்ற நடராஜன் குனிந்து கிறு கிறு என்று எழுதத் தொடங்கினுன். தியாகு கேட்டான் * என்ன எழுதுகிருய்?' என்று. gy
* அப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறேன்" என்ருன் 15டராஜன்.
* அப்பாவுக்கா ? என்று ஆச்சரியத்தோடே கேட்டான் தியாகு.
* ஆம், அப்பாவுக்குத்தான் எழுதுகிறேன்.'
' என்ன எழுதியிருக்கிmய்?' என் (395 LT66r
s KU தியாகு.
* என்ன எழுதுவது? நான் கட்டாயமாகக் கன கத்தைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகி றேன்' என்று சொன்னன் 5டராஜன்.
G உனக்கென்ன பைத்தியமா ? அ  ைத ஏன் அவருக்கு எழுதுகிருய்? அவர் உன்னைச் சும்மா விடு வாரா?' என் மூன் தியாகு,
* சும்மா விடாமல் என்ன செய்யப்போகிருர் ? மனத்தில் உள்ளதைச் சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும்? நான் என்ன களவெடுத்தேனு ? பொய் சொல்கிறேன ? ஒளிப்பு மறைப்பு ஏன் ?' என்ருன் நடராஜன்.
 

so N-MJ/ \ / \ /
16 1 கொழுகொம்பு
SLSASJSLLLSAJSLLLSAJSLSSASLSSASLSSAJSLSAJSLLLSAJSAJSMLSSSSSASASASLSSASLSSASJSLLS
' அட , நல்ல புத்திசாலிதான். எல்லாவற்றை யுமே தலைகீழாக்கிவிடுவாய்போல இருக்கிறதே. இந்தக் கடிதத்தைக் கண்டால் காளைக்கே உன் தகப்பனர் இங்குவந்தாலும் வருவார்' என்ருன் தியாகு.
' வரட்டுமே, அதற்காக அவருக் குப் பொய் சொல்ல வேண்டுமா ? அல்லது அவரை ஏமாற்ற வேண்டுமா ? வந்துவிட்டார் என்ருல் நான் கொண்ட கொள்கைதான் மாறப் போகிறதா ?’ எ ன் மு ன் நடராஜன்.
தியாகு சடாரென்று முன்னுற் கிடந்த கடிதத்தை எடுத்துக் கிழித்தெறிந்துகொண்டே “ இப்போது ஒன்றுமே எழுதவேண்டாம்; எழுதவேண்டுமென்ருல் ஆறுதலாக காளேக்கு எழுது. இப்போது வெளியே போய்விட்டு வருவோம் வா' என்றவாறே நடரா
ஜனின் கையைப் பிடித்து இழுத்தான்.
15டராஜனும் எழுந்துகொண்டே தியாகுவின் பின்னுல் கடந்தான். அப்போது மாலை ஆறுமணிக்கு மேலாகியிருந்தது. கண்ணேப் பறிக்கும் மின்சார விளக்குகளின் ஒளிவெள்ளத்தில், தெருவின் இரு
கரையிலும் சனக்கூட்டம் ஆற்றுவெள்ளம்போல
வளைந்து சுளித்துச் சென்றது. பட்டினம் என்ருல் ஒரே தேர் திருவிழாவா ? இத்தனே சனக்கூட்டம் எங்கிருந்து வந்தது? புற்றை வெட்டிச் சரித்தால் எறும்புகள் கலைந்து ஒடுமே, அதேபோலத்தான் சனங்களும் கலைந்து வழிந்து கொண்டிருக்கையில்
தியாகு அக்கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு
31

Page 88
கொழுகொம்பு 162
கடந்தான். அவன் பின்னல் நடராஜன், ஆற்று வெள்ளத்தில் எங்கே போகிருேம் என்ற பிரக்ஞையே யின்றி மிதந்து செல்லும் பழுத்த இலையைப்போல மிதந்து சென்ருன். அவன் உள்ளம் 36)gFT 5 இருந்தது; அது பறந்தது.
தேயிலைத் தோட்டத்தில் அவன் 'டாக்குத்தர் ஐயா ஆகி விட்டான். அவனுக்கு ஒரு சிறிய வீடு கிடைத்தது. பனிப்புகார் படர்ந்த மலையுச்சியிலே தனிமையாக இருக்கும் அந்த வீட்டிலே கனகமும்
அவன் மன எண்ணங்களுக்குப் பின்னணியாகக் கடைத்தெரு ரேடியோக்கள் எல்லாமே பாடுகின்றன:
பாட்டுக் கலந்திடவே - எனக்கொரு பத்தினிப் பெண் வேண்டும் - எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டு தர வேண்டும்.
இன்ப நினேவுகளில் மிதந்த 5டராஜன், தியாகு
வின் பின்னுல் கடந்து இருவரும் கால்பேஸ்’ மைதா
னத்துக்கு வந்துவிட்டனர். அப்போது அவர்கள் பக் கத்தில் புத்தம் புதிய கார் ஒன்று திடீரென்று வந்து நின்றது.
கடராஜன் பயங்துபோய் அந்தக் காருக்குள் உற்று கோக்கினன்.
 
 

يا كحع
3,612h)
அஞ்சினவனுக்கு ஆகாயமெல்லாம் பேய் என் பார்கள். தன் பக்கத்திற் கார் வந்து சடுதியாக நின்றபோது கடராஜன் பயங்தே போய்விட்டான். அவன் மனதில் ஒடிய இன்ப நினைவுகளும் அந்தக் கார் நின்றதைப் போலவே டக் கென்று நின்று விட்டன.
காருக்குள்ளிருந்தவர் தியாகராஜாவை விழித்து 'ஹல்லோ ராஜா ! உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தேனே' என்ருர்,
* இன்றுதான் கடிதம் கிடைத்தது; ஆள்கூடக் கிடைத்துவிட்டது. இதோ இவர்தான் மிஸ்டர் (5ட ராஜா. அடுத்த மாதமே உங்கள் தோட்டத்திற்கு வருவார் ' என்ருன் நடராஜனையும் வந்தவருக்கு அறிமுகம் செய்து வைத்து " இவர்தான் மிஸ்டர் ஜயவர்த்தன ஹற்றணில் இவருக்குப் பெரிய தேயிலைத் தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்து ஆஸ் பத்திரிக்குத்தான் தங்களே வேலைக்கு வரும்படி கேட் கிருர் .' என்ருன்.
15டராஜனுக்குப் பயம் தெளிந்தது; தான் தேடிய உத்தியோகம் தன் காலடியிலேயே சரண்புகுவதை நினைக்கையில் ஆனந்த மிகுதியால் அவன் வாய டைத்துப் போய்விட்டது. மேலும் தான் உத்தி

Page 89
கொழுகொம்பு 164
„ሥ--ሥ-~ሥ-~ሥ
-1N, 1N1NM anaan
யோகம் பார் க் க ச் செல்லும் தோட்டத்துரை தன் னே ப் போலவே ஒர் இளேஞனுக இருந்தது அவ
லுக்குப் பரமதிருப்தியாக இருந்தது. அந்தநிறைவு
உணர்ச்சியில் ஜயவர்த்தணுவின் கையைக் குலுக்கிக் கொண்டான்.
ஜயவர்த்தன அவனிடம் தன் தோட்டத்து விலாசத்தைக் கொடுத்து அடுத்தமாதம் முதலாங் திகதி வேலையை ஒப்புக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு போய்விட்டார்.
வீட்டுக்கு வந்த நடராஜன் படுக்கையிற் புரண்டு கொண்டே மறுபடியும் கனகத்தின் கடிதத்தைப் படித்தான் அந்தக் கடிதம் ஒரு பைபிள்வாக்கியத் தோடு முடி திரு ங் த து அழுகிறவர்கள் பாக்கிய வான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள். உங்களுக்காக நான் அழுதுகொண்டுதா னிருக்கிறேன். எனக்கும் ஆறுதல் கிடைக்கும் என்ற கம்பிக்கை இருக்கிறது' என்று கனகம் அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள். படிக் து முடித்த 15டராஜன் படுக் கையிலிருந்துகொண்டே கனகத்துக்குக் கடிதம் எழுதி னன். ஏதோவெல்லாம் எழுதிவிட்டு 'நீ இனி அமத் தேவையில்லை கெதியில் 5ான் அங்கு வருவேன். அப் போது உன் அழுகை தீர்ந்துவிடும்' என்று கடிதத்தை முடித்தான், உண்மைதானே 1 கனகத்துக்கு மட்டுமா ஆறுதல் கிடைத்துவிடும். நடராஜனின் தீர்மானத்தில் அல்லலாடும் அவன் மனதிற்குக்கூட அல்லவா ஆறுதல் கிடைத்துவிட்டது. கடலில் அலைகள் என்றைக்கமே ஒய்வதில்லை. ஆகவே கரையிற் குந்திக்கொண்டு அலே அடங்கட்டும் குளிப்போம் என்றிருப்பதில் ஏதாவது
 

165 கெ ாழுகொம்பு
அர்த்தமிருக்கிறதா ? துணிந்து அலைகடலில் இறங்கிக் குளிப்பவன்தான் தன் கருமத்தை முடித்து ஆறுத லடைகிறன். அலே கடல்போலக் குமுறிக்கொண்டிருக் கும் இன்றைய உலகிலும் அப்படித்தான் செயலாற்ற வேண்டும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு மட்டுமல்ல; தணிந்தோர் மாட்டும் உள்ளது. நடராஜ னும் தன் படிப்பு, தங்தையார், குடும்பம், ஊர் எல்லாவற்றையுமே விட்டெறிந்துவிட்டுச் செயலாற்
றத் துணிந்தபோது அவனுக்கு ஆறுதலாகவே இருக்
தி து.
ஆனுல் இந்த நிலையிலும் அவனுக்குத் தந்தையா ரின் எண்ணம் வந்தது. 'தான் ஏற்கனவே எண்ணி யதுபோலத் தந்தையாருக்குத் தான் கனகத்தைக் கைவிட முடியாது என்று வெட்டொன்று துண்டு இரண்டாக எழுதிவிடுவோமா' என்று யோசித்தான். மறுகணம் தியாகு சொன்னதுபோல 'ஏன் எழுத வேண்டும் 2 முதலிற் கருமத்தை எவருக்கும் தெரியா
மலே முடிப்போம். அதன்பிறகு 15டப்பது கடக்கட்
டும்' என்று எண்ணினுன்,
15டராஜன் கேர்மையானவன்தான். ஒளி ப் பு மறைப்பு என்பது அவனிடம் கிடையாது, கெஞ்சாரப் பொய் சொல்லி அவனுக்குப் பழக்கமில்லை. ஆனுல் இன்றைக்குத் தன் தந்தையாரை ஏமாற்ற, தன் உள்ளத்தை மறைக்க எண்ணமிட்டான் அந்த எண் னம் அவன் மனத்தைச் சூறைக்காற்றிலடிபடும் துரும் பாக அலைக் கழித்தது. இதுவரையிருந்த அமைதி போயேவிட்டது. அந்தக் குழப்பத்திலே கித்திராதேவி அவலே அணைத்துக்கொண்டாள்.

Page 90
கொழுகொம்பு 166
SqLLLLLSAAAASAAAASLSLqLSA SqSAASAA LSLSSAA qqS SAAA SqiSASASA SLS A SLSASSA SLSASSMLL SJSeSLSLSSASLSSASLSSASSSLSLMASAAS S SAASAAS MLSMAASAAS SLLLLLAALS0LS
கடிதத்தை எழுதிய அம்பலவாணர் ஒவ்வொரு நாளும் தன் மகனுடைய கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். வயலிலே உழவுக்குப் போகிறவர் மாலையிற் திரும்பி வந்ததும் மகனின் கடிதத்துக்காக அந்த வீடு முழுவதையுமே அரித்துப் பார்ப்பார். கடிதம் வரவில்லை என்று அறிந்ததும் அவர் முகத் திற் பெரிய ஏமாற்றம் படர்ந்துவிடும்.
கடிதம் அனுப்பி ஐந்து நாட்களாகிவிட்டன. அப்போதும் கடிதம் வராதபோது அவருக்குச் சங் தேகம் வலுத்துவிட்டது.
கனகத்தைத் தேடிக்கொண்டு கல்முனைக்குத்தான் போய்விட்டானே ? தன் சுயமரியாதை, கெளரவம் எல்லாவற்றையுமே தாங்கிக்கொண்டு தூண்போல நிற்கும் தன் ஒரே ஒரு மகன் தன்னைக் கைவிட்டு விட்டானு என்றெல்லாம் எண்ணங்கள் ஓடுகையில் அவரால் அந்தத் துன்பத்தைத் தாங்கமுடியவில்லை. காரியம் மிஞ்சிப்போகுமுன்னர் அதைத் தன் கைக் குள் அடக்கிவிடவேண்டும் என்று அம்பலவாணர் தீர்மானித்துக்கொண்டார். வெள்ளம் வரமுன்னர் அணைகட்டவேண்டாமா ?
கொழும்புக்குப் போகலாம் என்று எண்ணினர் அம்பலவாணர். ஆனல் வயலில் உழவு கடந்துகொண் டிருந்தது. அம்பலவாணருக்கு மகாத்மா காந்தியைப் போல இயந்திரங்களில் நம்பிக்கையில்லை. அரசாங்கம் வாடகைக்கு விடும் இயந்திரக் கலப்பையினுல் இரண்டு மூன்று (5ாட்களில் வயலைக் கிண்டித்தள்ளி விடலாம் ஆனுற் சென்ற வருடம் இயந்திரக் கலப்பையால்
 
 

16? கொழுகொம்பு
~ er is le ... er in er is ~ le so ...
உழுததினல் அவர் வயலே பாழாகிவிட்டது என்று
எண்ணிக்கொண்டிருந்தார் அம்பலவாணர் அவர்
தெய்வமாகப் பூசித்துவரும் எருத்து மாடுகள் வயலில்
மிதிக்காவிட்டால், சீதேவி அங்கு வருவாளா ? மாடு
பூட்டி ஏருழுவதானுல் பதினைந்து நாட்களுக்கு மேலா வது பிடிக்கும். அந்த நாட்களில் வயற் சொந்தக் காரன் இருக்காவிட்டால் வேலே ஓடாது; உழவும் கன் ருயிராத,
ஆனல் தான் மட்டும் இந்த நேரம் மகனைப்பற் றிப் பாராமுகமாக இருந்துவிட்டால். பிறகு உல கில் அவர் தலை நிமிர்ந்து வாழ முடியுமா ? கங்தையா அவர் தலையில் ஏறி மிதிக்கமாட்டானு ? அம்பல வாணருக்கு ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை.
அடுத்த அடுத்த நாட்களிலும் கடிதம் வரவில்லை. அவருக்குத் தன் அருமை மகன்மேல் ஆத்திரம் ஆத் திரமாக வந்தது. கடலிலிருந்து இழுத்த வெறும் தூண்டில்போல் அவர் கடிதம் எந்தப் பிரயோசனத் தையும் தராதது அவருக்குப் பொறுக்க முடியாத ஏமாற்றமாக இருந்தது. தன் மகனு தனக்கு இப் படிச் செய்கிருன்? என்று அவரையே அவர் கேட்கும் போது அவர் நெஞ்சு வெடித்து விடும்போல் இருக் திதி,
புனுகு பூனையைப்போலப் புறுபுறுத்துக் கொண்டு திரியும் அம்பலவாணரை அவர் மனைவி கேட்டாள். 'ஏன் இரண்டு மூன்று காட்களாக ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்’ என்று.

Page 91
கொழுகொம்பு 168
‘எல்லாம் நீ பெத்தாயே அந்த மகனுற் தான்' என்று எரிந்து விழுந்தார் அம்பலவாணர்.
'ஏன் அவனுக்கென்ன?' என்று பதட்டத்துடன் (3 g5 L "LLIT Gjir (OPLJIT Gðir GOT LħLDAT.
* அவனுக் கென்னவா ? அவனும் உன் மகன்
தானே. அடி ஆமணக்கென் ருல் நுனி என்ன கொச்சி யாகவா இருக்கும். இன்றைக்கே போய்ப் பயலின் செவியைப்பிடித்து இழுத்து வந்து என்ன செய்கிறேன் பார்?' என்ருர் அம்பலவாணர்.
-
பொன்னம்மா ஒன்றும் அறியாமற் தவித்தாள். அம்பலவாணர் அன்றைக்கே கொழும்புக்குப் புறப் பட்டார்.
கல்முனைக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்
டிருந்த 15டராஜன் முன்னுல் திடுதிப்பென்று தந்தை
யார் வந்து கின்றதைக் கண்டபோது சப்த காடிகளும் ஒடுங்கிப்போகத் திகைத்து நின்றன்.
அவன் தங்தையார் ‘எங்கே புறப்பட்டுக் கொண் டிருக்கிருய்?" என்று கேட்டார்.
எங்கிருந்தோ அப்போதுதான் வந்து அறைக்குள் காலடி எடுத்து வைத்த தியாகு, 'ஏன் புறப்படவில் லையா?' என்று கேட்டவன், அங்கே தங்தையும் மக னும் நிற்பதைக் கண்டு விறைத்துப்போய் நின்மூன்.
 

25
துளி விஷம்
அம்பலவாணரைத் திடுகூருகக் கண்ட தியாகு மெதுவாக அவ்விடத்தை விட்டு கழுவி விட்டான். த5தைகசூம மகனுக்கும தி1ெ5த யுததம ஒனறு கடக்கப்போகிறது என்று தீர்மானித்தான். அந்த யுத்தத்தைத் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவுடன் அடுத்த அறையிற் போயிருந்து கொண் டான்.
நடராஜனுக்கும் அப்பாவைக் கண்டபோது ஆச் சரியமாக இருந்தது. தன்னைக் குழப்பத்தான் அவர் வந்திருப்பார் என்று எண்ணியபோது அவனுக்கு ஆக் திரமாகவும் இருந்தது. ஆனுற் கியாகு அவனிடம் படித்துப் படித்துச் சொல்லியிருந்தான் என்ன தான் செய்தாலும் எதற்கும் ஆத்திரப்படக் கூடாது. செய்வது மற்றவர்களுக்கும் தெரியக்கூடாது' என்று கடராஜன் இலட்சியவாதியாகத்தான் இருப்பினும் ம காத் மா காந்தியல்ல, இலட்சியம் மட்டுமல்ல, அதை அடையும் வழி கூடப் புனிதமாயிருக்க வேண் டும் என்ற கல்லெண்ணம் இப்போது அவனிடம் இல்லை. வெற்றிதான் குறிக்கோள்.
அம்பலவாணரும் மூதூரிலிருந்து புறப் படும்
போது ஆத்திரமாகத்தான் வந்தார். ஆனுல் ஆத்தி
ரம் என்ன கித்தியத்துவம் பெற்றுவிட்ட உணர்ச்

Page 92
கொழுகொம்பு 120
对 SqSASASASLSASAS SLSLSAS SLSLSASSLLSASASLSSASAS ^مخبر^سمبرطحسمبر、حسمبرحسمبرجسمبر
سمبرح صبرح جسمبری
சியா ? தமிழ் வார்ப்பத்திரிகைகள் சிலவற்றில் வெளி யாகும் சிறு கதைகளைப்போல ஆத்திர வுணர்ச்சிக்கு ஒரு வாரங்கூட-ஏன் ஒரு5ாட்கூட-ஆயுள் இல்லை. இரவு முழுக்க ரயிலிலே யோசித்து யோ சித் துக் கொண்டே அம்பலவாணர் 'மகனே ப் பயமுறுத்தியோ வெருட்டியோ ஒன்றும் செய்யக்கூடாது சாதுர்ய மாகப் பேசித்தான் அவன் மனதைத் திருப்ப வேண் டும்' என்று எண்ணிக்கொண்டு வந்தார் எனவே, தங்தையும் மகனும் தங்கள் சுயரூபத்தை மறைத்து, இருவருக்குமிடையில் ஒரு பொய்ம்மையை இழை யோடவிட்டு நின்றனர்.
நடராஜன் தந்தையாரைக் கேட்டான்: 'எப் போது வந்தீர்கள் ?’ என்று.
சாதாரணமாக இருந்தால் இப்பதான் வங்தேன் என்று தெரியவில்லையா ? எப்போது வந்தீர்களாமே. இது ஒரு கேள்வியா?" என்றுதான் அம்பலவாணர் கேட்டிருப்பார். ஆனல் இன்றைக்கு அ ப் படி ச் சொல்ல அவரால் முடியுமா? 'இன்றைக்குத்தான் வங்தேன். கொஞ்சம் வேலையிருக்கிறது. அதுதான் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்' என் ரூர் அம்பலவாணர்.
'கடிதம் எழுதியிருக்கலாமே, கான் ரயிலடியிற் கார்த்திருப்பேனே' என்ருன் நடராஜன்.
*எழுதி என்ன பிரயோசனம் ? நீ என்ன பதிலா எழுதப்போகிருய்?’ என்று பெருமூச்சு விட்டார் அம் பலவாணர், தன் அப்பாவா இப்படிப் பேசுகிருர்

A.
171 கொழுகொம்பு
~ a s-le - - - - -~~.
என்பதை நடராஜனுல் நம்பமுடியவில்லை. அவர் ‘காரி யமாகத்தான்’ வந்திருக்கிருர் என்று நடராஜனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. எனவே, வைரத்தை வைரத் தாலே வெட்ட முயன்றவனுக அவனும் விட்டுக்கொ டுக்காமலே பேசத் தொடங்கினன். 'ஊரில் எல்லா ருஞ் சுகமா?' என்று ஆரம்பித்தான்.
'யார் எல்லாரும் ? நான் இருக்கிறேன். உன் அம்மா இருக்கிரு. வேறு நமக்கு யார் இருக்கிருர்கள். நானும் அம்மாவும் சுகமாகத்தான் இருக்கிருேம்' என்ருர் அம்பலவாணர் பிறகும் நடராஜன் பேசத் தொடங்கு முன்னமே அவர் சொன்னுர்: “மற்றெல் லாரின் சுகத்தைப்பற்றியுந்தான் உனக்குக் கடிதம் வந்திருக்குமே" என்ருர்,
அப்பா எதைச் சொல்கிருர் என்று நடராஜனுக்கு கன்முக விளங்கியது. அவன் சொன்னன்: ' வேறு யாருமே எனக்குக் கடிதம் எழுதவில்லை. தேவையு மில்லை' என்று,
* யாரும் ஏன் எழுதப் போகிருர்கள். உனது மாமனுர் கூடக் கனகத்தை, சுந்தரத்துக்குக் கல்யா ணஞ் செய்து விடுவது என்று தீர்மானித்து விட்டார். அந்தக் கனகம் கூட என்ன ? அவள் கூட அதற்குச் ச ம் ம தித் து விட்டாளாமே. அவள் கல்முனைக்குப் போனுளாம். அவள் போன அடுத்த காளே அந்தச் சுந்தரமும் போய் விட்டானும் ' என்ருர் அம்பலவா னர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல அம்பலவாணர் பேசினலும் அந்த ஊசி நடராஜன் மனதில் சுருக்கென்றுதான் தைத்தது.

Page 93
கொழுகொம்பு 172
~~~~~\~~~~~~~~~:~~~
και οι ன ப் பா பொய் சொல்லுகிறீர்கள் ? சுற்றி வளைத்துப் பேசா மற் கனகத்தை இனிக் கனவிலும் நினையாதே; தான் அதற்கு உன்னை விடமாட்டேன் என்று நேரடியாகவே சொல்லுங்களேன்' என்று
சொல்லத் தோன்றியது நடராஜனுக்கு. ஆனல் தன்
உணர்ச்சிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான் ஆனுலும் அவன் பேச எண்ணியவைகள் அவனுள் ளேயே திரிந்து வெளியில் வந்தன. ' யாரோ உங்க ளுக்குக் கதை கட்டியிருக்கிருரர்கள் அப்பா, '
* நீ அப்படித்தான் சொல்வாய் என்பது எனக் குத் தெரியுமே, உன் மனம் வெள்ளையானதுதான். ஆணுல் எல்லார் மனமும் அப்படியா இருக்கும். கான் சொல்வதை நம்பாவிட்டாலும் ஊரில் வந்து உன் கண்ணுரக் கண்டபின்பாவது நம்பத்தானே வேண் டும் ' என்ருர் அம்பலவாணர்.
" நான் எங்கே இனி ஊருக்கு வரப்போகிறேன்" என்று சொன்ன 5டராஜன் காக்கைக் கடித்துக் டுதான் டான்,
* ஏன் ஊருக்கு வராமல் என்ன ? அவள் போய் விட்டால் உனக்கு வேறு பெண்ணு கிடைக்காது. அந்தக் கலியாணம் கடக்க முதலே கான் உனக்கு ஏற்ற இடத்திலே வேறு கலியாணத்தை 15 டத் தி வைக்கா விட்டால் நான் அம்பலவாணன் இல்லை " என்று உணர்ச்சியுடன் பேசினர் அம்பலவாணர், அவர் இழுத்து மூடியிருந்த பொய்ம்மைத்திரை அவரை அறியாமலே கமன்று விட்டது.

173. கொழுகொம்பு
தந்தையின் சுய ரூபத்தைக் கண்ட நடராஜனுக் கும் ஆத்திரம் பிய்த்துக்கொண்டு வந்தது. அந்த ஆத்திரத்தில் ' அப்பா எனக்கு இப்போது கலியா ணமே வேண்டியதில்லை, பரீட்சை முடிந்து உத்தி யோகம் வரட்டும். அதற்குள் என்ன அவசரம் ?” என்ருன்,
‘ எனக்குத்தான் என்ன அவசரம்? ஆனு ற் செய்தவனுக்குச் செய்வது செத்த பிறகல்ல அதற் குத்தான் சொன்னேன்' என்ற அ ம் பல வா ண ர் அதற்கு மேற் பேசவிரும்பாதவர்போல, 'கான் குளித்து விட்டு வருகிறேன்; வெளியிற் போய் வரலாம் வா' என்றுவிட்டு எழுந்தார்.
நடராஜனின் உள்ளம் அப்பா சொன்னதில் உண்மை ஏதும் இருக்குமா?’ என்று சிங் தித்தது. ஒடும் மோட்டாரில் நிலையின்றி ஊசலாடும் மீற்றர். முள்ளைப்போல அவன் மனம் தவித்த போது அம். பலவாணர் குளித்துவிட்டு வந்தார்.
வெளியே கிளம்பிய இருவரும் கொழும்பு முழு வதும் அலைந்தார்கள். மியூசியம், மிருகக் காட்சிக் சாலை, துறைமுகம் என்று எதையெல்லாம் பார்க்க வேண்டுமோ அதையெல்லாம் பார்த்தார்கள். தன் மகன் மீது என்றைக்குமில்லாத பரிவு காட்டினர் அம் I (G)3)(600T II. -
சாயந்திரமானதும் நடராஜன் தன் தகப்பனுரி டம் கேட்டான். ' அப்பா என்னத்திற்காக இத்தனை அவசரமாகக் கொழும்புக்கு வந்தீர்கள் ?' என்று,
_്

Page 94
கொழுகொம்பு 1?4
عصبرج۔سمبرحمحبرحمحےخدمحی
" அவசரம் ஒன்றும் இல்லை. வீட்டுச்சாமான்கள் கொஞ்சம் வாங்க வேண்டும். ஊரிலே தச்சனிடம் காசைக் கொடுத்துவிட்டு அவன் வீட்டுக்கு நாட்கணக் காக அலைய யாரால் முடியும் ? அத்தோடு கொழும் பில் நீயிருக்கும்போதே சாமான்களை வாங்கிவிட வேண் டும் என்று எண்ணினேன் ' என்ருர் அம்பலவாணர்.
* அப்படியென்ன பொருள்கள் இப்போது வாங்க வேண்டும் ? வீட்டிலே ஒன்றும் இல்லையா ?' என்ருன் 5டராஜன்.
எல்லாந்தான் வாங்க வேண்டும். அதுவும் மார் கழி முடிந்து தை பிறந்து விட்டால் உனக்குக் கலி
யாணமும் வந்துவிடும். அதற்கு இப்போதே வாங்கி
விட்டாற் போகிறது ' என்ருர் அம்பலவாணர்.
' எனக்கிப்போது கலியாணமே வேண்டாம் என் கிறேனே ' என்ருன் நடராஜன்.
அம்பலவாணர் புன்னகை புரிந்தார். அந்தப் O - () o ) o գ)րիլ
புன்னகை இதயத்தின் நிறைவிற் தழும்பிய சிரிப்பு அல்ல. சங்தேகப்படும் கணவனைத் தன் வழிக்குத் திருப்ப முயலும் சோரம்போன மனைவியின் புன்ன கைதான் அது அந்தப்புன்னகையோடு சொன்னர்; * உன் அம்மாவை எனக்குக் கலியாணம் பேசும் போது 5ான் கூடத்தான் உன்னைப்போல் எனக்கு இப்போது கலியாணம் வேண்டாம் என்று சொன்
னேன் ' என்ருர் அம்பலவாணர்.
15டராஜனுக்கு உண்மை விளங்கிற்று. பரீட்சை முடிந்து வீட்டுக்குப் போனல் அப்பா தனக்குக் கலி
 

175 கொழுகொம்பு
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
ܐ
யானத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார் என்று அவனுக்குத் திட்டமாகத்
தெரிந்துவிட்டது. அத்தோடு கனகத்தையும் சுந்த
ரத்தையும் பற்றி அவர் சொன்ன கதை அவன் மன தைக் குழப்பியது. தன் தங்தையார் ஒற்றைக்காலில் நிற்பது போலவே மாமனுரும் நின்று கனகத்தைச் சுந்தரத்துக்கோ அல்லது வேறு யாருக்கோ கலியா ணம் முடித்து வைத்து விட்டால்.
அம்பலவாணர் மரத்தளபாடங்களிற் சில வாங்கி அவற்றை ரயிலில் அனுப்பி விட்டு அ ன்  ைற க் கே தானும் போய்விட்டார். ஆணுற் கனகத்தைப்பற்றி அவர் சொன்ன கதை ஒரு குடம் தேனேக் கெடுக்க ஒரு துளி விஷம் போதுமே, 15டராஜனின் இ ன் ப நினைவுகள் எல்லாமே கசந்து வேப்பங்காயாய்-குஞ்
சாய் மாறிக்கொண்டிருந்தன. அந்தத் துளி விஷம்
அவன் வாழ்க்கை முழுவதையுமே கைப்பாக்கி விடுமா?

Page 95
26
காதல்மடப்பிடியோடு
அம்பலவாணர் போனதும் தலைமறைவாகவிருந்த தியாகு கடராஜனிடம் வந்தான். வந்ததும் ஒன்றுமே தெரியாதவன் போல " அப்பா போய்விட்டாரா ?” என்று கேட்டான்.
p
* அவர் போய்விட்டாரே " என்று பதிலிறுத் தான் நடராஜன்.
* ஏன் வந்தாராம் ?"
'ஏன் வந்தார் என்பதுதான் எனக்கும் சரியா கத் தெரியவில்லை. இரண்டு மூன்று மரச்சாமான்கள் வாங்கினர் அதற்காக வேலை மினக்கெட்டுக் கொழும் புக்கு வந்திருக்க வேண்டியதில்லை. கனகத்தின் விஷய மாக என்னைக் கட்டுப்படுத்த வந்தவராகவும் தோன்ற
வில்லை. என்னேடு மிக மிகத்தான் தாராளமாகவும்
கதைத்தார் ' என்ருன் நடராஜன்.
தியாகு சிரித்தான். சிரித்துக்கொண்டே கேட் டான் ' புலி பதுங்குவது எதற்காகத் தெரியுமா ?
to: கு அழி 矿 Ավ
நடராஜன் பதில் சொல்லத் தோன்ருமல் தியா குவையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். தியாகு அவனிடம் மறுபடியும் கேட்டான்: ‘'என்ன விழிக்கிருய் ? புலி பதுங்குவது எதற்காக என்று கூடத் தெரியாதா ?'

1?? கொழுகொம்பு
'பாய்வதற்குத்தான் ' என்ருன் நடராஜன்.
* ஆம், பாய்வதற்குத் தான். உன் தங்தையார் பெரிய ஆள், அவர் பேசிய எல்லாவற்றையும் நான் ஒட்டுக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். கன கத்துக்கும் சுந்தரத்துக்கும் கலியாணம் நடக்கப்போ கிறது என்ற மகா உண்மையைச் சொல்வதற்குத் தான் அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிருர். இதி லிருந்தே நான் மற்றவைகளை ஊகித் துக் கொண் டேன். இதை ஒரு கடிதத்தில் எழுத முடியாமலா இத்தனை தூரம் வந்திருக்கிருர் என்பதை யோசித் தாயா ?’ என்ருன் தியாகு.
* ஒருவேளை அப்பா சொல்வதிற்கூட உண்மை யிருக்கலாம். கனகம் எனக்கு எழுதிய கடிதத்திற் கூடத் தன் தகப்பனர் சுந்தரத்தைத் தனக்குக் கலி யாணஞ் செய்ய முயற்சிப்பதாக எழுதியிருக்கிருள்' என்ருன் 5டராஜன்.
' சரிதான் உன் மனத்தை யறிந்துதான் அப்பா வும் உன்னிடம் பேசியிருக்கிருர், அப்போது விடுதலை கிடைத்ததும் நேராக வீட்டுக்குப்போ, இப்போதே கனகத்தையும் மறந்துவிடு. அப்பா உனக்கு அழ கான பெண்ணுகப் பார்த்து ஆயிரங்காலப் பயிராக வளர் அருமையாகக் கலி யா ண ம் முடித் தும் வைப்பார். கானும் என் இஷ்டமித்திரரோடு வந்து தம்பதிகளை ஆசீர்வதிக்கிறேன் ' என்று சொல்லிச் சிரித்தான்.
23

Page 96
  

Page 97
கொழுகொம்பு 180
என்ன வேண்டுமானுலுஞ் செய். ஆனல் இனிமேல் ஊருக்குப் போனுலோ, அதன் பிறகு கன கம் உனக்கில்லை என்று எண்ணிக்கொள். அவ்வளவு தான் என்னுற் சொல்ல முடியும் ' என்ருன் ,
நடராஜன் சிறிது யோசித்தான் அவனுல் எங் தத் தீர்மானத்திற்குமே வர முடியாமலிருந்தது. சிறிது 5ேரங் கழிந்தபின் சொன்னன்: ' அப்பாவுக்குத் தெரி யாமல் ஏதும் செய்துவிட்டால், அதைப் பொருமல் அப்பாவுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டால் . ஒரு வேளையிற் தற்கொலையே செய்துவிட்டால் .
தியாகு பலமாகச் சி ரித் தா ன் சிரித்துக் கொண்டே சொன்னன்: 'நீ ஒரு முட்டாள் எல் லாத் தகப்பன்மாரும் தம் பிள்ளைகளை வி ர ட் டி யடிக்கிருரர்கள். நீ எண்ணுவது மட்டும் சரியாக இருந்தால் என் தங்தை எனக்காக இதற்குள் ஆகக் குறைந்தது பத்துத் தடவையாவது தற்கொலை செய் திருக்கவேண்டும். ஒன்றையும் யோசிக்காமல் முத லில் நினேப்பதைச் செய். முதலில் அப்பா ஆத்தி ரப்படுவார். ஒரு வருடத்துக்குள் சமாதானமாகியும் விடுவார்' என்மூன்.
நடராஜனும் உணர்ச்சியோடு சொன்னுன்: 'சரி, அப்படியே செய்கிறேன்; காளைக்கே கல்முனைக்குப் போகிறேன். ஆணுல் அப்பாவுக்குத் தெரி யாமல் இதைச் செய்துவிட்டுப் பிறகு 15ான் அவரின் முகத் திலேயே விழிக்கமாட்டேன' அவன் இதைப் பேசி முடித்தபோது தன்னைப் பெற்று வளர்த்துப் பேராக் கிய தன் தங்தைக்காக அவன் கண்கள் அவனை

181 கொழுகொம்பு
ܐܝܓ¬ܐܝܓܔ
யறியாமலே கலங்கின. ஆனல் அந்தக் கலக்கம் தியாகுவுக்கு எந்த உணர்ச்சியையும் கொடுக்கவில்லை. உபயோகமற்று அவன் கண்கள் க லங்கு கி ன் றன என்று தியாகு எண்ணிக்கொண்டான்.
விடிந்தது; கொழும்பு ககரம் சுறுசுறுப்பாயிற்று. அந்தச் சுறுசுறுப்பு உச்சத்தை யடைந்தபோது மறு
படியும் இரு ட் டி ற் று. (5டராஜன் ரயிலில் ஏறிக்
கொண்டு கல்முனே க்குப் புறப்பட்டான்.
விடியற் காலையில் மட்டக்களப்பில் இறங்கிய நடராஜன், அங்கே மாப்பிள்ளே யாகத் தன்னை அலங் கரித்துக்கொண்டே கல்முனைக்குப் பஸ் ஏறினன். காலைச் சூரியனின் கதிர்கள் மட்டக்களப்பு வாவியிற் பிரதிபலித்து மினுங்குகையில் நடராஜன் மனமும் எதிர்கால இன்ப வாழ்வு பற்றிய வர்ண விசித்தி ரங்களோடு அலையாடிக்கொண்டிருந்தது. கல்லடிப் பாலத்தைப் பஸ் கடந்து அப்பால் அவனே அரியா சனத்தில் அரசரோடு சரியாசனம் வைத்த தாயாகிய சிவானந்த வித்தியாலயத்தைத் தாண்டுகையில், மட் டக்களப்பு மறுமலர்ச்சி இலக்கியத்தின் பிதா மக னுன சுவாமி விபுலாநந்தரின் சமாதியடியில் அவன் சிரங் தாழ்ந்தது.
கல்முனையை அடைந்ததும் நேரே கன்னிகாஸ் திரி மடத்துக்குப் போனுன். காலைச் சூரியனின் மஞ்சட் கிரணங்கள் அவன் முதுகிலே சுள்ளெ ஸ் றடிததன.
வெளிக் கேற்றைத் தாண்டி கடந்தவன் நேரே பழக்கப்பட்ட பாதையில் விரு ங் தின ர் தங்கும் அறைக்குப் போனன். அங்கே சுந்தரம் ஒரு கதிரை யில் இருந்தான். கனகம் சற்றுத் தள்ளித் தலையைக் குனிந்து கொண்டு நின்ருள்.

Page 98
27 இருள் சூழ்ந்தது
2)Tெரிலே வேலையற்றிருந்த சுந்தரத்திற்குத் தக் தையின் உபத்திரவம் பொறுக்க முடியாது போய் விட்டன், குடும்பத்திலே நிமிர்ந்த பிள்ளை; அதுவும் கொடித்துப்போன குடும்பத்தைக்  ைக தூ க் கி விட வேண்டிய நிலையிலுள்ளவன், ஒன்றுக்கும் உதவாதவ னகத் தெருளேம் அலைந்துகொண்டு திரிந்தால் எந் தத் தந்தைக்குத்தான் மனம் பொறுக்கும்? அவர் மகன் தன்னுடைய மடிப்புக் கலையாத உடுப்பிற்கே உழைத்தான் என்றிருந்தாற்கூட அகிலேசபிள்ளை மன வருத்தமில்லாமல் இருப்பார். இங்நிலையிற் சண்முகம் மூலமாக கங்தையா வீட்டிற் சம்பந்தஞ் செய்யச் செய்த முயற்சியும் தோல்வியடையவே, அகிலேச பிள்ளையவர்களுக்குத் தன் மகனைக் காண்பதே எரிச் சலாக இருந்தது
தந்தையின் அங்கலாய்ப்பையும் எரிச்சலையும்
பொறுக்க முடியாத சுந்தரம் வீ ட் டை வி ட் டே இளம்பி விட்டான், கிளம்பியவன் கல்லோயாத் திட் டத்தில் வேலை தேடிவரும் கும்பலோடு கும்பலாக கேரே கல்முனைக்குத்தான் வந்தான்.
கல்முனைக்கு வந்தவனுக்குக் கனகத்தைப்பற்றிய எண்ணம் உண்டாயிற்று, கனகத்திற்கும் அவனுக்
கும் எந்தத் தொடர்புமே இல்லைத்தான். அவளேக்

183 கொழுகொம்பு
கண்டாலே கத்தி சுத்திக் கொடியைக் கண்ட பண
மூட்டையைப் போலக் கனகம் முகத்தைத் திருப்பிக்
கொள்வதையும் அவன் கண்டுதான் இருக் கி ரு ன்.
ஆணுலும் அவன் கனகத்தைச் சந்திக்க விரும்பினன். உண்மைதானே, மக்கள் மழலைச்சொற் கேளாதவர் 妊 குழலினிது யாழினிது என்பார்களாம் என்று கூறு கிறது தமிழ் வேதம் வயதடைந்த சம்சாரிகளுக்கு இதுபொருந்தலாம். ஆனல் வசந்தகாலக் குருத்துக் கள் போல மனதிலே இன்ப நினைவுகள் எழும் வய திலுள்ள எந்த வாலிபனும் ஓர் இளம்பெண்ணின் குரலைத்தான் குழலைவிட யாழைப் பார்க்கிலும் அதி கம் விழைகிருன் அவள் அவனை விரும் பா மற் கடிந்து பேசுவதுகூட இ ன் பத் தே ஞ கத் தா ன் அவன் காதிற் பாய்கிறது.
சுந்தரமும், கனகம் தன் னே க் கடிந்தாற்கூட அதை இரசிக்கவே விரும்பினன். பாடசாலைக்குப் போனவன் கனகத்தை விசாரித்தான். யாரோ தன் னைத் தேடுவதாகத் தெரிந்த கனகம் தன் அண்ண னக இருக்கலாம், ஏன் 5டராஜனுகவே இருக்கலாம் என்றெண்ணிக்கொண்டு ஓடிவந்தாள். ஆனல் உப சரிப்பு அறையிலே சுந்தரத்தைக் கண்டபோது. நெற்றிக் கண்ணுல் எரித் து விட அவள் என்ன தில்லை 5டராஜனு ?
வந்த வனே முகத்திலடித்தாற்போலப் போ என்று சொல்லவும் முடியவில்லை. மேலும் அப்ப டித்தான் துரத்திவிட்டுப் போனுலும் அவள் சக ஆசிரியைகள் 'வந்தவன் யார் ? ஏன் பேசாமல் வந்து

Page 99
கொழுகொம்பு 184
۔۔۔۔۔۔
விட்டாய்?" என்று தொளைத்துக் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் அவளால் முடி Այլ OT ? -
எனவே, ஒன்றும் பேசாமற் தலையைக் குனிந்து நின்ருள். இந்த நேரத்திற்தான் நடராஜனும் அங்கே வந்தான் சுந்தரத்தை அங்கே கண்டபோது வானத் திலிருந்து ஆயிரம் கட்சத்திரங்கள் ஒரே நேரத்தில்
இடம் பெயர்ந்து அங்கும் இங்கும் ஒடுவதைப்போல
அவன் மனத்துள்ளும் எண்ணங்கள் கனவேகத்தில் ஓடின. அப்பா சொன்ன தெல்லாம் சரியா ? கன கத்தின் பின்னலேயே சுந்தரமும் கல்முனைக்கு வந்து விட்டான ? கனகம் கூட அவனே விரும்புகிருளா ? அவன் முன்னுல் எத்தனை நாணத்தோடு தலையைக் குனிந்து கொண்டு நிற்கிருள் ?
நடராஜனேக் கண்ட சுந்தரமும் தி  ைகத் துப் போனுன் ஆனுலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் * எப்போ வந்தாய் நடராஜா ?” என்று கேட்டான்.
* இப்போதான் ' என்று அலட்சியமாக கடரா ஜன் இறு த் த விடையினல் ஆடிக்காற்றிலே சர
சரத்து உதிரும் ஆலஞ் சருகுபோலக் க ன க த்தின்
உள்ளமும் வரண்டு சருகா கிச் சுழன்றது.
* நானும் நேற்றுத்தான் வங்தேன். கனகத்தின் தந்தையார் இந்தப் பார்சலைக் கனகத்திடம் கொடுக் கும்படி என்னிடம் தந்தார். சரி கான் வருகிறேன்' என்றுவிட்டுக் கையில் வைத்திருந்த பொட்டலத்தை மேசையின் மேலே வைத்துவிட்டுச் சுந்தரம் போய் விட்டான்.
 

185 கொழுகொம்பு
MLSSAAAASAASS SAASAAS ASAAASqSqqqSqS
கனகத்தின் தலை சுழன்றது. என்ன பேசுவது! எப்படிப் பேசுவது? என்று அவளுக்குத் தெரியவில்லை, நெருப்புப் பிடித்து எரியும் வைக்கோர் போரைப்போல அவள் உள்ளம் எரிகையில், அந்தப் பெரு நெருப்பில் அவள் உள்ளம் சாம்பர் கூட இல்லாதபடி சூன்யமாகி விடும்போல இருந்தது. இந்தச் சுந்தரம் ஏன் வங் தான்? என்று எண்ணிப் பார்த்தபோது, மோட்சத் தின் பலகணிகள் வழியாகப் பாதாளத்துக்குப் பிடித் துத் தள்ளப்பட்ட மனிதனைப்போல அவளும் எங்கோ கீழே கீழே அதல பாதாளத்திற்குப் போய்க்கொண் டிருப்பதைப் போலத் தோன்றிற்று.
மனத்துள்ளே ஒடி 1ெ5 வரி ங் த ஆயிரமாயிரம் வினுக்களும் அடங்கி மனம் புறம்பான பாத்திரத்துள் ஊற்றப்பட்ட கொதிநீரைப்போல அடங்கியபின் 5ட ராஜன் கேட்டான்: 'ஏன் பேசாமல் நிற்கிருய்?"
கனகத்திற்கு உயிர் வந்தது. ஆனல் வேருேர் உல கத்தையே சிரிட்டித்து இடையிலே நிறுத்தப்பட்ட திரிசங்குவைப்போலத்தான் அவள் நிலையிருந்தது. இன் னமும் பயமும் கலக்கமும் தெளியவில்லை. ஆனுலும்
அவள் பேசவேண்டியே இருந்தது. அவள் சொன்னுள்: 'நீங்களும்தானே பேசாமலிருந்தீர்கள்? இப் போது தான் வருகிறீர்களா?"
"ஆமாம், இப்போதுதான் வருகிறேன். பின்னே ரம் போகப் போகிறேன்" -
'இப்போதுதான் வங்தேன் என்கிறீர்கள், பின் னேரம் போகவேண்டும் என்கிறீர்கள், அவ்வளவு அவ
24

Page 100
கொழுகொம்பு 186
சரமாக ஏன் வந்தீர்கள்?' என்று நெளிந்தாள் கனகம், அவளுக்குக் கலக்கம் தெளிந்துவிட்டது.
'அவசரம்தான்; எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான். பின்னேரம் புறப்படுவதற்குத் தயாராக இரு' என்ருன் நடராஜன்.
கனகம் ஆச்சரியத்தோடு கேட்டாள் 'எங்கோ' என்று. -- ܓ
‘எங்கேயா? எங்கே வஞ்சனையும் பொருமையும் இல்லையோ, எங்கே மனிதன் தன் உணர்ச்சிகளுக்குத் தன்னையே திருப்திப்படுத்திக்கொண்டு வாழலாமோ, எங்கே பயமும் அச்சமும் இல்லையோ, எங்கே அழுகை யும் பற்கடிப்பும் இல்லையோ, எங்கே மனிதன் மனித ணுக வாழமுடியுமோ, அங்கேதான் இருவரும் போக வேண்டும்' என்று கீதாஞ்சலி பாடிய தாகூரைப்போல கடராஜன் உணர்ச்சியுடன் சொன்னுன்
பயத்தை வெளிக்காட்டாமல் மறைக்கும் ஒளி யற்ற புன்னகையோடு கனகம் கேட்டாள் 'எங்கே
என்று எனக்கு விளங்கவில்லையே?’
‘எங்கானல் என்ன? உனக்காக ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன். வாழ வழிசெய்துகொண்டேன்."
'அப்போது உங்கள் படிப்பு--?'
'படித்தது போதும், முதலில் மனிதன் மனிதனுக வாழவேண்டும்'
 

187 கொழுகொம்பு
AqSqASAq S SLSASAASASASASASASASASASASASASASASLSSASSSSS SLSSS "سمیہ محیبر^سمبر محیرہ۔۔۔ص
'ஏன் இப்படிப் புத்தியில்லாதவர் மாதிரிப் பேசு கிறீர்கள்? அடுத்த மாதம் உங்கள் படிப்பு முடிந்து விடும் அதற்குள் என்ன அவசரம்?' என்ருள் கனகம்,
'அவசரம்தான், நான் இப்போது பாடசாலைக்கே போவதில்லை. நீ வந்தேயாகவேண்டும்' என்ருன்,
கனகத்திற்குத் திகிலாக இரு ங் த து கடராஜன் கொந்தளிப்பான நிலைக்கு உடனடியாக விமோசனத் தைத் தேடினன். ஆனுற் கனகமோ பெண்மைக்கே உரிய இயல்பான அமைதியுடன், கொந்தளிப்புக்குப் பின்னர்வரும் அமைதியான வாழ்க்கையைத்தான்
விரும்பினுள் மேலும் தனக்கு நடராஜன் கிடைக்கா
விட்டாற்கூட அவளாற் பொறுத்துக்கொள்ள முடிங்
திருக்கும்; ஆனுற் தனக்காக தன்னுல் அவன் படிப்புப்
பாழாகி, அவன் எதிர்காலமே இருண்டு விடுவதை அவ ளாற் பொறுக்க முடியவில்லை. எனவே அவள் சொன் னள், 'உங்கள் படிப்பு முடியட்டுமே. அப்போது வரு கிறேன்"
'இப்போது வரமாட்டாயா?" என்று உரத்துக் கேட்டான் நடராஜன்.
*யார் அப்படிச் சொன்னது? உங்கள்--'
'அந்தக் கதை ஒன்றும் தேவையில்லை, நீ வருகி முயா மாட்டாயா? அதற்குமட்டுமே பதில்சொல்."
கனகம் எதையோ எண்ணிச் 'தபடியே 'வரா விட்டால்--?' என்ருள்.

Page 101
கொழுகொம்பு 188
AJSMLMAeSMLSSASLMLS MLLSSASLSSASLSSASSMSMSAJSLSLSASSMSSSLSSASSSSSASASSSLS
'வராவிட்டாலா? நீ வரத்தான் மாட்டாய் என் பது எனக்குத் தெரியுமே. வராமலே இரு. கான் போகி றேன். உனக்கும் சுந்தரத்திற்கும் சுயம்வரம் நடக்கும் போது எனக்கெழுது' என்று விட்டுத் திரும்பிக் கொண்டு விறு விறு என்று கடந்தான்,
கனகம் அறைவாசல் வரை அலறிக்கொண்டு ஓடி ள்ை. ஆனல் அதற்குள் நடராஜன் வெளிக் கேற் றையே தாண்டிப் போய்க்கொண்டிருந்தான். அவன் முன்னுல் அமரர் புதுமைப்பித்தன் பாடியதைப்போல *செல்லும் வழியிருட்டுச் செல்லுமிடமிருட்டுச் சிங்தை தனிலுந் தனியிருட்டாகவே இருந்தது. ஆம் உலகமே இருண்டுவிட்டது.
 
 

2S
திசை தப்பியது
'அழுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்' என்ற பைபிள் வாக் கியம் கனகத்திற்கு வாய்ப்பாடமானதொன்று, நட ராஜனுக்கு எழுதிய கடிதத்திற்கூட அவள் இதைப் பிரயோகித்து இருக்கிருள். வித்தகர்கள் இந்த வாக் கியத்திற்கு வேதாந்தமாகப் பொருள் விருத்துரைக்க லாம்; ஆனுற் சாதாரணமான மனித மூளைக்கும் இந்த வாக்கியத்தின் பொருள் எவ்வளவு பொருத்தமான தாகி இருக்கிறது. ஆம் அழுகிறவர்கள் பாக்கியவான் கள். துக்கம் வந்தால் மனிதன் அழத்தான் வேண்டும்; கதறியழ வேண்டும். கண்கள் கடைசிச் சொட்டு நீரை யும் வெளியேற்றும் வரை அழுகையில், இதயத்தின் பாரம் குறைகின்றது. உடலும் சோர்வடைகின்றது. உள்ளத்தின் இலகுவிலும் உடற் சோர்விலும் துக்கம்
அடங்கி ஆறுதல் கிடைக்கிறது.
கனகமும் கதறியழுதால் அவள் ஓரளவாவது ஆறுதலடைந்திருக்க முடியும். ஆனல் அவள் இருந்த சூழ்நிலையில் அவளால் அழமுடியுமா?
கடராஜன் பாடசாலையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில், பாடசாலை மணி கிணு, கிணு' என்று அடித்தது. ஒய்விற்காக மாணவிகளும், ஆசிரி யைகளும் அங்குமிங்குமாக கடந்தார்கள். அமைதியாக

Page 102
கொழுகொம்பு 190
இருந்த அந்தச் சூழ்நிலையிலே கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமும் வெடித்துக் கிளம்பி, உலகமே சிரிப்பும் கும்மாளமும் நிறைந்ததுதான் என்பதை நிரூபிப்பன போலத் தோன்றிற்று.
தான் இருந்த பக்கமாகக் கமலா வந்ததைக் கண் டதும், கனகம் தன் கண்களைத் துடைத்துக்கொண் டாள். உள்ளே பொங்கிக் குமுறும் சோகத்தைச் சிர மப்பட்டு அடக்கையில் காற்றின் அமுக்கம் தாங்க முடியாது வெடிக்கும் பலூனைப்போல அவள் சடலமே வெடித்துத் துகள் துகளாகி விடும்போல இருந்தது.
கமலா வந்ததும் கேட்டாள்; "நடராஜா தானே வந்தார்” என்று.
சரிதான் இனிமேல் எத்தனை கேள்விகள் கேட்க எண்ணி யிருக்கிருளோ! கனகத்துக்குச் சுருக்கமாகப் பதில் சொல்லி எப்படியும் அவளை விட்டுக் கழன்று போய்விட வேண்டும் என்றே தோன்றிற்று. ஆனல் **ஆம் அவர்தான்' என்று அவள் சொல்லுகையில் உதடுகள் அழவேண்டும் என்று துடித்தன.
'இப்போது ஏன் வந்தார்’ என்றுள் கமலா,
ஆம், நடராஜன் இப்போது ஏன் வந்தார்? இத யத்தில் செடியாக வளர்ந்திருந்த ஆசை என்ற பயிரைப் பிய்த்துப் பிடிங்கி, அதை இரத்தங் கசிந்துகொண்டே யிருக்கும்படி செய்யவா? அ  ைத க் கூட அவளால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனல் அவன் போகையிற் கடைசியாகச் சொல்லிவிட்டுப்போன வார்த்தைகள்
 
 

191 கொழுகொம்பு
ኤሥ”.....”`.....”.....ሖ"ኤ حمح۔۔۔۔۔۔۔۔۔۔۔محمحسح برص
சுந்தரத்தையும் தன்னையும்பற்றி அவர் எண்ணியிருந்த எண்னம்- இப்படி யெண்ணியா அவர் தன்னை விட் டுப் பிரிந்து போக வேண்டும்' என்று எண்ணியபோது எதிரேயிருந்த சுவரிலே தலையை மோதிக்கொண்டு சாக வேண்டும் என்று தோன்றிற்று. இதற்குள் கமலா, ‘என்னடி பேசாமல் நிற்கிருய் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று சொல்வதுதானே' என்று சொல்லிச் சிரித்தாள் சிரித்துக்கொண்டே மறுபடியும் கேட்டாள்: "5டராஜா வுக்குச் சோதனை முடிந்து விட் டதாமா!'
சோதனை! அவர்தான் எல்லாரையும் சோதிக்கி ருரே, கடவுளே இப்படி ஒரு சோதனையை ஏன் அனுப் பினுய்?'என்று கனகம் எண்ணியபோதே நடராஜனின் படிப்புக் குழம்பியதை நினைக்கையில் அவளுக்கு மயக்க மாக இருந்தது இதற்குள் பாடசாலை மணி 'கிணு கிணு' என்று ஒலிக்கவே கமலா வகுப்பிற்குப் போனுள்.
அவளைத் தொடர்ந்து கன க மும் சென்ருள். நல்ல
வேளே! இந்தமட்டிலாவது மணியடித்ததே. ஆனலும் பாடசாலை விட்டபின்பு என்னத்தைச் சொல்வது?
வகுப்புக்குச் சென்ற கனகத்தை இரண்டாம்வகுப் புக் குழந்தைகள் கலகலத்து வரவேற்ஞர்கள், கனகம் அந்த வகுப்பிற்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்க மட் டுக்தான் வருகிருள். பாடுவதிற்ருன் குழந்தைகளுக்கு எத்தனே ஆசை
பிள்ளைகளின் குதூகலத்தையும் சி ரிப் பை யு ங் கண்ட கனகம் தானும் சிரிக்க முயன்ருள். ஆனல் பட்டமரம் தளிர்விடுவதுண்டா? பந்தருக்கு காட்டி

Page 103
கொழுகொம்பு 193
wn a-a-r
யிருக்கும் பட்ட மரத்திலே கடதாசிப் பூக்களைக் கட்டி வைத்தால் அது செடியாகி விடுமா? சிரிக்க முயன்ற அந்த முயற்சியும் பந்தற் கப்பிற் கடதாசிப் பூ கட்டிய மாதிரித்தான் இருந்தது.
எப்படியோ கனகம், பிள்ளைகளை அர்த்த சந்திர வடிவமாக வளைத்து நிறுத்தி, நேற்றுவிட்ட இடத்தி லிருந்து மகா கவி பாரதியாரின் பாடலைச் சொல்லிக் கொடுத்தாள், w
துன்பம் நெருங்கி வந்தபோதும்-நீ சோர்ந்து விடலாகாது பாப்பா அன்பு மிகுந்ததெய்வம் உண்டு-துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
பாரதியார் இந்தப்பாட்டை பாப்பாக்களுக்கா கவா பாடினர்? அவர்களுக்குத் துன்பம் என்ற ஒன்று உண்டா? மோட்ச இராட்சியமே அவர்களைப்போன்ற வருடையதுதானே. பாரதிக்கு இது தெரியாமலா இருக் தது? அவர் கனகத்தைப்போன்ற பெரிய பாப்பாக் ளுக்குத்தான் இதைப்பாடியிருக்க வேண்டும்!
திரும்பத் திரும்ப அந்த அடிகளைப் பாடுகையில்
கனகத்துக்கு ஒர் ஆறுதலுண்டாயிற்று. ஆனல் அந்தத் துன்பம் மறக்கக்கூடிய துன்பமா?
'திறந்த வீட்டில் அழையாமலே புகுந்துகொள்ளும் தெரு காயைப்போல நடராஜா போய்விட்டார்; இனி வரமாட்டார் என்ற நினைவு அவள் மனத்துட் புகு கையில், வானமண்டலத்தின் தத்துவங்கள் அசைக்கப்

193 கொழுகொம்பு
qSASSASSMSASSLASMMSAAAASLSLSLSJSLLMASLSSSMSJSLLS
பட்டு அண்டகோளங்கள் இடம்பெயர்ந்து வெடித்து யுகாந்த கால அக்கினியே அவள் மனத்துள் இரைச் சலோடு எரிவதைப்போல இருந்தது அவள் தலை சுற் றியது. நிற்கமுடியாமற் கீழே விழவேண்டும்போல இருந்தது.
கனகம் லீவு கேட்டு ஒரு துண்டு எழுதித் தலைமை ஆசிரியைக்கு அனுப்பிவிட்டுத் தன் அ  ைறக் குட்
போய்க் கட்டிலிற் தொப்பென்று சாய்ந்தாள். மடை
r (20
திறந்த வெள்ளப் பிரவாகமாய், இத்தனே 1ே5 ர மும் தடுத்து வைக்கப்பட்டிருந்த அழு  ைக பீறிட்டுக் கொண்டு பாய்ந்தது.
அழுது ஒய்ந்த கனகம் மறுபடியும் நடராஜனைத் தான் நினைத்துப் பார்த்தாள். அவர் கூப்பிட்டபோதே நான் வருகிறேன் என்று சொல்லியிருந்தால்-மார்கழி மாதத்துக் கன்னங் கனிந்த இருளில் பளிச்சென்று மின்னும் மின்னலைப்போல அந்த நினைவே அவளுக்கு ஒரு சுகத்தைக் கொடுத்தது. ஆனல் மின்னலின் பிரகா சம் எத்தனே நேரத்திற்கு இருக்கும்? மறுபடியும் இருட் டுத்தான். அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைக் கைகழுவ விட்டதன் பேதைமைக்கு கொங்துகொண் L-TOUT.
நேற்று என்ற முடிவும் 15ாளை என்ற பிறப்பும் இல்லாத நித்திய கரகம்போல முடிவற்ற தன் துன்ப நினைவுகளில் மீளமுடியாத கனகம் கலங்கிக்கொண்டி ருக்கையில் நடராஜா பஸ்ஸில் ஏறிக்கொண்டு மட்டக் களப்புக்குப் போய்க்கொண்டிருந்தான்.அப்பா கொட் டிய விஷம் தியாகுவின் மந்திரத்திற் கட்டுண்டு இது
வரை கடிவாயிற்தான் இருந்தது. இப்போது அந்த
விஷம் தடையை மீறிக்கொண்டு உடலெங்குமே பரந்து
சிரசைத் தாக்குகையில் அவன் கொஞ்சங் கொஞ்ச
மாகச் செத்துக் கொண்டிருந்தான்; தெருவிலே குப்
25

Page 104
கொழுகொம்பு 194
N1-1Nao
பைக்கடதாசியை மேய்ந்து திரியும் பஞ்சத்திலடிபட்ட மாட்டின் கண்களைப்போல, அவன் கண்கள் பெருத் துக் கலங்குகையில் அவைகளில் ஒரு சோகம் ததும்பி நின்றது. அவைகள் பார்க்கும் சக்தியையே இழந்து விட்டனவா? கார்கால மழையிற் செழித்து நின்ற காட்டுப் பற்றைகளும், தூரத்தே பசுமை போர்த்தி யிருந்த வயல்களும், தண்ணென்றிருந்த வாவியும், செழுமையாய்க் கொழுமையாய்க் கொம்பைச் சுற்றிக் கொண்டிருக்கும் வெற்றிலைக் கொடிகளும் சூழ் ங் த அந்தப் பிரதேசத்தில் வண்டி போய்க்கொண்டிருக் கையில் அவனுக்கு மட்டும் எங்கே யோ கா ன ல் தெரியும் பாலைவனத்துக்கூடாகப் போவது போலத் தோன்றிற்று.
மட்டக்களப்புக்கு வண்டி வந்தபோது, அதை விட்டிறங்கும் 5டராஜனுக்கு எங்கே போ வது ? என்று தெரியவில்லை. மறுபடியும் கொழும்புக்குப் போவதா? கொழும்புக்குப் போனுற் கியாகுவிற்கு என்ன சொல்வது? அவள் வரமாட்டேன் என்று விட்டாள் என்று கா கூசாமல் எ ப் படி த் தா ன் சொல்வது?
யோசித்தபடியே உச்சிவெயிலில் புளியந்தீவுப் பாலத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றன்: கீழே நீலவானத்தைப் பிரதிபலித்துத் தெளிந்து நிற் கும் மட்டக்களப்பு வாவி "நான் பாடும் மீன்களை மட்டுமல்ல, வாழத்தகுதியற்ற வாழ வேண் டா த எத்தனையோ காதலர்களையும் என்னுள்ளே வைத்தி ருக்கிறேன்' என்று சொல்வதைப்போல மெதுவாகத் தன் சிற்றலைகளைக் கரையில் மோதி நுரைக்க வைத் தது. இரும்புக்கம்பிகளைப் பிடித்தவாறு எதையோ தீர்மானித்த நடராஜன் முன்னுல் சற்றுத்தூரத்தில் செல்வராஜன் காணப்பட்டான். ஆம் செல்லன் அவனை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிருன்.
 
 

29)
க ர வு செல்வராஜனக் கண்ட நடராஜன் தடாரென்று ஒரு கடைக்குள் புகுந்து தன்னை மறைத்துக்கொண் டான். செல்லனின் முகத்தில் விழிக்க அவனுக்குப் பய
மாகவும் இருக்கலாம், வெட்கமாகவும் இருக்கலாம்.
அல்லது பழிவாங்கும் வஞ்சகமாகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும் 5டராஜன் தன் மைத்துனனின் கண்களிற் தெரிபடவே விரும்பவில்லை.
ஆனலும் (5டராஜன் தீக்கோழியல்ல. மணலுக் குட் தன் தலையைப் புதைத்துக்கொண்டால் உலகத் தின் கண்களே குருடாகிவிடும் என்று அவன் நினைக்க வில்லை. எங்கே செல்லன் தன்னைக் கண்டுவிடுவானுே என்ற பயத்திற் செல்லன் வந்த திக்கையே, பாட சாலைக்கு ஒளித்த சிறுவன் ஆசிரியர் வந்துவிடுவாரோ என்று பதட்டத்தோடு பார்க்கிறதுபோலப், பார்த்துக்
கொண்டு இருந்தான். அவன் பார்வையில் எதிரே
வந்துகொண்டிருந்த செல்லன் சந்தியைத் தாண்டி அடுத்த தெருவிற் போய்விட்டது தெரிந்தது. நடரா ஜன் பெருமூச்சு ஒன்றை நீளமாக விட்டான். கண்டம் ஒன்று கழிந்ததுபோல இருந்தது அவனுக்கு, ஆனல் அதற்குள் யாரோ அவன் தோளைத் தட்டியவாறே 'ஹலோ, எப்படி வந்தாய்?" என்று கேட்டான்.
நடராஜன் திரும்பிப் பார்த்தான். ஒரு அரை இடம் திரும்பிய அந்த கொடிக்குள் செல்லன்தான்

Page 105
கொழுகொம்பு 196
ہ^صبر
„o-o-
வந்துவிட்டானே என்று அவன் மனம் எண்ணிவிட் டது. ஆனல் அங்கு கின்றவன் செல்லனல்ல. நடராஜ னின் கல்லூரி நண்பன் ஒருவன். அவன் பெயர் கூட இப்போது 15டராஜனுக்கு ஞாபகமில்லை. ஆனலும் 15டராஜன் சிரித்துக்கொண்டே 'காலையிலேதான் வந்தேன்' என் மூன்.
“பாடசாலைக்கு வரவில்லையா? இன்றைக்குக் கல் லூரிக் கட்டிட நிதிக்காக 15ாடகம் ஒன்று கடத்துகி ருேம் அதற்கு ரிக்கற் விற்கத்தான் வங்தோம். செல் லன் கூட வந்தான். என்னுேடு இங்கேதான் நின்றன். அவனைக் காணவில்லையா?' என்று மூச்சுவிடாமற் கேட்டான் கணேசன்,
"பார்த்தேனே, அவன் அவசரமாகப் போகிமூன். நான் பிறகு பாடசாலைப் பக்கம் வருகிறேனே' என்று நெஞ்சறியப் பொய் சொன்னுன் 5டராஜன்.
கணேசனும் அவசர அவசரமாக, 5டராஜனிடம் ஒரு முதலாம் வகுப்பு ரிக்கற்றைக் கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறினுன் ,
அவன் வெளியேறிய துமே நடராஜன் தான் இனி மட்டக்களப்பிலேயே நிற்கக்கூடாது என்று தீர்மா னித்துக்கொண்டான். ஆனல் ள்ங்கேபோவது? கொழும் புக்குப் போகவும் அவன் விரும்பவில்லை. நேரடியாக ஹற்றனுக்குப் போய் உத்தியோகத்தைக் கையேற்க லாம் என்ருலோ இன்னமும் முதலாங் திகதிக்கு ஆறு நாட்கள் இருந்தன. அதற்கு முன்னே அங்கே போவது கெளரவக் குறைவாகப்பட்டது. ஆனுலும் "காதற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 

197 கொழுகொம்பு
ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே என்று
யாரோ பரதேசி சொன்னதைக் கேட்டுக் கட்டிய
மனைவியையும், கடலிற் கலங்களையும், காவிரிப்பூம்
பட்டினத்தையுமே விட்டுச் சென்ற திருவெண்காட
ரைப் போல அவனும் 15டக்தான். அவன் பின்னுற்
கனகமே வரமாட்டேன் என்று விட்டாள். இனி இந்த
உலகத்தில் அவன் பின்னல் வர என்னதான் இருக்
கிறது. ஆகவே கஞ்சாப் போதையில் கால் போன திக்கில் கடக்கும் பைராகியைப்போல நடந்தான். அப் போது உச்சி வெயிலாக இருந்தது, மந்தமற்ற ஆகாய
வெளியை நீண்டு ஒடுங்கிக் கிடந்த மட்டக்களப்பு
வாவி பிரதிபலிக்கையில், அந்த வாவி அவனைப்போலவே
பற்றற்றதாய்த் தோன்றிற்று. ஆனுல் அதன் தெளி
வுக்கும் இவன் குழம்பிய மனதுக்குங்தான் எத்தனை
வேறுபாடு. அவன் கடந்தான்.
அவன் பின்னுல் மட்டக்களப்புப் பட்டினம் கொஞ்சம் கொஞ்சமாகக் கழிந்துகொண்டிருந்தது. விருந்தினரை இன்முகங் காட்டி வருக வருக என்று அழைக்கும் பண்புவாய்ந்த அந்த நகரம் அவனைப் போ வெளியே' என்று துரத்துவதுபோல இருந்தது. கடந்துகொண்டே வந்தவன் ஊருக்கு ஒதுக்குப் புற மாக இருந்த வதுளை பஸ் ஸ்தானத்திற்கு வந்தபோது அங்கே பஸ் ஒன்று புறப்பட ஆயத்தமாக நின்றது. முன் பின் யோசிக்காமல் அந்த வண்டியில் ஏறிக் கொண்டான். அவனுக்கென்ன? சட்டை கழற்றிய பாம்பைப்போல ஊரையே துறந்துவிட்டான். மேலும் அவன் சட்டைப் பையிலே தகப்பனர் கொழும்புக்கு வந்திருந்தபோது கொடுத்துவிட்டுப்போன இருநூறு

Page 106
கொழுகொம்பு 198
حصے حصہ۔۔۔صح^مح^
ரூபாய் இருக்கிறது. ஐந்தாறு (5ாட்களுக்கு அவன் வது அளயில் இருந்தாலென்ன? வங்காளத்துக்குப் போன லென்ன? பஸ் வண்டி புறப்பட்டது.
இதற்குள் கணேசன் மூலமாக நடராஜனின் வரு கையை அறிந்த செல்வராஜன், தன் வேலைகளை எல் லாம் மறந்து, 15டராஜனைத் தேட ஆரம்பித்தான். ஆனுற் குறிப்பாக எந்த இடமென்று தேடுவது? ஆனற் கணேசன் நடராஜன் சாயந்தரம் பாடசாலைக்கு நிச் சயமாக வருவான் என்று அவனுக்கு 15ம்பிக்கை யூட்டினன்.
அன்று பாடசாலையே அமர்க்களப்பட்டது காட கத்தை அரங்கேற்றும் பணியில் மற்றெல்லாவற்றை யுமே மறந்து தடயுடலாக இருந்த மாணவர்களுக்கு மத்தியிற் செல்லனுல் மனமொன்றி எந்த வேலையி லும் ஈடுபட முடியவில்லை. மேற்கில் மட்டக்களப்பு வாவியின் அப்பால் படுவான் கரையில் விழுந்து கொண்டிருந்த ரசவாத வித்தைக்காரனுன சூரியன், பாடசாலைச் சுற்றுப்புறத்திற் ச  ைடத் துத் தரை யோடு கவிந்து கிடக்கும் முந்திரிகை மரங்களையும் காற்றிலசைங்தாடிய அம் மரத்துக் கொம்புகளால் நன்முகக் கூட்டிச் செருக்கப்பெற்று வெள்ளென் றிருக்கும் மணல்வெளியையும் பொ ன் ம ய மா க் கி க் கொண்டிருக்கையில், அந்தச் சாயங்கால மயக்கத் திற் செல்லனின் மனம் (5டராஜனுக்காகத் தவித்துக் கொண்டிருந்தது. அவன் கண்கள் தெருவாயிலையே பார்த்துக்கொண்டிருந்தன. -
ஆனல் அந்தச் செக்கரில் மட்டுமல்ல, செக்கர் இருண்ட கருமையிற்கூட நடராஜன் வரவேயில்லை.
 

199 கொழுகொம்பு
செல்லன் பெருமூச்சு விட்டபடியே 'நாடகம் முடிங் தால் நாளைக்குப் பாடசாலைக்கு விடுமுறை கிடைக் கும். நடராஜன் சிலவேளை கனகத்திடம் கல்முனைக் குப் போயிருப்பான். அங்கே போய்ப் பார் த் து க் கொள்ளலாம்' என்று எண்ணிக்கொண்டான்.
பொழுது விடிந்ததும் செல்லன் கல்முனை க்குப் போனுன், இரண்டு நாட்களாக அழுதழுது மேலும் அழமுடியாமையினல் அடங்கிப்போயிருந்த கனகத் திற்கு அண்ணனைக் கண்டதும் குருமண்ணைப் பீறிக் கொண்டு கிளம்பும் நீரூற்றைப்போல அழுகை பொத் துக்கொண்டு வந்தது. அண்ணனைக் கட்டியணைத்து அழவேண்டும் என்று அவள் விரும்பினுள். ஆளுற்ை சோகத்திற்குக்கூட எல்லை யிருக்கின்றது போலும்! கனகத்தின் சோகமும் எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டபோது அவள் உணர்ச்சியற்று மரத்துப் போய் விட்டாள். மேலும் தன் அண் ண ன் முன் னு ல் அழுது அவனையும் கலங்கப்பண்ண அவள் விரும்ப வில்லை. எனவே வடவாக்கினியைத் தன்னுள்ளே அடக்கி வைத்துக்கொண்டு மேலே தண்ணென்றி ருக்கும் சமுத்திரம்போலத் தன் துக்கத்தையும் அங் கலாய்ப்பையும் தன்னுள்ளே அடக்கி வைத் து க் கொண்டு அண்ணனை வரவேற்ருள்.
சிறிதுநேரம் தன் தங்கையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த செல்லன் "கடராஜன் வங் தானு?’ என்று கேட்டான்.
"ஆம்" என்று சாதாரணமாகச் சொன்ன கன கம், பிறகும் அவன் தன் அண்ணனிடம் ஏதும்

Page 107
கெ ாழுகொம்பு 200
SqSqSASSASSASSASASASqAS SqSqSqSLSSA
சொல்லிவிட்டுப் போயிருப்பானுே என்ற பயங்கலந்த ஆவலில் ' உங்களிடம் வர வில் லை யா ?' என்று கேட்டாள்.
'இல்லையே' என்று வரட்சியாகச் சொன்னன் செல்லன்,
பயங்தெளிந்த கனகம் " அவருக்கு மட்டக் களப்பில் வேலையிருக்கிறதாம். அத்தோடு நேற்றே ரெயிலுக்குப் போகவேண்டும் என்று சொன்னர். லீவும் இல்லையாம் போய்விட்டார் போலும்' என்று அடுக்கினுள்.
"அப்போது அவனுக்குக் கோபம் எல்லாம் என் மேற்தானுக்கும்' என்று கேட்டு மெல்லச் சிரித்தான் செல்லன், அண்ணனின் சிரிப்புக் கூரான கத்தி யாய்க் கனகத்தின் இதயத்தை வெட் டு  ைக யில், அந்த வேதனையை வெளிக்காட்ட முடியாதபடி உள் ளுக்குள்ளேயே அனுபவிக்கையிற் கனகம் குற்று யி ராகக் கிடக்கும் விலங்குபோல முனகினுள்.
அவள் முனகலின் அர்த்தத்தை உண ர் ங் து கொள்ளாத செல்லன் எனக்குச் சோதனை முடிங் ததும் வீட்டுக்குப் போக லா ம், உனக்கெப்போது விடுதலை’ என்று கேட்டான்.
"விடுதலையைப்பற்றி என்ன? இந்த விடுதலைக்கு நான் ஊருக்கே வரவில்லை; நீங்கள் போங்கள்' என்ருள் கனகம்.
 

30 1 கொழுகொம்பு
SS MeSLSLzSLSYYYSJAS SAAA SLLSAAAA SLSASAe SLSLSASSAAS S LSAAAS SLSASAASSLLLSA SASASLSSASLSASASLSALASLSAqS SqSAAAA
‘கடராஜன் ஊருக்கு வரமாட்டா னு ?”
"அப்படித்தான் நினே க் கிறேன்' எ ன் ரு ள் கன கம்,
அதற்காகத்தான் நீ யு ம் வர மாட்டாயாக்கும் என்று கேட்க நினைத்தான் செல்ல ன். ஆனல் தங்கையிடமா அப்படிக் கேட்பது என்ற எண்ணம் அவனைக் கேட்க விடவில்லை. 'பரீட்சை முடிந்தால் கட ராஜன் கொழும்பில் என்ன செய்யப் போகிரு ஞம்?' என்றுதான் கேட்டான்.
'உத்தியோகம் கிடைக்குமட்டும் கொழும்பிலே தான் நிற்பாராக்கும்" என்குள் கனகம்.
'அப்படியா? அப்படியானுல் பரீட்சை முடிந்த தும் நான் கொழும்புக்குப் போய் அவனைப் பார்க் கிறேன்' என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு வந்தான். தெருவிலிறங்கி நடக்கையில் சுங் த ரம் அவன் கண்களிற் தோன்றினன். , , ,
96.

Page 108
CBO)
பொருப்பகம் சேர்ந்த காக்கை
'உண்மையான துன்பம் என்பது துன் பத் தைத் தர க் கூடிய அனுபவங்களிலோ நிகழ்ச்சி களிலோ செயல்களிலோ இல்லை. அவற்றை உணர்ச்சி பூர்வமாக எண்ணிப் பார்ப்பதிற்ருன் இருக்கிறது. என்று சிக்மன்ட் ப்ராய்ட் கண்ட முடிவுதான் எத் தனை உண்மையானது மாமனர் தன்னை வெளியே போ என்று விரட்டியபோது, கனகம் கான் உங்க ளுடன் வரமாட்டேன் என்று சொல்லியபோதுகூட 15டராஜன் அவ்வளவு கலக்கமடையவில்லை. ஏதோ ஓர்வித வெறியுணர்ச்சி அ வ னை ஆட்டிக்கொண்டு அலைக்கழித்தது என்பது உண்மைதான். ஆனல் அதே நிகழ்ச்சிகளைத் திரும்பவும் மனதில் எ ண் ணி ப் பார்த்தபோதுதான் அவனுக்குத் தாங்கமாட்டாத துக்கமாக இருந்தது. இனிமேற் கா ண மா ட் டோம் என்ற கசப்பான கம்பிக்கையின் முடிபான தாயை எண்ணிக் கலங்குவதா ? அல்லது கனகத்தை எண்ணிக் கலங்குவதா ? அல்லது திசைதெரியாத கடலிலே தனிமையிற் தவிக்கும் தோணி போன்ற தன்னையே அவன் எண்ணிக் கலங்குவதா ? எதற் காகக் கலங்குவது ?
காதல் இனிமையான மென்மையான உணர்வு தான். ஆணுற் கம்பிக்கயிற்றிலே கடப்பது போன்ற அசுரசாதனையோடு அந்த உணர்ச்சியுடன் பழகிக்
 

203 கொழுகொம்பு
ܓ ܓ ܓ ܓܓܗ ܗ
கொண்டால் எல்லாம் இன்பமயந்தான், கொஞ்சம் கால் தடுக்கினுற்கூட அதலபாதாளத்தில் விழவேண் டியதே. ஒருகுடங் தேனிற் துளி விஷம் போல
அந்த இன்ப உணர்விற் சிறுகுறை ஏற்பட்டாலும்
அந்த உணர்வு முழுமையுமே கொடூரமானதாகக், குரூரமாக மாறிவிடவேண்டுமா ? அப்பா ! காதல் மிருகத்தனமான உணர்ச்சிதான்.
வதுளையிலே, உயர்தர விடுதியொன்றிற் தங்கிய கடராஜன் மூன்று நாட்களாக மிருகத்தனமாகவே 15டந்தான். குடி குடி என்று குடித்தான். தானே தன்னை மறந்த யோகநிலையில் இருந்தவனுக்கு முத லாம் திகதியும் வெறுமையாகிவிட்ட பணப்பையும் விழிப்பைக் கொடுத்தன. ஆகவே அதற்கு மேலும் வதுளையிற் தங்கியிருக்க முடியாததினுல் நடராஜன் ஹற்றனுக்குப் போனன்.
அங்கு போன நடராஜனத் தோட்ட முதலாளி ஆகந்தமாகவே வரவேற்ருர், நடராஜன் வேலையை ஒப்புக்கொண்டான்.
இலங்கைத் தேயிலைத் தோட்டங்க ள் இருக் கிறதே, அவை புதுமைப்பித்தனின் பொன்கரம் மாதி ரித்தான். அந்தப்பகுதியிற் சிலகாலம் வசிக்க கேர்ங் தால் எந்தக் கல்நெஞ்சனும் அங்கு மக்கள் வாழும், வாழத் துடித்துக் கொண்டிருக்கும் நிலையைக்கண்டு இரத்தக் கண்ணிர் வடிக்காமலிருக்க முடியாது !
நடராஜனைப் பொறுத்த வரையில் புது  ைம ப் பித்தன் தொடக்கம் இந்தக்காலத்துக்குக் குருத்து

Page 109
கொழுகொம்பு 204
எழுத்தாளர்கள் வரை தமிழ் வளர்த்த, வளர்க்கின்ற எல்லாருமே தென்பாண்டி நாடான திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர்கள்தான் என்ற ஒரு அபிப் பிராயம் அவன் மனதில் பதிந்துபோ யிருந்தது. ஆனுல் ஹற்றணுக்கு வந்தபோது அந்த பாண்டி காட்டுத் தமிழர் தமிழை மட்டுமல்ல, சேய்காடான இலங்கையின் பொருளாதாரம் என்ற முதுகெலும் பையே வளர்த்தவர்களும் அவர்கள்தான் என்பதை தெரிந்து கொண்டான்; ஆம் தேயிலைத் தோட்டத் துக் கூலிகளில் மிகப் பெரும்பான்மையினர் கிருநெல் வேலித் தமிழர்களே! தனக்கு மிகநெருங்கிய மக்களே யிட்டுத்தான் பாரதியும் தேயிலைத் தோட்டத்திலே என்ற பாட்டைப் பா டி ப் பி ர லா பிக் கி மு ன் போலும்!
ஆம்; அவர்கள் என்ன? மனிதர்களா? மிருகங் களா? பத்தடிச் சதுர அறைக்குள்ளே ஒரு O filifu குடும்பமே வாழ்கிறது. உப்புப்பொரிந்து விழும் மண் சுவர், தண்ணிர் கசியும் தளம் புகையடித்துக் கிடக் கும் கூரை இக் த ப் 'பொன்ன கரத்துள்ளே இரவு முழுக்க அடைந்து கிடக்கும் மனிதக்கூடுகள் அதி காலையில் வெளியேறி வேலைக்குப் போ கின்றன. பாலன் தொடக்கம் விருத்தாப்பியர் வரையில் எல் லார்க்கும் வேலை, பனியால் கனேந்த, மழை யா ற் கொடுகி அந்த மலைமேடுகளிற் பிள்ளைகள் 'பில்லு' வெட்டுகிறர்கள். ஆண்கள் ப யளை யிடு திரு ர் க ள், பெண்கள் கொழுந்து எடுக்கி மூர்கள். இனி உழைக் கச்சக்தியில்ல என்றவரைக் கும் உழைப்பு: அக ன் பிறகு அவனுக்கத் தொழில் இல்லை. அதுமட்டுமா
 

305 கொழுகொம்பு
அவனுக்கு குடியிருக்க வீடில்லை. பிறகு இல்லிட மற்றவனுக்கு கல்லிடமேயில்லே! தேயிலைச்செடிக்குப் பயளையாகித் தான் பிறந்த தின் பயனே க் கடைசி வரைக்கும் இந்த பூரீலங்காவிற்குச் சமர்ப் பண ம் செய்து மாண்டுவிடுகிருன்,
சிந்திக்கத் தெரிந்த 5டராஜனுக்கு இந்த மக்க
ளின் வாழ்க்கை மனத்தை இளக்கிற் று. இதனுல்
மலைநாட்டிலே சோனுவாரியாகக் காத்திராப் பிரகார மாகக் கொட்டும் மழையோ, வான் முகடு களை த் தொட்டுக்கொண்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் மலைத் தொடர்களோ, அந்த கெடுங்குடுமி மலைத்தொ டர்களின் மீது புகையாய்ப் பரந்து படிந்திருக்கும் பனிப்பு காரோ, வெள்ளியை உருக்கிக் கவிழ்த் து விட்டது போல ஒடிக்கொண்டிருக்கும் மலையருவி களின் சுகமோ, கண் வைத்த தொலைவரை பரந்து கிடக்கும் பசுமையின் குழுமையோ ஒன்றுமே தெரிய வில்லை. தனக்கென்று கொடுக்கப்பட்டிருந்த அழி கான பங்களாவின் தனிமையில் நீண்ட இரவுகளின் பயங்கரத்தில் அவன் அந்த மக்களைப்பற்றியே சிந்தித் துக்கொண்டிருந்தான் ஆம் கண்ணைக் கட்டிக் காட் டில் விடப்பட்ட குழந்தையைப் போல பழக்கவழக்கம்
பாஷை எல்லாமே வேறுபட்ட சூழ்நிலையில், தன்
னைப்போலவே அனுதையாக வந்து விட்ட தமிழர்கள் இந்தத் தாழ்வான நிலையில் வாழ்வதை எண் ணி ப் பார்க்காமலிருக்கத் தமிழன் எவனுக்கும் மனம் வர முடியுமா ? இலங்கை இந்தியச் சிக்கல் கமிழ%னப்
o o o o பொறுத்த வரையில் ஓர் இனச்சிக்கல் என்று கூடச் சொல்லிவிடலாம். தேயிலைத் தோட்டத்து ம க் க ள்

Page 110
கொழுகொம்பு 206
எல்லாரும் வட இந்தியர்களாக இருப்பின் தமிழன் அவர்களை இப்போதே இலங்கையை விட்டுப் போங் கள் என்று விரட்டிவிடுவானே என்னவோ! எப்படி யிருப்பினும் நடராஜனுல் அந்த மக்கள்மேல் விஷேட அனுதாபங்கொள்ளாமலிருக்க முடியவில்லை,
மேலும் தள்ளாடும் மனத்தை ஒரு நிலைப்படுத் திச் சாந்தியடையவும் அவன் அந்த மக்களுக்குத் தொண்டு செய்ய முற்பட்டான். தொண்டோ? தோட்டத்து ஆஸ்பத்திரியில் குயினையினின் தண்ணி ரும், இருமல் கலவையும் தான் இருந்தது. இதை வைத்துக்கொண்டு அவன் என்னதான் செய்வது ? ஆணுலும் சேவா உணர்ச்சியுடன் அவ ன் செய்த வைத்தியம் அங்குள்ளோர் பலர்க்குப் பெருத்த ஆறு தலாக இருந்தது, சொந்தப் பணத்தையே செலவ ழித்துப் புதுப்புது மருந்துகளை எடுத்தான். ஆயிரம் பேரைக்கொன்ருல் அரைப்பரிகாரியாமே. நடராஜ னும் தைரியத்துடன் தன் தொழிலை கடத்தினன். அவனுக்கு வெற்றிகிட்டியது. தோட்டத்தில் மட்டு மல்ல அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் அவன் புகழ் பரவியது.
என்ருலும் அவன் கூடியவரை தன்னை மறைத்து வைத்துக்கொள்ளவே முயன்ருன், ஊ ரிலிருந்து யாரும் தன்னைத் தேடிவந்து விடுவார்களோ என்ற பயம் அவனே அரித்துக்கொண்டே யிருந்தது. இந்தப் பயத்தினல் தோட்டத்துக்குள்ளேயே தன் தொழிலை நிறுத்திக்கொண்டு அந்தக் கூலிகளுக்குச் சிக்கனத்தின் அவசியத்தைப்பற்றியும் ஓர் கிராமமாக அவர்கள்
 

30? கொழுகொம்பு
சேர்ந்து வாழவேண்டிய தேவையைப் பற்றியும் பிர சாரம் பண்ணுவதே அவன் வே லை ய ர கி விட்டது. இந்த வாழ்வு அவனுக்கு விருப்பமாகவும் இருந்தது.
ஆனலும் கனகத்தை அவனுல் மறக்க முடிய வில்லை. தண்டியலங்காரர் சொன்னது பே ா லப் பொருப்பகஞ் சேர்ந்த பொல்லாக் கருங் கா க்  ைக பொன்னிறமாகலாம். பொன்னிறமானுலும் காக்கை காக்கை தானே, நடராஜனும் மலைகாட்டுத் தமிழர் பிரச்சினைகளிலீடுபட்டு ஒரு தொண்டனுக மாறியிருக் கலாம். ஆனல் அவன் கனகத்தின் காதலனுன நடராஜன் அல்லாமல் வேறு எது வும் ஆகி விட GOTLDsir ?
பகல் முழுக்க ஏன் முன்னிரவுகளிலும் அவன்
அவளை மறந்திருக்கலாம் ஆணுல் கும்மென்றிருட்டிக்
கிடக்கும் வைகறையிற் சில்லென்றடிக்கும் வாடைக் குளிரில் நித்திரையும் இல்லாமல், அதே நேரத்தில் விழித் திருக்கவும் முடியாமற் கட்டிலிலே கண்ணை மூடியும் திறந்தும் வைத்துக்கொண்டு அவஸ்தைப் படுகையில் அவனுல் தமிழ்நாட்டின் ஒரு மூ லை யில் தனக்காகக் கலங்கிக்கொண்டிருக்கும் கனகத்தைப் பற்றி அவனுல் எண்ணுமலிருக்க முடியவில்லை; அந்த எண்ணத்தை அவனல் நிறுத்த முடியவில்லை; துரத்த இயலவில்லை.
அன்றைக்கும் அப்படித்தான் நடராஜன் படுத் துக்கொண்டிருந்தான். கதவு தட்டுப்படும் சப்தம் கேட்டது. யாரது? என்று கேட்டு க் கொண்டே

Page 111
கொழுகொம்பு 208 -
எழுந்தான் கதவைத் திறந்தபோது காற்றேடு பெய்த மழை வீட்டுக்குள்ளே சலார் சலார் என்று ைேர இறைத்தது. கையிலே லாந்தரை வைத்துக் கொண்டு ராமசாமி நின்ஞன், -
‘என்னது இந்நேரத்தில்?" "ரொம்பக் கடுமை
யான வருத்தம் வரணும் நீங்க”
வழக்கமாகவே நடராஜன் இப்படிச் சந்தர்ப்பங் களில் அடுத்த கேள்வி கேட்பதில்லை. அவசர அவ
சரமாகக் கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு கொட் டும் மழையில் கடந்தான். இரண்டு மைல் தூரம் மலேப்பாதையில் கடந்து ஊரையடைந்து வீ ட்டுக் குள் காலடி எடுத்து வைத்தபோது.
நடராஜனுக்குத் தன் கண்களையே நம்ப முடிய
வில்லை. கனகம் அங்கே எப்படி வந்தாள்? எப்போ வந்தாள்?
நடராஜன் சிஆலயாகி நின்றன்.
 

3.
குந் த கம்
ਉoura நின்ற நடராஜனை 'வாருங்கள் இப் படி' என்ற மென் குரல் உணர்ச்சியைக் கொடுத்தது.
இப்படி ஒரு மென் குரலைக் கேட்டு நடராஜ னுக்கு அதிக காலமாகிவிட்டிருந்தது. அப்படி ஒரு மென் குரல் கேட் கா த ப டி யி னு ற் ரு னே அவன் வாழ்க்கை இப்படிக் கரடு முரடான பாதையிற் கூடச் சென்றுகொண்டிருக்கிறது. கர்ம யோகியான நேருஜி கூடப் பெண்களின் இனிமையான குரலைக் கேட்க முடியாதது சிறையில் மிகப் பெரிய துன்ப மாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிருரர்.
எனவே, அந்த இனிமையான குரலினல் உயி ரேறிய நடராஜன் மெதுவாக வீட்டினுள்ளே கடந்து கொண்டிருந்தான்.
அவன் முன்னுல் கடந்து கொண்டிருந்த கனகத் திற்கும் அந்தப் பெண்ணிற்குந்தான் எ வ் வள வு ஒற்றுமை! அதுவும் பின்னுற் பார்க்கையில் இருவ ரும் ஒரே அச்சில் வார்த்தது போலத்தான் இருந்தது. ஒடிந்து விழுவது போன்றிருந்த அதே இடை அந்த இடை நீண்டு முதுகைத் தழுவிக்கொண்டிருந்த ஒற் றைச் சடைப்பின்னல்.
நடராஜன் கனகத்தைப் பிரிந்து வந்ததன்பின் எந்தப் பெண்ணையுமே இத்தனே சிரத்தையோடு கவ
27 . .

Page 112
கொழுகொம்பு 210
னிக்கவில்லை. ஆனுல் இவள் ஆடி அசைந்து மென் னடை கடக்கையில் அந்த கடையை நடராஜனற் பார்க்காமலிருக்க முடியவில்லை.
முன்னே சென்ற அந்தப் பெண் அறைக்குட் சென்றதும் திரும்பினுள். கர்ம யோகியைப்போல அந்த அறையின் கும்மிருட்டைத் துரத்தும் புனித சோபையோடு ஆடாமல் அசையாமல் எரிந்துகொண் டிருக்கும் மேசை விளக்கின் தெளிவற்ற ஒளியில், அவள் முகம் அந்திச் சூரியனின் செவ்வொளியைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சலவைக் கல்லான பூவைப்போல விகசித்தது. தண்டினடியிலே தலை கீழாகத் தொங்கும் தாமரை யிதழைப்போன்ற முகம். கூரான காடி, நெருங்கி கிரைத் திருந்த அவள் பல் வரிசையிற் கடைவாய்க்குள் ஒன்று மட்டும், இன் னுென்றின்மேல் ஏறிக்கொண்டு நின்றது, அவளின் முகத்துக்கு அழகையே கொடுத்தது. வலது கன் னத்திற் பேனையிலிருந்து சிங் தி ய துளிமைபோல இருந்த மச்சம் அவளுக்குக் 'கண்ணுாறு படாமற் சிருஷ்டி கர்த்தாவே வைத்த குறைபோலத் தோன் றிற்று.
வைத்த கண் வாங்காமல் அவளேயே பார்த்துக் கொண்டிருந்தான் நடராஜன். அவள் த லை யைக் குனிந்தவாறே 'இதோ அம்மா' என்ருள். ܝ
எதிரே கட்டிலிற் பழஞ் சிலை யை ப் போ லத் துவண்டு கிடந்தாள் அவள் தாய், கன்னங்கள் காய்ந்த ரொட்டியைப்போல ஒட்டி வெளுத்துக் கிடக் தன. தலையின் முன்பக்கம் அப்படியே கரைத்துக்
 
 
 

211
கொழுகொம்பு
குப்பையின்மேற் சாம்பரை விசிறி எறிந்ததுபோலக் கிடந்தது. அவள் கொர், கொர் என்றிழுத்த இழுப்பு அந்தச் சூழலின் செயலற்ற மெளனத்திற்குப் பகைப் புலமாக நின்றது.
நடராஜன் கதிரையை இழுத்துப் போட்டு இருந்து கொண்டே அந்தக் கிழவியைப் பரி சோ தி க் க த் தொடங்கினான். அந்தப் பெண் அவன் முன்னாற் சிலைபோல் நிற்கலானாள் சுவருக்கு மேலே அ  ைம தி யாக எரியும் தேங்காய் எண்ணெய் அகல் விளக் கின் ஒளியில் தன் ஐந்து காயங்களிலும் குருதி பெரு கச் சிலுவையிலே தொங்கிக்கொண்டிருந்த கிறீஸ்து நாதரின் படம் தலையைக் குனிந்து அவர்கள் எல் லாரையுமே பார்த்துக்கொண்டிருந்தது.
தன் பரிசோதனைகளை முடித்த நடராஜன், பலி யாடுபோலத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்ற பெண்ணிடம் கேட்டான். "இப்போது எத் தனை நாளாகிறது?'' என்று.
- ''இரண்டு நாட்களே ஆகின்றன. ஆனால் இந்த மாதிரி அம்மாவுக்கு - அடிக்கடி குளிர் அதிகமா யிருக்கும் போதெல்லாம் வரும்' என்றாள் அவள்.
''எத்தனை காலமாக இருக்கிறது?'' என் றான் நடராஜன்.
''ஐந்து வருடங்களுக்கு  ேம ல ாக'' எ ன் றா ள். அவள்.
தண்ணீர் வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கும். தொழில் முறையில் இயந்திரம் மாதிரி

Page 113
கொழுகொம்பு 212
MMYN MYNMNMMNMNM"
அவளோடு பேசுவதிலும் 5டராஜனுக்கு ஏதோ ஒரு திருப்தி இருக்கவே இருந்தது. சரி, என்னுல் முடிந்த வரையும் முயன்று பார்க்கிறேன். அதிக மாக க் குணப்படுத்த முடியும் என்றுதான் எண்ணுகிறேன்" என்றே தன் கைப்பைக்குள் இருந்து ஏதோ மருந்தை எடுத்துக் கொடுத்து விட்டுத் துண்டிலே 'டாக்குத் தர் பாணியில் ஒருவருமே வாசிக்க முடியாத ஏதோ ஒரு மருங்தை எழுதினன், க்டராஜன்.
வெளியே விருப்பமற்ற புருஷனை வரித் து க் கொண்ட புதுமணப் பெண்ணைப்போல வானமும் அழுது தீர்த்துக்கொண்டே யிருந்தது பல்லைக் கிட்ட வைக்கும் அந்தக் குளிரிலே கீழெல்லாம் தெப்பமாக நனைந்துவிட்ட காற்சட்டையோடு நடராஜன் ஏதோ வெல் லா ம் எண்ணிக் கொடுகிக்கொண்டிருந்தான். இயல்பாக இரக்க சுபாவமுள்ள அவன் உள்ளம் தனக்கு முன்னுற் கொடிபோன்று கடந்து சென்ற பெண்ணை நினைத்து இரங்கியது.
இதற்குள் அந்தப் பெண் கையிலே ஆவி பறக் கும் கோப்பையோடு அவன் எதிரில் மீண்டும் வந்து கோப்பிக் கோப்பையை நீட்டினுள். நிர்மானுஷ்ய மான காட்டில் விடப்பட்ட இலக்கிய இரசிகனுக் குத் திடீரென்று கம்பராமாயணம் கிடைத்தால் எப் படி யிருக்கும்? மலைகாட்டின் வெடுவெடுக்கும் குளிரில், அதுவும் அர்த்த இராத்திரியில் இந்தக் கோப்பி கிடைத்தபோது நடராஜன் அருக்கர்மல் அ த னை வாங்கி இரசித்துக் குடித்துக்கொண்டிருந்தான்.
அவன் குடித்துக்கொண்டிருக்கையில் அங் த ப் பெண் கேட்டாள்: 'அம்மாவுக்கு.

213 கொழுகொம்பு
*~ a s. MNMNMMNMNMMNMNMMN
அந்தப் பேச்சை அவள் தொடங்க முன்னமே அதிலிருந்த ஏக்கத்கின் கனத்  ைத 15 ட ரா ஜ ன் உணர்ந்து கொண்டே "பயப்படும்படியாக ஒன்று மில்லை' என்றன். ஆனுலும் இத்தனை காலமாக எத்தனையோ தெய்வங்கள் ஆற்ருத அப்பெண்ணின் கவலையை 5டராஜனின் ஒரு வாக்கியம் ஆற்றிவிடப் போகிறது! மங்கிய விளக்கின் தெளிவற்ற ஒளியில் அவள் ஒரு சோக சித்திரமாகவே தோன்றினுள்,
நடராஜன் எதையோ மறந்தவன்போல "இவ்வ ளவு கேரமாகப் பேசுகிருேம்; தங்கள் பெயர், ஊர் .."என்றிழுத்தான்.
நான் யாழ்ப்பாணம். நீங்களும் யாழ்ப்பாணங்
தானே' என்று அவசரமாகக் கேட்டாள் அந்தப் (OL 605T.
'இல்லை, கான் திருகோணமலை' என்ருன் நட ராஜன்.
*அதிக நாட்களாக இங்கே இருக்கிறீர்களா? 'மூன்று வருடங்களாக' என்ருள் அந்தப்பெண். வெளியே சோனுவாரியாகப் பெய்த மழை ஒய்ந்து விட்டது. 15ட ராஜன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். மணி இரண்டு,
அவன் குறிப்பறிந்த அவள் 'போகப்போகிறீர் களா?' என்ருள்.
'மழையும் ஒய்ந்துவிட்டது. போகத்தான் வேண் டும், இராமசாமியிடம் மருந்து கொடுத்து அனுப்பு

Page 114
கொழுகொம்பு 214
கிறேன். எழுதித்தந்திருக்கும் ஊசியை நாளேக்காலே யில் வந்து அடிக்கிறேன்” என்று கொண்டே எழுங் தான்,
அவள் விரல் இடுக்குகளில் ஏதோ ஒன்  ைற வைத்துக் கொண்டே அவனிடம் கையை நீட்டினுள். அது பணமாகத்தானிருக்கும் என்பதை அலு மானித்த நடராஜன் 'வேண்டாம், வேண் டாம்' என்று அவளைத் தடுத்துக்கொண்டே எழுந்து கடந்து வந்தான்.
அவனைத் தொடர்ந்த அந்தப்பெண் 'காளைக்கு எங்நேரம் வருவீர்கள்?’ என்ருள்.
'ஆஸ்பத்திரிக்குப் போக முதல் ஏழரைக்கெல் லாம் வருகிறேன்' என்றவன் 'தங்கள் பெயர் ?” என்றிழுத்தான்.
“பிலோமின' என்ருள் அவள்.
- 'சரி கான் வருகிறேன்' என்றுகொண்டே (5ட ராஜன் வெளியேறினன். அரிக்கன் லாந்தரைப் பிடித் துக்கொண்டு முன்னுல் கடந்த இராமசாமி 'பாவம்! அந்த வாத்திப் பெண்ணு ரொம்ப நல்லவ. அவ அம்மாவுக்கு ஒரே பாயும் படுக்கையுந்தான்' என்ருன், 'அவள் வாத்தியாரா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டான் 5டராஜன்.
'ஆஞ்சாமி, டவுனில்தான் படிப்பிக்கிரு' என் ரூன் இராமசாமி. -
'அவ்வீட்டில் வேறு யாரும் இல்லையா?” 'மூணு நாலு வருஷமா அ ங் த ப் பொண்ணுங் தாயுந்தான் அந்த வீட்டிலே இருக்கிருங்க, லீவுக் குக்கூட ஊருக்குப் போறதில்லை" என்று இரக் கப் பட்டான் இராமசாமி.
 

215 கொழுகொம்பு
இதற்குள் தோட்டத்துக்கு வந்துவிடவே, கட ராஜன் மருங்தைக் கலந்து இராமசாமியிடம் கொடுத்து *நாளைக்கு வருகிறேன் என்று சொல்' என் முன்,
இராமசாமி போனதும் படுக்கையில் விழுந் து நடராஜன், பிலோமினுவை எண்ணிப் பார்த்தான். அழகான இளம் பெண் தன் கோயாளித் தாயா ரோடு ஏன் இத்தனை தூரம் வந்திருக்கிருள்? அந்த இருசாண் வயிறுக்குச் சோறு கொடுக்க அவர்கள் குடும்பத்தில் ஒருவருமே இல்லையா? முற்றிலும் புதி தான சூழலில், எவர் ஆதரவும் இல்லாமல் அவர்கள் எப்படித்தான் வாழ்கிருர்களோ. அவள் தாயாருக்கு .ஆண்டவனே! நடராஜனுக்குத் தெரிந்த வைத்திய சாஸ்திரத்தில் அவள் வியாதிக்கு மருந்தில்லை என்றே தோன்றிற்று. அப்படியாயினும் அப்பெண்ணின் கதி? நடராஜனுக்கு நித்திரை வரவில்லை. ஆம், 5டராஜ னைப் போன்ற மனம் படைத்தவன் வைத்திய சாஸ் திரத்திற்கே தகுதியற்றவன்! பிறர் துன் பத்  ைத த் தன் மனதிலே அனுபவித்து வருக்கித் தன் வாழ் வையே உருக்குலைத்துக் கொள்ளும் கலைஞணுக வேண் டியவன் ஏன்தான் இந்தத் தொழிலைப் படித்தானே? பிலோமினுவின் நினைவோடு, கனகத்தின் எண் ணம் தொடர்ந்து வந்தது. பிலோமினுவைப்போலக் தான் கனகமும். ஆம், வாழ்க்கையில் ஒதுக் கப் பட்ட பெண்களுக்கெல்லாம் வாத்தியார் வேலைதான் கதி என்று எண்ணிக்கொண்டே நித்திரையாகி விட் டவன் எழுந்து பார்த்தபோது ஏழுமணிக்கு மேலாகி இருந்தது. அவன் எழுந்திருப்பதற்குள்ளாக வேலைக் காரன் வந்து 'உங்களுக்குப் போன்’ வந்திருக்கிற தாம்" என் முன்.
அவசரமாகத் தோட்டத்துரையின் வீட்டுக்குச் சென்று போனைக் கையில் எடுத்துக் கேட்கையில் எங்கிருந்தோ தியாகராசன் பேசலானன்.

Page 115
32
முடியும் தொடர்பும்
நாட்கள் கடந்துவிட்டன. அம்பலவாணரின் கொதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வங் தது. தூண்டுகோல் இல்லாவிட்டால் நெய்விளக்கும் கன் ருக எரியாது. எரிச்சலுக்கும் கொதிப்பிற்கும் கூட எதிரிலே எதிரிகள் இல்லாவிட்டால் அவைக ளும் கன்முக எரிவதில்லை. ஆனுலும் இருளின் அமைதி யிலே முணுக்கென்று எரியும் படுக்கையறை விளக் குப்போல அவர் உள்ளம் இலேசாக எரிந்துகொண்டு தான் இருந்தது.
இதற்குள், மார்கழிமாதம் சோதனை முடிந்து செல்வராஜன் ஊருக்கு வந்துவிட்டான். அவன் வரு வதற்குச் சிலநாட்களுக்கு முன்பாகச் சுங் த ர ம் கல் லோயாப் பள்ளத்தாக்கில் எப்படியோ எல்லாமோ அலைந்து விட்டு ஊருக்கு வந்துவிட்டான்,
சுந்தரம் ஊருக்கு வந்ததும் வராததுமாக நட ராஜனைப்பற்றிய செய்திகள் ஆகாயத்திலே திட்டுத் திட்டாய்க் கிடந்துருளும் மேகக்கூட்டம், குழந்தை யின் கற்பனைக்குத் தக்கதாய் விதவித ரூப த்தை அடைவதுபோலப் பேசுபவரின் வாய்ச்சாலத்திற்குத் தக்கதாய் விசித்திர விசித்திரமான செய்திகளாகப் பரிணமித்தன. 、 。°,、 °
 

21? கொழுகொம்பு
இந்தச் செய்திகள் அம்பலவாணரின் காதுக ளில் அடிபட்டபோது அவருள் மெதுவாக எ ரிங் து கொண்டிருந்த பொருமைத் தீ மறு படி யும் அவர் அறிவு, பாசம் முதலான எல்லாப் பண்புகளையுமே சுட்டெரித்துவிட்டுக் கொழுந்து விட் டெ ரிங் த து. மூன்று மாதங்களாக மகனுக்கும் அவருக்கும் எங் தத் தொடர்புமே இருக்கவில்லை. அதற்குள் அவன் க ல் முனை யி ற் கனகத்தோடு காணப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டபோது அவர் மகன் எட் டாம் எட்வேட் அரசரைப்போல அரசுகட்டிலேயே துறந்து அந்தக் கனகத்தின் பின்னூல் ஓடிவிடுவானுே என்று எண்ணுகையில், அந்த எண்ணத்தின் பாரத் தைத் தாங்கமாட்டாது அவர் உள்ளம் உடல் எல்
லாமே சுண்டிற்று.
ஆனலும் நடராஜன் தன் படிப்பை முடித்துக் கொண்டு உத்தியோகம் ஒன்றைத் தேடிக்கொள்ளு முன் எதையுங் தணிந்து செய்யமாட்டான் என்று தோன்றிற்று அவருக்கு. மனிதமனம் விசித்திரமா னதுதான். பெற்ற தாயையே யமனிடம் பறிகொ டுத்துக் கதறிக்கொண்டு இருக்கு ம் வேளையிற்கூட அந்த விசித்திர உள்ளம் தன் தாய் உயிரோடு 15ட மாடுவதை நினைத்துப் பார்க்கிறது. ஏன்? பாடை யில் நீட்டி நிமிர்ந்து விறைத்துக் கிடக்கும் உயிரற்ற கட்டை, திடீர் என்று உயிர் பெற்று எழுந்து வரு வதைப்போலக் கற்பித்துக் கொள்கிறது. இப் படி கடக்க முடியாத சம்பவங்களையே மிக எளிதாகக் கற்பித்துக்கொள்ளும் மனித மனம், நடப்பதை எண் ணிப்பார்க்கத் தயங்குமா? தமிழன் வாழ்வே, உத்தி
28

Page 116
கொழுகொம்பு 818
-o-o-o-o-
யோகத்தை கோக்கிக் கல்வி கற்பது; உத்தியோகங் கிடைத்ததும் பொன் காய்த்த மர மா க வரும் பெண்ணே மணந்து கொள்வது; அதுவும் முடிந்தால் தன் உத்தியோகத்துக்கு ஊரோடு ஒருமாற்றம் எடுத் து க் கொள் வ து என்ற சக்கர வட்டத்துள்ளேயே உழன்றுகொண்டிருக்கையில், அம்பலவாணர் தன் மகன் உத்தியோகத்தைத் தேடாமற் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டான் என்று எண்ணிக்கொண் டதிற் தவறு என்ன?
இந்த நினைவில் ஆறுதலடைந்திருந்த அம்பலவா ணர் மார்கழி மாதம் பிறந்ததும் தன் மகன் வந்து விடுவான் என்று எதிர் பார்த்துக்கொண்டு இருந் தார். பரீட்சைத் திகதி முடிந்ததும் அவன் வராம லிருப்பதைக் கண்ட அவர் மனத்தில் மறுபடியும் சங் தேகம் கவிந்தது.
இதற்குள் செல்லனும் மூதூருக்கு வந்துவிட் டான், அவன் வந்ததும் சுயம்பிரகாசமான சூரியனி லிருந்து கேரிடையாகவே வந்த ஒளியைப்போலக் கலப்பற்ற உண்மைகள் கேரிடையாகவே வந்தன.
நடராஜன் கல்முனேக்கு வந்தது, கனகத்தைத் தன்னுேடு வரும்படி அழைத்தது, கனகம் மறுத்தது, அவன் திரும்பிப் போனது எல்லாமே அம்பலவாணர் காதுகளில் விழுந்தன.
இவ்வளவு5ாளும் தன் மகன் தனக்குத் துரோ கம் பண்ணிவிட்டுக் கனகத்தின் பின்னல் ஓடி விடு வானே என்று சங்தேகப்பட்டுக் கொண்டிருந்த அம்பல வாணருக்கு இந்தச் செய்தி காதில் விழுந்தபோது

819 கொழுகொம்பு
அவருக்குள்ளே அவியா 5ெருப்பாகக் கொழுந்து விட் டெரித்துக் கொண்டிருந்த ஆண்மை, சுயமரியாதை என்ற உணர்ச்சிகள் திடீரென்று அணைக்கப்பட்டு விட்டனபோல இருந்தன. பெரு நெருப்பிற் சட சட வென்று எரிந்து பொசுங்கும் பிரப்பங் காட்டைப் போல அவர் உள்ளுணர்ச்சிகள் எல்லாம் வெந்தன; கருகி விழுந்தன தன் மானம் என்ற கொடியைத் தழுவிப் படரவிட்டுக் கொண்டிருந்த தன் மகன் என்ற ஒரே கொழு கொம்பும் தன்னை விட்டுத் தூரமாக, வெகுதாரமாகப் போய்விட்டான்; வைரித்து நிமிர்ந்து நிற்க வேண்டிய கொழுகொம்பே தன் எதிரிகளிடம் மண்டியிட்டு விழுந்தான் என்று அவர் எண்ணுகை யில் அவர் உலகிலே நான் ஏன் பிறந்தேன் என்று எண்ணினுர், அளவற்ற மனுே உறுதியை அடக்கி வைத்துக் கொண்டிருந்த அவரின் பரந்த மார்பு அவ மானங் தாங்கமாட்டாமற் சுருங்கிப்போய், அந்தச்சுருங் கிய நெஞ்சுக்குள்ளே அடங்கிக்போய்க் கிடந்த உணர்ச் சிகள் பீறிக் கொண்டு வெளிக் கிளம்புகையில், அவ் வுணர்ச்சிகளின் தீவிரத்தை அந்த வீடு தாங்கமுடிய வில்லை. ஆயிர மாயிரமாண்டுகளுக்கு ஒருமுறை பிறக் கும் மகாகவியைப்போல, மனத்துள்ளே வெம்பிச் சாம்பி மெளனியாகி விட்டிருந்த அம்பலவாணர் கடைசியாகத் தன் வாயைத் திறந்து, 'இனி எனக்கு அவன் மகனல்ல" என்று அறுதியிட்டுச் சொன்ன போது, பொன்னம்மா அவர் பேச்சின் கோரத்தைத் தாங்க முடியாது வெலவெலத் துப் போனுள்.
அம்பலவாணருக்குத் தன் புத்திரனே விடத் தன் மானம் பெரிதாக இருக்கலாம் எனக்கு அவன் மகனேயில்லை என்று சொல்லிவிட்டு அம்பலவாணர்

Page 117
கொழுகொம்பு 230
~~~سمبرحسسمبرح سمصبرح سمص
இருக்கலாம். ஆனல் பொன்னம்மா அப்படி ச்சொல்லி விட்டு இருக்கலாமா ? அவளுக்கு இந்தப் பரந்த உலகிலே உள்ள ஒரே ஒரு சொத்து 15டராஜன் தான். அந்தச் சம்பத்தே தன்னை விட்டுப் போனதை அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடிய வில்லை. பெற்றபாசம் அவள் கொய்தான மனத்தை, ஈரச் சேலையை முறுக்கிப் பிழிவதுபோல் பிழிகையில், அந்த மனுேவேதனையின் எல்லைக் கோட்டிலே நின்ற அவள், காலங் காலமாக இந்தக் கன்னித் தமிழ்நாடு கட்டிக் காத்து வளர்த்துவரும் ‘கண்கண்ட தெய்வ மான கணவனுக்கு அடங்குதல்' என்ற பண்பாட் டின் இலக்கிய உருவான அந்தத்தாய், தன் பண் பாட்டில் இருந்து 5ழுவிவிடக்கூட மனதாயிருந்தாள். தன் கணவனிடம் கேட்டாள். 'எல்லாப் பாசமுமே இத்துடன் அற்றுவிட்டதா? முதலிற்போய்ப் பிள்ளை யைப் பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் விரும்பம்போல என்னவாகுதல் செய் யுங்கள்' என்று.
இதனைக்கேட்டதும் அம்பலவாணர் குண் டு பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் கிழட்டுப் புலியைப் போலப் பாய்ந்தார் 'வேனுமானுல் உன் மகனைப் போய் நீ பார், போ. உன் அண்ணனையுங் கூட்டிக் கொண்டு போ' என்று அம்பலவாணர் இரைந்த போது அந்த இரைச்சல் பொன்னம்மாவின் தாயுள் ளத்திற்குத் தூபமிட்டதே தவிர, அந்தப் பெரும் இரைச்சலில் அவள் தாபம் அடங்கிப் போகவில்லை. அவள் வேகத்தோடு பேசினுள்: 'உங்களுக்கு எல்லாமே முடிந்து விட்டதென்ருல் எனக்கும் அவன் மகன் இல்லாமற் போய்விடவில்லை. நான் போகத்தான்
 
 

231 கொழுகொம்பு
is ~ ~ 10 s. سمبر^سمبر--
போகிறேன். நீங்கள் போகவில்லை என்ருல் கான் யாரோ டாவது போகத்தான் வேண்டும். '
'போ, இப்போதே போ. இந்த வீட்டிலே ஒருவ ருமே இருக்க வேண்டாம் எல்லாருமே போய்த் தொலை யுங்கள்' என்று பொன்னம்மாவின் கழுத்தைப்பிடிக் துத் தள்ளினுர் அம்பலவாணர், அந்தத் தள்ளலில் புத்திரபாசத்தினுல் ஈடாடிப் போயிருந்த பொன்னம் மாவின் பெண்மைப் பண்பு மீண்டும் தன்னிலையை அடைந்தது. என்னதான் இருந்தாலும் தன் கணவர் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் இருக்கும் என்பது அவளுக்கு தெரியும். வீட்டுக்குள்ளே நடக் கும் அலங்கோலத்தை வெளியிற் காட்ட அவள் விரும்பவில்லை. இந்த நிலையிற் தானும் ஏட்டிக்குப் போட்டியாக நின்மூல் தன் கணவர் என்னென்ன செய்வாரோ என்று அவள் பயந்தாள்,
அம்பலவாணர் வீட்டில் இப்படி அல்லோ) கல் லோலமாக இருக்கையிற் கங்தையா தன் மகளுக்காக ஏங்கினர். தான் பெருத பிள்ளையான நடராஜனை நினைந்து தவித்தார். ஏன், பட்டையுரித்த மரம்போல நாளுக்கு நாள் வாடிக் கொண்டேவரும் பெருமரமான தன் அத்தானே கினேக்து கூட அவர் உருகினர்.
செல்லன் வந்து கடந்தவைகளைத் தெரிவித்த
போது, அவருக்கு 5டராஜன் போக்கைக் கண்டு
அடுதாபப்படுவதா, ஆத்திரப்படுவதா எ ன் பது
அவருக்குத் தெரியவில்லை. 15டராஜனே ஊருக்கு
வராததை எண்ணியபோது, கனகம் விடுதலைக்கு
வராமலிருப்பது கூட அவருக்குத் துக்கமாகத் தென்

Page 118
கொழுகொம்பு 233
படவில்லை. ஆனல் என்ன செய்வதென்பதுதான் அவருக்குப் புலப்படவில்லை சாட்டையில்லாப் பம்ப ரமாக அவர் தறிகெட்டு நிற்கையில், ஒருநாள் செல் லன் பத்திரிகையைக் கொண்டுவந்து ‘கடராஜா பாஸ்! நடராஜா பாஸ்!!” என்று தன்னை மறந்து கத்தினன்.
செல்லனின் தலை கால் தெரியாத உற்சாகத்தைக் கண்டு, கங்தையாவுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. பத்திரிகையைக் கீழே போட்ட செல்லன் தன் தங்தையாரின் முகத்தைப் பார்க்கையில், அந்த முகத்திற் கப்பியிருந்த சோகத்தை மதிக்கையில் செல் லன் தன்செயலின் அர்த்தமற்ற நிலையையுணர்ந்து வெட்கிப்போய் நின்றன்.
தங்தையும் மகனும் சிலைகளைப்போல எதிரெதிரே செயலற்று நிற்கையில், அந்த அமைதியிலிருந்த பயங் கரம் அவர்களுள்ளத்தை உலுப்பிற்று. கங்தையா
கரகரத்த குரலில் மெதுவாகக் கேட்டார்: " நீ கொழும்புக்குப் போய் அவனைப் பார்த்துவிட்டு வரு கிருயா ?
செல்லன் தலையை அசைத்தான் அவனுற் பதில் சொல்ல முடியவில்லை அன்று பின்னேரமே செல்லன் கொழும்புக்குப் பயணமாகி விட்டான்.
கொழும்புக்கு வந்த செல்லன் தியாகுவைச் சங் தித்து நடராஜனைப்பற்றிய செய்திகளை விசாரித்தான். அவனுக்கு நடராஜன் மலைநாட்டில் வேலையாக இருக் கிருன் என்ற செய்தி தெரியவந்தது.
 
 
 
 
 

33
பரிவு
ଔ_jpg தந்திமூலம் தியாகராஜன் பேசியபோது 15டராஜனுக்குத் திகைப்பாக இருந்தது மேலும் தியாகு, செல்வராஜன் உன்னைத் தேடித் திரிகிருன் என்று வெடிகுண்டைத் தூக்கிப் போட்டபோது, நடராஜனின் திகைப்பு மேலும் அதிகமாயிற்று.
இலங்கை ஒரு சிறிய தீவு, உலகை ஈரடிகளால்
அளந்த வாமனனைப்போல, யாரும் இரண்டு நாட்களில் இலங்கை முழுவதையும் சுற்றி அளந்து விடலாம். இந்த நாட்டிலே, பாலைவனத் தீக்கோழியைப் போலத் தன் கண்களைத் தரைக்குள்ளே மறைத்துக் கொண் டால் உலகமே குருடாகி விட்டது என்ற எண்ணத் தோடு மலைநாட்டிற்கு ஒளித்து ஓடி வந்திருக்கும் தன் அறிவீனத்தை நினைத்துக் கொண்டான் (5டராஜன். செல்லன் இங்கேயே தன்னைத் தேடி வந்துவிட்டால் என்ன செய்வது? மேலும் எங்கே தன்னை மறைத்துக் கொள்வது? என்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருந்த கட ராஜனுக்கு, ' நான் பதினுெரு மணியளவில் உன்னே ச் சந்திக்க வருகிறேன் ' என்று சொன்னதுகூடத் தெளிவாகக் கேட்கவில்லை.
அந்தக் கலவரத்தோடு வீட்டுக்கு வந்த நடராஜன் தோட்ட ஆஸ்பத்திரி திறப்பதற்கு முன்னகவே பிலோ மினுவின் தாயைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் வீட்டிற்குப் போனன்,

Page 119
கொழுகொம்பு 334
நோயாளியைப் பரிசோதித்தபோது அவள் தேக நிலையில் எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை. ஆனற் பிலோமினுவின் நடவடிக்கைகளிலே தான் மாற்றம் காணப்பட்டது. தேற்றுச் சோகமே உரு வானவள் போன்று காணப்பட்ட அவள் முகத்திலே ஒரு தெளிவு இருந்தது. வீட்டுக்கு வரும் 5டராஜனே நன்முக உபசரிக்க வேண்டும் என்று அவள் நினைத்துச் செய்ததுபோல, அந்தச் சிறிய வீடு ஒழுங்காகவும் அழகாகவும் ஆக்கி வைக் கப் பட்டு இரு ங் த து. வியாதிக்காரத் தரயாரோடு நெடுகிலும் பழகி அவள் மனம் மரத்துப்போய்விட்டதோ, அல்லது அவள் தன் தாயின் வியாதியை நடராஜன் குணப்படுத்தி விடு வான் என்று திட்டமாக நம்பினுளோ, அல்லது உற்ருர் உறவினர் எவருமே இல்லாத அந்த இடத் திலே தனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டது என்று எண்ணினுளோ பிலோமினு குதூகலமாகவே இருக் தாள.
அவள் குதூகலத்தைப் பார்க்கையில் நடராஜ னுக்கு மன நிறைவாகவே இருந்தது, தன் சிகிச்சைகள் அவள் தாயாருக்குச் சுகத்தைக் கொடுக்காவிட்டாலும் பிலோமினுவிற்காவது கம்பிக்கையைக் கொடுக்கட்டும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.
அவள் தாயைப் பரிசோதித்து மருந்து கொடுக் ததும், பிலோமினு நடராஜனுக்குக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அதைக் குடித்துக் கொண்டே 15டராஜன் கேட்டான். ' இராத்திரி எப்படி இருக் தது? சுகமாகத்தூங்கினர்களா ?”

225 கொழுகொம்பு
ASMSLSAqAASSSLLS S LSASAJSLSqASeSeLSS ASqS LSASqSeSqSMASLSqAAAAAAS
* ஆம் ' என்று தலையை அசைத்தாள் பிலோ மின. ஆனல் அந்த அசைப்பு எதனைக் குறிக்கிறது என்பது நடராஜனுக்குத் திட்டமாகத் தெரியவில்லை. ஆனலும் தான் போய் மருந்து கொடுத்து அனுப்பு கிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமாகத தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
* போகப்போகிறீர்களா ?" என்ருள் பிலோமின. ' எனக்கு கேரமாகி விட்டது ' * பின்னர் எப்போது வருவீர்கள் ? * நாளைக்கு !”
* நாளைக்கா?" என்று திடுக்கிட்டாள் பிலோமினு! அவள் குரலிற் தொனித்த பயமும் திகைப்பும், | Ել - ராஜனே அப்படியே பிரமிக்க வைத்தன. நடராஜன் அவளைக் குறிப்பாகப் பார்க்கையில் அவள் கண்கள் கலங்கிப் போயிருந்தன அழுகையே வந்துவிட்டது போல இருந்தது அவளுக்கு. அம்மன் கோயிலிற் கட்டப்பட்ட பலியாடுபோலத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பரிதாபகரமாக நின்ருள் அவள்,
தலைக்கு மேலே சுவரிலே இவ்வுலகின் கஷ்டங்களை யும் துன்பங்களையும் கான் தான் தாங்கிக்கொண்டிருக் றேன். துன்பப்படுகிறவர்களே என்னிடம் வாருங் கள்' என்று அழைப்பதுபோலக் கையைத் தூக்கிப் பிடித்தவாறு மக்களை நேசிக்கும் அன்பினுற் பற்றி எரியும் தன் இருதயத்தைத் திறந்து காட்டியபடி கிறிஸ்து 15ாதரின் படம் ஒன்று இருந்தது. 15டராஜன் பிலோ மினுவின் பரிதாபகரமான முகத்தைப் பார்க்க முடியாதவனுய்த் தன் முகத்தை நிமிர்த்தியபோது
29

Page 120
கொழுகொம்பு 826
மேலேயுள்ள படத்தையும் பார்த்தான் பின் அதையே அப்படத்தையே பார்த்துக் கொண்டு நின் முன்.
* மத்தியானம் வர முடியாதா ?” என்று பிலோ மினு கேட்டாள்.
* நான் வரத் தேவையில்லை என்று நினைத்தேன். வேண்டுமானல்வ ருகிறேன். ஏன் தங்களுக்கும் பயமா யிருக்கிறதா ?" என்று அடுக்கடுக்காகக் கேட்டான் 15டராஜன்.
' அப்படி ஒன்றுமில்லை. ஆனல் அம்மாவின் கிலே யில் நீங்கள் அடிக்கடி இங்கு வருவது நல்லதல்லவா ?” என்றுள் பிலோமின. கலங்கிக்கொண்டிருந்த அவள் கண்கள் ஒர் அன்னியரிடம் தங்கள் கலக்கத்தைக் காட்டுவதா என்றெண்ணிப் போலும் க ண த் தி ல் நெளிந்து தம் இயல்பான பிரபையோடு மறுபடியும் நடராஜனைப் பார்க்கையில், அக் கண்களிலே அடை மழைக்குப் பின்னர் தோன்றும் வான வில்லின் வர் ணங்கள் தெரிந்தன.
ஆனல் அந்தக் கண்களையே பார்த்துக் கொண் டிருந்த 5டராஜனுக்கு அதன் வர்ண விசித்திரங்களல்ல நீர் மட்டத்துக்குக் கீழே சுழித்துச் செல்லும் நீரோட் டத்தைப் போன்ற துன்பச் சுல்தான் தெரிந்தது. பாவம் பிலோமினு பயப்படுகிருள் என்பது அவனுக் குத் திட்டமாகத் தெரிந்தது. எனவே அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக " மத்தி யானம் எனக்கு வேலையிருக்கிறது; ஆனுலும் நான் வர முயற்சிக்கிறேன்' என் முன்,

23? கொழுகொம்பு
on Jo N-on-1-NJo
ஆனல் அந்த வாக்கியங்கள் பிலோமினுவைத் கிருப்திப்படுத்தியதோ என்னவோ? ஆனல் நடராஜ னைத் திருப்திப்படுத்தவில்லை. எனவே அவ்வசனம் முடிந்ததும் முடியாததுமாகக் கேட்டான். ' தனி யாகத்தான் இருக்கிறீர்களா ?”
' ஆம்' என்றுள் பிலோமின. இப்படித் தன்னி டம் யார் கேட்கப் போ கிருர்கள், எப்போது பதி லிறுப்போம் என்று காலங்காலமாக அங்கலாய்த்துக்
கொண்டிருந்தவள் போலப் பிலோமினு ' ஆம்' என் ருள்
சட்டியிலே ஈயக் குழம்பாய் உருகிக் கொண்டிருக் கும் நடராஜனின் மனது இந்தப் பதிலினுல் இடம் கிடைத்தப் பொத்துக் கொண்டு ஒடத் தொடங்கிய தைப் போல ஆயிற்று. அவன் மனம் அவனை யறியா மலே அவனுக்குள்ளேயே " ஐயோ பாவம்' என்று இரங்கிற்று.
' ஊரிலே எல்லாரும் இருக்கிருர்களாக்கும் ' என்
முன் நடராஜன். அவன் பேச்சிலே ஊரிலே எல்லாரும் இருக்கவேண்டும் என்ற அங்கலாய்ப்புத் தொனித்தது.
* ஊரிலே எவருமே இல்லை' என்ற பிலோமினு பெருமூச்சு விட்டுக்கொண்டே “ அதெல்லாம் பெரிய கதை' என்ருள்.
அதைத் தொடர்ந்து நடராஜன் நேரம் போனதை பும் பொருட்படுத்தாமல் அவள் கதையைக் கேட் டான். பிலோமினு சிங்கப்பூரிற் பிறந்தவள். கொழுத்த

Page 121
கொழுகொம்பூU338
சம்பளம் வாங்கிய அவள் தங்தையார் குடிகாரர். ஆகவே அங்கிருந்தும் அவராற் பணம் சம்பாதிக்க முடியவில்லை. இதற்குள் இரண்டாவது யுத்தம் வரவே பிலோமினுவும் அவள் தாயாரும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவள் தங்தையைப் பற்றி இப்போதெல்லாம் ஒன்றுமே தெரியாது. தாயா ரின் முயற்சியினுல் பிலோமின கஷ்டப்பட்டுப் படித்து ஆசிரியையாகியிருக்கிருள், பிறந்த ஊர் யாழ்ப்பாணம் எனினும் நீண்ட காளைய சிங்கப்பூர் வாசத்தால் ஊரிலே வீடோவளவோ கிடையாது. ஏழையாகி விட்ட தால் இனசனமும் இல்லாமற் போய்விட்டது.
இந்தக் கதையைக் கேட்ட நடராஜன் எதையோ யோசித்தபடியே 'அம்மாவைவிட வேறு துணையே இல்லாத நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்திலேயே ஒரு ஆசிரியையாக இருக்கக்கூடாது' என்ருன்.
* இருக்கலாம்; என்னிடம் பணம் இருந்தால் ஆயிரமோ இரண்டாயிரமோ பாடசாலைக் கட்டிட நிதிக்கென்று கொடுத்து விட்டு அங்கேயே படிப்பித்துக் கொண்டிருக்கலாம்' என்ருள் பிலோமினு.
நடராஜனுக்கு அடுத்ததாக அவளிடம் என்ன பேசலாம் என்று தெரியவில்லை. ஏனென்ருல் அவ னுக்கு உணர்ச்சிவயப்படும் இருதயம் மட்டும் இருங் தது. பிறரின் சோகத்தைத் தன்னுடையதாக எண் னித் தன் இதயத்தையே உலக வக்கிரங்கள் என்ற முள்ளில் அழுத்திக்கொண்டு இரத்தக்கண்ணிர் வடிக்க அவனுக்கு தெரிந்திருந்தது. ஆனல் இந்தச் சமூக நிலைகளை - அதன் அடிப்படைகளை மாற்றியமைத்துத் தானுகவேண்டும். இலட்சிய கோக்கோ - அல்லது
 

229 கொழுகொம்பு
ܓܐܝܐܝܟܖܐܚ
மாற்றி அமைத்துத்தான் ஆக வேண் டும் என்ற வெறியோ அவனிடம் இருக்கவில்லை.
எனவே வேறு ஒன்றும் பேசாமலே ' கான் மத்தி ய) னம் வருகிறேன் ' என்று வெறுமனே சொல்லி விட்டு அவன் வெளியே இறங்கி (5டக்கையில் அவன் உதடுகள் மட்டும் புதுமைப்பித்தனின் அடிகளை முணு முனுத்துக்கொண்டு இருக்தன.
புண்பூத்த மேனி புகைபூத்த உள்ளமடா - அவள் மண்பூத்த பாவம்நம் மதிபூத்த கோரமடா
என்று கடந்துகொண்டே வந்தவன் தன் வீட்டை நெருங்கும்போது அங்கே தியாகு நின்றுகொண் டிருந்தான், அவனேக் கடந்ததும் 15டராஜனுக்கு உடலெல்லாம் வியர்த்தது.
*καρκ
单革革
萃等苓
滨

Page 122
34
திரிதல்
LDTர்கழிமாதம் போய்விட்டது. பள்ளிக்கூட விடுமுறை முடிந்து மறுபடியும் பாடசாலை ஆரம்ப மாயிற்று.
விடுதலையிற் பாடசாலையில் இருக்காமல், எங்கெங் கெல்லாமோ திரிந்துவிட்டு வந்திருந்த கனகம் மறு படியும் பாடசாலைக்குள் வந்து புகுந்து கொண்ட போது சற்றுத் தூரப்போயிருந்தது போலத் தோன் றிய கவலையும் ஏக்கமும் மறுபடியும் அவளைப் பீடித் துக் கொண்டன. ஆயினும் அடி வானத்தே கண் சிமிட்டும் நட்சத்திரம் போலக் குட்டையாய்க் கலங் கும் சிந்தனைகளுக்கு அப்பால் தெளிவின்றித் தெரியும் புனித லட்சியம் என்ற ஒன்றைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளும் ஒரு முயற்சியில் அவள் கவலைகள் ஒரோர் வேளை அகன்று விட்டனபோற்றன் தோன் றின. ஆனுலும் இந்த இலட்சியம் இருக்கிறதே. அது யாரை வாழவைத்தது? எப்போது வாழ வைத் தது? இலட்சிய நோக்கில், அதை பிடிக்கப் போகி றேன் என்ற வெறியில் இலட்சியவாதி தன்னை மறக் திருந்தால் அதற்கு வாழ்க்கை என்ரு அர்த்தம் ? கன கமும் ஏதோ வாழ்ந்துகொண்டிருந்தாள்.
இதற்குள் அவள் தங்தையார் ஒருதடவை வந்து அவளை ஊருக்குக் கூப்பிட்டார் அவள் மறுத்தாள். செல்வனின் இடையீடு மட்டக் களப்பிலேயே அவளை
 

231 கொழுகொம்பு
AAAASAASSASSASSMLSSSAASSASSMSAS MSLLLLSAAAASAAS ASqS MLASASSSLS SJSLLLSLLJSMLSq
நிரந்தரமாகத் தங்கவைத்து விட்டதுபோற் தோன் றிற்று. ஆனுல் எவர் முயற்சியும் அவள் கலக்கத்தைத் தணியவைப்பதாக இல்லை சுவாமி விவேகானந்தர் * தமது பெண்கள் அழுவதைவிட வேறெதற்குமே பழக்கப் பட்டிருக்கவில்லை என்று கூறியது உண்மை தான ? கனகம் இன்னும் இன்னும் அழுதுகொண்டே யிருக்கக்கூடாது என்றுதான் அந்தலட்சியத் தூணிலே சாய்க் து நிற்க முயன்ருள்.
மார்கழி விடு முறைற்குள் அவள் மான் சிவு குஷ்ட ரோக ஆஸ்பத்திரிக்குப் போயிருங்கா ள். தண்ணிரில் மிதக்கும் வெண்ணெய்த் திரள் போல மட்டக் களப்பு வாவிக்கும் வங்காளக் கடலுக்குமிடையே தத்தளித்து மிதந்துகொண்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு தீவின் அழகு நிமிர்ந்த கேரான தென்னே மரங்களின் நிழலி லிருந்து பார்த்தால் கிழக்கே கண்ணே க் கூசவைக்கும் சூரியன் ஒளியில், பாலாற்றில் மூழ்கித் தலை நிமிர்ந்து பார்க்கும் அப்ரசியைப்போல நுரைகக்கும் கடல் மத்தி
யிலே தோன்றும் அந்தத்தீவு கனகத்துக்கு எத்தனையோ
தடவை காதல் நினைவுகளைக் கொடுத்திருக்கலாம். ஆனல், இம்முறை, ஆயிரமாயிரம் கருகா கங்களாகப் படமெடுத்துச் சிறியடிக்கும் அலைகளின் நடுவே, ஆலிலை யில் அறிதுயிலில் அமர்ந்துகிடக்கும் மகாவிஷ்னுவைப் போல் அடங்கிக் கிடப்பதுதான் அவளுக்குத் தென் பட்டது. அந்தச் சின்னஞ்சிறு தீவைப்போல, கொங் தளிக்கும் வெளியுலகிலிருந்து தானும் மனத்தை ஒரு நிலப்படுத்தி அடக்கிக் கொண்டால். என்று அவள் எண்ணினுள் அந்த எண்ணத்தோடு அங்கே வந்தவள், அனுதினமும் அங்கம் அங்கமாக அழுகிச் செத்துக் கொண்டு இருக்கும் பயங்கரமான வியாதிக்காரர்

Page 123
கொழுகொம்பு 233
களிள் மத்தியில் சாந்தத்திற்பிறந்த புன்னகையோடு, இவர்கள் தெய்வப்பிறவிகளா ? என்று எண்னும் படியாக தன்னலமற்ற சேவைசெய்து கொண்டிருக்கும் மேனுட்டுக் கன்னியர்களைக் கண்டபோது கனகத்தின் மனதிலும் ஓர் உறுதி பிறந்தது வாழ்க்கை வாழ் வதற்கே' என்றதில் கனகத்தின் மனம் தீவிரமற்றதாக இருக்கலாம். ஆனுல் இளமைக் கனவுகள் அவள் மனத்தை நிறைத்து நின்றபோது அவள் வாழவே விரும்பினுள் அங் த வாழ்க்கை, வாழமுடியயாது என்றமனநிலையில் அவளும் அந்தக் கன்னியர்களைப் போலப் பிறருக்காகவாவது வாழவிரும்பினுள்! எனவே துறவியாகிவிடுவது என்று அங்குவைத்தே மனதில் முடிவு செய்துகொண்டாள்.
அப்படி முடிவுசெய்து கொண்டு மான்தீவை விட்டு மறுபடியும் கல்முனைக்கு வந்தபோது அவள் மனம் குழம்பியது. அதிலும் பாடசாலை மறுபடியும் தொடங்கிச் சக ஆசிரியைகள் எல்லாம் பாடசாலைக்கு வந்து சேர்ந்தபோது அவள் அதிகமாகக் குழப்பப்பட் ! --IT Gir!
முதலிலே தான் துறவியாக ஆவதானுல் மதம்
மாறியாக வேண்டுமே என்று எண்ணியபோது அவ ளுக்கு அவ்வெண்ணமே அருவருப்பாக இருந்தது! பரம் பரை பரம்பரையாக வந்த சைவக் குடும்பம் அவளறிய அவள் குடும்பத்திலே யாரும் மதம் மாறியது கிடை யாது. இங்நிலையில் தன் ஏமாற்றத்தைத் தீர்ப்பதற்காக அவள் மதம் மாறிவிட்டால் ஊரிலே அவள் தங்தை யாருக்கு, அவள் குடும்பத்திற்கு எத்தனை அவமானம்! என்றெண்ணியபோது அவ்வெண்ணத்தின் அழுத்தத்
 

233 கொழுகொம்பு
NMNM YON MYN
N /n M-an /n Ma
தில் அவள் மனத்திலிருந்த தீர்மானம் அப்படியே கசிந்து உரு மாறிப்போயிற்று.
ஆணுலும் இயங்கிரம் போலக் கனகம் பாடசாலை விடுதியிற் கிறிஸ்தவப் பிள்ளைகள் அனுஷ்டிக்கும் மத சம்பந்தமான ஒழுங்குகளைக் கடைப்பிடித்து வந்தாள். அதிகாலையில் பூசைக்குச் செல்லும்போதும், சாப் பாட்டின் முன்னும் பின்னும் செபிக்கும் போதும், படுக்கைக்குப் போகுமுன் பிரார்த்திக்கையிலும் கன கமும் அவர்களேடு தானும் பங்கெடுத்துக் கொண் டாள். அவள் மனத்திற்கு வேண்டியது அமைதி! சாந்தி அழையா விருந்தினராக மனத்தில் வந்துறுத் தும் தீனைவுகளை வராமல் விரட்டி யடிக்க முழு நேரவேலை! அவ்வளவுதான்.
இங்கிலையிற் கங்தையா மறுபடியும் அங்கே வங் தார். வந்தவர், எப்படியாவது கனகத்தை ஊருக்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்றுதான் விரும்பி ஞர். பாவம் வீட்டை விளங்கவைக்க வேண்டிய அந்த விளக்கு அனதையாக ஒரு மூலையிற் தூக்கி எறியப்பட்டதுபோலக் கிடப்பதை காண அவரால் முடியவில்லை,
ஆனற் கனகம் அவர், தன்னை இவ்வளவுக்கு வலிந்து அழைப்பதிற் சங்தேகப்பட்டாள். தன்னைக் கூட்டிக் கொண்டு போய், அந்தச் சுந்தரத்திற்கே கல்யாணம் முடித்துவைத்துவிடுவாரோ என்று அவ ளுக்குப் பயமாக இருந்தது.
இந்த எண்ணத்தில் எப்படியோ சாக்குச் சொல்
லித் தங்தையை அனுப்பிவிட்ட கனகம்,முழுதாக மனம்
30

Page 124
கொழுகொம்பு 234
மாற்றமடைந்து விட்டாள் கெதியில் மதம் மாறிக் கொண்டு துறவியாகிவிடத் துணிந்தாள்.
இந்த எண்ணத்தை மடத்துத் தலைவியிடம் வெளியிட்டுத் தந்தையார் வந்து திரும்பிய ஒருவாரத் திற்குள்ளாகவே, கனகம் கல்முனையை வி ட் டு க் கிளம்பிப்போய்விட்டாள் அமைதியற்றுத் த வித் த அவள் உள்ளத்துக்கு ஒரளவு அமைதியும் கிடைத்து விட்டது. ஆனல் அந்த அமைதி நிலையானதா? போகு மிடத்திலே அவள் நடராஜனைக் கண்டாள்?
மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு வந்த கனகம் பொல்காவலைச் சந்தியில் மலைநாட்டுப் புகையிரதத் தைக் காத்துக்கொண்டு நின்ருள். அவளோடு மதப் படிப்புக்காக இன்னமும் இருவர் இருந்தார்கள்.
புகையிரத நிலையத்திலே, நித்திரை அழுத்தும் இமைகளோடு, கையிலே பைபிளைத்திறந்து வைத்துக் கொண்டு அவர்கள் மூவரும் இருக்கையில் கொழும் புக்குப் போய்க் கொண்டிருந்த தியாகு அவர்களைக் கட்டான்.
தூரத்திலிருந்து அவர்களைக் கண்ட தியா கு யாரோ தனக்குத் தெரிந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டு அருகாமையில் வந்து கூர்ந்துபார்த்தான். அவர்கள் தனக்கு அறிமுக மாணவர்கள் அல்ல என்பதை அறிந்து கொண்டபோதுகூடத் தியாகு அவ்விடத்தை விட்டு நகரவில்லை. தன் சு பாவ குணப்படியே அவர்களை வளைத்துக் கொண்டு திரிங் தான். அவன் செய்கை அவர்களுக்கு அருவருப்பைக் கொடுத்தது. எனினும் அவனைத் தடுப்பதெப்படி?
 

335 கொழுகொம்பு
s
இறைச்சித் துண்டைக் கண்ட சொறிகாயைப் போல அவர்களையே மோப்பம் பிடித்துக்கொண்டு சுழல்கையில், அப்பெண்களின் சம்பாஷணையிலிருந்து அவர்களில் ஒரு த்திக்குக் கனகம் என்று பெயர் என அவனுக்குத் தெரிய வந்தது.
தியாகராஜன் நடராஜனை எண்ணினன். அந்த நடராஜன் சதாஎண்ணிக்கொண்டிருக்கும் கனகத்தை எண்ணினுன்! அந்தக் கனகந்தான் இவள் என்று அவன் மனம் அகாரணமாகச் சொல்லிற்று. மேலும் தியாகுவிற்கு அப்பெண்களோடு சும் மா வா வது
கதைக்கவேண்டும் என்றிருந்தது. எனவே அவன்
சந்தர்ப்பத்தை பயன்படுத் கிக் கொண்டு ' நீங்கள் திருகோணமலையிலிருந்து வருகிறீர்களா?’ என்று கேட் டான். அவர்கள் அடக்கமாக ' இல்லை மட்டக்களப்பி லிருந்த வருகிருேம் " என்ருர்கள்.
ஆனல், தியாகு கதையை வளர்த்து அவள், தான் நினைத்த கனகந்தான் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டான். அவள் எங்கே போகிருள் என்பதையும் கண்டுகொண்டு விட்டான்.
இதைத் தெரிந்து கொண்டவன் அவளை மேலும் அதிகம் குழப்பாமல்விட்டு உடனே நடராஜனிடம் வந்து மேலே நடக்க வேண்டியவைகளைக் கவனிக்க வேண்டுமென்று மனதுட் திட்டமிட்டுக் கொண்டு போய்விட்டான்.
கனகத்தின் மனத்திலோ அவன் ஏன் என்னை விசாரித்தான்? என்பெயர் அவ னு க்கு எப்படித் தெரிந்தது? ஒருவேளை (5டராஜனுக்கும் அவனுக்கும் ஏதாவது உறவு இருக்குமோ? என்றெல்லாம் எண் ணிைக் கொண்டாள். மறுபடியும் அவள் மனம் குழப்பமடைந்தது. -

Page 125
35
சூத்ரதாரி
யாகராஜனக் கண்டதும் நடராஜன் திகைத்து நின்முனல்லவா? ஆணுலும் ஒருகணத்தினுள் தன்னைத் தானே சுதாரித்துக்கொண்டு ‘ஹ ல்லோ எப்போ வந்தாய்' என் முன்,
நடராஜனின் பதட்டத்தையும் பயத்தையும் விளங்கிக்கொண்ட தியாகு வழக்கம்போலவே இன்ன மும் அவனைக் கிண்டல்பண்ணி அழவே வைத்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் " ஏன் வரக் கூடாது?’ என்று கேட்டான்.
* யார் சொன்னுர்கள் வர க் கூ டா து 1 என்று ஆணுல் ஒரு முன்னறிவிப்புமின்றித் திடுதிப்பென்று வந்துவிட்டாயே; அதுதான் கேட்கிறேன்' என்ற கடராஜன் அவனே அழைத்து வந்து ஆசனத்தமர்த் தினன்.
அமர்ந்துகொண்ட தியாகு, நடராஜனை வைத்த கண் வாங்காமற் பார்த் துக் கொண்டிருந்தான். பாவம்! பிரகாசமாக எரியும் மின்சார விளக்கிற்குப் போடப்பட்ட ஒளி அடக்கியிைேேபால எப்போ தும் இளஞ் சிவப்பு முகமாகப் பிரகாசித்துப் புன்னகைத் துக் கொண்டிருக்கும் அவன் அழகான முகம் சில மாதங்களுக்குள் ஏன் இப்படிக் களேயிழந்துபோய் விட்டது? என்றைக்குமே கேர்த்தியாகச் சிவப்பட்டு
 

23? கொழுகொம்பு
ஒழுங்காக இருக்கும் அவன் கேசம் ஏன் இப்படி அலங்கோலமாகக் கிடக்கிறது? குழம்பிக் கிடக்கும் அந்தத் தலையின் முன் அசைவிலே வெள்ளிக்கம்பி போல ஒரு கரை மயிர் ஓடிக்கிடக்தது கூடத் தியாகு வின் கண்ணிற்பட்டது. அவன் கோலத்தையே பார்த்துக்கொண்டு இருந்தபோது வாழ்விற் சிரிப்ப தைத் தவிர வேறெதையுமே அறியாத தியாகுவிற்குக் கூட மனம் இளகியது.
(Ό
* நீ உருமாறிப் போய்விட்டாய்? ' என்று அங்க ஸ்ாய்த்தான் தியாகு.
* உன் கண்களுக்கு அப்படித் தெரியலாம்; கான் அப்படி எண்ணவில்லை. '
* நீ அப்படி எண்ணத்தான் மாட்டாய்; இதை யெல்லாம் எண்ணிப் பார்ப்பவனுக இருந்தால் உன் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்திருக்காது ' என்ருன் தியாகு.
* ஏன் என் வாழ்க்கைக்கென்ன? நான் மன நிறைவோடுதானே வாழ்கிறேன். '
* வாழ்வதாக எண்ணிக்கொள்கிருய் அல்லது அப்படி வாழ்வதாக 15டிக்கிருய், ஆனல் உன் மனதைத் தொட்டு உண்மையைச் சொல்லு, உன் தங்தையாரை, தாயாரை, அழகான உன் கிராமத்தை எ ல் லா ம் விட்டுப் பிரிந்து வாழ்வது உனக்கு மன நிம்மதியாக
இருக்கிறதா?
நடராஜனுல் அந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியவில் லை , மன நிம்மதியே இல்லை என்ற

Page 126
கொழுகொம்பு 2.38
N-1N1--1a1n 1a.
உண்மையைச் சொன்னுல் அததன் மடைமையை ஒப்புக் கொண்டதாக முடியும் நிம்மதியாக இருக் கிறேன் என்று மேலும் பொய் சொல்லவும் அவனல் முடியவில்லை. எனவே தொணதொணத்துப் பெய்து கொண்டிருக்கும் மழைச் சப்தத்தைத் தன் கற்ப னே க்கும் நினைவுக்கும் ஏற்றதாக மனதில் ரூபிகரித் துக்கொள்ளும் குழந்தையைப்போலத் தன் சோகத் தையும் தாபத்தையும் த ன் மனச்சாந்திக்காகத் திரித்து ‘எப்படியாயிருந்தாலும் அப்போதிக்கரி உத்தி யோகத்துக்குப் படித்தவன் ஊரை விட்டுப் பிரிந்து தானே வாழவேண்டும்' என்ருன், - - - - -
* அப்படி வாழ்பவர்களுக்கு எப்போதாவது ஊருக் குப்போகலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனல் உனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறதா ?"
* ஏன் இல்லையா ?' என்று வெடுக்கென்று கேட்ட நடராஜன் தடாரென்று தன் தவறை யுணர்ந்தவனுக, 1ெ5 ருப்பை மிதித்தவன்போலத் திகைத்துகின்றன்.
வாக்குமூலத்திலே பிடிகொடுத்துவிட்டு எதிரியைக் கண்டு சந்தோஷிக்கும் நியாயதுரந்தரைப் போலத் தியாகு மனம் நிறைந்தவனுக 1 நடராஜா, எப்போ தாவது உன் மனம்மாறி ஊருக்குப் போவாய் என் பது எனக்குத் தெரியும். அப்படி எண்ணிக்கொண்டு தான் நீளக்கயிற்றில் பிணைத்துக் கணுவிலே கட்டி வைத்திருக்கும் பசு மாட்டைப்போல உன்னையும் உன்னிஷ்டத்திற்கு எப்படியாவது கூத்தாடு என்று கான் வீட்டுவைத்திருந்தேன். எனக்கு கன்ருகத்

239 கொழுகொம்பு
தெரியும், பாசம் என்ற கயிற்றிற் கனகம் என்ற அந்தக் கணுவிற் கட்டப்பட்டிருக்கும் வரையும் நீ எங்கேயுமே போய்விடமாட்டாய் என்று இன்னமும் ஏன் இங்கிருக்கவேண்டும், ஊருக்குப் புறப்படலாமே' என்ருன் தியாகு. དོ་
நடராஜன் ' தியாகு' என்று தன் பலங் கொண்ட மட்டும் மூர்க்கமாகக் கத்தினன். குழியினுள்ளே கிடந்த அவன் கண்கள் உடனே சிவந்து விட்டன. உச்சிவெய்யிலிலே காஞ்சோன்றிச்சுனை பட்டவனைப் போலப் பதைபதைத்தவனுய் ' இதற்காகத்தான நீ இங்கு வந்தாய் ? ? என்று மறுபடியும் சீறினுன்
அவன் சீற்றத்தைக்கண்ட தியாகு வழக்கம் போலச் சிரித்தான். சிரித்துக்கொண்டே சொன்னுன் * எதற்காக என்னிற் கோபிக்கிருய்? வீட்டுக்குப்போக உனக்கு விருப்பமில்லை என்ருல் அதனல் எனக்கு என்ன கெட்டு விடப்போகிறது? ஆனற் காதற்ற ஊசியும் வாராது காணுங்கடைவழிக்கே ’ என்று எங் தப் பரதேசியோ பாடியதைக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை, மாதாவை எல்லாரையுமே விட்டுச்சென்ற திருவெண்காடனைப்போல நீயும் உன் மாமனுரின் ஒரு சொல்லுக்காக இத்தனை பிடி வாதமாக எல்லா ரையுமே பிரிக் து இப்போது உன்னே நீயே ஏமாற்றிக் கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை அந்தப் பட்டினத்தடிகள் கூட அன்னையிட்ட தீ என்று கடைசியிற் கதறினுன் , உனக்கும் எல்லாந்தான் போனலும் அந்தத் தாயின் பாசம்கூட விட்டுப் போய் விட்டதா ?

Page 127
கொழுகொம்பு 240 -
அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பது நட ராஜனுக்கு முள்ளின்மேற் குந்திக்கொண்டிருப்பதைப் போல வேதனையாக இருந்தது. தன் ஊரைப்பற்றிய எண்ணங்கள் எல்லாம் நொந்து கொண்டிருக்கும் அவன் மனத்திலே ஒடி நெளிகையில், என்ன காரணத் திற்காகத் தியாகு இங்கு வந்திருக்கிருன் என்று எண்ணமிடுகையில் நடராஜனுக்கு எழுந்து எங்காவது ஆாரமாக ஓடிவிடவேண்டும்போல இருந்தது.
5டராஜனின் முகபாவங்களை அந்த முகத்திலே ஒடி கெளியும் துன்பத்தையும் ஆற்ருமையையும் கண்ட போது தியாகுவுக்கும் மேலே பேச முடியாமல் இருந் தது. 15டராஜனின் நிலைக்க அழுவதா சிரிப்பதா என்று அவனுக்குத் தெரியவில்லை எனவே அவனுகவே பேச்சை மாற்ற விரும்பினன், தியாகுவின் மனதிலே 15டராஜன் என்றைக்காவது ஒருநாள் மனம்மாறி வீட்டுக்குப் போகத்தான் போகிருன், இடையே 5ாம் குழப்பாமல் மெளனமாக இருப்போம்' என்று தோன்றிற்று.
எனவே தியாகு நடராஜனின் தோட்ட ஆஸ்பத் திரியைப் பற்றிக் கேட்டான்; தோட்டச் சொந்தக் காரரைப்பற்றி விசாரித்தான். தன் கொழும்பு கண் பர்களைப் பற்றிப் பேசினன். தான் படிப்பை விட்டு விட்டதையும், கொழும்பிலே தான் தொடங்க இருக் கும் வியாபாரத்தையும் பற்றிப் பேசினன், விரை வில் நிகழஇருக்கும் தனது இங்கிலாந்துப் பயணத் தையும் சொல்லி வைத்தான்.
இந்தப் பேச்சுக்களினிடையே செல்வராஜன் தன் னேக் கொழும்பிலே சந்தித்ததையும் சொன்னன்.

24 f - கொழுகொம்பு
سمی حمحمحمح۔
அவன் பேச்சுக் குறுக்கிட்டபோது நடராஜனுக்கு அந்தப் பேச்சு முழுவதையுமே கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றிற்று. ஆனல் அந்த ஆவலை வெளிப்படுத்தவும் அவனுக்கு வெட்கமாக இருந்தது.
அவன் மன நிலையை உணர்ந்துகொண்ட தியாகு வாழைப்பழத்சில் ஊசி ஏற்றுவதைப் போலக் கடந்த கால நிகழ்ச்சிகளை அவனுக்கு ஞாபகமூட்டினன் உத்தியோகத்தைச் சம்பாதித்துக்கொண்டு கனகத்தை அழைத் துவரக் கல்முனைக்குப் புறப்பட்டபோது 'கீ அழைத்ததும் கனகம் வராவிட்டால். என்றுதான் கேட்டதைத் தியாகு ஞாபகமூட்டியபோது (5டராஜ னின் உள்ளம் உடல் எல்லாமே அவமானத்தாற் குறுகிச் சாம்பின. செல்லன் மூலமாகத் தான் அறிந்த வைகளைக் கல்முனையில் கடந்தவைகளை எல்லாம் அப்படி அப்படியே சொன்னபோது, நடராஜன் அவற் றைக் கிரகித்தானு என்னவோ, ஆனல் ஒன்றுமே பேசாமல் மெளனமாகத்தான் இருந்தான். அவன் மனத்துள்ளே தியாகு தன் இருப்பிடத்தைச் சொல்லி விட்டானே என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஆம், சற்றுமுன்பெல்லாம் அவன் ஊரை, குடும் பத்தைக், கனகத்தைச், செல்லனே எல்லாம் வெறுத் துக் கொண்டிருந்தவன், இப்போது அவைகளை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் வெட்கப்பட்டான். செல்லனே அல்லது தன் தந்தையாரோ தன்னைத் தேடி இங்கேயே வந்துவிட்டால் என்று எண்ணிய போது அவன் தலை சுற்றியது. தலையை மணலிற்குள் புதைத்துக்கொண்டால் சூழ இருக்கும் உலகமே தன்னைக் காணுது என்று நினைக்கும் தீக்கோழியைப் போல மலைகாட்டில் வந்து குடியிருந்துகொண்டால்
31

Page 128
கொழுகொம்பு 242
محصبر حصحصح۔
எல்லாக் கண்களுமே இருண்டுவிடும் என்ற தன் எண்ணத்தை, அந்த எண்ணத்தின் பரிதாபகரமான முடிபை அவன் சிந்திக்கையில் நடராஜன் அவசர மாகத் தியாகுவிடம் கேட்டான் செல்லனுக்கு கான் இங்கிருப்பது தெரியுமா ?
அவன் பதட்டத்தைக் கண்ட் தியாகு சிரித்துக் கொண்டே சொன்னன்: ' ஏன் பயப்படுகிருய் ? நீ எங்கிருக்கிருய் எப்படியிருக்கிருய் என்பதைப்பற்றி ஒன்றுமே நான் அவனிடஞ் சொல்லவில்லை. கடந்த விஷயங்களை அவன் மூலமாக அறிந்துகொண்டு கல்முனைக்கு வந்ததற்குப் பின்னுல் ஒன்றுமே எனக் குத் தெரியாது என்ற உண்மையைத்தான் அவனி டம் சொன்னேன். இனிமேற்ருன் உன் தந்தை யாருக்கு அறிவிக்கப்போகிறேன் ' என்ருன்,
'ஏன் நான் உலகிலே சிவிப்பது உனக்கு விருப்பமாயில்லையா ?' என்று ஒரேயடியாகக் கேட் டான் (5டராஜன். - : .
அவன் பயத்தையும் பதட்டத்தையும் உணர்ந்த தியாகு ' பயப்படாதே; சும்மா கேலிக்குத்தான் அப்படிச் சொன்னேன். நிச்சயமாக உன் தங்தையா ருக்கோ, எவருக்கோ கான் எதையும் அறிவிக்கப் போவதில்லை ஆனல் என்றைக்காவது ஒருகாளைக்கு இந்நிலை மாறத்தான் போகிறது. அப்போது நீ ஊருக்குப் போகத்தான் போகிருய் அங்கே கனகத் தோடு வாழத்தான் போகிருய். அந்தச் சுபதினத் தைக் காண 5ான் வந்துதான் ஆகவேண்டி யிருக்கும். அந்த நிலை வரட்டும், எதையுமே நான் செய்யவில்லை.
 

213 கொழுகொம்பு
s-le ~~e s
" அந்த நிலை வந்தாற் பார்ப்போம் ' என்று வேண்டா வெறுப்பாகக் கூறினன் நடராஜன்.
இதற்குள் இராமசாமி வந்து நடராஜனே அவசர அவசரமாக அழைத்தான். நடராஜனும் புறப்பட ஆயத்தமானன். தியாகு தன் பேச்சை முடிவுரையாக * சரி கானும் வருகின்றேன். ஒருவாரங்களுக்கு இந்தப் பக்கமாகத்தான் திரிவதாக எண்ணம். ஆனல் வேறு அலுவல்கள் இருந்தாற் கொழும்புக்குப் போனலும் போய்விடுவேன்' என்றவன் ‘சரிதான் இவ்வளவு நேர மும் மறந்துவிட்டேன் சென்றமுறை கொழும்புக்குப் போய்க்கொண்டிருக்கையிற் பேராதனையிற் கனகத் தைச் சந்தித்தேன் ' என்ருன்.
' கனகத்தையா ? அவளை உனக்கு முன்பின் தெரியாதே ' என் முன் நடராஜன். -
* தெரியாவிட்டால் என்ன, நான் சந்தித்தது கனகத்தையேதான். உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தாளோ என்னவோ" என்றுவிட்டு நடராஜனின் பதி லுக் குக் காத்திராமற் காரிலேறிக்கொண்டு கடந்தான்.
இராமசாமி துரி த ப் படுத் தின ன். கனகம் உன்னைப் பார்க்க வந்தாளோ என்று தியாகு சொல்லி யது வெளியை நிரப்பிக்கொண்டு நிற்கும் காற்றைப் போல அவன் மனத்தை நிறைத்துக்கொண்டு நின்றது. நடராஜனுக்குத் தியாகு சூத்திரதாரியாக இருந்து ஏதோ கடத்துகிருன் என்று பட்டது. மனத்தில் தியாகுவைப் போய்க் காணவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். it

Page 129
36
'ሲ፡ தாயார்
டராஜன் மனம் மறுபடியும் சலனமடையத் தொடங்கிற்று தியாகராஜன் தன்னிடம் கதைத்த வைகளை மீட்டும் மீட்டும் அவன் மனம் நினைவுக்குக் கொண்டு வருகையில் தியாகு தன்னை ஊருக்கு அனுப்பி வைக்கவே ஏதேதோ திட்டம் எல்லாம் போட்டு வைத்திருக்கிருன் என்று அவன் மனம் நம்பிற்று. கடைசியாகக் கனகம் இங்கே வந்திருக் கிருள் என்று தியாகு போட்ட வெடிகுண்டு நடரா ஜனே அப்படியே ஒரு கலக்குக் கலக்கிற்று.
15டராஜன் ஊரிலே நடைபெறும் எத்தனையோ கல்யாணப் போர்களைக் கவனித்திருக்கிருன், பொது வாகக் கிராமப் பகுதிகளில் கடக்கும் ஒவ்வொரு கலியாணமும் இந்த மகத்தான கலியப்தத்திலே
கல்யாணம் என்ருற் சாதிப் பேச்சுக் கிளத்தும் கல
காரம்பம்' என்று புதுமைப்பித்தன் எழுதியதைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும், இந்த லட்சணத்தில் காதற் கலியாணங்கள் கூட கடைபெறுவதுண்டு. யாராவது ஒருவன் தாய் தங்தையர் சம்மதமின்றி ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்வான். இதனுல் சம்பந்தப்பட்ட இரு கலியாணப் பகுதியினருக்கும் ஒரே போராக இருக்கும். ஒரு வருடத்திற்குள் இந்தத் துவந்த யுத்தம் எல்லாம் அடுத்த வருடமே இரு குடும்பங்களும் ஒன்முகிவிடும்.
 

245 கொழுகொம்பு
N- صفحص. عصحصصحسس
தியாகுவின் திட்டத்தையும் தன் நிலையையும் கவனித்தாற் கல்யாணத்தின் பின் நடைபெற வேண் டிய இந்தத் துவங்த யுத் தம் கல்யாணத்துக்கு முன்னமேயே நடைபெற்று விட்டதுபோல நடராஜ னுக்குத் தோன்றிற்று. இனிஎன்ன ? தியாகு அப்பா மாமா எல்லாரையும் கூட்டிக்கொண்டு வருவான், மறுபடியும் பிரிந்தவர்கள் கூடுவார்கள். தனக்கும் கனகத்துக்கும் கல்யாணம் கடக்கும். தான் மறுபடி யும் ஊருக்குப்போய் வழி  ைமபோல மாமனுர் வீட்டிலே வாழவேண்டியிருக்கும் என்று எண்ணிய போது இப்படி ஒரு முடிவுக்குத்தானு இத்தனை வைராக்கியத்துடன் எல்லாரையும் பிரிந்தேன் ? படிப் பைத் தறந்தேன் என்று ஏங்கினன், அடக்குமுறை பிரயோகம் , பண்ணப்பட்ட இலட்சிய வாதியின் மனம்போல் அவன் மனம் உள்ளுக்குள் குமைந்து சாம்பியது. இப்படியெல்லாம் நேருவதாக இருந்தால் ஏன் ஊரைவிட்டு வந்திருக்கவேண்டும்? ஏன் தந்தை யைப் பிரிந்திருக்க வேண்டும் ? என்றெல்லாம் எண்ணி னன் மறுபடியும். -
ஒன்றன் பின் ஒன்ருய், சங்கிலிக்கோவையாய் எண்ணங்கள் அவனுள்ளே ஒன்றை ஒன்று துரத் துகையில் அப்படித் தொடரும் எண்ணங்கள் சரியா பிழையா, தியாகுவைப்பற்றித் தன் பூகம் உண்மையா பொய்யா என்பதைப் பற்றிச் சிந்திக்க முடியாமலே அவன் சமநிலை கெட்டுப்போயிருந்தான். வெறிபிடித்த தேசியவாதி தன் அரசியற் கொள்கைகள் எல்லாமே சரியென்று எண்ணுவதைப்போல நடராஜனும் தான் நினைப்பதெல்லாம் சரியென்று எண்ணிக்கொண்டு
அந்த நினைவின் முடிபாய், அந்த நினைவுகளின்

Page 130
கொழுகொம்பு 246
N-1S.
காரணமாய் இருந்த தியாகுவை மீண்டும் சந்தித்து அவனைத் தன் வாய்கொண்ட மட்டும் திட்டித்தீர்த் துவிட எண்ணினுன்
இத்தனைக்கும் அவ ன யே காத்துக்கொண்டு நின்ற இராமசாமி " ஐயா கொஞ்சங் கெதியா வந்தாற் தேவல' என்ருன்,
நடராஜன் தன் உணர்ச்சி ஒட்டங்களை இராம சாமியின் முன்னுற் காட்டிக்கொண்டதற்கு வெட்கிக் கொண்டவனுய்ச் சரி புறப்படு' என்று சொல்லிக் கொண்டே கடந்தான்.
பிலோமினுவின் வீட்டை அடைந்ததும் வழக்கம் பால “ இப்போது எப்படி இருக்கிறது ?" என்று கட்டான்.
Ag
G
பிலோமினு பதிலே பேசாமல் அவன் முன்னல் நின்றுகொண்டிருந்தாள். வெளியே உலகையே பனிப் புகாரும் குளிரும் இறுக்கி மூடிக்கொண்டிருக்கையில் இயற்கையே நிரந்தரத்துவம் பெற்று நின்றுகொண் டிருப்பதைப்போல இருந்தது.
தனக்கு முன்னுல் அசையாமல் நின்ற பிலோமினு வின் முகத்தை உற்றுப் பார்க்கையில் அவள் இரவு முழுவதும் நித் தி  ைர கொள்ளவில்லை, அழுது கொண்டே யிருந்திருக்கிருள் என்ற உண்மை கடராஜ னுக்குத் தெரிந்தது.
எதிரே அவள் தாயார் படுத்திருக்கும் கட்டிலைக் கவனித்தான். எல்லா உபாதைகளையும் படுக்கையி
 

24? கொழுகொம்பு
حص۔۔۔۔۔۔محصحمحصے
லேயே தீர்த்தவளாக ஓர் அசைவோ, ஆட்டமோ இன்றி அடித்துப்போட்ட பாம்பைப்போலச் செயலற் றுக்கிடந்தாள் அவள் தாய். அந்த அறைக்குள்ளே மருந்துப் போத்தல்கள், பழஞ்சீலைகள், கோப்பைகள், பீங்கான்கள் எல்லாம் ஓர் ஒழுங்குமின்றி மூலைக்கு மூலை இறைக்கப்பட்டுக் கிடந்தன. அவ்வறையின் செயலற்ற தன்மையும், களையிழந்த தோற்றமும் ஒரு பயங்கரத்தைக் கொடுப்பதாக இருந்தது.
' இராத்திரி அமைதியாகத் தூங்கினர்களா ? என்று கேட்டபடியே நடராஜன் அவள் தாயாரின் நாடியைப் பரிசோதித்தான். தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கொலைக் குற்றவாளிபோலப் பிலோ மின அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நித்திரை யற்றிருந்ததாற் சிவந்து போயிருந்த அவள் கண்களி லிருந்து, கடற்பஞ்சிலே பட்டு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்த் துளிகளைப்போலக் கண்ணிராறு அவள் கன்னங்களில் ஒடிற்று.
இத்தனைக்கும் அவள் தாய் செயலற்றுப் போய்க் கிடந்தாள். இரவுமுழுக்கப் பய்ங்கரமாக வெட்டி இழுத்துக்கொண்டிருந்த இழுப்பும் இப்போது இல்லை. எத்தனையோ கஷ்டங்களுக் கிடையில் தன் மகளை உருவாக்கிவிட்ட அந்தத் தாய், கடைசிகாலத்தில் அவள் அனுதரவான நிலையைப் பார்க்கக்கூடாது என்று எண்ணினுளோ என்னவோ படுக்கையில் பிரக்ஞையற்றுப்போய்க் கிடந்தாள்.
அவளைப் பரிசோதித்து முடிந்த நடராஜன் கேட்டான். ' யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்

Page 131
கொழுகொம்பு 248
களுக்கு அறிவிக்கலாம். அவர்கள் இங்கே இருப்பது தங்களுக்கு உதவியாக இருக்குமல்லவா ?' என்ருன் , பிலோமினுவிடம்
* அப்படியானுல் அம்மா. " பிலோ மினு அதற்குமேலே தொடரமுடியாமல் விம்மி விம்மி அழத்தொடங்கினுள்.
15டராஜனுக்கு அவளுக்கு எப்படி ஆறுதல்செய் வது என்று தெரியவில்லை. அப்படியே கல்லுப்போலக் கதிரையில் இருந்துகொண்டிருந்தான். அவள் விம்மல் முடிந்ததும் அவளைச் சிரிக்கவைக்க வேண்டும் என்று விரும்பினவனுகப் பெண்கள் எல்லாரும் இப்படித் தான் எதற்கும் அழுது தீர்த்து விடுகிருர்கள். இப் போது அழுதீர்களே அதனல் யாருக்கும் என்ன பயனும் ஏற்பட்டிருக்கிறதா ?’ என்ரூன். -
தூண்டிற்காரனுக்கு மிதப்பிலே கண் இருக்கு மாம். நடராஜனின் இந்தக் கேள்வி பிலோமினுவின் மனத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. தன் அன்னையின் நிலையை அறிவதிலேயே அவள் கண்ணுயிருந்தாள். அந்த நிலையை அறிந்து விடுவதற் காக அவள் பதட்டத்தோடு கேட்டாள்: ' அம்மா விற்கு எப்படியிருக்கிறது ?
* வயது போய்விட்டது. பலவீனமான உடம்பு' 5டராஜன் இதை அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொல்லத் திராணியற்றவனுய் நிலத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னன்.
" அப்படியானல். "
 

249 கொழுகொம்பு
* ஒன்றுமில்லை; ஆனுலும் உறவினர்கள் யாராவது பக்கத்திலிருந்தால் உங்களுக்குத் தைரியமாக இருக்கும்
அல்லவா ?”
' உறவினர்களா ?' பிலோமினு நீண்ட பெரு மூச்சு விட்டாள்; ஏக்கத்தின் சுவாலைபோல இருந்தது அங் நெடுமூச்சு.
இதற்குள் நடராஜன் அவள் தாயாருக்கு ஏதோ ஊசியைப் பாய்ச்சினுன், பாய்ச்சிக்கொண்டே “ இன் னும் சில நிமிடங்களில் உணர்வு வரும். எதற்கும் தைரியத்தை விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டும் " என்றே புறப்படுவதற்கு ஆயத்தமானுன்,
' அதற்குள்ளாகப் போகப்போகிறீர்களா ?"
15டராஜன் அதற்கு விடைசொல்ல முடியவில்லை; அவள் முகத்தைப் பார்த்துப் பேசவே அவனுல் முடியவில்லை. -
* உங்கள் தாயாராக இருந்தால் இப்படி விட்டு விட்டுப் போவீர்களா ?' என்ருள் பிலோமின.
அ வ ள் கேள்வியில் நடராஜன் அப்படியே திகைத்துப்போனன். துன்பத்தின் எல்லையிலே நிற்கும் எந்த உயிருக்கும், அது அஃறிணையாயின் என்ன, உயர்திணை உயிராயின் என்ன, தன்னை மறந்த ஒரு வெறியிற் பிறக்கும் தைரியம் ஒன்று ஏற்படுகிறது போலும் நடராஜன் மனதிலே இராமசாமி பிலோமினு வைப்பற்றிச் சொன்னதெல்லாம் ஞாபக த்திற்கு வந்தன. ‘மூன்று வருடங்களாக ஊருக்கே போகவில்லை தனியாகத்தான் இருக்கிருர்கள்,' . பாவம் !
33

Page 132
கொழுகொம்பு 250
உறவினர்களும் இல்லை. பிலோமின பயப்படுகிருள். என்று எண்ணிக்கொண்டான் ஆணுலும் அவள் கேள்விக்கு விடையாக " வைத்தியனுக்கு எல்லா வியாதிக்காரரும் ஒன்றுதான் எல்லாரையும் தன்னுல் முடிந்தவரை வியாதியிலிருந்து நீக்குவதே அவன் இலட்சியம்' என்முன்,
" அப்படியாயின் பெற்ற தாயாரிடத்திற்கூட உங்களுக்குப் பாசம் கிடையாதா ?”
1 யார் அப்படிச் சொன்னது ? பிலோமினு ! இப்படிக் கதையை வளர்த் துக்கொண்டிருப்பது உன் மனதிற்கு ஓர் திருப்தியைக் கொடுத்தால் நான் நீண்ட நேரத்திற்கு இப்படியே பேசிக்கொண்டிருக்க விரும்புகிறேன். ஆனல் இப்படிப் பேசிக்கொண் டிருப்பதால் ஆகப்போகிறது ஒன்றும் இல்லை. உங்கள் நிலை எனக்கு நன்முக விளங்குகிறது. எனக்கும் இதயம் இருக்கிறது. என் தாயார் என்று எண்ணிக் கொண்டே உன் தாயாரைக் கவனித்தேன். ஆனல் இப்போது நான் போகவேண்டும். எப்படியும் அரை மணித்தியாலத்தில் உன் அம்மாவுக்கு உணர்வுவரும், அப்போது இம் மருந்தைக் கொடு இரண்டு மூன்று மணித்தியாலங்களில் கான் வந்துவிடுவேன் ' என்று எழுந்து கடந்தான்.
* இருங்கள் என்று சொல்லிக்கொண்டே பிலோ மினு அவனுக்குக் கோப்பி கொடுத்தாள். அவளை மூடி மறைத்திருந்த 15ாணத்திரை அகன்றது. எங்கோ இரு துருவங்களில் இருக்த இரண்டு உயிர்களும் துன்பத்தின் உச்சியில் ஒருவரை நெருங்குகையில் இருவரிடையுமிருந்து இடைவெளி நெருங்கி நெருங்கிக் கொண்டே வந்தது.

37
தழுவல்
விட்டுக்கு வந்ததும், கடராஜன் தியாகுவிற்குத் தந்தி பேசினுன் ஆனல் யோசித்து யோசித்து உருக் குலைந்து கொண்டிருக்கும் செயலற்றவணு தியாகு? அவன் அங்கேயில்லை என்று தெரியவந்தது. அவன் எங்கு போனுன் என்பதைக்கூட 5டராஜனுற் தெரிந்து கொள்ள முடியவில்லை. இப்படியே மூன்று நாட்கள் கழிந்து விட்டன.
நடராஜனின் மனதிலிருந்து வந்த சங்தேகமும் அதன் பயங்கரமும் காற்றிற் கரைந்து அற்றுப்போன ஒலியைப் போலக் காலம் என்ற சூன்யத்தில் அற்றுப்
(3 J FT ut )? 'L GOT,
இவ்வளவுதூரம் தன்னைத் தேடிக்கொண்டு வந்த
செல்லன் தியாகுவிடம் தன் இருப்பிடத்தை வற்
புறுத்திக் கேட்காமலிருப்பானு ? அப்படிக் கேட்டுப் பிடித்திருந்தால் இதுவரை தன்னை வந்து சக்திக்காமல் இருப்பானு ? செல்லன் தன்னைத்தேடிவந்தது என்று சொன்னதெல்லாம் தியாகுவின் புரளி என்று அவன் மனம் எண்ணிற்று.
இந்த மனவேதனைக்குள்ளே பிலோமினுவின் வீட்டுக்கு அடிக்கடி போய்க் கொண்டிருப்பது அவனுக்கு ஆறுதலாகவே யிருந்தது.

Page 133
கொழுகொம்பு 253
மலே காட்டிலே அவனுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள எவரும் இல்லை. மனம் விட்டுப் பேச ஒர் உயிர்ப்பிராணி கிடையாது இந்தநிலையிற் தத்தளித்தவனுக்குப் பிலோமினுவிடம் பே சுவது இதமாக இருந்தது 1 ஆம் பெண்கள்- வேதனையாகவும் அதைத்தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிருர்கள் என்று திருக்குறள் சொல்லுகிறது. யாரோ ஒருத்தியால் ஏற்பட்ட மனுேவேதனேகளைப் பிலோ மினு தீர்த்துக் கொண்டிருந்தாள் !
இந்த மனநிம்மதி அவனுக்கு மட்டுந்தானு ? பிலோமினுவுக்கு இல்லையா ? அவளைப் பொறுத்த வரையில் கடராஜனைப்போற் சூடுபட்ட மனம் அவளுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனல் அவள் மனதிலே தனிமையின் பயங்கரம் இரு ங் த து! இளமையின் உணர்ச்சிகள் இருந்தன.
சாதாரணமாகப் பெண்கள் எல்லோருமே, தங்க ளையொத்த இளைஞர்களுடன் பேசுகையில் விட்டுக் கொடுக்காமல்தான் பேசுகிருரர்கள். ஏட்டிக்குப் போட் டியாகத் தங்களைக் குறைவாகக் காட்டிக்கொள்ள T மற் பேசுகிறதற்கு இயற்கை அவர்களுக்குப் படிப் பித்துக் கொண்டுதான் இருக்கிறது! பிலோமினுவும் அவனுடன் அப்படித்தான் பேசினுள்,
தனியாக இருக்கையிற் பிலோமினு பேசியதெல் லாம் நடராஜனின் நினைவுக்கு வரும். நேற்று அவள் பேசியதை நடராஜன் எண்ணிப்பார்த்தான்.
* மத்தியானம் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே."

253 கொழுகொம்பு
* இல்லை; இராமசாமி எனக்காகச் சமைத்து வைத்திருப்பான் '
* ஒருநேரச் சாப்பாட்டைக் கொட்டுவதால் அப் படி ஒன்றும் அதிகமாகச் செலவழிந்து போய்விடாது."
* அப்படியானுல் எனக்காகச் சமைத்ததினுல் தங்களுக்குச் செலவு அதிகமாகி விட்டதாக்கும் '
* பெண்கள் சமைக்கும் போது கணக்குப் பார்த் துச் சமைப்பதில்லை. '
' அதனுல்தான் எனக்கு மணஞ்செய்து கொள்ள இன்னமும் மனம் வரவில்லை ' இதைச் சொல்லியதும் நடராஜன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் கல்லைக் கடித்தவன்போலக் கணம் அப்படியே செயலற்று கின்று விட்டான். பேசத்தகாததைப் பேசி விட் டோம் என்ற எண்ணத்தில் அவன் மனம் நாணிற்று.
* கணக்குக் காட்ட வேண்டுமே என்ற பயத் தினுலேதான் எத்தனையோ பெண்களும் கல்யா ணத்தை வெறுக்கின் மூர்கள் ' என்ருள் பிலோமினு. அவளிடம் எந்தச் சலனத்தையும் காணவில்லை.
எப்படியோ சாப்பிடாமலே வந்துவிட்டான் அன்று மத்தியானம். அன்று இரவு அவளாகவே அவனிடம் பேச்சைத் தொடக்கினுள். ' இராமசாமி
யிடம் சமைக்க வேண்டாம் என்று சொல்லியிருப்
சீர்கள் ?
* ஏன் ? நீங்கள் கணக்குப்பார்க்காமற் சமைத்து வைத்திருக்கிறீர்களோ ?”

Page 134
கொழுகொம்பு 254
* கணக்குப் பார்க்க வேண்டிய தேவை இன்ன மும் வரவில்லை "
'அந்தத் தேவை வருவதும் தங்களுக்கு விருப்பமா யில்லையே என்று மத்தியானம் சொன்னீர்களே.'
பிலோமின அவ்வளவில் எதையோ மறைக்க விரும்பியவள் போல ' அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் இன்றைக்குச் சாப்பிட்டுத்தான் ஆகவேண் டும்?' என்ருள். அவள் குரலிலே உரிமையோடு கூடிய வற்புறுத்தல் இருந்தது.
அவள் வற்புறுத்தலான வேண்டுகோளை மறுக்கத் திராணியற்றுப் போன நடராஜன் அன்று சாப் பிட்டான், -
வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அன்றுதான் அவன் நல்ல சாப்பாட்டை, பெண் கைப்பட்டுச் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிருன் அது கன்முகத்தான் இருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும், கையைத் துடைத்த வாறே வெளியே வந்தவனுக்கு மேசையிற் கிடந்த புத்தகம் ஒன்று காட்சி கொடுத்தது. அழகான அட்டைப் படத்தோடு கூடிய எட்டணுப் புத்தகம் அது. புத்தகத்தின் பெயர் ஆசை அண்ணு.
பெயரைப் பார்த்ததுமே அவனுக்கு அதில் வெறுப்பு ஏற்பட்டது; அட்டைப்படமே பிடிக்கவில்லை. ஆபாசப் புத்தகமாயிருக்கும் என்று எண்ணிக் கொண்டே / இவைகளையும் படிக்கிறீர்களா ? எண்முன்

255 கொழுகொம்பு
Tn-'n 1n. 1 N
' ஏதோ கிடைப்பதெல்லா வற்றையும் நேரங் கிடைத்தாற் படிக்கிறேன் ' என்ருள் பிலோமினு.
* இந்த ஆபாசமான படத்திற்கு ஆசை அண்ணு ?" என்று பேரிட்டிருக்கிருர்களே?' என்ருன்,
“ எடுத்த எடுப்பில் ஆபாசம் என்று விட்டீர் களே 2 Ο
* படம் அப்படித்தான் இருக்கிறது."
* நீங்கள் வடகாட்டுக் கதைகள் படித்திருக்கிறீர் 3,61 it 2'
* ஒரளவு படித்திருக்கிறேன். '
* அதில்வரும் கதாபாத்திரங்கள் அண்ணன் தங்கை என்றுதான் முதலிலே தொடங்குவார்கள். கடைசியிற் கதை கல்யாணத்திலே முடியும், அங் நிகழ்ச்சியொன்றைச் சுருக்கிப் படமாக வரைந்தால் அது ஆபாசமாகத்தான் படும்.
* சந்தர்ப்பமும் சூழலும் அவர்களேக் காதலர் களாகப் பண்ணியிருக்கும்.'
* அப்படிப் பண்ணிய சூழ்நிலையை ஆபாசம் என்பதாக இருந்தால் இப்படத்தையும் ஆபாசம் என்று விடலாம். சூழ்கிலே ஆபாசமா ? ஏன் அதைத் தெய்வ நியதி என்ருல் என்ன ?"
'அப்படி என்ருல் அண்ணன் தங்கையாகப் பழகு &தே கூடாது ?"

Page 135
கொழுகொம்பு 256
'கம் காட்டுக்குப் பொருந்தாது. வயது வந்த ஆணும் பெண்ணும் நெருங்கிப்பழகுவதனல் கம் 15ாட்டில் அவர்கள் கணவனும் மனைவியுமாக இருக்க வேண்டும்; அல்லது உடன் பிறந்த அண்ணன் தங்கைகளாக இருக்க வேண்டும்.'
* இந்த வசனத்தை நானும் ஏதோ ஒரு காவலிற் படித்ததாக நினைவு. இரகுநாதனே, காண்டேகரோ என்று எனக்குத் தெரியாது. உன் தத்துவப்படி 15ானும் நீயும் நெருக்கமாகப் பழகுவதுகூட ஆபத் துத்தான் ' என்று சிரித்தான் நடராஜன்.
* அப்படி ஒன்றும் பயப்படாதீர்கள்' என்று பிலோமினுவும் சிரித்தாள்.
15டராஜன் மனதிலே இந்தக் காட்சி படமோடிக் கொண்டிருக்கையில் ராமசாமி வந்தான். வந்ததும் வராததுமாக ' சாமி சீக்கிரமாப் பொறப்படுங்க; அந்த அம்மாவுக்கு ரொம்ப சீரியஸாக இருக்கு " என்றன். - --
ராமசாமி உடனே புறப்பட்டான். அப்போது
இரவு எட்டு மணியிருக்கும். ஆனலும் காலத்தை வென்று எங்கும் வியாப்பித்திருக்கும் கடவுளைப் போல உருவற்ற கும்மிருட்டு அந்தச் சுற்றுப்புற மெங்கும் வியாப்பித்துக் கிடந்தது. கடவுளோடு இரண்டறக்கலந்து விட்ட ஆத்மாக்கள் போல மலை 15ாட்டுத் தேயிலைப் புதர்களெல்லாம் அந்த இருட் டோடு இருளாக உருத் தெரியாமல் கலந்திருந்தன. தூரத்தே அங்கங்கேயிருந்த"லயிற்றுகளிலிருந்துதோன்
 
 

35? கொழுகொம்பு
میختہجیے۔ ...^سمتضح^سمصیحح^سمصاسمبرحیح^سمصحیح
றிய வெளிச்சம் மட்டும் அஞ்ஞானிகள் போலப் பகட்டிக்கொண்டிருந்தன.
அந்த இருளரி லே நடராஜன் சிரமத்தோடு வழியைக் கண்டுபிடித்தபடி ஒடிக்கொண்டிருந்தான் !
கையிலே மின் குளுடன் ராமசாமி நடராஜனைத் துரத்திக்கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தபோது பிலோமினுவின் தாயார் ஏதேதோ படுக்கையிற் கிடந்தபடி புலம்பிக்கொண்டிருந்தாள். பிலோமினு அவள் கட்டிலுக்குப் பக்கத்தில் அழுதவண்ணம் நின்றுகொண்டிருந்தாள் !
15டராஜனேக் கண்டதும் அவள் அழுகை மடையை உடைத்த வெள்ளமாய்ப் பொங்கியது. தனியனுய் விடுவேனே என்ற பயங்கரத்தில், அந்த பயத்தினியல் பாற் பிறந்த சோகத்தில், அவள் இதயத்தின் ஊற்றுக் கண்கள் எல்லாம் திறந்து குயீர் குபிரென்று விம்மி வெடித்து அழுகையில் அவ்வழுகை என் நிராதரவான நிலையை உன்னிடம் மட்டும்தான் சொல்லியழ முடி யும் என்று 15டராஜனிடம் முறையிடுவது போல இருந்தது.
நடராஜன் கோயாளியின் காடியைப் பரிசோதித் தான் ! பரிசோதித்து என்ன செய்வது? என்ன ஆகப் போகிறது ? என்ன நடக்க இருக்கிறது ? என்பது அவனுக்கு எப்போதே தெரிந்திருந்தது. ஆனல் அதைப் பிலோமினவுக்குச் சொல்லத்தான் திராணியில்லை.
33

Page 136
கொழுகொம்பு 258
مسیحصیحیحه
அவன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில் அந்தத் தாய் சொன்னுள் " ஏன் தம்பி நீ அவதிப்படுகிருய், இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.'
* அம்மா' என்று மறுபடியும் அலறி  ைள் பிலோமினு !
அந்தத்தாய் மறுபடியும் தன் மகளை அணைத்த படியே சொன்னுள் " என்னமோ நீ கொடுத்து வைத் தது அவ்வளவுதானம்மா. இனி எல்லாவற்றிற்கும் ஆண்டவன் இருக்கிருர் ' என்ருள். அவள் பேச்சுத் தெளிவாக இருந்தது. எண்ணெய் வற்றிப்போகும்
அகல் விளக்கின் கடைசி அனற்பிளம்பைப்போல.
அப்படிச் சொல்லியவள் சிறிது தயங்கினுள். அக்தியகாலத்திலே மரிக்கப்போகின்றவனின் மனதைத் தங்கள் பக்கமாக இழுப்பதற்குப் பிசாசும், தேவதூதர் களும் தங்கள் கடைசிப் பிரயத்தனத்தைச் செய்வார் களாம் என்று கடராஜன் கிறிஸ்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிருன். அந்தப் போராட்டங்தான் அவ ளுள்ளே கடந்துகொண்டிருக்கிறதோ அல்லது தன் மகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கடைசிக்காலத்தில் இந்தத் தாயுள்ளம் எண்ணிப் பார்த்ததோ! கடரா ஜன் கூடப் பரிதாபகரமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவள் பிலோ மினவைப் பார்த்துச் சொன்னுள். 'உன் பக்கத்தில் இந்தப் பொடி' யையும் பார்க்கிறபோது எனக்கு ஆறுதலாக இருக்கிறது ”
இதைச் சொல்லிவிட்டு அவள் கடராஜனைப் பார்த்தாள். கடராஜனிடம் எதற்கோ கெஞ்சுவதைப்

359 கொழுகொம்பு
محسمبر~
போலிருந்தது அவள் பார்வை ! அவள் கெஞ்சுவதற்கு எந்தப் பதிலும் கொடுக்கமாட்டாதவனுக நடராஜன் சிலையாகிப் போய் நின்றன்.
சொல்ல வேண்டியதைச் சொல்லி யாகிவிட்டது என்று எண்ணினளோ என்னவோ, மறுபடியும் கிழவி தன் மகளைப் பார்த்து ' பிலோமினு! திருமணித்தியாலப் புத்தகத்தை எடுத்துப் படி அழாதே' என்ருள்.
லோமினு புத்தகத்தை எடுத்து விம்மியபடியே * என் காலிரண்டும் அசைவின்றிக் கைகளிரண்டும் செயலற்றுக் குளிர்ந்து 5ான் மரணுவஸ்தையாகக் கிடக்கிறபோது. "என்று வாசித்தாள்.
கிழவி, ' என் தயாபர யேசுவே, என் பெயரிற் தயவாயிருஞ் சுவாமி' என்று வாய்க்குள்ளே முணு முணுத்தாள்.
பிலோமினு அந்தச் செபத்தைப் படிப்பதும் இடை விட்டுத் தன் தாயைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
நிமிஷங்கள் சென்றுவிட்டன.
பிலோமின மறுபடி தன் தாயைப் பார்த்தாள். பார்த்தாள் தன்னைப் பெற்று வளர்த்த பேரன்பைக் கடைசி முறையாகப் பார்த்தாள் ! அவள் குடியிருந்த கோயிலின் கருணைமிகுந்த கண்கள் தன் னை யே இன்னமும் உற்று கோக்குவதை அப்படியே கோக்கிக் கொண்டேயிருப்பதைப் ப ா ர் த் தா ள் ! தாயின் தலைமாட்டிலே நின்ற நடராஜன், கண்களில் ஆருக நீரைப் பெருக்கிக்கொண்டு மெ ள ன மாக அழுது கொண்டிருந்தான். அதைக்கண்ட பிலோமினு அம்மா என்று அலறிக்கொண்டே தடாரென்று சாய்ந்தாள்.

Page 137
3SS
தியாகம்
கொழும்புக்குப் போன செல்வராஜன் எந்த 15ற்செய்தியும் இன்றி மூதூருக்கு வக்துவிட்டான். அவனையே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கங்தையா அவன் வெறுங்கையோடு வந்ததைக்கண்டு இடிக் து போப் விட்டார் !
எவருக்குமே சொல்ல முடியாத ஓர் அருவருப்பான
கனவைக் கண்டவர்போலக் கங்தையா தவித்தார். 5டராஜனைப்பற்றி யாரிடம் சொல்வது ? அவனை எங்கு தேடுவது? தான் பெற்ற பிள்ளையைவிட அருமையாக வளர்த்த 5டராஜன் இப்படிக் கண்காணுமற் போய் விட்டானே என்றெண்ணும்போதெல்லாம் அவர் கெஞ்சம் வெடித்தது.
ஆனல், செய்வதென்ன வென்றுதான் எவருக்கும் புலப்படவில்லை.
ஆணுல் இந்தக் கவலைக்கிடையிலும், கார்த்திகை மாதத்திலே வாடைக்காற்று மழையை வருவழித்தது. காடு கரம்பெல்லாம் நீர் நிறைந்தது. மகாவலிகங்கை பிரவாகித்தது. கடல் குமுறியது. தை மாதம் பனி கொட்டிற்று. கதிர்கள் முற்றிப் பழுத்துத் தலை சாய்த்தன. புல்லிற் தேங்கிய பனித்துளிகளை வைரத் துண்டுகளாகப் பிரகாசிக்கச் செய்த சூரியனுக்குப்

361 கொழுகொம்பு
கோபமும் தாபமும், சண்டையும் சச்சரவும், உலக இயற்கை. அவைகள் இல்லாமல் மனித குணங் களே உருவாவதில்லை என்று தெரிவிப்பது போல இயற்கை தன் தொழிலைச் செய்துகொண்டுதான் இருந்தது.
கூனி வேலை பார்த்த கிழவியும், குடிலர் வேலை பார்த்த சண்முகம்பிள்ளையுங்கூட நடராஜனை மறந்து விட்டார்கள்! ஊரே நடராஜன் என்ற ஒருவன் இருந்தான் என்பதை மறந்துவிட்டிருந்தது.
தன்னைக் காட்டிக் கொடுத்த துரோகியான யூதா சுக்குக் கிறீஸ்து5ாதர் சொன்னுராம்: 'நீ பிறவாதிருந்
தால் உனக்கு கலமாயிருக்கும்' என்று. அம்பலவாணர்
கிறிஸ்து5ாதரல்ல. 'ஒரு கன்னத்தி லடித்தவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பிக் கொடு ' என்ற கிறீஸ்து காதரின் போதனையைத்தானும் அம்பலவாணர் ஏற் றுக்கொள்ளக் கூடியவரல்ல. ஆனலும் பிள்ளைப்
பாசமும் வாஞ்சையும் அவர் இதயத்தை அலக்கழிக்
கையில், வீம்பு பேசி அலுத்த அவர் உள்ளம் கூம்பிச் சாம்புகையில், கிறிஸ்துகாதரைவிட ஒருபடி மேலே போய் ' அவன் பிறவாதிருந்தால் அவனுக்கு மட்டு மல்ல எனக்கும் நலமாயிருக்கும்” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்! ஆனலும் தன் மகனைத் தேடிப் பார்க்க வேண்டும் எங்கே எப்படி இருக்கிருனே என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமே ; இந்த நினைவு அவருக்கு வரவில்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவன் இல்லாமற்போன பொல்லாப் பிள்ளையாகவே இன்னமும் இருந்தான்.

Page 138
கொழுகொம்பு 262
ܓ ܐ ܓ ܝ
கங்தையாவிற்குக்கூடக் கனகத்தைப் பற்றிய விசாரம் ஏற்படவில்லை. கல்முனையிலே கனகம் ஏதோ உயிரொடு இருக்கிருள் என்ற நினைவுமட்டும் அவருக் கிருந்தது. அவர் மனைவிமட்டும் மகளைக் கூட்டிக் கொண்டு வந்து காம் வேறு வழி பார்க்கிறதுதானே; அவள் இப்படித்தான இருக்கிறது? என்று அடிக்கடி அவரைக் கேட்பதுண்டு. அப்படி அவள் கேட்கும் போதெல்லாம் கங்தையா அகாரணமாக அவள்மேற்
சீறிவிழுந்தார்.
பாவம் மலை குலைந்தாலும் மனங்கலங்காத அவர் அத்தான் உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கிருர் 1 அவர் மட்டும் அப்படி வாடி வதங்கிக்கொண்டிருக் கையில் தன் வீட்டில் மட்டும் மங்கள காரியம் கடக் காததுதான் குறையா? என்று எண்ணிக்கொண்டார். சந்தர்ப்பம் கிடைத்தால், அத்தானிடம் சரணுகதி யடைந்து புண்பட்டுக் கிடக்கும் அவர் மனதைத் தேற்றுவிக்கக்கூட ஆயத்தமாகத்தான் இருந்தார் கக் தையா. ஆனல் அம்பலவாணர் அவரை எப்போ தாவது முகங்கொடுத்துப் பார்க்கிருரா ? அப்படிப் பட்டவரிடம் தானுக எப்படிப் போய் உறவு கொண் டாடுவது ? கங்தையா வுக்கும் ஒன்றுமே விளங்கவில்லை.
எப்படியோ இருவரும் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள் இருவர்க்கும் பொதுவான காரியங் கள் எத்தனையோ ஊரில் கடக்கத்தான் செய்தன. கல்யாண வீடுகள், சாவீடு எல்லாவற்றிலும் இருவரும் மரம்போல மட்டைகள் போலக் கலந்துகொண்டார் கள். மட்டையும் மரமுமாகவே பிரிந்து போனர்கள். எந்த உணர்ச்சியும் அவர்களை ஒன்ருக்கி வைக்கவில்லை.
 

...
263 கொழுகொம்பு
nua n anjanua- حمیرح میرحبیرح
இப்படியிருக்கையிற்ருன் கல்முனையிலிருந்து கன கத்தின் கடிதம் வந்தது. கனகம் தான் மதம் மாறி விட்டதாகவும், அத்தோடு தான் ஒரு கன்னிகாஸ்திரி ஆகிவிடப் போவதாகவும், கல்முனையை விட்டுப் போய் விட்டதாகவும் எழுதியிருந்த அந்தக் கடிதம் கங்தை யாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது !
உண்மைதான் ! நூறு இருநூறு வருடங்கட்கு முன்பாகக் கிறிஸ்தவ சமயப் பாதிரிகள் கீழ்க் கரை களில் தங்கள் மதத்தைப் பலவழிகளிலும் பரப்பிக் கொண்டிருக்கையில் அவர்கள் நோக்கம் மட்டக்களப் புப் பகுதிகளில் அமோக வெற்றியைக் கொடுத்தாலும் திருகோணமலைப் பகுதிகளிற் பிரதிகூலமாகத்தான் இருக்கிறது. பிறவாத பெம்மானன தென் கைலை நாதன் கோயில்கொண்டிருக்கும் இடமல்லவா அது ! வைதீகமான சைவர்கள் இடையில் மதமாற்றம் எடு படவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும் இப் போதும் இந்தப் பகுதிகளிலுள்ள சைவர்கள் மத மாற்றத்தை இழிவான செயலாகவும், மதம் மாறிய வர்களை அருவருப்பாகவுமே எண்ணுகின்றனர். அப் படியான சூழ்நிலையில் வளர்ந்த கங்தையா தன் மகள் மதம் மாறிவிட்டாள் என்பதைக் கேள்விப்பட்ட போது உள்ளத்தில் நெருப்பைக் கொட்டிக்கொண் டவர்போல அவஸ்தைப்பட்டார் ! தனக்கு இப் படியுமா அவமானம் வரக் காத்திருந்தது என்று நொந்துகொண்டார் !
ஆனுல் புத்திசாலியான அவர் எதையும் அமர்க் களப் படுத்துவதில்லை. தன் மனே விக்குக்கூட விஷயத் தைச் சொல்லவில்லை. இந்திரதனுவால் அடிபட்டதைப்

Page 139
கொழுகொம்பு 264
محمسیح۔۔۔۔۔۔۔۔۔۔
SAJSLSASSSLSLSLS ASLLS AJSLSSASLSSASLSAAAA
போல வலிக்கும் தன் இதயத்தை எவருக்குமே காட் டாமல் இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என் பதை இரகசியமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
* கனகம் மதம் மாறுவதையோ தான் எண்ணிய படி எதையும் செய்வதையோ சட்டப்படி அவர் தடுக்கமுடியாது, அவள் வயது வந்தவளாக இருக் தாள். தங்தை மகள் என்ற ஒரே பாசந்தான் அவளைத் தடுத்து நிறுத்தக்கூடியதாக இருக்கும். தங்தை மகள் என்ற பாசங்கூட அவருக்கு இல்லாமலா போய்விட் டது ? கனகத்தின் போக்கைத் தடுத்து நிறுத்த முடி யாமற் கங்தையா தவிக்கிருரே. அது ஏன் ? தங்கள் ஆசாரம், பெருமை எல்லாவற்றையுமே உதறி எறிந்து விடுவதாக எழுதியிருக்கும் தன் மகளைக் கங்தையா எரித்துவிடாமல் வாளாவிருக்கிருரே. அதன் இரக சியந்தான் என்ன ?
கனகத்தின் போக்கைத் தடுத்து நிறுத்தி அவளை வீட்டுக்குக் கொண்டுவந்து என்ன செய்வது ? தன்னை அணைத்து வளர்த்த அத்தான் அம்பலவாணர், அரு மையான ஒரே மகனைப் பிரியாமற் பிரிந்து சாகா மற் செத்துக்கொண்டிருக்கிருர், அவர் வீடு இழிவு விழுந்த வீட்டைப்போலப் பொலிவிழந்து நிற்கையில் தன் வீட்டிற் தனது மகளுக்கு எந்த மங்களகரமான காரியத்தைச் செய்வதையும் கங்தையாவினுல் எண் னிப்பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கண்னுக்குக் கண், உயிருக்கு உயிர் என்று அந்தக்காலத்திலே அரச நீதி இருந்ததாம். அதைப்போலவே கங்தையாவும், அம்பலவாணரின் மகனுக்காகத் தன் மகளையே இழக்கத் தீர்மானித்துவிட்டாரா ?
 

265 கொழுகொம்பு
அவருடைய வீட்டிற்தான், 15டராஜனைத் தவிர வேறு எவரும் உரிமை பாராட்ட முடியுமா? அப்படி ஒரு உரிமை பாராட்டுவதைக் கனகம் சம்மதிப்பாளா? கங்தையாவிற்குத்தான் அது சம்மதமா? மணக்கோ லத்தில் கனகத்தையும் நடராஜனையும் கற்பனை செய்து பார்த்த அவர் கண்கள், அந்தக் கற்பனையுருவைச் சித்திரவதை செய்து கடராஜனிடத்தில் வேருெருவனே ஒட்டவைத்துப் பார்ப்பதைக்கூட வெறுத்தன.
ஒருவேளை நடராஜன் தன் மனம் மாறித் திரும்பி வந்துவிட்டால் . என்று எண்ணிப்பார்த்தார் கங் தையா ! அப்போது கனகமும் இங்கே கன்னியாகவே இருந்தால். அதற்குள்ளே அவள் இப்படி ஒரு முடிவு செய்துவிட்டாளே என்று எண்ணிக்கொண் டிருக்கையிற் கங்தையாவினல் அங்நினைவின் கோரத் தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.
நடராஜன் என்றைக்காவது ஒருநாள் வருவான். ஆண்டவனே அவன் வந்துதானகவேண்டும். அவன் இங்கே வந்ததும், கனகம் இங்கில்லாவிட்டால், ஏன் இருந்தாற்தானென்ன, அத்தான் அவனுக்குத் தட புடலாக யாரையாவது கல்யாணஞ் செய்துவைப்பார். அவர் மனமுங் குளிரும். அதனுல் என்ன ? அந்தச் சுபதினத்தைத் தன் கண்ணுற் காணக் கொடுத்து வைக்கவில்லையா? என்று நினைக்கையில் கங்தையாவின் கண்கள் கண்ணிரைக் கொட்டின.
கங்தையா மறுபடியும் பெருமிதத்துடன் எண்ணி
னர். என் மகள் வேசையாடவில்லை. எவருக்கும்
துரோகம் பண்ணவில்லை. தீங்கிழைக்கவில்லை. எவருக்
கும் தொந்தரவு இல்லாமற் தன்பாட்டில் ஒதுங்கிக்
34

Page 140
கொழுகொம்பு 266
கொண்டாள். அவளை காம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்? அவள் இப்படிப் போய்விட்டாள் என் பதை அறிந்தாலாவது நடராஜன் வரமாட்டானு ? அத்தான் மறுபடியும் அம்பலவாணராக ஆகிவிட மாட்டாரா? கனகம் இப்படிப்போவது நல்லதென்றே அவருக்குப் பட்டது! ஆனலும் வெட்டுப்பட்ட ஆம ணக்கிலிருந்து சொட்டும் பாலைப்போல அவர் கண்கள் கண்ணிரைச் சொட்டவிடுவதை அவரால் நிறுத்தவோ தடுக்கவோ முடியவில்லை.
வேதனைப்படும் அவர் உள்ளத்திற்கு ஒரேஒரு ஆறுதல், சமயசம்பந்தமாக எ த் த னே வேறுபாடு அவர் மனதில் இருந்தாலும், கிறிஸ்தவ சமயத் துற விகளைப் பற்றி அவருக்கு மேலான எண்ணமே இருங் தது. அவர்களின் தன்னலமற்ற சேவையும், அயராத உழைப்பும் அவர் மனதை எப்போதுமே கவர்ந்திருந் தன. அதனுற்தான் கனகத்தைக்கூடக் கல்முனைக்கு அவர்களின் பாடசாலைக்கு அனுப்பியிருந்தார். தன் மகளும், இந்த நிலையில் ஒரு துறவியாகிவிட்டதை வர வேற்றுக்கொண்டு, எல்லா ஆறுகளும் கடலிற் சங்க மிப்பது போல மதங்கள் எல்லாம் கடவுளிடம் சங்க மிக்கின்றன என்ற விவேகானந்தரின் தத்துவத்தில் ஆறுதலடைந்துகொண்டிருந்தது 1 ஆம், அத்தான் அவஸ்தைப்படுகிருர் (5டராஜன் காணுமலே போய் விட்டான்; இவர்களிருவருக்காகவும் தன் மகளையே தியாகம் பண்ணிவிட்டார் கங்தையா! அவரது தங் தைப் பாசம் என்ற ஆட்டுக்குட்டிகூட வே த னை என்ற உள்ளத்திற் பலியிடப்பட்டுவிட்டது.
தங்தையார் இப்படிப் பதைக்கையில், கனகமும் அவள் பாடசாலையின் மற்றைய ஆசிரியைகளும், பிலோ மினுவின் தாய் இறந்த துக்கம் விசாரிப்பதற்காகப் பிலோமினவின் வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.

39)
மிருத்யூவின் வாயிலில்
கீழே விழப்போன பிலோமினவை 5டராஜன் தாங்கிப் பிடித்துக்கொண்டான் ! தனக்கு இருந்த ஒரே ஆறுதலான தன் தாயாரின் பிரிவைத் தாங்க முடியாத கொடியாக அவள் துவண்டு விழுந்து கட ராஜனின் கைத்தாங்கலில் தடைபட்டு, அவன் மடியிலே பிரக்ஞையற்றுப்போய்க் கிடக்கையில், அகாதரவாய் விட்ட அவள் நிலையின் பயங்கரமான எதிர்காலந்தான் 15டராஜன் மனத்தை நிறைத்து விட்டது. அவன் வைத்தியன் அவளை மூர்ச்சை தெளியப்பண்ண வேண்டுமே என்ற அவன் தொழில்கூட அவனுக்கு மறந்துபோய்விட்டது! பலமான பந்தரிலே செழித்துப் படர்ந்திருந்த கொடியிலிருந்து வாடி விழுந்துவிட்ட புடலம் பூவைப்போன்ற அவள் முகத்தையே அவன் பார்த்துக்கொண்டு இருக்கையில் எதிரே கட்டிலில் கட்டையாய் விறைத்துக் கிடந்த அவள் தாயாரின் சடலத்தைப்போல அவனுடைய சர்வ உணர்ச்சிகளும் அவனுள்ளேயே அடங்கி சாகக்கொடுத்தவனைப் போலக் கல்லாய்ப்போய் இருந்தான்.
சற்று நேரத்திற் பிலோமின கண்ணைத் திறந்தாள். தன்னை மறந்த வெறியில் நித்திரையாய்விட்ட வெறி யன், நித்திரை முறிவிற் கண்ணே விழித்தால் அவனுக்கு நினைவு வந்திருக்கலாம். ஆனல் மயக்கம் தீர்ந்திராது. கண் விழித்த பிலோமினவிற்கும் சித்தம் சுவாதீனத்தி

Page 141
கொழுகொம்பு 268
- os-eov
லில்லை. தான் எங்கிருக்கிறேன், எப்படியிருக்கிறேன், என்ற எண்ணம் இன்னமும் வரவில்லை. ஆனல் பயங் கரமான கனவாக அம்மா செத்துப் போய்விட்டாள்" என்றது மட்டும் அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது. அவள் மறுபடியும் அலறி அழத் தொடங்கினுள்.
“பிலோமின அழுதழுது என்ன ஆகப் போகிறது ? எழுந்திரு” என்று அவளைத் தூக்கி நிறுத்த முயன் ரூன் 15டராஜன்.
'இந்த உலகிலே நான் எப்படித் தனியாக நிற்கி றது” என்று விம்மி விம்மி அழுதாள் அவள்.
கடராஜன் கண்களும் அவனையறியாமலே கண் ணிரைக் கொட்டின. இப்போது "ஆண் டாண் டு தோறும் அழுது புரண்டாலும். என்ற பழைய பாட்டின் தத்துவத்தைச் சொல்லி அவளை அழாம லிருக்கச் செய்யவேண்டும் என்ற மனநிலைகூட அவ னுக்கு மாறிவிட்டது! அவள் கன்ருக அழவேண்டும். அவள் கண்களிலே கட்டுண்ட க  ைடசி ச் சொட்டுக் கண்ணிரும் வெளிவந்து கண்கள் வ ர ண் டு விடும் வரை, வரண்ட அந்தக் கண்கள் இரத்தகண்ணிரைக் கொட்டும் வரை நீ அழு ; கன்முக அழு பிலோமினு ' என்று அவளுச்குச் சொல்லவேண்டும் போல இருக் தது 15டராஜனுக்கு.
அவள் இன்னமும் அழுதுகொண்டுதான் இருந்தாள், 'அம்மா ! என்னைத் தனியாக விட்டிற்றியே." அவள் உள்மனதின் பாதாளங்களிலேயிருந்து குன் ய மாகி விட்ட எதிர்காலத்தின் பயங்கரம் வெடித்துக் கிளம்பி
 

269 கொமுகொம்பு
ஒலமிடுகையில், அந்த ஒலத்திற்கு ஒரு ப தி லை கடரா ஜன் உதடுகள் கொடுத்தன.
* பயப்படாதே பிலோமினு, உன்னேடு கான் இருக்கிறேன். '
“ அம்மா வீட்டைவிட்டுப் போனுல் எல்லாருமே போய்விடுவீர்கள்! "
* உண்மையாக, சத்தியமாக நான் போகமாட் டேன்" என்று கம்மிய குரலில் அவசரமாகச் சொன் ஞன் நடராஜன். அவன் கைகள் அவள் தலையைத் தடவிக்கொடுத்தன.
இதற்குள் திடீரென்று பிலோமின எழுந்து நின் ருள். தான் எப்படியிருக்கிறேன் என்ற உணர்ச்சி, வெளிறிக்கிடந்த வானத்தில் இடி இடித்ததைப்போலத் திடீரென்று அவளுக்கு வந்துவிட்டது. தன் அழகை அதிகப்படுத்தி அங்கங்களை மறைத்து நின்ற ஆடை சற்றுக் குலைந்து கிடந்ததை எண்ணுகையில் அவளுக் குத் தன்னிலேயே ஒரு அருவருப்பு வெறுப்புப் பிறக் றது. தடாரென்று தன் ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டாள் !
அவள் போக்கு நடராஜனுக்குப் ப ய த்  ைத க் கொடுத்தது. இத்தனை நேரமாக அவளின் உடலின் மிருதுத்தன்மையை உணர்ந்தபோதுதான் அவள் தனி மையின் பயங்கரத்தையும் அவனுல் நன்முக உணர முடிந்தது. ஆணுற் திடீரென்று எழுந்துவிட்டபோது தான் அவனுக்கு அவள் பெண், தான் ஆடவன் என் பதை உணர முடிந்தது. ஏதும் தவறுதலாக எண்ணிக்

Page 142
கொழுகொம்பு 270
MYN
கொள்வாளோ ? என்று டு ட ரா ஐ ன் யோசித்தக் கொண்டு நின்றன்.
உடைகளைச் சரிப்படுத்திக்கொண்ட பிலோமின திரும்பினுள். தன்னை உணராமலே அவனிடம் அழுது புலம்பிய அவளுக்கு, இப்போது மறுபடியும் அவனைக் கட்டியணைத்துக்கொண்டு அழவேண்டும் என்று இருங் தது. உண்மைதான் ! துக்கத்தை யாரிடமாவது சொல்லியழுதாற்ருன் அது திரும் என்று மனித மனம் 15ம்புகிறது. அவள் சோகத்தைச் சொல்லி யழக்கூடிய ஒரே ஒரு மனிதன் நடராஜன்தானிருந்தான். ஆனல் அவன் இளைஞன் ! எனவே பிலோமினு விம்மிப் பொருமிக்கொண்டு நின்ருள்.
இதற்குள் இராமசாமி தோட்டத்திற்குப் போய் இரண்டு மூன்று பெண்களை உதவிக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
பிலோமினு விடியும் வரை தாயின் கட்டிலடியில் விம்மிப் பொருமிக்கொண்டு இருந்தாள்.
விடிந்தது !
நடராஜன் வெளியிற் சென்று பிரேத அடக்கத்
துக்கான ஏற்பாடுகளைக் கவனித்தான்.
இதற்குள் ஒரு கூட்டம் ஆசிரியைகள் அங்கே துக்கம் விசாரிக்க வந்தார்கள். அவர்களிற் கனகமும் இருந்தாள்.
வந்தவர்கள் உபசாரத்திற்கு ஏதேதோ சொல்லிப் பிலோமினுவைத் தேற்றினர்கள். அவர்கள் கடமை முடிந்தது என்ற திருப்தியிற் போய்விட்டார்கள் !

271 கொழுகொம்பு
ܕܝܢܓܐܝܓܐܚܝܓܗܐ ܚ
மழை கொட்டத்தொடங்கு முன்பதாக மத்தி யானத்திலேயே பிரேத அடக்கம் முடிந்துவிட்டது.
அவள் தாய் கட்டையாக வீட்டிலிருந்தபோது லோமினுவுக்கு ஏதோ ஆறுதலாக இருந்தது. ஆனல் அவள் தாயும் வெளியேறிய பிறகு அவ்வீட்டிலிருந்த வர்களும் செத்த மாட்டிலிருந்து உண்ணி கழன்ற தைப்போல ஒவ்வொருவராகப் பிரிந்துபோய் விட்டார் கள். இரவு இருண்டுகொண்டு வருகையில் புறத்தே உலகைக் கவ்விக்கொள்ளும் இருளைப்போலப் பிலோ மினுவின் மனத்தில் பயமும் தனிமையும் கவிகையில் பிலோமினு செயலற்றுப்போய் ஒரு மூலையில் அப்படியே குந்திக்கொண்டிருந்தாள். இமைக்காத அவள் கண் கள் பார்க்கும் சக்தியையே இழந்துவிட்டாற் போல இருந்தன எந்த அவயவமும் அசையவில்லை. அசையத் திராணியற்றிருந்தன.
15டராஜன் சாப்பாடு கொண்டுவந்தான். பிலோ மினு இன்னமும் மூலையிற் குந்தியபடிதான் இருந்தாள்.
15டராஜன் அவளை நெருங்கி ' இப்படியேதான் இருப்பதா, எழுந்து சாப்பிடு.'
* சாப்பிடவா ! இப்போதுதான் அம்மாவைத் தின்றுவிட்டு இருக்கிறேனே!"
5டராஜனுக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வ தென்றே தெரியவில்லை. ஆனல் அவளை எப்படியாவது தேற்றுவிக்க வேண்டும் என்ற மனம்மட்டுமிருந்தது. அவளை நெருங்கித் தேற்றவிருந்த காணமும் பயமும் கூட இப்போது இல்லை, அவளில் ஏதோ ஒரு உரிமை

Page 143
கொழுகொம்பு 2?2
அவனுக்கு இருக்கிறதுபோல அவன் மனத்திற்குத் தோன்றியது. 15டராஜன் அவளே 5ெருக்கமாக அணுகி ‘எல்லோரும் சாகத்தானே வேண்டும்; உன் தாயார் உலகில் வாழ வேண்டிய காலம் வாழ்ந்துவிட்டாள் அதற்காகக் கவலைப்படலாமா ? எழும்பு, இதைச் சாப்பிடு' என்று (5டாாஜன் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
நடராஜன் கைகளிலே தன் முகத்தைப் புதைத் துக் கொண்டு 'காளைக்கு நீங்களும் போய்விடுவீர்கள்: அம்மா இழுத்து இழுத்துச் சாகாமலிருந்தாலல்லவா எனக்கு ஆறுதலாக இருக்கும்” என்று புலம்பினள்.
உண்மைதான். ஆணுற் கடவுளின் சித்தம் இருக்க வேண்டுமே. இதெல்லாம் நம் கையிலா இருக்கிறது ? or be சாப்பிடு" என்று மறுபடியும் அவளைக் கெஞ்சி ணுன் நடராஜன்.
பிலோமின இன்னும் அழுதுகொண்டுதா னிருங் தாள். சூடான அவள் கண்ணிர் நடராஜனின் மார்பை கனத்தது. " பிலோமினு ! உனக்குத் துணையாக நான் என்றைக்குமே இருப்பேன் ' என்ருன் நடராஜன் அவளே அணைத்தபடி,
அன்றிரவு அவர்கள் இருவருமே சாப்பிடவில்லை. இருவருமே நித்திரை செய்யவுமில்லை. அம்பு பட்ட அன்றிற் பேட்டைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டேயிருக்கும் சேவலைப்போல 5டராஜன் அவள் பக்கத்திலேயே இருந்தான். நடுக் கடலிலே திசை தப்பி அலைந்த படகுக்காரனுக்குத் திடீரென்று பட கும் உடைந்துவிட, அந்த அகாதரவான நிலையிலும்

273 கொழுகொம்பு
அங்கு ஒரு கட்டுமரம் வர அதிலே ஏறி உட்கார்ந்து கொண்டவனைப்போலப் பரபரப்போடும் பயத்தோடும் பிலோமினு இருந்தாள்.
விடியற்காலையானபோது பிலோமினு நடராஜன் மடிமீது தலையை வைத்தபடியே நித்திரையாகி விட் டாள். இமையை அழுத்திக்கொண்டிருக்கும் தூக்கக் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு நடராஜன் அவள் முகத்தைப் பார்த்தான். அதிற்தான் என்ன கலவரம்! அந்தக் கலவரத்தினிடையே கூட அவளுக்குத் தன்னி டம் எவ்வளவு கம்பிக்கை 1 அங்த கம்பிக்கையில் அல்லவா அவள் பயம், கலவரம், தனிமை, சோர்வு எல்லாமே அடங்கிவிட்டன. அவள் தன்னிடம் எதிர் பார்ப்பது ஒரு பாதுகாப்பைமட்டுந்தான ? அந்தப் பாதுகாப்பை எதிர்பார்த்துத்தான் தன்னிடம் அன்பு பாராட்டுகிருளா ?
அன்பு கனகம் கூடத்தான் அவனிடம் அன்பு பாராட்டினுள்! அவன் அன்பின் சுயகலந்தானு காதல்? அல்லது அவள் வேண்டிநிற்கும் பாதுகாப்பின் சுய கலமா காதல் ?
கனகத்தை அவன் பிரிந்து வந்துவிட்டான். ஆனல் இனி அவன் பிலோமினுவைப் பிரிய முடியாது! விலக முடியாது.
* அருமை அண்ணு' என்ற அட்டைப் படம்
அவன் நினைவுக்கு வந்தது. அந்தப் படத்திலும் இப்
படித்தான் மனங் கலங்கிக் கதறியழும் பெண்ணுெ
ருத்தி ஓர் இளைஞன் மார்பில் முகத்தை வைத்துக்
35

Page 144
கொழுகொம்பு 274
கொண்டு புலம்புகிருள். சைத்ரீகன் அப்பெண்ணை ஆபாசமாக வரைந்திருக்கிருரன். ஆனல் அப்படம் புலப்படுத்தும் கதை தன்னுடைய கதையைப்போலத் தானிருக்குமோ ?
அவன் என்றைக்கோ ஒரு5ாட் படித்த காண் டேகரின் தத்துவம் அல்லலாடும் அவன் மனதிற்குச் சாந்தியளித்தது. ‘எந்த இரு உயிர்கள் மிருத்யூவின் வாயிலிற் சந்திக்கின்றனவோ அவைதான் முடிவு பரியந்தம் தங்கள் வாழ்க்கைப் படகைச் செலுத்த முடியும் !
ஆம் 1 15டராஜன் தன் வாழ்க்கைப் படகைப் பிலோமினுவின் துணையோடு கொண்டு செலுத்தத் துணிந்துவிட்டான் ! அது அவனுல் தடுக்க முடியா தாகிவிட்டது.
器
器
 
 

4 O
g
கனகத்திற்கு இன்னமும் சாந்தி கிட்டவில்லை. பூவுக்குட்கிடந்து குடையும் வண்டைப்போல அவள் உள்ளத்தையும் ஏதோ ஒரு வேதனை குடைந்து கொண்டுதா னிருந்தது. மனத்தை ஒருநிலைப்படுத்தும் முயற்சி யில் அவள் தோல்வியடைந்துகொண்டுதா னிருந்தாள் 'காய்க்கு வேஷம் போட்டாற் குரைத் துத்தானகவேண்டும் அல்லவா ? கனகமும் ஒரு துறவி யாவதற்காக இத்தனே தூரம் வந்துவிட்டாள் ! ஆனல் அவளாற் குரைக்க முடியவில்லை. முயற்சி செய்து கொண்டிருந்தாள். مین
ஒருநாள் அவள் ஆண்டவன் உண்டாக்கிய ஆதி மனிதனையும் மனுஷியையும் பற்றிப் படித்துக்கொண்டி ருந்தாள். ' கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டுத் துரத்திய பிறகு அவர்கட்குப் பிள்ளைகள் பிறக் தனர்.
'மூத்தவன் பெயர் காயீன். இளையவன் பெயர் ஆபேல்.’
*இருவரும் சர்வேசுரனுக்குப் பலி ஒப்புக்கொடுக்க நினைத்தார்கள்."
*தோட்டக்காரனன காயூன். தன் தோட்டத்தி
ருந்து வாடிய காய்களையும், புழுக்குத்திய பழங்களே யும் கடவுளுக்குப் பலியாகக் கொடுத்தான்."
G6)

Page 145
கொழுகொம்பு 276
*மங்தை மேய்ப்பவனன ஆபேல், தன் மங்தை யிலிருந்து கொழுமையான ஆட்டுக்குட்டியைக் கொடுத் தான்."
'காயீனின் பலியைச் சர்வேசுரன் ஏற்றுக்கொள்ள 6ჭ6სტი).’’
கனகம் அதற்குமேற் படிக்கவில்லை. அவ்விடத் தில் அவள் உள்ளத்திலே கெருஞ்சி முள் குத்தியது போலச் சுருக்கென்று தைத்தது.
துறவு அருமையானது. துறந்தோர் பெருமை யும் அளவிட முடியாதது. ஆனல் எல்லோராலும் எல்லாவற்றையுக் துறந்துவிட முடிகிறதா ? கனகத் தால் அவள் நினைவுகளைத் துறந்துவிட முடிகிறதா ? நடராஜனைப்பற்றி அவளால் எண்ணுமல் இருக்க முடிகிறதா ?
இராஜாஜியின் "சுதரிசனத்தைலம் என்ற கதை யில் குரு ஒரு சீஷனுக்குச் சொன்னுர்: "துறவிகளுக்கு வேண்டுவது முதன் முதலில் ஆசைகளாற் தீட்டப் படாத அப்பழுக்கற்ற மனம்.'
அவளிடம் அப்பழுக்கற்ற உள்ளக் கமலம் இருக் கிறதா ?
ஏற்கனவே அவள் மனம் யாரிடமோ பறிபோ
யிருந்தது. பறிபோன அவள் மனத்தை இப்போது நினைவுகள் துளைத்துக்கொண்டிருக்கின்றன.
வாடி வதங்கிய காய்களையும், புழுக்குத்திய பழங் களையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்த

2?? கொழுகொம்பு
காயினைப்போல, அவளும் உளுத்துப்போன, உழுத்துப் போய்க் கொண்டிருக்கும் மனத்தையா கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பது ?
செல்லாக் காசைக் குருட்டுப் பிச்சைக்காரனுக்
குக் கொடுக்கும் தர்மப் பிரபுவைப்போலத் தூய்மை
யற்ற மனத்தையா ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பது ?
மனிதனின் 5டபடிக்கைகளை இருட்டிலும் கண்
காணித்துக்கொண்டிருக்கிற கடவு ளே க் குருட்டுப் பிச்சைக்காரனுக எண்ணி ஏமாற்றுவதா ?
உலகிலே வலியவன் எளியவனை ஏமாற்றுகிருன். கள்ள ஞானிகள் பக்தரை ஏமாற்றுகிருரர்கள். கண வன் மனைவியை ஏமாற்றுகிருன். அரசியல்வாதி பொது மக்களைத் தேர்தலுக்குத் தேர்தல் ஏமாற்றுகிருன், ஆனல் இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போலத் துறவு என்ற புனிதமான போர்வையில் எத்தனையோ பேர் அந்தப் பரம்பொருளையே ஏமாற்றத் துணிகி ரூர்கள் !
தானும் அப்படித்தான் ஆண்டவனே ஏமாற்றி விட வேண்டுமா ?
மாதவியும் துறவிதான். மணிமேகலையும் துறவி தான்.
கோவலனுடன் வாழ்க்கை இன்பங்தைச் சுதித்து, அவள் பிரிவினுற் துறவியாய் விட்ட மாதவியை, தமிழ்நாட்டுக் கிராம மக்களின் பிரதிபிம்பமான காட் டுக் கூத்துக்காரன் இன்னமும் தாசிகள் கேசம் மோசமே என்றுதான் தூவுதிக்கிருன்.

Page 146
கொழுகொம்பு 278
ஆனல் மணிமேகலையை ‘மணிமேகலா தெய்வம் என்று போற்றுகிறன்,
ஆம்! மாதவியின் கலைச்சிறப்பு, கோவலன்மேல் கொண்ட காதல், அவன் பிரிந்ததால் அவள் உலகையே பிரிக்தவிட்ட பண்பு ஒன்றையும் இந்தகாடு ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னையும் அப்படித்தான் ‘காதலிற் தோல்வி ஏற்பட்டுத்தான் இந்தக் கோலம் போட்டிருக் கிருள்' என்று இந்தநாடு என்றைக்கும் இழிவாகத் தான் பேசும்!
கனகத்திற்கு மனம் குழம்பியது.
இந்தக் குழப்பத்தோடுதான் அவள் பிலோமின வின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கக் கூட்டத்தோடு கூட்டமாகப் போனுள்.
ஊரிலே செத்தவீடு என்ருல் இப்படியா இருக்கும்? ஒப்பாரியும் ஒலமும் ஒரு மைலுக்கு மேலே கேட்கும் படி ஊரே திரண்டு அழும். தங்கள் தங்கள் குரல்களை அந்த ஒருகாளைக்காவது ஒதுக்கி வைத்துவிட்டு இழவு வீட்டில் எல்லாருமே கூடிவிடுவார்கள்.
ஆனல் இங்கே பிலோமினு மட்டுந்தான் அழுகி ருள். வந்தவர்கள் எல்லாரும் சேர்ந்தாவது ஒரு சொட்டுக் கண்ணிர் விடவேண்டுமே!
அவளுக்கு உற்ருர் உறவினர்கூட இல்லையா? இருக் தால் அந்தவீடு இப்படியா இருக்கும்?
அவளோடு வந்தவர்களிற் சிலர் சுக துக்கங்களைக்
கடந்த நிலையிலுள்ள துறவிகள்; மற்றையோர் அழு வது மரியாதைக் குறை வானது என்றெண்ணிக்
 

279 கொழுகொம்பு
ܓܓܗܝ
கொள்ளும் புது 15ாகரீகக்காரர்கள். கனகத்துக்குத் தன்னேடு வந்தவர்களிடம் வெறுப்பாக இருந்தது. பிலோமினுவோடு சேர்ந்து அழவேண்டும் போல இருந் தது. அங்கேயே தங்கிகின்று அவளுக்குத் தன்னுலான உதவிகளைக் செய்யவேண்டும் என்று தோன்றிற்று.
ஆனல் தன்னேடு வந்தவர்கள் திரும்பிப்போகை யில் அவர்களோடு தானும் திரும்பிச் செல்வதைத்தவிர வேறெதையுமே செய்யக்கூடியதாக இருக்கவில்லை. ஆணுற் பிலோமினுவின் கிராதரவான நிலையை மற்றவர் களைவிட அதிகமாக அவளால் உணரமுடிந்தது.
அவள் தன்னுடன் வந்த சிங்கள ஆசிரியையான பிரேமாவிடம் விசாரித்தாள்.
அவளிடமிருந்து அறிந்த செய்தி கனகத்தைத் திகைக்க வைத்தது. பிலோமின தன் தாயாரோடு மூன்று நான்கு வருடங்களாக இங்கேதான் இருக் கிருள் என்றதைக் கேட்டபோது கன கத் துக்கு வேதனை பிறந்தது. அவளுக்கு இன்னும் மணமாக வில்லை' என்று தெரிந்தபோது, அதற்குமேல் அவளுக்கு உற்ருர் உறவினர் இல்லைப்போலும் என்று கேள்விப் பட்டபோது கனகம் தன்னையறியாமலே ஐயோ என்ருள்.
அவள் உள்ள நெகிழ்வையுணர்ந்த பி ரே மா தாழ்ந்த குரலில் 'ஆனல் கருணையுள்ள கடவுள் அவளை அனதரவாக விட்டுவைக்கவில்லை. ஓர் அப்போதிக்கரி யாம்; 5டராஜா என்று பெயராம்; அவர்தான் அவ ளுக்கு இப்போது துணையாக இருக்கிருராம். இன் னும் கல்யாணமாகாவிட்டாலும் அவர்கள் இருவரும்

Page 147
கொழுகொம்பு 280
vTNMN1
கணவனும் மனைவியும் போலத்தான் வாழ்கிருரர்களாம்" என்றபோது கனகம் ' யாரது 15டராஜனு ' என்று வெலவெலத்துப் போய்விட்டாள்.
அவள் பேச்சிற் தொனித்த படபடப்பு, அவள் கண்களிற் தேங்கிநின்ற ஆவல், அவள் சர்வாங்கத் திலுமே உண்டான அதிர்ச்சி எல்லாவற்றையும் அவ தானித்த பிரேமா, 'ஏன் உனக்கு நடராஜனைத் தெரி யுமா ? ஏன் இப்படிப் படபடக்கிருய்?' என்று கன கத்தைக் கேட்டாள்.
*சை, சும்மா கேட்டேன்' என்று கனகம் தன் உணர்ச்சிகளை மறைக்க முயன்ருள். ஆணுற் பிரேமா நடராஜன் என்ற பெயருக்கும் இவளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்பதைத் தனக்குத் தானே திடமாக்கிக்கொண்டுவிட்டாள்.
யார் இந்த நடராஜன் ? அத்தானகத்தான் இருக்குமோ ? அவர்தான் இங்கே வந்து ஒருவருக்கும் சொல்லாமல் ஒளித்துக்கொண்டிருக்கிருரோ ? கனகம் மனத்துள்ளே இப்படி எண்ணற்ற கேள்விகள் நீர்க்
குமிழிகள் போலத் திடீர்த் திடீரென்று பொங்கி
வெடித்துக் கொண்டிருக்கையில், அவள் கால்கள் கடந்தன; வாய் ஒன்றையுமே பேசவில்லை.
ஆனலும் மனத்துள்ளே பொங்கியெழுந்துகொண் டிருந்த ஆவல், சீறியடித்த புயல்காற்றுத் தாழ்ப் பாளிடாத கதவைப் படீரென்று திறந்ததுபோல அவள் வாயைத் திறக்க வைத்தது.
கனகம் கேட்டாள்; "கடராஜன் எந்த ஊராம்?

281 கொழுகொம்பு
எனக்கு நன்முகத் தெரியாது, திருகோணமலை என்று சொல்கிருர்கள்’ என் ருள் பிரேமா,
திருகோணமலையா ? கனகம் தன்னை மறந்தவ ளாய்க் கேட்டாள். உடைந்த வெண்கல மணியின் காதம்போல அவள் குரல் அலறியது.
பாடசாலையை அடைந்ததும் நடராஜனைப்பற்றிய எண்ணங்கள் கனகத்தை வதைத்தன. அவனைப் பற் றிய ஒவ்வொரு நினைப்பும் ஒவ்வொரு வேதனையை, கிராசையை அவள் மனத்தில் நிறைத்தன.
கிராமப்புறத்திற் பிறந்த தமிழன் ஒவ்வொருவனும் வெளியூருக்குப் போனல் தன்னை யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், திருகோணமலையான் என்றுதான் சொல்கிருன். நடராஜனும் திருகோணமலையாம். அப் படியானல் திருகோணமலையைச் சார்ந்த கிராமத்தவ ணுக, மூதூரானுக ஏன் இருக்கக்கூடாது?
ஆண்டவனே அவர், அவராகவே இருந்துவிட்டால் a ao , O SO 09 O IO 9 OP ஆம், அவர் அப்படித்தான் இருக்கவேண்டும். இந்த உலகிலே அவர் வாழத்தான் வேண்டும். சங்தோ ஷமாக வாழவேண்டும் என்று அவள் மனம் பிரார்த் தித்தது.
அந்த 15டராஜன் தன் அத்தானகவே இருந்து விட்டால் தான் அவரை மறுபடியும் சந்திப்பதா? தன் னைக் கண்டால் அமைதியான அவர் வாழ்க்கை கெட்டு விடாதா? அகாதரவான பிலோமினுவிற்குக் கிடைத்த ஆறுதல் தன் இடையீட்டாற் கெட்டுவிடுமா?
வேண்டாம், எனக்குத்தான் அவரோடு வாழக்
கொடுத்து வைக்கவில்லை. அவளாவது அவரோடு
36

Page 148
கொழுகொம்பு 282
٧مې'
வாழட்டும். அவர் வாழ்க்கை என் தலையீட்டால் நாச மாகிவிடவேண்டாம்.
கனகம் தனக்குள்ளே வாதப் பிரதிவாதங்களை எழுப்பிக்கொண்டு எதிலேயும் பற்றற்றவளாக, அப் படியே செயலழிந்து, தன் சூழலே மறந்து இருந்து விடுவாள்! இரண்டு மூன்று வாரங்களாக மனம் இப் படியே போராடிக்கொண்டிருந்தது. இந்தப் போராட் டத்தினிடையில் அவள் மடத்திலே தான் அனுபவிக்க வேண்டிய விதிகளைக்கூடத் தவறவிட்டுக் கொண்டிருங் தாள.
கடைசியாய் அவள் தீர்மானித்தாள், அவர் தன் அத்தான்தான் என்பதைக் கண்டுகொண்டால், தான் அதற்குமேல் அவர் கண்முன்னுல் அவ்வூரிலேயே இருக் கக் கூடாது. அவர் வாழ்விற்குத் தன்னுற் குந்தக மேற்படக் கூடாது. அந்த ஊரிலே இராமற் திரும்பிக் கல்முனைக்கோ, மூதூருக்கோ எந்த ககரத்திற்கோ திரும்பிப் போய்விடவேண்டும்.
ஆனல் அம்மடத்துச் சட்ட திட்டங்கள் அவனைக் கண்டு பிடிப்பதற்கு அவளுக்கு அனுசரணையாக இருக்கவில்லை. பிலோமினு வந்தாற்கூட அவளேயே விசாரித்துப் பார்த்துவிடலாம். அவள் இன்னமும் பாடசாலைக்கே வரவில்லை. இனி அவள் பாடசாலைக்கே வரமாட்டாள் என்றுகூடச் சொல்லிக் கொள்கிருர் கள். யாரிடமும் கேட்கவும் அவளுக்கு வெட்கமாய் இருந்தது; பயமாக இருந்தது.
எனவே பிலோமின கடராஜனைத் தேடும் முயற்சி யில் எதெதையெல்லாமோ சாக்காக வைத் துக்

283 கொழுகொம்பு
qSSSSASASSSLSqASJSLMSSSLASLSASJSqASJSLSASSSLSqASASJSLSAYSMSAJSqASLS
கொண்டு அடிக்கடி வெளியே போய்வரத் தொடங் கினுள். -
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் கடைத் தெருவிலிருந்த கூட்டமாக நிறைந்துபோயிருந்ததோட் டத் தொழிலாளர் எல்லாரும் திரும்பிப்போய் விட் டார்கள் ஏதோ பெரிய வேலையைச்செய்து ஓய்ந்து விட்டவனைப்போலக் க  ைடத் தெரு ஓய்ந்திருந்தது. புகையாகப் படர்ந்து படிந்திருந்த பனி அந்த ஒழிச்ச லான நிலைக்கு மேலும் ஓர் அசதியைக் கொடுத்தது போல இருந்தது. ஹற்றணுக்கு வந்தபிறகு தனக்கு அறிமுகமான மட்டக்களப்பு ஆசிரியை ஒருத்தியோடு கனகம் ஹைலண்ட்ஸ் பாடசாலை விடுதியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள். மலை முகட்டிலிருந்து கீழே பார்க்கையில் இளங் தம்பதிகள் இருவர் கடைத் தெருவிலே குசாலாக கடந்து கொண்டிருந்தனர்.
கனகம் கீழே இறங்கி வருகையிற் குறிப்பாக அவர்களையே பார்த்தாள். உலகமே இன்பவெள்ளம் என்று எண்ணிக்கொண்டு அந்த வெள்ளத்தில் மிதப் பவர்களைப்போல அவர்கள் கடந்து கொண்டிருந்தார் கள். அவள் பிலோமினுதான்; அவன் . கனகம் கூர்ந்து மிகக் கூர்ந்து பார்த்தாள். அதே ஒல்லியான தேகம்; அதே இளஞ்சிவப்பு நிறம்; எங்கே யோ எதையோ பார்த்துக்கொண்டு நடக்கும் சிந்தனை கடை ஆம் அது 15டராஜனே தான்.
விடுதிக்குச் சென்றதும் மனத்துள்ளே அடங்கி யிருந்த, அடக்கப்பட்டிருந்த வேதனையும் வெறுப்பும் ஊற்றுக்கண்திறந்து பீறும் நீரைப்போலக் கனகத் துள்ளிருந்து கிளம்பின. நடராஜன் பிலோமினவுடன்

Page 149
கொழுகொம்பு 284
حصیححصحیح
இணைந்துகொண்டு சென்ற அந்த மனச்சித்திரம் அவ னுள்ளே பொருமைத் தீயாய்க் கனன்று எரிந்தது! காலங் காலமாகத்தான் தனக்கென்று எ ன் னி க் கொண்டிருந்த தன் நடராஜன் இன்னெரு பெண்ணின் கணவனுய் இருப்பதை எண்ணுகையில் அவளுக்கு உன்மத்தமே பிடித்துவிட்டது. ஒடிப்போய் அந்தப் லோமினுவைக் கழுத்தைத் திருகிக்கொல்ல வேண்டும் என்று எண்ணினுள். கடராஜன் காலடியில் விழுந்து கதறவேண்டும் என்று நினைத்தாள். இருளிலே, தனிமை யில் எதிர்ப்பட்ட எல்லாவற்றிலும் தலையை முட்டிக் கொண்டு அழுதாள்; அழுதாள்.
ஆனல் மாண்டவன் மீள முடியுமா? 5டராஜன் இனித் தனக்குக் கிடைப்பானு? அவன் கன்முக இருக் கட்டும்! என்றுதான் அவளால் முடிவுபண்ண முடிக் திது.
இதற்குள் கனகத்தின் கடவடிக்கைகளை மறை முகமாகக் கவனித்த மடத்துத் தலைவி, அவள் துறவி யாவதற்குத் தகுதியுள்ளவள் அல்ல என்று தனக்குட் தீர்மானித்துவிட்டாள்.
அவள் கனகத்தை ஒருநாள் அழைத்துச் சில
மாதங்களுக்கு நீவீட்டிற்ருன் இருக்கவேண்டும். அதன் பிறகும் உனக்குத் துறவியாவது விருப்ப மாக இருந்தால் இங்கே வரலாம்' என்ருன்.
5டராஜன் முன்னுக்குத் தான் இருக்க வே கூடாது எனறு ஏற்கனவே தீர்மானித்திருந்த கனகம் அதைக்கேட்டமறுகாளே மூதூருக்குப் புறப்பட்டாள்.

4.
அவநம்பிக்கை
"ஒருவனுடைய புதை குழியிலேதான் இன்னுெரு வனுடைய இன்பம் பிறக்கின்றது' என்று ஆங்கிலக் கவி பாடினன். அரசியற்தகடுதத்தங்களை மனத்திற் கொண்டே இது பாடப்பட்டதாயினும் பிலோமினு வைப் பொறுத்தவரை அது அவள் வாழ்விலே சில நிதர்சனமான உண்மையாகி விட்டது.
ஆம், செத்தும் கொடைகொடுத்த சீதக்காதியைப் போலத் தான் வாழ்ந்தவரையும் வல்லூறுகளினின்றும் குஞ்சைக் காப்பாற்றிய தாய்க் கோழியைப்போலத் தன் மகளைக்காத்து வளர்த்த அந்தத் தாய் இறந்த பின் அவளுக்கு ஒரு நிரந்தரமான பாதுகாப்பைத் தேடி வைத்துப்போய்விட்டாள். இருக்கும் வரையில் மகளுக்கு இன்னமும் கல்யாணமாகி விடவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்தத்தாய், தெய்வமாக நின்றுதான் தன் மகளின் மணவாழ்வைக் காண முடிந்தது.
மணம் இந்தத் தமிழ் காட்டிலே எத்தனை சிக் கலான விஷயம் அது கடுவிரைவாய்ச் சுற்றும் பம் பரம் தன்மேலிருக்கும் சதுரக்கடதாசியையும் வட்ட மாக மாற்றி விடுவதுபோல, இந்த மணம் என்ற ஒரே சிக்கல் எல்லாச் சிக் கல் களை யும் தன் னுள் அடக்கிக்கொண்டு, 15ம் சமுதாயத் தையே பம் பரமாக ஆட்டி, அந்தப் பம்பர வட்டம்போல எல்லா

Page 150
கொழுகொம்பு 286
வற்றையும் தன் ரூபமாக்கிக்கொண்டு சுழல்கிறது. ஒரு தங்தைக்குத் தன் புத்திரியின் கல்யாணத்தை விட மேலான பிரச்னை நம் சமுதாயத்திலே இருக்கிறதா ?
மாளாத இந்தப் பிரச்னை பிலோ மி ஞ வைப் பொறுத்தவரையிற் தெய்வ சங்கற்பம் என்ற அறிவுக் கெட்டா விதிப்படியோ, அல்லது உணர்ச்சிச்சேர்க்கை என்ற இயற்கை விதிப்படியோ, எப்படியோ இலே சாக நடந்துவிட்டது.
தன் இளவயது தொடக்கமாக ஏழ்மை, போராட் டம், ஏக்கம், கவலை என்ற சூழலிலே வளர்ந்த பிலோ மினுவுக்கு இந்தப் புது உறவு அளித்த தெம்பும் திட மும், சாந்தியும் நிறைவும் அவளை எங்கோ கற்பனைக் கும் எட்டாத இன்பபுரிக்கு அழைத்துச் சென்றது.
இளமையின் மென்மையான காதல் நினைவுகள் தன்னுள்ளே திரிந்து கரடுமுரடான ஆத்திரமாய், விண்ணென்று குத்தம் மனப் புண்ணின் உளைச்சலாய் விட்டிருந்த நடராஜனுக்கு இந்த உறவு அதனே மறு படியும் மனிதனுக்கும் மகா மருந்தாய்த்தான் அமைந் தது. சொர்ப்பணு வஸ்தையான காதலைவிட, சம்போக
மான மணவாழ்வு அவனுக்கு ஆன ங் த மா க வே
இருந்தது.
நீண்ட இரவின் மெளனம் அவனுக்கு இன்ப மாகவே இருந்தது. மலை5ாட்டிலே கொட்டும் மழை யையும், பனியையும் அவனுல் அனுபவிக்க முடிந்தது. வெள்ளிக் கம்பிகளாய் ஒழுகும் மலையருவிகளின் இன் பத்தை அவனல் நுகர முடிந்தது. மாலை மதியத் தின் குளுமையையும், வேனிற்காலத்து வனப்பையும் அவனல் உணர முடிந்தது.

28? கொழுகொம்பு
தனிமையின் கொடுமையையும், அதன் பயங்கரத் தையும் மறக்கச் செய்து தன்னை நிலத்திலே நன்ருக வேரூன்றி நிலைக்கச் செய்துவிட்ட புருஷன் என்ற கொம்பிலே அந்தக் கொடியும் செழிப்பாகப் படர்ந் தது. 15ாளுக்கொரு முகையும், தளிரும் விட்டு ஆனந்த மாகப் படர்ந்து அக்கொடி தென்றலில் ஆடிற்று. வேனிலில் விகரித்தது. நிலவிலே குளிர்ந்து ஒளிர்ந்தது. காலம் வரும்போது அது பூக்கும்; காய்க்கும். தன் இனத்தைப் பெருக்கியே தீரும்.
அந்தக் கொடியும் கொம்பும் ஒரோர்வேளை தம் மை மறத்தன. இளமை வெள்ளத்தின் உணர்ச்சிச் சுழிப்பில், ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த இரண்டு இலைகள் ஒன்றை ஒன்று அணைத்துக் கொண்டது போல அணைந்தன. எங்கிருந்து வங்தோம் என்ற இறந்தகாலம் அவர்களுக்கு மறந்து போய்விட்டது. எங்கே போகிருேம் என்ற எதிர்காலத்தைப் பற்றி அவைகள் கவலைப்படவில்லை. இணைந்து கொண்டி ருக்கும் இந்தக் கணங்தான் சாஸ்வதமான து! அதிலே எவ்வளவு இன்பம்! அந்த இணைப்பிலே 5ேர்ந்த துயரம் தெரியவில்லை. 5ேரும் துன்பம் வெளிச்சமில்லை! அவ் வளவுதான்.
இந்தப் புதுமோகத்தின் உச்சியிலே பிலோமினு தன்னை முற்றுமே மறந்துவிட்டாள். தன் வீட்டை யும் துறந்து 15டராஜனின் இல்லத்திற்கே வந்துவிட் டாள்! அங்கே கடராஜனேடு அமைதியாக வாழ்க் கையை 15டத்திக்கொண்டிருந்தாள்.
பாடசாலையை நினைத்தால் மட்டும் அவளுக்குப் பயமாக இருந்தது தான் நடராஜனேடு கடத்தும்

Page 151
கொழுகொம்பு 288
வாழ்க்கையை கெறியற்றதாகத்தான் பாடசாலை மேலதிகாரிகள் கருதுவார்கள். மேலும் நடராஜனுக் கும் அவளுக்குமிடையில் மதத்திற் பெரிய இடை வெளி ஆகவே இந்த உறவு அவள் வேலைக்கே உலே வைக்கும் என்று அவளுக்குத் திட்டமாகத் தெரிக் திருந்தது.
ஆனல் வாழ்க்கை வேதனைகளிற் சிக்கி மனம் கொந்துபோயிருந்த அவள் மதத்தில் அத்தனை ஆழ்ந்த பற்றுள்ளவளாக இருக்கவில்லை. மேலும் மதம் என்ற சிக்கலைக் கிளப்பித் தனக்குக் கடவுள் விட்ட துணை யான நடராஜனைக் கைநெகிழ விட்டுவிடவும் அவள் விரும்பவில்லை.
அவளுக்கு இப்போது வேண்டியது கொண்டவ னின் அன்பு அது தாராளமாகவே கிடைத்தது. (5டராஜனின் அன்பு மழையிலே தன் எதிர்காலம் என்ற பயிர் செழிப்பாக வளரும் என்று அவள் நம்பினுள். அந்த நிலையிற் தன் உத்தியோகத்தைக்கூட அவள் துரும்பாக எண்ணிவிட்டாள்! பாடசாலைக்கு நீண்ட
விடுதலே எழுதிக்கொடுத்துவிட்டு ஆனந்தமாகக் குடும்
பம் கடத்தினுள். அவள் வாழ்க்கைப் படகு இன்பக் கடலில் மிதந்துகொண்டுதானிருந்தது.
ஒருநாள் சாயந்தரம் ஐந்துமணியாகி இருக்கும். பிலோமின தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுத் தலைவாயிலில் 5டராஜனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே உலகை இறுக்கிப் போர்த்துக்கொண்டிருந்த பனிப்புகாரின் சில்லென்ற தனிமையில் அவள் மனம் இறந்தகால நிகழ்ச்சிகளே

889 கொழுகொம்பு
எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நினைவு ஒட்டம், பெட்டியிலே இதுவரை பத்திரமாக வைத் திருந்த தன் தாயின் புகைப்படம் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்தது.
அப்படத்தின் நினைவு வந்ததும் ஒட்டமாக ஒடிப் போய் அந்தப்படத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அந்த அன்பினுருவையே பார்த்துக் கொண் டிருந்தாள்.
15டராஜன் வந்ததுகூட அவளுக்குத் தெரியவில்லை! அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவள் கண்கள் பனித்தன.
நடராஜன் இலேசாகச் செருமினன். பிலோமினு கலவரப்பட்டு நிமிர்ந்தாள்.
நடராஜன் ஒன்றுங் தெரியாதவனைப்போலக் கேட் டான்; ' என்ன யோசித்துக்கொண்டிருக்கிருய், பிலோ மின?
* ஒன்றும் யோசிக்கவில்லை. அம்மாவின் படம் பெட்டிக்குள் இருந்தது. எ டு த் துப் பார்த்தேன். இதைச் சட்டம் போட்டுச் சுவரிலே வைக்கலாம் என்று நினைத்தேன்."
'உனக்காவது அம்மாவின் படமாவது இருக்கிறது பார்த்துக்கொண்டிருக்க.' கடலினடியிலே மறைந்து கிடந்த பவளப் பூச்சிக் குன்று திடீரென்று வளர்ந்து நீர்ப்பரப்பிற் தலைகாட்டியதுபோல, அவன் மனதின் அடித்தளத்திலே மறைந்து கிடந்த ஏக்கம் இப்படித் திடீரென்று வெளிப்பட்டது.
3?

Page 152
கொழுகொம்பு 390
SSLSqSJSSLSJSSLSALSASMLSLJSqSSMSJSSLSLSJSqSMLSAJASLSLLAASLLSM AJSSLSqqA qSLLSAJSqLS AASqLSASqSLSASqS
" ஏன்? தங்கள் தாயார். ' ஆவலும் இரக்க மும் நிறைந்த தொனியிற் பிலோமினு கேட்டாள்.
‘என்னைப்பற்றியவரையில் அம்மா, அப்பா எல் லோரும் செத்தே போய்விட்டார்கள். 'ம்' அந்தக் கதை ஏன்?" என்று நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டுத் தன் உடைகளே மாற்றினுன் 5டராஜன்.
பிலோமினுவுக்கு விளங்கிவிட்டது. அவர் தாயும் தங்தையும் இருக்கிருரர்கள். ஆனல் ஏதோ மனஸ் தாபம் தன் கணவரையும் அவர்களையும் பிரித்து வைத் திருக்கிறது.
பிலோமின பேச்சை அவ்வளவில் முடித்துக் கொண்டாள். இரவு சாப்பாடானதும் பிலோமினு தருணமறிந்து தொடங்கினுள்.
* இரண்டுகிழமை லீவு எடுத்துக்கொண்டு ஊருக் குப் போவோமா?
* எந்த ஊருக்கு? யாருடைய ஊருக்கு?' என்று 15டராஜன் படபடத்துக் கேட்டான்.
' உங்கள் ஊருக்குத்தான்; அதுதானே இனி என்னுடைய ஊரும்.'
* அந்த ஆசையை மட்டும் விட்டுவிடு. இனிமேல் உனக்கும் எனக்கும் இதுதான் ஊர்' என்று பெரு மூச்சு விட்டான் கடராஜன்.
* ஏன் ? உத்தியோகம் பார்க்கப் போனவன் யாரோ வேதக்காரியைக் கிளப்பிக்கொண்டு வந்திருக் கிருண் என்று எல்லோரும் திட்டுவார்கள். அதனுற் தான் ஊருக்கே போகிறதில்லை என்கிறீர்களாக்கும்.'

391 கொழுகொம்பு
'அவ்வளவு பயந்திருந்தால் உன்னைக் கையேற் றிருக்கவே மாட்டேன்."
" அப்போது ஏன் ஊருக்குப் போகமாட்டேன்' என்கிறீர்கள்? தன் தோளிலே கைகளைப் பின்னிப் போட்டுக்கொண்டு தொங்கிய பிலோமினுவின் கன்னத் தைக் கிள்ளியவாறே நடராஜன் சொன்னன்: எல்லாம் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணுற்தான்."
பிலோமினுவின் உள்ளம் சுருக்கென்றது. தனக் குப் போட்டியாக யாரோ ஒருத்தி இருக்கிருள் என்ற எண்ணம் அவளை வதைத்தது. அவள் நாளைக்கு இங்கேயே இவரைத்தேடி வ க் து விட்டா ல் என் றெண்ணிய போது, அந்த நினைவு அவளைக் கொன்றே விட்டது.
அவள் மனதிலே ஒடி நெளிந்த எண்ணங்களை முகத்திலே வாசித்த நடராஜன் 'சும்மா சொன்னேன். அதற்கு யோசிக்கிருயா? அப்பாடா! பெண்கள் என் முலே எரிச்சலின் மறு உருவங்தான்" என்ருன்,
* சும்மாவும் இல்லை; சுமந்துகொண்டும் இல்லை; எனக்கு எல்லாங் தெரியும்.'
* என்ன தெரியும்?"
* ஊரிலே உங்களைக் காத்து ஒரு அழகி இரு ப் பது?"
* அப்படி நீ நினைக்கிருய்?"
* நீங்கள்தானே சொன்னீர்கள்!"

Page 153
கொழுகொம்பு 292
* அதுதான் சும்மா' என்றேனே.
" அப்படியானல் கான் தங்களை கம்பலாமா?" என்றுகொண்டே பிலோமினு நடராஜன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள்.
* நன்முக நம்பு, என்னை யாரும் அணுப்பவும் முடியாது. அணுப்பப்படவும் மாட்டேன்' என்று அவளைத் தேற்றினுன் நடராஜன்.
ஆணுலும் அன்றிரவு இருவருக்குமே மன நிம்மதி uໃດ.ລ).
பிலோமினுவுக்கு அவநம்பிக்கை, கடராஜனுக்குத் தியாகுவின் கடிதம் உண்டாக்கின திகில்,
S32.

92ع 4
வெளிச்சம்
சுழற்றியடிக்கும் கச்சான் காற்றுத் தெருப் புழு தியைக் கிளப்பி மேலெழுப்பிக்கொண் டிருக்கையிற் கனகம் தன் கைப்பெட்டியைக் கையிற் பிடித்தவாறு மூதூர்க் கிராமத்தின் பழமைக்கும் சிறுமைக்கும் சாட்சி பகர்ந்துகொண்டிருக்கும் கிரவல் ருேட்டிலே தனியாக கடந்துகொண்டிருந்தாள். தெருவோரத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளி டையே பரந்து கிடந்த பாழ் வளவுகளிலே தகரைப் பற்றைகள் பசுமையும் பொலிவுமின்றி வெறும் கம் பாய்க் கழியாய் நீட்டிக்கொண்டிருந்தன. அவைகளி னடியிலே புற்கள் கூட வைக்கோலாய்க் காய்ந்து வெளிறிக்கிடந்தன. அச்சூழலே அவள் இதயத்தைப் போல இனிமேலும் பசுமையைக் காண்போம் என்ற கம்பிக்கை வரண்டு காய்ந்து கிடக்கையில், வேம்பு கள் மட்டும் குலை குலேயாய்ப் பழங்களைத் தாங்கிக் கொண்டு நின்றன. அவ்வளவும் கசப்பான பழங்கள்; கனகத்தின் நினைவுகள் போல.
எவர் கண்ணிலும் படாமல் ஒரேயடியாக வீட் டுக்குப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்திற் கனகம் விரைவாகவே கடந்தாள். ஆணுல் அவளுக் கென்ன கண்கட்டு வித்தை தெரியுமா? யாரோ ஒருத்தி -அவளின் பெயர்கூட இப்போது மறந்துவிட்டது கனகத்திற்கு-தெருப் படலையைத் திறந்துகொண்டு

Page 154
கொழுகொம்பு 294
வெளியே எட்டிப் பார்த்தாள். அவ்வளவுதான், ஒவ் வொரு படலையிலுமே அவள் வருகையை எத்தனையோ விழிகள் பார்த்துக்கொண்டேயிருந்தன. முதலில் அக் கண்களில் ஒரு ஆச்சரியம், பிறகு அவைகளிலே ஒரு ஏளனம். அதற்குப்பின்னுல் அக் கண்களின் சொந்தக் காரர்களான பெண்கள், கச்சான் காற்றிலே வரண்டு போய்க் கிடந்த தங்கள் உதடுகளை நெளித்தார்கள். பின்னர் அவ்வுதடுகளை ஈரமாக்கிக்கொண்டு எதையோ குசு குசுத்தார்கள்.
எப்போது வீட்டுக்குப்போய்ச் சேருவேன் என்று ஒட்டமும் கடையுமாகச் சென்ற கனகத்தின் கால்கள் அவள் வீட்டை அண்மியதும் ஒன்றையொன்று பின் னின. அந்தத் தயக்கம் கணநேரந்தான். அதற்குள் அவள் சடலம் முழுதுமே தெருப் படலைத் தகரத்தில் ப்ொத்தென்று சாய்ந்தது, படலை திறபட்டதும் அவள் வேகமாக ஓடினுள்; அவள் கண்கள் கண்ணிரைக் கொட்டின; அவளாலே தன்னுணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. திறந்து கிடந்த வீட்டிற்குட் போய்ப் படுக்கையொன்றிற் பொத்தென்று சாய்ந்தாள்.
இதற்குள்ளாகத் தெருப்படலே திறக்கப்பட்ட சத்தங்கேட்டு அடுக்களைக்குள் இருந்த அவள் தாயார் வந்து விட்டாள்; தங்தையும் வந்துவிட்டார்.
அவர்களைக் கண்டதும் கனகம், சிரமப்பட்டுப் பொங்கிவரும் தன் அழு கை யை அடக்கிக்கொண் டாள்.
எவருமே பேசாமல் மெளனமாயிருக்கையில்
அந்த மெளனமே எல்லார் இதயங்களையும் சித்திரவதை செய்தது. ー

395 கொழுகொம்பு
கங்தையா மட்டுமல்ல, அந்த ஊரே நடராஜன் கனகத்தைக் கூட்டிக்கொண்டு எங்கோ கண்காணுத இடத்திற்குப் போய்விட்டான். இருவரும் எங்கோ ஓரிடத்தில் இன்பமாக வாழ்கிருரர்கள்! என்றைக்கோ ஒருகாளைக்கு அவர்கள் இருவரும் இவ்வூருக்குத் தம்பதி களாக வரப்போகிருரர்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தது. கனகம் கல்முனேயில் இல்லை என்று கேள்விப்பட்ட காள் முதலாகக் கங்தையாவின் மனம் இதை எண்ணி எண்ணித்தான் தளிர்த்தது. ஆனல் இன்று கனகம் மட்டும் ஒற்றைக் கட்டையாய்த் தனியே வந்து நின்றது. மெளலிக வித்தகன் வரு மென்று தழைக்கின்ற உள்ளத்தால் முன்னெரு தமி யன் சென்ற கதையாகவே இருந்தது.
கனகத்திடம் எதையும் விளக்கமாகக் கேட்க எவராலும் முடியவில்லை. எதையாவது கேட்டால் அழுவாள்; இல்லாவிட்டால் எரிந்து விழுவாள்.
கங்தையாவிற்குத் தன் மகள் ஏன் வந்தாள் என் பது தெரியவில்லை. 15டராஜனுக்கும் இவளுக்குமிடை யில் ஏதோ மனத்தாங்கல்; அதுதான் இவள் வந்து விட்டாள் என்று அவர் மனம் சாதாரணமாக எண் ணிக் கொண்டுவிட்டது. காலம் போனுல் விஷயம் தானகவே வரும், அதுமட்டும் அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணிக்கொண்டார். இது வரை நடராஜனைக் காணவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த அவர் மனம் இப்போது அவன்மேல் எரிந்து விழுந்தது. ஊர்க் கதை தன் மகளைப்பற்றி ஈனமாக இழிவாக இருக்கையில் கங்தையா தன் ஆத் திரத்தை எல்லாம் நடராஜன்மேற் காட்டி அவன்

Page 155
கொழுகொம்பு 296
எங்கேயிருக்கிருன் என்று சொல் லி வி டு பல்லை உடைத்து விடுகிறேன்" என்று குதித்தார். கனகமோ பிடிவாதமாக எனக்குத் தெரியாது என்று மறுத்தாள்.
கனகம் வந்துவிட்ட செய்தி கா தில் விழுந்த உடனே பொன்னம்மாவும் தன் சகோதரன் வீட்டுக் குப் போனள். மாமியைக் கண்டபோது குமுறி ஆர்ப் பரித்த கடலலைகள் தரையைத் தழுவுவதுபோலக் கனகம் அவளுட் புதைந்துகொண்டு அழுதாள். ஆன லும் அவள் ஏன் அழுகிருள் என்பதன் அர்த்தம் அவளுக்கும் விளங்கவில்லை! கடராஜனைப்பற்றிய செய் தியை எல்லாருக்கும் மர்மமாகவே வைத்திருந்தாள்.
அம்பலவாணருக்குக்கூடக் கனகம் தனியாக வங் தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. எல்லாரையும் போலவேதான் அவரும் தன் மகன் எங்கேயோ கனகத் தோடு வாழ்கிருன் என்ற எண்ணத்திற்ருன் மேலுக்குக் குமுறும் கடல் ஆழத்தில் சலனமற்றிருப்பதுபோல நிம்மதியாக இருந்தார். அந்த நிம்மதியை அவர் மனம் இழந்து போயிற்று. அவன் கனகத்தோடு வந்தாற் கூட அவனை வரவேற்கத் தயாராயிருந்த அத் தங்தை யின் உள்ளம் இப்போது தன் ஒரே மகனை உயிரோடு பறிகொடுத்துவிட்ட ஏக்கத்தில் துடித்தது.
- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உணர்ச்சி
களைத் தூண்டிவிட்டுத் தன்னிற்தானே கொங் து கொண்டிருந்த கனகம் தனிமையில் தன் வாழ்வை நினைத்துப் பார்ப்பாள். அவள் மனக்கண்ணிலே 15ட ராஜன் பிலோமினுவின் கையைக் கோத்துக்கொண்டு கடை வீதியிலே உல்லாச நடைபோட்டது ஞாபகத்
 

29? கொழுகொம்பு
^محے^محمے^محمحیحدسمبر
திற்கு வரும் அந்த நினைவு அவளைக் கொல்லும். காலங் காலமாகத் தான் கனவுகண்ட, காத்துக்கிடந்த வாழ்வு எவளோ ஒருத்திக்குக் கிடைத்து விட்டதே என்ற எரிச்சல் மறைமுகமாக அவளை வதைத்தது. சுயநலத் தின் சூழலிலே சுற்றியிருப்பனவெல்லாம் தன க் கென்றே எண்ணும் மனிதப்பிராணிக்குக் கழுதையைப் போலப் பின்னங்காலால் உதைத்த கற்பனைகள் கவலை யைத் தான் கொடுத்தன. பாவம் நமக்காவது அந்த வாழ்க்கை கிடைக்கவில்லை. பிலோமினுவாவது வாழட் டுமே என்று அவள் மனம் தனக்குத்தானே சமா தானம் சொல்லிக்கொள்ளும்! ஆனற் தன்னையும் சுங் தரத்தையும் கல்முனையில் கேருக்கு கேர் கண்டதால், அந்தக் காட்சியின் மேலெழுந்த விபரீதமான எண் ணத்தாலல்லவா தன்னை நடராஜன் பிரிந்துவிட்டான் என்று எண்ணுகையில் அவ்வெண்ணத்தை அவளாற் தாங்கமுடியாது போய்விடும்.
அவரை கேரிலே சந்தித்து 'இந்தத் தப்பபிப்பிரா யத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் ஏன் வங்தேன்' என்று கனகம் தன்னைத் தானே கொங்துகொள்வாள்! இப்படியே மனத்துட் குமுறிக் கொண்டிருந்த கனகம் தன் ஆத்திரத்தை எல்லாம் அவனுக்குக் கடிதமாக எழுதினுள்.
இதற்குள் மட்டக்களப்பிற்குக் கூட்டுறவுச் சங் கங்களின் பொதுக் கூட்டத்திற்கு மூதூர்ப் பிரதிநிதி யாகச் சென்றிருந்த செல்லன் வந்துவிட்டான் கனகத் தைக் கண்டபோது அவனுக்குத் திகைப்பாக இருக்
| Ի. Ֆ/.
38

Page 156
கொழுகொம்பு 298
aaaav
ஆனற் கனகம் அவனுக்கும் முழு உண்மையையும் சொல்லவில்லை. கன்னிகாஸ்திரி ஆவதற்காக ஹற்ற னுக்குச் சென்றேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. திரும்பி வந்துவிட்டேன்' என்றுமட்டும் சொல்லி வைத் தாள். நடராஜனைப் பற்றிய எதையுமே அவள் சொல்ல வில்லை.
ஆனல் அடுத்தநாள் அவன் வெளியேயிருந்த போது அவன் விலாசத்துக்கு வந்த கடிதம் ஒன்றை எங்கேயோ வைத்துவிட்டு அப்போதுதான் நினைவு வந்தவராய் எடுத்துக்கொடுத்தார் கங்தையா.
செல்லன் கடிதத்தைப் பிரித்துப் படித்தான். அதிலே தியாகு எழுதியிருந்தான்:
அன்புள்ள செல்வராஜனுக்கு:
வணக்கம், நீர் கடாாஜனைத் தேடிக்கொண்டு கொழும்புக்கு வந்தபோது அவனைப்பற்றிய விஷயங் களை வேண்டும் என்றே மறைத்து மழுப்பினேன். என் றைக்காவது அவன் வைராக்கியம் தணிந்து ஊருக்குப் போவான்; அதுவரை யாரும் அவனைக் குழப்பக்கூடாது என்று அப்போது நான் எண்ணினேன். அந்த எண்
ணத்தை மனத்தில் வைத்துக்கொண்டு அவனைக் கண்
காணித்துக்கொண்டு இருந்தேன். இப்போது அவன் மனம் மாறுபட்டிருக்கும் என எண்ணுகிறேன். ஆனல் நான் வெளிகாடு செல்கிறேன். திரும்பி வர நாட்க ளாகும். அதுவரை அவனைக் கவனிக்கவும் என்னல்
முடியாது.
இப்போது அவன் ஹற்றணிலே ஜயலதாத் தோட்
டத்தில் வேலையாக இருக்கிருன், அந்தவூர்க் கன்னி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

299 கொழுகொம்பு
காஸ்திரி மடத்திலேதான் தங்கள் தங்கையும், இருப் பதாக அறிகிறேன். இவ் விஷ யங் களை இனியும் மறைத்துவைப்பது சரியென்று எனக்குப் படவில்லை. எனவே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுவிடும் கொய் தான அவன் மனதைக் குழப்பாமல் மேற்கொண்டு செய்யவேண்டியவைகளைக் கவனமாகச் செய்யும்படி கேட்கிறேன்
இப்படிக்கு, அன்புள்ள தியாகு
கடிதத்தை வாசித்த செல்லன் அந்தகார இருட் சிறையிலே அடைபட்டுக் கிடந்தவன் திடீரென்று, விடைபெற்று ஒளியைக் கண்டதுபோன்ற மகிழ்ச்சி யுடன் ‘அப்பா இதைப் படியுங்கள்' என்று தன் தங்தை யாரிடம் கடிதத்தை நீட்டினன்.
கடிதத்தை வாசித்த கங்தையா கறுவினர். இரு வரும் ஒரே ஊரில் இருந்திருக்கிருரர்கள். ஆணுற் கனகம் திடீரென்று திரும்பி வந்துவிட்டாள். இதன் காரணம் என்னவாயிருக்கும்? என்று கங்தையா எண்ணுகையில் அந்த எண்ணத்தின் முடிபு கடராஜன்மேல் அவருக்கு வெறுப்பைத்தான் கொடுத்தது. கல்முனையிலிருந்து கனகம் 5டராஜனைத் தேடிக்கொண்டு போயிருக்கிருள். அவன் தன் மகளை நிராகரித்திருக்கிமூன். அவளை அவ மானப் படுத்தியிருக்கிருன், அதுதான் கனகம் ஒடிவங் திருக்கிருள் என்ற எண்ணத்தொடர்களின் சுவாலை நடராஜன் மேல் அவர் இதுவரை வைத்திருந்த பிள் ளேப் பாசத்தைப் பொசுக்கிவிட்டது தர்மசாஸ்திரம் கூடத் தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லச் சொல்கிறதே. கங்தையா கனகத்தின் தங்தையல்லவா? அவர் என்ன செய்வார்?

Page 157
கொழுகொம்பு 300
SqSLSASAASqASLSALSLSqAASSSAS ل நடராஜன் ஹற்றணில் இருக்கிருன் என்ற செய்தி அம்பலவாணருக்குத் தெரியவந்தபோது அவருக்கும் அவன்மேல் எரிச்சலாகத்தான் இருந்தது. ஆத்திரங் தணிந்து இத்தனை காலமாகப் பிச்சை வேண்டாம் தாயே காயைப்பிடி' என்றதுபோலத் தன் மகன் எப் படியாவது ஊருக்குத் திரும்பி வந்தாற்போதும் என்று மனத்துள் எண்ணிக்கொண்டவருக்குக் கனகம் தன் மைந்தனுல் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிருள் என்ற நினைப்பு, ‘என் மகனல்லவா 15டராஜன்' என்ற பெரு மிதத்தைக் கொடுக்கவில்லை!
‘எப்படித்தானிருப்பினும் போய் அவனைப் பார்த் துக்கொண்டு வாருங்களேன்' என்று அவர் மனைவி சொன்னபோது, அவர் வீம்புதான் பேசினர். 'எனக்கு அவனைப் பார்க்கவேண்டிய அவசியமேயில்லை' என்று தான் தன் மனைவியிடம் சொன்னர். ஆம் அவருக் குத் தேவையில்லை. தேவையுள்ளவர்கள் கூட்டிக் கொண்டுவந்து அவனைப் பூவும் மணமுமாக வாழ வைத்தால் அவர் தூரத்தேயிருக்து பார்த்து மனங் குளிர்வார். அவ்வளவுதான்.
ஆணுல் தன் தங்தையோரின் வெறுப்பையோ, அம்பலவாணரின் அலட்சியத்தையோ, கனகத்தின் தடுப்பையோ எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுச் செல் லன் ஹற்றனுக்குப் புறப்பட்டான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

533 كيه
திருமணம்
கனகமும் உன் பக்கலிலேதான் இருக்கிருள். என் றைக்கோ ஒருநாள் நீ அவளேக் கூட்டிக்கொண்டு ஊருக்குப் போகத்தான் போகிருய் ஆனல் அந்தச் சுபதினத்தைக் கானும் பாக்கியம் எனக்கில்லாமற் போய்விட்டது. கான் ஏற்கனவே உன்னிடம் அறிவித் திருந்ததுபோல இன்றைக்கே இங்கிலாந்துக்குக் கப்பல் ஏறுகிறேன். உன்னைப்பற்றிய விஷயங்களை இன்னமும் ஒரு மூடுமந்திரமாக வைத்துக்கொள்ள என்னுல் முடிய வில்லை. எனவே, உன்னைப்பற்றிச் செல்வராஜனுக்கு எல்லாவற்றையும் அறிவித்திருக்கிறேன். இது தவருன செய்கையாக உனக்குப்பட்டால் அதற்காக என்னை மன்னித்துவிடு. சரி, கான் விடை பெற்றுக்கொள் கிறேன். இங்கிலாந்துக்குப் போனதும் உனக்கு மூதூர் விலாசத்துக்குத்தான் கடிதம் எழுதுவேன். அப்போது நீ மனச் சம்மதமாகக் கனகத்துடன் ஊரிலே இருப் பாய் என்பது எனக்குத்தெரியும், வணக்கம்' என் றிருந்த கடிதத்தைக் கண்டங்ாட் தொடக்கம் நடராஜ னின் மனம் அமைதியை மறுபடியும் இழந்துவிட்டது.
பிலோமினுவின் இதமான அணைப்பிலே, அவளின் அன்புப்பிணைப்பிலே இவ்வுலகத்தையே மறந்திருந்த நடராஜனுக்கு மறுபடியும் தன் ஊர் உற்ருர் உற வினர்கள் எல்லாரையும் பற்றிய நினைவுகள் வசந்தத் திற் தேசாந்தரம் போகப் புறப்பட்ட வண்ணுத்திப் பூச்சிக் கும்பல்களாகக் குபு குபு என்று கிளம்பின.

Page 158
கொழுகொம்பு 303
அவன் தியாகுவை கொங்தான்; சூத்ரதாரியாக இருந்துகொண்டு தியாகு ஏதோ நாடகம் கடத்து கிருன் என்று. அவன் இங்கு வந்திருந்தபோது தான் நினைத்தது சரி என்று இப்போது அவனுக்குப் பட் டது. அவன் பண்ணிய சூத்ரதாரி வேலையை அப் போது பண்ணியிருந்தால் அதனுல் ஒன்றும் குடிமுழு கிப் போய்விடாது. ஆனல் இப்போது அவன் நிலை என்ன? பிலோமினு அவன் மனமறிந்த மனைவியாகி விட்டாள். சட்டமும் மதமும் அங்கீகரிக்கவில்லையா யினும் அவள் அவனுக்கு மனைவிதான். இந்த நிலையில் தன் ஊரிலிருந்து எல்லோருமே படையெடுத்து இங்கு வந்துவிட்டால்.
எவ்வளவு மறைக்க முயன்றும் 5டராஜனின் குழப்பத்தைப் பிலோமின கண்டுவிட்டாள். ஆனல் அவன் குழப்பத்திற்கான காரணத்தை அவளாற் கண்டுபிடிக்க முடியவில்லை. அமைதியான இரவைத் துளைக்கும் சுவர்க்கோழியின் அலறலைப்போல அவன் மனத்தை ஏதோ ஒன்று துளைப்பதை மட்டும் அவ ளால் அறிய முடிந்தது. அந்த ஏதோ ஒன்று, 5ட ராஜன் சொன்னதுபோலத் தன்னைப்போல ஒரு அழ கான பெண்ணு? அப்படியாயின் தன்னுடைய கதி? பிலோமினுவும் பயந்தாள். இந்தப் பயங்கரத்தை யும், அவ5ம்பிக்கையையும் தெளிவிக்க இன்னமும் பொழுது வரவில்லை.
இதற்குள் கடராஜன், கனகம் அங்கே வந்திருங் தாள் இப்போது மறுபடியும் மூதூருக்குப் போய் விட்டாள்' என்பதை விசாரித்து அறிந்து கொண் L. Mr Gör.
 

303 கொழுகொம்பு
அப்படியாயின் இந்தத் தியாகுதான் கனகத்தை யும் இங்கே வரச் செய்திருப்பான்' என்று நடராஜன் எண்ணினன். 'வழித்துணைக்கு மடையனைக் கூட்டிக் கொண்டுபோய் அவதிப்பட்ட செட்டியாரைப் போல கம் அந்தரங்கங்களை எல்லாம் இந்தத் தியாகுவிடம் சொல்லி அவனிடம் உதவி கேட்டோமே என்று தன் னேத்தானே கொந்துகொண்டான் நடராஜன்
யாரை கொங் தும் என்ன செய்வது ? இனி எங் தக்கணமும் அப்பாவோ, அம்மாவோ, யாராவது இனி ஊரிலிருந்து வரக்கூடும். வந்தால் என்ன ? இங்கே தன்னிலையைக் கண்டுவிட்டுத் திரும்பிப்போவார்கள் என்று அலட்சியமாய் எண்ணிச் சமாதானமடைய அவனுல் முடியவில்லை. தங்தையின் கண்டிப்பு, தாயின் கண்ணிர், மாமனரின் பாசம், கனகத்தின் அன்பு எல் லாம் தன்னைப் பிலோமினுவிடமிருந்து பிரித்து அவளை நிர்க்கதியாக்கி விட்டுவிடுமோ என்று அவன் எண்ணி
னை,
இந்தப் பயத்தினிடையே கனகம் ஹற்றனுக்கு ஏன் வந்தாள்? எப்படிவங்தாள்? ஏன் திரும்பிப் போய் விட்டாள்? ஏன் என்னைச் சந்திக்காமலிருந்து விட் டாள் ? என்று அந்தரங்கத்தில் அவன் மனம் எழுப் பிய அத்தனை கேள்விகளுக்கும் கனகத்திடமிருந்து வந்த நீண்ட கடிதம் அவனுக்குப் பதில் சொல்லிற்று.
அந்தக் கடிதம் அவனைப் பைத்தியமாகவே ஆக் கிற்று, அக்கடிதத்தின் ஒவ்வொரு வரிகளும் பழைய நினைவுகளைக் கிளறி அவனை வதைத்தன. ஆத்திரக்தந்த பைத்தியகாரத்தனத்தாற்தான் கனகத்தைப் பிரிய

Page 159
<سمصبر حصی.
MNMNMMNMNMMNMNMMN
கொழுகொம்பு 304
நேர்ந்த முட்டாள்தனத்தை யெண்ணி அவனுல் கண் னிர் விடாமலிருக்க முடியவில்லை. அக் கடிதத்தின் ஒவ்வொரு வாக்கியமும், தன்னுல் அ னியா ய மாக வஞ்சிக்கப்பட்ட கனகமே அழுதழுது அவனிடம் சொல் வதுபோல இருந்தது. அவள் சொல்லம்புகள் அவனேத் தைத்தன. அவ் வார்த்தைகளின் வேதனையை அவனுற் தாங்க முடியவில்லை.
ஆனலும் கடந்துபோனவைகளுக்கு அவனுல் என்ன பிராயச்சித்தம்பண்ண முடியும் ? வெறுமனே அழுவ தைத் தவிர அதுவும் இன்றைய நிலையில் பிலோமினு விற்குத் தெரியாமல் இரகசியமாக அவன் அழவேண் டும். இல்லாவிட்டால் கனகத்தின் வாழ்க்கை மட்டும் போதாதென்று, பிலோமினுவின் வாழ்க்கைகூட 5ரக மாகிவிடும். ஆனலும் அவன் அழுதான். கையாலா காதவன்போல விம்மி அழுதான்!
உணர்ச்சிப் போராட்டங்களின் சோர்விலே அத னுள்ளே பிலோமினுவின்மேல் அவனுக்குள்ள கடமை யுணர்ச்சி, நெருப்புப்பிடித்து அழிந்த காட்டிலே நீண்டு கருகியிருந்த பெரு மரம்போலத் தலைதூக்கி நின்றது.
ஆம் இப்போது பிலோமினுவைக் காப்பாற்ற வேண்
டியது அவன் கடமை! அந்தக் கடமையைக் கனகத் தின் கண்ணிரோ, அன்போ, பாசமோ எதுவும் இனித் தடுக்க முடியாது. அந்தக் கடமையுணர்ச்சி, ஊரைப் பற்றி யெழுந்த எண்ண அலைகளின் முடிபில் அவனுக் குள் ஒரு வெறியாகவே மாறிவிட்டது!
அந்த வெறியுணர்ச்சியில் ஊரிலேயிருந்து வரக்
கூடிய சில்லறைத் தொந்தரவுகளிலிருந்து தப்பிக் கொள்ளப்பிலோமினுவை உடனடியாகப் பதிவுமணம்'
 
 

305 கொழுகொம்பு
செய்துகொள்வதெனத் தீர்மானித்தான். பழைய காத லுக்கும் புதிய கடமைக்கும் இடையில் அல்லாடும் தன் மனதைக் கடமையில் லயிக்க வைப்பதற்குச் சட்ட பூர்வமான பாதுகாப்புத் தேடிவிட எண்ணி னன். கனகத்தின் காதலனுக இல்லாமல் பிலோமினு வின் கணவனுக மட்டும் இருப்பதற்கு எதையெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்ய அவன் தயாரானன்.
கண்டிக்குப்போய்க் கா ரியா லயத்திற் பதிவு முடிந்தபிறகுதான் பிலோமினவுக்கு அவன் ஏன் தன் னைக் கண்டிக்கு அழைத்துவந்தான் என்பது விளங் கியது. ஆனலும் இந்தக் காரியத்தை நினையாப்பிர காரமாக முடித்ததின் மறைபொருள் அவளுக்குப் புலப்படவில்லை. எனவே பதிவு கங்தோர்க் காரியால யத்திலிருந்து வெளியே வந்ததும் பிலோமினு இதற் குத்தான இவ்வளவு அவசரமாகக் கண்டிக்குக் கூட்டி வந்தீர்கள்.
பிறகென்ன? மீதான் அவநம்பிக்கைப் பட்டுக் கொண்டிருக்கிருயே' என்று சிரித்தான் நடராஜன்.
அப்படி இல்லை; கான் எங்காவது ஓடிவிடுவேன் என்று நீங்கள்தான் பயந்து கொண்டிருந்தீர்கள். அதனுல் ஒன்றையும் வெளியிடாமல் என்னை இழுத்து வந்தீர்கள்' என்று பிலோமினுவும் சிரித்தாள்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் கண்டி நகரிலே
அலைந்தார்கள். இதற்கு முன் எத்தனையோமுறை
அவர்கள் பார்த்த தலதா மாளிகையும் தெப்பக்குள
மும், அரசமாளிகையும் ஏதோ சொர்ப்பன லோகத்து
89

Page 160
கொழுகொம்பு 306
Janaaaaaaaaa
விங்தைகளாக அவர்களுக்குப் பட்டன. சனங்களின் இரைச்சலும், அழுகிய பொருள்களின் காற்றமும் அவர்களுக்குக் கந்தர்வ கானமாகக் காதிற் பட்டன. தேவலோகச் சுகந்தமாக 15ாசியைத் துளைத்தன. இரு வர் உள்ளத்திலும் உடலிலும் ஒர் புதுத்தென்பு பிறக் தது. பேட்டோ படம் ஒன்று பிடித்துக்கொள்வதற் காக ஒரு “ஸ்ரூடியோ'வுக்குள் இருவரும் நுழைந்த போது அந்த ஸ்ரூடியோவின் வரவேற்பு மண்டபத் தில் இருந்த வானெலி மெதுவாகப் பாடியது.
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்
அன்பி லழியுமடி-கிளியே அன்புக்கழி வில்லைக்
காண்) இப்படியே திரிந்ததில், மதியம் திரும்பிவிட்டது. பிலோமினவுக்கு அலுத்து விட்டதோ என்னவோ 'வீட்டுக்குப் போகலாமே என்ருள். -
'இப்போதா, இப்போதுதான் காம் புதுத் தம்பதி களாகியிருக்கிருேம். அந்தத் திருகாளை உல்லாசமாகக் கழிக்காமல் வீட்டிலே என்ன காத்துக்கிடக்கிறது’ என்ருன் நடராஜன்.
‘நல்ல திருமணங்தான்; இந்தத் திருமணத்தை
எப்போதோ காம் கொண்டாடி யிருக்கவேண்டும். இப்போது கிழட்டுக் கல்யாணம் ஆகிவிட்டதே' என் ருள் பிலோமினு.
‘என்ன மாதிரியாவது இருக்கட்டும். கல்யாணம் வாழ்க்கையில் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு ஒரு தடவைதான் வருகிறது! அந்தத் தினத்தை அவனே, அவளோ வாழ்க்கையில் மறக்கமுடியாது. கொட்டா
 

30? கொழுகொம்பு
விட்டாலும் தேள் பிள்ளைப்பூச்சியாகி வி டா து. இந்தக் கல்யாண ம் மட்டும் ஊரில் கடந்திருக்கு மானுல்.’
அதற்குமேல் (5டராஜனல் பேசமுடியாமற் போய் விட்டது. அவன் தொண்டை கரகரத்தது; கண்கள் கலங்கிவிட்டன.
அவன் மனக் குறையை உணர்ந்த பிலோமின 'ஏன் ஊருக்குப்போய் இதைச் செய்திருக்கலாந்தானே. நான் வேண்டாமென்றேன? என்ருள் பிலோமின.
செய்திருக்கலாந்தான் .' என்று தரித்துப் பெரு மூச்சுவிட்ட கடராஜன் அதெல்லாம் பெரிய கதை. அதையெல்லாம் ஆறுதலாகச் சொல்கிறேன். இப்போது வா பேராதனைப் பூங்தோட்டத்துக்குப் போகலாம் என்ருன் நடராஜன்.
இருவரும் பேராதனைப் பூங்தோட்டத்துக்கு வந்த போது இரண்டு மணியாகிவிட்டது. அந்த உக்கிர வெய்யிலில் அப்பூங்தோட்டத்தின் பசுமையான குளு மையோ, உலகத்தின் அத்தனை தாவரங்களும் நிரம்பி யிருக்கும் அத்தோட்டத்தின் பெருமையோ, பூக்களின் வனப்போ, மரங்களின் காம்பீர்யமோ, செடிகளின் செளந்தர்யமோ, புல் போர்த்திருக்கும் செழுமையான தரையின் மரகதப் பசுமையோ ஒன்றுமே கனகத்தின் மனதைக் கவரவில்லை. அத் தோட்டத்தை வளைத்துக் கொண்டு துடுக்கும் கலகலப்பும் நிறைந்த பெதும்மைப் பருவத்தாளைப்போலக் குதிகடை போட்டுக் கொண் டிருக்கும் மகாவலிகங்கைகூட அவளைக் கவரவில்லை. அவள் மனது 15டராஜனிடம் கதை கேட்பதையே எண்ணிக்கொண்டிருந்தது.

Page 161
கொழுகொம்பு 308
கங்கைக்கரையோரத்தே அடர்ந்து வளர்ந்த புத ரோரமாக ஆசனத்தில் இருவரும் அமர்ந்து கொண் L60Tif.
அவரவர் கவலைகளோடு இருவரும் மெளனமாகச் சில நிமிடங்களைக் கழித்தனர். அந்த மெளனத்தை "இங்கே இருக்கத்தானு வங்தோம்; இதையெல்லாஞ் சுற்றிப் பார்க்க வேண்டாமா?' என்ருன் நடராஜன்.
'எனக்குக் காலெல்லாம் கோகுது. கான் இப்படித் தான் இருக்கப்போகிறேன்" என்ருள் பிலோமின.
*சரி எனக்கென்ன, தேவியின் ஆணைப்படிதான்' என்று குறும்பாகச் சிரித்தான் நடராஜன்.
நடராஜனைத் தன் இலக்கிற்குத் திருப்பப் பிலோ மின முயன்ருள். அவள் ஆசிரியையாக இருந்தவள். தான் கருதியதை மாணவன் வாயிலிருந்தே விடை யாகப் பெறுவதன் சூட்சுமம் அவளுக்குத் தெரியும். அந்த முறையிலேதான் அவள் கடராஜனிடம் கேட் டாள். இந்த ஆற்றைப்பார்ப்பதால் தங்களுக்கு என்ன நினைவு உண்டாகிறது?"
*ஆற்றைப் பார்த்தால் தமிழனுக்கு என்ன நினைவு உண்டாகும்? வெள்ளைக்காரனைப்போல "ரோமர்க னாகிய காங்கள் வணங்கும் தங்தையாகிய தைபர் நதியே' என்று அவனுற் பாடமுடியுமா? கங்காதேவி என்று சொல்லிப் பெண்ணுெருத்தியைத் தான் நினைவு படுத்துவான் தமிழன்.'
"அப்படியானல் தங்களுக்கு எந்தப் பெண்ணின் ஞாபகம் வருகிறது?"
 
 

309 கொழுகொம்பு
*அதை கான் சொல்ல வேண்டுமா?" 'சொன்னுல் என்னவாம்?"
*அப்படியா பிலோமினு கண்ருகக் கேள். இப் போது 15ம் அருகிலே ஒடிக்கொண்டிருக்கும் இந்த மகாவலி கங்கையைப் பார்க்கும்போது பெதும்பைப் பருவத்தினளாக இருக்கும்போது நீ பயமறியாது துள் ளிக் குதித்து ஓடியதைக் கற்பனையிற் காண்கிறேன். இது உற்பத்தியாகுமிடத்திலே கல்லுக்குக் கல் கலீர் என்று துள்ளிக் குதித்துக்கொண்டு ஒடும்போது உன் னேக் குழந்தையாகக் காண்பேன். இந்த நதி இன்னும் சில மைல் வேகமாக ஒடிச் சமதரையில் மெதுவாக ஊர்கையில், கான் உன்னை முதலிற் சந்தித்தபோது நீ மெதுவாய் அடிமேல் அடி வைத்து உள் அறைக்குள் அசைந்து நடந்ததைக் காண்பேன். அதற்கும் சூழ உள்ள வயல்களை கீர் பாய்ச்சிக்கொண்டு கரைததும்பச் செல்லும் போது அதிலே ஓர் அன்பு மிகுந்த தாயாக உன்னேக் காண்பேன்.
பிலோமினவுக்கு அவன் பதிலில் திருப்தி ஏற்பட வில்லை. ஆனல் 15ாடகத்திலே 5டிப்பவன் போன்று நெளிந்து வளைந்து பேசும் பேச்சையும், அவன் அபி கயத்தையும் இரசித்தாள்.
அவன் முடித்ததும் 'அதற்கும் மகாவலிகங்கை கடலோடு கலக்கும் இடத்தில். அதைச் சொல்ல மாட்டீர்கள்" என்ருள் பிலோமினு குறும்பாக.
* அட இதுதான் மகாவலிகங்கையா? எனக்குத் தெரியாதே. என்ன இருந்தாலும் நீ ஆசிரியை. பெய ரும் உருவமும் உங்கள் கூட்டத்துக்கே முக்கியம்.

Page 162
கொழுகொம்பு 810
பாட்டைப் படிப்பித்துவிட்டு இது அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் எதுகை மோனே எல்லாம் அருமையாக இருக்கும் என்று சொல்வீர்களே தவிர, அதன் உட்பொருளை இரசித்துச் சுவைக்க உங்களுக்கும் தெரியாது; மாணவர்களையும் விடமாட்டீர்கள்' என் ரூன் 15டராஜன்.
அவனிடம் பேசி வெல்ல முடியா தெ ன் ப ைத உணர்ந்த பிலோமின 'எனக்கு இந்த ஆற்றைப்பார்த் தால் இந்த ஆற்றின் கரையோரமாக கடந்து மூதூருக் குப் போகலாம் என்ற நினைவு வருகிறது' என்ருள்.
15டராஜன் மெளனமானன் அவன் குதூகலம் எல்லாம் மூதூர் என்ற சொல்லைக்கேட்டதும் தொட் டாச்சினுங்கிபோலச் சுருங்கிவிட்டது. பிலோமின. அவனில் மெதுவாக அணைந்துகொண்டே 'ஊருக்குப் (Burg, LDII i "Lo fj5GITIT???
p
** (Bus (Bojstlh
* அது பெரியகதை என்றீர்களே! அந்தக் கதை யைச் சொல்லுங்களேன். '
சற்று5ேரம் அப்படியேயிருந்த நடராஜன் இன் னும் ஏன் பிலோமினுவிடம் தன்னைப்பற்றிய விபரங் களை மறைக்கவேண்டும் என்று தீர்மானித்தவனய் ' உங்கள் பாடசாலையிலே கனகம் என்று ஒருத்தி, அவளை உனக்குத் தெரியுமா? அவளும் மூதூர்தான் '
" நான் இருக்கும்வரை இல்லை. பிறகு வந்தாளோ என்னவோ. கல்முனையிலிருந்துதான் யாரோ வரப் போவதாகக் கேள்விப்பட்டேன் ”

311 கொழுகொம்பு ,
AMASJAeSMASMMMSASeeMASAeMSASMMMAJMMSASJSAqAMMSAeSAeLSMAJSLMSASMLMSAJSLSALSeSMeSMAJSAqMeMSAJSMLSSASASLLLSAAASSeMLMAASAAAAASLLMASqS
* அவள்தான். அவள் எனக்கு மச்சாள். அவள் உன்னை ஒருநாளுமே காணவில்லையா? '
' எனக்கே அவளைத் தெரியாது. அம்மா செத்த அன்று இரண்டு மூன்று புது முகங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக இருக்குமோ என்னவோ? ஏன் இப்போது அவளுக்கென்ன?”
" அவளுக்கென்ன? இப்போது அவள் திரும்பி ஊருக்கே போய்விட்டாள். ஒருகாலத்தில் கான் அவ ளேக் காதலித்தேன்.
பொழுது போனதே தெரியாமல், ஆர்வத்தோடும் குழப்பத்தோடும் பிலோ மினு அந்தக் கதையைக் கேட்டாள்.
கதையைச் சொல்லி முடித்த கடராஜன் ' பிலோ மினு! நம்பிக்கை அன்பு என்ற அத்திவாரத்தின் மேற்ருன் 5ம் வாழ்க்கை அமையவேண்டும். அதற்கு முதற்படியாக என் மனம் முழுதையுமே திறந்து உனக்குக் காட்டியிருக்கிறேன். இதோ இந்தக் கடி தத்தையும் படி ' என்று கனகத்தின் கடிதத்தையும் அவள் கையிற் கொடுத்தான்.

Page 163
4 - 4 -
கனகத்தின் கடிதம்
அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினுள்.
அன்புள்ள அத்தானுக்கு,
இந்தக் கடிதத்தை எழுதவதா வேண்டாமா என்ற போராட்டத்தில் எத்தனையோ நாட்களைக் கடத்திவிட்டு எப்படித் தொடங்குவது என்ற கேள்வி யில், எத்தனையோ தடவை எழுதி எழுதிக் கிழித்து விட்டு எப்படியோ இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாட்டுக் கதாசிரியன் ஒருவன் தன் கதைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘என் மனதில் எழுதாக் கிளவி யாய்க் கிடந்து வேதனைப் படுத்தும் எண்ணங்களை எழுதாமலிருக்க என்னல் முடியவில்லை. அதனுற்ருன் நான் எழுதுகிறேன்" என்று சொன்னனம். அவனைப் போலவே, கடந்துபோன சம்பவங்கள் என் மனத் தைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருக்கையில் என் ஞல் இக் கடிதத்தை எழுதாமலிருக்க முடியவில்லை. அதனுலேதான் இதை நானும் எழுதுகிறேன். அங் தக் கதாசிரியனின் எழுத்துக்களைப்போலவே என் எழுத்துக்களும் மோட்ச சாம்ராச்சியத்தில் இடம் பிடித்துக்கொள்ள ஏற்பட்ட இன்சூரன்ஸ் ஏற்பா டல்ல. இதனுல் யாருக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறதோ என்பதும் எனக்குத் தெரியாது. ஆனல் எனக்கு இதிலே ஒரு திருப்தி உண்டு என்பதுமட் டும் எனக்குத் தெரியும், ஆனல் அதே நேரத்தில்
 

813 கொழுகொம்பு
இக்கடிதம் தங்களுக்கு எந்தக் குழப்பத்தையும் தரக் கூடாது என்று என் மனப்பூர்வமாகப் பிரார்த்திக்
றேன்.
சரி, கடந்துபோன சம்பவங்கள் எல்லாம் ஞாப கத்திற்கு வருகின்றன. 'தம்பி, இங்கு நீர் வரவேண் டாம்' என்ற அப்பாவின் வார்த்தைகளைத் தாங்க மாட்டாமல் நீங்கள் அதுவரை பேசிக்கொண்டிருந்த என்னிடங்கூட ஒருவார்த்தை சொல்லாமற் திடீ ரென்று போய்விட்டீர்கள். அன்றைக்கு கான் அதிக மாக ஒன்றும் துக்கப்படவில்லை; எப்படியும் திரும்பி என்னிடம் வருவீர்களென்ற நம்பிக்கை எனக்கிருங் தது. ஆனல் உண்மையாகவே துக்கப்பட்டவர் அப்பா தான். அன்றையிலிருந்து இன்றுவரை அப்பாவை உங்கள் பிரிவு எவ்வளவு தூரம் வதைத்து விட்டது என்பதை என்னுல் எழுகிக்காட்ட முடியாது!
ஆனற் கொழும்புக்குப் போன நீங்கள், அண்ண னுக்கு எழுதிய கடிதத்தைப் படித்தபோதுதான் தங் களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஏற்பட்டுவிட்ட இடைவெளியின் கோரத்தை உணர முடிந்தது!
அதன் பிறகு நான் கல்முனைக்குப் போனேன். அங்கேயிருந்து தங்களுக்குக் கடிதம் எழுதினேன். நீங் கள் ஒருநாள் திடீரென்று கல்முனைக்கு வந்தீர்கள்! அதை நினைத்தாலே என் கெஞ்சம் வேகிறது. சர்வாங்க மும் படபடக்கிறது.
நீங்கள் வருவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்னர் தான் அங்கே சுந்தரம் வந்தான். அவன் ஏன் வந்தான்
40

Page 164
கொழுகொம்பு 314
என்று எனக்குத் தெரியாது. சத்தியமாகச் சொல் கிறேன். நான் எங்கெங்கே திரிந்துவிட்டு மறுபடி மூதூ ருக்கு வரும்வரையிலும் என்னை அவனுக்கு மணம் முடிப்பதற்கு யோசித்திருந்தார்கள் என்ற விஷயமே எனக்குத் தெரியாது!
தங்களைக் கண்டதும் அவன் போய்விட்டான். ஆணுலும் அவன் நிழல் அங்கே தங்கிவிட்டது. அந்த நிழல் தங்கள் மனதில் பூதா காரமான சந்தேக உருவிற் தங்கியேவிட்டது.
அதன் பிறகு நீங்க ள் கே ட் உர் கள் 'வா போவோம்' என்று.
நீங்கள் சுயமாக இருந்து யோசித்துப் பார்த்தால், நான் மட்டுமல்ல எந்தப் பெண்ணுமே இந்தக் கேள் விக்கு உடனே வருகிறேன்' என்று பதில் சொல்லி யிருக்கமாட்டாள் என்ற முடிவுக்கு வருவீர் கள். ஆனல் அன்று நீங்கள் சுயமாகச் சிந்திக்கும் நிலையில் இல்லை; சங்தேகம் உங்கள் கண்களை மறைத்து விட்டது!
நீங்கள் போய்விட்டீர்கள்! உங்களுடைய அழ கான உருவமும் என்றைக்கும் மறக்கமுடியாத உங் கள் முகமும் போயே விட்டன.
அத்தான் கல்கியின் கவிதை ஒன்றை நீங்களும் படித்திருப்பீர்கள். மால்மருகன் வேலன் வந்து வள்ளி யின் கையைப் பற்றி வா என்றிழுக்க அவள் வெடுக் கென்று கையை இழுத்தாளாம். உடனே இன்பமான அவள் கனவு கலைந்துவிட்டது. தான் கையை இழுத்த பேதைமைக்காக அவள் பின்னர் கலங்கினுளாம்!
 

315 கொழுகொம்பு
-8-S-S-
நீங்கள் கல்முனை க்கு வந்தது கன வுபோலவே எனக் கிருந்தது என்னே வாவென்றழைத்ததும் கன வு போலவே இருந்தது ஆல்ை நீங்கள் போனபின்பு தான் அவை ஒன்றுமே கனவல்ல கனவு என்ற மகா உண்மை எனக்குத் தெரிந்தது. அதன்பிறகுதான் நான் தங்களோடு வாழ்வதைப்பற்றி உண்மையாகவே கனவு காணவேண்டி நேரிட்டது. ஆம், வாழ்க்கை கனவா யிருக்க முடியாது வாழவேண்டும் என்ற ஆசைதான்; வாழப்போகிறேன் என்ற நினைவுதான் கனவாயிருக்க முடியும்.
\ ஆனல் அதன் பிறகு 15ான் ஆசைப்பட்ட வாழ்க் கைக் கனவு என்றைக்குமே கனவாகாமல் விட்டது. 'நீங்கள் வா என்று கூப்பிட்டதும் ஏன் போகாமல் இருந்தேன்' என்பதை எண்ணிக் கலங்கும் ஒன்று தான் என் வாழ்க்கையின் கனவு; மற்றெல்லாம் கனவேதான் !
கோபித்துக்கொண்டு போய்விட்ட நீங்கள் திரும்பி வருவீர்கள் என்றுதான் கான் எண்ணினேன்; சில கிமிஷங்களின் பின்னுகுதல். நீங்கள் திரும்பிவந்து மறு படியும் என்னை வா என்று அழைத்தீர்களானுல் நான் நிச்சயமாகத் தங்களுடன் வந்திருப்பேன். ஆனல் நீங் கள் போய்விட்டீர்கள். உங்கள் மனதிற் குடிபுகுந்த சங்தேகப் பிசாசு உங்களை என்னை விட்டுத் தூரமாக்க, மிகத் தூரமாகச் சென்று விட்டீர்கள்.
ஆனல் இந்த நிலையிலும் தங்களைப்பற்றிய ஓர் எண்ணம் எனக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது; ஆம், கீங்கள் பெற்று வளர்த்த தாயைத் துறந்து, அரவ

Page 165
கொழுகொம்பு 316
ணைத்துக் காத்த தங்தையைத் துறந்து, தங்கன் எதிர் கால வாழ்வுக்கு ஊன்றுகோலாயிருந்த தங்கள் படிப் பையே வீசி எறிந்துவிட்டு, எனக்காகக் கல்முனைக்கு வந்தீர்கள் என்ற நினைவு ஆறுதலைக் கொடுக்கிறது. என்ருலும் அவ்வளவு அன்பையும் ஒரே வார்த்தையில் உதறி எறிந்துவிட்ட என் பேதைமையை நினைத்து என்னுற் துக்கப்படாமலிருக்க முடியவில்லை. அதே கேரத்தில் நீங்கள் என்மேல் வைத்த அதீதமான அன்புதான் என் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட் டது என்று என்னுற் தங்கள் மேற் குற்றஞ் சாட்டாம லிருக்கவும் முடியவில்லை. தங்களுக்குத் தாகூரின் கவிதை கன்முகத் தெரியும் என்று எண்ணுகிறேன். அவர் ஒரிடத்திற் பாடினர்.
* மலர் ஏன் கருகி விட்டது? தணியாத ஆசை யோடு அதை என் இருதயத்தோடு அணைத்துக்கொள்ள முயன்றேன். அதுதான் மலர் கருகிவிட்டன.
* வீணைக் கம்பிகள் ஏன் அறுந்துவிட்டன? அவற் றின்சக்திக்கு அப்பாற்பட்ட 15ாதத்தை அவற்றிலே மீட்க முயன்றேன். அதுதான் வீணேத்தந்திகள் அறுந்துவிட்டன' என்று.
தங்களைப்போலத் தீவிரத்தோடு அன்பு செலுத்தி அதனல் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்ட ஒருவனைப்பற்றித்தான் அவர் இப்படிப் பாடி யிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
சரி, எங்கேயோ போய்விட்டேன்; ஆனல் என்ன செய்வது? கடிதத்தை எழுதத் தொடங்குமட்டுந்தான்

3 1? கொழுகொம்பு
எழுதுவோமா வேண்டாமா என்று தயங்கினேன். ஆனல் எழுதத் தொடங்கியபின் பேணு எதையோ எழுதிக்கொண்டு போகிறது. ஆணுலும் 'இதய சம் பூரணத்திலிருந்ததுதான் வாய் பேசுகிறது' என்ற பைபிள் வாக்கியப்படி எல்லாம் என் மனதிலிருப்பது தான் வெளிவருகிறது. இனி விட்ட இடத்திற்கு வருகிறேன்.
நீங்கள் கொழுப் புக் குத் திரும்பியிருப்பீர்கள் என்ற எண்ணத்தில் அ த ன் பிற கு உங்களுக்குக் கொழும்பு விலாசத்திற்குக் கடிதங்கள் எழுதினேன்; ஒன்றிற்கும் பதில் வரவில்லை.
காலகதியில் நீங்கள் மறுபடியும் என்னிடம் வரு வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு அற்றுப்போய்விட் டது. எனவே என் வாழக்கையின் போக்கை மாற் றிக்கொள்ள விரும்பினேன், மதம் மாறினேன். துறவி யாகப்போக எண்ணிக் கற்றனுக்கு வங்தேன்.
ஆனல் அங்கே மறுபடியும் தங்களே அறிந்துகொள்ள நேரிட்டது. தாங்கள் பிலோமினுவை மணமுடிக்க இருப்பதைத் தெரிந்துகொண்டபோது மறு படி யும் என் மனம் அமைதியை இழந்தது. இனி அங்கே இருந்தால் பாவம்! எந்தக் குற்றமுமே புரியாத பிலோ மினுவின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எண்ணி ஊருக்கே வந்துவிட்டேன். வந்தாரை வாழவைக்கும் இத் தமிழ்நாடு, பெற்றுவளர்த்த என்னே க் கைவிடாது; ஆகவே நீங்கள் இனிமேல் என்னேப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். உங்கள் புது மனைவியோடு நிம்மதி யாக வாழ்ந்தீர்களானுல் அது ஒன்றுதான் எனக்கு இப்போது தாங்கள் கொடுக்கும் ஆறுதலாக இருக்கும்!
நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள் என்றுதான் எண்ணுகிறேன். ஏனென்ருல் சமுதாயத்திலே பெண் ணரின் நிலையைச் சரியாக அளக்தறிந்த ஒஸ்கார் வைல்ட்

Page 166
கொழுகொம்பு 3.18
ஓரிடத்தில் எழுதினன் ஆண் பெண்ணின் முதற் காதலை விரும்புகிருன், பெண் ஆணின் கடைசிக் காதலை விரும்புகிருள்' என்று; தாங்கள் என்னே அடி யோடு மறந்துவிட்டுத் தங்கள் மனைவியிடம் அன்பு காட்டினுல், அவள் தங்கள் பூர்வகால வாழ்க்கையை அறிந்துகொண்டாற் கூட அதல்ை உங்களுக்கு ஒரு இடைஞ்சலும் ஏற்படாது. 15ம் நாட்டிற் பெண்க ளின் நிலை அப்படி!
நான் என்ன செய்யப்பேகிறேன் என்று கேட்கி நீர்களா? அதற்கும் 5ம் நாட்டவர்கள் வழி செய்து தான் வைத்திருக்கிருரர்கள். மனப்பாரத்தை எல்லாம் இறக்கி வைப்பதற்கு விதி என்ற சுமைதாங்கியை ஏற்கனவே கட்டி வைத்திருக்கிருரர்கள். ஒரு காலத் தில் உங்களோடு சேர்ந்த 'தெய்வகீதம் பலவுண்டு, சேர்ந்துபாட நீயுண்டு என்று பாடிய நான் இன் றைக்கு அதே கவிஞனின்
எழுதிச் செல்லும் விதியின்கை எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கொஞ்சி நின்ருலும் சூழ்ச்சி பலவும் செய்தாலுப் வழுவிப் பின்னே சோர்ந்து ஒரு வார்த்தையேனும் மாற்றிடுமோ
அழுத கண்ணிர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்
திடுமோ! என்ற பாட்டோடு திருப்தியடைந்து கொள்வேன்.
கடைசியாகத் தங்க ள் இருப்பிடத்தையோ, வாழ்க்கையையோ நான் இங்குள்ளவர்களுக்குச் சொல் லித் தங்கள் நிம்மதியைக் குலைக்கமாட்டேன். ஆனல் என்றைக்காவது நீங்க ள் தங்கள் மனைவியோடு ஊருக்கு வந்தால் தங்களுக்கு மனம் நிறைந்த வரவேற் பளிக்கும் முதலாம் ஆள் 15ானுக இருப்பேன் என்றதை

3 19 கொழுகொம்பு
-~~~~<~:~~~പ്പ
மட்டும் எழுதிக்கொண்டு என் நீண்ட கடிதத்தை முடிததுக் கொள்கிறேன்.
இப்படிக்கு, தங்கள் அபுன் ஸ்ள கனகம்
சுவையான கதையைப் படிப்பவள்போலப் பிலோ மின ஒரே மூச்சில் கடிதத்தை வாசித்து முடித்தாள். அவளுக்குக் கனகத்தின்மேல் இரக்கம் உண்டாயிற்று 5டராஜன்மேல் எரிச்சல் ஏற்பட்டது, வரித்த கண வனே இன்னுெருத்திக்கு பறிகொடுத்துவிட்ட பெண் னின் மன உளைச்சல் அவள் பெண்ணுள்ளத்தைத் தொட்டது. பெண் ஆணின் கடைசிக் காதலையும், ஆண் பெண்ணின் முதற் காதலையும். என்று கன கம் குறிப்பிட்டிருந்த ஒஸ்கார் வைல்டின் வரிகள் தன்னே ஏ ள ன ஞ் செய்வது போலப்படுகையில் அவளுக்குக் கனகத்தின் மேல் எரிச்சலாகவும் இருந் தது. இப்படிப் பல உணர்ச்சிகள் அவள் உள்ளத்தில் ஒரே நேரத்திற் சலனப்படுகையில் அவளால் ஒன்றுமே பேச முடியவில்லை. 15டராஜனும் வாங்கின் இன்னுெரு மூலையில் வானத்தைப் பார்த்தவாறு எ  ைத யோ யோசித்துக்கொண்டு இருந்தான்.
அங்கி மயங்கிக் கொண்டிருந்தது! இருவருக்குமிடையே சுவராய் அடைத்துகின்ற மெளனத்தை நடராஜன் கலைத்தான். 'போகலாமா?
பிலோ மினு பதில் ஏதும் சொல்லாமல் எழுந்து
அன்றிரவை அவர்களிருவரும் கண்டியிலே கழித்து விட்டு அடுத்த5ாள் ஹற்றனுக்குச் சென்றபோது அங்கே செல்வராஜன் வந்திருப்பதைக் கண்டார்கள். பிலோமினுகூட அவன் கனகத்தின் அண்ணனுகத் தான் இருப்பான் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

Page 167
今よー
மூவர்
நடராஜனைக் கண்டதும் புன்னகை புரிந்த செல் லன், பிலோமினுவைக் கண்டதும் துணுக்குற்றன். ஓரிரண்டு நிமிஷத்திற்குள்ளாக அவன் மனம் எவ் வளவையோ எண்ணிக்கொண்டது. பாரிந்தப் பெண்? நடராஜனின் பின்னுல் மனைவி என்ற உரிமையோடு வருகிருளே. தியாகு கூடக் கடிதச் கில் இவளைப்பற்றி எழுதவில்லையே. நடராஜன் இந்தப் பெண்ணை மனைவி யாக்கிக் கொண்டுவிட்டதை அறிந்து ஆற்றமையினுற் முன் கனகம் மூதூருக்குத் திடுதிப்பென்று ஓடி வந்து G? * sir GIT IT ?
தன் தங்கையின் நிலையை எண்ணியபோது என்ன தான் வெள்ளை மனம் படைத்தவனுயிருந்தாலும் அவ ஞல் 5டராஜன்மேல் வெறுப்புக் கொள்ளாமலிருக்க முடியவில்லை. கணத்த ள் இப்படித் துரோகம் பண்ண எண்ணியிருந்தவன் மீதுதான கனகம் இத்தனை அன்பு பாராட்டினுள்' என்று அவ்வெறுப்புக் கனகத்திலும் மேலும் படர்ந்தது.
தூரத்திலே செல்லனைக் கண்ட நடராஜனும் தலை யைக் குனிந்து கொண்டான். அவன் முகத்தை ஏறிட் டுப் பார்க்கவே 15டராஜனுக்கு வெட்கமாக இருந்தது.
ஆனலும் தியாகுவின் கடிதம் வந்த காளிலிருந்து ஊரிலிருந்து யாராவது வருவார்கள் என்பதை அவன்

321 கொழுகொம்பு
எதிர்பார்த்தே யிருந்தான். வந்தால் அவர்களிடம் என்ன பேசுவது என்பதைக்கூட ஒரளவு திட்டம் பண்ணியே இருந்தான். எனவே தைரியதத்தை வர வழைத்துக் கொண்டு செல்லனிடம் பேச்சுக்கொடுத் தான்.
* இப்போதுதான் வருகிருயா?
இல்லை; கேற்றுப் பின்னேரம் வங்தேன்; உன்னைக் காணவில்லை. பட்டினத்தில் இரவு தங்கிவிட்டு இப் போதுதான் மறுபடியும் இங்கே வங்தேன்."
அவர்களை அப்படியே பேசிக்கொண்டிருக்க விட்டு விட்டுப் பிலோமின உள்ளே சென்றுவிட்டாள். அவ ளுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. ஒரே குழப்ப மாக இருந்தது.
நடராஜனுல் அதற்குமேல் என்ன பேசுவது என் பதும் தெரியவில்லை. சிறிதுநேரம் அப்படியே மெளன
மாக இருந்துவிட்டு 'காங்கள் கேற்றுக் கண்டிக்குப்
போயிருங்தோம்; இன்றைக்குத் தான் வங்தோம்’ என் @?ଟit.
* கேள்விப்பட்டேன் எ ன் ரு ன் செ ல் லன், அதைத் தொடர்ந்து கனகம் சுகமாயிருக்கிருளா ? என்று கேட்க எண்ணினன் கடராஜன். ஆனல் எந்த கோவைக்கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்பது என்ற உள்ளுணர்வு அவன் மனதைக் குடைகையில் கனகம் என்ற ஒரே வார்த்தையோடு அவன் வாய் அடைத்துக் கொண்டது. -
அவள் சுகமாகத்தான் இருக்கிருள்' என்ருன் தியாகு மடியிலே கனமில்லாதவனுக்கு வழியிலே பய
41

Page 168
கொழுகொம்பு 333
மிராது. செல்லனுக்கும் நடராஜனுக்கு வெடுக்கு வெடுக் கென்று பதில் சொல்வதற்கு எந்தத் தயக்கமும் இருக்க
'கான் கல்முனைக்குச் சென்று அவளை அழைத் தேன். அவள்."
'அந்தப் பழைய கதைகளை எல்லாம் ஏன் கிளறு கிருய்? இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னே உன்னே மறுபடியும் சந்திக்க முடியும் என்று கான் எண்ணியிருக்கவில்லை. இப்போது உன்னைக் காண்பதே எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆறுதலாக இருக்கிறது" என்று செல்லன் உணர்ச்சியோடு சொல்கையில் அவன் கண்களில் நீர் முட்டிற்று.
அவன் முகபாவத்தைக் கண்டபோது கடராஜனை வெட்கம் பிடுங்கித் தின்றது. செல்லனின் முகத்தைப் பார்க்கத் திராணியற்றவனுகத் தலையைக் குனிந்து கொண்டான்.
இதற்குட் பிலோமின இருவருக்கும் கோ ப் பி கொண்டுவந்து வைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.
நடராஜன் கோப்பியைக் கையில் எடுத்துச் செல்ல, னிடம் நீட்டினுள், செல்லன் அதைக் கையில் வாங்கிக் கொண்டே ‘உன் கல்யாண விருங்தை இந்தக் கோப்பி யுடனேயே முடித்துவிடலாம் என்று நினைக்கிருயா ? என்ருன் சிரித்துக்கொண்டே.
அவன் சிரிப்புத் தன்னை ஏளனஞ் செய்வதாக நடராஜன் எண்ணினன். அவனேடு பேசிக்கொண் டிருக்காமல் எழுந்து எங்காவது ஓடிவிடுவோமா ? என் றிருந்தது 5டராஜனுக்கு.
 


Page 169
கொழுகொம்பு 334
சற்றுத் தயங்கிய நடராஜன் பிறகு கம்மிய குரலிற் சொன்னன்; 'ஏதேதோ இன்புக்கனவுகளில் மிதந்து கொண்டிருந்த 5 ரங் கள் குறைக்காற்றிலடிபட்ட துரும்புபோலத் திசைதப்பி ஆளுக்கொரு திக்காற் போய்விட்டோம். அப்படியும் கான் இப்போது ஒரளவு நிம்மதியுடன் வாழ்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கை கனகத்திற்குக் கிடைக்கும் வரையிலும் கான் ஊருக்கு வரப்போவதில்லை; சத்தியமாக வரப்போவதில்லை."
‘அப்படியானல் நீ இன்னமும் கனகத்திற்காகத்
தானு வாழுகிருய்?
அப்படியில்லை; அவளுக்காகவும் வாழவேண்டி யிருக்கிறது எண்முன் நடராஜன்.
சரிதான், அப்படியானல் நீ வாழ்ந்த மாதிரித் தான், 15டராஜா இந்தச் சிக்கலிலும் குழப்பத்திலும் மாட்டிக்கொண்டால் உன் வாழ்க்கை அமைதி கெடுமே ஒழிய உருப்படியான பலன் ஒன்றும் ஏற்படாது, கன கத்தைப்பற்றிக் கவலைப்பட இனி காங்கள் இருக் கிருேம். இனி நீ உன்னைப்பற்றி உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படு, அவர்கள் இன்னமும் நீண்ட காலம் உலகில் வாழவேண்டும் என்று கவலைப்படு' என்ருன் செல்லன்.
அவர்களைப்பற்றி ஏன் இப்போது கவலைப்படவேண் டும்? அவர்களுக்குத்தான் நான் எங்கே எப்படியிருக் கிறேன் என்பது கன்முகத் தெரியுமே, அப்பா இப் போது என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய நியாய மில்லையே:
کرد:

325 கொழுகொம்பு
'நீ அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிருய் போல இருக்கிறது (5டராஜா. நீ உன் பிதா மாதாக் களுக்கு ஒரே மகன். நீ (5டத்தும் குடும்ப வாழ்க்கை யைக் கண் முன்னே கண்டு களிப்பதற்கு அவர்களுக்கு எவ்வளவு ஆசையாக இருக்கும். அதை எண்ணிப்
Ti.
‘என் வாழ்க்கையைக் கண்டு மனங் குமுறுவதற் கும் அங்கே ஒருத்தி இருக்கிருள். அதையும் கான் எண்ணிப்பார்க்க வேண்டும்,
செல்லனுக்குக் கோபம் வந்துவிட்டது. வேகத் தோடு அவன் சொன்னன்: ‘கடராஜா! நீ எல்லோரைப் பற்றியும் பிழையாக எண்ணிக்கொண்டிருக்கிருய். நீ கனகத்தின் கணவனுகி விடவில்லை என்ற காரணத் திற்காக உன் வாழ்வைக் கண்டு பொருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மனம் எங்களில் எவருக்குமே கிடை யாது. என் மூக்கு அறுபட்டாலும் சத்துராதிக்குச் சகுனப்பிழை உண்டாகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கான் உன்னைத் தேடிக்கொண்டு இங்கே வந்திருக்க மாட்டேன். நீ வேறு பெண்ணை மணம் முடித்துவிட்டாய் என்று அறிந்தபின்பும் உன்னேடு முகம் கொடுத்துக் கதைத்திருக்கமாட்டேன். எதை யெதையோ எண்ணிக்கொண்டிருக்கும் உனக்கு இதை யெல்லாம் எப்படி விளக்குவது என்பதுகூட எனக் குத் தெரியவில்லை. நீ பிரிந்துபோனபிறகு எங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் உனக்காக எவ் வளவு வேதனைப்படுகிருேம் என்பது ஆண்டவனுக் குத் தெரியும், உன்னே எப்போது திரும்பிக் காணப் போகிருேம் என்ற எங்கள் மன ஆவலையும் அவன்

Page 170
கொழுகொம்பு 336
صحيحصلحصحصحص حصحصحصحصحص صاح عدد
தான் அறிவான் | எப்படியும் உன்னைக் கூட்டிக் கொண்டு போகாமல் நான் இவ்விடத்தை விட்டு 15க ரப் போவதில்லை.
செல்லன் உணர்ச்சியோடு பேசிமுடித்தபின் கட ராஜன் அமைதியாகச் சொன்னன்: 'அதற்கென்ன இங்கே இருந்துவிடேன்
*ஆம் இருக்கத்தான் போகிறேன். ஆனல் உன் னேடு அல்ல; எனக்குக்கிடைத்த புதுத் தங்கையோடு என்ருன் செல்லன்
எப்படித்தான் இருப்பினும் நடராஜன ஊருக்கு வரும்படி சம்மதிக்கச்செய்யச் செல்லனல் முடியவில்லை. இப்படியே அன் றைப்பொழுதும் கழிந்து விட்டது.
அன்றிரவு செல்லன் நடராஜனிடம் சாந்தமாகக் கேட்டான்: ‘உன்னைப்பற்றிய எல்லா விஷயங்களும் உன் மனைவிக்குத் தெரியுமா?
15ன்முகத்தெரியும். நான் எல்லாவற்றையுமே சொல்லியிருக்கிறேன்' என்ற நடராஜன் அதைத் தொடர்ந்து தான் பிலோ மி ன வை மனைவியாக்கிக் கொள்ள நேரி" கதை முழுவதையுமே செல்லனுக் குச் சொன்னுன்
அந்தக் கதையைக் கேட்டுவிட்டுச் செல்லன் அவனை மனமாரப் பாராட்டினன். நீ இன்னமும் கனகத்தை எண்ணிக் கலங்கிக்கொண்டி ருந்தால் அது அபலையான பிலோமினுவுக்கு நீ செய்யும் மகத்தான மன்னிக்க
 

32? கொழுகொம்பு
முடியாத துரோகமாயிருக்கும்' என்று புத்தி புகட்டி னன். ஊரிலே உன்னேக் காண்பதற்கு எல்லோரும் ஆவலோடிருக்கிருர்கள். இக் நிலை யில் நீ பிலோமினு வோடு ஊருக்கு வந்தால் உன் எதிர்காலம் எவ்வளவோ 15 ன் ரு க விருக் கும்' என்பதை நயமாக எடுத்துச் சொன்னுன்
செல்லனின் பேச்சுக்களை எல்லாம் கேட்டுக்கொண் டிருந்த பிலோமினவுக்கும் அவன்மேல் ஓர் அலாதியான பிரிதி உண்டாயிற்று. இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா?’ என்று அவள் எண்ணிக்கொண்டாள் ஆனல் (5டராஜனை வெறுப்பதா, விரும்புவதா என்ற புரியாத குழப்பத்தில் மூழ்கிக்கொண்டு செயலற்றுப் போயிருந்தாள்.
தன் பேச்சு ஏதுமே கடராஜனிடம் எடுபடாத தைக் கண்ட செல்லன், கடைசியாகப் பிலோமினுவிடம் பேசிப் பார்ப்பதெனத் தீர்மானித்தான்.
பிலோமினு செல்லனை ஒர் உத்தமன் என்று மதித் தாள். பகைவனுக்கருளும் அவன் கன்னெஞ்சைப் பாராட்டினுள். ஆனுலும் அவள் வேண்டுகோளுக்கு விடுக்கக்கூடிய பதில் அவளுக்கே திருப்தியளிக்கவில்லை. 'எனக்கென்ன இருக்கிறது; அவர் வருவதாக இருந் தால் எங்குபோகவும் எனக்குத் தடையில்லை. ஆனல் ஊருக்குப் போவோம் என்று அவரைக் கேட்கவும் நான் விரும்பவில்லை' என்று அவள் செல்லனிடம் அழுத் தமாகச் சொல்லிவிட்டாள்.

Page 171
கொழுகொம்பு 328
-o-o-o-o-o-o-o„ سمبرطحسمبرطحسمبر
இப்படியே கான்கு நாட்கள் ஓடிவிட்டன. அவர் கள் மூவரும் மூலைக்கொருவராகக் குங்திக்கொண்டு தங்கள் தங்கள் பாட்டிற்கு யோசிப்பகிலேயே காலம் கழிந்துகொண்டிருந்தது செல்லனுக்கு 15ம்பிக்கையிருங் தது. (5டராஜனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. பிலோமினுவிற்குத் தன்னிற்தானே வெறுப் பாயிருந்தது.
இந்தச் செயலற்ற குழப்பத்தில் அவ்வீட்டின் இன்பமே எங்கே ஓடிவிட்டது.
ஒருநாள் செல்லனும் 5டராஜனும் வெளியே சென்
றிருந்தார். வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அங்கே பிலோமினுவைக் காணவில்லை.

46
கொழுகொம்பு
'LDணவாழ்க்கை என்பது நாளுக்கு நாள் புதிது புதிதாக மலர்ந்த கொண்டிருக்கும் வாழ்க்கை அற்புதம் என்று ஒர் ஆங்கிலர் கவிஞன் பாடினன். மணமான புதிதில் நடராஜனின் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது. நாளுக்கு நாள் புது உற்சாகம், புது மலர்ச் சியாகக் கழிந்த அவன் வாழ்க்கை கனகத்தின் கடிதத் தைக் கண்டபிறகு மலர்வதை மறந்துவிட்டது. செல்ல னின் வருகைக்குப் பிறகு கூம்பியே விட்டது.
மூன்று கான்கு நாட்களாக முகங் கொடுத்துப் பேசிக்கொள்ளமாட்டாமல் மூலைக்கொ ரு வ ரா க ப் பிரிந்துகொண்டிருந்த நடராஜனும் பிலோமினுவும் வாழ்க்கையின்பத்தை இழங்தே விட்டனர். செல்லனின் வரவால் அவர்கள் வாழ்க்கை தொட்டாச்சிணுங்கிப் பற்றையைப்போலச் சுருங்கியே விட்டது.
இந்த நிலையிலே அன்று காலை தன் உத்தியோகத் துக்குப் புறப்பட்டுப் போன நடராஜன் திரும்பி வருகையில், வெளியேபோயிருந்த செல்லனும் அவனேடு சேர்ந்துகொண்டான். இருவரும் வீட்டுக்கு வந்துபார்க் கையில் அங்கே வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அதைப் பார்த்ததும் நடராஜனுக்குப் பகீர் என்றது! அவன் எதிர்பார்த்த பயங்கர நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும் என்று அவன் மனம் தடாரென்று எண்ணிக்கொண் டது (5டராஜன் திரும்பிச் செல்லனேப் பார்த்தான்.
42

Page 172
கொழுகொம்பு 330
அந்தப் பார்வை வெறுப்பைக் கொட்டியதா ஆற்ரு மையைப் பிரதிபலித்ததா? என்று செல்லனுக்கு விளங்க
செல்லன் வீட்டைச் சுற்றித் தேடினன், பயன் இல்லை.
கடராஜன் வீட்டுக் கதவை உடைத்துத் திறங் தான். அங்கே பொருட்கள் எல்லாம் வைத்தது வைத் தது மாதிரியே இருந்தன. அவசரமாக அங்குமிங்கும் தேடிப் பார்த்த நடராஜன் கண்ணில் அவன் பேருக்கு விலாசமிடப்பட்ட கடிதம் ஒன்று கண்ணிற்பட்டது. நடராஜன் அந்தக் கடிதத்தை எடுத்துப் பரபரப்போடு படிக்கத் தொடங்கினன். பிலோமினு அந்தக் கடிதத் தின் வரிகளில் கரந்திருந்து அழுதாள்.
இராசா!
தங்களுக்கு கான் எப்போதாவது கடிதம் ஒன்று எழுதவேண்டி யிருக்கும் என்று கணுக்கூடக் காண வில்லை. ஆனல் எனது முதற் கடிதமே கடைசிக் கடித மாக அமைவதையிட்டு என்னுற் கண்ணிர் வடிக்காம லிருக்கவும் முடியவில்லை.
'மனித வாழ்க்கையை' நின்முன், இருந்தான், கிடக் தான், தண்கேள் அலறச்சென்ருன்' என்று ஒரு சில சொற்களில் முடித்துவிட்டார்கள் சமண முனிவர்கள். நீங்கள் மட்டும் என் வாழ்க்கையிற் குறுக்கிட்டிரா விட்டால் எனது வாழ்க்கையும் அப்படித்தான் முடிங் திருக்கும். ஆனல் அப்படித் தென்னை மட்டையைப் போல உணர்ச்சியற்று வீழ்ந்து அழியாமல் முழு மனுஷி யாக இன்றைக்கு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்ருல், எனக்கு அந்தப் பூரண வாழ்
 

3.31 கொழுகொம்பு
வைத் தங்க தங்களுக்கு 5ன்றி செலுத்தாமல் என் ணுல் இருக்கமுடியவில்லை.
ஆம், இளமை தொடக் க ம் இ ன் பத் தி ன் வாடையே வீசாது வளர்ந்த என் வாழ்க்கையின் பிற் பகுதி தங்கள் ஒட்டுறவினுல் பூரணமடைந்தது. உலக வாழ்க்கையிற் பெண்ணுெருத்தி எந்த இன்பத்தை எதிர்பார்ப்பாளோ, அந்த இன்பத்தை நான் அடைந்து விட்டேன். அந்த்ப் பொற்காலம் குறுகியதானுலும் அது அநித்தியமானது. நான் எந்த உலகிலிருப்பினும் அது என் மனத்தைவிட்டு அந்த இன்பம் சாகாது.
ஆணுல் அந்த இன்பத்தை இன்னமும் சகித்துக் கொண்டிருப்பது எனது சுய5லமாகவே இருக்கும்; என் சகோதரி ஒருத்திக்குச் செய்யும் துரோகமாக இருக் கும் அதுமட்டுமல்ல, உங்கள் மனத்திற்கும் அது தீராத உளைச்சலாகவே இருக்கும்.
நெடுங்காலங்தொட்டு 'நீ வாழ்வதுடன் பிறரையும் வாழவிடு' என்பதுதான் தமிழனின் சிறந்த பண்பா டாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உன்னத மான இலட்சியத்திற்கு ஒர் இழுக்காக கான் வாழ விரும்பவில்லை.
என்முன்னுல் இப்போதிருக்கும் பிரச்சினை கனகத் துக்காக நான் வாழுவதல்ல. கனகத்தை - வாழவிடு' என்பதுதான். உங்களிருவரையும் வாழ விடுதற்காக நான் வாழாமலிருப்பது தர்க்கவாதத்திற்குக் கூடப் பொருத்தமானதுதான். ஏனென்ருல் என் வாழ்வைப் பூரணப்படுத்தினிர்கள் என்று ஏற்கனவே குறிப்பிட் டேன் அல்லவா? அந்த உபகாரத்திற்கு கான் பிரதி யுபகாரம் பண்ண வேண்டாமா?

Page 173
حسیمی
கொழுகொம்பு 332
ஆனல் என் தர்க்கவாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும் ஏனென்ருல் எந்தச் சிறிய சம்பவமும் தங்களைக் கெதி யாக உணர்ச்சிவசப்படச் செய்துவிடுகிறது. இரக்கம் மிகுந்த மனம், உணர்ச்சிவசப்பட்டபின், தாங்கள் தீர்மானிப்பது சரியாயிருந்தாலும் பிழை என்ருலும் அத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒரு தீவிரங் கொண்டுவிடுகிறது. அதன் பலாபலன்களை அலசிப் பார்ப்பதில்லை. அதை எண்ணும்போது என் செய்கை யும் தங்கள் மனத்தை எப்படிக் குழப்புமோ என் றெண்ணித்தான் கான் பயப்படுகிறேன்! என் கடைசி நேரத்தில் மனத்திலே எந்தக் களங்கமுமின்றிச் சொல் கிறேன். 'உண்மையாகவே கான் இந்த முடிவுக்கு வங் தது கனகமும் நீங்களும் மனச் சமாதானமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தினற்தான். என் கடைசி ஆசையை நிறைவேற்ருவிட்டால் அந்தப்பாவம் உங்களைச் சும்மாவிட்டு விடாது' என் தாயார் இறந்த நேரத்தில் எனக்கு அடைக்கலங் தந்ததுபோலவே என் கடைசிக் காலத்திற் தாங்கள் துணையாக இருக்க வேண்டும் என்று தங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள் கிறேன்.
நீங்கள் கொஞ்சம் பொறுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். கனகம் உங்களுக்காகப் பிறந்தவள். நான் தற்செயலாகத் தங்கள் வாழ்விற் குறுக்கிட்டவள். நான் எப்படிக் குறுக்கிட்டேனே அப்படியே பிரிந்தும் போ கிறேன். என் பிரிவு தங்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கிறது என்பதை எண்ணிக்கொண்டு கான் மிகுந்த மனநிறைவோடேயே பிரிகின்றேன். அதைப் பற்றிக் கவலைப்பட என்ன இருக்கிறது.
 

கொழுகொம்பு
۳۔یہ^"سمیہ**بسمبر
தங்களைச் சமாதானப்படுத்த எதையெதையெல் லாம் பூசி மெழுகுகிறேன் என்று எண்ணுகிறீர்களா? நிச்சயமாக அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உண்மை யைத்தான் எழுதுகிறேன்.
'கான் செத்தேன் என்று தக்கப்படுவதைவிட, ஏன் செத்தேன் என்று எண்ணிப்பார்க்தால், தங்க ளுக்கு அப்படி எண்ணிப்பார்ப்பதற்கு ஒரு தடைய மாகத்தான் இதை எழுதுகிறேன்.
ஆம், கான் ஏன் சாகிறேன்? நன்முக நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
கனகம் ஏன் தங்களுக்கு அழுதழுது கடிதம் எழுதினுள்? அதையும் எண்ணிப்பாருங்கள்.
'இரண்டையும் நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களா னல் நீங்கள் வாழவேண்டியதின் அவசியத்தை வாழ்க் கையிற் தாங்கள் செய்யவேண்டியிருக்கும் ஒரு மகத் தான சேவையின் தேவையை உணர்வீர்கள். அந்தத் தேவைக்காக வாழ்வீர்கள், வாழவேண்டும் என்று விரும்புவீர்கள்.
கான் ஏன் சாகிறேன்? கனகம் வாழவேண்டும் என்பதற்காக’ என்று ஏற்கனவே பதில் எழுதிவிட் டேன். அவள் வாழ்வதானுல் கான் ஏன் சாகவேண்டும் என்று கேட்பீர்களா? கான் பிரிந்து போவதுதானே என்று நினைக்கிறீர்களா? .
கல்ல கேள்விகள்தான். உண்மையாகவே என்னுற் பிரிந்துகொண்டு தனியாக வாழ்க்கை கடத்த முடியு மாயின் கான் சாகவேண்டிய தேவையே இராது. ஆணுற் சமூகத்தில் அப்படி கான் வாழ முடியுமா?

Page 174
கொழுகொம்பு 334
حصر حصحصحصیح سمصر
A^-^-~- v ->-->-"
கனகமும் அப்படித்தான். என்னை வாழவிட்டுக் கனகம் தனித்து வாழ முடியுமா?
எங்களில் யாராவது ஒருத்தர் வாழவேண்டும்: அதற்கு ஒருவர் சாகவேண்டும்; இல்லாவிட்டாற் செத்துக்கொண்டிருக்க வேண்டும். செத்துக்கொண் டிருப்பதை விடச் சாவது மேலல்லவா?
ஆம், கமது சமுதாயம், அதன் செம்பாதியான பெண்களை, தன் பலத்தில் நிமிர்ந்துநிற்கத் திராணியற் றவர்களாகத்தான் காலங் காலமாக வைத்துக்கொண் டிருக்கிறது அவர்கள் கொடிகளாம் அந்தக் கொடி கள் படரக் கொழுகொம்பு அவசியமாம் என்று என் னவோ எல்லாம் பேசிக்கொண்டு வருகிறது. மதவாதி கண்ணுக்குத் தெரியாத மோட்சத்தைக் காட்டிக் காட்டி (5ாளும் பொழுதும் மனிதர் கூட்டத்தைச் சாவ தற்குத் தயார் பண்ணுவதுபோலவே பெண்களுக்கும் காதல் என்ற மோட்சத்தைக் காட்டி, ஆண்கள் அவர் களைச் சாவுக்குத் தயார் பண்ணி வருவதே எங்களினத் தின் சரித்திரமாக இதுவரைக்கும் இருந்து வருகிறது. இந்தப்போக்கு மாருவிட்டால், மாற்ருவிட்டால் காங் கள் சாவதையும் தங்களாற் தடுக்க முடியாது.
பெண்களெல்லாம் வ ரிங் து கட்டிக்கொண்டு கையிலே வாள் பிடித்து வீராங்கனைகளாக, ஆண்க ளோடு எல்லாவற்றிலும் சரிநிகர் சமானமாக 6) Ո է0 . வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆண்துணை கிடைக்காவிட்டாலும் காட்டிலே தனித்தியங்கக்கூடிய ஒரு நிலையைத்தான் கான் வேண்டுகிறேன். காந்தி மகாத்மா குறிப்பிட்டதுபோல எந்தப் பெண்ணும்
 

385 கொழுகொம்பு
میر حسببیہہ سی۔۔حسببیہہ سیارہ
எந்த நேரத்திலும் தன்னங் தனியனுகத் தெருவிலே கடக்கக்கூடிய ஒரு புதிய சமுதாய அமைப்பைத்தான் நான் கேட்கிறேன். அப்படியான ஒரு சூழலை உண்
டாக்காதவரை என் பிரிவுக்காகத் துக்கப்பட்டால் அதிலே அர்த்தமேயில்லை. இப்படியான ஒரு சமுதாய
அமைப்பை உண்டாக்குவதற்காக நீங்கள் பாடுபடுங் கள். அதற்குக் கனகத்தையும் துணேயாகச் சேர்த்துக்
கொள்ளுங்கள். அந்தப் புதிய சமுதாயத்தைச் சிருட் டித்தபின் வேண்டுமானுற் கனகத்தை துரத்திவிடுங் Jb6ኽT .
ஆண்கள் மனத்தை அப்படித் தூய்மைப்படுத்த முடியாவிட்டால் எந்தப் பெண்ணின் கடந்த கால வாழ்வைப்பற்றி விசாரிக்காமல் இருங்கள். அகராதி யிலிருந்து கற்பு என்ற வார்த்தையையே விலக்கி விடுங் கள். பெண்களின் கடைசிக் காதலுக்கும் மதிப்பளி யுங்கள். இல்லாவிட்டால் எங்களைச் சாக அனுமதி யுங்கள்! அதைவிட்டு வேலி பயிரை மேய்வதுபோல எங்களுக்குக் கொழுகொம்பு' என்று பெருமைப் பட் டுக் கொண்டிருக்கும் நீங்களே எங்களை நாசமாக்கா தீர்கள்.
என் சக்திக்கும் மேலாக எதையோ எழுதி விட் டேன் போல இருக்கிறது. எல்லாம் கான் சாகாமல் இருந்தால் என்ன? என்று நான் சிந்தித்ததின் விளைவு!
என் எண்ணம் எப்போதாவது 5  ைட முறைக் கு வருமோ என்னவோ? ஆஞற் கடைசி முறையாக
மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன், என் ஆசைகள் எல்லாம் நிறைவேறவிட்டாலும் நீங்கள் கனகத்தைக் கைவிட்டுவிடாதீர்கள், என்னையுங் தேடாதீர்கள். உங்

Page 175
கொழுகொம்பு 336 حرحرحل
* *****صحمحصبح صبرہ۔
கள் கண்ணிற் படாமலே நான் போய்விடுகிறேன். என் பிரேதத்தைக்கூட நீங்கள் காணமுடியாதவாறு
நான் சாகிறேன்.
பிலோமினவின் கடிதத்தைப் பார்த்த நடராஜ னுக்குத் தலையிலே இடி விழுந்ததைப்போல இருந்தது. சுவரிலே தலையை முட்டிக்கொண்டு அழுதான்.
இதற்குள் செல்லனின் கடிதத்தைக் கண்டு மூதூரி லிருந்து புறப்பட்டுக் கங்தையாவும், அவர் தங்கையும் அங்கே வந்திருந்தார்கள். நடராஜன் அவன் தாயின் மடியிற் குழந்தையைப்போல விம்மி விம்மி அழுதான் !
அதன்பிறகு பிலோமினவுக்குக் கொழுகொம்பு கிடைத்திருக்கும் என்று 15ான் எழுதத்தேவையில்லை. ,
அவளுக்குக் கொழுகொம்பு கிடைத்தால் மட்டும் போதுமா? பிலோமினுவின் கடைசி ஆசையான புதிய சமுதாயம் உருவாவதற்கு 15டராஜன் தனித்து என்ன செய்வது? எல்லாரின் மனமுமல்லவா மாறவேண்டும் அந்தப் புதிய சமுதாயங் தான் பெண்களின் உண்மை யான கொழுகொம்பு.
முற்றும்
 
 
 


Page 176
石 左
 
 

噴劑 就)
-劑

Page 177