கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூவர் கதைகள்

Page 1


Page 2
ܢ -*
SY
-
- - ܥ
-
-
s - -
"
-
ܝ.
-
-
.
"
፲፩
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 3
ܘ .
-
-
-
',
-
-
-
ܡ
-
ܝ
V
,ܠܐ
-
- -
.
 

དམ་པ་༽ ༈ ། All- A. vijo 三了 竇 s
༄། من رجلا செக திர்காமநாதன் செ. யோகநாதன் நீர்வை பொன்னையன்
நவயுகப் பதிப்பகம் யாழ்ப்பாணம்
t

Page 4
நவயுகப் பதிப்பகம்
விலை ரூ. 3-00
1 - 5 - 71
ஆனந்தா அச்சகம். ஆ82/5, ட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13.

FLDITIILI600TLD
உலகத்துத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக் காகப் போராடி உயிர் நீத்த வீரம்செறிந்த மே தினப் போராளிகளுக்கு.

Page 5

முன்னுரை
பத்து இலக்கிய நண்பர்கள் சேர்ந்து ஆளுக் கொரு கதையாகப் பத்துச் சிறுகதைகள் கொண்ட தொகுதியொன்றை வெளியிட சில மாதங்களுக்கு முன் முயன்ருேம். பல்வேறு கார ணங்களினல் அத்திட்டம் நிறைவேருது போ யிற்று; ஆயினும் அதிலே சம்பந்தப்பட்டவர் களில் நாம் மூவரும் இணைந்து ஆளுக்கு மும்மூன் ருக ஒன்பது கதைகளடங்கிய தொகுதியை வெளியிடும் வாய்ப்பு ஒன்று உருவாகியது. அதன் விளைவாக மூவர் கதைகள் இப்பொழுது உங்கள் கைகளிற் கிடக்கிறது.
இலக்கிய ஆர்வத்தினுல் நாம் ஒன்றுபட்டிருக் கின்றே மாயினும், அடிப்படையில் இலக்கியத்தின் பண்பையும் பணியையும் பயனையும் பற்றிய கருத் தோட்டத்தினுலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு எம்மிடையே ஒற்றுமை இருப்பதை உணர்ந் தோம். பதின்மரிலிருந்து மூவராக எண்ணிக்கை குறைந்ததற்கும் இது ஒரு காரணமாகலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஐம்பதாம் ஆண்டுகளில் இலக்கிய உலகில் நெருங்கிய தொடர்பு கொண்டு, அறுபதுகளில்

Page 6
ஏழுதத் தொடங்கிவிட்ட நாம், இக்கால கட்டத் தில் எமது இலக்கிய உலகில் ஏற்பட்ட இயக்கங்
களையும், சலனங்களையும் அவற்றின் விளைவுகளை
யும் இலாப நட்டங்களையும் ஒரளவிற்கு நன்கு அவதானித்து வந்திருக்கின்ருேம்.
கடந்த பத்தாண்டு காலத்துக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு நெருங் கிய தொடர்புடையோராய் இருந்து வந்தமை யால் முற்கூறிய இயக்கங்களையும் அவற்றின் பெறுபேறுகளையும் வெறும் தூரத்துப் பார்வை யாக அன்றி, அனுபவ ரீதியில் நாம் அறிந்து கொண்டோம். இலக்கியத்தைப் படைப்பதில் ஈடுபட்டிருக்கும் நாம் செய்முறை மட்டுமல்லாது இலக்கியக் கொள்கையையும் ஊன்றிச் சற்றுக் கவனித்து வந்திருக்கின்ருேம். எந்த ஒரு இலக் கியக் கொள்கையும் இறுதி ஆய்வில் அரசிய லிலிருந்து விலகியதன்று என்ற முக்கியமான உண்மையை நாம் முற்ருக உணர்ந்திருக்கின் ருேம். ஆகவே அரசியல் அரங்கில் ஏற்படுகின்ற மாற்றங்கள் சகல துறைகளையும் பாதிக்கின்றன என்பதையும் நாம் உணர்ந்திருந்தோம்.
1956ல் ஈழத்து அரசியல் அரங்கில் ஏற் பட்டமாற்றங்கள் சகல துறைகளையும் சிந்தனை களையும் பாதித்தன. இம்மாற்றங்களுக்குள் கலை இலக்கியத்துறையும் உட்பட்டிருக்கின்றது. 1956ம் ஆண்டுக்குப்பின் ஈழத்துக் கலை இலக் கியத்துறையில் ஒரு விழிப்பும் எழுச்சியும் பிறந் ததுடன் கலை இலக்கிய சிருஷ்டிகள் ஒரளவுக்கு மக்களின் வாழ்க்கையோடு இணைந்து முன்னேறி
யுள்ளன.
1966ம் ஆண்டு அக்டோபர் ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் மற்றுமொரு மைல் கல் லாக அமைந்துள்ளது. ஈழத்தின் வட பிரதேசத் தில் நிலப் பிரபுத்துவத்தின் சாபக்கேடான சாதி

அமைப்புக்கெதிரான போராட்ட இயக்கம் கலை இலக்கிய சிருஷ்டிகளில் பெரும் பாதிப்பை ஏற் படுத்தியது, இவற்றில் ஒரளவுக்கு சில குறை பாடுகள் இருந்த பொழுதும், இவை அடிப்படை யில் கடந்தகால கலை இலக்கியத்தன்மையிலிருந்து மாறுபட்டனவாகவும், உத்வேகமுடையனவாக வும், நடைமுறையில் மக்களுக்குச் சேவை செய் வனவாகவுமிருந்தன.
1970ம் ஆண்டு மேயில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் கலை இலக்கியத் துறையில் பெரும் மாற் றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனல் ஆரம்பத்தில் கலை இலக்கியத் துறையில் சிறிது சலசலப்பிருந்ததேயன்றி எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் எதுவும் நடைபெற
வில்லை.
முற்போக்கான அரசியல் நம்பிக்கை எம்மூவ ருக்கும் குறைந்தபட்ச ஒருமைப்பாட்டை அளிக் கின்றது. அதன் விளைவாக எதிர் காலத்தில் உறுதியான நம்பிக்கையும், சிறப்பான எதிர் காலத்தில் நம்பிக்கை கொண்டதோடமையாது அதை உருவாக்கும் பணியில் - போராட்டத் தில் - எழுத்தாளனுக்கும் பங்குண்டு என்ற உறு திப்பாடும், அத்தகைய போராட்டம் விஞ்ஞான பூர்வமான தத்துவத்தையும் வெகு ஜனங்களின் பங்குபற்றலையும் நிறைவாகப் பெற்றிருக்க வேண் டும் என்ற உணர்வும் எமக்குப் பொதுவான நம் பிக்கையாயிருக்கின்றது. இந்த நம்பிக்கை எமக் குப் பொதுவாக இருப்பதால், வெவ்வேறு அள வில் இக்கதைகளிலும் பிரதிபலிக்கின்றது. தனிப் பட்டவர்களின் ஆளுமை க்கேற்பவும், அனுபவம்,
ஆற்றல், கல்வி, பயிர்ச்சி என்பனவற்றுக் கியை
யவும் இந்த நம்பிக்கை பெறும் அழுத்தம் வேறு படக் கூடும். ஆனல் மாற்றம் வேண்டும் என்ற

Page 7
எண்ணம் ஏறத்தாழ எல்லாக் கதைகளிலுமே இழையோடுகிறது என்பதில் தவறிருக்காது.
ஒரளவிற்கு வழமையான சிறுகதை வடிவத் தில்,அமைந்துள்ள வெறும் சோற்றுக்கே வந்தது என்ற கதையும், குறுநாவல் என்றே கூறவேண் டிய திருச்சிற்றம்பலம் என்ற படைப்பும், விவ ரணச் சித்திரம் (Reportage) என்று கூறத்தகும் எழுச்சி என்ற சிருஷ்டியும் இத்தொகுதியிற் காணப்படும் பல்சுவைக்கும் பன்முகப் பாட்டுக் கும் தக்க சான்றுகள் எனலாம். பொதுவான தத்துவத்தையோ - கொள்கையையோ - சித் தாந்தத்தையோ - எழுத்தாளர்கள் மனப்பூர்வ மாக ஏற்றுக்கொண்டாலும் வாழ்க்கைக்குப் புறம் போகாமல் இயங்கி எழுதினல் ஒரேவகையான கதைகளையோ, ஒரே அச்சில் வார்த்தவை என்று கூறத்தக்கனவற்றையோ எழுத வேண்டியதில்லை என்பதற்கும், கலைத்துவத்திற்கும் தத்துவத்திற் கும் முரண்பாடு இருக்க வேண்டியதில்லை என்ப தற்கும் இக்கதைகள் ஓரளவு உதாரணங்களாக உள்ளன என்பது எமது பணிவான அபிப்பிரா யம். ஆயினும் இதற்குத் தீர்ப்புக் கூறவேண்டி யவர்கள் இந்த நாட்டின் உழைக்கும் வெகுஜனங் களே யாவர்.
செ. கதிர்காமநாதன் செ. யோகநாதன் 1-5-71 நீர்வை பொன்னையன்

Gif. 555 TLD5 Tg56t

Page 8
O
1. வெறும் சோற்றுக்கே வந்தது
2. ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
3. தாய் மொழி மூலம்

வெறும் சோற்றுக்கே
வந்தது
lன்னல்களைத் திறந்து விட்டால் வெளியே ருேட்டுத் தெரிகிறது. நீண்ட, அகலமான, தார் ஊற்றப்பட்டு ஒப்ப ரவு செய்யப்பட்ட நேர்த்தியான ருேட்டு அது. எந்த நேர மும் அந்த ருேட்டு சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. அடிக் கடி பஸ்களும் கார்களும், அங்குமிங்குமாக அலையெறிந்து கொண்டிருக்கும் மனித வெள்ளமுமாக, அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
ஒரு நாள் பூரா கண்ணுடி யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, அவளது பார்வைக்கு எட்டக்கூடிய தூரத்தி லேயுள்ள அந்த ருேட்டிலே என்ன நடந்து கொண்டிருக்கிற தென்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வள்ளிக் குப் பழக்கப்பட்டுவிட்டது . இதற்கு முன்பெல்லாம் அவ ளுக்கு இத்தகைய பரபரப்பான மஹேந்திர ஜாலங்கள் நிறைந்த ருேட்டுகளைத் தெரியாது. அவள் கண்டதெல்லாம் வெறும் புழுதி ருேட்டுகளும், காட்டுமரஞ் செடிகளும், காய்ந்து கறுத்த சில மனிதர்களும் டிராக்டர்களும் மட் டுமே. கிளிநொச்சி வட்டாரமொன்றைச் சேர்ந்த குடி யேற்ற நிலப்பகுதியொன்றில் ஏழு குழந்தைகளுக்கு ஒரு அக்காவாக ஒரு சிறிய குடிசையொன்றுக்குள் பசியும் பட்
I

Page 9
மூவர் கதைகள்
டினியும் அழுகையும் அச்சமுமாக வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்த வேளையில்தான் அவளை அதிர்ஷ்டம் வந்து அணைத்து விட்டதாகப் பெற்றேர் சொன்னர்கள்.
அவளுக்கு அது எப்படியான அதிர்ஷ்டம் என்பது தெரி யாது. தாயைக் கேட்டாள். அவளுக்கு மூன்று நேரமும் வேளா வேளைக்கு, இறைச்சி, மீன், முட்டையோடு சாப் பாடு கிடைக்கப்போகிற தென்றும் விதம்விதமான சட்டை களை அவள் அணியலாமென்றும், வசதியும் காற்ருேட்டமும் நிறைந்த பெரியதொரு வீட்டிலே பொழுது கழியப் போகிற தென்றும் மகிழ்ச்சி நிரம்பிய முகத்தோடு தாய் கூறினள். இறைச்சி, மீன், முட்டையென்றதும், முதலில் வள்ளிக்குத் தலைகால் புரியவில்லை. இத்தகைய சாப்பாடுகளை அவளது சொந்த வீட்டிலே எங்கே காண முடிகிறது? சாம்பல் மொந் தன் வாழைக் காய்களை வெட்டி நறுக்கி- பூசனிக் காய்களைப் பிளந்து துண்டுகளாக்கி-தினம் தினம் சமையல் நடக்கிறது. சாப்பிட்டு நாவுக்கும் சலிப்புத் தட்டிவிட்டது. பூசனிக் கா யையும், வாழைக் காயையும் க்ண்ட வள்ளிக்கும் ஒருவித வெறுப்பு வந்து விட்டது.
வள்ளிக்குக் கொழும்பிலே ஒரு வீட்டில் வேலை கிடைத் திருக்கின்ற செய்தி மற்றக் குழந்தைகளுக்குள் பரவியது. இறைச்சி, மீன், முட்டை, இந்தச் சொல் லேசாக ஒரு பொ ருமையையும் அவர்களுக்குள் கிளறிவிட்டது. வள்ளிக்கு நேரே இளையவளான காந்தி, தாயின் சேலைத் தொங்கலைப் பலாத் காரமாகப் பற்றி இழுத்துத் தன்னையும் வேலைக்கு அனுப்பும்படி கெஞ்சிக்கேட்டுக்கொண்டாள். அவளின் கெஞ்சல் தாயின் காதுகளில் ஏறவில்லையென்றதும் கண் களில் கண்ணிர் துளிர்த்துவிட்டது. அவளது ஆய்க்கினை யால் சினமுற்று, தாய் கைகளை ஒங்கியபோது காந்தியின் உள்ளம் ஆவேசமடைந்து, விம்மலுக்கிடையே புலம்பினள்.
*அவவுக்கு நெடுக-வாரப்பாடு தன்ரை மூத்த மேளிலை தான்! எங்களிலை எப்பெனும் பாசமில்லை. அவளுக்கு
12
s

வெறும் சோற்றுக்கே வந்தது
இறைச்சி, மீன், முட்டையோடு சாப்பாடுபோட்டுக் கொழுக்க வைக்க வேணுமெண்டு, அனுப்ப நினைக்கிரு. எங்களைப்பற்றி, எள்ளளவும் நினைக்கிரு இல்லை. அவளை விட நான்தானே ஒல்லி? எனக்குத்தானே கைகாலெல்லாம் எலும்பு தெரியுது. நான்தானே பேத்தைச்சி மாதிரி இருக்கி றேன்? என்னை அனுப்பினல், கொழுத்துவந்திடுவேன் எண்டு அவவுக்குப் பொருமையா இருக்கு. ஒரு வாழைக்காயை யும், கோதம்பைப் புட்டையும் காய்ச்சிக் காய்ச்சித் தந் துட்டு வேலை மட்டும் மாடு மாதிரி வாங்கிப் போடுவா. பாப்பம். பாப்பம். இனிப் பாப்பம், பிள்ளை எண்டு கெஞ் சிக்கொண்டு வேலை செய்விக்க வா, காட்டித் தாறன்."
தாயும் தந்தையும் கம்பீரமான தமது உடலைக் கோணிக்குறுகலாக்கி முகம் விகCக்க ஐம்பது ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அவளை யாரோ ஒரு அந்நியனுடன் வழி யனுப்பி வைத்தபொழுது காந்தி சொன்னது போல அவ ளுக்கு இனிக் கோதுமைப்புட்டும் வாழைக்காய்க்கறியும் சம் பலும் நித்திய சாப்பாடாகாது என்ற எண்ணமே பிரிவுத் துயரைப் போக்கடித் திருந்தது. இறைச்சி.1 மீன்! முட்டை! அவற்றை அவளால் கற்பனை செய்ய முடியவில்லை! அவளது வீட்டிலே நற்கும் நாலைந்து கோழிகள் ஒன்று மாறி ஒன்று இட்டுத் தள்ளும் முட்டைகளை, ஸ்கூல் மாஸ்டர் வீட்டுக்கும் சனிற்ரறி வீட்டுக்கும் எடுத்துச்சென்று காசாக்கி மீண்ட தையே, அவள் தனது வாழ்க்கையில் கண்டிருக்கிருள். அந்த முட்டைகள் அவளது வீட்டில் கோதம்பை மா வாங்குவதற் காகவும், மண்ணெண்ணெய் வாங்குவதற்காகவும் கறி மிள காய் வாங்குவதற்காகவும், காசுக்குப் பதிலாகப் பயன்படுத் தப் படுகின்ற ஒரு பண்டமாகிவிட்டது. கோழிகள் அடை கிடந்து விட்டால் போதும், மண்ணெண்னையோ, கோதம் பைமாவோ வாங்க முடியாமல் அந்த வீடு தவியாய்த் தவித்துவிடும். அடைகிடக்கின்ற கோழிகளைப் பார்த்து 'படுவான் அடிச்சதுகள்' என்று அவளது தாய் திட்டித்
13

Page 10
மூவர் கதைகள்
தீர்ப்பதையே இப்படியான சந்தர்ப்பங்களில் கேட்கலாம்.
ஒருவிதத்தில் அது கோழிகளுக்கே உரித்தான வசவுகளல்ல. மறைமுகமாக அது அவளது கணவனையும் சாடுகிறது. வயி றுமுட்ட, எங்கோ சென்று கள்ளை நிரப்பிவிட்டு வந்து, பிதற்றலும் அதட்டலும் அட்டகாசமுமாகக் கொட்டி லுக்குள் முடங்கிக் கிடக்கும் அவளது கணவனே, கோழி யைச் சாட்டி, ஆட்டைச் சாட்டி, கு ழ ந்  ைத க ளே ச்
சாட்டி, தனது வயிற்றெரிச்சலையெல்லாம் அவள்
கொட்டிக்கொண்டிருப்பாள். நேரடியாக அவனைத் தாக் கினல் அவன் கொடுக்கும் அடிகளையும் உதைகளையும் வாங் கிக் கட்ட முடியாது. உடலில் எள்ளளவும் இடமில்லை. முன் பெல்லாம் வாங்கிக் கட்டியாகிவிட்டது. வள்ளி தலைச்சன் குழந்தையாக வயிற்றிலே இருந்த காலத்தில் கணவன் என்ற அந்த முரட்டு ஆத்மா பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைத் தூக்கிவந்து பார்த்துப்பாராமல் முதுகிலே இரண்டு குறிகளைக் கதறக் கதற வைத்திருக்கிறது. அவை இன்னும் பெரிய தழும்புகளாக சட்டையை அகற்றிவிட்டுப் பார்த்தால் முதுகிலே தெரிகின்றன.
வீட்டின் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு, பெரிய வீதிகளை யெல்லாம் பிரமிப்போடு கடந்துவந்து, கடைசியில் பெரிய தொரு பங்களாவின் வாசலில் வந்து நின்ற பொழுது வள் ளிக்கு உடலெல்லாம் புல்லரித்தது. அது ஒரு சொர்க்கத் தின் வாசல்போன்ற உணர்வு பரவியது. முற்றத்துக்கு வெளியே பூத்துக் குலுங்கிய, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, ருே ஸ்நிற ரோஜா மலர்கள் அவளது இதயத்திலே கற்பனைத் தந்தியை மீட்டின. அந்த வண்ண வண்ணப் பூக்களை அவள் முன்பு கண்டதில்லை. அவற்றைப் பிடுங்கி, சிறு வயதி லேயே அடர்த்தியும் நீளமுமாக வளர்ந்திருக்கும் தனது கருநிறக் கூந்தலில் - பிறகு - சூட்டிப் பார்த்துக்கொள்ள லாம் என எண்ணிக் கொண்டாள். கூந்தலிலே மலர்களைச் சூட்டிப் பார்ப்பது அவளுக்குப் பிடித்தமான ஒன்று. குடி யேற்றப் பகுதியிலுள்ள காட்டு ஓரங்களில் ஓங்கி நிற்கும்
14
*

வெறும் சோற்றுக்கே வந்தது
கொன்றை மரங்களிலும் பிச்சி மரங்களிலும் அலரி மரங் களிலும் ஏறி, மலர்களைப் பிடுங்கி, மலர்களை மாலை கோர்த் துத் தனக்கும் தனது தங்கைகளுக்கும் சூடி, அழகு பார்த்து அவள் மகிழ்ந்ததைப் போலவே இந்த மலர்களையும் பறித்து இங்கு சில விளையாட்டுத் தோழிகளையும் சேர்த்துக்கொண்டு அவள் துள்ளித் திரியலாம்.
இறைச்சி, மீன், முட்டை, இந்த இனிய கனவுகளுடன் மகிழ்ச்சியும் அச்சமுமாக அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த வள்ளிக்கு அதிர்ஷ்டம் வந்து அணைத்து விட்டதா கப் பெற்றேர்கள் சொன்னதன் பொருள் அப்பொழுது தான் புரிந்தது. காந்தி அழுது புலம்பியபோது தன் மீது அவளுக்கு ஏற்பட்டுவிட்ட பொருமை குறித்து ஆத்திரப் பட்டது தவறு என்று மனம் வேதனைப்பட்டது. அவளுக் கும் எங்காவது ஒரு பங்களாவில் வேலை கிடைத்து தன்னைப் போல இறைச்சி, மீன், முட்டைகளை யெல்லாம் சாப்பிடக் கூடிய அதிர்ஷ்டம் அரவணைத்துக் கொள்ள வேண்டுமென அவள் உள்ளம் பிரார்த்தித்தது.
அவள் வேலைக்காரியாகப் பொறுப்பு ஏற்க வேண்டி யிருந்த அந்த வீட்டிலே இரண்டே இரண்டு நபர்கள் மட் டும்தான் இருந்தார்கள்! அவர்கள் கணவனும் மனைவியும். காலையிலே இருவரும் எங்கோ ஒரு பெரிய கந்தோருக்கு, மிக நேர்த்தியாகப் புறப்பட்டுச் செல்வார்கள். பின்னேரம் திரும்பி வருவார்கள். இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல! அவளது தாயும் தந்தையும் கூலிகள்! காலையிலே புறப்பட் டுச் சென்ருல் பின்னேரம் சூரியன் மறைந்துவிட்ட பிறகு தான், அவர்களும் வீட்டுக்கு வருவார்கள். ஒருநாள் பூரா வும் அவளும் அவளது சகோதரர்களும் வீட்டு வளவுக்குள் ளும் காட்டு நிலங்களிலும் அயல் அட்டைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கூட் டாக அவர்களைப்போன்றே வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் அயல் வீட்டுச் சிறுசுகளான நந்தன், லச்சுமி,
I 5

Page 11
மூவர் கதைகள்
நாகன், மாணிக்கம் எல்லோருமாகக் கூட்டுச் சேர்ந்து விடு வார்கள். பற்றைகளிலே படர்ந்து வளர்ந்திருக்கும் குன்று மணிச் செடிகளைத் தேடிப்பிடித்து இளம்பருவத்திலிருக்கும் குன்றுமணிக் காய்க் கொத்துகளைப்பறித்து அதற்குள் மெல் லிள ருேஸ் நிறத்திலிருக்கும் மணிகளை மாலையாகக் கோர்ப் பது, அவர்களுக்குப் பிரீதியைத் தருகிறது. அல்லது குறிஞ் சாக் கொடியின் கீழ், முற்றிய காய்கள் வெடித்துப் பிளந்து, பஞ்சு பறந்து, உதிர்ந்துகிடக்கும் கோதுகளைப் பொறுக்கு வார்கள். அது பாம்பின் தலையைப் போன்ற வடிவமுள் ளது. படமெடுத்தாடும் பாம்பைப் போன்றிருக்கும் அந் தக் கோதில் இரு சிறு துவாரமிட்டு, குன்று மணிகளை, கருமை நிறம் தெரியத்தக்கதாகச் சொருகிவிட்டால் அப் புறம் பேசவே வேண்டியதில்லை. நிஜமான பாம்பேதான்! அது படமெடுத்து, ஆடி அசைந்து சீறிச் சினந்து ஆடவேண் டாமா? அதை ஆட வைக்கிற இரகசியம் அவர்களுக்குத் தெரியும். நீண்ட கூந்தல் மயிரைக் கோதின் முனையில் துளை இட்டு முடிந்து இவ் இரண்டையும் தென்னை ஈர்க்கில் தொடுத்துவிட்டபின் பார்க்கவேண்டுமே! பாம்பு துள்ளித் துள்ளி ஆடும்! சீறிச் சினந்து ஆடும்! பாய்ந்து ப்ாய்ந்து கொத்தும்! இதைக் கண்டு குழந்தைகளெல்லாம் ஆரவார மாகக் கூச்சல் போடுவார்கள்! சிரிப்பார்கள்! அந்தப் பாம்பைத் தாங்களும் ஆட்டுவதற்குத் தரும்படி கெஞ்சு வார்கள். அழுவார்கள். அல்லது குரும்பட்டைத்தேர் கட்டி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இந்த விளையாட் டுகளால் நெடு நேரமாகப் பசி மறந்து போயிருக்கும்!
அந்த வீட்டுக்கு வந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் அவளுக்குப்பல உண்மைகள் தெரிந்து விட்டன. பதினுெரு வயதுச் சிறுமியாக இருந்த போதிலும் எதையும் அவளால் சிந்திக்க முடியும். அந்தச் சுற்று வட்டாரத்திலே அவளுக்கு எந்த ஒரு விளையாட்டுத் தோழிகளுக்கும் இடமில்லை! மிக நேர்த்தியான- விலை உயர்ந்த உடைகள் அணிந்து அவர்கள்
I 6
خاور

வெறும் சோற்றுக்கே வந்தது
வண்ணப் பூச்சிகள் போலத் திரியும் சிறுமிகள்! அவர்கள் முகம்கொடுத்து அவளோடு பேச வேண்டுமே! ஊஹ"ம்! அவர்களது முகத்தில்தான் என்ன இளக்காரம் அவளை ஏற இறங்க வைத்துப் பார்க்கிற பொழுதுதான் எத்துணை இளக்காரம் தெரிகிறது. யன்னலுக் கூடாக முகம் புதைத் துக் கைகளை அசைத்து அவர்களைக்கூப்பிடவே அவளுக்கு அச்சமாக இருக்கிறது! நடுக்கமாக இருக்கிறது! துணிச் சலை வரவழைத்துக்கொண்டு அவள் நிற்கும் யன்னல் ஒர மாகக் கடந்து சென்ற சிறுமி ஒருத்தியை அவள் கூப்பிட்ட பொழுது- “முடியாது’ என எவ்வளவு வேகமாக அந்தச் சிறுமி தன் தலையை ஆட்டிவிட்டு ஓடிவிட்டது! அவள் ஓடி யாடிய அவளது சொந்தப் புழுதி மண்ணில் ‘நந்தா' என்று அவள் கூப்பாடு போட்டால் போதுமே, ஒரு பரிவாரமே அவளைத் தேடி ஓடிவந்து விடும்.
இறைச்சி. மீன். முட்டை. இந்த இனிய கனவுகளு டன் அடியெடுத்து வைத்த அவளுக்கு, இறைச்சி மீன் முட்டை இவைகளைக் காண நித்திய வாய்ப்பு இருக்கத்தான் செய்தது! ஆனல். ஆனல். வீட்டிலே ஆரவாரமாகச் சத்தமிட்டு, தாயிடம் உரிமையோடு கேட்டு விரும்பியவாறு வாய் நிறையச் சாப்பிடுகிற அந்த உரிமையையே அவள் இழந்துவிட்டபின், இறைச்சி - மீன் - முட்டை - என்ற அந்த உணவு வகைகளே அவளுக்குச் சங்கடத்தை ஊட் டின. மெளனமாக ஆசைகளை அடக்கிக்கொண்டு, "பசிக் கிறதே... யென முரண்டு பிடிக்க முடியாமல் எஜமானும் சீமாட்டியும் சாப்பிடும் வரை காலம் தாழ்த்தி எஞ்சிய வற்றைச் சாப்பிடுகின்ற, சிறகொடிந்த, வாயிழந்த, அந்த நிலைதான் அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமா?
அன்ருெருநாள் ஏதோ ஒரு கதையில் அவளைப்பார்த்து, வீட்டு எஜமானி சொன்னுள்:
'டியோய் வள்ளி இப்படியெல்லாம் உன்ரை வீட்டிலே சாப்பிட உனக்குக் கிடைச்சிருக்காடி? வரையிக்கை பயித்
17

Page 12
மூவர் கதைகள்
தங்காய் மாதிரி, பேத்தைபத்தி வந்தாய். இப்ப என்னடா என்ருல் ஆனை மாதிரிக் கொழுத்திட்டாய்! இந்தச் சொகு செல்லாம் உனக்குத் தொடர்ந்து வேணுமெண்டால் நல்ல பிள்ளையாக எங்களோடை நெடுக இருக்க வேணும்! இல்
லையோ பேந்தும் போய், உங்கடை குச்சிவீட்டுக்குள்ளே,
நாய், பண்டி வாழ்க்கைதான் நீ வாழுவாய்! அங்கை யென்ன, உனக்கு கோதம்பை ருெட்டியும் அரை குறைச் சோறும், சம்பலும் தானே உன்ரை கொப்பன், கோத்தை சமைத்துப் போடுவினம்! உன்ரை அதிர்ஷ்டமடி! நீ எங் கடை வீட்டுக்கு வேலைக்காரியாக வந்தது! நீ ஊருக்குப் போகயிக்கை அங்கையுள்ள வங்கள் எல்லாம் உன்னைப் பார்த்து அதிசயிக்கப் போருங்கள்! நீதான் அங்கை பெரிய இடத்துப் பெட்டை போல இருக்கப் போகிருய்!"
எஜமானி இப்படிச் சொல்வதை ஆரம்பத்தில் கேட்ட பொழுது அவளுக்கும் பெருமையாகத்தான் இருந்தது! எஜ மானியும் அடிக்கடி இப்படிச் சொல்லிக்கொண்டுதான் வரு கிருள். அவள் ரொம்பப் பெரிய அதிர்ஷ்ட சாலியாம்!
女
அந்த வீட்டிலேயுள்ள பெரிய பெரிய நாற்காலிகளையும் சோபாக்களையும் தளபாடங்களையும் கண்ணுடிப் பொருட்
களையும் அலங்காரங்களையும் மேலெழுந்த வாரியாகப்
பார்த்து, பணக்கார வீடொன்றில் வேலைக்காரியாக இருக் கின்ருள் எனத் திருப்திப்படுவதாக இருந்தால், வள்ளிக்கு அந்த வீடு பெரிய அதிர்ஷ்டமாகத்தான் இருக்கவேண்டும்.
அப்படியே, அந்த வீடு தனது அதிர்ஷ்டத்தின் விளைவு என -
அவளும் கொண்டவள் தான்! ஆனல் அவளது பிஞ்சு உள் ளம் துடிக்கக்கூடிய முறையில், அவளை ஒரு தீண்டத்தகாத
வள் போல அவர்கள் கருத்திற்கொண்டபொழுதுதான்
அவளுக்கென்று ஒரு “புதிய விதியை’ அந்தப் பணக்காரக் குடும்பம் சிருஷ்டிக்க முயல்வதை அவள் கண்டாள் .
8
融
é.

வெறும் சோற்றுக்கே வந்தது
வள்ளிக்கென்று ஒரு பழையதட்டத்தைக்கொடுத்து, தரை யிலே உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றும் ஒரு பாயைக் கொடுத்து சமயலறையின் ஒரு மூலையிலே விரித்துப் படுக்கு மாறும் அவர்கள் கூறியபொழுது - அவர்களது அந்த விதிக் குப் பணிந்தவளாக அவள் தன்னைக் காட்டிக்கொண்ட போதிலும் ஒரு கேள்வி அவளுக்குள்ளேயே பிறந்தது. ஒரு குரல் ஆவேசமாகக்கிளர்ந்தது. அவள் பிறந்து வளர்ந்த இந்த உலகத்தில் அவளுக்கு முதன் முதலாகத் தெரிய வந்த ஏற்றத்தாழ்வு, சாதி அமைப்பு ஒன்றேதான்! அதன்படி பார்த்தால், அவள் ஒரு வேளாளப்பெண் தாழ்த்தப் பட்டவர்களை வீட்டுக்கு வெளியே நிறுத்தி, அவர்களது கை மண்டையிலே செம்பு ஒட்டிக்கொள்ளாமல் குபுகுபு வென்று தண்ணீர் ஊற்றிய ஒரு உயர்சாதிப் பெண்ணுகக் கிளிநொச் சியிலே உலாவி வந்த ஒருத்திக்கு - அதே விதிமுறைகளை இதோ இவர்களும் சிருஷ்டிக்கிருர்கள்! அவளுக்கென்று ஒரு தட்டம்! அவளுக்கென்றுஒரு கிளாஸ்! அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு இடம்! அவள் தரையில்தான் உட்கார லாம்! நாற்காலியில் உட்காரமுடியாது! வீட்டைப்போல சகஜமாக - தாராளமாக - சுதந்திரமாக - எந்த ஒரு பொரு ளையும் தீண்ட முடியாது! -
எஜமானனையும் எஜமானியையும் தேடி வரும் நண்பர் களுக்கும் சினேகிதைகளுக்கும் இன்ன கிளாஸில்தான் தேநீர் வழங்கப்பட வேண்டு மென்ருே இன்ன கோப்பையில்தான் உணவு பரிமாறலாமென்ருே எந்த ஒருநியதியும் கிடையாது. ஆனல் அவர்களோடு தப்பித் தவறி ஒரு வேலைக்காரி வந்து விட்டால் வள்ளியின் கிளாசில்தான் "மரியாதை"க்குப் பயந்து தேநீர் வழங்க உத்தரவாகிறதே!
-ஆனல் எஜமானி சொல்லுகிருள்:- 'உன்ரை வீட் டிலே அரையும் குறையுமாகச் சாப்பிடக்கூட வழியில்லாமல் கிடந்து, சாக இருந்த நீ உன்ரை நல்ல காலத்துக்குத் தான் இங்கே வந்திருக்கிருய் இப்படியான ஒரு சொகுசான
I9
ബ

Page 13
மூவர் கதைகள்
அறைகூட உனக்குப் படுக்கக்கிடைச்சிருக்காது! என்னடி சொல்லுகிருய்..?
கற்ருேட்டமும் வெளிச்சமும் வசதிகளும் நிறைந்த வீடாக இது இருக்கலாம். அவள் இருந்தது, பலரும் ஒன் ருக அடைந்து கிடக்கும் ஒரு சிறு குடிசை என்பதும் உண் மையே.
அதன் ஒரு மூலையில் இருக்கும் சாக்குக் கட்டிலில் அவள் விரும்பியது போல ஏறிப் படுக்க முடிகிறது. இங்கே எத் தனை கட்டில்கள்! குளிரெடுத்தாலும் முடிகிறதா என்ன? உறைகளைத் தேய்க்கவும் படுக்கைவிரிப்புகளை அலம்பவும், மடித்து வைக்கவும் மட்டுமே முடிகிறது.
'உன் ரை அதிர்ஷ்டம் தானடி எங்களட்டை வந்திருக்
கிருய்’
ஒருநாள் இப்படி எஜமானி கூறிய சமயம்ஏதோ ஒரு துணிச்சலில் வள்ளி சொன்னுள்:-
‘எங்கடை வீட்டிலே இருக்கிற சொகுசை உங்களுக்கு என்னம்மா தெரியப்போகிறது?’
இந்தப் பதிலைக் கேட்டதும் அம்மாவும் ஐயாவும் ஒரு கணம் வெல வெலத்துப் போய்விட்டார்கள்! ஏதோ ஒரு போர்க்கோலத்தைக்கண்டு அஞ்சியவர்களைப்போல' என்னடி சொன்னுய்' என அதட்டினர்கள் . அம்மாவிடம் செல் லம் கொடுத்து விட்டாய்' என ஆங்கிலத்தில் ஐயா சொன் னதும், அது தன்னைப்பற்றியது என அவளுக்குப் புரிந்தது.
அன்று வழக்கத்துக்கு மாருக அன்பு ததும்ப வள்ளியை அழைத்த வீட்டுஎஜமானி அவளுக்கு இரண்டுமூன்று-ரூபாய் பெறுமதியில்லாத இரு தோடுகளை அன்பளிப்பாக வழங்கி
20

வெறும் சோற்றுக்கே வந்தது
விட்டு, அவளது அழகைப் பார்த்து ரசிக்க விரும் புகிறவள்போல வள்ளியிடம் சொன்னுள்.
‘எங்கேடி சுரையைக் கழற்றித் தோட்டைக் காதிலை போட்டுக்கொண்டு வா.ஒட்டை குத்திவிட்டகொப்பனுக்கு, பாவம் - இவ்வளவு நாளும் ஒரு தோடு போட்டு உன்னை அழகுபார்க்கத்தானும் வழியில்லாமை இருந்திருக்கடி! உன்ரை நல்லவிதிக்கு எங்களட்டை வந்திருக்கிருய். போ. போ. போட்டுக் கொண்டு வா!'
-அவை வெள்ளித் தோடுகள்! அவை கிடைத்ததுகூட பேரதிர்ஷ்டம்போல எஜமானி அபிநயித்துச் சொன்ன பொழுது வள்ளிக்கு முகமெல்லாம் விகCத்தது. பெண் களுக்கே உரித்தான நாணத்துடன் அவற்றை வாங்கி கண் களில் நன்றியுணர்ச்சி பொங்க அவள் தனது காதுகளில் அவற்றைப் பூட்டிக் கொண்டிருந்த சமயம் எஜமானி தனது கணவனைப்பார்த்து ஆங்கிலத்தில் சொன்னுள்:-
'இது என்ன இந்தப் புதிய ஏற்பாடு என்று யோசிக் கிறீர்களா? இப்பொழுதெல்லாம் வேலைக்காரர்களைப் பிடிப் பதென்றல் எவ்வளவு ரொம்பப் பெரிய கஷ்டம் சொல்லுங் கள். போனமுறை பொங்கல் தினத்துக்கு ராணி வீட்டிலே நின்ற இரு வேலைக்காரிகளும் புதுச் சட்டை நகை என்றெல் லாம் வாங்கிக்கொண்டு பிறகு வருவதாகப் போனவர்கள் தான், திரும்பிவரவேயில்லை. ஏன் இறைவரிமதிப்பாளர் இரா கவன் வீட்டை எடுத்துப்பாருங்களேன். அங்கே நிண்ட வேலைக்காரப் பெட்டை களவெடுத்து நல்லாச்சாப்பிடுமாம். ஒருநாள் தேத்தண்ணி போட்டு தன்ரையெண்ணத்துக்கு குடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுவிட்டு மிஸ்ஸிஸ் ராக வனுக்குக் கோபம் வந்துட்டுது. நல்லா அடிச்சுப் போட்டா. அந்தக் கழிசறை. அதுடைய பிச்சைக்காறப்புத்தி . திண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யிற நாய் - பொலிசட்டைப் போய்ச் சொல்லி மானக் கேடாப் போச்சு. நல்ல காலத்
2I

Page 14
மூவர் கதைகள்
துக்குப் பொலிஸ் ராகவனுக்குப் பழக்கமா இருந்ததாலே மேலுக்குப் போகவிடாமை உள்ளுக்கேயே சடைஞ்சாச்சு. இதை நான் ஏன் சொல்லுற னெண்டால் இந்தப் பெட் டையை நாங்கள் இரண்டு மூன்று நாளைக்குப் பேய்க்காட்ட வேண்டியிருக்கு அவளுடைய தகப்பன் வாருன் , பிள்ளை யைப் பார்க்கப் போருணம். கடிதம் போட்டிருக்கிருன்.”
-வள்ளிய்ோடு முகம் கொடுத்துக் கதைக்காத ஐயா மனைவியின் ஆங்கில லெக்ஸரைக் கேட்டதும் சொன்னர்.
'டியேய் வள்ளி! வேறு வீடுகளில் எண்டால் வேலைக் காரிகளுக்குச் சாப்பிடக் கூடக் குடா துகள்! உனக்கு வேலை யும் குறைவு. அம்மா உனக்குச் செல்லமும் தாரு ஏதோ நல்ல விதியிருந்து எங்களட்டை வந்திருக்கிருய்."
வண்ணமலர்ச் செடிகள் மிகுதியாக வளர்ந்து நிற்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்த வள்ளியின் தந்தை கந்தனுக்கு அப்படிப்பட்ட ஒரு வீட்டை ஏழு தலைமுறை சென்றலும் தனது சந்ததியால் கட்டிமுடிக்க இயலாதென்ற திடமான நம்பிக்கை அதைப் பார்த்ததும் ஏற்பட்டது. அங்குள்ள சுவர்கள் - அங்குள்ள விருந்தைத் தரைகள் - அங்குள்ள மின்விளக்கு அலங்காரங்கள் - அங்குள்ள மீன் தொட்டில் கள் யாவுமே அவனைப் பிரமிப்பிலாழ்த்தின. உண்மையி லேயே வள்ளி அதிர்ஷ்டக் காரிதான்! அவள் பிறந்த நட்
சத்திரத்தை அவன் நினைத்துப் பார்த்தான். திருவோணம்.
ராணியாட்டம் வாழுவாள் என்று சோதிடர் சொல்லி இருக் கிருர்.
ஒரு பக்கத்தில் ஒதுங்கி, கைகட்டி எஜமானனுக்கும் அவ ரது மனைவிக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்த அவனுக்கு வள்ளிக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த கிளா
22
-4:fl.

வெறும் சோற்றுக்கே வந்தது
சில் தேநீர் வந்தது! புனிதமான கோயிலொன்றுக்குள் பிர வேசித்து, தேவி சமேதரராய் எழுந்தருளியிருக்கிற ஆண் டவன் முன்னல் பக்தி பரவசமாக நிற்கும் ஒரு பக்தனைப் போல அவன் குரல் தளதளத்தது.
*எனது தெய்வங்களே! இதெல்லாம் என்னத்துக்கு? மூன்று நேரம் சாப்பாடு குறையாமல், வள்ளியை உங்களது சொந்தப் பிள்ளைபோலப் பாக்கிறியள். அதுக்கே நாங்கள் சாகுமட்டும் ஊழியம் செய்யவேணும். அவள் அதிர்ஷ்டம் செய்துதான் இங்கை வந்தவள். அவளை ஒருக்கா அவளது தாய் பார்க்க வேணும், கூட்டிக்கொண்டு வா எண்டு சொல்லி ஆசைப்பட்டவள்தான். ஆணு, தாய்க்குத் தாயாய் என்ரை அம்மா கவனிக்கையிக்கை, அவளை என்னத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டவேணும்..? அவளின் ரை
சம்பளத்தைத்தந்தால் போதும். பிறகு - ஆறுதலாக -
தாய் பார்க்கட்டும்.'
சுவரின் ஒரு மூலையில் சாய்ந்து நின்ற வள்ளியின் குரல் திடீரெனத் தந்தையை நோக்கி எழுந்தது.
'ஏலாது! நான் வரப் போறன், இங்கே நிக்க மாட்
டன்
‘ஏண்டி. அங்கை வந்து வயிறு காய்ஞ்சு சாகப் போ றியோ? தெய்வம் மாதிரி இந்த அம்மாவையும் ஐயாவை யும் விட்டுவிட்டு வாறனெண்டு சொல்ல உனக்கு என்ன பைத்தியமே?”
'முடியாது, நான் வரப்போறன். காய்ஞ்சு செத்தா லும் சரி, வருவேன்.'
*நில்லடி. என்ரை குணம் தெரியுமே?”
'நான் மாட்டன்! வரத்தான் போறன்’
28
മീ.

Page 15
மூவர் கதைகள்
மகளை விலக்கி வெளியே செல்ல முற்பட்ட, அவனை அவள் பின் தொடர்ந்தாள். அய்யாவும் அம்மாவும் செய லற்று நின்றனர். அவள் குரல் சீற்றமாக ஓங்கி ஒலித்தது.
‘நான் மாட்டன், வரத்தான் போறன்!” علم
s
24

ஒரே குடிசைகளைச்
சேர்ந்தவர்கள்
அந்தக் கிராமம் எவ்வளவோ தூரம் முன்னேறிவிட் டது என்பதற்கு, அங்கேயுள்ள பல ஒட்டு வீடுகள் முக் கிய சாட்சிகளாக இருந்த போதிலும் பலரது மனப்போக் குகள் அடிப்படையில் மாறவில்லை என்பதற்கு அத்தாட்சி யாக அந்த இளைஞர் கழகத்தின் கதையை நாங்கள் நினைவு படுத்திக் கொள்ளுவோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின ரையே உள்ளடக்கியிருக்கிறது அது. அதை உருவாக்குவதே எமக்குப் பெரும் போராட்டமாக இருந்தது. அதே நேரம் எந்தவித செழிப்புமற்று, இருள் க விந் தி ரு ந் த எங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளிக்கதிர்கள், அதன் மூலமே பரவலாயிற்று, ஜீவக்கதிர்களை நாங்கள் ஸ்பரிசிக்கலானுேம்,
★
கழகம் இருந்த இடத்தைச் சுற்றிக் குடிசை வீடுகளே அதிகம். அவை எங்களுடையவை. சலவைத்தொழிலையே பிழைப்பாகக் கொண்டு, பல தலைமுறைகளாக அந்த இடத் தில் நாங்கள் வாழ்ந்து வருகிருேம். ஒ ன் ருே டு ஒ ன் று நெருங்கி, ஒர் ஒடுங்கிய காணிக்குள் சுமார் முப்பது குடிசைவரை நிறுவியிருந்தோம். அருகே, கவனிப்பாரற்றுக்
25

Page 16
மூவர் கதைகள்
கிடக்கும் பெரும் பனம்கூடல்கள். அந்தக் காணிகள் எங் களிடம் இருந்து விட்டால் எமது நெருங்கிய, விஸ்தீரணம் குறைந்த சிறு வீடுகளை, ஐதாகக் காற்ருேட்டமும் வெளிச் சமும் நிரம்பியதாக் விசாலித்த முற்றத்துடன் கட்டி எழுப் பியிருப்போம். ஆனல் அவை எங்களூர்ப் பெரிய மனிதர் களுடையவை. அவர்களுக்கு இதைப்போன்று, இன்னும் பல ஊரடங்கலும் உண்டு. வடலிகளும் புதர்களும் பற்றை களுமாகப் பாம்புகள் சஞ்சரிக்கும் அந்தக் காணிகளின் நடு வில் எங்களுடைய குடிசைகள் எப்படி அமைந்தன? ஒரு வேளை, ஊருக்குப் புறம்பான இடத்தில் எங்களுடைய தலை முறையினர் குடியேற அனுமதிக்கப்பட்டிருப்பார்களோ என்னவோ?
அந்தக் காணிகளே, எங்களது மலசல கூடங்கள். அவற்றிலேயே எங்கள் கால்நடைகள் மேய்ந்தன. சிறிய தொரு நிலப்பரப்புக்குள் முப்பது குடும்பங்கள் எப்படி செளகரியமாக இருக்க முடியும் என்று நினைத்துப் பாருங் கள்! எங்களுடைய ஆடுமாடுகள் காலாற நின்று எப்படிப் புல்பூண்டுகளைக் கடித்துப் பசியாற முடியும் என்று எண் ணிப் பாருங்கள்! ஏன் - எங்களுடைய குழந்தைகளுக்கு ஒடி ஆடி விளையாடக்கூட இடம்போதவில்லை. மாங் கொட்டை போடுவது, கெந்திப்பிடிப்பது, கிளித்தட்டு ஆடுவது, எல்லாவற்றையும் ஒழுங்கையிலேயே அவர்கள் வைத்துக்கொண்டார்கள். ஒருநாள் அதற்கும் ஆட்சேபனை வந்துவிட்டது. எங்களுடைய பிள்ளைகளுக்குப் பழக்க வழக் கம் தெரியாதாம். ஊர்ப் பெரிய மனிதர்களைக் கண்டாலும் ஒதுங்காமல் தொடர்ந்து ஒழுங்கையில் நின்று அவர்கள் விளை யாடிக்கொண்டிருக்கிருர்களாம். மறைவு தேடி எங்களுடைய பெண்கள் சிறுநீர் பெய்யக்கூட இடம் இருக்கவில்லை, ஒழுங் கையோடு ஒட்டிய வீட்டுக்கோடிகளின் இடைவெளிக்குள் பதுங்கி நின்று, சலசலவென்று சலம்விடுவார்கள்.
எங்களுக்கென்று விசாலித்த காணி நிலம் ஏன் கிடைக்க வில்லை என்பதற்கு எமது முதாதையர்களால் பதில் சொல்
26

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
லத் தெரியவில்லை. வாயும் வலிமையும் மிடுக்கும் இருந்த வர்கள் ஒட்டமும் நடையுமாகக் காணிகளை அபகரித்துக் கொண்டதாகக் கேள்விப்பட்டோம். ஆனல் இவர்கள் ஒன்றை மட்டும் தெளிவாகப் பாரம்பரியக் கதை போலவும் நீதிபோலவும் எங்களிடத்தில் சொன்னர்கள்: தமது விசு வாசமும் பணிவும் தான் இப்போதிருக்கும் குடிநிலத் துக்கே காரணமாக இருந்ததாம். எந்த ஒரு வண்ணுணுக் காவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காவது, தோட்ட நிலம் இருக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள் சொந்த நிலத்தில் விளைந்தது என்று பெருமைப்பட, ஒரு வயல்நிலம் இருக் கிறதா என்று விசாரித்துப் பாருங்கள்! ஏன் - கழிவு நிலத் துக்காவது சொந்தம் பாராட்ட எங்களால் முடிகிறதா என்று நினைத்துப் பாருங்கள்! மத்தியானச் சோற்றுக்குப் பதிலாகப் புத்தம்புதுப் பனங்காய்களை நெருப்பில் வாட்டிக் காடியில் தோய்த்துத் தின்பதற்குக் கூட நாங்கள் ஒன்றில் இரக்கவேண்டியிருக்கிறது; அல்லது திருட நேரிடுகிறது!
எங்களுடைய கிராமத்திலும் அநேக பாடசாலைகள் இருக்கத் தான் செய்தன. ஆனலும் நாங்கள் சின்னஞ்சிறு வயதிலேயே எங்கள் வயிற்றுப்பாட்டுக்காக, உழைக்க வேண்டுமென்று எண்ணத்தொடங்கி விட்டோம். எங்களுக் குச் சோறு கிடைத்தால் சரி, அதைவிடப் பரமானந்தம் வேருென்றும் கிடையாது. மூடல்களுடனும் பெட்டிக ளுடனும், எங்கேபோனுல் எங்களுக்குச் சோறு கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு, நான், செல்லையா, முருகன், சிதம் பரி, செல்லக்கண்டு எல்லோருமே ஒரு கூட்டமாகப் பூதிக் கிழவி ஆற்றுப்படுத்தும் இடமெல்லாம் போவோம். ஏதோ ஒரு வீட்டில் திவசம் அல்லது அந்தியட்டி, அல்லது கலி யாணம், அல்லது ஏதோ ஒரு விசேஷம் நடக்கும். எங்க ளுடைய ஊரில் இந்தச் செய்திகள், எங்கள் மத்தியில் வெகு சீக்கிரமாகவே பரவி விடுகிறது. விசேஷம் நடக்கும் வீட் டின் பின்புறமாக எச்சில் இலைகளுக்காகக் காத்திருக்கும் அவர் நாய்களைப்போலவே, முகத்தைத் தொங்கப் போட்
27

Page 17
மூவர் கதைகள்
டுக்கொண்டு நாங்கள் எப்பொழுது சாப்பாடு போடுவார் கள் என்று காத்துக்கொண்டிருப்டோம். எங்களைப் போலவே இன்னும் பலர் வந்திருப்பார்கள். என்னேடு படிக்கும் மயிர்வெட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளை யும் மரமறுக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளையும் பனை ஏற்றத் தொழிலாளர்களின் குழந்தைகளையும் நான் அங்கே கண்டிருக்கிறேன்.
- நாங்கள் பள்ளிக்கூடம் போனுல் சோற்றுக்கு என்ன செய்வது? வருஷத்தில் பல நாட்கள் பள்ளிக்கு முழுக்குப் போட்டு விட்டு நாங்கள், வீடுகளிலும் வயல்களிலும் தோட் டங்களிலும் தொட்டாட்டி வேலைக்குப் போய்விடுவோம். நாங்கள் விரும்பாவிட்டாலும் எங்கள் ஆத்தையும் அப்புவும் எங்களை விட மாட்டார்கள். அப்படிப்பட்ட நாட்களில் நான் வேடிக்கையான ஒரு காட்சியைக் கண்டதுண்டு. நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் வாத்தியாரான வல்லிபுரச் சட்டம்பியார் வீடு தேடி வந்து, படலையில் வாஞ்சையோடு அழைக்கும் குரலைக் கேட்டிருக்கிறேன். நாங்கள் போகா
விட்டால் அவருக்கு அப்படியென்ன குறைவந்து விடப்
போகிறது? நெடுநாளாக இது எனக்குப் புரியவில்லை. அவருக்காகவே, எங்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியி ருப்பதாக, எங்கள் ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள் சொல்லிக்கொள்வார்கள்.
நாம் பல வழிகளில் சுரண்டப்படுகிருேம் என்பதை நான் வாலிபனகியதும் தான் உணர்ந்தேன். எனது பதி னலாவது வயதில், என் படிப்பு நின்றுவிட்டது. அப்புறம் நான் தொடர்ந்து படிப்பதை வல்லிபுரச் சட்டம்பியார் கூட விரும்பவில்லை. டாப்பை நிரப்பி, வரவுக்கு வந்து திரிந்து, அவரது வயிற்றைக் கழுவ உதவி செய்தோம் என் பதற்குப் பதிலாக, “ஒழுங்காகத் துறைக்குப்போய் அப்பு வுக்கு உதவி செய்து, பொறுப்பாக நடக்கும்படி" பரிந் துரைத்தது தான், அவர் எங்களுக்குச் செய்தது! அன்றும்
28

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
சரி, என்றும் சரி குடும்பக் கஷ்டம் தெரியாது, சொகு சாக, கட்டற்று, நாம் நடந்தோமா என்ன? நாங்களும் துறைக்குப் போவதன் மூலம் எங்கள் குடும்பக் கஷ்டங்கள் ஒழிந்து விடுமென்று எப்படி எதிர்பார்ப்பது? இளவயதி லேயே தலை நரைத்து, முதுகு கூனி, முகத்தின் மலர்ச்சி வரண்டு, சோகங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எமது பழைய தலைமுறைக்கு விடியாத அதே நாட்களை நாங் கள் மாற்றியமைத்து விட்டால். 2
நம்பிக்கையோடு, யெளவனத்தின் எழிற் கனவுகளோடு நாங்கள் துறைக்குப் போனேம். எங்களது வயதொத்த பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் பெற்றேரிடம் கை யேந்திக்கொண்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. இன் னும் அவர்கள் 'சின்னப்பொடியள்! நாங்களோ எங்கள் காலில் சுயமாக நிற்கத் தெரிந்துகொண்டு விட்ட "கடுக் கண்டவர்கள் 1.
துறை நிலப்பரப்பில் தேங்கிக்கிடந்த அழுக்கு நீர், பல வகை வர்ணங்கள் கொண்டதாக, சோடாநுரையுடன், ஒரு குட்டை போலக் கிடக்கிறது. சுரி நாற்றம், கொடூர வெய்யில், வயிற்றைக்குடையும் பசிக்களை. நாவரட்சி. - ஆனலும் நாங்கள் சேலைகளைத் துவைக்கத் தொடங் கினுேம், மலைபோல எத்தனை உடுப்புகள்! இளவயதிலேயே தலைநரைத்து, முதுகு கூனி, முகத்தின் மலர்ச்சி வரண்டு சோகங்களைச் சுமந்துகொண்டிருக்கும் எமது பழைய தலை முறைக்கு விடிய மறுத்த அதே நாட்களை எங்களுடைய காலத்திலாவது நாம் எதிர்கொள்ளக்கூடாது என்ற உத் வேகத்தோடு துணிகளை மூசி மூசிக் கற்களில் அடித்தோம்.
女
உடுப்புகளைப் பொட்டளியாகக் கட்டி அவற்றை முது
கிலே தூக்கிச் சுமந்துகொண்டு ஊரிலேயுள்ள பெரிய மனி
29

Page 18
மூவர் கதைகள்
தர்களுடைய வீடுகளுக்கு, எனது வயோதிபத் தந்தைக்குப் பின்னே நான் சென்ற பொழுது பரிதாபத்துக்குரிய ஒரு சிறுவனின் முகத்தைப் போலவே எனது முகமும் சாந்தம் கப்பிக் கிடந்தது, என்னிடம், அந்தப் பெரிய மனிதர்கள் முன்னே அப்படி அமைதியாகவும் பணிவாகவும் வார்த்தை களை அதிகம் பேசாமலும், நிற்கவேண்டுமென்று யார் சொல் லிக் கொடுத்தார்கள்? சின்னஞ்சிறு வயதில் அப்புவுக்கும் ஆத்தைக்கும் பின்னல் அடங்கி ஒடுங்கி நின்று பழக்கப் பட்டுவிட்ட தோஷமோ? ஆத்தையோடு கூடிவந்து பின் ஞல் பதுங்கி நின்ற அந்த நாட்களில் தட்டுவத்தில்எனக்குச் சோறு கிடைக்கத் தவறுவதில்லை! அது நல்லதாகவும் இருக்கலாம், நாறிச் சமைந்ததாகவும் இருக்கலாம். ஆணு லும் நாங்கள் அவற்றை வெகு ஆவலோடு உண்டோம் .
'திடீரென நோய்பிடித்து, இறக்கும் ஆடுகளையும் கோழி களையும் எங்கள் மீது அன்பு மீதுரப் பெற்று, அனயாசமா கத் தூக்கித் தருவார்கள். எங்கள் முகத்தில் அதற்கு நன் றிக் கடனகப் பரவுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. முதுகும் கழுத்தும் தாழ்ந்து வளைய, அர்த்தமில்லாத பயந்த மனப்பான்மையோடு அவற்றைப் பெற்றுக்கொள் ளும் எங்களுக்கு, அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் கோலாகலமான விருந்துகளும் கிடைத்தன.!
நாங்கள் குடிமைகள்!
y
திடீரென்று ஒருநாள் அந்த ஆச்சரியம் நடந்தது. எங்களது குடிசைகளில் ஒன்றில் இருந்து, தனது இளம் பருவத்தில் வீட்டைவிட்டு ஓடிப்போன சிதம்பரி மீண்டும் எங்களைத் தேடிவந்திருந்தான். மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு லோன்றியில், அவன் சலவைத் தொழிலாளியாகக் காலத்தைக் கழித்திருந்தான். கம்பீரமான இளமையோடு, பலதும் தெரிந்தவன கத் திரும்பி வந்திருந்த அவனிடம்,
30

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
நாங்களெல்லோரும் தேடிப் போனுேம், ஒழுங்காகச் சவரம் செய்திருந்த முறையும் பெரிய மனிதர்களைப்போல வேட் டியுடுத்திய தோரணையும் ஒத்த வயதினரான எங்களை ஒரு கணம் திகைக்க வைத்தது. அடர்ந்து வளர்ந்து, முகத்தில் செழித்திருந்த எனது மயிரையும் அழுக்குத் துண்டால் கச்சை கட்டிக்கொண்டு நான் நின்ற கோலத்தையும் வெறித்து நோக்கிய அவனது கண்களில் வேதனை படர்ந்தது. எங்களிடம் துயரப் பெருமூச்சோடு சொன்னன்:-
* "எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் வேகமாக மாற்றம் நடந்துகொண்டிருக்கு. ஆனல் நீங்கள் இன்னும் எங்களுடைய, ஆத்தை அப்புவைப் போலவே விடிவை நினைக்காமல், விதியை நொந்துகொண்டு இருக்கிறியள்'.
ஆத்தை, அப்பு அவையைப் போலவே எங்களுடைய வாழ்க்கையிலும் எந்தவித மாற்றமும் நிகழாமல் இருள் கவிந்திருப்பதற்கான காரணம் சிதம்பரிக்கு நன்ரு கத் தெரிந் திருந்தது. எங்களையொத்த, துன்பம் மிகுந்த தொழிலாளி களோ டெல்லாம் அவனுக்கு நிறையத் தொடர்பு ஏற்பட் டிருந்தது. தோட்டக்காட்டிலுள்ள தொழிலாளர்கள், செங் கொடிச்சங்கத்தில் சேர்ந்து அடக்குவோரின் துப்பாக்கிகளுக் கெதிராகவும் முதலாளிகளுக்கெதிராகவும் பொலிஸாருக் கெதிராகவும் முதலாளித்துவ அரசு இயந்திரத்துக்கெதிரா கவும் போர்ப்பதாகையைத் தூக்கிப் பிடித்திருக்கும் கதையை அவன் கூறியபொழுது நாங்கள் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தோம்.
எங்களோடு துறைக்கு வந்து, அவனும் சலவைத் தொழிலில் ஈடுபடலானன். இருந்தும் தனது குடிசையில் ஏதேதோ நூல்களையும் பத்திரிகைகளையும் இரவில் கொண்டு வந்து அவன் வாசிக்கும்போது, எங்களுக்குப் பொருமை யாக இருந்தது; பெருமிதமாக இருந்தது. நாங்களும் அவனைப்போலவே, புத்தகங்களை ஏன் படிக்கக் கூடாது
3 II

Page 19
மூவர் கதைகள்
என்று தோன்றியது. சிலர் வெட்கப்பட்டோம். சிலர் முயற்சித்தோம். எங்களிலிருந்து அவனைப் பலதும் பத்தும் தெரிந்தவனுக, நாங்கள் நோக்கத் தொடங்கினேம். மாலை நேரங்களில் கள்ளுக்கொட்டிலுக்குப் போவதை நிறுத்தி விட்டு உலக அரசியல் விசயங்களை இராமுக் கிழவர் வெகு உற்சாகமாக அவனேடு பேசிக்கொண்டிருப்பதைக் காதாரக் கேட்டோம்.
ஒருநாள் எங்களை அழைத்து வைத்துக்கொண்டு சிதம் பரி சொன்னன்: ۔
“டேய் நாங்கள் யாருக்கோ அடங்கி நடக்கப் பிறந் தவர்கள் என்று நினைத்துக்கொண்டு, அது தான் எங்கள் பிறப்புக்குப் பரம்பரை பரம்பரையாக நிர்ணயிக்கப்பட் டுள்ள தலைவிதி என்று ஏற்றுக்கொண்டு இவ்வளவு கால மும் வாழ்ந்து வந்து விட்டோம். அதிலுள்ள அடிமைத் தனத்தையும் அநீதியையும் நாங்கள் எதிர்க்க வேண்டியது அவசியம். எங்களுக்கெதிராக நிலப் பிரபு வர்க்கங்கள் அமைத்துக் கொடுத்துள்ள ஈவிரக்கமற்ற பொருளாதாரச் சுரண்டலையும் அரசியல் ஒடுக்கு முறையையும் தகர்த்து, அதன் அதிகாரத்துக்கும் ஆணவத்துக்கும் எதிராக எண் ணற்ற கிளர்ச்சிகளை, போராட்டங்களை, உலகடங்கலு முள்ள தொழிலாளர்கள் நடத்திக்கொண்டிருக்கிற கால மிது. இன்னும் நாங்கள் எங்களைத் தொழிலாளிகள் என்று எண்ணிக்கொள்ளாமல், குடிமைகளாக அங்கீகரித்துக் கொண்டு எங்களைக் கட்டிய தளைகளை அறுக்க அஞ்சிக் கொண்டிருக்கிருேம். ஆனல் நாங்கள் தொழிலாளர்கள்; எங்களது உழைப்பை, உடல் சக்தியை, விற்றுக்கொண் டிருக்கின்ற தொழிலாளர்கள்!'
எங்களிடம் சிதம்பரி கூறியவற்றிலிருந்து 'நாங்கள் அடிமைகளல்ல, குடிமைகளல்ல, அடக்கப்பட்டு நடத்தப்
32
A

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
LU L- வேண்டியவர்களல்ல' என்ற பல உண்மைகளைக் கற் றுக்கொண்டோம். கெளரவமாகக், காலையிலிருந்து மாலை வரை வெய்யிலிலே உடலை வருத்தி, ஆடைகளைத் துவைத்து உலர்த்தி, மடிப்புக் கலையாமல், வெண்மையுடன் உடுக்கக் கொடுக்கும் நாங்கள் எதற்காக, முதுகை வளைத்து, தலை யைச் சொறிந்து, பயந்த சுபாவத்தோடு, பணிந்து வாழவேண்டும்? கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும்? குறைந்த ஊதியத்துக்கு உழைத்து, வருடம்பூரா வறுமை யோடும் வாழ்க்கை பூரா வெறுமையோடும் ஏன் வாழ வேண்டும்? நாங்கள் சிந்திக் கலானுேம், முதலில் பயந்த போதிலும் சிதம்பரி சொல்வதிலுள்ள நியாயமும் அவன் ஆவேசப்படுவதிலுள்ள அர்த்தமும் புரியலானுேம். எங்க ளுக்கென்று, எங்களைப்போன்ற, ஒடுக்கப்பட்ட மக்களுக் கென்று தொழிலாளிகளால் ஒன்று சேர்ந்து, அவர்கள் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கட்சி ஒன்று அல்லும் பகலும் பாடுபட்டு வருவதாக அவன் கூறிய பொழுது நாங்கள் ஆச்சரியப்பட்டோம். அந்தக் கட்சியைப்பற்றி நாங்கள் கேள்விப்படாதவர்களல்ல. ஆனல் சிதம்பரி கூறி யதைப்போன்ற உண்மைகளையல்ல. உழைக்கும் மக்களை ஒன்று சேர்க்க, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங் கள் என ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தக் கட்சியைப் பற்றி நாங்கள் கேட்க நேர்ந்த எவ்வளவோ அவதூருன பிரச்சாரங்களினல் ஒருபோதுமே அணுக மறுத்து விட் டோம். அதை ஆதரித்தால், நாங்கள் குடியிருக்கும் நிலம் கூடப் பறிமுதலாகிவிடும் என்ற அச்சம் எங்களுக்கு!
நாங்கள் வாலிபர்கள் கூடி, ஒரே கொடியின் கீழ், எங் கள் வர்க்கத்தை வழிநடத்த வேண்டிய அவசியத்தை உணர லானுேம். எங்களது சுதந்திரமான வாழ்க்கைக்கு, சுபீட்ச கரமான வாழ்க்கைக்கு, இயக்கம் அவசியமாகப்பட்டது. போராட்டம், தகுந்த பாதையாகத் தோன்றியது. ஒரு நாள் சலவைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை
33

Page 20
மூவர் கதைகள்
அங்குரார்ப்பணம் செய்தோம். அதற்கென்று ஒரு சிறு கொட்டிலைக் கட்டவும் செய்தோம்.
நாங்கள் துவைத்துக் கொடுக்கும் ஆடைகளுக்குப் பதி லாகப் பெறும் கூலி எவ்வளவு அற்பத்தனமானது என்ப தையும் தொழிலாளி மக்களாகிய நாங்கள் நீண்ட கால மாகப் பணக்காரர்களுக்கு உழைத்து வந்ததாலேயே இன் றும் வறியவர்களாக இருந்து வருகிருேம் என்பதையும்
எங்களைக் கொள்ளையிட நீண்டகாலமாக அனுமதித்து விட் ,
டோம் என்பதையும் நாங்கள் கூறியபொழுது சின்னக் குட்டிக் கிழவரும் இராமுக் கட்டாடியும் இன்னும் பலரும் முணுமுணுப்பதைக் கேட்டோம். எங்கள் பெற்றேர்களில் பலர் நாங்கள் ஏதோ ‘அட்டா முட்டித்தனம்’ செய்வதாக எண்ணிக்கொண்டு பட்டினி கிடந்து எங்களைப் பழைய வழிக் குத் திருப்ப முயன்ருர் கள். தாய்மார்கள் மார்பகங்களில் ஒங்கி அறைந்து, கதறிப் புலம்பினர்கள். எங்களோடு கூட்டுச் சேராமல் சின்னவி போன்ற சிலர் பதுங்க முற் பட்டதையும் கண்டோம். தொழிலாளர்களுக்காகக் காலம் மாறுகிறது என்பதை உணராமல், அறியாமை காரணமாக எங்களோடு ஒத்துழைக்க மறுத்த தொழிலாளர்களைக் கண்டு நாங்கள் வேதனைப் பட்டோம்.
'டோ ய், உங்களுக்கு என்ன வந்துவிட்டது? இவ் வளவு நாளும் நல்லாத்தானே இருந்தனிங்கள்? சின்ன வயதிலேயே தறுதலை என்று பட்டம் கேட்டு, ஊர்வெள் ளாளன் களட்டையெல்லாம் செப்பமாக அடிவாங்கி, இனி ஊரிலை இருக்கேலா தெண்டு ஓடிப்போன அவனேட சேர்ந்து வண்ணுரக் குடிகளையெல்லாம் அழிச்சுப் போடக் கங்கணம் கட்டியிட்டியளோ? டேய். சாதி வெள்ளாளங்கள் அறிஞ் சால் எங்கடை வீடு, வாசல் எல்லாத்தையுமே எரிச்சுப் போடுவாங்கள். பெண்டில் பிள்ளையளை மானத்தோடு ருேட்டிலை நடக்க விடாமைப் பண்ணிப்போடுவாங்கள் ; அவங்களுக்குத்தான் பொலிசிலும் செல்வாக்கு. கடைக்
34

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
கண்ணைக் காட்டி, இங்கிலிசிலை சொன்னங்களெண்டால் வழக்குக் கணக்குக்கூட எழுதாமை, எங்களையே தாறு மாருப் பேசிப்போட்டு பொலிசுக்காறன் போயிடுருன். அவங்கடை ஆக்கள்தான் கவுண்மேந்திலும் இருக்கிருன்கள். எம். பி. யஞம் அவங்கள்தான். மந்திரியளும் அவங்கள்தான். மேனையள் .நாங்கள் பெட்டைக் கோழியள். ஒருநாளும் கூவி, எதுவும் விடியாது. பேசாமை நல்லபிள்ளையாட்டம் இருந்திட்டாக் கடவுள் தாற கஞ்சித் தண்ணிக்குப் பிழை யில்லாமல் குடிச்சுக்கொண்டு இருக்கலாம்”
- அவர்கள் கூறியதைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். ஆனபடியால் தான் நாங்களும் செங்கொடியை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று சொன்னுேம். எல்லோரிடத்தி லும் எங்கள் நியாயத்தை எடுத்துக் கூறினுேம்,
'நீங்கள் சொல்வதிலேயே நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழுகிருேமென்ற முழு உண்மையும் அடங்கி யிருக்கு! வீடுகள் எரிக்கப்படும், எங்கள் பெண்கள் கற் பழிக்கப்படுவார்கள், பொலிசும் அரசும் அவர்கள் பக்கம் நிற்கும், நாங்கள் பெட்டைக்கோழிகள்.” என்ற அத்த னையும் உங்களுக்குத் தெரியுதுதானே! உண்மைதான். இது நாள்வரை அப்படித்தான் நடந்திருக்கு. அதனுல்தான் இனியும் அப்படி நாங்கள் இருக்க இடம் கொடுக்கக் Gin. ! — sTgl எ ன் று சொல்லுகிருேம். எங்களுடைய சிதம்பரமும் கதிராத்தையும் முன்பும் கற்பிழக்கவே செய் தார்கள்! இப்பொழுதும் எங்கள் பெண்கள் ருேட்டால் போகும்போது, அவர்களை ஒருமாதிரியாகப் பார்த்து 'வம் புக்கதை’கள் பேசத்தான் செய்கிருர்கள். கூனல் அம்மான் குடிவெறியில் ஏதோ பேசிப்போட்டாரெண்டு, மரத்தோடு கட்டி அடிக்கத்தான் செய்தார்கள்! ஊமையன் மகினம்’ பொழிகிருன் என்று சொல்லி, நொய்த இடமொன்றில் தாக்கி, அவனைத் துடிக்கத் துடிக்கச் சாக அடிக்கத்தான் செய்தார்கள்.
99
35

Page 21
மூவர் கதைகள்
"நாங்கள் நல்ல பிள்ளைகளாக இருந்தும் இப்படி எங்க் ளுக்கு எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கத்தானே செய்தன.
இப்படி எங்களுக்கு நடந்த எத்தனையோ அக்கிரமங் களைச் சகித்துக்கொண்டு நீண்ட நாட்களாக நாம் முதுகு கூனி இருந்துவிட்டோம். இனியும் எங்களிடத்தில் ஒரு கதிராத்தையும் சிதம்பரமும் சோரம் போகக் கூடாது. அவர்களைக் கிள்ளுக்கீரையாக, பணக்காரர்கள் வெறித் துப் பார்க்கும் பெண்களாக இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது. பணக்காரர்களுடைய வீடுகளுக்குச் சென்று எங் கள் வறுமையைப் புலம்பும் பெண்களாக, தட்டுவச் சோற் ருேடு எங்கள் தாயோ சகோதரியோ மனைவியோ, பிள்ளை களோ திரும்பக் கூடாது.
எத்தனையோ வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு எங் கள் வாழ்வில் விடிவு வேண்டுமென்பது ஒத்துக்கொள்ளப் பட்டது. நாங்கள் என்றுமில்லாத மாதிரி மகிழ்ச்சியிலாழ் ந்தோம். தலைநிமிர்ந்து தெருக்களில் நடந்தோம். நகரங்
களில் வாழும் தொழிலாளர்கள் போன்று, சுரண்டலை
எதிர்க்கின்ற தைரியம் எங்களுக்கு வந்து விட்டதாகச் சிதம் பரி குதூகலித்தான்.
மீண்டும் அழுக்குத்துணி எடுக்கப்போனபொழுது நாங்கள் கூறினுேம்:
"இப்ப எல்லாம் பொருட்களின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. அழுக்கு உடுப்புகளை அவித்துத் தோய்க்கிற தென்றல் எப்படி முடியும்? ஊத்தைச் சோடா குதிரை விலை. சவ்வரிசி வாங்கிறதே கஷ்டம், சிறட்டைக் கரியும் அப்பிடி. இந்தக் கோலத்திலை குடிமை எண்டு சொல்லி நீங்கள் அதட்டுறதுக்குப் பயந்து எவ்வளவு நாளைக்குத் தான் எங்களாலே தோய்ச்சுத் தரமுடியும்? நீங்கள் தாற வருஷப் படி எங்களுக்குக் கட்டாது. எங்கடை வறுமை யையும் ஒருக்கா நீங்கள் கண் விழிச்சுப் பார்க்க வேணும்
36
ܬܐܵ ܐ

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
துண்டு ஒன்றுக்கு இருபத்தைஞ்சு சதப்படி கணக்குப் பார்த்துத் தாறதெண்டால், தோய்ச்சுத் தாறம். முடியா விட்டால், எங்களை விட்டிடுங்கோ ?”
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஊர் பரபரப் படைந்தது. வண்ணுர் சங்கம் அமைத்துத் தலை நிமிர்ந்து பேசத் தொடங்கி விட்டார்கள் என்ற குறுகுறுப்பையும் குரோதத்தையும் நாங்கள் எதிர்நோக்கினுேம். அதே நேரத்தில் காசு பணமற்ற, காணி நிலமற்ற உயர்குடி விவ சாயிகளிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைத்தது. எத் தனை நாளைக்குத்தான் நாட்டாண்மைக்கு அஞ்சி, அவர் கள் அடங்கி ஒடுங்கமுடியும் என எங்களுக்குச் சாதகமாக உற்சாகமூட்டும் அவ்விவசாயிகளின் குரல்களையும் நாம் கேட்டோம். எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம் எனத் தயாராக இருந்த எங்களுக்கு ஒருநாள் மாலை பர பரப்பான செய்தி கிடைத்தது. சிதம்பரியைத் தெருவில் மறித்து, வலிய மோதி, உதைத்துக்கொண்டிருக்கிருர்கள் என்பதுதான் அது. குழந்தைகள், பெண்டுகள் முதியவர் கள் எல்லோருமாகக் கையில் கிடைத்ததுடன் தெருவுக் குப் பறந்தோம். எங்கள் குழந்தைகள் இரத்தக் கொதிப் போடு, ஆவேசமாகக் கத்தினர்கள்.
', 'டேய் பண்டியள்; உங்களையெல்லாம் நாங்கள் அழிக் கத்தாண்டா போறம்; துணிவிருந்தால் எங்களிலை தொடு ங்கோ பார்ப்பம் .”*
நாங்கள் அவனுக்காகச் சென்ருேம். எங்களிலும் பத் துப்பேர் இரத்தம் சிந்தினுேம். அது எங்களுக்கு வீரசாத னையாக இருந்தது.
★
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எங்களுடைய கழகம் துரிதமாக வளர்ந்து விட்டது. எங்களுடைய குழந்தை
37

Page 22
மூவர் கதைகள்
களுக்கு மாலை நேரங்களில் கல்வி அறிவு ஊட்டுவது, முதி யவர்களுடன் நாட்டு நடப்புகளைப் பரிமாறுவது, பத்திரி கைகளைப் படித்துக்காட்டி விமர்சிப்பது, இப்படிப் பல கடமைகளையும் இளைஞர்கள் ஏற்றுக்கொண்டோம்.
கழகக் கட்டிடத்தின் தூணிலே சாய்ந்துகொண்டு, கால்களை அகலப் பரப்பியவாறே உட்கார்ந்திருந்த இராமுக் கிழவர் பத்திரிகை படிக்கக் கேட்டுவிட்டு, ஆவலோடு எனது குரலை உள்வாங்கிக் கொண்டிருக்கிருர், சிறிது நேரத் தில் இன்னும் சிலர் வந்துவிடுவார்கள். இராமுக் கிழவ ரின் முகத்தில் பலவித உணர்ச்சிகள்!
“எம். பி. க்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், அமைச்சருக்கு இரண்டாயிரம் ரூபாய், உதவி அமைச்சருக்கு ஆயிர த் து ஐநூறு ரூபாய் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என விசாரணைக் கமிட்டி பிரதமரிடம் சிபார்சு செய்திருக்கிறது.
இந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பு தாகவும் திறைசேரியில் பணம் காலியாக இருப்பதாகவும் கூறும் அரசாங்கம் கூப்பனரிசியை வாங் கா ம ல் தியாகம் செய்யும்படியும் சிக்கனமாக இருக்கும்படியும் சம் பள உயர்வு கேட்க வேண்டாமென்றும் வேலை நிறுத்தத் தில் ஈடுபட வேண்டாமென்றும் உழைக்கும் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.”
திடீரென, இராமுக் கிழவர் பற்களைக் கடிப்பது தெரி கிறது. எனது குரலையும் மீறி அவரது குரல் ஒலிப்பதைக்
கேட்டேன்:
**டோய். அரசாங்கம் எண்ட பெயராலை கொள்ளை யடிக்கிற இந்தப் பண்டியளுக்கு எதிராகவும் நாங்கள்
போராடத்தான் வேண்டும்."
38
ܬܼ̇ܙܐ

ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள்
இராமுக் கிழவர் கூறியதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த சிதம் பரியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந் திருந்தது. உற்சாகத்தோடு “கிழவர், குடுகை” என ஆர வாரமாக, பெரிய குரலில் கூறிய அவன் முதுமையான அந்த இரும்புக் கைகளைக் குலுக்கிக் கொண்டே சொன்
ஞன்:
*"கிழவன்! நீ சொல்லுகிறது சரி! நாங்கள் குடிமை யாக இருக்க முடியாது எண்டு கூறி உயர்ந்த வர்க்கத் துக்கு எதிராக இந்தச் சின்னஞ் சிறு கிராமத்துக்குள் போராடியதுடன் எங்கடை கடமை முடியவில்லை. நாட் டிலே பொருளாதார நெருக்கடி வர வர தீவிரமடைஞ்சு கொண்டு வருகுது. எங்களாலை வாழ்க்கை நிலையை தாங்க
முடியாதளவுக்கு செலவு கூடியிட்டுது. கடையளிலை போனல்
செத்தல் மிளகாய் இல்லை. உள்ளி இல்லை. புளி இல்லை. தலைக்கு மேலை எல்லாச் சாமானும் விலையாக இருக்கு. இந்த இலட்சணத்திலை மனிதன் எப்பிடித்தான வாழுறது? முந்தியெண்டால், பச்சையரிசியைக் காய்ச்சி, மாங்காயும் மிளகாயும் வைச்சு அரைச்சாவது சாப்பிட்டம், இப்ப அதுவும் இல்லை! காசு இருக்கிறவன் கறுப்புச் சந்தையி லும் கனக்க விலையிலும் சாமான்களை வாங்கி வீட்டிலை வைச்சிருக்கிருன்! இது நாங்கள், உழைக்கிற மக்கள் கொஞ்ச வருமானத்திலை பட்டிணி கிடந்துதான் சாக வேண்டியிருக்கு. தொழிலாளிகளான எங்கள் மத்தியில், தலையெடுத்துவிட்ட புரட்சிகர உணர்வை இனி எந்த அர சாங்கமும் ஒண்டும் செய்ய முடியாது. மக்களை அடக்கு கிற, மக்கள் எதிரிகளை நாங்கள் இனம் கண்டு விட்டோம் அவங்களை ஒழிச்சுக்கட்ட நாங்கள் உறுதிபூண்டு விட் டோம் . .
-தாளலயத்தோடு நான் கைதட்டினேன்; குழந்தை குஞ்சுகளும் இராமுக் கிழவரும் தொடர்ந்து கைதட்டி
ஞர்கள்.
39

Page 23
தாய்மொழி மூலம்
தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, ஈரலித்த பட்டையோடு வீட்டுக்கு வந்திருந்த தில்லையம்பலம் முதல் வேலையாகத் தேங்காய் மட்டைகளை அடுக்கி, நெருப்பு மூட்டுவதில் ஈடுபட்டிருந்தான். அவனது முழுக் கவனமும் அந்த ஒலைப்பட்டை ஈரலிப்பால் உக்கிப்போய்விடக் கூடாது என்பது தான்.
தீக் கொளுந்துகள் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்த வேளையில், பழக்கப்பட்டுப்போன கா ரொ ன் றி ன் "ஹோர்ன்’ சத்தம், தெருவில் கேட்டது. தினமும், தெரு முடக்கில் திரும்பும்போதெல்லாம் அந்தக் காரின் "ஹோர்ன்' சத்தம் கேட்கத் தவறுவதில்லை. மாலை நேரத்தில், ஏழு மணி போலக் காரின் சத்தம் கேட்டால், யாழ்ப்பாணக் கச்சேரியிலிருந்து சிவஞானம் வீடு திரும்பிக் கொண்டிருக் கிருன் என்று அர்த்தம். அவன் வழக்கறிஞர் சுப்பிரமணி யத்தின் ஒரே மகன். கச்சேரியில் பொறுப்புவாய்ந்த பெரியதொரு பதவியில் இருக்கிருன் . ஒரு காலத்தில் சிவ ஞானத்தின் வருகையைத் தெரிந்துகொண்டாலே போதும், வீட்டிலிருந்து ருேட்டுக்குத் தில்லையம்பலம் எழுந்தோடிப் போவது சர்வசாதாரணமாக இருந்தது. தனது நெருங் கிய ஒரு நண்பனைச் சந்தித்து அளவளாவ வேண்டுமென்ற துடிப்புத்தான் அப்படிப்பட்ட ஒரு தூண்டுதலுக்குக் கார
40
b.

தாய் மொழி மூலம்
ணம். ஆனல், அது தான் எவ்வளவு வேகமாக மாறிவிட் டது எந்த நேரமும் தில்லையம்பலத்தோடு நட்புப் பாராட்டி இளமைப்பருவத்தில் அவனுடைய வீடே. கதி போலக் காணப்பட்டுக்கொண்டிருந்த சிவஞானம், பிற் காலத்தில் நட்புப்பாராட்டியதே கிடையாது. நாலாம் வகுப்பு முதல் எஸ். எஸ். ஸி. வரை அவர்கள் நல்ல நண் பர்கள். அப்புறம் அந்த நட்புச் சிறிது சிறிதாகத் தேய்ந்து, சம்பிரதாயமாகச் “சுகமா’’ என்று கேட்குமளவுக்கு வளர்ந்து, இப்போது நின்று கதைக்க நேரமற்ற, அவசர அவசரமாக வெறுமனே தலையாட்டிச் செல்லும் ஒரு நிலைக்கு வந்து விட்டது.
தெரு முடக்கில் ஒலித்த காரின் சத்தத்தைக்கேட்டு அது சிவஞானம் என்பதைப் புரிந்துகொண்ட தில்லையம் பலத்தின் தந்தை தம்பர், திடீரென ஏதோ சோகத் துக்கிலக்காகி, தாடியும் மீசையுமாக முகவு வரத் தையே மறந்து, கிழிந்த வேட்டியுடன் வெறும் மேலில் காட்சியளித்த தில்லையம்பலத்தை ஒரு கணம் வெறித்துப் பார்த்தார். நன்கு படித்துப் பல்கலைக்கழகத்தில் பீ. ஏ. பட்டமும் பெற்றுவிட்ட ஒருவனை மகளுகப் பெற்றிருக் கிருேமென அவர் கொண்டிருந்த பெருமிதம் கடந்த ஐந்து வருடகாலமாக மகனுக்கு நிலவி வந்த வேலையில் லாத் திண்டாட்டம் காரணமாகச் செத்து விட்டது. தன் னெத்த விவசாயிகளிடம் இனி விடிந்துவிடும் எனக்கூறி யிருந்த பழைய நாட்களை மீண்டும் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை! படிப்பில் சூரனன ஒருவனுக்குத் தான் தந்தையாக இருந்ததால் அவனை நம்ப நேர்ந்த தனது குடும்பத்தின் எதிர்காலம் அவலமாக மாறிவிட் டதை அவரால் தாங்க முடியவில்லை. யாவும் அவருக்குக் கவலையைக் கொடுத்தன. கடன் சுமையும், குடும்பப் பார மும், மகனுக்கு இனிமேல் வேலையே கிடைக்காது என்ற நம்பிக்கைச் சிதைவும் ஒன்றுசேர்ந்து அவரை வெடு சுடு என் ருக்கிவிட்டது.
41

Page 24
மூவர் கதைகள்
சற்று முன்னர் தோட்டத்திலே தண்ணிர் இறைத்து விட்டுப் பட்டையும் கையுமாக முன்னுல் தில்லையம்பலம் சென்றுகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னுல் மண்வெட் டியும் கையுமாகத் தம்பர் வந்துகொண்டிருந்த பொழுது அது நடந்தது. அவரை வழிமறித்துத் *தோட்டத்தாலையோ' எனப் பேச்சுக் கொடுத்த சங்கக்கடை மனேஜர் வைத்தி லிங்கம் தில்லையம்பலத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்ததும் தம்பரின் மனம் மேலும் புண்படலாயிற்று. சங்கக்கடை மனேஜர் வைத்திலிங்கம் போலவே பலரும் அவரிடம் அவ ரது மகன் தமிழிலே படித்துவிட்டதாகக் குறைவுபடுத்து கிருர்கள். அவரது சொந்த மைத்துனரே ஒரு தமிழ் சட் டம்பியார் தான்! இருந்தபோதிலும் தில்லையம்பலம் பல்
கலைக்கழகத்துக்கு எடுபட்டுவிட்ட அந்த நாளில் அதை
அவரிடம் குதூகலித்துச் சொன்னபொழுது அதை ஒரு வியப்பாகவோ, பொருட்டாகவோ அவர் தனது காதில் போட்டுக்கொள்ளவில்லை. தமிழிலே பீ. ஏ. யைப் படித்து, அதனல் என்ன இலாபம் என அவர் திருப்பிக் கேட்டதும் தம்பரது மனம் கூம்பிப்போய்விட்டது. பணம் படைத்த பலரும் அவரிடம் தட்டிக்கொடுத்து, அவரது மகனது திற மையை மெச்சி உற்சாகப்படுத்துவதாகக் காணுேம். ஏழ்மையிலடிபட்ட ஒரு விவசாயியின் குடும்பத்தினில் ஒரு எழுச்சி நிலையா என்ற வேக்காடாகவே குரல்கள் ஒலித் தன! பொருளாதாரத்தில் பின்தங்கிவிட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையே இது தான் என்பது "குத்தகை விவ சாயியான தில்லையம்பலத்தின் தந்தைக்கு எப்படித் தெரியும் ?
தில்லையம்பலத்தைப் படிப்பிப்பதை அச்சத்திற்குரிய தாக அவர் நோக்கத் தொடங்கியபோது அவரது மனைவி சின்னச்சியின் உறுதியான பேச்சே வருவது வரட்டும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அவள் சொன்னுள்:
'உங்கடை மச்சான் தமிழ் படிக்காமல் வேறு என் னத்திலை படிச்சவராம்? ஏன் எங்களுக்கு ஏதும் ஐஞ்சைப்
42

யனைப் படிப்பிக்கிறது தான்.
தாய் மொழி மூலம்
பத்தைத் தந்து உதவி செய்ய வேணுமெண்டு பயப்பிடு கிருர் போலை கொஞ்சம் பணம் பிடிபட்டவங்களுக்கெல் லாம் உடலைவருத்தி உழைக்கிற ஏழை எளிய துகள், படிக் கக்கூடாது, நல்லாவரக்கூடாது, உடுக்கக்கூடாது, உண் ணக்கூடாது,எண்ட எண்ணம் வந்திடுது. அப்பிடி யெண் டாத்தானே அவை இன்னும் எங்கடை முதுகுகளிலே ஏறி வேண்டியமட்டும் சவாரி விட்டுக் கொண்டிருக்கலாம், பேய்க்காட்டலாம். அவற்றை விழல்க் கதையளை விட்டிட்டு காணி வயலை வித்து, கடன்பட்டாவது நாங்கள் பொடி
9
சின்னுச்சியின் அடித்துச் சொல்வதுபோன்ற தீர்மான மும் கடன் படமுயன்ற துணிச்சலும் தில்லையம்பலத்தைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பும் விசயத்தில் யாருடைய கருத்துக்கும் இடமில்லாமல் செய்துவிட்டது. பெண் குழந் தைகளுடன் கடனும் தனியுமாக எப்படி வாழப் போகிறீர் கள் என அநுதாபமாகக் கதைத் தவர்கள் உண்மையில் தன்மீது கொண்ட பற்றுதலினலேயே இரக்கப்பட்டு, உள் ளதைக் கூறியிருந்ததாகக் கடன்பட நேரும் போதெல் லாம் தம்பருக்கு எண்ணத்தோன்றும். ஆஞல் அதன் பொய்மையும் ஒருநாள் அவருக்குக் காதில் விழத்தான் செய்தது.
காசு கடன்படுவதற்காகக் கொன்ருய்க்டர்" கனகர் வீட்டிற்கு அவர் சென்ற சமயம், கனகர் தனது மகனிடம் பொரிந்து கொண்டிருந்தார். -
*தின்ன வழியில்லாது கூலிக்கு உழைக்கிறதுகள் எல் லாம் கெட்டித்தனமாப் படிச்சு, பீ. ஏ., எம். ஏ. எண்டு வந்திடுருன்கள். உங்கை தம்பன் ரை தில்லையம்பலத்தைப் பார். ! இது உன்னை நினைச்சால் எனக்கே வெக்கமாக் கிடக்கு. உன்னுலை, ஒரு எஸ். எஸ். ஸியைக் கூட வடி
43

Page 25
மூவர் கதைகள்
வாப் பாஸ் பண்ண முடியவில்லை. நீ என்னடா என்ருல் கொழுப்பு மெத்திப்போய் சிநேகிதப் பொடியளோடை சையிக்கிளிலை ஊர் அளந்து கொண்டு திரியிருப். எவ்வளவு 'டியுஷன்" தந்தும் உன்ரை மரமண்டையிலை படிப்பும் ஏறுதில்லை. ም ?
- ஊரெல்லாம் பொருமைப்படுகிற அளவுக்கு, ஓர் உதாரணமாக, உடலை வருத்தி உழைக்கும் விவசாயி ஒரு வணின் மகன் கெட்டிக்காரனக இருக்கிருன் என்பதில் அவர் கொண்டிருந்த பெருமிதம் தகர்ந்து போகக்கூடிய தாக வேலையில்லாத் திண்டாட்டம் என்ருெரு நிலை வரு மென்பதை அவர் கண்டாரா என்ன ? அவரது காலத்திலும், பின்னரும், நாலு எழுத்துப் படித்து, வாழ்வில் ஏற்றம், பெற்ற யாழ்ப்பாணத்தவர்களைப் போலவே, தில்லையம் பலத்துக்கும் ஒரு அரசாங்க உத்தியோகம் வாய்த்து, ஏழ்மையால் தாழ்வுற்ற தமது நிலை மாறும் என அவரும் அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் ஏன் - அவனுமே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
அந்த நம்பிக்கை கடந்த ஐந்து வருடங்களாக இல்லை யென்று ஆகிவிட்டபின் வீட்டிலே ஒரு நாள் பூரா பாரச் சுமையாக, கடன் சுமையைப்போன்றே அவனது உணவு, உடை, சிறுசெலவுகளும் தம்மை அழுத்திக் கொண்டிருப்ப தாகப் பெற்றேர் வெந்து வெடிக்க ஆரம்பித்து விட்டார் கள். அதுவே சில சமயங்களில் முரண்பாடுகளாகத் தோன்றி, பெரும் பூகம்பங்களாகவும் அவர்களுக்கிடையே வெடித்து விடுகிறது. r
தெரு முடக்கிலே கேட்ட காரின் வருகைச் சத்தம், கேலிப்புன்னகை சிந்தி அனுதாபம் கொண்டவரைப் போல நடித்த சங்கக் கடை மனேஜர் வைத்திலிங்கத்தின் கூற்றுக்களால் புகைந்து கொண்டிருந்த தம்பரின் மனே
44

தாய் மொழி மூலம்
நிலையை மேலும் அனலேற்றியது. மனேஜர் அவரிடம் சொன்னது காதில் வந்து இரைச்சலிட்டது.
" என்ன தம்பரண்ணை. தில்லையம்பலத்துக்கு ஒரு தொழிலும் கிடைக்கயில்லைப்போலை கிடக்கு. தமிழிலே படிச்சவனுக்கு என்ன உத்தியோகத்தைத் தான் அவங்க ளும் குடுக்கிறது? இந்த உலகத்திலை பெரிய பெரிய படிப் புகள் இங்கிலிசிலை தான் இருக்கு. அதுக்கு எங்கை போன லும் மரியாதை, உவன், பண்டாரநாயக்கா சிங்களத்திலை தான் எல்லாமெண்டு தூக்கிப்பிடிச்சு தாய் மொழியளிலை அரசாங்க அலுவல் நடக்க வேணுமெண்டு சொல்லியிருந் தாலும் கச்சேரியிலை போய்ப்பார்க்க வேணும். இங்கிலீசு
கிளார்க்குகளை வேலைக்கு எடுத்து அவங்களட்டை ஒரு அறுப்பும் செய்விக்க ஏலாமைக் கிடக்கு எண்டு எங்கடை “ஒ. ஏ.” சொன்னவர். அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போன பொழுது நேரிலே அதையும் பார்த்தன். ஏழாம் வகுப்புப்படிச்ச எனக்குத் தெரியிற இங்கிலீசு கூட அவங் களுக்குத் தெரியல்லை. ஒரு விலாசம் இங்கிலீசிலை வடிவா எழுத மாட்டாமை இருக்கிருன்கள். இந்த நாளைச் சிங்களத்தமிழ் பீ. ஏ. க்களும். படிப்பும்! உன் ரை மேன் இங்கி படிச்சிருந்தால் இப்ப, இப்பிடி ஒரு கரைச்சலும் வந்திராது. இது, தமிழைப் படிச்சு. என்ன சேட்டிவிக் கரைக் கூழ் காய்ச்சிக் குடிக்கிறதே? இங்கிலீசுப் பீ. ஏ. எண்டால், எங்கடை 'ஒ. ஏ.'' சிதம்பரப்பிள்ளையருக்கு ஒரு சொல்லுச் சொல்லி, அங்கை இங்கை செருகிப் போடுவன்.""
தம்பருக்குக் காரில் போகும் சிவஞானத்தின் நினைப்புத் தோன்றியதும் அவனேடு இளமைக் காலத்தில் படித்த தனது மகனின் நிலை, மனதைச் சுட்டது. தம்பர் முணு முணுத்தார்:
45

Page 26
மூவர் கதைகள்
"கெட்டித்தனமாக, அவன் இங்கிலீசிலை படிச்சபடி யால், காரிலை போருன், கொழுத்த சம்பளத்தோடு கவலை யில்லாமலும் திரியிருன். இது தமிழ் பீ. ஏ. படிச்சிட்டு வந்து, வீட்டிலை குந்திக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு அப்பவே அவளுக்கு நான் சொன்னணுன் . என்னுலை படிப் பிக்கச் சக்தி இல்லை; கடை கண்ணியிலை விடுவம் எண்டு, அவள் கேட்டாளே?
*தமிழிலை என்ன தொழிலைச் செய்யிறது எண்டு இவன் படிச்சவன்? ஐஞ்சு வருஷமா ஒரு வயது வந்த பிள்ளை தாய் தேப்பனுேடை இருந்து எத்தினை நாளைக்குப் பணச் செலவை வைக்கிறது. ‘கோசுக்குக் கோசு" இன்டர்வியூ வுக்குப் போக எண்டு சொல்லி, எவ்வளவைக் கடன் பட் டுட்டன்? கோச்சுக்குக் கொட்டினது தான் மிச்சம். வர வர எனக்கும், கைகால் உளைஞ்சு, உழைக்கேலா மைக் கிடக்கு, வீட்டிலை இருக்கிற குமருகள் கன்னி கழியாமை இருக்கிறதை நான் யோசிக்கட்டோ? இல்லை கடன் தனியை யோசிக்கட்டோ? இல்லை, படிச்சிட்டு வந்து வருஷக் கணக்கா இருக்கிற உன்னை யோசிக்கட்டோ? இனி என்னை நம்பிக்கொண்டிருக்காமை, அவரவர் தங்கள் பாட்டைப் பாருங்கோ’.
தந்தை கூறிய "தமிழிலே படித்து' என்ற சொல்லை
மட்டுமே அப்போது தில்லையம்பலம் காதில் வாங்கினன். அவனுல் அதைச் சகிக்க முடியவில்லை. உள்ளம் ஆத்திரத் தால் துடித்தது. சுட்டெரித்து விடுபவன்போல, எரிச்சல் யாவும் முகத்தில் திரள, அவரைப் பார்த்தான்.
"ஏன் இங்கிலீசிலை படிச்சவங்களுக்கெல்லாம் உத்தி யோகம் வந்து கதவைத் தட்டிக்கூப்பிடுதோ..? மரவேலை
செய்யிற சின்னவியின்ரை மகன் கனகரெத்தினம் இங்கி லீசிலை சயன்ஸ் படிச்சு, என்னைப்போலை பட்டதாரியாகி,
46

தாய் மொழி மூலம்
வீட்டிலை தான் இருக்கிருன் உப்பிடிக் கனபேர் - நீங்கள் சொல்லுற இங்கிலீசிலை படிச்சிட்டும் வருஷக் கண்க்காத் தொழில் இல்லாமைத் தான் இருக்கிறன்கள். தாய் மொழி யிலை படிச்சவங்களுக்கு மட்டும் வேலையில்லை எண்ட ஒரு *எழுத்து' இல்லை. எத்தனையோ பேர் பெரிய பெரிய பத வியிலும் இருக்கிருன்கள்! உங்களைப்போன்ற உழைப்பாளித் தந்தைகளுக்குப் பிள்ளைகளாகப் பிறந்த காரணத்தாலை எங்களுக்குத் தான், அது இங்கிலிசோ, தமிழோ, சிங்க ளமோ, தொழிலே கிடைக்கயில்லை. தாய்மொழியிலை படிச்சா, அது என்ன குறைவோ? படிச்சதெல்லாம் ஒரே பாடம் தான்! ஒரே அறிவைத் தான்! சும்மா, வாய்க்கு வந்தபடி தாய்மொழியைக் கிறுக்கிபோட்டு, பட்டத்தோடு வந்திருக்கிறதா நினைக்கிறியள் போலை! அவன், இவன் சொல்றதைக் கேட்டு, 'அது கூட, இது குறைய' எண்டு உங்களைப் பேச வேண்டாமென எத்தனை நாள் சொல்லி யிட்டன். எங்கடை ஆக்கள் பெரிசாச் சுதந்திரம் கிடைத்து விட்டதாச் சொல்லிக்கொண்டு, இன்னும் ஏகாதிபத்திய வாதிகளுக்குக் கைகட்டிய தங்கடை அடிமைப் புத்தி மாரு மல் இருக்கிருர்கள்!
*வேலை சிடைக்கயில்லையெண்ட கவலையை விடப்பெரிய கவலையாயிருக்கு இது. நான்தானே, தோட்டமென்ன. சுருட்டுச் சுத்துறதெண்டாலும் சரியெண்டு சொல்லுறன். என்ரை, கையும் காலும் நோகாமல், அலுக்காமல் பூப் போலையே இருக்குது? படிக்கிறகாலத்திலும் தோட்டம் கொத்தினனன் தான்! நீங்கள் தான், நான் உத்தியோக மாகையில்லை, அரசாங்க உத்தியோகத்துக்கு வழியில்லாமை இருக்கிறன் எண்டு புறுபுறுத்துக் கொண்டிருக்கிறியள். வேலை கிடைக்காமை இருக்கிறது எனக்கு மட்டுமுள்ள ஒரு தனிப் பிரச்சினையில்லை.”
மேற்கொண்டு பேசுவதை சடாரென நிறுத்திவிட்டு அங்கு நிலவமுற்பட்ட பயங்கர அமைதியைக் கலைப்பது
47

Page 27
மூவர் கதைகள்
போலத் தேங்காய் மட்டைகளில் தீ நன்கு கொளுந்து விட்டு எரியக் கூடியதாகக் குனிந்து ஊதத் தொடங்கினன் தில்லை"பம்பலம். யார் மீதோ, அவனது கண்களிலிருந்து பறக்கும் பொறிக்கனல்களே அங்கு தணலாகிக் கொண்
★
எஸ். எஸ். சி. முதல் உயர்வகுப்புகள் வரை தாய் மொழி மூலமே போதிக்கப்பட வேண்டுமென ஆட்சியா ளர்கள் முடிவெடுத்திருந்த அதே கால கட்டத்திற்ருன் தில்லையம்பலமும் அந்த வகுப்புகளுக்கு வந்திருந்தான். சுதந் திரத்துக்குப் பின்னர், தாய்மொழிமூலம் போதிக்கப்பட வேண்டுமென்ற கொள்கை வலுத்திருந்தது. படிப்படியான மாறுதல்களுடன் முற்ருகவே தாய்மொழியாக்கப்பட்ட கால மும், தில்லையம்பலத்தின் பள்ளிப்பருவமும் ஒரே சமயத் தில் நேர்ந்ததால், எந்த நோக்கத்துக்காக அவன் தம்ப ரால் ஆங்கிலக் கல்லூரியில் சேர்க்கப்பட்டானே அது அறவே பிழைத்து விட்டது.
கிராமியப் பாடசாலைகளில் பயில நேர்ந்த மாணவர் களுக்குத் தாய்மொழி மூலமே யாவற்றையும் படித்துக் கொள்ளலாம் என்ற அறிவித்தலானது மகிழ்ச்சியைக் கொடுத்தது! அந்நிய மொழியொன்றினில் சகல பாடங் களையும் படிப்பதிலுள்ள கஷ்டத்தை அவர்கள் நன்கு அறிந் திருந்தார்கள்! அந்த மொழியே தமது திறமையை விருத் தியுறவிடாது, வரம்பிட்டிருப்பதாகவும் அவர்கள் கசப்புற் றிருந்தார்கள். கல்லூரி ஆசிரியர்கள் காட்டுமிராண்டித்
தனமாக அவர்களை அடித்து, "மொக்குகள்' என்று பட்
டம் கட்டியபோதெல்லாம் படிப்புலகையே துறந்து ஓடிவிட வேண்டும் போல மனமுடைந்திருக்கிருர்கள். அப்படியான ஒரு மனமுடைவினல் இடைநடுவில் வரதராசாவும், சிவா னந்தனும் தங்களுக்குத் தோட்டமும் தரவையில் மாட்டுச் சாணியும் அள்ளுவதே தகுதியென நிராசையோடு கூறி, பள்ளியிலிருந்து விலக நேர்ந்தது! சிலர் ஆங்கிலக் கல்லூரி
48
ܬ݁ܠ ܐܶܠܳܐ

ད་
தாய் மொழி மூலம்
களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அங்கே மகா கெட்டிக்காரர்களாகத் திகழ்ந்திருக்கிருர்கள்.
எஸ். எஸ். ஸி. முதல் உயர்தர வகுப்புகள் அனைத்தும் உடனடியாகவே தாய்மொழிமூலம் போதிக்கப்படவேண்டு மென்ற கொள்கையைத் தில்லையம்பலம் படித்த கல்லூரி மூச்சுப்பேச்சில்லாமல் அமுல்படுத்தத் தொடங்கிவிட்டது! பல கிராமியக் கல்லூரிகளிலும் அதே மாறுதல் நிகழ்ந்தது! ஆனல் யாழ்ப்பாணத்துப் பட்டணத்தில், மிஷனரிகளின் கீழும் இந்து முகாமையாளர்களின் கீழும் இயங்கிக் கொண் டிருந்த பெரிய பாடசாலைகளில் தாய்மொழி மூலம் கல்வி போதிக்க எதிர்ப்பு மிகுந்திருந்தது! பணக்காரப் பெற்றேர் களும், ஆங்கிலத்திலேயே ஊறித் திளைத்த ஆசிரியர்களும் ஆங்கிலக் கல்வி அகற்றப்படுவதால் புழுப்போலத் துடித் தார்கள்! தாய்மொழியில் படிப்பிக்கக்கூடிய மொழி ஆற் றல் தம்மிடம் இல்லையென்று தமிழர்களாகவே பிறப்பில் இருந்த ஆசிரியர்களும், ஆங்கிலமில்லாவிட்டால் படிப்பின் தராதரமே குன்றி விடுமெனத் தமிழர்களாகவே பிறந்த பெற்றேர்களும் கச்சை கட்டி, பெற்றேர் ஆசிரியர் சங் கத்தில் முழங்கியிருந்தார்கள்! அந்த முழக்கம் நகரப் புறங் களில் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் இடங்கள் பூரா தீவிரமாக மிகுந்திருந்தது.
தில்லையம்பலத்தின் நிழலில் ஆங்கிலத்துக்கும் கணிதத் துக்கும் வேறு பல பாடங்களுக்கும் உதவிபெற்று, கூட் டாகப் படித்து, நெருங்கிய நண்பணுகத் திகழ்ந்து கொண் டிருந்த வழக்கறிஞரின் மகனன சிவஞானம், அப்போதிக் கரி மகன் நற்குணம், சனிற்ரறி இன்ஸ்பெக்டரின் மகன் கணேசமூர்த்தி, ஆகியோர் முதலில் தாய்மொழி மூலம் பயிலும் மகிழ்ச்சிகரமான செய்தியைச் சக மாணவர்க ளுடன் பகிர்ந்து, குதூகலித்த போதிலும் மறுநாள் அவர் கள் பெரும் எதிர்ப்பாளர்களாகக் கிளம்பியிருந்தார்கள்!
49

Page 28
மூவர் கதைகள்
அவர்கள் சொன்ன புதிய விபரங்களைத் தில்லையம்பலம் தனது வாழ்நாளில் கூட நினைத்துப் பார்த்ததில்லை!
"தமிழிலை படித்து என்ன பிரயோசனம் என்று எங் கடை "பாதர் சொல்லுகிருர், நாங்கள் இங்கிலாந்துக்கோ, அமெரிக்காவுக்கோ போக முடியாதாம். இலங்கையுக்கையே நாங்கள் அடைபட்டுக் கிடக்க வேணும். ஏன் - யாழ்ப் பாணத்துக்கங்காலை சிங்கள நாடுகளிலை கூட வேலை செய்ய இயலாது. தமிழிலைப் படிச்சால் ஒரு வாத்தியாராக வரத் தான் ஆக ஏலும், ஒரு டி. ஆர். ஓ. எண்டோ இஞ்சினி யர் எண்டோ, டாக்டர் எண்டோ, பொலிஸ் இன்ஸ்பெக் டர் எண்டோ எப்பிடி நாங்கள் வர முடியும்? அதோடை இங்கிலிசிலை படிக்கிறதுக்கு இருக்கிற மரியாதை, சிங்களத் தையும், தமிழையும் படிச்சு வந்திடப்போகுதே? நாங்கள் தொடர்ந்து இங்கை படிக்க மாட்டம். யாழ்ப்பாணம் டவுணிலை மிஷனரி ஹிந்துப் பள்ளிக்கூடங்களிலை இன்னும் மேல்வகுப்புகள் தமிழிலை படிப்பிக்கத் தொடங்கயில்லையாம். நாங்கள் அங்கை போப் போறம்.”
சிவஞானம் தில்லையம்பலத்தின் நெருங்கிய நண்பன் என்ற தொடர்பில், தன்னைப் போலவே பட்டிணத்துக்கு வந்து அவனைப் படிக்கும்படி கேட்டிருந்தான். ஆனல் சிவ ஞானத்தின் மனநிலை வேறு விதமாக இருந்தது! சாதா ரணமாகவே தவணைக்குத் தவணை ஒழுங்காகச் சம்பளக் காசு கட்ட வழியற்று பூரணமாகப் படித்து முடிக்க வாய்ப் பிருக்கிறதோ என்ற அச்சத்தோடும் குடும்பப் போராட் டத்தோடும் பயின்று கொண்டிருப்பவன் அவன். அப்ப டிப்பட்ட ஒருவனுக்குப் போர்டிங்குக்கும் உடுப்புக்கும் படிப் புக்குமென்று நூறு நூற்றைம்பது ரூபாய்களை அள்ளி வீச அவனது குடும்பம் தயாராக இருக்கிறதா என்ன?
"இப்பவே படிப்பிக்கக் காசு இல்லையெண்டு அப்பு சொல்லுகிருர் . ஊரோடை படிக்கிறபடியாத்தான் தோட்
50
臀、

தாய் மொழி மூலம்
டம், வயல் எண்டு அவருக்கு உதவி செய்யவும் என்னுலை முடியுது. நான் போன அந்த வருமானமும், ஆள் உதவி இல்லாமல் பட்டுப்போம். சம்பளக் காசு கேட்டால், தோட் டத்தைக் கொத்து, கடைகண்ணியிலே நில் எண்டு சொல் லுருர், பாவம், அவராலும் எத்தினை நாளைக்குக் கஷ்டப் பட முடியும்? ஆனவாயிலை அவரும் சாப்பிடாமல் வீட்டி லுள்ள மற்றவர்களும் சாப்பிடாமல் எத்தினை நாளைக்குக் கடன்பட்டு என்னையும் படிப்பிக்கிறது?”
சிவஞானத்தின்மூலம், தமிழிலே படிப்பதைச் சிவஞானத்தின் தந்தை குறைவுபடுத்திச் சொன்னதாகக் கேட் டறிந்ததும் தில்லையம்பலம் திடுக்கிட்டுப் போனன். சிவஞானத்தின் தந்தையாரான வழக்கறிஞர் சிவசுப்பிரமணி யம் அரசியல் மேடைகளில், மூவர்ணக் கொடியொன்றின் கீழ் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பேசியிருப் பதை அவன் கேட்டிருக்கிருன். அவரது உணர்ச்சிகரமான பேச்சுக்களால் குழுமியிருக்கும் பிரமாண்டமான மக்கள் கூட்டம் ஏகோபித்த குரலில் 'தமிழ் வாழ்க’ எனக் கோஷ மிட்டதை அவன் கேட்டிருக்கிருன்; கடலுக்கப்பாலுள்ள நாடுகளிலெல்லாம் மகா நாடுகள் கூட்டிப் பிற நாட்டார் தமிழுக்கு வணக்கம் செய்வதாக அவர் சொன்ன பெரு மைதரும் தகவலை அவன் கேட்டிருக்கிருன்; தமிழர்க் கென்று, தமிழ்மொழிக்கென்று ஒரு அரசை நிறுவும் பணி யிலே ஆவி பிரியும்வரை தளராது உழைப்பேன் என அவர் சங்கநாதம் செய்ததையும் அவன் கேட்டிருக்கிருன். அவர்தான், சிவஞானம் தாய்மொழி மூலம் படிக்கத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிருராம்.
பின்னர் அவன் கேள்விப்பட நேர்ந்தவைகளும் வியப் பாக இருக்கவில்லை. தாய்மொழியின் அருமை பெருமை களை, மேடைகளில் முழங்கி. பாமர மக்களின் உணர்ச்சி களை மீட்டிய, தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் தமது குழந்தைகளை ஆங்கிலம் மூலமே படிப்பிக்கிருர்களாம்.

Page 29
மூவர் கதைகள்
தில்லையம்பலம் புன்ன கையோடு சிவஞானத்திடம் சொன்னன்:
'தாய் மொழியில் பயிலும் ஒரு குழந்தைக்குச் சிந்தனை விசாலித்ததாகவும் அந்நிய மொழி பயில்பவனைவிட அறிவு மிகுதியாகவும் இருக்குமென உன்னுடைய அப்பா சொன் னவர். இப்ப ஏன் இப்பிடி .உன்னை இங்கிலீசிலை படிக் கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்?”
ஐந்து வருடங்களாக உத்தியோகமற்று, பட்டதாரி ஒருவன் தவிக்க நேர்ந்ததற்குத் தாய்மொழியில் கல்வி கற் றதே காரணமென ஊரவர்களால் சொல்லப் படுகின்ற பொருந்தாமையைத் தில்லையம்பலம் உணர்ந்திருந்தான். இன்னும் அதன் உண்மையான காரணங்களை கிராமிய மக் களிடையே அம்பலப்படுத்தப்படாத வரை நிந்தனைகளை யும் கேவலமான கணிப்பீடுகளையும், மனதைப் புண்படுத் தும் சொற்களையும் ஒரு பொருட்டாகக் கருதிவிடக் கூடா தெனத் தனது மனதை அவன் தேற்றவேண்டியிருந்தது.
நெருப்பில் முறுகிய பட்டையை முற்றத்துப் பூவர சின் ஒடிந்த கொம்பரொன்றில் மாட்டிவிட்டு, கிணற்ற டியை நோக்கிச் சென்ற அவன் ந:ாலைந்து வாளி குளிர்ந்த நீரைத் தேகத்தில் ஊற்றிக் கொண்டதும் உடலுக்கு இனம் தெரியாத ஆறுதல் ஏற்பட்டது. யாவற்றையுமே மறந்து விட்டவன் போலத் திரும்பி வந்து சாய்மனைக் கட்டிலில் சாய்ந்து கொண்டான், வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத் தலைவரான கனகலிங்கம், எம். பி. ஒருவரின் வீட்டுக்கு முன்னல் பட்டதாரிகளின் அவல நிலைக்கு ஒரு முடிவு கூறும்படி கோரி, சாகுமட்டும் உண்ணு விரதம் மேற்கொண்டிருப்பதாகப் பத்திரிகையொன்றில் செய்தி இருந்தது. சங்கத்தின் இந்தத் தீர்மானத்தைக் கூட்டம் கூடி முடிவெடுத்த அன்றே அவன் ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எத்தனையோ தடவை
52

R
தாய் மொழி மூலம்
பாராளுமன்றப் பிரதிநிதிகளை நம்பியாகிவிட்டது; தேனெ ழுகப் பேசும் அவர்கள், தனிப்பட்ட முறையில் தமக்கு மிக வேண்டியவர்களுக்கு மந்திரிகளின் கால்களைப் பிடித் தாவது தொழில் தேடிக் கொடுக்க முயன்றுகொண்டிருக் கிருர்கள். ‘நிதி நிலைமை மகா மோசம், இந்த நிலையில் பிரதமர் யோசித்துக்கொண்டிருக்கிருர்’ என சாக்குப் போக்குக் கூறி, தொங்கிய முகத்தோடு பட்டதாரிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு கனகலிங்கம் இறப்பது ஒரு பொருட்டாகி விடுமா?
கனகலிங்கம் சாகுமட்டும் இருக்கப் போகும் உண்ணுவிர தச் செய்திகளைத் தாங்கி வந்துள்ள இதே பத்திரிகைகள் உண்ணுவிரதம் செய்யாமலே செத்தொழிந்த பட்டதாரிக ளின் மரண விசாரணைகளையும் வெளியிடத்தான் செய்தன. புத்தளம் சீமெந்தித் தொழிற்சாலையில் தொழிலாளியாக இருக்கும் அப்புஹாமியின் மூத்த மகன், சிரிசேன தனது உடன் பிறந்த ஏழு சகோதரிகளை நிர்க் கதியாய் தவிக்க வைத்து "என் றெக்ஸ்’ அருந்திச் செத்துப் போனன். எம். பி. ஒருவரை நம்பி, அவரது தேர்தல் மேடைகளில் ஏறி முழங்கிய சிவலிங்கமும் அந்த எம். பி. யால் ஏமாற்றப் பட்டு மல்லாகத்திலுள்ள சுடலையொன்றில் பொலிடோல் குடித்து மடிந்து போகவே செய்தான். விரக்தியால் நிகழ் ந்த பல மரணங்களுக்கெல்லாம் யார் அஞ்சினர்கள்? அநு தாபப் பட்டார்கள்? அக்கறை எடுத்தார்கள்? இனிக் கன கலிங்கத்தின் உண்ணுவிரதமா பிரச்சினைக்கு முடிவுகாணப் போகிறது?
பட்டதாரிகள் சங்கம் தவருண பாதையில் வழிநடத் தப்படுவது குறித்து தில்லையம்பலத்தின் மனம் வேதனை யடைந்தது. தமது ஒத்தவர்க்கத்தின் நலனுக்காகக், கீழ்த் தரமான முறைகளில் நடந்துகொள்ளும் பாராளுமன்றப் பிரதிநிதிகளையே தஞ்சமடைந்து உழைப்பாளிகளது படித்த குழந்தைகள் யாசகம் எடுப்பதென்றல்...? சுரண்டுபவர்
5.3

Page 30
மூவர் கதைகள்
களும் சுரண்டப்படுவோரும் இருக்கும்வரை, பொது எதிரி களைக் கண்டுபிடிக்காதவரை, கனகலிங்கம் என்ற தனிநபர் மட்டுமல்ல, ஆயிரம் கன கலிங்கங்கள் உண்ணுவிரதம் மேற் கொண்டாலும்கூட பலன் பூஜ்யம் என்பதை நினைத்து அவன் கொதிக்கலானன்.
தில்லையம்பலத்துக்கு சமூக சேவை அமைச்சிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு வருமாறு கடிதம் வந்திருந்தது. புத் திசாலித்தனமாக, பயணச்செலவுகள் கொடுபடமாட்டாது என முற்கூட்டியே குறிப்பிட்டிருந்தார்கள். யாராவது ஒரு பணம் படைத்த வர்க்கத்தைச் சேர்ந்தவனுக்காக அந் தப் பதவியை அமைச்சு சிருஷ்டித்திருக்கலாம் என வேடிக் கையாக நினைக்க அவனுக்குத் தோன்றியது. அல்லது, அமைச்சரின் பலமான சிபாரிசின் பேரில் இப்பொழுதே அந்தப் பதவி ஊர்ஜிதம் செய்யப் பட்டிருக்கலாம் என அவன் நினைத்தான். அவனது கடந்த ஐந்து வருடகால அனுபவம் பொய்மையானதல்ல. ஐந்து வருடங்களும் எந்தத் திறமையின் அடிப்படையில் அவன் புறக்கணிக்கப் பட்டான்?
அந்த நேர்முகக் கடிதத்தைத் தில்லையம்பலம் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. முயன்று பார்க்கும் உந் துதல் சிதைவுருத காரணத்தினல், தில்லையம்பலம் மீண் டும் கொழும்புக்குப் போயிருந்தான். ஐந்து வருடக் காலத் தில், அவன் தோற்றிய நேர்முகத் தேர்வுகள் நூற்றுக் கும் மேற்பட்டதாக இருக்கலாம்.
அவனைப்போலவே அங்கு பலர் வந்திருந்தார்கள். தமி ழர்களும் சிங்களவர்களுமாக நிரம்பியிருந்த அந்தக் கூட் டத்தில் பெரும்பாலானேர், விவசாயிகளினதும் தொழி லாளிகளினதும் குடும்பங்களில் பிறந்தவர்களாக இருந் தார்கள். சோகமும், அடக்கமுமாக நின்றிருந்த அவர் களை இனம் காண்பது பிரச்சினையாக இருக்கவில்லை. இன்
54

R
தாய் மொழி மூலம்
னெரு கூட்டம் படோபகரமாக நின்றிருந்தது. அவர் களுக்குப் பல விசயங்கள் தெரிந்திருந்தன. ஒருவன், நேர் முகத் தேர்வுக் குழுவில் இருக்கும் கொமிஷனர் தனக்கு தூரத்து உறவு என்று மற்றவர்களிடம் பீற்றிக் கொண் டிருந்தான். இன்னெருவனுக்கு “எத்தனைபேரை எடுக்க இருக்கிருர்கள், எத்தனைபேர் விண்ணப்பித்தார்கள், என்ற விபரங்கள் தெரிந்திருந்தன. செனட்டர் ஒருவரின் மகளு க்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருப்பதாகப் பரவலாகக் கதை த்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்காகத்தானும், வழக் கமாகக் கோருவது போலச் சிறப்புப் பட்டதாரிகள் என் றில்லாமல் பொதுப் பட்டதாரிகளைக் கோரி "கசெற்"றில் விளம்பரப் படுத்தினர்களாம். ! அமைச்சரும் வேறு சில பெரிய புள்ளிகளும் தெரிவு செய்யப்பட வேண்டிய பெயர் களை முற்கூட்டியே பட்டியல் தயாரித்துக் கொடுத்து விட் டதாகவும் பேச்சு அடிபட்டது.
அங்கு, சிவஞானத்தின் சகோதரி சரஸ்வதியும் வந்தி ருந்தாள். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறி ஓராண்டு கூட ஆகியிருக்காது. மூன்று மாதங்களுக்கு முன்னர் பரீட் சைப் பெறுபேறு வெளிவந்தது. ஒரே ஊரைச் சேர்ந்த வள் என்ற முறையில் தில்லையம்பலம் அவளோடு பேச்சுக் கொடுத்தான். எல்லோரும் தமது சொந்தத் தாய் மொழி யிலேயே கற்ருக வேண்டுமென்ற நிர்ம்பந்தம் உருவாகி விட்ட பின்னரே, அவளால் பல்கலைக் கழகத்துக்குள் அடி யெடுத்து வைக்க நேர்ந்தது.
அவள் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் தில்லையம்ப லத்தோடு பேசினுள்:-
*பத்துப் பேரையாவது எடுக்கப் போகினம் எண்டு கேள்வி. அப்பா, ஆரையோ கண்டு பேசினவராம். என்ன செய்யிருன்களோ தெரியாது. இனி அதிர்ஷ்டம்.”
55

Page 31
மூவர் கதைகள்
தில்லையம்பலம் முறுவலித்தான்!
'உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போகாது, முயற் சித்துப் பாருங்கோ, கிடைக்கலாம்.”
"ஏன் அப்படிச் சொல்லுகிறியள்.”
*"என்னைப்போலை ஒரு விவசாயியின் குடும்பத்தில் நீங் கள் பிறந்திருந்தால் வருஷக்கணக்கா வேலையிலல்ாமைத் தான் இருப்பியள். ஆனல், நீங்கள் பிறந்தது பெரிய குடும் பம். உங்கடை தகப்பனர் உங்களை வேலையில்லாமல் நெடு நாளைக்கு இருக்க விடமாட்டார்." -
அந்த நேர்முகத் தேர்வுக்குப் போன பொழுது தில்லை யம்பலத்தால் ஒன்றைமட்டும் உணர முடிந்தது. நெடு நாட்களாகத் தொழில் கிடைக்காமல் விரக்தியுற்றுக் கொண் டிருந்த பலர் ஆத்திரமும் ஆவேசமும் சிந்தனைத் தெளி வும் கொண்டிருந்தார்கள். இந்தச் சமூகத்தின் வர்க்க ரீதி யான அமைப்பினல் தான் தொழிலாளிகளினதும் விவ சாயிகளினதும் குழந்தைகளாகிய தங்களுக்கு ஆண்டுகள் பலவாகியும் ஒரு சாதாரண தொழில்தானும் கிடைக்க வில்லையென அவர்கள் குமுறிக் கொண்டிருந்தார்கள். அவர் கள் கூறிய வேகம் மிகுந்த சொற்கள் இப்போதும் காதில் ஒலிக்கின்றன.
‘எங்கள் பிரச்சினையும் ஒரு வர்க்கப் போராட்டமே தான்! பணம் படைத்தவர்கள் எங்களுடைய தொழில் வாய்ப்புகளைத் தமது வர்க்க நலன் விரும்பிகளின் ஆதர வோடு தட்டிப் பறித்துக்கொண்டு போகிருர்கள்! திறமை யும் ஊக்கமுமுள்ள நாங்கள் சுரண்டப்படுகிருேம், பின் தள்ளப்படுகிருேம். வேலையில்லாத் திண்டாட்டத்தினல் வருசக்கணக்காக வாடி, மனித உழைப்பையே இழந்து விடுகிருேம். எங்களுடைய பட்டதாரிகள் சங்கங்களில் அங்கம் வகிப்பவர்கள் யார்? எந்த ஒரு முதலாளித்துவ
56

தாய் மொழி மூலம்
வர்க்கத்தினரின் பிள்ளைகளாவது, வேலையில்லை எனக் கலங் கித் தவித்து, சங்கத்தில் சேர்ந்திருக்கிருர்களா? கிடை யாது. நாங்கள்-தொழிலாளிகளினது, விவசாயிகளினது, கீழ்த்தட்டு மத்திய வர்க்கத்தினது, குழந்தைகள் மட் டுமே இருக்கிருேம்! நாங்கள் இன ரீதியாகவோ பிரதேச ரீதியாகவோ ஏன் பிளவுபட்ட சங்கங்களை வைத்திருக்க வேண்டும்? எமது பிரச்சினைகளை அணுகி, அபயம் அளிக்கும்படி எங்கள் வர்க்க விரோதிகளிடம் ஏன் தஞ்சமடைய வேண் டும்? நாங்கள் தேசிய அடிப்படையில் அணிதிரண்டு, இரத்த உறிஞ்சிகளான எங்கள் வர்க்க எதிரிகளின் மோசடி களை, கயமைத்தனங்களை, கைலஞ்சக் குற்றங்களை, அதி காரத்தை, ஆட்சியை, ஒழித்துக்கட்ட வேண்டும். புரட்சி கரமான போராட்டத்தில் நாங்கள் ஈடுபடாதவரை எமது பிரச்சினைகள் விடியாது!"
நேர்முகத் தேர்வு முடிந்து, மாதம் ஒன்று கழிந்து விட்டது. ஒருநாள் தில்லையம்பலத்தின் தந்தை ஆத்திரத் தோடு வீட்டுக்குள் நுழைந்தார். தில்லையம்பலத்தைக் கூப் பிட்ட அவரது குரல் தளதளத்தது.
‘'டேய் தம்பி, அப்புக்காத்து சிவத்தாற்ரைமேள் சரஸ்வதிக்கு அந்தத் தொழில் கிடைச்சிருக்காம். முந்த நாள் பல்கலைக் கழகத்தாலை வெளிக்கிட்ட பொடிச்சி அது. அவளும்தானே தமிழிலை படிச்சவள்? உன்னைப்போலை வடிவா இங்கிலீசும் பேசத் தெரியாது. அவளுக்குக் கொண்டே உத்தியோகத்தைக் குடுத்திருக்கிருன்கள். இது என்ரை பிள்ளை.ஐஞ்சு வருஷமாக் கஷ்டப்படுகுது.அதுவும் தமிழிலை வெளிவந்த, முதல் பீ. ஏ. அதுக்குக் குடுக்க வேணும் எண்ட ஒரு எண்ணம் அவங்களுக்கு வரயில்லை. பணக் காரன்ரை பக்கம்தான் நிக்கிருன்கள். அதுக்கை வாயை விட்டா, மக்களாட்சி நடக்குதாம், மக்களாட்சி! எலெக்ஷன் எண்டு கொண்டு வோட்டுக் கேட்க இங்கை வரட்டும். கழுத்து வெட்டு வெட்டிறன்!"
57

Page 32
மூவர் கதைகள்
தமிழிலே கற்க நேர்ந்த காரணத்தினுல்தான் தனது
மகன் தில்லையம்பலத்துக்குத் தொழிலே கிடைக்கவில்லை
எனத் துயருற்றிருந்த தம்பருக்குச் சடுதியாக அதற்குமப் பால் வேருெரு காரணம் இருப்பது புலப்பட்டது. *
தம்பரைப் போன்றே ஏனைய உழைப்பாளிப் பெற்
ருேரும் அந்த உணர்வைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
58

Ga. Gu 35 T56

Page 33
1. மூடுதிரை
2. நேற்றைய அடிமைகள்
3. திருச் சிற்றம்பலம்
60
,ه؟

மூடு திரை
66
இனி ஆட்களுக்கு முன்னலை நான் எப்பிடித் தலை நிமிர்ந்து நடக்கப் போறன்? இந்த நாற்பத்தைஞ்சு வரு ஷத்துக்கை ஆருக்கும் குனியாத தலை, இனிக் குனிஞ்சு தான் நடக்கப்போகுது. சாந்தம். ஒமோம். நல்ல பேர் வைச்சம். சாந்தகுமாரி.”
அளவுக்கு மீறிய மனக்கசப்புடன் தங்கம்மா முணு முணுத்துக் கொண்டிருந்ததை, முன் திண்ணையில் உட்கார்ந் திருந்தவர்கள் தெளிவாகக் கேட்டபோதிலும், அதைக் கேளாதவர்கள் போலவே குனிந்தபடி கனகரெத்தினத்தின் முன் இருந்தார்கள். கனகரெத்தினம், மனைவி தங்கம்மா வின் குரலின் முன்னல் தன்னையறியாமலே குற்றவாளி போலக் குறுகினர். அவரது கம்பீரமான முகம், ஐம்பது வயதேயாயினும் களையுடனிருக்கும் அவரது முகம் சோர்ந்து மற்றவர் பார்வையின் முன் கூசிக் குனிந்திருந்தது. ஆயினும் அது இதய ஆழத்திலிருந்து ஏற்பட்ட வருத்தத்தால், இதயபூர்வமான குற்ற உணர்வால் ஏற்பட்டதல்ல.
அவர் நிமிர்ந்து வீட்டுச் சுவரைப் பார்த்தார். கலண் டர்ப் படத்திற்கு வைக்கப்பட்டிருந்த செவ்வரத்தம்பூ வாடிக் கிடந்தது. அதை, நேற்றுக் காலையில் கலண்டரில் உள்ள லட்சுமி படத்துக்கு பயபக்தியுடன் வைத்து வணங் கிய சாந்தகுமாரி, அக்கலண்டருக்குப் பக்கத்தில் இப்போது
6 II

Page 34
மூவர் கதைகள்
படமாக மட்டும் இருக்கின்ருள். கலண்டர்ப் படத்திற்குப் பக்கத்தில் இருந்த அவளின் படத்தைப் பார்த்து மனஞ் சீறிக் கணகரெத்தினம் பெருமூச்செறிந்தார்.
அவரது மகள் சாந்தகுமாரியின் அழகில் அவருக்கே பெருமையிருந்தது. அவளுக்குப் பார்த்தவரைக் கவரும் அழகிய குறுகுறுத்த கண்கள். பணிவோடு கலந்த வசீகரம் அவளது முகத்தில், புன்னகையில் சோகங்களையும் மீறித்
தனிக்கவர்ச்சியாய்ப் பொங்கிக் கிடந்தது. அவளுக்கு இரு
பத்தியாறு வயதென்று யார்தான் சொல்லுவார்கள்? இன் னமுமென்ன, பதினறு வயதென்றே சொல்லுமளவிற்கு வயதினைக் குறைக்கும் வடிவம். இருபத்தியாறு வருடங் களாய் இளமையின் கீதமாய், இந்த வீட்டில் என்றுங் கல கலப்பின் ஒளியாய், சிரிப்பாயும், அழுகையாயும், பேச்சா யுமிருந்த சாந்தகுமாரி நேற்று இரவு யாரோ ஒருவனேடு ஒடிப்போய்விட்டாள்!
*அவளை, நெசவுக்குப் படிக்க எண்டு விடேக்கையே
நான் நினைச்சன்; எவ்வளவிலை அழுது குளறினன். பொம்
பிளையள் எண்டால் வீட்டோடை இருந்திட வேணும்.
வேலிக்கு வெளியாலை அவளின் ரை தலையும் தெரியப்படாது,
எண்டு நான் சொல்லேக்குள்ளை, என்னை உலகத்தின் ரை போக்குத் தெரியாத கர்நாடகம் எண்டு தகப்பனும், மக ளுமாய்ப் பழிச்சினை. இப்பிடியெல்லாம் சிரிச்சுப்போட்டு இப்ப சாந்தம் மானத்தை வாங்கிப்போட்டா ளெண்டு தலை தலையாய் அடிச்சு என்ன வரப்போகுது ?"
அவளின் மனதோடு கண்களும் அழ, வார்த்தைகள் கடந்த காலங்களை எல்லாம் மற்றவர் கண்களின் முன் காட்சிகளாகத் தோற்றுவித்துக் கொண்டிருக்கையில், அவர் களின் மனத்தினுள், பெருமூச்சும் சிரிப்பும் சீறின. கனக ரெத்தினத்திற்கு எதையும் எண்ண முடியவில்லை. இரு பத்து எட்டு வருடங்களாய் வாழ்ந்த தாம்பத்ய வாழ்வில்
62
\k

மூடுதிரை
அவர் மனைவி தங்கம்மா இப்படி அழுதநியாள். அவளின் அழுகையும், விம்மலுமே அவருக்கு எதிராய்க் குற்றம் சாட்டி மாபெரும் கரமாய் எழுந்ததுபோல அவருக்கு உணர்வு தட்டியது. அர்த்தமற்ற சம்பிரதாயங்களை உடைக்க வலுவின்றி, நெளிந்தும் தயங்கியும் நின்ற அவரை பழகிய அன்பாலும், கண்ணிரின் வலிமையாலும் வளையப் பண்ணிய சாந்தகுமாரியும் தன் எண்ணம் வெற்றி பெறுவ தற்குக் கடைசியில் என்ன கொடூரமான குற்றம் சாட்டி னள். அவருக்கு இதயத்துள் துக்கம் குடைந்தது.
அவள் தன்னுடைய ஆசையை அவரிடம் சொன்ன போது, அவர் எதிர்பாராத அடிபட்டவர்போல முகம் மாறி அவளைப் பார்த்து அதனல் வரும் கஷ்டங்களையெல் லாம் விஸ்தாரமாக எடுத்துச் சொன்னர். அப்பொழுது அவள் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு குற்றம் சாட்டும் குரலில் அவரைக் கேட்டாள்:
'நீங்களும் இப்படி மூடத்தனங்களை ஏற்கிறீர்களா ? அந்த மூடத்தனங்களை ஏற்றுக்கொண்டு என் வாழ்வையும் அழித்து நாசப்படுத்தப் போகின்றீர்களா ?"
பார்வையைச் சற்றுச் சரித்து, வாசலைத் தாண்டி அவர் வெளியே பார்த்தார். தங்கம்மா நன்கு சடைத் திருந்த செவ்வரத்த மரத்தின்முன் எதையோ பார்த்த படி நின்ருள். அவள் முகத்தில் இன்று விடிந்த சில மணி நேரங்களில் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விட்டது.
வாசலில், சிலவேளைதான் அவள் போய் நிற்பாள். அது வும் மகனன தர்மலிங்கத்தின் வருகைக்காகத்தான். தர்ம லிங்கம் இன்று பகல் பத்து மணிக்கு வருவதாகப் போட்ட கடிதத்தைக்கூட சாந்தகுமாரி முந்த நாள்தான், இதே திண்ணையில் இருந்து தாய்க்கு வாசித்துக் காட்டினள்.
தர்மலிங்கம் மனதில் வளர்த்த நம்பிக்கை என்ற செடி இலை துளிர்க்க முன்னரே நசித்து அழிக்கப்பட்டுவிட்டதோ
63

Page 35
மூவர் கதைகள்
என்ற கேவலில், தங்கம்மாளின் மனதினுள் அழுகையாய் விக்கிற்று.
தங்கம்மா அசையாமலே இன்னும் செவ்வரத்த மரத் தடியில் நிற்கிருள். என்றுமே அவள் இப்படி ஒரிடத்தில் நெடுநேரம் தரித்து நில்லாத பம்பரம். இந்தச் சிறிய நேரத் திற்குள் அவள் நெஞ்சில் அவளையே மீறிய வைராக்கியம் முளைத்துவிட்டது. சாந்தகுமாரி ஓடிப்போனவள், தனது சாதியின் மானத்தையும், தங்கள் குடும்பத்தின் பரம்பரை யின் மானம், புகழ் யாவையும் அள்ளிக்கொண்டே போய் விட்டாள் எனத் தங்கம்மா பொருமினள். இனி எந்த இடத்திற்குப் போவதற்கும் அவள் விரும்பமாட்டாள். எப்படிப் போவாள்? அவளைப் பார்த்து அனுங்கும் அனு தாபங்களையும், முன்னுல் போகவிட்டுப் பின்னல் இரகசியமா யும், பரகசியமாயும் எழும் கேலிச் சொற்களையும் அவள் எப்படித் தாங்க முடியும்?. இனி அவர்களை, அனேக மாக அவர்களின் சாதிக்காரர் தங்களோடு மதித்தும் சேர்க்கமாட்டார்கள்; அவர்களின் வாழ்வெல்லாம் அந்தப் பழி நீண்ட நிழலாகத் தொடர்ந்து கொண்டே வரும் எனத் தங்கம்மா தன்னுள்தானே நினைத்துக்கொண்டாள்.
அது கொடுமையான தண்டனையல்லவா?
எட்டு மணிக்கு வரும் பஸ்ஸின் ஓசை இலேசாகக் கேட்டது. குழப்பத்தில் ஆழ்ந்திருந்த கன கரெத்தினம் தன் னிச்சையாகவே வெளியே பார்த்தார். அவரும் சாந்தகுமா ரியும் அந்தப் பஸ்ஸில்தான் பெரியகடைக்குப் போவார்கள். பஸ் டிரைவர் கனகரெத்தினத்தோடு மிகவும் பழக்கமான வர். வழக்கமாகவே கனகரெத்தினத்தின் வீட்டடியில் *கோர்ண்”அடிப்பவர். அன்றும் அறிவிப்பதற்காகக் கோர்ண்’ அடித்தவர், சில நிமிடம் நின்று தாமதித்துப் பிறகும் *கோர்ணை’அடித்தபடி பஸ்ஸை இரைச்சலுடன் எடுத்ததைக் கனகரெத்தினம் அவதானித்தார்.
64

மூடு திரை
என்ன முகத்தோடு இன்று அச்சகத்திற்குப் போவது என்ற சலிப்பிலும் தலை குனிவிலும் அவர் அச்சகத்திற்கு வேலைக்குப் போகாமலே நின்றுவிட்டதாக தங்கம்மா நினைத் தாள். அவள் அப்படித்தான் நினைக்கவேண்டுமென்று அவ ரும் நினைத்தார். இருபத்தியெட்டு வருடத் தாம்பத்திய வாழ் வில் மனதறிந்து அவளுக்கே மறைத்த அந்த உண்மை, காரிய நியாயங்களோடு ஒட்டியது என்பதை அவரே தீர் மானித்து, அத் தீர்மானத்தில் மன ஆறுதலும் அடைந்தார்.
YAr
இருபத்தியெட்டு வருடத் தாம்பத்திய வாழ்வில் மன தறிந்து தனது மனைவிக்கு மறைத்த அப் பொய், காரண காரிய நியாயங்களோடு ஒட்டியது என்ற நினைவில் கனக ரெத்தினம் பெருமூச்செறிகையில் படலையடியில் கலகலப் புக் கேட்டது.
நிமிர்ந்து படலையைப் பார்த்தார்.
தங்கம்மாவின் தங்கச்சி பூரணமும் அவளது மைத்துணி பாக்கியமும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
“என்ரை இரத்தம் வந்திட்டியோடீ. பார். அந்தச் சிறுக்கி எனக்குச் செய்து போட்டுப்போன உபகாரத்தை"
தங்கம்மா அழுகையும், ஒப்பாரியும் கலக்கப் புலம்பி, பூரணத்தின் தோளோடு சாய்ந்து அணைந்தாள்.
“என்ன மாதிரி அந்தப் பிள்ளை இருந்தாள். மிரிச்ச இடத்துப் புல்லுக்கூடச் சா காதெண்டு ஒரு கிழ மைக்கு முந்தித்தான் நான் அதைப் பார்த்திட்டுச் சொன்னனன். சீ. அது இப்பிடிச் செய்து போட்டுதே'
பாக்கியம் சொன்ன குரல் கனகரெத்தினத்திற்கும் கேட்டது, அவருக்கு இன்னும் நல்ல நினைவு இருக்கிறது. கறுத்துத் தடித்த மத மதத்த அவள் அவரறிய இருபத்தி
65

Page 36
மூவர் கதைகள்
யொரு வயதில் இன்னெருவனேடு ஒடி பிறகு அவனிட மிருந்து பொலிசின் துணையோடு தகப்பன் அவளை மீட்டு வந்து ஊர் பேர் தெரியாத ஒருவனுக்குக் கட்டி வைக்கப் பட்டவள். பதினெரு வயது தொடக்கம் அவள் அவனைக் கண்டு சிரித்து, மயங்கி, தனிமையில் சந்தித்து அவனை மணப்பதாக வாக்குக் கொடுத்து சாதியென்ற தடையால் அவனை, அவனேடு வாழ்ந்தும் இழந்தவள். சம்பிரதாய, பழைமைக் கொடுமையால் வாழ்வின் நிம்மதியையே இழந்து மனம் விரும்பாத ஒருவனை மனம் விரும்ப நிர்ப் பந்திக்கப்பட்டு அடிமையின் மனதோடு ஆணுல் நிறைவு பெற்றவள் போலத் தனக்கே பொய் சொல்லி, அதையே உண்மையாய் நினைத்து வாழ்பவள். இவள், எந்தக் கொடுமையின் முன் தோற்று. தன் மனதைக் கொன்று, செல்லரித்துப்போன சம்பிரதாயங்களை யெல்லாம் தன்னை வெல்ல வழி கொடுத்தர்ளோ, அதே கொடுமைகளை உடைத் தெறிந்து, தன் மனதின் மகிழ்ச்சிக்காக அர்த்தமற்றுப் போன செல்லரித்த சம்பிரதாயக் கொடுமைகளையெல் லாம் வீசி எறிந்தவளை - சாந்தகுமாரியை, ஏன் இவள் போற்றவில்லை? மனதார வாழ்த்தவில்லை? மாரு க அவளைத் திட்டுகிருள்; நாக்கு வலிக்க வசைமாரி பொழிகின்ருள்!
சீ, என்ன மனிதர்கள்!
கனகரெத்தினம் மனதிற்குள் காறித்துப்பினர்.
பாக்கியம் எதனுல் வஞ்சிக்கப்பட்டாவோ, அதற்கே அடிபணிந்து அதையே சத்தியம் என ஏற்றுக் கொண்டாள். எவ்வளவு பரிதாபமானவள் அவள். ஏதோ ஒரு கொடுங் கரம் அவளை அப்படி ஒப்புக் கொள்ள வற்புறுத்தி அவளை வெற்றி கொண்டதா? அவர் மட்டுமென்ன?
அவருந்தான் நூறு உப்தேசங்கள் சொன்னர். சாதி யென்ன, சமயமென்ன என்று மனைவி திட்டத் திட்டச்
66

மூடு திரை
சொன்னவர். மூடுதிரை ஒன்றை இட்டுத்தானே, தனது
மகளின் அழுகைக்கும் சமாதானங் கண்டார்.
அவரின் மனஞ்சேகரித்த கருத்துக்களைச் செயலாக்க அவர் துணியவில்லை. தனது கருத்துக்களைச் செயலாக்கி ஞல், தனக்கு எதிரே பிற்போக்கான ஒரு உலகம் பூத மாய்த் தோன்றித் தன்னையும், தன் குடும்பத்தையும் நாசஞ் செய்து கொண்டுவிடும் என்ற அச்சத்தால் - அவரே, மீண் டும் தானே போய், தோற்று, பழமையின் சம்பிரதாயங் களினது வக்கரித்துப்போன நிழல்தணிலே போய் விழுந்தார்.
அவருக்கும், பாக்கியத்திற்கும் அடிப்படையில்தான் என்ன வித்தியாசம்?
உள்ளே வந்த பாக்கியமும், பூரணமும் தங்கம்மாவு டன் ஏதோ குசுகுசுத்தும், சிணுங்கியும் கதைத்துக் கொண் டிருக்க, கனகரெத்தினம் எழுந்து, வளவின் முன்பாய் நின்ற சிதம்பரத்த மரத்தடியில் போய் நின்ருர்,
“இருபத்தியாறு வருடங்களாய் சாந்தகுமாரி இந்த வீட்டில் வாழ்ந்தாள். அவள் என்றுமே பெற்ருேருக்கு கீழ்ப் பணிந்து அவர்கள் சொற்தட்டாமல் அடக்கமாகத் தான் வாழ்ந்தாள். பதினறு வயதில் எஸ். எஸ். ஸி. சித்தி யெய்திய உடனேயே, தான் நல்ல வருவாய் தரும் படிப் புப் படிக்க வேண்டுமென்று அடிக்கடி தகப்பனிடம் சொல் வாள். இன்று அவள் வீட்டை விட்டு இன்னெருவனுடன் ஒடிவிட்டாள் என்று சொன்னவுடன்தான் அவளைப் பற்றி விசாரிக்கவும், திட்டவும் இங்கே பலர் கூடி விட்டார்கள். இந்தக் கிராமத்தில் இன்னும் பழமையையே இறுகப் பிடித்திருக்கும் பகுதியில் இருபத்தியாறு வயது வரை ஒரு பெண் திருமணமாகாமல் இருப்பதே மிகவும் அருவருக்கத் தக்க நிகழ்ச்சிதான். தர்மலிங்கமே அடிக்கடி சொல்வான்: *சாந்தத்தை எத்தினை நாளைக்கு இப்படியே வைத்திருக்கப்
67

Page 37
மூவர் கதைகள்
போகின்ருேம்?” ஊர்க்கதை, சாத்திரங்கள் இவையெல்லாம் சாந்தகுமாரியை எத்தனை விதங்களில் வதைக்கின்றன? அவள், பஸ்ஸில் ஏறி வேலைக்குப் போகின்ருள் என்பதைத் தூற்றித் தூற்றிப் பலருக்கு நாக்குத் தழும்பேறிவிட்டது. குமரியைப் பஸ்சிலை ஏறி, இறங்கவிட்டு காசு சம்பாதிக் கினை என்ற பழமொழி கூட அவள் குடும்பத்தின் மீது சுமத் தப்பட்டது. இந்தப் பழமொழியைச் சுமத்திய ரா சாத்தி, அவரறிய வந்து சாந்தகுமாரியிடம் அழுது மன்ருடி ஐம் பது ரூபா கடன் வாங்கிச் சென்றிருக்கின்ருள். இவை யெல்லாம் என்ன போலித் தனங்கள்! குடும்பத்தின் கஷ்ட நிலைமையைத் தாங்க முடியாமல்தான் சாந்தகுமாரி வேலை செய்வதற்குப் போனள். தனது குடும்பமிருக்கும் கஷ்ட மான நிலைமையில் தனக்குத் திருமணமே ஆகாது; தான் விரும்பியவனை மணக்கவே முடியாது என்று தெரிந்த பின்புதான் அவள் வீட்டைவிட்டு ஓடிப் போனுள் அவள் தன் மனதைக் கொன்று, பண்பாட்டின் பொய் இருளினுள் புதைந்துகிடக்க விரும்பாது ஒளியை நோக்கித் தானே ஒடிஞள். இருபத்தியாறு வருடங்களாய் இதே வீட்டில் இருந்துவிட்டு, இறுதியில் பெற்ருேருக்குத் துன்பத்தையும் அவமானத்தையும் கொடுத்துவிட்டு ஒடிப்போய்விட்டாள் என்று பூரணம் புலம்புகின்றள். ஆனல் இருபத்தியாறு வயதாகியும் பிறர் பழிக்க அவள் புண்பட்ட இதயத் தோடு வாழ்ந்தாளே என்று யாராவது அவளுக்கு ՎԶեմ)/ தல் சொன்னர்களா?. இவைகளையெல்லாம் மதிக்காது, வீட்டினுள் அழுது புலம்பிக்கொண்டுதான் சாந்தகுமா ரியைப் போன்ற யுவ திகள் வாழவேண்டும் என்று இச் சமுதாயம் விரும்புகிறதா? " என்ன வரட்டுத்தனமான அர்த்தமற்ற மூடப் பண்பாடு இது!"
கனகரெத்தினத்தாரின் மனம் எங்கெங்கெல்லாமோ சுற்றிவந்து சிந்திக்கிறது. அவர், தாம் வேலை செய்யும் அச்சகத்தில் எத்தனையோ பேருக்குப் புத்தி சொல்லி ஆறு தல் கொடுத்திருக்கின்றர். சக ஊழியர்களோடு மட்டுமல்
68
\بہ*

فلم
மூடு திரை
லாது, எல்லோருடனும் வெகு சீக்கிரமாகப் பழகி அவர் களோடு, இன்ப துன்பங்களோடு ஒன்றிவிடும் அவர், சாதி சமய பேதம் பாராட்டுவதை விரும்பாதவர், "எல்லோ ருமே கடவுளின் பிள்ளைகள்’ என்று அடிக்கடி நாத்தழும் பேறச் சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கும் இந் நிகழ்ச்சி ஒரு சோதனையென வந்தது. சாந்தகுமாரி சாதி குறைந்த ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள்!
ஊருக்கு அவர் சாதிசமய பேதமற்றவராய் விளங்கி விட்டு, தனது வீட்டுக்கு மட்டும் வேறு நீதியைக் கைக்
G0)395 fT 6öör l nTpJrrT? 塔
கனகரெத்தினம் அழுத நெஞ்சோ டு சிரித்தார்.
"இந்த இரகசியம் மூவருக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதால், நான் ஒரு கோழை என்று அர்த்தம் வந்து விடுமா?’
"இந்த இரகசியம் மூவருக்குள் மட்டுந்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதால், நான் ஒரு கோழை என்று அர்த்தம் வந்து விடுமா ? சாந்தகுமாரி என்னுடைய மகள். எந்த விஷயத்தையுமே யாரிடமும் ஒளித்தோ மறைத்தோ வைக்காதவள். தான் வாழ்ந்த உலகில் அள வற்ற பொய்யும், ஏமாற்றும் நிறைந்திருக்கின்றது என்பதை உணர்ந்தவள் அவள். எந்தவிதமான காரணமுமற்ற, வெறும் போலித்தனமான பழக்க வழக்கங்களை வெறுத்த அவள், தானகவே புதிய உலகத்தினுள் பிரவேசித்திருக் கின்ருள். என்னல், பெற்று வளர்த்த தகப்பணுகிய என் ஞல், தனக்குச் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து வைக்க முடியாது என்பது அவளுக்கும் தெரியும்; எனக் கும் தெரியும்; என் மனைவிக்கும் தெரியும். ஒரு பெண்ணை வாழவைக்க எங்கள் சம்பிரதாயங்களால் முடியவில்லை;
69

Page 38
மூவர் கதைகள்
எங்களுக்கும் தெரியவில்லை. ஆனல் சாந்தகுமாரி ஒடிப் போய் மானத்தை வாங்கிவிட்டாள்ே என்று என் மனைவி புலம்புகின்ருள். குடும்ப கெளரவத்தால் சாந்தகுமாரிக்கு வாழ்வு கொடுக்க முடியவில்லை. நானும் என்ன? ஊருக்கு உபதேசித்தவைகளை என் வீட்டிற்குள் நடைமுறைப் படுத்த முடியாமல், அதற்குத் துணிவற்றவனய் இந்த வைதீகங் களுக்குப் பயந்து, தலை குனிந்து இருட்டின் துணையோடு தான் என் மகளுக்கு நான் உதவினேன்.”
தன்னுடைய மகள் சாந்தகுமாரி, குறைந்த சாதிக் காரன் ஒருவனேடு ஒடிப்போனதுபற்றி, என்றுமே மெளனத்திலும், சிந்தனையிலும் காலங்கழிக்கும் தர்மலிங் கம் என்ன சொல்வானே என்று கனகரெத்தினத்தார் யூகிக்க முடியாதிருந்தார். அவனது போக்கே அப்படி யானதுதான். அவன் கடைச் சிப்பந்தியாக அநுராதபுரத் தில் வேலை செய்கின்றன். சிறுவயதிலிருந்தே மெளனத் தின் உரத்தில் வளர்ந்து, எதற்கும் பேசாது, பேச்ாதிருப் பான் என்று நினைக்கின்ற வேளையில் உரத்து அட்டகாச மிட்டுத் தர்க்கித்தும், ஆத்திரவசப்பட்டும் கதைப்பவன் அவன். உரத்து அட்டகாசமிடுவான் என நினைத்திருக்கை யில் சிரித்துச் சாந்தமாகப் போய்விடும் அவன், எப்போ தும் பத்திரிகை புத்தகங்களோடும், பலத்து வாதமிடும் நண்பர்களோடும் பரிச்சயமான அபூர்வப் பிறவி.
அவன் அடிக்கடி சொல்வான்:
*நூறுதரம் சொன்னலும் அது தர்க்கத்திற்குச் சரி யானதாக இருக்க வேண்டும். . எதையும் ஆராய்வற்று ஏற்றுக் கொள்வதும், எதற்கும் அர்த்தமற்றுத் தலைசாய்ப் பதும் என்னுல் முடியாதவை. அற்பத்தனமான சுயநலங் கள், வீணுகக் கருத்தேயற்று பழைய நம்பிக்கைகளினைத் தழுவி வாழும் அறியாமை ஆகிய இவை யாவும் கீழா
னவை; வெறுக்கத் தக்கவை; அழிக்கப்பட வேண்டியவை'
70

மூடு திரை
அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் , சாந்தகுமாரி அவனை விழுங்குவது போலப் பார்த்திருந்துவிட்டு இவை யெல்லாவற்றையும் இவன் எங்கிருந்து கற்றனே என்ற பாவனையில் முகம் மாறுகையில் தர்மலிங்கமே சொல்வான்:
*சாந்தம், நீயும் வெறும் சமையலறைப் பெண்ணுக வாழ்ந்து சாக நினைக்காதே. உலகத்தில் மாடுகள்கூடத் தங்களுக்குத் தாங்களே நுகத்தடி போட்டுக் கொள்ள முன் னுக்கு வருவதில்லை. ஆனல் தமிழ்ப் பெண்களோ வாழ் நாள் முழுவதும் அடிமைகளாயிருக்க மனம் ஒப்பி, தாங் களே தங்களுக்கு நுகத்தடி இட்டுக் கொள்கிறர்கள். ஆனல் எனக்கு ஒரேயொரு கவலை. சாந்தம், நான் நினைத்த படி உன்னைக்காண முடியாத ஏழையாக, நாடோடியாக, பரதேசியாக ஆகிப் போயிட்டன்'
கனகரெத்தினத்தாருக்கு நெஞ்சைக் கீறி அழுகை பொங்கினும், அடக்கிக் கொண்டு மனதினுள் வெதும் பினர்.
தர்மலிங்கம் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வந்து விடுவான்.
பிறகு என்ன நடக்கும்?
அவன் சீறுவான? சினப்பான? மெளனமாகவே
நிற்பானு?
சாந்தகுமாரி அவன் மீது வைத்திருந்த அன்பைவிட, அவனும் அவள் மீது அதிக அன்பினை வைத்திருந்தான். தன்னுடைய தங்கச்சிக்கு இவ்வளவு வயதாகிறதே என்று அவன், கனகரெத்தினத்தாரிடமே நேரடியாகவும் மறை முகமாகவும் உணர்த்தியிருக்கின்றன். அவன் ஒருநாள் இதனைத் தாயிடம் வற்புறுத்தி ஏதோ அட்டகாசமிட்ட போது தங்கம்மா கூறியது இப்போதும் கனகரெத்தினத் தாருக்கு காதோடு கேட்பதுபோலப் பிரமை தட்டியது.
71

Page 39
மூவா கதைகள்
*தம்பி.கலியாணமெண்டது நீயும் நானும் மட்டும் தீர்மானிக்கிற விஷயமில்லையடா. இதெல்லாம் விதிவழி வாற விஷயம். விதிப்படிதான் எல்லாம் நடக்கும். என்ரை பிள்ளை இப்ப என்ன கரைஞ்சோ போகப்போகுது."
மெளனமாய் இருப்பான் என்று எதிர்பார்த்த தர்ம லிங்கம் துள்ளி விழுந்தான்; "விதியும், மண்ணுங்கட்டி யும். அவள் கிழவியானுப்பிறகு விதிவந்து கலியாணம் செய்துவைக்கும், பார்த்துக்கொண்டு இருங்கோ. உங்கடை இயலாமைக்கு விதி எண்டு திரை போட்டுக் கொண்டு அதி லேயே ஆறுதலடையுங்கோ. அவள்-சாந்தம் அழுதழுது தனக்குள்ளேயே சாகட்டும்”.
தங்கம்மா ஒய்ந்த பாடாயில்லை. கடைசியில் முழுக் குற்றத்தையும் தர்மலிங்கத்தின்மேல் போட்டுவிட்டுப் போனுள். தர்மலிங்கம் உழைத்துத் தங்கச்சிக்குத் திரு மணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் சொல்லி விட்டுப் போனதும், தர்மலிங்கம் ஆறிப்போன நீராகி, செயலற்று இருந்து யோசித்தான். ஒரு வருடத்திற்குள் எப்படியும் சாந்தகுமாரிக்குத் திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மனதினுள் உறுதி எடுத்து, அதைப் பெற்ருேருக்குச் சொல்லிவிட்டுப்போன தர்மலிங்கம் ஒன் றரை வருடங்களுக்கு மேலாகியும் அதைச் செய்ய முடிய வில்லை. திடீரென்று தர்மலிங்கம் கடிதம் போட்டிருந்தான். அதைச் சாந்தகுமாரிதான் - அதோ அந்தத் திண்ணையி லிருந்து வாசித்துக் காட்டினள். அப்போது கடிதம் வாசித் துக் கொண்டிருந்தவள், ஏதோ நினைவில் தலைநிமிர்ந்து தகப்பனைப்பார்க்க, தகப்பன் பெருமூச்செறிந்தார். அந்த இரகசியத்தை வெளிப்படுத்தி விடாதே என்பது போல்த் திரும்பவும் மகளைப் பார்த்தார்,
தன் தங்கச்சிக்குத் தன்னல் கொடுக்கக்கூடியதைக் கொடுத்து, திருமணம் செய்து வைப்பதற்கான அடுக்கு களுடன்தான் தர்மலிங்கம் வரப்போகிருன் என்ருல், வந்
72
.િ

மூடுதிரை
ததும் அவன் மாபெரும் ஏமாற்றத்தை அல்லவா எதிர் கொள்ளப்போகின் முன்.
- t V
தன் தங்கச்சிக்குத் தன்னல் கொடுக்கக் கூடியதைக் கொடுத்து, திருமணம் செய்து வைப்பதற்கான அடுக்கு களுடன் வீட்டிற்கு வரும் தர்மலிங்கம் மாபெரும் ஏமாற் றத்தை அல்லவா எதிர்கொள்ளப் போகின்ருன் என்ற தவிப்பிலும், பயத்திலும் மனங் குழம்பியிருந்த கனகரெத் தினத்தார் படலையைத் திறந்து கொண்டு தர்மலிங்கம் வருவதைக் கண்டதும், ஒன்றரை வருடமாய் அவனைக் காணுதிருந்த ஆசையும் மனதிலெழத் திண்ணையில் இருந்து எழுந்தார்.
மகனைக் கண்டதும், தங்கம்மா நெஞ்சினுள்ளிருந்து அழுகை பீறி வெடிக்க ஒடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டு விம்மினுள்.
“என்ரை ராசாவின்ரை ஆசையிலை மண் விழுந்து போச்சுதடா .”
தாயின் ஒப்பாரியைத் தர்மலிங்கம் தொடர விடவில்லை, தாயை ஆதரவோடு ஆதாரமாகத் தாங்கிக் கொண்டு அமைதியாக அவன் சொன்னுன்
"அம்மா.. எனக்கு எல்லாமே தெரியும். எல்லாவற் றையும் விரிவாக எனக்குச் சாநதமே எழுதியிருந்தாள். படலையடியிலை நின்று அழவேண்டாம். நடவாத ஒன்றும் இப்போது நடத்துவிடவில்லை.”
கனகரெத்தினத்தாரின் மனம் எகிறிற்று,
"சாந்தம் எல்லாவற்றையுமே இவனுக்கு எழுதிவிட் டாளா? தர்மலிங்கம், சாந்தகுமாரி குறைந்த சாதிக்கார
73

Page 40
மூவர் கதைகள்
னேடு ஓடியதை மனதார ஒப்புக்கொள்ளுவான? இருபத் தியாறு வயதுவரை அவளைத் திருமணம் செய்து கொடுக் காமல் வீட்டினுள்ளேயே அமுங்கி அழ வைத்திருந்தால், அவள் இதைச் செய்யாமல், வேறு என்னதான் செய்வாள் என்று என்னைத்தான் இவன் திட்டப்போகின்றன?. தர்ம லிங்கம், சாந்தத்தை நீயுந்தான் நம்ப வைத்தாய். ஆனல் அந்த நம்பிக்கையை நீயும்கூட நிறைவேற்றிவைக்க முடிய வில்லையேடா. ஒரு வருடத்தில் தங்கச்சிக்குத் திருமணம் செய்து வைக்கிறேனென்று உறுதியோடு கூறிப்போன நீ ஒன்றரை வருடங்கழித்து இங்கே வந்திருக்கின்ருய். வெறுமையைத் தரிசிக்கப் போவது தெரிந்தும் இங்கே வந்திருக்கின்ரு ய், சாந்தம் எல்லா இரகசியங்களையும் உனக்கு எழுதினதால் அதற்குப் பழிவாங்கவென்று நீ வந்தாயா? புரிந்து கொள்ள முடியாத உனது வார்த்தைகளிலே என் னல் எதைத்தான் அறிந்து கொள்ள முடியும்?"
தர்மலிங்கத்தை உட்திண்ணையில் இருத்திவிட்டு, பக் கத்தில் அவனைப் பார்த்தபடியே தங்கம்மா இருக்க, அதே மூலைத் திண்ணையில் அவர்களுக்கு எதிராக, முதுகைக் காட்டியபடியே இருந்தார் கணகரெத்தினத்தார். அவர் இருந்தது தாய்க்கும் மகனுக்கும் தெரியாமற் செய்ய இடையில் ஒரு சாக்குப்படங்கு தொங்க விடப்பட்டிருந் தாலும் தாங்கள் கதைப்பது கனகரெத்தினத்தாருக்கும் கேட்கும் என்பது அவர்கள் இருவருக்கும் தெரியும்.
தங்கம் மாதான் கதையைத் தொடங்கினுள்:
'உனக்கும் அந்த ஆட்டக்காறி காயிதம் எழுதின வளோ?. எழுதுவாள். எழுதுவாள். இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமோ எண்டிருந்துவிட்டு இப்பிடி ஒரு அவப் பெயரைத் தேடி வைச்சிட்டுப் போயிருக்கிருள் சண்டாளி. நீயும், கொய்யாவும்தான் நான் சொல்லச்
74
هن

மூடுதிரை
சொல்ல அவளுக்குச் செல்லம் குடுத்தியள். இப்ப அவள் எல்லாருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிட்டுப் போயிட் டாள். சாதி குறைஞ்சவனுேடை ஒடிப்போன நாய் ஒண்டு என்ரை வயித்திலை பிறக்கப் போகுது எண்டு தெரிஞ்சிருந் தால் பிறந்த உடனையே கழுத்தைத் திருகி . இனி என்ரை சந்ததிகூட மானத்தோடை தலை நிமிர்ந்து.”
முச்சு விடாமற் சொல்லிக்கொண்டுபோன தங்கம்மா வின் குரலை, திடீரென்று மெல்லக் கிளம்பிய தர்மலிங்கத் தின் சிரிப்பு இடைமறிக்க, கனகரெத்தினம் அவனின் குரலிற்காய் காதைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்
தாா.
‘அம்மா, மானம் மானமெண்டு நீங்க சொல்லிற போது எனக்குச் சிரிப்பாகத் தான் வருகுது. மானம் போயிட்டுது, மானத்தோடை தலைநிமிர்ந்து வாழேலாது எண்டு நாங்க சொல்லேக்கை எதைக் குறிக்கிறம்? பொய் யான, பழமையான, உளுத்துப்போன கருத்துக்களுக்கை எங்களைச் சிறைப் பிடிச்சு நாங்களே வைச்சுக் கொண்டு இப்பிடி வாழுறது பெரிய முட்டாள்தனம். எல்லாரும் இப்ப பெரிசாச் சத்தம் போட்டுத் திட்டுற அளவுக்கு சாந் தம் செய்த குற்றந்தான் என்ன?”
*டே தம்பி. இதென்னடா, இதென்ன நீ கதைக்கிற கதை? நாங்க அவளுக்கு என்ன குறை வைச்சம்? இப்ப, கடைசியாய் அவள் எங்கடை மானம் மரியாதை எல்லாத் தையும் கெடுத்துப்போட்டு, இனி எங்களை எண்டைக்குமே தலைநிமிர்ந்து நடவாதபடிக்குச் செய்திட்டுப் போட்டாளோ இல்லையோ?"
தங்கம்மாவிற்கு மூச்சிழுத்தது.
*சாந்தம் இப்ப புதுமையாய் என்ன செய்திருக்கிருள்? ஒருத்தனைக் கலியாணம் முடிச்சிருக்கிருள். அவளை ப்புரிஞ்சு
75 .

Page 41
மூவர் கதைகள்
கொண்டு, அவளைக் கண்கலங்காமல் பாதுகாக்கக்கூடிய ஒரு தனை விரும்பி அவனுேடை போயிருக்கிருள். நீங்க குறைஞ்ச சாதிவெண்டு திட்டுற ஏழையொருதன், கூடின சாதியிலி ருக்கிற இன்னுெரு ஏழையை - சாந்தத்தை மணமுடிச் சிருக்கிருன், ஏழைக்கு ஏழைதான் துணை. அவள் செய்த திலை என்ன தவறு இருக்கு? இருபத்திய்ாறு வயதாகியும் அவளுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நாங்கள் யாரும் முன் வரவில்லை. அதுக்காக அவள் எங்களிட்டை வந்து அழ வும் இல்லை. புலம்பவுமில்லை. ஆனல் கடைசியிலை அவளே ஒருத்தனை விரும்பிக் கலியாணம் முடிச்சிட்டாள். நாங்கள் அவளுக்கு முன்னுலை தலைநிமிர்ந்து நிற்க வெட்கப்பட வேணும். இருபத்தியாறு வயது ஆகுமட்டும் அவளை வீட் டிலை வைச்சிருந்து அவளைக் கொண்டு உழைப்பிச்சுத் தின் றமே என்று ஆராவது யோசிச்சிருக்கிறியளா?
கடைசியில் கனகரெத்தினத்தாரும் அவனது கதைக் குள் இழுபட்டார். “உண்மையிலை சொல்லப் போனல் அவள் இவ்வளவு காலமும் வீட்டுக்கை இருக்கிருளே என்று நினைக்கவோ. பரிதாபப்படவோ யாருக்கும் மனமுமில்லை; யோசஃனயுமில்லை. அவளுக்கு உதவி செய்ய ஒரு தருக்கும் நாதியில்லை. ஆனல் இப்பதான் அவளைப்பற்றி நினைக்க எல் லாருக்கும் நேரம் வந்திருக்கு. அவள் ஓடிப்போகு மட்டும் அவளைப் பற்றிக் கதைக்க ஒருவருமில்லை. இப்பதான் அவளைத் திட்ட எல்லாரும் கூடியிருக்கிறியள். சாந்தத்தை இப்பிடி ஓடிப்போக வைச்சது ஆர்? நீங்கதான். நீங்க உடும்புப் பிடியாப் பிடிச்சிருக்கிற முட்டாள்க் கொள்கைகள் தான். நல்ல காலம். சாந்தம் மூளையுள்ளவள். சிலரைப் போல மடைத்தனமாய்ச் சாகாமல் தான் நினைச்சவனுேடை ஒடிப்போயிட்டாள்.” கனகரெத்தினத்தார் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். அவர் ஒளித்தோ மறைத்தோ மூவருக்குத் தெரிந்த இரகசியமாய் செய்த செயலை ஆதரிக்க மகன் இருக்கிருனே என்ற நிம்மதியில் அவர் பெருமூச் செறிந்தார். அவரது நெஞ்சுக்குள் கிடந்து தயங்கிய கருத்
76

மூடுதிரை
துக்களை அவனே இப்போது சொல்லிக்கொண்டிருப்பது போல அவர் உணர்ந்தார்.
"இரும்புப்பிடியாய் முட்டாள்க் கருத்துக்களைப் பிடித் துக்கொண்டு உயிர்களைக் கொல்லுறதுதான் மானமில்லாத செயல். தனக்கு ஒரு வாழ்வு வரேல்லையே எண்டு ஏங்கிக் கொண்டிருக்கிற குமரை வீட்டுக்குள்ளை வைச்சுக்கொண்டு அவளின் ரை உணர்ச்சிகளை மதிக்காமல் சீவிக்கின்ற மனிதன் தான் தலை குனிஞ்சு நடக்க வேண்டியவன். உண்மையிலை சொல்லுங்கோ. மானம் போயிட்டுது, மரியாதை போயிட் டுதெண்டு சொல்லி அவளுக்கு நீங்க இதுவரை என்ன செய்தியள்? உங்களாலை, உங்கடை பண்பாட்டின்படி அவ ளுக்குச் சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியுமா? முடியாது. இப்படித்தான் பொய்ப் பெருமை
யாலும், சாதிபேதத்தாலும் ஆயிரமாயிரம் உயிர்கள் வீணு
கக் கொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல் எல்லாரும் நினைத்த படி, நினைத்ததை அடைந்து மகிழ்வோடு வாழக்கூடிய ஒரு காலம் வரும். அந்தப் பொன்ஞன புதுயுகம் வரும் வரை இப்பிடி விஷயங்கள் நடப்பதை யாரும் தடுக்க முடி யாது. இது அழுகிப் போன முதலாளித்துவ சமுதாயத் தின் விதி. தன்னை நம்பினவனை ஏமாத்தாமல், நீங்க போற் றுகிற இந்தச் சமய சம்பிரதாயங்களை உடைத்துத் தகர்த் துக் கொண்டு தைரியமாய்ப்போன சாந்தாதான் நேர்மை யுள்ளவள். மானமுள்ளவள். அது சரி ஏனம்மா பேசா மலிருக்கிருய்?"
எங்கோ மனதை விட்ட தங்கம்மா பேசமுடியாது மெளனமாயிருந்த நேரத்தில் கனகரெத்தினத்தாரின் வாய் மூவருக்குத் தெரிந்த இரகசியமொன்றை அவனுக்கும் சொல்லத் துடித்துக்கொண்டிருந்தது.
'தம்பி தர்மலிங்கம். உன்னைப்போலை எனக்கு அறிவு மில்லை. இவ்வளவு துணிவுமில்லை. ஆனல் பயந்து பயந்து
77

Page 42
மூவர் கதைகள்
சாந்தத்தின்மேல் வைத்த அன்பாலும், எனது அற்ப அறி வாலும் நான்தான் அவளை அவளது காதலனேடை ஒடிப் போகும்படி தூண்டிவிட்டேன். ஏற்கனவே, சாந்தம் தான் காதலித்ததை எனக்குச் சொல்லியிருந்தாள். அவனைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன் என்று சொன் ணுள் அவள். ஊர், உலகம், சம்பிரதாயம் ஆகிய யாவும் இதனை ஒப்பாதே என்றேன். அவள் என்னையே கேட்டாள்: 'நீங்களும் இப்படியான மூடத்தனங்களை ஏற்றுக்கொண்டு என்னுடைய வாழ்வையே அழிக்கப் போகிறீர்களா?' என் ருள். என்னல் என்ன பதில் சொல்ல முடியும்? நான் திரை மறைவில்தான் இதனைச் செய்யும் வலிமையுடைய வன். நானே அந்த இரவு, என் மகளைச் சஞ்சலம் நிறைந்த இதயத்தோடு என் மகளை அந்தப் பையனின் கையில் பிடித் துக் கொடுத்துவிட்டு, காலையில் எழுந்து வேறு நாடகம் ஆடினேன். சாந்தம் ஒடிப்போய்விட்டாள் என்று அழு தேன். என்னடா மகனே செய்ய முடியும். நீ புது உலகத் தின் மனிதன். புதிய தலைமுறையின் பிரதிநிதி. நானே? . உன்னளவு வலிமை எனக்கில்லையே.
தர்மலிங்கத்தின் காலடியோசை கேட்டது.
தகப்பன், மகனை மெளனத்தோடு நிமிர்ந்து பார்த்தார். அவன் சொன்னன்: "ஐயா, இனி ஆட்களுக்கு முன்னலை நான் எப்பிடித் தலைநிமிர்ந்து நடக்கப் போறன் எண்டு நினைச்சுக்கொண்டு நீங்களுமா மனவருத்தப்படப் போறி யள்? எனக்கு எல்லாம் தெரியும். சாந்தம் எனக்கு எல்லா மையுமே விபரமாய் எழுதியிருந்தாள்!"
2.
78
جبرا

நேற்றைய அடிமைகள்
குளித்துக் கொண்டு நின்ற தாயின் முதுகையே பார்த் துக் கொண்டு நின்முள் தங்கமணி. அவளின் தாய் செல் லியின் முதுகில் நீண்ட ஆறிப்போன தழும்பு ஒன்று பெரிதா கத் தெரிந்தது. பொதுநிறமான அவளது முதுகில் அந்த நீளமான வடு பளிச்சிட்டது. அந்தத் தழும்பின் வயது பதினறுவருஷங்கள் பதினறு வருஷங்கள் தான்; அவளின் தம்பி சூரியனின் வயதுதான் அந்தத் தழும்பிற்கும், சூரி யன் செல்லியின் வயிற்றில் உருண்டு புரண்டு வெளிவரத் துடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற போதிலே தான் அவளுக்கும் அந்தக் காயம் உண்டானது. தங்கமணி யின் நெஞ்சினுள்ளே ஆத்திரம் மூண்டு ஜுவாலை எழுப் பிற்று. அவளுக்குக் கலியாணமாகிப் புருஷனேடு வேற் றுாரில் வாழப்போய் மூன்று ஆண்டுகள் போய்விட்டன. அதன்பிறகு தாயையும் தம்பியையும் பார்க்க அவள் மீண் டும் வீட்டிற்கு வந்திருக்கிருள். நேற்று மாலையிலேதான் வந்தாள்.
"மோனை, கொடியிலை காயிற அந்தச் சேலையை ஒருக் கால் எடுத்துவா"
தாயின் குரலைக் கேட்டதும், தங்கமணி மேற்புறத் தென்னைகளில் கட்டப்பட்டிருந்த கொடியிலே காய்ந்த சிவப்புச் சீலையை எடுத்து வந்து தாய் செல்லியிடம் கொடுத்தாள். தாய் உடலைத் துடைத்துக் கொண்டு, சீலை
79

Page 43
மூவர் கதைகள்
யை உடுத்துக் குறுக்குக் கட்டாகக் கட்டிக் கொண்டாள். உள்ளே போய்த்தான் இரவிக்கைபோடப் போகிருள் போலும்.
'தம்பி எங்கை போயிட்டான்?"
செல்லி அந்தக் கேள்விக்கு நிறைவோடு பதில் சொன் ணுள்:
*உன்ரை அவரோடை சேர்ந்ததுக்குப்பிறகுதான் அவன் முற்ரு மாறிப் போட்டான். முந்தியென்ருல் படவிசர். இப்ப அவனுக்குப் படமும் பிடிப்பில்லை. ஊருலாத்திற தும் விருப்பமில்லை. கூட்டமும் புத்தகங்களுந்தான் அவ னுக்கு இப்ப துணையாப் போச்சு...”
மனம் குளிரத் தங்கமணி புன்னகை செய்தாள். சூரி யன் மட்டுமென்ன, தானும் கூட எவ்வளவு மாறிப் போய் விட்டாள். அதை நினைக்கும் போது அவளிற்கு வாழ்வு, பூரண அர்த்த முள்ளதாகத் தெரிகின்றது. அவளின் கண வன் கனகுதான் எல்லாவற்றிற்கும் காரணம். அவனைக் கணவனுகக் கொண்டமையினல் வாழ்விலே புதிய பிரகா சத்தையும் அவள் கண்டாள். எல்லாமே விதியென்றும் நியதியென்றும் நம்பிநம்பி வாழ்ந்த, கடந்துபோன வாழ் வின் நாட்களையெல்லாம் அவள் மிகக் கச்ப்போடு நினைவு கூர்வாள். அந்த வாழ்வு பற்றிய எண்ணங்கள் அவள் போன்ற மிகச் சிலரின் நெஞ்சிலிருந்து நீங்கிப் போயிருக் கலாம். ஆனல் அறிவின், புதிய சிந்தனையின் ஒளியே புக முடியாத பல கிராமங்களில் அது இன்னும் உயிர் வாழ்ந்து வருவதையும் அவள் நன்ருகவே அறிவாள்,
நேற்று மாலை அவள் தன்னுடைய தம்பி சூரியனேடு தான் வேற்றுாரிலிருந்து தான் பிறந்த ஊருக்குத் திரும்பி வந்தாள். திருமணமாகிப்டோனதின் பின்னர் மூன்ருண் டுகள் கழித்து அவள் பிறந்த ஊருக்குத் திரும்பியபோது,
80

நேற்றைய அடிமைகள்
ஊரின் முதல் அழைப்பாளிபோலச் சடைத்து நிற்கும். ஆல மரத்தை மிகக் கூர்மையாகப் பார்த்தாள். ஆலமரத்தின் நெஞ்சிலே பெரிய நோட்டீஸ் ஒன்று ஒட்டியிருந்தது. கூர் ந்து பார்க்கிருள். "அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆல யக் கதவுகள் திறக்கட்டும், என்ற எழுத்துக்கள் அவளை எதிர் கொண்டன. சூரியனை அவள் பார்த்தாள். அவன் அர்த் தபுஷ்டியோடு சிரித்தான்.
‘என்ன, நோட்டீசைக் கிழிக்காமல் விட்டிருக்கிறர் கள்.?
தங்கமணி அதிசயத்தோடு கேட்டாள்.
'இந்த ஆலமரத்திலை இவ்வளவு கெட்டித் தனமாய் ஏறி நோட்டீஸ் ஒட்ட நாங்கள்பட்டபாடு எவ்வளவு? இதிலை ஏறிக் கிழிக்கிறதெண்டால் லேசான வேலையில்லை. அப்படி ஆருந் துணிவு வந்து கிழிச்சாலும், அவன்ரை உடம்பைக் கிழிச்சு அந்த ரத்தத்தாலை இந்த ஆலமரத்திலை எழுதுவம். இது கிழிக்கிறவனுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும்’
தங்கமணின் உடல் சிலிர்த்தது. சூரியனைப்பார்த்தாள்: பதினறு வயதான அவனது நெஞ்சிலே எவ்வளவு துணி வும், பழிவாங்குமுணர்வும் மிகுந்து நிற்கிறது. தகப்பனைப் போலவே எவ்வளவு உறுதியாகச் சொல்கிருன் .
'அக்கா, முந்தியைப்போலை இல்லை இப்பநிலைமை. காலம் மாறியிட்டுது. இரத்தக் கடனை இரத்தத்தால் தான் தீர்க்கமுடியும் எண்ட உண்மை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிட்டுது. ஒரு பத்துப் பதினைஞ்சு வருஷத் துக்கு முந்தி நாங்கள் நாயிலும் கீழாயிருந்தம். இனி அப் படி இருக்கவே ஏலாது. இங்கை எனக்குப் பல கடனுகள் இருக்குது.'
தங்கமணி அவன் பிறந்த நாளை நினைவில் எடுத்தாள். அவன் இரத்தம் கசிந்த சீலையிலேதான் பிறந்தர் ன். அது
8

Page 44
மூவர் கதைகள்
வும் சாதிப் போராட்டம் ஒன்றின் முற்றிய நிலையிலே, அடக்கு முறையின் கொடியநகங்கள் பெற்றவளைப் பற்றி விரு ண்டிய உணர்ச்சிப் பெருக்கான நேரத்திலே, தாயின் கோபம்ததும்பிய சபதத்தின் ஒலியிடையேதான் இரத்தப் படுக்கையிலே அவன் விழுந்து தன் முதற்குரலை எழுப் பினன்.
தங்கமணிக்கு அப்போது ஆறுவயது. அவள் மொழு மொழுவென்று தோன்றுவாள். துணிந்த தாயின் நெஞ்சம் போலவே அவளுக்கும். தகப்பனைப் போலவே அடர்ந்த கூந்தல் அவளுக்கு. பின்னிக் கூந்தலை அழகோடு விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறிய பிஞ்சுக்குழந்தை அவள்தான். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முத்திரை குத் தப்பட்டவர்கள் அங்கே எல்லா விதத்திலும் உரிமை மறுக் கப்பட்டிருந்தார்கள். கிணற்றில் நீர் அள்ளக்கூடாது. கோயிலுக்குள்ளே போகமுடியாது. பெண்கள் மேற்சட்டை அணியக்கூடாது. பள்ளிக்கூடத்திற்கு அவர்களின் பிள் ளைகளுக்கு அனுமதியில்லை, ஐயா அம்மாக்களுக்கு வழி வழியாக அடிமை வேலை செய்ய வேண்டியதே அவர்களுக் குள்ள கடமையும் உரிமையுமென அவர்கள் நம்பியிருந்தார் கள். அந்த நம்பிக்கையென்ற விலங்கினைத் தங்கள் கை களுக்குத் தாங்களாகவே அவர்கள் பூட்டியிருந்தார்கள். செல்லியைக் கலியாணம் முடித்தவன் முருகன். முருகன் அந்த ஊரிலே பிறந்து வளர்ந்தவனல்ல, அந்த ஊர் மக்கள் ஐயாக்களின் நிலங்களிலே பிணைக்கப்பட்டவர்கள். காலங் காலமாக அவர்களுக்கு வாயை மூடிக்கொண்டு சேவகம் செய்வதற்கு அவர்களாலே பணிக்கப்பட்டவர்கள். முரு கன் அந்தக் கிராமத்திற்கு வந்த புதிதிலே, தன்னுடைய கிராமத்தைவிட அங்கே கொடுமையான ஒடுக்குமுறைகள் நிலவுவதைக் கண்டான். இயல்பாகவே துணிவுள்ள முற் கோபி அவன். திருமணமாகி நாலைந்து வருஷங்களில் ஊரின் ஒதுக்குப்புறத்திலுள்ள காட்டுக் காணியில் பல
82
t;-

நேற்றைய அடிமைகள்
எதிர்ப்புகளுக்கு நடுவே அவன் ஒரு குடிசை போட்டுக் கொண்டான். அவனது கையிலே எந்த நேரமும் பள பளத் துக்கொண்டிருக்கும் பாளை சீவும் கத்தி, பலரையும் வாலாட்டாமற் செய்திருந்தது. முதன் முதலாகத் தன் னுடைய மனைவி செல்லியை அவன் இரவிக்கை அணியச் செய்தான். அங்கே அதுவரை ஒடுக்கப்பட்ட மக்கள் மேற் சட்டை போட்டதில்லை. போடவும் முடியாது. முருகனின் உடல்பலம் நம்பிக்கையளித்த துணிவிலே செல்லி அந்த இர விக்கையை அணிந்து கொண்டாள். அழகை அள்ளித் தெரியவைக்கும் அவளின் புதிய தோற்றம் முருகனை மட் டுமல்லாது, செல்லியைச் சேர்ந்த அனைவரையுமே கிறங்க வைத்தது. செல்லியைப்போல இரவிக்கை அணியப் பலரும் விரும்பினர்கள். துணிவுள்ள சிலரின் மனைவியரும், பிள்ளை களும் செல்லியைப் போலவே இரவிக்கையை அணியத் தொடங்கினர்கள். உழைத்து வனப்பேறிய அவர்களின் உடல்வாகிற்கு இரவிக்கை மிகவும் வசீகரமாகவேயிருந்தது.
உடையார் கருணுகரர், மணியகாரர் நடராசா போன் றவர்களுக்குச் சொல்லொணுத ஆத்திரமேற்பட்டு உறக்க மின்றிப் படுக்கையிலே உழன்ருர்கள். காலங்காலமாக முன் னேர்கள் கட்டிக்காத்துவந்த மரபுகளை இந்தக் கீழ்சாதி கள் நொருக்கித் தள்ளுகிருர்களே என்று கொதித்தார்
சமாதான நீதவான் கனகசபை. "இரவிக்கையோடு இன்று
போவார்கள், நாளை எங்கள் வீட்டிற்குள் வந்து சம்பந்தஞ் செய்யக் கேட்பார்கள்" என்று துள்ளியடித்தார் அய்யாசாமி,
என்னுடைய அதிகாரமிருக்கேக்கை இப்பிடி நடக்கவேணும்,
இவங்களை வீடு பூந்து எலும்பெலும்பாய் நொருக்கியெறி வன் என்று மீசையை முறுக்கிக் கொண்டு அங்குமிங்கும் உலாவினர் இளைப்பர்றிய பொலிஸ்காரரான மாணிக்கத் தம்பியர். கடைசியில் எல்லோரும் கூடி யோசித்தனர். எல் லோருடைய ஆத்திரமும் முருகனின் மேலேயே பாய்ந்தது. அவன்தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஏதோ ஒரு விதத்
83

Page 45
மூவர் கதைகள்
தில்முயன்று அவனை முடித்துவிடவேண்டும் என்பதே அவர்களின் சந்திப்பின் முடிவாக இருந்தது. எதிலும் நசிந்து கதைப்பவரான தரகர் கனகையா ஒரு ஆலோசனை சொன்னுர்:
'முருகனை முடிக்கிறதெண்டால் சுகமான வேலை யில்லை. அவன் ரை கூட்டாளியளும் பயங்கரமான வங்கள். பிறகு கரைச்சல் தொடரும். முதலிலை முருகனைக் கூப் பிட்டு நயமாகச் சொல்லிப் பாப்பம், அவன் கேக்கயில்லை எண்டால் வேறை ஒரு வழியிருக்கு. அவங்கடை ஆக்க ளிலை ஒருதனேடை முருகனுக்கு வெட்டுப்பழியிருக்குது. அவனை நாங்கள் முடிச்சிட்டு முருகனிலை வலு சுகமாக் கொலேயைத் திருப்பி விடலாம். எல்லாத்துக்கும் பொலி சிலை கொஞ்சம் அணைவு வேணும்."
கனகையாவின் உன்னதமான ஆலோசனையினுல் மனம் பூரித்துப்போன உடையார் கருணகரர் உற்சாகம் பொங் கச் சொன்னுர்:
** அதுக்கு ஒண்டும் யோசியாதையுங்கோ. பொலிசிலை நான் எல்லாத்தையும் வெண்டு தருவன்’
செல்லிக்கு அப்போது வயிற்றில் ஏழுமாதம் . சூரியனை வயிற்றுள்ளே வைத்திருந்தாள். வெள்ளிக்கிழமை அதி காலைப் பொழுதொன்றின் போது முருகன் வீட்டின் முன்" னல் பொலிஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. பொலிஸ்காரர் கள் தொப்தொப் என்று குதித்து உள்ளே ஓடிவந்து முரு கனைக் கைது செய்தனர். இரத்தம் தோய்ந்த கத்தியையும் சீலையையும் வீட்டின் பின்புறத்தில் கைப்பற்றினர்.
முருகனுக்கு எதுவுமே புரியவில்லை.
மாணிக்கனைக் கொன்றதாக அவன்மீது சாட்டப் பெற்ற குற்றம் மூன்று மாத வழக்குத் தவணைகளின் விசா
84
حج} *
A.

நேற்றைய அடிமைகள்
ரணையின் பின்னர் நிரூபணமாயிற்று. அவனுக்கு ஆயுட் காலத் தண்டனை.
செல்லி தலை தலையாய் அடித்துக்கொண்டு அலறிஞள். கோட்டடிக்கு ஆறு வயதான தங்கமணியோடு அவளும் சென்றிருந்தாள். இன்ருே நாளையோ பிரசவிக்கத் தயாரா யிருந்த அவள், சொந்தக்காரர் மறிக்க ம்றிக்கக் கோட்ட டிக்குச் சென்றிருந்தாள். முருகன் முகம் திகைப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை. தரகர் கனகையா, உடையார் கருணுகரர், மணியகாரர் நடராசா ஆகியோர் முருகனை மறியற்சாலைக்குக் கொண்டு செல்லும் வரையில் அங்கே நின்றனர்.
பட்டணத்தில் தரகர் கனகையாவுக்கு ஒரு பெரிய தண்ணிப்பார்ட்டி அன்று இரவு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.
கோட்டடியிலிருந்து திரும்பிய ஐவரில் தங்கமணியும், செல்லியுமிருந்தார்கள். புஸ்புஸ்ஸென்று இளைத்து.இளைத்து நடந்து வந்துகொண்டிருந்தாள் செல்லி. அவளின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் வடிந்து கொண்டிருந்தது.
பெரிய ஆலமரத்தைக் கடந்து மணியகாரர் முடக் கைத் தாண்டியபோது மாணிக்கத்தம்பியரின் வீட்டின் முன்னே ஒரு சிறிய கூட்டம் நிற்பதனைக் கண்டாள் செல்லி. அவளோடு வந்த சரவணனுக்கும், ராமனுக்கும், காந்திக் கும் கண்களிலே பீதி தெரிந்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதனை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். செல்லிக்கு அந்த நிலையிலும் தன்னை மீறியதோர் துணிவு வந்து விட்டது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு எதி லும் துணிந்து நிக்க வேணும் என்று முருகன் அவளுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிருன்.
85

Page 46
மூவர் கதைகள்
*ஒண்டும் பேசாமல் வாருங்கோ. என்ன நடக்குது பாப் பம்’ என்று கூறிக்கொண்டு துணிவை வரவழைத்துக் கொண்டு அவள் முன்னே நடந்தாள்.
மாணிக்கத்தம்பியர் வீட்டு முன்புறம்.
"g நாயே..." சொற்களோடு அவள் முன்னே காறித் துப்பினுள் மாணிக்கத்தம்பியரின் இளைய மகள் கனகம்மா.
செல்லம்மாவோடு வேறு சிலர் செல்லிக்குக் குறுக் காக வந்தார்கள்.
* பெரிய ராசாத்தி வாழு, பெண்டுகள் வழிவிடுங்கோ’
ஏளனமாகச் சொல்லியபடி செல்லியின் முன்னுல் நின்று ஆத்திரம் பொங்கப் பார்த்தாள் கனகசபையின் மூன்ருந் தாரம்.
*ராசாவை எங்கை விட்டிட்டு வாறியள்?"
இந்த ராசா போனல் என்ன? செல்லியின்ரை வடி வுக்கு இன்னெரு ராசாவைப் பிடிக்க முடியாதோ என்ன?”
"ஒமோம்”
“கீழ்சாதி நாய்! நாங்க கதைக்கிறம், என்னடி பேசா மல் நிக்கிருய்?- மெய்யடி தோறை"
கனகசபையின் மூன்ருந்தாரம் சீறியது.
செல்லிக்கு வயிறெல்லாம் ஒரே வலியாயும், வேதனை யாயுமிருந்தது. மனப்பாரம் மறுபுறம்.
*பிள்ளை, உங்களோடை எனக்கொரு கதையுமில்லை. வழியை விடுங்கோ, ஏன் வீண் கதையளை ?"
செல்லி சொன்ன பதில் முடியுமுன் அவள் கன்னத் திலே பளீரென்று அடித்தாள் கனகம்மா.
86
 

நேற்றைய அடிமைகள்
'அக்காவிலை தொடப்படாது தெரியுமோ?"
சரவணன் முன்னே பாய்ந்தான். அவனை எதிர்பார்த் திருந்தவள் போலக் கையில் வைத்திருந்த கோடரிப் பிடி யினல் அவனது பிடரியில் படாரென அடித்தாள் செல் லம்மா. சரவணனின் பிடரியிலிருந்து பச்சை இரத்தம் சீறிப்பாய, அவன் குப்பறச் சரிந்தான்.
"ஐயோ என்ரை ராசா."
செல்லி அலறிஞள். மூச்சிழுத்து அலறிஞள்.
“ஏனடி இவனும் உன்னுேடை இருக்கிறவனே??
செல்லம்மாவின் கையிலிருந்த கோடரிப்பிடி செல்லி யின் முதுகின் மீது பளிர் பளீரென்று தாவி அடித்தது. செல்லி முதுகை நெளிந்து நெளிந்து துடித்தாள். கன கம்மா கெக்கட்டம் விட்டுச் சிரித்தாள்.
தங்கமணி ஓவென்று அலற அவள் வயிற்றிலே யாரோ ஒருத்தி எட்டி உதைத்தாள். பிஞ்சுக் குழந்தை மல்லாக் காய்ச் சரிந்தாள்.
"இந்தத் தேவடியாளின்ரை சீலை சட்டையை உரிஞ்சு எறியுங்கோடி. நாறலி, உனக்கொரு றவிக்கையோடி எளிய நாயே..?
அய்யாசாமியின் மனைவி உரத்துக் கூவினுள்.
செல்லிக்கு உடலெல்லாம் நடுங்கியது. தன்னைப் பாது காத்துக்கொள்ள வழி தேடுபவள் போல மிரண்டு மிரண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். சாதாரண நிலை யிலாயின் அவள் ஒடித் தப்பி விடுவாள். இப்போதோ வயிற் றினுள்ளே பிறக்கப் போகும் சிசு புரண்டுகொண்டிருக்கிறது.
87

Page 47
மூவர் கதைகள்
“இந்த எளிய நாயிலை தொடவோ போறியள். தொட் டால் துடக்கும் பாவமும் வந்திடும், பொறு வாறன் ."
கனகம்மா கூறிக்கொண்டு மின்னலாய்ப் பாய்ந்தாள். போனவள் திரும்பி வரும்போது கொக்கைச் சத்தகம் ஒன்றைக் கைகளிலே கொண்டு வந்தாள்.
நெஞ்சகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு நின்ற செல்லியின் முதுகுப்புறமாக வந்த கன் கம்மா, செல்லியின் முதுகுப்புறத்துச் சட்டையில் கொக்கைச் சத்தகத்தைக் கொழுவிப் பற பறவென்று இழுத்தாள். செல்லி முதுகை நெளித்தாள். இறவிக்கை முதுகுப்புறத்தால் கிழிய, மீண் டும் அவளின் சீலையிலை கொழுவி வலிமையோடு இழுத்தாள் கனகம்மா. செல்லி திணறி வளைந்தும் பயனில்லை. வயிற் றுள் பாரம் அழுத்தி, உடலைச் சுருக்கி இழுத்தது.
அவிழ்ந்த சீலையை இரு கைகளாலும் பரபரப்போடு இழுத்து உடலை மறைத்துக்கொண்டு குந்திய நிலையில் இருந்தா ள் செல்லி. அவளது உடல் படபடப்போடு நடுங் கிக் கொண்டிருந்தது.
‘இனி றவுக்கை போடவேணுமெண்டு கனவிலும் நினைக் காதையுங்கோடி. இந்த அடையாளத்தை மனதிலை வைச் சிருங்கோ.”
எவ்வித தயக்கமுமின்றி கனகம்மா, திறந்திருந்த செல் லியின் முதுகில் சதக்கென்று கொக்கைச் சத்தகத்தால் கொத்தி ஆழ இழுத்தாள். இரத்தம் சீறியடித்து முதுகில் வழிய ‘அம்மா’ என்று ஈனஸ்வரமாக அலறியபடியே வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கால்களைக் குருவி வலித்த படியே மல்லாக்காகச் சரிந்தாள் செல்லி. ஈரப்படுத்திய இரத்தம் கச கசத்துக் கிடக்கும் சீலையிலே கால்களை அகட்டி அவள் அவஸ்தைப் பட்ட சில கணங்களுள் "ம்மா. ம்மா..” என்ற குழந்தையின் முதற் குரல் சீறிக் கொண்டு
ܕܐܲ*
 

நேற்றைய அடிமைகள்
அவளின் இரத்தத்தில் நனைந்துகொண்டே அந்தச்சிசு தன் முதற் குரலை ஒலித்தது!
YA
அந்தச் சம்பவம் நடந்தொழிந்த பின்னர் இரவிக்கை போடுவதனைப் பலர் கைவிட்ட போதும், துணிவுள்ள சிலர் சில நாட்கள் கழிய மீண்டும் இரவிக்கை அணிந்தனர். செல்லியின் முதுகுத் தழும்பைக் காணக் காண அவர்களின் நெஞ்சிலே ஆத்திரம் கொழுந்துபற்றியெரிந்தது. பதினறு வருஷங்களினுள் நடந்த பல மாறுதல்களின் விளைவின் பின்னே அவர்கள் இரவிக்கை அணிவது சர்வ சாதாரண மான பழக்கமாக வந்துவிட்டது. எனினும் செல்லியின் வர லாறு யாவராலும் நினைவு கூரப்பட்டது.
தங்கமணியின் மனதிலே அந்தச் சம்பவம் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்தக் கிராமத்தில் எழுந்த அந்த எழுச்சி நசுக்கப்பட்டதாயினும் உள்ளே கனன்று கொண்டுதாணிருந் தது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பழி வாங் கித் தீர வேண்டுமென்ற எண்ணம் செல்லியின் மனதிலே நிறைந்திருக்கின்றது. குற்றமற்ற கணவன், மறியற்சாலை யால் வந்ததும் அவள் எதையும் செய்யத் தயாராக இருந்தாள்.
முருகன் மறியலுக்குப் போனதின் பிறகு அவுள் மிக வும் சிரமப்பட்டே தன்னுடைய வாழ்க்கையை நடத்தி ணுள். அவளை நிராதரவாக யாரும் விடவில்லை. தங்கள் கஷ்டத்தினிடையேயும் தங்களால் இயன்ற உதவியினை செல்லியின் குடும்பத்திற்குச் செய்தார்கள். செல்லிக்குப் பல கவலைகளிருந்தபோதும் பிள்ளைகளைப்பற்றிய கவலைதான் பெரிதாக இருந்தது. தங்கமணி திருமண வயதை எட்டி விட்டாள். சூரியனே சினிமாப்படம், ஊர் சுற்றல் என்று ஒரு கவலையுமில்லாமல் திரிந்து கொண்டிருந்தான்.
89

Page 48
மூவர் கதைகள்
செல்லியின் உறவினர்களின் முயற்சியினல் தங்க மணிக்கு கனகு என்பவனைத் திருமண்ம் செய்து வைத்தார் கள். கனகு தங்கமணியோடு தன் மைத்துனனையும் தனது ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தான். ஆறு மாதங்கள் வரை சூரியன் கனகு வீட்டில் நின்றுவிட்டு ஊர் திரும் பினன்.
செல்லி அவனை மிக ஆச்சரியத்தோடு எதிர்கொண் டாள். அவன் வரும்போது ஒரு சின்னப் பெட்டிக்குள் பல சிவப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்தான். அவை களை ஒரு மூலையிலிருந்து ஆழ்ந்து படித்தான். சுவரிலே மூன்று படங்களை ஒட்டியிருந்தான். முதற்படம் ஒரு பெண் துவக்கோடு எதனையோ சுடத் தயாராகி நின்ருள். இரண் டாவது படத்தில் பல நிற ஆட்கள் சிரித்தபடி கைகளில் ஒவ்வொரு புத்தகங்களை வைத்திருந்தனர். பின்னல் ஒரு சூரியன் செங்கதிர் பரப்பிநின்றது. கடைசிப் படத்தில் பரந்த நெற்றியுடைய, சொண்டின் கீழே காய் அடையாளம் உள்ள ஒருவர். செல்லிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் ஐந்து வரை கூடப் படிக்கவில்லை. படிப்பென்ருல் கசந்து முகஞ் சுளித்தவன் . இப்போதோ அவன் நிறையப் படிக் கின்றன் . அவனிடம் அவனது வயதொத்தவர்கள் நிறை யப் பேர் வருகின்றனர். கதைக்கின்றனர். இன்னும் பலர் அலுவல்கள் செய்கின்றனர். சூரியனின் வருகைக்குப் பின் னர் தங்கள் பிள்ளைகள் மிக ஒழுங்காகி விட்டார்கள் எனப் பல தாய்கள் கூறக் கேட்டு செல்லி மிகவும் மசிழ்ச்சியுற் ருள். நெஞ்சினுள்ளே பெருமிதம் அவளுக்கு.
தங்கமணி கனகுவைத் திருமணம் செய்யும்வரை ஒடுக் கப்பட்ட தங்களின் வாழ்வு அப்படி அமைந்ததற்கு விதியே காரணம் என நம்பியிருந்தாள். முற்பிறப்பில் செய்த வினை களின் பயனுகவே தாங்கள் இப்படிப் பிறக்க வேண்டியிருந் தது என அவள் மனதினுள்ளே பழமையின் கருத்து விதைக்கப்பட்டிருந்தது. கனகுவோடு வாழப் போனதின்
90
-
غال .

நேற்றைய அடிமைகள்
பின்னே கனகு அவளைப் பல கூட்டங்களிற்குக் கூட்டிச் சென்ருன். அவனேடு அவள் சாதி அடக்குமுறைக்கு எதி ரான பல ஊர்வலங்களிலே பங்கு கொண்டாள். வீட்டில் கனகு பல புத்தகங்களை வைத்திருந்தான். வியத்ணும் என்ற இடத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வியத்ணுமிய மக்கள் நடத்தும் வீரப் போராட்டங்கள் பற்றி அவன் அவளுக்கு நிறையவே கூறுவான். துப்பாக்கி ஏந்தி நின்ற பெண்ணின் படமொன்றை அவள் ஒரு நாள் பார்த்துவிட்டு மனஞ் சிலிர்த்தாள். தன் தாய்க்கும் உறவினருக்கும் நிகழும் அவ மானங்கள் அவளின் கண்களிலே வந்து நின்றன. தானும் வியத்ணுமியப் போராளிகளைப் போல மாற வேண்டுமென் றும் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்வாள். தன் எண்ணங்களைக் கனவனிடம் சொன்னபோது, அவன் கூறிய பதில் இன்னும் அவளின் நெஞ்சிலே மிகவும் பசுமையாக நிற்கிறது. -
‘தங்கம், இந்தச் சாதிப் பிரச்சினை தனியாகத் தீர்க் கக் கூடிய ஒண்டில்லை. சமுதாயத்திலை புரட்சியாலை பெரிய மாற்றம் ஏற்பட்டு தொழிலாளியின் ரை அரசு ஏற்பட்டால் தான் இது முற்ருய் மாறும்’
தம்பியின் வரவை எதிர்பார்த்திருந்த தங்கமணி, மீண் டும் செல்லியின் குரல் கேட்டுச் சிந்தனை கலைந்தாள்,
* தம்பியை இன்னுங் காணயில்லை. காட்டுப் பக்க மாய்ப் போய்க் கொஞ்ச விறகு வெட்டிக் கொண்டு வர வேணும். எடி சின்னக்கிளி.”
செல்லி விபரத்தைக் கூறிக்கொண்டு அடுத்த வீட்டுச் சின்னக்கிளியைக் கூப்பிட்டாள்.
“ஒரே நாரிப் பிடிப்பும், முதுகுக் குத்துமாயிருக்கு. பிள்ளை அந்த றப்பிலை தயிலமிருக்கு. ஒருக்கா எடுத்துப் பூசிவிடு.”
/ 91

Page 49
மூவர் கதைகள்
*வாறன்.”
தங்கமணி தைலத்தை எடுத்துக்கொண்டு வரும்போது இரவிக்கையைக் கழற்றி மேல்முதுகைக் குனிந்தபடியிருந் தாள் செல்லி.
திறந்திருந்த முதுகின் நீளமான ஆறிப்போன தழும் பையே சில கணங்கள் அசையாமலே பார்த்துக்கொண்டு நின்ருள் தங்கமணி, அந்தத் தழும்பின் வயது பதினறு வருஷங்கள். பிஞ்சு மனதில் பதிந்த அந்தச் சம்பவம் தங்க மணியின் கண்களினுள்ளே பொங்கி வந்து தெரிந்தது.
மெதுவாகத் தாயின் முதுகைத் தொட்டு அந்தக் காயத்தைப் பார்த்தாள். தங்கமணி என்ன நினைப்பா ளென்பதனைச் செல்லி அறிவாள். இசைவாகக் குனிந்த படியே "நடு முதுகில் உரஞ்சு பிள்ளை” என்ருள் செல்லி.
அடுத்த வீட்டிலிருந்து ஓடிவந்த சின்னக்கிளி மூசிக்
கொண்டு கேட்டாள்:
*ஏன் அக்கை கூப்பிட்டனி ?”
**விறகுக்குப் போகையில்லையோ?” குடிசையைப் பார்த்தவண்ணம் கேட்டாள் சின்னக்கிளி:
*அண்ஜண வரேல்லையோ?”
'இல்லையடி’
ஆச்சி, நான் போட்டுவரட்டோ கிளியோடை." தங்கமணி கெஞ்சும் குரலிலே கேட்டாள்.
*நீ வாயிலும் வயித்திலுமாயிருக்கிருய். என்னெண்டு
போப்போருய்?’
92
 

நேற்றைய அடிமைகள்
தங்கமணி கலகலவென்று சிரித்தாள்.
'நாலு மாசந்தானே இப்ப, ஏன் உனக்குச் செய்த மாதிரி எனக்கேதும் செய்வாளவை எண்டு யோசிக்கிறியோ? என்னேடை ஆருங் கதைக்க வந்தால் அவளவயின் ரை
எலும்பை முறிச்சுப் போட்டுத்தான் அடுத்த வேலை
LunT - u 6õT”
செல்லி எதையோ யோசித்து வாய்க்குள் முணு முணுத்தாள்
*சரி, றப்புக்குள்ளை கத்தி கிடக்குது. பெரிய கடகத் தையும் கயிறையும் எடுத்துக்கொண்டு போட்டு நேரத் தோடை வந்திடு”
A
ஊரின் ஒதுக்குப் புறத்திலுள்ளது அந்த விறகு வெட் டும் பறட்டைக் காடு. காட்டின் முனைப்பிலே கோயிற் கிணறு. சின்னக்கிளியும், தங்கமணியும் தங்கள் பாட்டிற்கு எதனையோ கதைத்துக் கொண்டு மக்கி ஒழுங்கையினற் போய்க்கொண்டிருந்தார்கள்.
கோயிற் கிணற்றடிக்குத் தண்ணிர் அள்ளுவதற்காக மூன்று பெண்கள் சென்று கொண்டிருந்த பாதையில் போய் மக்கி ஒழுங்கை ஏறியது. இடுப்பில் குடத்துடன் போன பெண்கள் திரும்பிச் சின்னக்கிளியையும், தங்க மணியையும் ஒரு பார்வை பார்த்தனர்.
'இதாரு புதாள் ஒண்டு. ஆர்ரை பக்கம்?"
முன்னே போன மூன்று பெண்களில் இளைய ஒருத்தி மற்றவர்களைக் கேட்டது தங்கமணியின் காதிலும் தெளி
வாக விழுந்தது.
93

Page 50
மூவர் கதைகள்
முன்னே போய்க்கொண்டிருந்த மூவரும் ஏககாலத்தில் திரும்பித் தங்கமணியைக் குறுகுறுத்துப் பார்த்தார்கள்.
தங்கமணியின் பார்வை வன்மத்தோடு அவர்களின் பார்வையினை எதிர்கொண்டு கடைசியில் ஒருத்தியின் முகத் திலே குத்திட்டது.
தங்கமணிக்குத் திடீரென்று நரம்புகள் துடித்துப் பம்மின.
பதினறு வருஷங்களுக்கு முன்னே தன் கண்களுக்கு முன்னலே தன்னுடைய தாயை நிர்வாணமாக்கி, அவள் முதுகிலே கொக்கைச்சத்தகத்தால் கொத்தி ஆருத தளும்பை ஏற்படுத்திய கனகம்மா அவள்.
ஒரு இரவிக்கை போட்டமைக்காக, பிரசவத்தாயென் றும் பாராது செல்லியைப் பதினறு வருஷங்களுக்கு முன்னே கொடூரமாகத் தாக்கிய ஈவிரக்கமற்ற மனித ஜென்மம்
கனகம்மா!
தன்னை மீறிய வெறுப்போடு அவர்களுக்கு எதிரே காரித்துப்பினுள் தங்கமணி.
'என்னடி நாயே ஆக்கள் நிக்கிறது தெரியேல்லையோ'
தங்கமணியை நோக்கி மூவர் குரலும் சீறின.
‘ஒமோம். இப்ப இவையள்தானே பெரியவை."
**நல்ல கதை. இப்பிடி அடாதுடித்தனமாய் வெளிக் கிட்டுக் கொப்பனுக்கும் கோச்சிக்கும் என்ன நடந்த தெண்டு தெரியுமோடி.”
கனகம்மா நக்கல் கலந்த தொனியில் ஆறுதலா சச் சொல்லிவிட்டுக் குடத்தைக் கீழே வைத்தாள்.
94
ܕ"ܵ

நேற்றைய அடிமைகள்
'இவள் முருகன்ரை மோள்
தாயின் பதினறு வருஷங்களுக்கு முந்திய தீனமான வேதனையும், பரிதாபகரமாகத் தாக்கப்பட்ட முறையும் தங்கமணியின் கண்களினுள் அலை அலையாய் விழுந்தன. அவள் உடலில் வேகம் ஏறிற்று. -
‘எங்களுக்கு முன்னலை துப்பின துப்பலை மண்ணுலை மூடிவிடடி.”
கனகம்மா தங்கமணியை நோக்கி முன் வந்தாள்.
"மண்ணுலை மூடாட்டில் என்னடி செய்வாய்?
*கோச்சிக்கு நடந்தது தெரியுமோ?. எடி அரியம் அந் தப் பனங்கருக்கை எடுத்தண்டு வாடி. எளிய நாயே
என்னை எடியெண்டோ சொல்லிருய்?'
கனகம்மா கைகளை ஒங்கிக்கொண்டு தங்கமணியின் மேலே பாய்ந்து விழுந்தாள். மிருகவேகம்.
ஒரு கணம். தங்கமணியின் மூளையில் மின்னல் மின் னிற்று.
கடகத்தினுள் கிடந்த கத்தியை விசிறி எடுத்தாள் தங்கமணி.
"ஆச்சியை இந்தக்கையாலை தானடி வெட்டினனி.’
ஆக்ரோஷம், தன்னிலை மறந்து வேகமாய் இயங்கிற்று.
சதக். சதக், “என்ரை ஐயோ. அம்மா என்ரை கை."
"பதினறு வருஷத்துக்கு முந்தி. நீ செய்தனியடி.”
தங்கமணி வெறிகொண்டவள் போல, இருபக்கத்தி லும் வீசி வீசிக் கன கம்மாவைக் கத்தியால் கொத்திக்
95

Page 51
மூவர் கதைகள்
கொண்டிருந்தாள். தலைமயிர் குலைந்து தங்கமணியின் தோளோடு புரண்டு அலைந்தது .
விரல்களும், நரம்புகளும் துடித்து நிலத்தில் புரண்டன.
இரத்தம் சீறிச் சீறி அடித்தது. குடமொன்று இரத் தத்தால் மூழ்கியது.
தங்கமணி ஓயவில்லை.
96.

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் இப்படிச் செய்வான் எனச் சண்முக லிங்கம் எதிர்பார்க்கவே இல்லை. சண்முகலிங்கம் மட்டுமல்ல திருச்சிற்றம்பலத்தோடு பழகிய வேறு யாருங்கூடத்தான் திருச்சிற்றம்பலத்தின் இந்த முடிவை நினைத் திருக்க
மாட்டார்கள்.
சண்முகலிங்கம் புரண்டு புரண்டு படுத்தும் நித்தி ரையே வரவில்லை. அடுத்த அறையிலிருந்து இலேசாக யாரோ இருமுவது கேட்டது. அந்த மனநிலையில் மெல்லிய இருமலும் மூளையைத் தகர்க்கும் பேரோசை போலச் சண் முகலிங்கத்தின் மனதைத் தாக்க, சண்முகலிங்கம் கனத்துக் கறுத்த இருள் செறிந்திருந்த அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
வெளியே நிலவு மங்கிக்கிடந்தது, முனையுடைந்த கடற் சிற்பிபோல நிலவும் பிய்ந்ததுபோல வடிவமற்ற பாதியாய் மங்கி, சோம்பலான பிரகாசத்தை வீசிக்கொண்டிருந்தது. இரண்டொரு முகிற்திரள்கள் மேலும் கிழிந்து காற்றுத் திசையோடு ஒடிக்கொண்டிருந்தன. இதுபோன்ற ஒரு நிலவுக்காலத்தின்போதுதான் திருச்சிற்றம்பலமும் சண்முக லிங்கமும் முதன் முதலிற் சந்தித்தார்கள். அந்தச் சந்தி ப்பு நிகழ்ந்து இரண்டு வருஷங்கள் கழிந்திருக்கலாம், திருச்
97

Page 52
மூவர் கதைகள்
சிற்றம்பலத்தின் தோற்றமோ பேச்சோ எவரையும் கவரக் கூடியவை அ ல் ல. அதுவும் அவ ன் பேசுவது புத்தக வசனங்களை ஒப்புவிப்பதுபோலக் கேட்டவருக்கே மன தினுள் சிரிப்பைத் தோற்றுவிக்கும். எப்போதும் பின் ஞலே முதுகைச் சுரண்டிக்கொண்டிருக்கும் இடதுகை ஒன்று தான் அவனை நினைக்கையில் மனதிலே உருவமாய் விழும். அடிக்கடி சுளித்துக்கொள்ளும் அந்த மயிரடந்த புருவங் களின் கீழே நம்பிக்கைவறட்சி தோய்ந்த அவனின் கண்கள் லேசாக அடைபட்டிருந்தன. திருச்சிற்றம்பலத்தின் தடித்த உதடுகள் மலர்வது வெகு அபூர்வம். திடீரென அரிதாக அவன் இதழ்களில் புன்னகை தவழும்; அப்படிப் புன்னகைத் தாலும் முகத்திற் பிரகாசம் கொடுத்த சில கணங்களிலே அந்த சிரிப்பு புஸ்என்று அழிந்து விடும். சிரிப்பதையும் ஓர் குற்றமான செயல் என நினைப்பது போலிருந்தது திரு சிற் றம்பலத்தின் போக்கு.
முல்லைத்தீவுக்கு அரசாங்க எழுதுவினைஞணுக நியமிக்க பட்ட சண்முகலிங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் - அங்கு யாருமே அவனுக்குப் பழக்கமாகாத நிலையில், போன முதல் வாரத்தில் கடற்கரையிலுள்ள மீன் பிடிப்பட கொன்றின் பக்கத்தில் தனிமையில் உட் கார்ந்திருந்தான். மணல் பரந்து மனிதனுக்கே இனம் புரியாத அமைதியினைக் கொடுக்கும் அக் கடற் கரையில் அலையின் வயிறு குலுங்கும் கத்தலைத் தவிர வேறு ஒலியில்லை. அந்த ஓசை கூட அக் கடற் கரையின் மெளனத்தை ரசிக்க வைக்கும் பின்னணியாக ஒலித்தது. எவ்வளவு துயரச்சுமையோடு போகிறவனது மன தையும் அந்த கடற்கரையின் பரந்த தன்மையும், உயர்ந்து விழுந்து நுரைசீறும் அலைகளின் எழிலும், அந்த சருநீல வண்ணத்தின் குளிர்மையும் கழுவி அமைதி கொடுத்து விடும் என அன்று சண்முகலிங்கம் நினைத்தான். வேலையால் களைத்து அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து மாலை வேளை களில் கடற்கரையில் போயிருக்கும் சண்முகலிங்கத்திற்கு
98

திருச்சிற்றம்பலம்
இந்த அனுபவம் வாழ்வோடு என்றும் பிணைந்திருக்க வேண் டுமென்ற மன விருப்பமிருந்தது. பணமில்லாமல் அனுப விக்கும் இச் சுகத்தை அவன் மனதார விரும்பினன்.
அலையின் நீண்ட கரமொன்று நுரையோடு சீறிக் கிள ம்பி சோகி ஒன்றைக் கரையில் எற்றி உதைத்துத் திரும் பிற்று. முதுகோட்டில் சிவப்பு வரிகள் நிறைந்த நண்டுக் குஞ்சொன்று கிளு கிளுவென்று வெகு தூரம் மணலுக்கு வந்துகொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிரு ந்த சண்முகலிங்கம் யாரோ கூப்பிட்ட உணர்வில் பின் புறமாகத் திரும்பிப் பார்த்தான்.
இடது கையால் பின்முதுகைச் சுரண்டிக்கொண்டுதன்னை அழைத்த அந்த உருவத்தைச் சண்முகலிங்கம் கண்டிருக் கின்றன். முல்லைத்தீவின் புத்தகக் கடை ஒன்றிலே கண்ட தாக நினைவு.
ஏன் கூப்பிட்டீர்? என்கிறகேள்வியைச் சண்மு கலிங் கத்தின் கண்களாலேயே கிரகித்துக்கொண்ட அந்த மனிதன் அதற்குப் பதிலாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டான். அவன் பெயர் திருச்சிற்றம்பலம், முல்லைத்தீவிலுள்ள ஒரே புத்தகக் கடையான சரஸ்வதி புத்தக நிலையத்தில் நிக்கிருன்.
திருச்சிற்றம்பலம் சொன்னவற்றைப் புருவத்தைச் சுழி த்துக் கொண்டே சண்முகலிங்கம் கேட்டுக் கொண்டிருந் தான். நேரம் போகப் போக இருவரிடையேயும், ஒரு மன நெருக்கம் தோன்றிற்று. முதற் சந்திப்பிலே தங்க ளிடையே குறுகிய பிணைப்பொன்று தோன்றி விட்டதாய்
திருச்சிற்றம்பலம் எப்போதுமே உரத்தகுரலிற் பேசுவான். மற்றவர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்கின்ற வேளை களில் மட்டுமே அவன் மனச்சோர்வுடன் வாய்க்குள் முணு
99

Page 53
மூவர் கதைகள்
முணுத்துக்கொண்டு போவான்; காற்பெருவிரலால் நிலத் தைத் தேய்த்துக் கொள்வான்.
முல்லைத்தீவில், மத்தியதரவர்க்கத்துக்கு கீழ்த்தட்டினரு க்கு தங்குவதற்கென்றுள்ள அந்தப் பெரிய வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் தனியாக வாழ் த்தான் சண்முகலிங்கம், அந்தப் பெரிய வீட்டின் எல்லா அறைகளிலும் பலர் வாடகைக்கு இருந்தபோதிலும் அவர்களில் யாருடனும் சண்முகலிங்கம் மனம் வீட்டு பழகி
யதில்லை.
சண்முகலிங்கம் முல்லைத்தீவுக்கு உத்தியோகம் பார்க்க வருமுன்பு திருச்சிற்றம்பலம் சரஸ்வதி புத்தக நிலையத் தின் முன்புறத்திலுள்ள ஒடுங்கிய திண்ணையில்தான் படுப் பது வழக்கம். எலும்புகளையே நக்கிச் சுரண்டும் ஊசி நாக்கு, அங்கு வீசும் பணிக்காற்றுக்கு. அதுவும் கடற் காற்று. கடை யின் முன் திண்ணையில் குறண்டிக்கொண்டு சின்னப் போர் வைக்குள் வெடவெடக்கும் திருச்சிற்றம்பலம் ஓயாது மூக் கைச் சிந்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். எவ்வளவுதான் தலையைக்காலை மூடினுலும் கிஸ்சென்ற பனிக் காற்று அவன் மூடிப்போர்த்த போர்வைக்குள் நிரம்பிப் பம்மி விழும். ஓயாத தடிமன் காரணமாக விக்ஸ் டப்பி ஒன்றை அவன் தன்னுடைய மடிக்குள் பத்திரமாக வைத்திருந்தான். வந்த புதிதில் திருச்சிற்றம்பலத்தின் இருக்கை பற்றி சண்முகலிங் கம் ஒன்றுமே விசாரிக்கவில்லை. அங்கு இருக்கத்தொடங்கி ஒரு மாதங்களிந்த பின்னர்தான் சண்முகலிங்கத்தோடு ஒரளவு அறிமுகமாயிருந்த இரத்தினசிங்கம் திருச்சிற்றம் பலத்தின் இந்தப் பேய்த்தனமான வேலையைப்பற்றிச் சொன்னன்.
மறுநாள் மாலையில், சண்முகலிங்கமும், திருச்சிற்றம் பலமும் கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருக் கையில் நட்புக் கலந்து தொனித்த அழுத்தமான குரலில்
100

திருச்சிற்றம்பலம்
தன்னுடைய அறையிலேயே திருச்சிற்றம்பலத்தையும் வந்து தங்கும்படி சண்முகலிங்கம் வேண்டிக்கொண்டான். திருச்சிற்றம்பலம் ஒரு உதிரித் தொழிலாளியாக இருந்த போதிலும் தனது நட்புக்கு மிக அவசரமாய் ஒருவன் தேவைப்பட்டதால் மட்டுமல்லாது, திருச்சிற்றம்பலத்தின் ஒளிவுமறைவற்ற குணங்கள் காரணமாகவும் திருச்சிற்றம் பலத்தோடு சண்முகலிங்கம் சினேகிதம் வைத்துக் கொண்டான்.
திருச்சிற்றம்பலம் தனது உடமைகளோடு சண்முகலிங் கத்தின் அறைக்கு வந்தான்-ஒரு பழைய குட்கேசுக்குள் உடுப்புகள், அரைப் பழசான மண்ணெண்ணைக் குக்கர், சில புத்தகங்கள், கடதாசிப் பெட்டி நிறைய தட்டுமுட்டுச் சாமன்கள், இவற்றை எல்லாம் விட விசேஷ கவனத்துடன் கொண்டுவரப்பட்ட இரண்டு படங்கள், ஒன்று விநாயகர் படம், மற்றது அவனின் குடும்பப் படம். அதுவும் ஒடு கின்ற தண்ணீரிலே தோற்றமளிக்கும் பிரதிபிம்பம் போல உருவம் மங்கிக் கிடந்தது.
-இவைதான் அவனின் சொத்துக்கள்!
சண்முகலிங்கம் நிமிர்ந்து வானத்தைப்பார்த்தான்.
மிட்டாய்க்காரனின் மிஷினுக்குள் அரைபட்டுவரும் தும்பு மிட்டாய் போல முகிற் குவியல்கள் வானத்தின் கிழக்கு மூலையில் துணுக்குகளாய் ஓடிக்கொண்டிருந்தன. அவ் வேளையில் சண்முகலிங்கத்தின் மனத்திற்குள் இனந்தெரி யாத பொருமல், கூக்குரல், பயங்கரம் யாவும் கலந்து சீறிற்று.
-திருச்சிற்றம்பலம் எங்குபோய் எப்படி ..?
தன்னுடைய அந்தச் சொத்துகளை தனது வீட்டு விலா சத்துக்கே அனுப்பும்படியும், தன்னையாருமே தேடவேண்
101

Page 54
மூவர் கதைகள்
டாம் என்று வெகு உருக்கமாகவும் எழுதிவைத்துவிட்டுத் திருச்சிற்றம்பலம் இன்று பகல் எங்கோ போய்விட்டான். எல்லோரிடமும் அவனைப்பற்றி விசாரித்தாகிவிட்டது. அவன் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் வந்து தன் னிடம் திறப்பைத் தந்துவிட்டுச் சாப்பிடப் போய் வரு வதாய்ச் சொல்லிவிட்டுப் போனவன் மாலைப்பொழுதாகி யும் திரும்பிவரவில்லை என்று சொன்னதோடு திருச்சிற்றம் பலம் காணுமற்போனதுபற்றிய கவலையை சரஸ்வதி புத் தக நிலையச் சொந்தக்காரன் தீர்த்துக்கொண்டான். திருச் சிற்றம்பலத்தின் இந்த மாதச் சம்பளத்தை இன்னமும் கொடுக்காதபடியால் அப்பணம் தனக்கு இலாபம் என எண்ணி புத்தகக் கடையின் சொந்தக்காரன் சந்தோஷங் கொண்டான். நன்முக கேட்டுப் பார்த்ததில் பகல் பத்து மணிக்கு மாங்குளம் என்ற இடத்திற்குப்போன பஸ்ஸில் திருச்சிற்றம்பலம் போனதாக அறிய முடிந்தது.
திருச்சிற்றம்பலம் ஏன் இந்த முடிவுக்கு வந்தான் என் பதை சண்முகலிங்கம் பல தடவை மூளையைக் குளப்பியும் தீர்மானித்துக்கொள்ளமுடியவில்லை. சில வேளை திருச்சிற்றம் பலம் தற்கொலை செய்துகொள்வதற்காக. இருக்காது. அவன் தன்னுடைய குடும்பத்தை மிகவும் பொறுப்புடன் தாங்கி வ்ாழ்பவன். தன்னுடைய தாய், தங்கச்சி, தம்பி ஆகியோருக்காகவே உயிர் வாழ்ந்துகொண்டிருப்பதாக அவனே அடிக்கடி சண்முகலிங்கத்துக்குச் சொல்லியிருக் கிருன். -
ஆனல் அவன் சண்முகலிங்கத்திற்கு எழுதின அந்தக் கடிதம், அவனின் அந்தச்சொத்துக்களைத் தன் குடும்பத்தின ரிடம் சேர்க்கும்படி எழுதியிருந்த விதம், தன்னையாருமே தேடவேண்டாம் என்றும், இனிக் கவலைகளற்ற உலகில் தான் வாழப்போவதாயும் எழுதிய உருக்கம். இவைகள் யாவும் தற்கொலை செய்யத் தீர்மானித்தவனின் முன் முயற்சிகள் தானே!
★
102

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலத்திற்கு முப்பத்தியாறு வயதாகி விட்ட போதிலும், தோற்றமோ நாற்பது வயதை மதிப் பிடவைத்தது. முன்னுச்சி மயிர் முற்றக உதிர்ந்து ஏறு நெற்றி விழுந்தது, திருச்சிற்றம்பலத்திற்கு உள்ளுர மனதை அரிக்கும் கவலையாக இருந்தது. சண்முகலிங்கம் அறைக்குள் இல்லாத வேளைகளில் கண்ணுடியைத் தலைப்பக்கமாகச் சரித்து பல கோணங்களிலும் வைத்துப் பார்த்து தனது தலையில் விழும் வழுக்கைக்காகத் தனக்குள் தானே மனம் வெதும்புவான்.
மெல்லிய சன்னமாக உடைந்த குரலில் தன்னுடைய நிலைமையைச் சொல்லித்தானே மனம் அலுத்துக்கொள் வது அவனுக்கு நித்திய தொழிலாகிவிட்டது. வாழ்ந்து தான் என்ன பிரயோசனம் ? என்று மனம் புழுங்குகிற அதே வேளையில் அதே மனம் அவனை மறுபுறத்தில் ஒரு சுயநலக் காரன் பொய்யன் என்று சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை. தான் வாழ்வதே தனது குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்று அடிக்கடி சொல்லும் அவனுக்கு, மனம் முற்ருக அலுத்துக்களைத்த வேளையில் அதே விரக்தி தோய்ந்த வச னங்களே ஓயாமல் வாயிலும் நினைவிலும் வரும் .
திருச்சிற்றம்பலமே அவனது குடும் பத்தின் சுமை தாங்கி.
திருச்சிற்றம்பலத்தின் தாய் பொன்னம்மா ஓயாத நோயாளி. அவனது தங்கச்சி அன்னலெட்சுமிக்கு இருபத்தி யேழு வயது. தம்பி விநாயகமூர்த்தி எச்.எஸ்.ஸி. வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிருன் பொன்னம்மா கணவனை இழந்த பின்பு பலகாரம் சுட்டு விற்று வாழ்க்கையை ஒரு மாதிரித் தாக்காட்டிக்கொள்ள முயன்றபோதும் அது மிக வும் சிரமமாக இருந்தது. அதோடு சிறுவயதிலிருந்தே திருச் சிற்றம்பலம் படிப்பில் மிகவும் குறைவாக இருந்தபடியினல் அப்போதே ஏதாவது வேலைக்கு அவனை அனுப்ப முடிவெடுக்
103

Page 55
மூவர் கதைகள்
கப்பட்டிருந்தது. அன்னலெட்சுமி தாயோடு சேர்ந்து விற் பதற்குப் பலகாரங்கள் செய்வதற்கு உதவி ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள். விநாயகமூர்த்தி நன்ற கப் படிக் கக் கூடியவன். எவ்விதமான கடும் முயற்சிகளுமின்றி, எல் லாப் பரீட்சைகளிலும் முதற்தரமாகச் சித்தி எய்தினன். எஸ். எஸ். ஸி. பரீட்சையிற் சித்தியெய்திய பிறகு சிலருக்கு அவன் ரீயூஷன் சொல்லிக் கொடுத்து அவ்வருவாயிலிருந்தே தொடர்ந்தும் தன் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.
ஒரு முறை திருச்சிற்றம்பலத்திடம் முல்லைத் தீவுக்கு வினயகமூர்த்தி வந்தபோது சண்முகலிங்கம் அவனேடு கதைத்திருக்கின்றன். தமையனைப் போலவேதான் வினயக மூர்த்திக்கு மயிரடர்ந்த புருவமும் தடித்த உதடுகளும் நீள முகமுமாயினும், துறுதுறுத்த கண் கள் அவனைப்பார்த்த பார்வையில் மனதைப் பதியவைப்பனவாயிருந்தன. வின யகமூர்த்தியோடு கதைத்த சில நிமிஷங்களிலேயே அவன் புத்திகூர்மையுள்ள திறமைசாலி என்பதனைச் சண்முகலிங் கம் உணர்ந்து கொண்டான்.
வினயகமூர்த்திக்கு மேற்படிப்புப் படிக்கவேண்டு மென்ற ஆசை மனம் நிறையவே இருந்ததை அவனுடைய தயக்கமான கதைகளிலிருந்து சண்முகலிங்கம் கிரகித்துக் கொண்டாணுயினும் அதையிட்டு எவ்விதமான அனுதாப உணர்ச்சியையோ, உற்சாகத்தையோ காண்பிக்கவில்லை. அதற்கு அவன் மனதிற்குள்ளேயே காரணம் இருந்தது. வினயகமூர்த்தி அங்கு வந்து நின்ற சில நிமிஷங்களுக்குள் ளேயே அந்த இன் ரவியூவுக்குப் போனயா, இந்த வேலைக்கு மனுப்பண்ணினயா? என்ற கேள்விகளால் திருச்சிற்றம் பலம் அவனைத் துளைத்தெடுத்துவிட்டான். தமையன் அறையில் இல்லாதபோது வினயகமூர்த்தி நடந்துகொண்ட விதம், கதைத்தகதைகள், சீறியெழுந்த பெருமூச்சுகள் ஆகி யன தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும், சிறப்பிற் கும் திருச்சிற்றம்பலமும் ஒரு தடை என்ற குறுகுறுப்புணர்ச்
O4
轶事
 

༦
திருச்சிற்றம்பலம்
சியினை மெளனமாக ஆணுல் விசனத்தோடு தெரிவிப்பதனைப் போலிருந்தது.
வினயகமூர்த்தி அங்கிருந்து போய்விட்ட பிறகு, திருச் சிற்றம்பலத்தோடு சண்மு கலிங்கம் இலேசாகக் கதையைத் தொடங்கினன்.
‘விஞயகமூர்த்தி நன்ருகப் படிக்கக்கூடியவன். அவனே. ஒரு மாதிரிக் கஷ்டப்பட்டு மேலுக்குப் படிக்கவைத்தால் என்ன?”
மெலிந்து முகம் வாடியிருந்த திருச்சிற்றம்பலம், முது கைச் சுரண்டிய இடது கையைக் கன்னத்திற்கு இழுத்து உறிஞ்சிக்கொண்டு சிறிது நேரம் மெளனமாயிருந்தான். தனது தடித்த உதடுகளை நாக்கினல் நனைத்து ஈரப் பசை யாக்கினன்.
*உமக்கு என்ன? வெகு இலேசாகச் சொல்லிவிட்டீர். இப்போதே நான் படுங் கஷ்டங்களும் ஏற்றிருக்கும் சுமை களும் என்னுலே தாங்கமுடியாதவைகளாக உள்ளன. எத் தனை செலவுகள். இவை எல்லாவற்றையும் விட.”
திருச்சிற்றம்பலத்தின் உடைந்து உருக்குலைந்த குரல் தளதளத்துக் கலங்கிற்று. சிறிது நேரம் கடலின் கதறலைத் தவிர வேறு ஒலிகளின் குறுக்கீடற்ற சூழலில் அவர்கள் இருவருமிருந்தனர்.
*நான் எப்போதாவது போயா விடுமுறை நாள், விசேட நாள் என்று வீட்டிற்குப் போனதை நீர் கண்டிருக் கின்றீரா? தொண்ணுரறு மைல் தூரமுள்ள என் வீட்டை தொளாயிரம் மைல் தூரத்திலேயுள்ள இடமாகக் கருதிக் கொண்டு, குடும்ப நினைவொன்றையே ஏக்கமாகச் சுமந்து
105

Page 56
மூவர் கதைகள்
கொண்டு நான் இங்கு எப்படி வாழ்கிறேன் என்று உமக்குத் தெரியாதா!”
அந்த வார்த்தைகள் சுமந்துவந்த துயரம், சண்முகலிங் கத்தின் மன அந்தரங்கத்தையே சுண்டி இழுத்தது.
சண்முகலிங்கத்திற்குக் கிடைக்கும் லீவுகள் எல்லாவற் றையும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போய் நின்று வரு வதிலேயே கழித்தான். சண்முகலிங்கம் வீட்டிற்குப் போக முன் அறைத் திறப்பைத் திருச்சிற்றம்பலத்திடம் கொடுக் கும்போது மனதின் துயரை முகத்தில் காட்டாது மறைக் கும் முகபாவத்தோடு அவனிடம் திருச்சிற்றம்பலம் திறப் பைப் பெற்றுக்கொள்ளுவான். வீட்டுக்குப் போவது பற்றிய கதை வந்ததாயின், போய்த் தான் என்ன பிரயோசனம் ? என்ற தொனிப்பில் ஏதாவது சொல்லி மனதைப் பிளக்கும் வேதனையையும், சஞ்சலத்தையும் நெஞ்சினுள்ளே அடக்கி அந்தப் பேச்சையே திருச்சிற்றம்பலம் வழிமாற்றித் தடம் புரளவைப்பான். இன்றுதான் திருச்சிற்றம்பலம் தன் னுட்ைய வீட்டிற்குப் போகாமலிருக்கும் சாரணமே சண் முகலிங்கத்திற்கு விளங்கிற்று.
* எப்பிடித்தான் மிச்சம் பிடிக்க முயற்சித்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. என்னுடைய மனதினை இரும்புக் குண்டுகள் போல பிரச்சினைகள் நசித்து அமுக்கிக்கொண்டு இருக்கின்றன. சில வேளைகளில் இந்தத் துன்பங்களுக்கு எல் லாம் அஞ்சி அவற்றை மனத்தில் இருந்து பிய்த்தெறிவதற் காக நான் புத்தகங்களிடம் தஞ்சம் அடைவேன். அவை கூடச் சில வேலைகளில் என்னைத் துயரத்தில் ஆழ்த்தி விடு
கின்றன’’
விழிகளைத் தாழ்த் தி யோசித்த படியிருந்த அவனைச் சண்முகலிங்கம் ஆச்சரியத்தோடு பார்த்தான். அவன்
106
*

திருச்சிற்றம்பலம்
குனிந்தபடியே மெலிந்த குரலில் புத்தகத்திலுள்ள வசனங் களை உணர்ச்சி ததும்ப வாசிப்பவனைப் போலக் கதைத்துக் கொண்டிருந்தான். ஒயாமல் புத்தகத்தைப் படித்துக் கதைப்பதைக் குறைத்துக் கொண்டமையினுல் புத்தகத் தமிழே பேச்சுத் தமிழாகி, அவன் பேசுவதே மற்றவர் களுக்கு விசித்திரமாகி விட்டது. அவன் பேசுவதை முதலிற் கேட்பவர் அவன் வேண்டுமென்றே அப்படிக் கதைப்பதாய் நினைத்து விடுவார்கள். அவனேடு பழகிய ஆரம்ப நாட் களில் சண்முகலிங்கமும் அவனைப்பற்றி அப்படித்தான் நினைத்தான். பழகியவர்களுக்கே விளங்குபவனுய் இருந்
தான்.
தன்னை மறந்து உணர்ச்சியில் சொல்லிக்கொண்டு போன திருச்சிற்றம்பலம், மெளனமாய் ஏதோ மனதினுள் நினைத்து எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். புன்னகை செய்வதே குற்றமென நினைக்கும் அவனது இறுகிய தடித்த உதடுகளில் இலேசான துயர நடுக்கமிருந்தது.
'தம்பி, இப்போது என்னைப் பாரும், எனக்கு முப்பத்தி யாறு வயது. ஆனல் நான் அரைக் கிழவனுகிவிட்டேன். தங் கச்சிக்கு இருபத்தியேழு வயது. கிராமப்புறத்தில் இருபது வய திற்குள்ளாகவே பெண்களுக்குத் திருமணமாகிவிடுவ துண்டு. ஊருக்கு நான் மிகவும் ஆசையோடும் ஆர்வத் தோடும் போனல், 'தங்கச்சிக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப் போகிருய், என்ற சொந்தக்காரரின் துளைச் சலைத் தாங்கவே முடியாது. அன்னலெட்சுமிக்கு எப்படி நான் கலியாணம் செய்துவைக்கப் போகின்றேன்? என் னுடைய கதைதான் முடிந்து போய்விட்டது.தங்கச்சி யென்ருலும்."
மனதில் சாம்பல்பூத்த துயரம் அந்த மெளன நிலவு காலத்தின் இலேசான ஒளியிலும், அவனையும் மீறி அவன்
107

Page 57
மூவர் கதைகள்
முகத்திலே பீறிட்டழுத தைப் பார்த்துவிட்டுச் சண்முக லிங்கம் ஏதோ சொல்வதற்கு வாய் உன்னியபோது திருச் சிற்றம்பலம் வேட்டித்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சினன். அது துளிர்த்த கண் ணிரைத் துடைத்ததோர் பாசாங்கு என்பதனைச் சண்முக லிங்கம் மங்கிய வெளிச்சத்தில் தெளிவுறத் தெரிந்து கொண்டபோதும், அதனைக் காணுதவனேபோலப் பாவனை செய்து எதையாவது சொல்லியாகிலும் திருச்சிற்றம் பலத்தை ஆறுதல் படுத்த நினைத்தான்.
‘எந்த நாளிலும் கஷ்டம் இருக்கிறதில்லை. வெய்யிலும் நிழலும் மாறி மாறி வருகிறதுதான். நீங்சள் வீணுய் யோசி
யாதையுங்கோ.”
சண்முகலிங்கத்தின் சாக்குருவிவேதாந்தத்தைக் கேட்டு திருச்சிற்றம்பலத்தின் இறுகிய உதடுகள் கேலியாக நெளி யாதபோதிலும், விரக்தி சிரிக்கும் கண்களினல் அவன் சண்முகலிங்கத்தைப் பார்த்தான்.
*நீர் கந்தோரிலே இருந்து எழுத்து வேலை செய்கிறதைத் தவிர வேறு எதையுமே அறியவில்லை, இன்னும் இருபத்தி ஐந்து வயதிலேயே நானும் இப்படித்தான் வாழ்க்கைக்கு உதவாத பழமொழிகளையும், வெற்றுரைகளையும் கூறிக் கொண்டு திரிந்தேன். ஆனல் வாழ்க்கையில் ந7ங்கள் நேர் நேராக நின்று அனுபவம் பெறுகிறபோது தான் உண்மை நிலைமை தெரியும். வெய்யில் இருந்தால் நிழலும் இருக்கும் என்று சொல்லுகிறது. முப்பத்தியாறு வருஷங் சளாய் நான் வெய்யிலிற்குள்தான் நிற்கின்றேன். இனி எப்போதுதான் நிழல் வரும்? நான் இப்போதே அரைக் கிழவன். இனி என்னை எவள்தான் கலியாணம் முடிக்கச் சம்மதிப்பாள்?"
1 08

�)
திருச்சிற்றம்பலம்
த திருச்சிற்றம்பலத்தின் மன அவஸ்தைக்கான மூலக் குரல் அவனையறியாமலே வெளியில் ஒசையிட்டது.
"உண்மைதான், இதோ காய்ந்து கருகி, விரக்தியே ஒலியாய், உருவாய் நிற்கும் திருச்சிற்றம்பலத்துக்கு இனி நிழல்தான் இருக்கின்றதா? திருச்சிற்றம்பலம் மட்டுமா. அவன் தங்கச்சி அன்னலெட்சுமி. இதுபோல இன்னும் எத் தனை பேர்? இவர்கள் ஒயாத விசாரம் என்ற பாலைவனத் தில் நடந்தலைந்து விரக்தி என்ற மண் மழையினல் மூடுண்டு மடிவதற்கா பிறந்தனர்? சண்முகலிங்கத்தின் மன அரங் கிலே கேள்வியலைகள் உருண்டு எழுந்தன.
கடல், வயிறு கிழிந்து ஒலமிட்டது.
*ي
திருச்சிற்றம்பலம் வேலை செய்யும் "சரஸ்வதி புத்தக நிலையம்' அப்படியொன்றும் பெரிய கடையல்ல. பாடப் புத் தகங்கள்,பள்ளிக்கூட உபகரணங்களோடு, வார, மாத இதழ் களும் கதைப் புத்தகங்களும் அங்கு விற்கப்பட்டன. அநே கமாக வியாபாரம் மந்தமாகவே இருக்கும். பொழுதைப் போக்குவதற்காகத் திருச்சிற்றம்பலம் மும்மரமாகப் புத்த கங்கள் வாசிப்பதுண்டு. மனதை எங்கோ பறக்க விட்டு உணர்வின் எல்லைகளை மீறிப் புதிய உலகினைப் புத்தகங் களிற்கூடாகத் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் இடை யில் மனம் திடீரென்று திசைமாறி விழிப்புறும்போது, சுவாரஸ்யம் துக்கமென்னும் கத்தியால் அதலகுதலமாக வெட்டப்பட்டுவிடும். ஏனென்ருல் காதல் நாவல்களினை வாசித்துக் கொண்டிருக்கும்போது கதாநாயகன் என்ன சொகுசாய் கம்பீரமாய் வருகிறன். அவனைத் தேடிக் காதல் ததும்பும் இதயத்தோடு கடற்கரைக்கு அழகுசுந்தரி வரு கின்ருள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மோகந்
109

Page 58
வர் ககைகள் e elp த
ததும்ப மெய்மறந்து பார்த்திருக்கின்ருர்கள். அவள்தான் என்ன லாவண்யமாக வெட்கப்படுகிருள் - திருச் சிற்றம்ப லத்தின் உணர்வுகள் தகிக்கின்றன - அவனுடைய அணைப் பினுள்ளே அந்தக் கதாநாயகி அவளின் கைகளையே தன் கழுத்திற்கு மாலையாக்கி, அவள் கைகளை எடுத்துத் தன் தோள்களில் அவன் ஆசையோடு படரவிடுகின்முன். பாதி மூடிய கண்களோடு தோளில் சாயும் அவளின் கன்னத் தோடு முகம் உராயும் கதாநாயகனின் மூச்சுமட்டுமா தகிக்கின்றது; இதோ திருச்சிற்றம்பலத்தின் மூச்சுந்தான் கொதிக்கினறது!
சட்டென்று திருச்சிற்றம்பலத்தின் மானசீகக் கனவு கலைந்துவிடும். முன் வழுக்கை விழுந்த தலையைத் தடவிய படியே வெறுப்போடு புத்தகத்தை அடித்து மூடி மேசை யில் போட்டுக்கொண்டு தன்னைத்தானே அருவருத்துத் திட்டுவான். ".
“சீ, மண்ணுங்கட்டிக் கனவுகள்! அரைக் கிழவன். அதற் குள் அவருக்குக் கண்டறியாத காதல் நினைவுகள்.’
அந்த வேளையில் சுகத்தோடும் சொகுசோடும் உலகில் வாழ்பவர்கள் அவனுக்கு எதிரியாகிவிடுவார்கள். தன் நிலை மைக்கு அவர்களே காரணஸ்தர் என்ற முடிவின் ஆவேசத் தோடு அவர்கள் முழுப் பேரினதையும் கழுத்தைத் திருகிக் கொல்ல அவனது மனம் ஆவேசங் கொண்டு குமுறும். புரு வங்கள் சுழியிட்டு வாய் முணுமுணுக்கும். கடைசியில் இப் படியொரு நாள் மன வெதும் பலில் இருக்கும்போதிலே யாரோ ஒருவன் ‘அண்ணை’ என்று திருச்சிற்றம்பலத்தைக் கூப்பிட்டமைக்காக அவனை அடிப்பதற்குத் திருச்சிற்றம்ப லம் வரிந்து கட்டிக்கொண்டு போய்விட்டான்.
** என்னடா, உனக்கு இப்போது வயதென்ன? கலியா ணமாகி மூன்று பிள்ளைகள் உனக்கு. என்னை நீ அண்ணை
110

திருச்சிற்றம்பலம்
யென்று சொல்லிக் கேலியா செய்கிருய்? மடையா, என்னை அரைக் கிழவன் என்று நினைத்தா கேலி செய்கிருய்?”
வந்தவன் நடுங்கிவிட்டான். தலைதப்பினல் போதும் என்ற யோசனையில் அங்கிருந்து நழுவி மறைந்தான்.
சரஸ்வதி புத்தக நிலையத்திற்கு வருபவர்களில் திருச் சிற்றம்பலத்திற்கு மிகவும் பிடித்தமானவன் இரத்தினசிங்கம், மலர்ந்த முகத்தோடு விளங்கும் அவன், அணுவசியமாக எதையும் கதைக்கமாட்டான். அவனும் ஒரு கடைச் சிப் பந்தி; அத்தோடு அங்குள்ள ' கடைச்சிப்பந்திகள் சங்கத் தில்’ செயலாளராகவும் இருந்தான்.
*მება.
ஏதாவது கதைத்துக் கொண்டிருந்தாலும் அதன் முடி வில் இரத்தினசிங்கம் ஒரு விஷயத்தைச் சொல்லத் தவற மாட்டான்.
'மனிதனை மனிதன் சுரண்டிக் கொழுக்கும் உலகிலே நாங்கள் வாழுகின்ருேம். வாழ்க்கையின் பண்பற்ற தன் மையையும், அரக்கத்தனமான கொடுமைகளையும் நாம் சகித் துக் கொண்டு வாழ அதுவே விதியென்று வாழக்கூடாது. விதிகளின் அடிமை அல்ல மனிதன். தனியாக நிற்பதன் மூலம் எங்கள் கஷ்டத்தை முறியடிக்க முடியாது. உம்மை யும் என்னையும் போன்ற உதிரித் தொழிலாளிகள் விவசாய தொழிலாளி வர்க்கத்தோடு ஒன்றிணைந்து போராடுவதின் மூலமே விமோசனங் காண முடியும்.”
இரத்தினசிங்கம், சண்முகலிங்கத்திற்கும் நண்பனுக இருந்ததால் சிற்றம்பலத்தோடு இரத்தினசிங்கத்தின் நட்பு மேலும் இறுகிற்று. திருச்சிற்றம்பலத்தின் மனப் பலவீனங் களை இரத்தினசிங்கம் மிக அனுதாபத்தோடு கவனித்துப் பதில் சொல்வான். சண்முகலிங்கத்தோடு கதைப்பதற்கும்
III

Page 59
༩༣
மூவர் கதைகள்
இரத்தினசிங்கத்தோடு பழகுவதற்குமிடையே பல வேற் றுமைகளிருப்பதைத் திருச்சிற்றம்பலம் அவதானித்திருந் தான். இரத்தினசிங்கம் திருச்சிற்றம்பலத்தின் சுகதுக்கம், குடும்ப விவகாரம் ஆகியவை பற்றி வெகு அக்கறையாக விசாரிப்பான். அவனுடைய கதைகளில் ஒளிவுமறைவிருப் பது இல்லை. சண்முகலிங்கம் தன்னைப்பற்றி விசாரிக்கும் போது ஏதோ ஒரு திரையைத் தனக்கு முன்னர் விரித்துக் கதைப்பது போலவும் சில விஷயங்களை மூடிக் கதைப்பது போலவும் தோன்றும். தானும், இரத்தினசிங்கமும் கடைச் சிப்பந்திகளாகவும், சண்முகலிங்கம் அரசாங்க எழுதுவினை ஞன கவும் இருப்பதே அதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் திருச்சிற்றம்பலம் மனதினுள்ளே நினைத்துக் கொண்
Il f” GÖT,
இரத்தினசிங்கம் தன்னிடமுள்ள பல புத்தகங்களைப் படிக்கும்படி திருச்சிற்றம்பலத்திடம் கொடுத்திருக்கின்றன். இதுவரையும் காதல் நவீனங்களையும் துப்பறியும் நாவல் களையுமே ரசித்து வந்த அவனுக்கு இர த் தி ன சிங் கம் கொடுத்த புத்தகங்களை வாசிப்பது ஆரம்பத்தில் சற்று சிரமமாகவே இருந்தது. ஒருநாள் இரத்தினசிங்கம் 'தாய்" என்ற புத்தகத்தைக் கொண்டுவந்து அவனிடம் வாசிக்கும் படி கொடுத்தான். திருச்சிற்றம்பலத்திற்கு முதலில் அதனை வாசிக்க விருப்பமில்லாதபோதும், நடுவிலிருந்து சில பக் கங்களைத் தட்டி வாசித்தான். படித்த பக்கங்கள் பிடித் துக் கொண்டமையால் ஆவலோடு முதலிலிருந்து வாசிக் கத் தொடங்கினன். சுவாரஸ்யத்தோடு புதிய சிந்தனைக ளும் அவனது நெஞ்சிலே தோன்றிற்று. அன்று மாலை இரத்தினசிங்கம் "வீரம் விளைந்தது’ என்ற இன்னேர் புத்த கத்தைக் கொண்டு வந்து திருச்சிற்றம்பலத்திடம் கொடுத்த போது தலையங்கத்தை மனதினல் வாசித்துவிட்டுத் திருச் சிற்றம்பலம் சண்முகலிங்கத்தை ஊடுருவியபடியே கேட்
I 12
*

ད།
ஆண் ஆறு
திருச்சி ற்றம்பலம்
டான் "என்னைப் போன்றவர்கள் இந்த வீரக்கதைகளைப் படித்து என்ன செய்ய முடியும்? நானென்ன வீரனு, வெறும் ஏழை மனிதன்."
சண்முகலிங்கம்போல மெளனமாகவிராது, இரத்தின சிங்கம் கடகடவென்று சிரித்தான்.
"பணக்காரனும் ஆளணி உள்ளவனுமல்ல வீரன். சோத னைக் கட்டத்தில் மனித சமுதாயத்தின் நன்மைக்காகத் தன்னல் முடிந்ததை எல்லாம் செய்கிறவன்தான் வீரன். நீங்கள் உங்களைப் பற்றி ஒருநாளும் குறைவாக நினைக்கக் கூடாது. எதிலும் தனித்து ஒதுங்கிப் போகக்கூடாது. துன் பப்படுகிறவர்கள் தனித்து நிற்கவில்லை என்பதனை நீங்கள் உணர வேண்டும்.”
இரத்தினசிங்கம் அனேகமாக தொழிலாளர் போராட் டங்கள், தொழிற்சங்க இயக்கங்கள், சர்வதேச அரசியல் நிலைமை பற்றித் தெரிவிக்கும் பத்திரிகைகளைக் கடைக்குக் கொண்டு வருவது வழக்கம். ஒருநாள் கதையோடு கதை யாகத் தொழிற்சங்க இயக்கங்கள் பற்றிக் கூறிவிட்டுத் திருச்சிற்றம்பலத்தையும் தங்கள் தொழிற்சங்கத்தில் சேரும் படி இரத்தினசிங்கம் கேட்டான். அப்போது திருச்சிற்றம் பலம் ஏதோ கூறி மழுப்பிவிட்டான்.
சண்முகலிங்கம் திருச்சிற்றம்பலத்தோடு அரசியல் பேசி யதில்லை. ‘நமக்கென்ன, அரசியலில் பங்குபற்றினல் வேலைக்கு ஆபத்து, பேசாமலிருப்போம்” என்று கூறினலும் இரத்தினசிங்கத்தோடு அரசியல் இயக்கங்கள் பற்றிக் கதைத்துக் கொள்வதுண்டு.
வெளியே வானத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனை யில் ஆழ்ந்திருந்த சண்முகலிங்கம் மீண்டும் அறைக்குள்
Il 3,

Page 60
மூவர் கதைகள்
வந்தான். அவனுடைய மனம் மிகவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அறைக்குள் இருள் மண்டியிருந்தது. கதவை அடுத்திருந்த சுவரிலுள்ள மின்சார சுவிச்சைத் தட் டிஞன். அறையெங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்தது. உரத்த அடக்கமுடியாத சிரிப்பினையே கேட்டறியாத திருச்சிற்றம் பலம் வாழ்ந்த அறையின் மேற்கு மூலையைச் சண்முகலிங் கம் பார்த்தான். மேற்கு மூலைச் சுவரிலே விநாயகர் பட மும், அவனது குடும்பப் படமும் மாட்டப்பட்டிருந்தன. படங்களின் கீழருகாக மண்ணெண்ணைக் குக்கர் வைக்கப் பட்டிருந்தது. அவனது தட்டு முட்டுச் சாமான்களும், புத்த கங்களுமடங்கிய பெட்டிகளின் மேல் அவன் படுக்கும் பாயும் தலையணையும் ஒழுங்காகக் கிடந்தன. அவனுடைய உடுப்பு கள் அடங்கிய சூட்கேஸ் தனியாக ஒரு மூலையில் சாத்தப் பட்டிருந்தது.
சண்முகலிங்கம் நிறம் மங்கிய அந்தக் குடும்பப் படத் தையே கூர்ந்து கவனித்தான். அந்தப் படத்தினுள்ளிருந்து திருச்சிற்றம்பலத்தின் தாயும், அன்னலெட்சுமியும், விநா யகமூர்த்தியும் தன்னையே உறுத்துப் பார்த்து, "எங்கே திருச்சிற்றம்பலம்? எங்கே என் மகன்? எங்கே எங்கள் அண்ணு?’ என்று கூவுவது போல இருந்தது. திருச்சிற்றம் பலத்தின் மறைவுக்கு அவன்தான் பதில் சொல்ல வேண் டும். தன் பொருட்களை தன் குடும்பத்திடம் ஒப்படைக் கும்படி உருக்கத்தோடு எழுதி வைத்துவிட்டு மாங்குளம் போன பஸ்ஸிலே திருச்சிற்றம்பலம் ஏறிப் போய் விட் டான். அங்கே நீண்டு ஓடும் புகையிரதத் தண்டவாளங் களை மிதித்து வரும் ராட்சதப் புகையிரதத்தின் சக்கரங் களைத் தன் உடல் மீதேற வைத்து மரணமடையவா அவன் போனன்?
மாலையில் இரத்தினசிங்கத்தைத் தேடிப் பார்த்தபோது அவன் எங்கோ வெளியே போனதாகத் தெரியவந்தது.
14

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம், தன் குடும்பத்தின் சுமைதாங்கி தானேதான் என்று எத்தனையோ தரம் பெருமையடித்துக் கொண்டான்; அவற்றையெல்லாம் பொய்யாக்கி விட்டு எங்கோ போனதின் மூலம் தன்னைப் பிறர் துருவித் துருவி ஆராயும் நிலைக்கு ஆளாக்கி விட்டானே என்று நினைத்த போது கசப்புணர்ச்சியும், ஆத்திரமும் சண்முகலிங்கத்தின் மனதினுள்ளே வெடித்துச் சீறின.
'திருச்சிற்றம்பலம் என்னை ஒரு பழிகாரணுக்கிவிட்டு எங்கே நீ போய்விட்டாய்? எனக்கு இப்படியொரு நிலை மையை ஏற்படுத்தித் தருவதற்குத்தான உன்னை என்னு டைய அறைக்கு நான் கொண்டு வந்து சேர்த்தேன்?
AS
சண்முகலிங்கத்தின் அறையில் திருச்சிற்றம்பலமும், இரத்தினசிங்கமும் சுவாரஸ்யமாக சண்முகலிங்கத்தோடு கதைத்துக் கொண்டிருந்தபோது மேற்குமூலைச் சுவரில் இருந்த விநாயகர் படத்தையே பார்த்தவண்ணமிருந்த இரத்தினசிங்கம் புன்னகை ததும்பும் முகத்தோடு கேட்டான்:
“என்ன திருச்சிற்றம்பலம், விநாயகர் படத்தை மட் டுந்தான் வைத்து வணங்குகிறீர்? விநாயகர்தான் உமது இஷ்ட தெய்வமா ?”
இடது கையினல் பின்முதுகைச் சுரண்டிக் கொண்டி ருந்த திருச்சிற்றம்பலம் தலையைச் சற்று வளைத்துச் சுவரி லிருந்த விநாயகர் படத்தைச் சிலகணங்கள் பார்த்து விட்டு உரத்த குரலைத் தணித்தபடி சொன்னன்:
'உண்மைதான், விநாயகர்தான் என் இஷ்ட தெய்வம். ஏனென்றல் விநாயகரும், நானும் ஒரேமாதிரித்தான். விநா
15

Page 61
மூவர் கதைகள்
யகருக்குத் திருமணமே ஆகவில்லை. எனக்கும் அப்படித்தான். விநாயகர் பருத்த உடலுடையவர். ஆனல் சிறிய எலியே அவருக்கு வாகனம். அந்தச் சிறிய எலிதான் பருத்த உட லைச் சுமக்கின்றது. அதுபோலவே வாழ்க்கையில் கனமான சுமைகளை நானும் சுமக்கின்றேன்.”
அவன் விரக்தியோடு சொன்னதைக் கேட்ட சண்முக லிங்கம் கடகடவென்று சிரித்தான். ஏறு நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே திருச்சிற் றம்பலம் மெளனமாயிருந்தான்.
இரத்தினசிங்கம் சிலகணங்கள் பேசா திருந்தான். பிறகு தன் கையிலிருந்த புத்தகத்தின் பக்கமொன்றைப் பிரித்த படியே திருச்சிற்றம்பலத்தைப் பார்த்தான்.
"எதிலும் விரக்திகொள்ள வேண்டாம். உன்னைப் போலத்தான் உலகிலேயே பலகோடி மக்கள் நசுக்கப்படு கின்றர்கள், தனித்திருக்கவில்லை நீங்கள். உங்களைப்போன்ற மக்களின் இயக்கத்தோடு பிணைத்துக்கொள்ளுங்கள்."
குறி பார்த்துப் பாயும் துப்பாக்கிக் குண்டுகள் போலச் சீறின அவன் வார்த்தைகள்: “இந்தப் பக்கத்தை ஒரு முறை படியும்.” இடது கையினல் முதுகைச் சுரண்டி விட்டு அவனுடைய கையிலிருந்த புத்தகத்தை வாங்கி வாசித்தான் திருச்சிற்றம்பலம். ‘ஒன்றை நீங்கள் உணர வேண்டும். என்னைப் போன்றவர்கள் அந்தக் காலத்தில் தனியாட்களாக இருந்தோம்; சமுதாயத்தின் மாற்றந் தாய்ப் பிள்ளைகளாக இருந்தோம். நீங்களோ இப்போது லட்சக்கணக்கில் இருக்கின்றீர்கள். தனது பலத்தை உணர்ந்து வைத்துள்ள ஒரு தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள். உங்களை நசுக்குகின்ற கொடுமை களை யெல்லாம் துகள் துகளாக அழித்தொழித்துப் பிர
16
مشي لا
 
 

திருச்சிற்றம்பலம்
காசமான வாழ்வைக் கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள்! உலகம் உங்களுக்கேயுரியது.
திருச்சிற்றம்பலம் அதைப்படித்துவிட்டு ஒன்றுமே பேசாது சண்முகலிங்கத்தையும், இரத்தினசிங்கத்தையும் பரிதாபத்தோடு பார்த்தபடி எழுந்து அறை மூலைக்குப் போனன்.
அன்றைக்கு அவன் எழுந்து போன அதே மூலை இன்று வெறுமையாகிக் கிடப்பதனைப் பார்த்த சண்முகலிங்கம் பெரு மூச்சொன்றை உதிர்த்தான். அப்போது இரவு மூன்று மணி ஆகியிருக்கும். மனம் படபடப்பால் உறக்கம் வராத போதும் அவனுக்குக் கண்கள் அரைகுறையாக மூடிக் கொண்டு கெஞ்சின. அறையில் நிறைந்த வெளிச்சம்தான். அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. வெளிச்சம் உமி ழும் மின் விளக்கையே பார்த்தபடி இருந்தான். திடீ ரென்று யாரோ அவனை மாங்குளத்திற்கு அங்கிருந்து அழைத்துச் சென்ருர்கள். மாங்குளத்திற்கும், முல்லைத் தீவிற்குமிடையே இடைத் தூரம் முப்பது மைல்கள்தான். ஆனல் அந்த வேகமும் எவ்வளவு சீக்கிரத்தில் அந்தக்காரி ஞல் கடக்கப்பட்டுவிட்டது. மாங்குளம் புகையிரத நிலை யத்தில் சண்முகலிங்கம் இறங்கியதுதான் தாமதம், திருச் சிற்றம்பலத்தின் தாயும், அன்னலெட்சுமியும், விநாயக மூர்த்தியும் ஓவென்று அலறிஞர்கள். ‘அண்ணனைக்கொன்று விட்டாயே’ என் செல்லத்தைக் கொன்றுவிட்டாயே" என்ற அழுகையின் பிரலாபம் எங்கும் விம்மியது. சண்முகலிங்கம் ஒன்றுமே பேசவில்லை. புகையிரதத் தண்டவாளங்களைப் பார்த்தான். என்ன நேரம்! புகையிரதச் சக்கரங்கள் திருச் சிற்றம்பலத்தின் உடலைத் துவைத்து நசுக்கியிருந்தன, கழுத்துத் துண்டிக்கப்பட்ட முண்டத்தின் கைகால்கள் சதை சிதறித் தண்டவாளத்தில் அரைந்து இரத்தமும் எலும்புத்
Il II 7

Page 62
மூவர் கதைகள்
துண்டுகளுமாய் விசிறிக் கிடந்தன. திருச்சிற்றம்பலத்தின் தலைமட்டும், உருக்குலையாமல் இரத்தம் தோய்ந்து தொங் கும் கழுத்துச் சதையோடு கற்களிடையே தனித்துக்கிடந் தது. சண்முகலிங்கத்தின் இதயம் அடைத்தது. அடக்க முடியாத வேதனையோடு நெஞ்சைப் பொத்திக்கொண் டான். அதற்குமேலே தாங்கமுடியாத திகிலோடு, வியர்வை பொங்கும் உடலோடு சண்முகலிங்கம் துள்ளி யெழுந்தான், என்ன கோரக்கனவு!
தான் கண்டது கனவென்றறிந்த நிம்மதியிலே முக வியர்வையைத் துடைத்துக்கொண்டு சண்முகலிங்கம் எழுந்த போது கதவை வெளியே யாரோ படபடவென்று தட்டி ஞர்கள்.
女
கதவைத் திறந்த சண்முகலிங்கம் திகைத்துப்போய் நின்றுவிட்டான்!
அவன் முன்னே திருச்சிற்றம்பலம், இரத்தினசிங்கத் தோடு நின்றன்.
சண்முகலிங்கத்தின் திகைப்புக் கலந்த மெளனத்தைத்
திருச்சிற்றம்பலமே கலைத்தான்.
“என்ன பேசாமலே நிற்கிறீர்??
திகைப்புக் குலையவில்லை சண்முகலிங்கத்திற்கு. ‘என்ன நீர்..நீர். எங்கே போய்.எப்படி?’’
“பயப்பட வேண்டாம். நான் தான் திருச்சிற்றம்பலம் உயிரோடு திரும்பி வந்துவிட்டேன்."
18
 

திருச்சிற்றம்பலம்
தான் மாங்குளத்திற்கு பஸ்ஸில் ஏறியதைச் சொல்லி விட்டுத் திருச்சிற்றம்பலம் தொடர்ந்தான்.
*உண்மையாகவே இன்று தற்கொலை செய்துகொள்வ தற்காகத்தான் நான் இங்கிருந்து மாங்குளத்திற்கு பஸ் லிலே சென்றேன். என் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் தெரியுமா?. அது ஒரு சுயநலத்தின் தோல்வி யினுல் ஏற்பட்டது. இதற்காக நான் வெட்கப்படுகின் றேன். இன்று பகல் எனக்கு ஒரு கடிதம் வந்தது. விநா யக மூர்த்தியைப் பற்றியது அக்கடிதம். எனது தங்கச்சி எழுதியிருந்தாள். எனது தம்பி விநாயக மூர்த்தி யாரோ ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு எங்கோ போய்விட்டா
ஞம். இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் என் வாழ்க்கையின்
கனவே சரிந்துவிட்டதாய் நான் உணர்ந்தேன். 61′′ (60)IT னுடைய குடும்பச் சுமையை நானே இதுவரை சுமந்திருந் தேன். விநாயகமூர்த்தியை ஏதாவது ஒரு வேலையில் சேர்ப் பது, அவன் உழைப்பையும் சேர்த்துதான் என் தங்கச்சிக் குத் திருமணம் செய்து வைப்பது. (தயக்கக் குரலில்) பிறகு என் வாழ்விற்கும் ஒருத்தியைத் தேடிக்கொள்வது, இதுதான் என் நீண்டநாள் திட்டமாக இருந்தது. இதனல் தான் விநாயகமூர்த்தியை மேலே படிக்கவிடாமல் ஏதா வது தொழிலுக்குப் போகும்படி வற்புறுத்திக்கொண்டிருப் பேன். ஆனல் நேற்றுக் காலையில் வந்த கடிதம் என் கற் பனைகளையே தகர்த்தது. விநாயகமூர்த்தி வீட்டைவிட்டுப் போனல், நான் தான் வாழ்நாள் பூராவும் குடும்பச் சுமை யைச் சுமக்க வேண்டும். தங்கச்சிக்குத் திருமணம் செய்து முடித்தபின் அம்மாவைப் பார்ப்பதற்குத் தொடர்ந்து உழைக்க வேண்டும். நானும் மற்றவர்கள்போல திருமணம் செய்து குழந்தை குட்டிகளோடு வாழும் வாழ்வு எனக் குக் கிடையாத ஒன்ருகிவிடுமோ என நினைத்தபோது எனக்கு வாழ்வே வெறுத்தது. நிம்மதியற்ற தொடர்
119

Page 63
लिशङ हाङ्ग" "
மூவர் கதைகள்
வாழ்வைவிடத் தற்கொலை நல்லது என்ற முடிவிற்கு வந் தேன். தற்கொலை செய்யும் முடிவோடு மாங்குளம் செல் லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ்ஸில் ஏறி இருந்து கொண்டே என் நெஞ்சில் உள்ளவர்கள் ஒவ்வொருவரை யும் மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். எல்லோரை யும் மறக்க முடியுமென்று தோன்றிற்று. இவரது நினைவோ (இரத்தினசிங்கத்தைச் சுட்டிக்காட்டி) அகற்ற முடியாத ஒன்ருகிவிட்டது. பஸ்ஸில் போகும்போது இருபுறமும் பார்த் துக் கொண்டிருந்தேன், வயலில் நிறைய விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி யும் இரத்தினசிங்கம் சொன்னது என் நினைவிற்கு வந்தது. இந்த உலகம் உழைக்கின்ற எங்களுக்கே, என்று நான் பல முறை கூட்டங்களில் தொழிலாளிகள் கூறக் கேட்டிருக் கின்றேன். பிறகு நான் கோழைபோலப் புகையிரதத்தின் முன் விழுந்து சாவதா என நினைத்துக்கொண்டேன். ஆனல் என் மறுமணம் தற்கொலைக்கே தூண்டியது. இரவில் பதுங்கிப் பதுங்கித் தண்டவாளத்திலிருந்து புகையிரதம் வருவதைக் காத்திருந்தேன். இருளின் நடுவே தொலைவில் ஒளியொன்று துலங்கி ஜொலித்தது. என் நெஞ்சில் பல எண்ணங்கள் புரண்டன. இரத்தினசிங்கத்தின் குரல் மாறி மாறிக் கேட்டது. நான் தனியாளில்லை, துணையுள்ளவன். இத்துணையோடு, இலட்சக்கணக்கானவர்களின் பலத்தோடு புத்துலகை ஆக்கி மகிழ்வாய் வாழ முடியும் என்ற எண் ணம் என் நெஞ்சில் இருளிடையே ஒளியெனத் தோன் றிற்று . நான் ஆழச் சிந்தித்தேன்; தொலைவில் புகையிர தம் கூவியது. உறுதியான முடிவுடன் என் தற்கொலை முயற்சியைத் தூக்கி யெறிந்துவிட்டு புதிய மனிதனய்த் திரும்பி விட்டேன்!'
திருச்சிற்றம்பலத்தின் முகத்திலே புதிய ஒளி துலங்கிற்று; இலேசான புன்முறுவல் முகத்தை மலர்த்திற்று.
120 女
*

f6)al GT6,260TLIlair

Page 64
1. மேதினம்.
2. எழுச்சி.
3. முடிவிலிருந்து ஆரம்பம்.

k
மே தினம்
கீஜ ஒன்பது மணி. வெளியில் ஏதோ பரபரப்பு. அது என்ன?
ஒரு தொழிலாளி ஜன்னலால் பார்க்கின்றன்.
ஆயுதம் தாங்கிய பொலீஸார் காரியாலயத்தைச் சுற்றி
வளைக்கின்றனர்.
துப்பாக்கிகளுடன் சில பொலீஸ்காரர்கள் திடீரென்று, ஆனல் கவனமாகக் காரியாலயத்துக்குள் நுழைகின்றனர்.
அவர்களுடைய முகங்களில் ஒரு வித பயபிதி.
காரியாலயத்திலிருந்த தொழிலாளர்கள் பதட்ட மின்றி, அமைதியாக இருக்கின்றனர்.
பொலீஸ்காரர்களுக்குத் தென்பு பிறக்கின்றது. ஆபத்தொன்றுமில்லை.
இதை அறிந்த பொலீஸ் அதிகாரி பொலீஸ்காரர்களை விலக்கிவிட்டு முன்னுக்கு வருகின்றன்.
தொழிலாளர்கள் மத்தியில் எதுவித மாற்றமுமில்லை. பொலீஸ் அதிகாரிக்கு ஆத்திரம்பொங்குகின்றது.
123

Page 65
மூவர் கதைகள் ஏன்?
தங்களை இந்தநிலையில் கண்டவர்கள் ஒட்டம் பிடிக்க வேண்டும், தாங்கள் அவர்களைக் கலைத்துப் பிடித்து அடி போடவேண்டும் என்பது, அவர்களுடைய எண்ணம்.
அது பலிக்கவில்லை.
ஆத்திரத்தில் அவன் பல்லை நெருடுகின்றன்.
"சண்முகம் வாசலிலை நில், ஒருதரையும் வெளியாலை போகவிடாதை'.
கோபத்துடன் கத்துகின்றன்.
“பெர்ணுண்டோ பின்வாசலுக்குப் போ"
தொழிலாளர்கள் நிதானத்துடன் எல்லாவற்றையும் கவனித்துக்கொன்டிருக்கின்றனர்.
"மார்ட்டின் அந்தக் குப்பைக் கூடையைச் சோதி”
தயங்கியபடியே மார்ட்டின் குப்பைக் கூடையை நெருங் குகின்றன். ty
"ஒரு தரும் அசையக்கூடாது. அப்பிடியே இருக்க வேண்டும்'.
தொழிலாளர்களைப் பார்த்து அதிகாரி அட்டகாசத்து டன் கத்துகின்றன்.
*சரி இந்தஇடத்தை முதலில் வடிவாய்சோதியுங்கோ'
ஒன்றும் அகப்படவில்லை.
*அறைகளின் ரை துறப்புகள் எங்கே?'
124

மே தினம்
தோழர் கந்தையாவைக் கேட்கின்றன் அதிகாரி.
4'grair?'
*அறைகளைச் சோதனை போடவேணும்"
அதிகாரத்துடன் கூறுகின்றன்.
“எதற்காக?"
“இங்கே கைக்குண்டுகள் கிடக்கெண்டு தகவல் கிடைத் திருக்கு" *
கந்தையா ஏளனமாகச் சிரிக்கின்ருர்,
அறைகள் சோதிக்கப்படுகின்றன.
இல்லை, சோதிப்பதாகப் பாவனை செய்யப்படுகின்றது.
சோதனை முடிந்தது.
*நீதானே வேலுப்பிள்ளை ?”
*g?
"நீ கைக்குண்டுகளைக் கடத்தி வந்ததெண்டு தகவல் கிடைத்திருக்கு. என்ன, கொண்டந்தனிதானே?"
அதிகாரி கண்களை உருட்டி வேலுப்பிள்ளையைப் பார்க் கின்றன்.
பதிலில்லை.
* 'ஆர் சிவகுரு?"
*நான் தான்"
' கந்தையா?”

Page 66
* "ერჯ
மூவா கதைகள "நான்"
،،grfh மூண்டு பேரும் வந்து ஜீப்பிலை ஏறுங்கோ'
தொழிலாளர்கள் ஆவேசத்துடன் பொங்கி எழுகின் றனர்.
தோழர் கந்தையா அவர்களை நிதானத்துடன் ஒரு மாதிரிப் பார்க்கின்ருர் .
அவருடைய பார்வையில் பொருள் நிறைந்திருக்கிறது.
தொழிலாளர்கள் சாந்த மடைகின்றனர்.
‘சரி நாங்கள் போட்டுவாறம். நீங்கள்.”
கந்தையா கூறுகின்றர்.
' கெதியாய் ஏறுங்கோநேரம் போட்டுது”. அதிகாரி அவசரப்படுத்தினன்.
மூவரும் ஜீப்பில் ஏறுகின்றனர்.
ஏழெட்டு ஜீப்புகளும் ஐந்தாறு பொலீஸ் வான்களும் உறுமிக்கொண்டு புறப்படுகின்றன.
தொழிலாளர்கள் தங்களது முஷ்டிகளை உயர்த்தி ஆட்
டிக்கொண்டு கந்தையாவாக்களை வழியனுப்பி வைக்கின் றனர்.
எல்லா வாகனங்களுக்குள்ளும் ஆயுதம் தாங்கிய பொலீ ஸார் நிறைந்திருக்கின்றனர்.
“இதுவும் ஒரு விதத்தில் மேதின அணிவகுப்புத்தான்”
தோழர் கந்தையா முறுவலித்துக்கொண்டு கூறுகின் ருர்,
126

மே தினம்
"எதுவித கரைச்சலுமில்லாமல் இவையளை மடக் கியாச்சு. இனி ஊர்வலமில்லை. எனக்குப் பதவி உயர்வு..?
屬 பொலீஸ் அதிகாரியின் உள்ளத்தில் பூரிப்பு.
மூன்று தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி காட் டுத் தீ போலப் பரவுகின்றது.
* இனி கம்யூனிஸ்ட்காரர்களால் ஊர்வலம் நடத் "தேலாது. இவங்களாலைதான் எங்களுக்குத் தலையிடியாகக்
கிடந்தது, நாங்கள் தப்பிப் பிழைத்தம்”.
பராளுமன்றத்தில் நம்பிக்கைவைத்துள்ள "இடது சாரித் தலைவர்களுக்கு” ஆனந்தம்.
66
{I¿ ஊர்வலத்துக்குத் தடை!”
ஒரு கிழமைக்கு முன்பு இதை அறிந்த தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு.
"என்ன, மேதின ஊர்வலத்துக்குத் தடையா?” ஒரு தொழிலாளி ஆச்சரியத்துடன் கேட்கின்றன்.
'ஓ, மே தினத்தண்டு ஒரு தரும் ஊர்வலம் நடத்தக் கூடாதாம்'.
'ஆர் சொன்னது?"
‘'வேறை ஆர் சொல்கிறது? யூ. என். பி. அரசாங்கம் தான்.”
வெறுப்புடன் ஒரு தொழிலாளி கூறுகின்றன். -
“resör oo”
127

Page 67
மூவர் கதைகள்
ஆத்திரம் பொங்கிக்குமுற மற்ருெரு தொழிலாளி கேட் டான்.
**வெசாக் பெருநாளும், மேதினமும் ஒரே நாளிலை வருகுதாம்".
*அதுக்கு?"
** ஏதாலும் குழப்பம் வந்தாலுமெண்டு மே முதலாம் திகதியிலண்டு ஊர்வலம் நடத்தக்கூடாதெண்டு அரசாங் கம் சொல்லியிருக்கு'?
“முந்தியும் ஒரு முறை இந்த இரண்டு கொண்டாட்டங் களும் ஒரே நாளிலை வந்தவைதானே, அண்டைக்கு இரண் டும் கொண்டாடப் பட்டவைதானே?"
99
“ஓம் "அப்ப இந்த வருஷம்?"
'உந்த அரசாங்கம் சொன்னப்போலை நாங்கள் கேக் கப்போறமே?”
கேளாமல்..??
சந்தேகத்துடன் நல்லதம்பி கேட்டான்.
"உதைப்போலை எத்தினை அரசாங்கங்களை நாங்கள் கண்டிட்டம், நாங்கள் செய்யப் போறதை நிச்சயம் செய்தே தீருவம்" '"a * + " " زوجي
lപ്പെ ஊர்வலத்தை நடைபெருமல் செய்வதற்கு அர சாங்கம் முழு மூச்சுடன் வேலைசெய்கின்றது.
128
fs
yè
المل

மே தினம்
முதலாளித்துவச் செய்திப் பத்திரிகைகள் அரசாங்கத்
துடன் பூரணமாக ஒத்துழைக்கின்றன. பொலீஸார்
தீவிரமாக வேலைசெய்கின்றனர்.
சி. ஐ. டி. பொலீஸார் இரவு பகலாக ஒடித்திரிகின் றனர்.
*பொது மக்களே, பயங்கர ஆயுதங்களுடன் ஆபத்துப்
பேர்வழிகள் வீதிகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்
றனர். உங்கள் உடைமைகளையும், உயிர்களையும் காப்பாற் றுவதற்குப் பொலீஸாருடன் ஒத்துழையுங்கள்’
பொலீஸார் இரவு பகலாக ஒலிபெருக்கியில் அலறித் திரிகின்றனர்.
பொது மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு.
தொழிலாளர்கள் மத்தியில் மனக்கொதிப்பு.
பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் 'இடது சாரித் தலைவர்கள்' மே தினத்தை ஏப்ரல் முப்பதாம் திகதி கொண்டாடித் திருப்தியடைந்தனர்.
ஏன் முப்பதாம் திகதி கொண்டாடினர்?
அரசாங்கக் கட்டளையை மீறி மே தினத்தை நடத்த பொலீசுக்கு அவர்கள் பயம். அது மாத்திரமல்ல வெசாக் கிலண்டு மேதினத்தைக் கொண்டாடினுல் தேர்தலில் வாக்கு களைப் பெறமுடியாதென்ற அச்சம்.
கம்யூனிஸ்ட் கட்சி?
தொழிலாளி வர்க்கம்?
‘மே தினத்தன்றே மேதின ஊர்வலம்!”
129

Page 68
மூவர் கதைகள்
தொழிலாளி வர்க்கத்தின் பிரதிக்ஞை இது.
மூன்று தலைவர்கள் காலையிலேயே கைது செய்யப்பட்டு விட்டார்கள்.
வேறு சில தலைவர்களுக்காகப் பொலீஸார்வலைவீசித்திரி
கின்றனர்.
“சுன்னகத்திலையிருந்து ஊர்வலம் தொடங்கப் போகு 9
தாம".
இத்தகவல் கிடைத்ததும் ஒரு பகுதிப் பொலீஸார் கன் ஞகத்துக்கு ஒடுகின்றனர்.
'இல்லை, மட்டுவிலிலிருந்தாம்".
சில பொலீஸ் வாகனங்கள் மட்டுவிலுக்குப் பறக்கின்
றன.
'சங்கானையில் சில சிவப்புச் சட்டைகள் தெரிந்ததாம்".
சங்கானைக்கும் விரைகின்றது பொலீஸ்,
★ DTa ஐந்தரை மணி.
நகரத்தின் உயிர்த்துடிப்பு அதிகரிக்கின்றது.
காக்கிச் சட்டைகள் தலை கால் தெரியாமல் ஒடித் திரிகின்றன.
*உலகத் தொழிலாளர்களே ஒன்று சேர்வோம்"
நகரத்தின் இதயத்திலிருந்து திடீரென ஒரு கம்பீரமான குரல் ஒலிக்கின்றது.
30
يجر

மே தினம்
தொழிலாளி வர்க்கத்தின் தியாகச் சின்னமான செங் கொடி வானத்தை நோக்கி உயர்கின்றது.
“மேதினம் வாழ்க!”
அலையலையாக வந்து குவிந்து கொண்டிருக்கும் மக்கள் திரள்கோஷிக்கின்றது.
எங்கிருந்து இவ்வளவு மக்களும் வருகின்ருர்கள்?
இரண்டு பொலீஸ்காரர்கள் பீதியடைந்து ஒரு சந்துக் குள் விழுந்தடித்துக் கொண்டு ஒடுகின்றர்கள்.
மேதின ஊர்வலம் ஆரம்பிக்கின்றது!
ஊர்வலத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், வாலிபர் கள், மாணவர்கள் அணிதிரண்டு சென்று கொண்டிருக்கின் ருர்கள்.
இந்த வேளையில் உலகின் பல்வேறு நகரங்களிலுள்ள வீதிகளில் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்ற கோ டானுகோடி தொழிலாளர்களுடன் புதிய உலகை அமைக் கப்போகும் இந்தப் புரட்சிப் போராளிகள் ஒரே இலட் சியப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ருர்கள்.
ஜனசமுத்திரம் முன்னுக்கும் பின்னுக்கும் அலைமோதிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் மத்தியில் ஒரே உத்வேக உணர்ச்சி வியாபித்திருக்கின்றது.
“உலகத் தொழிலாளர் வர்க்கம் நீடுழி வாழ்க’ ஊர்வலத்திலிருந்து எழுந்த இந்தப் பட்டாளி வர்க்க சர்வ தேசியத்துவ உணர்வு நிறைந்த லட்சோப லட்சம் மக்
களின் உள்ளத்தைக் கிளறி ஒரே அணியில் ஐக்கியப்படுத் தும்கோஷம் எதிரொலித்து விம்மிப் பொங்கியது.
131

Page 69
மூவர் கதைகள்
ஊர்வலம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. -
வீதியின் இரு மருங்கிலும் வியப்பும் பரபரப்பும் நிறைந்த மக்கள் திரள், நிரையிட்டு இந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றது.
சத்தியத்தை வலிமையாகக் கொண்டு நிதானமாக முன் னேறிக்கொண்டிருக்கும் இந்தப் போராளிகள் மத்தியில் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கும் புரட்சி உணர்வுச் செந்தழல் உலகின் பழைய, உக்கி உழுத்துச் செத்துக்கொண் டிருக்கும் சகலவற்றையும் சுட்டுப் பொசுக்கிச் சாம்ப ராக்கி அந்த அழிவில் புதிய உலகைக் கட்டி எழுப்புவதற்குத் துடித்துக் கொண்டிருக்கின்றது.
மேதின ஊர்வலம் பொங்கிக் குமுறி உருகி வழியும் எரி மலைக் குழம்புபோல அலையலையாகப் பெருகிக் கொண்டிருக்
கின்றது.
ஊர்வலத்தின் முன்னல் செங்கொடி கம்பீரமாகப்
பறந்துகொண்டிருக்கின்றது.
செங்கொடியிலிருந்து பிறந்த மகத்தான சக்தி தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் தகர்த்தெறிந்து, தான் சென்று கொண்டிருக்கும் பாதையைத் தங்குதடையற் றதாகச் செய்து மக்களைக் கவர்ந்திழுத்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
**சொல்லுறதைச் செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள் எண் டதை இப்ப நாங்கள் நேரிலே பார்க்கிறம்.”
வீதியோரத்தில் நின்று கொண்டிருக்கும் மக்கள் திரளிலிருந்து ஒரு குரல் ஒலிக்கின்றது.
132
 

s
மே தினம்
ஊர்வலத்தின் உத்வேக உணர்ச்சியினல் கவர்ந்திழுக்கப் பட்ட வீதியோரத்தில் நிற்பவர்களில் அநேகர் ஊர்வலத் தில் வந்து சேர்கின்றனர்.
'பொலீஸ்!' :نمونہ=
வீதியோரத்தில் நின்ற ஒருவர் கத்துகின் ருர்,
ஊர்வலம் வீருப்புடன் முன்னேறிக்கொண்டிருக்கின்
Д0 ф5/ •
ஆயுதமேந்திய பொலீஸ் படை ஊர்வலத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.
பொலீஸ்காரர்களின் தோள்களிலேயுள்ள துப்பாக்கிச் சனியன்கள் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கின் றன.
பொலீஸாரின் மனிதச் சுவர் ஊர்வலத்தை நெருங் குகின்றது.
'நில்லுங்கள்!"
ஒரு பொலீஸ் அதிகாரி உரக்கக் கத்துகின்றன்.
'அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!" பொலீஸ் அதிகாரியின் தன்னந்தனியனன முரட்டுக் குரலை தொழிலாளர்களின் இடிமுழக்கம் போன்ற கோஷம் விழுங்குகின்றது.
மேதினப் போராளிகளின் அணிவகுப்பு கெம்பீரமாக முன்சென்று கொண்டிருக்கின்றது.
'நில்லுங்கள்!”
133

Page 70
மூவர் கதைகள்
அதிகாரி கீச்சுக்குரலில் மீண்டும் கத்துகின்றன். அவனு டைய முழிகள் பயத்தில் பிதுங்குகின்றன. முகத்தில் குறி வியர்வை.
கடந்த காலப் போராட்டங்களின் அனுபவங்களைத் தொகுத்து, அதன் அடிப்படையில் தமது எதிர்காலப் போராட்டப்பிரதிக்ஞையை மேதினக்கூட்டத்தில் பிரகட னம் செய்து சபதமெடுக்க புரட்சி உணர்வு பீறிட்டுக் கொப்பளிக்கச் சென்று கொண்டிருக்கும் அந்தப் போராளி கள் அந்தப் பொலீஸ் அதிகாரியின் உளறலைக் கேட்க வில்லை.
‘கலைந்து போங்கள்!" கூவுகின்ற அதிகாரியின் குரல் நடுங்குகின்றது.
ஊர்வலம் முன்னேறிக் கெண்டேயிருக்கின்றது. *தாக்குங்கள்!"
நடுங்கிய குரலில் பொலீஸாருக்குக் கட்டளையிட்டு விட்டுப் பின்வாங்குகின்றன் அதிகாரி.
பொலீஸாருக்குத் தயக்கம்.
தாக்குங்கோ !”
மீண்டும் அலறிக்கொண்டு தனது ஜீப்புக்குக்கிட்டச் செல்கின்றன் அதிகாரி.
பொலீஸ்காரர்கள் தாக்கத் தொடங்குகிருர்கள்.
ஊர்வலத்திலுள்ளவர்கள்?
தம்மைப் பாதுகாக்க முற்படுகின்றனர்.
மோதல்!
134
y
 
 

மே தினம்
பொலீஸ் படை சிதறிச் சின்னபின்னமடைகின்றது.
ஊர்வலம் முன்னேற முயல்கின்றது. மேலும் பொலிஸ்படைகள் வந்து குவிகின்றன. மோதல்!
குண்டாந்தடிப் பிரயோகம்!
தடியடி!
கல்லெறிகள்!
கண்ணிர்ப்புகை!
கைகால்கள் முறிகின்றன.
மண்டைகள் பிளக்கின்றன.
ரணகளம் !
மேதின உரிமைக்காக இந்தப் புரட்சிப் போராளிகளின் ரத்தம் பூமியில் மழைமாதிரிப் பொழிகின்றது. அந்த இரத்தத்திலிருந்து சத்தியம் ஜனித்தது. புத்துலகு அவ தரிக்க இருக்கின்றது.
சுரண்டும் வர்க்கத்தின் காக்கிச் சட்டைக் காவல் நாய் கள் சிந்திய நாற்றம் பிடித்த ரத்தத்தால் எந்தவித பயனும்
விளையப் போவதில்லை, அது மண்ணுேடு மண்ணுய்
மறைந்து மக்கியது.
‘சுந்தரமாக்களைக் கைது செய்துபோட்டாங்கள்!?? ஒரு தொழிலாளி கத்துகின்றன். சுந்தரமாக்களிருந்த பொலீஸ் ஜீப்பை நோக்கி
தொழிலாளர்கள் ஒடுகின்ருர்கள்.
135

Page 71
மூவர் கதைகள்
தொழிலாளர்கள் ஜிப்பை அடையுமுன் அது புறப் படுகின்றது.
“தோழர்களே! மே தினப்பிரகடனம். கூட்டம்.” சுந்தரம் கத்துகின்றன்.
அவனுடைய மண்டையிலிருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருக்கின்றது.
“புரட்சிகர மே தினம் வாழ்க!”
ஒரு கையால் மண்டையிலுள்ள காயத்தை அழுத்திப் பிடித்தபடியே மறுகையின் முஷ்டியை உறுதியாக உயர்த்திப் பிடித்துக்கொண்டு கோஷிக்கிருன் சுந்தரம்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேர்வோம்!”
ஜீப்பிலிருந்த முருகேசு எழுந்து செங்கொடியை அசைத் துக் கொண்டு கோஷிக்கின்றன்.
ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் அவர்களுடைய கோ ஷங்கள் காற்றில் மிதந்துவந்து தொழிலாளர்களின் காதில் விழுகின்றன.
அவர்களுக்குப் புத்துணர்வு.
அநேக தொழிலாளர்களுக்கு ரத்தக் காயங்கள். அவர் கள் அதைப் பொருட்படுத்த வில்லை.
ஒரு தொழிலாளி பக்கத்து வீடொன்றிலிருந்து ஒரு மேஜையைக்கொண்டுவந்து வீதியோரத்தில் வைக்கின்றன்.
ரத்தம் தோய்ந்த செங்கொடி ஒன்று கெம்பீரமாகப்
- பறந்து கொண்டிருக்கின்றது.
136

ابطہ
மே தினம்
ஒரு தொழிலாளி மேஜைமீதேறி சர்வதேசிய கீதத்தைப் பாடுகின்றன்.
போராளிகள் எந்தவித பரிசோதனைக்கும் தயாரென்ற நிலை யில் உறுதியாக நிற்கின்றனர்.
அவர்களுடைய எதிர் காலப் போராட்டப் பிரதிக்ஞை இந்த மேதினக் கூட்டத்தில் பிரகடனப் படுத்தப்படுகின்றது,
அந்தப் போராளிகளின் உள்ளங்களில் புரட்சித் தீ கனன்று கொண்டிருக்கின்றது.
மாலைச் சூரியன் செங்குழம்பை அள்ளி வீசிக்கொண் டிருக்கின்றன்.
உலகம் சிவப்பாக மாறிக்கெண்டிருக்கின்றது,
YA
37

Page 72


Page 73

மூவர் கதைகள்
பொலீஸ்காரர்களுக்கு ஆத்திரம் பொங்குகின்றது.
“இந்த ருஸ்கல்களுக்கு இண்டைக்குச் சரியான பாடம் படிப்பிக்க வேணும்"
இருவரும் ஒரே நேரத்தில் பல்லை நெருடிக்கொண்டு வன்மத்துடன் கூறுகின்றனர்.
பொலீஸ் நிலையத்தை நோக்கி இருவரும் தயக்கத்து
டன் செல்கின்றனர்.
பொலீஸ் நிலையத்தில் டெலிபோன் மணி அடிக்கின்றது.
பொலீஸ் உயரதிகாரி டெலிபோனை எடுக்கின்றன்.
இன்று, பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவனுக்கு அதிக வேலை.
அதிகாலையிலேயே அவன் கந்தோருக்கு வந்துவிட்டான்.
மேலிடத்துக் கட்டளையை அவன் நிறைவேற்ற வேண்டு மல்லவா?
அவனுக்கு இன்னும் மதுபோதை கலையவில்லை.
பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்காகக் கொழும்பிலிருந்து வந்த ஒரு வெளிநாட்டு உதவிப் பிரதிநிதி, சென்ற இரவு ஒரு சிறு 'பார்டி போட்டிருந்தார். அதில் குடித்த மது இன்னும் அவனுக்கு வேலை செய்துகொண்டிருக்கின்றது.
பேசி முடிந்ததும் அவன் டெலிபோனைப் படாரென வைக்கின்றன்.
அவனுடைய கண்கள் நெருப்பைக் கக்குகின்றன. பற் கள் நெருடுகின்றன.
கோபத்தில் சப்பாத்துக் காலால் நிலத்தில் உதைக் கின்றன்.
14

Page 74
எழுச்சி
பொலீஸ் நிலையத்திலுள்ள எல்லாப் பொலீஸ்காரர் களையும் அவன் தன்னுடைய அறைக்குக் கூப்பிடுகின்றன்.
எல்லோரும் பதட்டத்துடன் வருகின்றனர். *ராத்திரி ஆர் ருேந்து சுத்தப் போனவங்கள்?"
ஆத்திரத்துடன் கேட்டான்.
ஆறு பேர்களுடைய நம்பர்களை உதவிப் பொலீஸ் அதி காரி தயங்கியபடியே கூறுகின்றன்.
"அந்தப் பண்டியள் எங்கை?"
‘இன்னும் அவர்கள் வரவில்லை.”
"அந்த நாயஸ் வரட்டும். இண்டைக்கு நான் அவங்களுக் குச் சரியான பாடம் படிப்பிக்கிறன்."
எல்லோரும் பீதியுடன் அதிகாரியைப் பார்த்தபடியே மெளனமாக நிற்கின்ருர்கள்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
“பண்டிக்குப் பிறந்தவங்கள் எல்லா இடத்திலையும் போஸ்டர்கள் ஒட்டினதோடை ருேட்டெல்லாம் எழுதிப்
போட்டாங்கள். மந்திரி போண் பண்ணியிருக்கிறர். உடனே நடவடிக்கை எடுக்க வேணும்.”
அங்கு நின்ற எல்லோருடைய முகங்களும் மாறுகின்றன.
போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது வஞ்சம் தீர்க்க அந்த பொலீஸ்காரர்களுடைய கைகால்கள் துடிக்கின்றன.
'மத்தியானம் பன்னிரண்டு மணிக்கிடேலை அந்தப் பண்டிப் பயல்களைப் பிடிச்சுவந்து நல்லாய் உதைச்சு
142
کنور

மூவர் கதைகள்
நாளைக்கு விடியு மட்டும் லொக்கப்பிலை போட்டாத்தான் சரிவரும். அதோடை நீங்கள் சரியான கண்காணிப்புடனி ருக்க வேண்டும். கெளரவ விருந்தினருக்கும் எங்கடை தமிழ் மந்திரிக்கும் போதிய பாதுகாப்புக் குடுக்க வேணும். ஏதா
கூற வேண்டி வரும். கவனம், மற்றப் பொலீஸ் ஸ்டேசன் களிலையிருந்தும் நான் ஆக்களைக் கூப்பிடுறன். இப்பவிருந்தே வேலையைத் துவங்குங்கோ’ .
குட்டிப் பிரசங்கத்துடன் நெடுமூச்சு விட்டான் அதிகாரி.
எல்லாத் திக்குகளுக்கும் பொலீஸ் வான்களும், ஜீப்பு களும், மோட்டார் சைக்கிள்களும் பறக்கின்றன.
போஸ்டர் ஒட்டியவர்களின் காரியாலயத்தை நோக்கிப் பொலீஸ் ஜிப்புகள் பறக்கின்றன.
காரியாலயக் கதவு பூட்டிக் கிடக்கின்றது.
பொலீஸாருக்கு ஏமாற்றம்.
கோபாவேசம் பொங்கிக் குமுறுகின்றது.
நகரத்திலுள்ள சில குறிப்பிட்ட வீடுகளுக்கு அவர்கள் செல்கின்றர்கள்.
வீடுகளைச் சோதிக்கின்ருர்கள்.
அட்டகாசம் செய்கின்ருர்கள்.
ஆனல் அவர்களுக்குத் தேவைப்படுகின்றவர்கள் ஒரு வர்தானும் அகப்படவில்லை.
பொலீஸ்காரர்கள் நகரத்தையே ஒரு கலக்குக் கலக்கு கின்றனர்!
143

Page 75
எழுச்சி
Lug)6är?
ஏமாற்றம்.
நேரம் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
“இந்த வேலையைச் செய்தவங்களுக்கு இந்த ஊரிலை நிக்கிறதுக்கு துணிவெங்கை இருக்கப் போகுது? அவங்கள் வேறை இடத்துக்கு ஓடிவிட்டாங்கள். நாலைஞ்சு நாளைக்கு அவங்கள் இந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டாங்கள்.”
உதவி பொலீஸ் அதிகாரி கூறுகின்றன் .
இது அவர்களுக்கு ஒரளவு தென்பைக் கொடுக்கின்றது.
மாலை நாலு மணி.
பல்வேறு பொலீஸ் நிலையங்களிலிருந்து வந்த பொலீஸ்
காரர்கள் நகரத்தின் கேந்திர இடங்களில் உசாராக நிற் கின்றர்கள்.
சி. ஐ. டி. க்கள் பல இடங்களில் "வெள்ளுடுப்பில்" திரி கின்ருர்கள்.
சந்தேகத்திற்கிடமானவர்கள் பொலீஸ்காரர்களால்
சார நிலையம்.
அதைச் சுற்றியுள்ள ருேட்டுக்கள் பாதுகாப்பின்
கலாசார நிலையத்திலிருந்து தெற்குப் பக்கமாக, கல் லெறி தூரத்தில் பொலீஸ் நிலையம்.
144
 

A.
எழுச்சி
கலாசார நிலையத்திற்கு முன்னலுள்ள ருேட்டில் அடிக் கொரு பொலீஸாக அவர்கள் அணிவகுத்து நிற்கின்ருர்கள்.
போவோர் வருவோரை அவர்களுடைய கண்கள் நோட் டம் விட்டுக்கொண்டிருக்கின்றன.
நாலரை மணிக்குக் கலாசார நிலையத் திறப்பு விழா!
நாலு மணியிலிருந்தே பெரிய பெரிய மோட்டார்கள் கலாசார நிலையத்தை நோக்கி வரத் தொடங்கிவிட்டன.
கலாசார நிலையத்தின் முன்னுலுள்ள மைதானம் மோட்டார் மயமாகின்றது.
"பெரிய மனிதர்'களும் “பிரமுகர்களும் மோட்டார்க களில் வந்து இறங்குகின்ருர்கள்.
அவர்களில் அனேகர் மேல்நாட்டு உடையில் இருக் கின்றனர்.
சிலர் காட்டுமிராண்டி பீட்டிள் தலைமுடி ஸ்டைல், மூங்கில் குழாய் லோங்ஸ், கறுப்புக் கண்ணுடிகள், இடுப் பில் நாலங்குலத் தோல் பெல்டுகள். கொந்தாலி போன்ற கூர்ச் சப்பாத்துகள்.
ஆபாச "மினி ஸ்கேட்டுகளின் காம விழிகள் அங்கு மிங்கும் அலைந்து ‘இரை’க்கு வேட்டையாடிக் கொண்டிருக் கின்றன.
கெளரவ விருந்தாளியையும் கறுவாக்காட்டுத் தமிழ் மந்திரியையும் வரவேற்க வீதியோரத்தில் அவர்கள் கூடி நிற்கின்றனர்.
அவர்கள் மத்தியில் சாதாரண பொது மக்களும் நிற் கின் ருர்கள்.
“பெரிய மனிதர்களில் அநேகருக்குக் கலாசார நிலை யத் திறப்பு விழாவில் அக்கறையில்லை.
அவர்களில் சிலர் தங்களுடைய உடுப்பை மற்றவர் களுடைய உடுப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தங்களுக்
குள் தாமே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றர்கள்.
145

Page 76
மூவர் கதைகள்
சிலர் தற்காலிக சோடியைத் தேடி நோட்டம் விடு கின்றனர்.
வேறு சிலர் இரவு நடக்கப் போகும் விருந்தை - பல வகையான மதுக்கள், உணவுகளைப் பற்றி எண்ணி வாயூ றிக் கொண்டு நிற்கின்ருர்கள்.
கெளரவ விருந்தினர் வந்தவுடன், தாங்கள் அவருடன் கதைத்து அறிமுகமாக வேண்டும், அவருடன் அறிமுக மாகிவிட்டால், கொழும்பில் அடிக்கடி அவர் நடத்தும் பார்ட்டிகளுக்கும் விருந்துகளுக்கும் தாங்கள் செல்ல முடி யும், கிறிஸ்மஸ், புதுவருட போத்தல்'களும் பரிசுகளும் தங்களுக்குக் கிடைக்கும் என்று சிலர் அங்கலாய்த்துக் கொண்டு நிற்கின்றர்கள்.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் பற்றியும் "ஸ்கொலர் விழிப் பற்றியும் சிலர் மனப்பால் குடித்துக் கொண்டு நிற்
கின்றனர்.
பொதுமக்களுடைய எண்ணம் வேறு ஏதோ ஒரு தூர தேசத்தின் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றது.
அவர்கள் தங்களைப் பற்றிய நினைவின்றியே இலட்சிய வேட்கையுடன் நிற்கின்றர்கள்.
அவர்களுடைய கண்களில் தியாகச் சுடர் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது.
பொலீஸ் மோட்டாரின் மணி அலறுகின்றது.
நாலரை மணி!
சகல விழிகளும் தென் திசைக்குத் திரும்புகின்றன.
46

எழுச்சி
பொலீஸ் மோட்டாரின் பின் ஒரு பெரிய நீண்ட பென்ஸ் கார்!
அது விமானம் போல அசைந்து வந்து சந்தியால் திரும்பி கலாசார நிலையத்தை நோக்கி வந்து கொண் டிருக்கின்றது.
அதற்குள் கெளரவ விருந்தினர்!
அவர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருக்கின்றர்.
பார்வையில் தன்னகங்காரம், திமிர். -
பென்ஸ் கார் கலாசார நிலைய வாசலை நெருங்கு கின்றது,
பத்திரிகைப் படப்பிடிப்பாளர்கள் முண்டியடித்துக் * கொண்டு முன்னுக்கு ஓடி வருகின்ருர்கள்.
ஒரு வஜ்ஜிரக்குரல் முழங்குகின்றது.
*அமெரிக்க யுத்த வெறியனே!
வியட்னுமை ീര வெளியேறு!’
பல குரல்கள் கோஷிக்கின்றன. .கோஷங்கள் வானை முட்டிச் சாடுகின்றன ܨܘܼܬ݂
சுலோக அட்டைகள் வானத்தில் உயர்கின்றன.
கற்களும் போத்தல்களும் முட்டைகளும் பல திசைக ளிலிருந்து வந்த பென்ஸ் காரைத் தாக்குகின்றன.
147

Page 77
மூவர் கதைகள்
ஒரு கூழ் முட்டை அமெரிக்க ஏகாதிபத்திய யுத்த வெறியனின் கன்னத்தில் வந்து விழுகின்றது.
அந்த முட்டை உடைந்து அவனுடைய கன்னத்தில் வழிகின்றது.
*அமெரிக்கக் கொலை பாதகர்கள் ஒழிக’
சுலோகங்கள் சுழன்று சாடுகின்றன.
‘வியட்நாமிலுள்ள வியட்கொங்கினர்தான் சாடுகின் றனரோ?
அமெரிக்க யுத்த வெறியன் திகைக்கின்றன்.
அவனுடைய முகம் பய பீதியில் விகாரமடைகின்றது.
பொலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சி.
“பெரிய மனிதர்கள்' சின்னபின்னமாய்ச் சிதறத் தலை தெறிக்க ஒடுகின்றனர்.
"அமெரிக்க யுத்த வெறியர்கள் ஒழிக!”
எல்லாத் திசைகளிலுமிருந்து கோஷங்கள் எழுந்து வானத்தைப் பிளக்கின்றன.
“இன்று வியட்நாம்!
நாளை இலங்கை!”
பொலீஸ்காரர்கள் கொந்தளிப்பை அடக்குவதற்கு அங்குமிங்கும் “பெற்றன்களை வீசியபடியே ஒடிக்கொண்டி ருக்கின்றனர்.
மந்திரியைக் காணவில்லை.
'டிறைவர் வேகமாய் ஒட்டு காரை."
148
 

W,
எழுச்சி
அமெரிக்க யுத்த வெறியன் அலறுகிருன்,
அந்தக் கோழையினுடைய உடல் பயத்தில் நடுங்கு கின்றது.
அவன் காருக்குள் பதுங்குகின்றன்.
பொதுமக்களும் பொலீஸ்காரர்களும் மோதுகின்றனர்!
பென்ஸ் கார் தென்கிழக்குத் திசையை நோக்கி வேக மாக ஓடுகின்றது.
அது ஒரு விடுதிக்குள் விரைவாக நுழைகின்றது. அங்கு தான் அந்த யுத்த வெறியன் தங்கியிருக்கின்றன்.
அந்த விடுதியின் முன் ஆர்ப்பாட்டம்!
விடுதி தாக்கப்படுகின்றது. பொலீஸ் விடுதியை நோக்கி விரைகின்றது.
நகரத்தின் கிழக்குப் புறத்தில் ஒரு பிரபலமான ஹோட்டல்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்ருெரு யுத்த வெறி யனின் மேற்பார்வையில் அந்த ஹோட்டலில் இரவு விருந் திற்காக சுறுசுறுப்பாகத் தயாரிப்புக்கள் நடந்துகொண்டி ருக்கின்றன.
"அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!” அந்த ஹோட்டலின் முன்னிலும் ஆர்ப்பாட்டம்.
ஹோட்டலும் தாக்கப் படுகின்றது.
மதுப் போத்தல்கள் நொருக்கப் படுகின்றன. மேசை கள் தலைகீழாகப் புரட்டப் படுகின்றன.
149

Page 78
மூவர் கதைகள்
ஹோட்டலை நோக்கி பொலீஸ் வேகமாகச் செல்கின்றது.
அதே நேரத்தில் -
“அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக’
நகரத்தின் இதயத்தில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் கெம்பீரமாகச் சென்றுகொண்டிருக்கின்றது.
“அமெரிக்க யுத்த வெறியனே!
வியட்நாமை விட்டு வெளியேறு!”
ஊர்வலத்தினர் ஆக்ரோஷத்துடன் கோஷிக்கின்றனர்.
அந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான வாலிபர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் லட்சிய வேட்கையுடன் அணிவகுத் துச் சென்று கொண்டிருக்கின்ருர்கள்.
சிலருடைய மண்டைகளிலிருந்து தியாகச் சின்னமான ரத்தம் வழிந்து கொண்டிருக்கின்றது.
**வியட்நாம் வெற்றி!
எங்கள் வெற்றி !”
தியாகத் தீயில் புடமிடப்பட்ட அவர்கள் கோஷிக் கின்ருர்கள்.
காக்கிச் சட்டைகள் ஊர்வலத்தை நோக்கிப் பாய் கின்றன.
காக்கிச் சட்டைகளுக்கு எதிராக -
மக்களின் இரும்பு முஷ்டிகள் உறுதியுடன் உயர் கின்றன!
சூரியன் சிவக்கின்றது. மேற்கு செந்நிறமாகிக்கொண்டிருக்கின்றது.
50 女

W.
முடிவிலிருந்து ஆரம்பம்
“6T6örgoT LIT GLDIr,0TP''
நேரம் போட்டுது. நான் போவேணும்.
சட்டையை அவசர அவசரமாக அணிந்துகொண்டே அவன் கூறினன்.
‘எங்கையடா மோனை போப்போருய்??
வியப்புடன் தாய் அவனை ஏறிடுகின்ருள்.
*இண்டைக்கு சிம்மாசனப் பிரசங்கம் நடக்கப்போகுது. எங்கடை மந்திரிமார் எல்லாரும் வாருர்கள். நான் சுதந் திர சதுக்கத்துக்குப் போவேணும்.'
உரிமையுடன் கூறினன் அவன்,
அவனுடைய குரலில் தற்பெருமை.
"இப்ப இரண்டு மூண்டு மாதமாய் உனக்கு ஒரே வேலை தான். ஏன் இப்படி அலையிருய் எண்டு எனக்குத் தெரி
151

Page 79
மூவர் கதைகள்
யேல்லை. இதாலை கண்ட பலன்தான் என்ன? வீண் உலைச் சல்தானே. உன்னைப் போலைதான் உன்ரை அப்பரும் இராப் பகலாய் வேலைசெய்தார். நானும் உங்களைப் போலை ஒரு காலத்திலை உலைஞ்சு களைச்சனன்தான். ஆனல் கண்ட தென்ன?”
சலித்துக்கொண்டே அவனுடைய தாய் கூறினுள்.
“என்ன, ஒரு பலனுமில்லையா? ஏன், எங்கடை மக்கள் அரசாங்கம் வந்திட்டுதுதானே. இதுக்காகத்தானே நாங் கள் கஷ்டப்பட்டு வேலை செய்தம்.”
பூரண மன நிறைவுடன் கூறுகின்றன்.
“எந்த அரசாங்கம் வந்தால்தான் என்ன? எங்களுக்கு எப்பவும் கஷ்டம்தானே.”
வேதனை நிறைந்த விரக்தி அவளுடைய குரலில் தொனிக்கின்றது.
'அப்படிச் சொல்லாதையணை அம்மா, எங்கடை அர சாங்கத்திலை எங்களைப்போன்ற ஏழையள் எல்லாருக்கும் கட்டாயம் வேலை கிடைக்கும். எங்கடை கஷ்டமெல்லாம் கெதியாய்த் தீர்ந்துபோம்.”
துன்பத் தீயில் வரண்டுவிட்ட தன் தாயின் வேதனை நிறைந்த முகத்தைப் பார்த்தபடியே எதிர்கால நம்பிக் கையை ஊட்டுகின்ருன் அவன்.
'சரி வாறது வரட்டும். எல்லாத்தையும் நாம்தானே சுமக்கவேண்டும். அது கிடக் கட்டும். இப்ப பசியோடை
என்னெண்டு போப்போருய்?"
152
هما
 

முடிவிலிருந்து ஆரம்பம்
"ஏன் பத்து மணிக்குத்தானே பாண் திண்டனன். எனக்குப் பசிக்கேல்லை."
“நல்லாய்ச் சாப்பிடுகிற வயதிலை நீங்கள் இப்பிடிக்
கிடந்து காயிறதைப் பார்க்கவேணுமெண்டு என்ரை தலை விதி."
அவள் விட்ட பெருமூச்சு அவளுடைய இதயச் சுமை யைத் தாங்கிக்கொண்டு வெளிவந்தது.
அவனுடைய கண்கள் கலங்குகின்றன.
அவனை அவள் மிகவும் நம்பிக்கையோடு படிக்க வைத் தாள். சொத்துச் சுகம் யாவையும் இழந்தும், பட்டினி கிடந்து மகனின் படிப்பொன்றையே தன் லட்சியமாகக் கொண்டு அவள் வாழ்ந்ததும், கடைசியில் என்ன ஆயிற்று?
மகன் மிகவும் கவனமாகவும் திறமையாகவும் படித்து முன்னுக்குத் திகழ்ந்தாலும், சமூக வாழ்விலே, பணம் படைத்தவர்களுக்குப் பின்னுக்கு, மிகக் கடைசியில், மிக வும் மிகவும் கடைசியில் நிற்பதை அவள் கடந்த காலத்தில் அனுபவ பூர்வமாக அறிந்து மனம் சலித்துப் போயிருந் தாள.
அவன்தான் எத்தனை நேர்முகப் பரீட்சைகளுக்குப் போய் ஏமாற்றத்தையே தாங்கொணுத வேதனைகளோடு சுமந்து வந்தான்.
அவையெல்லாம் பழைய கதைகள். இன்ருே ஒரு புதிய வரலாறு தொடங்குகிறது என்று அவனே சொல்கின் ருனே...!
'அம்மா நான் போட்டு வாறன்’
சிந்தனையிலிருந்து தாய் மீள்கின்ருள்.
53

Page 80
மூவர் கதைகள்
“பஸ் சுக்குக் காசு கிடக்கே?”
சட்டைப் பைக்குள் கையை விடுகின் ரூன்.
இருபத்தைந்து சதம் தட்டுப்படுகின்றது.
t “ஒ. காலமை பாண் வாங்கிப் போட்டு மிச்சக் காசு கிடக்கு.*
‘போய்ச் சேந்திட்டால் காணும். திரும்பி வர என்ரை சினேகிதரிட்டை வாங்கலாம்.”
போவதற்கு அவன் அவசரப்படுகின்றன்.
செயலெல்லாம் துரிதம்.
*இருபத்தைஞ்சு சதம்தானே கிடக்கு. உதுகாணுமே?”
“ஒ, இது காணுமணை.'
. காணுவிட்டாலும் அவளால் என்னதான் செய்ய முடி யும்? البر
*தங்கச்சியாக்கள் நெசவு சாலையிலிருந்து வரப்போ கினை. நீ கஞ்சியை வையணை. நான் போட்டுவாறன்.”
அவன் அவசரமாகச் செல்கின்றன். சென்றுகொண்டிருக்கும் அவனுடைய முதுகுப் புறத் தைப் பார்த்தபடியே அவள் நிற்கின்ருள்.
*இதே மாதிரித்தான், இவனைப்போலைதான் அண் ی*
டைக்கு அவரும்.’
அவளுடைய கணவனின் உருவம் அவள் கண்முன் நிழ லா டுகின்றது.
அவளுடைய கண்கள் குளமாகின்றன.
154

முடிவிலிருந்து ஆரம்பம்
"இந்த வேகத்திலைதான் அண்டைக்கு அவரும்.”
மீண்டும் ஒரு பெருமுச்சு, இது எத்தனையோ நாட் களின் தொடர்ச்சி.
தன்னுடைய கணவனேடு அவளும் இதே வேகத்தில் பல ஊர்வலங்களில் சென்றிருக்கின்றுள் கூட்டங்களில் பங்கு பற்றியிருக்கிருள். அப்போது அவள் கணவனும் இதே பூரிப்போடுதான் கதைத்திருக்கிருன். ஆணுல் இன்று அவள்
அகணவன்?
திரும்பி வராத அவள் கணவன் அன்று சென்று கொண் டிருந்த அதே வேகத்தில் இன்று அவளுடைய மகன் சென்று கொண்டிருக்கின்றன்.
அவனுடைய தந்தை ஒரு பஸ் தொழிலாளி.
கஷ்டப்பட்டு அவனை சர்வகலாசாலைப் படிப்புவரை படிப்பித்துவிட்டு, அவன் பரீட்சை முடிவுவெளியாகு முன் மூன்று வருடங்களுக்கு முன் அகால மரணமடைந்தார்.
வயோதிபத் தாயையும் மூன்று சகோதரிகளையும் அவன் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.
படிப்பு முடிந்ததும் அவன் வேலை தேடி அலைந்தான். அலைச்சலா அது? அதுவே மாபெரும் வேதனையான அனு பவம்.
வேலை கிடைக்கவில்லை.
“அலுவல் பாத்தால்தான்’ வேலை கிடைக்கும் என்று சிலர் சொன்னர்கள்.
பண முள்ளவர்களெல்லாம் 'அலுவல் பார்த்து’ உத் தியோகம் பெற்றனர்.
155

Page 81
மூவர் கதைகள்
அவன்?
சில இடங்களில் பாடம் சொல்லிக்கொடுத்தான். கிடைத்த அற்ப தொகையைக்கொண்டு கஞ்சியும் தண்ணி யுமாக அவர்கள் காலத்தைக் கடத்தி வந்தார்கள்.
இப்பொழுது அவனுடைய மூன்றுசகோதரிகளும் நெசவு சாலைக்குச் செல்லத் தொடங்கி ஒரு வருடமாகின்றது.
அவர்களுடைய வாழ்க்கை மேடு பள்ளங்களினூடாக நகர்ந்து கொண்டிருக்கினறது.
பிரதான வீதிக்கு அவன் வந்து விட்டான்.
வீதி யெல்லாம் இருநிறக் கொடிகள் பொலிந்திருக்கின் றன.
பஸ் நிலையத்தில் நின்று போவோர் வருவோரை அவன் பார்த்தபடியே நின்றன்.
எல்லோரிலும் பரபரப்புத் தெரிவதை அவன் உணர் கின்றன்.
அவர்கள் மத்தியில் ஒரு புதுப் பொலிவு.
பஸ் வருகின்றது.
ణ్ణి -
அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்ட கட்சிகளின் இரு வர்ணக் கொடிகள் பஸ்ஸின் முன்புறத்தில் பறந்துகொண் டிருக்கின்றன. .ܕܒܹܗ
தாவி ஏறி பஸ்ஸின் மேல் தட்டில் போய் அவன் உட் காருகின்ருள்,
பஸ் தொழிலாளி அவனை நெருங்குகின்றன்.
1 56
f

முடிவிலிருந்து ஆரம்பம்
அந்தத் தொழிலாளியின் முகத்தில் வெற்றிப் பெரு மிதம்.
அவனுக்கும் திருப்தி.
பஸ் ஓடத் தொடங்குகின்றது.
பெரும்பெரும் அந்நிய கம்பெனிக் கட்டிடங்களும் வர்த் தக நிலையங்களும் அவனுடைய கண்களில் படுகின்றன.
*உதெல்லாம் நாளைக்கு எங்கடை கையிலைதானே வரப் போகின்றன. அந்நிய முதலாளியள் இனி மூட்டைகட்ட வேண்டியதுதான் ஏன் எங்கடை நாட்டிலையுள்ள முதலாளி யள் தப்பிவிடுவீனையே?
அவனுடைய உள்ளம் கிளர்ச்சியடைகின்றது.
அவனை வஞ்சித்த சக்திகளெல்லாம், அவன் போன் ருேர் ஆக்கிய அரசால் வஞ்சித்து அழிக்கப்படப் போகின் றன என்ற நினைப்பு அவனுக்கு.
பஸ் நகரசபைக் கட்டடத்தை நெருங்குகின்றது.
சகல வாகனங்களும் பொலீசாரால் நிற்பாட்டப்படு கின்றன.
சுதந்திர சதுக்கத்தை நோக்கிச் செல்கின்ற சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரள்திரளாக அணியிட்டு நிற்கின் ருர்கள்.நீலநிறச் சட்டைகளைப் பலர் அணித்திருக்கின்றனர்.
நீலத்துடன் சங்கமித்துவிட்ட சிவப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.
அவன் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றன்.
தன்நிழல் தன் காலடியின்கீழ் கிடந்து மிதிபடும் நேரம்,
57

Page 82
மூவர் கதைகள்
நெருப்பை நெஞ்சுடன் கட்டியனைத்துக்கொண்டிருக் கும் வானம் கனலை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றது.
தார் ருேட்டு உருகிக் கசிந்து கொண்டிருக்கின்றது.
அவன் மக்களுடன் சங்கமிக்கின்றன்.
மக்கள் மத்தியில் பரபரப்பு; பெருமகிழ்ச்சி புதுமை யைக் காணுவதற்கான தவிப்பு.
தங்களுடைய அரசாங்கத்தின் மந்திரிமாரைப் பார்ப் பதற்கு அவர்கள் ஆவலுடன் நிற்கின்றர்கள்.
நெருப்பாய் எரியும் வெயிலைக்கூட அவர்கள் பொருட்
படுத்தவில்லை.
அவனுடைய வயிற்றில் பசித்தீ கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கின்றது சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றை யொன்று விழுங்கிக்கொண்டிருந்தாலும் இந்தப் பசி அவ னுக்குப் பழகிப்போய்விட்டது.
அதை மறப்பதற்கு அவன் மக்களைப் பார்க்கின்றன்.
புதிய எழுச்சியில் மக்கள் தங்களை மறந்த மோனநிலையி லிருக்கின்ருர்கள்,
Frt&ouait இருபுறங்களிலும் சாதாரண பொலீஸ்காரர் கள் நிற்கின்றர்கள். அவர்கள் மக்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டு நிற்கின்றர்கள்.
இப்பொழுது அவர்கள் "மக்கள் பொலீஸ்" அல்லவா?
மணிச்சத்த அலறலுடன் ஒரு பொலீஸ் மோட்டார் சீறியபடியே வேகமாக வருகின்றது.
சந்தியில் அந்த மோட்டார் திடீரென நிற்கின்றது.
及5&
K.
*
 

முடிவிலிருந்து ஆரம்பம்
மோட்டாரிலிருந்து ஒரு பொலீஸ் அதிகாரி இறங்கு கின் முன் ,
அடர்ந்து கறுத்த கொம்பு மீசை, தடித்த உதடுகள், கண் இமையிலிருக்கும் அந்த வெட்டுப்பட்ட வடு, அவனு டைய முகத்திற்கு மேலும் விகாரமூட்டுகின்றது.
நாலுயுறமும் பார்வையைச் சுழற்றுகின்றன்.
கண்கள் கனல் கக்குகின்றன.
அவனுடைய கையில் அதே பழைய குண்டாந்தடி. இடுப்பில் கைத்துப்பாக்கி.
*அவன்!’
囊 மக்களுடைய விழிகள் வியப்பில் விரிகின்றன. உதடு கள் அசைகின்றன.
'அவன் தான்! அந்தப் பழைய கொலை காரனேதான்!’
மக்கள் மத்தியிலிருந்து யாரோ ஒருவன் கூறுகின்றன்.
புஞ்சிபொரளையின் சம்பவம் அவர்களுடைய கண்முன் தோன்றுகின்றது.
*ஏய்! இஞ்சை வா..!"
அந்த இடத்தில் நின்றுகொண்டே அவன் கர்ச்சிக் கின்றன்.
மக்களுக்குத் திகைப்பு
வீதியோரத்தில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருக் கின்ற ஒரு பொலீஸ்காரன் அந்த அதிகாரியைப் பார்க் கின் முன்,
1 5 9

Page 83
மூவர் கதைகள்
*உன்னைத்தான். வா இஞ்சை.”
எதிர்பாராத அழைப்பு.
பொலீஸ்காரனுடைய முகம் வெளிறுகின்றது.
தயங்கியபடியே அதிகாரியை நோக்கிச் செல்கின்றன்.
அவனுடைய கை "சலூட்’ அடிக்க உயருகின்றது.
'ஏய்! அந்தப் பண்டியளை பின்னுக்குத் தள்ளிவிடு.”
மக்கள் மத்தியில் சலசலப்பு; வெறுப்பு.
சிலருக்குக் கோபம் பொங்குகின்றது.
'இப்பவும் இவன்.”
கூட்டத்திலிருந்து ஒருவர் தொடங்குகின்றர்.
சாவி கொடுத்துவிட்ட பொம்மைகளைப்போல் பொலீஸ் காரர்கள் மக்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கின் முர்கள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
மெலிந்த அவன் உடலில் திடீரென ஏதோ குறைந்து விட்டதுபோன்ற உணர்வு, -
அதிகாரி மோட்டாரில் ஏறினன்.
மோட்டார் திரும்பி வேகமாகச் செல்கின்றது.
மக்கள் கொதிக்கின்றர்கள். பொலீஸ்காரர்கள் மக்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே நிற்கின்றர்கள்.
60
(4,

முடிவிலிருந்து ஆரம்பம்
கண்களை ஒடுக்கிப் பார்த்தபடி நிற்கும் அவனுடைய மனம் தூரதிசையை நோக்கிச் செல்கின்றது.
மே இருபத்தேழாந் திகதிக்கு முன்கடந்த முதலாளித்துவ ஆட்சியில்
பொலீஸ் பாதுகாப்பிலிருந்தபொழுது தொடம்பே முத லாளி கொலையுண்டார்.
பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களின் வேலை நிறுத்தத்தின்போது காட்டுமிராண்டித்தனமாக மாணவர் களைத் தாக்கினர்கள்.
இ. போ. ச. வேலைநிறுத்தத்தின்போது தனது தந்தை பொலீஸ்காரரால் கொடூரமாக அடிக்கப்பட்டு ஒரு கிழமை யால் இறந்தார்.
மே மாதம் இருபத்தேழின்பின்
"மக்கள் அரசாங்கம்’ உதித்த மறுநாள்
மக்கள் விரோத நடவடிக்கையிலீடுபட்ட ஏரிவிட்டுப் பத்திரிகைக் காரியாலயத்தின்முன் தேர்தல் முடிந்தபின்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபொழுது பொலீஸாரால் அவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள்.
புஞ்சிபொரளையில் சோமபாலா பொலீஸ் வெறியாட் டத்துக்கு இரையாகிச் செத்தான்.
நில மற்ற மக்கள், தேர்தல் வெற்றியின் பின், மொரட் டுவையிலும், பொலன்னறுவையிலும் வெற்ருக இருந்த நிலத்தில் குடியேறியபொழுது பொலீஸ் அந்த மக்களை ஈவிரக்கமின்றித் தாக்கியது.
இவைகள் எல்லாம் தற்செயலாக நடந்தவை என அவன் முன்னர் நினைத்தான்.
161

Page 84
மூவர் கதைகள்
ஆனல் தொடர்ந்து நடக்கும் எல்லாச் சம்பவங்களும்
தற்செயலானவைகளா?
முன்பும் இப்போதும் ஒரே கதையா?
முந்திய கதையின் மிகுதிக் கதையா இப்பொழுது நடக்கின்றது?
பல சம்பவங்கள் அவனுடைய மனத்திரையில் தோன் றித் தோன்றி மறைந்துகொண்டிருக்கின்றன.
அவனுடைய ரத்தம் கொதிக்கின்றது.
பற்களை நெருடுகின்றன்.
மே இருபத்தேழுடன் முதலாளித்துவப் பொலீஸ் பேயாட்சி முடிந்து விட்டது என்று தான் நினைத்தது தவறு என்ற உணர்வு அவனுடைய இதய ஆழத்தில் சுடர் விடத் தொடங்குகின்றது.
பொலீஸ் மோட்டாரின் மணி மீண்டும் அலறுகின்றது.
மக்கள் பேராவலுடன் மோட்டார் வரும் திசையைப் பார்க்கிருர்கள்.
"மக்கள் அரசாங்க” மந்திரிமார்களின் மோட்டார் கள் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தப் பொலீஸ் அதிகாரி தனது சகாக்களுடன் மந் திரிமார்களுக்குப் பாதுகாப்பாகப் பெருமிதத்துடன் வந்து கொண்டிருக்கின் முன்.
அவனுடைய பார்வையில் மிடுக்கு.
இப்பொழுதும் எங்கடை ஆட்சிதான் நடக்கின்றது என் பதை அவனுடைய அகங்காரமும் அதிகார வெறியும் நிறைந்த பார்வை எடுத்துக்காட்டுகின்றது.
162
(

முடிவிலிருந்து ஆரம்பம்
மந்திரிமார்களின் மோட்டார்களின் பின்னல்
பெரும் பெரும் அந்நிய முதலாளிகள், வர்த்தக முதலை கள், பழைய அரசாங்கத்தின் அதிகாரத் திமிர்பிடித்த அதே உயர் அதிகாரிகள் எல்லோரும் பெருமிதத்துடன் மோட் டார்களில் வந்துகொண்டிருக்கின்ருர்கள்.
அவனுடைய தொண்டைக்குள் ஏதோ உருண்டு பிரள் கின்றது.
"மகனே, தொழிலாளியளின்ரை இழிந்த வாழ்வின் விதியை, அவர்களைச் சுறண்டி வாழுகின்ற முதலாளி வர்க் கம் மாத்தி அமைக்க விரும்புமெண்டு நீ நம்பிறியா? பாலுக்குப் பூனை காவலிருக்குமெண்டு நீ நம்பிறியா? எனக்கு வாழ்க்கையிலை நிறைய அனுபவமிருக்கு. நான் சொல்லிறன்; தொழிலாளியளாலைதான் தொழிலாளி யின்ரை கஷ்டத்தை உணரமுடியும். அவையள்தான் தங் கடை தலைவிதியைத் தாங்களே மாத்தி அமைக்கவேணும். தன்னை மிதிச்சு நசுக்கிறவனை தொழிலாளியள் அழிக்கா மல் ஒருநாளும் அவையளின் ரை துன்பம் தீராது. அவை யள் சுசுமாய் வாழேலாது.”
இப்படி அவனுடைய தாய் அவனுக்குப் பலமுறை சொல்லியிருக்கின்ருள். அனுபவத்தில் அவள் நிறையப் படித்துவிட்டாள். தனது தலைமுறைக்குள் அவள் நேரடி வாழ்வில் மக்களுக்கு அரசாங்கங்கள் செய்தனவற்றையெல் லாம் உணர்ந்திருந்தாள்.
இதே கட்சிகளுக்காக அவளுடைய கணவன் தன்னை மறந்தே உழைத்தான். அவன் ஊர்வலங்களுக்கும் கூட்டங் களுக்கும் போனபோதெல்லாம் அவளும் கூடப் போயிருக் கின்ருள். அன்று அவள் பக்கத்திலே போன தலைவர்கள் எல்லாம் இன்று பென்ஸ் கார்களில் பவனி வருவதை அவள் கண்டு மனம் விம்மியிருக்கின்ருள்.
63

Page 85
மூவர் கதைகள்
அவளுடைய ரத்தம் மகனிலும் ஒடுகின்றது.
அந்த ஒல்லியான, அடர்ந்து சுருண்ட மயிர் நெற்றி யில் புரளும், சிரிப்பற்ற மகனின் வாழ்வு அனுபவங்களும் அவளுடைய கசப்பான அனுபவங்களைப்போலவே மாறு பாடின்றி அமைந்திருந்தன.
-ஒரே கதையின் மறுபக்கமா இதுவும்!
பிரித்தானிய ஏகாதிபத்திய யுத்தத்தின் ஞாபகச் சின்னம் “மக்கள் அரசாங்க” மந்திரிமாரை வரவேற்க வந்திருந்த மக்களுக்கு சவால் விடுவதுபோல நாற்சந்தியில் தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.
அந்த ஏகாதிபத்திய சின்னத்தை அவன் தலைகுனி வோடு பார்க்கின்றன்.
அவன் மெதுவாகத் திரும்பி, கவிழ்ந்த தலையுடன் நடந்துகொண்டிருக்கின்முன்.
பல சம்பவங்கள் அவனுடைய நெஞ்சில்வந்து முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.
**தொழிலாளியள் பாராளுமன்றத் தேர்தல் மூலம் அர சாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தேலும் எண்டது ஒருநாளும் நடக்காத காரியம். உது உலகத்திலை எந்த நாட்டிலையும் முந்தியும் நடக்கேல்லை. இனிமேலும் நடக் காது. உதிலை ஏன் வீணுய் உலையிருய்? உதை விட்டிட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி காட்டுகின்ற புரட்சிகர வழிக்கு கட்டாயம் கூடிய கெதியிலை நீ வருவாய்.”
தேர்தலின்முன்பு தனது நண்பன் கூறியது அவனு GoÖ) L- LJ நினைவலையில் உதிக்கின்றது.
இதை என்ரை நண்பன் எவ்வளவு உதாரணங்களோடு நம்பிக்கை மேலிடக் கூறினன்.”
164
ཡིན།
/
 

es
முடிவிலிருந்து ஆரம்பம்
அவன் விழிப்பை டகின்றன்.
விழிப்படைந்த அவன் அந்த நண்பனைச் சந்திப்பதற்கு விரைவாகச் செல்கின்றன்.
I அவனை - என்ரை நண்பனை எவ்வளவு கவனியாது" في
நடந்துவிட்டேன்!”
சிந்தனை அழுக்குகள் அகன்றுவிட்ட நெஞ்சம்.
புதிய பாதையில் அவன் வேகமாகச் சென்றுகொண் டிருக்கின்றன்.
இப்போது அவனுடைய இதயத்தில் சுமையில்லை.
அவனுடைய நடையில் உறுதி.
165

Page 86
!_)~
)**
 


Page 87


Page 88
இந் நூலாசிரியர்கள்
கொட்டும்பனி. (சிறுகதை)
நீர்வை. பொன்னே மேடும் பள்ள( உதயம் (சிறுக
 

"
ཞི་
யோகநாதன்.
G யோகநாதன் கதைகள் (சிறுகதை)
பன்: மும் (சிறுகதை) தை)