கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதியார் பாடல்கள்

Page 1

ভূঞাrés
اس سے سہتے ہی رہی

Page 2

இது కvaha #
ཡོད། }. f تیو· பாரதியார் பாடல்கள்
پیشہ qa کہتے
A A.
Α.
GT Y
یے۔محم&"?
;("'"تغییم
(க, பெஈ, த, (சாதாரன) பரீட்ஸ்4:45- 1966
Svariane glogari பதவுரையும்டி உவமான உவமேய விளக்கமும்
செய்யுள் கயமும் கொண்ட
: புதிய வெளியீடு. ܓܥܠ ܠ ܐ ܕܝ1 . s' "' - '4%ש.
Sる。 . . . .
۲۹:م
C,^*擔r, 1 ܐܬܼ
கிழி:tis, 。
".
মািণ翡30
勒
(கான்காம் பதிப்பு)
1965
ఇది es ut 2-00

Page 3
பிறந்த அன்றே 蠱 பெற்ற அன்னையை இழந்த என் மேல் நிறைந்த அன்பைச் சொரிந்து சைவத் தமிழ்ப்பற்றும் ஈரல்யும் தழைக்க
ഖങ്f്ള வாழ்வு தந்த என்னருமைத் தந்தையார் ,',!( } ممبر 6۔
தளையசிங்கம் கனகசபை அவர்களுக்கு நன்றிக் காணிக்கையாக இந்நூல் உரையின
கல்தகன்றேன். t
5&ు ఈడితాmడి,
sigildLic, க. வேந்தனுர்
5-6-6.
 
 

"அ" _Siva •hjkarn
பதிப்புரை
her-armon
a
്ങുക), கல்விப்பகுதியாரால் 1965 - 1966 உள்ள காலங்களில் நிகழவிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணம்) தேர்வுக்குக் குறிக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாரதியார் பாடல்களுக்குப் பதவுரையும் செய்யுள் நயமும் கொண்ட புதியதோர் விளக்கவுரை எழுதி வெளியிட வேண்டுமெனப் பல ஆசிரிய நண்பர்களும், மாணவர்களும் நேரில் வந்தும், கடிதவாயிலாகவும் எம்மைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் விருப்பத்தை நிறை வேற்றும் வண்ணம் பரமேசுவரக் கல்லூரித் தமிழ் விரி வுரையாளர் வித்துவான் திரு. க. வேந்தனர் அவர்களை ஊக்கினுேம், அவர்கள் பாரதியாரின் கவிதையுள்ளத்துடன் கலந்து நுகர்ந்து, நுகர்ந்து மிகச்சிறந்ததோர் விளக்கவுரையினை எழுதி உதவினுர்கள். -
பாரதியாரின் பாடல்களுக்கு வித்துவான் அவர்கள் எழுதிய நயம், மாணவர்களுக்குப் புதியதோர் இலக்கிய விருந்தாகப் பொலிகின்றது. எளிமையும், இனிமையும், உணர்ச்சி வீறும் கொண்ட பாரதியார் பாடல்களே, எங்ஙனம் நுகர்ந்து நுகர்ந்து சுவைக்கலாம் என்பதற்கோர் வழி காட்டியாக வித்துவான் அவர்களின் விளக்கவுரை விளங்குகின்றது.
வித்துவான் அவர்கள் எழுதிய கும்பகர்ணன் வதைப் படலம், இந்து சமய பாடம், சுந்தரகாண்டம் விளக்க வுரை என்னும் நூல்களுக்குப் பேராதரவு நல்கி எம்மை ஊக் கிய ஆசிரியர்களும், மாணவர்களும் இந் நூலினையும் ஆதரிப் பார்களென எதிர்பார்க்கின்ருேம்,
–— I. i 5èäa H.Eir Grx:Tii,

Page 4
R.
பொருளடக்கம்
பக்கம்
1. பாரததேசம் * 参● • • • ' ' l' .....................= 18 2. நடிப்புச் சுதேசிகள் ** ... 19 - 35 3. சுதந்திரப் பெருமை se pas ... 86 - 4:5 4. சுதந்திரதேவியின் துதி . ... 46 as 59 5. புதுமைப் பெண் 8 Oe • • , 60 -76 -سي 6, தொழில் p . 82 سس 77 ه م 7 தமிழ்த் தாய் 89e ... 83 - 96 8. தமிழ் ᏫᏱᏬᏱ ᏮᏍ ... 97 - 106 9. மூன்று காதல் a 4 ... 107 - 125 10 (f('?') . . . [ 14 + 26؟[ 11. முரசு ... • • • 42 سسست H8%2
 

பாரதியார் பாடல்கள்
1. LI TJg5 (35 Fluid
பாரததேசம் என்பது இந்தியா முழுமையையும் அகப் படுத்தி நிற்கும் தொடராகும். பாரதியார் தமது கவிதை யுல கில் சுதந்திர பாரத தேசத்தைப் படைத்து மிகப் பெருமிதங் கொள்கின்றர் அடிமைப் பாரதத்தில் வாழ்ந்து, பாரத மக்கள் படும் அல்லல்களைக் கண்டு ஆவி துடித்த பாரதியார், அந்த அடிமைப் பாரதத்தையே சுதந்திர பாரதமாகக் கற்பனை செய்து பாடிய கவிதைகளை, இப் பாரததேசம் என்னும் பகுதி யில் காண்கின்றேம். கவிதைகளின் ஓசை எழுச்சியும், பெரு மித நடையும் பாரதியாரின் உரிமை வேட்கையையும் தாய் நாட்டுப் பற்றையும் புலனுக்குகின்றன.
இராகம்-புன்னுகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
பொருள்:-பார்த தேசமேன்று பாரத தேசந்தான் எங் கள் தாய்த் திருநாடென்று, பெயர் சொல்லுவார். (நிறைந்த பற் றுடன்) அதன் பெயரைச் சொல்லுபவர்கள், மிடிப்பயம் . வறுமை எம்மை வருத்துமோ என்றேன்னும் அச்சத்தை, கோல்லுவார் கொல்கிறவர்கள் (இல்லாமல் அழிக்கின்றவர் கள்) ஆவார், துயர்ப்பகை - துன்பமாகிய பிகையையும், வெல் லுவார் வெற்றிகோள்வார்.
விளக்கம்: பாரததேசம் என்னும் தாய்த் திருநாட்டின் பெயரை உண்மையான பற்றுடன் கூறுகின்றவர்கள் உள்ளத் தில் வறுமைப் பிணியினுல் வருந்த நேருமோ என்ற அச்சமும், வாழ்க்கையில் ஏற்படுகின்ற பலவேறு வகைப்பட்ட துன்பங்களி

Page 5
"u"
했 பாரதியார் பாடல்கள்
னுல் உண்டாகும் தாக்கமும் உளவாகா என்பதாம். தாய்த் திருநாட்டில் உண்மைப் பற்றுடையவர்கள் சுதந்திரப் போரில் குதித்துச் செயலாற்றும்பொழுது, உளவாகும் வறுமை, துன்பம் என்பவற்றை வென்று விடுதலைபெற முனைந்து நிற்பார்கள் எனும் உண்மையைப் பாரதியார் பல்லவியில் தோற்றுவாய் செய் கின்றர்.
சரணங்கள்
3 வெள்ளிப் பனிமலேயின் மீதுலவு வோம்; அடி
மேலேக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்; பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டு வோம் (பாரத)
பொருள்: அடி - பெண்ணே; வெள்ளிப் பனிமலையின் - வேள்ளிபோல விளங்குகின்ற பணியால் ழடுண்டு கிடக்கும் இமயமலையின், மீது - (மேல்) உச்சியில், உலவுவோம் - (மன வலிமையுடன் முயன்று ஏறி உலாவித் திரிவோம், மேலைக் கடல் முழதும் - பாரதநாட்டின் மேற்குத் திசையில் உள்ள அர பிக்கடல் எங்கும், கப்பல்விடுவோம் கப்பல்களைச் செலுத் திச் செல்வோம் (சென்று வாணிபஞ் சேய்வோம் என்பதாம்). பள்ளித்தலம் அனைத்தும் பள்ளிக்கூடங்களை எல்லாம், கோயில்சேய்குவோம் - கோவில்களைப்போல மதித்து ஆக்க முறுத்துவோம். எங்கள் பாரததேசம் என்று - எங்கள் தாய்த் திருநாடு பாரததேசம் என்று சொல்லி, தோள்கோட்டுவோம் - அங்ங்னம் தாய்த்திருநாட்டின் பேயரைச் சொன்னதினுல் வளர்ந்து எழச்சிகோண்ட) தோள்களைத்தட்டிப் பெருமிதங் (Sg5rgii (36) Tib.
விளக்கம்: சுதந்திர பாரதத்தின் மக்களாகிய நாம் மனத் திண்மையும், ஊக்கமும் கொண்டவர்களாய் வட இமயத்தின் உச்சியின்மேல் ஏறிச்சென்று உலாவுவோம். பாரதநாட்டின் மேற்கே உள்ள அரபிக்கடல் எங்கும் பாரதநாட்டின் கப்பல்களை இடைவிடாமற் செலுத்தி வாணிபஞ் செய்யும் பெருமுயற்சியில் ஈடுபட்டு உழைப்போம். இங்ங்னம் மலேயையும், கடலையும் பாரத
 
 

விளக்கவுரை 3
மக்கள் தம் முயற்சியால் வென்று ஆட்சிபுரிய வேண்டுமெனப் பாரதியார் ஊக்கமும் உரமும் ஊட்டுகின்றர்.
இனி, மலையாட்சியும், கடல் ஆட்சியும் பெற்ற பாரத மக் கள் கலை ஆட்சியிலும் மேம்பட்டவர்களாக விளங்க வேண்டும் என்பதே பாரதியாரின் பேரார்வமாகும். பாரத நாட்டில் கோவில் களுக்குப் பெருமதிப்புக் கொடுக்கின்றது போலவே, பள்ளிக் கூடங்களையும் மதித்து ஆக்கமுறுத்தவேண்டும் என்பதாம்.
பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்கு வோம் ன்னப் பாரதியார் மிக ஆர்வத்துடன் கூறுகின்றர்.
வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி
எனவரும் பாரதியாரின் பாடற்பகுதிகளையும் நோக்குக.
இனிப் பள்ளித்தலம் அனைத்தும் கோயில்செய்கு வோம், என்பதற்குப் பள்ளிக்கூடங்கள் (கல்லூரிகள்) உள்ள இடங்களில் எல்லாம் சமயவழிபாட்டுக்குரிய கோவில்களையும் அமைத்துக் கலை உண்ர்ச்சியுடன் கடவுளுணர்ச்சியையும் ஊட்டு வோம் எனவும் பொருள் கொள்ளலாம்.
2 சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைங் ாோம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)
பொருள்: சிங்களத் தீவினுக்கு - சிங்களத்தீவு என்று சொல்லப்படுகின்ற இலங்கைக்கு, (அதனை இந்தியாவுடன் இணைத்து) ஒர் பாலம் அமைப்போம் - பாலம் ஒன்று கட்டு வேகம், சேதுவை (தனுஷ்கோடிக்கும் தலைமன்னுருக்கும் இடையில் உள்ள) சேது என்னும் (இராமர்) அணையினை

Page 6
"-
4 . பாரதியார் பாடல்கள்
மேடுறுத்தி - உயர்த்தி, வீதி சமைப்போம் தெரு அமைப் போம், வங்கத்தில் - வங்காளத்தில் நின்று, ஒடிவரும் பெரு கிப் பாய்ந்து வருகின்ற, நீரின் மிகையால் - கங்காநதியின் மிகு தியான நீரால், மையத்து நாடுகளில் - இந்தியாவின் மையத் திலே (நடுவில்) உள்ள நாடுகளில், பயிர் செய்குவோம் - (நெல் முதலிய) பயிர் வகைகளை உண்டாக்குவோம்.
விளக்கம்: இக்கவிதையிலே, பாரதியாரின் கவிதை உள் ளத்திலே உருவாகும் செயல் திட்டங்களைக் காண்கின்ருேம்.
இந்தியாவுடன் இலங்கையை இணைத்து ஒன்ருக்கிவிடப் பாரதியார் திட்டம் தீட்டுகிறர். தாய்காடாகிய இந்தியாவுடன் சேய்காடாகிய இலங்கையை, சேரவிடாமல் இடையே நின்று பிரிக்கின்ற சிறுகடலைப் பாலத்தினுல் இணைத்துவிட்டால் ஏற் படும் பயன் பெரிதென்பதே பாரதியாரின் எண்ணமாகும். சைவம் புத்தம் என்னும் சமயங்களாலும், தமிழ் சிங்களம் என்னும் மொழிகளாலும் தாய்நாடாகிய இந்தியாவுடன் இணைந்து கிடக் கின்ற சேய்காடாகிய இலங்கையை நிலத்தினுலும் இணைத்து விட எண்ணுகின்ற பாரதியாரின் கவிதை உள்ளத்தின் அகல மும் ஆர்வமும் மிகமிகப் பாராட்டற்குரியதாகும். பாரதியாரின் கவிதைக் கனவு இன்றைய விஞ்ஞான உலகில் நனவாகச் செயற் படவுங் கூடும்.
இத்துடன் அவரின் கவிதை உள்ளம் அமைந்துவிடவில்லை. சேது என்னும் அணையை நன்குயர்த்தித் தெருவீதி அமைக்கவும் திட்டம் வகுக்கின்றர். இங்ஙனம் பாலமும், வீதியும் அமைத்த பாரதியார் மத்திய இந்தியாவிற்கு ஓர் நீர்ப்பாய்ச்சல் திட்டம் அமைத்துப் பயிர் செய்யவும் முயல்கின்ருர், வங்க நாட்டில் பாய்கின்ற கங்காநதியின் நீரை மறித்துத் திருப்பி மத்திய இக் தியாவில் பாய்ச்சி, பயிர் செய்யவேண்டுமென்னும் பாரதியாரின் திட்டம், அவரின் சிந்தனைத்திறனைக் காட்டுகின்றது. இன்று நீ ரின்றிவரண்ட நிலப்பகுதிகளுக்கெல்லாம் ஆற்றுவெள்ளத்தைவிஞ் ஞான வசதிகளால் பாய்ச்சி, வளம்படுத்தும் வழிகள் பல நாடுக ளிலும் மேற்கொள்ளப்படுதலைக் காண்கின்றுேம்; இங்ஙனம்
 

விளக்கவுரை 5
பாரதியாரின் கவிதை உலகக் கற்பனைகள் எல்லாம் அரிய பெரிய விஞ்ஞான சாதனைகளாகச் செயற்படுவதை எண்ண எண்ண அவ ரின் கவிதையுள்ளத்தில் அறிவியற் புலமையும் ஆட்சிபுரிந்ததென் னும் அருமைப்பாடு புலனுகின்றது.
3 வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்; எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம்.
(பாரத}
பொருள்: வெட்டுக் கனிகள் செய்து - (நிலத்தில்) சுரங்கங் களைத் தோண்டி, தங்கம் முதலாம் - தங்கம், போன், வெள்ளி, இரும்பு, கரி முதலிய வேறுபல பொருளும் - பலவேறுவகையான போருள்களையும், குடைந்கெடுப்போம் . (மீண்டும் மீண்டும்) நிலத்தை அகழ்ந்து அகழ்ந்து எடுத்துக்கொள்வோம், இவை-(இங் கனம் நிலத்தைக் குடைந்து எடுத்த தங்கம் முதலிய பொருள் களை, எட்டுத் திசைகளிலும்-உலகின்கண் உள்ள எட்டுத் திசைக ஒளுக்கும் எல்லாப் பக்கங்களுக்கும்), சென்று - (கடல் வழியா லும், நில வழியாலும்)கொண்டு சென்று, விற்றே விற்று, எண் னும் போருள?னத்தும் - எங்கள் நாட்டுக்கு மிக இன்றியமை மாமல் வேண்டுமெனக் கருகப்படுகின்ற பலவேறுவகைப்பட்ட போருள்கள் யாவற்றையும், கொண்டுவருவோம் - (பிறநாடு களிலிருந்து) பெற்று வருவோம்.
விளக்கம்: பாரதியாரின கவிதை உள்ளத்தில், பாரத தேசத்திலேயே தங்கம், இரும்பு, கரி முதலான பொருள்களையும் நிலத்தைத் தோண்டிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தனை தோன்றி நிழலாடுவதைக் காண்கின்ருேம் பிறநாடுகளை எதிர் பாராமல் எங்கள் நாட்டிலேயே தங்கம் முதலான உலோகப் பொருள் களையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அப்பொருள் களில் எங்களுக்கு வேண்டியவைபோக மிகுதியான பொருள்களை உலகின் பல பகுதிகளுக்கும் கொண்டுசென்று விற்று, எங்கள்

Page 7
6 பாரதியார் பாடல்கள்
நாட்டுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்கொண்டுவர வேண்டுமென்றும் பாரதியார் திட்டம் வகுக்கின்றர்.
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்
என அவர் ப்ாடுகின்ற கவிதையில் அமைந்துள்ள எழுச்சியைப் பாருங்கள். சுதந்திர பாரதத்தின் நிலத்தைத் தோண்டி எடுக் கின்ற உலோகப் பொருள்கள் எல்லாம் உலகின் எல்லாத் திசை களிலும் சென்று விற்கக்கூடிய அளவுக்குப் பெருகவேண்டும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும். இன்றைய சுதந்திர பார தத்தில் இரும்பு, நிலக்கரி முதலிய பொருள்களை எடுத்தற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன, என்பதை அறிகின்றேம்.
4 முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே;
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே, தத்தி நமக்கினிய பொருள் கொணர்ந் து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)
பொருள்: ஒரு தென்கடலிலே - ஒப்பற்ற (சி ற ப் பு வாய்ந்த) தெற்குக் கடலின்கண்ணே, முத்துக்குளிப்பது (கட் லின் ஆழம் அளவும்) முழ்கிச்சென்று முத்துக்களை (நம்நாட்டவர்) எடுக்கின்றர்கள், பலநாட்டினர் . (அங்ங்ணம் குளித்தெடுத்த முத் துக்களை விலைக்குப் பேற்றுக்கொள்ளுதற்காக) உலகின் பல் வேறு நாடுகளிலும் உள்ளவர்களாகிய, வணிகர் வியாபாரி கள், வந்தே - தமது நாட்டை வந்ஆடைந்து, மொய்த்து - (முத் துக்களைப் பேறுதற்காக ஒருவரின் ஒருவர் முந்தி) நெருக்கமாகக் கூடி, நத்தி - (மிக) விருப்பங்கோண்டவர்களாய், நமக்கு - (பாரதநாட்டு மக்களாகிய) எங்களுக்கு, இனிய - மகிழ்ச்சியை ஊட்டுகின்ற நல்ல, பொருள் கொணர்ந்து - பொருள்கவள (உப காரமாகத் தருதற்போருட்டு) கொண்டுவந்து, நம் அருள் வேண்டு வது எங்களுடைய கருணையை (தயவை) எதிர்பார்த்தவண்ண
 
 

விளக்கவுரை gy
மாய் விரும்பி நிற்பது, மேற்கரையிலே-பாரததேசத்தின்) மேற் குக் கரைத் துறைமுகங்களிலே (என்பதாம்).
விளக்கம்: தென்கடலில் முத்துக் குளிக்கும் செயலையும், அம்முத்துக்களைப் பெறுதற்காகப் பிறநாட்டு வணிகர்கள் மிக ஆராமையோடு வந்து குவிந்துகிற்கும் காட்சியையும் பாரதியார் மிகப் பெருமிதத்துடன் கூறுகின்றர்.
முத்துக்களைப் பெறுதற்காகப் பிறகாட்டு வணிகர்கள் வந்து நிற்கும் ஆர்வத்தைப் பாரதியாரால் மறக்கமுடியவில்லை.
மொய்த்து வணிகர் பலநாட்டினர் வந்தே நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து நம்மருள் வேண்டுவது
என அவர் பாடிய கவிதையைப் படிக்கும்பொழுது எமது உள் |ளத்திலும் புதியதோர் எழுச்சியும் பெருமிதமும் தோன்றுகின் |றன. பிறநாட்டு வணிகர்கள் பொருள்கொடுத்து முத்துக்களைப் பெற வந்தவர்கள் என்றலும், முத்துக்களை விலைக்கு விற்கும் பாரதநாட்டு மக்களின் கருணையைப் பெறுதற்காக அவர்களுக்கு
மிக விருப்பத்தைக் கொடுக்கும் இனிய பொருள்களை உபகார
|மாக உதவி நிற்கும் செயலை எண்ண எண்ண பாரதியாரின்
உள்ளத்தில் இன்பமெழுகிறது.
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே என அவர் கூறுகின்ற செய்யுள் தொடரைப் படிக்கும்பொழுது எமக்கும் புதியதோர் இன்பம் எழுகின்றது.
நத்தி-விரும்பி; மொய்த்து-நெருங்கி. 5 சிந்து நதியின்மிசை நிலவினி லே
சோநன் னுட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவினை வாடிவரு வோம். (பார) பொருள்: சிந்து நதியின்மிசை சிந்துநதியின் நீர்ப்பாட்டி யின்மேல், நிலவினிலே - நிலாக்காலத்திலே, சோநன்நாட்டு

Page 8
8 பாரதியார் பாடல்கள்
இளம்பெண்களுடனே - சேரரால் ஆளப்பட்ட தனுல் சேரநாடு என்னும் பெயர் பெற்ற (இப்பொழது மலையாளம் என வழங்கு கின்றது) நல்ல நாட்டில் உள்ள இளமை நலம் நிரம்பிய பெண் களுடன் சேர்ந்து, சுந்தரத்தெலுங்கினில் - மொழிவளம் என் னும் அழகு நிரம்பிய இனிய தெலுங்கு மொழியினுல், பாட் டிசைத்து - பாட்டுக்களைப் பாடியவண்ணமாய், தோணிகள் ஒட்டி - தோணிகளைச் செலுத்தி, விளையாடிவருவோம் - விளை பாடிவருவோம் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் பாரதியாரின் பரந்த உள்ளத் தைக் காண்கின்றேம், மொழியினுலும் நிலத்தினுலும் வேறு பட்டு நிற்கும் பாரத மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் பாரத மாதாவின் அணைப்பிலே தங்கி இன்பமடைய வேண்டும் என் னும் பெருநோக்கம் கொண்ட பாரதியார், தமது நோக்கத்துக்கு ஓர் உருக்கொடுத்துத் தீட்டிய இக்கவிதை காலம் கடந்து வாழும் பொருள்கலத்துடன் பொலிகின்றது.
சிந்துநதியிலே நிலாக்காலத்திலே, சேரநாட்டில் உள்ள (மலை யாளத்தில் உள்ள) இளம் பெண்களுடன் அவர்களின் தாய் மொழியாக விளங்குகின்ற மலையாளத்திலோ அன்றித் தமி ழிலோ பாட்டுப்பாடாமல் தெலுங்கு மொழியிலே பாட்டுக்களைப் பாடியவண்ணம், தோணிகளை ஒட்டி விளையாடுகின்ற ஒன்று பட்ட அன்பினுல் இணேந்த தேசீயப் பெருவாழ்வைப் பாரதியார்
ஒதி ஓதி ஆனந்தம் அடைகின்றர்.
பாரதநாட்டு மக்கள் தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்
னடர்கள், சீக்கியர், மராட்டியர் என மொழிகளினுலும் நிலப் பிரிவுகளினுலும் வேறுபட்டவர்களாய் ஒற்றுமை குலைந்து வாழா
மல் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் உயர்ந்த உண்மையை
பாரதியார் இக்கவிதை மூலமாக எடுத்துரைக்கின்றர்.
இங்ங்னம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழும் உயர்ந்த
கிலேயை ஒட்பம் என வள்ளுவர் உரைத்துள்ளார்.
 

ܦ בעבר הרריירה விளக்கவுரை T -- . 93.
إليه تقنية
உலகம் தழீஇயது ஒடபம; மலாத லும * კაპა
ܨܘܪ ** கூம்பலும் இல்லது அறிவு ਅ *
, ' ' ' எனவரும் திருக்குறளை கோக்குக. !, 黑从 པ། ༤༽
تھی۔ ܓܠ ܐ 6 கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் ノ
காவிரி வெற்றிலேக்கு மாறுகொள்ளு-வோம்; சிங்க மராட்டியர்தம் கவிதை”தொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)
பொருள்: கங்கை நதிப்புறத்து - கங்கை நதியின் கறை யில்ே விளைகின்ற, கோதுமைப்பண்டம் , கோதுமை என்னும் பொருவள, காவிரி - காவிரிநதியின் கரையில்ே உண்டாகிய, வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் - பதிலாகக் கொடுத்துப் பண்டமாற்றுச் செய்வோம், (கோதுமையைக் கொடுத்து வ்ேற் j)?, обошi கொள்ளுவோம் என்பதாம்) சிங்கமராட்டியர்தம் . சிங்கத்தைப்போல வீரம் மிக்கவர்களாகிய மாாட்டியர்களு டைய, கவிதைகொண்டு - மராட்டியமொழிப் பாட்டுக்களை உள்ளம்கொண்டு (கேட்டுமகிழ்ந்து) அதற்கு, சேரத்துத் தந்தங் கள் சேரநாட்டின்கண் உள்ள யா?னத்தந்தங்கவள, பரிசளிப் போம் - பரிசில்ாகக் கோடுப்போம்.
விளக்கம்: இக்கவிதையிலும் ஒன்றுபட்டுவாழும் ஒட் பத்தையே மீண்டும் உரைத்து உரைத்துப் பாரதியார் மகிழ்கின்றர். வடநாட்டின்கண் உள்ள வீரமராட்டியர்கள் பாடிய மராட்டிய மொழிக் கவிதைகளைக் கேட்டு மகிழும் அளவிற்குத் தென்னுட் டின்கண் உள்ள சேரநாட்டு மக்கள் மராட்டிய மொழிப் புலமை வாய்ந்தவர்களாக வாழவேண்டும் என்பதே பாரதியாரின் எண்ண மாகும். சேரநாட்டு யானைத் தந்தங்கள் வீரம்ராட்டியரின் கவி தைக்குப் பரிசிலாக வழங்கப்படும் பெருவிழாவை பாரதியாரின் கவிதை உள்ளம் கற்பனை செய்கின்றது. இங்ஙனம் பாரதியார் கவிதை உலகிற் கண்ட கற்பனைகளெல்லாம் பாரதநாட்டு மக்க ளின் வாழ்வாக மலர்ந்து வளம்சுரக்கும் காலம் மிக அண்மையில் உளதென்றே யாமெல்லாம் எண்ணக்கூடியதாக இருக்கின்றது.

Page 9
10 பாரதியார் பாடல்கள்
காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்; ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.
( LI FIT Jigs)
பொருள்: காசிநகர்ப் புலவர் - காசி நகரின்கண் உள்ள பேரறிஞர் ஒருவர், பேசும் உரைதான் நிகழ்த்துகின்ற விரிவுரை யி?ன, காஞ்சியில் காஞ்சி நகரின்கண் இருந்துகொண்டே, கேட்பதற்கு - கேட்டு மகிழ்தற்கு ஏற்ற, ஓர் கருவிசெய்வோம் . ஒரு கருவியை நாங்கள் (ஆராய்ந்து) கண்டு அமைத்துக்கொள் வோம், ராசபுத்தானத்து த ராசபுதனம் என்னும் அடத்தில் உள்ள, வீரர் தமக்கு போர் வீரர்களுக்கு, நல்லியல் - நல்ல தன்மையோடு பொருந்திய, கன்னடத்து - கன்னட தேசத்தின் கண் உள்ள, தங்கம் - தங்கத்தை, அளிப்போம் பரிசிலாகக் கோடுப்போம் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் இன்று எங்கும் காணப்படும் வானுெலிக் கருவியைப்பற்றி அன்று சிந்தித்த பாரதியாரின் கவிதை உள்ளத்தைக் காண்கின்றேம், சுதந்திர தாகம்கொண்ட பாரதியார் கவிபாடும் புலவராக மட்டும் விளங்காமல், சிறந்த விஞ்ஞான அறிஞராகவும் விளங்குகின்றர் என்பதை"இதனுல் அறி கின்றேம். ஒரு சிறந்த நகரத்தில் இருந்து பேரறிஞர் ஒருவர் நிகழ்த்துகின்ற விரிவுரையை உலக மக்கள் எல்லோரும் கேட்டு அறிவைப் பெறவேண்டும் என்ற ஆராவேட்கை பாரதியார் உள் ளத்தில் அலைமோதி எழுகின்றதென்பதை உணர்கின்றேம். பாரதகாட்டு மக்கள் விஞ்ஞானப் புலமை மிக்கவர்களால் வியத் தகு புதுப்புதுக் கருவிகளைப் புனைந்து உலக மக்களின் கன் மதிப்பைப் பெறவேண்டும் என்பதே பாதியாரின் நோக்கமாகும்.
காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் க விசெய் வோம்; எனும் இக்கவிதைத் தொடர்களில் பாரதியாரின் எண்ணத் துடிப்பு அப்படியே கிடந்து நிழலாடுவதை உணர்க.

விளக்கவுரை 1.
வட இந்தியாவில் உள்ள ராசபுத்தான வீரர்களைப் பராட்டிக் கன்னட நாட்டு மக்கள் தங்கத்தைப் பரிசிலாக அளித்து ஊக் குவிக்கும் உயர்ந்த பண்பாட்டைப் பாரதியார் உரைத்து மகிழ் கின்ருர், இதனுல் பாரததேசத்தில் வாழும் மக்கள் எல்லோரும் சாதி சமய மொழி வேறுபாடுகளை மறந்து எவரிடத்தில் என் னென்ன நல்லியல்புகள் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் தமக்குரியதாக எண்ணி மகிழவேண்டும் என்னும் உண்மையைப் பாரதியார் நிலைநாட்டுகின்றர் என்பதைத் தெளிகின்றேம்.
8 பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் பண்ணி மலைகளென வீதிகுவிப்போம்; கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்,
(LI T Ors)
பொருள்: பட்டினில் பட்டு நூலினுல், ஆடையும்-பட்டு ஆடைகளையும், பஞ்சில் - பஞ்சு நூலினுல், உடையும்- பருத்தி ஆடைகளையும், பண்ணி - செய்து, மலைகளேன - மலைகளைப் போல விளங்கும்வண்ணம், வீதிகுவிப்போம் பாரத நாட்டுத் தெருவீதிகளில் விற்கும்போருட்டுக் குவித்து வைப்போம், கட் டித் திரவியங்கள் - (திரவியக் கட்டி) பணத்தைக் கட்டி, கொண்டுவருவார் - கொண்டு வருகின்றவர்களாகிய, காசினி வணிகருக்கு - உலகின் பல பாகங்களிலும் உள்ள வியாபாரிக ரூக்கு, அவ்ை - பாரதநாட்டு வீதிகளில் செய்து குவித்த பட் டுப் புடைவைகவுளயும் பருத்திப் புடைவைகளையும், கொடுப் டோம் - (பணத்தைப் பெற்றுக்கொண்டு) விற்றுவிடுவோம் என் பதாம். (கட்டித்திரவியம் என்பதற்கு தங்கக் கட்டியாக உள்ள பொருளை எனவும் கருத்துக் கூறலாம்.)
* "ܓܥ
G6Iršis asid: இக்கவிதையில் பாரதியாரின் ஆர்வம் பெரு கிப் பாய்கின்றது. பட்டாடைகளையும் பருத்தி ஆடைகளையும் நெய்து நெய்து மலேமலேயாய்க் குவித்து வைத்து அவற்றை 6).135 கின்ற வெளிநாட்டு வணிகர்களிடம் கட்டித் திரவியத்தைப் பெற்
றுக்கொண்டு விற்றுவிடுவோம் எனப் பாரதிய்ார் விளம்புகின்ற
*ஆ:"
/ 。

Page 10
2 பாரதியார் பாடல்கள்
மொழிகளைக் கேட்கக் கேட்க எங்களுக்கும் கவிதைவெறி மூளு கின்றது. சுதந்திர பாரதத்தில் வாழ்கின்ற மக்களின் முயற்சி யால் உருவாக்கப்பட்ட ஆடைகளை வெளிநாட்டு வணிகர்கள் விலைகொடுத்துப் பெறுகின்ற காட்சியைக் காண ஆசைப்படு கின்ற பாரதியாரின் ஆவித்துடிப்பு இக்கவிதையில் கிடந்து அலை மோதுகின்றது.
9 ஆயுதம் செய் வேரம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள் வைப்போம்; ஒயுதல் செய் யோம் தலை சர்யுதல் செய்யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்
(Lu Er Uğ5).
பொருள்: ஆயுதம் செய்வோம் - போர்ப்படை முத லான பல திறப்பட்ட கருவிகளை எல்லாம் நாங்களே சேய்து கோள்வோம். நல்ல காகிதம் செய்வோம் - வேளிநாட்டாரும் போற்றத்தக்க சிறந்த காகிதங்களை (கடதாசிகளை) நாங்களே செய்துகொள்வோம், ஆலைகள் வைப்போம் : தொழிற்சாலீை கள் பலவற்றை உண்டாக்குவோம், கல்விச்சாலைகள் வைப் போம் - (தொழில் அறிவைப் பேறுதற்கும் பலகலைகவளப் பயி லுதற்கும் ஏற்ற) பல கல்வி நிலையங்களை நம் நாட்டில் கட்டு வேகம், ஒயுதல் செய்யோம் - முயற்சியின்றி ஒருகாவூரும் ஒய்ந்தி ருக்க மாட்டோம், தலைசாயுதல் செய்யோம் - அறத்தை மறந்த பகைவர்களுக்கு அஞ்சித் தலைவணங்கமாட்டோம், உண்மை கள் சோல்வோம் - (என்ன இன்னல்கள் வந்து நேர்ந்தாலும்) உண்மை பேசுதலில் நின்று தவறமாட்டோம், பல 'வண்மை கள் செய்வோம் - பல் திறப்பட்ட ஈகைகளாகிய தானதருமங்க ளைச் செய்து நாட்டில் வறுமைப்பிணி தோன்றுமல் தடுப்போம் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் தொழில் வளத்தையும் கல்வி வளத்தையும் பாரத தேசமெங்கும் பெருக்கிப் புதுவாழ்வு படைக் கும் பெருந்திட்டத்தை பாரதியார் வகுத்துரைக்கின்றர். இத்திட் டங்கள் எல்லாம் செயற்பட வேண்டுமானுல் பாரதநாட்டு மக்கள்
 

و «0
விளக்கவுரை 3
ஓயாத முயற்சி உடையவர்களாகவும், பகைவர்க்கு அஞ்சித் தலைவனங்காத தன்மான உணர்ச்சி படைத்தவர்களாகவும் விளங்கவேண்டும் என்று பாரதியார் விரும்புகின்றர். அங்ங்னம் தாம எண்ணிய விருப்பம் நிறைவேறவேண்டுமானுல் உண்மை யில் தவருத உயர்ந்த வாழ்வும், இல்லாதவர்க்கு உதவிசெய்யும் ஈகைப்பண்பும் உள்ளவர்களாய் பாரத மக்கள் வாழவேண்டும் எனவும் பாரதியார் பாடுகின்றர்.
ஒயுதல் செய்யோம் தலேசாயுதல் செய்யோம்:
என்னுந் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஒசை பாரதி யாரின் முயற்சித் துடிப்பையும் தன்மானத் துடிப்பையும் அப்ப டியே எடுத்துக் காட்டுகின்றன.
10 குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்;
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள் செய்வோம்: நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.
(பாரத) பொருள்; குடைகள் செய்வோம் - எமக்கு வேண்டிய குடைகளை நாங்களே செய்துகொள்வோம், உழபடைகள் செய் வோம் - உழவுத் தொழிலுக்கு வேண்டிய கலப்பை முதலிய கரு விகளை (புதிய முறையில்) நாங்களே செய்துகொள்வோம், கோணிகள் சேய்வோம் - சணல் புல் முதலியவற்றைக் கொண்டு பல் வகையான பைகவள நாங்களே செய்துகோள் வோம், இரும்பாணிகள் செய்வோம் இரும்பினுல் சிறிய ஆணி களையும் நாங்களே செய்துகொள்வோம், நடையும் நீல்த் திலே செல்வனவும். பறப்பும்-வானத்திலே பறக்கின்றனவும் ஆகிய, உணர் - ஆராய்ச்சி பொருந்தியனவும் ஆகிய, வண்டி கள்.பலவகைப்பட்டஊர்திகளை (வாகனங்களெ), சேய்வேனம் - எங்கள் நாட்டில் நாங்களே செய்துகோள்வோம், ஒதாலம் . உலகின்கண் உள்ள மக்கள், நடுங்க வரும் நடுங்கி அஞ்சத் தக்க, கப்பல்கள் - (போர்க்) கப்பல்கள் பல்வற்றை, செய் வோம் - ஆக்குவோம் (கட்டுவோம்) என்பதாம்.

Page 11
4. பாரதியார் பாடல்கள்
விளக்கம்: இக் கவிதையில் வெளிநாட்டையே நம்பி இரா மல் நமக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் நம் காட்டில் காங் களே செய்துகொள்ளல் வேண்டும் எனப் புகல்கின்ற பாரதிய ரின் புலமை உள்ளத்தைக் காண்கின்றேம், குடைகளும், உழு படைகளும் பெருந்தொகையாக மக்கள் வாழ்வில் பயன்படுகின்ற பொருள்களாகும். இவற்றைச் செய்யும் முறைகளை மிக எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பதே பாரதியாரின் எண்ணமாகும். இங்ஙனமே கோணிகள், ஆணிகள் என்பவைகளும் பெருங்
தொகையாக வேண்டப்படுவனவாகும். இவற்றை நாங்களே செய்துகொள்ளாமல் வெளிநாட்டை எதிர்பார்த்திருப்பது நாணத்
தக்கது என்பதைப் பாரதியார் குறிப்பாக எடுத்துக் கூறு கின்றர். நிலத்திலும் வானத்திலும் செல்லத்தக்க ஊர்தி களையும், உலக மக்கள் நடுங்கத்தக்க பெரும் போர்க் கப்பல்களை யும் பாரதநாட்டு மக்கள் ஆக்கி உலக மதிப்பையும் வரவேற்டை யும் பெறவேண்டுமெனப் பாரதியர் ஆசைப்படுகின்றர்.
ஞாலம் நடுங்கவரும் கப்பல் கள் செய்வோம்
என்னும் கவிதைத் தொடரில் பாரதியாரின் ஆசை அலை மோது கின்றது.
11 மந்திரங்கற் போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம் கடல் மீனை யளப்போம், சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
(பாரத) பொருள்: மந்திரம் - அரசியற் சூழ்ச்சிகளையும் தொழில் நுட்பங்களையும் ஆராய்ந்து, கற்போம் - கற்றுக்கொள்வோம், (அரசியற் சூழ்ச்சிகளும் தொழில் நுட்பங்களும் எளிதில் அறிந்துகொள்ள முடியாதனவாய் மிக நுட்பமாக ஆராய்ந்து அறியக்கூடிய முறையில் மறைந்து கிடத்த லால் அவற்றை மந்திரம் எனக் குறிப்பிட்டார்) வினைத் தந்திரம் கற்போம் - அமைச்சியல், தூதியல், படைவகுப்பு ழத

விளக்கவுரை 丑岳
லிய செயல்களுக்குரிய நூல்க?னக் கற்றுக்கொள்வோம், (தக் திரம் - நூல் தந்திர உத்தி என நன்னூலில் வருவதை நோக்குக) வானை அளப்போம் - ஆகாய வெளியின் பரப்பை
பபும் அளந்து காண்பேர்ம், கடல்மீனை அளப்போம் - அலைகட் லின் கண் உள்ள மீன்களின் வகைக்ளையும் அளந்து கான் போம், சந்திறமண்டலத்தின் இயல் - சந்திரமண்டலத்தின்
தன்மையை, கண்டுதெளிவோம் - ஆராய்ந்து கண்டு அறிவோம், சந்தி - தெருக்கள் கூடும் சந்திகளையும், தெரு - தெருக்களையும், பெருக்கும் - அளவில் பெருகச்செய்து அமைக்கின்ற, சர்த்திரம்
கற்போம். நகரமைப்புக் கலைகவளயும் நன்கு ஆராய்ந்து கற்றுக் கொள்வோம் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் அரசியல் ஆட்சி முறைகளை யும், அறிவியற் புலமையையும், நகரமைப்பு வழிகளையும் கற்றுத் தெளிந்தவர்களாய்ச் சுதந்திர பாரத மக்கள் சிறந்து விளங்கு கின்ற பெருநிலையைக் கண்டு மகிழ விரும்புகின்ற பாரதியாரின் கவிதை உள்ளத்தைக் காண்கின்றேம்.
பெற்ற சுதந்திரத்தை மற்ற நாட்டினர்களும் மதித்து வர வேற்கும் முறையிற் பேணவேண்டுமானுல் அரசியல் நுட்பங்க ளையும். தொழில் நுட்பங்களையும் தெளியவேண்டும் என்றும், வானை அளந்து அங்குள்ள மழையின் நிலை காற்றின்நிலை முத லியவற்றை அறிந்துகெர்ள்ளும் விஞ்ஞானப் புலமையில் மிக்க வர்களாய் விளங்கவேண்டும் என்றும், கடலின் நீரைக் கிழித்து அதன் ஆழப் பரப்பெல்லாம் சென்று சென்று ஆராய்ந்து அங்கு வாழும் மீன்களின் வகைகளையும், அவற்றின் வாழ்க்கை நெறி களையும் கண்டு தெளிந்து அளக்கும் கலைப் புலமையும் படைத் தவர்களாய்ச் சிறக்கவேண்டும் என்றும் பாரதியார் தமது கவிதை உலகில் நின்று கற்பனை செய்கின்றர்.
சந்திரமண்டலத்தை ஆராய்ந்து அதன் தன்மைகளை எல் லாம் கண்டு உணரவேண்டும் என்றும் பாரதியார் கட்டளை இடு கின்றர். இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் சந்திர மண்டல ஆராய்ச்சி பாரதியாரின் கவி உள்ளக் கற்பனையை அப்படியே

Page 12
蕙6 பாரதியார் பாடல்கள்
மெய்ப்பித்துவிட்டது. நகரின் சந்திகளையும் தெருக்களையும் புதிய முறையில் பெருப்பித்துப் போக்குவரவுத்துறையை செம் மைப்படுத்தவேண்டும் எனவும் பாரதியார் திட்டம் இடுகின்ருர், இன்றைய சுதந்திர இந்தியாவில் இத்திட்டம் செயலாகி வருவ தைக் காண்கின்றேம். எனவே பாரதியாரின் கவிதை உள்ளம் பலதிறப்பட்ட ஆக்க வழிகளையும் சிந்தித்து ஆட்சிமுறையை அமைக்கின்றதென்பதை அறிகின்றேம்.
12 காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம்கொல்ல குலே வளர்ப்போம்; ஓவியம் செய் வோம்நல்ல ஊசிகள் செய்வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.
(பாரத)
பொருள்: காவியம் செய்வோம் பெருங்காப்பியங்கள் என்னும் புதிய இலக்கியங்களை இயற்றுவோம், நல்ல காடு வளர்ப்போம் - (காடுகள்இருந்து அழிந்துபோன இடங்களிலெல் லாம்) புதிய காடுகளை வளர்ப்போம், கவலவளர்ப்போம் - விஞ் நானம், வானசாத்திரம், கணிதம், சோதிடம் முதலிய கலை கவள வளர்த்துப் பயன்படைப்போம், கொல்லர் உலை வளர்ப் போம் . இரும்புத்தொழில் புரியும் கொல்லர்களுடைய இரும்பு உருக்கும் உலைகளை விஞ்ஞான முஜையில் புதிய போர்க்கருவி கவள இயற்றத்தக்க பெருந்தொழில் நிலையமாக வளம்பேருகச் செய்வோம், ஓவியம் செய்வோம் - சித்திரங்கவளப் புதியமுறை யில் தீட்டுவோம், நல்ல ஊசிகள் செய்வோம் - சிறந்த ஊசி கவளயும் செய்வோம், உலகத் தொழில் அனைத்தும் - உலகின் கன்னே விஞ்ஞான அறிவினுல் இன்று புதிது புதிதாகத் தோன்றி விளங்குகின்ற பலவேறு வகைப்பட்ட தோழில்கவள எல்லாம், உவந்து செய்வோம் - மகிழ்ச்சியோடு புரிந்திடுவோம் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் பாரதியாரின் புலமை உள் ளத்தின் அகலத்தைக் காண்கின்ருேம். புதிய காவியங்க

விளக்கவுரை 7
ளாகிய இலக்கியங்களைப் புனேந்து மக்கள் உள்ளத்தில் புதிய
உணர்ச்சிகளை ஊட்டவேண்டும் என உரைத்த பாதிரியார்
அதனை அடுத்துக் காடுகளை வளர்க்கவேண்டும் எனவும் கட்டளை இடுகின்ருர், காவியங்கள் மக்களின் உள்ளத்தை அறிவினுல் வளம்படுத்துவதுபோலக் காடுகள், மழையினுல் நாட்டின் வளத் தைப் பெருக்கும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும். பல் வேறு அறிவியற் கலைகளை வளர்க்க வேண்டுமென உரைத்த பாரதியார் அதனை அடுத்துக் கொல்லர் உலைக்களத்தையும் வளர்க்கவேண்டுமெனக் கூறுகின்றர். அறிவும் ஆண்மையும் மக்கள் உள்ளத்தில் நிலைபெற வேண்டுமென்பதை இதனுல் வலியுறுத்துகின்றர். கலைகளை மட்டும் உணாந்தால் போதாது.
கொல்லர் உலையில் புதிய படைகளை வடித்துப் போர்த்திறம்
வாய்ந்தவர்களாகவும் விளங்கவேண்டும் எனப் பாரதியார் புகல் கின்றர். சித்திரக்கலைத் திறமையுடன் நல்ல ஊசிகளைச் செய் யும் தொழில்நுட்பத் திறமையும் சேர்ந்திருக்கவேண்டுமெனவும் சொல்கின்றர். இங்ங்ணம் உலகத்தின்கண் விளங்கும் பல்வேறு தொழில்களிலும் வல்லமை வாய்ந்தவர்களாய்ப் பாரத நாட்டு மக் கள் வாழவேண்டும் என்பதே பாரதியாரின் கவிதை உள்ளத்தில் நிலைபெற்ற கருத்தாகும் என்பதைக் காண்கிருேம்.
13 °சாதி இரண்டொழிய வேறில்லை" யென்றே
தமிழ்மகன் சொல்லியசொல் அமிழ்த மென்போம்: நீதிநெறி யினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்ஞேர். (பாரத}
பொருள்: தமிழ் மகள் - தமிழ் அன்னேயின் தவப்புதல்வி யாகிய ஒளவையார், சாதி இரண்டு ஒழிய  ைஉலகிற் சாதிகள் இரண்டே அல்லாமல், வேறு இல்லை என்றே - உயர்வு தாழ்வு குறித்து வேறுபட்ட பலசாதிகள் இல்லையென்று, சொல்லிய சொல் 8 கூறிய நீதிமொழிகளே, அமிழ்தம் என் போம் - சாவா மருந்தாகிய தேவா அமிழ்தம்போலக் கொண்டு மகிழ்வோம், மீதி கெறியில் கின்று அறத்தை மேற்கொண்டு ஒழுக்கமுடையவர்க
ளாய் வாழ்ந்து, பிறர்க்குதவும் - துன்பப்படுகின்ற பிறர்க்கு

Page 13
8 பாரதியார் பாடல்கள்
உதவி செய்கின்ற, கேர்மையர் - கன்னிகலயில் நிற்பவர், மேல வர் . மேலான உயர்ந்த சாதியினராவர், மற்ருேர் - மீதி, நெறி, இநர்மை என்பன இல்லாதவராய் பிறர்க்கு உதவாமல் வாழ் இன்றவர்கள், கீழவர் - தாழ்ந்த சாதியினராவர் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் பலவேறு சாதிகளாகப் ༼འ, பிரிந்து சிதறிக் கிடக்கும் பாரதமக்களை நோக்கிப் பாரதியார் கூறுகின்ற அறிவுரைகளைக் காண்கின்றேம். நீதிநெறியில் நீங் காமல் நேர்மையுடையவர்களாய் வாழ்ந்து பொருளைத் தேடி o அல்லல் அடையும் பிறர்க்கு உதவும் நல்லவர்கள்தான் மேலான சாதி என்றும், நீதிநெறிகளில் தவறி நேர்மையற்றவர்களாய், பிறர்க்கு உதவி செய்யாமல் வாழ்கின்ற தீயவர்கள்தான் கீழான சாதியினர் என்றும் ஒளவையார் கூறிய அறிவுரைகளை அப்ப டியே பாரதியார் வழிமொழிந்து எம்மை வாழ்விக்க முயல்கின்றர்.
சாதி யிரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி,
எனவரும் ஒளவையாரின் அறிவுரைகளை இத்துடன் ஒப்பிட்டு கோக்குக.
 
 
 

விளக்கவுரை 9 2 நடிப்புச் சுதேசிகள்
பாரதநாட்டில் விடுதலைப்போர் கடந்த காலத்திலே நாட்டுப் பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன இல்லாமல் வெறும் போலி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் சிலரின் கடிப்பைக் கண்ட பாரதியார், அவர்களை இகழ்ந்து பாடிய கவிதைகளை நடிப்புச் சுதேசிகள் என்னும் இப்பகுதியில் காண்கின்றேம், பொது மக்களின் மதிப்பைப் பெறுதற்காகப் போலிவேடம் பூண்டு காட் டுப்பற்றுக் கொண்டவர்போல் நடித்து வாழ்ந்த நயவஞ்சகச் சுதேசிகளை இகழ்ந்து பாடிய பாரதியாரின் கவிதைகளில் கிடந்து அலைமோதுகின்ற உணர்ச்சிக் குமுறலும், கோபக் கனலும், இகழ்ச்சிப் பெருக்கும் எமது உள்ளத்தையும் தீண்டி உணர்ச்சி ஊட்டுகின்றன. நாட்டை அடிமைப்படுத்தி ஆளும் பகைவர்கள் ஆற்றுகின்ற கொடுமைகளிலும் நாட்டுப்பற்று இல்லாமல் உள் ளவர்கள்போல் நடித்துப் பொதுமக்களை ஏமாற்றி வாழ்கின்ற நடிப்புச் சுதேசிகளின் கொடுமை கஞ்சினும் கொடியது என்பதே பாரதியாரின் நெஞ்சத் திரையில் நிழலாடுங் கருத்தாகும்.
பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திரமு மின்றி
வஞ்சனை சொல்வா ரடி கிளியே! a rufa ši GSF 6o 6ô6ão GiffTTESA! 通
பொருள்: அடீ கிளியே = அடி கிளிபோன்ற பெண்ணே, கெஞ்சில் - மணத்தின்கண், உரமும இன்றி . கலங்காத மனத் திண்மை என்னும் வல்லமை இல்லாமலும், நேர்மைத் திரமும் இன்றிகரீதியோடு பொருந்திவிற்கும் கிலே திரியாத வாழ்வு இல்லா மலும், வஞ்சனே சொல்வார் - பொது மக்களை வஞ்சித்துத் தம் வழிக்கு எடுக்கக்கூடிய வஞ்சனேயான மொழிகளேச் சொல் வார்கள், வாய்ச் சொல்லில் வீரர் - (இவர்களெல்லாம் செய லின்றி) வாயால் மட்டும் காட்டுப்பற்று உள்ளவர்கள் போல் பேசுவதில்தான் வீரர்கள் என்பதாம்.

Page 14
20 பாரதியார் பாடல்கள்
விளக்கம்: இக்கவிதையில் மனத்திண்மையும், நேர்மை மாருத வாழ்வும் இல்லாதவர்களாய் வாய்ச்சொல்லினல் மட்டும் பொதுமக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்ற நடிப்புச் சுதேசிகளின் போலி வாழ்க்கையை வெறுத்துக் கூறுகின்ற டாரதியாரின் உள் ளத்தைக் காண்கின்ருேம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்:
என்பது திருக்குறள்.
அடீ கிளியே என்னும் சொற்களை ஏனைய கவிதை களுக்கும் ஏற்றபெற்றி கூட்டிக்கொள்க:
கூட்டத்திற் கூடிறின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்திற் கொள்ள ரடி!-கிளியே!
ET Gafio Dp ' LI ET BT Lo ! 2
பொருள்: கூட்டத்தில் - உரிமை உணர்ச்சி கொண்டோர் கூடி விரிவுரை நிகழ்த்துகின்ற) மகாகாடுகளில், கூடிகின்று . தாமும் கலந்து கின்று, கூவிப் பிதற்றல் அன்றி ஆரவாரித்து வெறுஞ் சொற்களேக் கூறிக் குளறுதல் அல்லாமல், காட்டத் திற் கொள்ள்ார் - (உரிமைப்போர் சிகழ்ச்சிகளே தமது உள்ளத் தில் பதித்து) செயலாற்றச் சிந்தியார்கள் காளில் மறப்பார் . கேட்ட அன்றே (அவ்வுயர்ந்த நோக்கங்களே) மறந்துவிடுவார் கள் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் சுதந்திரத் தெ கின்ற மகாநாடுகளில் தாமும் கூடிகின்று காட்டுப்பற்று உள்ள வர்கள்போல் நடித்து வெற்றரவாரம் செய்தலன்றி அங்கு நிகழ்ந்த செயல் திட்டங்களில் எட்டுனையும் கருத்து இல்லாமல்
கேட்ட அப்பொழுதே மறந்து மக்களே ஏமாற்றுகின்ற கடிப்புச்
சுதேசிகளின் பண்பை கெஞ்சுக் கொதிப்புடன் இகழ்ந்துரைக்
தாண்டர்கள் கூடு
கின்ற பாரதியாரின் வேஞ்சின மொழிகளைக் கேட்கின்ருேம்.
இந்நடிப்புச் சுதேசிகளின் செயல், கூட்டத்தில் கோவிந்தா என்
 
 

விளக்கவுரை 2.
பதுபோல கட்டத்தில் கொள்ளாத வெறும் ஆரவாரம் என்பதே பாரதியாரின் கருத்தாகும்.
சொந்த அரசும் புவிச்சு கங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ?-கிளியே! அலிகளுக் கின்ப முண்டோ?
பொருள்: சொந்த அரசும் . தமக்கே உரிமை ஈ உடைய அரசாட்சியும். புவிச் சுகங்களும்  ை(அங்ங்ணம் சொர்த அர சாட்சியைப் பெற்றிருப்பதால்) இந்நிலவுலகின் கண் அடை கின்ற இன் பங்களும், மாண்புகளும் - பெருமைகளுர் அந்த கர்க்கு - சுகக் & ரததின் சிறப்பை உணரும் அறிவில்லாத அகக் குருடர்களுக்கு, 'அறிவாகிய கண் இல்லாதவர்க்கு என்பதாம்) உண்டாகுமோ - கிடைக்குமோ, (கிடையாது) அளிகளுக்கு - ஆண் தன்மையும், பெண் தன்மையும் இல்லாதவராய் விளங் கும் பேடிகளுக்கு, இன்பமுண்டோ - இன்ப உணர்ச்சி உண் டாகுமோ, (இலலே என்பதாம்.)
விளக்கம் இக்கவிதையில் சுதந்திர வாழ்வின் பெரு மையை அறியாமல் அகக்குருடராய் வாழ்கின்ற நடிப்புச் சுதேசி கள் தம் நாட்டைத் தாமே ஆளுகின்ற அரசுரிமையின் சிறப்பை யும், அதனுல் நுகரும் இன்பங்களையும், பெறும் பெருமைகளை யும் உணரமாட்டார்கள் என்பதை வற்புறுத்திக் கூறுகின்ற பார தியாரின் புலமை உள்ளத்தைக் காண்கின்றேம்,
M ஆண் தன்மையும் பெண் தன்மையும் இல்லாத அலிப், பிறவிகள் வாழ்க்கை இன்பத்தை உணராமல் வாழவுதுபோல நாட்டுப்பற்று அற்ற நடிப்புச் சுதேசிகளும் சொந்த அரசின் சிறப்புக்களையும் சுதந்திரமாக வாழ்ந்து உலகில் அடையும் இன் பங்களையும் யெருமைகளையும் அறியாத குருடர்களாய் வெறும் வாழ்வு வாழ்கின்றர்கள் என்பதே பாரதியாரின் கருத்தாகும்.
ஆண்தன்மையும் பெண்தன்மையும் இல்லாமல் இன் பத்தை இழந்து வாழும் அலிகள் உவமானம்.

Page 15
22 பாரதியார் பாடல்கள்
காட்டுப்பற்று முதலியன இல்லாமல் சொந்த அரசி னேயும், டிவிச் சுகங்களையும் மாண்டிகளையும் இழந்து அகக் குருடர்களாய் வாழும் அந்தகர்கள் (கடிப்புச் சுதே சிகள்) - உவமேயம்,
இன்பம் இல்லாமையும், சுதந்திர உணர்ச்சி இல்லா மையும் அலிகளுக்கும் கடிப்புச் சுதேசிகளுக்கும் உள்ள பொதுத்தன்மைகளாகும்.
கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி-கிளியே!
3 I SA LUGAROT Gš Gtor lo ! 堡
பொருள்: கண்கள் இரண்டிருந்தும் பார்க்கின்ற கண்கள் இரண்டும் (பழுதின்றி) ஒளி நிறைக்கண வாய் இருக்கவும், காணும் திறமை அற்ற (அக்கண்களால்) பொருள்களேக் கூர்ந்து சோக்கி அறியும் வல்லமைப்பாடில்லாத, ப்ெண்களின் கூட்டம் - எதற்கும் அஞ்சி, ஒடுங்கிச் சிந்தனே இல்லாமல் சிறையில் இருந்தவர்கள் போல் மூடக் கட்டுப்பாடுகளிளுல் அறிவைப் பறிகொடுத்து அடங்கியிருக்கின்ற) பெண்களின் கூட்டம்போலவே இக்கடிப்புச் சுதேசிகள் இருக்கின் ருர்கள், பேசிப் பயனென்ன - (இத்தகைய கடிப்புச் சுதேசிகளே ப்பற்றி) பேசுவதால் ஒரு பயனும் இல்லை என்ப்தாம்.
விளக்கம்: இக்கவிதையில் நடிப்புச் சுதேசிகளின் அறி வின்மையை எண்ணி எண்ணி சிங்தை துடித்து வெம்புகின்ற பாரதியாரின் உள்ளக் குமுறலை உணர்கின்றுேம். இரண்டு கண் களும் ஒளியோடு நிரம்பி இருக்கப்பெறும், அவற்றின் உதவி யால் பலதிறப்பட்ட பொருள்களையும் கூர்ந்து கோக்கி அறிந்து கொள்ளும் வல்லமை இல்லாதவர்களைப்போல் நடிப்புச் சுதேசி களும் நாட்டுப் பற்றின் சிறப்பையும் சுதந்திர வாழ்வையும் தமது அறிவினுல் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாமல் செயலற்று இருக்கின்றர்கள் என்பதே பாரதியாரின் எண்ண மாகும்.

விளக்கவுரை 23
இங்ஙனம் செயலற்று இருக்கும் நடிப்புச் சுதேசிகளுக்கு உவமானமாகக் கண்கள் இரண்டும் இருந்தும் கானுந் திறமை யற்ற பெண்களின் கூட்டத்தைப் பாரதியார் கூறியிருக்கின்றர், புதுமைப்பெண்ணைப் படைத்துத்தந்த பாரதியார் பெண்கள் கூட் டத்தைக் கண்கள் இரண்டு இருந்தும் கானுந் திறமையற்றவர்க ளென இகழ்ந்துரைக்கும் செயல் சிந்தனைக்குரியதாகும். மூடக் கட்டுப்பாடுகளினுல் அடக்கி ஒடுக்கித் தம்மை அடிமைப்படுத்த வும், அக்கட்டுப்பாடுகளே அறுத்தெறிந்து விடுதலைபெற முடியா மல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்ற ஆண்மை யற்ற பெண்களின் கூட்டத்தைத்தான் கண்கள் இரண்டு இருந்தும் காணுக் திறமையற்ற பெண்களின் கூட்ட மெனப் பாரதியார் இகழ்ந்துரைக்கின்றர் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ? 岳
பொருள்: யந்திரசாலே என்பர் - (எங்கள் காட்டில்) யந்திர சாலைகள் அமைக்கவேண்டும் என்றும் சொல்வார்கள், எங்கள் துணிகளென்பர் = (எங்கள் காட்டில்) காங்கள் கெய்த துணி களேயே நாங்கள் அணியவேண்டும் என்றும் சொல்வார்கள், (இங்ஙனம் மிக உணர்ச்சியுடன் பேசுவார்களே அல்லாமல் அக்கடிப்புச் சுதேசிகள் செயலில் ஒன்றும் செய்யமாட்டார் கள் என்க) மந்திரத்தாலே - (கல்லால் எறிந்தோ அல்லது பிற கருவிகளாலோ வீழ்த்துவது அல்லாமல்) மக்திரத்தை உச்சரிப் பதகுலே, எங்கும் - எவ்விடத்தில் என்ருலும், மாங்கனி வீழ்வ துண்டோ - மாம்பழம் விழுமா (விழாது என்பதாம்),
விளக்கம்: இக்கவிதையில் நாட்டின் விடுதலைக்கு முயற்சி செய்யாமல் சொல்லளவில் எங்கள் நாட்டில் யந்திரசாலைகள் அமைப்போம், எங்களுக்கு வேண்டிய துணிகளை நாங்களே செய்துகொள்வோம் என்றெல்லாம் கூறிக்கூறிப் பொதுமக்களை ஏமாற்றித் திரிகின்ற நடிப்புச் சுதேசிகளின் காணமற்ற பண்பைக்

Page 16
翠盐 பாரதியார் பாடல்கள்
இடித்துக் கூறுகின்ற பாரதியாரின் எழுச்சிக் குரலைக் கேட் கின்றேம்.
முயற்சியின்றி மந்திரத்தாலே மாங்கனி வீழ்த்த எண்ணுதல்-உவமானம்.
செயலின்றி சொல் அளவில் சுதந்திரம் பெற எண் ணுகின்ற கடிப்புச் சுதேசிகளின் செயல்-உவமேயம்.
முயற்சி இன்மை - பொதுத்தன்மை ஆகும். உப்பென்றும் இனி என்றும் உள்நாட்டுச் சேலே என்றும்
செப்பித் திவிவர ராஉ!-கிளியே! செய்வ தறியா ரடி! 6.
பொருள்: உப்பென்றும் 15ம் 8ாட்டிலேயே உப்பை வினே விப்போம் என்றும், சீனி என்றும் . கம் காட்டிலேயே சீனி யைச் செய்வோம் என்றும், உள்நாட்டுச் சேலே என்றும் ம. எங்கள் உள் காட்டுத் தறிகளில் ஜெய்யப்படுகின்ற ஆடை களேயே காங்கன் அணியவேண்டும் என்றும், செப்பித் திரிவார். சொல்வித்திரிவார் (மேடைகளில் பேசித்திரிவார்கள்), செய்வது, அறியார் . (இங்ஙனம் சொல்லித் திரிதலன்றி சொன்னவற்றை) செயலில் ஆற்றும் வழிகளே அறியமாட்டார்கள் என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில் செயலில் ஒன்றும் செய்ய முடியாத நடிப்புச் சுதேசிகள், சொல் முழக்கம் செய்து திரி கின்ற போலித் தன்மையைக் கூறி இகழ்கின்ற பாரதியாரின் உணர்ச்சிப் பண்பை உணர்கின்றுேம், இங்ஙனம் செயல் உள்ளமின்றி சொல் அளவில் சுதந்திர உணர்ச்சி உள்ளார் போற் பேசித்திரிகின்ற நடிப்புச் சுதேசிகளின் செயல் மிக வெறுத்தற்குரியது என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் தாவினுற் சொல்வ தல்லால்-கிளியே! நம்புத லற்ரு ரடி 霍
 
 
 
 
 

விளக்கவுரை 25、
பொருள்: தேவியர் மானம் என்றும் . கமது நாட்டுப் பெண்களின் மானத்தை நாங்களே காப்பாற்றவேண்டும் என் றும், தெய்வத்தின் பக்தி என்றும் . கம் காட்டில் கடவுட் பக் தியை கிலேபெறச் செய்யவேண்டும் என்றும், காவினுல் சொல் வது அல்லால் - காவினுல் மிக அழகாகச் சொற்களேத் தொடுத் துப் பேசுவதே அல்லாமல், கம்புதல் அற்ருர் . அங்ஙனம் பெண்களின் மானத்தைக் காப்பதிலும் தெய்வபக்தியிலும் கம் பிக்கை வைக்கமாட்டார்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் பெண்களின் மானத்தைக் காப்பது மேலானது என்றும், தெய்வபக்தியைப் பெருக்குதல் வேண்டும் என்றும், மக்களின் மதிப்பைப் பெறுதற்காகச் சொல் லித்திரிகின்ற நடிப்புச் சுதேசிகள் அக்கொள்கைகளில் நம் பிக்கை கொள்ளாமல் இருப்பதை எண்ணிய பாரதியார் மிக மிக வெறுப்புடன் இகழ்ந்துரைக்கின்ற உரைகளைக் கேட்கின் ருேம். பெண்களின் மானத்தைக் காத்தலும், தெய்வ பக்தியை வளர்த்தலும் பாரதநாட்டுப் பண்பாட்டில் வாழையடி வாழை, போல நிலைபெற்றுவரும் பெரும் கொள்கைகள் ஆகும் இக் கொள்கைகளில பற்று இல்லாமல் சொல்லளவில் பற்று உள்ள வர்கள் போலக் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுகின்ற நடிப்புச் சுதேசிகளை எண்ண எண்ண பாரதியாரின் உள்ளம் வேகின்றது,
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக்-கிளியே! (6) யிருந்தா JT Lo... 8.
பொருள்: பிறர் - (பகைவர்களாகிய) அங்கியர்கள், மாத ரைக் சற்பழித்து . கமது பாரத காட்டுப் பெண்களின் கற்பை அழித்து, வன்கண்மை - கொடுமைகளே. செய்ய புரியவும், பேதைகள் போல். (அந்த அங்கியர்களை எதிர்த்து அழிக்க மூடி யாமல்) அறிவிலிகள் போல், உயிரைப் பேணி இருந்தார் . தங்கள் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாத்துக்கொண்டு இருந்துவிட்டார்கள் என்பதாம்.

Page 17
.26 பாரதியார் பாடல்கள்
விளக்கம்: இக் கவிதையில் மாதரின் மானத்தைக் காப் பாற்றுதல் எங்கள் கடமை என்று வாய்வீரம் காட்டிப் பேசிய நடிப்புச் சுதேசிகள், பாரதநாட்டுப் பெண்களைப் பிறநாட்டுப் பகைவர்கள் வந்து கற்பழித்துக் கொடுமை செய்வதைக் கண் டும் அவர்களை எதிர்த்து அம்மாதர்களைக் காப்பாற்றும் ஆண்மை யற்றவராய்த் தங்கள் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாத் திருந்த பேடிச்செயலை எண்ணி எண்ணிப் பாரதியார் இகழ்ந் துரைக்கின்ற செயலைக் காண்கின்றுேம். பெண்களைப் பகைவர் கள் கற்பழிக்கும்பொழுதுகூட அப்பகைவர்களை எதிர்த்துப் பெண்களைக் காப்பாற்ற முயலாமல் அஞ்சித் "திரிகின்றவர்கள் வாயினுல் மட்டும் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவோம் என்று மேடைகளில் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் கிளியே! அஞ்சிக் கிடந்தா ரடி! 9.
பொருள்: பிறர்கள் - பகைமை கொண்ட அங்கியர்கள், தேவி கோயிலிற் சென்று அன்னை பராசக்தி எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலின் உள்ளே சென்று, தீமை செய்ய , கொடுமைகள் புரியவும், ஆவி பெரிதென்று எண்ணி - (அங்க னம் தேவி கோவிலிற் புகுந்து கொடுமை செய்கின்ற பகைவர் களே எதிர்த்து அழிக்காமல்) தங்கள் உயிரைப் பெரிதென்று மதித்து, அஞ் சீக் கிடந்தார் - அச்சம் கொண்டவர்களாய் வீட் டினுள் ஒளித்துக் கிடந்தார்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் தெய்வபக்தியை வளர்க்க வேண்டும் என்று சொல்லளவில் மாத்திரம் கூறித்திரிகின்ற நடிப்புச் சுதேசிகள், அன்னை பராசக்தி கோவிலுக்குள் அந்நியர் புகுந்து தீமைகள் புரிந்தபொழுது அவர்களை எதிர்த்து அழிக்கா மல் அஞ்சித் தங்கள் ஆவியைக் காத்தற்காக ஒளித்துக் கிடக் தார்கள் என இடித்துரைத்து இகழ்கின்ற பாரதியாரின் உள்ளத் தைக் காண்கின்றேம். இங்கடிப்புச் சுதேசிகள் உண்மையான

விளக்கவுரை 있7
தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் தங்கள் ஆவி
யைப் பொருட்படுத்தாமல் அன்னை பராசக்தி கோவிலிற் புகுந்து
தீமைசெய்கின்ற அந்நியர்களின் ஆவியைக் குடித்திகுப்பார்கள் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
ஆவி பெரிதென் றெண்ணிக்-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ!
என்னும் கவிதைத்தொடர்களைப் படிக்கும்பொழுது எமது உள்
எத்திலும் அருவருப்போடு கலந்த நாணம் எழுகின்றது.
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடி!-கிளியே! goslao Los JFavré 5 sitio. 0.
பொருள்: அச்சமும் - எடுத்ததற்கெல்லாம் அச்சம்கொள்ளு தலையும், பேடிமையும் பேடித்தன்மையையும், அடிமைச் சிறு மதியும் - அடிமைசெய்து ஒாழ்தலேயே பெரிதாக எண்ணுகின்ற அற்ப புத்தியையும், உச்சத்திற் கொண்டார் - உயர்வான குணங்களெனப் போற்றிக் கைக்கொள்ளுகின் ருர், ஊமைச் சனங்கள் - (இவர்கள் பயனில்லாத சொற்களேயே பாராட்டிப் பேசுவதனுல் உண்மை அறிந்து உரையாத ஊமைச் சனங்க ஒளாகவே இருக்கின் ருர்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் அச்சம், பேடித்தனம் அடிமை செய்யும் அற்பபுத்தி என்பவற்றைத் தமக்குரிய உயர்ந்த குணங்களாகக்கொண்டு உண்மை அறிந்து உரையாமல் பய னில்லாதவற்றையே மிகவும் பாராட்டிப் பேசுகின்ற நடிப்பு? சுதேசிகளை, ஊமைச் சனங்களெனப் பழித்துரைக்கின்ற பாரதி யாரின் உள்ளக்கொதிப்பை உணர்கின்றேம்.
பயனில்லாதவற்றையே பேசி ஆரவாரம் செய்கின்ற கடிப் புச் சுதேசிகளின் பேச்சினுல் ஓர் பயனும் உண்டாகாது என் பதை உணர்த்த விரும்பிய பாரதியார் ஊமைச் சனங்களென அவர்களை இகழ்ந்துரைத்துள்ளார் என்க.

Page 18
28 பாரதியார் பாடல்கள்
பயனில் சொற் பாராட்டு வானே மகனெனல் மக்கட் பதடி எனல்
என்பது திருக்குறள்.
வள்ளுவர் பயனில் சொல் பாராட்டுகின்றவர்களை மக்கட் பதடிகள் என்றர். பாரதியார் ஊமைச்சனங்கள் என் ருர், உள்ளிடில்லாத மொழிகளை உரைக்கின்றவர்கள் என் பதே கருத்தாகும்.
அச்சமூம் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
எனும் இத்தொடர்களில் நடிப்புச் சுதேசிகளின் எளிய பண்பு களைப் பாரதியார் அப்படியே படம்பிடித்து எமக்குக் காட்டு isgöTogir.
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்க ளுக்கோர் கணமும்-கிளியே! வாழத் தகுதி யுண்டோ? I
பொருள்: ஊக்கழம் = செயலாற்றவேண்டும் எனக் தோன் றுகின்ற மன எழுச்சியும், உள் வலியும் (கலங்காமை என்னும்) மனத் திடமும், உண்மையில் உண்மை பேசுதலில், பற்றும் இல்லா - குல யாத உறுதிப்பாடும் இல்ல்ாத, மாக்களுக்கு - (மக்கள் உருவத்தைக் கொண்டுள்ள) விலங்குகளுக்கு, ஒர் கண மூம் - ஓர் கனட் பொழுதாவினும், வாழத் தகுதி உண்டோ இக்கிலவுலகத்தில் மக்களாக இருந்து வாழுதற்கு ஏற்ற தகுதி உண்டோ? (இல்லே என்பதாம்)
விளக்கம்: இக் கவிதையில் ஆறறிவு படைத்த மக்கள் உள்ளத்தில் என்றும் நிலையாக விளங்கவேண்டிய பண்புகளா கீய ஊக்கம், உள்வலி, உண்மை பேசுதல் என்பவைகள், ! ஒன்றுமில்லாத விலங்குகளாக விளங்கும் நடிப்புச் சுதேசிகள், ஒருகண நேரமேனும் இந்த உலகில் வாழத் தகுதி அற்றதர்கள் எனப் பாரதியார் மூழும் நெருப்புப்போல் கோதித்து மொழி

விளக்கவுரை 39
கின்ற வெஞ்சின உரைகளைக் கேட்கின்ருேம். பகுத்தறிவு இல் லாத மக்களே விலங்குகளாக மதித்துக் கூறுதல் ஆன்றேர் unJ LIII, 5)1 b
மாவும் மாக்களும் ஐயறி வினவே
பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே
என்பது தொல்காப்பியம்.
மாக்கள் எனப்படுவார் மன உணர்ச்சி இல்லாதவர் எனப் பேராசிரியர் கூறும் உரையையும் நோக்குக.
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மக்கள்
எனப் பாரதியார் நடிப்புச் சுதேசிகளின் பண்பை எடுத்துரைக் கும் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஒசை, ஓர் கணப்பொழுதேனும் நடிப்புச் சுதேசிகள் இவ்வுலகில் வாழத்
தகுதி அற்றவர்கள்தான் என்னும் எண்ணம் எமது உள்ளத்
திலும் எழுகின்றது.
வசையிலா விண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்
என்பது திருக்குறள், புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்
பழிப்பில்லாத வளப்பத்தை உடைய விளைவுங் குன்றும் என்பது
இக்குறளின் கருத்தாகும் வள்ளுவர், புகழ் இல்லாதவர் கள் உலகில் வாழத் தகுதி அற்றவர்கள் எனக் கூறு கின்றர். பாரதியார், ஊக்கமும் உள்வலியும் உண்மை யில் பற்றும் இல்லாதவர்கள் வாழத் தகுதி அற்றவர்கள்
எனக் கூறுகின் ருர்,
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்!-கிளியே! இருக்க நிலைமை யுண்டோ

Page 19
30 urg Gari turl-666ir
பொருள்; மானம் சிறிதென் றெண்ணி - (உயிரினும் சிறந்த) மானத்தை மிகச்சிறியதொன்றென்றே மதித்து, வாழ்வு பெரிதென் றெண்ணும் - (உடம்போடு கூடி இவ்வுல கில்) வாழ்கின்ற வாழ்வை மாத்திரம் மிகப்பெரியதென்று மதிக்கும், ஈனர்க்கு - (அறிவில்லாத) இழிந்தோர்க்கு, உலகக் தனில் - இந்த சிலவுலகத்தில், இருக்க விலைமை உண்டோ டீ வாழ்தற்குத் தகுதி உண்டோ என்பதாம்,
விளக்கம்: இக் கவிதையில் உயிரினும் சிறந்த மானத் தைச் சிறிதாக மதித்தும், நிலை இல்லாத வாழ்வைப் பெரிதாக மதித்தும் மான உணர்ச்சி இன்றி வாழ்கின்ற நடிப்புச் சுதேசி களை வைதுரைக்கின்ற பாரதியாரின் வெய்ய மொழிகளைக் கேட் கின்றேம். மானத்தை இழந்து அடிமைகளாய்ச் சுதந்திர உணர்ச்சி இன்றி உலகில் இருந்து வாழ்கின்ற மக்களினுல் ஓர் பயனும் இல்லை என்பதையும், அவர்கள் சுதந்திரநாட்டில் இருக் கத் தகுதி இல்லாதவர்கள் என்பதையும் பாரதியார் மிக அழுத் தந் திருத்தமாக எமக்கு அறிவிக்கின்றர்.
ஈனர்க் குலகந் தனில்!-கிளியே! இருக்க நிலைமை உண்டோ!
என்னும் தொடர்களைப் படிக்கும்பொழுது மானம் அழிந்து வாழும் நடிப்புச் சுதேசிகளின்மேல் பாரதியார் கொண்டுள்ள வெறுப் புணர்ச்சி அம்படியே எமக்கும் புலனுகின்றது.
மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே? எனவரும் இனியவை நாற்பதில் உள்ள செய்யுட் பகுதியையும், கோக்குக.
சிந்தையிற்கள் விரும்பிச் சிவசிவ வென்பது போல், வத்தே மாதர மென்பார்-இனியே! மனதி லதனக் கொள்ளார். 丑$
பொருள்: சிங்தையில் மனத்திலே, கள் விரும்பி - அறிஞர் களால் வெறுக்கப்படும் இழிவான கள்ளை உண்ணுதலில் மீக

விளக்கவுரை 3.
விருப்பமுடையவர்களாய் இருந்துகொண்டே, சிவசிவ என்பது போல் - வெளியில் தன்னே ஓர் சிவபக்தன் என்று பிறர் எண் ஆணும்படி சிவசிவ என இறைவன் திருப்பெயரைச் சொல்லு கின்றவர்களே ப்போல், வந்தேமாதரம் என்பார் - தாய்க்கு வணக்கம் என்னும் பொருள்படும் வங்தேமாதரம் என்னும் சொல்ல ஒர் பற்றுமின்றி காப்பழக்கத்தினல் சொல்வார்கள் . அதனே வந்தேமாதரம் என்னும் சொல் குறிக்கும் பொருளே, மனதில் கொள்ளார் - எட்டுணை ஏனும் தமது மனத்தின்கண் சிந்தியார்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் கள் உண்ணும் எண்ணத் தையே மனதில் உடையவராய் இருந்துகொண்டு சிவசிவ என்று இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப் பொதுமக்களை ஏமாற்றித் திரிகின்ற போலித் துறவிகளைப்போல, காட்டிற் பற்று இல்லாத நடிப்புச் சுதேசிகளும் வந்தேமாதரம் என்னும் தேசத் தொண்டர்களின் மூலமந்திரத்தை வாயளவிற்கூறி மனத்தில் அதனைப்பற்றி எண்ணுமற் பொதுமக்கனை ஏமாற்றுகின்றர்கள் எனச்சொல்லி உயிர் துடிக்கின்ற பாரதியாரின் உள்ளக் குமுற லைக் காண்கிறுேம்.
வந்தேமாதரம் என்பது பாரதநாட்டின் விடுதலைப் போர் வீரர்களும் தியாகிகளும் மிக மேலாக மதித்துக் கூறுகின்ற மூலமந்திரமாகும். இத்துணைச் சிறந்த வந்தேமாதரம் என் னும் சொல்லே நடிப்புச் சுதேசிகள் வாயளவில் சொல்லித் தாங் களும் தேசத்தொண்டர்கள்போல வெளிக்குக் காட்டிக்கொள் கின்றர்களே என்பதை எண்ண எண்ணப் பாரதியாரின் உள்:
ௗம் எரிகின்றது.
வந்தே மாதர மென்பார்!
மனதி லதனக் கொள்ளார்!
எனும் தொடர்களைப் படிக்கும்பொழுது எமது உள்ளத்திலும் நடிப்புச் சுதேசிகளின் போலி வாழ்க்கையைப்பற்றிய சிந்தனை எழுகின்றது.

Page 20
32 Luar g sau Tř u Ir. 6 s6ir
பழமைபழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே! பாமர சேதறி வார்! 4.
பொருள்: பழமை பழமை யென்று - எங்கள் நாட்டின் பழ மைப் பண்பாட்டைப் பேணிவளர்க்கவேண்டும் என்று சொல்லி, * பாவனே பேசலன்றி உண்மைத் தேசத்தொண்டர்கள் சொல் வதைப் பார்த்து (கண்டபாவனையில் கொண்டைமுடித்தல் என் பதுபோலத்) தாமும் கூறுதலன்றி, பாமரர் - அந்த நடிப்புச் சுதேசிகள் ஆகிய அறிவிலிகள், பழமை இருந்த நிலை எங்கள் பாரதநாடு பழங் காலத்தில் பெற்றிருந்த சிறப்பு விலைகளே எல் லாம், எதறிவார் - எவ்வாறு அறிவார்கள் (அறியமாட்டார்கள் என்பதாம்),
விளக்கம்: இக்கவிதையில் உண்மைத் தேசத் தொண் டர்கள் கூறுவதைப்போல நடிப்புச் சுதேசிகளும் பாரத நாட்டின் பழம் பழம்பெருமையை நாம் பாதுகாக்க வேண்டுமெனப் பாவனைசெய்து கூறுவதே அல்லாமற் சுதந்திரத்தின் பெரு மையை உணராத அந்த அறிவிலிகளால் எங்ஙனம் பாரதநாட் டின் பழம்பெருமைகளை அறிய முடியுமெனப் பாரதியார் கூறி இகழ்கின்றர் என்பதை உணர்கின்றேம்.
நடிப்புச் சுதேசிகளும் தேச விடுதலைக்கு உழைக்கும் உண் மைத் தொண்டர்கள் உரைப்பதுபோலவே தாமும் உரைத்துப் பொதுமக்களை ஏமாற்றிப் புகழ்ஈட்ட முயல்கின்ற செயலைப் பாரதியாரால் பொறுக்க முடியவில்லை,
நாட்டில் அவ மதிப்பும் நாணின் றிஇழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே!டகிளியே!
Ag Gao LD u 63), GAN FET U LI. 15
பொருள்: காட்டில் காட்டின்கண் உள்ள மக்களால், அவமதிப்பும் - தமக்கு மரியாதைக் குறைவு ஏற்படுதலையும் சிந்தியாமல், (6ாட்டின் விடுதலைக்காக உழைக்கின் ருேம் என உரைத்துக் கொண்டு) நாணின்றி. (தவருண வழிகளில் செல் கின் ருேமே என்று) வெட்கமில்லாமல் (காணமில்லாமல்),
 
 

விளக்கவுரை
இழிசெல்வத் தேட்டில் - நீதிக்கு மாறுபட்ட இழிவான வழி
களில் செல்வத்தைத் தேடுவதில், விருப்புங் கொண்டே - மிக விருப்ப முடையவர்களாய், சிறுமை அடைவார் . இகழ்ச்சீ அடைவார்கள் என்பதாம்
விளக்கம்: இக்கவிதையில் நடிப்புச் சுதேசிகள் நாடு விடுதலை அடையும்வண்ணம் உழைக்க வேண்டுமெனக் கூறிக் கொண்டே பொதுமக்கள் தம்மைக் குறைவாக மதிக்கும் வண் ணம் நாணமில்லாதவர்களாய், இழிதொழில்களைச் செய்து செல் வத்தைத் தேடும்விருப்பத்தை உடையவர்களாய் கீழ்மை அடை வார்களெனக் கூறி வருந்துகின்ற பாரதியாரின் மனநிலையை உணர்கின்ருேம், -
தேசத்தொண்டர் என்னும் போர்வையில் புதுந்துகொண்ட நடிப்புச் சுதேசிகள், தம்மை உண்மைத் தொண்டர்களென
எண்ணிய பொதுமக்கள் அவமதிப்பார்கள் என்பதைக்கூட
நினைக்காமல் தீய வழிகளால் செல்வத்தைத் தேட முயன்று சிறுமையடைகின்ற செயலை எண்ணி எண்ணிப் பாரதியார் மிக அருவருப்படைகின்றர்.
இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே
SR6hñ (3u I 9Aggpn69»Ln -Lu J 620)LGQH g gti o.! எனும் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஒசை பாரதி யாரின் அருவருப்பை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடி-கிளியே!
செம்மை மறந்தா ரடீ! 6 பொருள்: சொந்தச் சகோதரர்கள் - தம்மோடு உடன் பிறந்த உரிமையை உடைய உடன்பிறப்பானர்கள், துன்பத் தில் - பகைவர்கள் புரிகின்ற இன்னல்களினுல் அல்லது வறுடிை வருத்தம் முதலியவற்ருல், சாதல் கண்டும் இறந்துபோதலைப் பார்த்துக் கொண்டிருந்தும், சிந்தை இரங்கார் தமது மனத்தில் சிறிதளவேனும் இரக்கம் கொள்ளமாட்டார்கள், செம்மை
மறந்தார் - (இங்ஙனம் இரக்கமில்லாத இவர்கள் அல்லற்பட்ட
3

Page 21
34 பாரதியார் பாடல்கள்
சுற்றத்தாரை ஆதரிக்க வேண்டும் என்னும்) மீதியையும் மறந்து
விட்டார்கள் என்பதாம்,
விளக்கம்: இக்கவிதையில் தம் உடன்பிறந்த சகோதரர்
கள் துன்பத்தினுல் இறந்துபோதலை நேரிற் கண்டும் தம்மால்
இயன்ற உதவிபுரிந்து அவர்களின் துன்பத்தை ஓரளவாவது நீக்க எண்ணுமல் மனஇரக்கமின்றி நீதியையும் மறந்து வாழ் கின்ற நடிப்புச் சுதேசிகளின் எளிய பண்பை எண்ணி எண்ணிக் கவலை அடைகின்ற பாரதியாரின் மன நிலையை உணர்கின்றேம்,
இதனுல் நடிப்புச் சுதேசிகள் நாட்டு மக்களை ஏமாற்றுவ
துடன் அமையாது தம்முடன் பிறந்த சகோதரர்கள் வறுமை முதலிய இன்னல்களால் இறந்து போதலைக் கண்டும், இரங்கி உதவாத வன்கண்ணராய் வாழ்கின்றர்கள் என்பதையும் பாரதி யார் நினைவூட்டுகின்றர்.
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி எனும் தொடர்களைப் படிக்கும்பொழுது நடிப்புச் சுதேசிகளின் இரக்கமில்லாத உள்ளம் அப்படியே காட்சி அளிக்கின்றது.
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணுற் கண்டும் கிளியே! G5 Ligai Salt L S S to f
பொருள்: பாரதர் பாரத நாட்டு மக்கள், பஞ்சத்தும் ை வறுமை மிகுதியினுலும், நோய்களிலும்  ைகொடும் கோய்களி குலும், புழுக்கள்போல் துஞ்ச - எலும்பில்லாத புழுக்கள் துடி துடித்து இறப்பதுபோல இறக்துபடுதலே, தம் கண்ணுற் கண்டும் , தமது கண்களால் நேரே பார்த்துக்கொண்டிகுந்தும், சோம்பிக் இடப்பார் = வறுமைத் துன்பத்தையும் கொடிவ கோய்களையும் மீக்கித் தம் காட்டு மக்களைப் பாதுகாக்க முடி யாமல் சோம்பல் உடையவர்களாய் உறங்கிக் கிடப்பார்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் நடிப்புச் சுதேசிகள் உண்மை
காட்டுப்பற்று உடையவர்கள்போல நடித்துப் பேசுவார்களே அல்

விளக்கவுரை 35
லாமல் பஞ்சத்தினுலும், நோய்களினுலும் துடிதுடித்துப் பாரத காட்டு மக்கள் இறப்பதைக் கண்டும் தம்மாலியன்ற உதவி செய்து அவர்களைப் பாதுகாக்க முயலாமல் சோம்பிக் கிடப்பார் கள் எனச் சொல்லிச் சோல்லித் துன்பம் அடைகின்ற பார தியாரின் உள்ளத்துடிப்பை உணர்கின்றேம்.
புழுக்கள் போல் துஞ்சத் தம் கண்ணுல் கண்டும் சோம்பிக் கிடப்பாரடி எனும் தொடர்களைப் படிக்கும்பொழுது பாரதமக்கள் இறந்து பட்ட பரிதாப நிலைமை எமது உள்ளத்தையும் உருக்குகின்றது.
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுமூர்
வாயைத் திறந்து சும்மா!-கிளியே! வந்தே மாதர மென்பார்! 18
பொருண்: தாயைக் கொல்லும் - தமது தாயைத் தம் கண் முன்னேயே துடிக்கத் துடிக்கக் கொல்லுகின்ற கொடிய, பஞ் சத்தை - வறுமைப்பிணியை, தடுக்க - போக்குதற்கு, முயற்சி புரூர் - சிறிதேனும் முயற்சி செய்யமாட்டாதவர்களாகிய அக் இடிப்புச் சுதேசிகள், சும்மா - ஓர் கருத்தும் இன்றி, வாயைத் திறந்து  ைதமது வாய்களை அகல விரித்து, வக்தேமாதரம் என் பார்  ைவந்தே மாதரம் என்னும் தாரக மந்திரத்தைச் சொல் வார்கள் என்பதாம், (தாயைக் கொல்லும் பஞ்சத்தை என்பதற்கு பெற்ற தாயையும் கொன்று தின்னக்கூடியதான கொடும் பஞ் சத்தை எனவும் பொருள் கூறலாம்).
விளக்கம்: இக் கவிதையில் தாயைக் கொல்லும் மிகக் கொடும் பஞ்சம் தம் தாய்காட்டில் நிலவுவதைக் கண்டும் அத னேப் போக்க முயலாமல் வாளா வந்தேமாதரம் எனக் கூறித் திரிகின்ற நடிப்புச் சுதேசிகளின் உணர்ச்சி அற்ற வாழ்வை எண்ணி எண்ணி வருந்துகின்ற பாரதியாரின் மனநிலையை உணர் கின்ருேம்,
நடிப்புச் சுதேசிகள் நாட்டில் உள்ள வறுமை முதலியவற் றைப் போக்க முயலாமல் தாங்களும் உண்மைத் தேசத் தொண் டர்கள்போல கடித்து மக்களை ஏமாற்றிப் புகழடைய முயல் கின்ற போலிச்செயலைப் போக்கடிககவேண்டும் என்ற பெரு வேட்கை பாதியாரின் உள்ளத்தில் கின்று அலைமோதுவதை அறிகின்றேம். Ingge

Page 22
36 பாரதியார் பாடல்கள்
3. சுதந்திரப் பெரும்ை
சுதந்திரப் பெருமை என்பது அடிமை வாழ்வை அறுத்துச் சுதந்திர வாழ்வைப் பெறுதற்காகப் பாரதகாட்டில் தேசத் தொண்டர்கள் போர்தொடுத்த காலத்தில் சுதந்திரத்தின் சிறப் புக்களைப் போற்றிப் பாரதியார் பாடிய கவிதைத் தொகுதியாகும். இக்கவிதைகளில் சுதந்திர தாகம் கொண்ட பாரதியாரின் உணர்ச்சிக் குமுறலும், சுதந்திர வேட்கையும் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. அடிமைத் தளையை அறுத்து எங்கள் அன்னை நாடாகிய பாரததேசத்தை விடுதலை செய்வோமென வீறு கொண்டெழுந்த பாரதநாட்டு விடுதலை வீரர்களின் உயிர்த் துடிப் பும், உரிமை உணர்ச்சி வேகமும் இக்கவிதைகளில் நின்று நிழ லாடுகின்றன.
*தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ?" என்னும் வர்ண மெட்டு வீர சுதந்திரம் வேண்டிநின்ருர் பின்னர்
வேருென்று கொள்வாரோ?-என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவா ரோ? (வீர)
பொருள்: வீர சுதந்திரம் - (பிறருக்கு அடிமைப்பட்டு அடங்கி வாழாத) வீர சுதந்திரம் என்னும் தன்னுட்சி உரி மையை, வேண்டி கின்ருர்  ைபெறுதற்கு விரும்புகின்றவர்களா கிய உண்மைத் தேசத் தொண்டர்கள், பின்னர் - அதனே நீங்கி, வேருென்று - அதற்கு மாறுபட்ட அடிமை வாழ்வை, கொள் வாரோ - விரும்பி ஏற்றுக் கொள்வார்களோ கொள்ளமாட் டார்கள், என்றும் க எப்பொழுதும், ஆரமுது கிறைந்த சுவையை உடைய தேவாமிர்தத்தை, உண் ணு தற்கு - (முயன்று பெற்று) அருந்துவதற்கு, ஆசைகொண்டார் - விருப் பம் கொண்டவர்கள், கள்ளில் - (அறிவை மயக்கும்) இழிவான கள்ளேப் பெறுதற்காக, அறிவைச் செலுத்துவாரோ - தமது அறிவினேச் செலுத்த முயற்சி செய்வார்கனோ (செய்ய மாட் டார்கள் என்பதாம்)
ལུ་

விளக்கவுரை 37
விளக்கம்: இக் கவிதையில் வீரசுதந்திர வாழ்க்கையை விரும்பி விடுதலைப்போர் புரிகின்ற தேசத்தொண்டர்கள் ஆளும் கட்சியாரால் அளிக்கப்படுகின்ற அடிமைச் சின்னங்களாகிய இழிந்த பதவி, பட்டம் முதலியவற்றை விரும்பமாட்டார்கள் எனக் கூறுகின்ற பாரதியாரின் விடுதலைப்போர் முழக்கத்தைக் கேட்கின்ருேம்.
வீரசுதந்திரம் வேண்டி நின்ருர் பின்னர் வேருென்று கொள்வாரோ?
எனப் பாரதியார் உரிமைக்குரல் எழுப்பி உலக மக்களைக் கேட் கின்றர். வீரசுதந்திரம் பெறவேண்டும் என்னும் விடுதலை வெற்றி கொண்ட உண்மைத் தொண்டர்கள் பட்டம் பதவி என்ப வற்றை எட்டுணையும் மதியார்கள் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
வீரசுதந்திரத்தை ஆரமுதென்றும், அடிமை வாழ்வைக் கள் என்றும் பாரதியார் இழித்துரைக்கின்றர் அரிய ஆரமுதத்தைப் பெற்று உண்ணுதற்கு முயல்கின்றவர்கள் இழிந்த கள்ளைப் பெற்று உண்பதற்கு முயலமாட்டார்களெனப் பாரதியார் அறுதி யிட்டு உரைக்கின்றர்.
ஆரமுதை உண்ணுதற்கு ஆசைகொண்டார் - உவமானம். வீரசுதந்திரம் வேண்டி நின்ருர்-உவமே யம். இடைவிடாத முயற்சியும், ஆரா வேட்கையும் பொதுத்தன்மைகளாகும்.
கள்-உவமானம் அடிமையாக இருந்துபெறும் பட்டம் பதவிகள்-உவமேயம், இழிவும், பிறரால் இக ழப்படுதலும் - பொதுத்தன்மைகளாம்.
2 புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
பொய்யென்று கண்டாரேல்-அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பா ரோ? (పటిa}
స్లో

Page 23
哥8 பாரதியார் பாடல்கள்
பொருள்: புகழும்(ைசெயற்கரும் செயல்களே ஆற்றி அவற் றிஞல் அடைகின்ற) உண்மைப் புகழும், கல் அறமுமே = தூய தரும கெறியுமாகிய இரண்டுமே, அன்றி - அல்லாமல், எல் லாம் - மற்றைய பட்டம் பதவீ முதலியனவெல்லாம், வெறும் பொய்யென்று - விலையில்லாமல் அழிந்துபோகும் பொய்மை உடையவைகள் என்று கண்டாரே ல் - ஆராய்ந்து தெளிவார் களேயால்ை, அவர் - அங்ங்ணம் புகழும் அறமுமே மெய்யான வைகளெனத் தெளிந்த அத்தேசத் தொண்டர்கள், இகழுறும் . பிறரால் இகழும் தன்மை பொருங்கியதான, ஈனத் தொண் டியற்றியும் அங்கியர்க்கு அடிமை செய்தல் ஆகிய இழிதொழி லேப் புரிந்தும், வாழ்வதற்கு = உயிர் வாழ்வதற்கு, இச்சை புற்று இருப்பாரோ - ஆசைப்படுவார்களா இல்லை என்பதாம்,
விளக்கம்: இக்கவிதையில் புகழும் நல்லறமும்தான் நிலை யாக நிற்கக்கூடியவைகள் என்பதை உணர்ந்த சுதந்திர வீரர் கள், பிறர் இகழ்ந்து கூறத்தக்கதாக அந்நியரின்கீழ் அடங்கி யிருந்து எளிய தொழில்களைப் புரிந்து வாழ விரும்பமாட்டார்கள் எனக்கூறிப் பெருமை அடைகின்ற பாரதியாரின் பெருமித உள் ளத்தைக் காண்கின்றேம்.
W இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ?
எனச் சுதந்திரதாகம் கொண்ட மக்களைப் பாரதியார் கேட்கின் ரூர், சுதந்திரத்தின் சிறப்பை உணர்ந்த மக்கள் ஒருபோதும் அந்நியரின் கீழ் அடிமையாய் இருந்து அவர்களிடம் பெற்று வாழும் பட்டம் பதவிகளை விரும்பமாட்டார்கள் என்பதே பாரதி யாரின் எண்ணமாகும்.
தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா
எனப் பாரதியார் பிறிதோர் இடத்தில் கூறி இருப்பதையும் கோக்குக.

விளக்கவுரை இ.
 ேபிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாசேல்-மானம் துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ? 醫 (வீர)
பொருள்: பிறந்தவர் யாவரும் - (இவ்வுலகில்) பிறந்தவர் கள் எல்லோரும், இறப்பது உறுதி எனும் = இறந்துபடுதல் தவருது விகழ்வது ஒன்ருகும் என்ற, பெற்றியை உண்மை "வான தன்மையை, அறிந்தாரேல் - சுதந்திரதாகம் கொண்ட தொண்டர்கள் அராய்ந்து அறிவார்களேயானுல். மானம் து ற ங் து - (உயிரினும் சிறந்த) மானத்தை வீ டு த் து அறம் மறக்தும் - தருமத்தைக் கைவிட்டும், பின் - அங்ஙனம் தருமத்தையும் மானத்தையும் கைவிட்ட பின்பும், உயிர் கொண்டு வாழ்வது - உயிரை மட்டும் பாதுகாத்து வாழ்க் திருப்பதை சுகமென்று மதிப்பாரோ - இன்பம் என்று கருது வார்களோ கருதமாட்டார்கள் என்பதாம்,
விளக்கம்: இக் கவிதையில் பிறந்தவர் யாவரும் இறப் பது உண்மையென்று தெளிந்த சுதந்திரத் தொண்டர்கள் மானத்தையும் அறத்தையும் கைவிட்டு அடிமைகளாய் உயிர் வாழ்ந்திருப்பதை இன்பம் என்று ஒருபோதும் எண்ணமாட்டார் கள் என மிக ஆர்வமுடன் கூறுகின்ற பாரதியாரின் மன எழுச்சியைக் காண்கின்ருேம்.
பிறந்தவர் யாவரும் இறப்பதுறுதி யெனும் பெற்றியை அறிந்தாரேல்
எனவரும் கவிதைத் தொடர்களில் நிலையாமை உணர்ச்சி கிழ
லாடுகின்றது.
சிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவதன்று தொன்றியல் நெறியே
எனவரும் மணிமேகலைச் செய்யுள் பகுதியையும் நோக்குக.
மானம் துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது ககமென்று மதிப்பாரோ. სისორ ჯ.

Page 24
40 பாரதியார் பாடல்கள்
எனப் பாரதியார் கேட்கின்ற குரலிலே அவர் உள்ளத்தெழுந்த மானஉணர்ச்சியின் பெருக்கு, அப்படியே கிடந்து அலைமோது கின்றது.
இளிவரின், வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு என்பது திருக்குறள்.
மானம் என்பது தன்னிலையில் தாழாமையும், தாழ்வு
வந்துழி உயிர் வாழாமையுமாம் எனப் பரிமேலழகர் கூறும் கருத்தையும் நோக்குக.
4 மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ? (வீர)
பொருள்: மானுட ஜன்மம் - மக்கட்பிறவி, பெறுவதற்கு அனிதெனும் அடைதற்கு அரியதொன்று என்ற, வாய்மையை உணர்ந்தாரேல் = உண்மையை உணர்வார்களானுல், அவர் .ை அங்ங்ணம் உண்மையை அறிந்த சுதந்திரத் தொண்டர்கள், ஊனுடல் தீயினும் - (சுதந்திரப் போரில் ஈடுபடுவதினுல்) ஊனே உடைய (தமது) உடம்பு அழியுமீாயினும், (ஊனேடு கூடிய உடம்பை நெருப்பில் இட்டு வேகவைத்தாலும் எனவும் பொருள் கொள்ளலாம்), உண்மை நிலைதவற - தாம் உண்மை யென நம்பி மேற்கொண்ட சுதந்திர வாழ்வில் நின்றும் நீங்கி அடிமை வாழ்வை ஏற்க, உடன்படுமாறுளதோ - உடன்படு கின்ற தன்மை உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் மக்கள் பிறப்பின் மேம் பாட்டைய உணர்ந்த சுதந்திரத் தொண்டர்கள் தாம் சுதந்திரப் போரில் ஈடுபடுவதனுல் இறக்கும் நிலைமை ஏற்பட்டாலும் அஞ்சி அடிமையாக இருப்பதற்கு உடன்பட மாட்ட்ார்கள் என மிக உணர்ச்சிப் பெருக்குடன் பாரதியார் உரைக்கின்ருர்,
 
 
 
 
 
 
 
 
 
 
 

விளக்க வுரை 4疆莎
ஊனுடல் தீயினும் உண்மை நிலை தவற உடன்படு மாறுளதோ?
எனவரும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது உண் மைச் சுதந்திரத் தொண்டர்கள் தங்கள் ஊன்பொதிந்த உடல் அழிய நேர்ந்தாலும் அடிமைகளாக வாழ உடன்படமாட்டார்கள் என்னும் உணர்ச்சி எமது உள்ளத்திலும் எழுந்து இன்ப மூட்டுகின்றது.
சதையைத் துண்டு துண்ட்ாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ?-ஜீவன்-ஒயுமோ?
எனப் பாரதியார் கூறும் இச்செய்யுட் பகுதியையும் நோக்குக.
* விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கை கட்டிப் பிழைப்பாரோ?
பொருள்: விண்ணிலிரவிதனே - வானவீதியில் உலாவித்தன் ஒளிக்கதிர்களினல் உலக மக்தளேப் புரக கின்ற சூரியனே. விற்றுவிட்டு • விலக்குக் கொடுத்துவிட்டு, எவரும்  ைஎத்தகைய அறிவிலிசள் என் ரூலும், போய் - தேடிச்சென்று, மின்மினி கொள்வாரோ - (சூரியனே விற்ற பணத்தைககொண்டு அச்சூரி யனுக்குப் பதிலாக அற்ப ஒளியை உடைய) மின்மினிப் பூச் சியை விலைக்கு வாங்குவார்களோ வாங்கமாட்டார்கள், (அது போல, கண் ணினும் இனிய - எங்கள் கண்களிலும் பார்க்க மிக மேலான, சுதந்திரம் போனபின்  ைஉரிமை வாழ்வை இழந்த பின், கை கட்டிப் பிழைப்பாரோ - (அங்கியரின் கீழ் அடிமை களாக இருந்து) கைகட்டி வாழ்வார்களோ வாழமாட்டார்கள் 6T60T Lugtup,
விளக்கம்: இக்கவிதையில் சுதந்திர உணர்ச்சிகொண்ட மக்கள் ஒருபோதும் அடிமைகளாக இருந்து வாழ விரும்பமாட் டார்கள் என ஆர்வத் துடிப்புடன் கூறுகின்ற பாரதியாரின்
ஆனந்தவெள்ளம் அலை எறிகின்றது.

Page 25
ag2 பாரதியார் பாடல்கள்
வானவீதியின்கண் நின்று பேரொளியைப் பரப்பி உலக உயிர்களை வாழ்விக்கின்ற சூரியனைப்போலப் பாரத தேசமெங் கும் அறிவொளி வீசிப் பாரத மக்களின் பண்பாட்டை வழிவழியாக நிலைபெறச் செய்யும் கண்ணினும் இனிய சுதந்திர வாழ்வை இழக்க ஒருபொழுதும் உரிமை உணர்ச்சிகொண்ட பாரத மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதே பாரதியாரின் கருத்தாகும் சுதக் திர வாழ்வை இழந்து அடிமை வாழ்வை மேற்கொள்வது சூரி யனை விற்று அதற்குப்பதிலாக மின்மினியை விலைக்குப் பெறு வதுபோன்ற செயலாகும் என்பதைப் பாரதியார் விளக்கிக் கூறுகின்ருர்,
விண் - உவமானம், பாரததேசம் - உவமேயம். அகலமும், அளவிடமுடியாத பெருமையும் - பொதுத் தன்மைகளாகும்.
விண்ணில் இரவி (சூரியன்) - உவமானம். பாரத காட்டின்கண் நின்று நிலவும் சுதந்திர வாழ்வு - உவ மேயம். வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்த லும், எங்கும் ஒளியைப் பரப் புதலும் - பொதுத்தன்மை களாகும.
மக்கள் உறுப்புக்களில் கண் மிக இன்றியமையாததாய்
விளங்குவதுபோல மக்கள் அடையும் பேறுகளில் சுதந்திரமே
மிக இன்றியமையாததாய் விளங்குகின்றது என்பதை,
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?
எனும் தொடர்களால் பாரதியார் எமக்கு இனிது விளக்கிக் கூறுகின்றர். p
6 மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினுல்
கைகொட்டிச் சிரியாரோ? (வீரy
 

விளக்கவுரை 4.
பொருள்: மண்ணில் - இங்கிலவுலகின் கண் உள்ள, இன்
பங்களே - பட்டம் பதவி முதலிய கிலேயில்லாத சிறிய இன்பங்
களே, விரும்பி அடைவதில் விருப்பங்கொண்டு, சுதந்திரததின் ை சுதந்திரமாக வாழ்கின்ற, மாண்பினே , பெருமை பொருந்திய
பேற்றினே, இழப்பாரோ - இழந்து விட எண்ணுவார்களோ
எண்ண மாட்டார்கள், கண்ணிரண்டும் விற்று - தமக்குரிய கண்கள் இரண்டினையும் வில்லககு விற்றுவிட்டு, சித்திரம் வாங்கி ணுல் - (கண்களை விற்றுப் பெற்றுக்கொண்ட அப்பணத்தைக் கொடுத்து) அழகிய சித்திரம் ஒன்றை ஒருவர் வாங்குவார் ஆணுல், கைகொட்டிச் சிரியாரோ - (அவரின் அறியாமை மிக்க செயலைக்கண்ட உலக மக்கள்) கைகொட்டிச் சிரித்து அவரை இகழ்வார்க்ள் என்பதாம்.
விளக்கம் இக் கவிதையில் உலகில் அடையும் சிறிய இன்பங்களுக்காக மாண்புமிக்க சுதந்திரத்தை இழக்க ஒருபோ தும் பாரத மக்கள் எண்ணமாட்டார்கள் எனச் சொல்லிச் சொல்லி இறுமாப்படைகின்ற பாரதியாரின் உள்ளத்தைக் காண் கின்றேம். பட்டம் பதவி முதலிய சிறிய இன்பங்களுக்காக,
மாண்புமிக்க சுதந்திரத்தை இழந்து வாழுதல், ஒருவர் தமது
இரண்டு கண்களையும் விற்று அழகு நிறைந்த சித்திரத்தை வாங் குவதுபோல இருக்கும், எனச் சிறந்த உவமானம் காட்டி எமது உள்ளத்தில் சுதந்திரத்தின் இன்றியமையாமையை மிக அழுத் தம் திருத்தமாகப் பதித்துள்ள பாரதியாரின் புலமைத்திறன் பாராட்டற்குரியதாகும். : : '
கண் இரண்டினையும் விற்றல் உவமானம். மாண்பு மிக்க சுதந்திரத்தினை இழத்தல் - உமமேயம். சிறப் பும், இன்றியமையாமையும் - பொதுத்தன்மைகளாகும்.
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தை இழத் தல்-உவமானம். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கு தல்-உவமேயம். பிறரால் இகழப்படுதலும், பயனின் மையும் பொதுத்தன்மைகளாகும்.

Page 26
44 பாரதியார் பாடல்கள்
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவாே? வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (வீர)
பொருள்: வந்தே மாதரம் என்று - வந்தே மாதரம் என்று சொல்லித் தாய்காட்டிற்கு வணக்கம் செய்து அங்காட்டினத் தம் உயிரினும் மேலாக மதிப்பவர்கள், வணங்கியபின் அங்க னம் தம் தாய் காட்டை வந்தே மாதரம் எனக்கூறி வணக்கஞ் செய்தபின், (அச்சுதந்திரத்தொண்டர்கள்), மாயத்தை வணங்கு வரோ - (பட்டம் பதவி முதலியவற்றைத் தமக்கு ஈத்து) தம்மை மயக்குகின்ற அடிமை வாழ்வாகிய மாயத்தை மதித்து வழிபாடு செய்வார்களோ செய்யமாட்டார்கள், வந்தே மாத ரம் ஒன்றே - வந்தே மாதரம் என்று சொல்வித் தாய்காட்டை வணங்குகின்ற ஒப்பற்ற சொற்ருெடர் ஒன்றுதான், தாரகம் என்பதை - சுதந்திரத் தொண்டர்களின்) மூலமந்திரம் என் பதை, மறப்பாரோ - (அவர்கள் ஒருபோதும்) மறக்கமாட்டார் கள் என்பதாம். -
தாரகம் என்பதற்கு தம் உயிர் உடலில் தங்கி நிற்றற்கு ஆதாரமாக உள்ளது எனவும் பொருள் கூறலாம்).
விளக்கம்: இக் கவிதையில் தாய்நாட்டுக்கு வணக்கம் எனப் பொருள்படும் வந்தேமாதரம் என்னும் மூலமந்திரத்தின் கருத்தை உணர்ந்து சொல்லி அதனுல் புத்துணர்ச்சி கொண்டு தம் ஆவி தளிர்க்கின்ற சுதந்திர வீரர்கள் ஒருபோதும் பட்டம் பதவி முதலிய சிறிய இன்பங்களைக் கொடுக்கும் அடிமை வாழ்வை விரும்பமாட்டார்களெனக் கூறுகின்ற பாரதியாரின் வெற்றி முழக்கத்தைக் கேட்கின்ருேம்.
வந்தேமாதரம் என்பதுதான் பாரதநாட்டை விடுதலை செய் தற்காக சுதந்திரப் போர் தொடுத்த தேசத் தொண்டர்களின் உயிரினும் மேலான மூலமந்திரம் ஆகும். தம் உடலை விட்டு உயிர்போகும் நேரத்திலும் தேசத்தொண்டர்கள் இம்மந்திரத்தை மறக்கமாட்டார்கள்.

விளக்கவுரை
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்து வோம்; முடி-தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ?-அவ-ழானமோ?
எனவரும் பாரதியாரின் பாடல் இவ்வுண்மையை நிலைநாட்டி உரைத்தலைக் காண்க.
தாரகம் என்பது சமய நூல்களில் மூலமந்திரமாகிய பிரண
வத்தின் பெயராய் விளங்குகின்றது. சமயத் தொண்டர்களுக்கு
மூலமந்திரமாய் விளங்குகின்ற பிரணவத்தைப் போலத் தேசத்
தொண்டர்களுக்கு வந்தேம்ாதரம் என்னும் தொடர் மூலமந்திர
மாய் விளங்குகின்ற தென்பதை உணர்த்த எண்ணிய பாரதி யார் அதனைத் தாரகமெனக் குறிப்பிட்டுள்ளார்.
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
எனப் பாரதியார் அத்தொடரைத் தாரகம் எனக்கூறி மகிழ்தலை நோக்குக.
ю

Page 27
46 பாரதியார் பாடல்கள்
4. சுதந்திர தேவியின் துதி
பாரத மக்கள் தாங்கள் அடையும் பேறுகளையெல்லாம். சத்தியின் மயமாகக் காணும் பண்பாடு படைத்தவர்கள். காட் டைப் பாரதமாதா என்றும், கல்வியைக் கலைமகள் என்றும், செல்வத்தைத் திருமகள் என்றும் சத்தியின் கோலமாகக் கொண்டு பரம்ப்ரை பரம்பரையாக வழிபட்டு வருகின்றர்கள். அப்பரம்பரைப் பண்பாட்டில் ஊறி, உணர்ச்சி பெற்றெழுந்த பாரதியார் சுதந்திரத்தையும் சுதந்திர தேவியென சத்தியின் கோலமாக வைத்து வழிபாடு புரிகின்றர் சுதந்திர தேவியின் திருவருளைப் பெருத நாட்டின் தாழ் நிலையையும், சுதந்திரதேவி யின் அருளைப் பெறுதற்காக முயலும்பொழுது ஏற்படும் இன் னல்களையெல்லாம் தாங்கி நிற்கும் சுதந்திரத் தொண்டர்களின் வீர உள்ளத்தையும், சுதந்திரத்தின் மேம்பாட்டையும் சுதந்திர தேவியின் துதியென்னும் இப்பகுதியிற் காணலாம். பாரதியா ரின் சுதந்திர வேட்கை அலை எறியும் கடல்போலப் பெருக் கெடுத்துப் பாய்கின்ற பெருமித கடை இக்கவிதைகளிற் கிடந்து நிழலாடுகின்றது.
இதந்தகு மனையின், நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் ருலும் விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே. பொருள்: இதந்தரூ . இன்பத்தை அளிக்கின்ற, மனேயின் நீங்கி-இல்லத்தைத் துறந்து சென்று, இடர் மிகும் - துன்பம் நிறைந்த, சிறைப்பட்டாலும் சிறைச்சாலையில் அடைபட்டு இருந்தாலும், பதம்-பதவியும், திருகசெல்வமும் ஆகிய இரண் இம் மாறி - இரண்டினேவும் இழக்கு, பழிமிகுந்து - பிறரால்

விளக்கவுரை 47
பழிக்கப்படும் தன்மை மிகுந்து, இழிவுற்ருலும் - தாழ்ந்த
விலேயை அடைய கேர்த்தாலும், விதந்தரு - வேறு வேறு வகை யான, கோடி இன்னல் - கோடிக்கணக்கான துன் பங்க ள், விளைந்து - உண்டாகி, எனை அழித்திட்டாலும் - என் இன அழிவு செய்தாலும், சுதந்திர தேவி - சுதந்திரம் என்னும் பெரு வாழ்வை எமக்கு அளிக்கின்ற தேவியே, நின் ஆன . (என் உறுதி
மீனும் சிறந்த) உன்னே, தொழுதிடல் - வணங்குதலே, மறக்கி லேனே - (யான்) மறக்கமாட்டேன் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் இன்னல்கள் பல அடுத்து அடுத்து வந்தாலும், சுதந்திர தேவியாகிய நின்னைத் தொழுது வாழ்கின்ற தொண்டினை யான் மறக்கவே மாட்டேன் எனக் கூறும் பாரதியாரின் சுதந்திர வேட்கைத் துடிப்பைக் காண் கின்ருேம்.
மனைவி மக்களோடு வீற்றிருந்து இன்ப நுகர்ச்சிபெற்று மகிழும் இல்லததைவிட்டு, துன்பமே நிறைந்த சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்தாலும், சுதந்திர தேவியைத் தொழுது தொண் டாற்றும் செயலே மறக்கமாட்டேன் எனப் பாரதியார் மிக மன மகிழ்ச்சியுடன் உரைக்கின்றர். மனேவி மக்களை விட்டுப் பிரிந்து நாட்டின் விடுதலைக்காகச் சிறைக்குப் புகும் வாழ்வு மிக அரிய தொன்று; ஆதலினுல் அதனை முற்கூறினர்.
பட்டம் பதவிகளை மிகப் பெரிதாக மதித்து வாழ்கின்ற வர்கள் சுதந்திரத் துடிப்பினுல் அவற்றையெல்லாம் உதறித் தள்ளி, கோடிக்கணக்கான துன்பங்கள் கூடிவந்து தம்மை அழித்திட்டாலும், சுதந்திரதேவியின் அருளை மறக்கமாட்ர் எனவும் பாரதியார் மிக மான உணர்ச்சியுடன் கூறுகின்றர்.
இங்ஙனம் பாரதியார் தன்மேல் ஏற்றிக் கூறிய இவ் விடு தலை வேட்கைப் பண்புகள் பாரதநாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுச்சிபெற்றுச் செயலாக மலரவேண்டும் என் பதே அவரின் கருத்தாகும்.

Page 28
as 48 பாரதியார் பாடல்கள்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும்
எனப் பாரதியார் கூறுகின்ற இக்கவிதைத் தொடரில் நின்று அலை மோதுகின்ற சுதந்திரத் துடிப்பு ஆயிரம் ஆயிரம் சுதந்திர வீரர்களைப் படைத்து அளிககும் ஆற்றல் வாய்ந்ததாகும்.
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சேனம்
எனவரும் ப்ாரதியாரின் கவிதைத் தொடர்களையும் நோக்குக.
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும், பன்னருங் கல்வி கேள்வி
படைத்துயர்ந் திட்டா ரேனும், பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள் வேய் பிணத்தோ டொப்பார். 9.
பொருள்: கின்னருள் (சுதந்திர தேவியே) உனது கருணை வாகிய சுதந்திரத்தை, பெற்றிலாதார் . பெருதவர்கள், விக ரிலா உவமை கூறமுடியாத, செல்வரேனும் - மிகப்பெருஞ் செல்வத்தை உடையவர்களாய் இருந்தாலும், பன்னரும் (அன விட்டுக்) கூற முடியாத, கல்வி - கற்ற கல்வி அறிவையும், கேள்வி - கற்றுணர்ந்தவர்களிடத்துக் கேட்ட கேள்வி அறிவை யும், படைத்து - பெற்று, உயர்ந்திட்டாரேனும் - மேம்பாடு அடைந்தவர்கள் ஆஞலும், பின்னரும் . இவற்றையெல்லாம் அடைந்ததோடு அமையாமல் பின்பும், எண்ணிலாத - எண் இணிறந்த, பெருமையில் - மதிப்புக்களில், சிறந்தாரேனும் - உயர்ச்சி பெற்ருராயினும், அன்னவர் (உன்னருளாகிய சுதக் திரத்தைப் பெருமல்) மேற்கூறிய எல்லாச் சிறப்புக்களேயும் பெற்றிருக்கின்ற அவர்களின், வாழ்க்கை - வாழ்வானது, பாழாம் - அழிந்துபோகும், (சுதந்திரம் இன்றி வாழ்கின்ற அவர்கள்) அணிகள் வேய் = அணிகலன்களை அணிந்து (ஆபரணங்

d
விளக்கவுரை 49
களால்) அழகு செய்யப்பட்ட, பிணத்தோடொப்பார் . பிணத்
தைப்போல் விளங்குவார்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் சுதந்திர தேவியின் திருவரு ளாகிய சுதந்திரத்தைப் பெருமல் அடிமைகளாக இருந்து வாழ் கின்றவர்கள் எத்துணைப் பெரும் பேறுகளை உடையவர்களாய் விளங்கினுலும் அவர்களின் வாழ்வு பயனில்லாததாகும் எனக் கூறுகின்ற பாரதியாரின் சுதந்திரதாகம் கொண்ட உள்ளத் துடிப் பைக் காண்கின்றேம்.
இவ்வுலக வர்ழ்விற்கு மிகமிக இன்றியமையாது வேண்டட் படுவது பொருட் செல்வமே ஆகும். பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லை என்பது திருக்குறள். இப்பொருட் செல்
வத்தை அடிமைகளாக இருப்பவர்கள் மிகமிகப் பெருந்தொகை யாகப் பெற்றிருந்தாலும் அதனுல் பயனில்லை என்பதே பாரதி யாரின் கருத்தாகும். நிகரிலாச் செல்வரேனும் எனப் பாரதி யார் கூறிய தொடரைப் படிக்கும்பொழுது அச்செல்வத்தின் மிகுதி புலனுகின்றது.
இங்ங்ணம் செல்வம் மட்டுமேயன்றி அடிமைகளாக இருந்து வாழ்கின்றவர்கள் ஆராய்ந்து கற்றறிந்த அரும்பெருங் கல்வி கேள்விகளும் பலதிறப்பட்ட பெருமைகளும் பயனின்றிப் பாழாகு மெனப் பாரதியார் மிக உணர்ச்சியுடனும் சுதந்திர எழுச்சியுட னும் கூறுகின்றர்.
பன்னருங் கல்வி கேள்வி
படைத் துயர்ந் திட்டா ரேனும்
பின்னரும் எண்ணி லாத -
பெருமையிற் சிறந்தன ரேனும்
அன்னவர் வாழ்க்கை வாழாம்,
2) இக்கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஒசைப் பெருக்கும் உணர்ச்சிக் குமுறலும் அடிமைப்பட்டு வாழ்
வோரின் மேம்பாடுகள் எல்லாம் பயனின்றிப் பாழாகப்போகும்
4

Page 29
50 பாரதியார் பாடல்கள்
என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாக அனைவர் உள்ளத் திலும் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் விளங்குகின்றன.
இங்கனம் சுதந்திரம் இல்லாதவர்கள் பெற்றிருக்கும் சிறப் புக்களின் இழிவை -
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார் எனும் தொடரால் பாரதியார் எமக்கு விளக்கிக் கூறுகின்றர்.
அணிகள் வேய் பிணம்-உவமானம்.
அடிமையாக வாழ்கின்றவர்கள் பெற்றுள்ள கல்வி, செல்வம் முதலிய சிறப்புககள் - உவமேயம்
பயனின்மையும், பிறரால் மதிக்கப்படாமையும் பொதுத்தன்மைகளாகும்.
உயிர் இல்லாத பிணத்துக்கு உயர்ந்த அணிகலன்களை அணிந்து அழகு செய்வதினுல் அப்பிணத்துக்கு ஒர் மேம்பாடும் எய்தாமை போல அடிமையாக வாழ்கின்றவர்கள் அடைந்துள்ள கல்வி செல்வம் முதலியவைகளால் அவர்களின் நாடு ஒரு பய. னும் அடையாது என்பதாம்.
தேவி நின்னுெளி பெ ருத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலேகள் வேதங்க ளுண்டோ? பாவிய ரன்ருே நின்றன்
பாலனம் படைத்தி லாதார்? 3.
பொருள்: தேவி = சுதந்திர தேவியே, லீன் ஒளி - உன் னுடைய சுதந்திரப் பேரொளியை, பெருத அடையாத, தேயம் = தேசமானது, ஓர் தேடிமாமோ = (எத்துணைச் சிறப்புக்

விளக்கவுரை 5.
களுடன் விளங்கினுலும்) ஒரு தேசமென்று எண்ணப்படக் கூடியதாகுமோ, அங்கு - அந்தத் தேசத்தில், ஆவி உண்டோ உயிர்கள் (வாழ்ந்தாலும்) வாழ்கின்றன என்று எண்ணலாமோ, செம்மை அறிவுண்டோ - சிறந்த அறிவு வளர்ந்து பயன் தருத லாகிய செயல் உண்டாகுமா, ஆக்கம் உண்டோ - செல்வம் உண்டாகுமா, காவிய நூல்கள்  ை(உயர்ந்த) இலக்கியங்களும், ஞானக் கலேகள் - (உபநிடதம் முதலிய) ஞான சாத்திரங்களும், வேதங்கள் - வேதங்களும், உண்டோ - உளவாகுமோ, கின்றன். சுதந்திர தேவியாகிய உனது, பாலனம் - பாதுகாப்பை (சுதக் திர வாழ்வை), படைத்திலாதார் - பெருதவர்கள், பாவியர் அன்ருே - கொடும் பாவிகளேயாவர் என்பதாம். ܦܢ
விளக்கம்: இக் கவிதையில் சுதந்திர தேவியின் அரு ளைப் பெருத அடிமை நாட்டின் தன்மையையும், அங்கு வாழ் கின்ற மக்களின் கீழ்நிலையையும் இகழ்ந்துரைக்கின்ற பாரதியா ரின் உணர்ச்சிக் குமுறலைக் காண்கின்றேம்.
சுதந்திர தேவியின் ஒளியைப் பெருமல் இருக்கின்ற நாட்டை ஒரு நாடாகப் பாரதியார் கருதவில்லை. அங்கு உயிர் களும் இல்லை உண்மை அறிவும் இல்லை ஆக்கங்கள் இல்லை காவிய நூல்கள் இல்லே ஞான சாத்திரங்கள் இல்லை வேதங்கள் இல்லை அங்கு வாழ்கின்ற மக்கள் எல்லோரும் பாவிகள் என் றெல்லாம் பாரதியார் பழித்து வைதுரைக்கின்றர். அடிமையாக வாழ்கின்ற மக்கள் அடிமைத்தளையை அறுத்துச் சுதந்திர வாழ் வைப்பெற முயலாதிருந்தால் அவர்களின் எதிர்காலப் பரம்பரை யினரை மீளா அடிமைகள் ஆக்கிப் பாழ்படுத்தும் பெரும் பாத கச் செயலைப் புரிகின்றவர்களாவார் என்பதை வலியுறுத்த
பாவிய சன்ருே நின்றன்
பாலனம் படைத்தி லாதார்?
எனப் பாரதியார் வைது உரைக்கின்றர் என்பதை உணர்க.

Page 30
32 பாரதியார் பாடல்கள்
ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார் கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்; இழிவறு வாழ்க்கை தேரார்,
கனவினும் இன்பங் காணும்; அழிவறு பெருமை நல்கும்
அன்னை! நின் அருள் பெ ருதார். 龜
பொருள்: அன்னே சுதந்திரதேவி யென்னும் தாயே, அழி வறு - அழிவில்லாத, பெருமை நல்கும் பெருமையை அளிக் கின்ற, கின்னருள் பெருதார் . சுதந்திர வாழ்வு என்னும் கின் பெருங் கருணையைப் பெருதவர்கள், ஒழிவறு கோயில் . தீராத கொடும் பிணிகளால், சாவார்  ைஇறந்துபடுவார்கள், ஊக்க மொன்று - அடிமைத்தளேயை அறுத்து சுதந்திர வாழ்வைப் பெறுவோம் என்னும் ஊக்கத்தை (முயற்சியை) ஒருசிறிதே னும், அறியமாட்டார் - உணரமாட்டார்கள், கழிவுறு மாக்க ளெல்லாம் - (பிறநாட்டில்) கீழ்த்தர வாழ்க்கையில் இருக்கும் அறிவில்லாத மக்களும், இகழ்ந்திட - பழித்துரைக்கத் தக்கதாக கடையில் கிற்பார் இழிவான நிலையை அடைந்திருப்பார்கள், இழிவறு இழிவில்லாத, வாழ்க்கை - உயர்ந்த வாழ்வு (சுதந்திர வாழ்வு) எப்படிப்பட்டதென்று, தேரார் ஆராய்ந்து அறியார், கனவினும் - கனவில் என்ருலும், இன்பம் (சுதந்திர வாழ்வு பெற்றிருப்பதஞல் ஏற்படும்) இன்பத்தை, காணுர் - அறிய மாட்டார்கள் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் அடிமைத்தளையை அறுத் துச் சுதந்திர வாழ்வைப் பெற முயலாமல் இருக்கின்ற மக்க
ளின் அறியாமையை எடுத்துக்காட்டி இடித்துரைக்கின்ற பாரதி யாரின் சுதந்திர எழுச்சியைக் காண்கின்ருேம்,
தீராத கோயினுல் சாகின்றவர்கள் சுதந்திரப்போர் ஆற்றிச் சாக முன்வரமாட்டார்கள். பிறநாட்டில் உள்ள கீழ்த்தர வாழ்க்கை வாழும் அறிவில்லாத மக்களாலும் இகழத்தக்க இழிநிலையில் இருந்து கீழ்மைப்படுகின்றவர்கள் ஏன் சுதந்திரப்போர் ஆற்றித்

விளக்கவுரை 53
தம்மை உயர்த்திக்கொள்ளக் கூடாதெனப் பாரதியார் சிந்திக் கின்றர். இன்பமே இல்லாத துன்பம் நிறைந்த அடிமை வாழ் வில் கிடந்து அல்லல் உறுகின்றவர்கள் சுதந்திர வாழ்வை அடையவேண்டும் எனும் துடிப்பினுல் என்று விழித்தெழுந்து சுதந்திரப்போர் தொடுக்கப்போகின்றர்கள் என்றெல்லாம் பாரதி யார் எண்ணி எண்ணி ஏங்குகின்றர்.
இழிவறு வாழ்க்கை தேரார் கனவினும் இன்பங் காணும்.
எனப் பாரதியார் மொழிகின்ற கவிதைத் தொடர்களிலே சுதக் திரம் இன்றி அடிமையாய் வாழும் மக்களின் இழிநிலை அப்ப டியே புலனுகின்றது.
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யும் தம தன்பும் அளிப்பவர் மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே 5.
பொருள்: தேவி . சுதந்திர தேவியே, நின்னருள் (சுதக் திர வாழ்வை அளிக்கும்) உனது திருவருளே. தேடி - (எங்ஙனம் அடையலாமென அல்லும் பகலும்) ஆராய்ந்து தேடி, உளம் தவித்து - மனத்தில் என்றும் தீராத தாகம் கொண்டவர்களாய், தமது - தங்களுடைய, 9 ஆவியும் - உயிரையும், அன்பும் - நிகஸ் திரியாத பேரன்பையும் (சுதந்திரப் பற்றையும்), அளிப்பவர் . (சுதந்திர தேவியாகிய உனக்குக் காணிக்சையாக) தருகின்ற தேசத்தொண்டர்கள், மேவி நிற்பது ~ அடைந்திருப்பது, வெஞ் சிறையாயினும் - கொடிய துன்பங்களைக் கொடுக்கின்ற சிறைச் சாலையாய் இருந்தாலும், (அத்தேசத் தொண்டர்களுக்குச் சிறைத்துன்பம்) தாவில் - குற்றமில்லாத, வானுலகு என்ன ம அமரர் உலகத்தில் பெறும் இன்பத்தைப்போல, தகுவதே மேன்மை உடையதாய்த் தோன்றும் என்பதாம்.
விளக்கம் : இக் கவிதையில் சுதந்திர வாழ்வு பெற
வேண்டும் என்னும தீராத தாகத்துடன் சுதந்திரப் போர் தொஇக்கின்ற தேசத் தொண்டர்கள் தாம் சிறைச்சாலையில்

Page 31
あ4 பாரதியாச் பாடல்கள்
இருந்து அடையும் துன்பங்களை எல்லாம் தேவர் உலகத்தில் சென்றடையும் இன்பங்களாக மதித்து மகிழ்ச்சி அடைவார்க ளெனக் கூறுகின்ற பாரதியாரின் மன எழுச்சியைக் காண் கின்ருேம். -
சுதந்திர வாழ்வுக்காக சுதந்திரப்போர் புரிகின்ற தொண் டர்கள் தங்கள் ஆவியையும் அன்பையும் சுதந்திர தேவிக்குக் காணிக்கையாகக் கொடுத்து உள்ளம் களிப்பார்களெனப் பாரதியார் கூறிக்கூறி மகிழ்கின்றர்.
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யும்தம தன்பும் அளிப்பவர்
எனும் தொடர்களைப் படிக்கும்பொழுது சுதந்திரத் தொண்டர் களின் சுதந்திர தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத உழைப் பும், அன்பும் எமது உள்ளத்திலும் பதிந்துவிடுகின்றன. அவர் கள் சிறைச்சாலைத் துன்பத்தை தேவர் உலக இன்பமாக மதித்து மகிழ்வார்கள் என்பதைப் பாரதியார் மிக மகிழ்ச்சிப் பெருக்குடன் எமக்குக் கூறுகின்றர்.
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே.
எனும் தொடர்களைப் படிக்கும்பொழுது எம் உள்ளத்திலும் ஓர் ஆனந்தம் எழுகின்றது. w
அம்மை உன்றன் அருமை யறிகிலார் செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்; இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. 6
பொருள்: அம்மை = அன்னேயே, உன்றன் - உனது திரு வருளினல் அடையும் சுதந்திர வாழ்வின், அருமையறிகிலார் . அரிய சிறப்பினை அறியாமல் அடிமையாய் வாழ்கின்றவர்கள், செம்மையென்று - சிறப்புடையன என்று, இழிதொண்டினே ை பிறருக்கு அடிமைப்பட்டு அவர்கள் ஏவலின் வழிகின்று செ

விளக்கவுரை 5。
கின்ற தொண்டுகளை, சிந்திப்பார் . கினேப்பார்கள், (அங்ஙனம் அடிமைகளாய் இருக்கின்றவர்கள்) இம்மை இன்பங்கள் - இல் வுலகத்தில் பெறக்கூடிய இன்பங்களே, எய்து இருக்கு அடை கின்ற, பொன் மாடத்தை - அழகிய மாடங்களோடு கூடிய இல்லத்தை (வீட்டினே), வெம்மையார் - கொடுமை கிறைந்த, புன்சிறை - எளிய சிறைச்சாலை, எனல் வேண்டுமே - என்றே கூறவேண்டும் என்பதாம்.
V
விளக்கம் : இக் கவிதையில் சுதந்திர தாகம் இல்லாமல் அடிமை வாழ்வு வாழ்கின்ற அறிவிலிகள் அழகிய மாடங்களோடு பொருந்திய இல்லத்திலிருந்து அடைகின்ற உலக இன்பங்கள் எல்லாம் கொடிய துன்பங்களைத் தரும் எளிய சிறைச்சாலை வாழ்க்கையாகவே கொள்ளவேண்டும் எனக் கூறுகின்ற பாரதி யாரின் உள்ளத் துடிப்பைக் காணகின்ருேம்.
அடிமை வாழ்வில் மோகம் கொண்டவர்கள் அவ்வாழ் வினைப் பெரிதாக மதித்துப் போற்றுவார்க ளென்பதைப் பாரதியார் மிக அருவருப்புடன் கூறுகின்றர்.
அம்மை உன்றன் அருமை யறிகிலார் செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்
எனும் தொடர்களில் அடிமை வாழ்வைப் பெரிதாக மதிக்கும் அறிவிலிகளின் உள்ளத்தைப் பாரதியார் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றர்.
அடிமை வாழ்வை வரவேற்று மகிழ்கின்றவர்கள் பொன் மாடத்திலிருந்து இந்திரபோகத்தை அடைந்தாலும் கொடிய கொடுமை நிறைந்த எளிய சிறைச்சாலையிலிருந்து அடைகின்ற துன்பத்தைப் 1ே ன்றதே எனப் பாரதியார் மிக அழுத்தம் திருத்தமாக எமசகு எடுத்துக் காட்டியுள்ளார்.
4ே ற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்; கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின் பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர்.  ே

Page 32
56 பாரதியார் பாடல்கள்
பொருள்: கின்னே - சுதந்திரதேவியாகிய உன்னே, மேற் றிசை - மேலைத்தேசத்தில் உள்ள, பலநாட்டினர் - பலநாட்டு மக்களும், வீரத்தால்-சுதந்திரம் பெறவேண்டும்" என்னும் வீடு தலைப் போர் வீரச் செயல்களால், போற்றி - (உன்னே ப்) பாது காத்து மதித்து, புதுகிலே-(அடிமை வாழ்வில் நின்று நீங்கி) சுதங் திர வாழ்வென்னும் புதிய பெரும் விலையினை, எய்தினர்-அடைக் தனர், (அங்ங்ணம் சுதந்திரத்தை அடைந்த மேலைநாட்டினர்) கூற்றினுக்கு-இயமனுக்கு, (சுதந்திரப்போர் தொடுத்ததினல்) உயிர் கோடி கொடுத்தும் - தம் உயிரைக் கோடிக்கணக்காகப் பலிகொடுத்தும், (அதனுல் உள்ளம் தளராமல்}கின் பேற்றினே(உனது பெருங்கருணையினல் பெறும் சுதந்திரப் பெருவாழ்வு என்னும் பேற்றினே (செல்வத்தை), பெறுவேமென ல் - பெற் றிடுவோம் என்னும் மன உறுதியுடன், பேணினர் - (சுதந்திர தாகம் குறையாத வண்ணம்) பாதுகாத்துப் போராடினர் என்பதாம்.
விளக்கம் : இக் கவிதையில் மேலை நாட்டினரின் சுதந் திர வேட்கையையும், அவர்கள் சுதந்திரத்தைப் பெறுதற்காக ஆற்றிய சுதந்திரப் போரில் கோடிக்கணக்காகத் தம்மைப் பலி கொடுத்த வீரச் செயலையும் பாராட்டி உரைக்கின்ற பாரதியாரின் ஆர்வத்துடிப்பை அறிகின்றேம்.
மேலைநாட்டினர் கோடிக்கணக்கான"உயிர்களைச் சுதந்திரப் போரிற் பறிகொடுத்து விடுதலைபெற்ற வீரச் செயல்களைப் பாரதியாரால் மறக்க முடியவில்லை. பாரதநாட்டு மக்களும் மேலே காட்டு மக்களைப்போல் உயிரைப் பொருட்படுத்தாமல் சுதந்திரப் போரில் குதித்து விடுதலை பெறவேண்டும் என்னும் வேட்கை பாரதியார் உள்ளத்தில் நின்று அலை எறிகின்றது,
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின் பேற்றி னைப்பெறு வேமெனல் பேணிளர்.
போர் வீர உணர்ச்சி எழுகின்றது. -
 

விளக்கவுரை 57"
அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன் என்ன கூறி இசைத்திட வல்லனே? பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். 8.
பொருள்: அன்ன தன்மைகொள் - (மேற்கூறிய வண்ணம்) சுதந்திர வாழ்வை நல்கும் பெருங்கருணைப் பண்புகொண்டத கின்னே சுதந்திர தேவியாகிய உன்னே, அடியனேன் - அடியவ ணுகிய யான், என்ன கூறி - எவ்வகையான புகழ் மொழிகளைச் சொல்வி, இசைத்திட - பாராட்டிப் போற்றிட வல்லனே " வல்லவனுவேன், பின்னமுற்று  ை(சாதிசமயப் பூசல்களினுல்) பலவேறு சிறுசிறு கூட்டத்தினராகப் பிரிந்து, பெருமை இழந்து - (பாரதகாட்டு மக்கள், வீரர்கள், அறிஞர்கள், உரிமை
ஆட்சி உடையவர்கள், எனக் கூறப்பட்ட பழம்) பெருமைகளே
(சிறப்புக்களே) எல்லாம் இழந்து (பறிகொடுத்து), மீன் சின்னம் அற்று - உன் அடையாளமாகிய சுதந்திர ஒளி ஒருசிறிதேனும் இல்லாமல், அழி தேயத்தில் சிதைவுற்றுக் கிடக்கின்ற தேசத் தில், தோன்றினேன் - (யான்) பிறந்துவிட்டேன் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரதநாட்டில் தோன்றிய யான், சுதந்திர தேவியாகிய உன்னை
எங்ங்ணம் பாராட்டிப் போற்றுவேன் எனப் பாரதியார் கூறு
கின்ற இரக்கக் குரலைக் கேட்கின்றேம்
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்,
எனப் பாரதியார் கூறுகின்ற இக்கவிதைத் தொடர்கள் அடி மைப் பாரதத்தின் கீழ்நிலையை அப்படியே எடுத்துக் காட்டு கின்றன.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பரரத தேசந் தன்னை

Page 33
58 பாரதியார் பாடல்கள்
எனப் பாரதியார் கூறும் இக்கவிதைத் தொடர்களையும் ஒப் பிட்டு நோக்குக. அடிமை நாட்டில் தான் பிறக்க நேர்ந்ததை இட்டு அல்லல் உறுகின்ற பாரதியாரின் உள்ளத் துடிப்பும், சுதந்திர தாகமும் அப்படியே இக்கவிதைத் தொடர்களில் கின்று நிழலாடுகின்றன.
பேரறத்தினைப் பேணுதல் வேலியே! சேர வாழ்க்கை, துயர்,மிடி யாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே! வீர ருக்கமு தேநினை வேண்டுவேன், g
பொருள்: பேரறத்தினே - பெரிய (உயர்ந்த) தருமகெறி யினே, டேணுகல் = பாதுகாக்கின்ற சிறந்த, வேலியே வேலி (மதில்) போல விளங்குகின்ற சுதந்திர தேவியே, சோர வாழ்க்கை-சள ச்ெ செயல்களால் வாம்கின்ற பொய் வாழ்வும், துயர்-பகைவரால் ஏற்படுங் தீமை என்னுக் துன்பங்களும், மிடி யாதிய-வறுமை முதலியவைகளுமாகிய, கார் அறுக்க - இருளி இனப்போக்க, கதித்திடு-மிக்கெழுந்திடும், சோதியே-பேரொளி போன்றவளே, வீரருக்கு-(உடல், பொருள், ஆவி மூன்றையும் சுதந்திர வாழ்வைப் பெறுதற்காக விடும் ம ன த் தி ன்  ைமி கொண்ட) ஆண்மையாளராகிய சுதந்திரப் போர்வீரர்களுக்குடி அமுதே-அமுதம் போன்றவளே, கினை - சுதந்திர தேவியாகிய உன்னே, வேண்டுவேன் - (எமது பாரத தேசத்திற்கும் சுதந்தி ரம் தந்தருளவேண்டுமென்று), யான் வணங்குகின்றேன்.
விளக்கம்: இக் கவிதையில் சுதந்திர தேவியின் சிறப் பைச் சொல்லிச் சொல்லித் துதிக்கின்ற பாரதியாரின் எல்லை யில்லாத சுதந்திர தாகத்தைக் காண்கின்றேம் சுதந்திர தேவியை அறத்தின் வேலி என்றும், களவு, துயர், வறுமை என்பனவாகிய இருட்கூட்டத்தைப் போக்கி ஒளிவிரிக்கின்ற சோதியாகவும், விடுதலைப் போர்வீரர் பருகி மகிழும் அமிர்த மாகவும், பாராட்டி உரைக்கின்ற பாரதியாரின் விடுதலை வேட்கை நிரம்பிய உள்ளத்துடிப்பு எம்மையும் ஊக்கிவிடுகின்றது.

விளக்கவுரை 59
சோர வாழ்க்கை, துயர், மிடியாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே!
எனுமிக் கவிதைத் தொடர்களில், ஓர் அடிமை நாட்டில் உள்ள களவு, துயர். வறுமை என்பவற்றை இகளாகவும், சுதந்திர தேவியின் கருணையினுற் பெறும் சுதந்திர வாழ் வினை, அந்த இருளைப் போககி ஒளி பரப்பும் சோதி
யாகவும் உருவகஞ் செய்துரைத்த பாரதியாரின் புலமைத்திறன் போற்றற்குரியதாகும்.

Page 34
SO பாரதியார் பாடல்கள்
5. புதுமைப் பெண்
சங்ககாலத்திலும் வேதகாலத்திலும் பெண்கள் ஆண்க
ளோடு ஒத்த உரிமையும் சிறப்பும் மதிப்பும் உடையவர்க எாகப் போற்றப்பட்டனர். இடைக்காலத்திற் பெண்களை ஆண் களின் அடிமைகளாக எண்ணி இகழ்ந்து மதிக்கும் கொள்கை தோன்றியது. இக்கொள்கை பாரதநாட்டில் மிகமிக வேரூன் றிப் பாரதநாட்டின் பழம் பெருமையையும் பண்பாட்டையும்
பாழ்படுத்திவிட்டது. தாய்க்குலத்தை அடிமைப்படுத்தியதினுல்,
மிளா அடிமைகளாகக் கிடந்து அல்லற்படுகின்ற சேய்க்குலத்தை (அடிமைப் பரம்பரையை) உடையதாகப் பாரதநாடு விளங்கியது
இந்நிலையில் பாரதநாட்டின் அடிமைத்தளையை அறுத்தெறிய வேண்டுமானுல் முதற்கண் பாரதப் பெண்களின் அடிமைத் தளை அறுத்தெறியப்படல் வேண்டுமெனப் பாரதியார் எண்ணி னுர், அவரின் எண்ணம் புதுமைப் பெண் என்னும் கவிதை களாக உருப்பெற்றது. சுதந்திரப் பாரதத்தைப் படைக்க எழுந்த புதுமைப்பெண், அன்னை பராசக்தியின் கோலமாக நின்று கூறுகின்ற அறத்தோடு கலந்த ஆண்மை உரைகள் ஆயிரம் ஆயிரம் ஊழிகள் நின்று வாழக்கூடிய பொருட்கரு நிரம்பியனவாகும்.
போற்றி போற்றி! ஓர் ஆயிரம் போற்றி ! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்! சேற்றிலேயுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றன பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை, மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப் பயன் வாழிநீ! 瑾上

விளக்கவுரை 6.
பொருள்: மாதரசே - பெண்களின் தலைவியாகிய புதுமைப் பெண்ணே, கின் பொன்னடிக்கு - உனது பொன்போன்ற திருவடிகளுக்கு, போற்றி போற்றி . வணக்கம். வணக்கம், ஒர் ஆயிரம் போற்றி - ஆயிரம் முறை வணக்கம், பல்லாயிரம் போற்றிகாண்-பல ஆயிரம் முறை வணக்கம், (காண். அசை) சேற்றி லே-சேற்றின் கண்ணே, புதிதாக-புதுமையாக, முளைத்த ஒர்-தோன்றிய ஒரு, செந்தாமரை - செந்தா மரையின்கண் கின்று பூத்த, தேமலர்போல்-தேன் தங்கிய (செந்தாமரை) மல ரைப்போல; ஒளி தோற்றி நின்றன-ஒளிவீசித் தோன்றி கிற் கின்ருய் பாரத காட்டிலே - அடிமைப்பட்டுக் கிடந்து அல்ல லுறுகின்ற இப் பாரத நாட்டிலே, துன்பம் மீக்கும் க (அடிமை யென்னும்) துன்பத்தைப் போக்குகின்ற, சுதந்திர பேரிகை . சுதந்திர (உரிமை) முரசினே, சாற்றி வந்தனமுைழங்கிய வன் ணம் வந்துளாய், எங்கள் சாதி - பாரத5ாட்டவர் என்னும் மத் களாகிய காங்கள், செய்த தவப்பயன்-செய்த தவத்தின் பயணு கவே (ஜின் வருகை) விளங்குகின்றது. மீ - (இங்ஙனம் எங்கள் பாரதநாட்டு மக்கள் ஆற்றிய தவத்தின் பயணுகத் தோன்றிய) புதுமைப் பெண்ணுகிய ,ே வாழி-டூேழி வாழ்வாயாக என்பதாம். விளக்கம்: இக் கவிதையில் பாரதியார் தாம் படைத்த புதுமைப் பெண்ணை, அன்னை பராசக்தியின் அருள் வரவாகக் கருதி வணங்குகின்ற ஆர்வக் குரலைக் கேட்கின்றுேம்,
அடிமைப் பாத காட்டில் தோன்றிச் சுதந்திர தாகம் கொண்ட புதுமைப் பெண்ணை, சேற்றிலே புதிதாக முளைத்த செந்தாமரை மலர் என்று பாரதியார் பாராட்டி உரைக்கின்றர்.
சேற்றிலே புதிதாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றன பாரத நாட்டிலே; எனும் கவிதைத் தொடர்களில் பாரதியாரின் புலமைத்திறன் நிழலாடுகின்றது.
உரிமை வாழ்வைப் பறிகொடுத்து அடிமைப்பட்டு அல்லல் உற்றுச் சிதறிச் சிதைந்து கிடக்கும் பாரத கட்டைச் சேருக

Page 35
歌莺 பாரதியார் பாடல்கள்
வும், அப்பாரத நாட்டின்கண் தோன்றிச் சுதந்திரக் குரலை
எழுப்பும் புதுமைப் பெண்ணைச் சேற்றில் தோன்றிய செங் தாமரை மலராகவும் கூறும் பாரதியாரின் உவமைத் திறன்
பாராட்டுக்குரியதாகும்
சேறு - உவமானம், அடிமைப்பட்டுக் கிடக்கும். பாரதகாடு - உவமேயம்,
இழிவும், அருவருப்பும், மதிப்பின்மையும் - பொதுத் தன்மைகளாகும்.
சேற்றிலே புதிதாகத் தோன்றிய செந்தாமரை மலர் - உவமானம், பாரத காட்டில் தோன்றிய புது மைப்பெண் - உவமேயம் இழிந்த இடத்தில் தோன் றியமையும், சிறப்பும் பொதுத்தன்மைகளாகும்.
புதுமைப் பெண்ணின் எழுச்சிக்குரலால் பாரத காட்டு மக்கள் விழிப்படைந்து சுதந்திர வாழ்வைப் பெற முயல்வார்கள் என்னும் கருத்தை நிலைநாட்ட எண்ணிய பாரதியார்
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை, மாதரசே !
எனப் புதுமைப் பெண்ணைப் பாராட்டுகின்றர்.
மாதர்க் குண்டு சுதந்திரம் என்று நின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தசனது நாரதர் வீணையோ? M
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமேர? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ? சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! ?
பொருள்? (புதுமைப் பெண்ணே) மாதர்க்கு - பெண்களுக் கும், சுதந்திரம் உண்டு என்று – சுதந்திர வாழ்வு உரியதென்று,

விளக்கவுரை 6S
மின்-உன்னுடைய, வண்-அறிவு வண்மை (வளம்) கிரம்பியதும், மலர்த்திருவாய் - மலர்போன்ற அழகினே யு ையதுமாகிய வாயினேத் திறந்து, மொழிந்த சொல் - நீ கூறிய அறிவு மொழி களின், காதந்தான் அது - இனிமையும் பொருளும் கிரம்பிய ஓசையானது, காரதர் வீணை யோ - காரத முனிவர் இசைக் கின்ற வீணையின் இனிய ஓசையோ, கம்பிரான்-எங்கள் தலைவ ணுகிய, கண்ணன் - கண்ணபிரான் ஊதுகின்ற, வேய்ங்குழலின் பமோ = புல்லாங்குழலிலிருந்து பெருகிவருகின்ற இசையின் இன்பமோ, வேதம் - வேதங்கள் நான்கும், பொன்னுரு . >2993ھ கிய வடிவத்தோடு பொருந்திய, கன்னிகையாகியே - இளம் பெண்ணின் உருவத்தைத் தாங்கி, எமை - எங்களே, மேன்ை செய்து - சிறப்படையச் செய்து, காத்திட - (அடிமை வாழ்வில் வின்றும் எம்மை எடுத்து) காப்பாற்றும் வண்ணம், சொல் வதோ - சொல்கின்ற பொருளுரைதானே சாதல் - இறத்தலு யும், மூத்தல் - மூப்பு அடைதலேயும், கெடுகளும் . அழிக்கின்ற (இல்லாமற் செய்து அமரர்ஆக்குகின்ற), அமிழ்தமோ - ஓர் புதிய அமிர்தமோ, தையல் - புதுமைப் பெண் ணே, இங்கே - இப் பாரத இாட்டில், வாழ்க - வாழ்வாயாக, பல்லாண்டு . பல் லாண்டு வாழ்வாயாக என்பதாம்.
விளக்கம் : புதுமைப் பெண் மாதர்க்குச் சுதந்திரம் உண்டெனக் கூறிய புதுமைக் குரலைக் கேட்ட பாரதியார் மிகமிக வியப்படைந்து விட்டார். பெண் குலத்தை அடிமைப் படுத்திய அடிமைப் பாரதத்தில் தோன்றிய புதுமைப் பெண் எழுப்பிய உரிமைக் குரலின் இனிமை, நாரதனின் வீணையிலே தோன்றிய இன்னிசை வெள்ளமோ, கண்ணபிரானின் புல்லாங் குழலில் கின்று பெருகும் இன்னிசை இன்பமோ, வேதம், அழகிய பெண்ணுருத்தாங்கி எழுந்தருளிப் பாரத மக்கள் உய்ந்து ஈடேறும் வண்ணம், சொல்லிய பொருளுரைகளோ, அல்லது சாதலும் மூப்பும் இல்லாத அமரர் வாழ்வை அளிக்கும் அமிழ் தமோ என்றெல்லாம் பாரதியார் பாராட்டி உரைக்கின்ருர், புதுமைப் பெண் எழுப்புகின்ற சுதந்திரக் குரலால் அடிமைப் பாரதம் விடுதலை உணர்ச்சி பெற்றெழுந்துவிடும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.

Page 36
is 4. பாரதியார் பாடல்கள்
அறிவு கொண்ட மனித வுயிர்கனே
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம் நெறிகள் யாவினும் மேம்பட்டு RD Argoi i
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம் தறிய பொன்மலர் மென்சிறு வாயினுல்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3.
பொருள்: 5றிய-கறுமணம் (வாசனை) கமழ்கின்ற, பொன் மலர் - அழகிய மலர்போன்ற, மென் சிறு வாயினுல்-மென்மை யான சிறிய வாயினுல், கங்கை = இளமை கலங்கனிந்த புது மைப் பெண்ணுனவள், கூறும் - சொல்கின்ற, கவீனங்கன் (அடிமைப் பாரதத்திற்கு} மிகமிகப் புதியனவாய உரைகளை, கேட்டிரோ-கேட்டீர்களோ (கேளுங்கள்), அறிவு கொண்ட பகுத்தறிவு கொண்ட, மனித உயிர்களே - மக்களினத்தை, அடி மையாக்க (என்றும்) தமக்கு அடிமைகளாக இருக்கும் வண் ணம் அடக்கி வைக்க, முயல்பவர் முயல்கின்றவர்கள், பித்த ராம் - அறிவிலிகளேயாவர், நெறிகள் யாவினும் - அறநூல்க ளிற் கூறிய) பல வழிகளிலும், மானிடர் - மக்கள், மேம்பட்டுமேன்மை பெற்று, நேர்மைகொண்டு - மீதி என்னும் நடுநிலை மையையே தமக்குறுதுணையாகக்கொண்டு வாழ்ந்து, உயர் தேவர்கள் ஆதற்கே - உயர்ந்த (சி தே) அமரர்களாகுதற்கு, சிறிய தொண்டுகள் - சிறிய அடிமைச் செயல்களைச் செய்து (மான மின் றி) வாழ்கின்ற கிலேமையை, தீர்த்து - அறவே விட்டு, அடிமைச்சுருள் - (பல நூற்ருண்டுகளாகத் தொடர்ந்து நீல வும்) அடிமைத் தளேயென்னும் தொடரினே, தீயில் இட்டு கெருப்பிலே போட்டு, பொசுக்கிட வேண்டுமாம் - எரித்துவிட வேண்டுமாம் என்க.
விளக்கம் : இக் கவிதையில் புதுமைப் பெண்ணின் உரிமை வேட்கை உரைகளே மிக ஆராமையுடன் எடுத்துரைக் கின்ற பாரதிபாரின் சுதந்திர தாகத்தைக் காண்கின்ருேம்.

விளக்கவுரை 6
மக்களை மக்கள் அடிமைப்படுத்த முயல்கின்ற அறியா மையைப் புதுமைப்பெண் எள்ளி நகையாடுகின்றள், சிறிய அடிமைகளாய் அடக்கப்பட்டுத் தொண்டுபுரிந்து வாழ்கின்ற அடிமை நிலையை இல்லாமல் எரித்துவிடவேண்டும் எனக் கூறுகின்ற புதுமைப் பெண்ணின் குரலைப் பாரதியார் மிக ஆராமையுடன் வரவேற்கின்றர்.
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச் சுருள்
தீயில் இட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்.
எனவரும் கவிதைத் தொடர்களில் புதுமைப் பெண்ணின் சுதந்திர வேட்கை அலைமோதுகின்றது.
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே
எனும் கவிதைத் தொடர்களுடன்
வையத்துள் வாழ்வரங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
எனும் திருக்குறளை ஒப்பிட்டு கோக்குக.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்சி இவ்வையம் தழைக்குமாம்; பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நானும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெணணின் குணங்களாம்;
பெண் மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரேச? :
பொருள்: பெண்மைத் தெய்வத்தின் - பெண்குலத்தின் தெய்
வம்போல விளங்குகின்ற புதுமைப் பெண்ணின், பேச்சுக்கள் .
சுதந்திரதாகம் கொண்ட மொழிகளை, கேட்டிரோ - கேட்டிச்
களோ, (கேளுங்கள்) ஆணும் பெண்ணும் ஆண்களும் பெண்க
ளும், மிகரென ஒருவர்க்கொருவர் ஒப்பானவர்களென்று (சt
5

Page 37
66 பாரதியார் பாடல்கள்
மாணவர்களென்று), கொள்வதால் - கொள்வதினுல் (ஒப்புக் கொண்டு உரிமை வாழ்வு வாழ்வதால்), இவ்வையம் - இந்த கில உலகம் (இங்கிலவுலகத்திலுள்ள மக்கள்), அறிவிலோக்கி வ அறிவினுல் மேம்பட்டு, தழைக்குமாம் - செழிப்படையும் (ஆக் கம் பெறும்), இங்கு - இப்பாரததேசத்தில், பூணும் . தனக்கு அணிகலனுகப் பொருந்தியுள்ள, இல்லறத்தோடு - தூய தருமத் தோடு கலந்த, பெண்ணுருப்போந்து பெண்ணின் வடிவத் தில் வந்து, சிற்பது - எமக்குக் காட்சிதந்து எம்முன் எழுங் தருளி கிற்பது, தாய் சிவசிவ சக்தியாம் - உலகின் அன்னேயாக விளங்கும் (சிவசக்தியாகிய) உமாதேவியாரே ஆவர், இாணும் . வெட்கமும், அச்சமூம் - பயமும், (புதுமைப்பெண்ணுகிய பரா சக்திக்கு வேண்டியதில்லை) காய்கட்கு - நாய்களுக்கே, (கீழ்த்தர மான அடிமை உணர்ச்சி கொண்டவர்களுக்கே) வேண்டுமாம்வேண்டியனவாகும், இற் குடி - (தான் பிறந்த) நல்ல குடும்பத் தின் உயர்ந்த பண்பாடுகளே, பேணும் - பாது கா க் கி ன் ந, பெண்ணின் - (சிறந்த) பெண்களின், குணங்களாம் - குணங்க ளாக விளங்குவன, ஞானம் - மெய் அறிவு, கல்லறம் - துரa தருமம், வீரசுதந்திரம் - வீரத்தோடு பொருந்திய உரிமை வாழ்வு என்பவைகளாம். -
விளக்கம் : இக் கவிதையில் புதுமைப் பெண்ணின் சிறந்த பண்புகளைப் பாரதியார் படம்பிடித்துக் காட்டுகின்றர். வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்து எடுத்ததற்கெல்லாம் காணிக்கோணி நிறகின்ற வெட்கமும், கண்டதற்கெல்லாம் கடுங்குகின்ற அச்ச மும் பெண்குலத்தின் குணங்கள் அல்ல, ஞானமும், கல்லறமும், வீர சுதந்திரமும்தான் நற்குடிப் பெண்களின் குணங் கள் ஆகுமெனப் புதுமைப்பென் கவில்கின்ருள்.
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு தற்குடிப் பெண்ணின் குணங்கனணம்
எனப் புதுமைப்பெண் கூறுகின்ற கொள்கை பெண்குலத்தின் மேம்பாட்டை விளக்குகின்றது.

விளக்கவுரை 67
தாய்க்குலத்தை அடிமைப்படுத்தினுல் சுதந்திர ஒளியைக் காண முடியாது என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்
எனவரும் கவிதைத் தொடர்களில் பாரதியாரின் ஆர்வம் அப் படியே நிழலாடுகின்றது.
எட்டுமறி வினிலானுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி எனவரும் பாரதியார் கூற்றையும் இத்துடன் ஒப்பிட்டு கோக்குக.
நிலத்தின் தன்மை பயிர்க்குன தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேவரி தாவதோர் செய்தியாம்; குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்:
கொடுமை செய்தும் அறிவை யழித்துமத் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்:
தங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ 。
பொருள்: கங்கை கூறும்-இளமைகலம் கனிந்த புதுமைப் பெண் சொல்கின்ற, வியப்புக்கள் - ஆச்சரியம் அடைதற்குரிய கொள்கைகளே, கேட்டிரோ - கேட்டீர்களோ (கேளுங்கள்) ஜீலத்தின் தன்மை-சீலத்தின் (நல்ல அல்லது கெட்ட) குணம், பயிர்க்கு உஅங்கிலத்தின் கண் மூவிேத்த பயிருக்கும், உஇரத8கு உண்டாகும், (.ggGura), சேத்தொண்டும் Basg இழிவான அடிமைத்தனமும் (வாழ்வும்), மடமையும் - அறிய ஈ  ைம யு ம், கொண்டதாய் - உடைய ஒரு தாயானவள், தலத்தில் . உலகத்தில், மாண்புயர் - பல சிறப்புக்களேயும் பெற்று மேம் பாடடையும், மக்களேப் பெற்றிடல் - இன்மக்களே ஈன்று தரு தல், சாலவே - மிகவும், அரிதாவதோர் - முடியாத இரு, செய்தியாம் - விகழ்ச்சி ஆகும், குலத்து மாதர்க்கு - இற்குடியித் பிறந்த பெண்களுக்கு, கற்பு . கந்பொழுக்கமானது, இயல்

Page 38
68 urg auri ut labas air
பாகுமாம் - (சீக்குச் சூடும், நீர்க்குக் குளிர்ச்சியும் போல)இயல் பான ஓர் குணமாகும், அங்கலத்தை - அந்த நற்பண்பாகிய கற்பொழுக்கத்தை, கொடுமை செய்தும் - வீ ட் டுக் கு ன்
அடைத்து வைத்தலாகிய கொடுஞ்செயலைப் புரிந்தும், அறிவை
அழித்தும் - கல்வி கற்பிக்காமல் அவர்களின் அறிவைக் கெடுத் தும், காக்கவிரும்புதல் - (கற்பில் தவருமல் அப்பெண்களே) காப்பாற்ற விரும்புதல் (எண்ணுதல்), தீமையாம் - தீய செயலாகும்.
விளக்கம் : இக் கவிதையில் பெண்குலத்தின் இயல் பான பண்பாடுகளையும், அப்பண்பாடுகளைச் செயற்கை நெறி யால் அடிமைப்படுத்திக் காக்க முயல்கின்ற அறியாமையையும் பாரதியார் அப்படியே எடுத்துக் காட்டுகின்றர்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்குலத்தில் ஒர் தாய், சுதந்திர எழுச்சியும் சிறந்த பண்பாடுகளும் நிரம்பிய நன் மக்களைப் பெற முடியாது என்பதைப் பாரதியார் சிறந்த உவமான மூலம எடுத்து விளக்குகின்றர். நிலத்தின் தன்மைக் கேற்பவே அந்நிலத்தின்கண் தோன்றும் பயிர்கள் இருப்பது போல அடிமைப்பட்டுக் கிடக்கும் ஓர் தாய் பெற்ற மக்களும்
அறிவு ஆற்றலின்றி அத்தாயின் தன்மையுடையவர்களாகவே
விளங்குவர்கள் என்பதாம்.
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்டியர் மக்களைப் பெற்றிடல்
சாலவே அரிதாவது எனும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது பாரதியாரின் எனணம் எமது உள்ளத்திலும் அப்படியே பதிந்து விடுகின்றது. கிலத்தின் தன்மை - உவமானம், தாயின் தன்மை - உவமேயம் தம் தன்மையைத் தாம் ஈன்றவற்றல் பிறர்க்குப் புலனுக்குதல் - பொதுத்தன்மையாகும்.
பயிர் - உவமானம். மக்கள் - உவமேயம், தாம் தோன்றியவற்றின் தன்மையைத் தாமும் கொண்டிருத் தல் - பொதுத்தன்மையாகும்.

விளக்கவுரை 69
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் என்பது திருக்குறள்.
நற்குடிப் பெண்களுக்குக் கற்பு இயல்பானதென்றும், அக்கற்பினைக் காத்தற்காக அவர்களை வீட்டில் அடைத்துக் கொடுமைப்படுத்துதல் கல்வி ஊட்டாமல் அவர்களின் அ வைக் கெடுத்தல் முதலிய செயல்களைப் பாரதியார் மிகமிக வெறுக்கின்றர்.
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம் கொடுமை செய்தும் அறிவை யழித் துமிந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
எனும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது பாரதியாரின் உணர்ச்சித் துடிப்பு எமது உள்ளத்தையும் தொட்டு அசைக் கின்றது.
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என்பது திருக்குறள்.
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன் றிச் சதும றைப்படி மாந்தர் இருந்த நாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்; மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னுெப்புற்றே முதுமைக் காலத்தல் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததசம் 6
பொருள்: புதுமைப் பெண்ணிவள் - புதுமைப் பெண்ணு கிய இவளின் சொற்களும் - கதந்திர தாகம் கொண்ட) மொழி களும், செய்கையும் - புதுமையான (புரட்சி கொண்ட) செய்கை களும், பொய்மை கொண்ட பொய்யைத் தமது வாழ்க்கை நெறியாகக்கொண்டு மக்கள் வாழ்கின்ற கலிக்கு - இந்தக் கலி பூகத்திற்கு, புதிதன்றி - புதியனவாகத் தோன்றுவதல்லாமல்,

Page 39
70 பாரதியார் பாடல்கள்
சதுமறைப்படி - கான்கு வேதங்களிற் கூறுகின்ற கொள்கை களின்படி, மாந்தர் இருந்தநாள் தன் னில் - மக்கள் வாழ்வு நடாத்திய வேத காலத்திலே, பொதுவான - ஆண், பெண் என்னும் இருபாலாரின் வாழ்விலும் விலவிய, வழக்கமாம் - வழக்கங்கள் ஆகும். மதுரத்தேமொழி - இனிமையான தேன் போன்ற மொழிகளைப் பேசுகின்ற, மங்கையர் - பெண்கள், முதுமைக் காலத்தில் - பழமை வாய்ந்த வேதகாலத்தில். உண்மைதேர் - மெய்ப்பொருளை ஆராய்கின்ற, மாதவப் பெரி யோருடன்  ைபெரிய தவத்தால் மேம்பட்ட ஞானிகளாகிய முனிவர்களுடன், ஒப்புற்றே - அறிவிஞல் ஒத்தவர்களாய் வீத் றிருந்து, வேதங்கள் - வேதங்களின் உண்மைப் பொருளே, பேசிய - கலந்து உரையாடி ஆராய்ந்த, முறைமை - வழக்கம், மாறிட - மாற்றமடைய, கேடு விளைந்ததாம் - (இக்கலிகாலத் தில்) மக்களுக்குப் பலவகையான தீமைகளும் உண்டாயின என்பதாம்,
விளக்கம் : இக் கவிதையில் வேத காலத்தில் ஆண்க ளோடு ஒத்த உரிமையும் அறிவும் படைத்தவர்களாய்ப் பெண் களும் வாழ்ந்தார்கள் என்னும் வரலாற்று உண்மையைப் பாரதியார் வற்புறுத்திக் கூறுகின்றர்.
வேதகாலப் பெண்கள் தங்கள் தலைவர்களாகிய முனி வர்களுடன் வேத உண்மைகளை ஆராய்ந்து அறியும் ஞான பலம் படைத்தவர்களாய் விளங்கினர்கள் என்பதாம். இக் கலிகாலத்தில் வேதகால ஒழுக்கங்கள் மாறிப் பெண்கள் ஆண் களுக்கு அடிமையென்னும் இழி வழக்கு தலையெடுத்ததினுல் பல தீமைகளும் பாரதநாட்டில் உளவாயின என்பதே பாரதி யாரின் கருத்தாகும்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் தறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளா மறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண் ண ந மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ !

விளக்கவுரை 7置
பொருள்: உதயகன்னி - புதுமையாகத் தோன்றிய புது மைப் பெண்ணுனவள், உரைப்பது - சொல்கின்றவைகளை, கேட்டிரோ - கேட்டீர்களோ (கேளுங்கள்), நிமிர்ந்த கன் னடை - (மணத்தில் களங்கம் இல்லாமல் உண்டாகும் பெரு மிதம் புலனுகும் வண்ணம்) நிமிர்ந்து 15டக்கின்ற நல்ல கடை அழகும், கேர்கொண்ட பார்வையும் - (மனம் பலதிறப்பட்டு கிலையின்றி அலேயாமல் ஒரு வழி விற்பதால் உளவாகும்) நேரான கண் நோக்கமும் (பார்வையும), நிலத்தில் - இங்கில வுலகத்தில், யார்க்கும் - எவர்ககென் முலும், அஞ்சாத - அச் சம் கொள்ளாத, நெறிகளும் - ஒழுக்கங்களும், திமிர்ந்த - கிறைந்த (பரிபூரணப்பட்ட), ஞானச் செருக்கும் - மெய்யறிவுத் திறத்தினுல் ஏற்பட்ட செம்மாப்பும், இருப்பதால் = தங்களிடம் கிலைபெற்றிருப்பதால், செம்மை மாதர் = செம்மையான ேெறி களைக் கைக்கொண்ட பெண்கள், திறம்புவது இல்லையாம் - தங்களுக்குரிய ஒழுக்கத்தில் சின்றும் தவறுதல் உண்டாக தாம், பேரிருளாம்  ைமிகப்பெரிய இருளென்று சொல்லப்படு கின்ற, அறியாமையில் = அறிவில் லாமை ஆகிய கடலில், அமிழ்ந்து - மூழ்கிக்கிடந்து, அவல மெய்தி - பெருங் துன்பங் களை அடைந்து, கலையின்றி. கல்வி அறிவென்னும் கலை உணர்ச்சி சிறிதும் இல்லாமல், வாழ்வதை  ைவாழ்கின்ற இழிநிலையை உமிழ்ந்து தள்ளுதல் - வெறுத்து நீக்குதல், பெண்ணறம் ஆகு மாம் - பெண் குலத்துக்கு உரிய தருமச் செயலாகுமாம் என்க
விளக்கம் : இக்கவிதையில் பெண்களிடத்தில் அமைய வேண்டிய சிறந்த பண்புகளைப் பாரதியார் மிகத் திறம்படக் கூறியுள்ளார். கடையிலும் பார்வையிலும் ஓர் பெண்ணின் களங்கமில்லாத தூய உள்ளம் அப்படியே புலனுகும் என்பது பாரதியாரின் கருத்தாகும். நடையை நிமிர்ந்த கன்கடை என்றும், பார்வையை கேர் கொண்ட பார்வை என்றும் பாரதியார் சிறப்பித்துக் கூறுகின்றர்.
நிறைந்த ஞானச் செருக்கும் எவர்க்கும் அஞ்சாத ஒழுக்க
நெறியும் படைத்த பெண்கள் ஒருபொழுதும் தமது செம்மை வாய்ந்த ஒழுக்க நெறியில் தவறமாட்டார் எனப் பாரதியார்
மிகுந்த ஆர்வத்துடன் மொழிகின்றர்.

Page 40
72 பாரதியார் பாடல்கள்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
எனும் இக்கவிதைத் தொடர்களால் புதுமைப் பெண்ணின் நிலைதிரியாத அக உணர்ச்சிகளை அப்படியே பாரதியார் படம் பிடித்துக் காட்டுகின்றர்.
அறியாமையில் மூழ்கிக் கிடந்து கல்வி அறிவு சிறிதும் இல்லாமல் அவலம் அடைகின்ற அடிமை வாழ்வை வெறுத்துத்
தள்ளி உரிமைப் போர் ஆற்றுதலே பெண் குலத்துக்குச் சிறந்த
அறமாகும் எனப் பாரதியார் புகல்கின்றர்.
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஒதுபற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே தில்க வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம், 8
பொருள்: உலக வாழ்க்கையின் உலகியல் வாழ்வில் அமைந்துள்ள, நுட்பங்கள் தேரவும் - புதிய புதியனவாய் இன் றைய நூற்ருண்டில் அமையும் வாழ்வின் நுட்ப வழிகளே ஆராய்ந்து அறியவும், ஒது = (பிறநாடுகளில் ஆராய்ந்து). கற் கப்படுகின்ற, பற்பல - பலதிறப்பட்ட கலைகளைப்பற்றி விளக் கும், நூல்வகை பலதிறப்பட்ட அறிவு நூல்களே, கற்கவும் ம ஆராய்ந்து கற்றுணரவும், இலகு - விளங்குகின்ற, சீருடை - சிறப்புப் பொருந்தியனவாய் விளங்கும், காற்றிசை - நான்கு பக்கங்களிலும் உள்ள, நாடுகள் யாவும் சென்று - நாடுகள் எல்லாவற்றிற்கும் சென்று அவ்வவற்றில் உள்ள, புதுமை புதுமையான கலை நுட்பங்களே, இங்கே - இப் பாரத நாட்டின் கண், கொணர்ந்து கொண்டுவந்து பரப்பி, திலகவாணுதலார்வ

விளக்க வுரை 了$
பொட்டணிந்த அழகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண்கள், நங்கள் - எங்களுடைய, பாரததேசம் - பாரதநாடு, ஓங்க - உயர்ச்சிபெற, உழைத்திடல் வேண்டுமாம் - முயற்சி செய்தல் வேண்டுமாம், விலகி - நாட்டு விடுதலே முதலியவற் றில் பங்குபற்ருமல் ஒதுங்கி, வீட்டில் - வீட்டின் கண் உள்ள ஓர் பொங்தில் - ஒர் மறைவான இடத்தில், வளர்வதை-ஒளித் திருந்து வாழ்வதை, வீரப்பெண்கள் = சுதந்திர உணர்ச்சியும் புதுமை வேட்கையும் கொண்ட வீரப்பெண்மணிகள், விரை வில் - மிகவிரைவாக, ஒழிப்பராம் - நீக்குவார்களாம் என்க.
விளக்கம் இக் கவிதையில் உரிமை வேட்கை கொண் டெழுந்த புதுமைப் பெண்குலத்தின் அரிய செயல் திட்டங் களைப் பெரிய வேட்கையுடன் கூறுகின்ற பாரதியாரின் சுதந் திரத் துடிப்பைக் காண்கின்ருேம்
உலக வாழ்வில் பெண்கள் ஒதுங்கி இருக்கும் நிலைமையை உதறித்தள்ளிப் புதுப்புது வகையாய் வளர்ந்துவரும் வாழ்க்கை நுட்பங்களைப் பெண்கள் ஆராய்ந்து தெளியவேண்டும் என்றும் பலதிறப்படப் பரந்து விரிந்து கிடக்கும் அறிவுக் கலைத்துறை நூல்களைப் பெண்கள் ஆராய்ந்து கற்க வேண்டும் என்றும், பெண்கள் பிறநாடுகள் எல்லாம் சென்று அங்கங்கு புதுமை பாக விளங்கும் ஆய்வுக்கலை ஆக்கங்களைக் கொணர்ந்து பாரதகாட்டில் பரப்ப வேண்டுமென்றும், வீட்டின் ஓர் புறத் திலே ஒதுங்கி வாழும் பெண்களின் அடிமைத்தளையை அறுத்து விடுதலை உணர்ச்சியை வித்திட்டு விளைவு செய்யும் அரும் பணியில் பாரத நாட்டு வீரப் பெண்மணிகள் விரைவில் ஈடு படவேண்டும் என்றும் பாரதியார் விரும்புகின்றர்.
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
எனும் கவிதைத் தொடர்களில் பாரதியார் உள்ளத்திலே தோன்றி
அலைமோதுகின்ற பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்னும் உணர்ச்சி அப்படியே கிடந்து நிழலாடுகின்றது.

Page 41
74. பாரதியார் பாடல்கள்
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்:
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பசாம்; காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பரம்: ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வாாம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ 9
பொருள்: இளைய கங்கையின் - இளமை கலங்கனிந்த புது *மைப் பெண்ணின், எண்ணங்கள் - மனக் கருத்துக்களை, கேட் டிரோ - கேட்டீர்களோ (5ே ஞங்கள்), பலபல (புதுமைப் பெண்கள்) பலவேறு வகைப்பட்ட, சாத்திரங்கள் - அறிவுக் கலைகளே, கற்பராம் - ஆராய்ந்து படிப்பார்களாம், பலபல - பல வேறு வகைப்பட்ட, சவுரியங்கள்  ைவாழ்க்கைக்கான சுகவழி கள், செய்வராம் - (ஆராய்ந்து) ஆக்குவார்களாம், மூத்த-மிகப் பழமைப்பட்டு முதிர்ந்த, பொய்மைகள் - பொய்யான கட்டும் பாடுகள், யாவும் எல்லாவற்றையும், அழிப்பராம் - இல்லா மல் தொலைத்து விடுவார்களாம், மூடக்கட்டுக்கள் - அறியாமை யோடு கலந்த மூடக்கட்டுப்பாடுகள், யாவும் - எல்லாவற்றை யும், தகர்ப்பராம் - நொறுக்கி விடுவார்களாம், மானிடர் - மக்களின், செய்கையனேத்தையும் - செயல்கள் எல்லாவற்றை யும், காத்து - (தீமை கலவாத வண்ணம்) காப்பாற்றி, கடவு ளர்க்கு - தெய்வங்களுக்கு, இனிதாக - இன்பந்தரும் செய்கை களாக, சமைப்பராம் - ஆக்குவார்களாம், A ஆண் மக்கள்-ஆண் கள், ஏத்தி - புகழ்ந்து, போற்றிட - பாராட்டி உரைக்கும் வண்ணம், வாழ்வராம் . (புதுமைப் பெண்களாகிய தாங்கள்) வாழ்வார்களாம் என்க.
விளக்கம் : இக்கவிதையில் புதுமைப் பெண்கள் தம்மை ஆக்கி காட்டையும் கன்னிலை பெறச் செய்தற்காக மேற் கொள்ளும் செயல் திட்டங்களைப் பாரதியார் மிக இறுமாப் புடன் இயம்புகின்றர்.
புதுமைப் பெண்கள் பல கலைகளையும் கற்று அறிவில் சிறந்தவர்களாய் விளங்கியும், மூடக் கட்டுப்பாடுகளை முறி

ബ
விளக்கவுரை 贸岛
யடித்தும் மக்கள் புரியும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு இனிதாகப் புரியும் வண்ணம் காப்பாற்றியும், ஆண்மக்கள் புகழ்ந்து போற்றிட நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே பாரதி யாரின் உள்ளக் கருத்தாகும்.
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்: மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்:
எனும் இக்கவிதைத் தொடர்களில் பாரத நாட்டுப் பெண் குலத்தை அடிமையாக்கும் பொய்க் கட்டுப்பாடுகளையும் மூடக் கொள்கைகளையும் தொலைத்து பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டுமெனப் பாரதியார் உள்ளத்தில் நீண்ட நாட்களாக நிஜல பெற்றுள்ள பெருவேட்கை அப்படியே புலனுகின்றது.
போற்றி, போற்றி! ஜயஜய போற்றி! இப்
புதுமைப் பெண்ணுெளி வழிபல் லாண்டிங்கே? மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னே, நல் அருளி னுலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினுேம், 10
பொருள்: போர்றி போற்றி - வணக்கம், வணக்கம், ஐய, ஐய வெற்றி உளவாகுக, வெற்றி உளவாகுக, போற்றிக வணக்கம், இப்பு துமைப் பெண்ணுெளி - இல் தப் புதுமைப் பெண் பரப்புகின்ற சுதந்திர ஒளியானது, இங்கே இந்தப் பாரதநாட்டின் கண், வாழி பல்லாண்டு - பலபல ஆண்டுகள் கிலேபெற்று வாழவதாக, வையம் - இங்கிலவுலகத்தை, மாற்றி. (அறியாமையோடு கூடிய கிலேயில் கின்றும்) வேறுபடுத்தி, புதுமையுறச் செய்து - புதிய வீறு பெற்றுப் பொலியும் வண் ணம் செய்து, மனிதர் தம்மை - மக்களினத்தை, அமரர்களாக் கவே - (அவர்களின் அறியாமையை நீக்கி) தேவர்களாக ஆக்கி வாழ்வளிக்கும், ஆற்றல் கொண்ட - அருள் ஆற்றல் (வல் -லமை) படைத்த, பராசக்தி அன்னே - பராசக்தி என்னும் திருப்

Page 42
76 பாரதியார் பாடல்கள்
பெயரை உடைய உலகமாதா ஆனவள், நல் லருளினுல்-(சிறப் பாகப் பாரத மக்களையும் பொதுவாக உலக மக்களையும் ஈடேற்ற வேண்டும் என்று எண்ணிய) நல்ல கருணையால், ஒரு கன்னிகை ஆகியே - புதுமைப் பெண் என்னும் பெயரை யுடைய ஒர் இளம் கன்னியாக எழுந்தருளி, தேற்றி - எமக்கு ஆறுதல் மசால்லி, உண்மைகள் கூறிட - உண்மைக் காரணங் களை எடுத்துரைத்த எம்மை ஈடேற்ற, வந்திட்டாள் - வந்தி ருக்கின் ருள், (அவளின் வருகையினுல் செல்வம் யாவினும் = இாங்கள் பெறவேண்டிய செல்வங்கள் எல்லாவற்றினும், மேம் செல்வம் - சிறந்ததாக விளங்குகின்ற சுதந்திர வாழ்வு என்னும் செல்வத்தை, எய்தினுேம் - அடைந்துவிட்டோம் என்க.
விளக்கம் : இக் கவிதையில் புதுமைப் பெண்ணுக எழுந் தருளி வந்தவள் கருணையே உருவமாகிய அன்னை பராசக்தியே தான் எனச் சொல்லி மகிழ்கின்ற பாரதியாரின் கவிதை உள்ளத்தைக் காண்கின்றேம்.
அன்னை பராசக்தியானவள் தனது பெருங்கருணைப் பெருக்கினுல் அடிமைத் தளையில் அகப்பட்டுக் கிடந்து அல் லல் உறும் மக்கள் உள்ளத்தில் விடுதலை உணர்ச்சி எழும் வண்ணம் நல்லறிவு கொடுத்து அவ்ர்களை அமரர்களாகப் புதுக்கி அருளும் வண்ணம் புதுமைப் பெண்ணுக எழுந்தருளி வந்தாள் என்பதே பாரதியாரின் உள்ளக் கருத்தாகும்.
N
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை, நல்
அருளி ஞலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்.
எனும் இக்கவிதைத் தொடர்களைப் படிக்கும் பொழுது எழுகின்ற ஒசைப்பெருக்கு பாரதியாரின் உள்ளத்துடிப்பையும் ஆர்வச் செழிப்பையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றது.
iബ

விளக்கவுரை 77
6. தொழில்
சுதிந்திர பாரதத்தைத் தமது கவிதை உலகிற் படைத்து மகிழகின்ற பாரதியார் \ பலவகைத் தொழில்களும் பாரதநாட்டில் வளர1ேண்டுமென வற்புறுத்துகின்றர். எதற்கும் பிறநாடுகளை எதிர்பார்த்திருக்கின்ற நிலைமை மாறி எமக்கு வேண்டிய கருவிகளையும், பிற பொருள்களையும் நாமே நமது காட்டில் செய்துகொள்ள வேண்டுமென்பதே பாரதியாரின் எண்ணமாகும் தொழில் இன்றி சோம்பிக்கிடக்கும் மக்கள் உள்ள நாடு, சுதந்திரம் பெற்றலும் அடிமை நாடென்றே கருதப்படும் என் பதைப் பாரதியாரால் மறக்க முடியவில்லை. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீனில் உண்டு களித்து இருப்போரை நிந்தனை செய்வோம் எனப் பாரதி யார் கூறியுள்ள மொழிகளையும் நோக்குக.
இக் கவிதைகளில், தொழிலின் மேம்பாட்டை விளக்கிப் பலவகையான தொழில்களையும் குறிப்பிடுகின்றர். தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடா தென்பதே பாரதியாரின் உயிர்க் கொள்கையாகும். மூலப்பொருள்கள் நிரம்பிய பாரதநாட்டில் பலவகைத் தொழில்களும் செய்தற்கேற்ற வாய்ப்புகளும் சூழ் நிலையும் இருக்கின்றன என்னும் எண்ணத்தினுல் பாரதியார் அன்று கூறிய செயல் திட்டங்கள் எல்லாம், இன்றைய சுதந்திர பாரதத்தில் செயலாகி வருவதைக் காணக்கானப் பாரதியாரின் கவிதை உள்ளத்தின்/மாண்பு புலனுகின்றது.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடு விரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே! அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரந் தொழில் செய்திடு வீரே! பெரும்பு கழ்துமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே! 瑟

Page 43
78 பாரதியார் பாடல்கள்
發 பொருள்: இரும்பைக் காய்ச்சி = இரும்பை உருக்குலையில் இட்டுக் காய்ச்சி, உருக்கிடுவீரே - உருக்குங்கள், (அங்ஙனம் உருக்கிய இரும்பினல்) யந்திரங்கள் - பலதிறப்பட்ட கருவி களே, வகுத்திடுவிரே - ஆக்குங்கள், கரும்பை - கரும்பினே யங் திரத்தில் இட்டு, சாறு பிழிந்திடுவீரே - (அதன்) சாற்றைப் பிழிந்தெடுங்கள், கடவில்  ைகடலின் ஆழமான இட்த்தில், ஆழ்கி = சுழி ஓடிச்சென்று, கன் முத்தெடுப்பீரே - நல்ல முத் துக்களை எடுங்கள், அரும்பும் வேர்வை - உடம்பின் கண் கின்று தோன்றுகின்ற வேர்வையை, உதிர்த்து - கொட்டிய வண் ணம், புவிமேல்  ைஇங்கிலவுலகத்தில், ஆயிரம் தொழில் - ஆயி ரம் வகையான தொழில்களே. செய்திடுவீரே = ஆற்றுங்கள், பேரும்புகழ் - அழியாத பெரும் புகழுரைகளே, உமக்கே உங்க ளூக்கே, இசைக்கின்றேன் - உரியதாக மொழிகின்றேன். (அது னன் னவெனில்) இங்கு-பாரதநாட்டில், பிரமதேவன் = படைப்புக் கடவுளாகிய கான்முகனின், கலை படைப்புக் கலேயை வளர்க்கின்ற (அவளின் வழித்தோன்றல்கள்); நீரே நீங்கrே என்பதாம்.
விளக்கம் : இக் கவிதையில் பலவகைத் தொழில்களை
யும் செய்யும்வண்ணம் பாரதநாட்டு மக்களை ஊக்கிப் பாராட்டு கின்ற பாரதியாரின் எழுச்சிக் குரலைக் கேட்கின்றேம். இரும்பை உருக்குங்கள், யந்திரங்களை ஆக்குங்கள் கரும்பில் சாறெடுங் கள், கடலில் மூழ்கி முத்தெடுங்கள், என்றெல்லாம் ஒவ் வொரு தொழிலையும் செய்து நாட்டின் ஆக்கத்தை வளர்க் தும் வண்ணம் பாரதநாட்டு மக்களைப் பாரதியார் அறைகூவி அழைக்கின்றர்.
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிடிேல்
ஆயிரத் தொழில் செய்திடு வீரே!
எனும் இக் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஓசை பாரதியார் உள்ளத்தில் கிடந்து அலைமோதுகின்ற தொழில் ஊக்கச் செயல் திட்டங்களே அப்படியே எமதுள்ளத் திலும் பதித்துவிடுகின்றது.

விளக்கவுரை 79.
மண்ணெ டுத்துக் குடங்கள் செய் வீரே!
மரத்தை வெட்டி மனே செய்கு வீரே! உண்ணக் காய்கனி தந்திடு வீரே! உழுது நன்செய்ப் பயிரிடு வீரே! எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுதல் லாடைசெய் வீரே! விண்ணி னின் றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 2.
பொருள்: மண்ணெதித்து நிலத்தின் மண்ணேத் தோண்டி எடுத்து, குடங்கள் செய்வீரே - குடங்கள் முதலியவற்துை வனே யுங்கள், மரத்தை வெட்டி - மரங்களே அறுத்து, மனே செய்குவீரே - வீடுகளைக் கட்டுங்கள், உண்ண - உண்ணுதற்கு, காய்கணி-காய்களேயும் பழங்களையும், தந்திடுவீரே. உண்டாக்கித் தாருங்கள், கன் செய் - நல்ல வயல் (விளை) கிலங்களே, உழுது - உழுது பண்படுத்தி, பயிர் இடுவீரே - நெல், கோதுமை @g லீயவைகளே விதைத்துப் பயிராக்கி விளைவுசெய்யுங்கள். எண் ணெய் - எள்ளே விளேவுசெய்து நல்ல எண்ணெயிக்னமும், பரல் நெய் = பசுக்கள் எருமைகள் என்பவற்றை வளர்த்துப் பால் கெய் (வெண்ணெய்) முதலியவற்றையும், கொணர்ந்திடுவீரே. உளவாக்கிக் கொடுக்கள். இழையை நூற்று - பஞ்சை நூலாக தூற்று, கல்லாடை கல்ல சேலே முதலிய உடைவகைகளே, செய்விரே - நெசவு செய்யுங்கள், எமை - எங்களே, விண்ணின் ஜீன் று - வானுலகத்தில் கின்று, வானவர் - தேவர்கள், காப் பார் - காப்பாற்றுவார்கள், பார்மிசை - இந்த நிலவுலகத்தின் கண், மேவி - தங்கி மீன்று, காப்பவர் - மக்களினத்தைப் பாது காக்கின்றவர்கள், நீரே - (உழவும் தொழிலும் புரிகின்றவர்க னாகிய) நீங்களே என்பதாம்.
விளக்கம்: இக்கவிதையில், உழவும் தொழிலும் புரிகின் றவர்களே இல்வுலகத்தைப் பாதுகாக்கின்றவர்கள் எனக் கூறி மகிழ்கின்ற பாரதியாரின் பெருமிதத்தைக் காண்கின்றுேம்,

Page 44
80 பாரதியார் பாடல்கள்
பிறநாட்டில் இருந்து வருகின்ற பாத்திரங்களையும் மரத்தை அறுத்துச் செய்யும் பலதிறப்பட்ட பொருள்களையும் (தளபாடங் க2ளயும்) உணவுப் பொருள்களையும், எணணெய், பால், நெய் முதலியவற்றையும், உடைகளையும் எதிர்பார்த்திராமல் எங்கள் நாட்டிலேயே எங்களுக்கு வேண்டிய இப்பொருள்களை யெல்லாம் ஆக்குங்கள் எனப் பாரதியார் ஊக்குகின்றர்.
வானுலகத்தில் நின்று தேவர்கள் உலக மக்களைக் காப் பாற்றுகின்றர்கள். மண்ணுலகத்தில் நின்று உலக மக்களாகிய எங்களைக் காப்பாற்றுகின்ற தேவர்கள் உழவும் தொழிலும் புரி யும் தொழிலாளப் பெருமக்களாகிய நீங்களே, எனப் பாரதியார் தொழில் ஆற்றும் மக்களைப் பாராட்டியுரைக்கின்றர்.
விண்ணி னின் றெமை வானவர் காப்பரர்
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே
எனவருங் கவிதைத் தொடர்களைப் படிக்கின்றபொழுது எழு கின்ற பெருமிதச்சுவை பாரதியார் தொழிலாளர்மேற் கொண் டுள்ள பெருமதிப்பைப் புலனுக்குகின்றது.
66 உழுவார் உலகத்தார்க் காணி அஃதாற்ருது
எழுவாரை எல்லாம் பொறுத்து"
எனவரும் திருக்குறளையும் நோக்குக. \
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே! காட்டும் வையப் பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே! நாட்டி லேயறம் கூட்டி வைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே! தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிச் நீரே! 8

"क जाता
விளக்கவுரை 8瑟
பொருள்: பாட்டும் - இசைப்பாக்களையும், செய்யுளும் . இலக்கியப் பாக்களையும், கோத்திடுவீரே-இயற்றுங்கள், (கோத் கிடுதல்-தொடுத்து யாத்தல்) பரதநாட்டிய - பரத5Tட்டியம் எனச் சொல்லப்படுகின்ற, கூத்திடுவீரே - கூத்தையும் (கன்கு) ஆடிப் பயிலுங்கள், காட்டும்-காணப்படுகின்ற ே காற்றுகின்ற) வையப் பொருள்களின் - உலகின் கண் உள்ள இயற்கைப் பொருள்களில் அமைந்துள்ள, உண்மை - இயல்பான தன்மை களே, கண்டு - புதிதாக ஆராய்ந்து கண்டு, சாத்திரம் . புத்தகம் புதிய விஞ்ஞான சாத்திர நூல்களே (அறிவியற் கலே நூல்களை) சேர்க்கிடுவிரே - (பாரதநாட்டின் அறிவுக்கொடையாக) இயற் றுங்கள், (சேர்த்தல் - புதிதாகத் தமது எண்ணத்தில் தோன் றிய சாத்திர உண்மைகளை ஒழுங்குபடுத்தி ஒருசேரத் தொகுத்து நூலாக்குதல்) நாட்டிலே - (எமது) பாரதகாட்டின் கண்ணே, அறம் - தருமநெறியை, கூட்டிவைப் பீரே . (ää) திரியாமல்) வளர்த்துப் பாதுகாத்து வையுங்கள், (கூட்டுதல் . வளர்த்தல்) நாடும் - (மக்கள்) விரும்புகின்ற, இன்பங்கள் . வாழ்க்கை கலங்கள் (வசதிகள்) என்னும் இன்பங்கள் யாவற்றை யும், ஊட்டி வைப்பீரே - (முட்டின்றிப்பெற்று) நுகரும் வண் ணம் செய்யுங்கள், (இங்ங்னமெல்லாம் மக்களுக்கு வாழும் வாய்ப்புக்களே நீங்கள் வழங்குவீர்களானல்) தேட்டம் இன்றி . தேடுதல் இல்லாமல், விழிஎதிர் - கண்ணின் முன்னே. காணும். தோன்றுகின்ற, (கண்கண்ட) தெய்வமாக - தெய்வம்போல, ேேர - நீங்கள், விளர்குவீர் - (எம்மால் மதிக்கப்பட்டு) சிறந்து வாழ்வீர்கள் என்பAாம்.
விளக்கம் : இக் கவிதையில், பல கலைகளைக் கற்றும், புதிய சாத்திரங்களை ஆக்கியும், அறநெறியைப் பாதுகாத்தும் பாரத தேசத்தின் மேம்பாட்டை வளர்க்கின்றவர்களே கண்கண்ட தெய்வங்களாவார் எனப் போற்றிப் புகழ்கின்ற பாரதியாரின் எழுச்சியைக் காண்கின்றேம்.
இசைப் பாட்டுக்களும் இலக்கியப் பாட்டுக்களும் மக்கள் உள்ளத்தை அள்ளிப் புதிய இன்பத்தையும் எழுச்சியையும் பண்பாட்டையும் வளர்ப்பனவாகலின்,
6

Page 45
33 பாரதியார் பாடல்கள்
பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே
எனப் பாரதியார் ஆர்வக் குரலெழுப்பி அறைகின்றர்.
உலகிற் காணப்படும் பலதிறப்பட்ட பொருள்களில் இயற்.
கையாகவே அமைந்துகிடக்கும் உண்மைகளை ஆராய்ந்து கண்டு,
பல அறிவியற் கலை நூல்களைப் பாரதமக்கள் ஆக்கி உலகிற்.
களிக்கவேண்டும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
வையப் பொருள்களின் உண்மை கண்டு
சாத்திரம் சேர்த்திடு வீரே
எனப் பாரதியார் கூறும் பெருமிதக் குரலைக் கேளுங்கள். பாரத நாட்டின் பெருமையை நிலைநாட்டிய அறிவியற் கலை ஞர்களாகிய சகதீசசந்திரபோஸ், சேர். சி. வி. இராமன் முதலியவர்கள் கண்டு உலகுக்களித்த புதிய சாத்திரங்களையும் பாரதியார் எமக்கு கினைவூட்டுகின்றர்.

விளக்கவுரை 83 7. தமிழ்த் தாய்
தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்)
தமிழ்மொழி தொன்மையும் தெய்வத் தன்மையும் வாய்ந் தது. சங்கப் புலவர்களின் உள்ளத்தில் நின்று சுரந்த பத்துப் பாட்டு எட்டுத்தொகை என்னும் பண்பட்ட தீஞ்சுவை у இலக்கியங்களை உடையது. தன்னுேடொத்த பழமைவாய்ந்த பல மொழிகள் பேச்சு வழக்கில் நின்று இறந்துபடவும் தான் v இன்றும் இளமை நலத்துடன் நின்று வாழ்வது.
இன்னும் தமிழ்மொழி சிறந்து உயர்தனிச் செம்மொழி யாக ஓங்கி ஒளிர வேண்டுமானுல் மேலைநாட்டில் வளரும் புத்தம் புதிய கலைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் தமி ழிலும் தோன்ற வேண்டும் என்றெல்லாம் தமது உள்ளத்தில் தமிழ் மொழியின் ஆக்கங்கருதி யெழுந்த செயல் நெறிகளைத் தமித்தாய் சொல்வதுபோலப் பாரதியார் பாடிய கவிதைகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. தமிழ்த்தாயின் குரலோடு கலந்து பாரதியார் பாடிய இக் கவிதைகள், தமிழ் மொழியின் ஆக்கங் கருதி உழைக்கின்றவர் மேற்கொள்ள வேண்டிய செயல்களை யெல்லாம் மிகத் திறம்பட விளக்குகின்றன. புதிய அருவி ஊற்றப்போலப் பாரதியாரின் உள்ளத்துடிப் பின் வேகத்துடன் ஒன்றுபட்டுப் பாய்கின்ற இக்கவிதை வெள்ளத்தில் நாமும் மூழ்கிப் புதிய உணர்ச்சி பெறுவோமாக,
ஆதிசிவன் பேற்றுவிட்டான் - என்னை
ஆகிய மைந்தன் அகத்தியன் என்ருேள் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான் Κ
பொருள் என்ணே - தமிழ் மொழியாகிய என்னே, ஆதி படைப்புக்காலத்தில், சிவன் - முழுமுதற் கடவுனாகிய சிவ

Page 46
84 பாரதியார் பாடல்கள்
பெருமான், பெற்று ஈன்று, விட்டான் - உலகில் வாழும் வண்ணம் விடு கதான், ஆரிய மைந்தன் - வடமொழியாகிய ஆரி யத்தை உணர்க் கவனும், வட நாட்டின் கண் இருந்து வந்த ஆரிய முனிவனும், அகத்தியன் என்ருேர் - அகித் தியன் என்னும் பெயரை யுடையவனுமாகிய ஒரு, வேதியன் - அந்தணன் , கண்டு - என்னுடைய இலக்கியச்செல்வத்தையும், மொழிவளத் தையும் ஆராய்ந்துகண்டு, மகிழ்க்தே - மகிழ்ச்சி கொண்டவ ணுய், கிறைமேவும் முழுத்தன்மை பொருந்திய (பூரணமான), இலக்கணம் - அகத்தியம் எனப் பெயர் கொண்ட பேரிலக்கண நூலை, செய்து கொடுத்தான் - இயற்றி எனக்கு அளித்தருளி னுன் என் காம் (ஆதிசிவன் என்பதை ஆகிபகவன் என்பது போலக கொண்டு ஆதியாகிய சிவன் எனவும் பொருள் கொள்ளலாம்).
விளக்கம் : இக் கவிதையில் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் எனவும், அம்மொழிக்குப் பேரிலக்கணமியற்றி யவர் அருந்தவக்கொள்கை அகத்தியனுர் எனவும், பண்டு தொட்டுவரும் வரலாற்றை அப்படியே வழிமொழிந்து மகிழ் கின்ற பாரதியாரின் ஆர்வத்தைக் காண்கின்றுேம்.
சிவபெருமானே தமிழ்மொழியை தோற்றுவித்தருளினுள் என்று கூறுவது ஆன்ருேர் மரபாகும். இதன,
இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற் குரவர்
எனச் சிவஞானமுனிவர் கூறுவதாலும் உணர்க. அகத்திய முனிவர் வடநாட்டின்கண் இருந்து தீழ் நாட்டிற்கு வந்து தமிழைப்பயின்று தமிழ்மொழிக்கு அகத்தியம் எனத் தன் பெயரைக்கொண்ட பேரிலக்கண நூல் ஒன்றை இயற்றி அருளினூர் என்னும் ஓர் வரலாறு பழமைதோட்டு தமிழ் காட்டில் வழங்கிவருகின்றது.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னே
மூண்டதல் லன்பொடு நித்தம் இணர்த்தார்
ஆன்த மொழிகளி னுள்ளே - உயர்
ஆசியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்
பொருள் 3 என்னே, மூன்று குலத் தமிழ் 3ன்னர் . சேரர் குலம், சோழர்குலம், பாண்டியச் குலம்' என்று கூறப்படும்
 

விளக்கவுரை 85
மூன்று குலங்களிலும் தோன்றிய சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தரும், மூண்ட (உள் ளத்தில் கின்றும்) பெருகி எழுந்த, நல் அன்பொடு - தூய பேரன் புடன், கித்தர் - நாள் தோறும் (இல. யீடின்றி) - வளர்த்தார்; (சங்கம் நிறுவியும் புலவர்களே ஆதரித்தும்) வளர்த்தார்கள், ஆன்ற - உயர்தனிச் செம்மொழிகளாக வளம் படைத்து நிறைந்த, மொழிகளின் உள்ளே - மொழிகளுக்குள், உயர் = சிறந்த, ஆரியத்திற்க - ஆரியமொழியென்று கூறப்படுகின்ற வடமொழிகசூ நிகரென - ஒப்பாகக் கூறும் வண்ணம், வாழ்க் தேன் - உலகின் கண்ே நில பெற்று வாழ்ந்தேன் என்பதாம்.
N மூன்று குலத் தமிழ் மன்னர் என்பதற்கு அக்கினி குலத் தினராகிய சேசரும், சூரியகலத்தினராகிய சோழரும், சந்திர குலத் தினராகிய பாண்டியரும் என்றும பொருள் கூறலாம்.
விளக்கம் : இக்கவிதையில், முடியுடை மூவேர் தர்களால் தமிழ்மொழி வளர்க்கப்பட்ட தென்பதும், வடமொழியோடு ஒத்த மேன்மையுடையதாய் தமிழ்மொழி நிலவுலகில் பெருஞ் சிறப்புப் பெற்று விளங்கிய தென்பதும் கூறப்படடுள்ளன.
முடியுடை மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் களால் தமிழ்மொழி வளர்க்கப்பட்ட வரலாற்றைச் சங்க இலக் கியங்களால் அறியலாம். வடமொழியாகிய ஆரியத்தோடு ஒத்த பெருமையுடையதாய் அவ்வாரிய மொழியினும் வேறு பட்ட மொழியமைப்/ம் இலக்கண அமைபபும் கொண்டு விளங்கிய உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதே பாரதியா ரின் கருத்தாகும்.
வடமொழியைப் பாணினிக்கு வகுத் தருளி
அதற கிணையத்
தொடர்புடைய தென் மொழியை உலகமெலாந்
தொழு தேத்துங்
குடமு னிககு வலியுறுத்தார் கொல்லேறறுப்
பாக ரெனில்
கடல்வரைப்பின் இதன் பெருமை யாவரே
கணித் தறிவார்

Page 47
86 பாரதியார் பாடல்கள்
எனச் சிவஞான முனிவர், தமிழ்மொழியின் மேம்பாட்டை ஆரிய மொழியோடு ஒப்பிட்டுரைத்தலையும் நோக்குக.
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். 3.
பொருள்: கன்ளேயும் - தேனின்கண் (கள்ளின்கண்) உள்ள சுவையையும், தீயையும் - கெருப்பின்கண் உள்ள வெம்மையை பும் ஒளியையும், சேர்த்து  ைகலந்து, (அவற்றுடன்) கல்ல ல தூய, காற்றையும்  ைகாற்றின்கண் உள்ள ஆற்றலேயும், வான வெளியையும் ஆகாயவெளியின் கண் உள்ள அகலத்தையும், சேர்த்து - கலந்து, தெள்ளுதமிழ்ப் புலவோர்கள் - சங்கத்தில் ஆய்ந்து செப்பஞ் செய்யப்பட்ட தமிழையுணர்ந்த சங்கப் ஷலவர்கள் பல தீஞ்சுவைக் காவியம்-சொற்சுவையும் பொருட் சுவையும் நிரம்பிய இனிய இலக்கியங்களே, செய்து கொடுத்தார். இயற்றி எனக்குக் கொடுத்தருளினர்கள் என்பதாம்,
விளக்கம்: இக் கவிதையில் சங்கப்புலவர்கள் ஆக்கிய தீஞ்சுவை இலக்கியங்களின் பண்பைச் சிறந்தெடுத்துக் கூறு கின்ற பாரதியாரின் செம்மாப்பைக் காண்கின்றுேம்.
தேனின் சுவையையும், தீயின் வெம்மையையும், ஒளி யையும், காற்றின் ஆற்றலையும், வானின் அகலத்தையும், கலந்து அள்ளுசுவை இலக்கியங்களை ஆக்கி அளித்த சங்கப் புலவரின் ஆற்றலைத் தமிழ்த்தாயின் கூற்றகக் கூறிப் பாரதியார் ஆர்வங் கொள்கின்றர்.
தேனின்கண் சுவை இயல்பாகவே அமைந்திருப்பது போல, இயல்பாகவே அமைந்துள்ள சொற்சுவையும், தீயின்கண் வெம்மையும் ஒளியும் இயல்பாகவே அமைக் திருப்பன போலத் தீமைகளே அழித்து எக்காலமும் எங்கும் நிலைபெறக் கூடிய (காலங்கடந்து வாழக்கூடிய) பொருளாற் றலும் அறிவு விளக்கமும் காற்றின்கண் இயல்பாகவே

விளக்கவுரை 8ና
அமைந்துள்ள ஆற்றலைப் போல நிலைதிரியாத அறத்திறனும் (என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதன அறம் என்பது திருக்குறள்). வானின் கண் இயல்பாகவே அமைந்துள்ள அகலத்தைப் போல அளவிடற் கரியதாய் நவில்தொறும் நவில்தொறும் புதிது புதிதான பொருள் நலத்தைப் புலனுக்கி அகன்று செல்லும் நோக்கும் உடையனவாய்ச் சங்க இலக்கியங்களும், வள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர் முதலிய பிற்காலச் சான்றேரின் இலக்கியங் களும் சிறந்து விளங்குதலைக் காண்க.
இலக்கியத்திறனுய்வுப் புலமை படைத்த பாரதியார் இக் கவிதையினுல் இலக்கியத்தின் நிலைபேறன பண்புகளுக்கெல்லாம் ஓர் உருவக் தீட்டியுள்ளார் என்க.
கவிதைக் கனி பிழிந்த சாற்றிலே பண் கூத்தென்னும் இவற்றின் சாரமெல்லாம் ஏற்றி அதனுேடு இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினுல் மாதவனின் மேனி வகுத்தான் பிரமனென்போன்
எனப் பாரதியார் கூறுகின்ற கவிதைத் தொடர்களுடன்,
கன்னேயுந் தீயையுஞ் சேர்த்து - நல்ல காற்றையும் வானவெளியையுஞ் சேர்த்து
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் *
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்
போருள்: சாத்திரங்கள் பல - (தத்துவ உண்மைகளே உணர்ந்த ஞானிகள்) தத்துவ சாஸ்திர நூல்கள் பலவற்றை, தந்தார் - இயற்றித் தந்தார்கள், இந்தத் தாரணி எங்கும் = (அவர்கள் அளித்த சாத்திரங்களின் சிறப்பினுல்) இந்த கிலவுலர்

Page 48
88 பாரதியார் பாடல்கள்
கத்தில் உள்ள அறிஞர்கள் யாவரும், புகழ்ந்திட - பாராட்டிப் போற்றிசெய்ய வாழ்ந்தேன் - வாழ்வு பெற்றிருந்தேன், கேத் திரங் கெட்டவன் - கண் கெட்டவணுகிய, காலன் . (கால எல்லை அறிந்து பொருள்களே அழிக்கும் காலதேவஞகிய) இயமன் தன்முன் - தனக்கு முன்னே, கேர்த்தது - எதிர்ப்பட்டன, அனைத்தும் - எல்லாப் பொருள்களையும், துடைத்து - அழித்து, முடிப்பான் - முடிவு செய்வான் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் காலன் என்னும் தேவ றேனவன் தன்முன் எதிர்ப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் அழிவு செய்யும் இயற்கை உடையவன் என்னும் உண்மை சொல்லப்படுகிறது.
காலங்கள் தோறும் தமிழகத்தில் தோன்றிய கடற்பெருக் கில்ை பல அரிய தமிழ் நூல்கள் அழிந்துவிட்ட செயலைப் பாரதியார் நினைவூட்டுகினறர்,
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையுங் கொன்று நடப்பான் 5 பொருள்: கன்றென்றும் . இந்நூல்கள் (அல்லது பொருள் கள்) மிக நல்லன என் ருே, தீதென்றும் - (இப்பொருள்கள்) மிகத் தீயன என்ருே, பாரான் - (அக்காலதேவன்) ஆராய்ந்து பாரான், முன்பு - தனக்கு முன்னே, காடும் - காணப்படுகின்ற (தோன்றுகின்ற), பொருள்கள் அனேத்தையும் - பொருள்கள் எல்லாவற்றையும், வாரிச் சென்றிடும் ள அள்ளிச் செல்கின்ற, காட்டுவெள்ளம் போல் - அடங்காமல் பெருக்கெடுத்து வரு கின்ற பெரும் வெள்ளத்தினேப்போல, வையச்சேர்க்கை - உல கின்கண் தங்கியுள்ள பொருள்கள். அனேத்தையும் மூழுவதை பும், கொன்று - அழித்து, கடப்பான் - (அக்காலதேவன்) செல் வான் என்பதாம்.
(காட்டுவெள்ளம் என்பது, உயர்ந்த மரங்களும் மலேகளும் உள்ள காட்டில் கொட்டுகின்ற செருமழையி ணுல் பெருகி ஓடுகின்ற வெள்ளத்தைக் குறிக்கின்றது. காட்டு மழைபோல எனும் வழக்கையும் கோக்குக.)

விளக்கவுரை 89%
விளக்கம்: இக் கவிதையில், காலதேவன் செய்யும் அழிவின் மிகுதி சொல்லப்படுகின்றது.
காலதேவன் பொருள்களின் சிறப்பு, சிறப்பின்மை என்
னும் பண்புகளை நோக்கி அழிக்கின்றவனல்லன் காட்டுவெள் ளம் பெருகி தன்முன் அகப்பட்ட பொருள்களை எல்லாம்
அப்படியே வாரிக்கொண்டு செல்வதைப்போலவே காலதேவ னும் உலகில் உள்ள பொருள்களையெல்லாம் அழிக்கும் இயல் புடையவன் என்பதாம்
காட்டுவெள்ளம் - உவமானம், காலதேவன்-உவ | "
மேயம். தம்முன் அகப்பட்ட அனைத்தையும் அழித் தல் - பொதுத்தன்மையாகும்.
தமிழகத்தில் காலதேவன் என்னும் இயமன் கடற் பெருக், கினுலேயே பொருள்களை வாரி அழிவு செய்துள்ளான் என் பதே ஆராய்ச்சியாளர் முடியாகும். முப்பெரும் கடல்கோள்கள் அடுத்தடுத்துத் தமிழகத்தில் நிகழ்ந்தன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றர்கள். இங்ஙனம் தமிழகத்தில் நிகழ்ந்த கடல்கோள்களால் அரும்பெருந் தமிழ் நூல்கள் பல அழிக் தொழிந்தன என்பதைத் தமிழ் அன்னையின் கூற்றகக் கூறிப் பாரதியார் மிகக் கவலைப்படுகின்றர்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதையும் கோக்குக.
கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன் O காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர் ! 6.
பொருள்: அங்காள் - (யான் மிகச் செழிப்புடன் இருந்த) அந்தப் பண்டைக்காலத்தில் கன்னிப் பருவததில் என் கட்டிள ம்ைப் பருவத்திலே, என்றன் காதில் விழுந்த என் காதினுல்

Page 49
'90 பாரதியார் பாடல்கள்
கேள்விப்பட்ட, திசைமொழி எல்லாம் - திசைமொழிகளுக்கெல் லாம், என்னென்னவோ பெயருண்டு என்னென்னவோ பல திறப்பட்ட பெயர்கள் வழங்கின, பின்னர் - காலஞ்செல்ல, யாவும் - அத்திசைமொழிகள் எல்லாம், அழிவுற்று - (கால தேவனுல்) அழிக்கப்பட்டு, இறந்தன - சுவடும் இல்லாமல் செத்துவிட்டன, கண்டீர் - இவ்வுண்மையைத் தெளிந்து கொள்வீராக என்பதாம்.
விளக்கம் இக் கவிதையில், தமிழ்மொழியோடு ஒத்த பழமை வாய்ந்தனவாய்ப் பண்டைக்காலத்தில் வழங்கிய பல திசைமொழிகள் அடிச்சுவடும் இல்லாமல் அழிந்துபட்ட வரலாறு நினைவூட்டப்படுகின்றது.
தமிழ்மொழியோடு ஒத்த பழமையுடைய திசைமொழிகள் பல அழிந்தொழிந்திடவும், தமிழ்மொழி மட்டும் இன்று காறும் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நின்று வாழ்கின்ற சிறப்பைப் பாரதியார் சொல்லி மகிழ்கின்றர்.
கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித் தெழுந்தே ஒன்றுபல வாயி டினும ஆரியம்போல் உலக வழக்கு அழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயன் மறந்து வாழ்த்துதுமே எனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழியின் மேம்பாட்டை வியந்துரைத்திருத்தலை நோக்குக.
தந்தை அருள்வலி யாலும்-முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கண மட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான் 富 பொருள்: தந்தை - எனது தங்தையாராகிய சிவபெருமா வின், அருள்வி லியாலும் - திருவருளின் வல்லமையாலும், முன்பு முற்காலத்திலே, சான்ற - அமைந்த (சான்ருண்மை
 
 

விளக்கவுரை 9
விரம்பிய, புலவர் . சங்கப் புலவர்களின், தவவலியாலும் " (சங்கத்தில் ஆராய்ந்து என்னை வளம்படுத்திய) தவவலியாலும், (என்ஞேடொத்த பழமையுடைய மொழிகள் இறந்துபட்-சி போல், யானும் இறந்து படாமல்) இந்தக் கணமட்டும்" இன்றுவரையும் (இன்றைய கணப் பொழுதளவம்), காலன் - (என்னே டொத்த மொழிகளே எல்லாம் அழித்தொழித்த) காலதேவனுணவன், என்னை - தமிழ் மொழியாகிய என்கின. ஏறிட்டுப் பார்க்கவும் - (எதிர்கின்று) உற்றுப் பார்க்கவும், அஞ்சி - அச்சங் கொண்டவனுய், இருந்தான் - இருந்து வரு கின்ருன்,
விளக்கம்: இக் கவிதையில், தமிழோடு, ஒத்த பிற மொழிகள் காலதேவனுல் தாக்குண்டு, அழிந்துபடவும், தமிழ் மொழி இன்றளவும் வாழ்ந்துவருகின்ற சிறப்புக் கூறப்படு கின்றது.
சிவபெருமானின் திருவருள் ஆற்றலினுலும், சங்கப் புல வர்களின் தவவலிமையாலும், தமிழ்மொழி இன்றளவும் மூவாச் சாவா முழுமுதன் மொழியாக நின்று வாழ்கின்றதென்பதாம்.
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்
எனப் பரஞ்சோதியாரும்,
கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ் என மாணிக்கவாசகப் பெருமானும், பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை என வரந்தருவாரும், முறையே தமிழ்மொழி சிவபெருமானுல் வளர்க்கப்பெற்றமையையும் சங்கப புலவர்களால் ஆராய்ந்து
செப்பஞ் செய்யப்பெற்றமையையும் பாராட்டி யுரைத்தலே நோக்குக.

Page 50
92 பாரதியார் பாடல்கள்
இன்ருெரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தசருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! $、
பொருள்: (இங்ங்ணம் பெரும்புகழுடன் நிலைபெற்று வாழ் கின்ற யான்) எனது ஆருயிர் மக்காள் - என் அரிய உயிரைப் போன்ற மக்களே, இன்று - இன்றைக்கு (இந்த நூற்ருண்டில்) ஒரு சொல் வினேக் கேட்டேன் - ஓர் மொழியினே (வார்த்தை யை)க் கேள்வியுற்றேன், கொன்றிடல் போல் - என்னேக் சொல்வது போன்ற, ஒரு வார்த்தை - ஒா கொடிய சொல்லினே, இங்கு - இவ்விடத்தில், கூறத்தகாதவன் - என்னே இங்ங்ணம் குறை கூறு தற்கு எள்ளளவும் தகுதியில்லாத ஒருவன் கூறினன் - சொல்லிவிட்டான், இனி ஏது செய்வ்ேன் - அவன் கூறிய வசைமொழிகசூ யான் இனி என்ன செய்வேன், கண்டீர். (இதனை நீங்கள்) அறிந்து கொள்வீராக என்பதாம்,
விளக்கம்: இக்கவிதையில் தமிழ்மொழியின்கண் உள்ள குறையொன்றினைப் பிறமொழியாளன் ஒருவன் எடுத்துக்காட்டி இகழ்ந்துரைத்த செயல் கூறப்படுகின்றது.
தமிழ்மொழி இந்நூற்றண்டுக்கேற்பப் புத்தம் புதிய கலை களைப் பெற்றுப் பிறநாட்டார் போற்றி செய்யத்தக்கதாகப் பொலிய வேண்டுமெனக் கருதிய பரதியார், பிறநாட்டார் கூறுவதாக வைத்து தமிழ்மொழி வளர்ச்சிக்கு வேண்டியவற் றைக் கூறுகின்ருர், தமிழர்கள் தமிழ்மொழியை உலகமொழி யாக நிலவக்கூடிய அளவுக்கு உயர்த்த வேண்டுமென்னும் ஆர்வத்துடிப்புப் பாரதியார் உள்ளத்தில் நின்று அலைமோது வதை அறிகின்றேம.
புேத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை,

விளக்கவுரை و؟
பொருள்: பஞ்சபூதச் செயல்களின் ன சிலம், நீர், காற்று, நெருப்பு, வான் என்னும் ஐம்பெரும் பூதங்களின் செயல்களின் கண் அமைந்துள்ள, நுட்பங்கள் கூறும் - றுட்பத்திறங்களை எல்லாம் ஆராய்ந்து சொல்லும், புத்தம் புதிய - மிகமிகப் புது1ைான கலேகள் - விஞ்ஞான சாத்திரங்கள் (அறிவியற் கலேகள் மேற்கே - மேல்நாடுகளில், மெத்த வளருது - மிகவும் வளர்சசி யடைந்து வருகின்றது, அந்த - அங்ங்னம மேல் காடு களில் சிறந்து விளங்ககின்ற அவ்விஞ்ஞான சாத்திரங்களாகிய, மேன்மைக்கலைகள் - உயர்ந்த மதிப்புககுரிய கலை களேப்பற்றி ஆராய்ந்து கூறும் நூல்கள், தமிழினில் இல்க்ல - தமிழ் மொழியின் கண் கிடையாது என்பதாம்.
விளக்கம் இக் கவிதையில் ஐம்பெரும் பூதங்களின்
செயல்நுட்பங்களை ஆராய்ந்து கூறும் அறிவியற்கலை நூல்கள்
தமிழில் இல்லையெனச் சொல்லிக் கவல்கின்ற பாரதியாரின்
உள்ளத் துடிப்பைக் காண்கின்றேம்.
மேலைநாட்டின்கண் வழங்கும் ஆங்கிலம், ஜேர்மன் முத லிய மொழிகளில் விஞ்ஞானசாத்திரம் என்னும் அறிவியற்
கலைகளைப்பற்றி ஆராய்ந்து கூறும் அரிய நூல்கள் தோன்றி
அம்மொழிகளை உலக மொழிகளாக உயர்த்திவிட்டன. தமிழ் மொழியில் விஞ்ஞானசாத்திர நூல்கள் இல்லாதிருத்தலால், அதன் பெருமை குறைந்து ஓர் சிறு மொழியாகக் கருதப்பட்டு விடும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
எனும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது எமக்கும்
தமிழ்மொழியில் அக்கலைகளை யெல்லாம் படைத்து அதனை
வளம்படுத்த வேண்டுமென்ற ஊக்கம் எழுகின்றது.
சொல்லவுங் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமீதுை யோங்கும்? ே

Page 51
பாரதியார் பாடல்கள்
பொருள்: சொல்லவும்  ை(மேலைநாட்டில் வளரும் அப் புத்தம்புதிய கலேகளே) தமிழில் எடுத்துரைக்கவும், கூடுவ தில்லை - இயலாதாம் (முடியாதாம்), அவை - அவ்வறிவியற்கலை களே, சொல்லுக்திறமை - விளக்கிக் கூறக்கூடிய ஆற்றல் வாய்ந்த கலைச்சொற்களும், தமிழ் மொழிக்கு இல்லை - தமிழ் மொழியின்கண் இல்லேயாம், தமிழ் - (ஆகவே) தமிழ்மொழி யானது, இனி  ைஇனி வருங்காலத்தில், மெல்ல - மெல்ல மெல்ல, சாகும் (உலகவழக்கில் கின்று) இறந்துபடுமாம். அந்த மேற்கு மொழிகள் - (மேற்கூறியவண்ணம் புத்தம்புதிய விஞ்ஞானக் ககலகளைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களை உடைய) அம்மேலேத்தேச மொழிகள், புவிமீசை  ைஇங்கிலவுலகத்தின் கண் இறவாமல் கின்று, ஓங்கும் - சிறந்து விளங்கும்.
விளக்கம்: இக்கவிதையில் புத்தம்புதிய விஞ்ஞானக் கலைகளைப் படைத்துதவாத நிலையில் உள்ள தமிழ்மொழி, காலப்போக்கில் உலகவழக்கில் நின்று வாழமுடியாமல் மெல்ல மேல்ல இறந்துபடுமெனக் கூறுகின்ற சிந்தனை உரைகளைக் காண்கின்றேம்.
காலத்திற்கேற்பத் தம்மை வளம்படுத்தி, வாழமுடியாத மொழிகள் மக்களின் ஆதரவை இழந்து இறந்துபட்டுவிடும் என்பதே மொழிநூலாரின் கொள்கையாகும். தமிழ்மொழியை Bலர்த்திப் புதுவாழ்வு கொடுக்க வேண்டுமானுல் அதன்கண் பஞ்சபூதங்களின் நுட்பங்களைக் கூறும் விஞ்ஞானக்கலை நூல் கள் பல தோன்றவேண்டு மென்பதே பாரதியாரின் பெரு வேட்கையாகும் என்க.
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமீசை ஒங்கும்
எனப் பாரதியார் கூறுகின்ற கவிதைத் தொடர்களில் அமைக் துள்ள எதிர்காலச் சிந்தனையும், மொழிநூற் புலமை கெறியும், தமிழார்வமும் எம்மையும் தமிழ்ப்பணி புரியும்வண்ணம் ஊக்கு கின்றன.

விளக்கவுரை 95.
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவுங் கெர்ணர்ந்திங்கு சேர்ப்பீர்! 11
பொருள்: என்று-(மேற்கூறியவண்ணம்) தமிழ்மொழியில் விஞ்ஞானசாத்திர நூல்கள் இல்லை என்றும், விஞ்ஞான சாத் திரத்தை எடுத்து விளக்கியுரைத்தற்கான மொழிவளம் தமிழுக் கில்லை என்றும், அந்தப்பேதை - அந்த அறிவிலி, உரைத்தான். சொன்னன், ஆ - ஐயோ, இந்தவசை - இப்படியான வடுச் சொல், எனக்கு வ காலங்கடந்து வாழும உயர்தனிச் GsFt மொழியாகிய எனக்கும், எய்திடலாமோ - வந்தடையலாமோ (ஆனபடியால் என் மக்களாகிய நீங்கள்), எட்டுத்திக்கும் ம. (இன்நே)எட்டுத் திக்குக்களிலும்உள்ள தேசங்களுக் கெல்லாம், சென்றிடுவீர் - (விரைந்து) செல்லுங்கள், கலைச் செல்வங்கள் யாவும் - (அவ்வத் தேசங்களில் உள்ள) பலதிறப்பட்ட விஞ் "ஞானக் கலைகள் யாவற்றையும் ஆராய்ந்து கற்று. இங்கு - கான் வதியும் இத்தமிழகத்துக்கு, கொணர்ந்து கொண்டு வந்து, சேர்ப்பீர் சேருங்கள் என் பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் உலகின் பலபாகங்களிலும் உள்ள தேசங்களுக் கெல்லாம் தமிழ்மக்கள் சென்று ஆங்காங்கு தோன்றி வளர்ந்துவருகின்ற புத்தம்புதிய விஞ்ஞானக் கலைகளை யெல்லாம் ஆராய்ந்து கற்றுத் தமிழ்மொழியில் அக்கலைகளைப் பற்றிய அரிய ஆராய்ச்சி நூல்களை ஆக்கிப் பரப்பவேண்டு மென்னும் கொள்கை நிழலாடுகின்றது பிறகாட்டு நல்லறிஞர் KP li ஆக்கிய புதிய விஞ்ஞானக் கலைகளைக் கற்றுத் தமிழாக்கஞ் செய்யவேண்டிய கடமை தமிழ் மக்களைப் பொறுத்ததாகும் என் னும் உண்மையைப் பாரதியார் வற்புறுத்திக் கூறுகின்றர். O சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலேச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஆர் வத்துடிப்புப் பாரதியாரின் தமிழாக்கப்பணியைப் புலனுக்கு கின்றது.

Page 52
"96. பாரதியார் பாடல்கள்
தந்தை அருள்வலி யாலும்-இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும்,
இந்தப் பெரும் பழி தீரும்-புகழ்
ஏறிப் புவிமீசை என்றும் இருப்பேன். 2
பொருள்; தந்தை - எனது தந்தையாராகிய சிவபெருமா னின், அருள் வலியாலும் - கிருவருள் வலிமையாலும், இன்று இந்த இருபதாம் நூற்ருண்டாகிய இக்காலத்தில், சார்ந்த . என்னே ஆக்குதற்காக வந்து சேர்ந்துள்ள, புலவர் அறிஞர் களின், தவவலியாலும் மிகுக்க முயற்சியென்னும் தவத் கிதத்தினுலும், இந்தப் பெரும்பழி - (என்மீது அந்தப்பேதை) விஞ்ஞான நூல்கள் இல்லை என்றும், விஞ்ஞானக் கலையை விளக்கிக் கூறத்தக்க சொல்வளம் இல்லையென நூறும் ஏற்றிக் கூறிய இந்த வசைமொழிகள் (இகழ்ச்சி யுரைகள்), தீரும் . (என்னைவிட்டு) நீங்கும், அங்ஙனம் வசைமொழிகள் என்ன விட்டு நீங்குவதினுல்) புகழ் ஏறி - புகழ் மிகப்பெற்று, புவி மிசை . இங்கிலவுலகத்தின் கண், என்றும் எப்பொழுதும் (உலகம் உள்ளதுணேயும்), இருப்பேன்  ைகிலேபெற்று வாழ் வேன் என் பதாம்.
துணையும் இறவாமல் புகழுடன் நிலைபெறுதற் பொருட்டுத் தமிழ் மக்கள் ஆற்றவேண்டிய கடமை கூறப்படுகின்றது.
சிவபெருமானின் திருவருள் ஆற்றலுடன், இன்று வாழ் கின்ற தமிழ்நாட்டு அறிஞர்களின் பேருழைப்பும் சேர்ந்துதான் தமிழைப் பாதுகாக்க வேண்டுமென்று பாரதியார் கூறுகின்றர்.
தமிழ்ாட்ட றிஞர்கள் மேலைநாட்டு விஞ்ஞானக் கலைகளைக் கற் லுத் தெளிந்து அவற்றைத் தமது தாய்மொழியாகிய தமிழில் தந்து, பல விஞ்ஞான நூல்களை வெளிப்படுத்துதல் வேண்டும். இங்கனம் புத்தம்புதிய கலைநுல்களைப் புனேந்து தமிழ்மொழியை உலக மொழிகளில் ஒன்ருக உயர்த்தி மேம்படுத்தும்வண்ணம் Litijstiti ஊக்குகின்றர். -

விளக்கவுரை 97.
8. தமிழ்
தமிழ்மொழி இனிமை கனிந்த உயர்தனிச் செம்மொழி யென்பதைப் பாரதியார் இப்பகுதியில் எடுத்துக் கூறியுள்ளார். தமிழ் மக்கள் தமிழ்மொழியை நன்கு கற்றுப் போற்ருமல் இருக்கின்ற நிலையைப் பாரதியாராற் பொறுக்கமுடியவில்லை. தமிழர் தமிழைப் புறக்கணித்துத் தமிழ் அறியாமல் இருக் கின்ற இழிநிலை மாறவேண்டுமென்பதே பாரதியாரின் பெரு வேட்கையாகும். இத்துடன் காலப்போக்கைத் தழுவித் தமிழில்
புதிய கலை நூல்களை இயற்ருமல், தமிழின் பழம் பெருமையை
மட்டும் பேசுகின்ற பழக்கம் மிகக் கொடியதெனவும் பாரதி யார் எடுத்துக் காட்டுகின்ருர், கம்பர், வள்ளுவர், இளங்கே வடிகள் முதலிய பெரும் புலவர்கள் ஆக்கிய நூல்கள் தமிழ்
மொழியின் சொல்லாற்றலையும் பொருளாற்றலையும் புலனுக்கு
கின்றன என்றும், தமிழர்கள் உள்ளத்தில் உண்மை ஒளி பெருகினல், தமிழ்மொழியும் வளம்படும் என்றும் கூறித்
தமிழ்த்தொண்டு புரியும்வண்ணம் தமிழ் மக்களை இடித்துரைத்து
வழிகாட்டுகின்ற பாரதியாரின் உள்ளத்துடிப்பு இக்கவிதைகளில் நின்று நிழலாடுகின்றன.
யாமறிநத மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் கண்ணுேம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனேத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்ருே சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும். 護
பொருள்: யாமறிந்த - காங்கள் கற்றறிந்த, மொழி
களிலே - (திருந்திய உலக) மொழிகளுள், தமிழ் மொழிபோல் ,
தமிழ் மொழியினேப் போல, இனிதாவது - இனிமை நலக்
கனிந்ததோர் மொழியினே, எங்கும் காணுேம் . (உலகின்) எப்
பகுதியிலும் கண்டிலோம், (ஆனுல் தமிழைத் தாய்மொழியாகக்

Page 53
98 பாரதியார் பாடல்கள்
கொண்ட தமிழர்களாகிய நாங்களோவென்முல்) Lu Tour prørtů = (தமிழைக் கற்காமல்) அறிவில்லாதவர்காைய், விலங்குகளாய் . (பகுத்துணர்ச்சியில்லாத) மிருகங்களைப் போன்றவர்களாய்த உலக இனத்தும் உலகின் கண் உள்ள ஏனைய இனத்து மக்க ளெல்லாரும், இகழ்ச்சிசொல - (தமிழர்கள் அறிவற்ற சாதி யென்று) பழித்துரைக்க, பான்மை கெட்டு - மக்கட்பண்பு அற்றவர்கனாய், (பான்மை - தன்மை). நாமமது - பெயர் மாததிரம், தமிழரெனக் கொண்டு - தமிழர் என வைத்துக் கொண்டு இங்கு - இத்தமிழகத்தில், வாழ்க்கிடுதல் - உயிர் வாழ்ந்து கொண்டிருததல், கன்ருே - கல்லதாகுமோ சொல்
வீர் - (தமிழ் மக்களாகிய நீங்களே சிந்தித்துச்) சொல்லுங்கள்.
தேமது ர - தேன் போல இனிமை பொருக்திய, தமிழோசை - தமிழ் மொழியின் பேச்சொலியானது, உலகமெலாம் . இக் ஜிலவுலகம் எங்கும் உள்ள ம4 களால் கற்றுப் பேசப்படும் வண்ணம், பரவும்வகை - வழங்கிப் பரவத்தக்கதாக, செய்தல் வேண்டும் - (தமிழர்களாகிய காம்) செயலாற்றவேண்டும்
முயற்சி யெடுக்க வேண்டும்).
தமிழ்மொழி உலக மொழியாகும் வண்ணம் தமிழ் மக்கள் முயற்சியெடுக்க வேண்டும் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில், தமிழ்மொழியின் தனிச் சிறப்பும், அத்தனிச் சிறப்பை யுணராதவர்களாயும் தமிழ்மொழி யைக் கற்று அறிவைப் பெறதவர்களாயும் விலங்குகளைப் போலிருக்கின்ற தமிழ் மக்களின் இழிநிலையினையும் எடுத்துக் காட்டி இடித்துரைத்து வழிப்படுத்துகின்ற பாரதியாரின் உள் ளத் துடிப்பை உணர்கின்றேம்.
பன்மொழிப் புலமை வாய்ந்த பாரதியார், இன்று உலகில் வழங்குகின்ற திருந்திய உயர்தனிச் செம்மொழிகள் பலவற் றுள்ளும் தமிழ்மொழியே இனிமையில் மிக்கதென்பதைத் தெளிந்து, அறுதியிட்டுரைக்கின்றர்.
வசம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணுேம்
O

விளக்கவுரை 99
எனப் பாரதியார் கூறுகின்ற குரலிலே எழுகின்ற ஒசையும் பெருமிதமும் தமிழ்மொழியே மற்றைய மொழிகளில் எல்லாம் மிக இனிமையுடையது என அவர் கூறிய கொள்கையை நிலைநாட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் தாய் மொழி இனிதாகவே இருக்கும் என்பது ஓர் பொது விதி யாகும். பாரதியார் தமிழ்மொழி இனிமையானது எனக் கூறி யது, தம்து தாய்மொழியென்ற பற்றினுல் அல்ல என்பதை யும், மொழியாராய்ச்சி நெறியில் ஆராய்ந்து கண்ட உண்மை அறிவினுலேயே என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
யாமறிந்த மொழிகளிலே
எனும் தொடர் மொழிஆராய்ச்சி கெறியால் தாம் கண்ட உன் மையையே பாரதியார் கூறினர் என்பதை வலியுறுத்துகின்றது.
இங்ங்னம் உலக மொழிகளுக்குள், சிறந்து விளங்கும் செம்மைவாய்ந்த தமிழைத் தமது தாய்மொழியாகப் பெற்று தமிழர்கள் தமிழைக் கருத்தூன்றிக் கற்காமல், அறிவிலிகளாய், மக்கட் பண்பற்றவர்களாய் உலக மக்கள் பழித்துரையாடத் தக்க இழிநிலையில் தமிழர் என்ற பெயருடன் உயிர்வாழ்ந் திருத்தல் நல்லதோ எனப் பாரதியார் எல்லேயில்லாத மனக் கவலையுடன் எம்மைக் கூவிச் சொல்லுகின்றர்.
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்ருே சொல்லீர் எனுங் கவிதைத் தொடர்களைப் படிக்கின்றபொழுது எழுகின்ற ஓசையில் பாரதியாரின் தமிழ்ப்பற்றும் தன்மானத் துடிப்பும் எம் உள்ளத்தையும் தொட்டு ஊக்குகின்றன.
இனிய தமிழ்மொழி, இந்த உலகமெலாம் வழங்கப்படும் உலகப் பெருமொழியாக நிலவி விளங்கும்வண்ணம் வைக்கத் தமிழ்மக்கள் முயலவேண்டும் என்ற பேராவல், பாரதியாரின் புலமை உள்ளத்தில் கிடந்து அலேயெறிகின்றது.

Page 54
00 பாரதியார் பாடல்கள்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
எனும் கவிதைத் தொடர்களிற் பாரதியாரின் உயிருணர்ச்சி அப்படியே பெருகிப் பாய்கின்றது.
உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
எனுந் தொடரை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்த தில:
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்ருேம்; ஒருசொற் கேளிர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2.
பொருள்: யாமறிந்த - நாங்கள் அறிந்த, புலவரிலே - உலகக் கவிஞர்களிலே, கம்பனப்போல் (கவிச்சக்கரவர்த்தி யாகிய) கம்பரைப் போல, வள்ளுவர் போல் - (தெய்வப் புல வராகிய) திருவள்ளுவரைப் போல, இளங்கோவைப் போல் - (முத்தமிழ்ப் புலவராகிய) இளங்கோவடிகளைப் போல, பூமி தனில் - இக்கிலவுலகத்தில், யாங்கனுமே - தமிழகம் ஒழிந்த) வேறெவ்விடத்திலும், பிறந்ததிலே - தோன்றினதே இல்லை, உண்மை - இக் கவனம் யான் கூறுகின்ற இம்முடிவான செய்தி தமிழ்ப் பற்றினுல் கூறுகின்றதாக எண்ண வேண்டாம் ) மெய் யுரையேயாகும், வெறும் புகழ்ச்சி இல்லே - பொருளற்ற புகழ் மொழிகள் (முகமனுரைகள்) அல்ல, ஊமையராய் - (இத் துணைச் சிறந்த கல்லிசைப் பெரும்புலவர்கள் தோன்றிய தமிழ்க் குலததில் தோன்றி இன்று கிாழ்கின்ற தமிழ் மக்க ளாகிய நாங்கள்) தமிழ் மொழியின் சிறப்பியல்புகவள உலக மக்கள் உணரும் வண்ணம் எடுத்து விளக்கியுணரக்கும் ஆற்றலின்றி இருப்பதால் ஊமைகளாகவும், செவிடர்களாய் - பிறமொழிப் புலவர்கள் தமிழ் மொழியைப்பற்றி ஆரய்க்கு கூறும் நுட்பத்

விளக்கவுரை O
திறங்கவளக் கேட்டுணாகம் பிறமொழியறிவோ, அல்லது தமிழ் மொழி ஆராய்வில் சிறந்த புலமையோ இன்றி இருத்தலால் செவிடர்களாகவும், (சுருடர்களாய் - தமிழ்மொழியின் மொழி யமைப்புத் திறனும் சொல்லாற்றலும், இலக்கணச் சிறப்புக் தொல்காப்பியம் எனும் முழமுதல் இலக்கண நூலின்கண் ஆராய்ந்து விளக்கப்பட்டிருத்தவல ஆராய்ந்து காணும் அக உணர்ச்சியின் தி இருத்தலால் குருடர்களாகவும் வாழ்கின் ருேம் . (தமிழர்களாகிய நாம் வாழ்ந்து வருகின்ருேம், ஒருசொற் கேளிர் - (தமிழ் மக்களே யான் கூறுகின்ற) ஒரு மொழியை (வார்த்தையைக் கேளுங்கள், சேமமுற - (தமிழ் மக்க ளாகிய கார்) ஈன்மை (சுகம் அடைய, வேண்டுமெனில் = வேண்டும் என்ருல், தெருவெல்ல்ாம் - தெருவீ கிகள் தோறும் (வீடுகள் தோரம்), தமிழ் முழக்கம் - (தமிழ் மொழியைப் பிழை யறப் பேசியும் படித்தும், போற்றியும் ஆராய்ந்தும் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு எழுப்புகின்ற) தமிழின் இனிய ஓசை முழக்கம், செழிக்க - பொருட்கரு வளம்) நிரம்பிச் செழிடி கும் வண்ணம் (செழிப்படைந்து கேட்கும் வண்ணப்), செய்வீர்-செய்யுங்கள்.
விளக்கம்: இக் கவிதையில், தமிழ்ப்பெரும் புலவர்களின் மேம்பாட்டையும், தமிழ் மக்கள் தமிழுணர்ச்சியின்றி வாழ்கின்ற புன்மையையும் எடுத்துக் கூறி இடித்துரைத்து, ஆக்கநெறி காட்டுகின்ற பாரதியாரின் தமிழ்ப் பற்றைக் காண்கின்றேம்.
உலக மகாகவிகளுள் உயர்ந்த இடத்தைப் பெற்று விளங்கு கின்ற முப்பெரும் புலவர்கள் தமிழ் மொழியை அணிசெய்கின் றர்களென்னும் சிறப்பைப் பாரதியார் மிக மிக ஆர்வத்துடனும் பெருமிதத்துடனும் கூறுகின்றர்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை உண்மை வெறும புகழ்ச்சியில்லை
ன்னும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்பொழுது எழுகின்ற
பெருமிதத் துடிப்புப் பாரதியாரின் முடிந்தமுடியான கொள்கைத் தடிப்பை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது.

Page 55
02 பாரதியார் பாடல்கள்
தமிழ் மக்கள் ஆகிய நாம் தமிழ்மொழியை ஆராய்ந்து கற்காமல், தமிழைப் புறக்கணித்து வாழ்கின்ற புன்மைப் பண்பால்,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்ருேம்
எனப் பாரதியார் இடித்துரைத்து எம்மை ஊக்குகின்றர்.
தமிழ்மக்கள் நன்மை அடைந்து, உலகம் மதிக்கத்தக்க பெருங்லைபெற்று வாழவேண்டுமானுல், தெருவீதிகள் தோறும் வீடுகள் தோறும் தமிழ் முழக்கம் செய்யவேண்டுமெனத் தமிழ் மக்களுக்குப் பாரதியார் ஆணையிடுகின்றர்.
சேமமுற வேண்டு மெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
எனுமிக் கவிதைத் தொடர்களுடன்
தெருவுதொறும் மிகவலறிச் சிவபெருமான் என்றேத்திப் பருகிய நின் பரங்கருணைத் தடங்கடலிற் படுவா மாறு அருளெனக் கிங்கு
எனவருந் திருவாசகத் தொடர்களையும் ஒப்பிட்டு நோக்குக.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்னே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3. பொருள்: பிறநாட்டு - (கமிழகத்தை ஒழிந்த) பிறநாடுக் ளில் உள்ள, கல்லறிஞர்  ை(உலகின் ஆக்கங் கருதி உழைக் கின்ற) சிறந்த பேரறிஞர்கள் ஆராய்ந்து ஆக்கிய, சாத்திரங்

விளக்கவுரை O3
கள் - அறிவியற் கலைகள் என்னும் விஞ்ஞான சாத்திர நூல் களே, தமிழ் மொழியில் - தமிழில், பெயர்த்தல் வேண்டும் ம மொழி பெயர்க்க வேண்டும், இறவாத - அழியாத (உலகம் உள்ளளவும் விலைபெறக்கூடிய), புகழுடைய - புகழைப் பெறக் கூடிய, புதுநூல்கள் - புதிய கருத்துக்களும் புதிய அமைப்புக்க ரூம் கொண்ட) புத்தம் புதிய நூல்களை, தமிழ் மொழியில் - தமிழில், இயற்றல் வேண்டும் - ஆக்கல் வேண்டும், மறைவாக(பிறகாட்டினர் அறிந்து பாராட்டாமல்) பிறரறியாவண்ணம், மேக்குள்ளே - எங்களுக்குள்ளேயே, பழங்கதைகள் - (கங்கை யையும், கடாரத்தையும் வென்ற தமிழர் என்றும், சங்கத்தில் வளர்ந்த தமிழ் என்றும்) பழம் பெருமைகளைக் கதைகளாக, சொல்வதில் - பேசிக் கொள்வதால், ஓர் மகிமை இல்லை - தமி ழர்களாகிய எமக்கு) ஒரு பெருமையும் லரப்போவதில்லை, திற மான புலமை எனில் - (எம்மிடத்தில்) சிறந்த புலமை (அறிவு காணப்படுகின்றதென்முல், அதை - அப்புலமைத் திறத்தினே வெளி நாட்டோர் = பிறநாட்டினர்கள் (பிறநாட்டு 15ல்லறிஞர் கள்), வணக்கம் செய்தல் வேண்டும் - மதித்துப் போற்றுதல் வேண்டும் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் தமிழ்மொழியை உலகமொழி யாக உயர்த்தி வாழ்வளித்தற்கான செயல்கெறிகளைக் கூறித் தமிழ்மக்களை ஊக்குகின்ற பாரதியாரின் ஆர்வப் பெருக்கைக் காண்கினருேம்.
பிறநாட்டு (மேலைநாட்டு) நல்லறிஞர்கள் அரிதின் ஆராய்க் தாக்கிய புத்தம் புதிய கலைகளை (விஞஞான சாத்திர நூல்களை)த் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டுமெனப் பாரதியார் திட்டர், தீட்டுகின்றர். இங்ஙனம் மொழிபெயர்ப்பதுடன் அமையாது
புததம் புதிய நூல்களைத் தமிழறிஞர்கள் தமிழில் இயற்றி மொழி
வளத்தைப் பெருக்கவேண்டும் என்றும் பாரதியார் வேண்டு கின்றர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

Page 56
A 04 பாரதியார் பாடல்கள்
எனும் கவிதைத் தொடர்களைப் படிக்கப் படிக்கப் பாரதியாரின் தமிழாக்கச் செயல்திட்டத்தின் அருமைப்பாடு புலனுகின்றது.
காலத்தையொட்டித் தமிழ்மொழியைப் புதுக்கிப், புதிய
புதிய கலைநூல்களால் அதனை வளம்படுத்தி வளர்த்தலை விடுத் துப், பிறர் அறியாமல் தமிழர்களாகிய நாம் நமக்குள்ளேயே பழம் பெருமைகளைப் பேசிக்கொண்டிருப்பதினுற் பயனென்றும் இல்லையென, இடித்துரைக்கின்ற பாரதியாரின் செயலூக்கம் மிக மிகப் பாராட்டத்தக்கதாகும். எமது புலமைத் திறமைகளை யும் செயல் திறமைகளையும் பிறநாட்டார் மதித்துப் போற்ற
வேண்டுமே அன்றி நாமே எமது பெருமைகளைப் பாராட்டிப் பேசுவது பொருளற்ற வெறுஞ் செயலாகுமென்பதே பாரதியாரின்
கொள்கையாகும்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதி லோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்
எனுமிக் கவிதைத் தொடர்கள் இறவாத புகழுடைய செய
லூக்க மந்திரங்களாய், என்றென்றும் நின்று வாழக்கூடிய பொருளாற்ற லுடையனவாய்ப் பொலிகின்றன.
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற் ருல்
என்பது நாலடியார்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்; பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரச் சிறப்புக் கண்டார். @
O

WT
விளக்கவுரை 105.
பொருள்: உள்ளத்தில் - மணத்தின் கண்ணே, உண்மை ஒளி - வாய்மை (மெய்) என்று சொல்லப்படுகின்ற உள்ளொளி யானது, உண்டாயின் - தோன்றுமானுல், வாக்கினிலே - (உள் ளத்தின்கண் நின்று தோன்றிய உண்மை ஒளியுடன் ஒன்றுபட் டெழுகின்ற) சொல்லின் கண்ணும், ஒளி உண்டாகும் - உள் ளொளி கின்று நிழலாடுகின்ற (தன்மை) தெளிவு தோன்றும்
இங்ங்ணம் உள்ளொளியோடு ஒன்றுபட்டெழுகின்ற சொல்லிலும் ஒளி தோன்றும் நிவலமை ஏற்பட்டவுடன் அத்துடன் கலந்து) வெள்ளத்தின் பெருக்கைப் போல் - வெள்ளம் பெருக்கெடுத்து வருதலைப்போல, கலைப்பெருக்கும் - அறிவியற் கலை என்னும் விஞ்ஞான சாதகிரத்தின் பெருக்கமும், கவிப்பெருக்கும்-இலக் கியப் பெருககமும், மேவுமாயின் - பொருந்தி நின்றனவாணுல், பள்ளத்தில் - அடிமை வாழ்வென்னும் படுகுழியில், வீழ்ந்திருக் கும் - வீழ்ந்து கிடங்து வருந்துகின்ற (வருந்திக் கொண்டிருக் கும்), குருடர் எல்லாம் - (அறியாமை என்னும் இருளிலே கிடந்து அல்லலுறுகின்ற) அகக் குருடர்களாகிய அறிவிலிகள் எல்லோ ரும், விழிபெற்று ம அறிவென்னும் அகக்கண்ணே அடைந்து, பதவி கொள் வார் - (சுதந்திர வாழ்வு என்னும்) உயர்நிலையை அடைவார்கள், தெள்ளு ற்ற - சங்கத்தில் ஆராய்ந்து) செப்பஞ் செய்யப்பட்ட, தமிழமுதின் - தமிழாகிய ஆமுதத்தின், சுவை கண்டார் - தீஞ்சுவையினே அழுந்தி அழுந்தி ஆராய்ந்துணர்ந்த வர்கள், இங்கு - இங்கிலவுலகததில், அமரர் - தேவர்களுக் குரிய, சிறப்புக்கண்டார் - இன்ப நுகர்வும் இறவாமை (சாவா மை)யும் ஆகிய சிறப்புப் பேறுகளை உடையவராய் நுகர்ச்சி பெற்று வாழ்வார்கள், (சிறப்புக் கண்டார் என்பது சிறப்புப்பேறு களே நுகர்ந்து, அறிந்தவர்களாவார் என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில், கற்பனைத் திறம் வாய்ந்த அற்புதப் பெருங் கவிஞராகிய பாரதியான், உள்ளொளி யோடு கலந்து சொல்லோவியமாகத் தோன்றும் கலைப் பெருக்கத்தின் ஆற்றலையும், கவிப்பெருக்கத்தின் ஆற்றலையும் அழுந்தி நுகர்ந்து நுகர்ந்து வியந்து பாராட்டும் உயிர்த்துடிப்புத் திறம்கொண்ட கவிதைப் பண்பை உணர்கின்றேம்

Page 57
F06 பாரதியார் பாடல்கள்
உள்ளத்திலே உண்மையின் ஒளியென்னும் உள்ளொளி நிலைபெறுமானுல் உரையிலும் அதன் தன்மை நின்று நிழ லாடுமெனப் பாரதியார் கூறுகின்ற கொள்கை அவரின் கவிதையுள்ளத் திறத்தைப் புலனுக்குகின்றறு. வெள்ளப் பெருக்கெழுந்து பாயும் பொழுது அதன் ஆற்றலின்கண் ஏனைய பொருள்களெல்லாம் அகப்பட்டேவல் கொள்ளப்படுவது போலக் கலைப்பெருக்கினுலும் கவிப்பெருக்கினுலும் அள்ளுப் பட்டடங்கிய மக்களும் தங்கள் அறியாமை நீங்கி அக்கலை, கவிதை யென்னும் இரண்டினுலும் ஏவல் கொள்ளப்பட்டு ஏற்ற முறுவர் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவிகொள்வார் எனுங் கவிதைத் தொடர்களைப் படிக்கும் பொழுது எமதுள்ளத் திலும் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் ஊற்றெடுத்துப் பெருகு வது போன்ற உணர்ச்சி உண்டாகின்றது.
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் எனுங் தொடருடன்,
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி எனவருந் திருவாசகத்தொடரையும்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் எனுந் தொடருடன்,
கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ
எனவரும் திருக்கோவையார்த் தொடர்களையும் ஒப்பிட்டு நோக்குக.

விளக்க வுரை 07
9. மூன்று காதல்
காமகள், திருமகள், காளி என்னும் சக்திகள் மூவர்
மேலும் காதல் கொண்டு பாரதியார் பாடிய கவிதைகள்
இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. கல்வியும் செல்வமும் வீரத்தோடு கலந்த கருணையும் மக்கள் வாழ்வுக்கு மிகமிக இன்றியமையாதனவாகும். இப்பேறுகளை நல்கும் திருவருட் சக்திகளாகிய நாமகளையும் திருமகளையும் காளியையும் மிகப்
பழங்காலக் தொட்டே பாரதமக்கள் வழிபட்டு வருகின்றர்கள். கவராத்திரி விழா இம்முப்பெருஞ் சக்திகளின் வழிபாடாக
மலர்ந்து வழக்காற்றில் நின்று நிலவுகின்றதென்பதை எல்லோரும் அறிவர்.
பாரதியார் தமது கவிதை உள்ளத்தை இம்முப்பெரும் சக்திகளிடத்தும் ஒப்படைத்து ( அர்ப்பணித்து நிற்கின்ற தன் மறதி நிலையினையே ( தற்போதங் கெட்ட நிலை ) காதல் எனக் குறிபபிடுகின்றர். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் இறைவனைத் தலைவனுகவும் தம்மைத் தலை வியராகவும் பாவித்துப் பாடியருளிய காதல் நெறியையே
பாரதியாரும் கைக்கொண்டுள்ளார், இறைவனிடத்துத்
தம்மை முற்றும் ஒப்படைத்துத் தம் செயலின்றி
கின்று நுகருகின்ற அன்பு கெறியைக் காதல் கெறி
யாகப் பாவித்துப் பாடுகின்றபொழுதுதான், தமது உருக்கமான அன்பின் அகலத்தை உணர்ந்தும் நுகர்ந்தும் ஆனந்தமடைவார்கள்.
சீவக சிந்தாமணியென்னும் பெருங் காப்பியத்தின் தலே வனுகிய சீவகன் கல்வியறிவில் மிக்கோங்கினுன் என்பதை உணர்த்திய திருத்தக்க தேவர்,
முழவெனத் திரண்ட திண்தோள் மூரிவெஞ் சிலையினனும் அழலெனக் கனலும் வாட் கண் அவ்வளைத் தோளினுளும் மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன் மதலையை மயிலஞ் சாயல்
குழைமுக ஞானமென்னும் குமரியைப் புனர்க்க லுற்ருச்

Page 58
08 பாரதியார் பாடல்கள்
எனுஞ் செய்யுளில், நாமகளைச் சீவகன் புணர்ந்தானெனக் கூறுவதையும் கோக்குக,
முதலாவது-சரஸ்வதி காதல்
இராகம்-சரஸ்வதி மநோகரி1 (தாளம்-திஸ்ர ஏகம்
பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரனே மேல் - அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும் - கண்டேன்
வெள்ளே மனது பறிகொடுத்தேன், அம்மா!
பொருள்: பிள்ளைப் பிராயத்திலே - என் இளமைப் பரு. வத்திலேயே (சிறு பிள்ளேயாக இருக்கும்பொழுதே), அவள் = காமகளின், பெண்மையைக் கண்டு - பெண் தன்மையாகிய பேரழ கைக் கண்டு, மயங்கி விட்டேன் - காதல் கொண்டு விட்டேன், அங்கு - (நாமகளைக் கண்டு மயங்கிய) அக காலத்தில், பள்ளிப் படிப்பினிலே - பள்ளிகசுடத்திற்குச் சென்று (கட்டளைக்கடங் கிப்) படிக்கின்ற கல்வியிலே, மதி - விருப்பம் (மனம்), பற்றிட வில்லை - கிலே கொள்ளவில்லை (பதியவில்லை). எனிலும் - என்ரு லும், அவள் - நாமகள், தனிப்பட - தனிமையாக, வெள்ளை மலரணை மேல் - வெண்தாமரை மலராகிய ஆசனத்தின்மேல், வீணையும் கையும் . வீணைதாங்கிய கையுடன் வீற்றிருந்தும், விரிந்த - பூத்துப் பொலிகின்ற, முகமலர் - tதனது) முகமாகிய மலரினல் (முக மலரின் கண் பொருந்திய வாயினுல்), விள்ளும் = மொழிகின்ற, பொருளமுதும் - பொருளாகிய அமுதத்தையும், கண்டேன் - அறிந்துகொண்டேன், (இனி முகமாகிய மலரினுல் குறிப்பாகக் கூறுகின்ற பொருளாகிய அமுதத்தை உணர்ந்து கொண்டேன் எனவும் பொருள் கூறலாம், "அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சங், கடுத்தது காட்டும் முகம்" என்பது திருக்

விளக்கவுரை 109.
குறள்), வெள்ளே மனது . (அங்ஙனம் கண்டவுடன்) கள்ளமில்
லாத (என் குழந்தை) உள்ளத்தை, பறிகொடுத்தேன் - பறி
கொடுத்துவிட்டேன், (அம்மா-வியப்பை உணர்த் துஞ் சொல்),
விளக்கம்: இக் கவிதையில் பள்ளியிற் படிக்கும் பிள் 2ளப் பருவத்திலேயே தாம் நாமகளின் கருணையைப் பெற நினைந்து அவள்மேல் மிக்க காதல்கொண்ட செயலைக் கூறு கின்ற பாரதியாரின் கவிதையுள்ளச் சிறப்பினைக் காண்கின
ருேம்.
பிள்ளைப் பிராயத்திலே அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன்
என்றும்,
பள்ளிப் படிப்பினிலே மதி பற்றிடவில்லை என்றும் பாரதியார் கூறுகின்ற கவிதைத் தொடர்களால் அவர், பள்ளியிற் பயிலும் பச்சிளம் பருவத்திலேயே கல்விக் கடவு ளாகிய நாமகளின்மேற் காதலாகிக் கசிந்துருகும் நிலையை
அடைந்துவிட்டார் எனபதை அறிகின்றேம், -
அவர் தமது கள்ளம் இல்லாத வெள்ளை உள்ளத்தில்
நாமகள் குடியேறிவிட்டாள் என்பதைக் கூறிப் பேருவகை
கொள்கின்றர். நாமகள் வீணைதாங்கிய கையுடன் வெண் தாமரை மலர்மேல் வீற்றிருந்துகொண்டு, முகமலரால் மொழி
கின்ற பொருளமுதை நுகர்ந்து நுகர்ந்து, பாரதியார் தமதுள்
ளத்தைப் பறிகொடுத்துவிட்டார் என்பதை காம் படித்துணர் கின்றுேம்.
தமது கள்ளம் இல்லாத வெள்ளை உள்ளத்தை வெண்
தாமரை மலராகக் கொண்டு நாமகள் குடியேறிவிட்டாளென் பதையே பாரதியார் குறிப்பாக எமக்குக் கூறுகின்றர்.
வெள்னை மனது பறிகொடுத்தேன்
எனப் பாரதியார் கூறுகின்ற குரலிலே, கள்ளமில்லாத என்
உள்ளத்தைக் கலைத் தெய்வத்திற்குக் காணிக்கையாகக்

Page 59
110 பாரதியார் பாடல்கள்
கொடுத்துவிட்டேன் என்னும் பெருமிதம் நிழலாடுவதை நோக்குக.
ஆடி வருகையிலே - அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில் ஏடு தமித்திருப்பாள் - அதில்
இங்கிதமாகப் பதம் படிப் பாள், அதை நனடி யருகனேந்தால் - பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் “இன்று கூடி மகிழ்வ" மென்ருல் - விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல்வாள், அம்மா! 2
பொருள்: ஆடிவருகையிலே - (யான் வீதி வழியாக) விளே பாடிக்கொண்டு வரும்பொழுது, அவள் - நாமகள், அங்கு-அவ் விடத்தில் உள்ள, ஒரு வீதிமுனேயில் . ஒரு தெருவீதியின் முன் பக்கத்திலே, கிற்பாள் - காணப்படுவாள், கையில். (அங்ஙனம் வீதியிற் காணப்படும்பொழுது) தனது கையிலே, ஏடு - புத்த கம், தரித்திருப்பாள் - வைத்திருப்பாள் தாங்கியிருப்பாள்), அதில்  ைஅப்புத்தகத்தின் கண் இருந்து, இங்கிதமாக - என் (உள் னத்திற்கு) இலிமை தரத்தக்கதான, பதம்-பொருள் பொதிந்த பாக்களே, படிப்பாள் - படித்தருள் வாள், அதை - அங்ஙனம் படிச்த அப்பாவின் பொருட்சுவையை, காடி - விரும்பி (கேட் பதற்காக) அருகணேந்தால் - (அவளின்) பக்கத்தே சென்ருல், பல . பலதிறப்பட்ட, ஞானங்கள் - மெய்ஞ்ஞான உண்மைகளே, சொல்லி - (எனக்குக்) கூறியருளி, இனிமை செய் வா ள் - இனிமை உணர்ச்சியை ஊட்டியருள் வாள், (அவளுட்டிய இனிமை உணர்ச்சியினுல் ஆனந்தமடைந்த யான், அவளே நோக்கி) இன்று  ைஇப்பொழுது, கூடி மகிழ்வம் - (இரங்கள் இருவரும்) கலந்து பேருவகிை கொள்வோம், என்ருல் - என்று யான்) கூறிஒல், விழிக்கோணத்திலே - கடைக்கண்ணினுல் என்ணேப் பார்த்து, இகைகாட்டி புன்னகை செய்து, செல் வாள் - சென்றுவிடுவாள், (மறைந்திடுவாள்),
விளக்கம்: இக் கவிதையில் கலைத் தெய்வமாகிய காமக 8ளின்மேற் காதல் கொண்ட பாரதியர், அவளின் அருளைப்

விளக்கவுரை
பெற்று ஆனந்தமடைதற்குரிய நிலைமை கிட்டி விட்டதெனக் கூறி மகிழ்கின்ற ஆர்வத் துடிப்பை அறிகின்றேம்,
தெரு வீதிகளில் ஒடி விளையாடுகின்ற சின்னஞ்சிறு பரு வத்திலேயே பாரதியார், நாமகளின் நல்லருளைப் பெற்று விட்டார். தான் விளையாடச் செல்கின்ற தெருவீதி முனையில் நாமகள் புத்தகங் தாங்கிய கையுடன் எழுந்தருளி நிற்பாள் என் றும், தனக்கு ஞானக் கருத்துக்களை நல்குவாள் என்றும், தன் னுடன் கூடி மகிழும்வண்ணம் கேட்டால் குறுககை புரிவாள் என்றும், கூறிக்கூறிப் பாரதியார் உள்ளங் குழைகின்றர்,
ஆடி வருகையிலே அவள் அங்கோரு
வீதி முனேயில் நிற்பாள் என்றும்,
ஏடு தலித்திருப்பாள் அதில் இங்கிதமாகப்
பதம் படிப்பாள் என்றும்,
இன்று கூடி மகிழ்வமென் ருல்
விழிக் கோணத்திலே நகை காட்டிச் செல்வாள்
என்றும் பாரதியார் கூறுகின்ற கவிதைத் தொடர்களைப் படிக் கும்பொழுது எழுகின்ற இன்ப உணர்ச்சியும், ஈடுபாடும் அவர், நாமகளுடன் கலந்து அவளருளாலே ஆதரிக்கப்பட்டு ஆனந்த மடைகின்றர் எனும் உண்மையைப் புலனுக்குகின்றன.
ஆற்றங் கரைதனிலே - தனி
யானதேனர் மண்டப மீதினிலே, தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தான்; அதை ஏற்று மனமகிழ்ந்தே - **அடி
என்ஞே டிணங்கி மணம்புரிவாய்" என்று போற்றிய போதினிலே - இனம்
புனைகை பூத்து மறைந்துவிட்டான், அம்மா! 3

Page 60
2 பாரதியார் பாடல்கள்
பொருள்: (யான் ஒரு 5ாள்) ஆற்றங்கரைதனிலே - ஆம் றங்கரையிலே, தனியான - தனித்துள்ள, ஓர் மண்டபமீதி னிலே - மண்டபத்தின்கண்ணே, தென்றற் காற்றை - (இள வேனிற் பகுவத்தில் வீசுகின்ற) தென்றல் காற்றின, நுகர்ந்தி ருந்தேன் - அனுபவித்து (நுகர்ந்து) மகிழ்ந்தவண்ணமாய் இருக் தேன், அங்கு - அங்ங்ணம் யான் தென்றற் காற்றின் இன் பத்தை நுகர்ந்துகொண்டிருந்த அவ்விடத்தில், (5ாமகள்) கன் விக் கவிதை யொன்று - கன்னித் தன்மையென்னும் புதிய இளமை பொருந்திய பாடலொன்றினே, (முதற் பாட்டினே) கொணர்ந்து - கொண்டுவந்து, தந்தாள் - கொடுத்தருளினுள், அதை - அக்கன்னிக் கவிதையினே, ஏற்று - பெற்று, மன மகிழ்ந்தே - உள்ளத்தில் உவகை கொண்ட யான், (அவளே நோக்கி) (என்னேடு - என்னுடனே இணங்கி - கருத்தொகு நித்து, மணம் புரிவாய் - (என்னை) திருமணஞ் செய்துகொள் வாயாக, என்று - என்று சொல்லி, போற்றியபோதினிலே - வணக்கஞ்செய்த நேரத்திலே, (அவள்) இளம் புன்னகை பூத்துஇளமைச் செவ்வி கனிந்த புன்சிரிப்புப் புரிந்துவிட்டு, மறைந்து விட்டாள் - மறைந்து சென்றுவிட்டாள்.
விளக்கம்: இக்கவிதையில், காமகளின் கருணையால் தாம் முதற் கவிதையை (கன்னிக்கவிதை)ப் பாடிப் பயன டைந்த செயலைப் பாடி மகிழ்கின்ற பாரதியாரின் ஆனந்தப் பெருக்கை அறிகின்றுேம்.
கன்னிக் கவிதை என்னும் முதற் பாட்டைத் தாம்பாடி மகிழ்ந்த சூழ்நிலையைப் பாரதியார் படம் பிடித்துக் காட்டு
ஆற்றங் கரைதனிலே - தனி
ஆனதோர் மண்டபமீதினிலே தென்றல் காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் எனப் பாரதியார் பாடுகின்ற கவிதையைப் படித்துப் பாருங் கள், கன்னிக் கவிதையைக் கலைமகள், பாரதியார் உள்ளத்தில் கருக்கொண்டெழும் வண்ணம் கருணைபுரிந்தபொழுது அவர்,
 

விளக்கவுரை 3
ஆற்றங்கரையில் உள்ள தனியானதோர் மண்டபத்திலே தென் றல் காற்றை நுகர்ந்து இன்ப உணர்ச்சியுடன் விற்றிருக் isgöTO3f.
மாசில் வினையும் மாலை மதியமும் விசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே, எனும் தேவாரத்துடன்,
ஆற்றங் கரை தனிலே தனி ஆனதோர் மண்டப மீதினிலே தென்றல் காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்.
எனும் இக்கவிதைத் தொடர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். திருநாவுக்கரசடிகள் ஈசனின் இணையடி நீழல் இன்பத்தைப் பெற்றுப் பாடியபொழுது நுகர்ந்த இன்பமும், பாரதியார் நாமகளின் கருணையைப் பெற்றுக் கன்னிக் கவிதையைப் பாடியபொழுது நுகர்ந்த இன்பமும் ஒரே தன்மையாக இருத் தலை நோக்குக.
கன்னிக் கவிதையைப் பாடிய பாரதியார் கலைமகளுடன் அத்துவிதமாகக் கலந்துவிட்டார்.
அடி என்னுேடிணங்கி மணம் புரிவாய் என்று போற்றிய போதினிலே - இளம்
புன்னகை பூத்து, மறைந்துவிட்டாள்
எனப் பாரதியார் பாடுகின்றபொழுது அவருள்ளத்தில் எழுகின்ற காதலின்பததை உணருங்கள்.
போற்றி நிற்பது என்று கொல்லோ
என் பொல்லா மணியைப் புணர்ந்தே, எனுந் திருவாசகத் தொடர்களுடன் பாரதியாரின் கவிதைத் தொடர்களையும் ஒப்பிட்டு நோக்குக.
8

Page 61
4. பாரதியார் பாடல்கள்
கன்னிக் கவிதை என்பது முதற் பாடிய கவிதை எனப் பொருள்படும். இராமன் முதன்முதல் ஆற்றிய போரைக் காகுத்தன் கன்னிப்போர் எனவும், கண்ணப் வர் முதன் முறை வேட்டையாடச் செல்வதைக் கன்னி வேட்டை மகன் போக எனவும் வருகின்ற வழக் காற்றை கோக்குக.
சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல் - பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால் - பிற
வாஞ்சையுண்டோ? வய தங்ங்ண மேயிரு பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன், அம்மா &
பொருள்: சித்தம் தளர்ந்ததுண்டோ - (கூடி மகிழ்வோம்
என்று யான் கேட்டவுடன் கலைத்தேவி மறைந்துவிட்டான் என்று) என்னுடைய மனம் விலைகுலைந்திடவில்லை. (தளர்த்த
துண்டோ இல்லை என்பதாம்), கலைத்தேவியின்மீது = கலைத்தெய்
வம் என்னும் காமகளின் மேல், விருப்பம் வளர்த்து - (தீராத) வேட்கையென்னும் காதல் பெருகிட, ஒரு பித்துப் பிடித்தது
போல் ஒப்பில்லாத ஒரு பைத்தியம் கொண்ட து போல்
(கொண்டவணுய்), பகற்பேச்சும் - பகற்பொழுதெல்லாம் அக் இ&லத் தெய்வத்தைப் பற்றி (கினைந்து கினேந்து) அவள் அழகி இனச் சொல்லி மகிழ்வதும், இரவில் இராப்பொழுதெல்லாம். இனவும் - அக்கலைத் தெய்வத்தைக் கனவிற் காண்பதுமாய், அவ விடை – அக்கலைத் தெய்வமாகிய காமகள்மேல், வைத்த 8ஆனவையல்லால் - கொண்ட கினவே (எண்ணம்) அன்றி, பிற வாஞ்சை = பிறபொருள்களில் விருப்பம், உண்டோன உண்டாக வில்லை, அங்ஙனமே - அப்படியே (நாமகளின் பேச்சும் நினைவு மாகவே), வயது என்வயது, இருபத்திரண்டாமளவும், இரு பத்திரண்டு நிரம்பும்வரையும், வெள்ளே-(வெள்வளக் கவலயுடுத்து வெள்ளெப் பணிபூண்டு வெள்ளெக்கமலத்தே விற்றிருக்கின்ற கார
 

விளக்கவுரை 15
னத்தால்) தூய வெண்மையாக விளங்குகின்றவளும், பண் மகள். வீணையில் இனிய பண்ணிசையை எழுப்புகின்றவளுமாகிய கஜல மகளின்மேல், காதலே -யான் கொண்ட காதலேயே, பற்றி சின் றேன் - பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்தேன்.
விளக்கம்: இக்கவிதையில் இருபத்திரண்டு வயதளவும்" உலகப்பற்றில் ஈடுபடாமல், கலைமகளின் எண்ணமும் பேச்சு மாகவே இருந்து, விழிப்பிலும் உறக்கத்திலும் அவளையே கண்டு காதல் மிக்கவராய் அவளுடன் கலந்து வாழ்ந்த தமது பெரும்பேற்றைக் கூறுகின்ற பாரதியாரின் கவிதை உள்ளத் தைத் காண்கின்றுேம்.
உள்ளம் உலைதலின்றி இருபத்திரண்டு வயதளவும் கஜல மகள்மேல் தீராத காதலுடையவராய் வீற்றிருந்து, கவிதை மழையைக் கொட்டிய பாரதியாரின் புலமை வாழ்வின் தூய் மைப் பண்பை அவரே கூறக் கேட்கின்ற பெருவாழ்வை நாமும் பெற்றுவிட்டோம்.
கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்த்தொரு
பித்துப் பிடித்ததுபோல் பகற் பேச்சும்
இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் பிற
வாஞ்சை யுண்டோ
எனப் பாரதியார் பாடிய கவிதைத் தொடர்களைப் படிக்கும் பொழுது, அவர், தம் எண்ணமெல்லாவற்றையும் கலைமகளின் மேல் வைத்து வாழ்ந்த கலைவாழ்வின் தூய பண்பாட்டை உணர்கின்றேம்.
இருபத்திரண்டு வயதளவும் கலைத்தெய்வமாகிய நாமக ளின் மேற்கொண்ட காதலுணர்வுடன் வாழ்ந்து கவிதைகளை அருவி ஊற்றைப்போலப் பாடிய பாரதியாரின் கவிதை உள் ளத்தின் அகலத்தையும் ஆற்றலையும் இன்று நாங்கள் அனு பவித்து மகிழ்கின்றுேம்,

Page 62
6 பாரதியார் பாடல்கள்
பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால் பிற வாஞ்சை யுண்டோ
எனும் இக்கவிதைத் தொடர்களுடன்
சிந்தனை நின் றனக்காக்கி நாயினேன் தன் கண்ணிணைநின் திருப் பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வரககுன் மணிவார்த்தைக் காக்கி
எனவரும் திருவாசகத் தொடர்களை ஒப்பிட்டு நோக்குக.
இரண்டாவது-லசுஷ்மி காதல்
" .
இராகம்-பூநீராகம் தானம்-திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே - அங்கோர்
இன்பப் பொழிலி னிடையினில் வேருெரு சுந்தரி வந்துநின்மூள் - அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன் சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லினுன் மற்றும் அந்தத் தின முதலா - நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின்றேன், அம்மா! 5.
பொருள்: இந்த கிலேயினிலே - (இங்ங்ணம் யான் இருபத்தி ரண்டாண்டுகள், கலைமகளிடத்தில் காதல் கொண்டிருந்த) கிலே மையிலே, அங்கோர் - அவ்விடத்தில் உள்ள ஒரு, இன்பப் பொழிலின் இடையினில் - இன்ப உணர்ச்சியை ஊட்டுகின்ற சோலையின் கண்ணே, வேருெரு - இன்னும் ஓர், அந்தரி-அழகி, வந்து நின்ருள் - வந்து தோன்றினுள் அவள் - அச்சுந்தரியின், சோதி முகத்தின் - ஒளிபொருக்திய முகத்தின்கண் கிழலாடு கின்ற, அழகின - எழிலே கண்டு - நோக்கியதும், என்றன் சிந்தை - எனது உள்ளத்தை, திறை கொடுத்தேன் பறிகொடு த்து விட்டேன். (கப்பமாகக் கொடுத்துவிட்டேன்), அவள் - அச்

விளக்க்வுரை 17
சுந்தரி, மற்றும் - அகன் பின்பும், பெயர் - தன்னுடைய பெயர், செந்திரு என்று - செம்மை வாய்ந்த திருமகள் என்று, சொல்லி ஞள்-கூறினள், அங்கத தினம் முதலாய் - அந்த நாள் தொடங்கி, கெஞ்சம் . எனதுளளம், ஆர - (இன்பததினல்) நிறைவடையும் வண்ணம், தழுவிட (அச் செந்திருவை அனேந்திட, வேண்டு கின்றேன் - விரும்புகின்றேன்.
விளக்கம: இக்கவிதையில் பொருட் செல்வத்தை நல்கும் திருமகளின் மேற் காதல்கொண்டு, அவளின் பெருங்கருணையை விரும்பிநின்ற தமது உள்ளத் துடிப்பைக் கூறும் பாரதியாரின் உவகைப் பெருக்கை உணர்கின்றேம்
இருபத்தி)ண்டு ஆண்டுகள் நிறையுமளவும் கலைமகளின் மேற் காதலகொண்டு, அவளின் கருணையினுல், கவிதை மழையைப் பொழிந்த பாரதியார், உலக இன்பங்களுக்கு மிக இன்றியமையாத பொருட்செல்வத்தை விழைந்து திருமகளின் கருணையை விழைகின்றர். A.
இன்பப் பொழிலின் இடையினில்
வேருெரு சுந்தரி வந்துநின்ருள் எனும் தொடர்களில் உலக இன்ப நுகர்வுக்குப் பொருள் மிக இன்றியமையாததென்பதை உணர்ந்து கூறுகின்ற பாரதியாரின் உயிர்த் துடிப்பை உணர்கின்ருேம்.
இன்பப் பொழிலின் இடை எனுக்தொடரை பொருளி லார்க்கு இவ்வுலகமில்லை எனவரும் திருக்குறளுடன் ஒப் பிட்டு நோக்குக. கவிதை பாடுதலில பெருங் காதல்கொண்ட பாரதியார், இல்லறவாழ்வில் ஈடுபட்ட பின்பு பொருட்செல் வத்திற் காதல் கொண்டவராய்த் திருமகளின் கருணையை விரும்புகின்றர்.
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறை கொடுத்தேன்
எனுந் தொடர்களில் பாரதியாரின் உள்ளம் பொருட் செல்வத் தில் பெருவேட்கை கொண்ட நிலை அப்படியே புலனுகின்றது.

Page 63
18 பாரதியார் பாடல்கள்
பொருளிலார்க் கிலே இவ்வுல கென்ற நம்
புலவர் தம் மொழி பொய்மொழி அன்றுகாண்
பொருளிலார்க் கினபில்லை துணையிலை
பொழுதெலாம் இடர்வெள்ளம் வந்தெற்றுமால்
பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்
எனத் தமது சுயசரிதையில் பாரதியார் கூறுவதையும் கோக் குக.
புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சற்றென் முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்; பின்னர் என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித் தேகிடுவாள்; அங்கு சின்னமும் பின்னமுமா ட மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேன், அம்மா ! 6.
பொருள்: புன்னகை செய்திடுவாள் - (அச் செந்திருவென் னுந் திருமகள்) என் இனப் பார்த்துப் புன்சிரிப்புப் புரிந்திடுவாள், அற்றைப்போது 9 அங்ஙனம் அவள் புன்சிரிப்புச் செய்த அக் 15ாள், முழுதும் - முழுவதும், மகிழ்ந்திருப்பேன் - உவகை கொண்டிருப்பேன், (திருமகளின் அருளால் சிறிய செல்வத்தைப் பெற்று அந்நாள் முழுவதும் உவகையுடன் இருப்பேன் எனக் குறிப்புப் பொருள் தோன்றுதலேக் காண்க.) என்முன் - எனக் கெதிரே (முன்பாக), சற்று கின்று - (அத்திருமகளானவள் சிறிதுநேரம் நின்று, பார்த்திடுவாள் - நோக்கியருள்வாள்' அந்த மோகத்திலே - (திருமகள் என்முன் கின்று என்மேல் திரு கோக்கம புரிந்ததினுல் ஏற்பட்ட) மயக்கத்தினல், தலை சுற்றி டுங்காண் - என் தலை சுழன்றிடும், (காண் - அசை, (திருமகள் Φ எனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தவுடன் யான் செல்வத் செருக் கினல் மயங்கித் தவலகீழாக நடக்கத் தொடங்கிவிடுவேன், என வோர் குறிப்புப்பொருள் தோன்றுதலேயும் காண்க : பின்னர் ம அதன்பின்பு, என்ன பிழைகள் - என்னிடத்தில் என்ன குற்றங் களே, கண்டோ - கண்டதினுலோ (நானறியேன்), அவள் அச் செந்திருமகளானவள், என்னே - அடியேனுகிய என்னே, புறக்

விளக்கவுரை 9
கணித்து - பொருட்படுத்தாமல் விடுத்து, ஏகிடுவாள் - சென்று விடுவாள். அங்கு - அங்ங்னம் அவள் சென்றிட அவ்விடத்தே கின்று, மனம் - என்மனமானது, சிந்தி - சிதறி, சின்னமும் - விலகுலேயப்பட்டும், பின்னமுமாய் - சிறு துகளாக கொறுங்கப் பட்டும், உளம் - சித்தம், மிக கொந்திடுவேன் : மிகவும் வருத் தங் கொண்டிடுவேன்.
விளக்கம்: இக்கவிதையில், சிலகாலம் திருமகளின் அருளைப் பெற்றும் சிலகாலம் பெருமலும் தாம் வறுமையால் வாடிய நிலையைச் சொல்லி வருந்துகின்ற பாரதியாரின் உள்ள நிலையை உணர்கின்றேம்.
உலகவாழ்வில் இடையிடையே வறுமைக் கொடும்பிணி யால் பாரதியார் அல்லற்பட்டுத் திருமகளின் அருளை வேண்டி நின்ற நிலைமையை அப்படியே சொல்லிச் சொல்லி எம்மையும் ஊக்குகின்றர்.
புன்னகை செய்திடுவாள் அற்றைப்போது
முழுதும் மகிழ்ந்திருப்பேன் என்றும்,
என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித் தேகிடுவாள் என்றும் பாரதியார் கூறுகின்ற கவிதைத் தொடர்களால் அவர் இடையிடை பொருட் செல்வத்தைச் சிறிதளவாதல் பெற்றும் இடையிடையே வறுமைத் துன்பத்தால் வாடி வருந்தியும் இருந்த நிலை புலனுகின்றது.
சின்னமும் பின்னமுமா - மனம்
சிந்தி உளமிக நொந்திடுவேன் எனும் தொடர்களில் பாரதியார் அடைந்த வறுமைத் துயரின் மிகுதி புலனுகின்றது.
வறுமைப் பாழ்பிணி ஆற்றப்படா துளம் உருகிப் போனது தேற்றப்படாதினி மகிமைக் கேடுகள் பார்க்கப் படாதுன - தருள்வாங்
எனவரும் திருப்புகழ்த் தொடர்களையும் நோக்குக.

Page 64
20 பாரதியார் பாடல்கள்
காட்டு வழிகளிலே - மலைக்
காட்சியிலே, புனில் வீழ்ச்சியிலே பல நாட்டுப் புறங்களிலே, நகர்
நண்ணு சிலசுடர் மாடத்திலே, சில வேட்டுவர் சார்பினிலே - சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும், மீட்டு மவள்வருவாள் - கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டுபோம், அம்மா! ?
பொருள்: காட்டு வழிகளிலே - (செழித்தோங்கும்) காடு கள் நெருங்கியுள்ள வழிகளிலும், மலைக் காட்சியிலே - (வான ளாவ ஓங்கி மழை முகிலுடன் விளங்குகின்ற) மலைகளின் அழ குத் தோற்றத்திலும், புனல் வீழ்ச்சியிலே - (மலேத்தலையில் கின்று இறங்கி வருகின்ற) அருவியின் வீழ்ச்சியிலும் (பாய்ச்சலி ஆலும்), பல-பலவகையான, காட்டுப்புறங்களிலே - வயல் வளம் வாய்ந்த ஊர்ப் புறங்களிலும், நகர் டுண்ணும் - பட்டினங்க னிலே உள்ளனவும், சுடர் - மின்னலைப்போல ஒளி வீசுகின் றனவுமான, சில மாடத்திலே - மேல் மாடங்கள் அமைந்த சில இல்லங்களிலும், சில வேட்டுவர் சார்பினிலே - சில இடங் களில் உள்ள வேடர்களின் இருப்பிடங்களாக விளங்கும் வேட் டுவச் சேரிகளிலும், சில வீரரிடத்திலும் . வீரர்கள் சிலரிடத்தி லும் (வீரர்களின் தோளிலும்), வேந்தரிடத்திலும் - மன்னர்க
ளிடத்திலும் (மன்னர்களின் செங்கோலாட்சியிலும் அவள் =
அத்திருமகளானவள், மீட்டும் - பின்பும், வருவாள் - எனக்குக்
காட்சி தந்திடுவாள், கண்ட அங்ஙனம் அத்திருமகளேக் கண்ட, விங்தையிலே உஆச்சரியத்தினலே, இன்பம் - இன்ப உணர்ச்சி
வானது, மேற்கொண்டு போம் - எனக்கு மேலோங்கிவிடும்.
விளக்கம்: இக் கவிதையில், அழகுத்தெய்வமாகிய திரு.
மகளின் அருட்காட்சியைத் தாம் கண்டுகளித்த இடங்களைக்
சொல்லி மகிழ்கின்ற பாரதியாரின் ஆர்வக்குரலைக் கேட்கின்றேம்.

விள்க்கவுரை 12.
கவிதை உள்ளம் கொண்ட பாரதியார் திருமகளின்மேற்: கொண்ட காதல், வெறும் பொருட்செல்வப் பேற்றுடன் நின்றுவிடவில்லை. எங்கெங்கே அழகும் செழிப்பும் காணப் படுகின்றனவோ அங்கெல்லாம் திருமகளின் காட்சியைக் கண்டு. ஆவி தளிர்க்கின்ருர்,
செழித்து வளர்ந்த காடுகளின் கவினிலும், வானளாவ ஓங்கியுள்ள மலைகளில் நிழலாடும் கவினிலும், மலைகளின் உச் சியில் நின்று வெள்ளியை உருக்கி ஓடவிட்டாற்போல இறங்கி வருகின்ற அருவிப்பெருக்கின் கவினிலும், நாட்டுப் புறங்க ளில் உள்ள வயல் நிலங்களில் பச்சைப் பசேலென விளங்கும் பயிர்களின் இளமைக் கவினிலும், நகரங்களில் அமைந்துள்ள மாடிவீடுகளின் கவினிலும், வேட்டுவச் சேரியில் உள்ள வேடர் களின் வீர வாழ்விலும், குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ள செழிப்பிலும், வீரவாழ்க்கை படைத்த வீரர்களின் தோள்களில் நின்று நிழலாடும் ஆண்மைக் கவினிலும், மன்னர்களின் ஆட்சித்திறமை, ஆண்மை என்பவற்றின் கவினிலும் திருமக ளின் காட்சியைக் கண்டு இன்பவெறி கொண்டேனெனப் பாரதியார் பாடிய இக்கவிதை புலவர்க்கோர் புதுவிருந்தாகும்: கவிதையுள்ளம் என்னெனன வகையில் செல்வ நுகர்வைப் பெற்று இன்பமடைகின்ற தென்பதைப் பாரதியார் எமக்கு உணர்த்தியுள்ளார்.
காட்டு வழிகளிலே - மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சியிலே
எனக் கவிதையைத் தொடங்குகின்றபோதே அவர் திருமகளைப் பார்ததவிடமெலாம் நீக்கமறக் கண்டு இன்பம் அடைகின்ற ஆனந்தப் பெருக்கை அறிகின்றேம்.
மீட்டும் அவள் வருவாள் கண்ட
விந்தையிலே இன்பம் மேற்கெரண்டு போம்.
எனும் கவிதைத் தொடர்களில் பாரதியார் அடைந்த இன்ப உணர்ச்சியின் இயல்பை அறிகின்றேம்,

Page 65
22 பாரதியார் பாடல்கள்
மூன்ருவது-காளி காதல்
இராகம்: புன்னுகவராளி) (தாளம்: திஸ்ர ஏகம்
பின்னுேர் இராவினிலே - கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு; கன்னி வடிவமென்றே - களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா! - இவள்
ஆதி பராசக்தி தேவியடா! - இவள் இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8
பொருள்; பின் - பின்னர் (திருமகளின் அருளைப் பெற்ற பின்), ஓர் இராவினிலே - ஒருநாள் இராப்பொழுதில் கரும் பெண் மை அழகு ஒன்று - (அழகு கரிய பெண்பை' ஒன்று) அழகு கிறைந்த கரிய சிறத்தையுடைய பெண்ணெருத்தி, என் கண் முன் - என் கண்ணின் முன்னே, வந்தது - வந்து காட்சி கொடுத்தாள் (தோன்றினுள்), கன்னி வடிவமென்றே - (அப் பெண்ணைக் கண்டவுடன்) இளங் கன்னிப்பருவ உருவமுடையவ ளாய் இருக்கின்ருள் என்று, களிகண்டு - மிக மகிழ்ச்சியைப் பெற்றவணுய், சற்றே - சிறிது, அருகிற் சென்று - அவனின் பக்கத்திலே சென்று, பார்க்கையில் - (யான்) பார்த்தபொழுது தான், (உண்மையை உணர்க்தேன்) அவள்-அக்கன்னிப் பெண் ணுனவள், அன்னே வடிவமடா - என் தாய்த்தெய்வத்தின் உரு வமாகக் கட்சியளித்தாளெடா, இவள் = இவள்தான், ஆதிபரா சக்தி தேவியடா - எல்லாவற்றிற்கும் முதலாகவுள்ள பராசக்தி யாகிய தேவியென்பதை உணர்ந்துகொண்டேனெடா, இவள் = இத்தேவியின், இன்னருள் - இனிய கருணை, வேண்டுமடா - எமது வாழ்வுககு மிக இன்றியமையாது வேண்டுவ தொன்ருகு மெடா, பின்னர் . அவளின் இனிய கருணையைப் பெற்றபின், உலகில் - இங்கிலவுலகின் கண் உள்ள, யாவும் - எல்லா வகை யான இன்பப் பேறுகளும், வசப்பட்டுப்போமடா - எங்கள் ஆட்சிக்குள் அடங்கி (உட்பட்டு)ப் போமடா.

விளக்கவுரை 23
விளக்கம்: இக் கவிதையில் அன்னை பராசக்தியின்மேற் காதல்கொண்டு அவளின் கருணையைப் பெற முயல்கின்ற
பாரதியாரின் எழுச்சியை உணர்கின்றேம்.
கல்வியும் செல்வமும் நிரம்பப் பெற்றலும் அன்னை பரா சக்தியின் இன்னருள்தான் அவை யாவற்றையும் முட்டின்றி நுகர்விக்கும் ஆற்றல் வாய்ந்ததென்னும் எண்ணத்தால் அள் ளுப்பட்ட பாரதியார், அவளின் அருளாற்றலைப் பாராட்டி வியக்கின்றர்.
கன்னிப்பெண் வடிவத்தில் காட்சிகொடுத்த தாய்த்தெய் வத்தைக் கண்டவுடன் பாரதியார் களிகொண்டுவிட்டார். அரு கில் சென்று பார்த்தவுடன் கன்னியுருவத்தில் நிற்பவள் ஆதி பராசக்தியென்பதை அறிந்தார்.
அன்னை வடிவ மடா - இவள் ஆதி பராசக்தி தேவியடா - இவள் இன் னருள் வேண்டுமடா
எனுங் கவிதைத் தொடர்களை படிக்கும்பொழுது எழுகின்ற ஓசையும் எழுச்சியும், பாரதியார் ஆதிபராசக்தி தேவியிடங் கொண்ட பக்தியையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்
வையகத்தில் எதற்கும் இனிக்கவலை வேண்டன்
சாகாமல் இருப்பது நம் சதுராலன்று
சக்தி அருளாலன்ருே பிறந்தோம் பார்மேல்
எனப் பாரதியார் பராசக்தி வணக்கத்தில் கூறுவதையும் நோக்குக.
செல்வங்கள் பொங்கிவரும்; - நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே - இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று

Page 66
24 பாரதியார் பாடல்கள்
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9.
பொருள் 3 செல்வங்கள் பொங்கிவரும் . (இப்பராசக்தியின் அருளால்) பொருட்செல்வம் அருட்செல்வம் எனும் இருவகைச் செல்வங்களும் பெருகி மென்மேலும் வளர்ந்துகொண்டே இருக் கும், கல்ல - துய்மையான (ஆணவச் சார்பில்லாத), தெள்ள றிவு - தெளிந்த ஞானம், எய்தி - எமக்கு வரப்பெற்று, கலம் பல = (அதனுல்) பல நன்மைகளும், சார்ந்திடும் - உண்டாகும், இங்கே - இவ்வுலகில், அல்லும் பகலும் - இரவும் பகலும், இவை - எமக்குமுன் காணப்படுகின்றவைகளாகி , அத்தனை கோடி  ை(எண்ணுள் அடங்காத) பல கோடிக்கணக்கான, பொருளினுள்ளே - இயங்கியற்பொருள், கிலேயியற் பொருள்க னெனும் இப்பொருள்களின் உள்ளே எல்லாம், நின்று-எள்ளுள் எண்ணெய்போலக் கலந்து நின்று, வில்லை அசைப்பவளை - தன் கையிலே உள்ள வில்லை வளைக்கின்றவளும், இந்த (அங்ங் கணம் வில்லை வ&ளப்பதிஞல்) இவ்வுலகில் உள்ள வேலையனைத் தையும் - எல்லாப் பொருள்களையும் இயங்க வைத்தலாகிய செயல்கள் (கிரியைகன் எல்லாவற்றையும்), செய்யும் - செய் தருளுகின்ற, வினேச்சியை - கிரியாசத்தியை, தொல் லேதவிர்ப் பவளை - எமது பிறவித் துன்பத்தைப் போக்குகின்றவளே, கித் தம் - என்றும் எப்பொழுதும், தோத்திரம் பாடி - (அவளின் புகழைக் கூறுகின்ற பொருள்சேர் புகழுரைகளாகிய) தேசத்திர (வணக்க)ப் பாக்களைப் பாடி, தொழுதிடுவோமடா - வணக் கஞ் செய்வோம்டா,
விளக்கம்: இக் கவிதையில், அன்னை பராசக்தியின் அருளாற்றலை வியந்துரைத்துப் பாராட்டி, அவளை வணங்கும் வண்ணம் எம்மையெல்லாம் ஊக்குகின்ற பாரதியாரின் இன்டர் உள்ளத்தைக் காண்கின் ருேம்.

விளககவுரை 25
அல்லும் பகலும் இங்கே - இவை அத்தனை கோடிப் பொருளினுள் ளேநின்று வில்லை அசைப் பவனே - இந்த வேலே அனைத்தையும் செய்யும் வினைச்சியை எனவரும் இக்கவிதைத் தொடர்களில், அன்னை பாாசக்தியைப் பற்றி ஆகமங்களில் கூறுகின்ற தத்துவப் பொருள்களை யெல் லாம், அடக்கி உரைக்கும் பாரதியாரின் ஞானத்திறன் கிடந்து நிழலாடுகின்றது.
மூலப் பரம் பொருள் ஊக்கம் - இந்த
மூன்று புவியும் அதன் ஆட்டம் காலப் பெருங் களத்தின் மீதே - எங்கள்
காளி நட முலகக் கூட்டம் எனச் சத்திவிளக்கத்தில் பாரதியார் கூறுவதையும் நோக்குக. வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சி எனுந் தொடருடன்,
பவள வாய்ச்சி, தவளவா ணகைச்சி நஞ் சுண்டு கறுத்த கண்டி எனவரும் சிலப்பதிகாரத் தொடர்களையும் ஒப்பிட்டு நோக்குக,

Page 67
26 V பாரதியார் பாடல்கள்
10. வெண்ணிலாவே !
வெண்ணிலா, திங்கள், சந்திரன், மதி என்பன ஒரு பொருட் சொற்கள். வெண்ணிலாவின் அழகினையும் அதன் தண்ணுெளியின் இனிய பண்பினையும் பாராட்டிப் பாடாத புலவர்கள் இல்லையெனவே சொல்லலாம். பாரதியார் வெண் னிலாவின் பண்புகளைப் புதியமுறையில் புனைந்து கூறுகின்ற அரிய கவிதைகள், இவ் வெண்ணிலா வென்னும் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
கற்பனைத் திறனும், கவிதை வளமும் படைத்த பாரதி யார், தமது சொற்சித்திரத்தில் வெண்ணிலாவின் வியத்தகு பண்புகளுக்கெல்லாம் வண்ணமும் வடிவுங் கொடுத்துத் தீட்டி யுள்ளார். பாரதியாரின் உள்ளத்திரையில் பதிந்த வெண்ணிலா எண்ணிலடங்காத ஏற்றத்தையும் எழிலையும், தேய்க் தும் வளர்ந்தும் மாருத நிறைவையும் பெற்றுப் பொலி கின்றது.
நீலவான் பரப்பாகிய கடலில் நிலவுமொரு தீவாக வெண் ணிைலாவைப் பார்க்கும் பாரதியாரின் கண்ணில் நிழலாடுகின்ற புலமை ஒளியுடன் நாமும் கலந்து, இக் கவிதைகளின் கற். பனை நலத்தைக் கண்டு மகிழ்வோம்.
எல்லே யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே - விழிக் இன்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே! சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிசைவே! - நின்றன் சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே!

விளக்கவுரை - 27
நல்ல ஒளியின் வகைபல கண்டில்ன்
வெண்ணிலாவே! - இந்த நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே! கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே - வந்து கூடி யிருக்குது நின்னுெளி யோடிங்கு
வெண்ணிலனவே! பொருள்: வெண்ணிலாவே! நீ எல்லேயில்லாத முடிவு காண முடியாமல் பரந்துகிடக்கும், ஓர் - ஒப்பற்ற, வானக் கடலிடை வானம் (ஆகாயம்) என்னும் பெருங்கடலின்கண், விழிக்கு - பார்க்கின்ற கண்களுக்கு, இன்பம் அளிப்பது - இன் பத்தைக் கொடுக்கும் (உவகை உணர்ச்சியை ஊட்டுகின்ற), ஓர் தீவென்று - ஒரு தீவைப்போல, இலகுவை காட்சியளிக்கின் முய், கின்றன் - உன்னுடைய, சோதி - (தன் )ஒளியானது, இங்கு . இவ்விடத்தில், சொல்லையும் டி (தீஞ்சொல் ஆவியின் பம் போன்ற) சொல்லின் சுவையையும், கள் ஆளயும் தேனின் சுவையையும், நெஞ்சையும் - என் உள்ளத்தினையும், சேர்த்து. ஒன்ரூகக் கலந்தாற்போன்று, மயக்கும் - இன்டத்தை ஊட்டி இயங்க வைக்கின்ற வகையது தான் = தன்மைதான், என் சொல் - என்னென்று சொல்வேன், நல்ல ஒளியின் (மீ தரும் ஒளியைக் கண்ட யான்) கல்ல இன்பத்தை ஊட்டுகின்ற ஒளி கிளின், வகை பல கண்டிலன் - பலதிறப்பட்ட பண்புகளையும் கண்டறியேன், இந்த இதோ நான் அடைந்துள்ள, இனவை. விழிப்பு கிலேயை, (உன் ஒளியைப்போல் வேறெந்த ஒளியும்) மறந்திட - மறந்துவிட, செய்வது - செய்தலே, கண்டிலன் டி கண் டறியேன், கொல்லும் - அறிவை அழித்து (மயக்கி), அமிழ்தை நிகர்த்திடும் - அமிழ்தின் சுவைபோன்றதோர் ஆனந்தத்தைக் கொடுத்திடும், கள்ளொன்று - மது ஒன்று, வந்து (எங்கி ருந்தோ) சுரந்து வந்து, இங்கு - இவ்விடத்தில் நீ வீசுகின்ற, வின் ஒளியோடு - உனது ஒளியினுடன் (தண்ணுெளியுடன்), கூடியிருக்குது - கலந்திருக்கின்றது,
விளக்கம்: இக்கவிதையில் வெண்ணிலாக் கொட்டுகின்ற தண்ணுெளி இன்பத்தை நுகர்ந்து கவிதை வெறி கொண்ட

Page 68
28 பாரதியார் பாடல்கள்
பாரதியாரின், புதிய கலங்கனிந்த புலமைக் குரலைக் கேட் கின்ருேம்.
எல்லைகாண முடியாமல் அகன்றுகிடக்கும் நீலவான் பரப் பைக் கடலாகவும், அங்கீலவான் பரப்பில் காணப்படுகின்ற வெண்ணிலாவை ஒரு தீவாகவும் கூறுகின்ற பாரதியாரின் புலமை போற்றத்தக்கதாகும்.
பரந்துபட்ட அகல்வான் பரப்பைக் கடலாகவும், அவ் வானத்தில் விளங்கும் வெண்ணிலாவைத் தீவென்றும் குறிப் பிடும்பொழுது, வானக்கடல் என்பதை வானமாகிய கடலென உருவமாகவும், தீவென்று இலகுவை என்பதை தீவைப்போல விளங்குவாய் என உவமை யாகவும் கொள்ளவேண்டும் தீவென்றிலகுவை, என் பதில் வருகின்ற 'என்று' என்பது உவம உருபாகும்.
வெண்ணிலா விரிக்கின்ற தண்ணுெளிக் கதிரின்கண் அமைந்துள்ள இன்பத்தை, நுகர்ந்து உளஞ்செழித்த பாரதியார் சொல்லின்பத்தையும் தேனின்பத்தையும் தம் உளத்தின்கண் கலந்து, சுவைக்க வைத்ததுபோன்ற புதியதோர் அனுபவத்தைப் பெற்றுவிட்டதாகக் கூறுகின்றர்.
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த் திங்கு வெண்ணிலாவே
நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல்
எனும் தொடர்களில் அமைந்துள்ள சொல்லின்பமும் பொரு ஓரின்பமும் பாரதியாரின் கவிதையுள்ளத்தின் செழிப்பைக் காட்டு கின்றன. இக்கவிதைத் தொடர்களுடன்
சொன் னலமும் பொரு ணலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத் துய்த்துக் கன்னலிலே சுவை யறியுங் குழந்தைபோல் தமிழ்ச் சுவை நீ களித்தாயன்றே

விளக்கவுரை 39.
எனப் பாரதியார் பாடிய ஓலைத்தூக்கில் வருங் தொடர்களுடன் ஒப்பிட்டு நோக்குக.
மாதர் முகத்தை நினக்கினை கூறுவர்
வெண்ணிலாவே - அஃது வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே காத லொருத்தி இளைய பிராயத்தள் வெண்ணிலாவே - அந்தக் காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே மீதெழும் அன்பின் விளைபுன் ன கையினள்
வெண்ணிலாவே! - முத்தம் வேண்டிமுன் காட்டு முகத்தி னெழிலிங்கு
வெண்ணிலாவே சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
வெண்ணிலாவே - நின் தண்முகந் தன்னில் விளங்குல தென்ஆன ஜெ
வெண்ணிலாவே
பொருள் வெண்ணிலாவே! நீ மாதர் மூகத்தை - பெ.
வின் (மங்கையர்களின்) முகத்தினை, லினக்கு. உனக்கு, இண
என்று கூறுவர் ஒப்பாகும் என்று உரைப்பார்கள், அஃது : உனக்கு ஒப்பாகும் எனக் கூறுகின்ற பெண்களின் முேகமானது, வயதில் - வயதின் முதிர்ச்சியாலும், கலலேயின் . துன்பத்தின் மிகுதியாலும், கோவில் உடற்பிணியிஞலும், (வருத்தத்தி குலும், கோயில் எனவும் பாடங் கொள்ளலாம்). கெடுவது அழகு குறைக்துவிடும். (ஆண் படியால் பொதுவாகப் ஷ்ெ
களின் முகத்தை உனக்கு ஒப்புக்கூறுதல் பொருத்தாது
உனக்கு ஒப்பாக உரைக்கக் கூடியது, காதலொருத்தி - காது
லுணர்ச்சியுடையவளாய். இளேய பிராயத்தள் இளமை கலஜ்
கணிந்த பருவத்தைக் கொண்டவளாய். காமன்றன் . (காதற்
கடவுளென்னும்) மன்மதனுடைய, வில்லேயிணைத்த வில்லிஐப்
போன்ற, (அழகிய) புருவத்தள் - புருவத்தைப் பெற்றவளாப்,
மீதெழும் - மிக்குத் தோன்றுகின்ற, அன்பீன் - அன்பினுலே,
9

Page 69
30 பாரதியார் பாடல்கள்
விளே - உண்டாகின்ற, புன்னகையினள் - புன்சிரிப்பைப் பு கின்றவளாய் விளங்குகின்ற ஒரு பெண், தன் காதலன், முத்தம் வேண்டி - முத்தமிடுதலை விரும்பி, முன்காட்டும் - அவனுக்கு முன்கின்று (நீட்டிக) கொடுகதின்ற, முகத்தின் எழில் - முகத் தின் எழில் அழகுதான், இங்கு . இவ்வுலகத்தில் உனக்கு ஒப்புரைக்கக்கூடியது என்க. கின் தண் முகந்தன்னில் - உனது குளிர்ந்த முகத்தின் கண்ணே, சாதல் - சாதலும், அழிதல் - இறத்தலும், இலாது - இல்லாததாய், கிரந்தரம் - எப்பொழு தும், விளங்குவது - விளங்குகின்றதாகிய பேரெழில் (ஒளி), என்னே கொல் உஎன்ன காரணத்தினுல், சொல்வாயாக.
விளக்கம்: இக்கவிதையில், வெண்ணிலாவைப் பொது வாக மாதர் முகத்துடன் ஒப்பிட்டுக் கூறுவதை மறுத்துப் புதியதோர் மாதின் எழில் முகத்தைப் படைத்து உவமை காட்டு கின்ற பாரதியாரின் கற்பனைத்திறத்தைக் காண்கின்ருேம்.
மாதர் முகத்தை நினக்கினை கூறுவர்
வெண்ணிலாவே - அஃது வயதிற் கவலையின் நோவிற் கெடுவது,
வெண்ணிலாவே
எனுங் கவிதைத் தொடர்களில் அப்படியே பாரதியாரின் கற் பனைத்திறன் புலனுகின்றது. பெண்களின் முகம் முதுமையி ணுலும், கவலையினுலும், வருத்தத்தினுலும், அழுகுகெட்டு மாறு படுந் தன்மையுடையது என, வெண்ணிலாவாகிய உவ மானப் பொருளை உயர்த்தியும், பெண்களின் முக
மாகிய உவமேயப் பொருளை இழித்தும் பாரதியார்
உரைக்கின்ருர், இங்ங்ணம் பழித்துரைப்பதை அணிநூலார்
கிந்தை உவமை எனக் கூறுவர். இங்ங்ணம் பெண்களின்
முகத்தை இழித்துக் கூறிய பாரதியார்,
காத லொருத்தி இளைய பிராயத்தள் காமன்றன் வில்லை இணைத்த புருவத்தள் மீதெழும் அன்பின் விளை புன்னகையினன் முத்தம் வேண்டி முன்காட்டு முகத்தின் எழில் இங்கு
எனப் புதியதோர் முகத்தைப் படைத்துத் தருகின்றர்.

விளக்கவுரை 3.
காதலுணர்ச்சியுடையவளாய், இளமை கலங் கனிந்த பருவத்தைக் கொண்டவளாய், மன்மதனின் கரும்பு வில்லைப்போல் வளைந்த புருவத்தைப் பெற்றவளாய் மிக்குத் தோன்றுகின்ற அன்பினல் உண்டாய புன் சிரிப்புப் பொருந்தியவளாய் விளங்குகின்ற ஓர் பெண், தன் காதலன் இடுகின்ற முத்தத்தைப் பெற விரும்பி நீட்டிக்கொடுக்கின்ற முகத்தின் அழகினையே வெண் ணிைலாவுடன் ஒப்பிட்டுரைக்கலாம் என்பதே பாரதியார்
கூறும் இக்கவிதைத் தொடர்களின் கருத்தாகும்.
இங்ஙனம் பாரதியார் படைத்துக்கூறிய இக்கற்பனை முகம் தமிழ் இலக்கிய உலகிற் காணப்படாத புதிதோர் பொருளாகும்.
நின்னெணி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே - நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே மன்னு பொருள்க ணனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே - அந்த மாயன் அப்ப்ாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே! துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே - இங்கு, தோன்றும் உலகவனே யென்று கூறுவர்
வெண்ணிலாவே பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும் வெண்ணிலாவே - நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலனவே! 豁
பொருள்: வெண்ணிலாவே இங்கு. இவ்வுலகத்தில், ஜீன். உன்னுடைய, ஒளியாகிய பாற்கடல் மீது . gaf GP yra விளங்கு

Page 70
182 பாரதியார் பாடல்கள்
கின்ற திருப்பாற்கடலின்கண்ணே, யுேம் (தண்ணெதளிக் கதிர்களே வீசும்) வெண்ணிலாவாக யுேம் அமுதும் தேவா மிர்தமும், எழுக்கிடல் - தோன்றியதுபோன்ற காட்சியை, நன்கு - (யான்) கன்ருக, கண்டனன் - கண்டுகொண்டேன், மன்னும்-கிலபேருயுள்ள, பொருள்கள் - இயங்கியற் பொருள் ஜிஐலயியற்பொருள் என்று கூறப்படுகின்ற, அனேத்திலும் " எல்லாப் பொருள்களிலும், விற்பவன் - (உலளும் புறமும்) கலந்து நிறைந்து கிற்கின்றதெய்வமாகிய, மாயன் மகா விஷ்ணு (திருமால்) வானவர், அப்பாற்கடல் மீது - அந்தத் திருப்பாற்கடலின் கண், உறல் - அறிதுயில் கொண்டு கிடத் தலை, கண்டனன் - கண்டுகொண்டேன், துன் னிய - மிகுந்த (கெருங்கித் தடித்த), நீல நிறத்தள் - நீல நிறமடையவளாகிய, பராசக்தி - அன்னே பராசத்தியென்னும், அவள் - அவனே, இங்கு தோன்றும் - இங்கு எம்மால் காணப்படுகின்ற, உலகு என்று - உலகினேயே வடிவமாக உடையாள் என்று, கூறுவர் - ஞானிகள் கூறுகின்மூர்கள், பின்னிய - (அப்பராசத்தியின்) பின்னல்பட்டு, (ஒன்ருேடொன்று பிணைப்புண்டு கிடத்தல்) மேகச்சடை மீசை  ைமழைமுகில் போலக் கரியதாய் விளங்கும் ஒடையின் கண்ணே, கங்கையும் - கங்காதேவியும், யுேம் - வெண்ணிலாவாகிய யுேம், கல்ல பெட்புற  ைநல்ல பெருமை பொருந்தியவர்களாய், விளங்குதல் வீற்றிருந்து விளங்குவதை, கண்டனன் - கண்டுகொண்டேன்.
விளக்கம்: இக் கவிதையில், வெண்ணிலாவின் பண்பு களில் நிழலாடும் தெய்வச்சாயலைக் கண்டு, உளம்செழித்து வீறும் உணர்ச்சிவெள்ளப் பெருக்குடன் பாடுகின்ற பாரதியாரின் உயர்திறனைக் காண்கின்ருேம்.
வெண்ணிலாவின் ஒளிவெள்ளம் உலகெலாம் பரவி அலை யெறிகின்ற காட்சி பாரதியாரின் புலமை உள்ளத்திற்கோர் புதுவிருந்தளித்துவிட்டது. அவர் வெண்ணிலாவின் ஒளி வெள்ளத்தைத் திருப்பாற்கடலில் எழுந்த அமுதமாகவும், அவ் வொளிவெள்ளப் பரப்பில் தோன்றுகின்ற வெண்ணிலாவை முன் திருப்பாற்கடலில் எழுந்த அமுதத்துடன் தோன்றிய வெண்ணிலாவாகவும் கூறி மகிழ்கின்றர்.

விளக்கவுரை ፤ Šጋ፩
நின்னுெளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே - நன்கு, நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் எனும் கவிதைத் தொடர்களைப் படிக்கும்போது பாரதியார் கண்ட காட்சி அப்படியே எமதுள்ளத்திலும் தோன்றுகின்றது.
இங்ங்னம் வெண்ணிலாவின் ஒளிவெள்ளத்தைத் திருப் பாற்கடலில் எழுந்த அமுதமாகக் கண்ட பாரதியார் அவ் வொளிவெள்ளம் நீலவான் பரப்பெல்லாம் பரவி அலையெறி யும் காட்சியை இன்னுெரு வகையாகவும் கற்பனை செய்கின் ரூர். நீலவானத்தைத் திருமாலாகவும், அவ்வான மெல்லாம் பரவி அலைவீசுகின்ற வெண்ணிலாவின் ஒளிவெள்ளத்தைத் திருப்பாற்கடலாகவும் அவர்க்குத் தோன்றுகின்றது. உடனே
மாயன் அப்பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே
எனப் பாடுகின்றர்.
பின், அந்நீலவான் பரப்பை உலகமே உருவமாக விளங் கும் பராசக்தியின் கோலமாகவும், அவ்வானத்தில் மிதக்கும் மழைமுகிற் கூட்டத்தை அவளின் சடையாகவும், அவ்வான வெளியில் உள்ள வெண்ணிலாவையும் ஆகாய கங்கையையும் அப்பராசக்தியின் சடைமேல் தங்கி விளங்குகின்றனவாகவும் புனைந்து கூறுகின்ருர்,
துன்னிய நீலநிறத்தள் பராசக்தி இங்கு
தோன்றும் உலகவளே என்று கூறுவர்
எனவும்,
பின்னிய மேகச்சடைமீசைக் கங்கையும் நல்ல பெட்புற நீயும விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே எனவும் வரும் கவிதைத் தொடர்களில் பாரதியாரின் கற் பனைத்திறன் அப்படியே கிடந்து நிழலாடுகின்றது.

Page 71
鱼34 பாரதியார் பாடல்கள்
சிவபெருமான் தமது சடைமுடிமேல் அணிந்துள்ள சங் திரனும், கங்கையும் அன்னை பராசக்தியின் சடைமேலும் விளங்குகின்றன என்று கூறினர். இங்ங்ணம் சிவனின் செயல் களையெல்லாம் பராசக்தியின் செயலாகக் கொண்டும் கூறுதல் மரபாகும். இதனை,
மதியின் வெண்டோடு சூடுஞ் சென்னி நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் Ar 600 6wyr Gan for vin &&R
எனவும்,
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந் திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே
எனவும் சிலப்பதிகாரத் தொடர்களால் அறிக.
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே - நினைக் காதல் செய்வார் நெஞ்சிற் கின்னழு தாகுவை
வெண்ணிலாவே! சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே! - நீ தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
வெண்ணிலாவே! மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலா வே! - நீ முத்தி னுெளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே! - நலஞ் செய்தொளி நல்குவர் மேலவ ராமன் ருே?
வெண்ணிலாவே!
பொருள்: வெண்ணிலாவே ,ே காதலர் கெஞ்சை (ஒரு வரை ஒருவர் விட்டுப்பிரிந்த) காதலர்களின் மனத்தை, வெதுப் புவை என்பர் - (காதலுணர்ச்சியைப் பெருக்கி) துன்பப்படுதது

விளக்கவுரை 血器莎
வாய் என்று சொல்வார்கள், கிகின - உன் மேல், காதல் செய் வார் கெஞ்சில் - (ஒருவரை ஒருவர்விட்டுப் பிரிந்தவர்களாய், உடனுறையும் காதலர்கள்) அன்பு செய்வார்களானல், இன் னமுதாகுவை - அக்காதலர்களுக்கு, இனிய அமுதினைப்போல இன்பமூட்டுவாய், மீ, தே - குளிர்ச்சி பொருந்திய, மணி அ நீல மணிபோல் விளங்கும், கெடுவானக் குளத்திடை - மீண்ட ஆகாயமென்னும் குளத்தின் கண் பூத்த, தேசு மிகுந்த - அழகு கிறைந்த, வெண்தாமரை - வெண்தாமரை மலரை, போன் ற&ன - போல விளங்குகின்முய், மோதவரும் - (வெண்ணிலா வாகிய) உன்னேத் தாக்கி மறைக்கவருகின்ற, கருமேகத்திர ளிக்ன - கரியமேகக் கூட்டத்தினுக்கு, நீ, முத்தின் ஒளி தந்து ம வெண்மையான முத்தின் ஒளிபோன்ற ஒளியைக்கொடுத்து, (அவற்றின் மேல் பரப்பி) அழகுற - அழகோடு பொருந்தி விளங்க, செய்குவை - செய்திடுவாய், (இங்ஙனம் நீ உன்வனத் தாக்கிச் சிதைக்க வருகின்ற மேகக்கூட்டத்திற்கு, ஒளியைக் கொடுத்து அழகுறச் செய்யும் செயவல எண்ணும் பொழுது) மேலவர் - அறிவிற் சிறந்த சான்குேரர்கள், தீது புரிந்திட - (தமக்குத்) தீமை செய்ய (கினேந்து) வந்திடும் - தம்மை கோக்கி வருகின்ற, தீயர்க்கும் - கொடியவர்களுக்கும், கலஞ் செய்து ம கன் மைசெய்து, ஒளி கல்குவர் - புகழுடன் வாழத்தக்க பெரு மதிப்பையும் கொடுப்பார்கள், (என்னும் உண்மை புலனுகின்றது என்பதாம்)
விளக்கம் இக்கவிதையில் வெண்ணிலாவின் செயல் களையும், பண்புகளையும் சொல்லி மகிழ்கின்ற பாரதியாரின் நல்லிசைப் புலமை வளத்தைக் காண்கின்ருேம்.
ஒருவரை ஒருவர், விட்டுப் பிரிந்திருக்கும் காதலருள்ளத் தில், காதலுணர்ச்சியைப் பெருக்கித் துன்புறுத்துங் தன்மை வெண்ணிலாவுக்குண்டெனச் சொல்லுதல் கவி மரபாகும்.
கொடியை அல்லைநீ யாரையும் கொல்கிலாய் வடுவில் இன்னமுதத் தொடும் வந்தனை பிடியின் மென்னடைப் பெண்ணுேரென்ருல் எனைச் சுடுதியோ கடல் தோன்றிய திங்களே

Page 72
| 36 பாரதியார் பாடல்கள்
என இராமபிரான்மேற்கொண்ட காதல் நெஞ்சமுடன் இருந்த சீதாதேவி வெண்ணிலாவைப் பரப்பும் திங்களை நோக்கிச் சொல்லியதாக வரும் இக்கவிதையை நோக்குக.
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ யென்பர் வெண்ணிலாவே
எனுந் தொடர்களுடன்,
எனைச் சுடுதியோ கடல் தோன்றிய திங்களே.
எனுந் தொடர்களையும் ஒப்பிட்டுணர்க.
இங்ங்னம் பிரிந்த காதலரை வருத்துகின்ற வெண்ணிலா பிரிவின்றி வாழுங் காதலர் நெஞ்சில் இன்னமுதம் போன்ற இன்ப உணர்ச்சியைப் பெருக்கி மகிழ்விக்கும் எனக் கூறு தலும் கவிமரபாகும்.
கலந்தவர்க் கினியதோர் கள்ளுமாய்ப் பிரிந்து உலர்ந்தவர்க் குயிர்சுடு விடமு மாயுடன் புலந்தவர்க் குதவிசெய் புதிய தூதுமாய் மலர்ந்தது நெடுநிலா மதனன் வேண்டவே
எனக் கம்பர் வெண்ணிலா மலர்ந்ததைப்பற்றிக் கூறுதலை நோக்குக. கலந்த வர்க் கினியதோர் கள்ளுமாய், எனும் கம்பர் கூறுந் தொடருடன் காதல் செய்வார் கெஞ்சிற் கின்னமுதாகுவை, எனப் பாரதியார் கூறிய கவிதைத் தொடரை ஒப்பிட்டுணர்க.
இங்ங்னம் பிரிந்த காதலர்களின் கெஞ்சில் துன்ப உணர்ச்சியையும், புணர்ந்த காதலர்களின் நெஞ்சில் இன்ப உணர்ச்சியையும் பெருக்குகின்ற வெண்ணிலாவின் செயலைக் கூறிய பாரதியார் அவ்வெண்ணிலா வானப்பரப்பில் தோன்று கின்ற தன்மையைக் கூறி மகிழ்கின்ருர்,
தேமணி நெடு வானக் குளத்திடை வெண்ணிலாவே ட நீ தேசு மிகுந்த வெண்தாமரை போள்றனை

விளக்கவுரை 37"
இதில், குளிர்ச்சி பொருந்திய நீலநெடுவான்பரப்பைக் குள
மாகவும், அவ்வானத்தின்கண் விளங்கும் வெண்ணிலாவை குளத்தின்கண் பூத்து விளங்கும் வெண்தாமரை மலராகவும் வைத்துப் பாடிய பாரதியாரின் உவமைத்திறனை உணர்கின்
Geagúil.
நீலவான்பரப்பு - உவமானம். குளம் - உவமேயம் நிறமும் அகலமும் - பொதுத்தன்மைகள். (இனி வானக் குளம் எனச் செய்யுளில் கிடந்தபடியே வைத்து, வானமாகிய குளம் என விரித்து உருவக அணியாகவும் கொள்ளலாம்.)
வெண்மதி - உவமானம். வெண்தாமரைமலர் - உவமேயம். நிறமும் அழகும்.பொதுத்தன்மைகளாகும்.
தன்னை எதிர்த்து மோதி மறைக்கவரும் கரியமுகிற். கூட்டங்களுக்கெல்லாம், வெண்மையான முத்துப்போல விளங்கு கின்ற தண்ணுெளியைக் கொடுத்து மகிழ்விக்கின்ற வெண் னிலாவின் செயலே எடுத்துக் காட்டாக வைத்து மிகச் சிறந்த தோர் உண்மையைப் பாரதியார் உரைக்கின்றர்.
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் நலஞ் செய்து ஒளி நல்குவர் மேலவ ராமன்ருே
என்பதே பாரதியார் எமக்கெடுத்துரைக்கும் உண்மையாகும்.
தனக்குத் தீமை புரிந்த முகிற் கூட்டத்திற்குத் தன் ஒளியைக் கொடுத்து நன்மை புரிந்த வெண்ணிலாவின் செயலை வியந்து
கூறிய பாரதியார்,
இன்னு செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு
எனவருந் திருக்குறளை நினைவூட்டுகின்ருர்,
அணங்குவாள் விட அரண் அணுகும் எல்லையும் குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்
எனவரும் கம்பரின் கவிதைத் தொடர்களுடன்,

Page 73
蠶38 பாரதியார் பாடல்கள்
மோத வரும் கருமேகத் திரளினை வெண்ணிலாவே நீ
மூத்தின் ஒளிதந்து அழகுறச் செய்குவை
எனுமிப் பாரதியாரின் கவிதைத் தொடர்களையும் ஒப்பிட்டு கோக்குக.
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே! - உன்றன் மேனி யழகு மிகைபடக் காணுது
வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே! - மூடு நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
வெண்ணிலாவே! சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலவே! - நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே! *புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே! - இருள் போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே!
பொருள்: வெண்ணிலாவே! மெல்லிய - மென்மையான, O மேகத்திரைக்குள் = முகில் என்னும் திரையினுள்ளே, மறைக் திடும் . நீ மறைந்து கிற்கும்பொழுது, உன்றன் - உன்னுடைய, மேனி - (வெண்மையான ஒளியோடு பொருந்திய உன் உடவின்
(திருமேனி), அழகு - எழிலானது, மிகைபடக்காணுது - மிகச் சிறந்து (அதிகப்பட்டு) விளங்குகின்றது, (அங்ங்ணம் உன் மேனி முகிலினுல் மறைக்கப்பட்டிருக்கும்பொழுது, மிக அழகுடன் விளங்குந்தன்மை) கல்வியலார் = சிறந்த பெண் தன்மைகள் (இயல்புகள்) யாவும் நிரம்பிய, யவனத்தியர் - யவனகாட்டு மகளிர்கள் மேனியை தங்கள் இயற்கை (அழகு கிரம்பிய

விளக்கவுரை 1岛铅
உடலினே, மூடு - மூடி (போர்த்து) மறைக்கின்ற, கற்றிரை ம பாலாவிபோன்ற நல்ல திரையானது (ஆடையானது), மேனி - அவர்கள் உடலழகினே, நயமிகக் காட்டி டும் - மேலும் மேலும் அதிகப்படுத்திக் காட்டும் தன்மையைப் போன்றதாகும் (என்று கான் கூறிய) சொல்லிய வார்த்தையில் - (அன்பின் தன்மையைக் காட்டுகின்ற) பாராட்டுரைகளால்(உரைகளைக்கேட்டு), காணுற் றனே போலும் - வெட்கமடைந்து விட்டனேயோ, சின்-உனது சோதிவதனம் - ஒளி பொருந்திய முகம், முழுதும்  ைமுழுவதை யும், மறைத்தனே - மறைத்துவிட்டாய், புல்லியன் - அறிவிற் குறைந்தவனுகிய அடியேன், செய்தபிழை = ஆற்றிய குற் றத்தை, பொறுத்தே அருள் - பொறுத்தருளி இருள்போ கிடச் செய்து - உன்னே மூடியுள்ள இருண்ட முகிற்படலத்தை அகலச்செய்து, (என் அறியாமையாகிய இருவளப்போக்கி, என் றும் குறிப்புப்பொருள் கொள்ளலாம்) வினது எழில் உனது அழகு நிறைந்த (அழகிய) முகத்தை, காட்டுதி - காட்டுவா யாக என்பதாம்.
விளக்கம்: இக் கவிதையில் வெண்ணிலா, மெல்லிய முகிலினுள் மறைந்து செல்லும்பொழுது, தோன்றுகின்ற புதிய அழகின் பொலிவினைத் தம் புலமைக்கண்ணுற் கண்டு மகிழ்ந்த பாரதியாரின் ஆர்வக்குரலைக் கேட்கின்றுேம்.
மெல்லிய முகிலினூடே மறைந்து செல்கின்ற வெண்ணிலா வின் எழில், மிகுந்து தோன்றும் காட்சியை, அழகு நிறைந்த யவனகாட்டு மகளிர் தமது தலையின்மேல் பாலாவி போன்ற மெல்லிய ஆடையினுல் முக்காடிட்டு, முகத்துடன் தம்மேனியை யும் மூடிச் செல்லும்பொழுது, அவர்களின் முகமும் மேனியும் முன்னையிலும் எழில் மிகுந்து விளங்குகின்ற காட்சியுடன் ஒப்பிட் டுரைத்த பாரதியாரின் புதிய உவமைத்திறன் போற்றத்தக்க தாகும். (இவ்வுவமை, பாரதியாரே படைத்துத் தமிழ் இலக்கிய உலகில் வாழ விடுத்ததொன்ருகும்.)

Page 74
量40 பாரதியார் பாடல்கள்
நல்லியலார் யவனத்தியர் (தம்) மேனியை மூடும் நற்றிரை அவர்களின் மேனி (அழகை) நய மிகக் காட்டிடும்
தன்மையைப்போல,
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகபடக் காணுது,
எனக் கொண்டுகூட்டுக. இதில், யவனாகாட்டு மகளிர் தம் மேனியைத் திரையினுல் மூடுதல் - உவம ணம், வெண் ணிலா மெல்லிய மேகத்திற்குள் மறைதல் - உவமேயம். அழகுமிக்குத் தோன்றுதல் - பொதுத்தன்மையாகும்.
மேகத்திரை என்பதை, மேகமாகிய திரை என உரு, வகமாகவுங் கொள்ளலாம்.
இங்ாவனம் மெல்லிய மேகத்துக்குள் மறைந்த மதியைப் பாடி மகிழ்ந்த பாரதியார் அம்மதி தன் உருவங் தோன்ருத வண் ணம் கருமுகிற் கூட்டத்துள் மறைந்தவுடன் மிகவும் கவலை கொண்டுவிட்டார். வெண்ணிலா ஒளி வெள்ளத்துடன் கலந்து கலந்து கவிதை வெறிகொண்ட பாரதியாரின் உள்ளம் அவ் வெண்ணிலா மறைந்தவுடன் உலைந்துவிட்டது.
சொல்லிய வார்த்தையில்
நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
எனப் பாரதியார் கூறுகின்ற குரலிலே அவருள்ளத்தில் கின்று நிழலாடும் சோக உணர்ச்சி அப்படியே புலனுகின்றது.

விளக்க வுரை 4.
நெரித்த திரைக்கடலில்
நின் முகங் கண்டேன்
நீல விசும்பினிடை
நின்முகங் கண்டேன் என வருங் கவிதைத் தொடர்களில் சோதி வதனத்தைக் கண்டு பாரதியார் அடையும் ஈடிணையில்லாத உவகை தோன்றுகின்றது.
யான் உன்னைப் பாராட்டி உரைத்த மொழிகளில் ஏதும் குற்றம் இருந்தாலும் பொறுத்தருளி, உன் எழில் வடிவத்தை எனக்குக் காட்டுவாயாக எனப் பாரதியார் வெண்ணிலாவை இரக் திரந்து வேண்டுகின்ருர்,
புல்லியன் செய்த விழைபொறுத்தேயருன் இருள் போகிடச் செய்து, நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே
எனப் பாரதியார் வெண்ணிலாவை வேண்டுகின்ற குரலிலே நிழ லாடுகின்ற சோகமும், ஆராமையும், அழகுணர்ச்சியில் அழுந்தி அழுந்தி ஆவி தளிர்க்கும் பாரதியாரின் புலமை உள்ளப் பொலி வைக் காட்டுகின்றன.

Page 75
42 பாரதியார் பாடல்கள்
11. முரசு
பாரதியாரின் உள்ளத்தில் பாரதநாட்டு மக்கள் விடுதலை பெற்று, வீரமும், தன்மானமும், அன்பும், அருளும், அறப்பண் பும் உடையவர்களாய், அகிலம் எல்லாம் போற்றிசெய்ய வாழ வேண்டும் என்ற பெருவேட்கை கிடந்து அலைமோதிக்கொண்டே
இருக்கும். அந்த அலைமோதலின் எழுச்சியினுல், அவர் பாடிய
கவிதைகளின் தொகுப்பே முரசு என்னும் இப்பகுதியாகும்.
இம்முரசொலிக் கவிதைகளைப் படிக்கும்பொழுது எழுகின்ற ஓசை முரசின் ஒலியைப்போலவே அலைஅலையாய்ப் பரந்து செல் கின்றது. சாதிப் பிரிவுகளாலும், சமயப் பிரிவுகளாலும் தனித் தனியாகச் சிதறுண்டு கிடக்கின்ற பாரதநாட்டு மக்களை, அறை கூவி அழைத்துப் பாரதியார் கூறுகின்ற அறிவுரைகள் ஆயிரம் ஆயிரம் ஊழிகள் கின்று வாழக்கூடிய ஆற்றலுடன் பொலி கின்றன.
பிறப்புரிமையினுல் சாதிச்சிறப்புக் கூறுகின்ற கொள்கை யையும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி வகுத்துரைக்கின்ற வன்கண் மையையும், நிறத்திமிரினுல் மக்களைத் தாழ்த்திவைக்கும் நீதி யற்ற செயலேயும் அறத்தொலையுங்கள், அன்பு நெறியைப் போற்றுங்கள், உலக மக்களெல்லாம் ஒருதாய் வயிற்றுக் குழக் தைகள் போல ஒன்றுபட்டு வாழுங்கள், பெண்குலத்தை அடி மைப்படுத்தல் பாவம், மெலியவரை வலியவர் வதைத்து வாழ் கின்ற செயலே வீழ்த்துங்கள், தெய்வம் எம்மையெல்லாம் சிறந்த நெறி ஒழுகச்செய்து காக்கும். என்றெல்லாம் பாரதியாரின் புலமை முரசம் பேரொலி எழுப்புகின்றது.
இம்முரசொலி யென்னும் பெருமுழக்கம் மொழியையும் நாட் டையும் கடந்து உலகப் பெருமுரசாக ஒலிக்கின்றது. பாரதியா ரின் முரசொலியில் மொழிகின்ற கொள்கைகள் முழு உலகத்துக் கும் உரிய பொறிநெறிகளாகும்.
O

விளக்கவுரை 14霹
வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு வாழும் மனிதர் எல்லோர்க்கும்
எனவும்,
அன்பென்று கொட்டு முரசே - அதில் யார்க்கும் விடுதலை யுண்டு
எனவும்,
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்ருய்
எனவும் வரும் முரசொலித் தொடர்கள், கட்டற்று எங்கும் பரந்து கிடக்கும் வானத்தின் அகலம்போலப் பொருள்வளம் நிரம்பியனவாய் விளங்கி உலக மக்கள் எல்லோர் உள்ளத்தி லும் இடம்பெற்று வாழும் உயிர் ஆற்றல் உடையனவாய், இருப்பதை கோக்குங்கள்.
நாக் கடிப்பாக வாய்ப்பறை அறைந்து சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
எனவரும் பழம்பாட்டின் தொடர்கள் புலவர்கள் உலக மக்க ளுள்ளத்தில் அறிவுவளம் பெருகும் வண்ணம் அறைகின்ற முர சின் தன்மையை விளக்குகின்றன. நாவை அடிக்கும் கோலாக வும், வாயை முரசாகவும் கொண்டு புலவர் பெருமக்கள் அடிக் கின்ற முரசொலி, போர் முரசு முதலிய தோற்கருவிகளைப்போல் அல்லாமல் உலகம் உள்ளளவும் நின்று முழங்கும் ஏற்றமுடைய தென்பதையும் நாம் உணர்ந்துகொளல் வேண்டும்.
பாரதியார் பழந்தமிழ்ப் புலவர்களைப் போலவே, தமது உள் ளத்தில் நின்று எழுந்த எண்ணங்களை எமக்குணர்த்தி எம்மை வாழ்விக்கவேண்டுமென்னும் பெருங்கருணையினுல், தமது நாவை அடிக்கும் கோலாகவும், வாயை முரசாகவும் (பறையாகவும்) கொண்டு முழக்கிய முரசின் ஒலியானது, என்றென்றும் எமதுள் ளத்தில் கேட்டவண்ணமாகவே இருக்கின்றது. வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே,

Page 76
144 பாரதியார் பாடல்கள்
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனுேடு நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!
பொருள்: வெற்றி - எமது பாரதநாட்டின் ஞான வெற்றி ம், சுதந்திர வெற்றியும், எட்டுத் திக்கும் - உலகின் எட்டுத் ஓசைகளிலும், எட்ட - சென்று பரவும்வண்ணம், (இசை திசை போக என்பதாம்) முரசே - முரசப்பறையே, கொட்டு - நீ முழங்குவாயாக, வேதம் - (எமது நாட்டின் ஞானகிதியாகிய) வேதங்கள் நான்கும், (வேத கெறிகள்) என்றும் - எப்பொழு தும், வாழ்க - கிலேபெற்று வாழ்வதாக, என்று - என்று வாழ்த்தி, முரசே - முரசப்பறையே, சொட்டு . மீ முழங்குவர பாக, நெற்றி - நெற்றியின்கண், ஒற்றைக் கண்ணனேடு - ஒப்பற்ற அக்கினிக் கண்ணே உடையவனுகிய சிவபெருமானு Lன், கிர்த்தனம் செய்தாள் - கின்று கடனம் புரிகின்றவளும், தித்த என்றும் உள்ளவளுமாகிய, சக்தி - சத்தி யென்னும் காளிதேவியானவள் வாழ்க - வாழ்வாளாக, என்று என்று வாழ்த்தி, முரசே - முரசப்பறையே, கொட்டு - மீ முழங்கு
6}}(T))ffé5.» -
விளக்கம்: இக் கவதையில் பாரதகாட்டின் வெற்றி யும், வேத வழக்குகளும், சிவசக்தியின் திருவருளும் நிலை பெறுவதாகவென வாழ்த்தி முரசை முழங்கும்வண்ணம் முழங்கு கின்ற பாரதியாரின் புலமை எழுச்சியைக் காண்கின்ருேம்.
பாரதநாடு சுதந்திரம் பெற்று, வெற்றியுடன் உலக
மெலாம் போற்றும் வண்ணம் விளங்கினுற்றன் வேத வழக்கும்,
தெய்வக் கொள்கையும் நிலைபெற்றேங்கும் என்பது, பாரதி யாரின் எண்ணமாகும். இதனை,
தேவிநின் ஒளி பெருத
தேயமோர் தேய மாமோ
ஆவியங் குண்டோ செம்மை
அறிவுண்டோ ஆக்க முண்டோ
கரவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ

விளக்கவுரை 45 أل
எனச் சுதந்திரதேவியின் துதி, என்ற பகுதியில் | ITU5uirir கூறுகின்றதினுல் அறிக.
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.
பொருள்: ஊருக்கு - ஊரின்கண் வாழ்கின்ற மக்களுக்கு நல்லது - (என் உள்ளத்தில் தோன்றும்) நல்ல அறிவுரைகளே, சொல்வேன் - எடுத்துக் கூறுகின்றேன், எனக்கு - மனதில் எனக்கு, உண்மைதெரிந்தது - உண்மையெனத் தோன்றி, வற்றை, சொல்வேன் - கூறுகின்றேன், சீருக்கெல்லாம் முதல் கும் - காங்கள் பெறுகின்ற சிறப்புகளுக்கெல்லாம். (p6ty காரணமாக விளங்கும், ஒரு தெய்வம் - ஒப்பற்ற முழுமுதற் கடவுள், துணைசெய்யவேண்டும் - துணையாக கின்று திருவருள் புரியவேண்டும். (என்பதை உணர்ந்துகொள்வீராக என்பதாம்).
விளக்கம்: இக் கவிதையில், மக்களாகிய நாம் அடை கின்ற சிறப்புக்களுக் கெல்லாம் மூலகாரணமாக விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவருளையே துணையாக நாம் பெற வேண்டும் எனக் கூறுகின்ற பாரதியாரின் தெய்வ நம்பிக் கையை உணர்கின்ருேம்.
சீருக்கெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம்
துணை செய்ய வேண்டும்
எனப் பாரதியார் கூறுகின்ற கடவுட் கொள்கையுடன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
எனவரும் திருவள்ளுவரின் கடவுட் கொள்கையையும் ஒப்பிட்டு கோக்குக. -
தெய்வத்தின் துணையின்றி நாம் ஒரு பேற்றையும் எய்த முடியாதென்னும் உண்மை, பாரதநாட்டு மக்கள் உள்ளத்தில்
10

Page 77
46 பாரதியார் பாடல்கள்
வழிவழியாக நிலைபெற்று கின்று மலரவேண்டு மென்னும் கொள்கை பாரதியாரின் கவிதையுள்ளத்தில் கிடந்து நிழலாடு கின்றது.
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு தீங்கும்வர மாட்டாது பாப்பா
எனக் குழந்தைகளுள்ளத்திலும் தெய்வ நம்பிக்கையை வளர்த்து வாழ்வுதர முயலும் பாரதியாரின் ஆர்வத் துடிப்பையும் நோக்குக,
2 வேத மறிந்தவன் பார்ப்பான், - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான், நீதி நிலைதவ ருமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பொருள்: வேதம் அறிந்தவன் - நான்கு வேதங்களேயும் ஒதி, அவற்றின் கண் உள்ள உண்மைப்பொருளே உணர்ந்தவ னும், பல - பலதிறப்பட்ட, வித்தை தெரிந்தவன் - சோதிடம் முதலிய கலேகளைக் கற்றுணர்ந்து எமக்கு, உரைக்கின்ற ஆற்றல் வாய்ந்தவனுமே, பார்ப்ப்ான் . அந்தணன் எனக் கூறப்பஒ வான், நீதிகிலே - நீதி நெறியில் கின்று, தவருமல்  ைநீங்காமல், தண்ட கொடியாரை ஒறுத்தலாகிய தண்டனே முதலிய, மேங் கள் - கியமங்களேயும், (எனவே சாம, பேத, தான, தண்டம் என்னும் ஆட்சி நியமங்கள் நான்கிவனயும் என்பதாம், ஈரமம் - இன்சொற் கூறுதல், பேதம் - பிரித்தல், தானம் - கொடுத்தல், தண்டம் - ஒறுத்தல்.) செய்பவன் - செய்து, மக்கள் நல்வழி யைக் கைக்கொண்டு வாழும்வண்ணம் செங்கோலாட்சி புரி கின்றவன், நாய்க்கன் - அரசனுவான்.
விளக்கம்? இக் கவிதையில் அந்தனர், அரசர் எனப் படுவோரின் பண்புகளை எடுத்துரைக்கின்ற பாரதியாரின் சிங் தனைத்திறனைக் காண்கின்ளுேம்,
அந்தணர் எனப் பிறப்பினுல் ஓர் சாதி இல்லையென் றும், வேதங்களையும் பலதிறப்பட்ட கலைகளையும் உணர்ந்த

விளக்கவுரை 47
வர்களே அந்தணராவார் என்பதையும் பாரதியார் வற்புறுத்தி யுரைக்கின்றர்.
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்
எனவருந் திருக்குறளுடன் பாரதியாரின் கருத்தை ஒப்பிட்டு நோக்குக.
இனி அரசர் எனப் பிறப்புரிமைபற்றிய சாதிப் பிரிவினை யும் பாரதியார் ஒப்புக்கொண்டிலர் நீதி திறம்பாமல் கொடி யாரை ஒறுத்துச் செங்கோலாட்சி செய்கின்றவனே மன்ன ணுவான், எனப் பாரதியார் சொல்லுகின்ருர், அரசன் மகன் அரசனெனும் பிறப்புரிமை யொன்றினையே கருதி, நீதி நிலை திறம்பிய கொடியோரையும் அரசரெனக் கொள்ளும், இழி நிலையைப் பாரதியார் மிக வெறுக்கின்றர் என்பதை உணர் கின்றேம்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்,
என வரும் திருக்குறளையும் நோக்குக. முறைசெய்து மக்களைக் காப்பாற்ருதவன் பிறப்புரிமையால் மன்னனுக இருப்பினும் அவனை மன்னனென மக்கள் கொள்ளார் என்பதாம்.
முறைசெய்து என்பதை நீதிநிலை தவருமல் என்றும், காப்பாற்றும் என்பதை தண்ட கேமங்கள் செய்பவன் என்றும் பாரதியார் விளக்கியுரைக்கின்றர்.
காயகன் காய்க்கன் என கின்றது.
3. பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி தொண்டரென் ருேர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல் இழி வில்லே,
பொருள்: பண்டங்கள் - பொருள்களே, விற்பவன் - (மக்க
ளுக்கு) விலையாகக் கொடுக்கும் தொழிலே ஆற்றி அதனுல், பிறர் பட்டினி - மக்களின் பசிப்பிணியை நீர்ப்பவன் போக்குகின்ற

Page 78
48 பாரதியார் பாடல்கள்
வனே, செட்டி - வணிகன் ஆவான், தொண்டர் என்று - அடிமைகள் என்று சொல்லப்படும், ஓர் வகுப்பில்லே - ஒரு சாதிப் பிரிவு கிடையாது. தொழில் - (ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஆற்றலுக்கேற்ற) தொழிலைச் செய்யாமல் இருக்கின்ற, சோம்பலைப் போல் = சும்மா முயற்சியின்றி இருப்பதுபோல், இழிவு - தாழ்ந்த கிலே, இல்லே - வேருென்று உலகில் இல்லே என்பதாம், (எனவே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஆற்ற லுக்கேற்பத் தமக்கும் பிறர்க்கும் பயன்தரக்கூடிய தொழில் ஆவளச் செய்தல் உயர்வாகும் என்பதை உணர்கின்ருேம்,
இதனுல், அந்தனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு பிரிவினராக மக்கள் வாழ்கின் ருர்கள என்பதே பாரதியாரின் கொள்கை என்பதை அறிகின்ருேம்.)
விளக்கம்: இக்கவிதையில், பிறப்புரிமை இன்றித் தம் செயலாகிய சிறப்புரிமையால் தோன்றிய வணிகர் தொழிலாளர் எனும் இரு பிரிவினரின் பண்பைக் கூறுகின்ற பாரதியாரின் கவிதை உள்ளத்தைக் காண்கின்றேம்,
பொருள்களை விலைக்கு விற்கின்ற வணிக மக்களாகிய செட் டிகள், மக்களின் பசிப்பிணியைப் போக்குகின்ற தண்ணளியா ளர் எனப் பாரதியார் பாராட்டி யுரைக்கின்றர். கொள்விலையிலும் பார்க்கப் பலமடங்கு விலையைக் கூட்டி விற்பதினுல் மக்களைப் பட்டினிபோடுகின்ற பண்பற்ற வணிகரைப் போலாது, மக்களின் பசிப்பிணியைப் போக்கி, அவர்களை வாழ்விப்பதையே பெரு நோக்கமாகக் கொண்டு, சிறிய ஊதியத்தைப் பெற்றுப் பொருள் களை விற்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வணிகப் பெருமக்களையே பாரதியார் இங்கு குறிப்பிடுகின்றர்.
நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நல்நெஞ்சி னுேள் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வ தூஉம் மிகை கொளனது கொடுப்ப தூஉம் குறை கொடாது சில பண்டம் பகர்ந்து வீசும்

விளக்கவுரை 49
என வரும் பட்டினப்பாலையில் கூறியுள்ள வணிகப் பெருமக்க ளின் பண்புகளை நோக்குக.
இனி, தமக்கும் பிறர்க்கும் பயன்தரத்தக்க பல்வேறுவகைப்
பட்ட தொழில்களை ஆற்றுகின்ற மக்களையெல்லாம் தொழிலாளர் எனும் ஒரு வகுப்பாகப் பாரதியார் கூறுகின்றர். இவர்களும் அந்தணர், அரசர், வணிகர் எனும் வகுப்பினரைப்போல மக்கள் வாழ்வுக்கு மிக இன்றியமையாதவர்க "ளென்பதே பாரதியாரின் கருத்தாகும். இனி,
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் என்றும்,
குடைகள் செய்வோம்
உழுபடைகள் செய்வோம்
ஆயுதஞ் செய்வோம் நல்ல
காகிதஞ் செய்வோம்
கொல்லர் உலை வளர்ப்போம்
என்றும்,
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனைகள் செய்வீரே
என்றும், பல தொழில்களையும் பாராட்டி உரைக்கின்ற பாரதி யாரின் கவிதைத் தொடர்களில் அறிக.
4 நாலு வகுப்பும் இங் கொன்றே; - இந்த - நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி,
பொருள்: காலு வகுப்பும் - அந்தணர், அரசர், வணிகர், தொழிலாளர் எனும் நான்கு பிரிவினர்களும், இங்கு - இப் பாரத தேசத்தில், ஒன்றே - ஒரு குலத்தினர்களேயாவர். இந்த கான் கினில் - இங்கு கூறப்பட்ட, அந்தணர், அரசர், வணிகர்,

Page 79
50 - பாரதியார் பாடல்கள்
தொழிலாளர் எனும் நான்கு பிரிவினரிலும், ஒன்று குறைக் தால் - ஒரு பிரிவினர் தம் நிலைதவறிக் கெடுவார்களானல், வேலே தவறி - தொழில் நெறிகள் எல்லாம் லீகலமாறி, சிதைந்தே - உருக்குலைந்து, மானிடச்சாதி - மானிடசாதி யென் னும் மக்களினம், செத்து - மடிந்து, வீழ்ந்திடும் - (அடிச்சவ டும் இல்லாமல்) ஒழிந்துவிடும்,
விளக்கம்: இக் கவிதையில், அந்தணர், அரசர், வணிகர், தொழிலாளர் என்னும் நான்கு பிரிவினருள் எந்த ஒரு பிரிவின ராதல் தம் நிலைகெட்டுச் சிதைவார்களேயானுல் மக்களினமே அழிந்துவிடும் எனக் கூறுகின்ற பாரதியாரின் சிந்தனைத் திறனை உணர்கின்றேம்.
響
அறிஞர்களும் அரசனும் வணிகர்களும் தொழிலாளர்களும், ஒரு நாட்டின் அமைதியையும் ஆக்கத்தையும் பெருக்கி வளர்ப் பதில் ஒத்த உரிமை உடையவர்கள் எனத் திட்டப்படுத்திக் கூறும் பாரதியாரின் அறிவகலம் மிகமிகப் பாராட்டத்தக்கதாகும்.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல் வரும் சேர்வது நாடு
எனவும்,
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு
எனவும் வரும் திருக்குறளையும் நோக்குக.
இதில், தள்ளா விளையுள் என்பது தொழிலாளர்களையும், தக்கார் என்பது அந்தணரையும், தாழ்விலாச் செல்வர் என்பது வணிகரையும், வேந்து என்பது அரசரையும் குறித்து நிற்றலையும் உணர்க.
5 ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை,

விளக்கவுர்ை 5.
பொருள் ஒற்றைக் குடும்பக்தனிலே - ஒரு குடும்பத்தின் கண்ணே, பொருள் ஓங்க - பொருள்வளம் பெருகும்வண்ணம், வளர்ப்பவன் - (தன் முயற்சியால்) பொருளே ஈட்டி வளர்க் கின்றவன், தந்தை - தக்தையாவான், மற்றைக் கருமங்கள் , மனே அறத்துக்குரிய ஏனேய காரியங்களே, செய்தே - ஆற்றி, மனே - இல்லத்தில் உள்ளோர்களே, வாழ்க்கிடச் செய்பவள் . நல்வாழ்வு வாழும் வண்ணம் தொண்டாற்றுகின்றவள். அன்னை - தாயாவாள்,
விளக்கம்: குடும்பம் நன்கு வாழ்வுபெற வேண்டுமானுல் பொருள்வளம் பெருகவேண்டும். பொருள்வளம் பெருகத்தக்க முயற்சிகளைப் புரிந்து பொருளை ஈட்டுகின்றவன் குடுமபத் தலைவனுகிய தந்தையாவான். குடும்பத் தலைவனுகிய தந்தை முயற்சியின்றிச் சோம்பி இருப்பானுயின் அக்குடுமபம் சீர் கெட்டுப்போகும் என்பதே பாரதியாரின் கருத்தாகும்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
எனவும்,
குற்றம் இலஞய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
எனவும் வரும் திருக்குறள்களை நோக்குக.
இனி குடும்பத் தலைவனுகிய தந்தை எத்துணைப் பெரும் பொருளை ஈட்டித் தொகுத்தாலும், குடும்பத்தை கடத்துகின் றவளாகிய தாயினிடம், இல்லறத்துக்குரிய நற்குணங்களாக விளங்கும், துறந்தாரை உபசரித்தல், விருந்தினரைப் பேணல், வறியாரிடம் இரக்கங்காட்டுதல் முதலியனவும், நற்செயல்களாய் விளங்கும், இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை அறிந்து காப்பாற்றி வைத்தல், உணவுகளைச் சுவைபட ஆக்கல, பிறர்க்குதவுதல், பொருளின் வரு வாயை அறிந்து அதற்குத் தக்கதாகச் செலவுசெய்தல் முதலியனவும் இல்லையாயின் அக்குடும்பம் நல்வாழ்வு பெருமல் சிதைந்துவிடும் என்க. இதனை,

Page 80
62 un Jasuri urles 66ir
மனை மாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
எனவரும் திருக்குறளால் அறிக.
பொருள் ஈட்டுதலைக் குடும்பத் தலைவனுகிய தந்தையின் செயலாகவும், குடும்பப் பொறுப்பை ஏற்று இல்லற வாழ்வைச் சிறப்பிப்பதைத் தாயின் செயலாகவும் வைத்துப் பாரதியார் கூறிய மரபை கோக்குக. இல்லாள். மனையாள். எனவருஞ் சொற்க ளும், வாழ்க்கைத் துணைவியாகிய தாய், வீட்டில் இருந்து குடும்பத்தைச் செம்மைபெறச் செய்பவள் என்னும் கொள்கையை நிலைகாட்டுகின்றன.
6 ஏவல்கள் செய்பவர் மக்கள்; - இவர்
யாவரும் ஒர்குலம் அன்ருே? மேவி அளை வரும் ஒன்ருய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.
பொருள்? ஏவல்கள் - தந்தை, தாயர் சொல்லிய பணிகளை (கட்டளையிட்ட பணிகளை), செய்பவர் - (உள்ளத்தில் ஊறும் உவகையுடன்) செய்கின்றவர்கள். ஆற்றுகின்றவர்களே, மக் கள் - கன்மக்கள் எனப் பாராட்டியுரைக்கத் தக்கவர்களாவார்? இவர் - தந்தை, தாய், மக்கள் எனக் கூறப்பட்ட, யாவரும் - எல்லோரும், ஓர்குலம்-ஒரு குலத்தில் பிறந்தவர்கள், அன்ருே(ஆனபடியால்) அனே வரும் - தந்தை. தாய், மக்கள் என்னும் யாவரும், ஒன்குய் மேவி - (கருத்து வேறுபாடின்றி) ஒன்று சேர்ந்து, கல்ல - சிறந்த, வீடு நடத்துதல் சண்டோம்  ைவீட்டு வாழ்க்கையை கன்கு கடத்துதலைக் காண்கின்ருேம்.
விளக்கம்: இக் கவிதையில், தந்தையும் தாயும் இட்ட பணிகளைக் கருத்துடன் ஆற்றிக் குடும்பத்தை மேம்படுததுதல் கன்மக்களின் கடமை எனக் கூறுகின்ற பாரதியாரின் புலமைப் பண்பை உணர்கின்றேம்.

விளக்கவுரை 53:
ஒரு குடும்பத்தில் தந்தையார் பொருளைத் தேடித் தொகுத் தாலும் தாயார் இல்லற கருமங்களை இனிது ஆற்றினுலும், அவர்கள் சொல்லுகின்ற வேலைகளைத் தட்டாமல் ஆற்றுகின்ற ான்மக்களும் அக்குடும்பத்தில் தோன்றி வாழவேண்டுமென்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற
எனவருந் திருக்குறளையும் நோக்குக.
இங்ஙனம் வீட்டு வாழ்க்கையில், தந்தை, தாய், மக்கள் எனும் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, உழைத் துக் குடும்பச் சிறப்பைப் பாதுகாத்தலைப் போலவே, காட் டின் விடுதலைக்கும், சாதி, சமய வேறுபாடின்றி ஒருதாய் வயிற் றுக் குழந்தைகளைப்போல ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டு மென்னும் குறிப்புப் பொருளொன்று தோன்றுதலையும் நோக்குக
சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார், நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
பொருள்: சாதிப்பிரிவுகள் - சாதி வித்தியாசங்களையே சொல்லி - பெரிதாகப் பாராட்டிக்கூறி, அதில் - அச்சாதியில் தாழ்வென்றும் = மிகவும் இழிந்த சாதியிற் பிறந்தவரென்றும் மேல் என்றும் - இவர் மிகவும் உயர்ந்த சாதியில் பிறந்தவ ரென்றும், கொள்வார் . வேறுபாடு கொள்வார்கள், நீதிப்பிரி வுகள் - (அங்ஙனம் வேறுபாடு கொண்டவர்கள்) உயர்ந்த சாதி யாருக்கொரு மீதியும், இழிந்த சாதியாருக்கொரு திேயும் என ரீதியிலும், வேறுவேறு பிரிவுகளே, செய்வார் . உண்டாக்கு வார்கள், அங்கு . அச்சாதிப் பிரிவுகள் உள்ள இடத்தில், வித்த மும் - எப்பொழுதும், சண்டைகள் செய்வார் - சாதியில் உயர்வு தாழ்வு கூறிச் சண்டை பிடிப்பார்கள்.

Page 81
姆54 பசரதியார் பாடல்கள்
விளக்கம்: இக் கவிதையில், சாதிப் பிரிவுகளால் சண்டை புரிந்து தம்மைத் தாமே ஆற்ற லற்றவர்களாகச் செய்து பிறர்க்கு அடிமைப்பட்டு வாழ்கின்ற பாரத மக்களின் பண்பை எடுத்துக காட்டி இடித்துரைக்கின்ற பாரதியாரின் உளத்துடிப்பை உணர் கின்றேம்.
சாதி வேறுபாட்டினையே பெரிதாகப் பாராட்டி, ஒருசாதிக் கொரு நீதி வகுத்து ஓயாமல் சாதிச்சண்டை புரிந்து கெடு கின்ற பாரதமக்களின் நிலைமையை எண்ணியெண்ணிப் பாரதி யார் ஏங்குகின்றர்.
பாரதமக்கள் சாதிப்பிரிவினுல் வேறுபட்டுச் சிறுசிறு கூட் டங்களாகப் பிரிந்து நின்றமையாலேயே பிறநாட்டாருக்கு, மிக எளிதில் அடிமைப்பட்டனர் என்னும் உண்மையைப் பாரதியார் அடிக்கடி எடுத்துரைத்துள்ளார்.
சாதிச்சண்டை போச்சோ உங்கள் 3F Lpbuu $3F6ör 6ooL (SLD (g # G3aFgr
என்றும்,
சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் வரும் பாரதியாரின் கவிதைத் தொடர்களை நோக்குக.
நீதிப் பிரிவுகள் செய்வார்
எனும் தொடருடன்,
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி
எனவரும் மனுேன்மணியத் தொடர்களையும் ஒப்பிட்டுணர்க.
 

விளக்கவுரை 55
8 சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்; ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம மாண்புறச் செய்வோம்,
பொருள்: சாதிக்கொடுமைகள் - (சாதியில் உயர்ந்தவர்கள் சாதியில் இழிந்தவர்களைத் துன்புறுத்துகின்ற) சாதிக்கொடுமை கள் இனி இந்த நாட்டில், வேண்டாம் - இல்லாது ஒழிவதாக, வையம் - உலகின்கண் உள்ள மக்கள் முதலிய உயிர்வகைகள் எல்லாம், அன்பு தன்னில்-அன்பினுல் (அன்பென்னும் ஒன்றி ணுல்) செழித்திடும் - வளம்பெற்று வாழ்ந்திடும், (ஆனபடியால்) இங்கு - இவ்வுலகில் (எங்கள் காட்டில்), ஆதரவு உற்று - ஒரு
வர்க்கொருவர் ஆதரவாகப் பொருந்தி, வாழ்வோம் . வாழ்வு
பெறுவோம், தொழில் - நமக்கும் பிறர்க்கும் கன்மை கல்கும் தொழில்கள், ஆயிரம் " ஆயிரக்கணக்கானவற்றை, மாண்புற " பெருமை பொருந்தத்தக்கதாக, செய்வோம் - (உயர்வு தாழ்வு பாராமல்) புரிந்திடுவோம்.
விளக்கம்: இக் கவிதையில் சாதிக்கொடுமைகள் செய் வதை விடுத்து, எல்லோரிடத்திலும் அன்பு செய்து வாழவேண்டு மெனக் கூறுகின்ற பாரதியாரின் ஆர்வக்குரலைக் கேட்கின்ருேம்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழித்திடும் வையம்
எனுங் கவிதைத் தொடர்கள்
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என் போடு இயைந்த தொடர்பு
எனுந் திருக்குறளையும்
முன்பு நின்றதோர் மூவுலகத்தினும் அன்பின் மிக்கதோர் ஆக்கமுண்டாகுமோ
எனும் கம்பர் கவிதைப் பகுதியையும் நினைவூட்டுகின்றன.

Page 82
156 பாரதியார் பாடல்கள்
ஒருவர்க்கொருவர் ஆதரவாய் நின்று, ஆயிரக்கணக்கான தொழில்களை ஆற்றி வாழ்வோம் எனப் பாரதியார் கூறுகின்ற ஆர்வத்தை உணருங்கள்.
ஆதரவு உற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண் புறச் செய்வோம்
எனும் தொடர்களைப் படிக்கப் படிக்க எமக்கும் ஆர்வம் எழு கின்றது.
9 பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்ததிடும் ஈசன்; மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்
பொருள்: புவி . இங்கிலவுலகத்தை, (இங்கிலவுலகத்தின் கண் உள்ள ஆன்மாக்களே) பேணி - பாதுகாக்து வளர்த்திடும் ம ஆக்கமடையச் செய்தருளும், ஈசன் - இறைவன் , பெண்ணுக்கு - பெண்களுக்கு, ஞானத்தை வைத்தான் - அறிவை (ஞானத்தை இயல்பாகவே கொடுத்தரு வின்ை, (ஈசன் தன் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியாரை அறிவில் மிகுந்தவள் எனும் கருத்துப் பட ஞானசத்தி என வைத்துள்ளார் என்னுமோர் குறிப்புப் பொருள் தோன்றுதலையும் நோக்குக) மண்ணுக்குள்ளே - இந் சிலவுலகத்தின் கண் வாழ்கின்ற, சில மூடர் - சில அறிவிலிகள், கல்ல - நற்பண்புகள் வாய்ந்த, மாதர் - பெண்களின், அறிவை .
ஞானத்தை, கெடுத்தார் - அழித்தார்கள்.
விளக்கம்: இக்கவிதையில் இறைவனுலே பெண்களுக்கு அருளப்பட்ட அறிவைக் கெடுத்து அவர்களை அடிமைப்படுத்து கின்ற கொடுமையை எண்ணி உள்ளம் இடிந்து குமுறுகின்ற பாரதியாரின் இரக்கத்தை உணர்கின்றேம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன் எனும் தொடர்கள் கல்விக்குக் கலைமகளைத் தெய்வமாகக் கொள்
வதையும், இறைவனின் அருளாற்றலை, இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி எனக் கூறுவதையும் நினைவூட்டுகின்றன.
 

விளககவுரை 15
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற
எனும் திருக்குறளுக்கு, உரைகூறிய பரிமேலழகர், அறிவறிந்த என்ற தினுல் மக்கள் என்னும் பெயர் பெண்பாலே ஒழித்து ஆண்பாலைக் காட்டி நின்றது எனச் சொல்லத்தக்க அளவுக் குப் பெண்கள் அறிவற்றவர்கள் எனும் கொள்கை இடைக்காலத் தில் பாரத நாட்டிலே நிலைபெற்றுவிட்டதைப் பாரதியார்
- 。
எண்ணி மிக வருந்துகின்றர் என்பதை உணர்கின்றுேம்.
ஏட்டையும் பெண்கள் தொடுவதைத் தீமை என்று எண்ணி யிருந்தவர் மாய்த்து விட்டார்
என்றும்,
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி
என்றும் பாரதியார் கூறும் கவிதைத் தொடர்களையும் நோக்குக.
மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்
எனும் தொடர்களைப் படிக்கும்போது பெண்களை அடிமைப்படுத்தி அறிவில்லாதவர்கள் எனவோர் கொடிய வழக்கத்தையும் நிலை நாட்டி வைத்த கொடியவர்களைப் பாரதியார் மிகமிக வெறுத்து வைகின்ற உணர்ச்சித் துடிப்பு எமதுள்ளத்தையும் தூண்டி உணர்ச்சி ஊட்டுகின்றது.

Page 83
158 பாரதியார் பாடல்கள்
விடுதலைக்கு மகளிர் எல்லோரும்
வேட்கை கொண்டனர்
உடைவவள் சத்தி ஆண்பெண்
ஒருநிகர் செய்துரிமை அமைத்தாள்
இடையிலே பட்டழ்ே நிலை கண்டிர்
இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ
எனப் பாரதியார் பெண்கள் விடுதலையிற் கூறும் கவிதையினை யும் நோக்குக.
10 கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணிர்
பொருள்: கண்கள் இரண்டினில் - (எமக்கு மிக இன்றி யமையாத உறுப்பாய் விளங்குகின்ற) இரண்டு கண்களில், ஒன்றைக் குத்தி - ஒரு கண்ணைக் குத்தி, காட்சி - அக்கண்ணில் அமைந்துள்ள காணும் தன்மையை (ஒளியை, கெடுத்திட லாமோ - இல்லாமல் அழித்துவிடலாமா, ( அங்ஙனம் அழிப் பவர்கள் ஒருவரும் இல்லை என்பதாம்) பெண்கள் அறிவை க பெண் குலத்தினரின் அறிவினை, வளர்த்தால் - வளர்ச்சியுறச் செய்தால், வையம் - இங்கிலவுலகத்தில் உள்ளவர்கள் இடத் தில் விலைபெற்றுள்ள பேதைமை = அறியாமை, அற்றிடும் = அழிக்தொழியும், காணிர் - சிந்தித்துத் தெரிந்துகொள்வீர் என்பதாம்,
விளக்கம்: இக் கவிதையில், வாழ்க்கையில் கருத்தொரு மித்த காதலுடன் ஈடுபட்டு, ஒத்த அறிவும் ஆற்றலும் உடை யவர்களாய் வாழவேண்டிய ஆண் பெண் எனும் இருபாலாரில், பெண்பாலாருடைய அறிவினைக் கெடுத்தல், பொருள்களைக் கண்டுணரும் கண்கள் இரண்டினில் ஒன்றினைக் கெடுத்து விடு தலே ஒக்குமெனப் பாரதியார் உவமானங்காட்டி விளக்குகின்றர்.

விளக்கவுரை 59.
கண்கள் இரண்டினில் ஒன்றினைக் குத்திக் காட்சி கெடுத்திட லாமோ
எனப் பாரதியார் பெண்குலத்தின் அறிவைக் கெடுத்து, அடிமை பாக்கித் தாமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரத மக்களைப் பார்த்துக் கேட்கின்றர்.
இதில், கண்கள் - உவமேயம், ஒத்த அறிவுடன் கருத்தொருமித்து வாழவேண்டிய ஆண்களும் பெண்க ளும் - உவமானம்.
கண்கள் இரண்டும் ஒன்றையே கோக்கல்போல ஆண்களும் பெண்களும், அறிவில் ஒத்தவராய் இருத்தல் பொதுத்தன்மையாகும்.
கண்களில் ஒன்றினைக் குத்திக் கெடுத்தல் - உவ மானம், ஆண், பெண் எனும் இருபிரிவினருள் பெண் களின் அறிவைக் கெடுத்தல் - உவமேயம். ஒத்த தன்மையுடையவற்றைக் குறைத்து மதித்தல் - பொதுத் தன்மையாகும்.
பெண்களாகிய தாய்க்குலம் சிறந்த அறிவுடன்வாழ்ந்தால், உலக மக்கள் எல்லோரும் அறியாமையில் நீங்கி ஆக்கமுறுவார் என்பது பாரதியாரின் கொள்கையாகும்.
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணிர் எனப் பாரதியார் மிக ஆர்வத்துடன் கூறுகின்றர்.
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்றறியீரோ உணர்ச்சி கெட்டிர் எனவும்,
தாய்க் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ தாயைப் போலேபிள்ளை என்று முன்னேர் வாக்குளதன்ருே பெண்மை அடிமை உற்ருல் மக்க ளெலாம் அடிமையுறல் வியப்பொன்ருமோ

Page 84
60 பாரதியார் பாடல்கள்
என, தாய்மாண்பு எனும் பகுதியில் பாரதியார் பாடிய கவிதை களையும் நோக்குக.
தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும ஒன்ருய் - எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.
பொருள்: தெய்வம் - ஒரே முழுமுதலாய் விளங்கும் பரம் பொருளாகிய தெய்வத்தை, பலபல சொல்லி - பல வேறுபட்ட தெய்வங்களாகத் தம்முள் மாறுபட்டுச் சொல்லி. பகைத் தீயை (மக்களுக்குள்) சமயப் பகையாகிய கொடு கெருப்பை, வளர்ப்பவர் - மூட்டுகின்றவர்கள், மூடர் - அறிவிலிகன், உய் வது - நாங்கள் ஈடேறும் வண்ணம் வழிகாட்டுகின்ற சமயங்கள், அனேத்திலும் . எல்லாவற்றிலும், ஒன்ருய் - (வேறுவேருன பெயர்களுடன் விளங்கினலும்) ஒரே பொருளாய் நிற்பதுடன், எங்கும் - இவ்வுலகம் எல்லாம் உள்ள இயங்குதிணைப் பொருள் கள், நிலத்திணைப் பொருள் எல்லாவற்றிலும் வியாபித்து, ஓர் பொருளானது - ஒரே பொருளாக (எக வஸ்துவாக) விளங்கு வதே, தெய்வம் - தெய்வமாகும்.
விளக்கம்: இக்கவிதையில் ஒன்றே தெய்வம் என்னும்
உண்மையை மறந்து பல தெய்வங்களின் பெயர்களைக் கூறிச்
சமயப்போரை மூட்டுகின்ற அறிவிலிகளை வெறுத்துக் கூறுகின்ற பாரதியாரின் உயர்ந்த கொள்கையை உணர்கிருேம்.
ஒரே முழுமுதலாகிய தெய்வந்தான் பல பெயர்களுடன் விளங்குகின்றதென்னும் உண்மையை உணராமல், என் தெய் வம் பெரிது, உன் தெய்வம் சிறிது, எனக்கூறிச் சமயப் பூசலை வளர்த்து மக்களினத்தை அழிக்கின்ற அறிவிலிகள் நெருப்பி னும் கொடியவராவர் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
உய்வது அனைத்திலும் ஒன்ருய் எங்கும் ஓர் பொருளானது தெய்வம் எனக் கூறும் பாரதியாரின் கொள்கையுடன்,
 
 
 

விளக்க வுரை 6.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
எனத் திருமூலரும்
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைக ளாலும் இயம்பரும் பொருளி தென்னத் தொல்லையில் ஒன்றே யாகித்
துறை தொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போற் பரந்த தன்றே
எனக் கம்பரும் கூறுகின்ற கொள்கைகளையும் ஒப்பிட்டு நோக்குக.
2 தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் வேக மதத்தார்
பொருள்: தீயினை - கெருப்பினை (அக்கினியை), கும்பிடும். வணங்கிடும், பார்ப்பார் - அந்தணர்களும், வித்தம் - என்றும், (ஒவ்வொரு5ாளும்) திக்கை - மேற்குத்திசையை, வணங்கும் . தொழுகின்ற, (தொழுகைசெய்யும்) துருக்கர் - இஸ்லாமியரும், கோயிற் சிலுவையின் முன்னே கோயிலின்கண் உள்ள சிலுவைக்கு முன்னே, கின்று - முழங்காலில் கின்று, கும்பிடும்.
வணங்குகின்ற, யேசு மதத்தார் - கிறித்தவர்களும்.
3 யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்.
பொருள்: யாரும் - (ஆகிய) பல சமயத்தவர்களும், பணிக்
திடும் தெய்வம் - வணங்கச் செய்யும் தெய்வம், பொருள்
யாவினும் - உலகில் உள்ள உயிர்ப்பொருள் உயிரில்லாப்

Page 85
62 பாரதியார் பாடல்கள்
பொருள் என்னும் எல்லாவற்றினும் வியாபித்து, நின்றிடும் . விளக்குகின்ற, தெய்வம் - தெய்வமாகும், பாருக்ருள்ளே - இங் கிலவுலகத்தின் கண்ணே, தெய்வம் ஒன்று - தெய்வம் ஒன்றே தான் உள்ளது, (கடவுள் ஒருவனே உள்ளான்) பற்பல - பல வேறுபட்ட, சண்டைகள் - சமயச்சண்டைகள், வேண்டாம் - புரிவதை விட்டிடுங்கள்,
விளக்கம்: மேற் தொடர்ந்து பொருள் கூறிய இரு
கவிதைகளிலும் ஒன்றே தெய்வம் என்னும் கொள்கையை வலி யுறுத்திக் காட்டிச் சமயச் சண்டைகளைப் போக்கி மக்களுள் ளத்தில் ஆன்ம கேய ஒருமைப்பாடென்னும் உயிர்க் கலப்பை உருவாக்கி வாழ்வளிக்க எண்ணுகின்ற பாரதியாரின் உயர்ந்த கோக்கத்தை உணர்கின்றேம்.
ஓமத்தீயில் இறைவனின் அருள் வெளிப்பாட்டைக்கண்டு
வணங்குகின்ற அந்தணரும், மேற்குத்திசையில் இறைவனின் அருள் வெளிப்பாட்டைக்கண்டு தொழுகை புரியும் துருக்கரும், சிலுவையில் இறைவனின் அருள் வெளிப்பாட்டைக்கண்டு வணங்கும் கிறீஸ்தவரும், பிறவாறு இறைவனே வணங்கும் ஏனைய மதத்தினரும், வேறு வேறுவழிகளால் ஒரே தெய்வத் தைத்தான் வழிபாடு புரிகின்றனர் என்பதே பாரதியார் சொல் லும் உயர்ந்த தெய்வக்கொள்கையாகும்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்
என முடிந்த முடியாகப் பாரதியார் தமது உயர்ந்த தெய்வக் கொள்கையை உலகுக்கறிவிக்கின்றர்.
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி
புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசு மதம் போற்றும் மார்க்கம்
ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்
நாம முயர் சீனத்து தாவு மார்க்கம்
நல்ல கன்பூசிமதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கு ஒன்றே

விளக்கவுரை 163
எனச் சர்வமத சமரசம் எனும் பகுதியில் பாரதியார் பாடியுள்ள கவிதையையும் நோக்குக.
4. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை; - அவை
பேருக் கொருநிற மாகும். பொருள்; எங்கள் வீட்டில் - எங்களுடைய வீட்டிலே, வெள்ளே நிறத்து ஒரு பூனை = வெண்மை நிறமுடைய பூனே ஒன்று, வளருது கண்டீர் - கின்று வளர்கின்றது காண்பீர் களாக, அப்பூனே = அந்த வெள்ளைப் பூனே, பிள்ளைகள் பெற் றது - குட்டிகளை ஈன்றது. அவை . அந்தக் குட்டிகள் ஒவ் வொன்றும், பேருக்கு ஒரு நிறமாகும் = வேறுவேறு பெயர் கொண்ட ஒவ்வொரு கிறமுடையனவாகும்.
15 சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளேப்
பாலின் நிறமொரு குட்டி
பொருள்: ஒரு குட்டி-ஒரு குட்டியானது, சாம்பல் விறம்= சாம்பல் கிறமுடையது, ஒரு குட்டி - ஒரு குட்டியானது, கருஞ் சாந்து நிறம் - கருமையான சாங்தைப்போன்ற நிறமுடையது; ஒரு குட்டி - ஒரு குட்டிவானது, பாம்பு கிறம் - பாம்பின் விற முடையது, ஒரு குட்டி = ஒரு குட்டியானது, வெள்ளே . வெண்மையான, பாலின் கிறம் - பாலின் நிறத்தை உடையது,
16 எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்ருே? இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
பொருள் எந்த கிறம் இருந்தாலும் - (மேற்கூறிய வண்ணம்) பூனேக்குட்டிகள் எந்தெந்த கிறந்தை உடையன வாகத் தோன்றினலும், அவை அப்பூனைக்குட்டிகள், யாவும்

Page 86
164 பாரதியார் பாடல்கள்
எல்லாம், ஒரேதரம் அன்றே - ஒரே தன்மையை உடையன வன்றே, இந்த நிறம் - இந்தக் குட்டியின் நிறந்தான், சிறிது என்றும் - இழிவானது என்றும், இஃது - இக்குட்டியின் நிறம், ஏற்றம் என்றும் - உயர்ந்தது என்றும், சொல்லலாமோ - சொல்ல முடியுமோ, முடியாது.
t வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை; எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணிர்.
பொருள்: வண்ணங்கள் - நிறங்கள், வேற்றுமைப்பட் டால் (ஒவ்வொருவர்க்கும்) வேறுவேருக அமைந்து வேறுபட் டிருப்பதினல், அதில் - அக்கிற வேறுபாடாகிய அக்காரணத்தி ஞலே, மானுடர் - மக்கள், வேற்றுமை இல்லை - (தமது இயல் பில்) வேற்றுமைப்படுதல் இல்லை, எண்ணங்கள் - நினைவுகளும், செய்கைகள் எல்லாம் - ஆற்றுகின்ற செயல்களும் (செய்வினை களும்) யாவர்க்கும் - எல்லா மக்களுக்கும், இங்கு - இவ்வுலகில், ஒன்றெனல் காணிர் - ஒரே தன்மையாகவே அமைந்திருத்தலை உணருங்கள்.
விளக்கம்: மேல் ஒரே தொடராக வந்துள்ள நான்கு கவி தைகளிலும், நிற வேறுபாட்டினுல் உயர்வு தாழ்வு கற்பித்து, மக்களை இகழ்ந்து மதிக்கின்ற நிறத்திமிர் படைத்தோரின் கொள் கையை எடுத்துக்காட்டி இடித்துரைக்கின்ற பாரதியாரின் உணர்ச்சிக் குமுறலைக் கேட்கின்றுேம்.
வீட்டில் வளரும் வெள்ளைப்பூனை ஈன்ற குட்டிகள் வேறுவேறு நிறங்களை உடையனவாக விளங்கினுலும் தாய்ப்பூனையின் உள் ளத்தில் அவைகள் எல்லாம் ஒரே தன்மையுடையனவாகவே தோன்றுகின்றன. நல்ல நிறமுடைய குட்டிதான் உயர்ந்தது என்ற எண்ணம் இன்றி எல்லாக் குட்டிகளின் மேலும் அத்தாய்ப் பூனை அன்பைச் சொரிந்து, பாலூட்டி, வளர்க்கின்றது என்னும் உவமையை எடுத்துக்காட்டி நிறத்திமிர் பிடித்தோரை இடித் துரைக்கின்ற பாரதியாரின் புலமை போற்றத்தக்கதாகும்.
 

விளக்கவுரை 65
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றே
எனப் பாரதியார் உலக மக்களை மிக உணர்ச்சியுடன் கேட் doől (13ít.
வெள்ளையர், கறுப்பர் என நிறவேறுபாட்டினுல், மக்களை
வேறுபடுத்தி உரைப்பதுடன் வெள்ளையர் உயர்ந்தவர்கள் என் றும், கறுப்பர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கொண்டு இன்றும் தென் ஆபிரிக்காவில் நிகழ்கின்ற கொடுமைகளை உணாகின் ருேம். தென் ஆபிரிக்காவில் வாழ்கின்ற வெள்ளையர்கள், நிற வேறுபாடு ஒன்றினையே காரணமாகக் கொண்டு அங்கு வாழ் கின்ற மற்றைய மக்களை இகழ்ந்து தம்மோடொத்த உரிமைக ளைக் கொடுக்க மறுத்துப் பெரும் இன்னல்களை ஆற்றுகின்றர் கள். இச்செயல்களை எல்லாம் எண்ணி உள்ளம் வருந்திய பாரதியார்,
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் அதில்
மானுடர் வேற்றுமை இல்லை
என மிக உணர்ச்சியுடன் கூறுகின்றர்,
வெண்மை நிறம் கொண்டவர்களென்றலும், கருமை நிறம் நிறம் கொண்டவர்களென்றலும், செம்மைநிறங் கொண்டவர்க
ளென்றலும், அவர்களின் நினைவும் செயலும் ஒரே தன்மையாக
அமைந்திருத்தலை உணருங்கள் எனப் பாரதியார் எடுத்துரைக் கின்றர். ஒரு வெள்ளையன் உள்ளத்தில் எழுகின்ற உயர்ந்த நினைவுகளும், அவன் ஆற்றுகின்ற செயல்களும் கருமைநிறம் கொண்ட ஒரு கறுப்பனிடத்தில் உளவாதலை உணருங்கள் என் பதே பாரதியாரின் கொள்கையாகும்.
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர் எனவரும் பாரதியாரின் எழுச்சிக்குரலைக் கேளுங்கள். நிறவேறு பாட்டினுல், மக்களின் உயிர்க்குணங்களாகிய அறிவு, அருள்,

Page 87
166 Lur pr69ulu Tř Lu Aru diðassir
ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு, வெறுப்பு, இன்பம், துன் பம், இளமை, மூப்பு முதலியனவும் வேறுபடுதல் இல்லை என்பதாம்.
பூனை, தானின்ற குட்டிகள் பலநிறங் கொண்டன வாக விளங்கினுலும், அவற்றின் நிறத்தில் உயர்வு தாழ்வு கோக்கி அன்பு செலுத்தாமல், தன்னுடைய குட் டிகள் என்ற ஒரே உணர்ச்சியுடன் அன்பைச் செலுத் திப் பாலுட்டி வளர்த்தலைப்போல, உயர்ந்த நோக்க மும் பண்பாடும் நிரம்பிய சான்றேர்கள், மக்களை நிறத் தினுல் வேறுபடுத்தி உயர்வு தாழ்வு உணர்ச்சிகளைக் காட்டாமல், அவர்களின் நினைவு, செயல் என்பவற்றின் ஒத்த தன்மைகளை உணர்ந்து, மதிப்புச் செய்வார்கள் என் பதே பாரதியார் நிலைநாட்டியுரைக்கின்ற உண்மையாகும்.
8 நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; தகரென்று கொட்டு முரசே! - பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்
பொருள்: இந்த மீணிலம் - இந்தப் பரந்த வுலகத்தின்கண், வாழ்பவர் எல்லாம் - இருந்து வாழ்கின்ற மக்கள் எல்லோரும். நிகரென்று ஒரே தகுதியுடையவர்கள் என்று சொல்லி, முரசே - முரசப்பறையே, கொட்டு - மீ முழங்குவாயாக, பொய்மை - பொய்யான (பொய்க் கட்டுப்பாடான), சாதி வகுப்பினே - சாதிப் பிரிவுகளே, எல்லாம் - எல்லாவற்றையும், தகர் என்று - நொறுக்கி எறியவேண்டும் என்று சொல்லி, முரசே - முரசப்பறையே, கொட்டு - நீ முழங்குவாயாக.
விளக்கம்: இக் கவிதையில் நிலவுலகில் வாழ்கின்ற மக்
மக்கள் எல்லோரும் ஒரே நிகரானவர்கள், தாழ்ந்தவர் உயர்ந்த வர் எனக் கூறுகின்ற சாதிக்கட்டுப்பாட்டைத் தகர்த்துவிட

விளக்கவுரை 67
வேண்டுமெனக் கூறுகின்ற பாரதியாரின் முழக்கத்தைக் கேட் கின்றுேம்.
சாதி மதங்களைப் பாரோம் உயர்
சென்மம் இத்தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
எனப் பாரதநாடு எனும் பகுதியில் பாரதியார் பாடுவதை யும் நோக்குக.
19 அன்பென்று கொட்டு முரசே! - அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு; துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனல்
பொருள்: முரசே - முரசப்பறையே, அன்பு என்று - அன் பினுல் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வீர்களாக என்று சொல்லி, கொட்டு முழங்குவாயாக, அதில் - அந்த அன்பினுல் ஒன்று பட்டு வாழ்வதில், ஆக்கம் - செல்வங்கள் (நன்மைகவ), உண் டாம் என்று உளவாகும் என்று சொல்லி, கொட்டு - முரசே மீ மூழங்குவாயாக, வெறும் - பயனற்ற, குதுப்பிரிவுகள் - வஞ்சனையோடு பொருந்திய சாதிவேறுபாடுகள் (பிரிவுகள்), போனல் - (அன்பினல்) அகன்று விடுமேயானல், துன்பங்கள் யாவுமே = எம்மைச் சூழ்ந்துள்ள வறுமை முதலான இன்னல்கள் எல்லாம், போகும் - நீங்கிவிடும்.
விளக்கம்: இக் கவிதையில் சாதிமத வேறுபாடுகளே மறந்து பாரதமக்கள் எல்லோரும் அன்பினுல் ஒன்றுபட்டால்
எய்தும் பேறுகளைக் கூறி மகிழ்கின்ற பாரதியாரின் ஆர்வப்
பெருக்கைக் காண்கின்ருேம்.
பயனற்றதும் வஞ்சனையோடு பொருந்தியதுமாகிய சாதிப்
பிரிவைப் போக்கினுல் பாரதமக்களைப் பற்றிநின்று வருத்தும்
துன்பங்கள் எல்லாம் தொலைந்து விடுதலை வாழ்வும் பெருஞ் செல்வங்களும் உளவாகுமெனக் கூறிக்கூறிப் பாரதியார் மகிழ கின்றர்.

Page 88
68 பாரதியார் பாடல்கள்
துன்பங்கள் யாவுமே போகும் வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனுல்
எனுங் கவிதைத் தொடர்களைப் படிக்கப் படிக்க எழுகின்ற ஈடு பாடு, எம்மையும் பாரதியாருடன் சேர்த்துவிடுகின்றது.
20 அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனை பேரும் நிகராம்; இன் பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்
பொருள்: முரசே - முரசப்பறையே, நீ, அன்பென்று " அன்பினல் எல்லோரும் ஒன்று படுவீர்களாக என்று சொல்லி கொட்டு முழங்குவாயாக, மக்கள் அத்தனே பேரும் - உலகில் உள்ள மக்கள் எல்லோரும், நிகராம் - ஒரே சமமானவர்கள் இங்கு - இந்தப் பாரதநாட்டில், யாவரும் - எல்லா மக்களும்,
ஒன்று என்று . ஒரே சமமானவர்கள் என்று, கொண்டால் . கொள்ளுகின்ற வழக்கம் ஏற்படுமானல், இன்பங்கள் யாவும்
மக்கள் தங்கள் வாழ்வில் அடையவேண்டிய இன்பப்பேறுகள் எல்லாம், பெருகும் - பொலிந்துவிளங்கும் (கூடும்).
விளக்கம்: இக் கவிதையில், சாதிப்பிரிவினுல் உயர்வு தாழ்வு கற்பிக்கின்ற வழக்கம் பாரதநாட்டை விட்டு நீங்கு
மானுல் ஏற்படும் பெரும் பேறுகளைப்பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கின்ற பாரதியாரின் எழுச்சியைக் காண் கின்ருேம்.
உலகில் உள்ள மக்களெல்லோரும் ஓர் இனம், ஒரேசாதி
என்ற உணர்ச்சி பாரதநாட்டில் நிலைபெறவேண்டுமெனத் துடிக்
கின்ற பாரதியாரின் கவிதை உள்ளம் வானிலும் அகன்றதாகும்.
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்
எனுங் கவிதைத் தொடர்களில் அமைந்துள்ள பொருள்வளம்
மிகமிகச் சிறந்ததாகும்.

விளக்கவுரை 69.8
எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்தியா மக்கள் எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் எனப் பாரதசமுதாயம் எனும் பகுதியில் பாரதியார் பாடியிருக் கும் கவிதைத் தொடர்களையும் நோக்குக.
2. உடன்பிறந் தார்களைப் போல - இவ்
வுலகில் மனிதரெல் லர்ரும்; இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?
பொருள்: இவ்வுலகில் - இந்நிலவுலகத்தின் கண் உள்ள, மனிதர் எல்லாரும் - மக்கள் எல்லோரும், உடன் பிறந்தார்களைப் போல - உடன்பிறந்த சகோதரர்களேயாவோம் (சகோதரர் களைப்போல் உள்ளோம்), வையத்தில் - இங்கிலவுலகின் கண், இடம்பெரிதுண்டு - (மக்களாகிய நாம்) இருந்து வாழ்தற்கு மிகப் பரந்துபட்ட பெரிய இடம் இருக்கின்றது, இதில் இங்ங்ணம் அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தில் வெவ் வேறு இடங்களில் இருந்து விரும்பிய தொழில்களே ச் செய்து வாழ்வதை விடுத்து, ஏதுக்கு - எதற்காக (என்ன பயனே அடை தற்காக), சண்டைகள் செய்வீர் - சாதிச்சண்டை, சமயச்சண்டை எனப் பல சண்டைகளே ப் புரிகின்றீர்கள்.
விளக்கம்: இக் கவிதையில் ஒரு தாய்வயிற்றுக் குழந் தைகளைப்போல உலக மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டுமெனக் கூறுகின்ற பாரதியாரின் அன்புள்ளத்தை அறி கின்றேம்.
இடம் பெரிதுண்டு வையத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்
எனப் பாரதியார் பிறநாடுகளைப் பிடித்து ஆள விரும்புகின்ற வல்ஸ்ரசுகளையுங் கேட்கின்றர். சாதிச்சண்டை சமயச்சண்டை என்பவற்றைவிட மிகக்கொடிய சண்டையாக நிலைபெற்று உலக மக்களை அல்லற்படுத்துகின்ற நிலச்சண்டை நீங்கவேண்டுமென் பதே பாரதியாரின் எண்ணமாகும்.

Page 89
170 பாரதியார் பாடல்கள்
22 மரத்தினை நட்டவன் தண்ணிர் - நன்கு
வார்த்தே ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு சேர்ந்த உணவெல்லை யில்லை.
பொருள்: மரத்தினை நட்டவன் - மரத்தை கட்டவன், (அதற்கு) தண்ணீர் - தண்ணீரினே, நன்கு - நல்லாக, வார்த்தே ஊற்றி, ஓங்கிடச் செய்வான் - அம்மரத்தின வளர்ந்திடும்வண் -ணம் செய்திடுவான், (இதேபோல) தெய்வம் - எம்மைப் படைத்த தெய்வம், சிரத்தையுடையது - எம்மேல் (மிக்க)
அன்புடையது, இங்கு - இங்கிலவுலகத்தின்கண் சேர்ந்த
உணவு - (இறைவனருளால் மக்கள் உண்டு வாழுதற்காக) உண்டான உணவுப்பொருள்கள், எல்லேயில்லை = அளவில்லாத கணவாய் விளங்குகின்றன.
விளக்கம்: இக் கவிதையில், படைத்த கடவுள் படியளப் பான், என்னும் உண்மையை எடுத்துக்காட்டி ஆர்வம் ஊட்டு கின்ற பாரதியாரின் அருள் உள்ளத்தை உணர்கின்றுேம்.
மரத்தை கட்டவன் தண்ணீர் ஊற்றி அம்மரத்தினை வளர்த் தல் போலவே எம்மைப் படைத்த தெய்வமும் எமக்கு வாழ வழிவகுக்கும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்
மரத்தை கட்டவன் தண்ணிர் ஊற்றி வளர்த்தல் - உவமானம், படைத்த தெய்வம் எமக்குப் படியளந்து ஊட்டிப் பாதுகாத்தல் - உவமேயம், அருளும் ஆற்ற லும் - பொதுத்தன்மைகளாகும். -
சிரத்தை யுடையது தெய்வம் - இங்கு சேர்ந்த உணவு எல்லை இல்லை எனவருங் கவிதைத் தொடர்கள் பாரதியாரின் தெய்வ நம்பிக் கையின் உறைப்பை எடுத்துக் காட்டுகின்றன.
23 வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்; பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.
 

r
விளக்கவுரை 7.
பொருள்: இங்கு - இவ்வுலகத்தில், வாழும் வாழ்கின்ற, மனிதர் எல்லோர்க்கும் - மக்கள் யாபேருக்கும், வயிற்றுக்கு - வயிறு வளர்ப்பதற்கு, (வயிற்றுப்பசியைத் தீர்ப்பதற்கு) சோறுண்டு கண்டீர் - சோறு இருக்கின்றது என்பதை உணர் வீர், பயிற்றி - நிலத்தை நன்கு பண்படுத்தி, (பயிர் செழித்து வளரத்தக்க பண்புடையதாக கிலத்தைப் பழக்கி யென்பதாம்) உழுதுண்டு  ைஉழவுத்தொழிலைச் செய்து அதனல் வரும்பயனை உணவாகக்கொண்டு, வாழ்வீர் - வாழ்ந்திருங்கள், பிறர் . பிற ருக்குரிய, பங்கை = பங்காக (உரிமைப்பாகமாக) உள்ள கிலம் பொருள் முதலியவற்றை, திருடுதல் வேண்டாம் - களவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
விளக்கம்: இக் கவிதையில், உழுதுண்டு வாழும் உயர்ந்த நெறியினைப் பாராட்டி யுரைக்கின்ற பாரதியாரின் புலமை உள் ளச் சிறப்பைக் காண்கின்ருேம்.
உலகில் வாழ்கின்ற மக்கள், பசிப்பிணியின்றி வாழத்தக்க வாய்ப்புகளை இறைவன் இயல்பாகவே ஈந்துள்ளான்; நிலத் தைப் பண்படுத்தி உழுதுண்டு வாழும் நெறியை மக்கள் மேற் கொள்ளாமல் தொழுதுண்டு வாழும் நெறியைப் பெரிதாக மதித்து நிற்பதினுலேயே பசிப்பிணியும், வறுமையும் உளவா கின்றன என்பதைப் பாரதியார் வலியுறுத்துகின்றர்.
வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதர் எல்லோர்க்கும்
எனுங் கவிதைத்தொடர் பாரதியாரின் உயர்ந்த நோக்கத்தைப் புலனுக்குகின்றது. வயிற்றுக்குச் சோறில்லாமல் வாழத்தக்க வறுமை மனிதருக்கு ஏற்படத்தக்க நிலையில் இறைவன் விட வில்லை என்பதாம். மனிதர்கள் முயற்சியின்றிப் பிறர் பொரு ளைத் திருடி உண்ணும் மானமற்ற நிலை மாறவேண்டுமென்பதே
பாரதியாரின் வேட்கையாகும்.
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்
எனும் கவிதைத் தொடர்கள் மக்கள். தன்மானத்துடன் வாழத்
தக்க வழியை வகுத்துக் காட்டுகின்றன.

Page 90
72 பாரதியார் பாடல்கள்
வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதர் எல்லோர்க்கும் பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் எனுங் கவிதைத் தொடர்களுடன்,
இலமென்று அசைஇ இருப்பிாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் எனவும்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்
எனவும் வரும் திருக்குறள்களையும் ஒப்பிட்டு நோக்குக.
24 உடன்பிறந் தவர்களைப் போலே - இவ
வுலகினில் மனிதரெல் லோரும் திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்கு
தின்று பிழைத்திட லாமோ?
பொருள்: இவ்வுலகினில் - இந்த நிலவுலகத்தின் கண் வாழ் கின்ற, மனிதர் எல்லோரும் - மக்கள் யாவரும், உடன்பிறந்த வர்களைப்போலவே - உடன்பிறந்த சகோதரர்களைப் போன்ற வர்களேயாவர், (இவ்வுண்மையை மறந்து) இங்கு - உலகில், திடங்கொண்டவர் - வலிமையுடையவர்கள், மெலிந்தோரை = வலிமை அற்றவரை (மெலியவரை), தின்று - வருத்தி, (அவர்க ளின் பொருள்களைப் பறித்து) பிழைத்திடலாமோ தாங்கள் மாத்திரம் வாழ்ந்திடலாமோ.
விளக்கம்: இக் கவிதையில் வலியோர் மெலியோரை வருத்தி அவர்களின் செல்வங்களையெல்லாம் தமதாக்கி வாழ் கின்ற வன்கண்மையை இடித்துரைக்கும் பாரதியாரின் இரக்கக் குரலைக் கேட்கின்றேம்.
உடன்பிறந்தாரைப்போல் ஒருவர்க்கொருவர் உதவி வாழ வேண்டிய மக்கள், விலங்குகளைப்போல வேறுபட்டு, வலிமை மிக்கோர், வலிமை அற்றேரை வருத்தி வாழ்கின்ற கொடுமையை எண்ணி எண்ணிப் பாரதியார் இரங்குகின்றர்.
ཀ།
 
 
 
 
 
 

விளக்கவுரை 73
திடங் கொண்டவர் மெலிந்தோரை - இங்கு தின்று பிழைத்திட லாமோ,
என உலக மக்களை நோக்கிப் பாரதியார் மிக உணர்ச்சியுடன்
(3a}, Lʼf3)göT (13ñ.
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர் நோக மனிதர் வாழும் வாழ்க்கை இனியுண்டோ
எனப் பாரதசமுதாயம் எனும் பகுதியில் பாரதியார் UTigUqsir GIF
கவிதைத் தொடர்களையும் நோக்குக.
உடன் பிறந்தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதர் எல்லோரும்
எனும் தொடர்கள்
யாதும் ஊரே யாவருங் கேளிர்
எனவரும் புறநானூற்றுத் தொடரையும்
திடங் கொண்டவர் மெலிந்தோரை - இங்கு தின்று பிழைத்திட லாமோ
எனும் தொடர்கள்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து
எனவரும் திருக்குறளையும் நினைவூட்டுகின்றன.
25 வலிமை யுடையது தெய்வம், ட நம்மை
வாழ்த்திடச் செய்வது தெய்வம்; மெலிவுகண் டாலும் குழந்தை ட தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ? பொருள்: தெய்வம் - தெய்வமானது, வலிமை உடையது மிகுந்த ஆற்றலுடையது, நம்மை = எங்களேயெல்லாம். வாழ்க் திடச் செய்வது - (இவ்வுலகில் இருந்து) வாழும் வண்ணம் வைப் பது, தெய்வம் - தெய்வமேயாகும், மெலிவுகண்டாலும் வல்

Page 91
74. பாரதியார் பாடல்கள் \
லமை இன்மையை அறிந்தாலும், (வாழக்கூடிய வல்லமை இன் மையைக் கண்டாலும் என்பதாம்) குழந்தை தன்னே - (தாம் பெற்ற) குழந்தை (பிள்ளை)யினை, வீழ்த்தி மிதித்திட லாமோ - (பெற்றேர்) கிலத்தில் வீழ்த்தி மிதித்து வருத்த லாமோ, (அங்ங்ணம் பெற்ருேர்கள் மெலிந்த குழந்தையென்று? எண்ணி வருத்தமாட்டார்கள் என்பதாம்),
விளக்கம்: இக் கவிதையில், தெய்வத்தின் முன்னிலையில் வலியவர்கள் மெலியவர்கள் என்ற வேறுபாடு கிடையாதென் னும் உணமையைக் கூறுகின்ற பாரதியாரின் புலமை உள்ளத் தைக் காண்கின்ருேம்.
மெலிந்த குழந்தையைப் பெற்றேர் வீழ்த்தி மிதிக்க மாட் டார்கள். அதேபோலத் தெய்வமும் வலியவர் மெலியவர் என்ற வேறுபாடில்லாமல் எல்லோரையும் வாழ்விக்கும் ஆற்றலுடையது என்பதாம்.
வலிமை யுடையது தெய்வம் நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் எனுந் தொடர்கள பாரதியாரின் தெய்வ நம்பிக்கையைக் காட்டு கின்றன.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது, எனுந் திருக்குறளையும்
ஆயக்கடவேன் யானேதான் என்னதோ இங்கு அதிகாரம் காயத்திருவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே
எனவரும் திருவாசகத் தொடர்களையும் நோக்குக.
26 தம்பிசற்றே மெலிவானுல் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி ட மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

விளக்கவுரை 175.
பொருள்: தம்பி - உடன்பிறந்த தம்பியானவன், சற்றே மெலிவானுல் - சிறிது வல்லமையற்றவனுக இருந்தால், அண் ண ன்தான் - அவனின் உடன்பிறந்த தமையஞனவன், அடிமை கொள்ளலாமோ - (வலிமையில் குறைந்துவிட்டான் என்பது பற்றி) தன் தம்பியைத் தனக்கடிமை யாக்கலாமோ, செம்புக் கும் - பரணத்துக்கும் (காசுக்கும்), கொம்புக்கும் - (கொல்லும் ) போர்ப்படைக் கருவிகளுக்கும், அஞ்சி - அச்சங்கொண்டு, மக் கள் - மனிதர்கள், சிற்றடிமைப்படலாமோ - (தம்மைப்போன்ற பிற மனிதரின்கீழ்) கீழ்த்தரமான அடிமைக்ளாய் இருந்து வாழலாமோ?
விளக்கம்: இக்கவிதையில், வலிமை மிக்கவர்களின் பணத்துக்கும் படைக்கும் அஞ்சி வலிமையற்றவர்கள் அடி மைப்பட்டு வாழ்வதை, இடித்துரைத்து, விடுதலை உணர்ச்சியை ஊட்டுகின்ற பாரதியாரின் உயிர்த்துடிப்பைக் காண்கின்ருேம்.
உலக மக்கள் எல்லோரும் உடன்பிறந்தோர்களாவார், என் னும் உண்மையை மறந்து, வலிமையற்றவர்களை வலிமை மிக், கோர், தமது பணப்பெருக்கினுலும், படைப்பெருக்கினுலும் அடக்கி அடிமைப்படுத்துவதை எதிர்த்துப் போராடவேண்டுமென் பதே பாரதியாரின் கொள்கையாகும்.
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடிமைப் படலாமோ? எனப் பாரதியார் எழுப்புகின்ற குரலிலே சுதந்திரவெறி கிடந்து அலைமோதுவதை உணருங்கள்.
(செம்பு என்பது காசையும், கொம்பு என்பது போர்க்கருவிகளையும் உணர்த்துகின்றன. கொம்பு - குண் டாந்தடி, அஃது, குறிப்பாகப் போர்க்கருவிகளைக் குறிக்கும். பொதுப்பெயராக இச்செய்யுளில் இடம்பெற்றுள்ளது).
ஓர் நாட்டினர் வல்லமை அற்றவர்களானுல் அவர்களை வல் லமைமிக்க இன்னுெரு நாட்டினர் அடக்கி அடிமைப்படுத்துதல் அன்பினுல் அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டுமெனக் கூறும்

Page 92
76 பாரதியார் பாடல்கள்,
மக்களின் பகுத்தறிவுக்கும் பண்பாட்டிற்கும் பொருந்தாத கொடுஞ்செயலாகும் என்பதைப் பாரதியார் அழுத்தம் திருத்த மாக எடுத்துக் காட்டுகின்றர்.
தம்பி சற்றே மெலிவானுல் அண்ணன் தானடிமை கொள்ள லாமோ எனப் பாரதியார் எழுப்புகின்ற குரல் உலக சமாதானத்தை விரும்புகின்ற அறிஞர்களுக்குப் புதியதோர் சிந்தனை விருந்தாக நின்று பொலிகின்றது.
27 அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு; பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்.
பொருள்: முரசே - முரசப்பறையே, நீ, அன்பென்று - அன்புதான் மக்களினத்தின் ஆக்கத்திற்குப் பெருந்துணையானது என்று சொல்லி, கொட்டு - முழங்குவாயாக, அதில் - அங்ங் னம் அன்புணர்ச்சி மக்கள் உள்னத்தில் ஊறிச் சுரக்குமானல், யார்க்கும் - உலக மக்கள் எல்லோருக்கும், விடுதலே உண்டு - அடிமை வாழ்வு இன்றி சுதந்திரமாக வாழும் பெரிய பேறு கிடைக்கும் (உண்டாகும்), பின்பு - விடுதலைப்பேறு கிடைத்த பின் மனிதர்கள் எல்லாம் - மக்கள் யாவரும் கல்வி பெற்று - கல்வி அறிவை அடைந்து, பதம்பெற்று வாழ்வார் - (இவ்வுல இல்) பெரும்பதவிகளையும் (அவ்வுலகில் இறைவன் திருவடிப் பேற்றையும்) அடைந்து, வாழ்வார்கள்,
விளக்கம்: இக் கவிதையில், மக்கள் எல்லோரும் அன் பினுல் ஒன்றுபட்டால் எய்தும் பேறுகளைச் சொல்லி மகிழ் கின்ற பாரதியாரின் சுதந்திரதாகத்தை உணர்கின்றேம்.
மக்கள் எல்லோரும் அன்பினுல் ஒன்றுபட்டு ஒருவரை
யொருவர் அடிமைப்படுத்தாமல், சுதந்திரமாக வாழ்வதினுல்,
பல ஆக்கங்கள் உளவாகும் எனப் பாரதியார் உரைக்கின் ரூர் சுதந்திர வாழ்வுபெற்ற மக்கள் கல்வியறிவில் மிக்கவர்

விளக்கவுரை 177
களாய் இவ்வுலகிலும் நல்வாழ்வு வாழ்ந்து, அவ்வுலகிலும் பேரும்பேற்றை அடைவார்கள் என்பதாம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பது திருக்குறள்,
28 அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனே டேருக்கும் ஒன்ருய் சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்,
பொருள்: மக்கள் அத்தனே பேருக்கும்  ைமக்கள் எல்லோ ருக்கும், ( வறியவர், செல்வர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என் னும் வேறுபாடுகளை விடுத்து ) ஒன்முய் - ஒரேவகையான வாய்ப்புக்களே வழங்கி (சமசந்தர்ப்பங் கொடுத்து ), அறிவை வளர்த்திட வேண்டும் கல்வியறிவைப் பெருக்கவேண்டும் , சிறியாரை (இங்ஙனம் கல்விகற்கச் சமசந்தர்ப்பங் கொடுப் பதினுல்) கீழ்கிலேயில் இருப்போரை, மேம்படச் செய்தால் . அறிவு ஆற்றல்களில் சிறந்தோங்க வைத்தால், பின்பு அதன் பிறகு, தெய்வம் - (எல்லோரையும் தன் மக்களாகக் கருதிக் கருணே புரிகின்ற) தெய்வம், எல்லோரையும் மக்கள் எல் லோரையும், வாழ்த்தும் கல்வாழ்வு பெற்றிடத் திருவருள் புரியும்,
விளக்கம்: இக் கவிதையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் வேறுபாடின்றி எல்லோர்க்கும் கல்வியறிவை ஊட்ப வேண்டுமெனக் கூறுகின்ற பாரதியாரின் பரந்த நோக்கத்தைக் காண்கின்ளுேம்,
கல்வியறிவை உயர்ந்தவர்கள் எனக் கூறப்படும் ფპტ பகுதியாருக்கே ஊட்டி, மற்றைய மக்களுக்குக் கல்வி கற்கச் சம உரிமை வழங்காமல் அடக்கிவைத்த கொடுமையைப் பாரதி யாரால் போறுக்க முடியவில்லை,
அறிவை வளர்த்திட வேண்டும். ਸੰ அத்தனே பேருக்கும் ஒன்ருய் 2 ,ܦ

Page 93
78 பாரதிய்ார் பாடல்கள்
எனப் பாரதியர் எடுத்துரைக்கின்ற கொள்கை கட்டாயக் கல்வி யின் இன்றியமையாமையை விளக்குகின்றது. மக்கள் எல்லோ ருக்கும் சமமாகக் கல்வியறிவை யூட்டினுல் கீழ்நிலையில் உள்ள மக்களும் மேல்நிலையை அடைவார்கள் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
எனும் தொடர்களில், அறிவை உயர்வு தாழ்வு பாராமல் மக்கள் எல்லோருக்கும் அளிப்பதுதான் தெய்வத்தின் திருவுளச் சம்மத மாகும் என்பதைப் பாரதியார் வலியுறுத்துகின்றர்.
ஏழை யென்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை, சாதியில்
இழிவு கொண்ட மனித தென்பது
இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமான மாக வாழ்வமே,
என, விடுதலை என்னும் பகுதியில் பாரதியார் பாடியுள்ள இக் கவிதையையும் நோக்குக.
29 பாருக் குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமை செய்யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்,
பொருள்: பாருக்குள்ளே - இவ் வுலகின் கண்ணே, சமத் தன்மை = எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் எனக் கொள்கின்ற சமத்துவத் தன்மை என்னும் கொள்கையும், தொடர் (உலக மக்கள் எல்லோரையும்) ஒன்ருக்கித் தொடர்பு படுத்தும் (இணைக்கும்) பற்றும் அன்பும், சகோதரத்தன்மை = (அந்த அன்பென்னும் உணர்ச்சியிஞல் உண்டாகின்ற) சகோ
 

விளக்கவுரை 79
தரத்தன்மை யென்னும் (சகோதரத்துவம்) உடன் பிறப்புணர்ச் சியும் உண்டாகுமானுல் யாருக்கும் - எவருக்கும், தீமை செய் யாது - கெடுதியை உண்டாக்காது, புவி எங்கும்  ைஉலகில் உள்ள யாவருக்கும், விடுதலே செய்யும் விடுதலை என்னும் சுதந்திர வாழ்வை உளவாக்கும் (கொடுக்கும்)
விளக்கம்: இக் கவிதையில், சமத்துவம், அன்பு சகோ தரத்தன்மை என்பவை உலக மக்களிடத்தில் நிலவி அவர்க ளின் வாழ்வில் சுதந்திர ஒளி தோன்றவேண்டுமெனச் சொல்லி மகிழ்கின்ற பாரதியாரின் பரந்த உள்ளச் செழிப்பை உணர் கின்ருேம்,
உலகில் சமத்துவம் என்னும் மக்கள் உரிமை நிலைபெறு மானுல் அவ்வுரிமை எல்லோரையும் ஒன்றுபடுத்தும் அன்பை யும், அந்த அன்பின் குழைவினுல் உளவாகும் சகொதரத்துவம் என்னும் உடன்பிறப்புணர்ச்சியையும் தோற்றுவித்து மக்கள் வாழ்வை வளம்படுத்தும் விடுதலைப் பெரும்பேற்றையும் கொடுத்து விடும் என்பதே பாரதியாரின் எண்ணமாகும்.
பாருக்குள்ளே சமத்தன்மை தொடர்பற்றுஞ் சகோதரத்தன்மை
எனுங் கவிதைத் தொடர்களில் பாரதியாரின் அறிவகலமும் கருணை நெஞ்சமும் அப்படியே புலனுகின்றன. சமத்துவம் என்பது சரிநிகர் சமானத்தையும், தொடர்பற்று என்பது எல்லோரையும் ஒன்றுபடுத்தித் தொடர்பு செய்யும் அன் பையும், சகோதரத்தன்மை என்பது எல்லோரும் உல கம் என்னும் அன்னேயின் மக்கள் என எண்ணும் பரந்த கோக்கத்தையும் குறிக்கின்றன.
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலே செய்யும்
எனும் தொடர்கள், இந்திய மக்கள் மாத்திரமன்றி உலக மக்கள் எல்லோரும் விடுதலை பெற்றுயர வேண்டுமென விரும்புகின்ற பாரதியாரின் பரந்த நோக்கத்தைக் காட்டுகின்றன,

Page 94
80 பாரதியார் u Pru.” GY56řir
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு சங்குகொண் டேவெற்றி ஊதுவோமே இதைத் தரணிக் கெல்லாம் எடுத்து ஒதுவோமே
எனச் சுதந்திரப்பள்ளு என்னும் பகுதியில் பாரதியார் பாடி யுள்ள கவிதையையும் நோக்குக.
30 வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்: பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும், பொருள் இங்கு - இந்த நிலவுலகத்தில், வாழம் மனித ருக்கெல்லாம் - வாழ்கின்ற மக்கள் எல்லோருக்கும், வயிற் றுக்கு சோறிட வேண்டும் வயிற்றில் பசியென்னும் கொடும் பிணி தோன்முதவண்ணம்) உண்ணுதற்கு உணவு கொடுக்க வேண்டும், (ஆங்ஙனம் உணவை மாத்திரங் கொடுப்பதுடன் அமையாது) பல கல்வி - பலதிறப்பட்ட கல்வித் துறைகளே யெல்லாம், பயிற்றித் தக்து - கற்பித்துதவி, இந்தப்பாரை = (அதனுல்) இங்கிலவுலகத்தை, உயர்த்திட வேண்டும் உயர் வடையச் செய்தல் வேண்டும்
விளக்கம்: இக்கவிதையில் வயிற்றுப்பசியைப் போக்கி யும், கலையறிவை ஊட்டியும் மக்களை வளம்படுத்த வேண்டு மெனக் கூறுகின்ற பாரதியாரின் ஆர்வக் குரலைக் கேட் கின்றுேம்.
உணவின்றி மக்கள் வருந்தக்கூடிய வறுமை ஒரு நாட் டில் நிலவுமானுல் அந்நாட்டில் அமைதியைக் காணமுடியாது. முதற்கண் மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டும். இங்ஙனம் உடலை வளர்க்கும் உணவைக் கொடுத்தலுடன் அமையாது அறிவை வளர்க்கும் கல்வியையும் ஊட்டவேண்டும் என்பதே பாரதியாரின் கொள்கையாகும். பசிப்பிணியைப் போக்குதலே முதற்கடமையாகப் பாரதியார் குறிப்பிட்டுள்ளார். பசிவந்திடப் பத்தும் பறக்கும், என்பது பழமொழி.
 
 
 
 

l
விளக்கவுரை 81.
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணே விடுஉம் நானணி களையும் மாணெழில் சிதைக்கும் பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி
என மணிமேகலையிற் பசிப்பிணியின் கொடுமைகளைப்பற்றிக் கூறியுள்ள வற்றையும் நோக்குக.
3. ஒன்றென்று கொட்டு முரசே! - அன்பில்
ஒங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! - இந்த நானில மாந்தருக் கெல்லாம்.
பொருள்: முரசே - முரசப்பறையே, ,ே ஒன்றென்று = (இவ்வுலகில் வாழ்கின்ற) மக்கள் எல்லோரும் ஓர் குலத்தினர் என்று சொல்லி, கொட்டு - முழங்குவாயாக, அன்பில் - அன் பினல் ஒன்று பட்ட பெருவாழ்வைப் பெற்று, ஒங்கென்று - மக்கள் எல்லோரும், சிறப்படைவார்களாக என்று சொல்லி, முரசே - முரசப்பறையே, ,ே கொட்டு - முழங்குவாயாக, இந்த - இ வ் வுல கிற் காணப்படும், 15ாவில முல்வல, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகைப்பட்ட நிலப் பிரிவுகளில், வாழ்கின்ற, மாந்தருக்கெல்லாம் - மக்கள் எல் லோருக்கும், கன்றென்று கன்மை உளவாகுக என்று சொல்லி, முரசே - முரசப்பறையே, கொட்டு = நீ, முழங்கு @dilloff 359
விளக்கம்: இக் கவிதையில் மக்கள் எல்லோரும் அன்பி னுல் ஒன்றுபட்டு வாழ்வார்களாக என வாழ்த்தித் தமது கவிதை முரசை நிறைக்கின்ற பாரதியாரின் ஆர்வக்குரலைக் கேட் கின்றேம்.
அன்பினுல்தான் உலகில் அமைதியைக் காணமுடியுமென் னும் உண்மையைப் பாரதியார் மிகத் தெளிவாகக் கூறுகின்றர்
ஒன்றென்று கொட்டு முரசே! - அன்பில் ஒங்கென்று கொட்டு முரசே!

Page 95
? 28。 182 பாரதியார் பாடல்கள்
என, அன்பினுல் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஓங்க வேண்டுமெனப் பாரதியார் வாழ்த்துகின்றர்.
அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மாந்தளிர்த் தற்று
எனவரும் திருக்குறள்களே கோக்குக. -
நிலப்பிரிவன்றி, உயர்வு தாழ்வுகளைப்பற்றி மக்களைப் பிரித் துக் கூறும் குலப்பிரிவு இயற்கையானதன்று, என்பதை உளங் கொண்ட பாரதியார்,
நன்றென்று கொட்டு முரசே இந்த
நானில மாந்தருக் கெல்லாம் எனுந் தொடர்களில் நால்வகைப்பட்ட நிலத்தில் வாழும் உரிமை பற்றி மக்களை, கானில மாந்தரெனக் கூறினர்.
முற்றிற்று.
 

வித்துவான், பண்டிதர், சைவப்புலவர் க. வேந்தனுர் அவர்களால் இயற்றப்பட்டு இனி வெளிவர இருக்குக்
நூல்கள்
குழங்தைக் கவிதைகள் ஈழநாட்டுத் தமிழ் மணிகள் நன்னூல் விருத்தி, உரை விளக்கம் சிலப்பதிகாரத் தெளிவு வீரமகேந்திரம் ” திருமுறைச் செல்வம்
கட்டுரைக் களஞ்சியம்

Page 96
சைவப் பிரகாச
அச்சியந்திரசாலே யாழ்ப்பாணம்
 


Page 97