கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிலந்தி வயல்

Page 1


Page 2


Page 3

༦ སྣ། ཛ༤ Aདི་སྔ་ རྒྱུར་ ༥ ༨ ༤ ༽
YN N1. بى على المع
சிலந்தி வயல்
சிறுகதைத் தொகுப்பு
முத்து இராசரத்தினம்
༽།།
பீஷ்மன் பதிப்பகம் 432 காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்

Page 4
MUTHU RAJARATNAM's
SILANTHI - VAYAL
Collection of Short Stories
PRICE Rs. 41.75
Published by a
BEESHMAN PATHIPPAKAM
431 Kankesanthurai Road - Jaffna
rinted by Chettiar Press, Jaffna.

ټوك
முகவுரை
இத்தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்து முடித்த தும் இன்றைய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை இலக்கியச் சூழ்நிலையில் இவற்றை எவ்வாறு பொருத்திப் பார்ப்பது என்று எண்ணத் தொடங்கினேன். ஏனெனில் எந்த ஒரு நூலையும் மதிப்பிடும் முயற்சியானது, அந்நூலை வேறு நூல் களுடன் ஒப்பிட்டு நோக்கும் முயற்சியாகவே அமைந்து விடுகிறது. ஒப்பியல் நோக்கின்றி உண்மையான மதிப்பீடு செய்தல் இயலாது.
இத்தொகுப்பிலுள்ள கதைகளிற் பெரும்பாலன, ஏறத் தாழக் கடந்த கால்நூற்ருண்டுக் காலமாக ஈழத்தில் வளர்ச்சி யடைந்துள்ள முற்போக்கு இலக்கியப் போக்கைச் சார்ந் திருத்தல் வெளிப்படை மனித வாழ்க்கையிலே தோன்றும் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு, அவற்றை விவரித்தோ அல்லது விளக்கியோ அல்லது அவற்றுக்குரிய தீர்வைக் கோடி காட்டியோ எழுதப்படும் இலக்கியப் படைப்புக் களையே பொதுவாக "முற்போக்கு இலக்கியம் என வழங்கி வருகிருேம். வறுமை, மிடிமை, அடிமைத்தனம், ஏமாற்று, சுரண்டல் முதலியன மனித வாழ்க்கையை அலைக்கழிக்கும் தன்மையை இயல்பு குன்றமற் சித்திரிப்பதே *முற்போக்கு? இலக்கியத்தின் பொதுப்பண்பாகும். சித்திரிக்கும் அழுத்தமும் வேகமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அது அவரவர் ஆளு மையைப் பொறுத்த விஷயம். இந்தப் பின்னணியிற் பார்க் கும் பொழுது, இத்தொகுப்பிலுள்ள கதைகள் துன்ப துயரங் களிற் சிக்கித் திணறும் மாந்தரைச் சித்திரிப்பனவாய் இருப் பதைக் காணலாம். சந்தனக்கட்டை என்ற கதையில், நசுக்கும் சக்திகளைச் சாடத்துடிக்கும் தெளிவுணர்ச்சியும், ாரம் என்ற கதையிலே பிரிந்த தம்பதிகள் மீண்டும் கூடும் இன்பசுகமும், தனக்கேற்பட்ட பாதிப்பினுல் &Աp:Ֆm யத்தை ஆழமாகச் சிந்தித்து வைத்திருக்கிறள் என்ற

Page 5
一 4一
கதையில் (இத்தலைப்பின் விவரணத்தன்மை கவனிக்கத் தக்கது ! ) மொழியுரிமையும் இனப்பெருமையும் பேசிக் கொண்டு தாழ்த்தப்பட்டோரை அடக்கியொடுக்கும் உயர் குடிப் பெருமக்களைத் தோலுரித்துக் காட்டும் துணிவும் கூர்மையும் அழுத்தம் பெற்றிருப்பினும், பெரும்பாலான கதைகளிற் சோகச்சுவையே இழையோடுகிறது. (ஆயினும் நம்பிக்கை வரட்சி கதைகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்). ஆசிரிய ரே கூறுவதுபோல, "அவருள் அமுங்கிக் கிடக்கின்ற" உணர்வுகளைப் புலப் படுத்துவனவாய் இக்கதைகள் அமைந்திருப்பதஞலும் சோக ரஸ்ம் முனைப்பாய்த் தோன்றுகிறது எனக் கருத இடமுண்டு. உலகமொழிகள் பலவற்றிலும் எழுந்த சிறுகதைகளிற் பெரும்
பாலானவை துன்பச்சுவை தோய்ந்தனவாய் இருப்பதும்
இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கதே.
பொருளைப் பொறுத்தவரையில் நமது இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு இயைய இக்கதைகள் அமைந்திருப்பினும், கதை கூறும் நுட்பம், பாத்திர வார்ப்பு உத்தி, முதலாய கலையம்சங்களில் ஆங்காங்குச் சிற்சில குறை பாடுகள் இருப்பதாகவே எனக்குப் படுகிறது; கதையினூடே ஆசிரியர் குறுக்கிட்டுக் கருத்துரைத்தல், கட்டுரைப்பாங்கில் விஷயங்களை விவரித்தல் முதலியன, பொருளுக்கு முக்கியத் துவம் அளிக்கும் பல எழுத்தாளரது படைப்புக்களிற் பரவ லாய்க் காணப்படும் பலவீனமாகும். இக்குறைபாடு மிக அண்மையில் நமது ஆக்க இலக்கியகாரர்களையும் விமர்சகர் களையும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. பட்டை தீட்டாத கற்கள் போலச் சில கதைகள் காணப்படுகின் றன. பயிற்சியும் முயற்சியும் இக் குறைபாட்டை நீக்கவல் லன. ஆசிரியர் இதுபற்றிக் கூர்ந்து சிந்தித்தல் தகும்.
ஆசிரியரது தர்மாவேசமும் இலட்சியதாகமும் இக்கதை களைப் படிப்போரது நெஞ்சத்தைத் தொடாமற் போகா, எடுத்துக்கொண்ட கருவைத் தன்னலியன்ற நேர்மையுடனும், ஆழ்ந்த சிரத்தையுடனும், எளிமையாகவும் ஆசிரியர் கையாண்டு செல்கிருர், அச்சுத் தொழிலாளியான ஆசிரியர்,
赢

t
سے قیا ہے۔
அத்தொழில் சம்பந்தமான செய்திகளையும் தகவல்களையும் சூழலையும் சில கதைகளிற் கொண்டு வரும்போது அநுபவத் தின் உண்மைத்தன்மை பளிச்சிடுகிறது. அநுபவஞானமே இக் கதைகளின் அடிப்படைச் சிறப்பியல்பாகக் காணப்படுகிறது. இது ஆசிரியரது நேர்மைத் திறனுக்குச் சான்முக மட்டு மன்றிச் சிற்சில கலை நுணுக்கக் குறைபாடுகளுக்கும் ஈடு செய்து கதைகளுக்கு நம்பகத்தன்மை, வலு என்பவற்றை ஊட்டுவதாகவும் உள்ளது.
நூலாசிரியர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர்; தொகுதி ஒன்றும் வெளியிட்டிருக்கிருர், இத்தொகுதியி லுள்ள சில கதைகளிலும் ஆங்காங்குக் கவிக்குரலைக் கேட்கக் கூடியதாய் உள் ளது. கருமுகிலினுள் சிறுமின்னல் என்ற கதையில் மின்வெட்டும் மொழியாட்சித் திறன் ஆசிரியரிடத்து மறைந்துகிடக்கும் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாகும். ஆனல் யாது காரணத்தாலோ பெரும்பாலான ககைகளில் ஆசிரியர் மொழிநடைக்குப் போதிய கவனஞ் செலுத்த வில்லை. இதுவும் ஆசிரியர் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். -
ஆசிரியர் தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதவும், மேலும் நூல்களை வெளியிடவும் இலக்கிய அபிமானிகளது ஆதரவு அத்தியாவசியமாகும். த மி ழ் வாசகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் இந்நூலைத் தகுந்தபடி ஆதரிப்பர் என நம்புகிறேன்.
63, பலாலி வீதி, - க. கைலாசபதி
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், وہ 76 سے 7 سے H2

Page 6
ஆசியுரை
இரு கைகளாலும் பவித்திரமாக ஏந்தி, இலக்கிய யாக குண்டத்திலே 'சிலந்தி வயல்' என்ற இந்த அவிசு சொரியப்படுகிறது.
இலக்கிய யாக குண்டம் தீச்சுடர்களைக் கக்கி, சமுதாயப் பெருச்சாளிகளையும், போலிகளையும், பூதங்களையும், அரக்கர்களையும், பொய்மைகளையும் சுட்டெரித்துச் சூழலை ப் புனிதமாக்க இந்த அவிசு உதவுவதாக,
முத்து இராஜரத்தினத்தின் முயற்சி மென் மேலும் வளர்வதாக,
- இராஜநாயகன் -

வாசக அன்பர்களே
இதனையும் சிறிது படியுங்கள்
நான் எழுத்தாளனில்லை; வெகு சாதாரண மனிதன் - உங் களில் ஒருவன். ஆஹா, ஒஹோ என்கின்ற இலக்கியம் படைப்பதற்காக நான் எழுதவில்லை, என்னுள் அமுங்கிக் கிடக்கின்ற எந்த உணர்வுகளையும் உங்களுடன் பங்கிட்டுக் கலந்துரையாட, எனக்குத் தெரிந்த எழுத்துக்களைக் கருவி யாகப் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.
நான் மஹா புருஷனில்லை. எனக்குள் இருக்கின்ற உணர்ச் சிகள் தெய்வீகமானதல்ல. உங்களுடன் சேர்ந்து வாழ்வதற் காக, உங்களால் உருவாக்கப்பட்டது.
உங்களுக்குத் தேவையான ஒவ்வொன்றும் எனக்குந் தேவை. பாலியல் உணர்வுகூட எனக்கு விலக்கப்பட்ட சங்கதி அல்ல. ஆரோக்கியமான சமுதாயத்தை விரும்புகிறேன். நிலைமாறி விட்ட, - சின்னபின்னப்பட்டிருக்கும் நாகரிகத்திற் சிக்கித் திணறும் சமுதாயத்தின் ஆரோக்கியம் எப்படி நன்னிலையில் இருக்கும் ?
நீரோட்டத்திற்கு எதிர்த் திசையாக நீந்த முயற்சி செய் கிறேன். வலுவற்றவன் நான் , என்னுல் முடியுமா ? நீரோட்டத்துடன் அடியுண்டு - அலைக்கழிக்கப்பட்டு, ஒரு அடி முன்னேற.
அதனுற்ருன் என்னுற் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் பாத்திரங் களை அவர்களது எண்ணத்தின் வழியில் நடமாட அனுமதித் திருக்கிறேன். இருப்பினும் --
நான் கடந்துவந்த பாதையிற் சிலபகுதிகள் எனது இதயத் தில் ஒருசில தாக்கங்களை ஏற்படச் செய்தது. அதனை அப் படியே எழுதமுயன்று, என்னுள்ளம் விரும்பும் பாதையில் திசைமாறிச் சென்றுள்ளது. அந்தப் பாதையினின்றும் நான் நழுவ முயற்சிக்கவில்லை.

Page 7
---- 8 ہے
ஏனெனில், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கும் இந்த விஷயங்கள் ஆழ்ந்த சிந்தனை யைத் தூண்டிவிடக்கூடியதாக அமையலாம். நான் தந்த இப்படையலிற் பல கசப்பான உண்மைகள் வெளிப்படுத் தப்பட்டிருப்பது அதிகமானதாகவோ, குறைவானதாகவோ உங்களுக்குத் தோன்றின், அதை அளவுபடுத்துங்கள். ஆனல் ஒரு சாதாரண மனிதனின் சக்திக்குமீறிய செயலைச்செய்ய வற்புறுத்தாதீர்கன். திரும்பவும் சொல்கிறேன்: "நான் மனிதன்g என்னை மாற் ரு தீர்கள். உங்களை ஏமாற்ருதீர்கள்.
இச்சிறுகதைத்தொகுப்பினைப் பார்வையிட்டு முகவுரை தந் துதவிய கலாநிதி க. கைலாசபதி அவர்களுக்கும், ஆசியுரை வழங்கியதோடன்றி இத்தொகுப்பை வெளிக்கொணர்ந்தே யாகவேண்டுமென ஊக்கமளித்த திரு. சு. இராசநாயகம் அவர்களுக்கும், சிறப்பான முகப்போவியத்தை வரைந்துத விய ஓவியர் கணேசர் அவர்களுக்கும், 1973-ம் ஆண்டு மே மாதம் 9-ம் திகதி இத்தொகுப்பிலுள்ள *நான்கு கதைகளை விமர்சித்த து மட்டுமன்றி எனது எழுத்தார்வத்தைத் தூண்டிய கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தினருக்கும், ஆசியுரை வழங்கிய நெல்லை க. பேரன் அவர்களுக்கும், இந்நூல் சிறப்புற அமையச் செயற்பட்ட செட்டியார் அச்சகத்தினருக்கும், வாசக நண்பர்களாகிய நீங்கள் தந்திருக் கும் பேராதரவிற்கும் எனது மனப்பூர்வமான நன்றியையும் விசுவாசத்தையும் தெரியப்படுத்துகிறேன்.
எனது அருமைத் தாயார் பூரீமதி முத்தையா சரஸ்வதியம்
மாள் அவர்களதும் எனது அன்புக்குரிய சிறிய தாயார் பூரீமதி முத்தையா நாச்சியரம்மாள் அவர்களதும் நீங்காத நினைவிற்கு அஞ்சலியாக இப்படையலைச் சமர்ப்பித்து அமைகின்றேன்.
431, காங்கேசன்துறை வீதி, முத்து இராசரத்தினம் யாழ்ப்பாணம், 罗& =6-及976。
*1. சிலந்தி வயல் 2. தனக்கேற்பட்ட பாதிப்பினுல் ஆழமாகச் சமுதா யத்தைச் சிந்தித்து வைத்திருக்கிருள் 3 வழி ஏதாவது ஏற்பட வேணும்
4. சந்தனக் கட்டை,

சுயநலமிகளின் சட்டதிட்டங் O களினுற் சீரழிந்த சமுதா யம், பாழடைந்த மாளிகை O யாக இருக்கும்போது, அச்
சட்டதிட்ட வலைக்குள் சிக்கிச் சிதையும் பாமரரை முதலி
O டாக வைத்துயரும் சிலந்தி கள் போன்ற சுயநலமிகளைத் ର) O தோற்றுவிக்கும் சமுதாயம்; ஏன் சிலந்திகள் விளையும்
வயலாக இருக்காது ?
முரய்வு வெய்யில் சுட்டது. மேற்கின் தொடுவானில் தொங்கியழுதுகொண்டிருந்த சூரியன் தன் கிரணங் ஐ ஒடுக்கி ஒடுக்கிக் குறுகித் தேய்ந்தான். முனியப்பர் விேலுக்கு அன்று அதிக கூட்டம் வரவில்லை. யாரோ இரண்டொருவர் வந்து சுவரில் முட்டிமோதி அழுதுவிட்டு உண்டியலையும் நிரப்புவதற்கு ஏதோ முயற்சி செய்துவிட் இப் போனுர்கள். பூவரச மர நிழலின்கீழ் கடையை விரித் திருந்தவன் மெதுவாகக் கடையைக் கட்டிக்கொண்டு றிகல் தியேட்டர் பக்கமாகச் சென்றன். ஐஸ்பழச் சுப்பையாவும பெரிய பெட்டிச்சைக்கிளே நிறுத்திவிட்டுத் தெருக்கரையோர மாகப் போடப்பட்டிருந்த சிமெந்துக் குந்தில உட்கார்ந் திருந்தான். அவனுக்கருகில் தனது கடையை விரித்துவிட்டு விழியை அங்கும் இங்கும் ஓடவிட்டான் மணியன்.
இளவட்டங்கள் கொஞ்சங்கொஞ்சமாக வந்து தியேட்டருக் குள் நுழைந்துகொண்டார்கள். அ ன் று அவர்களுடைய வியாபாரத்தில் அவ்வளவு சூடு இல்லை. சுப்பையாவிற்கு அலுப்புத்தட்டியது. ஐந்து சதம் கொடுத்து மணியத்திடம் ஒரு சுருள் கடலையை வாங்கிக் கொரிக்கத் தொடங்கிய வனுக்கு, மணியத்தின் கடலே வியாபாரத்தைப் பார்க்க மனதிற்குள் சிரிப்புத்தான் வந்தது. சைக்கிளில் ஊர்முழுக்க
அலைந்து ஐநூறு ஐஸ்பழம் விற்ருல் மூன்று ரூபா ஐம்பது
2

Page 8
سے 10 ہ=
சதம் "கொமிஷன்? கிடைக்கும். இருந்தாலும் அவன் ஊரி முழுக்க அலைந்து, வெகு பிரயாசைப்பட்டு நாளொன்றுக்கு ஐந்து ரூபா தேடிக்கொள்ள முயற்சி செய்வான். அப்படி அவனுடைய வியாபாரமே இருக்கும்பொழுது, மணியம் ஒவ்வொரு கொத்தாக மூன்று சாதிக் கடலைகளை வறுத்து வைத்துக்கொண்டு ஈயோட்டுகிருனே இவனுடைய சீவியம் எப்படிப்போகும் என்பதுதான் சுப்பையாவின் மனத்துள் எழுந்த கேள்வி.
சுப்பையாவின் தகப்பன் இங்கிலீஸ்காரனுடைய ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன். கொத்தி, வெட்டி, மூடை சுமந்து சீவித்த அவன், டாக்குத் தர் கனகசபேசர் வீட்டில் வேலைக்காரியாக இருந்த சுப்பு லகஷ்மியைக் கலியாணம் செய்துகொண்டான். அவனுக்கும் அவளுக்கும் வயது வித் தி யாசம் இருபத்தைந்து. இப் போழுது சுப்பையாவிற்கு வயது இருபது . தகப்பன் இல்லை. தாய் வேறு ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு தாய் நாட்டை மறந்துவிட்டாள். தன்னுடைய புதிய கணவன் இந்திய வம்சாவழியானதால் அவளால் இலங்கையில் வாழ முடியவில்லை சுப்பையாவிற்குத் தாய்நாடு இலங்கைதான். அவனுக்கு இலங்கையைவிட்டு வேறுநாட்டிற்குச் செல்ல விருப்பமில்லாததாற் பன்னிரண்டு வயதிலேயே தாய்தகப் பன் இல்லாமல் வாழப்பழகி, தனக்குத் தஞ்சம் அளித்த தேநீர்க்கடையிலேயே தங்கிக்கொண்டிருக்கிருன் ,
இப்பொழுது அவனையும் இலங்கையில் இருந்து துடைத்து விட, எத்தனையோ தந்திரங்கள் ஊருக்குள் நடந்தும், இந் தத் தேநீர்க்கடை முதலாளி அவற்றைப் பொடிப்பொடி யாக்கி அவனுக்குப் பாதுகாப்பளித்துக் கொண்டு அதற்குப் பிரதியுபகாரமாக அவன் சேர்க்கும் சேமிப்புத் தொகை களைச் சாப்பிடப் பழகிக் கொண்டார். அவனும் வயிற்றைக் கட்டி வாயைக்கட்டிச் சேமிக்கும் சேமிப்பை அதற்காக இழப் பதில் எவ்விதமான கவலையையும் அடைவதில்லை. ஆனல், உன்ழைப்பற்ற நேரங்களிற் பசியின் கொடுமையை உணர்ந்து கொண்டவனுக்குத் தன்னுடைய உழைப்பைப் பெருக்கவழி

- I 1 -
தேடுவதிற் சிற்றெறும்புபோற் சுறுசுறுப்பாக இருப்பது இயல்பாகிவிட்டது. அவன், வகைக்கொரு கொத்தாக மூன்று கொத்துக் கடலையை வைத்துக்கொண்டு ஈயோட்டும் மணியத்தைப் பச்சாதாபத்துடன் தோழமையுணர்வெழப் urtrfäsnteir. ** மணியண்ணே, உங்களுக்குப் பிள்ளைங்க எத்தனை பேரு இருக்காங்க??? * நாலு பிள்ளையளப்பா, மூத்தவளுக்கு எட்டு வயசாகிறது அடுத்தவளுக்கு ஆறு வயசு, அதுக்கடுத்தவளுக்கு மூண்டு வயசு. கடைசி கைக் குழந்தையப்பா. இடையிலையொண்டு வயிறழிஞ்சு...?? *" இவ்வளவு பிள்ளைகளையும் வைச்சிக்கிணு எப்பிடிண்ணே காலத்தைத் தள்ளுறீங்க?" *" ஏதோ இவ்வளவு காலமும் போயிற்றிது." அவனுடைய பிரச்சனையில் முடிவேற்படவில்லை என்ற கவலை, அவனு டைய வார்த்தைகளில் இழுபறிப்பட்டு நீண்டிருந்தது. * அது சரி யாவாரத்திலே நாளுக்கு என்னண்ணே கெடைக் கும்?
• அதையேனப்பா கேக்கிருய் - மூன்ருே நாலோ சில வேளை ஏழுளூபாயும் கிடைச்சிருக்கு. " * நாலு பிள்ளைங்களும் நீங்களும் சாப்பிடப் போது மாண்ணே - இதோடவா குடிச்சுக் கும்மாளம் வேறே போட்டுக்கிறீங்க?"
என்னவோப்பா பின்னேரம் இரண்டு போத்தில் உள்ளுக் குப் போனுத்தான் நிம்மதியா இருக்கேலுது. சாப்பாடில் லாமல் இருக்கலாம், கள்ளுக் குடிக்காமல் என்னுலை இருக் கவே முடியாதப்பா. " 9 அப்பிடின்ன வீட்டிலேயிருக்கிறவங்க எல்லாம் சாகவேண் டியதுதான். ' "அப்ப நானும் என்னப்பா சாகிறதே ? என்னுலை இயண் டதை நானும் செய்யிறன். ஏதோ கழுதையைக் கட்டி குட்டி

Page 9
= 12 -
யளையும் பெத்துத் தள்ளிற்றனெண்டுதான் இவ்வளவு தன் னும் பாடுபட வேண்டியிருக்கு. இல்லையெண்டா சிவசிவா எண்டொரு மூலைக்குள்ளை படுத்துக் கிடந்தால் ஆரி கேக்கப் GB nr 66oTub? ” ” * உங்க மனிசி ஒரு புண்ணியவதிதாண்ண. எப்படிக் குடும் பத்தைக் காப்பாத்துருளோ? ' * ஏன் அவளும் உழைக்கிருள் தானேயப்பா? பிறகென்னநான் அள்ளியா கொட்டவேணும்? காலையிலை மில்லுக்குப் போருள். பின்னேரத்திலை வாரு?ள் ஏதோ நாலு காசு கிடைக்கிறதாலைதானே? '
"அப்பிடி நீங்களும் உழைத்தா யென்ணுண்னே?" *நான் என்ன இப்ப உழைக்காமலா இருக்கிறன்?"
சுப்பையன் மெளனமாகிவிட்டான். அவனுக்கு மணியனு டையப் பேச்சில் ஏறிய சூடு பயத்தையும் கொடுத்திருக்க வேண்டும், எனக்கேன் அணுவசியமான கதையென்று ஒதுங் கிக்கொண்டவன், பைசிக்கிளை எடுத்துக்கொண்டு மணியத் திடம் "நான் வாறண்ணே" என்ருன். மணியம் தலையாட்டி அவனுக்கு விடைகொடுத்தபடி, நாலைந்து கடலைகளை எடுத்து உருட்டிப்பார்த்து வாயிற்போட்டுக் குதப்பத் தொடங்கி ஞன். அவனுக்கு என்றுமில்லாதபடி இன்று, அதிகமாகவே உணர்ச்சி நரம்புகள் புடைத்துக் கிடந்தன. அவனுடைய மனம் சுப்பையனுடைய பேச்சையும் கேள்வியையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. **இந்தச் சிறுக்கனுக்கு என்ன கொழுப்பு? என்னைக் குத்திக் குடைஞ்சிட்டுப் போருன். இதாலை இவனுக்கென்ன லாபம்?- தின்னிறதுக்கு வக்கில்லாமல் இருந்தவளைக் கூட்டிக்கொண்டு ஓடிவந்து நான் படிறபாடு. இவள் சிரிச்சுச்சிரிச்சுப் பேசி என்னை மயக்கிணதாலைதானே. நான் இவளைக் காணுமல் கூட்டிக்கொண்டு போகவேண்டி வந்தீச்சுது? அவளாய் என்னை மயக்கினுள் இப்ப அவள் அனுபவிக்கட்டுமன், பிள்ளையன், பெஞ்சாதியெண்டு எவ்வளவு காலத்துக்குக் கஷ்டப்படிறது ? இந்த மெலிஞ்ச தேகத்தையும் வைச்சுக்

- 1, 8 -
கொண்டு - நான் என்ன கொள்ளையே அடிக்கிறது? நாலெ ழுத்துப் படிச்சிருந்தாலும் ஆரையேன் ஏமாத்தியாவது பிழைக்கலாம். பிழைக்க வழியில்லாதன் இப்பிடிக் கடலை யைக் கிடலையை வித்து, அ ை யிதைக் கிண்டித்தான் பிழைக்க வேணும் - வேறையென்ன செய்யிறது?
கழுதையள். கழுதையள். பிள்ளையஸ் எண்டு பெத்துத் துலைச்சன் ஒரு சதத்துக்குப் பிரயோசனம் இல்லை, வேறை யிடத்துக் குட்டியளெல்லாம் துடுதுடெண்டு என்ன எல்லாம் செய்யிதுகள் ருேட்டிலை போசேக்கை வரேக்கை மாங்கா யைத் தேங்காயைக் கண்ணிலை கண்டாலும் அதை எடுத் துக்கொண்டே வீட்டை சேர்ப்பம் எண்டிற சிந்தையும் இது சளுக்குக் கிடையாது. எப்படிப் பிழைக்கப் போ குது
தன்னுடைய பலவீனத்தைப் பிள்ளைகள் மீதும் பெண்டாட்டி மீதும் திட்டுவதில், தனக்குத்தானே மறைக்க முயன்றுகொண் டிருந்தான் மணியன்.
அவனும் கஷ்டப்பட்டு நாலிடத்திலை வேலைசெய்து பார்த் தவன் தான். அவனுடைய உடம்புக்கு அந்த வேலைகள் எது தன்னும் இடங்கொடுக்கவில்லை. நான்கு நாட்களுக்கு வேலைக்குப் போனுல் ஆறு நாள் உடம்பு சரியில்லையெண்டு சுருண்டு படுத்துவிடுவான் அதன் பின் வயிறு கடிக்கும்போது தான் திரும்பவும் வேலைக்குப் போவான். அவனைக் காதலித் துக் களவாய் வீட்டைவிட்டு ஒடிக் கலியான ஞ்செய்து, நாலு பிள்ளைகளையும் பெற்று விட்டவள். இத்தனை கஷ்டங் களையும் சகித்து, தான் செய்த தலைவிதிப்பயன் என்று பொதிபொதியாய்ச் சுமந்து சீரழிந்து கொண்டிருந்தாள்.
பரிபூரணம் மூன்று பெண்களுக்கு அடுத்து நான்காவது பெண்ணுகப் பிறந்தவள் இவளுக்குப் பிறகு இரண்டும் பெண் கள்தான். மோத்தம் ஆறு பெண்கள். ஆண் சகோதரமே அவர்களுக்குக் கிடையாது. பரிபூரணத்தின் தாய் தகப்ப னுக்குக் காலும் கையுந்தான் சொத்துக்கள். அதை ஆட

Page 10
ܚܣܚ- 4 7 -ܚܒܫܗ
விட்டாற்தான் அத்தனைபேரும் கால்வயிற்றுக் கஞ்சியாவது குடிக்க முடியும். அப்படிக் கஷ்டநிலையில் உள்ள குடும்பத் தில் பெண்ணெடுக்க வருபவன் எப்படி வசதியுள்ள வனக இருக்கமுடியும்? தனக்கு முன்பிறந்த பெண்கள் காட்டிய வழியில்தான் பரிபூரணமும் தன்னுடைய மண வாழ்க்கையை ஆரம்பித்தாள். ஆனல், மணியம் மற்றப்பெண்கள் கலியா ணஞ் செய்துகொண்ட மாப்பிள்ளைமார்போல் வெள்ளாளச் சாதியில்லை. இவன் கொஞ்சம் தாழ்ந்த சாதிக்காரன். அத் துடன் வறுமையுடன் போராடத் தகுதியற்ற உடலும் உள்ள மும் கொண்ட சோம்பேறி. மற்றப் பெண்கள் புகுந்த வீட் டில் அடியுதைகளிலிருந்து தப்பியாவது கஷ்டப்பட்டுக் குடும் பத்தை இழுத்துப் பறித்து நடத்தினர்கள். ஆனல், பரிபூரணம். உயர்வர்க்க அரசியல் அதிகாரத்திலிருந்து தோன்றிய மற்ற எல்லா அதிகார அமைப்புக்களினதும் வம்ச அதிகாரம், மத அதிகாரம், கணவன் அதிகாரங்களினுற் பெரிதும் பாதிக்கப் பட்டாள். அவளுடைய உழைப்புத் தன்னையும் தான் பெற்ற பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்குத் தேவையாக இருந்தது. அதற்காக ஒரு மில்லில் தவிடு சலிக்கும் “சிவ்ப்றரில் வேலை செய்வது முதல் குறுதல் புடைப்பது களத்தில் நெல் காயவிடு வது போன்ற கடினமான வேலை செய்வதுடன், வீட்டிலும் பின்ளைகளைப் பராமரிப்பது சமையல் செய்வது, புருஷனே டும் அவனுள் இறங்கிக் குழப்பம் செய்யும் மதுவோடும் போராடி அடிஉதைபடவேண்டிய அவல நிலையிலும் இருந் தாள். அவளுடைய உடல் நோதற்பட்டு வேதனை அதிகரிக் கும்போது கள்ளச்சாராயம் விற்கும் பொன்னம்பலத்திடம் இரண்டு ரூபாவிற்குச் சாராயம் வாங்கிக் குடித்துவிட்டுச் சுருண்டு படுத்துவிடுவாள்.
அவள் குடிப்பது, போதையேறி ஆடிப்பாடி அகமகிழ அல்ல. வேதனைகள் எல்லாவற்றையும் மறந்து, மதுவின் மயக்கத்தில் உலகத்தை மறந்து ஒரு சிறிது நேரமாவது தூங்குவதற் காகத்தான். அப்படி அவள் மயக்கத்திற் புரள்கையில் பஞ் சானும் குஞ்சுகளுமான அவளுடைய குழந்தைகள் பரிதவிப்
لأول

- 15 -
பதைப் பார்ப்பதற்குரிய நிதான நிலையில் மணியனும் இருக் கமாட்டான். குழந்தைகளோ இப்படியான அன்ருடங் காய்ச்சிகளின் வயிற்றிற் பிறந்த காரணத்திற்காக அந்தக் குழந்தைப் பருவத்திலேயே பசி கிடக்கவும், பட்டினி கிடக் கவும் பரிதவிக்கவும் பழகிக் சொண்டன. படிப்பென்ருல் என்னவென்று தெரியாது. ஊரில் அங்கை இங்கை இருப் பவர்கள் பாவத்திற்கிரங்கிக் கொடுத்த பழைய கிழிந்த உடுப் புக்கள் அந்தக் குழந்தைகளின் கழுத்தில் தொங்கும். அந்தக் குழந்தைகள் மற்ற இடத்துக் குழந்தைகளைப் போல் நல்ல தைச் சாப்பிடவோ, நல்லதை உடுக்கவோ, நல்ல காட்சி களைப் பார்க்கவோ ஆசைப்பட்டால்.
அதைவிடக் கொடிய குற்றம் வேறு உலகத்தில் இருக்க முடியாது! மணியமும் பரிபூரணமும் கொடுக்கும் அடியுதை அத்தனைகளையும் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்தக் குழந்தை களுக்கு இல்லாமல் இருந்திருக்குமாஞல். இருந்தது. ஏனெனில் இப்பொழுதும் அவர்கள் உடலுள் உயிர் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் மூத்தபெண்ணுகப் பிறந்த காரணத் தால் அன்னலட்சுமி எட்டு வயதிலேயே ஏழு பிள்ளைகளைப் பராமரிக்கக் கற்றுக் கொண்டாள். அந்தப் பிள்ளைகளில் எந் தப் பிள்ளையாவது 'அ' வைப் பார்த்திருக்க நியாயமில்லை.
ஆனல் - எந்தக் கொடிய துன்பங்களையும் தாங்கிச் சகித்துக்கொள்ள அந்தப் பால்வடியும் பிராயத்திலேயே அந்தப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டனவென்றல்? அந்தப் பிள்ளைகளின் எழுத்தறியாக் கல்வி உன்னதமானது! தாயுந்தகப்பனும் சிரித்துப் பேசும் திருக்கோலக் காட்சி யைக் காண்பதென்றல் அவர்களுக்கு எவ்வளவு இன்பம். ஆஞல், அந்த இன்வத்தின் பின்னே இன்னெரு உயிரும் தோன்றி விடும் என்கின்ற அபாயம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது.
டாவங்கள்

Page 11
ܥܡܗ 6 [ ܡܩܘ
சிரிப்பதற்கு முயன்று தோற்றுப்போன சீவன்கள் அல்லவா அந்தப் பஞ்சானும் குஞ்சுகள்! - சடசடசடவெனச் “சிவ்ப்ரர் வேலைசெய்து கொண்டிருந்தது. *சிவ்ப்ரருக்கு இரண்டடி தள்ளிப் பெரிய மோட்டர் "ஹல் லரை" இயக்கி இரைந்து கொண்டிருந்தது. சிறு துகள்த் தவிட்டுத் தூசிகளும், நெல்லிற் கிடந்த தூசிகளும் "மில்லை மறைத்துக் காற்றிற் கலந்து பறந்து கண்ணையும் மறைத்தன. தலையைச் சுற்றிச் சிறு அழுக்குத் துணியைக் கட்டியிருந்த பரிபூரணத்தின் முகம் சேற்றிற் சோர்ந்து கிடந்த சிவந்த தாமரைப் பூப்போல் அழகு காட்டியது அவள் மிகவும் களைத்துச் சோர்ந்திருந்தாள். தண்ணிர் கொஞ்சம் குடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் "சிவ்ப்ரர்" சுவிட்சைத் தடை செய்யச் சென்ருள், "ஹல்லர்” பேரிரைச்சலுடன் இயங்கியது. பியதாச "ஹல்லர்" அருகில் நின்று நெல் நொருங்கிக் குறு நல் ஆகாது முழு அரிசியாக விழும் பதத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். பொன்னுச்சியும் ராமக்காவும் போட்டி போட்டு வாளிகளில் நெல் அள்ளிக் கொண்டுவந்து "ஹல் லர்? வாயை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பரிபூரணம் "சிவ்ப்ரரி சுவிற்"சை நிறுத்திவிட்டுத் திரும்பி யிருப்பாள்"அம்மே அபராதே! பியதாச கத்தினன். "எடி பூரணம்!" பொன்னச்சி. "எங்காத்தா, அம்மோடி!' ராமக்கா மூவரும் பூரணத்தை நோக்கி ஒடிஞர்கள். 'ஹல்லரையும் "மோட்டாரை"யும் இணைத்து இயங்கிக் கொண்டிருந்த "பெல்ற் அறுந்து, பூரணத்தின் நெஞ்சைத் தாக்கிவிட்டுச் சுருண்டு கிடந்தது. பொன்னச்சியின் மடியிற் பூரணம் தலைவைத்துப் படுத்திருந் தாள். பியதாச அனுதாபத்துடன் அவளுடைய முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்கிவிட்டுக் கொஞ் சங்கொஞ்சமாகத் தண்ணிரைப் பருக்கினன். ராமக்கா
(

- 7 -
அங்கு கிடந்த மட்டையொன்றினுற் காற்று வீசிக்கொண்டு கலவரத்துடன் நின்ருள். பரிபூரணம் தியங்கித் தியங்கி எழுந்து நின்ருள். அவள் சக தொழிலாளர் மூவரையும் நன்றி பெருகும் விழிகளுடன் நோக்கினள். அவளுடைய விழியருகில், கண்ணீர் கசிந்து காய்ந்து போவதை மில் முதலாளியும் 'மனேஜரும் கூடப் பார்த்துவிட்டுத் தேறுதல் கூறினர்கள். அத்துடன். அவளுக்கு ஐந்து ரூபா கையிற் கொடுத்து வீட்டுக்கனுப்பி விட்டார்கள்.
நல்லெண்ணெயும் மஞ்சலும் காய்ச்சி, இளஞ் சூட்டோடு தாயின் நெஞ்சிற் பூசி, அன்னபூரணம் தாய்க்கு ஒத்தணம் கொடுத்துக் கொண்டிருந்தாள். பரிபூரணத்திற்குச் சூடான புளிக்கஞ்சி குடிக்கவேண்டும் என்கின்ற ஆசை. அன்னலட்சுமி தாயின் நிலைமையைக் கவனித்து, எல்லோருக்குமே அன்று புளிக்கஞ்சியைத்தான் சாப்பாடாக மாற்றினுள். பரிபூரணம் வேதனையுடன் முக்கி முனகிக் கொண்டு படுத்துக்கிடந்தாள்.
சுப்பையா சைக்கிளை நிதானமாக மிதித்தபடி, இருளுள் கண்ணைக் கூர விட்டான் தூரத்தில் ஒருவன் தலைவிற் பெட்டியுடன் கால்கள் பின் னத் தடுமாறியபடி செல்வது தெரிந்தது. சுப்பையன் தீர்மானித்துக் கொண்டான். 'மணியம் சுதியோடு போருன், பெட்டி தவறி விழுந்தால், அவனுடைய முதலே அழிந்துவிடும். பாவம் அவனை வீட்டிற்குப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சைக்கிள் மணியன நெருங்கியது. "மணியண்ணே, எப்பிடிண்னே?" **ஆரடாவன்.' மணியன் பேசிய வார்த்தைகளைக் கேட் டுச் சுப்பையன் சிரித்தபடி கடலைப் பெட்டியை வாங்கி சைக்கிள் ‘கரியரில் வைத்துத் தள்ளிக்கொண்டே அவனு டன் சேர்ந்து சைக்கிளைத் தள்ளியபடி நடந்தான்.
3

Page 12
- 8 -
மணியம் இருந்த வீடு ஒரு ஒழுங்கையுள் அடித் தொங்க லில் இருந்தது. வீட்டைச் சுற்றி ஒட்டைவேலி இருந்தது. காய்ந்த பலாச் சருகுகள் காலடியுள் நசுங்கிச் சத்தமிட்டது. மணியன் ஏதோ ஒரு சினிமாப் பாட்டோடு தன்னுடைய சொற்களையும் சேர்த்துக் கோர்த்துப் பாட்டைக் குழப்பினன். மணியனை வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்த சுப்பையன் கடலைப்பெட்டியை இறக்கி வைத்துவிட்டு, மணியனிட மிருந்து விடைபெற்றுக்கொண்டு தப்பினேன் பிழைத்தேன். எனச் சைக்கிளில் தொற்றிக்கொண்டான். மணியனுடைய கையில் அன்று நாலு காசு கூடச் சேர்ந் திருக்கவேண்டும். அவன் தன்னுடைய குடிசைக்குள் குட்டி ராஜாங்கம் நடத்தத் தொடங்கிவிட்டான். "எடியேய் பூரணம்! என்னடி செய்யிருய்? மனுஷன் வந் திருக்கிறது கண்ணுக்குத் தெரியேல்லையே?" பூரணம் முக்கிமுனகிக்கொண்டு எரிச்சலுடன் திரும்பிப் படுத்தாள். அவளுக்குக் கணவனுடைய அதிகாரமனைத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தது. அன்னலட்சுமி விழிகள் பிதுங்க, தகப்பனையும் தாயையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு, தாயின் நெஞ்சுக்கு ஒத்த னம் கொடுத்தபடியே இருந்தாள். பரிபூரணம் முனகிக்கொண்டே மெதுவாகச் சொன் ஞள். * அன்னம் ஐயாவுக்குப் புளிக்கஞ்சியிலே வார்த்துக் குடு, குடிசிட்டுக் கெதியிலே படுக்கட்டும் மோனை' அன்னம் ஒரு சட்டி நிறையப் புளிக்கஞ்சியும், கோலி ஈர்க் கிலால் குத்திக் கரண்டிபோற் செய்யப்பட்ட பலாவிலையை பும் கொண்டு வந்து தகப்பனுக்கு எதிரில் வைத்து, "புளிக்கஞ்சியிருக்கு குடியுங்கோ ஐயா" "ஏன்ரி பூரணம், நேற்றுத்தானே இரண்டு ரூபாய் தந்தன். கூப்பன் எடுக்கேல்லையே??? மணியம் கழுதைபோலக் கத்தி ன்ை,
(p.
..

- 19 -
'அம்மாவுக்கு நெஞ்சுநோ. நான்தான் புளிக்கஞ்சி காய்ச் சின்னன்."
*நெஞ்சு நோவோ? எல்லாம் மாய்மாலம், எடி பூரணம். மனுசன் ஒரு நேரந்தான் சாப்பிடிறது. அதுக்கொரு கொஞ்ச அரிசி போட்டு வடிச்சுச் சம்பலும் அரைக்கிறதுக்கிடயிலை, உந்த நெஞ்சுநோவிலை செத்துப் போவியே???
'அம்மாவுக்கு நெஞ்சிலை பட்டியடிச்சு-நோவையா."பயந்து கொண்டே சொன்னுள் அன்னலட்சுமி.
* கறுமம், கறுமம். மனுஷனுக்கு நித்தக் கரைச்சல், தரக சீவியம்.' வாய்விட்டுக் குளறினன் மணியம். பரிபூரணத் திற்குப் பற்றிக்கொண்டு வந்தது.
*உன் ரை ஒய்ப்பின் ரை திறத்திலை சோறில்லாட்டித் தொண் டைக் குள்ளாலை கஞ்சி இறங்காதே? கோதாரியிலைபோன கடைக் காரரிட்டைக் கேட்டால் மிளகாயில்லை, உப்பில் லைச் சீனியில்லைப் புளியில்லையெண்டிருங்கள். என் ரை பஞ் சானும் குஞ்சுகள் பச்சையரிசிக் கஞ்சி குடிச்சுப்போட்டுப் படுத்துப் புரளுதுகள். உனக்குப் பாக்கக் கண்கெட்டுப் போய்ச்சுதே?"
49எடியே செய்யிறதையும் செய்து போட்டு அவளின் ரை வாய்க்கொழுப்பைப் பாரன்! திமிர் பிடிச்ச கழுதை" வார்த் தைக்கு வார்த்தை சூடேறி, மணியம் பரிபூரணத்தைப் போட்டு அடியடியென்று அடித்து, அடிவயிற்றிற் காலாலும் உதைத்துவிட்டான். அவனுடைய மிருகத் தாக்குதலுக்கு ஆளான பரிபூரணம் வேதனையால் துடித்தாள். துவண்டாள், வாய்விட்டு விக்கி விக்கி அழுதாள் பிள்ளைகள் எல்லாம் தாயைச் சுற்றியிருந்து அழுதுகொண்டிருந்தன.
பட்டியடிச்ச நெஞ்சுவலி ஒருபுறமிருக்க, மணியம் காலால் வயிற்றில் உதைத்த வேதனையும் சேர்ந்து, அவளுக்கு உடம் பெல்லாம் பச்சை இறைச்சிபோல் நொந்தது. வயிற்றிற்குள் வலிவலியென்று வலித்துத் தீட்டும் இறைத்தது. படுக்கை

Page 13
- 0 -
யில் வேதனையால் அங்குமிங்கும் புரண்டாள். அவளால் வேதனையைப் பொறுக்கமுடியவில்லை. பிள்ளைகள் எல்லாவற் றையும் வாஞ்சையுடன் தடவிஞள். கடைசிக் குழந்தையின் வயிற்றில் தனது முகத்தை அழுத்திக் கொஞ்சினுள். அவ ளுடைய கண்களில் இருந்து கண்ணிர் கரைபுரண்டது. அன்னத்தைப் பார்க்க அவளுக்குப் பரிதாப உணர்வு மேலோங் கியது. அவளுடைய தலைமயிரைக் சோதிவிட்டுப் படுக்கை யில் முகம் குப்புறக் கிடந்து நெளிந்து புரண்டு உருண்டு அழுதாள். அவளால் வேதனையைத் தாங்கமுடியவில்லை. எழுந்து குடிசையின் பின்புறம் தவழ்ந்து தவழ்ந்து போஞள்.
அவளுடைய வேதனையைப் பார்ப்பதற்கு அங்கு யாருமே விழித் திருக்கவில்லை !
来源
மணியம் அன்று மிக அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். ஆனல், படுக்கையில் விழித்தபடியே படுத்திருந்து ஏதோ ஆழமாக யோசித்துக்கொண்டு கிடந்தான். பிள்ளைகள் எல் லாம் ஏறுக்குமாருய்க் காலைப் போட்டபடி ஆழ்ந்து தூங் கின. அன்னலட்சுமி உருண்டுபுரண்டுவிட்டு எழுந்தாள். எழுந்தவள் குடிசையின் கோடிப்பக்கம்போய்க் குந்தியிருந்து விட்டுத் திரும்பிப் பார்த்தாள். தாய் பின்புற வளையில் தொங்கி ஏதே செய்வதுபோல் தோன்றியது. பிள்ளை கிட் டப்போய்ப் பார்த்தாள். அவளுடைய முகம் பரிதாபமாக மாறிக் குரல் கீச்சிட்டுக் களைப்பு மேலோங்க வீரிட்டலறிஞள்!
அவளுடைய அலறலைக் கேட்டுத் திட்டிக்கொண்டே வந்த வன் அக்காட்சியைப் பார்த்தான் -
"ஐயோ பூரணம் ! என்னை விட்டிட்டுப் போயிட்டியே. ,
கடவுளே உனக்குக் கண்ணில்லையா? எங்களையேன் இப்பிடிச் சோதிக்கிருய்???
அவனுடைய புலம்பல் அதிகரித்தது. அது ஓய்ந்தபாடாகக் காணவில்லை. அவன் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டான்.
鲑

- ! -
வளவு முழுக்கச் சுத்திச் சுத்திக் கத்தினன். இன்றும் கத்திக் கொண்டுதான் தெருமுழுக்க அலைகின்றன்.
கொறனர்" விளக்கம் முடிஞ்சு மரணவிசாரணை அதிகாரி கண்ணிற் கண்ணிர் கசியச் சொன்னுராம்.
"சமுதாயத்திற் பெண்கள் புருஷனலும், சமூகத்தாலும், முதலாளிகளாலும் ஒய்வொளிச்சலின்றி ஒடுங்கவேண்டியிருக் கிறது. குழந்தைகள் இவற்றுடன் தாய்தகப்பனலும் ஒடுக் கப்படுகிறர்கள். இந்நிலை மாறவேண்டும். இதற்கு விடிவு காணச் சமுதாயம் தனது கொள்கைகளை மாற்றித்தான் ஆகவேண்டும் "
அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணிர் உலகத்தின் இதயம் வடித்த கண்ணிர்.
இப்படித்தான் தன் சக நண்பர்களுடன் சுப்பையா பேசிக்
கொண்டு நிற்கிருன்.
சிலந்திகள் விளையும் வயலில் இப்படி எத்தனை பூச்சிகள் !
அன்னம், ஒரு தனவந்தர் வீட்டில் வேலைக்காரியாக மாய்கி ருள். ஆளுக்கொருவர் யார்யாரோ பங்கு போட்டுக் குழந் தைகளைப் பிரித்தெடுத்துக்கொள்ள, மணியம் தெருமுழுக் கப் பரிபூரணத்தைத் தேடியலைகின்றன்.
1971 - 03 - 1

Page 14
ஒரு கருவி
வாழ்த்து கைப்பதுதான் வாழ்க்கை, வாழாமலே கைப்பது
வாழ்க்கையேயல்ல.
**வெள்ளத்துக்கு எதிர்த்திசையில் நீந்துவதுதான் வாழ்க்கை" இப்படி யாரோ எழுதியிருந்தார்கள் ஆர்.? ஆர்.?-
ஒ.ஒ. காண்டேகர் 'சுகம் என்கே' என்ற தனது நாவலில் எழுதியிருந்தார். ஞாபகம் இருக்கு. ஆணுல்
நீச்சலடிச்சு நீச்சலடிச்சு கையும் ஓய்ஞ்சு காலும் ஒய்ஞ்சு மனமும் ஒய்ஞ்சுபோச்சு, இனி ?
மழைவரும் என்று உழுதுவிதைத்தவன் மழையே இல்லா மற் காய்ந்த பயிரைப் பார்ப்பதுபோல் எனது "சேர்டிபிக்கற்? றுக்களை அடிக்கடி பார்த்துக்கொள்ளும் பொழுது எனது மனத்திலே எத்தனை கோட்டைகள் வெடித்துச் சாம்பரா இ விட்டது என்பது கண்களை நீராட்டுகிறது.
நான் பள்ளிக்கூடக் காசுகட்ட ஐயாவைக் கேட்கும்போ தெல்லாம் ஐயா சொல்லுவார் உநீயென்ன படிச்சுக் கிழிக்கப்போறியே ? கரைச்சல் குடுக் ass mr Logio GSLurl nr l ” ”
நல்ல தீர்க்கதரிசனம், ஆஞல், நான் படிக்கச் செலவிட்ட காலத்தை வேறே எங்கே செலவழித்திருக்கவேணும்- ? அதை அவர் சொல்லித்தர மறந்துவிட்டார். ஏனென்ருல்) அது அவருக்குத் தெரியாது.
இன்று எல்லோருக்கும் தெரியும். எது எமக்கு வாழ்வைத் தருகிறது என்று, பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்.
ひ
y

一 2岛 一
அது- அதுதான் மண் 1
வானத்தை நம்பி எமது இரத்தத்தை வேர்வையாக்கும்போது மண் சிரிக்கிறது; செழிக்கிறது.
எம்மை மறந்து நாம் நீண்ட உறக்கத்தில் இருக்கும்பொழுது, எம்மை அணைக்கிறது; மறைக்கிறது ! அந்த மண் - எல்லோருக்கும் சொந்தமாக இருக்கிற அந்த மண்,
இப்பொழுது எனக்கில்லை; என்னிடம் காசு இல்லாதபடி யால், காசு வைத்திருக்கிற எவனெவனுே எல்லாம் தன் காலடியுள் வைத்திருக்கிருன் ! நான் ?
எனது 'பொக்கற்றுகளைத் தடவிப் பார்த்ததில் பதினஞ்சு சதம் கிடைத்தது, இன்னும் பத்துச் சதம் வேணும் "பிளே யின் ரீ" குடிக்க - அந்த ஆசையை மறந்துவிட வேண்டி பதுதான்.
வெறுங்குடலுக்குள் பச்சைத் தண்ணீர் குளிர்ந்து கொண் டிறங்கியது. அப்பொழுது ஒரு வேதனை ?
அதற்குப்பெயர், மரண வேதனை !
எனது கால்கள் நடந்துகொண்டேயிருக்கிறது. ஆஞல், அதற்கொரு லட்சியம் கிடையாது.
என்னிடம் லட்சியம் இருந்தது. அது- இப்பொழுது இல்லை. இப்பொழுது இருக்கிற ஒரே லட்சியம் நான் தினசரி ஒரு வேளையாவது சாப்பிட ஒரு வேலை. அது எடுபிடி வேலை யாக இருந்தாலும் பாதகமில்லை. யாருடைய காலைக்கழுவி . யாவது காசு வாங்குவதற்கு நான் தயாராக இருந்தேன். ஆஞல், எந்த வேலைக்குமே நான் லாயக்கில்லாதவன் என்று உதறித் தள்ளுகிருர்களே, அது ஏன் ?
சிறுகல்லைத் தூக்கிப்போடுவதற்குரிய சக்தி எனக்கில்லையாம். ஆனபடியால் மண்வெட்டி விவசாயம் செய்ய என்னுல் முடி

Page 15
- 84 -
யாது என்று எனக்குக் காணி தர மறுத்துவிட்டார்கள் காணி வழங்க "இன் ரவியூ" வைத்த பெரியவர்கள். எனக்கு அது சந்தோஷம். ஏனென்ருல் என்னுடைய பலவீனம் ஒன்று. காணியைப் பெற்றபின் திருத்திச் சீர்ப்படுத்த பணமில்லையென்பது முக் கியமான அடுத்த காரணம். என்னுடைய கைகள் என்னை அறியாமலே 'பொக்கற்றுக் குள் நீச்சலடித்தது. - தட்டுப்பட்டது அதேபதினஞ்சு சதந்தான்.
என்னிடம் பதினஞ்சு சதம் இருக்கிறது! திருப்தி, அதைத்
தடவித் தடவிப் பார்த்துக்கொண்டே கற்பனையில் ஒருசில மணி நேரத்தையாவது கழித்து விடலாம் பிறகு, வீட்டிலை எப்படியாவது உலை வைப்பார்கள் தானே?
பப்ளிக் லைப்ரறிக்குள் நுழைந்து பத்திரிகைகளைத் தட்டி னேன். தலையைச் சுற்றியது. மெதுவாகப் புறப்பட்டு முனி யப்பர் கோயிலுக்குப் போனேன். யாரோ நேர்த்தி வைத் துப் பொங்கினர்கள். நான் கோட்டை முகப்புச் சுவர்க் கட்டில் இருந்தேன். எனக்கு ஒரு நப்பாசை. பொங்குபவர்கள் படைக்கும் பொழுது எனக்கும் ஒரு பிடி தருவார்கள். எனக்கு முன்னிருந்த சிறுகற்களை என்னை அறியாமலே பொறுக்கிக் கோட்டை அகழிக்குள் எறிந்து கொண்டிருந்
தேன். யாரோ எனக்கு அருகில் வருவதுபோன்ற சலனம்
ஏற்பட்டது. வந்தவர் நல்ல வசதியான் இடத்து ஆள்போலும் எனக் கருகில் சிரித்துக் கொண்டிருந்தார். நானுஞ் சிரித்தேன். 'தம்பி, என்ன கோயிலுக்கு வந்தனிரோ??? 'இல்லை நான் சும்மா." எப்படிப் பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவர் என்னென்னவோ எல்லாம் சிேஞர், நானும் எனக்குத் தெரிந்தவரையில் அவருடன் அளவளாவினேன்.
t
βε

一 25一
*சிறிக்கு நூறு ரூபா எண்டு வரி போட்டான்கள். "சிக்ஸ் சிறி கார் வைச்சிருக்கிறவன் எல்லாம் காரை என்ன வித்தே போட்டான்கள். முன்னையப்போலத்தான் இப்பவும் காரிலை போருன்கள்; பிறிஸ்ரல் சிகரட் பிடிக்கிருன்கள், குடிக்கி முன்கள். அவங்கள் எப்பவும் போலைதான் இருக்கிருன்கள். கஷ்ரப்படுவது ஏதோ எங்களைப்போல ஏழைகள்தானே?" அவர் சொன்னுர்,
'உண்மைதான். எங்களைப் போலை ஆக்கள், அரசாங்கம் எவ்வளவு சம்பள உயர்வுத் திட்டத்தைப் போட்டாலும், போட்ட திட்டம் அப்படியே இருக்க, பழைய சம்பளத் தையே இப்பவும் எடுத்துக்கொண்டு சீவியம் நடத்திறது என்ருல், எங்கடை உழைப்பு ஆரிட்டைப் போகுது? கட்டுப்பாட்டு விலைக்கு இல்லாத சாமானெல்லாம் கறுப்பு
விலைக்குக் கொடுத்துக் கொள்ளை லாபம் அடிக்கிறவன்கள் ஏன் கஷ்ரப்படப் போருன்கள்?" நான் ஆத்திரத்துடன் பேசினேன்,
* 'இதெல்லாம் ஆற்றைபிழை, ஆளத்தெரியாதவன்கள் என் முல் விட்டிட்டுப் போகவேண்டியதுதானே? ஏன் எங்களைப் போட்டுக் கஷ்டப்படுத்த வேணும்?"
அவருடைய பேச்சின் மாற்றம் எனக்குத் தூக்கிவாரிப்போட் டது. நான் உடனடியாக என்னை உஷார்ப்படுத்திக்கொண் G. Går o
*சி ஆளத் தெரியாதவன்கள் எண்டு சொல்லக்கூடாது. அவன்கள் வந்தபிறகு நாங்கள் கஷ்டப்பட்டாலும் நாடு எவ் வளவோ முன்னேறியிருக்கு. ν ο /
"என்ன முன்னேறியிருக்கு? சனம் சாப்பாடில்லாமற் சாகிறது தான் முன்னேறியிருக்கு. சனத்தைப்பற்றி இவன்களுக்கு ஏதாவது கவலையிருக்கே? ஏதும் ஒரு லட்சியம் இல்லாதவன் கள்தானே இவன்கள் ஆத்திரத்துடன் பேசினர்.
"இல்லை நீங்கள் சொல்லுறது பிழை இவங்களிட்டை லட்சி யம் இருக்கிறபடியால் தான் நாங்கள் கஷ்டப்பட வேண்டி

Page 16
- 26 -
இருக்கு, இண்டைக்கு எங்களின் ரை விவசாயிகள் எவ்வளவு முன்னேறிகிருக்கிருன்கள்? அதை மறக்கக்கூடாது. லட்சியம் இல்லாதவன்களிட்டை ஆட்சியைக் குடுத்திட்டுக் கஷ்டப்படு கிறதிலே பலனில்லை. அதாலை நாங்களும் முன்னேறேலாது, நாடும் முன்னேருது. இப்ப நாங்கள் கஷ்டப்பட்டாலும் நாடு முன்னேறுது". நான் நீண்ட லெக்சர் அடிச்சன். அவருக்கு அது புரியேல்லை. அவர் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேச்சை வேறுபுறம் மாற்றினர். நானும் ஏன் வீண் கரைச் சல் என்று பேசாமல் இருந்தேன்.
"தம்பி அதிலை நிக்கிற சைக்கிள் என்னுடையதுதான். அதை ஒருக்கால் எடுத்துக்கொண்டு வாறிரே, வெயிலுக்குள்ளை நிக்கிது.”*
திறப்பை வாங்கிக்கொண்டுபோய் பூட்டைத்திறந்து அவர் காட்டிய சைக்கிளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தேன். அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டுப் போயிட்டார். நான் பொங்குபவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். கோயிற் பின்புறத்தால் சுற்றிக் கும்பிட்டுக்கொண்டு வந்த ஒருவர் முன்புறத்திற்குச் சென்று முனியப்பரை விழுந்து கும் பிட் டார். கும்பிட்டு எழுந்தவர் சந்தனக் கல்லில் ச ந் த ன ம் அரைத்துப் பொட்டு வைத்துவிட்டு வந்து, அங்கு மிங்கும் தடுமாறித்திரிந்து எதையோ தேடினர். அங்குள்ளவர்கள் அவரை விசாரித்தார்கள். அவருடைய சைக்கிளைக் காண assijapurth.
அவர் அடிபட்ட நாய்போல் அங்கும் இங்குமாக ஓடினர்.
அவர் படுகின்ற அந்தரத்தைப் பார்த்தவர்கள் அனுதாபப் Lurrf?as Gir.
!நான் مهمه ومم 7ة 6 5IT}
ஏமாற்றப் பட்டுவிட்டேன். என்னை ஒரு கருவியாக வைத்து இன்னெரு அப்பாவிக்கு ஒரு கொடியவன் நஷ்டத்தை ஏற் படுத்தி விட்டான்.
எனக்குப் பயமும், ஆத்திரமும் தடுமாற்றமும் و لكن ساط الافر له மரத்தின்கீழ் நான் பைசிக்கிளை எடுக்கும்பொழுது தேங்காய்
*
*

鼎
سے 27 --سے
துருவிக்கொண்டிருந்த பெண்ணுகத்தான் இருக்கவேண்டும். என்னைக்காட்டி ஏதோ சொல்கிருள். எனக்கு விஷயம் புரிந்துவிட்டது ஒடுவதா, வேண்டாமா? என் கால்கள் சோர்ந்துவிட்டன. அப்படியே இருந்துவிட் டேன். என்னை நோக்கி அங்கு நின்ற ஒருசிலர் விரைவாக வந்தார்கள். "நீ எங்கை இருக்கிறனி? ஒரு குண்டக இருந்த, கீஸிங்கர்
கெயர்கட்" பேர்வழி என்னைக் கேட்டார். நான் இருக்கிற இடத்தைச் சொன்னேன். * உன்னேடு கதைத்துக் கொண்டிருந்தவன் எங்கை??
போய்விட்டான்' அவனுக்கு மரியாதை கொடுக்க எண்ணுல் முடியவில்லை. நான் இழிவுபடுத்தும் தொனியோடுதான் சொன்னேன். /
'அவன் எங்கை இருக்கிறவன்?
“எனக்குத் தெரியாது? ‘இவன் ஒழுங்காய்ப் பதில் சொல்லமாட்டான் முறையாய்க் கொடுக்கிறதைக் கொடுத்தாத்தான் சரியான பதில் வரும்." அந்த மனுசி சொன்னள். "ஐயோ, எனக்கு அவனை உண்மையாகத் தெரியாது?. * நீதானே, அதிலை நிண்ட சயிக்கிளைக் கொண்டுவந்து அவ னுக்குக் கொடுத்தனி? " நான் பதில் சொல்வதற்கு முதலே தடதடவென்று அடிகள் விழுந்தன. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிகள் எனக்குக் கனவு போல் இருந்தது. நான் பொலீஸ் ஸ்ரேசனில் இருந்தேன். உேண்ட பேர் என்ன? இன்பெக்டர் கேட்டார். போலச்சந்திரன்" *உன்னுேடை பேசிக்கிட்டிருந்தானே அவன் ஆர்?
தெரியாது"
*தெறியாது?
'உண்மையாகத் தெரியாது சேர்" "அப்படியெண்டா அவனுக்கேன் சைக்கிளை எடுத்துக் கொடுத்தே? -

Page 17
一88一
"அது அவனுடைய சைக்கிள் என்று சொன்னன். திறப்புக் கூடக் கொடுத்தான் சார், அதுதான் நான் அவனுக்கு உதவியாகச் செய்தேன். "அவனுக்கேண்டா நீ உதவனும்? - "ஐயோ! வயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே குந்தியிருந்து கொண்டேன். Mز பலவிதமான கிண்டல், குடைசல்கள், தண்டனைகளுக்குப் பிறகு நான் நிரபராதி, ஏமாற்றப் பட்டுவிட்டேன் என்ப தைத் தெளிவுபடுத்திக் கொண்டார்கள். நான் வெளியே வந்தேன். தெருவைப் பார்க்க வெட்கமாக இருந்தது. உடலிற் பட்ட அடிகாயங்கள் வேறு சுள் சுள் என்று வலித்தது. முக்கி முனகி வேதனையை மறைக்க முயன்றேன். ஒருசிலமணி நேரப் பேயாட்டங்களுக்கு ஈடாடிய பாலச் சந் திரன் பழைய பிரச்சனைகளுக்குரிய பாலச்சந்திரனுக, உடல் நோவோடு நின்றேன். நானும் வாழவேண்டும்! و به மின்னி மறைந்த எண்ணத்திற்குள் அடி உதை, ஏச்சுப் பேச்சுக்களெல்லாம் என்னைச்சுற்றி வளையவந்தன. உடல்` கூனிக் குறுகிச் சக்தி இழந்து துவண்டது. எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் -2.6960. . . . . . நான் எப்படி வாழ்வது? ஒரு கல்லை நான் மட்டுந்தான் தூக்கமுடியாது - நாலு பேரோடை நானும் ஒருவனுக நின்ருல் தூக்கமுடியுந்தானே? என்னையும் தங்களோடை ஐஞ்சாவது ஆளாகச் சேர்த்துக் கமஞ் செய்ய ஆராவது கூப்பிடமாட்டானு? 鼻 காஞ்ச வயிற்றுடன் அந்தத் திசையை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டை நோக்கிப் பசியுடன் நடக்கிறேன்.
1975

* இஞ்சேருமெ%ன, இஞ்சேருமென. d(5. . . . . . ச்கு. ச்சூ" *அவள் இப்படித்தான், ஏதாவது தனக்குப் பிடிச்ச சாமான் களை எடுத்து வைச்சுக்கொண்டு நல்லாய்ப் புழுகுவாள்?? கந்தசாமி சொன்னர் நான் கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டபடி, கெளரவம் குறையாமற் சிரித்தேன். "நான் கலியாணம் முடிச்சு அஞ்சு வருஷ சேர்வீஸிலை அவள் ஒருத்திதான் எனக்கு மகளும் மகனும். s
அதுதான் அவள் உங்களுக்குச் செல்லம்போலை? சரியாய்ச் சொன்னிங்கள், அவள் என்னதான் குழப்படி செய் யட்டும்-ஒரு அடி-ம்கும் கிடையாது. அப்பிடித் தப்பித் தவிறி அடிச்சிட்டம் எண் டா ல், அண்டைக்கு அவளுக்கு யோகம்தான்' "ஏன் அப்பிடிச் சொல்றீங்கள்'?
பிறகென்ன, அவளை ஆத்திறதுக்குப் பிறகு அவளின் ரை ஆட்டத்துக்கெல்லாந்தான் நாங்கள் ஆடத் தொடங்கீரு வமே'
*நல்ல வேடிக்கைதான். நான். *உமக்கு வேணுமோ. ? பிஞ்சுக்குரலில் யாரிடமோ கேட்
67.
கந்தசாமி 'பக்கத்து வீட்டுப் பூரணத்தின் ரை பிள்ளையளோ
டைதான் அவளுக்கு விளையாட்டு, அதுகளிலை ஆரிட்டை யோதான் இப்பிடிக் கொஞ்சிக் கொஞ்சிக் கேட்கிருள்." "குழந்தையள் அப்பிடித்தான். என்ரை பிள்ளையன் கொஞ் சங் கூடச் சண்டை பிடிக்கிறதும் உண்டு?,

Page 18
- 30 -
இதெல்லாம் ஒரு சந்தோஷம்தானே? "ஒமோமோம் அது சரி? சொல்லும்போது என்னுள்ளத்தில் ஏதோ இனம்புரியாத கிளுகிளுப்பாக இருந்தது.
நீங்களும் வந்து கணநேரமாய்ப்போச்சு. நான் உங்களோடை கதைச்சுக் கொண்டேயிருக்கிறன், கொஞ்சம் இருங்கோ வாறன்". கந்தசாமி வீட்டிற்குள் போனர். அவர் ஏன் போகிருர் என் பது புரிந்தது. எனக்கு ஒண்டும் வேண்டாம், இஞ்சை
வாங்கோ - அதுகும் இந்தக் காலத்திலை. "
நல்லகதை, கொஞ்சம் இருங்கோ. " என்றபடியே வீட் டிற்குள் போய்விட்டார். அவரும் மனைவியுமாக ஏதோ குசுகுசுவென்று பேசினர்கள்.
மனைவியாரின் முகம் கறுத்தது.
சீனி இல்லையப்பா? அவள். சிபூரணம் வீட்டை கொஞ்சம் வாங்கேலாதே?
அவளிட்டை ஏது? அதை வித்துத்தான் அவள் இந்தமுறைக்
கூப்பன் அரிசியெல்லாம் எடுத்தவளாம்." கந்தசாமிக்கு உள்ளம் கூசியது. எப்படி வந்த விருந்தாளியை உபசரிப்பது என்று தெரியாமல் தடுமாறினர். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சசக்கரையும் இல்லையேப்பா?
பனங்கட்டி இருக்குது. அதோடை குடிப்பாரே? அவள் சொன்னுள். கந்தசாமியின் முகம் மலர்ந்தது. திரும்பி வந் தார்.
என்னுலை உங்களுக்குக் கஷ்ரம். p? உசேச்சே அப்படியில்லை. என்ன செய்கிறது? கஷ்ரப்பட்ட வீட்டிலையெல்லாம் இதுதானே கதை " கந்தசாமி சமாளித் துப் பேசினர். கந்தசாமியினுடைய மனைவியார் தேநீர் கொண்டு வந்தாள். "இங்கை இப்ப பனங்கட்டிதான் வச்சிருக்கிறம், பகுடி பண் னிராதையுங்கோ? வெட்கத்தோடை முகத்தைக் குனிஞ்ச l-L9- சொன்னள்,
*
*
\

س- 31 --
*பனங்கட்டியோ, அதாதல் எங்கடை ஊரிலை கி  ைட கு தெண்டு நாங்கள் பெருமைப்படுகிறதோ, வெட்கப்படுகி றதோ?. இதுதான் எங்களுக்கு நிச்சயம்" நான் பனங்கட் டியை எடுத்தபடி, வலக்கையால் தேநீர்க் கோப்பையையும் எடுத்துக் கொண்டேன். கந்தசாமியருக்கு உச்சி குளிர்ந்தது. **நல்லாய்ச் சொன்னியள். இனிமேல்க்காலத்திலை நாங்கள் கப்பலிலை வருகிற சாமான்களையெல்லாம் மறந்திடவேணும்.
எங்களின் ரை ஊரிலை கிடைக்கிற சாமான்களைத்தான் பாவிக்
கப் பழகவேணும்." திருமதி கந்தசாமி புன்சிரிப்புடன் வீட் டிற்குள் போனள்,
"நானும் வந்த விஷயத்தை மறந்து உங்களோடை முசுப் பாத்தி பண்ணிக்கொண்டிருக்கிறன். என்னெண்டால், 99
'ஒமோம், எனக்கு விளங்கிது - நான் மறக்கேல்லை. நானும் நாலைஞ்சு இடத்திலை கேட்டுப்பாத்தன். என்ன செய்யிறது? அதுகளின் ரை தலைவிதி அப்பிடி ' கந்தசாமி. -
நீங்கள் அப்பிடிச் சொல்லப்படாது. நானும் எனக்குத் தெரிஞ்சாக்களின் ரை காலிலையெல்லாம் விழுந்து கொண்டு தான் இருக்கிறன். அதுகளும் நெடுகவந்து எனக்குக் கரைச் சல் தந்துகொண்டு இருக்குதுகள்."
சரியான கறுமஞ் செய்ததுகள். மூத்தவள் ஏதோ பீடி
சுருட்டிக்கொண்டு.
ச? அதுதான் நிப்பாட்டிப் போட்டாங்களே. ஏதோ பொயிலை இடைக்கேல்லையெண்டு நிப்பாட்டிப் போட்டாங்களாம்." நான் சொன்னேன்.
*இனி நெசவுக்குப் போய்.” என்று இழுத்தார்;
'ஏதோ-அஞ்சோ, பத்தோ அதுகள் உயிரைக் கையிலைபிடிக்க
வாதல்." "இனி அந்தக் கதையை விடுங்கோ, ஏலுமான வரையும் நாங்களும் ஏதோ முயற்சி செய்து பார்ப்பம்.அது இப்ப எப்பிடி அதுகளின் ரை சீவியம் போகுது?

Page 19
- 5 2 --
'அய்யோ. அது - அந்த டாக்குத்தர் வீட்டிலையும், புடைவைக் கடைக்காரன் வீடு அங்கை இங்கையெல்லாம், அந்தத் தாய்மணிசிதான் குத்தி இடிச்சு. சரியான வயித்தெரிச்சல்."
'ம்.கும் - பொன்னுத்துரையும் நிரைச்சுக்கு நாலையும் பொம்பிளைப் பிள்ளையளாய்ப் பெத்துப் போட்டிட்டு நிம்மதி யாய்ப் போய்ச் சேர்ந்திட்டான். அதுகளுக்கு ஏதாவது தேடிக்கீடி வைச்சானே ? அது கும் இல்லை. எல்லாம் தலை யெழுத்துப்படிதான் !" பெருமூச்சில் முகில் கலைந்திருக்க வேண்டும் !
நான் ஆமோதித்தேன்: "நல்லாய்ச் சொன்னியள்.?? *"இனிமேல்க் காலத்திலை வழியில்லாததுகள் கலியாணம் முடிக்கக்குடாதப்பா. முடிச்சால் பிள்ளை பெறக்குடாது.'
"என்னுற் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனல், கந்த சாமி சொன்ன வார்த்தை அவ்வளவும் உண்மையானது தான். பொன்னுத்துரை செத்த அன்று அந்தப் பிள்ளைகள் பட்டயாடு , ! கடைசியாக அந்தப் பிள்ளைகள் தங்களின் ரை காதிலை மூக்கிலை இருந்த எல்லாவற்றையும் கழட்டித்தந்து, அதை விற்றுக் காசாக்கிக் கிறுத்திய அலுவல்களைப் பார்க் கச் சொன்னபோது - ஐயோ - இப்ப நினைச்சாலும் எனக் குத் துக்கம் வயிற்றைக் கிழிக்கிறது. சொந்தக்கா ரன்களும் ஏதோ குடுத்தான்கள். என்னைப்போல சிலரும் ஏதோ . ஆனல், சுடலையிக்கை நான் பட்ட பாடு. பறையடிக்கிறவன் ஒரு பக்கத்தாலை; பாடைக்காரன் ஒரு பக்கத்தாலை; அம்பட்டன், சுடலைக்காரன் அப்பப்பா. !
செத்தவனைச்சாட்டி உழைக்கிற கும்பல் ?
இனிமேல் ஒருத்தன் சாகப்போறதுக்கு முதல், தன்னுடைய செத்தவீட்டுச் செல்வுக்கென்று கட்டாயம் ஒரு ஐந்நூறு அறுநூறு ரூபாக் காசைச் சேர்த்துவைச்சிட்டுத்தான் சாக வேணும் அப்பிடியில்லை - யமனேடை சண்டைபிடிச்சு எப் பிடியாவது தன்ரை உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவேணும்.

· ბა. - 38 -
"என்ன பிறப்பு? என்ன வாழ்க்கை ? என்ன சா??’ எனக்கு வந்த எரிச்சலுக்கு வாய்விட்டே உழறிவிட்டேன். கந்தசாமி கேட்டார்: “ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?"
'முதலிலை சீர்திருத்தம் செய்யிறவன்கள் சுடலையிக்கைதான்
செய்யவேணும். தீண்டாமை ஒழிப்பைப்பற்றி நாங்கள் பேசிறம். ஆனல், சுடலைச் சடங்குகளிலை மட்டும் அதைக் காப்பாற்றி வைச்சுக்கொள்ளுகிறம். இது ஏன் ?"
கந்தசாமி யோசித்தார்.
நான் சொன்னதன் அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை. நான் விளங்கப்படுத்தீனேன். "ஒரு மனுஷன் செத்தால், அவன் ரை ஆத்துமா சாந்தி யடையுதோ, என்னவோ? ஆனல் உயிரோடை இருக்கிற அந்த மனுஷன்ரை பெண்டாட்டி பிள்ளையளின் ரை ஆத் துமா-?
அதை என்னெண்டு சொல்கிறது? செத்தவனுக்குச் செய்யவேண்டிய ஈமக்கிரியைகளுக்கு இணி மேல்க் காலத்திலை, வழியில்லாதவன்கள்
கொள்ளையடிச்சுக்கொண்டு வந்துதான் செய்யவேணும்.'" கந்தசாமியருடைய நெற்றி சுருங்கிக் கிடந்தது.
"உண்மைதான். அந்தக் காலத்திலை ஒரு கமுகை மரமும் பச்சைத் தென்னுேலையும் இருந்தால், நாலுபேர் தூக்கிக் கொண்டேப் போட்டிட்டு எரிச்சிடுவாங்களாம் ! இப்ப எவ்வளவு செலவு?? நன்கு புரிந்துகொண்டே பேசினர்.
அதுக்குள்ளே பாருங்கோ, நாங்கள் உலகத்திலை தீண்டாமை
ஒழிப்பைப்பற்றி விசேஷ மாய்ப் பேசிக்கொண்டு வாறம்,
ஆனல், சுடலையிக்கை பாருங்கோ; நான் இன்ன இன்ன சாதி, இவையஞக்கு எல்லாம் காலாதிகாலமாய்க் குடிமை
யள்; எங்களுக்குத் தரவேண்டிய தெல்லாத்தையும் தாங்கோ
எண்ட்ொரு கும்பல் நிக்கிறதை."

Page 20
- 34 -
"அது சரி. ஆஞல் அவன்கள் கேட்கிறதிலை பிழையில் லேயே, தாங்கள் செய்த வேலைக்குத்தானே கூலி கேக்கிறன் a 6y Poo 'மிச்சம் பிழைபாருங்கோ. இப்பிடியான மூடச் சடங்குகளை ஒழித்து, செத்தவனை அமைதியாய்ச் சாதாரணமாய்க் கட் டையிலை சாத்தினுல்த்தான் அவனுடைய ஆத்துமாவுக்கும் சாந்தி; உயிரோடை இருக்கிற மிச்சப் பேருக்கும் தொல்ஃல குறையும்; சாதியமைப்பும் ஒழியும் ' 'ஏன் இதையெல்லாம் இப்ப நினைச்சியள்??
கந்தசாமியர் அலுத்துக்கொண்டு கேட்டார். அவருக்கு இந் தச் செத்தவீட்டு விவகாரம் அவ்வளவு பிடிக்கவில்லை. 'பொன்னுத்துரையின்ரை செத்தவீட்டுக்குள்ளை நான் நாலு சாதிக்காரரோடையும் பட்ட பாட்டையும், அவர்களுக்கு இருந்த காசைப் பங்கிட்டுக் குடுத்துச் சமாளித்த அவலத் தையும் பார்த்தால்த்தான் இதைப் பற்றி உங்களுக்கு விளங்கும் ?
அவர் தலையை ஆட்டினர்.
தெருக்கதவுப் பக்கமாகப் பிள்ளையொன்றின் அழுகுரல் கேடடது. பூரணத்தின் பிள்ளைதான் அழுகிருள். * சரிதான். கவிதா அவளை ஏதோ செய்திட்டாள் போலே யிருக்கு?" கந்தசாமியின் மகள்தான் கவிதா.
*" கவிதா. கவிதா.* கனிவான குரலில் மகளேக் கூப் | ?” Lirrri.
* * 6T6ör60Tu'i umor?”o
* இங்கை வாம்மா! என்னம்மா சண்டை பிடிக்கிறியள்?? , ஒண்டு- மில்லை. இஞ்சேருமெண அப்பாப்பிள்ளை." அவருடைய பெயர் கந்தசாமி. மகள் வைச்சபேர் அப்பாப்பிள்ளை. அவர் அவள் காட்டிய பொருளைப் பார்த்தார். நானும் பார்த்தேன். அவர் யோசித்தார்.
*。

سینی سے 85 حصے
* எப்பிடி இவளுக்கு இந்தப் படம் கிடைச்சிது? இவள் நீக்ரோ இன விடுதலைக்காகப் போராடிய ஆஞ்சலா டேவிஸ் அல்லவா?" என்னிடம் படத்தைத் தந்தார். சத்தியசாயி பாபாவினுடைய தலைமயிரளவு வராதுதான். ஆஞல், நல்ல அடர்த்தியான மயிர்க் குகையினுள் நீண்ட ஒரல் மூஞ்சை, &95 suori i u Lorrass’ unTrišas அழகாகத்தான் இருக்கு, ஏதோ இனம் புரியாத கவர்ச்சி.
* சாமிப்படம் எல்லாப்பா இது?" கவிதா கேட்டாள். தமிழனுக்குப் பிறந்த அஞ்சு வயசுப் பொம்பிளைப்பிள்ளைக்கு ஆஞ்சலா டேவிஸ் சாமி! நான் சிரித்தேன். எனக்கு முசுப்பாத்தியாகத் தான் இருந்தது. கந்தசாமியும் சிரித்தபடி மகளை இழுத்து அணைத்துக்கொண் டார். ? ? இல்லையம்மா. இது ஒரு பெரிய பொம்பிளேg உனக்கு எப்பிடியம்மா கிடைச்சிது? ? * ஒரு மாமா தந்தவர்'
நானும் அவரும் அவளுடைய செல்லப்பேச்சையே ரசித்த படி இருந்தோம். * ஒ! ஒரு மாமாதான் - இந்தப் படத்தைத் தந்திட்டு - என் ரை தூக்கணத்தைக் கேட்டார் - குடுத்தன்." நெஞ்சு திக்கென்றது. அப்பொழுதான் அவளுடைய காதைப் பார்த்தோம். காதில் ஒட்டைதான் இருந்தது.
கந்தசாமி கையை ஓங்கினர். நான் கவிதாவை இழுத்து அணைத்துக் கொண்டேன். ஆஞல், அவளை அடிக்க ஓங்கின கை சோர்ந்து போய்க் கிடந்தது கந்தசாமி அவளுடைய காதைப் பார்த்து வெம்பினுர்,
அந்தக் குச்சியும் தூக்கணமும் வேண்ட நான் பட்ட பாடு, மனிசி என்னை இராப் பகலாய் நச்சரித்துப் போன தைப்பூசத்துக்குத்தான் வாங்கிப் போட்டன். இனி உந்தக் காதோட்டையை நிரவ எத்தினை நாளுக்குக் சஷ்ரப்பட வேணுமோ??

Page 21
எனக்குக் கந்தசாமியருடைய துக்கம் தெரிந்தது. ஆஞ்சலா டேவிஸினுடைய படத்தைப் பார்த்தேன். *" குச்கியும் துரக்கணமும் அந்தப் படத்திற்குரிய விலையாய்ப் போயிற்றுது.?? ஆஞ்சலாடேவிஸ் பெருமையாகச் சிரித்தாள்! அவள் பெறுமதியானவள்தான். அவளுடைய பெறுமதியைத் தெரியாதவன்-1 கேடுகெட் டவன்.
நான் கந்தசாமியரை ஆசுவாசப் படுத்தினேன். 'நல்ல காலம். கள்ளன். பிள்ளைக்கு ஒண்டுஞ் செய்யாமல் போனுனே. ஏதோ-பொருளோடை போனது போகட்டும். கவலைப்படா தையுங்கோ.” கந்தசாமி அதை ஆமோதித்தார். * வியாழன் மாறினது ஏதோ பிள்ளைக்குச் சரியில்லைப் போலை." கந்தசாமியின் மனைவி அங்கலாய்த்தாள். கந்தசாமி சொன்னூர். ஓமோம் ஏதோ வியாழன் மாற் றந்தான் ??
அக்டோபர் 1972
خب

6T
Tsir மேனகையோ, ரம்பையோ, திலோத் て லோகத்து அப்ஸ்ரஸ் 9ம் அல்ல. 6) பூலோகத்து மானிடரைப் பற்றிப் பிடித் 9 திழுக்கும் காந்தக்கவர்ச்சி மிக்க பொற்சிலை யும் அல்ல.
'கண்ணே, மணியே, கற்கண்டே, பொற் சிலையே - வண்ண மலரையள்ளி என்னுட லென்றுரைப்பவளே' எனக் கவிபாடி, என் காதலுக்காக ஏங்கித் தவிக்கின்ற காதலன் ஒருவன் எனக்கில்லே.
படிக்கட்டுப்போல் நான்கு பிள்ளைகளுக்குமுன் பிறந்த எனக்குக் கடைக்குட்டி ஒருவன்தான் தம்பி,
உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்ச்சி கள் எமக்குமுண்டு என்று நாம், ஒருவருக்கு ஒருவர் மறை முகமாக, மற்றவர்களுக்குப் புரிந்தும் புரியாமலும், மறைத் தும் மறைபடாமலும் எழுகின்ற பெருமூச்சுக்கள், கண் ணுேட்டங்கள், கலக்கங்கள். தவிப்புக்களுடன் காக்கொத் தரிசிக்காகக் கூலிக்கார அப்பனின் உழைப்பை எதிர்பார்த் துத் துவஞம் கொடிகள் !
பிறந்த தாள்முதல், கல்யாணமாகிப் பிள்ளைகளைப்பெற்றுப் பேயுருக்கொண்ட அம்மாவின் உடலில் உயிர் இன்னும் தங்கி யிருப்பதற்கு, அதற்கு வேறு தங்கு மடம் இருப்பது தெரி யாததோ, - அல்லது இனிமேல் இல்லையோ ? -
கூப்பன் அரிசி வெட்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் அம்மாவைப் பொறுத்தவரையில் கடவுளின் கொடுமைகள் ! கண்கெட்ட சோதனைகள் !
எங்களுக்கு கை

Page 22
سیسہ ) 88 ) سمیتے
சீனியை விற்று அரிசியாக மாற்றுவதும், அரிசியை விற்றுப் பாணுக மாற்றுவதும், வளவுக்குள் இருக்கும் குப்பைக் கீரை களைச் சாப்பாட்டுக் கீரைகளாகவும், மூலிகைகளாகவும் மாற் றுவதும், .சூர் மந்திரக்காளியும், சுக்கு மாந் தடியும் இல் Gl) (TLD 6î) . . . ... 声
அம்மா செய்யும் மந்திர தந்திர மாயா வினுேதங்கள் !
நாங்கள் சாப்பிட்ட மரவள்ளிக் கிழங்குகளிற்கூட நஞ்சூற வில்லையே !
நான் நினைக்கிறேன் - சித்திரகுப்தனுக்குக் கணக்குப் பார்க் கத் தெரியாது - அல்லது யுகபுகாந்திர வயதுகண்டு மூப் படைந்து விட்ட அவனுக்குச் சரியாகக் கணக்குப் பார்க்க முடியவில்லை ! .
அதனுல்த்தான் தப்பும் தவறுமாகக் கணக்குப் பார்க்கிருன் :
நான் கணக்கில் கெட்டிக்காரி, கணக்கில் மட்டுமில்லை, எல் லாப் பாடங்களிலும் கெட்டிகோரியென்றும், வசதிக்குறை வால் பாடங்களில் க வ ன ஞ் செலுத்துவதில்லையென்றும் வாத்திமார்களிடம் எனக்கு நல்லபெயர் உண்டு,
ஆனல், "ஜீ. சீ. ஈ. கிராஜுவேட்" ஆக அதிஷ்ட தேவதை எனக்கு அனுக்கிரகம் செய்யவில்லை.
**ஆமான சட்டை தைச்சுப்போட வழியில்லை. உடுத்த துண் டுக்கு வதில் துண்டு கிடையாது - உனக்கேன்ரி படிப்பு ? அவன் மனுஷன் இண்டோரஇண்டு கிடந்தடிக்கிற உழைப்பு, ஆறுசீவனுக்குப் போதாமல் இருக்கேக்கை. உங்களின் ரை படிப்புச் சிலவுக்கு எங்கை போறது ? " இது எனது அரு மைத்தாயின் தினசரி அர்ச்சனைகள்,
எட்டாம் வகுப்புடன் என்னுடைய தலைக்கு "ரிபன்" தேவைப் L u LG.SG)3a). தங்கையர் இருவரும் "சாறி பிறிண்டிங்" செய்யப் போஞர் இள். நான் வீட்டிற்குள்ளேயே புழுங்கினேன்.
*

- 39 -
"என்ன பாடுபட்டாவது, தம்பியையாவது நல்லாய்ப் படிக்க வைக்கவேண்டும்." மூத்தவர்கள் எங்களுக்குள் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணம்.
அநங்கன் அரங்கம் அமைத்துக்கொள்ளும் அற்புதத் தோற் றம் எனது தங்கையின் உடலை ஆகர்ஷித்துக் கொள்வதைக் கவனிக்கும்போது - -
என்னுடைய மார்பைக் குனிந்து பார்த்துக்கொள்வேன்.
எனது கன்னக் கதுப்புக்களை நானே தடவிப் பார்த்துக் கொள்வேன்.
நான் துறவியாக முடியாது, ஒடுகின்ற காலத்தை இழுத்து நிறுத்தவும் முடியாது. எனது வயதுக்குத் தடைபோட வும் முடியாது!
அழகான சேலை கட்டிச் செல்லும் பெண்களை மட்டுமா பார்க்கிறேன்? எனக்குத் தகுதியான கொழுகொம்பு கிடைக் காதா என்று ஏங்கவும்தான் செய்கிறேன்.
என்னை மட்டும் தாக்கும் மலரம்புகள் இன்ணுெரு இடத்தை எனக்காகத் தேடவில்லை என்ருல்.
இனி என்னல்த்தான் மன்மதன் பஸ்பமாகுவான் !
அப்புவுக்கும் அம்மாவிற்கும் உள்ளூரக் கவலை இருக்கத்தான் செய்தது. ஆனல் அவர்களின் முடிவின்படி நாங்கள் எல் லோரும் * அதிஷ்டம் கெட்டதுகள்!" காலா காலத்திற்குக் கலியானம் ஆகாமல் கன்னியர்களாக இருக்கும் எங்கள் முகத்தில் எப்படி லஷ்மிகரம் படியும்? யாராவது லஷ்மி என்கின்ற பெண் வந்து எங்கள் மூஞ்சை யில் ஓங்கி அடித்தால்த்தான் லஷ்மிகரம் படியும், ஒட்டை வேலிக்குக் கிடுகு வைத்துக் கட்டிக்கொண்டு, தெருவோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொள்வது எனது பொழுதுபோக்கு.

Page 23
ہے۔ 40ھ -۔
பள்ளிக்கூடத்தில் படிக்கும் சின்னப் பெட்டையளும் பெடி யளும் தெருவிலே புதியபாடம் படித்துச் செல்லும் இனிய காட்சிகள், ஒவ்வொரு பாடசாலை உயர்வகுப்புப் பிள்ளை களின் முன்னேற்றத்தையும் துணிச்சலையும் எனக்குப் பறை சாற்றுவதாக இருந்தது. ஒருநாள் ஒரு பையன் தன்னுடைய கையிலிருந்த சில்லறைக் காசுகளை அந்தச் சின்னக் குமரியுடைய நெஞ்சுச் சட்டைக் குள் போட்டுவிட்டுச் சிரித்தான். அவளும் சின்னமேளக்காரிகளுடைய காலிலுள்ள சலங்கை கள் குலுங்குவதுபோல் சிரித்தாள்! தான் அதிசயத்துடன் பொருமை படரப் பார்த்து விக்கித்து நின்றேன். அவர்கள் என்னைப்பற்றி ஏதும் கவலைப்பட்டதாகத் தெரிய cbdàು. கையுடன் கைசோர்த்து அங்கசேஷ்டைகள் புரிந்தவாறு *புதுமணத் தம்பதிகளின் கலகலப்போடு போனர்கள்.
வயது பதினறுக்குமேல் இருக்காது! யார் பெற்ற செல்வங்களோ..? எனது நெஞ்சை விம்ம வைத்துவிட்டுச் செல்லும் இத் தகைய பலரக ஜோடிகள் எத்தனை? கிழவனும் குமரியும், கிழவியும் குமரனும், உண்மையான காதலர்கள். சின்னஞ்சிறுசுகள் !
உலகம் மாறிவிட்டது! அளவுக்கு மிஞ்சிய அவசரம், அடுத்த நாளைப் பற்றிக் கவலையின்மை. கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத் திக் கொள்ளும் எத்தனம், உண்மையான வாழ்க்கை எது? இப்படியான சமுதாயத் தில், இந்த ஜன்மத்தில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு வாழ்வு கிடைக்குமா?

ലേ= 41 =
எங்களைக் கட்டிக்கொள்ள எவனும் தயாராகமாட்டான், எம்முடைய அழகையெல்லாம் வறுமை அபகரிக்க, யாரை யும் கவர்ந்துகொள்ளக்கூடிய கல்வியறிவும் கிடைக்காத எம்மை, எவனுடைய தலையிலாவது கட்டியடிக்க எமது தாய் தந்தையரிடம் ஒரு பொருக்கும் கிடையாது, சீதனத் தூண்டில் போட்டு மாப்பிள்ளை பொறுக்கும் சமு தாயத்தில் எமக்குப் பொருத்தமான வாழ்வு கிடைக்குமா? இன்றைய அவசர உலகத்தில் உண்மையான வாழ்வு எங்கே இருக்கிறது?
மாதத்தில் பத்தோ பதினஞ்சோ ரூபா நோட்டுக்களைக்
காண்பதற்காகச் சாறி பிறிண்டிங்' செய்யப்போகின்ற எனது சகோதரிகளைப் பார்க்கும்போது -
மலைபோல் ஏறிவரும் மேனியழகை மூடி மறைக்க வண்ணப் புதுத் துணிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? வருமானம் போதாதே!
மூக்கின்மேல் விரல் வைக்கின்ற அவசியம் எனக்கு நேர
-
எல்லாம் புரிந்துவிட்டது!
6

Page 24
ബജ്ഞ
கருமுகிலினுள் =
6
தமிழ்க் கலைச் சங்க ஆண்டு விழாக் SC3
காரியதரிசி எனது நண்பர், லயோ டாலஸ்டா அவருடைய உதவியுடன் கொழும்பு யின் “ஏழை யி ன் சரஸ்வதி மண்டபத்தில் நடை காதல் உருவமும் பெற்ற ஆண்டு விழாவின் காலை 1 நெறியும் வார்த்இசைநிகழ்ச்சியில் திருலோகச்சந்தி ! -தை அலங்கார ரனின் கச்சேரி நடைபெறுவதற்கு மும் = لاق وچھیےs[T حصہ ! அனுமதி பெற்றுக்கொடுத்தேன். அதே போல்.
அவனுடைய இசையில் மயங்காத டால்ஸ்டாய்
வர்களில்லை. ஆனல், தமது பிள்ளை டால் ஸ்டாய் தான் . களுக்கு அவன் ஆசிரியராகப் பணி நான் நானேதான். Lithu......
ஒருநாளும் அனுமதிக்கமாட்டார்கள். அது அவனலும்
(Lp L9-turf gil.
மண்டபம் தென்னங்குருத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்ட தோரணங்களினலும், கடதாசிப் பூச்சரங்கள், மலர்ச்சரங் கள், மாவிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுக் குளுகுளுப்பாகக் காட்சியளித்தது,
வாசலிற் பூரணகும்பம், குத்து விளக்கு, பன்னீர்ச்செம்பு, சந்தனக்கும்பா, மல்லிகை, ரோஜா, கனகாம்பரப் பற்றை யாவற்றையும் தாங்கிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தது ஒரு அழகிய வேலைப்பாடமைந்த மேசை,
خوا

سیست شبیه -سیت
பார்வையாளர் நிரையாக அடுக்கப்பட்டிருந்த நாற்காலி களிற் கலகலப்பாக, நெற்றியிற் சந்தனப்பொட்டுத் தரித்து, முகமெல்லாம் புன்னகை மலராக அமர்ந்திருந்தார்கள்.
நான் நண்பர் பத்மயோகனுக்கு அருகில் இருந்தேன். எனக் கருகில் ராஜதேவனும் அவனுக்கு அருகில் விக்னேஸ்வரியும் இருந்தாள். தொடர்ந்து பல புதிய முகங்களும் எங்கோ, எப்போதோ பார்த்த ஞாபகத்திலுள்ளவர்களும் பழகிய நண்பர்கள், சில உறவினர்கள், சில அன்னியர்கள் சகிதம் சரஸ்வதி மண்டபம் பொலிந்து நிறைந்திருந்தது.
மேடையின் இடப்புறத்து ஒரத்தில் ரவிவர்மாவால் பஉைக் கப்பட்ட கலைமகளின் திருவுருவம் ஒரு சிறிய முக்கோண மேசையில் வைக்கப்பட்டு இருகரையும் மங்கல விளக்கும் ஊது பத்திக்கொத்தும் கொளுத்தப்பட்டுப் புகைமணமும் மலர்மணமும் பார்வையாளர்கள் தமது உடைகளிற் பூசி வந்த குனேகா, லவண்டர், ஒடிக்கொலோன் வாசனையும் சந்தன மணமும் கலந்து மனத்தை மயங்கவைத்துத் தலை யைக் கிறங்கச் செய்தது. மேடையிற் சுருதி மீட்டப்பட்ட தம்புரா நொய் ங்ொய்யென, வீணையின் நாத நரம்பு களுடன் மெல்லிய இளந்தளிர் விரல்கள் ஒடியாடி விளை யாட, மிருதங்கத்தில் தாளமிட்டு வித்வான் ஒசைநெறிப் படுத்த, வயலினில் இருந்து இனிய நாதம் கிளம்ப.
திருலோகச்சந்திரன் செருமினன்.
நாதநரம்புகளைத் தண்மைப்படுத்தி, ஏழு ஸ்வரங்களுக்கு உயிர்கொடுத்து, எண்ணற்ற இராகங்களை இசைமொழியில்
தந்து, இனிமையான, அல்லது மதுரமான பலவித உணர்
வுகளைத் தரும் கற்பனை மயமான, புதிய நிலையில் எம்மைத் தள்ளிவிடும் அந்தப் பாடகன்.
ஏறியிறங்கி, வழுக்கி விழுந்து உருண்டுபுரண்டு குதித்து எழுந்து திரும்ப ஏறித் தொனியின் ஜாலங்களைச் சொற் கூட்டங்களுக்குட் செருகி, இசையென்னும் இன்ப மதுவில் மயங்கவைத்து எம்மை ஏழ்மைப்படுத்தி.

Page 25
سا - 44۔ سجیسے
மங்கல விளக்கெரிய, மகரதோ ரணமசையச் சங்கீதத் தென்றல் தழுவி உடல் சிலிர்க்க, எங்கும் அகிலுஞ் சந்தனமு மலர்மணமும் பொங்கிக் கமழப் பூபாள ராகத்தில் வண்ண மலர்க் கண்ணன்
மகிழ்ந்து குழல் ஊதுகிறன் வண்ண மலர்க் கண்ணன்
மகிழ்ந்து குழல் ஊதுகிருன், தண்ணிய காலை நேரத்தின் இனிய சுபாவத்தில்,
سمي புல்லாங்குழலிலிருந்து பூபாளராகத்தை அள்ளிச் சொரிந் தார் புல்லாங்குழல் வித்வான்
மண்டபத்தில் ஏராளம் உயிர்ச்சிலைகள் இமைக்க மறந்து தேவர்களாயினர்,
எனது கண்கள் செம்மின!
கண்ண்னின் வேய்ங்குழல் ஓசை - இசைக் சச்சேரி இனிதாக வரும் இனிய பாஷை எண்ணங்கள் ஒரு கோடி தோன்றும் - அந்த எண்ணத்தில் முதுமையும் இளமை பெற்றேங்கும்
(கண்ணனின்.
நப்பின்னே, வெள்ளைப் பசுவொன்றைக் கட்டித்தழுவிக் காதலன் கண்ணனின் இசையில் மனதைப் பறிகொடுத்து, இரங்கிய பார்வையுடன் அவன் எழிலையெல்லாம் அள்ளிப் பருகுவது போன்ற ஒரு கனவு - "
சூரியனின் காலைஇளங்கதிர்கள் சோலைகள்,பசும்புற்கள், மலர் கள் யாவையும் ஸ்பரிசித்துப் பறவையினங்களை யும் மிருகங்க ளையும் உலகத்து ஜீவராசிகளத்தனையையும் புளகாங்கிதமடை யச் செய்து அவற்றின் ஒலிகளையும் தன்னை ஆராதிக்கும் வேத மந்திரச் சூத்திரமாகவும் ஏற்றுத் தனது கரங்களை விரித்து உலகத்தை ஆலிங்கனஞ் செய்வது போன்ற பிரமை
ز)
a
ܪܬ

سب- 45 ہے۔
அலங்கார தோரணப் பந்தல் - அங்கு அழகான பாவையர் களிகொள்ளும் கும்பல் நலங்காணும் இனிதான நெஞ்சம் - இசை வளங்கண்டு மோனத்தைக் கொஞ்சும்.
(கண்ணனின்.
நதியோடு வருகின்ற இசையும் - காற்றில் அசைகின்ற தென்னுேலை தருகின்ற இசையும் சுதியோடு கூவும் பூங்குயிலும் - ஜோடிக் கிளிகளின் கொஞ்சற் கதைகளும் கமழும்
(கண்ணனின்.
இசையென்னும் வாகனத்தில் ஏறி எண்ணற்ற காடு,
வனந்தரங்கள், மலைகள், குடிசைகள், கட்டிடங்கள் யாவற்
றையும் தாண்டி, பதுளை நகரின் - துன்கிந்த நீர் வீழ்ச்சி யின் நாதத்தில் மெய்மறந்து, நான் பத்மயோகன், சபா மூவரும் தோள்மேற் கைபோட்டு இணைந்து நிற்கின்ருேம்,
நீர்வீழ்ச்சியில் இருந்து பரவும் நீர்ப் பூக்கள் எமது கை உரோமங்களில் மலர்ந்து வெயிலொளியிற் கண் சிமிட்டு கின்றன. எமது தலை முடியை மறைத்து நீர்ப்பூக்களினல் உருவாக்கப்பட்ட கிரீடம் எம்மை அலங்கரிக்க, நாம் மூவ ரும் தேவகுமாரர்களாக, கண்ணனின் வேய்ங்குழல் ஓசை யில் லயித்துப் புதியதோர் உலகத்தில்,
எம்மைப்போல், எமது பிரஜைகள் எல்லோரும், மே நிலையில் ஆநந்த உணர்வு உள்ளத்தைக் கொள்ளை கொள்ள பூஞ்சிறகடித்து நீர்வீழ்ச்சியின் அருகாக, மிக அருகாக, வான வீதியில், பூஞ்சோலையில், வனத்திற் பறக்கிருர்கள் நீர் வீழ்ச்சியினலுண்டாகும் ஸப்த ஜாலங்களுடன், காற் றுத் தடவச் சிலிர்ப்பும் காட்டு மரங்களின் கலகலப்பும் கீதமாக உருவாகி என்னே மெது மெதுவாக இழுத்து அந் தரத்திற் கொணர்ந்து - நான். ஒரு வழுக்கற் பாறையி லிருந்து உரோமம் சிலிர்க்க, உடல் குளிரில் ஒடுங்க, செய லற்ற ஜீவனுக வழுக்கி, வழுக்கிக் கீழே. பத்மயோகனும் சபாவும் தம் இரு கைகளையும் விரித்து ஆர்வமுடன்

Page 26
س 6 4 ديسد
என்னை அனைப்பதற்கு முயல்பவர்கள்போல் நோக்குகிருர்கள்; திடீரெனக் கரவொலி.
நாம் எல்லோரும் சரஸ்வதி மண்டபத்தில் இருக்கிருேம்! இதயத்தைப் பிழந்து, அதற்குள் எங்கே அந்த இனிய சங்கீதம் மறைந்துவிட்டது என்று தேடிப் பார்க்க வேண் டும்போல் ஒரு அந்தர உணர்வுடன், அவ்வளவு சனக் கும் பல்களின் நடுவில் தனித்து விடப்பட்டவன் போல் இருக் கிறேன்.
நான் மட்டுமல்ல - எல்லோருமே அப்படித்தான் இருக் கிருர்களோ ?
ஒரு மனிதனுல், உண்மையான உணர்ச்சிகளை எடுத்துச் சொல் லத்தகுந்த வார்த்தை - எந்த ஒரு மொழியிலும் இருக்க முடியாது !
எந்த ஒரு ஓவியனுலும் அதை வரையவும் முடியாது.
எனக்குப் பின்னுல் இருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரியவரின் விழியோரங்களிற் கண்ணிர்க் கசிவைக் கண்டு எனது கண்களும் பனிக்கயெத்தனித்தன. விக்கி னேஸ்வரி பெருமூச்சு விட்டாள். ராஜதேவன் தன்னிரு முழங்கால்களிலும், முழங்கைகளை பூன்றிக் குத்தென்ன நின்ற கையின் ஆதாரத்திற் கன்னத்தைப் புதைத் து மேடையையே வெறித்து நோக்கியபடி இருந்தான்.
அவன் மனைவியையும் பிள்ளையையும் அழைத்து வராமல் விக்கினேஸ்வரியுடன் வந்திருந்தான். விக்கினேஸ்வரி குயிற் குரலில், கிளியைப்போன்று எவருடனும் கொஞ்சிக் கொஞ்சி அன்னியோன்னியமாகப் பேசுவாள். மனுேரம்மியமான அழகி, எவரும் பழகுவதற்கு ஆசைப்படும் தகுதிவாய்ந்த
தன்மையும் இனிமையும் உள்ளவள். அவளுடன் பழகியவர்
கள் மீண்டு வருவது அருமையிலும் அருமை, அவள் பார் வையிலிருந்து மறைய அவர்கள் முயற்சித்தார்களானுல் - உருண்டுருண்டு அதல பாதாளத்திற்குப் போய்விடுவார்
جاتا

t
- 47 -
களோ ? அவளுடைய தாயார் விசாலாட்சி சீட்டுக் கொம்பனி வைத்திருப்பதால், ஏராளமான நண்பர்கள் அவர்களுக்கு, வசதிகளும் அதிகம்.
அவளுடைய தாயாரிடமிருந்து நளினத்தைக் கற்றிருந்தாள். அந்த நாளில்
அதை நினைத்து அவளே பெருமூச்செறிவாள்!
寧 塞
“Who am I ? When I get this life P. Not necassary of these questions. But, -
My dear Muthu -
தாங்கள் நல்ல வாழ்க்கையைப் பெற்றிருக்கிருேம். ஆனல் அதை அனுபவிப்பவர்கள் எத்தனை பேர்?" திருலோகச் சந்திரன் அதிகமாக அலட்டிஞன்.
திருலோகச்சந்திரனை நான் சில வருடங்களுக்கு முன்பு தான் நண்பனுக்கிக் கொண்டேன். அதனல் அவனுடைய வாழ்க்கை வரலாறு பூராவும் எனக்குத் தெரியாது. அவனி டம் அதை அறிய முயற்சித்து, அவனுடைய அலட்டல் வேதாந்தங்கள் நீண்டு செல்ல மனம் அலுத்து, அவனை மிரட்டிக் கலைத்து விடுவது எனது சுபாவம்.
அவன் பாடினுல் - நான் அவனுடைய அடிமை; அவன் பாடாத நேரமெல்லாம் - எனக்கவன் அடிமை,
அவன் நல்ல இசைஞன். என்னைக் கற்பனை உலகங்களிற் சஞ்சரிக்கவைத்து, பச்சைக் கூட்டோடேயே கைலாசக் காட்சியைக் காண வைக்கும் அற்புத சக்தி படைத்தவன், என்னிடம் காசு இருக்கின்ற நேரமெல்லாம் நான் ஒரு சீமான் போல இருந்து அவனுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுப்பேன், நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளமடிப் பேன். உல்லாசப்பயணம், சினிமா, நாடகம் , நடனம்

Page 27
صحضد 8 4 عنصيد
இசை எதையுமே தள்ளிவிடுவதில்லை. புகை, குடி தாம் பூலம் மட்டும் எனக்குச் சிம்ம சொப்பனம்;
e96) a$ھے காசு இல்லாதபோது அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்து, எவரையும் அணுவசியமாகக் கோபித்துச் சோம்பிக் கிடந்து விடுவேன்.
திருலோகச்சந்திரனை நான் சந்தித்த காலத்தில், அவன் மடிப் புக்கலையாத உடைகளுடன் நாகரிகமானவனுக இருந்தான். பிறகு, எப்படியெப்படி யெல்லாமோ அவனைக் குடிப்பழக் கம் கெடுத்துவிட்டது. குடித்துக் கெட்டழிந்த நிலையில் என்னிடம் சில்லறைக் காசுகேட்டு அடிக்கடி வரத்தொடங் கிஞன். அவனிடம் எனது சொந்தக் குணத்தைப் பிரயோ கிக்கும் சந்தர்ப்பங்களில் அவன் வசைந்துகொடுத்து, என் னிடம் நன்ருக ஒட்டிக்கொண்டுவிட்டான். இருந்தாலும் அவன் திடீரென எங்காவது மறைந்து விடுவதும் உண்டு. ஏன் எதற்கு, எப்போது, என்பது அறிய முடிவதில்லை நானும் அவனைத் தேடுவதற்கு முற்படுவதுமில்லை,
ஒருநாள் கோட்டையிலிருந்து வந்து வெள்ளவத்தைப் புகை யிரத நிலையத்தில் இறங்கிப் புகையிரத நிலைய வீதியால் எனது வசிப்பிடத்திற்குப் போவதற்கு, அந்தச் சின்னக்
குறுகிய வேலிப் பொத்தலினூடாக வந்து, புகையிரத நிஆலய
மாடிப் படிக்கட்டுக்களைப் பார்த்தேன் -
எவருமே நெருங்கிப் பேசத் தயங்கும் அழுக்குப் படிந்த உடைகளுடன் அவன் இருந்தான். மது மயக்கம் அவனுக்கு என்னையே அடையாளங் காணமுடியாதளவு நிலைக்குத் தள்ளி யிருந்தது. நான் அவனைத் தெரியாதவன் போல் எனது அறைக்கு வந்துவிட்ட்ேன், அறைக்கு வரும்பொழுது "ருேயல் பேக்கரி'யில் இரண்டு ருத்தற் பாண் முன்னேற்பாடாக வாங்கிக்கொண்டுவந்து, வல்லாரைச் சம்பலும் போட்டு, மூன்று முட்டைகளையும் அவித்து வைத்துவிட்டுக் கோப்பி அருந்தினேன்.
ر)
|WAN

(а
س--- 49 --
அவன் வரவில்லை.
சரத்சந்திரரின் சமாதவி' நாவல் எனது கட்டிலின் தலை மாட்டுப் பக்கத்தில் இருந்தது; பத்மயோகன் வைத்துவிட் டுச் சென்றிருக்கவேண்டும். நான் அதைப் படிக்க ஆரம் பித்தேன்.
பொழுது போனதே தெரியாது.
இரவு ஒன்பது மணியிருக்கும். எதற்கும் திருலோகச்சந்திர னைப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்ற எண்ணத் துடன் வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தைச் சென் றடைந்தேன்.
அங்கு அவன் இல்லை. அப்படியே தொடர்ந்து கடற்கரை யோரமாக நடந்துவந்து, புகையிரதப் பாதையைக் கடந்து ஹமர்ஸ் அவெனியுவினூடாக எனது அறைக்குத் திரும்பி வந்தேன். அந்தத் திருப்பத்தில், விளக்குக் கம்பத்திற்குச் சிறிது தள்ளி ஒரு பூம்பற்றை வேலியோரமாக அவன் அலங்கோலமாகக் கிடந்தான். * றவுசர் பட்டின்ஸ்" கழண்டு மானம், வெட்கம் இல்லா மல் தெருவில் உருண்டான் திருலோகச் சந்திரன். நான் நினைக்கிறேன் - கொஞ்ச நேரத்திற்கு முதல் நான் வந்திருந்தால், அவனுக்கு அருகில் ஒரு குளம் ஒன்று இருந் திருக்கக் கண்டிருப்பேன். நாற்றம் சகிக்கவில்லை. போவோர் வருவோர் எல்லாம் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டுச் சென்ருர்கள். எனக்கு ஒரே வெட்கமாக இருந்தது.
ஒரு குடிகாரனல் எத்தனை பேருக்கு மானக்கேடு!
ஆணுல்இந்த விஷயத்தில் அவனைத் திருத்தவே முடியாது. சாப் பாட்டைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை எங்ஆ
ளைப்போன்ற நண்பர்களின் வற்புறுத்தல்களுக்காகவே அவன்
சாப்பிடுவான். அவனுடைய உடையின் தரம், அவனுக்குக்
கிடைக்கும் கச்சேரிகளைக்கூடக் கிடைக்காமற் செய்துவிடும்.

Page 28
அவன் எதற்குமே கவலைப்படுவதில்லை . ஆணுற் குடிப்பதற்கு ஒரு சொட்டுச் சாராயம் கிடைக்காதபோது துடித்து விடு கிருனே!
அவனை எப்படியோ எனது அறைக்குக் கொண்டுவந்து சேர்த்துக் குளிப்பாட்டி, வெறியை முறிய வைத்துச் சாப் பாடு கொடுத்துத் தரையிற் படுக்கவிட்டேன். என்னுடன் சேர்ந்து அறையில் வசிக்கும் நண்பர் 1 ** ஏன் இந்தத் தேவையில்லாத வேலை??? என்று செல்ல மாகக் கடிந்து, தனது வெறுப்பைக் காட்டினர். சிரித்து மழுப்பிவிட்டுப் படுத்துவிட்டேன்.
来源 来源 米
சாஹித்திய சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட அவன், எந்த இசைக் கலைஞனையும் இகழ்வதில்லை. ஆனல், ஒன்றுமட்டும் சொல்வான் - "' எவனுக்கும் இசை வாழ்வைத் தராது. ஒவ்வொருவனும் வாழ்வதற்கு உண்மையாக உழைக்கவேண்டும். இயற்கையை வசைக்கவேண்டும்,
" அப்படியானல் நீயேன் இசையைத் தொழிலாகக் கொண்டாய்??? " இசையைத் தொழிலாகவா-?" உரக்கச் சிரித்தான். அவனுடைய சிரிப்பில் மகிழ்ச்சியில்லை. கேலிதான் இருந்தது. ** நீ வேறு ஏதாவது தொழிலைப் பழகியிருந்தால் நன்ருக வாழமுடியுமல்லவா?? " நான் எந்தத் தொழிலைச் செய்தாலும் இப்படித்தான் இருப்பேன். அதுசரி; எனக்கேன் தொழில்? புரிந்துகொள்ள முடியாதவன். அவனுடைய கேள்விகளுக் கும் பதில்களுக்கும் எமக்குக் கோபம் உண்டாகலாம்,
ஆனல், பயனில்லை. அவனற் பாடித்தான் பிழைக்கமுடி பும் பாடிப் பிழைப்பவனுடைய வருமானம் எப்படி இருக்
ہر
جو ()

سیسے 51 ساییت
கும்? அவனை வாஞெலிக் கலைஞனக உருவாக்கினுல் அவன் வாழ்ந்து முடிப்பதற்கு மாதாமாதம் ஏதோ சொற்ப வரு வாய் நிச்சயம் கிடைக்கும் என எண்ணி எத்தனையோ பேருடன் மன்ருடியுள்ளேன். ஆனல் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுபவர்களைத்தான் என்னுற் பார்க்க முடிந்தது. அவனுக்குக் கிடைக்கின்ற கச்சேரி நிகழ்ச்சிகள் கூட என் னுடைய முயற்சியினற்ருன் கிடைத்துவந்தது. அவனு டைய ஒரு பட்டு வேட்டியும் "சேர்ட்”டும் என்னிடம்தான் எப்பவும் இருக்கும். கச்சேரி முடிந்து வந்ததும் அத&னப் பெற்றுப் பத்திரப்படுத்திக் கொள்வேன். எவருக்கும் சரி, சாப்பாடு அல்லது தேநீர் கொடுத்து உப சாரஞ் செய்யத் தெரிந்த, உபசரிக்க ஆசையுள்ள நான்; வெற்றிலையோ, சிகரட் அல்லது மதுசாரங்களைக் கொடுத்து உபசரிக்க ஒருநாளும் முற்படுவதுமில்லை - யாராவது நண் பர்கள் அவற்றை வற்புறுத்திக் கேட்டு வாங்கிக்கொள்ளும் பொழுது, கோபத்திற் குறுகுறுப்புணர்வு உள்ளத்தை அரிக்க, முகத்தைப் பகட்டாக வைத்துக்கொள்ள முயற்சிசெய்து, தோல்வியடையும் சுபாவத்தை இழக்காதவனுமில்லை,
ஆனல். திருலோகச்சந்திரனுக்கு மட்டும் சாராயம் வாங்கிக்கொடுப் பதற்குத் தயங்குவதில்லை.
பொழுது விடிந்தது. பால் வாங்கப் பாற்சாலைக்குப் போன போது, அவனுக்கு உஷார் மருந்தும் இரண்டு ரூபாவுக்கு வாங்கிக்கொண்டு வந்திருந்தேன்.
அவனற் குடிக்காமல் இருக்க முடியாது. குடித்தாற்ருன் அவனுடைய 'என்ஜின்" வேலைசெய்யும், அவனுடைய நடுக் கம் மறைந்து, அவன் உயிர்த்துடிப்புள்ள மனிதனுக, மற்றவர்களோடு கலந்துரையாடத் தக்க தன்மை பெற்ற வணுக உருப்பெறுவான்.
அவனுடைய உடல் மதுசாரக் கிடங்காகிவிட்டது. அவன் சிறுகச்சிறுகத் தற்கொலை செய்துகொண்டு, பாதிவரையிற்

Page 29
--سے 52 ہے
செத்த மனிதனது - அல்லது தினஞ் செத்துச் செத்தெழும் பும் பாதிச் சவமாக நடமாடிஞன். காலையில் அவன் நித்திரைவிட் டெழுவதில்லை. சாராயம் அவனைத் தட்டியெழுப்புகிறதுரு திருலோகச்சந்திரன் எவரும் பார்க்கப் பரிதாபப்படக்கூடிய அப்பாவிபோல இருந்தான். மருந்து உள்ளே போனதும், குளித்துவிட்டு, என்னுடன் சாப்பாட்டைப் பங்குபோட்டுச் சாப்பிட்டுவிட்டு, எனது கதிரையில் இருந்து புத்தகங்களைப் புரட்டினன். அவனுடைய சையில், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு பிறந்த நாள் அழைப்பிதழ் இருந்தது. அவனுடைய முகம் அதனை வெறித்து நோக்கியபடி இருந்தது. சில காலமாகப் பார்க்கிறேன், அவனுடைய உடல் எல்லாம் வெளிறி, முக மும் மஞ்சள் வண்ணத்திற் சோர்ந்து கிடக்கிறது. அது விக்கியின் பிறந்தநாள் அழைப்பிதழ். இன்றுதான் அவளுடைய பிறந்தநாள். நானும் விக்கினேஸ்வரியின் மிகப் பிரியமான சிநேகிதர்களில் ஒருவனைப் போன்றவன் தான். அதனுல்- எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தாள். பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவதனுல் எவ்வளவோ வருமானமும் புதிய வர்த்தகத் தொடர்புகளும் ஏற்படுத்த வசதியாக இருப்பதனல், இந்த விழாவின் அருமை பெரு மைகளைத் தெரிந்தவர்கள், தமக்கு என்ன கஷ்டங்கள் ஏற்பட்ட போதும், பிறந்தநாள் விழாவை மட்டும் எப்படி யும் கொண்டாடியே தீர்ப்பார்கள்.
சிலருக்கு ஒரு வருடத்தில் இரண்டு முறைகள் கூடப் பிறந்த நாள் வருவதுண்டு! என்னுடைய அறையிலிருந்து அவளுடைய வீட்டிற்குப் போவதற்குப் பதினைந்து நிமிஷங்கள் போதும். ஆனல் அவளுடைய பிறந்தநாள் அழைப்பிற் குறிக்கப்பட்ட இடங்களெல்லாம் போய், அங்கங்கு நடைபெறும் நிகழ்ச் சிகளிற் பங்கு பற்றி அவளுடைய வீட்டிற்குப் போக மணி ஐந்தரையாகிவிட்டது.
ر
燃

- b് 3 -
முதல் ‘சென்ற் லோறன்ஸ் சேர்ச்சுக்குப் போய், திரும்ப
வும் வெள்ளவத்தை பிள்ளையார் கோவிலுக்கு வந்து, அங் கிருந்து அலறிக்ஸ் ஐஸ் கிறீமை"ச் சுவைத்து, அங்கிருந்து சுவிசித்தராம விகாரைக்குப் போய் மலர்கள் வைத்துத் திரும்பி அவளுடைய வீட்டிற்கு வந்து, அவள் மெழுகு வர்த்திகளை ஊதியணைத்துக் கேக் வெட்டினுள். அவளுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஒரு அலங்கார மேசையில் அழகாக அடுக்கிக் குவித்து வைக்கப்பட்டிருந் தது , றேடியோகிராம் தனது கடமையை இனிமையாக வும் சுத்தமாகவும் செய்தது. எல்லோரும் வாழ்த்தினர்கள். ஆடினர்கள், பாடினர்கள். உபசரிப்புக்கள் எல்லாம் மேல் நாட்டுப்பாணியில் அமர்க் களமாக இருந்தது அப்பொழுது -
விருந்தினர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டு எல்லோ
ரும் பரபரத்தார்கள். சிலர் வெளியில் ஒடிச்சென்ருர்கள்,
நேரம் இரவு 10 மணிவரையில் இருக்கும். நானும் அவர்களைத் தொடர்ந்து வெளியில் ஓடிவந்தேன். ஒருவனுடைய உடல் வெளிச்சுவரில் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது.
அவன் திருலோகச்சந்திரன்தான். எனக்கு உலகமெல்லாம் சுற்றியது. இது என்ன விபரீதம், எனக்கு தந்த தொல்லைகள் போதாவென்று செலவும் தொல்லையும் மொத்தமாகச் சேர்த்துத் தரப்போகிருனே? எல்லோரையும் விலகும்படி பணிவுடன் கட்டளை கொடுத் தேன். V விசாலாட்சி அவனை வீட்டிற்குள் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தாள்.
விருந்தினர்கள் பொலீஸில் தெரிவிக்கும் படி கூறினர்கள் எனக்கும் அது சரியாகவே பட்டது போன் பண்ணுவதற்கு விக்கியின் வீட்டிற்குள் போனேன். அங்குவிக்கி குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தாள், அதன் பிறகு
நான் விக்கியின் வீட்டிற்குப் போவதேயில்லை!
976-03-3

Page 30
தனக்கேற்பட்ட பாதிப்பினுல், சமுதாயத்தை
ஆழமாகச் சிந்தித்து வைத்தி
ருக்கிருள் !
(தக்கர் வானத்தில் திரண்டு உருண்டுவரும் சில்லறைக் கரு மேகச் சேர்க்கையால் உருவாகும் புதிய வண்ணக் கலவையில் மனத்தைச் செலுத்தித் திக் பிரமை பிடித்தவன் போன்றிருந்த சண்முகன் எதையோ நினைத்துச் சினந்து சிரித்தான். அவனுடைய கைகள், அவனை அறியாமலே வயல் வரப்பிலிருந்த புற்களிற் சிலவற்றை உருவி எடுத்தன. அவன் ஒவ்வொரு புற்களாக எடுத்து வீசுகின்ற ஒவ்வொரு வேளையிலும், அவனுடைய முகம் பிரகாசித்துக் கருகிய காட்சி, அவனுடைய சிந்தனைவேகத்தை அளக்கும் படிக்கற் as 67nras Lor7 söloor. அவன் கண்கள் பறைச்சேரி வயல் வரப்புகளின் நெளிவு சுழிவுகளைப் பார்த்துப் பரந்து நீண்டு வளைந்தும் சென்றது. வரப்பின் கரையில் அரைந்தூரும் பாம்பொன்று பொந்தி னுள் நுளைவதைப் பார்த்த அவன், கல்லொன்றைக் கையில் எடுத்தான். ஆனல், எடுத்த கல் எதிரே வரண்டு நாற்ற மடிக்கும் குளத்தின் சேற்று நீரிற்ருன் போய் விழுந்தது. அதைத்தொடர்ந்து பலகற்கள் குளத்துள் விழுந்து கொண் டிருந்தன. சண்முகனுக்கும் சங்கரிக்கும் இடையில் ஐந்து வயது வித் தியாசம் இருக்கும். பத்து வயதுச் சிறுமியாகச் சங்கரி இருக்கும் பொழுது, தம்பி சண்முகனை இடுப்பிற் சுமந்து படி, உழவாரமும், கடகப்பெட்டியும் எடுத்துக்கொண்டு, ஆட்டுக்குட்டிக்குப் புல் எடுக்க வயலுக்கு வெகு சிரமத்துடன் செல்வாள். வயல் வரம்பிற் சண்முகனை விளையாடவிட்டு ஆட்டுக்குட்டிக்குப் புல் செருக்கும் சங்கரி, இன்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துத் தாயாகிவிட்டாள். சண்முக னுக்கும் வயது பதினறைத் தொட்டுக்கொண்டிருந்தது.
リー
 
 
 
 

- 58 -
தாழ்த்தப்பட்ட மக்களில், படிக்கின்ற ஆசை கொண்ட மக்கள் கிறிஸ்தவப் பாடசாலையிற்ருன் கல் வி கற்க முன்பு வசதியிருந்தது. அருகிலிருந்த கிறிஸ்தவப் பாடசாலை யிற்ருன் சங்கரி மூன்ரும் வகுப்பு வரையில் எழுத்துக் களைப் படித்துக் கொண்டிருந்தாள்: சண்முகன் எட்டாம் வகுப்புவரை படித்திருந்தான். தொடர்ந்து படிப்பதற்கு அப்பாடசாலையில் வகுப்புக்களுமில்லை. அவனுக்கு வசதியு மில்லை. அவன் படிப்பை நிறுத்தி மேசன்களுக்குக் கூலியா ளாக வேலை பார்த்துச் சம்பாதிக்கத் தொடங்கி மூன்று வருடங்கள் வரையிற் கரைந்து விட்டன. அவனுடன் வேலை பார்த்த கூலிகளில் ஒரு சிலர் "ஜி. சி. ஈ. உயர்தரப் பரீட்சை யிற்கூட எழுதியிருந்தார்கள், அவர்களிடம் இலக்கியப் புத்த கங்களும், கவிதைப் புத்தகங்களும் பெற்று அதன்மூலம் அறிவை வளர்த்திருந்த சண்முகனுக்குச் சாதி சமய உணர்ச் சிகளில் நம்பிக்கையற்றுத் தமிழுணர்ச்சி மேலோங்கி நின் றது. அவன் யாழ்ப்பாணத்திற் சில ஊர்களுக்குள்தான் தன் கட்டிட வேலை சம்பந்தமாக உலவி வந்திருப்பான். அதுதவிர அவனுக்கு ஊருக்குள் இருக்கும் சிங்களவரைத் தான் தெரியுமே தவிர, வேறு சிங்களவரைத் தெரியவும் நியாயமில்லை. சிங்கள ஊர்களுக்குள் சென்றதும் கிடை யாது. அதனுல் அவன் அவர்களே வெறுக்கவுமில்லை விரும் பவுமில்லை. ஆனல், தமிழுணர்ச்சி மேலோங்கி நின்றது. தமிழுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராகியிருந்தான் சண்முகன், தமிழைப் புறக்கணிக்கும் தலைவர்கள் மீது வெறுப்பும் குரோதமும் அவனை அறியாமலே அவனுள்ளத் திற் புகுந்துகொள்ள, அவன் தமிழுக்காக உயிரைவிடத் தயாராகி உரம்பெற்றிருந்தான்.
மேசன்களுக்குத் தினமும் வேலையிருக்காது. சில வீடுகள் கட்டப்படும்போது கட்டிடப் பொருட்கள் இருக்கும் நிலை மைக்கேற்பத் தொடர்ச்சியாக வேலை இருப்பதுமுண்டு, இப் படி நிதானமற்ற தொழிலாகக் கூலித் தொழில் இருந்தத ஞல் அவன் வாழ்ந்த பகுதியில் இருந்த மக்களுடைய வாழ்வே பிரச்சனை மிகுந்த வாழ்வாகத்தான் இருந்தது.

Page 31
سياسي 6 5 سيده
தாற்றுநடுதல், அரிவு வெட்டுதல் போன்ற காலங்களில் எல்லோருக்கும் வேலையிருக்கும். அது தவிர்ந்த காலங்களிற் பெண்கள் சுற்றுப்புறத்தில் வசிக்கும் வசதி படைத்தவர் கள் வீட்டுக் காணிகளைக் கூட்டுதல், தூய்மைப் படுத்து தில் அரிசி நெல்லுக் குத்துதல் போன்ற வேலைகஜர் செய்து வந்தார்கள். சங்கரியும் அப்படியான தொழிலைத் தான் செய்து வந்தாள். கல்லுண்டாய் வீதியாற் பஸ்கள். கார்கள் ஊர்ந்து செல் லும் அழகை மங்கிய சூரிய ஒளியிற் கண்டுகொண்ட சண் முகன் நாவாந்துறைக் கடலுள் மூழ்கச் செல்லும் சூரியனைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அருகிலிருந்த மயானச் சோலைக்குள் வாசம் செய்யும் பறவைகள், வண்டுகளின் ரீங்காரம், ஒரு புதிய இசையைத் தோற்றுவிக்கத் தெரு ஒர மாக இருந்த கள்ளுக்கொட்டில்களில் ஒன்றிலிருந்து ஒருவன் உரக்கப் பாடுவது ஊரனைத்தும் பரவியது. இந்தப் பாட் டுக் கச்சேரி முடிவடையக் கடைசி நடுநிசி தாண்டவும் கூடும் அல்லது தொடர்ந்து விடிய விடியக்கூட நடைபெறு வதும் உண்டு, தேவதாஸ் படத்தில் தேவதாஸ் பாடிய *உலகே மாயம்" பாட்டைப் பர மு எவ்வளவு கால மாகத்தான் பாடுகிருன். அந்தச் சோகப்பாடல் எப்பொ ழுதுதான் முடிவடையுமோ? பரமு, சங்கரிக்கும் சண்முகனுக்கும் முறை மச்சான். சங் கரியைக் கல்யாணம் செய்துகொள்ள, அவன் பல ஆண்டு களாகக் காத்திருந்தவன். அப்படியிருக்க, அந்தக் கறுப் பழகியின் வயிற்றில் ஒரு சிசு வளருவது, அவனுக்கு எப் பொழுது தெரியவந்ததோ, அன்று அந்தப் பாடலைப் படிக் கத் தொடங்கியவன்தான். அதன்பின் அவனுக்கு வேலையிற் கவனமில்லை வாழ்க்கையிற் சுவையில்லே. கள்ளுக்கொட்டி லுக்கு வருவோர் போவோரிடம் ஏதாவது வம்பளப்பதும், அதன்மூலம் யாராவது வாங்கிக்கொடுக்கும் கள்ளைக் குடித்து விட்டுக் கச்சேரி வைப்பதுந்தான் அவனது தொழில். அவன் சங்கரியைப் புதிய பெண்ணுகத்தான் ஏற்க இருந்தான். அவள் பிறஞெருவன் எடுத்த வாந்தி என்கின்ற எண்ணம் எப்பொழுது உதித்ததோ, அன்றுடன் அவன் சந்தர்ப்பம்
جرم
ys

سس۔ 7ز ہے
கிடைக்கும் பொழுதெல்லாம் தானும் தவறுவதை நிறுத்த வில்லை. ஆனல், பெண் என்று பிறந்தவள் ஆணுக்கு அடிமை என்கின்ற எண்ணத்தில் ஊறிவளர்ந்த அவனல், சங்கரியை மன்னிக்கவும் முடியவில்லை; வெறுக்கவும் முடியவில்லை. அதனற்ருன் அவன் வாழ்வை வெறுத்தான், வீடு வேய, வேலி அடைக்க, வயல் வேலை, மேசன் வேலை என்று எந்தத் தொழில் பார்க்கவும் பயிற்சிபெற்ற பரமு, இன்று எந்த வேலை செய்வதற்கும் மனமற்ற பரமுவாக மாறிவிட்டான். சண்முகன் பதினறு வயதுப் பை யன க இருந்தாலும், பொலிந்த தோற்றம் பெற்றிருந்தான். அவன் வாழ்ந்த சூழலில் வசிக்கும் சிறு பையன்கள் கூடப் பாலுணர்வை வேளைக்கே புரிந்துகொள்ளக்கூடிய வசதிகள் இருந்ததால், சண்முகனும் அதைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தகைய விதிவிலக்கும் இருக்கவில்லை. அதஞல், அவனுக்குப் பரமு வின் மனமாற்றம், சோர்வு, வாழ்க்கையில் வெறுப்புப் போன்ற நிலை வந்துள்ளதைப் பார்த்து, அருவருப்புக்கொள் ளும் மனுேபாவம் அவனிடம் இருக்கவில்லை. ஆனல் தன் னம்பிக்கையற்றுக் காதலே வாழ்வாகவும் காமமே கண்ணு கவும் எண்ணிக் கலங்கும் பரமு, உலகையும் வாழ்வையும் மாயம் என்று பாடித் தனக்காகக்கூட உழைக்கின்ற வல் லமையற்றுப் பைத்தியக்காரன்போல உழலுவதைச் சகிக்க முடியவில்லை. 'பரந்து கிடக்கும் உலகத்திற் பரமு காதலிக்கச் சங்கரி மட்டுந்தான் இருக்கிருளா ? அவளை விரும்புவதாக இருந்தால் அவள் செய்த தவறை மறக்கவேண்டும். அவள் செய்த தவறை மறக்க முடியாவிட்டால், அவளை மறந்து வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளலாமே ? அவள் பாழாகிவிட்டாள் என்பதற்காகத் தானும் பாழா வதா?" இப்படித்தான் சண்முகன் எண்ணினன். மாலேப்பொழுதும் அருகி இரவு இருளைப் பட்ரவைத்தது. வழக்கமாக வயல் வரம்பில் நடந்த நிதானத்தில், வயல் வரம்பு வழியாகவே வீட்டைநோக்கி நடந்தான். ஒரு கிழ மையாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டிற்ருன் இருந் தான். -
※ 冰
8

Page 32
- 58 --
போத்தல் விளக்கின்மேற் காற்றுக்கு வசைந்து கொடுத்து, மங்கிய ஒளியைப் பரப்பிய சுடரின் அடியில், கரிய புகை மண்டிச் சுடரின் சக்தியைப் பலவீனப்படுத்தியது.
சண்முகனின் தாய் பொன்னுயி, குறுக்காகக் கட்டியிருந்த சேலை தொய்ந்துகிடக்க, விளக்கின் அருகில் இருந்து, பழைய பெட்டியொன்றின் மூ லை யில் ஏற்பட்டிருந்த கிழிசலைப் பனையோலையாற் பொத்திக்கொண்டிருந்தாள்.
அன்று சங்கரியின் உழைப்பிற்ருன் அடுப்பெரிந்தது. அவள் விதானையார் வீட்டிற்கு மாவிடித்துக் கொடுத்துவிட்டுவந்து, அடுப்பைப் பற்றவைக்கப் பொழுது இருண்டுவிட்டது. சங் கரி மத்தியானம் விதானே யார் வீட்டிற் சாப்பிட்டிருந்தாள். சண்முகனும் பொன்னுயியும் மூன்று மூன்றரை மணியளவிற் பாண்வாங்கிச் சாப்பிட்டுத் தேநீரையும் குடித்துப் பசிக்குத் திரைபோட்டிருந்தார்கள்.
சங்கரி அடுப்பிலிருந்து கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாள்: சண்முகன் ஏணைக்குள் கிடந்த குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியபடி மூலையிற் கிடந்த தேங்காய்ச் சிரட்டையைக் குனிந்து எடுத்தான். **வெள்ளைப்பச்சையரிசிக் கஞ்சி, சுண்ணும்பு மாதிரியிருக் கும் - கொஞ்சம்பொறு, ஒரு கறி வச்சோண்ணை சாப்பிட 6υπ ή , ,
"ஆய். கிடக்குது; சும்மா வயித்துக் கொதியை அடக்குவம் இஞ்சை கொண்டா !?? "எட சுண்ணும்புத்தண்ணி யெண்டிறன் - அதுக்கிடேலே செத்துப்போவியே??? * செத்துத் துலைஞ்சிண்டாத்தான் ஒரு கரைச்சலும் gᎧᏜ8apᏣau?** "இப்ப உனக்கு என்ன கரைச்சல் வந்திட்டுது: கலியா ணக் கரைச்சலே? - அவ்வளவு கொதியெண்டால் ஓடிப் போய் அவள் வள்ளியோடை படன் ?? சங்கரி சிலேடை யாகச் சொன்னுள்,
پر"//
リー

- 59 -
*" எனக்கப்பிடிக் கொதியில்லை. நீதான் கொதியடக்கேலாமை அமர்பிடிச்சுத் திரிஞ்சு.' மனத்துக்குள் அமுங்கிக் கிடந்த சினத்தை வெளியிற் கக்கினன் சண்முகன்,
சங்கரிக்குக் கோபம் உச்சியிலேறி, நரம்பு நாடியெல்லாம் சோர்ந்து, நிதானமிழந்தாள். அவளாற் சண்முகன் சொன்ன சுடுசொல்லுக்கு மறு சொல்லுச் சொல்லும் அள வுக்கு தகைமையில்லை. வாயில் வந்தபடி எப்படி யெப்படி யெல்லாமோ திட்டிச் செயலற்று அழத்தான் முடிந்தது.
அடுப்பிலிருந்த சோறு அடியிற் கருகி மணத்தது. பொன் ஞயிக் கிழவி மகனை வாயில் வந்தபடி திட்டி, பெட்டியை அவன் மீது வீசியெறிந்துவிட்டு வந்து, பானையை அடுப்பி விருந்து இறக்கினுள். சங்கரி குழந்தையைச் சண்முகனிட மிருந்து உருவிப் பறித்துக்கொண்டுபோய் வெறும் நிலத் திற் படுத்துவிட்டாள்.
சண்முகன் ஆத்திரத்தையும் வேதனையையும் அட்க்கி மெளனமாக இருந்தான். அவனுடைய சிந்தனை மட்டும் எங் கேயோ எல்லாம் சுற்றிப் பறந்தது.
கள்ளுக்கொட்டிலிற் கத்தும் பரமுவின் பாட்டு, நரி ஊளை யிடுவதைப்போல் ஒரே ஒலமாகப் பரவியது.
கிழவி கறியைக் கூட்டி அடுப்பிற் கொதிக்க வைத்தாள். வீட்டுத் தாவரத்திற் கட்டிநின்ற ஆடு, வீட்டுச் செத்தையை மென்றது.
சங்கரி மீது கோபப்பட்டது குறித்து அவனுக்கு வேதனை யாகவும் இருந்தது. அதே நேரத்தில் தனது கோபத்தில் நீதியும் இருக்கிறது. என்று எடைபோட்டுப் பார்த்து மேலும் ஆத்திரத்தை வளர்க்கின்ற தன்மையும் இருந்தது. அவன் தன்னைத் தம்பிப் பொடியன், தம்பிப் பொடியன் ? என்று சங்கரி தூக்கி இடுப்பில் வைத்து வயல் வரம்பெல் லாம் கொண்டு திரிந்த அவளின் ஆழ்ந்த அன்பை எடை போட்டுப் பார்த்ததும் கடைக்கண்ணுற் கண்ணிர் வழிவ

Page 33
- 0 =
தையும் பொருட்படுத்தாமல் வீட்டு முகட்டைப் பார்த்த படி, சங்கரியை இக்கதிக்கு ஆளாக்கிய தேவநாயகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினன்.
தேவநாயகம் நல்ல சாதிக்காரன். அவனுக்கு பன்னிரண்டு வயது நிரம்பிய பேரப்பெண் கூட இருக்கிருள். அவனு டைய மகன் ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருக்கிருன், அவனிடம் பெரிய உயர் சாதிக் காரும் இருக்கிறது. அவன் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிந்து தனது மனைவி மக்களுடன் வேருேரிடத்தில் பெரிய மாளிகை ஒன்றில் இருக்கிருன், தேவநாயமும் மனைவியும் பழைய வீட்டிலே யேதான் இருக்கிருர்கள். அந்த வீடும் பெரிய வீடுதான். ஆனல் வளவு நீண்டு பரந்து கிடந்தது. வேப்பமரம் இரண்டு, புளியமரம் மூன்று தென்னை, பனை, மா, பலா, கமுகு எல்லா மரங்களும் அடர்ந்து வளவு சோலையாகக் கிடந்தது. வளவைச் சுற்றி மூன்று மதில் கட்டி அழகு படுத்தியிருந்தார்கள். கிணற்றடியிலும் கிழவி குளிப்பதை யாரும் பார்க்காமல் நான்கு கரையும் வேலி அடைத்து அறிக்கையாக இருந்தது. கிணற்றுக்கு அருகில் ஒரு நாலைந்து யார் தள்ளி சுடுநீர் வைப்பதற்கு அடுப்பும், அடுப்பின் மேல் நிரந்தரமாகக் குடியேறிய கிடாரமும் இருந்தது. கிணற்றைச் சுற்றி நாலு புறமும் சுற்றியடைக்கப்பட்ட வேலியில் துலாவின் அடிப்பாகம் கீழே நிற்பதற்கு வசதி யாக ‘ட’ வடிவில் கோலி அடைக்கப்பட்ட வேலி இருந் தது. அதற்குள் மூவர் ஒளிந்திருந்தால் எவராலும் கண்டு பிடிக்க முடியாது.
சங்கரியும் பொன்னுயியும் தான் அடிக்கடி தேவநாயகத்தின் வளவைக் கூட்டிச் சுத்தப்படுத்துவார்கள். கொஞ்ச நாளா கப் பொன்னுயிக்கு களையேற்படச் சங்கரிதான் தனியாக வளவைக் கூட்டிப்பெருக்கச் சென்ருள். அவளுடைய வாளிப் பான உடலில் கிழவனுக்கு ஒரு கண்விழுந்து, அவன் சங் கரிக்கு ஒரு மூன்றரைப் பவுண் சங்கிலியைக் காட்டித் தனது ஆசையை 'ப' வடிவு வேலிக்குள் தீர்த்துவிட்டான்.
و)
脅。

- 61 -
ஆனல் தனது தொண்டின் பலாபலன் சங்கரி வயிற்றில் வளர்வதை அவன் அறியவில்லை. இல்லையென்ருல் சங்கரி யுடனே, அல்லது சங்கரியின் வயிற்றுக்குள்ளே, அந்த உயிரையோ சிதைத்துவிட அவன் வழிகாட்டிக் கொடுத் திருப்பான்.
சிறுமி சங்கரி காலங்கடந்துதானே தாய் போன்னுயிடம் விஷயத்தைக் கக்கினுள் அதன் பின் கிழவி என்ன செய்வாள். அவள் தனது ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்துக் கடைசி யாக ஒய்ந்தொழிந்து அலுத்துக் கிடந்தாள். சண்முகன் இப்பொழுதுதான் ஆத்திரத்துக்கு எண்ணெயூற்றிக் கொண் டிருந்தான். 'பரமு" அந்தத் தீச்சுடருக்கு உரிய திரியைத் தூண்டுபவனுகி இருந்தான், சங்கரி, பிள்ளையுடன் ஒரு மூலை யிற் படுத்து உருண்டு அலுப்பவளாக இருந்தாள், இந்நிலையில். -
வாசலில் "சைக்கிள் பெல்" அடித்தது.
* எடேய் பொடியா, வாசலிலை ஆரோ மணியடிக்கிருன் கள் போய்ப் பாரன் ரா!" போன்னுயி, "ஒமணை ஒம் இப்ப சோத்தைத்தா," * எட ஒருக்காற் போய்ப்பாத்திட்டு வாவன். அதுக்கிடை யிலையென்ன உயிர் போயிடுமே" பொன்னுயி கத்தினுள், சங்கரி தலையைத் தூக்கிப்பார்த்துவிட்டு மறுபுறம் திரும் பிப் படுத்தாள். சண்முகன் சினத்தபடி வெளியே போனுன்
வந்திருந்தவர்கள் வாசகசாலை நடத்தும் பொடியன்கள், பொங்கல் விழாவும் தமிழ் விழாவும் நடத்துவதற்காகப் பந்தல்போடச் சண்முகனைக் கூட்டிக்கொண்டு போக வந் திருந்தார்கள். எல்லோரும் நல்லாய்ப் படித்துச் 57 Lb LD nr வீட்டிற்குப் பாரமாக இருக்கும் உயர் குடும்பப் பிள்ளைகள். தமிழுணர்ச்சி அவர்களிடம் மேலோங்கி நின்றது. அவர் களைக் கண்டதும் சண்முகம் சந்தோஷத்துடன் வீட்டிற் குள் திரும்பியோடினுன்

Page 34
- 6 ? -
* சரி பொடியா கோப்பையைக் கழுவு " பொன்னுயி வீட்டிற்குள் வந்தவனிடம் கட்டளையிட்டாள்.
* இப்ப வேண்டாம் போயிற்று வாறனெண ??
* எட அவரைப் பாரன், கொஞ்ச நேரத்துக்கு முந்திக் கொதி கொதியெண்டு கொதிச்சிக் கிலியகேடுப் படுத்திப் போட்டு; இப்ப என்ன அவசரமெடா உனக்கு???
"எணை மெல்லமாய்ப் பேசு, தமிழ் விழா நடத்திற பொடி யள் வந்திருக்கிருன்கள். பந்தல்போட வரட்டாம்."
" ஒ. ஒ. ஊருத்தியோகம் எண்டால் பசியும் எடுக்காது. சம்பளமில்லா உத்தியோகத்துக்கு ஆலாய்ப்பறக்கிருர்' சங்கரி தனது எரிச்சலைக் கொட்டினள் -
* எட சம்பளமில்லாமல் தமிழ்ச்சமுதாயத்துக்காகப் பாடு பட்டா என்ன குறைஞ்சு போயிடுமே? புகழ்தானே?"
" ஒ. ஒ. நாங்கள் தான் தமிழ்ச்சமுதாயமே? நல்ல கதைதான்கு தமிழ்ச்சமுதாயத்திலும் எங்கடை சமுதாயம் கடைகெட்ட சமுதாயம் எல்லோ? நாங்கள் எந்தச் சமு தாயத்திலை இருந்தாத்தான் என்ன? எங்கடை பாடு, நாய்படாப்பாடுதான். எங்கடை ஆசை பாசமெல்லாத்தை யும் அழிச்சுச் சீரழிஞ்சுதான் வாழவேணும். எங்களுக்கு வேறை பாஷையஞம் தெரியாது. தமிழிலைதான் நாங்கள் பேசுவம் பழகுவம். தமிழ் விழாவைச்சுத்தான் நாங்கள் தமிழ் படிக்கப் போறமே. உது வைக்கிறவையஞக்குத்தான் தமிழ் தெரியாது. தெரிந்தாலும் பேசமாட்டினம், அது தான் அவையள் தமிழ் விழா எண்டு வெச்சுத் தாங்கள் தமிழ் பேசிற நாளைக் கொண்டாடுறவை. இதுக்குள்ளே தமிழ் விழாவும் தாலியறுந்த விழாவும்"
சண்முகனுடைய முதுகு நரம்பில் சுரீரென்று வலித்தது, அவன் பேராச்சரியத்தோடு சகோதரியைப் பார்த்தான். அவள் தனக்கேற்பட்ட பாதிப்பினுல் எவ்வளவு ஆழமாகச் சமுதாயத்தைச் சிந்தித்து வைத்திருக்கிருள்!

سیسے 63 سے
சண்முகன் திடசங்கற்பம் செய்து கொண்டான். எங்களு
டைய உரிமைகளைப் பெற்று நாங்கள் தலை நிமிரும்வரை
எங்களுக்கென்று யாருமே விழா நடத்தமாட்டார்கள்.
நானும் எந்த ஏமாற்றுக்காரரின் பேச்சுக்கும் எடுபட்டு எனது உழைப்புச் சக்தியை வீண் விரயமாக்கப் போவதில்லை.
எனது சகோதரியின் வாழ்வைப் பாழ்படுத்திய உயர் குடி யினர் தங்களது நன்மைக்காகத்தான் இப்படியான விழாக் களை வைக்கிருர்கள், இல்லையேல் அவர்கள் எனது சகோதரி யின் வாழ்வைப் பாழ்படுத்தியவனைச் சந்தியில் நிறுத்தி நீதியை நிலைநாட்டி, நீதி நிலைநாட்டு விழா வைத்திருக்க
Lorr L' Lm7ri 56oT mr?
நீதி நிலைநாட்டு விழாவைத்தான் நாம் வைக்கவேண்டும்
அதுதான் எனது லட்சியம்,
LD序#母 】9?鲜

Page 35
பஞ்சநாதக் குருக்கள் தன்னுடைய கையிலிருந்த இந்தியச்
சேலையை அவரிடம் கொடுத்தார்.
மாலைநேரத்துக் குங்கும வானத்தின்மீது ஊரும் நீலச் இதில் வண்டுகளோ? அல்லது நீலோற்பலப் புஷ்பம் கொட்டிக் கிடக்கும் செம்மண் தரையோ ? அவற்றிடையிற் பொன் வண்ணத்திற் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் எமது கண்ணைப் பறித்துவிடுமோ எனச் சஞ்சலப் படவைக்கும் அழகான (తాడి, மூன்றங்குல அகலப் பொற்கரையுள் வண்ணமயில்கள் தம் சிறகைவிரித்தாடும் காட்சி, அற்புதம் !
ஐயாயிரம் ரூபாய். வந்தவர் வேறு எந்தப்பேச்சும் பேசவில்லை ? சேலையுடன் வெளியேறிஞர். அந்த விலை கொடுத்து. ஆ- 1 விலைக்கு வாங்குபவருக்கே ஏற்படாத அதிர்ச்சி - சே ! பிளந்த வாயை மூடிக்கொள்ளவேண்டியதுதான். பூரீமதி பஞ்சநாதக் குருக்கள் இந்தியாவிலிருந்து வரும் பொழுது கட்டிக்கொண்டுவந்த சேலைதான் அது. பஞ்சநாதக் குருக்கள் வெளிப்புறக்கட்டடிக்கு வந்து காலை அகலவிரித்து, கைகளைப் பின்புறம் ஊன்றி, சாவகாசமாக இருந்தார்.
நீதியே நீ இருக்கின்றயா ?
சகேம்பிரிட்ஜ் கிறீம் கலர்க் கார்" மீஞட்சி அம்மன் கோவில் வாசலில் தெருக்கரையோரமாக வந்து நின்றது; புதுமணத் தம்பதிகளும் வேறு ஒருவருமாகக் காரிலிருந்து இறங்கி, கோவில் வாசலுக்கு வந்தார்கள்,
அழுக்குப்படிந்த கிழிந்த காற்சட்டையும் பரட்டைத் தலை யும் ஒட்டிய வயிறும்கொண்ட சிறுவர்கள் வீதியில் விளை

e
"हाल"
= 65 =
வாடிக்கொண்டிருந்த விளையாட்டைக்கூட் மறந்து, கோவில் வாசலுக்கு ஓடோடி வந்தார்கள். நான் அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த
வன், கிணற்றிற் கைகால் கழுவுவதற்காக வந்து கிணற்றி லிருந்து தண்ணீர் அள்ளியவன். துலாவைக் கிணற்றில்
தாட்டபடி புதுமணத் தம்பதிகளை வேடிக்கை பார்த்தேன்.
வீட்டுவேலி அடைக்கப்படாமல் இருந்தது. கோவிலுக்கு வருபவர்களையும் போவோர்களையும் வேடிக்கை பார்ப்பதற்கு வசதியாக இருந்தது.
புதுமணத் தம்பதிகளுடன் வந்தவர் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொழுத்தினர். தம்பதிகள் "ஸ்ரைலாக மீனுட்சி அம்மனை வணங்கிக் கற்பூரச் சுடரைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிவிட்டு, காரை நோக்கி நடந்தார்கள்.
சிதறுண்ட தேங்காய்ச் சில்லிகள் நாலு கரையும் பரவிக் கிடந்தன. சிறுவர்கள் பாய்ந்து தேங்காய்ச் சில்லிகளைப் பொறுக்கினர்கள். நான் கோலியிருந்த நீரைத் திரும்பவும் கிணற்றினுள் அமிழ்த்தி நீரை அள்ளினேன்.
அந்த நேரத்தில், டேய் வே-மக்களே, அம்மா - க, பறத் தாய் ஒ-களே போடுங்கோடா தேங்காயை' பஞ்சநாதக் குருக்கள் தனக்
குத் தெரிந்த சுலோகங்களில் அஷ்டோத்தர அர்ச்சனை
புரிந்து கோவிலை நோக்கி விரைந்து வந்தார். -
சிறுவர்கள் பயந்து, நாலு கரையும் சிதறி ஒடிஞர்கள் அதில் நின்ற சிறுவர்கள் எனது மருமக்கள்தான் என்னுடைய ஒரு சகோதரியின் புதல்வர்கள். வறுமை அவர்களை இத்த கைய கோவிற் பிரசாதங்களைத் தேடிப் பொறுக்கும் அவல நிலையை உருவாக்கியிருந்தது. பஞ்சநாதக் குருக்கள் பேசிய பேச்சும், அதற்கு ஆளான சிறு வர்களின் செயலும் எனக்குச் சிறுவர்கள்மீது ஆத்திரத்தை வரவழைத்தது 3
9

Page 36
স্পঞ্জীভুক্লােঙ্গােঙ্গ
س- 66 سے
பஞ்சநாதக் குருக்களோ ஒரு பெரிய மனிதர், அத்துடன் சமீபத்தில் அவருக்கு ஜே. பி. பட்டமும் கிடைத்திருந் தது. அதனல் அவருடைய கோபத்திற்கு ஆளாகிய எனது மருமக்களின் மீது எனக்குக் கோபம் எல்லைமீறி ஏற்பட்டது. ஆயினும், அவர்களை நான் தண்டித்தால் பின் எனக்கு ஏகப் பட்ட தண்டனை எனது சகோதரியிடமிருந்து கிடைக்கும்; நான் அனுதரவான நிலையில் வீட்டைவிட்டு வெளியேற்றப் படுவேன் என்கின்ற எண்ணத்தில், அவர்களை அடிக்க முயற் சிக்கவில்லை.
ஆனல் வந்த கோபத்தை அடக்கவும் முடியவில்லை. 'சனி, மூதேவி யளே! உங்களுக்கு ஏன் இந்தப் பொறுக்கிற வேலை? கோயி லிலை அடிக்கிற தேங்காயைப் பொறுக்கி- எடுக்கிற ஐயர் மாருக்குத்தான் உரியது. உந்த வேலையை நீங்கள் ஏன் செய் யப்போறியள்?
நான் மருமக்களைப் பேசியது, எனது சிகோதரிக்குப் பிடிக்க
வில்லை. அவர் அதன் காரணமாகத் தனது பிள்ளைகளைப்
பிடித்து அடித்து நொருக்கினர். எனக்கு வேதனையாக இருந்
தது. கை கால்களைக் கழுவி விட்டு வீட்டிற்குள் வந்து ஈரந் துவட்டினேன்.
*எட, பொண்ணையா! வெளியிலை வாடா உன்ரை முதுகை முறிக்கிறன்". பஞ்சநாதக் குருக்களின் ஆவேசக்குரல் எனக் குக் கேட்டது நான் எனது அறையிலிருந்து வெளியே எட் டிப் பார்த்தேன். இப்பொழுது நினைத்தாலும் எனக்கு அடிவயிற்றைக் கலக்கு கிறது. தேவராசா கோடரிப்பிடியுடன் நின்றன். நாலைந்து பிராமண இளைஞர்கள் கையில் ஏதேதோ ஆயுதங்களுடன் நின்ருர்கள். பஞ்சநாதக் குருக்கள், நான் இருந்த வீட்டிற்குள் ஆசேத்துடன் நுழைந்து என்னைத் தனக்கே உரிய பாணியில் எப்படியெப்படியெல்லாமோ பேசினர். "என்ரை வீட்டுக்கை பூந்து பேச, உங்களுக்கு என்ன உரிமை?" எனது சகோதரி கேட்டார்.

ལངས་ལྟ་བྱམས་
سے 67 ہے
தேவராசா சொன்னுன் :
• ஐயா வெளியிலை வாங்கோ அவன்ரை நாரியை நான் எப் படியும் முறிக்கிறன்" எனக்கு வீட்டிற்கு வெளியில் வரவே குடற் கலங்கியது.எனது மருமகன் ஒருவனை போலிஸ் ஸ்ரேசனுக்குப் போய் முறைப் பாடு கொடுக்கும்வடி அனுப்பினேன்.
*சிறுவர்களுடைய முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடி யாது. ஒரு பெரியாளை வந்து முறைப்பாடு கொடுக்கும்படி அனுப்பு" என அவனைக் காவல் நிலையத்தினர் திருப்பி அனுப் 1969–60Trř. , - இரவு எட்டு எட்டரை மணி இருக்கும். நான் என்னைத் தாக்க வந்தவர்களுக்கு ஒழித்து, எப்படியோ காவல் நிலையத் தைச் சென்றடைந்து, நடந்த விபரங்களைக்கூறி முறைப் பாடு கொடுத்துவிட்டு வந்து படுத்துவிட்டேன். - அடுத்த நாள் காலை வெள்ளிக்கிழமை, இந்துக்களுக்குப் புனிதமான நாள். எனக்குத் தங்கைதான் உணவு ஆக்கித் தருவாள், இன்னுெரு சகோதரிவீட்டு அறைக்குள் புழுங்குவதுதான், ப டு த் து எழும்புவதற்கானவிலாசமில்லாதவன்.
உழைக்கும் சொற்ப உழைப்பில் தங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி, நானும் வாழ்வதாக இருந்தால் ஒன்று தெருக் கரையோரம் படுத்தெழும்ப வேண்டும். அதற்குக் காவல் துறையினர் அனுமதிக்க மாட்டார்கள். மற்றது எந்த ஒரு ஒதுக்கிடம் கிடைக்கிறதோ அந்த இடத்திற் கிடைக்கும் எந்த விளைவுகளையும் ஏற்றுத்தான் ஜீவிக்கவேண்டும். வாடைக்கு அறை எடுத்து வசிப்பதாயின் சாப்பிடாமற் பட்டினியாகத்தான் இருக்கவேண்டும் எனது தங்கை எனது சகோதரியின் வீட்டிற்கு அடுத்த காணியில் ஒரு சிறிய கொட்டிலில், மூத்த சகோதரியின் பிள்ளைகளும் அனதை இளுமான இரண்டு பெண்பிள்ளைகளுடனும் தனது ஆறு பிள்ளைகளுடனும் வசித்தாள்.

Page 37
আজািকেলা
= 68 -
கணவன் லொறிச் சாரதி. அவரும் சிலநாட்களாக - லொறி
திருத்தவேண்டிய நிலையில் இருந்ததால் வீட்டிலேயே இருந்
srrrř.
நான் தேநீர் அருந்துவதற்காகத் தங்கையின் குடிசைக்குப் போனேன். தங்கை அப்பொழுதுதான் அடுப்புப் பற்ற்வைத் துக் கொண்டிருந்தாள். நான் அக்குடிசையின் உட்புறத்துள் “முருகையனின் காவற்கோபுரம்" புத்தகத்தை எடுத்துத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது தேவராசா "டேய் பொண்ணையா, வெளியிலை வாடா!' என்ருர், "அவனைக்கொல்லு, அதுக்குப்பிறகு, வாறதை நான் பாக்கி றன்' எலும் பஞ்சநாதக் குருக்களின் குரல் என்னுடைய காதிற் கேட்டது. - l தேவராசா குடிசைக்குள் ஒடிவந்தார்; தகரப் படலை ஒன்று இருந்தது. நான் அதனைச் சாத்தினேன். படலையில் 'டமார்? என்ருெரு சத்தம் கேட்டது அதன்பின்,
"அவனிலை உள்ள கோவத்துக்கு என்ரை பிள்ளையின் மண் டையை ஏன்ரா உடைச்சனி' என்று கோபாவேசத்துடன் அழுதபடி எனது தங்கை திட்டுவது கேட்டது. நான் பட லையைத் திறந்து வெளியில் வந்தேன். வெளியிற் பெரிய போர்க்களம்,
பிள்ளையின் தலையில் இரத்தம் பீரிட்டது. அவ்ன் மயக்க மடைந்திருந்தான். நான் அவனைத் தூக்கிக்கொண்டு எனது
அறைக்கு வந்து எனது "சேர்ட்" ஒன்றைக் கிழித்து அெ னுக்கு மண்டைக்காயத்திலிருந்து இரத்தம் ஒழுகாமல் முத லுதவி செய்தேன். தங்கை நாரியில் விழுந்த பலத்த அடியுடன் நான் இருக்கு மிடம் வந்தாள். பின் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போனுேம், இருவரையும் வைத்தியம் செய்ய அங்கு நிறுத்திவிட்டார் &8 ᎧᎳᎢ ,

سطس 69 حصين
நானும் எனது மைத்துனரும் காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு கொடுத்தோம்.
அன்றைய சம்பவத்தின் காரணமாக நாமும் பிள்ளைகளும் அன்று பட்டினியாக இருக்கவேண்டிய அவல நி லை யு ம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பணக்குறை காரணமாகச் சரியான சாப்பாடின்றி, நோய்வாய்ப்பட்ட பிள்ளை களைக் காப்பாற்ற நாம் பட்ட துயரும் வேறு யாருக்கும் வரவேண்
strò
இந்நிலையில், அன்று வெள்ளிக்கிழமை மதியம் தேவராசா வீட்டில் கோழி இறைச்சி வெந்து மணந்தது. போலிஸ்காரர் ஒருவரின் கண்கள் கண்ணுடிக் கோப்பையின் உட்புகுந்து செம்மிச்செம்மி நீச்சலடித்தன. சிறுவர்கள் சிலர் ஒட்டை விழுந்த வேலியினூடாக வேடிக்கை பார்த்து ரசித் துச் சிரித்தனர்.
மாலையில் என்னைக் காவல் நிலையத்திற்கு வரும் வண்ணம் அந்தப் போலிஸ்காரர் தனது இலக்க எண் குறித்துத் தன்னை வந்து சந்திக்கும்படி ஒரு சிறிய பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அதன்படி நானும் பொலிஸ் நிஜல யம் சென்று அவரைத் தேடியபோது, அவர் வேறு வேலை காரணமாகச் சென்று விட்டார் எனவும் அடுத்தநாள் சனிக் கிழமை ஒன்பது மணிக்கு வந்து அவரைச் சந்திக்கும்படியும் எனக்குக் கட்டளை இடப்பட்டது.
சனிக்கிழமை ஒன்பது மணிக்கு நான் பொலிஸ்நிலையம் சென் றேன். அவரைக் காணவில்லை. காலேச் சாப்பாடுகட்ச் சாப் பிட வழியில்லாமற் சென்ற நான் மத்தியானம் ஒருமணிவரை அங்கு இருந்தேன்.
அவர் வந்தார். 2
விசாரணை ஆரம்பமாகியது. எனக்கே என்ன காரணம் என்று தெரியாது. என்னைத் தடுப்புக்காவலில் வைத்தார். மாலை
' '

Page 38
--سب 70 --
ஐந்தரைமணி இருக்கும் இன்ஸ்பெக்டர் தேவேந்திரம்பிள்ளை விடுதலை செய்து வெளியில் விட்டார். நான் புரிந்துகொண்டேன். பஞ்சநாதக் குருக்களின் செல் வாக்குப் பாதாள உலகம் வரையும் பாயும் என்று.
"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே. எனும் திருமூல நாயனரின் திருமந்திரத்தைப் படித்த எனக்கு, எல்லோருக்குமாக இறைவனைத் தியானிப்பதும் எல்லோ ருக்குமாகச் சிந்தனை, சொல், செயல் யாவற்றிலும் என்னல் முடியுமான அளவு கடைப்பிடிக்கவும், முயற்சி செய்கின்ற நான்; இவ்வளவு கஷ்டப்படவேண்டிய கொடுமை என்ன இசய்தேன்? ஆண்டவனே நீ இருக்கின்ருயா?
**சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்தவிடையம் விட் டோரும் நினைவின்றி பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே " என்று திருமூல சுவாமிகள் திருமந்திரத்திற் சொல்லியிருக் கிருரே. ஆகையால், பிராமணர்கள் சத்தியம், ஞானம், சிந்தனை, கடவுள் நம்பிக்கையோடுதானே செயற்படுவர்கள். அப்படியான செயலைச் செய்யாமல் ஏழைகளைக் கொடு மைப்படுத்தும் இந்தச் சக்தி வாய்ந்தவர் யார்? ஆண்டவா! அந்தணர்கள் ஒழுக்கத்தை மறந்துவிட்டார் களா? அல்லது சமூகத்தைஏமாற்றுகிருர்கள் அல்லது இழிவுபடுத்துகிருர்கள். நீதியே நீ எங்கே மறைந்திருக்கிருய்? உலகச் சனக்கும்பல் களுக்கிடையே உன் னை த் தேடுகிறேன். நீ ஒரு முறை உனது திருமுதத்தைக் காட்டமாட்டாயா?
நீதியே நீ இருக்கின்ருயா?
1976
سر

ଗ| ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
இடியப்பம் வெறும் பாற்சொதிவிட்டுச் சாப்பிட்டவன், அரைவயிறு கூட நிரம்பக் கூடியதாகச் சாப்பிடவில்லை. காரணம் மனக்குழப்பம், பருவ உணர்வு, காதல்தோல்வி போன்ற பல வேதனைகள்.
༈
வயிறு நிரம்பக் கூடியதாகச் சாப்பிட்டாற்ருன் தூக்கம் வரும், தூக்கம் வந்தால் அவனுக்கு வேறு உணர்வுகள் தலை துர்க்கி நிம்மதியையும் குலைத்திருக்காது. அவன் மற்றவர் இளுக்கும் தொல்லே கொடுக்கக்கூடாது, தானும் துயரிலி ருந்து மீளவேண்டும் என்று படுக்கையிற் புரண்டு புரண்டு படுத்தான். ஆனல் தூக்கம் அவனிற் கருணை வைக்கவில்லை.
"சீ கேடுகெட்டவள். நான் அவளுக்கு என்ன கொடுமை
சேய்தேன். ஏன் எனக்கு அவள் இப்படி ஒரு பாரதூரமான துயரத்தைத் தந்தாள்?
* பொன்ஞன வாழ்வு மண்ணுகிப்போமா துயரம் நிலைதானு? உலகம் இதுதான?’ என்று பாட்டுப் படித்தாள். வறுமைத்துயராற் பாதிக்கப்பட்டவள் போல் ஏழையாக நடித்தாள். என்னுடைய இதயத்தைக் கேட்டுப் புதியபாதை சினிமாப் பாட்டுப் புத்தகத்தில்,
حمي
* விழியே விழியே! உனக்கென்ன வேலை?
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை" என்கின்ற பாடல் வரிகளைக் கோடிட்டுக் காட்டி ஞள். என்னுல் புன்னகை யோன்றைச் சிந்தத் தான் முடிந்தது. ஆனல் நான் எனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. அதன் பின் எவ்வளவு நாள் அதை நினைத்துத் துக்கப்பட்டிருக்கிறேன். அதனுல்தானே என்னுடைய விருப்பத்தை வலியச் சென்று தெரிவிக்கவேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது." இரத்தினசிங்கம் மறுபுறம்

Page 39
ആത്ത
ܣܚܩ 8 7 ܚ
புரண்டு படுத்தான். சிந்தனையோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தவோ தடைப்படுத்தவோ அவனுல் முடிய வில்லை.
4" என்னுடைய காதலைப்பெற முயற்சி செய்து பெற்றுக் கொண்டவள் அதன் பின் எனக்கு அவள் உண்மையுள்ள வ ளாக இருக்கவேண்டும் அல்லவா?
மஞ்சட்பொழுது, ஜன்னலினூடாக விழுந்த சாய்கதிர்களில் இரண்டு உருவங்களின் உராய்வுகள், சிரிப்புக்கள், பெரு மூச்சுக்கள்!
12 ஆர் அவையள்? ' 《高 இங்கையுள்ள பொம்பிளை ஆர்? நித்தி தானே? மற்ற ஆம்பிளை?" -
體。 ராஜசுந்தரன்
臀象 அவனுடன 99. அவன் அவளின் ரை அண்ணை முறையானவனெல்லே?
༽།། நம்பமுடியேல்லை ! - * எடியே, உவள் என்னை எவ்வளவு ஏமாத்திப்போட்டாள் ??
அவனுடைய முகத்தில் திகைப்பு. கண்கள் இருண்டு, கை கால்களெல்லாம் படபடத்தன.
** இப்பிடியே நான் திரும்பிப் போயிடுவமோ?
சீச்சீ நான் வத்தது அவளுக்குத் தெரியவேணும். 6T6ös 2:y
ஏமாத்தினதை நான் அறிஞ்சிட்டன் எண்டு காட்டத்தான் வேணும்"
இரத்தினசிங்கம் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு இருவர் முன்னும் போய் நின்றன்.
நித்தி துடித்துப்போய் எழும்பி அவனருகில் வந்தாள். ராஜசுந்தரம் நித்திக்குக் கண்ணைக்காட்டி எதுவும் நடக்காத பாவனையில் இருக்கும்படி கீட்டளை கொடுத்தான். அந்தக்
*

- 78 -
காட்சியைக் கண்ணிமைக்கும் நேரத்துள் இரத்தினசிங்கம் கண்டு கொண்டான். அதன் பின்னும் அங்கு அவனல் மனிதனுக நிற்க முடியாது: இரத்தினசிங்கம் பெரிய வேளாளர் பரம்பரையிற் பிறந் திருந்தாலும் வேளாண்மைத் தொழில் தெரியாதவன். ஜி. சீ. ஈ. சாதாரணப்பரீட்சையை முடித்துக்கொண்ட வன், அச்சுத்தொழிலைப் பழகிக் கொண்டதனல், பள்ளிக் கூடத்தை விட்டு விலகியதுமே அச்சுக்கூடம் ஒன்றில் வேலை செய்யத் தொடங்கிவிட்டான். பரம்பரைத் தொழிலைச் செய்ய நிலமுமில்லை. ஆணுல் அவன் பெரிய கமக்காறன்ரை மகன் ! தந்தையின் இரக்கசிந்தையாலும், ஊதாரித்தனத்தாலும் தங்களுடைய சொத்துச் சுகமெல்லாம் இழந்து, நிர்க்கதி யான நிலையில் இருந்த குடும்பமாக இருந்தாலும், இரத் தினசிங்கத்தின் குடும்பத்திற் பண்பு மட்டு ம் கட்டிக் காத்து வளர்க்கப்பட்டது. இரத்தினசிங்கத்திற்கும் ஒழுக்கத்தில் அளவிடமுடியாத நம்பிக்கை,
ஒழுக்கத்தை இழந்தால் உலகத்தில் வாழ்வதே பெரும் பாவம் என்கின்ற அசைக்க முடியாத அபிப்பிராயம்.
ஒழுக்கங்கெட்ட பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு எப்பிடி
ருேட்டாலே போறதென்கின்ற எண்ணம் இரத்தினசிங்கத் தின் மண்டையைப் பிளக்க, அவன் எப்படித் தன்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தானே தெரியாது. அதன்பின் வழக் கம் போல் மேல்கால் கழுவி, சாப்பிடுவதாகப் பாவனை செய்துவிட்டு வந்து, "லையிட்"டை ஒவ்" பண்ணிவிட்டுப் படுத்தவன் உருண்டான்.
வழக்கத்தில் அவன் வேலைசெய்து களைத்து வந்து சாப்
பிட்டுவிட்டுப் படுத்தானனல், காலையிற் கண் விழிக்கும்
போது மனச் சந்தோஷத்தோடு காலைக்கடன்களெல்லாம்
முடித்து, குளித்துச் சாப்பிட்டு வேலைக்குப் போவான்.
0

Page 40
- 74 - - வேலை செய்யும்பொழுது அவனுக்குத் தன்னை அறியாத ஒரு உற்சாகம் பிறக்கும். எந்த ஒரு நுண்ணிய கடின வேலையையும் சர்வசாதாரணமாகச் செய்து, அந்த வேலை களின் நிறைகுறைகளைக் கணிப்பிட்டுத் தன் வேலைத்திறனை அதிகரிக்கச் செய்யச் சிந்தனையை வளர்ப்பான். அவன்தான் படுக்கையில் உழல்கின்ருன். அந்த வீட்டில் இருக்கின்ற மற்ற எவருக்கும் அது தெரியாது.
சுவர்க்கடிகாரத்தின் ஒசை வழக்கத்திற்கு விரோதமாக அன்று அவனுக்கு உரத்துக் கேட்டது. அவன் ஒவ்வொரு வினுடியையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். மணி பதினென்றடித்து ஓய்ந்தது.
*லையிற் ச்விட்ச்" போடப்படும் ஒசை, விருந்தையில் மங் கல் ஒளி பரவியது. வீட்டுக்காரரும் மனைவியும் கக்கூஸிற் குச் சென்ருர்கள். - இரத்தினசிங்கம் தன் நிலை அவர்களுக்குத் தெரியக்கூடாதே
என்ற காரணத்திற்காகக் கடும் நித்திரையில் ஆழ்ந்திருப் பதுபோல் பாவனை செய்கின்றன்.
இருவரும் திரும்பிவந்து பாத்ரூமில்" கால்கலைக் கழுவிக் கொண்டு படுப்பதற்குச் சென்ருர்கள்.
* லையிற் ஒவ் ' பண்ணப்பட்டது.
அவர்களிருவருக்கும் நித்திரையில்லை. அவர்களுக்கு ஒரே யொரு மகள். பெயர் கோசலை, மூவரும் விருந்தையில்தான் படுப்பார்கள். ஒரு அறையிற் கோசலையின் பாட்டனர் படுப்பார். அவர் ஒரு நோயாளி. சந்தேகப்பிராணி, இள மையிற் காலத்தைக் கண்டபடி செலவழித்ததால் நோயின் கொடூரம் அவரை அடிக்கடி ஆட்கொள்ளும் . அந்த நோயால் அவர் சிறிது பாதிக்கப்படும்போது பிறருக்கும் அந்நோய் வந்தால் என்ன என்ற பரோபகாரச் சிந்தனை யுடன் எவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் இடை யூறு விளைவித்துக் கொண்டே இருப்பார்.
܀ܛܬܐ

ܣܡܘܿ 5 7 ܚܝܼܚ
நடந்துகொண்டே நித்திரை கொள்வதில் அசகாயகுரன். சிலவேளைகளில் இரத்தினசிங்கனின், அறைக்குள் புகுந்து எந்த வழியால் தன்னுடைய அறைக்குச் செல்வதென்கின்ற உணர்வின் றிச் சுவருடன் சண்டைபிடிப்பாரி. அவ்வேளை களில் இரத்தினசிங்கன் எழுந்து, அவரைச் சரியான வழி யிற் செல்லக் கையைப் பிடித்துக் கூட்டிச்சென்று விடுவான். இன்றும் அப்படித்தான் அவர் வந்து சுவருடன் போரிட் டுக் கொண்டிருந்தார். அப்பொழுது இரத்தினசிங்கன் எழுந்து உலையிற் "றைப் போட்டுவிட்டு அவரைக் கூட்டிச் சென்று சரியான வழியில் விட்டான். அப்பொழுதுதான் வீட்டுக்காரருக்கும் மனைவிக்கும் பாட்டா இருளில் வழி தவறி வந்தது தெரிந்தது. இப்படியான வேளைகளில் இரத் தினசிங்கன் செய்யுந்தொண்டு அவர்களது உள்ளத்தில் ஒரு பற்றை வளர்த்துவிட்டது. கொழும்புப் பண்பின் மயக்கத்திற் புரள்கின்ற வீட்டுக்கார ருடைய வாழ்நாளின் இறுதிக்கட்டம் நெருங்கும் அறிகுறி யாக ஒரே வியாதி கணவன் மனைவி இருவரையும் தழுவித் தன் திறமையைப் பரிசோதித்தது. அந்த வீட்டில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கோசலையும் இரத்தினசிங்கமும்தான். நித்தி தாயுடனும் சகோதரர்களுடனும் வெள்ளவத்தையில் இருந்தாள். தகப்பன் அவர்களை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்தார். எதிலும் ஒரு பற்ருே பாசமோ அற்ற புதுமை யான மனிதப்பிறப்பு. அதஞல் நித்திக்கும் சகோதரர்க ளுக்கும் பாதுகாவலர் தாய்தான். தாய்க்கும் மேலைநாட்டுப் பண்பில் அளவற்ற மோகம். அது பிள்ளைகளின் பண்பிலும் ஊறிப் பயங்கரமான அதலபாதாளத்திற்கு வழிகாட்டியாக, கண்ணைக்கட்டிக்கொண்டு களைக்கூத்தாடி கயிற்றில் நடப்பது போல், வாழ்க்கையின் பாதையில் வளைய வளைய விளையா டிவந்தார்கள், இவ்வளவற்றையும் அறியக்கூடிய சந்தர்ப்பம் இரத்தினசிங்கனுக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை; நித்தி அவனிருந்த வீட்டுக்காரரின் மனைவியின் தங்கை முறையானவள். ராஜசுந்தரன், வீட்டுக்காரரது மனைவியின் சகோதரன்,

Page 41
- 76
இதனுல் இரத்தினசிங்கன் பொறியில் அகப்பட்ட எ லி போன்ற நிலையில் அவ்வறையில் இருந்தான்?
எந்நேரத்திலும் ராஜசுந்தரனல் கழிக்கப்பட்ட நித்தியை இரத்தினசிங்கனின் தலையில் அவர்கள் கட்டியடித்துவிடு வார்கள் என்கின்ற பயம் இரத்தினசிங்கனுக்குக் கிலியை மூட்டியது. ** நான் எப்படியும் இந்த அறையை விட்டு மாறவேண் டும்." திடசங்கற்பம் செய்து கொண்டான் இரத்தினசிங் கன். ஆனல் எப்படி அறையை விட்டு மாறுவது ? அவர்க ளுடைய மனத்தைப் புண்படுத்தாமல் ஏதாவது சரியான காரணங்காட்டி அந்த அறையைவிட்டு மாறவேண்டும். அல்லது அங்கு அடிக்கடி வந்து தங்கும் நித்தியைக் காணும் போது, அந்தவேளை ஏற்படும் கொதிப்பை அடக்கிக்கொதிப் புணர்வை அவஞல் அடக்கிக்கொள்ளவும் முடியாது ஏதா வது சஞ்சலநிலைகள் உருவாகி, விபரீதமான விபத்து நேர்ந் தால் தப்பித்துக்கொள்ளவும் முடியாது.
மணி பன்னிரண்டு அடித்தது.
வீட்டுக்காரருக்கு ஊரெல்லாம் கடன். கடன்காரர்களின் தொல்லைகளிஞலும் அவருடைய வியாதியாலும் அவருக்குத் தூக்கம் வருவதில்லை. அவருடைய மனைவியாரோ பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் பதிவிரதை 1 இருவருக்கும் தங்கள் ஒரே மகளின் எதிர்காலத்திலும் கடன்கள் எல்லா வற்றையும் கட்டிமுடிப்பது எப்படி என்கின்ற எண்ணத்தி லும் இரவுகள் அழுத்தி உருண்டன. எப்பொழுதும் பிறரை அரித்தரித்துச் சுகTவனம் செய்த அவர்களாற் சுயமாக உழைத்து ஜீவனம் செய்கின்ற ஆண்மை கிஞ்சித்தும் கிடை பாது, சுமைகள் அதிகரிக்கும்போது, அவற்றை எப்படிப் பிறர்தலையிற் கட்டலாம்; எந்த மடையன் இந்தச் சுமையை ஏற்கத் தன் தலையைக் கொண்டுவந்து நுழைப்பான் என எண்ணுபவர்கள், எப்படி இரத்தினசிங்கன் என்கின்ற ஒரு இளைஞன் தங்கள் கூட்டில் இருந்து தப்பிப் பறப்பதை விரும்புவார்கள் ?

ܚ- 7 7 ܚܕܗ
பிறருடையீ கஷ்டங்களைப் பங்குபோட்டு வாழ்வது பெரி தல்ல, பிறரையே பொறுப்பேற்பதென்றல். அவன் குபேரனுகத்தான் இருக்கவேண்டும்.
இந்நிலையில், 9என்னுடைய அச்சுத்தொழிற் சம்பாத்தியம் எனக்கே போதாது. நான் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்? / இதற்குள் காதலும் வேரு ? உலக்கைக் கொழுந்துக்குக் கலி யாணம் ஒரு கேடா ? விளக்குமாத்துக்குக் குஞ்சமும் கட்டவேண்டுமா ? இறந்த சகோதரியின் பிள்ளைகள் அனதைகளாகத் தவிக்கி ருர்கள் அவர்களுக்கு ஒரு சதம் உதவமுடியாதவன். உழைக் கின்றேனென்று ஒரு நிமிடம் உல்லாசமாக இருக்கமுடியா தவன். அக்கா என்னைச் சின்னனிலை எவ்வளவு அன்பாகப் பார்த் தாள். பள்ளிக்கூடம் போகேக்கை தலைக்கு எண்ணெய் வைத்து, தலை இழுத்து, உடுப்புப்போட்டு வெளிக்கிடுத்தி விடிறதோடை, துலாவிலை த ண் வணி இழுத்துக் குளிக்க வார்த்து, உடுப்புந் தோய்ச்சுத் தருவாள். அந்த நன்றிக் கடனுக்கு நான் அவளுக்கு என்ன உதவி செய்திருக்கிறன்? அக்காவும் சரி, அத்தானும் சரி, இரண்டு பேரும் செத்துப் போனுர்கள். அவையளின் ரை பிள்ளைகளுக்காவது நான் ஏதாவது வழிசெய்யவேணும்" மணி அரைக்காக ஒருதரம் அடித்ததோ அல்லது ஒருமணி தானுே தெரியாது. இப்பொழுதுதான் அவனுடைய கண்கள் எரிந்து இருண் டன. அவன் ஒருபுறம் சரிந்து கண்ணயர்ந்தான்; அப்பொழுது, கனவஈ. இல்லை. ஒரு புதுவிதமான குளுகுளுப்பு, அவனு டைய - யாரோ உராய்வது போன்ற.
"என்னது ?
ஆ1 கோசலை !??

Page 42
سے 78 --
*இஞ்சை பாருங்கோப்பா இந்த அநியாயத்தை கோசலை யும் இரத்தினசிங்கமும் ஐயோ..!" வீட்டுக்காரன்ரை மனிசி கத்தினுள். வீட்டுக்காரன் இரத் தினசிங்கனின் குரல்வளையைப் பிடித்து நெரிப்பதுபோற் பாவனை செய்தான். பின் ரெலிபோன்’ பண்ணப்பட்டது. இரத்தினசிங்கனுக்குத் தான் நிரபராதி என்று நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அவன் வீட்டுக்காரரின் கட்டளைகளுக்கும் எடுபிடியளுக்கும் எடுபட்டான். வீட்டுக்காரர்: "என்ன செய்யிறது ? நடக்கிறது என்னவோ நடந்திட்டிது. இனி இதுகளைப் பிரிச்சு என்ன பிரயோசனம் ?
ஏதோ நல்லாய் இருந்தாற் சரிதான்' தத்துவம் பேசினர்.
இராஜசுந்தரன் தன்னுடைய மருமகளை 'சின்னப்பிள்ளையி லேயே கெடுத்துப்போட்டியேடா!' என்று பேசித் தனக் கிருந்த மறைமுகக் கோபத்தையும் சேர்த்து இரத்தினசிங் கனின் கன்னத்தில் மாறிமாறிச் சில அடிகள் கொடுத்து, நிம்மதி அடைந்தான்.
1972
鵬》

வழி ஏதாவது
ஏற்பட வேண்டும்
தணிகாசலமும் சுப்பிரமணியம் "பாக்கின் புல்தரை யிற் பிற்கையூன்றி முன்னே காலை நீளவிட்டு உல்லாச மாக இருந்தோம். எமக்குப் பிற்புறத்தில் மறையும் சூரிய னின் சாய்வுக் கதிர்கள் மல்லிகை மரத்தில் விழுந்து, மல்லிகை மரத்தின் நிழல் எம்மை மூடிக் காத்துச் சிறிது தொலைவில் நீண்டிருக்க, நிழல் நனையாப் பாகங்கள் சூரிய ஒளியிற் பிரகாசித்துக்கொண்டிருந்தது. நானும் நண்பனும் புல்தரையை உற்றுநோக்கி அத்தரை யின் ஊடே ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதை யொன்றின் முடிவில் இருக்கும் சீமெந்து வாங்கைப் பார்த் தோம். அந்த வாங்கிலில் அமர்வதற்காகத் தினமும் ஒரே பாதையில் மனிதர்கள் நடந்து சென்ற காரணத்தால், பாதையிற் புற்கள் அழிபட்டுப் போயிருக்கிறது என்பதை இருவருமே ஊகித்துக்கொண்டோம்.
நானும்
* முத்து, மனுஷன் எவ்வளவு நச்சுப்பிறவியெண்டு பாத் தீரே, அவன் கால்பட்ட இடத்துப் புல்லே கருகிப்போச் சப்பா..? அவன் அதிசய பாவத்துடன் நெஞ்சடைத்த சிரிப்பொன்றை முக்கிச் சிரித்து மனிதர்மேல் இருந்த வெறுப்பைக் காட்டினன்.
அவனுடைய மனவேதனையை உணர்ந்துகொண்டவன் நான். அவன் குடும்பம் எவ்வளவு கஷ்டநிலையில் அவன்கையை எதிர்பார்த்துத் தவங்கிடக்கிறது என்பதையும், அவனுடைய தொழில், மாத வருமானத்தையும் அறியாதவனுமல்ல. அவனுடைய அறிவும் போற்றத்தக்கது. ஆணுல், அதற்காக

Page 43
سے 80 حیے
மனிதப் பிறப்பை மட்டந்தட்ட விடக்கூடிய மனபலம் என் னிடம் இல்லை. மடக்கென்று சொன்னேன்.
* மச்சான் தணிகை - அந்த மனு சன்ரை கைபட்ட இட மெல்லாம் பொன்னுயெல்லே சொரியுதப்பா. குடிசையும் கோபுரமும் மட்டுமில்லை - கோயிலும் அவனுடைய ஒவ் வொரு அங்கத்தின் பிரமாண்டமான, அறிவின் சிறப்பிலுந் தானேயப்பா அழகு படுத்தப்பட்டிருக்கு." 9 அதுகும் சரி. ஆனல், அவ்வளவு பெரிய சக்தி படைச் சவன், ஏனப்பா பசியாலையும் பஞ்சத்தாலையும் பரிதவிச் சித் திரிகிருன், அவன்ரை கீழான எண்ணந்தானே அவனைக் கஷ்டப்படுத்திது." .ܓܪ
" அப்பிடிப் பொதுப்படச் சொல்லிக்குடாது, அதிலை கன விஷயம் கிடக்கிது தணிகை - நல்லா யோசிக்கவேணும். இங்கபாரும் ஊருக்குள்ளை சோலி சுறட்டில்லாமல், மற்ற வங்களுக்கு ஒரு தொல்லையுங் குடுக்காமல் தானுந் தன்பாடு மாய் இருக்கிற குடும்பங்களுக்கு எத்தினை சோதினை? எவ்
வளவு கஷ்டம். அவனுக்குத்தானப்பா நோயும் நொடியும்
பசியும் பிணியும்."
** கஞ்சன்கள் தானேயப்பா இப்ப வசதியா நல்லா இருக் கிருன்கள்?" அவசரப்பட்டுப் பேராச்சிரியப்பட்டுக் கேள்வி பதில் ஒன்றைச் சொல்லிவிட்டு என்னை உற்றுப் பார்த் தான். அவனுடைய முகத்திலும் கண்ணிலும் வேதனை கலந்த கேள்விக்குறி விரவிப் படர்ந்து நீடித்தது.
நான் சிரித்தேன். அது சிரிக்கக்கூடிய விஷயமில்லைத்தான்.
ஆனல் நான் சிரித்தேன். அவன் ம்கும் " என்ற முனகலு டன், வெறுப்புடன்,முகத்தை மறுபுறம் திருப்பிக் கைகோர்த் தபடி சிரித்துக் கதைத்துக்கொண்டு உரசியபடி செல்லும் ஜோடிகளைப் பார்த்தான். அந்தப்பெண் "மினிஷ்கேர்ட்" அணிந்திருந்தாள். அவன் அதற்கேற்ற மேற்கத்திய நாக ரிக உடையணிந்திருந்தான். அவள் மறு கையில் வைத்துச் சுழற்றியபடி வந்த "ஹான்ட்பாக் தவறி விழ அவள் குனிந்து அதை எடுத்தாள். அப்பொழுது அவளது பின்
ܟܠ ܐ
*ー
جهان

سے 81 ==
பக்கத்தில் அவள் உள்ளே அணிந்திருந்த பச்சை உள்ளங்கி பளிச்சிட்டது. நானும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். எனக்கும் அவனுக்கும் உணர்ச்சி மேலீட்டால் மூக்கு விரிந் தது. பெருமூச்சொன்றை விட்டு எமது இச்சையை வெளிப்படுத்தி உணர்ச்சியைத் தீர்த்துக்கொண்டு பழைய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். 11 பாரும் ஐசே, நாங்கள் உணர்ச்சியில்லாத நாங்களோ? எங்களுக்கும் இப்ப எத்தினை வயசு? உதுகள் இப்பிடிக் காட்சி காட்டினல் நாங்கள் எப்பிடி ஒழுங்காய் இருக்கிறது? கல்யாணஞ் செய்து குடும்பம் நடத்திறத்துக்கும் எங்களுக்கு வருமானம் காணுமோ?
நான் கல்லாக இருந்தேன். ** வேலாயுதம் எண்டிற என்ரை சிநேகிதன் ஒருத்தன் பறங்கி வியாதியோடவந்து படுத்துக் கிடக்கிருன், பாவம் அவனைப் பார்த்து மற்றவங்கள் பகுடி பண்ணிருங்கள், இனி அவன் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு ருேட் டிலே நடமாடிறது?" * உண்மைதானப்பாக ஒவ்வொரு மனிஷனும் ஏதாவது ஒரு முயற்சியிற் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கவேணும். அப் பிடியில்லையெண்டால் எல்லோரும் மனம்போனபடிதான் வாழுவாங்கள்?" ** நாங்கள் மாதம் எழுபது ரூபா எடுத்துத் தாய், சகோ தரம் குடும்பம் எண்டு பார்த்துக்கொண்டு எங்கடை கஷ் டத்தோடை கலியாண ஆ  ைச  ைய யும் மூடிவைச்சுக் கொண்டு.
' தணிகை எனக்கு என்னவோ போல இருக்கு மச்சான் வேறை ஏதாவது கதை கதையன் மச்சான், ??
" இல்லை மச்சான் இதைச் சோன்னத்தான் என்ரை மனம் ஆறுதல் அடையும். வேலாயுதம் எவ்வளவு நல்லவன் மச் சான். அவன் பள்ளிக்குடத்திலை படிக்கிற காலத்திலை அவள் கமலா எத்தினை 'கன்ட்பரிஸ் சொக்ளேட்" அவ னிட்டை வாங்கித் திண்டிருப்பாள். பள்ளிக்குடக் கூட்

Page 44
سص 82 صة
டங்களிலையும் அவனுக்காகத் தமிழ்ப்படக் காதல் பாட்டுக் களைத் தெரிஞ்செடுத்துப்பாடி அவனை எவ்வளவு மயக்கினுள்’ "அப்பவே அவன் உந்த உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் பட்டுத் திரிஞ்சவன் என்ன?" * அவனை அலைக்கழிச்சது அவள்தானப்பா, பிறகு என்ன செய்தான் தெரியுமே??
d th ge
* இப்ப ஒரு “எம்பிபியெஸ்ஸைக் கட்டிக்கொண்டு கொழும் புக்குப் போயிட்டாள்' * இது தணிகை அவளில்ை குற்றமில்லை, இவனிலைதான் குற் றம். அவள் சொத்துச் சுகமெல்லாம் உள்ளவள். இவ னுக்கு என்ன வசதி இருக்கு? எப்பவும் விரலுக்குத் தக்க வீக்கம் வேணும். அவளை எங்கையேன் கூட்டிக் கொண்டு போய் ஆசையைத் தீர்த்திருந்தாலும் அவள் மாட்டன் எண்டு சொல்லியிருக்கமாட்டாள். ஆனல் கலியானஞ் செய்து இவரோடை வர, இவற்றை இப்பத்தை நிலை மைக்கு அவள் எப்பிடித் தயாராகுவாள்??? " ஒ! அது சரி. ஆனல். அவன் அவளை எங்கை கூட்டிக் கொண்டு போய் ஆசையைத் தீர்க்கிறதப்பா? அதுக்கு அவனுக்கு ஏது வசதி?" * ஆனபடியால் இந்தக் கதையை விடும்" " ஆனூல் அவனைப் பார்த்து உலகஞ் சிரிக்கிதே யப்பா??? ** அவன் சிரிக்கக்கூடியதாய்த்தானே நடந்திட்டான். இருந் தாலும் எங்களைப்பற்றியும் நாங்கள் வீரம் பேசேலாது. இனிமேல் ஏலாது எண்டிற நேரத்திலை நாங்களும் இப்ப டித்தான் வழி தவறிருவம். ஆனபடியால் இந்த ஆராய்ச்சி வேண்டாம் வேறை ஏதாவது பேசும் ?? *" வேறை என்னத்தைப் பேசிறது. இப்படியான உலகத் திலை மனுஷன்ரையுடம்பிலை விஷம் இல்லையெண்டும், அவன்தான் பெரிய மாபெரும் சக்தியெண்டும் சொல்லுறீர். இதை எப்பிடி நம்புவது?"
ܟܠ ܐ

- 88 -
*" தணிகை. இந்தக் காலத்து மனிசன்ரை நிலைமைமை விளங்காமல் நீர் பேசுறிர். இப்ப பாரும் காசுள்ளவன் எல்லாம் தன் தன் காரியத்தைப் பாத்திட்டுப்போகக் காசில்லாதவன் கஷ்டப்படிருன், ஆனபடியால் எல்லாரிட் டையும் இப்ப காசு புளங்கிற வழி ஏதாவது ஏற்பட வேணும். அதுதான். இந்தக் காலம் கூடாது எண்டிறன் ."
9 அதுக்கென்ன செய்யிறது?" * எல்லோரும் வேலை செய்து சம்பாதிக்க வேணும்!" ** வேலை என்ன போட்டே கிடக்கு?
என்னுடைய கண்கள் கலங்கியது. நான் முகத்தைத் துடைப்பதுபோற் கண்களைத் துடைத்துக் கொண்டேன். தணிகாசலம் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் வேறுபுறம் திரும்பிப் பார்த்தான். நான் யோசித்தேன்; ** இந்தக் காலத்திலை எவ்வளவு படிச்சும் பிரயோசன மில்லை. என்னுடைய தம் பி எப்டியெப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் படித்தான். விளையாட்டுக்கள் ஓட்டங்கள் ள்ல்லாவற்றிலும் எவ்வளவு முதலிடங்களைப் பிடித்திருந் தான். ஆனல் அவன் வாழ அவனுடைய கல்வியும் உதவி செய்யவில்லை. அவனெடுத்த எந்தச் சான்றுப் பத்திரங் களும் உதவி செய்யவில்லை. தங்கச்சங்கிலி அறுத்த குற்றத் திற்காக இரும்புக்காப்பும், குறுகிய சிறையும்தான் அவ னுக்கு இன்று உதவி செய்கிறது. வெளியில் வந்ததும் அவன் வாழ்வதற்கு வழி என்ன?"
மச்சான், நேரம் போச்சுப் போவமே???
** . • • gp . • . هم@ * له
போர்க்"கை விட்டுப் புறப்பட்டு "லைப்ரறியைத் தாண்டி யிருப்போம். நிலமெல்லாம் கறுத்துக் கிடந்தது.
1972-0 - 22

Page 45
இக்கதையைப் பார்  ைவ யிட்டு, மனிதனை நேசிக்கும் மகோன்னதச் சிந்தனைக்கு நல்வழி காட்டிய செ. கதிர் காமநாதன் அவர்கள் இப் O பொழுது இங்கு இல்லை. அவருடைய சிரு ஷ் டிகள் ᏧᏏ Ꮷ560IᏧᏂ அவரை நினைவு படுத்துகின்
றன:
இக்கதையைப் பிரசுரிக்கும் இ போது, நான் அவருக்கு ଜୋi)) எனது அஞ்சலியைச் செலுத்
துகின்றேன்.
யாரோ ஒருத்தி காதலிக்கப்போய், செய்யாத குற்றத்திற்
காகத்தண்டனைபெற்று எஸ். எஸ். ஸி. கடைசியாண்டு டன், பரீட்சைக்குத் தோற்ருமலே பாடசாலையை விட்டு வெளிய்ே வந்தவன், அந்த அச்சுக்கூடத்தில்தான் தஞ்சம் புகுத்தான் 3 அவ்வச்சுக்கூடம் வேறு யாருடையதும் அல்ல; அவனைப் பாடசாலையிலிருந்து விரட்டிய அதே வாத்தியா ருடைய அச்சகந்தான்.
எந்நேரமும் தூங்கிய கண்கள். பருத்த மேனி, சரிந்து
தொய்ந்த தொந்தி. நடையில் ஒரு அலுப்பு - இத்தனையும்.
கொண்டு ஆசிரியராகவும், அச்சக அதிபராகவும் இருந்து அந்த ஊரில் உள்ள காணி பூமிகள், நகைகள் நட்டுக்களைத் தன்னுடைய ஆதிக்கத்துக்குட்படுத்திக் கொண்டிருந்தார் சுந்தரலிங்கவாத்தியார், நோஞ்சானக இருந்தாலும் கனகலிங்கம் இயற்கையிலேயே சுறுசுறுப்பானவன். எடுத்த எக்காரியத்தையும் கூடிய கெதி யில் செய்து முடித்து நிம்மதி காண்பதற்கு அவாவுள்ள அவனுடைய உள்ளம், வேறு எந்தப் பிரச்சனைகளைத் தன் னும் கவனிக்கும் ஆற்றல் இல்லாதது. வாழ்க்கையென்ருல் என்னவென்று எடை போடுவதற்கு முன்தான் எத்தனை காரியங்கள் நடந்து முடிந்து விடுகின்
yܬ݂ܳܐ
ܝܶܠ ܐܙ

- 85 =
றன. கனகலிங்கன் பெருமூச்சுக்களுக்குமேற் பெருமூச்சுக் களை விட்டே மெலிந்து வளர்ந்தவன். அவனுடைய வாழ்க் கையில்தான் எத்தனை சந்திகளைத் தரிசித்துவிட்டான். எல் லாம் அவனுடைய வாழ்விற்குச் சவால்விட்டுக் கொண்டி ருந்தன. எவற்றையும் லட்சியம் செய்து கொள்வதற்குரிய திராணி அவனிடம் இருக்கவேயில்லை.
ஆறுமாத காலமாகச் சுந்தரலிங்க வாத்தியார் அவனை "அப்ரண்டிஸா'கவே வைத்திருந்தார். அந்த ஆறுமாத காலத்திலும் அவனுக்கு அச்சுத் தொழிலாற் கிடைத்த ஊதியம், அவன் வேலை பழகுவதற்குக் காலடி எடுத்து வைப்பதற்கு ஒரு மாதத்திற்கு முதல்வந்த பெரிய வேலை காரர் முதல் முதலாளி வரை தந்த ஏச்சும் பேச்சும் அடி களும் குட்டுகளுந்தான். எல்லாவற்றையும் சகித்து இன்று அவன் ஒரு சிறந்த அச்சுத் தொழிலாளியாகிவிட்டான். இப்பொழுது அவனுக்கு அறுபது ரூபாவல்லவா சம்பளம் கிடைக்கிறது! அவனுக்கு ஏழாவது மாதம் கிடைத்த சம் பளம் இருபது ரூபா, அதைக் கொடுப்பதற்குக் கூடச் சுந் தரலிங்க வாத்தியார் முதலாளியின் கைக்குச் சற்றுத் தாம தமாகவே தென்பு பிறந்தது. சம்பளம் கோடுக்கின்ற பத்தாம்திகதி சுந்தரலிங்க வாத்தி யார் முதலாளியுடைய அதட்டல், உருட்டல், மிரட்டல் எல்லாம் சேர்ந்து ஒரு புதிய அழகை அவருட்ைய கண் களுக்குக் கொடுத்துவிடும். அன்று எல்லோரும் சம்பளத் தைப் பெற்றுக்கொண்டு செல்லும்பொழுது, அவருடைய அதிகார மிடுக்குக்குப் பயந்து மிரண்டு கடமையாற்றிக் களைத்துச் சலித்து வதங்கி விடுவார்கள். அச்சக நுண்ணியலாளர்கள், தினசரி அரிய புதிய விஷயங் களை அலசிப் பார்த்துக் கடமையாற்றிப் பல அறிஞர்களைத் தோற்றுவிப்பதற்குத் துணைக் காரணத்தர்களாக விளங்குப வர்கள். அவர்கள்தான் சம்பளக் கணக்குப் பதிவேட்டில் சுந்தரலிங்க வாத்தியார் முதலாளியின் முன் கையொப்ப மிடும்பொழுது முழுச் சாம்பிருனிகளாகிவிடுவார்கள். ஏனெனில், அந்தக் கணக்குப் பதிவேட்டில் இருக்கின்ற சம்

Page 46
ജ 86 =
பன வித்தியாசத்தையோ, அந்த வித்தியாசத் தொகைச்ை கண்டும் புரிந்து கொள்கிற சத்தியோ, அப்படிப் புரிந்து கொண்டாலும் எதிர்த்து வாதாடி நீதி கேட்கின்ற துணிவோ, அங்கு கூடிய சம்பளமாக நூற்றிமுப்பது ரூபா வெறும் நீக்கிலளிற்குக்கூட இருப்பதில்லை. அதற்குக் கார ணம் இல்லாமலும் இல்லை. என்னவெனில், அங்கு எதிர்த்து வாதாடி வேலையை விட்டு வெளியேறிய அந்நேரமே அந்த வேலைக்காரனின் தீரம் பல அச்சகங்களுக்கும் உடனே பறந் துவிடும். அதன்பின், அவனுக்கு வேறு அச்சகத்தில் வேலை பும் கிடைக்காது; கிடைத்தாலும், சம்பளம் ஏதோ உயர் வாகக் கிடைக்கப்போவதும் இல்லை. ஆதலால் ஏசா மற் பேசாமல் வேலை செய்வதே அவர்கள் எல்லோரினதும் ஏகோபித்த முடிவு.
இப்படித்தான் யாழ்ப்பாணத்துத் தொழிலாளர்கள் தங்க ளைக் காட்டிக் கொடுக்கிருர்கள். தொழிலாளர்களுடைய ஒற்றுமை வளரமுடியாதபடி பல தடைகளையும் ஏற்படுத்தி விடும் சாணக்கியத்தைக் கற்றுக் கொண்டவர்களே அங் குள்ள முதலாளிகள். அனைவருக்கும் அச்சாணக்கியத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு அகில இலங்கை ரீதியிற்கூட முத லாளிமார் சம்மேளனம் உண்டு. ஆனல் அச்சகத் தொழி gorr 6Trias G36Tmir?
மற்ற எந்த நுண்ணியல் தொழிலாளர்களையும்விட இலங் கையில் உள்ள அச்சுத் தொழிலாளர்கள் எத்தனையோ மைல் பின்தங்கிவிட்டார்கள் என்பதை அவர்களுடைய ஒற்றுமையின்மை பறைசாற்றும். அதுவும் ஜயந்தி அச்ச கத்தில் உள்ள தொழிலாளர்களின் ஒற்றுமையின்மைக்குத் தான் எத்தனை தடைகள்? நீக்கிலஸ் கத்தோலிக்க சமயத்தவன். அத்துடன் சாதியி லும் தாழ்ந்தவன். ஆதலால் எந்தத் தொழிலாளருக்கும் அவன் மீது ஒரு பொருமை. "மெசின் மைண்டர்" தங்க வேலுவுக்கு நூற்றிருபது ரூபா சம்பளம், உறவுக்கு ஒருவ ரும் இல்லை. தனிச்சீவியம். சுகமான எல்லாத் தேவைகளை யும் குறைந்த செலவிற் பெற்றுக்கொண்டு காலத்தைக்
>

- 87 -
கடத்தி விடுபவன். அவனுக்கு முதலாளியிலும், முதலா ளிக்கு அவனிலும் ஒரு அலாதிப்பிரியம். ஏனெனில், இவன் மூலம் அவருக்குஞ் சில சந்தர்ப்பங்களிற் சில நல்ல சுகங் கள் கிடைப்பதுண்டு. அதற்குப் பிறிதொரு வழியிற் சந் தோஷம் கொடுப்பார், அதை எவரும் கவனிப்பதேயில்லை. இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம், அவர்களில் மிக வும் கவனத்திற்குரியவன் கனகலிங்கன். கனகலிங்கன் தனது தாயாரின் மூலம் தனது குலப்பெரு மைகளையும், தந்தை பேரன், கொள்ளுப்பாட்டன் வாழ்ந்த பெருவாழ்வையெல்லாம் சிறிய ஒலைக் குடிலுக்குள் பட்டினி யோடிருந்து கேட்டுச் சந்தோஷப்பட்டுப் பெருமையும் கொண்டிருக்கிருன். ஆனல், இன்று அவன் குடியிருக்கும் முட்புதர்க் காணியே ஒரு பெரிய தனவந்தருடையது. அதற்குக் கூலி பத்து ரூபா. அந்தச் சிறிய குடிலுக்குள் வாழ்பவர்கள் நான்கு பேர். ஒன்று அவனுடைய வயோதி பத்தாய், மூத்த சகோதரி, அவன், அவனுடைய தங்கை, இவ்வளவு பேரும் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளக் கிடைக் கும் வருமானமோ, அவனுக்குக் கிடைக்கும் அறுபது ரூபா வும், அவனுடைய தாயார் அன்னப்பிள்ளை அங்கையிங்கை யோடி அரிச்சுப் பொறுக்கும் ஏதோ சிறிய வரும்படியுந்தான்.
*வேஜஸ்போர்ட்" என்ற சம்பள நிர்ணய சபையினரின் சம் பளத்திட்டத்தைப் பயன்படுத்தி முதலாளிகள் எல்லோரும் அச்சுக்கூலியை உயர்த்திவிடுவார்கள். ஆனல், தொழிலா ளர்களுக்குக் கிடைப்பதோ, சம்பளத்திட்டத்திலும் பார்க் கக் குறைவான அரைப்பகுதியோ அதற்கும் குறைந்த சம் பளந்தான். இதைக் கண்டும் கேட்டும் அறிந்த அதிகாரி கள் கூட, முதலாளிகளின் சந்தோஷத்தைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தங்கள் கடமைகளைச் சரிவரத் தமக்குச் சாதகமாக்கிக் கொள் வார்கள்,
கனக லிங்கன் வேலைக்குச் சேர்ந்து ஐந்தாவது மாதம் தொழிற் கந்தோரிலிருந்து ஒரு அதிகாரி. தொலைபேசியில் தான் வருவதை முதலாளிக்கு அறிவித்துவிட்டு வந்தார்.

Page 47
- 88 =
அவர் வருவதற்கு முதலே கனகலிங்கத்தையும் இன்னும் மூன்று பேரையும் அன்றுமட்டும் வேலை செய்ய வேண்டா மென்று வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டார் சுந்தரலிங்க வாத்தியார் முதலாளி. இதன் மூலம் தொழிற்கந்தோர் அதிகாரியின் கண்ணைத் துடைத்துத் தன் வருமானத்தைக் காப்பாற்றிக் கொண்டார் அவர். ஆணுல், லீவிற் சென்ற நால்வருக்கும் அதனுல் தங்களுக்கு விளைக்கப்பட்ட அநீதி என்னவென்று எள்ளளவும் தெரியாது.
*ஹைடில்பேர்க் ஒட்டோ மற்றிக் மெஷினை ஸ்ராட்" பண் ணிவிட்டு அதன் ஒட்டத்தையும், எழுத்துக்களின் அழகை யும், தெளிவையும் கவனித்துக்கொண்டிருந்த கனகலிங்கன் கண்களிலிருந்து உருண்டு விழுந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டதை எதிர்ப்புறத்திலிருந்து அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த நீக்கிலஸ் கவனித்துவிட்டான். "ஒட்டோ மற்ரிக் சிலிண்டருக்குள் தலையைப் போட்டு ஏதோ செய்து கொண்டிருந்த தங்கவேலு அதைக் கவனிக்காததில் நியா யம் இருக்கத்தான் செய்தது. நீக்கிலளிற்குக் கனகலிங்கன் அழுதது ஏதோ ஒருவித சோகத்தைத் தோற்றுவித்திருக்க வேண்டும். அவன் கனகலிங்கன் அருகில் வந்தான். 'கனகு ஏன் அழுதணி. சுகமில்லையே??? இல்லையென்று தலையசைத்தான் கனகலிங்கன். *அப்ப ஏன் அழுதணி???
ஹைடில்பேர்க் மெஷின்" பெருமூச்சு விட்டுக்கொண் டோடியது. நீக்கிலஸ் அவனிடமிருந்து பதில் கிடைக்காதது கண்டு தன்னுடைய வேலையைக் கவனிப்பதற்குச் செல்லத் திரும் பினன். கனகுவிற்குத் தன்னுடைய துயரை யாருக்காவது சொல்லவேண்டும்போல் உணர்ச்சியொன்று ஊடுருவியது.
*சிநீக்கிலஸ்."
நீக்கிலஸ் நின்று திரும்பிப் பார்த்தேன்.
脾

g
- 89 -
உசாப்பாட்டு நேரஞ் சொல்லிறன்' சரியென்ற பாவனே யில் தலையசைத்துவிட்டு நீக்கிலஸ் போஞன்.
அன்னப்பிள்ளை கைம்பெண்ணுகியும் எவ்வளவோ கஷ்டப் பட்டுத் தன்னுடைய மகனைப் பத்தாவது வகுப்புவரை படிக்கவைக்க முயன்ருள். ஏனெனில் எஸ் எஸ். ஸி. சேர்டி பிக்கற்? எடுத்தவர்கள் எல்லோரும் அரசாங்க உத்தியோ கம் பெற்று காணிபூமியெண்டு வாங்கிக் கல்வீடும் கட்டி இருக்கின, என்னுடைய மகனும் பத்தாவது படித்தால் ஏதாவது அரசாங்க உத்தியோகம் பெற்று எங்களை நன் ருக வைத்திருப்பான் என்ற எண்ணத்திற் கற்பிற்குப் பங் கம் ஏற்படாது எப்படியெப்படியெல்லாமோ கஷ்ரப்பட்டு உழைத்து மகனைப் படிப்பிக்க, அவனுக்கு யாரோ ஒருத்தி காதற்கடிதம் கொடுக்கப்போய் அவளுடைய ஆசையிற் கல்விழுந்து விட்டது. இப்படித் தன்னை இழந்து தன் பிள் ளைகளுக்காக உழைத்த தாய் நோயிற் படுத்துவிட்டாள். அதனை நினைத்துத்தான் அவன் அழுதான். நீக்கிலளிற்கு இக்கதையைக் கேட்டதும் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் எரிந்து கனகலிங்கனின் மீது ஒரு அனுதாபத்தைத் தோற்றுவித்தது. "
" கனகு, உன் ரை சாதிக்காறறைப் பாத்தியே, எல்லாம் பணம் இருந்தாத்தான் சாதி சமயம் எல்லாம். எதுவும்
இல்லாதவனுக்கு என்னப்பா சாதி? உங்களின் ரை சாதி
உங்களைக் காப்பாத்திச்சுதே?"
கனகலிங்கத்திற்கு இப்பேச்சு அருவருப்பை மூட்டினலும், பொறுத்துக் கொண்டான். ஏனே தெரியவில்லை அவனுக் குக் கொஞ்சம் சாதியில் நம்பிக்கை இருந்தது.
சிறுபையணுகப் பாடசாலையிற் படித்துக்கொண்டிருக்கையில்
தாழ்ந்த சாதிப்பையன் தன் அருகில் வந்திருந்தபொழுது,
இடத்தை விட்டெழுந்து வேறு இடத்தில் மாறி அமர்ந்த
தும், அதே பையன் தன்பெயரை உச்சரித்தபொழுது
அவனுக்கு அடித்துவிட்டுப்பின் ஆசிரியர் ஒருவரிடம் அறி
12

Page 48
= 50 =
வுரையேச்சு வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவமும் அவன் மனதிற் பசுமையாக இருந்தது. ஆனல் அன்றைய கனக
பெரிய வித்தியாசம் தோன்றியுள்ளதென்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில், வறுமை கற்றுக்கொடுத்த பாடங் களின் மூலம் அவன் எவ்வளவோ சமுதாயச் சீர்கேடுகளைக் கற்றுத்தெளிந்துள்ளான்.
நீக்கிலஸ் தடியன் எவருடனும் அள்ளளப்பாக எதையும் பேசுவது கிடையாது. தானுண்டு தன் வேலையுண்டு என் றிருப்பவன். சக தொழிலாளிகள் தன்னுடன் ஏதாவது வேடிக்கையாகப் பேச முற்படும் பொழுது மட்டுமே அவர் களுடன் கலந்துகொள்வான். மற்ற வேளைகளில் ஒதுங்கிக் கொள்வான். ஆஞல், இப்பொழுதுதான் சில காலமாக கனகலிங்கத் துடன் ஒட்டியொட்டிப் பேசுவதும், சாப்பிடத் தேநீர் குடிக்கப் போகவும் ஆரம்பித்திருந்தான். இது மற் றத் தொழிலாளர்களுக்கு என்னவோ புதுவிதப் பொருமை யைத் தோற்றுவித்தது. நீக்கிலஸ் கனகலிங்கத்தின் ஒற்று மையால் அவர்களுக்கு என்ன நட்டமோ தெரியாது; சுட் டுக்கொண்டிருந்தார்கள். தங்கவேலுவும் இதை நன்கு கவ னித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் இதைச் சுந்தர லிங்க வாத்தியார் முதலாளியிடம் உரைத்துவிட்டான். அவருக்கு இவர்களின் ஒற்றுமையில் எள்ளளவும் விருப்பம் இருக்கவில்லை. தன்னுடைய வர்த்தகத்தில் ஏதோ ஒரு பெரிய நட்டம் ஏற்பட்டுவிட்டதுபோற் கலங்கினர்.
அன்று வேலை முடிந்து எல்லோரும் கைகழுவிக் கொண்டி ருத்தார்கள். அப்பொழுது அங்கு புத்தகம் கட்டும் வேலை
செய்யும்?பைண்டர்"கிழவன் கனகலிங்கத்திடம் சொன்னன்,
* கனகு, பெரியவர் தன்னை ஒருக்காற் சந்தித்துவிட்டுப் Curs lists." கனகலிங்கன் ஏன் என்ற அர்த்தத்திற் பைண்டரைப்"

- 9 li l
* பைண்டர்" "ஏனே தெரியாது. பாக்கச் சொல்லிச் சொன் ஞர்." சொல்லிவிட்டுக் கைகளிற் சோப்பை'ப் போட்டு
அலசத் தொடங்கினன். தங்கவேலுவின் கண்களில் ஒரு
புதுவித ஒளி இழையோடியது. தன்னுடைய அண்டல் இவ்வளவு விரைவிற் பயனளிக்கும் என்று அவன் எதிரி பார்க்கவில்லை. நீக்கிலஸ"சம் கனகலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் எதுவும் பேசவில்லை.
"கனகலிங்கம் நீ எங்கடை பொடியன், கண்டவன்களோ டையும் சேர்ந்து கெட்டுப் போகாதை, உன்ரை படிப்பை யும் கெடுத்து உன்ரை கொம்மாவின் ரை ஆசையில் மண் ணைப் போட்டாய். நடுத்தெருவிலை நிற்கப்போறியே எண்டு, நான் உனக்கு இந்த நல்ல சந்தரிப்பத்தைத் தந்தன். கெடுத் துக் கொள்ளாதை. என்ன, நான் சொல்லுறது நல்லா உனக்குப் புரிஞ்சிதே?" கனகலிங்கத்தின் முகம் ஏக்கத்தில் அடிபட்டது. இந்த அறி வுரை ஏன்? நான் எந்தக் கண்டவன்களோடை சேர்ந்திட் டன்? எப்பிடிக் கெடப்போறன் என்று கலங்கி நின்முன், "நீக்கிலஸ் ஆரெண்டு தெரியுமே? அவன் நல்ல குடும்பத் தைச் சேர்ந்தவனில்லை, அவனுேடை சேராதை, - சரி இந் தக் கூடையிலை இருக்கிற சாமான்களை ஒருக்காற் போற வழியிலை வீட்டிலே கொடுத்துவிட்டுப்போ." உள்ளத்தை எண்ணங்கள் பங்குபோட்டுப் பிய்த்தெடுத்தன. ஒரு வார்த்தையிலாவது வாத்தியார் முதலாளிக்குப் பதில் கொடுக்க அவனிடம் துணிவில்லை. எதுவும் பேசத்தெரியாது மெளனமெதுமையுடன் கூடையைத் தூக்கிஞன், கூடை குண்டுக் கனமாகக் கனத்தது. இந்த வீட்டு வேலைகளைக் கனகலிங்கம் அடிக்கடி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந் தது. இதற்கு எவ்வித வருமானமும் கிடையாது. இது ஒரு கையுதவிதானே! இரண்டோ மூன்ருே மணித்தியாலங்கள் இதன்மூலம் தேய்ந்து போவதைப்பற்றி அவன் கவலைப்பட்

Page 49
- 92 -
டாலும் என்ன பிரயோசனந்தான் ஏற்பட்டு விடப்போகிறது? ஏனெனில், இவன் ஹைடில்பேர்க் மெஷின் மைன் டராக
இருந்தாலும் ஒரு எடுபிடி வேலைக்காரன், என்றே வாத்தியா
யர் எல்லோரிடமும் கூறிக்கொள்வார்.
கனகலிங்கத்தின் தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. பிதற்றல்கள், உளறல்கள் எல்லாம் மற்ற எவராலுமே புரிந்துகொள்ள முடியாத குழப்பமான மொழியாக இருந்தது. தமக்கையும் தங்கையும் பக்கத்து வீட்டுக் கனகம்மா ஆச்சியும் பக்கத்திலேயே இருந்தார்கள். வைத்திலிங்கப் பரியாரியார் தான் ஏதோ கர்மம் தர்மம்
என்று "ஒசி" வைத்தியம் பார்த்திருந்தார். அதுவரையிற்
கிடைத்த உதவியே அந்தக் குடும்பத்தினருக்கொரு பெரிய ஆறுதல்தான். இந்நிலையிற் கனகலிங்கனுக்கு வேலைக்குப்போகவே விருப்ப மில்லை. போகாமல் இருந்தாலும் வீட்டு நிலைமை என்ன ஆவது? அவனுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கிழத்தோற்றத்தைப் பெற்றுவிட்டவன், மனத்தைக் கல் லாக்கிக்கொண்டு வேலைக்குப் போனன், வேலைத்தலத்திலும் தேவையில்லாத பிரச்சினை. இதன் மூலம் தொழிலாளர்க ளிடையே மனக்கசப்பு. முதலாளியிடம் கெட்டபெயர். இவையெல்லாம் ஏன்? நீக்கிலளிடம் பேசாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் கனகலிங்கன். * பொதுமக்கள்தான் உண்மையான வீரர்கள். ஆஞல் நாம் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமுடையவர்களாகவும், நகைக்கத் தக்கவர்களாகவும் இருக்கின்ருேம். இதை விளங்கிக்கொள் ளாவிட்டால், மிக ஆரம்ப அறிவைக்கூடப் பெறமுடியாது?? என்று ஏதோ ஒரு புத்தகத்திற் படித்ததை நீக்கிலஸ் ஞாப கப்படுத்திக்கொண்டான். ஏனெனில், அவனுக்கு கனகலிங் கனின் மெளனநிலையையும், துயர்படிந்த முகத்தையும் பார்க் கப் பார்க்க பொறுமையற்ற நிலையும், சக தொழிலாளர் களின் பொருமைப்படையல்களையும் அடிக்கடி சுவைத்துச்
馨

- 9.8 -
சுவைத்து சீயென்று போய்விட்டது. ஆயினும் அவனற் கன கலிங்கன நெருங்காமல் இருக்கமுடியாது. நண்பர்கள் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கும் நீக்கிலஸ்: எதிரிகளைக் கனகலிங்கனுக்குக் காட்டிக்கொடுக்கும் கடமைப் பாடு உள்ளவன் அல்லவா? அதனுல் நீக்கிலஸ் வலிந்து சென்று கனகலிங்கனுடன் உரையாடிஞன். அதனுல்தான், ஆரம்ப அறிவைப்பெறும் வழியின் தடையை அகற்ற முடி யும் என்பதில் நன்கு அனுபவப்பட்டவன் நீக்கிலஸ்.
* கனகு, ஏன் ஒரு மாதிரி இருக்கிருய்? கொம்மாவிற்கு எப்படி?" ? அப்பிடித்தான் இருக்கு." "சுருக்கமான, துக்ககரமான பதில் கனகலிங்கனின் அடிவயிற்றுக்குள்ளிருந்து கேட்டது.
* பாரியாரிட்டைக் காட்டினதே???
உச நாங்கள் என்னப்பா காசைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டா இருக்கிறம்? ஏதோ புண்ணியவான் வைத்திலிங்கப் பரியாரி தான் பாவத்துக்கிரங்கி மருந்து கொடுத்தார். இழுத்துக் கொண்டு கிடக்குது." -
அவனுடைய கண்கள் கலங்கிச் சிவந்து, மூச்சுகள் ஒன்ருே டொன்று மோதி, தொண்டைக்குள்ளிருந்து அடக்கப்பட்டும் அடங்காமல் போட்டிபோட்டுக் கொண்டு கெம்பியெழுந்து வெளியே விழுந்தது அந்தத் துக்கிகரமான கேவல் ஒலி.
நீக்கிலஸ் தர்மசங்கட நிலையில் தத்தளித்தான். அவனுற் கனகுவிற்கு எப்பிடித் தகுந்த ஆறுதல் வழங்கமுடியும்? கனகுவின் முதுகை வருடிக்கொடுத்துவிட்டு மெதுவாக இடத்தைவிட்டு நகர்ந்தான் நீக்கிலஸ்,
நீக்கிலஸ் இன்னும் தன்னருகிலேயே இருக்கின்ருன் என்ற எண்ணத்திலேயே கனகலிங்கன் நின்றன். ஆணுல் அவனைத் திரும்பிப் பார்க்கவோ தன்னுடைய வேலையிலுள்ள கவ னத்தை முற்ருக ஒதுக்கிப் புலனை வேறுபுறம் திசை திருப் பவோ கனகலிங்கன் முயற்சி செய்யவில்லை. உஹைடில்
பேர்க் மெஷின்" ஓடியபடியே இருக்க சுயகுரலிற் வாய்விட்

Page 50
سی۔ 94 ~=
டுப் பேசினன் அக்குரலொலியை மெஷின் சப்தந்தான் சாப்பிட்டதே தவிர அதைக் கேட்பதற்கு அவனருகில் யாருமில்லை. யார்சரி நின்ருலும் அவர்களுடைய காதிற்கு இக்குரல் விழுந்திருக்கவும் மாட்டாது. * வாத்தியாரிட்டைக் கேட்டன் ஒரு அம்பது ரூபாமாதம்மாதம் பத்து ரூபாவாய்க் கழியுங்கோ எண்டு. அவர் சம்பளமே அறுபது ரூபா எப்பிடி அம்பது ரூபா கேப்பாய் எண்டிருர், நான் என்ன நீக்கிலஸ் இங்கையிருந்து ஒடியா போப்போறன் - எனக்கொரு அம்பது ரூபா தந்தால் அவற்றை காசு குறைஞ்சா போயிடும் நீக்கிலஸ்??? 'றப்பர் சக்கர் ஐந்தாறு பேப்பர்"களைத் தூக்கி ஒரேயடி யாக கிறிப்பர்ஸிடம் பாரம் கொடுக்க ரோலர்ஸ்? அப் பேப்பர்’களை அள்ளிச் சுழட்டி அரைத்துக் கசக்கிப் பிழிந் தெடுத்தது. கனகலிங்கன் சினமடைந்தவனுக மெஷினை" நிறுத்திவிட் டுத் திரும்பிப் பார்த்தான். அப்பொழுதுதான் நீக்கிலஸ் அவ்விடம் இல்லாதது அவனுக்குத் தெரிய வந்தது. தன் னுடைய துயரத்தைக் கேட்பதற்குக்கூட ஒரு இதயம் இல்லை என்று தெரியவந்ததும் அவன் இதயம் வேதனையாற் குப்பென்று அடைபட்டுப்போக, ருேழர்களில் சிக்கிக் கொண்ட பேப்பர்களை எடுத்துத் துப்பரவாக்கினன்.
** நாங்கள் ஒவ்வொரு நாளும் எப்படி அடியடியென்று அடித்துக் குடுக்கிறம் எங்களுக்கும் அரிச்சுப் பொறுக்கித் தான் சம்பளந்தாருர், மெஷின்களிலையும் இருக்கிற 'றிப் பயர்களை'யும் திருத்தாமற் காசெல்லாத்தையும் என்ன செய்யிருர்? ஒரு நாளைக்கு ஒருவணுலை மட்டும் முப்பது முப்பத்தைஞ்சு ரூபா வரையிலை நயம் கிடைக்கும் என்று நீக்கிலஸ் சொல் லுகிருன். அப்பிடியெண்டால் எங்கள் எல்லாராலையும் வாத்தியார் முதலாளிக்கு எவ்வளவு வருமானங் கிடைக் கும்? - அதுதானே அவர் ஊரிலையுள்ள காணிகளையெல் லாம் வாங்கி வீடு வீடுகளாய்க் கட்டிருர், ஏன் தான் இவ் gav Gray GiGas Garnir?
1 ܝܶܙ

- 9.8 - ܐܠܘܨ
வேஜஸ் போர்ட்" சம்பளப்படி எனக்கு இப்ப நூற்றிமுப் பது ரூபாவரையிற் சம்பளங் கிடைக்க வேணுமாமே!- தானிப்ப மூண்டு வருஷமாய் வேலை பார்க்கிறன். வோன வருஷம் தை மாதந் தொடக்கந்தானே அறுபது ரூபா சம்பளந் தரத் தொடங்கினவர் அப்பிடியெண்டால் என்னை எவ்வளவு ஏமாற்றிப் பிழிஞ்சிருக்கிருர்? - என்னை மட்டுமே? எங்களின் ரை இந்தக் கஷ்ரத்தைப் போக்க ஆரிருக்கினம்? ம்ம். இப்ப என்ரை அம்மாவுக்கு ஆமான மருந்து வாங் கிக் கொடுக்கக் கையிலை காசில்லை. என்ரை அம்மா இப்ப சாகிற மனிஷியே?
'அம்மா செத்துவிட்டால்..?? கண்கள் இரண்டும் குளமாகின. தன்னுடைய துயரனைத் தையும் தன் மனத்திற்குள்ளே ஆழப்புதைத்து வேலையில் கவனத்தைச் செலுத்திஞன் கனகு அழுதழுது இருண்ட அவன் கண்களுக்கு, காகிதத்திற் பதிவாகிய அச்சு எழுத் துக்களின் அழகை உற்றுப் பார்த்தும் சரியாகத் தெரிய வில்லை. சரியாகப் பதிவாகாத எழுத்துக்களைப் பதியச்செய்ய வேண் டும் என்ற ஆர்வம். 'றப்பர் சக்கர் சரியாக வேலை செய்தால் "கிறிப்பர்ஸ்’ம் சரியாக வேலை செய்யும், அஞ்சாறு பேப்பர்களில் ஒரே தரத்தில் அச்சுப் பதிவாகி எழுத்துக்கள் தேய்ந்திருக்காதே என்ற சிணுக்கம், எல்லாச் சினங்களுக்கும் துயரங்களுக்குமிடையே ஒடுகின்ற *ஹைடில்பேர்க்மெஷினை" நிற்பாட்ட வேண்டுமேயென் கின்ற எண்ணம்.
எழவேயில்லை. ‘ரிம்பனில்" அந்தப் பழைய எழுத்துக்கள் இருக்கும் இடத் தைக் கண்டு பிடித்து பேப்பர்த் துணிக்கையொட்டி எழுத் துக்களைச் சரிவரப் பதிவாக்க வேண்டுமென்பதே அவனு டைய அப்போதைய பிரச்சனை. அந்தச் சிந்தனைக்குள் இழையோடியது தாயின் அவலநிலை,

Page 51
- 96 -
"அம்மா செத்துவிட்டால்.” தாய் காலமாகிவிட்டால் அவளுடைய உடலைத் தகனஞ் செய்வதற்குச் செப்புக்காசுகூட இல்லாத துரதிஷ்டச்சனிய ஞயிற்றே நான் என்கின்ற இன்னுெரு பலவீனமான எண்ணம்.
இந்தப் போட்டி போட்டெழுகின்ற எண்ண அலைகளுடன் ஒடுகின்ற மெஷினை" நிறுத்த வேண்டுமேயென்ற எண்ணம் தோன்றவே இல்லை.
மெஷின் மூசி மூசி மணிக்கு இரண்டாயிரத்தைத்நுாறு அச் சுப் பதிவு வேகத்துடன் கதறிக்கொண்டோடியது. அதற்குள் அவன் பசைபூசிய காகிதத் துணிக்கையுடன் கையை விட்டான்.
உஐயோ! அம்மா!' ஒரேயொரு அலறல்தான், அதைத் தொடர்ந்து
உ6 ஐயோ கனகு!- கை போயிற்றுது - தூக்குங்கோ! தூக் குங்கோ! - பெரியாஸ் பத்திரிக்குக் கொண்டு போங்கோ
ஐயோ கனகு! - மூச்சு வருகுது - ஐயோ இரத்தம் குள மாய் ஒடுதே! - இனி இவனுக்குக் கையே கிடையாது
இரத்தத்தை எப்பிடி நிப்பாட்டிறது?- பழந்துணியள் கொண்டாங்கோ பழந்துணியள் கொண்டாங்கோ - சமெஷின்" கிறகத்தை நிப்பாட்டுங்கோ - கையே கிடை யாது, கனகு உனக்கு இனிக் கையே கிடையாது - ஐயோ கனகு உனக்கு இனிக் கையே கிடையாது." எல்லாத் தொழிலாளர்களும் குவிந்து ஓலமிட்டார்கள். சீறியடித்திருந்த இரத்தம் மெஷினிற் சில உறுப்புகள், ரிம்பன், எதிரிலிருந்த சுவர் அனைத்திலும் சோகச்சித்திரம் வரைந்திருந்தது. அவன் விழுந்து கிடந்த இடத்தில் இரத் தம் குளமாக நின்றது.
நீக்கிலஸ் துடிதுடியாய்த் துடித்து அழுதான்டு வைரம் பாய்ந்த அவனுடைய நெஞ்சம் கூட உருகிக் கசிந்தது,
y
轉=-

- 97 =
பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்ற கனகுவின் கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டது. இவ்வளவு சம்பவத்துக்கும் சுந்தரலிங்க வாத்தியார் முத லாளி அச்சகத்தில் இருக்கவில்ல்ை, ள்ங்கோ கேள்விப்பட்டு அலறி அடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்த் தலை யிற் கையுடன் வீடு திரும்பினர். இனி நஷ்டஈடு அது இது என்று எத்தனை செலவு வருமோ என்ற தலையிடி அவருக்கு, அவருக்கு வழிவகுத்துக் கொடுக்க நெருங்கி வந்து நின்முன் தங்கவேலு.
கனகுவின் தமக்கையுடன் தங்கையும் விஷயம் அறிந்து கதறுகதறென்று கதறினர்கள். கனகம்மா ஆச்சியும் அண்டை அயல்வீட்டாரும் ஏதோ தேறுதல் சொன்னர்கள். ஆணுல், இவையெல்லாம் தாயென்ற அன்புருவத்தின் செவிகளில் ஏறத்தக்க நிலையில் இல்லை. எல்லோரும் பால் பருக்கத் தயாராகும் நிலையிற் பேச்சிழந்து, பூசல் விழுந்த விழி யோடு புத்தியிழந்து, காதின் கூர்மையிழந்து அந்தச் சந் தனக்கட்டை கிடந்தது. இவர்களை உறவினர்கள் என்று கொண்டாடத்தக்க உறவி னர்கள் எவரும் இல்லை. சரிதான். இவர்களை உறவுகொண்டாடினல், நாங்களும் எங்காவது நல்ல சந்தியாகப் பார்த்து உட்கார்ந்து கையேந்த வேண்டியதுதான் என்று ஒதுங்கி விடுபவர்கள் மறந்தும் அந்த வீட்டுப்பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள். ஏழைகளுக்கு ஏழைகள்தான் உதவி செய்தார்கள். ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஒன்றும் இல்லாதவர்கள்தான் உதவி செய்தார்கள்! எப்படியான உதவி - அதுதான் வேடிக்கை! கனகலிங்கம் கையிழந்த நான்காவது நாள் - கனகலிங்கத் தின் வீடுதேடி ஒரு தந்தி பறந்துவந்தது. கனகலிங்கத்தின் தமக்கை புளியங்கொட்டைத் தமிழெழுத்திற் கையொப்ப மிட்டுத் தந்தியைப் பெற்றுக்கொண்டு முழித்தாள். சில கணந்தான். அந்தக் குமர்ப்பெட்டை தன்னந்தனியே வைத் திலிங்கப் பரிபாரி வீட்டை ஒடிஞள்.

Page 52
- 98 -
தந்தியைப் படித்த வைத்திலிங்கப் பரியாரி தலையிற் கையை வைத்துக்கொண்டு வெறும் நிலத்தில் உட்கார்ந்துவிட்டார். அந்தச் செய்தியை எப்படித் தெரியப்படுத்துவதென்று அவ ருக்குத் தெரியவில்லை.
"அடே பரமேஸ்வரா!. இரத்தக் குறைவால். செத்துப்.”
* ஐயோ தம்பி கனகு. எங்களை ஏமாத்திப் போட்டா யேடா- எங்களை நிர்க்கதியாய் விட்டிட்டுப் போயிட்டி யேடா - நாங்கள் என்ன செய்யிறது- நாங்கள் என்ன செய் -யிறது -நாங்களும் உன்னுேடை வாறம்- எங்களையும் கூட்டிக்கொண்டு போ!' தலைதலையென்று அடித்தாள். தலையெல்லாம் மண்ணேவாரிப் போட்டாள். முற்றத்தில் உருண்டாள் - புரண்டான். ஆவேசம் வந்தவள்போல் வீட்டை நோக்கி ஓடினுள். வைத் திலிங்கப்பரியாரியும் தொடர்ந்து ஒடிஞர். இவளுடைய அலறலைக் கேட்டு அயற் சனம் எல்லாம் திரண்டு நின்று விழித்தது! இவளுடைய அலறலுடன் தங்கையும் சேர்ந்துஆகவேண்டியதை அயலார்தான் கவனிக்கவேண்டும் வைத் திலிங்கப் பரிபாரியார்தான் அந்தக் கூட்டத்திற்குள் பெரி யவர். அவர் தந்தியுடனும் கனகலிங்கத்தின் கூப்பனுட னும் சுந்தரலிங்க வாத்தியார் முதலாளி வீட்டை ஓடினர். சுந்தரலிங்க வாத்தியார் முதலாளி தங்கவேலுவின் துணை யோடு வைத்திலிங்கப்பரியாரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஆஸ்பத்திரிக்குப்போய், ஒற்றைக் கையிழந்த கனகலிங்க னின் சடலத்தை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தார் கள். அச்சகத் தொழிலாளர்கள் அனைவரும் அவனுடைய வீட்டிற்குப் படையெடுத்து வந்திருந்தார்கள். யாரோ இரு வர் கனகலிங்கனின் சடலத்திற்கு அருகில் இருந்து தேவா ரம் படித்தார்கள்? குத்துவிளக்கொன்று சடலத்தின் தலை மாட்டருகில் அஞ்சலி செய்தொளிர்ந்தது. சடலத்தின் கழுத்தில் இரண்டு மாலைகள் சோர்ந்து கிடந்தன! யாரு டைய காணிக்கையோ? -
கனகலிங்கனின் சகோதரியரை ஆற்றுவதற்கோ, தேற்றுவ தற்கோ எவராலும் முடியவில்லை. இந்தச் சந்தடிகளுக்

- 99 -
கிடையில் எல்லோரையும் விலக்கிவிட்டுக் கனகலிங்கத்தின் மூத்த சகோதரியை நெருங்கி வந்து கொண்டிருந்தான் தங்கவேலு. அவனுடைய கையில் ஒரு காகிதம் இருந்தது. கனகலிங்கத்தின் மூத்த சகோதரி கண்களை நீர் திரையிட்டு மறைக்க, அழுதழுதுகொண்டே முத்திரையிற் கையொப்ப மிட்டாள்.
சுந்தரலிங்க வாத்தியாரி முதலாளிதான் செத்தவீட்டுச் செலவனைத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டார். நீக்கிலஸ் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு எல்லோ ராலும் ஒதுக்கப்பட்டு ஒரு பூவரச மர நிழலில் உள்ளம் வெதும்பியபடி நின்றன். “பைண்டர் கிழவன் அவனைக் கவனித்துவிட்டு மெல்ல அவன் அருகே நெருங்கினன், *நீக்கிலஸ் இப்பிடித்தானப்பா ஒரு நாளைக்கி எங்களுக்கும்." நீக்கிலஸ் பேசாமல் நின் முன்,
இந்தக் களேபுளேக்கை தங்கவேலு செய்த காரியத்தைக் கேள்விப்பட்டியே நீக்கிலஸ்?" என்ன எனும் தோரணையில் சபைண்டர்' கிழவனைப் பார்த்தான் நீக்கிலஸ். சேகனகலிங்கனின் ரை தமக்கையிற்றைத் தானும் வைத்தி லிங்கப்பரியாரியாரும் கையெழுத்துப்போட்ட காகிதத்திற் கையெழுத்து வாங்கி விட்டாணும்." நீக்கிலஸ் கொதித்தெழுந்தான்.
சஆர் சொன்னது?" ச எல்லாம் எங்களோடை வேலை செய்யிறவங்கள் தானபீபா" "அயோக்கிய ராஸ்கள் பொறு இண்டைக்கி அவனைச் சுடலையிக்கை வைச்சுப் படிப்பீக்கிறன்!" எல்லாத் தொழிலாளர்களும் குசுகுசுத்துக் கதைத்துக் கறு விக் கொண்டார்கள். அவர்கள் எதிரியைக் கண்டு பிடித்து விட்டார்கள். யார் தங்களுடைய ஆதரவாளர்கள் என் பதை நன்கு நிச்சயப்படுத்திக் கொண்டனர்.

Page 53
سے 100-چے
தனக்குக் கொள்ளிவைக்க ஒருவன் இருக்கிருன் என அன் னப்பிள்ளை எண்ணிப் பெருமைப்பட்ட புத்திரன் தன் இறுதியாத்திரையை தனக்கே கொள்ளிவைப்பார் யாருமற்ற நிலையில் மேற்கொண்டு விட்டான். சூரியன் ஓடிப்போய் எங்கோ ஒரு மூலையிற் பதுங்கிவிட்டான். கருமுகிற் கூட்டம் நிலவையும் நட்சத்திரங்களையும் மூடி மொய்த்துவிட்டன. கோம்பயன் மணல் மயானத்தை மூடி வளர்ந்திருந்த ஆல், அரசு, வேம்பு போன்ற பல மரங்களின் பசிய இலைகள் எல்லாம் கறுத்துச் சோர்ந்து விழுந்திருந்தன. காற்று மயானச் சோலையைத் தழுவி அழுது புலம்பி வீசியது. பிரேதத்தை மூடி எழுந்த தீயில் அச்சுத் தொழிலாளர் களின் மூச்சுக்கள் உரசி மோதித் தீ வானை அளாவியது. தீயில் வேகும் சந்தனக்கட்டையின் வாசனை, மயானத்தின் சோலைகளனைத்தையும் சந்தன மணங்கமழச் செய்தது. அந்த அச்சகத்திற் பணியாற்றிய பன்னிரண்டு பேரில் எட் டுப் பேர் தீயில் வேகும் ஒருவனுடைய வாழ்வைத் தீர்மா னித்தவனைத் தகுந்த பதில் சொல்லவைப்பதெனத் தீர்மா னித்துக் கொண்டனர். சோகத்தின் உச்சநிலையை எட்டிய காற்றின் கோரத்தாக்கு தலிற் சடலத்தை மூடிய தீச்சுவாலை முளாசிப் பற்றி எரிந் திதி 3 எண்மர் தவிர்ந்த நால்வரில், மூவர் சில நாட்களுக்கு வேலைக் குப் போவதைத் தவிர்ப்ப்தே சிறப்பெனத் தீர்மானித்தனர். ஒருவன்தான் தீயின் மென்மையைத் தொட்டுச் சுவைக்கி ருனே!
* பைண்டர் கிழவன் நீக்கிலளிடம் சொன்னன்: "செத்த வீட்டுச்செலவு இருநூறு ரூபாய். இன்னும் ஒரு அம்பது ரூபா கொடுத்தால் சனியன் தொலைஞ்சது ஐயா" - என்று தங்கவேலு முதலாளியாரிட்டைச் சொன்னதைக்

سیف-1 0 1 ----
கேட்டன் நீக்கிலஸ், நஷ்டஈடு கொடுக்கிறதாய் இருந்தால் எவ்வளவு வரும்?" *நஷ்டஈடு, எதுக்கு நஷ்டஈடு?.கையுக்கா, உடலுக்கா" உயிருக்கா, அச்சுக்குடத்தைக் குடுத்தாலும் காணுதேயடா அண்னை!"
கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, 'தாலிக்குள்ளும் வேலிக்கொள்ளும் பெண்களைச் சிறைப்பி டித்து வைத்திருக்கும் சமுதாயம், கனகலிங்கத்தின் சகோ
வழிதான் என்ன??? "ஐயோ பாவங்கள். அதுகளை இருநூற்றம்பது ரூபாவோடை ஏமாத்தப் பாக்கிருன்களே நீக்கிலஸ்." "இனிமேற் பொறுக்கேலாது, இந்தக் கொடுமை இன்னும் வளரக்கூடாது. இதுக்கெல்லாம் கால் தங்கவேலு, அவனுக் குத்தான் படிப்பிக்கவேணும்." தங்கவேலு குற்றுயிரும் குலையுயிருமாக ஆஸ்பத்திரியிற் கிடக்கிருனம், ஜயந்தி அச்சகத்தைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரமுயன்ற அச்சுத் தொழிலாளர்களில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கிருர்களாம். ஆணுல், நிச்சயமாக அதற்குள் நீக்கிலஸ் இல்லை. அவன் சுந்தரலிங்க வாத்தியார் முதலாளி எங்கு ஒளித்திருந்தாலும் அவரைத் தேடிக் கண்டு பிடித்து ஒரு கேள்வி-ஒரே கேள்வி மட்டும் கேட்டுவிட வேண்டுமென்று ஆசைப்படுகிருனென ஊரிற் பேசிக்கொள்
கிருர்கள்.
7 7 9 1 كم 3 كية 6

Page 54
LITULÎ
86தனக்கும் எனக்கும் இனி ஒத்துவராது, நீ உன்ரை அலுவ லைப் பார், நான் என்ரை அலுவலைப் பாக்கிறன்.'
உப்பிடிச் சொன்னுல் நான் மற்றப் பொம் ! وہ ۔ ممہ 6p ! ہمہ .....p@ ** பிளையஸ் மாதிரிப் பயந்திடுவன் எண்டு நினைக்காதையும். எனக்கு என்ரை அலுவலை எப்பிடிப் பார்க்கிறது எண்டு தெரி
யும், இனி எனக்கு நீர் புத்தி சொல்ல வேண்டாம். உமக்கும்
எனக்கும் இனிக் கதையில்லே. வெளியிலை போம்??
பூரீஹரனுக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை அவனல் அடக்கமுடிய வில்லை. தன்னுடைய மனைவி தன்னைத் தூக்கி எறிந்து பேசி விட்டாளே என்ற ஆத்திரம் அவனைக் கொடூர கோபத்திற்கு ஆளாக்கியது. அவன் வாயில் வந்தபடியெல்லாம் அவளைக் கேவலமாகப்பேசி, காறித் துப்பிக் கேலி செய்துவிட்டு வெளி யேறினன். வினுேதினி படாரேனக் கதவை அடித்துப் பூட்டித் தனது ஆத் திரத்தைக்காட்டிவிட்டு அறையினுள்ளே புகுந்துகொண்டாள். இருட்டியதுகூடத் தெரியாது. வீட்டிற்கு விளக்கேற்ற வேண் டும் என்கின்ற எண்ணம்கூட அவளுக்கு ஏற்படவில்லை. வீட்டு மூலையிற் குந்தியபடி கண்ணை மூடிக்கொண்டிருந்தாள். அந்த வீடு அவளுடையது. அவளுடைய சீதன வீடு, நகைகள் கையில் இருக்கின்ற ஒரு சோடிக் காப்பும் தாலிக்கொடியுந் தான். சேலை சட்டைகள் ஒரளவு இருந்தது. அது தவிர அவ ளிடம் வேறு சொத்தோ, பணமோ கிடையாது.
அவளுடைய தாய்க்கிழவி வீட்டிற்கு விளக்கேற்றினுள், கன
வன் மனைவிக்கிடையில் ஆயிரம் வரும் ஆயிரம் போகும் எனக்கேன் வம்பு எனக் கிழவி ஒதுங்கி இருந்து கொண்டாள். இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கு எதுவென அவளுக்குத் தெரியாது. *
*மோனை, ஏன் இப்படி இருக்கிருய்? இரண்டுபேரும் இப்ப கொஞ்சநாளாய் நாய்கடி பூனைகடியிலை நிக்கிறியள். என்
枋
*

---- تا 10 --سس۔
னண்டு கேட்டாலும் சொல்லுருயில்லை. உது குடும்பத்துக்கு அழகே ? இரண்டுபேரிலை ஒராளாதல் ஒரிச்சரிச்சுப் போக Ga16.7 Lirr (BLD'?' "
அவள் தாயை முறைத்துப் பார்த்தாள். 'இப்ப அவன் எங்கை போயிற்றன்?' வஞ்சகமில்லாமற் கிழவி கேட்டாள்.
"எணேய், இப்ப என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருக்கவிடு. எனக்குக் கரைச்சல் குடுத்தியே எண்டால் நான் என்ன செய்வன் தெரியுமே?” பாவம் கிழவி; பேசாமற்போய் விட்டாள்.
தாய் போனபிறகு அவள் கண்ணிலிருந்து வடிந்த கண்ணி ருக்கு அணைபோட முடியாமல் முழங்கால்களுக்குள் தலையைச் சொருகியபடி இருந்தாள்.
அவன் கல்யாணம் செய்து நாலைந்து மாதங்கள் ஒழுங்கா கத்தான் இருந்தான். அவனுடைய உழைப்பிற் குடும்பம் சந்தோஷமாகத்தான் நடந்தது. கிட்டத்தட்ட இப்பொழுது மூன்று நாலு மாதங்களுக்குள் அவளுடைய நகையிற் சங்கிலி, காப்பு, நெக்லெஸ், றிஸ்ற்வாச்' எல்லாவற்றையும் வாங்கி விற்ருனே அடைவு வைத்தானுே தெரியாது. ஏன் செய்தான் என்பதற்குக் காரணம் இல்லை. அதைக்கேட்கப் போகும் போது ஏற்பட்ட கைகலப்புக்களை அவள் வெளியிற் காட் டாமல்தான் இருந்து வந்தாள். இப்பொழுது அவன் கொடி யையே கேட்கின்ற அளவுக்குத் துணிந்தபின் அ வ ளா ல் அவனை மன்னிக்கமுடியவில்லை.
உழைக்கின்ற உழைப்பு வீடுவந்து சேருவதுமில்லை. இருக் கின்ற பொருட்களும் அழிந்து கொண்டு போவதாயின் பிறகு குடும்பத்தின் கதி என்ன? அந்தச் சிந்தனையில்லாமற் செயற் படுகின்றவன் தருகின்ற சீர்கேடுகளோடை சீரழியிறநிலும் பார்க்கத் தனிய வாழ்ந்தாலும் நிம்மதியோடிருந்து செத்தேன் என்கின்ற பேராவது இருக்கட்டும் என அவள் நினைத்தாள். அதனுல்தான் அவனை அவள் வீட்டைவிட்டு வெளியேற்றி
ஞள. -—

Page 55
--س۔ 104 -۔
**ளவ்வளவு தூரம் அவள் அவசரப்பட்டிட்டாள்? அந்த ஸ்ரூ டியோ கமராவையும், "அவுட்டோர் கமரா"வையும் வேண் டீற்ருல் நான் சொந்தமாத் தொழிலை நடத்தலாம் எண்டு பார்த்தன். நான் எடுக்கிற சம்பளத்திலை இருநூறு ரூபாவை யும் அவளிட்டைக் கொடுத்திட்டு, ஐம்பது ரூபாவை அம் மாட்டைக் கொடுத்தால் எப்பிடி அம்மா வேலையில்லாமல் இருக்கிற தம்பிமார் இரண்டுபேரையும் தங்கச்சியையும் காப்பாற்றி தானுஞ் சீவிப்பாள். அவளுக்குத் தெரியாமல் எல்லா அடுக்குகளையும் செய்து போட்டு ஸ்ரூடியோவைத் திறந்திட்டால் அவளுடைய நகை களைத் திருப்பிறதோடை, எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த் துக்கொண்டு நிம்மதியாய் வாழலாம் என்ரை அதிகாரத்திலே எல்லாரையும் அடக்கி அமைச்சு ஒரு ஒழுங்கான வழியிலை குடும்பத்தை நடத்தலாம் எண்டெல்லோ நினைச்சன். அவளிட்டை விசயத்தை சொல்லாமல் விட்டது பிழைதான். சொன்னுலும் அவள் பிறகு என்ரை சகோதரங்களுக்கு முன் ஞலை தான் ஒரு முதலாளி மாதிரியெல்லோ அதிகாரம் பண் ணுவாள். சரி இப்ப அவள், "டிவோஸ்கேஸ்" போட்டால் நான் என்ன செய்கிறது? - சீ அப்படிச் செய்யமாட்டாள். இனி அவ ளிட்டை உண்மையைச் சொல்லுவம். அது சரி, ஆர் சொல்லிறது ? அவள் ஒரு பொம்பிள்ளையன் மாதிரியே நடக்கிழுள். படிச்ச கெறுக்கு அவளுக்கு சரியான திமிரையெல்லோ குடுத்திருக்கு. பார்ப்பம்-பார்ப்பம் அவளின் ரை செருக்கு எவ்வளவுக்குப் போகுதெண்டு பாப்பம் ?
*மச்சான், ஒரு புதுச்சரக்கு ஒண்டு கையிலை மரக்கறிக் கூடையோடை அங்கையும் இங்கையுமாய் அலைஞ்சுகொண் டிருக்கு-என்ன சங்கதி? " ஒரு "ராக்சி ட்ரைவர் அந்தச் சோடாக்கடைக்காரனிடம் சொன்னன். "எங்கை மச்சான்? எங்கை.அப்ஐடியெண்டா அதை ஒரு மாதிரித் தட்டிப் பாரன்."
منيرة

- 105 -
"அவசரப்படாதை - அ வ ள் இந்தப் பக்கத்தாலைதான் வாருள்." வினுேதினி தனது கணவனின் நடத்தையிற் சந்தேகப்பட் டாள். ஆகையால், இனி அவன் உழைத்து ஒழுங்கான வாழ்வு நடாத்தக்கூடியவனல்ல; நாங்கள் வாழ்க்கையிலை சந்தோஷத்தைக் காணுவிட்டாலும், அரை வயிறு, கால் வயிறை நிரப்புவதற்காவது உழைக்கவேண்டுமென எண்ணி, புடவைக் கடையளிலை வேலை கேட்டு அலைந்துதிரிந்த அவள், அந்தச் சோடாக் கடைக்கு வந்தாள். "இந்தக் கூடையை ஒருக்கால் வைச்சிருக்கிறியளே, ஒரு இடத்தை போயிற்று வந்து எடுக்கிறன்?" அவள், சோடாக் கடைக்காரனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது. "டாக்சி ட்ரைவருக்குக் கண்ணடித்துவிட்டுச் சொன்னுன்
* வைச்சிருக்கத்தானே ஒ. அதுக்கென்ன இங்கை கொண் டrங்கோ "
அவள் நினைத்த உடன் வேலைகிடைக்குமாக இருந்தால், இலங் கையிற் குடும்பப் பிரச்சினைகளிற் பல தோன்றவே இடமில் லையே. அவள் அலைந்து அலுத்துக் களைப்புடன் வந்தாள், அன்று அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள் சமூக த் தி ன் போலிக் கெளரவத் திரையைக் கிழித்துத் தன் சுயரூபத்தைக் காட்டி, வேதனையைக் கொடுத்திருந்தது. தல்லவர்களே சமூகத்தில் இல்லை என்கின்ற அபிப்பிராயத்துடன் குமுறும் உள்ளத்துடன் சோடாக் கடைக்கு வந்தாள் , - * ஒரு "ஒரேஞ்ச் கிரஸ்" ஒண்டு தாங்கோ!' ''g. . . . . . g . . . . . . ஏன் வெளியிலை நிக்கிறியள். உள்ளுக்குப் போய் கதிரையிலை இருங்கோவன்." கடைக்காரன் சொன் னன், அவளுக்கும் அலுப்பாக இருந்தது. உள்ளே கண்ணுடி அலுமாரிக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் ஒதுங்கி இருந் தாள். அவன் சோடாவை உடைத்துக் "கிளாஸ்" ஒன்றையும் கொண்டுவந்து வைத்தான். அவள் சோடாவை ஊற்றிக் குடித்து விட்டு. "பேரிஸிலிருந்து காசை எடுத்தாள்.
14

Page 56
-- 106) سے
அந்த சோடாக் கடைக்கு எதிர்ப்புறத்தில், தெருவின் மறு கரையில்தான் அவன் 'ஸ்ரூடியோ"விற்குக் கடைவாடைக்கு எடுத்திருந்தான். கடையுள் "டாகிரூம்" அமைப்பதற்கும் , "சிற்ரிங்? எடுப்பதற்குரிய பாக்ரவுண்ட்சீன்ஸ்" வேலைகள் எல்லாம் செய்துகொண்டிருந்தான். உள்ளே வேலைகாரர்கள் தொடர்ந்து வேலே செய்துகொண்டிருந்தார்கள். அவன் ஒரு
"சிகரட்" பற்றவைக்கும் நோக்குட்ன் அந்தச் சோடாக் கடைக்கு வந்தான்.
- as ser
*சிச்சி சோடாக்கேன் காசு உங்களின் ரை அன்பு 9.
"படார்" யாருக்கோ அடிவிழும் சத்தம் கேட்டது, துப் பாக்கியிவிருந்து பாய்ந்த குண்டுபோல் வினுேதினி வெளியில் வந்தாள். வந்தவளுக்கு பூரீஹரனைக் கண்டதும் ஆத்திரம் அழு கையாக மாறியது. சோடாக் கடைக்காரன் வெளியில் வர வேயில்லை. பூரீஹரனுக்கு மனம் பணிபோற் குளிர்ந்தது. அவ ளைப் பொது இடம் என்கின்ற எண்ணமே இன்றி அனைத் துக்கொண்டபடி "ஸ்ரூடியோவிற்குச் செல்ல திரும்பினன்.
அவள் "என்ரை மரக்கறிக்கூடையை இங்கைதான் வைச் சனுன்."
"ஹலோ, அந்தக் கூடையைத் தாரும்' அவன் கூடையை வாங்கிக்கொண்டு, அவளுடன் ஸ்ரூடியோவை நோக்கி நடந் தான். N
வினுேதினி கணவன்மாருடைய கொடுமையாற் சீரழிந்த பெண்களைப் பார்த்து ‘வாழத் தெரியாததுகள் . அவன் குடும்பத்துக்கு ஆகாதவன் எண்டால், பிறகேன் அவனேடை இருந்தவளவை ? பிள்ளைப்பெறவே? அதுதானே ஆம்பிளை யள் பெண்டுகளைப் பிள்ளைப் பெறிற மெஷின்" எண்டு நினைக்கிறவங்கள்?" எனப் புருஷனுேடையே பெண்களுடைய உரிமைபற்றி விவாதிப்பவள் இந்தச் சமுதாயத்தில் பெண் ணுெருத்தி பாதுகாப்பாக வாழ்வதற்கு உழைப்பு மட்டுமல்ல, பெண்களின் சமுதாய முக்கியத்துவத்தை உணர்ந்த நல்ல ஆண்மகனின் துணையும் வேண்டுமெனக் கருதினுள்,

i 107 =
தனக்கேற்படவிருந்த அவமானத்திலிருந்து மீண்ட அவள் பெண்களுக்குரிய கண்ணிருடன் பூரீஹரனுக்கு நடந்த விஷயங் களைப் படபடவெனக்கூறி, இரண்டுகைகளையும் குவித்து, அவ னது நெஞ் சி ல் மடமடவென க் குத்தினுள். அவன் வேடிக்கை பார்க்கும் வழிப்போக்கர்களைக் கூடச் சிறிதும் பொருட்படுத்தாது, செல்லமாக அவளை இழுத்து, அவளைத் தனது நெஞ்சிற் குத்தவிடாது இறுக்கமாக அனைத்துக்
கொண்டான்.
பூரீஹரனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் கிறங்க, உடலெல்லாம்
புல்லரித்தது. அவன் நினைத் தான்: ‘வாழ்க்கை யெண்டிற பாரத்தைச் சுமக்கிறதுக்கு இரண்டு&ேரும் ஒப்பந்தஞ் செய் திட்டால் இரண்டு பக்கத்திலையும் இறுக்கமான உண்  ைம இருக்கவேணும். இப்ப இவளுக்கு ஏதாவது அவன் - நான் ஏற்றுக்கொள்ளுவன் ஏனெண்டால் சொல்லுத் தவருதவள். ஒமோம், சொற்றிறம்பா மைதானே கற்பு
அவளிட்டைப் படிச்ச செருக்கும் கர்வமும் இருக்கலாம் ஆணுல், மற்ற ஆக்களிட்டைக் கையேந்த வேணுமெண்டோ பரிசிகெட்ட சீவியஞ்சீவிக்க வேணுமெண்டோ எண்ணேல்லே? கஷ்ரப்பட்டு உழைச்சிச் சீவிக்கவேணும் எண்டு வெளிக்கிட் டாளே . இப்பிடி யெல்லோ இந்தக் காலத்துப் பொம்பிளை வள் வெளிக்கிடவேணும். - அதுசரி, அதுக்கும் வேலையு மெல்லோ வேணும்." ܠ
மனைவியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவான் போல் இருந்தது. அவர்கள் எவ்வளவு சந்தோஷமாகச் சிரிக்கிருர்கள்.
*
976

Page 57
நானும் எழுதினேன்!
(up*9అg காலத்திலே, ஏறக்குறையப் பதினன்காண்டுகளுக்கு
முன்னே, தமிழின்பன் எனும் புனைபெயரில் "பாவமும் பழியும்" எனும் எனது சிறுகதை புதினம் பத்திரிகையில் வெளிவர எவரும் அறியா மாபெரும் இலக்கிய மேதையாக, கமத்தொழில்
விளக்கத்தில் ஒரு கட்டுரையும் கழகப் பத்திரிகைகள் சிலவற்றிற்
சில கவிதைகளும் எழுதிப் பெருங்கவிஞனுனேன். "வசந்தம் மாதசஞ்சிகையிற் பலரின் இதயத்தைக் கவர்ந்த 'என்று வரும் . கவிதையொன்றினை எழுதி, சின்னக் கவிஞஞனேன். 1967-ம் ஆண்டளவிலே, கொழும்பு-6, இராசா அச்சக அதிபர் திரு. ந. இராசநாயகம் அவர்களால் எனது என்று வரும். கவி தைத் தொகுப்பு வெளியிடப்பட்டு, மாபெரும் தோல்வி கண்டது.
1971-ம் ஆண்டு இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவையினர் "கற்பகம்’ மாதசஞ்சிகையின் வெளியீட்டாளராக எனப் பணித்து, ஆசிரியர் குழுவிலும் என அறிமுகஞ் செய்தார்கள். மூன்றித ழுடன் கற்பகம் மூச்சை மறந்தாள். இன்று ‘சிலந்தி வயலுக்கு நீங்கள் பசளையாக, முகப்போவியத்து டன் மூலைக்குள் வீசியிருக்கலாம்--- அவர்களுக்கு இப்பின்னுரையை நான் எழுதவில்லே. சிலர் தாள்களைத் தட்டியிருக்கலாம்; சினந்திருக்கலாம்; இழித் துரைத்திருக்கலாம்; கசிந்திருக்கலாம்; அப்படியே ஏற்றெனைப் பாராட்டியிருக்கலாம். எதுவாயிருப்பினும், அருமையானவர்களே, என்னுடைய படையல் உங்களைச் சிந்திக்க வைத்திருக்கும் என எண் ணுகிறேன். அதன்மூலம் எனதாக்கத்திற் கண்டுபிடித்த பிழைக ளுடன், ஏதாவது நல்ல அம்சங்களிலும் தடக்குப்பட்டிருந்தால், யாவற்றையும் ஆய்ந்து, இந்த எழுத்தாளக்குஞ்சும் எழுதலாம், என, லைசென்ஸ்" தாருங்கள். நானும் எழுகிறேன் !
இலங்கையிலை உள்ள வங்களுக்கு ஏனிந்த வேலை ? நல்லா நட்டப் பட்டாத்தான். இவங்கள் படிப்பாங்கள்" என்பீர்களானல், இத் தொகுதியை வெளியிட்ட அனுபவத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்
முத்து இராசரத்தினம்
幌
~
ν


Page 58
κη // *


Page 59
- fག་
අgif| ග්‍රිෆිඩ් ග්‍රිකුණි, Gar கொண்ட பல இ இலக்கியவானில் சுடர்விட்டு ஒரு வகையில் இவர்கள் தம. துக் கொண்டே வருகிருர்கள் இைராகரத்தினமும் ஒருவர்
கொண்ட கருத்தை எவருக் தனித்துவத்தை நிலைநாட்டுப நாட்களில் இலக்கிய அன்பர் கடையிலும் வெள்ளவத்தை இடங்களிலும் பல்வேறு கவி செய்யும் கூட்டங்களில் தவ நான்கு கதைகளைக் கழக ந தி இதி விமர்சித்தார்கள். எ6 சிலந்தி வயல்" கதையையே கவும் வைத்துள்ளார்.
ாமன்கடை ராஜா அக் உழைப்பாளியாக நான் கண் உழைத்துக்கொண்டே இருக் பீட்டாளருடன் மிகவும் உத
நான் மஹா புருஷனில்3 சிகள் தெய்வீகமானதல்ல. த இாக, உங்களால் உருவாக் முகவுரையில் குறிப்பிடுவதில் மையை நாம் உணரமுடியும் போடுவது என்பது ஒரு பா நஷ்டமில்லாமல் செய்து அவ எதிர்காலத்தில் அவனது மு: முடியும் இதனை நாம் முற் இலக்கிய வளர்ச்சிக்கு எம் என்பதே எனது தாழ்மைய
குன்ருத உற்சாகமும் சுபாவமும் கொண்ட அருை இந்த நூலின் மூலம் சுட்ர்
கனிவான வாழ்த்துக்கள்.
நெல்லிய, 翼 ,z ר கரவெட் . * 30-06
வை- يطم ހ)
ԹԺւլգարի அச்சகம், 432, SITT,
 

۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ *,) 一て *
ܕ ܐ .
܂ ܬܐ
ਜ லக்கிய நண்பர்கள் இன்று ஈழத்து ப் பிரகாசிக்கின்ருர்கள். ஏதோ து திறமைகளை வெளிக்காண்பித் ತೌ? நண்பர் முத்து ܘ܂ மிஆ வும் துடிப்பானவர். தாம் சொல்லித் தமது வர் கழகத்தை நாம் ஆரம்பித்த திரு. அ. குருசாமி அவர்களின் க் கடற்கரையிலும் வெவ்வேறு டங்களுக்கு மத்தியில் ஏற்பாடு து கலந்து கொள்பவர். இவரது ண்பர்கள் 1973 மே மாதம் 9-ம் ாக்கு மிகவும் பிடித்துப்போன இவர் தமது தொகுப்பின் பெயரா
சகத்தில் இவரை ஒரு சிறந்த டேன். இன்றும் அச்சுக்கலையில் கிருர் கற்பகம்" சஞ்சிகை வெளி பியாக இருந்தார்.
65,66 உங்களுடன் சேர்ந்து வாழ்வதற் கப்பட்டது" என்று இவர் தமது மிருந்தே இவரது இலக்கிய நேர் ஈழத்தில் எழுத்தாளன் புத்தகம் ரிய பிரச்சனைதான் முதலுக்கே னே வாழவைப்பதன் மூலம்தான் பற்சிகளுக்கு உரமூட்டி வளர்க்க றக உணர்ந்து ஆரோக்கியமான மாலானதைச் செய்ய வேண்டும் ான கோரிக்கை
துடிப்பும் பழகுவதற்கு இனிய நண்பர் முத்து இராசரத்தினம் ஒளிர எனது இதயக்
一7°
-76 και
. ܛ
ங்கேசன்துறை விதி யாழ்ப்புனம்.