கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரட்சகர் இயேசு

Page 1

\ s
一)
|
|- s. |--|-|- |-
·- |- ... !|-|
·- )· |-\, - |--|- |-●

Page 2
,
 
 

.
ܕܐܝ& ܘܐQ ܢܚܝܙ 8ܙ ܢ اتش علند15 جی ہلا$ں پیداG)\@ IN గడగܟܪܶܨ(D_>)
*二三°
فيسومجموطنه نارiيې لاراو کم تا 8 للاC
ゲみの ٥ ميجة هي شبه هي هيئة
சீசர் அக, "క్ష్కా_

Page 3

இரட்சணிய யாத்திரிகம் இரண்டாவது குமரப்பருவம் இரண்டாவது இரட்சணிய சரிதப் படலம்
(செய்யுள் 804-414)
N
*、*/
17
No
~ இரட்சகர் இயேசு -
1972 இல் இருந்து
க. பொ, த (கலே, உயர்தரம்) தமிழ்ப்பாடச் செய்யுட்பகுதி
。
விளக்கம்
டுேலரிைன்?

Page 4
→ আলােপরু স্তম্ভ কেল
முதற் பதிப்பு: 1971
(உரிமை பதிப்பாளருக்கு)
வில: ரூ. 3-13
அச்சு, வெளியீடு: நீ லங்கா புத்தகசாலே, யாழ்ப்பாணம்
 

*
பதிப்புரை
1972ஆம் ஆண்டிலிருந்து க. பொ. த. கலை, உயர்தர மாணவர்களுக்கு உரிய செய்யுள் இலக்கியங்களில், இரட் சணியசரிதப் படலமும் (செய்,804-414) ஒன்று.
இம்முறை, சைவ கிறிஸ்தவ இஸ்லா மிய இலக்கியங்கள் தேர்வு நூல்களாக இடம்பெற்றமை பாராட்டுக்குரியது. ஒரு சமயத்தவர் மறுசமயதத்துவங்கள், ஆசா சங்கண்ப் புரிந்து கொள்ளுதல் சமரச வாழ்வுக்கு இன்றியமையாதது. இவ் "ஏற் பாட்டைப் போற்றிடல்வேண்டும், வாழ்த் திடல் வேண்டும்.
குறிப்பிட்ட செய்யுட் பகுதிக்கு உரை விளக்கம் தந்துள்ளார் தமிழ் உலகிற்கு நன்கு பரிச்சியமான "லெனின்". உரைத் துப் பார்க்கப் பார்க்க உரைவிளக்கத்தின் உயர்வு புலப்பட்டுக் கொண்டே இருக் கும். மதிப்புக்குரிய "லெனினுக்கு" எமது மனமார்ந்த நன்றி. (சாந்தி!)
A Málkasub.
பதிப்பாளர். ரீ. லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
1 - 2 - 7.

Page 5
ii
இரட்சணிய யாத்திரிகம்
வீரமாமுனிவரின் தேம்பாவணிக்கு அடுத்ததாக, கிறிஸ்தவ தமிழ்க் காவியங்களில், சிறந்ததெனக் கருதப்படுவதும் போற்றப் படுவதும் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். தழுவல் காவியங்களிற் தலைசிறந்த சிலவற்றில் இதுவும் ஒன்றென எண்ணப்படுகிறது. இஃது கிறிஸ்தவ சமயக் காவியமாயினும் மறுசமயத்தவராலும் விரும் பிப் படிப்பதற்கான ஒரு நூலென்ற பெருமையையும் கணிசமான அளவுக்குப் பெற்றுள்ளது. இன்னும் பெருங்காப்பியங்களில் ஒன்ருக வும் இடம் பெற்றுள்ளது. -
இதன் ஆசிரியர் தமிழகத்து. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டை மகா வித்துவான் H. A. கிருஷ்ணபிள்ளை (28-4 - 1827 - 3 - 2-1900) ஆவர். பிறந்த சமயம் வைஷ்ணவம் ஆகும். இறந்த சமயம் கிறிஸ்தவசமயம் ஆகும். அஃதாவது 1868-ம் ஆண்டு ஹென்றி அல்பிரட் என்ற பெயருடன் ஞான தீட்சைபெற்று. கத்தோலிக்க மதத்திற் சேர்ந்தவர். நெறிமாறினும் நன்னெறியில் வாழ்ந்தவர். கத்தோலிக்க மதத்திற் சேர்ந்த காலத்தில் அவர்தம் அனுபவத்தைப் பற்றி அவரே வெளியிட்டவற்றில் பின் தரப்படுவது ஒருபகுதியாகும்.
"அன்றே யான் பூர்வத்தில் தெரியாது ஒழுகிவந்த இந்து மதானுசாரச் சடங்குகளெல்லாம் என் மனதைவிட்டு ஒழிந்தன. மார்க்க சின்னங்களும் என் சரீரத்தைவிட்டுப் பறந்தன. வெகு காலமாக என்னப் பந்தித்திருந்த ஜாதிக்கட்டும் ஒழிந்தது. இவ்வாறு சர்வவல்லவரது திருக்கரம் அங்கங்கே நேர்ந்த பல விக்கினங்கள், தடை யிடையூறுகள் முதலிய எல்லாப் பிரதி பந்தங்களையும் சேதித்துப் பெருவழியினின்று ஒதுக்கி, இடுக்க வழி முகப்பின் திருக்கடையிலுள்ள ஜீவ வெளிச்சத்தண்டை யில் கொண்டுவந்து சேர்த்தது.'
இரட்சணிய காவியத்தை இயற்றுவதற்கான காரணத்தை அதன் சிறப்புப்பாயிரத்திற் கூறும்பொழுதும், பின்வருமாறு கூறுகின்றர்:
' என்னனேய பாவியரிந் நிலவுலகில் யாண்டுமிலர் எனினும் நாயேன் தன்னையொரு பொருளாகத் தடுத்தாண்ட கிறிஸ்துயேசு சாமிசெய்ய பொன்னனைய திருவடிக்குச் செந்தமிழ்மா லிகையொன்று புனேவான்
எண்ணி துன்னுநவ ரசஷ்ணிய யாத்திரிக மலரெடுத்துத் தொடுக்க லுற்றேன்.""

iii
திரு. கிருஷ்ணபிள்?ளயும் தடுத்தாட் கொள்ளப்பட்டவராம். அவர் காவியங் கண்டதை நினைக்கும் பொழுது, சைவநெறி மக்கள் மனதில் சுந்தரமூர்த்திநாயனூர் நினைவு கண்டிப்பாக வாத்தான் செய்யும், தடுத் தாட்கொள்ளப்பட்ட முறையும் வழியும் வேருபினும் இருவரும் ஆட் கொள்ளப்பட்டவர்கள்தானே. அத்துடன், சுந்தரமூர்த்தி அடிகள் பெரியபுராணமென்கின்ற பாரகாவியத்திற்கு, "தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் ' எனத் தொடங்கும் பதிகம் பாடிக் கருவிட்டவர். கிருஷ்ணபிள்ளை பரதேசியின் மோட்சப் பிரயாணத் தைக் காவியமாக்கி அதற்கு எருவிட்டவர். இவ்வேறுபாடு தழுவ லால் நேர்ந்திருக்க வேண்டும்.
இரட்சணிய யாத்திரீகம் தழுவற் காவியமென முன்னரே குறிப் பிடப்பட்டுள்ளது. எதனை அல்லது எவற்றைத் தழுவப்பட்டது என்ற விணுவுங் கூடவே எழுகின்றது. கிருஷ்ணபிள்ளே அவர்களே இரட்சணிய யாத்திரிக முதற்பதிப்பு முகவுரையில் அதற்கு விடை சொல்லி வைத்துவிட்டார்.
'இரட்சணிய வேதத்தின் உத்தரபாகமாகிய (1) சுவிசேஷ சத்தி யத்தையும், ஆங்கில பக்த சிரேஷ்டரொருவர் இங்கிலிஷ் பாஷையில் வாசக ரூபமாக, அதியுசிதமாக, வெகு விநயமாக, வரைந்து தந்த (2) "பில்கிரிம்ஸ் புரோகிரஸ்" என்ற கிரந்தமொன்று அநேக பாஷை களில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவருமாறு தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெகுகாலமாய் இந்நாட்டிற் பயன்பட்டுவருகிற (3) "மோட்சப் பிரயாணம்' என்ற புஸ்தகத்திலடங்கிய அருமையான பொருளையும், அதன் கருத்தையுந் தழுவித் தேவகிருபையை முன் னிட்டு இரட்சணிய யாத்திரிகம் என்ற இந்நூலினைச் செய்யுட்பாவாக எழுதத் துணிந்தேன் 1 ஆகவே, சுவிசேஷ சத்தியத்தைப் பற்றியும், "பில்கிரிம்ஸ் புரோகிரஸ், மோட்சப் பிரயாணம் என்னும் நூல்களைப் பற்றியும் சிறிதளவாவது அறிதல் வேண்டும்.

Page 6
iv
(1) arsa(3JLráI76 sir (GOSPELS)
கிறிஸ்தவர்களுடைய வேதநூல் ஆங்கிலத்திற் 'பைபிள்' என வும் தமிழில் பரிசுத்த வேதாகமங்கள் எனவும், விவிலிய வேத மெனவும் அழைக்கப்படும். இது பழைய ஏற்பாடு (Old Testament) , புதிய ஏற்பாடு (New Testament) என்ற இரு பகுதிகளைக் கொண் டது. பழைய ஏற்பாடு கிறிஸ்துவிற்கு முற்பட்ட காரியங்களைக் கூறு வது. 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருட்டித் தார் என்பது தொடக்கம், மனிதவரலாற்றில் தோன்றிய முது பெரியார்கள் அவர்களுடைய அறிவுத் திரட்டு, நியாயப் பிரமாணங் கள் ஆன்றேர் வாக்குகள் முதலியன இடம்பெற்றுள்ளன. ஆதி யாகமங் தொடக்கம் "மல்கியா'வின் ஆகமம்முடிய முப்பத்தொன்பது ஆகமங்களாகப் பழைய ஏற்பாடு முடிகின்றது.
புதிய ஏற்பாடு கிறிஸ்துவிற்குப் பின் நிகழ்ந்தவற்றைக் கூறு வது. அஃதாவது கிறிஸ்துவின் உபதேசங்களையும் அவர் வாழ்க்கை வரலாற்றையும் முழுமையாகக் கூறும் சுவிசேடங்கள் புதிய ஏற் பாட்டின் முதற்பகுதியும் முதன்மையான பகுதியுமாகும்.
சுவிசேட மென்பதற்கு நற்செய்தி' எனப் பொருள் சொல்லப் படுகின்றது. ஆணுல் சுவிசேடமென்ற சொற்களின் கருத்தைச் சற்று ஆழமாக அறிதல் வேண்டும். சுவிசேடம் சு + விசேடமெனப்பிரியும். சு - நன்மை என்ற கருத்தைத் தரும் வடமொழி உபசர்க்கமாகும். (உபசர்க்கம் - வடமொழி முதனிலை அடைமொழி (Prefix).) விசேடம்சிறப்பு எனவே முடிவான நன்மையும் முடிவான சிறப்பும் (விண்ணக அரசில் வீற்றிருத்தல், மோட்சம்) தருவதற்குக் காரணமான யேசு வின் உபதேசங்களும் வாழ்வுமென்பதே சுவிசேடமென்பதின் நிறை வான கருத்தாகும். (Gospel) என்ற ஆங்கிலப் பதத்திலும் சுவிசே, ஷம் என்ற மொழிபெயர்ப்பு கருத்துப் புஷ்டியானதுபோற் தெரிகிறது.
விசேடம் - சிறப்பு
*பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” - (திருக்குறள் 358 )
சிறப்பென்னுஞ் செம்பொருளென்பதற்கு, வீட்டிற்கு நிமித்த காரண மாய செவ்விய பொருள் எனப்பதவுரை கூறும் பரிமேலழகர், "எல்லாப் பொருளினும் சிறந்ததாகலால் வீடு சிறப்பெனப்பட்டது," எனச் சிறப்பு என்ற சொல்லிற்கு விளக்கந் தந்தது மறிக,

t
"சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே ’
என்ற தொல்காப்பியச் சூத்திரப் (தொல், பொருள். 192} பகுதிக்கு உரை கூறும் பொழுது, "சிறந்தது’ என்ற சொற்குச் சிறந்த வீட்டின்பம்" என்றே கச்சினுர்க்கினியரும் பொருளுரைத்தமை தெரிக.
முதலாம் சுவிசேடம்
புனிதர் மத்தேயு (Mattew) என்பவரால் எழுதப்பட்டது. யேசு வின் பன்னிரு சீடர்களில் இவர் ஒருவர். ஆயத்துறையில் வேலை செய்து கொண்டிருந்தவர். வேலைத்தலத்திலேயே இயேசு இவரைக் கண்டு தம்மைத் தொடருமாறு அழைத்தார். இவரும் தொடர்ந்து சீடரானுர்,
இரண்டாவது
புனிதர் மாற்கு என்பவரால் எழுதப்பட்டதாகும். மாற்கு இயேசு வின் கேரடிச்சீடர் அல்லர். சீடரின் சீடர் ஆவர் - புனிதர் இராயப் பரின் சீடர்,
மூன்றவது
புனிதர் லூக்காசு என்பவரால் எழுதப்பட்டது. இவரும் மாற்கு என்பவரைப் போலவே சீடரின் சீடர் = புனிதர் சினைப் பரின் சீடராவார். அப்போஸ்தலர் நடபடியை எழுதியவரும் இவரே UT6. T.
நான்காவது
புனிதர் அருளப்பரால் எழுதப்பட்டதாகும். யோவான் எனவும் இவர் அழைக்கப்படுவார். புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேடம் என்றே எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் முதற் பன்னிரு சீடர் களில் ஒருவர்; முதன்மையானவர், இரட்சகர் உயிர்போன சமயத்தில் சிலுவைய்டியில் நின்ற ஒரேயொரு சீடர் இவரேயாவர். இவரிடமே தம் அன்னையை ஒப்படைத்தார் இயேசு நாதர்.
(2) Pilgrim's Progress
இந்நூல் 17-ம் நூற்றண்டில் இங்கிலாந்தில் வசித்த சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராய ஜோன் பன்யன் (John Bunyan) என்பவரால் எழுதப்பட்டது. (உலகப் புகழ்பெற்ற மகாகவி மில்ர னும் இவர் காலத்தவரே) பாத்திரங்களைச் செப்பனிடும் தொழிலாளி யின் மகனுகப்பிறந்த பன்யன் இராணுவத்தில் பணிபுரிந்தவர். பின்பு இராணுவத்திலிருந்து விலகி மதபோதகர் ஆனர். அநுபூதிமானுகிய பன்யனின் பிரசாரம் கிறிஸ்தவ திருச்சபைக்கு விரோதமாகத் தோன் றவே, பிரசாரத்தை நிறுத்தும்படி தடை உத்தரவு விதிக்கப்பட்டது. பன்யன் அதனை மீறவே பன்னிரண்டு ஆண்டு கால சிறைத்

Page 7
vi
தண்டனைக்கு ஆளானுர், சிறையிலிருந்து கொண்டே பன்யன் மேற்படி நூலை எழுதினுர்,
இரட்சணிய யாத்திரிகம் (Pilgrim's Progress) சிறந்த உள் ளுறைகளைக் கொண்டது. கிறிஸ்துவின் கொள்கையை விளக்கிய போதிலும் அனைவருக்கும் பயன் தரக்கூடிய வாழ்க்கை நூலாகவும் உள்ளது. சொற்சுவையிலும் பொருட்சுவையிலும், ஏன் நகைச் சுவையிலும் கூட உள்ளுறையும் தத்துவமும் மறைந்தும் வெளிப் பட்டும் புரள்கின்றன. -
மனிதப் பண்புகள் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னப் பட்ட ஓர் உருவகக் காவியமாகும் இரட்சணிய யாத்திரிகம். தமிழ் இலக்கியவாசகர்களுக்கு உருவகக் காவியங்கள் புதியன அல்ல. சைவ உலகில் பாராட்டப்படும் கந்தபுராணம் ஒருவகை உருவகக் காவியம். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பிரபுலிங்கலீலை ஓர் உருவகக் காவியம். அண்மையில் வாழ்ந்த நவாலியூர் தங்கத்தாத்தா எழுதிய உயிரிளங்குமரன் நாடகமுமே ஓர் உருவக நாடகமாகும். அநேகமாக தத்துவக் கருத்துக்களைப் பாத்திர மாகப் படைத்த தமிழ் உருவகக் காவியங்களிலும், தனிமனிதனின் பண்புகளை, மனிதனுக்குள் அடங்கியுள்ள ஆசாபாசங்களைப் பாத்தி ரங்களாகக் கொண்டுள்ள பன்யனின் இரட்சணிய யாத்திரிகம் மிகச் சுவையானதாகக் காணப்படுகின்றது.
(3) பரதேசியின் மோட்சப்பிரயாணம்
தமிழில் இரட்சணிய காவியத்துக்கு அடிஎடுத்துக் கொடுத்த, தழுவகின்ற நூல் இம்மொழிபெயர்ப்பே ஆகும். எவ்வித மாற்றமும் இல்லாமல் இதனைத் தமிழில் மொழி பெயர்த்தவர் வண. S. பவுல் என்பவராவர். இஃது ஒருமொழி பெயர்ப்பு நூல் என்று சொல்ல முடியாதவாறு இந்நூல் அமைந்திருக்கின்றது என்பர்.
'பரதேசியின் மோட்சப் பிரயாணம் ஒரு சொற்பனப் பிரபந்தம்’ எனத் தொடங்கும் திருவாளர் பவுலின் முகவுரை, மிக ரசமாக உள்ளது. பரதேசியின் மோட்சப் பிரயாணம் பற்றிய அடக்கம் நூலின் தோற்றுவாயில் கூறப்பட்டுள்ளது.
இவற்றை ஆதாரமாகக்கொண்டு அமைந்த இரட்சணிய யாத் திரிகத்தின் காவியத் தலைவன் ஓர் ஆத்தும விசாரி ஆவன். அஃதா வது விண்ணக வாழ்வை விழைந்து அதற்காக வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொண்ட ஒரு கிறிஸ்தவன் ஆவன்.
'இரட்சணிய யாத்திரிகக் காவியம்பற்றிய முழு விளங்கங்களை யும். இவ் வுரை விளக்க ஆசிரியரால் எழுதப்பட இருக்கும் இரட்ச னிய யாத்திரிகத் திறனுய்வு' என்னும் நூலிற் காண்க.

இரட்சணிய யாத்திரிகம்
இரண்டாவது குமாரட்ருவம்
இரட்சணிய சரித்திரப் படலம்
சாதாரணமான மக்களுடன் சாதாரணமாக வாழ்ந்த கிறிஸ்தவன் ஒருவன் தன் பாவ வாழ்வைப் பற்றி நல்லாக உணருகிறன்; ஈட் டிய பாவமெல்லாம் பெரும் சுமையாகத் தன் முதுகின்மேல் அழுத்து வதையும் உணர்கின்றன். அவன் கையில் உள்ள விவிலிய வேதம் தனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதென்றும், மரணத் துக்குப் பின் நியாயத் தீர்ப்புக்குத் தான் ஆளாகவேண்டிவருமென றும் அவனுக்குத் தெளிவாகப் புரியவைக்கின்றது. எனவே, இது வரை தான் வாழ்ந்த நெறி முஇைகளே மாற்றி, மோட்சம அடைவ தற்கான புதிய யாத்திரைபுெ: ஆரம்பிக்கிறன், ஆசா பாசங் களிலிருந்து விடுதலை பெற்று, மனைவி மக்களைத் துறந்து இகலோக இன்பங்களையெல்லம் உதறித்தள்ளி, மோட்சப் பிரயாணததை ஆரம்பித்த கிறிஸ்தியான், தேவ ஊழியக் காரணுகிய சுவிசேடகன் ஒருவனின் புத்திமதிப்படி திசை திருப்பப்பட்டு மோட்சப் பயணத்தை நிகழ்த்துகின்றன். பயணத்தின்பொழுதெல்லாம் சில வேளைகளில் மனதில் இருள் குவிகின்றது; மனம் இருளைக் குவித்தும் விடுகின் றது. அறியாமையில் இருந்தும் இருளில் இருந்தும விடுபடுவதற் காக, பிரயாண ஆரம்பத்திலே கிறிஸ்தவ திருச்சபை யொன்றில்
சேர்கின்றன்.
(கிறிஸ்தவ திருச்சபை பரதேசியின் மோட்சப் பிரயாணம் என்ற நூலில் சிங்கார மாளிகை என உருவகிக்கப் படுகின்றது. மூல ஆசிரியர் ஜோன் பனியன் இதனை, "பலஸ் பியூட்டிஃபுல் ' (Palace Beautitu) எனக் குறிப்பிடுவர். ** இரட்சணிய யாத் திரிக' ஆசிரியர் 'எழிற் சத்திரம்' என அழகாக இதனைக் கூறினுர்)
எழிற் சத்திரத்தின் வாசலைக் கிட்டிய கிறிஸ்தியான் அந்த இரவில் தான் சிங்கார மாளிகையில் தங்குவதற்கு வாசற் காவலாளன அனுமதி வேண்டுகின்றன்:

Page 8
سے بڑ سے
* இத்தகு தலத்திடை யிரவு தங்கியான் நித்திரை தெளிந்துத யாதி நீங்கவெற் குத்தரங் கிடைக்குமோவுலங் கொடோளினுய் எத்திற னுங்கருத் தியம்பு வாயென்ருன்." ** இரவு தங்கியான் நித்திரை தெளிந்து உதயாதி நீங்க, ” எனச் சிங்கார மாளிகை எனப்பட்ட திருச் சபையின் தத்து வக் கருத்தை ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார், யாத்திரிகனின் வேண்டுகோளைச் செவிமடுத்த காவலாளன், சிங்கார மாளிகையாகிய வினுேத மாடத்துட்குள், யூகி, விவேகி, மெய்ப்பக்தி, நேசமணி ஆகிய கன்னிமாஸ்திரிகள் (கன்னியாஸ் திரிகள்) நால்வர் இருப்பதாகக் கூறி, அவர்களில் ஒருவராகிய யூகி என்னும் கன்னியை அழைத்து யாத்திரிகன் முன் நிறுத்தினுன் , *காசபுரியில் இருந்து சீயோன் மலையை அணுகும் ஆசையால் உந்தப்பட்டுள்ள பரதேசி இவனென்றும், இவன் செம்மைப் பாட்டை அறிந்து வேண்டியன செய்க' என்றும் கூறினுன் காவலாளி.
பூகி (Discretion) தாயான பரிவுடன் அவன் வரலாறு முழுவ தையும் கேட்டறிந்து உளம் நெகிழ்ந்து, தன் தோழியர்களாகிய 6 (Bald (Prudence), ULLág, (Piety) (SB3LDGOof (Charity) ஆகிய மூவரையும் அழைத்து, பரதேசியின் ஆவலையும் ஆசையை யும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினுள். அவர்கள் நால்வரும் அவனை அந்த மாளிகைக்குள இருந்த கன்னிமாட முற்றத்திற்கு அழைத்துச் சென்ருர்கள். நல்லதோர் ஆசனத்தில் அவன் அமர்ந்தான், தாக சாந்தியையும் முடித்தான். தாகம் தீர்ந்த பின்பு இராச் சாப்பாடு தயாராகும்வரை 'பார்ப்பன உத்தமிகள்’ எனக் கவிஞரால் சிறப்பிக் கப்பட்ட கன்னியர் கால்வரும் அவருடன் பல்வேறு காரியங்களைப் பற்றியும் கலந்துரையாடினுர்கள்; பல அனுபவங்களும் பரிமாறப் பட்டன. இன்னும் உணவு தயாராவதற்குச் சற்றுகேரம் இருந்த படியால் நேசமணியென்னும் கன்னிப்பெண், மன்னுயிருக்காகத் தன் னுயிரை இழக்க முன், குமரக் கடவுளாகிய இரட்சகர் இயேசு சிலு வையிற்பட்ட பாடுகளை விரிவாகக் கூறும்படி, பயபக்தி என்னும் கன்னியை வேண்டிக் கொண்டாள். புதிய விருந்தாளியாகிய பரதே சியும் மன்றடிக் கேட்டான்.

i 3 -
1 ஒன்று வேண்டுவ லுன்னத கோமகன் மன்றி ரிரட்சை முடித்த வரம்பினில் அன்ற டைந்த வரும்பெரும் பாட்டின இன்றி சைக்க மன்ருடுகின் றேனென்ருன் '
விநயமான வேண்டுகோளுக்கியைந்த மெய்ப்பக்தி என்னும் பார்ப்பனக் கன்னி, இரட்சகர் யேசு இறுதியிராப் போசன விருக் தில் ஈடுபட்டது முதல், யூதாசினுல் காட்டிக் கொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டதும், கண்துடைப்பு விசாரணைக்குட்படுத்தப்பட் டதும், மரணத் தீர்ப்பு வழங்கப்பட்டுச் சிலுவையில் அறையப் பட்டதும், கல்லடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த் தெழுந்து திரும்ப மறைந்தது மாகிய வரலாறுகளேயெல்லாம் பத்திச் சுவை கனி சொட்டச் சொட்டக் கூறினுள்,
பயபக்தி என்னும் கன்னிப் பெண்ணுற் பரதேசிக்குக் கூறப் பட்ட இச் சரிதைபே, இரட்சணிய யாத்திரிகம் என்னும் காவியத் தின் இரண்டாவது குமார பருவத்தில் அமைந்த இரட்சணிய சரித படலத்தில் கூறப்படுவதாகும். இரட்சணிய சரிதம் (இயேசு நாதரின்) இரட்சிப்புச் சரிதம், மன்னுயிர்களைப் பாவத்தில் இருந்து மீட்ட சரித்திரமென்பது கருத்து. -
இரட்சணிய சரிதப் படலம்
(தோத்திரம்)
*அகில லோகம் படைத்தளித் தன்பினுற்
சகல மன்னுயி ரும்கதி சார்ந்துய
மகவை நல்கிய மாண்புறு தாதையாம்
பகவ னுக்கித பாஞ்சலி பண்ணுவாம்'
வேறு
உலகமகிழ்ந் தீடேறப்பரலோக வாசிகளுக் குவகையேற அலகையுளந் திகிலேற வகண்டபரி பூரணனுரருண் மெய்வாக்கு விலகிதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கியன்பாற் சிலுவை மிசையேறிய மெய்ஞ்ஞான சிரியனடியைச் சிந்தை செய்வாம்.

Page 9
ܚܲܛܝܬܐ 4,ܬܐ ܣܳܗܡ
(வேறு)
*" துனிதரு விண்முனி தூய சிந்தனை
கணிதர நன்னெறி கடைப்பிடித்திட்டது இனிது வந்தடிய வரிதயத் தென்றும் வாழ் புனித நல்லாவியைப் போற்று வாமரோ'
திருவிருந்து எழிற் சத்திரத்தில் உள்ள பக்தி என்னும் கன்னிப்பாவை பரதேசிக்குக் கூறிய திப்பிய சரித்திரம் காவிய ஆசிரியரால் திருவிருந்து எனக் கூறப்பட்டுள்ளது, ஆத்துமத்திற்கு (வயிறு) உரிய விருந்து சாதாரண விருந்தாக, ஆத்துமாவுக்கு உரிய விருந்து திருவிருந்தாயிற்று.)
*மாக வேந்தற்கு மானத பூசனை
ஒகை யோடளித் தொன்பொன் வள்ளத்துறு பாகு உகுத்த பரிசெனப் பத்தியாந்
தோகை யின்னன சொல்லுதன் மேயினுள்
விருந்துக் கூறுகள்:-
(அ) காட்டிக் கொடுப்பு 1. இயேசுவின் இறுதிப் போசனம்
2. விருந்துபதேசம்
3. காட்டிக் கொடுச்கப் போவதை முன்னுணர்தல்
யூதாசு விருந்தில் இருந்து வெளி நடப்பு பேதுருவின் சபதம்
4
5 6. அப்பமும் இரசமும் அருந்துவித்தல் 7. இயேசு நாதரின் நள்ளிரவுச் ஜெபம் 8, இயேசு நாதர் "கெஸ்தமன்’ ஏகுதல் 9. காட்டிக் கொடுத்தல்
10. இயேசு நாதர் சிறைப்பாடும் எதிரிகளின் முறைப்பாடு
 

ܘܝܘܿܚܲܣ 5 ܤܚܩܣ
ll. 6arry 2001
2. , ii
13. 9 , iii
14 மரணத் தீர்ப்பு
15, யூதாசின் தற்கொலை
(ஆ) சிலுவைப் பாடு
1. மனுமகர் பொறுமை,
கல்வாரி மலைக்குக் கொண்டு போகப்படுதல்,
2
3. எருசலேம் நகர்ப்புறமாதரின் இதய சோகம். 4. பேதலித்த பெண்களுக்குப் பெருமானின் உபதேசம், 5. சிலுவைப் பாடு,
6. கல்லடக்கம்.
(இ) புனர் ஜென்மம்
உயிர்த் தெழுதல்.
2. சத்திய வேதத் திருச்சபை,
(ஆ) சிலுவைப் பாடு
தன்னுயிர் போயாக்கை தலைகீழுற விழுந்து சென்னி தகர்ந்து குடர்சிதறிச் செத்தொழிந்த துன்னரிய சாமித் துரோகிசெய லிற்ருகப் பன்னருநம் மான்சிலுவைப் பாடுகளை யுன்னுவாம். (1)
சொ. வி; துன்ன + அரிய = துன்னரிய, துன்னுதல் - நினைத் தல். பன்ன + அரிய = பன்னரிய, பன்னுதல் - சொல்லுதல், இற்று + ஆக ஊ இற்ருக,
ப. உ; தன் உயிர் போய் - தனது உயிர் போய், யாக்கை gອື່ນ கீழ் உற விழுந்து - தேகம் குப்புற விழுந்து, சென்னி தகர்ந்துதலே நொறுங்குண்டு, குடர் சிதறி * குடலானது சிதறுப்பட்டு, செத்து ஒழிந்த மாண்டு மடிந்துபோன, துன் அரிய சாமித்

Page 10
69 ܘܚ
- 6 -
துரோகி செயல் இற்று ஆக = நினைப்பதற்கே முடியாத கடவுட் துரோகியாகிய யூதாசின் முடிபு இதுவாக, பன்னரு நம்மான் சிலுவைப் பாடுகளை உன்னுவாம் - (இந் நிறத்தன் இவ்வண்ணத் தன் இவனுெருவன் எனக் கற்பனை செய்தும்) கூறுதற்கரிய நம் பெருமானுகிய இயேசுநாதர் சிலுவையிற்பட்ட பெரும் வேதனைகளை (இனிச்) சிந்திப்போம் - சிந்திப்போமாக,
வி:- முப்பது வெண் பொற்காசுகளுக்காக இசுக்காரியோத்து எனப்படும் யூதாசு இயேசுநாதரை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தான். இயேசு சிறைப்படுத்தப்பட்டார்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், மரணதண்டனை வழங்கப்பட்டது. இதன் மேல், யூதாசின் உள்ளம் நிம்மதியிழந்தது. மனச்சாட்சி குறுகுறுக்கத் தொடங்கியது. அவன் செய்த அநாகரிகமான செயலே மனம் குத்திக் குத்திக் காட்டியது.
* பழிக்குப் பாவத்துக் கஞ்சலே பல்லவர் தூற்றும்
மொழிக்கு நாணலை முன்பினுற் ருய்ந்திலே முற்றும் அழிக்கு நீசப் பசாசுக் கடித்தொழும் பாய்நேர்
வழிக்கு வாரலின் ருயினே யான்மதி மாண்டோய்'
(g3), UT : X Lu X - 288
இனியும் அவனுல் வாழ்வது சாத்தியமில்லை. குத்திக் குத்திக் காட்டி அவன் மனம் அவனையே கொன்றுவிட்டது. தற் கொலேயே அந்த நரகவேதனையிலிருந்து தப்புவதற்கு ஒரே வழியானது. நேராகத் தேவாலயத்திற்குச் சென்றன். முன்பு பெற்ற முப்பது வெண்பொற்காசுகளையும் மதபோதகர்களின் இடத்திற் திருப்பி வீசினுன், தனியாக ஓர் இடத்திற்குச் சென்று கழுத்திற் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
யூதாசு தற்கொலை செய்து கொண்டாலும், "உய்வினித்
தீர்ந்தாய்' என்று கவிஞர் கிருஷ்ணபிள்ளை மனச்சாட்சி கூறுவ தாகக் கூறுகின்றர். காட்டிக்கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டிய இடம் இது.
இ. வி: உற - செயவெனெச்சம் ஒழிந்த - துரோகி என்பதனுடன்
முடிந்த பெயரெச்சம். சாமித்துரோகி - நான்கள் தொகை. இற்றுகுறிப்பு வினைமுற்று, ஆக என்பதுடன் இணைந்து ஒரு சொல் லாகிச் செயவெனெச்சமாயது. கம்மான் - கம்பெருமானென்பது

- 7 -
நம்மானென மருவிற்று, அருமந்தபிள்ளைபோல். மான் - பெரு மான் என்பதன் முதற்குறை' என்றும் கூறலாம். உன்னு (வோம் தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று,
மனுமகர் பொறுமை
* பொல்லாத யூதர்களும் போர்ச்சே வகர்குழுவும்
வல்லான யெள்ளிப் புறக்கணித்து வாய்மதமாய்ச் சொல்லாத நிந்தைமொழி சொல்லித் துணிந்தியற்றும் பொல்லாங்கை யெல்லாம் நம்மீசன் பொறுத்திருந்தார்’ (2)
சொ, வி:- சேவகர் - பணியாளர். கிங்தை - அவமானம்.
z.:- பொல்லாத யூதர்களும் - நல்லவர்கள் அல்லாத தீமையே
செய்யும் யூதர்களும், போர்ச் சேவகர்குழுவும் - போர்புரியும் பணி யாளர் கூட்டமும், வல்லானை எள்ளி - வல்லவனுகிய இயேசு நாதரை இகழ்ந்து, புறக்கணித்து - அலட்சியம் பண்ணி, வாய் மதமாய்ச் சொல்லாத நிந்தை மொழி சொல்லி - வாய்க் கொழுப் வினுல் சாதாரணமானவரால் சொல்லமுடியாத சொல்லக்கூடாத அவமான வார்த்தைகளை எல்லாம் பலபடச் சொல்லி, துணிந்து இயற்றும் பொல்லாங்கையெல்லாம் = அஞ்சுவதற்கு அஞ்சாத அசட் டுத் துணிச்சலுடன் செய்யும் பெருந்துன்பங்களே எல்லாம், நம்மீசன் பொறுத்திருந்தார் - நம் பெருமான் சகித்துக் கொண்டிருந்தார்.
வி: அடிகளாரைச் சிறைப்படுத்திய புல்லர்கள் செய்த ஆக் கினையும் அவமானமும் கொஞ்ச நஞ்சமன்று, தூஷணம் பேசி ஞர்கள்; கொக்கரித்தார்கள். அவர் உடுத்திருந்த உடையைக் களைந்து எடுத்தார்கள். சிவந்த நிறமான நீண்ட அங்கியொன்றை உடுத்தினுர்கள். இரத்தம் பீறிடும்படியாக தலையில் முள்முடி ஒன்றைச் சூட்டினுர்கள். செங்கோலைப் போன்ற ஒரு கோலை அவர் கையிற் கொடுத்து, அவர் முன் மண்டியிட்டு நின்று, 'அரசனே! மகிமை மிக்க மன்னனே நீ வாழ்க வாழ்க’ என்று ஓலமிட்டுப் பரிகாசம் செய்தார்கள். அவர்கையிற் கொடுத்த கோலைத் திரும்பவாங்கி அதே கோலால் அவர் தலையிற் குரூர மாய் அடித்தார்கள். முகத்திற் துப்பினுர்கள. நாக்கு வறளும் வரையும், கண்கள் குழிவிழும் \ வரையும் ஆக்கினையும் அவ மானமும் தொடர்ந்து நின்றது. கசையடியும் கொடுக்கப்பட்டது. தலையிற் பலமுறை ஓங்கி ஓங்கிக் குட்டப்பட்டது. குட்டவும் பொறுத்திருந்தார் குமரக் கடவுள்.

Page 11
جسته "8 -س
இ. வி:- எள்ளி; செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வின்ை யெச்சம் சொல்லாத எதிர்மறைப் பெயரெச்சம். இயற்றும்: செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். நம்மிசன்: நம் முடைய ஈசன் என விரியும் ஆறன் தொகை, பொல்லாங்கு: தொழிற் பெயர்.
ஒளி இழப்பு
புற்றரவிற் சீறிப் புடைவளைந்து புல்லியர்தாந் துற்றி விளைத்த கொடுந்துன்பத் தனியுழந்து முற்றுங் கிரகணத்தின் மூழ்கு தினகரன்போல் செற்றமிலாத் தேவமைந்தன் றேசிழந்து தேம்பிகுர் (3)
சொ. வி. புடை - பக்கம், புல்லீர் 4 சிறியோர், துற்றி - நெருக்கி, உழத்தல் 4 வருந்துதல், செற்றம் - கோபம், தேசு - ஒளி, தேம் புதல் - வாடுதல், (தேம்பா அணி - வாடாதமாலே)
ப; உ:= புல்லியர்தாம் - அந்தக் கீழ்மக்கள், புற்று அரவிற்சீறி
புற்றில் வாழ் நச்சுப் பாம்புகள் போல் கொதித்து இரைந்து, புடை வளைந்து துற்றி - அவர் பக்கமாகச் சுற்றிவளைந்து அவரை நெருக்கி, விளைத்த கொடுந்துன்பம் தனி உழந்து-போகப் போகக் கூடுதலாகச் செய்து கொண்ட கொடியதுன்பங்களுக்கெல்லாம் எல்லேகடந்து வருந்தி, முற்றும் கிரகணத்தின் மூழ்கு தினகரன் போல், முழுக்கிரகணத்தினுற் பீடிக்கப்பட்ட சூரியனைப் போல், தேசு இழந்து = ஒளி மங்கி, செற்றமிலாத் தேவ மைந்தன் தேம் பினுர், சினப்பில்லாத தேவகுமாரணுகிய இயேசு வாடிஞர்.
உ. வி: தனியுழத்தல் - எல்லை கடந்து வருந்துதல். எல்லை கடத் தலாவது ஏனைய துன்பங்களெல்லாம் இன்பங்களாக மாறுகின்ற நிலக்கு நடைமுறைத் துன்பம் பெரிதாதல்,
உவமைக்காக எழுதிய கவிதைபோல் தெரிகிறது. தப்பான உவமையைக் கையாண்டு தேவமைந்தனின் சிறப்பைக் குறைத் துவிட்டாரெனக் கருதலாமல்லவா ? சுடச்சுடரும் பொன்போ லென உவமைகண்டிருந்தால் தேவமைந்தனின் செற்றமின்மைக் குச் சிறப்புத் தந்திருக்குமே.
இயேசு பொருள், தினகரன் உவமை, எல்லையற்றதுன்பம் பொருள், முழுக்கிரகணம் உவமை,

7 ܗ ܗ " ” حصہ * + "|جه تو یو نے سے LT
- 9 -
இ. வி:- அரவில்: ஒப்புப் பொருளில் ஐந்தாம் வேற்றுமை, மூழ்கு தினகரன்; வினைத்தொகை, தேவமைந்தன் தேவனுகிய வல்லா ளன் என்ற கருத்தில் (மைந்து-வலிமை) இரு பெயரொட்டுப் பண்புத் தொகை, தேவகுமாரன் என்ற கருத்தில் நான் கன் தொகை, (செற்றம்) இலா: ஈறு குறைந்த எதிர்மறைப் பெய ரெச்சம்,
2. கல்வாரி மலைக்குக் கொண்டு போகப்படுதல்,
சிலுவைச் சுமை
செவ்வங் கியைக்களேந்து தேவர்பிரான் முன்றளித்த அவ்வங் கியைத்தரித்தே யாகடியம் பலபேசித் தெவ்வர் குழுமிச் சிலுவை தனேச்சுமத்திக் கவ்வை நகர்கலுழக் கட்டிக் கொடுபோனுர், (4)
சொ. வி: ஆகடியம் - புதுமையாகப் பேசும் பரிகாசம், தெவ்வர் .
பகைவர். கவ்வை - துன்பம், கலும்தல் - வருந்துதல்,
ப, உ; செவ் அங்கியைக் களைந்து - சிவப்புச் சால்வையை நீக்கி, தேவர் பிரான் முன் தரித்த அவ் அங்கியைத் தரித்து - தேவ தேவனுகிய இயேசு நாதர் முன் உடுத்திருந்த பழைய உடுப்பை மீண்டும் உடுத்தி, ஆகடியம் பல பேசி - புதுமையான பரி காச வார்த்தைகள் பல சொல்லித், தெவ்வர் குழுமி - பகைவர் அனேவரும் ஒன்ருகக்கூடி, சிலுவைதனைச் சுமத்தி - சிலுவையைச் சுமக்கச்செய்து, கவ்வை நகர் கலுழக் கட்டிக் கொ(ண்)டு போனுர் . துன்பமயமான எருசலேம் நகர் கண்ணிர்விட்டு வருந்த இயேசு நாதருக்கு விலங்கிட்டுக் கொண்டு போனுர்கள்.
(குழுமி, களேந்து, தரித்து, சுமத்தி, கட்டிப் போனரென இயையும்
உ. வி: மரணதண்டனை வழங்கப்பட்டவர்களச் சிலுவையில் வைத்து அறைவதே அக்காலத்து யூதவழக்கம். எந்தச் சிலுவையில் அறையப்பட வேண்டுமோ அந்தச் சிலுவையையும் அவரைக் கொண்டு சுமப்பித்துச் செல்லும் தண்டனை சிததிரவதைக் கொப்பானது, தூக்கிடுபவர் கயிற்றையுங் கொண்டு போவது போல் தெரிகின்றதன்றே.
இ. வி: செவ்வங்கி: சிவப்பாகிய அங்கியென விரியும் பண்புத் தொகை, அவ் அங்கி; சுட்டுப் பெயர். சுமத்தி செய்து என
இ. யா, 2

Page 12
R్క్య
سمتیہ 10 مسسیس۔
னும் வாய்பாட்டுப் பிறவினை வினையெச்சம், கலுழ: செயவெ னெச்சம். (கலுழ: வினைப்பகுதி) குழுமி (குழுமு + இ) செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், கொண்டு .
கொடு ஆனது தொகுத்தல் விகாரம்,
இரட்சிப்புக் கடமை
நோக்கியணு வொவ்வொன்று நூரு யிரங்கோடி மாக்கயத்தின் சும்மை மலிந்த பாவந்திரட்டி ஆக்கு சிலுவை யமலன் சிரத்தேந்திக் காக்கை கடனுகக் கல்வாரி நோக்கினர். (5) · சருவ + ஈசன் = சருவேசன்,
எம்மான் - எம்தலைவன்.
ப. உ. வள்ளல் - வேண்டியார் வேண்டியதை ஈயும் கருணை வள்ளலும், குருராயன் - குருமூர்த்தியும், மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை எள்ளி அவதரித்த எம்மான் - நில பெற்ற உயிர்களுக்காகத் தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் மனித அவதாரமெடுத்த எம் தலைவனும், சருவேசன் - எல்லா உலகங்களுக்கும் இறைவனுமாகிய இயேசு பெருமான், கொள்ளே புரிந்து கொலேத் தீர்ப்புப் பெற்று வரும் கள்ளர் இருவரொடுங் - கொள்ளையடித்து (அதற்காக) மரணதண்டனை தீர்ப்புப் பெற்றுவருகின்ற (பாதகராகிய கள்ளர்) இருவரோடும், கல்வாரி நோக்கினர். கபாலத் தலத்தை நோக்கிச் சென்ருர்,
உ. வி:- யேசுநாதரைத் தனியே அழைத்துச் செல்வது வேறு, கொலைக்குற்றவாளிகளோடு அழைத்துச் செல்வது முழுக்க, முழுக்க வேறுகாரியம் என்றலும் நோக்கங் கருதி கதைப் புணர்ப்பு இவ்வாறு அமைந்துவிட்டது. கிறிஸ்தவமதக் கொள் கையை நிலைநாட்டுவதற்காக கதை இவ்வாறு பின்னப்பட்டி ருக்கலாம். இதனைப் பின்னர் பார்ப்போம்.
"காதற்ற ஊசியும் வராது காணும் கடைவழிக்கே’ என நம்ம வர் பாடியிருக்க, கள்ளர் இருவர் இயேசு நாதரின் கடைவழிக்குச் சென்றது கயப்பாக இருக்கிறது.
இ. வி. வள்ளலும், குருராயனும், எம்மானும், என அமையவேண் டிய தொடர், வள்ளல், குருராயன், எம்மான் என அமைந்தது எண்ணும்மைத் தொகை, கொலைத்தீர்ப்பு:- இருபெயரொட்டுப் பண்புத் தொகை, நான்கன் தொகையுமால்,

Page 13
-- 13 سے
இரட்சிப்புப் புண்ணியம்
மாரணத்தின் கூரொடிய வன்பேய் தலைநசுங்க
" . ஆரணஞ் சொல்லுண்மை யவனிமி சைவிளங்க
பூரணமச ரக்ஷணிய புண்ணியங் கைகூடுதற்குக் காரணமாஞ் செய்கைமுற்றக் கல்வாரி நோக்கினர் (7)
சொ- வி:- ஆரணம் - வேதம், இரகூரணியம் - இரட்சிப்பு - மீ.x 7.
ப. உ: மாரணத்தின் கூர் ஒடிய மரணத்தின் கூர்மையான முஃன உடைந்து போக, வன் பேய் தலேநசுங்க கொடிய சாத்தானின் தலே நசுங்கிப் போக, ஆரணம் சொல் உண்மை அவனி மிசை விளங்க - வேதங்கள் சொல்லுகின்ற (நித்திய) உண்மை இவ்வுல கில் பலருக்கும் தெரிய, இரகூடிணிய புண்ணியம் பூரணமா கை கூடுதற்குக் காரணமாஞ் செய்கை முற்ற - இரட்சிப்பின் நன்மை பூரணமாக நிறைவேறுதற்குக் காரணமான புண்ணியச் செயலே முடிக்க கல்வாரி நோக்கினர்.கல்வாரி ம8லயை நோக்கிச் சென் ருர்
உ. வி:- கொண்டு கூட்டாமல் பூரணமாய் இரட்சணிய மென்ப தற்கு சம்பூரண இரட்சிப்பு என்றும் கொள்ளலாம். செய்கை கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய செய்கை இரட்சணிய மாதலின் மா இரட்சணிய மென்றர், ஆரணஞ் சொல் உண்மை இவ்வாறு ஆக்கிரமிகளோடு எண் ணப்பட்டார் என்ற வேத வாக்கியம் நிறைவேறிற்று (இசை 53:12; மாற் 15:18)
இ. வி: "மரணம் மாரணமென எதுகை நோக்கி நீண்டது 'ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி' என்ப தில் எவரும் என்பது ‘ஏவரும்’ என நிற்பது போல். ஆணுல் கவிதைத் தொடக்கத்திலேயே எதுகை நோக்கி நீண்டது எனக் குறிப்பிடுதல் இயல்புக்கு ஒவ்வாமல் இருப்பதை நுனித்துணர்க,
சொல்லுண்மை: வினைத்தொகை, காரணமாகும் செய்கைக் காரணமாஞ் செய்கையாயிற்று. செயவெனெச்சங்கள் அனைத்தும் (கொடிய, கதங்க, விளங்க, முற்ற) நோக்கினர் என்பதனுடன் முடிந் தன, மிசை 7-ம் வேற்றுமையுருபு
அகப்புறப் பார்வை
ஈசன்சின நோக்கி யினநர ரைப்பிணித்த பாசவினை நோக்கிப் பரிந்து நடு நின்றுவரும் பேசரிய துன்பப் பிரளயத்தை நோக்கியிந்தக் காசினியை நோக்கினுர் கல்வாரி நோக்கினர் (8)

-سس 3 1 rmes
சொ. வி: சினம் - கோபம், பிரளயம் ஊழிக்கால வெள்ளம்.
காசினி - பூமி,
ப, உ? ஈசன் சினம் நோக்கி - தெய்வச் சினப்பையும் உள்நோக்கி,
ஈனநரரைப் பிணித்த பாசவினை நோக்கி இழிவான மானுடரை பீடித்துள்ள பாசத்தையும் அதனுலேற்படும் துன்ப வினைகளையும் உள்நோக்கிப், பரிந்து - இரக்கங் கொண்டு, நடு நின்றுவரும் பேச அரிய துன்பப் பிரளயத்தை நோக்கி - இறைவனுக்கும் ஈன மானுடனுக்கும் இடையே நடுவராக நிற்றலால் ஏற்படப்போகும் துன்ப வெள்ளத்தையும் உள்நோக்கி, இந்தக் காசினியை நோக்கி ஞர் - இப்படியாக இந்த உலகத்தை நோக்கிய இயேசுநாதர், கல்வாரி நோக்கினர் . கல்வாரி மலேயை நோக்கி நடந்தார்.
உ. வி: சாத்தானின் தலையீடுகளும், விளைவுகளும் அளவுமிஞ்சிப் போலும் தெய்வச் சினப்பையேற்படுத்தியது. பாசவினைகள் பலரையும் பாதிப்பதாக முடிதலின் அவற்றைப் புரியும் மனிதரை 'ஈனகரரென அருமையுறக் கூறினர். நோக்கினர், நோக்கினு ரென கூறிய நயம் , கிளர்ச்சி ஊட்டுகிறது. முதல் நோக்கு அக நோக்காகவும், அடுத்த நோக்குப் புறநோக்காகவும் அமைக் துள்ளது. இரு நோக்கு இவர் உண்கண் உள்ளது. ஒரு கோக்கு நோய் மறு கோக்கு மருந்தாகின்ற அருமை உணர்க.
இ. வி:- ஈசன் சினம் ஆறன் தொகை, பாசவினை, இராப்பகல் போல் உம்மைத் தொகை. துன்பப் பிரளயம்: உருவகத் தொடர், காசினியை நோக்கினுர்: வினையாலணையும் பெயர்.
நிற்ப என்பது நின்று எனத் திரிந்து கின்றது. இது காரணப் பொருட்டில்வரும் செயவனெச்சமாகும். மழை பெய்யக் குளம் நிறையும் என்பதுபோல் நடு. நிற்றலால் வரும் துன்பமென விரித்து காரண காரியப் பொருளை அறிக.
,
தெரிந்தும் தெரியாதார் அற்புதமும் வானத் தசரீரியும் புனிதச் சொற்பயில்வு மெல்லாச் சுகுணங் களுமிவரே தற்பரனென் ருேலமிடச் சண்டாளர் தாமிதனை அற்பமு மெண்ணுத தறவும் அநியாயம். (9)
சொ. வி: அற்புதம் - புதுமை, அசரீரி சரீரமற்றது - உருவிலி. சுகுணம் - நன்மை - நற்குணங்கள். அறவும் - முழுக்கமுழுக்க,

Page 14
ہم۔ 14 ست
ப; உ:- அற்புதமும் - (இவ்வுலகில் இயேசுபெருமான் நிகழ்த்திய) புது மைகளும், வானத்து அசரீரிகளும் - (அவர் ஞானதீட்சை பெற்ற நேரத்தில்) விண்ணில் இருந்து உண்டான சத்தமும், புனிதச் சொற்பயில்வும் - பரிசுத்த வேத வசனங்களும், எல்லாச் சுகுணங் களும் - அவரிடத்துக் காணப்பட்ட சகல நற்குணங்களும், இவரே தற்பரனென்று ஒலமிட - இந்த இயேசுநாதரே இறைவன் என்று ஒரு முகமாக ஒலமிடக் கண்டும், சண்டாளர் தாம் இதனை அற்ப மும் எண்ணுதது - இந்தப் பாவிகளாகிய யூதர்கள் இதனேச் சற்றும் நினைத்துப் பாராதது, அறவும் அநியாயம் முழுக்க முழுக்க அநியாயமாகும்.
உ. வி:- இயேசுநாதர் இறைவனென்பதை முன் நடந்த நிகழ்ச் சிகள் அனைத்தும் ஏகோபித்து நிரூபித்தும் உணராத புல்லர் களைச் 'சண்டாளர்’ எனக்குறிப்பிட்டது மிகப் பொருத்தமே. *கண்ணுற் கண்டதும் பொய், காதாற் கேட்டதும் பொய்” என ஒலமிடும் இவர்களை வேறு எப்படிக் கூறமுடியும்? புனித உள்ளத்தில் இருந்து எழும் சொல் புனிதச் சொல்லாயிற்று சுவிசேடம் தந்தவர்கள் புனிதர்கள் என்பது கருத்து.
இ. வி:- இவரே; ஏகாரம் பிரிநிலைப் பொருளது. எண்ணுதது: தொழிற் பெயர். அறவும்: ‘அற' என்ற உரிச் சொல் 'உம்' இடைச்சொல் பெற்று "அறவும் ஆயிற்று. இது ஒரு புதுப்பிரயோகம், உரிச் சொற்களும் பெயர்ச் சொற்களே.
இயேசு என்னும் ஆட்டுக்குட்டி .ܠܐܝܼ
தத்துநீர் வேலித் தராதலத்தோர் செய்தவினை റ്റ്
அத்தனை யுந்தாங்கி அலமந்து மாங்கமைந்து - ) சத்தமிடா தேகுந் தகன பலிமறியாம்
உத்தமருஞ் சாந்தமா யூருடு செல்கின்ருர் (10)
சொ. வி:- தராதலம் - பூமி, அலமந்து - வருந்தி,
ப, உ; - தத்து நீர்வேலித் தராதலத்தோர் = பாய்கின்ற நீரினுற் சூழப் பட்ட பூலோகவாசிகள், செய்தவினை அத்தனையுந்தாங்கி அலமந்துசெய்த வினைகளுக்குரிய பாவங்களனைத்தையும் சுமந்து வருந்தியும், ஆங்கு அமைந்து-வருந்துகின்ற அவ்விடத்தும் அமைதி குலேயாமல் அடங்கி, தகன பலி சத்தமிடாது ஏகும்மறியா உத்தமரும் - தகனம் செய்வதற்கான பலிபீடத்திற்குச் செல்லும் நேரத்திலும் கதருமற்

- 15 - 4ܛ செல்லும் ஆட்டுக்குட்டியுமாக விளங்கிய உத்தம மனிதராகிய இயேசுநாதர், சாந்தமாய் ஊர் ஊடு செல்கின்ருர் - சாந்த மூர்த்தி யாகி எருசலேம் நகருக்கு ஊடாகச் செல்கின்ருர்,
உ. வி: இங்குத்தான் இயேசுநாதரைப் பார்க்கும் பொழுது "சுடச்"
சுடரும்” பொன்னுகக் காணப்படுகின்றர். துன்பத்தையும் மரணத்தையும் அறிந்து அவர் பொறுமையிழக்கவில்லை. LDT(35, சலனமற்ற சாந்த நிலையை வெளிப்படுத்தினுர்,
இ. வி:- தத்து நீர்; வினைத் தொகை, நீர் வேலி: பண்புத் தொகை, இரண்டாம் வேற்றுமைத் தொகை என்றும் கொள்ளலாம். பலி: தொழிலாகு பெயர்.
காணுத காட்சி
கையயர்ந்து வாய்புலர்ந்து கண்ணிருண்டு காதடைத்து வெய்ய சிலுவை சுமந்தலசி மெய்வருந்தித் س
துய்ய திருவடிகள் சோர்ந்துநடை தள்ளாடி
அய்யன் மறுகூடு வரக்கண்டா ரணிநகரார் (11)
11 உ-ே அய்யன் - நம் தஜலவராகிய இயேசுநாதர், கை அயர்ந்து கை
கள் சோர்ந்து போய், வாய்புலர்ந்து - திருவாய் வரண்டுபோய், கண் ணிருண்டு - திரு விழி இருண்டுபோய், காது அடைத்து - திருச் செவிகளும் அடைபட்டு, வெய்ய சிலுவை சுமந்து = அதிபாரமான சிலுவையைத் த&லயிற் சுமந்து, அலசி - அங்குமிங்கும் அசைந்து, மெய்வருந்தி - உடல் பெருவருத்த முற்று, அய்ய திருவடிகள் சோர்ந்து நடை தள்ளாடி - பரிசுத்த திருவடிகள் சோர்வடைந்து அங்குமிங்கும் நடை தள்ளாடி, மறுகுஊடு வர - வீதிக்கூடாக விடுவதை அணிநகரார் இன்டர் . அழகிய எருசலேம் மக்கள் பார்த்தார்கள்,
வி; "வரக் கண்டார்.அணிநகரார்? இவ்வாறு வருதலைக் கண்ட எருசலேம் நகரமக்கள் (கண்டதும்) எப்படி, எப்படி நின்று பார்த்தார்களோ அப்படி அப்படியே நின்றர். நின்ற இடத்தில் இருந்து சிறிதுகூட நகரவில்லை என்றும் பொருள்கொள்க. இப் பொருளில் கண்டார் என்பது வினையால் ഴ്ത്തru| பெயர். நகரார் என்பது வினைமுற்று.
பாவத்தின் வெம்மை சிலுவையில் ஏற்றப்பட்டு வெய்ய சிலுவை எனப்பட்டது.

Page 15
سبا- 16 سس۔
இ. வி: கையயர்ந்து, வாய்புலர்ந்து, கண்ணிருண்டு, காதடைத்து,
மெய்வருந்தி: எழுவாய்த் தொடர்கள். துய்யதிருவடி குறிப்பு வினைப் பெயரெச்சம், அய்யன்: போலி.
கண்டவர் கலக்கம்
கல்லியல்வன் னேஞ்சவஞ்சக் கண்ணிலாப் பாதகராம் புல்லியரே யன்றியிந்தப் பொல்லாங்கு போந்தமைகண் டெல்லவருந் தத்தமுயிர்க் கிறுதியேய்ந் தனபோல அல்லலுழந் தலமந்தாக்கை நில தளர்ந்தார் (12)
சொ, வி: பாதகர் - பாவிகள், எல்லவரும் - எல்லோரும். ஆக்கை -
உடம்பு,
ப. உ. கல்லியல் வன்நெஞ்ச-கல்லொத்த அசைந்து கொடாத கொடிய
நெஞ்சையுடைய, வஞ்சக் கண்ணிலாப் பாதகராம் புல்லியரே அன் றிப் - வஞ்சகமான, கண்ணிருந்தும் இல்லாத பாவிகளாகிய கீழ் மக்கள் தவிர, இந்தப் பொல்லாங்கு போந்தமை கண்டு . இக் கொடுந்தீமை நம் பெருமானுக்கு வந்ததைக் கண்டு, எல்ல வரும் தத்தம் உயிர்க்கு இறுதி யேந்தனபோல - ஏனையவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் உயிருக்கே முடிவு வந்தனபோல (கருதி), அல்லல் உழந்து அலமந்து - துன்பமயமாகிவே தனைப்பட்டு, ஆக்கை நிலதளர்ந்தார் - தத்தம் உடம்புகள் நிலகுலேந்தன போலக் காணப்பட்டார்கள், வி:- வஞ்ச நெஞ்சமென்று கொள்வதிலும் வஞ்சகக் கண் என்று கொள்வது சிறப்புடைத்து. பொல்லாத யூதர்களின் கண்களே அவர்களே வஞ்சித்துக் கொள்கின்றதென்பது கருத்து, இறைவனே வஞ்சிக்கமுடியாது, தம்மைத்தாமே வஞ்சித்துப் பாவப் படுகுழியில் வீழ்த்துகிறர்கள் என்றதோர் இரக்கமும் கவிஞருக்கு வந்திருக்கலாமல்லவா ?
ஈன யூதர்களைத் தவிர எனயவர்களெல்லோரும் நாம் இருக்
கிருேம் என்ற நிலை மறந்ததை நிலைதளர்ந்தார்’ என்ற தொடர் அழகாகக் காட்டுகின்றது. மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஸ்தம்பித்து விட்டதுபோலும்,
இப்படி ஒரு பொல்லாங்கு வேறு பலருக்கு ஏற்படலாம். இயேசு
நாதருக்கு ஏற்பட்டதுதான் அவர்களின் யாக்கை நிலையைத் தளர்த திற்று, புல்லியர் தவிர நல்லவர் எல்லோரும் நிலைதளர்ந்தார்,

-- 17 سے
இ. வி: பாதகராம் புல்லியர்: இரு பெயரொட்டுப் பண்புத் தொடர். அன்றி; குறிப்புவின வினையெச்சம். போந்தமை: தொழிற் பெயர். தத்தம்: ஆரும் வேற்றுமை அடுக்கு, உரிமைப் பொருளில் வந்தது. நிலதளர்ந்தார் 7-ம் வேற்றுமைத் தொகை. போல்: சக வேதனை காட்டும் வினையெச்சம்.
3. எருசலேம் நகரப்புறமாதரின் இதயசோகம்
மாதருக்கு ளாசிபெற்ற மங்கலையா மன்னமரி காதலனுக் கோவிக் கதிநேர்ந்த தென்றுமன வேதனைப்பட் டாற்ருது மெல்லியலார் தாங்குழுமி வீதியிரு மருங்கு மொய்த்தார்வாய் விட்டழுது, (13)
(இது முதற் பதினைந்து கவிதைகள் எருசலேம் தெரிவையரின்
அழுகை வருணனையாகும்.
ப; உ;- மாதருக்குள் ஆசி பெற்ற பெண்களுக்குள்ளே இறைவனல் ஆசீர்வதிக்கப்பட்ட, மங்கலேயாம் அன்னை மரி காதலனுக்கோ - தீர்க்க சுமங்கலியாகிய தாயெனப்படும் மேரியின் அன்புக்குமார னுக்கோ, இக்கதி நேர்ந்தது என்று - இத்துன்பநிலைமை சம்ப வித்தது என்று, மனவேதனைப்பட்டு ஆற்றது - உடலன்று உள்ள முமே தீய்ந்து பொறுக்கமாட்டாது, மெல்லியலார்தாம் குழுமி - மென்மைப் பண்பு மிக்க பெண்களெல்லாரும் ஒன்ருகக் கூடி, வாய்விட்டழுது - , வீதி இரு மருங்கும் மொய்த்தனர் - தெருவீதி யின் இருபக்கமும் மொய்த்துவிட்டார்கள்; உ. வி: மேரி அல்லது மரி தெய்வ ஒளியாற் கருத்தரிக்கப்பட்ட வள், அதனுலேதான் ஆசி பெற்றவளென்றும், மங்கலை என்றும் மனங்கொள்ளக் கூறினுர், இன்னும் அதனுலேதான் மரி காத லன் என்றும் கூறினர். அவளுக்கே அவள் பெற்ற குமாரன் தெய்வமாவன். தெய்வத்திடம் காதல் - தெய்வக்காதல் புதுமை யானதன்று. அப்பர் கூட இறைவனிடத்துக், "காதலாகி’னுர், இ. வி: மாதருக்குள்: ஏழாம் வேற்றுமை ஆற்ருது: வினையெச்சம்,
ஆற்றது. அழுது, குழுமி, மொய்த்தாரென முடியும்.
காந்தண் மலர்செங் கமலமல ரைப்புடைப்பப் பூந்தண் கருங்குவளேப் போதுநீர் முத்துகுப்பத் தேந்தளவு தொக்கநறுஞ் சேதாம்ப லேயலர்த்தி
மாந்தண் டலைக்குயிலின் மென்மொழியார் மாழ்கினுர், (14) இ3 யா, 8

Page 16
اسس 8 في سفض
சொ. வி: புடைத்தல் - அடித்தல், பெருத்தல், தளவு, தளவம்.
முல்லைப்பூ தண்டலை - சோலை.
ப. உ. காந்தள் மலர் செங்கமல மலரைப்புடைப்ப - செங்காந்த மலர் போன்ற சிவந்த கைகளால் செந்தாமரை போன்ற முகத்தில் அடித்து ? பூம் தண் கருங்குவளைப்போது நீர் முத்து உகுப்ப - பொலிவான குளிர்ந்த கருங்குவளைபோன்ற கண்களில் இருந்து கண்ணீர் முத் துக்கள் சொரிய, தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலே அலர்த்தி தேன்வடியும் முல்லேப் பூவை ஒத்த பற்கள் மறைந்து கிடக்கும் சிவந்த அல்லிப் பூவை ஒத்த வாயைத் திறந்து, மாந்தண்டலக் குயிலின் மென்மொழியார் மாழ்கினர் - மாஞ்சோலேக் குயில்கள்போல் மதுரமான வார்த்தைகளைப் பேசும் பெண்கள் அழுது புலம்பிஞர்கள்
உ. வி: பெண்கள் முகம் ஒரு மலர்க்கூடை. அதனை அருமை யாக அனுபவிக்கின்றர் கவிஞர். எருசலேம் பெண்கள் பேரழ கிகள் என்பதும் தெரிகின்றது. அழகிகள் அழுவது பார்த்து அனுபவிப்பதற்கு அழகாய் இருக்கும்?
இந்த இரு கவிதைகளிலும் தேம்பாவணி, கவிஞர் நினைவிற்கு வந்திருக்கவேண்டும். "வையகம் வைகும் வாய்ந்த மாதரு ளெண்ணி லாசி துய்யகம் பொலியப்பூத்த சுந்தரி. "காந்தண் மிசையொரு தாமரையி னலர் காணலெனவரு மாதவன்” - இவை தேம்பாவணி அடிகள், தேம்பாவணிக்கு முன்தமிழ் இலக்கியங்களின் பொதுவான கற்பனையும் இது. இ. வி:- புடைப்ப, உகுப்ப, அலர்த்தி மாழ்கினரென இயையும். செம்மை + ஆம்பல் = சேதாம்பல், குயிலின்: ஐந்தாம் வேற் றுமை ஒப்புப் பொருள்.
தீயடைந்த வல்லியெனத் தேம்பிச் செயலழிந்தும் மாயும் வகையின்ருய் மறுகுற் றுயிர்பதைப்பப் போயடைந்த தெம்மருங்கும் பொற்பெருச லேநகரத் தாயிழையார் வாய்விட் டழுதகுர லோசை (15) சொ. வி:- மறுகுதல் - மயக்கம்; பொற்பு - அழகு; ஆயிழையார் -
நுண்ணிய ஆபரணங்களை அணிந்த பெண்கள். ப. உ. தீ அடைந்த வல்லியெனத் தேம்பி - நெருப்பிற் பட்ட பச்சைக்
கொடிபோல வனப்பிழந்து வாடிகு செயலழிந்தும் ஆட்டம் அசைவு ஏதும் இல்லாமல், மாயும் வகை இன்ருய் - உயிர் போக்க வழி

ains 19 =
தெரியாமல், மறுகுற்றும் உயிர் பதைப்ப - மயங்கியும் அவர்கள் உயிர்துடிக்க, பொற்பு எருசலேம் நகரத்து ஆயிழையார் வாய் விட்டு அழுத குரலோசை - அழகிய எருசலேம் நகரப் பெண்கள் கதறி அழுத குரல், எம்மருங்கும் போயடைந்தது - நாலாபக்கமும் ஒலித்தது.
உ. வி: மெளனமாகக் கண்ணீர் வடிக்கக் கூடிய செயலன்று இது, வாய்விட்டுக் கதறிக் கதறி அழுகிறர்கள் பெண்கள், இந்தப் பரிதாபக்காட்சியைப் பார்ப்பதிலும் பார்க்கச் செத்தொழிந்து விடுவதே பொருத்தமாகக் காணப்பட்டாலும் அந் நிகழ்ச்சி அவர் கள் கையில் இல்லாதபடியால் கதறித் தீர்க்கிறர்கள். அழுகை யும் ஒரு ஒசையாக ஒலிக்கின்றதாம்.
இ. வி:- தீயடைந்த இரண்டாம் வேற்றுமைத் தொகை,
மறுகுற்றும்; உம்மை விகாரத்தால் யாப்பு நோக்கித் தொக்கது.
செயலழிந்து: எழுவாய்த் தொடர். மாயும் வகை: பெயரெச்ச ,
நகரத்து (நகரம் + அத்து) 7-ம் வேற்றுமைத் தொகை, ஆபிழை:
வினைத்தொகை,
கண்டார் பதைத்தார் கலுழ்ந்தார் கரைந்தழுதார் கொண்டார் துணுக்கங் கொதித்தார் கடுவிடத்தை உண்டார் போலேங்கி யுயங்கி நெடிதுயிர்த்துத் திண்டாடி நின்றினைய செப்புவா ராயினர் (L6)
சொ, வி: துணுக்கம் - நடுக்கம். உயங்குதல் - வாடுதல் செப்புதல்
சொல்லுதல்.
ப* உ; கண்டார் பதைத்தார் - இரட்சகர் இயேசு சிலுவை சுமந்து கல்வாரி நோக்கிச் சென்றதைக் கண்டவர்கள் எல்லோரும் பதறி ஞர்கள், கலுழந்தார் - மனம் அவதிப்பட்டார்கள், கரைந்தழுதார் - ஆருகக் கண்ணிர் வடித்தார்கள், துணுக்கங் கொண்டார் - திடுக் கிட்டு நடுங்கினர்கள், கடுவிடத்தை உண்டார் போல் - கொடிய நஞ்சை அருந்தியவர்கள்போல், ஏங்கி உயங்கி நெடிது உயிர்த்து திண்டாடி நின்று - ஏங்கிப்போய் வாட்டமடைந்து நீண்ட பெரு மூச்சு விட்டு செய்வதறியாது திகைத்து நின்று, இனைய செப்பு வாராயினுர் - இவ்வாறு சொல்லிப் புலம்புவாராஞர்கள்,
உ, வி: சிலுவை சுமந்த காட்சி எருசலேம் மாதர்களுக்கு நஞ்சு
போல் தீமை புரிகின்றது; நோய்தருகின்றது.

Page 17
- 20 -
இ. வி. கண்டார்; வினையாலணையும் பெயர், ஏனைய முற்றுக்கள் அனைத்தையும் எச்சங்களாக்கி ஏங்கி, உயங்கி, உயிர்த்து, திண்டாடி செப்புவாராயினுர் என முடிக்க, முற்றெச்சங்களும், சாதாரண எச்சங்களும் கலந்த அமைப்பைக் கவனித்துக் கொள்க இனைய (இன் + அ) குறிப்பு வினையாலணையும் பெயர்.
ஆ ஆ இதென்ன வறவுமநி யாயமென்பார் தாவா வறமோ தலசாய்ந் திறுவதென்பார் முவா முதல்வன் முனியாத தென்னென்பார் ஒவா துழலெம் முயிர்க்கொழிவின் ருேவென்பர் (17)
ப; உ;~ ஆ ஆ இதென்ன அறவும் அநியாயம் என்பார் - ஆஆ. இது என்ன கொடுமை படு அநியாயம் என்று ஒரு சிலர் செப்பினுர்கள், தாவா அறமோ தலைசாய்ந்து இறுவது என்பார் - ஒரு கரலமும் கெட்டுப்போகாத தருமமோ தலைகாட்ட முடியாதபடி அழிந்து போவது என்ருர்கள் மறுசிலர், மூவா முதல்வன் முனியாதது என் என்பார் - பழமையிற் பழமையாய் இருக்கின்ற அதே நேரத்தில் புதுமையிற் புதுமையுமாகும் இறைவன் இக் கொடிய செய்கை யைக் கண்டும் கோபங்கொள்ளாது இருப்பது என்ன விந்தை என்றர்கள் இன்னுெரு சிலர். ஒவாது உழல் எம்முயிர்க்கு ஒழிவு இன்ருே என்பார் - இடையருமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக் கும் எமது உயிர்கள் ஒழிந்துபோகாதோ என்பார் ஒரு சிலர் . நமக்குத்தான் சாவில்லையோ என்பார் ஒரு சிலர்:
உ. வி:- இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெரு வருத்தப் பட்டார்கள் எருசலேம் பெண்கள். இதைவிட்ட அநீதி இதை விட்ட அதருமம் இல்லை என்கிறர்கள் அப்பாவிப்பெண்கள் கூட , தருமம் தலைசாய்ந்து அழிகின்றது என்பதால் எருசலேமில் இனி எவரும் நிம்மதியாக வாழமுடியாது என்றும் அவர்கள் கருது கின்றர்கள். மன்னுயிர் காக்கவந்த மகானுக்கே இன்னிலை என்ருல் ஏனையோர்பாடு சொல்லவேண்டிய அவசியமில்லை.
மூவா முதல்வன் - மூத்தல் அடையாத முதல்வன், அதாவது காலத்தைக் கடந்தவன், ஆக முதியவன், ஆக இளையவன் என் பது கருத்து,
இ. வி: தாவா(த), மூவா(த): ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச் சங்கள். அறமோ, ஓகாரம் சிறப்புப் பொருளது. இறுவது, முனியாதது: தொழிற் பெயர்கள். ஒவ்வாது: உழல் என்னும்

- 21 -
வினைப்பகுதியுடன் முடிந்த எதிர்மறை வினேயெச்சம். ஒழிவு: தொழிற்பெயர். இன்றே: ஏகாரம் எதிர்மறைப் பொருள். என்பார் அனைத்தும் முற்றுக்கள் என்போம். உழல் உயிர்: வினைத்தொகை,
இம்மைந்த குவிக் கிறுதிவரக் கண்டுமரி அம்மை யுயிர்வாழா ளவனி மிசையென்பார் செம்மைதிறம் பாத்தூய தேவ சீனத்திருக்டுே மும்மை யுலகும் முடியுங் கணத்தென்பார். (18)
ப. உ. இம்மைந்தன் ஆவிக்கு - தேவ மைந்தனின் உயிருக்கு, இறுதி வரக்கண்டு - முடிவு ஏற்படுவதைப் பார்த்து, அவனி மிசைமரி அம்மை உயிர்வாழாள் என்பார்-இப்பூலோகத்தில் மரிஅம்மை உயி வாழமாட்டாள் என்று சொன்னர்கள் சிலர், செம்மைதிறம்பாத் தூய தேவ சினந்திருகி = நடுவு நிலமை தவருத பரிசுத்தமான ஆண்ட வனின் கோபம் முறுகி, மும்மை உலகும் கணத்து முடியும் என் பார் - மூன்று உலகங்களேயும் கணப்பொழுதில் அழித்துவிடும், என் பார்கள் சிலர்:
உ. வி: பெற்றவளுக்குத்தான் பிள்ளையின் அருமை தெரியும். அது வும், சான்றேன், தெய்வக்குமரன் எனப் பெரிதுவந்த தாய் எப்படி இதனைப் பொறுத்தல் எப்படி முடியும், மரித்தல் அல்லது. செம்மை திறம்பாதவருடைய சினம் கணப் பொழுதிலேயே சினக்கப்பட்டவர்களை அழித்துவிடும். "குணமென்னும் குன்றேறி நின்ருர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது’ என்ற பொய்யா மொழிக் கவிதைவரிகளுக்கிடையில் நுழைந்துவிட்டது.
இ. வி. மைந்தன் ஆவி ஆறன் தொகை வர தொழிற் பெயர்ப் பொருள் தரும் செயவெனெச்சம், அவனிமிசை ஏழாம் வேற் றுமைத் தொடர். திறம்பா: ஈறு குறைந்த எதிர்மறைப் பெய ரெச்சம், கணத்து ஏழாம் வேற்றுமை. மும்மை உலகு - மூன் றுலகு. உலகும்; உம்மை முற்றுப் பொருள்:- செம்மை திறம் பாத; ஏழன் தொகை.
&\ idl6kl- ருயிரளிக்கு மாமருந்தை வேரோடு
கீண்டெறி வாரிந்தக் கெடுதோஷி களென்மார் கீண்டெறி வாரிந்தக் கெடுதோஷி களெனினும் மீண்டு முளேக்கவொரு வேளைவரா தோவென்பர். (19)
Y N

Page 18
ܚܩܕ 2 2 ܚܚܘ
ப. உ3- மாண்டார் உயிர் அளிக்கும் மாமருந்தை = செத்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை தரும் திருமருந்து மூலியை, வேரோடு கீண்டு எறி வார் இந்தக் கெடுதோஷிகள் என்பார்-ஆணிவேரோடேயே அகழ்ந்து எறிகின்ருர்களே இந்தப் பாவிகள் என்பார்கள் ஒருசிலர், கீண்டு எறிவார் இந்தக் கெடுதோஷிகளெனினும் அகழ்ந்து அல்லது கிழித்து எறிகின்றர்களே இந்தப் பாவிகள் என்றலும், மீண்டும் முளைக்க ஒருவேளை வராதோ என்பார் - திரும்பவும் (அம்மூலி) முளைப்பதற்கு ஒரு காலம் வராதோ என்று சொல்லுகின்றர்கள் (அதற்கு விடை சொல்பவர்கள்போல்) மறுசிலர்:
உ. வி: கவிதை கருத்துலகத்திற்கு வந்துவிட்டது; உள்ளத்தைத் தொடுகின்றது. அம்மானைப்பாடற் பாணியில் கவிதையை அழகாக உருவம் செய்திருக்கின்ருர் கவிஞர்.
உடல் நோய்களுக்கு கோயின் தன்மைக்குத்தகப் பல்வேறு மருந்துகள் உண்டு. ஆணுல் ஆன்மாவின் நோய்க்கு ஒரேயொரு மருந்துதான் உண்டு. அதுதான் திருவருள். திருவருளைச் சொரியும் கரு ணைக் கடவுள் இயேசுநாதர் மருந்தேயாவர். மாண்டார் என்பதற்கு மாட்சி மைப்பட்டார் எனப் பொருள் தந்து, சான்றேர்கள் உயிரைக் காக்கும் மருந்து, மாமருந்தாகி அது இயேசுவேயான பொருள்எனக்கொளல்தான் நுண்மையானது: செத்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்தல் தெய்வ அற்புதமாகக் கருதப்படுவது. மாண்டவர்களுக்கு ஏது உயிர்? அத னுலேதான் இது அற்புதம், மனம் தூயோர் தம் ஆன்ம உய்திக்கு இறைவனே மருந்தாக உட்கொள்வது இயற்கை நியதியாகக் கருதப்படும்.
*தனக்குவமை யில்லான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலே மாற்றல் அரிது'
என்ற குறளினூடாகக் கவிஞர் வெளிப்படுவதைக் காண்க,
பாவிகள் எதையும் செய்யலாம். அதனுல் பாதிக்கப்படுபவர்கள் அவர்களே அல்லாமல் வேறென்றில்லை. உயிர் அளிக்கும் மாமருந்தை வேரோடு பிடிங்கி எறியலாம். ஆணுல் அம் மூலி திரும்பவும் முளைக் காமல் விட மாட்டாது. திரும்ப முளைக்காதாயின், இவர்கள் இப்படிச் செய்வதற்குக் கருத்துண்டெனக் கருதப்படலாம். ஆணுல் அது தான் முளேக்குமாயிற்றே என அறுதியிட்டு உரைக்கின்ருர் கவிஞர். தெய்வ அவதாரம் ஒரு முறையுடன் நின்று விடப்போவதில்லை, அது

- - - 2 س
அடிக்கடி நிகழத்தான் செய்யும் என்ற கருத்தும் இங்கு தொனிப் பது காண்க. இயேசுநாதருடன் அவதாரம் நின்றுவிடவில்லை என்ப தும் வாசகர்களுக்குத் தெரியும். தருமம் தொலைந்து அதருமம் தலை யெடுக்கும் பொழுது நான் அவதரிக்கின்றேன்" எனக் கண்ணன் கீதையிற் கூறியது நினைவிற்கு வருகின்றது இங்கும். தோன்றிய தெல்லாம் அழிவதில்லை என்ற அடிப்படைச் சைவசித்தாந்தக் கோட் பாடு கவிஞருக்குக் கைகொடுக்கின்றது போலும் ! கவிதை "தத்து வம் விளையாடுகின்றது.
வடசொற்களை இடமறிந்து பிரயோகிக்கும் திறமை கவிஞர் கிருஷ்ணபிள்ளைக்கு அதிகம் உண்டு. இதனுல் கிறித்தவத் தமிழ் மர பொன்று உருவாகுவதையும், முன்பு உருவாகிய மரபைக் கட்டிக் காப்பதும் இங்கே கினைக்கப்பட வேண்டும். தமிழ்ப்படுபாவி, கிறிஸ் தவக் கெடுதோஷியாகி இருப்பது இரசனைக்குரியது.
இ. வி: மாண்டார் உயிர்: ஆறன் தொகை: அளிக்கும் மாமருந்து, பெயரெச்சம். வேரோடு: "ஒடு" என்னும் மூன்ரும் வேற்றுமை உருபு எஞ்சாமைப் பொருளைத் தந்தது. ஓடு என்பதற்கு வழமையாகக் கூறப்பட்டு வரும் பொருள் உடன் நிகழ்ச்சி என்பதாகும். முளைக்க வராது என்பதன் உடன்பாட்டு வினை யாகிய வரும் என்பதனுடன் முடிந்த செயவெனெச்சம். மருந்து, இருமடி ஆகுபெயர். s
புன்ருெழிலர்க் கஞ்சிநடுப் போற்ருதூர் பொங்கியழ மன்ருேரஞ் சொல்லியுயிர் வாழ்வதுவோ வாழ்வென்பார் மன்ருேரஞ் சொன்னுேன் மனபாழா யவன்குடியும் பொன்றி யெருக்கலரும் பொய்யா திதுவென்பார். (20)
சொ. வி: புன்தொழில் - இழிவான செயல், நடு = நீதி, மன்று
கோடு. ஒரம் - பொய்ச்சாட்சி.
ப; உ; புன் தொழிலர்க்கு அஞ்சி - இழி தொழில்களேயே புரியும் கீழ் மக்களுக்குப் பயந்து, நடுப்போற்ருது - நீதியை மதிக்காமல், நீதிக்குத் தல வணங்காமல், ஊர் பொங்கி அழ ஊரவர் அனேவரும் ஒன்று கூடித் திரண்டு அழும் படியாக, மன்று ஒரஞ் சொல்லி உயிர் வாழ்வது வோ வாழ்வென்பார் - நீதி மன்றிலே பொய்ச்சாட்சி சொல்லி உயிர்வாழ்வதும் ஒரு வாழ் வாமோ என்பார், மன்று ஒரஞ் சொன்ஞேன் மனே பாழாய்

Page 19
一 24一
எருக்கலரும் - நீதிமன்றில் ஒரம் பேசியவன் வாழும் மனை பாழ் டைந்து எருக்கலே பூக்கும் காடாகிவிடும், அவன் குடியும் பொன்றி எருக்கலரும் - அவன் வாழும் வீடு மாத்திரமன்று அவன் சந்ததியினர் வாழும் வீடுகளும் பரிநாசமாகி எருக்கலங் காடுகளாகிவிடும், இது பொய்யாது என்பர் - இது சத்தியம் என்று சொன்ஞர்கள் ("ஓகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது; எருக்கலரும் என்பது மனை யோடும், குடியோடுந் தனித்தனி கூட்டப்பட்டுள்ளது.1
சாரம்: பொய்ச்சாட்சி பேசி உயிர்வாழ்வது ஒரு வாழ்வன்று. அது நடைப்பிணவாழ்வு பொய்ச்சாட்சி சொன்னவன் வீடு காடாவதில் புதுமையில்லை. அவன் சந்ததியினர் வாழும் வீடுகளே காடுகளாகி விடும். நீதி மன்றத்திற் பொய்ச்சாட்சி பேசுவது சந்ததி சந்ததியாக அறுத்துக்கொட்டும் என்பதாகும்:
உ. வி. நீதிநூற்ருெகைப் பாடலொன்றுக்குச் சந்தர்ப்பம் கூறிப் பொருள் விளக்குகின்றர் இரட்சிப்புக் கவிஞர். இரட்சிப்பு என்ருல் மீட்பு. எடுத்துக் கொண்ட பொருளுக்குத்தக பழைய இலக்கியங்களையும் அங்கங்கே மீட்கின்றர் கவிஞர்.
"வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - முதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்ருேரஞ் சொன்னுர் மன ’ (கீ. நூ. தொ.)
கவிஞரின் இலக்கியப் பயிற்சி காவியத்தைச் சுவைபடச் செய்கின்றது. மக்களின் உள்ளக் கொந்தளிப்பு குற்றவாளிகளேச் சபிக்கும் எல்லைக்குச் சென்றுள்ளதைக் கவிதை தெரிவிக்கின்றது. பணத்திற்காக, எதிரியைப் பாதுகாப்பதற்காக பொய்ச்சாட்சி சொல் வதும் உண்டு. இங்கே "புன்தொழிலுக்கு அஞ்சி என்பதால் அக் காலத்தில் யூதேயா நாட்டு மதபோதகர்கள் எத்துணைக் கொடுர மனப்பான்மை உள்ளவர்கள் என்பது பெறப்படுகின்றது. இயேசு நாதரின் சிஷ்சியன் யூதாசு பணத்துக்காகக் காட்டிக் கொடுத்தான். ஆனுல் பெரும்பான்மை மக்கள் அச்சத்திற்காகப் பொய்ச்சாட்சி சொன்னுர்கள். அச்சமுதாயத்தில் தீயன எல்லாம் இருந்தன போலும், துர்நாற்றம் வீசும் இச் சமுதாய மத்தியில் - புல்லியர் மத்தியில் புண்ணியர் இயேசு கருணை நெறியை உபதேசிப்பதற்கு எவ்வளவு அல்லலும் ஆய்க்கினையும் பட்டிருப்பார் என்பது சொல்லி அறிய வேண்டியதில்லை.
 

..................-- 225 --س
இ. வி. நடுப் போற்றது: இரண்டாம் வேற்றுமைத் தொகை, பொன்றி செய்து என்னும் வாய்பாட்டுத் தன்வினை வினே யெச்சம், (பொன்றுவித்து எனப் பிறவினை வினையெச்சமாகக் கொள்ளின் முடிக்கும் சொல் இன்மை அறிக.)
ள்ேளிநா ஜிவரகூை! நல்கவரு ஞானகுரு
வள்ளலுக்கு வன்கொலேயும் மாபா தகம்புரிந்த , ܠܐ ܢܶܓܶܢ கள்ளனுக்குக் காவல் விடுதலையுங் கட்டுரைத்து كالأر * விள்ளுவதோ நீதிபுரி வேந்தருக்குச் சீலமென்பார். (21)
சொ. வி: கள்ளி - நட்புச் செய்து, கட்டுரைத்து - தீர்ப்புக்கூறி
விள்ளுதல் - சொல்லுதல்.
ப. உ. நள்ளி நர ஜீவரட்சை நல்கவரு ஞானகுரு வள்ளலுக்கு - கருணையால் உயிர்களை நேசித்து அவர்களைப் பாவத்தினின்றும் இரட்சிப்புச் செய்ய அவதரித்த ஞானதேசிகராகிய கருணைவள்ள லுக்கு, வன்கொலையும் - ஈவிரக்கமற்ற கொலேத் தண்டனையும், மா பாதகம் புரிந்த கள்ளனுக்குக் காவல் விடுதலேயும் - பஞ்சமா பாதகம் செய்த கள்ளனுக்கு மறியலில் இருந்து விடுதலையும், கட்டுரைத்து விள்ளுவதோ - உறுதியான தீர்ப்பாகக் கூறுவதோ, நீதிபுரி வேந்தருக்குச் சீலம் என்பார் - நீதியின்படி ஆணை செலுத்த வேண்டிய அரசனின் பண்பு என்று சிலர் சொல்வார்கள்.
உ. வி:- இது ஒரு விசித்திரம் என்றபடி, ஒருவர் மானுடர்களைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காகவே அவதரித்து சீவன்க ளிடத்துக் கருணையை அள்ளிக் கொட்டி அவர்கள் கடைத்தேற வைப்பவர். கள்ளனுே ஏனைய உயிர்களைத் துன்பம் செய்து கொள்ளை அடித்து மேலும் துன்பத்துக்குள்ளாக்குபவன், அவன் விடுதலை செய்யப்படுகிறன் .
பாஸ்காப் பண்டிகையை முன்னிட்டு கைதிகளிற் சிலரை விடுதலை யாக்குவது யூதேய நாட்டுவழக்கம். ஏன், இக்கால அரசாங்கங்கள் கூட, சுதந்திரதினம் முதலான தேசிய தினங்களை முன்னிட்டுக் கைதிகளிற் சிலரை விடுதலையாக்குவது வழக்கமல்லவா? விடுதலை யாக்கப்படவேண்டியவர்கருக் கொலேத்தண்டனைத்தீர்ப்பு, கட்டாயக் க்ைதியாக்கப்பட வேண்டியவனுக்கு விடுதலை என்றல் அது விசித் திரமன்றி வேறென்ன? அக்காலத்து மதபோதகர்களின் செல்வாக்கு, ஆட்சியைக் கூடப் பணிய வைக்கின்றது. இதனுலேதான் கொடிய மதபோதகர்களை இயேசு வெறுத்து ஒதுககவேண்டியவரானுர், கலகம்
இ. பா. 4

Page 20
- B6 -
புரிந்ததற்காகவும், கொலைப்பாதகத்தின் காரணமாகவும் முன்பே சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்தவன் பரபாசு" என்னும் கள்ளன்.
"LJU
இ.
II.
பாசு' என்னும் கள்ளனே விடுதலை செய்யப்பட்டான்.
வி. நள்ளி (கள் + இ) : செய்து என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம், குருவள்ளல்: இருபெயர் ஒட்டுப்பண்புத் தொகை, காவல் விடுதலை: நீக்கப் பொருளில் ஐந்தாம் வேற் றுமைத் தொகை,
கொல்லாது விட்டுவிடக் கொற்றவன்பல் கான்முயன்றும் பொல்லாருக் கஞ்சிப் புகன்ருன் கொலேயென்பார் பொல்லாருக் கஞ்கிப் பொதுநீதி யைப்புரட்டி அல்லாத செய்வார்க் கறங்கூற்றே யாமென்பார், (22)
உ: கொற்றவன் கொல்லாது விட்டுவிடப் பல்கால் முயன்றும் - விசாரணை செய்த அரசனு ன "பிலாத்து இயேசுநாதருக்குக் கொலேத்தண்டனை கொடுக்காமலிருப்பதற்குப் பலமுறை முயற்சி செய்தும், பொல்லாருக்கு அஞ்சி - பிரதான ஆசாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும், பயந்து (நிர்ப்பந்திக்கப்பட்டான்), புகன் முன் கொஆல என்பார்-கொஆலத்தண்டனைத் தீர்ப்பளித்து விட்டான் என்று சிலர் சொன்னர்கள், பொல்லானுக்கஞ்சி - தீயவர்களுக்குப் பயந்து, பொது நீதியைப் புரட்டி - அனைவருக்கும் பொதுவான நீதியைத் தலைகீழாக்கி, அல்லாது செய்வார்க்கு அறம் கூற்றேயாம் என்பார் . அநீதி செய்பவற்கு தருமதேவதையே இயமனுக நின்று அவர்களை ஒழித்துக்கட்டும் என்று சொன்னுர்கள் சிலர்.
வி: பொது மனித நீதி மறுக்கப்பட்டது எருசலேம் நகரப் பெண்களுக்கே தெளிவாகப்படுகின்றது. நீதிவிசாரணை செய்த பிலாத்து இறுதிவரை இயேசுவை விடுதலையாக்கவே பிரயத் தனப் பட்டான். ஆனல் பிரதான ஆசாரியர்களும், அதிகாரி களும், மோட்டுச்சனங்களும் கூச்சலிட்டு மிரட்டி அவனப் பணியவைத்தார்கள். அதனுல் தண்ணிரை ஊற்றிக் கைகளுவி விட்டு, தான் அதற்குப் பொறுப்பாளி அல்ல என்பதைக் காட்டிவிட்டு மரணதண்டனைத் தீர்ப்பளித்தான் எனச் சுவிசே ஷங்கள் கூறும். பின்தரும் சுவிஷேச வாசகங்களிலிருந்து கதையைத் தெரிக.
* அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களேயும், ஜனங்
களையும், நோக்கி; இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத் தையும் காணவில்லை என்ருன்,' (லூ 23 : 4)
 

ܚ 7 2 ܘܩܝ
* பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் கூட்டி வரச் செய்து அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனுக இந்த மனுசனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்த போது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் கான் இவனிடத்திலே காணவில்லை. உங்களை ஏரோதினிடத்திற்கு அனுப்பினேன். அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை மரணத்திற்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே ஆன படியால் இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன் என்றன்’ (லூ - 23:14 - 16) 'அவன் மூன்ருந்தரம் அவர்களே கோக்கி, ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன் றும் இவனிடத்தில் நான் காணவில்லையே ஆகையால் நான் இவ னைத்தண்டித்து விடுதலை ஆக்குவேன் என்ருன்' (லூ - 23:22)
' கலகம் அதிகமாகிறதே அல்லாமல் தன் பிரயத்தனத்தினுலே பிரயோசனம் இல்லையென்று 'பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி : இந்த நீதி மானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த் துக் கொள்ளுங்கள் என்ருன் - அப்பொழுது அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினுல் அடிப் பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக் கொடுத்தான்’
(மத்தேயு 27-24,26)
இங்கும், கவிஞர் நீதிநூற் தொகைப் பாடலொன்றை அழகாக எடுத்துப் பிரயோகிக்கின்றர்.
“கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங் கூற்றம் - மெல்விய வாழைக்குத் தானின்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற் கிசைந் தொழுகாப் பெண் '
புலம்பல் போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டுப் பெண் கள் புலம்புவது போலல்லவா தெரிகிறது. கதையை வாங்கிக் கொண்டு சூழலைத் தான் வசிக்கும் சூழ்நிலையாக வைத்துப் பாடுவது தான் தழுவல், மொழிபெயர்ப்புக் காவியக் கருத்தாக்களுக்கு எல் லாம் பொதுமரபாய் விட்டதே.

Page 21
- 88 -
இ. வி: கொல்லாது : எதிர்மறை வினையெச்சம். அல்லாத : குறிப்பு வினையாலணையும் பெயர். அறம் கூற்றே; ஏகாரத்தைப் பிரித்துக்கூட்டி, பிரிநிலைப் பொருளதாகக் கொள்க.
காட்டிக் கொடுத்தோன் கழுத்தி லொருகயிற்றைப் பூட்டிமன வாதையினுற் பொன்றினனும் பொல்லாங்கு சாட்டிக் கொலபுரிசண் டாளர்மணச் சாகூரியுந்தம் பாட்டிற் கிடப்பதென்ன பாவமதி பாவமென்பார் (23)
ப; உ; காட்டிக் கொடுத்தோன் இயேசுநாதரைக் காட்டிக் கொடுத்த வணுகிய யூதாசு, மனவாதையினுல் - மனச்சாட்சி குறுகுறுத்து வேதனையைக் கொடுக்க, அதனைத் தாங்க மாட்டாது, கழுத்தில் ஒரு கயிற்றைப் பூட்டிப் பொன்றினனும் - கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலே செய்து தொலைந்து போனுணும், (அப்படியிருக்க) பொல் லாங்கு சாட்டிக் கொலேபுரி சண்டாளர் - இல்லாத குற்றங்களை எல்லாம் இருப்பதாகச் சாட்டிக் கொலைசெய்கின்ற படுபாவிகள், மனச் சாட்சியும் தம்பாட்டிற் கிடப்பது என்ன - ஆடாமல் அசை யாமல், சற்றும் நகராமல் இவர்கள் ஒவ்வொருவரினதும் மனச் சாட்சி யும் செயல்படாத காரணம் என்ன? டாவம். அதிபாவமென்பார் கள் - இப்படி இவர்கள் மனச்சாட்சி செயல் படாமல் இருப்பது
இவர்கள் செய்த பெரும் பாவம் என்று சொன்னர்கள்.
உ. வி: யூதாசுக்கு மனச்சாட்சியென ஒன்று இருந்தது. இவர் களுக்கு அதுவும் இல்லையென்றபடி, இருந்தால், மனச்சாட்சி வேலைசெய்யாமல் இருப்பதும், இவர்கள் பயங்கரப் பாவிகள் என்பதற்கு அறிகுறியாகும். இவர்கள் சிந்தனையற்ற மிருகப் பிறவி என்று கருதக் கூடியவர்கள் என்றெல்லாம் எருசலேம் பெண்கள் கருதுகின்ருர்கள்.
இ. வி: கொடுத்தோன் வினையாலணையும் பெயர். புரிசண்டாளர் : வினைத்தொகை,மனச்சாட்சியும்: உம்மை எதிர்மறைப் பொருளது.
அதிபாவம்: அதி - மிகுதிப் பொருள் தருவதோர் வடமொழி இடைச்சொல்.
நிந்தனையாஞ் செந்நெருப்பு நெஞ்சைக் கொளுத்திடவும் நொந்தொருசொற் சொல்லாத நோன்மை நுணித்துணரின் மைந்தருக்கிச் சாந்தம் வருமோ மகேசனெனுஞ் சிந்தை செறுநருக்குச் சேராத தென்னென்பார் (24)

سيله= 39'اسيسيبي
சொ. வி: நோன்மை = வலிமை, சகிப்பு, மகா + ஈசன், மகேசன்,
ப. உ. நிந்தனையாம் செந்நெருப்பு நெஞ்சைக் கொளுத்திடவும் - (அந் தச் சண்டாளரிற் சிலர் சொல்லும்) தூஷணவார்த்தைகளாகிய முறு கிய நெருப்பு மனதைத் தீய்த்த பொழுதும், நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்துணரின் = வெதும்பி ஒரு பதிற் சொல்லுமே சொல்லாத பெரும் சகிப்பை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால், மைந்தருக்கு இச் சாந்தம் வருமோ - சாதாரண மனித்தப் பிறவிக்கு இப்படியான பொறுமை வராது (எனவே இவர் தெய்வப் பிறவிதானென்பது துணியப்படும்) , மகேசன் எனும் சிந்தை - இவர் சர்வசக்திவாய்ந்த கடவுள்தான் என்னும் எண்ணம், செறு நருக்குச் சேராதது என்னென்பார் - இப்பகைவர்களுக்கு வராத கார ணம் என்னையோ என்றும் சொன்னுர்கள்.
உ. வி. நிந்தனைச் செரு நெருப்பு என்பதால் எந்தளவுக்கு அது உள்ளத்தைச் சுட்டிருக்க வேண்டுமென்பது தெரியவரும், அப் பொழுதும் சகித்தாரென்ருல் அவர் தெய்வப்பிறவிதான் என்று துணிகின்ருர்கள் நகர்ப்புற நங்கையர்கள், அதே நேரத்தில் செறுநர் அதனை விளங்கிக் கொள்ளவில்லை. பகைமைத் திரை உண்மையைத் தடுத்து விட்டதோ, அல்லது இயற்கையில் இப்படித்தானுே என அவர்கள் புலம்பிக் கொள்ளுகின்றர்கள். கடவுள் என்று அறிந்திருந்தால் வைதல் நிகழாது, வாழ்த்து நிகழ்ந்திருக்கும். பெண்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று கூறிக் கொண்டாலும் உள்ளதை உணரும் திறனில் அவர் கள் முன்னிற்கிருர்கள்.
சகிப்பும் ஒரு விரதமாகக் கொள்ளப்பட்டு, பயிற்சியால் வலுப் படுத்தப்படவேண்டும் என்பது கோன்மை என்ற சொல்மூலம் தெரியவருகிறது. அன்றியும், சகிப்புத்தன்மை மனித பெலமன்றி, பெலவீனமாகாது என்ற கருத் தி லும் கவிஞர் அச் சொல்லைச் கையாண்டிருக்க வேண்டும்.
இ. வி; நிந்தனையாஞ் செந்நெருப்பு: உருவகத் தொடர், உணரின்: செயின் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம், வராது, வரும் என்ற எதிர்மறை வினைமுற்றுடனும், உடன்பாட்டு முற்றுடனும் தனித்தனி முடிந்தது.
செந்தா மரைபோற் றிகழுந் திருவதனம் அந்தோ வதங்கி யழகுகுடி போயதென்பார்
ஒடிதநந்தாக் கருணை நருத்துளிக்குங் கண்மலர்கள்
சிந்தா குலம்பொதிந்து தேசிழந்து விட்டவென்பார். (25)

Page 22
ത്ത 80 -
ତଥf୩, ରତ୍ନି :- குடிபோதல் - அற்றுப்போதல், நந்தாக்கருணை - ஒழியாத
கருணை, சிந்தை + ஆ குலம் = சிந்தாகுலம் - துன்பம்,
ப, உ; அந்தோ - ஐயோ, செந்தாமரைபோல் திகழும் திருவதனம் - சிவந்த தாமரை மலரைப்போல் வசீகரமும் ஒளியும் விளங்கும் அழகிய தெய்வ முகம், வதங்கி அழகு குடிபோயது என்பார்-வாடி பிரபை அற்றுப்போய் விட்டது என்பார்கள் சிலர், நந்தாக்கருணை நருத்துளிக்குங் கண்மலர்கள் - இடையருதகருணை என்றும் தேன் துளிகளேப் பணிக்கும் கண்களாகிய மலர்கள், சிந்தாகுலம் பொதிந்து தேசிழந்து விட்ட என்பார்-மனக்கிலேசத்தை நிறைத்து ஒளிகுன்றி விட்ட்னவே என்பார்கள் சிலர்,
உ. வி:- இதய கோய்க்குத் தேன்சிறந்த மருந்து என்பர். மனக் கவலைக்கு இறைவன் கருணை மருந்து என்பர். எனவே,"கருணை
நரு" என்றது மிகப் பொருத்தமே. இரட்சகர் இயேசு முற்ருக உடல் ஒளி இழந்துவிட்டார் என்பது தெரியவருகிறது.
இ. வி. போயது: படர்க்கை இறந்தகால வினைமுற்று இறப்பி றப்பை உணர்த்துவதற்கு யகரமெய் இடைநிலையைக் கொடுத்து வருவது, கவனிக்கப்பட வேண்டியதொன்று. நந்தா ஈறுகுறைந்த எதிர்மறைப் பெயரெச்சம். கருத்துளிக்கும்: இரண்டாம் வேற்று மைத் தொகை, விட்ட அன்சாரியை பெருத இறந்தகாலப் படர்க்கைப் பன்மை வினைமுற்று. 'அன்' சாரியை பெற்றல் விட்டன எனவரும்) .
உன்னத மெய்ஞ்ஞான முவந்துகுடி கொண்டதிருச் சென்னிபுடை யுண்டிரத்தஞ் சிந்துவதோ செவ்விதென்பார் மன்னுதிரு மேனிமுற்றும் வாரடியாற் கன்றிநைந்து சின்னமுற லாவதுவோ தெய்வமே யோவென்பார் (26)
சொ. வி. புடையுண்டு-வீங்கி, சென்னி-தலை, செவ்விது-செம்மை
யானது - நெறிப்பட்டது.
ப. உ;- உன்னத மெய்ஞ்ஞானம் உவந்து குடிகொண்ட திருச்சென்னி. மனிதகுலத்தினர்க்கு உன்னத வாழ்வை அளிப்பதற்கான உண்மை ஞானம் விரும்பிவந்து தானுகக் குடிபுகுந்த தெய்வீகச் சிரசு, புடையுண்டு இரத்தம் சிந்துவதோ செவ் விது என்பார் . (அடிக் காயத்தால்) வீங்கி இரத்தம் சொரிவதோ நெறிப்பட்ட செயலாகும் என்பார் சிலர், மன்னு திருமேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து சின்னமுறலாவதுவோ - நிலையான திருமேனி முழுவதும்

-- 31 سے :
கசையடியால் கன்றிப்போய், தசை எல்லாம் பீறிட்டும் பிய்ந்தும் உருக்குலைந்து போவதோ, தெய்வமே ஒ என்பார்-தெய்வமே இது உன் திருவுள்ளத்திற்கு அடுக்கும் செயலோ ஐயோ என்று கதறு வார் சிலர்.
வி: சிலுவையில் அறையுண்ண முன்பே, இயேசுநாதர் இரத்த
சோரையுடன் செல்லும் துன்பக் காட்சி கன்னெஞ்சையுங் கரையவைக்கின்றது. காயங்களால் த%லவீங்கி இரத்தம் சோணு மாரியாகச் சொரிகின்றது. அந்த நிலையிலும் இயேசுநாதர் பொறுமை இழக்கவில்லை. நாம் உண்மை ஞானத்தைப் பகீர தப்பிரயத்தனப்பட்டுத் தேடிக் கொள்கின்றேம், மெய்ஞ்ஞானமோ இயேசுநாதரைத் தேடி அவர் தலையிற் குடி கொண்டது எனக் கவிஞர் கூறுகின்றது அருமைப்பாடாக உள்ளது. புத்தர் மெய்ஞ்ஞானத்தைத் தேடிச் சென்றாாம்; மெய்ஞ்ஞானம் கிறிஸ்துவைத் தேடி வந்ததாம். எனவே, இயல்பிலே ஞானம் கைவரப்பெற்றவராகித் தெய்வ அவதாரம் என்பது இதனுல் உறுதிப்படுத்தப்படுகிறது. கவிஞருக்கு இரட்சகர்மேல் உள்ள ஆராதகாதலும் புலனுகின்றது.
இ. வி:- உன்னத மெய்ஞ்ஞானம்: பண்புத்தொகை, இரண்டன்
தொகையுமாம், தெய்வமே: எட்டாம் வேற்றுமை விளி,
பெண்ணிர்மை குன்ருத பெய்வளேயா ரிவ்வண்ணம் புண்ணிருந் தீயிற் புகைந்தா ருயிர்பொடிப்பக் கண்ணிரின் றுன்பக் கடற்கெல்லே காணுராய் எண்ணிர ராய்ச்செல்லு மெம்பெருமான் பின்சென்ருர், (27)
ப, உ:- பெண்ணிர்மை குன்ருத பெய்வளையார் இவ்வண்ணம் - பெண்
தன்மை குறையாத எருசலேம் பெண்கள் இவ்வாருக, புண் ஈரும் தீயில் புகைந்து - புண்ணில் நெருப்புப்பட்டால் எவ்வாறே அவ் வரறு கொடுந்துன்பத்தால் வருந்தி, உயிர்பொடிப்ப - அவரவர் உயிர் துடிதுடிக்க, துன்பக் கண்ணிரின் கடற்கு எல்லேகாணு ராய் - துன்பத்தால் சொரிகின்ற கண்ணிர்க் சுடலுக்கு எல்இல காணுதவராகி, எண் நீர ராய்ச் செல்லும் எம்பெருமான் பின்சென் ருர் - எவராலும் துதிக்கப்படத் தக்கவராகச் செல்லும் எம்பெருமா ஞகிய இயேசுவின் பின் செள்ளுர்கள்.
வி: சித்திரவதைக்கு உள்ளாகிவரும் இயேசுநாதரைச் சித்திரிப் பதில் மாத்திரமன்று, அச்சோகக் காட்சியைக் காணும் பெண்

Page 23
4.
- 82 -
களின் அவலத்தைச் சித்திரிப்பதிலும் கவிஞர் பெருவெற்றி தேடிக் கொண்டார். "பெண்ணிர்மை குன்ருத பெய்வளையார்’ எனப்படும் பொழுது, பெண்ணீர்மை குன்ருத பெய்வளையார் உண்டா என்றவின எழலாம். இருக்கிறர்கள். ஆல்ை அங்கே இல்லை என்பதுதான் கருத்து. 'புண்ணிருந்தீ என்பதற்கேற்ப 'புகைந்து' என்ற சொல் கையாளப்பட்டது. பொருத்தமான சொற்களைத் தெரிந்து பொருத்தமான இடத்திற் கையாளப்படு வதுதான் கவிதையென ஒருசிலர் கூறும் விளக்கத்திற்குப் பொருத்தமாக உள்ளது. தண்ணீரில் தீயிடும் பொழுது புகை எழுதல் இயல்பல்லவா? புண்ணும் தண்ணீர்ப்பிடி யுள்ளது தானே,
வி. பெண்ணிர்மை; பெண்ணுகிய நீர்மை என விரித்துப் பண்புத்தொகையெனக் கொள்க (பெண் என்ருல் இரக்கத் தன்மை என்பது கருத்து) ஆறன் தொகையெனக் கொள் வாரும் உண்டு, புண்ஈரும் (புண்ணே அறுக்கும்) இரண்டன் தொகை. எண்ணிரர் வினைத்தொகை.
பேதலித்த பெண்களுக்குப் பெருமானின் உபதேசம் உபசாந்தர் உபதேசம்
மைத்தடங்கண் ணிச்சொரிய வாய்விட் டழுதரற்றிச் சித்த முடைந்து தொடர்ந்துவரு சேயிழையார் பத்திமையுஞ் சிந்தைப் பருவரலுங் கண்டிரங்கி உத்தம சற்போத வுபசாந்த tதுரைப்பார் (28)
ப. உ. மைத்தடங்கண் நீர் சொரிய - மையூசிய விசாலமான கண்களில்
இருந்து நீர் தாரை தாரையாகச் சொரிய, வாய்விட்டு அழுது அரற் றிச் சித்தம் உடைந்து - கதறி அழுது, புலம்பி, மனம் உடைந்து, தொடர்ந்து வரு சேயிழையார் - (பாதை முழுவதும் இடையீடு இல்லாமல்) தொடர்ச்சியாக வருகின்ற பெண்களின், பத்திமையும் சிந்தைப் பருவரலுங் கண்டு இரங்கி - பக்தியையும், மனத்துன் பத்தையும், பார்த்து இரக்கமடைந்து, உத்தம சற்போத உபசாந் தர் ஈது உரைப்பார் - உத்தமமான நற்போதகரும் சாந்தகுணம் மிக்கவருமாகிய இயேசு இதனைத் திருவாய் மலர்ந்தருளுவார்.
வி:- சிந்திக்கும் இயல்புடைய பெண்கள் இனிச்சிந்திக்க (plg. யாத அளவுக்குச் சிந்தித்து மனம் உடைந்து விட்டார்கள். அவர்கள் பட்டபாடு இயேசுநாதரின் சிலுவைப்பாட்டிலும் கூடி
 

1, 88 =
விட்டது. அதற்குக் காரணம் இயேசுநாதர்மேல் உள்ள பக்தி யும், இயல்பான இரக்கச் சிந்தையும். "பெண்ணிர்மை குன்றத பெய்வளையாரின் பத்திமையுஞ் சிங்தைப் பருவரலும் இயேசு நாதரின் உள்ளத்தை கெகிழ்த்து அவரின் திருவுதடுகளைத் திறக்கச் செய்துவிட்டன. சொற்கோப்புச் சுவைதருகின்றது. (சத் > சற் - நன்மை.)
இ. வி: சொரிய: செயவெனெச்சம், தொடர்ந்துவரும் என்னும் பெயரெச்சத்துடன் முடிந்தது. சித்தமுடைந்து: எழுவாய்த் தொடர். ஈது: இது என்னும் சுட்டுப் பெயர் ஓசை நோக்கி நீண்டது.
மலடிகள் பாக்கியவதிகள் "எருசலேம் புத்திரிகா ளென்பொருட்டுக் கலுழாதே துடிப்துரிசறமற் றும்பொருட்டுஞ் சுதர்பொருட்டுங் கலுழ்ந்திடுமின் - வரிசைபெறு மகப்பெரு மலடிகள்பாக் கியரென்னு
உரைசெறியத் தருநாளிங் குளதாமென் பதையுணர்ந்தே (29) அன்றுபுக லிடமளிதா யவரவரே துயர்விஞ்சிக் குன்றுகளே மக்லக்குலமே யெமைமுடிக் கொள்ளுதிரால் என்றுரைப்பார் பசுமரத்துக் கிதுசெய்வா ரெனிலந்தோ தொன்றுலுலர்ந்து மடுமரத்துக் கெதுசெய்தார் துணிவொன்றி'
(துரிசு - குற்றம், பாக்கியர் - பாக்கியவதிகள், தொன்று அதிக
35(TGN)LDAT35)
ப, உ; எருசலேம் புத்திரிகாள் - எருசலேமின் புதல்விகளே! என் பொருட்டுக் கலுழாதே - நீங்கள் எனக்காக அழுது புலம்பாமல், உம்பொருட்டும் சுதர்பொருட்டும் - உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும், துரிசு அற - (பின்பு ஏற்படும்) துன்பம் அற் றுப்போகும் படியாக, கலுழந்திடுமின் - அழுங்கள், வரிசை பெறு மகப்பெரு மலடிகள் பாக்கியர் என்னு - சிறப்புத் தரும் புதல்வர் களேப் பெற்றுக்கொள்ளாத மலடிகள் பாக்கியவதிகள் என்று, உரைசெறியத் தரும்நாள் இங்கு உளது ஆகும் என்பதை உணர்ந்து (அழுங்கள்) - அனைவரும் சொல்லக்கூடியதொருநாள் இவ்வுலகில் வரும் என்பதை உணர்ந்து அழுங்கள்;
அன்று புகலிடம் அரிதாய் - (அப்படி ஏற்படப்போகும்) அந்த நாளில் அடைக்கலம் புகுந்து ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல்,
G. UT. 5

Page 24
-- 34 س--
அவர் அவரே துயர் விஞ்சி - அவரவர்களே துன்ப மிகுதியால், குன்று களே மலைக்குலமே எமைமுடிக் கொள்ளுதிர் என்று உரைப்பர் - குன்றுகளே மலைக் கூட்டங்களே! எம்மை மூடி மறைத்துக் கொள் ளுங்கள் என்று சொல்வார்கள், அந்தோ - ஐயோ!, பசுமரத்துக்கு இது செய்வார் எனில், துணிவு ஒன்றி, தொன்று உலர்ந்து படு மரத்துக்கு எது செய்யார் - பச்சை மரத்திற்கே இப்படிச் சித்திரவதை செய்வார்களேயானுல் அதிக காலமாகவே வாடிப் படுகின்ற மரத் துக்கு எதுதான் செய்ய மாட்டார்கள்? எல்லாமே செய்வர் !
'திரள் கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி ஸ்திரீ களும் அவருக்குப் பின் சென்ருர்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி; எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக் காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளை பெருத கர்ப்பங்களும், பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ள வைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி, எங்கள் மேல் விழுங்களென்றும் குன்றுகளை நோக்கி; எங்களே மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத் தொடங்குவார்கள். பச்சை மரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்ருன் ’
(லூக், 23: 27-31)
உரைசெறியத் தருநாள் இங்கு உளதாகும்; எருசலேம் நகரை உரோமர் முற்றுகையிட்டபோது நிகழ்ந்த கோரச்செயல்களுள் ஒன்று தாய்மார் தம் குழந்தைகளைப் பொசுக்கித் தின்றதாகும். இக் கோரக்காட்சியை தம் தெய்வீகக் கண்முன்பாகக்கண்ட இயேசு இப் பொழுது இங்ாவனம் மகப்பெரு மல்டிகளின் நிலேயே மேலென்ற வாறு உபதேசிக்கின்றர்.
பச்சைமரமும் படுமரமும்: 'பாவம் எதுவும் அறியாத பச்சைமரம் போன்ற எனக்கே இப்பயங்கரத்துன்பக்கதி hன்றல், அஃதாவது உங்கள் பாவமீட்புக்காக யான் இவ்வகைத் துன்பம் அனுபவிக்கவேண்டியதாயிருந்தால் ஐயோ பாவமயமான பட்டமரம் போன்ற நீங்கள் உங்கள் பாவங்களுக்காக எவ்வளவு பாடுகளை உத்தரிக்க வேண்டிவரும் என்பதை உணருங்கள். ஆகவே நீங்கள் வெறும் அனுதாபம் காட்டுவது போதாது. உங்களை அரவணைக்க வந்த என்னேநீங்கள் இங்ஙனம் புறக்கணித்ததால் உங்களுக்கும் உங் கள் மக்களுக்கும் வரப்போகும் கடுந்தண்டனையை நினைந்து உண்
 

ܩܕܡܘܗܝ 5 3 ܚܒܫܗ
மையை உணர்ந்து மனம் திரும்புங்கள். இன்னும் சில ஆண்டுகள் உங்கள் அனைவருக்கும் வரப்போகும் தண்டனை எவ்வளவு பயங்கர மானதாய் இருக்குமென்ருல் ' இத்தகைய துன்பத்தைக்கானவா பிறந்தோம் ? இதற்காகவா மக்களைப் பெற்ருேம் ? நாங்கள் துன்புறு வதுடன் இக்குழந்தைகளும் துன்புறுவதைக்காண முடியவில்லையே! மலடிகளாயிருந்தால் நலமாயிருக்குமே உயிருடன் இருந்து என்ன பயன் ? மலைகளே நம்மேல் விழுந்து நம்மை அப்படியே பொசுக்கி விட்டால் எவ்வளவோ நன்மையாகும் என்றெல்லாம் கதறுவார்கள்” என இப்பகுதிக்கு விளக்கம் தருகின்றர் சென்னை - மயிலை அதி மேற்றிராணியாராய வண. R. அருளப்பர் அவர்கள்
இவ்விளக்கம் மாத்திரமன்று, இயேசு அவதரித்த பொழுது எதிர்காலத்தில் இயேசு யூதமன்னன் ஆகலாம் என்ற பயப் பீதியி ணுல், ஏரோது மன்னன் இயேசு காலத்தில் பிறந்த சகல ஆண் குழந்தைகளையும் பயங்கரப்படுகொலை செய்வித்தான் என்ற கதை யையும் இவ்விடத்தில் நாம் நினைவுகூருதல் வேண்டும். எத்தனையோ குழந்தைகள் பலியாக்கப்பட இயேசு உயிர் காப்பாற்றப்பட்டது. எப்படிப் பார்த்தாலும் மகப்பெரு மலடிகள் பாக்கியவதிகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவரின் மனநிலை புண்பட்டிருந்ததை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
* ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதையுணர்ந்து கடுங்கோபமுற்ற ஏரோதுதான் ஞானிகள்மூலம் அறிந்துகொண்ட தின்படி பெத்தலகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும், இரண் டும் அதற்குட்பட்டதுமான வயதுடைய எல்லா ஆண் குழந் தைகளையும் கொல்லுவித்தான் ' (மத், 2:16)
இப்படியான கொடுமை செய்வார்களானுல் அந்தோ ஐயோ, படுமரத்துக்கு துணிவு ஒன்றி எதுசெய்யார் - முன்பே ம யுலர்ந்து போன பட்டமரத்துக்குத் துணிச்சலுடன் எதுதான் செய்ய மாட்டார்கள்? எல்லாம் செய்வார் என்றபடி,
உ. வி: மிக இளம் வயதினரான இத்தபோதனருக்கே இவ்வளவு கொடுமையென்றல் கிழடுகட்டைகளுக்கு என்னதான் செய்ய மாட்டார்களென்று அந்தப் பெண்கள் சலித்துக் கொள்கிறர் கள். துன்பம் தாங்கமாட்டாமல் மலைகளுக்குள்ளே அமிழ்ந்தி விட வேண்டும், தம்மை மலேகள் அமிழ்த்திவிட வேண்டும் என்று துடிக்கின்ற பெண்கள், தாம் கல்லாகப் பிறக்கவில்லையே

Page 25
سے 36 ) ہییسے
என்று கருதிப் போலும், மலைக்குலமே எமைமூடிக் கொள் ளுதிர் என்று கேட்கின்றர்கள். கல்லானுல் இதனைக் கண்டு கனிய வேண்டிய அவசியம் இல்லையென்று கருதுகின்றர் கள் போலும் ! யேசுநாதர் கூற்றகக் கொள்ளாமல் இப்படியும் GasTGTGTGOTTín.
இ. வி. புகலிடம்: 4-ம் வேற்றுமைத் தொகை, கொள்ளுதிர் முன்னிலைப்பன்மை வினைமுற்று. ஆல் - அசை, பசுமரம் - பண் புத்தொகை, படுமரம் - வினைத்தொகை,
கூடச்சென்ற குற்றத்திற்கு
என்றுதுய குறுமடவார்க் கிரங்கியிருந் துயிரோடு நன்றுமொழிந் தடர்சுமையா னலிவெய்தித் தளர்ந்தேகத் துன்றுசிலு வையையாங்கோர் வழிப்போக்கன் ருெடுத்தேந்தி ஒன்றிவரு கெனக்கொலேஞ ருத்தமரைக் கொடுபோனுர் (30)
சொ. வி: மடவார் - பெண்கள், இரும் துயர் - அதியதுயர். துன்று
பொருந்திய, வருக + என = வருகென
ப, உ என்று துயர் உறு மடவார்க்கு இரங்கி இவ்வாறு சொல்லித் துயரம் அதிகரித்த பெண்களுக்காக இரக்கமடைந்து, இரும் துய ரோடு நன்று மொழிந்து - பெரும் துயரத்திலும் நன்மையான தையே உபதேசித்து, அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக-தாங்கமாட்டாத பெரும் சுமையினுல் வேதனைப்பட்டு தள்ளாடிச் செல்ல, துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி ஒன்றிவருக என இயேசுநாதர் சுமத்த சிலுவையை, அவ் விடத்தில் சென்ற சீமோனுகிய வழிப் போக்க ன் ஒருவனிடம் கொடுத்து, இதனைச் சுமந்து இயேசுநாதருடன் நெருங்கி வருக என்று (கூறி). கொலைஞர் உத்தமரைக் கொடுபோனுர் - (அந்தக்) கொலேப்பாவிகள் உத்தமராகிய இயேசுநாதரை கொல்கதா என்னும் இடத்திற்குக் கொண்டு போனுர்கள்.
உ. வி. ஏதோ இந்த அளவிலாவது இரட்சகர்கள் இயேசுவின் சுமையைத் தளர்த்தியது பெருங் காரியமாயிற்று. ஆணுல், அதனையும் இன்னுெரு வழிப்போக்கனேக் கொண்டு பலவந்த மாகவே சுமப்பித்தார்கள். இது கூடச் சென்ற குற்றத்திற்குரிய தண்டனையாக்கும்.

سے 37 می۔
'போகையில், சிரேனே ஊராணுகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுசன அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக் கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினுர்கள்’ (மத்-27:32)
இ. வி;~ உறுமடவார்: வினைத்தொகை, கன்று: வினையாலணையும் பெயர். வழிப்போக்கனிடம் கொடுத்து 7-ம் வேற்றுமைத் தொகை, வருக வியங்கோள் வினைமுற்று. கொ(ண்)டு போனுர், இறந்தகாலப் படர்க்கை வினைமுற்று.
அனைவரும் அழுகின்றனர் (இது முதல் ஐந்துகவிகள் குளகம்]
பெண்டிரெலா மழுதரற்றப் பிள்ளேக ளெலாங்கதறக் கண்டுகேட் டவரிரங்கிக் கரைந்துருகிக் கருத்தழிய " மண்டுதுய ரெனுந்தீயால் வயிறெரியக் கடிநகரம்
பண்டெரிவீழ்ந் தழிசோதோம் பதிபோலப் பதைத்தேங்க (31)
சொ. வி: மண்டுதுயர் - நிறைதுயர். பண்டு - பழங்காலம், கடிநகர்
காவல் நகரம், பதி பட்டினம்.
ப; உ; பெண்டிர் எலாம் அழுது அரற்ற - பெண்களெல்லாரும் அழுது கதற, பிள்ளைகளெலாம் கதற - குழந்தைகளெல்லோரும் கதற, கண்டு கேட்டவர் இரங்கிக் கரைந்து உருகிக் கருத்து அழிய = வழியில் இக்கோரக் காட்சியைப் பார்த்தவர்களும், அதனைக் கேட்ட வர்களும் உள்ளம் கரைந்துருகிச் சிந்தனைத்திறன் அற்றுப்போக, மண்டுதுயர் எனும்தியால் வயிறு எரிய - நிறைந்த துயர் என்னும் நெருப்பினுல் (மக்களைப் பெறும்) வயிறே தீய்ந்துபோக, கடிநக ரம் - காவற்சிறப்புள்ள எருசலேம் நகரம் முழுவதும், பண்டு எரி வீழ்ந்து அழிசோதோம் பதிபோலப் பதைத்து ஏங்க-முற்காலத்தில் நெருப்பினுல் அழிந்துபோன சோதோம்பட்டினம் போல் நெஞ்சம் பதைத்து ஏக்கமடைய.
பிரபஞ்ச நிலைக்குலைவு பொருவரிய பரலோகப் புத்தேளிர் புதுமையிதின்
மருவுவதெம் முடிவோவென் றையுற்று மறுக்கமுறப் பருவரல்கொண் டைம்பூத பெளதிகமாத் திரையாய
சருவசிருட் டியுந்திகைத்துத் தமைமறந்து நிலகுலைய (32)

Page 26
- 88 -
ப; உ8 பொருஅரிய பரலோகப் புத்தேளிர் - ஒப்பற்ற வானுலகத்
தேவர்கள், புதுமை இதில் மருவுவது? - இதிலும் பார்க்கப் புதுமை வேறென்ன வரவிருக்கின்றது, எம்முடிவோ இது எங்குச் சென்று முடியுமோ, எப்படி முடியுமோ, என்று ஐயுற்று மறுக்கம் உற - எனச் சந்தேகித்து மயங்க, பருவரல் கொண்டு = துக்கித்து, ஐம்பூத பெளதிக மாத்திரையாய சருவ சிருட்டியும் திகைத்து தமை மறந்து நிலைகுலேய - பிரபஞ்சம் முழுவதும் தம்மைத்தாமே மறந்து தம் வழமையான நிலைமை சீர் குலேந்து ol. வி. வையக வாசிகள் அல்லர், வானுலகத் தேவர்களே இவ் வாறு ஒரு புதுமையைக் கண்டார்கள் இல்லை. இதன் விளைவு யாதாக முடியுமோ என்று அவர்கள் கலவரப் படுகின்றர்கள். ஐம்பூதங்களாகிய சிருட்டிப்புக்கள் அனைத்தும் கதிகலங்கின என்பதாம்.
எல்லாச் சிருட்டிப்புக்களும் (படைப்புக்களும்) ஐம்பூதங்களினு
லானவையே, வேறென்ருல் இல்லை, வேறென்று அப்படைப்புக் கலவையிற் சேரவுமில்லை என்பார் "ஐம்பூத பெளதிக மாத்திரையாய சருவசிருட்டியும்' என்றர்.
அன்னை பின்வர.
குழனுரலிற் பிரியாத குருத்துவமா ரருட்சீடர் அழலனய துயர்நலிய விழுதுகரந் துடன்செல்லப் பழுதணுமெய்ப் பரம்பொருளை மகவாக்கொள் பசுந்தோகை தழலிடுபூங் கொடியேபோற் சாம்பியுயிர் தளர்ந்தேக (33)
சொ வி: குழல் - ஆகுபெயராக ஊசியைக் கருதுகின்றது. குருத்
துவம் - குருஆவதற்குரிய தகுதி, மகவு - பிள்ளை. சம்பி - வாடி,
ப, உ; குழல் நூலில் பிரியாத - ஊசித்துவாரத்தின் வழி செல்லும் நூல்
போல், பிரியாத குருத்துவம் ஆர் அருட்சீடர்  ைநற்போதகராகிய இயேசுநாதர் சென்றவழியூே செல்கின்ற குருப்பட்டத்திற்கான தகு தியைப் பெற்ற இயேசுவின் அருள்நிறைந்த சீடர்கள், அழல் அணையதுயர் நலிய - தீப்போன்ற துயர் நலிதலால், அழுது கரந்து உடன் செல்ல - கண்ணிர்விட்டு மறைவாக (அக் கூட்டத்துடன்) செல்ல, பழுது அறுமெய்ப்பொருளை மகவாக்கொள் பசுந்தோகை = குறைவு எதுவுமே இல்லாத பரம்பொருளை பின்ளேயாகப் பெற்ற மரியம்மை, அழல் இடு பூங்கொடியே போல் சாம்பிஉயிர் தளர்ந்து ஏகநெருப்பில் இட்ட பூங்கொடிபோல் வாடி உயிர்சோர்ந்து செல்ல;
f

سس۔ 39 سست۔
உ. வி: குருப்பட்டம் எய்தக்கூடிய தகுதியும் வாய்ந்து எப்பொழு தும் இயேசு உபதேசிக்கும் கன்னெறியிற் செல்லும் பண்பும் வாய்க்கப் பெற்ற அருட்சீடர்கள், அக்கூட்டத்தில் மறைந்து சென்றது, அவர்களின் நிறைவற்ற தன்மையைக் காட்டுகின் றது. எனவே, மேற்கூறப்பட்ட இருதன்மைகளும் இவர்களுக்கு உண்டா என சந்தேகிக்கப்படலாம். மறைந்தோ மறையா மலோ அவர் வழிச்செல்கின்றர்கள் என்பது பெருமைப்பட வேண்டிய காரியமே. குழல்நூலிற் பிரியாது என்பதால் அவர் கள் இயேசுநாதர் கூறிய பாதையிலும், இயேசுநாதர் செல்லும் பாதையிலும் செல்கின்றர்கள் எனக்கூறுவதுடன் திருப்திப் படுத்துகின்ருர்போலும் கவிஞர்.
நன்மக்களைப் பெறுவதே ஒரு புண்ணியம். அதுவும் தெய்வமே ஒரு மானுடப் பெண்வயிற்றிற் பிறக்கும் என்றல் அப்பெண் ணின் புண்ணியம் இத்துணைத்து என்று சொல்லமுடியாது. தாயும் தங்கையும் அற்ற இறைவனுக்குத் தாயாகும் புண்ணியம் சாதாரண மானதா என்ன ? மரியம்மை பரம்பொருளையே மகவாகப் பெற்ற வள். பரம்பொருள் என்றல் மேலான பொருள்: அது தெய்வம். எனவேதான் 'பழுதறும் மெய்ப்பரம் பொருளை மகவாக் கொள் பசுந் தோகை” என ஆசிரியர் புனிதமாகக் கூறிப் புளகாங்கிதம் எய்துகின்றர்.
கண்ணீரும் பெருமூச்சும்
எண்ணிலா மறவோர்தம் மிகனெஞ்சு பறையறைய உண்ணிலவு விசுவாசத் துரவோர்நெஞ் சுள்ளழியப் புண்ணியருக் குறுங்கொலையின் புணர்ப்புன்னிப் பெருமியழு கண்ணிரும் பெருமூச்சுங் ககனதுருத் தியிலடைய (34)
ககனம் - ஆகாயம் - ஆகுபெயராக, காற்றை உணர்த்தும்,
ப. உ; எண் இலா மறவோர் தம் இகல் நெஞ்சு பறையறைய-கணக்கற்ற பாவிகளாகிய மறவர்களின் பாவநெஞ்சம் (உட்பயத்தால்) பறைபோல் சத்தமிட, உள்நிலவு விசுவாசத்து உரவோர் நெஞ்சு உள் அழிய(உதட்டில் இல்லாத) உள்ளத்துள் நிலவுகின்ற மெய்விசுவாசிகளா கிய உறுதிப்பாடுமிக்க பக்தர்களின் நெஞ்சம் உள்ளே குலைந்து போக, புண்ணியருக்கு உறும் கொலேயின் புணர்ப்பு உன்னி -

Page 27
س-40 سنه
புண்ணியராகிய இயேசுவிற்குத் தீர்க்கப்பட்ட பெருங் கொலேக்கான சதியை நினைந்து, பெருமி அழுகண்ணிரும் பெருமூச்சும் ககனதுருத் தியில் அடைய - உள்ளம் பெருமி அழும் கண்ணிரும் பெருமூச்சும் காற்ருகிய துருத்தியைச் சேர; " .
கொலைக்களத்தில் இயேசு இப்பரிசு பெருந்துக்கக் குறிமல்கி யெவ்வுயிருஞ் செப்பரிய துயருழப்பச் செருசலேயைப் புறம்போக்கி ஒப்பரிய முதுமூலத் தொருபொருளேக் கொண்டுய்த்தார் மெய்ப்படுவன் மனக்கொலைஞர் வதைபுரிவான் கொலக்களத்தில் (35)
சொ. வி. பரிசு - தன்மை, துக்கக்குறி-துக்க அடையாளம், உய்த்
lu .
இ.
தல் - செலுத்துதல், புரிவான் - புரிய,
உ; இப்பரிசு பெருந்துக்கக் குறிமல்கி - இத்தன்மையாகச் சோகத் தால் ஏற்படும் உருச்சிதைவே எங்கும் நிறைந்ததாக, எவ்வுயிரும் செப்பரிய துயர் உழப்ப - எல்லா உயிர்களும் இவ்வாறு எனச் சொல்லுதற்கரிய துயரிஞல் அலேக்கழிய, செருசலேயைப் புறம் போக்கி - எருசலேம் நகரத்தைக் கடந்து, மெய்படுவன் மனக் கொஇலஞர் - உள்ளத் தீமையைக் காட்டும் விகார உடம்பை உடைய கொலேப் பாதகர்கள், கொலேக்களத்தில் வதைபுரிவான் - கொஇலக் களத்திலே சித்திரவதை செய்வதற்காக, ஒப்பு அரிய முது மூலத்து ஒரு பொருளைக் கொண்டு உய்த்தார் = ஒப்பே இல்லாத ஆதிமூல மாகிய தனிப் பொருளைக் கொண்டுவந்து சேர்த்தார்கள்
வி: இப்பொருளைக் கடந்து பிறிதொரு தனிப்பொருள் இல்லை யென்பார், "ஒப்பரிய முதுமூலத்து ஒரு பொருளென்றர்? ஒப்பருமை ஒப்பில்லை என்ற கருத்தில் கின்றது. ஒரு பொருள் - தனிப் பொருள். அது இறைவன்.
வி: அரற்ற, கதற, அழிய, எங்க (31-ம் பாடல்) உற, நிலை குலைய (32) செல்ல, ஏக, (33) அறைய, அழிய, அடைய, (34) போக்கி, வதைபுரிவான், கொலைக்களத்தில் கொண்டு உய்த்தார் (35) எனக் கூட்டுக. ஒரு பாடலில் வினைமுடி வின்றி, அப்பாடலின் எச்சங்கள் அடுத்த அல்லது அடுத்தடுத்த பாடல்களின் வினைமுடிவுடன் முடிவது. குளகமெனப்படும் . "குளகம் பல பாட்டொருவினை கொள்ளும்” பாடல் இல - 32 புதுமை இதில் மருவுது: ஒலி அழுத்தததால் மருவுது என்பதை வினுவாகக் கொள்க. இதில்: உறழ்

Q(ィ/しんい^* N Aur
- 41 - y. ပs† ရုံw-e- பொருளில் ஐந்தாம் வேற்றுமை, பூதபெளதிகம்: பண்புத் தொகை பா. இ - 33; நூலில்: ஒப்புப் பொருளில் ஐந்தாம் வேற்றுமை. அருட்சீடர்: இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, பரம்பொருள்: பண்புத்தொகை.
LD56). T: LD56).T 6T66 (D செய்வினையெச்சம் ஈறு குறைந்து கின்றது.
கொலை 1 கோரக்கொலை 11 ஈண்டினியான் புகல்வதெவ னெம்பெருமான் திருமேனி தீண்டினர் சிலுவையொடு சேர்த்தினுர் செங்கையிலுங் காண்டகுசே வடியிலும்வெவ் விருப்பாணி கடாவினுர் நீண்டசிலு வையையெடுத்து நிறுத்தினும் நிலங்கீண்டு (36)
சொ. வி: இரும்பு + ஆணி = இருப்பாணி, கடாவுதல் - செலுத் துதல், தறைதல், கீண்டு - அகழ்ந்து, தோண்டி, செம்பை 十 அடி = சேவடி,
பகு உ3 ஈண்டு இனி யான் புகல்வது எவன் - இனி யான் என்ன - சொல்லக் கிடக்கின்றது, எம்பெருமரன் திருமேனி தீண்டிஞர் ين எம் இறைவரது திருவுடலே இறுகப்பிடித்தார்கள், சிலுவையொடு சேர்த்தினுர் - சிலுவையில் வைத்தார்கள், செங்கையிலும் காண்டகு சேவடியிலும் வெவ் இருப்பாணி கடாவிஞர் - சிவந்தகைகளிலும் வணங்குவதற்குத் தகுதியான சிவந்த அடிகளிலும் கொடிய இருப் பாணிகளைத் தறைந்தார்கள், நிலங் கிண்டு . நிலத்தைத் தோண்டி, நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினர் - நிலத்திற் பாடாகப் போட்டிருந்த சிலுவையைத் தூக்கி, தோண்டிய குழிக் குள் நிறுத்தினர்கள், உ. வி: இதுவரை உள்ள கோரக்காட்சிகளை மிக விபரித்த கவிஞர், பெருமான் சிலுவையில் அறையுண்ட கோரச் செயலை ஒரு பாட்டுடன் முடித்துக் கொண்டார். இது ஒரு நுட்பமான முறை. அவரால் எதுவும் சொல்வதற்கில்லை என்பதை அவரே சொல் விட்டார், காரணம் கடவுள் பட்டபாடு ஆகலாம்.
இ. வி: எவனெனும் வினுச்சொல் ஈண்டு இய்ைகுறித்து நின்றது. செங்கை: பண்புத்தொகை. சிலுவையொடு; ஏழாம் வேற்றுமை உருபு மயக்கம். மூன்ரும் வேற்றுமை எனக் கொள்ளின், و()Dوا "உடன் சேரல்" பொருளில் வந்ததெனக் கொள்க, t &s '

Page 28
صے 42 --سے குற்றவாளிகள் மத்தியில்
மற்றிரண்டு திருடரையும் வலப்புறத்து மிடப்புறத்துஞ் செற்றமொடு குருசேற்றிக் கொலமாக்கள் செயலொழிய
კაბო- சொற்றமறைத் திருவசனந் துலக்கமுறச் சுருதிமுதல்
குற்றவா ளிகளோடு நடுநின்ருர் குருசுமிசை (37)
சொ. வி: செற்றம் - கோபம், I diol (b. குருசு - சிலுவை, சுருதி -
வேதம்,
ப, உ;- மற்று இரண்டு திருடரையும் வலப்புறத்தும் இடப்புறத்தும் செற்றமொடு குருசு ஏற்றி - இயேசு நாதருடன் கொஇலக்குற்றம் சாட்டப்பட்ட ஏனய கைதிகள் இருவரையும் அவரின் இடப்பத் கத்தும் வலப்பக்கத்தும் ஒவ்வொருவராகச் சிலுவையில் வைத்துத் தறைந்து, கொலேமாக்கள் செயல் ஒழிய தண்டனையை நிறை வேற்றும் கொலேஞர்களின் செயல்முடிந்துபோக, சொற்றமறைத் திருவசனம்துலக்கமுற - ஆதியில் சொல்லப்பட்டுள்ள வேதவசனம் உண்மையாக முடிந்ததால் மேலும் விளக்கம் அடைய அஃதாவது வேதவசனத்தில் சொல்லப்பட்டது பலிக்க, சுருதிமுதல் - வேதங் களுக்குக் காரணமான இறைவன், குருசுமிசை குற்றவாளிகளோடு நடுநின்றர் - சிலுவையின்மேல் குற்றவாளிகளோடு குற்றவாளி யென நின்முலும், நடுநாயகமாக நின்று விளங்கினுர்g
உ. வி: "அல்லாமலும் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் -
அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளரை அவரோடுகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமத் காரரில் ஒருவனுக எண்ணப்பட்டார் என்கிற வேத வாக்கியம் அதனுலே நிறைவேறிற்று” (IDI-15:27-28)
மாற்கு என்பவரின் சுவிசேடத்திற் சொல்லப்பட்ட அக்கிரமத் காரரோடு எண்ணப்பட்டார் என்ற வசனம் பலித்ததனை "சொற்ற மறைத்திரு வசனம் துலக்கமுற என்ருர்,'
சுருதிகள் அனைத்துக்கும் இறைவனே முதலாவன் காரண மாவன் . ஆதலின் சுருதிமுதல் என்ருர், வேதங்களுக்கு முற்பட்ட வன் என்பதும் ஒருகருத்து.
சித்திர வதைக்குள்ளான போதும் அந்த மகான் நீதி மனப் பான்மை தவறவில்லை - நடுநின்ருர் - வாழ்வு முழுவதும் நீதிக்காகப் போராடியவர் ஆதலின் நடுநின்ருர், பிதா, குமாரன், பரிசுத்த

- 43 -
ஆவி என்ற மூன்றிலும் நடுநின்றர். வையகத்திற்கும் வானகத் திற்கும் இணைப்புப் பாலமாக நடுநின்றர். குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக்காக நடுநின்ருர், உயிர்போகும் தறுவாயிலும் கைதி களின் மத்தியில் நடுநின்ருர், என்றும், எங்கும் நடுநின்றது இயேசுநாதரின் பெருமையெனக் காண்க.
இ.
வி: சொற்ற: சொன்ன என்பது எதுகை நோக்கிச் சொற்ற ஆனது. சுருதிமுதல்:- நான்கன் தொகை, மிசை ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு, முதல்: ஆகுபெயர்.
இரட்சிப்பு முத்திரை
தன்னரிய திருமேனி சதைபுண்டு தவிப்பெய்திப் பன்னசிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென வறிகில் லார் தாஞ்செய்வ திவர்பிழையை மன்னியுமென் றெழிற்கணிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் (38)
சொ. வி: பாடு - பெரு வேதனைகள். அறிகில்லார் - அறியும் வல்ல
பம் அற்றவர்கள்.
உ; தன் அரிய திருமேனி சதை புண்டு தவிப்பு எய்தி - தன்னு டைய அருமைப்பாடு மிகுந்த திருஉடலின் சதையெல்லாம் புண்டு போய்த் துடிப்புற்று, பன்(ன) அரிய பல பாடும் படும்போதும்எத்துணைக் கொடுமையெனச் சொல்லமுடியாத வகையில் படாத பாடுகள் அத்தனையும் பட்டு உத்தரித்தபோதும், பரிந்து - கொலே ஞர்களுக்காக மனம் இரங்கி, "எந்தாய் ! தாம் செய்வது இன்னது என அறிகில்லார் இவர் பிழையை மன்னியும் - பிதாவே! தாங்கள் செய்து கொள்வது எத்துணேப் பாபகரமானது என அறியும் வல்லபம் அற்ற இவர்கள் பிழையை மன்னித்துக் கொள் ளும், " என்று எழில் கனிவாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல்என்று கூறி அழகுத் திருவாய் மலர்ந்தருளினுர் "மன்னுயிர்க்கெல் லாம் தன் அருளே வாரி வழங்கும் வள்ளலாகிய நம் பெருமான்.
வி: இங்குத்தான் தெய்விக மனிதராகிய இயேசு, இரட்சகர்
இயேசுவாக மாறினுர்; தான் ஒரு தெய்வப்பிறவியென்பதை ஐயமற நிறுவிக்காட்டினுர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு என்று கூறிய பெருமனிதன் , கன்னத்தை மரித்திரம் அன்று, திருமேனி முழுவதையும் கொலை யாளர் சித்திரவதை செய்யவிட்டு நின்றர். இங்கு, மேலும் ஓராயிரம் படி உயர்ந்து, "தாங்கள் செய்வது இன்னது என்று

Page 29
一44一
அறியாமற் செய்கின்றர்கள் இவர்களே மன்னித்துக் கொள்ளும் பிதாவே',* என வேண்டுதல் மூலம் தனக்கே உரிய அன்பு முத்திரையை வேதத்திலும், வையகத்திலும், வானகத்திலும் பொறித்துச் சென்றுள்ளார். இரட்சகர் இயேசுவின் பரிபூரணத்தெய்வீக மலர்ச்சிநிலையை மிக அழகாகப்பாடுகின்றர் திரு. வி. க. மன்னிக்கும் நிலவுலகம் படைப்பதற்கான மாண்புநிலை இதுவென்று சொல்லிப் பரவசப்படு கின்றர் கவிஞர்.
" சிலுவையிலே கிறிஸ்துஉனைச் சேர்த்தாணி அறைந்தகொடுங் கொலைஞரையும் பகையாது குழைந்தருளச் சுரந்ததென்னே? பலிஇரத்தம் முழுகிமனம் படிந்துருகி மன்னிக்கும் நிலவுலகம் படைப்பதற்கு நினேந்தருளச் சுரந்தமையே'
(கிறிஸ்துவின் அருள்வேட்டல் = 28)
* " "அப்பொழுது இயேசு, பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங் கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிருர்களே என்ருர்' (லூ. 23:34) இயேசுநாதரின் உன்னதமான இவ்வார்த்தைகள் லூக்காவின் சுவிசேடத்திலேயே காணப்படுகின்றது. மத்தேயு, மாற்கு, யோவான் என்பவர்களின் சுவிசேடங்களில் இவ்வாருன ஒரு வசனம் இல்லே என்பது கவனிக்கத்தக்கது. இதனுற் போலும் லூக்காவின் சுவிசேடம் அதிகம் ம கிக்கப்படுகின்றது:
* வேதாகமத்தில் பரிசுத்தலூக்கா எழுதிய சுவிசேஷம் உலகில் உள்ள புத்தகங்களில் மிக அன்பான புத்தகம் எனக் கூறப் படுகின்றது. இதை ஆக்கியோன் ஒரு கிரேக்கபண்டிதன். இப் புத்தகத்தின் 22-ம் 23-ம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் மரணம் விரிவாக எழுதப்பட்டுள்ளது' என்று கூறுகின்றர் அருட்டிரு கலாநிதி ஜேம்ஸ்மேதர் (தினபதி: 27-3-70)
சுவிசேஷம் தந்த புனிதர்கள் நால்வரில் மத்தேயு, அருளப்பர் என்பவர்கள் இயேசுநாதரின் முதற்பன்னிருசீடர்களில் இருவராவர். அருளப்பர் யோவான் எனவும் அழைக்கப்படுவர்: இயேசுநாதர் உயிர்பிரியும் பொழுது அவர் பக்கத்து நின்ற புனிதரும் இவரே. ஏனைய மார்க்குவும் லூக்காவும் சீடர்களின் சீடர்கள் ஆவர். புனிதர் மார்க்கு புனித இராயப்பரின் சீடனுர், புனிதர் லூக்காசு புனிதர் சின்னப்பரின் சீடரைாவர். உயிர் பிரியும் வேளை பக்கத்துகின்ற அருளப்பர்கூட இயேசுநாதரின் இப்பொன்மொழிகளைத் தன் வேதத் தில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடக் கூடியது.

ー 45 ー
இ. வி: அறிகில்லார்: கில், ஆற்றல் உணர்த்தும் இடைகிலே.
அறியும் வல்லபம் அற்றவர்கள் என்பது கருத்து. இன்ன
தென்று தெரியாமல் செய்கின்றவர்கள் வல்லபம் அற்றவர்கள் அல்லவா? இவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள்.
யார் கிறிஸ்தவர் ?
இத்தகைய வரும்பொறையும் மனநலமு மியைந்தவரே வித்தகனுக் கடித்தொழும்ப ரெனத்தகுமெய்க் கிறிஸ்தவர்மற் றித்தகைய குணமிலருஞ் கிறிஸ்தவரென் றிசைபெறுதல் செத்தவரைத் துஞ்சினவ ரெனவுரைக்குஞ் சீர்மைத்தால் (39)
சொ. வி:- தொழும்பு - அடிமை, பணிவிடை செய்தல். இசை பெறுதல் (இசைக்கப்பெறுதல்) - பெயர் பெறுதல். அடித்தொழும் பர் - திருவடிகட்குத் தொழும்பு செய்பவர்.
ப உ:- இத்தகைய அரும்பொறையும் மனநலமும் இயைந்தவரே . இத் தன்மையான பெரும் பொறுமையும் மனநன்மைப் பாடும் உடைய வர்களே, வித்தகனுக்கு அடித்தொழும்பர் எனத்தகும் மெய்க்கிறிஸ் தவர் - இறைவனுக்கு வழிவழியாகப் பணிவிடை செய்பவர்கள் என்று கூறக் கூடிய உண்மைக் கிறித்தவர்களாவர்; மற்று இத் தகைய குணம் இலரும் கிறித்தவர் என்று இசை பெறுதல் . மன்னிக்கும் மாண்பும் சகிப்புத்தன்மையும்
கிறித்தவர்கள் என்று பேசுதல், செத்தவரைத்துஞ்சினவர் என உரைக்கும் சீர்மைத்து - இறந்தவர்களே துஞ்சினவர் என்று கூறு வது போன்ற ஒருவகை மங்கள வழக்கு ஆகும்.
உ. வி; மன்னிப்பும் சகிப்பும் மன மாண்பாகக் கொண்டவர்களே தேவனுக்கு ஊழியம் செய்யும் உண்மையான கிறிஸ்தவர் ஆவர். இவர்கள்தான் பிதாவின் திருவடி பரவும் உரிமைக்கும் பெருமைக்கும் உரியவர்கள். இப்படி இல்லாதவர்கள் கிறிஸ் தவர்கள் ஆகார். இவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுவது மங்கள வழக்கல்லது பிறிதில்லை என்கிருர் கவிஞர்.
அமங்கள வார்த்தைகளைக் கேட்பத?னயே மனிதன் விரும்ப வில்லை. அதற்காக, மங்கலம் (நன்மை) இல்லாதவற்றையும் மங்கல மாகக் கூறவிரும்புகிருன் இறந்தவர்களைச் செத்தவரென்றே

Page 30
== 46 س=
இறந்தவர் என்றே, சொல்ல விரும்பவில்லை. விரும்பாத காரணத் தால் துஞ்சிஞர் என்று சொல்லுகின்றன. சுடுகாட்டை நன்காடு என்பதும், இடுகாடு என்பதும், அமங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமையை மங்கலவாரமென்பதும் இதுபோன்றதே. இவ்வாறு கூறு வதை இலக்கணநூலோர் தகுதிவழக்கு என்பர்.
இ. வி; மற்று: வினைமாற்று. சீர்மைத்து: குறிப்புவினை முற்று.
வேறு சாட்சியும் வேண்டுமோ ?
கீண்டிருப்பு முனயுடலேக் கிழித்துருவ வதைப்புண்டு மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியுமென் றுரைத்தமொழி ஈண்டிவரே யுலகினுக்கோ ரிரகூடிகரென் றெடுத்துரைக்கும் வேண்டுமே யினிச்சான்று மிதைவிடுத்து வேருென்றே. (40)
சொ. வி: கீண்டு - கிழித்து. இரும்பு + முளை = இருப்புமுளை இரட்சகர் - உயிர்களைப் பாவத்திலிருந்து இரட்சிப்பவர், மீட் பவர். சான்று - சாட்சி.
ப உ: கீண்டு இருப்புமுளை உடலேக்கிழித்து உருவ - திருக்குமரனின்
திருக்கரங்களிலும் திருவடிகளிலும் கிழித்துச் செலுத்தப்பட்டுள்ள
இரும்பாணிகள் உடலேக் கிழித்து உட்புறமாக உருவிச் செல்ல,
வதைப்புண்டு மாண்டுபடும்போதும் - துடித்து மடியும் தறுவா
யிலும், இவர்க்கு மன்னியும் என்று உரைத்த மொழி - பிதாவே, இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமற் செய்கின்றர்கள்,
இவர்களே மன்னித்துக் கொள்ளும் என்று கூறியவார்த்தைகள்,
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரட்சகர் என்று ': கும் - இங்கு இவர்தான் அனைத்துலகுக்கும் ஒப்பற்ற இரட்சகர்
ஆவர் என்று அழுத்திச் சொல்லும், இனி - இப்பொழுது, இதை
விடுத்து வேறென்று சான்று வேண்டுமோ - இப்புண்ணிய வார்த்
தைகளைத்தவிர இயேசுவே ஏக இரட்சகர் என்பதற்கு வேறுசாட்சி
வேண்டியதில்லே,
உ. வி: கோரமான சித்திரவதைக்குள்ளானபோதும் n60 či செம்மையையும் தெய்வத்தன்மையையும் காட்டுவதற்கு இவ் வார்த்தைகளே போதும், வேறு சாட்சி வேண்டியதில்லை என் கிறர் கவிஞர். இவ்வுலகத்துக்கு மாத்திரமன்று அவ்வுலகத்துக்கும் ஏன், எவ்வுலகத்துக்குமே இவர்தான் இரட்சகர் என்பார் ஓர் இரட்சகர் (ஏகஇரட்சகர்) என்றர்.

كسس 47 صفته
இ வி:- போதும்:- செய்யுள் விகாரத்தால் உம்மை தொக்கது. வேண்டுமோ விடை உள்ளிறுத்த வினு, வேண்டா என்றபடி,
பன்றிக் கூட்டம் ?
மன்ருடு மருட்சீவ வசனத்தை வன்மறவோர் - ஒன்ருகப் பொருள்செய்யா ருடைகளேந்து Ufil dìLNF
குன்ருத நசரேயன் யூதருக்குக் குலவேந்தன் - என்ருக டியமான வெழுத்திட்டார் சீலுவைமிசை, (41)
ப. உ. மன்ருடும் அருள் சீவவசனத்தை பொல்லாப்புக்காரர்களுக்காக வும் இறைவனே மன்ருடிக் கேட்கின்ற அருள் நிறைந்த உயிருக்கு உயிர்தரும் வளர்த்தைகளே, வன்மறவோர் ஒன்றுகப் பொருள் செய் யார் - அக்கொடிய பாவிகள் ஒரு பொருட்டாக மதித்தர்களில்இ, உடைகளேந்து பங்கிட்டார் - எம்பெருமான் திருமேனியில் தரித்த உடுப்புக்களேக் கழற்றி எடுத்து தமக்குள் பங்குபோட்டுக் .ெ டார்கள், குன்ருத நசரேயன் யூதருக்குக் குல வேந்தன் என்று *அழியாத நசரேயன் யூதகுலத்திற்கு அரசன்” என்று, சிலுவை மிசை ஆகடியமான எழுத்திட்டார் - பெருமானைத் தறைந்த சிலுவை யின் மேல் பரிகாசமான வார்த்தைகளேப் பொறித்தார்கள்,
உ வி: உடலுக்கு உயிரை இறைவன் தந்தான். உயிருக்கு உயிரை இரட்சகர் இயேசுவின் அருள் மணி வார்த்தைகள் தருகின்றன என்பார் அருட்சீவ வசனமெனக் கூறினுர்,
இக் கொலே மாக்களைப் பன்றிக் கூட்டம் என்று கூருமல் வேறெப்படிக் கூறுவது?
தூசண அருச்சனை
கேடணவு தலவரொடு கெழுமியல் யூதர்களும் மாடணவிக் காக்குநரும் வழிவருபுன் மனத்தவரும் பாடணவி வருந்துநம் பரமசுத னேப்பழித்துத் தூடணங்கள் பலபேசித் துணிந்துபுறக் கணித்திகழ்ந்தார் (42) சொ. வி. அணவுதல்; நெருங்கிச் சேர்தல், மாடு , பக்கம், பாடு
துன்பம், பரமசுதன் ஐ தேவமகன், ப3 உ கேடு அணவு தலைவரொடு - கெடுதற்கான து நெருங்குகின்ற மூப்பர்களோடு, கெழுமியபல் யூதர்களும் - அங்கு கூடி நின்ற யூதர்கள் பலரும், மாடு அணவிக்காக்குநரும் Aa சிலுவைப் பக்கத்தில்

Page 31
\\\د
一48一
நெருங்கிநின்று காவல்புரிகின்றவர்களும், வழிவருபுன்மனத்தவரும்= அவ்வழியே வருகின்ற அற்பர்களும், பாடு அணவி வருந்தும் நம் பரமசுதனைப் பழித்து - சிலுவைப்பாடுகளால் வருந்தும் நம் தெய்வ குமாரனேத் தூற்றி, தூடணங்கள்பல பேசி சாதாரண மானவர்களுக்கு முன்னலேயே பேசக்கூடாத பேசமுடியரத வார்த் தைகள் பலவற்றையும் தெய்வக் குமரனுக்கு முன்பாகவே பேசி, துணிந்து புறக்கணித்து இகழ்ந்தார் - அஞ்சவேண்டியதற்கு அஞ் சாத துணிச்சலுடன் எம்பெருமான மதிக்காமல் இகழ்ந்தார்கள்.
திருட்டுப் பிணமும் இகழ்ந்தது! வணங்காத முரண்கழுத்தர் வல்லுருக்கிற் கடினமுறீஇக் குணங்காணுக் கொடுமணத்தர் கூறியதீ மொழியொன்ருே
அணங்காருங் குருசுமரத் தறையுண்ட வொருதிருட்டுப் பிணங்காணு யிகழ்ந்ததுவும் பிதற் றியதெம் பெருமான (43)
உ; வணங்காத முரண் கழுத்தர் - வணங்க முடியாத முரட்டுக் கழுத்தை உடையவர்களும், வல்உருக்கில் கடினம் உறிஇ குணங் காணுக் கொடுமனத்தர் - வலிய உருக்குப்போல் கடினமுற்ற, இது வரை நன்மை எதுவென வே கண்டிராத தீயமனத்தை உடையவர் களுமாகிய புல்லர்கள், கூறிய தீமொழி ஒன்றே - சொல்லிய கொடிய வார்த்தைகள் பலப்பல, எண்ணிக்கைக்கு அடங்காதன, அணங்கு ஆரும் குருசுமரத்து அறையுண்ட ஒரு திருட்டுப்பிணம் காணுய் . அச்சந்தரும் சிலுவை மரத்தில் அறையப்பட்ட ஆகக்கீழ்த்தரமான அந்தத் திருட்டுப் பிணங்கூட, பார்த்துக் கொள், இகழார் அது வும் பிதற்றியது எம்பெருமானே - எம் இறைவனைச் சொல்லத் தகர தன சொல்லி இகழ்ந்து அந்தப் பிணம் கூடப் பிதற்றிக் கொண் டிருந்தது.
வி: அற்புதமான கவிதை "ஒன்று அமையாதோ கரிக்கன்று ஒது” என்றதுபோல் இந்த ஒரு கவிதையே போதும் உள வியலைச் சித்திரிக்கும் கவிஞரின் வன்மைக்கு, நையாண்டி என் ருல் இதுதான் கையாண்டி சிலுவையில் அறையப்பட்ட இரு கள்ளர்களில் ஒருவன் உளப்பாங்கை "அதுவும் பிதற் றியது' என அழகாகப் போடுகின்ருர் கவிஞர். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி, அதுவும் தண்ட&னயிலே திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சமயத்தில் தன்னை மறந்து கும்பலிலே கோவிந்தா போடு கின்றது இத்திருட்டுப்பிணம், திருடித் திருடிப் பிணமானது உயிர்வாழ்வதற்கெனத்திருடி உயிரில்லாமல் போன பிணம், இந்தப்பிணம்கூட “அதுவும்” பிதற்றியது
 

என்று கூறும்பொழுது இயேசுவின் இத்துன்பக் காட்சியைக் கண்டு கொந்தும் வெந்தும் உளைகின்ற நாம்கூட, வாய்விட்டுச் சிரிக்கின்ருேம். சாதாரணமாக இம்மனுேபாவத்தை நாளாந்த வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கின்ருேம். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவன் பலராலும் ஆக்கினை செய்யப்படுகிறன் என வைத்துக் கொள்ளு வோம். சனக்கூட்டம் மொய்க்கின்றது, நின்றவன், வந்தவன் ஒவ் வொருவனும் பதம் பார்க்கிறன். அத் திருக்கூட்டத்தில் - தெருக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு “ஐ. ஆர். சி” கூட என்ன சொல்கினறது என்ன செய்கின்றது என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். இதுவும்ஒரு வகையான எடுபாட்டுக் குணம், இக்குணத் தைக் கவிஞர் மிக அருமைப்பாடாகச் சித்திரம் செய்திருக்கின்ருர்,
* அதுவும்' - உம்மை செய்கின்ற வேலை கவிஞர் செய்த வேலையை விடக்கூடிவிட்டது. விளிம்பிலும் தப்பிக் கொள்ளவழி யிருந்தும், திருட்டுப் பிணத்தின் விதி விடவில்லைப் போலும்! அதனுல் * அதுவும் பிதற்றியது' சாவிறுதியிற் கூடச் சாக் தம் பிறக்கவில்லை.
மோட்ச வாசலில்.
அடுங்கொலைஞர் பொருட்டமல னகங்கனிந்த வருட்டிறமுங் கெடுங்கொடிய ருணர்வின்றிக் கிளந்தபழி மொழிச்செருக்கும் நடுங்கியுயிர் நலிசோரன் நச்சுமனத் தியற்கையுமோர்ந் தொடுங்குயிர்மற் ருெருசேர னுளம்பொறுக்கா துரைக்கின்றன், (44)
செ. வி:- அமலன் - மலம் அற்றவன், கிளத்தல் - சொல்லுதல்,
ப. உ. அடும் கொலைஞர் பொருட்டு - தன்னைக் கொலைபுரியும் கொலே
ஐயாளிகள் பொருட்டாக, அமலன் அகம் கனிந்த அருள் திறமும் தூய திருக்குமரன் மனம் இளகி மன்னிப்புக் கேட்ட் அருள் வல்லபத்தையும், கெடும் கொடியர் உணர்வு இன்றிக் கிளந்தபழி மொழிச் செருக்கும் - கெட்டுப் போவதற்கே இவ்வுலகிற் பிறந்த கொடியவர்கள் மரம்மாதிரி உணர்வில்லாமல் கூறிய வார்த்தை களில் அடங்கிய ஆணவத்தையும், நடுங்கி உயிர்நவிசோரன் நச்சுமனத்து இயற்கையும் உடலும் உன்ளமும் நடுங்கி உயிர் மெது வாய்ப் போய்க்கொண்டிருக்கின்ற அந்த நேரத்திலும் நஞ்சு படரும் மனத்தை உடையவனுகிய ஒரு கள்ளனின் இயல்பினையும், ஓர்ந்து - தனக்குள் நல்லாகச் சிந்தித்து, ஒடுங்கு உயிர் மற்றெரு சோரன்
இ. யா, 7

Page 32
---- ( 50 مسی۔
உளம்பொறுக்காது உரைக்கின்றன் - முன்னவனைப் போலேயே உயிர் ஒடுங்கிக் கொண்டுபோகும் சிலுவையில் அறையப்பட்ட மற் றக் கள்ளன் மனம் பொறுக்கமாட்டாமற் பின்வருமாறு உரைக் கின்றன்:
உ வி: உயிர் உடலைவிட்டுப்பிரிகின்ற இறுதித் தறுவாயிலும் மனித சிந்தனைமலர்ச்சி அடையலாம், பெரியதோர் விழுப் பயனை ஈட்டிக்கொள்ளலாம் என்பதோர் பெரிய தத்துவத்துக்கு இப்பாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது. ஒரே குற்றத்துக்கா கச் சிலுவையில் அறையப்பட்ட இருகள்ளர்களில் ஒருவன் வாயில் வந்ததைப் பிதற்றுகின்றன். மற்றவன் நிதானமாகச் சிந்திக்கின்றன். தன்னுயிர் டோகும் வேளையிலும், மன்னுயி ரைக் காக்கும் உத்தமர் இயேசுவின் மகத்துவத்தை இவன் உணரத் தொடங்குகின்றன். நரகமும், மோட்சமும் இருவருக் குமாகக் காத்துக்கொண்டிருக்கின்றன. நல்லவன் வல்லவளுகப் போகின்றன். பொல்லாதவன் புழு நரகு க்குப்போயே ஆக வேண்டும். இவ்விருபாத்திரங்கள் மூலமும் கவிஞர் மத தத்துவ உண்மைகளுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துகின்றர். ஒரு பாத்திரம் நச்சுமனம் உடையது. மறு பாத்திரமும் (இன்ற வனே) கச்சுமணமுடையது. (நச்சுதல் - விரும்புதல்). நச்சுமணங் களை வைத்துக்கொண்டு சமய அச்சு க் கோட்பாடுகளுக்கு கவிஞர் வலுவூட்டுவது உணர்வுக்கு வேலை தருகின்றது.
မိုးနှီးပွါး, အိ်မ်ား၊ ဇာ ၁၊ ခဲ၊ எஞ்சுரு மரணத்தீர்ப் பியைந்துழந்து மேழைநீ அஞ்சுவா யலேயேயில் வமையத்து மமலனுக்கு நஞ்சனேய நமக்கீது நேர்ந்ததுமெய் நடுநிலைமை விஞ்சியாம் விளைத்தகொடு வினைப்பயண யடைகின்ருேம், (45)
ப, உ; எஞ்சுரு மரணத் தீர்ப்பு இயைந்துழந்தும் - தப்ப முடியாத மரணத் தண்டனைக்கு உட்பட்டு அல்லற்பட்டபோதும், ஏழை நீ ய தரித்திரளுகிய நீஇவ் அமையத்தும் அமலனுக்கு அஞ்சுவாய் அலேயே - மரணவேதனையில் உழலும் இந்த நேரத்திலும்கூட இறைவனுக்கு அஞ்சுகின்ருய் இல்லேயே, நஞ்சு அனேய நமக்கு ஈது நேர்ந்தது மெய் = நல்லவர்களை நாசமாக்கும் விஷம் போன்ற நமக்கு இத் தீர்ப்பு அளிக்கப்பட்டது நியாயமே, நடுநிலமை விஞ்சியாம் விளேத்த கொடுவினைப் பயனை அடைகின் ருேம் - நியாய வரம்புமீறி யாமே விதைத்து விளேத்த கொடிய வினைகளின் பயனே அறுவடை செய்கின்ருேம் அனுபவிக்கின்ருேம்: -

س- 51 --س
உ. வி. ஆவி பிரியும்போது தெய்வத்தை நினைத்துக் கொள்ளு கின்ற இக்கள்ளன் மற்றவனை நோக்கி, ஏழை என விளித்தது, இவனுக்கு ஒரு பூரிப்பைத் தருகின்றது. இறை வனை வழிபடுவதுதான் ஒரு சிலருக்குச் செல்வம், “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே' என்ற ஞானசம்பக் தப் பெருமானின் வாக்கு இங்கு நினைவுகூரத்தக்கது. எனவே தான், பிதற்றிய கள்ளன ஏழை எனக் கூறுகின்றன் போலும்! குற்றத்தை உணர்வதும் ஒப்புக்கொள்வதும், மீண்டும் அதனேச் செய்யாமல் விடுவதற்கு ஒருவழி, தெய்வமன்னிப்புப் பெறுவ தற்கு ஒரேயொரு வழியுமாகும். ஆகவே, தினையை விதைத் தவன் தினையை அறுத்தல்போல் வினையை விதைத்தவன் வினையை அறுவடை செய்துதான் ஆகவேண்டும். அறுவடையை அகமகிழ்வோடு தாங்கும் அளவுக்கு இரண்டாம் கள்ளனின் மனம் பக்குவம் எய்திவிட்டது:
இ. வி: அல்லே! குறிப்புவினைமுற்று. ஈது; இது என்னும் சுட்டு
யாப்புக்காக நீண்டது.
உளந்திரும்பல்
மற்றிதனை புணராது வன்னெஞ்சோய் மாசணுகா நற்றவனே யிகழுவது நன்மையோ நன்மையலாற் குற்றமிவ ரிடத்துளதேற் கூறுதியென் றறக்கடிந்து தெற்றெனவுட் குழைந்துரைத்தான் ஜீவவழித் தலைநின்ருன். (46)
ப. உ. வன்னெஞ்சோய் - எதற்கும் அசைந்து கொடுக்காத வன்னெஞ் சுடையவன்ே ! (மற்று) இதனை உணராது - இவ்வுண்மையை உணராது, மாசு அணுகா நற்றவனை இகழுவது நன்மையோ? . மனமாசற்ற தபோதனராகிய பெருமானைத் தூற்றுவது உனக்கு எந்த விதத்திலும் நன்மை தருமா ? , நன்மை அல்)லால் குற்றம் இவரிடத்தில் உளதேற் கூறுதி = நன்மையே அல்லாமல் சிறு குற்றம் தானும் இவரிடம் காணப்பட்டால் அதனை எனக்குச் சொல் வாயாக, என்று அறக் கடிந்து - என்று முற்றக அத்திருடனைக் கடிந்து பேசி, தெற்றென உள்குழைந்து உரைத்தான் - உள்ளத் தெளிவோடு உருகிக்கூறினன், ஜீவவழித் தலைநின்றன் - உயிர் போகவேண்டிய பசிதையின், - அஃதாவது சுவர்க்கப்பாதையில் செல்
வதற்கு முதன்மையாக நின்றவணுகிய மறுதிருடன்
வி: உயிர்போக வேண்டியபாதை - சுவர்க்கப்பாதை - ஜீவ வழி எனப்பட்டது. ஜீவவழியை நோக்கிய இத்திருடனின்

Page 33
ܫܡܣܕ 52 ܚ
ஆணவமலம் பக்குவப்பட்டுவிட்டது. இதனை மலபரிபாகம் என்பர் சைவ சித்தாந்திகள்.
இ. வி. வன்னெஞ்சோய்: எட்டாம் வேற்றுமை விளிஏற்ற குறிப்பு வினைப் பெயர். அணுகா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச் சம். இகழுவது: தொழிற்பெயர். நன்மையோ: ஒகாரம் எதிர்மறைப் பொருளது.
மனந்திரும்புதல்
அல்லது
உள்ளநாண் முழுதுமற முஞற்றியாக் கினையுழக்குங் கள்ளனிவ னெனினுமனங் கண்டறிந்த சத்தியத்தைத் தெள்ளிதுடன் வெளிப்படுத்திச் சிந்தையுடைந் துளந்திரும்பிக் கொள்ளேயிடத் துணிந்தானித் தியவாழ்வைக் குறிக்கோடி (47)
ப. வி: மறம்: பாவம், உஞற்றி செய்து,
ப. உ. நித்திய வாழ்வைக் குறிக்கோடி - இறவாத பெருலாழ்வாகிய மோட்சம் அடைதலே இலக்காகக் கொண்டவணுகிய இவன், உள்ள நாள் முழுவதும் மறம் உஞற்றி - வாணுள் முழுவதும் பாவத்தையே செய்து, ஆக்கினை உழக்கும் கள்ளன் எனினும் = தண்டனை அடைந்து வருந்துகின்ற கள்ளனுக இருந்தாலும், மனம் கண்டறிந்த சத்தியத்தைத் தெள்ளிதுடன் வெளிப்படுத்தி - மனமறிந்த உண் மையைத் தெளிவாக மற்றவனுக்கும் அறிக்கை செய்து, சிந்தை உடைந்து உளம் திரும்பி = வேதனையுடன் மனம்திரும்பி, நித்திய வாழ்வைக் கொள்ளையிடத்துணிந்தான் - மே 1ா ட்ச வாழ்வை யே கொள்ளேயிட முடிவு செய்துவிட்டான்.
உ. வி: "தன்னெஞ்சறிவது பொய்யற்க ’ என ஆணையிட்டார் தமிழ் மறையாளர். கள்வனும் அதனை மறைக்க விரும்பவில்லை, வெளிப்படுத்தினுன் , இனி, அவன் 'சூட்டு’க்கு இலக்காக இடம் இல்லை. இன்னுெருவராற் திணிக்கப்படாமல் தானே கண்டறிந்து ஏற்றுக்கொண்ட உண்மையென்பார், மனம் கண்டறிந்த சத்தியம் என்ருர்,
இப்பொழுதும் அவன் கொள்ளைத் தொழிலை மறக்கவில்லை, பழக்கத்தொழில் எப்படிப் போகும்? ஆனுல் கொள்ளையிடப்படும்

- 53 -
பொருள் வேருய்விட்டது கவிஞரும் கவிதையால் எம்முள்ளத்தைக் கொள்ளே கொண்டுவிட்டார். கொள்ளை இன்பந்தரும் பரமண் டலக் கொள்ளே இது !
சத்திய சோதனை செய்த காந்தியடிகளுடன், இந்த முனையில் கருதப்படக்கூடிய கள்ளன் இவன். ஏன், இவனும்தான் “கண் டறிந்த சத்தியத்தை' தெள்ளிதுடன் வெளிப்படுத்தியவன். க்ம் மிற்பலர் கண்டறியாத சத்தியத்தைத்தானே மற்றவர்களுக்குச் சொல்லி, நாம் ஏமாறவோ, ஏனை ய வ ர் களை ஏமாற்றவோ முயல்பவர்கள்.
இ. வி: குறிக்கோடி: குறிப்புவினைப் பொதுப்பெயர். நித்திய வாழ்வு: இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன் தொக்கத் தொகையும்; பண்புத்தொகையுமாம்.
மரண விளிம்பில் மனமாசுநீக்கம்
சாக்குறிகள் அடுக்காமுன் தனுகரணந் தளராமுன் மீக்கிளறு நெடுமூச்சு விரவாமுன் விழிமயங்கி
நாக்குளறி வீழாமுன் நல்லுணர்வுற் றருட்கள்ளன் நோக்கினுன் தலதிருமி நுவலரும்புண் ணியப்பொலிவை, (48)
ப. வி: குறி - அறிகுறி, அடுத்தல் - தோன்றுதல், மீக்கிளறுதல் -
மேல்நோக்கி எழுதல், திருமி - திரும்பி
ப. உ. சாக்குறிகள் அடுக்காமு ன் - சாவுக்கான அறிகுறிகள் தோன்ற முன்பு, தனுகரனந் தளராமு ன் - உடலும் அகக்கருவிகளும் சோர் வடையமுன்பு, மீக்கிளறு நெடுமூச்சு விரவாமுன் - மேல்நோக்கி எழும் பெருமூச்சு உண்டாகுமுன்பு, விழிமயங்கி நாக்குளறி விழா முன் - கண்சொருகுப்பட்டு, நாக்குக் கொன்னித்து எல்லாம். ஒய்ந்து விடுவதற்கு முன், நல்லுணர்வுற்று - நல்ல காலத்தால் நற்சிந்தனை கைவரப்பெற்று, அருட்கள்ளன் நுவலரும் புண்ணியப் பொலிவை தலைதிருமி நோக்கினன் - திருவருள் வசப்பட்ட கள்ள்ன் - இரட்சகர் இயேசுவின் உள்ளங்கவர் கள்ளன், இவ்வண்ணத்தன்' என எவ ராலும் வாய்விட்டுச் சொல்வதற்கரிய புண்ணியப் பெர்லிவாகி நின்ற குமரக் கடவுளைத் தலைதிரும்பிக் கணிவொடு நோக்கினுன்,
உ. வி: சாத்தறுவாயிலும் "மனம் திரும்புதல்’ நிகழலாம் - மோட்ச சாம்ராஜ்யத்திற்குட் புகுந்துவிடலாம் - எனக்கருதும் சமயதத்து வத்தை நிலைநாட்டக், கதைப் புணர்ப்பில் வாணுள் முழுவதும் கள்ளனுயிருந்த ஒருவனை ஒருபாத்திரமாகச் சேர்த்துக்கொண்ட

Page 34
இ
ܚܝ ܠܐ 4 5 ܚܲܣܩܗ
மதத்தத்துவத்தின் மதாளிப்பு ஆய்வுக்குரியது. "நுவலரும் புண் ணியப் பொலிவு' - இரட்சணியக் கவிஞர் சேக்கிழார் மூலம் சொல்வளம் பெற்றுக் கொள்ளுதலை இலக்கிய அவதானிகள் விழிப்புடன் கவனிப்பர். அடுத்தடுத்த பாடல்களிலும் இவர்கள் கண்ணுறங்க முடியாது.
வி: அடுக்கா, தளரா, விரவா, வீழா: அகரம், ஆகாரமான செயவென்னெச்சங்கள். திருமி திரும் என்பதன் அடி யாகப் பிறந்த செய்தென்னெச்சம். நன்னூலார் தரும் வினைப்பகுதிகளிலொன்ருன திரும் அதே வடிவத்தில் கிருட்டினபிள்ளை காலத்திலும் நிற்பது இலக்கண ஆய் வாளர்களின் மகிழ்ச்சிக்கு இடமாகும். *
அறிவரும் பரலோக வேட்கை
காண்டகைய பெருங்கருணைக் கற்பகத்தை எதிர்கண்டு மாண்டகைய அன்பினுெடு மானதாஞ் சலிவழங்கி ஆண்டகைதும் அரசிங்லில் அடியேன நினைந்தருள வேண்டினேன் எனவிரைந்து வேண்டினுன் மிகவிரும்பி, (49)
ப. வி: மானத + அஞ்சலி = மானதாஞ்சலி - மனதால்வணங்கல்,
L
வேண்டுதல் - இரந்து வினயத்துடன் கேட்டல்,
உ; காண்டகைய பெருங்கருணைக் கற்பகத்தை எதிர்கண்டு - சாதாரண.
மானவர்களால் காணமுடியாத, வரம்பில் கருணையினுல் வேண்டு வார் வேண்டுவதை எல்லாம் விரும்பிக் கொடுக்குங் கற்பகத் தருப்போன்ற அற்புத மூர்த்தியை எதிராகக் கண்குளிரக் கண்டு மாண்ட கைய அன்பினுெடு மானத அஞ்சலி வழங்கி - மலபரி பாகம்பெற்று மலப்பக்குவமெய்திய ஆராத அன்பினுல் இதய வணக்கம் செய்து, ஆண்டகை - மனித மாணிக்கமே! இவ்வுலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் - அபயமளித்து இரட்சிக்கும் - தெய் வக் குமரனே, நும் அரசியலில் அடியேனை நினைந்தருள வேண்டி னேன் - நும்முடைய பரமண்டல இராச்சியத்தில் அடியேனும் நும் பக்கத்திருக்கக் கூடியதாக என்னை மன்னித்துத் திருவுளம் இரங்கல் வேண்டுமென மன்றடுகின்றேன், என மிகவிரும்பி இரந்து வேண்டினுன் - . -
வி: சென்ற கணம்வரை மருட்கள்ளன் இக்கணத்தில் சாகின்ற இறுதிக் கணத்தில் - அருட்கள்ளனுகி பரலோக இராச்சியத்திற் கும் நுழைவுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளுகிறன். பாவத்தை

58 -
மன்னிக்கும் இறைவனின் பெருங்கருணைத் திறனே இங்கு
அழுத்தம் உறுகின்றது. கிறித்தவ நெறியன்று, சைவசித் தாந்த நெறிக்கும் இது உடன்பாடென்க
"வேத நாயகனே போற்றி
விண்ணவர் தலவா போற்றி மாதொரு பாகா போற்றி மறுசம யங்கள் வாழப் * பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞகா போற்றி யான்செய் பாதகம் அனைத்துந் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி!' *இரந்திரந்துருக என்மனத்துள்ளே எழுபரஞ்சோதி 'யாகின்றர் இரட்சகர் இயேசுவாகிய குமரக் கடவுள் கைகூப்பி வணக்கஞ் செய்ய முடியாத நிலையிலிருக்கின்றன் கள்ளன் என்பதனைக் காட்டவும் போலும் ‘மானதாஞ்சலி என்ருர், அஞ்சலி செய்யவேண்டியது அஞ்சலி செய்துவிட்டாற் போதும் அல்லவா.
"மறுசமயங்கள் மாழ' என்பதே சாதாரணமாகக் காணப்படும் பாடம், எவரையும் திருப்திப் படுத்தும் நோக்கத்திற்காக அன்று, (நெறிபிறழ்ந்து திருப்திப்படுத்தல் அடாது) கருத்துநோக்கியும், சைவசித்தாந்தத்தின் இனிய பண்பு நோக்கியும் தான் பிறசமயங்கள் வாழ’ எனப் பாடம் திருத்தப் பாடுள்ளது. பாடியவரின் நோக்கம் தற்கவலையும் அதிலிருந்து எவ்வாறு தப்புதல் வேண்டும் என்பதுமேயாய் இருத்தல் வேண்டும். அப்படியான மனப்பக்குவமுள்ள ஒரு நிலையில் உள்ள ஒருவர், 'யான்செய் பாதகம் அனைத்தும் தீர்க்கும்’ எனக் கூறிக்கொண்டே மறுசமயங்கள் மாழ" என மீண்டும் பாதகம் செய்துகொண்டிருக்க முடியாது. "என்ன இச் சமயத்தில் வைத்தே ஈடேற்றவேண்டும்; இறைவனே நீ வேறு சமயங்களிலும் என்னே விட்டுவிடுதல் கூடும்' என்று கருதிக்கொள்ளுகிற எல்லேயிலேதான் "மறு சமயங்கள் வாழப் பேதகஞ் செய்வாய்' என்று பாடியிருத்தல் வேண்டும். எழுதியவன் ஏட்டைக் கெடுத்ததற்காகப் பாடுகின்றவன் பாட்டைக்கெடுக்க வேண்டுமா? அன்றியும் வகர, மகர மயக்கங்கள் மொழியில் அதிகம் என்க. வினைக்கேடு > மினக்கேடு, வேய்தல்) மேய்தல், விஞ்சுதல் > மிஞ்சுதல் என்றெல்லாம் காண்க, சிங்களத்திலும் 'விலே' 'மில’ ஆனது அறிக.

Page 35
ܚܚܗ 6 5 --
இ. வி: அன்பினுெடு; மூன்றம் வேற்றுமை உருபுமயக்கம், !
ஆண்டகை விளி (ஆண் + தகை எனவும் ஆண்ட + கை எனவும் பிரித்துப் பொருள்கொள்ளப்பட்டது) ஆண்டகை:- "டிெய ரெச்சம். ஆண்தகை ஏழன் தொகை, தகை, பண்பாகுபெயர்.
கள்ளனுக்கும் மோட்சம் 35 GTIGT LÍGDAT வருட்கள்ளன் கசிந்துகரு ணேயைநம்பி உள்ளுணர்வோ டினிதுரைத்த வொருமன்ருட் டுயிர்நல்கும் வள்ளல்திரு வுளத்தழுந்த மலங்காய்நீ பரதீசில் உள்ளபடி யின்றேயென் னுடனிருப்பா யெனவுரைத்தார் (50)
ப, வி: மலங்குதல் - கசங்குதல், துன்பப்படுதல். பரதீசு-மோட்சம்,
ப; உ; கள்ளம் இலா அருட்கள்ளன் - உள்ளத்தில் உண்மை கைவரப் பெற்று இறைவன் அருளைக் களவு செய்தவனுகிய அருட்கள்ளன், கசிந்து - உள்ளம் நெகிழ்ச்சியடைந்து, கருணையை நம்பி உள் . உணர்வோடு இனிது உரைத்த ஒரு மன்றட்டு - இறைவன் பெருங் கருணையில் நம்பிக்கை வைத்து இதய உணர்ச்சியுடன் இரந்து வேண்டிய மன்றடுதல், உயிர் நல்கும் வள்ளல் திருவுளத்து அழுந்த - மன்னுயிருக்காகத் தன்னுயிரைக் கொடுக்கும் இரட்சகர் இயேசுவின் திருவுள்ளத்திலே நன்றகப்பட, "நீமலங்காய் பரதீசில் உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய்” . 'நீ துன்பப்படாதே, மோட்சத்தில் உண்மையாக இன்றைக்கு என்னுடன் இருப்பாய், என உரைத்தார் - என்று திருவாய் மலர்ந்தருளினர்,
உ. வி: கள்ளரிலேதான் எத்தனை வகை ? அழுகள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன் என்பனபோல் இவனும் ஒரு வகைக் கள்ளன் - அருட்கள்ளன். அஃதாவது முன்னவரெல் லோரும் மருட்கள்ளர்கள் ஆக, இவன் அருட்கள்ளன் - “கல்ல' கள்ளன் - செய்வன எல்லாம் செய்துவிட்டு உயிர் மெதுவாகப் போய்க்கொண்டிருக்கிற நேரத்தில், உயிரை மெதுவாக மோட் சத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இயேசுநாதரிடமிருந்து அருளைத் திருடிக்கொண்டவன் 'கல்ல'கள்ளன் ஆகாமல் வேறு எப்படி இருப்பான்? உயிர் வள்ளல், அருட்கள்ளன்: இவ் இருதொடர்களும் ஒன்றுக்கொன்று இணங்கியும் பிணங் கியும் மகிழ்ச்சி தருகின்றன. ஒருவர் வள்ளலாயிருக்க அவரி டம் இரந்து வேண்டும் மற்ருெருவர் கள்ளனுகவேண்டியதில்லை. இதனுலேயே பிணக்கம். நெடுகாட்பட்ட கள்ளனுெருவன் இருக் தற்போல் இறைவனைக் கிட்டிக்கொண்டதனுல் இணக்கம்,

ܚ- 57 ܚ
"இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத் தில் வரும்போது அடியேன நினைத்தருளும்என்றன். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசி லிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச்சொல்லுகிறேன் என்றர். ’ (லூக், 23: 40 - 43)
இ. வி: மன்ருட்டு: தொழிற்பெயர், சீராட்டு தாலாட்டு என்பன போல், இன்றே: ஏகாரம் பிரிநிலைப் பொருளது (இன்றைக்கே யான் போய்விடுவேன் என்பது கருத்து.)
ஆய்வு: "அந்தப் புனித கம்பளத்தில் கிறிஸ்துநாதரின் திருச்சரீரம் கிடத்தப்பட்ட பின்னரும், அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருந்தது என்பதை அந்தக் கம்பளத்தில் காணப் படும் குருதி விளக்குவதாக அமைந்து இருக்கிறது இப்படி திரு. குர்ட்பெர்னு குறிப்பிட்டுள்ளார்’ *
இவ் ஆராய்ச்சியின் முடிவு புதிய சில பிரச்சினைகளைத்தோற்று விக்கக் கூடும். உயிர் போகுமுன்பே இயேசுநாதர் கல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டாரா எனவும் தடை எழுப்பலாம்.
"ஓய்வுநாளுக்கு முந்தினாாள் ஆயத்த நாளாயிருந்தபடியால் சாயங்காலமானபோது, கனம் பொருந்திய ஆலோசனைக்காரனும், அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருக் தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத் தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனுரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா, என்று கேட்டான். நூற்றுக்கு அதிபதியினுலே அதை அறிந்துகொண்டபின்பு சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத் தான்.' (மா + 15: 42 - 45)
புனிதத்துப்பட்டியில் கிடத்தப்பட்ட பின்னரும் அவரது இருதயம் துடித்துக்கொண்டுதான் இருந்தது என்ற கருத்துக்கு உரம் ஊட்டுவது போற்ருன் பிலாத்துவின் ஆச்சரியமும் காணப் படுகின்றது. சாதாரணமாக ஒருவர் சிலுவையில் அறையப்பட் டால், இத்துணை நேரத்துக்குள் அறையப்பட்டவரின் உயிர்போயி
. * ஜோ, ஏ. எம்; தாஸ் என்பவரால் 22-379ஆம் தேதி சிந்தாமணி
யில் எழுதப்பட்ட கட்டுரையைப் பார்க்க,
இE யா, 8

Page 36
. ; .
| (köö, (p19.11.5) என்பது பிலாத்துவுக்கு ஏற்பட்ட அனுபவ சித்தாந்தமாய் இருத்தல் வேண்டும். அதனுலேதான் நல்லடக்கம்
செய்வதற்காக யேசுவின் சரீரத்தைக் கேட்டபொழுது பிலாத்து ஆச்சரியப்பட்டான். இதற்குப் புறகடையாக இரட்சகரின் இதயநிலை
இருந்திருக்கலாம் விசாரணை செய்யப்பட்ட இடத்திலிருந்து கபாலத்
தலம் வரும்வரை வரலாற்றுக்கு எட்டாத சித்திரவதைக்கு ஆளானவர் இயேசு பெருமான், எனவே ஆராய்ச்சி முடிவு எதுவாயினும்
பிலாத்துவின் ஆச்சரியம் இதுவாயினும் சிலுவையில் அறையப்பட்ட அன்றே இயேசுநாதர் மரித்துவிட்டார் எனக் கொள்வதே சத்தியிம்
ஆகும். சிலுவையிலிருந்து இயேசுநாதரின் சரீரம் அகற்றப்பட்டுத் துப்பட்டியிற் கிடத்தப்பட்ட பின்னரும் அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருந்தது என்ற துப்புத் துலக்கத்தை, உயிர்துதெழும்வரை நீட்டிக்கொண்டு போவதற்கு இடமில்லை. இரட்சகரின் திருவாய் மொழியே இதற்குச் சான்று ஆகும். 'மலங்காய்போதிசில் உள்ளபடி இன்றே என்னுடன் இருப்பாய்' என்றல்லவா அடிக்ள் திருவாய்
மலர்ந்தருளினுள் இன்றே" என்ருல் சிலுவையில் அறையுண்ட
அன்றே என்பதுதான் கருத்து, புனிதர் லுக்காவின் சுவிசேடம் இரட்சகர் இயேசுவின் திருவாய் மணிமொழியை அழுத்தம் திருத்த T) { 06) afin^{R^310B3,
. శ్రీ
(கவிக்கூற்று)
வரம்பில் கருணை
எம்மா திரமும் படுபவி யென்றெள்ளு கள்ளன் அம்மா உயிர்போம் அளவிற் கதியாக்கம் நச்சிம் -\\}.*? பெம்மான் அருளுக் கிலக்காகி மெய்ப்பேறு பெற்ருன் கைம்மா றின்மகா கிருபைத் திறங்காண்டி மைந்த (51) ப. வி. மாதிரம் - திசை நச்சுதல் - விரும்புதல் ('நச்சினுர்க்கினி
யர்' எனப்பிரயோகங் காண்க) கைம்மாறு - பிரதிபலன்.
ப, உ3 மைந்த மகனே! எம்மாதிரமும் படுபாவி என்று எள்ளு கள்ளன் எட்டுத் திக்கிலும் உள்ளவர்களாலும் அறக்கொடியவன் என்று இகழப்பட்ட இக்கள்ளன், உயிர்போம் அளவில் சாகுந் தறுவாயில், கதியாக்கம் நச்சி உயர்கதியாகிய மோட்சத்தை விரும்பி, பெம்மான் அருளுக்கு இலக்கு ஆகி இறைவன் திருவரு ளூக்கு ஆளாகி, மெய்ப்பேறு பெற்றன் - சத்திய விளேவை அஃதா வது வான்மண்டல இன்ப வாழ்வைப் பெற்றுக் கொண்டான் ,
 
 
 
 
 
 
 
 
 

கைம்மாறு இல் மிக கிருபைத் திறம்காண்டி - பிரதியுப்காரம் எதுவும் கருதாத இறைவனது வரம்பில் கருணேவன்மையைக் காண்பாயாக'
உ. வி. சாகுந்தறுவாயிலும் "மனம் திரும்புதல் ஏற்படுமாயின்
நற்கதி பெறலாம் என்பதும், இறைவன் பிரதியுபகாரம் கரு
தாத இரக்க சிக்தையன் என்பதும் கவிஞரால் அழுத்தம் திருத் தமாகக் கூறப்பட்டுள்ளது. செய்யவேண்டிய பாவங்கள் அத்தனை
யையும் செய்துவிட்டு இறுதி நேரத்தில் மனம் திரும்புதலால் மோட்சத்தை அடைந்துவிடலாம் என்ற கருத்து நல்லதொரு சமூதாயத்துக்கு நலும்புரியுமா என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது, ஆய்க.
வி மாதிரமும் உம்மை முற்று பொருளது படுபவி. (அனைத்தும் அழிவதற்குக் காரணமான பாவி) நான் கத்தொகை: உரிச்சொல் அடையெனவும் கொள்க. எள்ளு கள்ளன்: விக்கத்தொகை, எள்ளும் கள்ளன் எனில் பெயரெச்சம் என்க: அம்மா வியப்பிடைச்சொல். கதியாக்கம்: பண்புத்தொகை இல் எதிர்மறை இடைநிலையுடன் (ஆ) விகுதியுங்கெட்ட
குறிப்புவினப் பெயரெச்சம் காண்டி (காண் + ட் + இ =
ப. உ. தன்னேரில் நின்று ஏங்கி அழும் தனித்தாயை - தன் முன்குல் t
நின்று ஏக்கத்துடன் அழுதுசெனரியும் ஒப்பற்றவளாகிய மரிஅம்மை
முனனிலை ஒருமை வினைமுற்று. டகரமெய்யெழுத்துப்பேறு
சீடன் நண்பன்
(შებ4ე)
தன்னேரி னின்றேங்கி யழுத்தனித்த வயன்பின் முன்னுக வழுங்கொரு டனேநோக்கி முற்றன்பால் அன்னுயுன் மகனிவன் மற்றுனக் கன்னேநண்ப
என்னுவருள் இன்னுரை தந்தன ரென்றுமுள்ளார். (52)
பையும், அன்பின் முன் ணுக அழுங்கு ஒரு சீடனே நோக்கி அன் புடன் முன்னுக நின்று ள்ளம் அழுங்கி ஆலேகின்ற ஒரேயொரு சீடனுகிய அருளப்பரையும் பார்த்து, அன்னுய் உன் மகன் இவன்
தாயே உனக்கு இனி மகன் இவன்தான், நண்ப சீடனே 1 மற்று
உனக்கு அன்னை - என் அன்னேயாகிய மரியம்மை யாவர் என்கு அருள் இன்னுரை தந்தனர் என்றுமுள்ளார் என்று அரு எால் உரை செய்தார் என்று முன்னவராகிய இயேசு பெருமான்,

Page 37
سي 60 كسيس
உ, வி: "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே கின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு தம்முடைய தாயைநோக்கி: ஸ்திரீயே, அதோ, உன்மகன் என்ருர், பின்பு அந்தச் சீஷனை நோக்கி; அதோ, உன்தாய் என்றர். அந்நேர முதல் அந்த சீஷன் அவளைத் தன் னிட மாய் ஏற்றுக் கொண்டான்" (யோ, 19; 26-27:)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் குரு சிஷய உறவு எவ்வா இருந்தது என்பதற்கு இயேசு பெருமானின் வார்த்தைகள் தக் உதாரணங்களாகும். சீடனே, கண்ப என அழைக்கும் இயேசு அடி களாரின் மனக் கனிவு இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் ஊன் றிச் சிந்திக்க வேண்டியதாகும். இறுதிவரை நின்ற ஒரேயொரு சீடனும் புனிதர் அருளப்பரே என்பதும் (யோவான்) கவனிக்கப் படவேண்டியது. இதிலிருந்து எப்படியான சீடன் நண்பனெனக் கருதப்படலாம்ென்பதும் ஊகிக்கப்படலாம்.
(கவிக் கூற்று)
தாய்க்கு நிகர் தாய்தான் !
ஆயிற் சிறந்தவற மாவதிவ் வாழிவைப்பிற் தாயிற் சிறந்ததம சின்றெனத் தக்கவன்பாஞ் சேயிற் சிறந்தவரு ணுயகன் சிந்தையார வாயிற் சிறந்தமொழி காட்டுமிம் மாண்பையோர்தி (53)
ப. உ. இவ் ஆழிவைப்பில் சிறந்த அறமாவது தாயிற் சிறந்த தமர் இன்று - கடல்சூழ்ந்த இவ்வையகத்தே சிறந்த அறமெனக் கருதப் படுவது பெற்றதாயினும் சிறந்த சுற்றம் இல்லை, என - என்று, தக்க அன்பாம் சேயிற் சிறந்த அருள் நாயகன் - ஈன்றே ருக்குத் தகைமையை - தகுதியை அளிக்கக்கூடிய அன்புப் புதல்வர்களில் மிகச் சிறந்த கருணைவள்ளலாகிய இயேசு, சிந்தை யார வாயிற் சிறந்தமொழி காட்டும் இம் மாண்பை ஓர்தி - (மானுடனே :) சிந்தையின் நிறைவால் ஏற்படும் உண்மைகளிற் சிறப்பான இவ்வார்த்தைகளின் மகத்துவத்தையும் சிந்தித்துப்
jiffTLf|LffTjf 85
உ. வி: பெற்றதாயையும், பேய், நாய் எனக் கருதும் பிசாசுப் பிறவிகளுக்குக் கவிஞர் ஒரு "அடி கொடுத்து 'தாயிற் சிறந்த தமரின்று' - அறவுபதேசம் செய்வது அருமைப்பாடாகவுள்ளது.
 

- 1 1 6 ܩܗ
"கடந்துளோர்களும் மறப்பரோ மக்கள்மேற் காதல்’ என்று அழுத்தம் செய்கின்றன் ஒரு கவிஞன். கடந்துளோர்களும் மறப்பரோ அன்னைமேற் காதல்’ என மறுதலைப் பாடம் சொல் கின்ருர் இன்னுெரு கவிஞர்.
'தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள், அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி; மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினுேமே என்ருள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத்தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறி யீர் க ள |ா என்ருர், ’ (லூ. 3; 48-49)
இயேசுவின் பாலியப் பருவத்தில் (அவருக்கு அப்பொழுது வயது பன்னிரண்டு) பஸ்கா பண்டிகைக்காகப் பெற்றேர்கள் இவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றனர். பண்டிகிை முடிந்து திரும்பி வரும்பொழுது இயேசு எருசலேமிலேயே தங்கிவிட்டார். வழியில் இயேசு தங்களுடன் திரும்பி வராததைக் கண்ட பெற்றேர் அங்கு மிங்குந் தேடினுர்கள். காணவில்லை. மீண்டு எருசலேமுக்குத் திரும் பிப் போஞர்கள். அங்கு அவர் போதகர்களின் நடுவில் உரையாடிக் கொண்டிருக்தார். அப்பொழுதுதான் மரியம்மை மகனை நோக்கி "மகனே ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்' என்று கேட்ட பொழுது, "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள். என் பிதாவுக் கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறிவீர்களா ? எனப் பதில் வினு எழுப்பிய இயேசு தான் உயிர் ஊசலாடிப் போகும் தறுவாயில் தாயிற்சிறந்த தமரின்று எனக் காட்டினுரென் ருல் தாய் எவ்வளவு பெரியவள் என்பதும், எத்துணை சிறந்தவள் என்பதும், தெரிகின்றது அல்லவா? இதனுலேதான்போலும், தாய் மொழி விடயத்திலும் சூடுபிடிப்பது!
இப்பாடல் கடையோட்டத்தைப் பார்க்கும் பொழுது திருக்கோ வையாரில் கவிஞருக்குள்ள ஆழ்ந்த பயிற்சி எவருக்குக் தெரியாமற் போகாது.
அனைத்துயிர்க்கும் தாயாகி நின்றவள் அன்பின்றலே நின்றருள் பெற்றவத் தொண்டனையன் துன்பின்றலே நின்று கருத்தொடு சொற்றவாய்மை என்பிங் குகுமட் டிதயத்தி லிருத்தியன்ன தன்பங்கின ளாவவள் சொற்றலே தாங்கிநின்றன். (54)

Page 38
in 62 -
ப. உ. அன்பின் தலே நின்று அருள்பெற்ற அத்தொண்டன் - முடி வான அன்புநெறியில் நின்று இறைவனின் அருளேப் பெற்றுக் கொண்ட அச்சீடன், ஐயன் துன்பின் தலை நின்று(ம்) - தன் குருநாதன் துன்ப உச்சியில் நின்று படாத தொல்கிலப்பட்ட பொழு திலும், கருத்தொடு சொற்றவாய்மை சிந்தித்துக் கூறிய உண்மை, என்பு இங்கு உகுமட்டும் இதயத்தில் இருத்தி - எலும்பெல்லாம் நீருகுமட்டும் மனத்தில் இருத்தி, அன்னை தன் பங்கினளா(க) . மரியம்மையைத் தன்னைப் பெற்ற தாய்போலும் கருதி, அவள் சொல் தலே தாங்கி நின்முன் - திருமரியம்மை கூறியதைச் சிரமேற் கொண்டு மிகப் பணிவுடன் வாழ்ந்துவந்தான்.
உ. வி. அன்னை மரியாள் அருளப்பருக்கு சுவீகார அன்னேயாய் விட்டாள். எல்லோருக்கும் ஒருதாய், அருளப்பருககு இருதாய், என்னே யோவானின் யோகம் !
இ. வி நின்றும்:- உம்மை விகாரத்தால் தொக்கது. பங்கின ளாக:- இறுதிகெட்ட செயவென்னெச்சம், பங்கினள் என்பது ஆக என்ற செயவெனெச்சத்துடன் சேர்ந்து ஒரே எச்சமாய் விட்டது. தலைதாங்கி: ஏழன் தொகை, வாய்மை; இரண்ட னுருபேற்ற தொழிற் பெயர். உகுமட்டும்; முற்றும்மை செய் யுள் விகாரத்தாற் தொக்கது. ஐயன், இருத்தி, ஆக, தாங்கி நின்ருன் என இயையும்.
(வேறு)
அந்தகாரம்
வழிப் பெருமான வதைத்துயிர் மாய்க்க மல்கும் பாழித் துயரின்பட லம்மெனப் பாரை முடி ஊழிக் கருமாலே வளைந்தென வொல்லே யும்பர் ஆழிக் கதிரைப் புதைத்தோங் கியதந்த காரம். — (5,5) ப. உ. வாழிப் பெருமானை வதைத்து உயிர் மாய்க்க என்றும் உள்ள வராகிய இயேசு பெருமானைச் சித்திரவதை செய்து அன்னவரின் ஆன்மாவை முடித்துவிட, அந்தகாரம் - ஒரேயிருட்டானது, பாழித் துயரின் படலம் என எதையும் சூனியமாக்கி விடும் துயரப் படலம் போலவும், ஊழிக்கருமாலே வளேந்தென - யுகமுடிவின் இருண்டமாலேப்பொழுது வளைந்தது போலவும், பாரைமுடி - மண் ணுலகம் முழுவதையும் சூழ்ந்து, ஒல்லே உம்பர் ஆழிக் கதிரைப் புதைத்து ஓங்கியது - விரைவாகவே ஆகாயத்தில் நிலவிய சூரியனை யும் சூழ்ந்து, மண்ணையும் விண்ணையும் மூடி மறைத்துக்கொண்டது.

anيس 63 سيسي
உ. வி: * அப்போது ஏறக்குறைய (ஆரும்மணி) பகல் பன்னி ரண்டுமணி நேரமாயிருந்தது. (ஒன்பதாம் மணி) பிற்பகல் முன்று மணி நேரம்வரை பூமண்டலமெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று
(மத், 27; 45; லூக், 23 44; மாற், 15 : 33)
எதையும் சூனியமாக்கும் துன்பப்படலம் போலவும், யுகமுடி வில் எழும் இருட்டுப் போலவும் அந்தகாரம் மண்ணையும் விண்ணையும் விழுங்கிற்று என்க. மனித இன ஒளி மறைய இருள் கவ்வியது புதுமை இல்லை. மண்ணவரும் விண்ண வரும் செய்வதறியாத திகைப்பு நிலையும் இதுவாகும்.
இ. வி. என, என: ஈரிடத்தும் எண்ணும்மை தொக்குகின்றது."
ஆழிக்கதிர் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. வாழிப்பெருமான்: நான்கன் தொகை (வாழி - வாழ்த் து: தொழிற் பெயர்) பாழித்துயரம் (பாழி - பெருமை) இக்கருத் திற் பண்புத் தொகை எனவும் கொள்க. துயரின் படலம்:- இன் தவிர்வழிச் சாரியை,
தேவ ஆட்டுக்குட்டி எல்லா வுலகத்தவர் பாவமு மேற்ற தேவ நல்லாடு உயர்வேதிகை மேவலு நம்ப னிதிச் செல்லா ரழறித்திட வப்பலி தீந்தெ ழுந்த அல்லார் புகையாமென வோங்கிய தந்த காரம், (56)
ப, வி. வேதிகை - பலிபீடம். நல்ல + ஆடு = கல்லாடு (நன்மை +
ஆடு = கல்லாடு , அல்லிருள் - "அல்லும் பகலும்’ .
ப, உ எல்லா உலகத்தவர் பாவமும் ஏற்ற தேவநல்லாடு = அனேத் துலக உயிர்களின் பாவங்களையும் தரனே ஏற்றுச் சுமந்த தேவனுகிய நல்ல ஆட்டுக்குட்டி, உயர் வேதிகை மேவலும் . (சிலுவையாகிய) புனித பலிபீடத்திற் போய்ச் சேர்ந்ததுமே, நம்பன் நீதிசெல் ஆர் அழல் தீத்திட தெய்வ நீதியாகிய (யாக குண்டத்தில்) எப்பொழுதும் அணைந்து போகாத நெருப்பு, அதற் குள் இடும் பலிப்பண்டங்களே எரிக்க, அப்பலி தீந்து எழுந்த அல்ஆர் புகையாம் என ஓங்கியது அந்தகாரம் - (யாக குண்டத் திற் போடப்பட்ட) பலிப்பண்டங்கள் எரியும் பொழுது எழுந்த தீச்சுடரின் கரும்புகை போல எங்கும் ஓடிப்பிடித்தது (அந்த இருள்.
~~~~
* யேசுவின் திருவாய் மொழிகள் பக். 1564-184,
鲇

Page 39
இ.
--سے 64 --سے
வி; தேவனே ஆட்டுக்குட்டியாக உருவகித்தவர் வேதிகையை சிலுவையென்றும், தெய்வ நீதியை யாக குண்டமென்றும் உருவகித்திருத்தல் வேண்டும். அவ்வாறின்மையின் இதனை அணி நூலார் ஏகாங்க உருவகம்’ என்பர். இருளை இவ்வாறு எல்லாம் உருவகித்துக் கொண்டு வருவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
கம்பன் + நீதி = நம்பநீதி: செய்யுட் கிழமைக்கண் வந்த
ஆரும் வேற்றுமைத் தொகை, “ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி" (தி. கு. ம.) என்பதுபோல்,
ll:
ஞானசூரியனும் வானசூரியனும்
வாதிக்கும் அநீத அஞ்ஞான மகாந்த காரம் நீதிக் கதிரோன மறைத்திடு நீர்மை கண்டு சாதிக்க மாட்டாது உலகுக்கொளி தந்து நின்ற ஜோதிக் கதிர்குன் றிடமையிருள் தொக்க தெங்கும். (57)
வி; மகா + அந்தம் = மகாந்தம், வாதிக்கும் - வாதைதரும்.
ஜோதி - ஒளிஉ; வாதிக்கும் அநீத அஞ்ஞான மகாந்த காரம் - எவருக்கும், எதற்கும் வேதனைதரும் அநீதியும் அஞ்ஞானமுமாகிய மகாஇருட்டு, நீதிக் கதிரோனை மறைத்திடு நீர்மை கண்டு-உலகுக்கு நீதி உணர்த்த அவதரித்த ஞான சூரியணுகிய இயேசுநாதரை மறைத்துவிட்ட பாவத்தன்மையை நோக்கி, சாதிக்க மாட்டாது உலகுக்கு ஒளி தந்து நின்ற ஜோதிக் கதிர் குன்றிட - உலகம் எதனையும் சாதிக் கும்படியாக ஒளிதருகின்ற சூரியன் இப்பொழுது எதனையும் சாதிக்க முடியாதவடி தன் ஒளிக்கதிர் மறைய, எங்கும் மையிருள் தொக் கது - எதனையும் காரிருள் கவ்விக் கொண்டது;
வி: அதிேயும் அஞ்ஞானமுமாகிய இருள் ஞான சூரியனை மறைத்தது, இதுகண்ட வானசூரியன் சகிக்க முடியாது ஒளி குன்றிக் கொண்டது. இதனுல் பூமண்டலம் மூழுவதும் இருள். கவ்விற்றென்க. வி, வாதிக்கும்; ()ேவாதனை என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம், மறைத்திடு, குன்றிட: யாப்பு நோக்கிய துணை வினைகள் என அறிக.

/ ', மண்க 65 muas } இனப்படிப் பாடுவனுே ?
காராழி பொங்கிக் ககனம்புதை uüL Q56őT659 பாராதி அந்தம் புரிதீமைப் படாமி தென்கோ தீரா அனர்த்தத் திரள்கூடிச் செறிந்த தென்கோ பேரா தொரியாமம் வரைதுற்றிருட் பெற்றி தன்னை (58)
ப, வி: காராழி - கருங்கடல். ககனம் - ஆகாயம், பட(ா)ம் - படம் திரைச்சீலை, ஓர் + யாமம் = ஒரியாமம் யாப்பு நோக்கி *ஒரி யாமம்’ ஆனது.
ப, உ3 பேராது ஓர் யாமம்வரை துற்ற இருள் பெற்றி தன்னை . அசையாது ஒருசாமம் வரையிலும் எங்கும் நிறைந்த இருட்டன்மையை, காராழி பொங்கிக் ககினம் புதைபட்டது என்கோ - கருங்கடல் பொங்கி எழுந்து நீல வானத்தை மறைத்து விட்டது என்று சொல்லட்டுமோ? , பார் ஆதி அந்தம் புரிதீமைப் படம் இது என்கோ - இதுவரை இப்பூமி முடிவில்லாமலே செய்த தீமைகளின் படம்தான் இது என்று சொல்லட்டுமோ? தீரா அனர்த்தத் திரள் கூடிச் செறிந்தது என்கோ - (அல்லது) ஒருகாலமும் தீர்ந்து போகாத பொல்லாங்குகள் எல்லாம் சேர்ந்து ஒன்ருய் நிற்கின்ற
உருவம் என்று சொல்லட்டுமோ?
உ, வி: கவிஞருக்கே எப்படிச் சொல்வதென்பது புரியவில்லேயாம். ஆமான கவிஞரொருவரின் கற்பனையே அவ்விருளை வருணிக்க இயலவில்லையெனில் இருளின் தன்மை தான் என்னே! கவிஞரின் கஷ்டம் இரண்டாம் மூன்ரும் அடிகள் ஒரடியாகக் கருதப்படும் பொழுது தெரிகின்றதல்லவா.
இ. வி: தீரா அனர்த்தம்: ஈறுகுறைந்த எதிர்மறைப் பெயரெச் சம், பேராது: எதிர்மறை வினேயெச்சம். துற்றிய இருள்; ஈறுகுறைந்து, யாப்புநோக்கித் துற்றிருள் ஆனது. பெய ரெச்சம். என்கோ - எதிர்மறை ஓகாரத்தை இறுதியிற் பெற்ற தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று (என் + கு).
குற்றுயிராய் எல்லாம் குலைந்தன!
ஊறுற்றிடு காரிருண் முடி யுடற்ற அஞ்சிப் பீறுற்றுள முட்கி யமர்ந்து பிதற்றி யாதும் தேறுற்றில வாய்ச்செய லற்ற ஜெகத்து ளாம்பல் கூறுற்ற ஜீவ வகுக்கங் குலைவுற்ற மாதோ, (59)
இ. யா.-9

Page 40
سے 66 حس۔
ப, உ ஊறு உற்றிடு கார் இகுள் மூடி உடற்ற தீங்குதரும் கரிய
இருள் (உலகைக்) கவ்வி வருத்த, அஞ்சிப் பீறுற்று உளம் உட்கி அயர்ந்து பிதற்றி யாதும் தேறுஉற்றிலவாய் - பயந்து உளம் பீறுண்டு நடுங்கி, சோர்ந்து, சொல்வதறியாது பிதற்றி எதிலும் தெளிவில்லாதனவாய், செயலற்ற ஜெகத்து(ள்)ளாம் - செயலிழந்த பூமியிலுள்ளனவாகிய, பல்கூறு உற்ற ஜீவ வருக்கம் (உம்) குலே வுற்ற : பல்வேறுபட்ட ஜீவ இனங்களும் உருவும் உளமும் குலேந்து நின்றன.
வி: ஊறு, பீறு, தேறு: தொழிற் பெயர்கள்: குலைவுற்ற: அன்சாரியை பெருத பன்மை வினைமுற்று. வருக்கமும்: முற்றும்மை செய்யுள் விகாரத்தாற் தொக்கது.
சஞ்சாரம் இல்லை பெருந்தீப் பிழம்பும் பிறங்கா தொளிர்பெற்றி குன்றிக் கருந்தீ யெனலா பதுகண் றெளியற் றிமைத்தல் பொருந்தா முழுக்குகு டாயின பொன்றி னுலொத் திருந்தா ரெவரும் எவையும் சரித்தில்ல காண்டி- (60)
ப5 உ பெருந்தீப் பிழம்பும் - சூரியனும், பிறங்காது ஒளிர் பெற்றி
குன்றி - பிரகாசிக்காது ஒளிகாலுந் தன்மை இழந்து, கருந்தீ
எனலாயது கரிக்கட்டிபோலரயது. கண்ணுெளியற்று இமைத்தல்
பொருந்தாது முழுக்குருடாயின - (மனிதரின்) கண்களெல்லரம் ஒளி யிழந்து இமைகள் மூடாமலே முழுக் குருடாகிவிட்டன, எவரும் பொன்றினுல் ஒத்து இருந்தார் - மனிதரனவரும் செத்தவர்கள்போல் இருந்தார்கள், எவையும் சரித்து இல்ல - ஜீவவருக்கம் அனைத்தும் சஞ்சாரஞ் செய்யவே இல்லே,
வி: சூரியன் கரிக்கட்டியாம்; மனிதக் கண்களெல்லாம் இமை மூடாமலே முழுக்குருடாய் விட்டனவாம் (கண் விழித்தபடியே பார்த்துக்கொண்டிருக்கிறர்கள் ஆணுல் ஒன்றும் தெரியவில்லே என்பது கருத்து) ; உயிரினங்கள் எவற்றிலும் அசைவாட்டம் ஏதும் இல்லையாம். எல்லாம் (ஸ்) தம்பித்து விட்டன; கவிதை ஒட்டமும் அப்படியே,
வி: தீப்பிழம்பு பண்புத்தொகை. ஒளிர்பெற்றி வினைத் தொகை, கருந்தீ; இரண்டாம் வேற்றுமை உருபும் பொரு ளும் உடன்தொக்க தொகை, அன்றி, பண்புத்தொகை அன்று. சரித்து: சஞ்சரித்து என்பதன் முதற் குறை, இல்ல (இல்லா

ܗܚ 7 6 ܫܚܗ
தனவாகின) அஃறிணைப் பன்மைக் குறிப்புவினைமுற்று. சஞ் சரித்து + இல்ல = சஞ்சரித்தில்ல. வந்து + இலன் ஊ வக் திலன் என்பதுபோற் புணர்ந்து கொண்டது.
மெய் விளக்கம் !
மெய்யான தீபம் கிறிஸ்தியேசெனும் மெய்ம்மை கண்டாம் உய்யாத உயிருக் குயிராமுயிர் ஒயு மெல்ல மையார் கண்ணிருண் டிடவானுெளி யாவு மக்கி வெய்யோ னுெளியுங் கரந்தாரிருள் மேய வாற்ருல் (61)
உ உய்யாத உயிருக்கு உயிாாம் உயிர் ஒயும் எல்லே - அவனரு ளன்றி உய்தி அடையமுடியாத உயிருக்குயிரான பகவான் ஜீவ மரண யாத்திரையில், வானுெளி யாவும் மட்கி வெய்யோன் ஒளியுங் கரந்து - (அதற்குக் காரணமான) வானுெளிகள் - வான் விளக்குகன் எல்லாம் மறைந்து, சூரிய ஒளியும் மறைந்து இருள் மூட, மையார் கண் இருண்டிட - கருவிழிகள் இருளடைந்த காரணத் தால் மெய்யானதீபம் - , கிறிஸ்து இயேசெனும் மெய்ம்மை கண் டாம் - கிறிஸ்து இயேசுநாதர்தான் என்கின்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்துகோண்டோம்.
இப்பொழுதுதான் உண்மையான ஒளி தெய்வ ஒளியென்பது தெரிய வருகின்றதாம். வி; கிறிஸ்து + இயேசு = கிறிஸ்தியேசு; இருபெயரொட்டுப் பண்புத் தொகை, ஒருபெயரொட்டுப் பண்புத்தொகை யெனவும் கொள்ளப்படலாம்.
புன்னெறியதனிற் செல்வோர்!
மெய்யுற்ற தெய்வம் பசுபாசம் விளக்கி நாளும் கையுற்ற நெல்லிக் கணியின்மறை காட்ட இன்னும்
ஐயுற்ற லேயும் புலமார்க்க ரகத்து நஞ்சு கையுற்ற கூட்டில் இருடொக்கது மண்ணும் விண்ணும் (62)
உ! மெய்உற்ற தெய்வம் பசுபாசம் விளக்கி - பதி, பசு, பாசங்
களின் மெய்யியல்புகளுக்கு விளக்கந்தந்து, நாளும் கையுற்ற நெல்லிக் கனியின் மறைகாட்ட - தினம் தினம் உள்ளங்கை நெல் லிக்கனிபோல் உண்மையை வேதங்கள் உரைக்கவும், ஐயுற்று அலேயும் புலைமார்க்கர் அகத்து - (உணராமல், நம்பாமல்) சந்கே

Page 41
سیب 68 سپیسے
கப்பட்டு புன்னெறியதனிற் செல்லும் போக்கினர் உள்ளத்தில் கை கூடிய நச்சுக் கூட்டுப்டோல், மண்ணும் விண்ணும் இருள் தொக்கது - எங்கும் இருள் மூடியது,
உ. வி. பதி, பசு, பாசங்களை விளக்கும் சைவசித்தாந்த உண்மை களையே விளக்கும் முறையில் வேறுபாடு காணப்படினும்-பரிசுத்த வேதாகமங்களும் விளக்குகின்றன என்ற உண்மையைக் கவிஞர் குறிப்பிடுவது கவிஞரின் வாசனுமலம்' ஆகலாம்.
வேறு மார்க்கத்தினரை, கவிஞர் குறிப்பிடுகின்றர் எனப் பிறர் குறிப்பிடுவது சற்றும் பொருந்தாது நன்னெறியில் இயங்காது புன்னெறியில் முயங்கும் ஒருவித காத்திகரையே கவிஞர் குறிப்பிடு கின்ருர், அவர்கள் கெஞ்சமதான் பாவவிடத்தால் கபkகரிக்கப்பட்டு இருண்டு கிடப்பது. உவமை கவிஞருக்கு உயர்வு தருகின்றது.
பாவ எண்ணங்களின் கூட்டத்தை ‘கஞ்சுக் கூட்டு’ என்ருர், இ. வி: கனியின், கூட்டில்: ஒப்புப் பொருளில் ஐந்தன்விரி. புலைமார்க்கம்: (புலைமையை உண்டுபண்ணும்கெறி) 2-ம் வேற்றுமை உருபும் பொருளும் தொக்க தொகை,
,அறியாதார் அறியாதர்ரே **مه ஈர்த்தங்கல கையிருட் கும்பியில் இட்ட பூவை ஆர்த்தன்பு வடங்கொ டிழுக்கும் நம்மைய குற்றல் பார்த்தும்ப ருடு பலதேவ கணங்கள் பையுள் போர்த்தங்கிடைத் தார்நர கத்திருள் போர்த்த தென்னுே? (63)
ப. வி: ஈர்த்து இழுத்து. அலகை - பசாசு, சாத்தான். உம்பர் -
வானுலகு, பையுள் - சிறுமை,
ப. உ. ஈர்த்து அங்கு அலகை கும்பியிலிட்ட பூவை - சாத்தான் நரகச் சேற்றில் இழுத்துக்கொண்டு சென்று அமிழ்த்திய பூவுலகத்தை, ஆர்த்து அன்புவடங்கொண்டு இழுக்கும் தம ஐயன் ஆற்றல் பார்த்தும் உண்மை உபதேசம் செய்து அன்புக் கயிற்றினுல் (மீண்டும் நரகத்தில் உழலும் பூமியை) இழுத்து வெளிக்கொண ரும் நம்பெருமானின் வரம்பிலாற்றலேக் கண்ணுரக் கண்டும், உம்பர் ஊடு பல தேவகணங்கள் - வானத்தில் பல தெய்வகணங்கள் உண்டு (என்னும்), பையுள் போர்த்து அங்கு இடைந்தார் - சிறுமையால் மூடப்பட்டு, மூடப்பட்டநிலையில் துன்பப்படுபவர்கள், நரகத்து இருள் போர்த்தது என்னே - நரகமாகிய இருளாலும் மூடப்பட்டிருப் பதுரனுே?

ܚܙܚ 9 6 ܘܢܣܩ
உ. வி: சிந்தனை அற்ற நிலையில் இக்கவிதை எழுந்ததா அல்லது சிந்தித்துத்தான் செய்யுள் செய்தாரா என்பது விளங்கவில்லே. "விண்ணிறைந்த தெய்வங்கள் பல்கோடி உண்டேனும்’ என்ற குமரகுருபர வாசகத்திற்கு, மறுத்தான போடுகின்றரா என்ப தும் புரியவில்லை. தெய்வத்தன்மை பெற்றவர்க%ளயும் தெய்வ மெனக் குடுப்பிடுவது அறிவு முதிர்ச்சியிலேற்பட்ட ஒரு மரபு. தமிழ்நாட்டு மரபில் ஊறியவர் இக்கவிஞர். இந்து சமய காவி யங்கள், இலக்கியங்கள், தேவார திருவாய் மொழிகளின் தொடராலும் அமைப்பாலும் ‘யாத்திரிகம் கண்டவர் இவ் வாறு கூறுவது என்னுே (ஏனுே)? "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பதுதான் எம்மதத்தினரதும் மையக் கோட் பாடாகும். இஃது அறியாதார் அல்லர் கிருஷ்ணபிள்ளை, போகட் டும், 'ஒன்றிலே மூன்ருய் மூன்றும் ஒன்றதாய்’ (இரட்சணிய யாத்திரிகம் சிறப்புப்பாயிரம் கடவுள் வாழ்த்து இரண்டாம் பாடல்) எனக் கூறும் ஒரு கவிஞர், மதபிரசாரகர்கள் ‘பேய்க் காட்டும் ஒருவழியில் இறங்கியிருத்தல், கூடாது.
ஒருவேளை இப்பாடல் "இடைப்பிறவரலோ ?
- εζ -'தட்டுங்கள் திறக்கப்படும்’ நிவியுண்ட் முந்நீர் உலகத்து நலம்பெய் கொண்முத் துளியுண்டு உணவுண்டு பல்போக சுகவாயுளும் உண்டு அளியுண்டு அருளுண்டு அறமுண்டு இவையாய எல்லாம் ஒளியுண்டெனில் உண்டுஇல தேலிலே ஒன்றும் அன்னுே! (64)
ப, வி: களி - குளிர்ச்சி. கொண்மு & மேகம், அளி - இரக்கம்.
ப, உ; நளியுண்ட முந்நீர் உலகத்து நலம்பெய் கொண்முத்துளி உண்டு - தண்மையான ஆழி சூழ் அகிலத்தில் நன்மைக்காகப் பெய்கின்ற மழையும் உண்டு, உணவுண்டு - (அதஞல்) உணவுக் கும் பஞ்சமில்லை; பல்போக சுக ஆயுளும் உண்டு - இதனுல் பல் போகங்களையும் துய்க்கும் சுகமுடைய நீண்ட ஆயுளுக்கும் குறை வில்லை; அளியுண்டு - பஞ்சமும் பிணியும் இல்லையாகவே இரக்க மும் உண்டு; அருளுண்டு - கருணையும் உண்டு; அறமுண்டு - (இவ்விரண்டும் உளதாகவே) பல்வேறு அறங்களும் வளரும் இவையாய ஏல்லாம் ஒளியுண்டு எனில் உண்டு. - இப்படியான நன்மைகளில் இயங்கும் ஒரு (சோஷலிச) சமுதாயம் தெய்வ

Page 42
- 70 -
ஒளியை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே உண்டு; இலதேல் ஒன்றும் இல்லை - தெய்வ ஒளியை ஏற்றுக்கொள்ள வில்லேயாயின் எல்லாமிருந்தாலும் ஒன்றும் இல்லை, உ. வி: முதலில், "தெய்வம் உண்டென்பதோர் சித்தம் உண்டா தல் வேண்டும். ' பின்பு எல்லாம் உண்டாய் விடும். ஆத்தி கர்களை இனிக்க இனிக்க வைக்கும் கவிதை இது. 'ஆத்திகம் பேணும் அபேத நெறியே " - கிருஷ்ணபிள்ளையின் சமுதா யக் கோட்பாடு எனக் கருதக்கூடிய கவிதையுமாகும்.
இ. வி: உண்டு: ஐம்பால் மூவிடப் பொதுக்குறிப்பு வினைமுற்று.
அன்னுே: சொல்லசை,
குறிப்பு: 56-65: இப் பத்துக் கவிதைகளிலும் அந்தகாரத்தையும் எந்த அந்தகாரத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஏற்றி வைக்கப்படவேண்டிய "மெய்யானதீபம்" இரட்சகர் இயேசு என் பதையும் ஆசிரியர் அழுத்தமாக வெளியிட்டுள்ளார். இருட்டில் நின்று, இருட்டுக்கு ஒளிதேடியவர்
'உம்பரூடு பல தேவ கணங்கள் பையுள், போர்த்து அங்கு நரகத்து இகுள் போர்த்தது என்னே" என ஏணுே கூறிப் பழிதேடப் பாடுபடுகின்றர். "தன்னே': உணர்ந்ததில் தற் குறைவு ஏதும் உண்டோ?
அமரத்துவ மரணம்
இறுதிச் ஜெபம் !
இற்ருக வுச்சிதொடுத் தேழரை யென்னு நாழி முற்ருக முயங்கிய வல்லிருண் முற்று மெல்வை எற்ருேகை விடுத்தனிர் என்னையென் தேவ னேயென்று உற்ருரருட் டாதையை நோக்கியோ ரோல மிட்டார். (65)
ப, உ1 இற்ருக - இருளின் தன்ம்ை இதுவாக உச்சி தொடுத்து ஏழரை என்னும் நாழி முற்ருக முயங்கிய வல்லிருள் முற்றும் எல்லே - நண்பகல் பன்னிரண்டு மணி தொடக்கம் பிற்பகல் மூன்று மணிவரை முழுக்க முழுக்க உலகை மூடிய வல்லிருட்டு விலகுந் தறுவாயில், என் தேவனே என்னை எற்ருே கைவிடுத்தனிர் - "என் பிதாவே என்னை ஏணுே கைவிட்டீர்?" , என்று ஆரருள் உற்ற அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார் - என வரம்பில் கருணையினராய பரமண்டலப் பிதாவை நோக்கி ஒருமுறை உரக்சுக் கூவிஞர்,
 

- 7 7 ܚ
(இரண்டரை நாழிகை = ஒரு மணித்தியாலம்) “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலீ! ஏலீ! லாமாசபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட் டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னேக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.' (மத், 27: 46; மாற். 15:43)
(கவிக்கூற்று)
உள்ளுதலும் விள்ளுதலும் உணராமை
எவ்வாறு நம்மான் றிருவுள்ள மினேந்த தேயோ எவ்வாறு தூய தீருமேனி யினைந்த தேயோ எவ்வாறு தந்தை யிதயஞ் சகித்திட் டதேயோ எவ்வாறென உள்ளுவல் விள்ளுவல் ஏழை யானே (66)
உ ந: எம்பெருமான் திருவுள்ளம் எப்படி வருந்தியதோ! அவருடைய தூய திருவுடல் எப்படி நொந்ததோ? இவையெல்லாம் கண்டு வானகப் பிதாவின் இதயம் எப்படிச் சகித்ததோ ? ஏழையாகிய யான் இவற்றை எல்லாம் எப்படி நினைத்து எப்படிப் பாடுவனுே?
இ வி: ஏ. முதல் மூன்றும் வினு; இறுதியானது பிரிங்லே. ஒ: மூன்றும் ஈற்றசை, உள்ளுவல், விள்ளுவல்: தனித் தனி தன்மை ஒருமை வினைமுற்று.
நான் தாகமாய் இருக்கிறேன். செற்ருர் எலியாவை விளித்தனன் ஜீவ ரட்சை பெற்ருர்வது காண்டுதும் என்று பிதற்றி நிற்க வற்ருவருள் வாரிதி தாகம் மரீஇயது என்னச் சொற்ருர் சுருதிமொழி முன்னுறச் சொற்ற வாறே. (67)
ப. உ; செற்ருர் - விரோதிகள், "எலியாவை விளித்தனன் ஜீவரட்டிை
பெற்று ஆர்வது காண்டுதும்" - "இவன் எலியாவை கூவி
அழைத்தான்; உயிர் மீட்டு பெற்றுப் பிழைக்கின்றதைப் பார்ப் போம்”, என்று பிதற்றி நிற்க - எனப் பரிகாசம் பண்ணி உள றிக்கொள்ள, சுருதிமொழி முன்னுறச் சொற்றவாறு - வேதம் Gpsö காலத்தில் கூறியுள்ளவண்ணம், வற்ற அருள்வாரிதி . வற்றிப் போகாத கருஇணக்கடலாகிய இயேசுநாதர், தாகம் மரீஇயது என்னச் சொற்ருர் . "தாகமாய் இருக்கிறேன் ? என்று கூறிஜர்,

Page 43
حصب - 720 --
'அதன் பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவ்ேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றர். ’ (யோ, 19; 28)
இ. வி: ஜீவரட்சை இரண்டன் தொகை. காண்டுதும் தன்மைப் பன் மை வினைமுற்று (காண் + ட் + உ + தும் - டகரமெய் எழுத்துப்பேறு; உகரம் சாரியை), மரீஇயது: மருவியது என்பதன் மரூஉ,
அநாதியான இரட்சிப்புத் தாகம்
எல்லாவுல குமுடை யார்பொருள் யர்வு முள்ளார் தொல்லாதி மூலப் பரஞ்சோதியர் தோற்ற நாசம் இல்லாரொரு தாகம் அனுதிதொட்டு எய்த லாலே கொல்லாது விடாத வோர்தா கமுங்கொண் டிரந்தார். (68)
11. ε, και στουουτ உலகும் உடையார் - சகல உலகங்களையும் தனதாக உடையவர், பொருள் யாவும் உள்ளார் - சகல சம்பத்தும் உள்ளவர், தொல் ஆதிமூலப் பரஞ்சோதியர் - முன்னைப் பழம் பொருட்கும் முன் இனப் பழம் பொருளாய் - ஆதிமூலமாகிய மேலான ஒளிமயம் ஆனவர், தோற்ற நாசம் இல்லார்-தோற்றமும் அழிவும் இல்லாதவர் ஒருதாகம் அநாதிதொட்டு எய்தலாலே - (இப்படி, எல்லாம் நிறைந்தவராகிய தனக்கென ஏதும் வேண்டாதவராகிய எம்பெருமானுக்கு ஜீவகோடி களே இரட்சிக்க வேண்டுமென்ற ஒப்பற்றதொரு அருள்விடாய் அவ தரித்த புனிதநாள் முதல் திருவுள்ளத்திற் கொண்டிருந்தபடியினுலே, கொல்லாது விடாத ஓர் தாகமுங்கொண்டு இரந்தார் - தன்னேக் கொல்லாமல் விடாத ஒப்பற்ற தாகமும் என்பதை மனத்துட் கொண்டு, தாகமாய் இருக்கிறேன் என்று இாந்தார் (போலும்).
உ வி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாகம் ஏற்படுவதுண்டு இயேசுநாதருக்கோ ஒருவித கருணைத் தாகம் - மனுக்குலத்தை மாபெரும் பாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற இயல்பான அருட்டாகம், இது அவருக்கு இடையிட்டு வரவில்லே, பிறவியொடு பிறந்த தாகம், முன்னறியும் (தீர்க்கதரிசனம்) வன்மையினராகிய இரட்சகருக்கு, இப்படி ஒரு தாகம் எங்கே போய் முடியு மென்பது முன்னரே அவருக்குத் தெரியும் என்பார், 'கொல் லாது விடாத ஓர் தாகமும் கொண்டு” எனக் கிறிஸ்தவ பக்தர் கிருஷ்ணபிள்ளை அருமையுறக் கூறியுள்ளார்.

- 73 -
'தாகமாய் இருக்கிறேன்” - சித்திரவதைக்குள்ளான போதி லும் "பிதாவே இவர்களை மன்னித்துக்கொள்ளும’ எனக் கூறிய திலிருந்து, இரட்சிப்புத்தாகம் என்பது தெரியவில்லையா?
தயாநிதிக்குமர தண்ணீர்ப்பஞ்சம்? alwa s-sitwassru rig** காதுற்ருெரு வன்கட லாம்பியைக் காடி தோய்த்தே ஒதுற்ற வீசோப் பெனுங்கோல் கொடுயர்த்தி நீட்டிக் கோதுற் றிலாத குமரே சனுக்குக் கொடுத்தான் மாதுக்கம் துக்கம் ஜலப்பஞ் சமும்வந் திவற்கே, (69)
ப. உ. காது உற்ற ஒருவன் - 'தாகமாயிருக்கின்றேன்' என்பதனேக் கேட்ட ஒருவன், கடல் ஆம்பியைக் காடிதோய்த்து - கடற்காளா ஆனக் காடியில் தோய்த்து, ஒதுற்ற ஈ சோப்பு எ(ன்)ணும் கோல் கொ(ண்)டு உயர்த்தி நீட்டி - வேதத்தில் சொல்லியபடி ஈ சோப்பு என்னும் தடியைக் கொண்டு (காடி தோய்த்த அக்காளான) உயர்த்தி நீட்டி, கோது உற்று இலாத குமரேசனுக்குக் கொடுத் தான் - மாசற்ற மனுமகனுக்குக் கொடுத்தான். இவற்கே ஜலப் பஞ்சமும் வந்தது மாதுக்கம் துக்கம் - கருணை வள்ளலாகிய இப் பெருமகனுருக்கு, தண்ணிர்ப் பஞ்சமும் ஏற்பட்டது5 மிகமிகப் பெரிய துக்கமாகும்.
உ, வி: தாகம் என்ருல் தண்ணீர் அல்லவா கொடுத்தல் வேண் டும். தவிர்த்து, இன்னும் விடாயைக் கூட்டும் காடியை, அது வும் காளானில் தோய்த்துக் கொடுத்தால், அதனையும் ஈசோப் புத் தண்டில் மாட்டி வாய்க்குக் கிட்டக்கொண்டுபோய்ப் பிடித் தார்களே, அம்மம்மா! எத்துணைப் பயங்கரக் கொடியவர்கள்! மனித குலத்திற்கு எளியணுய்ப் பணிபுரிந்தவரை, காயென மதித்து நக்கட்டும் என்று கருதினுர்க்ளோ, காயினும் தாழ்ந்த இந்தக் கொடிய நச்சரவுகள்.
கவிதையின் இறுதி அடி, ஈசோப்புத் தண்டுபோல் சோக உணர்ச்சியை தூக்கிக்கொடுக்கின்றது. ஜலப் பிரளயத்தை உண் டாக்குபவருக்குமா ஜலப்பஞ்சம் எனப் பஞ்சத்துடன் சேர்ந்த "உண்மை” நம்மைக் கேட்கின்றது.
பாடுபட்டவருக்குப் பொல்லடி?
பல்லாயிர கோடி ஜீவரைப் பாவ பந்தத் தல்லார்சிறை மீட்டவர்க் கோர்மிட ரூர வுண்ணீர் இல்லாதிறுங் காற்புளிங் காடி பியைந்த தந்தோ எல்லேமுக் காக மடிவார்க் குலகீய நன்றே (70)
இ. யா,-10

Page 44
س- 4 7 --
உ; பல்லாயிர கோடி ஜீவரை பல ஆயிரக்கண க்கான கோடி ஆன்மாக்களே, பாவ பந்தத்து அல்ஆர் மீட்டவர்க்கு - பாவக்கட் டுக்களாகிய இருண்ட சிறையிலிருந்து மீட்டு விடுதலே தந்த மகா னுக்கு, இறுங்கால் ஓர்மிடறு ஆர உண்ணிர் இல்லாது காடி இயைந்தது அந்தோ - சாகுந்தறுவாயில் நாக்கு நனைவதற்காவது ஒரு மிடறு தண்ணீர்கூடக் கிடையாமற் போனது ஐயோ “பரிதாபம், எல்லேமுக்காக - எங்கள் அனைவருக்குமாக, மடிவார்க்கு - உயிர்த்தி யாகம் செய்யும் உத்தமர்க்கு நன்றே உலகு ஈயும் - நன்மையானதை யா உலகம் கொடுக்கப்போகின்றது? (அதுதான் வரலாற்றில் இல்லையே.)
வி: உண்ணீர்மை அற்றவரிடமிருந்து தண்ணீரை எவ்வாறு எதிர்பார்ப்பது? பால் வார்க்கவேண்டிய இடத்தில், நீர் வார்க்கவும் இல்லையென்றல், அந்தோ என்று குளறமல் ஆர்தான் அமை வார்கள்? பாவத்தை நினைந்து நினைந்து அழுது அழுது ஆவி கரையவேண்டிய கட்டம், இதயம் இல்லாதவரிடமிருந்து இதனை எப்படி எதிர்பார்க்கலாம். இயேசுவுக்கா இக்கதி என நினைக் கும் போது இதயம் பதருதார் உலகின் பதராவார்.
உலகு ஈயும் நன்றே என்பதற்கு உலகம் பாராட்டும் நன்றி
இதுதானு எனப்பொருள் கொள்ளின் ஜலப்பஞ்சம் பாடும் கவிஞர் சொற்பஞ்சத்தால் வாடுகின்றர் எனக் கூறிமறுக்க,
இ.
வி: “பரிதாபம்: இசை எச்சம். (முன்பும் பல இசை எச்
சங்களை ஆங்காங்கு கவனித்திருக்க முடியும்) நன்றே:எகாரம் எதிர்
மறைப் பொருளது.
எல்லாம் முடிந்தது!
மருவார் அளித்த புளிங்கா டியைவாங்கி யன்பின் உருவாய்ந்தவர் யாவும் முடிந்தவென் றுய்த்தி யம்பி *ஒருவாத எந்தாய் உயிர்நல்கினன் நுங்கை' யென்னுத் திருவாய் மலர்ந்து தலைசாய்த்தனர் ஜீவன் விட்டார் (71) உ: அன்பின் உருவாய்ந்தவர் - அன்பே உருவாயவர், மருவார் அளித்த புளிங்காடியை வாங்கி - மனிதப் பண்பின் வாசனையே டடாத பகைவர்கள் கொடுத்த புளிக்காடியை வாங்கிக் கொண்டு, யாவும் முடிந்த என்று உய்த்து இயம்பி - எல்லாம் முடிந்தது என ஊகிததுச் சொல்லி, ஒருவாத எந்தாய் உயிர்நல்கினன் நுங்கை - "அங்கிங்கெனுதபடி எங்கும் நிறைந்த என் பிதாவே! உமது திருக்கரங்களில் என்னுவியை ஒப்புக்கொடுக்கின்றேன், ?? என்னு திருவாய் மலர்ந்து தலே சாய்த்தனர் ஜீவன் விட்டார் -
 

= 75 -
என்று புனிதவாயினுற் புகன்று, தலேயைச் சரித்துத் தன்
இவ்வுலகிற்காக விட்டுச் சென்ருர், உ. வி: ஜிவன் போகும் நிலை தெரிந்து விட்டது என்பார்.\
"உய்த்து' என்ருர், யேசு அடிகள் மரித்தாலும், அன்னவர் \ உயிர், கோடிக்கணக்கான மக்கள் உயிர்களுடன் கலந்து விட்டது - மன்பதையின் பாவமீட்புக்காக இவ்வுலகிலேயே தங்கி N யுள்ளது என்று கருதுபவர் போலவும் "ஜீவன் விட்டார்" என நயம்பட மொழிந்தார்.
இ. வி: அன்பின்: 'இன்' தவிர்வழிச்சாரியை, அன்பு வேறு, இயேசு வேறு என்றில்லை ஆதலின் ஆறன் விரி என அறை வாரும் உண்டு. ஒருவாத எதிர்மறைப் பெயரெச்சம், எந் தாயும் நுங்கையும்: ஆரும் வேற்றுமைத் தொகைத் தொடர் கள். என்னு: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சாய்த்தனர்: முற்றெச்சம்.
சிலுவையின் மகத்துவம் !
பேரருள் உடைமை இறைவனின் இயல்பர்ன தன்மை ஆகும். ஒப்பற்ற இவ்வியல்பினுல் இறைவன் பல்உயிர்களையும் பக்குவப் படுத்தி முடிவான இன்பநிலைக்குத் தயாராக்கிக்கொண்டே இருக்கின் ருன். இவ்வாறன இறைவனின் அன்பு - மனிதன் மேல் வைத்திருக் கும் அன்பு ஐந்து வகையான தன்மைகளைக் கொண்டதென இயேசு நாதர் விளக்கினர். மனிதன் நன்மைக்காக, தன்னைத்தானே பலி செலுத்தி, அவனுக்குப் பாவ விமோசனம் அளித்து அவனுக்கு வானுலக வாழ்வளிக்கும் இறைவன் வரம்பில் பெருங்கருணையை ஐந்தாவதாகக் குறிப்பிட்டார். இயேசுவாக அவதரித்த இறைவன் அதனைச் சாதனையிற் செய்து காட்டியதே சிலுவையின் மகத் துவம் ஆகும். மன்னுயிருக்காகத் தன்னுயிரைச் சிலுவையிற் கொடுத்து இரட்சகர் இயேசு ஆஞர்.
முன்பெல்லாம் கொலேத்தண்டனைக் கருவியாகப் பயன் படுத் தப்பட்ட சிலுவை - பயங்கரமான பொருளாகக் கருதப்பட்ட சிலுவை இயேசுவின் உயிர்ப்பலி கொண்டதால் புனித சின்னமாக - வழி பாட்டுச் சின்னமாக மதிப்புப் பெற்றுவிட்டது. இன்று மன்னர் மணிமுடிகளிலும் சிலுவை திகழ்கின்றதன்றே கொலைத் தண்டனைக் கான சிலுவையில் இரட்சகர் இயேசுவின் ஜீவன் கலந்ததால் சிலு வைக்கு ஏற்பட்ட மகத்துவம் இது எனில், மனித உள்ளத்தில்

Page 45
سیا۔ 76 ہے۔
இயேசுவின் ஜீவன் கலந்துவிடுமெனில் அவன் எத்துணைப் பெரிய மதிப்புக்கிடனுவன் - வணக்கத்திற்கிடனுவன் !
இரட்சகர் இயேசுவின் சிலுவைப் பாடுகள், தீயவனின் தீமையை ஒழித்து, அவனே கல்லவன் ஆக்கி, வையத்தில் வாழ்வாங்கு வாழ வைத்து, முடிவாக வானக வாழ்வில் அவன் பேரா இயற்கைப் பெருவாழ்வு எய்தவேண்டும் எ ன் றல்லவா நமக்குப் போதனை செய்கின்றன.
சைவசமயத்திற் கூட முருகனின் அவதாரம் எனக் கருதப் படும் திருஞானசம்பந்தப் பெருமான் 'ஆழ்க தீயதெல்லாம்” என்று உபதேசித்தாரே அன்றி, ஆழ்க தீயவரெல்லாம் என்று கூற வில்லை. மிருகத்திலிருந்து பிறந்த மனிதன் 'தாய்வழி தப்பாது” என்ற கோட்பாட்டுக்கு ஆளாகாமல் மனிதப் பண்பு சுடர் விட்டுப் பிரகாசித்துத் தெய்வநிலையை எய்திவிடல் வேண்டும் என்றுதான் சமயங்கள் எல்லாம் நமக்குப் போதிக்கின்றன. சிலுவைப் பாட்டின் மகத்துவமும் இதுவே எனக் காண்க,
ஏழு வார்த்தைகள்
இயேசுபெருமான் சிலுவையில் அறையுண்ட தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும். அத்தினம் " பெரியவெள்ளி' ஆகி கோடிக்கணக்கான மக்களின் வழிபாட்டுத்தினமாகி விட்டது. பூவுல கிற் பூத்த மானுட வெள்ளிகளில் (நட்சத்திரங்களில்) இரட்சகர் இயேசு " பெரிய வெள்ளி' என்பதிற் தடை என்ன ?
இத்திருநாளில் இயேசுநாதர் சிலுவையிற் சித்திரவதைக்குள் ளாகிக் கொண்டே, திருவாய் மலர்ந்தருளிய ஏழுவார்த்தைகள் கிறிஸ்தவ உலகில் பிரசித்தி பெற்றவை. இத்திருவேழு வார்த்தை களுக்கும் எத்தனே எத்தனை மாதிரி வியாக்கியானங்கள் எழுந்து விட்டன; இன்னும் எழுந்து கொண்டே இருக்கின்றன. சைவர் களுக்கு திருவைந்தெழுத்து எப்படியோ, கிறிஸ்தவர்களுக்குத் திரு வேழுவார்த்தைகளும் அப்படியாகும். இரட்சகர் இயேசுவின் உபதேச வார்த்தைகள் அளப்பிலவாகவும் சிலுவையிலிருந்து செப்பிய இவ் வார்த்தைகளுக்கு ஏன் இத்துணை பெருமதிப்பு என்ற வினு எழுவது இயற்கையே,
சாதாரண மனநிலையில் சொல்வதற்குரிய மதிப்பீடு ஒன்று. பரிகாசத்துக்கும் நையாண்டிக்கும் இடையே கற்பனைகளிலும் விளங் கிககொள்ள முடியாத சித்திரவதைகளுக்குள்ளே, இரட்சகர் உள்ளம் எதற்காகத் துடிதுடிக்கின்றது என்பதைக் காட்டும் வார்த்
 

ܢܚܤܣ 7 7 7 ܬܼ ܚ̈ܕܕܩܕ
தைகள் அல்லவா இவைகள் இதனுலேதான் சாதாரண இயேசு இரட்சகர் இயேசுவாக மாறி மனித மனமண்டலத்திற் தனி ஆட்சி புரியும் தெய்வீகத் தன்மையைக் காட்டினுர் அல்லவா ?
குறிப்பு : குறிப்பிட்ட பரீட்சைப் பாடப் பகுதி இத் திருவேழு வார்த்தை
களையும் கொண்டுள்ளது அதிட்டத்தில் அதிட்டம் என்க )
"பிதாவே இவர்களுக்கு மன்னித்தருளும், ஏனெனில், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருககிறர்கள்" (லூ, 23:34) பாட்டு இல. 39, ! "இன்றே நீ எள்னேடுகூடப் பசகதியில்" இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக், 23 : 43) பா, இ. 51. "தாயே, இதோ உமது மகன்' (அரு. 19 : 26) பா. இ; 53
'இதோ உன் தாய்' (அரு. 19 ; 27) பா. இ. 53
"ஏவி: ஏவி லாமா சபக்தானி' (என் சருவேசுரா, என் சருவே சுரா ஏன் என்னைக் கைவிட்டீர்) (மத், 27 : 47) பா, இ. 66
• தாகமாயிருக்கிறேன்" (அரு. 19 : 28) பா. இ. 68 * எல்லாம் முடிந்தது" (அரு, 19 : 30) பா. இ. 72
இயேசு என்னும் மெய்யான தீபம் உலகத்தில் மறைந்ததுஉள்ளத்தில் பிறந்தது!!
கவிஞரின் தனிச்சமா!
( ' தலே சாய்த்தனர் ஐவன் விட்டார்' - அடுத்து என்ன, என்ன நடக்குமோ எனத் துடித்திடும் அங்கலாய்த்திடும் வாச கன அதிக 'இடைவெளியால்' உறங்க விடுவது கதைப் புணர்ப்பின் சிறந்த உத்தி என அவன் ஒப்புக் கொள்ள மாட்டான். ஆணுல், திரை அமைப்புக்குப் பொறுப்பானவர் - என்ன காரணமோ தெரியவில்லை - சித்தாந்த வியாக்கியானத் தில் இறங்கி விட்டார். சமய காவியம் ஆதலின் இவ்வித இழுத்தடிப்பு மன்னிப்புக்கு இடமாகுமோ ?)
வேறு
உள்ளத்தால் உணருக ஜீவாதி பதிஏக திரித்துவத்தில் ஒன்ருன தேவ மைந்தன் தாவாத கருணையினுல் பேரன்பு மயமான தனுக்கொண்டு ஈண்டி
முவாத முதல்நீதி இரக்க(ம்)சம ரசம்புரிவான் முதுநீர் வையம் சாவாத படிதானே பலியாகிச் ஜீவன்விட்ட தகைமை பாராய். (72)

Page 46
ܚ ܲ8 7 --
(ஜீவ + அதிபதி = ஜீவாதிபதி. திரித்துவத்தில் - முக்கூருய
தன்மை. தனு - உடல், தாவாத - அழிவற்ற,
உ, ந: ஆன்மத் தலைவரும், ஒன்றேயான பிதா, குமரன், பரிசுத்த ஆவி என்னும் திரித் துவத்தில் ஒரு வருமாய தெய்வ மகன், அழிவற்ற கருணேயினுல் பேரன்பு மயமான மனிதவுடல் தாங்கி, இவ்வுலகில் அவதரித்து, மங்காத முதன்மை தரும் நீதியாலும் இரக்கத்தாலும் சாந்தி அளிப்பதற்காக, அதனல் மிசுப்பழைய இவ்வுலகு (காலநீட்டங்காரணமாக அழிந்து போகாத படி, தன்னைத்தானே பலியாக்கி, (பாவமீட்புக்காக) உயிர்விட்ட தெய்வப் பண்பை (உள்ளத்தால்) நோக்குக.
இ. வி. பதியும் ஒன்றும் எண்ணும்மை தொக்கது. ஈண்டி: செய்தென் எச்சம், புரிவான்; செயவென் எச்சத்திரிபு: 'வான்’ ஈற்று எதிர்கால வினைஎச்சம் என்றும் கூறுவர்.
அற்புதத்தில் அற்புதம் !
சந்ததம்கற் பனைமீறிச் சண்டாளர் ஆகிநன்றி தனஏண் ணுமல் புந்தியற்றுக் கொடுங்கூளிக்(கு) அடித்தொழும்பு புரிந்தொழுகும்
EVمهve(لمئا பொல்லா ருக்காய் அந்தரியா ழிப்பொருளாய் அகிலாண்ட கோடிகளை ஆட்டு விக்கும் விந்தையுளர் மனுவாகி உயிர்விடுத்த விந்தையைப்போல் விந்தை
í [S 6öISLe. (73) (சந்ததம் - நித்தியம். கற்பனை - கட்டளை. புந்தி - புத்தி, அடித் தொழும்பு : பாதபணிவிடை. அந்தரியாமி - எளிதில் அறியா வண்ணம் உட்பொருளாய் மறைந்து நிற்பவன். அகில + அண்டம் = அகிலாண்டம். மனு - மனிதன்.)
உ. ந: தினம் தினம் வாழ்விலே இறைவன் கட்டளைகளே மதியாது மீறி மனம் போன போக்கில் அடுத்தவருக்குக் கொடுமை செய்து வாழும் பாவிகள்; இறைவனின் பெருங்கருணைத்திறனுக்கு நன்றி அற்றவராய் மந்த மதியினுல் கொடிய பசாசுகளுக்கு-சாத்தானுக்குப் பாத பணிவிடை செய்து வாழும் பொல்லாதவர்கள் . இவர் களுக்காக, மறை பொருளாய் நின்று பிரபஞ்சம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் வித்தை வல்லவராய பரம்பொருள் மனித அவ தாரம் எடுத்து, உயிர்விட்ட புதுமையைப்போல் புதுமை எங்குமே, என்றுமே நிகழ்ந்ததில்&0,

°一●
مس - 79 -ست.
வி; எளிதில் அறியமுடியாத இறைவனே, எல்லோருக்கும் அறி யக்கூடியதான இயேசு ஆகினுர். காரணம் தன்னைப்பலியிட் டாவது சண்டாளரையும் பொல்லாரையும் இரட்சிப்புச் செய்வது, பிதாவே மனிதனுக அவதரித்தபடியால் இரட்சகர் இயேசு "பிதாமகன்’, தெய்வமகன், தேவசுதன் எனவும் அழைக்கப்படு கிறர். (பிதாவாகிய மகனென விரித்துக் காண்க.)
“விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்'
(அரசர் தேவாரம்) என்பார், 'அந்தரியாமிப் பொருளாய்” என்றர்:
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே' என்ற கருத்து கவிஞரையும் ஆட்டிவைக்கின்றது.
இ. வி; வித்தை எதுகை நோக்கி விந்தை ஆனது
塑一。
தனக்குலவரப் பெரும்பேறு தரவந்து, விழிக்கெதிரே சான்று காட்டி மனக்கினிய உபதேசம் வகுத்த,சரு. வேசன்ஒரு மைந்தன் தன்னைப்,
பனிக்கவதைத்( து) உயிர்கவர்ந்த பாருலகைத், தகிக்காமல் பரம தாதை, சினக்கணலே அவித்தெழுந்த, ஜீவகாருணியநிலை, தேறற் பாற்ருே. (74)
(உலத்தல் - சாதல்; உலவாமை - சாவாமை, சான்று - சாட்சி. பனிக்கவதைத்தல் - கண்டவர் உடல் விறைக்கும்படியாகச் சித்திர வதை செய்தல், தேறல் - தெளிதல்)
ந: இறவாத பெருவாழ்வை பூமிக்குத் தர அவதரித்து, (அதற்குத்தான் அவதரித்தார் எள்பதை) கண்ணுக்கு முன்னே சாட்சியாகக் காட்டி, மனதிற்கு இனிமையான நல் உபதேசங் களேத் தந்த, சருவேசனது ஒப்பற்ற சுதனை, (கண்டவர்) பணிக் கும்படியாகச் சித்திரவதை செய்து அன்னவர் உயிரைக் கவர்ந்து கொண்ட பரந்த உலகை, சுட்டுப் பொசுக்காமல், பரமண்டலப் பிதா, கோபத்தீயை அடக்கி, (அதற்குப் பதிலாக) பிதாவின் திருவுள்ளத்தெழுந்த ஜீவகாருணிய அருட் பண்பை, (நம்மனுேரால்) புரிந்து தெளிந்து கொள்ளுதல் முடிவதோ? முடியவே முடியாது.

Page 47
2.
.س?چ
---- 80 بسی۔
(வேறு)
அலகிலாப் பரமநீதி ஆயதென் எண்ணம் என்னு இலகுவாள் உறையில் சேர்த்தி, எரிந்தெழு கோபம் ஆறி உலகினுக்(கு) ஒருவர் ஆகி, உத்தரித்(து) அதனை உள்ளிக், குலவியே, தாதை பக்கல் குதுகலித்(து) இருந்தது அம்மா (75)
ந: அளவற்ற தெய்வ தீதியாகிய என் எண்ணம் நிறைவேறிற்று என்று, விளக்கமாகிய (நீதியென்னும்) வாளை (அருளென்னும்) உறையிலிடடு, சுவாலேவிட்ட சனத்தீ தணிந்து, உலகினே (ஈடேற்ற) ஏக அவதார புரூடராகப் பிறந்து, (இரட்சிப்புக்காக) தான்பட்ட பாடுகளை நினைந்து நினைந்து மகிழ்ச்சியடைந்து, பிதாவின் வலப் பக்கத்தில் பேரானந்தத்துடன் வீற்றிருந்தார் இரட்சகர் யேசு, வி: பிரசவ வேதனை பிள்ளையைக் கண்டதும் பேரானந்தமா கும் அன்னையைப்போல், மக்களின் பாவ இரட்சிப்புக்காகத் தான் பட்டபாடுகள், நோக்கம் நிறைவேறியதால் இயேசுவுக்குக் குதுகலந்தந்தன என்க. துன்பம் இன்பமாக மாறும் ஒரு நிலை எதற்காகத் துன்பத்தை அனுபவிக்கின்ருேம் என்ற காரணத்திலேதான் தங்கியுள்ளது.
பரமகா ருணியம் பொங்கிப் பலித்ததென் னெண்ண மென்னு வரமனுே கரரை வாழ்த்தி வாழ்த்திநாத் தழுதழுப்ப உரமிலா வான்ம கோடி யுய்ந்தமை யுள்ளி யுள்ளித் தரமிலா துவகை யோங்கித் தாதையாற் சிறந்த தன்றே. (76)
ப, உ; "பரமகாருணியம் பொங்கிப் பலித்தது" - "இறைவன் பெருங்
கருணை பிரவகித்து உண்மை யாயிற்று, ' என் எண்ணம் என்ன. (இதுவே) என் திருப்தி என்று, வர மனேகரரை வாழ்த்தி வாழ்த்தி நா தழுதழுப்ப - (வல்லார்க்கும் மாட்டார்க்கும்) வரமளிக்கும் மனுேகரணுகிய பிதாவை (சந்ததம்) வாழ்த்தி வாழ்த்தி நாத்தடுமாற, உரம்இலா ஆன்மகோடி உய்ந்தமை உள்ளி உள்ளி - ஞான உரம் அற்ற பல்கோடி ஆன்மாக்களின் இரட்சிப்பை நிஜனந்து நினைந்து, தரம் இலாது உவகை ஓங்க தாதை பால்சிறந்தது. பேரானந்தப் பெருவெள்ளத்தில் மிதந்து பிதாவின் பக்கத்தில் பொலிவுடன் விளங்கினர்.
தரம் - அளவு. பலித்தல் - உண்மையாதல்)
事 இவ்விரு பாடல்களாலும் தெய்வ நீதி நிறைவேறியதும் இறைவன் பெருங்கருணைத்திறன் நிதரிசனமாகிப் பலித்த தும், ஆண்டவன் பக்கல் வீற்றிருக்கும் இரட்சகர் இயேசு வுக்கு அளப்பிலா ஆனந்தம் அளிப்பன என்பது கூறப் படுகின்றது.

حتی سے 81 ٹینسے
இ. வி: இதுவே: சொல்லெச்சம். உவகை ஓங்கி: ஏழன் தொகை, வரமனுேகரர்: உருபும் வினையும் தொக்க இரண்டாம் வேற்றுமை.
(வேறு) ஜீவனே இழந்தஇச் செகத்துக்(கு), ஈறிலாச் ஜீவன்வந் தியையவும், செறிந்த நித்திய ஜீவவா யிலுக்கொரு திறப்பு:உண் டாக்கவும், ஜீவனின் அதிபதி ஜீவன் விட்டனர். (77)
உ. ந. அந்தரங்க ஆத்துமாவை இழந்த இப் பூமிக்கு, முடிவற்ற உள்ளுயிர்ப்பு உண்டாகவும், அடைபட்டுக் கிடந்த மோட்ச பூமியின் அன்புவாசல் மீண்டும் திறக்கப்படவும், உயிருக்குயிராகிய பிதா மகன் தன்னுயிரை அர்ப்பணித்து விட்டார்.
கோழை இப்பியைமணி குறித்துக் கூட்டுதற்(கு) ஆழிநீர் குளித்துமுச்(சு) அடக்கும் மக்கள்போல் ஏழைநர ஆன்ம கோடிகளை ஈட்டுதற்கு ஊழியான் மரணத்துள் ஒடுங்கினு அரோ ! (78)
ப. உ. கோழை இப்பிமணியைக் குறித்துக் கூட்டுதற்கு - பயந்த வஸ்துவான சிப்பி மணியை எடுத்துச் சேர்ப்பதற்காக, ஆழிநீர் குளித்து மூச்சு அடக்கும் மக்கள்போல்-சமுத்திர நீரில் சுழியோடி மூச்சடக்கும் மனிதரைப்போல், ஏழைநர ஆன்ம கோடிகளே ஈட்டு தற்கு - ஏழைகளாகிய மனித கோடிகளேக் காப்பாற்றுவதற்கு, ஊழியான் மரணத்துள் ஒடுங்கினர் - ஊழியையும் கடந்து நிற்கும் குமரக் கடவுள் மரணத்துக்குள் மறைந்துவிட்டார்.
உ. வி: உவமை உணர்வுக்குரியது. இயேசு பொருள்; கடற் குளிக்கும் மனிதன் உவமை, ஆன்மகோடி பொருள், சிப்பி மணி உவமை, மரணம் பொருள், சமுத்திரம், உவமை, மூச் சடக்கம் பொதுத் தன்மை,
இ. வி. நரர் + ஆன்ம = நரான்ம இருபெயரொட்டுப் பண்புத்
தொகை, அரோ: அசைச்சொல்,
ஒளிமயமான புண்ணியப் பொலிவு
கண்ணிய அன்பினுல் கட்டுண்டு) , ஓங்கிய தண்ணளிச் சலதியில் முழுகித், தாழ்வுரீஇ, உண்ணிகழ் பொறையினுல் உயிர்ப்(பு) ஒடுங்கினுள் புண்ணியம் உலகெலாம் பொலியத் தோற்றுவார் 1 (79) இ. யா 11

Page 48
حس۔ زۓ & --س۔
(சலதி - சமுத்திரம். தாழ்வு+உற்று = தாழ்வுற்று - தாழ்வுறீஇ.
பொறை - பொறுமை) உ. ந: மேன்மையான அன்பினுற் கட்டுண்டு, உயர்வான இரக்க மென்னும் பேராழியில் முழுகி, ஆன்மகோடிகளுக்கு எளியராய் உள்ளத்தில் உள்ள பொறுமையினுல் உயிர் பிரிந்தார் (உத்தமர் இயேசு) (அதனுல்) உலகமெல்லாம் புண்ணியப் பொலிவாக உயர் சிறப்புற்று ஒளிமயமாகி நிற்கின்ருர்!
*எல்லாம் முடிந்தது" ('முடிந்தது' என்பதற்குக் கவிஞரால் முடிந்தவரை விளக்கம்.)
முடிந்தது சஞ்சலம்: முடிந்த(ன) பாடுகள்; முடிந்தது வறுமைநோய்; முடிந்த சிந்தன; முடிந்தது தீர்க்கர்சொல்; முடிந்த முன் குறி; முடிந்தது கருதிய கருமம் முற்றுமே. (80) உ. ந: மனவியாகுலம் முடிந்தது; சிலுவைப்பாடு முடிந்தது; வறுமை யும் பிணியும் முடிந்தது; இறைவன் சிந்தனை முடிந்தது; தீர்க்க தரிசிகளாற் (முற்காலத்திற்) சொல்லப்பட்டது முடிந்தது (ஆதி காலத்தில்) முன்னரே சொல்லப்பட்ட உற்பாதம் எல்லாம் முடிந் தது; இறைவன் திருவுள்ளத் தெண்ணியிருந்த சகல காரியமுமே முடிந்தது. உ. வி: “ஒருதாகம் அநாதிதொட்டெய்தியது" (பா.இ.69.)
இறைவன் சிந்தனை எனப்பட்டது. முடிந்தது பரவவி மோச னப்பலி முடிந்தது பழமறைச் சடங்கு முற்றிலும் முடிந்தது குவலயத்(து) இரட்சை மொய்ம்புற முடிந்தது ஜீவியம் முழுதும் என்பவே, (81) உ. ந: பாவ மீட்புக்கான பலியும் முடிந்தது; ஆதி வேதத்தில் சொல்லப்பட்ட கிரிகைகள் எல்லாம் முடிந்தது; பூவுலக இரட்சிப்பு உறுதியாக (மொய்ம்புற) முடிந்தது; இயேசு பெருமானது இக லோக வாழ்வும் முடிந்து போயிற்று என்று சொல்வார்கள். (இவ்வாறு கவிஞரின் வியாக்கியானம் எல்லாம் முடிந்தது என்க) இத்தகு வனவெலாம் பொருந்த, ஈறிலா முத்தனர் முடித்தலின், முடிந்த(து) என்ருெரு வித்தக வாய்மொழி விளம்பித், தாமுடை அத்தனுக்கு) ஆவியை அளித்த ஒல்லேயே (82)
 

உ. ந: இவ்வாருணவை எல்லாம் பொருத்தமாகத், (தோற்றமும்) இறுதியும் அற்ற இறைவன் முடித்து வைத்ததால், "எல்லாம் முடிந்தது" என்றதோர் தெய்வீக உண்மை மொழியை திருவாய் மலர்ந்து, தம்மை உடைமைப் பொருளாக உடைய ஆண்டவன் கரங்களில் தன் ஆவியை ஒப்புக்கொடுத்த சமயத்தில்இ. வி; மூவிடப் பெயரில் ஒன்றன தாம் முதல் குறுகாது இரண்டாம் வேற்றுமைப்பட்டு நின்றது (உரைநடையிற் கூறப்பட்ட பொருளைக் கூர்ந்து கவனிக்க.) தம் முடை அத்தன் என நிற்பினும் ஒசைக்கு எவ்வித இழுக்கும் இல்லை என்க. தம்முடைய அத்தன் எனப் பொருள் கொள்ளின், உடை(ய) என்பது சொல்லுருபு. வேண்டாத இடத்தில் சொல்லுருபு வேண்டியதில்லே என்பதால் முதற்பொருள் கூறப்பட்டது. (இயேசுவின் ஜீவ நீக்கசமயத்தில் அங்கும் இங்கும் எங்கும்
நிகழ்ந்தவை
எல்லாம் கிழிந்தது! கிழிந்ததா லயத்திரை யிரண்டு கீற்றவாய்க் கீழிந்ததா சாரியர் கேடு சூழுளங் கிழிந்தது முதுமறைக் கிரியைச் சாஸனங்
கிழிந்தது தூடணங் கிளந்த வாபெலாம். (83)
ப உ; ஆலயத்திரை இரண்டு கீற்றவாய்க் கிழிந்தது - தேவாலயத்தின் திரைச்சீசில மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. ஆசாரியர் கேடு சூழ் உளம் கிழிந்தது - பிரதான மதபோதகரின், பிறர்க்குக் கேடு சூழும் உள்ளமும் கிழிக்கப்பட்டது. முதுமறைக் கிரி யைச் சாஸனம் கிழிந்தது - பாவவிமோசனத்திற்கென பழைய வேதங் களில் சொல்லப்பட்ட வீண் சடங்குகள் எல்லாமே கிழிக்கப்பட்டு விட்டது, தூடணம் கிளந்த வாபெல்லாம் கிழிந்தது - (நிறையத் தூசனங்கள் பேசிய வாயெல்லாம் கிழிந்தன. இவ்வாறே எல்லாம் கிழிந்ததென்க:
"அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்
கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது;'
கவிஞரும் ஒன்றுக்கு மூன்றகக் கிழித்திருக்கின்றர் என்க.)

Page 49
--سے 84 ==
எல்லாம் அதிர்ந்தது
அதிர்ந்தது கிடுகிடென் ருழி தழ்புவி அதிர்ந்தது பாதலத் தரச குளுகை அதிர்ந்தது கிறுகிறுத் தநீத மன்றலே அதிர்ந்தது புறமதத் தஸ்தி வாரமே. (84
ப, உ ஆழிசூழ்புவி கிடுகிடுஎன்று அதிர்ந்தது-பூவுலகம் கிடுகிடென்று ஆடியது - பூகம்பம் நிகழ்ந்தது. பாதலத்து அரசன் ஆளுகை அதிர்ந்தது - சாத்தானின் ஆட்சி திடுக்கிட்டுப் போயிற்று, அநீத மன்தலை கிறுகிறுத்து அதிர்ந்தது - அநீதியான தீர்ப்புக்கூறிய பிலாத்துவின் தலை சுழன்று நடுங்கியது. புறமதத்து அஸ்தி வாசமே அதிர்ந்தது - புறச் சமயங்களின் கோபுரம் மண்டபங்கள் அல்ல, அடி அத்திவாரமே தகர்ந்தது.
*அப்பொழுது,. பூமியும் அதிர்ந்தது' (மத், 27:61)
எல்லாம் பிளந்தது!
பிளந்தது வயின்ருெறும் பெரும லேக்குலம் பிளந்தது வஞ்சகப் பிசாச னெஞ்சுரம் ୧Sy ܓy9 பிளந்து சந்நிதி மறைத்த பித்திகை ?? பிளந்தது தீவிடம் பிறங்கு பைத்தலே (85)
ப, உ: வயின்தொறும் பெரும் மலைக்குலம் பிளந்தது - இடந்தோறும் பெரும8லக்கூட்டங்கள் யாவும் பிளந்துவிட்டன : (அசையாத மலே யும் அசைந்தது. வஞ்சகப் பிசாசின் நெஞ்சு உரம் பிளந்தது - சாத்தானின் நெஞ்சு வைரம் பிளந்து தெறித்தது. (இனிச் சாத்தா ணுக்கு இடமில்லை). சந்நிதி மறைத்த பித்திகை பிளந்தது - கடவு ளது சந்நிதானம் நமக்குக் கிடையாதபடி மறைத்து வைத்திருந்த பாவச்சுவர் இடிந்து விலகியது, தீவிடம் பிறங்கு பைத்தலே பிளந் தது - நச்சரவுகளின் தலை நசுங்கியது. குறிப்பு: சைவர்கள் இம்மூன்றம் அடியையாவது சிந்தித்தல் வேண் டும் பாவச்சுவரை ஏனே பாதுகாத்திடுகின்றர்கள் தெரியவில்லே , )
"அப்பொழுது, கன்மலைகளும் பிளந்தன’ (பத், 27:51)
இ. வி; தொறும் : எஞ்சாமைப் பொருளுணர்த்தும் இடைச்சொல்.
பைத்தலை : ஆகுபெயராக அரவை உணர்த்திற்று,

ܚܗܗ 5 8 ܚܢ
எல்லாம் திறந்தது திறந்தது தூயவர் சேம வைப்பிட ந் திறந்தது கதிக்குறு ஜீவ வாயிலுந் திறந்தது கருனேயின் றிருவி பூழிக்கடை திறந்தது செறுத்துள ஜீவ வூற்றரோ (86) ப. உ; தூயவர் சேம வைப்பிடம் திறந்தது - புனிதர்களின் கல் லறைகள் திறந்தன, கதிக்குறு ஜீவவாயிலும் திறந்தது - நற்கதிக் கான வானக வாயிலும் திறக்கப்பட்டது, கருணையின் திருவிழிக் கடை திறந்தது - இறைவன் கருணைக்கண்கள் திறந்தன செறுத் துள ஜீவஊற்று திறந்தது - இதுவரை மண்டி(க்)கிடந்த ஆன்ம ஊற்றும் திறக்கப்பட்டு விட்டது,
(சேமவைப்பிடம் - கல்லறை. கதி - நற்கதி.)
* (அப்பொழுது) கல்லறைகளும் திறந்தது’ (மத், 27 : 52)
இ. வி; விழிக்கடை கடை விழி இலக்கணப்போலி. ஆறன் தொகை எனலுமாம், கருணையின்: 'இன்' அல்வழிச்சாரியை. அரோ: அசை,
யூதரும் கலங்கினர்!
நற்சுதந் தரநமக் கருள, நாயகன் தற்சுதந் தரவுயிர் விடுத்த தன்மையைக், கற்சுதந் தரமுறு கடின நெஞ்சுடை, அற்சுதந் தரரறிந் தகங்க லங்கினர். (87)
உ. ந: (ஆன்ம விடுதலையாகிய) நல்ல சுதந்திரத்தை நமக்கு அளிப்ப தற்காக, எம்பெருமான் தனக்கே உரிமையாகவுடைய உயிரை அர்ப்பணித்த இரக்கப் பண்பை, கல்லேப்போல் இளகாத அசை யாத வன்னெஞ்சுடைய, இருண்ட வாழ்வுடைய யூதர்களும் கேள் விப்பட்டு மனங் கலங்கினுர்கள்
அல் - இருட்டு; இருட்டுச் சுதந்திரம் ஆனவர்கள் என்றல் இருண்ட வாழ்வு உடையவர்கள் என்பதே கருத்து.)
போற்றிட வேண்டிய புனிதர் நிகழ்ந்தசம் பவங்கள்பார்க் குநர்தம் நெஞ்சினை அகழ்ந்திட, அஞ்சி,மெய் யாக மற்றிவர் இகழ்ந்திடற் பாலரோ ஈசன் ஓர்சுதன்; புகழ்ந்துபோற் றிடத்தகும் புனித ராம்என்ருர், (88)

Page 50
= 96 =
உ. ந: அங்கு நிகழ்ந்த சங்கதிகள் பார்ப்பவர்கள் தம் நெஞ்சினை வருத்த, பயந்து, இவர் இகழப்படக் கூடியவரோ? மெய்யாகவே, இறைவனின் ஒப்பற்ற புதல்வனுவர்; புகழ்ந்து வணங்கிடவேண்டிய பரிசுத்தராவர் என்று கூறிக் கொண்டார்கள்.
மற்று :- அசை}
சோகக்காட்சி
தொக்குறின் றவரெலாம் துயரக் காட்சியொடு, அக்கணத்(து) ஆழம்பவம் ஆய யாவையும், சிக்கறத் தெரிந்து,நெட் டுயிர்த்துத், தேம்பியே,
துக்கமுற்(று) அழுதுனம் - துளங்கி ஏகினர். 89) (அயம்பவம் - அசம்பவம் - கடக்கக்கூடாதன. தொக்கு நிற்றல் -
கூடிகிற்றல்.
உ; ந: அங்கு கூடி நின்றவரெல்லோரும் சோகக் காட்சியினராய், அந்த நேரத்தில் நிகழ்ந்த அசம்பவங்கள் அனேவற்றையும், தெளிவாக அறிந்து, பெருமூச்சு விட்டு, வாடி, துக்கத்துடன் கண்ணிர் வடித்து, உளம் நடுங்கி, (அவ்விடம் விட்டுப்) பிரிந்தனர்.
சேய்மையில் நின்றவரில் சீடரும் ஒருசிலர்
கீழிபடும் இதயத்துக் கெழீஇய நண்பினர், வழிபடு கலிலெய மாதர், மற்றுளார், விழிபுனல் சொரிதர வெதும்பீச், சேய்மையில் கழிதுய ரொடுமணம் கவன்று நின்றனர். (90)
(கெழீஇய கெழுமிய - பொருந்திய, கழிதுயர் - மிகுதுயர்; சுழி:
மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல். )
உ. ந: கிழிபட்ட நெஞ்சினராய நண்பர்சுளும் (சீடர்களும்), (அவரைத் தொடர்ந்து) வழிபட்டுக் கொண்டுவந்த கலிலேய நாட்டு மகளி ரும், ஏனையவர்களும், கண்ணிர் சொரிய வெதுப்பம் உற்று, மிகத்தூரத்திலே மிகுந்த மனத்துயரொடு கலலேயே வடிவாய் நின்றனர்,
"கலிலேயாவிலிருந்து யேசுநாதரைப் பின் சென்று, அவருக்குப் பணிவிடை செய்து கொண்டுவந்த அநேக பெண்கள் தூரத் தில் நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டு நின்றர்கள். அவர் களுக்குள் மரியமதலேனம்மாளும் இயாகப்பருக்கும் யோசேப்பு

- 87 -
வுக்கும் தாயான மரியம்மாளும், செபதேயுவின் குமாரர்களு டைய தாயும் இருந்தார்கள். '
முத். 27 : 55 - 56, மாற். 15:40 - 4)
வையமும் வானமும் வாழ்த்தின !
ஞானமா கியவொரு நாதன், ருங்கிய மாணவ தேகத்தை, வரைந்திட்டு), ஆவியை வானநர பகன்கரம் வழங்கக் கண்ணுறீஇத், (91) தானமும் வானமுந் தழங்கும் வேலைவாய்.
(வேலைவாய் 3 அல. மானவதேகம் - மனித உடல், உறீஇ .
உற்று. தழங்கல் - ஒலித்தல்)
உ, ந: ஞானமயமான ஒப்பற்ற தேவன், சுமந்த மனிதஉடலே, மக்கள்
மனத்திரையில் ஓவியமாகப் பதித்துவிட்டு (என்றது உடலை விடுத்து) உயிரை வானகப் பிதாவின் கைகளில் ஒப்புவிக்க, (அதனை) கண்ணுற்று, வையகமும் வானகமும் கடலலைபோல் ஒலித்து வாழ்த்தின.
கால்முறித்துச் சாவினைக் காணல்
கொற்றவன் உத்தரம் கொண்டு யூதர்கள், சொற்றவா ரூபவண் துதைந்த சேவகர், குற்றுயிர்ச் சோரரைக் குறுகித், தொன்முறை, தெற்றெனக் கால்முறித்(து), உயிரைச் சித்தினுர், (92) (உத்தரம் - விடை, இங்கு ஆணேயை உணர்த்தும், தெற்றென. இங்கு, முற்றக என்ற பொருள் தரும். துதைதல் - நெருங்கு தல் - சேருதல்.)
உ. ந: கொற்றவனுய பிலசத்துவின் ஆணை பெற்ற யூதர்கள், சேரல்
லியபடியாய் அங்கு வந்த சேவகர்கள், குற்றுயிராய்ச் சிலுவையிற் துடித்துக் கொண்டிருந்த கள்ளரை அண்மி, பழைய வழக்கப்படி, அவர்களின் கால் கைகளை முற்ருக முறித்து, அரைகுறை) உயிரையும் நீக்கிவிட்டார்கள்
(தொன்முறை - பழைய வழக்கம்: ஒய்வுகாளிலே சிலுவையில்
தண்டனைக்கான எவரையும் அப்படியே விடுவதில்லை; சிலுவை யிலிருந்து அகற்றி விடுவதாகும்.)

Page 51
حصہ سے 88 : حس۔
'அந்த நாள் பெரிய ஒய்வுநாளுக்கு ஆயத்தகாளாய் இருந்த படியால், உடல்கள் அந்த ஓய்வுகாளிலே சிலுவைகளில் இரா தபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களு டைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப் போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனே கூடச் சிலுவையில் அறை யப்பட்ட முக்தினவனுடைய காலெலும்புக%ளயும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். ’ (அரு. 19:31-32)
குறிப்பு : 'அந்தக் காலத்தில் யூதேயா நாட்டில் நடைபெற்ற மரண
@.。
தண்டனையின் கொடுமை புரிகின்றதல்லவா? மாமிசபட்சிணி நண்டுக் கால்களை முறிப்பதுபோல் தற்செயலாகத் தப்பி ஒட்டிவிட்டாலும் என்று, குற்றுயிராளரின் கால்கண் முறி.பது கயமையா, கொடு மையா, சித்திரவதையா அல்லது இவையெல்லாமே ஒன்று சேர்ந்த தறுக்கணித்த வெறியா, கற்பனைபண்ணிக் காலக் கோலத்தை . ஆட்சி அருமைப்பாட்டை உணர்க .
இதுவும் ஒரு விளையாட்டு?
அன்பினுேர் படிவத்தை ஆவி நீத்தலில்,
என்பீனே முறித்திலர் லீனினும், ஈட்டியால்
வன்புறத் திருவிலா மருங்கு, குத்தினுன் கொன்பயில் ஒருமறக் கொடுங்க ணுளனே. (93)
(படிவம் - வடிவம். திருவிலா - பரிசுத்தவிலா, திருவடி திருக்கரம் என்பது போன்ற பிரயோகம், கொலைபயில் - கொல்பயில் - கொன்பயில். )
ந: அன்புருவாய இயேசு பெருமானின் உடலிலிருந்து ஆவி
பிரிந்துவிட்டபடியால், கால் எலும்புகளை முறித்தாரில்லை. என்
றலும் அவரது பரிசுத்த விலாப்பக்கத்தில், கொலைத் தொழிலே
பயிற்சியாக உடையவனுதலின் கனிவுப் பார்வை இழந்து மறப்
பார்வை கொண்ட கொடியவஞெருவன் தன் முழுப் பெலத்துடன்
ஈட்டியினுற் குத்தினன்,
* யேசுநாதரிடத்தில் வந்தபொழுதோ, அவர் எற்கனவே மரித்தாரென்று கண்டு அவருடைய கணக்கால்களே மூரிக்க வில்லை' (அரு. 19:33.)
அனந்தர முலகினுக் கருளி யாண்டகை தினந்தரு மான்மசஞ் சீவி யேயென வனந்தகு திருவுடல் வடுப்பட் டவ்வழிக் - கனந்தகு குருதியு நீருங் கான்றதால் (94)
 

سے 89 | سس۔ "
(அனந்தரம் நித்தியம். வண்ணம் >வணம் > வனம் A அழகு வடு - காயம். கனம் - மேன்மை, மகிமை.)
ப உ. அனந்தரம் உலகினுக்கு அருளி - எப்பொழுதும் உலகத்திற்கு அருள் செய்து, தினமதரும் ஆன்ம சஞ்சீவியேயென - ஒவ்வொரு நாளும் மனித ஆன்மா பாவத்திலிருந்து கிடைத்தேறி நித்திய வாழ்வுக்குத் தரப்படும் சஞ்சீவி இதுவே என்பது போல, ஆண் டகை வனந்தரு திருவுடல் வடுப்பட்டு - பெருந்தகையின் அழகுடல் காயப்பட்டு, புள்பட்டு, அவ்வழி கனந்தரு குருதியும் நீரும் கான்றது - அப்புண்ணினூடாக மகிமைதரும் இரத்தமும் நீரும் ககிந்தது. நீரும் குருதியும் ஆன்ம சஞ்சீவி எனப் பாய்ந்தது எனக் கவிஞர் கூறுவது தற்குறிப்பேற்றம்’ எனிலும், தத்துவ யதார்த் தம் உடையது. ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதும் இரட்சகர் இயேசுவின் இரத்தப் புரட்சியே என்க. இங்கு, இரத்தப்புரட்சி, செய்தவர் பக்கமாயினும், எங்கோ ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலுமோ இரத்தம் சிந் தித்தான் மறுமலர்ச்சி ஏற்படும் என்பது தெளிவாகின்றது அல்லவா?
"ஆணுல், போர்ச் சேவகரில் ஒருவன் ஈட்டியினுலே அவருடைய விலாவிலே குத்தினுன். உடனே அதினின் O) இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.”
(அரு. 19:34) ஜீவநீர் ஊற்றெடுத்தது பாவவெம் கோடையில் பாடுண்டு, எஞ்சிய தாவரும் ஆத்துமப் பயிர் தழைத்திட, பூவரு புண்ணிய பொருப்பின் ஓர்புடை, ஜீவநீர் ஊற்றுக்கண் திறந்த(து) என்பவே. (95)
(பூ - பூமி. பொருப்பு மலை. ஒர்புடை - ஒர்பக்கம். தா- கேடு)
உ ந. பாவமாகிய வெங்கோடையில் பல பாடுகளேயும் அனுபவித்து, தன்னுயிர் தவிர்ந்த மன்னுயிர்கள் ஆகிய ஆன்மப் பயிர்கள் தழைத்திட, பூமியில் அவதரித்த புண்ணிய மலேயாகிய எம்பெரு மான் திருமேனியின் ஒருபக்கத்தில், கருணை நீர் ஊற்று, கண் திறந்து பாய்ந்தது என்றும் சொன்னர்கள், 9). uit: 12 −,懿

Page 52
-سن- 90 -- அந்தமரந்தான் இந்தமரம்.
ஓர்ந்திடாப் பத்தனே ரடியி லொண்சில் ஆர்ந்தநன் னிர்சுரந் தளித்த வாறுபோல்
கூர்ந்தவீட் டிபின்வழி குருதி கோத்தநீர் ஆர்ந்ததில் வாக்கைநின் றவனி யுய்யவே. (96)
(ஒர்ந்திடல் சிந்தித்திடல். சிலை = கற்பாறை.
ப; உ; ஒர்ந்திடாப் பத்தன் - வேறு எதனையும் சிந்தியாமல், (கசப் பான ஆற்றுநீர் உவப்பான நன்னீராக மாறியதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த) மோசே துறவி, ஓர் அடியில் ஒண்சில ஆர்ந்த நன்னீர் சுரந்து அளித்தவாறுபோல் - தன்கையில் வைத் திருந்த மரக்கிளேயினுல் அடிக்க இறுக்கமான அப்போறை நிறைய நன்னிரைச் சுரந்து (அம் மக்களை) காப்பாற்றியது போல், கூர்ந்த ஈட்டியின் வழி குருதி கோத்தநீர் அவனிஉய்ய இவ்ஆக்கை நின்று ஆர்ந்தது - கூரான ஈட்டியின் வழியாக இத்திருவுடலிலிருந்து குரு தியும் நீரும் கலந்து வந்து வெளிப்பாய்ந்து நிறைந்தது.
உ, வி: மோசே முனிவன் அடித்த பொழுது பாறையினின்று வெளிவந்த கன்னீர் அநேக மக்களின் நீர்த்தாகத்தைத் தீர்த்து வைத்தது, இயேசு காதரின் திருவுடலிலிருந்து வெளிவந்த குருதியும் நீரும் கோடிக்கணக்கான மக்களின் ஆன்ம தாகத் தைத் தீர்த்துக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.
கதை எகிப்திற்குக் கொண்டு போகப்பட்ட இஸ்ரவேலர்களே ஆண் டவனுர் கட்டளைப்படி திரும்பவும் இஸ்ரவேலுக்கு மோசேதுறவி அழைத்துக் கொண்டு வந்தார். வழியில், 'மாரா' என்ற கசப் பான ஆற்றுத் தண்ணிரைக் குடிதண்ணீராக்க வேண்டி இருக் தது. தானும் அந்த மக்களும், தங்கி நிழலுக்கிருந்த அம்மரத் தின் கிளையொன்றை முறித்து மாரா நதியில் போட்டபொழுது அது கன்னிராய் மாறிற்ரும், அதே மரக்கிளையில் இன்னுெரு கிளேயை ஒடித்து, "சும்மா’ பாறையில் அடித்தபொழுதுதான் கற்பாறை நன்னீரைச் சுரந்தது (பழைய ஏற்பாடு யாத்திராகமம்.
மோசே முனிவர் கிளை ஒடித்த அந்த மரந்தான் சிலுவைமரம் எனச் சொல்லப்படுகிறது,

میسی \ }1, 9 ہے۔
மறை மாளுக்கன் - யோசேப்பு - (y) to S60 யாவையும், முடிய நோக்குரு நெடிதுயிர்த்(து) இரங்கியுள் அழிந்து நின்றவோர் அடியன்போ சேப்புதம் ஆண்டை ஆளுகை படிமிசை வரவெதிர் பார்த்து இருப்பவன் (97)
உ, ந; முடியவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும், முற்ருகக் கவனித்து, பெருமூக்சுவிட்டு இரங்கி உள்ளம் சிதைந்து நின்றவ ணுகிய யோசேப்பு என்னும் ஓர் அடியவன், நம் ஆண்டவஞர் அரசாட்சி இவ்வுலகில் ஆட்சிபீடம் ஏற எதிர்பார்த்திருந்தவன்
ஆவன்.
இ. வி: முடிவன : வினையாலணையும் பெயரான காலவாகுபெயர். உள் அழிந்து எழுவாய்த்தொடர். நோக்குரு செய்தென் னெச்சம். ஆண்டை ஆண்டவன் என்பதன் மரூஉ, தமிழ கப் பேச்சு மொழியுமாகும்
சூசையின் யாசகம்
மிக்கசம் பத்துளான் யூத வேதியர் தொக்கசங் கத்தினுேர் தலமைச் சூழ்ச்சியான் புக்கனன் அரசிடம் புனித யாக்கையென் பக்கலில் தருகெனப் பரிந்து வேண்டினன். (98)
உ, ந: (அந்த யோசேப்புவோ) மிக்க செல்வம் உள்ளவன்; யூத இன வேதியர்கள் கூடிய சங்கத்திற்கு முதன்மை தரக்கூடிய ஆலோசனைகள் தெரிவிக்கும் மூளை வன்மை கொண்டவன், பிலாத்து என்னும் அரசனிடம் நேரிற் சென்றன். (சென்று) இரட்சக இறைவரின் புனித உடலை என்னிடம் தருக எனப்பணிந்து விண்ணப்பித்தான்.
தொக்க கூடிய, பக்கல் - பக்கம், இடம்,
பக்கலில்; இல் : அல் வழிச்சாரியை.
* சாயுங்காலமானபோது, அரிமத்தியா ஊரானும், ஐசுவரியவா னும், யோசேப்பு என்னும் பெயருள்ளவனும், யூதருக்குப் பயத்தினிமித்தம் இரகசியமாக யேசுநாதருக்குச் சீடனுயிருந்த

Page 53
= 92 -
வனுமான ஒரு மனிதன், பிலாத்துவினிடத்தில் துணிந்து செனறு, யேசுநாதருடைய சரீரத்தைக் கேட்டான்,
(மத், 27:57-58; மாற். 15:43; லூக், 23:50-52; அரு 19; 38)
திகிலுடை மன்னவன், தீரத் தேர்ந்தபின், அகிலலோ கேஸ்வரன் அருளி யாக்கையை, இகலில்யோ சேப்பினுக்(கு) ஈந்து, "நீயினித் தகுமுறை இயற்றுதி சமாதி போ'யென்ருன். (99)
உ? ந: (அவர் இறந்துபோனதைக் கேட்டதும்) ஒருவிதத்திகைப்புக்
குள்ளான பிலாத்து, (செந்தூரியானிடம் அவ்வுண்மையைத்) தீர விசாரித்த பின்பு, சர்வலோக நாயகனின் அருளுடனே, பகைமை
யற்ற யோசேப்பினிடம் கொடுத்து, நீ இனிப் போய் சம்பிரதா யப்படி சமாதி எழுப்புக" என்றன்.
'யேசுநாதர் இத்தனை சீக்கிரத்தில் மரித்திருப்பாரோவென்று, பிலாத்து சந்தேகப்பட்டு, செந்தூரியனை வரவழைத்து அவர் மரித்து விட்டாரோ என்று அவனைக் கேட்டான். செந்தூரியன் வழியாக அறிந்துகொண்டபின் சரீரத்தை எடுப்பதற்கு யோசேப்புவுக்கு உத்தரவு கொடுத்தான்.”
(மாற். 15 ; 44 - 45; அரு. 19:38.)
நல்லடக்கம்
உத்தரம் கிடைத்தமை வினவி, உள்ளுளே பத்திசெய் நிக்கதேம் எனப் பகர்ந்திடும் உத்தமன், பரிமள உசித வர்க்கங்கள் வித்தக உடற்கெனக் கொண்டு மேவினுன் (100)
உ. ந: (யோசேப்புக்கு) ஆணை கொடுத்தமையைக் கேட்டறிந்து அந்தரங்கமாக இயேசுபிரானிடத்தில் பக்திசெய்து கொண்டு வந்த நிக்கோதேமுசு என அழைக்கப்படும் உத்தமன், வாசனைத் திர வியங்களிற் சிறந்தவற்றை (இயேசுநாதரின்) மேன்மையான சரி ரத்திற்கெனக்கொண்டு சென்றன்.
*ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் யேசுவினிடத்தில் வக் திருந்த நிக்கோதேமு என்பவன் வெள்ளைப் போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இருத்தல் கொண்டுவந்தான்’ (யோ, 19 + 39.) (போளம் - வாசனைப்பண்டம்) -

- 9.8 -
பூந்துகிலிற் புண்ணியவுடல் கொலேக்களத்(து), இருவரும் குறுகி, ஒல்லேயில் தொலைக்கரும் பாவநோய் தொலேத்த பாக்கையை, நிலக்குருசு அகற்றிமேல் நிலவச் சாத்தினர் விலக்கரும் பூந்துகில் விரித்து முடியே. (101) (ஒல்லை - விரைவு. தொலைக்க + அரும் = தொலைக்கரும்.)
உ. ந: கொ8ல செய்யப்பட்ட இடத்தில், யோசேப்பு, நிக்கோதேமுசு ஆகிய இருவரும் சென்று, விரைவில் தொலைக்கமுடியாத பாவப் பிணியைத் தொலைத்த திருவுடலே, நிறுத்தப்பட்டிருந்த சிலுவையி லிருந்து அகற்றி, விலே மதித்தற்கரிய பூந்துகிலே விரித்து, அதன் மேல் அத்திருவுடல் பிரகாசிக்கும்படியாகக் கிடத்தி, அதனுஷ் அவ்
வுடலே மூடினர்கள்.
உ. வி. பூந்துகில் இஃது புனித கம்பளம் எனவும் துப்பட்டி எனவும் பரிவட்டச்சீலை எனவும் அழைக்கப்படுகின்றது. சுர9 சேடங்கள் யேசுவின் போதனைகளையும் வாழ்க்கைக் குறிப்பு களையும் கூறுவது போல் இப்பூந்துகிலும் இயேசு சிலுவை யிற்பட்ட பாடுகளை உணர்த்துவதால், ஐந்தாவது GFLüd எனக் கத்தோலிக்க மக்களால் அழைக்கப்படுகின்றது, ஆறுமுக நாவலரைச் சைவமதத்தினர் ஐந்தாங்குரவர் என அழைப்பது போல்,
இயேசுவின் பாடுகளோடு தொடர்புபட்டுள்ள பொருட்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கிய புனிதைஹெலன் அம்மையார், இப்பூந்துகில கொன்ஸ்தாந்தினுேப்பிளுக்குக் கொண்டு வந்ததாகச் சரித்திரம் கூறுகின்றது. பின்னர், பல இடங்களின் யாத்திரைக் குள்ளான புனிதப் பூந்துகில் இறுதியாக இத்தாலி நாட்டில் உள்ள டியூரின் நகரில் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
புனிதப் பூந்துகிலைப் பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர் பல ரும், இது இயேசுநாதர் பட்ட அவஸ்தைகளை எல்லாம் துல்லிய மாக விளக்குகின்றதென அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள். ஏசுநாதர் எப்படியான தேகக்கட்டுடையவர்; அவரது குணநலங்கள் எப்படிப்பட்டன என்பவற்றைக் கூடப் புனிதப் பூந்துகில் நுணுக்க மாகத் தெரிவிக்கின்றதாம். ஐந்தாவது சுவிசேடமான புனிதப்

Page 54
ضدس 94 جسد
பூந்துகிலின் சார்பாகச் சொல்லப்படும் ஜெபம் ஒன்றுக்கு 500 நாட் பலனை அளித்துள்ளார் பதினுேராம் பத்திநாத La Lui.
இப்புனிதப் பூந்துகில் 14 அடி நீளமும் 3 அடி 8 அங்குல அகலமும் உள்ள ஒரு லினன் துணி எனவுங் கருதப்படுகிறது.
ஜீவன்முத்தர் ஜீவ ஜீவனைச் சுமத்தல்
விந்தைசேர் எழில்திரு மேனி மீதெலாங் கந்தநல் திரவியம் புனேந்து, கண்கள்நீர் சிந்தி,மெய் அன்புடை ஜீவன் முத்தர்தாம், தந்தம சென்னியில் தாங்கிச் சென்றனர். (102)
உ, ந: புதுமைமிக்க அழகுத்திருமேனி முழுவதும் வாசனைத் திரவி யங்களே ஊற்றிப்பூசி, கண்ணிர் சொரிந்து, மெய்யான அன்பு பூண்ட ஜீவன்முத்தர்களாகிய அவ்விருவரும், (இயேசுவின் பூதவுடலே) தங்கள் தலையில்வைத்துச் சுமந்து சென்ருர்கள்,
உ. வி: மானிட உடலோடேயே இருவகைப்பற்றும் அற்று ஆணவ முனைப்பிழந்து, மனப்பக்குவம் எய்தியவர்கள் ஜீவன்முத்தர் எனப்படுவர்.
இ. வி. மீது ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு தந்தம: முற் குறிப்பிட்டபடி அகரம் சாரியையாகக் கொள்ளாமல் - கொள்ள வும் வேண்டியதில்லை - ஆரும் வேற்றுமை அஃறிணைப்பன்மை உருபாகவும் கொள்ளலாம். கொள்ள, விரித்தொடர் ஆகும்.
சென்னி: பால்பகா அஃறிணைப்பெயர்.
என்பும் உரியர் பிறர்க்கு
வணக்குறும் பரம்பினுேர் மருங்கு மட்டவிழ் நனக்குறு முகைவிரி நந்த னத்திது வினைக்குரித் தாயயோ சேப்பு வேதியன் தனக்கெனச் சமைத்தவச் சமாதி நண்ணினர், (103)
(மட்டு - தேன். பரப்பு) பரம்பு. கந்தனம் ம கந்தவனம். பூக் தோட்டம்)

ப. உ. வன ஒர்மருங்கு குறும்பரப்பு நந்தனத்து காட்டின் ஒரு பக்கமாகவுள்ள குறுகிய பரப்பிலமைந்த பூந்தோட்டத்தில்; மட்டு அவிழ் நனை குறுமுகை விரிநந்தனத்து - தேன்சிந்தி ஈரலிப்புச் செய்யும் சிறுமொட்டுக்கள் விரிந்த பூந்தோட்டத்தில், தனக் கெனச் சமைத்த அச்சமாதி - தன்னை அடக்கஞ் செய்வதற்கென முன் கூட்டியே சித்தப்படுத்தியிருந்த கல்லறையை, வினைக்குரித் தாய யோசேப்பு வேதியன் நண்ணினுன் - அடக்கஞ் செய்யும் வினைக்குப் பல்வழிபாலும் உரித்துடையணுகிய யோசேப்பு என்னும் அநதனை அடைநதான, உ. வி: “இதனை இதனுல் இவன் முடிக்குமென்ருய்ந்து அதனை
அவன்கண் விடல்’ என்னுந் தமிழ்மறைக்கு இலக்கியமாகியவன் யோசேப்பு என் னும் குருவானவர் என்பார், விக்னக்குரித்தாய யோசேப்பு என்றர். *என்பும் உரியர் பிறர்க்கு" - தன் எலும்பை - என்புடலை அடக்கஞ் செய்வதற்கெனத் தான் முக்தியே சித்தப்படுத்தியிருந்த இடத்தைத் தன்குருவானவருக்கே கொடுத்து, "கன்றிமறப்பது நன்றன்று'. என்று காட்டிய கன்மகன். நன்மாணுக்கன், கற்போதகன், யோசேப்பு ஆவன் என்க. (
சேமவைப்பிடம் கண்டனர் இரட்சகர்
கன்முறை அகழ்ந்த அக் காமர் வைப்பினில், தொன்முறை விதிப்படி, தூய யாக்கையைப், பொன்முறை போற்றிடும் புலமைத் தாமென, நன்முறை வளர்த்தினர் நலங்கொள் மொய்ம்பினுர், (104)
கல்> கன். தொல் > தொன். வளர்த்தல் - கனிவொடும் பரிவொடும் கிடத்துதல்) காமர் - அழகு,
உ. ந: மலையில் (யூத) வழக்கத்தின்படி தோண்டிய அவ் வழகிய சேம வைப்பிடத்தில் (கல்லறை) , பழைய வழக்க விதிமுறைகளின் படி, இயேசு நாதரின் பரிசுத்த உடலே, பொன்னை அதற்குரிய முறையில் போற்றிக்காப்பது அறிவுடைமையாகும் என்று கூறப் படுவதுபோல, (பிறர்க்கு நன்மைப்பாடுதரும் மன உரன்வாய்ந்த அவ்விரு சீடர்களும் நல்லமுறையில் நம்பெருமான் மேனியைச் சமாதியிருத்தினுர்கள்.
(நலங்கொள் மொய்ம்பினர், வைப்பினில் யாக்கையை விதிப்படி புலமைத்தாமென வளர்த்தினர் என இயையும்)

Page 55
سنس 96 --
(சேவவைப்பிடம் - பரமண்டலவாழ்வு, முத்தி என்பதையுங் கரு தும், கல்லறையையும் கருதும் இ, வி: கன்முறை : ஏழன் தொகை,
அகழ்ந்த வைப்பு என்பதுடன் முடிந்த பெயரெச்சம், பொன்முறை: இரண்டன் தொகை. புலமைத்து: (புலமை + அத்து + உ) குறிப்புவினமுற்று.
(உபதேச) வாசனமயம்
ஆர்வமிக் gGIDLALQLD di Ulqui. Quorihî)ið
வார்விழி புனலுக வாரிப் பெய்தனர்
தீர்வரும் பரிமள திரவியங்களே
சேர்வுறு கபாடக்கற் செறித்திட் டாரோ (105)
(மொய்ம்பு - வலிமை, புனல் - நீர், உகுதல்- சொரிதல் பரிமளம்
வாசனை. கபாடக்கல் - கல்லறையை முடிவிடும்கல்; கபாடம் -
கதவு, இங்கு கல்லறையை மூடிவிடும் கல்லே கதவாகவுள்ளது. 9... : ፴፡ இயேசுபெருமானிடத்தில் ஆர்வமும் ஆசையுங் கூடிய மெய்யடி
யார்கள், (இரட்சகர் மேலுள்ள பாச) உறைப்பினல் கண்களினின்
றும் வாருகின்ற நீர் சொரிய எல்லேயற்ற வாசனைத் திரவியங்களே
புனிதர் உடல்மீது வாரி வாரிச் சொரிந்தனர் பின்பு கல்லறைக்
குப் பொருத்தமான படக் கல்லினுல் கல்லறையை இறுக்கமாக
மூடினர்கள்
(அடியர் பெய்தனர் (பெய்து) செறித்திட்டார் என இயையும் இ. வி. வார்விழி. விழிவார் என்னும் ஐந்தன் தொகை GuT66
போல் மாறிநின்றது.
பெய்தனர்: முற்றெச்சம்.
கபாடக்கல்: இரு பெயரொட்டுப் பண்புத்தொடர் அரோ
அசிை
உத்தரிப்பும் புண்ணியமும்
உலகெலாம் புரிந்த தீவினையை உத்தரித்(து)
அலகிலாப் புண்ணியம் அமைத்த ஆண்டகை
இலகுபேர் எழில்திரு மேனி ஈண்டு)ஒரு
சிலேகெழு சமாதியும் செறிந்ததே அந்தே (106)

- 97 =
உத்தரித்தல் - துன்பத்தில் உழல்தல், துன்பங்களை அனுப் வித்தல்.
உ ந: உலக மக்கள் அனைவரும் செய்த பாவங்களினின்று அவரை
மீட்பதற்காக (சித்திரவதைப்) பாடுகளை அனுபவித்ததனுல் எல்லே பற்ற புண்ணியத்தைத் தேடிக்கொண்ட பெருமகனுரின் ஒளிவீசும் அழகுத் திருமேனியும், இவ்வுலகத்தில் ஒரு கல்லறைச் சமாதியில் அடங்கியதே, ஐயோ! (இது காலக்கோலமோ, கடவுன் நியதியோ?) சாத்தறுவாயில், புற்ணியல் இதனிலும் பெரிதோ' எனப் பூரிப்படைந்த கன்னன் இங்கு நினவுக்கு வருகின்றன். கபட மற்ற கன்னன் புண்ணியமும், கள்ளங் கபடமற்ற இரட்சகரின் புண்ணியமும் ஒன்றை யொன்று விஞ்சுமா அல்லது சமப் LA BILDT ? QuiJ35.
உயிர்ப்பும் உய்தியும்
தைவிக மானிட தனுள் டுத்த,நம் தைவிக் இரட்சகர் தணந்த மானிட மெய்பசுந் தரையிடை விரவி, மீண்டெழுந்(து) உய்வதுஇன் றேல்,புவிக்கு உய்வு இன் ருகும் ஆல். (107
(தனு - உடல், தைவிகம் - தெய்வீகம், தணத்தல் - பிரிதல்.)
உ. ந: தெய்வீகமான மனிதவுடல் தாங்கிய, நம்முடைய தெய்வத்
Spl.
துவம் நிறைந்த (பாவ) மீட்குநரின் மனிதவுடல் இப்பசுந்தரை யிற் கலந்து, திரும்பவும் உயிர்த்தெழுதல் இல்லேயாஞல், இப் பூவுலகுககு ஒருநாளும் உய்தியில்லே.
வி; சமாதியில் கல்லடக்கம் செய்யப்பட்ட இயேசு மூன்றம் நாள் அக்கல்லறையில் இருந்து உயிர்த் தெழுந்தார். அந்த *உயிர்த்தெழுதலிலேதான்’ இயேசு பெருமானுர் மகத்துவம் புலப்பட்டது. இயேசு கிறிஸ்து சாதாரணமகன் அல்லர் என்ப தும் ஆண்டவன் அவதாரமாகிய தெய்வமகன், தேவசுதன் என்ப தும் பெறப்பட்டது. சாதாரண மனிதன் உயிர்த்தெழ முடியாது. எனவே பாவமீட்குனராக இறைவன் அவதரித்தார் என்ற உண்மை அழுத்தம்பெற அப்புண்ணிய புருஷரின் உபதேசங் கள் வாழ்வாங்கு வாழவைக்கும் வேதவாசகங்கள் என நம்பப் படுகிறது. -
g). LIT. 3

Page 56
=.................. 98 سے
'அளவினுல் அறியலாகும்"
நேசயோ சேப்பென நிக்க தேமெனப் பேசிய தொண்டரும் பிறரும் நம்பிரான் பூசமா திக்குறு புணர்ப்பெ லாம்புரிந் தீசன மதிக்குள்வைத் தேத்திப் போயினர், (108)
(பூ - பெருமை. புணர்ப்பு - கிரியை, 1
உ ந: (நல்லடக்கத்தைப் பொறுத்தவ9ர) யோசேப்பு, நிக்கதேம்
என்று சொல்லப்பட்ட இரு பெருந் தொண்டரும் பிறரும் நம்பெரு மானின் பெருமைக்குரிய, பூசனைக்குரிய, சமாதிக்கு வேண்டிய கிரியைகள் எல்லாஞ் செய்து, இறைவனை மதியினுல் விளங்கி மனதில வைத்து வணங்கிச் சென்ருர்கள், உ. வி. தெய்வ வணக்கம் மூவயும் மனதும் ஒன்முக இணைந்து முழுமையுற்று நிகழும் பொழுது அது சாலச் சிறந்தது என் பார். “மதிக்குள் வைத்து ஏத்தி' என்று நுட்பமாகச் கூறியது கவனிப்புக்குரியது. சிவஞான சித்தியாரைப் பின்பற்றி, இரட்சணிய சமய நிர்ண யம் எழுதிய கவிஞர் கிருஷ்ணபிள்ளைக்கு, "அளவினுலுந் தெளி யலாஞ் சிவனே' என்பது தெரியாமலா போகும். இதனுலும் மதிக்குள் வைத்து ஏத்தியென மதுரமாக மொழிந்தார் போலும், இந்தக் கருத்தில், மதியெ ன்பது காரண ஆகுபெயராய் அளவை இயலைக் கருதும்
அளவை தருக்கம்,
பத்திமைப் பாவையர்
அத்தனுக்கு) அடித்தொழும்(பு) அமைந்த அன்புடைப் பத்திமை வடிவெடுத்(த) அனேய பாவைமார் சித்தசஞ் சலத்தொடு கலுழ்ந்து தேம்பியே தத்தமது) உறையுள் போய்ச் சடைத்து இருந்தனர். (109) (அத்தன் இறைவன். அடித்தொழும்பு பாதபணிவிடை பத்
திமை - பக்தி, உறையுள் வீடு, சடைத்தல் - இங்கு) மனமழி தல், எடுத்த + அனேய = எடுத்தனைய}

@-,
6)
 ܼܝܝ
ந: இறைவனுக்குப் பாதபணிவிடை இயல்பாகவே செய்யும் அன்பு வாய்ந்த இயேசு பக்தியே உருவெடுத்தாற்போன்ற பெண்கன் மனக்கிலேசத்தோடு கலங்கிவாடி, தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று செயலற்ற நிலையிலிருந்தனர். இறிதியாகச் சென்றவர்கள் பெண்கள் முன்னுக்கு வந்தவர்களும் அவர்களே: அஞ்சுறு காட்சிகண்டு), அலமந்(து) ஆவி நைந்(து) எஞ்சிய பாதகர் இயல்மு றைப்படி செஞ்சவே உலகமைந்(து) ஒழுகும் சீர்மைகண்டு) உஞ்சம்னன்(று) உளம்வலித்(து) உரங்கொண் டாரரோ, (110) அலமருதல் மனத்துன்பச் சுழற்சி. உ; அஞ்சுறு காட்சி கண்டு (எவரும்) அச்சப்படக்கூடியதான இக்காட்சிகளைக் கண்டு, அலமந்து ஆவிநைந்து வருந்தி உயிர் இளகி, எஞ்சிய பாதகர் - (முன்பு மனந்திரும்புதலுக்கு ஆளாகிய வர்போக) மிகுதியாயுள்ள கொடியவர்களும், இயல்முறைப்படி செஞ்சவே உலகு அமைந்து ஒழுகும் சீர்மைகண்டு - இயற்கை நியதி யின் படி செம்மையான முறையில் சீராக ஒழுகும் அமைதியைக் கண்டு, உஞ்சம் என்று உளம்வலித்து உரங்கொண்டார் - (இனி நரம்) பிழைத்த்ோம் என்று உள்ளத்தாற் கவரப்பட்டு இரட்சகர் இயேசுவின் திருவடிச் சுவடுகளைப் பின்பற்றும் மனவுறுதி - தெய் வம் உண்டென்பதோர் சித்தங் கொண்டார்கள். வி: பாதகர்களிலும் படிப்படியாக மனந்திரும்புதல் நடை பெற்றது. இதனுலேதான் இயேசுகிறிஸ்து இரட்சகர் இயேசு ஆனுர்கள். அந்த அளவுக்கு இயேசுவின் சிலுவைப்பாடு சிறப்பில் முடிந்தது. நல்வாழ்வு வாழ்வதற்கான இயல்பைக் கொண்டதுதான் உலக இயற்கை அமைப்பு. இவ் வுலக இயற்கையை விளங்கிப் புன் னெறி விலக்கி நன்னெறி வாழுதலே மனித இயற்கை. இவ் வியற்கையை விளக்கி வைத்தவர் இரட்சகர் இயேசு !
மன்னுயிருக்காகத் தன்னுயிரைத் திய ரக ஞ் செய்து மனித
பாவத்தை மன்னித்துப் பாவத்திலிருந்து மனித குல்த்தை மீட்டு

Page 57
س- 100 است.
வைத்தவர் - மீட்டு வைக்கின்றவர் - இனியும் மீட்பவர் இரட்சகர் இயேசு !
இ. வி: காட்சிகண்டு - இரண்டன் தொகை எஞ்சிய பாதகர் என் பதுடன் முடிந்த பெயரெச்சம், செஞ்சவே - (செம்மையாகவே, செய்ய திருவடி என்ற பிரயோகம் காண்க) = எழுத்துப் போலியால் இவ்வாருயிற்று. யாத்த என்பது ஞாத்த என வருவதும் அறிக. செய்து பார் என்பதனை செஞ்சுபார் எனச் சொல்வதும் அறிக.
உஞ்சம் : உய்()ேத(ா)ம்) : தன்மைப் பன்மை வினைமுற்று இங் கும் யகரமெய் ஞகரமெய்யாகத் திரிந்தது. திரியவே தகரமும ரகரமாயிற்று. எனெனில், ஞகரமெய் தகரமெய்யுடன் மயங் காது. செஞ்சவே (செய்யவே) யென்பதில் ஞகர மெய்க்குப் பின் மயங்கக்கூடிய யகரமெய் நிற்கின்றதெனில், ஞகரமெய் யும் யகரமெய்யும் மயங்குதல் தொடர் மொழிக்கண் அன்றித் தனிமொழிக்கண் இன்மை அறிக. இன்னும் எதுகை நோக்கிய திரிபும் எனப் புரிந்து கொள்க.
இதுவரை, பத்தி என்னும் பார்ப்பனக்கன்னி, மோட்ச பய ணத்தை ஆரம்பித்த கிறிஸ்தவப் பரதேசிக்கு, யூதாசு தற்கொலே செய்துகொண்ட பின்பு இயேசுநாதருக்குச் செய்த அட்டுழியங்களே யெல்லாம் நெஞ்சிளகக் கூறி, எம்பெருமான் சிலுவைப்பாடுகளை மெய்ம்மயிர் சிலிர்க்கச் சிந்தை நெகிழச் செம்மையாக எடுத்துரைத்து, தேவசுதன் நல்லடக்கம் செய்யப்பட்டது முடிய, இயேசு கிறீஸ்து இரட்சகர் இயேசு ஆகிய புனிதவரலாற்றை மென்மையாகக் கூறி மூடித்தாள் என்க,
இரட்சணிய சரித படலத்தில், சிலுவைப்பா(ட்)டு மிக உன்னத மானது (ஆமென்)
"மன்னவனே! சிலுவையிலே மரித்த பின்னர் பேயின்
மயக்கமில்லே சீடருக்கு, மயங்காமை தெளிந்தேன் பொன்னுடலம் பொழிகுருதிப் பெருக்கினிலே ஆழ்ந்தேன் பொல்லாத பேய்க்குறும்பு புகஇடமும் உண்டோ !
- திரு: வி. க.

sa lO -
பாவபர்ரஞ் சுமந்தேன் இதுவரையும் வந்தேன். இங்கே வருமட்டுமே பாரம் நீங்கவில்லேயே 翰。 இங்கே வந்த நிமிஷம் என் பாவபாரம் நாசம் இது என்ன இடமோ? பாரம் நீங்கிப்போயிற்றே இங்கென்பாரம் நீங்கவும் இங்கென் கட்டுவிடவும் என் வாழ்வு துவங்கிற்றே இது என்ன இடமோ ! சிலுவையே நீ வாழ்க! சமாதியே நீ வாழ்க ! சிலுவையிலே மாண்ட ஏகவே வாழ்க, வாழ்க,
- பரதேசியின் மோட்சப் பிரயாணம்.
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித்தலங் கொண்டடித்தால் வன்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து ;
வான மேனியில் அங்கு விளங்கும் ! பெண்மை காண் மரியா மத்தலேணு
பேணும் நல்லறம் யேசுகிறிஸ்து ; நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியிலிஃது பயின்றிட லாகும்
- பாரதியார்,
வைரம் பாய்ந்த வார்த்தைகளில் வளருந் தெய்வ ஒளியேற்றி உயிரைப் புரக்கு நெறியுரைத்த உணர்வுத் தந்தை, உலகம்அறப் பயிரை வளர்க்கத் தன்னுயிரைப் பசளே யாகப் பாலித்த உயர்வுச் சிறப்பில் யேசுபுகழ் ஊழி கடந்தும் வாழாதோ!
- ஜீகவீ?

Page 58
6.
10.
.
2.
13.
l4
ܚܵܩ 102 ܡܲܩ 醬
'மாதிரி வினுக்கள்
"இரட்சணிய யாத்திரிகம் ஒரு காவியத்திற்குரிய பண்புக் கூறு கள் எல்லாம் அமைந்தது - ஆராய்க? "இரட்சணிய யாத்திரிகத்தின் காவியத் தலைவன் ஆத்துமவிசாரி என்னும் மோட்சப் பிரயாணி ஆவன்' இவன், "தன்னேர் இல்லாத் தலேவனு? ஆய்க? இரட்சணிய யாத்திரிகம் கவிசேட தத்துவத்தையும் தழுவி இயற் றப்பட்டதென்பதற்கு இரட்சணிய சரிதப்படலமே சான்ருகும் ஆராய்க? -
இரட்சணிய சரிதப்படல ஆசிரியரின் தமிழ் இலக்கியப் பயிற்சி வளத்தை அகச்சான்று காட்டி விளக்குக.
வடசொற்களே அதிகம் கையாண்டிருப்பது பக்திச்சுவை இலக்கி
யத்திற்குத் தவிர்க்க முடியாததாகும் - ஆராய்க.
தேவனின் மகிமையை எங்கெங்கே எவ்வெவ்வாறு கவிஞர் குறிப் பிடுகின்ருர் ? சிலுவைப் பாடுகளைச் சித்திரிக்கும் திறனே ஆராய்க? *சிலுவைப்பாட்"டில் நல்ல கள்ளனின் பங்கு எது எனவும் அதனுல் அறியக்கிடக்கும் மததத்துவம் எது எனவும் குறிப்பிடுக?
எருசலேம் நகரப் பெண்களின் இதயக்குமுறலேக் கவிஞர் எவ்வாறு வெளிப்படுத்துகிருர்,
அந்தகாரம் எவ்வாறு வருணிக்கப்படுகிறது? இயேசுநாதரின் இரட்சிப்பு முத்திரை எது எவ்வாறு?
விஞ்ஞான ரீதியான ஆய்வாளர் பூந்துகிலால் புலப்படுத்துவன எவை?
கவிஞர் கிருஷ்ணபிள்ளையின் உவமை வளத்தை விளக்குக?
ஆசிரியர் பாடிய இக்காவியம் முழுவதையும் பயில்வோர் இடை யிடையே சில பகுதிகள் சுவை மிகுந்தனவாகவும், சில பகுதிகள் சுவை குன்றியனவாகவும் அமைந்திருத்தலேக் காணலாம்" - இக் கூற்று எந்த அளவுக்கு உண்மையானது ஆராய்க.

ܚܩ 1 8 10 ܚ
சிறுகுறிப்பு:-
கல்வாரி: கல்வாரியா' என்ற இலத்தீன் மொழியின் திரிபு தான் கல்வாரி. எபிரேய மொழியில் காப்பாத்தா என அழைக்கப்படும். மண்டையோட்டு வடிவமாக அமைந்த பாறைமேடு ஆதலின் கபாலத்தலம்’ எனவும் கூறப்படுகிறது. இது எருசலேம் நகருக்கு வெளியேயுள்ள ஒரு பாறைமேடு, இயேசு நாதரைச் சிலுவையி லறைந்த இடம் இதுவாகும்.
ஆதி மனிதனுன ஆதாமைப்புதைத்த அதே கல்லறையிலேதான் இயேசுநாதரைத் தறைந்த சிலுவையும நிறுத்தப்பட்டதென சத்திய வேதானுசாரத்தில் 15 - 1 - 1890) கூறப்பட்டுள்ளது ஆதாமின் கபாலம் காணப்பட்ட காரணத்தால் கபாலத்தலமென அழைக்கப் படுகிறதெனக் கூறுவாருமுளர்.
பாஸ்கா ஆதிகால யூதர்களின் மிகப்பெரிய ஆண்டுவிழா பாஸ்கா எனப்படுகிறது. முனனுெரு காலத்தில் எகிப்தில் அடிமை களாகத் துன்புறுத்தப்பட்ட இஸ்ரவேலர்களே, இறைவன் ஆணைப்படி மோசெஸ் (இவர் மோசே, மோசேயின் எனவும் அழைக்கப்படுவார். Moses) என்பவர் இஸ்ரவேலுக்கு மீட்டுக்கொண்டு வந்தார். அம் மீட்பு நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொள்வதற்காக பாஸ்கா விழா
கொண்டாடப்பட்டது.
இரட்சகர் இயேசு இறுதியாகக் கொண்டாடிய பாஸ்கா விருந்து நிகழ்ச்சியைத் தொடர்ந்தே அப்பெருமகன் பட்ட மிகப்பெரு வேதனை யும், இரட்சிப்புச் சாதனையும் நடந்து முடிந்தது.
சிலுவை: பழைய சீரிய மொழியான Siba என்பதன் திரிபுதான் சிலுவையாகும். எனவே, இது ஒரு திசைச்சொல், ஆங்கிலத்தில் Cross, தமிழில் ‘குருசு’ ஆகி, சிலுவைக்குப் பதிற் சொல்லாகவும் வழங்கப்படுகிறது.
புராதன யூதேயா நாட்டில், மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டது சிலுவையே. இந்த கோக் கில் இதுவும் ஒருவகைக் கழுமரம். நமது நாட்டில், அக்காலத்தில் கழுவிலேற்றித் தண்டனை அளிப்பதும் இதுபோன்றது.
ஆதி மனிதனுன ஆதாமின் காவடியில் ஜிவவிருட்சத்தின் மூன்று வித்துக்கள் வைக்கப்பட்டன எனவும், வைத்து மூன்றம் நாளில் ஆதாம் இறந்தாரெனவும், ஆதாமைப் புதைத்த மூன்ரும் நாளில் அம்மூன்று விதைகளிலிருந்து மூன்று செடிகள் மு?ளத்தன எனவும், அவை காலப்போக்கில் காடாகிக் காட்சியளித்தன என வும், அம்மரங்களே சரித்திரப் பிரசித்திபெற்ற சிலுவை மரங்க ளென்றும், "பார்ப்பரம்பாள்மாலை" என்னும், கிறிஸ்தவ நூல் கூறும்,
"பரமத் திருத்துவத்தின் பாங்கின் சிறப்பாக முன்று சிறுசெடிகள் முளேத்தே நயமாக" என்று தத்துவக் கருத்தொடு குழைத்துக் கூறுவர் பார்ப்பரம்பாள் மாலே ஆசிரியர், அன்று கிந்தனேக்கும், தண்டனைக்கும் சின்ன்

Page 59
- 104 -
மான சிலுவை, இரட்சகர் இயேசுவின்பின் வந்தனைக்கும், வழிபாட் டுக்குமுரிய புனிதச் சின்னமாய் விட்டது.
யூதேயா: ஸ்மாரியர் நாட்டுக்குத் தெற்குப்பக்கமாக, எருசலே மைத் தலைநகரமாகக் கொண்ட பழம்பெரும் நாடு.
எருசலேம் : யூதேயா நாட்டின் தலைநகரம் ஏரோதன் (ஏரோது) மன்னனின் ஆட்சிப்பட்டினம். இயேசு நாதரின் இறுதிப்
பாஸ்கா விருந்து நிகழ்ந்ததும், கொலேயுண்டதும் இங்கேதான். யூதர்
களின் (இஸ்ரவேலர்களின் டி பரிசுத்த நகரம். - பெத்தலகேம் : யூதேயாவிலுள்ள ஒரு பட்டினம், எருசலேமுக் குத் தெற்கே ஆறுமைல் தொலைவிலுள்ளது. யேசு பிறந்த இடம். நஸரேத்து . எருசலேமிலிருந்து 60 மைல் தூரத்தில், கலிலேயா நாட்டிலுள்ள நகரம். இயேசு வளர்ந்த இடம்.
யெத்சமனி: (கெஸ்தமன): எருசலேமுக்குக் கிழக்கே சுமார் அரைமைல் தொலைவிலுள்ளது ஒலிவேத்து மலை. இம்மலையி லமைந்த பூங்காவே யெத்சமனி. இப்பூங்காவிலேதான் புண்ணியர் இயேசுவின் இறுதி ஜெபம் நிகழ்ந்ததும், எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டதும். பிலாத்து : இயேசுவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கிய அதிகாரி. அப்பொழுது உரோமை ஆட்சியாளர்களின் பிரதிநிதியாக எருசலேம் நகரிலிருந்தவன் இவன். எப்படியும் யேசுவை நிரபராதியாக்கி விடல் வேண்டும் என்ற மனப்பாங்குடன் இவன்செயற்பட்டாலும் இறுதியில் கலகக்காரக்கும்பலைத் திருப்தி செய்யவேண்டியிருந்த தால்இயேசுவிற்கு மரணத்தீர்ப்பு அளிப்பதற்கு கிர்ப்பந்திக்கப்பட்டான். பரபாசு : பயங்கரத் திருடன் இயேசு நாதருடன் ஒன்ருக நிறுத்தி விசாரணை செய்யப்பட்டவன். பாஸ்கா விழாவின்போது சிறைக் கைதிகளில் ஒருவனை விடுதலை செய்வது வழக்கம். இயேசு வையும், இவனையும் உடன் நிறுத்துவதன் மூலம் இயேசுவை பரஸ்கா விழாவின் நினைவாக மன்னிதது விடலாமென்ற அந்தரங்க சூழ்ச்சியுடன்தான் பிலாத்து பரபாசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினன். ஆணுல், அவன் எதிர்பார்த்தது வேறுவிதமாய் முடிந்து விட்டது. யூத மூர்க்கர்களின் கிளர்ச்சி, பரபாசை விடுதலையாக்கி இயேசு நாதரை மரணதண்டனைக் காளாக்குவதில் வெற்றிகண்டது. மக்கள் தீர்ப்பு மகேசுரன் தீர்ப்பு ஆகிவிட்டது.
பரிசேயர் : வேதாகம சட்டங்களை அணுவும் பிசகாமல் அனு சரிப்பவர்கள். பெரும் ஞானிகள்போல் நடிப்பவர்கள். இணையற்ற சுய கலக் கூட்டம்,
சதுசேயர் : பரிசேயருக்கு நேர்மாறனவர். கன்னடத்தைக்கு முத லிடங் தருபவர்கள். வெளி ஆசாரங்களில் சாரமில்லை என்பவர்கள். அப்போஸ்தலர் : இயேசு காதரின் முதற் பன்னிரு சீடர்கள். இவர்களுக்கு அப்போஸ்தலர் (புனிதர்கள்) எனப் பெயரிட்டது இயேசு காதரே.
செந்தூரியன் நூற்றுக்கதிபதி, நூறுபோர் வீரர்களுக்குத் தலைவனுகப் பணிபுரிபவன்.
 


Page 60
to Csol,

.
- “
l

Page 61
o
魔
|× sae 藏