கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமரத்துவம்

Page 1


Page 2


Page 3
-
-
sy
 

யாழ்வாணன்
யாழ். இலக்கிய வட்டம்
யாழ்ப்பாணம்

Page 4
யாழ். இலக்கிய வட்ட வெளியீடு - 15
முதற் பதிப்பு - மார்கழி 7 969  ̄ܕܚܝܓ݂ܠ
உரிமை : ஆசிரியருக்கு
விற்பனை உரிமை :
தனலக்குமி புத்தகசாலை,
சுன்னுகம்
விலை : ரூபா 2-50
AIMARATHTHUVAM (Collection of Short Stories)
Author : N. Sanmuganathan ( YARL VANAN)
Publishers: Yarl Ilakkiya Vaddam, Municipal Office, Jafna.
First Edition : December, 1969
Sole Distributors: f " Thanaluckumy Book Depot, Chunnakam.
Price : Rs. 2-50
 
 
 

சமர்ப்பணம்
عــــــــي سمصــد
புவியில் என்னைப் பெற்ற அளவிற் பெருமை யெய்தி அன்னை விண்ணகஞ் செல்ல என்னை வளர்த்து மனிதனுக்கிய எனது தந்தை மு. நாகலிங்கம் அவர்களுக்கு இந் நூலை
அர்ப்பணிக்கிறேன் -

Page 5

பதிப்புரை
துTய இலக்கிய சேவை செய்யும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட யாழ். இலக்கிய வட்டம், நான்கு வருடங் களுக்கு மேலாக நல்ல தொண்டு செய்து வருவதைத் தமிழுலகம் நன்கறியும். இலக்கியத் தரம் மிக்க நூல் களை வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்கியும் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வளர்த்தும் வருகிறது. இத்தகைய நற்பணியை இலக்கிய வட்டம் தொடங்கிய நாள் முதலாக எந்தவிதமான சோர்வுமின்றித் தன்னலமற்ற உள்ளத்தோடு செய்து வருபவர் திரு. யாழ்வாணன் அவர்கள். பல எழுத்தாளர்களின் நூல்கள் இலக்கிய வட்ட வெளியீடாகச் சிறப்புடன் வெளிவரக் காரண மாக இருந்த இவரது சிறுகதைத் தொகுதி அமரத் துவம் என்னும் மகுடத்துடன் வெளிவருகிறது. இதை வெளியிடுவதில் யாழ். இலக்கிய வட்டம் மிகவும் பெருமை யடைகிறது.
யாழ். குடாநாட்டில் எந்தவொரு மூலையில் ஏதாவது சிறு இலக்கியக் கூட்டமோ அன்றிப் பெரு விழாவோ நடந்தால், நிச்சயமாக அதில் திரு. யாழ் வாணனின் பங்கும் சேர்ந்திருக்கும். எவருக்கும் உதவும் இவர் சமூகப் பணிபுரியும் பல நிறுவனங்களில் அங்கம் வகித்துத் தொண்டாற்றி வருகிருர்,
அழகு தமிழில் எழுதும் இவரின் கதைகளில் தெளி வுண்டு. நல்ல கருத்துண்டு. சிந்தையைத் தூண்டும் ஆற்ற லுண்டு.
என்றும் எமக்கு ஆதரவு நல்கும் இலக்கிய அன்பர் களின் கைகளில் இதை மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிருேம்.
வணக்கம்
காரை. செ. சுந்தரம்பிள்ளை யாழ். இலக்கிய வட்டம், இணைச் செயலாளர் யாழ்ப்பாணம்.

Page 6
என்னுரை
யான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற யாழ். இலக்கிய வட்ட உறுப்பினர்களது ஆசை நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு நிறைவேறுகின்றது.
இத்தொகுதியிலுள்ள கதைகளின் உரிமையாளன் நான் என்ருலும், நூலுருவில் வெளியிட மூலகாரணமாக இருந்தவர்கள் கவிஞர்கள் வி. கந்தவனம், காரை. செ. சுந்தரம்பிள்ளை ஆகியோராவர். அவர்களுக்கு என்றும் கடப்பாடுடையேன்.
* அமரத்துவம்’ என்ற மாலையைத் தொடுப்பதற்கு, வேண்டிய மலர்களைத் தெரிந்து எடுத்து உதவியவர் களுள் முக்கியமானவர்களான இரசிகமணி கனக. செந்தி நாதன், கவிஞர் இ. நாகராஜன், திரு. கே. வி. நடராஜன் ஆகியோருக்கும் என் நன்றி.
ஈழத்து இலக்கிய வரலாற்றில், புதிய பரம்பரை யினரை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்குரிய நண்பர் சிற்பி அவர்களது அணிந்துரை இந் நூலை அணி செய்கின்றது.
மிகவுங் குறுகிய காலத்தில் இந் நூலைத் தங்களது பதிப்பக நூல்போன்று கணித்துச் சிறப்பாக அச்சிட் டுதவிய சுன்னகம், திருமகள் அழுத்தகத்தினருக்கும், ஊழியர்களுக்கும், குறிப்பாக முகாமையாளர் திரு. மு. சபாரத்தினம் அவர்களுக்கும், அழகுற அட்டைப்படம் வரைந்துதவிய ஓவியர் ரமணி அவர்களுக்கும், மற்றும் இந் நூல் வெளிவர ஒத்துழைத்த நண்பர்கள் அனை வருக்கும் நன்றியுடையேன்.
நகரமண்டபம்,
யாழ்ப்பாணம், அன்புடன் 20-12-69. யாழ்வாணன்

அணிந்துரை
இதயத்திலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவாகிப்பது, உணர்ச்சி. இந்த உணர்ச்சியிலிருந்து வடித்து எடுக்கப்படும் இனியரசம், இலக்கியம் ,
இதயத்திற்கும் இலக்கியத்திற்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு. எழுத்தாளனின் இதயத்தையும் வாசகனின் இதயத்தையும் உறவாட வைக்கும் உறுதி யான பாலம், இலக்கியம்.
உள்ளதை உள்ளபடியே எழுதுவது இலக்கியமன்று உள்ளதை உணர்ந்தபடி எழுதுவதுதான் இலக்கியம்.
நண்பர் யாழ்வாணன் அவர்களின் அமரத்துவம் என்ற இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள பல கதைகளைப் படித்த பின்னர், இலக்கியம் சம்பந்தமான மேற்கூறிய சிந்தனைகள் என்னுள்ளத்தே உறுதிபெற்றுவிட்டன.
※
சமூகத்திலுள்ள சிறுமையையும் சீர்கேட்டையுங் கண்டு ஆசிரியர் பொங்கியெழுகின்ருர் ; கொள்கை எதுவுமற்ற போலிகளின் அட்டகாசத்தைக் கண்டு கொதித்தெழுகின்றர் ; வெறும் வரட்டுக் கெளரவத்திற் காக, அன்பையும் பாசத்தையும் அடக்கி அழிப்போரைக் கண்டு ஆவேசப்படுகின்ருர் ; விதியின் கொடுமையால், வாழமுடியாமல் தவிப்போரைக் கண்டு குமுறி அழு கின்ருர் .
இத்தகைய உணர்ச்சிகளைச் சீராக்கிச் செம்ம்ை யாக்கிச் செந்தமிழ்ச் சொற்களுட் பொதிந்து சிறுகதை இலக்கியமாக்கித் தந்திருக்கின்ருர் ஆசிரியர்.
杀 ※ *

Page 7
Viii
அவள், அவனுடைய முறைப் பெண். அதைவிட, இருவரும் உயிரினுமினிய இன்பக் காதலர்கள். அதற்கும் , மேல், அவர்களிருவரையும் தம்பதியாக்கவேண்டும் என்ற ஆசையும் இலட்சியமுமுடைய பெற்ருேரைப் பெற்ற பாக்கியசாலிகள் ! அவர்களின் இன்பப் பூரிப்புக்குக் கேட்கவா வேண்டும் ? அவனுக்குக் கொழும்பில் உத்தியோகம் கிடைக்கின்றது. அடுத்து வரும் சுப முகூர்த்தத்தில் அவர்களிருவரும் தம்பதியாவர் என்ற நிலையில், அவளுக்கு நியூமோனியா வருகின்றது ; போகும்போது அவளுடைய அழகான தலைமுடியையும் கொண்டு போகின்றது ! அந்தக் குஞ்சியழகு அகல, அவள் கோரமாகின்ருள். அவன் தியாகியல்லன் ; அவளை மனைவியாக்க இப்போது அவன் விரும்பவில்லை. வேருெருத்தியைக் கல்யாணம் செய்து, அப் புதுப் பெண்ணை அழைத்துக்கொண்டு, தன் காதலியின் வீட்டிற்கு விருந்துண்ணவும் வருகின்றன். மொட்டை யாகிவிட்ட அவளின் மனநிலை எப்படியிருக்கும் ? ஏக்கம், ஏமாற்றம், விரக்தி, வேதனை முதலிய எத்தனையோ உணர்ச்சிகளுக்கிடையிற் சிக்கி, அல்லற்பட்டு, ஆற்ருது நெஞ்சு பிழியப் பிழிய அழுகின்ருள் அவள் கதை இத்துடன் முடிந்திருந்தால், உணர்ச்சிச் சுளிப்புள்ள உருக்கமான கதை " என்பதுடன் நின்றிருக்கும். ஆனல், கதை மேலே தொடர்கின்றது. சினிமாவிலும் வேறிடங் களிலும் நாம் காணும் சாதாரண பெண்ணல்லள் அவள். தன் காதலன், தன்னை ஏமாற்றிவிட்டான் என அவள் குற்றஞ் சுமத்தவில்லை ; கோபாவேசங் கொள்ளவில்லை. * மனிதர்கள் மனித வாழ்க்கையைத்தான் விரும்பு வார்கள். கோரத்தைக் கொலுவில் வைத்து அழகு பார்க்க எந்தப் பைத்தியக்காரனும் தயாராக இல்லை ' எனத் தன் நிலையைப் பற்றி நிதானமாகச் சிந்தித்து அமைதிகாணும் அவள், முன்னர் பிறந்தநாட் பரிசாக அவன் அளித்த, அதுவரை அவள் அணியாதிருந்த, <9Iէք 5rT6ծI, உயர்ந்த சேலையை மனப்பூர்வமாகப் புதியவளுக்குப் பரிசளித்து, வாசகர் அனைவரின் சிந்தை
 

ix
யில் அதியுயர்ந்த இடத்தை அடைந்துவிடுகின்ருள். மொட்டை என்ற இந் த க் கதை த னிச் சிறப்பு மிக்கது.
莺
சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தபோதே அவனைத் தாலாட்டிச் சீராட்டி, அம்புலிகாட்டி அமுதூட்டி அன்பையும் பாசத்தையும் சொரிந்து அருமையாக அவனை வளர்த்தவள் அவள். அந்தத் தம்பி, இப்போது செத்துக் கிடக்கின்றன். அவனைப் போய்ப் பார்க்க முடியாத பெருந்துயர் அவளுக்கு. காதலே பெரிதெனக் கருதி ஒரு டிரைவருடன் அவள் ஓடிய காரணத்தினல், பிறந்த வீட்டுக்கு அவள் போகவே முடியாது.
சாவீட்டு அழுகுரல், அந்தத் தமக்கையின் காதில் விழ, அவள் புழுவாய்த் துடிக்கின்ருள். தம்பியை வளர்த்த அந்த நினைவுகளெல்லாம் தோன்றித் தோன்றி அவளைச் சித்திரவதை செய்கின்றன. இனிப் பொறுக்கவே முடியாது என்ற நிலையில், அவள் பிறந்த வீட்டுக்கு-சா வீட்டுக்கு-ஒடுகின்ருள். வேதனை வெள்ளம் வெடித்துப் பாய, தம்பி. *’ எனக் கதறிக்கொண்டு அந்த உடலின்மேல் அவள் விழுந்து புரளும்போது, போடி வெளியே! உனக்கொரு தம்பியா ? அவன் இண்டைக்குச் செத்துப் போனன். ஆணுல், நீ அந்த டிரைவரோடு போன அண்டைக்கே அந்திரட்டி செய்து போட்டன் ' என்ற தந்தையின் குரல் நாராசமாக ஒலிக்கின்றது. இப்படியும் ஒரு தந்தையா ?
முள் என்ற இக்கதையில் வரும் கதாநாயகி, இங்கே பிரசங்கம் செய்யவில்லை ; போர்க்கோலம் பூண வில்லை, அமைதியாக, அனதையாக வெளியே செல் கின்ருள் அவளுக்காகப் பரிதாபப்படும் நாம், சமுதாயத் தின் ஏற்ற இறக்கங்களையும் அவளுடைய தந்தையின் வரட்டுக் கெளரவத்தையும் கண்டு வெறுப்பும் வேதனையும் அடைகின்ருேம். ஆசிரியரின் பிரச்சாரமோ
11

Page 8
Χ
போதனையோ இன்றி, வாசகர் இத்தகைய உணர்ச்சி களுக்கு ஆளாவது, ஆசிரியரின் கதை சொல்லும் திறனையே காட்டுகின்றது. -
※
தொழிலாளர்கள் வேலைநிறுத்தஞ் செய்கின்றனர். அவர்களுடன் சேர்ந்த மரியானுக்குத் தர்மசங்கடமான நிலை ஏற்படுகின்றது. அவனுடைய மனைவிக்குப் பிரசவ வேதனை. உடனே ஆஸ்பத்திரியிற் சேர்க்கவேண்டும். ஆனல் கையிலே பண மில்லை. தொழிற்சங்கத் தலைவனும் உதவி செய்யக்கூடிய நிலையிலில்லை. தன் சக தொழிலாளி களுக் கெதிராக வேலைக்குச் செல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. அவன் கருங்காலி யாகின்றன். வெளியூரில் அவன் வேலை செய்துகொண்டிருக்கும்போது, வேலைநிறுத்தக்காரர் அவனை நையப்புடைத்து மூர்ச்சை யடையச் செய்கின்றனர். இந்த நிலையில், அவனுடைய மனைவிக்கு இரத்தம் செலுத்தப்படவேண்டிய தேவை ஏற்படுகின்றது. ‘கருங்காலி’யான மரியானுக்குப் பாடம் படிப்பிப்பதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறேது ? வேறு கதாசிரியர்களின் கையில், இக்கதை, வெறும் பிரச்சாரக் கதையாகத் திரிந்திருக்கும். யாழ்வாணன் ' அத்தகைய சபலத்திற்கு அடிமையாகவில்லை. தொழி லாளரின் ஒற்றுமையைவிட, மனிதாபிமானமே பெரிது; மேலானது என்ற உயர்ந்த எண்ணம் தொனிக்கும்படி ஆசிரியர் * சங்கமம் ? கதையை முடித்திருப்பது பாராட்டிற்குரியது.
器
* எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் ' என்ற உயர்ந்த இலட்சியத்துடன் அமரகாவியங்கள் படைக்கும் எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கை இன்பம் நிறைந்ததா? அவனுடைய இலக்கியப் பணிக்கு ஆதார சுருதியாக இருக்க வேண்டிய அவனது மனைவியே அவனை வெறுக்கின்ருள். எனக்குக் கிடைத்தது நரக வாழ்வு. உலகிற் பிறந்தால், இப்படிப்பட்டவருக்கா வாழ்க்கைப்

xi
படுவது ? என்று மனம் குழம்புகின்ருள். ' நாம் நிகழ் காலத்துக்காக வாழ்வதிற் கருத்துக் கிடையாது.
வாழ்ந்துவிட்ட பிறகும் நமக்கு வாழ்விருக்க வேண்டும்'
என்ற கணவனின் இலட்சியம் அவளுக்கு விளங்கவே யில்லை. ஆனல், கணவன் இறந்தபின்னர்தான், அவ னுடைய அருமை பெருமைகளை அவளால் உணரமுடி கின்றது. கர்ணனைத் தேரோட்டியின் மகன் என நினைத்து அவனது வாழ்வை நரகமாக்கிய அவனது மனைவியைப் போல் தானும் நடந்ததை எண்ணிக் குமுறுகின்ருள். எழுத்தாளனின் பரிதாப வாழ்க்கை, இலட்சியத் தா கம், சிருஷ்டி வெறி ஆகியவற்றைக் கலைநயத்துடன் அமரத்துவம் என்ற கதையில் ஆசிரியர் கூறுகின்றர்.
% தீராத தொற்று நோய் காரணமாக மனைவியாலும், மாமியாலும், உற்ருர் உறவினராலும் வெறுத்தொதுக் கப்படும் பரிதாபத்துக்குரிய ஒருவனைக் கோடை யிலும், ஊரார், உலகத்தாரின் கேலிக்கும் இகழ்ச்சிக்கும் ஆளான தன் பைத்தியக்காரக் கணவனைக் கொஞ்ச மேனும் வெறுக்காமல் அன்போடு பேணிவரும் ஒரு மனைவியைக் கொழுகொம்பு என்ற கதையிலும் காண் கின்ருேம். இரண்டுமே நல்ல கதைகள்.
% மொட்டைக் கடிதத்தை நம்பித் தன்னைப் புறக் கணித்த அத்தான் துரை, பின்னர் உண்மையை உணர்ந்து, மணம் செய்வதற்கு முன்வரும்போது, அவ னுடைய தடம் புரளும் தன்மையை வெறுத்து, அவனைப் புறக்கணிக்கும் புதுயுகப் பெண்ணுன இராணியைக் கன்னிமையிற் சந்திக்கின்ருேம்.
ஆசிரியரின் கற்பனைத் திறனையும் மொழி வளத்தை யும் காட்டும் பல பகுதிகள் அங்கங்கேயுள்ளன.
கதைகளை வாசிக்கும்போது, "இப்படியும் நடக்குமா? இது சரியா? இதை நம்பலாமா?-போன்ற கேள்விகள், சந்தேகங்கள் எழாதவாறு வாசகர்களைக் கதாபாத்தி

Page 9
xii
ரங்களுடனும் நிகழ்ச்சிகளுடனும் ஒன்றிக்கச் செய்து விடுவதிலேதான் ஆசிரியருடைய இலக்கிய வெற்றியின்
இரகசியம் இருக்கின்றது. எந்த அணியிலும் சேராமல்
மனிதாபிமானக் கண்கொண்டு ஆசிரியர் அனைத்தையும் நோக்குகின்ருர் என்பதை இத் தொகுதியிலுள்ள
கதைகள் துலாம்பரமாக்குகின்றன. என்னுடைய இக்
கருத்தை இப்போது ஒப்புக்கொள்ளாதவர்களும், கதை களைப் படித்தபின்னர் நிச்சயமாக ஒப்புக்கொள் வார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
* கலைச்செல்வி’, சிற்பி கந்தரோடை, சுன்னகம், 27-12-69.
 

பதிப்புரை என்னுரை அணிந்துரை அமரத்துவம்
d Th1 95LDLs), G)LD (TL 60) l–
புடம் கோடை
முள் ஆதாரம் கன்னிமை கொழுகொம்பு மலர்ந்த வாழ்வு
அறுவடை பிரவாகம்
பக்கம்
Vi
Vii
13
22
36
42 49
58
73
85
91
98
I 0.7

Page 10

அமரத்துவம்
* வீட்டைச் சூழ்ந்துவரும் இருளை விழுங்கும் மெழுகு வர்த்தியின் ஒளியிலே சகல வஸ்துக்களும் துலாம்பர மாகத் தெரிகின்றன. ஆனல், ஒளியைத் தந்த மெழுகு வர்த்தியின் கதி? உருகி உருகித் தன் உருவத்தையே அழித்துக் கொள்கின்றது. இதுதான் உண்மையான இலட்சியவாதிக்குரிய இலட்சணம்.'
* பிரபல எழுத்தாளர் ? ஞானி ' தனது சிறந்த சிறு கதையொன்றிற் குறிப்பிட்டிருக்கும் உண்மையிது. தான் கண்ட கற்பனை இலட்சியவாதிக்கு எடுத்துக்காட்டாகவே அவர் விளங்கினர்.
* தனது சிந்தனையின் ஒளியினலே சமுதாயம் என்ற
வீட்டைச் சூழ்ந்த இருளை அழித்து-ஒளியுமிழ்ந்து தானும் உருகிக் கரைந்துவிட்டார்.'
கூடியிருந்த கூட்டத்தினருக்கு வரவேற்புரை நல்கும் போது செயலாளர் சொன்னவை என் செவிப்பறை யைத் தாண்டி நெஞ்சத்தை ஊடுருவியபோது, கண்கள் பனித்தன.
செயலாளரின் பேச்சோடு ஒன்ற முடியாத பலவீன உணர்ச்சி என்னுள் கவியும்போது நீர்த்துளிகள் திரை யாகி என் முன்னிருந்தனவற்றைத் தெளிவாகத் தெரிய விடாது மறைக்கின்றன. முன்முனைச் சேலையினுற் கண் களைத் துடைத்துக்கொள்கிறேன்.
மேடையில் இடப்பட்ட மேசைமீது பூரண கும்பம். பக்கமெங்கும் தோரணங்கள்-சாளரங்களுக்கூடாக வரும்

Page 11
2 அமரத்துவம்
காற்றில் அலைகின்ற தோரணங்கள். பூரண கும்பத் துக்கு அருகேயுள்ள குத்துவிளக்குகளின் திரிகள் அத் தனையுங் காற்றை அக்கறைப்படுத்தாது ஒளிதருகின்றன. குத்துவிளக்குச் சுடரில் புன்சிரிப்புத் தவழும் அமைதி யான முகம். எதையும் அளந்து அறிவென்னும் உலையிலே புடமிடும் தீட்சண்ய விழிகள். காரிய சாதனையையே கருத்தாகக்கொண்டு விளங்கும் உள்ளத்துக் கிசைவாக மெளனம் சாதிக்கும் வாய்.
இந்த உருவம் வெறும் புகைப்படந்தான்.
நிணமும் சதையும் எலும்புமற்ற வெறும் பிரதிமை is a a a solo உயிரோடு உலவியபோது. என் வாழ்வின் கொழுகொம்பாக இருந்தாரே ! அவர்தான் இவர். அவரின் சாயல் இது.
நினைவுடன் நீர்முத்துக்கள் கண்களில் மீண்டும் பனித்தன.
இன்று அழுவதற்காக ஆக்கப்பட்டவள்தானே நான்.
அதைத் தடுப்பது சாத்தியமல்ல.
அவரைச் சிலாகித்துப் பேச, அவரது இலக்கிய சேவையை உய்த்துணர்ந்த எத்தனையோ கலைஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் இங்கே கூடியிருக்கின்றனர்.
இதைக் காணும்போது பெருமிதத்தில் இதயம் பொங் கித் ததும்புகிறது. உருவப் படத்துக்கு மாலை சூட்டு கிருர் ஒருவர். தனிப் பூவுக்கு இல்லாத பெருமை மாலைக் குண்டு. சிறந்த எழுத்தாளர் என்ற மாலையைத் தொடுக்க உறுதுணை பயந்த நாராக விளங்கினேனும் நான். ?
அந்த நிழலிற்கூட நிற்க இலாயக்கற்ற எனக்கு இங்கு கெளரவம் ? காலத்தாற் சாகாத அந்தக் கலைஞருக்கு வாழ்க்கைப்பட்டதன்போதுதான் இது. இருந்தும் பெருமையிற் பங்குகொள்ளவந்த எனக்கு உரிமை சிறி தாவது வேண்டாமா ?
 

அமரத்துவம் 3
மனக் குளத்தில் ஆயிரம் கேள்வி அலைகள் பொங்கிப் பிரவாகிக்கின்றன.
※ s
தலைவர் எழுந்து, 'அன்பர்களே ! எம். காலத்தில் வாழ்ந்து, எம் நாட்டுக்கு நல்லிலக்கியம் படைத்துத் தந்த ஞானி " அவர்கள் அகாலத்தில் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். ஆனல், அவர் தந்த இலக்கியங்கள் காலத்தை எதிர் நீச்சலடித்து இன்றும்-என்றும் நின்று நிலைக்கக்கூடியவை. அவரது பிரிவு எமக்கு மட்டுமல்ல, இதோ, மேடையிலமர்ந்திருக்கும் திருமதி ஞானி அவர் களுக்கும் குழந்தைகளுக்குமே ஈடு செய்ய முடியாத நட்டமாகும். அம்மையார், அவருக்கு உறுதுணையாக விளங்கி, அவர் படைத்த நல்லிலக்கியப் புலத்துக்குப் LIFăTu? " l-Tri: ... ... ... '
தலைவர் மேலுந் தொடர்கிருர்,
அந்தப் பேச்சைத் தொடர என் உள்ளம் ஒருப்பட
என்னுல்தான் அவர் இலக்கியம் வளர்ந்து பயன் கண்டதா ? இல்லை ! மெருகிட்டுப் போலியைப் புதுமை யென்று அறியாது பறைசாற்றும் சொற்கள் இவை. இதிற் கடுகளவாவது உண்மையுண்டா? மனச்சாட்சியின் உறுத்தலினல் என்னுள் எழுந்த கேள்விகள் இவை. அவரது புகழில் எனக்குப் பங்குண்டாம். அப்படியென்று தான் உலகம் இன்று கூற முனைகிறது. அதில் எனக்குப் பெருமை ? எனது ஒத்துழைப்போடுதான் அந்த மலர் மாலை சமூகத்திற் கெளரவம் பெற்றதா? நெஞ்சம் உண் மையைத் தளை செய்துவிட முடியவில்லையே.
ஒரு பெண் வாழ்க்கையில் விரும்புவது அத்தனையும் வெறும் புகழ் ஒன்றுமட்டும் என்பது நியதியாக இருந்து விட்டால் அவர் எப்படி யெப்படி எல்லாமோ இருந்து

Page 12
4. - அமரத்துவம்
விட்டுப் போகட்டுமென மெளனியாகியிருக்கலாம். ஒத் திசைந்து சென்றிருக்கலாம். வளம் குறைந்துவிட்ட வயலில் வசதியென்ற விளைச்சலை எதிர்பார்த்து ஏங்குவது ஒரு பெண்ணின் இயற்கைதான். இதுவே பொதுவான
அவர் அடிக்கடி சொல்லும் கருத்துக்கள் பேணுவின் மையூடாக வந்து உலகத்துக்கு வெளிச்சமாகாதவை. என் கண்களில் துளிர்க்கும் ஒரு சில துளிகளைத் துடைத்து -வரண்டுவிட்ட எனது உதடுகள் திறந்து சிரிப்பதற் காகச் சொல்லியவை ஏராளம் ! நான் ஒரு இரசிகையாக இருந்திருந்தால் அதையெல்லாம் எழுதிக் காட்டலாம். அவை காற்றுடன் கலந்து பிரகிருதிக்குத் தத்துவம் புகட்டுகின்றனவோ?
அந்தத் திருவுருவம் மறைந்து ஆண்டுகள் பத்துக்கு மேல் காலக் கடலுட் சங்கமித்துவிட்டன. காலத் தச்சன் பொல்லாதவன். அவன் வெட்டிய மரத்தை ஒட்டும் ஆற்றல் எவருக்குண்டு ? கண்ணிராற்றல் தடுத்துவிட முடியுமா ?
பசுமையான - இளமையின் மதாளிப்பு மிகுந்த காட்சிகள் சிகிரியாக் குகைகளில் வரைந்துள்ள சித்திரங்க ளாகி என்முன் நிற்கின்றன. கால நதியினலும் வர்ணம் குலையாத புதுமைகளவை ! நினைவில் நித்தியத்துவம் பெற்று நிற்கின்றன.
உற்றவர், பெற்றவர் கூடிய சபை. குருக்களின் முன் ஓம குண்டம். அதனின்றும் திவ்வியமான புகை யெழுந்து எம்மிருவர் முன் திரையாக நிற்கின்றது. ' கன்னியாம் கனகசம் பன்னும் . ** இத்தியாதி மந்திரங்களைக் குருக்கள் உச்சரித்துக்கொள்ள, மங்கல நாணை என் கழுத் தில் இட்டபடி அவர் பார்க்கும்போது, என் கழுத்தி லும் தலையிலும் அலங்காரத்துக்கிடப்பட்ட நகைக ளுடன் இயற்கையாக ஒன்றிவிட்ட நாணம் தலைநிமிர விடாமற் பாரமாக உறுத்தச் செய்தது.

அமரத்துவம் 5
* உன்னை, உன் முகத்தைக்கூடக் காட்டமாட்டேன் என்றுவிட்டாயே! அவ்வளவு வெட்கமென்னத்துக்கோ?? ள்ன்று அடுத்த தினங்களில் அவர் துளைத்துத்துளைத்துக் கேள்விக்குமேல் கேள்வியாகப் போடத் தொடங்கிவிட் டார். இது மட்டுமா? சிறிய செயல்களைப் பெரிதுபடுத்தி அவற்றை நினைவூட்டி அந்த இன்பத்தில் என்னை மறக்கச்
அந்தக் கனவுகள் நித்திய நிலைத்துவமானவையாக இருக்கவில்லையே! சாதாரண பெண்களைப் போல் ஆசா பாசத்துடன் வாழ்வுத் தடாகத்தில் நீச்சல் அடிக்கலா மென்று கருதிய என் கருத்துக்கள் நீர்க்குமிழிகளாயின.
நினைத்தது அனைத்தும் வெறுமையென்று நான் சொல் லப்போவதில்லை. ஆணுலும் எனது கொள்கைகளும் எண்ணங்களும் ஒன்றித்துப் போக முடியாத ஒரு பெரும் இலட்சியப் பாதையில் அவர் செல்லத் தொடங்கினர். அதுதான் அவரை நிர்ணயித்தது. நான் இந்த உலகத் தோடு ஒன்ற நினைத்ததில் தவறென்ன இருக்கின்றது? அது தான் என் இலட்சியம். இல்லைப் பொது நியதிதான் !
மணம் முடித்த புதிது. கண்டவர்கள் தலை வணங்க அவர் அரசினர் அலுவலகத்தில் நல்ல பதவியில் இருந் தார். அதனுல் எனக்குள்ள பெருமை அவருக்கு இல்லை யென்பேன். அந்த ஆணவத்தில் நெஞ்சம் எக்களிப்புக் கொண்டது. கெளரவமும் வசதியும் மிகுந்த வாழ்வுதான் சிறப்புடைத்து என்றுதானே உலகம் கருதுகிறது ?
வெறும் போலிக்குப் புதுமையென்று அர்த்தம் கற் பித்துக் கொண்டேன ? என்னவோ இதுதானே எனக்குப் பிடித்தது. அவர் ? உலகத்தை-அதாவது நிதர்சனம் என்று மக்கள் விழையும் எதையும் உண்மையென்று கருதாத ஒரு தனியுலகில் தானே இன்பங் காண விழைந் தார் என்பதைச் சிறுகச் சிறுக அவரைப் பற்றிய மாற்றத்திற் கண்டேன்.

Page 13
6 அமரத்துவம்
அந்த மாற்றம் உலகத்துக்குள் காலை விட்டவர்கள் தாம் நடந்து செல்லும் இந்தப் பூமியின் சுவடுகளைப் பற்றி அக்கறைப்படுவதில்லைப் போலும் . சதா எழுத்து, எழுத்து என்று அதனையே தாரக மந்திரமாகக் கொண்ட வர்களுக்கு நிச வாழ்க்கையில் இசைந்துவரும் செயல்கள் நினைவில் நிற்காமலே இருந்துவிடும். இந்த உண்மையை நான் நிதர்சனமாகக் கண்டேன்.
எழுத்தையே கருத்தாகக் கொண்ட அவராற் கட மையை ஒன்றிச் செய்ய முடியவில்லையாம். சமூகத்தை ஏமாற்ற அவரது மனச்சாட்சி மறுத்தது. திடீரெனத் தனது உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, வேட்டி யும் "நெசனலுமாக அசல் தமிழ் ஆசிரியர் போலத் தோற்றமளித்த அவர் கோலத்தைக் காண உருத்திர மூர்த்தியின் நெற்றிக் கண்ணின் தன்மைதான் என் விழி களிலும் உண்டானது.அதைக் கண்டும் அசையாத நக்கீரனுக நின்று சொன்னவை அனைத்தும் இப்போதுதான் என் செவிகளில் அமிர்தவர்ஸமாக இருக்கின்றன.
*" விஜயா ! நாம் நிகழ்காலத்துக்காக வாழ்வதிற் கருத்துக் கிடையாது. வாழ்ந்துவிட்ட பிறகும் நமக்கு வாழ்விருக்கவேண்டும். *’ எத்தனை தாற்பரியமான வார்த்தை ? இதன் பெறுமதியை எடைபோடத் தெரிந் திருக்கவில்லையே நான்.
காலத்துடன் சேர்ந்துவரும் நெருக்கடிகள், அவை பற்றி அறியவிடாத இரும்புத் திரைகளாக இறுகிக் கொண்டன. நான் அவராக இருக்கவில்லையே!.
ஏன் ? உலகத்திலுள்ள அத்தனை பேரும் இலட்சியம் என்று தமது மனேவியாஜ்யத்துக்கமைய வாழ்ந்துவரத் தொடங்கினல் அதனைச் சுற்றியுள்ள சூழ்நிலை என் னவது ?

அமரத்துவம் 7
குழந்தை பசி-பசியெனத் துடித்துத் துவண்டு கொண்டிருக்கையில் உலகத்தை மறந்து அவர் எதை யெதையோ எழுதிக்கொண்டிருக்கையில் எரிச்சலும் புகைச்சலுங் கொண்ட மனேநிலையிற் புழுங்காமலிருந்து விடப் பற்றற்ற துறவியாக நானிருக்கவில்லை.
**விஜயா ! என்னைத் தடுக்காதே ! காலம் வெகுவிரை வாக ஒடிச் செல்கிறது. அதனை விட்டுவிட்டால் மீண்டும் இழுத்துக்கொண்டுவந்து கட்டிவைக்க முடியாது !!’’ இப் படி ஏதேதோ சொல்லி, குடும்பத்தை மறந்த புதிய சொப்பன வாழ்வில் அவர் செல்லுகையில் மெளனமாகக் கண்ணிர் வடிக்கத்தான் என்னல் முடிந்தது.
ஆனல், யார் யாருக்காக இதுவரை எழுதிக் குவித் தாரோ அந்தச் சமூகம்.
நன்றிகெட்ட உலகம். எழுத்தாளன் என்ருல் வெறு மனே புகழுடன் மட்டும் வாழ்ந்துவிடக் கூடியதல்லவே a a அவனுக்கும் வாய் வயிறு உணர்ச்சி எல்லா வற்றுக்கும் மேலாக ஒரு வாழ்க்கையும் உண்டுதானே ! அதை எவர் கவனித்தார்கள்?
குழந்தை அலறுகிறது. அவர் எதையெதையோ எழுதிக்கொண்டிருந்தார்.
கைகளில் ஏதோ வேலையாக அடுக்களைக்குள் இருந் தேன். அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல முடி யாத நிலை. அந்த வேளையில் அவருடைய நினைவுகள் இந்த உலகத்தில் இல்லை.
* என்ன ? ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள். குழந் தையைக் கொஞ்சம் தூக்கி வைத்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டபடி உள்ளிருந்து வந்தேன்,
சே 1 என்ன மனிதர்.

Page 14
8. அமரத்துவம்
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் மண்ணைப் பிசைந்து பிசைந்து பகவத் நாம பஜனை செய்துகொண்டிருந்தா ராம். குழந்தை அழுதழுது வந்து மண்ணுக்குள் அகப் பட்டுக் கொண்டதைக்கூட அறிந்துகொள்ளவில்லை அந்தப் பக்தன். குழந்தை நசிவுற்றது. இது புராணக் கதை.
இங்கே !
எழுத்தாளனும் ஒரு கர்ம யோகிதான். குழந்தை அழுதழுது விட்டு விருந்தையின் எல்லைக்கே சென்று விட்டது. ஒடி வந்து குழந்தையைத் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டேன். இல்லாவிடில் குழந்தை காயப் பட்டிருக்கும்.
அப்போதும் அவர் இந்த நினைவுலகத்துக்குத் திரும்ப வில்லை.
* நீங்களும் ஒரு மனிதரா ? இந்த நேரம் குழந்தை கீழே விழுந்து மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும். இப்படி உலகத்தை மறந்து என்னத்தை எழுதிக் கிழிக் கிறியள் ?’ என்றபடி அவர் எழுதிக்கொண்டிருந்த தாளைப் பலவந்தமாக இழுத்துக் கிழித்துவிட முயன்ற
** பளார் ! பளார் ! தொடர்ந்து இரண்டு அடிகள்! கன்னங்கள் உப்பிக் கனன்று சிவந்தன.
வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி. இப்படி ஒரு துர்வாச முனிவரா அவர் ? அவரது அமைதி யான கண்கள் கொவ்வைக் கனியின் வண்ணத்தையுடைய உதடுகள் வைரித்துப் புடைத்து நின்றன.
அந்தக் கோபப் புலியின்முன் என் அந்தக்கரணங்கள் அனைத்தும் செயலிழந்து விட்டனபோன்று ஜடமாயின. என்னை நான் அடக்கி ஒடுக்கிக்கொண்டேன்.
வசதியற்ற வாழ்வு. வீட்டோடிருந்து உள்ளதை ஒழிக் கிறது மட்டுமல்லாமல் குழந்தைகளைக்கூட மறந்த நிலையா? நரக வாழ்வு இது.

அமரத்துவம் 9
எதிலுமே பிடித்தமற்ற தாமரை இலைத் தண்ணிரான அவரது வாழ்க்கையோடு ஆண்டுகள் பல ஒடிமறை கின்றன. அவரது கருண்ையுள்ளம் என்றும் நிரந்தரமாகக் கனல்வது அல்ல திடீரெனத் தோன்றும் அதிர்ச்சி திடீரென மறையும். ஆணுல் என்னைப் பொறுத்தவரை! வாழ்க்கை உலகத்தோடொட்டியது. எனவே மனங் குமுறினேன். வெறுப்பு என்னைச் சூழ்ந்தது. அதனல் அவரையல்ல - அவரது பணியைத்தான் உதாசீனப் படுத்த முயன்றேன்.
எதிர்ப்பென்ற அலைகளுக்கூடாகச் சாதனை செய்பவ ரல்லவா அவர். அதைவிட்டு விலகி உலகுடன் ஒன்று வாரா ? முடவனுக்கு ஆதாரம் கைத்தடி. அந்தத் தடியைப் பறித்துவிட்டால் தொப்பென்று கீழே விழுந்து விடுவான். அதைப் பறித்துவிடலாமா? அமரத்துவமாகி விட்ட அந்தக் கலைப்பணியில் அவர் முற்றும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டபின்.இல்லாமை என்ற வரண்ட நிலத்தில் வெறுமையும் வெப்பமும் இழைக் கின்றன. என்னுட் குறைகள் மலிந்து இந்த வாழ்வில் சமுதாயச் சூழலுடன் வந்துகொண்டிருக்கும் பிரச்சினை அலைகளுள் எற்றுப்பட்டுக் கொண்டிருந்தேன். பெட்டைக் கோழி கூவுவதால் விடிந்துவிடாது.
கரை தெரியாத அலைகளின் தாக்கத்தை எப்படித் தாங்குவது ? தனித்தவளாகக் குடும்பத்துக்குள் நுழைந்த என் கரத்தில் இப்போது மூன்று குழந்தைகள்.
இலட்சிய நெருப்புக்கு ஆகுதியாகப் பெற்றவர் தந்த உடைமைகள் கரைய - அவருக்கென்றிருந்த வீடும் ஈடு. வருவாயில்லாததோடு இருக்கின்றதும் கரைந்துகொண் டிருந்தால். நமக்கில்லாவிடினும் நமக்கிருக்கின்ற குழந்தைகளின் எதிர் காலம் என்னுகும் ? இதைப் புரிந்து கொள்ள முடியாத அவரின் கலங்கரை விளக்கத்தின் ஒளி என் கண்களுக்குத் தென்படாம லிருந்ததில் தவ றிருக்க முடியாது. இந்த நியதிகளை அவரது எழுத்துக்கள்

Page 15
10 அமரத்துவம்
உலகுக்கு எடுத்துக்காட்டின. அவை அவருக்கு மட்டும் பயன்படவில்லை.
என்றைக்குமே இதே நிலையா?. என்னுள் அது வரை முட்டி மோதிக்கொண்டிருந்த ஆத்திர உணர்ச்சியை வெளியே கொட்டத் தொடங்கினேன். அதை யெல்லாம் அக்கறை பண்ணுத அவர் தனது இலட்சியத் தடத்தில் நிதானமாக முன்னேறிக்கொண்டிருந்தார்.
இயற்கையோடு மனிதனுக்கமைந்த தேவைகளைப் பொருட்படுத்தாது அவர் எழுதிக்கொண்டோ படித்துக் கொண்டோ இருப்பார். அத்தேவைகளை மறக்கவும் அவரால் இயலும், அதன் பலன்.? தூணுன உடம்பு துரும்பானது.
பைத்தியங்களும் கலைஞர்களும் ஒரே வயிற்றில் உதித்த இரட்டைக் குழந்தைகள்தாம். இந்த உண்மை நிலையைப் புரிந்துகொள்ளப் பக்குவ மில்லாத நான் உலகத்துக்கென்றுரிய போலிக் கண்களுடன் அவரைப் பார்த்தேன். "எனக்குக் கிடைத்தது நரக வாழ்வு ! உலகில் பிறந்தால் இப்படிப்பட்டவருக்கா வாழ்க்கைப் படுவது?’ என்றெல்லாம் என்னுள்ளம் குழம்பித் தவித்தது உண்மைதான்.
கூட்டம் தனது கைதட்டலின்மூலம் பேச்சாளரின்
பேச்சுக்கு மதிப்பளித்தது.
மேடையின்மீதிருந்துகொண்டு உலகத்துக்கு வெளியே இறந்த காலத்துக்குச் சென்று முக்குளித்துக்கொண்டிருந்த நான் நடைமுறை உலகத்துக்குத் திரும்புகின்றேன்.
மேடையில் எத்தனையோ அறிஞர்கள் பேசித் தங்களின் எண்ணக்குவியல்கள் அனைத்தையும் சபைக்குச் சொல்லிவிட்டார்கள். அந்தக் கருத்துக்களில் எல்லாம் எனக்குப் புரிந்துகொள்ள முடியாத, புரிந்துகொள்ளத் தவறிய உண்மைகள் துலாம்பரமாக விளங்கின.
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய நினைத்து இருளையே சூரியணுகப் பாவிக்கவேண்டியதுதான ? நான

அம்ரத்துவம் I
அவரை வெறுத்தேன்.? இப்போதுதான் நெஞ்சில் அது உறைக்கிறது.
அவரையா ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை என்று கற்பனை பண்ணினேன்?
கண்கள் கட்டற்ற குளமாயின. அந்த முகம் நினை வில் தோன்றுகிறது.
*" விஜயா, வாழும் வாழ்க்கை இறந்தகாலத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. அது எதிர்காலத்திலும் சிரஞ்சீவித்துவம் பெறவேண்டும். ’’ இப்படி இப் போதும் சொல்லுவதாக நெஞ்சம் நினைக்கின்றது.
அந்தத் தீர்க்கதரிசனம் பொய்த்துவிடவில்லை. என் கண்கள் அந்த வாழ்க்கையை இதோ காணு கின்றன. நான் உணரத்தவறிய உண்மைகள் எல்லாம் என் செவிகள் குளிர அமிர்தவர்ஷமாகக் காதில் நுழை கின்றன.
உலகம் அவரைத் தனக்குச் சொந்தமானவர் என்று கூறிக்கொண்டாலும் அவர் எனக்குமட்டுமே உரியவர் என்பதனல் இந்தப் பெருமிதம் எனக்குமட்டும் தனிச் சொத்து. அதை எவர் மறுக்கமுடியும்? வெறும் எழுத் தையும் கருத்தையுந்தானே உலகம் எடுத்துக்கொண்டது. நான். ?
உண்மைகள் உண்மைகள்தாம் . நான்கொண்ட கருத் துக்கள் நிதர்சனத்துக்கு உண்மையாகத் தெரிந்து என்னை ஏமாற்றியதுதான் உண்மை.
மகாபாரதம் காட்டிய கொடைவள்ளல் கர்ணன். அவனைத் தேரோட்டியின் மகன் என்று கருதி வெறுத்து வாழ்வை நரகமாக்கினுள் அவன் மனைவி. குருச்சேத் திரப் போர்க்களத்தில் அவன் அர்ச்சுனன் கணக்கு இரையாகியபின்தான் அவன் முடிமன்னர் குலத்தவன் என்ற உண்மையை அவளால் உணரமுடிந்தது.
பேதைமை நிறைந்த பெண்ணுள்ளத்தில் ஊழிக்காலந் தொடக்கம் இந்தப் பண்புதான் குடிகொண்டிருக்கிறதோ?

Page 16
12 அமரத்துவம்
என்னுடைய அவர் இந்நாட்டின் இலக்கிய சாம் ராட்” என்ற உண்மையும் இப்போதுதான் வெளிச்ச மாகின்றது.
சாவிலா நான் வாழ்வைக் காண்கின்றேன் ?
'திருமதி ஞானிஅவர்கள் இப்போது பேசுவார்கள்' என்று கூறியபடி தலைவர் என்னை அழைத்தார். என் கண் களிலிருந்து நீர்த்துளிகள் பிரவாகிக்கின்றன.
சபையின் முன்னின்று அவரது பிரதிமையிருக்கும் திசையைப் பார்க்கின்றேன். அந்தத் திருவுருவத்தின் தோற்றத்தைக் காணக்காண என்னுள்ளே கிளர்ந்து வரும் வேதனை கண்களில் நீர்த்திரையிடுகின்றது.
கண்களால் இறந்தகாலத்துக்கு இப்பால் நிகழ் காலத்திலும் அவரைக் காண்கின்றேன். அவர் நிகழ் காலத்தைத் தாண்டி எதிர்காலத்திலும் வாழப்போ கின்ருர், என்றுமே அழியாத அமரத்துவம் வாய்ந்தது அவரது கலைப்பணி.
என்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு, 'மதிப்புக் குரிய தலைவர் அவர்களே, அறிஞர் பெருமக்களே, சபையோர்களே ! அமரத்துவமடைந்துவிட்ட அவர் வாழ்க்கையை, கலையை, எழுத்தை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீர்கள். பலவருடங்கள் அவருடன் வாழ்ந் தும் என்னுல் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிய வில்லையே என்பதுதான் எனக்கு வேதனையளிக்கின்றது. அவர் அமரர். நான் வெறும் ஜடம் ' என்று கூறிய தற்குமேல் தொடர்ந்தும் பேச முடியவில்லை. கண்கள் பனிக்க, நான் கதிரையில் உட்காருகின்றேன்.
என் சிறுபேச்சைத் தலைவர் அடக்கத்தின் பண்பு எனக் குறிப்பிடுகிருர். ஆனல் உண்மை எது ? என்பது எனக்குத்தான் புரியும். அழியும் பொருள் அழியாத பொருளுக்கு விளக்கம் கொடுக்க முற்படுவது பேதைமை u Gj606)JIT ?

சங்கமம்
பட்டணத்தின் ஜடத்துவம் மாறி உயிர்த்துவம் தலைகாட்டும் அந்த உதயவேளையில்.
உலகத்தைத் தனது கொடுங்கரங்களாற் பிடித்துச் சிறைவைத்த இருளின் ஆதிக்கம் கிழக்குத்திசையில் தலைகாட்டிய கதிரவன் ஒளியைக் கண்டு ஆற்ருமையோடு திரும்பிப் பார்த்துக்கொண்டு, வழிநடக்கத் தொடங் கியது. கடலின் மேனியைக் கலக்கியடித்துக்கொண்டு வள்ளங்கள் சிலவற்றில் மீன்பிடித் தொழிலாளர்கள் கரைக்குத் திரும்பத் தொடங்கினர்.
கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் “மஸ்ரர்" என அழைக்கப்படும் மலகூடத்தொழிலாளர் கூடுமிடத்தில் ஒரே அமைதியின்மை நிலவுகின்றது. வேலைநிறுத்தஞ் செய்யும் தொழிலாளர்கள் ஒருபக்கத்திற் கும்பலாக நின்று வேலைக்குச்செல்லும் தொழிலாளர்களை ஏதோ அதிசயப் பிறவிகளைப்போல நோட்டமிடுகிறர்கள். அவர் களின் கண்களில் துவேஷம் கலந்த அசூயை குலவுகிறது. நெஞ்சின் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளாத வாயி லிருந்து குரோதமான வார்த்தைகள் வெடித்துச் சிதறு கின்றன.
'ஏய் கருங்காலிகளே ! உங்கள் இனத்தை நீங்களே காட்டிக்கொண்டிருக்கிறீர்களே! எல்லோரும் ஒற்றுமை யாக வேலைநிறுத்தஞ் செய்வோம் வாருங்கடா !'
இது அழைப்பு. ** எடே கறுப்பா ! நீயும் அவங்களுடன் சேர்ந்து விட்டாயா? வேலையால் வாடா ஒருகை பார்க்கிறேன் !'

Page 17
14 அமரத்துவம்
அழைப்பைச் செவிமடுக்காததால் இப்படி ஒரு
மிரட்டல்.
* டேய், மினக்கடாமற் கெதியாய்ப் போங்கடா, ஏய்
கங்காணி சுடலைமுத்து, எங்கே ஒருவரையும் காணவில்லை ?
நீ ஏதோ ஆட்களைக் கொண்டுவந்து வெட்டிப் புடுங்குறன்
எண்டாய், ஒருவரையும் காணவில்லை."
ஒவசியரின் கேள்வி.
* ஒம் ஐயா, எல்லோரும் வாறன் என்று சொல்லி வேண்டிக் குடிச்சாங்கள். வெறி முறிஞ்சதும் அங்காலைப் பக்கம் சேர்ந்துவிட்டாங்கள் போலை, உதுதான் உவங் கடை குணம். பொறுக்கியள். *
* இப்ப என்ன செய்கிறது ? ஆரும் பெடியளை எண்டாலும் போய்க் கூட்டியாவன்.'
அவரது ஆணையைச் சிரமேற்கொண்டு ஒடிச்சென்ற கங்காணி சுடலைமுத்து சில பையன்களைக் கூட்டிவரு கிருன். ஒவசியர் அவர்களுடைய பெயர்களைப் பதிந்து விட்டு வேலைக்கு அனுப்புகிறர். அவருடைய முகத்தில் ஏதோ சாதிக்கமுடியாததைச் சாதித்துவிட்டதாக எண்ணம். மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தை எப்படி யும் பெற்று இன்னுஞ் சிலகாலம் தொடர்ந்து யாழ்ப் பாணத்தில் இருக்கவேண்டுமென்ற நினைப்பு மிதப்பிலே தான் அவருக்குக் கண், வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற கடமையுணர்விலும் பார்க்க மேலதிகாரிகளிடம் " காக் காய் ' பிடித்துத் தனது பதவிகாலத்தை நீடிக்கவேண்டு மென்ற சுயநலத்தின் பம்பரமாய் அவர் சுழலத் தயா ராகவிருக்கிருர்,
兴 米
வேலைநிறுத்தம் தொடங்கி இன்று இருபத்தைந் தாவது நாள். நிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. அறிக்கைகள் என்னவோ சேவைகள் ஒழுங்காக நடைபெற்றதாகக் கூறுகின்றன.

சங்கமம் 15
மரியான் வேலைநிறுத்தம் செய்தோரில் ஒருவன். வேலைநிறுத்தம் இரண்டொரு நாட்களில் முடிவடைந்து விடுமென நம்பியிருந்தான் அவன் சுமுகமான முறையில் முடிந்திருக்கவேண்டிய வேலைநிறுத்தம் யார் பக்கத்து அலட்சியத்தினலோ நீண்டு செல்கிறது.
மரியானின் மனைவி ருேசம்மா நிறைமாதக் கர்ப்பிணி. இதுதான் பெறுமாதம். வேலைநிறுத்தக்காரர்களுக்கு அதற்கு முந்திய மாதச் சம்பளம் கொடுபடவில்லை. சம்பளத்தைக் குறிப்பிட்ட நாளில் கொடுக்காவிட்டால் தொழிலாளர் வேலைக்குத் திரும்புவார்கள் என்ற எண்ணம்போலும், அதற்கு இடமேற்படவில்லை.
* பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் ' என்பதை நன்ருக உணர்ந்த-அவர்களை ஆதரிக்கும் தொழிற்சங்கம் வழங்கிய அரிசி மற்றுஞ் சாமான்களைக்கொண்டு சமாளித் துக்கொள்வதனல் தொழிலாளர்களினல் அதை நீடிக்க முடிந்தது.
ருேசம்மாவின் பிரசவவேதனை தொடங்கிவிட்டது: மரியானின் இதயமும் நோக்காடு கண்டது. அவனுடைய கையில் ஒரு சதமுமில்லை. தொழிலாளருக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பதையே தொழிலாகக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள், வேலைநிறுத்தஞ் செய்து வெளியில் நிற்கும் அவனிடம் பணத்தைக் கொடுப்பார்களா ? சங்கத் தலைவரிடஞ் சென்று நிலைமையை விளக்கிக் காசு கேட்டான். அவரும் இல்லையென்று சொல்லிவிட்டார். என்ன செய்வதென்றே புரியவில்லை. வீட்டில் ருேசம்மா பிரசவ வேதனையால் அவதிப்படுகிருள். செலவிற்கோ பணம் இல்லை. கேட்கக்கூடியவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. எல்லோரிடமும் இல்லை என்ற பதில் தான். இல்லை என்று சிவனே என்று இருந்துவிடக்கூடிய நிலையா இது ?
இறுதி முயற்சியாகத் தங்கள் சங்கத்தின் தீர்மானத் துக்கு எதிராக வேலைசெய்யும் தொழிலாளர்களின் கங்காணியாகிய சுடலைமுத்துவைக் கேட்டுப் பார்ப்

Page 18
16 அமரத்துவம்
போம் என எண்ணினன். வேலைநிறுத்தத்தில் நாம் வேறு பாடுகொண்டிருந்தாலும், தொழிலாளச் சகோதரர்கள் என்ற எண்ணத்திலாவது உதவுவார்கள் என்ற நப்பாசை,
கங்காணி சுடலைமுத்துவிடம் அவனது சகாக்கள் பலர் இருந்தனர். சுரணையற்றவனுக வந்த மரியானைக் கண்ட சுடலைமுத்து " ஒ மரியான ? என்ன சங்கதி ? நீங்கள் எல்லாம் இந்தக் கருங்காலிகள் இருக்குமிடம் வரலாமா?’ என்ருன். அவனது கேள்வியில் கிண்டலுங் கேலியும் தலைகாட்டின.
"அப்படி யெல்லாம் சொல்லக்கூடாது கங்காணியார். என்ர பெண்சாதி நிறைமாதக்காரி, வயிற்றில் நோக்காடு கண்டிருக்கு. கையிலே காசும் இல்லை. அதுதான் உம்மட்டை வந்தனன்.”
** ஏன் உங்கடை தலைவரைக் கேட்கிறதுதானே. உங்களுக்கு அவர்தானே வேணும் ?"
** அவரிடம் போனேன் ; கையை விரித்துவிட்டார். '
* ஒ அப்படியா சங்கதி? அப்ப நான் ஒன்று சொல்லறன் நீ செய்கிறியோ ? உடனே ஐம்பதுளூபா தாறன்.'
** நான் என்ன செய்யவேணும் ???
** நாளைக்கு வேலைக்கு வரவேண்டும்.”
** என்ன முழிக்கிருய் ?'
*" ஒன்றுமில்லை வந்து.'
* உந்த இழுவல் கதையென்னத்துக்கு ? அப்படி யானுல் என்னிடம் காசு இல்லை."
வந்த சுவட்டிலேயே திரும்பிவரும் மரியானின் மனதிற் போராட்டம். நோக்காடுற்ற ருே சம்மாவின்
முகமே முன்னுக்கு நிற்கிறது. அவள் துடித்துத் துவஞம் காட்சி அவனது சிந்தையில் நீக்கமற நிறைகின்றது.

சங்கமம் 17
வேலைக்குப் போனுற் பணம் கிடைக்கும். அவளை ஆஸ் பத்திரியிற் சேர்த்து வைத்தியஞ் செய்யலாம். அதுக்குக் கங்காணியாருடைய காசுங் கிடைக்கும். பைத்தியம் போலத் தன்னிற் பேசிக்கொண்டு சென்ருன். வேலை நிறுத்தஞ் செய்கின்ற காத்தானும் கறுவலும் நல்ல குடி போதையில் அந்த வழியில் ஆடியசைந்து வந்தனர். வேலைநிறுத்தத்திற் சேராத சூசைமுத்து தள்ளுவண்டி யைத் தள்ளி வருகிருன்.
** அடே கருங்காலி !' கறுவல் உரத்துக் கத்துகிருன், மரியானைக் கண்ட வர்கள் வாய்க்குள் சிரித்துத் தம் அன்பைத் தெரிவிக் கின்றனர். குடிசை சமீபித்துவிட்டது. குடிசைக்கு முன்னே நாலைந்து பெண்கள் நிற்கின்றர்கள். உள்ளே ருேசம்மா நோக்காட்டினல் துடித்துக்கொண்டிருந்தாள். மரியான் அங்கு தரித்து நிற்கவில்லை. அவனது கால்கள் கங்காணி சுடலைமுத்துவிடம் இழுத்துச் சென்றன. ஐம்பது ரூபா கைக்கு வந்தது. வாடகைக் காரொன் றைப் பிடித்துவந்து ருேசம்மாவை ஆஸ்பத்திரியிற் சேர்ப்பித்தான்.
*" இவ்வளவு நேரமும் என்ன செய்தநீங்கள். நேரத் தோடை வாறதுக்கென்ன ? ? மருத்துவிச்சியின் கேள்வி.
** ஏன், ஏதும் வில்லங்கமோ ?* * ஒம். பிள்ளை குறுக்கே கிடக்கு அதோடை பெல வீனமாகவுமிருக்கு.'
** அம்மா தாயே நீதான் காப்பாத்தவேண்டும்.' * டாக்குத்தரை வீட்டிற் போய்க் காண். அவர் வந்து பார்ப்பார்.'
“ “ Frful Lb LDIIT. ’ ” மரியான் டாக்டரின் வீட்டுக்குப்போய் அவரைக் கண்டான். கதைத்தான்.
** நீ போ, நான் எல்லாங் கவனிக்கிறன்.'
அ - 2

Page 19
18 அமரத்துவம்
டாக்டர் இலேசாகக் கூறிவிட்டுப் போய்விட்டார்.
* பாலைத்தீவு அந்தோனியாரே, நீதான் என் பெண் சாதியைக் காப்பாத்தவேண்டும் ' என்ற கோரிக்கை யுடன் வீடு திரும்பினன்.
臀 ※ 游 பொழுது விடிந்தது. மரியான் மஸ்ர ‘ருக்குப் போனன். அங்கு வழக்கம்போல இரு பகுதியினரும் இருந்தனர். மரியான் ஒவசியரிடஞ் சென்று தன்பெயரைக் கொடுத்தான்.
டேய் மரியான்! அட துரோகி-கருங்காலி !' என்ற அர்ச்சனை ஒருபக்கம்.
வரவேற்கும் கைதட்டல் இன்னெருபக்கம்.
மனதை இரும்பாக்கிக்கொண்டு தலையைக் குனிந்த படி வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவனை டேய் மரியான் ! வேலை செய்துவிட்டுப் பன்னிரண்டு மணிக்கு இங்கு வா. கைதடியில் குழி வேலைக்குப் போகவேண்டும். " ஓவர் ரைம் தரலாம் ' என்ருர் ஒவசியர்.
" ஓம் ஐயா.'
மரியான் யந்திரம்போல வேலைசெய்து கொண்டு போனன். அவனது சிந்தனையெல்லாம் ஆஸ்பத்திரியில் கிடக்கும் ருேசம்மாவின் மீதே இருந்தது.
மரியான் வேலை முடித்துத் திரும்பிவர ஒருமணிக்கு மேலாகிவிட்டது. ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்து சென்ருன், நேரம் தவறியமையாற் காவலாளி உள்ளே போக விடவில்லை. ருேசம்மாவைப் பார்க்க அவனல் அன்று முடியவில்லை.
ஒவசியர் சொன்னபடி கைதடிக்குப் போகவேண்டும் என்ற எண்ணத்திற் கடையில் இரண்டு வடையைக் கடித்து வெறுந் தேநீருங் குடித்துவிட்டு லொறியை எதிர்பார்த்து நின்றன்.
 

சங்கமம் 19 மூன்று மணிக்கு லொறி கைதடியை நோக்கிப் புறப்பட்டது. லொறியில் மரியான் உட்பட நான்கு தொழிலாளர்கள் இருந்தார்கள். வழியில் ஆரியகுளத்தடி யில் அடுக்கிவைத்திருந்த மல வாளிகளையும் ஏற்றிக் கொண்டார்கள். கைதடியில்தான் இங்கிருந்து மலத்தைக் கொண்டுபோய் வெட்டிப் புதைப்பது வழக்கம்.
லொறி கைதடியைச் சமீபித்ததும் லொறியின் மீது கல்வீச்சு நடைபெற்றது. லொறி நிறுத்தப்பட்டபோது பதினைந்துபேர் கூட்டமாக வந்து தாக்கினர்கள். ஒவசியரும் லொறி டிரை வரும் ஒடி மறைந்துவிட்டார்கள். தொழிலாளர்கள் நால்வரும் சுற்றிவளைக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டனர். மரியானத்தவிர மற்றவர்கள் ஒரு மாதிரியாக வெறிகொண்ட கூட்டத்தினரிடமிருந்து தப்பி ஒடிவிட்டனர். மரியானுல் ஒடமுடியவில்லை.
* கருங்காலி ! துரோகி ! எங்களுடன் சேர்ந்து வேலை நிறுத்தஞ் செய்ய ஒமெண்டுபோட்டு, இப்போ காசுக்காக எங்களுக்கு மாருக வேலைசெய்கிருயா ?' என்றவாறு தாக்கினர்கள். மூர்க்கர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத மரியான் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான்.
实 张
ஆஸ்பத்திரியிலிருந்து மரியானின் விலாசத்துக்குத் தந்தி வந்தது. மரியானின் தாய் அதை வாங்கித் தந்திச் சேவகனிடமே ' தம்பி இதில் என்ன எழுதியிருக்கு. ஒருக்கா வாசித்துச் சொல்லு மோனை' என்று கேட்டாள்.
* மனைவி மிக அபாயகரமான நிலையில் இருக்கின்ருள். இரத்தம் உடன் தேவை. வரவும் ' என வாசித்துக் காட்டிவிட்டுப் போய்விட்டான் தந்திச் சேவகன்.
* ஐயோ! அடைக்கல மாதாவே ! நான் என்ன செய்ய ? அவனும் காலமை போனவன். இன்னும் வரவில்லையே' என ஒப்பாரி வைத்தாள் மரியானின் தாய்.

Page 20
20 அமரத்துவம்
அவளது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் - எல்லோரும் தொழிலாளர் குடும்பத்தினர் - என்னவோ ஏதோ என விழுந்தடித்துக்கொண்டு அங்கு ஒடி வந்தனர்.
* ஏனத்தை அழுகிருய்?' என்ருன் தொழிற்சங்கத் தலைவனகிய அந்தோனி.
" நான் என்னடா மோனை செய்யிறது? மரியான யுங் காணவில்லை. ருேசம்மாவுக்கு இரத்தம் வேண்டு மென்று தந்தி வந்திருக்கு ' என்று சொல்லியபடி தந்தியை அவனிடங் கொடுத்தாள்.
தந்தியை வாங்கிய அந்தோனி, ' சரி, சரி, நீ ஒன்றுக்கும் யோசியாதை ஆத்தை. நாங்கள் ஆஸ்பத்திரிக் குப் போய்த் தேவையான இரத்தங் கொடுக்கின்ருேம் ' என்ருன்.
என்ன சொன்னீர்கள்? இரத்தம் கொடுக்கப் போகின்றீர்களா ? ஆருக்கு.அந்தக் கருங்காலியின் பெண்சாதிக்கா? நாங்கள் வரமாட்டோம் . அவனுக்கு இது நன்றக வேணும்' என்ருன் வாலிபனும் சற்றுத் தீவிரவாதியுமாகிய மரிசலின். மற்றவர்களும் அவனது பேச்சை ஆமோதித்தார்கள்.
* மரியானின் பெண் சாதி சாகக்கிடக்கிருள். அவனை யும் இங்கு காணவில்லை."
" அவன் வரமாட்டான். கைதடியில் அவனை அடித்துப் போட்டுவிட்டோம் ' என்ருன் மரிசலின் திமிருடன்,
" அட மடையா. உதுதானடா ஒழுங்கு ? அவசரப் பட்டுவிட்டாய் மரிசலின். உது கூடாது. அவன் இண்டைக்கு வேலைக்குப் போனலும் நாளைக்கு மனம் மாறி எங்கள் பக்கம் வரக்கூடும். இப்படி அநியாய மாக அவசரப்பட்டால் எல்லாத்தையுமே கெடுத்துப் போடுவாய், தொழிலாளரை நாம் ஒன்ருக்கி எங்கள் உரிமைகளுக்காகப் போராடமுடியாது எல்லோருக்கும்

Friis, LDL) 21
இது தெரியவேண்டும். இப்போது ஆஸ்பத்திரிக்கு வாருங்கள். மரியான் மனம் மாறிப்போய்விட்டான் என்பதற்காக ஒன்றும் தெரியாத அவன் பெண்சாதியை 6T60T LIT சாகவிடவ்ேண்டும் ? எல்லோரும் ஒரே இரத்தமடா ?’ இவ்வாறு சொல்லிக்கொண்டு தொழி லாளர் தலைவன் அந்தோணி ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டான். அவனைப் பின்பற்றி மற்றத் தொழி லாளர்கள் அனைவருந் தொடர்ந்தனர்.
அவர்களது இதயங்களில் இப்பொழுது எந்தவித மான கொந்தளிப்புமில்லை. மரியானின் மனைவி ருேசம்மா சுகமாகப் பிரசவித்துவிடவேண்டு மென்ற பிரார்த் தனையே மேலோங்கி நின்றது. வழியில் இரண்டொரு தொழிலாளர்கள் தள்ளுவண்டியுடன் வந்துகொண்டிருந் தனர். அவர்கள் தங்கள் வேலைநிறுத்த இயக்கத்துக்கு எதிரான முறையில் நடந்துகொள்கிருர்கள் என்ற ஆத்திர உணர்ச்சிக்கு உள்ளத்தில் இடங்கொடாது மெளனமாக நடந்து சென்ருர்கள்.

Page 21
மொட்டை
இரண்டாவது சினிமாக் காட்சி முடிவடைந்ததன் அறிகுறியாக, இரண்டொரு மோட்டார் வண்டிகள் நடுநிசியின் பேயமைதியைக் குலைத்துக்கொண்டு, வீதியை அமர்க்களப்படுத்திய வண்ணம் ஒடுகின்றன. அவ் வொலியைக் கேட்டுத் துடித்தெழுந்த வீட்டுநாய் குரைத்துக் குரல்காட்டிவிட்டுச் சுருண்டு படுத்துக் கொண்டது.
இத்தனை அரவத்தையுங் கேட்டபடி, கனத்த நினைவுப் பளுவை இறக்கமுடியாது திக்குமுக்காடும் நிலையில் - கட்டிலிற் புழுவாய்ப் புரண்டுகொண்டிருக்கின்றேன். உடல் அயர்வு அந்த ஒலியோடு முற்ருகப் போய் விட்டது. தொடர்ந்து படுக்க முடியவில்லை. புரியாத விடுகதையாகிவிட்ட நித்திரை இப்போதைக்கு வரு மென்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. அறையிலே இருளிற் கண்களை மூடிக்கொண்டு புரளுவதைவிட எழுந் திருப்பதுதான் இப்போதைக்குச் செய்யக்கூடிய புத்தி பூர்வமான காரியம்.
மேசையோடு பொருத்தப்பட்ட மின்சார “சுவிச் சை அழுத்தியதும் வீட்டினுள் ஏகாதிபத்தியஞ் செலுத்திய இருள் ஜன்னல் வழியாக, நல்லவனின் வரவைக் கண்டு மனம் மாளும் தீயோனைப் போல, அகலச் சென்று முற்றத்தில் நிழல்வலை விரித்தது.
படித்துப் படித்து மனம்போனவாறு வீசப்பட்ட புத்தகங்கள் மேசை மீது சிதறிக் கிடந்தன. நத்தையாக நகரும் காலத்தை, இரவின் கையிற் கொடுத்துக் கண்
 

மொட்டை 23
கொட்டக் கொட்ட அப்படியே விழித்திருப்பதைவிட, எதையாவது படித்தால் நெஞ்சிற் கிளருஞ் சிந்தனையை ஒருவழிப்படுத்தலாமென்ற நினைவு எழுகின்றது.
சோம்பலை முற்ருக வெட்டி எறிந்துவிட முனைபவள் போல, கைகளைச் சொடுக்கிக்கொண்டே நடந்துசென்று புத்தகங்களை எடுத்து விரிக்கின்றேன். அதனுள்ளிருந்து விழுந்தது அந்தத் திருமண அழைப்பிதழ். படித்துப் படித்து மனப்பாடமாகிய அதைப் படிக்காமல் விடலா மென்ருல், துடித்துத் தாவும் மனக்குரங்கு கேட்குமா? கண்கள் அதன்மீது மொய்க்கின்றன.
** நிகழும் சோபகிருது வருடம் பங்குனி மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9-30 மணியளவில் வருகின்ற சிங்கலக்கின சுபமுகூர்த்தத்தில் எமது புத்திரி திருநிறைசெல்வி கண்மணிக்கும், ஆறுமுகம் அவர்களின் புத்திரன் கணேசனுக்கும். 9
நித்திரையைத் தட்டிக் கழிக்க நெஞ்சில் மூண்டெழுந்த வெறுப்புணர்வு - விஸ்வரூபம் பெறுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து அழைப்பிதழைப் படிக்க முடியாதபடி மனம் தடுக்க, பஞ்சுபோன்ற இலேசான அழைப்பிதழ் உருக்குத் துண்டமாகக் கனத்துக்கொள்ளு கிறது.
என்னுள் கிளர்ந்துவரும் சிந்தனைப் பெருமூச்சில் பரிணமிக்கும் வெப்பத்தோடு பங்குனி மாதத்துப் புழுக்கமும் சேர்வதால் உள்ளே இருக்கமுடியவில்லை. இரவின் அமைதியில் நிலையிழந்து உலகம் கட்டுண்டிருக்கும் வேளை. தனித்த ஒருத்தியாக நினைவில் விரித்த வலையில் என்னை யானே சிறையிட்டுக்கொள்ளுகின்றேன்.
முற்றத்து மரத்தடியிற் கிடந்த சாய்மனைக் கதிரை யில் முடங்குகிறது என் உடல், அதுவரை மறைந்திருந்து, எமனின் கோரப்பற்களை நினைவூட்டிக்கொண்டு வானில் கிளம்பி வருகின்றது தேய்பிறை. இருளின் தனியாட்சியில் விழுக்காடு. ஆனலுமென்ன, பெரிய மரங்களும்

Page 22
24 அமரத்துவம்
கட்டிடங்களும் அந்த ஒளியில் பிரமாண்ட நிழலையே தம்மடியில் தேக்குகின்றன. மனித மனத்தின் உண்மை யொளி, ஆசாபாசத்தின் நிழல் படர்ந்ததுதானே ! .
குறை நிலவின் ஒளியில் முற்றத்து மல்லிகைப் பந்தலிற் பூத்த மல்லிகைகள் நறுமணங் கமழுகின்றன. அம்மா இப்போது வீட்டிலிருந்தால் இந்த நிசியில் இப்படித் தனியாக இருக்க விடமாட்டாள். பருவப் பெண்கள் இரவு வேளையில் வெளியே வந்தால், பேய் பிசாசுகள் பீடித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை அவளுக்கு எந்தப் பேயையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. என்னுள் கிளரும் வேதனைப் பேயை எவராலும் விரட்டிவிட முடியாது. வாழ்வென்ற வசந்தம் பூக்கும் பருவத்தில், தாழ்வென்ற சூறை கிளம்பிவிட்டால் பருவத்துக்குரிய அழகு அழிவதோடு நிலையும் மாறிவிடும்.
எனக்கு உயிரைப்பற்றி அக்கறை ஏனிருக்கவேண்டும்? பருவ வளர்ச்சி. கன்னிமை. இதைக் கண்டு எந்தப் பேயாவது பீடித்துக்கொள்ளட்டும். வாழும் தகுதி யிருந்தால்.இந்த இரவில் - இந்த நல்ல நாளில். இப்படித் தனிமையில் நெஞ்சம் கணக்க நான் என்னையே நெடுமூச்சு அனலால் வாட்டவேண்டியிருக்காதே !
தடம்புரண்ட புகைவண்டியிலுள்ள பிரயாணிகள் காயப்படுவது இயற்கைதானே!
அப்பப்பா ! நினைவுகள் சிரஞ்சீவி - கற்பகதரு. எதை வேண்டுமானலும், எப்போதுவேண்டுமானலும், சுகித்துக் கொள்ளலாம். ஆண்டவன் அது ஒன்றைக் கொடுக்கா விட்டால் மனித மனத்துக்கு ஒருகணமேனும் இன்பம் கிடைக்காது போய்விடலாம்.
இல்லை ; துன்பமாகிய சுமையையும் அதுதான் தூக்கித் தலையில் வைக்கிறது.
துன்பப் பளு நெஞ்சில் அமுக்குவதனல்தானே இப்படி. ஏகாங்கி நிலையைப் போக்கடிக்க வேண்டியவர்

மொட்டை 25
அந்த நினைவில் எவ்வளவு இதம். !
அந்தப் பெயர் இனிய கரும்பு. ஆனல் பிஞ்சுக் கரும்பின் சாற்றினைச் சுவைக்க முடியாது. அடிக்கரும்பின் சுவைக்கு இப்போது ஆசைப்படுவது பைத்தியக்காரத் தனந்தான் !
இப்பிறப்பில் அடையமுடியாத ஆசை எப்பிறப்பில் நிறைவேறும் ? இதற்குப் பொறுப்பு பாழும் விதி. விதியென்று முடிவுகட்டிக்கொண்டால், உலகம் ஏன் முயலவேண்டும். முயற்சியே செய்யமுடியாத முடம் நான்; எட்டாத கொம்பரில் ஏறநினைக்கும் பிரயத்தனம் வீண்.
தத்துவமா பேசுகின்றேன் ? ஒருவேளை துன்பம் என்ற புலத்திலேதான் தத்துவம் விளைகிறதோ ? நான் சகோதரனுக அவரை மதிக்கவேண்டுமாம்.இந்தச் சகோதரன் என்பது வெறும் பாவனை. நடிப்பு. உள்ளத்துக்கிசையாத பொய்யை மெய்யாக்க முனையும் பகீரதப்பிரயத்தனம். தறிகெட்டு ஒடும் மனதை நிறுத்து மிடமும் தொடங்குமிடமும் அதுதான். அவரின் கனிவான பேச்சும் இனிமையான சுபாவமும் எனக்கு மட்டுமே சொந்தமென்று எண்ணியபோது இனித்தது. அது இல்லை யென்றபோது. இனி யான் கண்ணுற் கண்டாலும் மனதால் நினைக்கமுடியாத இடத்துக்கு - வெகு தொலை வுக்குச் சென்ற அவர் இன்னெருத்தியின் அருகே - இருப்பர். நிதர்சனத்துக்கு அண்மையானுலும், உணர் வுக்கும் பண்புக்கும் வெகு வெகு தொலைவுக்குச் சென்று விட்டார்.
யாரும் அன்பு பாராட்ட முடியாத பாவி நான். இலையுதிர்ந்து, பூ உதிர்ந்து, மீண்டும் தளிர்க்க முடியாத, இடியினல் தாக்கப்பட்ட மொட்டை மரத்தை, விறகுக் கன்றி-நிழலுக்குப் பயன்படுத்துவாரு முண்டோ? பரந்து செழித்து நிற்கும் மரங்களுக்குக் கீழேதான் வெயிலில் நடந்து செல்பவன் இடந்தேடி ஒதுங்குவான்.
காய்ந்து விறகாகிக் கொள்ளும் மொட்டை மரத்தில் குருவிகள் கூடக் குந்தியிருக்க முடியாது. பாழ் வெளியின்

Page 23
26 அமரத்துவம்
நடுவே பயனற்ற மொட்டைமரமாகி நிற்பது உணர்வும்அறிவும் கொண்ட மனித உயிருக்கு உரியதல்லவே.
திணித்து ஒரிடத்தில் அமர்ந்திருப்பதென்பது துறவி களுக்குத்தான் முடிந்த செயல். நிலையாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பது ஆசாபாசங்கள் அத்தனையுங் கப்பிக் கவியும் மனமுடைய என்போன்றவருக்கு முடியக்கூடிய காரியமல்ல. எழுந்து மீண்டும் விருந்தைக்குச் செல் கின்றேன். வரும்போது வெளி விருந்தைக்கும் மின் விளக்கை ஏற்றி வந்தேன். என்னை மறந்த நிலையில் உள்ளேகும் என்னுருவை வாசலில் பொருத்தியிருந்த கண்ணுடி அப்படியே காட்டுகின்றது.
ஐயோ! அது. ? என் நினைவுகள் இந்த உருவத் துக்குச் சற்றும் பொருத்தமற்றவை என்று குத்திக் காட்டுகின்றனவா ?
என்னையே நான் வெறுத்துக்கொள்ளும் உருவம். பெண்கள் அழகின் முக்கிய பின்னணியே அவளது சிகை. எவ்வளவு கூடுதலாகக் கூந்தலிருக்கின்றதோ, அவ்வள வுக்கு அவளுக்கு அழகுண்டு. அந்த ஒரே ஒரு பின்னணி யிலேதான் ஏனைய அங்கங்கள் பூரணத்துவம் பெறு கின்றன. அதுவே அழகின் உறைவிடம். அது இல்லாத என்னையும் பெண் . என்று எப்படிச் சொல்லிக் கொள்வது? இது பெண்ணு ? வெறுக்கின்றேன். அந்தக் கண்ணுடி காட்டும் உருவை உலகம் ஒதுக்குவது நியாயமே !
கண்களில் நீர் குளம் கட்டுகிறது. மருந்துக்குக் கூட உரைக்க முடியாத வெண்மொட்டை, தானுக நாவிதனைக் கொண்டு ஒட்ட வழித்துக்கொண்டதுபோல, பள பள வென்று மின்னுகிறதே வழுக்கையாக. சாவதிலும் இது கொடுமையல்லவா!
* அப்பா ! அம்மா ? என்ன கோரம் ! ஒரு நாளா ?
இரண்டு நாளா? கடந்த இரு மாதங்களுக்கு மேல் அதனைக் கண்டிருக்கின்றேன். எனக்குச் சாட்சி இந்தக்

மொட்டை 27
கண்ணுடி மற்றவர்களுக்குச் சாட்சி அவர்களது கண்கள். இன்றுதான் இதன் உண்மையான கோரம் எனக்குப் புல்ப்படுகின்றது. என்னிடமிருந்து அவரைப் பிரித்துத் தள்ளிச் சென்று இன்னெருத்திக்கு உரியவளாக்கியது. இந்தக் கோரம் . ஆத்திரத்துடன் என் கைகள் கண்ணுடியை நோக்கி ஓங்குகின்றன. யாருக்கு யார் குத்துவது?
மடை திறந்த ஆற்றின் வேகத்தை இலகுவில் அடைத்துவிட முடியுமா ? கண்கள் ஆருகிவிட்டன.
உள்ளே நுழைந்து அப்படியே கட்டிலில் விழுந்து கதறிக்கதறி யழவேண்டுமென்ற தவிப்பு தலையெடுக் கின்றது. விறுவிறுவென்று அப்படியே ஒடிச் செல் கின்றேன். அங்கே. ஒடும் நிலை நின்றுவிடு கின்றது. எனக்கு முன்னே, என் அறையில் புன்சிரிப்புத் தவழ, அழகான வண்ணச்சேலை யுடுத்தி அதற்கேற்ற அமைப்பான அணி பூண்டு-சுருள் சுருளாக-அலைபாயும் கூந்தல் சகிதம் இருக்கும் பெண். அந்த அழகி ? அங்கங் களுக்கும் அணிகளுக்கும் அலங்காரமான வண்ணச் சேர்க்கைகளுடன் இருக்கின்ருள் அவள் ? அது வெறும் புகைப்படமல்ல. எனது அபிலாஷைகளின் நிறைவு அது.
நான்தான் என்று இன்று சத்தியம் செய்தாலும் நம்புவதற்கு முன்வரமாட்டார். முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சிடும் முயற்சி. இலையுதிர் கால மொட்டை மரமல்ல. இடியினல் தாக்கப்பட்ட மொட்டை மரத்தை-பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் மிளிரும் பூஞ்செடிக்கும் ஒட்டுப் போடுவார் உண்டோ? இல்லையே! பசையற்ற-பசுமையற்ற விறகுதான் நான். நான் வேறு, அந்தப் புகைப்படத்திலிருக்கும் நான் வேறு. இதில் எது உண்மை ?
அந்தப் பிரதிமையும் யானும் ஒன்ருனல் இந்த அவல வாழ்வுக்கு இடமில்லையே? அவலட்சண நிலையோடு ஏற்பட்ட வெடிப்பு இப்படியொரு பாதாள வாழ்வுக்குத் தள்ளிவிட்டதே !

Page 24
28 அமரத்துவம்
இன்று நேற்றல்ல. எத்தனை ஆண்டுகளாகப் பழகியவர்? அழியாத சிகிரியாச் சிலைகள் போன்று எம்மிருவரிடையே யும் இளமைக் காலத்தில் நிலவிய - அப்பழுக்கற்ற குழந்தை விளையாட்டுக்கள் அழியாத கற்சிலைகள். காலம் சூருவளியை வீசித் தொலைக்கட்டுமே! கல்லை அதனல் புரட்டமுடியாது.
இந்த இரவில் அமைதிக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் எங்கள் வளவின் சிறு செடிகள்கூட எம்மிடையே ஏற்பட்ட நிலையைத் தெளிவாகச் செப்புமே 1 முற்றத்து மண்ணின் புழுதி எண்ணற்ற கதைகள் சொல்லும். அவையெல் லாம். இனி நம்பமுடியாத பாட்டிக் கதைகள்தாம். அப்பப்பா ! ஆண்டவனே ! இந்தத் துன்பத்திற்குள் என்னைத் தள்ளத்தான என்னை-என்னைப்பற்றி நானே அதீத கர்வங்கொள்ளச் செய்தாய் ? அழகின் செருக்கில் உலகம் என்வரை அற்பம் என்ற நினைவுகளில் அகம்பாவம் கொண்டேனே. அதன் பலன்தான் இப்படியொரு துர்நிலையோ? யான்மட்டுந்தான் கர்வியா ? உலகத்தவர் அனைவருமே தம்மைப்பற்றித் தாம் கர்வம் கொள்ளாமல் இருப்பதில்லை. கர்விகளுக்கெல்லாம் இதே நிலையானுல் விரைவில் உலகில் சாந்தியே நிலைத்துவிடும்.
அன்பின் பிடிப்பு பிஞ்சில் முளைகொண்டு வளர்ந்து தழைத்துக்கொள்கையில் அம்மாவிற்கு எவ்வளவு இன்பம் ? அவளின் அண்ணுவின் மகனல்லவா அவர். எங்கள் பிணைப்பிற்கு மேலும் இறுக்கமளிப்பதுபோல, மாமாவிடமிருந்துவந்த கடிதம் இருந்தது. அதில் அவர் *" கணேசனை வளர்த்து ஆளாக்கியதற்குக் கைம்மாருக அவனையே உனது மாப்பிள்ளை ஆக்கிக்கொள். விரைவில் இங்கு வேலையொன்று பெற்றுத்தர முயற்சி செய் கின்றேன்' என எழுதியிருந்தார் மாமா, அம்மாவுக்குத் தலைகால் தெரியாத புளுகம்.
இது போதாதா? இள நெஞ்சங்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன. தற்காலிகமான ஒன்றை நிரந்தரமான தென்று நம்புவதா ? நம்பிக்கைகள் முற்று முழுவதும் நிலைபெற்ருல் உலகின் சரித்திரம் மாறுபடாது. அந்த
 
 

மொட்டை 29
மாற்றம் எனக்கு இப்படி ஒர் இடியையா தூக்கிப் போடுவது ? இதன் பொருள் விதி. விதியை யாராவது நம்பாமலிருக்கலாம். ஆணுல் அதுதான் என்னை வீழ்த்திவாழ்க்கையை வெட்டிப் புதைகுழிக்குள் தள்ளியது. இதைப் பகுத்தறிவுவாதங்கொண்டு தர்க்கிப்பதில் அர்த்த மிருப்பதாக எனக்குப் படவில்லை.
米
கம்பெனி யொன்றில் மனேஜராகப் பொறுப்பேற்கக் கொழும்பு சென்றுவிட்டார் அத்தான். அந்த மகிழ்ச்சி யில் அவரைவிடக் கூடுதலான பங்கு எனக்குத்தான். திருமணத்தை விரைவில் நடத்தி அந்த அமைதியில் இன்பங் காண அம்மா முனைந்தாள். என் மனமுங் கடிவாளமில்லாத குதிரையைப் போலக் கற்பனை வீதியில் எதேச்சையாக ஒடிக்கொண்டிருந்தது. அப்பப்பா ! எத்தனை இனிமைகள்! மொட்டவிழ்ந்த மலர்களின் இனிய நறுமணமா அந்த நினைவு !
அன்று அவர் கொழும்புக்குப் புறப்படுகையில், என் னிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தபோது தொனித்த பெருமிதம் எவ்வளவு 1 வார்த்தைகளில் வடிக்கமுடியாது. உணர்ச்சிவசப்பட்டவராகத் தோற்றினர். சற்று விலகி **கிணற்று நீரை வெள்ளமா கொண்டுசெல்லப்போகிறது? விரைவில் அதிகாரத்துடன் உங்கள் உடைமையாக்கிக் கூட்டிச் செல்லுங்கள் ' என்றேன். என் பதிலில் அவர் கொண்ட உவகை குமிழ்ச்சிரிப்பாக மலர்ந்தது.
வாடி நிலத்தில் விழுவதற்கு முன், மலர்கள் அதீத ஒளியைக் காட்டுகின்றன போலும்.
* எண்ணுவதெல்லாம் நடக்காது. எதுவும் அவன் செயல். மனப்பால் குடிக்காதே." வேதாந்தியின் வெறும் பிதற்றல் இது என்று யான் கூறமாட்டேன். எதிர்காலம் ரந்தரமாக மாறக்கூடியது என்று உணர்வு பூர்வமாகக் கண்ட தீர்க்கதரிசியின் பொன் மொழி என்பேன். அந்த உண்மையின் நிதர்சனமே யான்.
நாளிதழ் மலர்ந்து மண்ணில் வீழ, அந்த அழிவில் மாதங்கள் பூத்தன. லிவு எடுக்க முடியவில்லையென்றும்,

Page 25
30 - அமரத்துவம்
கூடிய விரைவில் தானும் தந்தையாரும் ஊருக்கு வந்து திருமணத்துக்கு ஒழுங்குசெய்வதாகவும் அத்தான் எழுதிய கடிதம். தந்த குதூகலம் எனது பருவத்தைப் பின்னே தள்ளிக் குழந்தையாக்கியது. எனது பிறந்த நாளுக் கணிவதற்கென அழகான டிசைனில் பட்டுச் சேலை யொன்று அனுப்பியிருந்தார். எனக்கு எனது பிறந்த நாள் எப்போதும் ஞாபகமிருப்பதில்லை. அந்த நாளினை அவர்தான் எனக்கு ஞாபகமூட்டுவார்.
தலையிடியோடு தொடங்கிய காய்ச்சல், பெரிதாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரியில் "நிமோனியா’ என்றனர். காய்ச்சலினுற் பீடிக்கப்பட்ட நோயாளியான என்னை மாமாவும் அவரும் வந்து பார்த்தனர். சில நாட்கள் தங்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். திருமணம் நடக்கவேண்டிய தினங்களில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தேன். அந்த வேதனை அவரது முகத்திற் பூரணமாகப் பிரதிபலித்தது.
காய்ச்சல் சுகமாகி வீடு வந்துவிட்டேன். ' அத்தான் எப்போது வருவார். எம் வாழ்வு ஒன்றுபடும் காலம் நெருங்கிவிட்டது. ’’ இப்படியெல்லாம் எனது எண்ணப் படகு கற்பனையாற்றில் இளந்தென்றலில் உந்தப்பட்டுச் செல்லும் வேளை, எனது எழிலுக்கு எழிலூட்டிய இந்தத் தலை. மரத்திலிருந்து இலையுதிர்காலத்தில் இலைகள் "பொல பொலவென விழுவது போல, நாளும் மயிர்கள் உதிர்ந்தபடியே இருந்தன. அதை நிறுத்துவதற்குச் செய்யாத வைத்தியமில்லை. வைத்தியமனத்தும் விழலுக் கிறைத்த நீர், இலைகளெல்லாம் உதிர்ந்தபின் மொட்டை யாகிவிட்ட மரம் தழைப்பதுண்டு. ஆனல் என் மயிர் இனி முளைக்காதாம். அனுபவ அறிவு நிரம்பிய வைத்தியர் களின் இறுதியான முடிவு இது. அதற்கு உதாரணம் அந்தக் கண்ணுடியில் என் தலை மின்னுவதுதான்.
என்னையே நான் பார்த்து ஏங்கி ஏங்கி அழுது-ஆருக் கண்ணிரைப் பெருக்கிய நாட்கள் ? அந்த நிமோனியாவில் செத்துத் தொலைந்திருக்கப்படாதா?
 

மொட்டை 31.
லீவில் அத்தான் மீண்டும் வந்தார். எனது கண்ணிரின் வற்ருத ஒட்டத்தைக் கண்டு அவரது நெஞ்சமும் அழுதது. அனுதாபமும் கனிவான வார்த்தைகளுங் கிடைத்தன. * அத்தான் என்னைக் கைவிடமாட்டீர்களே?' எவ்வளவு பைத்தியகாரத்தனமான கேள்வி இது? மனிதர்கள் மனித வாழ்க்கையைத்தான் விரும்புவார்கள்.
என்னைக் கண்டதும் அழுத அத்தான் அந்தக் கேள்விக்கு விடை ஏன் கூருத மெளனியானுர்? அவர்தான இவர் !. அவர் மனதில் அனுதாபம் உண்டு. ஆனல் அவர் தியாகி அல்லவே. அகத்தின் உண்மையைக் காட்டும் கண்ணுடிதானே முகம். அந்த முகத்தில் அவரது மனத்தில் உள்ள அனைத்தும் எழுதி ஒட்டப்பட்டிருந்தன. அந்தக் கேள்வி உலகாயதத்திற்குப் பொருத்தமற்றது.
இரண்டாம் நாள் திரும்பிச் சென்றுவிட்டார். அவரது இதயத்திலிருந்து நான் தூக்கியெறியப்பட்டுவிட்டேன் என்பதை அவரிடமிருந்து வந்த கடிதங் கூருமற் கூறியது. ܢ ܗ
அக அழகிலும் பார்க்கப் புற அழகைத்தானே சமூகம் விரும்புகிறது. இது காலந் தந்த பாடம். அவர் அதற்கு விதிவிலக்கு அல்லவே! அந்தச் சமூகத்தில் ஒர் அங்கந்தானே அவர். அங்கத்துவத்தைப் பிரதிபலிப்பது தான் அவர் கடமை. அதை வேருக மாற்றிவிட முடியுமா? கோரத்தைக் கொலுவில் வைத்து அழகு பார்க்க எந்தப் பைத்தியக்காரனும் தயாராக இல்லை. மேடையில் ஏறினல் பார்வையாளருக்கு நகைச்சுவை யூட்டலாம்.
அவர் அழகையே விரும்புவது இயற்கை. ஆனல் நான்.அதை இழந்துவிட்டு, அவர் வாழ்வைக் கேட்பது மடமை.
எங்கோ கோழி கூவியது. என் சிந்தனையைத் தொடர முடியாத சோர்வு .நித்திரையைப் பெற மறுத்த

Page 26
32 அமரத்துவம்
விழிகள் காலத்தின் கடுகதி ஒட்டத்தின் பின் நித்திரையின் தாக்கத்தைச் சகிக்கமுடியாது பலவீனமுறுகின்றன.
கண்கள் இமையுள் சொருக என்னை மறக்கின்றேன்.
* பிள்ளை 1 பிள்ளை விடிந்து இவ்வளவு நேரமும் நித்திரையா?* அம்மாவின் வாத்சல்யமான கூப்பாடு இது. சோர்வும் அயர்வும் நீங்காத நிலையில் விழிக்கி றேன். திறந்து வைத்த ஜன்னல் வழியாகச் சூரியனின் கதிர்க் கம்பிகள் குத்துகின்றன. மணவீட்டுக்குப் போன அலங்காரங்களின் அழகு குன்றி, நித்திரைச் சோர்வு குலவ அம்மா நிற்கிருள்.
என் கண்கள் கொவ் வைக் கனிகளின் வண்ணத்தைப் பெற, முகத்தில் வரட்சி புரையோடுகிறது. நிசியைக் கடந்த பின்பு நித்திரை விழித்து, விடிகிற சமயத்தில் உறங்கிய சோம்பலில் ஏற்பட்ட உடல்நிலை, அம்மாவுக்கு உடல் நலமற்றவளாக என்னைக் காட்டுகிறது. ** என்ன அம்மா உடம்புக்கு ' என்று கேட்டுத் துடிக்கிருள். தோட்டக்காரன் செடியின் வாட்டத்தைக் கண்டு வேதனைப்படுவது இயற்கை. ஆணுல் பட்டுப்போகும் மரத்துக்குத் தன்னைப்பற்றிய அக்கறை இருக்கவேண்டு மென்பதில்லையே. வளருஞ் செடிகள் தண்ணீர்த் தேவை யைத் தமது உருமாற்றத்தில் தெரிவிக்கும். பட்ட மரம்?
அம்மாவுக்கு மருமகனின் வாழ்க்கை ஒப்பந்தத்தில் கலந்துகொள்ள உரிமையும் கடமையும் உண்டு. காரணத் தோடொட்டிய முறிவை அவள் ஒத்துக்கொள்வது இயற்கை. மகள் உதவாதவளாகிவிட்டபோது அதற்காக மருமகன் உறவை உதறவில்லை. அவள் அழுது கண்ணிர் வடிக்கலாம். அதற்காகத் தன்னுடைய மகளைப் பலவந்த மாகத் திணித்துவிடுதல் சாத்தியமா? ஒன்றில் தொடங்கி கிளைகள் விடுத்து, விழுதுகளை நிலத்தூன்றிய ஆயிர மாயிரம் எண்ணங்கள் வேதனையில் பரிணமிக்கின்றன.

மொட்டை 33
அவற்றைப் பலவந்தமாக அடக்கி, ஒடுக்கி, வேதனை யின் சுவடே தெரியாதவளாக நடிக்க முயல்கின்றேன். நடிப்பிலேதானே இன்றைய உலகம் தனது சுயரூபத்தை மறைக்கிறது.
காலம் கடுகதி வண்டியாகித் தரிக்காது ஒடிச் செல் கின்றது. பற்றுக்களைக் கொழுகொம்பாக்க முயலும் மன நினைவுகளை வெட்டிச் சரித்து, பிடித்தமற்று இயங்குகிறது வாழ்வு. இதற்குச் சாந்தி மரண மைதானத்தில்தான். மனிதன் உலகில் சீவிப்பதானுல் மனித லட்சணங்கள் அமைந்தவனுக இருக்க வேண்டும். நாலு சார் வீடாக இருந்த மனை, அதிக பொருட்செலவில் என்பொருட்டு நவீன வீடாக மாறியது. அந்த வீடும், எனக்கென இருக்கும் ஐஸ்வரியங்களும் பாலைவனத்துப் பிரயாணி யின் தாகத்தைத் தணிக்காத - பொற்குவியல்கள்.
தந்தை வழியும் தாய் வழியும் சேர்த்த சொத்துக்க ளவை. எனக்காக அவற்றைத் தேடி வைத்துவிட்டு அப்பா எப்போதோ மரணக் கிடங்கிற்குச் சென்று விட்டார். அம்மாவின் ஆதரவை நாடி எத்தனையோ உறவினர்கள் வந்து பயன்பெற்றுச் செல்லுகின்றனர். அவளின் அஸ்தமனத்துக்குப் பின் அத்தனை சொத்துக் களும் எனக்குத்தானே! காட்டில் நிலவை மிருகங்கள் இர சிக்கின்றனவா ?
திருமண வைபவத்தின் நான்காவது நாள். வீதியைத் துகள்படுத்தி ஒடிய மோட்டார்வண்டி யொன்று எங்கள் வீட்டின் வெளிக் கதவோரம் வந்து நிற்கிறது.
உள்ளேயிருந்து ஜன்னல் வழியாக வெளியுலகைப் பார்க்கின்றேன். அங்கே.
புதுமணத் தம்பதிகள். அத்தான் அவள் கரத்தைப் பற்றியபடி இறங்குகின்ருர், தென்னம்பாளை போல வெடித்த அவளது வாயில் முத்துக்கள் ஒளிர்கின்றன. பொருத்தமான சோடி.
கார் வந்த சத்தத்தைக் கேட்டு, வந்தவர்களை வரவேற்க, அம்மா வீட்டு முகப்பில் தயாராகிவிட்டாள்.
அ - 3

Page 27
34 அமரத்துவம்
கல்மிஷமற்ற இதயங் கொண்ட அம்மாவின் முகத்தில் அளவற்ற ஆதரவு குலவுகிறது. எந்த ஆதரவும் தர முடியாத பலவீன உள்ளந்தான் எனக்கு 1 வீட்டைக் கூட்டிப் பெருக்கும் விளக்குமாற்றை ஒதுக்குப் புறமாகத் தான் வைக்க வேண்டும். புறப்படும் வழியில் இடலாமா ?
மனதில் புரையிட்டுக் கொப்பளிக்கும் அலைகள் அனந்தம். அவர்கள் எதிரே செல்வதற்கு நான் பாக்கியம் செய்தவளல்ல. புதுமணத் தம்பதிகளின் விழி விசேடத் துக்குதவாத மொட்டைச்சி. நமது சாத்திரங்கள் மொட்டையை முன்னே வரவிடுவதில்லையே!
வரட்சியான எனது தோற்றம். அந்தக் குளிர்மை யான வாழ்வின் இதத்தைக் கெடுக்கலாமா ?
ஜன்னல் வழியாக வெளியே பார்க்கின்றன என் விழிகள். அம்மா அவர்களுக்குத் தேநீர் வழங்குகிருள்.
** மாமி ! உங்கள் அன்பை என்னல் என்றும் மறக்க முடியாது. கோவிலுக்குச் சென்றபின்தான் எங்காவது செல்லவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள். நான் முதன் முதல் உங்களைப் பார்த்த பின்தான் எல்லாம் என்று சொல்லிவிட்டேன்." இவ்வாறு அம்மாவிடம் கூறியது, என் செவிப்பறைகளைத் தாக்கியது. நன்றி யுணர்ச்சியில் என்றும் தாழ்ந்தவரல்ல அத்தான்.
அம்மாவின் வாயெல்லாம் பற்கள். தன் மருமகனின் குன்ருத மதிப்பில், அவளுக்குப் பெருமை ஏற்பட் டிருக்கலாம்.
இடுப்பிலிருந்த சாவியைக் கையிலெடுத்துக்கொண்டு உள்ளே வருகின்ருள் அம்மா. தம்பதிகளுக்குப் பரிசாக எதையாவது கொடுக்க முனைகிருள். அலுமாரிக்குள் ளிருந்து ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றை எடுத்து வெள்ளித் தட்டமொன்றில் வைத்துக்கொண்டு புறப்படு கின்ருள். 'அம்மா’’ என்ற என் குரல் அவளைத் திடுக்கிட வைக்கின்றது.
திரும்புகிருள்.

மொட்டை 35
என் கையில் அன்று அவர் பிறந்த நாளுக்குப் பரிசாக அனுப்பிய சேலை, புத்தம் புதிதாக, கசங்காத நிலையில் வெகு அழகாக இருக்கிறது. அது பரிசுக்குகந்தது. அதை இதுவரை நான் அணிந்ததேயில்லை. அனுப்பிய பார்சலை உடைத்துப் பார்த்துவிட்டு, அலுமாரியுள் வைத் திருந்தேன். இனி அது எனக்குரியதன்று.
அம்மா என்னைப் பார்த்த பார்வையில் அவளது உள்ளத்து வேதனைகள் அனைத்தும் கொப்பளிக்கின்றன. ஒரு சொட்டுக் கண்ணிர் முத்தாக அவள் கடைக்கண்ணிற் பரிணமிக்கின்றது. சோகக் கடலிலே தான் வேதனை முத்துக்கள் பிறக்கின்றன. ஜன்னல் வழியாக வெளியே பார்க்கின்ற விழிகளில், அந்தத் தட்டத்தில் இலங்கும் சேலே.
புதுமணப் பெண்ணிடம் அம்மா நீட்டும்போது அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ, யானிருக்கும் பக்க மாகத் திரும்புகிருர், என்னுடைய விழிகள் அவரது விழிகளை மொய்க்கின்றன. அதிலிருந்து ஒரு சொட்டு உதிரவே செய்தது. புறங்கைகள் அதனைத் துடைத்துக் கொள்கின்றன. மணப்பெண்ணுக்கு இந்த உலகைப் பற்றியே அக்கறையில்லை. அம்மாவிடம் பரிசைப்பெற்றுக் கொள்ளுகிருள்.
வெறும் கண்ணிர்த்துளி-தியாகமல்லவே! அப்படி யானல், அவர் தியாகஞ் செய்யவேண்டுமென்று நான் கோருவது நியாயமா? மனச்சாட்சி கேட்கும் கேள்வி இது.
** இல்லை." இது என் பதில், மொட்டையாகிவிட்ட மரம் உயிர்பெற முனைவது சாத்தியமல்ல. அதற்காகத் தோட்டக்காரன் கவனிக்கவில்லையென்று பழி கூறுவது பாவம்.
இந்த மொட்டைமரம் காலத்தச்சனுல் வெட்டி முறிக்கப்படவேண்டும். அதுதான் நியதி.
தெருவில் மோட்டார் வண்டி புறப்படும் ஒசை சுேட்கிறது. காற்றுடன் கலந்து எழும்பும் புழுதித் துகள்கள் அந்த அழகிய காரில் படிய முனைகின்றன. அதைப் பொருட்படுத்தாமல் வண்டி ஓடி மறைகிறது.

Page 28
பு ட ம்
* மனிதா மண்ணில் நீ ஆயிரம் சாதனைகளை நிலை நாட்டிவிட்டாலும் இறைவனை மறந்துவிடாதே ' என்று பூமித்தாய் விரலை நீட்டி வானத்தைக் காட்டுவது போன்று உயர்ந்துநிற்கும் ஒலிய மலை. எங்கும் பசிய ஆடை போல் பச்சைப்பசேல் என்ற தோற்றம். இழிந்தோடும் ஆறுகளும் கடவுளின் கருணையை நினைவூட்டுகின்றன; இயற்கையின் இன்பநாதம்போல் எங்கும் புள்ளினங்கள் இசைமிளற்றுகின்றன.
இத்தகைய எழில் சூழ்ந்த பிராந்தியத்திலே ஒரு தேவாலயம். மனித சிருஷ்டிதான். ஆனல், மனிதன் தன்னை உணர்ந்து தேவனை உபாசிப்பதால் மட்டுமே உய்வு பெறலாம் என்பதை மறக்கவில்லை என்பதற்குத்தக, தரையில் உயர்ந்ததாய், ஆனல் வானத்துக்குத் தாழ்ந்த தாய் முகில் தவழ விளங்குகின்றது அத்தேவாலயம்.
உலக மக்களை இரட்சிக்க அவதரித்த தேவகுமாரன் யேசுபிரான் தன்னை நோக்கி வந்தவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிருர்,
தேவகுமாரனின் நல்லுபதேச வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு மக்கள் அமைதியோடு அங்கு குழுமியிருக் கிருர்கள்.
வஞ்சமும் போலியுமற்ற தெய்வீக அமைதி உள்ளே குவியும் வேளையிலே.

புடம் 37
வெளியே மனித ஆரவாரம். சிலர் அவசர அவசர மாக யேசுவை நோக்கி வருகின்றனர். அவர்களின் இதயத்தைப் பிரதிபலிப்பதுபோல வாய்கள் பேசு கின்றன.
ஆலயத்தினுள்ளே நிலவிய அமைதி குலைகிறது. அதுவரை மெளனமாய்க் கட்டுற்ற சிலைகளாக இருந்தவர் களின் செவிகள் அந்தச் சலசலப்பைக் கேட்கின்றன. அவர்களது கண்கள், ஆரவாரஞ் செய்துவந்த கூட்டத் தவர்களை மொய்க்கின்றன. கூட்டத்தவர்களிடையே கூனிக் குறுகி, பலவந்தமாக இழுத்து வரப்பட்ட ஒரு பெண் யேசுமுன் நிறுத்தப்படுகிருள்.
பாவம் நிழலாடும் கண்கள். கோரமான சிந்தனையின் பயனுல் உள்ளத்தில் உருவாகிய-எள்ளத்தனையும் ஈரம் இல்லாத் தன்மையாற் பொலிவு குன்றிய முகம். விரிந்த தலை. அவள் செய்த பாவச் சுமை அவளை உறுத்தியதால் உலகை நிமிர்ந்து பார்க்கத் திராணியற்று நிலங்கவிழ்ந்த தலையுடன் நிற்கின்ருள்.
ஒவ்வொருவர் வாய்களிலிருந்தும் திட்டுகளும் வசவுகளும் பொங்கிப் பிரவகித்துவருகின்றன. தேவ குமாரன் எதையுங் கவனியாதவர்போல் நிலத்தை விரல் களினுற் கீறிக்கொண்டேயிருக்கிருர், கடல் அடங்கிய நிலையது.
மெளனம் நெடும்பாம்பெனக் கணக்கற்று நீளுகிறது. அதை உடைத்தெறிய எவருக்கும் தெம்பு பிறக்கவில்லை. குளிர்மையின்முன் அக்கினி செயலிழந்து விடுமே, அத்தகைய நிலை.
அங்கே நிறுத்தப்பட்ட பெண்ணுக்குரிய பாவத்துக்குத் தகுந்த சிட்சை அளிக்கவேண்டுமென்பது அவளைக் கொண்டுவந்தோரின் அவா. அதை முதலில் திறந்து சொல்லத் தைரியம் எவருக்கும் எழவில்லை.
நிர்ச்சலமான அமைதி. அவளை இழுத்துவந்த முக்கிய மானவரான மனிதர்களின் உள்ளங்கள் பொறுமையை

Page 29
38 அமரத்துவம்
இழக்கின்றன. சற்றுத் தைரியம்வர வேதபாரகரும் பரிசேயரும். பதட்டத்துடன் மனிதப் பிரகிருதிகளின் பிரதிநிதிகள்போல் யேசுவின் முன்வந்து நிற்கிருர்கள்.
*" போதகரே, இதோ நிற்கிறவள் மாபெரும் பாவி. விபசாரமென்னும் இழிதொழிலை மேற்கொண்டவள். விபசாரமென்னுங் கொடிய குற்றத்தைச் செய்பவளைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் " என மோயீசன் வேதப் பிரமாணத்தில் எங்களுக்குக் கட்டளையிட்டிருக் கிருர், நீர் இவளுக்கு என்ன தண்டனை வழங்கவேண்டும் எனக் கருதுகின்றீர்?"
யேசுவின் மெளனம் கலையவில்லை. அன்பும் அருளும், சமாதானமும், நம்பிக்கையும் ஒன்ருகக் குலவும் அந்தத் திருமுகத்தில் அமைதியே சுடர்விடுகிறது.
அப்பெண்ணை அங்கு கூட்டிவந்தவர்களின் நோக்கம் யேசுவினிடத்தே குற்றங் காணவேண்டுமென்பதே. அப் பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லும்படி கூறினல் யேசுவை "இரக்கமற்றவர், மக்களை இரட்சிக்க வந்ததாக அவர் சொல்வது பித்தலாட்டமானது, பொய்ப் பிரசாரக ரவர்' என்றும் அவளை விடுதலைசெய்தால் ' தேவ கட்டளையை மீறுகின்றவர் " எனவும் மக்களிடையே யேசுவைப்பற்றிப் பிரசாரம் செய்யலாம் என்பதுதான் அவர்களது எண்ணம்.
யேசு என்ன சொல்லப்போகின்ருர் என்ற துடிப்பு அவர்களின் உள்ளங்களிற் குடைகிறது.
உலக மக்களின் இருதயங்களைப் புனிதப்படுத்தக் காத்திருக்கும் யேசுவின் கண்களிற் கலக்கமில்லை. தெளிந்த நீரோட்டமாகவே அவை மிளிருகின்றன. அவற்றின் குளிர்மை சகல உலகத்துக்கும் அமைதி வழங்கும் பெற்றியுடையது. மனிதப் பிரகிருதிகளின் குரோத உள்ளத்தைப் புரிந்து, அறியாமையை நீக்க முயலும் யேசுவின் இதழ்க்கடையில் முறுவல் வெடித்து

புடம் 39
மலர்கின்றது. மெதுவாக உடலைத் திருப்பிப் பார்க் கின்ருர், ஆயினும் அவரது விரல்கள் இன்னும் நிலத்தைக் கீறுவதை நிறுத்தவில்லை.
கேள்விக்கு விடை கிடைக்காமையினல் உள்ளத்தில் அசூசை புரண்டெழ வேதபாரகரும் பரிசேயரும் வெறுப் புடன் யேசுவைப் பார்க்கின்றர்கள். எல்லாவற்றையும் புரிந்த தேவகுமாரனுக்கு அவர்களது நெஞ்சிற் பளிச் சிடும் குரோத உணர்ச்சி தெரியாமலில்லை.
தலையை நிலங்கவிழ்ந்து நிர்ச்சலனமாக விருந்தவர் தன் திருமேனியை அசைத்துத் திருப்பி - மெதுவாகத் தலையைத் தூக்குகிருர்,
அமைதியும் அருளும் பொங்கும் விழிகள். உலகத்தின் கல் மிஷத்தைக் கழுவித் துடைத்துக் காட்டுங் கருணை வெள்ளம் அலைமோதும் கண்கள். பாலசூரியனின் தேஜஸ் சரணடையக்கூடிய திவ்விய பிரமை அந்த முகத்தில் இழையோடுகிறது.
பத்ம இதழ்கள் குவிகின்றன. அந்த இதழ்கள் உதிர்க்க விருக்கும் முத்துக்களை மக்கள் எதிர்நோக்கி நிற்கின்றனர்.
சூழல் முழுவதையும் யேசுவின் கண்கள் அளக் கின்றன. சலசலப்படங்கிய நிலை. தன் கட்டளையை எதிர் நோக்கி நின்ற அனைவரையும் அவர் நோக்கி,
* நீங்கள் அனைவரும் இந்தப் பெண்ணுக்கு - அவள் செய்த பாவங்களுக்காகத் தண்டனை பெற்றுத்தர முயல் கிறீர்கள். வேதப் பிரமாணக் கட்டளைப்படி, இவளுக்குத் தண்டனை கல்லால் எறிந்து கொல்வது என்ருல் அப் படியே செய்யலாம். ஆனல், உங்களில் எவன் ஒரு பாவமுஞ் செய்ததில்லையோ அவன் முதலில் முன்வந்து கல் எறியக்கடவன் ' என்ருர்,
இவ் வார்த்தைகளை உதிர்த்து யேசுவின் நா அடங்ஓ விட்டது. உதட்டில் தவழும் புன்னகை இன்னும் மறைய வில்லை. மீண்டும் குனிந்து தரையில் விரல்களால் எழுதிக் கொண்டிருந்தார்.

Page 30
40 அமரத்துவம்
ஓவென்று இரையும் கடல்போல், பழி தீர்த்துக் கொள்ள முனைந்தவர்களின் இதயங்கள் ஆர்ப்பரித்த போதிலும், அவை செயலற்று வலுவிழந்துவிட்டன.
ஒரு சில கணப்பொழுதுக்குள்.
பெருகியிருந்த கூட்டம் சிறுகச் சிறுகக் கலைகின்றது. உள்ளத்தினை மறைத்துச் செயலாற்ற முடியாத மனி தர்கள் தானே அவர்கள். சத்தியக் கனலின்முன் அசத் தியம் தலைதூக்க முடியுமா?
சில கணப்பொழுதில் அங்கு சந்தடியற்ற நிலை உரு வாகியது. மூப்பர் முதற்கொண்டு எல்லோரும் போய் விட்டார்கள். எவருக்குஞ் சத்தியத்தை எதிர்க்கும் திராணியில்லை.
அந்தக் கூட்டத்தினுல் தண்டனையளிக்கப்பட வேண்டி யவள் மட்டும் அங்கு நிற்கிருள். அந்த மனிதக் கூட் டத்தையே தலைதூக்கிப் பார்க்க முடியாத பாவச்சுமை யைக் கொண்ட மரியமதலேனுள் இன்னும் நிலத்தையே பார்த்தபடி நிற்கிருள்.
யேசுவின் கண்கள் அந்தப் பாவியை நோக்குகின்றன.
அசத்தியத்தின் கொடுமை, சிறுமையின் சருகு, தீமை களின் கந்தல்கள் அனைத்துங் கருணைகொண்ட யேசுவின் அருட்பிரவாகத்திற் கரைந்துவிட அவள் தெளிவுகொள் கிருள்.
8 பெண்னே ! உன் மீது குற்றஞ்சாட்டியவர்கள் உனக்கு ஆக்கினைத் தீர்வையிடவில்லையா ? ??
** இல்லைச் சுவாமி.'
யேசு மீண்டும் அவளைப் பார்த்துக் கூறுகிருர்,
* நானும் உனக்கு ஆக்கினைத் தீர்வையிடவில்லை. இனிமேற் பாவஞ் செய்யாதே. நீ போ.”*
தாமரையன்ன யேசுவின் தாள்களை அப்பெண் பற்று கிருள். அவளது நெஞ்சக் குன்றிலிருந்து சோகநதி பாய்ந்து
 

புடம் 41
அந்தப் புனித யேசுவின் பாதங்களை நனைக்கின்றன. மனிதர்கள் புறக்கணித்த ஆத்மாவுக்கு ஆண்டவன் அருள் கிடைக்கின்றது. தன்னையே அவரது சேவைக்கு அர்ப் பண்க்கிருள்.
நீண்டு கிடக்கும் எதிர்காலத்தில் அவளுக்கு வழி காட்டப்போகும் அந்தப் பாதச் சுவடுகளை அவள் மறக்க வில்லை. பாவத்தாற் குனிந்த தலை அந்தத் திவ்விய பாதங்களின் ஒளியிற் கட்டுண்டு ஒன்றிப்போய்விட்டன:
இருளும் ஒளியும் இல்லாத ஒரே திவ்விய சோதி யான அந்தப் பாதச்சுவட்டிலே சென்ற அவள் ஒரு பாக்கியவதி ஆணுள்.- O
யேசுவின் கருணைச் சுவட்டிற் செல்லும் அவளது இதயம், உலகத்தின் கன்மிசக் கறைகளைக் காணுது, கருணையுடைய உருவையே காலமெல்லாங் கண்டு நின்றது.

Page 31
கோடை
வாழ்க்கை வாழ்வதற்கா? வேதனை ஆழியில் முக் குளித்துத் திணறித் திண்டாடும் நெஞ்சில் இந்தக் கேள்வி பிறந்தது 1 விடைகாணமுடியாத துர்ப்பலநிலை. எனவே முடிவு? மற்றவர்கள் எதிர்பாராத ஒன்றுக்கு வழி சமைப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
பிணி-மூப்பு-சாக்காடு ஆகிய கொடுமைகளால் மனித ஜன்மம் சதா அவலத்துக்காளாகி அல்லற்பட்ட தைக் கண்டு மணிமுடிதரிக்கவேண்டிய மன்னன் மகன் சித்தார்த்தன் அரசபோகத்தை, அருமை மனைவியை, பிரிய மகனையெல்லாம் விட்டொழித்து வீட்டைவிட்டு வெளியேறினன். அந்தப் போதிசத்துவனல் உலகம் சாசுவதமான ஒரு தத்துவத்தைப் பின்பற்றி வழி நடந்து வருகிறது. அப்படிப்பட்ட அரிய சாதனையைச் செய்து விடுவதற்காக நான் வீட்டைவிட்டு வெளியேறவில்லை.
ஆனல், ஒன்றில்மட்டும் ஒற்றுமையுண்டு. மணமன்றில் கரம்பற்றிய மனைவியை, அன்பின் அடையாளமான மக்களையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஓடி வந்திருக் கின்றேன்.
அர்த்தமற்ற - வாழத்தெரியாத - கோழையின் கருத்து என்றெல்லாம் உலகம் வேண்டுமானல் என்னைப் பழிக்கட்டும் தூற்றட்டும். அந்த உலகத்துக்கு என்னை யும், என்னேடு ஒன்றிப்பிணைந்துவரும் ஆசாபாசத்தின் பேருக எழுந்த சிக்கல்களையும் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ? ܝ*
மானம் என்ற ஒன்றைச் சுற்றி எழுப்பப்பட்டது தான் வாழ்க்கையென்ருல் பின்னேக்கிச் சென்றுவிட்ட

கோடை 43
வாழ்க்கை வாழ்வதற்கல்ல. அது யான் கொண்ட முடி வோடு வரையறுக்கப்படவேண்டும் என்ற உண்மையை ஒர்ந்துணர்ந்துகொள்வது சுலபம்.
புகுந்த வீட்டின் அலட்சியம் ; பிறந்த வீட்டின் நச்சரிப்பு. உலகமே ஒதுங்கிப்போ என்ற கூப்பாட்டுக்கு இனி இடமில்லையல்லவா ?
பண்ணை ஆஸ்பத்திரிக்கு முன்பாக உள்ள தெருக் கரையில் யாரோ புண்ணியவான்கள் நட்டுவைத்த பூவரசு மரங்கள் நிரை பிடித்து நிற்கின்றன. ஒதுக்குப்புறமாகச் செழிப்புள்ள மரநிழலில் அமர்ந்திருந்தேன். எதிரே பரந்த கடல். மீன்பிடிக்கும் வள்ளங்கள் அங்குமிங்கு மாகச் சென்றுகொண்டிருந்தன. கடலுக்கு அக்கரையில் உள்ள நிலப்பிரதேசத்தில் நின்ற பனைமரங்கள் கண் ணுக்குத் தெரிகின்றன. ஆஸ்பத்திரிக்கு வந்துபோகும் நோயாளிகள் போல என்முன்னே அலைகளும் வந்து வந்து அழிந்து போகும் அநித்தியநிலை. எனது நெஞ்சத்தில் ஒசையிடும் துன்பங்களின் உண்மை விளக்கமும் அதுவே. கரையில் இருந்து சுமார் இருபத்தைந்து யாருக் கப்பால் தலையில் முண்டாசுக்கட்டுடன் வயதுசென்ற மனிதனெருவன் ஒருகையில் பறி 'யும் மறுகையில் * கரப்பு "மாக நின்று ஏதோ தன் வயிற்றுப்பாட்டுக்கு மீனே, இருலோ பிடித்துக்கொண்டான். மாடுகள் இரண்டு என்னைக் கடந்து செல்கின்றன. அப்பாலுள்ள மரத்தடியில் தஞ்சமடைந்து கால்களை மடித்துப் படுத்த வாறு அவை இரைமீட்கின்றன.
மேய்ந்த புல்லை அசைபோடும் அந்த மாடுகள் அதிலே எவ்வளவு இதங்காணுகின்றன. என்னதான் தட்டிக் கழித்தாலும் கடந்தகாலச் சம்பவத் தீனியை என்னல் இரைமீட்காதிருக்க முடியவில்லை.
ኅç
※
அந்த நாட்கள். எவ்வளவு பசுமையானவை யாக இன்னமும் என் மனத்திற் பதிந்திருக்கின்றன. மனித உடலில் வலுவும் வாழ்க்கைக்கு வேண்டிய வசதி

Page 32
44 அமரத்துவம்
யும் அமைந்துவிட்டால் மனிதனுக்குத் தன்னைப்பற்றிய அகங்காரமும் " எனது என்கின்ற ஆணவமும் எங் கிருந்தோ வந்து ஒன்றிக்கொள்கின்றது.
அப்பப்பா ! பணத்தின் ஆதாரத்துடன் யான் கட்டிய இன்பமாளிகைகள் அனைத்தும் அத்திவாரமற்ற கட்டிடங்கள் என்பதை அனுபவம் என்ற பள்ளிக் கூடத்திலேதான் பயின்றுகொள்ள வேண்டுமா ?
* உப்புக் கொட்டிலில் ஒழுக்கு விழுந்தது போல என் திருவிளையாடல்களால் என் பணமும் கரைந்து நான் வைத்திருந்த கடையையும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. அற்றகுளத்தில் பறவைகளுக்கு வேலை என்ன? கொட்டியும் ஆம்பலுமாகவுள்ள இந்த உடற் குளத்தில் ஆயிரம் ஆயிரம் நோய்க்கிருமிகள் எஞ்சி நிற்கின்றன.
நாயில் இருக்கும் தெள்ளு நாய் இறந்ததும் தாமாகவே அகன்றுபோய்விடுவதுபோல என் நண்பர் களுஞ் சென்றுவிட்டனர். ஆனல், நான் செய்த அக்கிரம மெல்லாம் ஒன்று திரண்டு தயிரைக் கடையும்போது வெண்ணெய் திரளுவதுபோல, காசநோயாக என்னை ஆக்கிரமித்துக்கொண்டது. முதல்தடவை இருமலாக அது ஆரம்பித்தபோது தேகச்சூடு காரணமாக இருக்கலா மென எண்ணினேன். ஆனல், தேகம் மெலிந்து உரித்த புருவாயிற்று. அத்துடன் மார்ச் சளியுடன் இரத்தமுஞ் சர்வசாதாரணமாக வெளிவரத் தொடங்கியது. பண்ணை ஆஸ்பத்திரிக்குச் சென்று படம் பிடித்துப் பார்த்தேன். தேகம் படுமோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. காங்கேசன்துறை ஆஸ்பத்திரியில் ஒருவருடகாலத்தைக் கழித்தேன். பலன் என்னவோ பூஜ்யந்தான். நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்துடன் டாக்டரின் ஆலோ சனைக்கெதிராகத் துண்டை ‘ வெட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
தொழிலோ ஒன்றுமில்லை. இரண்டு பிள்ளைகள், மனைவி, நான்-மொத்தம் நான்கு உயிர்கள் வாழ்க்கைப்

கோடை 45
படகைச் செலுத்துவது மிகவுஞ் சிரமமான காரியமாகத் தெரிந்தது. பிறந்தவீட்டில் அடைக்கலம் புகுந்தேன். தந்தையின் உதவியினுல் ஒரளவு குடும்பம் நடந்தது. ஆனல், குடும்பத்திலேயுள்ள மற்றவர்கள் ஏதோ தாங்கள் தண்டச்சோறு போடுவதாக எண்ணிக்கொண்டு எங்களை, அணுதைகள் சிலரை வீட்டில் வைத்துப் பராமரிப்பது போல, வேண்டாவெறுப்பாக நடாத்திவந்தார்கள். அதைக்கண்டு மனம் வெதும்பினுலும் கண்டுங் காணுதது போல இருந்தேன். ஆற்ருமைக் காலத்தில் தன்மான உணர்ச்சிகளைக் கொன்றுவிடத்தான் வேண்டும். என்ன செய்வது ?
எனது பிள்ளைக்கும் என் தம்பியின் பிள்ளைக்கும் மண் விளையாட்டில் ஏதோ தகராறு. எனது மகன் தம்பியின் மகனைப் பிடித்துத் தள்ளியபோது அவன் கீழே விழுந்து விட்டான். அதிலிருந்து மூண்டது ரகளை. தம்பி மனைவி குழந்தைகள் தகராறுதானே என எண்ணுது, தனது மனப்புகைச்சலை வெளிப்படுத்துவதற்குத் தக்க தருண மென எண்ணியிருந்தவள் மாதிரிப் போர்க்கொடியை உயர்த்திவிட்டாள். அதன் பயணுகப் பிறந்த வீட்டை விட்டுப் புகுந்த வீடாகிய உரும்பராயை அடைந்தேன். ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிவிட்டாலும் பண்ணை சென்று ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தவில்லை. புகுந்த வீட்டில் பழகுவது ஏதோ " பிறத்தியார் ? வீட்டில் பழகுவதுபோலவே என்னைப்பொறுத்தவரையில் இருந்தது. அவர்களாக மனங் கோணுவதற்கு முன்பு நானகவே ஒதுங்கி எனக்கென்று " சின்னத்திண்ணை யொன்றை உறைவிடமாக்கிக்கொண்டேன். ஒரு பனை யோலைப் பாய், ஒரு தலையணை, ஒரு பேணி, கோப்பை இவற்றையெல்லாம் என்னுடைய உபயோகிப்புக்காக ஒதுக்கி வைத்தேன்.
ஒரே இரத்தம் - ஒரே உறவாக வாழ்ந்தவர்கள் விலகி அப்பாற் செல்ல வேண்டிய நிலை. நானக ஒதுங்கவில்லையானுற் பின்பு அவர்கள் உள்ளங்களால் வெறுத்தொதுக்கப்பட வேண்டும்.
பண்ணைக்கு வரும்போதெல்லாம் தந்தையார் பத்தோ இருபதோ பெற்று வளர்த்துவிட்ட கடமையின் பேரால்

Page 33
46 அமரத்துவம்
உதவுவார். என்னுடைய கஷ்டகாலம், அவரும் திடீரென இறந்துவிட்டார். பற்றுக்கோடற்ற கொடியாகி வேதனை யென்ற சண்டமாருதத்தால் அலையுண்டு, துடித்துத் துவண்டுவந்தேன்.
என்னுடைய கைச்செலவிற்குக்கூடப் புகுந்த இடத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு மூன்று மாதங்கள் ஒருவிதமாகக் கடந்தன. பழகப் பழகப் பாலும் புளிக்கும். பால் புளித்துவிட்டால் அதனைத் தலையில் வைத்தா ஆடுவார்கள்? அதற்குரிய இடம் குப்பை மேடுதான்.
நேற்றுக்காலை, காலை ஆகாரத்திற்கு அப்பம் தந் தார்கள். அதைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது என் இரண்டாவது மகன் வந்தான். அவனுக்கு அப்பம் என்ருல் உயிர். அவனைக் கூப்பிட்டு ஒரு அப்பத்தை எடுத்துக் கொடுத்தேன். ஆவலுடன் அதைச் சாப்பிடச் சென்ற பையனை எனது மாமி கூப்பிட்டு அப்பத்தைப் பறித்து எறிந்துவிட்டு என்னைப் பார்த்த பார்வை. உருத்திரமூர்த்தியின் கோபாவேசம் அவளது விழிகளில் கனன்றது. அவளது வாயினின்றும் புறப்பட்ட வார்த்தைகள் ? எவ்வளவு இளக்காரம் ! குழைந்து குழைந்து மதிப்போடு பேசியவளா இவள் !
* உனக்கு எத்தனைநாள் சொல்லுவது, அங்கை ஒன்றும் வேண்டித் தின்னதை என்று ' எனக் கூறியபடி அவனைத் துரத்திவிட்டு, "இங்கை இருந்து உயிர் வாங்கு வதிலும் பார்க்க எங்கே என்ருலும் கோயில்களில் அல்லது காங்கேசன்துறையிலாவது போயிருந்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். குழந்தைகளாவது ஆறுதலாக இருக்கும் ' என்ருள்.
என் கண்களில் நீர் பனித்தது. அன்று நான் செய்த தீவினையின் பயனை இன்று அனுபவிக்கின்றேன் என எண்ணிக்கொண்டே அழுதேன். சாப்பாடு மாத்திரம் சிறைக் கைதிகளுக்குக் கொடுப்பதுபோல மனைவி கொண்டுவந்து வைத்துவிட்டுப் போவாள். வேறு ஒன்றுமே பேசமாட்டாள். " பணம் இல்லாவிட்டால் மனிதன் பிணத்திற்குச் சமானம் என்பதை உணர்ந்

கோடை 47
தேன். இப்படி எத்தனை நாட்களுக்குத்தான் மான மிழந்து சீவிப்பது? சிந்தித்தேன். புகுந்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவுடன் கண்ணயர்ந்தேன்.
米 杀
பொழுது புலர்ந்தது. எழுந்து முகம் கழுவிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டேன். புறப்பட முன்னர் பிள்ளைகளை இறுதித் தடவையாகப் பார்த்துப் பேசிவிட்டு வெளியேறினேன்.
நெஞ்சிற் புகைச்சல்; தாங்கமுடியாத அரிப்பு. அந்த வேஜா பஸ்ஸிற்குள் இருமினேன் என்ருலும் அநாகரிக மாக இருமவில்லை. நலமுண்டுத் துண்டைக்கொண்டு வாயை மூடிக்கொண்டுதான் இருமினேன். முன்னல் இருந்த அம்மையார் ஒருத்தி பக்கத்திலிருந்த பெண் ணிடம் ' கசம்பிடித்தவர்க ளெல்லாம் பஸ்ஸில் ஏறி மற்றவர்களுக்கும் தொற்றவைக்கிருர்கள்' என்ருெரு பொன்மொழியைக் கூறினுள். பிரயாணிகள் எல்லோரும் என்னை அருவருப்புடன் நோக்கினர். எனக்குப் பக்கத்தி லிருந்த பிரயாணி எழுந்து அடுத்த சீற்றுக்குப் போய் விட்டார்.
யாழ்ப்பாணம் வந்ததும் பிறந்தகம் செல்ல வேண்டும் என்ற நப்பாசை. அங்கு போய்விட்டு ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்ற எண்ணத்துடன் பத்துச் சதத்துக்கு இனிப்பு வாங்கிக்கொண்டு அங்கு சென்றேன். என்னைக் கண்டதும் தம்பியின் மகன் "பெரியப்பா' என்றழைத்த படி ஒடிவந்தான். வாரி அணைத்து முத்தம் சொரிய வேண்டுமென்ற ஆவல். ஆணுல் என் நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு இனிப்பைக் கொடுத்தேன். அம்மா வந்து சுகநலம் விசாரித்தாள். பெற்றமன மல்லவா? " இரு தம்பி, தேத்தண்ணி கொண்டுவாறன் ; குடிச்சிட்டுப்போ’ என்றவள் அடுக்களைக்குத் திரும் பினுள்.
* மாமி, என்ன பேணியிலை தேத்தண்ணி கொண்டு போக வெளிக்கிடுகிறியள். நாங்கள் பிறகு அதில் ஒண்டுங் குடிக்கிறதில்லையோ? " மாடா விலை கிளாஸ் இருக்கு. அதிலை விட்டுக்கொண்டுபோய்க் கொடுங்கோ.”

Page 34
48 அமரத்துவம்
4 % ტყ:[i] L9]6ir?ar, ? ?
மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். அம்மா தந்த தேநீரைக் குடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். மன திலே பலவிதமான போராட்டம். உள்ளே போகவில்லை. மரத்தின் கீழ் உட்கார்ந்துவிட்டேன்.
6 ம்மா."-படுத்திருந்த மாடுகள் கத்திய சத்தங் கேட்டு நான் 'அசை ' போடுவதை நிறுத்திவிட்டு அவற்றை நோக்கினேன். அவை தத்தம் இடங்களுக்குச் செல்கின்றன. நான் எங்கு போவது ? தன்மானம் இழந்து இன்றுவரை உயிரை மட்டும் பிடித்து வைப்பதற்கு வாழ்ந்தது போதும். இனி.
நெஞ்ச இரைப் பையில் சீரணிக்க முடியாத ஆயிரம் ஆயிரம் துன்பங்களுக்குக் கரைகாண வேண்டுமானல். நான் வாழ்வது தகாது. எனது இந்த முடிவிற் கோழைத் தனத்தைக் காணும் உலகத்தைப் பற்றி எனக்கு அக்கறை கிடையாது. மரம் பூப்பது முழுவதும் காயாவதில்லை. காய்ப்பது அத்தனையும் முற்றிக் கனியாவதில்லை.
இரவின் கரும் போர்வை உலகத்தைக் கவிந்து கொண்டது. எதையும் பிரித்து எடுத்துவிட முடியாத கருமை. யாழ்ப்பாணத்து மின்சாரக் கம்பங்கள் இருளை ஒட்டிக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. பண் ணைப் பாலத்தை நோக்கி மெதுவாக எழுந்து நடந்தேன்.
அதோ அந்தக் கடல் ஓங்கார கானமிசைத்துக் கொண்டு அலைகளைத் தூக்கி எறிந்தெறிந்து ஒசையிடு கின்றது.
அந்த ஒசையின் அர்த்தம். காலனின் அழைப்பா ?
இறந்துபோன தந்தையையும் மற்றும் தாயார், மனைவி, பிள்ளைகள் எல்லோரையும் ஒருமுறை நினைத்துக் கொள்ளுகிறேன்.
திணறல் . போராட்டம் . மயக்கம் .
ஆழ ஆழச் செல்லுகின்றேன் .
 

முள்
கிழக்கு நோக்கி நீண்டு கருங்கோடு கிழித்த பனங் கூடல். நிழல் மறையுங் கருக்கற் பொழுது. பகலின் ஒளிவைக் கண்டு தாம் வாழுங் கிளைகளை நாடிச் செல்லும் பறவை இனங்களின் பிலாக்கணம், அமைதியைச் சாகடித்து ஒய்கிறது.
வீதியின் கிழக்குப்புறத்தே உள்ள பெரிய வளவில் எதேச்சையாக வளர்ந்த வடலி ஒலைகளையும், கலட்டியின் * செழுமை'யைப் பறைசாற்றும் " இக்கிரிப் பற்றையை யும் சலன புத்தியுடன் கடித்து உருசி பார்க்கும் வெள் ளாட்டுக் குட்டிகளைச் சாய்த்து வருகின்ருள் மூன்ருவது வீட்டுத் தெய்வானை ஆச்சி.
இலட்சுமி, தங்கம் என்ற அந்தக் குட்டிகள் கட்டுப் பாடற்ற, துடுக்குக்காரக் குழந்தை களாக அங்கும் இங்கும் அலைய முயல்கின்றன. அவற்றை அடக்க ஆச்சிக்குத் தெரியும்.
* பால்குடியன்கள் ! உரோமம், பட்டின் மிருதுத் தன்மையைப் பிழிந்து வடிக்கிறது. அவற்றினைப் பிடித்து வைத்து, உடலை நீவிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை தோன்றும் அத்துணைக் கவர்ச்சி! கடவுளின் படைப்பின் அழகில் மனம் இதங்காண விழையும் அவாவின் குமைச்சல்,
வீதியில் f கினிங், திணிங் என்ற சைக்கிள் சத்தத் தைக் கேட்டு, " வள் வள் ' என்று குரைக்கும் வீட்டு நாயின் " கட்டிய ஒலம் என் கவனத்தைக் குலைக்க, கண்கள் படலைப் பக்கம் மேய்கின்றன. அம்மாவின் வீட்டுக்குப் பக்கத்தில் வாழும் சோமு என்ற பையன் சைக்கிளிலிருந்து இறங்கி வருகின்றன்.
4 -- yھے

Page 35
50 அமரத்துவம்
" கமலக்கா.
** என்ன தம்பி ? ??
* உங்கட. ' - வார்த்தைகள் தொண்டைக்குள் திக்கித் திணறுகின்றன.
** எங்கட. என்ன சொல்லன். என்
தவிப்பை அவன் உணரவில்லை.
** என்னப்பா வந்த விசயத்தைச் சொல்லேன். ' * உங்கட தம்பி கணேஸ் மோசம்போயிட்டான்
அக்கா. ?’’
勇 》
** என்ன ? தம்பி கணேஸா. ?
பாசப் பொறிக்கிடங்கு விரிந்தவிழ, அதற்குள் நான் அமிழ்கின்றேன்.
கண் விழித்தபோது கருக்கற் பொழுது கடந்து விட்டது தெரிகிறது. நெஞ்சை அதன் போக்கிற் செல்ல விடாது முடக்கித் திருப்பும் முயற்சி.
செய்தி சொல்லவந்த பையனின் சுவடு அழிந்து. முகிலிற் துடுப்பெடுத்து ஒடம் செலுத்தும் நிலவின் ஒளி எங்கள் ஊரைச் சீதளக் குளிப்பிற்குள் ஆழ்த்துகின்றது. எத்தனை எத்தனை சீவராசிகள் இந்த ஒளியின் மயக் கத்தில் இன்ப சுகத்தை நாடி. !
முற்றத்தில் நிற்கும் முல்லைக் கொடியில் மொட்டுகள் பருவப் பூரிப்பிற் பூட்டறுத்து, வாலைக் குமரியின் போது நிலை காட்டி மயக்க...அப்படியிருக்கும் கணேஸின் அரிசிப் பற்கள்.
* சின்னஞ் சிறிய குஞ்சுக் கையால் தொட்டுத் தடவிய தம்பி. 11
இன்று இல்லை ! வேதனை நெஞ்சை மத்தாய்க் கடைகிறது. அதனல், கண்களிற் காட்டாற்று வெள்ளம் உருவாக " கைத்
துடைப்பு 'க் கருமம் என்ற அணையையும் உடைத்துத் தகர்க்கின்றது.

முள் 51
வீடு காட்டிய கற்புக் கோட்டத்தை ஊடறுத்து உட்புகமுடியாத நிலவொளி முற்றத்தில் விழ, வீடு இருளில் மூழ்கின்றது.
வீட்டின் இருளை விளக்கொளி இரையாக்குகின்றது. துன்ப முட்கள் நெஞ்சைக் குத்திக் கிழிக்க. இப்போதைக்கு என்ன செய்வது என்று தெரியாத பதட்ட நிலையில், தூணுடன் சாய்ந்தவாறு கிடக் கின்றேன். விழிகள் வீதியைத் துழாவுகின்றன. இன்னும் அவர் வரவில்லை.
உடனடியாகத் தம்பியை-இல்லை தம்பியின் உடலைக் காணமுடியாதவளாகத் துடிக்கின்றேன்.
அடிக்க அடிக்கக் கெம்பி எழும்பும் இறப்பர்ப் பந்துதான் மனம், மன அங்கலாய்ப்புக்களின் அடிகளைத் தாங்க இயலாத . .
* தம்பி! இப்போது தம்பியில்லை. நீ வெறும் பிணம்." ஒன்ரு ? இரண்டா ? எத்தனை சம்பவங்கள் ?. ஆகக்கூடிப் பத்துவயது கூடாத உனக்கு இப்படியொரு நிலையா? தாயின் அடியிலிருந்து பிரிக்காத குட்டியாகக்
குருக்கன் அடித்ததா ?
'வாழைக்குட்டியை அழிக்கும் இயமன், எத்தனையோ நச்சுமரங்களை உலகத்தில் ஏன் இன்னும் வைத்திருக்க வேண்டும் ??
* உன் முகத்தை, அழகான பிஞ்சுக்கரத்தை, வாளிப் பான உடலை, இனிமையான பட்டதரங்களைக் கண்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றனவே."
பிறந்தகத்தாருக்குப் பிடிக்காதவள் நான். *ஒடு காலி, உனக்கு அந்திரட்டி செய்துபோட்டம். இனி, இஞ்சை வாசற்படியைக்கூட மிதிக்கக்கூடாது.”
இந்தக் கட்டளையை மீறியா நான் உன்னைக் காண்பேன் ?
என்னையே நொந்துகொள்ளும் நான்.

Page 36
52 அமரத்துவம்
* இல்லை. என்னை உயிராக, தன் சதையைக் கரைத்து அதனையே ஊட்டமாக ஊட்டிக் காக்கும் அத்தான்: அவரை நம்பி, நான் வெளியேறியது தவரு ?
சமுதாய ஏற்ற இறக்கத்துக்கு மேலாக ஒரு பெண்ணின் மனச்சாட்சி பெரிதென்பதை - அவளது திண்ணியமான கற்பு மேலானதென்பதைச் சற்றுஞ் சிந்திக்காதவர்களே படித்தவர்களாக உலவும் இந்த உலகத்தில்.
* பச்சைப் பசுங்கொடியே! பழுதுபடா இரத்தினமே
பிச்சையெனக் கிடைத்த பெரும் பொருளே
இப்படி எவளாவது கிழவியொருத்தி தன் வீட்டுப் பழஞ்சலிப்பை எங்கள் வீட்டுச் சாவிற் சொல்லி அழ அனுமதிக்கும் உலகம், சொந்த இரத்த உறவை, உயிரோடு கலந்து வந்த சொந்தத்தை வெட்டிச் சாய்ப்பதில்.’
* தம்பி! நீ செத்துக்கிடக்கிருய் . ஒடிவந்து உன்னைக் காணமுடியாத பாவியாகிவிட்டேனேயடா. உனக்கும் எனக்குமுள்ள " பட்ச "த்தை எப்படியடா மறப்பன் ? உன்னைப் பெற்றவள் அம்மாதான்; ஆனல் வளர்த்தவள் நான். இராசா ?
குறுகுறுவென ஒளிரும் குறும்புக் கண்கள். பட்டின் இதந்தரும் தளிர் உடல், முல்லையின் மலர்ச்சி இரகசி யத்தைக் காட்டும் பற்கள்!
பிறந்த ஒரு வருடத்துக்குள் அம்மாவுக்குக் கடுமை யான சுகவீனம், கிழித்துப்போட்ட நாராக, கட்டிலிற் கிடந்த அவவால் உன்னைத் தூக்கி ஒராட்ட எப்படி முடியும் ! நிசியின் பேயமைதியைச் சாகடித்து நீ அலறு வாய். உன் துரும்பு உடலில் அந்தச் சத்தம் எப்படி யடா பிறக்கும் ? அப்பொழுது நான்தான் உனக்குப் போச்சியில் பால்தந்து வளர்த்தவள். * கமலா சின்னஞ்சிறுசு இராக்கண் பகற்கண் விழித்துக் குழந்தை யோடு மாரடிக்கிருள் எண்டு அம்மா எத்தனையோ தரம் சொன்னது உனக்குத் தெரியாது. அப்பாவின்

முள் 53
தோளிற் கிடந்து நெளியும்போது, " அந்தா பெரியக்கா எண்டு கையைக் காட்டினுற் போதும், உலகம் என் னளவோடு உனக்குச் சுருங்கிவிடும். அக்கா பிள்ளை' யாக வளர்ந்த நீ இன்று பிணமாக அங்கே கிடக்கிருய் பார்க்கமுடியாத அபலையாக நான் இங்கு இருக் கின்றேன்."
அடுத்த வீட்டு முற்றத்தில் மின்னிய ஒளிச் சன்னங்கள் உறக்க விட்டத்துக்குள் அகப்பட்ட மனிதப் பிரகிருதி களினல் அழிக்கப்பட்டுவிட்டன. அவ்வீடுகள் இருளிற் சயனிக்கின்றன.
வழக்கமான நேரம் கடந்துவிட்டது.
* காரும் அவரும் இப்ப எந்த ஊரிலேயோ ? வாடகைக் கார் என்ருல் ஒரு இடத்தில் நிற்கமுடியுமோ? பாவம், அந்த மனுஷன்தான் என்ன செய்யும் ? நான் பெரிய வீட்டுக்காரியெண்டு ஆலாய்ப் பறந்து உழைக்குது. அவர் என்னிலை வைச்சிருக்கிற அன்பு ; அதுக்காக உப்படியே உழைக்கவேணும் ??
* அந்த டிறைவரோடு ஒடிப்போனவள் இந்த வீட்டுப்பக்கமே தலைகாட்டப்படாது. அப்பா பெரிய பவிசிலை பேசினவர். எனக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட இவரின் நல்ல குணம் அப்பாவுக்கு எப்படித் தெரியும் ??
அடுத்த வீட்டில் குழந்தை அழும் ஒலி.
மனித நினைவுக்கும்-வேதனைக்கும் முண்டுகொடுக்கும் சந்தர்ப்பங்கள் எங்கெங்கோ எப்படி எப்படியோ தோன்றிவிடுகின்றன.
* இதைப்போலை நீ அழும்போது எனக்குப் பத்து வயது. நான் எப்படி எப்படியோ அணைத்துப் போச்சி யைத் தந்து. , அம்மா பாவம் அவள் என்ன (o)ruiaufrait ?
நினைக்கவே நெஞ்சு குதறுகிறது.

Page 37
54 அமரத்துவம்
* தம்பி! உன்ர பக்கத்திலை இருந்து உனக்கு இறுதிச் சடங்கு கூடச் செய்ய முடியாத மாபாவியாகிவிட்டன்."
நான் செய்துவிட்ட தவறென்ன ? என் மனதுக்குப் பிடித்தவரை மனதால் வரித்துக்கொண்டேன். மனமே செயலின் ஆதாரம். மனதை ஒரிடத்தில் வைத்துச் செயலைச் செய்வதென்பது எல்லோருக்கும் சாத்திய மானதல்ல. மனமும் செயலும் ஒன்றிய வாழ்வையே நான் விரும்பினேன்.
* தம்பி வாடிவதங்கிய பூவைப்போலக் கிடக்கும் உன்னைச் சுற்றி நின்று அழுவார்களே! நான் ஓடி வந்து.'
‘எப்படி வருவேன்?
* மூதேவி! வெட்கங்கெட்டவள். கார் டிறைவருக்குப் பின்னலை போனவள். இனி என் பிள்ளை இல்லை. நான் அந்திரட்டி செய்துபோட்டன். இனி என் கண்ணிலை விழிக்காதை-எண்டு திட்டின அப்பா என்னைக் கண்டதும் நரசிங்கராகத்தான் மாறுவார்.’
அப்பா ! அவரும் உரிமையும், என் கையால் வளர்ந் தவனின் இறுதிக்கோலத்தை நான் காணக்கூடாதென்று தடுக்க அவர் யார் ? நெஞ்சிற் பிரவாகித்த வேதனை யூற்று கண்வழி கழிகின்றது. என்னை உணராத ஏகப் பெருவெளியிற் செல்வதுபோன்ற உணர்வு.
இருளை ஊடறுத்துக்கொண்டு வரும் மோட்டார் வண்டியின் ஒளிச்சன்னம் முற்றத்துக்கு அப்பால் ஒளி வாய்க்கால்போலப் பரிணமிக்கிறது.
அவர் வருகின்றர்.
வழமையான எந்தச் செயலுமின்றி அழுதகண்ணுேடு இருக்கும் என்னை அவரது அழைப்புக் குலுக்குகிறது.
" தம்பி, '-தொண்டைக் குகைக்குள் வார்த்தைகள் அமுங்கிய தவிப்பு!
 

முள் 55
* * କtଙrଜor' ? ' '
* தம்பி.பின்னேரம் செத்துப்போனன்.' ** என்ன... ???
மகா மசானப் பெருமோனம் திரையிடுகின்றது. அதனைக் கிழித்துப் பேசும் வலு.
** நான் 9
** நான் அங்கை போகட்டே ?" * உன்னை வீட்டுக்குள்ளை விடுவினையோ ??? ** என்ர தம்பியைப் பார்க்க எனக்கு உரிமை
யில்லையா? என்னை ஆர் தடுக்கப்போகினம் எண்டு பாப்பம், '
*கமலா, போறதோ போகாமல் விடுறதோ உன்ரை
விருப்பம். விருப்பப்படி செய்யும். ' சலனம் எதுவுமின்றி, புதுப் புனலின் பாசம் கூட்டி வடியும் வார்த்தைகள்.
எப்போது விடியும் ?
இரவின் இறுக்கம் கண் கொட்டக் கொட்ட விழித் திருக்கின்றேன்.
அரைமைல் தொலைவில் அழுகுரல், இரவின் அமைதி யைச் சாகடித்துக்கொண்டு என் காதுகளில் விழுவது போன்ற பிரமை.
இரவின் இறுக்கம் கலைய, சேவல் கூவுவது கேட் கின்றது.
அவர் உழைத்துச் சோர்ந்த நிலையில் குறண்டி’க் கொண்டு படுத்திருக்கிருர், இருந்தும் இயந்திரமாகிவிட்ட மன உணர்வு, அவரை உசுப்பி எழுப்பிவிடுகின்றது.
நானும் எழுந்து தம்பியின் சாவீட்டிற்குப் புறப்படு கின்றேன்.

Page 38
56 அமரத்துவம்
அதிகாலையில், பூபாள இராகத்தை எழுப்பும் பட்சிகளின் ஒசையை அடக்கிப் பறைமேளத்தின் ஒலி கேட்கின்றது.
* இனியும் பொறுத்திருக்க முடியாது."
* கமலா வெளிக்கிட்டிட்டியே ?
9 9
“ gob... . . ... ** நான் வந்தால் வீண் கரைச்சல், நீ மட்டும் போட்டுவா’ எனக் கூறியபடி கூட்டிவந்து எங்கள்
வீட்டுக்கருகில் விட்டுச் செல்கின்ருர்,
தத்தித் தத்தி நடக்கும் குழந்தையின் நடையுடன் இருள், உலகை விட்டுச் செல்கிறது.
கிழக்கின் கருப்பப்பையைப் பிளந்து மீண்டும் பிரசவ மான சூரியன், குறும்புத்தனத்துடன் உலகத்துக்குப் பொன்முலாம் பூசுகின்றன்.
நெஞ்சக் குன்றிற் பொங்கிப் பிரவாகித்துவரும் வேதனை அணையை உடைத்துப் பாய்கின்றது.
* பாலோ பருக்கவில்லை! பாற்கடனுே செய்யவில்லை!’ கிழவிகள் தங்கள் மானசீகத்துக்கேற்ற கற்பனைகளை யெல்லாங் கொட்டிக் குவித்துக் குரல்கொடுப்பது கேட் கிறது.
நெஞ்சத் துன்பத்தை ஒப்பாரியாகக் கொட்ட முடியாத நிலையில் என் கால்கள் எட்டி நடைபோடு கின்றன.
குலையுடன் சேர்ந்த மொந்தன் வாழை வீட்டு வாசலிற் கட்டப்பட்டிருக்கிறது. இடாம்பீகத்தையும் காலத்தின் நாகரீகத்தால் அள்ளுண்டு போகாத பழைய மரபையும் பறைசாற்றிடும் வீட்டின் சம்பிரதாயத்துக் கான அடையாளங்கள் அவை.
தனித்துச் செல்லும் என்னைக் கண்டதும், வாசலின் ஒரத்தில் தென்னேலைக் கீற்றின்மேல் அமர்ந்திருந்த பறையன், பறையை ஒங்கி அடிக்கிருன்.

முள் 57
ஒலியை ஊடறுத்து என் கால்கள் முன்னேறுகின்றன. கனலாக மூண்டு கொழுந்துவிட்டெரியும் நெஞ்சின் க்கொழுந்துகளின் சுவாலை என்னை வாட்டி வதைக்க, தீ (Lp(5gil டி வதை கட்டிலில் வளர்த்தப்பட்ட உடலை மூடிய சேலையை நீக்கி .
* தம்பி!” - என்று சீதளம்பெற்ற அந்த உடலில் என் முகம் புதைக்கின்றேன்.
* ஒடு காலி நாயே..போனவனேடு போறதுக்கு ங்கையேன் வந்தனியடி...' என்றபடி, என் கூந்
ந 19. AD LI L
தலைப் பற்றி வெளியே இழுத்துக்கொண்டு வரும் அவர், என்னை மார்மேலும் தோள்மீதுங் கிடத்தி, வளர்த்து விட்ட தந்தைதான்.
** அப்பா, உங்களோடை சொந்தங் கொண்டாட வரேல்லை. என்ர தம்பி. 99
*" போடி வெளியே! உனக்கொரு தம்பியா? அவன் இண்டைக்குச் செத்துப்போனன். ஆனல், நீ அந்த டிரைவருடன் போன அண்டைக்கே அந்திரட்டி செய் திட்டன்!' என்று சொல்லிக் குரோத உந்தலில் என்னை வெளியே தள்ளுகிருர்,
அங்கு நான் அணுதை. இழவு வீட்டிலும் "கர்வம் கொலுவிருக்கிறது. நான் என் வீட்டை நோக்கி நடக் கிறேன்.

Page 39
ஆதாரம்
66 நாதன் தைரியமாகப் போடா ! எல்லாம் சரியாக நடக்கும்.’’ இப்படிச் சொல்லி வண்டிக்குள் தள்ளி விட்டுத் தனது கரங்களை அசைத்து விடைதந்த நட ராஜனின் தோற்றம் என் விழிகளைத் தாண்டி எட்ட எட்ட நகர்கின்றது. ஜன்னல் வழியே எனது கையைக் காட்டி எனது பிரியாவிடையைத் தொடர்ந்துகொண் டிருப்பதில் இனி அர்த்தமில்லை.
நான் முன்னே.
\,
அவன் பின்னே.
பகல் நேரமாக இருந்திருந்தால் அவனது உருவம், எனது கண்களுக்கு இன்னும் சற்றுத் தொலைவிலிருந் தாலும் தெரிந்திருக்கும்.
மனித அறிவினது பரிணும வளர்ச்சியின் பேருகப் பரிணமித்த மின் விளக்குகள் தமது சக்தியை வாரிக் கொட்டிக் கொழும்புப் பட்டினத்தின் உண்மைச் சொரூபத்தை இன்னமுங் காட்ட முயல்கின்றன. ஆணுல், ஒடும் வண்டியிலிருக்கும் எங்கள் விழிகள் அதனைப் பார்ப்பதற்குச் சக்தியிழந்து வடக்கை நோக்கி முன்னேறுகின்றன.
நேரகாலத்தோடு ஏறிவிட்டதன் பேருக இருக்கை சற்று வசதியாக அமைந்துவிட்டது. இந்த வண்டிக்கு ஏதாவது இடைஞ்சல் ஏற்படாமல் இருக்குமானல், நிச்சயம் அதிகாலை ஐந்து மணிக்கு யாழ்ப்பாணத்தை அடைந்துவிடலாம். உடனடியாகப் பஸ் கிடைத்து விட்டால் ஊருக்கும்.
༣,

ஆதாரம் 59
இந்த நினைவு கசப்பும் இனிமையும் இரண்டறக் கலந்த நிலையற்ற சலனத்தில் மனதைத் தள்ளுகின்றதே. கசப்பான உண்மைகளுக்கும், அனுபவத்துக்கும் அப்பாற் பட்டதுதான் இனிமை. அது இலகுவிற் கிடைக்கக் கூடிய ஒன்றல்லப் போலும். எத்தனை துன்பஞ் சூழ்ந்து கொண்டு, என்னை ஆட்டிப் படைத்தன. இப்போது மட்டும் மனதிற் குதூகலம் என்ன துள்ளியா குதிக்கிறது?
நினைவில் இருள் சூழுகிறது.
அந்த இருளுக்கு ஏதுக்கள் அனந்தம். கையோடு கொண்டுவந்த காலைத் தினசரியை-பகல் முழுவதும் திருப்பித் திருப்பி நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் புரட்டிப் பார்த்திருப்பேன். படித்துப் படித்து நெட் டுருவான செய்தி அது. என்னுள் குமுறும் நெஞ்சின் இஷ்டத்துக்கமைய, கண்கள் அச்செய்தியை மீண்டும் மேய்கின்றன.
* அன்பு மகனுக்கு.
நீ எங்களை நட்ட நடுவழியில் விட்டுவிட்டுச் செல்லலாமா? உன்னை நம்பித்தானே நாங்கள் இந்த உயிரை வைத்திருக்கின்ருேம். நீ போன நாள் தொடக்கம் அம்மா ஊண் உறக்கமின்றி ஒயாது அழுது புலம்பிக்கொண்டிருக்கிருள். உன்னுடைய எண்ணப்படி எல்லாம் நடக்கும். தாமதிக்காது உடன் வரவும்.'
தந்தை நமசிவாயம், கரவெட்டி. சாதாரண விளம்பரத்துக்கெனப் பத்திரிகைகள் ஒதுக்கும் பக்கங்களை விடுத்து, வாசகர்களின் கவனத்தை இலகுவிற் கவரக்கூடிய பக்கத்தில் அந்த விளம்பரத்தை இடம்பெறச் செய்திருந்தார்கள், பணமும் கூடுதலாகச் செலவாகியிருக்கும்.
நட்ட நடுவழியில் விட்டுவிட்டேனும் நான் அவர்களை. நானு நடுவழியில் விட்டேன்? இப்போது, நான்தான்

Page 40
60 அமரத்துவம்
நட்டநடுவழியில் நிற்கிறேன். அவர்களா நடுவழியில் நிற்கிருர்கள்.
வீட்டைவிட்டு வெளியேறி எட்டாத தொலைவில் நானிருந்து ஏங்க என்னை நம்பிய."சே!” பெற்ருராம் பெற்ருர் . இந்த அன்பெல்லாம் அப்போது எங்கே தொலைந்து போனது? இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர்கள்தானே !
* உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்ததற்கு நீங்கள் எத்தனைநாள் வேண்டுமானலும் அழுது தொலையுங்கள். எனக்காக ஏன் நீங்கள் வாடவேண்டும் ?' என்று சொல்லி என்னுள் குமுறிய ஆத்திரத்தோடு காலையில் இப் பத்திரிகையை விட்டெறிந்துவிட்டு வேறு இடத்துக்கு மூட்டை கட்டலாமென முனைந்தேன்.
விட்டான நடராஜன் ?.
* மடையா ! நீ அவைக்காக மட்டுமல்ல, உனக்காக மட்டுமல்ல, உன்னை நம்பியவர்களுக்காகவேனும் போகத் தான் வேண்டும். கடந்த மூன்று நாளுக்கு முன் யாரோ ஒரு வாலிபன் வவனியாவில் ரெயிலடித்துச் செத்து விட்டானம். உன்னைக் காணுதவர்கள் நீயென்று நம்பி விட்டால். விபரீதமான தொல்லைகள் உன்னையே சூழ்ந்துவிடலாம்.'
ஆத்திரத்திற் புத்தி மழுங்கிய எனக்கு அவன் மிக இலகுவாக விஷயத்தை விளக்காமலிருந்திருந்தால் அவனையும் உச்சிவிட்டு இன்னும் எங்காவது சென்று தொலைந்திருப்பேன்.
கையிற் பிடித்திருந்த பத்திரிகையைத் தட்டிப் பறிப் பதுபோற் சாளரத்தினூடே காற்றுச் சுழன்றடித்தது. அதனை நிதானமாகப் பிடித்துக்கொண்டேன். எனக்கு முன்னே-எனக்கு அருகிலேயே, பிரயாணிகள் எல்லாரும் தங்களுக்குத்தக்க பிரச்சினைகளில் ஈடுபட்டுவிட்டார்கள். நீண்ட அரவம் தனது குறுங்காலால் ஊருவதுபோல நேரம் மெதுவாக ஊருகிறது. அதைப்பற்றிய அக்கறையை

ஆதாரம் 61
எனக்கில்லாமற் செய்யும் நெஞ்சின் நினைவுகளில் என் னுள் நானே சம்வாதம் செய்ய முனைகின்ற உணர்வு களைத் தட்டிக்கழிக்கத் திராணியற்று எற்றுண்டு செல்லு கின்றேன். சீரணிக்க மறந்த சம்பவத் தீனி அசீ ரணத்தை உண்டாக்குவது நியதிதானே !
காலமும் மனமும் ஒன்ருேடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவைதான். உலகம் அன்றிருந்த நிலைக்கும் இன்றிருக்கும் நிலைக்கும் எத்துணை வேறுபாடு. மாற்றம் நிரந்தர உண்மை. பாலணுக இருந்தவன் பைய ணுகி - இளைஞணுகியபோது பாலப்பருவத்து மழலைத் தனமோ, பையனுக இருந்தபோதுள்ள குறும்புத் தனமோ இன்றிப் புதிய ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படு கின்றன். அச் சூழ்நிலையிற் கிடைக்கும் அனுபவங்கள் எவரும் சொல்லிக்கொடுத்து வருபவையல்ல.
இந் நியதிக்கு நானெப்படி விதிவிலக்காகமுடியும்? காலம் எப்படி நிற்காமல் விரைகின்றதோ, அத்தோடு உடலும் உள்ளமும் ஒத்து மாறுதலடைகின்றன. எவ் வளவுதான் கட்டுப்பாடாக, வைதீக ஆசாரங்களை, குல சம்பிரதாய விரதங்களை மேற்கொண்டாலும், மனித னுக்கு அமைந்த உணர்ச்சிகளுக்கு மனிதன் அடிமையா கிறதைப் பலரின் அனுபவங்கள் நீண்ட காலமாகச் சுட்டிக் காட்டியே வருகின்றன.
அன்னைக்கும் தந்தைக்கும் அருமையான மைந்தனுக அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவன்தான் நான். * கீறிய கோட்டைத் தாண்டாதவன் தம்பி " என்று அப்பாவாற் பெருமைப்படுத்தப்பட்ட அருமை மைந்தன், அவராலிடப்பட்ட தறுதலைப்பட்டத்துடன் இப்படி வெளியேறியிருக்கிறேன்.
பாராட்டியவர்களே, வெளியேறுவதற்குக் காரண மாகியதை மறுக்க முடியுமா ? அவர்களின் காரணத்துக்கு மையமாக அமைந்தவள் தங்கம். அந்தத் தங்கம் அவர்களுக்கு வெறும் பித்தளையாக இருக்கலாம்:

Page 41
62 அமரத்துவம்
காரணம் ? வெளியுலகம் சதா போற்றிப் புரக்கும் பண மென்ற உரைகல்லில் உரைத்தபோது, அவர்களுக்கு அப்படித் தெரிந்துவிட்டது. அதன் மாற்றுக் குறையாத மதிப்பை உண்மையில் உணரும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லையே !
'நீ மட்டும் அப்படி என்னத்தைக் கண்டுவிட்டாய்?’’ இது அவர்கள் விடுக்கும் வினதான். முதிர்ச்சியும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களும், இளமையான உள்ளங்களின் போக்கையும் சுயநலத்தை எதிர்பார்க் காத துல்லியமான அன்பையும் உணரத் தவறிவிடு கின்றன. இந்த உலகம் அந்தஸ்து என்ற நாதனலே தான் ஆளப்படுகிறது.
தங்கம் என்ற அந்த நான்கெழுத்துக்குள் என் வாழ்க்கை தங்கியிருந்ததை அவர்களுக்கு எவ்வளவு தூரம்
உணர்த்தினேன். உண்மையை உணர்ந்துகொள்ளத் தவறிய அவர்களுக்குப் புலப்படவில்லையே அது. தங்கம் . சொல்லும்போது, இதமும் சுவையும்
சொட்டும் சொல்.
எதிர்பாராத சந்திப்புத்தான். எவ்வளவு இறுக்கமான இணக்கம் ? ஒருவரையொருவர் பிரியமுடியாத நிலையை எம்முள் உருவாக்கியது அந்தச் சம்பவம். சதா கற்பனைக் கதைகளிற் கிடைக்கும் கருவான ஒன்று. செத்த பாம்பைத் திருப்பித் திருப்பி அடிப்பதுபோல் கதாசிரியர்கள் இதையேதான் சதா பின்னிக் கதையாக்குகிருர்கள். இந்த உண்மையை அஸ்திவாரமாகக் கொண்டுதானே, மனித சமுதாயம் ஊழிஊழிக் காலமாக இயங்குகின்றது என்ற உண்மையை மறந்துவிடுகிருர்கள், மனிதர்கள்.
என்னைக் கவர்ந்து என்னைத் தனதாக்கி விட்ட தங்கத்தை என்னுல் பிரிந்துவாழ முடியாது. என் உணர்ச்சி களின் அர்த்தங்களைச் சரியான உவமைகளிலோ பொரு ளிலோ சொல்லிவிடச் சக்தியற்றது என் புன்மதி.
நடக்கின்ற காரியங்கள் எதுவும் திட்டமிட்டதுபோல் நடந்துவிட்டால் இந்த உலகில் அனந்தகோடி மாற்

ஆதாரம் 63
றங்கள் நாளும் சம்பவிக்க வேண்டுமென்பதில்லையே ! இதையெல்லாம் நடத்திய சூத்திரதாரி யாரோ ? அறிந்
தவர் யார்?
புரியாத கற்பனைகளையும், தத்துவங்களையும் இங்கு கொட்டிக் குவிப்பதில் அர்த்தமில்லை.
என் ஆகத்தைச் சத்திர சிகிச்சைசெய்து, அதனுள் அமைந்துள்ள இதயத்தை அப்படியே பார்க்கும்போது அதில் வதிபவள் தங்கம் என்பது துலாம்பரமாகத் தெரியும்.
காலை ஆறுமணிக்கு நெல்லியடியிலிருந்து புறப்படும் *வான்’ தனது வழமை மாமூல்படி அப்படியே பிரயாணி களை இழுத்துக்கொண்டு சென்றிருந்தால் . இந்தச் சிக்கலிலோ, வலையிலோ அகப்பட வேண்டியதில்லை.
அன்று வான் கொள்ளவேண்டிய அளவுக்கு மேல் இரண்டொருவர் அதிகமாக இருந்தபோதிலும் வான்’ சாரதிக்குத் திருப்தி ஏற்படவில்லை. வழியிற் பிரயாணி களை ஏற்றிக்கொள்ள வேண்டுமென ஆலாய்ப் பறந்தான். அவன் எண்ணியபடியோ, அன்றி என் வாழ்வின் திருப்பத்துக்கோ சந்தர்ப்பம் ஏற்படவேண்டு மென்று நியதி இருக்கின்றதே ! அதைத் தடுத்துக்கொள்ள முடிய வில்லை. வழியில் ஒரு பெண்ணுஞ் சிறுமியும் ஏறினர். அவர்கள் அடிக்கடி வழியில் நின்றுகொண்டு கைகாட்டு வதை நான் பார்த்திருக்கிறேன். பிதுங்கி வழியும் கூட்டத்துடன் செல்லும் ஏனைய நாட்களில் அவர்களை ஏற்ற வழியற்று வான்’ சென்றுவிடும். அன்று அவர் களும் ஏறிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. இருப் பதற்கு இடமின்மையால் உடலை வளைத்துக் குனிந்தபடி இருவரும் நின்றுகொண்டு வந்தனர்.
புத்தூர் மிஷன் ஆஸ்பத்திரியடியில் கன்றுக்குட்டி யொன்று வானுக்குக் குறுக்கே ஒடி வந்தது. டிரைவர் திடீர்ப் பிறேக் போட்டான். எனக்கருகே அந்தரத்தில் நின்றுகொண்டிருந்த தங்கம் கீழே விழாமலிருக்க என்னைத்

Page 42
6 4. அமரத்துவம்
தன் கைகளினற் பற்றிப் பிடித்துக்கொண்டாள். கன்றுக் குட்டி தப்பியது.மறுகணம் எங்கிருந்து வந்ததோ நாணம், தெரியவில்லை. வெடுக்கென ஒதுங்கிக்கொண்டாள்.
நான் நிமிர்ந்து பார்த்தேன். அவளது கண்கள் என்னை வெட்கத்தினல் நோக்கி, நிலம் கவிந்தன. மயன் தன் கைவண்ணத்தைக் காட்டிப் பூலோகத்துக்கு அனுப்பி வைத்த ஊர்வசியோ அன்றி இன்றைய சமுதாயத்தின் புதுமைகளைப் பிரதிபலிக்கும் நாரிமணியோ அல்ல அவள் . வறுமையின் காரணமான அடக்கமும் பவ்வியமும் அமைவான கவர்ச்சியும் அவளிடமிருந்தன. என் மன திலுஞ் சிறிது பதற்றம். 'வான்’ மீண்டும் ஒடத் தொடங் கியது. மீண்டுங் கன்றுக்குட்டி யொன்று குறுக்கே வராதா? அசம்பாவிதமான எண்ணந்தானிது. இதுநாள்வரை என் னுள் எழாத உணர்வின் தாக்கமிது!
அன்றைய சம்பவம் அப்படியே நின்றிருந்தால் அன்னையை, தந்தையைப் பிரிந்து வெறுத்து நான் இப்படி ஓடிவரவோ, அவர்கள் பயந்து என்னைக் கூப்பிடப் பகி ரங்கமான விளம்பரத்தை வெளியிட்டிருக்கவோ நேர்ந் திராது.
அந்தப் புதுப் பிரயாணிகளை வாடிக்கையாளர்க ளாக்கிக் கொண்டான் சாரதி ஈஸ்வரன். அவன் மட்டு மல்ல தினசரி அப்பெண்ணைக் காணுவதில் எனக்கும் ஒரு திருப்தி. எப்படியாவது அவளை நாளுக்கு ஒரு தடவை யேனும் பார்க்காவிட்டால் எதையோ இழந்து விட்ட 5 fTLulib..........
வெறும் மனித உணர்ச்சி இதுதான். இந்தச் சுவட்
டிலேதான் நானும் எனது உணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டேன்.
இவ்வித உணர்ச்சி பாவத்தில், அதன் பிரவாகத்தில் எற்றுண்டு செல்லும்போது எனது உணர்ச்சிகளையும் மழுங்கடிக்கக் கூடியதாகத் தங்கம் இருந்திருக்கலாகாதா? ஒவ்வொரு நாளும் எங்கள் வானிலேயே வரத் தொடங்கினுள் தங்கம். அதில் அவளுக்கு ஆர்வம்

ஆதாரம் 65
உண்டாகி யிருக்குமோ என்னவோ?.அவளின் நடத் தையில், செயலில், பணிவில் முன்னைவிட மாற்றம் அமை வதை உணர்ந்தேன். அவளிடம் அமைந்த அந்தஸ்தும் ஆடம்பரமும் காட்டமுடியாத ஒருவித அமைதியும் அடக்கமும், இன்றைய நடைமுறை உலகில் எனக்குப் புதுமையாகப் பட்டன. எனது உணர்ச்சிகளை அவளும் நன்கு புரிந்துகொண்டுவிட்டாளா? கடமையைப் பற்றிய பிரக்ஞை இழக்க, அவளைக் காணுவதில்தான் எனக்கு அதிக அக்கறை. அதன் பலன் ? முற்று முழுதான அனுபவசாத்தியமற்ற இளமையுள்ளம், எதிலும் துணிவு காட்டுவது இயற்கைதானே.
எனது உள்ளத்து உணர்ச்சிகளைக் கொட்டி மனக் குரங்கின் சேட்டைகளுக்கமைய, இன்றைய நடைமுறை உலக இளைஞர்களைப் போல, கடித மொன்றை அவள் கைகளிற் சேர்ப்பித்து விட்டேன். அது கடிதமா ? யாராவது பத்திரிகைக்காரர் கண்டுவிட்டாற் கை கொட்டிச் சிரிப்பாரோ , என்னவோ! அத்தனையும் உள றல்கள்; சொந்தக் கற்பனையுஞ் சினிமா வசனங்களுங் கலந்த சாம்பார்.
இத்தகைய துணிகரச் செயலைச் செய்வது சுலபம். செய்தபின்தான் அதுபற்றி எண்ணங்கள் தோன்றுகின் றன. நான் துணிகரமானவன் என்று வீட்டிலுள்ளவர் களாற் பலமுறை பாராட்டப் பெற்றிருக்கிறேன். ஆனல், இந்தச் செயல் எனக்குள்ள தீரத்தைத் தீர்த்தது. சதா தனது எல்லையையே வட்டமிடும் செக்கில் பூட்டிய மாடாய் இரவெல்லாம் அதனைப்பற்றி-அக்கடிதத்துக்கு என்ன பலன் ஏற்படுமோ ? யாருக்காவது தெரிவித்து மானத்தைக் கப்பலேற்றி விடுவாளோ என நடுங்கி னேன். தனது கால்கள், தலைகளை உள்ளடக்கிக்கொண்டு வெறுஞ் சடமாகக் கிடக்கும் ஆமைபோல உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு வான் நிலையத்தை அடைந்தேன். எப்போதும் கலகலக்கும் எனது வாய் பேசா மடந்தை யாக, கண்கள் கலவரத்தைக் காட்டிக்கொள்ள, பிடித்த
அ - 5

Page 43
66 அமரத்துவம்
மற்ற மனநிலையில் வானில் ஏறினேன். வான் சாரதி வழமைப் பிரகாரம் ஏதோ கேட்டான். எதற்கும் நியாயமான பதில் கூற என்னல் முடியவில்லை. தங்கம் ஏறுகின்ற இடத்தை நெருங்க உடல் பனிக்காலத்துச் சீதோஷ்ண நிலையிற் கிடுகிடுத்தது. கண்களுக்கு உலகை நிமிர்ந்து பார்க்க வலுவில்லை. கீழே கவிந்து கிடந்தன. * தவறுகள்தாம் மனிதனைக் கோழையாக்கி விடுகின்றன’ என்று யாரோ ஒரு அறிஞன் கூறிய உண்மை மனதில் எழுந்தது.
தங்கம் வந்தாள். என் முகத்தை மேலும் திருப்பிக் கொண்டேன். ஆனல் யான் எதிர்பாராத விளைவு. அவளின் சிரிப்பொலி கேட்டது. சாடையாகத் திரும்பிய என் விழிகளில் அவளது தென்னம்பூப் பற்கள் புன்னகை பூப்பதுதான் தெரிந்தது. அப்படியானல் அவளும் என் எண்ணத்துக்கு முற்று முழுதாக வசப்பட்டவளா ? உடலினை ஆட்கொண்ட பயம் நழுவிவிட, அவளை நிமிர்ந்து பார்த்தேன். புன்னகைப் பாணத்தை என்மீது தூவிவிட, கண்கள் நிலம் நோக்கின. இதன் பொருள்?
உதட்டோரச் சிரிப்பு. ஊடல். முணுமுணுப்பு. இறுதியிற் கடிதப் பரிவர்த்தன. நாம் பிரயாணஞ் செய் யும் வீதியைப்போல் எங்கள் இணக்கம் நீண்டுவளர்ந்து கொண்டே இருந்தது.
ஒடும் வண்டியிற் குழந்தையொன்றின் அலறற் சப்தம். எனக்கு முன்னலிருந்த இளம்பெண் அதற்குப் பாலூட்ட முனைகிருள், வெட்டுண்ட சிந்தனைத்தொடர் நீளுகிறது.
பெருமூச்சுக் கனல்வதுதான் இந்தநிலைக்குட்பட்டவர்க் குரிய விதிபோலும். இதையே ஆதாரமாகக்கொண்டு தான் சாகாத காவியங்கள் எழுந்தனவோ? இந்த மனித சமுதாயத்தின் அணுவின் அணுவுக்குக்கூட இலாயக்கற்ற எனக்கு அதீத கற்பனை. கற்பனையென்பது வாழ்வின் அடித்தளத்திலிருந்துதானே எழுகிறது?

ஆதாரம் 67
வீட்டில் அன்றைய தினசரியைப் படித்துக்கொண் டிருந்தேன். அம்மா வந்தாள்.
*தம்பி, மணியகாரன் பகுதி வந்திட்டுப் போகினம்.?
' கண்டனன் . இரத்தினச் சுருக்கமான என் பதிலிற் கிடந்த அர்த்தத்தை அம்மா அறிந்துகொண் டாள். எதிலும் நான் அதிகம் பிடிகொடுத்துப் பதில் சொல்வதில்லை யென்பதைத் தன் உதிரத்தில் வைத்து உலகத்தில் உலவவிட்டவள் தெரிந்துதானே இருக்க வேண்டும்.
*" என்னதான் நீ சொல்லுகிருய் ?' - அவளின் கேள்வி.
** நான் என்னத்தைச் சொல்ல ? ??
** நாதன்! நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக் கிருய்? யாரோ உன்னுேட வானில வாற ஒரு பெடிச்சி யோட நீ தொடர்பாம். இதெல்லாம் நல்லதா? ஊர் பேர் தெரியாதவர்களோடு உனக்கு...'
அப்பப்பா ! காதுங் காதும் வைத்தமாதிரி இரகசியம் என்று மனிதன் நினைக்கிறவை அப்படியே ஆழ அமுங்கிப் போவதில்லை. எப்படியோ இறகு முளைத்து, எம்மை அறியாமலே வதந்தி என்கிற சந்தைக்கு வந்துவிடத் தான் செய்கின்றன.
அம்மாவின் நச்சரிப்பு நாளும் பொழுதும் விஸ்வரூப மடைந்தது. நான் இனிமேலும் அவளது கேள்விக்கு முன் அடங்கி ஒடுங்கிவிட முடியாது.
விஷயத்தைத் தெரிவிக்கின்றேன். ஊ ! அம்மா இவ்வளவு பிற்போக்குத்தனமுள்ளவ ளென்ருே, அப்பா இப்படி உருத்திர மூர்த்தியாவார் என்றே யான் எதிர்பார்க்கவில்லை.
அவர்களது வார்த்தைகளிலிருந்து, கல்யாணச்சந்தை யில் என்னை ஒரு பொருளாகப் பேரம்பேசி அதன்மூலம்

Page 44
68 அமரத்துவம்
பணத்தைக் கறக்கலாம் என்கிற கருத்து அவர்கள் மனத்திலிருக்கிறதென்பது தெரிந்தது. அவர்கள் கட்டிய கனவை உருவாக்குவதற்கு, எனது அபிலாஷைகளுக்கு இலக்கான நனவை யான் பலியிடுதல் சாத்தியம் அல்ல. பணமும், பதவியும், குலமு ங் கோத்திரமும் தரமுடி யாத அமைதியான அன்பின் இலக்கணத்தை இந்தச் சமுதாயத்துக்குச் சிந்தனையாளர்கள் சுட்டிக் காட்டி ணு,லும் பழைய தடத்திலேயே ஒடும் கட்டை மாட்டு வண்டித் தடத்திலேயே இன்னும் இந்த நாட்டி லுள்ளவர்கள் செல்லுகிருர்கள். அவர்களைத் தடை செய்ய முடிவதில்லையே!
என்னுள் கிளர்ந்தெழுந்த ஆவேசத்தை ஒரு நாள் நேரடியாகக் கொட்டிக்கொண்டேன். என்ன இருந்தா லும் தாய், தாய்தான் ; மகனின் எதிர்காலம் இருண்டு விட்டாலும் அன்றைய நிலையில் தனது மைந்தனுக்கு ஏற்படுந் துன்பத்தை அவள் ஒருநாளும் பொறுக்க மாட்டாள். ஆனல், தந்தை அப்படியில்லையே! எனது ஆவேச உணர்ச்சியை அவராற் சகிக்க முடியவில்லை. முஷ்டியால் எனது தாடையைப் பதம் பார்த்ததோடு வசவுகளையும் பொரிந்து தள்ளினர்.
அதன் பலன் ? கட்டுக்களை அறுத் தெறிந்துவிட்டு இப்படி ஓடி வந்துவிட்டேன்.
காலம் நிரந்தரமாக நின்றுவிடாது. மனித மனதின் எண்ணத்தை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவவிட்டு, மாறுதலைப்பெறச் செய்வதற்கு அது முனைகிறது என்பது தான் உண்மை.
நேரிற் கொதித்தெழுந்த அவர்கள் நெஞ்சிற் கனிவு. அப்பப்பா ! என்னிதயத்திலும் இப்போது அமைதி,
ஓடுகிற வண்டி இருட் குகையை ஊடறுத்துச்
செல்லுகின்றது.நேரத்தின் ஒருபகுதியை எனது எண்ணம் தின்றுவிட்ட போதிலும், நான் இறங்கவேண்டிய

ஆதாரம் 69
நிலையம் வரவில்லை எண்ண உலகிலே இலயித்துக்கிடந்த எனக்கு நேரம் பறந்தது தெரியவில்லை. கையிலிருந்த மணிக்கூடு நிசியை அடுத்துவிட்டதைத் தெரிவித்த போது, எண்ண மாடு இரை மீட்பதற்கு இடந்தந்த உடல் பொறுக்கவில்லை. கோழித்தூக்கம் தூங்குபவர்கள் போன்று என்னையும் நித்திரையின் பிடிக்குள் தள்ளியது. சாய்ந்துவிட்டேன்.
மனித உடலுடன் ஒன்றிய துன்ப உணர்வுகளை மறக்கக்கூடிய சக்தி நித்திரைக்குக்கூட இல்லை. நடந்த, நடக்கின்றவை கனவிலும் என்னை விட்டுவைக்கவில்லை; நெஞ்சிற் கவிந்த சலனங்கள் என்னுள் ஆழப் புதைந்து விட்ட சூழ்நிலையில், பல சிக்கல்களுக்குள் அமிழும் போது.
* யாழ்ப்பாணம் ' என்ற குரல் திடுக்கிட வைக்க எழுந்துகொண்டேன். அதுவரை ஆன்றமைந்த ஞானிகள் போல் அடக்கமாகக் கிடந்த பிரயாணிகள் இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா ? வண்டியை நிறுத்துவதற்கு முன்பே மூட்டை முடிச்சுக்களோடு வாசலை முற்றுகையிட்டுள்ளார்கள். எதிலும் அவசரம் நிதானமற்ற போக்கு ! − அவர்கள் மட்டுந்தான ? நானுந்தான். எனது கைப் பையைத் தூக்கிக் கொண்டு பரபரவென்று சனக் கூட்டத்தை முட்டித் தள்ளிக்கொண்டே இறங்குகிறேன். நினைத்ததுபோல எதுவும் நடப்பதில்லையே! விடிவ தற்கு முன்னே வருமென்று எதிர்பார்த்த வண்டி இரண்டு மணி நேரம் தாமதித்தே வந்தது.
நித்திரையினின்றும் விடுதலைபெற்று உயிர் மூச்சு விடத் தொடங்கியது பட்டணம், பஸ்நிலையத்துக்குப் பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் ஒன்று தயாராக நின்றது. அதில் தொற்றிக்கொண்டேன். இறங்கும்போது என்னை வழமையாக நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணத் துக்குக் கொண்டுவரும் 'வான் சாரதி ஈஸ்வரன் கண்டு விட்டான்,

Page 45
70 - அமரத்துவம்
தம்பி I
குரல் கேட்டதும் திரும்பினேன். வாயில் முழுப் பற்களும் தெரிய, " என்ன ஐஞ்சாறு நாளாய்க் கர்ண வில்லை ! ஊருக்குத்தானே ? வந்து வானில் ஏறும். புறப்படப்போகிறது ' என்றன்.
அவனது வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். என்னைத் தொடர்ந்து பலரும் ஏறிக்கொண்டனர்.
கிழக்கு வானில் உதித்து உயர்ந்துவிட்ட கதிரின் பொன்வண்ணம் உலகின் ஒவ்வோர் அணுவிலும் புகுந்து குலவும் எழில், வண்டி உடனே புறப்படும் என்று கூறிய ஈஸ்வரன் மேலும் ஐந்துபேரைப் பஸ்நிலையத்திலிருந்து கூட்டிவந்து தன் மனங் குளிர ஏற்றிய பின்பே புறப் பட்டான். காற்றின் வேகத்தை விடத் தீவிரமாக எனது மனம் அடித்துக்கொண்டது. அப்பா, அம்மாவைக் கண்டு எதைப் பேசுவது ? என்ன சமாதானம் சொல்வது என்ற கருத்துக்கு யான் அடிபணியவில்லை. எனது பிரிவினல் என்னைத் தேடும் தங்கம் 2
a a e o e 8
என் மனுேவேகத்தைப் பொருட்படுத்தாது நிதான மாகவே ஈஸ்வரனின் "வான் ஒடிக்கொண்டிருந்தது. இடை இடை ஆட்களை ஏற்றி இறக்கி ஆவரங்காலை அடையும்போது காலை ஒன்பதுமணிக்கு மேலிருக்கும்.
"தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே? வந்தவா றெங்ங்னே போமா றேதோ
மாயமாமிதற் கேதும் மகிழ வேண்டாம் !
தேவாரத்தின் ஒசையைத் தொடர்ந்து பறை மேளத்தின் முழக்கம் என் செவிப்பறையைத் தாக்கியது. மரண ஊர்வலம் அது. வண்டியை ஒரு பக்கத்துக்கு எடுத்து ஊர்வலத்தைத் தாண்டினன் சாரதி. பின் என்னைப் பார்த்து, ' தம்பி ! உந்தப் பிரேதம் யாரென்று தெரியுமே?'
** இல்லை ' என்பதற்கறிகுறியாகத் தலையை ஆட்டி னேன்,

ஆதாரம் 7.
எல்லாம் உமக்குத் தெரியும். நம்மடை "வானிலை" பீடிக் கம்பனிக்கு வரும் ஒரு பெட்டை, அதுதான் உது. எனக்கு மேற்கொண்டு எதுவுமே சொல்லத் தெரிய வில்லை. அவன் தொடர்ந்து ' யாரோ ஒரு பெடியனைக் காதலிச்சுதாம். அந்தப் பெடியன்ரை வீட்டுக்கு அது தெரியவந்ததினல், வீட்டுக்காரர் அவனைக் கண்டித்திருக் கினம். அந்தப் பெடியன் எங்கேயோ ஒடிப்போய் வவனியாவிலை ரெயிலுக்கை பாய்ந்து செத்துப்போனணும். அதைக் கேள்வியுற்ற பெடிச்சி நேற்றுக் காலை நஞ்சு குடிச்சுச் செத்துப்போச்சு!"
* யார் தங்கமா ?'
* ஒம் தம்பி! அந்தச் சிவத்தப்பெட்டை, '
ஈஸ்வரா வண்டியை நிறுத்து என்று என் பலம் கொண்டமட்டும் கத்தினேன். வேகத்தையோ அவன் நிறுத்துவதையோ பொருட்படுத்தவில்லை.
** எனக்காகத் தன் வாழ்வைப் பலியிட்டவள் பின்னே பிணமாக வர யான் யாருக்காக முன்னே செல்
அப்படியே பக்கத்துக் கதவைத் திறந்தபடி வெளியே பாய்கிறேன் ! அவ்வளவுதான் அப்போதைக்குத் தெரிந்தது.
உலகமே இருண்ட நிலை. என்னையே உணர்ந்து கொள்ள முடியாத வேதனை. அத்துடன் உடலின் ஒவ்வோர் அணுவிலும் குத்திக் குதறுவதைப் போன்ற வலி. கண்ணை விழித்துப் பார்க்கின்றேன். கண்கள் குளங்களாக மாற எனது தாயும் தந்தையும் நிற் கிருர்கள். அப்பால் உறவினர்கள். அவர்களைப் பார்த்துவிட்டுக் கீழே பார்க்கின்றேன். என் கால்கள் இல்லை . கைகள், உடல் அனைத்திலும் பாரிய கட்டுக்கள். இந்தக் கட்டுக்களுடன் எனது சீவன் சுதந்திரத்தை இழந்துவிடாது இங்கேதான் கிடக்கிறது. அப்பாவும் அம்மாவும் அழுவதன் கருத்து இப்போது புரிகிறது. கால்களை இழந்து, ஊனமுற்ற என்னைக் கண்டு மனம் பொருமி அழுகிருர்கள்..? கல்யாணச் சந்தை

Page 46
72 அமரத்துவம்
யில் நல்ல விலைபோகக்கூடிய சரக்குப் பயனற்றுவிட்ட தாகக் கருதுகிருர்கள். ஆம், உடையாரின் பேத்திக்கோ, மணியகாரனின் மகளுக்கோ அருகதையற்ற என்னைத் தங்கம் போன்றவள்தான் தாங்கமுடியும். அந்தத் தன்மையை இன்னெருத்தியிடம் எதிர்பார்க்க முடியுமா? பணம் என்ற ஒன்றை வீசி ஊனமான பிண்டத்தை வாங்க முன் வருவதற்கு உடையாரோ, மணியகாரனே பைத்தியக்காரர்கள் அல்லவே !
அந்தத் தங்கம் இந்தப் பித்தளைக்கு நிகராகுமா ?
தங்கம் ! தங்கம் !
என்னை மறந்து கத்துகிறேன்.
கால்களில் நோ. தலை கிறுகிறுக்கின்றது. ஆஸ்பத்திரியில் எல்லாமே என் முன் ஆடுவதுபோன்ற பிரமை.
ஏன் எனக்கே தெரியவில்லை. கண்கள் தம்முள் தாம் ஒன்றுகின்றன. இப்போது உலகம் ஒரே இருள். கால்கள் அற்ற என்னை அணைத்துக்கொள்ள, மெதுவாக அழைத்துச் செல்ல யாருமற்ற நிலையில்.
எனது கூப்பாடு என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கேட்கவில்லை.
உயிரென்ற கொடிக்குப் பற்றுக் கோடாக, உலகில் எவர்தான் உதவ முடியும்? உலகின் விழிகளுக்கு இந்த உட லென்ற பிண்டம் கால்களிழந்த ஊனமாகப் புலப்படும்.
எந்தவித ஊனமும் அற்ற அன்பின்முன் இதெல்லாம் அர்த்தமற்ற வெறும் பிரமைதான்.
அதோ..!
96), air.........!
என் தங்கம், மனிதர்களின் ஊனமுற்ற விழிகளுக்குப் புலனுகாத அவள் என்னை இனங்கண்டு என் முன் வரு கிருள். எழுந்து நடக்கச் சக்தியற்றுக் கிடக்கும் உடல் --۔ ..........95ق 3) [B](69
அவளின் தோளே ஆதாரமா ? எனது கரங்கள் அவளது தோளைத் துணைகொள்ளுகின்றன.

கன்னிமை
பொன்னம்மாளின்மீது சாய்ந்து, அவளது கழுத் தைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் இராணி.
கண்கள், கரை கட்டாத குளத்துநீர் பொசிவதைப் போன்று, விடாது கண்ணிர்த் திவலைகளை உருட்டித் தள்ளின. கையிலே இருக்கும் காகிதங்கள் அவளது நெஞ்சின் நிலையை நினைவூட்டுவதுபோன்று வீசுங்காற்றில் படபடக்கின்றன:
நெஞ்சிலே வேதனைப் பளு. பனிக்குங் கண்களினல் இரும்புத் துண்டின் சுமையான அக்கடிதத்தை மீண்டும் நோக்குகின்றன அவள் விழிகள்.
அன்புள்ள பொன்னம்மாவுக்கு,
தங்கள் மகளைப்பற்றிய உண்மைகள் வெட்ட வெளிச்சமாகிவிட்டன. தொடர்ந்து உங்கள் தொடர்பை மேற்கொண்டு வீணுன அவ மானத்தைத் தலையில்கட்டிக்கொள்ள முடியாது. வசதிக்கேற்ற வேறு இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்குரிய காரணத்தை இத் துடன் இணைத்திருக்கும் மறுகடிதம் விளக்கும்;
இப்படிக்கு, அப்பாக்குட்டி:
இரத்தினச் சுருக்கமாக விளக்கும் வார்த்தைகள். அவை வார்த்தைகளல்ல. நம்பிக்கையைப் பலிகொண்ட விடமாத்திரைகள். கண்ணுற் கவ்வி விழுங்கியவளின் நெஞ்சு கருகிச் சாம்புவதில் வியப்பில்லையே!
* * gjbLDT l’’

Page 47
74 அமரத்துவம்
கட்டுமீறிய சோகத்தின் பிரதிபலிப்பாக இச்சொல் வெடித்துச் சிதறி வெளிவருகிறது.
நெஞ்சில் ஓவென விரைந்து அலைபாயுந் துன்பத் தைப் பிரதிபலிக்குஞ் சொல்லைத் தொடரமுடியாமல். திக்குகிருள் இராணி,
என்ன பிள்ளை இது இது யாருடைய அநியாய வேலை. ஐயோ கடவுளே! தொடர்ந்து சோதனைகளை எமக்குக் கொடுக்கவேண்டுமென்பதுதான் உனது திரு வுளமா ?”
இராணி கையிலிருந்த மறுகடிதத்தை அவளிடங் கொடுத்தாள். குழிந்த கண்களில் நீர் வடிய கடிதத் துடன் இருந்த மறுசெய்தியைப் பார்க்கிருள் பொன் னம்மாள்.
அன்புள்ள துரை,
உமக்கு விவாகம் நிச்சயமாக்கப்பட்ட உமது அத்தையின் மகள் இராணிக்கும் எனக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு, நீர் ஒரு நேர்மையான மனிதனுனல் எமது காதல் வாழ்க்கையிற் குறுக்கிடாதிருப்பீ ரென எதிர்பார்க்கிறேன்.
ஏன் இந்தமாதிரிச் செய்கிருர்கள்? நான் யாருடைய குடியையுங் கெடுக்கவில்லையே!. இந்த அநியாயத்தைக் கேட்பார் கிடையாதா? கண்ணீர் கரைபுரளுகின்றது;
யார் யாரைத் தேற்றுவது ?
பறந்துவந்த பருந்தினின்றுங் காப்பாற்றச் செட்டைக் குட் குஞ்சை வைத்துக்கொள்ள முனையும் தாய்க் கோழிபோல் மகளை அணைத்துக்கொள்ளுகிருள் பொன் னம்மாள். *
திக்குத் திணறி வார்த்தைகள் வெளிவிட முடியாத இராணி கேவிக்கேவி அழுகிருள்.

கன்னிமை 75
காலத்தின் கடுகதி ஒட்டம் நிமிடங்களை விழுங்கி மணியாக ஊதிப் புடைத்து வெங்கணுந்தியென ஊர்ந்து செல்கின்றது.
※ ※ * அம்மா!? பள்ளிக்கூடத்துக்குச் சென்ற சிறுவன் திண்ணையிற் புத்தகம், சிலேற்றைப் போட்டுவிட்டு அழுது வடியும் தாயையும் தமக்கையையும் தன்னை மறந்த நிலையிற் பார்த்துக்கொண்டிருக்கின்றன்.
* பிள்ளை 1 தம்பி பள்ளியாலை வந்திட்டான். எழும்பு, என்ன செய்வது."
கலைந்துகிடந்த கூந்தலைக் கையால் அள்ளிச் சொருகிக் கொண்ட இராணி சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்கிருள்.
கண்ணில் வடிந்த நீர் துடைபட்டுக் கொள்கிறது. உள்ளத்தில் உறுத்திய வேதனைப் பாணத்தினல் ஏற்பட்ட இரணம் வலிப்புத்தருகிறதே. அதை மாற்றுவது யார்? பொன்னம்மாள் அடுக்களைக்குட் செல்கிருள்: அது வரை சாம்பல் பூத்துக் கிடந்த அடுப்புப் புகைக்கின்றது. கையிற் சுளகு ஒன்று. அதன் மீது கொட்டிய அரிசியில் உள்ள நெல்லைப் பொறுக்கி எடுத்துக்கொண்ட பொன்னம்மாளின் ஒரவிழிகள் மகளைத் தேடுகின்றன. இராணி வாசலின் அருகில் கிடந்த ஈசிச்செயரில் தன் நிலைகுன்றிய வேதனையோடு ஒணுணுக வளைந்து கூனிக் குறுகிக் கிடப்பது தெரிகிறது. நெடுமூச்சொன்று அவள் நெஞ்சாழத்திலிருந்து ஒசையுடன் கிளம்புகின்றது.
※ ※
வீதியிற் சைக்கிளின் மணிச்சத்தம். நிமிர்ந்து வேலி யினுல் வெளியே நோக்குகின்ருள் இராணி. அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே மெதுவாகச் செல்லுஞ் சம்பந்தனின் கண்களில் வெற்றி வெறி குடி கொண்டிருப்பதை இராணியால் அவதானிக்க முடிந்தது.

Page 48
76 அமரத்துவம்
அதுவரை துலங்க மறுத்த உண்மைகள் மனக் கண்ணில் துலங்கின.
அடப்பாவி ! இதெல்லாம் உன் வேலையா ?
இராணியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தை களைக் கேட் ட பொன்னம்மாள் " என்ன பிள்ளையது ?" என்றுள்.
* அவன் போருணம்மா."
* யாரது ?"
* அந்தப் படுபாவி சம்பந்தன்."
* அவன் போனுல் உனக்கென்ன ?
* அவன்தான் அம்மா எல்லாத்துக்குங் காரணம் ? என்ருள் விம்மியபடி,
* அந்தத் தறுதலையா ? ஏன் இப்படி இவங்கள் எங்களுக்கெண்டு சதி செய்யிருங்கள் ? கடவுள்தான் இவன்போன்றவர்களைத் தண்டிக்கவேண்டும். ஏழை அழுத கண்ணிர் அவம் போகாது' என்றபடி நகருகிருள் பொன்னம்மாள்.
இராணியின் அழும் கண்களில் தீராத குரோதம் குடிகொள்ளுகிறது.
இந்த நாய்களை எப்படித் தொலைப்பது ? வீதியில் அலையுங் காலி நாய்களை யென்ருல் மாநகரசபைக்கார ராவது பிடித்துச் செல்வார்கள். மனித உருவில் நடமாடும் இதுகளை . யார். ... ?
* பெட்டைக் கோழி கூவி விடிந்துவிடுமா ? என்னல் என்ன செய்துவிடமுடியும்? மெலியாரை வலியார் தீண்ட வலியாரைத் தெய்வந் தீண்டும் என்று அம்மா சொல்லு வாளே ! அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாள். பாவம், என்னைப் படிப்பித்து ஆளாக்கி என் காலில் நிற்கக்கூடிய தொழிலுக்குக் கொண்டுவந்துவிட் டாளே. இது மகத்தான சாதனை. அப்பா இல்லாத குறையே தெரியாமல் வளர்த்தாளே !? இதையெல்லாம் நினைந்து கொள்கிருள் இராணி,

கன்னிமை 77
பொன்னம்மாள் அடுக்களைக்குள் நெருப்போடு குந்தி யிருக்கின்ருள்:
தம்பி செல்வன் வேலியோரத்து மரத்தின் கீழே பூனைக்குட்டியோடு விளையாடுகின்றன். உலகத்தைப்பற்றி யெல்லாம் எண்ணமுடியாத கல்மிஷம் விரவாத வெள்ளை உள்ளம் குழந்தைகளுக்கு தாயையும் தமக்கையையும் பற்றிய எதுவித நினைவுமின்றித் தன் குழந்தைத்தன விளையாட்டிலேயே ஒன்றிப்போயிருக்கின்ருன் செல்வன்.
* தம்பி, இந்த அநியாயங்களைப் புரிந்துகொள்ள முடியாத சிறுவன். சிறுபிள்ளையாக இருந்துவிட்டால் இப்படியான அவப்பெயரை எவரும் இலவசமாகச் சூட்டப்போவதில்லையே? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து - அப்பாவிகளை வம்பு தும்புகளுக்குள் தள்ளி வேடிக்கை பார்க்கச்செய்வதற்கு இந்த உலகிற் பாவிகள் ஏன் பிறக்கிருர்கள் ??
* சம்பந்தன் போன்றவர்கள் இந்த உலகில் இப்படி யான கற்பனைகள் செய்து தமது சுய குரோதங்களைச் சாதிக்க முயலுகிருர்களே. அதை நம்புகின்ற அவர்களும் பாவிகள்தான். உண்மையைத் திரைநீக்கிப் பார்க்கத் தெரியாது - பொய்யை நம்புகின்றவர்கள் கோழைகள். அவர்கள் பேடிகள். வாழ்க்கையைக் கருவறுப்பவர்கள் அவர்கள்தான் .
கையில் ஏற்கனவே கசங்கிய நிலையில் உள்ள கடிதத்தின் அடியில் எழுதப்பட்ட பெயர் நினைவுக்கு வருகின்றது.
* அத்தான் ! உங்களை இப்படியான சலனங்களுக்குள் தள்ளப்படுபவர் என்று யான் கருத்திலும் நினைக்கவில்லை. என்னைப்பற்றிய உண்மைகளை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டும் இப்படியான தப்பிலிகளின் அபாண் டங்களுங்கு உள்ளத்தில் இடங் கொடுக்கின்றீர்களே ! ?
வேதனை புரையோடிய இதயத்தில் உலகத்தின் உண்மை நிலைவரங்கள் புரிவதில்லையோ ? ..

Page 49
78 அமரத்துவம்
இராணி தன்னை மறந்த நிலையில் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிருள்.
* அத்தான்." கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நீங்கள் இருந்து கொண்டு, சதா உங்கள் எண்ணத்தோடு சஞ்சரிக்கும் என்னை இப்படி உதறுவதற்கு ஏன் தான் மனம் துணிந்தீர்கள். கடந்த காலத்து வஞ்சகமற்ற குழந்தைத் தன்மை பொருந்திய இளமையான உள்ளத் தோடுள்ள நீங்கள் இப்போது இல்லை. மாறிவிட்டீர் களா? இல்லவே இல்லை; மாற்றப்பட்டுவிட்டீர்கள்.
பாவி சம்பந்தன். புலியால் துரத்தப்பட்டு நடுங்கும் மான் பதறி ஒடுவதில் வியப்பில்லையே 1 நினைக்கவும் பயங்கரமான அந்தச் சம்பவத்தை மனத்தடத்துக்குக் கொண்டு வரு கிருள் இராணி.
நினைவு சினிமாத்திரையாகிறது. அன்று காலை மணி-எட்டுக்குமேல்.
ஆசிரியையான இராணி பாடசாலைக்குச் செல்கின்ருள். ஒருகையிற் பாடக்குறிப்புக் கொப்பி. மறுகையிற் சிறு குடை. அவளுடன்கூட துணைபோல்வந்த செல்வன், தன் வகுப்பிற் படிக்கும் நண்பர்கள் முன்னே செல்வதைக் கண்டதும் அவளை விட்டுவிட்டு ஒடிச் சென்று அவர்க ளுடன் சேர்ந்துகொண்டான். தனிமையில் ஏதேதோ சிந்தனையுடன் சென்றுகொண்டிருந்தவள், uurTG3 UT IT செருமும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்ருள். அழையா விருந்தாளியாகச் சம்பந்தன் வந்துகொண் டிருந்தான். அவனைக் கண்டதும் ஒதுங்கி வழிவிட்டு நிலத்தை நோக்கியபடி விரைவாகச் சென்றுகொண்டிருக் கிருள்.
தெருவில் மக்கள் நடமாட்டம் குறைந்த சந்து ஒன்றை அவள் நெருங்கியதும் விரைந்துவந்து அவளை அணுகுகின்றன் சம்பந்தன்.

கன்னிமை 79
* ரீச்சர் என்ன ஏதோ முனிவர்களைப்போல உலகத்தைப்பற்றிய சிந்தனை இன்றிச் செல்கிறீர்கள் ? இயற்கையிலேயே நாணமும் அடக்கமும் உடையவ ளான இராணி எதுவித பதிலுமின்றி அந்தத் தூர்த்த னுக்குப் பயந்தபடி, மெளனமாகச் செல்கிருள்.
"என்ன ரீச்சர்? நான் கேட்கிறேன் நீங்கள் கதைக் காமல் போகிறியள். உங்கள் வாயிலிருந்து சொல்லு வந்தால் முத்துதிர்ந்துவிடுமென்ற பயமோ ?
"தெருவாற் போகிற எனக்கு அந்நிய ஆட்களுடன் என்ன கதை வேண்டியிருக்கு?
* அட முத்துத்தான் உங்கட சொல்லு, சபாஸ்! நல்லாகத்தான் கதைக்கிறியள். உங்கள் கதையிலேயே இப்படி இனிப்பிருந்தால். ' என்றபடி அவளைக் குரோதம் கக்கும் கண்களினல் பார்த்துக்கொள்கின்றன்.
இராணி தனக்குள் பயந்தபடி, ஆனல், துணிவுள்ள மங்கையைப்போல் விரைவாக நடக்கிருள். பள்ளிச் சிறுவர்கள் தூரத்தே சென்றுகொண்டிருக்கின்றனர்.
"நான் கொடுத்துவிட்ட கடிதத்துக்குப் பதில் தரவில்லையே! ஏன்?"
* என்ன பேச்சைக் காணுேம்?" *பதில் எழுதத் தேவையில்லை. தயவுசெய்து பெண்கள் தனியாகப் போகும்போது, இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளவேண்டாம். நான் யாருக்கும் பதில்
எழுதுகிற வழக்கமில்லை.
* யாருக்காவது பதில் எழுதாமல் விடலாம். சம்பந்தனைப்பற்றி நீ அறிந்திருப்பாய். எந்த மகாராசா வீட்டுக்காரரென்ருலும் எனக்குப் பறுவாய் இல்லை.
என்னைப்பற்றித் தெரியுந்தானே ?
செருமலோடு அவன் கேட்குங் கேள்விகளுக்கு இராணியினற் பதில்கூற முடியுமா? புலியின் பார்வை,

Page 50
80 - அமரத்துவம்
நரியின் வஞ்சம், பாம்பின் விடம் போன்ற இத்தனை யாலும் உருண்டு திரண்ட, மிருகநிலைகொண்ட மனித உருவத்திற்குக் கண்ணுக்குத் தெரியாத தூரத்துக்கு ஒடிப்போய்விடுவதுதான் புத்திசாலித்தனமுங்கூட.
* உனது முடிவு என்ன ?...' * பதில் கூருதுவிடில் பின்னல் வருத்தப்படுவாய்."
* அதிட்டத்தில் அவளுக்கு நம்பிக்கையில்லை. ’ ஆயினும் கார்ச் சத்தங் கேட்டது.
தலைமையாசிரியையும், இன்னும் இரண்டொரு ஆசிரியைகளும் அக்காரில் வருகின்றனர். இராணியின் கரங்கள் அவளை அறியாமல் நீண்டன.
கார் நிறுத்தப்பட்டதும் இராணி ஏறிக்கொண்டாள்.
அவள் தனக்கொரு பதிலுங் கூருது காரில் ஏறிச் சென்றதைக் கண்ட சம்பந்தன், "இன்றைக்கு நீ தப்பி விட்டாய். சம்பந்தனின் குணம் உனக்கு விரைவில் தெரியவரும் ' என்று முணுமுணுத்தபடி தெருவின் திருப்பத்தாற் சென்று மறைந்தான்.
அவளும் ஒருமாதிரியாகச் சனியனின் பிடி இப்போ தைக்கு ஒழிந்தது என்றே கருதினள். ஆனல் "அது தொடர்ந்து ஏழரையாண்டுச் சனியணுகி, நளனைத் தொடர்ந்ததுபோல் ’ அவளையுந் தொடர்ந்தது.
赞
அத்தை மகன் துரை இவ்வளவு பேடியா ? போ லிக்கும் அசலுக்கும் வேறுபாடு தெரியாத குழந்தையா? அத்தானை இளமையிலிருந்தே விரும்பி னேன. ஆனல் அவர் இவ்வளவு கோழையா?
எனக்குத் திருமணம் முடிவாகிவிட்டது என்பது ஊரறிந்த விஷயம். அது சம்பந்தனின் காதுக்கும் எட்டி யிருக்கும். அவன்தான் மொட்டைக் கடிதம் எழுதி யிருப்பான்."

கன்னிமை 8.
ஏற்கனவே பள்ளிக்கூடத்துச் சிறுமி ஒருத்தியிடம் சம்பந்தன் கொடுத்துவிட்ட காகிதத்தைத் தேடி எடுத்து அதனுடன் அம்மொட்டைக் கடிதத்தை ஒப்பிட்டுப்பார்க் கிருள் இராணி.
இரண்டும் ஒரே கையெழுத்து உள்ளங்கை நெல்லிக் கனிபோல் உண்மை தெளிவாகின்றது.
இப்போது கண்ணிலே கலக்கமில்லை இராணிக்கு மொட்டைக்கடிதத்தை மெய்யென்று நம்பிய துரையைப் பற்றியே அவள் நினைவு வட்டமிடுகின்றது.
தானே கட்டிய இன்பக் கோட்டையில் ஏகச் சக்கராதி பதியாக இன்பங் காணுவதற்கு முனைந்தவள் - படு பள்ளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டாள்.
* வேண்டாம், இந்த அவல வாழ்வின் அர்த்த மென்ன? கொடிக்கொரு கொம்பு தேவைதான். ஆணுற் சின்னஞ்சிறு வித்தில் உதிக்கும் ஆலமரத்துக்கு எது ஆதாரம் ??
கட்டிலிற் குறவணவன் புழுப்போல் குறண்டுகிருள் இராணி. அதீத சிந்தனையின் பேருகத் தலைப் பாரமாகிய பெலவீன நிலை,
* அக்கா 1 அக்கா ! இப்ப கொஞ்சம் முந்தி சீழ்க்கை அடித்தபடி ஒரு ஆள் சைக்கிளில் இந்த ருேட்டால் போனவனல்லே. அவனைச் சந்தியில் வந்த கார் அடித்து விட்டதக்கா . ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகினம் , '
* யார் அந்தப் பாவியையா?
தன்னுற் கொடுக்கமுடியாத தண்டனையைக் கடவுள் வழங்கிவிட்டாரே என்ற எண்ணம்.
* யாருக்கு யார் தண்டனை வழங்கினலும் எனக்குரிய நல்வாழ்வு போய்விட்டதே. இந்த அவமானத்துடன் எப்படி இனி நான் வாழ்வேன்? இதற்கு ஒரு முடிவே கிடையாதா? என்னைப் பெற்று வளர்த்தவள்கூடத் தலை
அ - 6

Page 51
82 அமரத்துவம்
நிமிர்ந்து செல்லமுடியாதவாறு அவமானத்தைக் கட்டி விட்டவன் தண்டனை அடைந்துவிட்டால் மட்டும் போதுமா ?
* பிள்ளை, அந்தத் தறுதலையைக் கார் அடிச்சுப் போட்டுதாம். கூப்பன் கடகத்துடன் வந்த பொன் னம்மாள் பல்லெல்லாம் தெரிய சந்துஷ்டியுடன் தன் மகளுக்குக் கூறினுள்.
உம்.சுரத்தில்லாமற் கேட்டபடி இராணி அப்பால்
நாள் இதழ்கள் கூடி வார மலராக மலர்ந்து சிறுகச் சிறுகக் கருகி மடிகின்றன.
* தபால் 11
சேவகன் கொடுத்த தபாலைச் செல்வன் கொண்டு வந்து கொடுத்தான்.
* யாருடைய கடிதம் பிள்ளையிது ??
கடிதத்தைப் பரபரப்புடன் உடைத்த இராணி உரக்கப் படிக்கிருள்.
அன்புள்ள மாமி,
தப்புக் கணக்குப்போட்டு இராணியை வெறுத்துக் கடிதம் எழுதிவிட்டேன். எனக்கு மொட்டைக் கடிதமெழுதியவன் சம்பந்தன் என்பவனம். அவன் காரிலடிபட்டு இப்பொழுது கால்களிரண்டும் இழந்தநிலையில் ஆஸ்பத்திரியிற் கிடக்கிருணும். தான் எழுதிய அத்தனையும் பொய் யென்றும் இராணி மாசு மறுவற்றவள் என்றும் விபரமாக எழுதியிருக்கிருன். யான் செய்த தவறை மன்னித்து மேலே ஆகவேண்டியவை களைப் பார்த்து எழுதுங்கள்.
இங்ங்னம், உங்கள் மருமகன்,
துரை.
 

கன்னிமை
83
'அட! கடவுள் காப்பாற்றி விட்டார். எப்படி யெல்லாம் நான் கண் கலங்கினேன். அந்தப் பெடியன் நல்லவன். தான் எழுதியது பிழையெனத் தெரிந்தும்
இங்கு கடிதம் எழுதியிருக்கின்றான் பார்த்தியே.'
'போதும் அம்மா ! அதிக சந்தோஷப்பட்டு மனக் கோட்டைகளை விண் உயரக் கட்டாதீர்கள். உங்கள் சந்தோஷத்தை இந்த அளவுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்களென்ன தாயக் கட்டைகளா, நினைக்கின்றபாட் டுக்கு அமைய நகர்த்தப்படுவதற்கு? எனக்குத் திருமணமே வேண்டாம் அம்மா. சணப்பித்தம், சணவாதம் என்ற நிலை கொண்டவர்களுடன் வாழ்வா வாழமுடியும். நெடுக நரகமே கிடைக்கும்.'
' நீ என்ன பிள்ளை சொல்லுகிறாய்?' என்றபடி இராணியின் முகத்தைத் திக்பிரமையுடன் நோக்குகிறாள் பொன்னம்மாள்.
'அம்மா நான் திருமணஞ் செய்து கொள்ளாமல் இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்கத் தீர்மானித்து விட்டேன். உங்களையும் என்னையும் காப்பாற்ற ஆசிரியத் தொழிலிருக்கு. இந்தமாதிரி உலகத்துக்குச் செவி கொடுத்துப் பொய்யை மெய்யென நம்பி இதயத்தில் சந்தேகத்துக்கு இடங் கொடுத்தவர்களுடன் வாழ்வதைக் காட்டிலும் கன்னிமை மேலானது. பொய் வதந்தியைக் கட்டுகின்றவர்களிலும் பார்க்க அந்தப் பொய்யை உண்மையென நம்பும் பலவீனக்காரர்களால் அதிக கேடு வரும் அம்மா?' என்று கூறியபடி உள்ளே செல்லு கிறாள் இராணி.
தலையில் கையைவைத்தபடி அப்படியே குந்தியிருந்து விட்டாள் பொன்னம்மாள். உள்ளே சென்ற இராணியின்
கைகள் பேனாவால் காகிதத்தை உழுகின்றன.

Page 52
84 அமரத்துவம்
உங்கள் கடிதங் கிடைத்தது. நீங்கள் உண்மை யைப் புரிந்துகொண்டு எனது தூய்மையை உணர்ந்துகொண்டதிற் பரம திருப்தி யடை கின்றேன். ஆனல் உங்கள் தொடர்பை நீடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. காலம் எமக்கு வழிகாட்டும். உலகம் ஒருவிளையாட்டுக்களமல்ல. உண்மையை உணராது போலிக் கூச்சலுக்குச் செவிசாய்க்கும் உங்களுக்கு நாம் உகந்தவர்க ளல்லள். எதிர்காலம் எப்படியோ ? சந்தேகம் என்ற கடலில் நிம்மதியாக வாழ்க்கைப்படகைச் செலுத்தமுடியாது. சந்தேக அணுக்கள் சிறு சிறு அலைபோல மனதை அரித்துக்கொண்டே யிருக்கும். தொடர்பை இத்துடன் துண்டித்துக் கொள்ளவும். உலகம் பரந்தது. அதில் எமக்குச் சிறு துளியாவது நிம்மதி கிடைக்கும்.
வணக்கம்.
இங்ங்ணம், இராணி. கடிதத்தைத் தாய்க்குப் படித்துக் காட்டிவிட்டுத் தபாலில் சேர்த்து வரும்படி தம்பியாரைப் பணித்தவள், விருந்தையிற் கிடந்த சாய்வு நாற்காலியில் தன்னை மறந்த நிலையிற் குறண்டியபடி கிடக்கிருள்.
தாயாரின் சோகங் கலந்த பெருமூச்சுக் காற்றில் மிதந்து இராணியின் காதில் விழுந்தபோதும் தனது முடிவை மாற்றிக்கொள்ள விரும்பாது நிம்மதியாகப் பார்த்தபடி படுத்திருந்தாள் இராணி.
 

கொழுகொம்பு
அன்று நல்லூர் தேர்த் திருவிழா.
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து கிடக் கின்றது சன வெள்ளம். உச்சி வெயிலின் கொடுமையை இலட்சியம் செய்யாது * அரோகரா " , " முருகா " என்று கசிந்துருகும் மக்கள் ஒலி வானைப் பிளக்கிறது. ஆலயத்தின் நாணு திசைகளிலும் கற்பூரச் சுடர் தெய்வீக ஒளியாகி ஓங்கியெரிகின்றது.
வேக்காட்டைத் தமது பக்தியினல் ஆட்கொண்ட பக்தர்கள் பலர், சுடுமணலில் அங்கப்பிரதிட்டை செய் கிருர்கள். பெண்கள் பஞ்சாங்க அஞ்சலி செய்தபடி கோவிலைச் சுற்றி வருகின்றனர். தேவார, திருவாசகப் பண்களை இசைத்துக்கொண்டு பக்தர்குழாம் கூட்டம் கூட்டமாகச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
கோவிலின் மேற்கு வீதியிலமைந்துள்ள மாநகராட்சி மன்ற செளகியத்துறை அலுவலகத்தில் நான் கடமை யாற்றிக்கொண்டிருக்கின்றேன்.
காலைமுதல் ஓய்வில்லாத வேலை. பிள்ளைகளைத் தவற விட்ட பெற்றேர்களும், தவறிய பிள்ளைகளை எம்மிடம் ஒப்புவிக்கக் கொண்டுவரும் சாரணர்களுமாக அடிக்கடி பலர் அலுவலகத்துக்கு வருவதும் போவதுமாக இருக் கின்றர்கள்.
அழுகின்ற குழந்தைகளைத் தேற்றுவதும், பிள்ளை களைப் பிரிந்த பெற்றேர்களுக்கு ஆறுதல் சொல்லுவதும் இலகுவான காரியமா?

Page 53
86 அமரத்துவம்
* சுமார் ஐந்து வயதிருக்கும். நீல நிறக் காற் சட்டையும், வெள்ளைச் சேட்டும் அணிந்திருக்கின்ருர் . பெயர் செல்வம் என்று கூறுகிருர், பிள்ளையைத் தவற விட்ட பெற்ருேர் இங்குவந்து கூட்டிச் செல்லவும் " என ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு ஆயாசத்தைத் தேற்றிக்கொள்ள என் இருப்பிடத்துக்குத் திரும்பு கின்றேன்.
சிறிய ஒய்வு கிடைத்தாற்போதும் என்ற தவிப்பில் உடம்பு கெஞ்சுகின்றது.
நாம் எண்ணியபடியே எல்லாம் நடைபெறுவதா யிருந்தால், முருகன் ஆலயத்தில் இத்தனை திரளாக மக்கள் ஏன் இந்த உச்சிக்கால வெய்யிலின் கொடுமை யிலும்கூட வருகிருர்கள் !
சாரணர்களாற் கொண்டுவரப்பட்ட சிறுமியொருத்தி யைப் பற்றி மீண்டும் ஒலிபெருக்கியில் அறிவிக்கிறேன்.
சிறுவர், சிறுமிகளைக் கோவிலுக்கு அழைத்து வருபவர்கள் அவர்களைக் கவனமாக வைத்திருக்கக் கூடாதா ? பொறுப்பில்லாத இவர்கள் ஏன் பிள்ளைகளைச் சன நெருக்கடியான தினங்களிற் கூட்டி வரவேண்டும் ? இவ்வாறு பெற்றேர்களை வைதபடி இருக்கிறேன்.
※
தவறவிட்ட சிறுவர், சிறுமிகளைப் பெற்றேர் கூட்டிச் சென்றுவிட்டனர். சில மணித்தியாலங்களாவது ஒய்வாக இருக்கலாம் என எண்ணியவணுக அங்கிருக்கின்றேன். அச்சமயத்திற்ருன் அந்தப் பெண் அங்கு வந்தாள். இளமையைத் தாண்டிய-முதுமைக் கிடைப்பட்ட பருவம். சோகமே உருவாகிய அவள் என்னை நோக்கி ' ஐயா ! என்னுடைய புருஷனைக் காணவில்லை. அவர் ஒரு மன நோயாளர். எங்கு போனுரோ தெரியவில்லை ' என்ருள் விம்மியபடி. பதட்டமும் வேதனையும் புரையோடிய உள்ளத்திற் கவியும் எண்ணக் குவியல்கள் வார்த்தைக ளாகக் கொப்புளித்தன.
 

கொழுகொம்பு 87
எனதருகேயிருந்த சக ஊழியர்கள் கொல்' என நகைத்தனர்.
அவளே ஒரு மனநோயாளியாக இருக்கலாம் என அவர்கள் எண்ணினர்களோ ?.
* பைத்தியம் என்ருல் ஏன் இங்கை கூட்டிவந்தனி' என்ருர் எனது சகஊழியர். அவரது குரலில் ஆத்திரம் தொனித்தது. அவரும் களைப்படைந்துவிட்டாரல்லவா? சற்றுச் சிரமபரிகாரம் செய்துகொள்ளலாம் என்ருல் அதற்கு இப்பெண் இடைஞ்சலாக வந்து நிற்கின்ருளே என்ற வெறுப்பாகவும் இருக்கலாம்.
" நான் என்ன தம்பி செய்வது, அவர் ஒரே பிடிவாத மாக இங்கு வரவேண்டு மென்று ஒற்றைக் காலில் நின்ருர் என்னுல் தடுக்க முடியவில்லை. தடுத்தாலும் அவர் எப்படியும் இங்கு வந்தே தீருவார். கோவிலுக்குப் போக விரும்பும்போது தடை செய்யலாமா ? . ஆகையால்தான் அவரையுங் கூட்டிக்கொண்டுவந்தேன்; அவருக்கு மூளை ம்ாருட்டமெண்டாலும் தொடர்ந்து இருப்பதில்லை. இடைக்கிடை இப்பிடித்தான் அந்தக் கொள்ளை வந்து மனுசனைக் கொண்டோடித் திரிகிறது.'
அவளது பேச்சோடு உதிரும் வார்த்தைகள் ஒரளவு படித்தவள் என்பதைக் காட்டின. அவளுக்கு வாய்த்தவன் மனநோயாற் பீடிக்கப்பட்டவன ? முருகா இதுவும் உன் சோதனைதானு.?’ என்மனம் அவளுக்காகப் பச்சாதாபப் பட்டது. இத்தக்காலத்திலும் இப்படியொரு பெண்ணு? ஆதரவற்றவர்களுக்கு உதவுவதுதானே நமது கடமை.
நான் எழுந்து சென்று, அப்பெண்ணின் கணவனைப் பற்றிய அங்க அடையாளங்களை ஒலி பெருக்கியில் அறிவித்ததோடு நிற்காமல், இரண்டு சாரணர்களை அழைத்து, அவர்களிடம் அவனைப்பற்றிய குறிப்புக்களை யும் கூறி, அவனைத் தேடிப் பிடித்துவரும்படி அனுப்பி விட்டுத் திரும்பினேன்,

Page 54
88 அமரத்துவம்
கைகளை நாடியிற் கொடுத்துச் சிந்தனை வசப்பட் டிருந்த அவள் என்னைக் கண்டதும் மரியாதையாக எழுந்து நின்ருள்.
* நீங்கள் இருங்கள் ' எனக் கூறியபடி எனது இருக்கையில் அமர்ந்தேன்.
அவளது கணவன் ஏன் மன நோயாளியானுன் என்பதை அறிந்துகொள்ள என்மனம் விழைந்தது.
‘எப்படி உங்கள் கணவருக்கு இந்தநிலையேற்பட்டது?
** மின்சார நிலையத்தில் "லைன்ஸ்மனுக’ வேலை பார்த்து வந்தார். ஒருநாள் வேலைக்குச் சென்ற இடத்தில் "லைற் மரத்தில் ஏறி ஏதோ வேலை செய்திருக்கிருர், அப்போது கால் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டார். மண்டையில் நல்ல அடி. சித்தம் கலங்கிவிட்டது என்றர்கள். ஆஸ்பத்திரி யில் இரண்டுமாதம்வரை இருந்தார். எனது பிரார்த் தனக்குக் கடவுள் செவிசாய்த்து விட்டார். எனது தாலி தப்பியது. ஆனல் எங்களைக் காப்பாற்றவேண்டிய அவரை நான் காப்பாற்றவேண்டிய நிலையேற்பட்டுவிட்டது. சிலகாலம் மனநோய் வைத்தியரிடமும் வைத்தியம் செய்வித்தேன். வருத்தஞ் சுகப்படவில்லை. சில சமயம் சாதாரணமாக இருப்பார். திடீரென எங்கேயாவது சென்றுவிடுவார். சிறுபிள்ளையைக் கவனிப்பதுபோல, கண்ணுக்குள் எண்ணை விட்டபடி இவரைக் கண்காணித்த படிதான் என் வாழ்க்கை நடக்கின்றது.'
* உங்களுக்கு இனத்தவர்கள் இல்லையா ???
* ஏன் இல்லை. அவர்கள் எல்லோருக்கும் என்மேற் கோபம், பைத்தியத்துடன் மாரடித்துக்கொண்டு என் வாழ்க்கையை நானே பாழாக்குகின்றேனம். "சும்மா அவனுடன் அல்லற்படுவதிலும்பார்க்க, அங்கொடைக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வாழலாமே", என எனக்கு ஆலோசனை கூறினர்கள். அவர்களுக்கென்ன ? லேசாகச் சொல்லிவிடலாம். ஆனல் அவர் பைத்தியமானலும் என் புருஷன். அவரைக்காப்பாற்றவேண்டியது எனது கடமை.

கொழுகொம்பு 89
அவர் நல்ல நிலைமையிலே வாழும்போது பங்குபற்றிய நான் இப்போது இந்த நிலையில் அவரைக் கைவிட்டால் மகாபாதகியாகி விடுவேன். அவரது மனநோய் மாரு விட்டாலும் பரவாயில்லை. அவர் நீண்டகாலம் வாழ வேண்டும். அதற்காக எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தாங்கும் சக்தி எனக்குண்டு.'
* சீவியத்துக்கு என்ன செய்கிறீர்கள் ?? * ஏதோ கடவுள் புண்ணியத்தாலே அவரது பென்சன் காசு கொஞ்சம் வருகிறது. அதைக்கொண்டு சமாளிக் கின்றேன்.'
எவ்வளவு கனிவு ! என் நெஞ்சிலே அப்பெண் தெய்வமாகப்பட்டாள்; கட்டிய கணவன் பைத்தியமாக மாறித் தொல்லைகள் பல கொடுத்தும், அதையெல்லாம் சகித்துக்கொண்டு, சிறு குழந்தையைப் பராமரிப்பதுபோல அவனைத் தன் கண் காணிப்பில் வைத்துக் காப்பாற்றும் அப் பெண் போற்றப்படவேண்டியவள்தான். 'கல்லானலும் கணவன் புல்லானுலும் புருஷன்' என்ற முறையில் வாழ்ந்த பண்டைய நம் பண்பாடு அழிந்துவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அவள் எனக்குத் தோற்றினுள்.
ஒவ்வொருவரின் பரிகாசத்துக்குமுரியதான பைத் தியம். அவனைச் சமூகம் புறக்கணிக்கிறது. அவளுக்கு அவனே எல்லாம். பைத்தியத்தின் நிழலிலே தன்னை அர்ப்பணித்துச் சமுதாயத்தைப்பற்றிய இலட்சியமில் லாது அவள் வாழ்கிருள் என்பதை எண்ணும்போது என் நெஞ்சம் நெகிழ்கின்றது.
அவனைத் தேடிப்போன சாரணர்கள் திரும்பி வருகின்றனர்.
** என்ன தம்பியவை ஆளைக் கண்டியளா ?' ஆவலும் பதட்டமுமாக எழுந்து நின்று அவள் அச் சாரணர்களை வினவினுள்.

Page 55
90 அமரத்துவம்
அவர்கள் உதட்டைப் பிதுக்கினர்கள். அவளது முகம் ஏமாற்றத்தால் கூம்பியது. * சரி, அவருடன் முதலில் எங்கே நின்றனிர்கள் என்பதைக் காட்டுங்கள்?* என்றபடி அவளையும் அழைத்து நானும் இன்னும் இரண்டு தொண்டர்களும் வெளிக்கிளம்பினுேம்:
சனத்திரள் சமுத்திர ஒலமாகக் கூக்குரலிடும் சூழ்நிலை" தனி ஒரு மனிதனையே பிரித்தறியமுடியாத சண்வெள்ளம். ஆண்டவன் பாதத்திற் சகல ஆத்மாக்களும் ஒன்றி அத்வைதமாகிவிடுமென்ற உண்மையிதுதானே..?
" இதிலைதான் இருந்தார்.' * Θ) ουδου இதில் 9
* அங்கே ...”*
இப்படி அவளது மனம் அலைவதுபோற் பலஇடங்களை நிலையின்றிக் காட்டிச் செல்லுகிருள்.
அவனுக்கல்ல இவளுக்குத்தான் பைத்தியமோ? என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது.
* அதோ! வருகின்ருர் ' எனக் கூறியபடி அவள் எதிர்த் திசையை நோக்கி ஒடுகிருள்
அத்திசையை நோக்குகின்றேன்.
வெகுளித் தனமாக அங்கும் இங்கும் மிலாந்தியபடி சனநெரிசல் குறைந்த இடத்திலிருந்து அவன் வருகின்றன்.
அவளது முகத்தில் இதுவரை கவிந்திருந்த சோக இருள் கதிரவனைக் கண்ட கமலமாக மாற, அவனது கையைப் பற்றியபடி அவள் வருகின்ருள்.
கோவிலின் நானுதிசையும் பக்தர் வெள்ளம். இறைவ னின் அருளுக்கிடையே உலகத்தின் வாழ்வில் ஒரு உத்தமியைப்பற்றியறியும் வாய்ப்பைக் கண்டு மன அமைதியோடு அலுவலகத்தை நோக்கி நடக்கின்றேன்,

மலர்ந்த வாழ்வு
இரவு ஒரு மணி யென்பதை அறிவித்தது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மணியோசை. ஊரின் மரண அமைதி அவளை வெகுவாக அச்சுறுத்தியது. இரண் டாவது சினிமாக்காட்சி முடிந்த ஆரவாரமாக, தூரத் திற் கேட்கும் " கார்க் கோண் சத்தங்கள் போர்க்களச் சங்கநாதமாகக் கேட்டன. அவள் படுக்கையிற் கிடந்து புரண்டாளே தவிர, தூக்கம் அவளை அரவணைக்கவில்லை,
தியாகு, அவளது கணவன் இன்னும் வீடுதிரும்பவில்லை. அழுதழுது வற்றி வரண்டுவிட்டன கண்கள். சுகந் தராத படுக்கையை விட்டெழுந்து விளக்கைத் தூண்டினள். சுகந் தராத வாழ்க்கைக்குப் புத்தகங்கள் துணைபுரிவது போன்று வேறு எதுவுமே துணைபுரியமாட்டாதோ ? . மேசையிற் கிடந்த புத்தகமொன்றை எடுத்து விரித்தாள் ஸ்ரசா. அப் புத்தகமே அவனது வாழ்க்கையைப் பிரதி பலித்து எழுதி வைத்திருக்கும்போது. அதைப் படிக்கத் தான் வேண்டுமா? ஆத்திரத்துடன் புத்தகத்தை மேசை மீது விட்டெறிந்தாள். மனம் அமைதியற்றுத் தவித்தது.
முற்றவெளியில் நடைபெறுங் களியாட்ட விழாவின்
இறுதிநாள். சூதாட்டத்துக்கு ஒரு சுமைப் பணத்துடன் சென்ற தியாகு இன்னும் வீடு திரும்பவில்லை.
முதல்தரம் தோற்றுவிட்டு இரவு ஒன்பது மணியள வில் நன்கு குடித்துவிட்டு வெறியுடன் வந்தான். தோற்ற காசை எடுக்கவேண்டும். உடனே பணம் வேணும்' என்று மூர்க்கமானுன்,

Page 56
92 அமரத்துவம்
' காசு இஞ்சை கொட்டியா கிடக்குது ஏன்தான் இப்படி உங்களுடைய புத்தி குறுக்காலை கொண்டு போகுதோ தெரியவில்லை ' என்ருள் ஸ்ரசா.
' என்னடி சொன்னுய்? திட்டுறியாடி ; உன்ரை அப்பன் வீட்டுச் சொத்தையாடி நான் சூதாடித் துலைக் கின்றேன். பெட்டிக்குள்ளே கிடக்கிற காசை எடுத்துக் கொண்டு வாடி ' என்ருன் தியாகு.
"எல்லாத்தையும் முடிச்சிட்டியள். இந்த வீடொன்று தான் இன்னும் கிடக்கு.'
' என்னடி உனக்குத் தந்த சீதன வீடு வளவு எண்ட மாதிரியல்லே கதைக்கிருய் ' என்று சீறி விழுந்தான்.
மறு வார்த்தை பேசாது காசைக் கொண்டுவந்து கொடுக்கும்போது ' ஏன் சாப்பிட்டுவிட்டுப் போறது தானே' என்ருள்.
** நான் இப்ப சாப்பிடவில்லை. நீ சாப்பிட்டுவிட்டுப் படு ' என்றவன் உடனே வெளியேறிவிட்டான்.
காசுடன் தனியாக இரவு ஒன்பது மணிக்குச் சென்ற கணவனை இன்னுங் காணவில்லையே என்று கலங்கித் தவித்தாள் ஸ்ரசா;
* 兴
உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, செல்வச் செழிப் புடன் வளர்ந்த தியாகு இப்படி ஊதாரியாக மாறுவான் என்று யார் கண்டார்கள் ? தாய் தகப்பனுக்கு ஒரே பிள்ளை. அவனது இன்றைய திருவிளையாடல்களை உயிரோ டிருந்து பார்க்கக் கொடுத்து வைக்காமலே பரகதி அடைந்துவிட்டார்கள் பாக்கியசாலிகள். இப்படி ஒரு பிள்ளை பிறந்து எங்களை ஏலத்தில் விடுவான் என்பதை அவர்கள் முன்கூட்டியே தெரிந்துவைத்திருக்க வேண்டும். கெளரவமான கவுண்மென்ற் உத்தியோகம் செய்யும்

மலர்ந்த வாழ்வு 93
தியாகு இப்படிப் பகிரங்கமான குடிகாரணுகவும் சூதாடி யாகவும் மாறியதைப் பற்றிக் கதைக்காதவர்களே கிடையாது.
தியாகுவுக்கு மனைவியாகக் கிடைத்து மாருத துய
ருடன் வாழும் ஸரசா, வறிய குடும்பத்திற் பிறந்து
தாய் தந்தையரை இழந்து ஒன்றை விட்ட சகோதரனின் பராமரிப்பில் கிடந்து நாராகி உண்மையான பொறுப் புள்ள பெண்ணுக மாறி விட்டவள். "பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும். என்பதற்கொப்ப ஸ்ரசாவின் வாழ்விலும் விடாமல் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது துன்பமுந் துயரமும்.
* எல்லாம் என்ரை தலையெழுத்து ' என்ற கூற்றுடன் தன் தலையில் மளார் மளார் என்று அடித்துக்கொண்டாள்.
அதே சமயத்திற் கதவு தட்டப்படுஞ் சத்தங் கேட்டது. கண்ணிரைத் துடைத்தபடி எழுந்து சென்று கதவைத் திறந்தாள். பொழுது புலர்ந்திருப்பது அப் போதுதான் அவளுக்குத் தெரிந்தது.
* இதுதானே தியாகராசாவின் வீடு ?" என்று கேட் டார் கதவைத் தட்டியவர்.
** ஒம், என்ன சங்கதி? '
* நீங்கள் அவர் மனைவிதானே ?. அவரை ஆஸ் பத்திரியிற் கொண்டுபோய் விட்டிருக்கின்ருேம். மண்டை யிற் சரியான காயம். அதோடை அறிவு நினைவற்ற நிலையிற் கிடந்தார்' என்ருர் வந்தவர் அவசரத்துடன்,
* ஐயோ! அத்தான் !'
ஸ்ரசா, ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தாள். தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த 'பாண்டேஜ் 'சையும் மீறி இரத்தம் கசிந்த கோலத்தில் தியாகு படுத்திருந் தான். அறிவு இன்னும் திரும்பவில்லை.

Page 57
94. அமரத்துவம்
**அத்தான் !' என்று அவலக்குரலில் கத்திய ஸ்ரசா வைத் தாதி தடுத்து நிறுத்தித் தென்பூட்டினள்.
** அடி கொஞ்சம் பலமானதுதான். ஆனல் உயிருக்கு ஆபத்தொன்றுமில்லை. புது இரத்தம் ஏற்றி இருக்கின் ருேம். இன்னுஞ் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும் ' என்ருள் தாதி.
பல மணித்தியாலங்களின் பின்பே தியாகு கண்களைத் திறந்தான். அழுத கண்களும் சிந்திய மூக்குமாக இருந்த மனைவியைப் பார்த்து,
* ஸரசா' என்ரு ன்.
** என்ன நடந்தது அத்தான்?' * எல்லாம் நடக்கவேண்டியதுதான் நடந்திருக்குச் ஸ்ரசா. கடவுள் நல்ல தண்டனை தந்திட்டார் ??
'நீங்கள் என்னத்தான் சொல்லுகிறியள்?' என்ருள் ஸ்ரசா பதறியவளாக.
* ஸரசா ! 'கசினே விளையாட்டென்று ஒரு சனியன் விளையாட்டு இருக்குது. முதலிலை அதிலை தோத்துப்போய் வந்துதான் பிறகும் உன்னட்டைக் காசுவாங்கிக்கொண்டு போனேன் இல்லையா ?. பிறகு விளையாடித் தோற்ற பணத்தையும் வெண்டு அதுக்கு மேலாலையும் ஆயிரத்துக்கு மேலே வென்றிட்டேன். அந்தத் திமிரிலை பிறகும்போய் அங்குள்ள மதுக்கடையிலே மூக்குமுட்டக் குடிச்சன். கண்விண் தெரியாத வெறி. காசைக் கண்டவுடனை புதிசாக நாலைந்து சிநேகிதங்கள் வந்து சேர்ந்தாங்கள். பின்பும் எல்லோருமாகக் குடித்துவிட்டு வந்தோம். ஆரியகுளத் தடியில் வந்தவுடன் பேந்தும் மது அருந்தக் கூப்பிட் டான்கள். நான் மறுக்கவே தகராறு ஆரம்பித்தது. அடிபட்டதாக ஞாபகம். பிறகு ஒன்றும் தெரியாது ' என்று சொல்லிமுடித்தான் தியாகு.
* உங்களை அடித்துப்போட்டு, பணத்தையும் பறித் துக்கொண்டு போய்விட்டாங்கள் பாவிகள். அதுக்குத்

மலர்ந்த வாழ்வு 95
தான் அவங்கள் சிநேகிதம் மாதிரி நடிச்சுக்கொண்டு
வந்த வங்கள். கண்ணுக்கு வந்தது புருவத்தோடையாவது போயிட்டது. எல்லாம் அந்த நல்லூர்க் கந்தன் காப் பாற்றினுன் ' என்று ஸ்ரசா தாலியை வெளியிலெடுத்து ஒற்றிக்கொண்டாள்.
** இல்லை ஸ்ரசா, அடித்தவர்கள் என்னைச் சாகடிக்க வில்லையென்றுதான் கவலையாக் கிடக்கு."
*" என்ன வார்த்தை யத்தான் வாய் கூசாமல் சொல் லுறியள் ? அவசரமாக அவன் வாயைப் பொத்தினுள் ஸ்ரசr,
* உனக்குத் தெரியாது ஸ்ரசா. உன்னைப் படுத்திய கொடுமைகளுக்காகத்தான் கடவுள் எனக்கு இந்தப் புத்தியைப் படிப்பித்தவர். ஆரோ ஒருத்தி எனக்குச் செய்த துரோகத்துக்காகத்தான் பெண்ணினத்தையே வதைக்க வேணுமென்ற வைராக்கியத்தில் உன்னைப் போட்டுச் சித்திரவதை செய்தேன். எறிந்தவனை விட்டு
விட்டு ஏதோ ஒரு அவசரத்துக்காக ஒடியவனைப் பிடிச்சு
அடித்த மாதிரி உன்னைப் பழிவாங்கினேன் . .'
* அந்தக் கதையெல்லாம் இப்ப ஏன் அத்தான். இப்ப நீங்கள் அதிகமாகக் கதைக்கக்கூடாது ' என்ருள் ᎧmᏪᎠ éᎭmᎢ .
** இல்லை, ஸ்ரசா. இந்தத் தருணத்தை விட்டால் வேறை சந்தர்ப்பம் வராது. செத்துப்போவேனென்று பயப்படுகிருயா? நான் இப்போதைக்குச் சாகமாட்டன்: என்ரை நெஞ்சுக்குள்ளை கிடக்கிற தெல்லாவற்றையும் உனக்குச் சொன்னுல்தான் என்ரை மனப் பாரம் குறை u Ib......... வருத்தமும் மாறும்.
செல்வக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்த நான் ஏன் குடிகாரனுக-சூதாடியாக மாறினேன் என்பது உனக்கு மட்டுமல்ல, யாருக்குமே தெரியாது.
அப்போது நான் கல்லூரி மாணவன். அங்கை எனக்கும், நாகமணி என்ற நச்சரவத்திற்கும் காதல் ஏற்

Page 58
96 அமரத்துவம்
பட்டது. கல்லூரிக் காதல் கல்லூரியுடன் என்பார்கள். அநேகமாக, நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது ஆண்கள் என்பதுதான் உண்மை. ஆனல் ஒரு பெண் இவ்வளவு நயவஞ்சகியாக இருப்பாளென்று நான் எண்ண வில்லை. சுருக்கமாகக் கூறப்போனல் அவளும் நானும் காதலர்களாணுேம். அவள் குடும்பத்தினர் நாகரீகப் போக்கில் கொஞ்சம் முன்னேறியவர்கள். எங்கள் நெருக் கத்தை அவர்கள் கண்டிக்கவில்லை. அதற்கு மாருக அதை வளர்க்கவே துணைபுரிந்தார்கள். என் சொத்துப் பத்தும், ஒரே பிள்ளை என்கிற எண்ணமுமே அவர்கள் மனதில் இருந்திருக்கிறது. பெரிய பதவி, அந்தஸ்து என் பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அவளின் பெற்றேர். அப்படி எதுவும் சந்திக்காவிட்டால் என்னைப் பிடிக்கலாமெண்ட எண்ணத்தோடுதான் மகளுடன் என் னைப் பழகவிட்டிருக்க வேண்டும். அவளையும், அதற்குத் தக்கமாதிரிப் பழக்கி வைத்திருக்கவேண்டும்.
ஆனல் அவர்களுடைய சூட்சுமம் எனக்குத் தெரி யாது. நான் உண்மையாகவே அவளை நம்பினேன். கல் லூரிப் படிப்பு முடிந்துவிட்டது.
அவளும் தாயும் கொழும்புக்குச் சென்றனர். ‘விரை வில் திரும்பி வருவோம். வந்தவுடன் திருமண விடயங் களைக் கவனிக்க வேண்டும். தயாராக இருங்கள் " என்று கூறி விடைபெற்றுச் சென்ருள்.
நான் இலவுகாத்த கிளியானேன். கொழும்பிலிருந்து திருமண அழைப்பிதழ் எனக்கு வந்தது. செல்வி நாகமணிக்கும் டாக்டர் பத்மநாத னுக்கும் திருமணம் நடாத்தப் பெரியோர்கள் நிச்சயித் திருப்பதால்.
என் நெஞ்சு சுக்குநூருக வெடித்துச் சிதறியது
போன்ற பிரேமை. ●ää
அவ் வழைப்பிதழை அவளே தன் கைப்பட எழுதி அனுப்பியிருந்தாள். எவ்வளவு திமிர் அவளுக்கு.

மலர்ந்த வாழ்வு 97
அவளுக்கிருந்த மனத் தைரியமும் துணிச்சலும் எனக் கில்லாது போய்விட்டது.
அவள் எனக்குச் செய்த துரோகத்தை, இதயத்தில் ஏற்படுத்திய கீறலை மாற்ற எனக்கு வேறு வழியிருக்க வில்லை. மதுவை நாடினேன். படிப்படியாகச் சூதாடி யாகவும் மாறினேன்.
*" போதும் அத்தான், போதும்! இனிக் கதைக்கா தீர்கள். சற்று ஒய்வு எடுங்கள். நடந்தவை நடந்தவை யாக இருக்கட்டும். நடப்பது நல்லனவாக இருக்கட்டும் ' என்ருள் ஸ்ரசா.
** நடப்பவை நல்லவையாகவே யிருக்கும் ஸ்ரசா. இந்தத் தியாகு தீர்மானித்தாற் பிறகு யார் வந்தாலுமே மாற்றமுடியாது என்பது உனக்குத் தெரியுந்தானே.'
ஸ்ரசாவின் விழிகளிலிருந்து வழிந்துகொண்டிருந்த அவலக் கண்ணிருடன் இப்பொழுது ஆனந்தக் கண்ணிரும் கலந்திருக்க வேண்டும்.

Page 59
9)6)60)
1மரக்கறிக்காரியின் வரவை எதிர்நோக்கி வெளியே வந்தாள் சீதா.
காலைநேர அமைதி அஸ்தமித்தபின் வீதி கலகலப்பாக வுள்ளது. வீதியிற் போகும் வாகனங்களையும் பாடசாலை நோக்கிச் செல்லும் பிள்ளைகளையும் பார்த்தபடி நிற் கின்ருள்.
தொலைவில் மரக்கறிச் சுமையுடன் வள்ளி ஆடி அசைந்து வரும் காட்சி, கண்டிப் பெரகராவில், யானை பவனிவருவதைச் சீதாவுக்கு நினைவூட்டியது,
இதழிற் பூத்த புன்னகையுடன் '' இந்த மனுஷி நேரத்துக்கு வருவதில்லை. கதை கண்ட இடம் கைலாசம் என்று நின்றுவிடுவாள்' என முணுமுணுத்தாள்.
** அம்மா, கனநேரமாக நிற்கிறியளோ ?’ என்ற பீடிகையுடன் கடகத்தை இறக்கினுள் வள்ளி.
* வந்து ஒரு மணித்தியாலம் இருக்கும். நீ என்னடா வெண்டால் ஆன நடை போடுருய் ' எனக் கூறியபடி குனிந்து தனக்குத் தேவையான கறிவகைகளை எடுத்துக் கொண்டாள்.
*" கோவிக்கா தேங்கோ அம்மா. வாற வழியிலை உங்கடை கொண்ணர் வீட்டையும் போனேன். அது தான் கொஞ்சம் சுணங்கிப்போச்சு.'
** அப்படியா ?' என்று பரபரப்புடன் கேட்ட சீதாவின் இதயத்திலிருந்து நீண்ட பெருமுச்சொன்று வெளியேறியது. அந்த உணர்ச்சி வெறும் பெருமூச்சுடன்

sg,016) 160) - 99
நின்றுவிடக்கூடியதல்ல. அவளது மனத்திற் பலவிதமான சலனங்கள் எழுந்தன. கேட்போமா ? வேண்டாமா ?? என்ற கேள்வி அவளை உறுத்த, " அங்கே எல்லோரும் சுகமாகத்தானே இருக்கினம். அம்மா இப்ப எப்படி இருக்கிரு ? எழும்பிக்கிழும்பி நடக்கிருவா ?' என்று வார்த்தைகள் அவளையறியாமலே வெளிப்பட்டன.
** அந்த வயித்தெரிச்சலை ஏனம்மா கேட்கிறியள் ! நீங்கள் ஒருமாதிரியாய்த் தப்பிவந்து மகராசியாக இருக் கிறியள். ம். ஆனல் தெய்வாணையம்மாபாடுதான்
ம்.அந்த நாட்களில் உங்களுக்குச் செய்ததுக்கெல் லாம் வட்டியும் முதலுமாகக் கோடியுக்கை கிடந்து இழுபறிப்படுகிரு.'
** என்ன..?*
சீதாவினல் அங்கு தொடர்ந்தும் நிற்கமுடியவில்லை. அவள் விம்மியபடி, சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றதைக் கண்ட வள்ளி தானும் அவளைப் பின்தொடர்ந்து சென்ருள்.
*" ஏன் வள்ளி அம்மாவைக் கோடியுக்கையே கிடக்க விட்டிருக்கினம் ? அவை கண்கெட்டுத்தான் இருந்து தடவப்போகினம்.'
** ம். அவைக்கு என்ன தண்டனைதான் கிடைக்கப் போகுதோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். எழும்பி நடக்கமுடியாத பாரிச வாதக்காரியான தெய்வானை யம்மாவை அந்த நாலுசார் வீட்டிலை கிடக்கவிடாமல், கொட்டிலுக்குள்ளையல்லே விட்டிருக்கினம். நான் அங்கை நிக்கையுக்கை அவ தண்ணிக்குத் தவித்த தவிப்பு.அதை என்னெண்டுதான் சொல்லுறதெண்டு எனக்குத் தெரியவில்லையம்மா. அந்த நேரம் உங்கட மச்சாள் பேப்பரல்லே பார்த்துக்கொண்டிருக்கிரு. கனநேரத்துக்குப் பிறகுதான் அருவினைக்காத்தாமலுக்குப் பெடிச்சியைப் பார்த்து அந்தக் கிழவிக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திவிடு. சவம் என்னவாக் கத்தித் துலைக்குது..?’ என்ருளே பாவி,'

Page 60
100 அமரத்துவம்
** எனக்கே மனம் " திக் எண்டு போச்சுது அவ இருந்த இருப்பென்ன? அவவுக்கு இந்த நிலையா வர வேணும் ? எனக்கு மனம் கேக்கவில்லை. நானும் வேலைக் காரப் பெடிச்சிக்குப் பின்னலை போய்ப் பார்த்தன்.'
'அந்தக் கோதாரியை என்னெண்டு சொல்ல.? பலபேரை வைத்து ஆட்டிப்படைத்த தெய்வாணையம்மா மேலிலை சீலை துணியில்லாமல் வெறுங் கட்டிலொன்றிலை உறுண்டுகொண்டு கிடந்தா, நான் வேலைக்காரியிட மிருந்து “ அவக் கெனச் செம்பைப் பறித்து அவவுக்குப் பருக்கினேன். அவள் பதறிப்போனள்:
நீ என்ன வேலை செய்தனி ? அம்மா பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? உனக்கேன் இந்தத் தேவை யில்லாத வேலை ? ? என்று சீறிவிழுந்தாள்.
** " யார் வள்ளியா?.வா, நான் அந்தப் பிள்ளை சீதாவுக்குச் செய்த துரோகத்துக்காகத்தான் இப்படிக் கிடந்து அனுபவிக்கின்றேன் என்று தெய்வாணையம்மா அழுதுகொண்டே சொல்லிச்சுது.
** "அப்படி யெல்லாஞ் சொல்லாதேயுங்கோ, கடவுள் இருக்கிருர்’ எனச் சொல்லி அவவின்ரை உரிந்து கிடந்த சீலையையுங் கட்டிப்போட்டுத்தான் வந்தனன்.
* உங்கடை மச்சாள் நான் பெரியம்மாவைப் பாத் திட்டு வாறதைக் கண்டிட்டு முகத்தை ஒரு மாதிரியாகச் சுழித்தாள். என்ன செய்கிறது? என்ரை மனம் மிடு மிடுத்ததுதான், இரண்டு கேள்வி கேட்க வேணுமெண்டு, பிறகும் அவவோடை கதைச்சு ஏன்தான் வீணுக மனத் தாங்கல் எண்டு நான் பேசாமல் வந்துட்டேன்' என்றவள் * எட, சரியா நேரம் போட்டுதம்மா. வாடிக்கைக்காரர் காத்துக்கொண்டு இருக்கப்போகினம். எல்லாத்துக்கும் நான் பிறகு வாறன் ஆறுதலாகக் கதைப்பம் ' என்ற படி கடகத்தைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.
சீதாவுக்கு ஒரு வேலையிலும் மனஞ் செல்லவில்லை.

அறுவடை 0 1
அவளது சிந்தனை தனது கடந்த காலத்தை எண்ண லாயிற்று.
சீதா, அக் குடும்பத்தின் இரத்த உறவுள்ள உரிமை யோடு வளர்ந்துவந்தவள். திடீரென்று, தான் யார் என்பது அவளது சகோதரன் சந்திரனது திருமணத்தின் போதுத்ான் தெரியவந்தது .
சந்திரனுக்குத் திருமணம் பேசிப் பெண் வீட்டார் வந்தபோதே அவளின் பிறப்பின் இரகசியம் வெளிப் பட்டது. செல்வந்தரான பெண் வீட்டாருடன் சீதனப் பேரம் நடைபெற்றபோதுதான் அவளால் தனது வர லாற்றை அறிந்துகொள்ள முடிந்தது;
மகனுக்குக் கூடிய சீதனம் பெற்றுக்கொள்ள வேண்டு மென்ற பேரவாவினல் தெய்வான ' எங்களுடைய சொத்தெல்லாம் எனக்குப்பின் எனது மகனுக்குத் தானே ' என்ருள்.
** என்ன சொல்லுறியள். மகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?' என்று கேட்டனர் பெண்வீட்டார்.
" அவள் எனது மகள் அல்ல. எங்களுக்குப் பெண் குழந்தை யில்லாததால், நாவலப்பிட்டியில் இவர் வேலை பார்க்கும்போது, இவளை விலைக்கு வாங்கி வளர்த்தோம்'
என்ருள் தெய்வானை
அவளது வார்த்தைகள் அனைத்தும் துலாம்பரமாக அடுத்த அறையில் இருந்த சீதாவுக்குக் கேட்டன: அவளது தலை சுற்றியது. மின்சாரத்தினுல் தாக்குண்ட அதிர்ச்சி, மனத்தை நினைவுகள் கசக்கிருமிகளாக அரிக்கத் தொடங்கின.
அன்றிரவு அவளாற் படுக்கையில் படுக்க முடிய வில்லை.
மறுநாள், தாயாரிடம் தனது வரலாற்றைப்பற்றிக் G3, LIrait.

Page 61
I 02 அமரத்துவம்
* ஆம் சீதா, அது உண்மைதான். அதற்காக நீ ஒன்றும் மனம் நோகாதே பிள்ளை, உன்னை நான் வளர்த் தாலும் நீயும் என் மகள்தான். கொண்ணனுக்குக் கூடிய சீதனத்துடன் பெண் கிடைக்க வேண்டுமே என்ற ஆசை யால்தான் அப்படிக் கூறினேன் ' என்று ஒருவாறு சமா ளித்துவிட்டாள்.
ஆனல் பெண்வீட்டார் இளித்தவாயர்களாக இருக்க வில்லை. திருமணப் பதிவிலன்றே, சந்திரனுக்கு முழுச் சொத்துக்களையும் எழுதினுல் மட்டுமே ரொக்கமாக ஒரு லட்சம் ரூபா கொடுக்க முடியுமென்று அடம்பிடித்தனர்.
தெய்வான மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறினள். இதனல் தமையனது திருமணம் தடைப்பட்டுவிடப் போகுதே என எண்ணிய சீதா, தாயாரை அழைத்துத் தனக்காகத் திருமணத்தைக் குழிப்பாது முழுச் சொத்துக்களையும் தமையன்பேருக்கு எழுதிக்கொடுக்கும்படி கூறினள்.
அவளது தியாக உணர்ச்சியினல், திருமணப்பதிவு எந்தவிதமான தடங்கலுமின்றி நடைபெற்றது.
திருமணம் முடிந்து நிர்மலா, வீட்டுக்கு வந்த பின்பே ரகளை ஆரம்பமாகியது. வீட்டில், உரிமையுடன் வளர்ந்த சீதா, புதியவளாற் புறக்கணிக்கப்பட்டாள். நிர்மலா வைத்ததே அங்கு சட்டமாக மாறியது. சீதனத்துக்கு ஆசைப்பட்டுத் திருமணஞ் செய்தவர்களை அவள் தனது பணப்பலத்தினலேயே அடிமைகளாக்கி விட்டாள்.
சந்திரன் கொழும்புக்குப் போய்விட்டான். வீடு அல்லி ராச்சியமாக மாறியது.
உரிமையுடன் வாழ்ந்த வீட்டில், வேலைக்காரியாக வாழவேண்டிய நிலையேற்பட்டபோதும், சீதா பொறுமை யைக் கைவிடாது அமைதியாகவே இருந்தாள்.

அறுவடை 103
எங்கேயோ பிறந்து, பெற்றேரின் முகத்தைக்கூடப் பார்க்காமல் இங்கே வந்து செல்வமாக வளர்ந்து இறுதி யில் வேலைக்காரியாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எண்ணி மனம் வெதும்புவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும் அவளால்..?
திடீரென்று ஒருநாள் சீதாவுக்கு விடிவுகாலம் ஏற்பட்டது. கலியாணத் தரகர் முருகுப்பிள்ளை அம்மான் அவளுக்குத் திருமணம் பேசிவந்தார். சனியன் தொலைந் தாற் போதும் என்று நினைத்த நிர்மலாவின் நினைவுடன் திருமணம் நடந்தேறியது.
சீதாவின் கணவன், வர்த்தக ஸ்தாபனமொன்றில் கடமையாற்றினன்
திருமணம் முடிந்துவிட்டாலும், சீதா, கணவனுடன் அங்கேயே தங்கியிருந்தாள்: அன்று ஒருநாள், ! வீட்டிற் கழட்டிவைத்த வைரத்தோடுகளைக் காண வில்லையென ஒரே ரகளை. சீதாதான் எடுத்திருக்க வேண்டும் என நிர்மலா குற்றஞ்சாட்டினுள்,
சீதா தனக்கொன்றுமே தெரியாது எனக் கூறிஞள். ஆஞல் அவளின் கூற்று அங்கு எடுபடவில்லை;
அதனுல் ஏற்பட்ட வாக்குவாதம் சீதா குடும்பத் தினரை அங்கிருந்து வெளியேற்றியது.
தன்னைத் திருடியெனக் குற்றம்சாட்டி நாடக மாடியவளின் வீட்டுக்கு எப்படிப் போவது ?.
தன்மான உ ண ர் ச் சி மேலீட்டால், தன்னை வளர்த்து ஆளாக்கிய தெய்வானையின் நிலை அவளது மனத்தைத் தளரச்செய்தது;
படலை திறக்குஞ் சப்தம் அவளது சிந்தனையை அறுத்தது: சங்கர் வருவதைக் கண்டதும், பதறியவ ளாக எழுந்தாள்.

Page 62
104. அமரத்துவம்
மரக்கறிச் சாமான்கள் வைத்த இடத்திலேயே வைத்தபடி இருப்பதையும், மனைவி மனந்தளர்ந்த நிலை யில் நிற்பதையும் கண்டு மனம் குழம்பியவனுக ‘என்ன நடந்தது சீதா ?' என்ருன் பதட்டத்துடன் சங்கர்,
காலையில் வள்ளி கூறிய அனைத்தையும் அப்படியே ஒப்புவித்தாள் சீதா.
'அதுவா?. எனக்கு எப்பவோ தெரியும். ஆணுல் நீ வருந்துவாய் என்று நான் சொல்லவில்லை' என்றவன் " அது சரி, இப்ப இப்படி நின்று என்ன செய்யப் போகிருய் ?'.
' என்ன செய்வது என்றே புரியவில்லை, என்னைத் தனது மகள்போல உரிமையுடன் வளர்த்து, புகுந்தவ ளுக்கு அடிமையாகிப் புறத்தியாள் ஆக்கிவிட்டதுடன், திருடிப்பட்டமும் சுமத்திய நிர்மலாவைக் கண்டிக்காது, அவளுடன் சேர்ந்துகொண்டதை எண்ணும்போது எனது மனம் பாருங்கல் ஆகியது என்னவோ உண்மைதான். ஆனல், அவவின் இன்றைய நிலையை அறிந்தவுடன் என் மனம் படாத பாடுபடுகின்றது. அம்மாவை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரலாமெண்டு பார்க்கிறேன் . '
*உன்னைக் கள்ளியென்று பழி சுமத்தியவர்களின் முற்றம் மிதிக்க உனக்கு வெட்கமாக இல்லையா '? என்ருன் சங்கர் கோபமாக,
'அம்மாவா அப்படிச் சொன்ன ? வந்தவளின் பணத் திமிர் அல்லவா அவவைக் கட்டிப்போட்டிருந்தது. எய்தவ னிருக்க அம்பை நோவதில் என்ன பயன் ? பலபேர் மதிக்க வாழ்ந்த அம்மாவின் இன்றைய நிலை என்னைத் தடுமாறச் செய்கின்றது. மன அமைதியின்றித் தவிக்கும் அவவுக்குக் கடைசிகாலத்தில் சில நாட்களுக்காவது மன அமைதியை நாங்கள் கொடுக்கக்கூடாதா '?.என்ருள் சீதா சங்கரைப் பார்த்து.
அவளது பார்வையிற் கெஞ்சல் கொப்புளித்ததைக் கண்ட சங்கர், ' சரி, சரி, மதியாதவர்கள் வீட்டுக்குப்

s90)6) 60l. 105
போக முற்படுகிருய், நான் தடுக்கவில்லை. நீ போவதென் ருல் போ' என்று கூறிவிட்டு மீண்டும் அலுவலகத் துக்குச் சென்றன்.
*ኅ(•
சிங்கர் சென்ற பின்பு, சீதா தாயார் வீட்டுக்குச் சென்ருள். நிர்மலா அவளுடன் முகங் கொடுத்துப் பேசவில்லை. கண்டும் காணுதவளைப்போல, நாற்காலி யொன்றில் அமர்ந்திருந்தாள். அவளது உதாசீனத்தைப் பொருட்படுத்தாத சீதா, தெய்வானை படுத்திருந்த இடத்துக்குச் சென்ருள்.
தெய்வான படுத்திருந்த நிலை அவளை நிலைகுலையச் செய்தது.
* அம்மா ? ? எனக் கூறியபடி கட்டிலின் அருகில் சென்ருள்.
அங்கே தெய்வானை நினைவற்ற நிலையில் முடங்கிக் கிடந்தாள். அவளை அணைத்துத் தலையைக் கோதியபடி கண்ணிர் உகுத்தவண்ணங் கட்டிலில் அமர்ந்திருந்தாள் சீதா.
சீரும் சிறப்புமாக வாழ்ந்த தெய்வானை, அனுதரவான நிலையில், ஒலைக்கொட்டிலுக்குள் தேடுவாரற்றுக் கிடப் பதைக் காணச் சீதாவின் நெஞ்சம் கொதித்தது.
கடந்த காலத்தை யெண்ணிக் கண்ணிர் விடுவதைத் தவிர சீதாவினல் என்ன செய்ய முடியும் ? .
* தண்ணி, தண்ணி அனுங்கினுள்.
எனத் தெய்வானை ஈன சுரத்தில்
* அம்மா இந்தாருங்கள் தண்ணிர் ' என அவளைத் தூக்கித் தலையை மடியில் வைத்து அணைத்த வண்ணம் தண்ணிரைப் பருக்கினுள்.
தெய்வானைக்கு அந்தக் குரல், முன்பு எங்கோ கேட்ட பழகிய குரலாக இருந்திருக்க வேண்டும்.

Page 63
10.6 அமரத்துவம்
பசாடடைந்துவிட்டதன் கண்களால் சீதாவை உற்றுப் பார்க்கின்ருள்.
* அம்மா, நான்தான் சீதா. என்னைத் தெரிய வில்லையா? ' என்ருள் சீதா கரகரத்த குரலில்.
** சீதாவா ? ...”* தெய்வானையின் விழிகளிலிருந்து நீர் பெருக்கெடுத் தோடியது. மகளின் முகத்தை வைத்தகண் மூடாது பார்த்தபடி யிருந்தவள் மறுபடியும் ஏதோ சைகை காட்டியபடி வாயைத் திறந்தாள்.
தன் கைகளினலேயே தாய் கடைசியாகத் தெளிவு வாங்கிக் குடிக்க விரும்புகின்ருள் என்பது சீதாவுக்குப் புரிந்தது.
சீதாவின் திகைப்பையும் அழுகையையும் பார்த்த தெய்வானை தண்ணீரையே காட்டுகிருள்.
சீதா பருக்கப் போகும் அந்த ஒரு சொட்டுத் தண் னிருக்காகவா தெய்வானையின் சீவன் இதுவரை காத் திருந்தது . ته همه
சீதாவின் ஒற்றைக் குரல் உயர்ந்த தொனியில் ஒலித்தது.
 

பிரவாகம்
வானில் உருளும் நிலவுக்குப் போட்டியாக ஆஸ் பத்திரி வளவினுள் மின்விளக்குகள் இரவைப் பகலாக்க முயல்கின்றன.
* வார்ட் டுகளில் நோயாளர்களின் சம்பாஷணைகள் இன்னும் ஓயவில்லை. மணி ஒன்பதைத் தாண்டிவிட்டதை ஞாபகப்படுத்தி, ‘லையிற் 'றை அணைத்து அமைதியை நிலைநாட்ட ஒடலிமார் பிரயத்தனம் செய்கின்றனர், ஆனல் அமைதி நிலவுவதாகக் காணுேம்.
மின்விளக்குகள் அணைக்கப்பட்ட பின்பும் அங்கு சல சலப்பு ஒயவில்லை. கட்டில்களிற் படுத்திருக்கும் வாலிப நோயாளர்களிற் சிலர் அரட்டையடித்துக்கொண்டிருக் கின்றனர்.
அவன் கட்டிலிற் படுத்துக் கண்ணயர முயற்சிக் கின்றன், முடியவில்லை; ஆஸ்பத்திரிக்கு வந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. அவனது நோய் ஓரளவு தணிந்துவிட்டபோதிலும், பூரணசுகம் ஏற்படவில்லை.
அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களும் அடங்கிக் கட்டிலில் முடங்கிவிட்டார்கள்.
நிசப்தமான சூழ்நிலையில். மனம் மரந் தாவும் மந்தியாகின்றது. வாழ்நாளில் இப்போதுதான் அவன் நோயாளியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆஸ்பத்திரி அனுபவம் புதிது. அங்கு தங்கியிருப்பது சிறைச்சாலையில் இருப்பதுபோன்றதுதான் என்ருலும் அவனுக்குப் பல வித அனுப வங்களை - படிப் பினை களை ஏற்படுத்திய தென்னவோ உண்மைதான்.

Page 64
108 அமரத்துவம்
முதல்நாள் மாலை அவனுக்குப் பொழுதுபோவது பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனல் அன்று பின்னேரம் அந்த வார்ட் டைச் சுற்றிப் பார்வையிட வந்த டாக்டர் அவனுக்குப் பரிச்சியமுடையவர். அவர் அவனைப்பற்றி அங்குள்ள ஊழியர்களுக்குக் கூறியிருக்கவேண்டும். அதன் அவர்கள் அவனுடன் அன்னியோன்யமாகப் பழகினர். அதனையடுத்துச் சகநோயாளர்களும் மதித் தனர். அவனுக்குத் தேவையான பத்திரிகைகள், புத்த கங்கள் ஆகியனவற்றை வாங்கிக் கொடுப்பதற்குத் தங்களுடன் தங்கிநிற்கும் உறவினர்களை அனுப்பி உதவி ஞர்கள்:
அங்குள்ள நோயாளர்களுக்கிடையில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் அவன் காணவில்லை. ஒரே குடும்பத் தினர் போன்று அன்னியோன்யமாகப் பழகுவதைக் காண அவனது மனங் களிப்படைந்தது.
ஆஸ்பத்திரிக்கு வெளியேயும் இந்நிலை நிலவினல்.
அவனது படுக்கைக்கு வலப்புறமாக மூன்ருவது படுக்கையிலுள்ள தொய்வு நோயாளி லொக்', 'லொக் என இருமுகின்றன். இருமலை அவனல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. படுக்கையிலிருந்து எழுந்திருந்தபடி இருமு கின்றன். மூச்சுத் திணறலுடன் வரும் இருமலினல் அவஸ்தையுற்று வாந்தியெடுக்கின்ருன்,
அந்த நோயாளியின் அவஸ்தையைக்கண்டு இரக்கப் படவேண்டிய சகநோயாளிகளிற் சிலர் தங்கள் நித் திரைக்குக் குந்தகம் விளைந்துவிட்டதே என்ற மன உளைச்சலினல் முணுமுணுக்கின்றனர். ஆமாம், எத்தனை தான் அன்னியோன்யமாகப் பழகியபோதிலும் தனது சுகத்துக்குச் சகமனிதன் இடைஞ்சல் தரும்போது அவனை மனிதன் சபிக்கத்தான் செய்கிருன்,
அங்கு கடமையாற்றிய தாதி, ஓடலி ஆகியோர் பொறுமையாக அந்நோயாளிக்கு உதவிசெய்து படுக்க வைக்கின்றனர். அவர்களது செய்கை அவனது மனதில்
 

e பிரவாகம் 109
ஆஸ்பத்திரி ஊழியர்களைப்பற்றி அவன் இதுவரை கொண்ட கருத்தை மாற்றிவிடுகின்றது.
எந்தவிதமான அருவருப்போ, வெறுப்போ இன்றி மனிதாபிமானத்துடனும், கடமை யுணர்ச்சியுடனும் அங்கு கடமையாற்றிய அவர்களின் சேவை அவனது உள்ளத்தைத் தொடுகின்றது.
- இவர்களைப்போல எல்லா ஊழியர்களுமே கடமை யுணர்ச்சியுடன் சேவைபுரிந்தால் ஆஸ்பத்திரி, நோயாளி களின் சொர்க்கமாகிவிடாதா?
* கிறிச் . கிறீச்.
தாதி வார்ட்டைச்சுற்றி ' ரோட்ச்" லைற் பிடித்த வண்ணம் நோயாளர்களைப் பார்த்தபடி வருகின்ருள்.
அவனது கட்டிலுக்கருகில் வந்ததும், ' என்ன, நீங்கள் இன்னமுந் தூங்கவில்லை ? ' என்கின்ருள், கனிவான குரலில்,
அவன் சிந்தனை அறுகிறது. ' இல்லை, நித்திரை வரவில்லை-சிஸ்டர். ' அவள் அப்பால் செல்கிருள். சிந்தனை அலைகள் மீண்டும் அவனைச்சுற்றிக் கோலமிடுகின்றன.
அவன் ஆஸ்பத்திரிக்கு வரும்போது, அங்கு தங்கி யிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வரவில்லை. ஆனல் டாக்டரின் ஆலோசனையை அவனுல் மறுக்க முடிய
அவனுக்குப் பிள்ளைகள் என்ருல் உயிர். ஆம், அவன் பிள்ளைகுட்டிக்காரன். அவர்களைப் பிரிந்திருப்பது அவ னுக்கு வேதனையாயிருந்தது. இரவில் அவனது அணைப் பிலேயே நித்திரை செய்பவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு அதீத செல்வம் கொடுத்துக் கெடுப்ப தாக அவன் மனைவி அடிக்கடி குறைப்பட்டுக்கொள்வாள்; அவளது கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது

Page 65
1 1 0 அமரத்துவம்
என்பதை அவனுல் இப்போது உணர்ந்துகொள்ள
முடிந்தது. தன்னைப்பிரிந்து இவர்கள் எப்படி உறங்கு வார்களோ என இரக்கப்பட்டான். அதைப்பற்றி யோசித்துப் பயன்.?
*வார்ட்"டில் இருந்த நோயாளிச் சிறுவணுெருவன் நோயின் அகோரம் தாங்கமாட்டாமல் 'ஐயா, ஐயா'! எனத் தனது தந்தையை விளித்து அலறுகின்றன்.
அச்சிறுவனது குரல் அவனது இதயத்தைப் பிழிகிறது. அன்று மாலை, தாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த மூத்த புதல்வன் கூறியவை திரைப்படம்போல அவன் முன்னே வருகிறது.
'அப்பா! நீங்கள் இங்கு இருக்கவேண்டாம் இப்பவே எங்களுடன் வீட்டுக்கு வாருங்கள்,'
* நான் நாளை வருகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போங்கள் ' எனக் கூறி அவர்களை அனுப்ப முயற்சிக் கின்றன்.
* அப்படியானல் அம்மா வீட்டிற்குப் போகட்டும், நான் உங்களுடன் இருந்துவிடுகின்றேன். காலையில் அம்மா வந்து கூட்டிப் போகட்டும். நீங்களில்லாமல் இரவில் நித்திரை வரமாட்டாதாம்.”
மகனது வார்த்தைகள் அவனது இதயத்தைப் பிழி கின்றது. விழிகளிலிருந்து நீர் கொப்புளிக்க, நாளை கட் டாயம் வருவதாகப் பொய் கூறி மகனைத் தாயுடன் ஒருவாறு அனுப்பிவிடுகின்றன்.
* ஐயா, ஐயா! ' எனக் கூப்பாடுபோடும் நோயாளிச் சிறுவனின் குரல் அவனை மீண்டும் ஆஸ்பத்திரிச் சூழ லுக்கு இழுத்துவருகின்றது.
அச் சிறுவனுக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்றலாம் என்ற எண்ணத்துடன் எழுந்து அச் சிறுவனின் படுக்கையை நோக்கிச் செல்லுகின்றன்.

பிரவாகம் 11
சிறுவனின் தந்தை சோகமேயுருவாக, படுக்கையில் அமர்ந்து மகனை ஒரு கையால் அணைத்தபடி இருக் கின்றர். ஆனல் அச் சிறுவனே, தந்தை அருகில் இருப் பதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத மயக்க நிலையில் பிதற்றியபடி கிடக்கின்றன்.
அக் காட்சியைப் பார்க்கச் சகிக்காத அவன் திரும்பி வந்து தாதியிடம் அச் சிறுவனின் நிலைபற்றிக் கூறு கின்றன்.
அச் சிறுவன் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டா னென்றும், இன்னும் சில நாட்களிற் பூரண சுகமடைந்து விடுவானென்றும் தாதி அவனிடம் தெரிவித்தாள். அவளது கூற்று அவனது உள்ளத்தை ஒரளவு அமைதி அடையச் செய்தது. திரும்பவுந் தனது படுக்கையை நோக்கிச் செல்கின்றன்.
புதிய சிறுவனெருவன் எரிகாயங்களுடன் அங்கு கொண்டுவரப்படுகின்றன். வேதனையைத் தாங்கக்கூடிய வயதில்லை. கா யங் களின் எரிவு தாங்கமுடியாமல் 'அம்மா, ஐயா!' எனக் குழறுகின்றன். அச்சிறுவனத் தாதி படுக்கையிற் படுக்க வைத்து மருந்து பூசுகின்ருள். அவன் - ஆம், அவனும் அவர்களுக்கு உதவுகின்றன். ஓடலி டாக்டரைக் கூட்டிவரச் செல்கின்றன்.
நிம்மதியற்ற நிலையிற் காலையில் டாக்டரைக் கெஞ்சி யாகுதல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறவேண்டும் என்ற தீர்மானத்துடன் படுக்கையிற் சரிகின்றன் அவன்.
ஆஸ்பத்திரியில் ஒளி குறைந்த மின்விளக்குகள் இருட் டைக் கலைக்கமுடியாது தண்ணுறுவதுபோன்று மனத்தின் இருள் கவிய அவன் கட்டிலிற் கிடக்கின்றன்.
*எப்போது விடியுமோ?'.

Page 66
. . . . . . .است
 


Page 67


Page 68
محمحمحیے۔--محمحمحیے
ஈழத்து இலக்கிய உலகில் புகழ் பெற்றது நகரமண்டட யாற்றுப்
அலுவல லும் ப DITT GÖTG) I s
LIT Ls). வTகளுல் தொடக் (o)g uЈ6) T வருகின் தின் G அவரது மிகவும்
கங்கை பல கிளைகளாகப்
யாழ்வாணன் என்கின்ற ஆ
பாய்ந்து புகழிற் களித்து வரு அவர்கள் சுகாதாரப் LI ( * சுகாதார ஒலி என்ற பத்திரிை சபை ஊழியர் சங்கம், நல செயலாளர் , நெல்லியடிப் பெ யாழ்ப்பாணம் உதைபந்தாட 1968ஆம் ஆண்டு நடைபெற்ற குழுவின் செயலாளராகக் கட யாழ்ப்பாணம் என்ற வாடா பெருமக்களின் பாராட்டுதல் அண்ணு அஞ்சலி அவரது L யாழ்ப்பாணத்திலுள்ள ச இலக்கிய மன்றங்கள் என்பவ யின் பிற பாகத்திலும் அயல் சங்கங்கள், சுகாதார இயக்க யாழ்வாணன் அவர்களுக்கு ெ இலக்கிய விழாக்கள், நாட கூட்டங்கள் ஆகியவற்றைச் சிறப்பாக நடாத்தி முடிக்கும் யையும் பலர் அறிவர்.
சிறந்த சிறுகதையாசிரியர களைப் பெற்ற எழுத்தாளர். யாழ்வாணன் நிறைந்த நல்லிய அவர் ஆயிரத்தில் ஒருவர்.
iMAMAASSSSSASASASASAqAMSqMAqASqMAqAMSqMAAqALSLALLSAAAASLLLLLLLLMMSMSLSALSLSSLASLSqMMLSMMLSLeMSLS
திருமகள் அழுத
 

பாழ்வாணன் என்ற பெயர் நன்கு க் காப்பாளராக அவர் கடமை யாழ்ப்பாண மாநகரசபை கத்திற்கூட நா. சண்முகநாதனி ார்க்க யாழ்வாணனே முக்கிய
இலக்கிய வட்டத்தை உருவாக்கிய 1 யாழ் வாணனும் ஒருவர். க காலத்திலிருந்தே அதன் ளருள் ஒருவராகப் பணிபுரிந்தும் றர் அவர் யாழ். இலக்கிய வட்டத்
வளர்ச்சிக்கான காரணங்களுள்
அயராத - அடக்கமான உழைப்பு முக்கியமானதொன்று.
பிரிந்து கடலிற் கலக்கின்றது. ற்றல் ஆறும் பல கிளைகளாகப் கின்றது. நண்பர் யாழ்வாணன் குதியினரால் வெளியிடப்படும் கையின் ஆசிரியர்; யாழ். மாநகர வுரிமைச் சங்கம் ஆகியவற்றின் ாதுசன நூலகக் குழு உறுப்பினர் : ட்டச் சங்கப் பொருளாளர். சுகாதார-குடிநல வார விழாக் மையாற்றியதுடன் எழில் மிகு Tமலரையும் வெளியிட்டு அறிஞர் களையும் அவர் பெற்றுள்ளார். மற்றுமோர் தொகுப்பு நூலாகும். மூக நிலையங்கள், கல்லூரிகள்,
ற்றுடன் மட்டுமல்லாது இலங்கை
நாடுகளிலுமுள்ள இலக்கியச் ங்கள் ஆகியவற்றுடனும் நண்பர் நருங்கிய தொடர்புகள் உள்ளன. 5-நடன விழாக்கள், பொதுக் செம்மையாக ஒழுங்கு செய்து யாழ்வாணனின் " மந்திர சக்தி
ாகிய யாழ்வாணன் பல பரிசில் பரந்த சமூக சேவையாளராகிய ல்புகளைக் கொண்ட பண்பாளர்.
- வி. கந்தவனம்
தகம், சுன்னுகம்
ܒܰܗܓܓܐܝܠ¬ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠܐܝܠܐܝܠܐܝܠܐܝܠܐܝ