கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லை நகர் தந்த நாவலர்

Page 1
நல்லை நகர் . +LP)2)
8.சொ?
எழுபத்0
சண்முகநாதன்
யாழ்ப

---- ------
|-- - -- - - ---- -
S S S S S S S S
- - - -
- - - -
|- - |- - |- - |- - |- - |- |- - |- |- |- - - |- - |- -
- - -
- -
S S S S S S S S S S S

Page 2

NA VAGA E
ARL
1 HLIS
EARLALAI WEST
CHUNNAKAM
L U R R i R

Page 3

I *·
ό).
நல்லை நகர் தந்த Ab
ሎራ خدا درک
ாவலர்
(நாவலர் பாடியருளிய புலோலிநகர் பூரீ பசுபதீசுரப் பெருமானர் திருவூஞ்சலும், அவர் எழுதி வெளியிட் டருளிய "சைவமத சாரம்" என்ற துண்டுப் பிரசுரமூம் நூலின் இறுதியிலே அநுபந்தங்களாய்ச் சேர்க்கப்பட் டுள்ளன.]
சண்முகநாதன் புத்தகசாலை
யாழ்ப்பாணம்

Page 4
முதற் பதிப்பு: ஜூன் 1969
அச்சுப்பதிவு:
பூரீ சண்முகநாதன் அச்சகம் யாழ்ப்பாணம்
WM
வில் ரூபா 1-50
 
 

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள்
அளித்த
ஆசியுரை
நாவலர் அவர்கள் பற்றி, திரு. சொக்கன் தினகர னில் எழுதிய பல கட்டுரைகளைப் படித்ததுண்டு. அவர்
களைப் பற்றிச் சிந்திக்க ஒருவர் கிடைத்தாரே என்று
மனம் மகிழ்ந்தது. இப்பொழுது நிலையாய்ப் பயன்படும் வகையில் கட்டுரைகள் புத்தக வடிவில் வந்திருக்கின்றன. நாவலர் பெருமானின் ஆத்ம சக்தி சொக்கனிற் கலந்து மேன்மேல் ஊக்கமும், ஆக்கமும் பயப்பதாக,
கல்ாசாலை வீதி, சி. கணபதிப்பிள்ளே,

Page 5
வண்ணை வைத்தியேசுவர வித்தியாலய முன்னுள் அதிபர்
திரு. ச. அம்பிகைபாகன் அவர்கள்
வழங்கிய
வாழ்த்துரை
திரு. சொக்கலிங்கத்தைப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். இக் காலத்தில் அவருடைய பணிகளையும் ஆற்றல்களையும் என்னல் அறிதல் முடிந் தது. இலங்கைக் கம்பன் கழகத்தை நிறுவி அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இலக்கிய ரசனையை வளர்த்துள்ளார். அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத்தின் மூலம் பத் தியை வளர்ப்பதற்கு உதவியுள்ளார்.
திரு. சொக்கலிங்கம் முத்தமிழும் கைவரப் பெற்ற வர். இலங்கைக் கலைக் கழக நாடக எழுத்துப் போட்டி களிலே 1960-61 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து முதற் பரிசில்கள் பெற்ற இவர், பல நாடகங்களை எழுதி மேடை யேற்றியும் உள்ளார். வீரகேசரி நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசில் பெற்ற தோடு, வேறும் பல பரிசில்கள் இவருக்குக் கிடைத் துள்ளன். கடோபநிடதத்தில் வரும் நசிகேதனின் கதை
யைச் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்துக கல்கி
1966 ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியிட்டிருக் கிருர், ݂ ݂
இத் தகுதிகள் பல வாய்ந்த இவர் நாவலரைப் பற்றி ஒரு நூல் எழுதியிருப்பது பாராட்டுதற்குரியது. இந் நூலைத் திரு. சொக்கலிங்கம் ஆர்வத்தோடு எழுதியுள் ளார். குறுகிய காலத்திலே எழுதப்பட்டிருப்பதால் நூல் சுருக்கமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு விரிவான

(i)
நூல் நாவலரைப் பற்றி எழுதுவாரென எதிர்பார்க் கின்றேன்.
திரு. சொக்கலிங்கம் ஒரு வளரும் பயிர். அவருக்கு நல்ல எதிர்காலமுண்டு. இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் திடகாத்தித்தையும் அருள்வாராசு.
மணிமனை, ச. அம்பிகைபாகன் மல்லாகம், 25ー6ー69。

Page 6
உடுப்பிட்டி மெதடிஸ்த மிஷன் கல்லூரி ஆசிரியர் திரு. கா. நீலகண்டன் அவர்கள்
வழங்கிய சாற்றுகவி
சொக்க ரிைரும்புகழ் சொல்லப் புலவரெலா மிக்க மகிழ்வுடன் முன் மேவிடுவர் - தக்க
சுவையனைத்துஞ் செய்ய தமிழ்த்தாய்சீ ரேற்றி ாகவையனைத்துஞ் சாடுவதால் கன்று.
as Ir. gilé6v) as6zö7 Lldär மெதடிஸ்த கமிஷன் கல்லூரி, உடுப்பிட்டி.
 
 
 

திரு. ஆ. தேவராசன் அவர்கள் அளித்த மதிப்புரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற் ருண்டு ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்த காலம். செல் லரித்து, சிதைந்து கிடந்த ஏட்டுச் சுவடிகள் அச்சு வாக னம் ஏறிய காலம் இந்தக் காலம். ஏட்டுச் சுவடிகள் அச்சேற்றப் பெற்ற நூல்களாக வெளிவந்தமை புதுமை என்பதால் இந்த முக்கியத்துவம் கிடைத்துவிடவில்லை, அச்சேற்றப் பெற்றதால், தமிழ் நூல்கள் ஒரு பரந்த வட்டத்திலே பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது ஏட்டுச் சுவடிகள் மேலும் அழிந்து போகாது ஓர் அரண் அமைக்கப்பட்டது. இதற்கு க் காரணமாயிருந்தவர் நல்ல நகர் ஆறுமுகநாவலர் அவர்கள் என்பது வர லாற்று உண்மை.
நாவலர் பெருமானின் இந்தப் பணி தமிழ் நூல் களைப் பொறுத்தவரை தலையாய பணி - வரலாற்றுத் திருப்பம் தந்த பணி. இதைப் பற்றித் திரு. வி. க. கூறும்பொழுது - "நூல் வெளியீட்டுக்குக் கால்கோள் கொண்டவர் நாவலர்' என்று மனமாரப் பாராட்டு கின்ருர்,
1577ஆம் ஆண்டிலேயே தமிழ் எழுத்துக்கள் மரத்தில் செய்யப்பட்டிருந்தாலும், அவை நமது நாட்டு இலக்கி யங்களைப் பதிப்பிக்க உதவவில்லை. கிறித்துமத போதனை நூல்களும் சைவ சமய நிந்தனை நூல்களுமே வெளியிடப் பட்டன. 1834 ஆம் ஆண்டுக்குப் பின்னரே நம் நாட்டு மக்கள் அச்சு எந்திரம் வைத்து நம் நாட்டு நூல்களை யும், நம் நாட்டு வளர்ச்சிக்கான கருத்துக்களையும், வெளியிடும் அளவுக்குப் பதிப்புச் சட்டம் தளர்த்தப்பட் டது ஆட்சிபீடத்தில் இருந்த அந்நியர்கள் நிர்வாகத் தேவைக்காக இந்நாட்டு மொழிகளையும் பயிலவேண்டி

Page 7
(vi)
ஏற்பட்டது; இதே நிலை தமிழ் நாட்டிலும் இருந்தது: அதற்காகச் சென்னையில் அந்நியர்கள் நடத்திவந்த கல் விச் சங்கம் இருந்தது. அதில் தமிழும் கற்பிக்கப்பட் டது. தாண்டவராய முதலியார் தமிழ்ப் மண்டிதராக நியமிக்கப்பட்டார். அவர் சில தமிழ் நூல்களை அச் சேற்றி வெளியிட்டா ரெனினும், அவை தமிழ்க் கல் விக்கோ, நம் நாட்டு வளர்ச்சிக்கோ ஏற்றவையாக இருக்கவில்லை; இருக்கக் காரணமும் இல்லை. அவை அந் நியர்களுக்காய் வெளியிடப்பட்டவை. -
இந்தச் சூழலில்தான் 1849 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் அச்சு எந்திரம் பெற்றுத் தமிழ்க் கல்விக்கான நூல்களையும், நம் நாட்டு மக்கள் உள வளர்ச்சிக்கான நூல்களையும் வெளியிட்டார், அவற்றைத் தாம் அமைத்த தமிழ்க் கல்விக் கூடங்களில் பாடநூல்களாகவும் வைத் துப் போதித்தார். இதனல் தமிழ் மக்களுடைய மலர்ந்த வாழ்வுக்கான சிந்தனைப் புரட்சிக்கு வித்திட் டார், அடிமை மனப்பான்மை, சிறர்கள் மத்தியிலும் விலகத் தொடங்கியது.
இத்துடன் நின்றுவிடாது பொதுமக்கள் மத்தியிலும் நமது பாரம்பரியங்களைப் பேணக்கூடிய கருத்துக்களைப் பரப்பினர் : சைவ சமயக் கருத்துக்களையும் பரப்பினர். இதற்குச் சொற்பொழிவுக் கலையைத் தமிழில் முதன் முதலில் புகுத்திச் சீர்பெறக் கையாண்டார். வசன
நடையைப் புகுத்தி, அதைப் பொதுமக்கள் பயன்பெறக்
கூடிய அளவுக்குத் தெளிந்ததாய், இ ல குவா ய் க் கையாண்டார். இது அவர் தமிழ் மொழிக்கே செய்த வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டாகும். அவர் செய்த தொண்டுகள் பல, தமிழின் வரலாற்றில் திருப்பு முனை களாய் அமைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அவர் செய்த தொண்டுகள் ஒரு காலகட்டத் திருப் பத்தின் விளைநிலனய், நிலைக்களமாய் அ  ைம ந் த ன. அவரே ஓர் இயக்கம் ஆனர். அந்நியர் ஆட்சி வெறியை, அவர்களால் ஏற்பட்ட பல்திறப்பட்ட அழிவுகளைப்

(vii)
பொதுமக்கள் புரியுமாறு வைத்தார். சமயத் துறையி லும், சைவ சமயக் கருத்துக்களை வெளியிட்டதோடும், சைவ சமயத் தாக்கல்களுக்கு விடையிறுத்ததோடும் நின்றுவிடாமல், சைவ சமயச் சீர்திருத்தங்களையும் பல முறை வற்புறுத்தினார்;. தவறாக ஒழுகியவர்களைக் கண் டித்தார்.
சிந்தனையாளர் - சீர்திருத்தவாதி - பாரம் பரிய க் காவலர் - தமிழ் . நூற் பதிப்பாளர் - தமிழ்க் கல்வி ஆசான் - சைவ நெறிக் காவலர் - சொற்பொழிவாளர் - என்றிருந்த நாவலர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்த கொடூர பேதி நோய்க் காலத்தில் வன்றொண்டராய் மாறினார். அசையாது அநியாயம் செய்த அரசாங்க அதிபர் துவைனம் துரையை ஆட்டிப் படைத்தார். அதன் பின் சேர்.பொன்.இராமநாதன் அவர்களின் அரசி யல் ஆசானாய் மாறினார். இராமநாதன் செய்த அரசி யற் சேவை நாவலர் வளர்த்த தேசியத்தின் தொடர்ச்சி.
நாவலர் ஒரு காலகட்டச் சிற்பி - சுதந்திர உணர்வு கொண்ட ஒரு சமுதாய எழுச்சியின் பிதாமகன்; தேசி யத்தின் தந்தை. நாவலர் காலம் தமிழ் இலக்கிய வர லாற்றில் ஒரு திருப்பு முனை - பத்தொன்பதாம் நூற் றாண்டின் பிற்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் நா வ லர் காலமாகத் திகழ்கிறது. தேசிய வளர் ச் சி யி ல், சுதந்திர வேட்கையில் நாவலர் காலம் ஒரு திருப்புமுனைக் காலம்.
அந்நியர் ஆட்சிக்காலத்தில் வரலாறு எழுதியவர்கள் நம் நாட்டு எழுச்சியை மூடி மறைத்தே எழுதி வந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் வரலாறு எழுதியவர் கள் கூட நம் நாட்டு வரலாற்றில் புகுத்திய இருளை முற்றாக அகற்றிவிடவில்லை. அந்த அளவிலே பாதிக்கப்பட்டிருந் தவர் நாவலர். நாவலர் வரலாற்றுப் பெருந்தகை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களும், தமிழ் மக்க ளின் வரலாற்று ஆசிரியர்களும் நாவலருக்கு அளிக்க வேண்டிய இடத்தை அளிக்கத் தவறி விட்டார்கள் ,

Page 8
(viii)
தமிழ் நாடே இன்று தமிழ்நாடு என்று பீடுநடை போடு கிறதென்றல், அங்கும் தமிழ்த் தேசியம் வளர வித்திட் டவர் நாவலர் என்பதை மறைத்துவிட முடியாது. தமிழ் நாடு நாவலருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. அந்த நன்றிக் கடனை விரைவில் தமிழ்நாடு செலுத்தி வைக்கும் என்று நம்புவோமாக.
இன்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. எதை யும் காலச் சூழலின் பின்னணியில் வைத்து எடை போட்டு மதிப்பு வழங்கும் ஆராய்சிப் பண்பு வளர்கி றது. அந்த அளவில் நாவலர் பெருமான் வரலாறும் புத்துயிர் பெற்று வளர்கிறது. புத்துயிர் பெற்ற நாவலர் பெருமான் வரலாற்றைப் பரப்புபவர்களின் முன்னணி யில் இந் நூலாசிரியர் திரு. க. சொக்கலிங்கம் அவர்களும் ஒருவர்.
திரு. சொக்கலிங்கம் (சொக்கன்) தமிழ் எழுத்துல கிற்குப் புதியவரல்லர். அவர் தமிழ் மொழிக்குப் பல துறைகளில் அணிசெய்துவரும் பல்வகைத் திறமை பூண்ட ಶ್ಲೆ 5767ಗೆ. எழுத்துத் துறையில் பழுத்த அநுபவ g|T 6ül .
* நல்லை நகர் தந்த நாவலர்” என்ற தொடரில் அவர் ** தினகரன் " பத்திரிகையில் நாவலர் வரலாற்றை எழுதிவந்தபொழுது நான் அவற்றை அக்கறையுடன் படித்தேன். வரலாற்றுப் பின்னணியில் எதையும் ஆரா யும் திறமை அவரிடம் நிறைய உண்டு. அதன் பெறு பேறுதான் இந்த நூல். இதை நூல்வடிவில் வெளியிட வேண்டும் என்று விரும்பிக் கூறியவர்களில் நானும் ஒரு வன். இன்று அது நனவாகிவிட்டதில் மகிழ்ச்சி அடை கிறேன்.
இந்த நூல் மிகுந்த செல்வாக்குப்பெறும் என்பதில்
நான் சிறிதும் ஐயம் கொள்ளவில்லை. "தொடர்க அவர் தமிழ்ப் பணி !" என்று வாழ்த்துகிறேன்.
ஆ, தேவராசன்
வடமாநிலக் கல்வித் திணைக்களம்,
யாழ்ப்பாணம், 26-6-69.

வ சிவமயம்
முகவுரை
யாழ்ப்பாணத்துச் சைவத் தமிழ் மக்கள். தமது நீண்ட துயிலிலிருந்து எழுந்து, தம்மைச் சைவராய் வாழவைத்த மகானுக்குச் சிலை எடுத்தல் வேண்டும் என்று கங்கணம் கட்டி முனைந்து நிற்கும் இவ் வேளையிலே, நான் தினகரனில் எழுதிய கட்டுரைகள், "நல்லை நகர் தந்த நாவலர்" என்ற தலைப்பில் நூல் வடிவம் பெறுகின் றன. இஃது நான் செய்த தவப்பேறே.
இக் கட்டுரைகள் அச்சிற் போய்க்கொண்டிருக்கும் வேளையில் நாவலர் பெருமானின் கைபடப் பதிப்பான அவர்தம் நூல்கள் பலவற்றைக் காண்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிட்டிற்று. பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சபை யார் நாவலர் விழாவை யொட்டி எடுக்கும் விழாவின் சார்பாய் நடாத்தவிருக்கும் புத்தகக் கண்காட்சியின் செயற் குழுவில் அமைப்பாளனய் அமர்ந்தமை, இவ் வாய்ப்பை நல்கிற்று. சென்ற நூற்ருண்டில் வெளியான அந் நூல்களின் அமைப்பையும், பொருட் சிறப்பையும் நோக்க இவை யாவும் ஒரு தனி மனிதரின் வேலைகளா என்று நான் அடைந்த மலைப்பு இன்னும் நீங்கியபா டில்லை. இவற்றையெல்லாம் ஆராய்ந்து மிக விரிவான "நாவலர்" வரலாற்று நூல்களும், ஆராய்ச்சி நூல்களும் வெளிவரல் வேண்டும் என்பது எனது வேணவா, அறி ஞர்கள் இத் துறையிலே முயல்வார்களாக,
இவ்வாண்டு, பத்திரிகைகளில் நாவலர் பற்றி வந்த கட்டுரைகள் மிகப் பல, நண்பர் திரு. ச. தனஞ்சய ராசசிங்கம் அவர்களின் "நாவலரின் நற்பணிகள்" என்ற ஆராய்ச்சி நூலும் அண்மை யில் வெளிவந்துள்ளது,

Page 9
(x)
இவற்றிற்குப் பிறகும் எனது கட்டுரைகள் நூல் வடிவம் பெறுவது, எனது முரட்டுத் துணிச்சலின் வெளிப்பாடன்று நாவலரைப் பற்றி நானும் சில கூறல் வேண்டும் என்ற என் பேராசையின் பிரதிபலிப்பே. இவ்வாசையிலே குற்றம் இல்லை எனக் கருதுவோர்க்கு இந்நூலை அன்புக் காணிக்கையாக்குகின்றேன்.
"நல்லை நகர் தந்த நாவலர் கட்டுரைகளை முதலில் வெளியிட்ட தினகரன் நிறுவகத்தினர், அவற்றை அழ குற நூலாக்கி உங்களிடையே தவழவிடும் பூரீ சண்முக நாத அச்சக அதிபர், ஆசியுரைகள் வழங்கிய பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை. திரு. ச. அம்பிகைபாகன், சாற்றுகவி அளித்த ஆசிரியர் திரு. கா. நீலகண்டன், அணிந்துரை தந்த நண்பர் திரு. ஆ. தேவராசன் ஆகி யோர்க்கு எனது உளங்கனிந்த நன்றி உரியதாகுக.
க. சொக்கலிங்கம் நாயன்மார்கட்டு, ( சொக்கன் )
யாழ்ப்பாணம்.


Page 10

நாவலர் காலத்து நம் நிலை
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனுல் எற்றைக்குந் திருவரு ஞடையோம்.
(திருத்தொண்டர் புராணம் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனுர் புராணம்) *,
"இன்று கிறிஸ்தவரல்லாதாருடன் நமது வாழ்வைத் தொடங்கி விட்டோம். எமது தலைவரும், காவலருமாகிய கர்த்தரின் திருவுள்ளப்படி அவரின் அழைப்பினை ஏற்று." அவரது திராட்சைத் தோட்டத்திலே உன்னத சேவை யாற்ற நாம் எம்மை அர்ப்பணிக்கிருேம். வல்லமை குறைந்த இந்தப் பாத்திரங்களைக் கருவிகளாக்கித் தமது திருநாமத்தை இம் மக்களிடையே பரப்ப அவர் பயன் படுத்துவாராக; தமக்கு உண்மையாயிருக்க எம்மை ஆசீர் வதிப்பாராக; எமது முயற்சியை வெற்றியோடு முற்றுவிப் பாராக"
1816ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆந் தேதி யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பழையைத் தமது முதலாவது வசிப்பிடமாய்க் கொண்ட கிறிஸ்தவ போதகர் இருவரின் முதற்செபம் இவ்வாறு தொடங்கிற்று. வந்தனைக்குரிய எட்வேட் Gurpaðir, * (Rev. Edward Warren) 6ujë. 56or të j5 LIT Gofusi) if (Rev. Dr. Daniel Poor) gldu (36i. 605 வரும் அமெரிக்க நாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள். அஞ்ஞானிகளாகிய எம் மூதாதையர்களை மெய்ஞ்ஞானிக. ளாக்கிக் கருத்தரின் மந்தைக்கேற்ற நல்ல ஆட்டுக்குட்டி களாய் ஆக்குவது இவர்களின் நோக்கம்! " திராவிட
BIT - 1

Page 11
2 நல்லைநகர் தந்த நாவலர்
மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய கால்ட்வெல்ட் ஐயரால் "கீழைத் தேயத்தின் கிரேக்கர் அல்லது ஸ்கொட் லாந்தினர்" என்று புகழப்பட்டவர்களும், அயரா உழைப் பும், ஆற்றலும் வாய்ந்தோருமாகிய தமிழரில் ஒரு பிரிவின ரான யாழ்ப்பாண மக்கள் மீது இவர்களின் கடைக்கண் ணுேக்கு விழுந்ததில் வியப்பில்லை.
இவ்வாறு 1816இல் தெல்லிப்பழையிலே இடப்பட்ட கிறிஸ்தவ சமய வித்து, வளர்ந்து, மரமாகி வட்டுக் கோட்டை, உடுவில், பண்டத்தரிப்பு முதலாமிடங்களுக்குந் தன் கிளைகளைப் பரப்பலாயிற்று. ஆங்கிலக் கல்வியின் பின்னணியில் மதப்பிரசாரம் மிக விரைந்து பரந்தது, இவ் வளர்ச்சிக்கு வேண்டிய ஊக்கமும், ஆக்கமும் ஆங்கில ஆட்சியாளரிடமிருந்துங் கிடைத்தால் சொல்லவா வேண் டும்? தெல்லிப்பழை தலைமைப் பீடமாயிருந்தாலும், வட்டுக் கோட்டையே கல்விப் பீடமாய் அமைந்தது. அங்குச் செமினரி என்ற நாமத்தோடு, அது நாளொரு மேனி யாய் வளர்ந்தது. உடுபுடைவை, உணவு, விடுதி வசதி, இலவசக் கல்வி முதலான வாய்ப்புக்கள் ஆரம்பத்தில் இங்கு அளிக்கப்பட்டமையால் மாணவர் தொகை பெருக லாயிற்று; பெருகவே மதமாற்றமும் எளிதாயிற்று.
படிப்படியாக ஆங்கில அரசு வலி பெறத் தொடங்கிய பொழுது, ஆங்கிலக் கல்வியின் இன்றியமையாமையை
மக்கள் உணரத் தொடங்கினர். இவ்வுணர்ச்சியைப் பயன்
படுத்திக் கிறிஸ்தவ பாதிரிமார் தம் சமயச் சார்பான நூல்களை ஆங்கிலக் கல்வியின் பெயரால் கற்பிக்க வழி பிறந்தது. பெயரளவில் தமிழும் கற்பிக்க வேண்டியிருந் தமையால் அவர்கள் தமிழ்க் கல்வியையும் தமக்குச் சார் பாக்கிக் கொண்டனர். நாட்டு மக்களின் சமய, பண் பாட்டு நெறிகளைக் குறைத்துக் கூறியும், அவை பயனற் றவை, மூட நம்பிக்கைகள் மலிந்தவை என்று காட்டியும் அவர்கள், தம் பிரசாரத்திற்கு வலிவேற்றினர்.
3.

நாவலர் காலத்து நம் நிலை
1843 இல் வட்டுக்கோட்டை செமினரியின் பாடத் திட் டம் அமைக்கப்பட்டிருந்த வகை இது. ஆறு ஆண்டுக் கல்வித் திட்டத்தினை உள்ளடக்கியிருந்த இதிலிருந்து,
• ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் ' என்றாற் போல இரண்டாண்டுத் திட்டத்தை மாத்திரம் இங்குத் தருகிறோம்.
முதலாம் ஆண்டு ஆங்கில பாடங்கள்
எண்கணிதம், புதிய ஏற்பாடு, பகுத்துணர் வாசிப்பு நூல், (Analytical Reader) ஆங்கில இலக்கணம், சைல்ட் எழுதிய ஆவி பற்றிய நூல் (Child's book on the soul) ஹிந்துஸ்தானின் புவியியல், தமிழ்ப்பாடம், இலக்கணம்.
இரண்டாம் ஆண்டு ஆங்கில பாடங்கள் |
புவியியல் (வூட்பிறிஜ்). இலக்கணம், எண்கணிதம், பகுத்துணர் வாசிப்பு நூல், குட் எழுதிய இயற்கை பற்றிய நூல் (Good's book on the nature) தமிழ்ப் பாடங்கள்.
இலக்கணம் (முன்போலவே), குருட்டுவழி (Blind way) இதற்கு இந்து சமய ஆதாரம். (Evidence from Hinduism)
ஒரு மரத்தை முற்றாய் அழிக்க வேண்டுமானால் அதனை அடிமரத்தோடு வெட்டிவிடுவது மாத்திரம் போதாது. அதன் ஆணி வேர் வரை சென்று, ஆணி வேரையும் கல்லி எறிதல் வேண்டும். இந்த உண்மையை மிஷனரி கள் நன்கறிந்திருந்தனர். எனவே, யாழ்ப்பாணத்தின் சமய, பண்பாட்டு மரத்தை அழிக்க அதன் ஆணிவேரா கிய கல்வி முறையையே முற்றாய் மாற்றி அமைக்கும் வழியினை அவர்கள் கையாண்டனர். பச்சிளங் குருத்துக் களாகிய மாணவரின் உள்ளங்களிலே அவர்களின் பாரம் பரிய நம்பிக்கைகள் யாவும் மூடத் தனமானவை, குருட்டுத் தனமானவை என்ற எண்ணம் பாய்ச்சப்பட்டது. இதற்கு

Page 12
4 நல்லைநகர் தந்த நாவலர்
மிஷனரிகளின் கல்வித் திறனும், அயரா உழைப்பும், கஷ்டங்களைப் பொறுக்கும் சகிப்பு மனப் பாங்கும், சமயத் திற்காக எதனையும் தியாகம் செய்யும் பண்பும் உறுதுணை யாயின. சிறிது சிறிதாய் அவர்களின் 9,6560) LD (Personality) எம் முந்தையரைக் கவர்வதாயிற்று.
இவ்வளவு விரைவில் இக் கவர்ச்சி அவர்களை ஆட் கொள்ள வேருெரு காரணமும் இருந்தது. நான்கு நூற் ருண்டுகளுக்கு மேலாய்த் தமது சுதந்திரத்தை இழந்து, அதனுல் தமது மத, கலாசார, உரிமைகளையும் அடகு வைத்துவிட்டு அஞ்சி அஞ்சியே வாழ்ந்து பழகியதால், அதுவே இயற்கைபோல அவர்களுக்குத் தோற்றியது நெல்லைப் பெற்றுக்கொண்டு உமியைத் தருபவனிலும், தவிட்டைத் தருடவன் மேலானவன் என்று அவர்கள் நினைத்திருந்தால், அதில் தவறு ஏதுமில்லை. போர்த்துக் கேய, ஒல்லாந்த ஆட்சி பீடங்களின் சமயச் சகிப்பின்மை யிலும், ஆங்கிலரின் சாத்விக சமயப் பிரசாரம் மேலா னது என்று அவர்கள் கருதியிருக்கலாம்.
அன்றியும் கல்வியின் ஆத்மார்த்த நோக்கம் கைவிடப் பட்டு இலெளகிக நோக்கத்தை ஏற்றுக்கொண்ட பின் னர், உத்தியோகம், பட்டம், பதவி முதலானவற்றைப்
பெற ஆங்கிலமும், அதன் பின்னணியில் அமைந்த மத
மாற்றமும் உதவுமானுல் அவ் வாய்ப்புக்களை ஏன் இழத் தல் வேண்டும்? இவ்வாறும் அவர்கள் சிந்தித்திருக்க
லாம். எது எவ்வாருயினும் எமது நோக்கிலும், போக்
கிலும் 19ஆம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் தளர்ச்சியும்
வீழ்ச்சியும் ஏற்பட்டமையைத் தடுக்க எவரும் முயலவில்லை.
இக் காலத்தில் எமது கல்வி நிலையும் பாராட்டத் தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கவில்லை. தமிழையோ வேத சிவாகமங்களையோ, மற்றும் சமய சாத்திரங் களையோ கற்றவர் தொகை மிகக் குறைவு. ஒரு கிராமத் தில் ஒருவரோ, இருவரோதாம் அத்தகைய கல்வி பெற் றிருந்தனர். மற்றவர் கோயிற் புராண படனங்களின்
ܛ

*=".
நாவலர் காலத்து நம் நிலை 5
மூலம் பெற்ற கேள்வியறிவோடும், பாரம்பரியமான சடங் காசாரங்களோடும் திருப்தியடையவராயிருந்தனர்.
சமயம், சமயச் சடங்குகள், சமயக் கல்வி என்பவற்றை வளர்க்க வேண்டிய பிராமண குருமாரும் சாதாரண மக் களின் நிலையிலேயே இருந்தனர். மிஷனரிகளைப் போலக்
கல்வி, ஒழுக்கம், சமய அறிவு, கட்டுப்பாடு முதலான
வற்றை இவர்கள் பெற்றிருக்கவில்லை. மக்கள் இவர்களி டம் அதனை எதிர்பார்த்ததாயும் தெரியவில்லை. கோயில் களில் மூன்று காலப் பூசை நடந்தால் போதும், திரு விழாக் காலங்களில் கணிகையரின் சதுர்க் கச்சேரியும், வாண வேடிக்கையும், பிறவும் நடந்தால் அது சிறந்த திருவிழா; காளி, வைரவர், அம்மன் கோயில்களில் தப் பாது கடா, கோழிகளைப் பலியிடுவதே முறை என்ற வகையிலேதான் மக்களின் சமயச் சிந்தனை சென்று கொண்டிருந்தது. கோயில் முகாமையாளர்கள் பழி பாவங் களுக்கஞ்சாதவர்களாய், ஒழுக்கக் கேடர்களாய், கல்வியறி. * வற்றவர்களாய், ஆணவம் விஞ்சியவர்களாய், விளங்கு வதே அக்காலப் பொதுப் பண்பாய் இருந்தது. YA
" பேய் அரசு செய்தாற்
பிணந்தின்னுஞ் சாத்திரங்கள்"
என்று பின்வந்த பாரதி குறித்தது போல இவர்களின் நிருவாகத்தின் கீழ் அமைந்த கோயில்கள் பத்தியை வளர்க்கும் சாதனங்களாகவோ, சமயக் கல்வியை அளிக் கும் கலைப் பீடங்களாகவோ விளங்க வில்லை. சுருங்கச் சொன்னல், யாழ்ப்பாணமே அறியாமை இருளில் மூழ்கி, தான் இருளால் மூடுண்டிருப்பதையும் உணர முடியாது நெடுந் துயிலிலே ஆழ்ந்து கிடந்தது
18-12-1822 இல் நாவலர் பெருமான், கந்தர், சிவ காமியாகிய பெற்றேர்க்கு மகனுய்த் திருஅவதாரஞ் செய்த பொழுது யாழ்ப்பாணம் இருந்த நிலை இதுதான்.

Page 13
நாவலர் கற்ற கல்வி
* நில்லாத உலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேனென் றறத்துறந்து சமயங்க ளானவற்றின் நல்லாறு தெரிந்துணர்ந்து .
(தி. தொ. பு- திருநாவுக்கரசு நாயனர் புராணம் 37)
விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளையாது என் பர். விதை எவ்வளவு சிறந்ததானுலும், தண்ணிர், பசளை முதலான வசதிகள் போதிய அளவு இருந்தாலும் நிலம் வளமற்றதாயின் அந்த விதை வளர்ந்து பயன் தராது.
ஆகவே, ஒருவரின் கல்விக்குச் சூழலும், தக்க ஆசிரிய
ரும் மாத்திரமன்றி அவரின் பாரம்பரியத் திறனும் அவ சியம் வேண்டப்படுகின்றது. இவ்வகையிலும் நாவலர் பாக்கியசாலியே. அவரின் குடும்பம் கல்விச் சிறப்பு வாய்ந்த குடும்பம். அவர்தம் மூதாதையர் திருநெல்வேலி ஞானப்
பிரகாசர். அப் பெரியார் யாழ்ப்பாணத்திலிருந்த போர்த்
துக்கீச அதிபதியின் உணவிற்கு மாடு அளிக்க மறுத்து, நாட்டைவிட்டே நீங்கிச் சென்று தமிழகத்திலே குடியே றியவர்; சமய சாத்திரங்களைத் துறைபோகக் கற்றவர். சிதம்பரத்திலே ' ஞானப்பிரகாசம் ' என்னும் குளந் தொட்டவர். வடமொழியும், தென்றமிழும், மறைகள் நான் கும், ஆகமங்களும் கற்றுத் தேர்ந்த அறிஞர். சிவஞான போத விருத்தி முதலான வடமொழி நூல்களும், சிவஞான சித்தியார்க்குத் தமிழில் ஓர் உரைநூலும் இவரால் இயற் றப்பட்டன.

நாவலர் கற்ற கல்வி
ஞானப்பிரகாசரின் மரபில் வந்த சதானந்தருக்கு இரு வர் மைந்தர்கள். அவர்களுள் கந்தர் மூத்தவர்; இலங் கையர் இளையவர். கந்தருக்குப் பிறந்த கடைக்குட்டியே பின்னுளில் நாவலரான ஆறுமுகம், இவருக்கு மூத்த நால்வரும் அரச கருமமாற்றியும், கலைவன்மை வாய்த்தும் விளங்கியோர். ஆறுமுகத்தின் தந்தை சிறந்த நாடகாசிரி யர்; ஒல்லாந்த அரசிலே அலுவல் பார்த்தவர். எனவே, நாவலருக்குக் கல்வி விருத்திக்கான பாரம்பரியத் திறனும் அமைந்திருந்தது. அதனேடு முன்னையோரின் துணிவு, நேர்மை, இசைவன்மை, தமிழ்ப்புலமை முதலானவையும் பிதிரார்ச்சிதமாய்க் கிடைத்தன.
அவர் இயற்கையான விவேகி என்பதற்குத் தருக்கரீதி கடவாது, மாற்றரின் வாயும், வலியும் ஒடுங்கச் செய்த கண்டனங்கள் சான்று பகரும். இவையன்றி அக்கால இயல்பிற்கேற்ப எவற்றையும் மனனஞ் செய்து உள்ளத் தில் பசுமரத்தாணி போலப் பதியவைக்கும் ஆற்றலும் வாய்த்திருந்தார் என்பதற்கு, அவர், தம் கட்டுரைகளிலும், நூல்களிலும் எடுத்துக்காட்டியுள்ள எண்ணக் கணக்கற்ற மேற்கோள்கள் சான்ருகும்.
" ஆறுமுக நாவலர் சரித்திரம்" எழுதிய பூரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் நாவலரின் தோற்றத்தை வரு ணிக்கும்போது அவரின் தலை பருத்தும், கைகால்கள் மெலிந்தும் காட்சி தந்தன என்பர். சிறுவயதில் நாவலர் வாற்பேத்தை" என்றும், "பாணுத்தலையர் " என்றும் பரி கசிக்கப்பட்டதாயும் கூறுவர். இவ்வருணனையின் நோக்கம் அவர் பெரிய மூளை சாலி எனவும், உடலாற் செய்யும் தொழிலுக்கு அருகதை அற்றவர் எனவும் காட்டுதற்காக லாம். உள, உடலியலார் தலை பருத்திருப்பது மூளை வளர்ச்சியின் வெளிப்பாடன்று என நிரூபித்திருக்கின்ற னர். எனவே, நாவலரின் பணிகளையும் நூல்களையுங் கொண்டன்றி அவரின் விவேகத்தையும், அறிவாற்றலையும் உடற்கூற்று வகையில் நிரூபித்தல் நன்றன்று.

Page 14
நல்லைநகர் தந்த நாவலர்
நாவலர் ஒரு பால மேதை (Prodigy). அவர், தம் தந்தையார் எழுதிய நாடகக் குறையைத் தமது ஒன்பதா வது வயதிலேயே பூர்த்தி செய்தார் என்று அறிகிருேம். இது சாதாரண செயலன்று. மூர்த்தியின் சாந்நித்தியம் சிறியதொரு விக்கிரகத்திலேகூடப் புலப்பட்டுவிடுவது போல அவரின் திறன்கள் சிறுவயதிலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டன.
இவற்றைவிட நாவலரிடம் அயரா உழைப்பும் அமைந் திருந்தது, தமது காலத்தையெல்லாம் படிப்பதிலும், சிந் திப்பதிலும் சிந்தித்துத் தெளிந்தவற்றை வாழ்க்கையிலே கடைப்பிடிப்பதிலும் அவர் செலவு செய்யும் பான்மையின ராய் இருந்தார்.
இத்தகைய பெறுதற்கரிய மூலதனங்களோடு கல்வியில் ஈடுபட்ட அவரின் விரைவிற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற கல்வியுணவு அவர்க்கு ஆரம்பத்திலே கிடைத்தது என்று கூறலியலாது. போதிய நூல்களோ, கலாசாலை வசதியோ இல்லாத சூழ்நிலையில் அவர் அக்காலத்திலே அறிஞர்கள் எனக் கருதப்பட்ட பலரையும் அடுத்துப் பருகுவனன்ன ஆர்வத்தணுகிக் கல்வி கற்றர். ஆரம்பத்தில் நல்லூர்ப் பள்ளிக்கூடம் ஒன்றிலே சுப்பிரமணியபிள்ளை என்பா ரிடம் மூதுரை, நிகண்டு முதலிய கருவி நூல்களையும், பின்னர் சரவணமுத்துப் புலவர், இருபாலைச் சேணுதிராய முதலியார் போன் றரிடம் உயர் தமிழ்க் கல்வியையும் பெற் முர்; வட மொழியைத் தம் சொந்த முயற்சியால் கற்றர்.
இவ் வேளையில் இவர் ஆங்கிலக் கல்வி கற்பதற்காய்ப் பேர்சிவல் அவர்களின் ஆங்கில பாடசாலைக்கு அனுப்பப் பட்டார். 1834 ஆம் ஆண்டு தொடக்கம் 1841 வரை ஆங்கிலக் கல்வி நடந்தது. வழக்கமான திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கு முற்றிலும் வேருண ஒரு சூழ்நிலை அது. கல்விமுறையோடு கல்விக்கான விடயங்களும் இங்கு மாறுபட்டவையாயிருந்தன. ஆங்கிலக் கல்வியின் ஆரம்ப காலமாதலால் இப்பாடசாலையிலும் சிறந்த ஆங்கிலக் கல்வி

நாவலர் கற்ற கல்வி
அளிக்கப்பட்டிருக்கும் என்பதற்கு ஆதாரமில்லை. ஆணுல் ஏழாண்டுக் கல்வியின் பயணுய் ஆங்கிலத்திலிருந்து விவிலிய வேதத்தினை மொழிபெயர்க்கும் ஆற்றல் கைவரப் பெற்றவராய் நாவலர் ஆணுரென்றல், அது அவரின்
மொழிகளைக் கற்குந் திறனையும், பொது விவேகத்தையுமே
எடுத்துக் காட்டுகின்றது.
பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு தமது பத்தொன்ய தாவது வயதிலே பேர்சிவலின் பாடசாலையில் அவர் ஆசிரியரானுர்; கீழ்வகுப்புக்களிலே ஆங்கிலமும் மேல் வகுப்புக்களிலே தமிழும் கற்பித்தார். . இக் காலத்தில் விவிலியவேத மொழி பெயர்ப்பும் தொடர்ந்து நடந்தது.
ஒருவனுடைய கல்வியிலே தெளிவு ஏற்பட அவனது ஆசிரியத் தொழில் பெரிதும் உதவவல்லது. தான் கற்ற கல்வியை இரை மீட்கும் காலம் என்று ஆசிரிய வாழ்க் கைக் காலத்தைக் குறிக்கலாம். நாவலர் ஏழாண்டுகள் கற்பித்தற்றெழிலை நடாத்தினுலும், அது பேர்சிவல் பாட சாலையோடு நின்றுவிடவில்லை. வாழ்நாள் முழுவதும் தமிழிலக்கண இலக்கியங்களையும், சைவசமய சாத்திரங் களையும் அவர் கற்பித்துவந்தார். இதனுல் பரந்த அறி வும், படித்தவற்றிலே தெளிவும், பிழையற்ற தன்மையும் அவர்க்கு ஏற்பட்டன.
இருபதாம் நூற்றண்டில் வாழ்ந்த பாரதியார் ஆங்கி லக் கல்வியால், தமக்குப் பெருந் தீங்கே விளைந்தது என்று குறிப்பிடுகின்றர்.
நலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்பதாயிரங் கோயிலிற் செப்புவேன்"
என்பது அவர்தம் உறுதிமொழி. ஆணுல், மிஷனரி களின் சூழலிலே வாழ்ந்து ஆங்கிலம் கற்ற நாவலரோ அதனுல் அடைந்த நன்மைகளே அதிகம் எனலாம். நாவ லர் போன்றவர்கள், சார்ந்தவற்றைப் பஸ்மீகரமாக்கிப்
15 r. 2

Page 15
1 O. நல்லைநகர் தந்த நாவலர்
புனிதஞ் செய்யும் நெருப்புப் போலத் தாம் தமது புனித நிலையினின்றும் எச்சூழலிலும் மாருத உறுதி வாய்க்கப் பெற்றேர். எனவே, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்து அதற்கு உயிரூட்டமளிக்க அவர் கற்ற ஆங்கிலக் கல்வியே உதவியாயிற்று. Catechism முறையைப் பின்பற் றிச் சைவ விணுவிடை எழவும், பெரிய புராணம், திருவிளை யாடற் புராணம் போன்றவற்றைக் கத்திய ரூபமாய் (வசன வடிவில்) ஆக்கவும் ஆங்கில அறிவே அவர்க்கு உதவிற்று.
கற்றல், கற்பித்தல், பிரசங்கித்தல், நூலெழுதுதல், நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தல், கண்டனம் எழுதுதல், கற்றறிந்தாரோடு கலந்துரையாடல், அரியனவாய்க் கிடைக்கும் நூல்களைத் தாமே பிரதிபண்ணல் முதலாகப் பல துறைகளால் அவர் தமது அறிவை விருத்தி செய்து கொண்டார். இவ்வகையில் 19 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவத் தமிழ் அறிஞர்களுளெல்லாம் தலை சிறந்தோராய், அவர், தம்மை ஆக்கிக்கொண்டார்.
f,
* முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் " என்ற பொன்மொழிக்கு ஒர் இலக்கியமாய் நாவலர் விளங்கினர் எனலாம். சூழ் நிலைக்குத் தம்மை ஆட்படுத் தாமல் சூழ்நிலையைத் தமக்கு அடிமை ஆக்கிய பெருமை 19 ஆம் நூற்ருண்டுச் சைவப் பெரியார்களுள் நாவலர்
r
ஒருவர்க்கே உண்டு. * ஞானபாநு" என்ற பெயர்
அவர்க்கே பொருந்தும்.
 

நாவலரின் பரித்தியாகம்
* கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
- திருக்குறள் - கல்வி
"நான் ஜய வூடு (1834) முதலாகப் பீற்றர் பேர்சிவல் துரையுடைய இங்கிலீஷ் வித்தியாசாலையிலே இங்கிலீஷ் கற்றேன். பிலவ ஞ9 (1841) பேர்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனுயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெற வில்லை; என்னுடைய தமையன்மார் நால்வரும் இயன்ற மட்டும் பொருளும் உத்தியோகமும் உடையவர்களாயிருப் பவும், அவர்கள் பொருளுதவியும் நான் பெறவில்லை. இங்ங்ணமாகவும் மேற்கூறப்ப்ட்ட விருத்தியை நான் கீலக இருS புரட்டாதி மீ" (1848) பரித்தியாகஞ் செய்தேன். பேர்சிவல்துரை, " நான் தங்களுக்கு உயர்வாகிய வேத னம் தருவேன். தாங்கள் என்னை விடலாகாது" என்று பலதரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும் நான் அவ்விருத் தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இங்கிலீஷிலே அற்ப விற்பத்தியாயினும் பெற்றிருந்தும், என்ணுேடு இங்கிலீஷ் கற்றவர்களுள்ளும் எனக்குப்பின் இங்கிலீஷ் கற்றவர்க ளுள்ளும் அநேகர் தங்கள் சத்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும், நானும் என் சத்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின் அது தப் பாது சித்திக்கும் என்றறிந்தும், அஃதில்லாமல் விளையும் அவமதிப்பைப் பார்த்தும், உத்தியோகத்தை விரும்ப வில்லை. தமிழ்க், கல்வித் துணை மாத்திரங் கொண்டு செய் யப்படும் உத்தியோகம் வலிய வாய்த்தபொழுதும் அதை யும் நான் விரும்பவில்லை. கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங்காது வீடு, விளைநிலம், தோட்டம், ஆபரணம் முதலியவற்றேடு விவாகஞ் செய்து கொடுக்கும்
Y is y
t
r ከ ...
। । i y

Page 16
12 நல்லைநகர் தந்த நாவலர்
வழக்கமேயுடையது என் சென்ம தேசமாகவும் நான் இல் வாழ்க்கையிலே புகவில்லை. இவையெல்லாவற்றிற்கும் கார ணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியா கிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் எனனும் பேரா சையேயாம் ”
இப் பேராசையின் முதற்படியாகச் சைவ சமயப் பிரசா ரத்தினை நாவலர் மேற்கொண்டார். வெளிப்படையான சடங்காசாரங்களை மாத்திரம் அவதானித்த பாதிரிமார், சைவம் என்பது மூடநம்பிக்கைகளும், பலதெய்வ வணக்க மும் மலிந்த ஒரு பின்னடைந்த சமயம் என்று கருதி அக் கருத்தைத் தம் பிரசார ஆயுதமாகப் பயன் படுத்திவந்த காலம் இது. * குருட்டுவழி' என்ற தலைப்பில் அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட துண்டுப் பிரசுரம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நாள்கள் இவை வட்டுக் கோட்டை செமினரியில் இரண்டாமாண்டு மாணவருக்கு இத்துண்டுப் பிரசுரம் தமிழ்ப் பாடபுத்தகங்களுள் ஒன்ருய் இருந்தது என்பதை முன்னரே கண்டோம்.
ஆக, நாவலர் தம்முன் இரு கடமைகள் இருப்பதனை உணர்ந்தார். ஒன்று, பாதிரிமாரின் பழிப்புக்களுக்குத் தக்க பதில் இறுப்பது. மற்றது சைவ மக்களிடையே நிலவிய அறியாமையைப் போக்குவது. இவற்றை நிறைவு செய்தற்காய்ச் சைவ தூஷண பரிகாரம், சுப்பிரபோதம் முதலான துண்டுப் பிரசுரங்களை அவர் எழுதி வெளியிட்
டார். இவை வேகமும், கருத்தாழமும், சத்தியமும், ஒரு
சேர அமைந்து நல்லறிவுச் சுடர் கொளுத்துவனவாய் விளங்கின. சுப்பிரபோதத்தின் தொடக்கத்தில் அவர் கூறு கின்ருர் -
பாதிரிகள், ' கடவுளின் மகிமை ஓரளவிற்கு அவ ருடைய கிரியைகளினுலே பிரசன்னமாகின்றது. மனுஷ னுடைய குணம் அவன் ஒழுக்கத்தினுல் விளங்குகின்றது. விருட்சத்தின்றன்மை கணியினுல் வெளிப்படும். உயர்ந்த பொன் அதின் மாற்றினுல் விளங்கும். அது போலவே
 
 
 

நாவலரின் பரித்தியாகம் 13
நீங்கள் வழிபடும் கந்தசுவாமியின் தாரதம்மியத்தை அவ ருடைய விருத்தாந்தங்களால் கிரகிப்போம்" என்கிருர் கள். இது விவேகிகள் யாவருக்கும் ஒப்பமுடிந்த பகூடி மன்ருே? ஆதலால், அப்பாதிரிகள் கந்தசுவாமியைக் கடவு ளல்லரென்பதற்குக் கூறும் நியாயங்கள் ஒக்குமோ, ஒவ் வாவோ என ஆராயாதொழிதல், மெய்க் கடவுளை உணர்ந்து வழிபட்டு முத்திபெற விரும்பும் மேன்மக்களுக் குத் தகுதியன்றே! கந்தசுவாமியிடத்திலே பதிலக்ஷணம் இன்றென்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் நியாயங் கள் கந்தபுராணத்திற் கூறப்படும் அவருடைய சரித்திரங் களுள், அவர் சரீரங்கொண்டு பிறந்தமையும், தெய்வ யானையம்மையை விவாகம் செய்தமையும், கன்னிகையாகிய வள்ளியம்மையிடத்திற் சென்று அவளைத் தம்மோடு புணர் தற்குடன்படும்படி பிரார்த்தித்து, அவளுடன்படாமை கண்டு அஞ்சித் தம்மிடத்தே அடைக்கலம் புகுந்த அவ் ளைப் புணர்ந்தமையுமேயாம். இம் மூன்றுமுடையார் பதி யெனப்படுதல் கூடுமோ கூடாதோவெனப் பரீகூழிப் போம்."
இவ்வாறு கூறியவர், இத்தகைய செயல்கள் கல்வி யறிவொழுக்கஞ் சற்றுமில்லாத பேதைகளாலும் இழிக்கப் படுவனவன் ருே?" எனத் தொடர்ந்துரைத்து அவை தெய் வத்திற்குரியன எனல் பேதைமையே என்பதையும் ஏற்கின் முர். மிக்க பண்போடு தமது வாதத்தினைத் தொடங்கி முருக தத்துவத்தை ஆகம, சாத்திர ஆதாரங்கள் காட்டி மிக அழகாய் நியாயித்து, முற்கூறிய குறைகளெல்லாம் குறைகளல்ல; அறியாமை காரணமாய் விளக்கமின்றி விரிப்பன எனவும் காட்டி உண்மையை நிறுவுகின் ருர்.
* இனி அக்கினிசத்தி ஒன்ருய வழியும், சுடப்படுவதும், விளக்கப்படுவதும், அடப்படுவதுமாகிய விஷயத்தில் சூடு விளக்கம் அடுதலாகிய தொழிலினுல் பலவாதல் போல, கந்தசுவாமியினது சத்தி ஒன்ருகிய வழியும் கிருத்திய பேதத்தால் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியா சத்தியென

Page 17
4 நல்லைநகர் தந்த நாவலர்
மூவகைப்படும். இம் மூன்று சத்திகளுமே முறையே வள்ளியம்மை, வேலாயுதம், தெய்வாணையம்மை யெனக் கூறப்பட்டன. சைவாகமங்களை ஒதியுணராதார் இவற்றின் உண்மைப் பொருளையுணராது மயங்குவார்கள்."
7 ; " " " . . . .ܐ 灭。”ö,r ܆ ܕ .à
மாரின் கண்டனங்களுக்கு ஆப்பிடுவதோடு அவரின் கடமை நிறைவெய்தவில்லை. சுத்த வீரன் ஒருவனின் நேர்மைக் குணத்தோடும், துணிவோடும் சமய தத்துவங் களுஞ் சடங்குகளும், அக்காலச் சைவர்களால் எவ்வாறெல் லாம் திரிக்கப்பட்டு, இழிக்கப்பட்டுச் சீர்கேடடைந்தன என்பதையும் அவர் எடுத்துக் காட்டுகின்ருர், !
பாதிரிகள் சண்டை, சலஞ்சாதித்தல். தாசி, சதுர், சங்கீதம், பரஸ்திரீ, கூட்டம், வாத்திய முழக்கம், வாண விளையாட்டு முதலிய வேடிக்கைகள் யாவும் திருவிழாவில் உண்டென்றும், அவை கந்தருக்கும் காமுகருக்கும் வாய்ப்பென்றும் இகழ்கின்ருர்கள். நமது, சைவாகமங்க ளிலே, ஆலயங்களைக் கட்டு முறைமையும், அவைகளிற் பிரதிஷ்டை செய்யு முறைமையும், அவைகள் செய்தற் குரிய ஆசாரியர்களது இலக்கணமும் அவைகளில் தரி சனஞ் செய்யு முறைமையும், இவைகளில் வழுவினுேர் பெறுந் தண்டமும் விரிவாக உணர்த்தப்படும். இக் காலத்திலே கோயிலதிகாரிகள் பெரும்பான்மையும் சைவா கம உணர்ச்சியும், நல்லொழுக்கமும், சிவபத்தியுமில்லாத
வர்களாயும் சிவத் திரவியாபகாரத்திலும் வியபிசாரத்தி
லுமே கருத்தைச் செலுத்துவோர்களாயுமிருத்தல்ாலும், அக்கோயில்களுக்குப் பொருள் கொடுப்போர்களும் அவ் வாறே புண்ணிய பாவப் பகுப்புணர்ச்சியின்றி, கோயில் களில் வெகுசனங்கள்முன் தாங்கள் பெறும் உபசாரத்தை யும், தாசிகள் கூட்டம், வாணவிளையாட்டு முதலிய வேடிக் கைகளையுமே பொருளென மதித்தலாலும், சில கோயிலதி காரிகள் பூசை, திருவிழாக்களைக் குத்தகை கூறி விற்ற லாலும், பொய், களவு வியபிசாரம், சிசுவதை, வழக்
சுப்பிரபோதம் இதனுேடு முடிந்துவிடவில்லை. பாதிரி
لم

!و و ج " A. is ! .
২. ' ܡܐ܂ t *: நாவலரின் பரித்தியாகம் 15
கோரம் பேசல் முதலிய. பெரும் பாதகங்களைச் செய்யும் பிராம ணர்கள், கோயிலதிகாரிகளிடத்திலே பொருள் கொடுத்துப் பூசை திருவிழாக்களையும் அவற்றேடு சிவத் திரவியாபகாரகமாகிய அதி பாதக த்தை யும் விலைக்குக் கொள்ளுதலாலும், அதனுல் சைவாகமவுணர்ச்சியும், நல் லொழுக்கமும், சிவபத்தியுமுள்ள 'பிராமணர்கள் விலக்கப் படுதலாலும், நமது தேவாலயங்கள் சைவாகம விதிப்படி நடவாதொழிந்தன." . . . .
இதனுல், "சைவ மன்னர்களுடைய அரசு ஒழிந்தது: மழை குன்றிற்று; பஞ்சமிகுந்தது. கொள்ளை நோய்கள் பெருகுகின்றன. பாதிரிகள் இவையெல்லாமாராயாமல், சைவசமயிகள் பலராலே, தேவாலயங்களில் நடத் தப்படும் தீய ஒழுக்கங்களைக் கண்டு சைவ சமயத்தை யிகழ்தல் பேதைமையன்ருே ?"
இதுவரை காட்டியவை நாவலரின் அறப்போரில் ஒரு சிறு துளியேயாம்.
*கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னுேக்காச் சொல்? என்னும் பொய்யாமொழியை வாழ்வுக் குறிக் கோ ளாய்க் கொண்ட். அவர், தமது உடல், பொருள், ஆவி யாவற்றையும் துச்சமாய் மதித்து உண்மையை எடுத் துரைத்த்தில் வியப்பில்லை. ஆனல் எதார்த்தவாதி வெகு ஜன விரோதி என்ற உலகியல் அவர் வரையில் பொய்ப் பது எங்ங்னம்? சோக்கிரட்டீசை நச்சுக் கோப்பையை ஏற்க வைத்த அதே எதார்த்தவாதந்தான் நாவலரையும் பில எதிர்ப்புக்களை எதிர்நோக்க வைத்தது. ”
நாவலர்க்கு எதிரிகள் பலராயினர். அவரின் கண்ட னங்களுக்குத் துவண்டு கொடுத்தவர்களே அவரிற்பழி வாங்கச் சமயம் பார்த்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் மாத் திரமன்றித் தமிழகத்திலும் அவரைப் பகைத்தவர் பலர். அருட்பாவை மருட்பா என நிறுவி, அருட்பாவிற்கு வரை

Page 18
6 நல்லைநகர் தந்த நாவலர்
விலக்கணம் வகுத்ததால் அவரை நோக்கி வீசப்பட்ட வசைக்கணைகள் கொஞ் சம ல் ல. நாவலரிடம் கற்று உயர்ந்த மாணுக்கர்களே அவருக்கு வைரிகளான கொடு மையும் நிகழ்ந்தது.
* என்னிடத்து நெடுங்கால நேரே கற் றெத்தனையோ
நன்மையெலாம் பெற்றபலர் நாடறியப் பகைத்தகன்ற வன்மைமனத் தினராக.
என்று நாவலரே இதனை ஓரிடத்தில் எடுத்துரைக் கின்றர். இருப்பினும் அவர் தளர்ந்து சோர்ந்துவிட வில்லை. அச்சம் அவர் அறியாதது. கொடுத்தும் டாகை கொண்டு கொடியவரின் வலுக் கெடுத்த வன்முெண்டர் அவர். நாவலர் நம்பனுக்கேயன்றி இந்த நானிலத்தில் வேறெவர்க்கும் எ க் காலத்திலும் அஞ்சியதேயில்லை. அவரே சொல்கிறர்.
* ஆகா! பல மனிதராலும் பகைக்கப்பட்டீர், இனிக் கெட்டீர் என்பார்க்கு. " ஓகோ 1 கடவுளுக்கஞ்சும் அச்சம் பெருகப் பெருக மனிதருக்கஞ்சும் அச்சங் குன்றிக் குன்றி விடும் என்பதறியீர் போலும் ' என்போம்" என்னும் நாவலரின் அறக்குரலிலே,
"நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் "
என்ற அப்பரின் வீரமுழக்கம் எதிரொலிக்கக் காண் கின்ருேம்.
لس

நாவலரின் சொன்மாரி
திண்மை பெறுஞ்சைவ சித்தாந்த சாகரத்தின் தண்மை நலம்பருகிச் சைவ மெனும் - உண்மையுள செஞ்சாலி ஓங்கச் சிறந்தபிர சங்கமழை அஞ்சாது பெய்யும் அருண்முகிலே.??
- ஆறுமுக நாவலர் சரித்திரம். அநுபந்தம். சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர்.
1847 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் நாளில் நாவலர் தமது முதற் பிரசங்கத்தை வண்ணுர்பண்ணைச் சிவன் கோயிலிலே செய்தார். அவர் பிரசங்கம் செய்யத் தொடங்கிய அந்நாள் சுவாதி நட்சத்திரங் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை, விக்கினம் போக்கும் விநாயகருக்குத் தேங்காயுடைத்து, மங்கல ஓசையாம் மணியோசையோடு அவர் பேச்சுத் தொடங்கிற்று. தமிழகத்திலோ, யாழ்ப் பாணத்திலோ செய்யப்பட்ட முதற் சைவப் பிரசங்கம் அதுதான். மேலும் சொல்வதாயின், பிரசங்க முறையே தமிழில் அவராலேயே தொடக்கப்பட்டது எனலாம்.
மிஷனரிகள் தம் தேவாலயங்களிலே பிரார்த்தனைக் கீதங்களைப் படிப்பர். பின் விவிலிய வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசிப்பர். தொடர்ந்து போதகரோ, பாதிரி யாரோ சமய சம்பந்தமாக உரை நிகழ்த்துவார். ஞாயிற் றுக்கிழமைதோறும் இவை கிறிஸ்தவ தேவாலயங்களிலே தவருது நடக்கும். இம்முறையினை அவதானித்த நாவலர் சிவாலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் இம்மாதிரி ஒழுங் கைக் கடைப்பிடித்துச் சைவத்திற்குப் புத்துயிரளித்தார். தமக்கு உதவியாளராய்க் கார்த்திகேச ஐயரை அமர்த்தி ஞர். இருவரும் மாறிமாறி முறை வைத்துப் பிரசங்கங்கள்
ஆற்றினர். .
币T一3
ܟܝܢ

Page 19
18 நல்லைநகர் தந்த நாவலர்
நாவலரின் பேச்சிலே வேகம், ஒழுங்கு, பயபத்தி, பேசும் விடயத்தில் ஆழ்ந்த அறிவு முதலியன புலப்பட் டன. பேசுதற்கு முன் அன்றைப் பேச்சிற்கான குறிப்புக் கள் எடுப்பதும் அவர் வழக்கமாயிருந்தது, என பூரீமத் கைலாசபிள்ளையின் "நாவலர் சரித்திரத் திலிருந்து அறி கின்ருேம். பொறுப்பற்று மேடையிலே ஏறிய பின்னரே பேச்சு ஒத்திகை செய்வார்போலக் கண்டவற்றையெல் லாம் பேசுகின்ற இக்கால அறிஞர் களுக்கு இவ்வழக்கம் வேண்டாததாயிருக்கலாம். ஆணுல், நாவலர் போன்றர் தம்மை உணர்ந்தவர்கள். ஒரு திருப்பாசுரத்தின் ஒரு சொல்லையாவது பிழைபடக் கூறின், அது சிவாபராதம் எனக் கொள்ளும் பாங்கினர். இக்காரணத்தினுலேயே அவர் மிகவும் கவனமாகத் தமது பிரசங்கங்களை ஆயத் தம் செய்து வந்தார். இந்தப் பண்பே ஆறுமுகவரை நாவலர் ஆக்கியது.
ஒரு சந்தர்ப்பத்திலே கார்த்திகேச ஐயரின் பிரசங்க நாளில் அவர் வராமையால் நாவலர் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் ஒன்றும் ஆயத்தம் செய்யாமை யால் "நான் ஆயத்தமில்லை" என்றர். அங்குக் குழுமி யிருந்த சபையோரிற் சிலர் வியப்போடும், சிலர் சிறிது ஏளனத்தோடும் அவரை நோக்கினர். உடனே நாவலர் எழுந்து நின்று, "ஆயத்தமில்லை, ஆயத்தமில்லை, ஆயத்த மில்லை" என மூன்று முறை உரத்துக்கூறி, அச்சொற் ருெடரையே பீடிகையாய்க் கொண்டு அழகானதோர் உரை நிகழ்த்தினர்.
.சும்மா இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாகில்
பெருங்காள மேகம் பிள்ளாய் '
எனும் கூற்று அன்று நாவலர்க்கும் பொருந்துவதா யிற்று.
பூரீமத் த. கைலாசபிள்ளை நாவலரின் தமையனர் புதல்
வர். நாவலரின் பணிகளிலே அவர்க்கு உறுதுணைவராய்
ή.

ܛܪܟܐ
நாவலரின் சொன்மாரி 19
இருந்தவர். பிற்காலத்தில் நாவலரின் பாடசாலைகளைப்
பரிபாலனஞ் செய்தவர். அவர், பலரது வற்புறுத்தல்
சுாரணமாக மிகுந்த தயக்கத்தோடு நாவலரின் சரித் திரத்தை எழுதியுள்ளார். நாவலரின் நெருங்கிய உற வினர் என்பதால், தாம் கூறுவனவற்றில் மிகைபடக் கூறல் வராவிடினும், வாசிப்போர் அவ்வாறு கொள்வரோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. இந்த அச்சத்தால் மிக மிகக் கவனமாக நாவலரின் வரலாற்றை அவர் எழுதி யுள்ளார். இதனுல் அந்நூலிலே சத்தியம் சுடர்விட் டொளிரக் காண்கின்ருேம். நாவலரின் பிரசங்கங்களை நேரிலே கேட்டு அநுபவித்து மகிழ்ந்த அவர் நாவலரது பிரசங்கச் சிறப்பினைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்ருர் :-
"இவர் பிரசங்கம் பண்ணும்போதும், அர்த்தம் சொல் லும்போதும், பேசும்போதும் சொற்களெல்லாம் நீரோட் டம் போல வந்துகொண்டேயிருக்கும், சொற் பஞ்சம் இவருக்கு ஒருகாலத்திலுமில்லை. ஒரு சொல்லையாவது விஷயத்தையாவது திருப்பிச் சொல்லும் வழக்கம் இவ ருக்கு இல்லை. இவர் பேசுவதை எந்தச் சிறு பிள்ளைகளும் விளங்கிக்கொள்வார்கள். பேசும்போது பெரும்பாலும் இயற்சொற்களையே வழங்குவார். சிறு பிள்ளைகளோடு பேசும் பேச்சும் இலக்கணத்துக்குச் சிறிதும் மாறுபடாத தாயும் அவர்களால் விளங்கிக்கொள்ளத் தக்கதாயுமிருக்கும். குற்றங் கண்டவிடத்துப் பெரும் பிரபுக்களாயுள்ளவருள்ளும் இவராலே முகத்துக்கு முன்னே வைத்துக் கண்டிக்கப் பட்டவர் பலர். அவர்களெல்லாரும் அக் கண்டனத்தைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுப் போனவர்களேயல்லாமல், முன்னிலையில் நின்று எதிர்த்துப் பேசினவர் ஒருவராவது இல்லை. அதற்குக் காரணம் இவர் கண்டித்துப் பேசும் போது அதுவுமொரு சிறந்த சாதுரியமும் அலங்காரமு மாயிருத்தலேயாம். கேட் பவர் அவற் ருல் மயங்கிப் போகின்றபடியால் எதிர்த்துப் பேசச் சத்தியற்றவராய்விடு கின்றர்கள்." 酸

Page 20
20
நல்லை நகர் தந்த நாவலர்
நாவலரின் எழுத்திலுள்ள அதே ஒழுங்கு, இலக்கண வரம்பு கடவாமை, தெளிவு, கம்பீரம் யாவும் அவர்தம் பிரசங்கங்களிலும் காணப்படும் என்பதற்கு, அவரது பிர சங்கத்திலிருந்து சிறியதோர் உதாரணத்தைத் தருகின் றேன். இவ்வுதாரணமும் கைலாசபிள்ளையவர்களின் ஆறு முக நாவலர் சரித்திரத்திலிருந்தே எடுக்கப்பட்டது.
'துன்பத்தில் வெறுப்பும் இன்பத்தில் விருப்பும் ஆன் மாக்களுக்கு இயற்கையேயாயினும் அவர்கள் இன்பம் இது. துன்பம் இது. துன்பத்தினின்று நீங்கி இன்பம் பெறு நெறி இது என உள்ளபடி அறிதற்கும் துன்பத்தினின்று நீங்கி இன்பத்தைப் பெறுதற்கும் சுதந்திர சத்தியுடைய வர்களல்லர். சுதந்திரர் சிவபெருமானொருவரே. ஆன் மாக்களோ பரதந்திரர்கள். ஆன்மாக்கள் இவ்வுண்மையை யறிந்து சிவபெருமானது திருவருள் வழிப்பட்டொழுகி னன்றி இன்ப துன்பங்களை அறிதலும், துன்பத்தினின்று நீங்கி இன்பத்தைப் பெறுதலும் இயலாவாம். நித்திய மாகிய பேரின்பம் முத்தியின்பமொன்றே; மற்றையின்பங் களெல்லாம் முட்பூவிற் றேன் போல்வனவாம்.'
ஆற்றொழுக்குப் போல, ஆடம்பரச் சொற்சிலம்பமின்றி ஆறு முகவர் செய்த பிரசங்கங்கள் பலரின் மனங்களை மாற் றின. பரசமயம் செல்லவிருந்தோர் • சிவமதமே செம்மை சான்ற எம் பெருமதம் என உணர்ந்து சைவராய் நிலைத்தனர்; சிவம் விட்டு அவம் சென்றோரும் திரும்பி னர். மது, மாமிசம் உண்டோர் மாக்கள் நிலை நீங்கி மக் களாயினர்; வி ய பி சாரிகள் வியபிசாரம் விடுத்தனர். யாழ்ப்பாணத்திலே சைவம் மீண்டும் தலையெடுத்தது.
• கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.'
வல்லாராகிய ஆறுமுகவர் திருவாவடுதுறை ஆதீனம் சென்று பிரசங்கமாரி பொழிந்து உபயசந்நிதானங்களால்

நாவலரின் சொன் மாரி
21
' நாவலர்' பட்டம் சூட்டப்பட்டார். இது நிகழ்ந்தது 1849 இல். அப்போது நாவலருக்கு வயது இருபத்தாறு.
' உள்ளத்தில் உண் மை யொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்.'
என்ற பாரதியின் வாக்கு அன்றே நாவலரால் உண் மையாயிற்று. அவரின் பரிசுத்த ஆன்மா, உள்ளத்தினூடு ஒளிப் பிரவாகமாய் வெளிப்பட்டு, உதடுகளிலே சிவமாய். தமிழாய், முருகாய் உதிர்ந்து ஒளிர்ந்தது. கவிச்சக்கர வர்த்தி ' பட்டம் பெற்றோர் பலராகக் கம்பனே அதற்கு உரியனானான். ' நாவலர்' என்ற பட்டப் பெயர் நல்லைநகர்
ஆறுமுக நாவலருக்கே உரித்தாயிற்று.
செல்லுஞ் சொல் வல்லாராகிய நாவலர் சென்ற இட மெல்லாம் சிவநெறி வளர்த்தார். சிவாகம சைவசித்தாந் தச் செந்நெறியினைச் சீர்பட எடுத்துரைத்தார். தனி மனி தராய் நின்று தாபனங்கள் பல செய்யத்தகும் செயல் களைத் தாமே செய்து முடித்தார். எனினும், அவருக்கு அமைதி ஏற்படவில்லை.
1879 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசைத் தினமாகிய சுவாதி நக்ஷத்திரத்தன்று யாழ்ப்பாணச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் அவரின் இறுதிப் பிரசங்கம் இவ்வாறு முடிந்தது ;-
'' நான் உங்களிடத்துக் கைம்மாறு பெறுதலைச் சிறி தும் எண்ணாது முப்பத்திரண்டு வருஷ காலம் உங்களுக் குச் சைவ சமயத் துண்மைகளைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போமென்று பாதிரி மார்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் நான் உயிரோ டிருக்கும்போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இன்னும் என்னைப்போலப் படித்த வர்களும் சன்மார்க்கர்களுமாய் அநேகர் வருவார்கள். ஆனால், உங்களுடைய வைவுகளைக் கேட்டுக் கேட்டுக்

Page 21
22
நல்லை நகர் தந்த நாவலர்
கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போல ஒருவரும் வரார். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங் கம். இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ண மாட்டேன்."
1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 21 ஆந் தேதி நாவலர் சிவபதம் அடைந்தார்.
நல்லை நக ராறுமுக நாவலர் பிறந்திலரேற் சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே- எல்லவரும் ஏத்து புரா ணாகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை.
- - ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை

வசனநடை கைவந்த வல்லாளர்
" நாவலர் மனிதரை மனிதராக்குவதற்கு, அஃதாவது வையத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு நூல்கள் எழுதினர்; அச்சிட்டார், மனிதருக்கு நூல் செய்தார்; வெளியிட்ட்ார்." பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (நாவலர்-பக், 60)
" நாவலரின் காலம் கவிதைக் காலம்: யமகம், திரிபு. மடக்கு முதலான யாப்புமுறைகளைக் கையாண்டு கடின மான செய்யுள்களையும், பிரபந்தங்களையும் புலவர்கள் இயற்றிவந்த காலம். கவிதை உள்ளத் துணர்ச்சியை வெளிப்படுத்தும் சாதனம் என்பதை அப்புலவர்கள் நினைத் தும் பார்க்கவில்லை. மாருகக் கவிதைகள் புலவர்களுக்கு அவர்களின் வித்துவச் சிறப்பையும், செருக்கையும் வெளிப் படுத்தும் கருவிகளாயே பயன்பட்டன. நாயக்கர் காலச் செய்யுள்களிலே சொல்வளமாவது இருந்தது. இவர்கள் காலத்தில் அதுவும் இல்லை. -
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை மாட்டுவண்டியிலே தம் மாணவர் குழாத்தோடு சென்று கொண்டிருப்பாராம் அவ்வேளையில் செய்யுள்கள் கடல் மடை திறந்தாற்போல அவர் வாயிலிருந்து உதிருமாம். ஏடுகளில் அவற்றை எழுதும் மாணவர்க்குக் கைகள் வலி கண்டுவிடுமாம். இந்த வேகத்தில், "இம் என்னு முன்னே எழுநூறும் எண்ணுாறுமாய்க்" கவிதைகள் பிறக்குமானுல் அவற்றில் புலவரின் உணர்ச்சி வளத்தை, உயிர்த் துடிப்பை, கற்பனைச் சிறப்பை, கருத்தாழத்தை நாம் காணல் கூடுமா? வாணவேடிக்கையோ, கழைக்கூத்தோ போன்று கவித்துவமும் ஒரு வித்தையாகக் கருதப்படுமா யின், அவ்வாறு கருதும் ஒரு கூட்டம் இருக்குமாயின்

Page 22
24 நல்லைநகர் தந்த நாவலர்
அதனுல் மொழியோ, சமுதாயமோ எத்தகைய பயனும் அடையமாட்டா.
நாவலர் இவ்வுண்மையை உணர்ந்தவர். அவர் தமது வித்துவச் செருக்கை விதந்தோதும் ஒரு கூட்டத் தைச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்காகவோ அவர்களின் புகழுரைகளுக்காகவோ பிரபந்தங்களையும் பிற நூல்களை யும் செய்ய விழைந்தவரல்லர், வழிதுறை அறியாது அறி யாமையின் வாய்ப்பட்டு அழிந்துகொண்டிருத்த ஒரு சமு தாயத்தை அறிவு பெற்று விழித்தெழச் செய்து, நன்னெறி ஒழுகச் செய்வதே அவர் நோக்கமாகும். இந்த நோக் கத்திற்குக் கவித்துவம் துணை செய்யப்போவதில்லை. பள் ளத்தில் வீழ்ந்திருக்கும் பாமரர்க்குப் பாட்டாலாம் பயன் யாதுமில்லை. எனவே நாவலர், தம் பிரசாரத்திற்கு உரை நடையைத் தேர்ந்தார். மிஷனரிகளின் பிரசாரக் கருவி யாய் உரைநடை நூல்கள் பயன்பட்டு வந்ததும் அவர்க்கு வழிகாட்டியிருக்கலாம்.
தத்துவபோதக சுவாமிகள், வீரமாமுனிவர் முதலா னுேர் நாவலர்க்கு முன்னரே தமிழிலே உரைநடை நூல் கள் எழுதியுள்ளனர். பாட்டுக்களுக்கு உரை எழுதவே பயன்பட்ட வசனநடையைக் கருத்துக்களையும், உணர்ச்சி களையும் புலப்படுத்தவும் கையாளலாம் என்று இவர்கள் செயலிற் காட்டினர். எனினும், இவர்கள் அந்நியராத லால் தமிழின் மரபையும், உணர்ச்சித் துடிப்பையும், வேகத்
தையும் தம் சொற்களிலே அமைத்துக் கொணரமுடியாது
இடர்ப்பட்டனர். வீரமாமுனிவரின் அவிவேக பூரண குரு" கதையில் நகைச்சுவையும், அங்கதமும் உண்டு. ஆணுல் கம்பீரமோ, கருத்தாழமோ இல்லை. தத்துவ போதகருக்கு, உரைநடை கிறிஸ்தவ சமயப் பிரசாரக் கருவி மாத்திரமாகவே நின்று முடிந்தது.
இந்நிலையிலே தமிழிலக்கணம், நீதி நூல்கள், மெய் கண்ட சாத்திரங்கள், கருவி நூல்கள், வடமொழி வேத சிவாகமங்கள், தருக்கம் முதலானவற்றேடு ஆங்கிலமும்
خیال
 

Ësi
வசனநடை கைவந்த வல்லாளர் 25
முறையாய்க் கற்று அதன் போக் கினையும் அறிந்து கொண்ட நாவலர், தமிழ் மரபிகவாது, சமய மரபினைக் கடவாது, அதேவேளையில் மக்களுக்கு விளங்கத்தக்க ஆங்கில எளிமையோடு உரைநடையைக் கையாளத் தொடங்கினர். இவ்வகையில் இக்கால உரைநடையின் தந்தை என்று நாவலரையே கொள்ளல் தகும்.
கவிச் சக்கரவர்த்தி கம்பன் விருத்த யாப்பிலே பல புதிய வண்ணங்களை அமைத்துக்கொண்டது போலவே, நாவலரும் உரை நடையில் இடத்திற்கும், பொருளுக்கும், படிப்போர்க்கும் ஏற்பப் பலவகைப்பட்ட உரைநடைகளை வகுத்துக் கொண்டார். கண்டனங்கள் எழுதுதற்கு ஒரு வகை உரைநடை, புராணங்களை உரைநடைப்படுத்தும் போது வேருெரு வகை உரைநடை, மாணவர்க்கு நூல் கள் எழுதுகையில் இன்னுெருவகை உரைநடை, நூல் களுக்கு உரை காண்கையில் மற்றெரு வகை உரை நடை என அவரின் உரைநடைகள் பல திறத்தனவாய் அமைந்
தன.
அவரது கண்டன நடையிலே அங்கதச் சுவை ஆங் காங்கே தலைகாட்டும். தமிழின் முழு ஆற்றலோடுங் கூடிய வசைச் சொற்கள் மரபிகவாது கையாளப்படும். தருக்க ரீதியான ஒழுங்கு எவ்விடத்திலும் தவறது. கேள்விக்கு மேற் கேள்விகள் கிளர்த்தப்படும். அவை எதிரிகளின் வாய்களுக்கு ஆப்பு வைப்பனவாய் அமையும். படித் தோர்க்கும், படி ப் பறிவு குறைந்தோர்க்கும் படிக்கத் தூண்டவல்ல கவர்ச்சி, எவ்விடத்தும் குறையாது. இவை யாவிற்கும் மேலாகச் சத்தியம் அங்குச் சுடர்விடும். ஏச் சின் அடிநாதமாய் எல்லையற்ற கருணை இழையோடும்.
"சைவ சமய விருத்திப் பொருட்டு எடுத்த கருமங் களுக்குஞ் சைவ சமயத்துக்கும் இடையூறு செய்வாரைக் கண்டிக்கும் சைவப் பிரசாரகரது கோபஞ் சண்டேசுர நாயனுர் முதலாயினுர் கோபம் போலும் என்றரைக் குறித் துச் "சண்டேசுர நாயனுராய் விடுவாரா இவர் ! அவர்
町一4

Page 23
26
நல்லை நகர் தந்த நாவலர்
கோபமாய்விடுமா இவர் கோபம் '' என்று பரிகாசஞ் செய் தாயே. சண்டேசுர நாயனாரது சிவபூசையிற் பாலை ஒரு வன் காலினாலே சிந்தலாகாது. சைவப் பிரசாரகரது சிவபூசையிற் பாலை ஒருவன் கா லினா லே சிந்தலாம் போலும்! இவர் இப் பாதகனைக் கோபித்து விலக்காது இவன் இது செய்க எனச் சும்மாவிருத்தல் வேண்டும் போலும்! ததீசி முனிவர் தம்மெதிரே சிவநிந்தை செய்த தக்கனைக் கோபித்துக் கண்டித்து அவ்விடத்தினின்றும் நீக்கிவிட்டது புண்ணியம்; சைவப் பிரசாரகர் தம்மெதிரே சிவநிந்தை செய் த வ ரைக் கோபித்துக் கண்டியாது, மகிழ்ந்து பாராட்டுவதே புண்ணியம் போலும். இனி நீ. இராமர் தம்முடைய தேவியாரைக் கவர்ந்து சென்ற இரா வணனைக் கோபித்துத் தண்டித்தது நீதி எனவும் இக் காலத்தே ஒருவன் தன் மனையாளைக் கவர்ந்தானொரு வனைக் கோபித்துத் தண்டித்து அவளை மீட்கப் புகின், அது அநீதியெனவும் இதுவும் நீதி என்பாருக்கு, "இரா ! மனாய் விடுவானா இவன் ! சீதையாய் விடுவாளா இவள் ! இராமர் கோபமாய்விடுமா இவன் கோபம்?'' எனவும் ஒருபோது சொல்லத் தலைப்படுவாயோ! சொல்லினும் சொல்லுவாய் !!! சீமானே! உனக்கென்ன? இராமர் கோபமும் அநீதிதான் என்பாய். நீ ''மகாத்மி.'' கெளத மர் கோபமாத்திரம் அநீதி என்னாய். அவராலே கோபிக் கப்பட்டான து ''நாகேந்திரன் '' என்னும் பெயர் வந்து தடுக்குமன்றோ! என் சீமானே ! ஏன் உனக்குக் கண் சிவக்கின்றது ! இந்தக் குளிரிலே உனக்குடம்பெங்கும் வேர்க் கி ற தே னோ! வேர்வையைத் துடை துடை! வேர்வை உள்ளடங்கினால் வியாதியுண்டாகும் ! இந்தச் சனங்கள் ஏன் பல்லைக் காட்டுகிறார்கள்! என் சீமான் நெடுங்காலம் வாழ்ந்திருக்க வேண்டும். என் சீமானிருந் தாலன்றோ என் போலிகளுக்கு நல்ல பொழுதுபோக்கு.
'வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை'

வசனநடை கைவந்த வல்லாளர் 27
என்ற திருக்குறள் வாக்கினை மெய்ப்படுத்தும் இப் பந்தியிலே சொல்லுக்குச் சொல் அங்கதச் சுவையே (Satire) விளங்கினும், அதனிடையே சிவநிந்தையைப் பொருத செம்மணத்தையும் காண்கின்ருேம். அநீதியைக் கண்டு, கொடியோனை நோக்கி விழிக்கின்ற நெருப்பு விழி களின் வெம்மையையும் உணர்கின் ருேம். ஆயின், இத னிலும் வேகமும், சீற்றமும் அதிகமாய் வெளிப்படும் இடங்களும் உள்ளன. அங்கெல்லாம் நாம் விழி சிவந்த நாவலரைக் காணல் இயலாது, வெந்து கனிந்த எரிமலை யாய்ச் சிவாபாரதிகளைக் சீறும் நாவலரையே காணலாம். அது அவர் வழி.
வன்ருெண்டராய் நின்று, தீயோரைத் தீமைகளைச் சாடும் நாவலர் பெருமான், அடியார் சரிதங்களை உரைக் கையில் மெழுகாய் உருகி அன்புப் பிழம்பாகிவிடுவார். அங்கு நாம் காண்பதெல்லாம் நாவலரின் பத்தி, பத்தி, பத்தியே தமிழின் அழகெல்லாம், இனிமையெல்லாம் அவ் வேளையிலே அவர்தம் உரைநடையிலே கலந்துறவாடு வதனை நாம் தெளியக் கண்டு உருகலாம். பெரிய புரா ணத்தில் காரைக்காலம்மையார் புராணம் வரையுள்ள பகுதிக்கு, நாவலர், 1 சூசனம்" என்னும் விளக்கக் குறிப் புக்களை எழுதியுள்ளார். அவற்றிலிருந்து ஒரு பகுதியினை நோக்குவோம்.
"நாயகி நாயகனது பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவனைக் கண்டவுடன் வசமழிதல் இடையன் பும், அவனைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். அவ்வாறே பக்குவான்மா சிவனது பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவரைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவரைக் கூடினவுடன் வசமழிதல் கடை யன்புமாம். நாயகனது பெயர் கேட்டவுடன் வசமழியும் தலையன்புடைய நாயகிக்கு, அக் கேட்டலோடு காண்டல், கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளரும் அன்பின் பெருக் கம் இத்துணைத்தென்று கூறுதல் கூடாதன்றே ! அது

Page 24
28 நல்லைநகர் தந்த நாவலர்
போலவே, "இந்தச்-சேணுயர் திருக்காளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே-கோணமில் குடுமித் தேவ ரிருப்பர் கும்பிடலாம்” என்று நாணன் கூறின மை கேட்டவுடன் வசமழிந்த தலையன்புடைய இந் நாயனருக்கு, அக் கேட்ட லோடு சிவலிங்கப் பெருமானைக் காண்டல் கூடல்களும் நிகழ்ந்த வழி, முறுகி வளர்ந்த அதிதீவிரமாகிய அன்பின் பெருக்கத்தை இத்துணைத்தென்று கூறுதல் கூடாது."
இன்று நாம் இறந்தாரையெல்லாம் * அமரர்" என்று வழங்குகிருேம். அவர் "இறையடி சேர்ந்தார்' என்கிருேம். அரசியல்வாதியோ, தேசிய வீரரோ பிறந்ததை அவதா ரம் செய்தார் என எழுதுகிருேம். அவர் தம் சகாக் களிலே எல்லையற்ற கருணையுடையவர்" என்று வரைகின் ருேம். "அரசியல்வாதியின் தரிசனத்திற்காக மக்கட் கூட் டம் காத்துக் கிடந்தது" எனப் பத்திரிகைக்காரர் வரு ணிப்பதுண்டு. அமரர், இறையடி, அவதாரம், கருணை, தரிசனம், விஜயம், படைப்பு முதலான சொற்கள் அவற் றின் பொருட்பேற்றினை இழந்துவிட்டனவோ என்ற மலைப்பு இக்காலப் பிரயோகங்களைக் காணும்போது எமக்கு ஏற்படுகின்றது. ஓரளவாவது சமய அறிவு, தமிழ் முறைமை தெரிந்திருந்தால் இப் பிழைகள் எமது எழுத் துக்களிலே நேரா. இவ்விரண்டையும் பெறுதற்கு விருப்ப முள்ள எழுத்தாளர் நாவலரின் திருவிளையாடற் புராண வசனம், பெரியபுராண வசனம் முதலானவற்றைக் கருத் தூன்றிக் கற்றல் வேண்டும. (ஆம் ! கற்கத்தான் வேண் டும் 1 நவீன ங் கள், சிறு கதைகளைப் போல வாசித்தல் வேண்டா.)
அடிப்படை இலக்கண அறிவு பெறுவதற்கும், வசனங் களைப் பிழையற எழுதுவதற்கும், விடயங்களை ஒழுங்கு படுத்தி எழுதும் கட்டுரைப் பழக்கத்திற்கும் நாவலரின் பால பாடங்களை மாணவர் கற்கக் கடவர். எளிமை சொல் லில் இல்லை. சொல்லும் வகையிலேதான் உள்ளது. இதனை இக்காலத்தில் உணர்ந்தோர் மிகக் குறைவு. நாவலரின்
 

வசனநடை கைவந்த வல்லாளர் 29
பால பாடங்கள் வாயிலாக எளிமைக்கு நாம் பொருள் உணர்ந்து கொள்ளலாம்.
" அடிமையானவன், தன்னிடத்தே தன்னுயகன் ஒப் பித்த பொருளை, அவன் கருத்தறிந்து, அக் கருத்தின் படியே செலவு செய்தல் வேண்டுமன் ருே. அந்நாயகன் கருத்துக்கு மாருகச் சேமித்து வைத்துக் கொண்டாலும், தன்னிச்சைப்படி செலவு செய்து அழித்தாலும், அவனுலே தண்டிக்கப்படுவானன் ருே. ஆன்மாக்களெல்லாம் சகல லோக நாயகராகிய கடவுளுக்கு மீளாவடிமைகள். தமக்குத் திருத்தொண்டு செய்து பிழைக்கும் பொருட்டு ஆன்மாக் களுக்கு இவ்வருமையாகிய மனித சரீரத்தைக் கொடுத் தருளினவர் அக் கடவுளே. மனிதரிடத்துள்ள பொருளெல் லாம் அவர் கொடுத்தருளிய பொருளே."
மகாத்மா காந்தி ' ஏழைகளின் பொருளுக்குச் செல்வர் கள் தருமகர்த்தர்களாய் இருக்கின்றர்கள் என்பதை மறத் தல் கூடாது' என்னும் பொருள்படக் கூறிய கருத்தினை நூருண்டுகளுக்கு முன்பே நாவலர் எவ்வளவு அழகாய்க் கூறிவிட்டார் ! வழக்கமான பிரயோகத்தில் "நாயகன்" என்பதற்குக் கணவன் என்ற பொருளையே கொள்ளத் தெரிந்த மாணவர்க்கு நாயகர்" என்ற சொல்லின் புதுப் பொருள் ஒன்றைப் புலப்படுத்தி அதனைச் சர்வலோக நாயகர்" என்ற சொற்ருெடரால் மேலும் விளக்கி மாணவ ருள்ளத்திலே நாவலர் பதிய வைக்கும் சிறப்பினை நோக் கத் தெரிந்தவர்களுக்கே, எளிமை என்பதன் கருத்தும் புலணுகும்.
நாவலரின் காலத்திற்குப் பிறகு தனித் தமிழியக்கம் என ஒன்று தமிழகத்திலே தோன்றியது. எதனையும் தூய தமிழ்ச் சொல் கொண்டே புலப்படுத்தல் வேண்டும். வட மொழிப் பதங்களை மறந்தும் உரைநடையிலாவது, செய் யுளிலாவது கையாளல் கூடாது என இவ்வியக்கம் வலி
யுறுத்தியது.

Page 25
30 நல்லைநகர் தந்த நாவலர்
* வட மொழியும் தென்றமிழும் மறைகளுன்கும்
ஆனவன் காண் *
என்ற தெய்விகக் குறிக்கோளினைக் கொண்ட நாவ லரை அவர் வட மொழிச் சொற்களைக் கையாண்டார் எனக் குற்றம் பாரித்து அண்மையில் தமிழ்ப் பேராசிரி யர் ஒருவர் ' நாவலர் வசனநடைக்குத் தந்தையல்லர்' எனக் கூசாது உரைத்துள்ளார். 19 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலி யார் சரித்திரம், பெண் கல்வி முதலாம் நூல்களின் அண் மைப் பதிப்புக்களிலே வேதநாயகம்பிள்ளையின் வசனங் களிலே கையாளப்பட்ட வட மொழிச் சொற்கள் பல வற்றையும் நீக்கித் தனித் தமிழ்ச் சொற்கள் புகுத்தித் தமி ழிலக்கிய வரலாற்றிற்கே இழுக்கினைத் தேடிய கூட்டத் திடம் நடுவுநிலையை எதிர்பார்த்தல் மடமையேயாகும்.
நாவலரின் தாயகம் யாழ்ப்பாணம், அவரின் தாய்த்
திருநாடு இலங்கை. முன்னதனுல் இன உணர்வும் பின் னதணுல் தேசிய உணர்வும் பெற்றவராயிருப்பினும், தமி
ழகத்தையும் அவர் நேசித்தார். அது அவர் 'புக்ககமாய்
இருந்தது. யாழ்ப்பாணத்திற் போலவே சிதம்பரத்திலும் சைவ கலாசாலை தாபித்தவர் அவர். அத் திருத்தலத்திலே சைவப் பிரசாரகர்க்கான பயிற்சி நிலையம் அமைத்தல் வேண்டும் என்பதும் அவர் வேண வா. தமது வாழ்
நாளிலே சில ஆண்டுகளை அவர் தமிழ் நாட்டிலேயே
கழித்தார். இவ்வாறு பரந்த சமய, இன, மொழிப் பற்றுக் கொண்ட ஒருவரை அவர், தம் தேயத்திலே பிறக்கவில்லை என்பதற்காக அலட்சியம் செய்வதும், அவரின் பணிகளை மூடிமறைக்க முயல்வதும் தமிழகத்தறிஞர்க்கு ஒவ்வாச் செயல்களாகும். எங்கிருந்தோ வந்தவரையெல்லாம் அவர் களின் தமிழ்ப் பணிக்காய்ப் போற்றிப் பாராட்டிச் சிலை யாக்கி வழிபடும் பண்பினர், தம் இனத்தார் ஒருவரை ஒதுக்கித் தள்ளுதல், 'உட்சுவரிருக்கப் புறச் சுவர் கோலம் செய்வது போன்ற செயலேயாகும்.
را

s
வச்ன நடை கைவந்த வல்லாளர் 3i
நிற்க, நாவலரின் உரை நடையின் சிறப்பமிசங்களை ஓரளவு நோக்கினுேம். அவரது உரைநடையில் ஒரு பொது அமிசமும் கவனிக்கத் தக்கது. விளக்கமும் தெளி வும் வேண்டுமிடங்களிலே அவர் சந்தி பிரித்து எழுதி வந்தாராயினும் எந்தச் சமயத்திலும் இலக்கண வழுவின் றியே வசனங்களை ஆக்கினர். ஆங்கிலத்தின் செல்வாக் கிற்கு உட்பட்டுத் தமிழின் தனித்தன்மையினை அவர் பலி கொடுக்கவில்லை. நாவலர் எழுதிய உரை நூல்களி லெல்லாம் இந்தச் சிறப்பினை நாம் காணலாம்.
உரைநடையாசிரியராய் மாத்திரமன்றி அவர் உரை யாசிரியராயும் விளங்கினுர், கோயிற்புராணம், சிவதரு மோத்தரம், மருதூரந்தாதி, திருச்செந்தினிரோட்டக யமக வந்தாதி, முதலான நூல்களுக்கு அவரால் உரை வகுக் கப்பட்டன. ۔
நாவலர் பண்டை நூல்கள் சிலவற்றைப் பரிசீலனை செய்து வெளியிடும் பணி யினை யும் மேற்கொண்டார். திருக்குறள் பரிமேலழகருரை, திருச்சிற்றம்பலக் கோவை யுரை, தருக்க சங்கிரகவுரை, சேதுபுராணம் என்பன
அவரால் பதிப்பித்து வெளியிடப் பட்ட நூல்கள்.
இவற்றை வெளியிடுவதில் நாவலர் கைக்கொண்ட முறை கள் எனக் கைலாசபிள்ளை அவர்கள் எடுத்துக் காட்டுவன பின்வருவன :-
1. பிரதிகளின் ஆதாரமில்லாமல் ஒன்றனையும் தாமா கத் திருத்தாமை .
2. பாட பேதங்களொன்றும் அச்சிடாமை. (சிறந்த பொருள் இதுவென்று துணிந்தவருக்கு அந்தப் பாடத் தைக் கொள்வதேயல்லாமல் வேறு சிறப்பில்லாத பாடத் தைக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆணுல், பரிமே லழகர் முதலிய பழைய உரையாசிரியர்களும் பாடபேதங் களை ஏற்று உரை செய்திருக்கிருர்கள்.)

Page 26
32 நல்லைநகர் தந்த நாவலர்
3. இவர் தமக்கு முன்னிருந்த ஆசிரியர்களது துணை யில்லாமல் சித்தாந்தத்திலாவது வேறு எவற்றிலாவது தமது யுத்தியினுல் ஒன்றையுஞ் சொன்ன தேயில்லை.
இவை யாவிற்கும் மேலாக நாவலர் எழுதியோ, பதிப்பித்தோ வெளியிட்ட நூல்களிலே அச்சுப் பிழை களைக் காண்பது அரிதினும் அரிது. ஒருவர் இருவரன் றிப் பலராலும் சரி பார்க்கப்பட்டு வெளியாகும் பாட புத் தகங்களே எழுத்துப் பிழைகள் மலிந்து வெளியாகும் இந்நாளில், தனி ஒருவராய் நாவலர் வெளியிட்ட புத்த கங்களில் எழுத்துப் பிழை மிக அருகியிருப்பது வியப் பினும் வியப்பே. இது, நாவலரது முயற்சியின் அளவை யும், கவனிப்பின் நுட்பத்தையும், செய்வன திருந்தச் செய் யும் ஆற்றலேயுமே நமக்குப் புலப்படுத்துவதாயுள்ளது.
ஆயின், இன்று நாவலரின் நூல்களை வெளியிடு வோர் அந்நூல்களில் எண்ணக் கணக்கற்ற எழுத்துப் பிழைகள் மலிய இடமளிக்கின்றனர். இச் செய்கை நாவ லரின் ஆன்மாவிற்குச் செய்யும் பெருந் துரோகமாகும்.
ډول
 

w
நாவலரின் கல்வித் தொண்டு
* பிள்ளைகளுக்குப் பாடங்களை விளங்கப்படுத்துகிற சக்தி தமிழர்களுக்குள் இவருக்கே படைக்கப்பட்டது.”
- ஆறுமுக நாவலர் சரித்திரம், த. கைலாசபிள்ளை
நற்குலப் பிறப்பு, தெய்வ பத்தி, நற்குறிக்கோள், துலாக்கோல் போலும் நடுவுநிலை, நல்லொழுக்கம், மாணுக் கரிடத்து அன்பு முதலாம் பண்புகள் வாய்க்கப் பெற்ற வனே நல்லாசிரியன் என்று பழந்தமிழிலக்கண நூலாகிய நன்னூல் வகுத்துரைக்கும். நாவலர்க்கு இவையெல்லாம் வாய்த்திருந்தன. இவற்றேடு மாணவர் உளங்கொள்ளும் வகையில் விடயங்களைத் தெளிவுபடுத்தியும், எளிதுபடுத்தி யும் விளக்குகின்ற வல்லமையும் அவர் பெற்றிருந்தார்.
பல நூல்களையும் துறைபோகக் கற்றவர் பலர் இருக் கலாம். தாம் அறிந்தவற்றை அழகாகவும், எளிமையாக வும் எடுத்துரைப்போரும் பலர் இருக்கலாம். பொருத்த மான சொற்களைத் தெரிந்து, பொருத்தமான முறையில் பெரிய விடயங்களையும் கவர்ச்சியோடு எழுத வல்லவரும் பலராகலாம். ஆணுல், தமது ஆளுமையை மாணவனிலே பதித்து, அவன் உளங்கொள்ளும் வண்ணம் கற்பிக்குந் திறமை எல்லார்க்கும் எளிதிற் கிடைப்பதன் று. முற் குறித்த மூவகைத் திறமைகளோடு கற்பித்தற்றிறமையும் பெற்றிருந்தவர் நாவலர் ஒருவரே. அவர் ஓர் அவதார புருஷர்.
நாவலரிடம் கற்கின்ற பாக்கியம் பெற்ற கைலாசபிள்ளை அவர்கள், நாவலரின் கற்பித்தற்றிறமை பற்றிப் பின்வரு மாறு எடுத்துரைக்கின்றர்.
" விளங்கப்படுத்துகிறபோது "ஏ" " ஆரை " என் னும் இரண்டு சொற்களை இடையிடையே சொல்வார்.
币T一司

Page 27
34 நல்லைநகர் தந்த நாவலர்
எவ்வளவு கடினமான பாட்டுக்களையும் விஷயங்களையும் மாணுக்கருடைய மனசில் நன்முகப் பதியும்படி மிகத் தெளி வாக விளக்குவார். அர்த்தஞ் சொல்லும்போதும், பிரசங் கஞ் செய்யும்போதும் இந்த " ஏ " " ஆரை " என்னுஞ் சொற்கள் ஒருபோதும் வந்ததில்லை. இலக்கியத்தை இலக் கணத்திலும், இலக்கணத்தை இலக்கியத்திலும் அமைத் துப் பொருத்தி மாணுக்கர்களுக்கு நன்கு காட்டினவர் இவரே."
நாவலர்தம் ஆசிரியத் தகைமையை எமக்கு இன்றும் எடுத்துரைக்கும் ஒரு சான்ருய் அவரது " இலக்கணச் சுருக்கம் விளங்குகின்றது மாணவரின் இயல்பறிந்து, தேவையறிந்து, காலமறிந்து எவ்வெவற்றை அவர்கள் அறிய வேண்டுமோ அவ்வவற்றை மாத்திரம் தக்க மேற் கோள்களுடன் விளக்கிச் செல்லும் அந்த இலக்கண நூலுக்கு இணையான ஒன்று, சென்ற நூற்றண்டிலாவது, இந்த நூற்றண்டில் இன்று வரையாவது வெளிவந்த தில்லை. மேதையான ஒருவர் எத்துறையிலே கை வைத் தாலும் அது சிறக்கும் என்பதற்கு இலக்கணச் சுருக்கம்" ஒர் எடுத்துக்காட்டு. மாணவர் மாத்திரமன்றி எழுத்தா ளரும் அதனைக் கற்பார்களாயின் பிழையற்ற உரைநடை எழுதும் பழக்கம் கைவரப் பெறுவர்.
நாவலரின் கல்வித் தொண்டு கற்பித்தலோடு நின்று விடவில்லை. அவர் காலத்திலே உயர் கல்வி கற்க வேண்டு மாயின் மிஷனரிகளின் பாடசாலைகளுக்கே மாணவர்கள் செல்லவேண்டியிருந்தது. காலத்தின் போக்கிற்கும் அர சியலாரின் நோக்கிற்குமேற்பக் கல்வியின் குறிக்கோள் மாறிக்கொண்டிருந்த ஒரு காலப் பிரிவிலே, தாய்மொழிக் கல்வியும் சமயக் கல்வியும் புறக்கணிக்கப்படலாயின. 1868 ஆம் ஆண்டுக் கல்விச் சட்டம், " அரசாங்க நிதி யுதவி பெற விரும்பும் பாடசாலைகளிலே சமயக் கல்வி கற் பித்தல் கூடாது' எனத் தளையிடுவதாய் இருந்தது.
இத்தகைய சூழ்நிலையிலே தமிழ் மாணுக்கர் தம் சமயச் சார்பான கல்வியைப் பெறவும், உயர்ந்த மொழியறிவு

நாவலரின் கல்வித் தொண்டு 35
பெறவும் தக்க வகையிலே சைவப் பாடசாலைகளை நிறுவல் இன்றியமையாதது என்பதனை நாவலர் நன்குணர்ந்தார்; 1868 இல் கல்விச் சட்டம் வரமுன்னரே எதிர்காலத்திலே தமிழ், சைவப் படிப்புக்களுக்கு இத்தகைய இடர் ஏற்படும் என அவர் உணர்ந்துகொண்டமை அவரின் தீர்க்கதரி சனத்தையே எடுத்துக் காட்டுவதாயிருக்கிறது. 1848 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 5 ஆம் நாளிலே யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையிலே சைவப் பிரகாச வித்தியாசாலையை அவர் தொடங்கியபொழுது, அதனை நடாத்துதற்கு வேண் டிய பணவசதி அவரிடம் இருக்கவில்லை ; போதிய நில வசதியும் இல்லை : இராமாயணத்தை ஆசை பற்றி அறைய லுற்ற கம்பனைப் போல், நாவலரின் உள்ளம் நிறைய இருந்தது ஆசை ஒன்று மாத்திரமே ; சைவப் பிள்ளைகள் சைவ நெறியையும், தமிழறிவையும் பெறல் வேண்டும் என்ற பேரவா ஒன்றே அவரை ஊக்கி நின்று, இறை வன் திருவருளை முன்வைத்து இத் தொண்டினை த் தொடங்க வைத்தது.
ஒருவரிடமும் தமக்கெனக் கை நீட்டி எதனையும் பெற் றறியாத அந்த மகான், வித்தியாதானத்திற்காகச் சைவ வீடுதோறும் பிடியரிசித் தானம் பெற்ருர். அவரிடம் கல்வி பெற்ற நன்றி மறவாத மாணவர் சிலர் அப் பாட சாலையிலே இலவசமாகக் கல்வி கற்பித்தனர். பாடசாலை யைத் தொடர்ந்து நடத்திச் செல்ல ஒரு வர்த்தகசாலையை விலைக்குப் பெறுதற்காய் முயன்று, அதற்கு வேண்டிய பணம் கிடைக்காத நிலையிலே, நாவலர் தம்மை உடை யார் முன் நின்று அழுது கதறிய கதறல் ஒரு கவிதை யாய் உருவெடுத்தது.
** மணிகொண்ட கடல்புடைகொ எரிந்நாட்டி லுன் சமய வர்த்தன மிலாமை நோக்கி - மகிமைபெறு நின்புகழ் விளக்குவான் கருதியிம்
மைப்பொருட் பேருெ பூழித்தே கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவ்வூர்க்
கயவர்செயு மிடர்கள் கண்டுங்

Page 28
36 நல்லைநகர் தந்த நாவலர்
கல்லூரி யதை நாடத் தப்பொருட் டுணைசெயக்
கருதுவோ ரின்மை கண்டும் அணிகொண்ட சாலைய தொழிப்பின துனையிகழு
மந்நிய மதத்தர் சாலை யாமென நினைத்தெ னெஞ்சிற்பகற் றுயருற
லறிந்துமொரு சிறிது மருளாத் திணிகொண்ட நெஞ்சவினி நின் முன்யா ஆறுயிர்விடுத
றிண்ண நீ யறியா ததோ சிறியேன தன்பிலச்ச் சனை கொ முழகிய திருச்
சிற்றம் பலத் தெந்தையே.
*அருளாத்திணி கொண்ட நெஞ்ச1" என நாவலர் ஏசிய பின்னரும், " உயிர் விடுவன் " எனப் பயமுறுத் திய பின்னரும் " சிற்றம்பலத்தெந்தை" வாளாவிருப்பரோ? அன்றே கொழும்பு வாசரான நன்னித்தம்பி முதலியார் என்ற கொடைவள்ளலிடமிருந்து, நானூறு ரூபாயை அனுப்புவித்துத் தம் மைந்தனைச் சாகவிடாது அவர் காப் பாற்றியருளினுர்.
இவ்வாறு நாவலரின் வித்தியாதானத்திற்கு ஏற்பட்ட விக்கினம் நீங்கப் பெற்றது. சைவப் பிரகாச வித்தியாசாலை தன்முறையிலே நடந்து வந்தது. தாம் வாங்கிய வர்த் தகசாலையின் இலாபப் பணங் கொண்டு வித்தியாசாலையை நடாத்தியது மாத்திரமன்றி அவர் முதலாம், இரண்டாம், நான்காம் பாலபாடங்களையும், சைவ சமயசாரம் முதலிய பிற நூல்களையும் அச்சிடுவித்து வெளியிட்டார்.
சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடர்ந்து சிதம் பரத்திலும் ஒரு கலாசாலை தொடங்குதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். 1864 ஐப்பசி 28 ஆம் நாளில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையும் தொடங்கப் பட்டது. அடுத்து அவர் அளித்த ஊக்கத்தினல் யாழ்ப் பாணத்தில் கோப்பாய், கொழும்புத்துறை, கந்தர்மடம், பருத்தித்துறை, மாதகல், இணுவில் முதலாமிடங்களில் சைவ வித்தியாசாலைகள் ஆரம்பமாயின. 1872 இல் வண்
彎」

நாவலரின் கல்வித் தொண்டு 37
ணுர்பண்ணையிலே நாவலர், சைவாங்கில வித்தியாசாலை ஒன்றினைத் தொடங்கினுராயினும், போதிய பணவசதி யின்மையாலும், மிஷனரிமாரின் போட்டியினுலும், அரசாங் கத்தின் நிதியுதவி கிடைக்காமையாலும் 1876 இல் அது மூடப்பட்டது. எனினும், ஆங்கிலக் கல்விக்கு அவர் இட்ட வித்தே, 1890 இல் நியாயவாதி சின்னத்தம்பி நாகலிங்கம், சித. மு. பசுபதிச் செட்டியார் முதலாம் சைவ நன்மக்கள் முயற்சியால் வளர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாய்க் கிளைத்தது.
நாவலரின் உள்ளத்திலே சைவ சமய அறிவு வளர்ச் சிக்கான பெரியதொரு திட்டம் உருவாகி வந்தமையை அவர் சிதம்பர வித்தியாசாலைத் தாபிதத்திற்கென 1860 இல் வெளியிட்ட விஞ்ஞாபனம் வாயிலாக அறியலாம். கத் தோலிக்க பாதிரிமார் போலவும், புருெட்டஸ்தாந்து மதி போதகர் போலவும் சமய அறிவும், ஒழுங்கும், கட்டுப் பாடும் நிறைந்த சைவப் பிரசாரகர்களைத் தக்க பயிற்சி யளித்து உருவாக்கி அவர்கள் மூலம் சைவ நெறியினைத் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரப்பல் வேண்டும் எனும் வேண வாவினை அவர் கொண்டிருந்தமைக்கு இவ் விஞ்ஞா பணமே சான்று பகரும். அவர் கூறுகிருர் :-
1. சிதம்பரத்திலே திருவீதியில் விசாலமாகிய ஒரு நிலம் வாங்க வேண்டும்.
2. இந்த நிலத்திலே ஒரு பாடசாலையும், பூசைக் கட்டு, சாத்திரக்கட்டு, சமையற்கட்டு என மூன்று கட் டுள்ள ஒரு திருமடமும் கட்டுவிக்கவும், சிவபூசைக்கு உப யோகமாகும் பொருட்டு ஒரு சிறு நந்தவனம் வைக்கவும் வேண்டும்.
3. இந்தப் பாடசாலையிலே கல்வியறிவொழுக்கங் களிற் சிறந்த உபாத்தியாயர்களை நியோகித்து, பிள்ளை களுக்குப் பாலபாடங்கள், நிகண்டு, திருவள்ளுவர் முத லிய நீதி நூல்கள், சிவபுராணங்கள், இலக்கணம், கணி தம், தருக்கம், வெளிப்படையாகிய வசனநடையிற் செய்

Page 29
38 நல்லைநகர் தந்த நாவலர்
யப்பட்ட சைவ சமய நூல்கள், பூகோள நூல், ககோள நூல், வைத்தியம், சோதிடம், வேளாண்மை நூல்,
வாணிக நூல், அரச நீதி, சிற்ப நூல் முதலானவைகளைப்
படிப்பிக்க வேண்டும்.
4. சாமர்த்தியசாலிகளாகிய ஒதுவார்களை நியே" கித்து, சில பிள்ளைகளுக்குத் தேவாரமும், திருவாசகமு மாகிய தமிழ் வேதத்தைப் பண்ணுடன் ஒதவும், சுத்தாங்க மாக ஒதவும் பழக்குவிக்க வேண்டும்.
திருக்கோயிலிலும், திருமடத்திலும் பாடசாலை ஆசிரி
யர்களைக் கொண்டு சமய நூல் விளக்கம் சொல்லுவித்த லும், சாயங்கால வேளைகளில் ஒதுவார்களைக் கொண்டு தேவார திருவாசகங்களை ஒதுவித்தலும், சமயகுரவர் களுடையவும், நாயன்மார்களுடையவும் குருபூசைகளைத் திருமடத்திலே நடாத்துவித்தலும், பாடசாலையிலே கற் றுத் தேர்ந்த நல்லொழுக்க சீலர்களான மாணவர்க்கும் பிறர்க்கும் நிருவாண தீகூைடி அளித்து அவர்களுக்குச் சமய சாத்திரங்களைப் பயிற்றுவித்தலும், மாணவர்களை ஆண்டுதோறும் மடாதிபதிகள், வித்துவான்கள், பிரபுக் கள் கூடிய சபையிலே பரீகூழித்தலும், வருடந்தோறும் வரவு செலவுக் கணக்கை நிறுவக மேற்பார்வைச் சபைக் குப் படித்துக் காட்டலும், பாடசாலையிற் கற்று வெளியேறி யோர் அவ்வப்போது வந்து மாணவர்க்குக் கற்பித்தலும், கற்றுத் தேர்ந்தவர்க்குச் சின்னமும், சான்றும் வழங்குதலு மாகிய மிகப் பரந்த திட்டத்தினை ஐந்தாம் விதியிலிருந்து பதின்மூன்ருவது விதி வரை விரித்துச் சொன்னவர், பதி குன்காம் விதியிலே பின்வருமாறு குறிப்பிடுகிருர் :-
14. இப்படிக் கல்வியறிவொழுக்கங்களால் நன்கு
மதிக்கப்பட்டவர்களுள், தங்கள் வாழ்நாளைப் பிறருக்குப்
பயன்படும் வண்ணம் போக்கல் வேண்டுமென்னுங் கருத் துடையவர்களைச் சிதம்பர சபாநாதர் சந்நிதியிலே சங்கா பிஷேகஞ் செய்வித்து, சைவப் பிரசாரகர்களாக "நியோ கித்து, அவரவர் தகுதிக்கு ஏற்ற சம்பளம் நியமித்து, தமிழ் நாட்டில் உள்ள ஊர் தோறும் அனுப்பி, அவர்

a
நாவலரின் கல்வித் தொண்டு 39
களைக் கொண்டு அங்கங்கு உள்ள திருக்கோயில்களிலே சனங்களுக்குச் சமயநெறியைப் போதிப்பிக்க வேண்டும்.
நாவலரின் இத் திட்டத்தினைப் படிக்கும்போது கிரேக்க மகா ஞானியாகிய சோக்கிரட்டீசின், 'அறம் என்பது என்ன? அதனை அறிந்திடும் அறிவே" என்னும் கூற்றே நினை வில் வருகின்றது. (Virtue is knowledge) அறத்தை எவன் அறிந்து கொள்கின்ருணுே அவன் அதன் வழியிலேயே நடப்பான் என்று சோக்கிரட்டீஸ் நம்பினுர். தாம் தமது வாழ்நாளெல்லாம் அறத்தின் வழியில் ஒழுகியதால், அதற் குக் காரணம் தாம் அறத்தினை அறிந்திருந்தமையே என் பதால், உலகிலுள்ள யாவரும் அறத்தினை அறிய வழி செய்வதன் மூலம் உலகைத் திருத்திவிடலாம் என்று அவர் உறுதியாகக் கருதி வந்தார். ஆனல், அறத்தை அறிந்து கொள்வதனுல் மாத்திரம் ஒருவன் அறநெறியினணுதல் இல்லை. உலக இயற்கை இருந்தவாறு இதுதான். அறிந்த அறத்தினை எல்லாரும் கடைப்பிடிக்கத் துவங்கிவிட்டால் வானவர் நாடு இங்கேயே வழி திறந்திடுமே !
புகழையும், சுயநலத்தையும், பதவி வேட்கையையும் பற்றிக் கொண்டு தொங்குகின்ற இந்நாள் உலகில், சோக் கிரட்டீஸ், நாவலர் போன்றரின் கருத்துக்கள் ஏட்டள விலே கிடந்து செல்லரித்துப் போகுமேயன்றி மக்கள் அவற்றை வாழ்விலே பயன்படுத்தார்கள். பெரியார்கள தும், ஞானிகளதும் திட்டங்களை வாழ்விலே செறியச் செய்வதே அவர்களுக்கு நாம் எடுக்கின்ற சிறந்த நினைவுச் சின்னம் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வார்க ளாணுல் . .
** இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு "
- திருக்குறள்,

Page 30
நாவலரின் தேசிய சமூகத் தொண்டுகள்
* அணியி ளங்கதிர் ஆயிர முள்ள
அருக்கன் போய்க்குட பாலிடை மேவ மணிகள் கொண்டு மணிவிளக் கேற்றிடும் மாவலி கங்கை நாடெங்கள் நாடே
- சின்னத்தம்பிப் புலவர் .
நாவலர் சைவ நெறி காத்த தண்ணளியாளர் மாத் திரமல்லர். தம்மைச் சூழ்ந்திருந்த மக்களின் உலகியல் வாழ்வுயர்ச்சிக்கும் முயன்றுழைத்தவர். சமயத்தின் பெய ரால் அறியாமைகளும், குருட்டு நம்பிக்கைகளும் மலிந் திருந்த ஒரு சமுதாயத்தினை உயர்த்துதற்காய் அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட்ார்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சமூகம் இன்று போலவே" அன்றும் பல ஒழுக்கக் கேடுகளுக்கு நிலைக்களஞய் இருந்து வந்தது. இந்நிலை அவர் உள்ளத்தினைப் பெரிதும் வாட் டியது. ‘நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ' எனத் தலைப் பிட்டு அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலே கூறுகிருர் :-
* தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலும் இங்கிலிசுப் பள்ளிக் கூடங்களிலும் படிக்கப் புகுந்த பற்பல மாணுக்கர்கள் இராத் திரியிலே திருவிழா, திருவிழா என்ருேடிச் சனக் கூட்டத் திலே நெருக்குண்டு தள்ளுண்டு அடியுண்டு நுழைந்து தாசிகளுடைய நாட்டிய கீதங்களைப் பார்த்துங் கேட்டுங் கெட்ட வார்த்தைகளுங் கெட்ட செய்கைகளும் பழகிக் கொண்டதும், அவர்கள் இராப் பாடமும் இழந்து இரு

நாவலரின் தேசிய சமூகத் தொண்டு 41
பது இரு பத்  ைதந்து நாழிகை வரையும் நித்திரையும் இழந்து மற்றைநாட் பள்ளிக்கூடங்களிலே பாடம் ஒப்பி யாது தூங்கி விழுந்துங் கல்வியை இழந்தும், அவர்கள் வீட்டு வேலை, தோட்ட வேலை, வயல் வேலைகளும் பழகாது படிக்கிருேம், படிக்கிருேம் என்று எத்தனையோ வருஷம் புத்தகம் தூக்கிக்கொண்டு வித்தியா தகூழிணை இறுத்துக் கொண்டு பெருமுயற்சியுடையவர்கள் போல் ஒடித் திரிந் துங் கல்வித் தேர்ச்சி பெருது திரும்பியதும், அவர்கள் உத்தியோகம், உத்தியோகம் என்று கேட்டபொழுதெல் லாம் ஒரு வசனந்தானும் பிழையறத் தொடுக்கத் தங்க ளால் இயலாமையினலே பிறரிடத்தே பலமுறை அலைந்து திரிந்து விண்ணப்பம் எழுதுவித்துக் கொண்டு கச்சேரி கோட்டுக்களுக்கு ஓடியும் உத்தியோகங் கிடையாமையினு லும், ஒரு பிழைப்புமின்றி நடைப்பிணங்களாய்த் திரிவ தும், அவர்கள் " வேலையில்லாதவருக்குப் பிசாசு வேலை கொடுக்கும்” என்றபடி கையொப்பமில்லாக் கடிதங்கள் எழுதித் தபாற் பெட்டியிலே போட்டுக்கொண்டும், வசைப் பத்திரங்கள் எழுதியெழுதி ஒட்டிக் கொண்டும், கைதடி யிலே திருவிழா, வேலக்கையிலே திருவிழா, சுதுமலையிலே திருவிழா, மூத்தநயினுர் கோயிலிலே திருவிழா, இணுவி லிலே திருவிழா, நயினுர் தீவிலே திருவிழா, வேலம்பரா யிலே திருவிழா, மாதகலிலே திருவிழா, புன்னுலையிலே திருவிழா, துன்னுலையிலே திருவிழா, மருதடியிலே திருவிழா என்று சொல்லிக் கஞ்சா லேகியம் உட்கொண்டு தாசி களுடைய வண் டி களுக்குப் பின்னுல் ஒடிக்கொண்டும், சேணிய தெருவிலே இரணிய நாடகம், கள்ளியங்காட்டிலே அரிச்சந்திர விலாசம், கந்தர்மடத்தடியிலே தமயந்தி விலா சம், நெல்லியடியிலே ஏதோ ஒரு கூத்து, பறங்கித் தெரு விலே ஏரோது நாடகம், சங்குவேலியிலே இராம நாட கம், மானிப்பாயிலே தருமபுத்திர நாடகம் என்று கேட்ட கேட்டவுடனே கஞ்சா லேகியந் தின்று வீராவேசத்தோடு ஈட்டி, வளைதடி கருங்காலித் தண்டு கைப்பற்றி நடந்து, நித்திரை விழித்து உலைந்துகொண்டும், நாடோடிகளாய்த்
币T一6
,
KK

Page 31
42 நல்லைநகர் தந்த நாவலர்
திரிந்து கெடுவதும் திருவிழாக்களால் விளைந்த பிரயோ சனங்களன்றே !”
நாவலர் இளைஞர்களின் கதி கண்டு கண்ணிருகுத்த காட்சிகள் இன்று புதிய வடிவங்கள் எடுத்து, திரைப் படங்களாயும், களியாட்ட விழாக்களாயும், பொழுதுபோக் குக் கிளப்புகளாயும், உணவு விடுதிகளாயும் (Hotels), ஆபாசப் பத்திரிகைகளாயும் நிலைத்து இக்கால இளைஞர் களைப் பாழ்படுத்தி வருகின்றன. இவற்றைக் கண்டு சீறி எழுந்து இடித்துரைக்க ஒரு நாவலர் தாமும் நம்மிடை இன்று இல்லையே!
அவர் காலத்திலே யாழ்ப்பாணத்திலே மாகாணுதி பதியாய்த் துவையினந் துரை என்ற ஆங்கிலேயர் இருந் தார். அவராலே யாழ்ப்பாண மக்கள் அடைந்த இன் னல்கள் பல. அவற்றினை நாவலரே ஒரு துண்டுப் பிர சுரத்திலே எ டு த்து விரித்துரைக்கின்றர். அவற்றுள் மூன்று விடயங்களை மாதிரிக்காய்க் காட்டுகின்ருேம்.
(1) துவையினந் துரை யாழ்ப்பாண மணிய உத்தி யோகம், உலாந்தர் காலந் தொடங்கி உயர்குடிப் பிறப் போடு, உத்தியோகஞ் செல்வங் கல்வியறிவு நல்லொழுக் கஞ் சுற்றப் பெருக்கம் எச்சபையினும் நன்கு மதிக்கற்பாடு முதலிய பலதிறத்தாலுஞ் சிறப்புடைய பரம்பரை யாராலே கேட்கப்பட்டும், அவருக்கு அது கொடுக்கப்பட்டால் தம் முடைய வெட்கமில்லாத அநீதியாகிய கேள்விக்கு அவர் ஒரு சிறிதும் உடன்படார் என்று பயந்து, அந்தக் கேள்வி களை முடித்தலில் அதிசமர்த்தரென்று மன்னுரிலே தம் முடைய நெடுங்கால அநுபவத்தாலே துணியப்பட்ட மன்னர் அதிகாரத்தை இங்கே வருவித்து, அவ்வுத்தியோ கத்தை அவருக்குக் கையளித்துவிட்டார். ஓர் ஏழை விவாகஞ் செய்து கொண்ட மனையாளை, அவனுக்குத் துரோகஞ் செய்து, தமக்கு மனையாளாக்கிக் கொண்ட ஒரு மகாப் பிரபு, யாழ்ப்பாணத்துச் சனங்களே, உங்கள் வீட்
டுக் கன்னிகைகளுக்குக் கலியாணம் எழுதும் உத்தியோ

\
நாவலரின் தேசிய சமூகத் தொண்டு 43
கத்தராய்விடும்படி செய்துவிட்ட துவையினந் துரை எவ் வளவு பரம யோக்கியர் !!!
(2) முன்னை வழக்கத்திற்கு மறுதலையாக இப்பொழுது நெடுங்கால நிலை பெறுவதாகப் பேதி வியாதிக் காலத் திலே துவையினந் துரை தாம் சனங்களுக்கு நன்மை செய்வார்போல் நடித்து, அவர்களுக்குத் தீமையும் கவர்ன் மெண்டு திரவியாபகாரமுஞ் செய்த தம்முடைய கொடு மையை மறைக்கும் பொருட்டு, தம்மாலே நியாயமொரு சிறிதுமின்றி நெடுங்காலம் பகைக்கப்பட்ட நியாயாதிபதி யைத் தாம் தப்பு நியாய நோக்கி வலிந்து தம் மனையா ளோடு போய்க் கலந்து தமக்குச் சிநேகிதராக்கிக் கொண் LITIt.
(3) இப் பஞ்சகாலத்திலே வட தேசத்திலே கவர்ன ரும் கலெக்டர்களும் பஞ்சத்தால் வருந்துஞ் சனங்களுக்கு எவ்வளவோ பெரு நன்மைகளைச் செய்வது பத்திரிகை களாலறிந்தும், இங்கே சனங்கள் படுந் துயரத்தைக் கண் டுங் கேட்டும், துவைனந் துரை தாம் இங்கே ஒரு நன் மையுஞ் செய்யத்தலைப்படவில்லை. அம்மட்டோ, இரக்கம் ஒரு சிறிதுமில்லாமல், வாயிதாப் பணத்தினுலும், தலை வரிப் பணத்தினுலும் சனங்களை வருத்தத் தலைப்பட்டார். அது கண்டிரங்கி, இங்குள்ள சிலர் ஒரு கூட்டங் கூட்டிக் கவர்னருக்கு எழுதிய விண்ணப்பத்தை அவர் துவையி னந்துக்கு அனுப்பி இங்கே பஞ்சம் உண்டென்ற து மெய்யோ என்று கேட்கத் துவையினம் தாம் கவர்னருக்கு யாதோ எழுதிவிட்டு, இங்கே தலைவரிப் பணத்தையும் வாயிதாப் பணத்தையும் சீக்கிரம் அறவிடும்படி தலைமைக் காரர்களுக்குக் கட்டளை செய்துவிட்டார்.
அரசியலாலோ, அதிகார உத்தியோகத்தாலோ உயர் நிலையினைத் தேடிக்கொள்ளாத ஒருவர், ஆங்கில அரசின் உயர் அதிகாரியான ஆங்கிலேயர் ஒருவர் பற்றி ஆங்கி லத் துரைத்தனத்தின் பணிவுள்ள பிரசையாயிருந்து கொண்டே தாக்கித் துண்டுப் பிரசுரம் வெளியிட்டாரா

Page 32
V)
44 நல்லைநகர் தந்த நாவலர்
ஞல் அவரின் துணிவினை என்னென்பது? இத் துணிவு அவர்க்கு எவ்விதம் அமைந்தது? மனச்சான்றின் வழிப் பட்டு, மக்கள்மீது கொண்ட இரக்கத்தினுலே, பரநலம் நோக்கி அவர் அன்று செய்த செய்கையினை இன்று நமக் காய்ச் செய்யத்தக்கவர் யார் உளர்?
நாவலர் துண்டுப் பிரசுரம் வெளியிடுவதோடு நின்று
விடவில்லை. தமது கலாசாலையிலே ஒரு பொதுக்கூட்டம்
கூட்டினர். அக்கூட்டத்திலேயே ஒரு விண்ணப்பத்தினை எழுதி, து ைவயின ந் து ைரயின் அநீதிகளையெல்லாம் அதிலே விரிவாகக் காட்டி, தேசாதிபதியாகிய சர். லோங் டன் 1878 இல் யாழ்ப்பாணம் வந்தகாலை, தூதுக்குழு ஒன்றினைத் தலைமைதாங்கி அழைத்துச் சென்று தேசாதி பதியிடம் அவ்விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்தார். அத ணுலே எவ்வித பயனும் விளைந்திலதாயினும், மக்களின் உரிமைப் போராட்டத்தின் தளபதியாய் நிற்கத் தகும் ஆற்றல்வாய்ந்த ஒருவரை மக்கள் நாவலரிலே கண்டு கொண்டனர்.
இலங்கைச் சட்ட நிரூபண சபைக்குப் பிரதிநிதியாகத் திரு. பொன். இராமநாதன் அவர்களைத் (பின்னுளிலே * சர்" பட்டம் பெற்றவர்) தெரிந்தனுப்புவதிலும் நாவலரே முன்னின்றுழைத்தார். இராமநாதனுேடு போட்டியிட்ட திரு. பிறிற்றே (Brito) வயது, அநுபவம் முதலியவற்றில் இராமநாதனிலும் பெரியவராயிருந்தும், அவர் நாவல ருக்கு நெருங்கிய நண்பராயிருந்தும், நாவலர் மக்களின் விருப்பத்திற்கே மதிப்பளித்துப் பல கூட்டங்கள் கூட்டி, திரு. இராமநாதனைச் சட்ட நிரூபண சபைக்கு அனுப்ப வேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்தினுர், உண் மையில், அப்பொழுது இருபத்தேழு வயதே அடைந் திருந்த திரு. இராமநாதன் சட்ட நிரூபண சபைக்குச் சென்றமையே நாவலரின் முயற்சியாலேதான். பிற்காலத் தில் (1915 இல்) சிங்கள-முஸ்லிம் இனக் கலவரத்தின் போது, ஆங்கில தேசாதிபதியையே துணிவுடன் எதிர்த்து நின்று, இலங்கை மக்களின் உரிமைக் குரலை இங்கிலாந்
مم%*ر
ஆ

நாவலரின் தேசிய சமூகத் தொண்டு 45
திற்குச் சென்று முழக்கி, நாட்டின் அமைதி காத்த ஈழத் தின் கேசரியை நாவலர் அன்றே இனங் கண்டு கொண் டார். நாவலரின் வெற்றி இராமநாதனின் வெற்றி, இராம நாதனின் வெற்றி ஈழ மணித் திருநாட்டின் வெற்றி. இதனை இன்று நினைத்துப் பார்ப்பவர் யார்? நாவலர் இராமநாதனுக்கு வெற்றியீட்டிக் கொடுத்த நிகழ்ச்சியைத் தாம் கேட்டறிந்தபடி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 'நாவலர் எழுந்தார்" என்ற தலைப்பில் சுவை நிறைந்த ஒரு கட்டுரையாய் எழுதியுள்ளார்.
நாவலர் எடுத்துரைத்திருக்காவிடில் திருக்கேதீஸ்வரத் திருத்தலம் இன்று பொய்யாய்ப் பழங் கதையாய் மெல்ல மறைந்து போயிருக்கும். யாழ்ப்பாணச் சமயநிலை என்ற துண்டுப் பிரசுரத்திலே அவர் திருக்கேதீஸ்வரம் பற்றி எடுத்துரைத்தவை இவை :- " சைவ சமயிகளே! இன்' னும் ஒன்று சொல்லி முடிப்போம். தேவாரம் பெற்ற சிவ ஸ்தலங்களுள் இரண்டு இவ்விலங்கையில் உள்ளன. அவற்றுள் ஒன்ருகிய திருக்கோணமலைக்குத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனுர் திருப்பதிகமொன்றிருக்கின்றது : மற்றென்ருகிய திருக்கேதீச்சரத்துக்குத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனுர் திருப்பதிகமொன்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனுர் திருப்பதிகமொன்றும் இருக்கின்றன. இத் திருக் கேதீச்சரம் இவ் வடமாகாணத்தின் கண்ணுள்ள மன்னு ருக்கு அதிசமீபத்திலிருக்கின்ற மாதோட்டத்திலுள்ளது. திருக்கேதீச்சுரம் அழிந்து காடாகக் கிடக்கின்றதே ! புதிது புதிதாக இவ்விலங்கையில் எத்தனை எத்தனையோ கோயில்கள் கட்டப்படுகின்றனவே! நீங்கள் இந்த மகா ஸ்தலத்தைச் சிறிதும் நினையாததென்னை யோ! இவ்விலங் கையிலுள்ள விபூதிதாரிகள் எல்லாருஞ் சிறிது சிறிது உபகரிக்கினும் எத்துணைப் பெருந்தொகைப் பொருள் சேர்ந்துவிடும். இதை நீங்கள் எல்லீருஞ் சிந்தித்து இத் திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின் அருட் கடலாகிய சிவபெருமான் உங்களுக்கு அநுக்கிரகஞ் செய் Qgif." -

Page 33
46 நல்லைநகர் தந்த நாவலர்
நாவலரின் குரலுக்குத் தமிழ் மக்கள் எல்லாருஞ் செவி சாய்க்காவிடினும், சைவமும், தமிழும் பண்பாடுமே உருக் கொண்ட வள்ளன்மையின் இருப்பிடமாகிய மகான் ஒரு வரின் செவிகள் அவற்றைப் பயபத்தியோடுங் கேட்டன. அம் மகானே சித. மு. பசுபதிச் செட்டியாரவர்கள். அவர் ஆராமையோடு பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப் பகுதியிலே தொடக்கி வைத்த திருக்கேதீஸ்வர ஜீர்ணுேத் தாரணத் திருப்டாணி, எமது காலத்தில் சர். கந்தையா வைத்தியநாதன் அவர்களாலே தீவிரம் அடைந்தது.
அவர் எம்மைப் பிரிந்த பின்னர் திருப்பணி வேலைகள் சற்றே தளர்நடை போட்டனவாயினும்.
இன்று இராசகோபுர வேலைகள் பூர்த்தியடைந்து, நாவலரின் புகழ்போல அக்கோபுரம் வான்முட்டி நிற்கின் றது. இது அவரின் நல் வழிகாட்டலுக்கு நிலைத்ததோர் சான்றெனலாம்.
سلیم “
/

நாவலரின் நற்பண்புகள்
* உரைதிறம் பரதநீதி யோங்குநீர் மையினின் மிக்கார்"
- தி. தொ. பு, மெய்ப்பொருளுயனர் புராணம்
"சரித்திரம் எழுதுவோர் தமது பாட்டுடைத் தலைவ ருடைய குணங்களையுங் குற்றங்களையும் பகூடி பாதமின்றி ஒப்பக் காட்டுதல் வேண்டும். நாவலரவர்களுடைய நடை யிலோ குற்றமானது ஒன்றையும் நான் காணுமையால் குற்றஞ் சொல்ல எனக்கில்லை; குணங்களே சொல்ல வேண்டும். குணங்களை மாத்திரஞ் சொன்னுற் சிலர் நம்ப மாட்டார்கள். ஆதலால் அவர் சரித்திரத்தை நான் எழு துதல் சரியன்று என்று மறுத்தேன்."
ஆறுமுக நாவலர் சரித்திர முகவுரையில் பூரீமத் த. கைலாசபிள்ளையவர்கள், நாவலரின் சரித்திரத்தை எழுதத் தமக்கிருந்த தயக்கத்தையும், அச்சத்தையும் இவ்வாறு குறிப்பிடுகின்றர். அவர் கூற்றில் நியாயமிருக்கிறது.
நாவலர் வாழ்வு தெய்வீகமானது. மானுடத்தின் புழு திக் காற்று அவர் மீது படிந்ததில்லை. மனித உணர்ச்சி கள், விருப்பு வெறுப்புக்களிடையே அவர் ஊசலாடிய தில்லை. சலன சித்தம் அவர் அறியாதது. இத்தகைய ஒருவரிலே குறை காண்பது எவ்வாறு ?
எனினும், அவரை எதிர்த்தோரும், இழித்தோரும் இல்லாது போய்விடவில்லை. அவர்களின் எதிர்ப்பெல்லாம் அவருக்குப் புறத்திலேயே நிகழ்ந்தன. அவரைக் காண நேர்கையில் அவருக்கு அடிபணிந்து போவதே மாற்ரு ரின் வழக்கமாயிருந்தது. தெய்வ நீதி என்ற கூர்வாளின்

Page 34
48 நல்லைநகர் தந்த நாவலர்
நுணியிலே இலாவகமாய் நடந்த அவரை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் ஆற்றல் எவர்க்கும் இருந்ததில்லை.
தம்பிரானைத் தோழமை கொண்ட நம்பியாரூர் பரவை மனைக்குத் தம் தோழனைத் தூது விடுத்ததையும், அடி யாரை மதியாது சென்றதையுங் கேட்டும் கண்டும், மனம் பொருத விறன் மிண்டர் " புறகு கூறியதுபோலவே சிவ நிந்தையாளர் எவராயிருப்பினும் அவர்மீது காய்ந்தவர் நாவலர். தாம் இயற்றி வழிபட்ட மணலிலிங்கத்தை உதைத்த தந்தையின் கால்களைக் கோல் கொண்டு துண் டித்த சண்டேசுர மூர்த்தியாய் அவர் வாழ்ந்தார். " திருத் தொண்டர் புராணம் கட்டுக்கதை " என்றுரைத்த தமைய ஞராகிய தியாகுவைக் கத்தி கொண்டு துரத்தி, அவர் மர ணப்படுக்கையில் விழும்வரை அவரோடு பேசுதலுமின்றித் தறுகளுண்மை கொண்டிலங்கிய பெருந்தகையை 'ஐந்தாங் குரவர்' என்று அழைத்தல் சாலப் பொருந்துவதேயாகும்.
அவர் அற்புதங்கள் நிகழ்த்தியதில்லை. தமது அறி வாலும், ஆற்றலாலும், புகழாலும் மயங்கித் தருக் கித் திரிந்ததில்லை தம்மை ஐந்தாங் குரவரோடு ஒப்பிடும் வாசகங்களை நாராசங்களாய்க் கொண்டு நாணிக்கூசி அவ் வாறுரைப்போரைக் கடிதலும், கண்டித்தலும் அவர் வழக்க மாயிருந்தன.
நாவலரின் ஆசைகள் மிகப் பல. சிவமணமும், செந்
தமிழ் மணமும் திக்கெல்லாம் கமழ்ந்திட அவர் வகுத்த
திட்டங்களும் மிகப்பல. அவற்றை இயற்ற முடியாத நிலை ஏற்படுகையில், ' இறைவா! வல்லமை குறைந்த இச் சிறியேனுக்கு ஏன் இத்தனை ஆசைகளைக் கொடுத்துச் சோதிக்கிருய்?" என்று அவர் மனம் நோவார்.
* கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை
வெள்ளத் தலைவர் மிக "
என்னும் திருவருட் பயனது இறுதிக் குறள் நாவலர்க் கும் உண்மையாயிற்று. அவர் வருந்திய வருத்தம் யாவும்
A

ܐܸܬ
நாவலரின் நற்பண்புகள் 49
அல்லற்படும் உயிர்கள்மீது கொண்ட பெருங் கருணை காரணமாகவே எழுந்தன; நடிப்புச் சைவராகிய எம் நல்வாழ்வு கருதியனவாகவே இருந்தன. இதனுலேயே முற்கோபி என்ற அவப் பெயரையும் அவர் சம்பாதித்துக் கொண்டார். அதற்காய் அவர் வருந்தியதில்லை.
யாழ்ப்பாணத்து நல்லூர்க் கோயிலிலே சிவாகமத் திற்கு விரோதமான செயல்கள் பல நிகழ்ந்தன. அவற் றைக் கண்டு சகியாராய்க் கோயில் முதலாளிக்கு அக் குற்றங்களை எடுத்துரைத்துத் திருந்துமாறு நாவலர் நயந் தார். முதலாளி கேட்டாரில்லை. உடனே பகிரங்கமாய் " நல்லூர்க் கந்தசுவாமி கோயில் " என்ற தலைப்பில் அவர் இரண்டு கண்டனப் பிரசுரங்களை வெளிப்படுத்தினர். ஓர் இடத்தில், ' இவர் இந்நாட்டை நீங்கிச் சிதம்பரம் செல்லட்டும். நாம் கோயில் மீது இவர் கற்பித்த பிழை களைத் திருத்தி நடப்போம்” என்ருர்க்கு, " அவ்வாறு தாம் செய்ய ஆயத்தம்' என்றும், " அவர்கள் சிவாகம முறைப்படி கோயிலை நடத்தட்டும் " என்றும் நாவலர் குறித்துள்ளமையை நோக்குகையில் அவரது கண்டன நோக்கத்தின் பரிசுத்தம் நன்கு புலப்படும்.
இவ்வாறு அவர் எடுத்துரைத்த பின்னரும் கோயில் முறைமைகள் மாற்றப்படவில்லை. கோயில் முதலாளியா கிய கந்தைய மாப்பாணரும் திருந்தியபாடில்லை. சிற் றினஞ் சேர்ந்து அவர் கெட்டுக்கொண்டிருந்தார். தம் நண்பர்களின் தூண்டுதலால் நாவலர்மீது பகையையும் வளர்த்தார்.
அவர் நாவலர் இருந்த மனை வழியாகத் தாசி ஒருத் தியின் வீடு சென்று திரும்புவது வழக்கம். இச் செயலைக் கண்டிக்கும் நாவலர்க்குப் பாடம் கற்பிக்க விரும்பி அதி காலைப் பொழுதில் குடையும், மிதியடியும், சிறு துண்டும், பிரம்புமாய்த் தெருவழியாகச் செல்பவர், நாவலரது வீடு சமீபித்ததும் தம்மை மறந்து உடல் நடுங்க, உளமொடுங்க, மிதியடியையும் கழற்றிக் கையிலே கொண்டு அடக்க ஒடுக்
5T-7

Page 35
50 நல்லைநகர் தந்த நாவலர்
கமாய் நடப்பாராம் ! நாவலரின் ஆளுமையும், மலையணைய
ஒழுக்க நெறியும் இருந்த வகை அது 1 மாப்பாணர், நாவ லரின் வீட்டு வழியாய்ச் செல்கையில் அடையும் உணர்ச்
சிகளைப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை தமக்கே உரிய
வ  ைக யி ல் 'நீங்களொருக்கால் போய்ப் பாருங்கள்" என்ற தமது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு சுவைபடக் கூறுகின்ருர் -
'மாப்பாணர் சந்திக்கு வந்ததும், மார்பிலே உத்தரீ யம், தோளிலே சிறு துண்டு, - கால்களிலே சோடு - கையிலே பிரம்பு - மெய் வாய் கண் மூக்கு செவி என்ற உறுப்புக்கள் - எல்லாம் ஒருமுறை சரிபார்த்து, தாமுந் தாம் தாணுே என்றுகூட நிச்சயம் பண்ணுவார். இதற் கிடையில் மாப்பாணர் ஒரு சிறிதுந் தாமதிக்கவில்லை;
'வழக்கம்போல நடந்துகொண்டு போகிருர்; ' ஏன் தாமதிக்க வேண்டும் !" என்று வைத்துக்கொண்டு அவ ருடைய மனமும் சில தீர்மானங்கள் பண்ணும்; " நாவல
ரென்ருல் நமக்கென்ன ! போகிற வருகிற தெருக்களில் எத்தனை பேர் இருக்கிருர்கள்; நிற்கிருர்கள்; அவர்களுக் கெல்லாமா நாம் சலாம் போடுகின் ருேம் ! நாவலர் இருந் தால் இருந்திட்டுப் போகட்டும்; நம்முடைய கண்களுக்கு அங்கே என்ன அலுவல் 1 கொஞ்சம்- அந்த இடத்தில் - கெதியாய்ப் போய்விடுவோம்; ஆணுல் எவ்வித மரியாதை யும்." என்று இன்னுமெத்தனையோ தீர்மானங்கள்; எல்
லாம் அரைகுறை. அத்தப் பொல்லாத வீடு வந்துவிட்
டது!
அதே விருந்தை, குறித்த தாழ்வாரம். ஏதோ ஓர் உருவம், தெரிந்தும் தெரியாமலும் தோன்றுகின்றது; ஆசாட்டம், மாப்பாணருடைய வலக்கண் - அதிலும் கடைக்கண் பகுதி - தனக்குரிய தீர்மானத்தின் பங்கைப் போக்கடித்துவிட்டது. அவ்வளவுதான்.
மாப்பாணருடைய மூக்கு நுனி - கண் ணிமைகள்
ஒவ்வொன்றும் - உரோமத் துவாரங்கள் - சர்வாங்கமும்
ل*

༽ །
நாவலரின் நற்பண்புகள் 51
நூருயிரம் நாவலர்கள் தோன்றிவிட்டார்கள். " பார்க்கு மிடமெங்கும் பரமன்கா ணம்மானை' என்றவருக்கு இப்படி யொரு நிலை வந்திருக்கலாம் போலும். இது கிடக்க, மாப்பாண ருக்கு மார்பு டக்கு, டக்கு என்கிறது. அவர் அந்த இடத்திற்கென்று பண்ணி வைத்த வேகம், கன விலே நடக்கிற, ஒடுகிற வேகமாய்ப் போய்விட்டது. அவ ருடைய கால்களுக்கே அவை என்ன செய்கின்றனவென்று தெரியவில்லை. ஒரு நடுக்கம்; நல்ல வேளை, எதிர்வளவு வேலி பலமான வேலி; எல்லை வரைக்குங் கால்கள் போய்ச் சேர்ந்துவிட்டன. அங்கவஸ்திரம் எப்படியோ அரைக்கு வந்துவிட்டது. சிறு துண்டும் எங்கேயோ போய்விட்டது. வலக் கையிலிருந்த பிரம்பு இடக்கைக்கு மாறிவிட்டது. வழக்கமான ஆட்டம் - அசைவு - ஒன்று மில்லாமல் அது செத்துக் கிடக்கின்றது. கையிலே விளங் குகிற பிரம்புக்கும், கால்களிலே தேய்கிற சோடுகளுக் கும் என்ன தொடர்போ, ஒன்று கூடி ஒரு கையில் இருக் கின்றன கால்களிலே கிடந்த சோடு கைக்கு எப்படி வந் தது? " பிரம்பும் 1 - சோடும் 1-" இவற்றைத் தொலைத்து விடலாமோ என்று கூட அந்தக் கை யோசிக்கின்றது.
நல்ல குளிர்; துரதிர்ஷ்டமாய் மழையில்லை. அப்படி யிருந்தும் மாப்பாணர் அப்பியங்க ஸ்நானஞ் செய்துவிட் டார் - அவ்வளவு வியர்வை. களையென்ருல் ஒரு புதுக் களை திசைமாரு வைக் கடந்தபோதுகூட இப்படியொரு களை மாப்பாணருக்குண்டாகவில்லை. தூரமும் இவ்வளவு தூரமாய் அந்தக் காடு தோன்றவில்லை. ஏன், நேரமுங் கூட அப்படித்தான். இந்த நாடகம் நடந்து முடிந்தது ஒரே ஒரு நிமிஷம். ஆணுல் மாப்பாணருக்கு அப்படி யில்லை. ஒரு பிறப்பு - அஃதாவது ஒரு பிறவியெடுத்த Φιτουιό.
* நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப்பெரிது "
என்னும் திருக்குறள் வாக்கு நாவலர்க் கென்றே அமைந்ததோ என்று சிந்திக்கத் தோன்றுமாறு, இவ்விவு

Page 36
52 நல்லைநகர் தந்த நாவலர்
ரணம் அமைந்திருக்கக் காணலாம். இதுவே நாவலரின் சக்தி ! இதுவே அவரின் புருஷத்துவம் !
பிறர்க்காக இரங்குவதும், ஆபத்து என்றதும் முன் னணிக்கோடி வந்து உதவிபுரியத் துடித்து நிற்றலும். நாவலரின் இரத்தத்தோடிணைந்த அரிய பண்புகள் என்ப தற்கும் அவரின் வாழ்க்கையிலே சான்றுகள் காணக்கிடக் கின்றன. அவற்றுள் மூன்றினை பூரீமத் த. கைலாசபிள்ளை யின் கூற்றிலே காண்போம்.
"தம்மை வந்து அடைக்கலம் புகுந்தவர்களைக் காப் பதும், தாங்கள் செய்த குற்றத்தை அறிந்து பச்சாத்தாபப் பட்டுத் தம்மை வந்து கூடிமை வேண்டியவர்களைக் காப்ப தும் இவருக்குரிய விசேட குணங்களாம். இவர் ஒரு உநாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தவசிப்பிள்ளை யொருவன் பைத்தியத்தினுலே சாதத்தை அள்ளி இவரு டைய இலையில் எறிந்து விட்டான். அதற்காக அவன் மேற் கோபங்கொள்ளாது பொறுத்துக்கொண்டனர்.
ஒரு தைச் சங்கிராந்தியில் யாழ்ப்பாண வித்தியா சாலையில் இவர் இருக்கும்போது, அவர்க்குச் சிறிது தூரத்திலுள்ள வீட்டில் நெருப்புப் பற்றியது; அப்போது எவ்வழியாற் போனுரென்று ஒருவருக்குந் தெரியாமற் சட்டென்று போய் மற்றவர்களோடு தாமும் ஒருவராய் நின்று கூரையைப் பிடுங்கி நெருப்பை அவித்தார்.
இவருடைய மாணுக்கரொருவருக்கு வைசூரி நோயுண் டான போது, பலர் தடுக்கவுங் கேளாது தளியே அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்து வந்தார். மற்ருெரு மாணுக் கராகிய சுப்பிரமணியபிள்ளை என்பவர் நிருவாணதிகூைடி பெற்று இவரிடத்தே ஞானசாத்திரங்கள் படிக்க வேண்டு மென்று விண்ணப்பஞ் செய்து மிக்க அன்பு காட்டி நடந் தமையால், அவருக்கு நோயுண்டானபோது அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார்; வைத்திய ஞ் செய்வித்தார்.
الجهة
齣4

༽
நாவலரின் நற்பண்புகள் 53
அவரிறந்தபோது அவரது அந்தியக் கிரி யை களை த்
தாமும் உடனிருந்து செய்வித்தார். அவருடைய சரித் திரத்தை ஒரு சிறு புத்தகமாக எழுதினுர். அவருடைய பிள்ளையை வித்தியா சாலையிற் படிக்கச் செய்தார். இப் படிப் பல காரியங்களை இவர் தம்மை நம்பின அநேக ருக்குச் செய்திருக்கின்றர். இவற்ருல் இவருடைய இரக் கம் என்னுங் குணம் நன்முக வெளிப்படுகின்றது. சிலர் பொருட்டுக் கண்ணிர் விட்டழுததையும் பார்த்திருக்கின் ருேம்."
நாவலரின் அஞ்சாமை, நேர்மை, வீரம், சத்தியத்தின் மீது நிலைத்த நாட்டம் முதலான உயர் பண் புகளை அருட்பா சம்பந்தமாக அவர் நடாத்திய வழக்குக்களா லும், தில்லையில் வாழ் தீகூழிதர்களோடு நடாத்திய நீதி மன்ற, விவாதப் போர்களாலும் நாம் நன்கறியலாம். இவற்றின் விவரங்களைப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை' அவர்களின் நாவலர்" என்ற நூல் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. வரலாற்ருதாரங்களோடும், பிற நூலாதா ரங்களோடும் அந்நூல் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. " கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலாக் கருணை வள்ளல் எம் நாவலர் பெருந்தகை என்னும் உண்மையை அந்நூலை வாசிப்பவர் அடைவர் என்பது உறுதி.
1938 ஆம் ஆண்டில் ' நாவலர் நினைவுமலர்" ஒன்று ஈழகேசிரி அதிபதி நா. பொன்னையா அவர்களால் வெளி யிடப்பட்டது. இன்றைய கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர். கா. பொ. இரத்தினம் அவர்கள் அந் நினைவு மலர் ஆசிரியராவர். நாவலர் பெருமானைப் பற்றிய அரிய பல செய்திகள் அதன் கண் உள்ளன. " நாவ லரிடத்து விளங்கிய குணங்கள் " என்ற தலைப்பில் பூரீமத் அம்பலவாண சுவாமிகள் அம் மலரிலே அறுபத்து மூன்று குணங்களை எடுத்துக் காட்டியுள்ளார். இவை முதலாக நூலும் மகாத்துமாக்களும் கொண்டாடிய குணங்களாம்" என்று அவர் குறித்துக் காட்டுவனவற்றுள் மாதிரிக்காகப் பதினைந்தை மாத்திரம் இங்குத் தருகின்றேன்.

Page 37
54
10. 11.
12.
15.
14.
15.
நல்லைநகர் தந்த நாவலர்
ஈசுரபக்தி,
ஜீவகாருண்ணியம். பிர்மஜ்ஞானம் (மெய்யுணர்வு) கொடை (ஒளதார்யம்) அடைந்தவர்களைக் காத்தல் (ஆசிருதசம்ரட்சணம்) பழியஞ்சல் (லோகோபவாதபயம்) துணிவு (நிர்ப்பயத்வம்)
சத்தியவிரதம்.
யானென்பதில்லாமை (நிகங்காரத்வம்)
எனதென்பதில்லாமை (நிர்மமத்வம்) ஆசையின்மை (நிஸ்பிருஹத்வம்) கெளரவம். நேர்மை (ஆர்ஜவம்) அசையாமை (அசலத்வம்)
ஆசாரசீலத்வம். ،ها
திருநெல்வேலி, பூநீகாயரோகண சுவாமி சந்நிதானம் பிரம்மபூரீ சி. சதாசிவக் குருக்கள் அவர்கள்,
* உத்தமோத்தமன்'
என்று நாவலரைக் குறித்த தி லும் உயர்ந்ததொரு வார்த்தை கிடைக்கும்வரை ஈழத்தவராகிய நாமெல்லாம்
அவரை,
உத்தமோத்தமன்"
என்றே அழைப்போம். ya

நாவலரை ஏத்திய நல்லோர்கள்
" உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம்உளன். "
- திருக்குறள் நாவலர் பசுக்களுக்குச் செய்யுந் தொண்டையும் பதி தொண்டாகவே கருதி வாழ்ந்தவர். எனவே, தம் தொண்டுகளை எவரும் புகழ்வதை அவர் விரும்பியதில்லை. " இன்ன கூட்டத்தில் இன்னவாறு பேசினேன். அவை யோர் இன்னவாறு புகழ்ந்தனர். இத்தனை நூல்கள் எழு தினேன். ஆன்ருேர்கள் இவ்வாறு சிறப்புப் பாயிரஞ் செய்தனர்" என்று கணக்கு வைக்கும் அறக்கணக்கர் அவர் அல்லர். ஆயினும் புகழ் அவரை நாடி வந்து, அவர் ஏவல் கேட்டு நின்றது. தமரும் பிறரும் மாத்திர மன்றிப் பகைவரும் அவரைப் பரவினர். புரொட்டஸ் தாந்து மதத்தைத் தாபித்த மாட்டின் லூதர் போன்று சைவத்தைப் புனருத்தாரணம் செய்த லூதர் என்று *Ceylon Patriot என்ற பத்திரிகையில், நிருபர் ஒருவர் நாவலரைப் புகழ்ந்துள்ளார்.
நாவலர் வண்ணை வைத்தியேஸ்வரன் கோவிலிலே பிரசங்கம் செய்யத் தொடங்கிய விமரிசையை விளக்கிவிட்டு அவரின் சிறப்புக்களை Hindu Pastors என்ற தலைப்பில் அமைந்த கிறிஸ்தவ நூல் ஒன்று பின்வருமாறு குறிப் பிடுகின்றது: " பிரதம பேச்சாளர்களாகிய இருவரும் எமது யாழ்ப்பாணப் பாடசாலையில் வெளி மாணவரா யிருந்து கல்வி கற்றேர். அவர்களுள் முதல்வரும் அடிக் கடி உரையாற்றுபவரும் ஆறுமுகநாவலராவார். அவர்
* February 1870 g) di Mofussil Guardian g65 (Dig.
Ceylon Patriot gì do LDụI9Tới Tử, பண்ணப்பட்டது.

Page 38
56 நல்லைநகர் தந்த நாவலர்
எல்லா இயக்கங்களிலும் முதன்மை பெறும் மேதை. மற் றவர் அவரின் நண்பர் கார்த்திகேச ஐயர். முன்னவர் வேளாண் குடித்தோன்றல், கவர்ச்சி வாய்ந்த தோற்ற முடையவர். விவேகி ; கற்குந்திறனும் தனிமையை நாடும் இயல்பும், பாவநெறியறியா ஒழுக்கமும், இந்து சாஸ்திரங் களிலும் கூடிய கிறிஸ்தவ சாஸ்திர அறிவும், நீண்ட கால மாய் நாளுக்கு நாள் வளர்ந்து செல்வதாகிய நட்போடு கூடிய திரு. பேர்சிவலின் பெறுதற்கரிய துணையுமாய் வடிவுபெற்றிலங்குபவராவார்."
இத்தகைய ஒருவரை அவர் திறனறிந்து போற்றும் நல்லுள்ளம் வந், பீற்றர் பேர்சிவலுக்கு அமைந்து கிடந் தது. எங்குக் கண்டாலும் மரியாதையோடு எழுந்து நின்று வணக்கம் செலுத்தி நாவலரைப் போற்றுபவராய்ப் பேர்சிவல் துரை விளங்கி வந்தார். அவர் நாவலரைக் குரு என்றே குறிப்பது வழக்கம்.
** அறுசமயத் தலைவராய் நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம் வடிவினுல் வருந்தொண்டர்"
என்று சேக்கிழார் பெருமான் சாக்கிய நாயனுர்பற்றிக்
குறிப்பது, வந். பேர்சிவல் அவர்களுக்கும் பொருந்து வதே. நாவலர் பெருமான், ' கிறிஸ்தவருள்ளும் சாக்கிய
நாயனுர் போன்றர் உளர்" எனக் குறிப்பது, இவரையே, என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறுவதும்
நோக்கத்தக்கது. பேர்சிவலுக்கும் நாவலருக்குமிருந்த அன்புப் பிணைப்பினை 1855 ஆம் ஆண்டின் உவெஸ்லி யன் மிஷன் அறிக்கை (பக்: 20) நன்கு காட்டும். தமி ழகத்திலே சைவசமயக் காவலர்களாயும், செந்தமிழின் புர
வலர்களாயும் மடாதிபதிகள் அன்றும் விளங்கினர்; இன்
றும் விளங்குகின்றனர். இவர்களுள் தலையாயவர் திருவா வடுதுறை மடாதிபதிகள். நாவலர் காலத்தில் உபய சந் நிதானங்களாய் விளங்கிய இருவரும் நாவலர்க்குப் பெரு மதிப்பு அளித்து வந்தனர். அவர்களே ஆறுமுகவரை அறிந்து நாவலர்ப் பட்டம் வழங்கியவர்கள். திருவாவடு

t
நாவலரை ஏத்திய நல்லோர்கள் 57
துறை மடத்துப் பண்டார சந்நிதிகள் நாவலரை எவ் வாறு மதித்தனர் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சியே தக்க சான்றகும். இஃது 1938 இல் வெளியான நாவலர் நினைவு மலரிலே தரப்பட்டுள்ளது.
'நாவலரவர்கள் ஒருமுறை திருவாவடுதுறை மடத் தில் தங்கியிருக்கும்போது தாம் அச்சிட எழுதி வைத்தி ருந்த சில நூல்களை ஒத்துப் பார்ப்பதற்காக அங்குள்ள நாலு ஏட்டுப் புத்தகங்கள் தமக்கு வேண்டுமென்று சந்நி தானத்திடம் கேட்டிருந்தார்கள். பின் அவர்கள் புறப் படும்போது சந்நிதானம் அப் புத்தகங்களை எடுப்பித்து நாவலரவர்கள் முன் வைப்பித்துவிட்டு அவற்றுளொன். றைத் தான் பின் எடுத்து வைத்துக்கொண்டது. நாவல ரவர்கள் முறைப்படி நமஸ்காரஞ் செய்து விடைபெற்றுக் , கொண்டு மற்ற மூன்று புத்தகங்களையுமெடுத்துக் கொண்டு சிறிது தூரம் போனபின் சந்நிதானம், "இப் புத்தகத்தை விட்டு விட்டீர்கள்” என்று திருவாய் மலர்ந்து கொண்டு போய்க் கொடுத்தது. எவருக்கும் எழுந்து மரியாதை செய்யும் வழக்கம் மடத்துச் சம்பிரதாயமாயில்லாமையால் இப்படியோருபாயஞ் செய்தது."
இக் காலத்தில் திருவாவடுதுறை ஆதீன மகாவித்து வானுய் விளங்கியவர் திருசிரபுரம் மீனுட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள். அவர் செய்யுள்களை விரைந்து இயற்றும் ஆற் றல் கைவரப் பெற்றவர். பல தல புராணங்கள் பாடிய வர். சேக்கிழார் பிள்ளைத் தமிழிலே பிள்ளையவர்களின் பத்தித் திறமும் கவித்துவ ஆற்றலும் நன்கு புலப்படுகின் றன. மடத்திலே இருந்து பல மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த இப்பெரும் புலவர் நாவலர்க்கு இனிய நண்பர். நாவலரின் நூல்களுக்கு இவர் சிறப்புப் பாயிரங்கள் வழங் கியுள்ளார். திருக்குறள் பரிமேலழகருரைய்ை நாவலர் பதிப்பித்த காலை இவர் வழங்கிய சிறப்புப் பாயிரம் பின் வருமாறு:
5T-8

Page 39
58 நல்லைநகர் தந்த நாவலர்
" மன்னுபெரும் தமிழ்ப்பாடை யிலக்கணமும் இலக்கியமும் வரம்பு கண்டோன் பன்னுசிவ புராணங்கள் பலதெரிந்தோன்
சிவாகம நூற் பரவை மூழ்கி யுன்னுமது பூதியெனும் விலைவரம்பி
லாமணிகை யுறக்கொண் டுள்ளான் இன்னுநய முணர்த்தினணுய்ச் சைவமெனும்
பயிர்வளர்க்கும் எழிலி போல் வான் நீடுபுகழ் திருக்கேதீச் சரந்திருக்கோ
ணுசலமிந் நிலமா நின்ற நாடுபுகழ் தலம்பொலியாழ்ப் பாணத்து
நல்லூர்வாழ் நகராக் கொண்டோன் றேடுபுக முருவமைந்த கந்தவேள்
தவத்துதித்த செல்வன் யாரும் பாடுபுக ழாறுமுக நாவலனிவ்வா
றச்சிற் பதிப்பித் தானே."
பிள்ளையவர்களின் மா னு க் கர்களுள் தியாகராயச் செட்டியாரும் ஒருவர். இவர் கும்பகோணம் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராய் இருந்தவர். தமிழும் சைவமும் நன்கு கற்றுத் தேர்ந்த அறிவாளி. துணிவும் வீரமும் நேர்மைப் போக்கும் தமிழ் மரபினைப் பேணும் சான் முண்மையும்
பூண்ட இப்பெரியார், நாவலர்க்குக் கொடுத்த சாற்றுகவி
கள் நாவலரின் அறிவாற்றலை நன்கு புலப்படுத்துவனவா கும்.
திருவாங்கூரிலே நீதிபதியாய்க் கடமையாற்றியவரும் தமிழார்வமும் புலமையும் வாய்ந்தவரும் யாழ்ப்பாண வாசரு மாகிய ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர் கள் நாவலரிலே மாருத பத்தி பூண்டோர். "நல்லை நக ராறுமுக நாவலர் பிறந்திலரேல்' என்று தொடங்கும் இவரது வெண்பா மிகப் பிரசித்தமானது.
ل*

༣.
நாவலரை ஏத்திய நல்லோர்கள் 59
தகைசேர் தமிழ்க்குத் தனிமுதல் வன் கந்த வேள் குமரன் நகுவேல் தலமிசை யான் புல வோன்குரு நல்லையறு முகநா வலஞர்க் கினியான் புகழ்மொய்ம்ப னிம்பர் இகல்சூர் மதப்பகை செற் றீச ஞருல கெய்தினனே.
எனும் பாடலும் நாவலர் சிவபதம் அடைந்த காலை இவ ராலே பாடப்பட்டது.
உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், நீர்வேலிச் சங்கர பண்டிதர், யாழ்ப்பாணம் பூ முருகேச பண்டிதர் முதலா னேர் நாவலரின் சமகாலத்தவர். இவர்களுள் சிவசம்புப் புலவர் நாவலரோடு கற்ற சகபாடி, இம் மூவரும் அக் காலத்திலே விளங்கிய வித்தியாசாகரங்கள்.
அந்தமில் இன்பத் தமுதமா மழைநிகர் மெய்யுப தேசம் விளங்கிட விரித்துரை செய்திடும் படுதர் தேசிக சிகாமணி மறை திகழ் பிரணவ மன்ன முறை திகழ் ஆறுமுகநா வலனே.
என்று சங்கர பண்டிதரும்,
ஆரிருந்தென் ஆர்சிறந்தென் ஆறுமுக நாவலன்போல் ஆரிருந்து போதிப்பர் ஐயையோ - வாரணிந்து தேக்குமதிச் செஞ்சடிலத் தேவுருவு கொண்டாலும்
வாக்கவனைப் போல வரா.
ஆறுமுக நாவலனென் ரு லெவரு மன்புகொண்டிங் கேறுமுக மாயெம்மை யேற்றுவந்தார் - ஆறுமுக நாவலனே இன்னினியே நம்மையொரு நாயென்றும் பாவனையும் பண்ணுர்கள் பார்,
என்று முருகேச பண்டிதரும் கூறுவனவற்லிருந்து அவர் கள் நாவலர்க்கு அளித்து வந்த மதிப்பின் அளவு நன்கு புலனுகின்றது.
வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை நாவலரின் மருகர்; நன்மாணுக்கருமாவார். இராமாயணம், கந்த

Page 40
60
நல்லை நகர் தந்த நாவலர்
புராணம் முதலாம் நூல்களுக்குப் பொருள் விரிப்பதில் அவர்க்கு இணை அன்றும் இல்லை; இன்றும் இல்லை. எனினும் மனிதர்க்கு இயல்பான சில பலவீனங்கள் அவர்க் கும் இருந்தன. அவர் ஓர் உல்லாச புருஷர். நொத்தாரி சான பொன்னம்பல பிள்ளை ஒரு வழக்கிலே மறியலுக்குப் போக நேர்ந்தது. இவ்வழக்கில் முக்கிய சாட்சி நாவலர். அவரின் சான்றுரையே பொன்னம்பல பிள்ளை என்ற பொன்னையாவை மறியலுக்கு அனுப்பியது. இத்தனைக்கும் நாவலர் தம் மருகரைத் தம் சொந்த மகனாய் நேசித்து வளர்த்தவர் ! நீதியேயன்றி வேறறியாத பெருமான் உண் மையைச் சொல்லி மருகரை மறியலுக்கு அனுப்பி வைத் தார்.
மாமனாரின் இச் செயலால் வித்துவ சி ரே ா ம ணி அவரை வெறுத்தாரல்லர். மாறாக அவரின் மதிப்பு நாவ லரில் மேலும் உயர்ந்தது. நாவலர் சிவபதமடைந்தபோது அவர் உளம் உருகிக் "கண்ணும் நீராய்'' உயிரும் ஒழு கக் கலங்கி நின்று பாடிய பாடல் இது.
அவருைள் வேதா கமங்களின் இரும்பொருள் ஏழையே மையந் திரிபற் றுணர இனிதிற் றிரட்டி இயம்பும் எந்தாய் யாமெலாம் நின்னடி யேமெனப் பெறினும் பணிகரி குயிலென் றணிபெறு மூன்றையும் புற்றிற் கானின் மாவிற் புகுத்திய சிற்றிடைப் பணை முலைத் தோமொழி மடவார் கண்ணெனுங் காலவேல் எண்ணில் நுழைய நெஞ்சம் அழிந்த நிலைய மாகிப் பாடி காவலிற் பட்டுழன் றிட்டனம்.
வித்துவ சிரோமணியின் மாணவராய் இசைபோக்கி யவர்களுள் சபாபதி நாவலர் குறிப்பிடத்தக்கவர். திரா விடப் பிரகாசிகை முதலான தீந்தமிழ்ப் பனுவல்கள் இவர் தந்தவையேயாம். நாவலரின் வசன நடைச் சிறப்பினை

நாவலரை ஏத்திய நல்லோர்கள் 61
இவர் திறனுய்வு முறையிலே ஆராய்ந்து கூறுவது நோக் கற்குரியது.
"செய்யுணடை வாய்ந்த நக்கீரர் உரைநடையும், விளக்கங் குறைந்த இளம்பூரணமும், கட்டுரைச் சுவை செறிந்த சேணு வரையரது இலக்கண நடையும், பொருட் செறிவுடைய பேராசிரியர் உரைநடையும், தங் கோள் நிறுத்தும் நச்சினுர்க்கினியர் சொன்னடையும் நாவலரவர் களின் வசன நடைகளிலேயே வந்து முடிகின்றன."
செல்லரித்தும் சிதல்வாய்ப் பட்டும் சீரழிந்த சங்கநூல் களையும், காப்பியங்களையும் பிறவற்றையும் முயன்றெடுத் துப் பிழை களைந்து அச்சிலே பதிப்பித்தவராகிய டாக்டர் சாமிநாதையர், நாவலர் காலத்தில் மிக இளைஞர். தம் ஆசிரியப் பிராணுகிய மீனுட்சிசுந்தரம் பிள்ளையோடு, நாவ, லரை அவர் கண்டுள்ளார். எனினும் மீனுட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் ஏனுே நாவலருக்கு முக்கிய இடந் தர மறந்துபோனுர், இச்செயலுக்குக் கழுவாய் தேடுவார் போல நாவலர் நினைவுமலரிலே அவர் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதன் தலையங்கம் ' நான் கேட்டபடி " என்பது.
* தமிழ்நாட்டில் எவ்வளவோ நாவலர்கள் இருப்பி னும் நாவலரென்று கூறிய மாத்திரத்தில் அச் சொல் யாழ்ப்பாணத்து நல்லூர் பூநீலபூரீ ஆறுமுகநாவலரையே குறிக்கும். இதற்குக் காரணம் அவர் நாவலர்களுக்குள் சிறந்தவராக விளங்கியமையேயாகும்” என்று அவர் தமது கட்டுரையிலே குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
நாவலரின் சமகாலத்தவராய் விளங்கிய சேர். முத்துக் குமாரசுவாமி, சேர். பொன். இராமநாதன் போன்ற அரசி யல் வாதிகளும் அவர்தம் பெருமையைச் சட்ட நிரூபண சபையிலே எடுத்து அறிவுறுத்தியிருக்கின்றனர். 1876 அக்டோபர் 19 ஆந் தேதி மேற்கூறிய சடையிலே சேர், முத்துக்குமார சுவாமியவர்கள் கூறியதாவது:-

Page 41
62 நல்லைநகர் தந்த நாவலர்
"அவரே வடக்கில் உள்ள இந்துக்களுள் இந்து வான ஆறுமுகநாவலர். வாதசிங்கமாகிய கெளரவ அங் கத்தவர் அவர்களையும் (அந்நாள் இராணி நியாயவாதி Hon'ble Mr. R. Cayley) i £5LD 357 35p 60) Ldu (Tsib e9)67Tib£5Lவல்ல ஒருசில சுதேசிகளுள் அவரும் ஒருவராவர். அவர் தம் வாழ்நாள் முழுதும் கிறிஸ்தவத்துக் கெதிரான போதனைகளிலும், எழுத்துக்களிலுமே கழிந்தது. அவருக் கென அமைந்த கோட்பாடுகளை அலட்சியம் செய்தல் எளி தான காரியமன்று.'
சேர். பொன். இராமநாதன் 1884 பெப்ரவரி 11ஆந் தேதியன்று சட்ட நிரூபண சபையில் நா வல  ைர "மாபெரும் இந்து சீர்திருத்தவாதி" எனக் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு. தி. சதாசிவ ஐயரவர்கள் 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆந் தேதி சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைப் பரிசளிப் பின் போது உரைத்தவை இவை.
" நாவலரைப்போல முன்னும், இப்பொழுதும் தமிழ் வித்துவான்களில்லை. ஒருவேளை இருந்தாலும் அவரைப் போலத் தமிழ்ப் பாஷையையும், நல்லொழுக்கத்தையும், சைவசமயத்தையும் வளர்த்து நல்ல தமிழ் வசன நடையில் நூல்களை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் நாட் டிாருக்கு உபகரரஞ்செய்தவர் வேருெருவருமில்லை. பொருள் வரும்படிக்காகப் பிறரை வணங்காதவர்களும் அவரைப் போல ஒருவருமில்லை."
பெருகிவந்த பரசமய வெள்ளம் நாவலரின் பெரு முயற்சியால், வடிந்துபோன பின்பு தமிழத்திலும் ஈழத்தி லும் புதியதோர் ஆபத்து ஏற்படலாயிற்று. அந்நியராட் சியின் காரணமாய்த் தமிழ் மொழி படிப்படியாக நலி வடைந்து வந்தது. " பாமரராய் விலங்குகளாய் உலகனைத் தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெ னக் கொண்டிங்கு' எம் இனத்தினர் வாழ்வாராயினர்.
لها
A

நாவலரை ஏத்திய நல்லோர்கள் 68
எனவே மொழிப்பற்றினை ஏற்படுத்தல் வேண்டும் எனும் ஓர் இயக்கம் எம்மிடையே தோன்றி வளர்ந்தது. இவ் வியக்கத்தால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் நூல்களைப் புதுப்புதுத் துறைகளிலே ஆங்கிலப் போக்கினைப் பின்பற்றி எழுதும் ஆர்வம் தமிழறிஞரிடையே கிளர்ந்தெழுந்தது. சுந்தரம் பிள்ளை, சூரியநாராயண சாஸ்திரியார், மாயூரம் வேதநாய கம் பிள்ளை, சுவாமி வேதாசலம் என்ற மறைமலையடிகள், கதிரைவேற்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், வி. கலியாணசுந்தரனுர், பிரான்சிஸ் கிங்ஸ்பரி முதலானுேர் தமிழியக்க காவலராய் நின்று தமிழ் காத்தனர். இவர்கள் யாவரும் நாவலர் பெருமானையே தம் வழிகாட்டியாய்க் கொண்டனர் என்பது வெள்ளிடைமலை. நாவலர் நினைவு மலரிலே இவர்களுட் பலரதும் கட்டுரைகள் உள்ளன? அவை யாவும் நாவலர் புகழ்பாடி நிற்கின்றன.
ஆணுல் காலச் செலவில் மொழியினின்றும் சமயத்தைப் பிரித்துக் காணுகின்ற ஒரு நிலை இருபதாம் நூற்ருண் டின் இரண்டாந் தலைமுறையினர்க்கு ஏற்பட்டபொழுது, ஆறுமுக நாவலர் போன்ற பெயோர்களின் சாதனைகள் பொய்யாய்ப் பழங்கதையாய் அவர்களுக்குத் தோற்றின. இந்நிலையிலே, ' நாவலர் தமிழுக்கு என்ன செய்தார்?" என்று கேட்கும் விந்தையான கேள்வி ஒன்றும் எழுந்த தில் வியப்பில்லை.
ஆணுல் அந்த வியப்பு வியப்பாகவே நின்று எமது இலக்கிய, சமய வரலாற்றினைப் பாதிக்க நாம் இடமளித் தல் கூடாது. இன்று விழிப்புற்றுவிட்ட ஈழத்துச் சைவத் தமிழுலகு, நாவலரின் வழியினைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டும் கலங்கரை விளக்காய் அமைதல் வேண் டும். இதுவே சைவத் தமிழரது எதிர்பார்ப்பாகும்.
திருமி குந்ததமிழ் செழுமை கொண்ட சிவ
மருவி நின்றமத மென்பன
சீரழிந்து புகழ் பேரொழிந்து கெடு
நாளில் வந்தசிவ மாமணி ...'

Page 42
64 நல்லைநகர் தந்த நாவலர்
மரும விந்தபல வுரைந வின்றுகொடு
மடமொ ழிந்தறிவு விரிவுகொள் வளமி லங்குபல பனுவல் கண்டு நமர்
வளர நன்றுசெயு மொழிமணி உருகு மன்புசெறி யரிய தொண்டரிசை
யுலகு நின் ருெளிர மிகமுயன் றுதவு நல்லைமணி விபூதி கண்டியணி யுடைய மாணிதுணி வுறுமணி உருவு கண்டரிய புலவ ரும்பரசி
யுயர்வு தந்திடு சிகாமணி ஒது மாறுமுக நாவ லாதிபதி
ஒளிகொள் பாதமலர் பணிவமே,
(முதுதமிழ்ப் புலவர், பண்டிதர் மு. நல்லதம்பி)
1. இக் குறியீட்டிலக்கண மெல்லாம் வசன நடை கைவந்த வள்ளலாகிய பூநீலபூரீ ஆறுமுக நாவலரவர்க ளாலே முன்னரே மேற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன."
தமிழறிஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியா" "சைவசமயமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென் பதே இவரது பெருநோக்கம். இதன் பொருட்டுத் தம் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது உழைத்து வந்தார் கள். பிற சமயத்தார்களோடு சொற்போர் ஒரு பால் நிகழ்த்தி வந்தார்கள். ஒருபால் சமய சாஸ்திர பரிசீலனை செய்து வந்தார்கள்.
ஒருபால் தமிழிலக்கிய விலக்கணங்களைப் பரிசோதித்து வெளியிட்டு வந்தார்கள். ஒருபால் போதகாசிரியராயி ருந்து சமய நூல்களையும், தமிழ் நூல்களையும் மாணவர் களுக்கு ஆர்வம் பிறக்கக் கற்பித்து வந்தார்கள். தமது நோக்கம் இனிது நிறைவேறுதற் பொருட்டுக் கலாசாலை
لW
A

人娜
நாவலரை ஏத்திய நல்லோர்கள் 66
களை நிறுவினர்கள். தமது இறுதிக் காலத்திலே தமிழ்ப் பல்கலைக் கழகமொன்று நிறுவுதற்குப் பெரிதும் முயன்று வந்தார்கள்."
恕
பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை
"யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் ஓர் அவதார புருஷர். இடையிருட்கடைக் காலத்தில் விடியு முன் விசும்பில் விளங்கும் வெள்ளிபோலத் தமிழகத்தில் தளரும் சைவமும் தமிழும் தழைய, அவ்விரண்டிற்கும் புத்துயிர் வழங்கப் பிறந்த வள்ளலாவர். முன்னே பல காலங்களிலும் தமிழகத்திலிருந்து தான் பெற்ற சில சிறு நன்மைகளை வட்டியுடன் பெருக்கி, ஒரு காலத்து ஒரு முக மாகப் பழங் கடனைத் தீர்த்து, என்றுந் தீர்க்கொணுதவாறு தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி, நாவலரென்ருல் அது மிகையாகாது."
நாவலர், பேராசிரியர்,
சோமசுந்தர பாரதி
" நாவலர் ஓர் அறிஞரும், நூலாசிரியருமாவர்; ஆசி ரியரும் போதகருமாவர், வழி காட்டியும் சீர்திருத்தவாதி யுமாவர். ஆற்றல் வாய்ந்த மேதையும் அயரா உழைப் பாளியுமாவர். அவர் தமிழை நேசித்தவர். சைவத்தை நேசித்தவர். இறைவனில் அன்பு செய்தவர். அவரைப் போன்ற வேருெருவரைத் தமிழ்நாடு பல நூற்ருண்டுகள் கண்டதில்லை."
சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம்
' யாழ்ப்பாணத்திற்குப் பத்தொன்பதாம் நூற்ருண் டின் முற்பகுதியில் மேனுட்டார் வந்து சேர்ந்தபொழுது இங்கு மக்களுக்குத் தமிழ் மொழியில் எழுதும் வழக்கம் குறை வாயிருந்ததென்றனர். படித்தவருட்கூட வசனம் எழுதும் வழக்கம் அவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை.
5T-9

Page 43
66 நல்லைநகர் தந்த நாவலர்
அவர் ஒருவரோடொருவர் சீட்டுக்கள் மூலம் தொடர்பு வைக்க நேரிடின் பாட்டுக்களாலேயே தம் கருத்துக்களை எழுதியனுப்புவர். அதனுல் படித்தவருட் கூட வசனத்தில் எழுதும் முறை பெருவழக்காக இருந்திருக்கவில்லை. ஆணுல், மேனுட்டுக் கல்விமுறை வந்ததன் பயணுய் வசனம் எழுதும் வழக்கம் நாட்டிற் பெரிதும் பரவியது. பின்னர் யாழ்ப் பாணத்தில் ஆறுமுகநாவலர் போன்ற வசன நடையைக் கையாளுவதில் வல்லாளரான பெரியாரின் முயற்சியாலும், இவ்விருபதாம் நூற்றண்டுக் கல்வி முறையினுலும் வசன மெழுதும் வழக்கம் பெருவழக்கமாக வந்துவிட்டது."
(8ur râui க. கணபதிப்பிள்ளை
لیہہ

- غېب
K
நாவலர்க்கு நாம் செய்யும் நன்றி
கந்தவேள் செய்தவம்போற் காணுந் தவமுமவன் மைந்தணு நாவலன்போன் மைந்தர்களுஞ் -
செந்தமிழில் வல்லவர்க ளன்னவன் போல் வந்திடுவ தும்முலகில் இல்லையில்லை இல்லை இனி.
- யாழ்ப்பாணம் பூ. முருகேசபண்டிதர்
திரு. கைலாசபதிப்பிள்ளை ' நாவலரைப் போல நமக்கு ஆள் இல்லை." என ஓரிடத்திலே குறித்துள்ளார். அஃது உண்மையே. நாவலர் ஐம்பத்தேழாண்டுகளே இவ்வுல கில் வாழ்ந்தார். ஆணுல், மற்றவர்களால் நூருண்டுகளிற் கூடச் செய்து முடிக்கவியலாத பணிகளை அவர் தமது குறுகிய வாழ்க்கைக் காலத்திலே செய்து முடித்துவிட்டார். அயரா உழைப்பினரான அவரை நோக்கி வந்த இடுக்கண் களே இடுக்கட்பட்டன. அவர் அவற்றைக் கடந்து வெற்றி வாகை சூடி விளங்கினர். நாவலரைப் போல ஒருவர் இனி எம்மிடை வருதல் அரிதினும் அரிது.
அவருக்கு நன் மாணுக்கர் பலர் இருந்தனர். வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை அவரின் மாணுக்கர் மாத் திரமன்றி மருகருமாவர். மற்றும் மா. வைத்தியலிங்கபிள்ளை, பிற்காலத்தில் திரு.சதாசிவபிள்ளை, காசிவாசி செந்திநாதை
யர், ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள், பூரீமத். த. கைலாச
பிள்ளை முதலானுேரும் நாவலரிடம் கற்றுத் தேர்ந்தவர் களே. சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரும் அவரிடம் பாடங் கேட்டதுண்டு. இவர்களின் வழியில் ஒரு மாணவ பரம்பரை ஈழத்திலும், தமிழகத்திலும் உருவாயிற்று. அந் தப் பரம்பரையில், காலஞ்சென்ற வித்துவசிரோமணி

Page 44
68
நல்லை நகர் தந்த நாவலர்
சி.கணேசையர், சதாவதானம் கு.கதிரைவேற்பிள்ளை யாகி யோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களின் வரிசையில் இன்றும் எம்மிடை வாழ்ந்திருப்போர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களும், மட்டக்களப்புப் புலவர்மணி
ஏ. பெரியதம்பிப்பிள்ளையவர்களுமாவர்.
எனினும், நாவலர்க்குப் பின்பு நமக்கு அவர் போல ஓர் ஆள் இன்றுவரை கிடைக்கவில்லை. அவருக்கிருந்த அஞ்சாமை, நேர்மை, தியாக உணர்வு, அறிவாற்றல்கள், தன்னலமறுப்பு முதலியவற்றிற்கு ஈடு காண்பது இயலாத காரியமாகும். தமது பல திறப்பட்ட பணிகளாலும், பண் பாலும் அவர் தனித்தே நிற்கிறார். அவர் போன்ற பெரு மக்கள் ஒரு சமூகத்தில் அடிக்கடி தோன்றுவதில்லை.
இத்தகைய பெரியார்களுக்கு நாம் நிறுவத் தகுந்த மிக்குயர்ந்த நினைவுச் சின்னமும், ஆற்றக் கூடிய நன்றிக் கடனும் அவர்களின் உபதேசங்களின்படி ஒழுகுதலேயா' கும்; அவர்கள் ஆற்றுப்படுத்திய வழியிலே தயங்காது நடத்தலேயாகும்; அவர்கள் கண்ட கனவுகள் நனவாக அல்லும் பகலும் அயராது உழைத்தலேயாகும்.
நாவலர் இறையடி சேர்ந்து தொண்ணூறாண்டுகளா கின்றன. இக் காலப் பிரிவில் எமது சமூகத்தில் ஏற்பட் டுள்ள மாற்றங்கள் மிகப்பல . கூத்துக்களாலும், கோயிற் றிருவிழாக்களாலும் மாத்திரமே அக்கால இளைஞர்கள் கெட்டழிந்தனர். இன்றோ திரைப்படங்கள், ஆபாசப் பத் திரிகைகள், உணவு விடுதிகள், இரவுக் களியாட்டகங்கள் முதலிய பல வேறு திசைகளிலும் இளைஞர்களின் கவனம் திருப்பப்படுகின்றது. இவற்றால் அவர்களின் உடல், உள் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டுப் பலமற்ற, வரன்முறையற்ற. ஒழுங்கற்ற இளம் சமுதாயம் ஒன்று உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்துக்களிலும் பயங்கரமானதோர் ஆபத்து ஆன்மிகத் துறையிலே இன்று ஏற்பட்டு வருகின்றது.

நாவலர்க்கு நாம் செய்யும் நன்றி 69
குறிக்கோள்களற்றதும், உலகியலிலே சிக்கித் தடம் புரள் வதுமான கல் விக் கே முக்கியத்துவமளிக்கப்படுவதால் உலோகாயத சிந்தனைகள் பரவலாக எழுந்தவண்ணமிருக் கின்றன. " இந்தச் சரீரத்தை இறைவன் எமக்கு அருளி யது தன்னை வணங்கி முத்தியின்பம் பெறுதற்பொருட் டேயாம்' என்று நாவலர் வகுத்த குறிக்கோளுக்கு முற்றி லும் முரணுனதாகும் இது. இதனுல் விளையும் கேடுகளை நாம் கண்கூடாய்க் கண்டுவருகின் ருேம்.
இறையருளை மறந்த நெஞ்சத்திலே அமைதி ஏற் படாது. இறைவனை மறுக்கும் மூளையிலே தெளிவு பிறத் தல் இயலாது. சமய நெறிகளைக் காற்றிலே பறக்கவிடும் சமுதாயத்திலே உத்தம குடிமக்கள் தோன்றுதல் இயலாது. எனவே, நாவலர்க்குச் சிலைகண்டு மகிழ்வும், பெருமிதமும் அடையும் நாம் அவரின் நூல்களைக் கற்று, கற்ருங் கொழுகி எமது இளைய பரம்பரையினரையும் அவ் வழி யிலே ஒழுகப் பண்ணுதல் வேண்டும்.
ஒரு நூற்றண்டிற்கிடையிலேயே நாவலர் எழுதியன வும், பதிப்பித்தனவுமான நூல்களிற்பல எமக்குக் கிடைத் தற்கரியனவாய்ப் போய்விட்டன. நாவலர் நான்காம் பால பாடம் ஓர் அறநெறிக் கருவூலம். திருத்தொண்டர் பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராணவசனம் முதலா னவை சமய உண்மைகளதும், திந்தமிழினதும் பண்டா ரங்கள் போன்றவை. இவற்றை அழிந்தொழிந்து சிதை யாமற் பேணிப் பாதுகாத்தல் வேண்டும். இவற்றைச் சைவ மாணவர்க்குப் பாடப் புத்தகங்களாக்குதல் வேண் டும்; மலிவுப் பதிப்புக்களாய்ப் பிழையற அச்சிற் பதிப்பித் துச் சைவத் தமிழுலகிற்கு உதவல் வேண்டும்.
உலகிலே பழைமையான ஒரு சமயத்தின் பிரதிநிதிகள் என்று நாம் பேசிக்கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின் ருேம். ஆனல், அச் சமய நெறிகளுக்கு அடங்கி, அவற்றை நன்முறையிலே பின்பற்றுவதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. இதற்குக் காரணம் எமது சமயத்தைப்

Page 45
ነ70 நல்லைநகர் தந்த நாவலர்
பற்றிய அடிப்படை அறிவுகூட எமக்கில்லாதிருப்பதே, கோயில்களிலே ஆடம்பரமான திருவிழாக்கள் செய்வ தோடும், நேர்த்திக் கடன்களைச் செய்வதோடும், யாத்திரை போவதோடும் எம் சமயக் கடமைகள் முடிந்துவிடுகின் றன என்று நாம் நிறைவு கொள்கின்ருேம். இஃது உண்மையான சைவ வாழ்வன்று.
நாவலர் பெருமான் தமது சைவ தூஷண பரிகாரம் என்ற நூலிலே, இத்தகைய மாயங்களை உண்மையென நினைக்கும் மதியிலிகளைக் கண்டு தம் மனம் வருந்தியதை மிகவும் உருக்கமாய் எடுத்துரைத்திருக்கின்றர். உண்மைச் சைவத்தை அறிதற்கான கருவிநூல்கள் பலவற்றை அவர் எமக்காக அருளிச் செய்தமைக்குக் காரணம், அவர் எ ங் கள் அறியாமைகளை நன்கு அறிந்திருந்தமையே. எனவே, எமக்காகப் பல அரிய பணிகளை ஆற்றிச் சென்ற அப் பெருந்தகையாளர்க்கு நாம் ஆற்றத்தகும் நன்றிக் கடன் ஒழுங்கும், கட்டுப்பாடும், தெளிவும் நிறைந்த சமயி களாய் நாம் ஒவ்வொருவரும் மாறிச் சமய வாழ்வு நடத் துவதேயாகும்.
அந்தியேட்டி போன்ற காலங்களிலே கல்வெட்டுக்கள்
பாடும் பழக்கம் எம்மிடையே இருந்துவருகின்றது. தம் முடைய சாதி குலப் பெருமைகளையும், உறவினரின் உயர் பதவிகளையும் எடுத்துரைத்துத் தம்பட்டம் அடிப்பதே
கல்வெட்டுப் பாடல்களின் நோக்கமாக விளங்குகின்றதே
யன்றி, இறந்தவரின் ஆன்மாவிற்கு அஃது எவ்வகையி லும் அமைதி தருவதில்லை.
கல்வெட்டிற்குப் பதிலாகத் தோத்திரப் பாக்களை அச் சிட்டு வெளியிடும் நல்லோரும் உளர். இத் தோத்திரப் ப்ாடல்களோடு நாவலரின் 1 ஆம், 2 ஆம் சைவ வினு விடைகள், அவர்தம் * சைவசமய சாரம்" என்னும் துண் டுப் பிரசுரம் முதலானவற்றை இக் காலங்களில் அச்சிட்டு வெளிப்படுத்தல் சாலவும் பொருத்தமான செயல் என்ப தோடு, சைவசமய உண்மைகளை அதிகமான மக்கள்
لمراه

நாவலர்க்கு நாம் செய்யும் நன்றி
அறிந்து கொள்வதற்கேற்ற அரும்பணியுமாகும். கோயில் களிலே சிகரங்கள் நாட்டி, ஒலிபெருக்கிகள் மூலம் சினி மாப் பாடல்களை ஒலிபரப்பி, மேளதாளம் சதுர்க்கச்சேரி கள் நடாத்தி, வாணங்கள் விட்டுக் கரியாக்கும் பணத் திற்கு, நாவலர் கனவு கண்ட மடாலயங்களையும் சமயப் பிரசாரப் பயிற்சி நிலையங்களையும், உருவாக்குதல் அவர்க்கு நாம் இயற்றும் பெருநன்றியாய் அமையும் என்பதற்கு ஐயமில்லை.
இன்று கூட்டுப் பிரார்த்தனைகளிலும், பஜனைகளிலும் அர்த்தமற்ற வெற்றுச் சொற்கூட்டங்களைப் பத்திப் பாடல் களாய்க் கருதிப் பாடி மகிழும் வழக்கம் இருந்து வருகின் றது. இவ் வழக்கத்திற்கு நாவலர் முற்றிலும் எதிரானவர். அவரின் அருட்பா மறுப்புப் போராட்டம் எமக்கு ஒரு நல்ல பாடமாக அமைதல் வேண்டும். தேவார திருவாச கங்கள், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் போன்றவையே அவரால் அருட்பாக்களெனக் கொள்ளப் பட்டவை. பன்னிரு திருமுறைகளே அவர்க்குக் கண் கண்ட தெய்வம். காலாதிகாலமாக அடியார் பலரால் ஒதப்பட்டு ஒதப்பட்டுத் தெய்விகம் குடிகொண்ட இப் புனிதப் பாக்கள் எமக்கிருக்க அவற்றை ஒதாது வீண் காலம்போக்கி வேறு பாடல்களைக் கூட்டுப் பிரார்த்தனை போன்றவற்றிலே பாடுதல், ' குளிக்கப் போய்ச் சேறு பூசி யது' போன்ற மூடச்செயலாகும், நாவலர், நாவலர் என்று நா வலிக்க, தொண்டை நோவக் குரலெடுத்து விட்டு, அவரின் குறிக்கோளுக்கு முரணுன வழியிற் செல்லு தல் எவ்வகையிலும் ஏற்கத்தக்கதன்று. -
விபூதி, உருத்திராக்கம் முதலான சிவசின்னங்களை அணிதற்குக் கூசும் இளைஞர் பலர் இன்று நம்மிடை உள் ளனர். இவையெல்லாம் போலி என்றும், கபட வேடத் திற்குக் கைகொடுக்கும் கருவிகளென்றும் கூசாதுரைப் போர் பலரை நான் கண்டிருக்கின்றேன். இவர்கள், நாவ லர் பெருமானைப் பற்றிய சிந்தனைகள் எமது உணர்வினைத் தூண்டி விடுகின்ற இக் காலப்பகுதியிலாவது நாவலர்

Page 46
நல்லைநகர் தந்த நாவலர்
காட்டிய வழியினை உணர்ந்து கொண்டு சிவசின்னங்க ளுக்கு மதிப்பளிப்பார்களாக. நாவலர் வகுத்த விபூதியி யல், திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகம் என்பன இவர்களின் கண்களைத் திறப்பனவாகுக.
நாவலர் எமக்குச் செய்த நன்மை பனையினும் பெரிது. நாம் அதற்குத் தினையளவாவது பதிலுபகாரம் செய்தல் வேண்டாவோ ?
அந்த நன்றிதான் என்ன ? சைவராய் வாழ்தலே. நாவலர் காட்டிய வழியில் நடத்தலே. இதற்கு நாம் காலம் வரும் என்று காத்திராது இன்றே சைவ வாழ்வினைத் தொடங்கல் வேண் டும். * நன்றும் இன்றே செய்க."
வணக்கம்.
لم لأن
 
 

அதுபந்தம் கி.
6). கணபதி துணை
புலோலிநகர் பூநீ பசுபதீசுரப் பெருமானுர்
திருவூஞ்சல்
இது யாழ்ப்பாணத்து நல்லூர்
பூநிலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் இயற்றி அருளியது ைெடி மகிமை தங்கிய தேவாலய * 、 தர்மகர்த்தாவாகிய பூநீமான் வீ. இராமசுவாமிச் செட்டியார் அவர்கள் கட்டளையிட்டருளியபடி மேலைப்புலோலி சுப்பிரமணிய தாசனுகிய சு. வெற்றிவேற்பிள்ளையால்
தும்பைநகர் கலாநிதி யந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
கீலக ளுல் புரட்டாதி மீ” 5-0

Page 47
6) - குகமயம்
பிரகடன வரலாறு
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பொன்னுருங் கதிர்காம மாத லத்துப்
பொற்பாரு மெந்தைபணி போற்றி யேதான் முன்னுரு நால்வருமோ ருருவ மெய்தி
முன்ருேன்றி யேதிகழு முறைமை யென்னத் தென்னுரும் யாழ்ப்பான நல்லூர் தன்னிற்
சிறியேங்கள் சிவசமயந் தேரும் வண்ண மந்நாளி லவதரித்த குரவ ஞகு
மாறுமுக நாவலனை யன்பு செய்வாம்,
ஆங்கவன்ரு ன் புலோலிநக ரமல ஞகு
மப்பனையெம் மான்றனையே பாடு மூஞ்சல் வீங்கிய சொற் பொருள்வளத்த தெவர்தா மோரார் வினவலிபோ மச்சினிலே தருவா யென்று பாங்கியலு மாதளியின் றர்ம கர்த்தா
பன்னுயுக பூழிராமசாமிச் செட்டியார்தா மீங்கருளும் பணியென்றன் சிரமேற் கொண்டே
யியலச்சிற் றருவித்திங் கேய்வித் தேனுல்,
التعهفستسقسقصد تشخية
臀
به را
*X

6) சிவமயம்
பரதெய்வ வணக்கம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
சீர்பெற்ற புலோலிநகர்த் திருத்தளியிற் சிற்பரனஞ்
சிவபி ரான்மே
லேர்பெற்ற வாறுமுக நாவலனு ரீங்கிசைத்த
வினிமை யூஞ்சல்
பார்பெற்ற வச்சினிலே பதித்தற்குப் பண்பில்லாப்
பரவி யேனுன்
பேர்பெற்ற கதிர்காம மாதலத்துஞ் சந்நிதியும்
பிறங்கு கோயில்.
வீற்றிருக்கும் பெருமானர் விகCதகஞ் சக்கழகல :
விரும்பிப் போற்றி
யாற்றிருக்கும் புலோலிநக ரந்தளியி னமலபிரா
னடியைப் போற்றி
யேற்றிருக்குஞ் சிவபெருமா னடியார்க ளெவர்களுமே
யின்ப மார
ஆற்றிருக்கும் பவமுடையே னேங்காரத் தொருவரையே
யுன்னு கின்றேன்.
பூரீ கதிர்காம மகாக்ஷேத்திரம் வாழ்க. திருச்சிற்றம்பலம் வாழ்க,

Page 48
டெ சிவமயம்
புலோலி நகர் பரீ பசுபதீசுரப் பெருமானுர்
திருவூஞ்சல்
விநாயகர் காப்பு
* சீர்பூத்த மலரயன்மா லிமையோர் போற்றுந்
திறம்பூத்த புலோலியில்வாழ் சிவனர் கொன்றைத்
தார்பூத்த சடையர்பசு பதியார் மீது
தமிழ் பூத்த வூஞ்சலிசை தமியேன் பாட
ஏர்பூத்த மறைமுதலி னிலகுந் தெய்வ
மியல் பூத்த பிரணவமா யினிது மேவுங்
கார்பூத்த காடதட விகடகும்பக்
கயமுகவ னிருசரணங் காப்ப தாமே.
5T6 "
நலமோங்கு நாதவிந்து கால்க ளாக
நயனேங்கு சத்தி யொளிர் விட்ட மாக நிலமோங்கு மந்திரநூ விழைய தாக
நிகமோங்கு மறைநான்குங் கயிற தாகப் பலமோங்கு முபநிடதம் பலகை யாகப்
பரமோங்கும் பிரணவம் பொற் பீட மாகப் புலமோங்கு கலைவாணர் புகழ்ந்து பாடும்
புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல். க ,
* இத் திருவூஞ்சலிலுள்ள கவிகள் பதினென்றினும் முதலிரு சீர்களும் ஐந்தாஞ் சீரும் ஆரும் சீரும் மூவசையாக மற்றைய நான்கு சீரும் ஈரசையாகிவந்த சந்தம் நிறைந்த எண்சீர்க் கழி நெடிலடியாசிரிய விருத்தம். இதனைச் சுன்னகம் பூரீமான் அ. குமாரசுவாமிப் புலவரவர்களாற் புதுக்கப்பட்ட காரிகை யுரை டுகூ-ம் பக்கத்துங் காண்க,

شيلسي
திருவூஞ்சல்
காமருவு மிமையவர் பொன் மலர்கள் வீழக்
கணமருவும் பூதரிரு மருங்குஞ் சூழ மாமருவு மருமனயன் முதலோர் தாழ
வரமருவு மருளடியர் மலங்கள் போழத் தேமருவு தரிசனத்தின் மனஞ்சென் ரு முத்
திடமருவு சிற்சு கம்பெற் றினிது வாழப் பூமருவு மளியிசை கொள் பொழில்கள் சூழும் புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்.
கணந்திகழுங் கின்னரர்கள் சுருதி கூடக்
கவின்றிகழு மலர்ப்பிரமன் ருளம் போட இனந்திகழு மரமகளிர் நடன மாட
இசைதிகழுந் தும்புருநா ரதர்பண் பாட மனந்திகழு மன்பர் பெறு மிடர்க ளோட
மறை திகழும் பேரொலியெத் திசையு நீடப் புனந்திகழும் வள்ளிமண வாளர் போற்றும்
புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்.
வரஞ்சிறக்குந் திருத்தொண்ட ரன்பு கூர
மலர்சிறக்குங் கரங்கள் சிர மீது சேரத் திரஞ்சிறக்கு மானந்த வருவி சோரச்
சிவஞ்சிறக்கும் பெருஞானந் திகழ்ந்து சாரப் பரஞ்சிறக்கும் பருவதவர்த் தனிபங் காரப்
பரஞ்சிறக்கும் பாடல் கவி வாணர் தேரப் புறஞ்சிறக்கு மியாழ்ப்பாண மதனி லோங்கும் புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்.
மின்னியலுஞ் சடிலநதி மாது வீற
மிசையியலு முடிமீது மலர்க ளேறக் கொன்னியலும் படகமொடு துடிவிண் பீறக்
குணமியலு முனிவரர்வாழ்த் தொலிகள் கூறத் தென்னியலுங் களபசுகந் தாதி நாறச்
செயலியலுஞ் சிறியனிரு வினைகள் பாறப் பொன்னியலு மமருலகும் பொருவ மேவும்
& புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்.
77.
N

Page 49
78 திருவூஞ்சல்
சடைவிளங்குங் கடுக்கைநிலா மதிய மாடத்
தாள்விளங்குஞ் சிலம்புகலின் கலினென் ருட இடைவிளங்கு மணியரவக் கச்சு மாட
எழில்விளங்குஞ் சூலமெழு மான்கை யாட உடைவிளங்குங் கொலைப்புலியி னதஞ மாட
உரம்விளங்கு மெஞ்ஞோப வீத மாடப் புடைவிளங்கு நவமணிமா டங்க ளோங்கும் :* புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்.
கயலுலவு விழியுமையம் பிகையா ணேச கவினுலவு மிரசதகை லாச வாச மயலுலவு மலமரதி பாச நாச
மதியுலவு மடியருள மாவி லாச அயலுலவுந் திருநந்தி தொழுமுல் லாச
அருளுலவுங் கணேசனத்தந் தருளுந் தேச புயலுலவுஞ் சிகர வணி பொலிந்து மேவும்
புலோலி நகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்,
காதமருங் குழையவரே யாடீ ரூஞ்சல்
கரத்தமரு முழையவரே யாடீ ரூஞ்சல் சீதமரு மதலையரே யாடீ ரூஞ்சல்
சிலையமரும் பதலையரே யாடீ ரூஞ்சல் சேதமரு மிறையவரே யாடீ ரூஞ்சல்
திடமருவு மறையவரே யாடீ ரூஞ்சல் போதமருந் தடங்கள்பல புடைசூழ் கின்ற
புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்,
அறமிலங்குந் தயாநிதியே யாடீ ரூஞ்சல்
அருளிலங்கும் பசுபதியே யாடீ ரூஞ்சல் நிறமிலங்குஞ் செய்யவரே யாடீ ரூஞ்சல்
நினேவிலங்குந் துய்யவரே யாடீ ரூஞ்சல் மறமிலங்கும் படையவரே யாடீ ரூஞ்சல்
மதியிலங்குஞ் சடையவரே யாடீ ரூஞ்சல் புறமிலங்குங் கடலலைபன் மணிகள் வீசும்
புலோலிநகர்ப் பசுபதியே யாடீ ரூஞ்சல்
- با

7g திருவூஞ்சல்
அற்பாருந் திருவருளைந் தெழுத்து வாழி
அணியாரு மக்கமணி பூதி வாழி , , , , , வற்பாரு மறையுடனு கமங்கள் வாழி : மகிழ்வாருஞ் சைவமத சபையார் வாழி . கற்பாரும் மகளிர்பக வினங்கள் வாழி
கவிஞரு மரசர்முகில் மறையோர் வாழி نهالنډ
பொற்பாரும் பருவதவர்த் தனியார் வாழி
புலோலிநகர்ப் பசுபதியார் வாழி வாழி. 50
புலோலிநகர் பூரீ பசுபதீசுரப் பெருமானுர்
திருவூஞ்சல் முற்றிற்று.

Page 50
அநுபந்தம் உ
திருச்சிற்றம்பலம்
சைவ சமய சாரம்
க.
உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் என் கிற மூன்று தொழில் களையுஞ் செய்தற்குக் கருத்தா
ஒருவர் இருக்கிறார்.
உ.
அந்தக் கருத்தா சிவபெருமான். ந. சிவபெருமான் என்றுமுள்ளவர். எங்கும் நிறைந்
தவர் என்றுஞ் சுத்தர், எல்லாமறிபவர், எல்
லாம் வல்லவர், பெருங்கருணையுடையவர் :
ச.
சிவபெருமானுக்குத் தேவி அவருடைய சத்தியா
கிய திருவருள். ரு: சிவபெருமானொருவரே விக்கினேசுரர், சுப்பிர
மணியர் முதலிய பல மூர்த்திகளாகி நின்று
அருள் செய்வர். சா.
ஆன்மாக்கள் சிவபெருமானுக்கு என்றும் அடிமை
கள். எ. சிவபெருமானை மனம், வாக்கு, காயம் என்கிற
மூன்றினாலும் வ ழி ப டு த ல் ஆன்மாக்களுக்குக்
கடன். அ. மனசினாலே செய்யும் வழிபாடுகளாவன; சிவபெரு
மானைத் தியானித்தல், அவருடைய குணங்களைச் சிந்தித்தல் முதலானவைகள். வாக்கினாலே செய்யும் வழிபாடுகளாவன; சிவ பெருமானுடைய திருநாமங்களை உச்சரித்தல், அவருடைய பெருமையைப் பேசுதல், அவருடைய சரித்திரங்களைப் படித்தல் முதலானவைகள்.
- ---- தாரா
கூ.

as 0.
595.
& O. .
515.
ëëታ" •
கடு.
சைவ சமய சாரம் 8i
காயத்தினலே செய்யும் வழிபாடுகளாவன: சிவ பெருமானுடைய திருமேனியைத் தலையினுலே வணங்குதல், கண்களினலே தரிசித்தல், கைகளி ஞலே கும்பிடுதல், பூசித்தல், கால்களினலே வலம் வருதல் முதலாவைகள்.
சிவபெருமானை நோக்கிச் செய்யும் வழிபாடே அசுத்தர்களாகிய ஆன்மாக்களைப் பந்தித்த பாச மாகிய நோய்க்கு மருந்து.
வழிபாடாகிய ம ரு ந் துக் கு அநுபானமாவது மெய்யன்பு.
வழிபாடான மருந்துக்குப் பத்தியங்களாவன: உயிர் களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்' நன்றியறிதல், தாய், தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், வறியவர்களுக்குக் கொடுத்தல் முதலிய புண்ணி யங்கள்
வழிபாடாகிய மருந்துக்கு அபத்தியங்களாவன : கொலை, களவு, கள்ளுக்குடித்தல், மாமிசம் புசித் தல், பொய், வியபிசாரம், சூதாடுதல் முதலிய பாவங்கள்.
சிவபெருமான் தமக்கு ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுநிற்கும் இடங்களாவன: சிவ லிங்கம் முதலிய திருமேனியும், மெய்யடியார்க ளுடைய திருவேடமும்,
கசு, சிவபெருமான் தம்மை ஆன்மாக்கள் அறிந்து வழி பட்டுய்யும் பொருட்டு அருளிச்செய்த முதனூல் கள் வேதம், சிவாகமம், என்கிற இரண்டும்,
கள சிவபெருமானை வழிபடும்பொருட்டு ஆன்மாக்க
ளுக்குக் கிடைத்த கருவி மனித சரீரம்,
5T-11
 ീ',

Page 51
82
(59.
o 0.
60) g: 6 FLDu gfrt prld
மனித சரீரத்தைப் பெற்ற ஆன்மாக்களுக்குச் சிவபெருமானை வழிபடும் பொருட்டு யோக்கிய தையை வருவிப்பது சிவதீட்சை,
சிவதீட்சை பெற்றுக்கொண்டு வேத சிவாகமப் படியே சிவபெருமானை வழிபடுகிற சமயம் சைவ சமயம்.
'.'
சைவசமயிகள் ஆவசியகமாகத் தரிக்கத்தக்க சிவ சின்னங்களாவன: விபூதியும் உருத்திராட்சமும்,
சைவசமயிகள் ஆவசியகமாகச் செபிக்கத்தக்க
கிவமூலமந்திரம் பஞ்சாட்சரம்.
சைவசமயிகள் ஆவசியகமாக ஒதத்தக்க சிவ ஸ்தோத்திரங்களாவன; தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுரா ணம் என்கின்ற அருட்பா ஐந்தும்,
ஆன்மாக்களுக்குச் சுதந்திரமாகிய அறிவுந் தொழி லும் இல்லை; ஆதலினலே, சுதந்திரமாகிய அறி வுந் தொழிலும் உடைய சிவபெருமான நோக்கி, "அடியேங்கள் பாவங்களை விலக்கிப் புண்ணியங் களைச் செய்து உம்மை மெய்யன்போடு வழிபட்டு உய்யும் பொருட்டு உம்முடைய திருவருளைப் பொழிந்தருளும்' என்று பிரார்த்தித்து அந்தத் திருவருளை முன்னிட்டு அதன் வழியே ஒழுகல் வேண்டும்,
சிவபெருமானை விதிப்படி மெய்யன்போடு வழி
பட்டவர் அவருடைய திருவடிக்கீழ் நித்தியமாகிய பேரின்பத்தை– அநுபவிப்பர்.
}} திருச்சிற்றம்பலம்.
| ثم ان
 

694 а фирш 5 титih 89
நன்றி
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சபை நியமித்த நாவலர் புத்தகக் கண்காட்சிக் குழுவினர் தாம் அரிதின் முயன்று சேகரித்த நாவலர் பெருமானின் துண்டுப் பிரசுரமொன் றினையும், (சைவசமயசாரம்) நூல் ஒன்றினையும் (புலோலி நகர் பூரீ பசுபதீசுரப் பெருமானர் திருவூஞ்சல்) இந் நூலில் வெளியிட அநுமதி வழங்கியமைக்கு எனது இத யங் கனிந்த நன்றி உரியதாகுக.
க. சொ. நூலாசிரியர்.

Page 52
"நல்லை நகர் தந்த நாவலர்' எழுத உதவிய நூல்கள்
ஆறுமுகநாவலர் சரித்திரம் - பூரீமத் த கைலாசபிள்ளை
ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு
பெரியபுராணம் என வழங்குகின்ற திருத்தொண்டர் புராணம் (ஆறுமுகநாவலரவர்கள் பதிப்பு)
நாவலரின் நாலாம் பாலபாடம்
நாவலர் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
நாவலர் நினைவு மலர் - 1939
- தொகுப்பாசிரியர் பண்டிதர் கா. பொ. இரத்தினம்
A Century of English Education
J. V. Chelliah M. A.
The Union Pictorial, A History mainly in pictures of Tellippalai 1817 - 1947.
Hindu Education in Jaffna (A Paper)
by the Hon. S. Rajaratnam. M. L., C.
ܟܠ ܐܡܪ ܥܘܢ
 


Page 53

臀
 ി

Page 54
• சொக்கன்' எழு
வீரத்தாய் (சிறு காவியம்) - மனோன்மணி (மனோன்மண
சிலம்பு பிறந்தது 2 (நாடகம்
இலங்கை
சிங்ககிரிக் காவலன் (நாடகம் தெய்வப்பாவை
( நாடகம்
ஞானக்கவிஞன்
(குறு நவீ
நல்லூர் நான்மணி மாலை (பி
அறநெறிப் பா மஞ்சரி (சங். வெளிவந்த நீதிப்பாடல்க
திருவாட்டி சின்னம்
- எ
நாவலர் நாவலரான கதை (
சொக்
கிடைக் சண்முகநாதன்
யாழ்ப்

திய பிற நூல்கள்
- கலாபவன வெளியீடு -50
ரீய நாடகக் கதைச் சுருக்கம்) ஸ்ரீ லங்கா வெளியீடு 1-25
க் கலைக்கழக வெளியீடு 1-25 1) கலைவாணி வெளியீடு 1.50 ) வரதர் வெளியீடு 1-25
னம்) ஆசீர்வாதம் வெளியீடு 1-50
ரபந்தம்)
- ' சிற்பி' வெளியீடு -50 ககாலத்திலிருந்து இன்றுவரை கள் சிலவற்றின் தொகுப்பு)
மா இராமலிங்கம் நாபகார்த்த வெளியீடு
இசைச் சித்திரம்)
-50 க்கன் - சேந்தன் ண்பர் வெளியீடு
க்குமிடம் ன் புத்தகசாலை பாணம்.