கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பச்சை மண்ணும் சுட்ட மண்ணும்

Page 1


Page 2
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பச்சை மண்ணும்
சுட்ட மண்ணும்
கா. போ. இரத்தினம், பா. உ.
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைத் தொகுப்பு
y
தமிழர் விடுதலைக் கூட்டணியின்
ஊர்காவற்றுறைத் தொகுதிக் கிளை வெளியிட்ட
விலை: 300 ரூபா

Page 3
12
3.
4.
2-6Tsuj60s)
ës&&&aae apo gagag
முன்னுரை
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும்
பாராளுமன்றத்திலும் தமிழ்ப் புறக்கணிப்பு தெற்குக்கு ஒரு நீதி வடக்குக்கு ஒரு நீதியா ?
ஏட்டுச் சுரைக்காய்கள் es.
தமிழ்ஈழவாதிகள் பயங்கரவாதிகளா
வாக்குவேட்டை நியமனங்கள்
ஊழற் சேற்றுக்குள் சிக்கிய உலொறி
எங்களைத் தனியாக விடுங்கள் 00 9
மகாதேவாப் பாலம் மறைந்த மாயம்
முன்பு உலொறியில் இப்பொழுது வானில்
கச்சேரியில் அறுப்து தேர்தல் கூட்டத்தில் நூறு .
வடபகுதிக்கு ஒன்றும் இல்லை .11.11 கறுவாக்காட்டுத் தமிழ்
எவரும் பேசாத விடயம்
29 بست (۶ 3
31 - 36
37 5.
52 - 54.
60 ܚ 55
61 - 73
74 - 76
77 -- 79
80 - 82
83 - 84
85 - 88
89 - 9
96 ܚܙܝܗܝ 92
r")
 
 
 
 
 
 

முன்னுரை
** பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது' என்பது ஒரு பழமொழி, சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒட்டி வாழ முடியாது; ஒன்றுபட்டு வாழமுடியாது ஒத்துழைக்க முடியாது என்று நான் பாராளுமன்றத்தில் அழுத் தம் திருத்தமாக எடுத்துரைத்தேன். * உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடன் உறைந்து அற்று’ எனும் திருக்குறளை எடுத்துரைத்து ஒற்றுமைப் படாதவர்கள் ஒன்ருக வாழ்வது, குடிசை ஒன்றில் பாம்போடு வாழ் வ ைத ப் போன்றதே என்றும் விளக்கினேன்.
"எங்கள் மக்களுக்கு எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலே நாங்கள் கொடுத்தீ வாக்குறுதியை - சுதந்திர சமதர்ம தமிழ்ஈழம் ஒன்றை நிறுவ முழு ய லுவோம் என்பதனை - இன்னும் நாங்கள் நிறை எ ன் ப  ைத ந |ா டு அறிபும். தேர்தலிலே எங் களுக்குத் r தங்கள் இறைமையை அளித்த தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமையாகும். இதனைப் பண்புள்ள எவரும் மறுக்க முடியாது. * தமிழ்ஈழம் எங்கள் கோரிக்கை ’ என்று நாங்க ள் கூறியதை இந்த நாடு மட்டுமன்று, ஏனைய நாடுகளும் அறியும். எனவே, புனித விடுதலைப் பணிக்கு எங்களை அர் ப் பணித் து ஸ் ள நாம் எமது பணியை அரசியல் சூதாட்டமாகவோ, சேறு நிறைந்த அரசியல் விளையாட்டாகவோ ஆக்கமாட்டோம். எமது பணியைப் புனித பணியாக, நீங்களும் உங்கள் சனதிபதியும் கூறுகின்ற தர்ம நெறியாகவே கொள்கிருேம். எனவே நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கைவிடவோ அவர்கள் எங்களுக்குக் கொடுத்த கட்டளையை மீறவோ எங்களுக்கு உரிமை இல்லை என்பதனை நீங்’ கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். தமிழ்ஈழக் கொள்கை யையும் அதற்குரிய போராட்டத்தையும் கைவிட்டு சுயநலத்திற் காகவோ, உங்களிடம் நல்ல பிள்ளை என்று பெயர் பெறுவதற் காகவோ, ஆற்றலின்மையாலோ நாங்கள் உங்களுடன் இணைய மாட்டோம். எங்களுடன் ஒட்டாத உங்களுடன் இணைவதிலும் - ஒத்துழைப்பதிலும் பார்க்கத் தற்கொலை செய்வது மாண்புமிகு செயலாகும். "ஒட்டாரீபின் ஒருவன் சென்று வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று ’ என்று வள்ளுவர் கூறுகிருர் - இவ் வாறு பாராளுமன்றத்திலே கூறி எங்கள் கொள்கை - குறிக்கோள் தமிழ் ஈழத்தை உருவாக்குதலேயாகும். என்பதனை அசையாமலும் - அஞ்சாமலும், தயங்காமலும் - தளராமலும் நிலைநாட்டியுள்ளோம்.”
* தமிழ்மக்கள் தங்கள் தமிழ் ஈழத் தை மீட்கும் வரை தொடர்ந்து போராடுவார்கள். இதை மறந்துவிடவேண்டாம். இன்று வரை எங்கள் கட்சியைச் சிதைக்க முயன்ற அரசாங்கங்கள் யாவும் கடைசியில் வீழ்ச்சி அடைந்த வரலாற்றை நீங்கள் புதுப்பிக்க

Page 4
வேண்டாம்" என்றும் 2011-79 இல் பாராளுமன்றத்தில் ஐக்கிய
தேசியக்கட்சி அரசாங்கத்தை எச்சரித்துள்ளேன்.
羈 நான் 1972 இல் எழுதி வெளியிட்ட அடிமைச் சாசனம் எனும் நூவில் பின்வருமாறு கூறினேன். சிங்கள அரசாங்கத்தோடு சேர்ந்து * தமிழர்' எனப்படும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர் இதனை ( அரசியல் அமைப்பை ) ஆதரிக்கின்றனர். இந்த நான்கு பாராளு
மன்ற உறுப்பினர்களும் (திருவாளர்கள் 1. அருளம்பலம் 2. தியாக ராசா 3. மாட்டின் 4. இராசன் செல்வநாயகம்) முதன் முதலாகப் பாராளுமன்றம் சென்றவர்கள். இதுவே தங்களுக்கு முதன்முறையும் கடைசிமுறையும் என்பதை நன்கு தெரிந்தவர்கள், இப்பொழுது இந்த நான்கு பேரும் எங்கே? சிறீலங்கா சுதந்திரக்கட்சி, எங்கே ? எனவே, எங்களை அடக்கி ஒடுக்க முற்படும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி
எத்தகைய நிலையை அடையும் என்பதை விரைவில் ಹಾಕ್ಕ ಹಾಲೂರು !
பாராளுமன்றத்தில் நாங்கள் நிகழ்த்தும் இத்தகைய உரை களிலே பெரும் பகுதிகள் - பிரதான பகுதிகள் - பத்திரிகைகளில் வெளிவருவதில்லை; அரசாங்கத்துக்குச் சாட்டை அடி கொடுக்கும் உரைகள், அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டிக்கும் உரைகள், அரசாங்கம் தமிழர்களையும் தமிழ்ப்பகுதிகளையும் புறக்கணிப்பதைக் கோடிட்டுக் காட்டும் உரைகள் தமிழ்ப் பகுதிகளின் தேவைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை இடித்துக் கூறும் உரைகள், * தமிழ்ஈழக் குறிக்கோளை நிலை நாட்டும் உரைகள் முதலியன பெரும்பாலும் மக்களுக்குத் தெரிவதில்லை.
இந்தக் குறையை நீக்குவதற்கும், அரசியலையும் ஆட்சியியலையும் அரிசியியலையும் மக்கள் நன்கு அறிந்து கொள்வதற்கும், பொய்யும் புரட்டும் பரப்பி, மக்களை மயக்கி ஏமாற்றித் திசைதிருப்ப முயலும் அரசியற் பச்சோந்திகளும் புல்லுருவிகளும், பட்டம் பதவிக்காகவும், வயிறு வளர்ப்பதற்காகவும் ஆளும் சிங்களக் கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராகச் செய்யும் பொய்ப் பிரசா ரங்களைக் குழி தோண்டிப் புதைப்பதற்கும், 1979 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நான் பாராளுமன்றத் தில் நிகழ்த்திய உரைகளினைத் தொகுத்து இந்நூலை வெளியிடுகின் ருேம்,
இந் நூலை வெளியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊர் காவற்றுறைத் தொகுதிக் கிளைக்கும் இந் நூலை மிக விரைவில் அச் சிட்டு உதவிய யாழ். சைவப்பிரகாச அச்சகத்துக்கும் எனது நன்றி உரியது. -
வேலணை, கா, பொ. இரத்தினம், to 2a980,
 
 

s
பச்சை மண்ணும்
சுட்ட மண்ணும்
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மூன்ருவது வரவு - செலவுத் திட்டத்தை விவாதித்துக் கொண்டிருக் கிருேம். நிதி அமைச்சர் அவர்கள் பேசிய பொழுது, 8 - 2 வீதப் பொருளாதார வளர்ச்சி இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கிறதென்று குறிப்பிட்டார், இந்த 8 2 வீத பொருளாதார வளர்ச்சியினல், இந்நாட்டு மக்கள் குறிப் பிடத்தக்க நன்மையை - வளத்தைப் பெற்றிருக்கிருர் களா ? பொதுமக்களை இந்த வளம் சென்றடைந்திருக் கின்றதா ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அர சாங்கத் தி ன் பொருளாதாரக் கொள்கையாலும், நிர் வாகத்திறனுலும் பொதுமக்களின் வாழ்வு வளம் பெற் றிருக்கிறது என்பதை அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்துக் காட்டுமா? குறித்துக் காட்டும் என்ருல் மட் டுமே, இந்த அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணிக்கை யைக் கூட்டிவிட்டதால் இந்நாடு வளம் பெற்றுவிட்டது என்று கூறலாம்.

Page 5
} -¡m & ബ
இன்று இந்த அரசாங்கத்தில் கால் அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மு க் கா ல் அமைச்சர்கள், முழு அமைச்சர்கள் இருக்கிருர்கள் என்று நகைச்சுவையுடன் மக்கள் சொல்கிறர்கள். இன்று எண்பத்திரண்டு அமைச் சர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கிருர்கள். இந்நாட் டில் இதுவரையில் இவ்வளவு தொகையான அமைச்சர் கள் இருக்கவில்லை. முன்னர் மூன்று வகையான அமைச் சர்கள் இருந்தார்கள். இப்பொழுது ஐ ந் து வகையான அமைச்சர்கள் இருக்கிருர்கள். அமைச்சர் வகையும் கூட்டப் பட்டிருக்கிறது; அமைச்சர் தொகையும் கூட்டப்பட்டிருக்கிறது. மாவட்ட அமைச்சர்களைக் கால் அமைச்சர்கள் என்றும், பிரதி அமைச்சர்களை அரை அமைச்சர்கள் எ ன் று ம், அமைச்சரவையில் இல்லாத அமைச்சர்களை மு க் கா ல் அமைச்சர்கள் என்றும், ஏனைய அமைச்சர்களை முழு அமைச்சர்கள் என்றும் மக்கள் சொல்கிறர்கள்.
பெருகும் அமைச்சர்கள்
அமைச்சர்களின் வகையையோ, தொகையையோ கூட்டுவதல்ை ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் அடைகிறதென்று கூறினல், அதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சியைக் காட்டுமானுல், நாம், இந்நாடு பொருளா தார வளர்ச்சியை அடையவில்லை என்று கூற முடியாது. இந்த அமைச்சர்களின் தொகையும் இன்னும் கூட்டப் படலாம் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. ஆறு மாவட்டங்களுக்குப் பொறுப்பாக ஒரு பிரதேச அமைச் சர் நியமிக்கப்பட்டு இருக்கிருர், இருபத்துநான்கு மாவட் டங்களை ஆறு ஆருகப் பிரித்தால், மேலும் மூன்று பிர தேச அமைச்சர்களுக்கு இடமிருக்கிறது. இதைப்போல மாகாண அமைச்சர்களை நியமித்தால் ஒன்பது மாகாண அமைச்சர்களை நியமிக்கலாம். ஆகவே, இந்த அமைச்சரவை அடுத்த ஆண்டு மூன்று தானத்தை, அதாவது 100 ஐ எட் டிப் பிடித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
 

, سے 3 حس۔
1980 ஆம் ஆண்டில் நிதி அமைச்சர் கருதும் பொரு ளாதார வளர்ச்சியை அடைய முடியாதென்று நான் கூறு கிறேன். அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தே  ைவ யான சீமெந்து, மரம், இரும்புப் பொருள்கள், குழாய்கள், தார், மின்சாரக் கருவிகள் போன்றவற்றின் விலை பல மடங்கு ஏறிச் செல்வதை நாம் கா ன் கி ருே ம். விலை ஏறிக் கொண்டு போகும் முறையைப் பார்த்தால், 1980 ஆம் ஆண்டில், நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை அடைய முடியாது. ஆக்கப்பொருட் செலவுக்காகப் பெருமளவு பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனல், அந்தப் பணத்தின் பெறுமதி என்ன? 1978ஆம் ஆண்டில் 100 ரூபாவுக்கு வாங்கிய பொருளை, 1980 ஆம் ஆண்டில் 200 ரூபாவுக்கும் வாங்க முடியாதே!
முன்னேற்றம் குறையும்
இந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஆக்கப்பொருட் செலவுக்காக 1213 கோடி 80 லட்சம் ரூபா ஒதுக்கப்பட் டிருக்கிறது. இது மீளவரும் செலவைவிடக் கூடியது. நிதி அமைச்சர் கூறியது போல ஏறக்குறைய அரைப்பங் குக்கு மேல் ஆக்கப்பொருட் செலவுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனல், இதனல் 1980 ஆம் ஆண்டு அ பி வி ரு த் தி த் திட்டங்களில் முன்னேற்றம் கா ண ப் படு மா ? நான் கூறுகிறேன்: * 1978 ஆம் ஆண்டு காணப்பட்ட முன்னேற்றத்திலும் பார்க்க 1980 ஆம் ஆண்டில் எந்த வகையிலும் முன்னேற்றம் அதி கரிக்காது; குறைந்துதான் போகும்.'
1978 ஆம் ஆண்டிலே இந்த நாட்டின் வருவாய் 1164 கோடி 60 இலட்சம் ரூபா ; 1979 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் வருவாய் 1182 கோடி ரூபா, 1980 ஆம் ஆண் டில் 1203 கோடி ரூபா. 1978 ஆம் ஆண்டிலும் பார்க்க 1979 ஆம் ஆண்டு வ ரு வாய் 18 கோடி கூடியுள்ளது. 1979 ஆம் ஆண்டிலும் பார்க்க, 1980 ஆம் ஆண்டு 21 கோடி ரூபாதான் வருவாய் கூடியிருக்கிறது. செலவைப் பார்த்தால் 1978 ஆம் ஆண்டு 1894 கோடி ரூபா செலவு,

Page 6
- 4 sumas
1979 ஆம் ஆண்டு 2024 கோடி ரூபா செலவு. 1980 ஆம் ஆண் டு 2338 கோடி ரூபா செ ல வு இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, 1978 ஆம் ஆண்டு செல விலும் பார்க்க, 1979 ஆம் ஆண்டு செலவு 130 (β.5Γτιφ, ரூபா கூட. 1980 ஆம் ஆண் டி ல் 1979 ஆம் ஆண்டுச் செலவைவிட 314 கோடி ரூபா கூடியிருக்கிறது. எனவே இந்தச் செலவை வைத்துக்கொண்டு, ஆக்கப்பொருளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒப் பிட்டுப் பார்ப்போம்.
ஆக்கப்பொருட் செலவு
1978 ஆம் ஆண்டில் 660 கோடி 60 இலட்சம் ஆக் கப் பொரு ஞ க் கா க ச் செலவு செய்யப்பட்டிருக்கிறது. 1979 ஆம் ஆண்டில் 849 கோடி 40 இலட்சம் ரூபா ஆக் கப் பொருளுக்காகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 1213 கோடி 80 இலட்சம் ரூபா செலவிடப்பட விருக்கிறது. இவற்றை நாங்கள் ஒப்பிடும்பொழுது, ஆக் கப்பொருட் செலவு 1978 ஆம் ஆண் டி லும் பார்க்க, 1979 ஆம் ஆண் டி ல் 188 கோடி ரூபா கூடியிருக்கிறது. 1978 ஆம் ஆண்டு 660 கோடியே 60 இலட்சம் ரூபாவுக்குச் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை, 1980 ஆம் ஆண் டில் 1213 கோடி ரூபாவுக்குச் செய்யமுடியாது. 1978 ஆம் ஆண்டு விலை மட்டத்தை வைத்துக் கணிக்கும் பொழுது, 1213 கோடி ரூபாவுக்கு 1978 ஆம் ஆண்டு செய்த அபி விருத்தி வேலையிலும் குறைவாகத்தான் 1980 ஆம் ஆண் டிலே செய்ய முடியும். எனவே, 1978 ஆம் ஆண்டிலும் பார்க்க, 1980 ஆம் ஆண்டிலே அபிவிருத்திக்கென ஒதுக்கப் பட்டுள்ள இந்தப் பணத்தைக் கொண்டு, கூடிய அபிவிருத்தித் திட்டங்களே நிறைவேற்ற முடியாது. தங்கள் தொகுதிகளிலே நடைபெறுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு எவ்வளவு பண ம் செலவாகின்றது, எவ்வளவு பணம், மீளக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்பதை அறிந் துள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.
 
 

سے 5 --سسس۔
மீளவருஞ் செலவு குறைக்கப்படவில்லை
சென்ற ஆண்டிலே மீளவருஞ் செலவு 1174 கோடி ரூபா. இந்த ஆண்டிலே (1980) மீளவருஞ் செலவு 1124 கோடி ரூபா. இதிலே சிறிது குறைக்கப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சர் கூறியதுபோல, இந்த ஆண்டிலும் பார்க்க 1980 ஆம் ஆண்டில் மீளவருஞ் செலவு 50 கோடி ரூபா குறைக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான், சென்ற ஆண்டு களின் மீளவரும் செலவுகளை நோக்கினல், 1978ஆம் ஆண்டு வரை கூடி, 1979ஆம் ஆண்டிலே குறைந்து, 1980 ஆம் ஆண் டிலே மேலும் குறைந்திருக்கிறது. ஆனல் 1980 ஆம் ஆண் டிலே இந்தச் செலவுக் குறைவுக்குக் காரணம் உணவு மானியமே - பங்கீட்டுப் பொருளுக்காகக் கொடுத்த மானி யம் குறைந்திருக்கிறது. அதனுலேதான் மீளவருஞ் செலவு 1980-ம் ஆண்டிலே குறைந்திருக்கின்றது; வேறு எந்தக் கார ணத்தாலும் குறையவில்லை. உணவுக்காக 1978-ம் ஆண் டில் இந்த அரசாங்கம் 207 கோடி ரூபாவும், 1979-ம் ஆண்டில் 239 கோடி 28 இலட்சம் ரூபாவும் கொடுத்திருக் கிறது. 1980-ம் ஆண்டில் இது 127 கோடி ரூபாவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அரிசிப் பங்கீடு முதலியவற்றைக் கொடுக்காமையாலும், உணவு முத்திரை கொடுப்பதனுலும் 106 கோ டி ரூபா இந்த இனச் செலவிலே மிஞ்சியுளது. சென்ற ஆண்டிலே 1174 கோடி ரூபா மீளவரும் செல வாக இருந்தது. இப்பொழுது 1124 கோடி ரூபாவாக இருக்கின்றபடியால் 50 கோடி ரூ பா குறைந்திருப்பது உண்மை. உணவு மானியத்திலே 1980ஆம் ஆண்டிலே 108 கோடி ரூபா மிஞ்சியிருப்பதால், மீள வ ரு ம் செலவுக் குறைவால், இந்த 50 கோடி ரூபா குறையவில்லை என்பது இந்த எண்களைக் கொண்டு நிரூபிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி ஈடுகொடுக்கவில்லை
இந்தச் சூழ்நிலையிலே இந்த அரசாங்கத்தினுடைய
அபிவிருத்தி வேலைகள் நல்ல முறையிலே நடைபெறுதற்கு இன்றியமையாதன என நாங்கள் கூறுவதையே, நிதி

Page 7
سيس j) جنس
அமைச்சர் தமது வரவு - செலவுத்திட்ட உரையிலே கூறி புளர். 1979 நவம்பர் 14 ஆம் திகதி உத்தியோக அறிக்கை பின் 268 ஆம் பக்கத்திலிருந்து வாசிக்கிறேன் :
" தாமதம், விரயம், தே  ைவ ய ந் ற செலவினம், ஆகியவற்றைக் குறைப்பதற்குச் சகல முயற்சிகளும் மேற் கொள்ளப்படும். தேவையற்ற செலவினத்தையும், வினைத் திறமையின்மையையும், வீணழிவையும் குறைப்பதற்கான இப்பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவு கண்டிப்புடன் எனது அமைச்சரவைத் தோழர்கள் நடவடிக்கை எ டு ப் பார் கள் என்பதில் எனக்கு ஐயமெதுவுமில்லை." என்று நிதி அமைச்சர் கூறி யி ரு க் கி ரு ர். இன்று தேவையற்ற செலவினம், திறமையின்மை, த 1ா மத ம் மு த லி ய பல காரணங்கள் உங்களுடைய ஆட்சியைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூற்று நூற் றுக்குநூறு உண்மை. எனவே, இந்தச் சிக்கல்கள் நிறைந்து இருக்கின்ற சூழ்நிலையிலே உங்கள் எண்ணப்படி இந்த நாட்டை விருத்தியடையச் செய்ய முடியுமா? என்று நான் கேட்கிறேன்.
அபிவிருத்தித் திட்டங்களைச் செம்மையாக நிறை வேற்ற வேண்டுமென்ருல், இந்த அரசாங்கத்தின் நிருவாக இயந்திரம் செம்மையாக இயங்க வேண்டும். நிருவாக இயந்திரம் செம்மையாக இ யங் கி ன ல் விரயங்களைக் குறைத்து, கால தாமதத்தைக் குறைத்து, இருக்கின்ற வாய்ப்புக்களே நல்ல முறையிலே பயன்படுத்தி, அபிவிருத் தித் திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த முடியும்? இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கடன் நிதியிலிருந் தும், வெளிநாட்டு உதவிகளின் மூலமாகவும் 1978, 1979, 1980ஆம் ஆண்டுகளிலே எவ்வாறு பணம் பெறப்பட்ட தென்பதையும் வரவு - செலவுத் திட்ட உரையை அடிப் படையாகக் கொண்டு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
 
 

حساب /' سست۔
1978ஆம் ஆண்டில் ஏறக்குறைய 729 கோடி ரூபா பற்ருக்குறையாக இருந்தது. 1979ஆம் ஆண்டில் இப்பற்ருக் குறை 842 கோடிரூபாவாகும். 1980ஆம்ஆண்டில் 892 கோடி ரூபா பற்றுக்குறை காணப்படுகிறது. 1978ஆம் ஆண்டு கட ஞகவும், வெளிநாட்டு உதவியாகவும் 445 கோடி ரூபா பெறப்பட்டிருக்கிறது. 1979 ஆம் ஆண்டிலே வியாபாரப் பொருள் உதவியாகவும், கருத்திட்டத்துக்குப் பெறப்பட்ட உதவியாகவும், கோடையாகவும், 450 கோடி ரூபா கடன் பெறப்பட்டது. 1980ஆம் ஆண்டிலே 552 கோடி ரூபா கடன் பெறப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டு சென்ற ஆண்டிலும் பார்க்க 52 கோடி ரூபா பற்ருக்குறை உண் டாகினுலும், 100 கோடி ரூபாவைக் கூடிய கடனுகப் பெற்றதனலே பற்ருக்குறையைச் சரிசெய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, கடன் மூலமாகத்தான் இந்தத் துண்டுவிழும் தொகை ஈடுகொடுக்கப்பட்டது. அபிவிருத்திகளி னுலே ஈடுகொடுக்க முடியவில்லே என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். - தமிழர்களை அடக்கி ஒடுக்கும் படைகள்
நான் முன்னர்க் கூறியதுபோல இந்த ந ஈ ட் த ப் பொருளாதாரம் பல துறைகளிலும் முன்னேற வேண்டு மென்ருல் தாமதம், வீண் அழிவு நீக்கப்படல் வேண்டும். இன்று என்ன நடக்கிறது? இந்த வரவு - செலவுத் திட் டத்தை நாங்கள் ஆராயும்பொழுது, ஒர் உண்மை தெரி கிறது. இப்பொழுது த மிழ் ப் பகுதிகளிலே படைகளைத் குவித்து வைத்து, அந்தப் ப  ைட களை க் கொண்டு, த மி ழ ர் க ளே அடக்கி ஒடுக்கலாமென்று எண் ணி ப் பாதுகாப்புச் செலவினத்திற்காகக் கூடுதலாகச் செலவு செய்கிறீர்கள். 1978ஆம் ஆண்டில் இந்த அரசாங்கம்பாது காப்பு அமைச்சுக்கு 56 கோடி 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை ஒதுக்கியுளது. (குறுக்கீடுகள்) உள் ள  ைத ச் சொன்னல் உடம்பெல்லாம் நோகும் என்பார்கள்; ஆளுல் உள்ளதைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
1978ஆம் ஆண்டில் 5.66.62,929 ரூபா பாதுகாப்புக் காக ஒதுக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டில் இதற்கேன

Page 8
y) ஷ 岛 ഞ്ഞു
ஒதுக்கப்பட்ட பண ம் 73 கோடி 27 இலட்சம் ரூபா. 1980ஆம் ஆண்டிற்கு 100 கோடி 53 இலட்சம் ருபா ஒதுக் கப்பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டை விட அடுத்த ஆண் டுக்கு 27 கோடி ரூபாவைக் கூடுதலாகப் பாதுகாப்புக் காகச் செலவு செய்யத் தி ட் டம் இட்டிருக்கிறீர்கள். * நாங்கள் செலவுகளைக் குறைத்துள்ளோம்.' எ ன் று நிதி அமைச்சர் அவர்கள் தமது உரையிலே சொன்னுர், சில வகைகளில் சில திணைக்களங்களைப் பொறுத்த அள வில் செலவு குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனல் பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்த ஆண்டுக்கு 100 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறீர்கள். இந்த நாட்டிற்கு எங்கே இருந்து ஆபத்து வரவிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். உறுதியற்ற அரசியல் நிலை இருப்பதாகக் கருதி இப்படிச் செலவு செய்தால், இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
ஊழல் தலவிரித்தாடுகிறது
அபிவிருத்தித் திட்டங்களுக்கு மிக இன்றியமையா தது ஊழலற்ற நிருவாகம். சிறீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்திலும் பார்க்க இந்தக் காலத்தில் எங்கள் பகுதிகளில் ஊழல் பெருகிவிட்டது என்று மக்கள் பேசு கிருர்கள். இதை எவரும் மறுக்க முடியாது. ஐக்கிய தேசி யக் கட்சி 1965 - 1970 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டை ஆட்சி செய்த போது, நாங்க ள் அந்த அரசாங்கத்தில் சேர்ந்திருந்தோம். அப்பொழுது இவ்வளவு ஊழல் தலை விரித்து ஆடவில்லை. அப்போது எங்களோடு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் g)L'jGLIT ழுது அமைச்சர்களாக முன் வரிசையில் இருக்கிருர்கள். அவர்களைப் பார்த்து நான் சொல்ல விரும்புகிறேன்: அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இன்றைய இரு ஆண்டு காலத்தில் நிகழ்வ்தைப்போல் எந்தவிதமான ஊழலும் இடம்பெறவில்லை. ச ஞ தி பதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தால் ஊழல்களை நிரூபிக்க நாங்கள் ஆயத் தமாக இருக்கிருேம்.
 
 

ستييسك (وهي تصينية
*ஆசிரிய நியமனங்கள் பெற்றவர்களை நாங்கள் பதவியிலிருந்து நீக்கமாட்டோம்; அவர் கள் கொடுத்த பணத்தை மீளப்பெறுவதற்கு நாங்க ள் உதவி செய் வோம்." என்று நீங்கள் எங்களுக்கு வாக்குறுதி கொடுக்க வேண்டும். அப்பொழுது எங்கள் பகுதிகளிலே ஆசிரியர் களாக நியமிக்கப்பட்டவர்கள் பலர், 'நாங்கள் ஏழு, எட் டாயிரம் கொடுத்தே உத்தியோகங்களை வாங்கினுேம் * என்று சொல்வார்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முழுப் பொறுப்பையும் ஏற்றே நான் இதைச் சொல்கிறேன். இந்த உண்மையைச் சொல்வதற்கு இதைவிடப் பொருத்தமான வேறு எந்த இடமும் கிடை யாது. கொழும்பு மாவட்ட அமைச்சர், "நாங்கள் இங்கே வருகிருேம்; போகிருேம்' என்று கூறினர். ஆணுல் உண் மையைப் பேசவே நாங்கள் வந்திருக்கிருேம்; என்ன கார ணம் கொண்டும் நாங்கள் உண்மையை மறுக்கவோ மறைக் கவோ முயலோம்; எங்கள் வாழ்வில் நாங்கள் உண்மைக் காகவே போராடி வருகின்றேம். நீங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை நீங்கள் மறுக் கலாம் அல்லது மறைக்கலாம். உண்மை உண்மைதான், இன்று ஊழல் பெருகிக் கொண்டிருக்கிறது.
வேலைவங்கிப் படிவங்கள்
எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சமமாக நடாத்துவோம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனல், என்ன நடக்கிறது? த மி ழ ர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 36 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுக்கு ஆயிரம் தொழில் வங்கி விண்ணப்பப் படிவங்களை நிரப்பி அனுப்பினுர்கள், இந்தப் படிவங்களை நிரப்பும்போது ஒரு நிபந்தனை இருந்தது. ஒரு குடும்பத்தில் ஒருவர் வேலையில் இருந்தால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு உத்தியோ கம் கொடுக்க முடியாது. ஒரு நல்ல கருத்து சமதர்மக் கருத்து. இஃது ஒர் அடிப்படை நிபந்தனை. எனவே நாம் இதனைப் பின்பற்றி எத்தனையோ பேரின் வேதனையையும் வெறுப்பையும் தாங்கி 16,000 தொழிற் படிவங்களை நிரப்பி அனுப்பினுேம், -
罗
%

Page 9
صحبت سے 10. حستعمیت
திட்டமிடல் நிறைவேற்று அமைச்சு எங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின்படி எழுத்துக்கு எழுத்துச் சரி பாக நாம் நிரப்பி அனுப்பினுேம், அந்தப் பதினுருயிரம் படிவங்களுக்கும் என்ன நடந்தது ? அவையெல்லாம் தூக்கி வீசப்பட்டன. எங்கள் நேரம் வீணுக்கப்பட்டது. கடதாசி அச்ச டித்தல் என்பவற்றிற்காக அரசாங்கம் எங்கள் பணத்தைத் தான் செலவு செய்தது. இந்த மாதிரியான ஒர் அநியாயம் இந்த நாட்டில் முன் நடைபெறவில்லை. ஓர் இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு புறக் கணித்துச் சிறுமைப்படுத்தியுளது இந்த அரசாங்கம்.
நாம் அந்தப் படிவங்களைக் கேட்கவில்லை. நீங்கள் தான் தந்தீர்கள். நாம் ஒத்துழைத்தோம். எங்கள் ஆட்சி யில் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்மூலம் உத்தி யோகம் கொடுக்க மாட்டோம். தகுதி உள்ளவர்களுக் குத்தான் கொடுப்போம். ஆசிரியர் நியமனத்தில் 15 பேரை நியமியுங்கள் என்று எங்களைக் கல்வியமைச்சர் கேட்டார்; 75 பேர் கொண்ட பட்டியலை அனுப்பியிருந்தார், 370 க்கு மேல் புள்ளி பெற்றவர்களின் பட் டி ய லே எங்களுக்கு அனுப்பியிருந்தார், அவர்களில் முதல் 15 பேரை நாம் நேர்முகப் பரீட்சை வைத்துத் தேர்ந்தெடுத்தோம். இந்த விடயத்தில் ஒருவராகுதல் எங்களைக் குறைசொல்ல முடி யாது. தகுதி உள்ளவர்களைத்தான் நாம் தெரிந்து எடுத்தோம். பின் என்ன நடந்தது? ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு உத்தியோகம் கிடைத்திருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களை உத்தியோகத்துக்குத் தெரிவுசெய்யக் கூடாது என்று உங்கள் அரசாங்கமே கூறியது. ஆணு ல் ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் ஐந்து பேருக்கு ஆசிரியர் நியமனம் கொடுத்திருக்கிறீர் களே ! உங்கள் சமதர்மம் எங்கே ? சமத்துவம் எங்கே 2 இந்த ஒன்றே, ஒரு மானமுள்ள, அரசியல் நாகரிகம் படைத்த ஓர் அரசாங்கத்துக்குச் சவாலாக அமைகின்றது.
உண்மையான அரசியல் நாகரிகத்தைப் போற்றினுல், இந்த
ஒன்றின் காரணமாகவே இந்த அரசாங்கம் பதவியிலிருந்து
毙
 

ཚང་མ་གླ་ 77 གསང་ཨང་
36frgii)
இந்த விடயத்தை மாண்புமிகு சனதிபதியின் கவ னத்துக்குக் கொண்டு வந்தேன்; பெயர்களையும் கொடுத் தேன். அவர் விசாரிப்பதாகச் சொன்னர். இப்படி எத் தனையோ குடும்பங்களில் நடைபெற்றிருக்கின்றது. இந்த ஊழல் பெருகி நாற்றம் எடுத்ததால், இன்று ஒரு கல்விச் சேவை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அமைச்சரின் அதி காரங்கள் யாவும் - நியமனங்கள், மாற்றங்கள் யாவும் - அந்த ஆணைக்குழுவுக்குக் கொடுக்கப்பட்டுள.
இப்படிப்பட்ட ஊழல்கள் நீக்கப்படா விட்டால் நிதி அமைச்சர் அவர்களின் அபிவிருத்தித் திட்டங்கள் செயற்பட முடியாது. நான் பரீட்சைத் திணைக்களத்தி லுள்ள ஊழல்கள் பற்றிக் கூறவேண்டியதில்லை. அந்த வாக்குப்பணம் வரும்பொழுது நாம் பேசலாம். பரீட்சைத் திணைக்களத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, நான் இப்பொழுது ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். பெளத்த சமயத்தைச் சேர்ந்த மக்களும், இந்து மக்களும் கர்மத்திலே நம்பிக்கை உள்ளவர்கள். தமிழ் மாணவர் களுடைய புள்ளிகளெல்லாம் கூட்டப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டி, அந்த ஓசை அடங்குவதற்கு முன்னர் . * உயர்ந்த இடத்தில் ' இருந்தவர்கள் பலருக்குப் பொய் யான சான்றிதழ்களும், படைக்கப்பட்ட புள் ளிகளும் கொடுக்கப்பட்டன என்பதைப் பத்திரிகைகளும் அம்பலப் படுத்தியுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு வ ர் கைது செய்யப்பட்டுளர் எப்படி ஊழல் பெருகுகிறது என்பதை இதனுலும் அறியத் தக்கதாக இருக்கிறது.
மாவட்ட அமைச்சர்கள்
அ பி வி ரு த் தி த் திட்டங்களைப் பேசும்பொழுது, சென்ற ஆண்டிலே மாவட்ட அமைச்சர்களைப் பற்றி நிதி

Page 10
سيميس في 11 ستستضن
அமைச்சர் அவர்கள் மிகு சிறப்பாகக் கூறியது என்
நினைவுக்கு வருகிறது. அவருடைய பேச்சை நான் வாசிக்க
விரும்புகிறேன். சென்ற 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
15ஆம்திகதி அவர் நிகழ்த்திய வரவு - செலவுத்திட்ட உரை
யில் மாவட்ட அமைச்சர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்ருர் :
* மாவட்ட அமைச்சர் நியமனத் திட்டமானது, பொருளாதார அபிவிருத்தியுடன் பெருமளவில் தொடர் புடைய ஒர் அரசியலமைப்பு ஏற்பாடாகும். இது துரித பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்குச் சிற் ந் த வழி. அதிகாரத்தினைப் பன்முகப்படுத்துவதும் மக்களைப் பங்கு பற்றச் செய்வதுமாகும் எ ன் ப தி ல் அரசாங்கத்துக்குள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றது. எமது மாவட்ட அமைச் சர்களிடமிருந்தும், மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தில் இருந்தும் நாம் சிறந்த பயனை எதிர்பார்க்கிருேம். அவர் களது வெற்றியிலேயே எமது அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றி பெருமளவில் தங்கியுள்ளது.'
அவருடைய இந்த ஆண்டு உரையை நான் நன்கு ப டி த் து ப் பார்த்தேன், தம்முடைய அமைச்சரவைத் தோழர்களைப் பற்றிக் குறிப்பிடும் நிதிஅமைச்சர்,மாவட்ட அமைச்சர்கள் நியமனம் எவ்வளவு வெற்றியடைந்துள்ளது எ ன் பது பற்றியோ அவர்களிடமிருந்து இப்பொழுது எ  ைத எதிர்பார்க்கிருர் என்பது பற்றியோ எதுவும் பேசவில்லை; அவரால் பேச முடியாது. இந்த நாட்டிலே மாவட்ட அமைச்சர் பதவியினுல் துரித அபிவிருத்தி எது வும் உண்டாகவில்லை. இன்று பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திலே முன் சேர்க்கப்பட்ட ஒரு வேலையை மாற்றுதற்கு மாவட்ட அமைச்சருக்கு அதிகார மில்லை. திட்டச் செயற்பாட்டமைச்சின் செயலாளரிடம் அவரும் போகவேண்டியிருக்கிறது.
 

~_ سجنسي 23 ميسين
அ பி விருத்தி, மக்களோடு தொடர்புடையதாக அமைய வேண்டுமென்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார். மாவட்ட மக்களுடைய பிரதிநிதியாக மாவட்ட அமைச் சர் அமையாவிட்டால் அவர் எப்படி மக்களோடு தொடர் யுடையவராக இருக்க முடியும் 2 அன்றியும் மா வட் ட அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களிலேயே வாழ்பவர் களாகவும் இருத்தல் வேண்டும். மாவட்ட அமைச்சர்கள் நியமனத்தால் நிதி அமைச்சர் எதிர்பார்த்தவாறு அபிவிருத்தி வேலைகள் விரைவாகச் செய்யப்படவில்லை .
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பற்றி நான் அனு பவத்தேர்டு பேச முடியும். 1978ஆம் ஆண்டு நாங்கள் மாவட்ட அமைச்சர் இல்லாமல், மாவட்ட அரசாங்க அதிபரோடு சேர்ந்து செ ய் த அபிவிருத்தி வேலைகளை 1979ஆம் ஆண்டிலே செய்யமுடியவில்லை. இரண்டு மாவட்ட அமைச்சர்கள் இந்த மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டிருந் தும் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
யாருடைய பிழை என்று கேட்கிருர், சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினர். இதற்குரிய காரணத்தைக் கூறுகிறேன். முன்னர் ஒர் அரசாங்க அதிபர் சில மாற்றங் களையோ, சில வேலைகளையோ மூன்று நாள்களிலே செய் யத்தக்கதாக இருந்தது. இன்று மூன்று மாதங்கள் சென் ருலும் செய்ய முடியவில்லை. 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இரண்டு வேலைகளை மாற்றித் தரு மாறு, அப்பொழுது இருந்த அரசாங்க அதிபருக்கு எழுதி னேன். அதன்பின்னர் மாவட்ட அமைச்சர் நியமிக்கப் பட்டார். அவர் யூன் மாதம் அந்த இரண்டு வேலைகளை யும் அங்கீகரித்தார். பின்னர் செப்ரெம்பர் மாதம் எனக்கு மறுமொழி வந்தது : “ இவ்வேலைக்குத் திட்டம் நிறை வேற்று அமைச்சுச் செயலாளரின் அங்கீகாரம் வேண்டும்; அதற்காக அவருக்கு அனுப்புகிருேம்.’’ என்று. நான்கு, ஐந்து மாதங்கள் சென்றுவிட்டன. அதன்பின்னர் நாங்

Page 11
- 14 ജ
களும், யாழ்ப்பாண மாவட்ட அமைச்சருமாகச் சேர்ந்து திட்டம் நிறைவேற்று அமைச்சின் செயலாளரைக் கண்டு அவற்றைஅங்கீகரிக்குமாறு கேட்டோம். எனவே, முன்னர் மூன்றுநாளிலே செய்யக்கூடியதாக இருந்த வேலையை, இன்று மூன்று-நான்கு மாதங்களாகியும் செய்ய முடியாமலிருக் கிறது.இத்தகைய கால தாமதத்தைத்தான் நீக்குங்கள் என்று நாங்கள் கேட்கிருேம்,
விநோத நிகழ்ச்சி
இன்னுமொரு விநோத நிகழ்ச்சியை இங்கே கூற வேண்டியிருக்கிறது. இந்த நாட்டு நிருவாக சேவையிலே என்றுமில்லாத ஒரு விநோத நிகழ்ச்சி அதுவாகும். தேர் தலில் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை எங்களைப் பழி வாங்கும் நோக்கத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு நீங்கள் அரசாங்க அதிபராக நியமித்திருக்கிறீர்கள். நாங் கள் அங்கே எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. அவர் சென்ற தேர்தலில் என்னேடு போட்டியிட்டுத் தோற்ற வர். சென்ற தேர்தலிலே அவர் பகிரங்கக்கூட்டம் நடத்த வில்லை. இப்பொழுது அந்தக் குறையை நீக்குவதற்காக எங்கெங்கு அவருடைய கையாள்கள் வரவேற்பு ஒழுங்கு செய்கிருர்களோ, அங்கெல்லாம் போய்ப் பேசித்தன் னுடைய காலத்தைச் செலவிடுகிருர், நிருவாகம் செவ் வனே நடைபெறவில்லை. இதனை அறியாமல் இருக்கின்ற பலர் அறிய வேண்டுமென்பதற்காகவே இ  ைத நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
இந்தச் சிக்கல்களை நீங்கள் முதலில் நீக்காமல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. நிதி அமைச்சர் அவர்கள் கூறியதுபோல வீண்விரயம், வினைத் திறனின்மை, கால தாமதம் இவற்றையெல்லாம் நீக்க வேண்டும். கால தாமதத்திற்கு நான் இங்கே ஒரு உதா ரணத்தைக் கூறுகின்றேன். பொதுநிருவாக உள்நாட்டலு வல்கள் அமைச்சர் இப்பொழுது இந்தச் சபையில் இல்லை. எனது தொகுதியான ஊர்காவற்றுறைத் தொகுதியிலே,
 

سے 15 سس۔
ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபரின் பணிமனை யைக் கட்டுவதற்காகப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திலே பணம் ஒதுக்குவதற்கு அவருடைய அமைச்சின் அனுமதியைக் கேட்டோம் நான் கேட்க
வில்லை. யாழ்ப்பாணக் கச்சேரியே அனுமதியைக் கேட்டு
எழுதியது. இன்று ஒரு வருடமாகிவிட்டது. நான் பல நினைவூட்டற் கடிதங்களை எழுதினேன். இன்னும் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. காத தாமதத்திற்கு இது நல்ல தோர் உதாரணம் அன்றே !
உயரும் வாழ்க்கைச் செலவு
அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் குறைத்து இருக் கிறதா ? அ  ைத க் குறைக்கவே முடியாது. வாழ்க்கைச் செலவு நாள்தோறும் ஏறிக்கொண்டே போகிறது. இது ணுல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - மாதச் சம்பளம் பெறு கின்ற ஊழியர்களுக்கு - அரசாங் கம் இவ்வருடத்திலே இரண்டு முறை சம்பளத்தை உயர்த்தியது. 50 ரூபாவாக வும், 55 ரூபாவாகவும் சம்பளத்தை அரசாங்கம் கூட்டி யது. இந்த 50 ரூபாவினலும், 55 ரூபாவினலும் இன்று
விடம் போல் ஏறியிருக்கின்ற மண்ணெண்ணெய் விலைக்
கும், தேங்காய் எண்ணெய் விலைக்கும் ஒரு குடும்பத்தி னுல் ஈடுகொடுக்க முடியுமா ? இது சாதாரண கணிப்பிற் குரிய விடயமாகும். ஆகவே, 1000 ரூபா வரை மாத வருவாய் பெறுகின்றவர்களுக்கு இந்த அரசாங்கம் மேலும் சில உதவிகளைச் செய்ய வேண்டும்; அன்றேல் வேறு வழி களிலே தொழில் செய்து, அவர்கள் தங்கள் வருவாயைக் கூட்டுவதற்குரிய வாய்ப்புக்களைக் கொடுத்தாலொழிய, இந்த நாட்டிலே அவர்களும், தொழிலாளிகளும் தங்க ளுடைய வாழ்க்கையைச் செம்மையாக நடத்த முடியாது,
விலைக் கட்டுப்பாடு
இந்த அரசாங்கம் செய்யமுடியாததைச் செய்து
விட்டதாகவும் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டதாகவும் சொல்லுகின்றது. என் நண்பர் நல்லூர்ப் பிரதிநிதியவர்

Page 12
--سے 16 سیک (
கள் கூறியதுபோல், விலைக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் விலைகள் ஏறுவதைத் தடுக்க முடியாது. விலக் கட்டுப் பாட்டுக்குமாற்ருக, பொருள்களின் விலைகளையெல்லாம் ஒவ்வொரு 'கடையிலும் ஒவ்வொரு வியாபார நிலையத்திலும் எழுதி வைத்து, அதன்படி பொருள்களை விற்றல் வேண்டும் என்று இவர்கள் சொல்கிருர்கள். இதுவும் ஒருவகைக் கட்டுப்பாடுதான். எனினும் இப் பொழுது இன்றியமையாதது, பொருள்களைக் குறைந்த விலையிலே கிடைக்கக்கூடியதான ஒரு சூழ்நிலையை ஏற் படுத்துவதேயாகும். ஏனென்ருல், எல்லாப் பொருள் களின் விலைகளும் நாளுக்குநாள் ஏற்றப்படுகின்றன.
சில வியாபாரிகள் தங்களுடைய பொருள்களின் விலைகளைக் கண்டபடி கூட்டுகிருர்கள் என்பதை உணர்ந்த வர்த்தக அமைச்சர், அத்தகைய வியாபாரிகளைக் கடுமையான சட்டங்களை நிறைவேற்றித் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிருர், அவரது கூற்றே விலைக் கட்டுப்பாடு மிக இன்றியமையாதது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்புவரை இலவச பாடப் புத்தகங்களைக் கொடுப்பதென்ற நிதியமைச்சரது தீர்மானத்தை நாம் வரவேற்கிருேம். அது நல்லது. ஆணுல் பணம் படைத்தவர்களுக்கும் இந்த வாய்ப்பைக் கொடுக்க வேண்டியதில்லை. புத்தகங்களும் அப்பியாசப்புத்தகங்களும் இல்லாமல் வறிய பிள்ளைகள் பாடசாலைக்குப் போகாமல் இருக்கும் நாள்களும் உண்டு. எனவே, வாய்ப்பில்லாத பிள்ளைகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு திட்டமாகும். வறிய பிள்ளை களுக்கு அப்பியாசப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தல் மட்டுமே, பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம் பூரணமான நன்மையைக் கொடுக்கும் என்று சுட்டிக்காட்ட விரும் பு கிறேன்.
 

( : ..................... 17 \\ .........بسی۔
இன்னும் விலைகள் ஏற்றப்படுமா?
இந்த அரசாங்கம் 1980 ஆம் ஆண்டில் எ ந் த ப் பொருள்களின் விலையையும் ஏ ற் ரு து என்று எண்ணு கிருேம். காலி இடைத்தேர்தல் முடிவுறும் வரைதான் பொருள்களின் விலைகளில் ஏற்றம் இல்லை என்று நாம் சொல்வதை அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டிக்கிருர்கள்.இதற்குக் காலம் தான் பதில் சொல்லும்! யார் சொல்வது சரி என்பது விரைவில் தெரியவரும். காலி இடைத் தேர்தலின் பின்னர் புகைவண்டிக் கட்ட ணங்கள், வசுக்கட்டணங்கள் கூட்டப்படும் என்று மக்கள் பேசிக்கொள்கிருர்கள். இப்படிப் பொதுமக்கள் பேசிக் கொள்வது பின்னர் உண்மையாகி வருவதை நாம் அறி வோம். நிதி அமைச்சரிடம் ஒன்றை நான் கேட்க விரும்பு கிறேன். அவரைக் கட்டுப்படுத்தும் விதத் தி ல் நான் இதைக் கேட்கவில்லை. அடுத்த வருடம் பொருள்களின் விலை கூடாது என்று இந்தச் சபையில் நீங்கள் உறுதி அளிக்க முடியுமா? என்று கேட்க விரும்புகிறேன். புகை யிரத வசுக் கட்டணங்களைக் கூட்டோம் என்று உறுதி தருவீர்களா? -
உலகச் சந்தையில் எண்ணெய் விலை கூட்டப்படும் பொழுது இங்கும் எண்ணெய் விலை கூடும். அதற்கு நாம் பொறுப்பன்று எனலாம். ஆணுல், எண்ணெயைப் பயன் படுத்தும் அளவைக் குறைக்கலாம். அது இன்று நடைபெற வில்லை. இது விடயத்தில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள் ளன. ஆனல் எண்ணெய் விரயமாகாமல் இருப்பதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். விசேட மாகப் பாதுகாப்புப் படையினர்கள் தேவையில்லாமல் எண்ணெயை எரிக்கிருர்கள். பாதுகாப்புப் படையினரின் சீப்புக்களும், கார்களும் விரயம் செய்யும் எண்ணெயின் அளவை அவதானிக்கும்போது, முப்பது ரூபாவுக்கு மேல் விலை கொடுத்துப் பெற்றேலே வாங்கும் மக்களின் மனம் ஈரிந்து கொண்டுதான் இருக்கிறது.

Page 13
س- &# سكس (
நான் அறிந்த வரையில் கல்விளானிலே இரண்டு பேரைப் பிடிப்பதற்கு எத்தனையோ சீப்புக்களும் பார வண்டிகளும் நூற்றுக்கணக்கான மைல்கள் ஒடியிருக் கின்றன. போதாக்குறைக்கு கெலிக்கொப்டரும் அங்கு சென்றிருக்கிறது. இருவரைப் பிடிக்க ஏறக்குறைய ஆயிரம் கலன் எண்ணெய் எரிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய விரயங்கள் தடுக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது.
ஒத்துழைப்பா ?
நேற்று இங்கு பேசிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப் பினர்கள் பலர், சிறப்பாகக் கொழும்பு மாவட்ட அமைச் சர் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப் பினர்கள் தங்களோடு ஒத்து  ைழ க்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்கள்.
* அமரர் செல்வநாயகம் போன்று, அர சு ட ன் சேரும்படி கூட்டணிக்கு அழைப்பு-மல்லிமாரச்சியின் உருக் கமான பேச்சு 1 இந்தச் செய்தி இன்றைய அதாவது 20-11-79 செவ்வாய்க்கிழமைத் ** தினபதி 'ப் பத்திரிகை யில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
எனக்குப் பின்னுல் வீற்றிருக்கும் சிலாப உறுப்பி னர் (திரு, ஹரேந்திரா கொறயா) ஏன் அரசாங்கத்துடன் நாம் ஒத்துழைக்க முடியாது என்று கேட்கிருர், ஒத்து ழைப்பு என்பது இருதலைப்பட்டது; ஒத்துழைப்பு என்பது இரு பகுதிக்கும் சமமானது. ஒநாயும் ஆட்டுக்குட்டியும் ஒத்துழைக்க முடியாது. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும்
ஒட்ட முடியாது. புலியும் புல்வாயும் ஒன்றுக வாழ முடி
யாது. சமமாக - சமத்துவமாக இருக்கும் மக்களிடையே தான் ஒற்றுமை ஏற்படும்.
இந்நாட்டிலே சிங்கள இனத்துக்கும், தமிழ் இனத் துக்குமிடையே பிரச்சனைகள் இருக்கின்றன என்று நாம் மட்டும் சொல்லவில்லை; இந் த அரசாங்கமே தனது
 

வம் 19 டி )
தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல பிரச்சனைகள் இருக்கின் றன என்று கூறியுளது. ஆனல், அவற்றை இன்றுவரை தீர்க்கவில்லை என்பதை எ வ ரு ம் மறுக்க முடியாதுg நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! இப்பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டோம் என்று கூறிய மாண்புமிகு சனதிபதி அவர்களே காங்கேசன்துறை உறுப்பினர் (திரு. அ. அமிர்த லிங்கம்) அவர்களுக்கு எழுதிய கடிதத்திலே சில பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். ஆட்சியைப் பன்முகப்படுத்த வேண்டும் - எல்லா மாவட் டங்களிலும் மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிச் சணுதிபதி ஆணைக்குழுவொன்றும் இப்பொழுது நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு எப்படியாகுமோ?
சரித்திரத்தைத் திருப்பிப் பாருங்கள்
இங்குள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் தச் சபைக்குப் புதிதாக வந்தவர்கள். நாம் 1965ஆம் ஆண்டிலே ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாங் கம் அமைத்த செய்தி அவர்களுக்குத் தெரியாமல் இருக்
கலாம். திருச்செல்வம் அவர்கள் அமைச்சராக இருந்தது
மட்டும் அவர்களுக்குத் தெரிகிறது. அன்று நாம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்தோம்; உடன் படிக்கை எழுதினுேம்; 1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து, இந்நாட்டை ஆளக் கைகொடுத் தோம். எங்கள் உதவி அன்று இல்லாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. ஒத் துழைக்க மறுக்கிருேம் என்று பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை நான் சரித்திரத்தைத் திருப்பிப் பாருங்
கள்’ என்று கேட்டுக் கொள்கிறேன். 1970 ஆம் ஆண்டுச்
சரித்திரத்தோடு நின்றுவிடாமல், 1956 ஆம் ஆண்டுச் சரித் திரத்தையும், 1948 ஆம் ஆண்டு தொடங்கியாகுதல் படித்துப் பார்த்தால் நாம் சிங்கள அரசாங்கத்தோடு ஒத்துழைக்க மறுத் தோம் என்று மனச்சாட்சியுள்ள எவரும் சொல்ல முடியாது.

Page 14
) - || 20 gaine
ஒத்துழைத்தோம்; உடன்படிக்கை எழுதி ஒத்துழைத்தோம். ஆணுல், அது நிறைவேற்றப்படவில்லை. இடையில் விட்டுவிட்டு வந்தோம். இது நாம் கண்ட பலன்.
எங்கள் தலைவர் திருவாளர் செல்வநாயகம் அவர் கள் ஒத்துழைத்தார்கள் என்று சொன்னர்கள். நாமும் அவருடன் சேர்ந்து ஒத்துழைத்தோம். இது பலருக்குத் தெரியாது. 1965 ஆம் ஆண்டு நாம் ஒத்துழைத்ததன் பயணுக 1966 ஆம் ஆண்டு தமிழ்மொழி விசேட சட்டப் பிரமாணங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை நிறை வேற்றிய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமே இவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்று, அன்று பிரதமராக இருந்து தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சியில் அமர்ந்த திருவாளர் டட்லி செனநாயக்கா கேட்ட ஒரு கேள்விக்கு அமைச்சர் திரு. பீலிக்சு ஆர். டயசு பண்டாரநாயக்கா மறுமொழி கூறினர். 'உங்கள் அரசாங்கம் போல எங் கள் அரசாங்கமும் அவற்றை நடைமுறைப்படுத்தாது” என்பது அவருடைய மறுமொழி.
மேலும் அதற்கு மறுமொழி கூறிய அமைச்சர் பீலிக்சு டயசு பண்டாரநாயக்கா ** நீங்கள் நிறைவேற்றிய இந்தப் பிரமாணங்களை உங்கள் காலத்திலேயே நடை முறைப்படுத்தாமல் எப்படித் தட்டிக் கழித்தீர்களோ? அதேபோல நாங்களும் செய்வோம்' என்று உரைத்தார். திரு. டட்லி செனநாயக்கா இரண்டாவது கேள்வி கேட்க வில்லை; வாய் மூடி மெளனியானுர், நீங்கள் அஞ்சாட்டை வாசித்துப் பார்க்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி நிறை வேற்றிய அந்தப் பிரமாணங்களை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி யிலிருந்த நேரத்திலேயே நடைமுறைப்படுத்தவில்லை. இது சரித்திரம்.
எனவே, எப்படி நீாங்கள் உங்களோடு சேர்வது? நான், அந்தப் பிரமாணங்களை நடைமுறைப்படுத்தாமை பற்றி முன்னூறு கேள்விகள் வரை கேட்டேன்; ஒவ்வோர் அமைச்சரையும் கேட்டேன். எனினும், அந்தப் பிரமாணங்
 

கள் நன்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாவட்ட சபை தருகிருேம் என்று அன்று ஆட்சியாளர்கள் சொன் ஞர்கள்; மாவட்டசபை தருவதாகச் செல்லி ஒப்பந்தமும் செய்தார்கள்; ஆட்சியில் இருத்தினேம். அந்த நன்றியை மறந்து மாவட்டசபை பற்றி ஒரு வெள்ளை அறிக்கை யை மாத்திரம் தந்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வந்துவிட்டது என்று சொன்னர்கள். இனியும் சொல்வார்கள் .
பாம்போடு வாழலாமா?
இந்த வரலாற்றை மறைக்காதீர்கள்; மறுக்காதீர் கள். தெரியாதவர்கள் கடந்தகால வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நாங்கள் முன்னர் ஒத்துழைக்க மறுக்கவில்லை "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த உலகத்தை ஒன்றகக் கண்ட ஒரு பெரும் பண்பாட்டின் பின்னணியிலே வந்த தமிழ் இனம் ஒற்றுமையைத்தான் விழைகிறது. இந்த ஒற் றுமை இசைந்த ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் முன்னர் கூறியது போல ஒநாய்க்கும் ஆட்டுக் குட்டிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையாக இருக்கக் கூடாது. சுட்டமண் ணும் பச்சைமண்ணும் ஒட்டாது, ஒட்டாது.
'உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம் போடு உடனுறைந்து அற்று' என்று வள்ளுவர் சொல் கிருர், ஒற்றுமை இல்லாதவர்கள் ஒன் ரு க வாழ்வது ஒரு குடிசையில் பாம்போடு வாழ்வதைப் போல் இருக்கும் என்கிருர் அவர்.
சென்ற பதினன்கு வருடங்களாகத் தமிழ்மொழிப் பிரமாணங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி 300க்கு மேற்பட்ட கேள்விகளை இந்தச் சபையிலே கேட்டும், 100க்கு மேற்பட்ட கடிதங்களை அமைச்சர்களுக்கு எழுதி யும் எதுவும் நடக்காத நிலையிலேயே, இச் சபையில்

Page 15
ա:ԱgԱս- 22
நின்று இதனைப் பேசுகிறேன். நீங்கள் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிங்கள மக்களுடைய வாழ்க்கையிலே சிங்களம் முதலிடம் பெறவேண்டும். அவர்களுடைய மாவட்டங்களில் சிங்களம் முதலிடம் பெறவேண்டும் என்று நான் ஒரு தமிழறிஞன் என்ற முறையில் சொல் வேன், அதுபோலவே எங்களுடைய தாய்மொழிக்கு நீங்கள் முதலிடம் தந்தாலே உண்மையில் உங்களைச் சிங்களமொழிப் பற்று உள்ளவர்கள் என்று கூறுவேன்.
ஒத்துழைக்கவில்லையா?
நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று சொல்ல வேண் டாம். 1972 ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது - திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பி ர த ம ரா க இருந்த பொழுது எங்களுக்குக் கடிதம் எழுதி அந்த அரசியல் நிருணய சபையிலே எங்களையும் சேரச் சொன்னர். சேருவதா சேராமல் விடுவதா என்று எங்களுடைய கட்சியிலே இரண்டு கருத்து இருந்தது. எனினும், நாம் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் நிருணய சபைக்குச் சென்ருேம். ஆணுல், எங்களுடைய மொழி உரிமை, எங்களுடைய ஆட்சி உரிமை, எங்களுடைய குடி உரிமை, எங்களுடைய நில உரிமை எல்லாவற்றையும் மறுக் கும் முறையிலே அந்த அரசியல் அமைப்புத் திட்டம் உரு வானது. அதனுல் இடையில் வெளியேறினுேம்.
இவ்வாறு அவ்வப்பொழுது நாங்கள் படித்த பாடங் கள் பற்பல. வட்டமேசை மாநாடு ஒன்றைக் கூட்டி, எல்லா அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளையும் கூட்டி, தமிழர் களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்போம் என்று சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி, அதைவிடுத்துப் பாராளுமன்றக் குழு ஒன்றை நியமித்து, அதன் மூலமாக எங்களுடைய பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று சொன்ன பொழுது அதில் பங்குபற்ற நாங்கள் மறுத்தோம். எங்கள் ஒத் துழையாமைக்கு இதுதான் காரணம் என்பதை இன்றும்

-ய- 23 கலைமாலை
விளங்காமல், தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிற சில அமைச்சர்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறேன். அக்குழுவில் சேர்ந்தால் எதுவும் நடக்காது என்று அப்பொழுதே சொன்னோம்.
ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தலாம்
இந்த அரசாங்கம் தமிழ்மொழி உரிமைக்குச் சில உறுப்புரைகளை அரசியல் அமைப்பிலே சேர்த்திருக்கிறது. த மிழ் தேசிய மொழியாக்கப்பட்டிருக்கிறது. தமிழைத் தேசிய மொழியாக்கிவிட்டோம் என்று ஆட்சியாளர்கள் சொல்லிப் பிறநாடுகளில் இதை விற்கப்பார்க்கிறார்கள். தேசியமொழி என்று சட்டத்திலே எழுதியிருந்தால் மாத் திரம் என்ன பயன்? இன்றும் எங்களுக்கு தனிச் சிங்களத் திலே தான் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் தான் யாழ்ப் பாண மாவட்டம் ஆளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழிலே ஆட்சி நடைபெறுகிறதா? இது பற்றி மாண்புமிகு சனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் தமிழ்மொழி உரிமைபற்றிய அரசியல் அமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் ஒரு கிழமை யில் செய்யமுடியும் என்று எழுதினேன். இந்த அரசாங்கத் திலே எங்களுக்குச் செல்வாக்கு இருக்குமானால் - இந்த அர சாங்கம் எங்கள் அரசாங்கம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இருக்குமானால் - இந்த அரசாங்கம் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்குமுரிய அரசாங்கமாக இருக்குமானால் - ஒரு மாதத்துக்குள் அவற்றை மு ழு த ா க நடைமுறைப்படுத்த முடியும்.
யாழ் அரசாங்க அதிபர் உங்கள் கட்சியின் பொம்மை:
எங்களுடைய மனம் புண்பட்டிருக்கிறது. அரசியலமைப் பிலே நீங்கள் குறிப்பிட்ட உரிமைகளை எந்தவிதத்திலும். எங்களுக்குத் தரவில்லை. இதற்கு மாறாக என்ன செய்தீர்

Page 16
கள் யாழ்ப்பாண மாவட்டத்தைத் தனி மாவட்டமாக் கினிர்கள். அங்கு அவசரகாலச் சட்டத்தை நாட்டி, போர்ப்படை ஆட்சியைப் புகுத்தி, இந்த நாட்டிலிருந்து அதைப் பிரித்து, இரண்டு மாவட்ட அமைச்சர்களை நிய மித்து, ஒருவருடத்திலே மூன்று அரசாங்க அதிபர்களை அங்கே அனுப்பிவிட்டுக் கடைசியாக எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல், தேர்தலிலே தோற்ற ஒரு வரை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நாங்கள் எதிர்த் ததையும் பொருட்படுத்தாமல் உங்கள் கட்சியின் பொம் மையாக அங்கே அரசாங்க அதிபராக வைத்து உங் களுடைய கட்சியை வளர்க்கிறீர்கள். ஒரு கிழமைக்கு 500 பேரை ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சேர்த்துத் தரு கிறேன் என்று சொல்லித்தான் அவர் அங்கே அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுளர்,
இப்படியெல்லாம் நீங்கள் செய்துவிட்டு ஒத்துழைப் பைப் பற்றி எப்படிப் பேசலாம் ? இதுவரையிலே எந்த
மாவட்டத்திலும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் செய்யப் படாத வகையிலே தேர்தலிலே தோற்கடிக்கப்பட்ட ஒருவர் அங்கே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறர் .நாங்
கள் உணர்ச்சியோடுதான் பேசுகிருேம். எங்கள் LDGØTLř
புண்படுத்தப்படுகிறது. இன்றுகூடப் புத்திரிகைகளிலே செய்தி வந்தது. பருத்தித்துறையிலே பொலிசார் பெரிய அட்டூழியங்களைச் செய்கிருர்கள் என்று, இப்படியாக நீங்கள் எங்களுடைய மக்களிடையே காழ்ப்பை உண் டாக்கி, எங்களுடைய மக்களிடையே வெறுப்பை உண் டாக்கி, பயங்கரவாதம் என்ற போர்வையிலே எங் களுடைய மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டால் இஃது
ஒரு போதும் உங்க ளு க்கு, நன்மையை அளிக்காது.
பயங்கரவாதத்தை ஒரு நாளும் பயங்கரவாதத்தினுல் வெல்ல முடியாது. இது புத்தபெருமானுடைய கொள் கை; அன்புக் கொள்கை,
 

எங்கள் போராட்டம் வெற்றி அளித்துளது
அன்பு வழியைவிட்டு விட்டுப் பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று சொல்கிறீர்கள். இன்று இசுப்பெயின் நாட்டிலே பாசுக்கு என்ற சாதியினர் சுதந்திரத்துக்குப் பே ா ர |ா டு கி ன் ற ன ர். 190 பேர் அங்கே கொரிலாப்
போராட்டத்திலே கொல்லப்பட்டிருக்கிருர்கள். இவர்
களிலே பெரும்பாலானுேர் பாதுகாப்பு உத்தியோகத் தர்கள். அந்த "பாசுக்கு மக்களுக்கு இன்று சுயஆட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சுய ஆட்சி போதாது த னி ஆட்சி வேண்டுமென்று கேட்கிருர்கள். இன்று கியூபெக்கு நாட்டிலே என்ன நடக்கிறது? எல்லா உரிமை களும் மறுக்கப்பட்ட ஒர் இனம் - எல்லா முறையிலும் உரிமை பெற முயல்கின்ற ஒர் இனம் - அகிம்சை வழி யில் நம்பிக்கையுள்ள ஓர் இனம் தன்னுடைய உரிமை யைப் பெறும்வரை, நெஞ்சுக்கு நிறைவு வரும்வரை தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும். இப் பொழுது எங்கள் போராட்டம் வெற்றியளித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கூட எங்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண் டிருக்கிறது. இந்த நாட்டைப் பிரிக்கின்ற ஒரு கட்சி உருவாகி விட்டது என்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். ஆகவே, இவை எல்லாம் இன்று நீங்களும் உலகமும் ஏற்றுக் கொண்ட உண்மைகள்,
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உ ண்  ைம க ளே மறைத்துக் கொண்டு எங்களுடைய கட்சியைப் பலவீனப் படுத்த முயல்கின்றீர்கள். பதுளைப் பாராளுமன்ற உறுப் பினர் பேசுகின்ற பொழுது, வடக்கிலும் கூட்டணியின் செல்வாக்கு வீழ்ச்சியடைகிறது என்று சொல்லியிருக் கிருர், பொதுநிருவாக உள்நாட்டலுவல் கள் பிரதி அமைச்சர் என்ன கூறியிருக்கிருர்? 'வடக்கிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவை இழந்து விட்டது. யோகேந்திரா துரைசுவாமி அங்கே பவனி வருகிறர்,
4.

Page 17
سادس : 26 ماسة =
2
அவர் பெரும் தொண்டு செய்கிருர்' என்று கூறியிருக் கிருர், இப்படிக் கூறி நீங்கள் எதையும் சாதித்துவிட (LPLգ.Ա IIT Ցյ.
எங்களை அழிக்க முயன்றவர்களே அழிந்தனர்
இந்த வரலாறு 1956 ஆம் ஆண்டிலிருந்தே தொடர் கிறது. இன்றுவரையும் இந்த நாட்டிலே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாம் - அது ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி - சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமாக விருந்தாலுஞ் சரி - கூட்டு முன்னணி அரசாங்கமாக இருந்தாலும் சரி - ஆட்சிக்கு வரும்போது எங்களுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன என்று சொல் வார்கள்; வந்த ஒர் ஆண்டுக்குப் பின்னர் 'உங்களை நசுக் குகிருேம், உங்களை அடக்குகிருேம்' என்று சொல்லு வார்கள். இப்படியாக முயன்ற அரசாங்கங்கள் எல்லாமே அழிந்தனவேயொழிய நாங்கள் அழியவில்லை.நாங்கள்.அழிய மாட்டோம். இந்த நாட்டிலே தமிழ்மக்கள் இருக்கும் வரைக்கும் - எங்களுடைய கொள்கை இந்த நாட்டிலே வெற்றி பெறும் வரையும் - தமிழர் விடுதலைக் கூட்டணியை எவராலும் அசைக்க முடியாது. ஏனென்ருல் நாங்கள் சுய நலன்களுக்காகப் போராடவில்லை; நாங்கள் சிங்கள மக் களை அடக்கி, ஒடுக்கப் போராடவில்லை; நாங்கள் இழந்த
உரிமைகளை - நாட்டைக் - கேட்கிறேம்.
எங்களுடைய கருத்தை உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா? நான்கு பேரை நடுவர்களாக நியமியுங்கள். திருவாளர் தேசாய் அவர்கள் இப்பொழுது பிரதமராகஇல்லை. பிரதம மந்திரியாக இல்லாவிட்டாலும் அவரை அழைத்தால் வருவார். நாங்கள் எங்களுடைய கருத்தையும் எடுத்துக் கூறுவோம். நீங்களும் உங்கள் கருத் துக்களை எடுத்துக் கூறுங்கள். உங்களுக்கு எங்கள் மீது சில காழ்ப்புக்கள் இருக்கலாம். எங்களுக்கு உங்களிடத்தில் சில காழ்ப்புக்கள், வெறுப்புகள் இருக்கலாம், எனவே, திரும்பத் திரும்ப இந்த ஒத்துழைப்புப் பாடு
 

o
,' - 7 نور بے
வதினுல் கா எங்களை நோக்கி 'ஒத்துழையுங்கள், ஒத்துழை யுங்கள்” என்று நீங்கள் பாடுவதனுல் பயன் ஒன்றும் இல்லை.
கண்துடைப்பு ..) -
நான் சொல்கின்றவற்றை நீங்க ள் எதிர்க்கவோ மறுக்கவோ முடியாது. புதிய அ ர சி ய ல  ைம ப் புச் சட்டத்தில் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட மொழி உரிமை போன்ற உரிமைகள் கூட நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்டன. இதைச் சுட்டிக்காட்டி நான் எத்தனையோ முறை மாண்புமிகு சனதிபதி அவர்களுக்கு எழுதினேன்; இதற்குப் பொறுப் பான அமைச்சருக்கு எழுதினேன், அவர் தாம் சட்ட ஆலோசனை பெறுவதாகச் சொன்னர். இப்பொழுது இதற்குப் பொறுப்பாக ஒர் அமைச்சரை நியமித்திருக் கிறீர்கள். மிகு நகைப்புக்கிடமான முறையில், 1958 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 28 ஆம் எண்ணையுடைய தமிழ் மொழி விசேட சட்டத்தை நிறைவிேற் றுவதற்கு இந்த அமைச்சர் நியமிக்கப்பட்டார் என்று வரவு - செலவுத் திட்டம் கூறுகிறது.
1958 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 28 ஆம் எண்ணையுடைய தமிழ்மொழி விசேட உரிமைகள் சட்டம் தமிழ் மக்களுக்குப் போதிய உரிமையைக் கொடுக்க வில்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பிலே, தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் 58 ஆம் ஆண்டுச் சட்டத்திலும் பார்க்கக் கூடக் கொடுக் கப்பட்டிருக்கின்றன. ஆனல் 1958 ஆம் ஆண்டுச் சட்டத் தை நிறைவேற்ற நீங்கள் ஒரு அமைச்சரை நியமிப்பீர்கள் எஇருல் அதன் கருத்து என்ன? நீங்கள் ஆக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தந்த உரிமைகளை நடைமுறைப் படுத்தாமல், சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் எங்கள் தலைவர்களைக் கலக்காமல் சாட்டுக்காக நிறைவேற்றிய ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு தமிழ் அமைச் சரை நியமித்தோம் என்று கூறி ஏன் இந்தக் கண்துடைப்பு

Page 18
வேலை செய்கின்றீர்கள்? யாரை ஏமாற்றும் வேலை இது? இதைப் படித்துப் பார்க்கும்படி நான் நீதி அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நிறைவேற்றிய அரசியல் அமைப்புச் சட்டத்திலே குறிப்பிட்ட தமிழ் உரிமைகள் எங்கே?
தொடர்ந்து போராடுவோம்
1958 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 28 ஆம் இலக்கச் சட்டத்துக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திலுள்ள தமிழ் மொழி உரிமைகளுக்கும் எவ் வளவோ வித்தியாசம் உண்டு. அது 20 சதவீத தமிழ் மொ ழி உரிமைகளைக் கொடுக்கின்றதென்றல் உங் களுடைய அரசியலமைப்பு 55 சதவீதமான உரிமைகளைக் கொடுத்திருக்கின்றது. அந்த 20 சதவீத உரிமைகளை நிறை வேற்றி வைக்கத்தான் அவரை நியமித்தோம் என்று உங்கள் மதிப்பீடு கூறுகின்றது. இது எங்களை இழிவு படுத்தும் செயலாகும். எங்களை அறிவற்ற வர் களாக, உணர்வற்றவர்களாகக் கருதும் செயல் என்பதை இவ் விடத்தில் கூறிவைக்க விரும்புகிறேன். நாங்கள் வரை யறையாக - உறுதியாக - அழுத்தம் திருத்த மாக ச் சொல்லுகின்ருேம், நாம் ஒத்துழைக்க ஆயத்தமாக இருக் கின்ருேம். ஆனல், அந்த ஒத்துழைப்பு @CU FLIDLOTTGÖT ஒத்துழைப்பாக, எங்கள் மக்களின் உள்ளத்தில் நிறைந்த ஓர் உணர்வை உண்டாக்கும் ஒத்துழைப்பாக, தமிழ்
மக்களும் இந்த நாட்டில் சிங்கள மக்களோடு சரிநிகர் சம
மாக வாழ்கின்றேம் என்ற உணர்வை உண்டாக்குகின்ற ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலையை உண்டாக்கிவிட்டுக் கேளுங்கள். அதைவிட்டு உங்கள் கைப் பொம்மைகளை வைத்து - தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்களே வைத்து-உத்தியோகம் கொடுத்து, ஒரு கிழமைக்கு 500 பேரை
*

- 29 -
ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சேர்த்துத் தருவேன் என்று கூறும் ஒருவரை அரசாங்க அதிபராக வைத்து உங்கள் கையாலாகாத் தனத்தைக் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின் றேன். நீங்கள் யாரை அனுப்பினுலும் சரி, தமிழ்மக்கள் தங்க ள் உரிமைகளைப் பெறும்வரை தொடர்ந்து போராடு வார்கள். இதை மறந்துவிட வேண்டாம்.
இதுவரை எங்கள் கட்சியைச் சிதைக்க முற்பட்ட அரசாங்கங்கள் கடைசியில் இடறி விழுந்த வரலாற்றை நீங்கள் புதுப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.
(20-11-79 இல் நிகழ்த்திய உரை)

Page 19
2. பாராளுமன்றத்திலும்
தமிழ்ப் புறக்கணிப்பு
பாராளுமன்றத்திலே இருக்கின்ற சில குறைகளைப்பற்றி நான் சென்ற ஆண்டிலும் குறிப்பிட்டேன். இக்குறைகள் நீக்கப்பட வேண்டுமென்று உங்களுடைய கவனத்திற்குப் பலமுறை கொண்டு வந்தேன். இந்தப் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள மதில்களின் நுழைவாயில்களிலே தனிச் சிங்களம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத் தமிழிலும் பொறிக்க வேண்டுமென்று நான் எத்தனையோ முறை எடுத்துக் கூறினேன். இன்னும் அக்குறை நீக்கப்படவில்லை. அதைப்பற்றி நான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங் களிலே முகவரியிட்டு ஒட்டப்படுகின்ற துண்டு ஒன்றை இங்கே நான்  ைவ த் தி ரு க் கி றே ன். அதைப் பிரதம அமைச்சரவர் க ளி ன் கவனத்துக்கும், தலைவரவர்களின் கவனத்துக்கும் இங்கே சமர்ப்பிக்கின்றேன். அதிலே அச்சிடப்பட்டுள்ள முகவரியில் பாராளு மன்ற உறுப்பினர்களுடைய பெயர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. ஆனல் முகவரி தனிச் சிங்களத்தில் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கிறது. பிரதம அமைச் சரவர்கள் தலைவராக இருக்கின்ற நிலைக் கட்டளைக் குழுவில் நான் இதுபற்றி எடுத்துக் கூறியபொழுது, நிருவாக முறையிலே நாங்கள் இதை மாற்றியமைக்கலாம் என்று பிரதம அமைச்சர் சொன்னர். இந்த முகவரி தனிச் சிங்களத்திலே அச்சிடப்பட்டிருப்பதைப் பார்க் கின்ற பொழுது உங்களுடைய பெயரை மாத்திரம்தான் நாங்கள் தமிழில் தருவோம்; முகவரியைத் தமிழிலே தரமாட்டோம் என்று நீங்கள் கூறுவது போலத் தோ ன் று கிற து என்று நான் அன்று எ டு த் து  ைரத் தே ன்; அதையும் தமிழிலே தாருங்கள் என்று எடுத்துரைத்தேன். ஆங்கிலத்தை விட்டுவிடுங்கள். ஆங்கிலத்துக்குக் கொடுக்கின்ற இடத்தைத் தமிழுக்குக் கொடுத்தால் இடமும் சுருக் கமாக இருக்கும்; தமிழர்களின் உரிமையும் பாதிக்கப்படாமலிருக்கும் என்று சொன்னேன். அதைத் தமிழிலே செய்யலாம் என்று சொன் னிர்கள். அனல் இன்றுவரை அது செய்யப்படவில்லை. இதை நான் தலைவரின் கவனத்துக்கு மீண்டும் கொண்டுவர விரும்புகிறேன்.
(30.11-79 இல் நிகழ்த்தியது)

f .
3 தெற்குக்கு ஒரு நீதி 章 வடக்குக்கு ஒரு நீதியா?
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலே வேலை வாய்ப்புக் கொடுப்பது பற்றி எனக்கு முன் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் குறிப்பிட்டார்கள். திருகோணமலையில் உள்ள பிரச்சனை ஒருவகையாக இருக்கிறது. யாழ்ப்பாணத்திலுள்ள பிரச்சனிை வேறு ஒருவகையாக இருக்கிறது.
அரசாங்கமே நாட்டைப் பிரித்துளது
இந்த அரசாங்கமே தமிழ்ப் பகுதிகளைப் பிரித்துவிட்டது. நாம் ஈழத்தைக் கேட்டோம். ஆணுல், அரசாங்கத்தின் செயல்களோ தமிழ்ப் பகுதியைப் பிரித்துவிட்டன. தமிழ்ப் பகுதி  ையப் பிரதி நிதித்துவம் செய்கின்ற 10 பா ரா ஞ ம ன் ற உறுப்பினர்கள் நிரப்பி அனு ப் பிய தொழில் வங்கிப் படி வங் கள் எல்லாம் தூக்கியெறியப்பட்டன. சிங் களப் பகுதிகளில் கடைப்பிடிக்கும் முறைக்கு மாருக எங்கள் பகுதிகளிலே வேறு வகையிலே வேலை வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. எனவே, வேலைவாய்ப்புக் கொடுக்கப்படும் வகையிலே - தொழில் வங்கிப் படிவங்களை அரசாங் கம் பயன்படுத்தும் முறையிலே தமிழ்ப் பகுதிப் பாராளுமன்ற உறுப் பினர்களின் விடயத்தில் ஒருமுறையையும், சிங்களப் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் வேறு ஒரு முறைண்யயும் கடைப்பிடித்து இந்த அரசாங்கமே இந்த நாட்டைத் தொழில் வாய்ப்பிலே பிரித்து வைத்திருக்கிறது. -
யார் இந்த நாட்டைப் பிரிப்பது என்று பிரதமர் அவர்களைக் البري கேட்க விரும்புகிறேன். தமிழ்ப் பகுதியிலே எப்படித் தொழில் வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது? சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பின்னல் திரிந்தவர்களில் பெரும்பான்மையினர் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து ஐககிய தேசியக் கட்சி அமைப்பாளர் என்ற போர்வையிலே தங்கள் பட்டியலைக் கொடுக்கின்ருர்கள். அந்தப் பட்டியலின் அடிப்படையில் உத்தியோகம் கொடுக்கப் படுகிறது.

Page 20
سے 32 حضحسٹسسٹ
யாழ்ப்பாணத்திலே ஒரு தனித் தொழில் வங்கி இயங்குகிற து அங்கு தனிப்பட்ட முறையிலே அரசாங்க அதிபருடைய தலைமை யிலே ஒரு தொழில் வங்கி இயங்குகிறது. இதனை அவரே ஏற்றுக் கொண்டார். அதனை இந்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருக்கின்ற மாண்புமிகு சணுதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.
அங்கேயொரு வேலை வங்கி செயற்படுகிறதாம். அதற்குப் பொறுப்பாக 14 பேரை யார் நியமித்தார்களோ தெரியவில்லை. அதற்கு அரசாங்க அதிபர் தானே தலைவர் என்று எங்கள் பாராளு மன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் சொன்னர். இந்தப் பதினலு பேரும் என்ன செய்கிருர்கள்.? எங்கெங்கோ போய் அவர் களுடைய ஆள்களுக்குப் படிவம் கொடுத்து நிரப்பிக் கொண்டு அதற்குரிய பணத்தையும் சேர்த்துக் கொண்டு வந்து அரசாங்க அதிபரிடம் கொடுக்கிறர்கள். அதன் பின் யார் யாரையோ நியமிக் கிருர்கள். இது என்ன முறை என்று நான் கேட்கிறேன். இதை நான் மாண்புமிகு சணுதிபதி அவர்களுடைய கவனத்துக்கும் கொண்டு வந்திருக்கிறேன். இந்த இடத்தில் உண்மையான ஆட்சி நடக்கிறதா என்று கேட்கிறேன். இந்தமாதிரி அநியாயம் நடைபெறுகிற பொழுது ஊழல் நடைபெறுகிறபொழுது அதை எடுத்துச் சொல்ல வேண்டிய இடம் இது. இது பிரதமருக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழ்ப்பகு தியைநீங்கள் புறக்கணிக்கலாம். தமிழ்ப் பகுதியிலே ஒரு தனிப்பட்ட ஆட்சியை நடத்தலாம். அப்படி நடத்துவதை ஊழல் இல்லாமல் நடத்துங்கள் என்று கேட்பது பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்கள் கடமை மட்டுமன்று, எங்கள் மக்களுடைய கடமையுமாகும்.
அரசியல் பச்சோந்திகள்
ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்துங்கள். தகுதியுள்ளவரைப் புறக்கணித்து விட்டு யார் யாருக்கோ வால் பிடிக்கிறவர்களுக்கு, நீலத்தைப் பச்சையாக மாற்றி விட்டோம் என்று சொல்கிறவர் களுக்குத் தகுதி பாராமல் உத்தியோகத்தைக் கொடுத்தால் திரு கோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் (திரு. ஆர். சம்பந்தன்) அவர்கள் கூறியது போல இளைஞர்களுடைய உள்ளம் கொந்தளிக் கத்தான் செய்யும் ஏன் இப்படி நடக்கவேண்டும்? தெற்குக்கு ஒரு நீதி. வடக்குக்கு இன்னுெரு நீதியா? தெற்கில் பாராளுமன்ற உறுப் பினர்களுடைய கருத்துப்படி உத்தியோகம், வடக்கில் நீலம் அணிந்து இருந்தவர்கள் பச்சை அணிந்தவுடனே அந்த அரசியல் பச்சோந்தி

s
களுடைய எண்ணப்படி தகுதியற்றவர்களுக்கு உத்தியோகம் என்ப தைக் கேட்கும்பொழுது எந்த நல்ல உள்ளமும் கொதிக்காமல் இருக்க முடியாது. இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒத்துழைக்க வாருங்கள், இந்த நாட்டிலே அமைதியாக நாம் இருக்க வேண்டும் என்று சிறிது நேரத்துக்கு முன் பிரதம அமைச்சர் கூறி னர். அமைதி எங்கே பிறக்கும் ? ஒற்றுமை எங்கே பிறக்கும்? நீதி இருக்கிற இடத்திலே, நேர்மை இருக்கிற இடத்திலேதான் பிறக்கும். நான் சொல்கிறேன்: எங்கள் தொகுதிகளைப் பொறுத்தவரை நீதி, நேர்மை, நியாயம் மறைந்து போய்விட்டன. நீங்கள் நீதிக்கு, நேர்மைக்கு, நியாயத்துக்கு இடம் கொடுக்க வேண்டுமென்ருல், ஆட்சியைச் செம்மையாக நடத்த வேண்டும். நாங்கள் சொல்கிற குறைகளைச் சீர்தூக்கித் திருத்த வேண்டும்; அரசியற் காழ்ப்புக் காரணமாக மூடி மறைக்கக் கூடாது. யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான். எனவே, இந்த முறையை அங்கே மாற்றி, தகுதியின் அடிப்படையில் உத்தியோகம் கொடுங்கள் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
,' -- نئی بنی ہے۔
எனக்கு முன் சிலாபம் பாராளுமன்ற உறுப்பினர் (திரு. அரிந்திர கொறயா) அவர்கள் பேசும் பொழுது, அரசாங்க உத்தி யோகத்தர்களால் தகுதி வாய்ந்தவர்களைத் தெரிந்தெடுக்க முடியாது என்று சொன்னர், அரசாங்க உத்தியோகத்தர்களால் அவ்வாறு செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை. பிரதம அமைச்ச (560)LL) அமைச்சிலுள்ள உத்தியோகத்தர்களிடம் இந்தப் பொறுப் து கொடுத்தால் நன்முகச் செய்வார்கள். பிரதம அமைச்சருக்குக் "கணக்குவிட அவர்களால் இயலாது. உண்மையாக நீதியை, நேர் மையை நிலைநாட்ட வேண்டும் என்று நீங்கள் எண்ணினல், அர்சாங்க உத்தியோகத்தர்களைக் கட்சிச்சார்பு இல் லா ம ல் தங்களுடைய கடமையை நிறைவேற்ற நீங்கள் விட்டால், அரசாங்க ஊழியர்கள் நல்ல முறையிலே நடப்பார்கள். அரசியலைப் புகுத்தி, ஒரு பகுதிக்குப் பாதகமாகவும், இன்னுெரு பகுதி க் கு வாய்ப்பாகவும்" இருக்கிற சூழ்நிலையை அரசாங்கத் திணைக்களங்களில் நுழைத்தால் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அமைச்சர்கள் அல்லது அமைச் சர்களுக்கு வேண்டியவர்கள் சொல்கிறபடி தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
அரசாங்க அதிபரின் கோமாளிக் கூத்து
* ஈழநாடு’ பத் திரி  ைக யில் வெளிவந்த ஒரு செய்தி பற்றி உங்களிற் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஐயாயிரம்

Page 21
) حہ۔ 4 مئی --سے
ஆருயிரம் பேர் யாழ்ப்பாணக் கச்சேரியை முற்றுகையிட்டார்கள். கச்சேரியில் உத்தியோகத்துக்காக விண்ணப்பப் படிவம் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டது. நாள் கணக்கில் அங்கே போய்க் காத்திருந் தார்கள்; பல  ைம ல் தூரத்திலிருந்து சென்ருர்கள். என்னு டைய தொகுதியில் நெடுந்தீவு போன்ற இடங்களிலிருந்து கடல் கடந்து சென்ருர்கள்; விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்தார்கள். தொழில் வாய்ப்புக்கான விண்ணப்பப் படிவங்களைக் கச்சேரியிலே
அரசாங்க அதிபர் கொடுத்தார். இன்று அந்த 6,000 இளைஞர்களும்
உத்தியோகம் எங்கே என்று கேட்கிருர்கள்; பலமைல் தூரம் பயணம் செய்து, கச்சேரி வாசலிலே தவம் கிடந்து, விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக்கொடுத்து விட்டு எங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்றுகாத்துக் கிடக்கிருர்கள். சிலர் இரண்டு முறை விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்திருக்கிருர்கள். முதலில் தொழில் படிவங்களை, பின் அரசாங்க அதிபரின் கோமாளிக் கூத்துக்கு ஆளாகி விண்ணப்பங்களை நிர ப் பி க் கொடுத்திருக்கிருர்கள். இப்படி ஒரு கேலிக்கூத்தாக, தொழில் வழங்குகிற நிலமை யாழ்பபாண மாவட்டத் திலே நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பல விடயங்கள் இங்கே உள்ள அமைச்சர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதை உங்க ளுடைய கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது எங்களுடைய é95L@60)LD,
தொழில் வழங்குவதில் சிங்களப் பகுதியையும் தமிழ்ப் பகுதியை யும் வேறு வேருகப் பிரித்து வைத்து, தமிழ்ப் பகுதிகளுக்கு அநியாய
த்தைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். தமிழ்ப்
பகுதிகளில் வாழும் மக்களும் மக்கள்தாம். அவர்களுக்கும் உணர்ச்சி யுண்டு. எனவே இந்த உத்தியோகங்களைத் தகுதி அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்
கிறேன்.
ទិសាយទៅ
பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திலே பல பொதுவான விடயங்களை இங்கு பேசி இருக்கிறர்கள். ஆணுல், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்த அளவில் இந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியும் அப்படி நடைமுறைப் படுத்துவதில் என்ன என்ன சிக்கல்கள் இருக் கின்றன என்பதைப் பற்றியும் நான் இங்கு கூற வேண்டும். பன் முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திலே வருடக் கடைசி யில்தான் அடுத்த ஆண்டுக்குரிய வேலைப் பட்டியலைத் தயாரித்துக் கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கப்படுகிருர்கள். இந்த நடைமுறை வடக்கிலும் தெற்கிலும் ஒரே மாதிரியாகத்தான்

رW" ,
سے 35 ہے
இருக்கிறது. நாங்கள் தயாரித்துக் கொடுக்கும் வேலைப் பட்டியல் கள் ஆண்டுக் கடைசியில் திட்டம் நிறைவேற்றும் அமைச்சுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த அ  ைம ச் சு அவற்றை அங்கீகரித்துத் திருப்பி அனுப்ப இரண்டு மூன்று மாதங்களைச் செலவிடுகின்றது. பின்னர் இவ்வேலைகளுக்கு மதிப்பீடு செய்வதற்கு மாதக் கணக்கில் காலம் செல்கின்றது. வேலைகளுக்கு மதிப்பீடு செய்ய சில திணைக் களங்கள் ஏழு, எட்டு மாதங்களைக்கூட எடுக்கின்றன. வருடத்தில் 12 மாதங்களில் ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குப் பின்னரே வேலைகள் தொடங்கப்படுகின்றன. அதன் பின் எங்கள் பகுதியில் மழை வருகின்றது. இதல்ை வேலைகள் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டில் - 1979 ஆம் ஆண்டில் - வருடக் கடைசியில் தான் வேலைகள் செய்யப்பட்டன. 1977, 1978 ஆம் ஆண்டுகளிலும் பார்க்க இந்த ஆண்டு வேலைகள் நடைபெறுவதில் இடையிடையே தாமதம் உண்டானது. அரசாங்க அதிபர் மாற்றத்தாலும், மாவட்ட அமைச்சர் மாற்றத்தாலும் வேலைகளை முறையாக விரைவாகச் செய்ய முடியவில்லை,
நாங்கள் சில விடயங்கள் குறித்து திட்டம் நிறைவேற்று
அமைச்சின் செயலாளரை மாவட்ட அமைச்சரோடு சந்தித்து உரை
யாடினுேம், அந்த உரையாடலின்போது புது வேலைகளைத் தொடங் கவும், பழைய வேலைகளுக்குச் செலவு கூடுகிறபடியால் அவற்றிற்
குப் பணத்தைக் கூடுதலாகக் கொடுக்கவும் ஒழுங்குகள் செய்ய வேண்டுமென்று கேட்டோம். அதற்குத் திட்டம் நிறைவேற்று
அமைச்சின் செயலாளர் புதிய வேலைகளைத் தொடங்க வேண்டா மென்றும், பழைய வேலைகளையே செய்து முடிக்கலாமென்றும், அவற்றிற்குப் பணம் போதாமல் இருந்தால் எஞ்சும் பணத்தில் கொடுக்கலாமென்றும் கூறினர். அத ன் படி நாம் இர ண் டு மா த ங் களு க் கு முன்னர் கச்சேரியில் மாவட்ட அமைச்சர் தலைமையில் ந ட ந் த கூட்டத்திலும் முடிவெடுத்தோம். அந்த
முடிவின்படி சில வேலைகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனல்
அங்குள்ள அரசாங்க அதிபர் அந்த முடிவைக் குழப்புகிருர், அவர் சில இடங்களில் வரவேற்புகளுக்குப் போகின்ருர், அப்படிப் போகும் இடங்களில் சிலர் வேண்டுகோள் விடுத்தால் உடனே பணம் தரு
கிறேன் என்கிறர். ஆகவே இந்த விடயத்தைத் திட்டம் நிறை
வேற்று அமைச்சின் செயலாளரதும் அதன் பிரதி அமைச்சரதும்
:°ಅ சனதிபதியினதும் கவனத்திற்கு நான் கொண்டு வந்
தன்

Page 22
\
ஜீ ہی سے 36 حضست அங்கீகரிக்கப்பட்ட வேலைகளுக்கு
மாவட்ட அமைச்சருக்கு நான் அனுப்பிய தந்தியை இங்கு வாசிக்கின்றேன்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செ ல வுத் திட்டத்திலே 1979 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட பணத்திலே தி ட் டமி டல் அமைச்சு அங்கீகரிக்காத - நாங்கள் கேட்காத - புது வேலைகளுக்குப் பணம் கொடுப்பதாக அறிகிறேன். இதனை உடனே நிறுத்தி, அங்கீகரிக்கப்பட்ட வேலைகளை முடிப்பதற்கு மட்டுமே தேவையான பணத்தைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சோளாவத்தைபள்ளம்புலம் கிராம முன்னேற்றச் சங்கக் கட்டட வேலையை முடிப் பதற்கு 12,500 ரூபாவும், நடராசா வித்தியாலயத்துக்கு 15,000 ரூபாவும், ஊர்காவற்றுறை புனித மேரி பாடசாலைக்கு 13,000 ரூபா வும், கரம்பன் சண்முகநாத வித்தியாசாலைக்கு 15,000 ரூபாவும் கொடுப்பதற்கு ஆவன இன்றே செய்து அறிவிக்குக'
புதிய வேலைகளை இந்தக் கடைசி மாதத்தில் - 12 ஆவது மாதத்திலே தொடங்குமாறு அரசாங்க அதிபர் பணித்தார். அதை நிறுத்தி, செய்யத் தொடங்கிய வேலைகளுக்கு 'நாங்கள் செய்து முடிக்கிருேம். பணத்தைத் தாருங்கள்' என்று கேட்கின்ற வேலை களுக்கு - பணம் மிஞ்சியிருந்தால் கொடுக்கச் சொல்லி நான் கேட் டிருக்கிறேன். எனவே, திட்டம் நிறைவேற்று அமைச்சு அங்கீகரிக் கின்ற வேலைகளுக்கு மாருக நாங்கள் கேட்டால் புதிய வேலைக்குக் கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு, அரசாங்க அதிபர் தாம் நினைத்தபடி - ஏதோ இப்பொழுது தேர்தல் காலம் போல - சில சில இடங்களுக்குப் போய் 1 அது செய்கிறேன், இது செய்கிறேன் : என்று சொல்லிவிட்டு ஒரு புதிய வேலேக்கு 2000, 3000 ரூபா கொடுக் கின்ற அந்தக் கோமாளிக்கூத்தை நிறுத்த வேண்டுமென்று நான் பிரதம அமைச்சரையும் திட்டம் நிறைவேற்றல் பிரதி அமைச்சரையும் கேட்டுக்கொள்ளுகிற்ேன்.
ஒரு வருடத்திற்கு நாங் கள் வகுக்கின்ற திட்டங்களே நிறை வேற்ற வேண்டுமென்ருல் அரசாங்க அதிபரும் மாவட்ட அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வே ண் டும். இந்த ஒத்துழைப்பு இப்பொழுது இருப்பதாக நாங்க ள் எண்ணவில்லை. முன்னைய காலத் தி லே குறைந்தது ஒரு மா த ம் அல்லது இரண்டு மாதங்களுக்கொருமுறை நாங்கள் சந்திப்போம். என்ன என்ன வேலைகள் நடந்தன, எங்கு எங்கு தடைகள் இருக்கின்றன, என்றெல்லாம் ஆராய்வோம். ஆனல் இப்பொழுது - 1979 ஆம் ஆண்டிலே - ஒரேயொரு முறை ஆராய வாய்ப்புக் கிடைத்தது. எனவே, இந்த நிருவாகம் சீரழிந்து போகாமல் நல்ல முறையிலே நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(30-11-79 இல் நிகழ்த்தியது )

s
ஏட்டுச்
காரைக்காய்கள்
எனது பேச்சைத் தொடங்கும் பொழுது நுவரெ லியா மசுக்கெலியாத் தொகுதி இரண்டாவது பாராளு மன்ற உறுப்பினர் (திரு. அநுரா பண்டாரநாயக்கா) தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்குச் சிங்களத் தேர்ச் சியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்தது பற்றிச் சில குறிப்புக்கள் கூற விரும்பு கின்றேன்.
இந்த நாட்டிலே சில அரசியல்வாதிகள் செத்துச்
செத்துப் பிறக்கிருரர்கள்போல் இருக்கிறது. இந்த அரசாங்
கத்தினுல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட தெரிகுழுவிலே சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் உறுப்பினர் களாக இருந்தார்கள். அவர்களது ஆதரவோடு தான் இந்த அரசியலமைப்புச் சட்டத்திலே தமிழ்மொழிக்குச் சில உரிமைகள்பொறிக்கப்பட்டுள்ளன. இந்தஉரிமைகளைத் தானகவே அரசியல் சட்டத்திலே புகுத்திய அரசாங்கம் தமிழ்மொழி உரிமைகளை முறையாக இன்னும் நடை முறைப்படுத்தவில்லை. அவை ஏட்டுச் சுரைக்காய்களாக ஏமாற்று வித்தையாக முடிந்து விடுமா? என்று கேட்டு நாங்கள் அரசாங்கத்தைச் சாடி வருகின்றேம், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இன்னும் எத்தனையோ விதிவிலக்குகள் தமிழ் அரசாங்க ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டி யிருக்கிறது. தமிழை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே நிருவாக மொழியாக மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.

Page 23
இந்த நாட்டிலே உள்ள சிங்கள மக்கள் எங்கு வாழ்ந்தாலும் எப்படிச் சிங்கள மொழியிலே தங்கள் கருமங்களை ஆற்று கிறர்களோ அதுபோலத் தமிழர்களும் தமிழிலே தங்கள் கருமங்களை ஆற்றுகிற உரிமையைப் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிறது என்கிறர்கள் சிலர்.
இதன்படி எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்தச் சூழ்நிலையிலே, தமிழ் அரசாங்க உத்தியோகத்தர் களுக்கு அதுவும் பழைய அரசாங்க உத்தியோகத்தர் களுக்கு எப்பொழுதோ கொடுக்கப்பட வேண்டிய சில சிங்களமொழிச் சலுகைகளைக் கொடுத்ததற்காக அவர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். தமிழ் மொழிப் பிரச் சனையை வைத்து மக்களிடையே இழந்த அரசியல் செல் வாக்கை மீண்டும் பெறலாம் என எண்ணுகிறவர்களும் இன்றும் இந் நாட்டில் இருக்கிருர்கள். இதை எண்ணும் பொழுது நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி வேதனைப்பட வேண்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஏறக்குறைய 16 மாதங்களாகியும் இன்னும் தமிழ்மொழி உரிமைகள் முற்ற முழுதாகக் கொடுக்கப்படவில்லை.
எழுவருக்கு ஒருவர்
இங்கு பேசிய எதிர்கட்சித் தலைவரவர்கள் மாவட் டங்களின் நிருவாகம் பற்றியும் அரசாங்க அதிபர்களின் நியமனம் பற்றியும் எடுத்துக்கூறினர். இந்தச் சபையிலே பேசிய இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குருநாகல் மாவட்டத்திலே ஒரு தமிழர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிருர் - அதுவும் ஒரு சிங்கள மாவட் டத்திலே தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிருர் - இது எவ்வளவு பெருமைக்குரிய விடயம் என்ற கருத்துப்படக் கூறினர்கள். இலங்கையிலே 24 நிருவாக மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 24 மாவட்டங்களிலே இன்று இரண்டு தமிழர் அரசாங்க அதிபர்களாக இருக்கிருர்கள். குடித் தொகையின்படி கணித்தாலும் ஏறக்குறைய தமிழ்பேசும்
ܬܹܐ

- 89 - )
மக்கள் ஏழுபேர் அரசாங்க அதிபர்களாக இருக்க வேண் டும். தமிழ்பேசும் மக்கள் நிறைந்திருக்கின்ற தமிழ் மாவட் டங்கள் என்று கணித்தாலும் தமிழர்கள் ஏழுபேர் அர சாங்க அதிபர்களாக இருக்கவேண்டும். எனவே, சிங்கள மக்கள் பெருந்தொகையாக வாழுகின்ற ஒரு மாவட்டத் திலே தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமித் திருக்கிருேம் என்று சொல்வது எந்தவிதத்திலும் பொருத் தமுடையதாகாது. அந்தத் தமிழ் அரசாங்க அதிபருக்கும் தமிழ்ப் பகுதிகளிலேயிருக்கின்ற சிங்கள அரசாங்க அதிபர் களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அந்தத் தமிழ் அரசாங்க அதிபர் சிங்களத்திலே தகைமை பெற்றபடி யாலேதான் அரசாங்க அதிபராக இருக்கிருர், தமிழ்ப் பகுதிகளிலே கடமையாற்றுகின்ற சிங்கள அரசாங்க அதிபர்கள் தமிழிலே ஒரு சொல்லுக்கூடத் தெரியாமல் தமிழ்ப் பகுதிகளை ஆள்கிருர்கள். இந்த வேற்றுமையைப் பகுத்தறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுக்க முடியாது. தமிழ்ப் பகுதிகளிலே தமிழ் சிறிதளவும் தெரி யாத சிங்கள அரசாங்க அதிபர்கள் இருக்கிருர்கள் என் பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வேதனையும் வெட்கமும்
உங்களுடைய அரசியலமைப்பிலே தமிழ்ப் பகுதி களிலே நிருவாகம் தமிழிலேயே நடைபெறவேண்டு மென்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனல் இன்று என்ன நடக்கிறது. ஒரு கச்சேரிக்குப் பொறுப்பாக இருக்கின்ற அரசாங்க அதிபர் தமிழ் தெரியாதவராக இருந்தால், எப்படி அந்த நிருவாகத்தைத் தமிழிலே நடத்த முடியும்? எப்பொழுது நீங்கள் தமிழிலே நடத்தப்போகிறீர்கள்? அதற்காக இப்பொழுது என்ன ஆயத்தத்தை செய்திருக் கிறீர்கள்? ஒன்றரை வருடகாலமாக நாங்களும் நெருக்கிக் கொண்டு வருகிருேம். உங்களுடைய அரசியலமைப்பிலே நீங்கள் தருவதாகக் கூறிய உரிமைகளைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டு வருகிருேம். ஆனல் அரசாங்கமோ அசைவதாகக் காணப்படவில்லை. இந்த அரசாங்கம் சில

Page 24
- 40 -
தமிழ் உத்தியோகத்தர்களுக்கு மொழிச் சலுகை கொடுத் திருக்கின்ற பொழுது, இந்தநாட்டை முன்னர் ஆண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியொருவர் அதை எதிர்த்துக் குரல், எழுப்பிய வேதனையும் வெட்கமும் நிறைந்த நிகழ்ச்சியை நாங்கள் இன்று கண்டோம். எனவே, இந்த நாட்டிலே வாழுகின்ற இரு பெரும்பான்மைச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றல் அவர் கள் தங்களைத் தாங்களே, தமது மொழியிலே ஆளுகின்ற உரிமை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இந்த நாட்டிலே தமிழ் மக்கள் மன நிறைவோடு, உரிமையோடு வாழமுடிய வில்லை. இதைப் பலமுறை எடுத்துக் கூறினுேம். , இந்த உண்மையை நீங்கள் நம்பும் வரையும் நாங்களும் கூறிக் கொண்டு தான் இருப்போம்.
யாழ் மாவட்டத்தில் தனியாட்சி
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பற்றி நான் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். யாழ்ப்பாண மாவட்டம் இன்று தனியாக ஆளப்படுகிறது. இலங்கையிலுள்ள 24 மாவட்டங்களிலே இந்த ஆண்டிலே ஒருவருக்குப்பின் ஒருவராக மூன்று அரசாங்க அதிபர்களைக் கண்ட மாவட் டமும் யாழ் மாவட்டமே! இந்த ஆண்டிலே இரு மாவட்ட அமைச்சர்களை கண்ட மாவட்டமும் யாழ் மாவட்டமே. இந்த 24 மாவட்டங்களிலே தேர்தலிலே போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஒருவரை அரசாங்க அதிபராகக் கொண்டிருக் கின்ற மாவட்டமும் யாழ்ப்பாணம் மாவட்டமே. மிகுதி 23 மாவட்டங்களிலும் 23 அரசாங்க அதிபர்கள் கடமையாற் றுகிருர்கள். இவர்களிலே தேர் த லில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள் யாராவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றுகிருரா என்பதை நா ன் உங்களிடத்தில் கேட்க விரும்புகின்றேன்.
தோற்றவருக்கு அரசாங்க அதிபர் பதவி
தேர்தலில் தோற்ற ஒருவரை -இலங்கை நிருவாக சேவையைச் சேராத ஒருவரை-எப்போதோ இளைப்பாறிய ஒரு

w
جیسے ہلمجھ سے
வரை - தேர்தலில் தனது கட்டுப்பணம் இழந்த ஒருவரைதேர்தலில் என்னுடைய தொகுதியில் என்னுடன் போட்டி யிட்டுத் தோற்றுப்போன ஒருவரை - ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடாத ஒருவரை - சிறீலங்கா சுதந்திரக் கட்சியிடம் சென்று அக்கட்சியின் சார்பில் போட்டி யிடுவதற்காக அக்கட்சித் தலைமைப் பீடத்திடம் நியமனம் கேட்டுக் கிடையாமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவரை நீங்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக நியமித்தது ஏன் என்றுகேட்கிறேன்.
அந்தப் பகுதிப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஆகிய நாங்கள் அவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டாம் என்று கேட்டோம். மக்களின் இறைமையை மதிப்பதாகக் கூறுகின்றீர்கள். மக்களின் இறைமையை மந்திரம் போல் உச்சரிக்கின்றீர்கள். மக்களின் இறைமை யைப் பிரதிபலிக்கும் நாங்கள் அப்படி ஒருவரை நியமிக்க வேண்டாம் என்று கேட்டும் நீங்கள் அதைப் பொருட் படுத்தாமல் அவரை அங்கே நியமித்திருக்கிறீர்கள். உங்
களுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திருமலையில்
திரு. நவரத்தினராசா போட்டியிட்டார். அவர் முன்னர் இலங்கை நிருவாக சேவையில் இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவரை நியமித்திருந்தால் அதற்குச் சில காரணங்களைச் சொல்லலாம். மேலும், இப்படியான ஒரு நியமனத்தை ஏன் நீங்கள் மற்ற மாவட்டங்களில் செய்யவில்லை ? உங் கள் அரசாங்கம் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஒருவருக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டுமென்று எண் னினுல் அதை நீங்கள் யாழ்ப்பாணத்திலா பரீட்சிப்பது? கடந்த தேர்தலில் நூற்றுக் கணக்கான சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிருர்கள். அவர் களில் ஒருவரையாகுதல் நீங்கள் சிங்கள மாவட்டம் ஒன்றுக்கு நியமித்துப் பாருங்கள் என்று நான் அரசாங்கத்திற்குச் சவால் விடுகின்றேன்.
份

Page 25
ܝܵܩܘܼܩܹ %4 ܫܳܩܕܩ
நீங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைக்கச் சூழ்ச்சி செய்கிறீர்கள். மக்களுக்கு மாமுகமக்களின் இறைமைக்கு மாருக - மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு மாருக-ஒர் அரசாங்க அதிபரை யாழ்ப்பாணத் தில் நியமித்திருக்கிறீர்கள். அதனுல் அங்கே நிருவாகம் சீர்குலைந்துபோய் இருக்கிறது. ஆகவே, அங்கே நிருவாகம் செம்மையாக நடைபெற வேண்டுமானல் நீங்கள் உடனே அவரை மாற்றி இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த ஒரு வரை மற்ற மாவட்டங்களில் அரசாங்க அதிபர்களே நியமித்தது போல நியமிக்க வேண்டுமென்று நான் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஆள் பிடிக்கவா அரசாங்க அதிபர்
எங்கள் கட்சியில் சேர்ந்த ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆள் பிடிக்க அரசாங்க அதிபர் என்ற போர்வையில் அங்கு வைத்திருக்கிருேம் என்று சொல்லுங் கள். முன்னர் அமைச்சர் குமாரசூரியர் போன்ற ஒருவர் அதிகாரத்தில் இருந்தார். அவரைப் போன்ற ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கவில்லை, ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆள்பிடிக்க ஒருவரை அரசாங்க அதிபராக நாங்கள் வைத்திருக்கிறுேம் என்று நீங்கள் சொன்னுல் அதை நாங் கள் எதிர்க்கவில்லை. அதில் உண்மை இருக்கிறது. ஆகவே உண்மையைச் சொல்லுங்கள். அப்படி உண்மையைச் சொல் லாது மறைத்தாலும் அவரது செயலே அதைக் காட்டு இன்றது. அவர் என்ன செய்கின்ருர்? அங்கே அவரது கை யாள்கள் சிலர் இருக்கிருர்கள். உத்தியோகம் கொடுக் கிருர் என்று சொன்னவுடன் சில இளைஞர்களும் அவருக் குப் பின்னுல் செல்கிருர்கள். இக் கையாள்கள் யார்? அவருக்காக யாழ்ப்பாணத்தில் மேடை ஏறுபவர்கள் யார்? இன்று அவருக்கு வரவேற்பு வைப்பவர்கள் யார்? எல் லோரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர்கள்ே. சில இடங்களில் அவருக்கு வரவேற்பு வைக்கப்படுகிறது.
 
 

.............۔ 43ھ ) حسینے
இவ் வரவேற்புகளுக்கு உதவி அரசாங்க அதிபர்களும் வலிந்து அழைக்கப்படுகிருர்கள். இந்த வரவேற்புக் கூட் டங்கள் எப்படி நடக்கின்றன. அவை அரசியற் பிரசாரக் கூட்டங்களாகவே நடக்கின்றன.
)
அரசாங்கத்தின் கைப்பொம்மை
அவரை ஐக்கிய தேசியக்கட்சிப் பிரசாரக் கூட்டத்தை நடத் துவதற்குத்தான் வைத்திருக்கிறேம் என்று நீங்கள் வெளிப் படையாகக் கூறுங்கள்; நாம் மறுக்கவில்லை ! ஏன் ? பெரிய தொரு கட்சியாக இருக்கின்ற நீங்கள், அரசாங்க அதிபர் என்ற ஒருவரை வைத்துக்கொண்டு வரவேற்புக் கூட்டம் என்ற பெய ரில் அரசியற் பிரசாரம் செய்யவேண்டும்? ஏன் இந்தக் கோமா ளிக் கூத்து ? ஏன் இந்தக் கைப்பொம்மையை வைத்துக் கொண்டு எங்களையும் ஏமாற்றி, உங்களையும் ஏமாற்றி, உல கத்தையும் ஏமாற்றுகிறீர்கள் என்று கேட்கிறேன்.
அவர் என்ன செய்கிருர் ? அபிவிருத்திச் சங்கங்கள் என்ற பெயரில், இல்லாத சங்கங்களின் "மகசர்களைச் சிலர் கொண்டு வந்து அவருக்குக் கொடுப்பார்கள். உடனே அவர் நான் எல்லாம் செய்வேன் என்று சொல்வார். அவர் இப்பொழுது அங்கே தணிக்கை அதிகாரியாகவும் இருக்கிருர், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட் டத்தின்கீழ் முறையாகப் பணம் ஒதுக்கப்பட்ட வேலைகளை, தான் செய்விப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகளை வெளி யிடுகிறர். இப்படிச் சொல்வது சரியில்லை; இவை பன் முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ்ப் பணம் ஒதுக்கப்பட்ட வேலேகள், இவை அரசாங்க அதி பரால் செய்யப்பட்ட வேலைகளல்ல; யான் அமைச்சர் களோடு தொடர்புகொண்டு செய்வித்த வேலைகள் என்று நான் அறிக்கை விடுத்தால் அந்த அறிக்கை முழுவதை யும் பத்திரிகையில் வராமல் அவர் தடுக்கிருர், அப்படி நான் விடுத்த ஓர் அறிக்கையை இங்கு வாசிக்கிறேன்.

Page 26
) 44 பொய்ப்பிரசாரங்களால் பெருமைபெற முடியுமா? எனது முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டங்களை
யோகேந்திரா துரைசுவாமி தலையில் சுமத்தலாமா?
" அபிவிருத்திச் சபைப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற யோகேந்திரா இணக்கம்’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியினைக்
கண்ணுற்றேன். கரம்பொன் நாரந்தனைப் பகுதிகளில் அபிவிருத்திச்
சபைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. புதுப்புது அபிவிருத்திச் சபைப் பிரதிநிதிகள், யோகேந்திரா துரைசுவாமியைப் பேட்டி காண் பதாகவும், அவர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும், இடையிடையே செய்திகள் வெளி வருகின்றன. இவை " இரப்பானைப் பிடித்ததாம் பறப்பிராந்து ' எனும் பழமொழியைத்தான், தமிழ் மக்களின் ஆட்சி உரின்மக்காகப் போராடும் எங்களுக்கு நினைவூட்டுகிறது.
முன்னேய அரசாங்கத்தின் அமைச்சர் குமாரசூரியரும் நெடுந்தீவு மக்களும், வேலணையிலுள்ள அவருடைய தொண்டர்களும் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினர். ஆனல் எதையும் அவர் செய்யவில்லை. அவர் ஓர் அரசியல்வாதி. யோகேந்திரா ஓர் அரசாங்க உத்தியோகத்தர். இவருக்கு ஐ. தே. கட்சி அரசாங்கத்தி டம் செல்வாக்கிருக்கின்றதென்றும் இவர் பலவற்றைச் செய்விப்பார் என்றும் எண்ணுபவர்கள் புதிய திட்டங்கள் சிலவற்றைச் சமர்ப்பித் துச் செய்வித்தால் அதனுல் பயனைப் பெறலாம்.
சென்ற பல ஆண்டுகளாக நான் செய்த முயற்சியால் நடைமுறைப் படுத்தப்பட இருக்கும் திட்டங்களை அவருடைய தலையில் கட்டி அடிப்பதால் பயன் இல்லை. இது உமியைக் குற்றும் உன்மத்தச் செயலாகும். ஊர் காவற்றுறைத் தொகுதி அபிவிருத்திச் சபை சமர்ப்பித்த கோரிக்கை களின் இன்றைய நிலைமையை அறிந்தால் இந்தக் கோரிக்கைகளை விடுத்தவர்களின் உள்நோக்கத்தை யாவரும் அறியலாம்.
ஊர்காவற்றுறை நகரசபையின் இரண்டாவது நீர்விநியோகத் திட்டம் நிதி ஒதுக்கப்பட்டும் அமுல் செய்யப்படாமலிருக்கிறது என் பது சுத்தப்பொய், ஊர்காவற்றுறைப் பட்டின சபை விசேட ஆணை யாளரைக் கேட்டால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அவரே கூறியிருப்பார். இந்தத் திட்டத்துக்கு நிதியை நானே ஒதுக்குவித்தேன். இத்திட்டத்துக்கு எங்கிருந்து தண்ணிரைப் பெறுவது என்பதை ஆராய்ந்து முடிவு செய்வதில் காலம் சென்றது. கடைசியாக மின்தடைமானியின் உதவியுடன் ஒலுவில் சந்தியில் நீர்

)
一45一
இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் இப்பொழுது அகழ்வு ஆராய்ச்சி செய்யப்படுகிறது. நல்லதண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவும் புதிய கருவியான மின்தடைமானியை நீர்வளச்சபை பெற்றுக்கொள்வதற்கும் எனது முயற்சியினலேயே 75,000/= ரூபா கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பொலிசு நிலையக் கட்டடத்துக்குக் காணி ஒதுக்குவித்
தேன். நிதியைப் பெறுவதற்கு இரண்டு வருடங்கள் தொடர்ந்து போராடினேன். இப்பொழுது அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்
டத்தில் ரூபா 18,10,000/= ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக அறி விக்கப்பட்டுள்ளது.
ஊர்தாவற்றுறை அரசினர் வைத்தியசாலைக்குக் குடிதண்ணிர் கொடுப்பதற்குக் குழாய் நீர்த்திட்டம் உருவாக்கப்பட்டுக் கிணறு வெட்டும் வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலைக்கு ஒரு நோயாளர் வண்டியும் அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மக்கள் வங்கிக் கட்டடத்துக்கு இடம் எடுத்துக் கொடுத்து இரண் டாண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது மக்கள் வங்கி அதிகார சபைக் கட்டடத்துக்குப் பணம் ஒதுக்கியுளது. வரைபடங்களும் மதிப் பீடுகளும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை மக்கள் வங்கி அதிகார சபை அங்கீகரித்தவுடன் கட்டடம் கட்டப்படும் என எனக்கு அறி விக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் உட்பட ஒரு செயலகத்தை அமைப்பதற்குக் காணி எடுப்பதற்கு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதவி அரசாங்க அதிபர் அலுவ லகம் கட்டுதற்குப் பொதுநிருவாக உண்ணுட்டு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமெனச் சென்ற ஆண்டு அரசர்ங்க அதிபர் கறி அனுமதிக்கு எழுதினர். யோகேந்திரா பொறுப்பேற்ற பின்னும் மூன்ரு வது நினைவூட்டலை அனுப்பினேன். ஏதும் பயன் இல்லை. அமைச்சின் செயலாளருடன் இப்பொழுது தொடர்பு கொண்டுளேன். விரைவில் அனுமதியை வழங்குவதாகக் கூறினர்/
ஊர்காவற்றுறை வாடிவீடு திருத்தியமைக்கப்படல் வேண்டுமெ னவும் அபிவிருத்திச் சபையினர் வேண்டுகோள் விடுத்தனர். இது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. இந்த அபிவிருத்திச் சபைப் பிரதிநிதிகள் சிலர் புதிய வாடி வீட்டுக்கு முன்னைய அமைச் சர் இலங்கரத்தின அத்திவாரமிட்ட விழாவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டவர்கள், வாடிவீட் டுக்கு மூன்று லட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுதற்கு

Page 27
)
------- 46 ساس۔
மேலும் காலந்தாழ்த்தாமல் ஒப்பந்தத்தில் கொடுக்குமாறு தந்தி மூலம் யோகேந்திராவையே கேட்டுளேன்.
பல மாதங்களுக்குமுன் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் சின்னமடுப் பகுதிய்ை மாதிரிக் கிராமமாக உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வில்லை. இதற்கு அரசாங்க அதிபர்களின் மாற்றங்களும் காரணமாகும். சில சிங்களத் தொகுதிகளில் மூன்று கிராமங்கள் மாதிரிக் கிரா மங்களாக உருவாக்கப்படுவதால் பின்தங்கிய பகுதியான எனது தொகுதியிலும் மூன்று கிராமங்களை மாதிரிக் கிராமங்களாக்குமாறு பிரதம அமைச்சரைக் கேட்டுளேன்.
கடற்கரைப்பகுதிகளில் மட்டுமன்றி மண்கும்பான் அல்லைப்பிட்டி களில் மணல் எடுப்பதையும் நிறுத்துதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட அமைச்சரைக் கேட்டேன். நடவடிக்கை எடுக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டதெனினும் இன்னும் தடை முறையாக விதிக்கப்படவில்லை. இதற்கும் காரணம் கச்சேரி நிருவாகம் சீரழிந்து கிடப்பதேயாகும்.
ஊர்காவற்றுறைச் சந்தை மூன்று லட்சம் ரூபா செலவில் கட் டப்படுகிறது. இந்தச் சந்தைக் கட்டட வேலைகளைச் செய்வதற்கும் சேரி ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வீ டு க ளே க் கட்டுதற்கும் நல்ல ஒப்பந்தக்காரர் முன்வராமையால் காலதாமதம் ஏற்பட்டுளது.
ஊர்காவற்றுறை - காரைநகர் பாலத்தையும் கட்டித்தருமாறு அவர்கள் யோகேந்திராவைக் கேட்கவில்லை. தெரியாமல் விட்டுவிட் டார்கள். இந்தப் பாலத்துக்கு அடையாள வாக்குப் பணம் சென்ற வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுமிடம் பற்றிப் பல வகையான ஆட்சேபனைகள் இந்த அபிவிருத்திச் சபை யைச் சேர்ந்தவர்களும், பிறரும் எழுப்பிக் காலம் தாழ்க்கச் செய்து விட்டனர். இப்பொழுது வரைபடங்களும் செலவு மதிப்பீடும் தயா ரிக்கப்படுகின்றன. விரைவில் தொடங்கப்படும். நான் மாண்புமிகு சனதிபதிக்கு அறிவித்தவாறு மாவட்ட மந்திரிகள், அரசாங்க அதி பர்கள் மாற்றத்தால் யாழ்ப்பாணக் கச்சேரி நிருவாகம் சீர்குலைந்து விட்டது.'
இரண்டாம் முறை பொம்மை விளையாட்டு
ஊர்காவற்றுறையில் வாடிவீட்டைக் கட்டுவதற்கு 1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,50,000 ரூபாவைப் பன்முகப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கினேம். ஆனல், என்ன நடக்கிறது?

(' | سست 47ھ ہسست۔
ஒரு மாதத்துக்குமுன் அரசாங்க அதிபரைச் சந்தித்துவிட்டு வாடிவீடு கட்ட அவர் பணம் தந்தார் என்று பத்திரிகைகளில் பொய்ச் செய் திகளை வெளியிடுகிருர்கள். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட் ட்டத்திலே, அவர் அரசாங்க அதிபர் ஆவதற்கு முன்னரே ஒதுக்கப் பட்ட பணத்தையெல்லாம் அவர் கொடுத்தார் என்று பொய்ச்செய் திகளை வெளியிட்டால், இதை எங்கு எடுத்துக்கூறுவது ? இதைமறுத்து அறிக்கை வெளியிட்டால் பத்திரிகைகளில் வரவிடாமல் அவர் தணிக்கையைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்திவிடுகிருர், இதனுலே தான்அதனை நாம் இங்கே சொல்லவேண்டியவர்களாக இருக்கின்ருேம்,
இந்த வாடிவீடு பற்றிய விடயம் மிகவும் வினுேதமானது. ஊர்காவற்றுறையிலே ஒரு வாடிவீட்டுக்கு 1936 ஆம் ஆண்டில் அமைச்சர் திரு. இலங்கரத்தினு அத்திவாரக்கல் நாட்டியதாற் போலும், அந்த வாடிவீடு கட்டப்படவில்லை. அதன்பின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலே மீண்டும் பணம் ஒதுக் கினுேம்; வாடிவீடு கட்டுவதற்கு ஒழுங்குகள் செய்தோம். இரண் டாவது முறையாக அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைசாமி அதற்கு அத்திவாரக்கல் போடச்சென்ருர், அவர் அத்திவாரக்கல் போடப்போனபோது அவரோடு போனவர் யார் ? திரு. இலங்க ரத்தினவின் வலக்கையாக நின்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊர்காவற்றுறைத் தொகுதி அமைப்பாளாரேயாவர். இன்று அவர் யோகேந்திரா துரைசாமியின் இடது பக்கத்திலே நின்றுகொண்டு இரண்டாம் முறையாக அத்திவாரக்கல் இடுகிற கேலிக் கூத்துக் கள் - பொம்மை விளையாட்டுக்கள் - அங்கே நடைபெறுகின்றன, இதைப் பார்க்கும்போது நிருவாகம் அங்கே எப்படி நடக்கிறது என்று நன்கு உணரலாம் ? இத்தகைய பல செய்திகள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
அந்த வாடிவீட்டுக்குக் கல்லுப்போட்ட பின்பு அவர் நிகழ்த்
திய பேச்சு "டெயிலி நியூசு’ பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.
அது உங்களுடைய கவனத்தைக் கவரத்தக்க பேச்சு, இந்த வாடி வீடு பற்றி நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன் அதனை ‘ஈழநாடு? பத்திரிகைக்கு அனுப்பினேன். 'உங்கள் செய்தி பிழையானது. உண்மை இதுதான்' என்று எழுதினேன். அதில் ஒரு சொல்லுத் தானும் வெளிவராமல் தணிக்கை செய்துவிட்டார் உங்கள் அரசாங்க அதிபர். ஆகையால், அந்த அறிக்கையை என்னுடைய பேச்சுடன் சேர்த்து 'அஞ்சாட்டில்” வெளியிடுவதற்கு இங்கு சமர்ப்பிக்கிறேன்."

Page 28
تحتستے 48 ستستانے (
ஊர்காவற்றுறை வாடிவீடு
மொட்டந்தலேக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முடியுமா? காவலூர்ப் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த அறிக்கை
*காவலூர் வாடிவீடு - கட்டிட வேலைகள் இன்று ஆரம்பம்’ என்று 2-9-79 இல் ஈழநாட்டில் ஒரு பொய்ச்செய்தி வெளியானது. போலிக் காளான் அபிவிருத்திச் சபை ஒன்று யோகேந்திரா துரைச் மியை இரண்டு கிழமைக்கு முன் சந்தித்துக் கோரிக்கை விடுத்ததை அடுத்து வாடி வீட்டைக் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துளது என் றும் அந்தச் செய்தி கூறுகிறது. இந்தச் செய்தி பிழையானது மட்டு மன்றி மக்களைத் திசைதிருப்பி மயக்கவும் முயல்கிறது. எனவே காவ லூர் வாடி வீட்டைக் கட்டுதற்கு நான் செய்த முயற்சிகளை எடுத் துரைத்தல் இன்றியமையாதது. இது பொய்ப் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெறுவதை முறியடித்தற்கும் உதவும்.
1976இல் இந்த வாடிவிட்டுக்கு அமைச்சர் இலங்கரத்தின அத் திவாரமிட்ட பொழுது சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் என்று கூறிக்கொண்டு அவரை வரவேற்ற அரசியல் புச்சோந்திகள் இன்று இரண்டாம் முறையும் இந்த வாடிவிட்டுக்கு அத்திவாரக்கல் இடச் செய்தற்கு வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற முயலும் பொழுது உண்மையை வெளியிட வேண்டியது மிகமிக இன்றியமையாதது.
காவலூர் வாடிவீடு கட்டும் பிரச்சனை ஆறு வருடத்துக்கு மேற்பட்டது. பழைய வாடி வீட்டைத் திருத்த முடியாதென்று முடிவு செய்யப்பட்டதும் புதிய வாடிவிடு கட்டுவதற்குப் பொலிக நிலையத்தின் பின்னுள்ள காணியைப் பெறுதற்கு நான் ஒழுங்கு செய்தேன். இந்தப் புதிய இடத்தில் 1973 ஆம் ஆண்டில் வாடிவிடு கட்டப்படும் என அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா எனக்கு அறிவித்தார். அவருடைய பணிப்பின்படி ஏறக்குறைய மூன்று இலட்சம் ரூபா செலவில் கட்டடத்துக்கு மதிப்பீடு பெறப் பட்டது. அடுத்த ஆண்டில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தமையால் இதற்குப் பணம் அத்தி டத்தில் கேட்கப்பட்டது. இதற்கிடையில் இந்த வாடிவீட்டைப் பெரிதாகக் கட்டுவிக்க விரும்பிய அரசாங்க அதிபர் திரு. லால் விஜயபாலா புதிய மாதிரிப் படத்தையும் மதிப்பீட்டையும் பெற முயன்ருர், மதிப்பீடு ஆறு லட்சம் ரூபாவாயிற்று, அரசாங்கம் இப் பணத்தைக்கொடுக்க முன்வராமையால் இத்திட்டம் கைவிடப் பட்

سس- 4g سس
டது. முன்னைய மூன்று லட்சம் ரூபாத் திட்டத்தின்படி ப.மு. வ. செ. திட்டத்தில் 1976 இல் பணம் ஒதுக்கப்பட்டது. இந்த வேலை யைச் செய்வதற்கு ஒப்பந்தம் செய்வதில் ஏற்பட்ட தடைகள் கார ணமாகக் கட்டட வேலைகள் தொடங்கப்படவில்லை, அரசாங்கமே சில வாடிவீடுகளைப் பொறுப்பேற்று நடத்தும் எனப் பொது நிரு வாக உண்ணுட்டு அலுவல்கள் அமைச்சர் 1973 இல் அறிவித்தார். எனவே இந்த வாடிவிட்டைப் பொறுப்பேற்றுக் கட்டுமாறு அவரை நான் கேட்டேன். அவர் இப்பொழுது கட்டுவதற்குப் பணம் இல்லையென 21-8-78 இல் எனக்கு அறிவித்தார். இந்த ஆண்டின் ப. மு. வ. செ. திட்டத்தில் மாவட்ட முன்னிட்டு வேலைப் பட் டியலில் இதற்கு 2,50,000.00 ரூபா 1978 டிசம்பரில் ஒதுக்குவித் தேன். முன்னைய மூன்று லட்ச மதிப்பீடு இந்த ஆண்டில் ஐந்து இலட்சமாக உயர்ந்தது. எனவே ப. மு. வ. செ. திட்டத்தின் கீழ் மூன்று லட்சத்துக்குள் கட்டத்தக்கதாக ஒரு புதிய மாதிரிப் படத் தை வரைந் து மதிப்பீட்டுடன் தருமாறு கட்டடத் திணைக்கள மாவட் டப் பொறியியலாளரைக் கேட்டேன். அவரும் அயராது உழைத்து மொத்தச் செலவு மூன்று லட்சம் ரூபாவாகும் என 8-6-79 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவித்தார். முன் இரண்டரை லட்சம் மட் டும் ஒதுக்கப்பட்டதால் அரைலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக் குமாறு அரசாங்க அதிபருக்கு ப-7-79 ஆம் திகதி எழுதினேன். பல நினைவூட்டல்களின் பின் 20-8-79 ஆம் திகதிக் கடிதம் மூலம் திட்ட
மிடல் பிரதிப் பணிப்பாளர் நான் கேட்ட தொகை ஒதுக்கப்பட் டதாக எனக்கு அறிவித்தார்.
கட்டடத் திணைக்களத்தையே பொறுப்பேற்றுக் கட்டுமாறு நான் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டது. பணத்தை அத்திணைக் களத்துக்கு உடனே கொடுக்குமாறு புதிய மாவட்ட அமைச்சரை யும் அவரின் செயலாளரையும் தொலைபேசி வாயிலாகவும், தந்தி வாயிலாகவும் நெருக்கினேன். கட்டட திணைக்களத்திற்கு 24 லட்சம் ரூபாவும் கொடுக்கப்பட்டதென 27-8-79 ஆம் திகதிக் கடித மூலம் கக்சேரி எனக்கு அறிவித்தது. உடனே மாவட்டப் பொறியிய லாளருடன் தொடர்பு கொண்டேன். அவர் இந்த மாதம் வேலை தொடங்குவதாக அறிவித்தார். இந்த வரலாற்றுப் பின்னணியில் ஊர்காவற்றுறை - கரம்பொன் - நீாரந்தனை -- அபிவிருத்திச் சபைக் கும், அச்சபை யோகேந்திராவைச் சந்தித்ததற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியுமா ? ’

Page 29
- 50 -
குற்றச்சாட்டு
இன்னும் இரண்டு (பிரதான விடயங்களை நான் இங்கு குறிப் பிடவேண்டிஇருக்கிறது. ஒன்று தமிழ்மொழி உரிமையை ஒட்டியது. அடுத்தது தமிழ் உத்தியோகத்தர்கள் பெறவேண்டிய சிங்கள மொழித் தேர்ச்சி. இப் பொழுது சல முயற்சிகள் நடக்கின்றன. எனினும் விரைவாகச்செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை இங்கு
கூறவிரும்புகிறேன். நான் மாண்புமிகு சனதிபதி அவர்களுக்கு இந்த
விடயங்கள் தொடர்பாகத் தமிழில் எழுதிய கடிதத்திற்கு அவர் எனக் குத் தமிழில் மறு மொழி அனுப்பினர். தமிழ்க் கடிதத்திற்குத் தமிழில் மறுமொழி தந்துவிட்டால் தமிழ்மொழி உரிமைகள் எல்லாம் கிடைத்துவிட்டன என்று கூற முடியுமா? நான் மாண்புமிகு சனதிபதி அவர்களுக்கு எழுதியகடிதத்தில் உங்களைப்போன்ற செயல்வீரர் எமது குறைகளைத்தீர்க்க ஒரு வாரத்திலோ, ஏன் ஒரு நாளிலோ நடவடிக்கை கள் எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனல், பதினறு மாதங்கள் சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இப்பொழுது நான் மாண்புமிகு சனதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தை இங்கு வாசிக்கிறேன்.
மாண்புமிகு ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கள், சனதிபதி, கொழும்பு, அன்புடையீர்!
புதிய அரசியல் அமைப்பும் தமிழ் உரிமையும்
இதனுடன் மாண்புமிகு அல்ஹாஜ் எம். எச் முகமத் அவர் களுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி உரிமைக்காகப் போராடும் நாங்கள் ஆங்கிலத் தில் பேசுகிருேம், எழுதுகிருேம், என உங்கள் கட்சிப் பாராளு மன்ற உறுப்பினர்கள் இடையிடையே எங்க ளத் தெருட்டுகின்றனர். இதில் ஓர் உண்மை பொதிந்துள்ளது. எனவே நான் தமிழ்மொழி உரிமைபற்றி இக்கடிதத்தைத் தமிழில் எழுதுகின்றேன்.
நீங்கள் நிறைவேற்றிய அரசியல் அமைப்பில் தமிழ்மொழிக் குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் உரிமைகளைத் தமிழ் மக்கள் பெறுதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உங்கள் அரசாங்கம் இன் னும் மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தை நோக்குக. உங்கள் அர சாங்கம் விரும்பினுல் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுத்திருக் கலாம். உங்களைப்போன்ற செயல்வீரர்கள் ஒரு வாரத்திலோ ஏன் ஒரு நாளிலோ செய்யமுடியும். -

29
o
sa 51 an.
உங்கள் அரசியல் அமைப்பின் 25 ஆம் பிரிவில் இந்த மொழி உரிமைகளைப் " பயன்படுத்துவதற்குப் போதுமான வசதிகளை அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும்' எனவும் விதிக்கப்பட்டுள்ளது. எனி னும், தமிழ்மொழி உரிமைகளைப் பயன்படுத்துதற்கு அரசு வசதிகளை இன்னும் செய்யவில்லை என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். எனவே, மேலும் காலந்தாழ்த்தாமல் (1) தமிழ்மொழியைப் பயன் படுத்துவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறும் (2) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிருவாகத்தைத் தமிழில் நடத்துதற்கு உடனே ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி
அன்பன்
கா. பொ. இரத்திணம் பா. உ, ஊர்காவற்றுறை,
நடுத்தெருவில் நிற்கிறர்கள்
அரசாங்க உத்தியோகத்தர்கள் பற்றிச் சில குறிப்புக்களைக் கூற விரும்புகிறேன். இப்பொழுது பழைய தமிழ் அரசாங்க ஊழி யர்களுக்குச் சிங்கள மொழிச் சலுகையளிக்கப்பட்டிருக்கிறது. எனி இனும் இந்த அரசாங்கம் மொழித் தேர்ச்சி விதிவிலக்குத் தொடர் பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை சில திணைக்களங்களிலே முறை யாகச் செயற்படுத்தப்படவில்லை. சிங்களமொழித் தேர்ச்சியில்லாதவர் களைத் தண்டிக்கக் கூடாது என்று கூறுகின்ற அறிவுறுத்தலைச் சில திணைக்கள அதிகாரிகள் முறையாகச் செயற்படுத்தவில்லை இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். சிங்கள மொழித் தேர்ச்சியின்மையால் இன்று பல உத்திலோகத்தர்கள் வேலையை இழந்து, தங்களுக்கு நீதி எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறர்கள். தங்கள் உத்தியோகங்களை இழந்து நடுத்தெருவிலே நிற்கின்ற இவ்வூழியர்களுக்கு - சிங்களமொழித் தேர்ச்சி தேவையில்லை என்று விதிவிலக்களிக்கப்பட்ட இந்த ஊழியர் களுக்கு நீதியை வழங்குவதற்கு மேலும் நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட் டங்களிலே வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் பிறப்பு, இறப்புக்களைத் தமிழிலே பதிவு செய்ய முடியாமல் துன்பப்படுகிருர் கள். இந்தக் குறையை நீக்குவதற்கும் அமைச்சர் விரைவாக
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
(1-12-79 இல் நிகழ்த்திய உரை)

Page 30
ழ்ஈழ வாதிகள்
பயங்கரவாதிகளா
அரிசுபத்துவ இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் சில குற்றச் சாட்டுக்களை இங்கே ஆதாரத்துடன் எடுத்துக்காட்டினுர், வாங்குவதற்கெனப் போய்ப் பார்த்த ஆகாய விமானம் ஒன்று, பின்னர் வாங்கியது ஒன்று என்று கூட அவர் இங்கே கூறிஞர். இதுபற்றி விளக்கம் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
யாழ்ப்பாணப் பகுதியைப் பொறுத்தவரையிலே அங்குள்ள பொலிசு உத்தியோகத்தர்கள் பலருக்குத் தமிழ் தெரியாததன் காரணமாக வாக்குமூலங்களைத் தமிழிலே பதியமுடியாமலிருக்கிறது. யாழ்ப்பாணப் பொலிசுக் கண்காணிப்பாளரே இதை ஒரு கூட்டத் திலே பகிரங்கமாகக் கூறியிருக்கிருர். அங்கேயுள்ள பலருக்குத் தமிழ் தெரியாதபடியால் தமிழிலே வாக்குமூலங்களைப் பதியமுடியவில்லை. எனவே பொலிசுக்காரர்களுக்காகத் தமிழிலே வகுப்பு நடத்துவதற் குத் தொடங்கப் போகிருேம் என்று அவரே கூறியிருக்கிருர், எனவே, வாக்கு மூலங்களைத் தமிழிலே பதியக்கூடியதாகப் போதிய தமிழ் அறிவுள்ள பொலிசுக்காரர்களே அங்கே அனுப்பவேண்டும்.
பொலிசுப் படையின் கதவடைப்பு
பொலிசுப்படையிலே தமிழர்கள் மிகக் குறைவாகவே சேர்க்கப்படுகிறர்கள். கடற்படை, தரைப்படை விமானப்படை பொலிஸ் படை ஆகியவற்றிலே எத்தனைபேர் தமிழர்கள் எடுக்கப் பட்டார்கள் என்ற ஒரு கேள்வியை நான் அமைச்சரிடம் கேட்ட பொழுது இச்சபையிலே பதிலளிக்கையில், பாதுகாப்பை எண்ணி அத்தொகையைத் தரமுடியாமலிருக்கிறதென்று அவர் சொன்னர், அத்தொகையை நாங்கள் அறியக்கூடியதாக அமைச்சர் கூறுவார் என்று நான் எண்ணுகிறேன். இறிசேவ் பொலிசுப்படைக்கு யாழ்ப்பாணப் பகுதியில் தமிழர்கள் தெரிவு செய்யப்படவில்லை என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகிறேன். மாவட்ட அமைச்சர் நியமித்
 
 

سيبس لأنه 5 سس
கப்பட்டவுடன் நாங்கள் இந்த இறிசேவ் படைக்கு அவர்களை எடுப்போம் என்று இந்தப் பாராளுமன்றத்திலே கூறப்பட்டது. ஆனல் இன்னும் யாழ்ப்பாணப் பகுதிகளிலே தெரிவு நடைபெறவில்லை.
இப்பொழுது கொடுக்கப்படுகின்ற கடவுச் சீட்டுக்களிலே தமிழ் இல்லை. சிங்களமும், ஆங்கிலமும் தான் இக்கடவுச்சீட்டுக்களிலே காணப்படுகின்றன. இதிலே தமிழையும் சேர்க்குமாறு நான் முன்பும் பலமுறை கேட்டிருந்தேன். புதிய பிரதிகள் அச்சிடப்படும் பொழுது தமிழைச் சேர்க்கின்ருேம் என்று எனக்குக் கூறப்பட்டது. இப் பொழுது புதிதாகக் கடவுச்சீட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. எனவே அவற்றில், தமிழைச் சேர்க்கவேண்டுமென்று நான் கேட்டுக்கொள் கிறேன்.
யாழ்ப்பாணப் பகுதிகளிலே மூடப்பட்ட வங்கிகளிலே சில திறக்கப்பட்டுள்ளன. பல வங்கிகள், சிறப்பாகக் கிராமப்புறங் சுளிலேயுள்ள வங்கிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதற்குப் பொறுப்பானவர்களைக் கேட்டால் - வங்கித் தலைவர்களைக் கேட் டால் - போதியளவு பாதுகாப்பு இருக்கின்றதென்று பொலிசுப் பகுதியினர் கூறிய பின்னரே இவை திறக்கப்படுமென்று சொல் கிருர்கள். இதைப்பற்றி நான் அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். இப்பொழுது பட்டினப் பகுதிகளிலேயுள்ள வங்கிகள் திறக்கப்பட விருக்கின்றன. புங்குடுதீவிலேயுள்ள மக்கள் வங்கி உட்பட கிராமப் புறங்களிலுள்ள வங்கிகள் யாவும் மக்களின் தேவை கருதித் திறக்கப் பட்டவை. இந்த வங்கிகள் யாவும் இன்று மூடிக்கிடக்கின்றன.
ஈழவேந்தன் பயங்கரவாதியா ?
பயங்கரவாதத்திலே ஈடுபட்டவர் என்று திருவாளர் ஈழ வேந்தனை - இவர் மத்திய வங்கியிலே கடமையாற்றியவர் கனகேந் திரன் என்ற தம்முடைய பெயரைத் தனித் தமிழிலே ஈழ வேந்தன் என்று மாற்றிவைத்தவர் ; உயர் அதிகாரியாக மத்திய வங்கியிலே கடமையாற்றியவரை-பிடித்து இவ்வளவுகாலம் தடுப்புக் காவலில் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் ஒரு தமிழ்ப் பற்றுள்ளவர்; தமிழ் ஈழம் உருவாக வேண்டு மென்ற எண்ணம் உடையவர். அவர் எந்தவிதமான பயங்கரவா தத்திலும் ஈடுபடவில்லை. அவரைப் பிடித்து அங்கே வைத்திருப் பதற்குச் சிலர் காரணமாக இருந்தனர் எனச் சொல்லப்பட்டது. இவர்களுடைய வேண்டுகோளினல் அவர் அங்கே பிடித்து அடைக் கப்பட்டுள்ளார் என்று இப்பொழுது கதைகள் பரவுகின்றன.
3.

Page 31
)
صفحہ۔ 54 سست
எனவே, அவரை மேலும் காலந்தாழ்த்தாது விடுவிக்க வேண்டுமென்றும் தடுப்புக்காவலில் வைத்திருக்கக்கூடாது என்றும் வற்புறுத்துகிறேன்.
தனது தாய்மொழியில் பற்றுக்கொள்வதற்காக - அந்தப் பற்றை
மேடைகளில் கூறுவதற்காக - எல்லாவற்றையும் தமிழிலே செய்ய வேண்டும் என்ற பற்று இருப்பதற்காக மட்டும் ஒருவரைப் பயங்கர வாதி என்று பிடித்து வைத்திருப்பது முறையற்றது.
தணிக்கை அதிகாரியும் சுதந்திரனும்
சிலசெய்திகளை, சிறப்பாக "சுதந்திரன்’ பத்திரிகையில் உள்ள செய்திகளை யாழ்ப்பாணத் தணிக்கை அதிகாரி தணிக்கை செய்வது பற்றி உங்கள் கவனத்துக்கு நாம் கொண்டு வந்தோம். நீங்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினீர்கள். நடவடிக்கைகள் எடுக்கிறீர் கள் என்று நம்புகின்ருேம். அவ்வாறு உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த பின்பும் நாம் இங்கே பேசும் பேச்சுக்கள் கொழும் பிலுள்ள பத்திரிகைகளில் தணிக்கை செய்யப்படவில்லை. ஆனல், யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகளில் தணிக்கை செய்யப்படுகின் றன. இத் தணிக்கை அதிகாரி ' சுதந்திரன்’ பத்திரிகையை வெளியிடு வதில் எவ்வளவு கால தாமதத்தை உண்டாக்கலாமோ அவ்வளவு கால தாமதத்தை உண்டாக்குகிறர்.
தடுப்புக்காவலில் பல இளைஞர்கள் இருக்கிருர்கள். அவர் களைச் சட்ட அறிஞர்கள் போய்ப் பார்ப்பதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. பெற்ருர் ஒரு கிழமைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் போய்ப் பார்க்கலாம். ஆனல், அவர் களைச் சட்ட அறிஞர்கள் போய்ப் பார்க்க முடியவில்லை. இதனல், தடுப்புக்காவலில் உள்ளவர்களின் முறையீட்டை ஆராயும் ஆலோ சனைச் சபைக்கு அவர்களைப் பற்றி முறையிடுவதற்குப் போதிய வாய்ப்புக்கள் சட்ட அறிஞர்களுக்கு இல்லை. ஆகவே, தடுப்புக் காவலில் இருக்கின்ற இளைஞர்களைச் சட்ட அறிஞர்கள் போய்ப் பார்த்தற்கு அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தி
6
வாக்குவேட்டை
நியமனங்கள்
கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் ஒர் உண் மையை நாங்கள் அறியத் தக்கதாக எடுத்துக் கூறினர். அவரு டைய ஆட்சியின் கீழிருக்கும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபை கள் முதலியவற்றுக்கு நியமிக்கப்படும் தலைவர்கள், உறுப்பினர்கள் முதலானவர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிருர்கள் என்பதைப் பதி ரங்கமாகக் கூறினர். முற்றமுழுதாக நூற்றுக்கு நூறு வீதம் - அர சாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று நாங்கள் சந்தேகப்பட்டது உண்மை. இன்று அமைச்சர் எல்லாரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேலை செய்தவர் களையே நான் தலைவர்களாக நியமித்திருக்கிறேன் என்று இங்கே அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிருர், அரசியற் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டும் இந்த அமைச்சுப் பதவிகளைக் கொடுத் தால், இந்த நாட்டில் ஊழலை எந்த விதத்திலும் ஒழிக்க முடியாது. இக் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் தவிர, ஏனைய பணியாள்களும் - சாதாரண பணியாள்களும் - ஐக்கிய தேசியக் கட்சிக்கு உழைத்தவர்களா? ஐக்கிய தேசியக் கட்தியைச் சேர்ந்தவர்களா? என்பதையும் அறிய விரும்புகிறேன்.
ஒரு வீதத் தமிழரும் இல்லை
சென்ற ஆண்டிலே அமைச்சருடைய பணிகளைப் பற்றிய மீளாய்விலே கொடுக்கப்பட்ட கணக்கின்படி 1977 ஆம் ஆண்டிலே 38,822 ஊழியர்கள் இருந்தனர். 1978 ஆம் ஆண்டிலே 44,293 பேர் கடமையில் ஈடுபட்டிருக்கிருர்கள். எனவே, 1978 இல் 5,471 பேர் புதிதாக நியமனம் பெற்றனர். இந்த 5,471 பேர்களிலே எத்தனை பேர் தமிழர்கள்? ஒரு வீதமாவது தமிழ் பேசும் மக்களில்லை, கட்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்ருல் அதைப்பற்றிப் பேசவே வேண்டியதில்லை. கட்சி அடிப்படையில் என்ருல், எதிர்க்கட்சி யினருக்கு அதில் எந்தவிதமான பங்கும் இல்லை.

Page 32
ஒர் ஊழல்
அண்மையில் நடைபெற்ற ஓர் ஊழலே நான் இங்கு கூற வேண் டியவனுக இருக்கிறேன். யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேதியில்தான் பருத் தித்துறை நகரசபைத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தல் கள் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன் அதாவது மே மாதம் 20 ஆம் தேதிக்கு முன், மே மாதம் 15 ஆம், 18 ஆம், 17 ஆம், 18 ஆம் தேதிகளில் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திலே பல நியமனங்கள் நடைபெற்றன. நாங்கள் அரியாலையில் ஒரு தேர்தல் கூட்டத்துக்குப் போயிருந்தோம், அப்பகுதியிலே 4 பிள்ளைகளுக்கு வேலை கொடுத்து விட்டார்கள் என்று அங்கே எங்கள் வேட்பாளர் என்னிடம் சொன்னர், சீமெந்துக் கூட்டுத்தாபனத்திலே எப்படி உடனே வேலை கொடுக்கமுடியும் என்று அவரைக் கேட்டேன். பின் விசாரித்த பொழுது அந்தச் செய்தி உண்மைதான் எனத்தெரிந்தது. துண்டுகள் கொடுக்கப்பட்டன. சீமெந்துக் கூட்டுத்தாபனத்திலே வேலை கொடுக்கப்பட்டது. இதைப் பாராளுமன்றத்திலே எடுத்துச் சொல்வேன். இது பற்றிக் கேள்விகள் கேட்பேன் என நான் அந்தத் தேர்தல் கூட்டத்திலே பேசும் பொழுது தெரிவித்தேன். அதன்படி இந்தச் சபையிலே இது பற்றிக் கேள்விகள் கேட்டேன். நவம்பர் மாதம் 7 ஆம் தேதி தந்த பதிலில் 85 பேருக்கு வேலே கொடுத்திருப் பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பொரும்பாலானேர் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வர்கள். ஏறக்குறைய 85 பேர்களில் 75 பேர்வரை யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதியிலிருந்தும் ஏனையோர் பருத்தித்துறைப்பகுதி யிலிருந்தும் துண்டு மூலம் எடுபட்டவர்கள்.
பெரிய அநியாயம்
அமைச்சர் கூறியபடி ' நாங்கள் நினைத்தபடி, நாங்கள் விரும் பியவர்களை நியமிக்கின்ருேம்’ என்ருல் அதை நாங்கள் பொருட் படுத்தவில்லை. ஆனல், நாங்கள் மேடைகளிலே பேசினுேம் 'இது பெரிய அநியாயம்; இப்படித் தேர்தலுக்காக ஆள்களைச் சேர்ப்பதா? இதைப்பற்றி நாங்கள் விசாரிப்போம்’ என்று சொன்னுேம், இங்கே பெரிய சூழ்ச்சியொன்று செய்யப்பட்டது. இந்த நியமனங்கள் எல் லாம் தொழில் வங்கி மூலமாகத்தான் செய்யப்படுகின்றன என்று சொல்வதற்கு முயன்றுளர். அரசியல் அடிப்படையிலே நீங்கள் நியமனங்களைச் செய்கின்றபொழுது நாங்கள் என்ன செய்யலாம். ஆனல், இப்படி நீங்கள் செய்வதால் இந்த நாட்டிலேயுள்ள அர சாங்கத் திணைக்களங்களின்-அரச கூட்டுத்தாபனங்களின் நிருவர்கம் செயற்பாடு யாவும் ஊழல் என்கின்ற சமுத்திரத்தில் மிதக்கின்ற நிலமையைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதைத்தான் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ங்
--سس۔ 57, ...................
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை
நான் கிளிநொச்சித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபொழுது கிளிநொச்சித் தொகுதியில் அமைந்துள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையைப் பெருப்பிப்பதற்குப் பெரும் முயற்சிகள் செய்தேன். இத்தொழிற்சாலையைப் பெருப்பிக்க இந்த அரசாங்கம் போதிய முயற்சி செய்யவில்லை என்பதை அந்தத் தொழிற்சாலையைபற்றித் தரப்பட்டிருக்கின்ற விபரங்கள் நன்கு நிலைநாட்டுகின்றன. தினபதியிலே வந்த செய்தியொன்றையும் நான் பார்த்தேன். பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் தலை வர் தமது அலுவலகத்திற்குப் பத்திரிகையாளர்களை அழைத்து அங்கு வைத்துக் கொடுத்த அறிக்கை தான் " தினபதி ’ப் பத்திரி
கையிலே வந்திருக்கிறது. ஆகையால் அந்தச் செய்தியறிக்கையைப்
பற்றி அவருக்குத் தெரியாது என்று சொல்லவும் முடியாது; * தினபதி, செய்தியைத் திரித்துப் போட்டது என்று கூறவும்
(p19. LT51. அப்படியென்ருல் அடுத்த நாளே அந்தச் செய்தியை
மறுத்துரைத்திருக்கலாம். இந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கின்ற எவரும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மூடவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்தச் செய்தி கொடுக் கப்பட்டிருக்கின்ற தென்பதை ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சர் சொல்லுகிருர், ' தான் அதனை மூடமாட்டேன்’ என்று. அமைச்சர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளுகிருேம். ஆனல் இந்தத் தொழிற் சாலையை அபிவிருத்தி செய்யாமல், அதன் விருத்தியைக் குறைக்கின்ற நோக்கத்தோடு தான் அதன் தலவர் இருக்கிறர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தப் பத்திரிகைச் செய்தியை எந்தக்கோணத்தில் பார்த்தாலும் அது ஒரு பாதகமான செய்தியாகும்.
தலைவரின் சூழ்ச்சி 2
இந்தப் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நல்லமுறையிலே இயங்கவில்லை என்று எவராலும் சொல்ல முடியாது. இந்தப் பணி கள் பற்றிய மீளாய்வு அறிக்கையின் 226 ஆவது பக்கத்திலே கூறப் பட்டுள்ள ' உற்பத்திக்குப் பிரயோகித்த மூலதனத்துக்கு மீண்ட தொகை' என்ற அந்தப் பட்டியலின் படி, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை 22 சதவீதமான மூலதனத்தை மீட்டுக் கொடுத்திருக் கிறது. இப்படியாக மொத்த , மூலதனத்திலே 22 சதவீதமான மூலதனத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கிற ஒரு தொழிற்சாலையை அது நன்முக இயங்கவில்லை என்று கூற முடியாது. நல்ல முறையில் அது இயக்கப்பட்டிருந்ததால் இன்னும் கூடுதலான மூலதனத்தொகையை அது மீளக் கொடுத்திருக்கும். இதைவிட, வாயுநீர்க் கம்பனி, க,
8

Page 33
حضست 58 سستے
தாசிக் கூட்டுத்தாபனம், மட்பாண்டக் கூட்டுத்தாபனம், உருக்குக் கூட்டுத்தாபனம் முதலிய பல கூட்டுத்தாபனங்கள் 22 சதவீதத்துக் குக் குறைவாகத்தான் மூலதனத்தை மீளச் செலுத்துகின்றன.
உற்பத்திகளைப் பொறுத்த அளவில் ஏனைய கூட்டுத்தாபனங்கள் அடைந்த வளர்ச்சியை இந்தக் கூட்டுத்தாபனம் காட்டவில்லை. இந்தக் கூட்டுத்தாபனத்தை வளர்க்க இந்தக் கூட்டுத்தாபனப் பணிப் பாளர் சபையோ, அதன் தலவரோ முயற்சி செய்யவில்லை. இலங்கையின் தமிழ்ப் பகுதியில் இருக்கின்ற ஒர் இரசாயனத் தொழிற்சாலையான பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை வளர விடாமல் தடுக்க முயற்சிகள் நடக்கின்றனவோ என்ற சந்தேகத்
தைத்தான் இவைகள் எல்லாம் மக்களிடையே உண்டாக்கி இருக் கின்றன.
பெற்றேலியக் கூட்டுத்தாபனம் விழுங்குகிறது
இந்த அமைச்சின்கீழ் இரண்டு திணைக்களங்களும் 17 கூட்டுத் தாபனங்களும் 7 நியதிச்சட்ட சபைகளும் 3 தொழில் அமைப்புக் களும் இருக்கின்றன. இவற்றிலே இலங்கை ஒட்டுப்பலகைக் கூட்டுத் தாபனமும் அரச உலோகப் பொருள்கள் கூட்டுத்தாபனமும் சணல்
கைத்தொழில் கூட்டுத்தாபனமும் இந்த ஆண்டும் நட்டத்ல்ெதான் இயங்கி உள்ளன.
நான் சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டவிவாத த்தில் பேசுகையில் இலங்கைப் பெற்ருேலியக் கூட்டுத்தாபனம் 1978, 79, 80 ஆம் ஆண்டுகளில் மிகக்கூடுதலான நட்டத்தை அடையும் என்று கூறினேன். இப்பொழுது 37,40,67,237 ரூபா பெற்ருேலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்பட்டு இருக்கிறது. எல்லாக் கூட்டுத்தாபனங்களினதும் வரவை மொத்தமாகக் கணக் இட்டுப் பார்த்தால் நட்டத்தையே காணமுடியும். இந்த அமைச்சின் கீழுள்ள கூட்டுத்தாபனங்கள் சில அடையும் இலாபம் முழுவதையும் பெற்ருேலியக் கூட்டுத்தாபனம் அடையும் நட்டம் விழுங்கி விடுகிறது.
அரச உலோகப்பொருள் கூட்டுத்தாபனம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் பேசும் பொழுது, மண்வெட்டியைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்த மண்வெட்டி உற்பத்தி பற்றி நாம் சிறப் பாகப் பேசவேண்டி இருக்கிறது. இலங்கையின் பல்வேறு பகுதி களிலும் பல்வேறு விதமான மண்வெட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் யாழ்ப்பாணப் பகுதியில் பயன்படுத்தப்படும்

( سے 59 --سے
மண்வெட்டி தனித்தன்மையுடையது. இப்பொழுது அரச உலோகப் பொருட் கூட்டுத்தாபனத்தால் கொடுக்கப்படும் மண்வெட்டிகளை இரண்டு மூன்று மாதங்களுக்குமேல் பயன்படுத்த முடியாது. இவற்றின் நிறை போதாது. இவற்றின் அளவிலும் வடிவிலும் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். ...)
துண்டுக்குச் சிமெந்து
சீமெந்துக் கூட்டுத்தாபனம் பற்றிச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். இன்று சீமெந்து விநியோகத்தில் பல சீர்கேடுகள் இருக்கின்றன. சென்ற மாதம் 15 ஆம் திகதி முதல் புதிய முறை யில் சீமெந்து விநியோகம் நடைபெறுவதாகக் கெளரவ அமைச்சர் சொன்னர். ஆனல் இன்றும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பின்ர்களும் கொடுக்கும் துண்டுகளுக்குச் சீமெந்து கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. சிலருக்கு ஆயிரக்கணக்கான அந்தர் சீமெந்து கொடுப்பதாகப் பேசப்படுகிறது. ஆகவே துண்டுகளுக்கு சீமெந்து கொடுக்காமல் அரசாங்க அதிபரோ, உதவி அரசாங்க அதிபரோ, வேறு உத்தியோகத்தர்களோ செய்யும் சிபார்சின்படி சீமெந்தைக் கொடுத்தால் ஊழல் இருக்காது.
எரிபொருள்களை யாழ்ப்பாணத்திற்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியாமைக்குப் புகையிரதத் திணைக்களத்தைக் குறைசொல்லுகிருர் கள்.அதுபோதியவண்டிகளை கொடுப்பதில்லையென்றும் சொல்லுகிருர் கள். எண்ணெயை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புதற்கும் கிளிங்கர் முதலியவற்றைக் காங்கேசன்துறையிலிருந்து அனுப்புவதற்கும் கடல்வழியைப் பயன்படுத்தினுல் பல இலட்சக்கணக்கான ரூபாக்கள் மிஞ்சும். இப்பொழுது மிகவும் தேவைப்படும் எண்ணெயும் மிஞ்சும் என நாம் முன்னர் பலமுறை கூறினேம். குறித்த நேரத்தில் எண் ணெயை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப நாம் கடல்வழியைப் பயன் படுத்தினுல் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை நான் அரசியல் நோக்கத்துடன் சொல்லவில்லை. வடக்கு, தெற்கு என்று வேற்றுமை பாராட்டாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
ப. நோ. கூ. சங்கங்களுக்கு வீடிப்புகையிலை
வீடிப்புகையிலை சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்களுக்குக் கொடுக்கப் படுகிறது. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அதுஜன நல்லமுறையில் பயன்படுத்துகின்றன. 1979 ஆம் ஆண்டில் சிலருக்குப் புதுக்க வீடிப்புகையிலை கொடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு புதிதாகவும் கொடுக்கப்பட்டது. வியாபாரிகளுக்குக் கொடுப்பதை

Page 34
میسست، 60........................- \\ {
விடப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கொடுத்தால் ஏழை மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுப் பிழைக்க வாய்ப் பிருக்கிறது. ஆகவே, அடுத்த ஆண்டில் பலநோக்குக் கூட்டுறவுச் சங் கங்களுக்குப் வீடிப்புகையிலையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். எனது தொகுதியிலுள்ள ஊர்காவற்றுறைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங் கத்துக்கும் அடுத்த ஆண்டில் வீடிப்புகையிலையை வழங்க வேண்டு மென்று அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஊர்காவற்றுறைத் தொகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட் டிருப்பவர்கள் டீசல் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துகிருர்கள். அவர்களுக்கு டீசல் எண்ணெய் நேரத்துக்குக் கிடைக்காவிட்டால் தொழிலைச் செய்ய முடியாது. மண்டைதீவில் இருக்கின்றகடற்ருெழிலாளர் டீசல் எண்ணெய் பெற வேண்டுமானுல் யாழ்ப்பாணத்துக்கு அல்லது வேலணைக்குச் செல்ல வேண்டும்"எனவே, அங்கே ஒர் எரிபொருள் நிலையத்தைத் திறந்து தருமாறு நான் பல மாதங்களாகக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இப்பொழுது எண் ணெய்த் தட்டுப்பாடு இருக்கின்றபடியால் புதிதாக ஒரு நிலையத்தைத் திறக்க முடியாதென்று பெற்ருேலியக் கூட்டுத்தாபனம் சொல்கிறது. எனினும், ஒரு முகவர் நிலையம் மூலம் டீசல் எண்ணெயை விற்கத் தக்க வாய்ப்பைக் கொடுத்தால் அத்தொழிலாளர்களுக்கு இலகுவாக எண்ணெய் கிடைக்கும்.
(5-12-79 இல் நிகழ்த்திய உரை)
 

ஊழல் சேற்றுக்குள்
சிக்கிய உலொறி
சேற்றுக்குள் சிக்கித் திண்டாடும் ஒரு உலொறி வண்டியைப்போல இன்று கல்வி அமைச்சுக் காட்சியளிக் கிறது. "புதிய அரசாங்கம் நிறுவப்பட்டவுடன், கல்வி
அமைச்சர் பல பொருள்கள் ஏற்றப்பட்ட கல்வி அமைச்சு,
உயர் கல்வி அமைச்சாகிய உலொறி வண்டியை உற்சாக மாகச் செலுத்திச் சென்ருர். அந்த உலொறி வண்டி நேரான வீதியை விட்டுப் பக்கத்தில் சரிந்து செல்கிறது என்று நாங்கள் இந்தச் சபையிலே அமைச்சரை எச்ச ரிக்கை செய்தோம். அதையும் அவர் பொருட்படுத்த வில்லை. அவர் நினைத்தபடி உலொறி வண்டியைச் செலுத் தியதால் அந்த உலொறி வண்டி சேற்றுக்குள்ளே சிக்கித் திண்டாடுகின்றது.
ஊழல் ஆகிய சே ற் றி னு ள் சிக்கியமையால் ஐ டு ல | றி வண்டியின் பாரத்தைக் குறைப்பதற்காக
அதிலிருந்த சில பொருள்களை ஒரு காரிலே ஏற்றினர்கள்.
அந்தக் கார்தான் கல்விச் சேவைக் குழு. அந்தக் குழு
வாகிய கார் விரைவாக ஒடுமா என்பது இப்பொழுது
சந்தேகத்துக்கு இடமாக இருக்கிறது. அந்தக் காரிலே உள்ள சில இரயர்கள் தேய்ந்த இரயர்களாக இருக்கின் றன. அமைச்சரவை அந்தக் கல்விச் சேவைக் குழுவைக் கட்டுப்படுத்துகின்றது. இதல்ை அது விரைவாக இயங்க முடியாதிருக்கிறது. அந்தக் க்ல்விச் சேவைக் குழுவும் அர சியல் செல்வாக்கு என்கிற மதிலிலே முட்டி மோதுமா,
தானுகவே ஒடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.

Page 35
سس۔ 622 سسس- (
அந்த உலொறி வண்டியிலே மேலும் பாரத்தைக் குறைப்பதற்காக ஒரு ஒ ட் டோ இரிச்சோவிலே சில பொருள்களை ஏற்றினர்கள். அதுதான் புதிதாக அமைக் கப்பட்ட கல்விச் சேவை அமைச்சு. இப்படிப் பாரங் களைக் குறைத்த பின், அந்த உலொறி வண்டியை முந் திய சாரதி செம்மையாகச் செலுத்துவாரா? புதிய சாரதி நியமிக்கப்படுவாரா ? என்ற கேள்வி எழுகின்றது. இனிமேலாவது அவர் ஊழல் என்கிற சேற்றுக்குள் புதை யாமல் நேரான வழியிலே உலொறி வண்டியைச் செலுத் துவாரானல் நாட்டுக்கு நன்மை பயக்கும்.
உருப்படியாக எதனையும் செய்யவில்லை
ஒவ்வொரு அரசாங்கமும் நிறுவப்பட்டவுடன் கல்வி அமைச்சர்கள் எல்லாப் பாடசாலைகளையும் நகரத்தி லுள்ள பாடசாலைகளைப் போலத் தரம் உயர்த்துவோம்; எல்லாப் பாடசாலைகளையும் ருேயல் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி போன்ற கல்லூரிகளின் தரத்துக்குத் தரமுயர்த் துவோம் என்று சொல்வார்கள். ஆனல் அவர்களுடைய ஆட்சிக்காலம் முடியும்வரை அப்படியே சொல்லிக்கொண் டிருப்பார்களேயன்றி உருப்படியாக எதனையும் செய்வ தில்லை. இந்த அரசாங்கம் பதவி ஏற் றதும் கல்வி அமைச்சு, சென்ற அரசாங்கம் நடாத்திய புதிய இரண்டு பரீட்சைகளையும் நிறுத் தி யது. பழைய க. பொ. த. வகுப்புப் பரீட்சை முறையைத் திரும்பக் கொண்டு வந் தது. இதுதான் அரசு செய்த மாற்றம். மாணவர்களு டைய அறிவு, ஆற்றல், உளவளர்ச்சி ஆகியவற்றைச் செம்மை யாக வளர்க்கத்தக்க முறையிலே பாடநெறிகள் மாற்றியமைக் கப்படவில்லை.
தமிழ்ப் பகுதிகளிலே, சிறப்பாகக் கிராமப்புறங் களிலே உள்ள மத்திய மகா வித்தியாலயங்களிலே ஆசிரி யர் பற்ருக்குறை இ ன் று ம் நிலவுகிறது. சிறப்பாக, கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களைப் படிப்பிக்க

ہس۔ 63} --س۔
ஆசிரியர்கள் இல்லை. சென்ற முறையும் நான் இந்தச் சபையிலே இடித்துக் கூறியிருக்கிறேன். கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாமை யால் எவ்வாறு பாடசாலைகள் சீர்குலைந்து போயினவோ, அவ்வாறே இந்த அரசாங்கம் ப த வி க்கு வந்தபின், சென்ற இரண்டரை ஆண்டு காலத்திலும் நிரந்தர அதிபர் களை நியமிக்க நடவடிக்கை எடுக்காமையினுல் பல பாட சாலைகள் செம்மையாக இயங்க முடியாமல் இருக்கின்றன. ஒர் உண்மையை நான் இங்கே மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டியவனுக இருக்கிறேன். பாடசாலைகளில் ஆசி ரியர் பற்ருக்குறை இருந்தாலும் நல்ல அதிபர் இருந் தால் அவற்றை ஒ ர ள வு திருத்தமாக நடாத்தலாம். ஆசிரியர்கள் கூடிய தொகையாக இருந்தாலும் நல்ல ஒர் அதிபர் இல்லாவிட்டால் பாடசாலையைச் செம்மை யாக நடத்த முடியாது. இந்த உண்மையை முந்திய அரசாங்கமும் உணர மறுத்தது ; இந்த அரசாங்கமும் சென்ற இரண்டரை ஆண்டு காலமாக உணர மறுத்து விட்டது. இனிமேலாவது விரைவில் எல்லாப் பாடசாலை களுக்கும் நிரந்தர அதிபர்களை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிரந்தர அதிபர்கள் வேண்டும்
பதில் அதிபர்களாக நியமிக்கப்பட்ட சிலர் கடமை யாற்றத் தொடங்கி ஓய்வு பெறும் வரை பதில் அதிபர் க ளா க வே இருந்திருக்கிருர்கள். இது பாடசாலையின் தரத்தையும், கல்வி நிலையையும் மிகவும் பாதிக்கிறது. ஆகவே, இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் கல்விச் சேவைக் குழு எவ்வளவு விரைவாக நிரந்தர அதிபர்களை நியமிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Page 36
−−− 64 ---
பாடசாலைகளின் தரம் ஓங்க வேண்டும் என்ருல் - பாடசாலைகளின் ஒழுக்கநெறி உயர வேண்டுமென்ருல் - பாடசாலைகளின் கட்டுப்பாடு சிறக்க வேண்டுமென்ருல் பாடசாலைகளின் அதிபர்கள் நிரந்தர அதிபர்களாக நிய மிக்கப்படல் வேண்டும். அப்படி நியமிக்கப்படுபவர்கள் தகுதியானவர்களாக இருத்தல் வேண்டும். அவர்களுக்குப் போதிய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்கிக்காக உழைக்கிறவர்களைத்தான் நாங்கள் நியமிக்கின்ருேம் என்று கைத்தொழில் விஞ்ஞான அலுவல் கள் அமைச்சர் இங்கு பேசும்போது சொன்னர், அப்ப டிப் பாடசாலைகளுக்கு அதிபர்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களை நியமித்தால், அதனுல் எந்தவிதமான நன்மையும் உண்டாகாது. ஆகவே, பாடசாலை அதிபர் கள் - உத்தியோகத்தர்கள் - நியமனத்தில் அரசியலைப் புகுத்த வேண்டாம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ருலும் தகுதி நோக்கி, கல்வித் தரத்தை நோக்கி அவர்களை நியமித்தல் வேண்டும். கட்சிச் சார்பை நோக் காமல் இத்தகைய நியமனங்கள் செய்யப்படுவது மிகவும் இன்றியமையாதது. இனி அதிபர்களை நியமிக்கும்போது அவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்க வேண்டும்.
இறைமை சிதைக்கப்பட்டது
எனது தொகுதியாகிய ஊர்காவற்றுறையிலே ஒரு மத்திய மகா வித்தியாலயம் இருக்கின்றது, ஏறக்குறைய எட்டு ஒன்பது ஆண்டுகளாக இந்த வித்தியாலயத்திற்கு நிரந்தர அதிபர் நியமிக்கப்படவில்லை. ஆனல் அந்த வித்தி யாலயத்தின் பெய  ைர மட்டும் மாற்ற அமைச்சர் முயற்சி செய்துள்ளார். அந்த மத்திய மகா வித்தியால யத்தின் பெயரை மட்டும் "மாற்றுவதால் அது உயர்ச்சி அடைந்து விடாது. அந்த மகா வித்தியாலயத்திற்குப் பெயரை மாற்றிவிட்டு அதற்குத் தொண்டு செய்தோம் என்று எவரும் கூற முடியாது. அந்தப் பெயர் மாற்றம் ஒரு சர்வாதிகார முறையில் நடைபெற்றிருக்கின்றது.

سے بہ 65 ۔
இந்த அரசாங்கத்தினர் " சனநாயகத்தைப் பேணு கிருேம், பேணுகிருேம் ' என்று கூறுகின்றனர். இந்த மகா வித்தியாலயத்தின் பெயர் எப்படி மாற்றப்பட்டது? தகப்பனின் பெயரை ஒரு பாடசாலைக்கு வைக்கும்படி மகன் கேட்டால், உடனே அதன் பெயரை மாற்றி விடுவதா ? இந்த நாட்டிலே ஒரு பாடசாலைக்குத் தகப்பனின் பெயரை வைக்கும்படி மகன் கேட்கும் நிலையையும், அதை ஊக்கு விக்கின்ற முறையில் அரசாங்கம் தொழிற்படுகின்ற நிலை ரையுமே காண முடிகின்றது. ஒரு பெரியவரின் பெயரை ஒரு புாடசாலைக்கு வைக்கும்படி ஊர்மக்கள் கேட்க வேண்டும். மகன் கேட்டுத் தகப்பனின் பெயரை ஒரு பாடசாலைக்கு வைக்கின்ற நிலை இந்த நாட்டில் மாற வேண்டும். இது ஒரு அருவருப்பான நிலையாகும்.
இறைமை மாசு படுத்தப்பட்டுள்ளது
ஒரு பாடசாலையின் பெயரை மாற்றும் பொழுது பாடசாலை அபிவிருத்திச் சபையையோ, பெற்ருர் ஆசிரி பர் சங்கத்தையோ, அப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பின ரையோ கேட்பது வழக்கம். இப்படித்தான் முன்னர் நடைமுறை இருந்துவந்தது. ஆனல் இன்று ஒருவரையும் கேட்காமல், அதாவது பாடசாலை அபிவிருத்திச் சபை யையோ, அப் பகுதி ப் பாராளுமன்ற உறுப்பின ரையோ கேட்காமல் தான்தோன்றித்தனமாக - சர் வாதிகாரமான மு  ைற யி ல் - அந்தப் LITTL_g-IT &ah)u $l6ör பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறையைத் தான் நாங்கள் எதிர்க்கின்றுேம். அந்தப் பெயருக்கு உரிய வரை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்தப் பெரியவரின் பெயர் ஒரு பாடசாலைக்கு வைக்கப்பட்ட முறை, அந்தத் தொகுதி மக்களின் இறைமையை மாசுபடுத்துவதாக இருக்கிறது. அதற் காகத்தான் குரல் எழுப்புகிறேம்,
இந்த அரசாங்கம் பெற்ருேர் - ஆசிரியர் சங்கங்
களை நீக்கிவிட்டுப் பள்ளிக்கூடங்களில் அபிவிருத்திச்
சபைகளை நிறுவியிருக்கிறது. பெற்ருர் மட்டுமன்றி
பாடசாலை வளர்ச்சிக்கு உதவி செய்யத்தக்கவர்கள் அபி
விருத்திச் சபையில் உறுப்பினராக இருக்கும் வாய்ப்பு
9

Page 37
ساسي 66 حسب
கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனல் இந்த அபிவிருத்திச் சபைகளைப் பெயரளவில் நிறுவிவிட்டு, அவற்றை மதிக்கா விட்டால் அவை நன்ருக இயங்க முடியாது. இப்படிச் செய்தால் இந்த அபிவிருத்திச் சபைகளால் பாடசாலைக்கு எந்தவிதமான தொண்டும் செய்ய முடியாது என்பதை நான் வற்புறுத்துகிறேன். இந்த அபிவிருத்திச் சபையைக் கேளாமல், அந்தப் பாடசாலைக்கு அந்தப் பெயரைச் சூட்டிய தைத்தான் நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த அ  ைம ச் சு ஐக்கிய தேசியக் கட்சியோடு தொடர்புடைய ஆசிரியர் சங்கங்களைத் தவிர - தமிழ் ஆசிரியர் சங்கங்களாக இருந்தாலென்ன, சிங்கள ஆசிரியர் சங்கங்களாக இருந்தாலென்ன - ஏனைய ஆசிரியர் சங்கங் களே மதிக்காமல், அவற்றின் கருத்தைத் தழுவாமல் நடப்பதும் கண்டிக்கத்தக்கது. முன்னர் நிறுவப்பட்டுப் பதியப்பட்ட ஆசிரியர் சங்கங்களையெல்லாம் ம தித் து, அவற்றின் கருத்தைத் தழுவிக் கடமையாற்ற வேண்டி யது இந்த அமைச்சின் கடமையாகும்.
ஊழல் விசாரணைக் குழு இந்த அமைச்சின் கீழுள்ள பரீட்சைத் திணைக்களத்திலே நடக்கின்றஊழல்கள் பற்றிச் செய்திகள் வெளிவந்திருக் கின்றன. ஊழல்கள் பற்றிப் பலமுறை இந்தச் சபையிலே எடுத்துக் கூறியிருக்கிறேன். பிரதம அமைச்சர் அவர்கள் இந்தச் சபையிலே, ஆசிரியர் நியமனங்கள் பற்றிய ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதாக உறுதி யளித்திருக்கிறர். ஆகையால் முன்னர் நான் கூறியவற்றை மீண்டும் கூற விரும்பவில்லை. அந்த விசாரணைக் குழுவை இந்த ஆண்டு முடிவதற்குள் நியமிக்க வேண்டுமென்று நான் பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பணம் கொடுத்து உத்தியோகம் பெற்றவர்களின் நியமனங்களை இரத்துச் செய்ய மாட்டோம்; அவர்களுக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் ; அவர்கள் கொடுத்த பண ம் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற நியதியோடு அந்த ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்.

s
اساس 7 ژ) سیاست
ஆசிரியர் நியமனத்தில் அநியாயம்
தமிழ் மக்களுக்கும், முசிலிம் மக்களுக்கும் போதிய ஆசிரியர் நியமனங்கள் கொடுக்கப்படவில்லை. முந்திய அர சாங்கத்தின் கல்வி அமைச்சர் சிங்களவர்களுக்கு 80 வீத மும், தமிழ் மக்களுக்கு 12 வீதமும், முசிலிம் மக்களுக்கு 8 வீதமும் என்றவாறு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படு மென்று இந்தச் சபையிலே கூறினர். அதன நாம் எதிர்த் தோம். 20 " 5 வீதமான தமிழ் மக்களுக்கு 12 வீதமா என்ற அடிப்படையில் எதிர்த்தோம். ஆனல், இப் பொழுது தமிழ் மக்களுக்கு 5 வீதம் கூட ஆசிரிய நிய மனம் கொடுபடவில்லை. 22ஆபிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டதில்தமிழ்மக்களுக்கு 5வீதந்தானும் கொடுபடவில்லை. முசிலிம் மக்களுக்கு 2 வீதம்கூடக் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். முந்திய அரசாங்கம் - தமிழர்களைப் புறக்கணித்த அரசாங்கம் - தமிழர்களுடைய ஆதரவை விரும் பாத அரசாங்கம் செய்ததைக்கூட இந்த அரசாங்கம் செய்ய வில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
மாண்புமிகு சனதிபதி அவர்கள், சிறுபான்மை மக்களுக்கு 30 வீத நியமனம் கொடுப்பதாகச் சொன்னூர். ஆனல், சொல்லளவில் காலத்தைக் கழித்தால் தமிழ் மக்களோ, முசுலிம் மக்களோ அதனுல் நன்ம்ை பெற முடியாது. எனவே, கல்விச் சேவையில் தமிழ் மக்களுக் கும், முசிலிம் மக்களுக்கும் இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநியாயத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரிய நியமனங்களின்போது கவனிக்க ப் பட வேண்டிய சிலரைப் பற்றி நான் குறிப்பிட வேண்டும். இப்பொழுது தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை கொடுப் பதாகக் கூறி, மலைநாட்டிலுள்ள தொண்டர் ஆசிரியர் களுக்கு நியமனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள தமிழ், முசிலிம் தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது. கொடுக்கத்
தொடங்கியதை எங்கும் கொடுக்க வேண்டுமென்று நான்

Page 38
. سی-سی-=683 جیسے (
கேட்டுக்கொள்கிறேன். வசதிக் கட்டணச் சேவையிலே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி யும் நான் சில குறிப்புக்கள் கூறவேண்டியிருக்கிறது. இவ்வாறு நியமிக் கப்பட்ட பல ஆசிரியர்களுக்குச் சென்ற அரசாங்கம் கடைசி நேரத்திலே நியமனம் கொடுத்தது. இந்த அர சாங்கம் அப்படிக் கொடுக்கவில்லே. இந்த அரசாங்கம் அதையும் சிந்தித்து வசதிக்கட்டணத்திலே நியமிக்கப்பட் டுள்ளவர்களுக்கும் நியமனம் கொடுக்க வேண்டும்.
பதவி உயர்வு இல்லை
n
இந்த அரசாங்கம் இரண்டரை ஆண்டுகளாக இயங்கி வ ரு கி ன் ற் து. ஆனுல் கல்விச் சேவையைப் பொறுத்தவரையிலே எந்தவிதமான பதவி உயர்வுகளோ,
நியமனங்களோ முறையாகச் செய்யப்படவில்லை. இதஞல்
பல உத்தியோகத்தர்களும், பல ஆசிரியர்களும் பெரும் இ டர் ப் பா ட் டு க் கு உள்ளாக்கப்பட்டிருக்கிருர்கள். மாவட்டக் கல்விப் பணிமனைகளிலே மட்டும் பொதுசனத் தொடர்பு அதிகாரிகளாகச் சிலரை நியமித்திருக்கிறர்கள். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கும், அக்கட்சிக்கு உழைத்தவர்களுக்கும் இந்த நியமனங்களை வழங்கியிருக் கிருர்கள். இவர்கள் வேறு எந்த அடிப்படையிலும் நிய மிக்கப்படவில்லை. இவ்வாறு பொதுசனத் தொடர்பு அதி காரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று இந்த அமைச் சினல் வட்டாரக் கல்வி உத்தியோகத் தர்களாக நியமிக் கப்பட்டிருக்கிருர்கள். கைத்தொழில் விஞ்ஞான அலுவல்
கள் அமைச்சர் கூறியதுபோல, ஐக்கிய தேசியக்கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே உத்தியோகம் கொடுக் கப்படும் முறையைக் கல்வி அமைச்சும் கடைப்பிடித்து
வருவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடய
மாகும்.
$ሑ

= 69 - )
மூடாதீர்!
கொழும்புத்துறையிலே இருக்கின்ற ஆசிரியர் பயிற் சிக் கல்லுரரியை மூடுவதற்குச் சில முயற்சிகள் நடக்கின் றன. இதுபற்றி தாங்கள் கெளரவ அமைச்சருடன் பேசி யுள்ளோம். எனினும் அந்த முயற்சிகள் இன்னும் கை விடப்படவில்லை. மு ன் ன ர் நல்லூர், திருநெல்வேலி, பலாலி எனும் இடங்களிலிருந்த ஆசிரியர் பயிற்சிக் கலா சாலைகள் மூடப்பட்டன. எனவே, இப்பொழுது யாழ்ப் பாணத்திலே இருக்கின்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மூன்று. ஒன்று கோப்பாயில் இருக்கிறது : இன்னென்று பலாலியிலே இருக்கின்றது ; மற்றையது கொழும்புத் துறையிலே இருக்கின்றது. கோப்பாயிலிருக்கின்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மகளிர் கல்லூரியாக இருக்கின்றது. பலாலியிலே உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விஞ்ஞா னம், கணிதம் முதலிய பாடங்களைச் சிறப்புப் பாடங்க ளாகக் கற்பிக்கின்ற ஒரு கல்லூரியாக இருக்கின்றது. கொழும்புத்துறைப் பயிற்சிக் கல்லூரி ம ட் டு ம் ஆண் களுக்குரிய ஒரு கல்லூரியாக இருக்கிறது. என வே கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை மூடிக்
கோப்பாயை ஆண்களுக்கும் மகளிருக்கும் பயிற்சியளிப்ப
தற்கான ஒரு பயிற்சிக் கல்லூரியாக மாற்றுகின்ற முயற்சி யைக் கைவிட்டு, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியினேத் தொடர்ந்தும் நடாத்துவதற்கு உடனே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தப் பயிற்சிக் கல்லூரியை மூடுவதில்லை என்ற உறுதியை இன்றைக்கே அமைச்சர் இச்சபையில் கொடுக்க வேண்டும்.
கொக்குவிலில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல் லூரியில் போதிய இடவசதி இல்லை ; போதிய உபகர ணங்கள் இல்லை. கொழும்பிலுள்ள தொழில்நுட்பக் கல் லூரியிலே இருக்கின்ற எல்லாப் பயிற் சி நெறிகளும்
இங்கே இல்லை. கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி யிலே பயிற்சிநெறிகளைக் கற்று வெளியேறுகின்ற மான

Page 39
«قانه
வர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு எந்த விதமான ம தி ப் பும் கொடுக்கப்படவில்லை. ஆகவே, யாழ்ப்பாண மாவட்டம் முழுவதற்கும் பொதுவாக இருக்கின்ற இந்தத் தொழில்நுட்பக் கல்லூரியைப் பல துறைகளிலும் விருத்தி செய்து வளர்த்து, அதற்கு வேண் டிய கட்டடங்களை அமைத்து, இதனுல் நாட்டுக்கு நல்ல பயன் உண்டாகக் கூடிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இன்று அபிவிருத்திக்கு மிக இன்றியமையாத தாக இருக்கின்ற தொழில்நுட்பப் பயிற்சி பல வழிகளி லும் விருத்தி செய்யப்பட வேண்டும். இடைநிலைப் பொறி யியல்துறையிலும் மாணவர்கள் சிறப்பாகப் பயிற்றப் பட்டு, அவர்களின் சேவை நாட்டுக்குப் பெறப்படல் வேண்டும்.
தோட்டப் பாடசாலைகள்
இனி, தோட்டப் பாடசாலைகளைப் பற்றியும் இங்கு நான் சில குறிப்புக்கள் கூறவேண்டியிருக்கிறது. 1977ஆம் ஆண்டிலே சென்ற அரசாங்கம் 250 தோட்டப் பாட சாலைகளைப் பொறுப்பேற்றது. இந்த அரசாங்கம் ஏனைய
பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் என்று கூறப்பட்டது.
ஆனல் அவ்வாறு எல்லாத் தோட்டப் பாடசாலைகளையும் இதுவரையிலே இந்த அரசாங்கம் பொறுப்பேற்றுவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் பல பாடசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட வேண்டியிருக்கின் றன. த மிழி லே பழமொழி ஒ ன் று கூறுவார்கள், "சடங்கு முடிந்தும் சந்நியாசிதான் ' என்று, இதுபோலப் பொறுப் பேற்கப்பட்ட தோட்டப் பாடசாலை ஆசிரியர் களுக்கு அரசாங்க ஆசிரியர்களுக்குரிய சலுகைகள், வசதி கள் கொடுக்கப்படவில்லை. பல ஆசிரியர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. பாடசாலைகளைப்
பொறுப்பேற்ருலும் இந்தத் தோட்டப் பாடசாலைகளில்
ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. சில ஆசிரியர்களுக்குப் புகையிரத இலவசப் பிரயாணச்சீட்டுக் கள் முதலியன முறையாக வழங்கப்படவில்லை. இரண்டரை

r ? ? -
ஆண்டுகள் கழிந்தும் இவர்களுக்குரிய பதிவு இலக்கம் இன் னும் வழங்கப்படவில்லை. பாடசாலைகளைப் பொறுப்பேற் கின்ற பொழுது எந்த ஆசிரியரையும் வேலைநீக்கம் செய்ய மாட்டோம் என்ருர்கள். இப்பொழுது ஆறு பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதியை இந் த த் துறையிலே நிறைவேற்ற வேண்டும்.
பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளைத் தோட்ட
நிருவாகத்திடம் விட்டிருக்கிருர்கள். தோட்டத்தின் நிரு
வாகப் பொறுப்பதிகாரிகளிடம் பாடசாலைகளின் பொறுப் புக் கையளிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இது அரு வருக்கத்தக்க-கண்டிக்கத்தக்க ஒரு செயலாகும். தோட்டங் களுக்குப் பொறுப்பாக இருக்கும் பிரதம நிருவாகிகள் சிலர் சாதாரண பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை யில்தானும் சித்தியடையாதவர்கள். அவர்களுக்குப் பாட சாலைகளைப் பற்றி எதுவும் தெரி யா து, ஆகவே,
இவர்களுடைய பொறுப்பில் பாடசாலைகளை வி டு வ து
பொருத்தமற்றது. ஏனைய பாடசாலைகள் எல்லாம் கல்வி அமைச்சின் நேர்க் கண்காணிப்பின் கீழ் - கல்வி உத்தியோ கத்தர்களின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் பொழுது, தோட்டப் பாடசாலைகளை ம ட் டு ம் தோட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளின் மேற்பார்வையில் விடுவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு புறக்கணிப் பாகவே கருதப்படும். ஆகையால் ஏனைய பாடசாலைகளின் நிருவாகத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்ற தோட்டப் பாடசாலைகளின் நிருவாகத்துக்கும் எவ்வித வித்தியாசமு மில்லாமல், தோட்டப் பாடசாலைகள் யா வு ம் ஏனைய அரசாங்க பாடசாலைகளைப் போல நிருவகிக்கப்பட வேண் டும். தரகர்கள் மூலமாக நிருவகிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த முறையை உடனே மாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ۔

Page 40
இடமாற்றம்
இப்பொழுது பல ஆசிரியர்களுடைய மனங்களை அலைத்துக் கொண்டிருப்பது வருட இறுதி மாற்றம். இந்த மாற்றம் என்ன முறையில் நடக்கப்போகிறது ? சென்ற அரசாங்கம் ஒரளவுக்குச் சில திட்டங்களை வகுத்து வருடக் கடைசியிலே ஒரு மாற்றத்தை மாவட்டங்களுக்கிடையில் நடத்தி வந்தது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின், 1977 இல் இது நடைபெறவில்லை. 1978 இலும் நடை பெறவில்லை. 1979 கடைசியிலாவது இந்த ஆசிரியர்களு டைய இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படுமா ? செய் யப்பட்ட திட்டத்தின்படி நடைமுறைப்படுத்தப்படுமா ? என்பதை நான் அறிய விரும்புகிறேன். சென்ற இரண்டு ஆண்டுகள் இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப் படவில்லை. அமைச்சர் ஒரு திட்டம் வகுத்தார். அந்தத் திட்டம் இந்த மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப் படுமா என்பதை அமைச்சரிடமும், அதற்குப் பொறுப் பாக இருக்கும் கல்விச் சேவைக் குழுவிடமுமிருந்து அறிய விரும்புகிறேன்.
முற்பகலில் கூறியதைப் பிற்பகலில் சுமக்கிறர்
பரீட்சைத் திணைக்களத்தைப் பற்றி நான் இங்கு
கூறவேண்டியதில்லை. அந்தத் திணைக்களத்திலே நிறைந்
திருக்கின்ற ஊ ழ ல் களை ப் பற்றிப் பத்திரிகைகளிலே நா ங் க ள் படித்து வருகிருேம், செ ன் ற ஆண் டு டிசெம்பர் மாதம், 11 ஆம் திகதியன்று கெளரவ கைத் தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் இந்தச் ச  ைப யி லே பேசுகின்றபொழுது தமிழ் மா ன வ ர் களையும் அவர்களுடைய விடைத்தாள்களைத் திருத்திப் புள்ளிகளிட்ட விரிவுரையாளர்களையும் வன்சொற்களால் எப்படித் திட்டினரென்பதை நீங்கள் எல்லோரும் அறி வீர்கள். மிகவும் கடுமையான வார்த்தைகளால் அன்று தமிழ் மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் இச் சபை
யிலே திட்டினர். அன்று பிரயோகித்த அத்தனை சொற்

المصبه 7 سسلسة
களும் இன்றைக்கு அவருக்கும் அவருடைய இனத்துக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றன. ஏழை, எளிய மாண வர்களை ஒதுக்கிவிட்டுப் பணக்கார மாணவர்களைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பிவைக்கக்கூடிய முறையிலே விடைத் தாள்களின் புள்ளிகள் மாற்றப்பட்ட இந்தப் பயங்கரமான ஊழல்கள் மீண்டும் பரீட்சைத் திணைக்களத்திலே நடக்கா திருக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகத்தைப் பற்றி நான் அதிகம் கூற விரும்பவில்லை. ஆணுல், பல்கலைக்கழகத்துக்கு மாணவர் களைத் தெரிவு செய்கின்ற முறை குறையுள்ள ஒரு முறை யாக இருக்கிறது. தகுதிவாய்ந்த மாணவர்கள் பலர் இன்று நடுத்தெருவிலே விடப்பட்டுளர். தகுதியுடைய மாணவர்கள் எல்லோரும் பல்கலைக்கழகத்திலே சேருவ தற்கு வாய்ப்புக் கிடைக்கக்கூடிய வகையிலே இந்தத் தெரிவு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல துறைகளில் அபிவிருத்தி அடைய வேண்டி இருக்கிறது. சிறப்பாகப் பொறியியல் துறையும், ஆயுள்வேத, சித்த வைத்தியத் துறையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப் படல் வேண்டும். பிற பல்கலைக்கழகங்களில் இருக்கும் எத்தனையோ துறைகள் அந்தப் பல்கலைக்கழகத்தில் இல்லை. அவைகள் எல்லாம் உடனே அங்கும் தொடங்கப்படல் வேண்டும்,
மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் பற்றி யு ம் கூற விரும்புகிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடக்க, நாள் பார்க்கிருேம் என்று, அன்று அமைச்சர் சொன் னர். சூருவளி வந்தது. நாளும் போய்விட்டது; நட்சத் திரமும் போய்விட்டது. இந்தப் பல்கலைக்கழகம் எப் பொழுது தொடங்கப்படும் என்று தெரியவில்லை.
(7.1279 இல் நிகழ்த்திய உரை) O

Page 41
எங்களைத்
தனியாக விடுங்கள்
சமூகசேவைகள் அமைச்சு அல்லற்படுகின்ற மக்களுக்கு உரிய நேரத்திலே வேண்டிய உதவியைச் செய்து அவர்களைக் காப்பாற்று வதற்காகப் பணியாற்றிவருகிறது.இந்த உதவி உத்தியோகம் கொடுப் பதற்குக் கட்சிச் சார்பு பார்க்கப்படுவதுபோல் செய்யப்படுகின்ற உதவி என்று நான் எண்ணவில்லை. இந்த உதவியைச் செய்கின்ற பொழுது தமிழ்ஈழம் சிறீலங்கா, அல்லது வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபடின்றி, உண்மையாக யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு அந்த உதவியை விரைந்து அளிக்கவேண்டும்.
உதவிப் பணம் போதாது
இந்த அமைச்சு மேற்கொண்டுள்ள சமூகப்பணிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அதிலே முதலாவது பொது உதவிப்பணம் வழங்குவதாகும். இந்தப் பொது உதவிப்பணம் இலங்கை முழுவதும் வழங்கப்படுகின்றது. இப்பொழுது வாழ்க்கைச்செலவு கூடியிருக்கின்ற படியாலும் குடும்ப வாழ்க்கை முறையிலே பல மாற்றங்கள் உண் டாகியிருக்கின்றபடியாலும் வயது வந்தவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். பொதுஉதவிப் பணத்திலே பல வயோதி பர்கள் தங்கியிருக்கிருர்கள் தொடக்கத்திலே இந்த உதவிப்பணம் ஒரு ஆளுக்கு 12 ரூபாவாக இருந்தது. இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குடும்பங்களுக்கு 14 ரூபாவிலிருந்து 20 ரூபா வரைத் கும் கொடுக்கப்படுகிறது. கைம்பெண்கள் போன்ற சில ருக்கு 50 ரூபா வரையும் கொடுக்கப்படுகிறது. இப்பொழுது முறையே 45 ரூபாவாகவும் 60 ரூபாவாகவும் இந்த உ த வி ப் பணம் கூட்டப்படல் வேண்டும். முன்னர் 12 ரூபாவுக்குப் பெறக்கூடிய தாக இருந்த பொருளே இப்பொழுது 30 ரூபாவுக்கும் பெறமுடியாத நிலைமை இருக்கின்றது. எனவே பெயருக்காக இந்த உதவிப்பணம் கொடுக்கப்படுகிறது என்று இருக்காமல் இந்த உதவியைப் பெறு கின்றவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஓரளவுக்காவது கொண்டு
ع
 
 

༈།
ടു്.
میس ز75 بسی۔
நடத்தக்கூடிய முறையிலே இந்தத் தொகையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும், 1968 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் இந்த உதவிப்பணம் வாழ்க்கைச் செலவைத் தழுவிக் கொடுக்கப்படவில்லை
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 1968 - 69 ஆம் ஆண்டிலே 12.89,900 ரூபா பொது உதவிப் பணமாகக் கொடுக்கப்பட்டது. 1969-70 ஆம் ஆண்டிலே 12,51,600 ரூபா கொடுக்கப்பட்டது. 1970 - 71 ஆம் ஆண்டில் 12,80,000 ரூபா கொடுக்கப்பட்டது. 1971 - 72 ஆம் ஆண்டில் 12,74,600 ரூபா கொடுக்கப்பட்டது. 1972 - 73 ஆம் ஆண்டில் 12,60,000 ரூபா கொடுக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாண மாவட்டத்திலே 9,959 பேர் பொதுஉதவிப் பணம் பெற்றிருக்கிறர்கள். இந்தப் பொது உதவிப் பணத் தொகையைக் கூட்டினல் இப்பொழுது பொது உதவிப் பணத்தை எதிர்பார்த்துள்ள எல்லோருக்கும் அதனைக் கொடுக்கக் கூடிய வசதி ஏற்படும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இறப்பதற்கு முன் உதவுக
இன்று ஏறக்குறைய மூவாயிரம் நாலாயிரம் பேர் இந்த உத விப்பணத்துக்காகக் காத்திருக்கிருர்கள். இவர்கள் எப்பொழுது இந்த உதவிப் பணத்தைப் பெறுவார்கள்? உதவிப் பணம் பெறுபவர்கள் இறந்தாலே இவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இப்படிக் சாத்திருப் பவர்கள் சிலர் இந் 5 உதவிப் பணத்தை பெருமலே இறந்துவிடுகிறர்கள் ஆகவே, உண்மையாக உதவிப் பணம் பெறத்தகுதி உள்ளவர்களுக்கு இந்த உதவிப்பணம் உரிய நேரத்திலே கிடைக்க வழிவகைகள் செய்யப் படல்வேண்டும். எத்தனையோ வழிகளில் பணத்தைச் செலவு செய்யும் அரசாங்கம் இப்படியான தருமத்தைச் செய்ய முன்வரவேண்டும். அதற்கு வேண்டிய பணத்தை இந்த அமைச்சுக்குக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தினது கடமையாகும். இன்று பல நாடு களில் இருந்து அரசாங்கத்திற்குப் பெருமளவில் உதவிப் பணம் கிடைக்கின்றது. எனவே, அரசாங்கம் இப்படியாகக் கிடைக்கும் உதவிகளிலிருந்து சமூகசேவைக்கும் உதவிப்பணத்தைக் கொடுத்தால் போதிய வருவாய் இன்றி, ஆதரவின்றி வாழ முடியாமல், தவிக்கும் மக்களுக்கு அதன் மூலம் பெரும் பலன் விளையும். இப்படிப் பணத் தைப் பயன்படுத்துவது நீதியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.
ஊனம்உற்ற மக்களுக்கு உதவி செய்வதும் இந்த அமைச்சின் கடமையாகும். சில துறைகளில் சில மக்களுக்கு இன்று உதவிகள் செய்யப்பட்டாலும் ஊனமுற்றுள்ள எல்லா மக்களுக்கும் இன்று

Page 42
உதவி கிடைக்கவில்லை. மூன்று சில்லு வண்டிகள் இன்று எல்லோருக் கும் கிடைக்கவில்லை, பலமுறை இதுபற்றிப் பலர் எங்களை அணுகி உதவி கேட்டுள்ளனர். ஆனுல் அவர்களுக்கு எவ்வித உதவியும் இது வரை கிடைக்கவில்லை. ஆகவே, இத்தகைய உபகரணங்களைப் போதிய அளவு வாங்கி ஊனமுற்றவர்களுக்குக் கொடுக்க சமூக
சேவை அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். = \, :
எங்கும் தமிழ்ப் புறக்கணிப்பு
சமூக ப்ப னி தமிழ்ப் பயிற்சிநெறி இல்லைஎன்று எனக்குப் பலர் முறைப்பாடு செய்திருக்கிருர்கள். இத்தி கைய பயிற்சி நெறிகளைத் தமிழிலும் நடாத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும். இந்தப் பயிற்சிநெறி இன்று தமிழில் இல்லாதது ஒரு
பெரிய குறைபாடாகும். இதைப்போலச் சுகாதாரப் பரிசோதகர்களுக் கான பயிற்சி நெறியும் தமிழ்மொழியில் இல்லை. இத்தகைய குறைகளைப்பற்றி நாங்கள் பலமுறை கூறி இருக்கிருேம்,
அரசாங்கம் தமிழ்மொழிக்கு எல்லா உரிமைகளும் கொடுத் திருப்பதாகக் கூறுகின்றது. தமிழ் உரிமைகளைச் சட்டத்தில் எழுதி வைத்துவிட்டால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் பொது
மக்களிடமிருந்து முறைப்பாடுகள் எங்களுக்கு வருகின்றன. உங்
களுக்கு தமிழ்மொழி உரிமைகளே நடைமுறைப்படுத்துவது சிக்கலாக இருக்குமானுல் எங்களே வேறகப் பிரித்து விடுவதுதான் சிறந்த வழி யாகும். அரசியல் சட்டத்தில் உரிமையைத் தந்து விட்டு அந்த உரிமையை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் இருப்பதால், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் பொதுமக்களிடமிருந்து
வரும் முறைப்பாடுகளை அரசாங்கத்திற்கு அனுப்பிஅனுப்பி ஓய்ந்து
போகின்ருேம். தமிழில் நடாத்தப்படவேண்டிய பயிற்சி நெறிகளேத் தமிழில் நடத்துவதில், தமிழில் வெளியிடப்பட வேண்டிய அறிக் கைகளே வெளியிடுவதில் இனியும் காலதாமதம் செய்யாமல் அர சாங்கம் செயற்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் தமிழ் இனத்தை இனியும் தொடர்ந்து ஏமாற்றுவது அழகன்று. ஒரு தார்மீக சமுதாயத்தை இப்படி உருவாக்க முடியாது. ஆகவே இதைக் கவனித்து, “ தமிழில் பயிற்சி நெறிகள் நடத்தப்படவில்லை, தமிழில் அறிக்கைகள் கிடைக்க வில்லை' என்று முறைப்பாடுகள்? இனிமேலும் இந்த நாட்டிலே தோன்ருமல் இருக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அல்லது எங்களைத் தனியாக விட்டுவிட வேண்டும்.
(8-12-79 മ്ല நிகழ்த்திய உரை)

ܠ ܐ .
மகாதேவாப் பாலம்
மறைந்த மாயம்
இலங்கை மின்சாரசபை, கிராம மின் வழங்கல் திட்டங்களை
எங்கள் பகுதிகளில் காலம் தாழ்த்தியே நிறைவேற்றிக் கொண்டு
வருகிறது. மூன்று மாத ம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை மதிப்பீடுகளைக் கூட்டிப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலிருந்து பணம் பெற முயல்கிறது. ஆண்டுத் தொடக்கத் தில் நாங்கள் கொடுக்கின்ற பணத்தைக் கொண்டு அதனுடைய ஆரம்ப மதிப்பீட்டுக்கே அந்த வேலைகளைச் செய்யவேண்டும். நயினு தீவுக்கு நீர்மின்சக்தி கொடுக்கமாறு நான் அமைச்சரைக் கேட்டிருந் தேன். அதனைத் தான் செய்வதாக எழுதியிருந்தார். ஆணுல், அந்த வேலே இன்றும் தொடங்கப்படவில்லை. எனவே, அதை விரைவில் தொடங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தனது மின் திட்டத்தைப் பொறுப்பேற்குமாறு இலங்கை மின் சார சபையை நாரந்தனைக் கிராமசபை கேட்டிருந்தது. நாரந்தனைக் கிராமசபை மின் திட்டத்தின் கீழ் பல மக்கள் மின்சாரம் பெற முடியாமலிருக்கிருர்கள். ஆதலால் அதை மிக விரைவில் பொறுப் பேற்று மக்களுக்கு மின் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,
வீதிகள் பழுதடைந்து விட்டன
எனக்கு முன் பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்டது போல, பெருஞ்சாலைத் திணைக்களத்திலே போதிய உருளை, தார், வாகனங்கள் முதலியன இல்லாமையால் வேலைகள் செம்மையாக நடைபெறவில்லை, இந்த வேலைகள் செம்மையாக நடைபெற வேண்டுமானுல் வருகிற ஆண்டிலாவது இவற்றைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் பண்ணே - ஊர்காவற் றுறை - புங்குடுதீவு வீதிகள் மிகவும் பழுதடைந்த நிலையிலிருக்கின் றன. இப்பொழுது மழைகாலம் தொடங்கி விட்டமையால் எல்லாவீதி களுமே போக்குவரத்துக்கு உகந்தவையாக இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன. எனவே அவற்றை விரைவாகத் திருத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும். -

Page 43
அனலைதீவுக்கு அலைஅரசி
பெருஞ்சாலைத் திணைக்களம் படகுச் சேவைக்குப் பொறுப்பாக இருக்கின்றது. மணிமேகலை எனும் ஒரு படகை இப்பொழுது நெடுந்தீவுச் சேவைக்காகக் கட்டிக் கொண்டிருக்கிருர்கள். அதை வேறு இடத்துக்குக் கொண்டு போக வேண்டுமென்று சிலர் திட்டமிடு கிருர்கள். அதை நெடுந்தீவு மக்களுடைய பயணச் சேவைக்கே பயன் படுத்த வேண்டும் என்பதை இங்கே வற்புறுத்திக்கூற விரும்புகிறேன்.
அலையரசி எனும் ஒரு படகு பல மாதங்களாகத் திருத் தப்பட்டு வருகிறது. அதைத் திருத்தி முடிந்தவுடன் பின்னரும் திருத்த வேண்டிய நிலை ஏற்படுவது வழக்கம். இதை விசாரித்து மிக விரைவிலே அப்படகைத் திருத்தி ஊர்காவற்றுறையிலிருந்து நயினுதீவுக்கும் அனலை தீவுக்கும் செல்லும் மக்களுக்காக அதனைப் பயன்படுத்தினுல் பேருதவியாக இருக்கும்.
என்னுடைய தொகுதியிலே ஏறக்குறைய ஒன்பது துறைமுக மேடைகள் இருக்கின்றன. இந்தத் துறைமுக மேடைகளைப் பெருஞ் சாலைத் திணைக்களம் பொறுப் பேற்க வேண்டுமென்று நான் பல முறை கேட்டும், அல்வாறு பொறுப்பேற்கச் சொல்லியும் இன்னும் பொறுப் பேற்கவில்லை. அவ்வாறு பொறுப்பேற்ருல் அத்துறைமுக மேடைகளை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். எனவே அவற்றைப் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருபத்தெட்டு இலட்சம் ஒதுக்கப்பட்டது
அடுத்ததாக, ஒரு பிரதான விடயம் பற்றிக் குறிப்பிட விரும்பு கிறேன். யாழ்ப்பாண மாவட்டத்துக்கே முதன்மையான விடயம் மகாதேவா பாலம். இந்த மகாதேவா பாலத்துக்கு 1963 ஆம் ஆண் டில், எனக்கு முன் பேசிய கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினர் (திரு. வீ. ஆனந்தசங்கரி) அவர்கள் குறிப்பிட்டது போல, இருபத் தெட்டு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. அன்று பொது வேலைப் பகுதிக் கும் அஞ்சல் பகுதிக்கும் பொறுப்பாக இருந்தவர் இப்பொழுது பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருக்கிருர், அவர் பூநகரிக்குப் போய் இந்தப் பாலத்துக்கு அத்திவாரக் கல் நாட்டினர். இதனைக் கிளிநொச்சி உறுப்பினரும் நினைவூட்டினர். அந்த வேலைக்காக இருபத்தெட்டு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்தொகை இரண்டு ஆண்டுகளாக வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக் கப்பட்டிருந்தது. ஆணுல் அந்தப் பணம் செலவுசெய்யப்படவில்லை.
நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கத்தேரடு சேர்ந்திருந்த காலத்தில் இப்பாலம் குறித்து நான் அன்றைய பிரதமர்
திரு. டட்லி சேனநாயக்காவுக்கு எழுதினேன். "நாங்கள் உங்கள்

சட்சியோடுஇரும்பது உங்களுக்கு வாக்களிக்க மட்டுமன்று. ஆதலால் மகா
தேவாப்பலத்துக்குப் பணம் ஒதுக்கி அதனைக் கட்டவேண்டும் என்று நான் அவருக்குச் சூடாகளழுதியதன் பயணுக அந்தப் பணம் ஒதுக்கப்பட்டது. அதை நான் சென்ற முறையும் எடுத்துக்காட்டினேன். ஆளுல், மிகவும் மனவருத்தத்தோடு கூறுகிறேன். சென்றமுறை அந்தப்பாலத்துக்கு வாக்குப்பணம் ஒதுக்கப்பட்டிருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1967 ஆம் ஆண்டில் முடிக்கப்படவேண்டிய பாலவேலே இன்று 12 வருடங்களாகியும் செய்யப்படாமல் சிலரது சூழ்ச்சியின் காரண மாக இவ்வளவு காலமும் பிற்போடப்பட்டு வந்தது. உப்புக் கூட்டுத் தாபனம் இடையிட்டு அதன் உற்பத்தியை இவ்வேலை பாதிக்கும் என்று சொல்லவே மேலும் அந்த வேலை காலதாமதமாகியது. அதன்பின்னர் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. அவர்களும் ஏழு ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களைக் கூறி அவ்வேலையைப் பிற்போட்டு வந்தார்கள்.
வேதனைக்குரிய விடயம்
கடைசியாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமை யிலே ஒர் உயர்மட்டக்குழு நியமிக்கப்பட்டது. இந்தக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து அந்தப் பாலத்தைக் கட்டலாம் என்று முடிவு செய்தது. எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பு இந்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்தவரும் இப்பொழுது மகா வலி அபிவிருத்திக்கும் காணி அபிவிருத்திக்கும் பொறுப்பாக இருக் கின்றவருமான அமைச்சரைச் சந்தித்து இந்தப் பாலத்தைக் கட்ட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கினர்கள். இதனு ல் சென்றமுறை அடையாள வாக்குப்பணம் ஒதுக்கப்பட்டது. ஆணுல் இந்த ஆண்டிலே இந்த வேலைக்குப் பணம் ஒதுக்கப்படவில்லை. அது மட்டுமன்றி வெளிநாட்டு உதவியுடன் கட்டப்படுகின்ற பாலங்களின் நிர லிலும் இந்த மகாதேவாப்பாலவேலே சேர்க்கப்படவில்லை.
இந்த மகாதேவாப் பாலத்தை இந்த ஆண்டிலாவது கட்ட வேண்டும். 10 ஆண்டுகளாகக் கூறப்பட்ட காரணங்களைக் கூறி மேலும் இதன் வேலைகள் தாமதமாக்கப்படுமோ என்று நான் கேட் கிறேன். கிளிநொச்சித் தொகுதியிலே உள்ள பூநகரி, மன்னர்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி பாதிக்கக்கூடிய வகையிலே இப்பாலத் தின் வேலைகளை - மேலும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலம் கடத்தாமல் - தமிழ் மக்களின் நம்பிக்கையை மேலும் இழக்காமல்முடிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகிறேன். சென்ற ஆண்டில் அடையாள வாக்குப்பணம் ஒதுக்கப்பட்ட பல வேலைகளுக்கு இந்த முறை பணம் ஒதுக்கப்பட்டிருந்தும் இப்பாலத்தின் வேலைகளுக்குப் பணம் ஒதுக்காமல் விட்டது எங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது,
(10-12-79 இல் நிகழ்த்திய உரை )

Page 44
முன்பு உலொறியில்
இப்பொழுது வானில்
நீதி வழங்கப்படும் பொழுது, அது மக்களுக்கு இலகுவாகவும்,
பெருஞ் செலவின்றியும் கிடைக்கச் செய்தல் வேண்டும். விரைவாக
நீதி வழங்கப்படுதலும் இன்றியமையாதது. பல வழக்குகளுக்குத் தவணை போடப்படுவதால் காலத்தாழ்வு உண்டாகின்றது. இது நீதிச் சேவை முறைக்குப் பொருத்தமானதன்று. ஒவ்வோர் அரசாங்கமும் பதவிக்கு வரும் பொழுது, காலத்தாழ்வு இல்லாமல் வழக்குக்கள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறுகிறது. ஆனல், தவணை போடுவது நடந்துகொண்டே இருக்கிறது. சில கோயில் வழக்குக்கள் ஐந்து, ஆறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இதன் காரண மாகக் கோயில் நிருவாகம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, வழக்குக் களே மிகு விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் உரிமைகள் எங்கே?
புதிய அரசியலமைப்பின் 25 ஆவது உறுப்புரையிலே, "இந்த அத்தியாயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவையான மொழிகளைப் பயன் படுத்துவதற்குப் போதுமான வசதிகளை ஏற்பாடுசெய்தல் வேண்டும்?? என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பின் மூலம் ஆட்சித் துறையிலும், நீதித் துறையிலும் மொழியுரிமை வழங்கப் பட்டிருக்கிறது. ஆட்சித் துறையில் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமை யைத் தமிழ்மக்கள் பெற எதுவும் செய்யப் டவில்லை. நீதித்துறையிலே கூட அந்த உரிமையைப் பெற எதுவும் செய்யப்படவில்லை. இத்துறைக் குப் பொறுப்பாக ஒரு தமிழ் அமைச்சர் இருக்கிறபடியால் நான் அவ ரைக் கேட்கிறேன் ; இதுவரை புதிய அரசியலமைப்பின் இந்த உறுப் புரையின்படி தமிழ்மக்கள் தமிழ்மொழியிலே எல்லாவற்றைபும் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் ? இதனை நான் அறிய விரும் பு கிறேன். சில நீதிமன்றங்களிலே தமிழ் தட்டச்செழுத்தாளர்
t
 

' } H =agge 8 וייר"
இல்லை; தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் இல்லை, ஆகையால் வழக்கு களைத் தமிழிலே நடாத்த முடியாது என்று சொல்லப்படுகிறது ? எனவே, இந்தக் குறைபாட்டை நீக்க வி ைர வி ல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமாதான நீதிவான் பதவியைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இந்த அமைச்சரின் கீழ் முதல் ஆண்டிலே சமாதான நீதிவான் பதவி வழங்கல் முறையாக நடந்தது. அதில் நாம் எந்தவிதமான குறை யும் சொல்வதற்கில்லை. சென்ற அரசாங்க காலத்திலே சமாதான நீதிவான்களை எந்தவிதமான வரையறையுமில்லாமல், த கு தி  ைய நோக்காமல், வரலாறு தெரியாமல் நியமித்தார்கள். சிறீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கொழும்புக்குச் செல்லும் பொழுது எங்கள் ஊரிலே சொல்வார்கள் : * லொறி கொண்டு போயிருக்கிறர் ஜே. பி. பட்டம் ஏற்றிக்கொண்டு வருவதற்கு ' என்று. அதைப் போன்று இப்பொழுது வான் வண்டியிலே ஏற்றி இறக்குகின்ற மாதிரி, சமா தான நீதிவான் நியமனங்கள் கொடுப்பதை நிறுத்த விட வேண்டும். சென்ற அரசாங்கம் கொடுத்த சமாதான நீதிவான் பதவிகள் தகுதி யற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டன எனக் கூறி, அவற்றை இந்த அரசாங்கம் நிறுத்திவிட்டது. அவ்வாறு நிறுத்திவிட்டு, அவர்களைப் போ ன் ற வ ர் க ஞ க் கே கொடுப்பதாயின் அந்தப் பதவிக்கு எந்தவித மதிப்புமில்லை. அமைச்சர் முதலாவது ஆண்டில் எவ்விதம் தகுதியானவர்களை நியமித்தாரோ, இனிமேலும் அவ்வாறே நிய
மித்தல் வேண்டும். நாங்கள் சொல்பவர்களை நியமியுங்கள் என்று
நாம் கூறவில்லை. தகுதியுள்ளவர்களுக்கு இந்தப் பதவியைக் கொடுத் தால்தான் இதனை மக்கள் மதிப்பார்கள்.
கழுதைக்குச் சேணங் கட்டினுலும் குதிரையாகாது
எனது தொகுதியிலே என்னலே தேர்தலில் தோற்கடிக்கப் Lilu 'L ... ஒருவரின் சிபார்சிலே மூவருக்குச் சமாதான நீதிவான் பதவி கள் கொடுக்கப்பட்டன. அதன்பின் அப்பதவியைப் பெற்றவர்கள் பணம் சேர்த்து, அந்தப் பதவியைப் பெற்றுத் தந்தவருக்கு நன்றிக் கடனுக வரவேற்பு வைத்தார்கள். இப்பொழுது சிலர் அந்தப் பதவி ᎶᏈ0u It i பெறுவதற்குப் பணம் சேர்த்து அவருக்கு வரவேற்பு வைக் கிருர்கள். எனவே, இவ்விதமான ஊழல்களுக்கு இடங்கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அமைச்சரின் 5-60 D. "கழுதைக்குச் சேணம் கட்டினுலும் குதிரையாகாது ?? என்று ஒரு பழமொழியுண்டு எனவே, தகுதிவாய்ந்தவர்களுக்கு இப்பதவியைக் கொடுக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கின்றேன்.
l

Page 45
அரசாங்கம் இப்பொழுது அரசாங்க உத்தியோகத்தர்களுக்குச் சமாதான நீதிவான் பதவி கொடுப்பதில்லையென்றும் அதனுல்தான் திருவாளர் பாக்கியராசாவின் சமாதான நீதிவான் பட்டத்தை நீக்கி னேன் என்றும் அமைச்சர் சொன்னர். ஆனல், இப்பொழுது பட்டி ருப்புத் தொகுதியிலே கந்தசாமி என்ற ஓர் அரசாங்க உத்தியோகத் தருக்குச் சமாதான நீதிவான் நியமனம் கொடுக்கப்பட்டிருப்பதாகப் பட்டிருப்புப் பாராளுமன்ற உறுப்பினர் என்னிடம் சொன்னர். அவருக்கு இவ்விவாதத்தில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கா மையால் நான் இதனை அமைச்சருடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
கங்காணிகள் பணம் சேர்க்கிறர்கள்
முந்திய அரசாங்க காலத்தில் போல் இப்பொழுது ச்மாதான நீதிவான் பதவியைப் பெறுவதற்குக் கங்காணிமாரும், தலைமைக் கங்காணிமாரும் நாட்டிலே தோன்றிவிட்டார்கள். எங்கள் பகுதி யிலே நடப்பது அமைச்சருக்குத் தெரியாது. அங்கே சிலர் இதற் காகப் பணம் செலவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். இதனை நான் அமைச்சருடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். முன் னர் இந்தப் பதவிகளை நான் சிபார்சு செய்தவர்களுக்கு அமைச்சர் கொடுத்தார். அதன் பின் * போதும் ' என்று அமைச்சர் எழுதி னர். ஆனல், பின்னரும் மூவருக்கு இந்தப் பதவிகளை அவர் கொடுத் தார். ' போதும் என்று கூறிவிட்டு இவ்வாறு கொடுக்கிறீர்களே’ என்று சொன்னேன். அவர் இப்பொழுது நிறுத்திவிட்டார்.
அரசாங்கம் பழிவாங்குகிறது
புங்குடுதீவு கிழக்குக்கு ஒரு மரண விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நான் நீதி அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். உடனே நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் எனக்குக் கடிதம் எழுதினர். ஆனல் அக் கடிதத்திலேயே அவர் இதுபற்றி யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றும் எழுதியிருந்தார். இன்று பல மாதங்களாகி விட்டன. எதுவும் நடக்கவில்லை. இதுபற்றி அரசாங்க அதிபருக்கு எழுதினேன். அவர் என்ன செய்கிறர் என்று தெரியாது. அவருக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு அமைச்சருக்கு நன்ருகத் தெரியும். தேர்தலில் தோற்கடிக்கப் டட்ட ஒருவரை அங்கு கொண்டுவந்து வைத்து, எங்களைப் பழிவாங்கு இற நிலையில் அரசாங்கம் இருக்கிறது. அமைச்சர் அவர்கள் அரசாங்க அதிப்ருடைய எண்ணப்படி செய்யாமல், தாமே தகுதியான உத்தி யோகத்தர்களை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். மிகு விரைவில் புங்குடுதீவு கிழக்குக்கு மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
(13-12-79 இல் நிகழ்த்திய உரை)
th

(م
கச்சேரியில் அறுபது
தேர்தல் கூட்டத்தில் நூறு
அண்மைல் 25 புது வசு வண்டிகள் வடபகுதிக்கு அனுப்பப் பட்ட பொழுது அங்கே கோலாகலமான விழா நடாத்தப்பட்டது. ஏனெனில், அதுவரையில் அவ்வளவு தொகையான புது வசு வண்டி கள் வட பிரதேசத்துக்கு அனுப்பப்படவில்லை. வசு வண்டிகளை அனுப்பாமல் அப்பகுதி புறக்கணிக்கப்பட்டபடியால் பல கேள்வி களை நான் இந்தப் பாராளுமன்றத்திலே கேட்டதன் பலனுகவே இந்த 25 புது வசு வண்டிகளும் அங்கே அனுப்பப்பட்டன. எனி னும் அவை போதியனவாக இல்லை.
20 - 4 ம் 78 இல் நான் இங்கு கேட்ட ஒரு கேள்விக்கு, 597 புது வசு வண்டிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டன என்ற மறுமொழி கிடைத்தது. அந்த மறுமொழியில், அன்றுவரையும் யாழ்ப்பாணத்துக்கு ஒரு புது வசு தானும் அனுப்பப் படவில்லை என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பிரதேச போக்குவரத்துச் சபைகள் நிறுவப்படுவதற்கு முன்னர் வசுச் சாலைகளுக்கு அனுப்பப்பட்ட 145 வசு வண்டிகளில் 12 வக வண்டிகள் மட்டுமே யாழ்ப்பாணப் பகுதிக்கு அனுப்பப்பட்டன. பிரதேச போக்குவரத்துச் சபைகள் நிறுவப்பட்ட பின்னர் நவம்பர் 6 ஆம் திகதி வரையும் அனுப்பப்பட்ட 568 வசு வண்டிகளில் சில வசு வண்டிகளே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
பல புது வசுக்களை அனுப்புக
எனவே, 1310 புது வசு வண்டிகள் பல வகச் சாலைகளுக் கும் அனுப்பப்பட்டாலும், அவற்றிலே வட பிரதேசத்துக்கு அனுப் பப்பட்ட வசு வண்டிகள் மிகக் குறைவானவை. அங்குள்ள குடிசனத் தொகையை - பயணம் செய்வோர் தொகையைக் கவனித்தால் இன் னும் பல புது வசு வண்டிகள் விரைவாக அனுப்பப்படல் வேண்டும் என்பது தெளிவாகின்றது.

Page 46
-- ܓ -- ܘ - ܙ - ܕ ܝ ¬ܚܡܹܐ ܘܚܘܝ
صيس- 84 -
இந்த ஆண்டு ஏப்பிறில் மாதம் 12 ஆம் திகதி யாழ்ப்பாணக் கச்சேரியிலே உத்தியோகத்தர்களோடும், பாராளுமன்ற உறுப்பினர் களோடும் அமைச்சர் ஒரு கூட்டத்தை நடாத்தினர். அக் கூட்டத் தில் 60 புது வசு வண்டிகளை வட பிரதேசத்துக்கு அனுப்புவதாக அமைச்சர் உறுதி கூறினர். அவற்றிலே, இதுவரையில் 37 வண்டிகளே அனுப்பப்பட்டிருக்கின்றன. அமைச்சர் கூறியதற்கொப்ப மிகுதி 23 வண்டிகளையும் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன். அமைச்சர் அங்கே மாநகரசபைத் தேர்தற் பிரசாரத் துக்குச் சென்ற பொழுது, மக்கள் தங்கள் யிரயாண வசதிக் குறைவை எடுத்துக் கூறியதால் 100 புது வசு வண்டிகளைத் தருவதாகப் பிரசாரக் கூட்டங்களிற் கூறினுர், 14-5-79 ஆம் திகதிய “ ஈழநாட் டிலே’ ‘* வட பிரதேசத்துக்கு 100 பஸ்களை அனுப்புவதாக அமைச்
சர் உறுதி ' என்ற செய்தி வெளிவந்தது. அது தேர்தற் பிரசாரம்
என்று நாம் எண்ணினலும், கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்திலே 60 புது வசு வண்டிகளை நிச்சயமாகத் தருவதாக அவர் கூறியபடி யால் மிகுதி 23 வசு வண்டிகளையும் அனுப்புமாறு கேட்கிறேன். இது நாம் கேட்ட தொகையன்று. அமைச்சர் அந்தக் கூட்டத்தில் கூறிய தொகை, அந்தக் கூட்ட நிகழ்ச்சிகள் எங்களுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன. வசுச் சாலேயும், நிலையமும்
வேைைணயில் ஒரு வகச் சாலேயை நிறுவ வேண்டும் என்று அந்தக் கச்சேரிக் கூட்டத்திலே கேட்டோம். இப்பொழுது காணி எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியிலும் அந்தக் காணி பற்றி விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அடுத்த ஆண் டில் இந்த வசுச் சாலையை விரைவாகக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் கூட்டத்திலே யாழ்ப்பாணத்திலே ஒரு வசு நிலையம் கட்டப்படும் என்று அமைச்சர் கூறினர். அந்த வசு நிலயத்தைக் கட்ட இன்னும் தொடங்கவில்லே. என வே, அதனேயும் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரின் வாக்குறுதி
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் வார இறுதியில் மேலதிக புகையிரத சேவைபொன்று இப்பொழுது நடைபெறுகிறது. இந்தச் சேவை கொழும்புக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் மிகு விரைவில் நாள்தோறும் நடைபெறுமென்று இன்று காலேயில் போக்கு வரத்து அமைச்சர் கூறினுர், நாங்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை முன்பு இருந்த ஒரு சேவையைத்த்ான் திரும்பத் தருமாறு கேட்கின் ருேம். அந்தச் சேவையை மிகு விரைவில் வடபகுதி மக்களுக்குத் தருமாறு கேட்டு எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.
( 14-12-79 இல் நிகழ்த்திய உரை )

2.
வடபகுதிக்கு
ஒன்றுமில்லை
எனது தொகுதி கடலால் சூழப்பட்ட பல தீவுகளைக் கொண்ட ஒரு தொகுதியாகும். தொகுதி முழுவதும் வாழ்கின்ற மக்கள் அனை வரும் கடற்கரையிலிருந்து ஒன்றரை மைல் தூரத்திற்குள்ளேயே வாழ்கின்றர்கள். எனது தொகுதியிலுள்ள தீவுகளின் கடற்கரைகள் ஏனைய தொகுதிகளின் கடற்கரைகளிலும் கூடிய நீளம் உடையன ஆகையால் எனது தொகுதியிலே உள்ள மீனவர்களுக்குச் செய்யப்பட வேண்டிய பல சேவைகள் பற்றி நான் இங்கு சுருக்கமாகக் குறிப் பிட வேண்டி இருக்கிறது.
என்னுடைய தொகுதியிலும் இடம் பெயர்ந்து வந்து தொழில்
செய்யும் மீனவர்கள் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கின்றனர்.
இது இலங்கை முழுவதும் உள்ள ஒரு பிரச்சனையாகும். சொந்த ஊர்களில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் இடம் பெயர்ந்துவந்து தொழில் செய்யும் மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் உண்டா வதைத் தடுக்க இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே திருகோணமலைப் பாராளுமன்ற உறுப் பினர் அவர்கள் கூறியதைப்போல இடம் பெயர்ந்து தொழில் செய்யும் மீனவர்களுக்கும் சொந்த ஊர்களில் இருந்து தொழில் செய்யும் மீனவர்களுக்கும் இடையில் மோதலைத் தவிர்க்கச் சில நிரந் தரமான ஒழுங்குகள் அவசரம் செய்யப்பட வேண்டும் என்பதை நானும் இங்கு வற்புறுத்திக் கூறவேண்டி இருக்கிறது.
பலமுறை அலைகிறர்கள்
மீனவர்களுக்குக் கடன் வழங்கப்படுவது பற்றிக் குறிப்பிட வேண்டும். எனக்கு முன்னர்ப் பேசிய பல உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியதுபோல, ஊர்களில் மக்களோடு தொடர்புபட்டுத் தொண் டாற்றுகின்ற கடற்ருெழில் பரிசோதகர்கள் போதிய அளவு
* தொண்டாற்றவில்லை. படகுகளை வாங்குவதற்குக் கடன் பெறுவதற்
கான பத்திரங்கள் அவர்கள் மூலமாகத் தான் கடற்றெழிலாளர்

Page 47
களுக்குக் கொடுக்கட்பட்டன. பலர் இவற்றைப் பெற முடியாமல் என்னிடம் வந்து முறையிட்டிருக்கிறர்கள். கடற்றெழிற் பரிசோதகர் கள் சிலர் கடற்றெழிலாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உயத் திரமாவது செய்யாமலிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது அமைச்
(569Lu ä56ynud. *
வங்கியிலே கடன் பெறும்போதும் பல சிக்கல்கள் ஏற்படு கின்றன. எங்களிடமும் கடற்ருெழிலாளர்கள் பலமுறை வந்து அலைகிருர்கள். சில கடற்றெழிலாளர்கள் வங்கிக்கு நாலு, ஐந்து முறை சென்று அலேகிருர்கள். ஆகவே கடற்ருெழில் பரிசோதகர்கள்
போன்றவர்கள் உதவி செய்து இந்தக் கடன்களைக் கடற்றெழிலாளர்
இலகுவில் பெற வழி செய்தாலே அமைச்சருடைய திட்டப்படி அவர்கள் நன்மையடைய முடியும்.
வங்கியில் கடன் பெறுவதை இலகுவாக்குவதற்காகக் கடற் ருெழிலாளர்களுக்கென வங்கிகள் சில திறக்கப்பட்டிருக்கின்றன. எனது தொகுதியாகிய ஊர்காவற்றுறையிலே இத்தகைய வங்கி யொன்றைத் திறப்பதற்கு அமைச்சர் அனுமதி கொடுத்திருந்தார். ஆனல் இன்னும் அந்த வங்கி திறக்கப்படவில்லை. இப்படிக் கடற் ருெழில் வங்கிகளைத் திறந்தால், மீனவர்கள் இலங்கை வங்கிக்கோ
மக்கள் வங்கிக்கோ சென்று கடன் பெறுவதில் இருக்கிற தாமதத்
தையும் அலைச்சலையும் குறைக்கலாம்.
பிரதிப் பணிப்பாளர்கள்
இப்பொழுது அமைச்சர் கடற்றெழிலாளர்கள் வாழுகின்ற (
இடங்களை நாலு பிரிவாகப் பிரித்திருக்கிருர், வடமேற்கு, தென் பகுதி, கிழக்குப்பகுதி, வடபகுதி ஆகிய இந்த நாலு பிரிவிலும் நாலு பிரதிப் பணிப்பாளர்கள் நியமிக்கப்படல் வேண்டும். நான்கு பிரதிப் பணிப்பாளர்கள் பொறுப்பிலே இந்த நான்கு பிரிவையும் இயங்கச் செய்தால், மக்கள் அமைச்சருக்கோ கொழும்பிலுள்ள உத்தியோகத்தர்களுக்கோ தொல்லை கொடுக்காமல் பிரதிப் பணிப் பாளர்களோடு தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வாய்ப் பாக இருக்கும். அப்படிப் பிரிப்பது மட்டுமன்றி, ஆட்சி மாற்றத் தைப் பரவலாக்கவும் மிக விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். வெளி இணைப்பு மோட்டார் போன்றவற்றை அந்தந்தப் பகுதிகளிலே வாங்கத்தக்கதாகவும் வசதிகள் செய்யப்படவேண்டும்,

வடபகுதி புறக்கணிக்கப்பட்டுளது
கடற்ருெழில் அமைச்சர் 1978 - 79 ஆம் ஆண்டிற்கான் முன் னேற்றம் பற்றி இங்கே ஒர் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிருர், அவருடைய அறிக்கையைப் பயன்படுத்தியே இங்கு நான் பேசுகின் றேன். அவருடைய அறிக்கையில் வடபகுதியில் கடற்றெழில் செய்யும் மக்கள் 35.64 வீதமானவர்கள் என்ற விபரம் தரப் பட்டிருக்கிறது. சேமநலத்திற்காகப் பல திட்டங்கள் வகுக்கப்படு வதாக அவர் தம்முடைய அறிக்கையிலே கூறி இருக்கின்றர். தமிழ் அறிக்கையில் மூன்ரும் பக்கத்தில் இந்த விபரங்கள் தரப் பட்டுள்ளன. ' மீன்பிடித் துறைமுகங்கள், கப்பல் நங்கூரத்தானங் கள், ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலைகள், பழுதுபார்க்கும் தொழிற் கூடங்கள், வீடமைப்புத் திட்டங்கள், மீன் ஏலம் கூறும் நிலையங் கள், குளிர்சாதன வசதிகொண்ட களஞ்சிய அறைகள், இறங்கு துறைகள்." இப்படிக் கடற்ருெழிலாளர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வசதிகளில் இதுவரை ஒன்றுதானும் வடபகுதிக்கு கொடுக் கப்படவில்லை என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனிக்கட்டித் தொழிற்சாலையோ, குளிர் அறையோ, படகு திருத்தும் நிலையமோ, மீன்பிடித் துறைமுகமோ எதுவும் இதுவரை வடபகுதிக்குக் கொடுக்கப்படவில்லை. ஆகையால் இந்தக் குறைகளை நீக்க அடுத்த ஆண்டிலே வடபகுதியில் என்ன என்ன திட்டங்களை அமைச்சர் நிறைவேற்ற இருக்கிருர் என்பதை நான் அறியவிரும்புகிறேன். ஏனெனில் அவருடைய அறிக்கையிலே வீடமைப்புத் திட்டங்களுடன் இனிமேல் செய்யப்போகும் வேலைகள் பற்றியும் கூறப்பட்டிருக் கின்றது.
வீடமைப்புத் திட்டம்
நான் இங்கு வீடமைப்புத் திட்டம்பற்றி ஒன்று சொல்ல வேண்டும். இதுவரை ஒவ்வொரு மீனவருக்கும் வீடுகட்ட 1800 ரூபா வழங்கப்பட்டு வந்தது. ஆனல் இந்தத் தொகை போதாது. இந்தத் தொகையைக் கொண்டு அவர்கள் ஒரு வீட்டைக் கட்ட முடியாது. இப்பொழுது வீடமைப்புத் திணைக்களம் சுய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் வீடுகளைக்கட்ட உதவிசெய்து வருகின்றது. இந்தச் சுய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் மீனவர்கள் வீடு கட்டுகின்ற பொழுது, இப்பொழுது கொடுக்கின்ற 1,800 ரூபாவையும் அவர் களுக்கு உதவியாகக் கொடுத்தால் அவர்கள் மிகு இலகுவாக வீடு களைக் கட்ட முடியும். இப்பொழுது கொடுக்கப்படும் 1,800 ரூபா பணத் தைக் கொண் டு தற்போதைய சூழ்நிலையில் ஓர்

Page 48
அறையைக்கூடக் கட்டமுடியாது. ஆகவே அந்தப் பணத்தையும் கொடுத்து - இது கடற்றெழிலாளர்களுக்கு அமைச்சர் செய்கின்ற விசேட உதவியாக இருக்கும் - சுடி வீடமைப்புத் திட்டத்தின்கீழ் செய் யும் உதவியையும் செய்தால் அவர்கள் தங்களுடைய வீடுகளை இலகு வில் அமைத்துக்கொள்ள முடியும்.
வடபகுதிக்கு எவ்வளவு பணம்
நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்ற கடற்ருெழில் பிரதேசங்களிலே முதலாவது பிரிவாகிய தென்மேற்குக் கரையோர அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதிஉதவி அளிக்கிறது. இரண்டாவது பிரிவான வடமேற்கு கடற்றெழில் திட்டத்துக்கு அரபுப் பொருளாதார அபிவிருத்திக்கான அபுதாபி நிதிப்பிரிவு க ட ன் வழங்கியிருக்கிறது. மூன்ருவது பிரிவான கிழக்குக் கரையோர அபிவிருத்தித் திட்டத்துக்கு நெதர்லாந்து அரசாங்கம் நிதி உதவி அளிக்கிறது. நான்கு பிரதேசங்களில் வட பிரதேசம் தவிர்ந்த மூன்று பிரதேசங்களின் திட்ட வேலைகளுக்குப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பணம் வடபகுதிக்கு ஒதுக் கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன்.
ஐந்து பனிக்கட்டித் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக் கின்றன. இவற்றில் ஒன்றுதானும் நான்கு பிரிவுகளில் ஒன்றன வடபகுதியிலே இன்னும் திறக்கப்படவில்லை. இக்குறைகளை நீக்கு வதற்காக முதலில் ஒரு பனிக்கட்டித் தொழிற்சாலையையும், ஒரு குளிர்சாதனக் கூடத்தையும், படகு திருத்தும் இடத்தையும் மிகு விரைவிலே அங்கு தொடங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஊர்காவற்றுறையில் மீன்பிடித் துறைமுகம்
எனது தொகுசியிலுள்ள ஊர்காவற்றுறை பழம்பெரும் நகர மாகும். அமைச்சர் அங்கே ஒரு மீன்பிடித்துறைமுகத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் ஏ னை ய தீவுகளிலேயிருக்கின்ற கடற்றெழிலாளர்களும் அதனல் பயனடைவார்கள். அங்கு ஒரு படகு திருத்தும் கூடத்தையும் அமைக்கவேண்டும். நெடுந்தீவு போன்ற பல தீவுகளிலே கடற்ருெழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பனிக்கட்டி கிடைக்காமல் இருப்பதனல் ஊர்காவற்றுறையிலே ஒரு பனிக்கட்டித் தொழிற்சாலையையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
( 15-12-79 இல் நிகழ்த்திய உரை )
 

கறுவாக்காட்டுத்
தமிழ்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் இன்று பொழுதுபோக்கிற்காக மட்டு மன்றி அறிவியல் வளர்ச்சிக்கும், அழகியல் உணர்வினைத் தூண்டு வதற்கும் பயன்படுகின்றன. எனவே, இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை நல்ல தரமுள்ளவையாகவும், தொடர்பாகக் கேட்கத்தக்கவையாகவும் அமைத்தல் இன்றியமையாததாகும் தமிழ்ச் சேவை ஒன்றிலே காஃல 8 மணியிலிருந்து மாலே 5 மணி வரை எவ்விதமான ஒலி பரப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதை நான் சென்ற ஆண்டிலும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஒலிபரப்புச் சேவைகளிலே ஏறக்குறைய பகல் முழுவதும் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனல் தமிழ்ச் சேவையிலே காலே 10 மணியிலிருந்து பகல் 12 மணிவரை எவ்விதமான நிகழ்ச்சியும் இல்லை. இந்த நேரத்திலே சிங்கள ஒலி பர புச் சேவையில் இரு சேவைகள் நடத்தப்படுகின்றன. எனவே காலே 10 மணியிலிருந்து 12 மணிவரை தமிழ் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்து வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இரவில் 8 மணி தொடக்கம் 9 மணிவரை முசிலிம் நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. இது ஒரு சமய நிகழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நேரத்தைக் கூட்டிக் கொடுத்தாலும் நர்ங்கள் அதை வர வேற்கிருேம். ஆனல் அந்த நேரம் இரவு நேரம், மக்கள் எல்லோ ரும் வி ட் டி ல் இருக்கின்ற நேரம். நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கான ஒருநல்ல நேரம். எனவே, இந்த முசிலிம் நிகழ்ச்சிகள் நடக்கின்ற இவ் வேளையிலே நல்ல தமிழ் நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்ய வேண்டும்.
எல்லாக் கலைஞர்களும் பங்குகொள்ளல் வேண்டும்
ஒலிபரப்பப்படுகின்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் நாடகங்
கள் எல்லாம் ஒரே மாதிரியானவிையாகவும், திரும்பத் திரும்ப ஒரே
நடிகர்களாலும் கலைஞர்களாலும் நடிக்கப்படுவனவாகவும் நடத்
தப்படுவனவாகவும் இருப்பதை நாங்கள் காண்கிருேம். ஏனைய கலைஞர்
களுக்கும், நடிகர்களுக்கும் இந்தக் கலந்துரையாடல்கள், நாடகங்கள் ஆகிய
வற்றிலே இடம் கொடுக்கப்படல் வேண்டும். இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சி
72

Page 49
、g0 一 سے۔
களை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்கள் சென்ற அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்டார்களா அல்லது இந்த அரசாங்க காலத்திலே நிய மிக்கப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. 9-12-79 ஆம் திகதி ஒலிபரப்பிலே நேயர் கடிதங்களுக்குப் பதில் கொடுக்கப் பட்டபொழுது அதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. அதிலே மூன்றுபேர் பங்குபற்றினர்கள். அவர்களில் ஒரு பெண்மணி பேசிய பொழுது அது கொழும்புக் கறுவாக்காட்டுத் தமிழ் போல இருந்தது. எனவே, அறிவிப்பாளர்களைத் தெரிவுசெய்கின்ற பொழுது தமிழை நன்முக உச்சரிக்கத்தக்கவர்களையும், தமிழில் நல்ல அறிவுள்ளவர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.
பிழையான மாவட்டச் செய்திகள்
நான் இங்கு மிகவும் பிரதானமாகக் குறிப்பிட விரும்புவது தமிழிலே ஒலிபரப்பப்படுகின்ற மாவட்டச் செய்திகள் பற்றியேயாகும் , மா வட்டச் செய்திகளெல்லாம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தையும், ஊர்காவற்றுறைத் தொகுதியையும் பற்றியவையாகத்தான் இருக்கின் p6ᏈᏠ, இச்செய்திகள் மிகவும் பிழையாக ஒலிபரப்பப்படுகின்றன. இது தொடர்பாக நான் ஒரு கேள்வியைப் பாராளுமன்றத்தில் கேட் டேன். அந்தக் கேள்விக்கு மறுமொழி தரப்பட்டது. அந்த மறு மொழி 11-12-79 ஆம் தி க திய உத்தியோகபூர்வ அறிக்கையில் தொகுதி 8, கலம் 9 இல் இருக்கின்றது. அதை நா ன் இங்கே வாசித்துக் காட்டுகின்றேன்.
* யாழ்ப்பாண மாவட்டத்திலே குடி நீர் ப் பிரச்சனையைத் தீர்த்து  ைவக்கு முக மாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. யோகேந்திரா துரைசுவாமி ஐந்து பெரிய திட்டங்களையும், 44 சிறிய திட்டங்களையும் அமுல் செய்வதற்காகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ருர்.'
இந்தச் செய்தி ' 44 சிறிய திட்டங்கள்' என்றும், " 5 பெரிய திட்டங்கள்' என்றும் கூறுகின்றது. ஆணுல் ஒரு திட்டமும் இன்னும் வரையப்படவில்லை. திட்டங்களை வரையாமல், வெறும் ஆலோசனைக் ஆட்டமொன்றை மட்டும் நடாத்திவிட்டு, இத்திட்டங்களையெல்லாம் விரை வில் நடைமுறைப்படுத்தப் போகிருேம் என்ற செய்தியைப் பரப்பினுல் இது எவ்வாறு உண்மையாக இருக்கும் என்று நான் கேட்கின்றேன். இவை உண்மையற்ற செய்திகள் என்று நாங்கள் எண்ணுகிருேம் ; மக்கள் எண்ணுகிருர்கள். அரைகுறைச் செய்திகள்
இவ்வாறு மாவட்டச் செய்தியிலே ஒலிபரப்பப்படும் செய்தி ஆள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கின்றன. இது கண்டிக் கப்படவேண்டிய ஒரு விடயமாகும். இந்தச் செய்திப் பிரசாரங்களிலே அரசியலைப் புகுத்துவதிலே பிரயோசனம் இல்லை. பத்திரிகைகளிலே
 

(...)
வருகின்ற அரைகுறைச் செய்திகளை எடுத்து, இவ்வாறு மாவட்டச் செய்தியாக ஒலிபரப்புகிருர்கள். 18-1179 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை ஒலிபரப்பப்பட்ட மாவட்டச்செய்தி பல பிழைகளே உடையதாக இருக்கிறது. * வீரகேசரி' யிலே இருந்த ஒரு செய்தியை அப்படியே பிரதிபண்ணி ஒலிபரப்பியிருக்கிருர்கள். செய்திகளை ஒலிபரப்ப அனுப்புமுன் அவை உண்மையானவையா என்பதை அறிந்து - அவற்றுடன் தொடர்பான திணைக்களங்களை உசாவி உண்மையை அறிந்து - மாவட்டச் செய்திக்குப் பொறுப் பான நிருபர்கள் அவற்றை அனுப்ப வேண்டும். 22-11-79 ஆம் தேதி இரவு 7 மணிக்குத் தரப்பட்ட செய்தியும் மிகவும் பிழையான செய்தியாகும். ஆகவே மாவட்டச் செய்திகளேத் தருகின்றவர்கள் உண்மையான செய்திகளைத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பாறையிலே ஒர் அலைமாற்று நிலையம் இருக்கிறது. அது பழுதாயிருக்கிறது. அந்த நிலையம் நன்கு திருத்தப்படவில்லை என்று மக்கள் இப்பொழுது முறையிட்டுக்கொண்டிருக்கிறர்கள். அதை விரைவிலே நன்கு திருத்திப் பயன்படுத்தவேண்டும். யாழ்ப்பாணத் திலே வானெலி நிலையமொன்று கட்டுவதாக அமைச்சர் எனக்கு எழுதியிருந்தார். அதற்குரிய காணி பெறப்பட்டுள்ளது. எப்பொழுது அந்த யாழ்ப்பாண வானுெலி நிலையத்திலிருந்து ஒலி பரப்புத் தொடங்கும் என்பதை அறிய விரும்புகிறேன்.
நயினுதீவுக்கு வேண்டாம்
கோட்டல் கூட்டுத்தாபனம் நயினதிவிலே வாடி வீடொன்
றைக் கட்ட ஒழுங்கு செய்வதாக அறிகின்ருேம். ந யி னு தீவு புண்ணிய தலமாகக் கருதப்படும் ஓர் இடம். அங்கே கோட்டல்
கூட்டுத்தாபனம் வாடிவீட்டைக் கட்ட வேண்டியதில்லிை, போதிய மடங்கள் அங்கே இருக்கின்றன. புத்த கோவிலுக்கு அருகில் பல தங்குமிடங்கள் இருக்கின்றன. அம்மன் கோவிலுக்கு அருகிலும் பல மடங்கள் இருக்கின்றன. அங்கே கோப்டல் கூட்டுத்தாபனம் வாடிவீடு கட்டுவதை மக்கள் எதிர்க்கிருர்கள். பல மடங்களும் தங்குமிடங்களும் அங்கே இருப்பதனுல் அங்கே வாடிவீடு தேவை யில்லையென மக்கள் எனக்கு முறையிடுகிறர்கள். ஆதலால் கோட்டல் கூட்டுத்தாபனம் அங்கே வாடிவீடு கட்டும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பத்திரிகையாளர் சங்கத்தை அமைப்பதற்குப் பத்திரிகைப் பேரவையால் அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட மாகாணத்தில் இருந்து வெளிவரும் “ ஈழநாடு', ' சுதந்திரன்' ஆகிய இரு பத்திரிகைகளின் ஆசிரியர்களும் அதற்காகக் கூட்டப்பட்ட கூட் டத்துக்கு அழைக்கப்படவில்லை. இந்தக் குறையையும் நீக்கவேண்டும்.
(18-1279) இல் நிகழ்த்திய உரை ) ፲ - ሥ ***`”ሣ

Page 50
4.
எவரும்
பேசாத விடயம்
பலநோக்குக் கூ ட் டு ற வு ச் சங்கங்கள் பல து  ைற க ளி லே செயற்பாடு களை விரி வ  ைடய ச் செய்வதற்குப் பல இடர்ப்பாடுகள் இப் பொழுது இரு க் கி ன் ற ன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பல தொழில்களிலும் ஈடுபட வேண் டு ம் எனின் பணம் வேண்டும். அவை பணத்தை வங்கிகளிலிருந்தும் கடனுகப் பெற முடியும். ஆல்ை, இப்பொழுது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்குப் பல தொல்லைகள் இருக்கின்றன. வங்கி களுடைய போக்கும், வங்கிகளிலுள்ள உத்தியோகத்தர் களுடைய நாட்டமின்மையும் காரணமாக இக்கடன்களை விரைவிலே பெறமுடியாமலிருக்கிறது. ஆகவே கூட்டுறவு வங்கியை மிக விரைவிலே தொடங்கி அந்தக் கூட்டுறவு வங்கி யின் மூலமாகக் கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கடன் கொடுக்கும் நடைமுறையை விரைவில் செயற்படுத்த வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள்
இந்த வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலவிவா
தத்தின்போது பேசிய நிதியமைச்சர் கிராமிய வங்கிகளை இப்பொழுது திறக்கின்ற கருத்துத் தமக்கில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தோடும் இணைந்து இயங்கிய கிராமிய வங்கிகள் எல் லாம் இப்பொழுது மூடப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும்திறக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று o O o ● ” اسی لیٹy36T
வேண்டிச்சரே கூறியிருக்கிருர், ஆகவே கூட்டுறவு வங்கி அரசியலைப் புக, -
 
 

لuے 93 میل...............
யொன்றை நிறுவி அதன் மூலமாகப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வேண்டிய கடன்கள், ஏனைய வசதிகளைக் கொடுக்க விரைவிலே நடவடிக்கை யெடுக்கவேண்டும்.
முன்னர் பல கூட்டுறவு வங்கிகள் இயங்கி வந்தன. நாங்கள் புதிதாக ஒன்றை அமைக்கும்படி கேட்கவில்லை, சென்ற அரசாங்கம் இல்லாமற் செய்துவிட்ட கூட்டுறவு வங்கிகளை மீண்டும் நிறுவி - ஒரு தொகுதிக்கு ஒரு கிளை யாவது நிறுவி - அதன் மூலமாகப் பல நோக்குக் கூட் டுறவுச் சங்கங்கள் பணம் பெறுவதிலேயுள்ள தொல்லை களை நீக்க முயற்சி செய்வது இன்றியமையாததாகும்.
அரசாங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க ங் களுக்குப் பல து ை0களிலும் " வியாபாரத் துறையிலும், கைத்தொழில் துறையிலும் முன்னீடு கொடுப்பது இன்றி யமையாதது. தொடக்கத்தில் அரசாங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களைப் பொருட்படுத்தவில்லை; இந் நாட்டில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ந ல் ல தொண்டைச் செய்கின்ற நிலையில் இருக்கின்றன என் பதை அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. அந் பூர் சங்கங்களுக்குச் சில முன்னீடுகளைக் கொடுத்தால் மட்டுமே அவை நல்ல முறையில் இயங்க முடியும்.
ஆணைக்குழு
பலநோக்கக் கூட்டுறவச் சங்கங்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும்பொழுது பல சிக்கல்கள் உண் டாகின்றன. அந்த ஒழுங்கு நடவடிக்கைகளை விசாரிப்ப வர்கள் அவற்றை விரைவாக விசாரிப்பதில்லை. அதன் பொருட்டு நியமிக்கப்படும் நடுவர்கள் முறையாக இயங் குவதில்லை. அவர்களுடைய போக்கைப்பற்றிப் பலவகை யான குறைகள் கூறப்படுகின்றன. எனவே கூட்டுறவு ஆணைக் குழு நடுவர்களை நியமிக்காமல், ஒரு பட்டியலை அனுப்பி அவர்களிற் பொருத்தமானவர்களைத் தெரிவு

Page 51
அந்த 94 -
செய்யும்படி கூட்டுறவுச் சங்கங்களைக் கேட்பது நல்லது. ஆணைக் குழு நியமிக்கும்போது சில வேளைகளில் பொருத்த மில்லாதவர்களும் சந்தேகப்படத்தக்க நடத்தை உள்ளவர் களும் நியமிக்கப்படுகிறர்கள். அப்படிப்பட்டவர்கள் நிய மிக்கப்பட்டால் நீதி வழங்கமாட்டார்கள். அவ்வாறு நீதி வழங்காமல் விடப்பட்டதற்குப் பல உதாரணங்கள் இருக் கின்றன.
கூட்டுறவு ஆணைக்குழு இலங்கை முழுவதிலு முள்ள முறையீடுகளை ஆராய வேண்டியிருக்கிறது. ஒரு
நாளைக்குப் பத்து, பதினைந்து முறையீடுகள் ஆணைக்குழு
வுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு கூட்டுறவு ஆணைக் குழு நல்ல முறையில் விசாரணை செய்ய முடியாது. அதனல் தனித்தனிக் குழுக்களை அவர் கள் அமைக்கிருர்கள். அந்தக் குழுக்களிலுள்ள உறுப் பினர்களுடைய நீதி நேர்மையைப் பற்றி அந்த ஆணைக் குழு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலையில் இருக்கி றது. எனவே, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டியது மிக இன்றியமையா தது. இதை விரைவில் செய்ய வேண்டும்.
இப்பொழுதுள்ள ஆணைக்குழு உறுப்பினர்களில் தமிழ் தெரிந்தவர்கள்,ஒருவருமில்லை. ஆணைக்குழுவினுடைய அலு வலகத்தில்கூடத் தமிழிலே கடிதம் அனுப்பினுல், கவ னித்து நடவடிக்கை எடுப்பதற்கு வேண்டிய உத்தியோ
கத்தர்கள் இல்லை. இதனுல் தமிழில் மட்டும் தங்கள் அலுவல்களை எழுதி அனுப்புகின்ற தொழிலாளர்கள்"
பெரிதும் இடர்ப்படுகிருரர்கள். தங்களுடைய குறைகளைப் பற்றி ஏழைத் தொழிலாளர்கள் தமிழிலே அனுப்பு கிற கடிதங்கள் சிறிதும் கவனிக்கப்படாமல் போகின்றன. ஆதலால், இதனை விரைவாகக் கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்,
 
 
 

கூட்டுறவு ஊழியர்கள்
இதுவரை இந்தச்சபையிலே எந்தவொரு உறுப்பின ரும் பேசாத விடயமொன்றை நான் சிறப்பாக அமைச்சரு டைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். கூட்டு றவு ஊழியர்களது சேவை நிலைமை பற்றிக் கூற விரும்பு கிறேன். 1972 ஆம் ஆண்டிலே இவர்களுக்குச் சம்பளத் திட்டமொன்று வகுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையும் புதிய சம்பளத் திட்டமெதுவும் இந்த ஊழியர்களுக்கு வகுக்கப்படவில்லை. சேவை நிபந் தனைகள், உத்தியோக உயர்வு, மாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு முதலியன எதுவும் இல்லாமல் இவர்கள் பல குறைகளுக்காளாகிக் கொண்டிருக்கிருர்கள். இதனை எவ ரும் மறுக்க முடியாது. கூட்டுறவுச் சேவையொன்றை உரு வாக்குமாறு நான் சென்ற முறையும் அமைச்சரிடம் கேட் டேன். கூட்டுறவு ஊழியர்களுக்கு நிவாரணமளிக்க இதுதான் வழி.
உணவுமுத்திரை -
அடுத்து உணவுமுத்திரை பற்றியதாகும். இது
எங்களை ஒவ்வொரு நாளும் பாதிக்கிற விடயமாக இருக்
கின்றது. எங்க ள் பகுதிகளில் இது பூதாகாரமாகத் தலைவிரித்தாடுகிறது. மற்றைய பகுதிகளுக்கும், எங்கள் பகுதிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. எங்கள், பகுதியிலுள்ள சில உத்தியோகத்தர்கள், உணவு முத்திரைகளைக் குறைத்துக் கொடுத்தால் அரசாங்கத்திடம் நல்ல பெயரை எடுக்கலாம் ;
மேல் உத்தியோகத்தர்கள் தங்களை நல்லவர்களாகக் கருது
வார்கள் என்று நினைக்கிறர்கள். உணவு முத்திரைகளை யாருக்குக் கொடுப்பது என்பதைக் கிராம சேவையாளர்கள் (Լpւգ.6վ செய்கிருர்கள். கிராம சேவையாளர்களுக்கு எதிர்ப்புக் காட்டுகிறவர்களும், அவர்களைப்பற்றி முறை யிட்டவர்களும் இருப்பார்கள். ஆதலால், எல்லாக் கிராம சேவையாளர்களும் நீதி வழங்குவார்கள் என எண்ண (plquirtg).

Page 52
to e?oc's
لجصحسن 9 سم.
அரசியல் பச்சோந்திகளைப் புகுத்த வேண்டாம்
இங்கே பேசியவர்கள், அரசியலைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் புகுத்த வேண்டாம் எ ன் று சொன்னூர்கள். அரசியலைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் களில் புகுத்தாமல் இருந்தபடியால், சென்ற இரண்டு ஆண்டு களில் எங்களுடைய கண்காணிப்பில் அவை செம்மையாக இயங்கி வந்திருக்கின்றன. நட்டத்தில் இயங்கிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எல்லாம் இன்று எவ்வித நட்டமுமில்லாமல் எங்கள் பகுதி க ளி ல் இயங்குகின்றன. இதற்குக் காரணம் அவை எங்களுடைய நேரடிக் கண் காணிப்பில் இருந்தமையேயாகும். இன்று கட்சி அமைப் பாளர்கள் என்ற போர்வையில் சிலரைப் புகுத்த முயல் கிறீர்கள். இதற்கு இடங்கொடுத்தால், முன்னேய அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழலிலும் பார்க்க இந்த அரசாங்க காலத்தில் அதிக ஊழல்கள் இடம்பெறும். முன்பு பலநோக் குக்கூட்டுறவுச் சங்கங்களை அழித்த அரசியல் பச்சோந் திகள், இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கள் என்று சொல்லிக் கொண்டு ஓடி வருகின்ருர்கள். அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நன்ருக நடை பெற்ருல் எங்கள் நாட்டில் நல்ல தொண்டுகளைச் செய்ய முடியும், சிறப்பாகப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செல வுத் திட்ட வேலைகளை எல்லாம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாகச் செய்ய முடியும். பன்முகப்படுத் தப்பட்ட வரவு செலவுத் திட்ட வேலைகளைப் பின்தங்கிய எங்கள் பகுதிகளில் செய்ய ஒருவரும் முன்வருவதில்லை. ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தழுவி இந்தச் சங்கங்கள் நடக்கத்தக்கதாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அன்றேல் ஒரு வருடத்துக்குள் முன்னைய அர சாங்க காலத்தில் இருந்த த்ஊழல்கள் எங்கள் பகுதியில் மீண்டும் தலை காட்டும்.
(22-12-79 இல் நிகழ்த்திய உரை)
 
 
 

-

Page 53
ܕܐ ܢ`
it. பொ. இரத்தினம் பா
1, digg. மண்ணும் ~)
2. அடிமைச் சாசனம்
எங்கள் போராட்டம் சிங்கள ஏகாதிபத்தியச்
நீதியை, நியாயத்தை, ấžavgöra. Gh G3 LITETIT. எக்காலத்திலும், எவ்வ தில் உண்மை, நீதி, ந் நாமும் வெல்வோம் ந
'. சிங்கள மக்களுக்கு அதைப் போலத் தமி தேசம் இருக்கிறது. இ துக் கொண்டும், மறந் ராக இருக்கின்றபடிய "صے سے
' .zairg:G sóli_SPrfið -
பால் குடிக்க வேண்ட * புலி, புலி என்று சொ சொன்னுல் - நீங்களே இந்த நாட்டில் பிரிவி கள் சிங்களம் மட்டு சிங்கள மக்களையும் பிரித்து வைத்திருக்கின் வேண்டும்.' 4. தனி ஆட்சி
இந்த இணைப்பாட்சிக் இனி இந்த நாட்டிலே என்ற கொள்கைதான்  ̄ܓ வைக்க விரும்புகின்றே 3. தடுப்புக் காவலில்
இலங்கையின் இண்ட பல ஆண்டுகளா ப் ப லும் அஞ்சாமலும் ப எனும் கடைசிப்படின சிப் படியிலிருந்து தமிழி ஏகாதிபத்தியத்தாலும்
ਛੂਪ

உ எழுதிய அரசியல் நூல்கள்
~~~~~~~~లా
சுட்ட மண்ணும் தை 1980
விலை ரூபா 3 - 0
அகிம்சைப் போராட்டம் நயவஞ்சகச்
சூழ்ச்சிக்கு எதிரான போராட்டம்
உண்மையை, உயர்ந்த மானத்தை படம். ஆகையால் இப்போராட்டம் கையிலும் தோல்வி காணுது உலகத் நியாயம் என்றும் வெல்வதைப் போல ம்மை நாமே ஆள்வோம்!' - பக் 28 -ஆவணி, 1972 எப்படி ஒரு பிரதேசம் இருக்கிறதோ ழர்களுக்கும் இந்நாட்டிலே ஒரு பிர இந்த வரலாற்று உண்மைகளை துவிட்டும் தமிழர்கள் சிறுபான்மையின்
ால் அவர்களே இரண்டாந்தரப் பிரசை
அடிமைகளாக்கி விடலாம் என்று மனப் . 7:55 7 ܚܒܝܚTh 8:9 ன்னுல் - பிரிவினை பிரிவினே என்று
பிரிவினக்கு வித்திட்டவர்களாக - னயை உருவாக்கியவர்களாக ஆகுவீர் ம் சட்டம் சென்ற பல ஆண்டுகளாகச்
தமிழ் மக்களையும் பல துறைகளிலும் 1றது. இனிப் பிரதேசம்தான் பிரிய
== guహ్, 1972
கொள்கையை ஏற்காமல் விட்டால்
தனி ஆட்சிக் கொள்கை - தனிநாடு
வலிவுபெறும் என்பதைச் சொல்லி
齿。 = km&si ?』ー
பத்து நாள்கள் 上
ாவது பெரிய இனமான தமிழ் இன்ம் ல இன்னல்களை அடைந்து, அசையாம ல படிகளைக் கடந்து, இன விடுதலே பி அடைந்து விட்டது. இந்தக் கடை னத்தை இறக்குவதற்கு எந்தச் சிங்கள
இனி முடியாது.' 一 。 。
ச்சகம், யாழ்ப்பானம்
ஆனி, 1972