கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீபதோரணம்

Page 1


Page 2


Page 3

தீப தோர ண ம் (சிறுகதைத் தொகுதி)

Page 4
தீபதோரணம் (சிறுகதைத் தொகுதி) ஆசிரியர்: அ. பாலமனுேகரன் முதலாவது பதிப்பு: 1977 ஜூலே உரிமை: ' . அச்சுப்பதிவு: - திருக்கணித அச்சகழ்
மட்டுவில், சாவகச்சேரி.
' ବର୍ଣ୍ଣ ଅ}; ரூபா 3-75
THEEPATHoRANAM'.) (Collection of Short Stories) .
by: (/).
 
 
 
 
 
 

ஆசிரியர் முன்னுரை
1968-ம் ஆண்டு நான் மூதூரில் ஆசிரியப் பணியாற்றிய
காலத்திற்றன் பிரபல எழுத்தாளர் திரு. வ. அ. இராச ரத்தினம் அவர்களின் புரிச்சயத்தின் பலனுக எழுத்
துத் துறையில் பிரவேசித்தேன். சிந்தாமணி ஆசிரிழ்ர்
s
飙。翡
திரு. இராஜ அரியரத்தினம் அவர்கள் அன்புடன் தம்து :
வார் இதழில் எனது கதைகட்குக் களம் அ  ைமத் து உதவினர்,
அதைத் தொடர்ந்து வீரகேசரி தாபனத்தாரின் நாவல் வெளியீட்டு இலக்கியப் பணி மூலமாக என்து முத்ல் நாவலான "நிலக்கிளி பிரசுரிக்கப்பட்டது. அவர்கள் வெளி யிட்ட எனது இரண்ட்ாவது நாவலான “குமாரபுரமும் என் னைப் பெருந்தொகையான வாசகர்கட்கு அறிமுக ப் படுத்தியது.
ஆரம்ப காலந்தொட்டு இன்றுவரை சிந்தாமணி, வீர கேசரி, தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவை மூலமாக வெளியாகிய எனது பல சிறுகதைகளுள் பல்வேறு சுவை பயக்கும் பதினெரு கதைகளை இந்தத் தொகுதியில் தொகுத்துள்ளேன்.
இருபத்தைந்து வயதில் ஆரம்பித்த எழுத்துப் பணியின் தரமும் தன்மையும், இன்று முப்பத்தைந்து வரை அந்தந்த வயதுகட்கும், பெற்ற அனுபவத்திற்கும் அமைய இந்தக்
கதைகளில் பிரதிபலிக்கின்றன.
" என்னையும் எழுத்தாளனுக்கிய மேற்கூறிய அன்பர்களுக் கும், தாபனங்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றியைப் பகிரங்கமாக்த் தெரிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த விழைகிறேன்.

Page 5
மேலும், இந்தச் சிறுக்தைத் தொகுதியை சிறந்தமுறை யில் அச்சிட்டு உதவிய திருக்கணித அச்சகத்தாருக்கும், அழகிய அட்டைப்படம் வரைந்து எழில் கூட்டிய ஓவிய நண்பர் சந்ராவுக்கும் எனது அன்புகலந்த நன்றிகள் உரித்
தாகுக. -
வாசக அன்பர்களாகிய நீங்கள் ஒரு எழுத்தாளனைப் பாராட்டி அவனது ப்டைப்புக்களை விமர்சிக்கையில் கிடைக்
கும் புகழையும் விள்ையும் பலனையும் ஆதாரம்ாகக் கொண்டு
தான் அவன் தனது அடுத்துவரும் ஆக்கங்களுக்கு அத்திவா ரம் இடுகிருன். -
இந்தச் சீரிய பணிக்காக உங்களை வாழ்த்திப் பணிவன் புடன் நன்றிகூறி உங்களைத் தீபதோரண வா யி லு க்கு அழைத்துச் செல்லும்,
幫
* நிலக்கிளி? அ. பாலமனுேகரன் தண்ணிரூற்று, ... " முள்ளியவளை, 7-7-77, " . . . .
s a.
登
"" ; | BN - , , , ༥
 
 
 
 
 

臀
.
,
" . ,
盛 璧,阙
。
*,
蠶 鶯鶯
*
· კი 1
枋,
證。• ه. சமர்ப்பணம்
ன் U ம்
بیا
'
.. is ,
"

Page 6
உள்ளடக்கம்
தீபதோரணம்
மழை வந்தது
ஒரு கவிதை சிதைகிறது
ஒருசொட்டுத் தேன்
இழக்கு வெளுக்கின்றது வால் வெள்ளி
ஒரு பச்சை மரம்
பற்றி எரிகிறது
鷲。 幫
麟。
64
இளங்கன்று
பனேகளின் நடுவே 79 ஒரு ஆகாயத் தாமரை -
பூமிக்கு வருகிறது 89
காயாம்பூ - 100
 
 

泷
தீப தோரணம்
I)லையும் இரவும் சங்கம்மாகும் நீலநிறக் கலவை யிலே அந்த மலைப்பிரதேசம் ம்ெல்ல மறைந்துகொண்டிருக் கிறது. அசைவாட்டமாகத் தளும்பிக்கொண்டிருக்கும் மென் காற்றிலே இனம்புரியாத ஒரு புனிதம், இனிம்ை இவை யெல்லாம் பரவிக்கிடக்கின்றன. இங்கே மலையடிவாரத்தி னின்று புனித்திரையினூடாக நோக்கும்போது எதிரே விசும் பின் வெளிர்நீலப் பின்னணியில் மலைமுகடு படுத்துக்கிடக் ** இன்றது. அம்முகட்டின் ம்டியினிலே சின்னஞ்சிறு ஒளிச்சுடர் கள் பல வரிசையாக அந்தவீட்டின் முற்பகுதியை வளைத்து ஒளிர்கின்றன. வீட்டின் ம்ாடிக் கைச்சுவர்களிலும், முன்ற லிலிருந்து இறங்கிவரும் படிக்கட்டுக்களிலும் நளினமான * அசைவுகளுடன் தோரணமாகப் பல தீபக்கொழுந்துகள்
துடிக்கின்றன. " - -

Page 7
2 தீப தோரணம்
ம்லேசியாவின் மலைப்பிரதேசங்களின் ம்த்தியில் அம்ைந்த அவ்வீட்டிலும் கார்த்திகை விளக்கீடு நடைபெறு வதைக்கொண்டு அவ்வீட்டில் வாழும் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம் என்பதை நாம் அறியலாம். கவிந்து நிற்கும் மரங் களுக்கிடையே ஒளிந்தும் மறைந்தும் ஏறிச்செல்லும் பாதை வழியே நாமும் அவ்வீட்டைநோக்கிச் சென்றல், வீட்டின் முன்றலில், அந்தத் தீபவரிசைகளின் ஒளியில் இரண்டு குழந் தைகளின் முகங்களும், அவற்றின் அண்மையில் ஒரு தாயின் முகமும் ம்ந்தகாசமான ஒளியுடன் விளங்குவதைக் காண லாம்.
மலையின் உச்சியிலே, தீபங்களின் மத்தியிலே நிற்கை 'யில் அந்தக் குழந்தைகள்கூட ஏதோ புரிந்துகொள்ள முடி யர்த ஒரு பெரும் சக்தியை உணர்வில்ே மட்டும் அனுபவிப் பவர்கள்போலத் தம் வழக்கம்ான துடியாட்டங்கள் எதுவு மின்றிஜ்ன்னையை அணைத்தவாறே நிற்கின்றனர். அவ்வள
வுக்கு இயற்கையின் மோனசக்தியை இருளிலே மேலும் f :
மிகைப்படுத்தின அந்தத் தீபதோரணங்கள்.
சற்றும்ேலே நிமிர்ந்து நாம்' மாடியை நோக்கினல், வாமன் அங்கிருந்து கீழே வீட்டைச்சுற்றித் தோரணமாக
அசையும் தீபத்தொடர்களைப் பார்த்தவாறே இருக்கின்ருன்
“
∎ነ”
அவற்றைப் பார்க்கையில், தன்நெஞ்சில் நிறைந்து நிற்பவ ܕ ܪ.
ளுக்குத் தான் ஒருதடவை எழுதிய சிலவரிகள் நினைவுமொட் டுக்க்ளாக மனப்பொய்கையில் விரிகின்றன. "
பவானி! வாழ்க்கையென்பது தீபங்கள் பல
தொடுக்கப்பட்ட அழகியதொரு தோரணம் என்றே நான் எண்ணுகிறேன். பிறப்பிலிருந்தே இத்தீபவரிசை நீண்டு வாழ்
வின் கோடிமட்டும் செல்கின்றது. 争

தீப தோரணம் 3
ஏற்றப்படாமல் நிற்கும் இத்தீபதோரணத்தின் முதற் தீபங்களை, எம் தாய்தந்தையரும், எம்மில் அன்புகாட்டு வோரும் அன்பை நெய்யாக வார்த்து, அறிவை ஒளியாக எடுத்து எமக்காக ஏற்றுகின்றனர். நாம் வளர்ந்துவருகை யிலே நாமே எம்முண்டய தீபங்களை. ஏற்றிக்கொள்கிருேம். சிலவேளைகளில் அவற்றை ஏற்றும்போது, ! அனுபவமின்ம்ை யாலும், அவசரப்படுவதினலும் எம்மை நாமே சுட்டுக் கொள்ளவும் நேரிடுகிறது. . . " .
அறிவும் அமைவதற்கேற்ப எம்து தீபங்களும் பிரகாசிக்கின்றன. வாலிபவயதை அடை யும்போது காதல் ள்ன்னும் புனிதமான தீபத்தையேற்ற முற்படுகின்ருேம். இதற்கு எம்முடைய முயற்சிம்பட்டும் போதாது. ஒருதுணையின் பூரண அன்பும் தேவை. ணைந்த அன்பால் இருவருடைய வாழ்வின் தீபங்களும் ஒன்றி மேலும்
சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. இந்நிலையில் குழந்தைகள் என்ற சின்னஞ்சிறு தீபங்க்ள் வருகின்றன.
மேலே நினைக்க மனம் மறுக்கின்றது. கலங்கிய கண் களினூடாகக் கீழே தெரியும் தீபச்சுடர்கள் சேர்ந்தும் பிரிந் *ಹ್ಲಿ தும் நடனமாடுவதுபோல அவனுக்குத் தோன்றின. கைக் கெட்டும் தூரத்தில் போடப்பட்டிருந்த மேசையில் கிடந்த
". புத்தகத்தைக் கைநீட்டி எடுத்தான், நான்கைந்து கடிதங்கள் வரிசைக்கிர்ழமாக ஒழுங்குபடுத்திய புத்தகத்தின் நடுப்பா
கத்தினுள் வைக்கப்பட்டிருந்தன. அடிக்கடி எடுத்துப் படிக் கப்பட்டவைபோன்று அவை கசங்கிக் கறைபடிந்து காணப் படுகின்றன. எத்தனையோ தடவைகள் அவற்றைத் திருப் ,義 பித் திருப்பிப் படித்ததனல் அவற்றின் வாசகங்கள் பாட urra; இருந்துங்கூட அவன் கண்கள் அவ்வரிகளிலே ஒன்றிப் பதிகின்றன. குண்டும்ஸ்லிகை ம்ொட்டுக்களைக் கோத்துவைத் தது போன்று எவ்வளவு அழகிய எழுத்துக்கள்,

Page 8
4.
என்றும் என்னுடையவர்க்கு,
நான் எழுதுவதைப் படித்தால் நீங்கள் நிச்சயம் சிரித்துக்கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய இதயத்தில் பொங்கும் மகிழ்ச்சிப்பிரவாகத்தை என்னல் அடக்கவே முடிய வில்லை. அளவுகடந்துவிட்ட இந்த அமுதநிலையை உங்களுக்கு எழுதினுற்றன் எனக்கு நித்திரை வரும்
போலிருக்கின்றது. வாழ்விலே எந்தப் பெண்ணுக்கும்
கிடைக்காத அதிர்ஷ்டம் உங்கள் வடிவினிலேன்னக் குக் கிடைத்துவிட்டதுதான் இந்நிலைக்கு முதற் காரணம்! மீதமெல்லாம் நான் இந்த உலகிலே வேறெங்கும் பிறக்காம்ல் இங்கே இந்த அழகுத் திருக்
கோணமலையில் பிறந்துவிட்டேன் என்ற எல்லையற்ற
பெருமையும் உவகையுந்தான்!
தளர்நடை நடக்கும் பருவமுதல் வெள் ளிக்கிழமைதோறும் கோணேசர்மலைக்குச் சென்றி ருக்கின்றேன். ஆனல் இன்றைய வெள்ளிபோன்று எனக்கு எந்த வெள்ளியுமே இன்பம் தந்ததில்லை.
சுவாமிமலைக்குச் செல்லும் வழிகூட இவ்வளவு அழகாகவா முன்பும் இருந்தது? பெரிய தோர் வெண்ணிலவுப் பிறையாக் வளைந்துகிடந்த வெண்மணற் பரப்பினிலே, கடற்கன்னி கருநீலப் பட்டுடுத்தி அசைந்தாடிவந்து அலைகளை மலர்க்குவி யலாக்ச் சொரிந்துகொண்டிருந்தாள்.அங்குமேய்ந்து கொண்டிருந்த மான்கூட்டம் முன்பெல்லாம்" என் ம்னதைக் கவர்ந்ததுகிடையாது. இயற்கையழகும் மணமும் அற்ற செயற்கைப் பூக்களைப் போன்றே அவையும் உயிர்த்துடிப்பின்றித் தோன்றும். ஆனல்
இன்றே? செவ்விள மாலைநேரம் அவை மிரண்டும்
ம்ருண்டும் அயலிலே வந்தபோதுதான் எத்தனை கொள்ளையழகு! கோட்டையின் குகை வாசலிலே
தீப தோரணம்

தீப தோரணம்
நுழையும்போது ஓவென்று உரக்கக்கூவி அதன் எதிரொலியைக் கேட்கவேண்டும் எனக் குழந்தை போல் ஆசைப்பட்டேன்.
மலையை நோக்கி ஏறிச் செல்கையில் செறிந்துவிட்ட இருளில் ஒளியை உமிழ்ந்து நின்ற
தீபக்கம்பங்களின்கீழ் ஒசையின்றி உதிர்ந்த இலந்தை
இலைப்பழுத்தல்கள் பொன்நாணயங்களாக நீங்கள் சிரிப்பதுபோலவே மின்னின ! பாதையோரம் அடர்ந்த கிளேபரப்பிநின்ற இருண்ட ஆலமரத்தின்
விழுதுக்ளிலே ஊஞ்சல்கட்டி நித்தமும் உங்களுடன்
ஆடவேண்டும்போலெல்லாம் தோன்றியது! இதைப் படிக்கையில் நீங்கள் குறும்புதவழ அழகாகச் சிரிப் பது எனக்கு இங்கே தெரிகிறது. இருப்பினும் ம்ேலே தொடர்கிறேன்.
ܝ ܐ கீழே இருண்டுகிடந்த பாறைகளிலே
மோதிய அலைகளின் ஓங்காரம் உங்கள் பெயரையே நித்தம் இசைத்தது. என் இதயம் இறக்க்ைபெற்று
ம்ெல்லமிதந்து மேலே பறப்பதுபோன்றிருந்தது.
கண்களிலே கோவிற்படி க்ள் தென்படுமுன்னரே
s
அமுத வெள்ளம்ாக்க் காற்றினிலே கலந்துவந்த
நாதஸ்வர இசை ஏனே என்னைக் கண்கலங்கவைத்து விட்டது: என்னவோ இவ்வளவு அழகும் இனிமை யும் நிறைந்த உலகம் எனக்குரியதல்ல; இந்த இன் பச்சுமையை என்னுல் சுமக்கவே முடியாது என்
றெல்லாம் தோன்றியது. இருந்தும் அங்கு என்னை
யும் மறந்த நிலையில் எனக்கோர் ஆசை ஏற்பட்டது! அதை நிறைவேற்றுவீர்களா?
எம்முடைய திருமணம், இதேபோன் றதொரு மாலைவேளையிலே, மலையுச்சியில் கோணேஸ்

Page 9
6 தீப தோரணம்
வரன் சந்நிதியிலே, நாதஸ்வர இசையும் மலர்களின் மணமும் நிறைந்து பெருக், நடக்கவேண்டுமென் பதுதான் என்ஆசை!
விரைவில் மலேசியாவிலிருக்கும் உங் கள் அக்காவுக்கு அறிவித்து அவர்களையும் வரவ ழைத்து என்னை நிரந்தரமாக உங்களுடன் சேர்த் துக் கொள்ளுங்கள். இங்கே என்அன்னை என்னைத் தினமும் அன்புகாட்டிச் சீராட்டும்போதெல்லாம் நெஞ்சில் முள்ளாக வேதனை உறுத்துகின்றது. தாய் தந்தையரை இழந்துவிட்ட உங்களை மீண்டும்குழந் தையாக்கி என்மடியிலேவைத்துச் சீராட்டவேண் டும் என்றனண்ணம் என்அன்னையைக்கூட வெறுக்க வைக்கிறது. மீண்டும் சிரிக்கவேண்டாம். பதிலை எதிர்பார்க்கிறேன்.
என்றும் உங்களுடைய s பவானி
வாமனுடைய விரல்கள் தாமாகவே தாளத்திருப்பக்
கண்கள் அடுத்த கடிதத்தைக் கவ்வுகின்றன.
என் அத்தானுக்கு, ܂ ܀܀
அன்று சந்தித்தபோது அத்தான் என்று அழைக்கச் சொன்னீர்கள் எனக்கு வெட்கமாக் இருக் கின்றது. கடிதத்தில் எப்படியும் எழுதமுடிகிறது. இக்காலத்தில் காதலுக்காக உயிர்விடுபவர்கள் மிகச் சிலரேதான். ஆனல் பலருடைய வாழ்க்கையில் காதல்தான் அவர்களுக்காக உயிர் விடுகின்றது என்று நீங்கள் எழுதியிருந்தீர்க்ள், -

தீப தோரணம்
எனக்குக் காதல் என்ருல் என்ன வென்று எழுதத் தெரியவில்லை. ஆனல் ஒன்றுமட் டும் நன்ருகத்தெரியும். உங்களுடன் என்னுடைய வாழ்வை இணைத்துக் கொண்டேன். வாழ்வோ தாழ்வோ எதுவாயினும் நீங்கள் கொடுப்பதுதான் எனக்கு வாழ்க்கை.
உங்களைப்பற்றி இங்கு சிலர் பேசிக் கொண்டபொழுது, நீங்கள் பெரிய பணக்க்ார
ரென்றும், மலேசியாவில் உங்கள் அக்கா உங்க
ளுக்கெனப் பெண்கூடப் பார்த்து வைத்திருப்ப தாகவும் ப்ேசிக்கொண்டார்கள். உண்மையாகவா
அத்தான்! உங்கள்மீது நம்பிக்கையற்றவள் என்று
கோபிக்கவேண்டாம். ஏதோ நினைவுக்கு வந்ததை
அப்படியே எழுதிவிட்டேன் மன்னிக்கவும்,
-
அத்தான்! நீங்கள் வைத்திருக்கும்
மோட்டார் சைக்கிளை விற்றுவிடுங்கள் அத்தான்.
நீங்கள் தொலைதூரமெல்லாம் அதனிற் செல்லும் போதெல்லாம் எனக்கு ஏதோ பயமாகவிருக்கின்றது. நீங்கள் எங்குசென்ருலும் என்னுடைய கோணேஸ் வரன் உங்களுடன் என்றும் இருப்பான் என்ற நினை விலேதான் அமைதியடைகிறேன். நாளை வெள்ளி யல்லவா! கட்டாயம் கோவிலுக்கு வரவும். (இத்
- துடன் மிகவும் இனிமையானதோர் பொருள் அனுப் புகிறேன். கண்ணுக்குத் தெரியாது! பெற்றுக் கொள்ளவும்.) -
என்றும் உங்கள்
ш6ulг6ої *

Page 10
தீப தோரணம்
qS -—
முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றி மறைய வாமன் மற்றக்கடிதத்தை எடுத்தான்.
அன்பு அத்தான்!
நாளை விடிந்துமறுநாள் நீங்கள் யாழ்ப்
பாணம் போய்விடுவீர்கள் அதற்கிடையில் நாம் சந்
தித்துக்கொள்ள முடியுமோ தெரியவில்லை. அதிக
நாட்கள் லீவில் நிற்க்ாதீர்கள். போகும்போது வேக மாக் ம்ோட்டார் சைக்கிளைச் செலுத்தாதீர்கள். நீங் கள் எங்குசென்ருலும் இந்த அபலையின் நெஞ்சும் உங்களைத் தொடர்ந்துகொண்டே வரும். எமது விஷயம்பற்றி உங்கள் அக்காவிற்கு எழுதிய கடிதத் திற்குப் பதில்விந்துவிட்டால் உடனே வரவும். நானும் வெகுவிரைவில் அப்பா அம்மாவிற்குஇதைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் நிச்சயம் என் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்கள். உங்க ளது வரவை ஆசையுடன் எதிர்பார்த்திருக்கும்,
உங்கள்'
பவானி
வாம்ன் ஒருசிகரட்டை எடுத்துப் பற்றவைத்தான்.
தீக்குச்சினின்றும்சுடர்விட்ட தீக்கொழுந்து சற்றுநேரம்நின்று எரிந்து பின்பு அடங்கிஅவிந்தது. எரிந்து ஏஞ்சியகுறைக்குச்சி யையே சிறிதுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு வரிசையில் இருந்த அடுத்த கடிதத்தை எடுத்தான் அவன்,
".
游
 

தீப தோரணம்
என்றும் என்னுடையவர் என்று நான் எண்ணியிருந்தவருக்கு,
κ என்னடா! ஆயிரமாயிரம் மைல்க ளுக்கு அப்பால் வந்துவிட்டபோதிலும் இவள் தொடர்ந்துவிட்டாளே! என்று இந்தக்கடிதத்தைப் பார்த்ததும் நீங்கள் திகைப்படையக்கூடும் இல்லை, வெறுப்படையக்கூடும் என்றுகூறினல் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
என்னுல் நம்பவேமுடியவில்லை! இன்று போஞ்றல் நாளை; அல்லது மறுநாள் நிச்சயம் இந்த பவானியைத்தேடி வருவீர்கள் என்றுதான் என் இதயம் சொல்கிறது. ஆனல் நான் உங்களுக்காக, உங்கள் கடிதத்திற்காகக் காத்திருந்த ஒவ்வொரு நாளும் என்னை என்கற்பனை உலகிலிருந்து கீழே
* கொண்டுவரும் ஒவ்வொரு படிகளாக அமைந்து, என்கண்ணுக்கு இதோதோன்றும் இந்தவெறுமை - யான ஆனல் உண்மையான உலகுக்குக் கொண்டு
வந்துவிட்டன. -
தரையிலே நிற்பவளுக்குக்கூட ஏதா 1:ܨ%
வது பற்றுக்கோடு இருக்கும். நானே தரைமட்டத் துக்குக்கீழே அலைபாயும் கடலில் ஒடமாக மிதக் கின்றேன். தணலிலே போடப்பட்ட நண்டுகள் தங் களுடைய வேதனையில்கூட அச் செந்தணல்களைத் தான் தப்புவதற்குப் பற்றுக்கோடாக எண்ணி மீண் டும் மீண்டும் அவற்றைப் பற்றும்ாம். அதேபோன்று என்னுடைய வேதனையே எனக்கும் இங்கு ஆதார மாகவிருக்கின்றது. கோணேசர் மலையடிவாரத்தில் ஓவென்று பேரிரைச்சலுடன் மோதிச்சிதறும் அலை களாக் என்மனமென்னும் பேராழி அலைபொங்கி அரற்றுகின்றது.

Page 11
தீப தோரணம்
மலையுச்சியிலே, மாலை வேளையிலே
ஒலிக்கும் நாதஸ்வர இசைகூட இந்த இரைச்சலிலே
எனக்குக் கேட்பதேயில்லை. இருளிலே, கோணேசர் மலையைச் சுற்றிவளைந்த கடலிலே, ஒருசமயம் மின்னி யும், மறுசமயம் அலைகளின் உயரத்தால் மறைக்கப் பட்டும் தோன்றுகின்ற வள்ளங்களில் எரிகின்ற தீபங்கள்போன்று, நீங்கள் விரும்பிய வாழ்வென் னும் தீபத்தையேந்திக்கொண்டு அலைகளின் மத்தி யிலே தவிக்கின்றேன். ஆனல் மலையுச்சியிலே தெரி யும் அந்தத்தீபம் மட்டிலும் நிஷ்களங்கம்ாக், அமைதியாக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது:
அதைப்போலவே நீங்களும் உங்கள் வாழ்வை வளமாக அமைத்துக் கொள்வதற்காக எங்கேயோ கண்காணுத இடத்திற்குப் போய்விட் டீர்கள் என்பதை இன்றுதான் புரிந்துகொண்டேன்.
மலேசியாவில் இருக்கும் உங்கள் அக்காவின் விலா
சத்தைக் கொடுத்த உங்கள் நெருங்கிய நண்ப்ருக் குக்கூட நீங்கள் தி டீ ரெ ன் று மலேசியாவுக்குப் போவது தெரியவில்லையென்றல் எவ்வளவு முன் னேற்பாட்டுடன் என்னை விட்டுவிலகி இருக்கின்றீர் கள் என்பது ந்ன்கு புரிகின்றது.
ஆனல், என்னிடம் தனிமையில் பழ கிய போதும், என்னை அந்நேரங்களில் உங்களிடம் நான் ஒப்படைத்தபோதிலுங்கூட நீங்கள் காட்டிய பண்பை நினைத்துத் தான் என்ம்னம், நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்பதை நம்ப மறுக் கின்றது.
அத்தான்! இந்தப்பவானியை உண் மையாகவே மறந்துதான் போனிர்களா? உண்மை
तै• ।
κ.

தீப தோரணம்
யாகவே அப்படித்தான் இருந்துவிட்டாலும் பாதக மில்லை. உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரு வரியையாவது எழுதுங்கள். என் உண்மையான
* நிலையை நான் புரிந்துகொள்ள அது எனக்கு
வாய்ப்பளிக்கும்.
-
பதில் எவ்வளவு அவசியமென்பது உங்,
களுக்குத் தெரியாவிடினும், எனக்கு இடந்தந்த உங் க்ள் இதயத்துக்கு நிச்சயம் தெரியும் என்ற நம்பிக் கையில் காத்திருக்கின்றேன்.
இன்றும் உங்களுடைய
பவானி
வாமனின் பார்வை அடுத்தகடிதத்தில் பதிந்தது.
திரு. வாமன் அவர்கட்கு,
". . தங்களுடைய நீண்ட மெளனத்தைப் புரிந்துகொண்டேன், காலம் எதையும் ஆற்றக்கூடிய சிறந்த மருந்தென்பதை இந்த வெறிச்சென்ற இடைக்காலம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம்ாக உணர்த்திவிட்டது: -
- இன்றும் வெள்ளிக்கிழமைதான் பல நாட்களின்பின் கோணேசனிடம் சென்றேன். மேல் நோக்கி வளைந்த பாதையில் ஏறும்போது இதயத் தில் தாங்கவொண்ணுத துன்பச் சுமையுடன்தான் ஏறினேன். ஆனல் நான் கீழ்நோக்கி இறங்கி வரு கையில் அந்தச்சும்ை இருக்கவில்லை. கால்கள் தாம்ா கவே மிகவும் இலகுவாக வழிநடந்தன. ஏனெனில் என் நெஞ்சச்சுமையைக் கோணேசனிடம் கொடுத் துவிட்டேன்.

Page 12
2. தீப தோரணம்
கடல்ம்ட்டத்திலே அலைக்ளால் எத்தி
யும் மோதுண்டும் தத்தளிக்கும் வள்ளத்திலிருந்து பார்த்தபோது மலையுச்சியில் தோன்றிய தீபந்தான் எனக்கு வாழ்வாகத்தோன்றியது. ஆனல் மலையின் * உச்சிக்கீேறிக் கோணேசனின் நிழலிலே நின்று கட லையும் அதற்கப்பால் தெரிந்த தரையையும் நோக் கியபோது, தரையிலும் எண்ணற்ற தீபங்கள் உண்டு. அவற்றுக்கும் ஒளியுண்டு என்பது புரிந்தது. நீங்கள்
* எனக்குக் கற்றுத்தந்த பாடத்திலேதான் நானும்
ஆறுதல் காண்கிறேன்.
ஆம்! வாழ்வே ஏற்றப்படாத தீப தோரணவரிசைதான். என்னுடைய வாழ்வென்னும் தீபவரிசையிலே நான் ஏற்றமுயன்ற காதல் என்னும் தீபம் அவிந்து அணைந்துபோய்விட்டது, ஆஞ்றல் அணைந்துபோன தீபத்தையே சுற்றிச்சுற்றி வந்து * அழுவதிலே பயனில்லை என்பதை இன்று உணர்ந்து கொண்டேன். என் வாழ்வென்னும் தீப்தோரணத் திலே இன்னும் ஏற்றப்படவேண்டிய தீபங்கள் நிச் சயம் இருக்கத்தான்செய்யும். தாங்கள் கற்றுத்தந்த பாடத்திற்கு என் இதயங்கனிந்த நன்றி!
இப்படிக்கு பவானி
- "سمي
வாமனுடைய விழிகள் பளிச்சிட்டன, முக்காற்பங்கு புக்ைந்துவிட்ட சிகரெட்டை இதழ்களிலே பொருத்தி நீண்ட
கடைசி இழுவையாகப் புகையை உள்ளிழுத்துவிட்டு எஞ்சிய
தைச் சாளரத்துக்குவெளியே சுண்டியெறிந்தான்.
அடுத்து இருந்தது கடிதமல்ல, அதுவொரு திருமண அழைப்பிதழ்! மணமகளின் பெயர் "பவானி யென்று தெளி
 

தீப தோரணம் 13
-----------
வாக, அழகாக அச்சிடப்பட்டிருந்தது. அவனையறியாமலே
அவனுடைய விரல்கள் அவ்வழைப்பிதழின் வழுவழுப்பை
ஸ்பரிசித்துக்கொண்டிருந்தன.
வீட்டின் முன்றலில் கார் வந்துநிற்கும் ஒசை
அத்தான் வந்துவிட்டார் போலும் என்றெண்ணிப்
புத்தக்த்தை மூடி மேசைமேல் வைத்தான் வாமன். கீழே இளங்குரல்கள் கலகலத்தன. அதைத்தொடர்ந்து மாடிப்படி
களிலே ஒருசோடி இளம்பாதங்கள் துடிப்புடன் தாவிவருவது கேட்டது. மாமா! என்று கூவிக்கொண்டே குறுகுறுத்த கருவிழிகளுடன் குதித்து வந்தான் ஒரு சிறுவன். அவனு டைய கைகளிலே புத்தம்புதியவையாக ஒருசோடி சப்பாத் துக்கள் மின்னின. -
*ம்ாமா! அப்பா எனக்கு வாங்கிவந்த சப்பாத்தைப்
பாத்தீங்களா?' என்று கூவிக்கொண்டே வந்தவன் வாமனின்
அருகில் வந்ததும் முகத்தில் இருள்படரச் சட்டென நின் முன், நின்றவன் தன்னைச் சுதாரித்துக்கொண்டு 'ஓ! ஐ ஆம் வெரி சொரி மாமா!' என்று குரல் தழுதழுக்க இரங்கி வேண்டினன். அவனுடைய கண்கள் வாமனின் கால் களை நோக்கின. வாமன் அணிந்திருந்த நீளக்காற்சட்டை
முழங்கால்களுக்குக் கீழே பரிதாபகரமான வெறுமையுடன் துவண்டு ஆடியது. நீண்டிருந்த தன் கரத்தைநீட்டி மரு
மகனைத் தன்னுடன் அணைத்துத் தழுவியவாறே ‘ஒ1 இற்ஸ்
9 ഉണ്ണ, തൌp ഞഥ, டியர்' என்ருன் வாமன்
- சிந்தாமணி - 1968.

Page 13
மழை வந்தது .
எங்கும் ஒரே வரட்சி! காய்ந்துப்ோன கச்சான் காற்று நீர் நிலை யாவையும் வரளச் செய்து, உலர்ந்த சருகுகளை யெல்லாம் வாரிச்சுருட்டி சாவுச்சிரிப்புச் சிரிக்கின்றது. 雲。 , ܐܝ ܢ நித்தகைக் குளம். அதை நம்பி வாழும் கமக்கார்ர் களினுடைய இதயங்களைப் போலப் பாளம் பா ள ம் ராய் வெடித்துக் கிடக்கின்றது. கரடு தட்டிப்போய்க் கிடக்கும் அந்தக் குளத்தில் நீர்வேட்கையால் அலைந்து திரியும் விலங் குகளின் அடிச்சுவடுகள் தாறுமாருகப் பதிந்து கிடக்கின்றன.
குடிப்பதற்குக்கூட நீரில்லா நிலமைக்கு வந்துவிடும் அளவிற்குக் கிணறுகள் வற்றிவிட்டன. தாவரங்களெல்லாம் இலைகளை உதிர்த்து, ஆயிரம் எலும்புக் கரங்களை வான நோக்கிச் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

t
மழை வந்தது 5
அந்தக் குளத்தையொட்டிய அச்சிறு கிராம் த் தி ன் எல்லையிலே இருக்கும் அந்த வளவும் வரண்டு போய்க்கிடக் கிறது. கிணற்றடியைச் சுற்றி நிற்கும் இளங்கமுகுகள் அத் தனையும் வெய்யிலிலே வெந்து போன இலைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிற்கின்றன. பிள்ளையென்று பெயர் கொள்ளும் நிலைக்கு உயர்வு பெற்ற தென்னம்பிள்ளைகள் யாவும் வட்டுச் சுட்டுப்போய் வதங்கிய நிலையில் பரிதா பம்ாகச் சரிந்து காணப்படுகின்றன. அந்த வள வி ல் காணப்பட்ட எதுவுமே இளசும் புதிசும்ாகவே இருந்தன.
ஆமாம்: அவனும் அவளும் நான்கு வருடங்க்ளுக்கு முன் புதும்ணக்க்ருக்குக் கலையாத நிலையில் தமக்கெனத் தாமே உருவாக்கிய இன்ப பூமியல்லவா அது!
மிச்சம் மீதியிருந்த கொஞ்ச நெல்லு, பஞ்சநாட்க
ளுக்கெனச் சேர்த்து வைத்திருந்த பச்சை ஒடியல், வள வின் ஒரு மூலையில் நட்டிருந்த ம்ரவள்ளி இவை அத்தனை யுமே இந்த வரட்சிக்குத் தாக்குப் பிடிக்கவில்லை. அடைவு வைப்பதற்குக்கூட எதுவும்ேயில்லை.
. எஞ்சி நிற்கும் மரவள்ளியினடியில் அ ல வ |ா ங்கும் கையுமாக மணியம் குந்தியிருக்கின்றன். வரண்டுபோன தன் வளவை ஒருதடவை சுற்றிப்பார்த்த அவனுக்கு நெஞ்
=-77
తొడు உதிரம் கசிந்தது. 繫。
காட்டிலே தன்னிச்சையாகக் கிளைபாய்ந்த மந்திகள்
கிணற்றுக் கட்டின் மேல் வந்திருப்பதும் வெறுங்குடத்தை
உருட்டுவதும்ாக இருந்தன. கிணற்றடியில் சொற்ப ஈரம் செறிந்த மண்ணில் தம் இளங்குட்டிகள் வாய் பதித் து நீரை உறிஞ்சுவதைத் தாய்க் (குரங்குகள் சிரத்தையின்றிப் பார்க்கின்றனவே அன்றி, அதோ கிணற்றுக்கு அண்ம்ை யிலே அவன் குந்தியிருப்பதை அவை பொருட்படுத்தவே 山7á)あ)ィ -

Page 14
6 மழை வந்தது
அடுக்களைத் திண்ணையிலே ம்கனை ம்ார்போடு அனைத் தவாறே அவன் மனைவி லட்சுமி கிணற்றடியை வெறித்து நோக்கிய வண்ணம் இருக்கிருள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் முருக்க்மிலைச் சாறும், சா ண மு ம் கலந்து மெழுகப் பெற்றுத் தண்ணென்று குளிரும் அ ந் த த் திண்ணை இப்போது காய்ந்து பொருக்கெழும்பிக் கிடக்கின் ქm) ჭil • -
*
சினைப்பட்ட பசுவின் மெருகும் ஆரோ க் கி யமும்
செறிந்த அவளுடல் இப்போது வாடி வதங்கிப் போய் க் கிடக்கிறது. இளங்கன்றுபோல் துள்ளித்திரிந்த அவர்க்ளு டைய இரண்டு வயது ம்கன் ம்ெலிந்து சுருண்டு போய்த் தாயின் மடியில் படுத்திருக்கின்றன். அவனுக்குக் காய்ச்சல். போதிய அளவு உணவு இல்லாம்ையே அவனுடைய நோய்க் குக் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இருந்தும், முதலில் கைம்ருந்துகள், பிறகு கிரா மத்துப் பரியாரியார் என்றஅளவுக்கு வந்தாயிற்று. குண
மில்லை. இனிமேல் பதினறு மைல்கட்கு அப்பாலி ரு க்கு ம்.
வைத்தியசாலைக்குக் கொண்டு போனல்தான் சுகம் வரும் என்ற நிலை. கொண்டு செல்வதற்குப் பணம்.? இல்லை? என்ற ஒரு சொல்லைத் தவிர தங்களுக்குள் பேசிக்கொள்வ தற்கு அவர்களுக்கு ஒன்றுமேயில்லாததால் அவர்களுக்கிடை
யில் அதிகம் பேச்சு வார்த்தையும் இல்லை. லட்சுமி மகனைப்
பெற்று இரண்டு ஆண்டுகளாகின்றன. முன்பெ ல், லாம் அவன் பசித்து அழுதாற் போதும், அவளுக்கு மார்புச் சேலையெல்லாம் நனைந்துவிடும்! இப்போதோ? பசியடங்கா விடினும் அழுகையாவது அடங்கட்டுமேயென அவள் மகனை மார்போடு அனைத்திருந்தாள்,

്
மழை வந்தது 7
வெகுநேரம் கிணற்றடியையே பார்த்துக் கொண்டி ருந்த லட்சுமி நித்திரையாகிவிட்ட மகனை மெல்லத் திண் ணையிற் கிடத்திவிட்டுக் கிணற்றடிக்குச் சென்று ஒரு வாளி நீரையள்ளிக் குடத்தடியில் வைத்துவிட்டு மரவள்ளியினடி யில் கிழங்கு கல்லும் அவனிடத்திற்குச் செல்கிருள். அவள் வரவு கண்டு கலைந்த குரங்குகள், குட்டிகள் அத்தனையும் வந்து அவள் அள்ளி வைத்த தண்ணீரைக் குடிக்கின்றன.
கல்லியெடுத்த கிழங்குகளை அவளிடம் கொடுத்து விட்டு அவனும் தண்ணிர் குடிக்கும் சின்னக் குரங்குக் குட்டிகளைப் பார்க்கிருன். அவை ஆவலுடன் நீ  ைர ச் சுவைத்துக் குடிப்பதைப் பார்க்கையில் அவன் முகத் தி ல் சிறிதளவு திருப்தியும் மகிழ்ச்சியும் ஒளிர்கின்றன. அவளைப் பார்க்கின்ருன் அவளும் சிரித்துக் கொள்கிருள்
வள்! வள்! தாழ்வாரத்தில் சுருண்டு கிடந்த அவர் களுடைய நாய் தன் பலமனைத்தையுங் கூட்டி மிகவும் சிர மப்புட்டுக் குலைக்கின்றது. அவர்கள் வளவுப் படலையடி யைப் பார்க்கிரு?ர்கள். அங்கே கந்தசாமி துவக்குடன் நிற்
கிரு:ன்.
* என்ன மணியம், வண்ணத்தி மோட்  ைடயி லை மரை இறங்கு தாம் வாவன் பாத்து வருவம்' என்று கேட்டதற்கு மணியம் பதில் சொல்லாமல் யோசிக்கிருன். இக்கொடிய வரட்சிக்காலத்தில் வேட்டைக்குப் போவதற்கு
'அவ்ன் மறுத்துவிடுவான் என்பது லட்சுமிக்குத் தெரியும். ஆனல் ஒரு மரை வெடிவைத்தால் குறைந்தது நூறு ரூபா
விற்கு விற்கலாமே! வருகிறேன்" என்று சொல்லமாட்டான என்ற நப்பாசையில் லட்சுமி அவனுடைய முகத்தைக் கவ னிக்கின்ருள். அங்கே பலமான சிந்தனையின் நிழல்!
2

Page 15
8 மழை வந்தது
மணியமும் சாதாரண நாட்களிற் காட்டுக்குப்போய் உடும்பு, பன்றி, மான் மரை முதலியவற்றைக் கொண்டுவரு பவன்தான். வேட்டையாடுவதில் மிகவும் திறமைசாலியுங் கூட! ஆனல் அவனுக்கெனச் சில கண்டிப்பான கொள்கை களும் இருந்தன. தேவைக்குமேல் எத்தனை மிருகங்கள் சந் தித்தாலும் அவற்றைக் கொல்லவே மாட்டான், வேட்டை யாடியதை ஒருநாளும் விற்கவும் மாட்டான். உயிரேபோன லும் வத்துமடு வெடிக்குப் போகவே மாட்டான்.
தாகத்தால் துடித்து, வற்றிக்கிடக்கும் நீர்மடுக்களை நோக்கித் தயங்கித்தயங்கி வந்து கூழ்போன்ற நீரைக் குடிக் கும் விலங்குகளை ஒளிந்திருந்து கொல்லும் அந்தக் குரூர வேட்டைக்கு அவன் போகவே ம்ாட்டான். இதற்குச் செல் பவர்களைக்கண்டாலும் அவனுக்குப் பிடிக்காது. அவன்குணம் லட்சுமிக்கு நன்கு தெரியும். அவளுக்கும் பிடிக்க்ாதுதான். ஆனல் இன்றைய நிலையில்...? -
'ஏன் கந்தசாமி அண்ணை படலேக்கை நிக்கிறியள்?
வந்திருங்கோவன்' என்றவ்ாறே அவள் மரவள்ளிக்கிழங்கு
களைத் திண்ணையில் வைத்துவிட்டு நித்திரைகலைந்து எழுந்த தன்மகனைத் தூக்கிக்கொள்கிருள். துவக்கைக் கப்பில் சாத்தி விட்டு மாலுக்குள் உட்கார்ந்து கொண்ட சுந்த சாமி வீடி ஒன்றைப் பத்திக்கொண்டே மாலுக்குள் வந்தம்ாந்த மன்னி
- , - 73
'அம்மா பசிக்குதனை' ம்கனின் குரல் ம்ணியத்தின்
நெஞ்சைப் பிழிகிறது. "கொஞ்சம் பொறு ராசா'இப்ப கிழங்கு அவிச்சுத்தாறன்' என்ற லட்சுமி ஏதோ செய்யக் கூடியதைச் செய்ய ஆரம்பிக்கிருள். ஆனல் பிள்ளைக்குப் பொறுக்கவில்லை. "அப்பு சோறு வேணுமப்பு!" என்று ஆகையில் மணியத்துக்கு எதுவுமே சொல்லத்தோன்ற
606լ՝ : - -
zܐ

மழை வந்தது 19
' கெதியிலை மழைவந்திடும் ராசா, அப்பு சோறு கொண்டு வருவார்' லட்சுமி மகனைத்தேற்றும்போது அவள் குரல் உடைந்து க்ரகரக்கிறது. மணியம் எழுந்து இறப்பில் சொருகியிருந்த தன் வில்லுக்கத்தியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டே கந்தசாமியைப் பார்த்து 'வெளிக்கிடு போவம்' என்றவாறே புறப்பட்டான்.
வண்ணுத்திமோட்டை எனப்படும் அந்த நீர்மடுவின் கீழ் காற்றுக்கரையில் ஓங்கிநின்ற ஒரு பாலை மரத்தில்
போடப்ப்ட்ட ஏத்து ஒன்றில் மணியமும் கந்தசாமியும்
சிலைகளைப்போன்றிருக்கின்றனர். காற்று மோட்டையைக் கடந்துவந்து அவர்கள் முகத்தில் ம்ோதுகின்றது. எதிரே,
கீழே ம்டு சுருங்கிப்போய்க் கிடக்கிறது. நடுவில்ம்ட்டும் சிறி
தளவு சேற்றுநீர். அதைச் சுற்றிலும் ஒரே சேறு பல விலங் குகளும் நீருக்காக வந்துசென்றதில் அந்த இடம் முழுவதும் ஒரே அடிச்சுவடுகள். -
இடையிடையே வந்துவிழுந்து தண்ணிர் குடிக்கும் காட்டுப் புருக்கூட்டங்கள் பறக்கையில் ஏற்படும் ஓசையும், சில்வண்டின் ரீங்காரத்தையும் விட வேறெந்த ஒலியுமில்லை.
அவர்கள் வந்து பலமணி நேரமாயிற்று. மணியத்தின் விழிகள்
மட்டும் சோர்ந்துவிடாமல் எதிரே கிடந்த இருண்ட காட் டைத் துழாவி வருகின்றன.
செக்கல்நேரம், சட்டென ஓர் அமைதி. இயற்கையே ஸ்தம்பித்துவிட்டதுபோன்ற நிசப்தம். இலைகள் அசையவில்லை சில்வண்டுகள்கூடச் சத்தமிடவில்லை. மணியத்தின் ரோமங் கள் சிலிர்த்தன. ஏதோ ஒரு மிருகம் மடுவில் இறங்கப் போகின்றது என்று அவன் உள்ளுணர்வு கூறியது. அவன் கரங்கள் மிகமெதுவாகத் துவக்கை உயர்த்தி, வில்லையும்

Page 16
20
மழை வந்தது
இழுக்க ஆயத்தமாகின்றன. அவன் விழிகள் இமைப்பதை மறந்து எதிர்க்க்ரைக் காட்டையே நோக்கி நிற்கின்றன. கந்த சாமியின் நெஞ்சு அடித்துக்கொள்வது அவனுக்கேகேட்கிறது.
இருட்திரையைக் கிழித்துக்கொண்டு வந்தது பெரிய
தொரு கலைம்ரை! நீரும், உணவுமின்றி சற்று மெலிந்திருந்
தாலும் அதன் க்ருநீலநிறம் செக்கல் ஒளியில் அழகாக மிளிர்ந்தது. முற்றிக்க்றுத்த அழகிய கொம்புகளை ஏந்திய வண்ணம் தேர்போல அந்தக்கலைம்ரை சற்றுத்தூரம் வந்து
நின்று கம்பீரமாகத் தலையைத் தூக்கி, மூக்கைச் சுருக்கிச்
சுவடித்தது.
ஏழு இலைகளை அடுக்கிவைத்தாலும் அவற்றினூடாகப் பார்க்குமாம் மரை! இலைதழைகளின் பின்னே மறைந்திருந்த அவர்களிருவரும் அசையவேயில்லை! அது சற்றுநேரம் #fbფ
டலை நோட்டமிட்டுவிட்டு தலையைஉயர்த்தி ஒருதரம் கம் மியது; வெண்கல நாதம்போன்ற அந்த ஒற்றைச் சப்தம்
காட்டில் அலையலையாகப் பரவியது. திடீரென்று முளைத்தது போல் அதன்பக்கத்தில் தோன்றியது ஒரு பெண்மரை! இரண்டுமே சாவதானமாக நீரை நோக்கி வந்தன. துணை குடித்து முடியும்வரை கலைமரை குடிக்கவேயில்லே.
இதோ! ம்ணியத்தின் துவக்கு கலைம்ரையின் கையடி வெள்ளையைக் குறிவைத்த வண்ணம் இருக்கிறது, அவன்
சுடவில்லை. பெண்மரை குடித்தாயிற்று. கலை கம்பீரமாக முன்னேவந்து தலையைத்தாழ்த்தி நீரைக் குடிக்கின்றது. மணி யத்தின் துவக்கு இப்போ கலைம்ரையின் நெற்றியைக் குறி பார்த்தவண்ணம் இருக்கிறது. கள்ளனில் வைத்திருக்கும் ஆள்காட்டிவிரலைச் சற்று அழுத்தவேண்டியதுதான். அவன் அழுத்தவில்லை, கந்தசாமிக்குத் தொண்டைவரண்டு விழிகள்
பிதுங்கி நிற்கின்றன. மரை தண்ணி குடிச்சுமுடிய முதல்
மணியன் வெடிவைக்கீமாட்டான்' எனத் தனக்குள் நினைத்

மழை வந்தது 2.
துக்கொள்கிருன், இதோ! கலைமரை நீர் குடித்துமுடிந்து தலையை மெதுவாக்த் தூக்கியவாறே நிமிர்கின்றது. கள்ள னில் இருக்கும் ம்ணியனின் விரல் ஒரும்யிரிழையில் அழுத் துகிறது. - -
இன்னமும் ஒரு மயிரின்ழதான்! அறுத்துவிட்ட பூச் சரம்போல் மரை விழும்! மகனை முல்லைத்தீவுக்குக் கொண்டு போய் மருந்து செய்விக்கிலாம். அடுத்தம்ாதம் முழுவதும் கால்வயிற்றுக் கஞ்சிக்காவது வழி பிறக்கும். லட்சுமியின் விழிகளிலே சிரிப்பைப் பார்க்கலாம். ஆனல் . ஆனல் மரைக்கலையும் அதன்துணையும், அவனையும் லட்சுமியை யும்போல இளங்குடும்பம்ாக அல்லவா தோன்றுகின்றன!
ஒருவேளை அப்பெண்மரையின் வயிற்றில் குட்டிகூட, இருக்குமோ? மணியனின் கரங்க்ள் நடுங்குகின்றன, எந்த வினுடியும் வெடிதீரும், மரைவிழும் என்று எதிர்பார்த்து நர்ம்பு நாடிகள் அத்தனையும் துடிக்கும் உணர்வின் உச்சக் கட்டத்தில் தவித்தான் கந்தசாமி! -
கலைமரை மறுபடியும் தலையை உயரத் தூக்குகிறது;
மணியன் வெடிவைக்கவில்லை. கந்தசாமி விஷயத்தைக் சட்
டென ஊகித்துக்கொண்டவன்போல் அவசரம்ாக மணியணி
டமிருந்து துவக்கைப் பறிக்கிருன். அந்த அரவங்கேட்டுத் துள்ளித் தெறித்து ம்றைகின்றன ம்ரைகள்!
வழியெல்லாம் வாய் ஒயாம்ல் திட்டிக்கொண்டே வரும் கந்தசாமியை மணியன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. நன்முக இருட்டிவிட்டது. காச்சான் காற்று விழுந்து குளிர்ந்த கொண்டல் பலமாக வீசுகின்றது. விண் ணுங்கு மரங்கள் குழைபுரட்டி நிற்பது இருட்டிலும் வெளே

Page 17
22 மழை வந்தது
ரெனத் தெரிகிறது. மந்திக்ள் ம்ரங்களின் கிளைகளை உலுப் பிப் பாய்ந்து தனுப்போடுகின்றன. வானில் கருமேகக் கூட் டங்கள் திரளுகின்றன.
கிராமத்தை அடைந்ததும் வளவுக்குள்ளேகூட வராது வெறுப்புடன் போகிருன் கந்தசாமி, குடிசைக்குள்ளேயிருந்து
வெளியேவந்த லட்சுமியின் முகத்தில் ஒரே பீதி மணியன்
வேட்டையாடி வந்தான இல்லையா என்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை.
*இஞ்செருங்கோ, தம்பியை வந்து பாருங்கோ, எனக்கு ஒரே பயமாய்க்கிடக்கு’ என்றவளை விலக்கிவிட்டு குடிசைக் குள் நுழைகிருன் மணியம். குப்பிவிளக்கின் ஒளியில் ஒலைப்பா யில் கிழித்த நார்போல் துவண்டுகிடக்கும் மகனைக்கண்ட மணியனுக்கு நெஞ்சுக்குழியைத் துக்கம் அடைத்தது. அவனை வாரி அப்படியே மடியில் கட்டிக்கொண்டான். திறந்திருந்த கதவினூடாக வீசிய கூதல்காற்று விளக்கையும் அணைத்து விடுகிறது.
லட்சுமி தட்டுத் தடும்ாறிக்கொண்டே வந்து மணிய
னின் தோளைப்பற்றியபடியே இருக்கிருள். வெளியே ஒரே இடிமுழக்கம்! இரண்டொரு பெரிய மழைத்துளிகள் பொட் டுப் பொட்டென்று காய்ந்துகிடக்கும் கூரையில் விழுகின்றன.
(சிந்தாமணி 1970)
*
 

ஒரு கவிதை சிதைகிறது
. . . .
A.
*、 பொழுதுசாய்ந்து இருள் கவியும் நேரம், அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் விளையாடச் சென்ற தமது பிள் ளைகளைக் குரல்நீட்டிக் கூப்பிடுகின்றனர்.
அவள் ஒரு போத்தல் விளக்கையேற்றி மாலுக்குள் வைத்துவிட்டு, முற்றத்தில் தவழ்ந்த பிள்ளையைத் தூக்கி இடுப்பில் வைத்தவாறே கோழிக்கூட்டை அடைப்பதற்குப் போகிருள்.
அந்தக் கோழிக்கூடு பெரியதுதான். முன்பு கிட்டத் தட்ட இருபத்தைந்து கோழிகள்வரை அதற்குள் அடையும். இப்போது இரண்டு பேடுகள்தான் அதற்குள் இருந்தன.
மிகுதி? பாதி விற்றதும் மீதி கறியாக்கியதுமாகக் கரைந்துபோய் விட்டன.

Page 18
24 ஒரு கவிதை சிதைகிறது
இந்நேரம் அவளுடைய மூத்தபிள்ளைகள் இருவரும் விளையாடிவிட்டு வீடுவந்து சேருகின்றனர். மூத்தவன் அரை யில் காற்சட்டை மட்டும் போட்டிருக்கின்றன். ஏழுவயதான அவனுடைய உடல் மெலிந்துபோய்க் கிடக்கிறது.
மற்றவள் பெண், அவளுக்கு ஆறுவயதுதான் இருக்கும். போதிய ஊட்டம் இல்லாததால் கண்கள் மங்கி ஒளியிழந்
தவைகளாகக் காணப்படுகின்றன. அவள் அவர்க்ளிருவரை
யும் கிணற்றடிக்குக் கொண்டுபோய்க் கழுவித் தானும் கால் முகிம் கழுவிக்கொண்டு வருகிருள்.
அடுக்களைத் திண்ணையில் அவர்களைவிட்டு ஈரம் துவட்டி பின்பும் அதே உடைகளைத்தான் அணிவிக்கிருள். முன்பெல் லாம் நேரம் ஒரு உடை மாற்றும் அந்தப் பிள்ளைகளுக்கு
இப்போ இருப்பது இந்த ஒரேயொரு உடைதான். குப்பி
விளக்கின் ஒளியில் அவள் பிள்ளைகளுக்குத் திருநீறு பூசி இருத்திவிட்டுச் சோறுபோட்டுக் கொடுக்கிருள். கலகலப்பு எதுவுமின்றி அவர்கள் மெளனம்ாகச் சாப்பிடுகின்றனர்.
அவளுடைய கணவன் ராசு மாலுக்குள் சாக்குக்கட்டி லில் கிடக்கிருன்.
அவள்தான் இந்த இரண்டு வருடங்களுள் எவ்வளவு
மாறிப்போய்விட்டாள்! முன்பெல்லாம் கிணற்றடிக் கமுகு போன்ற கொள்ளைச் செழிப்புடன் கன்னம் குழியச் சிரித்த
எறும்பின் சுறுசுறுப்புடனும், மலர்ந்த முகத்துடனும்:
ஒடியாடி வேலைசெய்தவளா இவள்? இல்லை! இன்றும் அதே வேலைகளைத்தான் செய்கிருள். அதே சுறுசுறுப்புடன்தான் செய்ய முயற்சிக்கிருள்.
*

ஒரு கவிதை சிதைகிறது 25
ஆனல் இப்போ அவளால் முடியவில்லை; குப்பிவிளக் கின் மங்கிய ஒளியிலே அவள் வெறும் எலும்புக் கூடாகத் தோற்றுகின்ருள். மனக்கவலை ஒருத்தியை இந்த அளவுக்கு உருக்குலைத்துவிடுமோ?
மடியில்கிடக்கும் பிள்ளைக்குப் பால்கொடுத்தவாறே
அவளுடைய விழிகள் அவர்களைத்தான் கவனிக்கின்றனவா? இல்லையே! அவ்விழிகள் அவர்களுக்கும் பின்னே வெகுதூரத் தில் அல்லவா வெறித்திருக்கின்றன.
அவள் அவர்களுடைய எதிர்காலத்தையிட்டுச் சிந்திக்
கிருளா? அல்லது கடந்துபோன வளமான நாட்களை மீண் டும் மனதில் எண்ணிப்பார்க்கிருளா? அவள் எதைத்தான் எண்ணியபோதும் அவளுடைய விழிகளில் உயிர் என்பதே காணப்படவில்லை. ':- -
அந்த விழிகள் மட்டுமன்றி அந்த வீடும்வளவும்ே கடந்த இரண்டுவருடங்களாகத்தம் களையையே இழந்துவிட் டிருந்தன. கிணற்றைச் சுற்றிநின்ற வாழைமரங்கள் கவனிப் பாரின்றி முறிந்தும் குட்டிபெருக்கியும் நிற்கின்றன.
1. முறைவேய்ச்சல் தவறியதால் மால்கூரை இற்றுப் போய்க்கிடக்கிறது. அங்கிருந்த எல்லாம்ே தாம் முன்பிருந்த நிலையைவிட்டிறங்கி உயிர் இழந்துபோய்க்காணப்படுகின்றன.
எட்டுமணியிருக்கும் பிள்ளைகள் அங்கங்கே முடங்கிக் கொண்டுவிட்டார்கள், சாக்குக்கட்டிலில் இதுவரை படுத் திருந்த ராசுவுக்குப் பொறுக்க்வில்லை. எழுந்து சுவரில் உள்ள ஆணியில் தொங்கும் தன் சேட்டுப்பைக்குள் கைவிட்டுப் பார்க்கிருன் எதுவுமில்லை.

Page 19
26 ஒரு கவிதை சிதைகிறது
அறையினுள்ளேபோய் மாடத்தினுள் கையைவிட்டுத் துழாவுகிருன். அங்கு எதுவுமில்லை. மேலே பரணில்கிடக்கும் றங்குப் பெட்டியை இறக்கி வீட்டுமூலையில் எரியும் குத்து விளக்கினடியில் வைத்து ஆராய்கிருன், அங்கும் எதுவும் ད། இல்லை.
இரண்டு ஆண்டுகட்கு முன்பு அந்த றங்குப்பெட்டி யைத் திறந்தாலே ஒரு சுபமணம் வீசும். அதன் ஒருமூலை யில் அவளுடைய நகைகள் எல்லாம் சிவப்பு ரிஷியூ கடதா சியில் சுற்றப்பட்டு முடிச்சுப்பெட்டியில் இருக்கும், அதன ' ருகே பணநோட்டுக்கள் துணியினலே சுற்றப்பட்டு அச்சறுக் கையாக வைக்கப்பட்டிருக்கும்.மறுபக்கத்தில் அவர்களுட்ைய் நல்ல துணிம்ணிகள் பாங்காக அடுக்கப்பட்டிருக்கும். கல்யா ணம்ான புதிதில் அவன் அவளுக்கென்று வாங்கித்தந்த *சென்ற் போத்தல் அதற்குள் இருக்கும் பெட்டியைத்திறந் ததுமே அதன் சுகந்தவாசனை பரவும். " . . . た
ܗ  ܼܵ
வீசப்பட்டுக் கிடக்கிறது. அதற்குள் சென்ற்றும் இல்லை. வாசனையும் இல்லை. அதைப்போலவே அந்த றங்குப்ப்ெட்டி யும் வெறுமையாகக் கிடந்தது. சலிப்புடன் அதைத்தூக்கிப் பரணில் போட்டுவிட்டு வெளியேவந்த ராசுவை அவள் ஏறிட் , டுப் பார்த்தாள்.
அவளும் எத்தனையோ தடவைகள் சொல்லிப்பார்த்து 1A விட்டாள். கெஞ்சிக்கேட்டாள்; கோபித்துக்கொண்டு அவ னுடன் புேசாமலே இருந்தாள். தாறும்ாமுகப்பேசிச் சண்டை பிடித்து, அடி உதைகூட வாங்கிக்கொண்டாள். அதன்பின் அவள் களைத்துப்போனுள்.
இப்போதும் அவனை ஏறிட்டுப்பார்த்த அவள் விழி * களில் அந்தக் களைப்புத்தான் தெரிந்தது. அவன் எங்கோ பார்த்தவாறே 'நீ சாப்பிட்டிட்டுப் படு நான் உதிலை ஒருக்
 

*,
1.
ஒரு கவிதை சிதைகிறது 27
காப் போட்டுவாறன்' என்று சொல்லியவாறே தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு போகிருண்.
அணைத்துவிட்டு மால் வாசலருகே படுத்துக்கொள்கிருள். ‘உதிலை ஒருக்காப் போட்டுவர, போய்விட்டான் அவன்.
அந்தக் கிராமவாசிகளில் ஒரு கணிசமான தொகை யினர் தத்தம் வீடுகளிலிருந்து ‘உதிலை ஒருக்கால் போட்டு வர' என்று புறிப்படும் நேரம் இதுதான்.
அவர்களிற் பலர் கூலிவேலை செய்பவர்கள் . சிலர் விவ சாயிக்ள். இன்னுஞ்சிலர் எந்தவேலையும் இல்லாமல் இதே வேலையாகத் திரியும் இளைஞர். '
飘 இங்குள்ள பலவீடுகள் இந்நேரம் இக்குடிமக்களின் தேவையைப் பூர்த்திசெய்வதற்கும், ஒருசில இடங்களில் தம் 'சுயதேவையையும் பூர்த்திசெய்வதற்காகவும் தற்காலிகத் தவறணைகளாக மாறிவிடும். -
* அவற்றில் ஒன்றை நோக்கித்தான் ராசு இப்போது போய்க்கொண்டிருக்கின்றன். அவன் மடியிலே பணம் இல் லாததனுல் அவன்நடையில் உற்சாகம் இல்லை. இருப்பினும் * விடாய்" ம்ே லிட அவன் அந்த வீட்டைநோக்கி நடக்கிருன்.
கடந்த மூன்றுவருடங்களாகத்தான் இந்தப் பழக்கம். ஆரம்பத்தில் உடற்சுகத்துக்காக என்று தொடங்கி இன்று அதற்காகவே ஆகிவிட்ட பழக்கம். அந்தநேரம் இவனிடம் நிறையப் பணம் புழங்கியபோது, ஆலடிச்சந்தியில் இவனைக் காத்துநின்று அழைத்துச்செல்லும் நண்பர்கள் பலர் இருந் தார்கள். அவனுடன் கூடிச்சென்று அரையும் காலும்ாக் சேர்ந்து குடித்துவிட்டு, கூடவே பத்துஇருபது என்று கைமாற்ருக வாங்கிச்சென்றவர்களும் உண்டு.

Page 20
28 ஒரு கவிதை சிதைகிறது
நாட்செல்லச் செல்ல கையிலிருந்த பணம் கரைந்தது. நகைகள் மக்கள் வங்கியில் அடைக்கலம் புகுந்தன. மீண் டும் பணம் செலவாகி அவன்கை வற்றியபோது அந்த நண் பர்களெல்லாம் அவனைவிட்டு நழுவிப்போக அந்தப் பழக்கம் மட்டும் வாஞ்சையுடன் அவனுடன் தங்கிவிட்டது.
இதோ ராசு வருவதைக் கண்டதும், சந்தியில்நிற்கும் அவனுடைய பழைய நண்பர்கள் சிலர் அவசரம்ாக . அவ்வி டத்தைவிட்டு நகர்ந்து வேறெங்கோ போவதுபோல் செல் கின்றனர். அவர்களுடைய இச்செயல் ராசுவுக்கு நெஞ்சில் வேதனையை ஏற்படுத்தியது. - - -
அவனிடம் கணிசமான தொகையைக் கட்டணுகப்பெற்று இன்னமும் திருப்பித் தராதவர்களும் அவர்களில் இருந்தனர். ராசுவுக்கு அவர்களைப்பற்றி எண்ணும்போது ஒரே எரிச்ச லாகவிருந்தது. -
அவனிடம் கடந்த இரண்டுமூன்று நாட்களாகக்கையில் சல்லிக்காசுகூட இல்லை. வீட்டுப்பாட்டை அவன்மனைவி ஏதோவக்ையாய் ஒளித்தும்றைத்து வைத்த சொற்பப்பணத் தைக்கொண்டு சமாளித்துவிட்டாள். -
ஆனல் இவனுக்கோ குடிக்காமல் இருக்கவே முடிய
வில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளில் அவன் குடிக்காத
நாளே கிடையாது. இப்போது 'நாலேந்து நாட்களாகத் தனக்கு வாடிக்கையாகச் சாராயம் விற்கும் முருகுப்பிள்ளை
யிடந்தான் கடனுகக் குடித்துவந்தான். இப்போதும் அவன் கால்கள் அவனை அங்கேதான் இழுத்துச் செல்கின்றன.
ம்ாலுக்குள் முருகுப்பிள்ளை மட்டும்தான் இருக்கிருர், வேறு ஒருவரையும் அங்கு காணவில்லை.

ஒரு கவிதை சிதைகிறது 29
முன் பெல்லாம் ராகவைக்கண்டவுடன் எழுந்து தடல்
புடலாக் வரவேற்கும் முருகுப்பிள்ளை, இன்று அவனைக் கண்
டும் க்ாணுதவாறு இருக்கிருர்,
*என்ன முருகுப்பிள்ளை? இண்டைக்கு ஒருத்தரையும் காணேல்லை' என்று கேட்டவாறே ராசு மால் திண்ணையில் அடeருகின்ருன்.
'ஆரது? ரர்கவே. இப்ப வியாபாரம் கொஞ்சம் மந்தம். எல்லாரும் குடிச்சுப்போட்டுக் கடன்சொல்லிப்போட் டுப் போகினம். இண்டைக்குச் சாராயத்துக்குப் போகக் . கூட கையிலை, காசில்லை' என்று முருகுப்பிள்ளை முணு
முணுத்தார்.
ராசுவுக்கு சுருக்கென்று நெஞ்சில் தைத்தது. இது வரையும் சுகம்ாக வாழ்ந்தவன். சுடுசொல்லுக் கேட்டறியா தவன். சட்டெனக் கோபங்கூட வந்தது.
" என்ன முருகுப்பிள்ள்ை! நான் கடனுய் நேற்று முந் தனுள் குடிச்சதுக்குத்தானே உப்பிடிக் குத்தரவாய்க் கதைக் கிறியோ?" என்று சற்றுச் சூடேறிய குரலில் கேட்டான்
ராசு , -
'சிச்சீ! என்னதம்பி, உன்னைப்போய் அப்பிடியெல் லாம் சொல்லுவனே! எத்தினைதரம் நான் காசுக்குத் தட் டுப்பட்டபோது உதவி செய்திருக்கிருய்." என்று முருகுப் * பிள்ளை பவ்வியமாகக் குழைந்தார்.
ராசுவுக்கு இப்போதெல்லாம் குடிக்காத சமயங்க்ளில் சின்ன விஷயங்களுக்கெல்லாம் எரிச்சலும், சினமும் ஏற்படும். ஒரு காப்போத்தல் உள்ளே போனல்தான் முகம் விடியும். பேச்சிலும் சுறுசுறுப்பு ஏற்படும்.

Page 21
30 ஒரு கவிதை சிதைகிறது
இன்ருே கையில் பணமில்லை என்ற மனச்சோர்வுடன் * விடாய் காரணமாக ஏற்பட்ட உடற்சோர்வும் சேர்ந்து கொள்ளவே உடல் பதறியது, கைவிரல்கள் சிறிது நடுக்கம் கண்டன. "
\
எனினும் சற்றுத் தணிந்துபோய் 'ஒரு காப்போத் தில்" கொண்டுவா முருகுப்பிள்ளை' என்று ராசு கேட்ட போது 'உண்ணுணைத்தம்பி! ஒருசொட்டுச் சாராயம்கூட என்னட்டை இல்லை. கிடந்தால் வைச்சுக்கொண்டு உனக்கு இல்லையெண்டு சொல்லுவனே!' என்று முருகுப்பிள்ளை சத்தியம் பண்ணினர்.
YA
ராசுவுக்கு மனம் விழுந்துபோய்விட்டது. 'அப்ப
நான் வாறன்' என்று கூறியவாறே ராசு எழுந்து படலை ஃ யைத் திறந்துகொண்டு ஒழுங்கைக்கு வந்தான். அவ்னுக்கு
குடிக்காம்ல் இருக்கத் தலை வெடித்துவிடும் போலிருந்தது ,
அடுத்து இரண்டு ஒழுங்கை தள்ளித்தான் கந்தப்பு வின் வீடு. அவனும் சாராயம் விற்பவன்தான். அவனிடம் கேட்டால் ஒருவேளை தருவான். என்று எண்ணியவாறே. கந்தப்புவின் வீட்டைநோக்கி நடந்தான். .
அங்கு கந்தப்புவின் மனைவிதான் இருந்தாள். 'அவர் காலமை வெளிக்கிட்டுப் போனவர், இன்னும் காணேல்லை' , என்று அவள் கூறியதும் ராசுவிற்கு மிகவும் ஏமாற்றமாய்ப் போய்விட்டது. −
கடன்சொல்லிவிட்டுக் குடிக்க லாம். ஆனல் அவனுடைய மனைவி என்ன சொல்வாளேர்
என்று ம்னம் தயங்கியது.

.நடந்தான் ۔۔۔۔۔
ஒரு கவிதை சிதைகிறது 3.
இருந்தும் அந்தப் பாழாய்ப்போன விடாய் கூச்சத் தையெல்லாம் உதறி எறிந்துவிட்டு வாய்விட்டுக் கேட்க வைத்தது. ܗ
A. ‘கையிலை இப்ப காசில்லை. உங்கை முருகுப்பிள்
" ளையிட்டையும் ஒண்டும் இல்லையாம். அதுதான் இஞ்சை வந்தனன். கந்தப்பு நிக்குமெண்டு நினைச்சன். ' என்று ராசு இழுத்தான். அவன் இதுவரைக்கும் இப்படிப் பிச்சை கேட்பதுபோல் எங்கேயும் இரந்து நின்றதில்லை. அந்தப் "பழக்கம்' "ராசுவை இந்த நிலைக்கும் இறங்க வைத்து விட்டது. -
ஆஞல் கந்தப்புவின் மனைவி 'அவர் ஒருத்தருக்கும் கடனுக்குக் குடுக்கவேண்டாம் எண்டிட்டுப் போனவர்'
ஃ க என்று சொன்னதும், அவனுக்குச் செருப்பால் முகத்தில்
அடித்ததுபோலிருந்தது. கூனிக்குறுகியவனக ராசு ஒன்றுமே. பேசாமல் தலைகுனிந்தவாறே தன்னுடைய வீட்டைநோக்கி
அவனுடைய வீட்டுக்குச் செல்வதானல் மீண்டும் முருகுப்பிள்ளையின் வீட்டைக் கடந்துதான் செல்லவேண் டும். அந்த வளவடியில் வரும்போது, அங்கு பேச்சுக் ' குர்ல்கள் க்ேட்கவே ராசுவின் கால்கள் சற்றுத் தயங்கின.
' இஞ்சாலை வந்து இருங்கோ பொடியள். இப்பான் உவன் ராசு வந்திட்டுப் போழுன்- ஒரு சொட்டுக் கூட என்னட்டை இல்லையெண்டு சொல் லிப் போ ட் டன்.
எனக்குக் கட்டுமே!"
இப்படி முருகுப்பிள்ளை யாருக்கோ சொல்வது ராசு
γή வின் காதில் நெருப்பாக விழுந்தது. அதை தொடர்ந்து
அவனுடைய பழைய நண்பன் ஒருவனின் குரல் கேட்டது.
a

Page 22
32 ஒரு கவிதை சிதைகிறது
'சந்தியிலை நாங்கள் நிக்கேக்கைதான் ராசு அதாலை வந்தவன். நாங்கள் மெல்லமாய் விட்டிட்டுக் கழண்டிட் டம், பெரிய கரைச்சல். 9
ராசு நின்று மேலும் கேட்டுக் கொண்டிருக்க மன தில்லாமல் வீட்டை நோக்கி நடந்தான். அவமானமும் ஆத்திரமும் அவனைப் பிய்த்தெடுத்தன.
வளவுப் படலையைத் திறந்து dրլգա ஒலி கேட்டு அவன் மனைவி எழுந்து அடுக்களைக்குள் சென்று விளக்கைக் கொளுத்தினள். . . "
அவன் சுரத்தில்லாமல் போய்ச். சாக்குக் கட்டிலில் விழுந்தான். s
அவள் சாப்பாட்டுத் தட்டைக் குடத்தடியில் கழு விக் கொண்டே ' வாருங்கோவன் சாப்பிட ? ? என்று f அழைத்ததற்கு ' எனக்குப் பசிக்கேல்லை' என்று அவனி" டமிருந்து பதில் வந்தது. அவள் கேப்பையை வைத்து விட்டு, கை ஈரத்தைச் சேலைத் தலைப்பில் து  ைட்த்த . வாறே சென்று சாக்குக் கட்டிலில் அவனருகே உட்கார்ந்து அவனைத் தொட்டுப் பார்த்தாள்.
- - -
முன்பெல்லாம் கட்டுக்கோப்பாக வன ப்பு டன் பொலிந்த அவனுடை உடல் இப்போ மெலிந்து போய்க் கிடந்தது. அவனுடைய கைகளைக் பற்றிக் கொண்டு, அவன் முகத்தை உற்றுநோக்கியவளுக்கு இன்று அவன். குடிக்கவில்லை என்பது தெரிந்தது.
என்னதான் அந்தப்பழக்கத்தை அவள் விரும்பா விடி னும், இப்போது அவனைப் பார்க்கையில் அவளின் இதயத் : தில் பரிதாபம் மேலிட்டது. - ". . .

ஒரு கவிதை சிதைகிறது 33
'என்னட்டையும் உங்கை ஒரு சதமும் இல்லை. கிடந் தால் தராம்ல் விடுவனே!' என்று அவனுடைய நிலையைப் புரிந்துகொண்ட அவள், கரகரத்த குரலில் ஆறுதல் கூறி யதற்கு 'எனக்குத் தெரியுந்தானே! நான் அதுக்குயோசிக் γ. கேல்லை. ' என்று கூறிவிட்டுப் பெருமூச்சுவிட்ட அவன்
கண்கள் முகட்டை வெறித்து நோக்கின.
(சிந்தாமணி 1971)

Page 23
ஒரு சொ ட்டுத் தேன்
ITரிகாலந்தான். இருப்பினும் கந்தனுடைய முக்த் , திலும் உடலிலும் வியர்வை ஆருக வழிந்துகொண்டிருந்” தது. வெறிபிடித்தவன் போலக் கோடாரியைக் கையில் ஏந் தியபடி அவன் செடிகளையும் புதர்களையும் விலக்கியவாறே காடேறிக்கொண்டிருந்தான்.
காடு இருண்டு கிடந்தது. அடிக்கடி பெருமழை பெய்து தால் மரங்களெல்லாம் ஈரங்குடித்துத் கறுத்துப்போய்க்
BG5III LGST
அவனுடைய நடையில் வேகமிருந்தாலும் அவன். விழிகள் மட்டும் எந்தவொரு மரத்தையும் தவறவிடாது : கவனம்ாக ஆராய்ந்துகொண்டிருந்தன. கலங்கிச் சற்றுச் r சிவந்துபோயிருந்த அவ்விழிகளில் தீவரம், ஏமாற்றம்,சோகம்

ஒரு சொட்டுத் தேன் 35
இவையெல்லாமே குழம்பிப்போய்க் கிடந்தன. ஈரஞ்சுவறி
இளகியிருந்த பாதங்களில் சுருக்கென்று தைக்கும் முட்களை
யும் பொருட்படுத்தாமல் அவன் எதையோ தேடிச் சென்று ' கொண்டிருக்கிருன், -
ஆனல் அவன் தேடிவந்ததன் சுவடு எந்தம்ரத்திலுமே காணப்படவில்லை. ஆனலும் அவன் சோர்ந்துவிடவில்லை.
எதிரே குறுக்கிட்ட காட்டாற்றில் முழங்காலளவுக்கு இறங்கி முகத்தில் சில்லிடும் நீரை அடித்துக்கழுவி, இரண்டு வர்ய் நீரையும் பருகிக்கொண்டு ஆற்றைக்கடந்து அப்பாற் கிடந்த காட்டினுள் நுழைகிரு?ன். 「 .
வவுனியா மாவட்டத்தின் காடுகளில் காணப்படும் இந்தக் காட்டாறுகள் கோடையிலே வரண்டுபோய் மணற் படுக்கைகளாகக் கிடக்கும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனல் மாரிகாலம் வந்தாலே காய்ந்துபோய்க் கிடக்கும் காட்டாறு கள் சிலமணிநேர மழை வீழ்ந்ததுமே கட்டுக்கடங்காமல் பிரவகிக்கும். குளங்கள் நிறைந்து தளும்பும்.
ஆனல் இச்சிறு குளங்களையொட்டி அமைந்திருக்கும் சின்னக் கிராமங்களிலுள்ள விவசாயிகளின் வாழ்க்கையோ மாரியில் வரண்டுவிடும்.
: மார்கழி பீடைபிடித்த மாதமென்பார்கள். மனைவி "யின் ஒரேநகையான, தாலிக்கொடி, வித்துக்கென்று வைத் திருந்த நெல், அங்குயிங்கும் சில்லறையாக வாங்கிய கைகடன் எல்லாமே மாரியில் குடிசைகளைவிட்டு வெளியேறிவிடும். நெல், அடைவுவைத்து எடுத்த பணம் அத்தனையையுமே அவரவர் வயல்களுக்குள் உழுது புதைத்துவிட்டு அண்ணுந்து வானத்தைப் பார்த்தவண்ணமே இருப்பார்கள். கோதுமை மாவும் மரவள்ளிக்கிழங்கும் வயிறுகளை அரைகுறையாக நிரப்பிக்கொண்டிருக்கும்

Page 24
தினுள் நுழைவதென்றல் மிகவும் சிரம்ந்தான்.
36 ஒரு சொட்டுத் தேன்
வயல்கள் ஒருபடியாக விளைந்து ம்ாசி, பங்குனியில் அறுவடை முடிந்ததும் க்ைக்குவரும் பணத்தைக்கொண்டு கொடி யை மீட்பார்கள், கடனை அடைப்பார்கள். வருடப் பிறப்பு வந்தால் ஒருசில துணிமணிகள்; இரண்டு போத்தல் சாராயம் இவற்றுடன் வந்தபணம் சென்றுவிடும். வைகாசி போய் ஆனி வருவதற்குள் மீண்டும் கடன், அடைவு என்ற ரீதியில் சகடயோகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இவர்க
ளது வாழ்க்கை.
இடையில் தப்பித் தவறி வானம் பொய்த்துவிட்டால் அல்லது தண்ணியைப் போட்டுவிட்டு சில்லறை அடிதடியில் இறங்கி வழக்குக் கணக்கென்று வந்துவிட்டால் அந்த வீழ்ச் சியிலிருந்து எழுந்து மீண்டும் பழைய வாழ்க்கை வட்டத்
" ཞི་
கந்தனும் இவர்களில் ஒருவன். அவனுக்கும் ம்னவி .ܓ̇ܝܼܪܵܐ
மக்களுண்டு, பிரச்சினைகளுண்டு.
காலை நடந்த நிகழ்ச்சியை நினைத்தாலே கந்தனுக்கு
நெஞ்சு குமுறியது.
அவனுடைய நான்காவது குழந்தையான ராணிக்கு
நான்கைந்து நாட்களாகவே சுகவீனம். எதைத் தின்ருளோ
தெரியவில்லை. ஒரேயடியாக வயிற்ருல் போகத்தொடங்கி
விட்டது. இரண்டொருநாள் அதையும் இதையும் கொடுத் துப் பார்த்தாள் கந்தனுடைய மனைவி, குணமில்லை. கடந்த
இரவு முழுவதும் குழந்தைக்கு நினைவேயில்லை.
விடியற் காலையில் கந்தன் குழந்தையையும் தூக்கிக் '്യ്
கொண்டு அயற்கிராமத்துப் பரியாரியாரிடம் ஓடினன். அவர் குழந்தையின் கையைப் பிடித்துப்பார்த்து உதட்டைப்
*
 

37
ஒரு சொட்டுத் தேன்
பிதுக்கிவிட்டு, ஒரு தூக்ளக் கையிலெடுத்து "இதை மூன்று
நேரம் சுத்தமான தேனிலே குடு. நாளைக்குத்தான் பொடி
தப்புமோ இல்லையோ எண்டு சொல்லலாம்' என்று கூறிய போது கந்தனுக்கு வயிற்றை எதுவோ செய்தது.
இருப்பினும் மிக்வும் நம்பிக்கையுடன் மருந்தை வாங் கிக்கொண்டு சந்தியிலிருக்கும் சங்கக்கடையருகில் வந்துதான் அவனுக்குத் தன் வீட்டில் மருந்துக்குக்கூடத் தேனில்லை என்பது நினைவுக்கு வந்தது. -
நான்கு மாதங்களுக்கு முன்னர் அவனுடைய குக் கிராமத்திலே தேனுறு பாய்ந்தது. அந்நாட்களில் கந்தன் தினமும் தன் ஊரவருடன்சேர்ந்து காட்டுக்குச் செல்வான். கிடைக்கும் தேனைப் பிழிந்து பகிர்ந்துகொள்வார்கள். அந்த முறை கந்தனுடைய வயல்வேலிக்கு முட்கம்பி மிகவும் -Wஅவசியமாகத் தேவைப்பட்டது. எனவே தனக்குக்கிடைத்த முப்பதுபோத்தல் தேனையும் அப்படியே மொத்தமாக அயற் கிராமத்தில் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு விற்றுவிட்
LIT 60T . . . . . . . சை! மருந்துக்குக்கூட ஒருசொட்டுத் தேன் வைக்காமல் விற்றுவிட்டது எவ்வளவு பிழையாய்ப் போயிற்று. . என்று சிந்தித்தவண்ணம் நடந்து
கொண்டிருந்த கந்தனுக்குச் சட்டென்று ஒரு யோசனை பிறந்தது. அவனிடமிருந்து தேனை மொத்தம்ாக வாங்கிக் கொண்டவரின் கடை அருகில்தானே இருக்கிறது. மருந் துக்குக் கொஞ்சத் தேன் கேட்டால் நிச்சயமாகக் கொடுப் பார் என்று எண்ணியவன், வேகம்ாக நடந்துசென்று அக் கடை வாசலில் ஏறினன்.
கல்லுப் பிள்ளையார்போல உட்கார்ந்திருந்த கடை
~) முதலாளியின் பின்னே உயரம்ான பிராக்கிகளில் தேன்
போத்தல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட தும் கந்தனின் மனம் ஆறியது.

Page 25
38 ஒரு சொட்டுத் தேன்
* புள்ளைக்குச் சுகமில்லை முதலாளி, "மருந்துக்குக் கொஞ்சத் தேன் வேணும்!'
"ஒருபோத்தல் பன்னிரண்டு ரூபாய் கந்தன்'
கந்தன் திகைத்துப்போனன். தன்னிடம் இருந்து ஒருபோத்தல் நான்குரூபாய்க்குக் கொள்வனவுசெய்த தேன்
இப்போ பன்னிரண்டு ரூபாவா? அவனுல் பேசவே முடிய
வில்லை.
'எத்தினை போத்தில் வேணும் கந்தன்?" ܗܝ -
ளேக்கு மருந்து குடுக்க ஒரு சின்னக் குப்பிப் போத்தலுக்கை
ஐஞ்சாறு சொட்டுத்தேன் தந்தாக்காணும்' கந்தன் கூனிக்
குறுகிக் குழைந்தான்.
'நான் கடன் குடுக்கிறேல்லையெண்டு உனக்குத் தெரி
யுந்தானே கந்தன்'
'முதலாளி கொஞ்சம் தயவுபண்ணுங்கோ' கந்தன்
வேண்டினன்.
ஆனல் அந்த முதலாளி அதற்குமேல் எதுவுமே பேச வில்லை. அவன் அங்கு நிற்பதையே உணராதவர் போலப்
பழைய பத்திரிகை ஒன்றில் மூழ்கிவிட்டார்.
கந்தன் ஊரைநோக்கி நடந்தான். தோளில் துவண்டு கிடந்த குழந்தையின் உடல் தகித்தது. அதைவிட அதிக
மாக அவனுடைய நெஞ்சு கொதித்தது.
கிராமத்தையடைந்ததும் மனைவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு, அங்கு உள்ள ஆறேழு குடிசைகட்கும்
சென்ருன். ஆனல் அங்கும் ஒரே பதில்தான்.

ஒரு சொட்டுத் தேன் 39
"இஞ்சையும் ஒருசொட்டுத் தேனும் இல்லைக்கந்தன் உன்னுேடைதானே நாங்களும் தேன் வித்தனங்கள். மருந் துக்குக்கூட இல்லாமல் பொடியள் திண்டாடுதுகள்.
தேனுறு பாய்ந்த அக்கிராம்த்தில் மருந்துக்குக்கூடத் தேனில்லை. குமுறும் நெஞ்சுடன் திரும்பிவந்த கந்தன் தாயின்மடியில் வதங்கிப்போய்க் கிடந்த குழந்தையின் நெற் றியிலே கையைவைத்துப் பார்த்தான். நெருப்பாய்ச்சுட்டது. க்ால்க்ள் சில்லிட்டுப்போய்க் கிடந்தன.
ஒன்றுமே பேசாமல் கோடரியையும் எடுத்துக்கொண்டு நண்பகல்நேரம் காட்டில் நுழைந்தவன் கிராமத்தைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டான்.
* இப்போ பொழுது சாய்வதற்கும் இன்னும் அதிக் ృవీడి.92 இன்னமும் சந்திக்கவேயில்லை"
அங்காங்கு அவர்க்ள் முன்பு தேன்தறித்த மரங்களில் இருந்த தேன்குடிகளெல்லாம் எங்கோ சென்றுவிட்டன. போதாக்குறைக்கு நிலவெறிக்கும் நாட்கள். தேன்குடி கண் ணில்பட்டாலும் அந்த வதைகளில் தேனிருப்பது மிக அசாத்தியம்? நிலவுக்குத் தேனீக்கள் தேனைக் குடித்துவிடும்
கந்தன் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. அதோ! அந்தச் சரிந்த வேலம்ரத்தில் கரடி ஏறிய அடையாளங்கள் தென்படுகின்றனவே! கரடி தேன் எடுப் பதற்காகத்தான் ம்ரங்களில் ஏறும் கந்தன் நெருங்கிச் சென்று கரடியின் கால்நகங்கள் மரத்தில் ஏற்படுத்தியி ருந்த அடையாளங்களைக் கவனிக்கின்றன். அவை எத்த ஆ னையோ நாட்களின்முன் ஏற்பட்டவை! அவன் சோர்ந்து விடாமல் சட்டென மரத்தில் ஏறி தேன்கொட்டருகில் வரு கிருன், பூவாசல் கறுத்துக்கிடக்கிறது. இதழ்களைக் குவித்து

Page 26
40 ஒரு சொட்டுத் தேன்
பூவாசலினுள் ஊதிவிட்டுக் காதைக் கொடுத்துக்கேட்கிருன்,
தேன் பூச்சிகள் இரையும் ஒசை கேட்கவில்லை! ஏமாற்றத்
Լե պLD ցՋ
துடன் கீழே இறங்கியவன் மிக்வும் வேகமாக நடக்கிருன்,
ஐயோ! பொழுதுபடமுதல் ஒரு சின்னத் தேன்குடி எண்டாலும் சந்திச்சுதேயெண்டால்!.
மகள் ராணியின் முகம் அவன் மனக்கண்ணில் தெரி கிறது. ' '
பொழுது சாய்ந்துவிட்டது. நன்முக இருட்டிவிட் . டால் காட்டில் வழியே தெரியாது. இனி எப்படி தேன் பார்க்கமுடியும் என்று நினைத்து, தன்கிராமம் . இருக்கும் திசையில் திரும்பி, நாலைந்துபாகம் நடந்தவனுடைய காதில் குளவி இரைவது கேட்டது. கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தான். /
ஒரு பாலைமரத்தில் பொக்காக் இருந்த ஒரு பகுதியை சுற்றிக் குளவிகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
குளவிகள் தேன்கூட்டில் நுழைந்து தேன்குடிக்க முயல்வது வழக்கம். ஆகவே நிச்சயம் அந்தக்கொட்டில் தேன் இருக்கவேண்டும் என்று நினைத்து, விறுவிறென்று மரத் தில் ஏறிப் பூவாசலை அவதானித்த கந்தனின் முகம் சற்று மலர்ந்தது. தேனீக்கள் பூவாசலில் நுழைவதும், வெளிப்படு வதுமாகக் காணப்பட்டன.
மரத்தைக் கோடரியால் தட்டிப்பார்த்து, கொட்டு எவ்விடம் என்பதை நிச்சயம் செய்துகொண்டு, கந்தன் விரைவாகத் தறிக்கத்தொடங்கினன்.
 

ஒரு சொட்டுத் தேன்_ 4.
சில நிமிடங்களுக்குள்ளாகவே பூ வாசலின்கீழ் ஒரு நீள் சதுரமான பகுதி அப்படியே ஒரு கதவு போலப் பெயர்ந்து விழுந்தது. அந்தத் தூவாரத்தினுள் கந்தன் வாயால் ஊத ஊத, தேனீக்கள் தாம்  ெமா ய் த் து இருந்த வதைகளை விட்டு மேலே கொட்டுக்குள் போய் அடங்கிக் கொண்டன. -
கந்தன் நம்பிக்கையுடன் க்ொட்டினுள்  ைக  ைய விட்டு ஒவ்வொரு வதைகளாகப் பிய்த்தெடுத்தான். வதை யில் தேனிருந்தால் ஈயம் போலக் கணக்கும். கந்தனின்
கையில் வந்தவையோ காற்று போல் லேசாக விருந்தன."
வெள்ளை வெளேரென்றிருந்த அந்த வெற்று வதைகளை எறிந்து விட்டு மீண்டும் கொட்டுக்குள் கையை விட்டுப் பதற்றத்துடன் துளாவினன் கந்தன்.
கொட்டின் மேலே, தேனீக்கள் மொய்த்தி ரு ந் த பகுதியில் இருந்த " " கணக்கன்வதை அ வ னு  ைடய நடுங்கும் விரல்களுள் அகப்பட்டது. அதைப் பிய்த்தெடுத்
ததுமே தேனீக்கள் மொய்த்துக் கொட்டின. சுரீரென்று
கடுக்கிய விஷத்தின் வேதனையையும் பொறுத்துக் கொண்டு அவன் அந்தக் கணக்கன் வதையை எடுக்கிருன், உள் ளங்கை அகலமேயுள்ள அந்த வதை குண்டுபோ ல க் கனத்தது. -
தேன் பிலிற்றும் அந்த வதையைக்  ைக க்கு ஸ் அடக்கியபடியே கந்தன் தன் கிராமத்தை நோக்கி புய . லென விரைகிருன். -
இதோ வலது கையினுள் தேன் கசியும் அந்த வதையைக் கொண்டு போய் ஒரு பேத்தி இ லை யி ல் பிழிந்துவிட்டு அதனுள் பரியாரியார் கொடுத்த தூளைக் குழைத்து ராணியின் நாவில் தடவவேண்டும், என்ற
தவிப்பில் அவன் காட்டில் மூச்சிரைக்க ஓடுகிறன்.

Page 27
42. ஒரு சொட்டுத் தேன்
சூரை முட்கள் தோலைப் பிய்க்கின்றன. கரம்பை முட்கள் காலில் ஏறுகின்றன. மேனியில் காயம்ப்ட்ட இடங்களில் வியர்வை வழிந்து சொல்லொணு எரிவை ஏற்படுத்துகின்றது.
இருப்பினும் கந்தன் தன் குழந்தையின் உயிரைத்
தடுத்து நிறுத்தி விடுவதற்காக மரங்க்ளில் மோதி க்
கொண்டும், கொடிகளில் இடறுபட்டும் தன் குடிசையை நோக்கி ஓடுகிருன், -
தேனில் குழைத்த மருந்தை தின்றதும், குழந்த்ை கண்ணைத் திறப்பாள். மனைவியின் முகம் மலரும், மற்றப் பிள்ளைகள் மறுபடியும் சிரித்து விளையாடுவார்கள் என்ற
நம்பிக்கை அவன் கீால்களுக்கு வலுவைக் கொடுக்கின்றன.
ஓடி, ஒடி அவன் கிராமத்து எல்லைக்கு வந்த போது நிலவு பகலாய்ப் பொலிகிறது. நிலவொளி தேங் கித் ததும்பும் அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு அவனு ட்ைய மனைவியின் ஒற்றை பிலாக்கணம் அவன் காதில் நாராசம்ாய் பாய்கின்றது. * 19 1 ܀
ஓடிவந்த பாதையில் சட்டென நின்றுவிட்ட கந்தன் ஆத்திரத்தில் பற்களை இறுகக் கடித்துக் கொள்கிருன், இரைக்கும் மூச்சு கனலாகத் தகிக்கிறது. -
எந்த நிலைமை ஏற்படினும் இலகுவில் ம்னதைத்
தளரவிட்டுவிடாத அந்தக் கிராமத்தானுடைய கண்கள் கலங்குகின்றன.
༣
 
 

905 சொட்டுத் தேன் 43
அந்தச் சின்னஞ்சிறு ‘* கணக்கண்வதை அவனு டைய பலம் மிக்க வலது கைவிரலுக்குள் நசுக்கப்பட்டு கசுங்குகிறது. தேன் துளிகள் சொட்டுச் சொட் டாக ம்ன்னில் சிந்திக் கொண்டிருக்கின்றன.
(30-9-73) வீரகேசரி-வாரமஞ்சரி,
馨
畿

Page 28
கிழக்கு வெளுக்கின்றது
இன்னமும் கிழக்கு வெளுக்கவில்லை. இன்று எங்க ளுடைய வீட்டுவேய்ச்சல். வீட்டில் எல்லோருமே வைகறை யில் எழுந்துவிட்டனர். நேற்றுப் பின்னேரம்ே வீட்டுக்கூரை யிலிருந்த இற்றுப்போன கிடுகுகளையெல்லாம் பிடுங்கிவிட் டிருந்தனர். மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியிலே மொட் டையாய் வெறிச்சென்று கிடக்கும் எமது வீட்டைப் பார்க் கிறேன். என்னுடைய எதிர்காலமும் இப்படிக் கூரையில்லா
வீடாய்க் குட்டிச் சுவராய்க் கிடக்கிறது. என்ற நினைப்பு
நெஞ்சைக் கவ்வுகின்றது.
நான் ஒரு பட்டதாரி. ஆமாம், வேலையற்ற பட்ட தாரிதான். வீட்டுக்குச் சுமையாக் நிற்கும் ஒரு பட்டதாரி என்னுடைய தகப்பனர் ஒரு ஏழை விவசாயி படிப்பில் சற்றுச் கெட்டிக்காரணுக விளங்கிய என்னை, கடன்பட்டு கஷ்டப்பட்டுப் படிப்பித்தார். நான் பட்டம்பெற்றவுடன்

s
-\
ܐ ܐ .
கிழக்கு வெளுக்கின்றது 45
நிச்சயமாக ஒரு உத்தியோக்ம் கிடைத்துவிடும். எம்து குடும்பம்படும் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பி யிருந்தவர் அவர். என்குடும்பத்தினர் மட்டுமன்று, நானுங் கூட என்னுடைய பட்டத்திற்கும் திறமைக்கும் நிச்சயம் ஒரு வேலை கிடைத்துவிடும் என்றுதான் நம்பியிருந்தேன். அந்த அசையாத நம்பிக்கையின் ஆதாரத்தில் ஆசைகள் புலவற்றை நெஞ்சில் வளர்த்துக்க்ொண்டவன் நான். இன் ருே? அந்த ஆசைகளையும் நம்பிக்கையையும் சுமந்திருந்த என் நெஞ்சில் அடி பலம்ாகப்பட்டுவிட்டது.
இந்த வைகறைப் போதிலேயே என்னைத்தவிர என் குடும்பத்தினர் யாவரும் வீட்டு வேய்ச்சலுக்காகத் தண்ணி ஊறவைத்திருந்த பனையீர்க்குகளை எடுப்பதும், புதிய கிடுகுக்ளைத் தூக்கிவந்து வீட்டைச்சுற்றிப் போடுவதும்ாக ஏதோவோர் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். நான்மட்டும் முழங்கால்களைக் கட்டியவாறே குசினித் திண்ணையில் குந்தி யிருக்கிறேன். உடம்பை வளைத்து இந்த வேலைகளையெல்லாம் என்னல் ஏனே செய்ய முடிவதில்லை. அப்புவுடன் வயலுக் குச் சென்று வயல்வேலைகளில் ஈடுபடவோ, அல்லது ஆச்சி யுடனும் தங்கைகளுடனும் வளவுக்குப் பின்புறம் இருக்கும் சிறிய தோட்டத்தில் வேலைசெய்யவோ என்னல் முடிவதில்லை.
என்னுடைய உடம்பால் முடிவதில்லை என்பதைவிட என்னு
டைய மனத்தால்முடிவதில்லை என்றுதான் சொல்லவே ண்டும். பட்டம் பெற்றதும் பதவி கிடைத்துவிடும், கைநிறையச் சம் பாதிக்கலாம், அப்பு பட்ட கடனையெல்லாம் அடைத்துவிட
லாகம், கல்யாணத்துக்குக் காத்திருக்கும் இரண்டு தங்கைகளை
யும் கரைசேர்த்து விடலாம் என்றெல்லாம் சதா கனவுகண்ட
எனக்கு, கேவலம் இந்தச் சின்னவேலைகளையெல்லாம் செய்
வதாலா குடும்பத்தின் க்ஷ்டங்களும் கடனும் மறைந்து
விடப்போகின்றன என்று ஒர்அவநம் பிக்கை விரக்தி!

Page 29
AV
46 கிழக்கு வெளுக்கின்றது
இந்த விரக்தி மனப்பான்மைதான் என் நெஞ்சில் இருள் வெள்ளமாய்த் தேங்கிக் கிடக்கின்றது. இதன் காரணமாக நான் எதிலுமே பற்றற்று, அக்கறையின்றி மனம் ஒடுங்கிப் போய்க் கிடக்கிறேன். என்னுடைய எதிர்காலம் எனக்கு முன்பாக விடியாதவொரு இரவாக நீண்டுகிடக்கிறது.
என்னுடைய இந்த மனநிலை என் பெற்ருேருக்கும், தங்கைக்ட்கும் நன்கு விளங்கியது போலும்! ள்மது குடும்பத் தின் சுமைகளில் நாளாந்த முயற்சிகளில் நான் பங்கு கொள்வதில்லையென்று அவர்க்ள் என்றுமே முகங்கடுத்து நடந்ததில்லை. அதற்கு ம்ாருக் என்னை அன்புடனும், மரியா தையுடனும்ே நடத்துவர்; ஆனல் ஊரவர்க்கு எனது ம்ன நிலை புரியுமா? "என்னதம்பி இன்னும் உத்தியோகம் ஒண்
டும் கிடைக்கேல்லையோ? என்று கேட்பர். கேலி இழையோ
டும் அவர்களுடைய அனுதாபம் என்நெஞ்சை நெருப்பாய்த் தகிக்கும். இந்த வேதனையைத் தவிர்ப்பதற்காகவே நான் அவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க் விரும்புவது என்னுடைய வழக்கமாய்விட்டது.
இன்னும் சற்று நேரத்தில் விடுவேய்வதற்காக -9|Ա 16ւ) வரெல்லாம் வந்துவிடுவர். அதற்கிடையில் நான் இங்கிருந்து
எங்காவது போய்விடவேண்டும் என்ற நினைப்பில் எழுந்து
படலையடிக்கு நடக்கிறேன். குப்பிவிளக்கின் ஒளியில் வீடு வேய வருபவர்களுக்குப் பிட்டவிக்க ஆயத்தம் செய்துகொண் டிருக்கும் என் இளையதங்கை ‘அண்ணை த்ேத்தண்ணியைக் குடிச்சிட்டுப்போவன், கலந்துபோட்டன்!’ என்று அல்ழத் ததைக்கூடக் கவனியாமல் மேலே நடக்கிறேன். நிலம் வெளிக்கத் தொடங்குகிறது. -
நீராவிக் குளக்கட்டில் நிற்கும் நாவல் மரத்தின் கீழ்ச் சென்று அம்ர்கிறேன். என்னிதயம் இருண்டுபோய்க் கிடக்

s
கிழக்கு வெளுக்கின்றது 47
அண்மையில் ஏதோ அரவம் கேட்கவே தனிமை கலைகிறது. கவனம் திசை திரும்புகிறது.
அங்கே செல்லமும் அவள் மகளும் நீராவியைநோக்கி வருகின்றனர். மகள்முன்னே நடந்துவர, செல்லம் மகளு டைய தோளைக் கைநீட்டித் தொட்டவாறே தொடர்ந்து கொண்டு வருகிருள். அவளுடைய விழிகள் மூடிக்கிடக்கின் றன. ஆம்ாம்! செல்லம் ஒரு குருடி! அவளுடைய மகள் தான் அவளுக்கு இப்போ விழிகளாக்விருக்கிருள். அவுள் தான் செல்லத்தின் முதல்பிள்ளை. அவளுக்குப் பன்னிரண்டு பதின்மூன்று வயதிருக்கும். கடைக்குட்டியான அடுத்தபிள்ளை செல்லத்தின் இடுப்பிலே இருக்கிருன். கிடுகு இழைப்பதற் கென்று நீராவிக் குளத்தில் ஊறப்போட்டிருந்த தென்னே லைகளை எடுத்துச் செல்வதற்காக் அவர்கள் அங்கே வரு கிருர்கள்.
கணவனும் மனைவியும்ாய் இரண்டு குழந்தைகளுடன்
ஏழ்மையிலும் திருப்தியுடன் வாழ்ந்த குடும்பம். இரண்டு
வருடங்களுக்குமுன் ஒருநாள், உம்ழைநேரம் தென்னந்தோப் பில் ஒலையெடுக்கச்சென்ற செல்லத்தின் விழிகளிரண்டும் அங்கு விழுந்த இடியுடன் தோன்றிய மின்னலால் ஒளியி ழந்துவிட்டன. போதாக்குறைக்குச் சென்றவருடம் அவளு டைய கணவனும் போய்விட்டான். நெஞ்சை வலிக்கு தென்று இரண்டுநாட்கள் படுத்தவன்தான் மூன்ரும் நாள் இறந்துவிட்டான், -
அதன்பின் செல்லம் தன் இடுப்பில் ம்கனை எடுக்கிக் கொண்டு, ம்களுடைய தோளைத் தொட்டவாறே தட்டித் தடவி ஊரெல்லாந் திரிந்து தென்னேலைகளைச் சேகரித்து வந்து கிடுகிழைத்து விற்பாள். அதிற்கிடைக்கும் வருமா னத்தைக் கொண்டு ஒருவாறு குடும்பத்தை நடத்துகிருள்,

Page 30
48 கிழக்கு வெளுக்கின்றது
அவர்களை இங்கு காணும்போது நேற்றுநடந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. நேற்றுப்பின்னேரம் செல்லம் தன் பிள்ளைகளுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந் தாள். எங்களுக்குக் கிடுகுவிற்ற பணத்தைப் பெற்றுச்செல் லவே அவள் அங்கு வந்திருந்தாள்.
அப்போது நான் வீட்டுத் திண்ணையில் சிந்தனையில் மூழ்கியவனுய் இருக்கிறேன். செல்லம் மகனைச் சுமந்து
கொண்டு மகளைத்தொட்டவாறே வீட்டுமுற்றத்தில் வந்து
நிற்கிருள். செல்லத்தைக்கண்ட என்னுடைய ஆச்சி அவர் களை இருக்கச்சொல்லிவிட்டு **செல்லத்துக்கும் பொடியளுக் கும் தேத்தண்ணிபோட்டுக்குடு தங்கச்சி!' என்று குரல்
கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் வருகிருர், பணத்தை
எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர்.
'ஏன்ரி செல்லம். உன்ரை பெர்ட்டைக்கு ஒரு
ܐܢܹܐ؟
தாவணிப் பாதியெண்டாலும் போட்டுவிடக்கூடாதே? பக்கு ()
வப்படுற பருவத்திலை கண்ட இடமெல்லாம் கூட்டிக்கொண்டு
திரியுருய்.' என்று நீட்டி முழக்கியவாறே முற்றத்தில் .
கிடந்த வெற்றிலைப் பெட்டியடியில் குந்துகின்றர். இப்போ என் கவனமும் அங்கே செல்கின்றது. ஆச்சியின் கேள்வி
யைச் செவியுற்ற செல்லத்தின் விழிகளற்ற முக்த்தில் இரு
ளும் கலவரமும் பரவுகின்றன. அவளுடைய மகளோ நாணத் தினுல் கூசிக் கோணுகின்ருள். அவளுடைய உடம்பின் வளர்ச்சியைக் கவனித்த எனக்கு ஆச்சியின் வின வியப்பைத் தரவில்லை,
‘என்ன செய்யிறதம்மா..? எனக்கென்ன கண்தான் , தெரியுமே? நான் என்ன செய்வன். இந்தப் பொடியன் கொஞ்சம் வளந்து ஆள்பட்டிட்டான் எண்டால் ஒலையெடுக் கக் கொள்ள என்னைக் கூட்டிக்கொண்டு போவான். அது மட்டும்ென்டாலும் அந்தப் பெட்டை பக்குவப்படாமல் இருந்திட்டால் பெரிய புண்ணியம் அம்மா!..? -ܝ

f
ܗܝܼ .
கிழக்கு வெளுக்கின்றது ፌ9
செல்லத்தின் குரல் உடைந்து தழுதழுக்கிறது. வய தும் வளர்ச்சியும் வறுமையைக்கண்டு வராமலா போய்விடு கின்றன என எனக்குள் எண்ணிக்கொள்கிறேன்.
நேற்றைய இந்த நிகழ்ச்சியை இன்றைய சூழல் ஞாப கப்படுத்தவும் என்மண்ம் சிந்திக்க ஆரம்பிக்கின்றது. தன் இரண்டு கண்களையும் அதற்குமேலாகத் தன் கணவனையும் பறிகொடுத்துவிட்டு எப்படித்தான் இந்தச் செல்லம் வாழ்க்கை நடத்துகின்ருள்? பார்வையோ கிடையாது. உற்
றர் உறவினர் என்று சொல்லிக்கொள்ள யாருமேயில்லே.
இருப்பினும் இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு இவளால் எப்படித்தான் சீவியம் நடத்த முடிகிறது?
இந்த வினவுக்கு விடையறியவேண்டும் என்ற ஆவ லுடன் எழுந்து செல்லமும் அவள் ம்களும் ஒலைகளை இழுத் துச் சென்ற வழியில் நடக்கிறேன்.
இதோ, இங்கே நீராவியை அடுத்த மேட்டுப்பாங் கான ஒருஇடத்தில், யாரோ ஒருவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு மூலையில் அவளுடைய சிறிய குடிசை அமைந்திருக்கிறது. வேலிப்புறமாகச் சென்று நான் பார்க் கையில் அக்குடிசையும், அதன் சூழலில் செல்லமும் பிள்ளை களும் இருப்பது நன்கு தெரிகிறது.
அது ஒரு சிறிய குடிசை முன்புறம் சாய்வாகப் பத்தி யிறக்கி சுத்தமாக மெழுசப்பட்டிருக்கும் இடந்தான் அவர் களது அடுப்படி திறந்திருக்கும் வாசலினுரடாகப் பார்க் கையில் அங்கே வீட்டு முகட்டுக்கப்பில் பிள்ளையார் படம் போட்ட பழைய கலண்டர் மட்டை ஒன்று தொங்குகிறது. அது கொழுவப் பட்டிருக்கும் ஆணியில் இரண்டு மூன்று செவ்வரத்தைப் பூக்கள் வீற்றிருக்கின்றன. வீடும் பசுஞ்
சாணத்தினுல் ம்ெமுகப்பெற்றுப் புனிதமாகத் தெரிகின்றது.
குருடியாயிருப்பினும் எவ்வளவு சுத்தமாகி வீட்டைவத்திருக் கிருள்.

Page 31
50 SMS SMS SMSMSMSMSqS கிழக்கு வெளுக்கின்றது குடிசையை அண்டிய வெளியிடத்தில் செல்லமும் அவள் ம்களும் பரபரவென்று கிடுகிழைத்துக்கொண்டிருக் கின்றனர். ஒருபக்கத்தில் நீராவிநீரில் ஊறிய தென்னேலை தள் பாதிபாதியாகக் கிழிக்கப்பட்டுக் கிடக்கின்றன. ம்று புறம் இழைக்கப்பட்ட கிடுகுகள் காலை வெய்யிலில் கிடந்து உலருகின்றன. கதை, பேச்சு எதுவுமேயில்லாத துரித இயக் கம்! இருவருடைய பழக்கப்பட்ட விரல்களும் மளமள வென ஓலைத்தளிரை நீவியெடுத்து ஈர்க்கை முறித்து ஒலையை மடித்து மாறிமாறிப் பின்னலிட்டு இழைக்கின்றன. விழிக ளற்ற செல்லம் மிக விரைவாக் இழைக்கின்ருள் அப்பப்டிா! எவ்வளவு சுறுசுறுப்பு! - -
" . அப்போது ‘செல்லம்1. செல்லம்." என்று குரல் கொடுத்தவாறே என்னுடைய ஆச்சி அங்கே அவசரம் அவ சரம்ாக வருகின்ருர், .
'வீட்டு மேய்ச்சலுக்குக் கிடுகு க்ானது. அதுதான் பாஞ்சு வாறன். இந்தாடி பொட்டை இந்தக் காச்ை வை: துக்கொண்டு கெதியிலை ஒரு அம்பது கிடுகு தாமோனை' என்று ஆச்சி மூச்சிழைக்கக் கூறுகிருர், செல்லத்தின் மகள் எழுந்து ஆச்சியிடம் பணத்தைவாங்கிப் பார்த்துவிட்டு 'நில்லுங்கோம்மா. மிச்சக்காசை எடுத்துத் தந்திட்டுக் கிடுகை எண்ணித்தாறன்.' என்று கூறிக்கொண்டே குடி சைக்குள் போவதற்குக் காலெடுக்கவும்
'எடி தங்கச்சீ. ! வீட்டுக்குள்ளே போகிடாதையடி. அதுக்கை சாமிப்படமெல்லோ கிடக்கு. ’
என்று கூவியவாறே கிடுகு இழைத்ததையும் விட்டு
விட்டுத் துடித்துக்கொண்டு எழும்புகிருள் அவளுடைய தாய், தட்டுத்தடுமாறி எழும்பியவள் ஒருகணம் விக்கித்துப்போய்
நின்றுவிட்டாள். குடிசையினுள் போகக் காலெடுத்த அவர்
ளுடைய ம்களும் தலைகுனிந்தவண்ணம் அப்படியே நின்று @i? "... Ll-frair, - - 。°

f
محرز
கிழக்கு வெளுக்கின்றது . S S S 5
"மேடி செல்லம். நேற்றுப் பின்னேரங்கூட நான் கேட்டதுக்கு உன்ரை பெட்டை இன்னும் பக்குவப்படேல்லை எண்டெல்லே சொன்னனி!?.??
செல்லம் தட்டுத்தடும்ாறி ஆச்சியின் குரலை நோக்கி வருகின்ருள். பார்வையற்ற அவளுடைய கண்கள் கரகர வெனக் கண்ணீர் சொரிகின்றன. அவளுடை குரல் கம்மு கின்றது " ..
"ஊத்தங்கரைப் புள்ளையாராணை அம்மா. உங்க்ளை ஏமாத்தவேணும் எண்டு நான் அப்படிச் சொல்லேல்லை. என்ரை விதி!. இவள் பக்குவப்பட்டு இப்ப இரண்டு மாச மாகுதம்மா. சனம் அறிஞ்சுதே யெண்டால் நாலுவிதமாய்க் கதைக்குங்கள். இதை நினைச்சுத்தானம்மா நான் உங்களுக் குப் பெர்ய் சொல்லிப்போட்டன். இந்தப் பொடியன் கொஞ்சம் புத்திதெரிஞ்சு என்னைக் கூட்டிக்கொண்டு போகத் துடங்கீட்டால், இவளை வெளியிலை கொண்டு திரியாமல் நான் என்ரைபாட்டைப் பாத்துக்கொள்ளுவன். அதுமட் டும் ஆருக்கும். இதைச் சொல்லிப் போடாதையுங்கோ அம்மா!' -
என்று கொஞ்சும் குரலில் அழுகிருள் அந்தக் குருட் டுத் தாய். அவளுடைய மகன் தாயின் கால்களைக் கட்டிய வாற்ே தாயின் முகத்தைக் கவலையுடன் பார்க்கிருன்.
- செல்வத்தின் வார்த்தைகளைக் கேட்ட எனக்கு மேனி யெல்லாம் ஏதோ செய்து புல்லரிக்கின்றது. கண்ணையிழந்து கணவனையும் இழந்து நிற்கும் இந்தக் குருட்டுப் பெண்ணுக் குத்தான் எவ்வளவு தன்னம்பிக்கை! எத்தனை நெஞ்சுரம்!
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டந்தான்! வாழ்வை எதிர்த் ப் போராடுபவனுக்குத்தான் வாழ்வு வழி

Page 32
52 கிழக்கு வெளுக்கின்றது
விட்டுக் கொடுக்கிறது! கோழைத்தனம்ாக ஒதுங்கி, தனக் குள் தானேஉருகி, தன்மேல் தானேபரிதாபப்பட்டுக்கொண் டிருப்பவனுக்கு விடிவே கிடையாது. என்றெல்லாம் எப் போதோ படித்து உருப்போட்ட தத்துவங்களின் கருத் தெல்லாம் இந்தக் குருட்டுப்பெண்ணின் வாழ்வைக் காணும் r போதுதான் எனக்கு வெளிக்கின்றன.
'அழாதையடி செல்லம்! நானேன் ஆருக்கும் 'பறையிறன். நீ ஒண்டுக்கும் யோசியாதை. ஊத்தங்கரை யான் உன்னை ஒருக்காலும் கைவிடார்!’ என்று என்னு டைய ஆச்சி செல்லத்துக்கு ஆறுதல் கூறுகிருர்,
கலங்கிவிட்ட கண்களைத் துடைத்தவாறே செல்லத் தின் ம்கள் கிடுகுக்ளை எண்ணி அடுச்குகின் முள். ஆச்சி தான் கொண்டுவந்த இழைக்கயிற்றின் உதவியுடன் ஐம்பது கிடுகு களையும் ஒரேகட்டாகக் கட்டுகின்ரு. அத்தனையையும் ஒன் முய்ச்சேர்த்து சும்ந்து செல்லக்கூடிய உடலுரமும், மனத்/ திண்மையும் கொண்ட அவரைப் பார்க்கையில் என்கண்கள் பனிக்கின்றன. நான் ஆச்சியை நோக்கி நடக்கிறேன்.
ஆச்சி அந்தக் கிடுகுக்கட்டைத் தூக்க முயற்சிக்கை யில், இரு கரங்கள் அவளைத் தடுத்துவிட்டு கிடுகுக்கட் டைத் தூக்கி தமக்குச் சொந்தமானவனுட்ைய தலைமேல் வைக்கின்றன. ஆமாம்! அந்தக் கரங்களிரண்டும் என்னு டையவைதான் ! - -
. * -
. (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்-1972)
:: "

வால் வெள்ளி
Iங்கும் அவளைப் பற்றித்தான் பேச்சு வீதியோ ரங்களில் சந்திக்கும் வாலிபர்கள் மத்தியில், கறி வாங்க வென்று வந்து காத்திருக்கும் நடுத்தர வயதானவர்களின் பேச்சில், வேலிகளண்டையில் மாநாடு கூடும் வீட்டுப் பெண்களிடையில், நெசவுக்குப் போகும் கன்னியரின் குசு குசுப்பில், பிள்ளைகள் படுத்தபின் தனிமையில் சந்திக் கும் தம்பதிக்ளின் பேச்சில்- இப்படியாக எல்லோருடைய பேச்சிலுமே அவள்தான் கதாநாயகியாய் இருந்தாள். வானத்தில் அதிசயமாக ஒரு வால்வெள்ளி தோன்றினல் எவ்வாறு மக்களெல்லாம் கூடிநின்று ஆர்வத்துடன் ப்ார்ப் பார்களோ, எப்படியெல்லாம் அதையிட்டுப் பேசிக் கொள் Yn 11 வார்களோ, அதைப் போன்று மல்லிகைத் தீவுப் பகுதி மக்கள் அனைவருமே அவளைப் பற்றிப்பேசிக் கொண் டனர். - -

Page 33
S4
'முந்தநாள் சின்னப் பொடிச்சியாய் இருந்தவள்
இண்டைக்கு விடியக் கருக்கலுக்கை வால்வெள்ளி வீசுமாப் போல பூசிமினுக்கிக் கொண்டு திரியிருள். காலம் கெட் டுப் போச்சுதடா தம்பி! இவள் எங்கையோ ஒரு பகுதியை அழிச்சுப் போட்டுத்தான் போவாள் - இது சிவசம்பரின் அசைக்க முடியாத நம்பிக்கை. -
இந்தப்பக்கத்துப் பொடியள் முழுக்க இவளாலே புழு தாகப் போகுதுகள் தம்பி! நீ வேணுமெண்டர்ல் இருந்து
- Luntsi I ܵ
இது அவருடைய தீர்க்கமான முடிவு.
வைகறைப் பொழுதிலேயே எழுந்துகொண்ட் சிவசம்பர் மனைவியை எழுப்பிவிட்டுக் கடைக்குப் பின்னலிருந்த கிணற் றுக்குச் சென்று கால்முகங் கழுவிக்கொண்டார். கிணற்றுக் கும் கடைக்கும் இடையே அமைந்திருந்த வீட்டின் மத்தி யில் தொங்கிய திருநீற்றுக் குடுவைக்குள் விரலைத் திணித்து
நீற்றையெடுத்து ஈரம்படிந்திருந்த நெற்றியிலும், தோள்.
களிலும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே பூசி கிழக்கு நோக்கித் தலையில் குட்டிக் கும்பிட்டுக் கொண்டார் சிவ
சம்பர். கட்டுமஸ்தான அவருடைய சந்தண மேனி ஆரோக்
கியப் பூரிப்புடன் விளங்கியது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலாகித் தோளுக்கு மிதந்த பிள்ளைகள் இருக்கிறர்கள் என்பதை இலகுவில் நம்பமுடியாது. அவ்வளவுக்கு இரத்தப்
பிடிப்புள்ள தேகம்! -
கடையைத் திறந்து பித்தளைக் கொதியடுப்பைத்
துலக்கிக் கழுவித் தேநீர்ப் பட்டறையை ஆயத்தம் செய்து
கொண்டு "இஞ்சேரும் கொஞ்சத் தணல் கொண்டுவாரும்’
என்று குரல் கொடுத்தார் சிவசம்பர். ஒருகையில் பித்தளை
மூச்குப்பேணி நிறையத் தேநீரும், மறுகையில் ஒரு சிரட்
டையில் தணலும் கொண்டுவந்து நின்ற தன்மனைவியை

சுகம்ாக் இறங்குகிறது
வால் வெள்ளி SS
ஒரு தடவை கவனித்துப் பார்த்தார் சிவசம்பர். கறணேப் பாவட்டந் தடியில் செய்த பாவைப் பிள்ளைபோன்ற அவ ளுடைய எலும்புத்தேகத்தில் சிவப்புநிற லங்காச் சேலை தொங்கிக்கொண்டு கிடந்தது. அந்தச் சிவப்புநிறம் அவருக்கு சட்டென 'அவளை ஞாபகப்படுத்தியது.
* "அவள் ராத்திரி வசுவிலே வந்திறங்கி உங்காலை
வயல்வெளிப் பக்கமாய்ப் போனவளப்பா!' என்றவாறே
தணலை வர்ங்கிக் கொதியடுப்பினுள் போட்டு மேல்ே கரித்
துண்டுகளைக் கொட்டிவிட்டுத் தேநீரையும் வாங்கிச் சுடச்
சுட வாயில் ஊற்றிக்கொள்கிருர். கரித்துண்டுகளில் தன. லின், வெம்மை ஏறுகிறது. சிவசம்பரின் நெஞ்சில் சுடுநீர்
鬣
'உவள் ப்ொரிவாள், ஏன் தான் இஞ்சை நெடுக வந்து திரியிருள்ோ தெரியேல்லை, எளிய சனியன்!!!
சிவசம்பரின் மனைவி திட்டித் தீர்க்கிருள்.
'உதுதானப்பா எனக்கும் யோசினை! எங்க்டை பொடி யங்களும் நல்லாய் வளந்திட்டாங்கள். இந்தக் காலத்திலை ஒழுக்கமெண்டது மருந்துக்கும் இல்லாமல் போச்சுது! என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.” என்று கூறிக்கொண்டே சிவசம்பர் கடையைத் திறந்தார். பொழுது பலபலவென்று விடிந்துகொண்டிருந்தது.
மல்லிகைத் தீவிலிருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவிலிருக்கும் ஆனந்தபுரத்தைச் சுற்றிப் பெரும் பரப்பளவில் காணப்படும் வயல் நிலமெல்லாம் கடந்த பத்து ஆண்களுக்குள் உண்டாகியவைதான். அதற்குமுன் காடாய்க் கிடந்த அந்தப் பிரதேசத்தில் குக்கிராமமாகவிருந்த ஆனந்த
புரம் விவசாய விஸ்தரிப்பின் காரணம்ாகப் புதியதொரு

Page 34
之
S6 வால் வெள்ளி
அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர்தான் ஆனந்தபுரச் சந்தியில் சந்தைக் கட்டிடமும், சங்கக் கடை யும் கட்டப்பட்டன. வெயிலில் நின்று வியர்வை சிந்தி உழைக்க விரும்பாத சிவசம்பர் கிடைத்த சந்தர்ப்பத்தைப் r பயன்படுத்திக் கொண்டார்.
அவருடைய விடுவளவும்: ஆனந்தபுரச் சந்தியை ஒட்டியே இருந்ததும் அவருக்கு வாயிப்பாகப் போயிற்று. வீட்டுக்கு முன்னல் வீதியை அண்டினுற்ப்ோல் ஒரு தேநீர்க் க்டையைக் கட்டிக் கொண்டார். வீட்டிலே தயாராகும் " சுவைமிகுந்த அரிசிப் பிட்டு, இடியப்பம், பால்சொதி மட்டு மல்ல சிவசம்பரின் சுவைததும்பும் பேச்சும், பெரிய மனுஷத் தோரணையும் அவருடைய கடைக்கு நல்ல வியாபாரத்தைக் கொண்டுவந்தன. -
காலேயில் கடையைத் திறந்து வைத்துக்கொண்டு, முதல்நாளையத் தினசரியுடன் கடை விருந்தையில் உட்/ கார்ந்து விட்டாரேயானுல் அவரைச் சுற்றியொரு கூட்டம் வாயைப் பிளந்துகொண்டு காத்துநிற்கும். பாகிஸ்தான்-இந் . தியா போர்முனை தொட்டுப் பதினெட்டு வயதுப் பருவ மங்கை படுகொலை விபரம் வரையில் நவரசம் ததும்பச் சர்ச்சை செய்வார் சிவசம்பர். *
ஆணுல், தற்போது இரண்டொரு மாதங்களாக எந் தச் செய்தியையும்விட அவளைப்பற்றிய "நியூஸ் தான் அவ ருடைய பேச்சின் மையமாகவிருந்தது.
ஆனந்தபுரத்திற்கு மேற்கேயிருக்கும் வயல்களுக்கு மல்லிகைத்தீவின் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் அடிக் கடி வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இதைவிட ༡༩༧༤ நாளொன்றுக்கு நாலு தடவை மல்லிகைத்திவிலிருந்து பஸ் வந்துசெல்லும், அதைச் செலுத்திவரும் டிறைவர், கொண்
 

57
டக்டர் சிவசம்பரின் கடையில் அரைமணி நேரமாவது தங்காமல் செல்லமாட்டார்கள். இவர்கள் எல்லோருடனும் உற்சாகத்துடன் நெருங்கிப் பழகும் சிவசம்பர் அவர்கள் s மூலம்ாக அக்கம் பக்கத்து ஊர்களில் நடந்த புதினங்கள் பற்
றிக் கேட்டறிந்து கொள்வார்.
• g2 -ᎶuᏧᏂᏧ; செய்திகளிலிருந்து உள்ளுர்ச் சங்கதிகள் வரை யில் புதினம் சேகரிப்பதில் அவர் ஒரு புலி! சேகரித்த செய் திகட்கெல்லாம் சுவைபடக் கைகால் வைத்துச் சுவாரஸ்ய: ' மாக அவற்றை நடமாட விடுவதிலும் அவர் ஒரு விற்பன்னர், wن அவருடைய விமரிசனங்களைக் கேட்பதற்கென்றே பலர் அங்கு நின்று செல்வார்கள். " .
காலை பஸ் வந்துவிட்டது. வயல்களுக்குச் செல்லும் பலதரப்பட்ட விவசாயிகள் இறங்கி வயலுக்குச் செல்லும் பாதையில் நடக்கின்றனர். அவர்களிற் பலர் சிவசம்பரின் கடையை நோக்கிவந்து உணவருந்தித் தேநீர் குடிக்கின்ற (ܓܝ னர். பஸ் டிரைவரும் கொண்டக்டரும் கடை விருந்தை யில் போடப்பட்டுள்ள வாங்கில் வந்து அம்ர்ந்துகொள் கின்றனர். -
சிவசம்பரின் மூத்தமகன் தேநீர்ப் பட்டறையில் நிற் கச் சிவசம்பர் வியாபாரத்தைக் கவனிக்கிருர், சற்றுநேரத் துக்குள்ளாகவே விற்பனை மும்முரம் குறைந்துவிடவே 'டிரை வர் கொண்டக்டருக்கு நல்ல ரீயாய்ப் போட்டுக்குடு மோனை' என்று மக்னைப் பணித்துவிட்டு விருந்தை, நிலத்தில் அமர்ந்துகொண்ட சிவசம்பர் டிரைவர் கொண்டக்டரைப் பார்த்து 'ராத்திரிச் சங்கதி தெரியுமோ?' என்று அர்த்து புஷ்டியுடன் கதையை ஆரம்பிக்கிருர்,
*。 TOE பொடியன் கொண்டுவந்த பசும்பால் தேநீரைச் சுவைத்த கொண்டக்டர் 'என்னண்ண சங்கதி?’ என்று

Page 35
58 -
பவ்வியமாகக் கேட்கிருர், 'சீ! அதேயேன் தம்பி பேசு வான்! காலம் நல்லாய்க் கெட்டுப்போச்சுது!’ என்று முகத் தைச் சுழித்துக்கொள்கிருர்,
பின் சட்டெனத் தணிந்த குரலில் 'அவள் ராத்திரி கடைசி வஸ்சிலை வந்து இறங்கினள். நான் கடையைப் பூட்டிற சாட்டிலை'ம்ெள்ளமாய்க் கவனிச்சன் 'வயல்வெளிப் பக்கமாய்ப் போருள். முன்னலை ஆரோ . இரண்டுபேர் போருங்கள்’.என்று சொன்னவர் "டேட் ஏன்னடா இஞ்சை விடுப்புக் கேட்கிருய்? போய் உன்ர்ை வ்ேலைய்ைப் பாரன்’ என்று தன் மகனை ஏசினர். "பாத்தியளே! இந்
தப் பொடியன்டிட எவ்வளவு ரூசியாய்க் கதை கேக்கிருன்
காலத்தைப் பாருங்கோவன்'
"உதையேன் சிவசம்பர் பேசுவான். எங்கை பார்த் தாலும் அவளைப்பற்றித்தானே ஊர் சிரிக்குது. கொஞ்ச மெண்டாலும் வெக்கமோ ஒண்டோ. எளியநாய்!’ டிரைவர் காறித் துப்புகிருர்,
‘வெக்கமோ?. உவளுக்கோ?.’ என்று கேலி கொப்பளிக்கக் கூறிய சிவசம்பர் 'இதைக் கேளுங்கோவின் பொடியள். ராத்திரி வயல்வெளிப் பக்கம் போனவள் எண் டல்லே சொன்னனன். ராத்திரி பண்டிக் கருக்கலோடை
திண்டதாக்கும் விடியப்புறம் வயித்தைக் கலக்கிக்கொண்டு
வந்தது. எழும்பிச் சங்கக் கடையடியாலை போறன். விருந் தையிலை ஆரோ இருக்குமாப்போலை கிடக்குது; கிட்டப் போய்ப் பாக்கிறன். சீமாட்டியார் இருக்கிரு. சுவையான தொரு கட்டத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் கொண்டக் டரை ஏறிட்டுப் பார்த்தார் சிவசம்பர்.
 

வால் வெள்ளி 59
பிறகென்ன?. எனக்கெண்டால் தலைவழிய பத்திக் கொண்டு வந்தது. ஏன் உதிலே இருக்கிருய் எண்டு கேட் டன். காலமை வஸ்சுக்கு வந்தனன் எண்டு சொன்னுள்
s உ ன க் கிே ன் இந்த வே லே? எங்க  ைட ஊர் ப் பொடியளையெல்லாம் ஏன் இப்பிடிப் பாழ்படுத் திரு ய்? எண்டு கேக்கப் பாத்தன் பிறகு ய்ோசிச்சுப் போட்டு பேசாமல் விட்டிட்டு வந்திட்டன்' என்ற சிவசம்பர் தொடர்ந்து 'உங்களுக்குத் தெரியுமே? மல்லிகைத் தீவில் பெருங் கையளெல்லாம் இவளோடை தொடர்பாம். நான் ஊருக்
காகக் கீதைக்கப் போக் நாளைக்கு என்ரை த லை யி ல்ை * ஏதாவது இடைஞ்சல் வந்து சேரும். எனக் கே ன் -
தேவிையில்லாத வேலை. ஆனல் தம்பி இவளாலை பெரிய அழிவுகளெல்லாம் வரப் போகுது. மேடர் அளவிலே யும் வந்து நிற்கும். இருந்து பாருங்கோ. சிவசம்பர் எங்கை இருந்து சொன்னவர் எண்டு நினைப்பியள். ༥) என்று தனக்கேயுரிய பாணியில் தீர்க்கதரிசனம் கூறினர்
-
சிவசம்பர். '
மெய்யே சிவசம்பர் உவள் உங்கடையூர்ப் பொடிச் சிதானே? டிரைவர் விசாரித்தார்.
- 'வப்பன் வரத்தனுய் தேப்பனுேடை கூடிக்கொண்டு இஞ்சை வந்தவள். அப்ப ஒரு சின்னப் பொடிச்சி . * பத்துப் பன்னிரண்டு வயசிருக்கும். இப்ப ஒரு மூண்டு வருஷத்திற்கு முந்தித்தான் காலியாணம் முடிச்சவள். பிறகு தம்பி. புருஷன்காரன் மரத்தாலை விழுந்தாப்
"மெய்தானே அண்ணை கொண்டக்டர் தூபம் G3 unir L LITrit. * -

Page 36
60 வால் வெள்ளி
*அவன் புருஷன் செத்து ஆறு மாதமாகேல்லை. அதுக் கிடையிலை இவள் ஆள்புடிக்க வெளிக்கிட்டிட்டாள்.'" என்ற சிவசம்பர் சட்டென்று தெருவைக் கூர்ந்து கவ னித்தார்.
அங்கு அவள்-இவர்களுண்டய சுவரர ஸ் யமான இருந்தவள்-வந்து கொண் டிருந்தாள். ܦ . . . * ܢ
இருபது வயதிருக்கும். வாளிப்பான உடலில் பெண் ம்ையின் அழகு குலுங்கியது. அள்ளிச் சொருகிய கொண் டையும், வெற்றிலைச் சிவப்பேறிய இதழ்களும் கொண்ட அவள் பார்வையில் அலட்சிய பாவம். சிவப்பு நைலக்ஸ் சேலை அவள் அழகை எடுத்துக்காட்ட மெல்ல நடந்து வந்து கடைக்கு முன்னுல் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சினுள் ஏறியம்ர்ந்து கொண்டாள். மல்லிகைத் தீவுக்குச் செல் லும் வேறு சிலரும் பஸ்சுக்குள் ஏறிக்கொள்ளவே டிரைவர் எழுந்தார்.
.ܘ
** இனி எங்களுக்கும் நேரமாகுதண்ணை !’
ஓமோம்! நீங்கள் ஏன் இனி மினக்கெட்ப் போறி
யள்!' என்று அர்த்தம் பலதொனிக்கச் சிரித்தார் சிவசம்பர் பஸ்சுக்குள் அமர்ந்திருந்த அத்தனை பேருடைய விழிகளும் அவளில் மொய்த்துத் திரும்பின. கடைப்பக்கம் திரும்பிப்
பார்த்த அவளுடைய இதழ்களில் ஒரு அலட்சியப் புன்
பஸ்வரைக்கும் வந்த சிவசம்பர் 'வானத்திலை வால்வெள்ளி தெரிஞ்சுதெண்டால், அதுக்குக் கருத்து உலக்த்திலை எங் கையோ ஒரு இடத்திலை அழிவு சம்பவிக்கும் எண் டு

6
சொல்லுவாங்க்ள் ' என்று தனக்கே உரியதொரு சி லே டைப் பாணியில் கூறிவிட்டுச் சிரித்தார். பஸ்சினுள் இருந்த அத்தனை பேருமே கொல்லெனச் சிரித்தனர். அவளும் சிரிக்கத்தான் செய்தாள். யாவரையும் ஏறிட்டு நோக்கிய அவள் பார்வையில் வெட்க்ம் துக்கம் எதுவுமே தெரியவில்லை .பஸ் புற்ப்பட்டது. சிவசம்பர் பஸ்சைப் பார்த்துக் கொண்டே நின்றர்.
பகல் பொழுதில் இரண்டு தடவைக்ள் மல்லிகைத்
யளவில் சிவசம்பரின் கடையடிச் சந்தியில் வந்து திரும்பி
யது. கடையைப் பூட்டிவிட்டு, விழுந்தையில் சு ரு ட் டு க் குடித்துக் கொண்டிருந்த சிவசம்பரின் கண்களுக்கு அவளும் . இந்த பஸ்சில் வந்திறங்கிச் சங்கக் கடைக்கு முன்னலிருந்த சந்தைக் கட்டிடத்துக்குள் நுழைவது தெரிந்தது. அவளு டன் இன்று யாரும் கூடவே வரவில்லை என்பதை அவ தானித்துக்கொண்ட சிவசம்பர் இண்டைக்குச் சீமாட் டிக்கு வேட்டை சந்திக்கேல்லைப் போல கிடக்கு! என்று தனக்குள் சொல்லியவாறே எழுந்துகடையைச் சாத்திக் கொண்டு படுக்கப் போய்விட்டார். .
அடுத்தநாட் காலை பஸ் வந்தபோது சிவசம்பரின்
கடைக்குமுன்னே ஏகப்பட்ட கூட்டம்! ஆனந்தபுரம் எங்கும்
ஒரே பரபரப்பு பஸ்சை நிறுத் தி வி ட் டு இற ங் கி விசாரித்த டிரைவர் கொண்டக்டர் திகைத்துப் போனர்கள். நேற்றுக் காலையில்கூட தங்களுடன் சந்தோஷமாசப் பேசிக் கொண்டிருந்த சிவசம்பர் இன்று காலை இறந்துவிட்டார் என் பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. -
தீவிலிருந்து வந்து சென்று மீண்டும் இரவு பதினெரு மணி ,

Page 37
62
* ராத்திரி வயித்துக்கை ஏதோ செய்யுது எ ண் டு சொல்லிப்போட்டு வெளியிலை போனவர் கனநேரம் கழிச்சு வந்து நெஞ்சுக்கை ஏதோ செய்யுது, கொஞ்சச் சுடுதண்ணி கொண்டு வா எண்டு துடிச்சார். அடுப்பை மூட்டித் தண் லணியை வைச்சுக் கொண்டு வந்து பாத்தால் என்ரை துரை என்னை விட்டிட்டல்லோ போட்டார்" என்று சிவசம்பரின் மனைவி கண்ணிரும் கம்பலையுமாகக் கூறியபோது அவர்களு டைய நெஞ்சங்கள் உருகின; "மனிச சமுசாரம் சொல்லிக் .. :' +, , , கொண்டே! என்று பெருமூச்சுடன் தங்கள் இறுதி மரியா தையைச் செலுத்தி விட்டு வந்து பஸ்சினுள் ஏறிக் கொண் டனர். ,
'சிவசம்பருக்குப் பிறஷர் குணந்தான். ஏதோ , திம். ரென்று ரத்தம் பீறி இரத்தாசயம் வெடிச்சுப் போச்சு' என்று விளங்கப்படுத்தினர் ஒரு வாத்தியார்.
**நல்லவன் பெரியவனைக் கனகாலத்துக்குச் சீவிக்க தெய்வம் விடாது பாருங்கோ! சிவசம்பற்றை கடவுள் பக் தியும் ஊருக்காய்ப் பாடுபடுற நல்ல நெஞ்சும் இஞ்சை இனி
வேறை ஆருக்கு வரப்போகுது.ம்ம்." உரக்கப் பெரு
மூச்சு விட்டுக் கொண்டார் ஒரு முதியவர்.
- இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு அவளும் பஸ் சினுட்தான் அமர்ந்திருந்தாள்! நேற்றுக் காலை இதே வேளே
யில் சிவசம்பர் வானத்தில் வால்வெள்ளி தோன்றினல் உல
கில் எங்கோ ஓரிடத்தில் அழிவு நிச்சயம்ாக ஏற்படும் என்று
தன்னைக் குத்திக் காட்டிக் கேலி பேசியதும், கடந்த இரவு
சந்தைக் கட்டிடத்துள் தனியாக இருந்த தன்னைத்தேடி
அவர் வந்ததும், அவருடைய சபலத்தைப் புரிந்துகொண்டு
தான் அதற்குத் தூபமிட்டதும், அதனல் தன்வசமிழந்த
சிவசம்பர், தன் கால்களுக்குள் நாய்போலக் குழைத்து
يحظر "
ܗܶܳ

63
கொண்டு நிற்கையில், தன் ஆத்திரம் எல்லாவற்றையும் திரட்டி 'இதுதானே உன்ரை பெரியம்னுசத்தனம்? பெரி சாய்க் கதைப்பியள், தனியச் சந்தித்தால் விடமாட்டியள்' என்று அவர் முகத்தில் காறி உமிழ்ந்ததும், சிவசம்பர் மலைத்துப் போய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. தட்டுத் தடுமாறிப் போனதும் அவள் நினைவில் நிழலாடின.
வீரகேசரி. 1972.
s

Page 38
ஒரு பச்சைமரம்
பற்றி எரிகின்றது
இராசமணி புரண்டு படுத்தாள். பக்கத்து வயற் குடிலிலிருந்து கொட்டும் பனியில் மிதந்துவந்த அந்தப் பாடல் மிகத் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இரு ளிலே விழித்திருந்த அவளுடைய விழிகள் அவனைநினைத்து உறங்க மறுத்தன. இனிமையான இசையுடன் சிருங்கார ரசீம் சிந்தும் அந்தச் சினிம்ாப் பாடலில் ஒவ்வொரு சொல்
லும், அவற்றின் பின்னே மறைந்திருக்கும் அப்பட்டமான
உறவுச் சங்கதிகளும் அவளுக்கு மிகவும் தெளிவாக, இனி மையாகப் புரிந்தன, -

ஒரு பச்சைமரம் பற்றி எரிகின்றது 65
அவள் மனம்ானவளல்ல, அவளுடைய குடும்பத்தின் ஏழ்ம்ை அவளுக்கு, இன்னமும் மனைவியாகும் வாய்ப்பை அளிக்கவில்லை. முப்பது வயது கன்னிப்பெண். இருப்பினும் f அவளுக்கு முத்தங்கள், பருவ அணைப்புகள் புதியனவல்ல. உணர்ச்சியின் எல்லையில் துடிக்கும் ஆண்மையின் பலமும், வேகமும் அவளுக்குத் தெரியாத தொன்றல்ல. ஆனல் அவள் என்றும்ே வரம்பை மீறியது கிடையாது.
அவன் இன்னமும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். ' இராசமணி பாயில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். பக்கத்திலே அவளுடை தங்கையும், தம்பிமாரும் குளிருக்கு ஒருவரை ஒருவர் அண்டிக் கொண்டு உறங்கிக் கொண்டி ருந்தனர். மங்கலாக எரிந்து கொண்டிருந்த அரிக்கன் லாம்பின் ஒளியில் அவர்கள் ஒவ்வொருவரையும் கவனமாக்ப் பார்த்தாள் இராசமணி.
கடந்த வருடம் தந்தை இறந்தபின் பருவம் அடைந்த தங்கை, வயலிலும் தோட்டத்திலும் வேலைசெய்ய வேண் டும் என்பதினுல் இப்போ பாடசாலைக்குச் செல்லாத இரண்டு தம்பிமார் - அப்பாலே சுருண்டு படுத்திருந்து தொய்வினுல் அவதியுறும் தாயார் . நாள் முழுவதும் கடு மையான வெயிலில் கச்சான் பிலவில் வேலை செய்த களைப்பில் தம்ம்ை மறந்து உறங்கும் அவர்களைப் பார்க்கை யில் அவளுடைய கண்கள் பனித்தன. பாடல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. முன்னதைவிட இது இன்னும் பச்சை. உடம்பால் மட்டுமல்ல, பார்வையால் மட்டுமல்ல. குரலால் கூட ஒருவரைத் தீண்டித் தழுவ முடியும் என்று நிரூபிப்பது போல இழையும் குரல்கள், அவன் வரும்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ .வேளை நெருங்குகிறது 7 ܐY
s

Page 39
66 ஒரு பச்சை மரம் பற்றி எரிகின்றது
அவளுடைய உடல் லேசாக்த் தகித்தது. இருபதுகளில் அனுபவிக்க வேண்டியவைகள் முப்பதுகளிலுங்கூடக் கிடைக் காம்ல் போய்விடும்ா?
அவள் படுக்கையை விட்டு எழுந்து கதவைத் இறந்' தாள். -
‘எங்கை புள்ளை பனியுக்கை போருய்? அவளுடைய தாய் முனகினுள். தொய்வு அவளுடைய குரலை அடைத் தாலும், அக்குரலிலே தொனித்த பாசம் இராசம்ணியைக் தளிர்வித்தது.
*தேத்தண்ணி ஆத்தித் தாறனிணை' அவள் குசினிக்குள் சென்று அடுப்பை மூட்டிவிட்டுத் தண்ணிர் கொதிக்கும் வரை காத்திருக்கிருள். -
மீண்டும் பாடல் முழங்காலைக் கட்டிக் கொண்டு எரி கின்ற நெருப்பையே உற்று நோக்கிய வண்ணமிருக்கும் அவளுடைய காதில் அப் பாடல் விழுந்து உள்ளத்தில் நிறைந்து உடலெங்கும் பொங்கிப் பிரவகிக்கின்றது. அவள் தன் முழங்கால்களை இன்னும் நெருக்கமாக நெஞ்சேர்டு சேர்த்தணைத்துக் கொண்டு அந்தப் பாடலிலேய்ே மூழ்கி விட்டாள். . . . . .
முளாசி எரியும் நெருப்பில் அலுமினியப் Lir260TuS 5 ருந்த தண்ணீர் மளம்ளவென்று கொதிக்கிது.
இதோ இன்னும் சில நிமிடங்களுள் அவன் வந்து விடுவான். தேனீரைச் சுடச் சுடக் கொண்டு போய்த் தாயி டம் கொடுத்த இராசமணி, பண்டி கச்சானைக் கிண்டிப் போடும். ஒருக்காப் பாத்து தீவறையை அண்டி விட்டிட்டு

ஒரு பச்சை மரம் பற்றி எரிகின்றது 67
வாறனிணை' என்று கூறிவிட்டுக் குடிசையின் பின்புறம் இருக்கும் கச்சான் பிலவை நோக்கி நடக்கிருள்.
முழு நிலவின் ஒளி பனிப்படலத்தில் தேங்கித் தளும்பு கிறது. குடிசையின் முன்பக்கமாக இருந்த வயலில் நெற் பயிர்கள் சலனமின்றி நின்றன.
அவள் கச்சான் பிலவினூடாகச் சென்று கீாட்டோரத் தில் அடங்கித் தணலாகக் கனன்று கொண்டிருந்த தீவறையில் தடிகளை அண்டிவிடுகிருள். . . "
戀
பாடல்கள் இப்போ மிகவும் தெளிவாகக் கேட்கின்றனி
இரவின் தனிமையிலே, இருவராய்க் கேட்க வேண்டு
மென்றே தேர்ந்து எடுத்து ஒலிபரப்பப்படும் அப் பாடல்"
கள் ஒயவில்லை. உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டு உறங்
@5 Lh உணர்வுக்ளை யெல்லாம் கிளர்ந்தெழ வைக்கும் அப் பாடல்களில் அவள் கிறங்கிப் போய் நிற்கிருள்.
தீவறை சுவாலைவிட்டு எரிகின்றது. அவனை ஏன் இன்
னும் காணவில்லை?
அவள் கச்சான் பிலவு மூலையில் நின்ற நாவல் மரத்தை நோக்கி மெல்ல நடக்கிருள். அந்த நாவலும் அதன் அடி யில் பரந்திருக்கும் வெண்மணலும் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. அங்குதான் அவர்கள் யாருமறியாமல் சந்தித்துக் கொள்வார்கள்.
கடந்த ஒராண்டு காலமாக ஏற்பட்ட உறவு, அவ
னுக்கு அவள் வேண்டும் அத்துடன் சீதனமும் வேண்டு Y மாம். அதுவும் அவளுடைய குடும்பத்தின் தற்போதைய - ஒரே சொத்தான இந்த வயலும் பிலவும் வேண்டும்ாம்,

Page 40
68 ஒரு பச்சைமரம் பற்றி எரிகின்றது
இல்லையேல் அவனுடைய தகப்பன் சம்மதிக்கவே மாட்
டாராம். நேற்றிரவு அவன் கூறினன். இன்று அவனுக்கு
முடிவைக் கூறியாக வேண்டும்.
எதைக் கூறுவது? பாடல்கள் முடிந்துவிட்டன. ஆனல் பனிபடர்ந்த அந்த இரவின் தனிமையிலே, நிலவு தேங் கும் நேரத்தில் 'அந்தப் பாடல்கள் கேளாத கானங்களை, வரையாத சித்திரங்களையெல்லாம் அவளுடைய இளம் நெஞ் சிலே உருவாக்கி விட்டிருந்தன. 'n
கொட்டும் பனியிலும் உடலிலே வெம்மை பரவுவது போன்றதோர் உணர்வு,
அதோ அவன் வந்துவிட்டான்.
அருகில் வந்ததும்ே உரிமையுடன் அவள் கைகளைப் பற்றி கனநேரம்ாய்க் காத்திருக்கிறியே ம்ணி என்று ஆதரவாய் கேட்டவாறே அவளைத் தன்னுடன் சேர்த்த ணைத்தான். அவனுடைய நெஞ்சில் சாய்ந்த இராசமணி தன் முகத்தை நிமிர்த்தி அவனை விழுங்கி விடுவதுபோலப் பார்த்தாள். அகன்ற விழிகள் நிலவில் பளபளத்தன.
அவள் நினைத்தால் அவனை மணக்க முடியும் ஆனல்
இப்படியே அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே இந்த அணைப்பினுள் க்ட்டுண்டவாறே வேறெதையும்ே சிந் திக்காம்ல் இருந்து விட முயன்றவளின் முகத்தை நோக்கிக் குனிந்தான் அவன்.
"கொம்மாவைக் கேட்டணியே மணி? له لقب என்ன7 சொன்னவ?* לא י .

ஒரு பச்சைமரம் பற்றி எரிகின்றது 69
அவள் பதில் சொல்லவில்லை. அவனைச் சுற்றிப் படர்ந் திருந்த அவளுடைய கரங்களின் பிடி இறுகியது; பின் அவ னுடைய அணைப்பில் நின்றும் தன்னை மெல்ல விடுவித்துக் கொண்டு தழு தழுக்கும் குரலில்,
'இந்தக் காணி ஒண்டை நம்பித்தான் எங்கடை குடும் பம் முழுதும் இருக்குது. இதை எனக்கு மட்டும் தந்திட்
அவன் சிலை போல நின்றன்.
அவனுடைய நெஞ்சில் மீண்டும் ஒருமுறை மும் பதிக்க விழைந்த தன் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்ட இராசமணி, ‘இனிமேலும் நான் உங்களைச் சந் * சரியில்லை. நான் போறன்’ என்று கூறி விட்டுச் சிட்டென்று திரும்பிக் குடிசையை நோக்கி வேகமாக நடந்
தாள . -
o a won a அப்பு குடியாமல் கடன்பட்டுக் காணி பூமியை விக்காமல் இருந்திருந்தால். .. -
வயலோரம் வந்துவிட்ட இராசமணி நின்று திரும்பி நாவலடியைப் பார்த்தாள். அவன் அங்கே இல்லை. அவளு டைய விழிகள் சற்றுக் கலங்கின.
அண்மையில் எங்கோ வாசித்தது நினைவுக்கு வருகிறது.
நேற்றைய எம்மவரின் தவறுகட்காகவும், ', நாளைய சந்ததியின் ஏற்றத்திற்காகவும்,
இன்றைய நாங்கள் அனுபவிப்பது வேதனையல்ல - அது சாதனை.
韃.彎。

Page 41
70 ” ஒரு பச்சை மரம் பற்றி எரிகின்றது
வயல் மூலையில் தேங்கி நின்ற நீரில் இறங்கி சில்
லென்ற பச்சைத் தண்ணிரை வாரியள்ளி முகத்திலடித்து கிரங்களையும் கழுவிக் கொண்டு இராசமணி தன் குடி சைக்குச் செல்கிருள்.
2-12-1973 விரகேசரி வாரமஞ்சரி

இ
"இளங்கன்று
அது ஒரு அழகிய வெள்ளைப் பசுக்கன்று ஈரப் பசு மையுடன் பளபளக்கும் கருவிழிகள்! மெத்தென்ற வெண் மையான உடல், வயிறு நிறையப் பசும்பால் குடித்த களிப்பில் மனம் போனப் போக்கெல்லாம் துள்ளி விளையா டியது. சதா களிப்பும் வெருட்சியும் சுடர்விட்ட கண்களைக் கொண்ட அந்தக் கன்று ஒரு பயமறியா இளங்கன்று.
அந்தக் கன்று தன் தாயைவிட்டு வெகுதூரம் செல் வதில்லை. பச்சைப் பசேல் என்று துளிர்த்திருக்கும் பசும் ܠܵܐ ܐܸܡܼܲ புல்லை மணந்து பார்த்து விளையாட்டாக இரண்டு வாய் கடிக்கும். திடீரென வாலைச் உயர்த்திப் பிடித்துக் கொண்டு

Page 42
7) இளங்கன்ாறு
துள்ளிப் பாய்ந்து விளையாடும். பின்பு அதே வேகத்தில் தாயை நோக்கி ஓடி வந்து அதன் பருத்த மடியில் முட் டிச் செல்லம்ாக இரண்டு வாய் பால் குடிக்கும். மீண்டும் விளையாடும். தாய்ப் பசுவுக்கோ, தன் கன்றைப் பார்க்கை யில் உள்ளூர உவகை பொங்கும். இருப்பினும் அதை வெளிக் காட்டாதவாறு மண்டி வளர்ந்து நிற்கும் பசும் புல்லை மேய்ந்தவாறே இருக்கும்.
சாராயச் சிவலிங்கத்தினுடைய பட்டப் பெயரே அவ னுடைய தொழிலை எடுத்துக் கூறும். அவனுக்கு ஒரே ஒரு மகள். அவள் பருவமடைந்து விட்டாள். அவளுடைய தாய்க்கோ தனது புருஷன் இந்த வியாபாரத்தில் முதலில் ஈடுபட்டபொழுது கொஞ்சம்ேனும் இஷ்டமில்லை. சாராயம் குடிப்பதற்கென்று பலரகமான மனிதர்கள் அங்கு அடிக்கடி எல்லா வேளைகளிலும் வந்துபோவது ஆரம்பத்தில் அவளுக்கு ள்ன்னவோ போலிருந்தது. எனினும் வியர்டாரம் சூடு பிடித்து நிலைவரமானபோது அவளுடைய மனமும் மாறிவிட் l-gil
ஏனெனில் இவ்வியாபாரத்தில் அவர்கள் மிக இலகு வாகப் பெருமளவு பணம் சம்பாதிக்க முடிந்தது. பணம் வரும் வழியை அவள் விரும்பாவிடினும் அதனல் வரும் பணத்தை அவளால் வெறுக்க முடியவில்லை. நாளாக் நாளாக அவளும் ஐம்பது சதத்திற்கும் ஒரு ரூபாவிற்கும் அளந்து கொடுப்பதில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். சிவ லிங்கனுக்கு வயலிலும் தோட்டத்திலும் வியர்வை சிந்த உழைத்து அடையும் ஊதியத்தைவிட இந்த வ  ைக யி ல் வரும் வருமானம் அதிகமாகவிருந்தது. தேன் எடுப்பவன் விரல்களில் படியும் தேனைச் சுவைக்க விழைவது விந்தை யல்லவே! சிவலிங்கனும் வியாபாரத்தை மிகவும் உஷாராக வும், உற்சாகமாகவும் கவனித்து வந்தான், வாடிக்கை அதி கரித்தது. வரும்ானம் வளர்ந்தது. -
 

இளங்கன்று 73
இளங்கன்று தன்னிச்சைபடி விளையாடி வரும் இந் நாட்களில் தாய்ப்பசு பசும்புல் உள்ள இடங்களை நாடித் திரிந்தது. கிராமத்தின் எல்லையிலே அடர்ந்த காடு உண்டு.
f அக்காட்டோரத்தில் செழுமை மிக்க பசும்புல் அளவுகணக் கின்றி வளர்ந்து காடாய்க் கிடந்தது. காட்டில் கொடிய விலங்குகள் உண்டென்பதைப் பசு இயற்கையாகவே அறிந்
திருப்பினும் அங்கு மண்டிக்கிடந்த பசும்புல்லின் கவர்ச்சி அதனைச் சுண்டியிழுத்தது. எதனையும் சட்டை செய்யாது அங்கு வளர்ந்திருக்கும் புல்லை உண்டு க்ளிப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் செலுத்தியது அந்தத் தாய்ப்பசு! இந்த மகிழ்ச்சியில் தன் கன்றின் போக்கைக் கவனிக்கித்
சில நாட்களாகவே காட்டுக்கு மிகவும் அருகில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது அ ந்தை .இளங்கன்று ܐܢܐ
அன்று அங்கே ஒரு புதரின் பின்னே ஓர் அழகிய சிறுத்தை இந்தப் பசுக்கன்றையே மிகவும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றது. முன்னுெருபோதும் அவ்வ ளவு அழகிய மிருகத்தைக் கண்டிராத அந்த இளங்கன்றுக்கு
வையாகத் தோன்றின.
பொன்மயமான பட்டுடலில் கரும் புள்ளிகள் துளங்க அச்சிறுத்தை நின்ற அழகை இந்த இளங்கன்று மிகவும் இரசித்தது. சிறுத்தையோ கன்றை நோக்கி "எ ன க் கு க் கிட்டே வந்து கொஞ்சமேனும் விளையாட மாட்டாயா? என்று அன்புடன் கேட்பதுபோல் பார்த்தது. இந்த இளங் கன்றுக்கு சிறுத்தையிடம் போக, விளையாட ம்னமிருப்பி னும் ஏதோ ஒருவகை நாணமும் வெருட்சியும் வந்து தடுக்கவே தாயிடம் துள்ளிக்கொண்டு ஓடி வந்து விட்டது.
அச்சிறுத்தையின் செவ்விழிகள் மிகவும் கவர்ச்சி நிறைந்த

Page 43
74 - இளங்கன்று
தன் தாயிடம் அந்த அழகிய நண்பனைப் பற்றி இளங் கன்று எதுவுமே சொல்லவில்லை. ஆனல் அடுத்த நாள் அந்த நண்பனுடன் விளையாட வேண்டுமென்று எண்ணிக் கொண்டது. அதன் தாய் எதையுமே கவனிக்கவில்லை-பசும் புல்லைத் தவிர.
சாராயச் சிவலிங்கன் வீட்டிற்கு இப்போ அடிக்கடி ஒரு வாலிபன் இருட்டியபின் வந்து போகத் தொடங்கி னன். அவன் அந்தக் கிராமத்துக்குப் புதியவன். வீதிகள் செப்பனிடுவதை மேற்பார்வை செய்யும் வேலை அவனுக்கு, ஒவ்வொரு நாளும் இருட்டியதும் சிவலிங்கன் வீட்டிற்கு வந்து அமைதியாகவிருந்து குடிப்பான். முதல் நாள் மூன்று ரூபாவிற்குக் குடித்துவிட்டு ஒரு பத்து ரூபா நோட்டைக் 'கொடுத்து இருக்கட்டும் என்று சொல்லிப் போய்விட் டான். நாட்பட நாட்பட அவன் சிவலிங்கன் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தன்னிருப்பிடத்திற்குப் போக மிக நேரமாகும்.
இப்போதெல்லாம் அங்கு வருகையில் முட்டை வாங்கி
வருவான். சிவலிங்கன் வீட்டில் இவற்றைக் கொடுத்து
அவிப்பித்து சாராயம். குடிக்கையில் சுவைக்காகச் சாப்பிடு வான். சிவலிங்கனுக்கும் அவன் மனைவிக்கும் இந்தப் புதி யவன்மேல் அபார மதிப்புண்டு. கடன் என்ற சொல்லே கிட்ையாது! அமைதியாகத் திண்ணையில் அமர்ந்தவாறே சிகரெட் புகை சூழச் சாராயப் போத்தலுடன் இருப் L Ꮷ[ᎢᏛᏈᎢ . .
அவனுடைய சொந்த ஊர் குருனுகலாம்! மனைவி எப் போதோ அவனை விட்டுப் பிரிந்து விட்டாளாம். மேற் கொண்டு விபரம் எதுவும் தெரியாது. அவன் அவ்வளவு அமைதி! சிவலிங்கனின் மனைவி சில சமயங்களில் மிகவும் சோம்பல் வாய்ப்பட்டதனல் அவளுடைய செல்லம்களே இவன் கொடுக்கும் முட்டைகளை அவித்துக் கொடுப்பாள்.

.
அழைப்பதுபோல் தலையசைத்தது.
இளங்கன்று − - 7s
அடுத்த நாள் மாலை நேரம். ஆவலுடன் காட்டோ ரத்திற்கு ஓடிச் சென்ற இளங்கன்றுக்கு அங்கே ஏமாற்றம் காத்திருக்கவில்லை. அந்த அழகிய சிறுத்தை இன்னும் அங்கே நின்றிருந்தது. நேற்றுக் கண்டதைவிட இன்று இன் னும் சற்றுத்தொலைவில் காட்டினுள் நின்று வாவென்று
அந்த அழகிய நண்பனுடன் பழகும் ஆவலைக் கட்டுப் பத்தமுடியாமல் சிறுத்தையை நெருங்கிச் சென்றது இளங் கன்று. ஒ! எத்தனை அழகு! எவ்வளவு ம்ென்ம்ை, என்ன அமைதி! என்று வியந்தது இளங்கின்று. இளங்கன்றை மிக் வும் அண்மையில் கண்ட சிறுத்தைக்கு நாவில் நீரூறியது. பலகாலமாக இரையின்றிக் கிடந்த அதன் வயிற்றில் அமி ல்ச் சாறுகள் சுரந்து கசிந்தது. பசிவெறி நிரம்பிய விழிக ளுடன் இளங்கன்றை நோக்கி இரண்டடி எடுத்து வைத் தது சிறுத்தை,
அந்தக் கிராமத்தில் விதிகள் செப்பனிடும் வேலைகள் கிட்டதட்ட முடியும் தறுவாயை நெருங்கிவிட்டன. அந்த வாலிபன் இப்போதெல்லாம். சிலவேளைகளில் சாராயச் சிவ லிங்கனுடைய வீட்டிலேயே தங்கிவிடுவதும் உண்டு.
அந்த இளங்கன்றும் அதன் தாயும் காட்டின் ஓரமாக மேய்ந்து வருவது அந்தக் கிராமத்தில் பல மனிதருக்குத் தெரி யும் " நீ இருந்துபார், ஒரு நாளைக்கு அந்தப் பசுக்கண்டை சிறுத்தை அடிக்கப் போகுது!’ என்று தீர்க்கதரிசனம் கூறு வார்கள். அந்தக் கன்றின்மேல் அவர்களுக்கெல்லாம் அனு தாபம் உண்டென்றல்ல! அப்படிச் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்குப் பெருமகிழ்ச்சி தாம் சொல்லியபடியே அந்) தக் கன்று இறந்துவிட்டால், தாம் கூறியது பலித்துவிட்

Page 44
76 இளங்கன்று
டதே என்று மகிழ்வார்களேயொழிய 9)"l இறந்ததற்காக மனம் வருந்துவார் எனக் கூற முடியாது. எது எப்படி யிருப்பினும் நடந்துவரும் விஷயங்களையெல்லாம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்:
சிறுத்தை நெருங்கி வந்ததும் இளங்கன்றுக்கு ஆனந்
தம் தலைகால் புரியாமல் வந்துவிட்டது. அழகிய குஞ்சம் போன்ற தன் வாலைத் தூக்கிக்கொண்டு கடைவிழியால் தன் புதிய தோழனைப் பார்த்தவாறே துள்ளிவிளையாடியது. பலநாட் பசியைச் சிறுத்தையினல் பொறுக்கவே முடிய வில்லை. அகோரப் பசிகொண்ட சிறுத்தையின் வால்மட்டும் மிகவும் அமைதியாக, அழகாக அங்குமிங்கும் அசைந்தாடி Llgil.
அதைக் கண்ட இளங்கன்றுக்கு ஒரே குஷி! சிறுத் தையை நோக்கி அது ஆவலுடன் ஓடி வரவும் சிறுத்தை தன் பின்னங்கால்களை ஊன்றி எகிறிப் பாய்ந்து இளங்கன்
றின் மேல் இறங்கவும் சரியாகவிருந்தது. அப்போதும் அந்த இளங்கன்று பயப்படவில்லை. இதுவும் ஒருவகை விளையாட்
டென்று எண்ணி மகிழ்ந்தது.
சிறுத்தையின் மஞ்சள் நிறப் பற்கள் இளங்கன்றின் முகத்தில் மிகவும் மென்மையாக ஆனல் ஆழமாக இறங் கின. இதுவரை என்றுமே வெளியே தெரியாத கூரிய வளைந்த நக்ங்கள் அந்தப் பஞ்சுப் பாதங்களினின்றும் வெளிப்பட்டு இளங்கன்றின் மென்மையான மார்பை மிக வும் இலாவகமாகப் பிளந்தது. இளங்கன்று அலறக்கூட அவகாசமின்றி குற்றுயிராக நிலத்தில் விழுந்து துடித்தது.
- இளங்கன்றின் மார்புக் கூட்டுக்குள் நாவைவிட்டு அங்கு கொப்பளித்த சுடுகுருதியைச் சுவைத்த சிறுத்தை, சப்புக் கொட்டிக்கொண்டே இளங்கன்றின் ஈரல்குலையையும், ம்ென்
*

இளங்கன்று 77
மையான பாக்ங்களையும் கண்ணைமூடி இரசித்துச் சாப்பிட் டது. அதன் வெம்பசி தற்காலிகமாகத் தணிந்துவிட்டது.
மல்லாக்காகக் கிடந்த இளங்கன்றின் உடலை முதுகின் மேல் போட்டுச் சுமந்துசென்று, ஒரு பற்றைம்றைவில் போட்டுச் சருகுகளால் மூடி மற்ைத்துவிட்டுச் சிறுத்தை காட்டுக்குட் சென்றுவிட்டது. எப்போ கடும்பசி எடுக்கும் மிகுதியையும் உண்ணலாம் என்ற ஒரே நினைவுடன் இரவுக் காக அது காத்துக்கொண்டு கிடந்கது.
வெகுநேரம்ாகக் கன்றைக் காணுத பசு ஏங்கியழுதது.
பசும்புல்லை அது இப்போ அறவே கவனிக்கவில்லை. அந்தக்
கிராமவாசிகளில் சிலர் அவ்வழியாகப் போகையில் கன்றிற் காக் அழுதரற்றும் தாயைக் கண்டனர். அவர்களுடைய விழிகளிலே ஒருவகை மகிழ்ச்சி மலர்ந்தது. ஒருவர் மற்ற வரைப்பார்த்துத் திருப்தியுடன் தலையை அசைத்துக்கொண் ட்னர். 'எப்பிடி! நான் சொன்னன்! எனக்கு அப்பவே
தெரியும் இதின் ரை கண்டைச் சிறுத்தை புடிச்சுப்போடு
மெண்டு!" என்று அவர்களில் ஒருவர் பெருமையுடன் கூறிஞ்ர்.
'வாருங்காணும் போய்ப் பாப்பம்' என்ருர் ம்ற்றவர்.
இவர்களுக்குப் பசுவின் சொந்தக்காரனை நன்கு தெரியும்,
அவன் இவர்களது இனத்தவனுங்கூட. ஆனல் இக்காட்டோ ரத்தில் இச்சிறுத்தை உலவுவது இவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தும், அதையிட்டு அவர்கள் அவனை எச்சரிக்கவில்லை.
'இதோ! இஞ்சைதான் காணும் சிறுத்தை கண்டைப் பிடிச்சிருக்குது!’ என்றவாறே அவர்கள் அந்த இடத்திற் குச் சென்றனர். - -
அந்தச் சிறுத்தை இளங்கன்றை எப்பிடிப் பிடித்திருக்
கும், எப்படி அதன் உடலைக் கடித்துக் குதறிச் சுவைத்

Page 45
78
இளங்கன்று
திருக்கும் என்பவற்றையெல்லாம் தம் கற்பனைக்கும், அனு பவத்திற்கும் எட்டிய அளவுக்கு இரசித்துப் பேசிக்கொண் டனர்.
ஆணுல் அந்த இளங்கன்றின் உடல் கிடந்த இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அது அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை. எப்போ கிராமத் திற்குக்சென்று இதையிட்டு ஊராரிடம் கூறி வம்பளக்கலாம் என்று அவர்களுடைய நாக்குகள் தினவெடுத்தன. தங்களுக்
குத்தான் இந்தச் சம்பவம் தெரியவந்ததையிட்டு அவர்
களுக்கோ பெரிய மகிழ்ச்சி!
தாய்ப்பசு அழுது கதறிக்கொண்டே பொழுது சாயும்ட் டும் அந்தக் காட்டோரத்திலேயே அலைந்தது. இரவு நெருங்க கொடிய மிருகங்களைப்பற்றி அதன் மனதிலே ஏற்பட்ட பயம், கன்றுக்காக அது கொண்டிருந்த பாசத்தையும் மிஞ்சி விட்டது. கன்றை நினைத்து ஏங்கியவாறே தள்ளாடித் தள் ளாடிக் கிராமத்தை அடைந்தது.
இறந்துபோன இளங்கன்றின் உடல் இருட்டிலே கிடந்தது; வெண்ம்ையான அந்தஉடல் செங்குருதிதோய்ந்து கறைபட்டுக் கிடந்தது. ஈக்கள் பெருந்தொகையாகக் குருதி படிந்த இடங்களில் மொய்த்துக் சுவைத்தன. சாரி சாரியாக வந்த கொள்ளி எறும்புகள் இரங்கன்றின் கண்களையும் தசைகலையும் அரித்துத் தின்றன.
சிறுத்தைக்குப் பயந்து ஒதுங்கிப் பதுங்கிவந்த சிலநரிக்ள் எப்போ சிறுத்தை வந்து உண்டுவிட்டுச் செல்லும், எஞ்சிய தைத் தாம் சுவைக்கலாம் என்று நாவினல் நீர்வடியக் காத்துக் கிடந்தன. ' ' :
ஆணுல் அந்தச் சிறுத்தை மீண்டும் அங்கு வரவேயில்லை."
நரிகள் தின்று எஞ்சியதைக் காகங்களும், பருந்துகளும் சில ஊர்நாய்களும் பிய்த்துத் தின்றன. * ...
(G ந்தாமணி 1970)
v,

خwi
பனைகளின் நடுவே
அடர்ந்த காட்டின் இடையே பிறந்து அக்காட்டின் இருளையும் ஈரலிப்பையும் சும்ந்துகொண்டு அச்சிற்றுரரை வளைத்தோடியது அந்த ஆறு. கடல் என்றும் சொல்லமுடி யாத, வாவியென்றும் கொள்ளமுடியாத ஆழம்ற்ற நீர்ப்
பரப்பு தன்னில் சங்கமிக்க வந்த இந்த நதியை அமைதி
யுடன் தழுவியசைந்தது. நதியோரங்களில் நின்ற காட்டுப் பூவரசுக் கிளைகளின் மறைவிஜே அவற்றின் இதமான நிழ லிலே மந்திகள் இளைப்பாறிக்இத்ாண்டிருந்தன. ஆற்றங்கரை யிலே ஆரம்பித்து காட்டைநோக்கிப் பரந்திருந்த பற்றை களின் கீழே காட்டுக்கோழிகள் இறகைக் கோதிவிட்டுக் கொண்டன. உச்சிவேளை கழிந்து சாயந்தரத்தை எதிர்
நோக்கும் ஒர் அசாதாரண அம்ைதி அங்கு நிலவியது.
தூங்கும் இவ்வமைதியைக் கிழித்துக்கொண்டு திடீரென
எழுந்தது ஆட்காட்டிப் பற்வைகளின் ஆரவாரம் பாதி
விழி மூடி இரைக்காகத் தவமிருந்த ஒற்றைச் சாம்பல்
நாரையொன்று சடசடவெனச் சிறகுகளை அடித்துக்
கொண்டே பூவரச வரிசைகட்கும் அப்பால் பறந்தது.
...",

Page 46
ზე பனேகளின் நடுவே
சின்னப்பன் சத்தம்வந்த திக்கை நோக்கினன். அங்கு மரக்கூட்டங்களுக்கும் அப்பால் ஓங்கிவளர்ந்து காணப்பட்ட பனைமரங்கள் அசையாமல் நின்றுகொண்டிருந்தன. பாடசாலை விட்டு வாத்தியார் வருகின்றர் என்று அவன் ஊகித்ததற் கேற்ப அதோ! ஞானம் வாத்தியார் பாதை . வளைவிலே வந்துகொண்டிருந்தார். -
சின்னப்பன் எழுந்துநின்று கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தான். கறுத்து மினுமினுத்த அவன் சரும்த்திற்குக் கீழே கரண சுரணையாகத் தசைகள் திரண்டு, அசைந்து, பின் தளர்ந்தன. அவனுடைய வயது அவனுக்கே தெரியாது பதின்மூன்று ஆண்டுகட்கு முன்பு ஆண்டாங்குளத்திற்குக் குடிசன மதிப்பெடுக்கவந்த ஒருவர் " மகனுக்கு எத்தனை வயது?’ என்று அவனுடைய தாயைக் கேட்டபோது, 'மூன்று பனங்காய்க்கு முந்திய பனங்காய்க்குத்தான். இவன்
பிறந்தான்' என்று கூறியவள் அவள்!
வருடங்களின் எண்ணிக்கையை, எத்தன்ை தடவை رa)ر* பழுத்தன என்பதைக்கொண்டே க்ணக்கிடும் அளவுக்குத்தான் இந்த ஊர் நாகரீகம் அடைந்திருந்தது. காலத்தைப்பற்றியே கவலையின்றி வாழ்ந்தார்கள் அவ்வூர் மக்கள்!
சின்னப்பன் மணலிலே பாதிவரை ஏறியிருந்த வள்ளத் தைத் தள்ளி நதியில் விடுவதற்கும், ஞானம் வாத்தியார் பாலையடி இறக்கத்திற்கு வரவும் சரியாகவிருந்தது.
"என்னடா சின்னப்பா, இன்னும் கொப்பருக்குச் சுகம் வரேல்லையே? ? என்று விசாரித்தவண்ணமே வள்ளத்தினுள் ஏறியம்ர்ந்தார் ஞானம் வாத்தியார். s
'இல்லை வாத்தியார், அப்பு வயலுக்குப் போட்டுது, . كاتيون நான்தான் இந்தமுறை வள்ளத்துக்கு நிக்கிறன்' என்று " பதில் கூறியவாறே சின்னப்பன் வள்ளத்தில் தொத்தின்ை.
(

*
பனைகளின் நடுவே 8.
இந்த வேகத்தில் வள்ளத்தின் குல்லாக்கட்டை ஒருமுறை
நீரில் சிறிது ஆழ்ந்து பின் நிலைக்கு வந்தது. வள்ளத்தின் பின்முனையில் நின்று கம்பூன்றிய சின்னப்பனின் க்ருமேனி வெய்யிலில் பளபளத்தது. ஆற்றின் அடிப்படுக்கையிலே தேங்கியிருந்த சேற்றில் கம்பையூன்றி எடுக்கும் போதெல்லாம் ஒருசிறு துரித அசைவை அவன் கைகள் இலாவகம்ாகச் செய்துகொண்டிருந்தன. வள்ளத்தின் மறுமுனையிலே அமர்ந் திருந்த ஞானம் வாத்தியாரின் மடியிலே கிடந்த சஞ்சிகை ஒன்றின் புத்கங்க்ள் காற்றிலே படபடத்தன. வெயிலிலே பளிச்சிட்ட அதன் கண்ணைப்பறிக்கும் வர்ண அட்டைப் lill-lb. சின்னப்பனுடைய கவனத்தைக் கவர்ந்தது.
'உது என்ன புத்தகம் வாத்தியார்?"
ஞானம் வாத்தியார் சஞ்சிகையை எடுத்து உயர்த்திக் காட்டினர். சின்னப்பனுக்கு வாசிக்கத் தெரியாது. அவன் வாசிப்பதற்காகவும் கேட்கவில்லை. கண்ணைக்கவர்ந்த அந்தப்
-படத்தைப் பார்ப்பதற்குத்தான் கேட்டான். சஞ்சிகையின்
அட்டையிலே இளமையின் அழகெல்லாம் முழும்ைபெற்றுத் திரண்டதுபோல் ஒரு கன்னி சிரித்துக்கொண்டிருந்தாள், சின்னப்பன் வைத்தவிழி வாங்காமல் அதைப் பார்ப்பதைக் கண்ட ஞானம் வாத்தியார் : “ எப்பிடியடா படம்?' என் முர், குமரப் பருவத்திற்கேயுரிய ஒரு நாணப்புன்னகை அவன் முகத்தில் சுழித்தோடிக் கோலமிட்டது.
"ஏன்ரா சின்னப்பா? நாகன்ரை பொட்டை யைத் தானே உனக்குச் செய்யிறதெண்டு பேச்சுக்க்ால் அடிபட்டுது. சித்திரைக்கு இன்னும் இரண்டு மூண்டு மாசந் தானே! அம்மட்டும் பொறுத்துக்கொள்ளு!’ என்று கேலி செய்தார் ஞானம் வாத்தியார். அதற்கும் சிரித்தவாறே வள்ளத்தைச் செலுத்தினன் சின்னப்பன். வள்ளத்தின் ஒட் டத்தில் ஒரு துரிதம், துள்ளல் இவையெல்லாம் இப்போ
இடம்பெற்றன.
6

Page 47
82 مح۔ ப?னகளின் நடுவே
‘வாத்தியார். உந்தப்படம்.’’ என்று இழுத்து நிறுத்தினன் சின்னப்பன்.
‘என்னடா, இந்தப்படம் உனக்கு வேணுமே? ? 'சிச்சி! படம் எனக்கு வேண்டாம், உதிலை உந்தப் பொட்டை போட்டிருக்கு ஒரு தோடு." முடிக்காமலே இழுத்தான் சின்னப்பன். *
ஞானம் வாத்தியார் அட்டைப்படத்த்ை ஊன்றிக் கவனித்தார். அட்டைப்படக் கன்னியின் அழகிய காது களிலே ஒளிவிடும் பொன்வளையங்கள் மின்னின. அவ்வளை யங்களின் அடியில் தொங்கிய சின்னஞ்சிறு முத்துக்கள் சரம்ாக் ஒளிவிட்டன. ஞானம் வாத்தியார் மீண்டும்நிமிர்ந்து சின்னப்பனைப் பார்த்தபோது 'ஏன் வாத்தியார்? உது கணக்க் விலைவருமே?' என்று குழந்தையாய்க் கேட்டான் சின்னப்பன்.
'ஒமிடா. பவுணிலை செய்விக்கிறதெண்டால் ஊருப்
பட்ட காசு வரும்! ஆன பவுண் நிறத்திலே இதைப்போல”
கஉையளிலை கிடக்குதுதானே. ஐஞ்சாறு ரூபாய்தான் வரும். என்ரை பெட்டை யளும் வைச்சிருக்கிரு?ளவை1' ஞானம் வாத்தியார் விளக்கினர்.
'ஐஞ்சாறு ரூவாயோ?' என்றுகேட்ட சின்னப்ப னுடைய முகம் மங்கியது. அவனுடைய முகத்தையும் அதில் தோன்றிய பாவங்களையும் கண்டபோது, தான் இளமை யிலே காதலித்ததும் அந்த வசந்த வயதிலே இதயத்தில் உதித்த எண்ணற்ற ஆசைகளும் அவற்றின் நினைவுகளும் ஞானம் வாத்தியாருடைய மனதிலே நிழலாடின.
வாழ்வில் க்ணிேசமான க்ாலத்தைக் க்டந்திருந்தும், ஐந்து பெண்களுக்குத் தந்தையாய் ஆகியுங்கூட, க்ாதல் என்றதும்ே இதயம் நெகிழ்ந்தது. மழலைசிந்தும் அழகிய குழந்தையைக் காணும்பொழுது; இதயத்தைத் தொடும் இனியஇசையைக்

பனேகளின் நடுவே 83
கேட்கும்போது; சிறியதொரு கவிதையை வாய்விட்டுப் படிக்கும்போது உள்ளத்தில் ஏற்படுமே ஒரு உருக்கம்: . அப்படியொரு உணர்ச்சி அவர்நெஞ்சில் மேலிட்டது.
'ஏன் சின்னப்பா?. 'உனக்கு இப்பிடியொரு தோடு வேணுமே? நான் நாளைக்குப் பள்ளிக்கு வரேக்கை கொண்டு வாறன்’ உணர்ச்சியலைக்ளால் உந்தப்பட்ட ஞானம் வாத்தி
யார் உறுதியளித்தார். 'உண்மையாகவா?’ என்று சின்னப் '
பன் கேட்கவில்லை. ஆனல் அவனுடைய விழிகள், அவற் "றில் கொப்பளித்த க்ளிப்பு, வியப்பு, இவையெல்லாமே கேட்க்ாமல் கேட்டுக்கொண்டன. வள்ளம் அடுத்தகரையை அடைந்தது.'
‘அப்ப நான் நடக்கிறன்’ என்றவாறே ஞானம்வாத் தியார் கரையில் இறங்கினர்.
'நாளைக்குப் பள்ளிக்கூடந்தானே வாத்தியார்?' என்று சின்னப்பன் கேட்டதற்கு 'ஓம் நாளைக்குப் பள்ளிக்கூடந் தான்' என்றவாறே ஞானம் வாத்தியார் நடக்கவாரம் பித்தார்:
ஆற்றும்ணலைக் கடந்து வண்டில் பாதையில் சற்றுத் தூரம் வந்தவர், பாதை சேறும் சகதியுமாக இருக்கவே வேட்டியை உயர்த்தி மடித்துச் சண்டிக்கட்டு கட்டினர். மடித்துக் கட்டிய வேட்டியின் உட்பட்டு நைந்து கிழிந்து தொங்கியது. ܘ ̄ ܗܝ ܼ
. இந்த மிாசச் சம்பளத்திலையெண் டாலும் ஒரு நல்ல வேட்டி வாங்கோணும். மூத்த மோளின்ரை பொடிக்கு வாறமாதம் காதுகுத்துறது எண்டு சொன்னவள். அதுக்கு நாங்களும் ஏதும் குடுக்கத்தானே வேணும். இந்தச்சித்
திரையிலேயெண்டாலும் இரண்டாம்வளின் ரை கலியாணத்
தைச் செய்துபோடோணும். சங்கத்திலை வெள்ளாமை

Page 48
84 பனேகளின் நடுவே
செய்யிறதுக்கெண்டு எடுத்த கடன்க்ாசு கையிலை கிடக்குத் தானே. ஒருமாதிரிச் சமாளிச்சுப்போடலாம். سے "
சிந்தனையில் மிதந்தவராய் அந்த ஒருமைல் தூரத்தை யும் கடந்து குமுளமுனைக்கு வந்து சேர்ந்தார் ஞானம் வாத்தியார். ருேட்டில் ஏறியதும் அவரையறியாம்லே அவ ருடைய கைவிரல்கள் சட்டைப்பைக்குள் நுழைந்து அங்கு கிடந்த மூன்று பத்துசத நாணயங்களையும் நெருடிக் கணக் கெடுத்துக்கொண்டன. ஆறு மைல்களுக்கு அப்பால் தண்ணி ரூற்றில் இருக்கும் அவருடைய வீட்டுக்குப் போகத் தேவைப் படும் பஸ் கட்டணம் முப்பது சதம்தான்.
ஆற்றங்கரைக்கு மேற்கே தொடுவானில் பொழுது கருகிக்கொண்டிருந்தது. சின்னப்பனின் இதயத்தில் கற்பனை தளிர்விட்டுக்கொண்டிருந்தது. பின்னேர வஸ்சில் ஒரு சனமும் வரேல்லைப்போல. என்று எண்ணியவாறே சின்னப்பன் வள்ளத்தைத் தள்ளி ஆற்றில் விட்டு அதில் , ஏறினன். தாழ்ந்து வளைந்து ஆற்றை வருடிய காட்டுப பூவரசுக்கிளைகள் சொரிந்திருந்த மஞ்சளும் சிவப்புமான ம்லர் கள் ஆற்றிலே கூட்டமாக மிதந்தன. வள்ளம் அம்மலர்க் கூட்டத்தைக் கிழித்தவாறே மெல்ல நகர்ந்தது. அவனுக் குப் பின்னே சூரியன் செவ்வரத்தம் பூவாகமாறி ஆற்றின் இக்க்ரையை இரத்தச் சிவப்பாக்கிக்கொண்டிருந்தான்.
சின்னப்பனுக்கு அந்த ஒளியை வாங்கியுமிழ்ந்த ஆற் றின் நீர்வட்டங்க்ள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொன் வளையங்களாக, முத்துச் சிதறல்களாகத் தோற்றின. கற் பனையின் தீவிரத்தில் அவன் கரங்கள் கோலூன்றுவதை நிறுத்திவிட்டன. வள்ளம் அதன் போக்கிலே மெல்லமிதந்தது.
அவனுக்கு முன்னே கிழக்கில் முழுநிலவு உதயம்ாகிக் ;് கொண்டிருந்தது. மாலை இருளாகமாற நதியின் கிழக்குக் கரையில் உருக்கிவார்த்த பாதரசமாக ஆற்றுநீர் நிலவில்

f
".
பனேகளின் நடுவே 8S
ததும்பியது. கெண்டை மீனென்று நீருக்குமேலே தெறித்து மூழ்கிப் பின்னும் தெத்தித் தெறித்து மூழ்கியது. நிலவில் கெண்டையின் உடல் வெள்ளித்துண்டாக மின்னியது.
...வெள்ளியிலை தோட்டைச் செய்துதான் பிறகு பவுண் நிறம் பூசுவாங்கள். இண்டைக்கு ராவைக்கு வள்ளியைச் சந்திக்கக்கூடாது. நாளைக்குக் காலமை ஞானம் வாத்தியார் தோடுகொண்டு வருவார். நாளையிரவு ஏன் வரேல்லைஎண்டு வள்ளி கோவிப்பாள். . ஒண்டும் GLI FITLDG) அவளின்ரை கையுக்கை தோட்டை வைக்கோணும். நல்ல நிலவுகாலந் தானே!. தோடு மினுங்கும் 1. -
தன்போக்கிலேயே சென்றுகொண்டிருந்த வள்ளந் தரை தட்டியது. நினைவுக்கு வந்தவனுகச் சின்னப்பன் வள்ளத்தை இழுத்துக் கரையில் விட்டுக் கம்பையும் காட்டுப்பூவரசங் கிளைகளுக்குக்கீழ் ஒளித்துவைத்துவிட்டுப் பனைகள் நின் றிருந்த திக்கைநோக்கி நடந்தான், காட்டுத் தெய்வமாகிய
- - -
\ஜான் குடியிருந்த கோவில் வெட்டையை அணுகியதும்
அவன் கால்கள் தாமாகவே நின்றன. ‘ஐயனே!’ என்
உதடுகள் முணுமுணுக்க கரங்களீே ஐயன் கோவிலைநோக்கிக் கூப்பிவிட்டுத தன்குடிசையை நோக்கி நடந்தான். ஆட்காட் டிப் பறவைகள் ஆளரவங்கண்டு "கிக்கிக். கீ. கிக்கி."
என்று கூச்சலிட்ட வண்ணமே கலைந்தன.
இரவு உணவுக்குப்பின் பாயை விரித்துப் படுத்த சின்னப் பனின் கண்கள் தூங்கமறுத்தன. பால்போலக் காய்ந்த நிலவு அவனுடைய நெஞ்சை என்னமோ வெல்லாம் செய்தது. அவன் எண்ண்மெல்லாம் வள்ளியையும் தான் அவளுக்கு நர்ளே தரவிருக்கும் அற்புதப் பரிசையும் சுற்றிச்சுற்றி வட்ட மிட்டன. நாளை கிடைக்கவிருக்கும் சந்தோஷத்தை மேலும் மிகையாக்குவதற்காக இந்த முழுநிலவில் வள்ளியைச் சந்திப் பதைக்கூட நாளைக்கென ஒத்திப்போட்டுவிட்டான். ஆண் டாங்குளமும் அதன் பத்துக் குடிசைகளும் உறங்கி ঢেং ঢ়ে৷ வளவோ நேரத்தின்பின்தான் அவன் இமைகள் கவிந்தன.

Page 49
86. பனகளின் நடுவே
அவனுடைய விழிக்ள் தூங்கியபோதும், எண்ணங்கள் தூங்கவில்லை. வாழ்வில் அனுபவிக்க விழைந்த ஆசைகளை யெல்லாம் கனவு மேடையிலே நிறைவேற்றிக்கொண்டிருந் தது சின்னப்பனின் இதயம், ஒளிவிடும் பெரிய பொன்வளை
"யங்கள் நீலவானிலே தொங்குகின்றன. அவை ஒவ்வொன்
றின் அடியிலேயும் பனங்காயளவு முத்துக்கள் சரம்ாக் ஆடு கின்றன. அந்த வளையம்ொன்றிலே வள்ளி ஒயிலாக
அமர்ந்து ஊஞ்சல் ஆடுகின்ருள். வள்ளி தன் காதுகளிலே -
பொன்வளையங்கள் அசைந்தாட அவனைப்பார்த்து நாணித் தலைகுனிகிருள். . . . .
ஆண்டாங்குளத்தையடுத்த பரவைக் கடலிலே வள்ளி முழங்காலளவு நீரிலே குந்தியிருந்து இருல் தடவுகின்ருள். வள்ளி என்று அவன் கூப்பிட்டதும், அவள் அவனேநேர்க்தி நிமிர்க்ையில், அவள் காதிலே தொங்கிய தங்க வளையங்கள் காலைவெய்யிலில் தகதகக்கின்றன. ஞானம் வாத்தியீர் வேட்டியை உயர்த்தி மடித்துக் கட்டிக்கொண்டு சேற்றில் இறங்குகின்ருர், வேட்டியின் உட்பட்டு கிழிசலாகத் தொங்குகிறது. ܊ ܗܼ . .
·、曹
விடியக் கருக்கலில் சின்னப்பன் க ன் விழிக் கையில். திருக்கோணம் வயல் வெட்டையில் காட்டுச் சேவல்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு கூவுகின்றன. இரவு கண்ட கனவுகளில் சில அவன் நினைவில் இனித்தன. விடி யப்புறம் கண்ட கனவு கட்டாயம் பலிக்கும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகின்றது" ... "
அவசரம் அவசரமாக பழந்தண்ணியைக் குடித்துவிட்டு ஆற்றங்கரையை நோக்கி விரைந்தான். அக் க்  ைர  ைய அடைந்ததும் வள்ளத்தைக் கட்டிவிட்டு குமுளமுனைக்கே சென்று பஸ் வரும்வரை காத்திருந்து ஞானம் வாத்தியார்

பனேகளின் நடுவே 87
வந்ததும் தோட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் அவன் எண் Eயிருந்தான். ஆனல் அன்று சோதனை f போலப் புலர் பட்டிக்கும் வயலுக்கும் என வந்து போகவே
அவனுடைய எண்ணம் தடைப்பட்டு விட்டது. இங்கு அவன் . கரங்கள் இயல்பாகவே தம். தொழிலைச் செய்து கொண்டி' ருந்தாலும் அவன். மனம் ஞானம் வாத்தியார் வரும் பஸ் சுக்காகக் குமுளமுனையில் காத்துக்கொண்டு இருந்தது.
ஊர்ப்பக்கத்துத் துறையிலே அவனுடைய வள்ளம் நின் றபோது குமுளமுனையில் பஸ் வந்து நின்று புற ப் படும் இரைச்சல் கேட்டது. துடிக்கும் நெஞ்சுடன் வள்ளத்தை அக்கரைக்குச் செலுத்திக் கரையிலே வள்ளத்தை ஏற்றி விட்டு, வண்டிப் பாதைவழியே ஒடினன் சின்னப்பன் அதோ! சற்றுத் தொலைவில் ஞானம் வாத்தியார் வருகிருர், வீடு வரும் எஜமானை அவனுடைய நாய் வளவின் வாச - བ༣) a 9292 சென்று வரவேற்று அவன் பின்னுலேயே கூடிவரும் உற்சாகத்துடன் சின்னப்பன் ஞானம் வாத்தியாரைச் சந் தித்துப் பின் அவர் கூடவே வந்து கொண்டிருந்தான். வாத் தியார் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவராக ‘என்ன சின் னப்பா, வள்ளம் நிக்குதுதானே?’ என்று விசாரித்தார்.
"ஓ! நான்தான் வள்ளம் கொண்டு வந்தஞன்’ என்ற சின்னப்பனின் விழிகள் வாத்தியாரின் சற்றுப் புடைத்தி ருந்த சேட்டுப் பையை நோட்டமிட்டன. அவன் ஆவலு டன் எதிர்ப்பார்த்திருந்த தோட்டை இன்னும் ஞானம் வாத்தியார் கொடுக்கவில்லை. அதற்குள் இருவரும் ஆற்ற டிக்கு வந்துவிடவே ஞானம் வாத்தியார் வள்ளத்தில் ஏறிக் கொண்டார். சின்னப்பன் வள்ளத்தைத் தள்ளி ஆற்றில் விட்டுத் தானும் ஏறிக்கொண்டு கம்புபோடத் தொடங்கி
.
Ge. o 3 ܘ در سیت o о ര
எனனடா சின்னப்பா...' என்று இழுத்துக்கொண்டே ஞானம் வாத்தியார் சட்டைப் பைக்குள் கையை விட்டார்
n

Page 50
88 பனகளின் நடுவே
சின்னப்பனுடைய இதயம் எம்பிக் குதித்து வாய்வழியே விழுந்து விடுவதுபோல் ஒருமுறை அடித்துக் கொண்டது. ஞானம் வாத்தியார் பைக்குள் இருந்து சுருட்டு ஒன்றை எடுத்துச் சாவதனமாக விரல்களால் நசித்துப் புகைப்பதற் காகப் பக்குவம் செய்தவாறே கேள்வியைத் தொடர்ந்தார்.
‘உங்கை ஆண்டாங்குளத்திலை ஆரிட்டை நல்ல தேன் கிடக்கு? கடைசிப் பொட்டைக்கு வயித்தாலே போகுது. தேன் தேவையாய் கிடக்கு,' என்று கேட்ட ஞானம் வாத்
தியாரின் விழிகள் அக்கரைக்கு அப்பால் நின்ற பனைகளை
நோக்கின.
.* *எனக்குத் தெரியேல்லை வாத்தியார் விசாரிச்சுப்
பார்த்தால் தெரியும்.’’ சின்னப்பனின் உதடுகள் பதில்
கூறின. ஆணுல் உள்ளமோ, எப்போ? எப்போ? வாத்தியார் தோட்டை எடுத்துத் தருவுார் என்று ஏங்கியது. வள்ளம் நடு ஆற்றைத் தாண்டிக் கொண்டிருந்த்து. வாயைவிட்டுக் கேட்டுவிட எண்ணி அவருடைய முகத்தைப் பார்த்தான். நேற்றைய ஒளி அங்கில்லை. ஒரு வேளை, கொண்டு வரா மல் வந்துவிட்டாரோ என்றெழுந்த ஐயத்தை, சே! கட்டா
யம் கொண்டு வந்திருப்பார். கரையில் இறங்கியதும் தரு
வார்தானே எனச் சமாதானப் பட்டுக் கொண்டான்,
வள்ளம் கரையை அடைந்தது. வாத்தியார் இறங்கி ஊரை நோக்கி நடந்தார். சின்னப்பன் இதயத் தவிப்புடன் வள்ளத்தில் க்ம்புடன் நின்றவாறே அவரை நோக்கினன்.
பாதையின் வளைவிலே அவர் உருவம் மறைந்தது. மரக்
கூட்டங்களுக்கு மேலே கலைந்து பறந்த ஆட்காட்டிகளின் ஆரவாரம் எழுந்து உச்ச நிலை அடைந்து பின் தணிந்து அடங்கியது. -
சின்னப்பனுடைய விழிகளின் கடையோரங்களில் கண் னிர் க்சிந்தது.
சிந்தாமணி 1968

f
c
−
ஒரு ஆகா யத்தாமரை பூமிக்கு வருகிறது
கிராமம் அழகியது! அமைதி நிறைந்தது!
ஆனல் இந்த அழகு தவழும் அமைதி எனக்கு மட்
டும் சொந்தமில்லை! அதோ மேற்கே செவ்வானம்! அது
அழகாகவா இருக்கிறது? ஆம்! ஊருக்கும் உலகத்திற்கும் அது ரம்மியமான காட்சிதான். எனக்கு மட்டும்.
அது என் உடைந்துபோன இதயத்தின் குருதிக்குழம்பு!
இன்னமும் சில நிமிடங்களுள் எனது வாழ்வைப்போலவே இருண்டுபோகவிருக்கும் அஸ்தமனம்!
எந்தச் சூரியனுக்காக் நான் தாமரையாய் மாறினேனே அந்தச் சூரியன் என்னுடைய உலகத்தின் அடிவானுக்கும் அப்பால் மறைந்துவிட்டான். இன்னும் ஒரு தாமரையைச்
சிரிக்கவைப்பதற்காக.

Page 51
"" كمېسي
90 ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது
அங்கே விடிவு ஏற்படவேண்டுமெனில் இங்கே இருட்ட வேண்டுமென்று சட்டமா? உண்ம்ை எதுவாகத்தான் இருப் பினும் இங்கே உள்ளே இருண்டுதான் போய்விட்டது. ,
நிரந்தரமான கண்ணிரின் கனம்நிறைந்த இருள். W
சில நாட்களுக்கு முன்புகூடச் செந்தாமரை என்று
அந்தச் சூரியனுல் வர்ணிக்கப்பட்டஐன்முகத்தில் இப்பேஈ ஒரே இருளாம். -
அதற்காகத்தான் என் பெற்றேர் என்னை இந்தக் கிர
மத்திற்கு, என் பெரியப்பா வீட்டிற்கு அனுப்பிவைத்திருக்
கிருர்கள். இக்கிராமத்தின் அழகும் அமைதியும் என்க்வலை களை மறக்கச்செய்துவிடுமாம். நான் தொடர்ந்து படிக்க மறுத்துவிட்ட உயர்கல்வியை, மீண்டும் நான் தொடரக் கூடும் என்ற நப்பாசையின் காரணமாகத்தான் நான் இங்கே அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறேன். - (*
நம்பிக்கை அவர்களுக்குத்தான். எனக்கில்லை.
‘என்ன இரண்டுங்கெட்ட நேரத்திலை இங்கை வயல் வெளியுக்கை நிக்கிருய்? -
*
- -
*
பெரியப்பாவின் தோட்டத்திலும் வயலிலும் வேலை செய்யும் நாக்னின் முகத்தை நான் கூர்ந்து கவனிக்கின்றேன். . "
..இரண்டுங்கெட்ட நேரமில்லை. எல்லாமே கெட்டு விட்ட நேரந்தான். என்மனம் சொல்கிறது.
%
*சரி நட தங்கச்சி வீட்டை. பெரிய கொப்பு தேடு வார். நாகன் முன்னே நடக்க நான் இயந்திரமாகத் தொடர்கிறேன். .
*

ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது 9.
இருள் கவியும் நேரம். வயல்வெளியின் ஒரு ஓரமாக அமைந்திருந்த அந்த அழகிய வீட்டில் பெரியம்மா விளக் குகளை ஏற்றுகின்ரு. பெரியப்பா முற்றத்தில் சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருப்பார்.
அற்புதமான தம்பதிகள். விசாலித்து வளர்ந்து வரு பவர்க்கெல்லாம்.கனியும், நிழலும் வழங்கும் பழமரம் போன்ற இனிய குடும்ப்ம்.
-
* "ஆ" முன்னே சென்ற நாகன் வலியில் துடித்த படியே காலைத்தூக்கிப் பார்க்கிருன், குதிக்காலில் கொடூர ” ہم !ហ பாய்ந்திருக்கிறது ஒரு கண்ணுடித்துண்டு و"
* ஒரு கணத்துள் நான் என்னை, என் கவலையை, என்ன -) விட்டுச்சென்ற சூரியனே. எல்லாவற்றையுமே மறந்துவிடு
கிறேன்.
‘என்ன நல்லாய்க் குத்திப்போட்டுதே நாகன்??
: காலில் ஏறியிருந்த கண்ணுடித்துண்டைப் பிடுங்கியதும் - இரத்தம் வழிகிறது. “சிச்சி! அவ்வளவு மோசமில்லைப் புள்ளை’ நாகன் என்னுடைய பதட்டத்தைக்கண்டு சிரித் தவனுகப் பக்கத்தில் எரிந்துபோய்க்கிடந்த குப்பைமேட்டி லிருந்து சாம்பரைக் கைநிறைய அள்ளிக் காயத்தில் வைத்து * அமுக்கிப்பிடித்துக் கொள்கிருன்.
'இதென்ன நாகன் காயத்திலை சாம்பலைப்போட்டால் அது மாருது சிலவேளை ஏற்பாக்கிக்கூடப் போடும் பெரி யப்பா வீட்டை டெற்முேல் கிடக்கும். அங்கைபோய் * மருந்து போடுவம்." அவன் என் அலறலைப் பெருட்
படுத்தலில்லை.

Page 52
92 ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது
*ஏன் தங்கச்சி இதுக்கு மருந்து. கழுதைப் புண்ணுக்
குப் புழுதி மருந்து!.. இரண்டு நாளேக்கை காஞ்சு
போகும்!'
*
நாகின் காலை விந்தி விந்தி நடக்கின்ருன்.
-
அடுத்தநாள் கழிந்து மறுநாள் காலையில் நாகன் வேலை
செய்ய வந்துவிட்டான். அவன் விந்தி நடக்கவில்லை. காயம்
கீாய்ந்துவிட்டது. கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்து
என்று அவன் ஏன் சொன்னன் என்பது இப்போதும் எனக்கு
*
முற்றக் விளங்கவில்லை.
ஆனல் கொழும்பிலே இருக்கும் என் தாயின் இடுப்பு வலி நினைவுக்கு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒருநாள் அவள் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டாள். *) இடுப்பில் அடிபட்டுவிட்டது. அடி அவ்வளவு (3u Dfrg. L'É96ö où (; என்பது எனக்கும் அப்பாவுக்கும் தெரியும். ஆனல் அன்றி லிருந்து அம்மாவின் எண்ணத்திலும் பேச்சிலும் அந்த இடுப்புவலிக்குத்தான் முதலிடம். காலையில் எழுந் த து தொட்டு பகலில் வேலையாட்களை வேலைவாங்கும் சமயத் திலும், இரவில் படுக்கைக்குச் செல்கையிலும், ஏன் தூக் கத்திலுங்கூட அவளுக்கு இடுப்புவலிதான். நாங்கள் யாரர் வது அதைச் சற்றுமறந்துவிட்டாற்போதும். ஏதோதன் னையே எல்லோரும் அலட்சியப்படுத்தி விட்டாற்போல் விச னிக்கத்தொடங்கி விடுவாள். ஒரே பிள்ளையான என்னைவிட அவளுடைய இடுப்புவலிதான் அம்ம்ாவினினுடைய ஒருமுக மான கவனிப்புக்குரிய செல்லப்பிள்ளையாய்ப்போய்விட்டது.
韃
அவளுக்கு இடுப்பில் வலி. எனக்கு? இதயத்தில்வலி.
வீட்டைச் சுற்றிநின்ற பழமரங்களில் காட்டுப் பறவை களும் அணில்களும் கொட்டமடிக்கும். முற்றத்தில் சில்

ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது 93
லென்று பூத்துநிற்கும் புஷ்பச்செடிகளில் விதவிதமான வண் ணத்துப்பூச்சிகள் தேன்குடிக்கும். பச்சைப்பசேல் என்று
தளதளத்து நிற்கும் நெற்பயிரையும், வயலை வளைத்துக் கொண்டு செல்லும் காட்டாற்றையும் தழுவிவரும் இளந் * தென்றல் என்னையும் தொட்டு வருடும்.
ஆனல் இவை ஒன்றுமே செய்யவில்லை. நானும் எனது. இல்லை. முன்பொருகாலம் என்னுடையவனுக இருந்த அந்தச் சூரியனும்.
இதய்மேங்கும் ஒரே இருள். வலி. வேதனை. என் னுடைய இறந்துபோன கலகலப்பையும் உற்சாக்த்தையும் . திரும்ப வரவழைக்க்ப் பெரியப்பாவும் பெரியம்ம்ாவும் எத் தன்ையோ வழிகளில் முயன்றனர். ஆனல் தோல்வி அவர் களுக்குத்தான். வெற்றி? ஒருவேளை ஆ என்னை ஏமாற்றிச் , சென்றுவிட்ட அந்தச் சூரியனுக்கா?. () அவன் சூரியனல்ல. சூரியகுமாரன். பெயரைப் போலவே அவன் ஒரு அக்கினிக் குஞ்சுதான். எனக்கு ஏன் தான் கமலா என்று பெயரிட்டார்கள் என்றுநான் இன்ன மும். என்னுடைய பெற்ருேரைக் கேட்கவில்லை. அவர் களைக் கேளாமலேதான் அவனைக்கண்டு மலர்ந்தேன், மணத் தேன். . . .
ஆனல் இன்றுதான் எனக்கு விபரம் புரிகிறது. சூரியன் ஒன்றுதான். ஆனல் தாமரைகளோ பல. என்னைப்பொறுத்தக மட்டில் அந்தச் சூரியனுக்காகத்தான் இன்னும் வா டி க் கொண்டிருக்கிறேன்.
வாடிச்சருகாகி. மறைந்து. மீண்டும் ஒருநாள் புத்தம் புது மொட்டாக வைகறையில் காத்துநிற்பேன். அப்போது - அவன் உதயம்ாவான். காலமெல்லாம் காத்திருக்கவேண்டும்
நிச்சயமாகக் காத்திருப்பேன், -

Page 53
94 ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது
அது என்ன? தொலைவிலே ஒரு பெண்ணின் ஒலம்!
எனக்குப் பழக்கமான, பிரியமான ஒசை. அதைத்தானே
என் இதயத்துள்ளே சதா இசைத்தபடி இருக்கிறேன்.
அரிசி புடைத்துக்கொண்டிருந்த பெரியம்மா , சுளகை t அப்படியே போட்டுவிட்டு, தென்னந்தோப்பினுரடாக அந்த அழுகுரல் கேட்ட திசையைநோக்கி ஓடுகின்ரு. நானும் தொடர்கிறேன். ... "
நான் போவதற்குள் அந்தக் குழந்தையைத் திண்ணையில் கிடத்திவிட்டார்கள். மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் அந்தப் பால்வடியும் வதனம். இப்போ பட்டுப் போர்த்தது. போல் மூடிக்கிடக்கும் அந்த கண்மடல்களுக்குக் கீழே மறைந்துகிடக்கும் துருதுருவென்ற கருவண்டுக்கண்க்ளை எனக்கு நன்கு தெரியும். ". . .
* நாகனின் மூன்றுவயது மகன் அவன். சில மாலைநேரங் / க்ளில் நான் இருண்டுகிடக்கும் தென்னந்தோப்பின் கோடி (片 வரைக்கும் செல்வதுண்டு. அச்சமயங்க்ளில் நாகனின் மனைவி இடுப்பில் அந்தக் குழந்தையுடன் எதிர்ப்படுவாள்.
ஐயோ பாவம்! பெரியஇடத்துப் பிள்ளை. கிளிக்குஞ்சு போலப் பெட்டை. ஏன்தான் இப்பிடி மூளைகுழம்பித் தோப்பிலும் துரவிலும் திரியுதோ என்று அவளுடைய முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும்.
ஆனல் அவளுடைய அந்தப் பாலகனே தளிர் இதழ் , களைத் திறந்து 'அக்கா எங்கை போருய்!' என்று மழலை - சிந்துவான். எனக்குச் சிரிக்கப்பேசத் தோன்றும். ஆனல் ஆ என்னல் முடிவதில்லை. நானும் என் கவலைகளும்.
இப்போ அந்தந் தேன் மணக்கும் மழலையும் செங்கீரைத் தேகமும் ஓய்ந்துபோய்த் திண்ணையில் கிடக்கின்றன,

༄་་་་་
ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது 95
நாகனுடைய மனைவி விம்மி வெடித்து நிலத்தில் புரள் கிருள். என் இதயத்தினுள் எதுவோ கரகரவென்று ஊரு கிறது. . அவளுடைய துயரை என்னல் நன்கு இனங்க்ண்டு கொள்ள முடிகிறது.
பிரிவு. இழப்பு. நான் சூரியனுக்காகக் குமுறிக்குமுறி ஒவென்று அழுகின்றேன்.
நாகனின் மனைவிகூட ஒருகணம் தன்துயரை மறந்து என்னைப் பார்க்கிருள்.
. கமலாவுக்குச் சரியான இளகின நெஞ்சு. பெரியம்tா பக்கத்தில் நிற்கும் பெண்ணுக்குக் கூறுகின்ரு.
. எதற்காகப் பழகவேண்டும். பின் ஏன்தான் பிரிய வேண்டும்?. மூன்று வருடங்கள் மட்டுமேதான் இந்தக் குழந்தை வாழவேண்டும்ா?. வலி வந்ததாம் வலி இன்னு மொரு ஐம்பது வருடங்கள் கழிந்தபின் வந்து தொலைத் திருக்கக் கூடாதா?. சே! எங்கு பார்த்தாலும் வலியும் வேதனைக்ளுந்தானு?
மூன்ரும் சடங்கு முடிந்துவிட்டதாம். நாகன் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டான். - w
ஆண்களே இப்படித்தான் போலும்!. இழப்புக்கள், பிரிவுகள், வேதனைகள் இவர்க்ளுக்குத் தெரிவதில்லை. சூரியன் ஒரு ஆண்1. நாகனும் ஒரு ஆண்தானே! அதனுற் முன் அவன் இன்றே மீண்டும் பழைய நாகனக வேலை செய்துகொண்டிருக்கிரு:ன்.
ஆனல் நான் பெண். நாகனுடைய மனைவியும் ஒரு பெண் தான்.

Page 54
96 ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது
ஈடுசெய்ய முடியாத அந்த இழப்பை நினைந்து அவள் இப்போதும் உருகிக் கரைந்து கொண்டிருப்பாள். வீடு வாசலைப் பெருக்கி, அன்ருட அலுவல்களைச் செய்வதற்குக் கூட அவளுக்கு மனமிருக்காது. அந்தச் சின்னக் குடிசை யின் ஒரு மூலையில் கிடந்து குமுறிக்கொண்டிருப்பாள்.
அவளுடைய எல்லையற்ற வேதனையின் ஒவ்வொரு அணு வையும் என்னல் உணரமுடிகின்றது. அவளுக்கும் எனக்குமி இழப்பு பொதுவானது. நானும் அவளும் இப்போ ஒரு இனம்!. அவளிடம் இப்போதே செல்லவேண்டும். அவ ளைக் கட்டிப்பிடித்துக் கதறித் தீர்க்கவேண்டும்.
தென்னந்தோப்பினூடாக விரைகிறேன்.
நாகனின் குடிகை. முற்றம் சுத்தமாக்ப் பெருக்கப் பட்டிருக்கிறது. இறந்த குழந்தைக்கு நேரே மூத்தவர்க |ளான் இரு பிள்ளைகள் வேப்பமரத்து ஊஞ்சலில் அறுந்து
விழுவதுபோல் ஆடுகின்றர்கள்.
சின்னப் பிள்ளைகள்தானே. இவர்களுக்கெங்கே தெரியப் போகின்றது.இழப்பும் அதன் வேதனையும்.
குடிசையை நெருங்கிச் செல்கிறேன். சின்னக் குசினிக் குள் நாகனுடைய மனைவி சம்ைப்பதில் மும்முரமாய் ஈடு பட்டிருக்கின்ருள். -
'டேய் முத்தா! ஓடிப்போய் உந்தக்கறிவேப்பிலை நாலு நெட்டு ஒடிச்சுக் கொண்டு வாடா. ' ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த முத்தன் குதித்து விழுந்து கறிவேப்பிலே மரத்தை நோக்கி ஓடுகின்முன். " , "
olo e o O - so சே! என்ன கேவலமான ஜென்மம்?. இவளும்
ஒரு தாயா?. பெருஞ்சீரகமும் கறிவேப்பிலையும் மணக்க
மணக்கத் தாளித்துக் கறி ஆக்க இதுவா சமயம்?.
(θ-»
A.
ܢ ܕ ܪ .
التي

ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது 97
என்னுடைய உணர்வுகளில் பச்சைத் தண்ணீரை வாரியடித்ததுபோல் ஒரு விறைப்பு.
அவள் என்னைக் கண்டு விட்டாள்.
முகத்திலரும்பிய வியர்வையைச் சேலைத்தலப்பால் ܬܝܐ துன்டத்தபடி வேளியே வந்த அவளைப் பார்க்கையில் எனக்கு ளிச்சலாக் இருக்கின்றது.
'இப்பிடி இந்தத் திண்ணையிலை இரம்மா.
பசுஞ்சாணத்தால் அன்று ' காலையிலுங்கூட ம்ெமுகி
அழுத்தப்பட்ட திண்ணையின் குளிர்ம்ை எனக்கு நெருப்பா கக் கொதிக்கின்றது. சட்டெனச் சற்றுச் &l - j gr:LGai
ప్ళ%99ణapత.
* உனக்கு ம்னம் என்ன கல்லே?. அந்தப் புள்ளை
செத்து நாலு நாளாகேல்லை. அதுக்கிடேல்லை. ? ?
அவளுடைய முகம் ஒரு கணம் ஆத்திரத்தினுலும், சினத் தினலும் விகாரப்பட்டுத் தோன்றுகிறது. எரிக்கும் விழிக ளால் என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு, நெஞ்சொடிந் தவள்போல் நிலத்தில் உட்கார்ந்து விம்மு கிருள். கண்ணீர் அருவியாக கொட்டுகின்றது. உண்மையாகவே அவள் அழு கின்ருள். அது எனக்குத் தெரிகின்றது.
அடுப்பிலே வைத்தது எரிந்து மணக்கின்றது. அவள் சட்டென எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு குசி *) னியுள் நுழைந்து சட்டியை இறக்கி வைத்துவிட்டு வருகி
(por.
7

Page 55
98
ஒரு ஆகாயத்தமரை பூமிக்கு வருகிறது
கம்லாத் தங்கச்சி. என்ரை சின்னக் குஞ்  ைச. யு ம் அதின்ரை கதைகளையும் நான் என்னண்டம்மா மறப்பன். ஆனல் நெடுக ஒரு இடத்திலை இருந்து கவலைப்பட எங்க் ளுக்கு எங்காலை புள்ளை நேரம். மூத்த பொடியன் இரண் டும் கூலி வேலைக்குப் போட்டாங்கள்.அவரும் வேலைசெய்து நல்லாய்க் களைச்சுப் போய் வருவார். கறிபுளி ஒண்டு
மில்லை. அதுதான் சும்மா தாளிச்சு ஒரு சம்பல் எண்டா லும் செய்வமெண்டு. அவளுடைய குரல் தழுதழுக்கி றது. ". -
அந்தச் சுற்ருடலை உற்று நோக்குகிறேன். மறைந்து விட்ட அந்த மழலைச் செல்வனின் ஞாபகத்தைக் கிளறும் பொருட்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று பார்க்கின் றேன்.
அவனுடைய விளையாட்டுப் பொம்ம்ைக்ள்.ஆடுகுதிரை மூன்று சக்கரச் சயிக்கிள்.அவன் உறங்கும் தொட்டில்.
இவையொன்றுமே அங்கு இல்லை! வறுமை தவழும், அந்தச் சின்னக் குடிசையில் இவையெல்லாம் இருக்குமரி என்ன ! . . .
கடந்துபோன அந்தச் சுகானுபாவமான ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவுக்குக் கொண்டுவரும் சின்னங்கள் எதுவுமே அங்கு இல்லை! அவை ஏற்படுத்தும் நெஞ்சைப் பிழியும் துயரமும் அங்கு இல்லை! ஆறுதலாக அமர்ந்திருந்து ஏற்பட்டுவிட்ட இழப்புக்களுக்காக இதயத்தை உடைத்துக் கொண்டு அதனிலும் ஒரு சுகங்காண இங்கு நேரந்தான் ஏது!
அடுத்த கணமே சம்ாளிக்க வேண்டிய அன்ருடப் பிரச் சனைகள். வாசற்படியிலே வந்து நின்றுகொண்டு மல்லுக்கு அழைக்கும் எதிர்காலம். இவற்றுடன் உடனடியாகவே போராட்டத்தில் இறங்கி. அப்போராட்டம் பிரசவிக்கும்
இன்ப துன்பங்களில் ஆழ்ந்துவிடத்தான் நாகனலும் அவன் .اللحوم
மனைவியாலும் முடியும்!

ஒரு ஆகாயத்தாமரை பூமிக்கு வருகிறது 99
இழப்புக்கள், பிரிவுகள், ஏமாற்றங்கள் அவர்களுக்கும் உண்டு.ஆனல் என்னைப்போல ஏற்பட்டுவிட்ட ஏமாற்றங் க்ளேயே மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாராட்டச் சீராட்ட அவர்களுக்கு அவகாசந்தான் ஏது?
y கழுதைப் புண்ணுக்குப் புழுதிதான் மருந்து!
.கண்டறியாத சூரியனும் தாம்ரையும்.நடை
முறை வாழ்வுக்குப் பயன்படாத செத்துப்போன உவ
விரைந்து வீட்டுக்குச் சென்று என் உடைகளையும் உட மைகளையும் ஒழுங்குபடுத்திப் பெட்டியில் அடுக்குகின்றேன்.
a பெரியம்மா முக்த்தில் வியப்பு நிறைய என்னைக் கவ
னிக்கின்ரு. -
r) 'நான் நாளைக்கே எங்கடை வீட்டை போகோணும்
பெரியம்மா. படிக்கிறத்துக்குக் கணக்கக் கிடக்குது.
2లా
香
畿リ。
N

Page 56
காயாம்பூ
அவளுக்குப் பெயர் காயாம்பூ. சித்திரையில் மலரும் இந்த ம்லர் நல்ல நீலநிறம்ாகவிருக்கும். அவளுடைய விழி/ களும் கருநீலநிறமானவை. எனவே அவளுடைய தக்ப்பன் அவளுக்கு ஆசையுடன் இட்ட பெயர் காயாம்பூ.
மேற்கே செவ்வானமிட்டுப் பொழுது சாய்ந்துகொஷ் டிருக்கிறது. அந்தி வெயில் படும் மரஞ்செடி, கொடியாவும் ம்ங்கலப் பொன்னிறம்பெற்று மிளிர்கின்றன. மந்திகள் உயர்ந்த மரங்களின் உச்சியிலே ஏறியிருந்துகொண்டு இத மான மாலை @លយ៉ាំឪល அனுபவிக்கின்றன.
அந்த உயர்ந்த மரங்கள் சூழ்ந்து நிற்குமிடத்தில் ஒரு சிறிய தடாகம். அந்தத் தடாகத்தினருகே ஒரு புல் மேட்டிலே காயாம்பூ உட்கார்த்திருக்கிருள்.
மீட்டப்படாதவொரு வீணையின் இனிய ம்ோனமும், சிறிதுசிறிதாகச் செம்மையேறிச் சில் நாட்களுக்குள் முற்றிப் பழுக்கீவிருக்கும் மாங்கனியின் செழுமையும் க்ாயாம்பூவின்

r)
காயாம்பூ O
உடலில் இழையோடி நிற்கின்றன. நீலநிறம்ான அவளு டைய அகன்ற காயாம்பூ விழிகள் அந்தநேரத்தில் மிகமிக ஆழங்கொண்டவையாகக் கனவு காண்கின்றன.
அவளுக்குச் சற்று அருகே இருந்த அந்தச் சிறகை தனது நீண்ட கழுத்தை வளைத்து இலாவகமாகத் தனது இறகு களைக் கோதிவிட்டுக் கொள்கிறது. ஆண்பறவைகளுக்கே உரிய ஒரு தனியழகு இந்தச் சிறகையிலும் தெரிகிறது.
விம்மிப் புடைத்துநிற்கும் அதன் நெஞ்சில்தான் எத்த்னை வர்ண ஜாலங்கள்! அதன் ஒவ்வொரு அசைவிலும் அந்தி வெய்யில் பட்டுத் தெறிக்கையில் வானவில்லின் அத்தனை, நிறங்களுமே பின்னிப் பிணைந்து சிதறுகின்றன.
காயாம்பூ அச் சிறகையை நோக்கித் தனது கையை மெல்ல நீட்டுகிருள். அது கோதுவதை நிறுத்திவிட்டு மெல்ல முன்னே நடந்துவந்து அவளது உள்ளங்கையில் தனது அலகைவைத்து உராய்கையில் காயாம்பூவுக்கு உள் ளங்கை குறுகுறுத்துப் புறங்கை ரோமங்களெல்லாம் சிலிர்த்து நிற்கின்றன. - v :
அவள் சட்டென அந்தச் சிறகையை இழுத்து தன் நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக் கொள்கிருள், இரண்டு சின்ன இதயங்கள் வெவ்வேறு கதியில் வெவ்வேறு நாதத் துடன் துடித்துக்கொள்கின்றன. காயாம்பூ சிறகையின் அழகிய இறக்கைகளை அன்புடன் தடவிக் கொடுக்கையில் அதன் வலப்பக்க இறக்கையில் புடைத்துநிற்கும் தழும்பு
ஒன்று அவளுடைய விரல்களில் நெருடுகிறது.
ஒருவருடத்திற்கு முன்பு ஒருநாள் விடியற்காலை! ஆயி ரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் சைபீரியாவி

Page 57
02 காயாம்பூ
லிருந்து சிறகைகள் தமக்குரிய சீதோஷ்ணம் நிலவும்நாடுகளை நாடிப் பெருங்கூட்டங்களாக நெடும்பயணம் ம்ேற்கொண்டு விட்டன;
அவற்றில் ஒருபகுதி ஈழவழநாட்டின் கிழக்குக் கரை யோரமாக இருக்கும் முல்லைத்தீவைச்சேர்ந்த ஒரு பிரதேசத் தில் இறங்குகின்றன. பல ஆயிரக்கணக்கில் அவை வானில் வட்டமிட்டுப் பறக்கையில் மழைக்கால இருள்போன்று அவை வானை மறைக்கின்றன. பறப்பதற்கென்றே சிறகு விரித்துப் பறக்கும் அந்த அழகிய சிறக்ைகள் காற்றைக் கிழித்தவண்ணம் நீரில் வந்து விழுகையில் விமானம் இரை வது போன்ற இரைச்சல் அந்தக் காட்டுப் பிரதேசத்தில் ஒலிக்கின்றது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்டாங்குளம் என்ற சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறிய குடிசையில் படுத்திருக்கும்( காயாம்பூவின் க்ாதுகளிலும் அந்த இரைச்சல் வந்து விழு கின்றது. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்திருந்து அவசரம் அவசரமாகத் தனது நீண்ட கூத்தலை அள்ளியெடுத்து முடிந்து கொள்கிருள். பாவாடையைத் தூக்கி உயரமாகக் கட்டிக் கொண்டு நீர்க்கரையைநோக்கி அவள் ஒட்டமெடுக்கையில் **எங்கையடி பாயுருய்?' என்று அவளுடைய தாயார் அதட்டுகிருள் 'சிறகையள் வந்திட்டுதணை' காயாம்பூ நிற்கவில்லை. திரும்பிப் பார்க்கவில்லை. சிட்டுப்போலப் பறக்கிருள்.
**நல்ல சங்கதிதான்! குமராகினப்பிறகும் கொஞ்சமெண் 鼻 டாலும் அடங்கி இருந்தாத்தானே' தாய் தன் கணவனை நோக்கிக் கோபத்துடன் சலித்துக்கொள்கிருள். அவனுக்கோ காயாம்பூ ஒடும் காட்சி, காட்டிலே தன்னிச்சையாக மான் குட்டிகள் துள்ளித்திரியும் அழகை நினைவுக்குக் கொண்டு வந்தது. தன் மனைவியின் கோபமில்லாத கோபப்பேச்சைக் கேட்டு இலேசாகச் சிரித்துக்கொள்கிருன்.
 

காயாம்பூ - 03
'நல்ல தேப்பனும், நல்ல மோளும்!' என்று மீண்டும், முணுமுணுத்தவாறே அவள் காலை வேலைகளைச் செய்ய
ஆண்டாங்குளத்தின் ஒருபக்கத்தை வளைத்துக்கிடந்த அந்தப் பரவைக் கடலைநோக்கி இரைக்க, இரைக்க ஓடி வந்த காயாம்பூ, நீர்க்க்ரையை அண்டி வளர்ந்திருக்கும் தில்லை மரங்களுக்குப்பின்னல் மறைந்து மறைந்து சிறகை கள் இறங்கியிருக்கும் இடத்தைநோக்கி மெல்லமெல்ல நடக்கிருள். ஆடுசதையளவிற்குப் புதையும் ஈர்ச்சேற்றில் அவள் லாவகமாக அடியெடுத்து நடக்கையில், காலைவெய் யிலில் கதலிவாழைபோன்று அவளுடைய செழுமையான உடல் மின்னுகிறது. காட்டுப் பிரதேசம் தன் சிறந்பை யெல்லாம் கொட்டி ஈந்துபெற்ற கலைக்கன்னி இந் த க் "ாயாம்பூ என்று எண்ணத் தோன்றுகிறது.
-
இன்னமும் குனிந்து மறைந்து சென்று ஒரு தில்லைவேரில் அமர்ந்துகொண்டே தில்லைக்கிளைகளை விலக்கிக் காயாம்பூ பார்க்கையில் சிறகைகள் அவளுக்கு மிகஅண்மையில் சிறிய படகுகள்போன்று நீந்தி வலம் வருகின்றன. சேவலும் பேடு மாக அவற்றில்தான் எத்தனை ஜோடிகள்! இளங்காலை
வெய்யிலில் அவற்றின் நிறங்கள்தான் எத்தனை அழகுடன் பொலிகின்றன! و ... ". مانتیمتر
அவள் தன் அழகிய காயாம்பூ நிறக்கண்களை அக்ல
விரித்து அவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கிருள். அதோ! அவளுக்குச் சற்றுத் தொலைவிலிருக்கும் சிறகைக் கூட்டம் ஒன்று ஏதோ கலைவுகண்டு நீரைக்கிழித் து 'a கொண்டு ஜிவ்வென மேலெழும்பிப் பறக்கின்றன,
டுமீல் டுமீல்!! என்று அடுத்தடுத்து ஐந்தாறு வெடிச் சப்தம் அந்தப் பிராந்தியத்தின் இனிய மோனத்தைக் குரூர

Page 58
* Ae ---- ఈ *- శ్లో** * ஆத்திே
04 . காயாம்பூ
மாகக் குலைக்கின்றது. விக்கித்துப்போயிருந்த காயாம்பூவின் முன்னுல் தொப்பென்ற சத்தத்துடன் அழகியதொரு ஆண்
சிறகை வந்து விழுந்தது. அதனுடைய இறக்கையொன்று
குண்டடிபட்டு பரிதாபமாகத் தொங்கியது.
அவள் தன்னிரு கைகளாலும் அதையணைத்துப் பிடித் தாலும், திமிறிப் படபடவென இறக்கைகளையடித்துத் தொலைவே சென்றுகொண்டிருக்கும் தன் இனத்துடன்
சேர்ந்துவிடத் துடியாகத் துடித்தது அந்தச் சிறகை. அதை
யணத்தவாறே தில்லைக் கிளைகளினூடாக் எட்டிப்பார்த்த கர்யாம்பூவின் விழிகளுக்கு மூன்று ஆண்கள் காற்சட்டை சேட்டணிந்து துப்பாக்கிசகிதம் குண்டடிபட்டு விழுந்த சிறகைகளைப் பொறுக்கி எடுப்பது தெரிந்தது.
- O À அந்தப்பகுதிப் பெண்களுக்கேயுரிய இயற்கையானதொரு( வெருட்சியும், அச்சமும் தூண்டவே அவள் பின்வாங்கித்
திரும்பித் தில்லைகளின் நடுவே சென்று ஒளிந்துகொண்டாள். ஆனல் அவள்கையிலிருந்த அந்தச் சிறகைtட்டும் அமைதி யாகவிருக்கவில்லை. அவளுடைய பிடியிலிருந்து தன்னை விடு வித்துக்கொள்ளும் தவிப்புடன் இறக்கைகளைப் பலமாக
அடித்துக்கொண்டது. அவளிருந்த இடத்தைநோக்கி யாரோ " . நடந்து வருவது கேட்கவே அவளுடைய இதயம் இன்னமும் "
Gaiah LDT.g. அடிக்கத்தொடங்கியது. . . . .
ஒரு தில்லைச் செடியின் பின் தன்னை நன்கு மறைத்த வாறே சிறகையையும் இறக்கைகளை அடிக்காதவாறு சேர்த் துப்பிடித்துக்கொண்டு காயாம்பூ பதுங்கிக்கொண்டாள். அந்தக் காலடி ஓசைக்கு உரியவன் தில்லைமரங்களை விலக்
கிக்கொண்டு சத்தம்கேட்ட திக்கை நோக்கி முன்வந்தான்.
அவன் அவளைக் காணுமுன்பே அவள் அவனைக் கண்டுவிட்
LsTair.
့်ချီ
 
 
 

PERLÁLA DUNNEřijas MARAN
nata
காயாம்பூ என்பது clav M los
இலேசாகக் கலைந்து கிடந்த சுருண்டமுடியும், மழுங்கச் சவரம் செய்யப்பட்ட சிவந்த முகமும், திடகாத்திரமான உடற்கட்டையும் கொண்ட அந்த வாலிபனைக்கண்ட காயாம் பூவுக்கு அன்ருெருநாள் தான் கர்ட்டிலேகண்ட வனப்பு மிக்க் மான்கலையின் ஞாபகம் நெஞ்சில் சட்டெனவந்தது.
அந்த வாலிபனுடைய தீட்சண்யம் பொருந்திய விழிகள் ஒவ்வொரு புதரையும், செடியையும் கவனித்துக்கொண்டே * வந்து சட்டென அவளுடைய நீலவிழிகளைச் சந்தித்தபோது அவளுக்கு வயிற்றிலிருந்து எதுவோ உருண்டையாகக் கிளம்பி வந்து தொண்டைக் குழியை அடைப்பதுபோலிருந்தது.
அந்த வாவிபனுடைய விழிகளோ சட்டென வியப்பால் - விரிந்தன. “ஹே யூ!' என்று வியப்புடன் கூவியவாறே அவன் அவளைநோக்கி முன்வந்தான். காயாம்பூ சரே எழுந்து ஓட்டம்பிடிக்க முயன்ருள். அதற்குள் அவன் நெருங்கிவந்து அவளுடைய கையைப்பிடித்துவிட்டான்.
அவளுடைய கரங்களுக்குள் இருந்த சிறகையின் வெருட்சியையும் துடிப்பையும்விட அவனது பிடியில் அகப் பட்டுக் கொண்ட காயாம்பூவுக்கு அதிகமான வெருட்சியும் மருட்சியும் இருந்ததைக் கண்ட அந்த வாலிபனுக்குச் 懿 சிரிப்புத்தான் வந்தது" வாயைத் திறந்து அவன் கலக்ல வென்று நகைத்தான். வெண்மையும் ஆரோக்கியமும் நிற்ைந்த அந்தப் பல்வரிசை காயாம்பூவுக்கு மிகவும்,அழகா கத் தோன்றியது. - .
அச்சிரிப்பு அவனுடைய முகத்துக்குத் தந்த சேபைய்ைக் கண்ட காயாம்பூவின், மனதில் கவிந்த அச்சம் விலகியது. நாணம் கலந்த முறுவல் அவளுடைய முகத்தை நிறைத் தது. அவள் ஓட முயலவில்லை என்பதைக் கண்ட அவன்
/

Page 59
( ද්‍රි: " é 106 காயாமயூ
தன் பிடியைத் தளரவிட்டான். நாகரீக உலகில் உயர்மட் டத்தைச் சேர்ந்த அந்த வாலிபனுக்கு 'இப்படியும் ஒரு அபூர்வ அழகா?' என்ற வியப்பே நெஞ்சை நிறைத்தது.
"அந்தத் தாரா நான் சுட்டது. அது என்னுடையது!' என்று அந்த வாலிபன் காயாம்பூ அணைத்துக் வைத்துக் கொண்டிருந்த சிறக்ைகைக் காட்டிக் கேட்டதும் காயாம்பூ தனக்கே சுபாவமான துடுக்குடன் 'இது தாரா இல்லை, சிறகை!' என்ருள்.
'ஒ! இந்தப் பக்கத்தில் இதைச் சிறகையென்ற சொல்
வார்கள்? அது எதுவாயினும்சரி அதை என்னிடம் தந்துவிடு?
என்று அந்த வாலிபன் கேட்டதும் அவள் அச்சிறகையை தன்னுடன் இன்னமும் நெருக்கமாகச் சேர்த்து அணைத்துக் கொண்டே ** இது என்னடியிலைதான் வந்து விழுந்தது. நான் தரமாட்டன் என்று மிடுக்காகக் கூறினுள்.
அவளுடைய முகத்தையும் அதில் தெரிந்த உறுதியை
யும் கண்ட அந்த வாலிபனுக்கு அவளிடமிருந்து சிறகையை எப்படியும் பெறமுடியாது எனத் தெளிவாகியது. மேற் கொண்டு எதுவும் பேசத் தோன்ருத நிலையில்' உன்னு டைய பெயரென்ன?’ என்று கேட்டான்
' காயாம்பூ!? அவளுடைய குரலில் பெருமை!
' காயாம்பூவா? அதென்ன பூ!!' அவன் வியப்புடன் கேட்டான்.
'காயாம்பூ தெரியாதே காயாம்பூ? இதுகூடத் தெரி யாதே' என்று கேட்ட அவள் நீலவிழிகளில் கேலி குமிழி யிட்டது காயாம்பூவைத் தெரியாமலும் யாராவது இருக்க முடியும்ா என்பது போன்ற வியப்பு அவளுடைய குரலில் தொக்கிநின்றது. R
 

காயாம்பூ 107
'உன்னைப்போல் காயாம்பூவும் மிக அழகாகவா இருக்
கும்?' என அவன் குறும்பாகக்கேட்டபோது அவளுடைய இம்ைகள் படபடவெனப் பட்டாம்பூச்சி போன்று.அடித்துக்
கொண்டன. முகம் குப்பென்று சிவந்தது. சிறகையை நெஞ் சுடன் சேர்த்தணைத்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டு மானென மறைந்தாள்.
காயாம்பூ மேல்மூச்சுக் கீழ்மூச்சுவாங்கத் தன் குடிசை யைச் சென்றடைந்தாள். அவள் கையிலே சிறகையைப் பார்த்ததும்ே அவளுடைய தகப்பன் விஷயத்தைப் புரிந்து கொண்டான்.
"என்னபுள்ளை, உவங்கள் வெடிவைச்ச சிறகையொண்டு
உன்னட்டை அம்பிட்டிட்டுதுபோலை! எரும்ை நெய்யிலை
பொரிச்சுப் பார்! அழகாயிருக்கும்!' என்ருன்.
'இல்லையணையப்பு, இதுக்குச் செட்டையிலைதான் சின்
னெரு காயம். நான் மருந்துபோட்டு மாத்தி வளக்கப்போற
னப்பு' என்று ஆசையுடன் பதிலளித்தவாறே நேர்வாளம்
இலையில் அம்மரத்தின் பாலைக்கறந்து மிளகும் வைத்துச்
சுட்டு அரைத்து சிறக்ைக்கு மருந்து கட்டினுள், சிலநாட்
களுள் அதன் காயம் ஆறிவிட்டாலும் அதனல் பறக்க
முடியவில்லை. எனவே அது காயாம்பூவின் குடிசையையும்
அக்குடிசைக்கு அருகேயிருந்த தடாகத்தையும் விட்டு எங்கே யும் செல்வதில்லை.
சில நாட்களில் காயாம்பூவைப் பொறுத்தமட்டில் அதன் வெருட்சி மறைந்துவிட்டது. வேறு யாரையும் கண்
டால் நெருங்காத அந்தச் சிறகை அவளிடம் ம ட் டும்
நெருங்கிப் பழகியது. நெடும்பயணம் மேற்கொண்டு வந்த சிறகையினம் இடம்பெயர்ந்து சென்றுவிட்டன. காயாம்பூ வின் மாமன் வளர்த்த நாட்டுத் தாராக்கள் உருவ அம்ைப்

Page 60
b) -
to8 - காயாம்பூ
பில் சிறகையைப் போலிருந்தாலும் இந்தச் சிறகை அவற் − றுடன் கூடுவதுமில்லை, அவை இதனுடன் கூடுவதற்கு விழை வதுமில்லை.
காயாம்பூ, காலையிலும் மாலையிலும் சுதந்திரப் பறவை யாக அந்தப் பிரதேசம்ெங்கும் கரம்பைப்பழம் பிடுங்கவும், உலுவிந்தம் பழம் பறிக்கவுமென்று திரிவாள். அவளுடன் அந்தச் சிறகையும் தன் வாலிறகை அசைத்தசைத்து நடந்து செல்லும், நாளடைவில் புண் ஆறி சிறிது தூரம் பறக்க வும் செய்தது. அந்த இரண்டு உயிர்களுக்குமிடையில் வலு வானதொரு பாசப் பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
மணி! மணி! என்று செல்லமாக அதனை அழைப்பாள்.' அதுவும் தன் கழுத்தை அசைத்துத் தன் குண்டுமணி விழி , களால் அவளை வாஞ்சையுடன் பார்க்கும். காயாம்பூ ஒரு (f மானிடப் பெண்ணேயல்ல, அவளும் இயற்கை பிறப்பித்த வனப்பு மிக்கதோர் இன்பப் பறவைதான் என்று அந்தச் சிறகை நினைத்தது போலும்! -
காயாம்பூவுக்கு மணியைக் கண்டதுமே, மணி தனக்குக் கிடைக்கக் காரணம்ாயிருந்தவனுடைய முகமே நெஞ்சில் பளிச் சென்று தோன்றும். மறுகணம் தான் அன்ருெருநாள் காட் டோரம் கண்ட மான்கலையின் கம்பீர தோற்றம் தெரியும். காட்டு முல்லையைக் கைகொள்ளாமல் பறித்துத் தலைநிறை யத் சூடிக் கொள்கையில் அவற்றின் வெண்ம்ையில் அந்த வாலிபனுடைய சிரிப்புத் தெரியும். 彎 கெண்டைக்காலளவு சேற்றில் ஒடியோடி நடக்கையில் ܓܠ 點 அவனுடைய கால்டியோசை அவளுக்குக் கேட்கும். இத்த l கைய நினைவுகள் ஏற்படும் போதெல்லாம் நீலநீள் விழிகள் ஆழம் நிறைந்தவையாகத் தோன்றும். ஏக்கப் பெருமூச்சு நெஞ்சினின்றும் புறப்படும்
赢

காயாம்பூ - 09
ஆனல், ம்றுக்ணம் அவள் யாவற்றையும் மறந்து
காட்டு மானுக, க்ரணப்புளுவாக துள்ளுவாள், மகிழ்வாள். வாழ்வதற்க்ென்றே பிறந்தவள் அவள். எளிமை நிறைந்த அவள் சின்ன இதயத்திலே பெரிய ஆசைகளே இல்லை. இருப்பினும் அவன் ஞாபகம் அவள் நெஞ்சில் மெல்லிய - தொரு வேதனையைப் பிறப்பிக்கவே செய்தது.
கள்ளங்க்படமில்லாத அந்த ம்னதில் ஏன் அவனைப் பற்றிய சிந்தனை வருகிறது? ஏன் அது வேதனையைத்தரு கிறது? என்பதெல்லாம் விளக்கமில்லாத வினவாக, விடுவிக்க முடியாத பிரச்சனையாய் அன்று தெரிந்தது. இருள் நன்றக்ப் படரத் தொடங்கிவிட்டது. மணி பின்தொடரத் தன்குடி சையை அடைந்தாள் காயாம்பூ தைமாதப் பனி இப்போதே விழத்தொடங்கிவிட்டது. சாக்குக்க்ட்டிலில் கிடந்த தகப்பனை நோக்கிய காயாம்பூ,
'ஏனப்பு இந்தமுறை சி ற  ைக் யளை இ ன் னு ம் காணேல்லை?’ எனக்கேட்டாள். ‘இனி என்ன தை பிறந் ) திட்டுதானே, இனி எந்த நேரமும் சிறகை விழும்’ என்று ' பதில் சொன்ன தந்தையைநோக்கி 'இந்தமுறையும் சிறகை வெடிவைக்கிற ஆக்கள் வருவினமே?’ என ஆவலுடன் கேட்டாள்.
‘ஓ! அவங்களுக்கென்ன பெரிய பணக்காரத் துரை மார்! கொழும்பு சண்டியிலிருந்து ஜிப்பிலை வருவாங்கள்!’
** என்னப்பு பணக்காறரெண்டு சொல்லுறியள். அவை யளிட்டை கனக்க மாடுகண்டு வயல் கிடக்குதோ?' காயாம்பூ வுக்குப் பணக்காரரைப்பற்றிய விளக்கம் அவ்வளவுதான் டி'
*இந்தப் பொட்டையின்ரை கதையைக்கேக்க எனக்குச் '. சிரிப்புத்தான் வருகுது! பணக்காறர் எண்டால் ஊருப்பட்ட ' காசு, கார், வங்களா எல்லாம் வைசிருக்கிறவங்கள்!? அவன் ( சிரிப்பினூடே விளக்குகிருன்,

Page 61
O காயாம்பூ
* எங்கடை ஊருக்கை ஆரப்பு பணக்காறர்?' என்று அவள் கேட்டதற்கு அவுட்டுச் சிரிப்புச் சிரிக்கிருன் அவன்.
காலையடி பணக்காறர்? நாங்கள் எல்லோருமே ஏழையள் தான்!? அவன் சிரித்தபடியே சொல்கிரு?ன். காயாம்பூவுக் குப் பாதி விளங்கியும் மிகுதி விளங்காமலும் தோன்றவே எழுந்து படுக்கச் செல்கிருள்.
"இஞ்சையோ? ஆண்டாங்குளத்திலையோ? இஞ்சை எங்
இரவு நடுச்சாமம்! அந்தச் சிறிய ஊர் உற ங் கி க் கொண்டிருக்கிறது. காயாம்பூ திடீரென விழிப்புக் கண்டு எழுந்துவிடுகிருள். குடிசையின் ஒரு மூலையில் வழக்கமாகச் சேர்க்கையிருக்கும் மணி. கீழ்ஸ்தாயியில் ஒருவித ஒலியெ ழுப்பிக் கொண்டு பறந்து பறந்து குடிசைக்கு வெளியே செல்ல முடியாமல் விழுகின்றது. - -
' என்ன இண்டைக்கு மணி பெரிய அந்தரப் படுது' ү, என்று காயாம்பூ தனக்குள் சிந்தித்தவாறே படுத் தி ரு க் கி. முள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை. வைக்றைப் பொழு ? தாகின்றது. உறக்கமின்றிக் கண்மூடிப் படுத்திருந்த காயாம் : பூவின் செவிகளில் விமானம் இறங்குவதைப் போன்ற ஒரு இரைச்சல் கேட்கின்றது.
மணி தலையை உயர்த்திச் சிறகுகளையடித்துத் துடிக்கி றது. காயாம்பூவுக்கு விஷயம் புரிந்து விட்டது. சிறகைகள் மீண்டும் வந்துவிட்டன! அவள் எழுந்து விடிந்தும் விடியாத
அந்த வேளையில்மேனுரியையும் நெஞ்சோடு அணைத்தவாறு நீர்க்கரையை நோக்கி ஒடுகின்ருள்.
蠻 " சிறகைகள் பெருந்திரளாக, செவ்வானத்தில் கரும்ேகக்
கூட்டங்களாக இறங்குவது சாயாப்பூவுக்குத் தெரிகிறது,
எக்களித்துத் துடித்து இறக்கைகளைப் படபடவென
 
 

காயாம்பூ
அடித்துக் கொள்கிறது. அதனைப் பார்த்த காயாம்பூ தன் முகத்துடன் அதனுடைய தலையை அணைத்து முத்தங் கொடுத்து.
'மணி! உன்ரை ஆக்கள் வந்திட்டினந்தானே! இனி என்னை உனக்குத் தேவையில்லைத்தானே!" என்று செல்லம் கொஞ்சையில் அவளுடைய காயாம்பூவிழிகள் கலங்கிக்குள மாகிப் பொட்டெனக் கண்ணிர் சிந்துகிறது. -
காயாம்பூ மெல்ல ம்ணியை மேலே உயர்த்தித் தன் கரங்களினின்றும் அதை விடுவிக்கிருள். அவள் கரத்திலே யிருந்து உந்தி மேலெழும்பிய அந்தச் சிறகை காயாம்பூவைச்
சுற்றி ஒருதடவை வாஞ்சையுடன் வட்டமிட்டுவிட்டுத் தன்
இனத்தைநோக்கி ஜிவ்வெனப் பறக்கிறது.
நன்முகப் பொழுது புலர்ந்துவிட்ட அந்த வேளையிலே
() தனிப்பறவையாகப் புறப்பட்டு வானத்தே சிறியதொரு ' கரும்புள்ளியாக மாறிப் பெரு மழைமேகம்போன்று இறங் கும் சிறக்ையினத்துடன் கலந்துவிட்ட தன் அரும்ைமணி
யைக் கலங்கிய கண்களுடாகப் பார்த்துக்கொண்டே நிற்கும் காயாம்பூவுக்கு துக்கம் நெஞ்சை அடைக்கின்றது. .
சிந்தாமணி 1970

Page 62


Page 63


Page 64