கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிலம்பு பிறந்தது

Page 1


Page 2


Page 3

சிலம்பு பிறந்தது
(இலக்கிய நாடகம்)
梁
எழுதியவர் : 65 (G O D 99 O 60)
தி
வெளியீடு: இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு. 1962

Page 4
. . . . . . . . . . . 鬣八*、*。 -
முதற் பதிப்பு : வைகாசி 1962
விலை ரூபா 1/25
எல்லா உரிமையும் இலங்கைக் கலைக் கழகத்திற்கே.
யாழ்ப்பாணம் 32, கண்டி வீதியில் உள்ள ஆசீர்வாதம் அச்சகத்திற் பதிப்பிக்கப் பெற்றது.
 
 

காணிக்கை
புதியனவாய் நாடகங்கள் பலவும் செய்து
பொலிவுடனே தமிழ்த் தாயை அணிசெய்வோர்க்கும், நிதியெனவே அறிஞருளம் உவகை கொள்ள நிலையான நாடகங்கள் நடிப்போ ருக்கும் எதிர்காலத் தமிழ்க் கலைகள் எழில்பெற் றேங்க
என்றைக்கும் முயல்கின்ற நல்லோருக்கும் கதியின்றி ஏங்குகின்ற கலைஞர் தம்மைக்
காப்போர்க்கும் காணிக்கை இந்த நூலே.

Page 5
Silambu Piranthathu
次” ری// e رومالكرك Zمحمد چی گر coas awarded/ ZA e سری مگرs/ .ميهلر മ 4ം ിrama ഠ).rp4 Corpe/z/for 796.O.
,CÆ ea74am4 راير كم) (eS-cy. ം 26ം പ്രീക്ഷa/ مورد محرک ീn/ ിrama) 76-72-60

ஆறறுபபடை
முத்தமிழு மேவிட்வே முறைதிறம்பா வகையதனில் இத்தரையா ருண்மகிழ இன்கவிதை யாத்தங்கு எத்தனையா மின்பமவை அத்தனையும் சேர்த்தமைத்த சித்தனது சிர்கேளாச் செவியென்ன செவியே! செந்தமிழன் சிர்கேளாச் செவியென்ன செவியே!
வேடுவரை ஆய்ச்சியரை விதந்துரைத்த சான்றேன் கோடுகின்ற செங்கோலின் குறையுரைத்த கோமான் ஆடுகின்ற கூத்தியினில் அறங்கண்ட நல்லோன் பீடுடையாற் காணுத கண்ணென்ன கண்ணே! பேதையராம் அன்னவரின் கண்ணென்ன கண்ணே !
எழிற்றமிழி ஞெழுகுசுவை சிலம்பதனில் வைத்த இளங்கோவை அரசு, திரு இழிவென்று தள்ளிக் கழிகாமப் பெரும்பரவை கடந்தபெரு முனியை நலத்தானை ஏத்தாத நாவென்ன நாவே ! ‘நல்லோனே !' என்னுத நாவென்ன’ நாவே ! என்றியாங்கு,
இளங்கோ புகழை எழிலொடுங் கூறி உளத்தினில் அவன்திறம் நிலைத்திடச் செய்தலே நோக்கமாய்க் கொண்டதிந் நாடகம், இதனின் போக்கினில் உண்மையும் கற்பனை தானும் பூவொடு மணமாய்ப் பொலிந்திடல் காணிர். 'சுற்றியே இருந்த துன்பமுந் துயரும் முற்றியே வருத்த முற்றத் துறந்தவன். செந்தமிழ் அன்பொடு செயற்படு கற்பனை உந்திட இளங்கோ உளத்தாற் றுறந்தான் அண்ணனுக் காக அரியணை துறந்ததாய் எண்ணிடல் தியாகத் தெல்லையைக் காட்டினும் அன்னது உள்ளத் தியற்கொவ் வாதது" என்றதாம் கருத்தை இயன்றிடு வரையில் வலியுறுத் திடலே நாடக நோக்கம்.
தனில், குணத்தினைப் பேணிக் குறையினை மறந்து
பயனுறல் பார்ப்போர் கடனே யாகும்.
க. சொக்கலிங்கம் சஹிரா மகா வித்தியாலயம் (சொக்கன்)
புத்தளம். 5-4-62

Page 6
நாடக உறுப்பினர்
இளங்கோ - சேரலாதனின் இரண்டாவது மகன். பின்பு இளங்கோவடிகள் ஆகின்றவர்.
செங்குட்டுவன் - இளங்கோவின் அண்ணன்.
சேரலாதன் - சேர நாட்டரசன்
நற்சோணே - அவன் மனைவி
பொன்முடி - இளங்கோவின் நண்பன்
கவுந்தி - இளங்கோவைக் காதலிப்பவள்
மங்கை --சோழநாட்டுவணிகர்குலப்பெண்
பூங்கொடி - அவளின் தோழி
பொன்னி - கவுந்தியின் தோழி
மாசாத்துவான் - மங்கையின் மாமன்
சாத்தன் - மாசாத்துவானின் மகன்
வெற்றிவேற் செழியன் - நெடுஞ்செழியனின் பி ன் பு பாண்டிய காட்டு மன்னனுக வங்
தவன்
மற்றும், நடனமாதர், வீரர், புலவர், அவையோர், அமைச்சர், கருவூலத்தலைவர், சித்தலைச் சாத்தன் முதலியோர்.

arWarry Awarrrrrrrrrrrrwa தோற்றுவாய்
کیY
s - ArELALGLEcGLLLGLcekLLGLJELGLELLG
(இலங்கைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும் இலங் கைக் கலைககழக தமிழ் நாடகக்குழுஉத் தலைவருமாகிய L j, Li Jr. of 55ut sori, if M A. (cey) Ph. D. (Lond அவர்கள் அளித்தது.)
தமிழில் நாவல்களும் சிறு கதைகளும் எவ்வளவு அதிகமாய் இருக்கின்றனவோ அவ்வளவு குறைவாக நாடக இலக்கியங்கள் இருக்கின்றன. இதற்குரிய கார ணங்கள் பல கதைகளை நீளமாய் நாவல்களாயோ குறுகி
வோ எழுதுவதைவிட நாட்
யனவாய்ச் சிறுகதைகளாக கங்களாய் எழுதுவது மிக வும் கடினமானது. ஒரு கதைக்கு நாடக உருவமும் நாடகத்தன்மையும் கொடுப் பதற்கு மிகுந்த கற்பனைத் திறனும் சுவை உண்ர்வும் வேண்டும். உணர்ச்சியையும் கதைப்போக்கையும் நாட்டக்" பாத்திரங்கள் மூலம் காட்டுவது கடினமானது. நாட்க அமைப்பு எளிதிற் செய்யக்கூடியதன்று. நாடகத்திற்கு உயிராயுள்ள காட்சி அமைவு படைப்பது ஒர் அரிப்' கலை, பாத்திரங்களின் குணவேறுபாடுகளை அவர்களுடைய உரையாடலிலும் நடிப்பிலும் காட்ட வேண்டும். ஒரே காட்சியில் பாத்திரங்களை வருவித்து அவர்களுடைய குணங் களையும் உணர்ச்சிகளையும் காட்டுவது பொறுப்பானது,
ஈழத்திலுள்ள நாடக ஆசிரியர்களை விரல்விட்டு @fဆံုး၏ ܫ விடலாம். பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஒரு வரே
y ...ኳዽ . தொடர்ச்சியாகச் சிறந்த நாடகங்களை எழுதி வந்திருக்கி o . . . . . .'; . . . பேசும் மொழியில், மக்களுடைய வாழ்க்
リ 碁
முர். மக்கள் கையை நாடகம் மூலம் அமைத்துக் காட்டிய பெருமை
அவரைச் சாரும். அவர் பல நாடகங்களை எழுதுவதற்

Page 7
4
குத் தூண்டுதலாக இருந்தது, அங் நாடகங்கள் அரங் கேற்றப் படுமென்ற நம்பிக்கையே. அவற்றைப் பல்கலைக் கழகமாணவரும் பிற நாடக மன்றத்தினரும் பலதடவை நடித்தனர். இதனலே அவர் எழுகிய நானுடகம், இரு நாடகம், சங்கிலி என்ற ஏழு நாடகங்கள் அச்சில் வெளி வந்தன. சுந்தரம் எங்கே? துரோகிகள் என்னும் இரு நாடகங்கள் இன்னும் அச்சேறவில்லை.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு இருந்த வாய்ப்பும் ஆற்றலும் பலருக்கு இருக்கவில்லை. இதனற் பலர் நாடகத் துறையில் இறங்க வில்லை. இக்குறையை நீக்குவதற்கு இரு வழிகள் உள. ஒன்று, தரமான சிறந்த நாடகங்களை இயற்றுவோர்க்குப் பரிசிலும் பாராட்டலும் வழங்குவது. நாடக எழுத்துப் போட்டிகளை ஏற்படுத்திப் பரிசில் அளிப்பதனுல் இவ்வழி கைகூடும். மற்றது, பரி சில் பெற்ற கதைகளை வெளியிடுவது. இது, தரமான சிறந்த நாடகங்கள் நூல் வடிவில் வெளிவரும் என்ற நம் பிக்கையை நாடக ஆசிரியருக்கு அளித்து, அவரை மேன் மேலும் அத்துறையில் ஈடுபடச் செய்கின்றது. அத்துடன் சிறந்த நாடகங்களை நடிக்க விரும்பும் நாடக மன்றங்க ளுக்கு நாடகத்தை நூல் வடிவில் அளித்து உதவுகின்றது.
இவ்விருவழி மூலம் நாடக எழுத்தாளருக்கு ஊக்க மளிப்பதே இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு வின் நோக்கங்களுள் ஒன்ருகும். ஈழத்தில் தமிழ் நாடகக் கலையை வளர்ப்பதற்கும், தொன்று தொட்டு வழக்கிலி ருந்து வரும் கூத்து முறைகளைப் பாதுகாப்பதற்கும் நிறுவப்பட்ட இக்காடகக்குழு, தமிழ் நாடக நூல்களை எழுதுவோருக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன் 1958, 1959, 1960, 1961 ஆம் ஆண்டுகளில் நாடக எழுத் துப் போட்டிகளை ஏற்படுத்தி, அதிலே திறமை காட்டி யவருக்குப் பரிசிலும் வழங்கியது. 1958, 1959ஆம் ஆண்டு

5
களில் நடத்திய போட்டிகளில் முதற் பரிசிலுக்குரிய தர மான நாடகங்கள் கிடைக்க வில்லை. 1960ஆம் ஆண்டிலேயே முதற் பரிசுக்குரிய தரமான நூல் போட்டிக்கு எழுதப்பட் டுப் பரிசில் பெற்றது. இதனை எழுதிய 'சொக்கனுக்கு ரூபா 500 முதற் பரிசாக வழங்கப்பட்டது. இவரே 1961ஆம் ஆண்டுப் போட்டியிலும் முதற் பரிசு பெற்ரு?ர். போட்டி யில் முதல் பரிசு பெற்ற நாடகத்கை வெளியிடுவது கலைக் கழகத் தமிழ்நாடகக் குழுவின் பணிகளுள் ஒன்று. அப் பணியின் விளைவாகவே இந்நூல் வெளிவருகின்றது.
சிலம்பு பிறந்தது என்னும் நாடகத்தை எழுதிய "சொக்கன்’ (சொக்கலிங்கம்) புத்தளத்திலுள்ள சகிரா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றுகின் முர். அவர் சில ஆண்டுகளுக்குமுன் இலங்கைப் பல்கலைக் கழகததிற் படித்து வித்துவான் பட்டம் பெற்றவர். பல் கலைக் கழகத்திலே தாம் பெற்ற இலக்கிய அறிவைக் கொண்டும் சரித்திர அறிவைக் கொண்டும் தமிழில் நாட கங்கள் எழுதி வருகின்ருர் பரிசில் பெற்ற, சிலம்பு பிறக் தது என்னும் நாடகமும் சிங்ககிரிக் காவலன் என்னும் நாடகமும் இத்தகையனவே. சிலம்பு பிறந்தது. சிலப்பதி காரக் கதையைத் தழுவியது. சிறந்த இலக்கிய நடையில் எழுதப்பட்ட இக்காடகம் குறிப்பிடற்குரிய சில அம்சங் களுடன் விளங்குகின்றது. கவுந்தி, இளங்கோவின் காதலி யாகக் காட்சியளிக்கின்ருள். இளங்கோ தமிழ்நாட்டின் உயர்வைக் கூறவே சிலப்பதிகாரத்தைப் பயன் படுத்தினர் என்பது பலர் கொள்கை, ஆணுல், தமிழ் நாட்டின் இழி வையும் எடுத்துரைக்கவே சிலப்பதிகாரததை இளங்கோ எழுதினரென்பதை இந்நூலாசிரியர் பல இடங்களிற் காட் டிச் செல்கின்ருர் இளங்கோ வஞ்சிக் காண்டத்தை எழு தவில்லை என்பதனையும் இந்நூல் வற்புறுத்துகின்றது.

Page 8
சேரலாதனின் அவைக்களதில் முதலாம் காட்சி நடைபெறுகின்றது. குட்டம் குடகுநாடுகளை வென்று சேரன் செங்குட்டுவன் இவ்வவைக் களத்திற்குத் திரும்பு கின்றன். இளங்கோ பற்றிய விசாரணை நடைபெறு கின்றது. போர்ப் பாசறையில் தமர் பிறர் என்ற வேறு பாடின்றி இளங்கோ மருத்துவம் செய்தல்பற்றிய செய்தி செங்குட்டுவன் மூலம் வெளியாகின்றது. இரண்டாவது காட்சி நடைபெறும் இடம் குடகு நாட்டரண்மனை, கவுந்தி (இளவரசி) கனவு காண்டலும் அதன்மூலம் இளங்கோ மீது தான் கொண்டகாதலை வளர்த்தலும் இங்கு கூறப்
படுகின்றன.
மூன்முவது காட்சியாகிய பாசறையில் இளங்கோ வீரர்க்கு அறுவுரை கூறிகின்ருர், தமிழரோடு தமிழரே போர் செய்யும் இழிவினை இடித்துரைக்கின்ருர், போர்ப் பறை கேளாத் தமிழகத்தைக்காண வீரர் அவாவுகின்ற னர். (கானல்வரிப் பாடல், நடனமூலம் அறிமுகப்படுத் தப் படுகின்றது) கவுந்தியும் தோழி பொன்னியும் வந்து காதலை வேண்டுகின்றனர். இளங்கோ தமது துறவுளப் பாங்கையும், காப்பியம் அமைக்கும் ஆர்வத்தையும் வெளி யிடுகின்ருர், கவுந்தி மன்னிப்புக் கோரிச் செல்கின்ருள். இளங்கோ கவுந்தியைத் தம் காப்பியப் பாத்திரமாக அமைத்துக் கழுவாய் தேடிட நினைக்கின்ருர்,
சோழ நாட்டிற்கு இளங்கோவும் நண்பன் பொன் முடியும் மாறுவேடத்திற் சென்று, வறுமையுற்ற மாசாத்து வான் வீட்டில் தங்குவதை நான்காம் காட்சி கூறுகின்றது.
அங்கு மங்கை என்ற பெண்ணாசியின் கற்புத் திறனையும்,
அவளை அலட்சியம் செய்து பரத்தையின் வழிச் செல்லும்
சாத்தனின் போக்கையும் அறிகின்றனர். தொடர்ந்து
சோழநாட்டின் 'காமநிலை கண்டு வருந்துகின்றனர்.
ܬܐܵܢ
ý

பொன்முடி, பரதவச் செம்மல்களின் மாறுவேடம் ஐந்தாம் காட்சியில் இடம் பெறுகின்றது. பொன்முடி யின் ஆற்றலாற் பாலையிடைச்சென்ற (உடன்போக்கு) காத லர் தம் எண்ணத்தில் நிறைவு பெறுகின்றனர். (கலித் தொகை 9ம் பாடல் இங்கு இடம்பெறுகின்றது.) இளங்கோ பொன்முடியின் வேண்டுகோட்கியைந்து இந்திரவிழா வரை சோணுட்டிலே தங்குகின்றனர். ஆருவது காட்சியில் இளங்கோவும் பொன்முடியும் ஊர் திரும்புகின்றனர். சேர லாதன் அவைக்களத்தில் நிமித்திகன் வாய்மொழி அமை கின்றது. இளங்கோ துறவியாகின்ற7ர்.
ஏழாவது காட்சி பத்து ஆண்டுகளுக்குப் பின்பு, கண்ணகிக்குக் கோயில் எடுத்தலைக் கூறுகின்றது. வெளி யிலே விழா ஆரவாரம் கேட்கின்றது. இளங்கோ கனக விசயரின் தலையிலே கல்லெடுத்த' செங்குட்டுவனின் போர் வெறி கண்டு வருந்திக் கண்ணகி சிலை முன்பு வஞ்சிக் காண்டத்தை எரிக்கின்ருரர். செய்தியைப் பின்பு அறிந்த செங்குட்டுவன் வேறு புலவர்களைக் கொண்டு வஞ்சிக் காண்டத்தைப் பாடுவிக்க எண்ணுகின்ற7ர். பின்னுரையில் இளங்கோவின் சிறப்புக் கூறப்படுகின்றது,
இதுவே சிலம்பு பிறந்ததின் கதை. இந்நாடகத்தை இலங்கைக் கலைக்கழகத் தமிழ்நாடகக் குழு வெளியீடாகக் குறைந்த விலையில் வெளியிடுகின்முேம், தரமான சிறங்க நாடகத்தை அரங்கேற்ற விரும்புவோர்க்கு இந்நூல் பெரி தும் பயன்படும். இன்று ஈழத்திலே எழுத்துலகில் ஏற்
பட்டுள்ள விழிப்பின் சாயலை இதிற் காணலாம். மட்டக்
களப்பு நாட்டுப்பாடல்கள் எமது முகல் வெளியீடாகும். சிலம்பு பிறந்தது இரண்டாவது வெளியீடு. இவ்வெளி யீடு நாடக ஆசிரிர்களுக்கு ஊக்கமளிப்பதோடு ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சிக்கும் பெருந்துணையாயிருக்கு மென்பது எமது நம்பிக்கை.

Page 9
இந்நூல் வெளியீட்டில்ஆர்வம் காட்டி எமக்குப் பல வகையிலும் உதவிய ஆசிரியர் திரு. க. பே. முத்தையா அவர்களுக்கும், டாக்டர் செ சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேம். மிகச் சுருங்கியகால எல்லையில் இதனைச் சிறந்த முறையில் அச் சிட்டுதவிய ஆசீர்வாதம் அச்சகத்தார்க்கு எமது உளம் நிறைந்த நன்றி.
சொக்கன் இன்னும் பல நாடகங்கள் எழுதி ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சிக்குப் பெருங் தொண் டாற்றுவாரென எதிர் பார்க்கின்ருேம். அதற்குப் பொது மக்களது ஆதரவு நிறைவாகக் கிடைக்கவேண்டும். நாடகம் ஏனைய கலைகளைவிட எளிதில் மக்கள் வாழ்க்கையைப் பண் படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. முத்தமிழ் வளர்த்த ஈழத் தில் நாடகம் நன்கு வளர்வதாக,
சு. வித்தியானந்தன் 24-4-1962
(
لم
 

சிலம்பு பிறந்தது
காட்சி 1
(வஞ்சி நகரத்து அரண்மனை ; திருவோலக்கம். சேரலா தன் அரியணையில் வீற்றிருக்கின்றன். அவன் பக்கலில் நற் சோணை அமர்ந்திருக்கின்ருள். சூழவர அமைச்சரும், புலவ ரும் மற்றையோரும் இருக்கின்றனர். அது காலை, ஓர் ஏவலன் நுழைகிருன்.) - ஏவ. வணக்கம் , மன்னவா! சேர. என்ன செய்தி ? சொல். எ வ. வாயிலில் ஒரு புலவர். சேர. வாயிலிலா ? புலவரா? அவரைக் காக்க வைத்தா
இங்கு வந்தாய்? ஏவ.: ஆம் வேங்தே ! சோ. பேதையே ஆற்றுவார் இன்றி அலக்கண் உற் ருே?ர்க்கும் போற்று தமிழ்க் காவலர்க்கும் சேரலா தன் வாயிலில் தடையா ? ஒடு. அவரைத் தக்கபடி அழைத்துவா, எவ. (தாழ்ந்து பணிந்து) பிழை பொறுக்க, மன்னவா !
(செல்கின்றன்)
சேர: தமிழின் தகைமையும், புலவர் பெருமையும் அறி
யாத புல்லன் ! அமை. இலக்கியம் என்ருல் "அது என்ன விலை?’ என்று கேட்க வல்ல ஏவலன் தானே? மாடு அறுத்திடும் புலையனும், மாண்புசேர் புலவனும் அவனுக்கு ஒருவர்தாம்:
(எல்லாரும் சிரிக்கின்றனர்.)

Page 10
10 சிலம்பு பிறந்தது
சேர: இந்த அறியாம்ை தகாதது, தவிர்த்தற்குரியது. சேரலாதனின் அவைக்களம் செந்தமிழின் அடைக் கலம்’ என்ற நிலை எய்தல் வேண்டும். சேரநாட்டைப் பாரீர்; அங்கு கல்லும் கவிபாடும், புல்லும் தமிழ் பேசும்’ என்று எங்காடும் எம்மை ஏத்தல் வேண் டும் "புலவரைப் போற்ருத புன்மை இங்கு இல்லை’ என்று மாற்ருரும் எம்மை மதிததல் வேண்டும். புல,தலை. நன்று, நன்று நின் குறிக்கோள். தமிழைப் போற் முத தன்மையில்ை நாடெங்கும் அதனைச் சிதைத் தும், சீர் கெடுத்தும் பேசுவோர் பெருகி விட்ட னர். புதியதொரு மொழிகூட இங்குத் தோன்று மோஎன அஞ்சுகிறேன். இந்நிலையில் தமிழையும், தமிழ் காக்கும் புலவரையும் காக்க எண்ணிய உன் *","செயல் மிக நன்று. அது வாழ்க ! (ஏவலன் புலவரை அழைத்து வருகிருன். அரசன் முதல் அனைவரும் மதிப்போடு எழுகின்றனர்) சேர. வருக, வருக, புலவரேறே ! வருக! செந்தமிழின்
சீர்பாடும் செங்கா உடையாரே வருக, புல: வாழ்க, மன்னவா! வளர்கநின் கொற்றம்! சேர. இந்த அணையில் அமர்க. (புலவர் அமரத், தொடர்ந்து யாவரும் அமர்கின்றனர்) சேர. புலவர் பெருமானே! இது என்ன கோலும்? அறிவு சுடர் விடும் விழிகள் ஆழ்ந்த துயரால் இருண்டு கிடக்கின்றன. தமிழ்ப் புலமையால் விம்மிடவேண் டிய தடந்தோள்கள், வெறும் எலும்பு மூடிய தோல்களாய்க் காட்சி தருகின்றன. தங்கள் உட லைக் கங்தையா மூடி நிற்றல் வேண்டும்? இதுதான் தமிழ் கற்றபேரு ? புலமை தந்த பயனு? புல. (பேசாதிருககிறர் கண்கள் பனிக்கின்றன.)
,
*
 

ν
காட்சி 1 11
சேர: பைந்தமிழ்ப் பாவலரே! தயக்கம் ஏன் ? குறையைக்
கூறுக. அதைப் போக்கிட ஆவன செய்வேன். புல. (பாடுகிருர்)
(பாடல் - ஆரவி இராகம்)
விண்ணினே இடறும் வியத்தகு விற்கொடி அண்ணுல் ! என்குறை அறிதியால், உரைப்பன் உற்றதாம் மிடிமை உடலோ டுளத்தை வற்றிடச் செய்தே வாட்டிநின்றதுகாண் கண்களும் கண்ணிர்க் கடல்களாய் மாறிப் புண்களாய்த் துன்பப் புகலிட மாயின செழுந்தமிழ்க் குலகையே அளித்திடும் பெரியோய் ! பழமரம் ஆகுவை பைந்தமிழ்ப் பறவைகட்(கு) எனவறிந் தின்றுயான் உன்றன அடைந்தேன் அணைத்தென ஆதரவு அளித்தலுன் கடனே.
புல.தலை. அடடா. எத்தகைய அழகிய பாடல்?
சேர. புலவர் பெருமானே! உம்மைக் கண்டதுமே உம் நிலை உணர்ந்து ஆவன செய்திருத்தல் வேண்டும்; தவறிவிட்டேன்; மன்னிக்க.
புல. தலை, ஒருவழியில் அத்தவறும் நலமே செய்தது
சேர. எப்படி ?
புல. த. ஒர் அழகிய பாடலுக்கு, உன் தவறுதான் காரண
மானது! அது நன்மைதானே?
(எல்லாரும் சிரிக்கின்றனர்)
சேர. உமது கூற்றிலும் உண்மை இருக்கிறது. சரி. கருவூ
லத் தலைவரே !
கரு. (எழுந்து வாய்புதைத்து நின்றபடி வேந்தே"

Page 11
12
சிலம்பு பிறந்தது
சேர:
கரு:
니0):
சேர:
LG):
சேர.
: .(6l {ا
(கருவூலத் தலைவரும், புலவரும் போகின்றர்கள். அந்த
இந்தப் புலவர் மெருந்தகையை முதலில் உணவுச் சாலைக்கு அழைத்துச் செல்லும். அறுசுவைஉணவும் உண்டு அவர் உடலும், உள்ளமும் ஆறுதல் பெறட் டும். பின்பு கருவூலச் சாலைக்கு அ  ைழ த் து ச் சென்று அவர் வேண்டிய மட்டும் பொன்னும் பொருளும் அள்ளி அள்ளிக் கொடும். என்ன ? தெரிந்ததா?
தங்கள் விருப்பப்படியே ஆகட்டும், மன்னவா !
வேந்தே !
லவர் பொமானே ! என்ன ? LH (Tb
நான் தளி ஆள். நான் உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம். அதற்கு மேல் எதுவும் வேண் டேன். அந்த இரண்டும் குறைவின்றி என்றும் கிடைக்க வழி செய்தால், அதுவே போதும். எனது கற்பனைப் பறவை விண் நோக்கி மகிழ்வோடு பறக் திடும். தமிழின் திறத்தை யெல்லாம் பாடிப் பாடிப் பரவசம் அடைவேன்.
ஆஹா! போதும் என்ற உமது உள்ளம் இருக்கின் றதே? அது கோடி பொன் பெறும். ஆகட்டும். கருவூலத் தலைவரே ! இவர்க்கு உணவளித்து, ஒவ் வோர் ஆண்டும் வேண்டிய நெல்லும், துணியும் நம் அரண்மனையிலேயே பெற வகைசெய்யும். புல வரே உணவு உண்டு வருக, உம்மோடு பேச ஆவ
லாய் இருக்கிறேன்.
நன்றி, மிக்க நன்றி! நான் வருகிறேன், மன்னவா
வேளையில் தூதுவன் ஒருவன் அவைக்குள் நுழைகிறன்.
r

ο
காட்சி 1 13
தூது. வாழ்க! வேங்தே வளர்க நும் வெற்றி!
இளவல் செங்குட்டுவர் குட்டநாட்டையும், குடகு நாட்டையும், பறம்பினையும் வென்று திறை பெற்று, மீள்கின்றர். அந்தச் செய்தியை உம்மிடம் அறிவிக்கவே என்னைமுதலில் அனுப்பினர். சேர. மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி ! இதோ, நீ கூறிய செய்
திக்கு என்பரிசு. (ஒரு மணியாரத்தை அவனுக்குப் பரிசாய் வழங்குகிருன்)
அவையோர் : இளவல் செங்குட்டுவர் வாழ்க!
ஏறுபோல் வலிய ஏந்தல் வாழ்க! விற்கொடி பொறித்த வேந்தர் வாழ்க! சேர. (அரசியை நோக்கி) நற்சோணை ! பார்த்தாயா உன் மகன் விரத்தை? "செருக்களம் காணுதவன், சிறு வன் ; போரில் என்னதான் செய்வானே?’ என் றெல்லாம் அஞ்சினயே? இப்பொழுது பார். அவ னைப் பெற்ற உனக்கும், பிறந்த கன்னுட்டிற்கும் பெருமை தேடித் தந்தனன். - அமை: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ? புல. தலை. அப்படிச் சொல்லும்
(வெளியே வெற்றிப் பறை முழங்குகிறது. தொடர்ந்து, 'விற்கொடி பொறித்த வேத்தன் வாழ்க! வெங்களம் பல கண்ட வீரன் வாழ்க 1 செங்களம் படத் தேய்த்த செங் குட்டுவன் வாழ்க!' என்ற பேரொலி எழுகின்றது)
எல்லா இளவரசர் வந்து விட்டார்! இளவரசர் வந்து
விட்டார். (ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்)
சேர: என்ன செய்வதென்றே எனக்குத் தெரிய வில்லை. செங்குட்டுவனைப் பெற்ற என் தோள்கள் பெரு

Page 12
14 சிலம்பு பிறந்தது
மையால் பூரிக்கின்றன. என் பேறே பேறு வீரத் திற்கு இம்மண்ணில் ஒருவன்தான் உள் ள |ா ன். அவனே செங்குட்டுவன், என் மகன் (செங்குட்டுவன் உள்ளே நுழைகிருன். பெருமிதத் தோற் றம், பீடு நடை, கொடிய பார்வை)
எல்: (எழுந்து) விற்கொடி பொறித்த வேந்தன் வாழ்க! வெங்களம் பல கண்ட வீரன் வாழ்க! செங்களம் படத்தேய்த்த செங்குட்டுவன்
வாழ்க !
செங்! வணக்கம், தங்தையே
(தந்தையை வணங்குகிருன்)
சேர: (அவனைத் தழுவியபடி) வெற்றி வீரனுய் விளங்கு
வாய், என்றும்!
(தாயை வணங்குகிருன்)
செங்: வாழ்த்துங்கள் தாயே! நற்: (அவன் தலையில் வலக்கரத்தை வைத்து) நல்லோ
னயும் வல்லோனுயும் விளங்குவாய் !
(திறைகள் நிறைந்த பெட்டிகளோடு எவலர் நுழைந்து அவற்றைச் சேரலாதன் முன்பு வைக்கின்றனர்)
சேர மகனே! என் கனவை நிறைவு செய்தாய். அடங் காத குட்டரையும், ஆண்மைநிறை குடகரையும் அடக்கினய் ; விழாத பறம்பரையும் வீழ்த்தினய், உன் வீரமே வீரம் ; இருக்கட்டும். இவை தாமா திறைப் பொருட்கள் ? எங்கே ? பாப்போம்.
செங்: தங்கள் விருப்பம் தந்தையே! இதோ,
(முதற் பெட்டியைத் திறக்கிருன்) குட்ட நாட்டான் குவித்த நன்மணிகள் இவை.
r
 

காட்சி 1 15
@g:
@ਲ:
(8.:
செங்.:
@Eff.
செங் :
சேர.
ஆஹா, குமரிப் பெண்ணின் குமிண் சிரிப்புப் போல வும் கவிதை வல்லோனின் தங்கக் கனவு போல வும் ஒளியை உமிழ்கின்றன (அள்ளிப் பார்க்கி முன்) நன்று! நன்று அதுமட்டு மல்ல. ஆரமும், அகிலும், சாந்தும், சாம்பு5தமும் கூட அளித்தான். மகிழ்ச்சி. குடகுநாட்டான் என்ன தந்தான்? இதோ (மற்றப் பெட்டியைத் திறக்கிருன்) முத் தும் மணியும், பவளமும் வைத்திழைத்த பட்டா டைகள் !
o *An గా 1y ஓ ! நன்று மிக நன்று இளமங்கையரின் தொடி
உடல்களைத் தழுவ ஏற்றவைதாம் ஐயமில்லை ! (வேறு பெட்டி ஒன்றைத் திறந்து) இதைப்பாருங் கள். தங்தையே! இவை பறப்பு நாட்டான் அளித்த பரிசுகள். பொன்னும், முத்தும், மணியும் புனைந்தி ழைத்த அணிகலன்கள். அடடா ! என் விழிகள் கூசுகின்றன. (எடுத்துப் பார்க்கிருன்) பாடும் புலவர்க்கும், ஆடும் கூத்தி யர்க்கும் அள்ளி அள்ளி வழங்கலாம். எங்கே? இவற்றை எங்கள் கருவூலச்சாலைக்கு எடுத்துச் செல்க.
(முன்பு உணவுச் சாலை சென்ற புலவர் திரும்புகின்
ருர் ஏவலர் திறைப் பெட்டிகளைச் சுமந்து செல்கின்றனர்.)
சேர.
புலவரே ! பார்த்தீரா? குட்டமும், குடமும், பறம் பும் என்முடிக்கு அடிபணிந்தன. இதோ செல்
கின்றனவே. இந்தத் திறைப் பொருட்கள்? இவை என் வெற்றியின் அறிகுறிகள். இவன்தான் என்
மகன், செங்குட்டுவன் தன் வாள்வலியால் மாற் முரைத் தாள் பணிய வைத்த வீரமறவன்.

Page 13
16 சிலம்பு பிறந்தது
புல: நீடு வாழ்க நிலைத்த புகழ் பெறுக மாற்ருரரின்
குருதியிலே குளித்தெழுக செங். (பணிவோடு) நன்றி!
(செங்குட்டுவன் அரசரின் பக்கலில் உள்ள அணையில் அமர் கிருன். புலவரும் ஒர் அணையில் அமர்கிருர்)
நற்: இருக்கட்டும். இளங்கோ எங்கே ? உன்னுடன்
தானே போர்க்களம் வந்தான் ? செங்: ஒ1 அவரா? அந்த மாபெரும் வீரர் குடகு நாட் டிலேயே பாடி அடித்து விட்டார், தாயே! உள் ளத்தால் துறந்தவர்க்கு மாளிகையும் ஒன்றுதான்! மண்குடிசையும் ஒன்றுதான்!
(ஏளனமாய்ச் சிரிக்கிருன்)
போதும், உன் அங்கதப் பேச்சை நிறுத்து. அவ
ந
fib:
னைக் காண என் உள்ளம் துடிக்கிறது. எங்கே அவன் ? சேர நானே கேட்க நினைத்தேன். நீ கேட்டுவிட்டாய். எல்லா இளங்கோ எங்கே? எங்கே? செங்: போதும் ஆரவாரம்! நிறுத்துங்கள். நடந்ததைச்
சொல்கிறேன்.
(அவையில் அமைதி)
இளங்கோ என்னேடு வந்தான ? வழி எல் லாம் ஒரே உபதேசங்தான். 'போர் வேண்டாம். அமைதி ; அன்பு! அது இது’ என்று புலம்பிய படியே வந்தான். போரிற் கூட அவன் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாகப் புண்பட் டோரைப் போர்க்களத்திலிருந்து தூக்கி வந்து மருநது கட்டினன.
ہایو

காட்சி 1
சேர.
அது தக்க செயல்தானே?
* செங்.: தக்க செயலா? தமர், பிறர் என்ற பேதம் இல்லாது எல்லார்க்கும் மருத்துவனனன், உங்கள் செல்வமகன்!
சேர.
நற்.
(GF).:
நற்.
( 8.:
செங்.:
சேர,:
மடையன் !
உங்கள் இரண்டு பேருக்குமே அவனைக் கேலி செய் யாமல் இருக்க முடியாது. அவன் ஒரு தெய்வம்
ஆமாம் அவனுக்குக் கோயில் எடுத்துக் கும்பிட வேண்டியதுதான்
(சிரிக்கிருர்கள்) (கோபத்தோடு) இளங்கோவின் சிறப்பினை உணரும் வன்மை இங்கு யாருக்கும் இல்லை. சீ இது என்ன? தாயும் பிள்ளையும் இப்படித் கான பேசிக் கொள்வது? (மெதுவாக) அதுவும் அவையிலா--உம் -போகட்டும். செங்குட்டுவ ! அவன் எங்கே என்பதைச் சொல். , வேறு எங்கே இருப்பான்? குடகு5ாட்டின் போர்ப் பாசறையிலே மருத்துவத் தொழில் பார்த்துக் கொண்டிருப்பான். (மெதுவாக) கோழை சரி. இன்று வெற்றித் திருநாள். வீரத்திற்கு விழா எடுக்கும் நாள். சிறப்புறக் கொண்டாடுக. ஆடலும் பாடலும் விண்ண திரட்டும். 6ாட்டை ணி செய்க ; நல்லாடை புனைக ; மகிழ்ச்சிக் கட
லில் கிளைத்திடுக! இந்த வெற்றித் திருநாள் போல் பல வெற்றித் திருநாள்கள் மீண்டும் மீணடும் வால் வேண்டும் என்று இறைவனை வழுத்துக:
விற்கொடி பொறித்த வேந்தன் வாழ்க ! வெங்களம் பல கண்ட விறலோன் வாழ்க ! செங்களம் படத்தேய்த்த செங்குட்டுவன் வாழ்க !
(திரை]
G - 2

Page 14
18 சிலம்பு பிறந்தது
காட்சி 2
(குடகு நாட்டு அரண்மனையின் அந்தப்புரம். நிலா மலர்ந்த இரவு. நிலா முற்றத்தின் அருகே உள்ள ஒரு பஞ் சணையில் குடகுநாட்டு இளவரசி கவுந்தி நித்திரை செய்கி ருள்: நித்திரையின் இடை இடையே, அவள் முகத்தில் புன் னகை பூக்கிறது. அவள் கனவு காண்கிருள்.
அந்தக் கனவிலே இளங்கோ வருகிருர். இருவரும் வெண் ணிலவை நோக்கியபடி பாடுகிருர்கள். கவுந்தி இளங்கோ வின் நெஞ்சிலே சாய்ந்திருக்கிருள்.
கனவுக் காட்சி அமைப்பு
”مر
படுக்கை அறை அமைப்பில் உள்ள முதலாவது திரையின் முன்புறத் தில் உள்ள ப்டுககையில் கவுந்தி (நடிகை) சாய்ந்திருக்க,
அது காலே சிறிது சிறிதாக அந்தத் திரை விலக இரண்டாவது திரை (மென்மையான துணியால் அமைந்த வெண்திரை விரும்பத்தக்கது.) காட்சி தரும். அந்தத் திரை நிலா முற்றத்தைச் சித்திரிக்கும்.
இந்தத் திரையின் பின்னல் ஒளி பாய்ச்சப்பட (இந்தத் திரையின் பின் னல் தூரத்திலே இருந்து திரைப்படக் கருவி (Film Projector) மூலம் ஒளி பாய்ச்சினல் தெளிவாக நிழல் விழும்) வெண்திரையின் பின்னணியிலே இளங் கோவின் நெஞ்சிலே சாய்ந்தபடி (படுக்கையில் சாய்ந்திருக்கும்) கவுந்தி போன்று ஒப்பனை செய்யப்பட்ட ஒரு நடிகை நின்று பாடுக.
பாடலும் கனவுக்காட்சி உரையாடலும் முடிவடைந்த தும், முதலாவது திரைவந்து மூடிக்கொள்ளும்.
(அந்தவேளையில் படுக்கையிலே படுத்திருக்கும் கவுந்தி எழுந்து தொடரலாம்.)
இள. (பாடுகிருர்)
பொழில்தரு நறுமலரே ! புதுமணம் விரிநிலவே ! பழுதறு திருமொழியே ! பணையிள வனமுலையே! முழுமதி புரைமுகமே 1 முரிபுரு வில்லிணையே! எழுதரு மின்னிடையே! எனயிடர் செய்தவையே

'K
காட்சி 9
& q.:
இள.
856) :
இள.
ö6ll•፡
நன்னித் திலத்தின் பூணணிந்து,
நலஞ்சார் பவழக் கலையுடுத்துச் செந்நெற் பழனக் கழனிதொறும் திரை உலாவுங் கடற் சேர்ப்ப ! புன்னைப் பொதும்பர் மகரத்தின்
கொடியோன் எய்த புதுப்புண்கள் என்னைக் காணு வகைமறைத்தால்
அன்னே காணின் என்செய்கோ ?
கவுந்தி ; என் அன்பே ! உனது தந்தையோடு போர் செய்து குடகுநாட்டை அடிமை செய்ய என் அண்ணனேடு வந்தேன். ஆனல் எல்லாம்
தலைகீழாகி விட்டன.
(தலையை நிமிர்த்திப் புன்முறுவல் பூத்தபடி) எப்
உன் புருவ விற்களும், விழிவேலும் என்னை உன் அடிமையாக்கின. மீளுதல் அறியா விருப்பினனுகி
விட்டேன்.
உண்மையாகத்தான் சொல்கிறீர்களா ?
உன் நூல்இடையும் வேல் விழியும் உண்மையா ணுல் என் காதலும் உண்மையானதுதான்.
அழியாதே இக்காதல் ? ' கவுந்தி! என் காதலின் அளவினை நீ அறிந்தால் இப்படிச் சொல்லமாட்டாய். அது நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது ; நீரினும் அள வற்றது !

Page 15
20 சிலம்பு பிறந்தது
கவு. அத்தான் ! தங்களை அடைய 16ான் செய்த பேறு
மிகப்பெரியது. தங்களை எனது உயிருக்குள் உயிராய்ப் புதைத்து, உங்கள் முகமலர்ச்சியில் என் அகம் மலர வாழவே விரும்புகிறேன் அத்தான் ! (நிலாமுற்றத் திரை மறைகிறது. கவுந்தி "அத்தான்' என்று முணுமுணுத்தபடி எழுகிருள்)
கவு. கண்ட தெல்லாம் கனவா? (பெருமூச்சு விட்டபடி படுக்கிருள். சிறிது பொழுதில் எழுந்திருக்கிருள்) என் கனவு நனவாகாதா? சேரநாட்டுக் கோமானை என் மணவாளனுய்ப் பெறவே முடியாதா ?
o
ஆ! அவரது அழகுதான் என்ன ? அந்தப் பெருமிதநடையை மறக்கவேமுடியாது. (சிரிக்கிருள். பின் தனக்குள் பாடுகிருள்)
“பொழில்தரு நறுமலரே !
புதுமணம் விரிநிலவே !
எழில்தரு மின்னிடையே !
எனஇடர் செய்தவையே’ [பாடலைக் கேட்டுக் கவுந்தியின் தோழி பொன்னி வருகிருள்)
பொன். என்ன? இளவரசியாரின் கற்பனை கொடிகட்டிப் 'பறக்கிறதே! இது நடுயாமம் ! நினைவிருக்கட்டும். 5Gol.: (பெருமூச்சோடு) நடுயாமம், பகல் இரவு மாலை என்ற பிரிவுகளெல்லாம் மறந்து விட்டன. எனக்கு பொ. அடே யப்பா ! இது என்ன அம்மா! புதுவகை
நோய் ? கவு. (சலிப்போடு) நோய்தான் ! அதைப்பற்றி உனக்கு
என்ன? நீ போய் நித்திரை செய்,

i
'K
காட்சி 2 21
QLiss.:
Ց6).։
டுபா :
ଔ. Q.:
GUT.:
க.ெ
பொ.
θ, 6η . .
பொ.
கவு.
கவுந்தியாரே! நீங்கள் நோயால் வருந்த நான் எப்படி நித்திரை செய்வேன்? நான் உங்கள் உயிர்த்தோழி அல்லவா? எனக்குக் கூடவா சொல் லக் கூடாது ? (கவுந்தியின் கூந்தலை ஆதரவோடு வுேகிருள். கவுந்தி பொன்னியின் மார்பிலே தலையைப் புதைத்துக் கொண்டு விம்முகிருள்)
பொன்னி I பொன்னி !!
அம்மா! அழுகிறீர்களா? என்ன இது? போரில் தந்தையார் தோற்றுவிட்டார், என்ரு இத்தனையும் ? (குறும்பாகச் சிரிக்கிமுள்)
அதற்கில்லை, பொன்னி!
பின்னே என்னதான் காரணம்? ஏன் அழுகிறீர் கள் ?
(5ாணத்தோடு முகத்தைக் கைகளுக்குள் புதைக் கிமுள்) சும்மா போடி ! ஓகோ ! உங்கள் வருத்தம் என்ன வென்று தெரிந்து விட்டது? (குறு நகையுடன்) தெரிந்து விட்டதா? ஆமாம் ! உங்களுக்குப் பித்துப் பிடித்து விட்டது. ஏதோ தெய்வக் குறைதான். இதோ போய்க் கட்டு விச்சியை அழைத்து வருகிறேன்.
(போக முயல்கிருள்)
பொன்னி I (காதைத் திருகுகிமுள்) உனக்குத்
தான் பேய் பிடித்திருக்கிறது. அதுதான் இந்த ஆட்டம் ஆடுகிருய் !

Page 16
22
சிலம்பு பிறந்தது
(ou T.:
கவு.
பொ :
3, 6).
(ou T.:
& Qy.: பொ.:
856).:
பொ.:
கவு.
Gluss.:
பின்னே என்ன அம்மா ? ஒருகால் சிரிக்கிறீர்கள் மறுகால் அழுகிறீர்கள். கேட்டால் ‘பிச்சி' போல விழிக்கி dர்கள்! என்னவென்றுதான் சொல்லுங்கள். பொன்னி ! உன்னையும் என்னையும் கேளாது எனது நெஞ்சம் ஒருவர் பின் போய்விட்டது. ஒ1 பருவத்தின் திருவிளையாடலா? நல்லது ! உங் கள் உள்ளங் கவர்ந்த அந்தச் செவ்வேள் யாரோ? எப்படிச் சொல்வேன் பொன்னி I (காணிக் கண் புதைக்கிமுள்)
கவுந்தியாரே! இப்படிக் கொஞ்சம் திரும்புங்கள் தாய்க்கு ஒளித்த குலா ? சொல்லுங்கள், குடகு நாட்டிளவரசியின் உள்ளத்தில் கோயில் கொண்ட வர் யாரோ ? எந்த ஊரோ? என்ன பேரோ?
கேட்டால் வெகுளி கொள்வாய் நீ! நான் ஏன் வெகுளி கொள்கிறேன் ? நெருப்புக் கொள்ளியைக் கூட விழுங்கிவிட்டுச் சிரிக்கக் கூடிய வளாயிற்றே நான் ? யார் எங்களை வென்று அடிமை யாக்கினர்களோ' அவர்களின் பாசறையிலுள்ள ஒருவர்தாம் அவர்
என்ன? எங்கள் பகைவருள் ஒருவரா? இளவரசி!
இது என்ன பேதைமை? தங்கள் உடலில் ஒடுவது
குருதியா? தண்ணீரா? நான் என்ன செய்வேன், பொன்னி இளங்கோ வைக் கண்டதுமே என் கருத்தை இழந்து விட் டேன். ' .. '|' ) ' .
எங்கே? அவர் பெய ை2 இன்னுெரு தடவை சொல்லுங்கள். - - - -
1.
ځيپلو

கவு.
பொ.:
கவு.
பொ.:
56)].։
பொ.
856).
(6)us!.:
இளங்கோ I (காணச் செம்மை பூக்கிறது) போருக்கே வராது பாசறையிலே பதுங்கி இருந் தாரே? போரிலே காயம்பட்டவர்களைத் தூக்கிச் சென்று மருந்திட்டாரே, அவரா? ஆம் அவரே தான் ! என்ன அம்மா! அந்தக் கோழையையா..? (வெகுளியோடு) அவரைக் குறை சொன்னல் என் ல்ை பொறுக்க முடியாது ! அம்மாடியோ! அதற்கிடையில் அவர் ஆகி விட் டாரோ? இப்பொழுது நாங்கள் தாம் பிறராகி
விட்டோம்! இல்லையா? நல்ல காதல், அம்மா !
பொன்னி 1 அன்று பூம்பொழிலில் அவரைக் கண் டேன். நெஞ்சைப் பறிகொடுத்தேன். அவர் அடி வைத்து நடக்கின்ற ஒவ்வொரு போதிலும், அந்த அடிகளைத் தாங்கும் பேறு எனக்குக் கிட்டாதா
னேன். அவர் புன்னகை
என்று எண்ணி ஏங்கி செய்தபொழுது அதற்கு ஈடாக எனது அனைத் தையுமே காணிக்கையாக்க என் நெஞ்சம் விரைக் தது. ஏழேழ் பிறப்புக்களிலும் எனக்கும் அவருக் கும் தொடர்பு இருப்பது போன்ற உணர்வு ஏற் பட்டது. அவர் வாய் திறந்து பேசியபொழுது என் ஊன் உயிர் அனைத்துமே உருகின! அவரை எப்படி மறப்பது ?
கவுந்தியாரே! நெருப்பு அழகானது என்று அதை மடியிலே கடடிக் கொள்வதா? அது பேதைமை யல்லவா? எவ்வளவுதான் உயர்ந்தவர் என்ருலும் அவர் எமக்குப் பகைவர் ! நினைவிற் கொள்ளுங்கள்.

Page 17
24
சிலம்பு பிறந்தது
கவு :
பொ.:
8 6Ꮒ] .:
பொ.
Ꮽ5Ꮫl ! .:
இளங்கோ நெருப்பு என்ருல் அந்த நெருப்பிற்கே என்னை இரையாக்க விரும்புகிறேன். அதைவிட எனக்கு இன்பம் வேறு இல்லை !
ஐயையோ! நோய் நன்முய் முற்றிவிட்டது. இதற்கு
என்ன செய்வது ?
பொன்னி ! இந்த நோய் தீர்க்கும் மருத்துவம்
உனக்குத்தான் தெரியும். உன்னைக் கெஞ்சிக்
கேட்கிறேன். அவரைச் சந்திக்க ஒரு வழி சொல்
லமாட்டாயா ? உன் காலில் விழுந்து.
(மறித்து) இது என்ன, இளவரசியாரே! (கண் ணிர்தயங்க) வேண்டாம்; உங்களுக்கு உதவாத இந்த உயிர் இருந்தென்ன? சரி! நாளையே இரு வரும் மாறு வேடத்தில் இளங்கோவின் பாசறைக் குப் போவோம். இப்பொழுது அமைதியாய்த் தூங்குங்கள,
(போகிருள்)
தூங்குவதா? இனித்துக்கம் எது?
(பெருமூச்சு விடுகிருள்.)
(பின்னணியில் 'பொழில் தரு நறுமலரே!” என்ற
பாடலை இசைக்கருவிகள் இசைக்கின்றன.)
(திரை)
é.
Ꭸ
 

கட்டு 3 ே
காட்சி 3 ெ
(குடக நாட்டின் புறநகரை அடுத்த ஒரு பாசறை. அதன் உள்ளே ஒரு பக்கத்தில் வேலும் வாளும் குவிந்து கிடக்கின்றன. மறு பக்கத்தில் ஏட்டுக் கட்டுக்கள் கிடக் கின்றன. சில அணைகளிலே காயங்களுக்கு மருந்து கட்டிய வீரர்கள் அமர்ந்திருக்கிருர்கள். நடுவிலே உள்ள அணை யிலே இளங்கோ இருக்கிருர்.)
இளங்.: (எழுந்து) வீரர்களே !
உங்கள் புண்கள் ஒரளவு ஆறிவிட்டன, ທີ່ຫໍ້ கள் வரும் வழிமேல் விழிவைத்துப் பெற்றேரும், உற்ருேரும் பெண்டிரும் பிள்ளைகளும் காத்திருப்
L IIT.
போரினல் உங்கள் உடல்களுக்குத்தான் புண் ஏற்படுகிறது. ஆனல் உங்களை நம்பி வாழ்பவர்க்கோ உள்ளங்களில் புண் ஏற்படுகிறது. அதுவே பெரும் புண் ; மாற்றுதல் அரிதான புண்! அன்பர்களே ! -
மொழியினல், பண்பால் ஒன்றுபட்ட நாம் ஒருவரோடு ஒருவர் போரிடல் வெறுக்கத்தக்க இகு செயலாகும். சோணுடும், பாண்டிங்ாடும், சேர நாடும் சிறுச்சிறு தமிழ்நாடுகளும் தமக்குள்ளே
போர் செய்தலை நினைக்கவே உள்ளம் மறுகுகிறது. இதனுல் எமது ஒற்றுமை குலைகிறது. பொருமை யும், போட்டியும், பூசலுந்தாம் எஞ்சுகின்றன. இதனை எனது தந்தைக்கும் தமையனுக்கும் எடுத் துரைத்தேன். அவர்கள் கேடகவில்லை, பயனைப் போர்க்களத்திலே கண்டீர்கள். குருதி ஆருய் ஓடி யது ; தலையற்ற முண்டங்கள் தரைமிசை விழிக் தன ; பிணங்கள் மலை எனக் குவிந்தன! சி - 3

Page 18
சிலம்பு பிறந்தது
இவ்வாறு இறக்தொழிங் தோர் யார்? வங்கரா? கலிங்கரா ? கடாரத்தோரா? அல்லர், நம்மவர் தமிழர் ! எஞ்சா மண்ணசை' யால்எமது உடன் பிறந்ே தாரையே கொன்று குவித்திட்டோம் நிலை யற்ற புகழ் என்ற கானல் நீரை கம்பி. நிலையான, அன்பையும் அருளையும், துறந்திட்டோம்! (சிறிதுபோது ஒன்றும்பேசாது நிற்கிருர், கண்கள் கலங்கு கின்றன.]
வேண்டாம் இந்த இழிசெயல் வேண்டாம் இந்தக் கொலைவெறி. வேண்டாம் இந்த வெம்போர்!
வீரன் : இளங்கோ தங்கள் மொழிகள் எமது உள்ளங்களை உருக்குகின்றன. வெறும் உணர்ச்சிக்கு ஆட்பட்டு. பரந்த தமிழகத்தின் ஒற்றுமையையே நாம் ' குலைக்கிமுேம் ; உண்மைதான் !
எதிர்காலத்தில் எம்மை எதிர்த்து வருகின்ற மாற் முரோடு அன்றி, நம்மவருடன் சண்டை செய் வதில்லை என்று விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம்! வீர 3.: எனது வாழ்நாளின் பெரும்பகுதி போரிலேயே கழிந்து விட்டது. ஆண்டு தவறினுலும் தவறும் ; எங்கள் நாட்டில் போர்மட்டும் தவறுவதில்லையே! இளங். இந்த இழிநிலையைப் போக்கிட எம்மால் இயன்றது செய்யத்தான் வேண்டும். நீங்கள் இளைஞர். செல லும் இடமெல்லாம் அன்பு என்ற ஒளி விளக்கினை ஏந்திச் செல்லுங்கள். போர் இருள் அந்த ஒளி கண்டு விலகி ஓடும். வெற்றி எமதே ! வீர 4. உண்மை! உண்மை ! தாங்கள் சொல் வ து
அனைத்தும் உண்மை!
4.
ή

காட்சி 3 ፵፯
வீர 1.
இளங்.
இளங்கோ ! தாயினும் சாலப் பரிந்து எங்களின் உடற்புண்களை ஆற்றினீர்கள்; தங்களுக்கு நன்றி கூற எங்களிடம் சொற்களே இல்லை. இனி காம் சென்றுவர விடைதாருங்கள். இந்த உடல்களில் உயிர் உள்ள வரை தங்களை மறவோம். உங்கள் ஆவலின் அளவினை நன்கறிவேன், பெற் றதாயையும் பிறந்த பொன்னுட்டினையும், வாளரிக் கண் மடங்தையரையும் மழலைச் சிறுவரையும் காண நீங்கள் துடிக்கின்றீர்கள். ஆயினும் ஒரு வேண் டுகோள்.
; என்ன அது ? ! உங்கள் விழிகளுக்கு விருந்தாக ஒரு கூத்தினே
ஒழுங்கு செய்திருக்கிறேன்; அதைக் கண்டு செல்
அலுங்கள்.
: கரும்பு தின்னக் கையூட்டா?
(எல்லாரும் அமர்கிருர்கள்]
ரங்.: (எழுந்து) இந்தக்கூத்து, சேரநாட்டவராகிய எமக்கு
முற்றிலும் புதுமையானது. இதனை ஆடப்போகின் றவர் பாண்டி காட்டவர், ஆய்ச்சியர் குரவை என் பது இதன் பெயர்.
மாயவன் யமுனை ஆற்றங்கரையிலே ஆய்ச்சிய ரோடு ஆடிய திருவிளையாடல்களின் அடிப்படை யிலே இது எழுந்தது.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை ஏழிசைகளின் பெயர்களா கும். இக்கூத்திலே குரலின் வடிவமாக மாயவ னைக் கொள்வர். பக்கலிலே நப்பின்னை முத லாக இரு பெண்கள் துத்தமும், தாரமுமாக வடி

Page 19
笼俗 சிலம்பு பிறந்தது
வம் பெறுவர். பலராமனுக இளியை நிறுத்தி இரு \ல்ஃ (பெண்களை, உழையும், விளரியுமாக வடிவம் தருவர்.
ைேகக்கிளை எஞ்சுகிறதல்லவா? அந்தக் கைக்கிளை 集 'யாய் வடிவம் கொள்ளும் பெண் நப்பின்னேயின் இடது பக்கத்திலே நிற்பாள். இவர்கள் கைகோத்து (ty (...) வட்டவடிவாய் நின்று ஆடுங்கூத்தே ஆய்ச்சியர் ' குரவை, இசையும், கூத்தும் இழைந்திடும் ஒரு
'பேரின்ப நிலைக்கு இந்தக் கூதது ஒர் எடுத்துக்
காட்டு.
இப்பொழுது கூத்துத் தொடங்குகிறது. (இளங்கோ கையைத் தட்ட ஏழு பெண்கள் அரங்கினுள் , п - . . . ,, - שני, יו"י), "י,\ ליי. : \ நுழ்ைகின்றனர். ஒரு பெண்ணிற்கு நீல 6 எண்ண்னயும், வேருெரு பெண்ணிற்குப் பால் வண்ணனயும் (பலராமன்) fஒப்பனை செய்யப்பட்டுள்ளது நீல வண்ணனின் பக்கலிலே மூன்று பெண்களும், பால் வண்ணனின் பக்கலிலே இரண்டு பெண்களும் நின்று ஆடத் தொடங்குகின்றனர் )
iyo: \ \, t , " ། ། ། '' ( , , , , . . . 'கன்று குணில்ாக் க்னியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் (' கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி !
பாடல்
பாம்பு கயிறக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் //تص ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி! கொல்லேயஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி !
 
 
 
 

காட்சி 3 29
இளங். என் பரிசு, இதோ.
s வேறு மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியித் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே ! திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே !
(ਪੁ5ਪi) பெரியவனே மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியிடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணுத கண்ணென்ன கண்ணே ! கண்ணிமைத்துக் காணுர்தம் கண்ணென்ன கண்ணே !
(மூவுலகும்) மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனுர் வஞ்சங் கடந்தான நூற்றுவர்ப்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தான ஏத்தாத நாவென்ன நாவே ! நாராய ணுவென்னு நாவென்ன நாவே !
(மூவுலகும்) (கூத்து முடிகிறது. வீரர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்
်”
றனர்) வீர. அடடா! தமிழ் சிறந்ததுதான், பாண்டிநாடு
என்று எண்ணியிருந்தேன். கலைசிறந்ததும் அங் குத்தான் என்று இன்றுதான் தெரிகிறது. எனது வீரர்கள் சார்பிலே இந்த முத்தாரத்தைப் பரி சளிக்க விரும்புகின்றேன். (கூத்துக்குழுவின் தலைவி அதனைப் பெறுகிருள்)
(பொற்கிழி அளிக்கிருர்)

Page 20
30 சிலம்பு பிறந்தது
கூ. தலை: (பணிவோடு வாங்கியபடி) நன்றி! நாம் போய்
வருகிருேம். இளங். நன்று. சென்று வருக.
(கூத்தியர் போகிருர்கள்]
வீர 1. இளங்கோ ! எங்களுக்கும் விடை தாருங்கள். இள. (வணங்கியபடி) சென்று வாருங்கள். எமது உரை யாடலை மறந்துவிடாது ஆவன செய்யுங்கள். வணக்
கம் !
வீர. அந்த உரையாடல் எமது 5ெஞ்சிலே பசுமை யாய் நின்று ஊக்கமும், உணர்வும் அளித்த படியே இருக்கும். அமைதி நிறைந்ததும் போர்ப் பறையே கேளாததுமான புதியதொரு தமி ழகத்தை அமைத்தலே எங்கள் குறிக்கோள். வருகிருேம். வணக்கம் ! (போகிறர்கள். இளங்கோ அவர்கள் செல்லும் வழியை நோக்கி நிற்கிறர். பின் திரும்பி வந்து ஓர் ஏட்டுக்கட்டை எடுத்துப் பிரித்தபடி அணையில் அமர்கிருர், அதுகாலை ஆண் வேடம் பூண்ட கவுந்தியும், பொன்னியும் நுழைகின்றனர்.)
பொன்.வணக்கம் !
இளங்.: (திடுக்குற்று நிமிர்ந்து) வணக்கம் ! நீங்கள் யார்? (இருவரும் தங்கள் தலைப்பாகையையும், பொய் மீசையையும் எடுக்கின்றனர்.) இள. ஆ.குடகு நாட்டு இளவரசியா ? வாருங்கள் கவு : 'வாருங்கள்’ என்று அழையாதீர்கள். 'வா'
என்று சொன்னுலே போதும். இள. பெண்ணிற்குப் பெருமைதரும் குடியிலே பிறந்த
வன் நான்
سمہ /

காட்சி 3 3.
Ꭶ5Ꮫ] .:
இள.
கவு.
பொ,
இள. ଜୋu୩.:
856).:
இள,:
பொ.:
(சிரித்தபடி) பெண்ணிற்குப் பெருமை தரத்தான் வேண்டும். ஆனல் அடிமைக்கு அது வேண்டிய தில்லை!
(குறுநகை செய்து) நீங்கள் அடிமையா?
வென்றவர்க்குத் தோற்றவர் அடிமைதாமே? நீங் கள் வென்றவர்கள் ! நாங்கள் தோற்றவர்கள் ! குருதியாற்றிலே குளித்தெழுந்து பெறும் வெற்றி யிலே எனக்கு நம்பிக்கை இல்லை. கொலையால் பெறுகின்ற மணிமுடியை நான் மதிப்பதும் இல்லை" 'அழக்கொண்ட எல்லாம் அழப்போம்' என்று நம்பு
பவன் கான் !
வெங்களத்திலே பெறுகின்ற வெற்றி தோல்வி
பற்றி இளவரசியார் சொல்லவில்லை ! கவுந்தியாரே!
அப்படித்தானே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? வேங்தே ? எங்கள் இளவரசியைக் காதற் களத் திலே நீங்கள் வென்று விட்டீர்கள். இனி அவர் உங்கள் அடிமை.
(கவுந்தி நாணித் தலைகுனிகிருள்.
(பதற்றத்தோடு) இளவரசி 1 என்ன இது? இவள் சொல்வது உண்மையா?
(தலைகுனிந்து புன்னகை செய்கிருள்) இளவரசி 1 என்னைத் தவருக விளங்கிக் கொண் டீர்கள், அதற்காக வருந்துகிறேன்.
என்ன ?
(கவுந்தி மலைக்கிருள்)

Page 21
சிலம்பு பிறந்தது
இள.: ஆம், இளவரசி! ஆம், அன்று எனது நண்பன்
பொன்முடியோடு நகரப் பூம் பொழிலுக்கு வந் தேன். அங்கு உங்களைக் கண்டேன் ; புன்னகை புரிந்தேன் , விளையாட்டாகப் பேசினேன். அவை எல்லாம் வினையாகி விட்டன.
[கவுந்தி பேசாது வருந்தி நிற்கிறாள்) பொ.: இளங்கோவே! எமது இளவரசியை மேலும்
சோதியா தீர்கள். அவரால் தாங்க முடியாது. தங் களின் இதழ்க்கடையிலே மலரும் ஒரு முறுவலுக் காகவே அவர் " உயிர் வாழ்கிறார். அவர் கனவுக ளைச் சிதைத்திடாதீர்கள். பெண்பாவம் பொல்லா
தது!
இள.: தாயே ! இ...து........எ...ன்.ன ? உலகத்தின்
துன்ப துயரங்களைக் கடந்து துறவியாகிடும் நாளை எதிர்நோக்குபவன் நான்! அரண்மனை வாழ்வும், இன்பங்களும் எனக்கு எட்டிக்காய் ! இந்த உடல் பஞ்சணையிலே கிடந்தாலும் உள்ளமோ குடிசை யிலே, கிழிந்த பாயிடையே தான் கிடக்கிறது. அறுசுவை உணவை உண்டாலும், அவை என் வரையில் கூழின் இனிமையை விஞ்சக்கூடாதவை
யாகும். க வு:
பொன்னி! அந்தக் கூழிலும், கிழிந்த பாயிலும் எனக்கும் ஒரு பங்கு தரச்சொல். அவை .
போதும் எனக்கு. . இள.: ஐயோ ! அன்பு என்ற தளையால் என்னைக் கட்
டாதீர்கள்.- பொ.:
(ஏளனச் சிரிப்போடு) வாழ்வைக் கண்டு அஞ்சு
கிறீர்கள். இள.: நான் கோழை அல்லன்.

காட்சி 3 83.
பொ. அப்படியானுல் துறவியாக ஏன் விரும்புகிறீர்கள் ?
அன்பைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் ? காத ஐயா !
லைக் கேட்டு ஏன் காதம் ஒடுகிறீர்கள் ? இளங்கோவே 1 போருக்குப் படை நடத்தி வந்து பாசறையில் பதுங்கி இருந்தவரே ! அச் சம் உங்கள் உடன் பிறப்போ ? கவு. பொன்னி I என்ன இது ? பொ. நீங்கள் சும்மாய் இருங்கள். இளங்கோ ; தென்றலைப் புயல் என்று தெளிந்து அஞ்சி நடுங்குகிறீர்கள், நீங்கள் ! ஆனல் ஒன்றைமட்டும் நினைவிற் கொள் ளுங்கள். எங்கள் இளவரசியாரின் நெஞ்சிலே உங் கள் ஒருவருக்குத்தான் இடம் உண்டு, இனி அவர் வாழ்விலே வேறு எவரும் புகுதற்கு வழி இல்லை! அவர் வாழ்வைக் கண்ணீர்க் கடல் ஆக்கி விட்டீர்கள். நீங்கள் தன்னலமே வடிவானவர் ; கோழை ! - இள. பொன்னி! என்னைத் தவமுகப் புரிந்து கொண்டாய். * இளவரசி 1. இதை அறிந்து கொள்ளுங்கள். சாவையோ, போரையோ கண்டு அஞ்சி நடுங்கு பவன் நான் அல்லன் ! எனக்கும் வீரம் உண்டு. ஆனல் அந்த வீரம் கொலைவெறி ஆவதையே நான் வேறுத்தேன்; துறந்தேன். பொ. வெறும் பேச்சு 1 இள. வெறும் பேச்சா?
(பக்கத்திலே இருந்த ஒரு வலிய வேலை எடுத்து வளைக் கிருர், அது இரண்டு துண்டாகிறது. பெண்கள் மலைக்கின்ற னர், எரிகின்ற விளக்கிலே தமது கையைப் பிடிக்கிறர். கை எரிந்து தீய்கிறது. அவர் புன்னகையோடு நிற்கிருர், பெண் கள் * வென்று அலறுகின்றனர்.

Page 22
34
சிலம்பு பிறந்தது
கவு:
56).
அஞ்ச வேண்டாம். போர்செய்யத் தோள் வலியும், துன்பத்தைத்தாங்க உளவலியும் எனக்கு உள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் அது போதும்!
இளவரசி! இதோ பாருங்கள். (ஒரு பக்கத் திலே குவிந்துகிடக்கும் ஏட்டுச் சுவடிகளைக் காட் டுகிமுர்) எனது உள்ளமும், உயிரும் இவற்றிற்கு என்ருே? அடிமையாகி விட்டன. செந்தமிழின் சீர் பாடும் அடியார்க்கும் அடியேன் நான்,
தமிழ்மக்களின் வாழ்வினைக் கண்டு. கேட்டு,
உண்டு, உயிர்த்து அதனை எதிர்காலச் சந்ததிக்கு
எடுத்துரைப்பதே என் குறிக்கோள். மன்னர் திறன்பாடலே புலவர் கடன் என்ற கொள்கையை மாற்றி அமைத்து, ம க் களை த் தலைவராய்க் கொண்ட காப்பியம் சமைத்தலே என் கனவு ; தமிழரின் நிறையையும், குறையையும் தரணிக்கு எடுத் துரைத்தலே என் கடன் ! காதல் செய்ய எனக்குப் பொழுதும் இல்லை! அதற்கு நெல் ச மும் இல்லை ! (இளங்கோவின் காலில் வீழ்ந்து) என்னை மன் னித்துக் கொள்ளுங்கள். தங்களின் உயர்ந்த குறிக் கோளுக்குக் குறுக்கே என்றுமே வரமாட்டேன். எழுந்திருங்கள். தங்களின் நற்பண்பிற்கு என் உள்ளம் பணிந்து விட்டது. இனி எங்காவது தங் களைக் காண நேர்ந்தால், என் உடன் பிறந்தவளைக் காண்பது போல எண்ணி அகம் குழைவேன். (எழுந்தபடி) வேண்டாம்! தங்கள் குறிக்கோள் தூய்மையானது. பாசம் என்ற மாசு அதில் படிங் திடக் கூடாது. இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து என்னையும் மறந்து விடுங்கள்.

*
காட்சி 3 35
அருகக் கோட்டத்தின் துறவுப் பள்ளியிலே ஒரு துறவியாக இருந்து கொண்டு தங்களைக் காணக் கூடா விட்டாலும் தங்கள் புகழினைக் கேட்டாவது பெருமையும், மகிழ்ச்சியும் அடை வேன். நான் வருகிறேன்.
இள. (பெருமூச்சோடு) போய் வாருங்கள்
[போகிருர்கள்) இளம் உள்ளம் ஒன்றின் ஆசைக் கனவுக்ள் அனைத்தையும் சிதைத்து விட்டேன் கவுந்தி ! என்னை மன்னித்துக் கொள். உன்னை என் காப்பி யத்திலே நிலைபெற்று வாழவைக்கிறேன். அதுவே நான் செய்யத்தகும் கழுவாய் ! , 34,
Iஅது காலை'
“சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம்ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய' கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள்”
என்!) கலித்தொகைப் பாடலை முணுமுணுத்த வண்ணம் பொன்(மடி நுழைகிருன்.) இள. என்னடா! பொன்முடி! இதுவரை எங்கே சென்
றிருந்தாய்? பொ. இங்கேதான் வீரர்கள் எந்த நேரமும் 'ஆ ! ear'
என்று கதறிக் கொண்டிருக்கிரு?ர்களே ? (சுற்றுமுற்றும் பார்க்கிருரன். வீரர்களைக் காண வில்லை.) அப்பாடா! போய்விட்டார்களா ? (அவர் கள் சென்ற பக்கத்தை நோக்கிக் கும்பிட்டபடி) நன்றி !

Page 23
: 36
சிலம்பு பிறந்தது
. . . . .
பொ."
பொ.
பொ.:
இள :
பொ.:
: ஏன் ?
: 'எங்கே போனுய்?’ என்று கேட்டால் என்னடா
உளறுகிருய்?
அட இன்றைக்குத்தான் சேரநாடு திரும்புகி ருேமே 1 அங்கே ஒரே குளிராயிற்றே ! இங்கி ருந்து கொஞ்சம் சூட்டை உடலிலே ஏற்றிக் கொண்டு போகலாமே!’ என்று நினைத்து இப் படி ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வருகிறேன். சரி I அதைக் கவனமாகக் காப்பாற்றி வைத்திரு. (சிரித்தபடி) ஆனல் அந்தச் குடுதான் பயன்படப்
போவதில்லை.
9
நாம் சோழநாடு போகப் போகிருேம். எனது பாட்டனர் சோழப் பேரரசரைக் காண ஆவலாய் இருக்கிறது. அடடா! மகிழ்ச்சி 1 மகிழ்ச்சி! சோழநாட்டுச் சோறு சாப்பிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. ஆஹா அந்தச் சம்பாச் சோற்றையும் நெய்யை யும் சேர்த்து, குழைத்து. அட! வாயிலே நீர் ஆருக ஓடுகிறதே! அடைத் துக் கொள். சரி, இந்த ஏட்டுக்கட்டுக்களை ஒன் முக ஒரு துணியில் கட்டு ! இவை ஏட்டுக்கட்டுக்களா?
பின் என்ன?
ஏட்டுமலை 1 இவற்றைக் கட்டத் துணி எங்கே இருக்கிறது? வேண்டும் என்ருல் அரண்மனையிலே போய் ஒரு துணிக்குவியல் எடுத்து வருகிறேன்.
(போக அடி எடுத்து வைக்கிருன்.)
بچ*/

காட்சி 3 37
பொ.:
இள, பொ. இள.
பொ.
மடையா ! இதோ, இந்தத் துணியே போதும். சரி 1 வழியிலே ஏடுகள் தவறி விழுந்தால் என்னைக் குறை சொல்லாதே.
(கட்டுகிருன்)
அத்தோடு தாடி, மீசைகளும் தேடிக்கொள். ஏன்? கூத்தாடப் போகிருயா ? ஆமாம் ; கூத்துத்தான். பூம்புகாரை அடையும் வரை நாம் மாறு வேடத்திலேதான் செல்லவேண் டும். அப்போதுதான் நாட்டின் நிலைமை, மக்களின் வாழ்க்கை அனைத்தையும் நன்கு அறியலாம். இன் றிலிருந்து உன் பெயர் இளங்கண்ணன்; என் பெயர் இளவழுதி. நாம் துறைதோறும் புனித நீர் ஆடிவரும் அடியார்கள் தெரிந்ததா? சரி போலி அடியார் என்று எம்மை யாரும் அறியாதவரை நாம் தாடிகட்டி அடியாராவோம். (மூக்கைப் பிடித்துக் கொண்டு, கண்களை மூடிய படி) சிவோஹம் !
[இருவரும் சிரிக்கிருர்கள். பின்பு பொன்முடி ஏடுகளை ஒன்று திரட்டும் முயற்சியிலே ஈடுபடுகிருன்)
(திரை)

Page 24
38
சிலம்பு பிறந்தது
காட்
காட்சி 4. பு.
[சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு சிற்றூர். அங்கு ஒரு குடிசை ; சூழவர வறுமையின் அறிகுறிகள். ஒரு பக்கலிலே ஒரு பெண் துன்பமே வடிவாய் அமர்ந்திருக்கிறாள். அவள் கையிலே ஓர் ஏட்டுச்சுவடி, இருக்கிறது. அதை அவிழ்த்து ஒரு பாடலை உருக்கமாகப்-புராணபடனம் செய்வது போல - படிக்கிறாள். இந்தப் பெண்ணின் பெயர் மங்கை.] . . மங்கை.: (பாடுகிறாள்)
கல்முழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் . கார்வான் இன்னுறை தமியள் கேளா. நெருநல் ஒருசிறைப் புலம்பு கொண் டுறையும் (- (இந்த வரியைப் படித்த பொழுது அழுகைமீற விம் முகிறாள் ; மீண்டும் அதே வரியைப் படித்துப் பாட்டைத் தொடர்கிறாள்)
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறை மணியின் மாசுஅற மண்ணிப் புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன்எம் பரிசில் ஆவியர் கோவே! [கண்களை மூடி இருக்கிறாள். கண்ணீர் வழிகிறது. அது காலை அவளது தோழிப் பெண் பூங்கொடி வருகிறாள்) பூங்.: மங்கை ! என்ன இது ? எந்நேரமும் அழுகைதானா?
நீ அழும்படி அந்த ஏ ட் டி ல் எழுதியிருப்பது
என்னவோ ? மங்.: என்னைப் போலும் ஒரு பெண்ணின் கண்ணீர் இந்த
ஏட்டிலே படிந்திருக்கிறது. அது தான் அழுதேன்.
D60

காட்சி 4 39
பூங்:
மங்.:
LDhr. -
பூங்.:
மங்.:
பூங்.:
அவளின் தலைவனும் அவளை நீங்கிச் சென்ருனு ?
ஆம் ! கண்ணகி என்பது அவள் பெயர். வையா
விக் கோப்பெரும் பேகனின் மனைவி.
யார்? மயிலுக்குப் போர்வைய்ளித்த வள்ளலின்
LD&TaSuit 2
ஆம், பேகன் அவளைப் பிரிந்து வேருெருத்தி யுடன் வாழ்ந்தான். கண்ணகி பிரிவு ஆற்ருது வாடி மெலிந்தாள்.
பறவைக்கே பரிவுகாட்டிய அந்த மன்னனு தன் மனைவியின் கண்களைக் கடல்களாக்கினன் ?
ஆம்! இன்னும் கேள். இவ்வாறு அவள் வருந்திய நிலையைப் பெருங்குன்றார்க்கிழார் என்ற புலவர் கண்டார். அவரது நெஞ்சிலே இரக்கம் மேலிட் டது. பேகனிடம் சென்ருர், "வேந்தே 1 அன்று செவ்வழிப்பண் இசைத்த வண்ணம் உனது மனை நோக்கி வந்தோம். உன் மனைவி எம்மைக் கண்ட தும் மழைபோலக் கண்ணீர் சோர நிள்முள். மன்னவ! அவள். தனது கூந்தலைக் கழுவி, மீண் டும் மலர்குடி மகிழ அருள்வாய். அதுவே நீ எமக்குத் தரத்தக்க பரிசில்” என்ருர், அந்தச் செய்கிதான் இந்தப் புறநானூற்றுப் பாடலிலே வாழ்கிறது; படித்தேன். அழுதுவிட்டேன்.
ஐயோ! பாவம் ! அந்தப் பெருங்குன்றார்க் கிழார் போல உன்னையும், உன் தலைவரையும் சந்து செய்ய எவரும் இல்லையே! என்று வருந்துகிருயோ ?

Page 25
40 சிலம்பு பிறந்தது
மங்.: பூங்கொடி! நீ என்னை அறிந்து கொண்டது இவ் வளவுதான்! எனக்கும் அவருக்கும் இடையே யாரும் சந்து செய்ய வேண்டியதில்லை. அவர், தாமாகவே என்னிடம் திரும்பும்வரை நான் காத் திருப்பேன். பூங்.: காத்திரு. நன்முய்க் காத்திரு. இருண்ட இரவை நினைவுபடுத்தும் உனது கூந்தல் புலரிப் பொழுகின் வெண்மையை அடையும்வரை காத்திரு. உனது குழிவிழும் கன்னங்கள் திரை விழும்வரை காத்திரு. மங். பேதையே! எனது உடல் முதுமை அடையலாம்! ஆனல் என் உள்ளமோ அவர் நினைவிலேயே பசுமை பெற்று இளமைமாழுது விளங்கும். அதனை அவருக்குக் காணிக்கை ஆக்குவேன். எனது அன்பு, காலத்தை வென்று நிற்பது. பூங்.: மங்கை ! உனது பண்பு கண்டும் உன்னேடு பழ கியுங்கூட அவர் நெஞ்சம் திருந்தவில்லை! பார்த் தாயா? சரியான கல்நெஞ்சர் 1 மங்.: (தளதளத்த குரலில்) பூங்கொடி அவரைக் குறை
சொல்லாதே. இந்த உள்ளம் தாங்காது. பூங். மங்கை ! நல்லவர்க்குத் தாழ்வு என்றும் இல்லை. இது உறுதி ; கலங்காதே. அவர் ஒரு நாள் திருந் தத்தான் போகிருரர். உன் வாழ்வும் வளம்பெறத் தான் போகிறது.
சரி. எனக்கு நேரமாகிறது. நான் வருகிறேன். (போகிருள். மங்கை ஏட்டைக் கட்டிவைத்து விட்டு எழுகிருள். அப்பொழுது அவளின் மாமன் மாசாத்துவான் மாறுவேடம் பூண்ட இளங்கோவோடும், பொன்முடியோடும் உள்ளே நுழைகிருர். அவர்களைக் கண்டதும், மங்கை கண் ணிரைத் துடைத்தவளாய், முறுவல் விளையாடும் முகத் தோடு நிற்கிருள்.) V
تھے”

காட்சி 4 4江
܂ ܐܬ10 ܊ ܕ ܐ
மங்.: வாருங்கள் மாமா! மாசா. என்னேடு இரண்டு விருந்தினரும் வந்திருக்கி
முர்கள் அம்மா! மங் : மகிழ்ச்சி! நல்வரவு ஆகுக! இள, + பொ. வணக்கம் ! மாசா : இவர்கள் இருவரும் நெடுங் தொலைவிலிருந்து சோணுடு காண வந்தவர்கள் பயணஞ் செய்து களைதது விட்டார்கள்; இன்று இங்குத்தங்கி நாளை புறப்படுவார்கள். மங்.: நல்லது. தாங்கள் இங்குத் தங்கக் கிடைத்தது எங்
கள் பேறுதான். (பாய் எடுத்துப் போடுகிருள், அவர்கள் அமர்கிருர் கள். மாசாத்துவானும் அமர்கிருர்.)
மங், இருந்து கொள்ளுங்கள். 1ெ5 T 院 யி ல் உணவு
சமைத்து வருகிறேன்.
(உள்ளே செல்கிருள்.)
பொ. உணவு சமைப்பதா? இளங்.
(இளங்கோ பொன்முடியை உறுத்து நோக்குகிருர், பொன்முடி அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி) இளவழுதி வயி ருேடு வயிறு ஒட்டிக். - -
(மீண்டும் இளங்கோ உறுத்து நோக்குகிறர். பொன் முடி வாயை மூடிக் கொள்கிறன்.) மாசா. இளங்கண்ணன் என்ன சொல்லுகிருரர்? இள. 'இப்பொழுதுதானே உண்டு வந்தோம். வயிறு நிரம்பிக் கிடக்கிறதே!' என்கிருரர். வேறு ஒன்றும் இல்லை. (பொன்முடி அவரைக் கிள்ளுகிறன்.) சி - 5

Page 26
42.
சிலம்பு பிறந்தது
UDT F.T. :)
பொ.
இளங்: அஆதி இருக்கடடும், ஐயா ! தங்களுக்கு இரண்டு
LD 7 GF
ଜୋuit fit.
ԼD If 5*[] . :
அட சும்மா இரு இளங்கண்ணு உண்மையைச்
சொன்னல். 15ாணமோ ?
ஓ! அப்படியா? அதனல் என்ன? bs அப்படிச் சொல்லுங்கள். அதனல் என்ன? இன் னும் ஒரு தடவை உண்டால் போகிறது. பெரிய வராகிய தங்கள் சொல்லை மறுப்பதா?
மக்கள் இருப்பதாகச் சொன்னீர்களே, அவர்கள் எங்கே?
(முகம் வாடுகிறது.) அதை ஏன் கேடகிறீர்கள்?
'அது பெரிய கதை ஐயா !
தங்களுக்கு வருத்தம் தருவதானல் சொல்ல வேண்டாம்.
இல்லை 1 இல்லை 1 அது வருத்தம் தருவதாய் இருந் தாலும் சொல்லத்தான் விரும்புகிறேன். அதனல் என் மனத்திற்கும் ஆறுதல் கிடைக்கும். அப்படியானல் சொல்லுங்கள். கேளுங்கள்: நான் ஒரு காலத்தில் யவனம் வரை சென்று வாணிகம் செய்தேன். கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறை கொடாது. பெரும் பொருள் ஈட்டினேன், அந்தக் கா லத் தி லே மாசாத்துவான் என்ருல் தமிழகம் முழுதுமே அறியும்.
அடடே! அரசருக்கும் வட்டிக்குப் பணம் கொடுப் பாராமே? அந்த மாசாத்துவான் தாங்கள்தாமா ?
(சிறிது பெருமையோடு) ஆமாம்! அது ஒருகாலம்! (பெருமூச்சு விட்டபடி) உம்! அதை எண்ணி
-

لم .
காட்சி 4 43
என்ன பயன் ! போகட்டும். கதையைக் கேளுங் கள்: எனக்கு இரண்டு மக்கள் பிறந்தார்கள் ; வளர்ந்தார்கள்.
அவர்களிலே மூ த் த வ ன் பதினமுண்டு அடைந்த பொழுது சோழநாடே வியக்கும்படி திருமணம் நடாத்திவைத்தேன். இப்பொழுது தங்களை வரவேற்ருளே ? அவள்தான் மனைவி.
இளங். நினைத்தேன். அருந்ததி போன்ற அந்த அம்மை யார் சிரித்துப் பேசினுலும் அந்தச் சிரிப்பின் பின்னணியிலே பெருந்துயர் படிந்திருப்பதை என் ணுல் உணரமுடிந்தது.
மாசா. பார்த்தீர்களா ? இந்தப் பெண்ணில் யாராவது குறை கூறமுடியுமா? பொற்படிமை போல விளங் குகிருள், இல்லையா ? ஆனல் எனது மகனே இவளை ஒதுக்கிவிட்டு ஒரு பரத்தையின் பின்னே சென்று விட்டான். அ வ ளு க் கா க த் தனது குலந்தரு செல்வக் குவையையும் தொலைத்தான். இப்பொழுது மனைவியின் அணிகலன்களையும் ஒவ் * வொன்முய் எடுத்துச் செல்கிருரன். எங்கள் குலத் கிற்கே இல்லாத குணம், ஐயா! (தலையில் அடிக் கிமுர்) நாங்கள் எங்கள் செல்வத்தை அழித்தாலும் அழிப்போம். ஆனல் எமது மனைவியரின் ஒரு குன்றிமணி பொன்னைக் கூடத தீண்ட மாட்டோம். போயும் போயும் இவன் என் மகனுய்ப் பிறந் தானே !
பொ. சரி, இந்த அம்மையார் “நகையைத் தரமாட்டேன்’
என்று சண்டை பிடிப்பதில்லையா?

Page 27
幽
4
சிலம்பு பிறந்தது
Lost & IT.;
,
F.
இவரைத் தங்கள் மருகியாகப் பெற்றது பெரும் பேறுதான், நல்லது தங்கள் இளையமகன் எங்கே?
இள:
DTJf.况
இள:
L01T 9 T.:
༣༣༣
,
பொன்.
LD 3FT.
LDs &ss.
ஐயா ! என் மருமகள் குணக்குன்று ஐயா! தன் னலமே அறியாத தங்கக்கட்டி அவள் ! தன் கணவனுக்காக எரிகின்ற தீயிலும் குதிப்பாள்,
அவன் முகம் வாடினல் இவள் அகம் கருகும்.
(கண்ணீர் வடித்தபடி) அவன் மிகவும் நல்லவன் ஐயா ! ஆனல் எனது ஊழ் அப்படி மற்றவரை கொந்து என்ன பயன்? என்ன ? அவருக்கு என்ன நேர்ந்தது ? கேளுங்கள்: குடும்பம் வறுமை அடைந்தது கண்டு அவன் வருந்தினன்; ஒரு நாள் எவருக்கும் சொல் லாது மதுரைக்கு ஒடியும் விட்டான்.
அங்கு அவன் வாணிகம் செய்து பொருள் ஈட்டுவதாய்ச் செய்திகள் வந்தன; மகிழ்ந்தேன்.
ஆனல் இந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
ஐயோ! பாவம் !
அங்கே அவனைக் கள்வன் என்று அநீதியாய்க் குற்றம் சாட்டிக் கொலைத்தண்டனை விதித்தார்கள். அவன் பிணத்தைக் கூடக் காண, நான் கொடுத்து
வைக்கவில்லை! பாவி நான் !
என்ன? வழுதியின் நாட்டிலா அறம் பிறழ்ந்தது ? வளையாத செங்கோல் வளைந்ததா? என்னுல் நம்
பவே கூடவில்லை. ஆம் ! ஐயா ! ஆம்! வழுதி முன்போலவா வாழ்
கிமுன்? தன் மனைவி செண்பகவல்லியோடு காமப்
பெருங்கடலிலே நீந்தித் கிளைக்கிமுன்.

காட்சி 4 45
*அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்”
என்று வள்ளுவர் பெருமான் தெரியாமலா சொன்னர்? உம்! அவன் இறந்தது கூட எனக்கு வருத்தம் இல்லை. என் மூத்தமகன் உயிரோடு இருக் கிருனே! அதற்காகவே நான் மிகமிக வருந்து கிறேன். இள. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? யாராவது தம்
மக்கள் சாவதை விரும்புவார்களா ? DTF. எனது உள்ளம் அவ்வளவு வெறுத்துப் போய் விட்டது. ஐயா , எனது மருகி என் முன்னலே சிரிப்பதும், நான் இல்லாத இடத்திலே நெஞ்சைப் பிழிந்து கண்களால் வழிப்பதும் எனக்கல்லவா தெரியும்? இந்தப் பாவம் இவனை எளிதில் விட்டு விடாது, ஐயா! குலமகள் அழுத கண்ணிர் வீண்
پہلو
போகாது. (கண்கலங்குகிருர் : அப்பொழுது அவரின் மூத்தமகன் சாத்தன் வருகிறன்.)
மாசா. வாடாப்பா, வா! பார்த்துக் கொள்ளுங்கள் இவன்
தான் எனது செல்வமகன், சாத்தன் ! என் வயிற்
றிலே நெருப்பைக் கொட்டுகிற பாதகன் இவன்
தான் ! இள. + பொ. வணக்கம்! நாங்கள் இன்று உங்கள் விருக்
தாளிகளாய் வந்தவர்கள்.
சபுத். வணக்கம! நல்வரவாகுக! அமருங்கள்.
(உள்ளே போகிருன்.
மாசா. எங்கேயடா போகிருய்?

Page 28
46
சிலம்பு பிறந்தது
சாத்.
ԼD IT 3 fi :
சாத்.
LD i T 8FT . :
சாத்.
LDT 9T
சாத்.
LD [] 9FTI :
இது என்ன கேள்வி, அப்பா ! நான் என் வீடு வந்தேன். எனது மனைவியைக்காணப் போகிறேன்.
உனக்கு இங்கு எங்கேயடா மனைவி இருக்கிருள்? மீண்டும் மீண்டும் இங்கே ஏனடா வருகிருய்? க டிய மனையாள் கண்ணிர்விட, பரத்தையின் அணைப்பிலே பரவசம் அடைபவனே! வீட்டிலே தெய்வம் குடியிருக்க, பேயின்பின்னலே அலை பவனே! இங்கு ஏனடா வருகிருய்? அந்தப் பேதைப் பெண்ணின் கண்ணிரிலே கப்பல்செலுத்தி விளையாடவா நீ வருகிருய்? தூ! 5ாணம் இல்லாத வனே!
அப்பா 1 விருந்தினரின் முன்பு என்னைப் பழித் திட எத்தனை நாள்கள் காத்திருந்தீர்கள் ?
பழி ; பாவம் ! அவற்றை எண்ணிப் பார்க்கக்கூட உனக்குத் தகுதி இல்லை. வந்த வழியைப் பார்த்து ஒடு.
ஒடுவதற்கா நான் இங்கு வங்தேன் ?
o o எதறகாக வ6தாய
எனக்குக் காசு வேண்டும். அதைப் பெறுவதற்குத் தான் வந்தேன். காசு இல்லாதவிடத்து மங்கையின் அணிகலன்கள் இருக்கின்றன, அவை போதும்
என்ன சொன்னுய்? மங்கையின் அணிகலன்களா? இதோ அவை ; ஏற்றுக்கொள் ; ஏற்றுக்கொள்.
(சாததனின் அருகிலே சென்று அவன் கன்னத்திலே அறைகிறர். மங்கை பதற்றத்துடன் 'மாமா' என்று அலறி யபடி ஓடிவருகிருள்.)
ή
چw"\

4
*
காட்சி 4 47
மங்.: மாமா (அவரின் கைகளைப் பிடித்தபடி) என்ன
மாமா ! இது ?
மாசா. என்னை விடு அம்மா!
மங்.: (பெருங்குரலில்) மாமா ! இனி அவரை அடிப்ப தானுல் என் பிணத்தின்மீது நின்று அதைச் செய் யுங்கள்,
மாசா.: (மலைத்து நிற்கிருர்)
மங் : (அணிகலன்களைக் கழற்றிச் சாத்தனின் காலடியில் வைத்தபடி) அத்தான்! தங்களைக் காக்க வைத்து விட்டேன். மன்னியுங்கள் தங்களுக்கு இல்லாத அணிகலன்கள் எனக்கு ஏன் ? இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.
(சாத்தன் நடுங்கும் தன் கைகளால் அவற்றை எடுக்கி
முன்.)
மங். அத்தான் ! ஒரு வேண்டுகோள்.
சாத். (அவளைப் பாராது வேறு பக்கம் பார்த்தபடி)
என்ன சொல் ?
மங் : ஒரே ஒரு முறை உங்களை வணங்கிட எனக்கு அருளுங்கள். தங்கிள் அடிகளைத் தீண்டும் பேற் றினை எனக்கு அளியுங்கள்.
சாத். (சலிப்பையும், தனது விரைவையும் காட்டும் வகை
யில்) ஆகட்டும்.
(கண்ணிர் மல்க அவனது காலடியில் வீழ்ந்து அடி களைத் தொட்டு வணங்குகிருள்.)
சாத். சரி சரி எனக்கு நேரமாகிறது. நான் வரு
கிறேன்.
[போகிருன். அவன் போகும் வழியையே மங்கை நோக்கி நிற்கிருள்]

Page 29
48
சிலம்பு பிறந்தது
மாசா. அம்மா! குழந்தாய்! என்னை மன்னித்து விடு
மங்.
உனது கணவனைக் கைநீட்டி அடித்ததற்காக
என்னை மன்னித்து விடு. (அழுகிரு?ர்) . . .
மாமா' (தன் கண்ணீரைத் துடைத்தப்டி) என்ன
இது ? சிறு குழந்தைகள் போல. உம் இருக்
கட்டும். வந்த விருந்தினரைக் கவனிக்க வேண்டாமா? சமையல் முடிந்து விட்டது. சென்று வாழையிலை வெட்டி வாருங்கள்.
இளங். அம்மா ! உங்களின் உள்ள நிலையிலே, மேலும்
மங்.:
தொல்லைதர நாங்கள் விரும்பவில்லை, வருகிருேம். (பதற்றத்தோடு) ஐயா! விருந்தினரை வெறு வயிற்ருேடு அனுப்புவதிலும் சாவதே மேல் ! நாங்கள் சாவதை விரும்புகிறீர்களா?
இளங்.: (தயக்கத்தோடு) அதற்கு இல்லை !
LDij.:
அப்படியானுல் இன்று தங்கி உணவு உண்டுதான் செல்லவேண்டும்.
இளங்.: (வருத்தத்தோடு) தங்கள் விருப்பம் போலவே
மங்.:
ஆசட்டும்
மிக்க மகிழ்ச்சி. (உள்ளே போகிமுள்)
மாசா.: ஐயா! தயவு செய்து இங்கு நடந்தவற்றை மறந்து
விடுங்கள். தங்களை நெடும்போது காக்கவைத்த
மைக்கு வருந்துகிறேன். சரி, இருந்து கொள்
ளுங்கள், வாழையிலை வெட்டிவருகிறேன்.
(வெளியேறுகிருர்)
பெடேன். ஏன்...இளங்.இளவழுதி ! பூம்புகாரிலே சதுக்
d
கத்துப் பூதம் என்று ஒன்று இருக்கிறதாமே . அந்தப் பூதம் நாட்டிலே பொய்ச்சாட்சி #F്
у

காட்சி 5 49
வோரையும் புறங்கூறுவோரையும், பிறர்மனை நயப் " போரையும் பிடித்துக் கொன்று விடுமாமே? அது
۵۔
2 - 6220T G60) L-ID LI JIT இள.: ஆமாம் ! அதை ஏன் நினைத்தாய் ? பொன். இல்லை ! பூம்புகாரிலே அதைக் காணநேர்ந்தால் பரததை வழிச் செல்வோரையும் பிடித்து உண் னும்படி கேட்கவேண்டும்! இள. (பெருமூச்சோடு) நீ சொல்வது உண்மைதான்.
(திரை)
بل*/
*

Page 30
50 சிலம்பு பிறந்தது
காட்சி 5
(பூம்புகார் ; காவிரிக் கழிமுகம். இளங்கோ ஒரு புன்னை மர நிழலில் அமர்ந்து பாடுகிறர். -
(UTL-6)) இளங்.: திங்கண் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லது வோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி! காவேரி ! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் V
புலவா தொழிதல் கயற்கண்ணுய் மங்கை மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி! காவேரி !
மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோ லதுவோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி! காவேரி ! கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணுய் ! மன்னு மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி! காவேரி !
உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய், வாழி! காவேரி ! விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி ! காவேரி ! (பாடல் முடியும் பொழுது ஓர்அந்தணர் கூட்டம் அவரை நெருங்குகின்றது.)

காட்சி 5 51
அந், தலை. (முதுமையால் ந டு ங் கும் குரலில்) வாழி !இளங்கோ! வாழி, நின்புகழ் ۱های
இள. வணக்கம் 1 வருக! என்னல் ஆகவேண்டியது ஏதும்
parGLT ? அந் தலை. உண்டு; உண்டு, அதற்காகத்தானே வந்தோம் இளங்.: சொல்லுங்கள். இயன்றது செய்வேன். அந்-தலை. இயன்றது என்ன? 'கட்டாயம் செய்வேன்' என்று உறுதி அளியுங்கள். அப்பொழுதுதான் சொல்வேன். என்ன, ஐயாமாரே! நான் சொல் வது நீதிதானே ? அந்.கூ. நீதிதான்! நீதிதான்! R இளங்.: ஐயா ! உங்களை யார் என்றே எனக்குத் தெரி யாது. உங்கள் வேண்டு கோளும் இன்னது GT60T அறியேன். இந்நிலையில் உறுதிமொழி எவ்வாறு அளிப்பேன் ?
r",
அந்.தலை. என்ன சொல்கிறீர்கள் ? என்னைத் தெரியாதா? (இளங்கோ மறு பக்க ம் திரும்பும் பொழுது தமது பொய்த்தாடியை எடுக்கிருர். இளங்கோ, தம் பக்கம் திரும் பும் பொழுது தாடியை வைத்துக் கொள்கிறர்] உண்மை
யைச் சொல்லுங்கள்.
இளங்.: உண்மையைத்தான் சொல்கிறேன். தங்களை நான்
அறியேன். '' அந் தலை. அட கடவுளே! பச்சிளங் குழந்தையிலிருந்து தங்களோடு ஒன்முய் உண்டு ஆடிப் பாடி வளர்ந் தவன் நான். என்னை-இந்த-இந்த, (இளங்கோ மறுபக்கம் திரும்பத் தாடியை எடுத்துவிட்டு அழகு காட்டுகிமுன்; தம் பக்க ம் திரும்பும் பொழுது தாடியை வைத்தபடி) என்னைத் தெரியவில்லை என்

Page 31
52 சிலம்பு பிறந்தது
கிருரே; (அழுவது போலப் பாசாங்கு செய்கிருர்) காவிரியிலாவது
இனி வாழ்ந்து என்ன பயன் ?
குதித்து உயிரை விடலாம் என்ருரல், இது கோடைக் காலம்! தண்ணீர் முழந்தாள் அளவுதான் நிற்கும்! அந்.ஒரு. அதுமட்டுமில்லை. குளிர்பிடித்து நோய் வந்தால்
என்ன செய்வது? ஆனபடியால். அந். தலை. ஆனபடியால்? அந். ஒரு. ஒரு பெரிய பாண்டத்தில் நீரைச் சூடாக்குங்கள். பின்பு அதனுள்ளே விழுந்து உயிரை விடுங்கள். கூட்டம்: ஆமாம்! அதுதான் நல்லவழி! அந் தலை: ஐயையோ ! எல்லாரும் என்னைச் சாகச்சொல்
கிருரர்கள். நான் என்ன செய்வேன்?
இளங்.: ஐயா ! அந், தங். என்ன ஐயா ! என்னைத்தான் தங்களுக்குத் தெரியாதே! என்னேடு என்ன பேச்சு? (அழுகிருர், அப்பொழுது தாடி கழன்று விழுகிறது. ஆனல் அது அவருக்குத் தெரியாது. தொடர்ந்து அழுகிருர், எல்லாரும் சிரிக்கிறர்கள். அந்தணரோ விடாது அழுகி முர். இளங்கோ அவரை அடையாளம் கண்டு கொள்கிருர்.)
இளங்: ஒ1 இவரா? இவரது அழுகையிலிருந்துதான் இவர் யார் என்று தெரிகிறது. தயவுசெய்து எல்லாருமாய்ச் சேர்ந்து இவரது காலையும், கையை யும் கட்ட எனக்கு உதவுங்கள். இவரை ஆற் றிலே எறியக் கூடாது. கடலிலேதான் எறிய வேண்டும். நெடுநாளாய்ச் சுருtன்களுக்கு நல்ல இரையே கிடைக்கவில்லையாம், வாருங்கள்.
(எல்லாரும் அவரை நெருங்குகின்றனர்)
اليه)

காட்சி 5 53
பொ.: ஐயோ! ஐயோ! வேண்டாம். உங்களைக் கும்பிடுகி றேன். (கையை உயர்த்துகிருர்; தாடி கழன்றிருப் பதை அப்போதுதான் கண்டு கொள்கிருரர். அசட்டு விழி விழித்தபடி) அட! சரியான சமயத்திலே தாடி காட்டிக் கொடுத்து விட்டது.
இள. அடேய் பொன்முடி; என்னடா இவையெல்லாம்
பொன் : இவை எல்லாமா? இதோபார், இந்தத் தாடிகள் எல்லாம் (கூட்டத்தவர் பொய்த்தாடிகளைக் கழற்று கின்றனர்.) சேர்ந்து ஒரு பெரிய தொண்டு செய்து விட்டு வருகின்றன.
இளங்.: (அவர்களை இனங் கண் டு கொண்டவராய்)
அடடா! நீங்களா? சோழநாட்டுப் பரதவச் செம் மல்களுக்கு வேடம் பூணுதல் பெருங்கலைபோலும்!
கூட்.ஒரு. அதை ஏன் கேட்கிறீர்கள் ? எல்லாம் உங்கள்
நண்பரின் வேலைதான்.
இள. அவனைத் தெரியாதா? மனிதனுய்த் தப்பிப் பிறந்
தவன்.
பொன். ஆ! அப்படிச் சொல். தேவனுய் விளங்கவேண்
டியவன் தவறி மனிதனுகி விட்டேன்.
இள. (சிரிப்போடு) மடையன்! நான் ஒன்று சொன்னல் நீ வேமுென்முகப் பொருள் கொள்கிருய், அடேய்! பொன்முடி! நீ இராமதூதுவனுய்ப் பிறந்திருத்தல் வேண்டும்.
பொன். போ அப்பா ! இந்த இராமதூதுவன் வேலையாலே
இப்பொழுது | ධූල්‍ය இளங்குடும்பம் மகிழ்ச்சிக் கட லில் கிளைத்துக் கொண்டிருக்கும், அது தெரி
யுமா உனக்கு?

Page 32
54
சிலம்பு பிறந்தது
இளங்.:
தெரியாதே !
பொன். தெரியாதா நன்று ! மிக நன்று 1 கேட்டுக்கொள். 4.
பொன்.
பொன்.
இதோ நிற்கிருரே! இந்தச் சேர்ப்பரின் பக்கத்து வீட்டிலே ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒர் இளைஞன் மீது காதல். அவனும் அவளைத் தன் உயிரிலும் மேலாய் விரும்பினன்.
அவர்களின் காதலுக்குப் பெற்றே7ர் தடையாய்
இருந்தார்களாக்கும்
பார்த்தாயா? உனக்குச் சுவை உணர்வே கிடை யாது, போ. எவ்வளவு ஆவலோடு, நடந்ததை, அழகாகக் கவர்ச்சியாகச் சொல்லவந்தேன்! நீ என்னடா வென்முல் எல்லாம் தெரிந்தவன் போல..? அப்போது நான் சொல்லவே மாட்டேன் போ.
(அஞ்சியவர் போல) ஐயோ! ஏன் இந்தவெகுளி? பொன்முடியாரே! புகல்க நும் கதையை, பொறுமை யோடு கேட்போம் !
அப்படி வா வழிக்கு சரி, பெற்றேர் தடை யாய் இருந்தார்களா? நேற்று மாலைவேளையிலே அவர்கள் தங்கள் பெற்றேர்க்குத் தெரியாமல் உடன் போக்கில் சென்று விட்டார்கள். பெண்ணின் பெற்றேர் தங்கள் குழந்தையைக் காண வில்லையே என்று துடிதுடித்துப் போனர்கள். சேர்ப்பரே ! அதற்குப் பிறகு நடந்ததை நீரே சொல்லும், வில்லவரே ! நீர்தாம் பெண்ணின் தந்தை. உமக் குப் பக்கலிலே நாணிக்கோணி நிற்கிருரே எழிலர். அவர் தாம் தாய். நான் அந்தணர் கூட்டத் தலை வர். பாலைவெளியில் நடந்ததை நடித்துக் காட்டு வோம். சரி, சேர்ப்பரே; நீர் கதையைத் தொட ரும்; அதற்கிடையில் நாங்கள் தயாராகி விடு

காட்சி 5
55
வோம் (த ா டி யை அணிந்தபடி கோலூன்றிக் கொண்டு நிற்கிறான். அவனுக்குச் சிறிது தொலை
வில் வில்லவனும், எழிலனும் நிற்கின்றனர்.) சேர் : நல்லது! அந்தப் பெண்ணின் பெற்றோர்க்குத்
துன்பமும், வெகுளியும் மிகுதியாயின். தங்கள் செல்வச் சிறுமகளை, ஒருவன் ஏமாற்றி அழைத்துச் சென்றதை அவர்களால் பொறுக்கக் கூடவில்லை. மகளையும் இளைஞனையும் தேடிப் புறப்பட்டார்கள். அந்த இளைஞனோ எனது உயிர் நண்பன். அவனைக் காக்க விரும்பினேன்; வழி தான் தெரியவிலலை. பொன்முடியாருக்கு என் நிலையைக் கூறினேன்.
அவர் ஒரு கூத்தே ஆடி விட்டார். இளங். (போலி வெகுளியோடு) பொன்முடி !, உனது - -வால் நீளத்தைச் சோழநாட்டிலும் காட்டி விட்டாய்.
- உன்னை... உன்னை... (காதைத் திருகுகிறார்) பொன் : (தன் பெரிய உடலைத் தூக்கிக் கொண்டு துள்ளுகி 15. றான்.) ஐயையோ!காதுகா து!(இளங்கோகாதைவிட) (4 அட! நான் என்ன யானையா? அங்குசம் போடுவது
மாதிரி- ஐயோ! காதிலே ஒரு துண்டையே (' காணவில்லை, அப்பா! இள.: சரி ! இனி உன்முறை. மேலே நடந்ததைச் சொல். பொன்.: மேலே என்ன? பெண்ணின் பெற்றோர் வருகின்ற
வழியிலே அந்தணமுதியோர் வேடம் பூண்டு நின் றோம். எங்கே ? சேர்ப்பரே! வேலவரே! உங்கள் தாடியை அணிந்து கொள்ளுங்கள் ; எனக்குப் பக்கத்திலே வாருங்கள். (இருவரும் தாடி அணிந்து பொன் முடியின் அருகில் வருகின்றனர்.) அப்

Page 33
56 சிலம்பு பிறந்தது
படித்தான்! நல்லது! வில்லவரே ! ஒ! மன்னிக்க
வும். ஐயன்மீர்! அம்மையீர்! உங்கள் குழந்தை
யைத் தேடி வருக ! (அவர்கள் சிரித்தபடி வருகிருர்கள்.)
பொ.: என்ன ஐயா! மகளின் திருமணத்திற்குப் போகி றவர் போல அல்லவா, ஆடிப் பாடி வருகிறீர்கள்? முகத்திலே துன்பம் துளிக்கூடக் காணவில்லை ! அழுது கதறிக் கொண்டு வாருங்கள் ஐயா ! (அவர்கள் வருத்தத்தைக் காட்டும் முகத்தோடு வருகின் றனர். பொன் முடி கோல் ஊன்றி நடுங்கியபடி நிற்கிருன்)
பெ.த. அந்தணப் பெரியீர்! இவ்வழியால் ஒரு பெண்ணும்
ஒர் இளை எனும் சென்றதைக் கண்டீர்களா? பொ.மு.: (நடுங்கும் குரலில்) கண்டோம் ! கண்டோம் ! காணவில்லை என்று சொல்லோம் ; சொல்லோம். பெண். தந். (பதற்றத்தோடு) அவர்கள் நெடுந்தொலை
சென்றிருப்பார்களா? பொ.மு. சென்றிருப்பார்கள் 1 ஆமாம்! உங்களைப் பார்த் தால் அந்தப் பெண்ணின் பெற்ருேர் போலத் தெரிகிறதே ? பெ.த. அந்தப் பாவிப் பெண்ணின் பெற்ருேர்தாம் ஐயா ! அவள் எங்களின் பாசத்தையும் மறந்து அந்தப் பயலோடு ஓடி விட்டாள் பொ. இப்போது அவர்களைத் தேடிப் பிடிக்க வந்தீர்
களோ ? பெ.த ஆம் ஐயா ! எனக்கு வரும் வெகுளிக்கு அவர் களைக் கண்டால். (பல்லை நெருமுகிருர்) தாய் : (வருத்தத்தோடு) இது என்ன? சிறிது அமைதி
யாய் இருங்கள்.
ځار)
و البته

காட்சி 5 57
பொ.:
பொ.
பெ. த.
பொ.
பெ த.
பொ.:
பெ. த.
(குறுநகை செய்து) ஐயா! நான் சில கேள்விகள் கேட்கின்றேன். தயைகூர்ந்து விடை தருவீர்களா?
. ஆகட்டும் கேளுங்கள்.
மலையிடத்தே சந்தனம் பிறக்கிறது, அதனல் மலைக்கு ஏதாவது பயன் உண்டா?
இல்லை ! அதனை முயன்று பெறுபவர்க்கே நறுமணத்தை அது அள்ளி அள்ளி வழங்குகிறது. இல்லையா? : ஆமாம்! கடவிடத்தே முத்துப் பிறக்கின்றது. அதனைப் பெற்று அணிபவர்க்கல்லாது கடலுக்கு அதனல் பயன் இல்லையே?
இல்லை! உண்மைதான்.
பொ. யாழிலே பிறக்கின்றது ஏழிசை யாழுக்கு அத
பெ. த.
பொ.:
னல் பயன் எதுவும் இல்லை. மீட்டுபவர்க்குத் தான் பயன் இதையும் ஒத்துக் கொள்கிறீர்கள்.
(சலிப்போடு) ஆமாம்!
எண்ணிப் பார்த்தால் உங்கள் மகளும் அத் தகையளே ! நீங்கள் மலை; அவள் சாந்து மரம் நீங்கள் கடல் , அவள் முத்து. நீங்கள் யாழ்; அவள் அதில் எழும் இன்னிசை 1 என்றுவது ஒரு நாள் அவள் உங்களைப் பிரிந்து செல்லத்தான் வேண் டும். அப்பொழுதுதான் அவளுக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் மகிழ்ச்சி !
இரு வரும் (பேசாது தலைகுனிந்து நிற்கிருரர்கள்)
பொ.:
ஆதலால் வருந்தாது திரும்பிச் செல்லுங்கள். அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள் வார்கள்.
சி - 7

Page 34
58
சிலம்பு பிறந்தது
இள.'நன்று ! நன்று!
༣ ཉན། (எல்லாரும் திடுக்குற்றுப்பேசாது நிற்கின்றனர்)
பொன்.
பொன்முடி! கற்ற கலித்தொகையை நன்கு பயன் படுத்திய்ை. உன்திறமையை மெச்சுகிறேன்.
(தாடியைக்கழற்றியடி நிமிர்ந்து என்ன இளங்கோ
அந்தப் பெற்றேர் திரும்பிச் சென்ற வகையைச் சொல்லவிடாமல்.:
இ ந் த"அ றிவுரைக்குப் பின்பும் பெண்ணையும்
மருமகனையும் தொடர அத்துணைப் பேதையரா?
நீ சொல்லாமலே பின்பு நடந்தது எனக்குத் தெரிந்து விட்டது.
பெரிய மனிதன் என்றுதான் எண்ணம் ! ஐயா, பொன்முடியாரே! நீங்களும் இளங்கோவும்
சொற்போர் தொடங்கினல் அதற்கு முடிவே
இராது. நாங்கள் போய் இந்திர விழாவிற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்; வருகிருேம்.
(கூட்டத்தவர் போகிருரர்கள். பொன்முடி சிறிது
பொறுத்து தொடர்ந்து ஓடுகிருன்.)
Golur.: கூட்: பொ.: :. -״ا ه36
இள. பொ.:
ஐயா ! ஐயா என்ன ?
தயை கூர்ந்து தாடிகளைத் தந்து செல்கிறீர்களா ?
(சிரித்தபடி தாடிகளைக் கழற்றி) இந்தாருங்கள். உங்கள் தா-டி ! (கொடுத்து விட்டுப் போகிமுர் கள் பொன்முடி திரும்பி வருகிருரன்.) ஏன் இத்தனை தாடியும் உனக்கு ? உன் நண்பனுகி விட்டேன், பார். தாடி மீசை இல்
லாமல் வாழமுடியாதப்பா. நீ என்னடா என்ருல்
I
f
/ş-

காட்சி 5 59
Go UT :
இள.
ஒரு நாளைக்குச் சேரநாட்டில் நிற்பாய். மறுநாள் சோழநாடு வருவாய். நானும் உன் வால்போல plair பின்னலேயே வரவேண்டி இருக்கிறது? போகும் இடங்களிலே வேடம் போட்டால்தானே என் பிழைப்பு நடக்கும் ? தக்க சமயத்தில் நினைவு படுத்தினய்; பொன்முடி! சோழநாடு எனக்கு வெறுத்து விட்டது. நாளையே பாண்டிநாடு புறப்படல் வேண்டும். ஐயோ 1 ஐயோ! இது என்ன? உனக்கு இங்கே என்ன குறை? சோறுடைய சோழநாடு வந்தேன். மூக்கு முட்ட உண்டு இப்பொழுதுதான் சிறிது மினுமினுப்போடு இருக்கிறேன். நீ என்னடா என்ருல் 'பொன்முடி புறப்படடா’ என்கிருய். (அழுவது போல) நான் வரமாட்டேன்; போ. விளையாட்டு இருக்கட்டும். பொன்முடி நான் சொல் வதைக்கேள். இந்தச் சோழ நாட்டிலேதான் என் தாயார் பிறந்தார். என் குழந்தைப் பருவம் காவிரி மண்ணிலேயே கழிந்தது. சிபியும் மனுநீதிகண்ட சோழனும பிறந்தமண் இந்தச் சோழமண் 1 இத னல் நான் அடைந்த பெருமைக்கு அ ள வே
"இல்லை! வளத்திற்குச் சோழநாடுதான் வரைவிலக்
r,
பொன்.
கணம் சொல்கிறது; உண்மைதான்! பட்டினப்பாலை பூம்புகாரின் வளத்தினைப் பாடுவதை என்ன என் பேன்? ஆனல்.
என்ன ஆ-னுல் இப்பொழுது சோழநாட்டிற்கு என்ன குறை ? அரண்மனையிலே ஒவ்வொரு பொழுதும் நான் சோற்றுக் கடலிலும் கறி ஆஅது களிலும் நீந்தித் திளைக்கிறேனே ? சொல்! சோழ நாடு எந்தவகையில் குறைந்து விட்டது?

Page 35
சிலம்பு பிறந்தது
Ꮆlufl . ::
பொறுமையாய்க் கேள் பொன்முடி! சோழநாடு இன்று அளவற்ற செல்வத்தில் தன்னை மறந்து
நிற்கிறது. வளங் கொழிக்கும் பூம்புகாரின் விதி
களூடே எல்லையற்ற துன்பம் பெருகி ஓடுவதாக
நான் உணர்கிறேன். சுருங்கச் சொன்னுல் சோழ
நாடு ஒரு காமக்களஞ்சியம் !
மன்னரின் மக்களும், வாணிகச் சிறுவரும், பரதவ இளைஞரும் காமக்களியிலே மூழ்கித் திளைக் கிருர்கள் ; தங்கள் மனைவியரை மறந்து, அவர்தம் வாழ்க்கையைக் கண்ணிர் வெள்ளமாக்கி இவர்கள் பரத்தையரின் மனைகளைத் தஞ்சம் புகுந்து கிடக் கிருரர்கள். நகர வீதிகளிலே நிலையற்று வீசும் தென்றலைப் போல நிலைகெட்ட உள்ளத்தராய் இவர்கள், தம் வாழ்க்கையைப் பாழாக்குகிறர்கள். இந்த நிலையைக் காண எனது 6ெ சமே உடைந்து விடும் போல இருக்கிறது. தமிழகத்தின் எதிர் காலம், அச்சம் தருவதாகவே எனக்குத் தோற்று கின்றது
அட நீ என்னப்பா சேர 5ா டு போர்வெறி கொண்ட நாடு, என்று அங்கிருந்து புறப்பட்டாய் சோழ நாடு வந்தாய் ! இது காமவெறி பிடித்த நாடாகி விட்டது. இனி எஞ்சியிருப்பது பாண்டி காடுதான். அங்கு என்ன வெறியைக் காணப் போகிருரயோ ?
இதோ பார் 1 வந்து நான்கு நாள்கள் ஆக வில்லை. இப்பொழுது புறப்பட்டால் உன் பாட்ட ஞர் என்ன நினைப்பார் ? அவரோ உன்னில் தம் உயிரையே வைத்திருக்கிருர்,
طبیا)

n காட்சி 5 61.
இள. இந்தத் தளைகளை எல்லாம் அறுத்துக் கொண்டு
பொ.
இள :
GUIT.:
ஒடவே நான் விரும்புகிறேன். அப்பா. இளங்கோ ! இன்னும் சிலநாட்களாவது பொறுத்துக் கொள், அப்பா ! இந்திரவிழா முடிந்த தும், நீ "கூற்றுவன் ஊருக்கு வா’ என்ருலும் மறு பேச்சில்லாது வந்து விடுகிறேன். தயைகூர்ந்து இன்னும் ஒரே ஒரு திங்கள்...? உன் விருப்பப்படியே ஆகட்டும். சோழ நாட்டின்முழு மையான வடிவத்தையும் காண "இந்திர விழாவும்’
துணையாகலாம் ! (அவரின் நாடியைத் தடவியபடி) என் தங்கக் கட்டி சோழ நாட்டுச் சோற்றை இன்னும் சில நாட்கள் சாப்பிட வாய்ப்புத் தந்தாயே! மிக்க நன்றி! மிக்க
நன்றி!
(திரை)

Page 36
62 சிலம்பு பிறந்தது
- (சேரலாதன் அவைக்களம் சேரலாதன் நற்சோணை யோடு அரியணையில் வீற்றிருக்கிருன். புலவரும், அமைச் சரும் சபையோரும் சூழ்ந்திருக்கின்றனர். செங்குட்டுவன் சேரலாதனின் அருகில் இருக்கின்றன். இளங்கோவும் பொன் முடியும் உள்ளே நுழைகின்றனர். சேரலாதன். நற்சோணை, செங்குட்டுவன் தவிர்ந்த அனைவரும் மதிப்புடன் எழுந்து நிற்கின்றனர்.) சேர. வா. இளங்கோ ! இப்போதாவது கண் தெரிங்
ததா? - சபை: இளங்கோ வாழ்க 1 எம் இறை வாழ்க! இளங் அனைவரும் வாழ்க 1 (கையமர்த்துகிருர் அனைவ
ரும் அமர்கின்றனர்) வணக்கம் தந்தையே ! சேர. (தழுவியபடி) நீடு வாழ்க! −
(இளங்கோ அணைப்பிலிருந்து விடுபட்டுத் தாயிடம்
போ கிருர்)
இள. அம்மா! நற். வா மகனே! (உச்சி முகர்கிருள்) இப்பொழுது கூட உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இள, ! உங்களைக் காணத்தான் நானும் ஓடோடி வந்தேன்
அம்மா. செ. (ஏளனமாக) பால் மணம் மாறுப் பங் சி ள ம்
குழந்தை இள. அண்ணு! (செங்குட்டுவன் அருகு சென்று வணங்கு
கிரு?ர்.) செ. உயிரோடு திரும்பி வந்தாயே! அதுபோதும்
உன்னைப் பாசறையில் தனியே விட்டு வந்தேன் என்று அம்மா என்னைத் துளைத்தெடுத்து விட்டார்.
جھ7
طبل

காட்சி 6 63
பொ.
GgU.:
Go UT :
செ.
பொ.:
சேர.
நான் கூட 'அம்மா தேடுவார். விரைவில் நாடு திரும்புவோம்' என்றேன். கேட்டால்தானே? சோழநாடு பாண்டிநாடு என்று என்னையும் இழுத் துக்கொண்டு திரிந்தார். - அடடா, பொன்முடி! நீயும் வந்து விட்டாயா? வாழ்க! வாழ்க! நன்றி, வேந்தே! (தலைதாழ்த்தி வணங்குகிறன்) ஏனடா, பொன்முடி! நீயும் சோழநாடு போயிருந் தாயா? காவிரித் தண்ணீரும், சோழநாட்டுச் சோறும் அங்கேயே உன்னைக் கட்டிப்போட்டிருக் குமே! (இளங்கோவைப் பார்த்தபடி அவரை ஏள னம் செய்யும் நோக்கத்தோடு) தோன் "பந்திக்கு முந்திப் படைக்குப் பிந்துபவன்' ஆயிற்றே !
(எல்லாரும் சிரிக்கின்றனர்.)
(சிணுங்கியபடி) என்ன இளவரசே! வந்தது வர முன்னமே ஏளனத்தில் இறங்கிவிட்டீர்கள் ? சரி ! சரி ! இளங்கோ ! இப்படி உட்கார். (நற் சோணையின் பக்கலிலே உள்ள அணையைக் காட்டு கிமுன். இளங்கோ சென்று அமர்கிருர்) பொன் முடி! நீயும் உட்கார், (ஒர் ஆசனத்தைக் காட்ட அதில் பொன்முடி அமர்கிருன்.) சோழநாடு போயிருந்தாயா? அப்பா என்ன சொன் னர் ? என்ன சொல்லியிருப்பார் ? அருமையான பேரன் அத்தி பூத்ததுபோல வந்திருக்கிருனே' என்று தலையில் தூக்கிவைத்துக் கூத்தாடி இரு ப் பார். (சிரிக்கிருன்)

Page 37
64
சிலம்பு பிறந்தது
சேர :
இள.
(கோபத்துடன்) செங்குட்டுவ ! நீ பேசாது இருக்க மாடடாய்? (பயந்தவன் போல வாயைக்கையால்பொத்தி விட்டு) மன்னிக்கவேண்டும், தாயே! நீ சொல் இளங்கோ! அம்மா தமது தங்தையாரின் நலம் அறிய ஆவ லாய் இருக்கிரு?ர் !
சிறப்பாக ஒன்றும் சொல்லவில்லை. அம்மா 1 தங் களையும் அப்பாவையும் காண விரும்புவதாய்ச் சொன்னர். அண்ணுவின் நலன் பற்றியும் கேட் டாா. நல்லது. சோழநாட்டின் இன்றைய நிலை எப்படி ? (எழுந்து) கிறது அங்கு; பாலும் தேனும் ஓடுகின்றன! பூம்புகார்த் துறைமுகம் கப்பல்களால் நிறைந்து கிடக்கிறது. சோழநாட்டுப் பொருள்களை வாங்கிட
கேட்க வேண்டுமா? வளம் கொழிக்
யவனரும் கடாரளும் ஈழரும் போட்டியிடுகின்றனர். மருவூாபபாககமும, படடினப பாககமும எ55ாளும போல விழாக் கோலம் பூண்டுள்ளன. மனைகள் வானத்தைத் தழுவி மோனக் கதைபல பேசுகின் கின கொள்வோரதும் கொடுப்போரதூம் ஒதை கள் அங்காடிகள் எங்கும் மலிந்து கிடக்கின்றன. எல்லாம் அங்கு உண்டு; இல்லாததும் ஒன்று உண்டு;
அந்த ஒன்று என்னவோ? இதயம் !
புல + செங். என்ன?
இள.
ஆம்! இதயந்தான் அங்கு இல்லை. அதனுல் இன்ப மும் இல்லை ! எல்லையற்ற களியாட்டங்கள் மக்களின் வாழ்வினைக் கருத்தற்றவை ஆக்குகின்றன. சோழ
ظاه

காட்சி 6 65
நாடு சிற்றின்பக் கொள்கலம் ஆகி விட்டது. காமக் களியில் எல்லையற்று ஈடுபடுவோர் அங்கு பெருகி விட்டனர். கற்புடை மங்கையரின்'ஏக்கப் பெரு மூச்சுக்கள் ஒவ்வொரு மனையின் சுவ்ரையும் முட்டி மோதுகின்றன. இந்தச் சுவர்கள் Ngiftair e-gu வது உறுதி அனறு சோழநாடு,பெண்களின் கண்ணீரிலே மூழ்கி மறைந்து விடும்' அவைப புல,: என்ன, இளங்கோ ! செல்வர்க்குழ்வேந்தர்க் கும் இவை இயற்கையான செயல்கள் அல்லவா ?
I', '' இள. (சிரிப்புடன்) இயற்கையான செயல்:
மனைவியரின் இளமையை, எழிலை, .
வைட் 1. (2) ༤ ཉིན་ வப் பகடையாடுவதா இயற்கை
பரத்தையரின் சிரிப்பிலும், ?ကြီးဈန္တိမ္ပိန္၊ மயங்கி அவர்தம் அடிகளை வருடுவதா' இய்ற்கையான செயல்? ; , , 宛
#:# , ' ' } செ. தொன்று தொட்டுவரும் வழக்க்ம்'இதில் இள. வழக்கம்! இந்தக் கண்மூடி வழக்கங்கீம்.ண்மூடிப் போதல் வேண்டும். மனிதன் மனிதனய் வாழ் தல் வேண்டும். را نامه , i. செ: இளங்கோ! நீ ஒரு விந்தை மனிதன். வீரத்தை விளையாட்டாக்கி, வெற்றிப் பறையே மங்கலப்பறை எனக் கொண்டு, நெஞ்சை விழுப்புண்ணின் நிலைக் களமாக்கி, நினைவைப் புகழின் புகலிட்டிாக மாற்றி வாழ்ந்திடும் வாழ்வே தமிழரின் வாழ்வு ! அதை வெறுத்தாய் ! சோழநாடு சென்ரு ய், வாழ்விலே கிடைக்கின்ற இன்பத்தை யெல்லாம் " அ ள்ளி அள்ளிப் பருகி ஆனந்த வெறியாட்டு அயர்வதை வெறுத்து அதற்கும் வசை பாடுகிருஜய். உனக்கு உலகிலே எந்தச் செயல்தான் நல்லதோ? நான்
றியேன் ! あ_。

Page 38
66 சிலம்பு பிறந்தது
Ggy.: Sofil gf உங்கள் சொற்போரை நிறுத்துங்கள். ' சோழநாட்டின் நிலை இது. எங்கே? பாண்டி
is நாட்டிப் பற்றிச் சொல்.
(இது நகைத்து) பாண்டி நாடு, நீதி கோடிய மன்ன்ன்! நெறி தவறிய மக்கள்! நிலத்து வாட்டு ன்ெற வறுமை ! இவைதாம் பாண்டி நாட்டின் இன்றைய நிலை. பாண்டிய நாட்டினை அடுத்த .. பாலவெளியிலே க ள் வரும், கொலை ஈரும் நிற்ைந்து கிடக்கின்றனர். இவர்கள் போர்க் காலத்  ேெல் பாண்டியனுக்கு உதவி புரிந்தவர்கள்! போர் ', முடிந்த் பின்தான் வாழ வழி இல்லையே? கள்வ
. விட்டார்கள்! சேர: ஒஹோ! போரின் கொடுமைக்கு இதுவும் ஓர் உதாரண்ம் என்று சொல் ல ப் போகிருய் !
இல்லயா?
இள்: ஆம்! போர் உயிரைக் கவர்வதோடு நின்று விடு வதில்லை. வாழ்வையே கெடுத்து விடுகிறது. வீரனை ஆறல் கள்வனக்கி விடுகிறது. அருளுடை கெஞ் 'சனை இரக்கத்தின் எதிர்மறைக்கு இட்டுச் செல் றெது. இந்த நிலையிலேதான் அந்தப் பாலை நில 。” ' மக்களும் வாழ்கின்றனர். மட்டின்றிக் கள் உண்பர். வழிச் செல்வோரைக் கொன்று குவிப்பர் ; வெறி யாட்டயர்வர் அந்த வேட்டுவர்! செங்.: அவர்களைச் சோம்பேறிகள் ஆக்கியது போர்! கள்வர் ஆக்கியது போர் 1 க ய வ ர் ஆக்கியது * (3 af ! மதுவுண்ண வைத்தது போர் 1 எல்லாம்
போரின் விளைவுகள். அப்படித்தானே?"
இள. என் கருத்து அதுதான் !
..
 
 
 
 

ክኀ
காட்சி 6
செங்.:
STG)).
(ਲ :
956).
சேர.:
வாள் எடுக்கப் பயந்தவன் வாய்வீச்சால் தன் கொள்கையை நிலைநிறுத்தப் பார்க்கிறன். கோழை, தான் கோழையாக இருப்பதற்குக் காரணம் போரின் கொடுமை என்று தத்துவம் பேசுகிருரன். வேந்தனின் அறத்தை விளங்கிக் கொள்ளாதவன் வீரத்தைப் பழிக்கிறன். இளங்கோவின் அறிவு ரைகளைக் கேட்டால், நாமும் தலையை மழித்துக் கொண்டு, பிச்சைக் கலம் ஏந்தி "வாழ்வே நில்ை யற்றது' எனக் கூறிக்கொண்டு துறவிகளாகி விட வேண்டியதுதான் !
(எல்லாரும் சிரிக்கின்றனர்) . v . உண்மையின் கசப்பை இப்பொழுதுதான் நன்கு உணரமுடிகின்றது. "
(அதுகாலை காவலன் உள் நுழைகிறன்) (வாய்புதைத்தபடி) வேங்தே ! ... . . . என்ன? சொல் வாயிலில் நிமித்திகர் ஒருவர் வந்திருக்கிறர் தங் களைக் காண விரும்புகிறர். לו அழைத்து வா.
(ஏவலன் செல்கிருன்)
சரி; இளங்கோ பயணத்தால் களைத்திருப்பாய். அரண்மனை சென்று ஆறுதல் கொள். களைப்பு ஒன்றுமில்லை, தந்தையே! நிமித்திகனின்
வாக்கையும் கேட்போமே? " .
5ல்லது, அவ்வாறே ஆகட்டும்,
(நிமித்திகன் நுழைகிருன்) வாழ்க வேந்தே வளர்க நும் கொற்றம் !

Page 39
68
சிலம்பு பிறந்தது
சேர. டின் வரவு நல்வரவாகுக. நீ வருபொருள் உரைப்
*。
1/༣༦
s
பதில் வல்லவனே ? தன்னைப்பற்றித்தானே உரைத்தால் அது தற் புகழ்ச்சி ஆகிடும். சோழப் பேரரசரும் பாண்டிய மன்னரும் இந்தச் சிறியவனைத் 'திறமை உள்ள வன்' என்று சொல்வார்கள் வேந்தே !
ச்ேர். நன்கு பேசுகிருய்.
4 م) و ؟\,\, , , ,)( } (சிரிக்கிருன்)
அவைப் புல பேச்சுவன்மை நிமித்திகரோடு பிறந்த கலை
யாயிற்றே ! அவர்கள் முதலில் எம்மிடமே பல கேள்விகள் கேட்பர். அதன்மூலம் எமது இறந்த கால வாழ்வை அறிந்திடுவர். பின்பு அ வ ற் றையே எமக்குத் திரும்ப எடுத்துச்சொல்லி எம் மையே வியக்க வைப்பர். அவர்கள் கூறிய இறந்த காலச் செய்திகளில் நம்பிக்கை வைப்போம், நாம்!
பின்பு என்ன? இனி நிகழப்போவன பற்றி அவர்
(கள் எதைச் சொன்னுலும் நாம் நம்பவேண்டியது
தானே ? அடடா! 'சொலல் வல்லர்’ நிமித்திகர்
தாம் உண்மை !
(சிரிப்பு]
நிமி. புலவர் பெருமான் என்னைத் தவருய் விளங்கிக்
சேர.
கொண்டார் போலும்! பொன்னை விரும்பியோ, பொருளை விரும்பியோ பொய் உரைக்கும் புல்லன் நான் அல்லன். வரு பொருள் உரைத்தல் ஒரு கலை, அதைப் பேணுதல் என் கடன். அதனைத் தொழிலாக்கி நான் வருவாய் தேடுவீதில்லை.
நன்று, என் கையைப்பார்த்து என் எதிர் காலத் தைக் கூறு பார்ப்போம்,
چf
خپ',

فيها.
ዙኀ
காட்சி 6 69
நிமி.:
(38.
நிமி.
செங்.:
நிமி:
GTG.: நிமி.
செங்.:
(பெருமையோடு தலை நிமிர்த்தி) கை பார்க்க வேண்டுவதில்லை. தங்கள் மெய் பார்த்தே சொல்கி றேன், வேங்தே ! தங்களை இந்த அரியணை இன் லும் பத்தாண்டுகள் தாங்கும். இந்தப் பத்தாண்டு களிலே பாரதத்தின் பெரும்பகுதியே தங்கள் அடிக்கீழ் வந்துவிடும். தாங்கள் பேரரசராய் விளங்குவீர்கள், தங்கள் கனவுகளை உங்கள் மக்களிலே ஒருவர் நிறைவு செய்வார். ஆனல். தங்களுக்குப் பின்.
எனக்குப் பின்.?
மன்னிக்க வேண்டும். அது அதிர்ச்சி தருகின்ற ஒரு செய்தி 1 என்னைக் கேட்காதீர்கள். எதையும் தாங்கும் இதயம் எங்களுக்கு உண்டு. தயங்காது சொல். அரசருக்குப் பின் இளவரசர் அரியணை ஏறுதல் இயலாது. அவரை அடக்கிடுவர் அவர் தம்பி ! தம் பெருமிதத்தால் உயர்ந்து நின்று பெரும் புகழ் ஈட்டப் போகும் பேரரசர் இதோ. (இளங்கோ வைக் காட்டி) இவர் தாம்!:இந்த இளங்கோ தாம்! (அதிர்ச்சியடைந்து) "என்ன? உண்மை இது. என்னை மன்னிக்க வேண்டும்."
(பல்லை நெருமியபடி) என்ன சொன்னுய்?
(செங்குட்டுவன் வெறுப்போடு இளங்கோவைப் பார்க்கி
முன். (ori.",
இளங்கோ புன்னகை கருகாத முகத்தோடு இருக்கி நிமித்திகன் அஞ்சி நடுங்குகின்ருன். சபையோர்
சேரலாதன் நற்சோணை உட்பட வியப்பால் சிலையாகின்ற
னர்.)
சேர.:
படைமுகமே கண்டறியாத இந்தச் சிறுவன் எனக் குப்பின் அரசனுவான ? உனக்குப் பித்தமா பிடித்து விட்டது?

Page 40
70
சிலம்பு பிறந்தது
நிமி.
சேர.\
8ெங்.:
மன்னவா! மன்னிக்க வேண்டும். உண்மையைத்
தான் நான் கூறினேன்.
எது உண்மை? மூத்தோன் இருக்க இளையவன் முடி பெறுவதா உண்மை ? தலை இருக்க வால் ஆடுவதா உண்மை? நிமித்திகனே இதைக் கேள். "குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத்து
(۵ - 49 D 6) 35ÍToðiðIT's Las Tõðs
என்ற பெரும்புகழை நான் யாரால் பெற்றேன் என்பதை நீ அறிவாயா? என் மூத்த மகனுலேதான்! அவன் இருக்க இளையவன் அரசனுவதா?
(வாளை உருவியபடி) தங்தையே! நிமித்திகன் சொல்லால் அந்த நிலை நேருவதானல், இன்றே அது நேரட்டும். இளங்கோ! எடு உன் வாளை. இருவரில் ஒருவர்தாம் வாழவேண்டும். ஒன்றில் நான் 1 அல்லது, நீ! உன் நெஞ்சில் வீரம் இருக் தால், அரசனுகும் தகுதி உனக்கு அணுவேனும் இருக்குமானுல் எடு உன் வாளை !
(இளங்கோ எழுகிருர், சிரித்தபடியே செங்குட்டுவன்
அருகே
செல்கிருர், நற்சோணை அரியணையிலிருந்து இறங்கி
இருவருக்கு மிடையே சென்று நிற்கிருள்)
நற்.
இள.
எல்.
சணடைக்குச் செல்லவில்லை, அம்மா !
என்னைக் கொன்று விட்டுப் பின்பு உங்கள் வீரத்
தைக் காட்டுங்கள்.
1d.
தாயே! தங்கள் வயிற்றிலே பிறக்கும் பே அறு
பெற்றவன் நான். முறையற்றன செய்வேனு?
என்னை நம்புங்கள். நான் என் அண்ணனுடன்
(வியப்போடு) என்ன?
(செங்குட்டுவன் வாளை உறையிலே இடுகிருன்)
*

**
*
காட்சி 6 71.
இள. (தமையன் அருகு சென்று) அண்ணு! என்னைத் தவருக விளங்கிக் கொண்டீர்கள். இந்த அரியணை எனக்குத் துரும்பு. இகை 5ான் என்றுமே விரும் பியதில்லை.
கிமித்திகரே! உமது வாழ்க்கையிலே முதன் முறையாக நீர் தோல்வி அடைகிறீர். உமது வருபொருள் உரைக்கும் ஆற்றலை நான் புற ங் காணப் போகிறேன். இன்றிலிருந்து நான் ஒரு துறவி !
அன்னை மீதாணை, என் அருமைத் தமிழ் மீது ஆணை, நான் துறவி துறவி! துறவி! கனவிலும் கனவிலும் நான் எதிர்பார்த்த அந்த நாளும் வந்து விட்டது. குணவாயிற் கோட்டத்திலே ஐம் புலன்களோடும் போரிட்டு அவற்றை வென்றிடும் முயற்சியில் நான் ஈடுபடுவேன்.
(ஆடை அணிகளைக் கழற்றுகிருர், இடையில் மட்டும் ஓர் உடை)
என் உள்ளத்திலிருந்து என்னைப் பிரித்
தெடுத்து, இந்த உடலை மறைத்து, வாழ்வையே நரகமாக்கிய ஆடை அணிகள் இதோ உள்ளன.
(சேரலாதன் முன்பு வைக்கிருர்) நான் வருகிறேன். (இளங்கோ போகிறர். நற்சோணை 'மகனே இளங்கோ!' என்று கதறி அறிவு கெடுகிருள் சேரலாதன் அவளைத் தாங்கியபடி கண்களில் நீர் சோர நிற்கிருன். செங்குட்டு
வன் பெருமூச்சு விடுகிருன். அவையோர் சித்திரப்பாவைகள் போல நிற்கின்றனர். இளங்கோ தாயைத் திரும்பிப் பார்க்

Page 41
72 சிலம்பு பிறந்தது
கிறர். முகத்திலே ஒரு சிறிதுவேதனை. பின் திரும்பி உறு
தியே கால் கொண்டு நடப்பதுபோல நடந்து செல்கிருர்,
பின்னணியில்: .
'நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது’
− (என்ற குறள் இசைக்கப்
VA, ,
(திரை)
/*
திரை பின்வசனம்
இளங்கோ துறவியானர் : இளங்கோ அடிகளானர் ; ஆண்டுகள் சென்றன. சேரலாதன் மறைந்தான். செங்குட் டுவன் அரசனனன். " . . .
இளங்கோ பேராற்றங் கரையிலே கண்ணகி கதையை அறிந்தார். அவரது கற்பனைப் பறவை சிலப்பதிகாரம் என்ற வானிலே, தன் வண்ணச் சிறகுகளை விரித்துப் பறந்தது.
செங்குட்டுவன் உறையூரிலே கண்ணகிக்குக் கோயில் எடுத்தான். அவனது ஆற்றல் முன் அடிபணிந்த கணக விசயர் தங்கள் தலையிலே சுமந்து வந்த கல்லிலே கண்ணகி கோயில் சிறப்புற எழுந்தது.
அன்று கண்ணகி கோயில் எழுந்த ஓர் ஆண்டு நிறைவு விழா.
 

*برابر
ܕ ܼ ܝܓ݂ܖܫ ܗ¬ *
காட்சி 7
(உறையூர்க் கண்ணகி கோட்டம். வாயிலிலே இரு காவலர் நிற்கின்றனர். உள்ளே விளக்குகள் ஒளி காலு கின்றன. அவற்றின் ஒளியோடு போட்டியிட்ட வண்ணம் கண்ணகியின் சிலை ஒளியை உமிழ்கிறது. அழகான சிலை !
இளங்கோ வருகிறர். காவலர் பணிந்து"வணங்குகின்ற னர். தலையை அசைத்தவண்ணம் அவர் உள்ளே நுழைகி (m?ff.
வெளியே பேரிகைகளும் இசைக் கருவிகளும் முழங்கு கின்றன. 'பத்தினி வாழ்க !" என்றும், “கனக விசயர் தலையிலே கல் எடுத்த செங்குட்டுவன் வாழ்க!” என்றும் பலவகை ஒலிகள் எழுந்து குமைகின்றன.
இளங்கோவடிகள் கண் இமைக்காது கண்ணகி சிலை யையே சில விநாடிகள் நோக்குகிருர், மூகத்தில் துன்பம் கவிகின்றது.)
இள. தாயே !
சென்ற ஆண்டிலே பேராற்றங்கரையிலே நீ உன் கணவனேடு வான் வழி சென்ற கதை யைக் கூறினர் வேட்டுவர்; செங்குட்டுவனைச் குழ்ந்திருந்த நாம் இறும்பூதெய்தினுேம், 'கண்ணகி என்ற கற்புத் தெய்வம் வாழ்ந்த நாளிலே நாமும் வாழ்ந்தோம்’ என்று பெருமிதம் அடைந்தோம்,
அன்றிலிருந்து உனக்குச் சொற்கோயில் எடுப்பதே என் கடனுயிற்று. உனது கதையின் துணைக் கொண்டு தமிழகத்தின் இன்றைய நிலையை எடுத்துரைக்க எண்ணினேன். சிலப்பதிகாரம் மக் களின் காப்பியம் தாயே! மக்களின் காப்பியம் !
ஆனல், இதனை முற்முக மன்னன் காப்பிய மாகவே ஆக்குதல் வேண்டும் என்று செங்குட்டு
சி - 9

Page 42
74 சிலம்பு பிறந்தது
re ܚ
வன் என்னை வற்புறுத்துகிறன். ‘வஞ்சிக் காண்டம் தன் கீர்த்தியையே பாடுதல் வேண்டும்' என்று
ܟ݂.
لله
அவன் எதிர்பார்க்கிருரன்.
ག
நான் எப்படி 'அவன் கட்டளையை நிறை வேற்றுவேன்? போரைவெறுப்பவன் நான் புகழை வெறுப்பவன் நான் 1 கொலை, வெறி என்றலே என் நெஞ்சம் கருகுகிறது.
கனகவிசயரின் அடிமைத் தனத்தின் மீது உன் கோயில் எழுந்தது. வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்ற குருதியிலே உன் புகழ் எழுந்தது! புகழா அது ? அல்ல! கானல் நீர்! கொலைவெறியின் பழிச்சின்னம் ?
இந்தக் கொலை ஈர்களின் புகழை நான் எப் படிப்பாடுவேன் தாயே! எப்படிப் பாடுவேன்? (கண்மூடி நிற்கிருர், வேதனை அவரது முகத்தில் குடி கொள்கிறது. பின் முகம் வெறுப்பை வெளியிடுகிறது )
. . .
: ஆம் ! புகார்க்காண்டத்துடனும், மதுரைக்
'கொண்டத்துடனும் உன் கதை முடிகிறது. வஞ்சிக் ார் காண்டத்தின்ல் அதை வளர்த்திட மாட்டேன்.
. இதோ-வஞ்சிக்காண்டத்திலே நான் எழுதிய {ʻi"Y, •
பகுதிகள் இவற்றை, இப்பொழுதே உன் முன்றி : லிலே எரித்து விடுகிறேன்.
(விளக்குச் சுடரிலே ஏட்டுக்கட்டைப் பிடித்து எரிக்கிருர், எரிந்து முடிந்ததும் பெருமூச்சோடு வெறிகொண்டவர் போலப்பேசுகிருர்) -
(! ! ! ! !“ - - ''' مر" . یہ - இள, கற்புக்கனலே! மதுரையை எரித்ததோடு உன்
வெறி அடங்கியது. வஞ்சிக்காண்டத்தை எரித் ததோடு என் வெறி அடங்கியது "
* 'ry
// { s',

காட்சி 1. tତି
தனிமனிதன் ஒருவனின் செயலிற்காக மது
ரையையே எரித்தாய் நீ. நானே தனி மனிதனின்
புகழ் வெறிக்காக, கொலை வெறிக்காக எனது கற் பனைக் கருவூலத்தையே எரித்தேன்.
,ெ (அமைதியாகச் சிறிது பொழுது நிற்கிருர்)
இன்னும் சிறிது நேரத்தில் செங்குட்டுவன், மன்னர் பலர் சூழ இங்கு வருவான். தூய்மையின் பிழம்புருவான உனது முன்றிலிலே களியாட்டங் கள் தூளிபறக்கும். அவற்றைக் கண்டும், கேட்டும் நெஞ்சை ஊதுலைக் குருகாக்க நான் விரும்ப வில்லை,
சிலம்பு பிறந்தது ; ஆனல் என் நெஞ்சில் அமைதி பிறக்கவில்லையே, தாயே! எனது காப் பியத்தால் மக்களின் வாழ்க்கையை மாற்றிட முடி யவில்லையே தாயே ? கள்ளும், காமமும், பொய்யும், புலைமையும் நிலைத்துத் தானே வாழ்கின்றன !
(கண்களில் நீர் முட்டுகிறது. மரம் என ஆடாது ஆசை யாது கண்மூடிநிற்கிருர். பின்பு குனிந்து எரிந்த ஏட்டுக் கருகல்களை ஒன்று திரட்டி ஒரு துணியில் இட்டு முடிகிருர், அதனேடு ஒர்ஏட்டில் ஏதோ எழுதி அதனை அந்தத் துணிமுடிச் சில் சொருகுகிறர். பின் நிமிர்ந்து கண்ணகி சிலையை ஒரு முறை நோக்குகிமுர். அந்த முடிச்சைக் கண்ணகி சிலையின் காலடியில் வைத்து வெளியேறுகிருர், காவலர்கள் வியப் போடு அவரது செயலை நோக்கி நிற்கிருர்கள்.
". 。、
சிறிது நேரத்தில் செங்குட்டுவன் மன்னர் புடைசூழ உள்ளே நுழைகிருன். சிலையை வணங்கியபின் கீழே உள்ள பீடங்களில் அவரவர் தகுதிக்கேற்ப அமர்கின்றனர். ச்ெங் குட்டுவனின் ஒருபக்கத்தில் வெற்றிவேற் செழியனும், மறு பக்கத்தில், சீத்தலைச்சாத்தனர் என்ற புலவரும் இருக்கின் றனர். ". . . . v s.ʼ., . . . .
சி - 10

Page 43
சிலம்பு பிறந்தது
{ } { ', ' ! ) 22 °' கை மகா ய
செங். : (எழுந்து) அன்பர்களே! 1,1.12 14)
- பத்தினிக்குக் கோயில் எடுத்த முதலாவது ஆண்டு விழா இது. இந்த விழாவிலே பாண்டிய இளவலாம் வெற்றிவேற் செழியரும், கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், கலந்து கொண்
டமை பெரும் பேறேயாகும்.
' -
எனது அழைப்பினை ஏற்று இவ்விழாவிலே - 1 கலந்து கொள்ள வந்த உங்கள் அனைவரையும்,
"வருக, வருக!'' என வரவேற்கின்றேன். எல்.:
கனக விசயரை அடக்கிய காவலன் வாழ்க! ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்ற இளவல் வாழ்க! பத்தினிக்குக் கோயில் கண்ட பதியே வாழ்க ! செழியன் பழி துடைத்த செம்மல்! வாழ்க!
(வாழ்த்தைத் தொடர்ந்து நடனம் தொடங்குகிறது. செங்குட்டுவனைத் தலைவனாய்க் கொண்டு ஒரு தலைவி காமத் தால் உடலிளைத்த நிலையில் அவனைப் பழிப்பதுபோற் பர வலாய் அமைந்த (நிந்தா ஸ்துதி) பாட்டிற்கு ஒரு பெண் அழகாக அபிநயம் பிடிக்கிறாள். அந்தப் பாட்டின் இடை இடையேகண்ணகி திறமும் பேசப்படுகின்றது. ஆடல் முடியும் வேளையில் ஓர் ஏவலன் நுழைகிறான்.) ஏவ : (வாய்புதைத்து) வேந்தே! செங் : என்ன ? எவ: விருந்து தயாராகி விட்டது. மடைத்தலைவர் அறி
வித்து வரச் சொன்னார். செங். நன்று! நீ போ. நாம் வருகிறோம். நண்பர்களே!
வாருங்கள். ''சிறியகட்பெறினே'' என்ற ஒளவை ''
யார் பாடலை நீங்கள் அறிவீர்கள். அதியமான் சிறிது 'கள்' பெற்றால், புலவர்க்கு அதை அளித்து
+(!

الاسي.
காட்சி 7 77.
அவர்கள் அதை அருந்துவதையும், அதன் பய ணுகப் பாடுவதையும் கேட்டு மகிழ்வானும், பெரும் அளவிலே ‘கள்’ கிடைத்தால் புலவரோடு சேர்ந்து தானும் உண்டு களிப்பானும், அவன் வழியிலே வந்தவர் நாம். வருக ! கள்ளுண்டு களிப்போம்
இம்முறை யவனத்தில் இருந்து முந்திரிகைச்
சாறும் வரவழைத்துள்ளேன்.
வெற். ஆஹா 1 அந்த முந்திரிகைச் சாற்றைச் சுவைத்து ஆண்டுகள் பலவாகின்றன. அதன் சுவையும் அது தரும் வெறியும். செங். சொல்லுக்கு அடங்காதவை என்று சொல்லித்தான தெரியவேண்டும் ? சரி சரி! விருந்து காத்திருக் கிறது. வருக ! (எழுகிருன், எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு தொடர்கின்றனர். அது காலை வாயிற் காவலன் வந்து செங்குட்டுவன் முன்பு பணிவோடு நிற்கிருன்.)
எவ. இறைவ! தாங்கள் வருமுன்பு இளங்கோவடிகள்
இங்கு வந்திருந்தார்.
செங். வந்தாரா? நன்று, வஞ்சிக்காண்டத்தை எழுதி முடித்திருப்பார். நாளையே அரங்கேற்றுவோம். அவரின் சொற்கோயிலால் எனது கற்கோயிலும், வீரமும் என்றும் நிலைக்கப்போகின்றன. மகிழ்ச்சி
(நடக்கிருன். ஏவலன் அவன்முன்னல் போய் அச்சத் துடன் வாய்புதைத்து நிற்கிருன்.)
ஏவ. வேங்தே ! தங்களின் எண்ணம் ஈடேரு தவகையில்.

Page 44
18
சிலம்பு பிறந்தது
செங்.: (வெகுளியோடு அவன் கன்னத்தில் அறைந்து)
'')''. என்ன ?
அவன
எவு.: (கன்னத்தைத் தடவியபடி) அவர், தாம் எழுதி
4) வந்த வஞ்சிக் காண்டத்தை எரித்து விட்டார்.
(பக்கலிலே நின்ற சீத்தலைச் சாத்தனார் அதிர்ச்சி அடை கிறார். கண்கள் நிறைகின்றன] - சீ.சா.: ஐயையோ! கலைக்கோயிலின் ஒரு பகுதியையே
அடிகள் உடைத் தெறிந்து விட்டாரே! (செங்குட்டுவன் வெறி கொண்டவனாய் ஏவலனின் சட் டையைப் பற்றிப் பிடித்தபடி]. செங்.: அடேய்! பொய் சொல்லாதே. க இங்கே என்ன
நடந்தது. சொல்? ஏ வ.: 1 (செங்குட்டுவனின் காலில் விழுந்து) வேந்தே!
நான் சொல்லி முடிக்கும் வரை தங்கள் வெகு ளியை என்மீது காட்டாதீர்கள். தங்களைக் கெஞ்
சிக் கேட்கிறேன். செங் : (சட்டையைப் பிடித்திருந்த கையை எடுத்து) சரி
சொல்! ஏவ. : இங்குவந்த இளங்கோவடிகள் நெடு நேரமாய்க்
கண்ணகி சிலையை நோக்கிப் பேசியபடி இருந்தார்.
துன்பம் அவர் முகத்திலே கவிந்து கிடந்தது. 111. !
அவர் பேசியது என்ன வென்று எனக்கு விளங் (1)
கவே இல்லை.
இறுதியாகத் தாம் கொண்டுவந்த ஏடுகளை விளக்கில் இட்டு எரித்தார். அப்பொழுது அவர் உரத்த குரலிலே “வஞ்சிக் காண்டத்தில் நான்
11

காட்சி 7 7. 9
எழுதிய பகுதிகள் இதோ. இவற்றை இப்பொ ழுதே, உன் முன்னரே எரித்து விடுகிறேன்’ - - .என்று சொன்னர் "ל,
அந்த ஏடுகள் எரிந்தபின்பு, அவற்றைச் சேர்த்து ஒரு துணியில் முடிந்தார். ஏட்டில் ஏதோ எழுதி அந்த முடிச்சிலே சொருகினர்.
(ஓடிச் சென்று முடிச்சை எடுத்து வருகிறன்)
இதோ அந்த முடிச்சு ; இதுதான் அவர் எழுதிய ஏடு.
(ஏட்டைச் செங்குட்டுவன் கையிலே கொடுக்கிருன்.)
செங்.: (ஏட்டைச் சாத்தனுரிடம் கொடுத்து சீத்தலைச் சாத்தனரே! நீரே அதைப் படியும் ; கேட்போம். சா.: (படிக்கிறர்) செங்குட்டுவ!
இத்துடன் வஞ்சிக்காண்டத்தின் சாம்பரைக் கட்டி வைத்திருக்கிறேன். வெறு ம் சாம்பரா அது ? அல்ல. உன்போன்ற அரசரின் கொலை வெறியையும், புகழ்வெறியையும் தாங்க முடியாத ஒரு மெல்லிய உள்ளத்தின் எரிந்த சிதைவுந்தான் அது !
என்னை மன்னித்துக்கொள். விரத்தின் பெய -ரால் மனிதத்தலைகளைப் பந்தாடிய உன்னையும் ஒரு பொற்கொல்லனுக்காய் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்ற செழியனையும் என் காப்பியத்தில் வாழ வைக்க என்னுல் முடியாது.
(செங்குட்டுவன் வெறிச்சிரிப்புச் சிரிக்கிருன்.)
சா.: மன்னவ ! உன் சிரிப்பிற்குக் காரணம் என்ன ?

Page 45
80
சிலம்பு பிறந்தது
செங்.:
சாத்.
(ଗ 3F($j.:
அடிகள், 'தாம், ஒருவர் தாம் புலவர், தமிழ் தெரிந்தவர்' என்று பெருமிதம் கொள்கிருர் என்
செல்வமும், வீரமும், புகழும் எத்தனையோ புலவர் : களை என்னிடம் அழைத்திடும். பழமரம் நாடும்
பறவைகள் போல அவர்கள் என்னை நாடி ஓடி வருவார்கள். அந்தப் புலவர்களில் ஒருவரைக் கொண்டு வஞ்சிக்காண்டத்தை நிறைவு செய்வேன். இளங்கோவடிகளின் வயிறு எரிய எரிய அதை அரங் கேற்றமும் செய்வேன். நான் அரசன், என்னல் ஆகாதது ஒன்றும் இல்லை. (சிரிக்கிருன்)
: அரசே வாய் திறந்து ஒரு சொல் சொல்லும்.
மதுரையிலிருந்து ஆயிரம், ஆயிரம் புலவர்களை அழைத்து வருகிறேன். அவர்கள் மூலம் உமது இசையை வான் முட்டச்செய்கிறேன். நான் நினைத் தால் நாளையே வஞ்சிக் காண்டம் அரங்கேறும்.
வேந்தரே !
நீங்கள் ஆயிரம் புலவர்களைக் கொண்டு ஆயிரம் காப்பியங்களை ஆக்குவிக்கலாம். ஆனல் இளங்கோ வடிகளின் கற்பனை வளத்தை, கவின்பெறு பண் பினை, உள்ளத்தைத் தொடுகின்ற இயல்பினை. இந்தப்புலவர்கள் கனவுகாணக் கூடமுடியாது. அவர்
தெய்வப் புலவர் !
அதையுந்தான் பார்ப்போமே ? சரி ; நேரமாகிறது, வாருங்கள் விருந்துக்குப் போவோம்.
(எல்லாரும் போகிருர்கள். மேடையிலே சிறிது சிறிதாக இருள் சூழ்கிறது. விளக்குகள் அணைகின்றன.)
பின்னணி: காலம் விரைந்து சென்றது. உறையூர் வெறு
மூர் ஆயிற்று. கண்ணகி கோயிலும் அழிந்தது.
 
 

காட்சி 7 81
செங்குட்டுவனின் கற்கோயில் சிதைந்தது. இளங்கோவின் சொற்கோயிலோ காலத்தை வென்று நிலைத்து நிற்கிறது !
பின் வந்த பாரதி, 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றேர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு"
என்று புகழ்ந்து பாடினர், அதை!
செங்குட்டுவன் வஞ்சிக் காண்டத்தைப் பாடு வித்தான்; சிலப்பதி காரத்தோடு சேர்த்தான். அதனல் அவன் புகழும் சிலநாள் வாழ்ந்தது ! தமிழகம் தாழ்ந்தபோதெல்லாம் செங்குட்டு வனின் புகழ், கனகவிசயரின் தலையிலே கல் எடுப் பித்த புகழ் பேசப்பட்டு, தூங்கிய தமிழகம் தட்டி
எழுப்பப்பட்டது,
ஆணுல் இன்று 'மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் பேசுவதில் மகிமை இல்லை’ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனுல் சிறிது சிறிதாய்ச் செங்குட்டுவன் செயலும் மறக்கப்பட்டு வருகிறது. அவனை நினைப்போர் அருகி ‘இல்லை’ என்ற நிலையும் உருவாகின்றது.
ஆனல் இளங்கோ ? அவர் கவிஞர் ! காலம் அவரது அடிமை ! தமிழ் உள்ள வரையும். தமிழன் வாழும் வரையும், அவரின் புகழும் வாழும் !
வணக்கம்.

Page 46
يعتني 3,...,
··
%**rܙܕ. ." « -م .......... * {{ '; ' ከ" -- " :
- . .. , - ܗܝ .. '' '.'
" , , .
? - "" :ب • . " ;} . 1 - ' ” ܕܢ.
・ * 。 :● . . .
s -v་ (of a e s ●
་་་་་་་་་་་་་་་་་་་་་་་ .شیب ۰ بود -
ஆசாவாதம அசசகம
- - - is is . . . . 32, கண்டி வீதி
ܘ
" ": ' )%( ܀
- - " : யாழபபாணம.
-
,
,* \'", "\\\"");
,*,、 | ', '/' .. '\'','*پيو ( : '...{ . */
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 47


Page 48
SSG F
(2-6-1.
சிறுகதை, நாவல், நாடகம், கவிதை போன்ற இலக்கியத் துறை களில் பணியாற்றும் திரு. க. சொக்க ਭੰ என்ற *சொக்கன்" ஒரு தமிழாசிரியர். யாழ்ப்பாணம், ஆவ ரங்காலிலே பிறந்தவர் : பல கள் பெற்றவர்.
1946 இல் கடைசி ஆசை என்ற இவரது சிறுகதை மின்னுெளி பத் திரிகை நடத்தியசிறுகதைப் போட்டி யில் முதற் பரிசு பெற்றது. 1960ஆம் ஆண்டு தினகரன் சிறுகதைப் ே வது இடத்தைப் பெற்றது.
இரண்டு நாவல்கள், பல சிறு நாடகங்கள் இவரால் அவ்வப்போது இவரது கவிதைநூல்.
சொக்கனின் சிலம்பு பிறந்தது 1960-61 ஆம் ஆண்டுகளில் இல பரிசுகளைப் பெற்றன.
 

பாட்டியில் பிரயாணம் இரண்டா
றுகதைகள், ஏறக்குறைய இருபது எழுதப்பட்டுள்ளன. வீரத்தாய்
', 'சிங்ககிரிக் காவலன்' நாடகங்கள்
1ங்கைக் கலைக் கழகத்தின் முதற்