கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்துக்குவியல்

Page 1


Page 2
مجیب - - **
,
y
,
t
ہر نثر
..
د بند ۰“
-
ܡ
-
 ܼܓ
-
*hم
ܝ
-
-
-
.
۔۔۔۔
 
 
 
 
 
 
 

数※※※※※※※※
1. கவிதை முத்துக்கள் 2. சிறுகதை
'அவன் ஏன் அழுகிருன்'
3. வரலாற்று நாடகம்
* 'வன்னியர் திலகம்
s
y 9
கலை இலக்கியத்துறையில் ஆர்வமுள்ள இளம் கலைஞர் களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் தரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் சிறந்த பணிக்கு எமது வாழ்த்துக்கள்
கவிதைகள், கதைகளில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பனவல்ல. யாவும் கற்பனையே
-ஆசிரியர்
வெளியீடு: பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபன ஊழியர்கள்

Page 3
முதற்பதிப்பு: 1981 - 5 - 1
ஆசிரியர்; செவ்வந்தி மகாலிங்கம்
இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
பரந்தன்.
விலை ரூபா 5-00
轟
黔 l
அச்சுப்பதிப்பு: ராஜா அச்சகம், அச்சுவேலி.
 

வாழ்த்துரை
என்னிடம் படித்த பண்டித மாணவருள் சி. கா. தம் பையா புறனடையானவர் த ம்  ைம வெளிக்காட்டா தவர். திட்பநுட்பமான அவர் எழுத்து க் களை க் காணும் தோறும் அவரை ஒர் அபர பரிமேலழகர் என்று மனசால் வாழ்த்து வதுண்டு.
திரு. செவ்வந்தி மகாலிங் கம் பண்டிதர். தம்பையா வின் மாணவரென்றறியும் போது, திரு. மகாலிங்கத் தைக் கட்டித்தழுவி, ஆசீர் வதித்தாலோ என் கி ன்ற ஆர்வம் என்னை விழுங்கு கின்றது.
96)160p.........
கவிதையில், கதையில், நாடகத்தில் தரிசித்து, இளம் சந்ததியினர் அநுபவிப்பாராக என்று, திருவருளைப் பிரார்த்தித்து, திரு. செவ் வந்தி மகாலிங்கத்தை வாழ்த்துகின்றேன்.
கலாசாலை வீதி, கலாநிதி சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி. ܦ
- ~ (பண்டிதமணி)
èY AGA * tly
fస్థా

Page 4
சிறப்புரை
9. Quir. @SF6b&aouum B. Sc: Dip-in-Ed.
கத்தும் கடலடக்கிக் கவின்மிகு தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்துத் தமிழ் முத்தாரங்களைத் தந்தது கூடல் மாமதுரை; அந்தத் தாரில் மேலும் ஒர் ஆரம் பதித்திட வெளிவருகிறது முத்துக்குவியல் பரந்தன் இரச" பனத் தொழிற்சாலையிலிருந்து
பிழையில்லாமல் - இலக்கண வழுவில்லாமல் - எழுதப்பட்டிருப் பது இலக்கியம் என்பது இலக்க" நூலோர் கொள்கை. எழுத்துருவிலே உள்ளவைகள் அனைத்தும் இலக்கியம்
எனினும் உள்ளத்திற்கு இன்பம் ஊட்டும் கற்பனை நிறைந்த நூல்களே' பொதுவாக இலக்கியம் என எண்ணிடுவர்.
படிக்க படிக்க நமது நெஞ்சத்தைக் கவரும் நடை, உள்ளத் திற்கு மகிழ்ச்சியை - துன்ப்த்தை உண்டாக்கும் கருத்துக்கள், மீண் டும் மீண்டும் படிக்கத் தூண்டும் தன்மை, படிக்கத் தொடங்கினல் நிற்பாட்டிட விரும்பாத பிணிப்பு, படித்த பகுதிகள் பல நம் மன திலே தங்கிடும் இயல்பு, படித்திடும் கதாபாத்திரங்களாக நாம் மாறி டும் போக்கு, அவற்றை எமது நிச வாழ்விலும் பின்பற்றிடும் இழுப்பு. இன்னுேரன்ன பலவித அமைப்புக்களைக் கொண்டதே இலக்கியம் என் றும் சொல்லி விடுவர். கவிஞர் செவ்வந்தியின் கவிதைகள், கதை, கட்டுரை, நாடகம் முதலியன நிச்சயம் இவற்றுள் ஒன்முகி இலக்கியத் தில் இடம்பெறுவதைக் காணலாம்.
மீசாலையைச் சேர்ந்த திரு. குமாரு மகாலிங்கம் தனது சிறு வய
திலிருந்தே 'செவ்வந்தி' என அழைக்கப்படுபவர். தனது இளம் பராயத்திலிருந்தே நாடகத்தில் ஆர்வங் கொண்டிருந்தார். 1960-ம் ஆண்டு சாவகச்சேரியில் நடைபெற்ற நஞ்சன் நாகப்பா நாடகத் தில் தோற்றியவர் தொடர்ந்தும் சதிகாரன் சபாபதி " , "நாகபுரி நாகேந்திரன் இரும்புத் தலையன் , மன்னர்குடி மார்த்தாண் டன் போன்ற நாடகங்களிலும் நடித்து வந்தார்.
என்பது ஒரு பொதுவான கருத்து.
 
 

இன்று, நாடகங்களுக்குப் பெண்களேத் தேடுவது மிகக் கடினமாக உள்ளது. ஆனலும், 1960-ல் நஞ்சன் நாகப்பா " பெண் பாத்திரத் நிற்குப் பெண்ணே நடித்திருந்தார். அந்தப் பெண்ணுக்குச் சோடி போட்டு நடித்த பெருமை செவ்வந்திக்கே உரியதாகும். தொடர்ந்து வெளியான தென்மராட்சி முத்தமிழ்க் கலைமன்றத்தாரின் தயாரிப்பு களில் - குறிப்பாக எனது நாடகங்களில் சினிமா உலகின் A. நாகேஷ் வரராவ் ஆக விளங்கியவர் செவ்வந்தி, 1970 ஆம் ஆண்டுவரை மன்றத் தயாரிப்புக்கள் எல்லாவற்றிலும் கதாநாயகனகவே நடித்து மேலும் என்னேடு கூடவிருந்து அண்ணன் நவரத்தினம் அவர்களின் அரசியற் பணியிலும் ஈடுபட்டு சிரமதானங்கள் போன்ற சமுதாயச் செயற்பாடுகளிலும் தன்னைத்தான் அற்பணித்து பெற்ற அனுபவங்களி அலும் உள்ளத்தே கொழுந்துவிட்டு எரியும் விடுதலை உணர்வு, இலக் கியப்பசி போன்றவற்ருல் உந்தப்பட்டு அரும்பி, முகை எடுத்து மலர்ந்தவற்றுள் சில எடுத்துக் குவித்தவையே முத்துக் குவியல் ஆகும்.
மொழி என்பது ஒரு தொடர்புச் சாதனம். அந்த மொழியின் மூலம் தனதுள்ளத்தெழும் உணர்ச்சியை வெளிக்கொண்டு வரும் பொழுது அது இலக்கியமாகிறது. இந்த இலக்கியத்தின் மூலம் அதனே ஆக்கிய ஆசிரியன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுகிருன். உணர்வுகளையும் கருத்துப் படிமங்களையும் உணர்த்துகிருன். அவ்வாறு செய்யும்பொழுது தனி மனிதனது அனுபவப் பொறி பொதுமை பெறுகிறது. தனது அனுபவத்தை இயன்றவரை நிறைவாகப் பிற ருக்கு உணர்த்திய நிலையில் கவிஞனுக்குத் திருப்தி உண்டாகிறது.
இந்த வகையில் கவிஞர் செவ்வந்தி தனது உணர்ச்சிகளைத் தனது ஆற்றலுக்கமைந்த மொழி, இலக்கண எல்லைக்குள் நின்று வெளிப் படுத்தி உள்ளார். இலங்கை வானெலி ஒலி மஞ்சரி, வீரகேசரி, ஈழ நாடு போன்றன அவற்றை ஒலிபரப்புவதிலும் வெளிப்படுத்துவதிலும் காட்டிய ஊக்கத்தால் பெற்ற ஆக்கம் இன்று முத்துக்குவியல் ஆகியி ருக்கிறது.
மேலும் இச்சாதனங்கள் கொடுக்கும் ஆதரவும் முத்துக்குவியலால் பெறும் வெற்றியும் மென்மேலும் பல முத்துக்குவியல்களை மக்களுக்கு அளிக்கச் செவ்வந்திக்கு வாய்ப்பளிக்கட்டும்!
செவ்வந்திக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

Page 5
பாராட்டுரை
நாடகத்துறை மூலம் எமது தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமைகளே வெளிக்கொணருகின்ற பணியை செய்து வரும் என் அன்புத்தம்பி திரு. குமாரு மகாலிங்கம் என்னலும் எனது தொகுதி மக்கள்ாலும் அன்பாக அழைக்கப்படும் தம்பி செவ்வந்தி கலேத்துறை யிலும் இலக்கியத்துறையிலும் ஆற்றுகின்ற பணி உரிமை வேண்டி ரோடும் எமது இனத்தின் செயல் திட்டங்களுக்கு உற்சாகத்தையும், சிந்தனை மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
எம்மிடையே இருக்கும் உயர்வு தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு இவர் ஆற்றும் இப்புனித பணி, எமது பண்டைய கலை, கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு இவ்ர் எடுக்கின்ற முயற்சிகள் வளர, வாழ எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புள்ள வ. ந. நவரத்தினம்
பா? உ. சாவகச்சேரி.
கலைமகள் உைறயட்டும்
முது கூட்டுத்தாபன நிதி கணக்கியல் பிரிவில் எழுதுவினைஞராக றையாற்றும் திரு. செ. கு. மகாலிங்கம் (செவ்வந்தி) அவர்கள் தமது ஒய்வு நேரத்தில் கவிதைகளை இயற்றி கலைக்கும் தமிழ் இலக்கி யத்திற்கும் பெருமைதேடித்தருவதை நாமனைவரும் அறிவோம். தனக்தியலில் மட்டுமல்ல, கலைப்படைப்புகளிலும் இவர் சிறந்து விளங் குவதையிட்டு நாம் பெருமை கொள்ளாதிருக்க முடியாது. இயற்கை பிலேயே எல்லோரிடத்தும்இப்படியான கலைத்திறனும், கவித்திறனும் அமைவதில்லை. ஆயிரத்தில் ஒருவர் தான் கலைவாணியின் அருளால் கஜல, கவித்திறனுடன் இவ்வுலகில் தோன்றுகிறர்கள். இவரது கலைப் பொக்கிசங்களை நாம் அறிந்தது போல், நாடும் அறிய வேண்டும் என்பதே எமது பேரவா. என்றும் அவரது நாவில் கலைமகள் உறை பட்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க அவரது கலைத்தொண்டு! வளர்க அவரது கவித்திறன்!!
க. சற்குணராசா
(நிதிமுகாமையாளர்) பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
..)

தலைவர் வை. த. சிவலிங்கம் ஆளணி முகாமையாளர் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்,
பரந்தன்,
1981-ம் ஆண்டின் தொடக்கத்திலே சங்கம் வளர்த்த தமிழ் புலவர்கள் உருவாகிய மதுரை மாநகரிலே, மங்காத் தமிழ் வளர பொங்கு விழா எடுக்கும் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு கோலாகலமாக நடைபெற்றது. அடுத்து வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டிலே எமது செவ்வந்தி மகாலிங்கத்தின் கவிதைகள் ஒலிக்கும் என்பது கண்கூடு.
எமது கூட்டுத்தாபனத்தின் கழகத்தில் கலை கலாச்சாரச் செயலாளராக இருந்து கலைக்கும், தமிழுக்கும் ஆற்றும்
தொண்டுகள் அளப்பரியன. இவரது கவிதை, கட்டுரை,
நாடகங்களில், பல நல்ல புதிய சீர்திருத்தக் கருத்துக்கள் இழையோடுவது உண்மையே. அப்படி வானெலியிலும், வரும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த படைப்புக்களில் சிலவற்றை தொகுத்துத் தருவதே இம்முத்துக் குவியல் மலராகும்.
இம்மலர் சீரிய முறையில் வெளியிட அயராது உழைத்த மலர் வெளியீட்டுக் குழுவினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எமது கூட்டுத்தாபனத்திற்கு சிறப்பினைத் தேடித் தரும் செவ்வந்தியின் கலேகள் வளர, கன்னித் தமிழ் ஓங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

Page 6
வாழ் த்துரை
திருவாளர். ந. இராமநாதன் (செயலாளர்)
இனிய மனிதரும், மானிட நேசமுள்ள சிறந்த கவிஞரும" நண்பர் "செவ்வந்தி மகாலிங்கத்தினை கெளரவிக்கும் முகமாக மல ரொன்றினை வெளியிடும் நண்பர்கள் சிலரின் பெருமுயற்சியின் விளைவே இச் சிறு தொகுப்பாகும்.
இம்மலர் கூறும் செய்திகளைவிட, நண்பர் செவ்வந்தியின் ஆக் கங்கள் உயர்ந்த-சிற்ந்த படைப்புக்களாக உருப்பெற்றவை. இவரது ஜனரஞ்சகப் படைப்புகள் வானெலியிலும், பத்திரிகையிலும் பல ருக்கும் பரிச்சயமானவை. உயரிய கலை உள்ளம் கொண்ட இவரின் இவ் ஆக்கச்சிறப்பே இம் மலர் கொணர ஊக்கிய தெனலாம்.
இங்ங்ணம் புகழுற்ற கலை உள்ளம் கொண்ட நண்பர் எமது கூட் டுத்தாபனத்திற்குக் கிடைத்த பெருமையில் பங்குற்று, இம்மலர் வெளிவர உதவிய சகல நண்பர்கட்கும், இம் மலரினை வெளிக்கொண ரும் பாரிய பொறுப்புக்குரியவன் என்ற முறையில் மலர்வெளியீட்டுக் குழு சார்பாக நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
நண்பர் செவ்வந்தி மகாலிங்கத்தின் கலைப்பணி.
- செயலாளர், மலர் வெளியீட்டுக் குழு
பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
 

தலைவர் வை, த. சிவலிங்கம்
ஆளணி முகாமையாளர் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்,
பரந்தன்.
1981-ம் ஆண்டின் தொடக்கத்திலே சங்கம் வளர்த்த தமிழ் புலவர்கள் உருவாகிய மதுரை மாநகரிலே, மங்காத் தமிழ் வளர பொங்கு விழா எடுக்கும் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு கோலாகலமாக நடைபெற்றது. அடுத்து வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டிலே எமது செவ்வந்தி மகாலிங்கத்தின் கவிதைகள் ஒலிக்கும் என்பது கண்கூடு.
எமது கூட்டுத்தாபனத்தின் கழகத்தில் கலை கலாச்சாரச் செயலாளராக இருந்து கலைக்கும், தமிழுக்கும் ஆற்றும் தொண்டுகள் அளப்பரியன. இவரது கவிதை, கட்டுரை, நாடகங்களில், பல நல்ல புதிய சீர்திருத்தக் கருத்துக்கள் இழையோடுவது உண்மையே. அப்படி வானெலியிலும், வரும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த படைப்புக்களில் சிலவற்றை தொகுத்துத் தருவதே இம்முத்துக் குவியல் மலராகும்.
இம்மலர் சீரிய முறையில் வெளியிட அயராது உழைத்த மலர் வெளியீட்டுக் குழுவினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எமது கூட்டுத்தாபனத்திற்கு சிறப்பினைத் தேடித் திரும் செவ்வந்தியின் கலேகள் வளர, கன்னித் தமிழ் ஓங்கி எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

Page 7
வாழ்த்துரை
திருவாளர். ந. இராமநாதன் (செயலாளர்)
இனிய மனிதரும், மானிட நேசமுள்ள சிறந்த கவிஞரும" நண்பர் "செவ்வந்தி மகாலிங்கத்தினை கெளரவிக்கும் முகமாக மல ரொன்றினை வெளியிடும் நண்பர்கள் சிலரின் பெருமுயற்சியின் விளைவே இச் சிறு தொகுப்பாகும்.
இம்மலர் கூறும் செய்திகளைவிட, நண்பர் செவ்வந்தியின் ஆக் கங்கள் உயர்ந்த-சிற்ந்த படைப்புக்களாக உருப்பெற்றவை. இவரது ஜனரஞ்சகப் படைப்புகள் வானெலியிலும், பத்திரிகையிலும் பல ருக்கும் பரிச்சயமானவை. உயரிய கலை உள்ளம் கொண்ட இவரின் இவ் ஆக்கச்சிறப்பே இம் மலர் கொணர ஊக்கிய த்ெனலாம்.
இங்ங்ணம் புகழுற்ற கலை உள்ளம் கொண்ட நண்பர் எமது கூட் டுத்தாபனத்திற்குக் கிடைத்த பெருமையில் பங்குற்று, இம்மலர் வெளிவர உதவிய சகல நண்பர்கட்கும், இம் மலரினை வெளிக்கொண ரும் பாரிய பொறுப்புக்குரியவன் என்ற முறையில் மலர்வெளியீட்டுக் குழு சார்பாக நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
வளர்க நண்பர் செவ்வந்தி மகாலிங்கத்தின் கலேப்பணி.
- செயலாளர், மலர் வெளியீட்டுக் குழு -
பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
 

ஆசி யு  ைர
த&லவர் வை, த. சிவலிங்கம் ஆளணி முகாமையாளர் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்,
பரந்தன்.
1981-ம் ஆண்டின் தொடக்கத்திலே சங்கம் வளர்த்த தமிழ் புலவர்கள் உருவாகிய மதுரை மாநகரிலே, மங்காத் தமிழ் வளர பொங்கு விழா எடுக்கும் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு கோலாகலமாக நடைபெற்றது. அடுத்து வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டிலே எமது செவ்வந்தி மகாலிங்கத்தின் கவிதைகள் ஒலிக்கும் என்பது கண்கூடு.
எமது கூட்டுத்தாபனத்தின் கழகத்தில் கலே கலாச்சாரச் செயலாளராக இருந்து கலைக்கும், தமிழுக்கும் ஆற்றும் தொண்டுகள் அளப்பரியன. இவரது கவிதை, கட்டுரை, நாடகங்களில், பல நல்ல புதிய சீர்திருத்தக் கருத்துக்கள் இழையோடுவது உண்மையே. அப்படி வானுெலியிலும், வரும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த படைப்புக்களில் சிலவற்றை தொகுத்துத் தருவதே இம்முத்துக் குவியல் மலராகும்.
இம்மலர் சீரிய முறையில் வெளியிட அயராது உழைத்த மலர் வெளியீட்டுக் குழுவினர்கள் அனைவருக்கும் எனது, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எமது கூட்டுத்தாபனத்திற்கு சிறப்பினைத் தேடித் தரும் செவ்வந்தியின் கலேகள் வளர, கன்னித் தமிழ் ஓங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

Page 8
வாழ்த்துரை
திருவாளர். ந. இராமநாதன் (செயலாளர்)
இனிய மனிதரும், மானிட நேசமுள்ள சிறந்த கவிஞருமான நண்பர் 'செவ்வந்தி' மகாலிங்கத்தினை கெளரவிக்கும் முகமாக மல ரொன்றினை வெளியிடும் நண்பர்கள் சிலரின் பெருமுயற்சியின் விளைவே இச் சிறு தொகுப்பாகும்.
இம்மலர் கூறும் செய்திகளைவிட, நண்பர் செவ்வந்தியின் ஆக் கங்கள் உயர்ந்த - சிறந்த படைப்புக்களாக உருப்பெற்றவை. இவரது ஜனரஞ்சகப் படைப்புகள் வானொலியிலும், பத்திரிகையிலும் பல ருக்கும் பரிச்சயமானவை. உயரிய கலை உள்ளம் கொண்ட இவரின் இவ் ஆக்கச் சிறப்பே இம் மலர் கொணர ஊக்கிய தெனலாம்.
இங்ஙனம் புகழுற்ற கலை உள்ளம் கொண்ட நண்பர் எமது கூட் டுத்தாபனத்திற்குக் கிடைத்த பெருமையில் பங்குற்று, இம்மலர் வெளிவர உதவிய சகல நண்பர்கட்கும், இம் மலரினை வெளிக்கொண ரும் பாரிய பொறுப்புக்குரியவன் என்ற முறையில் மலர் வெளியீட்டுக் குழு சார்பாக நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
வளர்க நண்பர் செவ்வந்தி மகாலிங்கத்தின் கலைப்பணி.
-- செயலாளர், மலர் வெளியீட்டுக் குழு ---- பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம்

வளாட்டும் கலைப்பணி
நண்பர் செவ்வந்தி மகாலிங்கம் எமது கூட்டுத்தாபனத்திற்கு 1969-ம் ஆண்டு கடமைபுரிய வந்து பொறுப்பேற்ற காலத்தில் இருந்து கலை ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஒன்று கூட்டி முத்தமிழுக்கு வித்திட்ட பெரும் பணியை ஏற்றமை குறிப்பிடத்தக்கது. பழகுதற்கு இனிமையும், பண்பும் படைத்த இவர் ஆக்கிய நாடகங்கள் வட பிராந்தியத்திலே பெரும் பரிசில்களைத்தட்டியுள்ளது. நாடகத்தில் மட்டுமல்ல, இயல், இசை, கவி, போன்ற முத்தமிழையும் ஒருங்கே படைக்கக் கூடிய திறமை இயற்கையாகவே படைத்தவர். நண்பரின் கலைப்டணி வளரட்டும் என வாழ்துகிறேன்.
க. ச. வேலாயுதம் இ. பொ. கூட்டுத்தாபனம்,
பரந்தன். s.
தொடரட்டும் அாயபணி
அண்ணன் செவ்வந்தி மகாலிங்கம் அவர்கள் சாவக்க்சேரி வாழ் இளைஞர்களின் கலை வாழ்வுக்கும் கலைத்துறைக்கும் ஆற்றுகின்ற சேவை அளவற்றன. சித்திவினுயகர் கலைமன்றத்தின் தலைவராகவும் நடத்து னராகவும் கடமையாற்றும் இவரின் கலைப்படைப்புக்கள் யதார்த பூர்வமான சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. நினைத்தவுடனேயே
தனது ஆக்கங்களை எழுத்தில் வடிக்கும் திறமை பெற்ற இவரது.
இலக்கியப்பணி தூயதமிழ்ப்பணி தொடர எமது வாழ்த்துக்கள்.
செல்வன், ச. மார்க்கண்டு (Gevu6vnramrti) சாவகச்சேரி சித்திவினுயகர் கலே மன்றம்

Page 9
பல்லாண்டு வாழட்டும்
இந்நூல் ஆசிரியர் திரு. செவ்வந்தி மகாலிங்கம் அவர்கள் எமது மன்றத்திற்குப் பல காலமாகக் கலை இலக்கியத் துறையில் அரும்பணி புரிந்தவர். அவர் எமது மன்றத்தால் அரங்கேற்றப்பட்ட பல நாட கங்களுக்கு ஆசிரியராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து அரும் பெரும் பணியாற்றிய பெரும்பங்கு அவருக்கு எமது மன்றத்தின் வளர்ச்சியில் உண்டென்ருல் அது மிகையாகாது. அத்தகைய திறமை மிக்கவரும் எமது அனைவரின் அன்பையும் பெற்றவருமான திரு. செவ் வந்தி மகாலிங்கம் அவர்கள் தமது உள்ளத்தில் எழுந்த உணர்ச்கிக் குமுறல்களை எல்லாம் கொட்டி ஒன்ருக்கி முத்துக் குவியல்" என்னும் கோவையாக்கி புத்தக வடிவில் வெளியிடுவதை யொட்டி எமது மன்றம் பெருமை அடைகிறது, பூரிப்படைகிறது. இவரது கவிதைப் படைப் புகள் வானெலியிலும் சஞ்சிகைகளிலும் அடிக்கடி வருவதையும் நாம் நன்கறிவோம். திறமைமிக்க அவரின் "முத்துக் குவியல்' உலகுள்ள வரை வாழ வளர உளமார பல்லாண்டு வாழட்டும் என வாழ்த்து @gmມງ ܕ ܗܝ
மா. கணபதிப்பிள்ளை
செயலாளர்,
ஸ்ரார் நாடக மன்றம், கிளிநொச்கி
தன்னலமில்லாக் கலைஞன்
இன்றைய ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கவிதைத் துறையில் கவிஞர் செவ்வந்தி மகாலிங்கம் அவர்கள் ஆற்றிவரும் பணி மகத்தா னது. அண்மைக் காலத்தில் வானெலியில் அதிகமான கவிதைகளை எழுதி கவிதைப் பிரியர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட திரு. செவ்வந்தியின் கவிதையில் புதுமையையே என்றும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. கவிதைப் படைப்புக் கள் மட்டுமல்லாது சிறுகதை, நாடகம், போன்ற பல்வேறு துறை களுலிம் அன்னவரது ஆற்றல் மேலோங்கி எமது மத்தியில் சுடர் விட்டுப் பிரகாசிக்க எமது இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரி வித்துக் கொள்ளுகிழுேம். . ..
வணக்கம் க ைஇரத்தினசிங்கம்
இ. போ.

if
நம்நாட்டுச் செல்வம் ”
கிளிநொச்சித் தொகுதி விவசாயத்துறையில் மட்டும் முன்னணி வகிக்கவில்லை நல்ல மூதறிஞர்களையும், கலைஞர்களையும் கவிஞர்களையும் தன்னகத்தே கொண்டதாகும். அப்படிப்பட்ட கலை இலக்கியத்துறை யில் பெரும் பங்கினை வகிக்கும் தம்பி செவ்வந்தி மகாலிங்கத்தின் ஆக்கங்களை நான் வானெலியிலும் நேரிலும் கேட்டும், பார்த்தும் மகிழ்ந்துள்ளேன் சமுகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உள்ளது உள்ள படியே புனைந்து கவிதைப் புரட்சியை ஏற்படுத்தும் செவ்வந்தியின் ஆற்றல் அளவற்றது. நம் நாட்டுச் செல்வமாகத்திகழும் கவிஞர் செவ்வந்தியின் படைப்புகளை நாடு போற்றட்டும். நாமும் வாழ்த்து கிழுேம்.
வாழ்க தமிழ்! வளர்க கவிஞனின் கலை இலக்கியம்!
- " - வீ. ஆனந்தசங்கரி
(பா. உ. கிளிநொச்சி)
கவிமலர் சிறக்கட்டும்
தன்னிலவு என்றுமே தன்மையானதுமல்ல மலர்கள் அனைத்துமே பூசைக்குகந்தவையுமல்ல, மனிதரிடையேயும் அப்படித்தான் மாண் புடையோரும் உண்டு மாசுடையோரும் உண்டு. தன்னலமற்ற தியாக சிந்தை கொண்ட கவிஞர் செவ்வந்தியும் ஒரு தண்ணிலவே இயற் கையாகவே புலமைத்துவம் கொண்ட ஒரு கவிஞனுடன் ஒரே அலு வலகத்தில் கடமையாற்றும் பேற்றைப் பெற்றமையையிட்டு நாம் பெருமையடைகிருேம், தீத்தமிழைக் கவிதையாக்கி, செந்தமிழை அமுதர்க்கி, சொல்நயத்தை உருவாக்கி, பொருள் நயத்தை விருந் தாக்கி, தெள்ளுதமிழ்க் கவிதைகளை அள்ளித் தந்து, கவிமழை பொழி யும் திறனை வானலைகளிலும், வரும் சஞ்சிகைகளிலும், நேரிலும் கேட்டும் பார்த்தும் பருகியும் சுைைவக்கும் இன்பந்தான் ஒருகோடி அவரது கவிதை, கட்டுரை, சிறு கதை போன்றவற்றை ஒன்று திரட்டி முத்துக்குவியலாக்கி நாம் பெற்ற இன்பத்தை நானிலமும் பெறவேண்டுமேயென்ற ஆவலால் ஆர்வத்தால் ஆக்கப்பட்டதே இம் மலர்க் குவியல் மார்கழியில் மணம் பரப்பும் செவ்வந்தி மாதங்கள் பன்னிரண்டிலும் மனம் பரப்ப வேண்டும், அவரது கலைப் பணி தொடர, நாமகள் என்றும் அவரது நாவில் நின்று கவிபல படைக்க துணை புரியட்டும். அதன்பயனை நாடு முழுவதும் பெற்று இன்புறட்டும்.
திருமதி. சூரியகுமார் மலர் வெளியீட்டுக் குழு உறுப்பினர்,
.ப. இ.அ.தா ܐܝ... .. .. .. *

Page 10
NYNX NYINY NZ AAAAA
NVENYNYVNYNVENYNY ZAZNANA ANA ZAZNAZNA ZA
எமது கூட்டுத்தாபனம் இரசாயனவியல் துறையில் முன்னேறி வரும் இவ்வேளையில், கலைத்துறையில் எமது கூட்டுத்தாபனத்தின் பெருமைகளை வெளிக் கொணர்ந்த திரு. செவ்வந்தி மகாலிங்கம் என்பவரை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இன்று எமது கலை இலக்கியங்கள் ஏட்டளவில் இருப்பதையும், ஓரிரு கவிஞர் க ள் அதை வெளிக்கொணர்ந்து சிறப்பிப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது, அந்த வரிசையில் சொல் நயமும், பொருள் நயமும் பொதிந்த, யதார்த்தமான சம்பவங்களைக் கோவைப் படுத்தி கவிதைகளை ஆக்குவதில் திறமைமிக்க கவிஞர் செவ்வந்தியும் ஒருவரே என்பதை நினைக்கும் தோறும், எமது கூட்டுத்தாபனத்திலும் கலைஞர்கள் உருவாகியிருப்பது கண்கூடு.
இவரது கவிதைப் படைப்புக்களை அநேகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவைப் பிரிவில் அடிக்கடி கேட்கக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான ஒரு கவிமகன் எமது கூட்டுத்தாபனத் திற்குக் கிடைத்தது எமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்ருகும்.
வாழ்க அவரது தமிழ்!
' , ', ' ' வளர்க அவரது கலைச்சேவை1
ܫܗ ܙ !,
இவ்வண்ணம் க. பாலேந்திரா - ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையாளர் பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூ, தாபனம்
 
 
 
 
 

* ******************
எ ன் , க  ைத *****资资兴***沙华兴会效率没兴资本 பிறந்த மண் :
கல்வியும், கலையும், கனியும் கலந்துறவாடும் தென்மராட்சிப் பகுதியின் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 2-ம் வட்டாரமாக விளங் கும் மீசாலையில் பிறந்த நான், ஆரம்பக் கல்வியைக் கமலாம்பிகை வித்தியாலயத்திலும், பருவ காலக் கல்வியை யா/விக்கினேஸ்வர வித் தியாலயத்திலும் பயின்று க. பொ. த. சித்தியெய்திவிட்டு, இரசாய னப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் எழுதுவினைஞராகக் கடமை யாற்றுகிறேன்.
தமிழுக்கு வித்திட்ட தலைவர் :
காலஞ்சென்ற பண்டிதர். சி. கா. தம்பையா அவர்களே எனது கல்விக்கும் தமிழுக்கும் வித்திட்ட பெருந் தலைவர். அவரால் ஊட்டப் பட்ட தமிழ்ப் பால் இன்று எத்தனையோ கலைஞர்களையும் கவிஞர்களை) யும் உருவாக்கி இருப்பதைத் தென்மராட்சி மக்கள் உணர்ந்து பெருமை ய டைவது வியப்புக்குரியதல்ல. அப்படிப்பட்ட தமிழ் வி த் த க ரி ன் இழப்பு எனக்கு மட்டுமல்ல, எமது தொகுதி இளம் சந்ததியினர்க்கே பேரிழப்பாகும். என் இதயத்தில் உதயம் தரும் சிந்தனைச் சிதறல்களுக்கு இலக்கணம் வகுத்த இனியவருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்: 1 கலை வாழ்வுக்கு ஒளியேற்றிய அண்ணன் அ. பொ செ... | - தென்மராட்சிப் பகுதியில் உறங்கிக் கிடந்த உயரிய கலைகளையெல் லாம் வெளிக்கொணர்ந்த பெருமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை உடமையாகக் கொண்ட அ ண் ண ன் அ. பொ. செல்லையா B.Sc. (அதிபர், பளை மகாவித்தியாலயம்) அவர் களே எனது கலைத்துறைக்கு ஒளிகாட்டிய செம்மலாகும். சாதி, மத பேதமெனும் சாக்கடைக் கொள்கைக்கு சாவு மணி ஒலிக்கும் திண்மை மிக்க ஒருவர் உண்டென்றால் அ. பொ. செ. என்றே எந்தக் குழந்தை யும் திட்டவட்டமாகச் சொல்லும். சென்னையிலே B.Sc. தேறிய இவர் இந்தியாவில் இருந்து திரும்பி வந்ததும், உத்தியோகம் தேடி ஓடாமல் உறங்கிக் கிடந்த இளைஞர்களை விழிக்க வைத்தார். தென்மராட்சி முத்தமிழ்க் க லை ம ன் ற த்  ைத உருவாக்கி உயரிய கலைகளை உல கறிய வைத்தார். சமூ க சீர்திருத்த கருத்துக்கள் அடங்கிய பல நாடகங்களை உருவாக்கி, நெறிப்படுத்தி நடித்ததுடன் தன்னுடன் சேர்ந்த கலைஞர்களையும் ஒளி பெற வைத்தார். அவரது படைப்பான ' 'யார் கொலைகாரன் ' ' ' 'சதிகாரன் சபாபதி' ' ' 'நஞ்சன் நாகப்பா' ''நாகபுரி நாகேந்திரன்'' போன்ற சிறந்த நாடகங்களை கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் மேடையேற்றி எம்மையும் நடிக்கவைத்த பெரு மையும் அவரையே சாரும். நாடகத்தில் பெண்களா என்று கேலி
முத்தமிழ்" ார். ச மூ " நெறிப்படுத்த

Page 11
பேசியவர்களின் வாயை மூடவைத்து, கலைக்கும் வாழ்வுக்கும் வித்தி யாசம் தெரியாதென்ற மமதை தனை ஒழித்து கலைத் தாயின் வடிவங் களில் ஆண், பெண் என்ற பாகுபாட்டை மாற்றி எம்மையெல்லாம் மறுமலர்ச்சிப் பாதைக்கு வழிகாட்ட உழைத்த உத்தமர் அ.பொ.செ. என்பதை மறுக்க முடியுமா? அல்லது மறக்கத்தான் முடியுமா?
முன்னேற்றப் பாதையிலே!
எழுத்தாளர்களும் கலைஞர்களும் கவிஞர்களும் உருவாக்கப்படுகி" றார்களேயன்றி, கலை ஏட்டுடன் கட்டிப்பிடித்துக் கொண்டு சந்ததி சந்ததியாகப் பிறக்கிறார்கள் என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடி. யாது. இன்றைய சமூகத்திலே சிந்தனைத் திறனும் திண்மிய கருத் தும், கற்பனை வளமும் படைத்த எத்தனையோ இளம் எழுத்தாளர் களும், கலைஞர்களும் குடத்தில் இட்ட விளக்காகத் திகழ்வதை நான் அறிவேன். ஏன் நாடே அறியும். ஒருசில குறிப்பிட்ட கலைஞர்களை மட்டும் (செல்வாக்கைப் பயன்படுத்துவோர்) தமது உடமையாக்கிக் கொண்டு இன்றைய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் புகழாரம் சூடுவ தையும் அவர்களது படைப்புக்கள் எப்படிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பினும் சிறப்பிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இது வேதனைக்குரியதும், வெட்கப்படக்கூடிய செயலுமாகும். இப் படித்தான் இந்திய சினிமா வானிலும், ஒரு குறிப்பிட்ட நடிகரைப் போட்டால்த்தான் வசூலைத் தேடலாம் என்ற குறுகிய நோக்கம் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது இளம் தலைமுறையினராலும் அது முடி யும் என்பதை அண்மையில் வெளிவந்த படங்கள் பறைசாற்றுகின்றன. இது கண்கூடு ஆயின் பத்திரிகை வாழ்வில் அது இலைமறை காய்தான்' இளம் எழுத்தாளரின் படைப்பில் சுவை இல்லை, கரு இல்லை. கற்பனை இல்லை, கலை இல்லை என்றெல்லாம் தட்டிக் கழித்து விடலாம். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் உருவாக வேண்டாமா? தவழும் குழவி என்றுமே தவழப் போவதில்லை. எழுந்து நடமாடும் மனிதனாகவும் வாழும் என்பதை சில பத்திரிகையாளர்கள் உணரமறுப்பது விந்தையே.
கையேட்டுப் பிரதிகளாகவும், ஏட்டுப் பிரதிகளாகவும் இருந்த எனது ஆக்கங்களை என் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் கொடுத்து வாசிப்பித்து இதன் குறைநிறைகளை வழங்குமாறு கேட்டேன். அநே கர் எனது படைப்புகளில் உயிரோட்டம் இருப்பதாகவும், உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும் கூறியதுடன், இவைகளைப் பத்திரிகை சஞ்சிகை வானொலி ஆகியவற்றிற்கு அனுப்புமாறு வேண்டினார்கள். அதன் எதிரொலியாகவே என் கன்னிப் படைப்பான ''இப்படியும் மனிதர்கள்'' என்ற கவிதையை (13-12-79) அன்று இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன ஒலிமஞ்சரி நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தேன். (16-12-79) அன்று நடைபெற்ற ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் இக்கவிதை ஒலிபரப்பானது. உண்மையில், திறமைக்கும் கருத்துக்கும் ஊக்கங் கொடுக்கும் ஆக்கப் பணியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஒலிபரப்புக் கூட்டுத்

தாபனத்தில் எனக்கு உறவினர்களோ அல்லது நண் பர்க ளோ அல்லது தெரிந்தவர்களோ இல்லாத போதும் எனது படைப்புக் களைத் தரம் கண்டு ஒலிபரப்பிய தன்னலமற்ற ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவைக்கு நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை. எனது கவிதைகளுக்கு ஆக்கம் தந்த பத்திரிகைகளில் குறிப்பிடும்படி அமைவது ஈழநாடு பத்திரிகை ஒன்றே எனக் கொள்ள வேண்டும். எனது ஆக் கங்கள் சிலவற்றிற்கு ஊக்கம் தந்துள்ளது. ஏனைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் கைவிரித்த காரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு தலைக்காதலாக இருக்கலாம். 79-ம் ஆண்டில் இருந்து 1980 - 12 - 01 மார்கழி மாதம் வரை சுமார் 30 கவிதைகள் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன ''ஒலி மஞ்சரி'' ''வானொலி வட்டம்' ஆகிய நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகி உள்ளன.
இதுவரை பல நூற்றுக்கணக்கான வானொலி ரசிகர்களின் கடிதங் கள் என் கைக்கு கிடைத்துள்ளன. இத்தனை ரசிகர்கள் என் கவிதையை ரசிக்கிறார்கள் என்றால் என் ஆக்கங்களுக்கு அவர்களும் ஊக்கம் தருகி
றார்கள் என்பது பொருளல்லவா?
இம்மலரைப் புத்தக ரூபமாக வடிக்க உதவிய மலர் வெளியீட்டுக் குழுத் தலைவர் திரு. வை. த. சிவலிங்கம் (ஆளணி முகாமையாளர்), செயலாளர். திரு. ந.இராமநாதன் அவர்களுக்கும், பொருளாளர் திரு. க. ச. வேலாயுதம், மற்றும் திருவாளர்கள்: சி. சுந்தரலிங்கம், ஆர். தம்பையா, க. கணபதிப்பிள்ளை, டேவிற் தோமஸ், ஜோ. இம்மனியல், கே.கோபாலகிருஷ்ணன், ஏ. ஞானப்பிரகாசம், எஸ். தருமநாயகம், எம். ஞானேந்திரன், எம். ஏ. ஜெயரட்ணம், கே. இரத்தினசிங்கம், திருமதி. சூரியகுமார் பொன்னையா ஆகியோர்க்கும் என் நன்றியறிதலை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். என் கவியாக்கத்தின் ரசனைகளை உடனுக்குடன் பார்த்து ஊக்கம் தரும் நண்பர்கள் க.நாகமுத்து நா. குணரத்தினம், அவர்களுக்கும் என் நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன்.. இம்மலர் உருவாக உழைத்து நிதி உதவிய அன்பர்கள், நண்பர்கள் ஸ்தாபனங்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இம்மலர் சீரிய முறையில் உருவாக உறுதுணை புரிந்து அச்சிட்ட அச்சுவேலி, ராஜா அச்சகத்தாருக்கும், அட்டைப் படத்திற்கு ஓவியம் தந்த ஓவியர் குமரபுரம் திருமதி. தாமரைச் செல்வி அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
வாசக நேயர்களே! இம்மலரில் இடம்பெற்ற கவிதைகள் கதை. நாடகம் போன்றவற்றில் தேங்கியிருக்கும் சிறப்புகள், குறைபாடுகள் நிறைவுகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிவித்து எனது கலைப் பணிக்கு உறுதுணை புரிவீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் கதையை முடித்துக் கொண்டு, சுவைத்துப் பாருங்கள் என்று கூறி விடைபெறு கிறேன்.
- வணக்கம் --
செவ்வந்தி மகாலிங்கம் இரசாயனப் மொருட்கள் கூட்டுத்தாபனம்
பரந்தன்

Page 12
  

Page 13
ஏய்என்ன சமைத்தாய் எடுத்துவை மீன்பொரியல் கடிப்பதற்குக் கருவாடு கள்வாய்க்குக் கணவாய்நன்று கொடுத்துவிட்டுச் சென்றதுபோல் குடியர்இவர் கேட்கையிலே கட்டியவள் என்னசெய்வாள் கலங்குவதைத் தவிர
'ı
வீட்டினைவு இல்லாத வீண்குடியர் இவர்களுக்கு
வாழ்க்கைப் படவோ பெண்பிறந்தாள் பூமியிலே * நாட்டின் நலனும் நமதினிய நாட்டுடைய கூட்டுஅபி விருத்தியெல்லாம் குறைகிறது குடிமகனுல் *
இவர்களும் மனிதர்களாய் ஏன்பிறந்தார் பூவுலகில்
 

போ லிகள்
(வாலிப வட்டம் நிகழ்ச்சியில் 8-1-80-ல் ஒலிபரப்பாகிய கவிதை)
போலிகள் பலருண்டு பூவுலகில் புதுப்புது வடிவினில் வந்று நிற்பர் பார்த்தால் படித்தவர் போலிருக்கும் பிறர் பைகளில் தான்இவர் கண் இருக்கும் உடலால் உழைக்கமுடியாத உதவாக்கரைகள் இவர்களினல் ஏதும் அறியாப் பாமரர்கள் எத்தனை சிரமப்பட வேண்டும்
கரில்முட்டக் களிசான் போட்டிடுவர் கைதனில் புத்தகம் வைத்திருப்பர் சினிமா நடிகர் தோற்றிடுவர் இவர் சீவும் தலையின் வடிவழகில்
ஆங்கிலம் அரைகுறை பேசிநிற்பர் தாய் மொழிதனைக் கொஞ்சம்
மறந்தவர் போல் கல்லூரி செல்லும் பையனைப்போல்வெகு கச்சிதமாய் இவர் நடித்திடுவர்
பஸ்சின் கியூவினில் வந்துநிற்பர் புகை வண்டியின் மேலேயும் ஏறிநிற்பர் மக்கள் கூடும் சந்தையிலும் கோயில் விழாக்களின் கூட்டத்திலும் மாதர்கள் காதணி என்ருலும் மானிடர் கைப்பொருள் என்ருலும்
ஏமாந்த நேரத்தில் எப்படியும் எடுத்துக்கொண் டோடுவதிவர்கள்
தொழில்
பல்கனி டிக்கற்தான் எடுப்பர் பகல்ப்படம் பார்ப்பதில் மன்னவர்கள் மெத்தப் படித்தவர் போலிருக்கும் இந்த மேனி மினுக்கரின் முகவழகில் பெண்களே நீவிர் மயங்காதீர் பின்னர் இதை எண்ணி வருந்தாதீர் துள்ளித் திரிகின்ற பெண்களே உங்கள் பள்ளிப் படிப்பது கெட்டுவிடும்
ஊருக்குப் புதிய பெண் என்ருல் உருக்கம் காட்டி நின்றிடுவர் ஆண்துணையில்லாப் பெண்என்று அலசி கேட்டு அறிந்திடுவர் போகுமிடம் வெகு தூரமென்ருல் கள்வர்கள் உண்டு கவனமென்பர் நம்பி பெண்ணைத் தெருவில் வைத்து நகைகளைமட்டும் பிடுங்கிச் செல்வர்
காவலர் கைகளில் மாட்டிக் கொள்வர் சிறைக் கம்பியும் சிலநாள் எண்ணிக் கொள்வர் இருந்தும் இவர்கள் திருந்தவில்லை ஏனுேதொழிலை மறப்பதில்லை பயணம் பண்ணும் பயணிகளே கவனம் வேண்டும் பொதிகளிலே கைவிட்ட கைப்பொருள் திரும்பாது கவனித்துக் கொள்வீர் போலிகளை
3

Page 14
ஆ  ைச
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 6-1-80Ꮝ ஒலிபரப்பான கவிதை)
அகிலத்தின் ஆடவர்க்கு அரிவையர்மேல் ஆசை அரிவையற்கென்றலோ ஆடைகளில் ஆசை
ஆயர்குல மைந்தர்கட்கு ஆநிரைமேல் ஆசை ஆநிரைகட் கென்ருலோ அறுகின்மேல் ஆசை
இரப்போர்க்கு எந்நாளும் ஈவோர்மேல் ஆசை ஈவோர்க்கு எந்நாளும் ஈசன்மேல் ஆசை
உடையவர்க்கு எந்நாளும் உழவர்மேல் ஆசை உழவர்க்கோ எந்நாளும் உய்வின்மேல் ஆசை
எத்தர்க்கு ஏந்நாளும் ஏமாற்றும் ஆசை ஏமாற்றுப் பேர்வழிக்கோ ஏராளம் ஆசை ஐயருக்கு எந்நாளும் ஐங்கரன் மேல் ஆசை ஐங்கரனுக் கென்ருலோ மோதகத்தில் ஆசை
ஒப்பிலாப் புலவனுக்கு ஒதுவதில் ஆசை ஒதுபவர்க் கென்ருலோ ஒசையின் மேல் ஆசை ஒளவைக்கு எந்நாளும் முருகன்மேல் ஆசை அஃதிலா முருகனுக்கோ மயிலின்மேல் ஆசை
'0' ? ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔
 

காதலித்தேன் அவளை
(ஒலிமஞ்சரி நிகழ்ச்கியில் 2-3-80-ல் ஒலிபரப்பான கவிதை)
மயங்கிடும் மாலைவேளை மலர்விழி அவளைக் கண்டேன் சிவந்திடும் செக்கர் வானச் சிரிம்பினில் என்னைத் தந்தேன் எடுப்பார் கைப்பிள்ளைபோல ஏந்திழை இருக்கக் கண்டேன் என்னையே அவட்குத் தந்து எடுத்தடி வைத்துச் சென்றேன்.
குணமது குன்றென்ருலும் குலமது குவலயந்தான் சாதிகள் அவளுக்கில்லை. சண்டைகள் குறைவு கண்டாய் சமத்துவத் தத்துவங்கள் சாஸ்திரக் கேள்வி ஞானம் எடுத்திடும் இலக்கியங்கள் இலக்கண வரம்பை யொத்தாள்
கண்கவர் மேனியாளே காதலித்தவர்கள் கோடி வள்ளுவன் வழியில் நின்றன் கம்பனும் உருகி நின்முன் யாழ்நகர் தந்த செம்மல் நாவலர் விரும்பிச் சென்ருர் இன்றுள கவிஞரெல்லாம் ஏந்திழழை அவளுக்காக
ஏங்கிடும் ஏக்கங்கோடி எவளுக்கும் இணங்க மாட்டாள்
நானுமோ காதலித்தேன் நமக்கவள் மசியவில்லை கற்பனைக் கலைகள் கொஞ்சும் கவிஞரைத் தழுவச் செல்வாள் நர்த்தன நடனமாடும் நாரியர் தன்ளைச் சேர்ப்பாள் முத்திடைப் பிறந்த பெண்ணும் முத்தமிழ் என்ற கன்னி

Page 15
மர்மம் இப்போ தெரிகிறது
(வர்லிபவட்டம் நிகழ்ச்சியில் 25-3-80-ல் ஒலிபரப்பான கவிதை)
அண்ணன் உண்டு தம்பியுண்டு அக்கையுண்டு தங்கையுண்டு சொந்தமுண்டு சுகமுமுண்டு சொகுசான வாழ்வுமுண்டு காசுபணம் உள்ளவரை கால்பிடிக்க ஆட்களுண்டு பையதனில் இல்லைஎன்ருல் பார்பார் அவனைஎன்பர்
അ
வேலைஇல்லை வெட்டிஇல்லை வீறுநடை ஏன்இவர்க்கு வீதிவழியே வரவும் வெட்கங்கூட இல்லையென்று வீட்டுவாசலில் இருந்து வீண்வம்பளந்தவர்கள் வெளிநாட்டில் வேலைஎன்று சென்றுவிட்டான் என்றறிந்தால்
ஆரதிலை போகிறது அஞ்சுகம் அக்காவோணை தம்பியவர் வெளிநாட்டால் வேறென்ன அனுப்புறவர் வீடுகட்டிப் போட்டியளே வாடகைக்கும் கொடுப்பியளோ என்னட்டையும் பெண்இருக்கு எப்படியும் யோசியுங்கோ
என்ன உலகமிது ஏன்இந்தப் பெருமையெல்லாம் படித்துவிட்டு நான்பட்ட பாடுகளைப் பார்த்திருந்து வேலிவழியேயிருந்து வெருட்டி மிரட்டியவர் வீட்டில் இருப்பதற்கு விடுகினம் இல்லைஇப்போ
ஒட்டைச் சயிக்கிள் மச்சான் டபிள்போட மாட்டனென்று நான் கால்கடுக்க நடக்கையிலே காணுமல் ஒடினவர் மோட்டைச் சயிக்கிள்மச்சான் மோட்டுவேலை என்றுசொல்லி கார்எடுத்தால் நல்லதென்று கனக்கக் கதைக்கினமே
வாதம்பி என்றுசொல்லி வரவேற்கப் பலபெயர்கள் என்மகளை எடுத்தியென்ருல் எதுவும் தருவனென்று நடையாய் நடந்திப்போ கிடையாய்க் கிடக்கினமே கலியாணங் கட்டனென்று கால்கடுக்க நிக்கினமே آب
யாரை இவர் தேடுகிறர் என்னையல்ல என்னையல்ல தேவை இவர்களுக்கு நான் தேடிவந்த செல்வமல்லோ என்னைஅவை தேவையென்றல் எடுத்தெறிஞ்சவையோ முன்பு இப்போ என்னைத் தேடுவதன் மர்மம் இப்போ தெரிகிறது
6

*
எண்னம் நமக்கு வரும்
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 4-5-80-ல் ஒலிபரப்பான கவிதை)
வண்ண நிறத்தில்ஒரு சின்னக்குயில் ஒன்று தென்னை மரத்தில் வந்து தேன்குரலில் பாடயிலே எண்ணக் கனவினிலே இன்ப நினைவினிலே கண்ணன் குழல்இசைக்கும் எண்ணம் நமக்குவரும்
பச்சைக்கிளி யொன்றுதன் இச்சைக் கணவனுடன் கொச்சைத் தமிழ்படித்துக் கூடிக் குலாவையிலே எண்ணக் கனவினிலே இன்ப நினைவினிலே காவியக் காதலரின் எண்ணம் நமக்குவரும்
வெள்ளைப்பசு இரந்து கன்றை அழைக்கையிலே பசலை பசியகன்று பாலைக் குடிக்கையிலே எண்ணக் கனவினிலே இன்ப நினைவினிலே அன்னை அரவணைத்த எண்ணம் நமக்குவரும்
கலைமான்கள் கூட்டமது நிரையாகச் செல்கையிலே கண்ணுல் கதைபேசி கலந்து மகிழ்கையிலே எண்ணக் கனவினிலே இன்ப நினைவினிலே பள்ளியிலே படித்த எண்ணம் நமக்குவரும்
காக்கைக் குருவியெல்லாம் கூப்பாடு போடயிலே இரைக்கு இனிய தங்கள் இனத்தை அழைக்கையிலே எண்ணக் கனவினிலே இன்ப நினைவினிலே
கூட்டுறவால் உயரும் எண்ணம் நமக்குவரும்
ፖ7 f

Page 16
6 O O e o
"நாட்டின் தலைவர்கள் உழவர்களே”
(1979-ம் ஆண்டு கிளிநொச்சி உழவர் விழாப் ப்ோட்டியில் முதற் பரிசு பெற்றதும், வாலிபவட்டம் நிகழ்ச்சியில் 8-4-80-ல்
ஒலி பரப்பப்படடதுமான கவிதை)
உழவுத் தொழிலின் மகத்துவத்தை எழுத்தில் வடிப்பது இன்பமன்ருே பாப்பா புலவன் பாரதியும் அழியா நெறியின் வள்ளுவனும் பெருமைத் தொழிலே உழவென்று பாடிப் போந்தார் முன்பாக நிலத்தாய் நமக்குத் தருகின்ருள் நெத்தியின் வியர்வைக்கு ஈடாக
எந்தத் தொழிலைக் கொண்டாலும் இழப்புண் டதற்குற் கண்டீரோ மேழிச் செல்வச் செழிப்பிற்கு நிகரும் உண்டோ புவிமீதில் அன்னை தந்தையும் செய்திடலாம் அண்ணன் தம்பியும் சேர்ந்திடலாம் பட்டப் படிப்புத் தேவையில்லை பயிர்செயும் உழவுத் தொழிலுக்கு
வரப்பைக் கட்டி வளமாக்கி வயலை மெல்ல உழுதிடுவோம் மழையைக் கண்டு விதைத்திடுவோம் களையைக் கொய்து எடுத்திடுவோம் வளரும் பயிரை உயிராக்க வாய்க்கால் கட்டி நீர்இடுவோம்
பச்சைப் பசிய நெல்மணியைப் பாத்தே நாங்கள் மனமகிழ்வோம்
தலையைச் சாய்க்கும் பெண்ணைப்போல் கதிரைச் சாய்ப்பாள் நெல்அன்னை அரிவாள் கொண்டு அறுத்திடுவோம் அட்டியாய்ச் சூடு வைத்திடுவோம் மாடு கட்டிப் போரடிப்போம் மலையென நெல்லைக் குவித்து வைப்போம் உண்ண உணவுக் கலையமாட்டோம் உழவராய் நாங்கள் இருக்கும்வரை

புத்தாண்டே வாராய்
(1980 புதுவருடப் பிறப்பையொட்டிய விசேஷ நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதை 13-4-89,
பொங்குதமிழ் சிங்களத்தின் புத்தாண்டே எங்கும் இசை முழங்க வங்கக்கடல் ஒலிக்க வான்முகில் மாரிபெய்க துன்ப இருளகர தூயபணி பெருக சங்கம் வளர்த்த தமிழ் சிங்கத்திரு நாட்டினிலே பொங்கு புகழ் பரப்பி புதுமைப் படைப்பெடுக்க ஊரார் மனம் மகிழ உழவுத்தொழில் சிறக்க முத்தமிழும் ஒளிர மூதறிஞர் வாழ்த்தொலிக்க வானுெலிச் சேவையது வையம் புகழ்பரப்ப குயில்கள் குரல் இசைக்க குருவிகள் குழாம் பாட சித்திரைப் புத்தாண்டே சீர்சிறக்க நீவாராய்.
。

Page 17
வேண்டாம் இதை விட்டிடுவோம்"
(15-4-80-ல் வாலிபவட்டம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதை)
பட்டப்பகல் வேளையிலே பாதிமது போதையிலே நட்டநடு வீதியிலே தட்டத்தடு மாறயிலே கேடுகெட்ட மூடருக்கு புத்திசொல்ல முயலுவது வெட்கம்கெட்ட வேலையெல்லோ வேண்டாம்இதை விட்டிடுவோம்
தாயின் சிறப்பினையும் தந்தை வளர்ப்பினையும் தட்டிவிட்டுக் கெட்டுவிட்ட தறுதலை யானவரை மரியாதை காட்டியெறும் மதித்து நடத்துவது வெட்கங்கெட்ட வேலையல்லோ வேண்டாம்இதை விட்டிடுவோம்
புகைவண்டி ஒடயிலே சனநெருக்கங் கூடயிலே தூரப்பயணி வந்து தொங்கிக்கொண்டு நிகையிலே கால்மேலே கால்போட்டுக் கடுதாசி ஆடுகின்ற உள்ளூர் பயணிக்கு உபதேசம் செய்துநிற்றல் வெட்கங்கெட்ட வேலையெல்லோ வேண்டாம்இதை விட்டிடுவோம்
கையில் குழந்தையுடன் பஸ்சில் பயணம்வரும் தாயொருத்தி நின்றுகொண்டு தள்ளாடும் நிலையறிந்தும் சீக்கரெட்டை ஊதித்தள்ளி சிரித்து மகிழ்ந்திருக்கும் சிந்தனை யற்றவரைத் திருத்த முயலுவது வெட்கங்கெட்ட வேலையெல்லோ வேண்டாம்இதை விட்டிடுவோம்
சாதி யிரண்டொழிய பேதமே இல்லையென்று மேடைதனில் ஏறிநின்று வீரமதாய் பேசிவிட்டு கோயிலுக்குள்ளே இவர் கும்பிட வருகையிலே பேதமையைக் காட்டிநிற்கும் மூடருக்குப் புத்திசொல்லல் வெட்கங்கெட்ட வேலையெல்லோ வேண்டாம்இதை லிட்டிடுவோம்
10

மழையென ஒருவன் வந்தான்
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 20-4-80-ல் ஒலிபரப்பான கவிதை)
கதிரவன் கரையும் நேரம், கடற்கரை மணற்பரப்பில் கைதனைத் தலையில் தாங்கி கண்ணயர்ந் திருந்தபோது மெல்லெனக் கரத்தை நீட்டி மெய்யெலாம் உருகவைத்த கன்னியை விழித்துப் பார்த்தேன் கடுகியே காற்ருய்ச் சென்ருள்
வெண்மணற் பரப்பின்மீது விழுந்துநான் படுத்திருந்தேன் மேகத்தின் ஊடேவந்த வெண்ணிலா என்ற பெண்ணுள் கயல்விழிக் கண்ணைக் காட்டி கலக்கைத்தை தூண்டி நின்ருள் நெஞ்செலாம் இனிக்க நானும் நிமிர்ந்துமே பார்த்தபோது வஞ்சக நெஞ்சம் கொண்ட வான்முகில் மறைத்துக் கொண்டான்
தாளவே மனது நோவ சரிந்துநான் இருந்தபோது தாரகைச் செல்வியங்கு விழிமலர் சிமிட்டி நின்ருள் இருவரை இழந்து நின்றேன் இவளையே நோக்கி நின்றேன் மழையென ஒருவன் வந்தான் மறைந்தனர் மாதர் மூவர்

Page 18
66 9 கனவுகளே
(வாலிபவட்டம் நிகழ்ச்சியில் 17-6-80-ல் ஒலிபரப்பான கவிதை)
தோழியர் ஒன்று சேர்ந்து குறும்புகள் பலவும் செய்ய தோன்றிடு நாணமெல்லாம் தோகைஎன் நெஞ்சைத் தாக்க பாலொடு பழமும் ஏந்தி பாவைநான் பலவும் எண்ண போவெனத் தாளைமூடி போயினர் தோழிப் பெண்கள்
தாயினை இழந்த கன்று தவிப்பதைப் போல நானும் காலொடு கால்கள்பின்ன கையெலாம் தாளம்போட மெய்யெலாம் வியர்வை சிந்த மேனியில் நடுக்கங் கொள்ள உய்யவே உள்ளம் தந்த உத்தமர்முன் போய் நின்றேன்
வெண்கல மணியை ஒக்க வேள்அவர் சிரித்தபேயது விரற்கடைப் பலத்தில் நின்றேன் விழுந்திடும் நிலையில் நானும் மெல்லென நடந்து வந்து மேனியைத் தொட்டபோது
மின்கல விளக்கைத் தொட்ட விட்டிலைப் போலவானேன்
நாரியே நாணம் தானே நான்துணை நிற்கவென்று வாரியே வகையாய் எந்தன் வளைக்கரம் இரண்டும் பற்ற தட்டினில் இட்டபாலும் தளும்பியே நிலத்தில் சிந்த தலையினைக் கவிழ்ந்து கொண்டேன் தட்டைநான் பற்றிக்கொண்டேன்
தொட்டிலில் சிரிக்கும்தூய குழந்தையை அள்ளுமாப்போல் கட்டிலில் என்னைவிட்டுக் கட்டியே அணைக்க வந்தார் விட்டிடில் போதும்என்று விரைந்துநான் எழுந்தேன் - அங்கு கட்டிலில் தனியனனேன் கண்டது கனவுதானே
Q-2))

எனக்கவள் கவிதை தந்தாள்
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 29-6-80ல் ஒலிபரப்பான கவிதை)
பொழில்நிறை பொய்கை தன்னில் பூத்திடு கமலம் போல மொழிகளில் மூத்தகன்னி மூவகைத் தமிழின் செல்வி பற்பல புதுமை செய்வாள் பாலினும் இனிய சொல்லாள் இயல்இசை நாடகத்தின் இலக்கணம் வகுத்துத் தந்தாள்
நாவலர் நாவில் நிற்பாள் நடுவலர் நெஞ்சில் நிற்பாள் பாவலர் பாவில் நிற்பாள் பைந்தமிழ்ச் சொல்லில் நிற்பாள்' பரதவர் பாணரோடும் பச்சிளம் குழவியோடும் கொஞ்சியே கெஞ்சி நிற்பாள் வஞ்சமில்லாத வஞ்சி
நெஞ்சிலே நினைவு பொங்க நினைத்திடு நேரமெல்லாம் அஞ்சிடேல் அன்பேயென்று அடிபல தொடக்கி வைப்பாள் கலைபல மிளிர வைப்பாள் காவியம் பலவும் செய்வாள்
கவிகளின் கைவண்ணத்தால் கவிதைகள் புனைய வைப்பாள்
எத்தனை கோடி பொன்னைக் குவிப்பினும் இவளைப் போல நற்றவம் செய்த நங்கை நமக்கினிக் கிடைக்கப் போமோ தேனெடு பாகும் சேர்த்து சுவைத்திடும் சுவையைப் போல எனக்கவள் கவிதை தந்தாள் இனிப்பிறப் பில்லாப் பெண்ணுள்

Page 19
கற்பனையில் ஒரு கன்னி
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 29-6-80-ல் ஒலிபரப்பான கவிதை)
விண்ணிலே விரைந்து செல்லும் வான்நிலா மறைந்து நோக்கும் மண்ணிலே மலரும் பூக்கள் மதிமுகம் கண்டு வாடும் பண்ணிலே பாடல் தோன்றும் பாவையைக் கண்டால் போதும் கண்ணிலே காதல் ஊறும் கவலைகள் குறைந்தே போகும்
கருவிழிக் கண்ணுளோடு காவியம் புனையச் சென்ருல் கருமுகில் கவலை கொள்ளும் கன்னியாள் கூந்தல் கண்டு கருங்குயில் கானம் நீக்கும் காரிகை மொழியைக் கேட்டு கரும்புவிற் காமன்கூட காதலில் உருகிப் போவான்
நடையினைக் கண்டுநாணி நலிந்திடும் அன்னப் பேடை உடையது உடலைக் கொஞ்சும் உள்ளமோ அணைக்கத் தாவும் இடையது உடுக்கையொக்கும் இதழ்களில் மதுவே யூறும் படைகொடு துரதன் கூடப் பார்த்திடில் பணியத் தோன்றும்
முல்லையின் சிரிப்பைச் சிந்தி முகமலர் மறைத்துக் கொள்வாள் தொல்லைகள் மறைந்த தென்று தொட்டிடத் துடிக்கும் நெஞ்சம் எல்லையில் தாவியோடி ஏந்திளை ஏளனம் செய்வாள் தில்லையில் கூத்தளுடும் திருவிளை யாடல் செய்வாள்
அலைகடல் ஒரம் சென்றுநீர் அலைகளைக் காணும் தோறும் நிலைதடு மாறி நெஞ்சம் நீரிடை அவளைத் தேடும் الس؟ வலைபடு மீனைப் போல மனம்பல நினைவில் துள்ளும் " கலேமகள் கோலமெல்லாம் கடலலை மூடிச் செல்லும்
14

இயற்கையின் எழிலை எல்லாம்
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 24-9-80-ல் ஒலிபரப்பான கவிதை)
பகலவன் கதிரில் கண்டேன்
யோகிப் போக பால் நிலா வடிவில் கண்டேன் ) புரு பசுந்தளிர் உருவில் கண்டேன் -
16 பருப்பு டே. பனித்துளி நீரிற் கண்டேன் : ம் ம் இ . பழந்தமிழ் மொழியில் கண்டேன்
பாலினின் சுவையில் கண்டேன் பண்ணிசை ஒலியில் கண்டேன்
இடும் போது இது. பாவையின் நிழலில் கண்டேன்
( (31 2 5 1431
4 ல் ' பRNI62 குழவியின் குரலில் கண்டேன்
குரலிசைக் குயிலில் கண்டேன்
- 20 : 4L குதித்திடும் மானில் கண்டேன்
41 பார் கொஞ்சிடும் கிளியில் கண்டேன்) குமரனின் அழகில் கண்டேன்
போG) - கோபுரக் கலையில் கண்டேன்
பி வந்த இல
குவிந்திடும் மலரில் கண்டேன்
கோவிலின் சிலையில் கண்டேன் - லேட் 1.1 ர், குமாரும் பட்டம்
பக் பிட்டி இட்டல் ஆடிடும் மயிலில் கண்டேன் - 2 (UTC)
அன்னத்தின் நடையில் கண்டேன். ஆடிடும் அணங்கில் கண்டேன்
அற்புத நிலையில் கண்டேன் - 2
18 பிப ( இட்ட .(19 &: ஒடிடும் ஆற்றில் கண்டேன்
ஓடையின் மீனில் கண்டேன் - 40405 12 .
It ற த ப ஏட்டினில் எழுதத் தோன்றும்
இயற்கையின் எழிலை எல்லாம்
15

Page 20
வாழ்வு வளம் பெறட்டும்
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 31-8-80-ல் ஒலிபரப்பான கவிதிை)
பக்திக்கும் பாடலுடன் பண்இசையும் சேர்ந்திடுவாள் தித்திக்கும் தேன்தமிழில் செய்திபல சொல்லிடுவாள் புத்திக்கும் புலமைவரப் புதுமைபல செய்திடுவாள் எத்திக்கும் இசைபரப்பி இனியமணம் பரப்பிடுவாள்
கல்விக்கெனச் சேவை கலந்து படைத்திடுவாள் செல்விகளுக் கென்று சிறுநேரப் பணிபுரிவாள் மாதர் களுக்காக மஞ்சரிகள் சேகரிப்பாள்
வாலிப நெஞ்சங்களை வட்டமாய்க் கூட்டிடுவாள்
W விவேகக் கணக்கிடுவாள் விளையாட்டுச் செய்திசொல்வாள் விவசாயப் போட்டிவைப்பாள் வில்லிசையில் பாட்டமைப்பாள் விடுமுறை காலங்களில் வெகுநேரம் வேலைசெய்வாள் விரைகின்ற வினடியையும் விபரமாய்ச் சொல்லிடுவாள்
பாட்டும் பதமும் பலனுள்ள நாடகமும் வீட்டுக் கதையும் விடுகதையும் சேர்த்திடுவாள் கூட்டு முறையும் குடிசைப்புறக் கைத்தொழிலும் சேர்த்து நமக்கெல்லாம் செவிக்கு விருந்திடுவாள்
குடும்பத் தலைவியிவள் குறைதீர்க்கும் கோகிலம்தான் கவலைவரும் நேரம் கரம்பட்டால் போதுமிவள் துயரைத் துடைத்தெறிவாள் சுமையைக் குறைத்திடுவாள் வாணுெலி தங்கையிவன் வாழ்வுவனம் பெறட்டும்
4.
6

"நெடுந்தணல்''
(வாலிபவட்டம் நிகழ்ச்சியில் 16-9-80-ல் ஒலிபரப்பான கவிதை)
நெஞ்சம் உனக்கென்பர் நீயே துணை என்பர் மஞ்சம் கிடைக்குமெனின் மணிமொழிகள் கூறிடுவர் வஞ்சம் மனத்தினிலே வரலாறாய்க் கொண்டசிலர் கஞ்சத்தனம் நிறைந்த கண்ணீர்துளிகள் இவர்
கொஞ்சும் கிளியென்பர் கோல மயிலென்பர் துஞ்சும் வரை சுகங்கள் கிடைக்கும்வரை அணைப்பர் மிஞ்சும் இளமையெல்லாம் கெஞ்சி எடுத்திடுவர் கொஞ்சி மகிழ்ந்திடுவர் குலாவித் திரிந்திடுவர்
வஞ்சிக் கொடியென்பர் வான மதியென்பர் கஞ்சிக் கலையவிடேன் கண்ணே உனைஎன்பர் எஞ்சும் இளமையெலாம் எனக்கேதான் சொந்தமென்பர் பிஞ்சில் அவள்பழுக்க அஞ்சி நடந்திடுவர்
குஞ்சம் தலையசையக் குலமக ளாவமென்று தஞ்சம் அடைந்துவிட்ட தாயாகும் பெண்மயிலை பஞ்சத்தில் விட்டிடுவர் பண்பற்று வாழ்ந்திடுவர் நெஞ்சம் இதையெண்ணி நெடுந்தண லாகுதிங்கே
E =

Page 21
''கவிதையை நான் முடிப்பேன்''
(ஒலி மஞ்சரி நிகழ்ச்சியில் 28-9-80-ல் ஒலிபரப்பான கவிதை)
கடலலையில் நீந்திடுவாள் கற்பனையில் நான் மிதப்பேன் கடற்காற்றாய் மாறிடுவாள் கனவுலகில் சஞ்சரிப்பேன் கார்முகிலாய் ஓடிடுவாள் காதலினால் நான் துடிப்பேன் கான மயில் ஆடிடுவாள் காலத்தை நான் மறப்பேன்
கிழக்கில் அவள் தென்படுவாள் கிட்டுமென நான் நினைப்பேன் கிள்ளை மொழி பேசிடுவாள் கிறக்கத்தில் மூழ்கிடுவேன் கீதை அவள் படிப்பாள் கீழ் உதட்டை மென்றிடுவேன் கீழ்சாதி என்றிடுவாள் கிண்கிணியாய் நான்சிரிப்பேன்
குளிர் நிலவாய்த் தோன்றிடுவாள் குன்றாய் உருகிடுவேன் குறும்பாய் அணைத்திடுவாள் குழந்தையாப் மாறிடுவேன் கூவும் குயிலாவாள் குற்றமில்லை யென்றினைப்பேன் கூடும் நதியாவாள் கூத்தாடி நான் மகிழ்வேன்
கெண்டையெனத் துள்ளிடுவாள் கேள்விபல தொடுப்பேன் கேளாய்மதனா என்பாள் கேட்கும் பணி மறப்பேன் கையால் அணைத்திடுவாள் கலக்கத்தில் நான் விழிப்பேன் கைகொட்டிச் சிரித்திடுவாள் கண்களை மூடிடுவேன்
கொடியாய்ப் படர்ந்திடுவாள் கொழுகொம்பாய் மாறிடுவேன் கோலம் வரைந்திடுவாள் கொண்டாடி நான் மகிழ்வேன் கோதை எழுந்து நிற்பாள் கோலத்தை மாற்றிடுவாள் கெளரவம் புரியுதென்பாள் கவிதையை நான்முடிப்பேன்
18

М*
ܐ
“வெண்மதியே! முழுநிலவே'
(ஈழநாடு பத்திரிகையில் கவிதை இயற்றுங்கள் என்ற பகுதியில் வெளி வந்த தலையங்கத்தை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இக் கவிதை ைெடி பத்திரிகையில் 12-10-80-ல் பிரசுரிக்கப்பட்டது.)
முத்தழகே வெண்மதியே முழுநிலவே எங்குவந்தாய் கட்டழகு மேனியவள் காவியத்து நாயகிபோல் மெட்டழகு ஒசையிட மென்னிடையும் தாளமிட ஏட்டில் வரையாதெழில் ஒவியத்தைக் கண்டதுண்டா?
வண்ணம்அவள் உன்நிறம்தான் வடிவில்ஒரு தேவதைபோல் எண்ணம் அறிந்துகொண்டா எமக்குத் துணையானப் குளிர்ந்துநீ காய்வதென்ன கோடிசுகம் தருவதென்ன தளாந்துநான் வாடுகிறேன் தயவுகொஞ்சம் காட்டாயோ
காவல் பலத்ததுவோ காரிகைக்கு நோய்எதுவோ ஏவல் பிசாசுசில எள்ளிநகை யாடியதோ
நாவற்பழ நிறத்து நயனங்கள் தூங்கினவோ பாவலன் நான்இருக்க பைங்கொடிக்கு நேர்ந்தென்ன?
நேற்றுநீ வந்திருந்தாய் நேரிழையைப் பார்த்திருந்தாய் இன்றும்நீ வந்துவிட்டாய் என்னவளைக் காணவில்லை ஊற்றுப் பெருக்காக உள்ளமலை பாயுதிங்கே
காற்ருய்ப் பறந்து சென்று காதலிக்குத் தூது சொல்வாய்
(C2S) (C2)
19

Page 22
நீதிதனை ஏற்பதுதான் மேல்
(ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் 12-10-80-ல் ஒலிபரப்பான கவிதை)
கற்றும் கணக்கற்ற நாம்போடும் திட்டங்கள்
முற்றும் நிறைவேறும் என்றில்லை பெற்றும் பெறற்கரிய பேதமை இருள்நீக்கி
சுற்றம் சுடரோங்கச் செய். இற்றும் இறவா இறையருளை நாடிபற்றும்
கெடாமல் பாவத்தில் ஏன்வீழ்வான் மற்றும் மனிதர்களின் மாண்பதனை நேசித்து
முற்றும் முணர்ந்திடுதல் மேல்.
உற்றும் உறவா உறவுதனைப் பெற்றும்
பிறர் நோக்கிப் பேதலித்தல் குற்றம் எனத்கண்டு முற்றும்
மறந்திடுதல் மேல். குற்றம் குறைகண்டு மற்றும் மனிதரிடம்
சீற்றம் சினங்கொள்ளலேன். கொற்றம் தனையாளும் கோவேந்தணுஞலும் குற்றம் குறைகளைதல் மேல்.
சற்றும் தளராத தான்தோன்றிக் கோபத்தால்
சுற்றம் பகையாகுமே ஏற்றம் இதுவல்ல எவர்க்கும் பொதுவான சீற்றம் சினம் தணிதல் மேல். தோற்றம் இருந்தென்ன கூற்றம் வரும்போது
மாற்றம் நடவாது காண். போற்றும் பலர்வாழ்வின் பொதுவான நீதிதனை
ஏற்று நடப்பதுதான் மேல்.
20

*கோபக் கனல் ”
(14.10-80-ல் வாலிபவட்டம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது)
கதிரவன் கரைந்த பின்னர் கடற்கரை மணற் பரப்பில்
காதலிவரவை நோக்கி காத்துநான் இருந்தபோது
முகிலிடை மூழ்கி மூழ்கி முழுநிலா பவனி வந்தாள்
அகிலத்தின் அழகே என்பாய் அவளெனக் கிணையோ வென்முள்.
இராவிளக் கேற்றி வைக்க நானுனக் கடிமைப் பெண்ணுே காதலில் நீங்கள் துய்க்கக் காவலாள் உமக்கு நாணுே
ஏனவள் முகத்தைத் தாங்கி எனக்கிணை யாகச் சொன்னுய்!
என்னிலும் அழகோ உந்தன் ஏந்திழை பகரு மென்ருள்.
உன்னைப்போல் அவளையெண்ணி ஏளனமா செய்கின்ருய்நீ
கலைத்திறன் மிளிரு மெந்தன் காதலி உருவை மாற்ருள்
இன்றுநீ முழுநிலாதான் இருமுறை தினம் கடந்தால்
அரைப்பிறை என்பரன்பர் அழிந்திடும் அழகுக் கோலம்
ஈரேழ் தினம்கடந்தால் இறந்தபின் உயிர்ப்பாய் நீதான்
போலிதான் உந்தன்வாழ்வு பொழிப்பொரு நாளில் மட்டும்
ஏழைதான் எந்தன்தோழி எழிற்கலை கொஞ்சும் வஞ்சி
கோழைபோற் பேசிப்பேசிக் கோபக்கனலைநீ தூண்ட வேண்டாம்.
21

Page 23
“அன்னை பதம் தொழுவோம்”
(14-10-80-ல் 'ஈழநாட்டில் " பிரசுரிக்கப்பட்டது)
அகர முதலெழுத்தில் உருவானவள் - அவள் அகிலம் முழுவதற்கும் ஒலியானவள் சகல இனத்தவர்க்கும் தாயானவள் சரஸ்வதி யெனும் நாமம் தனைப்பூண்டவள்
பாவாணர் பண்பாட பாவானவள் பாலவயதான இளையோரின் நாவானவள் சில புலவர்தனை உருவாக்க தனையீந்தவள் பல கலைகளுக் கெல்லாமே தாயானவள்
ஆய கலைகளெல்லாம் அவளாகினாள் தூய தமிழ்ப்படிக்க துணையாகினாள் வெள்ளை மலரோடு அவளென்று முறவாடுவாள் வீணை இசைகேட்டு தனைமறந்து நிலைமாறுவாள்
கலையேடு கைதனிலே சுமக்கின்றவள் -- பல காவியம் நாம் சமைக்க உழைக்கின்றவள் கரம்கூப்பி கலைவாணி கழல் பாடுவோம் கல்விச் செல்வத்தை உலகோர்க்கு விருந்தாக்குவோம்.
22

'எவருக்கும் சொந்தமல்ல''
(ஓலிமஞ்சரி நிகழ்ச்சியில் 14-12-80ல் ஒலிபரப்பான கவிதை)
டிரை ?, வரு..? (பு'' Au
கனிந்திடும் காலைப் போதும்
கங்கையில் பாயு மீனும் வானிடை தோன்றும் மதியும் மாலையில் மலரும் பூவும் வீசிடும் தென்றல் காற்றும் விரைந்துமே பாயுமாறும் பாறையிலுருகு நீரும் பட்சிகள் கூட்டம்தானும் கூடிடும் மேகத் திரையும் கொஞ்சிடும் வண்ணக் கிளியும் கோல அழகினைக் காட்டு மலையும்
கூடியே கூவும் குயிலும் பாடிடும் பறவையினமும் பண்ணிசைத் தமிழின் சொல்லும்
ஆடிடு மழகு மயிலும் அன்னத்தின் சின்ன நடையும் விண்மிசை தோன்று மீனும் விரிந்துமே சிவக்கு வானும் ஏரிந்திடு நெருப்பும் எண்ணக் கனவினில் தோன்று நினைவும் காய்ந்திடும் கதிரும் கடும் குளிரினைச் சொரியுபனியும் இயற்கையின் எழிலேயன்றி எவருக்கும் சொந்தமல்ல.
23

Page 24
‘இவர்களை என்ன செய்ய?’
(28-9-80-ல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமாகிய கவிதை)
வெளிநாட்டு வேலைகட்கு ஏஜென்சி நானென்பர் வெவ்வேறு வேலைகட்கு விண்ணப்பம் கேட்டிடுவர்
ஆழுக்கொர் ஆயிரம்தான் அட்வான்சும் பெற்றிடுவர் ஆறு மாதத்தில் அனுப்புவன் வெளியிலென்பர் இன்னுமிருமாதம் பொறுத்திடு வேலையென்பர் இப்படியே வாலிபரை ஏப்பம்விட்ட பேர்வழிகள் சொந்தநாட்டை விட்டிடுவர் சொல்லாமல் ஓடிடுவர் கொடுத்தபணம் முழுக்கக் கொள்முதலாய்க் கொண்டுசெல்வர்
கண்ணே மணியேயென்பர் காதலியும் நீயேெெயன்பர் கைவிட மாட்டேனென்று கற்பூர மணைத்திடுவர், தந்தை மறுத்திடினும், தாயார் வெறுத்திடினும் தாரமாய் ஏற்பனென்று சத்தியமும் செய்துகொள்வர் வலிவலிய இவர் வாசலில் வந்துநிற்பர் விடியவிடிய இவர் வீரக்கதை கதைப்பர் கனியக் கனிய இவர் காதல்மொழி பேசிடுவர் தொடரத் தொடர இவர் சொல்லாமலோடிடுவர்
இதயமே அற்றவராய் இரக்கமற்ற அரக்கர்களாய் இவர்க ளிருக்குமட்டும் இடரென்றும் தீராது மனிதப் பிறப்பெடுத்தும் மாற்றமிலா மிருகங்களாய் இறைவாc ஏன்படைத்தாய் இவர்களை என்னசெய்ய?
24
 

“இயற்கையின் சிருஸ்டிக்குள்.”
(7-12-80ல் ஒலிமஞ்சரியில் ஒலிபரப்பான கவிதை)
அயராத நோக்கங்கள் ஆன்மாவின் கீதங்கள். உயிர்பாடும் கீதங்கள்; உள்ளத்தின் தாளங்கள். அலைபாயும் நெஞ்சங்கள் அவலத்தின் ஒலங்கள் துயிலாத எண்ணங்கள் ; துணைநாடும் உள்ளங்கள்.
மண்ணுக்குள் தங்கங்கள். மலராடும் தோட்டங்கள். நடைபோடும் கூட்டங்கள் ; நலிவான தோற்றங்கள்.
விழிநீரின் தாக்கங்கள் விடியாத ஏக்கங்கள். இடிதாங்கும் நெஞ்சங்கள் ; இளமையின் வஞ்சங்கள்.
பழிகார எண்ணங்கள் LJ6ð) 35 LITT GÖT நோக்கங்கள் கஞ்சத்தின் பூட்டுக்கள் ; கறைபடிந்த கீற்றுக்கள்
நெறியில்லா மாற்றங்கள் நெடுந்துாரப் பயணங்கள் பொன்னுக்கும், பூமிக்கும் ; பொல்லாத ஆசைகள்
இரவுக்கும் பகலுக்கும், எத்தனை கோலங்கள். இளமைக்கும் முதுமைக்கும், எத்தனை தோற்றங்கள். இறப்பிற்கும் பியப்பிற்கும். எத்தனை பேதங்கள். இயற்கையின் சிருஷ்டிக்குள், எத்தனை மாற்றங்கள்.
N%
ബ

Page 25
స్టో*************** 景※※染 O வி గా "PP 来※※※ 霖 * 555956Yil60)) 95LI (555[T * ***్య புது - 95 -, స్థ***
リ క్రిక్తి
క్షట్లో
6 காலையில் நான் கண் விழித்தேன்?
காலையில் நான் கண் விழித்தேன்
சேவல்களின் கூக்குரலால் வேதனையின் கீறல்பல வித்திட்ட காரணத்தால்
விடியாத இரவுஒன்று விளையாதோ என்வீட்டில் என வேகுகின்ற நெஞ்சமதை கெஞ்சுகிறேன் ஏழ்மையினல்
கற்பனையில் எண்ணமுண்டு கல்வீடு கட்டவென்று உள்ளதுவோ ஒலைமனை, உருந்படியாய் வேயவில்லை.
கடைதனிலே கண்டதுண்டு அலுமினியப் பாத்திரங்கள் கட்டியவள் தொடுவதுவ்ோ உடைந்துநிற்கும் மட்பாண்டம்.
மாரியோ ஒயுதில்லை, வறுமைக்கோ பஞ்சமில்லை பிய்ந்துவிட்ட கூரையதால் சிந்துகின்ற மழைநீரை
சட்டி ஒன்றில் ஏந்துகிருள் தையலவள் ஏதுசெய்வாள்? வெத்திலைக்கோ காசுமில்லை வெம்பசிக்கும் ஏதுமில்லை -
அடுப்படியும் ஒன்றேதான் படுப்பதுவும் அங்கேதான் இத்தனைக்கும் மத்தியிலே, ஈன்றுவிட்ட குட்டிகளும் தாய்நாயும்
இருக்க இடம்பிடிக்க ஏங்குவதைக் காணுகிறேன். ஏணையதில் கைக்குழந்தை பாலுக் கழுகிறது
வாழ்க்கைத் துணையவளோ மாழுத நோயாளி பனிக்கென்ருல் இருமுகிருள் படுமழைக்குச் சுருளுகிருள்
ஈளை வருத்தம தாம் இனிமாற்ற முடியாதாம் ஏழை அவளுக்கு இனி இறைவன்தான் விட்டவழி
மத்தியானச் சோத்துக்குக் கொத்தரிசி ஆறுரூபா ஈர விறகிற்கு எப்படியும் மூன்றுரூபா
கருவாடு கத்தரிக்காய் கறிபுளிக்குக் காசுவேனும் ~m= கூலிக்கு நான்சென்ருல் கிடைப்பதுவும் சிறுதொகைதான்
இத்தனைக்கும் மத்தியிலே எப்படித்தான் வாழுவதோ! இறைவனே எனேநீயும் ஏன்படைத்தாய் ஏழையதாய்
பாவியெனக் கொன்றுவிடு பாசத்தை நீக்கிவிடு புலராத பொழுது ஒன்றை எந்தனுக்குத் தந்துவிடு.
 
 
 

“ஒயில்தனை இழந்தாய் மயிலே'
(ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கவிதை)
மேனகை போன்ற தோற்றம் மேதினி போற்றும் வண்ணம் காதணி மலர்களாட கங்கையில் கானல் நீங்க கோதையர் குளாங்கள் சேர்ந்து குளிர்தரு அருவிநீரில் ஆரவே தாவித்தாவி அங்கநீர் ஆடும்போது ஆலிலை போலவங்கம்
தங்கமாய் மின்னமின்ன நூலிழையார்கள் நுங்கு நுரையுடன் பாயுநீரில் வேலிழை விழிகள் கொஞ்ச வினை பலபல பேசிப் பேசி பாலுரை தூண்டும் பருவ அழகுகள் தோயத்தோய கருவிழிக் கண்களாட
கண்டமீன் கெண்டைபாய ஒருவழிப் பயணம் பண்ணும் ஒர்யுவன் கண்டு நான மறுவழி புரியா தேங்கி
மயக்கத்தில் நின்று மூழ்க கலகல வெனவே கங்கை மங்கையர் நகையைச் சிந்த தெருவழி செல்வோர் சேர்ந்து சேதியே தென்று கேட்க மறுமொழி பகரா தேங்கி மலங்கவே விழித்து நோக்க தோழியீ தென்ன வம்பு தொல்வினை வந்து சூழு(ம்) முன்னர்நாம் வீடுசெல்வோம் முழுக்கினிப் போதுமென்று முகிலிடைத் தோயும் வண்ண வெண்ணிலா போன்ற பெண்கள் துகிலினை எடுத்தேதுாய உடம்பினை மூடிமூடி படியினில் தாவிஏறி
பாய்ந்திடும் மான்களாட்டம் ஓடிடும் கூட்டம் கண்டா ஒயில்தனை இழந்தாய் மயிலே
Q-2)) Q2))
27

Page 26
*காலம் ஒருநாள் மாறும்!”
காலம் ஒருநாள் மாறும் கன்னியற்கு வாழ்வுவரும் சீதனக் கொடுமையப்போ செத்து மடிந்து விடும் நாளுக்கு நாள் நாடுகளில் நாகரிகம் மாறுகையில் நாரியரின் சீதனந்தான் நானிலத்தை வாட்டுகுது
எனக்கு எழுபதென்றல் என் தங்கைக்கு ஏழுசும்மா வீடுவள வில்லையென்ருல் கட்டித்தர வேண்டுமென்பர் வீட்டிற்கொளி விளக்கு வீணர்கட்குத் தேவையில்லை வீடுவளவை மட்டும் விசாலமாய்க் கேட்டிடுவர்
சீதனக் கொடுமைதனை திட்டமிட்டு நீக்கிடுவேன் சீர்வரிசை கேட்பதென்று சிந்திப்பதே இழுக்கு KO நான்எடுக்கும் பெண்மயிலை, என்றுசொல்லி חj_וLITTri Ib60%T மார்தட்டிப் பேசியவர், மரறுகிறர் மணவறையில்.
மேடைதனில் ஏறிநின்று வீரமதாய் பேசுகிருர் வீடுவரை இல்லை.அந்த வீருர்ந்த கொள்கையெல்லாம் என்மகன் என்ஜினியர், எடுக்கும் தொகை எண்ணுறு கொடுப்பதென்ருல் எண்பதுவை, இல்லைஎன்ருல் ஆளைவிடு.
இன்றைக் கெழுத்தென்ருல் எவ்வளவு தேறுமென்பர். என்ன படித்திருப்பாள் எப்படிக் குணமிருக்கும் கறுப்போ, அவள் சிவப்போ, கல்யாணத்துக் கேற்றபெண்ணுே இந்தவகைக் கேள்வியெல்லாம் இதற்குப் பிறகேதான்
கடைச்சரக்கோ இவர்கள் களவாணிப் பண்டங்களோ! காசுகேட்டு வாங்க என்ன கால்நடை மாடுகளோ வெட்கமில்லையோ இவர்க்கு விலைபேசிப் பெண்எடுக்க துக்கமில்லையோ இவர்க்கு துணைவியிடம் சொத்தெடுக்க
2S

@@@@@@@@@@ତ@@@@@@
அவன்!
ஏன்?
-9I(ԼՔ
ଧୈତ
-சிறுகதை
இரவின் பயங்கர ஆட்சியை யும் பொருட்படுத்தாது தெரு நா ய் க ள் இரண்டு ஒன்றுமாறி ஒன்று பிலாக்கணம் பாடும் ஒசை இரவின் அமைதியைக் குலைக்கிறது உழைப்போரும், உயிர் வாழத் துடிப்போரும் உறக்கத்தின் உச் சிக்கே சென்றுவிட்ட இந்த அகால நேரத்தில், ஒரேயொரு ஜிவன் மட்டும் உறங்காத நெஞ் சத்துடன் உறவை எதிர்நோக்கி ஏங்கிக்கொண்டிருக்கிறது. யார் அந்த உரு வ ம்? ஏன் இந்தத் தவிப்பு?
வாழ்க்கையில் பண மும் பொருளும் இருந்து விட்டால் போதுமா? நிம் ம தி ய ல் ல வ |ா கிடைக்கவேண்டும். நிம்மதி விலை கொடுத்து வாங்கக்கூடிய பொ
ருளா என்ன?. ஆம் அவளுக் கும் அந்த நிம்மதி கிடைக்க
வில்லையே ஏன்? அ வ ள் உள் ளத்து உணர்ச்சிகளைப் புரிந்து
கொண்டோ என்னவோ. வானத்தில் இடி இடித்தது. மின் னல் கீற்றுக்கள் வெள்ளிச் சரங் களாகக் கோடிட்டன. கருமேகங் கள் எல்லாம் ஒன்ருேடொன்று முட்டி மோதுகின்றன. மேசை மேல் கண் சி மி ட் டி க் கொண் டிருந்த அரிக்கன் லாந்தர் ஊழிக் காற்றின் வேதனையைத் தாங்க முடியாமல் தன் ஒளியை உமிழ்ந்து விட்டு இருட்டில் தடுமாறியது" அவள் வாழ்வு சூ னிய மா கி க் கொண்டிருக்கும் போது, கேவ லம் - இந்த ஒளிவிளக்குத் தான சுடர் ஏந்தப் போகின்றது. சிறு துளியாகத் தொடங்கிய மழை பேய் மழையாகக் கொட்டியது. திறந்திருந்த கதவால் உள்ளே விசிறியடிக்கும் மழைச்சாரலைக் கூட இலட்சியம் செய்யவில்லை அவள், ஏன் கதவைக்கூடச் சாத்த மனதில்லை. ஒரு மணித்தியாலமா கப் பெய்த பேய்மழை ஒய்ந்து விட்டது.

Page 27
ஜிவா, அதுதான் அவள் கணவனது பெயர். பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் ஆணழகன் எந்தப் பெண்ணும் ஒருமுறை பார்த்தால் மறுபடி பார்க்கத் தூண்டும் அழகன். பத்மா மட் டும் குறைந்தவளா என்ன? பொ ருத்தமான சோ டி கள் என்று ஊரார் அங்கலாய்த்துக் கொள் ளும் போதெல்லாம் உவகையின் உச்சியில் பறந்தவள் அல்லவா அவள். கண்கள் கலந்தன, காதல் மலர்ந்தது. கடிதங்கள் பரிமாறப் பட்டன. ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத உறவுகள் வளர்ந்தன. உள்ளங்கள் சேர்ந்தன.
*"மகளே பத்மா நான் சொல் லுவதைக் கேளம்மா! உன் அப்பா உன்னைப் பாள்கிணற்றிலா பிடித் துத் தள்ளப் பார்க்கிருர், பொடி யன் மகாவலி அபிவிருத்தித் திட் டத்தில் உதவி என்ஜினியராக வேலை செய்யுதாம், தாய் சின்ன வயதிலை போயிட்டாவாம். தகப் பன் மட்டுந்தான் சகலதும். வேறு பெண் சகோதரங்களும் கிடை யாதாம். குடிகிடி இல்லாத நல்ல பிள்ளையென்று அனைவரும் சொல் லுகிருர்கள். மறுக் கா தே மகளே' தாயுள்ளம் அழுதது. 'அம்மா அப்பாவிடம் என்ன சொத்தில்லையா? சுகமில்லையா? எனக்கு இப் படி யு ஈ ன பெரிய இடத்துச் சம்பந்தத்திலை இஸ்ட மில்லை. என்னைத் தெரிந்த புரிந்த ஒருவருடன் தான் நான் வாழ விரும்புகிறேன். என்னைத் தொந் தரவு செய்யாதீங்க. அப்பிடி
3O
ஏதாவது முடிவு செய்தீங்க ' உங்க மகளை நீங்க உயி ரோ டு பார்க்க மாட்டீங்க. நான் விருட் டென்று என் துணிமணிகள் சில வற்றை அள்ளி எடுத்துக்கொண்டு குளிக்கும் அறைக்குள் நுழைந்து விடுகிறேன்.
ஒருக்களித்துச் சாத்தப்பட்ட குளியல் அறையின் இடைவெளி யூடாக வியர்க்கக் களைக்க அப்பா வராந்தாவுக்குள் நுழைவது தெரி கிறது. அப்பாடா! என்ற ஆசு வாசத்துடன் அப்பா அமர்ந்து கொள்ளுகிருர், அம்மா ருை டம் ளரில் பால் கொண்டு வந்து கொடுக்கிருர், 'பத்மா என்ன சொல்லுகிருள். இது அப்பாவின் கேள்வி. ? ? அவள் கலியாணம் செய்யேல்லையாம் * அம்மா பூசி மெழுகுகின்ருள். கதை என்னைப் பற்றியதாக இருக்கவே சோப்புப் போடுவதை நிறுத் தி வி ட் டு காதைத் தீட்டிக் கொள்கிறேன். ** இஞ்சை நடக்கிறதொண்டும் எனக்கு விளங்காதெண்டு நினை யாதேங்கோ. உந்த மக்கள் வங் கியிலை வேலை செய்யுற ஜிவானந் தம் என்ற பொடியனுக்கும், இவ வுக்கும் கண்டறியாத கூதலாம். அவனைப்பற்றி நான் ந ல் லா ய் விசாரிச்சுப் போட்டன். தாய் தேப்பனேடை மல்லுக் கட்டிக் கொண்டு ஓடிவந்தாராம். ஆரோ தெரிஞ்சவங்களின்ரை காலையோ கையையோ பிடித்து வங்கியில் பூந்திட்டார். உப்படியான கெள ரவக் குறைவானவனுக்கு பெண் ணைக் குடுத்திட்டு கண் ணி ர்

வடிக்க நான் தயாராக இல்லே. "இஞ்சருங்கோ’ அவள் பாத் ரூமுக்குள்ளை தானே நிக்கிருள் மெதுவாகப் பேசுங்கோ1? நல் லாய்த் தெரியட்டும் இந்த விச யத்திலை சுப்பையன் செல்லங் கொடுக்க மாட் டான். நான் சொன்னல் சொன்னது தான். இந்தக் கலியாண விசயத்திலை இவள் ஏதாவது புரளி பண்ணி னல். செத்துப்போனுள் எண் டுட்டு விடுவனே தவிர. ஏன் நாயே என்று கேட்க மாட்டன். அப்பா வேகமாக எழுந்து எங்கோ போகிருர், ஒரு விசயத்தில் அப்பா முடிவு எடுத்து விட்டாரென்ருல் ஆண்டவனே வந்தாலும் அசைய மாட்டார். பிறகென்ன. அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்கா மல் ஒடுகாலியென்ற பட்டத்தை யும் பெற்றுக்கொண்டு, காதலித் தவனுடன் கைப்பிடித்து ஒண்டிக் குடித்தனம் செய்யவந்த அவளுக் கு - இதுவும் வேண்டும் இன்ன மும் வேண்டும்.
வாசல் பக்கமாக ஏ தோ தொப்பென விழுந்த ஒசை கேட் டதும் தன் நினைவுகளை அறுத்துக் கொண்ட பத்மா தீப்பெட்டியை தடவி எடுத்துக் கொண்டு விளக் கை ஏற்றுகிருள். அங்கே. ஜிவா தெப்பமாக நனைந்த நிலை யில் தட்டுத்தடுமாறி எழுந்திக்க முயலுவது தெரிகிறது அவனை மெதுவாகத் தாங்கியவாறு கட் டிலுக்குக் கொண்டுசென்று படுக் கவைக்கிருள். நனைந்து விட்ட ஈரத்தலையை டவல் எ டு த் து
31
உணர்த்துகிருள். 'பத் மா நீ ஏன் இன்ன...மும். தூங்கலை மதுபோதையின் மயக்கில் வார்த் தைகள் தடுமாறுகின்றன. 'அத் தான் இப்பொழுதெல்லாம் ஏன் இந்த அர்த்த ராத்திரி வேளைக ளில் எல்லாம் வருகிறீர்கள். உங் களுக்காக ஒரு ஜிவன் காத்திருக் கிருள் என்று கொஞ்சமாவது சிந் தித்தீர்களா? ஏன் இப்படிச் சித் திரவதை செய்கிறீர்கள். இது நி யா ய மா? நீதியா, தர்மந் தானு?' என்று கேட்டுவிட மனம் தூண்டுகின்றது. இருந்தாலும் அவள் அ  ைத க் கேட்கவில்லை. "ஏங்க. இந்த அ மா வா  ைச இருட்டிலை வெளிச்சம் கூட இல் லாமல்" அவள் வார்த்தையை முடிக்கமுன் "ரொம்ப அக்கறை தான் போ" "வாங்க சாப்பிட' அவள் கேட்கின்ருள். நான் சாப் பிட்டு விட்டேன். இதைக் கூறிய வாறு அவன் தூங்கி விட்டான். நான் சாப்பிட்டு விட்டேன் அப் படியென்ருல் உங்களுக்கென்று ஒரு த் தி இந்த உலகத்தில் இல் லையா? பசிவேறு உறுத் தி யது. தூக்கம் வேறு கண்களை உறுத்து கிறது. பீறிட்டு வரும் கண்ணிரை அடக்க முடியாமல் விம்மி விம்மி அழுதாள் அவள். அழுவதைத் தவிர அவளால் என்ன செய்ய முடியும்.
பொழுது விடிந்து விட்டது. இரவு அழுது அழுது அலுத்துப் போன பத் மா எப்படித்தான் தூங்கிஞளோ அவளுக்கே தெரி யாது. விடிஞ்சு எவ்வளவு நேர

Page 28
இப்படித்தான் தூங்கிறதா........ சே....... கர்மம் என்று ஜிவா போட்ட கூச்சலில் தான் அவள் கண்விழித்தாள். விழுந்தடித்து எழுந்த அவள் குசினியை நாடி விரைந்தாள். அவனுக்கு காப்பி தயாரிக்க... நீ... காப்பி போட்டு நான் குடித்து... இப்பொழுதே நேரம் எட்டு மணி. இனி பஸ் பிடித்து வேலைக்குப் போகத்தானே சரி... நான் வாறன் வாசல்வரை சென்றவன்.. 'பத்மா! இன் றைக்கு நான் வர நேரமாகும் நீ கதவைப் பூட்டிவிட்டுப் படுத் துக்கொள் தெரிஞ்சுதா?'' அவன் போய் விட்டான்.
''உஞ்சு உஞ்சு நாய்க்குட்டி ஊரா வீட்டுப் பூனைக்குட்டி. வீட் டைப் பார்த்துக்கொள் நாய்க் குட்டி'' அடுத்த வீட்டுப் பரிம ளாப் பாட்டி தன் பேரக் குழந் தையை காலில் போட்டு ஆட் டியவாறு பாடுவது பத்மாவின் காதில் விழுகிறது......... சே. அந்த நாயிலும் பார்க்க கேவலமான பிறப்பா நான்....... இராத்திரி விட்டாயா?) மதுபோதையில் இப் படி நடந்திட்டான். ஏதாவது சாப்பிடு பத்மா ... என்று கூட அவனுக்குக் கேட்க மனதில்லை.
''ஏனாம்'' அவளால்  ேக வ லை, அடக்க முடியவில்லை. எனக்கென் னம்மா தெரியும்.'' அவன் சயிக் கிளைத் திருப்புகிறான். பிற கு என்ன நினை த் த ா னோ தெரி யாது ... ' 'அம்மா உ ங் க ளை ப் பார்த்தா எங்கடை அக்காபோல நல்லவங்களாய்த் தெரியுது. ஒரு ஒரு விஷயத்தைக் கூறாமல் போக முடியவில்லை. எங்கடை கந்தோ ரிலை வேலை செய்யுற றோசி எண்ட பெண்ணுக்கும் ஐ யா வு க் கு ம் ஏதோ தொடர்பிருப்பதாக கந் தோரிலை கதைத்துக் கொள்ளுகி றார்கள். றோசி ஒரு மாதிரியான ஆள் எண்டு எல்லோரும் சொல் லுகிறார்கள். காரியம் மிஞ்சக் கிடையிலை கவனியுங்க... நான் வருகிறேன்'' அவன் சைக்கிளை வேகமாக ஓட்டுகிறான். அவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றுகிறது ஐயோ! போயும் போயும் இப்ப டிப்பட்ட பண்பற்றவரையா கணவனென்று நம்பி ஏமாந்தேன் படித்துப் படித்துச் சொன்னார் களே கேட்டேனா? தலைதலையாக அடித்தாள் சுவரில் முட்டினாள் மோதினாள்.
பகல் க  ைர ந் த து, இரவு வந்தது மறு நாள்..... ஜிவா ஏது மறியாத அப்பாவி போல வீட் டிற்கு வந்து சேர்கிறான். அவ ளைக் கண்டும் காணாதவன் போல உள்ளே சென்று சேட்டைக் களற் றுகிறான். வெள்ளம் தலைக்கு மேல் போவதை உணர்ந்த அவளால் சும்மா இருக்க முடியவில்லை. ''ஏங்க நீங்க செய்யிறது உங்க
அன்று மத்தியானம் ஜிவா வேலைபார்க்கும் மக்கள் வங்கிப் பையன் வந்து கதவைத் தட்டி னான். பத்மா வந்து கதவைத் திறந்து பார்தாள். ''ஐயா இன் றைக்கு வரமாட்டாராம். அது தான் சொல்லச் சொன்னவர்''
32

ளுக்கே நன்முகப்படுகிறதா? 'இப்ப ஏன் அழுகிருய்' ஏன் இப்படியெல்லாம் என்னைப் போட்டு சித்திரவதை செய்ய நீங்க' *பத்மா! ஜிவா அதட்டிஞன் *சொல் லுங் க நேற்று நீங்க எங்கே போனீங்க?" ‘என்ன மிரட்டிறியா!' சூடாக வந்தது. "நான் ஒண்டும் மிரட்டலை நான் கேள்விப்பட்டது' GT 6f 6ft * உங்களுக்கும் அந்த ருேசியெண் டவளுக்கும் உறவிருக்கெண்டு கதைக்கிருங்களே உண்மையா!' 'அது வந்து. விஷயம்.
பதில்
என் சொந்த
அப்படியென்ருல் என்னை எதுக்கு விரும்பினிங்க. ஏன் ஆசை வா ரீர் த்  ைத காட்டினிங்க . . வயிற்றில் வள ரும் உங்கள் குலக்கொடி மீது ஆணை யிட்டுக் கூறுகிறேன். என் இடத் தில் இன்னெருத்திக்கு இடமளிக்க மாட்டேன். அப்படி ஏதாவது நீங்க தப்பா நடந்தீங்க, என்னை உயிருடன் பார்க்க மாட்டீங்க' *பத்மா..! நான் சொல்லுறதை கேள். நான் ஒரு இக்கட்டான நிலையிலை அவளிடம் மாட்டிக் கொண்டேன். அவளை ஏற்காது விட்டால் அவளுடைய சாவிற்கு
என்
நான் தான் பொறுப்பாளி
'நன்முக நடிக்கிறீர்கள். வெட்
கமில்லையா உங்களுக்கு சீ. நீங் களும் ஒரு மனிதரா?
*பத்மா!' தன் கைகள் வலியெ
டுக்குமட்டும் அவள் கன்னத்தைப்
33
யானேன்.
பதம் பார்த்தின ஜி
ஜிவாவின் கை g5G.T. , , , 'அடியுங்க. என்னைக் கொல் லுங்க. ஆனல் நீங்கள் நினைக்கி
‘றது மாதிரி மானம் கெட்டு வாழ
மாட்டேன் போங்க போய் அவ ளைக் கூட்டிவந்து கூத்தாடுங்க பத்மா எரிமலையானள். **ஆமா நான் கூட்டி வருகிறேன் நீ. ஆராத்தியெடுக்க ஆயத்த மாய் இரு ஜிவா வெகு வேக மாக வெளியே போகிரு?ன்.
வங்கி அலுவலகத்தில் ஒரே கூட்டம் என்ன என்ன நடந்தது ஜிவா கேட்கிருன் "பறவை பறந் திட்டுது மச்சான்’ யா  ைர ச் சொல்லுகிறீர்கள்? நம்ம ருே சி சிருப்பர் சிங்காரத்தோடை ஒடி விட்டாள். ஜிவாவுக்கு முன்னுல் அலுவலகமே இடிந்து சரிவது போன்ற பிரமை. 'உங்களுக்கு ஒரு கடிதம்' அலுவலகப் பையன் கொடுக்கிருன்.
அன்புள்ள சகோதரன் ஜிவா வுக்கு, என்னைப் பலமுறை மன் னிக்கவும். சிங்காரமும் நானும் ஒருத்தரை ஒருவர் விரும்பினுேம் நான் மூன்று மாதக் கர்ப்பிணி சிங்காரத்தின் பெற் முேர் குறுக்கே நின்றனர். அப் பாவியான உங்களை என் வலையில் சிக்கவைக்க எனக் குப் பிறந்த
நாள் விழாவென்று கூறி என் வீட்டிற்கு அ  ைழ த் து ச் சென்
றேன். மதுவாடையே தெரியாத
உங்களுக்கு குளிர்பானத்துடன்
மதுவைக் கலந்து அருந்தத் தந்

Page 29
தேன். மதுமயக்கத்தில் பத்மா! பத்மா! என்று என்னை அணைக்க வந்தீர்கள். உங்களை என் படுக் கையில் வைத் து நாடகமாடி னேன், விடிந்தது - நீங்களும் நானும் ஒரே கட்டிலில் பிற கென்ன? உங்களை மிரட்டினேன். என்னைக் கெடுத்து விட்டதாக நீலிக்கண்ணிர் வடித்தேன். அதை நம்பிய நீங்கள் மானத்துக்குப் பயந்து என்னை ஏற்பதாக வாக் குத் தந்தீர்கள். இனி என்றுமே உங்கள் வழியில் குறுக்கிட மாட் டேன். நீங்கள் பத்மாவுடன் நீண்டநாள் வாழுங்கள்.
வணக்கம்
இப்படிக்கு ருேசி
ஆ. நான் ஏமாற்றப்பட்டு விட்டேன.? ஐயகோ. என் பத்மாவுக்குக் கூடச் சொல்ல முடியாமல் எவ்வளவு துரோகம் பத்மா..! என் செல்வமே. நான் உன்னை வஞ்சிக்கவில்லைப் பத்மா. சந்தர்ப்பமும் சூழ்நிலை யும் என்னைக் கெடுத்து விட்டன. இதோ வருகிறேன். அலுவல கத்துக்கு முழுக்குப் போட்டு விட்டு ஓடினேன் வீட்டை நோக்கி
கதவு ஒருக்கழித்த நிலையில் சாத்தப்பட்டிருந்தது. கைபட்ட gilth... . . . தான க வே திறந்து கொண்டது. பத்மா கட்டிலில் படுத்திருக்கிருள். ஒ. தூங்கு கின்ருளோ! ஆமாம் அப்படித் தான் இருக்கும். முரட்டுத்தன மாக அவளைப்போட்டு அடித்தால் அவள்தான் என்ன செய்ய முடி யும். பாவம், என் கரம் பத்மா வின் உ ட லில் பட்டது . உடம்பு சில்லிடுகின்றதே! ஐயோ! பத்மா நீ போய் 6) "... Tuurt தாயே. இன்னுெருத்திக்கு ஆரா த்தி எடுப்பதிலும் பார்க்க இறந் துவிட்டால் போது ம் என்று துணிந்து விட்டாயா பத் மா! பத்மா!! உண்மையை உணராது உறங்கி விட்டாயே பத்மா நீ. என்னைப்பற்றி எவ்வளவு கேவல மாக எண்ணியிருப்பாய். ஒரு எளியவருக்கு இ த ய த்  ைத க் கொடுத்த பாவியென்றல்லவா துாற்றியிருப்பாய். இ ல் லை யா? அழுகின்ருன் அவன் ஆஞ ல் இழந்துவிட்ட இல்லாள் கிடை த்து விடுவாளா என்ன?
 

ܬܐ
༽ངེང་༽དང་ ཁ་ཤུ་ ཕྱི་ རིང་༽ངེས་
ஐ அவன்னியர் திலகம்ை
*@@@@@తో
நாடகத்தைப் பற்றி:
இலங்கை பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் மூழ் கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தன் தாய்நாட்டிற்காக இறுதிவரை போராடி வீரமரணம் எய்திய தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் என் பது வரலாற்றுச் சான்று. அக்கால இலங்கையில் தமிழ் மன்னர்களுக் கும் சிங்கள மன்னர்களுக்கும் எவ்வளவு தூரம் உறவும், ஐக்கியமும், தாய் நாட்டைக் காக்கும் தீரமும் அமைந்திருந்ததென்பதற்கு இவ் வரலாற்று நாடகத்தில் சம்பந்தப்பட்ட ஒற்றறியும் திறமை படைத்த சோமாவதி என்ற சிங்களப் பெண்ணின் வீரம் எடுத்தியம்புகிறது.
ஆசிரியர் முல்லைமணி எழுதிய "பண்டாரவன்னியன்’ வரலாற்று நாடகத்திற்கும் ஆசிரியர் வ. பொன்னம்பலம் (M. A) எனக்குத் தந்த குறிப்பிற்கும் ஆதாரங்களுக்கும் இடையே சரித்திரத்தில் ஒரு பாத்தி ரம் மாறுபடுகிறது. அதாவது காக்கைவன்னியன் என்கின்ற சிற்றரசன் தான் பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தவனென்று முல்லைமணி அவர்களின் நாடகம் கூற, காக்கைவன்னியன் பரம்பரையிலுதித்த (பிற்காலத்தில் முத்தரையன் குளக்கட்டை ஆண்ட) முத்தரையன் என்ற சிற்றரசனே காட்டிக் கொடுத்தவனென்று கூறுகிறது திரு. வ. பொன்னம்பலம் அவர்களின் குறிப்பு. இவற்றில் திரு. வ.பொன் னம்பலத்தின் குறிப்பை மையமாகக் கொண்டு கற்பனை கலந்து வன்னி யர் திலகத்தை உருவாக்கினேன். மற்றையபடி இதில் வரும் பெரும் பாலான பாத்திரங்களுக்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் சான்று களுக்கும் வேறுபாடுகள் குறைவென்பதே என் ஊகம்.
ஆசிரியர்

Page 30
வன்னியர் திலகம்
( வரலாற்று நாடகம்)
மேடையில்
1: பண்டாரவன்னியன்
(வன்னி நாட்டு தமிழ் மன்னன்) 2. குமாரசிங்க முதலி
(வன்னி நாட்டு ஆலோசகர்) 3. முனியப்பன்
(வன்னி நாட்டுத் தளபதி) 4. வொன்டிறிபேக்
(ஆங்கிலத் தளபதி) 5. ஜெனரல் யூவெல்
(ஆங்கிலத் தளபதி) 6. கப்டன் எட்வேட் மெச்சின் (ஆங்கிலப் படைத் தளபதி) 2) 7. முத்தரையன்
(வன்னி நாட்டுச் சிற்றரசன்) 8. நல்லநாச்சி
(பண்டாரவன்னியன் தங்கை) 9. சோமாவதி
(சிங்களத்து இளவரசி) 10. சேவகன் (I)
(பண்டாரவன்னியனின்) 11. சேவகன் (1)
(நல்ல நாச்சியின்) - பிடி : 133 43
இதன் அது சில காட்சிகள்
ஒ வ த த ர க ர 261 ல (12) - ர் (இ. 10 ( 1 ) -ஸ் - கற்பின் ல் இதேகர் பக்கம்
- இந்து, கால், 11 15: 44 (1) கட்ட 151: tR 2 3 (: பிரிட (2 - 5 - 4-7 ( 15:41: ப் ெ1-4 - - -
Nெ 5ம் கே 11:14:13 21-ல் இது தா.. -
36

களம் 1
பாத்திரங்கள்:-
யூவெல் எட்வேட் மெச்சின்
முத்தரையன்
இடம்:- யாழ்ப்பாணக் கோட்டை
(ஜெனரல் யூவெல்லும் எட்வேட் மெச்சினும் மதுவருந்தல்) யூவெ :- மிஸ்டர் எட்வேட் ரேக்கிற் ... ம்... குடியும்........ எட் :- நோ ....... நோ...... அதாவது டமிழன் அடிக்கடி ஒன்று சொல் றது மிச்சம் குடிச்சால் விஷமாகுமெண்டு. யூவெ :- டமிழன் எண்டு சொல்லாதே! சனியன் எண்டு சொல்லு: நாங்கள் எத்தனை பெரிய ராச்சியம் ஆண்டது. குட்டி, குட்டி மண் துண்டு வைச்சு - சும்மா சும்மா சண்டே போடுறாங்க. முல்லே தீவுக் கோட்டே காப்டன் வொன்றிபேக் ஆட்சி செய்யிறது - வன்னி நாட்டு தளபதி முனி கோட்டைக்குள்ளே சண்டை போடுறது. எங்கள் பீரங் கிப் படைக்கு முன்னால் அந்தச்சைத்தான் படே தூள்....... தூள்... எட்:- அப்பிடிச் சொல்ல வேண்டாம்..... வன்னி நாடு தமிழன் பெரிய மூளைகாரனெண்டு முத்திரே சொல்லுது. யூவெ :- என்ன மூளே! துவக்கு இல்லே: கைக்குண்டு இல்லே; பீரங் கி இல்லே; வெறும் குத்துவாள் ஈட்டி வைச்சு என்னா செய்யப் போறான்......... பண்டார வன்னியன் நாட்டை விட்டே ஓடப்போறான் (சிரித்து) வன்னி நாட்டு நெல் மூட்டே மூட்டையாக அல்லலாம்.-
அங்கேயுல்ல பவுன் எல்லாம் அல்லலாம்.... நாமெல்லாம் குடிச்சு குடிச்சு ஆடலாம்...
( முத்தரையன் மிரள மிரள ஓடிவந்து ) முத் '- மகா கனம் பொருந்திய துரையவர்களே ! யூவெ :- வாட்....... முத்திரே....... என்ன முளிக்கிறே....... எட்:- முத்திரே என்னா... நடந்தது........? முத் :- பிரபு அதையேன் கேட்கிறீர்கள் - சொல்லவே பயமாக இருக்கிறது' சோர்வுற்று பின்வாங்கிய வன்னிப் படைகளுக்கு, எமது முல்லைத்தீவுக் கோட்டை வொன்றிபேக்கின் படைகள் மதிலுக்குப் பின்புறமாக இருந்து எறிகுண்டுகளை வீசிய நேரத்திலும், அங்கே வீறு கொண்டெழுந்த முனியப்பனின் வீரவாளுக்குப் பதில் சொல்லமுடியாது ஆயிரமாயிரம் வெள்ளைப் படைகள் தரமிழந்தன. அப்படி இருந்தும் நேருக்குநேர் நின்று எதிர்க்க முன்வந்த வொன்றிபேக்கின் வலது கரத்தில் வேலைப் பாய்ச்சி விட்டான் முனியப்பன்.'
37

Page 31
எட் - வாட் டிஸ்த்த முனி.! முத் :- மகா கனம் பொருந்திய பிரபு தாங்கள் என்ன சொல்கிறீர் கள் . . ஆ ஹா.
எட் - வாட்டிஸ் தற் ஹா. 9)/DT... ...
முத் :- காகம். காகம் . அது பறக்கிற பறவை . யூவெ = வட். வட்.
முத் :- மகா கனம் பொருந்திய. யூவெ :- ஒ.நில்லு.நில்லு. நாங்கலெல்லாம் தோத்துப் போனது. எட் :- ஒ ஒ. பண்டாரம் படையிலே முனி மிச்சாம் கெட்டது. அதை ஒட்ட வெட்டணும். இல்லே சூட் பண்ணணும்.
முத் :- ஐயோ. அவன் சாகமாட்டான் பிரபு. எட் - அப்போ நீயும் அவன் பக்கம் நிக்கிறது.! யூவெ - உடனே இவனை சூட் பண்றது. முத் : ( பயந்து ) மகா கணம் பொருந்திய. யூவெ :- மடையா. மகா கணபதி. சும்மா வாயை மூடு. முத் :- ஐயர் துரையவர்களே! கோபம் கூடாது. பண்டாரவன்னி யனை வீழ்த்துவதானுல் ; நாமவனை அண்டித்தான் கெடுக்க வேண்டும். சிநேக மனப்பான்மையுடன் நட்புறவாடி - சமாதானம் பேசுவதுபோல் உள்நாட்டில் கிளர்ச்சிகளை விளைவிக்க வேண்டும். சிங்கள மன்னர்
களுக்கும், தமிழ் வன்னியர்களுக்கும் ஏற்றத்தாழ்விருப்பதாகக் கதை கட்டிவிட வேண்டும்.
எட் - அதை யார். மான். செய்கிறது? முத் :- மகா கனம் பொருந்திய துரையவர்கள் பண்டாரவன்னியனை பேட்டி காண வேண்டும்.
யூவெ :- செ. நில்லு. நில்லு. பண்டாரம் பொல்லாதவன். அங்கே முணி.. முணியிருக்குமில்லையா. p முத் : (ஏளனத்துடன்) முனி இருக்காது அடிக்கும். சும்மா போங்க துரை. எல்லாம் மனிசன் தான். யூவெ :- முத்தரே! நீ முண்ணுக்குப் போய் பேட்டி காணிறது. நாங்க இரண்டு பேரும் பி.ணுலே வாறது. முத் :- நான. (நடுங்குதல்) எட் - நீ கொஞ்சாம் பயந்தாது. முத். (வீரமுள்ளவன் போல) சீச்சீ. எனக்கொன்றும் பயமில்லை
38

யூவெ = வாட் மான். என்ன மான்
முத் :- இல்லை. நீங்களும் வந்தால் அழகாக இருக்கும் இல்லையா..? யூவெ:- நான் ஒண்டு மாத்திரம் சொல்றது. வன்னியர்கள் கோட் டேயெல்லாம். அதாவது முல்லேதிவு - முள்ளியவாளே - வட்டா வாள் - பணங்காமம் - கப்பிட்டியப்பொல - கற்சிலே மாடு - கப்பூ ரம் புள்வெளி. எல்லாம் பிடிக்க நீ உதவி செய்ய வேணும். அப்புடி நீ பிடிச்சு தந்தால் உனக்கு முல்லேத்தீவு ராச்சியம் தாரது. "ரென் தவுஸன் பவுண் சும்மா தருவோம். முத் - (அசட்டுச் சிரிப்புடன்) ஹி. ஹி. அது எனக்குத் தெரி யாதா பிரபு. இருந்தாலும் வன்னிநாடு மாத்திரம் தந்தால் போதும்" எட் - (இகழ்ச்சிச் சிரிப்புடன்) ஒ. ஒ. அந்தக் கோட்டேயிலை யொண்டு உனக்குத் தரலாம். முத் - மகா கணம் பொருந்திய பிரபு நாங்கள் நாளைக்கே வன்னி நாட்டிற்குப் புறப்பட வேண்டும். வெள்ளைக் கொடியுடன் சென்ருல் தான் வன்னிநாட்டின் வாயிற்கதவுகள் திறக்குமென்பதை நாம் நினை வில் வைத்திருக்க வேண்டும்.
யூவெ - மிஸ்டர் முத்திரே! நீ மூளே சொல்றது? அதுக்கு நாங்கள் நடாக்கிறது . நாளைக்கே புறப்படுவோம்-. என்ன. முத் - (குழைவுடன்) ஹி. ஹி.
- தி  ைர
களம் 2
பாத்திரங்கள் :-
பண்டாரவன்னியன் முனியப்பன் யூவெல் எட்வேட் முத்தரையன் சோமாவதி சேவகன்
இடம்:- பண்டாரவன்னியனின் அரண்மனை.
(பண்டாரவன்னியன் இருக்கையில் அமர்ந்திருக்கிருன். இருபக்கங்
களிலும் குமாரசிங்க முதலியும் நல்லநாச்சியும் அமர்ந்திருக்கி
ரூர்கள். சேவகன் வந்து துலேவணங்கி)
39

Page 32
சேவ:- மன்னர் மன்னவா மாட்சிமைதங்கிய சிங்களமன்னர் கப்பிற்
றியப் பொலவினல் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஒருஓலையுடன் சிங்கள இளவரசி சோமாவதி அரண்மனை வாசலில் காத்திருக்கிருக ள்.
பண்- அப்படியா. ஏன் தாமதம். சீக்கிரமழைத்துவா. (சேவகன் சென்று சோமாவதியை அழைத்து வருகிருன்) பண்; வருக. 6) CD55... ... தமிழ்ச் சிங்கள ஒற்றுமையின் பிரதி பிம்பமாகிய எனதருமை நண்பன் கைப்பற்றிய பொலவின் தங்கையே வருக . அதோ அந்த ஆசனத்தில் அமர்க. (இருக்கையொன்
றைக் காட்டுகிருன்)
(அரசனின் அனுமதி பெருமலே புயலென வருகிருன் முனியப்பன்)
(up Gorf;- மன்னிக்க வே ண் டு ம் மன்னவா. (ஆத்திரத்துடன்) அந்நிய அடிவருடிகளின் உணவுப்பிண்டம் - முத்திரையன் குளக் கட்டு முத்தரையன் - அந்தச் சிற்றரசின் . முல்லைத்தீவின் மணிக்
கொடியை பறங்கிப்பீரங்கிக்கு அடிபணியவைத்த அக்கிரமக்காரனின் பாதங்கள் எமது நாட்டின் மீது படியக்கூடாது. அவன் அடி பட்டுவிட் டால் கெட்டுவிடும் எமது ராஜஸ்தானி. பரணிபாடித் தரணி யாண்ட எம்குல மன்னர்களிடையே தோன்றிய கல்நெஞ்சன். அந்தக் கருநாகத்திற்குக் கொடுக்கும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விஷப் பற்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. (சுமார:- (நட்புக்கலந்த அதிகாரத்துடன்) மு னி ய ப் பா! சற்றே பொறு. முத்தரையனிடம் இருக்கும் அரசியல் ஞானம் எமது வன் னியர் குலத்திற்கு இருக்காதென்பது மடமைத்தனம். பண்;- ஆமாம். முனியப்பா. சற்றே அமைதிகொள். முதலில் சிங்கள இளவரசியின் சேதியை விசாரிப்போம்.
(முனியப்பன் ஒரு இருக்கையில் அமர்கின்றன்) பண். (சோமாவதியைப்பார்த்து) சரி. தங்காய்! நீ வந்த சேதி யைக்கூறு...! சேரமா - புரிந்துகொள்ள வேண்டும் மன்னவா - தெரிந்துகொள் ளவேண்டும் . பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எமது நாட்டை விட்டு விரட்டுவதாஞல் தமிழ்மன்னர்களுக்கும், சிங் கள மன்னர்களுக்குமி டையே, ஒற்றுமை நிலவவேண்டும். இதை நான் கூறவில்லை. என் அண்ணனின் மடலே கூறும்.
(மடலைக் கொடுக்க: குமாரசிங்கமுதலி பிரித்து வாசிக்கிருன்) குமார: "எனதருமைத்தோழா, இந்தநாட்டை வி ட் டு அந்நிய ஏகாதிபத்தியத்தை விரட்ட வேண்டுமேயானுல் - நாம் மக்களாட்சியை மலரவைக்க வேண்டுமேயானல் - தமிழ் சிங்கள குரோதத்தை மறந்து எமது வேற்றுமைகளையெல்லாம் ஒரு புறத்தே வைத்து - ஒன்றுபட்டு
40

ஒரே கொடியின் கீழ் இலங்கை மண்ணைக் காப்பாற்ற திடசங்கற்பம் எடுக்க வேண்டும். ஆகவே மதிநுட்பத்திலும், அரசியல் தந்திரத்திலும் தனக்கு நிகர் தானே என நிரூபிக்கும் என் தங்கை சோமாவதியை இவ்வுடன்பாட்டின் சின்னமாக அனுப்பி வைக்கிறேன். அவளுக்கு முழுக்க முழுக்க அரசியல் பணியைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள் கிறேன். வாழ்க எமது தாய்நாடு - வளர்க நமது ஒற்றுமை! இவ் வண்ணம் உன் அன்புக்குகந்த மன்னன். கைப்பிற்றியப்பொல' சோமா - புரிந்து விட்டதா மன்னவா! அண்ணனின் குறிக்கோள். பண் - ஆகா. தான்தோன்றி ஈஸ்வரர் தன்னுடைய அனுக்கிர கத்தை என்பால் வீசிவிட்டார். இனி வெற்றி நமதே. வாழ்க கைப் பிற்றியப்பொல - வாழ்க அவரது நட்பு. (சோமாவதியைப் பார்த்து) சோமாவதி அளவளாவ என் தங்கை நல்லநாச்சியிருக்கிருள் - அறி வூட்ட அன்பர் கு மார சிங் கம் (முனியப்பனின் தோளி ல் தட்டி) வீரத்திற்குத் தளபதி முனியப்பன். இவர்கள் உன்னை ஆத ரிப்பர். உனது அந்தரங்கங்களை இவர்களுடன் கலந்துரையாடித் தீர்த்துக்கொள். (33Fm LDmT உத்தரவு மன்னவா. -
(சேவகன் மீண்டும் வந்து தலைவணங்குகிருன்) சேவ அரசே! முத்தரையனும் இரு வெள்ளைக் க வ ண ர் களும் கோட்டை வாசலில் காவல் இருக்கிருர்கள்,
(முனியப்பன் வாளை உருவிக்கொண்டு எழுகிருன்) பண் (முனியப்பனை அமர்த்திவிட்டு) ம். அழைத்துவா அவர்களை (சேவகன் சென்றபின் நல்லநாச்சியைப் பார்த்து) - நல்லநாச்சி அவர்கள் வருமுன்னர் சோமாவதியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல். . . . . - (அவர்கள் சென்றபின் முத்தரையனைத் தொடர்ந்து யூவெல்லும் எட் வேட்டும் நுழைகிருர்கள்) பண் : (அவர்களைப் பார்த்து) வன்னி நாட்டினருடன் நட்புறவு மு  ைற யி லே அளவளாவ வந்தீர்களானுல் உட்காருங்கள் - அதை விடுத்து அன்னியப் பிரச்சனைகளைக் கிளறுவதானல் கோட்டையை விட்டு வெளியே சென்றுவிடுதல் நல்லது. முத் (வளைந்து நெளிந்தபடி) மாமன்னவா! தங்களின் வீரத்தை நானறியாதவனல்லவே - வீரம் விளைந்த உங்கள் தோள்களுக்குப் பதில் சொல்ல இந்த ஈழவள நாட்டிலே பிற மன்னருமுண்டா, பண் புகழ்ச்சி எமக்குத் தேவையில்லை. விஷயத்தைச் சொல். யூவெ மிஸ்டர் பண்டாரம் வன்னியன், உம்மிடம் நல்ல காட்டு யானைகள் இருப்பதாகக் கேள்வி. அது கொஞ்சம் சந்தோஷம் செய் தாலென்ன.
41

Page 33
பண் : ஜெனரல் யூவெல் யானைப்படை கேட்க நீயொன்றும் தந்து விட்டுச் செல்லவில்லையே. முத் அரசே நடந்ததை மறந்து நல்வழிப்படுங்கள். பண் : முத்தரையா! நீயா நல்வழி கூறுகிருய். நடந்தது நடந்த வைகளாகவே இருக்கட்டும். இனி நாம் நல்லவர்களாக வாழலாம் வா வென்று கேட்டதாம் ஆட்டிடம் ஒநாய். அதுபோல் இருக்கிறதப்பனே உன்கதை.
முனி (கோபத்துடன்) முத்தரையா! உன்னை முல்லைத்தீவுக் கோட் டைக்குள் வைத்தே சித்திரவதை செய்திருப்பேன். ஆனல், நீயொரு வன்னியன்; நாைெரு வன்னியன் என்பதால் உன்னை விட்டு வைத் தேன். இல்லையென்ருல் நீ இப்பொழுது இந்த அன்னியருக்கு ஆதரவு தேட வந்திருக்க மாட்டாய். குமார ; (சிரித்து) நட்புறவு முறையிலே நாடிவந்து யானைகள் பரிசு தரவேண்டுமென்று கூறுவது ஒவ்வாத செயல். (ஏளனத்துடன்) உண்டு களித்துச் செல்வதே மேல். எட் , என்ன முத்திரே சாப்பாட்டுக்கா வந்தது. பண் : ஆமாம் வந்தோரை வாழவைக்கும் தாயகமிது இல்லையென்று வந்தீர்கள். இருப்பதை அளிக்கிருேம். அதைவிடுத்து யானை, (శ్రాడిOT யென்று கூறுவதானல் நடப்பது வேருக இருக்கும். முனி ; இன்று யானை கேட்கிருர்கள் - நாளை சேனை Gas " Luntria5air - மறுநாள் நாட்டைக்கூடக் கேட்கத் தயங்கமாட்டார்கள். பண் ; முத்தரையா ஏன் விழிக்கிருய் - உன் திட்டம் பலிக்காது. வன்னிநாட்டின் ஓரத்திலேயிருக்கும் ஒரு சிறு துரும்பைக் கூட இந்த வெள்ளைப் படைகளுக்கு அள்ளிக் கொடுத்திட மாட்டோம். நாட்டைக் கலக்கும் நாசகாரர்களை வீட்டிலண்டுவது வழக்கமற்ற முறையெனினும் நேசமுறையில் வந்தீர்கள் என்பதற்காக அன்புக்கரம் நீட்டி அழைத் தோம். ஆனல்.
முத் ஆனல். பண் ; வன்னிநாட்டின் வளம்பெறு களிறுகளை வந்தோருக்கு வாரி வழங்கிடமாட்டோம். இவர்கள் யார், ஈழவள நாட்டின் தவப்புதல் வர்களா? அல்லது செந்நெற் களனிகளைச் செப்பனிடும் செம்மல்களா அல்லது வன்னியின் நிலம் செழிக்க அயராது ஏர்பிடித்து நாற்றுநடும் நன்மணிகளா? எந்த உறவுமற்ற இந்தச் சிறியவர்களுக்கு யானைப் படை கொடுப்பதற்கு என்னடா உரிமையிருக்கிறது. யூவெ ; (கோபத்துடன்) ஆ. ஆ. அவமானம் முத்திரே. அவமானம். பண் ; உங்களுக்கெங்கே மானமிருக்கிறது. மாற்ருன் தோட்டித்து மாங்கனியை பிச்சை கேட்க வந்தவர்களே! வீரமிருந்தால் தோல்வி
42

கண்டிருப்பீர்களா முல்லைவனக் கோட்டையில் - ஏட்டைப் புடைத்த இனமப்பா எமது இனம் - ஏச்சுப் பிழைக்கும் உங்களின் மூச்சைக் கூட அழித்திடத் தயங்க மாட்டோம். ஜாக்கிரதை 11 எட் ; என்ன. என்ன. கொல்லவா போறது. முத்தரே ! யாழ் பாணக் கோட்டே எம்மிடம். பருத்தித்துறைக் கோட்டே எம் மிடம். எல்லாமே எம்மிடமென்று சொல்லு . பண் ; யூவெல் 1 யாழினன் கொடியை சூழ்ச்சியால் கைப்பற்றியது போல் - வன்னிநாட்டை எடைபோட்டு விடாதேயப்பனே. வன்னியர் என்ற இறுதிமூச்சு இருக்கும்வரை விட்டுக் கொடுத்துவிட மாட் டோம். - தட்டிக் கேட்க வந்துவிட்ட வெள்ளைக் கோட்டான்களே! வன்னியனிடம் வகையாக மாட்டிக் கொண்டீர்கள். (ஏளனச் சிரிப்பு) யாரங்கே (கையை தட்டல்) இவர்களைக் கைது செய்யுங்கள். முதி 3 (குறுக்கிட்டு அரசே! சமாதானம் பேசவந்தவர்களை சரண டைய வைப்பது நீதியன்று. பண் ; அந்நியரின் பாதம் வருடும் அடிவருடியே! நீயா நீதிபற்றிக் கூறுகிருய். சங்கிலியனைக் காட்டிக் கொடுக்க ஒரு காக்கைவன்னியன் தான் இருந்தான் என எண்ணியிருந்தேன். ஆனல் வன்னியளை வன் னியணுகிய நீயே காட்டிக் கொடுப்பதில் இந்த வன்னிவள மாதா பொருமை கொள்ளட்டும் சொற்ப சுகத்துக்காக "சொந்த நிலத்தா னைக் காட்டிக் கொடுக்கும் அற்ப பதரே! கிள்ளி விடுகிறேனடா உனது தலையை. (வாளை உருவுதல்) குமார :- (வாளைத் தடுத்து) வேந்தே நிராயுதபாணியைக் வது நீதி தளர்ந்த செயல்: பண் ; (பெருமூச்சுடன்) பாவம். விட்டுவிடுகிறேன். பிழைத்துச்
யூவெ :- மிஸ்டர் பண்டாரவன்னியன். (குரலைக் கனைத்து) நீ நல்லவன். எதற்காக சண்டே போடவேணும். அயல் மன்னர்க ளெல்லாம் கொஞ்சம் வரிகொடுத்துச் சந்தோஷம் செய்யும்போது நீ மட்டும் மறுக்கக் கூடாது.
பண் ;- அண்டிப் பிழைக்க வந்த அந்நியனே! சொந்த நாட்டானி டம் வரி வசூலிக்க நீங்கள் யார். அயல் மன்னர்கள் அள்ளிக்கொடுக் கிருரே வெள்ளிப் பணங்களை. ஏன் தெரியுமா? உங்கள் சர்வாதி காரப் போக்கையுணராது ஏமாந்து விட்டார்கள். ஆனல் இன்றல்ல என்றுமே வன்னிநாட்டான் துட்டுக்கொடுக்க மாட்டான் - நட்புறவு முறையிலே வந்ததால் நீங்களின்று பிழைத்துச் செல்கிறீர்கள். இல்லை யென்ருல் உங்களுக்கு ஆலவட்டம் வீசும் முத்தரையனும், நீங்களும் வெளியே செல்வதற்கு உங்கள் உடலில் உயிர் இருந்திருக்காது.
43

Page 34
யாரங்கே இம்மூவரையும் எல்லைப்புறத்தே விட்டுவா. இனியெந்த வேளையிலும் இவர்களை நம்நாட்டில் கால்வைக்க அனுமதிக்காதே.ம். (சேவகன் அழைத்துச் செல்கிருன்) குமார - மன்னவா! முத்தரையன் இவர்களின் ஆசை வாாத்தைகளை நம்பி நன்முக ஏமாற்றப்பட்டு விட்டான். பண் - அது மட்டுமல்ல குமாரசிங்கா வன்னிநாட்டான் இன்று என்ன நிலையிலுள்ளான் என்பதையும் உளவறியவே இந்த நாட கத்தை நடத்தியுள்ளார்கள். முனியப்பா ! எதற்கும் ஆயத்தமாயிரு. ( சபை கலையுமாறு சைகை செய்கிருன்)
- தி  ைர -
as sm b 3
பாத்திரங்கள் :-
குமாரசிங்க முதலி இடம் :- பூங்கா நல்லநாச்சி
(நல்லநாச்சி மலர் கொய்துகொண்டிருக்கிருர் ) குமார - (செருமியபடி அண்மிக்கிறன்) ஹஜூம். நல் :- ஒ. நீங்களா. குமார :- தாங்கள் தன்னந்தனியாக அருவியோரம் உலாவுவதாக அறிந்தேன். நல் :- (நாணத்துடன்) எங்கே. நீங்கள் வரமாட்டீர்களோ. என்று நினைத்தேன். குமார :- (கவலையுடன்) நானே சாதாரண ஆலோசகன் தாங் களோ, தரணியாளும் இளவரசி. நல் :- இளவரசியும் மனிதவர்க்கம் தானே. உயர்வும் தாழ்வும் பழகும் மனநிலையைப் பொறுத்ததன்ருே. குமார - அப்படியென்ருல். நல் - இளவரசிக்கும் இதயமுண்டென்று கூறுகிறேன்.
குமார :- (பெருமூச்சுடன் ) அந்த இதயம் எந்தத் தேயத்து இள
வரசனைக் கொள்ளை கொள்ளுமோ. யாரறிவார்
44

நல் :- இளவரசியென்முல் இளவரசனைத் தான் கொள்ளை கொள்ள வேண்டுமா..? சாதாரண புலவனைக் கவர்ந்த அமராவதியைப் பற்றித் தாங்கள் அறியமாட்டீர்களா? குமார . இளவரசி அழகாகப் பேசுகிறீர்கள், லைலா - மஷ்ணு; அனர்- சலீம்: மும்தாஸ் - ஷாஜகான் போன்றவர்களின் காதலையும் அறிந்திருக்கிறேன். அதேபோல் எங்கள் காதலும் சமாதியாகி விடக் கூடாதே. நல் - சமாதியாகி விட்டால்கூட அதிலொரு சந்த்ோஷம் காண் பேன் நான். குமா :- இந்த அளவுக்கு உங்கள் மனம் என்னிடம் தாவியிருக்கு 4 DfT(30)6)... ... அப்புறம் நான் என் செய்வேன். (ஏளனம் கலந்த குறும் புடன் சிரிக்கிருன்.)
நல் :- போங்கள். குறும்புக்காரர் நீங்கள்.
குமார - உங்களை விடவா.
дѣ 6nт ціо 4
பாத்திரங்கள்:- இடம்:-
யூவெல் யூவெல்லின் கூடாரம் எட்வேட் மெக்சின் முத்தரையன் சோமாவதி
(யூவெல் ஆத்திரத்துடன் அங்குமிங்கிம் உலாவுதல்) யூவெ :- மிஸ்டர் எட்வேட் ! ஒரு டமிழன் எவ்வளவு ஈனத்தன மாக எண்ணி எங்களை வெளியே தள்ளிவிட்டான். அதை நினேக்க எனக்கு மிக வேதனை தான். சூட்பண்ண மனம் வந்தது. ஆனல் அவங்க கோட்டையாயிற்றே !
(கலைந்த கூந்தலுடன் சோமாவதி வந்து விழுகிருள்) சோமா :- பிரபு 1 என்னைக் காப்பாற்றுங்கள். யூவெ :- முத்தரே ! யாரிவள்? f மூத் - எங்கோ பார்த்த ஞாபகம். என் சிந்தனைக்கு எட்டவில்லை.
A 5

Page 35
சோமா :- என்னைத் தெரியவில்லையா சிற்றரசே சிங்கள வன்னி மன்னன் கைப்பிற்றியப்பொலவின் தங்கை, பூவெ :- ஒ! அப்படியா?
முத் - காரணமில்லாமல் இக்காரிகை நமது கூடாரத்துக்குள் வந்தி ருக்க முடியாது. (மிரட்டி) சோமாவதி" உண்மையைச் சொல்! நீ ஏன் இங்கு வந்தாய். சோமா - (நடித்து) ஆ. பகவனே! இது என்ன சோதனை இது உங்கள் கூடாரம் தான், இங்கு நீங்கள் தான் இருப்பீர்கள் என்று என் பெண்மையைக் காப்பாற்ற ஒடிவரவில்லை. எட் - முத்திரே..! அது என்ன பொம்மை !
முத் : பொம்மையில்லைத் துரையவர்களே, பெண்மை - பெண்மை யென்றல் புரியாது உங்கள் நாட்டவர்க்கு. ஒரு பெண் ஒருத்தனையே கணவனுக ஏற்பாள். அவன் காலத்தால் இறந்துவிட்டால் இறுதிவரை விதவையாகவே இருப்பாள். யூவெ - அப்படி.யெண்டால், வேறு க லி யா ண ம் செய்யுறது இல்லே. நாங்களெல்லாம் நினைச்ச நேரம் கலியாணம் செய்யலாம் இல்லையென்ருல் விட்டு விடலாம்.
முத் :- அந்த ஈனமான வாழ்வு எங்கள் குலத்தவர்களுக்கு തൂര് : தன் அன்புக்குப் பாத்திரமான ஒருவனைத் தவிர வேறு எந்தவொரு ஆடவனின் ஸ்பரிசம் கூட நாடவிடமாட்டாள் வன்னிநில மங்கை. உங்கள் தேயத்துப் பெண்களைப் போன்று கண்டகண்ட ஆடவரின் கையைப் பிடித்துக்கொண்டு கூத்தடிக்க மாட்டார்கள். கற்பு என் னும் பெண்மையைக் காத்திடுவார்கள்: யூவெ :- கட்பு. பெண்மை. மிச்சம் நல்ல பெயர் இல்லே. எட் - அதுதான் உங்கடை பெண்கள் மிச்சம் வடிவாய் இருக்கிறது.
சோமா :- இந்த அழகுதான் என்னை இக்சதிக்கு ஆளாக் கி யது. (அழுதல் ) என் அண்ணனிடம் உத்தரவு பெற்று நாடுகள் பலவற் றிலும் எனது ஆடற்கலையை அளிக்கவந்த என்னை, என் பெண்மையை விலைபேச வந்தான் பிரபு தளபதி மு னிய ப் பன். இன்று உங்கள் கூடாரம் இல்லையென்றல் புத்த பகவான் பக்தையான எனது கற்பு களங்கப்பட்டிருக்கும்.
முத் :- என்ன முனியப்பன?
யூவெ -
6T' - (இருவரும்) ஆ. வன்னிமுனியா?
46

ty
சோமா ;- ஆம் பிரபு அந்தக் காமாந்தகாரனின் உதிரத்தைக் குடிக் காது நான் தாய்நாட்டிற்குத் திரும்பப் போவதில்லை. உற்றவர்க ளுக்கு உயிரைக் கொடுப்பவர்கள் சிங்களர். உலுத்தர்களை ஒழிப்ப தற்குத் தயங்க மாட்டார்கள் சிங்களர் என்ற தத்துவத்தை நிலை நாட்டாது நான் என் தாய் நாட்டிற்கு காலடி எடுத்துவைக்க மாட் டேன். எங்கள் குலதெய்வமாம் புத்த பகவான் மீது ஆணையிடுகிறேன். இது சத்தியம்.
முத் - சோ மா வ தி கலங்காதே, காலம்தான் உன்னை எங்கள் கூடாரத்திற்கு இழுத்து வந்திருக்கிறது. வன்னிநாட்டுச் சிற்றரசர்கள் அனைவரும் மகாகனம் பொருந்திய யாழ்ப்பாணக் கோட்டை ஜெனரல் அவர்களுக்குக் கப்பம் கட்டும்போது ; இந்தப் பண்டாரவன்னியன்
மட்டும் தளபதி மு னி ய ப் ப ன் வார்த்தையைக் கேட்டு வரிப்பணம்
செலுத்த மறுக்கிருன் - எங்கள் முதல் வைரியும் - உன் எதிரியும் ஒருவனே.
எட் - அந்த முனிதான் வொன்றிபேக்கையும் காயப்படுத்தியவன். அவன் மட்டும் பிடிபட்டால். வன்னிக் கோட்டைகள் எல்லாம் நம்மிடம்.
முத் :- (திட்டத்துடன்) யூவெல் பிரபு அவர்களே! இந்த மாதரசியை வைத்தே மாபெரும் சாம்ராஜ்யத்தை முறியடிக்க தங்கள் அடிமை, அடியேன் முடிவு செய்துவிட்டேன். யூவெ = முத்திரே அது எப்படி முடியும். முத் :- சோமாவதி மட்டும் மனம் வைத்தால். (Մ)ւգպմ): சோமா :- என் எதிரி முனியப்பனின் செங்குருதிக்காக என்னையே தியாகம் செய்யத் தயார். முத் :- சபாஷ் வெற்றி, வெற்றி - அது எங்கள் பக்கம் இருக்க வேண்டுமானல், சோ மா வ தி ! நீ திரும்பவும் வன்னிநாட்டிற்குச் செல்லவேண்டும். சோமா :- (பயப்படுவது போல் நடித்து) என்ன. வன்னியனின் கோட்டைக்கா?
முத் - ஆம். பயப்படாதே! நாளை தான்தோன்றி ஈசுவரரின் விழா விலே நீ நடனமாடப் போகிருய். முனியப்பனைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நகர்காவலுக்குள்ள பாழடைந்த மண்டபத்திற்கு அழைத்து வரவேண்டும். சோமா - மிகவும் பயங்கரமான சோதனை. முத் - உன் வேதனை தீரவேண்டுமானுல் சோதனையைத் தாண்டத்
தான் வேண்டும்.
47

Page 36
3 ?
யூவெ :- அந்த முனியை மட்டும் நீ கொண்டுவந்தால் உன்னை ஒரு ராணியாக்குவேன். உன் கோபம் தீர அவனை நீ பழிவாங்கு.
சோமா:- உங்கள் வார்த்தைகளை நம்பியே மீண்டும் நான் வன்னி நாட்டிற்குப் போகிறேன். எனது முயற்சி வெல்ல புத்தபகவான் துணை புரிவாராக. ( போதல் ) யூவெ :- முத்திரே! முனியைப் பிடித்து விட்டால் நாட்டைப் பிடிக்க முடியுமா?
முத் :- முடியும் - த ள ப தி கைதானான் என்ற செய்தி கேட்டதும் வன்னிப்படை ஆட்டங் கண்டு விடும். உடனே எமது மும்முனைத் தாக்குதல்களையும் தொடங்கலாம் திருகோணமலை வொன் றிபேக்கின் பீரங்கிப் படை பனங்காமத்தை வளைத்துக் கொள்ளும். வட்டுவள நாட்டு இளவரசி நல்லநாச்சியும் பண்டாரவன்னியன் ஆலோசகன் குமாரசிங்கனின் சிறுபடையும் பனங்காமத்தை நாடி ஓடிவரும். தனித்து விட்ட வட்டுவள நாட்டிற்குள் எட்வேட் மெற்சின் அவர்களின் துப் பாக்கிப்படை புகுந்து நாட்டைக் கைப்பற்றி விடும். அதேவேளை மகா கனம் பொருந்திய யாழ்ப்பாணக் கோட்டை யூவெல் பிரபு அவர்களின் கடற்படை கடல் மார்க்கமாக வந்து வன்னிக் கோட்டையை எதிர்க் கும் மும்முனைத் தாக்குதலுக்கும் பதில்சொல்ல முடியாது வன்னிப் படை பின்னடையும்: நல்லநாச்சி கிளர்ந்தெழுவாள். யாழ்ப்பாணப் படையும் திருகோணமலைப் படையும் அவர்களைக் கைது செய்யும். இதைக் கேட்டதும் பண்டாரவன்னியன் தளர்ந்து விடுவான். தளர்ந்து - எப்படி? யூ, வெ :- வெல் மிஸ்டர் முத்திரே! அருமையான திட்டம் மிஸ்டர் எட்வேட். ''சென்ரத மெசேஜ் இமீடியட்லி ரூ றிங்கோமலை'' எட் :- யெஸ், சேர்!
திரை திரை - - -
களம் 5 பாத்திரங்கள் :-
யூவெல்
குமாரசிங்கம் எட்வேட்மெச்சின்
நல்ல நாச்சி இடம் :-யாழ்ப்பாணக் கோட்டை
எட் :- (வந்து கொண்டே) ஜெனரல் அவர்களே! வெற்றி மாபெரும் வெற்றி சண்டை போடாமலே வட்டவாள் நாட்டு இளவரசியையும் குமாரசிங்க முதலியையும் நட்டநடு இரவில் களவாகச் சென்று கட் டிலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு வந்துவிட்டோம்.
48

யூவெ :- வெல்... மிஸடர்... எட்வேட். எங்கே அந்த ஆக்கள் ...? எட் ;- யேஸ் அழைத்து வருகிறேன். யூவெ : என்ன அழைத்துவருவதா ! கட்டியிழுத்து வாருங்கள். - எட் : (கையைத் தட்டி) இம், கமான்... (கட்டியிழுத்து வருகிறார் கள் சிப்பாய்கள்) யூவெ ; வருக ! வருக ! வன்னி நாட்டு நெல்லைத் திண்டு கொழுத்த | தவளைகளே குமார :- மூட்டா வாயை தூங்குபவர்களைக் கைதுசெய்யும் கோழை களே. எட்டி நின்று தட்டிப்பேசும் துரோகிகளே... சரித்திரம் தெரி யாத தருக்மர்களே, வீரம் இருந்தால், நெஞ்சிலே தீரம் இருந்தால், அவிழ்த்துவிடு பார்க்கலாம். எட்: ஹீ-! ஹீ...!! கட்டிய உங்களை அவிழ்ப்பதற்கில்லை மான்... குமார : ஆகா என்ன வீரம் புறமுதுகிலே வேலைப்பாய்ச்சும் புல்லர் களே, ஏன் எங்களைக் கட்டி வந்தாய்? யூவெ ; குற்றவாளிகளைக் கட்டாமல் விட நாங்கள் ஒன்றும் முட் டாள்கள் அல்ல மிஸ்டர். எட்வேட் இவங்கள் செய்த குற்றங்கள். எட் : யாழ்ப்பாணம் கோட்டைக்குக் கப்பம் கட்ட மறுத்தது எங்கள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்தது. யூவெ : இரண்டுக்கும் தண்டனை தூக்குதான். குமார : (சிரித்து) விசித்திரமான தண்டளை - - - - - - - யூவெ ; விதித்தவர்கள் நாங்கள். குமார : நீதிமன்றம் கூடவில்லை. யூவெ : நாங்கள் நினைத்ததுதான் சட்டம், குமார : அடங்கிவிடப் போகிறது உனது கொட்டம்: - யூவெ : சாகப் போகிறாய்.......... குமார ; உங்களைப் போன்ற உன்மத்தர்கள் பயப்படுவார்கள்." யூவெ : பரிதாபமாக இருக்கிறது. குமார ; இதயமிருந்தாலல்லவா? யூவெ ; சரிக்குச்சரி பேசாதே ! வன்னிமன்னர்கள் எங்களுக்குக் கப் பம் கட்டுகிறார்கள். குமார ; மூளையற்றவாகள் ஏமாந்து விட்டார்கள். யூவெ ; கோபத்தைக் கிளறாதே ! குமார ; ஆண்டு கொண்டிருப்போரிடம் யாசகம் கேட்க வந்தவர் களே ! இறக்கும் தருணத்திலும் இழக்கமாட்டான் தமிழன் வீரத்தை!

Page 37
யூவெ * பேர்தும் நிறுத்து! கடைசியாக ஏதும் வேண்டுமானல் கூறு. நல் : சீ பேசாதே! கோழைத்தனமாக எங்களைக் கட்டி வந்துவிட்டுக் கொக்கரிக்காதே 1 வீரமிருந்தால் அவிழ்த்துவிடு பார்க்கலாம். யூவெ ; (சிரித்து) கட்டிய நாய்கள் குலைக்கிறது, குமா : எங்களைக் கட்டியிருக்கலாம் வேண்டுமானல் கொன்றுவிட லாம். ஆனல், நாளை இலட்சக் கணக்கான மானம் காக்கும் மறக் குடி மைந்தர்கள் வாழையடி வாழையாக வந்த வன்னியர்குல தில கங்கள் உங்ளைத் தட்டிக் கேட்க, உங்கள் குட்டை உடைக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை மறந்துவிடாதே !
எட் ; ஆகா. அழகாகப் பேசுகிருன், குமாா , அழகிற்குப் பொருள்கூறும் நாவேந்தர் பரம்பரையடா நாம் யூவெ ; (மீசையை முறுக்கி)ம். அளவுக்கு மிஞ்சுகிறது பேச்சு. குமார ; அதிகாரத்தை அழித்துவிடத் தூண்டுகிறது என் மூச்சு, யூவெ ; உயிரோடு விட்டதால் உளறுகிருய். குமா ; நாளை முனியப்பனின் வீரவாளுக்குப் பதில்கூற முடியாமல் உளறப்போகும் நீதான் உணரவேண்டியவன்.
யூவெ என்ன. என்ன. உளறுவாய் என்ரு கூறுகிருய். சரணு கதியடைந்துமா உன்னிடம் வீரம் ஒட்டிக் கிடக்கிறது. குமா ; அங்காடி வியாபாரிகளென நாட்டுக்குள் புகுந்த நீங்கள் தமிழன் வீரத்தை எடைபோட முடியுமா? பகட்டாகப் பேசாதே ஏன் எங்களைக் கட்டி வந்தாய்? யூவெ விட்டுவிடவல்ல. விட்டுவிடவல்ல உங்களைக் கொன்று விட. கொன்றுவிட, வேண்டுமானுல் விட்டுவிடுகிறேன் உன்னை. வட்டுவள நாட்டு இளவரசியைத் தந்துவிடுவாயா. என்ன மேடம் நல்லநாச்சி நீயென்ன சொல்லுகிருய்? நல் : மடையனே, மதிகெட்டுப் பேசாதே! மாணிக்கத்தால் பட்டா டையும், மரகதத்தால் தொட்டிலும் செய்து தருகிறேன், மலடியே ஒரு மகவைப் பெற்றுக்கொடு என்பதுபோல் இருக்கிறதடா உன் கதை. யூவெ ஒ. ஒ .!! நீயொரு பொம்பிளே. மரியாதையாகப் பேசு. நல் : மரியாதை - யாரிடமடா கேட்கிருய் மரியாதை. கற்பரசி மண்டோதரி போன்ற தமிழ்ப் பெண்களின் மானத்தை விலைபேச
வந்தவனே (ஆவேசமாக) இதோ நான் தருகிறேன் பரிசு. (கட்டுக்
களை உதறியெறிதல்)
யூவெ ஒ. ஒ. ஆ. ஆ. பிடியுங்கள்! பிடியுங்கள்!!
(சிப்பாய்கள் பிடித்தவுடன்) இவள் ஒரு பொல்லாத ராணி. இவ
ளேச் சும்மா விடக்கூடாது. இவள் மகா பயங்கரமானவள். நாளைக்குப்
50

பத்து மணிக்கு முல்லைத்தீவுக் கோட்டையிலே இவள் சாகும்வரை தூங்கவேண்டும். இந்தக் குமாரசிங்கம் முதலி இவளுக்குப் பக்கத்தில் தூங்கவேண்டும். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் எவருக்கும் இவர்கள் சாவு ஒரு பாடமாக அமையட்டும். குமா - எனயாளும் தான்தோன்றி ஈசுவரா! என் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதா? என் செய்வேன்? என் சிந்தையெல்லாம் கவர்ந்து விட்ட வன்னியர்குல திலகமே! உன்னை இறுதிவரை காணுதவனுக மடியப் போகிறேன் என்பதுதான் என் கவலை. போகட்டும். பூவெ போதும் நிறுத்துங்கள் பிரசங்கத்தை, ம், இவர் களை இழுத்துப் போங்கள்.
سم T](568 -~~-
6 6n u tito 6
பாத்திரங்கள் :
முத்தரையன் எட்வேட் மெற்சின் சோமாவதி யூவெல்
இடம் : எட்வேட் கூடாரம் மன்னுர்க் கோட்டை
(எட்வேல் மெற்சின் வரைபடம் ஒன்றைக் காட்டி முத்தரையனுக்கு விளக்குதல் )
முத் : எட்வேட் மெற்சின் துரையவர்களே 'வன்னிநாட்டின் ஒவ் வொரு பகுதியையும் நேரில் காண்பதுபோல் காட்சியை வரைந்துள் ளிர்கள், வன்னிப்படைகளை முறியடிக்க இது ஒன்றே போதும். ( சோமாவதி இதை மறைந்து நின்று அவதானிக்கிருள்.) எட் - உஸ் சத்தம் போடாதே! யாரும் பார்த்தால், திட்டம் கெட்டு விடும்.
முத் :- பிரபு கறுப்பு மச்சம் இட்ட இடங்கள் எதைக் குறிக்கிறது? எட் - வன்னி நாடுகளையும் - வன்னிப் படைகள் எங்களை எதிர்க்க வரும் இடங்களையும், முத்தரே இதோ பார்! திருகோணமலைப் படை கடல் மார்க்கமாக வந்து யாழ்ப்பாணப் படைகளுடன் அணிதிரளும் காட்சி நீல நிறத்தினல் வரையப்பட்டுள்ளது. எங்கள் மன்னர்ப்படை
வளைத்துக் கொள்ளும் பகுதிகள் சிவப்புநிற வர்ணத்தால் தீட்டப்பட் டுள்ளன.
51

Page 38
முத் : ஆகா. அற்புதம். அற்புதம். ஜெனரல் யூவெல்லின் திட்டத்திலும் பார்க்க இத்திட்டம் அபாரம்,
. சந்தோஷமான நேரத்தில் நாமிருவரும் குடித்துப்பார்த்தால்
என்ன.
முத். (குழைந்து) ஆமாம் குடிக்கலாம் குடிக்கலாம்.
(இருவரும் குடித்தல், முத்தரையன் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மயங்கி விழுதல்)
எட் :- நீ. என்ன முத்திரே. விழுந்து போனது. முத் :- (கிடந்தபடி) நான. விழமாட்டேன். ஆமா. குடிப் பே.ன் (நிலை மறத்தல்)
(சோமாவதி மெதுவாக வருகிருள். ) சோமா :- உள்ளே வரலாமா பிரபு. எட் :- ஒ. நீயர். வா. உன்னைத்தான் தேடினேன். சோமா :- பிரபு, என்னை எதற்காகத் தேடினீர்கள் எட் - உன்னேடு சந்தோஷமாகப் பேசலாம் என்று. சோமா :- அப்படி என்ன சந்தோஷம் பிரபு. எட் - விஷயம் தெரியுமா உனக்கு குமாரசிங்கம், நல்லநாச்சி இரு வரையும் நித்திரையில் வைச்சுப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டோம். சோமா - (அதிர்ந்து ) என்ன, தூங்கும்போது சிறைப்பிடித்து 66 "uerf 556MTT?
எட் . நீயேன் முளிக்கிருய். ' ' ' ச்ோமா? :- (சமாளித்து) இல்லை. இல்லை நான் சந்தோஷத்தால் துள்ளுகிறேன். ' - , - எட் : இனி நாங்கள் பண்டாரவன் னியனைப் பிடிக்க வேண்டும். சோமா : (நடித்து) ஆமாம். அவனையும் ஒழிக்க வேண்டும் (திட்ட மிட்டு) பிரபு. ந ல் ல நாச்சி நல்ல அழகியாமே! அவளை ஒருமுறை பார்க்கச் சந்தர்ப்பம் அளிப்பீர்களா? எட் ; உன் சந்தர்ப்பம் தவறிப் போட்டுது. இப்போ ஜெனரல் அவர் களைத் தூக்கிப் போடுவார். சோமா ? ஆ. தெய்வ மே 1 எந்தக் கடமையைச் செய்யவேண்டு போராடினேனுே, எவர்களைக் காக்கவேண்டுமென்று விரைந்து வந்
தேனுே. அவர்களேக் காக்க முடியவில்லை. வன்னிப் பெருமகனே! விதி விளையாடி விட்டது. தான் என்ன செய்வேன்?
52.

எட் - ஆ. ஆ. நீயென்ன அவங்கள் பக்கம் பேசிறது. சோமா - பின் யாரைப்பற்றிப் பேசச் சொல்லுகிருய் எட்வேட் மெற்சின் (வாளை உருவி) உன் உயிர்மேல் ஆசையிருந்தால் உனது வரைபடத்தைக் கொடுத்துவிடு. எட் - ஒ. ஒ.! நீ சரியான கள்ளி. உன்னை என்ன செய்கிறேன். பார். (அங்குமிங்கும் பார்த்து துப்பாக்கியைத் தேடல்) சோமா :- நில்லங்கே..! ஒரு அடி எடுத்து வைத்தாலும் துண்டித்து விடுவேன் உன் பாதங்களை. (நெருங்குதல்) எட் - சோமா. சோமா. விளையாடாதே சோமா. வாளை. வாளைக் காட்டாதே. என்னைக் கொல்லாதே. சோமா - (அருகே இருந்த மறுவாளைக் காட்டி) உங்களைப் போல நிராயுதபாணிகளைக் கொல்லமாட்டோம். வெற்றி யார் பக்கம் என்ப தனைப் பார்த்து விடலாம் எடுத்துக் கொள். (வாட்போரில் எட்வேட் படுகாயத்துடன் நிலத்தில் வீழ்கிருன்) சோமா :- வன்னிமாதா! உன் எதிரிகளில் ஒருவனை வீழ்த்திவிட்டேன் ஆனல், நீ இருவரை இழந்து விட்டாய்.
"அவசரமாக அங்கேயிருந்த வரைபடத்தை அபகரித்துக்கொண்டு ஒடமுயலும் போது, யூவெல் அப்பக்கமாக வருகிருன். ஏதுமறி யாதவள் போல். அமைதியாக இருக்கிருள். யூவெ - (வந்து கொண்டே.) எட்வேட். எட்வேட். வட்ஸ் சே சோமா நீ என்ன செய்கிருய். (எட்வேட் இறந்து கிடப்பதைக் கண்டு பதறி) ஆ. கொலை. கொலை. * (இச்சந்தர்ப்பத்தில் சோமாவதி வெளியே ஒடுகிருள். சந்தேகம் கொண்ட யூவெல் குறிப்பாக அவளுக்குச் சுடுகிறன் . ஆயினும், துப்பாக்கிச் சூடு அவள் கரங்களைத்தான் தாக்கியது. இறந்தவள் போல் விழுந்து கிடக்கிருள். யூவெ :- இவ்வளவு நாளும் எங்களை நல்லாய் ஏமாற்றிப் போட்டே எங்கடை கப்ரன் எட்வேட்டைக் கொலை செய்து போட்டே. நீயும் செத்துப்போ. நன்றி கெட்ட நாய்கள். (அவளைக் காலால் உதைத்து விட்டுச் செல்லுகிருன்) சோமா :- (எழுந்து) தாயே வன்னிமாதா. வன்னியர்குல திலகத் தைச் சந்திக்கும் வரை என்னைக் கொன்று விடாதே. (தட்டுத்தடுமாறி எழுந்து செல்லுகிருள் )
- தி  ைர --
53

Page 39
ப கூளம் 7ம்:-
- - - - பாத்திரங்கள் :-
இடம் :- பண்டாரவன்னியன்
முனியப்பன் ஆயுதசாலை முனியப்பன்) சோமாவதி .. போதாதம்பட்டி
(முனியப்பன் வாள்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறான்)
1பண் :- என்ன தளபதியாரே வாளுடன் விளையாடுகிறீர். முல்லைத் தீவுக் கோட்டையின் சிங்கநாதமா இது. முனி :- வாருங்கள் மன்னவா! வெள்ளைக் கோட்டான்களை வெட்டி வீழ்த்த ஒரு பயிற்சியைக் கையாண்டு பார்த்தேன். பாண் :- நல்லது முனியப்பா. உளவறியச் சென்ற எமது சிங்களத்துச்
சோமாவதி என்ன ஆனாள் என்று தெரியவில்லையே... முவி :- தப்பாக எடைபோடக் கூடாது. மன்னவா. அறிவாற்றல் மிக்கவள் - ராஜதந்திரி என்பது அவளுடைய செயல்கள் எமக்கு உணர்த்தியது. அ ' ( க. பண் :- மறுக்கவில்லை... ஆனாலும் அவள் ஒரு பெண் என்பதால்... சேர்மா :- (குற்றுயிராக வருகிறாள்] மன்னிக்க வேண்டும் மன்னவா .. பண் : மகளே சோ மா வ தி ... (தாங்கி ) சொல் தாயே என்ன நடந்தது. சோமா :- சொல்ல என்ன இருக்கிறது மன்னவா... சூரியோதயம் கிடைக்குமென சென்றேன்... முடியவில்லை, அன்னை நல்லநாச்சியாரை யும், அன்பர் குமாரசிங்கம் அவர்களையும் கள்ளத்தனமாகத் தூக்கிச் சென்று தூக்கிலிட்டு விட்டார்கள். பண் :- தாயே நல்ல நாச்சி.... குமாரசிங்கா.... [ அழுது] மகளே ...... உன் இறுதிமூச்சு இருக்கும்வரை அன்னியனின் தலையை உருட்டாது விடமாட்டேன் என்று சபதம் செய்தாயே. அநியாயமாக அழித்து விட்டார்களே... தான்தோன்றி நாயகனே... இதுவென்ன சோதனை. சோமா :- வன்னி நாட்டின் விழாக்கோலம் காணத் துடித்த என் இத யம் கருகி விட்டது..... மன்னா... இதோ! அன்னியன் போட்ட திட் டத்தின் வரைபடம். இதையே என்னால் அவர்களிடம் இருந்து கவர முடிந்தது. ஆனால், மன்னார்க் கோட்டை எட்வேட் மெற்சினை ஒழித்து விட்டேன்....
54

பண் :- ( அழுதுகொண்டே சிரிக்கிறான் ) மிக்க மகிழ்ச்சி4.8ம்மா.. மிக்க மகிழ்ச்சி.
(முனியப்பன் வரைபடத்தைப் பெற்றுப் பார்க்கிறான் ) சோமா :- வாழ்க வன்னிமா... ( இறத்தல் ) புண் :- ஆ ... சோமாவதி, நீயும் போய்விட்டாயா ஏ..! வன்னி நாடே. ஏன் இன்னமும் என்னை உயிரோடு வைத்திருக்கிறாய்? மாபாவி யூவெல் என் உதிரங்களைக் கொன்றெடுத்த உன் உதிரத்தைக் குடிக் காமல் விடமாட்டேன்.
முனி ;- அரசே! வரைபடத்தின் கூற்று எனக்கு நன்கு புரிந்து விட் டது. அன்னியப் படைகள் மு ம் மு னை க ளி லு ம் இருந்து எம்மை எதிர்க்கப் போகிறார்கள். மன்னார்ப் படையும் திருகோணமலைப் படை யும் அவ்வளவு வலிதானதல்ல. ஆனால், யாழ்ப்பாணப் படை மட் டுமே யூ வெல் லி ன் தலைமையின் கீழ் வன்னி நாட்டை வளைத்துக் கொள்ளப் போகிறது. பண் :- ஆகவே ஒட்டு மொத்தமாக ய ா ழ் ப் பா ண க் கோட்டை யூவெல்லின் படை மட்டுமே பலம் பொருந்தியதாக இருக்கிறது. இல்லையா?
மனி- வலிய படை பின்வாங்கி விட்டால், மற்றைய படைகளை துவம்சம் செய்ய ஒரு வினாடி போதும். பண் : ஆகவேதான் கூறுகிறேன் தளபதியாரே! யாழ்ப்பாணத்துப் படையை எதிர்க்க நீர் தான் நம் பகமானவன். இன்றே, இப்பொழுதே, போர்க்கொடி உயரட்டும். வயல்களிலும் வரப்புக்களிலும் நாட்டின் வளத்தை வளங்கொழிக்க வைக்கும் வன்னியர்குல திலகங்கள் வரிசை வரிசையாகப் புறப்படட்டும். வீட்டுக்கொரு வீரன் வீறுகொண்டெ மட்டும்!' முழங்கட்டும் போர்ப்பறை ! புறப்படட்டும் முனியப்பன் படை !
முனி : போர்...! போர்...!! போர் !!! எனகத் தாய் நாடாம் புண்ணிய பூமியின் வட து ரு வ த் தி லே ஒரு வலிய போர். இந்தப்
போரிலே...! பண் : வீரதிலகமிட்டுச் செல்லும் உமக்கு ஒருவேளை வீரமரணம்
கிடைக்கலாமென்று துஞ்சுகிறீரா தளபதியாரே. முனி : மரணத்தைக் கண்டு மறத்தமிழன் அஞ்சமாட்டான் மன் னவா. ஒருவேளை இந்த முனியப்பன் வீரமண்ணிலே இறந்துவிட்டால் ஏற்றமிகு இன்பத் தமிழகமாம் வன்னிமாதாவைத் தரிசிக்க சந்தர்ப்பம் இன் றிப் போய்விடுமே என்ற நப்பாசை.
1.

Page 40
பண் ; முனியப்பா எனதருமை மகனே. நீ யாழ்பாடி மண்ணிலே வீரமரணமெய்தி விட்டால் மாண்புமிகு மறவர்குல மைந்தர்களாம் யாழ்பாடித் தமிழர்கள் உனக்காக ஒரு ஆலயம் அமைப்பார்கள் என் பதை மறந்துவிடாதே. சென்று வா. வென்று வா. முனி ; போர் ( வாளை ஏந்தியவாறு செல்கிருன் )
രബ திரை s
(தற்போது முனியப்பர் கோவிலாக வணங்கப்பட்டு வரும் யாழ்ப் பாணத்து புராதனக் கோயில் முனியப்பனுக்கென யாழ்நகரில் அமைக் கப்பட்ட சமாதியென வரலாறுகள் சில கூறுகின்றன)
as 6 tip 8
பாத்திரங்கள் : பண்டாரவன்னியன் சேவகன் இடம் :- தான்தோன்றி ஈசுவரர் ஆலயம் (வன்னியன் பாசறை)
(பண்டாரவன்னியன் ஈசனை நினைந்து மன்ருடுகிருன் பண் ; அலைசூழ் நகரமைந்த நாயகனே! போராற்றும் துறையுறையும் பெம்மானே ! வன்னி மைந்தர்கள் அ னை வர் க் கும் பேராற்றல்மிக்க வீரம் தந்தாய். கவிபாடும் கல்விச்செல்வமும், முப்பெரும் தமிழையும் உவந்தளித்த மூலநாயகனே ! உன்னையும் உமையவளையும் என் கண் களால் காணுகின்ற காட்சியைக் காட்டமாட்டாயா?
காவலன் ஒருவன் கறைபடிந்த உடையுடன் விரைந்து வருகிருன்) காவ : வணக்கம் மன்னவா! பண் : செந்தூரா ! என்ன இது. காவ அரசே! வீரத்தளபதி முனியப்பதேவர் யாழ்ப்பாணம் போர் முனையிலே பின்புறமாகச் சுடப்பட்டு இறந்து விட்டார். படைகள் பின் வாங்கி விட்டன, , பண் : என்ன! முனியப்பன் இறந்து விட்டான? என் வீரவாள் ஒடிந்து விட்டதா? ஐயகோ! நேருக்குநேர் நின்று போரிட முடியால் தோளுக்குப் பின்நின்று கட்டு விட்டார்கள் மாபரிவிகள்.
56
 

காவ :- மன்னர்மன்னவா எமது கோட்டைகள் யாவும் தாக்கப் பட்டுவிட்டன. முத்தரையன் எமது இரகசிய வழிகள் யாவற்றையும் மூடச்சொல்லி வெள்ளைப்படைகளை ஏவி விட்டுள்ளான். இனி இங் கிருப்பது ஆபத்து. ^ பண் :- முத்தரையன் முழுச்சுரங்க வழிகளையும் மூடிவிட்டாஞ. என்ன அக்கிரமம்,
காவ ;- எமது படைபலம் முற்றிலும் பீரங்கிப் படையிடம் அடி பணிந்து விட்டது. மாற்றுடை தரித்து வாருங்கள் எங்காவது மறைந்து விடலாம். பண் :- வெட்கமில்லை - மாணமில்லை - ரோசமில்லை. வன்னியனின் இறுதி மூச்சு இருக்கும்வரை நடக்காது. இருபெரும் செல்வங்களை இழந்தேன்? இணையில்லாத் தோழி சோமாவைப் பறி கொடுத்தேன். எதற்குமே அஞ்சாத சிங்கம் முனியப்பனையே இழந்த பின்னர் இருப்ப தும் ஒன்றுதான், இறப்பதும் ஒன்றேதான். கோழைபோல் ஓடி மறை வதிலும் பார்க்க. நேருக்குநேர் சந்தித்து விடுகிறேன். அந்தச் சண் டாளர்களை வெற்றி ! இன்றேல் வீரமரணம். ( வாளை உருவியவாறு விரைதல் போர்க்களத்தை நாடி )
anumana திரை --
களம் 9 பாத்திரங்கள் :- -
ஜெனரல் யூவெல் வொன்றிபேக் முத்தரையன் பண்டாரவன்னியன்
flourfuscir
இடம் :- முல்லைத்தீவுக் கோட்டை
(குரல்: தனியொருத்தனுக போர்க்களத்தில் குதித்த பண்டாரவன்
னியனை ஜெனரல் யூவெல் கைது செய்து முல்லைத்தீவுக் கோட்டை
வொன்றி பேக்கிடம் அழைத்துச் செல்லுகிருன்.) வொன் : (கேலியாக) வருக வருக... அஞ்சாத சிங்கமே வருக, பண் (திமிறி) வொன்றிபேக். வொன் : இவன் செய்த குற்றங்கள். யூவெ ; கொள்ளையடித்தான். கொலைசெய்தான் நம் தேசத்தவரை பண் அழகான குற்றங்கள் யூவெ : அடுக்கடுக்காக இருக்கிறது.
57.

Page 41
பண் : நான் ஆச்சரியப்பட மாட்டேன். - முத் :- (குறுக்கிட்டு) பிரபு. பார்த்தீர்களா? எவ்வளவு துடுக் காகப் பேசுகிருன். பண் : ( காறியுமிழ்ந்து) சீ. நீயும் ஒரு வன்னியனு? எமது இனம் கரும்பைப் போன்ற இனம். கட்டோடு இருக்கும்வரை எவராலும் கிட்ட முடியாமல்ப் போய்விட்டது. கோடரிக்காம்பு குலத்துக்கீனம் என்பதுபோல் நம்மவளைக் காட்டிக் கொடுத்தாய். க ய வ ர் க ளின் காலைக் கட்டிப் பிடித்தாய். பெற்ற தாயையும் பிறந்த பொன்னட் டையும் அன்னியனிடம் ஒப்படைத்தாய். அற்ப ஆசைக்கு அறம் தவளும் பூமியை அன்னியன் கையில் தவளவிட்டாய். என்ருவது ஒகு நாள் உனக்கும் உன் ஆலவட்டம் தாங்கும். இவர்களுக்கும் பாடம் புகட்டுவார்கள் என்பதை மறந்து விடாதே. வொன் : (மேசையில் தட்டி) இது நீதிமன்றம். இங்கு யாரை Այմ» அவமதிக்கக் கூடாது. பண் ; ஆகா. சொல்லித் தெரியவேண்டியிருக்கிறது இது நீதிமன் றம் என்று ( ஏளனமாகச் சிரித்தல்) வொன் : வெள்ளைக்காரன் விசாரிக்காது தண்டிக்க மாட்டான். பண் எம்மை விசாரிக்க நீ யார்? வொன் : இந்த நாட்டு அதிபதி பண் ; நீங்களாகச் சூட்டிக்கொண்ட பெயரோ? வொன் எங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்? வொ : சரணகதியாகி விட்டாய் சண்டித்தனம் பேசாதே பண் :- அது எம்முடன் பிறந்த வியாதி. வொன் : பொறு மருந்து தருகிருேம். பண் மண்டியிடமாட்டான் மறத்தமிழன் வொன் : பேசக் கற்றுவிட்டாய்.
பண் காவலர் பரம்பரையப்பா நாம் • வொன் ; சீ. பேசாதே. குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிருயா இல்லையா? பண் ; வாளுடன் வாளும், வேலுடன் வேலும் மோதும், போர்ப்
பரணியிலே இறந்துபட்டவர்களுக்கு விசாரணை செய்வதுதான் உங்கள் நாட்டுச் சட்டமோ? வொன் : ஏய். ஆத்திரத்தை மூட்டாதே, - பண்; மானம் இழந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு. நாயென் றும் பேயென்றும் சொந்த நிலத்தானைத் திட்டுமளவிற்கு. எங்கிருந் தோ அங்காடி விmாபாரிகளென வந்த நீங்கள் எங்களை ஆழ நினைப்
58

பது அம்பத்தனம். வெஞ்சினம் கொண்டெழும் எமது குவி மூச்சுக்கு முன்னுல் உன் இனம் தூசாக மாறும். அண்டிப் பிழைக்கவந்த அற் பனே 1 ( ஆத்திரத்டடன் சங்கிலியை உடைத்தெறிகிருன் ) இந்தா ஏற்றுக்கொள்.
(வொன்றிபேக்கை முரட்டுத்தனமாக அடிக்கிருஷ். அருகே நின்ற சிப்பாய் ஒருவன் சுடுதல் ) வொன் : பிடி. பிடி- சூட்டிங். பண் : ( இரத்தம் சிந்த ) சொறணை அற்றவர்களே சுட்டுவிட்டீர் களா? தாயே வன்னிமாதா. உன் புதல்வன் உன்னிடமே வருகி முன். ஏற்றுக். கொ. ள். (இறக்கிருன்)
- திரை -
முற்றும்
குறிப்பு :
இந்நாடகம் 45 நிமிடங்கள் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந் நாடகத்தை மேடையேற்றுவதற்கு அனுமதி தேவையில்லை. ஆயி இணும். மாற்றுதல் கூட்டுதல் ஆகியன செய்யும் கலைஞர்கள் எம் முடன் தொடர்புகொள்ள வேண்டும். மூன்று மணித்தியாலங்கள் கொண்ட இந் நாடகத்தில் முழுமையாக தரமுடியாமைக்கு வருந்து கிறேன். முழுவிபரம் தேவைப்படுவோர் ஆசிரியருடன் தொடர் பு கொள்ளவும்,
ஆசிரியர்
வணக்கம்
وية قة
""؟نمو،

Page 42

(4119 urmaaegs 1990f)) Q#segeEョEg) g)Qg
(4,0) loogsges@đù19)(41119.11-solus?) ழபanடுmழகி “ஞ்ன பிஞ்umnus quos o lyf, 'g')); (prostos@-a odottos@s@)(ųjųo urternsắ> loomulo 11@ ₪9@-a) 1ęs og gỉ 1999u9@ · @@q图逼g94闽99:0949:自顾 (afges@@@@raqi-a Joo-8)(JOE) loogŲos@đī)19) quom ugong), o ap 19 *@@quæssig særụ gỗ · \fềo o ap 19 : 4 Isolidomoso-fi-3 (CrosA部홍g홍rTCZ'에 영99후예)(pugoho@-ā rī-TIŤąosfi 1150) q, e uso ( 57 Quos uoso ( 19 *@@apoi uog, (ğuys-ig) :sflooooo-ri-a (ụ@aogo)(q1@19 urnogoy@@rī qi@otīgi (99@@unto) q園國低ng@劑0匈思鶴):白佩quo hnuas reg) · Op 19 **@ :419)||19%Durī0 (ajges@qørnserTTIĶĪ 1997)(googoo urmg)($s-a 19??Ų9@-ā) quicos-16 mỗio o so 'q119 · @@gguggun3 g 』」s』gnもC (ps) loog ges@ñD19)(ųjųolirmaToo Loft)pelos) uogųs įsı sığnıcsso · @ 19 *@@qorq (Qorts to os o ristes : sredogo
くくくくくく〜〜〜〜〜〜〜〜〜〜〜(????????、ィ
_--_lo._^_^
Į199ųođò@ #0.15nų9190 VQ9ơi
『T--------------------))
----. |×,

Page 43
No
21
 
 
 


Page 44
6 லி 5 5 5 5 6 3 3 $ 2 )' 5.
\ N வந்தி "
இன்று, இரசாயனப் பெ பதில் எழுதுவினைஞராகக் . வந்தி பல கலை இலக்கியங். வதைக் கண்டு நான் ம செவ்வந்தியின் பல நாடகா போட்டிகளில் பெரு மீ இங்கு குறிப்பிடத்தக்கது. களில் வாழ்க்கையின் யதார் யோடுவதை வாசகர்களாகி என்பது திண்ணம்,
வாழ்க வளர்க செல் வந்தி

7%&Au
தன்மராட்சி நகரசபை எல் பக்குள் 2-ம் வட்டாரமாகத் கழும் மீசாலையில் பிறந்த ம்பி செவ்வந்தி மகாலிங்கம் யற்கையாகவே கலை இலக் ய நோக்கம் கொண்டவர். தன்மராட்சி முத்தமிழ் கலை ன்றத்தின் ந ட க ங் க ள் எவற்றிலும் பொறுப்பான தாபாத்திரங்களை ஏ ற் று டித்ததுடன், கதை, வசனம் ஆகிய வற்றையும் எழுதித் ந்து ஆற்றிய பணிகள் பல.
பாருட்கள் கூட்டுத்தாபன தி கடமையாற்றும் தம்பி செவ் களைப் படைத்து, புகழடை கிழ்ச்சியடைகிறேன். தம்பி ங்கள் வடபிராந்திய நாடகப் பரிசில்களைத் தட்டியுள்ளமை இவரது கதைகள், கவிதை சத்தமான சம்பவங்கள் இளை ய நீங்கள் வரவேற்பீர்கள்
க தமிழ்! பின் கலை இலக்கியம்!
அன்பன் 4. பொ. செல்லையா B, SE'. (அதிபர் பளை மகாவித்தியாலயம்)