கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உணராத உண்மைகள்

Page 1


Page 2


Page 3

உணராத உண்மைகள்
ஜோசப் பாலா
நான் வெளியீடு - 5

Page 4
பதிப்பு : மார்கழி 27, 1986
உரிமை : ஆசிரியருக்கு
விலை : ரூபா 10/-
* “UNARATHA UN MAIKAL”?
An Anthology of Short Stories (c) S. Joseph Bala
12, St. Patrick's Road, Jaffna, Sri Lanka.
Published by
NAAN Publications, Oblate General Delegation, Jaffna. Printed by Mani Osai Printers, Jaffna.

அரும்பும் பணிவிழ அல்பிறட் (அல்வி) தன் நனயும் ஈர நினவுக்கு.

Page 5
முன்னுரை
நண்பர் ஜோசப் பாலா அவர்கள் பதினெரு சிறு கதைகள் அடங்கிய தனது சிறுகதைத் தொகுதியொன்றினுக்கு முன்னுரை என்னை எழுதும்படி கேட்டபோது, நான் உண்மை யிலேயே ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆச்சரியத்திற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று மிகக் குறுகிய காலத்துள் எழு தத் தொடங்கிய பாலா, மிக விரைவுடனும் துணிச்சலுடனும் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளி யிட முன்வந்தமை. இரண்டு, பலபேர் முன்னுரை எழுத முன்னிற்கும் வேளையில் என்னை இச்சிறுகதைத் தொகுதிக்கு மு ன்னு  ைர எழுதச் சொல்லிக் கேட்டமை.
முன்னுரை, முகவுரை எ ன் பன முகமனுரைகளாகவும், முதுகுசொறி உரைகளாகவுமான சடங்காசாரங்களாக ஆகிவிட்ட இன்றைய எமது இலக்கியச் சூழலில் எழுதப்படும் முன்னு ரைகள் பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் கிடை யாது. என்னைப்போல இவ் அபிப்பிராயமுடைய பலர் இருப் பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
பாலா என்னை முன்னுரை எழுதவேண்டும் என்று திடீர்த் தாக்குதல் கொடுத்ததும் நான் ‘என்னல் இயலாது" என்று கூறித் தவிர்க்கவே பார்த்தேன்.
பாலா விடவில்லை; அது அவர் குணம்,
பாலாவின் நல்ல நட்பும், "நான்' சஞ்சிகையை மாதம் தோறும் கொண்டு வர அவர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாது அந்தச் சஞ்சிகை வெளியீட்டுக்காக உழைக்கும் அடக்கமான உழைப்பும் என் மறுப்பை மீளாய்வு செய்ய
 
 

வைத்தன. இவையெல்லாவற்றையும் விட உதட்டாலன்றி இதயத்தால் பேசும் பாலாவின் அன்பு என்னைக்கட்டாயப்படுத் தியது. அந்த அன்புரிமையோடுதான் இந்த முன்னுரையை எழுத முன் வத்தேன்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலர் எதோ ஒரு இலட்சிய வேகத்துடன் நிறைய நிறைய எழுதுகிறர்கள். கணிசமான வெளியீடுகளும், வெளியீடுகளேவிட அதிகமான அளவில் விளம்பரப்படுத்தப்படும் வெளியீட்டு விழாக்களும் இன்றைய யாழ்ப்பாணத்துக்குப் பழக்கமாகிவிட்டன. வெறும் பணச் சடங்குகளாகவும். ஒப்பாசாரங்களாகவும் இவை அமைந்து விடுவதும் இன்னுெரு அம்சம். இவ்வண்ணம் வெளிவருகின்ற பலருடைய ஆக்கங்களில் கருத்தாழமும், கலேயாக்கமும் காணப்படாமலிருப்பது மனதிற்குத் துயரையே அளிக்கின்றது.
வெள்ளத்தனையது மலர் நீட்டம்.
நமது சிறுகதை எழுத்தாளர்களில் மிகப்பெரும்பாலானேர் இதற்கு விதிவிலக்கல்லர். சிறுகதை கைத்தொழிற் புரட்சியின் பின்னர் தோன்றி வளர்ந்த ஒர் இலக்கிய வடிவம். பல்வேறு ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் அக்கலைவடிவத்தைப் பல பரி மாணங்களுக்குத் தமது எழுத்தாற்றல்மூலம் இட்டுச் சென் றுள்ளனர். நமது தமிழ் மொழியிலேகூட சிறு கதை க் கு என்று ஒரு சிறு வரலாறுண்டு. கு று கி ய காலத்தைக் கொண்ட வரலாழுக அது இருப்பினும் குறிப்பிடக்கூடிய வர லாறு அது. அவ்வரலாறு உலகச் சிறுகதை இலக்கிய வளர்ச் சிக்குத் தமிழ்ச் சிறு க  ைத ஆசிரியர்களும் பங்களித்துள்ள மையை எமக்குக் கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் சிறுகதை இலக்கிய வடிவை மேலும் புதிய புதிய பரிமாணங்களுக்கு தலைமுறையினர் இட்டுச் செல்கிறர்கள். ஆனல் நமது முன் னுேடிச் சிறுகதை எழுத்தாளர்களையும், இன்றைய ஆளுமை மிக்க சிறு கதை ஆசிரியர்களையும் அறியாமலேயே, அவர்க வின் ஆக்கங்களேப் படிக்காமலேயே ஈழத்தின் இளைய தலை முறை எழுத்தாளர் பலர் பல சிறு கதைகளே எழுதி விடு

Page 6
இருர்கள். பத்திரிகைகளில் வரும் பெரிய எழுத்து விளம் பரங்களினுல் சாதாரண வாசகர் மத்தியில் ஓரளவு பிரபல் மாகியும் விடுகிருர்கள்.
இவர்கள் எழுதியவற்றைப் புகழ்ந்து பேசி சங்கீகாரம்" தர, விமர்சகர்? எனப்படுவோரை ஆயத்தம் செய்தும் விடு கிறர்கள். இலக்கிய உலகில் இன் இளம் தலேமுறையினர் சில மூத்தோரை ஆதர்சமாகக் கொள்: தல்ை ஏற்பட்ட அவலத் தின் பிரதிபலிப்பே இது.
இப்போது எழுதும் புதிய இளம் எழுத்தாளர் பலரின் கதை களில் அவர்களின் எழுத்துப் பயிற்சியின்மையும்; குறிப்பிட்ட இலக்கிய வடிவம் பற்றிய ஞானமின்மையும் துருத்திக்
கொண்டு காணப்படுகின்றன. இப்பிழைகளேத் தவிர்த்தல் எவ்வாறு?
?
எழுத்துப் பயிற்சியினை எழுத்துப்பட்டறைகள் மூலம்
பெறுவதன் வாயிலாகவும் சிறந்த சிறுகதைகளேக் கூரிய வாசிப்புத் திறனு ன் வாசிப்பதன் வாயிலாகவும், நல்ல காத் திரமான விமர்சனங்கள் மூலமாகவும் இப்பிழைகளேத் தவிர்த் துக் கொள்ளலாம் ஆல்ை இவை இங்கு நடைபெறுவதாகத் தெரியவில்லை. பக்கச் சார்புகளும் குறிகிய கோஷ்டிச் சண் டைகளும், அகச் சார்பு விமர்சனங்களும் மலிந்த இன்றைய சூழலில் இவை சிரமமான முயற்சிதான். இந்நிலையில் இன் றைய இப்பொதுப்போக்கிற்கு ஜோசப்பாலாவும் உட்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ീ.
இந்தத் தொகுதியிலுள்ள பதினெரு சிறுகதைகளையும் முன்னுரை எழுதுவதற்காக ஆறஅமர இருந்து வாசித்துப் பார்த்தேன். மிக நீண்ட சிறுகதையான உறவில் மலர்ந்த உண்மைகள் தொடக்கம் (10 பக்கங்கள்) மிகக் குறுகிய சிறு கதையான அவவுக்கு என்ன தெரியும் (2 பக்கங்கள்) வரை பல அளவினைக் கொண்டதான சிறுகதைகள் இத்தொகுதி யிலுள்ளன:
 
 
 
 

இவற்றை வாசித்தபோது இக்கதைகளிற் சிறு கதைக்கு யே கட்டமைப்பு காலப்படாமைதான் எனக்கு முதலில் பட்டது. விவரணப்பாங்கிலும் உரையாடற் பாங்கிலும் பாலா இக்கதைகளேப் பெரும்பாலும் ஆக்கியுள்ளார். விவரணப்பாங்கு கட்டுரையாக அமைந்து விடுகிறது. உரையாடல்பாங்கு உரை பாடல் ஆகவே அமைந்துவிடுகிறது. இவற்றிற்கூடாகச் சிறு கதை உருவாகவில்லை. பேச்சுத் தமிழிலும், இலக்கியத் தமிழி லும் பாத்திரங்கள் உரையாடுகினறன. (பக் 13) கதைகளின் ஆரம்பம், டு, கடைசிப் பகுதிகளில் ஆசிரியர் புகுந்து நிகழ் வுகள், பாத்திர உணர்வுகள் பற்றியும், தான் கூறவந்த கருத்துக்கள் பற்றியும், பிரசாரம் புரிகின்றர் (21,23, 42,53) இருவர் பேசும் உரையாடலை ஒரு பந்தியில் அமைத்து மயக் கத்தையும் தருகின்றது (பக் 37), இவை யாவும் சிறுகதை இலக்கியத்தின் சுவையைக் குறைப்பன.
பாலா ஒரு கத்தோலிக்கர். கத்தோலிக்கருக்குரிய உல கப் பார்வை அவர் கதைகளிற் தெரிகிறது. அந்தப்பின்ன ணியில் அவர் வளர்ந்ததனுற்போலும் மிகப் பெரும்பாலான அவரது கதைகளிற் போதனைப் பண்பே மிகுந்து காணப்படுகி றது. இதனுல் கதைகள் அனுபவத்தில் பிறந்தனவாகவன்றி கருத்துக்களைப் புலப்படுத்தும் ஊடகமாக மாறி விடுகின்றன.
எனினும் பாலாவிடம் சில நல்ல பண்புகளும் காணப் படுகின்றன. அவர் எதையும் சமூகப் பிரக்ஞையுடனேயே அணுக முயற்சிக்கிருர், சமுகத்திற்காணப்படுகின்ற ஏமாற்று, சுயநலம், போலித்தனம், கபடம், நல்லவர்கள் நலிவெய்த கெட்டவர்கள் மேலோங்கும் நிலை என்பவற்றைக் கண்டு குமை கின்ற நெஞ்சத்தினை பாலாவிடம் காணுகிருேம். சிறுமை கண்டு பொங்கும் இந்தச் சிந்தை உண்மைக் கலைஞனின் பெரும் சொத்து. இது பாலாவுக்கு வாய்த்திருக்கிறது.
அவரிடம் அவதானிப்புத் திறன் உள்ளதை அவரது சில கதைகள் சாடைமாடையாகக் காட்டுகின்றன. பாலாவிடம் காணப்படும் விடாமுயற்சியும், அசுர எழுத்துவேகமும், தள ராத உழைப்புத் திறனும் நம்மைக் கவருகின்றன.
SET HY VIN PEYI AGNER IBAR
韃為裕- AA WAPEST
H U N N A k A M

Page 7
இச்சிறு கதைத்தொகுதியில் ஆங்காங்கு காணப்படும் காட்சி வர்ணிப்புக் கோலங்களும், மின்னிமின்னித் ՓՖմlպլb சில சொற்பிரயோகங்களும் பாலாவில் நமக்கு நம்பிக்கையூட்டு கின்றன. இவ்விடா முயற்சி அசுரனழுத்து வேகம், சிறுமை கண்டு பொங்கும் சிந்தை, அவதானிப்புத் திறன் என்பனவற் றுடன் பாலா இலக்கிய ஆக்கத்துறையில் ஆழ்ந்த ஞானமும் போதிய பயிற்சியும் பெறவேண்டும். உரிமையோடு கூ றுகி றேன் பெற்றுத்தான் ஆகவேண்டும். ஏனெனில் நேர்மையும், உண்மையும், ஆர்வமும், உழைப்பும் மிக்க ஒரு நல்ல எழுத் தாளனை முகமன்கூறிப் புகழ்ந்து பாழடித்துவிட என்மனம்
இடந்தரவில்லை.
岛。 மெளனகுரு
நுண்கலைத்துறை, யாழ்-பல்கலைக்கழகம், திருநெல்வேலி. > 22-12-86
| , αναγν ΥΕΤ13
ܬܐܬܐ ܠܗܲܬ ܬ ܐܢܬܬܐ܃ * ,ܐܨ1 1 + ܪܙ
 
 
 

6 г60Tбg)!бб) у
?-ாள்ளத்தில் எழுந்த சிந்த?னத் துளிகளை எழுத்திலே
வடிப்பதற்கு முனைந்த அந்த நாட்களில் அதனை நெறிப்படுத்தி
உளக்குவித்து வழிகாட்டிகளாய் இருந்த எழுத்துலக ஆசான்
களின் ஆலோசனை அறிவுரைகள் இந்த உணராத உண்மைகளே உருவாக்க உதவியது.
பாத்திரங்கள் பல கோணத்தில் அமைந்தாலும் இதுவும் இந்த மண்ணில் நடக்கும் யதார்த்த நினைவுகள்தான் என் பதனை "உணராத உண்மைகள்? உணர வைக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பதே என் எண்ணம்.
இச்சிறுகதைத் தொகுதியில் வரும் கதைகளை "நான்" உளவியல் மஞ்சரியிலும், அமிர்த கங்கை, தினகரன் போன்ற வற்றில் வெளியிட்ட நிறுவனங்களுக்கும் நன்றி பகர்வதோடு அவற்றை உள்ளடக்கி பதினெரு கதைகளைத் தொகுத்து உங்கள் கரங்க ளில் தவழவைப்பதில் மகிழ்வடைகின்றேன் unfair.
இவ்வெளியீட்டை சிறப்பிக்க எனது எழுது கோலுக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுள் ஒருவரே முன்னுரையால் உங்களுடன் பேச விளையும் கலாநிதி சி. மெளனகரு அவர்கட் கும், வெளியீட்டுக்குத் துணை நின்ற நான்" வெளியீட்டுக் குழு வினருக்கும், கத்தோலிக்க கலை இலக்கிய வட்ட நண்பர்கட் கும், யாழ் இலக்கிய வட்டத் தலைவர் செம்பியன் செல்வன் அவர்கட்கும் இலைமறை காயாய் இருந்து உதவிய எழுத்துலக நண்பர்கட்கும், எனது முதல் சிறு க  ைத த் தொகுப்புக்கு ஊக்குவிப்பு தந்த வாசக நெஞ்சங்களாகிய உங்களுக்கும்
நன்றி பகர்வதில் பூரிப்படைகிறேன்.
அழகுற அச்சேற்ற உதவிய நண்பர்கட்கும் அட்டைப் படத்தை அழகுபடுத்திய திரு. வீ. கே. அவர்கட்கும், விமர் சன உரைகள் தந்து, விளம்பர உதவிகள் செய்து ஊக்கு விக்கும் உங்கள் நினைவுகளை என் எண்ணத்தில் எண்ணி அன்பு பெருக்கால் நனையவைத்து நன்றி பகர்ந்து தொடர்கிறேன்.
அன்பின் ஜோசப் பாலா (யாழ்பாலன்)

Page 8
மட்டும் பார், நீ பரியாரியாக முனைய வேண்டாம், அது பாக்க எனக் குத் தெரியும்' என அதிகாரத் தொனியில் மிரட்டுவார். அந்த பிஞ்சு மனதில் நஞ்சு விதைகள் விதைப் பதால் சேரன் தன் உள்உ0ர்வை அடக்கி அதன் ஆவேசத்தை
உேலக்கை உரலில் எழும் தொனியல் காட்டுவான்.
சிட்டு வைத்தியத்தின் மகத்துவத்தைப் பேணிக்கரத்த பரம்பரையில் வாழ்ந்து வரும் பரியாரியாரின் திறமையைப் *சிகர் யாரும் இலர். மூலிகை சே க ரி ப் பது முதல் து வரை தனது மேற்பார்வையுடன் சேர%) துணையாக வைத்து சித்த வைத்தியத் துறையில் பல புதிய கண்டுபிடிப்புக்களேயும் நடாத்தினர்.
~
ஏதோ பெருமனம் கொண்டவர்போல் தன் வேலேப்பழு மிகுதியால் சற்று வேலேகளே பகிர எண்ணிய பரியாரியர் 'டேய் சேரன் இந்து வைத்தியத் துறையின் எதிர்கால வாரிசு நீதான். குருவை மிஞ்சிய சீடனுகி விடாமல் நான் சொல் தி அருவதை மட்டும் கற்றுக் கொள். நான்கூட என் குரு விடம் சிேசிேவிதையும் கற்று வரவில்லை. குரு வும் தனக்கு என சிலவற்றை வைத்துத்தான் சிலதைக் கற்றுத் தந்தார். அதுபோ ல் உனக்கும் சிலவற்றைச் சொல்லித் தருகிறேன். பெரிய விடயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என தனது பெரிய மனதை பகிர்வதுபோல் பாசாங்கு செய்து அரை குறைவைத்திய முறைகளைக் கற்றுக் கொடுக்கலானர் பரியா fluftsi சிவகுரு.
காலங்கள் நகர்ந்தன. கிராமத்தின் வளர்ச்சியோடு சிவ குருவின் வைத்திய நிலையமும் ஒகோ என வளர்ந்தது. சேர னின் கைராசியால் மேலும் பல கூட்டம் சேரத் தொடங்கியது: குருவின் மகிமைக்கு குந்தகம் ஏற்படாது வைத்திய முறையில் வளர்ச்சி மேற்கொண்டார்.
*பேரா உன்னை ஓர் முழு வைத்தியனுக்க வேண்டும் என்று தான் ஆவல். தற்போது உள்ள நிலை யி ல் மூலிகைகளையும் அதன் அருமை தெரியாது அழித்து வருகிறர்கள் அதன் மகத்
10 O உணராத உண்மைகள்
 
 

வேம் தெரியாதார். உனக்கும் சிலவற்றைக் கற்றுத் தந்தேன். மீதியைக் கற்றுத்தர என் உடல்நலமும் குன்றி வருகிறது"
'வன் தாத்தா இப்போ இந்தச் சிந்தனைகள், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போலல்லவா போய்விடும். எதனை யும் காலத்துடன் இணைந்து நினைப்பதனை செயல்படுத்துவது நல்லது அல்லவா? என் இன்னும் தாமதம் ஆக்குகின்றீர்கள். இன்றே கூறுங்களேன். கற்கக் காத்திருக்கின்றேன்" என் முன் சேரன்,
எமது காலத்தில் எனக்கு கற்பித்ததாலேயே உனக்கும் கற்பிக்க முனைந்தேன். எ ன க் கும் சிலவற்றை மறைத்தே கற்றுத் தந்தார்கள். அவர்கள் தலைமுறையில் நானே எட் L-ITO) gil. இதற்குள் ஒருவருக்கு ஒரு வ ர் குருவித்தை என சித்த வைத்தியத் துறையில் எத்தனை மறைந்து விட்டது. இன்று என்னிடம் இரு ப் ப தி லும் எத்த னேயோ மறைத்து உன்னிடம் கூறமுடியாத நிலையில் இன்று என் உடல்நலம் குன்றிவிட்டது. இனி இக்குறுகிய காலத்தில் கற்றுத்தர என் காலம் காத்திருக்குமா?" எனறு தன் மன உளேச்சலே கூறியபடி தரையில் சாய்ந்தார் பரியாரியார் சிவகுரு.
அன்று படுத்தவர்தான் பா யோ டு, பாரிசவாதமானது எழும்ப விடவில்லை. பேச வாய் எடுத்தவர் பேசா மடந்தை ஆகிவிட்டார். சேரனே தான் கற்றதனை தன் குருவிடம் பரீட்சிக்க முயன்றன். அரைகுறை வைத் தி யன் பேரன் சேரன் பாதி வைத்தியம் பாயில் கிடந்தவரை எழுப்ப முடிய வில்லேயே என எக்கப் பார்வையில் பார்த்தான் தாத்தாவை. மீதி வைத்தியத்தைக் கூறமுடியாது பாதி உடல் மர த் த கொடிய பாரிசவாதம். அவரால் பேச முடியவில்லையே என்ற பரியாரியாரின் ஏக்கப் பார்வை பே ர ன் சேரனையும் பேதலிக்க வைத்தது, స్త్ర
ஜோசப் பாலா C

Page 9
வெற்றிச் சின்னம்
கடவுளே, கடவுளே, என்னையேன் சோதிக்கிருய் கடவுளே உனக்குக் கண்ணே இல்லையா?
மாலை நேரம் ஆலயத்தில் ஜன நடமாட்டம் குறைந்து அன்றைய ஆராதனைகளே நடத்திவிட்டு, பாதர் டேவிற் தனது செபித்தலை முடித்து புறப்படும்போது ஆலயத்து நடுவே ஓர் அழுகுரல், அந்த அபயக் குரலின் வார்த்தையைக் கேட்டு ஆறுதல் கூற அவர் அண்டை சென்ருர் பாதர் டேவிற்.
'மகளே, ஆலயம் பூட்ட நேரமாகிவிட்டது. நீ இது வரை கடவுளேத் திட்டுறயே ஒழிய உன் மனக் குமுறல்களைக் கூறவில்லையே.
**கண்ணில்லாத கடவுளிடம் நீதான் வந்தாய் இல்லையா?*
*இல்லே பாதர் என் கஷ்டம். நான் நம்பியிருந்ததை நடத்த எத்தனை வேண்டுதல் செய்தேன். நேர்த்திகள் வைத்தேன், என்னைக் கடவுள் மீண்டும் மீண்டும் சோதிக் கிறர். அதுதான் பாதர் ஆத்திரம் தாங்காது அழுகிறேன்"
‘அப்படி என்ன உனக்கு நடந்துவிட்டது மகளே."
12 O உணராத உண்மைகள்

‘என் கணவன் குடிவெறியால் குடும்பத்தையே கவனி யாதவர். என் மகன்தான் ஏதும் உழைத்துத் தருவான். அவன்கூட படிப்பை நிறுத்திக் கடையில் வேலை பார்க்கிருன், என் மகளின் திருமணத்தை எதிர்பார்த்தேன். நடைபெறும் தறுவாயில் சீதனப் பிரச்சனையால் தடைப்படும் நிலை. இதற் காகத்தான் காணியை ஈடுவைத்து அவனை அனுப்ப முயன் றேன். அன்றுகூட வேளாங்கண்ணியிடம் நேர்த்தி வைத் தேன். அந்த மாதாவும், எனக்குத் துணை நிற்கவில்லை. பணமும் போய் மகனும் பட்டினியால் வாடுகிருன் பாதர்."
“என் பாதர் ஏழைக்குத்தான் சோதனையா? இது கட வுளுக்குத் தெரியாதா? பாதர். தினமும் கோவிலுக்கு வரு கிறேன். நேர்ததிக்குச் செய்துபோட சங்கிலிகூட செய்ய இருந் தேன். மாதா எமாத்தி விட்டா பாதர் ஏமாற்றிவிட்டா .
'மகளே, கடவுள் கைலஞ்சம் கேட்கவில்லை. மாருக உனது மாசில்லாத அன்பைத்தான் கேட்கிருர். இது தாறன் அது தாறியா, அது தாறன் இது தாஹியா என்ற பேரம் பேசி, பெறுவதற்கு இது சந்தை அல்ல. உன் மனத்தில் விசுவாசம் நிறைந்த பக்திதான் உன்னை மீட்கும். மகளே வெளியே ஆலயம் பூட்டப்போகிறது. உன் ஜெபத்தா இம் இறைவிசுவாசத்தாலும் இறைவனை நாடு அது உனக்கு நல்வாழ்வைத் தரும். சென்று வா மகளே. சென்று வா??
‘பாதர். பாதர் என் கவலையை யாரு கேட்கப் போகினம் பாதர். நான் சாகிறதைத்தவிர வழி ஏதும் இல்லை பாதர். இத்தனை கடன் சுமைகளையும் என்னல் சுமக்க எலாது பாதா. தாங்க வரலாது பாதர்,
"மகளே, இன்பமும் துன்பமும் தாங்கி வாழ்வதுதான் மனித வாழ்க்கை. இறைவன் மனிதர்களைப் படைத்தபோது அவனுக்குத் துணையாக இருக்கவே எத்தனையோ படைப்புக் களேப் படைத்தார். அவை இறைவனுக்குத் துதிபாடும் செயல்களைப் பார்த்தாயா? எத்தனை இயற்கை இன்பச் சோலைக2ள எமக்கு விட்டுவைத்தார். அதை அனுபவிக்கத்
GMTFů LITT GYmr O 13

Page 10
தெரியாது பேராசை கொண்டு பேயாய் அலேந்ததால்தானே இந்த நிலை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் Gմ" (լքլի பறவை இனங்களேப் பார். இவை இறைவன் மகிமைக்குச் சான்று பகர்கின்றனவே. மனிதன் தனக்குச் சோதனை சேற் படும்போது மட்டும் இறைவனைத் தேடுவதும் அவரைத் திட்டுவதும் இன்றைய உலகில் சகஜமாகிவிட்டதைப் பார்த் தாயா?
பாதர் டேவிற் தனது அறிவுரையால் ஆறுதல் கூறி குலும் அவள் மனதில் எறிய சுமைகளேத் தாங்கமுடியாத நிலையில் உணர்ச்சிவசப்பட்டவளாய், தனது வார்த்தைகளில் பாதருக்குத் தன் மனக் குறையைக் கூறினுள்.
"ஏன் பாதர், எழைகள் எதனையும் செய்யமுடியாதா? எமக்குத்தான் சோதனை தரவேண்டுமா இறைவன்?"
“என் மகளே, ஏழை பணக்காரன் என்ற நீ வணங்கும் தேய்வம் மதிப்பிடுகிறது."
“ஆம் பாதர் ஆம். இப்ப கடவுளும் கருணை காட்டு கிருர் இல்லை. இப்படித் துன்பம் வரும் எண்டால் என் மகனே இருந்த வேலையும் விட்டு இடைநடுவில் அந்தரிக்க விடுவாரா என்ன?
பணத்தைச் சேர்க்க நீங்களாகவே இருந்த வேலையை விட்டதும் அல்லாமல் பட்ட கடனையும் பாதுகாப்பில்லாத பயனத்துடன் திட்டமில்லாது பயணத்தைத் தொடந்து, இன்னலின்றி இருந்த நீங்களும் அகதிப் பணம் பெற முயன் நீர்களே, இதுக்குக்கூட இறைவன் துணை நிற்கவேண்டும் "?றது ஞாயமா? உண்மை அகதிகளின் நிலை என்ன என் சிதை நீங்கள் அறிவீர்களா. ஒரு துன்ப வாழ்வை நீங்களா கவே தேடிக்கொண்டு குறுக்கு வழியில் செல்வதற்கு இறை வனையும் துணைக்கு அழைததுக்கொண்டால் எப்படி முடியும்" நீங்களாகவும் துன்பத்தில் இருந்து விலக முயலவில்லையே அப்போது எப்படி அகலும் உங்கள் துன்பம். ஒரு முள
14 O உணராத உண்மைகள்
 
 

செடியை இறுக்க கட்டிப்பிடித்துக்கொண்டு 'இறைவா, என்னை இதிலிருந்து விடுவி, விடுவி" எனக் குரல்கொடுக்கும் போது அதில் இருந்து விடுபடவும் முயலவேண்டும் அல்லவா? எல்லாம் இறைவன் செய்வார் என்ருல் உலகில் எல்லோரும் எந்த முயற்சியும் இல்லாது இறைவனையேதான் பார்த்திருப்பார்கள். கேளுங்கள், தட்டுங்கள், தேடுங்கள் என்று முயலும் வழிகளே கூறியது புரியவில்லையா? g() மகன் கிறிஸ்துவின் வாழ்வில் எத்தனை பெரிய சுமைகளைத் தாங்கினர். அதனேக்கூட சகிப்பின்றி இறை சித்தமாக பிதா வின் சித்தமென சுமந்த சிலுவைதான் இன்று வெற்றிச் சின்னமாக எம் எதிரே தெரிகிறதே, அவரே கூறுகிருர், ‘சுமை சுமந்து சோர்ந்திருப்போரே வாருங்கள் என் அண்டை' என அவரிடம் செல்லும் நாங்களும் இந்தச் சுமைகளை அகற்ற முயலாது அவரில் விசுவாசம் கொள்ளாது எப்படி உன் சுமைகளே குறைக்க முடியும்.'
*உன் குடும்ப சுமைகளே உன் தற்கொலேயால் தீர்த்து விடுவாயா? அல்லது சுமைகளே இன்னும் குடும்பத்தில் கூட் டிக்கொள்வாயா?"
‘பாதர், என்னை எ ன் ன செய்யச் சொல்லுகிறீர்கள் பாதர்."
“முதலில் இறை விசுவாசம் வை. அவர் தாங்கிய திரு சிலுவை முன் உன் செயல் திட்டங்களே அறிக்கையிடு. உன் மகனின் நிரந்தர வேலேயைக் காப்பாற்றி, பட்ட கடனைத் தீர்க்க குடும்பமாக முயன்ருல் இறை ஆசியோடு நடப்பவை நல்லவையாக அமையும். இதுவே உன் வாழ்வில் உள்ள பாரச் சிலுவை நீங்க பரமனின் அருளோடு விசுவா பூ வாழ்வால் வெற்றி காணலாம்.'
“முதலில் உன்னை நம்பு. உலகைப் படைத்த இறைவனை நம்பு. உன் வாழ்வு மலரும்’ என்னும் அருளுரை கேட்டு பாதர் டேவிற்றின் ஆசிர் பெற்று அந்த வெற்றிச் சின்னப் பாதையிலே போலி வாழ்வை விட்டு புதுவாழ்வை நோக்கிப் புறப்பட்டாள் மேரி. 69
ஜோசப் பாலா O 15

Page 11
பாரச்சுமைகள்
SITHY νΙΝΑΥΑΟ ΑΡ ΙΙΒ: ΑΚΥ. 註為R.A-A WEST C + 3 NA N-A, KI A Mi
சிமேக்கோழி கூவிற்று. சம்மாட்டி பேதுறுவின் குரல் கேட்டு அன்னம் குரல் கொடுத்தாள். *சின்னவனுக்குக் காய்ச்சல் அவனே விட்டுவிட்டு பெரியவனும் நீங்களும் போட்டுவாங்கள்; மூடல் பெட்டியில் பழஞ்சோறும் கருவாடும் சுட்டு சம்பலும் வைச்சிருக்கிறன், நேரத்தோட போயிற்று வாங்கோ. நானும் கோ யி லுக் கு ப் போறன், போகேக்க அந்தோனியாரிட்டையும் மன்ருடிற்றுப் போங்கோ. இன்டைக்காகிலும் நின்மதியாய் சீட்டைக்கட்டி கடன் இல் லாமல் இருப்பம்.
"ஒம் பிள்ளே சின்னவனுக்கு குடிநீர் எதும் வைச்சுக்குடு பிள்ளை, போயி?வ வைத்சனரியோ பிள்ளை."
ஒம், அதை பிறம்பா வைச்சிருக்கிறன். இந்தக் கிழமை மச்சாள் திரேசம்மா வீட்டு அற்ருேமும் இருக்கு, திருவிழா வும் வருகிறது. எல்லாம் எப்படி இருக்கப் போகுதோ, நீங்கள் அங்க போனதும் சிலுவையின்ர வள்ளம் வருமாம். அதில சொல்லி கறியும் அனுப்பிவிடுங்கோ. கவனமாப் போயிற்று வாங்கோ. விடியப் போகுது."
கூட்டு முயற்சிதான் இத்தொழில், சம் மா ட் டி யு ம் தொழிலாழியுமாக எட்டுப்பேர் போவார்கள். அதில் ஒருத்தன் தான் பேதுறு. அவன் வீட்டு முனங்கல்போல் அந்த விடியும் பொழுதில் எத்தனை ஊமை நெஞ்சங்களின் நினைவுகள் சொல்
16 O உணராத உண்மைகள்
 
 
 

லோவியமாக தொழிலாளி மனதில் பதியவைக்கும் இத்தனை யும் தாங்கி அந்த கோரிக்கை நிறைவேற்றும் மன உறுதி யோடு கடலில் மிதக்கிருன் பேதுறு. -
வழிஅனுப்பி வைத்த அன்னம் தூங்கி விட்டாளா ? இல்ல. அவள் மணம் தூங்கவே இல்லை. காரணம் பல. பரந்த கடலில் இருண்ட வலயங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் தாண்டி வரும்வரை அவள் மனம்" எப்படி அமைதியாய் இருக்கும். போருக்காக செல்லுகிறன் பேதுறு? தொழிலுக்காக செல்வதுகூட இப்போ போருக்கு செல்வது போன்ற சூழலில் அல்லவா செல்கிருன், சென்ற நாள் முதல் இரு வாரம் கழித்து வந்தாலும் அந்த ஒரு வாரமும் ஒன் வொரு இரவும் கடலில் காவல் கிடக்க வேண்டும் . பரந்த வெளியில் அலேமோதும் கடலில் யாருக்கு யார் காவல். அங்கு கிடக்கும் அவனுக்கு யார் காவல் ? அங்கும்தான் கள்வர் நடமாட்டம். அதைவிட நட்சத்திரங்களைப் பார்த்து வானத்தின் நிலகளேத் தாங்களாகவே கணிப்பிட்டு தமது வ?லகளே இழுத்து வரவேண்டிய ஓர் உன்னத பணி; இதற்குப் புத்தகத்தில் எதுவும் படிக்கவில்லை பேதுறு, புத்தகப் பூச்சி யாய் இருந்து அவனது வரவைக்கண்டு வருவாய்க்கு வரியிடும் புத்தகப்பூச்சிகள் தான் எத்தனை எத்தனை. இவர்களின் திட்டங் கள் தீட்டுவதற்குப் பேதுறு போன்ற தொழிலாளி உழைக்க வேண்டும். இதுதான் நியதி இங்கு.
மேலேநாடுகளேப் போன்று இங்கு கடின உழைப்பாளிக்கு அதிக வருவாயும் கணக்குப் பார்ப்பவனுக்கு குறைவான வருவாயும் இருந்தால், சமூகமும் உழைப்பாளிக்கு மதிப்பளித்து ஊக்குவித்தால் இன்று இங்கும் எத்தனை சோம்பேறிகள் உருவாகாமால் இருந்திருப்பார்கள். சும்மா இருந்து ஊதியம் பெற அயல் நாட்டையும் அகதியாக நிரப்பியிாக்கமாட்டார் கள். இதை உணராத நிலையில் எம் சமூகத்துக்கு விடிவேது ?
- ஆணுல் பேதுறு போன்றவர்கள் அன் ரு ட உழைப்பு "விவிடுவாய்க்கு ஏற்ற மகிழ்வைக் காண எத்தனை சோதனை
ஜோசப் பாலா O 17

Page 12
களேத் தாங்குவார்கள். அவர்கள் வாழ்விலும் இன்று பல சோதனைகளேக் காணும்போது புதிய சிந்த ஜன பிறப்பதில் நியாயம் உண்டுதான்.
ஆழம் காணு கடலில் தாளம் போட்டு மர க் காலில் இருந்து அணியத்தில் இருப்பவனுக்குக் குரல் கொடுக்கிருன் பேதுறு. பெரியவன் சுக்கானைப் பார்த்துத் திருப்பு. எதிரே சிலுவையின்ர வள்ளம் தெரியுதுபோல. வடக்கால திருப்பு. பாடு பாத்து வர நீரோட்டம் எப்படி எண்டு கேட்பம்"
பாய் வள்ளத்தில் போன கால ம் போய் மோட்டரில போறது வசதிகள் தான். ஆனல் இன்று அது பாவிக்கவும் சிேடியாத சட்டம் போட்டுத் தடுக்கிறதே. இதையும் தாங் கும் அவனது தாண்டல் சிலுவையின் வள்ளத்தைக் கண்ட தும் தகவல் பரிமாறுகிருன் பேதுறு. புகையிரதத்தில் செல் பவர்கள் அநுராதபுரத்தில் சந்திக்கும் சந்திப்பு போன்று பல அகவலுடன், வீட்டிற்கு செய்தியையும் சுகநிலைகளேயும் பரிமாறு கிருர்கள் இருவரும்.
வீதியில் இருப்பது போன்ற உணர்வுதான் சிலுவையின் பயணத்திலும் தங்களே சோதித்த ஜீவன்கள், நாங்கள் தப்பு வம் எண்டுகூட எதிர்பார்க்கையில்லை. ந ல் லா ப் பட்டுது மீன் எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு இந்தப் பக்கம் வரக் கூடாது எண்டு அடியும் போட்டு கலைச்சுவிடடாங்கடா மச்சான். இப்ப அவங்கள் போயிருப்பாங்கள். பாத்துப் போ’ என்றேன். எனையவர்கள் தங்கள் பயப் பிரமையுடன் பாச உணர்வுகளே வீட்டாருக்குச் சொல்லிவிட்டு எதிர்ப் பயணங்களேத் தொடர்ந் g(0T.
பயப் பிரமையுடன் பயணங்கள் தொடர்கின்றன. ஏன் இந்தப் பயணம்? திரும்புவது இ லகு வான காரியம்தான். ஆனல் பேதுறு போன்ற அதில் பயணம் செய்யும் அத்தனை உள்ளங்களுக்கும் எத்தனை பாரச் சுமைகள். வீட்டாரை நினைக் கையில் இன்று திரும்பினல் வீட்டு நிலைகளே எப்படித் தீர்ப்
18 O உணராத உண்மைகள்
 
 
 

பது, இப்படி எத்தனை நாட்கள்? இன்முவது குறையாதா? என்ற மல் நிலையில் எல்லோர் பயணமும் தொடர்ந்தது.
வலையை வீசி எறியும்போதும் பாட்டோடு பல கதைகள் வந்தாலும் மனதில் எழும் எண்ணங்கள் வீ ட் டு நினைவைத் தான் வட்டமிடும். வேலைகள் ஒரளவு குறைய, மாலை மதி யைக் கண்டு உண வ ரு ந் தி உறங்குவோர் உறங்க காவல் காக்கும் கடமையும் தொடர்ந்தன. கடுங்குளிர் ஜில்லென்ற காற்று, மேகமூட்டம், தூறல்மழை, ஒரு பாட்டம் மழை வாட்டி எடுத்தது. இந்நிலையிலும் து ங் கா த நெஞ்சங்கள் தூங்க முயல்கின்றன இருக்கும் உடைக்கு மாற் று  ைL இல்லை. தலையைத்தானும் துடைக்க சிறு துணி யும் இல்லை. அப் போது பேதுர மனத்திரையில் பழைய பல நினைவை மீட் டான். வீட்டில் இருந்தால் எப்படி என சிந்தனையை சிதற விட்டரன். எல்லோர் முயற்சியும் குளிரைப் போக்க தேநீர் பருகி புகையை விட்டு லயித்திருந்த நேரம் பே துறு வின் எண்னை நினைவில்,
அன்ருெருநாள் நகரில் வலே வாங்கச் சென்றுவந்த சமயம் சிறு துறலில் நனைந்து வந்த பேதுருறுவை துடிதுடிப் போடு, "ஐயோ மழையில் ஏன் நனைஞ்சனிங்கள், காய்ச்ச லெல்லோ வரப்போகுது. தலையைத் துடையுங்கோ' என அவ்னது பறட்டைத் தலையை வருடி துடைத்து சூடாக இஞ்சி போட்டு தேநீர் கொடுத்து அன்னம் அன்று தனக்கு பக்குவம், பத்தியம் பார்த்து படுக்கவைத்த நினைவுகளே மீட்ட போது அந்த கடலில் விரித்திருந்த வலையில் பட்ட மீன் கூட் டத்தின் சத்தம் கேட்டு எமக்கு கஸ்ரம் தீர நல்ல உழைப்பு கிட்டும் என எல்லோர் மனதிலும் எழும் எண்ணத்துடே மேலோட்டமாக பேதுறு பார்த்தான். பெரியவன் சொன்னன் 'பேதுறு அண்ணே. இண்டைக்கு ஒரு வித்தியாசமான சத் தம். பெரிய ஆமை போலக் கிடக்கு. கடல் மாறி வந்திட்டுது போல. திருவிழாக் காலம் நல்லதுதான்’, ‘என் தம்பி பெரிசா திட்டம் போடுருய், எல்லாம் காலையில பாப்பம். இல்லை,
Gggreg fi tl i Ts II O) 19

Page 13
இல்லே. பேதுறு அண்ணே இப்பவே இழுப்பம் பின் வலேயை வெட்டிக்கொண்டு போனுலும்".
‘எப்படி இருந்தாலும் காலையிலேதானே நீரோட்டம் குறையும் அதுவரை அவங்களும் படுத்து எழும்பட்டும்.”
‘அண்ணே நாங்களும் முழிப்புத்தான். சத்தம் கேட்ட கையோ எழும்பிட்டம். ஆணு பேதுற அண்ணன் சொன்னது போல பார்த்து இழுப்பம் வலையளே. சத்தம் இல்லை இப்ப, வடக்கு மூலையால் வலே இழுத்துக் கிடக்கு, வெள்ளாப்போட இழுத்துப் போடவேணும்."
ஒம். ஒம் எல்லாரும் சேர்ந்து நேரத்தோட போயிட
வேணும். இரவு ஊர்ப்பக்கமா ஒரே சத்தமாக் கிடந்தது
ஊரில என்னவோ. எங்கதான் இப்ப நின்மதி" என்ற ஏக்கத் தொனியோடு பேதுறு கலக்கத்தைக் கொடுத்தான்.
ஆனல் எல்லோர் மனதிலும் இனம்புரியாத உற்சாகம் தான். பல நாளுககுப்பின் நல்ல உழைப்புடன் செல்வதில் எவனுக்குத்தான் மகிழ்வு வராது.
எல்லோருமாகத் தொழிற்பட ஆரம்பித்தனர். கடும் குளிரிலும் துள்ளிக் குதித்து அவர்களது முயற்சியால் வள் ளத்திற்கு இரு கரை வலையையும் இழுக்கத் தொடங்கினர். குஞ்சு மீன்களுடன் பெரிதுமாக சுமைகளை இழுக்கவே முடியாது திண்டாடவே பேதுருறுவும் குதித்தான் கடலில், தள்ளிவந்த வலையின் நடுவே ஆடி அசையா உயிரற்ற ஒர் உருவம். அவ்வலையில் கிடந்ததை தூக்கிப் போட்டார்கள். வள்ளத்திலே அரிக்கன் லாம்பு வெளிச்சத் துணையால் வலே யைப் பிரித்துப் பார்த்தபோது வேறெதுவுமல்ல பேதுறுவின் மைத்துனன் சவுரியின் உடல்தான். நான்கு நாளுக்கு முன் பாக தொழிலுக்குச் சென்றவன் உருவழிந்த நிலையில் உருக் குலைந்து நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் து?ளத்த ஒட்டை களுடன் களுத்திலே சிலுவையின் கயிறு, இடுப்பிலே பறி
20 O உணராத உண்மைகள்
(
 
 

கட்டும் கயிறுடனும் கண்ட பேதுறு பேசா மடந்தையாய் மூர்ச்சையுற்றுச் சரிந்தான்.
தன் வீட்டு நிலை இப்படி இருக்கும்போது தங்கை வாழ் வும் இப்படி ஆவதா? ஏனையோரது ஏ க்க ப் பார்வையுடன் ஏதோ எண்ணியவர்களாய் உடலை வளர்த்தி படகைத் திருப் பினர் துறையை நோக்கி.
உழைப்பை எதிர்பார்தா ஜீவன்கள் எ ல் லாம் قانون نگاه
தாங்கிச் செல்வதைக் கண்டு தொழிலுக்குச் േ புறப்பட்ட படகுகள் தொலைவிற்குச் செல்லப் புறப்படுகிறது.
', '
இதுவரை இவர்கள் உழைப்பு, களேப்பு, மகிழ்வு என்ருர் கள். இப்போ இறப்பு, துன்பம், பிரிவு. இதற்கோர் விடிவு, இதற்கே பயணம், தொழிலுக்கல்ல, தொலைவிற்கு பயிலாத வித்தைகள் இன்று பயில வேண்டும் இவர்களும். இ -
Ĝ3gprsů – LE FT SYST O 2

Page 14
உறவில் மலர்ந்த
உண்மைகள்
* a த்தான் எழும்புங்கோ, அத் தான் தேநீர் போட்டு மேசையில் வைத்திருக்கிறேன். குடித்துவிட்டு சுமன் எழும்பிய பின் அவனுக்கும் கொடுங்கோ அத்தான்.'
“எத்தனை மணி சாந்தா, நீர் ஏன். என்னையும் எழுப்பி
இருக்கலாமே??? இல்லே அத்தான் நீங்கள் நல்ல நித்திரை,
குளப்பாமல் செய்வோம் எண்டுதான் சமைத்தும் வைத்து விட்டேன். நேரமாகிறது வேலைக்குப் போயிற்று வா றன். நீங்க தேநீரைக் குடித்துவிட்டு படுங்கோ' என பரிவான வார்த்தையால் கண்ஜாடை காட்டி புறப்பட்டாள் சாந்தா. அப்போது மணி 6-10 அவள் அவசர அவசரமாக பஸ் நிலை யம் நோக்கி நகர்ந்தாள்.
அவன் நித்திரை கலைந்தபோது அவன் மனத்திரையும் கலங்கி கண்ணீரால் நனைந்து சிந்தனையில் ஆழ்ந்தான் பழைய பல நினைகளை இரை மீட்டவனுய் கட்டிலில் சாய்ந்தபடியே சிந்தனே சிறகடித்தது
சாந்தா ஒரு அரச வைத்தியசாலையில் தாதியாக கடமை புரிகிறள், பள்ளி வாழ்வில் தொடர்ந்த தொடர்பு குடும்! வாழ்விலும் மலரும் அனபுப் பெருக்கு, வசதி படைத்தி
22 O உணராத உண்மைகள்
 

வாழ்க்கை வாழ்ந்த சாந்தா தன் குடும்ப வாழ்வில் பல இன்னல்களே தாங்கி வாழ்ந்தாலும் குடும்ப மகிழ்வில் குறை வில்லாது வாழ வருவாய்க்கு ஒரு பணியாக தொடர்ந்தாள் தாதி வேலையை.
ஒரே வகுப்பில் பல நண்பர்கள் இணைவார்கள். அந்தத் தொடர்புகளின் துணைதான் இந்த வாழ்க்கை இணைப்பிற்கும் காரணமாக அமைந்தது. இன்றும் அந்த நண்பர்கள் சொந்த ரோடு பல துறையில் பணி புரிவதும் Longf வாழ்வின் நினைவுகளே வளர்ப்பதற்கு சாந்தாவின் இல்லம் ஓர் சந்திப்பு மையமாகவும் அமைந்தது. * *。 *鰭。
சாந்தன் கணவர் பாஸ்கர் பார்வைக்கு ஆணழகன் தான். அவனது துடுக்குத்தனம் தூய்மையான உள்ளம் எல் லோர் மனதையும் எளிதில் கவரும் வதனம், சாந்தாவை ஈர்த்ததில் வியப்பில்லேத்தான். அவனது அழகை ரசிக்க அதிக காலம் சாந்தாவிற்குக் கொடுத்து வைக்கவில்லை. காரணம் வீதி விபத்தில் தன் காலே இழந்து பொய்க்கால் பூட்டி அதிக தூரம் பயணம் செய்யமுடியாத நிலை, சொந்தத் தொழில் இல்லாததால் வீட்டோடு வருவாய்க்கு சிறு கடை போட்டு அதில் இருந்தே பலரது துணையோடு வியாபாரம் நடத்துவான்.
சிந்தா இதனைப் பெரிதுபடுத்திக் காட்டாதபோது அவன் மனம் தன் நிலை எண்ணி அவள் மகிழ்வு குறையுமோ என்ற ஐயத்தால் கவலைகொள்வான். அவன் வாழ்வில் நண்பர் தொடர்பும், குடும்ப மகிழ்வும், வரவுக்கேற்ற செலவும், திட்ட மிடல் முழுப்பொறுப்பும் சாந்தரவே கவனிப்பாள்.
மாலை வேளை நண்பர்கள் கூடும்; உணர்வுகளோடு பிற நினைவுகளையும் பாஸ்கருடன் பரிமாறிக்கொண்டு இருந்தபோது சாந்தாவின் குரல் கேட்டு முன்கதவைத் திறந்தான் பாஸ்கர். என்றுமில்லா மகிழ்வுடன் இருந்த அவள் வதனத்தைக் கண்டு “என்ன சாந்தா இன்று புதிய பொலிவுடன்." என புதிர் விட்டான் பாஸ்கர்,
(TSFů LUTTGITT O 23

Page 15
',
புதுச் செய்திதான் எதிர்பார்க்கவேயில்லை, இதனை அறிந் தால் நீங்களும் மகிழ்வீர்கள்."
என்ன. என்ன சொல்லுமன் அறிவோம்' பாஸ்கரின் அன்பு குழைதல் ஆர்வத்தை ஊட்ட இரு வர் TriGIÖSA யும் சாந்தாவின் வார்த்தையை எதிர்பார்த்து நின்றது.
அத்தான் உங்கள் ஆவலே சோதிக்கவில்லை. ஆனல் நல்ல செய்தி சொன்னல் எனக்கு உங்கள் பங்களிப்பைத் தரவேண்டும். என்ன தருவீர்கள்?
"ஒ. அதுவா, நண்பர்களே கேட்பதுபோல் இப்போ நாம் என்ன தருவது? 'ஐஸ்கிறீம் வேண்டித் தந்தால் ordi)(B)) (T ருக்கும் சொல்லுவேன்."
"டே, பாஸ்கர் உன் மனைவி எங்கிட்டே படிச்சு எங்கிட்டே விடுரு பாத்தியா?*
*சரி, சரி சாந்த்ா சொல்லும் வேண்டித்தாறம்' சாந்த னின் குரல் அவளது புதிரை அறிவதில் ஆர்வம் கொண்டது.
சாந்தா தன் மெளனத்தைக் கலைத்தவளாய்க் கூறிஞள். ‘எங்களோடு படித்த முரளி இபபோ எங்க ஆஸ்பத்திரியிலே டாக்டராக படித்து வந்திட்டான். அவனைக் கண்டதும் முரளி
என்றேன், அத்தான். அவனும்."
°,என்ன கூறினன் சாந்தா?"
என்ன கூறுவான் அவன் தா ன் இப்ப பெரிய டாக்ட ராச்சே, இப்ப தெரியுமா எங்களே?’ என சாந்தன் பதில் ளித்தான்.
‘ஆ. அப்படியா சாந்தா? அப்படியா?”
‘எப்படி அத்தான் கூறுவான். பள்ளி வாழ்க்கையில் சந்தித்தது போன்றுதான் சரளமாகக் கதைத்தான். இன்று
24 O உணராத உண்மைகள்
 

மாலேயே வீட்டிற்கு வருவதாகக் கூறினன் முரளி' என்ருள் சாந்தா,
'என்ன இருந்தாலும் அவன் இப்போ டாக்டர் முரளி தானே சாந்தா? −
'ஓம் அத்தான். இது எமக்கு எவ்வளவு மகிழ்வையும் பெருமையையும் தருகிறது என்ருள சாந்தா.
'ப்படியாருறல்) | வ ன் கெளரவத்தையும் மதிப்பையும் நாமும் காத்துக்கொள்ள மற்றவர்களும் அவனை மதிக்கும் வகையில் அவனே டு நடந்துகொள்ள முயற்சிக்கவேணும். இல்லையா சாந்தா."
‘ஆம் அத்தான். இன்று கதைத்ததை சிலர் பார்த்துத் திகைத்ததில் இருந்து க எண் டே ன் . இனி மரியாதையாகப் பேசுகிறேன் அத்தான்”
"அப்படி ஒன்றும் வேண்டியது இல்லை. அப்படிப் பழகி ஞல் இங்கு வருவதிலும் கெளரவம் குறைந்துவிடும் என்பீர் களோ? அப்படித்தானே என்ன?’ என எதிர்பாரா விருந்தா ளியாய் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்துவதுபோல் அங்கே வந்து பேச்சிற் கலந்துகொண்டான் டாக்டர் முரளி.
'ஒ. முரளி, டாக்டர் முரளி எப்படி வந்தீர்கள்? மதிப்பும் கிண்டலும் கலந்த குரல் சாந்தனின் பேச்சில் தென்பட்டது.
"ஒ. சாந்தஞ? எதிர்பார்க்கவே இல்லை. அப்போ பழைய படி பள்ளி வாழ்க்கை போன்ற சூழல்தான்' என டாக்டர் முரளி கூறினன்.
'அப்படி ஒன்றும் போட்டி இராது. காரணம் இங்கு உதைபந்தாட்டம் நடைபெருதே?? எனப் பள்ளிவாழ்வில் நிக ழும் உதைபந்தாட்டப் போட்டி நினைவுகளை மனத்திரையில் பதியவைத்தான் பாஸ்கர். இருவரும் எதிர் அணியாய் இருந்து விளையாடுவதால் அதில் ஏற்படும் வெற்றிதோல்லியும் படிப்
s s
ஜோசப் பாலா O 25

Page 16
பில் இன்று முன்னுக்கு வந்ததுபோல் அன்றும் இருவரிடமும் இருந்த போட்டி நினைவுகளேயும் சாந்தன் நினைத் து மனம் குமைந்தான்
சற்று நேரத்தில் தேநீர் தயாரித்து பரிமாற வந்தாள் சாந்தா,
முரளி, இன்று உன் வருகை எ ல் லோ ரு க் கும் பெரும் மகிழ்வுதான். சாந்தாவுக்கு இரட்டிப்பாய் இருக்கிறது பார்த் தாயா? என்ருன் பாஸ்கர்,
"ஒம். ஓம். எனக்கு ஐஸ்கிரீம் கிடைக்கும் அல்லவா? என்ருள் சாந்தா,
தொடர்ந்தன நட்பின் தொடர்புகள். பல கதைகள் பரி மாற்றப் பட்டன, பாஸ்கரின் நிலைபற்றி விபரித்து தம் திரு மணத்துக்குப் பல விதத்தில் முரளி காட்டிய தீவிரத்தையும் அதன் பலன்தான் சுமன் என்று மகிழ்வோடு கூற, அக்கறை யோடு கேட்டான் முரளி.
'டாக்டர் முரளி இனி எப்போ வருவது? வீட்டில் ஒரு முறை விருந்துக்கு வரவேண்டும்? என அழைப்பு விடுத் தான் பாஸ்கர்,
"நிச்சயம் வருவேன். உங்கள் வீட்டில் தொடர்ந்து சாப் பிடக் கிடைக்காதா? ஒரு முறையுடன் நிறுத்தி விடுவீர்களா? என்று தமாஷ"டன் சற்று வேலைப்பழுக்கள் உண்டு. குறைந் ததும் ஆறுதலாக வருகிறேன் எனக் கூறி நண்பர்களிடமி ருத்து விடைபெற்றன் முரளி.
சாந்தனின் மனதில் ஏதோ இனம் புரியாத கவலை. என் றும் இல்லாத சோர்வுடன் சிந்தித்தான். ‘என்ன சாந்தின் மெளனியாகிவிட்டாய்" பாஸ்கரின் குரல் கேட்டு 'ஒன்றுமில்லே பாஸ்கர். இவன் முரளி முன்பு போல் தான இப்போ அல் லது மாறிவிட்டான? என அவன கவனத்தைத் திசை திருப் பினுன், பள்ளி வாழ்க்கை, வேறு இபபோ பொறுப்புள்ள
26 O உணராத உண்மைகள்

பதவி. அத்தோடு சிறுவயதில் செய்வதை தொடர்வதில்லை அதனை எண்ணும்போது கூட சிரிப்பாய் இருக்கும். என் நாம் கூட முன்பு உள்ள நிலையிலா இரு க் கி ன் ருே ம் , இப்போ எத்தனை பேருக்குப் புத்தி கூறுகிருேம் எத்தனை மாற்றங்கள் எம் வாழ்வில் பார்ததாயா?
‘என் எமது தொடர்புகள் தொடர்கிறதே பாஸ்கர்’
தொடர்கின்றது நட்பு. ஆனல் நடைமுறை செயல்: பேச்சுக்கள் மாறுகின்றதை அறிகின்ருேம், அது தான் மாற்றம்
‘என்ன வேதாந்தம் பேசுகிறீர்கள். வாங்கோ சாப்பிட் டிட்டு கதைக்கலாம்" என உணவைச் சாந்தா பரிமாறியபின் சாந்தன் வீடு சென்ருன்.
காலச் சக்கரம் சுழன்ருேட நண்பர்களும் பள்ளி வாழ்க்கை போன்று தினம் சந்தித்து மகிழ்வதில் டாக்டர் முரளி யும் இணைந்து கொண்டான்,
பாஸ்கர் சற்று சுகவீனமாக தன் கால் வருத்தம் முன்பு முறிந்த இடத்தில் கொ தி வலி யால் இரவு முழுவதும் துவண்டு காலை சற்று அயர்ந்து தூங்கும்போது குமட்டலோடு மசக்கை ஏற்பட்டு சத்தி எடுக்கும் சத்தம் கேட்டு எழுந்தான். ஆம், சாந்தா தான் வேலைக்கு நேரமாகியும் புறப்படாது அவ ளும் தாய்மைப் பேற்றை அடைந்த அறிகுறியை உணர்த்தி ணுள்.
தன் மகன் சுமனுக்கு ஒர் துணை எதிர்காலத்தில் தேவை தான். ஆனல். ஆனல். வளர்த்தெடுப்பது, வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பது, எல்லாவற்றிற்கும் அவள் ஒரு சுமை தாங்கி ஆகிவிடுவாளே, என்ற கவலையும் கலந்திருந்தது அவனது நினைவில், சாந்தாவோ நடந்தவற்றை பாஸ்கரிடம் கூருது அவசர அவசரமாக புறப்பட்டாள்,
‘சாந்தா, சாந்தா இன்று லீவு போட்டு நின்ருல் என்ன? என்ருன் பாஸ்கர். ‘அத்தான் திடீரென நிற்க முடியாது;
ஜோசப் பாலா O 27

Page 17
鹼。
போய் அரை நாள் லீவு போட்டு வருகிறேன். உங் க ளே யும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லவா? முடிந் தால் முரளியை வந்து பார்த்துச் செல்லச் சொல்கிறேன் அத்தான்" என்று கூறிக் கொண்டே விடை பெற்ருள் சாந்தா.
சாத்தன் காலை 10 மணி போல் வீ ட் டு க் கு வந்தபோது தனது நிலைகளோடு சாந்தாவின் நல்ல செய்தியைக் கூறுவ தில் மகிழ்வுற்றன். ‘பாஸ்கர் எ தி லும் கவனம் தேவை. பாஸ்கர் உன் உடல் நலக்குறைவு ஒரு சிலருக்கு சாதகமாக அமையக் கூடாது அதுதான்."
‘என்ன சாந்தன் என் உடல் நலத்தில் மற்றவருக்கு என்ன இருக்கிறது. வீட்டில்தான் அதிக தாக்கம் எற்படுமோ” என்ருன் பாஸ்கர்.
‘என்ன பெரிய விவாதம். சுகயினம் என்ருல் சற்று ஒய்வு எடுத்து இருப்பதை விட்டு துள்ளித் திரிய பார்க்கிறீரே பாஸ்கர்,
என் சாந்தன் நீ கூட கூறக் கூடாதா? என்ற வார்த்தை
யைக் கேட்டு திரும்புகையில் டாக்டர் முரளி வைத்தியத்திற்கு தயாராக நின்றர்.
*நீ அல்லவா நண்பன். நிலை அறிந்து பணி செய்யும் உன் சேவை எம் வீட்டுக்குத் தேவை' என தமாசாக வரவேற் ருன் பாஸ்கர்.
இல்லை, இன்று சாத்தா கூரு விட்டால் நான் எப்படி வருவது. நீ கூட சொல்லி விடவில்லையே. அவளாகத்தான் கூறினுள். நான் கூட அவசரமாகச் செல்ல வேண்டும்" என பரீட்சித்துவிட்டு இதற்கான மருந்தை உடன் தந்துவிடுகி றேன். பின்னர் மாலையில் குளிசைகளை சாந்தாவிடம் கொடுத் தனுப்புகிறேன். சாந்தன் சற்று தாமதித்து வந்தால் தருகி றேன்? என்ருன்.
சாந்தனும் ஆமா போட்டு ஏற்றுக் கொள்ளவும் டாக்டர் முரளி விடை பெற்றுச் சென்ருர்,
28 O உணராத உண்மைகள்
 

sii is a via is a
விக்கிடக் டிஆர
H டாக்டரின் தொட்ர்பும் । கிேழ்வையும் ஜீர
னிக்க முடியாது திண்டாடினன் சாந்தன். பெண்களிடம் ஏற்படும் போட்டிகள் போன்று நண்பர்களின் உறவைச் சாந தனல் பொறுக்க முடியவில்லை. இது அவனது மனதில் ஓர் விதத் தாக்கம தான். பள்ளிவாழ்வில் போட்டி, விளையாட் டுத் துறையில் போட்டி, இன்று தம் நண்பர் தொடர்பில் முரளி செல்வாக்கு ஓங்குவதை எண்ணும்போது சாந்தனது தாழ்வு மனம் தத்தளிப்பது அவனது உளத் தாக்கமே காரணம்.
ii. ÄRY
சாந்தன் பா ஸ் க ரி டம் விடை பெற்றுப் புறப்பட்டான் வைத்தியசாலையை நோக்கி,
டாக்டர் முரளியின் அறை அங்கே பல நோயாளிகள் காத்திருக்க காவலாளியிடம் தன் வரவை தெரிவிக்க அவ னும் உள்ளே அழைத்தான். அங்கே தெரிந்த குரல் ஒன்றும் டாக்டரும் ஏதோ முக்கிய விடயமாகக் கதைப்பதை அறிந்து காவலாளி அருகே நிற்க கூறினன். அங்கிருந்து வந்த குர லுக்கு செவிமடுத்தான் சாந்தன்.
‘எப்படியும் குழந்தையை அழித்தே ஆகவேண்டும் முரளி, இனிக் குழந்தை பிறக்காது ஒப்ரேசன் செய்தாலும் நல்லது' என்ருள்.
"எதனேயும் நன்கு யோசித்து முடிவைச் சொல்லு சாந்தா? என்ருர் டாக்டர் முரளி.
மருந்தை வாங்கச் சென்ற சாந்தன் விஷத்தை வாங்கி வந்தவன்போல் நடந்தவற்றை இரட்டிப்பாகக் கூறி சென்ற விடயத்தைக் கூருது வேறு விடயத்துடன் திரும்பி வந்ததை எண்ணி ஆத்திரப்பட்டான் பாஸ்கர்,
காரணம் அவன் உடல் நிலை நெருப்பாக கொதித்து வார்த்தைகள் தடுமாறும் கடும் ஜூரம் அவனை வாட்டியது.
சாந்தன் நீ மருந்து வேண்டி வந்தாயா?
30 O உணராத உண்மைகள்

Page 18
, ' * 《韃
A 'இல்லை இந்நிலையில் எப்படிக் கேட்பது என்றுதான் ஓடி வந்தேன்" என்ருன் சாந்தன்.
"ஜுரம் தாங்க முடியவில்லை எனக்கு, உடன் வைத்திய சாலை செல்ல வழி செய்வாயா? அல்லது அங்கும் போய்."
எனக் கூறவே.
இல்லை பாஸ்கர் உடன் செல்வோம்" என ஒட்டோவை அழைத்து வைத்தியசாலை வாசலை அடைந்தான். அங்கே கண்ட காட்சி திடுக்கிட வைத்தது சாந்த னு க் கு; என்ன திகைப்பு, சகலதையும் பார்த்த பாஸ்கர் அமைதியாக இருந் தான்.
டாக்டர் முரளியின் அணைப்பில் சாந்தாவின் கண்ணீர் சித றிய துளிகளாக இருந்தது.
"என்ன முரளி என்ன நடந்தது? சா ந் தனி ன் குரலில் கர்ச்சிப்பும் சந்தேகமும் கலந்து இருந்தது.
டாக்டர் முரளி அமைதியாக அடக்கத்தோடு கூறினன். *சாந்தா தாயாகிவிட்டதால் தலைச்சுற்று ஏற்பட்டது. அவ்வ ளவுதான். அதிக யோசனையும் இதற்கு ஒரு காரணம்."
‘என் டாக்டர் இப்போ எப்படி இருக்கு?"
பாஸ்கரின் குரலில் அவனது ஜுரம் அதிகரித்தது புரிந்து அவளே அணைத்தபடி ‘பாஸ்கர் அவள் உன் சுமைகளை யும் தன் தாய்மையையும் அதிகம் எண்ணி சிந்தித்தான். கருச்சிதைவை ஏற்படுத்த என்னிடம் ஆலோசனை கேட்டாள். எனக்குத் தெரியும் உன் ஆவல்கள். அத்தோடு இருவரும் இணைந்து தாம்பத்திய உறவால் தவிப்பதை விடுத்து சிதைவு கள் தடைகள்கூட ஒருவகை கொலேயே என விபரித்தேன். அத்தோடு உணவு நேரத்துக்கு இல்லாத பெலவீனம்தான் உன் சாந்தாவுக்கு இந்நிலைக்குக் காரணம், இப்போ நானே ஒட்டிற்கு கூட்டிவர எண்ணினேன். நீயே வந்துவிட்டாய் (ppt Gil.
ஜோசப் பாலா O 92
|

பாஸ்கரின் ஜுரத்தைப் போக்க சாந்தாவை ஆதரவாகத் தூக்கிக் கட்டிலில் வளர்த்தியபின் மருந்தெடுக்கச் சென்றன் முரளி,
அப்போது சாந்தனிடம் 'சாந்தன் சில தொழில்களில் புனிதம் உண்டு. இதனை உணராத உன்னைப்போல் சிலர் எண்ணத்தில் எழும் சிந்த னே க ளே மற்றவர்களிடத்திலும் திணிக்க வார்த்தைகளே அளப்பது கூட ஒருவகை உளத்தாக்
"குரு, டாக்டர், ஆசிரியர்களிடத்தே உள்ள புனிதத் தன் மைகளைப் புரியாது அவர்கள் சேவைக்கு களங்கம் கற்பிக்க நினைப்பதால் வீணன விபரீதங்கள் வளர்ந்து சேவைக்கு ஆள் இல்லாத நிலை உருவாகி விடும், ஏன் அவர்களும் அப்புனி அத்தை காப்பாற்ற முடியாவிடில் அதனல் ஏற்படும் களங் *தீதை எவராலும் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சிலர் இருந்தாலே புனிதம் கெட்டுவிடும். இவர்கள் இருப் பதைவிட இறப்பது நல்லது சாந்தன்.
ஆனல் கற்புள்ள எந்தப் பெண்ணும் இவர்களிடம் மனம் திறந்து பேசி தம் இன்னல்களைத் தீர்க்க வேண்டும். அந்த நிலையைத் தாங்கும் பணிப்பாளர்களேச் சந்தேகப்படவோ, சந் தேகப் படும்படி நடப்பதோ மனித கு லத் து க் கே பெரும் இழுக்காகிவிடும்."
முதலில் நட்பின் மகிமை புரியாதவர்களே நண்பர்கள் என தொடர்புகளைத் தொ ட ரா ம ல் பார்க்க வேண்டும். தொடர்புகள் தொந்தரவுக்கல்ல. கணவன் மனேவி உறவி லும் களங்கம் ஏற்படுத்தவும் ந ட் பின் மகிமை புரியாது குடும்பத்தில் குளப்பத்தை ஏற்படுத்தவும் உன் போன்ற உறவுகள் உபத்திரவத்தை தராது இருக்க எனது நம்பிக்கை வாழ்வுதான் என்னைக் காப்பாற்றியது" எனக் கூறியபோது அருகே டாக்டர் முரளி மருந்தோடும் மனைவி சாந்திர புது நினைவுகளோடும் விழித்துப் பார்த்தாள். அப்போது அங்கே மெளனங்கள் பேசியது. @
Gags Gú usson O 31

Page 19
அவவுக்கு என்ன தெரியும்?
- 1ள்ளியில் இன்று ஆண்டுவிழா! சிறப்பு நிகழ்ச்சிகள் பல. யார் முதல் பரி சைத் தட்டிக் கொள்வது என்ற கேள்வி எல்லா மாணவர் உள்ளத்திலும் ஒலித்தது. மண்டபத்திலிருந்து எழுந்த ஒரு ஒலி பலர் மனத்தையும் ஈர்த்தது. 'தாயா? தாரமா?’ தாயின் பெருமைதனை உணர்ததி பலரையும் தன்வசமாக்கிக் கொண்ட சுரேஷின் பேச்சால் முதற்பரிசைத் தனதாக்கிக் கொண்டடான். அன்னையைத் தெய்வமாக வர்ணித்து அவளின் பெருமை தனைக் கூற இச்சிறிய அவகாசம் போதவில்லேயே! என எக்கத் தொனியுடன் பேச்சை நிறுத்தியதும் மண்டபம் கைதட்ட லால் அதிர்ந்து நின்றது.
பாராட்டுகளும், புகழ்மா?லகளும் தாங்கிய சுரேஷ் தன் இல்லம் சென்றதும் அவனை அன்புடன் வரவேற்ருள் அன்னை பார்வதி. எழ்மையிலும் தாய்  ைம யி ன் அன்பு உள்ளம் மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டது. நண்பர்களும் வந்தார்கள். டேய், சுரேஷ் இன்று பரிசைத் தட்டிக் கொண்டாய். அதற்கு நீர் எமக்குத் தரும் பரிசு என்ன?’ என்று கிண்டல் செய்தான் மனி, சுரே ஷோ அறையினுள் நுழைந்தான். அங்கே தேநீர் தயாரித்த நிலையில் அன்னை பார்வதி நிற்ப
32 O உணராத உண்மைகள்

தைக் கண்ட சுரேஷ் ‘என்னண செய்கிருய் இங்கே?' என்று தாயார்மீது வெடுவெடுவென பாய்ந்தான்.
'தம்பி தேத்தண்ணி போட்டனன். இதைக் கொண்டு போய்க் கொடன் மற்றத் தம்பியர்களுக்கும்" என்ருள்.
'உன்ா வெறும் தேத்தண்ணி குடிக்கவா வந்தார்கள், எனக்கே வெட்கமாயிருக்கு. நீ மு ன் னு க் கு வந்து என்ர மானத்தைக் கெடுத்திடாதே. அவங்க எல்லாம் பெரிய இடத்துப் பெடியள் ஆச்சியை பின்னுக்குக் கூட்டிக் கொண்டு போவனண அலட்டப்போகுது அது ஆட்களைக் கண்டால் அது சும்மா இருக்காது.”*
'தம்பி நீ போய் முன்னுக்கு நில்லு - அவவுக்கு என்ன தெரியும்? நான் அவவை அடுத்த வீட்டில் விட்டிட்டு வாறன்' மகனின் பெருமைக்கு புகழாரம் நடக்கிறது. தாய்மை பின் னுக்குத் தள்ளப்படுகின்றது. இங்கு மேடையில் தாய்மையின் பெருமை சொல்லி பரிசும் பெறுகிருர். இதற்கு யார் கார ணம்? வழித்தோன்றலே காரணம். அவவுக்கு என்ன தெரி யும்? என்று அடுத்த வீட்டில் விடும் நிலை. இங்கு காவோலை தானே விழுகிறது. குருத்தோலை சிரிக்கிறது. இடை ஒ?ல குருத்தோலே பக்கம் அல்லவா நிற்கிறது. இ
ஜோசப் பாலா O 33

Page 20
அவனும் ஒர் அகதி
பார்வைக்கு எல்லோரும் மனிதர்கள் தான். ஆனல் அதில் எத்தனை பேர் மனித மிருகங்கள். பார்த் தீங்களாப்பா, அவன் அண்ணுவை எப்படிக் கூறித் திட்டி ஞன் என்று. இந்த நிலைக்கு வந்ததே எங்கள் வீட்டால் தான் என்று ஒரு நிமிடம் கூட சிந்திக்கவில்லை. என்ன சமூகம் அப்பா இது.
மீரா. என்ன பேச்சு பேசுகிருய்? நீ கூட உன் வார்த் தையால் உன்னைத் தாழ்த்திக் கொள்கிருயே! படித்ததை பட்டம் பெற்றதைக் கூறிப் பெருமை கொள்ளவில்லை. பண் பான பிள்ளைகளை வளர்த்ததை எண்ணித்தான் பெருமைப்படு கிறேன். அதிலிருந்து தவறிவிடாதீர். நீங்கள் இருவரும் என் இரு கண்கள். இதில் எந்தக் கண்ணில் தூசி பட்டாலும், இரண்டும் மூடியே திறக்கும். காந்தன் வீட்டுக்கு வருவதில்லை. ஆனல் அவன் ஊருக்கு நல்லதைச் செய்யட்டும். அதற்கா வாவது அவன் படிப்பைத் தொடரட்டும் என்றுதான் தூரத்தே விட்டேன். இன்று அவன் நிலை அறியமுடியாத நிலையில், அவ னது நண்பன் டினேஷ் கூறியதில்தான் அறிந்து கொள்ள முடிந்தது.
இன்றைய நிலையில் எவன் எங்கு உயிருடன் இருப்பான் என்பதை அறியமுடியாத நிலையில் தூற்றுவார் வாயாவது: நல்ல தூது தரும் சாதனமாக விளங்குகிறதே! இதுவும் நன் மைக்குத்தான்!
34 O உணராத உண்மைகள்

அப்பா, நான் எதோ கூற நீங்கள் என்மீது அல்லவா குறை காண்கின்றீர்கள். டினேஷ் படிப்பதற்கும் பள்ளியில் சேர்வதற்கும் அண்ணன் பட்ட அக்கறை, இதுவரை எங் கள் வீட்டில் அம்மா அவன் மேல் காட்டிய கரிசனை எதனே யும் எண்ணுது அண்ணுவின் நிலைபற்றிக் கவலை கொள் ளாது ஏதேதோ கூடத் திரிந்ததே பாவம் என பழிவேறு கூறுகிருனே!
எந்த தகப்பனே தாயோ தன்பிள்ளே செல்லப்பிள்ளை, மற்றது எல்லாம் தெருவுப்பிள்ளை என்று நினைப்பதில்லே. ஆனல் அவர்களுடைய சூழல் நட்புத்தான் ஒவ்வொருவரை யும் அப்படி உருவாக்கிக் கொள்கிறது. மீரா, இளமைத் துடிப்பின் பேச்சும் அவசர முடிவும் தான் அவனை இப்படிப் பேச வைத்தது.
என்ன. என்ன. அப்பாவும் பிள்ளேயும் கொஞ்ச நேர மாவது சந்தோஷமாக இருக்க மாட்டீங்களா? நான் காந்த னின் விடயமாக அறிய அக்னேஸ் வீட்டிற்குச் சென்று வரு வதற்குள் என்ன புதிய மோதல் உங்களுக்குள்?
அம்மா. அம்மா. அப்பாவிடம் நான் சண் டை க் கு போகேலேம்மா. டினேஷ் வந்து. அண்ணுவைத் திட்டினர். அப்பாவும் அதனைக் கேட்டுத் தலையாட்டும் பொம்மையாக இருந்தாரம்மா, அதுதான்.
‘என்ன அதுதான் அடுத்ததையும் சொல்லன்' என மீராவின் அம்மா தங்கம் குரல் கொடுத்தாள்.
தங்கம், நீ இளேய மகன் என்று அழைப்பியே டினே ஷை அவன் தான் வந்து காந்தன் தன் னே யும் காட்டிக கொடுக்கப் போகிருணும் என்று கதைத்தார்களாம். அதுதான் அவன் பயத்தால் கத்திட்டுப் போருன். அது கிடக்க காந்தன் நிலை என்னவாம்,
விசாரணை நடக்குதாம். பள்ளியால் வரேக்க பாழ்பட்டுப் போனவங்கள் பிடிச்சிட்டு ஏதேதோ குற்றம் எல்லாம் சுமத்திப்
ஜோசப் பாலா O 35

Page 21
போட்டாங்கள் என்று நாங்கள் கலங்கிறம். சும்மா சுத்தித் திரியிறதுகளுக்கு வாயை வைச்சுக் கொண்டு கிடக்க வரலாது
தங்கம், நீ என் கொதிக்கிருய்? அவன் டினேஷ் அடுத்த கிழமை ஜேர்மனி போகிறனும், அதுக்கிடையிலை தன்னை இழுத்தாலும் எண்டு அவன் கத்துருன்.
அதுக்கு இஞ்ச பெடியள் பிடிபட ஒருசிலர் மட்டும் வேங் கட துக்கத்தைச் சொல்லி சுகம் அனுபவிக்கவல்லோ அங்க போகினம். இங்க எத்தனை முகாம். அதில படுகிற கஷ்டங் களுக்கு ஏதும் உதவ முடியாத வசதி படைத்த முதலைகள் கூட எல்லாம் அங்கபோய் அக தி க் கா சு எடுத்து இங்க அனுப்பி அனுபவிக்கத் துடிக்குதுகள். ஆற்றயேன் வீடு எரிய அந்த சூட்டிலை தங்கட குளிர்காயப் பாக்குதுகள். தங்கத் தின் மனக்குமுறல் வார்த்தையில் தீர்ந்தது.
தங்கமாக்கா. தங்கம்மாக்கா. ஒ! செல்லம்மாவா? என்னடி பிள்ளே? என்ன பெரிய சத்தமாக இருக்கு. ஊரில் நடக்கிற கூத்தில்ல, உன்ர வீட்டில் நடக்கிறத பாத்தா..?
என்ன. என்ன புதுக்கதை சொல்லிருய் செல்லம்மா? இவன் டினேஷ் ஏதோ பலதை அளந்து கொட்டிக்கொண்டு போறன், நீயும் இங்க கத்திறதைப் பாத்தா..! ஊர் வம்பை வதந்தியாய்ப் பரப்ப செல்லத்தைத்தான் செய்தித்தாளாய்ப் பயன்படுத்துவார்கள் அவ்வூர் மக்கள். என் என்ன புதிசா அறிஞ்சிட்டாய் ஊரில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தது போல் உங்கட போரை நிறுத்தவும் ஓர் ஒப்பந்தம் நடத்தி ணுல் தான் சரிவரும் போல் கிடக்கு. என்ன செல்லம் சொல்லுருய்? இல்லே, இவன் டினேஷ்சுக்கு ஊரில் கணபதி யின்ர பெட்டைக்குக் கலியாணப் பேச்செல்லோ நடக்குது.
ஏன்ரி செல்லம்! டினேஷ்சுக்கே? அவன் என்ன உழைச் சுக் கொட்டுருன்? கணபதிக்கு என்ன விசரா? அவன்ா மருமகன் வாத்தி வேலை பாக்குது. அவனைத் தானே கேட்ட தாக சொன்னுங்க, நீ புதிசா சொல்லுருய்.?
36 O உணராத உண்மைகள்

இல்லையக்கா, டினேஷ் வெளிநாடு போருன் στου (βου Π . அதுதான் பெட்டை போகும் எண்டு கதைக்கினம். சீதனக்
காசிலே ரிக்கற் எடுத்துக் கொண்டு அகதி (par Tcupé5(35 da. Lடிப் போரும்ை. அதுதான் அவசரப் படுகினம்.
கணபதிக்கு வெளிநாட்டு மோகம். பிள்ளேயை @ါးရှီ)၊ (၅)၉ါ0T டமாய் அகதி மு கா மு க் கு அனுப்ப முயலுகிறர் போல! (3. urre, S) (Month Gyö,15% 07 15 II (3) UN 35 Töör நிலைக்கப்போகுது? GT6ör 60 t . Dyah 6) u'(0) 0))) ab 1 III s'han ஆசிரியத்தொழில் என்ன குறை வாய்த தெரியுதோ கணபதிக்கு. கெடுகுடி சொற்கேளாது. இப்ப ஒரு பக்கத்திலே அவங்க அழிக்கிருங்கள். மற்றப் 1க் கத்திலே அகதி முகாமுக்குப் போற அவசரத்தில அரைகுறை விலைக்கு வித்துப் போறதில் ஒரு சந்தோஷம். இதில கணப திக்கு வெளிநாடு எண்டதும் வாயைப் பிளந்து ஒம் எண் டாராம். கனவுலகில் இப்ப அவரும் அங்க இருப்பதாக ஒரு நினைவு. ஏன் முந்தின மாதிரி எங்கட சனம் சதாரணமாக கலியாணம் செய்து வைக்க முடியுதே பார். சும்மா இருந்த வனுக்கு கொழுத்த சீதனம் எண்டால் டாக்குத்தர், எஞ்சி னியருக்கு எப்படி இருக்கும்? அவங்க கூட சேவை க் கா கப் படிக்கிருங்களா அல்லது வேள்விக்கு வளக்கிற ஆடுமாடுக்குத் தீனி போடுகிறமாதிரி, ஆடு மாடு கொழுத்தா நல்ல விலை அதுபோலத்தான் அதிகம் படித்தா கொழுத்த இதனம் எதிர் பாத்தல்லோ. படிக்குதுகள் இதில ஆசிரியத் தொழிலின் மகிமை எங்க தெரியப்போகுது இதுகளுக்கு.
*வீட்டுக்காரர். வீட்டுக்காறர்? ஆரு? கணபதி அண் ணனே என்ன புதிசா இந்தப்பக்கம்.? இல்லை பிள்ளே, அதிகம் வெளிக்கிட அவங்கட கூத்தால முடியுதில்லை. இப்ப என்ர மகளுக்கும், டினேசுக்கும் இந்த வெள்ளிக்கிழமை கலி யாணம். அதுதான் சொல்ல வந்தனன் பிள்ளை, திடீரென்று வந்தது, செய்துபோடுவம் எண்டுதான். 'ஏன் அண்ணே அவசரம்? அடுத்த மாதம் நல்ல நாள் இருக்கெல்லே?" பிள்ளை, அது வரைக்கும் பாத்தா பிரயாணம் செய்ய முடியா தாம். அதுதான் இப்ப நாள், திகதி, சாதகம் எல்லாம்
ஜோசப் பாலா O 37

Page 22
பாக்க நேரம் எது? நாட்டு நிலையும் பிளேற் திகதியும் பாத் தெல்லோ வைக்க வேண்டியிருக்கு. இனி எப்ப சீராகிறது. நாம் எப்ப நிம்மதியாகிறது?
'அப்ப அண்ணை கலியாணம் முடிய இரண்டு பேருமா அல்லது வீட்டோட போறியளோ? இல்லை. முதலில் அவையள் போயிற்று பின்தான் நாங்களும் போவம் எண்டு பாக்கிறம். கலியாணச் செலவு வேற கிடக்கு. வாறன் பிள்ளை என்று நடந்தார். அந்தப் பேச்சின் விமர்சனம் வீட் tg.c.) தொடர்ந்தது.
அந்த வெள்ளிக்கிழமை வாணவேடிக்கையுடன் கூடிய திருமணமோ என விமர்சிக்கும் அளவு இரவே தொடங்கி விட்டது. அடிக்கடி கேட்கும் அந்த வெடி தான் மறுநாள் தினசரி பல செய்தியுடன் பிரயாண வசதியின்மை, வழியில் கண்ணிவெடிகள், பஸ் கடத்தல் தொடர்வதால் திட்டமிட்ட அவர்களின் பிரயாணமும் தடைப்பட்டது. இச்செய்தி திரு மண வீட்டிலும் நிலைதனை மாற்றியது. 18 செலவுடன் சென் றவர்கள் இப்ப 35 வரை தேவையாம். இது கூட டினேசுக்கு தலையிடிதான். பார்ப்போர் எல்லாம் பிரயாணத்தை பற்றியே கேள்விகளைத் தொடுப்பர், செலவுக்குப் பணம் கேட்டால் இதுங்கும் இனசனம் இப்ப ஏற்பட்ட இடைஞ்சலை சொல்லிக் கேலி செய்வதில் ஒரு ரசனைதான் வம்பளக்கும் பூனைகளுக்கு விளையாட்டு, டினேஷ் போன்ற எலிகளுக்கெல்லோ சிவன் போகுது, கணபதி யின் நிலை தர்மசங்கடம்தான். நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துப்போன நிலையில் திண் டாடுகிருர், வெளிநாட்டுச் செக்கால கடன் அழிக்க கனவு கண்ட கணபதி என்ன செய்வேன் என்ற திகைப்புடன் செயற்பட்டார்.
காந்தனின் செய்தி காதில் விழுந்தது. வி டு த லே க் கு ஏற்ற வழிகளும் உண்டாம், பள்ளி மாணவர்களுடன் கண பதியின் மருமகன் வாத்தி சேந்து முயற்சிப்பதான செய்தி கணபதிக்கு எட்டியது.
38 O உணராத உண்மைகள்

*செல்லம் என்ன கனநாளாய் இந்தப் பக்கம் காணேல்ல 'இல்லை அண்ணை, காந்தன் வீட்டில் கொஞ்சம் வேலை கிடந் தாப்போல' என்று கதையைத் தொடர்ந்தாள். ‘இவன் காந்தன் படிக்கவெண்டு போயிற்றுக் கண்ட பெடியளோட சுத்தித் திரிந்ததால்தான் இப்ப இந்த நெருக்கு. இதுக்குப் போய் அரியம் வாத்தி ஏன் அலையுது? சும்மா இடக்கேலாம வில்லண்டத்தை எல்லே விலக்கு வாங்கப் போகிறன்' என்று மருமகனை திட்டித் தீர்த்தார் கணபதி,
என் அண்ணை இப்ப ஊரே திரண்டு நிக்குது. அதில வாத்தி அரியம் மட்டும் எட்ட நிண்டா சரியில்லைத்தானே அதுதானக்கும். இவங்கட தொல்லேயால் எங்கடயள் இதே இடத்துக்கும் போய்வரப் பாதையில்லை. இவையள் என்ன கெட்டித்தனம் செய்து போட்டினம்? இப்ப சம்மா போய் வந்த எல்லோருக்கும் எத்தனை சோதனை
"ஏன் அண்ணை, மகள் குடும்பம் புறப்படவில்லையோ? இப்போ போறதும் பெரிய சிக்கலாம்."
18, 20, வயதிலே போனதுகள் போயிற்றிது. கலியாணச் செலவும் போக, இப்ப இரண்டு பேரும் போகக் காசும் காணுது அதுதான் தனிய மருமகன் மட்டும் முதலில் போய் பின் அனுப்புவம் எண்டுதான் இருந்தா, பொடியளின்ச தொல்லே யால கொழும்புக்கும் செல்ல முடியாம நிக்குதுகள்:
"ஒமண்ணை, காந்தனும் வரப்போகுதாம். அங்கேயும் விவஸ் மீராவுக்குக் கலியாணப் பேச்செல்லே. தங்கம் அக்கா வீட்டில கதை அடிபடுகுது, அதுதான் அரியம் வாத்தியும் அக்கறைப்படுகிறதைப் பாத்தா..??
அப்படியே சங்கதி செல்லம் இவனுக்கு அவங்கட வீட்டு நிலை தெரியல்லப்போஜல, நான்கூட மருமகன் டி னே  ைஷ க் விகதியில் அனுப்பிவிட வேண்டும். பின் காந்தனும் வந் திட்டா பழைய சினேகிதத்தில. அரியம் வாத்தி அநியாய பிாய் அழியப் போகிருனுக்கும். அவனைக் கண்டால் சொல்லு
(3:graů u TscT C 3°.

Page 23
அவன்ர நன்மைக்குத்தான் நான் சொன்னதாக, நா னு ம் டினேஷின்ர விஷயமாக கொழும்புக்குப் போய் அனுப்பி வரப் போறன். இந்த வாாம் எப்படியும் எங்க சுத்தி எண்டாலும் போகத்தான் வேணும். செல்லத்தின் வெறு வா ய் க் குக் கிடைத்த சந்தோஷத்தில் நகர்ந்தாள்.
பல இடம் சுத்தி டினேஷின் பயணம் தொடர் கி றது. கணபதியின் மனம் ஏதோ ஆறுதல் அளிக்க டினேஷின் அகதிப் பயணம் வெற்றியில் முடிந்தது. கணபதி வீட்டாருக்கு மகிழ்ச்சி தான்
கணபதி விட்டிலை எல்லோர் எதிர்பார்ப்பும் டினே6ரின் கடிதம் நல்ல சேதி தரும் என்று. தங்கம் வீட்டிலோ காந்த னின் வரவு கிட்டுமோ..? மீராவின் மணவாழ்வு எப்படி .60ועיLמ யப் போகிறது என்று கணபதியின் மகளிற்கோ கன்னி கழிந்து ஒரு மாதம். இனி கடல் கடந்தால்தான் ஏற்பட வேண்டும். இன்றைய நிலையில் எதிர்பார்ப்புக்கள் தொடர்கின்றதே தவிர நிறைவேற சமூக நிலை தோன்றவில்லை.
எதிர்பார்ப்புகள் எவர் வாழ்விலும் இருப்பது நல்லதுதான் அதன் தன்மை நன்மை பயக்கும் எதிர்கால வாழ்வின் உர மாக அமைவது தான் நல்லது.
எனயோரின் துன்பத்தில் இன்பம் காணும் சிலரது சுய நலம் எதிர்பார்ப்புக்கள் ஒருவித திருட்டுத் தனத்தையும் போலி கெளரவத்தையும் காப்பதாகவே அமைந்து விடுகின்றன.
எதை எதிர்பார்க்கிருய்? அதை எப்படிப் பெற முயல்கி முய்? அதனுல் நிரந்தர மகிழ்வை எனையவர்களிடம் இருந்து பறிப்பதாக இராது முயற்சியின் மூலம் பெறுவதால்தான் எதிர்பார்ப்பின் நற்பயனை அனுபவிக்க முடியும்.
டினேஷின் கடிதம் பல கதை கூறியது. கணபதி வீட்டில் மகிழ்வுதான். ஆனல் எதிர்பார்ப்புகள் அதுவல்லவே. உடன் பதில் பல கோரிக்கையுடன் தொடர்ந்தது. மனைவி யின்
40 O உணராத உண்மைகள்
t

வேண்டுதல் விரைவில் சந்திக்க வேண்டும் என, கணபதியோ பணம் அனுப்பும் வழிமுறையுடன் பட்டகட ன் பட்டியலும் சேர்ந்து சென்றது.
பாவம் டினேஷ் அகதிமுகாம் உணவுடன் சிறுதொகை உதவிப் பணம்; இத்தனை கோரிக்கைகளையும் எப்படி நிறை வேற்றுவான் எத்தனே காலம் ஆகும் என்ற எக்கத்தில் ஏதும் உழைப்பைத் தொடர சட்டம் இடம்தாாதிருப்பினும் முயற்சியின் பயன் நண்பர்களுடன் எதோ வியாபாரம் செய்து பணம் சேகரிக்க பல வழிகளில் முயன்ருன்.
சிறு தொகைப் பணம் கணபதி பேரில் வந்தது. ஊரார் புகழைத் தன்பக்கம் திருப்பப் பல ருக்கு ம் கூறி பெருமை கண்டார் கணபதி. அவரது ஊரில் அகதி முகாம் உண்டு. அதற்கு உதவிட மனம் இ ல் லா த வர். அவரது குடும்பம் உய அயல்நாட்டு உதவி பெற்று அடுத்து பயணத்தையும் தொடர முயன்ருர்,
"என்னண்ணை, இப்ப காணமுடியிறேல்ல? என்ற செல் லத்தின் குரல் கேட்டு கணபதி 'ஓம். ஒ. வீட்டில் ஆரும் இல்லை. அடிக்கடி இவங்கட தொல்லே வேறு அதுதான் எப் படி தங்கம் வீட்டில. என கேள்விக்கணை தொடுத்தார்.
காந்தன் இவ்வாரம் விடுதலையாம் அதில தங்கள் அக்கா ஒடித்திரியுது" அரியம் வாத்தியின்ர பள்ளியும் அருகில அகதி முகாமும் அங்கையும் அகதிகளுக்கு உதவுறதில் அதுகளுக்கு ஒரு வேலேதான்.
"என்ன செல்வம் மகனை த் தா ன் விட்டிட்டு அலையுது
GTGT LIT. இப்ப இது களு க் கு எ ன் னு ம் அறிவு வரேல்லையே. பார். அரியம் வாத் தி யும் அநியாயமாய்ப் போய் மாளப் போகுது பார்."
"என்னண்ணே ஊரில் உள்ளவங்கட உதவி எடுத்துதான் அந்த அகதி முகாமும் நடக்குது இப்ப அவங்கட உதவியும்
Ggresů Lu TGIFT O 4

Page 24
இல்லை செலவுக்கும் வழி இல்லை. அதிலதான் ஊரில் அரி யம் வாத்தியும் பணம் சேர்க்குது." "சும்மா நெ டு க லும் அகதிக்கும், அதுக்கும் இதுக்கும் எண்டு எத்தனையள் சேர்க் குது. இதுக்கெல்லாம் இஞ்சை என்ன கொட்டியா கிடக்கி றது செல்வம்? நாங்க எவ் வள வு செலவு செய்து, அங்க இஞ்ச போவம் எண்டால் இவங்கட தொல்லை பெரிசாக் கிடக்கு" எனச் சிறிச் சினந்தார்.
அவர் உலை கூட அகதிப் பணத்தால் தான் ஏறுவதை உணராத கணபதிக்கு வாசல் மணியின் ஒலி கேட்டு வந்த மடல் கண்டு பிரித்தார்.
'மனைவி, மாமா, என் முயற்சிக்கு இங்கு தடைவந்துள்ள துடன் அரச விசாரணையிலும் உள்ளேன். அடுத்து என்ன நடக்குமோ த்ெரியவில்லை. அதுவரை எதுவும் அனுப்ப முடி * ".ושréחנu
என நீட்டோலேயினை படித்ததிலிருந்த கணபதி கதவு சத் தம் கேட்டபோது அங்கே டினேஷின் தோற்றம்தான் தெரிந் தது.
அதிக தேவையால் அவனது வியாபாரம் போதைவஸ்து கடத்தியதால் வந்த வினை - நாடுகடத்தப்பட்டான். இன்று அவனும் ஓர் அகதிதான் அவன் முன் காந்தனின் குடும் (பத்துடன் அரியம் வாத்தியும் அன்புடன் வரவேற்க அந்த முகாம் காத்திருக்கிறது. O
42 O உணராத உண்மைகள்

இது நிகழ்காலம்
“எஞ்சினியர் மனேவா; அவர் எங் களின் சித்தப்பா அப்பா வழியால்; பிறின்சிப்பல் டானியல் கூட அப்பாவுக்கு அண்ணன் முறையப்பா, உங்கட சித்தியின்ா மகன் இப்பவும் கூலிவேலைதான செய்யிருர்? என இடித்துக் கூறி தன் பெருமைகளே நாகுக்காகக் கூறுவதில் அவளுக்கு ஒர் மகிழ்வு.
ஊரில் உள்ள பெரியவர்கள் வசதி படைத்தவர்கள் எல் லாம் எதோ ஒர் வழியில் நிர்மலன் வீட்டுக்கு நெருங்கிய சொந்தமாக தற்பெருமைகளை பறைசாற்றுவாள் நிர்மலன் மனைவி லக்ஷ்மி,
இதற்கு சற்றும் சளைத்தவர் அல்ல நிர்மலன், மனைவிக்கு பக்கப்பாட்டு பாடுவதில் பயிற்றப்பட்டவர், “எங்கள் தூரத்து உறவுதான், இப்போ எங்க டிப்பாட்மென்டில் உள்ள டிறைக் டர் சதாசிவம் கூட, அவரது பிள்ளேயின்ர பிறந்தநாளும் வரு குது; அதுக்கு செல்ல வேண்டும். என ஏதோ ஒரு வழி முறைகளே பொருத்தி உறவை வளர்ப்பதை பெருமையாக சொல்வார் நிர்மலன். ஆளுல் கந் தோர் ஊழியர் என்ற முறையில் விருந்துக்கு அழைப்பது எல்லா பெரிய உத்தியோ கத்தரின் வழக்கமானதால்தான் அந்த அழைப்பும் என உணராத அடுத்த வீட்டு நேசம் எல்லாவற்றையும் கேட்டு
ஜோசப் பாலா O 43

Page 25
எதையும் தாங்கும் சுமைதாங்கிபோல் தான் அவர்களுடன் பழகி வந்தாள்.
அயலில் உள்ளவர்கள் அண்டி வாழ வேண்டும். எல் லோரும் தேவை என்று நடப்பவள் நேசம். அதனுல் இடை யிடையே சென்று குசலம் விசாரிப்பதோடு உதவிகளை பல வழி களிற் செய்து வீட்டுத் தோட்டத்தில் விளையும் வாழை, கிழங்கு, மிளகாய், வெங்காயங்களை பரிமாறி வருவாள். தன் பிள்ளைக ளையும் அவர்கள் உதவிக்கு உதவச் சொல்லி அனுப்புவாள். தன் அயலுடன் அன்பை பகிர்நதாலும் அதனை உண ரா த" நிர்மலன் வீட்டார், அவளே ஒர் தாழ் நிலையில் வைத்தே கணித்தனர். இதனை அவள் அவ்வளவாக உணரவில்லே. உணரக்கூடிய அறிவும் அவளிடம் அரிதாகவே இருந்தது. மேலும் தன் அன்பை காட்டுவதோடு அவர்கள் புகழை என யவர்களிடம் விமர்சிப் ப தி லும் அவள் மனம் பெருமிதம் அடைந்தது.
நிர்மலன் வீட்டின் பிள்ளைகளின் இன்ப துன்பங்களில்
பகிர்வதாக எண்ணி எந்த நிகழ்ச்சிகளுக்கும் அங்கு செல் வாள். ஆனல் அவளுக்கு அடுப்படிதான் காத்திருக்கும். பல வேலைகளுக்காக, அதனை அவள் உதவியாக செய்வாள். அவர்களோ அவளை ஊழியம் செய்யும் வேலைக்காரி போன்றே கவனித்தார்கள்.
நிர்மலன் வீட்டில் உறவினர் பலரும் வருவதும், தங்கு வதும், செல்வதும் அவர்கள் வசதிக்கும் வ ரு வாய் க்கு ம் பெருமை தரும் நிகழ்வாகவே கருதினர். அவரது கடமை யும் அரச உத்தியோகம் குறுக்கு வழியிலும் பணவரவும், சுற்றுலாவும், சுகவாழ்வுக்கும் அரச வாகனம், அதனை கூட வருவாயுடன்தான் பயன்படுத்துவார் நிர்மலன். அவர் உத்தி 1 யோகத்தில் அரைப்பகுதியை வீட்டில் இருந்தே நிர்வகிப்பாள் மனைவி லக்ஷ்மி, வருவாய்க்கு ஏற்றவாறு, சுற்றுலாக்கள், இன்பெக்சன்கள் என்றும், நைற் அவட், றவலிங்கினையும் டியூட்டி லிவு என பல வளிகளில் பண வருவாயும், பள்ளி
44 O உணராத உண்மைகள்

சென்று திரும்பும் பிள்ளே கூட அரசு வாகனத்தில் தான் வரும், அவரது வாகனம் அதற்கான பணத்  ைத றவலிங்கினையும் எனவும் எடுத்து தரும். இத்தனை வசதிகளையும் அனுபவிக் கும் நிர்மலனின் குடும்பத்திற்கு ந்ேசத்தின் தூய்மையான நேத்தை மதிக்க அவர்கள் பணம்தான் மயக்கத்தைத் தந் 岛J·
தூய்மையான கரங்களேயும் சிலரது கறைபட்ட கைலஞ் சங்களால், கைலஞ்சக் குகையில் சிக்கியவன் தான் அரசு உத் தியோகததிற்கு உகந்தவன் என்பது போல் தூய்மையான வனையும் பலரது தூண்டுதலால் அந்த நிலைக்கு தள்ள வைக் கும். என்பதும், போலி கெளரவத்தை பறை சா ற் றும் குடும்ப வாழ்வைக் குறைக்க விரும்பாது பழக்கப்பட்ட அவனது கரம் எ ல் லோ ரிட மும் லஞ்சம் பெறுவதில் மட்டும் இன, மொழி, மத பேதம் காட்டுவதில்லை நிர்மலன்.
வரவுக்கு மீறிய செலவு வாழ்க்கைக்கு உதவாத நாகரி கங்களே பழக்கப்படுத்தி வாழ்க்கையைத் திட்டமிடாது லக்ஷ்மி யின் கி வி ப் பி ன் ளே போல் சொன்னதைச் செய்யும் கைப் பொம்மையாளுள் நிர்மலன், அவனது கந்தோரில் பல வேலை கள் காலியானது. அதனை நிரப்பும் அதிகாரத்தை பயன் படுத்தியும் அதிக பணம் சம்பாதிக்கலானன்.
இதனை அறிந்த நேசம் தன் மகனுக்கு ஒர் வேலை எடுக்க முயன்று லசஷ்மியிடம் அணுகினுள், எங்கள் குடும்ப நிலை தெரியும் தானே லகக்ஷமி, எங்கள் கஷ்டம் உங்கள் உதவி யால் தீரட்டும். அதற்காக நிர்மலன் அண்ணனிடம் ஒரு வேலை என் மகனுக்கு எடுக்க கேட்டுப் பார்த்து சொல்லுறீரா? என் பிள்ளே ஏ. எல். பாஸ் பண்ணி சும்மா வீட்டில இருக் குது. அடுத்ததுகளேப் படிப்பிக்க வசதியும் இல்லை.
'ஒ, அதுவா, நேசம்வேலைக்கு ஆட்கள் தேவைதான் அவ ருக்கு அதிகம் இல்லை. மேலே பெரியவர்களுக்குக் கொடுக்க வாவது பத்தாயிரம் வரை தேவை. இது இருந்தா, கேட்டுப் பாக்கலாம்.' என தீர்வே கூறிவிட்டாள். **ஏதோ உனக்
ஜோசப் பாலா O 45

Page 26
*ாக செய்யத்தான் வேணும், பணம் இருந்தால் வந்து சொல்லு' என தன் சேவையுணர்வை நேசத்துக்குச் செய் வதுபோல் பாசாங்கு செய்தாள்.
'உங்களுக்குத்தான் மேல் இடத்தில் உள்ளவர்கள் எல் லாம் உறவு முறையாச்சே, எங்கள் வீட்டு நிலையும் உங்களுக்கு தெரியும்தானே லஷ்மி. ஏதோ அவன் வேலை எடுத் தால் மாதாந்தச் சம்பளத்தில் எடுத்துவிட்டுத் தரலாம். இப்பதான் என்ன செய்யிறது, பத்தாயிரத்துக்கு"
"அது இல்லாட்டி கதைச்சுப் பிரயோசனம் இல்லை. நேசம் உறவினர்தான் ஆனல் அவர்களிடம் கேட்பது எமது கெளர வம் என்னுகும். பணம் இருந்தால் செய்யலாம்' என முடி வாகவே கூறிவிட்டாள்,
எப்படித்தான் பணக்காறர் வீட்டில் பணிவிடை செய்தா லும், பணத்தைத்தான் அவர்கள் மதிப்பார்கள் என்பது நேசத்திற்கு மனதில் பட்டது.
கணேசும் தன்தாயின் முயற்சியால் தான் ஒர் வேலை பெறலாம் என நப்பாசையுடன் தாயின் பதிலைக்காண காத்தி ருந்தான். பாசத்தின் பரிசு பத்தாயிரம் அது இல்லையேல் அங்கு வேலை எடுப்பதும் கஸ்ரமாகியது, என நடந்த நிலைகளை விளக்கினுள் கவலையோடு நேசம்.
'அம்மா கவலைவேண்டாம் பணத்தை எதிர்பார்ப்பவர் கவிடம் நீங்கள் பலதை எதிர்பார்ப்பது தவறு. பக்கத்தில் உள்ள அரிவு பட்டறையில் வேலை கேட்டு வருகிறேன். அதில் முன்னேற்றம் உண்டானல் முன்னேறுவோம். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? பத்தாயிரம் இருந் தீால் அதை வைத்தே பிழைச்சிடலாம். அவர்களேப் போல கைலஞ்சத்திலும் பார்க்க கடின உழைப்புடன் முன்னேறுவது தான்நல்லது" என தான் ஆறுவதாகக் கூறி தாய் மனதை தேற்றினுள்.
46 O உணராத உண்மைகள்

நிர்மலனின் வருவாய் தலைநகரில் பெருவீடு, சொத்துக் கள் பெருக அங்கே தங்கி வாழ்வது லசஷ்மிக்கு கெளரவ மாகப் பட்டது. உறவினர் புகழ்பாட தன் உயர்வினை நிலை யானதென எண்ணி வாழ்ந்தாள். கலகலப்பாய் வாழ்ந்த வர்கள் எதிர்பாரா இனக்கலவரத்தால் சகலதையும் இழந்து சொந்த மண்ணில் அகதியானர்கள். அன்றும் அயல்வீட்டு நேசத்தின் பாசம் பல உதவி செய்ய உறவினர் உறவே தொடர்பற்றதானது. இன்றை ய உலகை அன்று உணராதா லசஷ்மி இன்று உண ரு கி ரு ள் . நேசத்தின் உணவும் ஒர் அளவு உதவியும் இரட்டிப்பாயிருக்குமே. மகன் கணேசும் உழைத்திருந்தால் என்ற ஏக்கம்தான் லகஷ்மிக்கு இன்று. பெருமைதட்டி உறவைக் கூற எவரும் அருகில் இல்லையே. அன்றைய உறவெல்லாம் இன்று துரத்து உறவானது.
நிர்மலன் வீட்டாரின் வசதிகளில் இன்பத்தை அனுப வித்த உறவுகள் இன்று அவனது துன்பத்தில் ஆறுதல் கூற முன்வரவில்லையே. அன்று நிர்மலன் போன்ற எத்தனை வசதி படைத்த உள்ளங்கள் தங்கள் பங்களிப்பால் கனேஸ் போன்
றவர்களே நல்ல முன்னேற்றப் படிகளில் ஏற்றத் தயங்கினர்
கள். இன்று அவர்களிடம் உதவியைப் பெற வந்தவர்கள நிறைவான வசதிகளே எதிர்பார்க்க அவர்கள் நிலை அவ்வ ளவு உயர்ந்ததல்ல. ஆணுல் உயர்ந்த உள்ளம் கொண்ட வர்கள் அவர்கள். பலர் வாழ்வில் இது நிகழ்காலம். இனி இறந்த காலத்தைக் கூறிப் பய னி ல் லே . எதிர்காலமாவது சிறக்க நல்லதை சிந்தித்து செயற்படுத்த கணேசுக்குதவியாக அவனது தச்சுப் பட்டறையில் நிர்மலனும் இணைந்து பணி யாற்ற முற்பட்டான். முன்னேற முயற்சிக்கிருன், இன்றைய துன்பத்திலும் ஓர் இன்பம் பிறக்கிறது. ஒ
Ggrgů u Tsor O 47

Page 27
உணராத உண்மைகள்
6, 6 zer .
ன்ேன அரியத்தார் உம்மை கன நாட்களா வீட்டுப் பக்கம் காணக் கிடைக்கேல்லை."
இப்ப எங்க செல்லுறது. இப்பதான் எங்கடை வீட்டை
செல் அடிச்சாலும் சொல்லிவிட ஆக்களில்லை. வாத்தியார் எல்லாரையும் அனுப்பிப்போட்டு நான் மட்டும் தான் நிக்கிறன்.
எங்க திருவிழாவிற்கு போட்டினமோ?
ஓம். ஒம். இப்ப திருவிழாவுக்குப் போறமாதிரித்தான் ஊர் இருக்கு
எந்தத் திருவிழா அரியத்தார் ? ஏன் நீர் போகேல் இலயோ?
வாத்தியார் இந்த நாளையிலே கோயில் என்ன குளம் என்ன. எல்லா இடமும் செல்லுத்தானே. சுடலை மாதிரி ஊர் இருக்கேக்க சனம் எல்லாம் சுடலையை கடந்து சுவர்க்கம் தேடி அலையுதுகள்
அரியம் இப்ப வீட்டுக்காரர் எங்க போட்டினம் எண்டு சொல்லு? அவையளும் சுவர்க்கம் தேடி எ ஐ ன் டோ ட அலேஞ்சு இந்தியாவிலை இரண்டு. மற்றவையள் ஜேர்மன், பிரான்சில அகதியாய் இருக்கினம்.
48 O உணராத உண்மைகள்

சொந்த மண்ணும் இருந்த வீட்டையும் வி ட் டிட் டு சுவர்க்கம் தேடி எங்கை அலேயினம். இல்லாததுகள் தான் அலை யுதுகள் எண்டால் இருக்கிறதுகளும் அனுபவிக்க எலாமல் எல்லே. அலையுதுகள். எல்லாருக்கும் தூரத்துப் பார்வை தான் போல. இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.
என்ன வாத்தியார் விஷயம் புரியாமல் கதைக்கிறியள்?
சரி, சரி. உம்மிட விஷயத்தைத்தான் சொல்லுமன்.
போகேக்க கொஞ்சம் கஷ்டப்பட்டுதுகள். இப்ப அவைய ளின்ர கடிதமும் அனுப்பிற படங்களையும் பாத்தா. இங்க என்ன வாழ்க்கை எண்டு படுகுது எனக்கும்.
ஏன் அரியம் நீரும் போற எண்ணமோ?
வாத்தியார் இந்த அரியத்துக்கு அந்த ஆசை இல்லாம லில்ல. அப்புவுக்கு கொள்ளி வைக்க அம்மாவுக்கு ஏதும் நடந்தா பாக்க எண்டுதான் என்னை மறிச்சுதுகள். என்ா எதிர் காலத்தை சிந்திக்கேல்லை.அதுகள்.
என். இப்ப என்ன குறை. உமக்கு. சொந்த மண்ணில் விளேஞ்சதை திண்டு உம்மிட வீட்டுத் திண்ணையிலை கிடக்க உமக்கு பிடிக்கேல்லையோ?
இது என்ன வாழ்க்கை வாத்தியார். இது என்ன வாழ்க்கை அங்க எவ்வளவு பணம் கொடுக்குங்கள், அதோட இருப்பிட வசதி சும்மா இருந்து சாப்பிட ஆருக்கு மனம் வராது.
இதில வாறது ஆரு. சண்முகமா?
ஒம். ஒம். அவன்தான் வாத்தியார்.
என்ன அரியம், வாத்திக்கு புதுக்கதை அளக்கிறீர்" நான் வாடிக்கைக்குப் போறன் நீ வரேல்லையோ?
வாத்தியார் சண்முகம் தினமும் தண்ணி அடிச்சிட்டு வந்தால் இப்படித்தான் உளறுவான். அவனுக்கு வீடு வாசல் நினைவே இல்லை. குடிச்சழிக்கிருன் பாருங்க வாத்தியார்.
ஜோசப் பாலா O 49

Page 28
வாத்தியார் இவனைப் போல சேத்து வைச்சு செல்லடிச்சு சாகிறதிலும் பார்க்க அனுபவிச்சு செத்தா என்ன? வாத்தி LITri,
சண்முகம். முன்னையவர் சேர்த்து வைச்சதைத்தான் நீர் அழிக்கிறீர். அனு ப விச் சு சாகிறதெண்டா உம்மிட உழைப்பிலே பெற்றதில்லை அனுபவிச்சா பறவாயில்லை. அதை விட்டு உடம்புக்கு தீங்கு விளக்கிற குடியை விட வேற அனு பவிக்கிற ஒண்டுமில்லையோ சண்முகம்.
வாத்தியார் எனக்கும் வீட்டில அக்கறை இல்லாமலில்லை அதுகளேயும் சந்தோஷப்படுத்தித்தான் நானும் அ ஒனுபவிக்கி றன்.
எப்படிச் சந்தோஷப் படுத்திறியோ அது உன்சை உழைப் பில நடந்தா வீண் விரயத்திற்கு மனம் வராது சண்முகம்.
வாத்தியார் சண்முகத்துக்கு எப்படிச் சொன்னலும் கெடு குடி சொற் கேளாது. இது குடி குடி பெருங்குடி. இவ னின்ர காதில எருது வாத்தியார்.
அரியம் உன்னை மாதிரி வீட்டு வருவாய் போதாது எண்டு வெளியால இருந்து வருகுது. அதோட விதானயைப் பிடிச்சு உனக்கும் வெளியால இருக்கிறதுகளின்ர பேரிலையும் கூப்பன் சாமான்களும் எடுத்து சேத்து வைக்க எங்களுக்குத் தெரியாதுதான். குப்பை. குப்பையோடு சேருமாப் போல பணம் பணத்தோட சேர்ந்த திமிரில நீ க தை க் 65) (? Li fi பாத்தியா.
சண்முகம் என். உங்கடை சண்டை ஒருவர் ஒருவரை திட்டிறதால உங்கள் பல்லேக் குத்தி பிறர் மணக்கக் குடுத்த மாதிரி. உங்கடை ரகசியங்களை கதைக்கிறியள்.
அவன் சண்முகம் இப்படித்தான் வாத்தியார். தவறணே யிலையும் அதுதான் இவனுேட போக எனக்கு வெட்கம்.
50 O உணராத உண்மைகள்
 

இப்ப என்ன வாத்தியார் நான் சொன்னனன்? உள்ள தைச் சொன்னனன். நான் கூட உழைப்புக்கு போகேலாது மனுசியும் விடுதில்லே.
அப்ப வாழ்க்கைச் செலவு எப்படி சண்முகம் சமாளிக் கிருய்?
அதுக்குத்தான் காணியின் அரைவாசி மூன்று பரப்பை மூலைக் கடைக்காரனுக்கு வித்திட்டன். அவனும் தொகையா கத் தர காசில்லையாம் மாதா மாதம் ஐயாயிரம் தாருனம், அவனும் வித்துத்தானே தரவேணும் அதை வேண்டி ஒரு மாதிரி சமாளிக்கிறேன்.
அப்ப வாத்தியார். சண்முந்ைதிற்கு இதுவும் கஸ்ரம் தான்.
ான் சண்முகம். ஏதும் சேர்த்து வைக்கிறியோ ? இல்லை. இல்லே. உண்மையாய் இல்லை. இருக்கிற உண் மையைச் சொன்ன என்ன வாத்தியார். என்ர மனுசி யும், பிள்ளேகளும் எந்தநாளும் அடுத்த வீட்டு எல்லேச் சண் டையால பெரிய பிரச்சனைப் பட்டுதுகள் அதுக்கு வேலி போட்டால் இப்ப ஒரு சண்டையும் இல்லை.
ஏன் சண்முகம் சமாதானம் ஆயிட்டினமோ?
இப்பதான் சமாதான தூதனுக ஒருவர் வந்திருக்கிருiர்.
ஆரப்பா. அந்த புண்ணியவான்? உது. தெரியாதே வாத்தியார், எல்லா வீட்டிலேயும் உலை எரு விட்டாலும் உயர்ந்திருக்கின்ற அன்ரீன தெரியுது. அது தான் ரீ வி. அந்த வீடடில வெளியாலை இருந்து வந்தவர் கொண்டு வந்த ரீ. வி யாலை இப்ப எங்கடை வீட்டிலை ஒருவரும் இல்லை. பகல் இரவா உறவு தொடருது.
தி இதில் சண்முகத்துக்கு நல்ல சந்தோஷம் தானே வாத்
lJFTff?
ஜோசப் பாலா O 51

Page 29
என்ன சந்தோஷம். மு ன் ன ம் வீட்ட போன என்ன தின்ன என்ன குடிக்க எண்டு கேட்க ஆட்கள் இருந் துதுகள் இப்ப. குஞ்சு குருமானேட பெரிசுகளும் இல்லை. அவிச்சு மூடியிருக்கு. எணடுங்கள், அதுகூட எனக்கு முந்தி பூனை, எலி ருசி பார்த்திருக்கும். அதில. மிஞ்சின எனக் கும் பங்கு கிடைக்கும். ஆனல். ஒரு நன்மையும் இருக்கி றது, வேலிச் சண்டையள் இல்லை. ஊர்க்கதைகள் இல்லை. இதால வீண் சண்டையள் குறைஞ்சுது. அதோடு எனக்கு வயிற்றுப்பாடும் குறைஞ்சிட்டுது வாத்தியார் அதுதான்.
என்ன அதுதான். எண்டு பெரிசா இழுக்கிறீர்.
அடுத்த வீட்டில் கிடக்குதுகள் எண்டு காணி வித்த காசில ஒரு பீ.வி. வேண்டிக் குடுத்தா, ஆரு வாற, ஆரு போற எண்டு தெரியுதில்லை. வாய்க்கு ருசியா சாப்பிட ரூசி பார்த்து சமைக்க. படருசி விடுகுதில்லை. அது களு க்கு சமைச்சதை சாப்பிட முடியவில்லை. அடுத்த வீட்டுக்காரர் பார்க்க வந்திருக்கினம் வீட்டு விஷயங்களே கதைச்சு பேக வம் எண்டாலும் சந்தை மாதிரி திண்ணையில சனம் இருக் கேக்க எப்படி கதைக்கிறது. குடும்பம் எப்படி நடாத்துகிறது. இந்த ஆத்திரத்தில இரண்டைக் கூடப் போட்டிட்டு படுத்தொ ழும்பிறன் வாத்தியார். யாரிடம் சொல்லிறது எ ங் க ட குடும்பக் கதையை.
என் நீர்தானே வீட்டுத் தலைவன் கொஞ்சம் மனம் திறந்து வீட்டில சொல்லித் திருத்திறது தானே. குழந்தை குட்டியளை மனைவியோட சேந்து திருத்த முயற்சித் தால் என்ன?
வீட்டில மனுசியும் நானும் சேர்ந்து கதைச்சு வாரங்கள் மாதங்கள் ஆகிட்டுது. பிள்ளையளே அக்கறையோட படிக்க கூப்பிட மாட்டாள். படம் பார்க்க குடும்ப சமேதரராய் இருந்து ரசிக்கிற காட்சியை எப்படிச் சொல்ல. இதைக் கேட்டா அதுகளோட சேர்ந்து நாகரீகம் தெரியாம பேசுருய்
92 O உணராத உண்மைகள்

V
எண்டுதுகள் இப்ப கொண்டாட்டம் எண்டாலும் துக்கம் மாண்டாலும் அந்த சமாதான தூதன் இருந்து சுகதுக்கம் கதைக்காது, உறவுமுறை கூறது. எதுக்கோ வந்து எதை யோ பாத்து போக வைக்கிறதால வம்பிளுக்கவும் ஒருத்த ருக்கும் நேரம் இல்லே வாத்தியார்.
என்ன வாத்தியார் சண்முகம் சுடலை ஞானம் பேசுமுர்? என்னேக் கதை சொல்லுறதாகக் கூறி இப்ப அவரும் புதுக் கதை சொல்லி உங்கட மண்டையை குளப்பிப் போட்டாரோ?
அரியம் வாத்தியாரை கண்டதில கணக்க சொன்னது உனக்கும் புதுக் கதையாப் போட்டுதோ? இதால உன்ர கதை யை மறைக்காதை, வா, கெதியா! புளிக்கிறதுக்கிடேல்ல ஒண்டு போட்டிட்டு வருவம்.
வாத்தியார் சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லேக்கதான் சண்முகம். இதுக்கு மருந்தே இல்லை வாத்தியார்.
நீங்கள் இருவரும் உங்கட நிலையளை நீங்க ளே தா ன் தீர்க்க வேண்டும். வழியைத்தான் சொல்லலாம் மற்றவை யள் வந்து உங்கட குடும்பத்தை நடத்த மாட்டினம். இதை உணர்ந்தால் வழி பிறக்கும்.
தொடர்புச் சாதனங்கள் ஒவ்வொன்றும் மனித வளர்ச் சிக்காகத்தான் உருவாக்கப்படுகின்றது. அதனைப் பயன்படுத் துவதில் நாம் கட்டுப்பாடாக இருந்தால் நல்ல பயனைப் பெற லாம். எதுவும் அளவிற்கு மிஞ்சினல் அமிர்தமும் நஞ்சாகி விடும் என்ற முதுமொழியிலும் நல்ல உண்மையுண்டுதானே. மதுவை அதிகம் பருகுவதால் ஏற்படும் தீமை போல்தான் தொலைக்காட்சி பார்ப்பதாலும் தீமை உண்டு என்பதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் இதனைக் கூறும்போது உமது திருந்திய மனநிலையும் அவர்களுக்கு உணரவைக்க உமது செயலும் உமது சொல் லு க் கேற்றவாறு அமைய வேண்டுமல்லவா?
ஜோசப் பாலா O 63

Page 30
வாத்தியார் எனக்கு ஒரு மாதிரி சொல்லி அரியம் நடக்கி றது சரியெண்டுதானே ஏற்றுக் கொள்ளிறியள். நான் என்ன பிழை விட்டனன். உன்னைப்போல ஊதாரியாத் திரியேல்லை கண்டியோ.
வாத்தியார் நீங்கள் நல்ல புத்தி சொல்லுறது: எனக்கு நல்லதுக்குத்தான். அரியம் செய்யிறது சரி எண்டா நான் செய்யிறதும் சரிபோல்தான் படுகிறது வாத்தியார்.
அப்படி என்ன நல்லதைச் செய்யிருய் சண்முகம். அரி யத்தைப் போல இந்தப் பெரிய வீட்டில இருந்து கொண்டு அடிபட்டு உதைபட்டு அகதிகளாய் பட்டினியாய் வீடு வாசல் இழந்து இருக்க இடம் கேட்டு வரேக்க பத்து அறை வீடும் பத்து பரப்பு காணியிலையும் குந்த இடம் தரமாட்டன் எாண்டு போட்டு இரண்டு வீடுகள் பூட்டியிருக்கு அதுக்கு விளக்கு வைச்சு சனத்தை பேக்காட்டி தனிய இருந்து கொண்டு ஊரை ஏமாத்திறதும் பத்தாம கடவுளேயும் எமாத்த சந்நிதி யானுக்கு அன்னதானமாம், மரத்தடி வைரவருக்கு பவுணில் பதக்கம் போட்டு சப்பறத் திருவிழா நடத்திறன் இது சரியா வாத்தியார்? -
அரியதுக்கு இந்தப் பணமெல்லாம் எங்க இருந்து எப்படி வருதெண்டு உங்களுக்கு தெரியுமே வாத்தியார்?
சண்முகம் வெறியில கதைக்கிற மாதிரித்தான் குடிகாரர் வாய்க்கு வந்தபடி எச ஊரும் கண்டதையும் கதைகுதுகள். எங்கட கஷ்டம் அவையஞக்குத் தெரியுமோ வாத்தியார்?
அரியம் அப்படி என்ன. கஷ்டம் வந்திட்டிது உனக்கு?
கஷ்டம் இல்லாமலா இத்தனை பேரையும் அனுப்பீற்று இருக்கிறன். ஒவ்வொரு தருக்கும் ஐம்பது, அறுபது செலவழிச் சிற்று இருக்கிறன். இப்ப வட்டிக்காசு எண்டாலும் கிடைக்கி தி ஸ்லை. அவங்க குடுக்கிறதும் காணுது எண்டு ஏங்கேக்க உது களின்ர தொல்லை கொஞ்சமே, வீட்டிலை இருக்கவாம் எண்டு
54 O உணராத உண்மைகள்

சிலர் அகதிக்கு அனுதைக்கு எண்டு சிலர், அதுக்கிதுக்கு எண்டு இப்படி எத்தினை பேர் தினமும் வாசலைத் திறக்கினம். இது களுக்கு எங்கை போறது வாத்தியார்.
வாத்தியார் இதுகள் இருக்கேக்க அரியத்துக்கு கோயில் திருவிழாவும் அன்னதானமும் உண்மையிலை தேவைதான) வாத்தியார்,
**」。 。 " 踝。 grody (pt), 6) by ("Y"" தவிர வேறு என்ன தெரியும் வாத்தியார், தெய்வ பூமியையும் எஸ்லோ ಕ್ಲಿಕೆ து வைக்கச்
சொல்லுது. it ܐ ܬܐ ܐ
அரியம் ஆண்டவன் கோபிக்க மாட்டான். கடவுளுக்கு கொடுக்கிறத கஷடப்பட்டதுகளுக்கு கொடுத்தா பவுணில அவர் கைலஞ்சம் கேக்கேல்ல, பட்டினி கிடக்கிறவனுக்குத்தான் உணவைப் பகிர்ந்து குடு என்றர். இல்லிடம் அற்றவனுக்கு இலலிடம் கொடுப்பது, இறைவனுக்கு இல்லத்தில இடம் கொடுப்பதற்கு சமன்.
வாத்தியார் அரியத்திற்கு இதுகள் வேப்பங்காய் போல் கசக்கும். இண்டைக்கு இத்தனை அழிவும் தாங்கிற சனங் களேக் காட்டித்தான் அங்கே இருக்கிறவையள் இலிச்சு இங்கை யும் அரியத்தின்ர உலைக்கு அனுப்பினம். இங்க கொளுத்தக் கொளுத்த அங்க கொழுத்த வருவாயும் அதில் சிவிக்கிற அரி யத்தைப் போல எத்தனை பேர் இங்கை இருந்தும் உதவாக் கரையா இருக்குதுகள். சுரண்டல்கள் பல வ ழி . அதில் இவையளின்ர செயலும் ஒருவழி.
இருவரும் கூறுவது உங்களுக்கே புரியும் தானே. இந்த உணராத உண்மைகள் உணரும் காலத்திற்தான்; go Lu fi76)Jfr6ÖST"
வாழ்வுண்டு. இதில் யாரு திருந்திறது முந்தி எண்டிரால்
*திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற நிலையில் உங்கள் செயல்கள் தான் நா %itu விடிவுக்கு வழி பிறக்கும். O
ஜோசப் பாலா O 85

Page 31
பிஞ்சு மனதில் நஞ்சு விதைகள்
SITEY viny Gr, LIBRARY EA FRA A ፶ዖጂ≤Sፕ C E J N N A K AM
"பாமா அக்கா. பாமா அக்கா பாலு அண்ணுவைப் பாருங்கோ. அக்கா, கறுத்தப் பூனை கடிக்க வருமாம், செல்லத்துரை பிடிக்க வருமாம் எண்டு Ljub 57’g-G?(5” -
'ஓம் ஒம் குஞ்சு குழப்படி செய்யாம படடா கண்ணு." என்று அதட்டினுள் பாமா,
'பாமாக்கா. பாமாக்கா மாமரத்தில நல்ல மாங்கா யிருக்கு பிடுங்கித் தாங்க."
“ “LI L-LIT . . . . . . கண்ணு! பிடுங்கித் தாறன்,
'இல்லை, இல்லை இப்ப தாங்கோ."
*சும்மா படுங்கோ.மாமரத்தில ஆந்தை இருக்கு, சத்தம் கேட்குது' என்று சிறு அதட்டலும் கொடுத்தாள் பாமா. குழந்தை சுசியோ உறங்க மறுத்தது. குறும்புத்தனத்தை அடக்க எண்ணியபாமா "சுசிக்குஞ்சுக்கு கதை சொல்லவா." என குழந்தை மனதை அடக்க முயன்ருள் பாமா. வெள்ளே மனம் கொண்ட பிஞ்சு உள்ளம் தன் பிடிவாதத்தை சற்று தளர்த்த தன் கதையை பாமா சொன்னுள்.
56 O உணராத உண்மைகள்

*ஒர் ஊரில் ஒரு பாட்டி இருந்தாள். அந்தப பாட்டி அப்பம் சட்டு விற்றுவந்தாள். அந்தப் பாட்டியின் அப்பம் தின்ன பலருக்கு விருப்பம். பாட்டி சொன்னுள், ‘அப்பம் தாறன் விறகு பொறுக்கி வாங்கோ எண்டு,"
பாமா அக்கா காசு குடுத்தா அப்பம் தரமாட்டாவா?* என வி ைதொடுத்தாள் கசி, 'சுசி குஞ்சு கதையை மட்டும் நன்முய்க் கேளு, கேள்விகளேக் கேக்க வேண்டாம்." என்று அதட்டி தன் கதையை கூற முயன்றள் பாமா. சுசி உடனே மாங்காய் வேணும். பிடுங்கித் தாங்கோ" என்று தன் பழைய பல்லவியைத் தொடர்ந்தாள். இல்லை "சுசிகண்ணு கதையைக் கேளு பின்பு பிடுங்கித் தாறன்’ என்று கூற சுசியும் அடம் பிடிப்பதைக் குறைத்தாள். தான் விட்டகதையை தொட்டு தொடர்ந்தாள். பாமா "எங்கே விட்டனன் சொல்லும் பார்ப் போம்" என்று வியின் நினவை மாற்ற முயன்முள் பாமா, விமரு கேட்டு பாட்டி கூற. என்று சொன்ன சுசியின் நினைவை கண்டு தொடர்ந்தாள் பாமா.
'ராமு என்ற சின்னப் பையன் அருகில் உள்ள பற்றைக் காட்டில் விறகு பொறுக்கச் சென்ருன். அந்தக் காட்டில் தான் பாட்டியும் விறகு பொறுக்குவாள். அங்கு ராமுவைக் கண்ட பாட்டி, ‘அடே சின்னப்பயலே உனக்கு என்ன துணிவு இந்தக் காட்டில் வந்து விறகு பொறுக்க' என்று மிரட்டிக் கேட்டாள் பாட்டி,
'பாட்டி. பாட்டி அடுப்படியோட இருந்த உனக்கு உள்ள துணிவை விட பள்ளிக்குப்போற எனக்கு என்ன துணிவு
குறைவு? அதுதான் வந்தனன்" என தன் குறும்புத் தனத்தை பாட்டியிடம் காட்டினன். -
'பாமாக்கா. பாமாக்கா அந்தக் காட்டில் கறுத்தப்
புனே இல்லையாக்கா? என்று தன் பயத்தை நினைவு கூர்ந் „Strohr o 69),
ஜோசப் பாலா O 57

Page 32
‘அந்தக் காட்டில் பூனை இல்லை. புலிகள் இருக்கு, பாம்பு இருக்கு, பயங்கர மிருகம் இருக்கிற காட்டில பலரும் தினமும் போய் விறகு பொறுக்கி வருவார்கள். பாட்டிக்கு ராமுவைக் கண்டதும், குறும்புகள் செய்ததும் கோபத்தைத் தந்தது. அதனைக் காட்டாதவளாய், “டேய் ராமு அப்பம் தாறன், விறகைக் கொண்டு வந்து தாறியா? என்ருள் பாட்டி, அவனுே 'என் வீட்டிற்கு விறகு யார் கொண்டு போவது?" எனக் கேட்டு அதனை மறுத்துவிட்டான்.
6.பாமாக்கா. பாமாக்கா. பெரியவர் சொல்லைக் கேக் கேல்லே ராமு அண்ணு அவரை க டவு ள் கோ பி ப் பார். என்னக்கா?" என தன் நிலையில் தீர்ப்புக் கூற பாமாவும் தலையாட்டி ஆமா போட்டாள்.
பிஞ்சு மனதில் ஏற்பட்ட எந்த நினைவையும் குறுகிய சிந்தனையால் குழப்பி விட்டதால் அவள் உணர்வு அப்படிக் கூறியது. மூத்தோர் சொற்கேட்டல் நல்லதுதான். அந்த மூத்தோரும் நல்லதைக் கூறி விளக்க வேண்டும். சுசியின் மனதில் எதிலும் பயத்தையும், எதற்கும் தங்கள் சுகத்திற்கு ஏற்றதான தீர்ப்பையும் கூறியதால் அவள் மனதில் உலக சூழலுடன் பழகிவரும் மனத் தைரியத்தை ஏற்படுத்த முடிய வில்லை.
பாமா தொடர்ந்தாள் கதையை. பாட்டி விறகைத் தூக் கும்போது விறகுக்குள் இருந்த பாம்பு ஒன்று கையைக் கொத்திவிட்டது. பாட்டியின் கத்தல் ராமுவின் கவனத்தைத் தொட்டது.
ஓடோடி வந்தான் ராமு. பாட்டியின் கையில் விஷம் எருதவாறு இறுகக்கட்டித் தன் சிறிய கத்தியால் காயத்தை சிறிதாகக் கீறித் தன் வாயால் உறிஞ்சித் துப்பினன் விஷத்தை.
பாட்டி தப்பினள். தன் வாயில் இருந்த சிறுதுளி விஷத்தால்
ராமு மயங்கினன். அதனைப்போக்க வெற்றிலை போன்ற குழைகளைச் சப்பி அவனது வாயைத் துடைத்து மயக்கத்
58 O உணராத உண்மைகள்

தைக்கலைக்க பாட்டி முயன்றள். இருவரும் தப்பினர். அவன் துணிவையும் மெச்சித் தன் முத்தத்தால் நன்றி கூறினுள் பாட்டி.
'பாமாக்கா.பாமாக்கா ராமு செய்ததுபோல் நானும் செய்யலாமா?" என்று கேட்டாள். 'இல்லையடா சுசிகண்ணு அது கதையில தான் அப்படி. நீ அப்படி செய்திடாதை விஷம் ஆளேக் கொண்டிடும்.? விஷம் நிறைந்த அறிவுரைகள் அவள் மனதில் பதிந்தது. சுசி வாழ்வில் எதிலும் பயப் பிர மையே வளர்ந்தது. தன்னல் எதுவும் செய்யமுடியாதவளாய் தனியே எங்கும் செல்லத் துணிவில்லாதவளாய் உளத்தாக்கம் ஊட்டி வளர்த்த வாழ்க்கை அவளது உளவளர்ச்சியையும் ஊறு செய்தது. அவள் முன்னே பலரும் அவளைக் கோழை என்றும், பயந்தாங்கொள்ளி என்றும் கூறுவதைக் கேட்டு அவள் மனம் பேதலித்தது. பாமாவின் வளர்ப்பில் உணவைக் கொடுத்தாள், உடையைக் கொடுத்தாள். நல்ல உளவளர்ச்சி யைக் கொடுக்கவில்லையே, என்று காலம் தாழ்த்தி ஞானம்
பிறந்தது. O
ஜோசப் பாலா O 59

Page 33
நல்ல இடத்து
சம்பந்தம்
“莺 என்ரா தேவையில்லாத பிரச் சினைக்கெல்லாம் போய் வீணுய் பகைத்துக் கொள்கிருய்" முன்வீட்டு சசியைப் பார், தானுண்டு தன்வேலையுண்டு. படிக் கப்போன படிச்சிட்டு வாறதுக்கு உனக்கேன் தேவையில்லாத கூட்டமெலலாம்.
கனகம்மாவின் குரலில் கனமான வார்த்தைகள் பிறக்க ஞாயம் உண்டுதான். கல்விச் சூழலில் மாணவர்கள் அங்கும் இங்குமாக டியூட்டறி என்றும் பல்கலைக்கழகம் என் றும் பதறித்திரியும் தின்னவேலிச் சூழலில் இருந்து பார்க் கும்போது கனகம்மாவின் மனதில் தன் பிள்ளையும் உயர்ந்த படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆவலால் கணவன் இறந்து ஏழு ஆண்டுகள் சென்றும் தன் கடின உழைப்பால் தன் மகன் சத்தியசீலனை படிக்க வைத்தாள். அவனது எதிர் காலத்தைக்கண்டு மகிழ, அவள் கண்டகனவை நண்வாக்கு வான் என ஏங்கித் தவிக்க வீட்டுச் சூழலில் எல்லோரும் படிப்பில் அக்கறை செலுத்தும்போது இவனே பிழைகளைப் பொறுக்காது போராட்டம் நடாத்துவதும், திட்டங்கள் தயா ரிப்பதிலும் பல்கலைக்கழகத்தில் முன்நிற்பான்.
நீதிக்காகக் குரல் கொடுக்காதவன் மனிதன் என்று எப்படிச் சொல்வது அம்மா? என்ருன் சத்தியசீலன்,
60 O உணராத உண்மைகள்
 

நீ கொஞ்சம் படிச்சிற்றய். உனக்கு ஒண்டும் சொல்ல எலாது; அப்பா மாதிரி நீயும் ஆருக்காகவும் அலையிருய் ஒழிய உன்ாவீடு இருக்கு, தங்கைச்சிமாற்ற எதிர்கரலம் இருக்கு எண்டு ஏதும் முயற்சி செய்யிறியோ? ஏதோ. என்ர கையும் காலும் ஒயும்வரைக்கும் உழைச்சுப்போடலாம். பின் நீ பாக்க வேணும் எண்ட பொறுப்புத்தானும் இருக்கே உனக்கு; ஏன்ரா வீண் வம்புகள். நீயும் அவங்களேப்போல பிரச்சினேசளில தலையிடாம படிச்சு பட்டம் பெற்று ஏதும் நாலு பணத்தை உழைக்கப் LJITIT007.
இதுவரை அவள் இப்படி பேசியதில்லைத்தான். பெண் பிள்ளைகளைவிட இவனுக்குச் செலவழித்ததுதான் அதிகம் அதற்காக அவள் பேசவில்லை. அவனின் எதிர்காலத்தை எண்ணியே இப்படிக் கூறினுள் கனகம்மா.
'தாரு பரமசிவம் அண்ணையே, என்ன இந்தப் பக்கம்." இல்லை கனகம்மா. உன்ர மகன் என்னவாம். சோதினை வரப் போகுது, சோதினை எப்படிச் செய்யப்போகிருணும்.
இவன் எப்படி திரிஞ்சாலும் இரவிலை படிச்சுக் கொண்டுதான் இருக்கிருன் அண்ணை.
இதென்ன நீ சொல்லுறது. போராட்டம் முடி யா ம சோதினை எப்படி நடக்கிறது. அதைத் தள்ளிப் போட்டு சோதினையைச் செய்யிறதுக்கு சும்மா சிறுபிள்ளை வேலைகளால எத்தனை பிரச்சனை, எத்தனை செலவு.
வன் அண்ணை அங்க தானே எத்தினை பெடியள் இருக்கி றங்க. ஏன் உங்கட மகன் சசியும் இதுகளே நிப்பாட்ட முயற் சிக்கலாம் தானே.
இஞ்சே கணகம் உன்ர பிள்ளே மாதிரி எல்லாத்திலையும் என்ர மகன் நிக்கமாட்டான். படிப்புக்கெண்டு போனவன் அதோட நின்றிடுவான். உன்ர பிள்ளைதான் ஆக்களை சேர்த்து போராட்டம் அது இது என்று எல்லாத்தையும் குளப்பிக்
Göggů usůT O 61

Page 34
குகாண்டு இருக்குது. இதால எங்களுக்கு எவ்வளவு தொல்லை தெரியுமே கனகம்.
என் அண்ணே நீங்க கஸ்ரப்படுகிறியள்?
அதேன் கேக்கிருய் கனகம். லண் டனி ல இருந்து ஸ்பொன்சர் வந்திருக்கு. இந்த சோதினையையும் செய்திட்டு போன பிறகு அங்க படிச்சு உழைக்கலாம் எண்டு பாக்கிறன். பொம்பிளை வீட்டார்தான் இதுவும் ஒழுங்கு பண்ணினம்.
அதுக்கிடையில ஒழுங்காச்சாண்னே கலியாணம்?
ஒம், ஒம், பேப்பரில வந்த விளம்பரம் பார்த்து போட் டன். எதோ சரிவந்திட்டுது.
பொம்பிளையை தெரியுமாண்னே?
அதை அங்கதான் போய் பாக்க வேணும். நல்ல வசதி யோட ரிக்கற்றும் அனுப்பி படிக்கவும் ஒழுங்கு செய்யிற எண் டாப்போல நான்தான் போட்டனன். இப்ப சோதினை முடி யத்தான் மகன் சசிக்கு சொல்லுவம் எண்டு இருக்கிறன். என்ர மகன் நான் போட்ட கோட்டைத் தாண்ட மாட் டான் தெரியும்தானே. அதுதான் நான் எதோ நினைச்சிருக்க இவங்கட போராட்டம் எல்லாம் இப்ப என்னத்துக்கு, அது தான் நீயும் உன்ர மகனை சொல்லித் தி ரு த் தி ன என்ன கனகம்?
ஊருக்காக மனம் நோகேல்லை. அவர் வீட்டுக்காகவல்லோ முதலைக் கண்ணிர் வடிக்கிருர். மேலிடத்து சம்பந்தம் எல் லாம் குணம், நலம், இனம் பாக்காது பணம், பவிசு, படா டோபம் பாக்க பொருத்தமும் சரிவந்திடுது. குப்பை குப்பை யோடு தான், பணம் பணத்தோடதான் சேருது என மனசுக்குள் குமைந்தவளாய்.
அண்ணை இப்ப பரீட்சைக்குத்தான் படிக்குதுகள் எண்டா
உங்கட கதையைப் பார்த்தா கலியாணத்துக்காகவும் படிக்க அவசரப்பட வேண்டிக் கிடக்கு.
62 O உணராத உண்மைகள்

உனக்குத் தெரிஞ்ச அளவு கன க ம் இந்த பெடியள் உணருதுகள் இல்லையே பார்.
எனண்ணே நீங்கதான் ஊருக்கு பெரியவராச்சே, ஒருக்கா சொல்லிப் பாக்கிறதுதானே.
அதுதான் நானும் யோசிக்கிறன். நீயும் உன் மகன்ர மனத்தை திருப்பப் பார் கனகம், நான் போயிற்று வாறன்.
என்னவாம் பெரியவர். என மகனின் குரல் கேட்டு கனகத்தின் நிலையோ தர்மசங்கடப்பட்டது. அவனது நிலைக்கு எதிர்மாருன சுயநல சித்தனை. இதில் எப்பக்கம் சாய்ந் தாலும் தாக்கம் மிருதங்கம்போல் இரண்டுபக்க அடிதான் என எண்ணியவளாய்; இல்லை சுசியின் திருமண விடயமாக சொல்லிற்றுப் போழுர்,
ஆரு சுசிக்கு திருமணமா?
என் அவன் முடிக்கப்படாதோ? அவனுக்கு என்ன குறை? என்ருள் கனகம்.
அவனும் ஆம்பிள்ளைதான் ஆனல்.
என்ன ஆனல் என்று அதட்டினுள் கனகம்.
அவன் சசி ஊரோடதான் கலியாணம் கட்டுவான். அது கூட அந்த பெரியவருக்கு தலைவலியாய்தான் இருக்கும். என்ருன் மகன் சத்தி.
அந்த மனுஷன் சொத்து, மேற்படிப்பு என எதிர்பார்த் திருக்கு இதைக் கேட்டா.
என் அம்மா அவருக்கு இந்த ஆசை. பாவம் அவருக்கு ஆறுதல் சொல்லு,
ஆரடா தம்பி அந்தப் பெட்டை. அதுதான் கிளிநொச்சி கணேசின்ர பெட்டை.
ஜோசப் பாலா O 63

Page 35
ஆரு. கணேஸ், இப்ப நடந்த கலவரத்தில் ஆமி கெடுத் துதே அந்தப் பெட்டையா?
ஓம், ஓம் அதுதான் சசி தன்ர படிப்பில் அகதிகள் பற்றி வரலாற்றை ஆய்வுசெய்து எழுத விபரம் திரட்ட கிளி நொச்சிக்கு போனவன். தெரிந்த வீடு எண்டு அப்பா கூறின ராம். அதால அங்க தங்க சந்தர்ப்பம் கிடைத்தது. அப்ப அவர்களின் அன்பு உபசரிப்பையும், அவர்கள் வீட்டு நிலை யினையும் அறிந்தவனுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததாம். இங்க வந்ததும் தன் எண்ணத்தோடு அவர்கள் செய்த உதவிக்கும் நன்றி சொல்லி கடிதம் போட்டானும், அக்கடி தம் இப்போ தொடரத்தொடர இந்த முடிவு வந்து சசி படிப்பு முடிய திருமணம் எண்டு முடிவு கட்டினனும் கடிதம் கூட கொஸ்ாலுக்கு வாறதால வீட்டுக்கு தெரியாதாக்கும் என்ருன் சத்தியசீலன்.
என்ரா இவனுக்கு இந்த எண்ணம் வந்தது?
என் அம்மா அவளுக்கு என்ன குறை?
எட தம்பி ஊர் அறிஞ்ச உண்மை அது. இப்படி நடந்தா அவங்க குடும்ப கெளரவம் என்னுகும்? இவன் சசிக்கு என்ன விசரோ?
என் அம்மா அவன்தான் உண்மையை உணர்ந்து வாழ் வளிக்க முன்வாருன். அவள் முன்பு இப்படி கெட்டவளா? எதிர்பாராமல் நடந்த விபத்து போன்றதே அந்த நிகழ்வு. இதற்காக இந்த சமூகம் அவளை தள்ளி வைத்தால் இப்படி எத்தனை பேருக்கு வாழ்வில்லாமலும் வீண் கதைகளோடும் வாழாவெட்டியாய் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். வீரர் அதிகம் ஆனல் செயல் வீரன்தான் சசி போன்ற தியா கிகள். அவர்கள் வாழ்விற்கு வசை பேசாது வழி காட்டி யாய் இருந்தால் எத்தனை ஊமை நெஞ்சங்களின் வாழ்வு மலரும் அம்மா.
64 O உணராத உண்மைகள்
 
 

அது ஏதோ பேசேக்க நல்லாயிருக்கு நடைமுறைக்கு இப்ப ஆற்ரு முன்வருவாங்கள்?
ஏன் அம்மா அவர் லண்டனில பாத்த பெட்டையை பற்றி என்ன விளக்கம் உண்டு. பணம், வசதி, எதிர்கால வளர்ச்சி பற்றி சிந்தித்தாரே அவளது நிலை, குணம், மன விருப்பம் அறிய முடிந்ததா இல்லையே, இப்போ ஆடு, மாடு போல பொருட்களே எற்றுமதி செய்வதுபோல் மாப்பிள்ளைகளை ஏற்றுமதி செய்யும் போலிக் கெளரவத்தைவிட உண்மை அறிந்து விரும்பி வாழ்வு அளிக்கும் இந்த தியாக செயல் எவ்வளவு மேல் அம்மா.
உன் கதையைப் பாத்தா நீயே நிண்டு நடாத்தி வைப் பாய் போல இருக்கு.
இது என்னம்மா இதுபோல பல பிரச்சனைகளை தீர்க்க வெளிக்கிட்ட நாங்களும் இதுமாதிரி வாழ்ந்தால் பிரச்சனைகள்
சுமுகமாக நீங்கும் அண்டைக்கு கிளிநொச்சியில நடந்தது
இண்டைக்கு இங்க நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும். அதை மாறி நினைக்கும்பொழுதே எங்களால தாங்க முடி யல்லே. அப்ப இந்த மனநிலையில் எல்லாரும் இருந்தா அதற்கு யார் அம்மா பொறுப்பு, பிரச்சனைகளைக் கண்டு விலத்தி ஓடாம அதில் இருந்து மீளப்பாக்கிறதுதான் புத்தி சாலித்தனம். சசியின் பிரச்சினையும் இப்படிப்பட்ட சூழலில் இருந்து எழுந்ததுதான். இதனை நிறைவேற்ற நாங்களும் சேர்ந்து உழைக்கத்தான் போறம்.
கனகம். கனகம் இஞ்சவாடி ஒரு கதை.
என்னண்ணை என்ன விஷயம்?
எடி குடி முழுகி விட்டுதடி, குடி முழுகிவிட்டுது. என்னண்ணை செல் விழுந்த மாதிரி கத்திறியள்.
இப்ப அது விழுந்தா பரவாயில்லை. அழிஞ்சு போயிடலாம். இது இப்படி நடக்கும் எண் டு நான் கனவிலையும் நினைக் கேல்ஸ் கனகம்.
ஜோசப் பாலா O 65

Page 36
அது என்ன அண்ணே? என்ர பிள்ளை பவுண் எண்டும் உன்ர பிள்ளை இரும்பு எண்டும் நினைச்சன். இப்ப இவன் சசியின்ர கடிதம் ஒண்டு பாத்தன்ரி. படிக்கிறன் படி க் கிற ன் எண்டு கணவதியின்ர பெட்டைக்கு கடிதம் எழுதி கலியாணத்துக்கும் எ ல் லோ நாள் குறிச்சிட்டான். எங்கட குலத்தில இல்லாதது நடக்க நான் விடமாட்டன். அப்படி நடந்தா அவன் எனக்கு பிள்ளை யில்லை எண்டு தலைமுழுகிட்டு இருப்பன். என்ன டி நான் சொல்லுறன் நீ ஒண்டும் பறையாம இருக்கிருய்.
என்னண்ண இந்த நாளேயில எதை ப  ைற யி றது. முன்னைய காலமே நாம நினைச்சது நடக்க.
ஏன்ரி நீயும் எதோ தெரிஞ்சமாதிரி கதைக்கிருய்? ஓம் அண்ணை. இதை அறிஞ்சிட்டுத்தான் உன்னே ட கதைப்பமெண்டா நீயும் பதறி வாருய்.
அப்ப என்ன செய்யச் சொல்லுருய் கனகம்?
உனக்கு வாரிசு இவன்தான். அவன் விருப்பம் கேளாம நீகூட பாக்காத லண்டன் சம்மந்தத்துக்கு சம்மதம் தெரிவிக் கிருய். அவன் சுசி தன் வாழ்க்கைக்கு தான தெரிவுசெய்யிற சுதந்திரம் அவனுக்கு இல்லாட்டி மற்ற சுதந்திரங்கள் அவ னுக்கு தேவையில்லாததாய் போயிட்டுது. அது தா ன் இந்த முடிவாக்கும். நீ எப்படி வெறுத்தாலும் ஊர் உன்ர பிள்ளே யின்ர பக்கம்தான் நிக்கும். உன் மனத்துக்கு இது கஷ்ட மாய் இருந்தாலும் ஏதோ உன் பிள்ளை வாழ்விற்கு நீயே குறுக்க நிற்கிற மாதிரி இருக்கக் கூடாது. நல்லதை செய் யேக்க நாலு கரைச்சல் வாறதும் உண்மைதான். என கன கம்மா அடுக்கிக் கொண்டே போனுள். -
எதுமே சொல்ல இயலாது பிரமை பிடித்தவராய் நின் ருர் பெரியவர் பரமசிவம்.
அப்போ எங்கோ இருந்து மங்கல ஓசை மணவிழாவை நினைவுபடுத்தியது. O
66 O உணராத உண்மைகள்

ஆத்ம சாந்தி
கிளியக்கா கிளியக்கா எங்க நிக்கிறியள்.
தாரு. தீபாவா வாருங்கோவன். வாசலில் நிண்டு பிறத்தி மாதிரி.
இல்லை அக்கா அங்காலையும் போகவேண்டும். அப்பா
வின்ர முப்பத்தொண்டு பத்தாம் திகதி வந்திடுங்கோ. காலை யில பூசையும் இருக்கு. காட் இந்தாங்கோ.
ஏன் பாமா உங்கட அண்ணி வீட்டுக்காறரும் வருவி 607(8Lo?
ஏன் அக்கா உங்களுக்கும் அவ அண்ணிதானே, அவை யளுக்குச் சொல்லி இருக்கு. வருறது விடுறது அவையளப் பொறுத்தது. அண்ணன்தான் அங்க போய்ச் சொன்னது சொல்லாட்டிலும் சரியில்லைத்தானே,
ஓம் . ஒம் அவர் குடுத்த காணியில இருந்து அனுப விக்கலாம், அவவின்ர செத்த வீட்டுக்கு வந்ததுபோல இதுக் கும் அவ வந்து நடத்திறதை விட்டு குளத்தோட கோவிச்சுக் கொண்டு.
அது ஏதோ அவைய முடிவு எடுக்கட்டும் அக்கா. ஏதோ ரத்த உருத்துக்களை மறக்காமச் சொல்லிக் கொண்டு வாறம்.
ஜோசப் பாலா O 67

Page 37
அம்மாவும் அண்ணனும் கண்ட ஆக்களுக்கும் சொல்லிப் போடுவினம். அதுதான் நான் வெளிக்கிட்டனன். போயிற்று வாறனக்கா. என விடை பெற்ருள் தீபா,
மலாயன் பென்சனியர் மரியாம்பிள்ளையின் வருவாயை எதிர்பார்த்து உலை எந்தும் ஜீவன்கள் இன்று அவரது ஆத் துமா சாந்திக்கு எலம் போடுகிறது.
தாரு தீபா.
ஒம், வவா அக்கா,
என்ன இந்தப் பக்கம்.
அப்பாவின்ர முப்பத்தொண்டுக்குச் சொல்ல வந்தனன் அக்கா,
தீபா, வருதிறநில ஒண்டுமில்லை; அவள் கிளி வர்ற தாயிருந்தா. நாங்கள் வரமாட்டம் குறை நினைக்காத, அண் டைக்கு ஏதோ அப்பாவின்ர முகத்தைப் பார்க்க வந்தம். அது மாதிரி இல்ல இது.
என் அக்கா அவவும் உன்ர சகோதரிதானே. அவவோட கதைக்காட்டிக் கதைக்காம வந்திட்டுப் போவன்.
அவள் நிக்கிற இடத்தில் நிக்க எங்களுக்கும் என் ரோசம் இல்லையோ?
நீங்கள் அவையளுக்காக வருறியளோ, அப்பாவுக்காக வருறியளோ, ஏதோ உங்கட இஸ்டம் என்ருள் தீபா,
ஒரு குடும்பத்தில் பிறந்த ஐந்து சகோதரருள் கிளி, தீபா, வவாக்கா, அண்ணன், தம்பி, நோயுற்ற அம்மாவும் இந்தக் குடும்பத்தில் எத்தனை பிரிவுகள் எல்லாம் பணம் சேரப் பாசம் பிரிந்ததே காரணம்.
68 O உணராத உண்மைகள்

யார் பெரியவர் யார் சிறியவர் இதுகளை அளக்க இப்போ எத்தனை பலப் பரீட்சைகள், பிறந்தநாள் கொண்டாட்டம், இறந்தநாள் நினைவுகள் நல்லது கெட்டதில்தான் தங்கள் உயர்வு தாழ்வை அளக்கும் அரங்காகப் பயன்படுத்துகிருர்கள். ஒரு வீட்டில் கொண்டாட்டம் நடந்தால் அதனை மிஞ்ச அடுத்த வீடு திட்டம் தீட்டுகிறது. போட்டிகள் இப்போ பல விதத்தில் ஒழுங்கு செய்கிருர்கள். இதற்கு எழை வீட்டாரும் விதிவிலக் கல்லவே,
இத்தனை உறவும் அன்று பாயில் படுத்த மரியாம்பிள்ளை யைக் கவனித்தனரா, இல்லை அங்கு அவரைக் கவனிக்கத் தங்கம் ஒரு வேலைக் காறி, அவளின் துணைதான் எது வேண் டும். எது கொடுப்பது என்பது, உடை, உணவு, மருந்து யாவும் அவள் பரிமாறிப்பார்த்தாள். இன்று அவரின் ஆத்மா சாந்தி நினைவுக்கும் அழைக்கப்பட்டிருந்தாள். பத்து வருடம் அவ் வீட்டில் இருந்து பார்த்தாலும் அவரது இறப்பின் பின் வெளியேற்றிய ஜீவன்கள் இன்று அழைத்திருக்கிருர்கள். உரிமையுடன; இல்லை கடமைகள் செய்ய. அவளது வரவைப் பார்த்து அடுப்படி காத்திருந்தது. இனி அவள் உணவும் சபைகள் முடிந்தபின் அவர்கள் கூறித்தான். இது எங்கும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. ஆனல் உறவைப் பலப் படுத்த இப்படி எத்தனை விழாக்கள் போலி வேடம் போட அரங்கமைக்கிறது.
இதுபோன்ற நிகழ்வு போல்தான் மரியாம்பிள்ளையின் நினேவு நாளும் வந்தது. உறவினர், அயலவர் கூடினர். வந்த வர்கள் எல்லாம் உறவுப் பரிமாற்றத்தோடு உணவுப்பண்டங் களைப் படைத்து அதில் உள்ள குறை நிறைகளைச் சிந்திக்க லானர்கள்.
**வவா அக்கா வரவில்லை என்ன செய்வோம் அம்மா" என்ருள் கிளி.
ஒரு மூடல் பெட்டியில சோறுபோட்டுக் கொடுத்தனுப்பு பிள்ளை. அப்பாவின் ஆத்ம சாந்தி உருத்துச் சோறல்லோ,
GeograFů Lu Touvrir O 69

Page 38
அவளும் பிள்ளைதானே. என மகளுக்கு ஞாபகம் ஊட்டினுள் அம்மா,
மூடல்பெட்டிச் சோறு அங்குபோய் அப்படியே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கொண்டு வந்தான் தம்பி ரமேஸ்.
சொல்லச் சொல்லக் குடுத்தியள். இப்ப எப்படி இருக்கு. அண்ணனின் குரல் கேட்டு உணவை ரசித்து உண்ட ஜீவன் கள் உறவை எண்ணிப் பலவாறு விவாதித்தனர். அவரது
ஆத்மா ஆறுதல் அடையவா, அந்தரப்படவா இந்த விருந்து கள். பல இனசனத்தின் மத்தியில் அல்லவா ஆத்மா சாந்தி விருந்து நடைபெறுகிறது. இது தேவைதான?
எத்தனை ஜீவன்கள் ஒருநேர உணவிற்கு வசதியற்று அகதி கள், அனதைகள், முதியோர், நோயாளர் இல்லங்கள் காத் திருக்க உணவு ருசி பார்க்கவும் உறவின் பலம் பார்க்கவும் தான ஆத்மசாந்தி நினைவுகள் இது அண்ணனின் வார்த்தை யில் வந்த கருக்களாக இருந்தது. -
எவரும் உண்மையில் மரியாம்பிள்ளையின் ஆத்மசாந்திக் காக மனம் திறந்து வேண்டவில்லை. மாருக உணவிலுள்ள குறைகளையும் உறவிலுள்ள தடைகளேப்பற்றியுமே எப்பமிட்ட னர். இதனை உணர்ந்தனரா இன்று, இது தொடர்கிறது இங்கு. ஆனல் உண்மையில் கண்ணிர்விட்டு அவர் ஆத்மாசாந்தி அடைய பிரார்த்தித்து அவரது விருப்புக்களை அறிந்து படை யலுக்கு தயார் செய்கிருளே தங்கம். அவள் மனம் பிரார்த் திக்கிறதுதான். அவள் உணவை எதிர்பார்த்து இருக்கவில்லை. அது இல்லாமலும் போகலாம்.
அண்ணன் ஒரு முடிவுக்கு வந்தான். அடுத்த ஆண்டு நினைவு அவனது பொறுப் ல்ெ என்றனது.
உருண்டோடிய நாட்கள் வருடமாயின.
70 O உணராத உண்மைகள்

அன்று காலைத் திருப்பலி அதில் கலந்தோரைத் விரத வீட்டிலிருந்த உணவு விரைந்தது முதியோர் இல்லத்தை நோக்கி.
அங்கே சென்றவன் அன்போடு முதியோரை அணுகினன்.
அப்பr எப்படிச் சுகம்?
தாரு தம்பி தாரிடம் வந்தீர்கள்?
உங்களிடதான்.
இல்லை மாறிச் சொல்லுகிறீர்கள். அவராய் இருக்கும் கேட்டுப் பாருங்கள், இல்லை அப்பா உங்களிடம்தான்.
தம்பி நீர் தவறக எண்ணிவிட்டீர். நீர்தேடி வந்தவர் LIT?
உங்களைத்தான் தேடிவந்தேன்.
என்னையா? இதுவரை நான் இங்கு வந்து எழு வருடங் கள் என்னை எவரும் தேடிவருவதில்லை. இப்போ யாரப்பா நீ?
ஏன் அப்பா அப்படி கூறுகிறீர்கள்?
இங்குள்ள பலரும் இப்படித் தினம் எதிர்பார்த்து எமாந் தவர்கள்தான். சிலருக்கு மட்டும் இடையிடை வந்து நலம் விசாரித்துச் செல்வதைப் பார்த்து இருக்கின்ருேம். எம்மனம் எத்தனை வேதனைப்படும். எம்மைப்படைத்த இறைவனை ஆத் திரத்தில் திட்டியதும் உண்டு. ஆனல் இன்று அவருக்கு நன்றி கூறவேண்டும்.
அப்படி என்னப்பா நடந்தது?
தம்பி நான் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர் களில் ஒருவன். கூலிவேலை செய்து சிவித்தேன். திருமணம் செய்து பிளளைகளையும் பெற்றேன். மனைவி இறந்து விட்டாள்.
ஜோசப் பாலா O 71

Page 39
பிள்ளைகள் இப்போ பெரிய இடத்தில் இருக்கிருர்கள், என்னை அப்பா என்று கூறக்கூட வெட்கம், இந்நிலையில் எனது எதிர் காலம் இங்குவரவேண்டியதாயிற்று. வந்த நாள்முதல் நான் அணுதை என்றே கூறினேன். காரணம் அவர்கள் பெயருக் குக் களங்கம் வராமல் இருக்கவே.
ஆனல் இதுவரை எவரும் என்னைத்தேடவும் இல்லை. நான்கூட இனி எவரிடமும் கதைக்காமல் இறந்துபோய் விடு வேணு என எங்கியதுண்டு. சிலரிடம் வருபவர்களைக்கண்டு எங்கியதுண்டு. இத்தனை வருடங்களில் என்ன என்றுதேடி வந்த உன்னை நினைக்ஸ்கயில் இறைவன் எனக்கு ஆறுதல் தந்துள்ளான். இனி ஆறந்தாலும் கவலை இல்லே. கதைக்கா மல் இறந்து விடுவேனே என்றிருந்தேன். இப்போ கதைத்த தால் இனி இறப்பைக்கண்டு பயப்படவில்லை. என்னைப்படைத்த இறைவன் எனக்கும் ஒருவனை அனுப்பி ஆறுதல் கூற வைத் தான். அவருக்கு எனது நன்றிகள் என்ருர் முதியவர்.
அப்போ அவனும் தன் பார்சலைப் பகிர்ந்து உணவைக் குழைத்து அவருக்கு ஊட்டத் தயாரானன்.
அத்தனை முதியோரின் வேண்டுதலும் இறைவா சாந்தி சாந்தி என மனதார வேண்டியது. O
12 O உணராத உண்மைகள்
 


Page 40

guns|Dలరిగా } لا ځلاند) چه په دا، b

Page 41
జిన్జిగౌశ్లో LPGF =
ஆழமான இந்தன்வி {ୋଙ୍କୁ ଡିପ୍ଲୋ ରୁ! ଏମିତି ସ୍ଥିତି
66) ରା ଔ ଜୌ) *}} type_tଶକ୍ତି’ " > மறைந்துகொள்ள நே
ਛੁ “ ಛೀಗೆ: $7 ఉత్తా
Qān(దేరొ_**- கன் ஈழத்தின் മട്ടു മിഖങിധ്
கொண்டிருக்கிலு ೩1ರ್ಣಿ(ಸ್ಥ- @f... உணர்த்தும் சமவலுத் தி
இவரது உணர தொகுப்பு எமது 5வது
s
உள்ளத்து ஆணர்வூக
தொகுப்பு வசிகி ெ எழுச்சீடை, மறுமலர் எமது எதிர்பார்ப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- s s
இகடின உழைப்பாலும் ட
நாளர்.
ஆக்க இலக்கியங்களாக மாற்று என்ற புனேபெயரில் அடிக்கடி வி វិញ្ច្រាំ
డిస్టోనీతో နှီးနှီး။ சமநிலைத் தின்மை
தவிரதி இவரின் ಟ್ರಿಣೇಟಿ இகன் வாரப்பதிப்புகளிலு: க் த டி வெளிவந்து Ló-豪彝 *
堑
இவரும் జై తొలిక్ శ్రీశ్రీ
நஞ்சங்களில் ஒரு பரவலான இபை ஏற்படுத்தும் என்பதிே