கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புது வாழ்வு

Page 1
புது !
-தாசை

வாழ்வு
JCUo リ。

Page 2

threflagii - Karagalஒn.
21.5
புது வாழ்வு
தாளையடி சபாரத்தினம்
CHUNDIKIŲ IRLS' COLLEGE வெளியிடுவோர்: திருமதி மீனா சபாரத்தினம்
உடுப்பிட்டி 2
E12 20,
AIN A115 -
விலை ரூபா 800

Page 3
ܐ
ܓ܅
*
அடுத்த வெளியீடுகள் :
குறுநாவல்கள்
தாளையடி சபாரத்தினம்
1. மறந்துவிடாதே
2. 6Gusmpfw II ? - 6)ë61832U-JII 6xfwJIT ?
 
 
 
 
 

• oooooooo
திரு.
a.
LLLLLLLLMLLLLLLLLLLL0LLLL0LLLLLLL LLLLLLLLS00L00LLYYSSi
க. சபாரத்தினம் அவர்கள்
தாளையடி - திருநெல்வேலி
we

Page 4

(p) đ5 og Go Jr
' * புது வாழ்வு? முதலிய கதைகள் தாளை யடி சபாரத்தினம் அவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துபவை. ' புது வாழ்வு” கல்கியில் பரிசு பெற்ற உயர்ந்த கதை.
s
சிறு கதை இலக்கியமாக உயிர்பெற்ற கால மிது. பழைய காலத்தில் பேரிலக்கியங்களை விரும் பிப் படிப்பதுபோல இக்காலத்தில் சிறு கதை களையே மக்கள் படித்து ரசிக்கிருர்கள். வாசகரின் மனத்தைக் கவர்த்தக்க சம்புவங்களும் வசன நடையும் கற்பனையும் சிறு கதைகளின் புகழுக்குக்
இந்த வகையில் திரு. சபாரத்தினம் மிக வெற்றிகண்டவர். சிறு வயதிலேயே நல்ல கற்பனைத் திறனுடையவர். தொடர் ந் து முயற்சிக்கும் உயர்ந்த பழக்கமுமுடையவர்.
காரணமாகின்றன.
எதிர்பாராத தடைகள் அவருடைய வசழ் வில் தொடர்ந்து குறுக்கிட்டன; அவருடைய ஆற் றலை மறைக்க முயன்றிருக்கின்றன. ஆயினும் அது மிளிர்ந்தது. வாசகர்களின் உள்ளத்தில் அவருக்கு உயர்ந்த இடம் கிடைத்தது.
சிரமங்களுக்கு நடுவிலும் எழுதினர். புகழும் ஓடிவந்தது. வீரகேசரி' அவரை ஒரு காலத்தில் உவந்து ஆதரித்தது, பிறகு மடக்கி வெளியேற்றி யது. அப்பொழுதும் அவர் சோர்ந்துவிடவில்லை.

Page 5
எழுதினார். புதினத்தை ஆசிரியராக இருந்து ம தி கும்படி நடத்தினார். புதினத்திலும் பல கதைகள் வெளிவந்தன.
"மறந் து விடாதே '' எ ன் ற குறு நாவலை (' தினகரன்” நேயர்கள் இன்னும் மறந்திருக்க மாட் டார்கள். வானொலியில் அவரது நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. எல்லாம் இன்று பழங்கதை கள் ஆகிவிட்டன.
இதில் அவருடைய படைப்பு முழுவதும் இல்லை. ஆயினும் உயர்ந்த கதைகள் என மதிக்கப் பட்டவைகள் சேர்க்கப்பட்டி ருக்கின்றன.
திரு. சபாரத்தினம் மிக இளம் பராயத் தி லேயே வாசகர்களின் அதிர்ஷ்டக் குறைவால் மறைந்து விட்டார். அதற்குள்ளாகவே தனக்கொரு தனியிடத்தை வாசகர்களிடம் பெற்றவர் இன்னும் சில வருடங்களாயினும் இருந்து எழுதுவாரா யின் எத்தனை சிறப்பைப் பெற்றிருப்பார் !
காலம் நம்முடைய கருத் துக்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைக் கொண் டிருப்பதில்லை.
திரு. சபாரத்தினம் மறைந்தாலும் அவர் உள்ளத்தை - அ வ ர் வாழ்ந்து கொண்டிருப்பதை இக்கதைத் தொகு தி நிரூபிக்கிறது.
வாசகர்களுக்கு இது பெரும் பாக்கியமே.
திருநெல் வேலி தெற்கு
க. தி. சம்பந்தர் 2-5-69

பொருளடக்கம்
அஉசு
ஊமை நாடகம்
2. ஓடமும் வண்டியும்
11
3. வண்டிக்காரன்
28
44
58
4. தந்தையும் மகனும்
5. நினைவு முகம் 6. புது வருஷப் பரிசு 7. உதவியும் பிர தியும்
ஜப்பானியன் படம்
63
70
|
9. பந்தயம்
91
99
110
10. கிழவரின் கதை
11. ஏழு ரூபாய் 12. முதுமையின் முதிர்ச்சி 13. பெண்ணின் பெருமை
14. வற்றாத நீரூற்று
119
134
149

Page 6
I 5.
1 Ꮾ .
7.
Ꭵ 8 .
19.
20.
சுனந்தாவதி as s
கடமையும் கருணையும்
ஷேட்
சைக்கிள் சக்கரம்
மனக்குகை
யார் அந்த அந்த அவன் புது வாழ்வு
(கல்கியில் பரிசு பெற்ற கதை, நாடக முறையில்
35 பக்கங்கள் முதலில் சேர்க்கப்பட்டுள்ளது )
丑54
67
181
192
2O2
214
 

பதிப்புரை வாசகர்களே !
சி நூறு க  ைதி எழுத்துக் களாலு மி , குறு நா வல் க ளி ஞ லு ம் , வானெலி நாடக அரங்கேற்றங்களினு லும் உங்கள் உள்ளங் களைக் கவர்ந்த கதாசிரிய ரும் என் அன்புக் கணவரு ம1) கிய தளையடி, சபாரத் தி ைம் அவர்கள் இறைபதமெய்தி இரண்டாண்டுகளாய் வி ட் ட ன. அன்னர் செய்த அறிவுப் பணிகளுள் * புது வாழ்வு' என்னும் இச்சிறு நூலை
முதலில் உங்களுக்குபதிப்பித்து வெளியிடுகின்றேன்.
தங்கள் ஆதரவு மேன்மேலும் கிடைக்கு மாயின் அவர் எழுதிய ஏனைய வெளியீடுகளும் கூடிய கெதியில் வெளிவரும். இப்புத்தகத்தை அழகுற அச்சிட்டுதவிய விவேகானந்த அச்சகத தாருக்கும் அச்சிட உதவிகள் செய்த அனைவருக் கும் எனது வணக்கம் உரித்தாகுக.
வீரபத்திரர் கோவிலடி இங்ங்னம்
உடுப்பிட்டி மீனு சபாரத்தினம் 30 - 5 - 69

Page 7
முதலாம் வதிப்பு: 1969
食
கிடைக்குமிடம் : மீனு சபாரத்தினம் வீரபத்திரர் கோவிலடி, உடுப்பிட்டி,
★
அச்சுப்பதிப்பு :
விவேகானந்த அச்சகம் யாழ்ப்பாணம்,
影

"' புது வாழ்வு '' (கல்கியில் பரிசு பெற்ற கதை, நாட.க முறையில் ) *கம் : அன்னம். * அன்: ஏனம்மா கம : சாப்பிட்டு விட்டாயா ? அன் : ஆமாம், எதற்காகக் கேட்கிறீர்கள்? கம் : பகல்போல நிலாக் காய்கிறதே, சற்றே
தோட்டத்தில் உலாவ அழைத்துச் செல்ல
லாமென்று கேட்டேன். அன் : எனக்குத் தூக்கம் வருகிறதம்மா, கம : என்ன ஒன்பது மணிக்குள் , நல்ல தூக்கம். அன் : உங்களுக்கென்ன நீங்கள் சொல்லுவீர்கள்,
பன்னிரண்டு மணி வரையில் நிலவை ரசித்து விட்டு காலை பத்து மணி வரையில் தூங்கு வீர்கள், நான் தான் வேலைக்காரியாச்சே, அப்படிச் செய்ய முடியுமா? காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்காவிட்டால் உங்களுக்
கெல்லாம் காலை ஆகாரம் சைபர் தான்.
* கம் : கமலா, அன் : அன்னம்.
கமல.

Page 8
கம : சரி நான் தனியே போகிறேன் , நீ போய்த்
தூங்கு .................. என் பின்னாலேயே வரு
கிறாயே, ஏன்? அன் :
பத்து மணிக்குமேல் ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்க மாட்டேன். உடனே திரும்பி
வந்துவிடுவேன். கம், :
உனக்கு ஏன் தான் இந்தப் பால் மதியில்
இவ்வளவு வெறுப்போ. அல் :
இந்த மாசத்தில் உங்களுக்கு விவாகம் நடக்கப் போகிறதல்லவா? குளிர் மதியும் தென்றலும் குழந்தைகள்போல் உங்கள் மடியில் தவழ்ந்து விளையாடுகின்றன, என் உள்ளம் ரசனை ஊற்று வற்றி மரத் துப் போய் விட்டது. அன்னம், என்னைவிட உனக்கு இரண்டு வயசு அதிகமாய்த்தானிருக்கும். உன் உள் ளத்தில் விவாகம் செய்யவேண்டுமென்ற
ஆசை தோன்றுவதில்லையா? அன் :
விவாகம் - அதை நினைக்கும் போதே எனக் குப் பயமாயிருக்கிறது. சிட்டுக் குருவிபோல் சிரித் து மகிழ்ந்து சிறகடித்துத் தி ரி யு ம் காலத்தை அது விழுங்கிவிடும். இதயத்தில் சதா சிந்தனை வலைகள் பின்னிக் கொண்டே இருக்கும். மண வ எ ழ்வு, எல்லோருக்கும் இன் பமா ன தாய் அமைந்து விடுவதில்லை. சிலருக்கு அது துன்பச்சுமையாய் விடுவ து முண்டு.
கA ;

கம : கல்யாணம் செய்து களைத்துப்போனவள்
போல் கதைக்கிறாயே. அ ன் : உள்ளத்தைச் சல்லடைக் கண்களாகத்
துளைக்கும் இந்த ஆராய்ச் சி வேண்டா மம் மா நிலாக் குடைக்கீழ் நிம்மதியாயிருந்து,
வேறு எதைப்பற்றியாவது பேசுவோம். கம : உன் முகமேன் இப்படி வெளுத்துப்போய்
விட்டது .. அன் :
என் பூழகமா? நிலா ஒளி பட்டு ஒரு வேளை சோபிக்கிறதோ என்னவோ? இன்பத்தைத் தேடிவந்த எங்களிடையே ஒரு சோக நாடகமே தொடங்கி விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எங்கே ஒரு
இன் பமான உபகதை சொல் லு கேட்கிறேன் அன் : உபகதையா ?
கம் :
ஏன் நீதான் நினைத்தவுடன் ஒரு கதை சொல்லுவாயே, உண்மையில் கதை சொல் லுந்திறன் உனக்குக் கடவுள் அ ளி த் த
ஒரு கொடை.
அன் :
கதை எழுதுவது மட்டுமல்ல, வாசித் ததையோ அறிந்ததையோ அப்படியே ரசனை கெடாமல் சொல்லு வ தும் ஒரு கலை யென்று
ஆங்கில அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். சும் : அப்படியென்று உனக்கு யார் சொன்
னார்கள் ?

Page 9
அன் :
+: : : : : :
அன் : ய ா  ேர ா சொன்னார்கள்.................... அது
போகட்டும், நீங்கள் விவாகம் முடிந்ததும் கணவன் வீட்டுக்குப் போய்விடுவீர்களா,
அல்லது...... கம : கணவனோடு தானே. போகவேண்டும், அவ
ருக்குக் கொழும்பில் வேலை. வெள்ளவத்தை யில் ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தியிருக் கிறாராம். ஆ ம ா ம் எப்பொழுதாவது கொழும்புக்குப் போயிருக்கிறாயா ?
போயிருக்கிறேனம்மா, கம :
கொழும்பில் எந்நேரமும் தேர்த்திரு விழா
போல் சனக் கூட்டமாயிருக்குமாமே, அன் : உண்மைதான் ச ன ங் க ள் எல்லோருமே
ஏதோ ரெயிலைப் பிடிக்கச் செல்பவர்கள் போல் குறுக்கும் நெடுக்கும் அவசரமாய்ச்
சென்று கொண்டிருப்பார்கள். கம் :
போன புதிதில் எல்லாம் உனக்கு ஆச்சரிய
மாயிருந்திருக்கும், இல்லையா? அன் : ஆமாம், கம : அங்கே நீ யார் வீட்டில் வேலை செய்தாய்? அன் : நான் முதன் முதல் வேலைக்கமர்ந்தது உங்கள்
வீட்டில் தானம்மா. கம : அப்போ கொழும்புக்கு ஏன் சென்றாய் ? அன் : அப்பாவோடு ஒரு முறை சென்றிருந்
தேன்...

A KN)
Ꮬ8Ꮣ f0
d
5
உன் அப்பாதான் நீ ஆறு மாசக் குழந்தை யாயிருக்கும்போதே இறந்து விட்டதாக அன்று கூறினயே.
அன்னம் நீ எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு வருஷ மாகிறது. இன்றுவரை நான் உன்னை என் உடன்பிறந்த சகோதரியைப்போலவே பா வித்து வந்திருக்கிறேன். உனக்குத் தெரியாத இரகசியம் என்னிடம் ஒன்றுமே கிடையாது ஆணுல் நீ என்னிடம் எதையோ மறைத்து வைத்திருக்கிருய், உன்னுடைய அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ள (AO Lயாதளவுக்கு நான் நம்பிக்கையற்றவளாய் விட்டேனு?
ல் : அம்மா. 0 0 O Poe
அன்னம் அழுகிருயா ? அம்மா, வேலைக்காரியாய் வந் த வளை
உயிர்த் தோழியாய்ப் வாவித்தீர்கள். அதை என்னல் மறக்க முடியாது. இன்னும் இரண்டு வாரத்தில் நீங்கள் கணவனேடு சென்றுவிடுவீர்கள் தாம்பத்ய வாழ்வை ஆரம்பிக்க, அதன் பின் உங்களோடு மனம் விட்டுப் பேசச் சந்தர்ப்பம் கிடையாமல் போனலும் போய்விடலாம். அதனுல் எண் இதயத்தை அழுத்தும் பெரும் பழுவைப்

Page 10
L. :
yøðr :
95.
6
பற்றிய சரிதையை இன்றே கூறுகிறேன் .......... அம்மா, அன்று கூறினீர்கள் உங் கள் அன்னையையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்குப் போகப்போவதாக, 5ll 16 சேய்து அப்படிச் செய்ய G6). Got Liv b...... We
ஏன் அப்படிச் சொல்லுகிருய் ?
இளத்தம்பதிகளின் காதல் வாழ்வின் அரிச்
சுவடி, தனிமையில்தான் ஆரம்பிக்கப்பட வேண்டும். அம்மா அப்பாவின் தலையீடு இன்ப வாழ்வை வேரோடு சாப்த்துவிடும். இது என் சொந்த அனுபவம். நீங்கள் எண்ணுவது போல் நான் கன்னிப்பெண் ணல்ல ; மனமானவள்,
என்ன மணமானவளா ?
ஆம். அன் பே யு ரு வா ன சுந்தரரூபனை அடைந்த பாக்கியவதி. ஆனல், அவரோடு கூடி வாழ விடாமல் தடுக்க குறுக்கே வந் தாள் என் அன்னை, பெற்றவள் பிள்ளைக்குத் தீமை செய்வாளா என்று எண்ணினேன். சரிந்தது என் இன்ப வாழ்வு. என் உள்ளம் உழுத்துப்போய் விட்டது. என் கதையை முதலிலிருந்து சொல்லுகிறேன் கேளுங்கள் . அன்ருெருநாள்.
 
 

*குலே:
*பத்ம:
குலே:
Luis LD:
குலே:
பத்ம;
குலே:
Lj5ép: குலே:
பத்ம:
7
இரவுச் சத்தங்கள் பத்மநாதா , எப்படி எங்கள் அதிர்ஷ்டம், நடுக்காட்டில் நந்தி தேவர்போல் நின்று விட்டதே பஸ். ரெயிலைத் தவிறவிட்ட போதே, சகுனம் சரியில்லையென்பது எனக்குத் தெரியும். இ எந்த இடம் குலேந்திரன். நடுக்காடு, இது தெரியவில்லையா உனக்கு? ம். நேரம் 10 மணியாகிறது. வவுனியாவுக்குக் கிட்ட வந்துவிட்டோ மென்று எண்ணுகிறேன். இப்போ என்ன செய்கிறது? சாரதி அங்கு மிங்கும் அலைகிருண். பஸ்ஸுக்கு உயிர் வரும்போல் தெரியவில்லை. இவ்வளவோடு பிரயாணத்தை நிறுத்தி விட்டு மிகுதியை நாளைக்குப் பாாத்துக்
கொள்ளலாம்.
நன்ருய்ச் சொன்னுய், இந்தக் காட்டில் எங்கே தங்கப் போ கிருய்? அதைத்தான் நானும் யோசிக்கிறேன். நன்ரூய் யோசி. கே ட் டா யா, சாரதி என்ன கூறுகிருனென்று? அதுதான் தெரி ந் த விஷயமாயிற்றே. விடியும் வரையில் பஸ் தகரா தென்று கூறு கிருன்,
* குலே: குலேந்திரன், பத்ம : பத்மநாதன்

Page 11
பத்ம:
குலே:
பத்ம:
பத்ம:
குலே:
பத்ம:
குலே:
8
இங்கிருந்து வவுனியா எவ்வளவு தூர மிருக்கும் ? என்னைக் கேட்கிருயே, எனக்கெப்படித் தெரியும்?
பத்மநாதா , வா, எவ்வளவு தூரமானுலும் நடந்தே செல்வோம்.
இந்த இருட்டிலா? வழியில் காட்டு மிருகங் களினல் ஏதாவது அபாயம் ஏற்பட்டால்? நாங்களிப்போது இருக்குமிடமும் காடு தான். அபாயம் இங்கேயும் ஏற்படலாம். தைரியமாய்ப் புறப்படு, முயற்சி பலனளிக் காமல் போகாது.
சரி உன் இஷ்டம் வா போவோம்.
பத்மநாதா, அதே பார்த்தாயா, வெளிச் சம் தெரிகிறது? வெளிச்சமென்னவோ தெரிகிறது, ஆணுல் அங்கு யாரிருக்கிருர்களோ. ஏன் தான் இப்படிப் பேசுகிருரயோ. வா நாமே போய்ப் பார்த்துவிடுவோம்.
குலே, இந்த அகால வேளையில் கதவைத்
தட்டுவது நன்ருயிருக்குமா ?
நல்ல ஆளப்பா நீ. இவ்வளவு வந்துவிட் டுத் தர்மோபதேசம் செய்கிருயே, கொஞ் சம் விலகி நில்லப்பா நான் தட்டுகிறேன்.
殿

*லட்சு: யாரது ?
குலே:
குலே:
நாங்கள்தான். அகாலவேளே யில் வந்து சிரமங் கொடுப்பதற்கு மன்னியுங் இள்.' பாதகமில்லை வந்த காரியமென்னவோ ? என் பெயர் குலேந்திரன். இவன் என் நண்பன் பத்மநாதன். யாழ்ப்பாணத்தி லிருந்து திருகோணமலை பஸ்ஸில் வந்தோம். என்ஜினில் ஏதோ பிழை ஏற்பட்டு பஸ் வழியில் நின்றுவிட்டது. அங்கிருந்து நடந்து வருகிருேம். - அப்படியா ? உள்ளே வாருங்கள். வெகு தூரம் நடந்து வருகிறீர்களா ? நன்முகக் களைத் துவிட்டீர்கள் போல் தெரிகிறது.
கொஞ்சமிருங்கள் வருகிறேன் (தூரத்தி லிருந்து) அன்னம்."
இன்னம்மா ?
இரண்டு விருந்தாளிகள் வந்திருக்கிருர்க
சோற்றுக்குத் தண்ணிரூற்றி விட்டேனே.
அதனுலென்ன, பசிகோடுதான் வந்திருக் கிருர்கள்போல் தெரிகிறது.
சரியம்மா, எப்படியும் நான் சாப்பாடு
ஆயத்தம் செய்கிறேன்.
* 6)L^-9ĩ : 6) Lo9, tẩ}.

Page 12
பத்ம:
10
(வங்துகொண்டே) உங்கள் இருவருக்கும் திருகோணமலையில்தான் வேலையா ?
இல்லை நாங்களிருவரும் கொழும்பில் வேலை பார்க்கிருேம், பஸ்ஸில் அநுராதபுரம் வரை யில் செல்லலாமென்று வந்தோம். ... இடையில் பஸ் உங்களை நிறுத்தி வைத்து விட்டது.
ஆமாம். . . காலை வரையில் எப்படி யும் பொழுதைக் கழித்துவிட்டால். நீங்கள் இங்கு தங்கிச் செல்வதில் எனக் கொரு ஆட்சேபனையுமில்லை. இப்படியான நேரத்தில் உதவுவதுதானே மனிதப் பண்பு.
என்னம்மா,. . தயாரா ? சரி வாருங் கள், சாப்பிடலாம்.
9 TL L InT L T. . . . . e o a e o a உங்களுக்கு எவ்வளவு சிரமம்.
இதில் சிரமம் என்ன இருக்கிறது. இருக் கிறதைத் தருகிருேம் பசிக்கு உண்ண, அவ்வளவுதான்,
தரங்கள் போய்வர விடை தாருங்கள். முன் பின் அறியாத எங்களுக்கு நீங்கள் செய்த உதவி மகத்தானது. இதற்குப் பிரதியாக தாங்கள் ஒன்றுமே செய்ய இயலாது.

1
ஒரு இரவு தங்க இடவசதி அளித்ததை
நீங்கள் ஏதோ பெரிய உதவியென்று புகழ் கிறீர்கள், இது கடமை. உதவிக்கும் கட மைக்கும் எவ்வளவோ வேற்றுமை இருக் கிறது.
பெருங்குடிப் பிறப்பு என்பது உங்கள் பேச் சில் தெரிகிறது. உங்கள் கணவர் கொழும் பில் உத்தியோகம் பார்க்கிருரென்று கூறி னிர்களே, அவர் விலாசத்தைக் கொடுத் தால் சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவ ரைச் சந்திக்க இலகுவாயிருக்கும். அன்னம் அப்பாவின் விலாசத்தை எழுதிக் கொடு அம்:ா.
நன்றி, நாங்கள் போய் வருகிருேம்.
போய்வாருங்கள்.
என்ன பத்மநாதா, திருப்பித்திருப்பி விலா சத்தையே பார்க்கிருயே, எழுத்துப் புரிய
வில்லையோ ? என் தலையெழுத்துத்தான். எனக்குப் புரிய வில்லை குலேன். அடக்கத்தில் சிரமமான அந்த அற்புதத் தேவதை அன்னம், என் நெஞ்சை நிரப்பிவிட்டாள். உன் கனவை நினைவாக்குவதற்குத்தான் அவள் தந்தையின் விலாசத்தை மெல்லக் கேட்டேன். மனதுக்குள் ஆசைப்பட்டால் விஷயம் நடக்காதப்பா,

Page 13
பத்ம;
குலே:
12
அவள் மணி மணியாய் ஆங்கிலத்தில் எழுதி யிருக்கிருளே, நாங்கள் அவளேப்பற்றி இரவு ஆங்கிலத்தில் பேசியதெல்லாம் ஆவளுக்குப் புரிந்திருக்குமோ ?
புரிந்திகுந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந் தது போலத்தான். நீ அவளை மணக்க விரும்புவதைத்தானே வெளியிட்டா ய், இதில் அவள் தப்புக் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது ?
குலேன், நீதான் இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்யவேண்டும். என்னை என்ன கல்யாணத்தரக னென்று எண்ணிக்கொண்ட#யா ? நிசமாகப் பேசும்போது வீணுக விளையா டாதே. கொழும்பு போய்ச் சேர்ந்ததும் நீ முதல் காரியமாக அன்னத்தின் தந்தை யைப் போய்ப் பார்க்கவேண்டும்.
கண்டு உன்னைப் பற்றி வானளாவப் LH (LA? 45
வேண்டும், உடனே அவர் தன் புதல்வியை
உனக்குத் தருவார், நீ கல்யாணம் செய்து கொள்வாய், அப்படித்தானே.
அப்படியொன்றும் என்னைப்பற்றி நீ இல் லாததும் பெஈல்லாததும் சொல்லவேண்
டாம். உண்மையைப் பேசினல் போதும்,
எப்படியும் அவளை மணந்தால் சரிதான்.
ܬܗ

பத்ம:
d. : LD:
குலே:
பத்ம:
13
சரி, எனக்கு இந்தத் தொழிலில் அனுபவம் போதாது ஆணுலும் முயற்சி செய்து பார்க் கிறேன்.
Lih... . . . . . . .... பார்ப்போம் உன் திறமையை, குலேன் நீ, விவாகத்தை முடித்து வைத் தது பெரிதல்ல, ஒரு வீடு வாடகைக்கு எடுக்கவேண்டும். இந் த விஷயத்தைச் சாதித்தால்தான் நீ உண்மையில் பெரிய சாமர்த்தியசாலி. உன் பட்டமும் வேண்டாம், பதவியும் வேண்டாம், என்னை என்பாட்டுக்குப் போக விடப்பா, அவ்வளவே போதும். குலேன் கொஞ்சம் சிந்தித்துப்பார், ஆசை யாய் மணந்த வளை அங்கே விட்டுவிட்டு நான் இங்கு ஏகாந்தியாய் வாழுகிறேன். ஒவ்வொரு கடிதத்தையும் அவள் கண்ணி ரால் எழுதுகிருள். பத்மநாதா, நான் சொல்வதைக் கேள். வெள்ளவத்தை வீட்டைப்பற்றி உனக்கு அன்று கூறினேனல்லவா. . உனக்கென்னப்ா பைத்தியமா ? என் சம் பளத்தில் எண்பத்தைந்து ரூபா வாடகை எப்படிக் கொடுக்கமுடியும் ? எல்லாவற்றையும் நான் யோசித்துத்தான் கூறுகிறேன். முன் அறையை எனக்கு ஒழித் துத்தா, நா ன் மூப்பத்தைந்து ரூபா

Page 14
Lu ğö LD:
Lu A5 LAb:
குலே!
பத்ம: குலே:
1 4
வாடகை தருகிறேன். மீதம் ஐம்பது ரூபா வையும் நீ கொடு. இதைவிடக் குறைந்க வாடகையில் வேறு எங்குமே வீடு எடுக்க (Lplgll sig5. முன் அறைக்கு முப்பத்தைந்து ரூபாவா ? இப்பொழு திருக்கும் இந்த சின்ன அறைக்கு முப்பது ரூபாதானே வாடகை, அதைப் பற்றி நீ யோசியாதே, அல்லாமலும் வேறெங்காவது குறைந்த வாடகையில் ஒரு வீடு கிடைத்தவுடன் இதை விட்டு விடலாம் சரி, உன் விருப்பம் போலவே செய். இதைவிட வேறு வழியேயில்லை. குறைந்த வாடகைக்கு வீடு கண்டுபிடிக்குமுன் உன் மனைவி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விடுவாள். அதன் பின் அவள் கொழும்புக்கு வந்து என்ன பிரயோசனம் ? ஏனப்படிச் சொல்லுகிருய் ? கல்யாண வாழ்வில் புதிதாய் இறங்கிய ஒரு பெண்ணின் கற்பனை உலகம் எத்தகை யது என்பது உனக்குத் தெரியவில்லையே. புருஷனேடு கை கோத்துக்கொண்டு பீச்சுக் கும், பாக்குக்கும், சினிமாவுக்கும் சோ9 யாய்த் திரியவேண்டுமென்ற ஆசை இல்லா மலா போய்விடும். குழந்தைகளைப் பெற்ற பின் இவைகளுக்குச் சந்தர்ப்பம் எங்கே கிடைக்கப்போகிறது.
鼻

பத்ம:
Η ό
உண்மைதான் குலேன், மணமாகாவிட் டாலும் உனக்கு உலக அனுபவம் என்னை விட அதிகந்தான், வீட்டு விஷயத்தை மறந்துவிடாதே, வெள்ளவத்தை வீட் டையே ஒழுங்குசெய். ஒழுங்கு செய்வதென்ன, வீடு என் கையில் தானிருக்கிறது. நீ மனைவியைப் புறப்பட்டு வரும்படி கடிதமெழுது, அன்னம், ஒரு சந்தோஷ சமா ச்சாரம். என்ன விஷயம், சம்பள ஏற்றமா ? இல்லை, அதைவிடப் பெரிது. உத்தியோக உயர்வா ? அதையும் விடப் பெரிது; குறைந்த வாடகையில் வீடு கிடைத்து விட்டதோ ?
ஊஹ"சம்,
பின்னே என்னவாம் ? நாளைக்காலை உன் அம்மா வருகிருளாம், தந்தி வந்திருக்கிறது. அம்மாவா, எங்கே தந்தியைக் கொடுங்கள். ஏன், என் வார்த்தையில் சந்தேகமா ? காலை எத்தனை மணிக்கு ரெயில் கொழும் புக்கு வருகிறது ?

Page 15
அன் :
பத்ம:
6
சரியாக ஆறு நாற்பத்தைந்துக்கு.
அப்போ இப்பொழுதே காருக்குச் சொல்லி வையுங்கள்.
இதுவென்ன வவுனியா என்றெண்ணி ணுயோ ? கொழும்பில் நான் நீயென்று ஆயிரம் கார்கள் டேனட்டியிட்டுக் கொண்டு வரும். நாளை ஸ்டேஷனிலேயே ஒன்றை ஒழுங்குசெய்தால் போகிறது.
th. . . . . . . . . எங்களூரில் மோட்டாரே கிடை
ஐயோ, தேவிக்குக் கோபம் வந்துவிட்டதே, இனி எனக்குக் கே எ ப் பி யும் கிடை யாது.
மறந்தேவிட்டேன். கோப்பி ஆறிப் பச்சைத் தண்ணிராங் விட்டது.
அதனுலென்ன, நாளை அம்மா வரும்போது இன்று பச்சைத் தண்ணிரை குடித்தால் குடியா முழுகிப்போய்விடும்.
போதும் உங்கள் குத்தல் பேச்சு, இங்தா ருங்கள் கோப்பி.
A
 

1 7
என்னம்மா, உண்மையாகவே புறப்பட்டு 6) "L. ni uJrr ?
ஆமாம், ஏதோ பத்து மாசம் சுமந்து பெற்ற குற்றத்துக்காகச்சொல்லவேண்டிய தைச் சொல்லிவிட்டேன். இனி உன் இஷ் டம்போல் நட. கடைசியில் அம்மா கூறிய புத் திமதியைக் கேட்காமல் விட்டோமே யென்ற நீநிச்சயம் பச்சாத்தாபப்படுவாய். அவர்களென்ன இன்று நேற்றைய நண்பர் களா? பள்ளிப் பருவத்திலிருந்து உடலும் உயிரு மாய்ப் பழகியவர்கள். அவனுக்குள்ள கெட்டிக்காரத்தனம் உன் புருஷனுக்கு இல்லாமல் போய்விட்டதே ஒட்டகம்போல் வந்து உன் “வீட்டில் குடி புகுந்து கொண்டதுமல்லாமல், மூ ன் று நேரமும் வயிறு புடைக்கச் சாப்பாடுகிருன், நாளைக்குக் குட்டிச்சுவராய்ப் போவது உன் குடும்பந்தசன். இப்படி ஏனம்மா பழி சுமத்துகிருய், சாப் பாட்டுக்கோ வாடகையாகவோ ஒன்றுமே அவர் கொடுப்பதில்லையென்று உனக்குத் தெரியுமா ?
ஏதாவது கொடுக்கிருணுவென்று உனக்குத் தெரியுமா வென்று நான் கேட்கிறேன். நீ
மனைவி, உனக்கு ஏன் உன் புருஷன் சொல்
லக்கூடாது ?

Page 16
லட்சு:
அன் :
அன் :
18
இந்தச் சின்ன விஷயங்களையெல்லாம் அவ ரிடம் கேட்டசல் என்னைப்பற்றி என் கண வர் எவ்வளவு கீழ்த்தரத்திசய் எண்ணு வார். இதில் கீழ்த்தரமாய் நினைக்க என்னடியம்மா இருக்கிறது ? நாளைக்கு நீங்கள் ஒடும் கையு மாய்ப் புறப்படும்போது அவன் செத்த மாட்டிலிருந்து உண்ணி கழர்வதுபோல மெல்ல நழுவிவிடுவனன்,
அப்பேn என்னை என்னம்மா செய்யச் சொல்லுகிருய் ? அவர்களை எப்படியும் பிரித்துவிட வேண்டும்.
அது முடியக்கூடிய காரியமா ? அவர்கள் தான் பிரியா நண்பர்களாச்சே,
விவாகமாகும் வரையில்தான் ந ட் பும் கொண்டாட்டமும், ம ன மா ன பின் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றுதான் ஆண்கள் இருக்கவேண்டும். அல்லாமலும் நண்பனென்று ஒருவனை வீட்டினுள்ளே வைத்துக்கொண்டிருந்தால் உலகம் நாலு கதையைக் கதைக்கும். உன் கணவனின் உள்ளத்தை உன்னல் வெல்லமுடியவில்லை. நீ கூறுவது எனக்கு ஆச்சரியeாயிருக்கிறது.
அன்பின் சொரூபமானவர் என் கணவர்.
அவர் உள்ளம் நொந்துவிடுமே என்றுதான்
அஞ்சுகிறேன்,

லட்சு:
gi # ?
அன் :
பத்ம:
19
ஒரு பெண் நினைத்தால் எந்தக் காரியத் தையும் சாதித்து விடலாம். ஆனல் பயந் தாங்கொள்ளியாயிருக்கக்கூடாது. நான் என்ன செய்யவேண்டும் ? உன் கணவன் சந்தோஷமாயிருக்கும்போது மெல்ல அவன் அருகில் சென்று 'உங்கள் நண்பரின் தொல்லை பொறுக்கமுடியவில்லை” என்று பழி சுமத்து. இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய நண்பர்களும் கீரியும் பாம்புமாய் விடுவார்கள். ஹா ! இவ்வளவு பெரிய அபாண்டத்தையா சுமத்தச் சொல்லுகிருய். இதைவிட நான் தற்கொலை செய்து கொள்ளுகிறேனம்மா. அவர்கள் நட்பை உன்னல் அளவிடமுடி யாது. நான் சுமத்தும் இந்தப் பழியை அவர் நம்புவாரென்பது என்ன நிச்சஆம் , இதனுல் என்னென்ன கேடுகள் விளையுமோ, என் இதயம் நடுங்குகிறது. வேண்டாம், என்னை நிம்மதியாய் இருக்கவிடு அம்மா. உம், கெடுகுடி சொற் கேளாது என்பார் கள். உன் நன்மையை உத்தேசித்தே இவ் வளவு சொன்னேன். என் கடமை முடிந் தது. இனி வாழ்வதும் தாழ்வதும் உன்னைப் பொறுத்த விஷயம் நான் வருகிறேன். நீ என்ன சமாதானம் கூறினலும் என் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இரண்டு மூன்று மாசத்துக்கு இருக்கப்போகிறே

Page 17
பத்ம:
அன் :
பத்தி:
அன்
lugt A.
20
னென்று கூறிக்கொண்டு வந்த உன் தாய் ஒரு வாரங்கூடத் தங்காமல் ஏன் போனள்?
அம்மாவின் போக்கே ஒரு அலாதி. சேர்ந் தாப்போல் இரண்டு நாள் எங்குமே தங்க மாட்டாள். ஊரிலுள்ள ஆடு, மாடு, கோழி க்ளின் நினைவு வந்ததும் ஒற்றைக்காலில் நி ன் ரு ள் போகவேண்டுஇென்று. எவ் வளவோ தடுத்தும் கேட்கவில்லை.
உண்மை அதுதானென்ருல் சரி. ஏதாவது அவளுக்கு மன வருத்தம் உண்டுபண்ணக் கூடிய விஷயம் இங்கு நடந்துவிட்டதோ என்று கேட்டேன்.
இதுவென்ன மகன் வீடா நீங்கள் பயப்பட, நான் மகள் தானே.
சரிதான் போ, மாமியை எங்கெல்லாம் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று திட்டம் போட்டிருந்தேன் தெரியுமா?
இங்கே பார்க்க என்ன இருக்கிறது? உங் களுக்குத் தெரிந்தது 'சூவும், மியூசிய" முந்தான். அதை எப்பவோ அப்பாவோடு போய் அவள் பார்த் திருக்கிருள். அப்படியா? ரொம்பச்சரி. ஆமாம், குலேன் இன்னும் வரவில்லையா? நேரம் ஆறு மணி யாகிறதே.

பத்ம:
அன் :
பத்ம:
அன் :
பத்ம:
2
வரவில்லை. அவனுக்கென்ன ஒண்டிக்கட்டை, எங்கே யாவது போயிருப்பான்.
உம், அன்னம், என்ன உன் முகம் ஒரு மாதிரி யிருக்கிறது. எப்படி இருக்கிறது.? ம். உங்களோடு நான் ஒரு விஷயம்பற்றிப் பேச வேண்டும். பெரிய பீடிகை போடுகிருயே, எது வேண் டுமோ பேசேன். அதற்கும் சுபமுகூர்த்தம் பார்க்க வேண்டுமா? இந்த வீட்டை விட்டுவிட்டு வேறெங்கா வது ஒரு சின்ன வீடு பாருங்கள். இவ்வளவு வாடகை கொடுக்க எங்களால் முடியுமா? இன்றுதான் பொறுப்புணர்ச்சியுள்ள குடும் பப் பெண்போல் பேசுகிருப். போதும் உங்கள் பரிகாசம், இந்தக் கேலி யும் விளையாட்டுந்தான் கடைசியில் அனர்த் தமாய் முடியப்போகிறது. அன்னம், என்ன இன்று இப்படிப் பேசு கிருய் ? உடனே நாங்கள் வேறு வீட்டுக்குப் போக வேண்டும்,
grgi

Page 18
அன் :
A_uéğ6 Lfb:
அன் :
பத்ம:
LuA5 to:
பத்ம:
22
அதுதான் வாடகை கொடுக்க முடியr தென்று கூறினேனே.
அன்னம், ஏதோ உள்ளக் குமுறலை உள்ளே அடக்கிக்கொண்டு மேல் பூச்சுப் பூசுகிருய் சொல் அன்னம், என்ன நடந்தது ?
ஒன்றுமே நடக்கவில்லை. குறைந்த வாடகை யில் வேறு வீட்டுக்குப் போனுல் சிரமமில் லாமல் சீவிக்கலாமே என்றுதான் கூறினேன். கொழும்பில் வீடு எடுப்பதென்ன இலகு வான காரியமா, இந்த வீட்டைக்கூடக் குலேன் எவ்வளவு சிரமப்பட்டு எடுத்தான் தெரியுமா ?
அப்படியானுல் நான் ஊருக்குப் போகிறேன். இத்த வீட்ட்ை வீட்டுவிடுங்கள்.
தயவுசெய்து கோபிக்கவேண்டாம். இனி ஒழித்துப் பயனில்லை. பாவிலே சிக்குண்ட நூலை அறுந்துபோகாமல் எடுத்துவிடலா மென்று முயற்சித்தேன். அது முடியா மற் போய்விட்டது.
நீ என்ன சொல்லுகிருய்? உங்கள் நண்பரோடு ஒரே வீட்டில் இருக்க முடியாது என்றுதான் சொல்லுகிறேன்.
ஏன் ?
擎

அன் :
பத்:ெ அன் :
பத்ம:
அன் :
பத்ம:
அல் :
பத்ம:
அன் :
23
இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அப்பாவியசு நீங்கள். இப்படியான நண் பனைப் பெற்றவனின் நெஞ்சில் துணிச்சல் ஏன் உண்டாகாமற் போகிறது. அன்னம் . (கோபத்தோடு) நண்பனின் மனைவியென்றும் பாராமல் சரச மாடப் பார்க்கிருனே அவனுக்கு இன்னுமா மதிப்புக் கொடுக்கச் சொல்லுகிறீர்கள் ? அன்னம். (ஆத்திரத்தோடு கன்னத் தில் அறைகிருன்) (விக்கிவிக்கி அழுதபடியே) அடியுங்கள். நான் தண்டிக்கப்பட வேண்டியவள்தான். (சிறுது நேர அமைதிக்குப்பின்) அன்னம், நீ சொல்வது உண்மைதானு ? (விக்குகிருள்) என்னுல் நம்ப முடியவில்லையே. குலேன் எனக்குத் துரோகம் செய்வானு ? இல்லை ஒரு பொழுதுமில்லை. அவன் விளையாட்டுப் பேச்சை நீ விபரீதமாய் எடுத்துக்கொண் டாய், நான் நம்பவே மாட்டேன். இத்தனை காலம் பழகிய நண்பன நீங்கள் எப்படிச் சந்தேகிக்க முடியும். ஒரு முறை பரீட்சை செய்து பாருங்கள், நண்பனின் வரிசுத்தம் தெரிந்துவிடும்,
பரீட்சை செய்து பார்ப்பதா ?

Page 19
பத்ம:
குலே:
பத்ம:
பத்ம:
குலே:
பத்ம:
24
ஆமாம், பரீட்சைதான், இன்றிரவு ஒரு அவசர காரியமாக நீங்கள் வெளியூர் பேஈகவேண்டியிருப்பதாக உங்கள் நண்பரி டம் கூறிவிட்டுப் போய்விடுங்கள், பின் அவருக்குத் தெரியாமில் உள்ளே வந்து படுத்துக்கொள்ளுங்கள். அப்புறம் நடப் பதைக் கவனிக்கலாம். ஐயோ, என் மூளை குளம் பி ப் போ ய் விட்டதே. பத்மநாதா, எங்கே புறப்படுகிருய் இந்த நேரத்தில் ? ஒரு அவசர காரியமாக நான் வெளியூர் போகவேண்டியிருக்கிறது.
திடீரென்று அப்படி என்ன பெரிய அலுவல் வந்துவிட்டது. காரியாலய விஷயமாய்ப் போகிறேன் வர இரண்டு நாளாகும். அதுவரையில் நீ கொஞ் சம் வீட்டைக் கவனித்துக்கொள், வீட்டைப்பற்றிய கவலை உனக்கு வேண் டாம். அதை நான் பார்த்துக்கொள்ளு கிறேன். சரி. (போய்க்கொண்டே) அன்னம் நான் போய்வருகிறேன். இன்றைக்கென்று அவருக்கு வெளியூரில் வேலை வந்துவிட்டது.

குர்ல:
அன் :
அன் :
குலே
அன் :
குலே:
25
ஏன், இன்றைக்கு என்ன விசேஷம் ?
இன்றைக்கு இந்தக் கோவிலில் நல்ல திரு விழாவா ம் , அ வ ரே ஈ டு போகவேண்டு மென்று திட்டம் போட்டிருந்தேன்.
திருவிழாத்தான் ஒவ்வொரு வருஷமும் நடக்கிறதே, காரியாலய வேலைகளை அலட் சியம் செய்ய முடியுமா. அவனென்ன செய் வான், பாவம்,
உண்மைதான், அதனுல்தான் தான் அவ
ரோடு திருவிழா வைப் பற்றி பேசவே இல்லை.
இன்னும் பத்து நாட்களுக்குத் தொடர்ந் தாற்போல் திருவிழா கொண்டாடுவார்கள். ஆமாம், ஆணுல் இன்றையப்போல் வாண வேடிக்கை இரு க் கு மே 1ா என்னவோ? v, ak , 0 0 6 D O O o y எனக்கொரு உதவி செய்வீர்களா?
என்ன ?
இரவு சுமார் பன்னிரண்டு மணியளவில் தான் வாணவேடிக்கை ஆரம்பமாகும். அச்சமயம் நீங்க ள் விழிப்பாயிருந்தால் தயவுசெய்து என்ன எழுப்பிவிடுங்கள். முற்றத்தில் நின்று பார்க்கலாம். நான் உள் விருந்தாவில்தான் தூங்குவேன். அதற்கென்ன, விழிப்பாயிருந்தால் சொல்லு கிறேன்.

Page 20
அன் :
பத்ம:
அன் :
பத்ம:
பத்ம:
குலே:
பத்ம:
t uğ tubi,
26
(மெல்லிய குரலில்) வந்துவிட்டீர்களா ? வாருங்கள் விருந்தா வுக்கு. (மெல்லிய குரலில்) விருந்தாவுக்கா? ஆமாம், இன்று அங்கேதான் படுக்கை போட்டிருக்கிறேன். சத்தம் செய்யாமல் படுத்துக்கொள்ளுங்கள்.
பன்னிரண்டு மணியடிக்கும் ஓசை (இரகசியமாக) யாரோ வருகிருர்கள் உங் கள் நண்பராய்த்தாணிருக்கும். (இரகசியமாக) சரி, சரி, சத்தம் செய்யாதே. அன்னம். . . . . . . -9) för 60Th............
யாரது ? என்ன ! பத்மநாதன ? நீ இங்கேயா இருக் கிருய் ? இருக்கிறேனென்று தெரிந்தால் வந்திருக்க மாட்டாயோ ? து ரோ கி (கன்னத்தில் அறைகிருஜன்) நண்பனென்று நம்பி நடு வீட்டில் வைத்தேனே, அதற்குக் கைமாறு செய்துவிட்டாய். ஏன் இப்படி பிரமை பிடித்ததுபோல் உட் கார்ந்திருக்கிறீர்கள் ? இன்று காரியாலயத் துக்குப் போகவில்லையா ? காரியாலயம் என்ன வேண்டியிருக்கிறது, உலகில் வாழ்ந்துதான் என்ன பயன் ? அப்பழுக்கில்லாமல் அவ ன் மீது அன்பு

L15 ud:
பத்ம:
u šlo:
27
செலுத்திதேவ ன், வளர்த்த கடா Dmitri 976ão பாய்ந்துவிட்டது. நடந்தவை யாவும் கன வாயிருந்தால் எவ்வளவு நன்ருயிருக்கும். அதைத் தான் நானு ம் சிந்திக்கிறேன்? எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் இர விரவாயே புறப்பட்டுப் போய்விட்டார். குற்றம் நிறைந்த நெஞ்சோடு அவன் எப் படிப் பேசமுடியும் ? நள்ளிரவில் எங்கு போனுனே. ses ded ஆ த் தி ர புத்தியில் மதியிழந்துவிட்டேன். நீங்கள் என் சொல்லுகிறீர்கள் ? அவன் செய்தது என்னவோ தவறுதான்? அவன் வயசு அப்படி. நான் புத்திமதி கூறி அவனைத் திருத்தியிருக்கலாம். மிருகத்தனமாய் அவன் முகத்தில் நான் அடித்திருக்கவே கூடாது. இப்படியான மனிதரா நீங்கள்? முது கெலும்பே உ ங் களு க் குக் கிடையாதா? அவரை கொலை செம்யாமல் விட்டீர்களே அதுவே பெரிதென்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். -
அவனைப்பற்றி உனக்குத் தெரியாது அன் னம். மிகவும் நெற்பமான இதயம் படைத்தவன். இந்நேரம் தற்கொலை செய் திருப்பாணுே என்று அஞ்சுகிறேன். சொல்லு

Page 21
பத்தி:
அன் :
28
அன்னம், நீ பெற்ற மகன் இப்படியான ஒரு தவறைச் செய்துவிட்டால் நீ மன்னிக்க மாட்டாயா ?
கட்டிய மனைவியைக் கறைபடுத்த முயற் சித்த ஒருவனுக்காக பரிந்தி பேசும் ஒரு
வரை இன்றுதான் நான் பார்க்கிறேன். *
போதும் உன் உபதேசம், நான் வருகிறேன். எங்கே போகிறீர்கள் ?
காரியாலயத்துக்கு.
சாப்பிடrமலா ?
எனக்குப் பசியில்லை. எப்பொழுது பார்த் தா லு ம் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறீர்கள் ? நன்ருய்த்தானிருக்கிறேன், தயவுசெய்து தொந்தரவு செய்யனமல் போ, வேளாவேளைக்குச் சாப் பிட ஈ விட்டால் உடம்பு என்னத்துக்காகும் ? பரலோகப் பிராப்தி கிட்டும். அவ்வளவு தானே. நான் அதைத் தான் எதிர்
பார்த்துக்கொண்டு வாழ்க்கையை ஒட்டு
கிறேன். உங்களை நம்பிக் கைப்பிடித்த என் கதி ?
 
 
 

I štp:
29
அன்னம், என் மீது நீ அழியா அன்பு கொண் டிருப்பது உண்மையானல் சிறிது காலத் துக்கு என்னை நிம்மதியாய் இருக்க விட்டு விட்டு உன் பெற்ருேரோடு போயிரு. இந்த நிலையில் உங்களை விட்டுவிட்டா என்னைப் போகச் சொல்லுகிறீர்கள் ? அமைதி தான் வேண்டும், இல்லாவிட்டால் என் நிலை இன்னும் மோசமாய்விடும். விக்கிரமில்லாத வெறுங் கோவிலாய் விட் டது எங்கள் தாம்பத்ய வாழ்வு. ஏணுே என் மனம் அடிக்கடி பயப்படுகிறது.
வீன க ம ன  ைத அலட்டிக்கொள்ளாதே அன்னம். எது வந்தாலும் சகித்துக்கொள் ளும் மனத்திடன் வேண்டும் . . tu 17 mi* a so e o O o o o a குலேன் வேலையை ராஜினமாச் செய்துவிட்டு எங்கோ போய்விட்டாணும். ஊரிலிருந்து அவன் தாய், தந்தை, சகோதரி எல்லோரும் அலறிக்கொண்டு இங்கு வந் திருக்கிருர்கள். "அ ண் ணு, ! உனக்குக் கூடவா தெரியாது என் அண்ணன் என்ன வானுனென்று ?" என்று அவன் தங்கை கண்ணிர் மல்க என்னைக் கேட்டாள். நான் என்ன கூற முடியும்? பேசாமல் இதயத் தைக் கல்லாக்கிக்கொண்டு வந்திருக் 5.3 pair. . . . . .......

Page 22
30
அன் : என்ன உங்கள் கண்களிலா கண்ணிர். .?
ப்த் ம: அன்னம் ஏன் என் காலைப் பிடிக்கிருய் ?
அன் ( அழுதபடியே ) சுவாமி. என் குல தெய்வமே. . நான் பழிகாரி. என்னை மன்னித்துவிடுங்கள்.
பத்ம: அன்னம்,
அன் : அம்மா போட்ட தூபம், என்னை அற்பத்
தனமாய் நடக்கத் தூண்டிவிட்டது. பெற்ற வள் பிள்ளைக் குத் துரோகம் செய்வாளோ
என்று எண்ணினேன் . அது என்
வாழ்க்கையையே சூழ்ந்துகொண்டது. பத்ம: அன்னம், நீ என்ன பிதற்றுகிருய் ? அன் உங்கள் நண்பர் நிரபராதி . உதீதமர்
es • • • • • • • • • • • • ஒரு பாவமும் அறியாதவர். உங்கள் இருவரையும் பிரிக்க அம்மா வகுத்
துத்தந்த வழியே நடந்தேன் . பத்ம (உரத்து ) நீ என்ன சொல்லுகிருய்? அன்று நடுராத்திரியில் அவன் பூனேபோல் வந்தது ஏன் ? அன் : அன்று நடந்த திருவிழாவில் வாணவேடிக் கையுமிருந்தது. வாண விளையாட்டு நடக்
கும்போது என் னை வந்து எழுப்பிவிடும்படி
கூறினேன். என் திட்டப்படியே.
பத்ம: அடி சண்டாளி, நீறு பூத்த நெருப்பா நீ.
விஷப் பாம்பே. பாழுங் கிணற்றை
靜
驗
ட

31
பசும்புற் றரை யென்று நம்ப நடித்தாயே
நாசகாரி............ அன் :
சுவா மி............... என்னால் தாங்கமுடியாத
வார்த்தை பேசாதீர்கள். பத் ம: ஆகா..................... அ வ் வ ள வும் மென்மை
யான தா உன் இதயம் ? கொடிய பழியைச் சுமத்தி ஒரு சற்குணனை வீட்டைவிட்டுத் அரத்தினா 3ய துரோகி, அப்பொழுது எங்கே போனது உன் மென்மையுள்ளம் ? உடன் பிறந்த தங்கையென்று போற்றிய உத்தமனை உதைத்துப் ப டு கு ழி யி ல் தள்ளினாயே, அதை மட்டும் உன் உள்ளம் எப்படி ஒப்புக்கொண்டது. ஐயோ, என்னால் தாங்கமுடியாது சுவாமி, பெற்றவளின் உபதேசப் போதை என் அறிவை மயக்கிவிட்டது............. மாபெரும் பாபச் செயலில் இறங்கிவிட்டது ...
என்னை மன்னித்து விடுங்கள். பத் ம: மன்னிப்பா? உனக் கா ? சதிகாரி.
ஏழேழு ஜென்மத்திலும் உனக்கு மன்னிப் புக் கிடையாது. இன்பலோகத் துக்கு வழி காட்டினாளே உன் தாய் அவளிடம் போய்
விடு. இனி உன் முகத்திலும் விழியேன் ...... அன் :
ஐயோ................ சுவாமி.. பத்ம: விடு என் காலை...
அன் :

Page 23
32
இவ்வளவு தானம் மா நான் வாழ்ந்த வாழ்வு கணவன் வீட்டைவிட்டுப் போன பின்னாடி அவரை எதிர்பார்த்து மூன்று நாட்கள்
இருந்தேன். போனவர் திரும்பவோயில்லை. கம : ஐயோ பாவம் ; உன் கணவர் என் னவானா
ரென்று இ ன் று வ ரை ஒரு தகவலும்
கிடைக்கவில்லையா ? அன் :
இல்லை. கொழும்பிலிருந்து முதலில் பிறந்த வீ ட் டு க் கு ப் போவதென்று தான் புறப் பட்டேன்.............. என் வாழ்க்கைச் சூரியனை அஸ்தமிக்கச் செய்த அன்னையிடம் மறுபடி யும் செல்ல என் உள்ளம் மறுத்த து. நேரா க யாழ்ப்பாணம் வந்தேன். உங்கள் பெற்றோ ரின் பெருங்குணம் அவர்கள் ஆதரவில்
என்னை நிறுத்திவைத்தது.
கம் :
அன்னம், எனக்கு மண மாகி நான் கொ ழும் புக்குப் போன தும் முதல் காரியமாக உன் கணவனைக் கண்டுபிடிக்க நிச்சயம் முயற்
சிப்பேன். அன் : அம்மா, உங்கள் நல்ல குணம் எனக்கு த்
தெரியாதா என்ன ? அவரை நீங்கள் ஒரு வேளை கண்டுபிடிக்கலாம்; ஆனால் இந்தப் பாபியை அவர் மறுபடி ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.
அப்படி எண்ணாதே அன் னம். நீ கூறியதி "லிருந்து உ ன கண வன் முன் கோபி யென்
கம்

33
அன் :
பது தெரிகிறது. நீ செய்த பிழை மன்னிக்க முடியாத தாயினும் அவன் உன்னை நிச்சயம்
மன்னிப்பான். கம : அன்னம், இன்று உனக்கு நிறைய வேலை
இருக்கிறது. அன்: ஏன், என்ன விசேஷம்? கல்யாணத்துக்குத்
தான் இன்னும் ஒரு வாரமிருக்கிறதே, கம : கிட்டவா, இரகசியமாய்ச் சொல்லு
கிறேன்................. இன்று மாப்பிள்ளை வரு கிறார்..................
மாப்பிள்ளை தான் உங்களைப் பார்த்து விட்
டார் என்றீர்களே.........
கம் :
மாப்பிள்ளை வருவதெல்லாம் பெண் பார்க்
கத்தான் என்று அர்த்தமா? அன் : பின் னே ஏன் வருகிறாராம் ? கம : சும்மா வருகிறார், உன் கைத் திறமையை
இன்று காட்டு பார்க்கலாம். அன் : நல்ல காலம், கைவரிசையை என்று சொல்
லாமல் விட்டீர்களே. கம : கார் வந்துவிட்டது போலிருக்கிறது, வா
நாங்கள் உள்ளே போகலாம். அன் : உள்ளே போவோம் என்று கூறிவிட்டு ஜன்
னலில் நின்று என்ன செய்கிறீர்கள் ? கம் :
உஸ் ....... சத்தம் போடாதே இப்படி வா, ஜன்னல் சேலையை விலக்கிவிடாமல் மெல்ல

Page 24
Lås ud:
குலே:
எட்டிப்பார். நீல ரை கட்டியிருக்கிருரே அவர்தான் எனக்குக் கணவனுய் வரப் போகிறவர். மறந்துபோய் மற்றவரைப்
பார்த்து விடப்போ கிருய். சரி கொஞ்சம் விலகுங்கள். G)/DfT . . . . . . . . (மயங்கி விழ்ந்து விடுகிருள்) அன்னம். ஐயோ. அம்மா
UTU 3. ..., , . அன்னமா ? சுவாமி. என்னை மன்னித்து விடுங்கள்.
அன்னம் நான் நாகரிகமற்ற காட்டுமிராண் டியைப்போல் நடந்துகொண்டேன். பிழையை மன்னிக்கும் பெருங்குணம் என்
னிடம் இல்லாமல் போய்விட்டது. உன்னை
எங்கெல்லாம் தேடி அலேக்தேன். (குலேனைப் பார்த்து) எவ்வளவு தீங்கி ழைத்துவிட்டேன்.
கவலைப்பட வேண்டாம். எல்லாம் பத்ம ந? தன் கூறி ஞ ன். அறியாத்தனத்தால் பெரிய அறிவாளிகள் கூட சிலசமயம் தவறு செய்துவிடுகிருர்கள். நான் எப்பொழுதோ அதை மறந்துவிட்டேன். உங்கள் குடும்
பத்தை மறுபடி ஒன்றுசேர்க்க வேண்டு
மென்ற ஒரே உணர்ச்சிதான் என்னிடம் எஞ்சி நின்றது.

பத்ம:
அன் :
35
இந்த சந்தோஷமான நேரத்தில் சோக நாடகத்தை நீடிக்க வேண்டாம். குலேனின் மனைவியை உனக்குப் பிடித்திருக்கிறதா, அன்னம் ? உண்மையில் உங்கள் நண்பர் அதிர்ஷ்ட சாலிதான், நீங்கள் மட்டுந்தான் இணைபிரியா நண்பர் கள் என்று எண்ண வேண்டாம். நானும் அன்னமும் கூஉத்தான். கமலா, ஒரே வீட்டில்தான் இரு குடும்பங் களின் புது வாழ்வும் மலரப்போகிறது.

Page 25

ܛ
1. ஊமை நாடகம்
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் செல் லும் பஸ், ஸ்ரான்டை விட்டுப் புறப்பட்டு விட் டது. பஸ் புறப்படும் சமயத்தில் கைப்பெட்டி யோடு ஒடிவந்தேன். பஸ் நகர்ந்து கொண்டே யிருந்தது. தெருவில் நின்ற சிலர் கைதட்டிக் கூத் குரலிட்டார்கள், "புட்போட்டில் நின்று கம்பியில்
வெளவால்போல் தூங்கியபடியே கண்டக்டர்
தலையை நீட்டிப் பின்னே பார்த்தான். நான் " சூட்கேஸோடு ? அசுர வேகத்தில் ஒடிக்கொண் டிருந்தேன், பஸ்சைத் தொடர்ந்து. கிரீச்சென்ற சத்தத்தோடு பஸ் நின்றது.
உள்ளே தாவி ஏறினேன். பந்தயக் குதிரை போல் மேல் மூச்சு வாங்க சூட்கேஸைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்தேன். கண்டக்டர் ஏதோ கூற, பிரயாணிகள் கொல்லென்று சிரித்தனர். என்ன கூறிஞனென்பது தெரியாது. ஆணுல் ஹாஸ் யம் என்னைப்பற்றியதுதான் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நானும் அசடுவழியச் சிரித்துக்

Page 26
2
கொண்டே ஆசனத்தில் எங்காவது இடமிருக்கி றதா என்று பார்வையைச் செலுத்தினேன். ஒன் றில் மட்டும் இடமிருந்தது. இடமிருந்தது என் ருல் இரண்டுபேர் இருக்கக்கூடிய ஆசனத்தில் ஒரு வர் இருந்தாரென்று அர்த்தமல்ல. இரண்டு பேருக்குரிய ஆசனத்தில் இரண்டுபேர் மட்டுமே இருந்தார்கள்.
அந்த ஆசனத்தை நோக்கி நகர் ந் தே ன். 'el. . . . . . . . . ' என்று யாரோ கீச்சுக்குரல் முனகி ஞர்கள். நான் பதறிப்போய்த் திரும்பிப்பார்த் தேன். ஒரு இளம்பெண் தன் பாதத்தைத் தட விக்கொண்டிருந்தாள். " மன்னியுங்கள் தெரியா மல் மிதித்து விட்டேன் ' என்று கூறும்போதே நாக்குக் கொன்னை தட்டியது. அவள் நிமிர்ந்து பார்த்தாள். நிர்மலமான அவள் முகத்தில் குரோ தத்தின் குறியே தென்படவில்ல்ை.
* கண்ணென்ன பொட்டையா, கொஞ்சம் பார்த்துப் போகப்படாது?’ என்று பின்னலி ருந்து ஒரு குரல் அம்புபோல்ப் புறப்பட்டது. அவனுெரு கால்சட்டை வாலிபன்,
"இந்தக்காலத்துப் பொடியள் வேண்டுமென்றே மிதித்துவிட்டு * சொறி சொறி ? என்பார்கள். அதிலே ஒரு திருப்தி அவர்களுக்கு. கை நிறைய மோதிரமணிந்திருந்த ஒரு தொப்பை மனிதரின் வியாக்கியான மிது.
 

3.
பிரயாணிகள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர் கூறியதில் அவர்கள் என்ன ஹாஸ்யத்தைக் கண்டார்களோ தெரியாது. நான் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டேன். ஏனே அப்பெண்ணை ஒருமுறை பார்க்காமல் என்னுல் இருக்க முடிய வில்லை. அக்கறை கொண்டவர்களின் பரிவான பேச்சு அவள் முகத்தைக் குங்குமமெனச் சிவக்கச் செய்துவிட்டது.
கண்ணுடிக்குள்ளால் பிரயாணிகளின் மேல் கண்ணுேட்டம் விட்டபடியே உல்லாசமாக பஸ் சைச் செலுத்திக்கொண்டிருந்தான் சாரதி. இப் பொழுது நேரம் இரவு பதினுெருமணியிருக்கும். அனுராதபுரிக்கு இன்னும் பத்துமைல் தூரந்தானி ருந்தது. கண்டக்டர் வாசலிலேயே உட்கார்க் து விட்டான். நிசப்தம் நிலவியது. பஸ்சில் பிர யாணிகள் உட்கார்ந்து தானிருந்தார்கள். ஆனல் கண்கள் மட்டும் மூடப்பட்டிருந்தன. சிலர் பக் கத்திலிருப்பவர்களின் தலையில் தங்கள் தலையை மோதிவிட்டு நிமிர்ந்து உட்காருவதும், மறுபடி யும் தூங்கி விழுவதுமாக இருந்தார்கள்.
எனக்கு மட்டும் ஏணுே தூக்கம் வரவில்லை. பக்கத்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணை அடிக்கடி திரும்பிப்பார்த்துக் கொண்டேயிருந் தேன். அந்த ஆவலை என்னல் அடக்க முடியவில்லை. நான் மட்டுமல்ல அவளும் என்னை அடிக்கடி திரும் பிப்பார்த்தாள்.

Page 27
4
அவள் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாள். ஆணுலும் ஒரு ஆசனத்துக்கு மூன்று மூன்று பேராயிருந்ததால் ஒரங்களிலுட்கார்ந்திருந்த நாங்களிருவரும் வெகு சமீபத்தில்தானிருந்தோம். பஸ் ஆடி அசைந்து செல்லும்போது எங்கள் முழந்தாள்கள் உராய்ந் தன. அவள் பதைபதைத்துக் காலை ஒதுக்கிக் கொண்டாள். நானும் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
பஸ் இப்பொழுது வவுனியாவைத்தாண்டி ஓமந்தைக்குச் சமீபமாக வந்துகொண்டிருந்தது. சிலர் உட்கார்ந்தபடியே குறட்டைவிட்டுத் தூங் கினர்கள். சிலர் முன் ஆசனத்தில் தலையை முண்டு கொடுத்துக்கொண்டு தூங்கினர். அவளும் நானும் அறைந்த சிலைபோல் உட்கார்ந்திருந்தோம். துரக்கம் எங்களே அணுகப் பயந்தது.
பிளாஸ்க்கையெடுத்து, அதன் மூடி யில் கொஞ்
சம் கோப்பியை ஊற்றி வாய்க்கருகில் கொண்டு
சென்ற நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் நீட்டினேன். கைகள் மலேரியாக் காய்ச் சல்காரனைப்போல் நடுங்கின. தீர்ப்பு வாசிக்க
ஆரம்பிக்கும் நீதவானின் முகத்தைப் பார்த்துக் *、,
கொண்டு நிற்கும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டவன் நிலையில் அப்பொழுது நானிருந்தேன். அவள் கைகளை நீட்டாமலே என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் கலவரத்தின் மெல் லிய ரேகைகள் படர்ந்திருந்தன. நாற்புறமும்

5
ஒருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு வாங்கி மட மடவென்று குடித்துவிட்டு மூடியைக் கொடுத் தாள். 'நன்றி யென் ருே "உபகாரம்" என்ருே அவள் கூறவில்லை. பெரிய பெரிய கப்பல்களையும் படகுகளையும் தன்னுள் அமிழ்த்திவிட்டு ஒன்று மறியாததுபோல் உருக்கிவார்த்த வெள்ளியென மினுங்கும் கடலைப்போ லிருந்தாள். மூடியில் நானும் கொஞ்சக் கோப்பியை வார்த்துக் குடித் தேன். அவள் உதடுகளைப் பதித்துக் குடித்த அதே யிடத்தில் என் உதடுகளும் பதிந்தன. கோப்பி தேவாமிர்தமாயிருந்தது.
அவளோடு ஒரு வசனங்கூடப் பேசத்தைரிய மில்லை. அவளுடன் கூட யாராவது பிரயாணம் செய்கிருர்களஈ என்பதையும் என்னல் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஊமை இன்பம் பிரயாண அலுப்பையே மறக்கக் செய்தது. யாழ்ப்பாணம் சீக்கிரம் வந்துதொலைந்து எங்களைப் பிரித்து விடுமோ என்ற விரக்தி நிறைந்த எண்ணந் தோன் றியது. யாழ்ப்பாணம் செல்லாமல் இந்த பஸ் வாழ்க்கை பூராவுமே எங்கள் இருவரையும் சுமந்து கொண்டு இப்படியே ஒடிக்கொண்டிருக்காதா என்று நினைத்தேன். இமைப்பொழுதில் பஸ் முறிகண்டிக்கு வந்துவிட்டது.
வழக்கம்போல் முறிகண்டியில் பஸ்ஸை நிறுத் தினர்கள். பிரயாணிகள் எல்லோரும் சோம்பல் முறித்துக்கொண்டே ஒவ்வொருவராய் இறங்கினர்

Page 28
6
கள். அவள் என்னைத் திரும்பிப்பார்த்துக்கொண்டே இறங்கினள். இறங்கியவர்கள் நேராகக் கிணற் றடிக்குச் சென்ருர்கள். ஒவ்வொருவராகக் கால் முகம் அலம்பிவிட்டு, பிள்ளை யார் கோவிலுக்குச் சென்றனர். என் கையில் வாளி அகப்பட்டதும் என் விஷயத்தைப் பார்த்துக்கொண்டு போகாமல் பின்னல் வந்தவர்களுக்கெல்லாம் தண்ணிர் அள்ளி இறைத்தேன். தொண்டு மனப்பான்மையல்லக் காரணம். அவள் இன்னும் காலலம்பவில்லை, அவ்வளவுதான். -
எல்லோருக்கும் கடைசியில் வந்திருந்தாளா ஞல் தண்ணிர் ஊற்றும்போது அவளோடு இரண்டு வசனம் பேசியிருக்கலாம். ஆனல் தன் பின்னல் பத்துப்பேர் நிற்க வந்துவிட்டாள். அவள் கால் கழுவியதுதான் தாமதம், வாளியைக் கைவிட்டு விட்டு நேரே கோவிலுக்குச் சென்றேன். பிள்ளையார் தரிசனம் முடிந்ததும், தேநீர்க் கடையில்தான் நாட்டம் சென்றது. ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்ததும் கொஞ்சம் உற்சாகமாயிருந்தது.
பஸ் நின்ற இடத்துக்கு வந்தேன். அவள் தனியே பஸ் ஸ்"ள் உட்கார்ந்திருந்தாள். சந்தர்ப் பத்தை நழுவவிடாமல், நானும் உள்ளே சென்று உட்கார்ந்தேன். பஸ்ஸுக்குள் ஒருவருமில்லை. நான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. ஆனல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட தால் வாய் திறந்து ஒரு வசனங்கூட என்னல் பேசமுடியவில்லை.

7
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " உங் கள் காலை மிதித்து விட்டேனென்று கோபமா?* என்று கேட்டேன். இது அசட்டுக்கேள்விதான், ஆனல் அச்சந்தர்ப்பத்தில் வேறு எப்படிக் கதை யைத் தொடங்குவதென்று எனக்குத்தோன்ற வில்லை. இந்த ஒரு வசனம் பேசி முடிந்ததும் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது. அவள் பதில் கூருமல் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவளுக்குப்பக்கத்தில் ஒரு பாசலிருந் தது. அதிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்தாள். நான் அதை வாங்கிக் கொண்டு 'என்னேடு பேசமாட்டீர்களா?' என்று அழாக்குறையாய்க் கேட்டேன்.
அவள் பதில் சொல்ல வாய்திறக்குமுன் ஒரு கிழவர் உள்ளே ஏறினர். அவர் எங்கள் சக பிரயாணி. நான் இருந்த ஆசனத்திலேயே அவரும் இருந்து வந்தவர். அவரைக்கண்டதும் காலை ஒதுக்கி அவருக்கு இடம்விட்டேன். சபித்துக் கொண்டே பஸ்ஸில் ஏறிய நேரந்தொடக்கம் இந்நேர வரையில் இவ் வுல க நினைவில்லாமல் நித்திரை கொண்டாரோ என்னவோ தெரியாது தனதிடத்தில் உட்கார்ந்ததும் "சாப்பிடுவதாஞல் அப்படிப் புள்ளைக்குப் பக்கத்தில் போயிருந்து சாப் பிடன் தம்பி, கோப்பி கீப்பி வாங்கிக் குடுத்தியே' என்று அக்கறையோடு விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒருபுறம் சிரிப்பும், மறுபுறம் சிவபூசைக்குள் கரடிபோல் வந்துவிட்டாரே என்று ஆத்திரமுமாயிருந்தது. -

Page 29
8
அவளைத் திரும்பிப்பார்த்தேன் நாணத்தோடு முகத்தை வேறு பக்கந்திருப்பிக்கொண்டிருந்தாள். அவள் கைப்படத்தந்த வாழைப்பழத்தைச் சாப் பிட்டு முடிக் த தும் 'திருகோணமலையில் உங்களுக்கு யாராவது உறவினர்கள் இருக்கிருர்களா?' என்று பேச்சை ஆரம்பித்தேன் அவள் என் பக்கந்திரும் பினுள். திடீரென்று காதிலறைந்தாப்போல
*கிர் கிர்’ என்று "ஹோன் அலறியது. சாரதி
வந்துவிட்டானுேவென்று பார்த்தேன். அவன் ஆச னம் வெறுமையாய்க்கிடக்தது. ஆனல் ஒரு கை ஜன்னலூடாய் 'ஹோனை' அழுத்திக்கொண்டிருந் தது. "கன்டக்டர்" தான் புறப்படும் நேரமாய் விட்டதென்பதை பிரயாணிகளுக்குத் தெரிவிக்க ஹோனடித்துக்கொண்டிருந்தான். பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய் வந்து சேர்ந்தனர். எங்கள் இன்பலோகம் இடிந்து வீழ்ந்தது
பஸ் புறப்பட்டது. ஒருவன் உற்சாகத்தோடு
பாட ஆரம்பித்தான். சிலர் சபாஷ்" போட்டுக்
 ைொண்டிருந்தனர். நாங்கள் ஊமை நாடகம் நடித் துக்கொண்டிருந்தோம். முதல் பாடியவனுக்
குப் போட்டியாக இன்னுெருவன் பாட ஆரம் ,
பித்தான். ரசிகர்கள் தங்கள் தங்களுக்குத் தெரிந்த சினிமாப்பாட்டுகளைப் பாடும்படி கேட்டார்கள், பாட்டுக்கள் அவர்களிடம் அகப்பட்டு தப்பமுடி யாமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தன பஸ் ஆனையிறவுப் பாலத்தை அடையும்போது அதிகா ஆல் இரண்டரை அல்லது மூன்று மணியிருக்கும்.

9
பாடியவர்களும், ரசிகர்களும் இப்பொழுது தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ஒன்றையொன்று தாவிப்பிடிக்க ஆவல்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு இதயங்கள் மட்டும் கிட்ட நெருங்க முடியாமல் தவியாய்த் தவித்துக் கொண்டி ருந்தன.
பஸ் பளையைத் தாண்டும்போது கி ழ க்கு வெழுத்துக்கொண்டிருந்தது. "நிறுத்துக் கொட் டியவர்களெல்லாம், இப்பொழுது நிமிர்ந்து உட் காந்தார்கள். இவ்வளவு சீக்கிரத்தில் விடிந்து விட்டதா என்று எண்ணினேன். இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாணம் போயடைந்துவிடுவோம் அப்புறம் ?
பஸ் கொடிகாமத்தைத் தாண்டிவிட்டது. இன்னும் பதிஞலு மைல் தூரந்தான் அவளோடு சேர்ந்து பிரயாணம் செய்யப்போகிறேன். அதன் பின் அவளைப் பார்க்கப்போகிறேனு? என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே பஸ் சாவகச் சேரியில் நின்றது. என்ன அவள் சாவகச்சேரி யிலேயே இறங்கப்போகிருளா? ஆம், இறங்கியே விட்டாள். கூட என் இதயமும் இறங்கியது. இறங்கும்போது அவள் என்னைப் பார்த்தபார்வை *போய் வருகிறேன்” என்று வாய்திறந்து சொல்ல முடியாத நிலை,

Page 30
10
பஸ் தகர்ந்தது, என்னைச் சுமந்துகொண்டு, இன்னும் பத் துமைல் இருக்கிறது யாழ்ப்பாணத் துக்கு, பத்து ேைலா, பத்தாயிரம் மைல்போலல் லவா இருக்கிறது. பஸ் ஆமை வேகத்தில் ஊர் கிறது. தூக்கம் கண்ணைச் சுழற்றுகிறது. நீண்ட பிரயாணத்தால் நாரி உளை வெடுக்கிறது. யாழ்ப் பாண பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும் இறங்கி னேன். அவள் கொடுத்த வாழைப்பழத்தின் தோல் நானிருந்த ஆசனத்துக்குக் கீழே இருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது. எங்கள் ஊமை நாடகத்தை அது பார்த்துக்கொண்டிருந்ததோ என்னவோ?
 
 

2. ஓடமும் வண்டியும்
பிரபல ஜவுளிக்கடையின் சொந்தக்காரரான அருணாசலம் அந்தப்பக்கத்திலேயே பெரிய பணக காரர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அந்தக் கடையை அவருடைய தந்தைதான் ஸ்தாபித்தார், தந்தைக்கு ப்பின் மகனுக்கு அது பிதிரார்ஜிதமாய் வந்து சேர்ந்தது. கஷ்டமென்பதைக் கனவிலும் அறியாத அருணாசலத்திடம் இரக்ககுணம் இம்மி பளவேனுமில்லை. சொந்தச் செலவுகளை டாம்பீக மாகச் செய்வாரேயல்லாமல் பிறர் உதவிக்கு அவர்
கை நீளவே நீளாது.
தூரத்து உறவில் தங்கை முறையான ஒரு ஏழைப்பெண் கணவனை இழந்து கைக்குழந்தை யோடு அவரிடம் பண உதவி கோரி ஒரு சமயம் வந்திருந்தாள், அப்போது அவர் நடந்து கொண்ட விதம்............? மனைவி சைகைசெய் து உள்ளே அழைத்து இரகசியமாக அவரிடம் ஏதோ கூறினாள்; வெளியே வந்த அவர் ''பணமெதற்கு, சீவிப்பதற்

Page 31
12
குத்தானே. நீ தனியே இருந்து சாப்பிடுவதற்கு எவ்வளவு பணம் தந்தாலும் போதாதே............ அதாவது நான் சொல்லவந்தது என்னவென்றால் என் மனைவிக்கு ஒத்தாசையாக இங்கேயே தங்கி விடேன் என்பதுதான்''
ஒத்தாசை என்பதன் பொருள் சமையற்காரி என்பதுதான். ஆனால் அந்தப்பெண் ஒப்புக்கொண் டாள். பிச்சையெடுக்காமல் கெளரவமாய்ச் சீவிப் பதற்கு எந்தத் தொழில் செய்தாலென்ன? அவள் வேறு வீடுகளுக்குச் சென்று கூலி வேலை செய்ய வேண்டிய நிலையில் தானேயிருந்தாள். அண்ணன் வீட்டில் எந்த வேலை செய்தாலும் மதிப்போடு இருக்கலாமல்லவா.
வருட ஏடுகள் புரண்டு கொண்டிருந்தன. கைக் குழந்தையா யிருந்த சமையற்காரியின் மகனுக்கு இப்பொழுது வயசு ஏழு. அருணாசலத்தின் செல் வப் புதல்விக்கு வயசு நாலு. இங்கேதான் சூறாவழி ஆரம்பமாகிறது. என்ன தான் சமையற்காரியானா லும் பெற்றபிள்ளையைப் பள்ளிக்கு வைக்கவேண்டு மென்ற ஆவலிருக்காதா? ஒரு நாள் தயக்கத்தோடு அருணாசலத்தின் மனைவியிடம் இது பற்றிப்பேச வாய் திறந்தவள், அவள் அதட்டிய அதட்டலில் வாயை மூடிக் கொண்டாள். வயிற்றுச் சோற்றுக்கே தாளம் போடும்போது பாழாய்ப்போன படிப்பு என்ன வேண்டிக்கிடக்கு என்று உள்ளத்தில் விரக்தி யேற்பட்டாலும் சில சமயங்களில் மகன் படிக்க வேண்டும் என்ற ஆசையுந் தலை காட்டும்.

Α: 3
அருணுசலத்தின் குமாரிக்கு ஐந்து வயசில் வெகு விமரிசையாக வித்தியாரம்பம் நடை பெற்றது. அவள் தானுண்டு தன் சமையல் வேலை யுண்டு என்று தானிருந்தாள். ஆனல் பயல் ஓடி வந்து 'அம்மா எனக்கெப்ப வாத்தியார் பாடம் சொல்லித்தருவார்?' என்று கேட்டான். எந்த அம்மாவால்தான் இதைச் சகிக்க முடியும். மகனைக் கட்டிக்கொண்டு கண்ணிர் விட்டாள்.
வீட்டுக்குப் பின்னலிருந்த மாமரச்சோலையில் குழந்தைகள் பிஞ்சுப்பருவத்தில் விளையாடுவதை யாரும் பொருட்படுத்தவில்லை. இப்போ அவனுக் குப் பத்து வயசு, அவளுக்கு ஏழு வயசு, வயசுக் கேற்ற உபாத்தியாயர் மாணுக்கன் விளையாட்டு ஆரம்பமாகும். அவள் உபாத்தியாயர், அவன் மாணுக்கன். கையில் ஒரு தடியோடு ' சொல்லு s2O5). . . . . . 4,611667 (69. . . . . . ' அவன் சொல்லுவான். கையில் கிடைக்காத பொருளைப் பெறுவதற்கு, ஆவல்படுவதுதானே மனித இயல்பு. சிறுவனின் உள்ளத்திலும் படிக்கவேண்டுமென்ற ஆசை உதித் தது. ஆன ஆவன்னு மண்ணில் எழுத அவன் கற்றுக்கொண்டான். அவள்தான் அவன் குரு.
மகளைக் கூப்பிட வந்த பூரீமதி அருணசலத்தின் கண்ணில் பட்ட சிறுவர்களின் விளையாட்டு சகிக்க முடியாத கோபத்தைத் தூண்டிவிட்டது. அவன் விரலைப் பிடித்து அவள் மண்ணில் எழுதிக்கொண் டிருந்தாள். 'தடியனுக்குப் படிப்பொன்றுதான்

Page 32
4
குறைச்சல். வசை மாரியைத் தொடர்ந்து அடியும் உதையும் வீழ்ந்தன. அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விக்கிவிக்கி அழு தான் சிறுவன்.
நாட்கள் செல்லச்செல்லச் சிறுவன் மீது அம் மணியின் மோதுதல் பலமாகிக்கொண்டே வந்தது. பெற்ற தாயினுல் சகிக்கமுடியவில்லைத்தான். போக்கிடமில்லாததால் மெளனமாகக் கண்ணீர் விட்டாள். -
பையனுக்கிப்போது பதினனு வயசாய்விட் டது. எவ்வளவுதான் ஒடி ஆடிச் சுறுசுறுப்பாக வேலைசெய்தாலும் வெகுமானம் திட்டும் அடியும் தான் கிடைத்தது. அவன் உள்ளம் விழிப்படைந் தது. பெற்ற வளை ப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு - கெளரவமாய் வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தன்னுடையதென்றெண்ணி ஒரு முடிபுக்கு வந்தான். தன் முடிபைத் தாயிடம் கூறினன். அனுபவத்தினுல் அடிபட்ட அவள் "மகனே! உன்னுல் என்ன வேலை செய்யமுடியும்? ஒருமுறை "வீட்டைவிட்டு வெளியேறினேமோ, மறுமுறை திரும்பி வாசற்படியில் கால்வைக்க முடியாது. சிறு பிள்ளை, உனக்கு உலகத்தைப் பற்றி என்ன தெரியும்?' என்று கூறினுள்.
'அம்மா நான் சிறுபிள்ளைதான் ஆனல் எனக்
கும் உணர்ச்சியிருக்கிறது. நேற்று அந்த அம்மாள் உன்னை எப்படியெல்லாந் திட்டினுள், ! போக்கற்
து.
参考

15
றவளே ' என்று திட்டினளே அதைக்கேட்டுக் கொண்டு நான் சும்மாதானே நின்றேன். பெற்ற மகன் மலைபோல வளர்ந்து நிற்க நீயெப்படிப் போக் கிடமில்லாதவளாக முடியும். எனக்கு வேலை கிடைக்கசவிட்டால் சாப்பிடாமல் கெளரவமாய்ப் பட்டினி கிடப்போம் - சுதந்தரமாய்ச் சாவோம்.
சிறுவனின் உணர்ச்சி மிக்க பேச்சு தாயின் கண்ணில் நீரைக்கொண்டு வந்தது. தந்தையைப் போலவே பிடிவாதக்காரணுய் இருக்கிருனென்று எண்ணினுள். காலங்தான் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டுமென்று மகனேடு வெளியேறினுள்.
சிறு உள்ளத்தில் தோன்றிய தன்னம்பிக்கை வரவரக் குறைந்துகொண்டே வந்தது. எங்கெல் லாமோ சுற்றியலைந்தும் யாரும் வேலை கோடுக்க முன்வரவில்லை. பெற்றதாயல்லவா? மகனுக்கு உற்சாகமூட்டினள். இரண்டு வயிற்றைக்கழுவ நாலு வீடுகளில் வேலை செய்தாள். ஆனல் தாயின் உழைப்பில் சீவிக்க அவன் ஆணுள்ளம் மறுத்தது.
ரெயில்வே ஸ்டேஷன் வாசலில் சிந்தனையில் ஆழ்ந்துபோய் நின்ற சிறுவன " " ஏய் பையா' என்று யாரோ கூப்பிட்டதும் திரும்பிப்பாார்த் தான். கூப்பிட்டவர் கைப்பெட்டியை அவனிடம் கொடுத்தார். அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அன்று அவனுக்கு இருபத்தைந்து சதம் ஊதியம் கிடைத்தது. அவனைத்தேடி வந்த தொழிலை அன்று

Page 33
16
தொடக்கம் அவன் மேற்கொண்டான். இப் பொழுதுதான் அவனுக்கு மனதில் நிம்மதியேற்
u l-ġill.
வழக்கம்போல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் * எக்ஸ்பிரஸ் ரெயினின் வருகையை எதிர்பார்த் துக்கொண்டு நின்றன். நன்ருக உடையணிந்து சீமான் போல் தோன்றிய ஒருவர் முதலாவது வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கினர். அவரை நோக்கிப் பல போட்டர்கள் ஒடிஞர்கள். அவனு மோடி னன். எ ப் படி யோ அவனுக்குத்தான் அதிர்ஷ்டமடித்தது. உண்மையில் அதை அதிர்ஷ்ட மென்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இந்த இடத்தில்தான் அவன் வாழ்க்கையில் பிரதான திருப்பமேற்பட்டது.
மோட்டாரில் சீமா னின் பெட்டி படுக்கை களை ஏற்றிவிட்டு கொடுத்த கூலியை திருப்தி யோடு பிகுபண்ணுமல் வாங்கிக்கொண்டு திரும் பியவன் ஒரு சிறு தோல்பெட்டி கீழே இருப் பதைக் கண்டான். சீமான்தான் எடுத்துக்கொள்ள மறந்தாரோ, அல்லது அவன்தான் எடுத்துவைக்க மறந்தானே தெரியாது. பெட்டியை எடுத்துக் கொண்டு வீடுநோக்கி நடந்தான். இன்று அவனுக் குக்கிடைத்த வருமானம் போதும், சீமான் தாராள மாகவே கூலி கொடுத்திருந்தார்.
A
鼻

17
கைப்பெட்டியைப் பற்றிய விபரத்தைத் தாயி டம் கூறினன். பெட்டி பூட்டி இருந்தபடியால் அவர்கள் அதைத் திறக்க முயற்சிக்கவில்லை. பத்திர
மாக அதைக் குடிசையின் மூலையில் வைத்துவிட்டு
'இந்தப்பெட்டிக்குள் விலைமதிப்பான பொருட் களுமிருக்கலாம் அல்லது வெறுந் துணிமணிகளு மிருக்கலாம். எதற்கும் அந்தச்சீமான நீ கண்டு பிடித்து இதை அவரிடம் ஒப்படைத்துவிடு' என்று கூறினுள். அவனும் அதுதான் சரியென்று ஒப்புக் கொண்டான்.
சுமார் ஒரு மாசத்திற்குப்பின் ஒருநாள் பட்டி னத்திலுள்ள பிரதான வீதியில் நின்ற மோட்டார் களில் ஒன்று பையனின் கவனத்தைக் கவர்ந்தது. இது . அந்தச் சீமானின் மோட்டாராயிருக் குமோ.. ? மோட்டாருக்குப் பக்கத்திலேயே அதன் சொந்தக்காரர் வரும்வரை காத்துக் கொண்டு நின்றன். சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து மோட்டஈரில் ஏறினுர், அவரை உற்றுப் பார்த்தான். சந்தேகமேயில்லை, அவரே தான். 'ஐயா’’ என்றழைத்துக் கொண்டு அருகே சென் ருன் சீமான் திரும்பிப் பார்த்தார்.
'அன்று உங்கள் சாமான்களை மோட்டாரில் ஏற்றும்போது ஒரு சிறு கைப்பெட்டி தவறிவிட்
うう
3

Page 34
18
சீமான் பரபரப்படைந்தார். " என்ன அந்தப் பெட்டி கிடைத்துவிட்டதா, எங்கேயிருக்கிறது?’
சீமானின் பரபரப்பைக் கண்ட அவன் அதற் குள் ஏதோ முக்கியமான அல்லது பெறுமதியுள்ள பொருட்கள் இருக்கின்றன என்று யூகித்துக் கொண்டான். தஈணுெரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டோமென்ற பெருமிதம் அவன் உள்ளத் திலேற்பட்டது. *్మ
பையனும் சீமானும் மோட்டாரில் குடிசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் போன சமயம் குடிசையில் பையனின் தாயார் இல்லை. அவள் தான். வேலை செய்யும் வீட்டுக்குச் செனறிருந்தாள். குடிசைக்குள் புகுந்த பையன் கைப்பெட்டியோடு வெளியே வந்தான். பெட்டி
யைக் கண்டதும் சீ
மேனனின் கண்கள் ஆச்சரியத் தாலும் ஆனந்தத்தஈலும் அகல விரிந்தன. அவசர அவசரமாகப் பெட்டியைத் திறந்தார். அதற்குள் அவர் வைத்த பொருட்கள் வைத்தபடியே இருந் தன. அவர் அப்பாடா என்று பெருமூச்சு விட் டார். பையனின் கோலத்தையும் குடிசையின் தோற்றத்தையும் அவர் கண்கள் ஒருமுறை அள விட்டன. அவர் உள்ளத்தில் என்ன தோன்றி யதோ?
'என் அருமைக் குழந்தாய் திருடன் என்ற மாருத பழிச் சொல்லொடு தற்கொலை செய்து கொள்ளவேண்டிய நிலையிலிருந்த என்னை நீகாப்
鞠

19
பாற்றினய், உனக்கு எப்படிப் பிரதி செய்வ வதென்றே தெரியவில்லை. * கூறிக்கொண்டே கத்தை கத்தையாகக் காசுத்தாள்களை எடுத்தார். தன்னை மறந்த நிலையில் அவர் கூறியவைகளைக் கேட்டுக்கொண்டு நின்ற பையன் அவர் பணம் தரப் போகிருர் என்பதை கவனித்ததும் 'ஐயா நான்' செய்த பிழைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டேன். உங்களிடம் கூலி பெற்ற நான் உங்கள் சாமான் களை ஒழுங்காக மோட்டாரில் ஏற்றியிருக்கவேண் டும். அப்படிச் செய்யாதது என் பிழைதான். திரும்ப உங்கள் பெட்டி உங்களிடம் வந்து சேர்ந் தது பெரிய ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றி விட்டது என்ருல் அதற்காக நான் மிகவும் சந் தோஷப்படுகிறேன். 'வேலை செய்யாமல் கூலி பெருதே' என்று என் தாயார் அடிக்கடி சொல்லு வாள். உங்களிடம் நான் பணம் பெறுவதை அம்மா அறிந்தால் மிகவும் கோபித்துக்கொள்வாள். என்னை மன்னியுங்கள்’ என்று கூறினன்.
'வயசுக்கு மேம்பட்ட புத்திசாலியான பைய னையும் அவன் அர்த்தம் நிறைந்த சாதுர்யமான பேச்சையும் கண்ட சீமான் உண்மையில் திகைத்து விட்டார். 'இவ்வளவு சிறந்த பண்பாட்டோடு ஒரு ஏழைத்தாய் தன் மகனை வளர்க்கிருளா? என்று ஆச்சரியப்பட்டார்.

Page 35
20
வேலைகளை அவசரமாக முடித்துக்கொண்டு வீடுதிரும்பிய அவள், குடிசை வாசலில் மோட்டார் நிற்பதையும், தன் மகன் ஒரு சீமானேடு உரை யாடிக்கொண்டிருப்பதையும் கண்டு ஒன்றும் புரியா மல் விழித்தாள். பையன் விபரமாக யச வையும் கூறக்கேட்ட தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள். அவளும் பணம் பெற மறுக்கவே சீமான் ஏமாற் றத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று.
மறுநாள் அதிகாலையில் குடிசை வாசலில் மோட்டார் வந்து நிற்பதைக் கண்ட தாயும் மகனும் வெளியே வந்தனர், அதே சீமானும் ஒரு அம்மாளும் மோட்டாரினின்றும் கீழே இறங் கினர். அந்த அம்மாள் பையனை அன்போடு தழுவிய படியே தாயைப்பார்த்து ' எல்லாம் என் கணவர் கூறினர். உங்கள் மகன் செய்த உதவியின் தரம் ஒருசமயம் உங்கட்குத் தெரியாமலிருக்கலாம். ஆனல் எங்களால் அதை மறக்கமுடியாது. அந்த பெட்டியிலிருந்த தஸ்தாவேஜுகள் மறைந்திருந் தால் என் கணவர் சிறைபுக வேண்டிக்கூட ஏற்பட்டிருக்கும். எங்கள் வாழ்வை அஸ்தமிக்க விடாமல் பாதுகாத்த நீங்கள் தினசரி வாழ்க்கையை நடத்தவே திண்டாடுகிறீர்கள். இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது என் மனச்சாட்சிக்கு ஒப்பவில்லை. தப்பாக எண்ணவேண்டாம், உங்களை
என் உடன்பிறந்த சகோதரியைப்போல் பாவிக்
கிறேன். உங்கள் மகனை நான் பெற்ற பிள்ளையைப்
擎

2
போல் போற்றுவேன். “என் வேண்டுகோளை மறுக் காதீர்கள்’ என்ருள்." W
** நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை அம்மா' இதுகூடப் புரிய வில்லையா அம்மா, தங்களோடு எங்களையும் வந்து . விடும்படி கேட்கிருர்கள்' என்ருன் 5 பையன் தாயைப் பார்த்து, -
மகனின் உற்சாகத்தைக் கவனித்தாள் பெற்ற அன்னை. அவள் வாழ்ந்து கெட்டவள். இன்னும் எவ்வளவு காலந்தான் வாழப்போகிருள். இன் ருே நாளையோ அவள் இவ்வுலகைப் பிரியவேண்டியவள் தானே. ஆனல் அவன்? வாழவேண்டியவன். அவர் கள் விரும்பியபடியே போனுல் ஒரு சமயம் அவள் மகன் உன்னத நிலையை அடையலாமல்லவா? பிள்ளைப் பாசம் தலை தூக்கி நின்றது. சம்மதித்து
66?L ʼ L.. rr 6ír.
காலம் மனத்தை மாற்றிவிடும்" என்பார்கள்.
ஆணுல் இவர்கள் விஷயத்தில் அப்படி நிகழவில்லை.
"என் சகோதரியைப் போலவும், என் பிள்ளையைப் போலவும் பாவிப்பேன்’ என்று அன்று கூறினுள் அந்தச் சீமாட்டி, இன்னும் அவள் தன் வாக்கைக் காப்பாற்றினுள் சமையற்காரியின் மகன் பாட சாலைக்கணுப்பப்பட்டான். மோட்டாரில் சாமா னேற்றிய போர்ட்டர் இன்று மோட்டாரிலே பாடசாலைக்குச் சென்றன். அன்னையின் அனுபவத்

Page 36
22
தழும்பேறிய புத்திமதிகள் அவனை அளவுக்குமேல் போகவிடாமல் காப்பாற்றின.
வங்கிச் சொந்தக்காரரான அந்தச் சீமா னின் அந்தரங்கக் காரியதரிசியாயிருந்த அவன், அவர் மரணத்துக்குப் பின் சொத்து பூராவும் தன் பெயருக்கெழுதி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அடைந்த ஆச்சரியத்திற்கோர் அளவில்லை. பெற்ற அன்னையைக் காட்டிலும் வளர்த்த அன்னைமேல் பன்மடங்கு அன்பும் அபிமானமும் கொண்டான்.
நிர்வாகத்தை அவன் ஏற்றுக்கொண்டதும் காலியாயிருந்த காரியதரிசி பதவிக்கு விளம்பரம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மனுக்கள் வந்து குவிந்தன. அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் ஒரு மனுவைக் கண்டதும் தீயை மிதித்துவிட்டவன்போல் துணுக்குற்றன். அவன் கண்களையே அவனுல் நம்பமுடியவில்லை.
நேர்முகப் பரீட்சைக்கு வரவழைக்கப்பட்ட வர்கள் தங்குமறையில் காத்துக்கொண்டிருந்தனர். சேவகன் வந்து ஒவ்வொருவராக முறைப்படி அனுப்பிக்கொண்டிருந்தான். அவள் முறை வந் தது. 1 மிஸ் அருணுசலம்' என்று சேவகன் கூறி யதும் உள்ளம் படபடக்க உயிரை ஒடுக்கி தன்னைத் தெரிவு செய்வார்களா, என்ற சந்தேகத்தோடு பூனைபோல் உள்ளே நுழைந்தாள். சுழல் நாற்காலி யில் ஆடம்பர உடை அணிந்த ஒரு யெளவுன

23
வாலிபன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் முகம் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்று சிந் தித்தாள். அதே நேரத்தில் சாதாரண நூற் புடவையோடு உடலில் நகையொன்றுமில்லாமல் சோகமேயுருவாய் நிற்கும் அவளைப் பார்த்ததும் அவன் உள்ளம் உருகியது.
"என்னை உனக்குத் தெரியவில்லையா?' என் முன் அவன். அவள் உற்றுப் பார்த்தாள். குரல் கூட நன்முகப்பழகிய குரல்போலிருந்தது. ஆனல் யாரென்றுதான் அனுமானிக்க முடியவில்லை.
** என்ன பேசாமல் நிற்கிருயே. ஒரு காலத் தில் உங்க ள் சமையற் காரியா யிருந்தவளின் மகனைத் தெரியுமென்று சொல்ல வெட்கமாயிருக் கிறதா?’’
''g'. . . . . . . . . நீ. நீங்களா?' அவள் கண் கலங்கியது.
அவளின் நிலை அவன் உள்ளத்தைக் கரைத் தது. 'அழாதே நான் விளையாட்டாகக் கூறியது உன் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டதா? சுப நேரத்தில் எனக்கு 'ஆன ஆவன்னவை ஆரம் பித்து வைத்தாய். அது இன்று என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. எப்பொழுதும் நீதான் என் குருவென்பதை நான் மறந்ததில்லை. ஆமாம், உத்தியோகம் பார்க்கவேண்டிய அளவுக்கு

Page 37
24
உனக்கு என்ன அப்படிக் கஷ்டம் வந்தது. உன் அப்பா அம்மா செளக்கியங் தானே ?
**செளக்கியமாய்த்தான் இருக்கிருரர்கள்.ஆனல் .அப்பாவின் ஜவுளிக்கடை வீழ்ந்து விட்டது. கடைக்கு மனேஜராக இருந்தவரே தட்டு முட்டுச் சாமான்களையெல்லாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். நான் ஏதாவது வேலை பார்த்தால் தான் குடும்பம் கஷ்டமில்லாமல் நடக்கும். இந்த வேலையை எனக்குக் கொடுத்தீர்களானல்
do o o O
"மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பாய், அப்படித்தானே’ அவள் பதில் கூரு மலிருந்தாள். அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டு 'இப் பொழுது எங்கே இருக்கிறீர்கள்? என்றன்.
அவள் விலாசத்தைக் கூறிவிட்டு விடை பெற் றுக்கொண்டாள். அவள் உள்ளத்தில் சிந்தனை அலை கள் மோதிக்கொண்டிருந்தன இந்த வேலிையை அவன் எனக்குக் கொடுப்பானு? அல்லது பழைய சம்பவங்களால் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மறையாமல் இருந்து இப் பொழுது பழிவாங்க முயற்சிப்பான? நிராதரவாய் வீடுதேடி வந்த தங்கையை சமையற்காரியிலும் கேவலமாய் நடத்தி அவள் அருமை மகனுக்கு செய்யாத கொடுமைகள் எல்லாம் செய்து. அப்பா ! அன்று அவளை நான் மாமி என்றழைத்த திற்கு என் அம்மா எவ்வளவு அட்டகாசம் செய்

25
தாள். இன்று அவனை நான் 'அத்தான்' என்று அழைத்தால். சீ பணம் வந்ததும் உறவு கொண்டாடுகிருளென்று தப்பாக எண்ணியிருப் பான். அம்மாவின் தடை உத்தரவுகளே மீறி அவன்மீது நான் எவ்வளவு அன்பாக இருந்தேன். அதை அவன் மறந்திருப்பான? அவன் மறக்கக் கூடியவனுயின் நான் ஆணு ஆவன்ன கற்பித்ததை எ ப் படி அவனுல் நினைவில் வைத் திருக்க
சிந்தனைச் சுழலில் சிக்குண்ட அவளுக்கு வீடு வந்துவிட்டதே தெரியவில்லை. மகளின் முகத்தை ஆவலோடு பார்த்தாள் அன்னே உள்ளத்தெழுந்த ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் 'வேலை உனக் குக் கிடைத்துவிட்டதா அம்மா’ என்று கேட்டாள், அச்சமயம் பேச்சுக் குரல் கேட்டு அருணுசலமும் வெளியே வந்தார்.
நிச்சயமாகக் கூறமுடியாதம்மா, வங்கியின் முதலாளி நமத்குத் தெரிந்தவர்தான். ஆனலும் வேலை கிடைக்குமென்று எப்படிக் கூறுவது.”
“என்ன ! நமக்குத் தெரிந்தவரா? அப்படி யானுல் அவரை நான் போய்ப் பார்க்கட்டுமா? அவர் பெயரென்ன?’ என்று கே ட் டா ர் அருணுசலம்.

Page 38
26
'உங்கள் முகத்திலேயே அவர் விழிப்பாரோ என்னவோ..? ஆதரிப்பாரற்று வீடு தேடி வந்த தங்கையைச் சமையற்காரியிலும் கேவலமாக
‘என்ன?’ என்று இரு ஆச்சரியக்குரல்கள் ஏக காலத்தில் ஒலித்தன .
"அவனுக்கு இந்த நிலை எப்படியேற்பட்டது என்ரு ஆச்சரியப்படுகிறீர்கள், ஒடம் வண்டி ஏறு வதும் வண்டி ஒடமேறுவதும் சக சந்தானே. பணம் ஒரு வழி நில்லா தென்ற தத்துவம் உங்கட்கு அப்போது தெரியாமற் போய்விட்டது.”
'உண்மைதானம்மா. அவன் முகத்தில் எப்படி,
நான் விழிக்க முடியும் ' என்ருர் அருணுசலம் நீண்ட ஒர் பெருமூச்சோ டு,
'நல்ல உண்மையைக் கண்டுவிட்டீர்கள். அவன் அப்படியொன்றும் பொல்லாதவனில்லை, அவன் குணம் எனக்குத் தெரியாதா? நீங்கள் ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.' என்ருள் பூணூரீமதி.
ஆமாம், உன் திட்டுக்களையெல்லாம் சகித் துக்கொண்டிருந்த பத்து வயசுப் பாலனல்ல அவன். லட்சாதிபதி இப்போது, என்னேடு பேசுவதையே
அகெளரவமாகக் கருதினுலும் கருதுவான்.”
 

27
திடீரென்று வாசலில் ஆமைபோல் ஊர்ந்து வந்து ஒரு மோட்டார் நின்றதும் சம்பாஷணையை முடித்துவிட்டு மூவரும் வாசலுக்கு வந்தனர். மோட்டாரினின்றும் இறங்கிய யெளவன வாலி பனையும் சீமாட்டி யையும் அருணுசலம் தம்பதி களுக்கு யாரென்று தெரிந்துகொள்ள முடியவில்லை. அச்சீமாட்டி 'அண்ணு’ என்றழைத்ததுந்தான் அவருக்குத் தான் காண்பது கனவா நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
'வயோதிப காலத்தில் நீங்கள் ஏன் மாமா சம் பாதித்துச் சாப்பிடவேண்டும் மனிதர் இல்லாத வர்களைப்போல். இப்பொழுதே புறப்படுங்கள். நரங்கள் நாதியற்று வந்தபோது எங்களை நீங்கள் ஆதரிக்கவில்லையா? கடமையைச் செய்யவேண்டி
யதுதானே மனித தர்மம். அல்லாமலும் என் மாமாவின் மகள் சம்பாதிப்பது எனக்கு அவமான
மில்லையா?' என்று பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து விட்டு சரளமாகப் பேசினன் அவன். அரு ணுசலம் மனைவியைத் திரும்பிப்பார்த்தார். அவள் கண்ணில் நீர் துளித்தது. மகள் மான் போல் துள் ளிக் கொண்டே உள்ளே ஒடினள். இதயம் கட்டுக் கடங்காமல் விம்மியது.

Page 39
܂ ܬܐ
3. வண்டிக்காரன்
ஒரு பக்கம் மலைச்சாரல், மறுபக்கம் பரந்த வயல் வெளி. தொடர்ந்து மழை பெய்ததால் வயலில் வெள்ளம் முட்டி நின்றது. நடுவேயிருந்த பாதை புதிதாகப் போடப்பட்டதாகையால் பள்ள மும் திட்டியுமாயிருந்தது. அப்பொழுது நடுப்பக லாயிருந்ததும் கரிய முகில் கூட்டங்களால் இருள் கவிந்திருந்தது.
அவன் மோட்டாரைப் பின்னும் முன்னும் பலமுறை தள்ளினன். அந்த அடை மழையில் அவனுக்கு உதவி செய்ய யார் முன் வரப்போகி முர்கள். மணி இரண்டுக்கு மேலாகி விட்டது. மோட்டார் யந்திரத்தில் மழையினுல் ஏதோ பிழை ஏற்பட்டுவிட்டது. சிறுவனுெருவன் மோட் டாரின் உள்ளே இருந்துகொண்டு பசியால் துடிக் கிருன், 'பாங்க் மானேஜர் ராமநாதனின் மனைவி செல்லம் பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்து வரச்சென்ற மோட்டார் இன்னும் திரும்பாத

29
தால் என்ன ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று தவியாய்த்தவிக்கிருள், நேரம் கொஞ்சம் கொஞ்ச மாகப் போய்க்கொண்டிருந்தது.
கொட்டு மழையில் தலையில் ஒரு துண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு காளைகளை முடுக்கி விட்டுக்கொண்டு வந்தான் மணியன். வீடு சமீ பித்து விட்டது என்ற சந்தோஷமோ என்னவோ காளைகளும் இரண்டு எட்டுக் கூடவைத்தே நடந் தன. வண்டி ஒன்று சமீபத்தில் வருவதைக்கண்ட மோட்டளர்ச் சாரதி ஒடிச்சென்று அதை நிறுத் தினன். மணியனுக்குக் கோபந்தான் வந்தது. "குளிரினுல் மாடுகள் சாகப்போகின்றன. இப்பொழுது ஏன் நிறுத்துகிருய்?' என்று அதட்டினன்.
'மாடுகளைப்பற்றிக் கவலை ப் படு கிரு யே, நானெரு மனிதன் இந்நேர வரையில் மழையில் நனைகிறேனே, உனக்கு இரக்கமிருக்கிறதா? மோட் டாருக்குள் பசியோடு ஒரு சிறுவன் தவிக்கிருன். மனமிரங்கி அவனே வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடு.
* உனக்கென்னப்பா பைத்தியமா? மாடுகள் செத்துப்போனுல் நாளைக்கு எனக்குச் சோறு போடு வது யார்? உன் பட்டனு?" -
வண்டியை மேலும் தட்டிவிட்டான் மணியன், வண்டி மோட்டாரைத் தாண்டும்போது ஏனே

Page 40
30
அவன் பார்வை மோட்டாரின் உள்ளே சோர்ந்து போயிருந்த சிறுவன்மேல் சென்று பதிந்தது. அதற்குமேல் வண்டியைச் செலுத்த அவன் உள்ளம் ஒப்பவில்லை. பையனை அழைத்து வண்டியில் ஏற் றிக்கொண்டு சென்றன். அவனையறியாமலே சிறு வன்மேல் ஒருவித பாசம் பிறந்தது. வழிநெடுக வாத்சல்யத்தோடு உரையாடிக் கொண் டு சென்றன். வடை முறுக்கு மசாலை வடேய். ய்." என்று யாரோ ஒரு கொட்டிலுக்குள்ளிருந்து கூவி ஞர்கள். வண்டியை நிறுத்திவிட்டு வேட்டித் தலைப்பில் முடிந்து வைத்திருந்த சில்லறையை எடுத்துக்கொண்டு போய் நாலைந்து வடைகளை வாங்கிவந்தான் மணியன். வண்டிக்காரனிடம் வாங்கிச் சாப்பிட்டால் அம்மா ஏசுவாளோ என்ற பயம் சிறுவனின் மனதிலிருந்தது. ஆனலும் அந்த நேரத்துப் பசி யாவற்றையும் மீறி நின்றது. சிறு வன் ஆவலோடு உண்பதைப் பார்க்க மணியனின் உள்ளம் களிப்பெய்தியது.
வாசலில் வண்டி நின்றது. பையன் இறங்கி யதும் பெற்றவள் ஓடி வந்து மகனை அணைத்துக் கொண்டஈள். மணியன் அவளை ஒருமுறை உற் றுப் பார்த்தான். அதே சமயம் அவளும் வண்டிக் காரனை நிமிர்ந்து பார்த்தாள். திடீரென்று அவன் வண்டியில் ஏறி வேகமாகச் செலுத்தினன். அவள் வண்டி போகும் திசையையே பஈர்த்துக்கொண்டு இலையாய் நின்ருள்,

(
3.
" வண்டிக்காரன் காசு வாங்காமல் போய் விட்டானே அம்மா' என்ருன் சிறுவன்
"கேட்டால்தானே கொடுக்கலாம்' என்று கூறினுள் செல்லம் நாத்தடுமாற.
"என்னம்மா அப்படிக் கூறுகிருய், வழியில் வடைகூட வாங்கித்தந்தானே அவன் எவ்வளவு நல்லவன்'
'ஆபத்து அந்தரமான வேளையில் - அதுவும் மழை நேரத்தில் உதவி செய்தால் இந்த வண்டிக் காரன் கூலி வாங்க மாட்டானப்பா’ இதைச் சொல்லும்போது அவள் கண்களில் நீர் முட்டியது.
அவளுடைய இதய விம்மல்களைக் கவனிப் பதற்கு அங்கு யாருமிருக்கவில்லை. சிறுவன் மட்டும் ஒன்றும் புரியாது தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்முன். அவள் உதடுகள் நடுக்கத்தோடு மெல்ல மறுபடியும் அசைந்தன. "ஆபத்து அந்தர மான வேளையில் உதவி செய்தால் இந்த. வண்டிக்காரன். கூலி வாங்க. DIT L L T Gör. ?? "ஏனம்மா அழுகிருய்” என்று கேட்டுவிட்டு தாயின் முகத்தைப் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கும் புதல்வனை மார்போடு அணைத்துக்கொண்டு அவள் வாய்விட்டே கதறிவிட்டாள். சிறுவனும் விக்கி விக்கி அழுதான்.

Page 41
32
இதயம் நிரம்ப ஏதோ இருந்துகொண்டு அவள் உயிரை வாட்டியது. குழந்தையை அணைத்த படியே என் கண்ணே. ’ என்று ஏதோ சொல்லத் தெண்டித்தாள். தொண்டை கம்மியது. மிகுந்த சிரமத்தோடு விக்கிக்கொண்டே *இந்தக் கதையைக் கேளடா செல்வமே,” என்று சொல்லத் தொடங்கினுள்:-
இங்கிருந்து சுமார் பத்து மைல் தூரத்தில் ஒர் கிராமமிருக்கிறது. அக்கிராமத்தின் வடகோடி யில் ஒரு கிழவன் தன் மகளோடு சிறு குடிசை யொன்றில் வசித்து வந்தான். அவர்கள் ஏழை களாயினும் கிழவனின் விடாமுயற்சியால் ஏதோ வயிற்றை நிரப்பக்கூடியதாயிருந்தது. ஒருநாள் திடீரென்று கிழவனுக்கு மாரடைப்பு வந்து விட் -து, மகள் புழுவாய்த் துடித்தாள். வைத்தியரை அந்த இரவிலேயே ஒடிச்சென்று அழைத்து வந் த7ள். கிழவன் ஒரு வாரமாகப் படுக்கையிலேயே கிடந்தான். நிலைமை கவலேக்கிடமாயிருந்தது. ஒரு நாள் மழை பேய்து கொண் டி ருந்த து. கிழவன் இருமி இருமி உயிரை விட்டுக்கொண் டிருந்தான். ஆளுதவியே இல்லாத அந்த ஏழைப் பெண் பணமுமில்லாமல் மிகவும் கலங்கினள். தந்தையின் கஷ்டத்தைப் பார்க்கச் சகியாமல்
து வைத்தியர் வீட்டை நோக்கி ஓடினள்.
இந்த மழையில் வண்டியில்லாமல் எப்படி பம்மா வரமுடியும்? அந்தப் பழைய மருங்தையே கொடுத்து நான் தந்த தைலத்தை நன்முக மார்
ܠܟ
து.
 

33
பில் பூசு, எல்லாம் சுகமாய்ப் போய்விடும்’ என்று கூறிவிட்டு வைத்தியர் மறுபடியும் புதினப்பத்திரி கையைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
அவள் இதயம் துடித்தது. மழையில் நடந்து வரும்படி வைத்தியரைக் கேட்பது நியாயமில்லைத் தான். ஆனல் உயிருக்கு யமனுேடு போராடும் தந்தையின் கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டு எப்படி அவளால் சும்மா இருக்கமுடியும்? கால்கள் தள்ளாட வெளியே வந்தாள். இரக்கமில்லாமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. அவளு க் கு உலகமே வெறுத்துப்போய்விட்டது. உள்ளமில் லாத உலக மத்தியில் வாழ்வதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொள்வதே மேலென்று ஒரு
கணம் சிந்தித்தாள். உள்ளத்தில் பயங்கரப் பு:பல்
விசியது. தற்கொலே அந்த நினைவிலேயே ஒரு வித பயம் நிறைந்திருந்தது.
எதிரே வண்டிக்காலே. உள்ளே சென்று எல் லோரையும் மன்ருடினுள். 'சும்மா போம்மா ஒரு ரூபா காசுக்காக இந்த மழையில் யாரம்மா வரு ாங்க??? என்று எல்லோரும் ஏகமனதாக எரிந்து விழுந்தார்கள். காசு கொடுத்தாலே யாரும் வர (Լpւգ ԱմfՄ5 நிலையிலிருக்கும் போது புண்ணியத்திற் காக யார் முன் வரப்போ கிருர்கள்? அவள் மேலும் வஈய் திறந்து ஒன்றும் பேசவில்லை. நெஞ்சு குமு றியது. பரிதாபத்தோடு எ ல் லோ ரை யு ம் பார்த்தாள்.

Page 42
34'
அவசர அவசரமாக வண்டியை காலைக்குள்ளே ஒட்டிக்கொண்டு வந்து ஒருவன் 'அப்பப்பா என்ன மழை" என்று கூறிக்கொண்டே தலையில் கட்டியிருந்த துண்டைப் பிழிந்து ஈரத்தைத் துடைத்தான். அப்பொழுது அவன் கண்கள் ஒரு வண்டிக் கூடாரத்துக்குப் பின்னல் ஒதுங்கிக் கொண்டு நின்ற பெண்ணைப் பார்த்தன. ஆச்சரி யத்தோடு அருகே சென்று 'ஏனம்மா நிற்கிருய்? மாரைக் காணவேண்டும்?' என்று விசாரித்தான்?
"அப்பாவுக்கு உடம்பு ஆபத்தாயிருக்கிறது. வைத்தியரை அழைத்துப்போக ஒரு வண்டி பார்க் கலாமென்று வந்தேன். மழையாயிருப்பதால் எல்லோரும் வர மறுக்கிருர்கள்" அவள் விக்கி விக்கி அழுவதைப் பார்க்க அவனல் சகிக்க முடிய வில்லை. 'அட இதற்காகவா தியங்கிப்போய் நிற் கிருய்? நானே வேண்டுமானல் வருகிறேன்’ என்று கூறிவிட்டு வண்டியைத் திருப்பினுன், அவள் மனம் ஏணுே பயப்பட்டது. மழையென்றும் பாராமல் ஒருவன் ஏன் வருகிருன்? பணத்திற்காகத்தானே. ஆனல் அந்தப்பணம் அவளிடமில்லை. நடுங்குங் குரலில் 'என்னிடம் பணமில்லை ஐயா, அப்பா சுகப்பட்டெழுந்ததும்.”
வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற மற்ற வண்டிக்காரர்கள் கொல்லென்று சிரித்தனர். அவற்றுள் ஒருவன் 'பலே கெட்டிக்காரியடா" என்று உரக்கக் கூறிச் சிரித்தான். வண்டிக்காரனின்

s
35
கண்கள் கோவைப் பழம்போல் சிவந்தன. அவன் முகத்தோற்றத்தைக் கண்ட கிற்ற வண்டிக்காரர்
கள். பயந்துபோய்ப் பேசாமல் நின்றனர். ‘இது
என் சொந்த விஷயம். இதைப்பற்றி யாராவது பேச வாய் திறந்தால் பற்களை உடைத்துப்போட்டு விடுவேன்’ என்று ஆத்திரம் நிறைந்த குரலில் பேசினன். பின் அவள் பக்கந் திரும்பி "ஆபத்து அந்தரமான வேளையில் உதவி செய்தால் இந்த வண்டிக்காரன் கூலி கேட்க மாட்டான் அம்மா" என்று சொல்லிவிட்டு வண்டியைத் திருப்பினுன்
வைத்தியரோடு வீட்டை அடைந்தபோது கிழவன் அசைவற்றுக் கிடந்தான். வண்டிக்கார னும் அந்தப் பெண்ணும் வைத்தியரின் முகத் தையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றனர். ஏதோ ஒரு மருத்தைக் கொடுத்துவிட்டு வைத்தியர் வண்டியில் உட்கார்ந்தார். கிழவனின் நிலை வண் டிக்காரனுக்குப் புரிந்துவிட்டது. கிழவனையும் பெண்ணையும் தனியே விட்டுப்போக முடியாமல் அவன் போனன், வண்டி போய் ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும் கிழவனின் ஆவி பிரிந்து விட்டது. அந்தப் பாவிப் பெண் தொண்டை நீர் வற்றும்வரை கத்திவிட்டு நிலத்தில் சாய்ந்து விட்டாள்.
வண்டிக்காரன் மறுபடியும் வந்தான். அவள் ஆதரவற்ற நிலையை அவன் நன்கு புரிந்துகொண்
1 ܐܷܬ݂ܩܸܚܙܹܐ̄.

Page 43
36
டிருந்தான். அவன் மட்டும் மறுபடியும் வந்திரா விட்டால் அவள் கதை எப்படி முடிந்திருக்குமோ தெரியாது. அவனை ஒரு சாதாரண வண்டிக்கார ணுகவே அவள் மதிக்கவில்லை. மனித உருவில் வந்த தெய்வமென்றுதான் எண்ணினுள்.
'நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே உன்னை என் சொந்தச் சகோதரியாகப் பாவிப்பேன். எனக்கு வேறு சகோதரர்களில்லை. என் கி ழ த் தாய் உன்னை அன்பாகப் பார்ப்பாள். நீ பிச்சையேற்று வயிறு வளர்ப்பது நன்ருயிருக்குமா? நீ அனுபவ மற்றவள். உலகில் உள்ளவர்கள் எல்லோரும் மனிதரென்று நினைக்கிருய், மனித உருவிலே மிருகங்களும் இருக்கின்றன. அவை சமய்ம் வாய்க் கும்போது தங்கள் சுபாவ குணத்தைக் காட்டி விTம் பின் நீ மிகவும் கவலைப்படுவாய், உயிரை விடவேண்டி ஏற்பட்டாலும் ஏற்படலாம்,' அவன் பரிவுமிக்க பேச்சு அவன் மீது மிகுந்த நம்பிக்கை கொள்ளச் செய்தது.
அவன் கூறியதில் கொஞ்சங்கூட்ப் பொய் கிடையாது என்பது அவன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தபோது நன்கு புலப்பட்டது. அவனுடைய
கிழத்தாயிடம் அவள் கண்ட அன்பை பெற்ற
ாயிடம் கூட அவள் காணவில்லை. அவன் வேலை க%ளச் செய்வதில் அவளுக்குத் திருப்தியேற் பட்டது நாளடைவில் குடும்ப நிர்வாகம் அவள்
戟
ܬܼܹܐ
حرا

37
கைக்கு வந்து விட்டது. 'உப்பு முடிந்துவிட்டதே? என்று அவள் கேட்பதும் "நேற்றுத்தானே வாங் கிக்கொண்டுவந்தேன் அதற்குள்ளாகவா கரைத் துக் குடித்துவிட்டாய்?’ என்று அவன் கோபிப் பதும் சர்வ சாதாரணமாய் விட்டது. அப்படி ஏற்படும் சிறிய சிறிய சண்டைகளில் நிரந்தர இன்பமிருப்பதைக் கண்டார்கள். ஆனல் கிழவி எப்பொழுதும் அவள் பக்கங்தான்.
நாட்கள் பறந்தன. கிழவி கண்களை மூடி விட்டாள். ஒருநாள் அவன் சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தான். தேநீரை அவனுக்குக் கொடுத் துக்கொண்டே ' என்ன அப்படிப் பெரி ய யோசனை? என்று கேட்டாள் அவள்.
'வயது வந்த ஒரு பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு யோசனைக் குமா பஞ்சம். உன் தாய் தந்தையர்கள் உயிரோடு மட்டும் இருந்திருந்தால் உன்னை இன்னும் இப் படியே வைத்துக்கொண் டி ரு ப் படா ர் க ளா ? ?? என்ருன்
*நானும் அப்படித்தான் யோசித்தேன்.? "என்ன நீயும் யோசித்தாயா? எப்படி?
"ஆமாம் யோசித்தேன். வயது வந்த ஒரு வாலிபனை வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டிருக் கிறேனே, அவரின் தாய் தந்தையர் மட்டுமிருந்

Page 44
38
தால் அவரைப்பற்றி இன்னும் சிந்திக்காமல் இருப்பார்களா? என்று”
'நீ இன்னும் குழந்தையாகவேயிருக்கிருய். உன் விவாகத்தைப் பற்றி நான் எவ்வளவு யோ சித்து யோசித்து மண்டையை உடைக்கிறேன் தெரியுமா?
"ஏன் உடைக்கிறீர்கள்? நான் தானே விவாகமே செய்வதில்லையென்று எண்ணிக்கொண் டிருக்கிறேனே?
‘பைத்தியக்காரி, முதலில் இப்படித்தான் சொல்லுவாய். பின் ஒரு புருஷன் வந்ததும் என் நினைவு இருக்குமோ என்னவோ?
இந்த இடத்தில் செல்லம் கதையை நிறுத்தி ணுள். அவள் கண்கள் நீரைப் பெருக்க உதடுகள் துடித்தன. ஆம் நூற்றுக்கு நூறு உண்மையைத் தான் அன்று அவர் கூறினர். இன்னெரு புருஷன் கிடைத்ததும் அந்தத் துரோகி அவரை மறந்து தான் விட்டாள். 99
'ஏனம்மா, கல்யாணமானபின் அவள் வண்டிக் காரன் வீட்டுக்குப் போகவில்லையா? என்று கேட் டான் கதையிலே ஆழ்ந்துவோயிருந்த சிறுவன்.
ܥܹܐ

39
"என்ன? இல்லையில்லை, கதையைச் சொல் லுகிறேன் கேள். 99
"அந்தப்பெண் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு விக் கி விக் கி அழுதாள். அவள் தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிருள் என்று நினைக்க அவனுள்ளம் விம்மியது அருகே சென்று அவள் கண்ணிரைத் துடைத்தான். அவளும் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்துக்கொண்டு? உங்களை நான் ஒருபொழுதும் பிரியமாட்டேன். என்று கொஞ்சும் பாவனையில் கூறினுள்.
இதன்பின் பல தினங்கள் செல்லவில்லை. அவர்களுடைய விவாகம் முடிந்துவிட்டது. வாழ்க் கைப் படகு தளப்பமில்லாமல் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது. மடியில் ஒரு பாலன்
நிம்மதியான வாழ்வு'
4 யுத்தம் ஆரம்பித்தது. லாரிகளும் மோட் டார்களும் கணக்கில்லாமல் ஓட ஆரம்பித்தன. வண்டிக்காரர்கள் பாடு தலையில் கை வைத்துக் கொண்டு உட்காரவேண்டியதாய் விட்டது. கஷ் டத்தோடு கொஞ்சக்காலம் சீவித்தார்கள். வறுமை அவர்களை வதைத்தது. வாழ்க்கையிலே புது அத் தியாயம் ஆரம்பித்தது.'
*ஒரு நாள் அவன் முகம் வஈட்டமடைந்து காணப்பட்டது. குழந்தையை மடியில் வைத்துக்

Page 45
40
கொண்டு இரு கன்ன்ங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.”
செல்லம் கதையை நிறுத்திவிட்டு சிறுவனத் தழுவினுள். அவள் இதயம் பொருமியது. ' என் செல்வமே. உன்மீது அவர் தன் உயிரையே வைத் திருந்தாரடா' என்று கூறும்போது அவள் தொண்டை கரகரத்தது.
"என்னம்மா, என்மீது என்று கூறுகிருயே’
'கண்ணே. கதையைக் கேளடா. ه ه ه’’
"அந்தப் பெண்ணும் அருகே உட்கார்ந்து கொண்டு, என்ன இன்றைக்கு முகம் ஒரு மாதிரி இருக்கிறது. உடம்புக்கென்ன? என்று கேட்டாள்.
'அந்த வீட்டுக்கு வேலைக்காரியுமவள்தான், எஜமானியும் அவள்தான். கணவனைப்பற்றிய கவலை ஒன்றைத்தவிர வேறு எவ்வித கவலேயும் அவளுக்கில்லை. புருஷனைப்பற்றிய நினைவு வருவ தற்குக்கூட சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. சாப்பாட்டு நேரந்தவிர்ந்த மற்ற நேரங்களில் அவர் அவளோடு அதிகமாகேேபசு வதில்லை. அவர் வேலைகளில் ஒன்றும் தவற விடாமல் அவள் அக்கறையோடு செய்ததால் ஒருவரோடு ஒருவர் பேசவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.”
 
 

(
41
"ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்கு திடீரென்று ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அன் ருெருநாள் ஆபீஸால் வந்தவர் மிகவும் சோர் படைந்தவராகக் காணப்பட்டார். அதை அவள் கவனித்தாளானலும் ஒன்றுமே கேட்காமல் காப்பி யையும் டிபனையும் கொண்டுவந்து மேசையில் வைத்தாள். ஆனல் அவர் அன்று சாப்பிடவே யில்லை. அன்று தலைவலி, மறுநாள் சுரம், சுமார் ஒரு மரசகாலம் வடுக்கையிலேயே கிடந்துவிட்டார். இரவு பகல் கண்விழித்தாள். டாக்டர் கூறிய நேரத்தில் ஒரு நிமிஷங்கூடப் பிசகாமல் மருந்து கொடுத்தாள். சுருங்கச்சொன்னுல், டாக்டர் மருந்தைக் கொடுத்தார். அவள் உயிரைக் கொடுத் தாள். 'எனக்காகக் கஷ்டப்பட்டு உன் குழந்தை யைத் தவிக்க விட்டு விடாதே" என்று அவர்
அடிக்கடி கூறுவார். ஆனல் அதை அவள் லட்சியம்
செய்யவில்லை. தான் இறந்துவிட்டாலும் தன் குழந்தையை அவர் கவனிப்பார் என்ற நம்பிக்கை அவளிடம் வேரூன்றியிருந்தது.'
* ஆபீஸ்"க்குப் போக ஆரம்பித்து விட்டார். அவர் சீக்கிரம் சுகப்பட்டெழுந்தது அவளுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது. அவர்களிடையே இருந்த நாணத்திரை இப்போ கொஞ்சம் விலகி விட்டது. அளவு மீறிய அன்பு விதியோடு சேர்ந்து விளையாடியது. உள் விருந்தையில் தூங்கியவள்
6

Page 46
42
அவர் கட்டிலைப் பகிர்ந்துகொண்டாள். வேலைக் காரியாக வந்தவளின் ஏவலை நிறைவேற்ற வேலைக் காரிகள் காத்துக் கிடந்தனர். பையன் பாடசாலை யில் சேர்க்கப்பட்டான். பையன் பாடசாலைக்குப் போவதற்கும் வருவதற்கும் கார் நியமிக்கப் பட்டது. இது இரகசிய நாடகமல்ல, உலகறிய இருவரும் பதிவுக் கல்யாணம் செய்துகொண் டனர். வாழ்க்கையில் என்று மறியாத சுக போகத்தை அவள் இப்போது அனுபவித்தாள். அவரது பரிசுத்தமான போ க் கு அவளை ஆகர்ஷித்தது.'
* இன்ப சாகரத்தில் உல்லா சமாகச் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கைப்படகு வழியில் பெரும் புயலை எதிர்பார்க்கவில்லை."
கதை செனல்லிவந்த செல்லம் இடையில் அதை நிறுத் திவிட்டுப் பெருமூச்சு விட்டாள். கண்கள் அழுது அழு து சிவந்துபோயிருந்தன. பையன் பது மைபோல் கண்ணைக் கசக்கிக்கொண்டிருந் தான். அவள் கூறிய கதையின் சாராம்சம் பைய னுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும் தாய் அழு வதைப் பார்த்து அவனும் அழுது கொண்டிருந் தான். அவள் கதையை ஆரம்பித்தாள்.
* எப்படியோ எட்டுப்பத்து வருடங்களின்
பின் சாந்த சொரூபியான அந்த வண்டிக்காரன்
சீங்கப்பூரால் வந்துவிட்டதை அவள் கண்டாள்.
| ܬܟ
 

43
தன் கரம் பற்றிய கணவனை - குணத்தின் குன்றை நேருக்கு நேராகச் சந்தித்த தும் அவள் செய்வ தறியாது உள் ளந் தீய்ந்தாள். எவ்வளவு ஆவலோடு தன் மனைவியையும் மகனையும் பார்க்க அந்தப் பழைய குடிசையை நோக்கி அவன் ஓடினானோ என் பதை நினைக்கும்போது ஏனோ அவள் உள்ளம் வெடித் து விட வில்லை வண்டியில் ஏற்றிவந்த து தன் செல்வப் புதல்வனென்று தெரிந்தும் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு திரும்பிச் சென்ற அந்தத் தெய்வம்.............. மகனே , அதுதான் உன் அப்பா..............'' ஓவென் றலறிக் கொண்டே தரை யில் சாய்ந்தாள், பையன் அம்மா, அம்மா என்று அலறினான். தாய் இறந்துவிட்டாள் என் றெண்ணி யது அந்த இளம் உள்ளம்.
அபீஸால் அப்பொழுதுதான் வந்த இராம நாதன் இக்காட்சியைக் கண்டு திகைத் துப் போனான் • செல்லம், செல்லம்' என்று அலறினான். அவள் கண்கள் சிறிது திறந்தன. 'இரண்டு அன்புக் கணவர்களிடையே அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறாள் பாவம்'' என்று அவள் உதடுகள் லேசாக முணுமுணுத்தன.
எங்கோ இருந்தவளை இழுத்து வந்து அவன் வாழ்க்கையில் புகுத்திய விதி, அவளை மறுபடி எங்கே கொண்டு செல்கிறதோ? இது தான் அதன் விளையாட்டு,

Page 47
4. தந்தையும் மகனும்
கடையிலிருந்த தளபாடங்கள், ஒரு காலத்தில் நன்முக வியாபாரம் நடந்த இடமென்பதை நிரூ பித்தன. வியாபாரம் குன்றி தளபாடங்களை விற் கும் நிலைக்கு வந்துவிட்டார் கணபதிப்பிள்ளை. அவர் ஆயிரமாயிரமாய்ச் சம்பாதித்தவர். ஆனல் ஒரு செல்லாக் காசுகூட மீதப்படுத் தி வைக்கவில்லை. மீதப்படுத்தவேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கவில்லை. முத்துப்பேசல் அவருக்கு நான்கு பையன்கள். எல்லோரையும் நன்முகப் படிப்பித்து நல்ல நிலைக்குக் கொண்டுவந்து, மணமும் செய்து வைத்துவிட்டார். நால்வரும் நாலு மூலையில் நல்ல உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தனர். அவருக்கும் வயசு வந்துவிட்டது. இனிமேலும் அவர் கையடித்துச் சாப்பிடவேண்டியதில்லை. விழுதுவிட்ட ஆலமரமல்லவா அவர்.
தளபாடங்களை விற்றதில் அவருக்கு நாலா யிரம் ரூபா வரையில் கிடைத்தது, அவ்வளவையும்
 

ཡིན་ན་ 45
நான்கு பிள்ளைகளுக்கும் பிரித்து அனுப்பிவிட்டு மூத்தவனுக்குக் கடிதமெழுதினர். "இந்தப் பணத்தை நான் வைத்துச் செலவு செய்தால் கரைந்து விடும் என்று உங்கள் நால்வருக்கும் பிரித்து அனுப்பி விட்டேன். எனக்கும் தள்ளாமை மேலோங்கி விட்டது. சிறிது நாட்களுக்கு உன் ணுேடு தங்குவதாக உத்தேசம். வருகிற சனிக் கிழமை காலை ஷ்டேஷனுக்கு வா?
சனிக்கிழமை காலை மூத்த மகன் ஷ்டேஷ னுக்கு வந்து அப்பா வை வரவேற்றன். மகன் மோட் டாரைச் செலுத்திச் செல்ல பின்னுல் உட்கார்ந்
திருந்த கிழவனுருக்கு பெருமை பிடிபடவில்லை.
மோட்டார் பங்களா வாசலில் நின்றது. கணபதிப் பிள்ளை உள்ளே சென்ருர், வேலைக்காரன் பேசினில் தண்ணிர் கொண்டுவந்து வைத்தான். சிறிது நேரத் தில் காப்பியும் வந்துவிட்டது. கிழவனுரின் கண் கள் மருமகளைக் காணவில்லேயே என்று தேடின. நடைபாதையில் வந்து கொண்டிருக்த கணபதிப் பிள்ளையின் கவனத்தைப் பாதி திறந்திருந்த கதவு கவர்ந்தது. உள்ளே எட்டிப் பார்த்தார். பஞ்சு மெத்தை கொண்ட மஞ்சத்தில் கொடிபோலப்
படர்ந்து கிடந்தாள் ஒரு பாவை, தூரத்தே நின்ற மகனை உரக்கக் கூப்பிட்டு ' என்னடா! உனக்கு
மூளையிருக்கா? உன் மனைவிக்கு உடம்பு சரியில்லை யென்று இந்நேர வரையில் எனக்கு ஒரு சொல் லுச் சொன்னுயா?" என்று கேட்டார் ஆத்திரத்
தோடு,

Page 48
40
என்னப்பா, இப்படிச் சொல்கிறீர்கள் அவள் இன்னும் படுக்கையால் எழுந்திருக்கவில்லை. இப்போ நேரம் ஏழுமணிதானே யாகிறது''
''படுக்கையால் எழும்பவில்லையா? நான் பிள்ளைக்கேதோ உடம்பு சரியில்லையென் றெண்ணி விட்டேன்.''
''நல்ல காலம் இறந்துவிட்டேனென்று எண்ண வில்லையே. வந்ததும் வராத துமாய் மகனுக்குப் போதனை ஆரம் பித்துவிட்டாரே அருமையான அப்பா'' என்று கூறிக்கொண்டே வெளியே வந்த மனைவியை எரித் துவிடுபவன் போல் உற்றுப் பார்த் தான் அப்பாவின் மூத்த மகன். அவள் அலட் சியமாகப் பு க ஷனைப் பார்த்துக்கொண்டே பைப் படிக்குச் சென்றாள்.
தனக்கென ஒழித்துக் கொடுத்த அறையில் ஒரு புத்தகத்தைக் கையில் பிடித்தபடியே சார் மனைக் கதிரையில் சிந்தனையிலாழ்ந்து போய் படுத் திருந்தார் கணபதிப்பிள்ளை . அவர் அனுபவஸ்தர். இனிமேல் வாயே திறக்கக்கூடதென்று சங்கல்பம் செய் து கொண்டு கிடைப்பதைச் சாப்பிட்டுவிட்டு அறையிலே முடங்கிக் கிடந்தார்.
நாட்கள் சென்று கொண்டிருந்தன. வாயைத் திறந்தாலும் குற்றம் மூடி னாலும் குற்றம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. மனைவியின் சொல்லம்பு

47
களை எதிர்க்கமுடியாமல் திணறிக் கொண்டி ருக்கும் மகன் மேல் ஆத்திரப்படுவதா , அனுதாபப்படுவதா என்று அவருக்குப் புரியவில்லை. புறப்பட்டுப் போய்விடுவோமென்றால், எங்கே போவது? உயி ராய் வளர்த்த மூத்த வனே அப்பாவுக்க 7 க ஒரு வார்த்தை மனைவியை எதிர்த்துப் பேச முடியாமல் திண்டாடும்போது, மற்றப் பிள்ளைகளை மட்டும் மலையென்று நம்பலாமா?
'அப்பா, நீங்கள் இங்கு வந்து ஒரு மாசத் துக் கு மேலாகிறது. நெடுக நானே உங்களை வைத் துக் கொண்டி ருக்கிறேனென்று பெரிய தம் பி கோபித்தாலும் கோபிப்பான். அவன் அன் றெழு திய கடிதத்தில் கூட 'அப்பாவுக்கு என்மேல் அன் பிருந்தால் இவ்விடம் வராமலிருப்பாரா?'' என்று குறிப்பிட்டிருந்தான். அதனால் நாளை ஸ்டேஷ னுக்கு வரும்படி தந்தி அனுப்பியிருக்கிறேன்........'
''..........ம், அப்போ, இன்றே புறப்படச் சொல்லுகிறாய். த ந் தி ய டி த் த ா ய் விட்ட தல்லவா....................?
அவன் பதில் பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றான்.
இரண்டாம் மகன் ஸ்ரேசனுக்கு வரவில்லை. தன து
மோட்டாரை அனுப்பியிருந்தான். பங் களா வேலைக்காரர்... ....... டாம்பீக வாழ்க்கை

Page 49
48
நடாத்திக் கொண்டிருந்தான். தினசரி வீட்டில் விருந்தும். நடனமும் ஒரே கும்மா ளமாயிருந் தது. பெரிய மனிதர்கள் மத்தியில் அப்பர் தலைகீ ட்டி விட்டால், அவனுக்குக் கண்டிப்பாகக் கோபம் வந்துவிடும். பல முறை நேரடியா கவே அவரை அவன் எச்சரித் திருந்தான். வேலைக்கா ரர்கள் வசிக்கும் அறைக்குப் பக்கத்து அறை பைத் தந்தைக்கு என்று ஒதுக்கிக் கொடுத்திருந் தான். அவன் பங்களாவுக்கு வரும் பிரமுகர் களில் யாராவது அவரைக் கண்விெட்டால் ஒகு வேலேக்காரனென்று எண்ண இடமிருக்குமல்லவா ? இவ்விதம் மகன் எண்ணினனே என்னவோ, தந்தை இப்படித்தான் எண்ணினுர், மகனின் போக்கு அவருக்கு வெறுப்பைக் கொடுத்தது. இப்படிப் பொறுப்பற்றவனுகச் செலவு செய் தால், பின்னுக்குக் கஷ்டப்படுவானே என்று கவலைப்பட்டார்.
இரண்டாவது மகன் வீட்டுக்கு வந்து இரண்டு மா சங்களுக்கு மேலாய் விட்டன. குணத் தின் குன்ரு ய், அடக்கத்தின் அவதாரமாய் வசய்த்த மருமகள்மேல் அவருக்கு அபார மதிப் பேற்பட்டது. அவளாலேயே இங்கு அவர் இரண்டு மாசத்துக்கு மேல் தங்கிவிட்டார். மாமா, மாமா என்று அவள் செய்யும் பணிவிடைக ளைக்கண்டு வேலைக்காரர்கள், கிழவனுர் எள்?
>
th

49
என்கமுன் எண்ணெய்யாய் நின்றனர். ஆணுல் பெற்ற மகன், அவர் சுய கெளரவத்தைப் பாதிக் கக்கூடிய வழியில் எத்தனையோ முறை நடந்து கொண்டான். நொந்த உள்ளத்தோடு வெளியேறி 6) "LLIT rř. -
எதிர்பாராத விதமாய் தந்தையை வீட்டு வாசலில் கண்டதும் ஆனந்தத்தோடு "அப்பா' என்று வரவேற்ருன் மூன்ருவது மகன். உள்ளே . யிருந்து ஒரு பெண் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். இப்பொழுதுதான் அவள் பாத்திரங் கள் தேய்த்துக்கொண்டிருந்தாள். அதனுல் அவள் கையில் கறை படிந்திருந்தது. நெற்றியிலிருந்த குங்குமம் வியர்வையில் கரைந்து மூக்கு நுனி வரை யில் கோடிழுத்திருந்தது, கிழவர் கண்களுக்கு அவள் மகாலெட்சுமிபோல் காட்சியளித்தாள்.
மூன்ருவது மகனையும் மனைவியையும் கண்ட தும் கிழவருக்கு திருப்தியேற்பட்டது. மகன் நல்ல உத்தியோகத்திலிருந்தான். ஆணுல் வீ ட் டி ல் வேலைக்காரர்கள் இல்லை. அவளே ஒடியாடி வேலை செய்தாள். பொறுப்புணர்ந்த அந்தப் பெண்ணின் சுறுசுறுப்பையும் குடிகையையும் கண்டு இருபதாம் நூற்ருண்டிலும் இப்படியிருக்குமோவென்று ஆச் சரியப்பட்டார். இங்கு எவ்வளவு காலமானுலும் நிம்மதியா யிருக்கலாமென்று எண்ணினர்.
7

Page 50
50
இரவு எட்டுமணியாய் விட்டது. மகன் இன் னும் ஆபீஸால் ஏன் வரவில்லையென்று சிந்தித்த வாறே வெளி மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார். வாசலில் யாரோ வரும் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தார். மகன்தான் வந்துகொண்டிருந்தரன். "ஏன் இவ்வளவு நேரம்?' என்று கேட்க வாய் உன்னியவர் சத் தம் தொண்டைக்குள்ளேயே அடங்கிவிட்டது. அவர் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. குவிந்து கிடந்த இதய மொட்டு காலை யில் மலர்ந்தது, மாலையில் உதிர்ந்து விட்டது.
அவன் கண்கள் ரத்தம்போல் சிவந்திருந்தன. தள்ளாடியபடியே உள்ளே சென்ருன், சாராய நாற்றம் கம்" மென்று வீசியது. "என் மகன் குடிகாரன? வேதனை நிறைந்த இந்த எண்ணம் அவர் இதயத்தைக் குடைந்தெடுத்தது. மகனைப் பற்றிக்கூட அவர் அவ்வளவாக வருந்தவில்லை.
"இந்தப் பெண்ணுக்கா, இப்படியான கழுதை வந்து வாய்க்கவேண்டும்' என்றுதான் எண்ணினுர்,
மகன் உள்ளே சென்றபின் வீட்டில் மரண அமைதி குடிகொண்டது. இராச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கிழவனர் தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார்.
இரவு ஒன்பதரை மணியிருக்கும், யாரோ குசு, குசு வென்று பேசும் சக்தம் கேட்டது. ஆனல் அழும் குரல் மட்டும் கேட்கவேயில்லை.

5.
மறுநாட் காலை, கிழவனரின் அறை திறந்தபடி கிடந்தது. சோகமேயுருவாய் அறை வாசலில் அவள் நின்றுகொண்டிருந்தாள். இமை ரோமங் களில் நீர் துளித்துப்போயிருந்தது. அப்பொழுது தான் எழுந்து வெளியே வந்தவன் ' என்ன! ஏன் இப்படித் திகைத்து நிற்கிருய்?' என்று மனைவியைக் கேட்டான். அவள் பேசவேயில்லை. புடவைத் தலைப் பால் கண்களைத் துடைத்தாள். அவள் கையிலிருந்த கடிதம் நழுவி விழுந்தது. கடிதத்தைக் கையி லெடுத்தான்.
மகனே,
உன் மூத்தண்ணனேடு ஒரு மாசமிருந்தேன்பூ மற்றவனுேடு இரண்டு மரசங்களிருங்தேன். உன் னேடு ஒரு நாட்கூடத் தங்கமுடியவில்லை. 'பெண் நல்லவளாயிருப்ப நன்மை பயக்குமா?’ என்ற சந் தேகம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப் பொழுதுதான் என் உள்ளத்தில் தோன்றியிருக் கிறது. இனியெங்கே போக?
உன் அப்பா
கடிதத்தில் குறிப்பிட்டது வோலவே "இனி எங்கே போவது?" என்று அவர் நெஞ்சிலே கேள்வி எழுந்தது. மூன்று மக்களினல் அடைந்த அணு பவமோ என்னவோ, அவரை நாலாவது மகனிடம் போகவிடாமல் ஏதோவொன்று தடுத்தது. உள் ளத்தில் சிந்தனை அலை மோதி மறுபடியும் இரண் டாவது மகனிடமே சென்றர்.

Page 51
52
தந்தை திரும்ப வந்துவிட்டதில் சந்தோ ஷமோ, வெறுப்போ அவனுக்குண்டாகவில்லை. இத்தனை வேலைகாரர்கள் கொட்டிச் சிந்தும் உண வில் ஒரு நஷ்டமுமேற்படப்போவதில்லை. பழைய படி வேலைக்காரர்களின் அறைக்குப்பக்கத்து அறை ஒளித் துக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையிலும் இரண்டாவது மகன் வீட்டை அவர் தேர்ந்தெ டுத்ததற்கு, ஒரு காரணமுண்டு. நிம்மதியாயி ருக்க மகனைக் காட்டிலும், மருமகளின் ஆதரவே முக்கியமென்று அவர் கருதினார்.
காலம் கடந்து கொண்டிருந்தது. விரத் தி யேற்படக்கூடிய சம்பவங்கள் எத்தனையோ நடந் தன. ஆனாலும் அவர் நாலாவது மகனிடம் போ க விரும்பவில்லை; பொறுமையோடிருந்தார்.
வெளியே பேச்சுக்குரல் கேட்டது. யார் யாரோ வருவார்கள் போவார்கள், அவர் வெளியே எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. இது அவர் மகனின் கண்டிப்பான உத்தரவு. தந்தையாயிருந்தும் மக னின் உத்தரவை மீற அவருக்குத் தைரியமில்லை. ஆனால் இன்று , குரல் பழக்கமான தாயிருக்கவே மெல்ல எட்டிப்பார்த்தார்.
ஆம், அவர் இளைய மகன் சிவசுப்பிரமணியன் தான். தந்தையைக் கண்டதும் அருகே சென்று 'அப்பா' என்றான். து க் க ம் தொண்டையை அடைக்க '' சிவம், ஏன் இப்படி இளைத்துப் போனாய்?'' என்று அன்பாக விசாரித்தார் அப்பா.

53
"எ ன் வீடு உங்களுக்குத் தூரமாய்விட்டதா அப்பா, என்னை ஏன் புறக்கணித்தீர்கள். இரண்டு நாளைக்காவது என் வீட்டில் தங்கக்கூடாதா?
'உன்னைப் புறக்கணித்தேனு? கிழவர் பதறிப் போய்க் கேட்டார். அவனும் ஏன் இப்படிக் கூறினுேம் என்று நாக்கைக் கடித்துக்கொண்டான். கிழவனர் நாலாவது மகனேடு புறப்பட்டுவிட்டார்.
அவனது வீடு ஒரு கோவிலைப்போல் காட்சி பளித்தது. சுவர்களில் தேசபிதாக்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு அறையை அவன் நூல் நிலையமாக அமைத்திருந்தான். அங்கேயிருந்த அலுமாரிகளில் பெரிய அறிவாளிகளின் புத்தகங்க ளெல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட் டிருந்தன.
கணவனும் மனைவியும் மாறிமாறிக் கிழவனை உபசரித்தனர். இராப் போசனத்துக்குப் பின் படுக்கைக்குச் சென்ற கிழவனுர் தூக்கம் வராத தால் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந் தார். இரவு பத்து மணியிருக்கலாம். இப்போழுது தூக்கம் கண்களைச் சுழற்றியது. ஆணுல் புத்த கத்தில் ஒன்றிப்போன அவரால் அதைக் கையிறக்க முடியவில்லை. கொட்டாவி விட்டபடி வாசித்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் யாரோ பேசுங் குரல் கேட்கவே உற்றுக் கவனித்தார்.

Page 52
54
*நீலா, உன்மீது எனக்கு நம்பிக்கை இல்லை யோ வென்று தப்பாக நினைத்துவிடாதே. இவ் வளவு காலம் கூடி வாழ்ந்த எனக்கு உன் குணம் தெரியாதல்ல இருந்தும் சொல்லுகிறேன். அப் பாவை அவர் வாழ்நாள் முழுவதும் என்னேடு வைத்திருக்க, மற்றவர்களைக் காட்டிலும் நான் தான் அதிகம் கடமைப்பட்டிருக்கிறேன். அந்திய கசலத்தில் அவர் மனம் நோகாதபடி நீ நடந்து கொள்ளவேண்டும். அப்பாவை அண்ணன்மார் அவதிக்குள்ளாக்கியிருக்கிருர்கள். அவர் எ ன் அப்பா மட்டுமல்ல, என் தெய்வங்கூட, இவ்வளவு தான் நான் உனக்குச் சொல்லமுடியும். 99
மறுபடி பேச்சுக்குரல் கேட்கவில்லை. தம்பதி கள் தூங்கிவிட்டார்கள். ஆணுல். கிழவனரின் தூக்கம் விடைபெற்றுக்கொண்டது. அவன் பேசி யதின் அர்த்தமென்ன? அப்போ அவனுக்கு ந் தெரியுமா? கிழவனைச் சுற்றிப் பழைய நினைவுகள் வலைபின்னின.
உத்தியோகந் தேடி அவர் சிங்கப்பூருக்குச் செல்லும்போது வ ய சு பதினலுதாணிருக்கும். ஏழாவதுவரையில் படித்திருந்தார். யாரோ உற வினர்களின் உதவியால் ஒரு ரப்பர் தோட்டத்தில் உதவிக் குமஸ்தாவாகச் சேர்ந்தார். அன்று தொடக்கம் அவர் வாழ்க்கை சுற்றிச்சுற்றித் தோட் டத்துக்குள்ளேயே நின்றது. இருபத்தெட்டாவது வயசில் அவர் மணம் செய்துகொள்ளும்போது

55
சொந்தத்திலே முப்பது ஏக்கர் கொண்ட ஒரு ரப்பர் தோட்டமிருந்தது. அந்த வரும்படியைக் கொண்டே வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்.
யுத்தம் வந்தது. எத்தனையோ உள்ளங்களில் அந்த யுத்தம் அழியா இடம் பெற்றதைப்போல் அவர் வாழ்க்கையிலும் தன் நினைவுச் சின்னத்தை அது பதித்துவிட்டுப் போய்விட்டது.
யுத்தம் முடிந்துவிட்டது. தோட்டத்தைவிற்று அவர் பணமாக்கிக் கொண்டார். ஊருக்குப் புறப்படவேண்டிய ஆயத்தங்களைச் செய்கிறர் என்பதைக் கண்டபோதுதான் அவர் மனைவி கண் ணிர் விட்டுக் கதறி அழ ஆரம்பித்தாள். அவ ளுடைய கடைக்குட்டி மகனுக்கு-சிவசுப்பிரமணி யனுக்கு-அப்பொழுது ஒன்றரை வயது:
* பைத்தியகாரி ஏன் அழுகிருய் ? என்று கூறி அவள் கண்ணிரைத் துடைத்தார்.
" முடியாது, என்ருல் ஊருக்கு வரவே முடி யாது. நீங்கள் போவதானல், என்னையும் இந்தப் பிள்ளையையும் கொன்றுவிட்டு மற்ற மூன்று பிள்ளை களையும் கொண்டுபோங்கள்’ கதறும்போது அவள் முகம் விகாரமாயிருந்தது.
அவர் மனைவியை அனைத்துக்கொண்டே கூறினர் : "நீ ஏன் பதற்றமடைகிருய், நான் உன் கணவன், எனக்கு உன்னைத் தெரியும். உலகம்

Page 53
56
உண்மையறியாது தோன்றியதையெல்லாம் கூறும். அதை நாமேன் பொருட்படுத்தவேண்டும். இந்தக் குழந்தை உன் உதரத்தில் கருவாகி உயிர் பெற்றது. இக்குழந்தை உன் வயிற்றில் இடம்பெறும்போது நீ நிராதரவான நிலையிலிருந்தாய் என்றும் உன் னைப் பாதுகாக்க வேண்டிய நானும் அதே நிலை யில்தானிருந்தேன். யார்மீதும் குற்றம் சுமத்த முடியாது. நீ என்றும் என்னுடையவள். வீணே கவலைப்படாதே புறப்படு:
அந்தக் குழந்தை பிறந்தபோது அதன் மூக் கையும் முளியையும் உற்று நோக்கிய அவள் உடல் நடுக்கமெடுத்தது. பிள்ளையைக் கொன்று விடு வோமா, என்றுகூட ஒரு கணம் எண்ணிஞள். தாய்மையுணர்ச்சி மேலோங்கி நின்றது. வாய்
நிறைய சிவகப்பிரமண்யன் என்று பெயரிட்டாள்.
ஒன்றுமே அவள் மனதுக்குச் சாந்தியளிக்கவில்லை,
ஊர்போய்ச் சேர்ந்தார்கள். அயற் பெண்க ளெல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கழுத்தை நொடித்துக்கொண்டனர். அவளால் சகிக்க முடிய வில்லை. கவலை என்ற கடும் நோய்க்கு இலக்காகி அவள் கண்களை மூடிக்கொண்டாள், கண்ணிர் விட்டுக் கதறும் நாலு பிள்ளைகளுக்கும் அப்பா வோடு அம்மாவுமாகிஞர் கணபதிப்பிள்ளை.
பேதமில்லாத அவர் அரவணைப்பில் நான்கும் வளர்ந்து குளிர்தருக்களாகிவிட்டன. ஆணுல் அவருக்கு அவை நிழல் கொடுக்குமா ?

57
சிந்தனை குலைந்து எப்பொழுது தூங்கினரோ அவருக்கே தெரியாது. காலை அறையை விட்டு வெளியே வந்தவர் பார்வை அகஸ்மாத்தாய்ப் பூசை அறைக்குள் சென்றது. அவன் தன் ஒரே தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்தான். <91671 ரால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உள்ளே ஒடிச் சென்று " நீ என் மகனெடா, நான் பெற்ற மகனெடா " என்று கூறி அவனை மார் புறத் தழுவினர். அவர் கண்களில் குளமாயின.

Page 54
5. நினைவு முகம்
கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்த டைந்தது. கொழும்பில் உத்தியோகம் வகித்து வந்த என் அண்ணன் கப்பலுக்கு வந்து என்னையும் என் மனைவியையும் வரவேற்ருர், சிங்கப்பூரில் அளவை இலாக்காவில் நான் உத்தியோகம் பார்க்கத் தொடங்கி ஏழு வருடங்களாகின்றன. உத்தியோகமான மூன்ருவது வருடமே எனக்கு விவாகமாகிவிட்டது. பெற்றேர் உறவினர் சம்ம மதத்தின் பேரில்தான் கல்யாணம் நடந்ததான லும் என் மனைவியை என் பெற்றேருக்கோ சகோ தரர்கட்கோ தெரியாது.
மனைவியின் பெற்றேர் யாழ்ப்பாணத்தவர்க ளாயினும் சிங்கப்பூரிலேயே இருபத்தைந்து வருஷங் களாக் வசித்து வந்தவர்கள், அவர்கட்குச் சொந்த வீடு நில புலங்களெல்லாம் சிங்கப்பூரிலிருக்கின் றன. அவர்கள் என் தூர பந்துக்களாகையால் நான் உத்தியோகமானதும் அவர்கள் வீட்டிலேயே தங்கினேன்,
y

59
எப்படி உண்டாகியது, ஏன் உண்டாகியது, என்ற பீடிகை ஒன்றுமில்லாமல் எனக்கும் என் மனைவிக்குமிடையில் காதலுண்டாகியது என்று ஒரு சொல்லில் முடிக்கிறேன், குறை கூரு தீர்கள்.
எல்லோர் சம்மதத்துடனும் எனக்கும் என் மனைவிக்கும் விவாகம் நடந்தேறியது. செலவை உத்தேசித்து விவாகத்தை சிங்கப்பூரிலேயே முடித் துக்கொண்டோம். இப்பொழுது மூன்று வயது மகனுேடு ஊர் திரும்புமென்னை முதலில் என் த ைSDயனர் குதூகலத்தோடு வரவேற்ருர்,
அண்ணன் கையை நீட்டியதும் பொன்செல்வன் ஒரு தாவுத்தாவி அவரிடம் போனன். குற்றமற்ற அவன் குறுகுறுக்கும் கண்களில் முத்தமிட்டதும் அண்ணன் பூரித்துப்போனுர்,
'பொன்செல்வன்' அதுதான் என் மகனின் பெயர். என்னுடைய பெயர் செல்வராஜன், தன் பிள்ளையின் பெயரில் என் பெயரின் ஒரு பகுதி இருக்கவேண்டுமென்று என் மனைவி விரும்பினுள், அப்படியே பொன்' பகுதியைச்சேர்த்து பொன் செல்வன் என்று வைத்துவிட்டேன். 'பொன்’ என்ற பகுதியைச் சேர்த்தால் பெயர் பட்டிக்காட்டுப் பெயராய்ப் போய்விட்டது என்று என் மனைவி ஆட்சேபித்தாள். ஆனல் 'பொன்' என்ற சொல் எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது.

Page 55
60
கொழும்பு நகரத்தில் கால் வைத்ததும் என் பாடசாலை வாழ்க்கை நினைவுக்கு வந்தது. ஏழு வருடத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட் டிருந்தாலும் கொழும்பு நகரம் என் கண்ணுக்குப்
பழைய நகரமாகவே பட்டது. கொழும்பில்தான்
நான் கல்வி பயின்றேன் தெருத்தெருவாகக் கால் நடையாகவே சுற்றித்திரிவேன். அங்கு நடமாடிய சிங்களவர்களின் பாஷை கொஞ்சங்கொஞ்சம்ஈ ய் எனக்கும் புரிந்தது. நானும் சிங்களம் பேசிப் பார்த்தேன். இடையிடையே மலாயாச் சொற் களும் கலந்தன.
யாழ்ப்பாணத்தைப் போயடைந்ததும் உற வினர்கள் எங்களை வரவேற்றனர். நான் சிங்கப் பூருக்குச் சென்றபின் பிறந்த குழந்தைகளை இது யார் தெரியுமா? இது யார் தெரியுமா? என்று தாய்மார்கள் கேட்டுக்கேட்டு என்னைத் திணறடித் 5 аяпт.
ஏழு வருடத்துள் இறந்தவர்களின் ஜாபி
தாவை என் தாயார் தயாரித்தாள். எல்லோ ருடைய வீடுகளுக்கும் சென்று துக்கம் விசாரித் தேன். சிறுமிகளாக என்னேடு ஒடி ஆடி விளையாடிய வர்கள் பெரிய பெண்களாகி நாணிக்கோணிக் கொண்டு நின்றனர். ஏறக்குறைய எல்லோரிலுமே வித்தியாசந் தெரிந்தது. சில பாட்டிகள் மட்டும்
ஏழு வருடத்துக்கு முன் இருந்ததுபோலவே
இன்றும் இருந்தார்கள்.
*

6
எங்கள் வீட்டு வெளி முற்றத்தில் ஒதுக்குப் புறமாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு சுமார் ஏழு அல்லது எட்டு வயசு மதிக்கக்கூடிய ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவள் முகம் எங்கேயோ பார்த்ததுபோல் இருந்ததேயல்லாமல் அவளை யாரென்று என்னல் திட்டமாக அனுமானிக்க முடியவில்லை. - -
‘தங்கச்சி, பொன்னி வந்திருக்கிருள். அவள்
பொடியனுக்கு ஏதாவது கொண்டுவந்து கொடு’ என்று என் சகோதரியிடம் கூறினுள். என் தாயார்.
என்ன ! பொன்னியா, அவளுடைய உருவம் எப்படி மாறிப்போய் விட்டது. தலைவாசலுக்கு வந்தேன். அவள் மலர்ந்த கண்களோடு 'நயினுள் என்னைத் தெரிகிறதா ? ? என்ருள்.
'அதற்குள் மறந்திவிடுவேனுே பொன்னி?' என்றேன். அவள் தன் முந்தானைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு மாம்பழத்தை எடுத்து "நபி ணுருக்கென்று இதைக் கொண்டுவந்தேன்" என்று கூறி நீட்டினுள். நளத்தி பொன்னியிடம் இரண்டு கைகளையும் நீட்டி மாம்பழத்தை வாங்கினேன்.
'எனக்குத்தா அப்பா’ என்று கூறி என் வேட்டி யைப் பற்றி இழுத்தான் என் குழந்தை, 'நயினுரை உரிச்சுவைச்சாப்போலிருக்கே எ ன் று கூறி க் கொண்டே என் குழந்தையை வாரித் தூக்கினுள்,

Page 56
82
குழந்தையின் இரு கன்னங்களையும் மாறி மாறி முத்தமிட்டாள். அப்பொழுது அவளொரு ஆவேச நிலையில் இருந்தவள் போல் காணப்பட்டாள். இந்த உலகம் , அவளைப் பொறுத்தவரையில் மறைந்து விட்டது. கண்கள் அரைவாசி மூடப்பட்டிருந்தன.
"உன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக் கிறாய் பொன்னி" என்றேன்.
அவள் தூக்கத்திலிருந்து அப்பொழுது தான் விழித்தவள் போல '' செல்லன்'' என்றாள். அவள் குரலில் ஒரு தளதளப்புக் காணப்பட்டது.
''உங்கள் சின்னவருக்கு என்ன பெயர் நயினார் '. என்று என்னைத் திருப்பிக் கேட்டாள்.
• பொன் செல்வன்' > என் றேன்.
அவள் உள்ளப் பூரிப்பு முகத்திலே பிரதிபலித் த து. முத்துப்போலுருண்ட இரண்டு சொட்டுக் கண்ணீரை மறைக்கவோ என்னவோ முகத்தை மறுபக்கந் திருப்பிக்கொண்டாள் பொன்னி.

6. புதுவருவடிப் பரிசு
உலகம் தோன்றிய காலந்தொட்புெதுவரு டங்கள் வந்து போய்க்கொண்டு தானிருக்கின்றன. அவள் சிறு பிள்ளையாய் இருக்கும்போது எவ்வளவு ஆவலோடு வருடப் பிறப்பை எதிர்பார்ப்பாள். புதுப்பாவாடை, தீண்பண்டங்கள் ஆகா எவ்வளவு இன்பமான தினம். முதல்நாள் இரவே அப்பா கொண்டுவந்த புது உடைகளைத் தொட்டுத்தொட் டுப் பார்ப்பாள். அந்த ஸ்பரிசந்தான் எவ்வளவு இதமாயிருக்கும். கோடி உடையின் மணத்தில் கூட ஒருவித இனிமையிருக்கும், "அப்பா கொண்டு வந்தார்’ என்பது மட்டும் அவளுக்கு அப்போது தெரியுமேயல்லாமல், அப்பா எப்படிக் கொண்டு வந்தார்? வாங்கப் பணம் வேண்டுமா? இதெல் லாம் அவளறியாப் பிரச்சனை.
இப்பொழுது அவள் இரண்டு குழந்தைகளுக் குத் தாய், மூன்றுவது வயிற்றில் அரை உயிர் பெற்று விட்டது. புருஷனுக்கு வெளியூர் உத்தியோகம். எடுக்கும் சம்பளம் அவனுக்கே காணுமலிருந்தது.

Page 57
64
பொறுப்பை உணர்ந்து வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி அவளுக்கு ஏதாவது அனுப்புவான். அவள் சிக்கனமாக வாழ்க்கை நடத்தினுள். இந்த நேரத் தில் வருஷத்தைப் பிறக்கும்படி அவள் கேட்டாளா? அது தானகவே பிறந்துவிட்டது.
வருஷப்பிறப்பில் பிள்ளைகள் கண் கலங்கு வதைப் பார்த்து பெற்றவளால் சகிக்கமுடியுமா? பிள்ளைகளை ஏமாற்றவே முடியாது. அடுத்த வீட்டுக் கோட்டான்களிருக்கே, அதுகள் ஓடிவந்து ‘என் கால்சட்டையைப்பார், பாவாடையைப் பார்? என்று சும்மா இருக்கும் பிள்ளைகளை தூண்டிவிட்டு விடுவார்கள். பிள்ளைகள்தானென்ன, தாயே இப் பொழுது புதுச்சேலையைக் காட்ட வரப்போகிருள்.
வருஷப்பிறப்புக்கு விடுதலை விட்டிருந்தும், அவன் ஊருக்குப் போகவில்லை. பிரயாணச் செல வுக்கு இருபத்தைந்து ரூபா இருந்தால், அவன் மனைவிக்கு ஒரு பிடவையும் பிள்ளைகளுக்கும் ஏதா வது வாங்கி அனுப்பியிருக்கலாமே. எவ்வளவோ முயற்சித்தும் அவனல் ஒரு பத்து ரூபா கூட அனுப்பமுடியவில்லை. வருஷப் பிறப்பு என்ன சம் பளத்தோடையா வருகிறது. அதுதான் இரண்டுங் கெட்டானுக பதின் மூன்ருந் தேதியோ பதின்னு லாந் தேதியோ வந்து தொலைகிறதே. யாரிடமா வது கடன் வாங்கினுல் பின் திருப்பிக்கொடுப்ப தெப்படி? அல்லாமலும் அறுபது ரூபா சம்பளக் காரனுக்கு யாராவது பத்து இருபது என்று கடன் கொடுப்பார்களா? வாங்கக்கூடியவர்களிடமெல் லாம் ஏற்கனவே வாங்கியாய் விட்டதே.
「會.
གྱུ༈ ༥
حزه

65 స్థ *T
வரியனர் பதின்மூன்முந்தேதி இரவே பிறந்து விட்டார். அவர் ஜெனனமாகும்போது சிறுவர்க ளெல்லாம் ஆழ்ந்த நித்திரையிலிருந்தார்கள். மறு நாள் அதிகாலை ஐந்து மணிக்கே பட்டாஸ் வெடி களின் அலறலோடு சிறுவர்களின் கூக்குரலும் சேர்ந்து வரியனரை வரவேற்றன. கிணற்றிலே வாளி ஒலி சப்த நாதங்களையும் கிளப்பியது.
இக்குதூலக் கொண்டாட்டம் அவள் குழந்தை களுக்கு விலக்கல்ல. அவைகளும் ஐந்து மணிக்கே எழுந்துவிட்டன. உள்ளம் நிறைந்த பூரிப்போடு அவர்கள் வாசலுக்கும் உள்ளுக்கும் மாறி மாறி ஒடிக்கொண்டிருந்தனர். ܘ ܫܩ ܀
*్మ"
அயலாரெல்லாம் ஆனந்த வெள்ளத்தில் மூழ் கிப்போய் இருக்க அவள் மட்டும் துயரக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தாள். வருஷப்பிறப்புக் கென்று ஏற்கனவே மீதப்படுத்தி, வைத்திருந்த அரிசி மாவோடு கொஞ்சக் கோதுமை மாவையும் கலந்து பிசைந்து பிட்டு அவித்தாள். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய் ஸ்நானம் செய்வித் தாள். ஸ்நானத்திற்கு பின்தான் வந்தது பிரச்சனை
"என் புதுப்பாவாடையை உடுத்துவிடம்மா”
என்ருள். இரண்டாவது பெண், அவளுக்கு ஐந்து
வயசு, ராஜ" மூத்தவன் அவனுக்ரு ஏழு வயசு,
தங்கையின் கேள்விக்கு தாயிடம் கிடைக்கப்
9 - ܥ ݂

Page 58
66
போகும் பதிலைக்கொண்டு தன் விஷயத்தையும் நிர்ணயித்துக்கொள்ள ஆவலோடு அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றன் மூன்ற வது கண்ணன். அவனுக்கு மூன்று வயசிருக்கும் எங்கோ ஒரு மூலையில் கிடந்த தன் பழைய சட்டை யைத் தூக்கிக்கொண்டு தாயிடம் வந்தான். கண்ணனுக்கு மட்டும்தான் வருஷப்பிறப்புக்கு கோடி உடுக்கவேண்டும், அது செய்யவேண்டும், இது செய்யவேண்டும் என்ற விஷயம் புரியாத
Gli
பெண் சிணுங்கினள். 'முதலில் சாப்பிட வாருங்கள். அதன் பிறகல்லவோ மற்ற விஷயங் களைக் கவனிக்கவேண்டும். உங்கள் அப்பா இன்று வந்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் வரங்கி வருவார் தெரியுமா?" என்று சமாதானம் செய்து குழந்தைகளைச் சாப்பிட அழைத்துச் சென்ருள் பெற்றவள். துக்கம் அவள் நெஞ்சையடைத்தது.
கண்ணனும் அக்காவும் "அப்பா பட்டுச்சட்டை கொண்டுவருவார்” என்று பாடிக்கொண்டே ஓடி ஞர்கள். மூத்தவன் மட்டும் 'அப்பா தான் வர முடியாதென்று கடிதம் எழுதிவிட்டதாகச் சொன் ஞயே,’ என்று ஏமாற்றம் கலந்த குரலில் முணு மூணுத்துக்கொண்டு போனன்.
அவள் குழந்தைகளுக்குப் பரிமாறிக்கொண் டிருந்தாள். 'ஏனம்மா அப்பா வர மாட்டர்

67
என்று அண்ணு சொல்லுகிருனே, நிஜந்தான?" என்று கண் கலங்கியபடி கேட்டாள் பெண்.
"யார் சொன்னது, நான்தான் வந்துவிட்
டேனே இதோ பட்டுப்பாவாடை. ராஜ" இதோ
Luftu i T 2.60të gj............ கண்ணு இங்கே gp1.96) . . . . . . . . . . . . * சாப்பாட்டையும் விட்டுவிட்டு பிள்ளைகள் துள்ளிக்கொண்டு அப்பாவிடம் ஓடின. அவள் ஆச்சரியத்தோடு தன் கண்களையே நம்ப முடியாமல் சிலைபோல் நின்ருள்.
64 என்ன அப்படிப்பார்க்கிருய்...??
'இல்லை நீங்கள்தான. என்று பார்த் தேன். இருந்தாப்போல் எப்படி உங்களுக்கு பெண்டில் பிள்ளை நினைவு வந்தது. ..? பொய்க் கோபத்தோடு அவள் கேட்டாள். ஆனல் ஆனந் தம் அடங்காமல் கண் வழியே சொரிந்தது: பிள்ளைகளைத் திரும்பிப்பார்க்கும்போது அவள் இதயம் நிறைந்தது.
'இதோ வார்.” என்ருன் அவன்
அவள் ஆச்சரியத்தோடு அவன் கையிலிருந்த சங்கிலியைப் பார்த்தாள் இது..?
"சுத்தமான தங்கக்தான். சுமார் முர்நூறு ரூபா முடிந்தது’ வருஷப்பிறப்புக்கு இப்படியான

Page 59
68
ஒரு பரிசை உனக்களிப்பதற்கு உதவி புரிந்த தொழிலாளியை வாழ்த்துவதா, அல்லது முதலா னியை வாழ்த்துவதா ?”
"என்ன! தொழிலாளியும், முதலாளியும் எனக் கொன்றும் புரியவில்லையே. به هه
'புரியச்சொல்லுகிறேன் கேள். கோழும்பில்
ஒரு பஸ் கொம்பனியில் வேலை செய்யும் தொழி
லாளிகள் வேலைநிறுத்தம் செய்தார்கள். முதலாளி
களும் அவர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்
காது பிடிவாதமாயிருந்தனர். இரு பக்கத்தினரும் இப்படிச் சண்டித்தனம் செய்யும்போது பொது மக்கள் பாடுக் திண்டாட்டமாயிருந்தது. ஒருநாள் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும்போது திடீ ரேன்று ஏதோ வேடித்தது போன்ற சத்தம் கேட்டது. அவ்வளவுதான் எத்தனை பேருக்குக்
({ = rس
'ஏன் காயமேற்பட்டது, என்ன வெடித்தது??
"மண்ணுங்கட்டி. O O O O B D O அடியே வெடித்தது குண்டடி குண்டு”
'குண்டா? ஐயோ யார் போட்டார்கள்?
"ஏன் ஏங்கிச்சாகிருய், இது அமெரிக்காவும்
ரஷ்யாவும் போடப்போகிறதாக பயமுறுத்தும் குண்டல்ல, எறிகுண்டு. ஆணுல் உயிர் போய்விடும்?

69
அவள் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அவன் மேலுந் தொடர்ந்தான்.
"உடனே காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரிக் குக் கொண்டுபேரனர்கள். என்னையும் அங்கே கொண்டுபோய்ப் போட்டார்கள்."
உங்களையுமா? ஏன்.?- "ஒ. உனக்கு நான் இன்னும் சொல்ல வில்லையா. இங்கே பார். ’ வேட்டியைக்
கொஞ்சம் உயர்த்தி முழந்தாழுக்குக் கீழுள்ள
காயத்தைக் காட்டினன்.
"ஐயோ, பெரிய காயமாயிருக்கே...??
அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.
'இந்தா, வருஷப்பிறப்பில் ஏன் அழுகிருய். அதுவும் காயம் மாறியபின் ஒப்பரரி வைக் கிறயே. இந்தக்காயத்தால் பிரதம மந்திரிகூட என்னேடு வந்து பேசினர். அதுதான் சின்ன விஷயம். பஸ் கொம்பனி முதலாளிகள் ஐந்நூறு ரூபா கொடுத்தார்கள். அதை நினைக்கும்போது தான் ஒவ்வொருநாளும் எறிகுண்டு வைக்கப்பட்ட பஸ்ஸில் ஏறவேண்டும்போல ஆசையாயிருக்கு. .பார்த்தாயா? நீ நெடுநாளாய் ஆசைப்பட்ட சங்கிலி வந்துவிட்டது. பிள்ளைகளுக்குச் சந்தோஷ மான வருஷப்பிறப்புக் கொண்டாட்டம். எனக்கு கடன் தீர்ந்து மனதில் நிம்மதி. . இவ்வன வுக்கும் யாரை வாழ்த்துவது? தொழிலாளியையா? முதலாளியையா?
அவள் அவன் காயத்தை வருடியபடியே மோன நிலையிலிருந்தாள்,

Page 60
7. உதவியும் பிரதியும்
வழக்கத்தைவிட இந்தமுறை "வெசாக்" தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடி ஞர்கள். மருதானைச் சந்தியின் திருப்பத்தில் யாரோ அதிக செலவு செய்து பிரமாண்டமான படல் சோடனை செய்து, மத்தியிலே பீடமமைத்து, அதிலே புத்தர் யோக நிலையில் இருப்பதுபோன்ற ஒரு சித்திரத்தை நிறுத்தியிருந்தார்கள். சித்திரம் புத்தரை (புத்தரை நாம் நேரில் பார்க்காவிட்டா லும் சித்திரத்தின் முகத்தில் சாந்தம், பொறை பிரதிவிக்க தெய்வீகக்களை கொட்டியது) தத்ரூப மாகக் கண்முன்னே நிறுத்தியது.
மின்சார விளக்குகள் அணைந்தணைந்து எரியும் போது புத்தரின் வாழ்க்கைச் சரிதையைச் சித்தரிக் கும் சித்திரங்கள் ஒன்றன்பின்னுென்முய் காட்சி அளித்தன. மக்களில் சிலர் பக்தி சிரத்தையோடு பார்த்துக்கொண்டு மணிக்கணக்காய் நின்றனர். "சிலர்' என்று நான் கூறிவதற்குக் காரணமிருக் கிறது. மேலே படித்தால் அது தானகவே புரிந்து விடும். -
藝

7.
மேலே குறிப்பிட்டது போன்ற காட்சிகளைப் பார்ப்பதற்கென்று நாட்டுப் புறங்களிலிருந்தெல் லாம் வயோதிகரும், வாலிபரும், சிறுவர் சிறுமி களும் குடும்பம் குடும்பமாய் வந்த குவிந்திருத் தனர். அவர்களில் சிலர் வருடா வரு L. La "வெசாக் பார்ப்பதற்கு மட்டுமே கொழும்புக்கு வருபவர்களாயுமிருக்கலாம். வெசாக் காட்சிகளைக் கண்டு களிக்க வந்திருக்கும் யுவதிகளைக் கண்டு களிக்க கொழும்பில் உத்தியோகம் பார்க்கும் கால்சட்டைகள் பல சுற்றியலைந்தன. கூட்டம் கூட்டமாய் நிற்கும் வாலிபர் மத்தியிலே புகுந்து யானை சேறு நிறைந்த குளத்தைக் கலக்குலு இ. போல் ஒரு கலக்குக் கலக்கி சுழலை ஏற்படுத்தி விட்டு நிமிர்ந்த நடை போட்டுச்செல்லும் யுவதி களுமிருந்தனர். அவர்களைக் கண்டு வாலிபசுட்டம் நாணித் தலைகவிழ்ந்து சிலையாய் நின்றது, - -
மருதான ரெயில் நிலைய மதிற்கவரோடு நின்று "இக்காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற என் கவனத்தை, சமீபத்தில் நின்ற இருவரின் சம்பாஷனை கவர்ந்தது. அவர் களில் ஒருவன் சிங்களத்தில் கூறினன்: 'நாடு பக்கம் போலிருக்கு" அதற்கு மற்றவன்: ‘ஒரே யொரு சோமபாலாதான்'
முதலாமவன் சிரித்தான்.
எனக்குச் சிங்களத்தில் நல்ல பரிச்சியமுண்டு. அதனுல் அவர்கள் சம்பாஷனையின் அர்த்தத் தத்தை நன்கு புரிந்துகொண்டேன். 'சோமபாலா?

Page 61
72
என்ருல் குடும் வத்திருப்பவர் என்று அர்த்தம். நான் நாற்புறமும் கண்ணுேட்டத்தைச் செலுத் தினேன், நாங்கள் நின்ற இடத் துக் கு ச் *ற்றுத் தூரத்தில் ஒரு குடும்பம் வந்துகொண் டிருந்தது.
ஒரு கிழவி, ஒரு நடுத்தர வயசுள்ள பெண், சுமார் பத்து வயசு மதிக்கக்கூடிய ஒரு சிறுவன், இதபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று வய சுள்ள ஓர் இளம்பெண், சுமார் முப்பது வயசுள்ள ஒருவனின் தலைமையில் வந்துகொண்டிருந்தனர். அந்த வாலிபன் குடுமி வைத்திருந்தான். அவன் அணிந்திருந்த வட்டக்கழுத்து பெனியனும், இடுப் பைச் சுற்றிக் கட்டியிருந்த இரண்டுவட வெள்ளிச் சங்கிலியும் அவனை நாட்டுப்புறத்தானென்று பறை சாற்றிக்கொண்டிருந்தன. ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்துக்கொண்டு கூட்டத்துக் குள்ளால் முன்னேறினர்.
இக்குடும்பத்தைப் பற்றித்தான் எனக்குச் சமீ பத்தில் நின்றவர்கள் பேசினர்களென்பதைப் புரிந்துகொள்ள முடியாத மூடனல்ல நான். மேலும் அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கவனித்தேன். ஆனல் அவர்கள் இரகசியமாய் ஏதோ குசுகுசுத்ததால் ஒன்றுமே புரியவில்லை. அக்குடும்பம் எங்களைத் தாண்டிச் சென்றபோது அவ்விருவரும் அவர்களைத் தொடர்ந்து சென்ருர்
 
 

73
கள். எதையும் அறிய விரும்பும் மனித சுபாவத்
தின் செயலோ என்னவோ, நானும் மெல்லத்
தொடர்ந்தேன். ஜன சமுத்திரத்தின் மத்தியி
லகப்பட்டுப் பொங்கும் அலையில் அங்குமிங்கும்
தூக்கி எறியப்பட்டு ஒருவிதமாக முன்னேறிக் கொண்டிருந்தோம்.
திடீரென்று சனங்கள் பின்னே தள்ளப்பட் டனர். நான் நன்கு கூர்ந்து கவனித்தேன், அந்த இருவரில் ஒருவன் குறுக்கே விழுந்தடித்துக் கொண்டு சென்றன். என் கவனம் முதலில் அந்தக் குடும்பத்தில்தான் சென்றது. அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வதைக் காட் டிலும் ஜனக்கூட்டம் அவர்களை முன்னேற்றிக் கொண்டிருந்தது என்று சொ ல் வது தா ன் பொருந்தும் ,
'வழி விடுங்கள், வழி விடுங்கள்’ என்று யாரோ சத்தமிடுவதைக் கேட்டுத் திரும்பினேன். எனக்குப்பக்கத்தில் நின்று அந்த இருவரில் ஒரு வன்தான் இப்படி சத்தம்போட்டான். அவன் முன்னுல் அந்த இளம்பெண் நின்றுகொண்டிருந் தாள். அவளைச் சுற்றி வட்டமாக அவன் தன் கைகளைக் கோத்துப் பிடித்துக்கொண்டு "ஐயோ தெரிக்கவேண்டாம்” என்று பரிதாப மாக க் கூறினன். அந்தப்பெண்ணின் கண்கள், பீதியோடு முன்னுல் வேகமகாகத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்
O

Page 62
74
கும் தன் குடும்பத்தினரையே நோக்கிக்கொண் டிருந்தன. வேண்டுமென்றே முதலாமவன் குறுக்கே பாய்ந்து அப்பெண்ணை கூடவந்தவர்களிடமிருந்து பிரித்துவிட்டான். இரண்டாமவன் உதவி செய் பவன் போல் நடித்து அவளை மெ ல் ல அடித் துக்கொண்டு போகிருன், அவன் சூழ்ச்சியை £22 - 6001" ராத அவள் உண்மையில் அவன் உதவி செய்கிரு னென்றே எண்ணிவிட்டாள்.
என் ரத்தம் கொதித்தது நரம்புகள் புடைத்தன. உயிர் போவதாயினும் அப்பெண்கணக் காப்பாற்றி
அந்தத் தூர்த்தனுக்கும் பாடம் கற்பிக்கவேண்டும்.
என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களோடு நானும் சென்றுகொண்டேயிருந்தேன். கணவனிட மிருந்து ஒரு அபலைப் பெண்ணைப் பிரித்து, உதவி செய்பவன் போல் நடித்து, கள்ளத்தனமாய்க் கடத் திச்செல்லும் அவன் கயமைக் குணத்தை நினைக்க அடங்கா ஆத்திரம் மூண்டது.
இப்போழுது டவர்” சினிமா மாளிகை வாச லுக்கு வந்துவிட்டோம். இந்த இடத்தில் சனக் கூட்டம் அதிகமில்லை. ஆனலும் அவன் அவள் கையைப் பற்றி இருந்தான். சனக்கும்பலுக்குள் ஏற்பட்ட அனுபவமோ என்னவோ அவன் சுய
ரூபம் அவளுக்கு நன்கு தெரிந்தது. 'கையை விடு'
என்று சீறினுள்

75 ܢܼܲܢ ܢܼܲ.
'சத்தம்போடாதே, நான் எப்படியும் உன் ளுேடு கூடவந்தவர்களிடம் உன்னைச் சேர்த்து விடுகிறேன்' என்று அக்கறை கொண்டவன்போல் கூறினன்,
*" விடு கையை’’ என்று அவள் மறுபடியும் கூறினுள். அவள் தொண்டை கரகரத்தது. பக்கத் தில் நான் நிற்பதைக் கவனித்ததும், அவன் அவளை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவள் கையை விடடா நாயே’ என்று ஆவே சத்தோடு கத்தினுள், ܢ
'உங்கள் உதவி, அவளை வீட்டிலேயே கொண்டு
போய்ச் சேர்த்தால்தான் பூரணத்துவம் அடையும்
போல் தெரிகிறது' என்று சாவதானமாய்க் கூறினேன்.
அவன் என்னைத் திரும்பிப்பார்த்தான். அவன் கண்கள் ரத்தம்போல் சிவந்திருந்தன. 'என் மனை வியை நான் எங்குவேண்டுமானுலும் கொண்டு போவேன், நீயாரடா குறுக்கேவர” என்று அதட் டினன். அவள் ஏதோ கூற வாய் திறந்தா ள். * நீ வாயைப் பொத்திக்கொண்டிரு, மூச்சுக் காட்டினுல் கழுத்தைப்பிடித்து நெரித்துவிடுவேன்? என்று கர்ச்சித்தான் அவள் ஏனுே பேசாமல் நடுங் கிக்கொண்டு நின்ருள். இரண்டொருவர் எங்களரு கில் வரவே எனக்குத் தைரியமுண்டாகியது.
'நீ யாரிடம் கதையளக்கிருய்? பார் உன்னைப் போலீஸிலே பிடித்துக்கொடுக்கிறேன்.'

Page 63
76
நான் கூறி முடிக்குமுன் அவன் பாய்ந்து என் மார்புச் சட்டையைப் பற்றிப் பிடித்தான். இதற் குள் பெரும் கூட்டம் கூடி விட்டது. அவன் பெரிய பிரசங்கமே செய்துவிட்டான் 'பெரிய படிப்பாளி பல்லவா, கால்சட்டை போட்டிட்டார் துரை, பெண்களுக்குப் பின்னல் நாய்போல் சுற்றியலைந்து கொண்டு, உங்களுக்கு நாலு போட்டால்தான் புத்திவரும்??
அவன் கூறி முடிக்குமுன் எங்கிருந்தோ 'நாலு’ உண்மையில் வீழ்ந்து விட்டது. நான் திணறிப் போனேன், கூ ட் டத் தி ல் நின்ற வர் க ள் என்னைப் பதம்பார்க்க ஆரம்பித்தார்கள். கூட் டத்தை விலக்கிக்கொண்டு போலீஸார் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். கூட்டத்தில்
அந்தப் புத்திசாலியைத் தேடினேன். அவன் வெகு
சாமர்த்தியமாகத் தப்பிக் கொண்டான்.
போலீஸார் என்னை ஸ்டேஷனுக்கு அழைத்
துச் செல்ல சனக்கூட்டத்தை விலக்கினர். அப் பொழுதுதான் வந்துசேர்ந்த 'சோமபாலா’ அந் தக் குடுமிக்கார அப்பாவி மனிதன் நன்ருக முஷ்டி பிடித்து என் முகத்தில் குத்தினுன், ஏனுே அவன் குத்து எனக்கு வலியை உண்டுபண்ணவில்லை.
கயவனின் கையில் சிக்கித் துடியாய்த் துடித்த போதும் கூட கண்களில் நீர் வராத அந்தப் பெண்ணின் கண்களில் இப்போ நீர் தாரை தாரை யாய்ப் பெருகியது.
ܟܠ ܐ

8. ஜப்பானியன் படம்
கல்கியில் வெளியானது.
அன்று நடந்த விருந்துக்கு அழைப்பு வந்ததின் பேரில் போயிருந்தேன். அங்கு வேணுவும் வந் திருந்தான். அவன் பால்ய நண்பன். அவனேடு பேசிக்கொண்டிருக்கும்போது மேல் நாட்டு உடை அணிந்த பெண் உள்ளே நுழைந்தஈள். பெரிய செல்வந்தர்கள்போல் தோன்றிய மூவர் எழுந்து அவளுக்கு மரியாதை செலுத்தினர். அவளும் பதில் மரியாதை செலுத்தினுள். அவள் மரியாதை செலுத்தியவிதம் அவளொரு உறித்துப் பெண் மணியோ வென்று எண்ணத் தூண்டியது. இரண்டு கரங்களையும் குவித்து நமஸ்கரித்தாள்.
என்னுடைய கவனத்தை மட்டுமல்ல, என் நண்பன் கவனத்தையும் அவள் கவர்ந்திருந்தாள். அந்த வெள்ளைக்காரியின் முகத்தோற்றம் அவள் மீது எனக்கு ஒருவித மரியாதையை உண்டுபண்ணி யது. அல்லாமலும் அவள் முகம் எங்கேயோ நன் முகப் பார்த்துப் பழகியது போலிருந்தது.

Page 64
78
ஆனால் என் நண்பன் அவளைப்பற்றிக் கொண் டுள்ள அபிப்பிராயம் முற்றிலும் மாறானது என்பது பின்னால் தான் எனக்குத் தெரிய வந்தது.
''என்னடா, அவளை அப்படியே விழுங்கிவிடு வாய் போலிருக்கிறதே” என்றான் வேணு, நான் சட்டென்று திரும்பினேன்.
"இல்லை............ இவளை எங்கேயோ பார்த்தது மாதிரியிருக்கிறதேயென்று ...............'' ''பார்த்திருப் பாய்'' என்று ஏளனமாகக் கூறிவிட்டு உரக்கச் சிரித் தான்.
ஏனோ என்னால் அந்தச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. அவன் சிரிப்பதை நான் விரும்ப வில்லை என் பதை அவன் உணர்ந்து கொண்டு தானிருக்கவேண்டும். அல்லாவிடில் அவன் சிரிப்பை நிறுத்திவிட்டு என் முகத்தை ஏன் அப்படி பச்சாத் தாபத்தோடு பார்க்கிறான்.
''அவளை உனக்குத் தெரியுமா?'' என்றேன்.
'தெரியாமலென்ன, அவளொரு அமெரிக்கப் பெண். இங்கு வந்து சுமார் எட்டு வருடங்களா கின் றன. அவள் தன்னை திருமதி ரபேட்ஸன் என்று கூறிக்கொள்ளுகிறாள். ஆனால் இவள் ஒரு ஜப்பானி யப் போர் வீரனின் தா சி என்று பேசிக்கொள் ளு

79
கிருர்கள். இப்பொழுது சுமார் முப்பத்தைந்து வயசிருக்கும், பார் எவ்வளவு அழகாயிருக்கிருள். யுவ தியாயிருந்தபோது எத்தனை பேரை மயக்கி யிருப்பாளோ?
'சீ, நீயொரு தாயின் மகனல்லவா? என்றேன் ஆத்திரத்தோடு.
அவன் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தான். **ஆமாம். இவளை எங்கோ பார்த்தமா? திரி இருக் கிறதென் ருயே, எங்கே யென்று க ண் டு பி டி த் து 6) "L muust?”
"நிச்சயமாக இவளை எங்கேயோ பார்த்திருக் கிறேன். ஆமாம், இவளுடைய பெயர் என்ன வென்று சோன்னுய்?
"உண்மைப் பெயர் என்னவென்று எனக்குத் தேரியாது. திருமதி ரபேட்ஸன் என்று கூறுகிருள்”
'ஏன் அவளுடைய பெயரைக்கூட சந்தேகிக் கிருய்??
'அவளைப்பற்றி அப்படியான வ த ந் தி க ள் இங்கே உலாவி வருகின்றன. ஒரு தனி வீட்டில் அவள் மட்டும் பத்து வயசு மகனேடு வசித்து வருகிருள். செலவுக்குப் பணம் எங்கிருந்து வகு கிறதோ தெரியாது. அவள் வீட்டில் ஒரு சிங்களங் பெண் வேலைக்கிருக்கிருள். அவளுக்குக்கூட இந்த வெள்ளைக்காரியின் மர்ம வாழ்வு புரியாத புதிராக வேயிருக்கிறதாம்."

Page 65
&萄
நான் அவளிருந்த மேசைப்பக்கம் திரும்பி னேன். அவள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னைப்பற்றி ஏதஈ வது தப்பாக எண்ணிவிடப் போ கிருளேயென்று முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டேன்.
அவள் என்னை நோக்கி வந்துகொண்டிருக் கிருளென்பது எனக்கு நிழலாட்டம் போல் தெரிக் தது. அவள் முன்னுல் வந்ததும் நான் இருக்கையை விட்டெழுந்தேன். அவளை ப்பற்றி வேணு என்ன தான் கூறினலும் எனக்கென்னவோ அவள்மீது மதிப்புத்தான் ஏற்பட்டது.
'மன்னிக்கவேண்டும், நீங்கள் மலாயாவில் இருந்தீர்களா?' என்ருள். நான் "ஆமாம்” என் றேன். அவள் குரல் கூட நன்கு பரீச்சியப்பட்டது போலவேயிருந்தது. 'ஏன் நீங்களும் மலாயாவில் இருந்தீர்களா?' என்று கேட்டேன் பதிலுக்கு,
"ஆம், கோலாலம்பூரில் என் கணவரோடிருந் தேன். நீங்கள் கூட எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவீர்கள். இப்பொழுது மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.”
சிறிது சிறிதாக அவள் யாரென்பது நினைவுக்கு வந்தது. அவளுடைய கணவன் திரு ரபேட்ஷ ன் ஒரு அமெரிக்கக் கம்பனிக்குச் சொந்தமான ரப்பர் தோட்டத்தில் சுப்பிரின் டென்டாக இருந்தார்.
A#قي

81
ரப்பர் ஏற்றுமதி செய்வதற்கு பெருங்கணக்காக நான் சரக்கு வாங்குவதுண்டு. வியாபார முறை யில் அடிக்கடி நான் அவரை சந்திக்க வேண்டி யிருந்தது. ஓரளவில் அவரை என் நண்பரென்று கூடக் கூறலாம். எங்கள் பழைய கதைகளையெல் லாம் கூறி நட்பைப் புனருத்தாரணம் செய்து 2 கொண்டேன்.
( ஆமாம், திரு ரபேட்ஸ ன் இப்பொழுது இங்கு தான் இருக்கிறாரா?''
திடீரென்று அவள் முகம் மாறிவிட்டது. ஆங்காங்கே துன்பத்தின் ரேகைகள் மெல்லப் படர்ந்தன. விழிக் கோணத்தில் நீர் திரையிட்டது நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று வருந்தினேன் .
அவர் இறந்து ஏழெட்டு வருடங்களாகின் றன. இந்த வசனம் அவளது இதயத்தின் அடியி லிருந்து வெளி வந்தது'
ஏன் இறந்தார்? எப்படி இறந்தார்? என்ற கேள்விகளைக் கேட்டு அவளை மேலும் துக்கத்தி லாழ்த்த நான் விரும்பவில்லை. நான் பேச்சை மாற்ற விரும்பி ' நீங்கள் இங்கு வந்து எவ்வளவு கால மாகிறது?'' என்றேன்.
11 .

Page 66
82
''ஏழு வருஷங்களுக்கு மேலாகிறது. நாளை உங்களுக்குச் செளகரியப்பட்டால் என் வீட்டுக்கு வாருங்கள். சாவகாசமாய்ப் பேசலாம்.'' என்று கூறிவிட்டு விலாசச் சீட்டையும் கொடுத்தாள்.
நான் அவள் கொடுத்த விலாசத்தைப் பெற் றுக்கொண்டு விடை கூறினேன். அவள் சென்று தன் பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
'அவளைப் பார்த்தால் எவ்வளவு நல்லவள் போல் தெரிகிறது. இந்த உலகம் அவளைப்பற்றி எவ்வளவு வதந்தியைக் கட்டி விட்டிருக்கிறது பார்த்தாயா'' என்றான் வேணு.
"உலகமென்று தனியே வேறொன்றிருக்கிறதா? நீதான் உலகம். அவதூறு கூறிய வாயாலேயே இப்போ மாற்றிக் கூறுகிறாய். தீர விசாரியாமலே தீர்ப்புக் கூறுகிறது உலகம். உலகத்தை நம்பித் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது.''.
• நாளை அவள் வீட்டுக்குப் போகிறாயா?''
''ஆமாம், தனியேயல்ல, உன்னையும் அழைத் துச் செல்லப் போகிறேன்.''
- என்னை அவள் அழைக்கவில்லையே. நான் வலிய எப்படிப் போவது”
''அதனாலென்ன, நீ கட்டாயம் வரவேண்டும் வந்து அவளிடம் மன்னிப்புக் கோரவேண்டும். நீ மறுத்தால் உன் சார்பில் நான் அவளிடம் மன்னிப்புக் கோருவேன்.''
"உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன ?))

83
''எனக்குப் பைத்தியமில்லை. என் மனதில் சரியென்று தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். நீ கட்டாயம் மன்னிப்புக் கோரத்தான் வேண்டும் என்று நான் வற்புறுத்துகிறேன். ஏனெனில் என றும் நீ என் நண்பனாக இருக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.''
மறுநாட் காலை நானும் வேணுவும் அவள் வீட்டுக்குச் சென்றோம். வேலைக்காரி வெளியில் வந்து ''உட்காருங்கள், அம் மாள் தியானத்திலிருக் கிறார்'' என்று கூறினாள். இருவரும் உட்கார்ந் தே " ம். நண்பன் கண்ணைச் சிமிட்டியபடியே பா தி திறந்திருந்த கதவு ஊடாகப் பார்க்கும்படி சைகை செய்தான். கதவினூடாக என் கண்களும் சென்றன
அறையினுள்ளே அவள் தியானத்தில் ஆழ்ந் திருந்தாள். அவளுக்கு முன்னால் உயரமான பீடத் தில் யேசுநாதரின் படமொன்றிருந்தது. கீழே சரி சமனாக இரண்டு படங்களிருந்தன. ஒன்று அவள் கணவனின் படம். மற்றது ஒரு ஜப்பானியப் போர்வீரனின் படம். 'இந்த ஜப்பானியன் யார்?
இவனுக் கும் இவளுக்கும் உள்ள தொடர் பென்ன? இவனை ஏன் இவள் தெய்வமாகப் போற்றவேண்டும்?' இந்தக் கேள்விகள் என் உள் ளத்தே தோன்றி என்னைச் சிந்தனைக்குள்ளாக்கின. நண்பன் என்னை அர்த்தத்தோடு " நோக்கிப் புன்னகை புரிந்தான்.

Page 67
84
தியானம் முடிச்து அவள் வெளியே வந்த்ாள், * உங்களை அதிக நேரம் காக்க  ைவ த் து விட்டேனுே?
இல்லை இப்பொழுதுதான் வந்தோம் உங்கள் பூசை அறையின் அமைப்பையும் ஒழுங்குகளையும் பார்த்தால் நீங்கள் இந்து மதத்தைத் தழுவிகிறீர் களோ என்று எண்ணத்தோன்றியது, என்றேன்.
'இல்லை, நான் கிறிஸ்து மதத்தையே தழுவு கிறேன். ஆனல் பிற மதங்களின் வைரியல் ல”
'மூன்று படங்களை வைத்து வணங்குகிறீர் களே, அவைகளில் யார் உங்கள் தெய்வம்???
'மூன்று ம் என் தெய்வங்கள்தான்.?
மூவி 4
'ஆச் சரியமாயிருக்கிறது, நான் இந்து, எங்கள் பெண் கள் கணவரைத் தெய்வமாகப் போற்று வார்கள். ஆணுல் பிற புருஷ னை அவர்கள் தெய்வ மாக வணங்கமாட்டார்கள். மறு மணம் செய்வதே எங்கள் மதத்திற்கு ஒவ்வாத செயலாகும்.”
நான் கூறியதைக் கேட்டு வெட்கமோ ஆத் திரமோ கொள்ளவில்லை. அவள் முகத்தில் சாந்த மும் அமைதியும் குடிகொண்டிருந்தது.
இந்த ஜப்பானியப் போர் வீரனையும் என்னை யும் பற்றிப் பலர் பலவிதமாகக் கதைககள் கட்டி
விட்டிருக்கிருர்கள். ஆனல், இவனை இங்குள்ளவர்
ܙܳܝܬܐ

85
கள் யாராவது கண்டிக்கிருர்களோ வென் ருல் அது தn னில்லை. இந்த அரூபி மனிதனையும் என்னையும் பற்றி உலகம் உருவாக்கியுள்ள கதைகளைக் கேட்டு நான் பயந்துவிடவில்லை. இவ்வளவுக்கும் இந்த உலகத்திடம் நான் ஒருநாளும் உதவி கோரிய தில்லை. அப்படியிருந்தும் உலகம் என் மீது எவ்வ ளவு அக்கறை கொண்டிருக்கிறது." சிறிது நேரம் அவள் பேசாமல் நின் ருள். அவள் முக பாவம் அவள் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிருள் என்பதை தெளிவு படுத்தியது. சிறிது நேர மெளனத்திற்குப் பின் தொடர்ந்தாள்.
'இவனைப்பற்றி யாரும் என்னிடம் இதுவரை கேட்டதுமில்லை நானும் சொன்னது மில்லை. இன்று உங்கள் இருவருக்கும் சொல்லுகிறேன்?
எனக்கும் என் கணவருக்கும் சிங்கப்பூரில் தான் விவாகமாகியது. எங்களைப்போல் அன்னி யோன்னிய தம்பதிகள் வேறு யாரும் இருந்ததில்லை என்றுதான் நான் இன்றும் எண்ணுகிறேன்." "அவரில்லாமல் நான் வாழமுடியாது, நானில்லா மல் அவர் வாழ முடியாது" என்பதுதான் எங்கள் இருவர் அபிப்பிராயமும். இதைப் பலமுறை அவர் வாய்விட்டே கூறியிருக்கிருர், ஆனல், இன்று அவரில்லாமல்தான் நான் வாழுகிறேன். 9 இந்த இடத்தில் அவள் தொண்டை கம்மியது

Page 68
86
''என் மகனுக்கு ஒரு வயசிருக்கும் சிங்கப்பூர் பிடிபட்டபோது. நிரபராதிகளாய்- நிராயுதபாணி களாய் - நிராதரவாய் நின்ற பொது மக்களைக் கூட ஜப்பானியர்கள் இம்சித்ததை நினைக்க இப் பொழுதும் என் உடல் நடுங்குகிறது. இதயமில் லாத சில ஜப்பானியர்கள் வேட்டை நாய்களைப் போல் வெள்ளையர்களைத் தேடித்தேடி வதைத் தார்கள்.''
''ஒரு நாள் இரவு என் கணவர் அவசரமாய் வந்தார். இப்பொழுதே புறப்பட்டுவிடவேண்டும், ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்கக்கூடாது. ஜப்பானி யர்களின் அக்கி ர ம த் தைச் சகிக்கமுடியாது. ஐயோ ................... இது போல் நான் கேள்விப்பட்ட தேயில்லையே, பத்து மாசக் கற்பவதி பதைக்கப் பதைக்க கற்பழிக்கப்படுகிறாள். பச்சைக் குழந்தை கள் பட்டாக் கத்திக்கு இரையாகின்றன. இன்னும் இங்கிருந்தால் ஆபத்துத் தான். உடனே புறப்படு என்றார். சாமான்களை அப்படியே போட்டுவிட்டு மறுநாள் புறப்படவிருந்த கப்பலைப் பிடிக்கப் புறப்பட்டோம்.''
"உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை யைத் தூக்கச் சென்றேன் நான் . யாரோ உள்ளே வரும் சப்பாத்துச் சத்தம் கேட்டது. வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். என் சர்வ நாடியும் ஒடுங்கி விட்டது. துப்பாக்கி சகிதமாக மூன்று ஜப் பானிய போர் வீரர்கள் உள்ளே நின்றார்கள்.

墓
87
ஒருவனின் துப்பாக்கி முனை என் கணவன் மார் பில் பொருத்தியிருந்தது மற்ற இருவரின் பார் வையும் என் மீது விழுந்தது. காட்டு மிருகத்தைப் போல் என்மீது பாய்ந்தார்கள். நான் உள்ளே ஒட எத்தனித்தேன். இருவரும் என் கையைப் பிடித்து வெளியே இழுத்துவந்தார்கள், சிங்கத் தைப் போன்ற வீரமும், மலை யைப் போன்ற உருவமுங் கொண்ட என் கணவர் துப்பாக்கி முனையில் கைகளை உயரத் தூக்கியபடியே செய லற்று நின்றர். அவரைத் தூணுேடு சேர்த்துக்
கட்டினன் அந்த ஜப்பானியன்.’ இவ்விடத்தில்
தன் கதையைச் சிறிது நிறுத்தினுள். அவள் பார்வை பூசை அறைக்குள் சென்றது. விடுவி டென்று அறைக்குள் சென்ருள், அந்த ஜப்பானியனின் படத்தைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத் துக்கொண்டே கூறினுள்.
‘இவன்தான் என் கணவனைத் தூணுேடு கட் டியவன். ஆளைப் பாருங்கள். என் கணவனின் தேக வலிமையில் நாலில் ஒரு பங்கு இவனிடமிருக் குமா?. மற்ற இருவரும் என்னைத் தூணுேடு கட்டினர்கள். நான் வாய்விட்டுக் கதறினேன், மன்ருடினேன். அவர்கள் காதில் ஒன்றுமே ஏற வில்லை. ஜய்பானிய பாஷையில் ஏதோ கூறி உரக் கச் சிரித்தார்கள். ஒருவனுடைய இரும்புக் கை என் மார்புச் சட்டையைப் பற்றியது. நான் ஐயோ என்றலறினேன். ஒரு வினடிக்குள் என் மார்புச் சட்டை கிழிந்து நான் அரை நிர்வாண

Page 69
88
மாய் நின்றேன். கட்டிய கணவனின் கண் முன் னேயே கற்பழிக்கப்படுவேனே என்பதை என்னுல் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. அவ ரைத் திரும்பிப் பார்க்கவே என்னுல் முடியவில்லை, அப்பொழுது என் கணவரின் நிலை எப்படி இருந் திருக்குமென்பதை என்னுல் விபரிக்க முடியாது, இந்த நிலையை ஒரு கணவனுல்தான் கற்பனை செய்து பார்க்க முடியும்.”
அதற்கு மேல் என்ன நடந்திருக்குமோ எனக்குத் தெரியாது. ஆனல் திடீரென்று இந்தப் படத்திலிருக்கும் ஜப்பானியன், அவரை விட்டு விட்டு என்னிடம் வந்தான். ஜப்பானிய பாஷை யில் மற்ற இருவரோடும் ஏதேதோ பேசினன். சிறிது நேரம் அவர்களுக்கிடையே பலத்த வாக்கு வாதம் நடந்தது. அவர்கள் பாஷை எனக்குப் புரியாவிட்டாலும் அவர்கள் எதுபற்றி வாதிக் கிருர்கள் என்பது ஓரளவிற்கு விளங்கியது. அவர் கள் இருவரது மிருகத்தனமான ஆசையைக் கண் டித்து தாங்கள் வந்தது கொள்ளையடிக்க வே யாத லால் உள்ள பொருட்களைச் சுருட்டிக்கொண்டு போவோம் என்று வாதாடினுன் இந்தப் படத்தி லிருக்கும் ஜப்பானியன். அவன் கூறியவைகளை இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. வேட்டை நாயைப்போல் என் மேல் பாய்ந்தான் ஒரு வ ன் அவன் முரட்டு முகம் என் கன்னத்தில் உராய்ந் தது. திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. இரு ஜப்பானியர்களும் சுருண்டு வீழ்ந்தார்கள். இவன்

89
துப்பாக்கியோடு வீழ்ந்தவர்களையே பார்த்துக் கொண்டு நின்றன். அவன் வாய் ஏதோ முணு முணுத்தது. அவன் முகம் இறந்தவர்களுக்காக வருந்துகிருன் எ ன் ப  ைத ப் படம் பிடித்துக் காட்டியது.”*
'பரபரப்போடு என்னை முதலில் கட்டவிழ்த்து விட்டான். பிறகு அவரையும் அவிழ்த்து விடும்படி என்னிடம் கூறினன். கடைசி வரையில் அவன் துப்பாக்கியை அவர் மார்புக்கு நேரே பிடித்த படியே நின் முன், என் கணவர் நன்றி கூறினர். "நீ செய்த இந்த உதவியை - எங்கள் உயிரைக் காப்பாற்றியதல்ல - என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றியதை என் உயிருள்ளளவும் மறக்க மாட்டேன்’ என்ருர்,
'இவனுக்கு ஆங்கிலம் நன்ருகப் பேச வராது. அரைகுறை ஆங்கிலத்தில் "எனக்கு ஒரு மனைவி இருக்கிருள்" என்ருன், ரத்தினச் சுருக்கமாய் அவன் கூறிய அந்த ஒரு வசனத்தில் எவ்வ்ளவோ அர்த்தங்களைக் கண்டோம். அவன் துப்பாக்கியை நீட்டிப் பிடித்தபடியே பின்காட்டிப் போய்க் கொண்டிருந்தான். என் கணவர் "உன் நினைவாக ஏதாவது கொடு" என்று கேட்டார். அவன் சிறிது நேரம் தயங்கிவிட்டு, டையரிக்குள்ளிருந்த தன் உருவப் படமொன்றை எடுத்துக் கொடுத்தான்.”
'நாங்கள் இங்கிலாந்துக்கு வந்தோம். வந் ததும் அவர் ஞாபகமாக அவனது புகைப்படத்
தைப் பெருப்பித்தார்."
12

Page 70
90
'இரண்டு மாசங்களுக்குப் பின் அமெரிக்கா சென்ருேம். அங்கு ஆறு மாசங்கள்தான் எங்கள் வாழ்க்கை இன்பமாய்க் கழிந்தது. என் கணவர் மோட்டார் சயிக்கிள் விபத்தில் மாண்டுவிட்டார் என்று அன்று வந்த செய்தி என் தலையில் கல்லைப் போட்டுவிட்டது. பிரமை பிடித்த வள் போல் காலத்தை ஒட்டினேன். கொழும்பில் ராஜர் அன்ட் கம்பனியில் எங்களுக்கு ஒரு பங் குண் டு. என் மகனின் பிற்காலத்தை உத்தேசித்து இங்கு புறப் பட்டு வந்தேன். இன்றுவரை எங்கள் வாழ்க்கை ஆடம்பரமில்லாமல் அமைதியாய்ப் போய் க் கொண்டிருக்கிறது.”
'இப்போ சொல்லுங்கள், எங்களைவிட உங்கள் பெண்கள் கற்பை உயர்வாக மதிப்பவர்கள் என்று கூறுகிறீர்களே, அவர்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இந்த ஜப்பானி யனை எப்படிக் கெளரவிப்பார்கள்? அவர்கள் எப்படியாவது செய்யட்டும் நான் உங்களைக் கேட் கிறேன். நான் மாசற்றவளாக வாழ உதவி புரிந்த இந்த ஜப்பானியனை நான் தெய்வமாகப் போற்றி ஞல் அது குற்றமா?”
என்னுல் வாய்திறந்து பேசமுடியவில்லை. இது வரையில் என் கையிலே இருந்த அந்த ஜப்பானி யனின் படத்தை அவளிடம் கோடுத்தேன். அந்தப் படத்தின்மீது உண்மையில் தெய்வத்தின் படம் போலவே எனக்கும் பக்தி பிறந்தது.
விடை பெற்றுக்கொண்டு திரும்பும்போது திடீரென்று என் நண்பன் வேணு அவள் காலைத் தொட்டு நிமிர்ந்தான். அவள் ஒன்றும் புரியாது திகைத்துப்போய் நின்ருள்.

璽
9. பந்தயம்
தினசரியைப் புரட்டினேன். அதில் என் புகைப் படத்தோடு முதல் நாளைய மோட்டார் சயிக்கிள் ஒட்டப் பந்தயத்தில் நான் வெற்றிபெற்ற செய் தியை பிரசுரித்திருந்தார்கள். அதுபற்றி எனக்குப் பெருமை ஏற்பட்டிருந்தாலும் என் வெற்றிக்கு உறுதுணையாய் - மூல காரணமாயிருந்த அந்த மோட்டார் சயிக்கிளைப் பற்றி ஒரு வசனங்கூட பத்திரிகையில் இல்லாதது எனக்கு வருத்தமாயிருந் அது தான் தேய்ந்து மற்றவர்கட்கு வாசனை யைக் கொடுக்கும் சந்தன மர ம் போ ல் புகழை விரும்பாது எனக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த அந்த சயிக்கிளைப்பற்றி பத்திரிகையா 7ெர்கள் எழுதாவிட்டாலும் நான் மறந்துவிட முடியுமா?
மோட்டார் சயிக்கிள் செலுத்துவதில் போற் றத்தக்க அளவுக்கு நான் திறமைசாலி அல்ல வென்பது எனக்கே தெரியும். இதற்கு முன் மூன்று முறை போட்டியில் கலந்து படுதோல்வி அடைக்

Page 71
92
திருக்கிறேன். இந்தமுறை நான் (இவற்றிபெற்ற துக்கு என் திறமையே காரணமென்று என் நண் பர்கள் கருதினார்கள். ஆனால் உண்மையான கார ணம் என்னவென்று நான் கூறினால் அவர்கள் நம்பவா போகிறார்கள். மற்றவர்களைப் பற்றி ஏன் பொருட்படுத்தவேண்டும். எனக்கு மட்டும் தெரிந் திருந்தால் போதாதா?
போட்டி தொடங்கு வதற்கு ஒரு வாரத்திற்கு முந்தியே நல்ல ஓர் மோட்டார் சயிக்கிளைத் தேடி அலைய ஆரம்பித்தேன். என் நண்பனொருவனிடம் புது ''டைகர் ட்ரையம்ப்" மோட்டார் சயிக்கிள் ஒன்று இருந்தது. அவனிடம் போய் நான் விஷ யத்தை வெளியிட்டதும் “ இரவல் தருவதைப்பற்றி ஒன்றுமில்லையப்பா, ஆனால்.......
இந்தக் கொடூரமான "ஆனால் " அவன் வாயி லிருந்து புறப்பட்டதுமே என் நம் பிக்கை குறைந்து விட்டது. அவனிடமிருந்து சயிக்கிளைப் பெற முடியுமென்ற நம்பிக்கை மட்டுமல்ல, போட்டியில் ஜெயிப்போமென்று நம்பிக்கையும் குறைந்துவிட் டது. முதன்முதலில் கேட்டவுடனேயே மறுக் கிறானே என்று அங்கலாய்த்தேன். எப்படியோ அவனைச் சரிப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்து போட்டி தினத்திற்கு முதல் நாள் வந்து சயிக் கிளைப் பெறுவதாக கூறிச்சென்றேன்.

93
முதலில் உங்கள் சந்தேகமொன்றை நான் நிவர்த்தி செய்யவேண்டும். ஒட்டப் பந்தயத் திற்குப் புறப்படுகிறேனே என்னிடம் சொந்தத் தில் ஒரு மோட்டார் சயிக்கிள் இல்லையா, என்று நீங்கள் எண்ணலாம். இல்லாமலென்ன, என்னிடமும் ஒன்றிருக்கிறது. மூன்றரைக் குதிரை சக்தி கொண்ட "மாச்லெஸ் மோட்டார் சயிக் கிள், தன்னுடைய வாழ்க்கைச் சரிதையில் அது வும் எத்தனை போட்டிகளைக் கண்டிருக்குமோ
தெரியாது. யுத்த காலத்தில் தன்னலியன்ற
சேவையைப் புரிந்துவிட்டு அரை உயிரோடு என்னை வந்து சரணடைந்து இன்று ஏழெட்டு வருடங்களுக்கு மேலாகப் போகிறது. என்னிடம் வந்த நாள்முதல் எஜமான பக்தியோடு சேவை புரிந்து வந்திருக்கிறது. இதை வைத்துக்கொண்டு தான் ஒரு நல்ல சயிக்கிளைத் தேடி அலைந்தேன்
மறுநாள் போட்டி, நண்பன் வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமானேன். என்னை அறியா மலே வாசலில் நின்ற வயோதிக மோட்டார் சயிக்கிளின் மீது எண் கவனம் சென்றது. அத னுடைய தீய்ந்துபோன தோற்றம் எனக்கு ஆயிரக் கணக்கான அனுபவங்களைக் கூறியது. எஞ்ஜினி லிருந்து எண்ணெய் சொட்டுச் சொட்டாய் வடிந்துகொண்டிருந்தது என் கண்ணுக்கு அப் போது அது எண்ணெய்யாகவே தோன்றவில்லை. என் நன்றிகெட்ட செயலை நினைந்து அதுவடிக் கும் கண்ணிராகவே தோன்றியது.
:2

Page 72
94
கம்
நான் வேண்டியபோதெல்லாம் என்னைச் சுமந்து கொண்டு எங்கெங்கெல்லாம் சுற்றி அலைந் திருக்கிறது. அதையே உற்றுக் கவனித்துக் கொண்டு நின்றேன். மண்டை ஓட்டைப் பார்த் ததும் சுடலை ஞானம் பிறப்பதுபோல் என் உள்ளத்தேயும் ஒருவித உணர்ச்சி வெறி உண் டாகியது. பேசாமல் உள்ளே சென்று உட் கார்ந்துகொண்டேன். கணக்கற்ற சிந்தனைகள் என்னைச் சுற்றி வலை பின்னின.
ஏன் இதே சயிக்கிளைக் கொண்டு போட்டி யிடக் கூடாது. தோற்றுவிட்டால்..................? தோற்றுவிட்டாலென்ன. இதற்குமுன் கலந்து கொண்ட மூன்று பந்தயங்களிலும் வெற்றியா பெற்றேன்? நண்பனிடம் போய் அவனது மோட்டார் சயிக்கிளைக் கேட்டதும் முதலில் 'ஆனால்' போட்டு அபசகுனமாய் மறுத்துவிட் டானே. மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டு மறு நாள் என் வயோதிகரில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். போட்டி நிலையத்தை அடைந் தேன். ஏராளமான சனக்கூட்டம் கூடியிருந்தது . எல்லோரும் என்னை ஒருமாதிரியாகப் பார்த் தார்கள். அவர்கள் பார்வை என்னை என்னவோ செய்தது. சிலர் எனக்குச் - சித்த சுவாதீன மில்லையோ என் று சந்தேகித்திருப்பார்கள். ஏதோ ஒரு வெறியில் வந் து விட்டேனேயல்லா மல் போட்டியில் கலந்து கொள்பவர்கள் து சயிக் கிள்களோடு என்னதையும் ஒப்பிட்டுப் பார்க்
1ெ

95
கும்போது அவமானம் அடையாமல் திரும்ப வேண்டுமே என்றிருந்தது. எல்லோருக்கும் கடைசி யில் வந்து ரசிகர்களின் கூக்குரலை வாங்கிக்கட் டாமல் மெதுவாகத் திரும்பிவிடுவோமா என்று கூட ஒரு கணம் எண்ணினேன். யாராவது ஒரு வர் கடைசியில் வந்துதானேயாக வே ண் டு ம். எல்லோருமே முதலாவதாக வர முடியுமா என்ன?
சன்பீற், ஹாவிடேவிட்ஸன், ஜாவா, இந்தி யன், முதலிய பல ரக சயிக்கிள்களிள் மத்தி யிலே என்கிழவனாரையும் கொண்டு வந்து நிறுத் தினேன். போட்டி ஆரம்பித்தது. காற்றைக் கிழித்துக் கொண்டு மோட்டார் சயிக்கிள்கள் கிளம்பின. யாரோ என்னை உற்சாகப்படுத்து வதற்காக என் பெயரைக்கூறிக் கத்தினார்கள். அ து என்னைக் கேலி செய்யும் குரல் போலவே எனக்குப்பட்டது. மூன்றாவது 'கியர் மாற்றும் போது வழக்கத்திற்கு மாறாக 'கர் கர்' சத்தம் கேட்டது. ஏக்கத்தோடு 'கிளஜ்ஜைக் கவனித் தேன். 'கிளஜ்' வயர் அறுந்து இரண்டு மூன்று கம்பிகளில் தவம் செய்தது. மறுபடி 'கியர், மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ............? எதிர்நோக்கி வரும் ஆபத்தையும் பொருட்படுத் தாமல் விசையை முடுக்கினேன். என் முன்னரே இரண்டே இரண்டு பேர் தான் போய்க்கொண்டி ருக்கிறார்கள் என்பதைக் கண்டதும் உற்சாகத் தோடு மேலும் மேலும் விசையை முடுக்கினேன். என் வயோதிகர் பூமியில் செல்லவில்லை. அந்த

Page 73
ரத்திலேயே பறந்துகொண்டிருந்தார், முன்னுல் சென்று கொண்டிருந்த இருவரையும்  ெம ல் ல மெ ல் ல நெருங்கிக் கொண்டிருந்தேன். திடீ ரென்று இடி முழக்கம் போல் இரைச்சல் ஆரம் பித்தது, என் சர்வ நாடியும் ஒடுங்கி விட்டது. கூட்டத்திலிருந்து கிளம்பிய கேலிக்குரல்கள் என் காதில் நாராசமாய் ஒலித்தன. எ ஞ் ஜி னி ல் பொருத்தப்பட்டிருக்கும் புகை போக்கிக் குழாய் கழன்றுவிட்டதே அந்த இரைச்சலுக்குக் காரண மாகும். இந்த வருத்தம் என் வயோதிகருக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. முதுகிலிருந்தபடியே ஒரு உதை கொடுத்தேனணுல் அந்த வருத்தம் சரிப்பட்டுவிடும். ஆணுல் இன்று இரண்டு உதை கொடுத்தும் வருத்தம் மாறவில்லை. காரணம் அக்குழாய் நன்ருகக் கழன்று வெளிப்பட்டுவிட் டது. அக்குழாயை இனி உள்ளுக்குச் செலுத்த முடியாதென்றறிந்ததும் கவனத்தைப் போட்டி யில் செலுத்தினேன். எனக்கு முன்னுல் சென்ற இருவரும் சற்று முன்னேறி விட்டார்கள். பின் ணுல் வந்துகொண்டிருந்தவர்களில் ஒரு வ ன் எனக்கு அருகில் வந்துகொண்டிருந்தான். திடீ ரென்று அலறல் குறைந்தது எப்படியோ குழாய் பொருத்தப்பட்டிருந்த வாய்க்கருகில் வந்துவிட் டது என்றுணர்ந்து ஆத்திரத்தோடு மறுபடியும் ஒரு தட்டுக்கொடுத்தேன். குழாய் பொருந்தி விட்டது எதிசையை முடுக்கினேன். உடலிலுள்ள 亨惑@ நரம்புகளும் முறுக்கேறிப் போயிருந்தன.
ܟܠ ܐ

97
எங்கிருந்தோ ஒரு அசுர பலம் வயோதிகருக்கு ஏற்பட்டது. முன்னுல் சென்று கொண்டிருந்த இருவரில் ஒருவன் எனக்கு அருகே வந்து விட்டான். அவன் ஒரு முறை | எ ன் னை த் தி கும் பி ப் பார்த்துவிட்டு உடம்பை நன்முக வளைத்து உட்க ர்ந்து கொண்டு விசையை முடுக் கினன். கொஞ்சம் கொஞ்சமாக என் வயோதி கர் முன்னேறினுர், எனக்கோ உற்சாகம் தாங்க முடியவில்லை. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடம் சமீபித்து விட்டது. முன்னுல் ஒருவன் மட்டும் வெகு சமீபமாகச் சென்றுகொண்டிருங் தான். உணர்ச்சியோடு வாய் திறந்து பேசி னேன். 'நண்பா, உன் வெற்றியைக் களங்கமில் லாத வெற்றியாக்கி விடு.”
முன் சக்கரங்களிரண்டும் ஒரு அங்குல வித் தியாசத்தில் இருந்தன. குறிக்கப்பட்ட இடத் திற்கு இன்னும் சில யார்கள்தானிருக்கும். அந்த இடத்தை இருவரும் ஒரே முறையில் த ர ன் டி னுேம் ஜன சமுத்திரத்தின் வாயிலிருந்து என் பெயரே கிளம்பிக்கொண்டிருந்தது. அப்பொழுது தான் என் வயோதிகர் ஜெயித்து விட்டார். என்ற விஷயம் எனக்குப் புரிந்தது.
13

Page 74
98
விசையைக் குறைத்து நிறுத்துவதற்கு எண் ணினேன். ஆனல் விசை தானுகவே குறைந்து விட்டதைக் க எண் டு ஆச்சரியப்பட்டேன். ஆம் விசையைப் பொருத் தி யிரு ங் த "வயர்' அறுந்து போய் விட்டது.
தன் கடைசி மூச்சு வரையில் எனக்காக - என் வெற்றிக்காகப் பாடுபட்டார் என் வயோ திகர். அவரைப்பற்றி ஒரு செய்தியுமே பத்திரி கையில் வராதது எனக்கு மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது.
藝
 

10. கிழவரின் கதை
" போடா காதலாம் க தல். உன் அழகுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்” என்று என் நண்பனைக் கேலி செய்தேன். அவ ன் மணலைக் கிளறிய படியே சிந்தனையிலாழ்ந்து போயிருந்தான்.
"அப்படிச் சொல்லாதே தம்பி. காதலுக்கு அழகும் முக்கியமில்லை. அந்தஸ்தும் மு க் கி ய மில்லை. அது எப்போ எந்த நேரத்தில் என்ன காரணத்துக்காகத் தோன்றுமென்று நிச்சயமா கக் கூறமுடியாது’ என்று எங்கட்குச் சிறிது தூரத்தில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண் டிருந்த ஒரு வயோதிகர் கூறினர்.
நாங்கள் பேசியதெல்லாம் அவர் காதில்
வீழ்ந்து விட்டதென்று நினைத்து உதட்டைக் கடித்துக் கொண்டேன்.
பெரியவர் சிரித்தபடியே, ‘வெட்கப் படுகி முயா தம்பி, இதில் வெட்கப்பட என்னதானி

Page 75
I 00
ருக்கிறது. இப்படி இருவரும் வாருங்கள். உங் கட்கு ஒரு காதல் கதை சொல்லுகிறேன்'
என்ருர்,
தெரியாமல் கிழவரிடம் மாட்டிக் கொண் டோமே என்று எண்ணியபடி அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தோம். அவர் கதையை ஆரம் பித்தார்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. அவன் பெயர் நாகலிங்கம். அரசாங்கத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தான். அவன் அழகனல்ல. ஆணுல் அவலட் --
சணமுமல்ல, தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வதில் அவ்வளவு அக்கறை கொண்டவனுகத் தெரியவில்லை.
தானுண்டு தன் வேலையுண்டு என்றுதான் ஆரம்பத்திலிருந்தான். ஆனல் அவன் வாழ்க்கை யில் அவள் குறுக்கிட்ட பின் புதான் மாற்றங்க ளேற்பட்டன. தினமும் ஆபீஸுக்கு அவன் பஸ் ஸில்தான் போவது வழக்கம். அவளும் அந்த பஸ்ஸில்தான் பிரயாணம் செய்வாள். ஆணுல் அவளைப்பற்றி அறிய அவன் என்றுமே முயற்சித்த தில்லை. அழகற்றவன் என்ற தாழ்மை உணர்ச் சிக்கு அவன் அடிமைப்பட்டிருந்தான். அதற் கொரு காரணமாயிருக்கலாம்.
A

1 0 1
அவனுேடு ஒரே கங்தோரில் வேலை பார்க்கும் கணேசன் நாகலிங்கத்தோடு ஒரே அறையில் வசித்தான். இருவரும் ஒன்ருகவே பஸ்ஸில் வேலைக்குச் செல்வார்கள். கணேசன் அழகன், அதோடு நாகரிகtாக உடை அணிவதில் கைதேர்ந் தவன். அடிக்கடி அவளை நசுக் காகப் பார்த்துப் புன்னகை புரிவான். உடனே அவள் தலையைக் கவிழ்ந்து கொள்வாள். நாகலிங்கனக் கிண்டல் செய்வதில் கணேசனுக்கு ஒரு திருப்தி 'அவள் அடிக்கடி உன்னையே பார்க்கிருளடா, நீதா ன் அவளைக் கவனிப்பதில்லை. ' என்றெல்லாம் கூறி கேலி செய்வான். கணேசன் கேலி செய்வது வலுக் கவே நாகலிங்கனின் உள்ளத்திலும் காதல் செடி தளிர் விட்டது.
பஸ்ஸில் சனக்கூட்டமாக இருக்கவே அன் ருெரு நாள் அவள் தன் பக்கத்தில் நாகலிங்கனுக்கு இட மளித்தாள். உண்மையில் அச்சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கலில்லையேயென்று கணேசனுக்குத் துக்க மாயிருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நாகலிங்கனைக் கேலி செய்தான். 'உண்மையில் நீ அதிர்ஷ்டக்காரனடா, அவள் உன்னைக் காதலிக்காவிட்டால் இப்படி நடந்து கொள்வாளா? அவளின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாத மண்டுவடா நீ! நானுயிருந் தால்."

Page 76
102
நாகலிங்கனுக்கு இப்போது இரவில் தூங்க முடிவதில்லை. மனதிலும் நிம்மதியில்லே. காதல் அனுபவம் உண்மையில் அவனுக்குப் புதிது. பஸ் லில் அவளைச் சந்திக்கும்போதெல்லாம் கைகால் கள் நடுங்கும், உள்ளமும் படபடவென அடித்துக் கோள்ளும். நாட்கள் இப்படியே போய்க்கொண் டிருந்தன. அவன் உள்ளத்தில் வேரூன்றிய காதல் செடியைக் கணேசன் நீரூற்றி வளர்த்து வந்தான்,
அன்று நாகலிங்கனுக்கு உடல் நிலை சரியில்லா மலிருந்தது. கணேசனிடம் ஒரு லீவ்லெட்டர் ? எழுதிக்கொடுத்துவிட்டு அறையிலேயே படுத்துக் கொண்டான். ஒருநாள் ஒய்வெடுத்தால் எல்லாம் சரியாய்ப்போய்விடுமென்று எண்ணினன். உட லுக்கு ஓய்வு கிடைத்தது. ஆ ன ல் உள்ளத் திற்கு.?
மாலை கணேசன் ஆபீஸால் வந்ததும் "அடே உனக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கடா. இரவு உன் கணக்கில் தேனீர் விருந்து வைப்பதாக வாக்களித் தால்தான் விஷயத்தைச் சொல்லுவேன்.” என்று குதித்தான்.
சம்பள ஏற்றம், உத்தியோக உயர் வு இவைகளைப் பற்றித்தான் ஏதாவது இருக்கும் என்று நாகலிங்கம் எண்ணினலும் அவளைப் பற்றிய தாய் ஏதாவதிருந்தால். என்றும் ஓர் சலபம் தட்டியது. முதலும் கடைசியுமாக அவளைத் தான் அவன் தன் வாழ்க்கையில் காதலித்தான்.

03
தற்கால நாகரிக வாலிபர்களைப்போல் துணிபோடு தன் காதலை அவளுக்கு எடுத்துக் கூற - கண்ணே பெண்ணே யென்று இதயத்தைப் பிளந்து அதற்குள் வீற்றிருக்கும் இ த ய ராணியை - காதலியைக் காட்ட - அன்பு வசனங்களை அள்ளிப் பொழிய அவனுக்கு அனுபவம் போதவில்லை. ஆனல் உள் ளத்தே காதல் வேகம் வெகு தீவிரமாகிக் கொண் டேயிருந்தது.
'என்னடா விழிக்கிருய்? அவளைப்பற்றி அறிய உனக்கு அக்கறையில்லை யென் ருல் என் பாட்டுக்குப் போகிறேன். உனக்கும் தேனீர்ச் செலவு மிச்சம்.?
நாகலிங்கனின் ஆவல் இப்போது பன்மடங் காகியது. ஆனலும் அதை வெளிக்காட்டிக் கொள் ளாமல் புதிதாக இன்றுதான் தேனீர் என் கணக் கில் குடிக்கப்போகிருபாடா? விஷயத்தைத் தான் நீ நீட்டிமுடக்காமல் என்னவென்று சொல்லேன்' என்ருன்.
நாகலிங்கனின் ஆவலைப் புரிந்துகொள்ள முடி யாத மண்டூகமல்ல கணேசன். அவன் வெகு சாமர்த்தியமுள்ளவன். எந்த விஷயத்தையும் தலைகால் வைத்து வெகு ரசனையோடு எடுத்துச் சொல்வதில் கைதேர்ந்தவன். நாகலிங்கனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு சொல்ல ஆரம் பித்தான்.

Page 77
104
- 'இன்று என்ன காரணத்தினுலோ பஸ்ஸில் அதிகக் கூட்டமில்லை. அவளுக்குப் பின்னூலிருந்த வெறுமையான ஆசனத்தில் நான் உட்கார்ந்தேன். அவள் அடிக்கடி பின்னுல் திரும்பிப் பார்த்தா ள், அவள் நிச்சயமாய் நீ வராததின் காரணத்தை அறியத்தான் ஆவல்படுகிருள் எ ன் று நான் உணர்ந்து கொண்டேன். சிறிது நேரம் அவஸ் தைப்பட்டுவிட்டு 'இப்பொழுது நேரம் என்ன இருக்கும். ’’ என்று கேட்டுவிட்டு தலேயைத் தோங்கப் போட்டுக் கொண்டாள். ஒரு வசனம் பேசுமு ன் அவள் உடல் ஒடுங்கிவிட்டது. எப் படியோ பேசச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. உன்னை ப்பற்றித்தான் நிறைய விசாரித்தாள். பெயர் கேட்டாள், ஊர் கேட்டாள், விலாசமும் கேட்டாள். அப்பப்பா அவளுக்குத்தான் எவ்வளவு அன்பு உன் மேல். ...’
கணேசன் கதைத்துக்கொண்டே போனன். ஆணுல் நாகலிங்கம் இந்த உலகில் இருந்தால்தானே கற்பனை உலகில் அவன் சஞ்சரித்துக்கொண்டிருந் தான் ,
மறுநாளும் நாகலிங்கன் வேலைக்குப் போக வில்லை, முதல் நாளே அவன் மறுநாள் லீவுக்கும் சேர்த்து எழுதியிருந்தான். உள்ளத்தே சிந்தனை அலைகள் மோத முகட்டைப் பார்த்தபடி படுக்கை பில் கிடந்த அவன், சயிக்கிள் மணியோசையைக்

105
கேட்டுத் துள்ளி எழுந்தான். த பா ற் க ா ர ன் கொடுத்த கடிதம் எங்கிருந்து வந்ததென்று முதல் முத்திரையைப் பார்த்தான். உள்ளூர்க் கடிதந் தான். விலாசம் முத்து முத்தாய்ப் பதிக்கப்பட் டிருந்தது. ஆவலும் ஆச்சரியமும் தூண்ட உறை யைக் கிழித்தான்.
அன்ப,
நேற்று உங்களைக் காணாதது என்னவோ போலிருக்கிறது. உடல் நலக் குறைவுதான் நீங்கள் வராமைக்குக் காரணமென்று உங்கள் நண்பர் கூறினார். நீங்கள் யாரோ, நான் யாரோ. ஆனால் உங்கள் சுகவீனத்திற்கு - நானேன் கவலைப்பட வேண்டுமென்பதன் காரணந்தான் புரியவில்லை. வாயால் கதைக்கலா மென்றால் பாழும் வெட்கம் குறுக்கிடுகிறது. அடக்கமுடியாத ஆவலால் கடித மெழுதிவிட்டேன். மன்னிக்கவும்.
1. அ உங்கள்
கடிதத்தை எத்தனை தடவைகள் வாசித்தானோ தெரியாது. கண்ணில் பலமுறை ஒற்றிக் கொண் டான். கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட் டதுபோல் பெருமிதங் கொண்டான் . உண்மையில் அவன் வாழ்நாளில் அவனுக்குக் கிடைத்த முதல் காதல் கடிதம் அதுதான்.
14

Page 78
106
மாலை கணேசன் வந்ததும் அவன் பேச்சைத் தொடங்கினன். ஆனல் நாகலிங்கம் கொலே செய் தவன்போல் முகத்தை 'உம்' மென்று வைத்துக் கொண்டு பேசாமலிருந்தான். ஏனே அவனுல் அவளைப் பற்றிக் கணேசன் வர்ணிப்பதைச் சகிக்க முடியவில்லை. கடிதத்தின் பின் அவளைத் தன் சொந்த உடமையாகவே எண்ணினன். கணேசன் தன் கிண்டலை நிறுத்தாமல் "அவள் உன் விலா சத்தைக் கேட்டாளேடா க டி தம் ஏதாவது எழுதினுளா?' என்ருன் ஒரு கேலிச் சிரிப்போடு.
நாகலிங்கனின் நிலை தீயை மடியில் கட்டி வைத்திருய்பவனின் நிலைபோலாய் வி ட் ட து. 'கணேஷ், எனக்குத் தலைவலியாயிருக்கிறது. தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே." என்று கூறிவிட்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான். கணேசனும் ஏதேன ஒரு இராகத்தை முணுமுணுத்த படியே ஆபீஸ் உடைகளைக் களைந்தான்.
நாட்கள் சென்றுகொண்டிருந்தன. கடிதம் கிடைத்த செய்தியை நாகலிங்கம் வெளிவிடவில்லை. தினசரி பஸ்ஸில் அவர்கள் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது, கூடக் கணேசனும் வந்து தொலை கிருனே யென்று நாகலிங்கம் மனத்துள் அலுத்துக் கொண்டான். சீக்கிரமே ஒரு சந்தர்ப்பம் கிடைத் தது ஒரு வார லீவில் கணேசன் ஊருக்குப் போகப் போ கிருன் இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிப் பயன் படுத்துவது என்று நாகலிங்கம் அல்லும் பகலும் சிந்தனை செய்தான். அவனுக்கு ஒரு வழியுந் தோன்றவில்லை.

07
கணேசன் போய் இரண்டு நாட்களாகிவிட்டன. நாகலிங்கத்துக்கு என்ன செய்வதென்றே தோன்ற வில்லை. மூன்று நாள், நாலு நாள், ஐந்து நாட் களுமாய் விட்டன. இன்னும் இரண்டு நாட்களில் கணேசன் வந்துவிடுவான். இப்படியான ஒரு சந் தர்ப்பம்-உள்ளத்தை அவளுக்குத் திறந்து காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பம் - என்றுமே கிடையா மற் போனலும் போய்விடலாம். எவ்வளவோ முயற் சித்தும் அவளோடு வாய் திறந்து ஒரு வசனம் பேச அவனுக்குத் தைரியம் ஏற்படவில்லை. பஸ்ஸில் இத்தனை பேர் மத்தியில் அவளோடு சம்பாஷிப் பதை அவள் நாகரிகமாகக் கொள்வாளா? அல்லா மலும் உள்ளத்திலுள்ளதை மனம்விட்டுச் சொல்ல அது ஏற்ற இடமல்லவே.
மனதை ஸ்திரப்படுத்திக் கொண்டு அவள் இறங்குமிடத்திலேயே நாகலிங்கனும் இறங்கிவிட் டான். அவள் எழுதிய கடிதம் சட்டைப் பையில் இருக்கிறதாவென்று ஒருமுறை தொட்டுப் பார்த் துக் கொண்டான். சம்பாஷணையை எ ப் படித்
**வணக்கம்' என்றன். இதைச் சோல்லும் போதே நாக்குளறியது நாகலிங்கனுக்கு. அவள் திரும்பிப்பார்த்தாள். அவள்முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. ஆனலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் பதில் வந்தனம் கூறினுள்

Page 79
1. 0 8
'உங் - கள் க - டி - த - ம் கிடைத் - தது ... 11 திக்கித்திக்கி வார்த்தைகள் அவன் வாயினின்றும் புறப்பட்டன.
' என் கடிதமா எப்போ எழுதினேன்?
அவள் பதிலைக் கேட்டதும், திடீரென்று அவன் நின்ற இடம் பெயர்ந்து அதல பாதாளத்திற்கு அந்தர மார்க்கமாய்ச் செல்வது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. நடுங்குங் கரங்களோடு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். கடிதத்தைப் பார்த்ததும் ஒரு புறம் ஆத்திரமும் மறுபுறம் சிரிப்புமாயிருந்த து அவளுக்கு.
"ஆமாம் இது என்னுடைய கடிதமென்று உங் கட்கு எப்படித் தெரிந்தது? இதில்தான் யாருடைய கையொப்பமுமில்லையே.”
"எனக்கு வேறு யாரிருக்கிருர்கள்..?" தப்பி ஒட வழி தெரியாவில் தவித்துக்கொண்டே கூறினுன்,
"நான்தானகப்பட்டேனுே?
'இல்லை . என்னை மன்னித்து விடுங்கள் 8 0 9 as . அவன்தான்.என்ன ஏ மா ற் றி விட்டான், என்னுடைய விலாசத்தை நீங்கள் கேட்டு வாங்கியதாகப் பொய் கூறிவிட்டான். நான் உண்மையென்று நம்பி.' விக்கிவிக்கி

109
அழுதான். ஒரு பெண்ணுக்கு முன்னுல் - பாதை யோரத்தில் - இப் படி நடந்துகொள்ளுகிருேமே யென்று அவன் எண்ணவில்லை. காதலில் அவனுக் கேற்பட்ட ஏமாற்றம் - உள்ளத்தில் ஏற்பட்ட அடி - மாருத தழும்பை உண்டுபண்ணி விட்டது.
"யார்? உங்களோடு ஒருவர் நிதமும் கூட வருவாரே, அவரா? என்று பரிவோடு கேட்டாள்.
சிறு குழந்தையைப் போல் விக்கி விக்கி தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு விடுவிடென்று நடந்தான் நாகலிங்கம், அவன் போகும் திக்கையே பார்த்துக்கொண்டு நின்ருள்.

Page 80
11. ஏழு ரூபாய்
தூண்டியை நீருக்குள் போட்டுவிட்டு குளக் கட்டில் சுமார் ஒரு மணி நேரமாக உட்கார்ந் திருந்த சிறிலுக்கு அன்று ஒரு மீனும் அகப்பட வில்லை. அலுப்போடு எழுந்து பங்களா வை நோக்கி நடந்தான். அவனுக்கு இருபது வயசிருக்கும். கலா சாலை விடுமுறைக்கு கிராமத்துக்கு வந்தவன் பொழுது போக்குக்காகக் குளக்கரைக்கு தூண்டி சகிதம் செல்வது வழக்கம். இன்று மீன்கள் அவனை ஏமாற்றிவிட்டன.
பங்களாவின் பின் பக்கவழியால் தோட்டத் துக்குள் நுழைந்தவன் , வீழ்ந்து கிடந்த ஒரு மரத் தின்மேல் உட்கார்ந்து தனது கறுப்புக் கோட்டைத் தைத்துக்கொண்டிருந்த பிரான்ஸிஸைக் கண்டான். பிரான்ஸிஸுக்கு சுமார் அதுவது வயசிருக்கும். சிறிலுக்கு நினைவு தெரிந்த காலந்தெஈட்டு அவர் கள் தே (ா ட் டக் காவல்காரனுக பிரான்ஸிஸ் கடமையாற்றி வருகிருன். பிரான்ஸிஸின் மேல்

1 1 J
சிறிலுக்கு அளவு கடந்த பிரியம். சிறு வயசி லிருந்தே அவன் "தாத்தா, தாத்தா" என்று பிரான்ஸிஸைச் சுற்றி வருவான். பாலப் பருவத் தில் பிரான்ஸிஸின் முகச் சுருக்கங்களையும், கண் களில் தேங்கி நிற்கும் சோக வாரியையும் அவனுல் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆணுல் இன்று? அவன் கலாசாலை மாணவன். உளநூல் சாஸ் திரத்தைக் கரைத்துக் குடித்திருக்கிருன். பிரான் ஸிஸின் இதயத்தில் ஏதோ ஒரு காரணத்தினல் வீழ்ந்த அடி குரூரமான ரணத்தை ஏற்படுத்தி யிருக்கவேண்டும் என்று எண்ணிஞன்.
"என்ன தாத்தா, நான் உங்கள் அருகே இவ்
வளவு நேரம் நிற்கிறேன் e o O a e o 99
"ஆமாம், ஏன் நிற்கிருய்? ஏதாவது பேச வேண்டுமா?’ என்ருன் கிழவன் குனிந்த தலை நிமிராமல் தன் வேலையில் ஈடுபட்டபடியே.
'ஏன் தாத்தா, நான் அறிந்த காலம் தொடக் கம் இந்தக் கறுப்புக் கோட்டைத் தானே தினமும் அணிகிறீர்கள். இதில்தான் எவ்வளவு தையல்கள் வீழ்ந்துவிட்டன. தைப்பதற்கே இனி இடமில்லையே.
இந்தப் பழைய கோட்டை இனி ஏன் மாற்றக்
கூடாது?’
'நானே ஒரு பழைய கோட்டுத்தான். புதிய கோட் டுக்குள் புகவேண்டிய காலம் வெகு தூரத்தி லில்லை. ’ கிழவனின் கண் கலங்கியது.

Page 81
112
''ஏன் தாத்தா அழுகிறீர்கள். நானுந்தான் கவனித்துக்கொண்டு வருகிறேன். சதா நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டுதானிருக்கிறீர்கள். உங்க ளுக்கேதாவது குறையிருந்தால் சொல்லுங்கள் தாத்தா. நான் அப்பாவிடங் கூறி நிச்சயம் நிவர்த் திக்க முயற்சிப்பேன் ,''
'' எனக்கென்னப்பா குறை - குறை இருந்தா லும் ஒருவராலும் அதை நிவர்த்திக்க முடியாது. மரணத்தைப் பற்றிய நினைவு என் கண்களைக் கலங்கச்செய்து விட்டது.”
''பொய், நிச்சயம் பொய் சொல்லுகிறீர்கள். நீங்கள் மரணத்தைக் கண்டு ஒரு பொழுதும் அஞ்ச மாட்டீர்கள். உங்கள் கவலைக்கு வேறு காரணம் இருக்கவேண்டும்.
பிரான்ஸிஸ் கோபத்தோடு நிமிர்ந்து பார்த் தான். அவன் உதட்டிலிருந்து சொற்கள் வெடித் தன. " பொய்யா? நான் என்று மே பொய் சொன்னதில்லை. நீ என்ன ஆதாரத்தைக் கொண்டு என்னைப் பொய்யனென்று கூறினாய்?''
"மன்னியுங்கள் " தாத்தா. நான் தப்பாக நடந்து கொண்டேன். தயவு செய்து என் பிழை யைப் பொறுத்துக் கொள்ளுங்கள்"
"அப்பா சிறில், நீ என் புதல்வன் மாதிரி. உலகத் தில் ஒட்டாமல் வாழ்ந்த எனக்கு சிறி தளவு பந்தம் உன்னால் தான் ஏற்பட்டது. நான் உண்மையில் சாவுக்குப் பயப்படவில்லை. ஆனால்,

113
மரண நினைவுதான் என் கவலைக்குக் காரணம். அந்த நினைவின் பின்னணியில் மறைந்து நிற் கும்.........
...........'' கிழவன் ஆழ்ந்த சிந்தனையில் அமிழ்ந்து விட்டான். சிறில் பேசாமல் பிரான் ஸிஸின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
''துரோகி.............. என் லட்சியத்தைக் கெடுத்து விட்டான். என் ஒரே ஆசையைத் தீ வைத்துக் கொழுத்திவிட்டான்.................'' பிரான்ஸிஸ் வெறி பிடித்தவன் போல் கத்தினான். அவன் தளர்ந்த உடல் உணர்ச்சி மிகுதியால் ஆடியது.
''தாத்தா............. தாத்தா.............. " எ ன் ன சொல்லுகிறீர்கள்? எனக்கொன்றும் புரியவில்லையே. அமைதியாயிருங்கள் தாத்தா'' என்றான் சிறில். கிழவன் ஏதோ பழைய சம்பவத்தில் ஒன்றி விட்டா னென்பது அவனுக்கு நன்கு விளங்கியது.
'ஒ ....... சிறில், பயந்துவிட்டாயா? எனக் குப் பைத்தியம் பிடித்து விடவில்லை. அது அவனைப் பற்றி நினைக்கும்போதெல் லாம் உண்மையில் நான் பைத்தியக்காரனாய்த் தான் மாறிவிடுகிறேன் .........''
''அது யார்
தாத்தா, அந்த அவன்?'
"அவன் தான் ஜோசெப். சினேகத் துரோகி அடுத்துக் கெடுப்பவன். அவனால் தான் என் ஒரே ஆசை அணைந்தது'!
15.

Page 82
114
Tெ
" என்ன தாத்தா, அடியும் நுனியும் இல் லாமல் சொல்லுகிறீர்களே. விஷயத்தை விபர மாய்த்தான் கூறுங்களேன்''.
''ஆம். கூறுகிறேன். சிறில், என் மகனே கவனமாய்க் கேள். வாழ்க்கையில் எனக்கு ஒரே யொரு ஆசைதானுண்டு. அது நியாயமான ஆசைதான். எல்லோருக்கும் தோன்றும் ஆசை யைப் போன்றது தான். நான் அனாதையைப் போல் இறக்கக்கூடாது, என் ஈமக்கிரியைகள் என் செலவிலேயே - நான் உழைத்த பணத்திலேயே நடைபெற வேண்டும் என்பது தான் என் ஆசை.
நான் பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை. உடலில் வலுவிருக்கும்போது - வாலிபனாயிருந்த போது கள்ளமில்லாமல் உடலை வளைத்து வேலை செய்தேன். கிடைத்த ஊதியத்தைக் கொண்டு கண்ணியமாய் வாழ்க்கை நடத்தினேன். ஆனால் ஒரு சதங்கூட மீத்து வைக்க முடியவில்லை. உட லில் நோய் கண்டது. என்னால் கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியவில்லை. ஒரு மருந்துக் கடையில் பொட்ட லங்களைக் குறித்த இடங் களுக்குக் கொண்டு சென்று வினியோகிக்கும் வேலை கிடைத்தது. ஊதியம் இங்கு மிகக் குறைவு தான். ஆனாலும் வேலை சுலபமாயிருந்தது. இங்கு வேலை செய்த ஐந்து வருஷ காலத்தில் ஏழு ரூபாய் மீதப்படுத்தி வைத்திருந்தேன்.

115
அடிக்கடி சுகவீனம் வந்தது. மாசத்தில் பதினைந்து நாள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அதிக காலம் எ ன் ஞ ல் உயிரோடிருக்க முடியாது என்ற சந்தேகம் வந்துவிட்டதால் அந்த ஏழு ரூபாயையும் செலவு செய்யாமல் வைத்துக்கொண்டேன். என் அந்திமக் கிரியை கள் நான் சம்பாதித்த பணத்தில் நடைபெற வேண்டும் என்ற ஆசைதான். எவ்வளவோ கஷ் டங்களுக்குள்ளும் அப்பணத்தைத் தீண்ட இடந் தரவில்லை. ܓ
வேலைக்கு ஒழுங்காகப் போகவில்லை என்ற காரணத்துக்காக என்னை வேலையினின்றும் நீக்கி
விட்டார்கள். முன்போல் வேலை செய்யவும் என்னுல் முடியவில்லை. உடல்நிலை அவ்வளவு மோசமாய்ப் போய்விட்டது. வயிற்றுப் பசி
உச்சநிலையை அடையும்போதுதான் அனுதாச் சிரமத்தை நாடினேன்.
அனுதாச் சிரமத்தில் எத்தனையோ அனதை களிருந்தார்கள். அங்கு இருப்பவர்கள் சொத் துள்ளவர்களாக ஒருபொழுது மிருக்க முடியாது. ஆச்சிரமத்தில் சேரும்போது அவர்கள் வசம் ஏதாவது இருந்தால் அதை ஆச்சிரமத்துக்கு அளித்துவிட்டுத்தான் சேர்ந்து கொள்ள வேண் Gilb. . . . . . . . . . . . என்ன், நான் ஒருபொழுதும் பொய் பேசியதில்லை என்று கூறினேனல்லவா? அது தவறு. அன்று நான் ஆச்சிரமத்தில் சேரும்போது பொய்

Page 83
116
f
பேசினேன். என் வாழ்க்கையில் நானறிந்து கூறிய பொய் அது ஒன்றுதானென்று எண்ணுகிறேன். என்னிடமிருந்த அந்த ஏழு ரூபாய்களையும் ஒரு சிறிய தோல் பைக்குள் வைத்து என் கழுத்தில் தொங்கவிடடிருந்தேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அது யார் கண்ணிலும் படாதபடி மிகவும் ஜாக்கிரதையாயிருந்தேன். ஸ்நானத்தின்போது மட்டுந்தான் சட்டையை நீக்குவேன்.
இப்படி அநேக வருடங்கள் கழிந்துவிட்டன. நான் இருந்த ஆச்சிரமத்தில்தான் யோசெப்பு மிருந்தான். அவன் குடிப்பழக்க முள்ளவன் கடைசி சிகரெட்டாவது கிடைக்காவிட்டால் அன்று முழுவதும் பைத்தியம் பிடித்தவன் போலி ருப்பான். ஆச்சிரமத்தில் உள்ளவர்கள் குடி யையோ சிகரெட்டையோ கனவிலும் எண்ணக் கூடாது. அல்லாமலும் அவர்கட்குப் பணம் எவ் வாறு கிடைக்கும். பணம் வைத்திருப்பது தலை வருக்குத் தெரிந்தால் உடனே ஆச்சிரமத்தை விட்டு வெளியேற வேண்டியதுதான். அதோடு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும்.
ஜோசெப் வெளியில் செல்லும் நேரங்களில் சிறுவர்களுக்கு வி ளை ய ஈ ட் டுக் காட்டுவான். கோழிச் சாவலைப்போல் கூவுவான். நாயைப் போல் குரைப்பான், உடலை வளைத்து வேடிக்கை கள் செய்வான் கரணங்கள் போடுவான். இதனல்

1 7
அவனுக்கு நாற்பதோ ஐம்பதோ ச த ங் கள் வேடிக்கை பார்ப்பவர்களிடமிருந்து கிடைத்தன. கையில் காசில்லாதபோது வழியில் கிடக்கும் குறச் சிகரெட் துண்டுகளை எடுத்துப் புகைப்பான்.
ஒருநாள் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது எப்படியோ என் கழுத்தில் தொங்கிக்கொண் டிருந்த தோற்பையைக் கண்டுவிட்டான். அதற் குள் பணம் இருக்கிறதென்ற மர்மம் எப்படியோ அவனுக்குத் தெரிந்துவிட்டது. அதிபருக்குச் சொல்லப்போவதாக என்னைப் பயமுறுத்தினன். அவனுக்கு வேண்டியது பணத்தானே. முதல்நாள் இருபத்தைந்து சதத்தினுல் அவன் வாயை அடக்கி விட்டேன். அதன் பின் ஒருவாரம் அவன் என்னை மறந்துவிட்டான் போல் தோன்றியது. மறுபடியும் ஒரு நாள் வந்து ஐம்பது சதம் கேட்டான். கோபத்தை அடக்கிக்கொண்டு தயக்கத்தோடு அவன் கேட்ட தொகையைக் கொடுத்தேன். பணம் தேவைப்படும் போதெல்லாம் என்னிடம் வரத் தொடங்கினன். நான் மறுக்கவே அதிபரிடம் போய் கோழ் சொல்லிவிட்டான். என் பணம் பறிமுதல் செய்யப்பட்டது மல்லாமல் ஆச்சிரமத்திலிருந்தும் நான் வெளியேற்றப் பட்டேன்.
நடைப்பிணமாக வெளியே வந்தேன். என்னல் சம்பாதித்துச் சாப்பிட முடியவில்லை. உடல் நிலை அவ்வளவு கேவலமாகிவிட்டது. உங்கள் பங்களா வாசலில் ஒட்டிய உடலோடு உட்கார்ந்து கொண்

Page 84
1 8
டிருந்தேன். உன் தந்தை என்னை உள்ளே அழைத் துச் சென்று உண்ண உணவு கொடுத்தார். உடுக் கத் துணி கொடுத்தார். அன்று தொடக்கம் இன்று வரை என்னை ஆதரித்து வருகிருர், நான் சும்மா இருக்கக்கூடாதேயென்று தோட்டத்தைக் காவல் காத்து வருகிறேன். ஆனல் இந்த வேலை உன் தந்தையால் எனக்குப் பணிக்கப்படவில்லை. நானுக ஏற்றுக்கொண்டது. நான் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. ஆனல்.
"தாத்தா, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவையும் நான் தருகிறேன். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்,' என்றன் சிறில் அனுதாபத்தோடு, ۱ م؛ با
பிரான்ஸிஸின் உதட்டுக் கோணத்தில் ஒரு வரண்ட புன்னகை மலர்ந்தது. 'மகனே என் கதையைக் கேட்ட நீ, மறுபடியும் இப்படிப் பேசு கிருயே. நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்காத பணத் தினல் என்ன பயன் ஏற்படப்போகிறது?'
"தாத்தா, தந்தையிடம் கூறி எப்படியும் உங்களிடமிருந்து பறி மு த ல் செய்யப்பட்ட பணத்தை ஆச்சிரம அதிபரிடமிருந்து திரும்பப் பெற முயற்சி செய்கிறேன். நீங்கள் கவலைப்பட ஜேண்டாம். " சிறில் வசனத்தை முடிக்க வில்லை பிரான்ஸிஸ் உ ர க் க ச் சிரித்தபடியே *ண்பத்தியம், பைத்தியம்' என்று கூறிக்கொண்டு தீன் கறுப்புக் கோட்டை எடுத்துத் தோளில் ேோல்ட் அடியே நடந்தான்.
Mir

12. முதுமையின் முதிர்ச்சி
மூன்று தங்கைகளுக்கு அக்காவான அவளை அழகும் அந்தஸ்துமுள்ள வாலிபனுக்கு மணம் முடித்து வைக்கப் பணம் வேண்டாமா? இரண் டாந்தாரமாக அவளைக் கொடுக்க பெற்ருர் முன் வந்தனர். அல்லாமலும் மாப்பிள்ளை அந்தப் பட்டணத்திலேயே பெரிய பணக்காரன், மூத்த வள் பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டால் இளைய பெண்களின் வி வா கத் தி ற் கு உதவி கிடைக்கலா மல்லவா?
மணப்பெண் சொர்ணம் கண்ணிர் விட்டான். பெற்றேர் பிடிவாதமாக விஸ்வநாதருக்கே அவளை மணம் செய்து வைத்தனர்.
விஸ்வநாதர் பெரிய பணக்காரராயினும் கர்வமில்லாதவர். குணசீலர், அந்த ஊரில் எல் லோரும் அவரை மதித்து அன்பு செலுத்தினர். அவரது மனைவி இறந்து பதினைந்து வருஷங்க ளாய் விட்டன. குழந்தைகள் இல்லாததால்

Page 85
20
அவருக்கு வாழ்க்கை வெறிச்சென்று இருந்தது. அன்பேயுருவான அவர் மனைவி வகித்த ஸ்தா னத்தை வேருெருத்திக்கு அளிக்க அவர் விரும் பாததால் மறு மணத்தை வெறுத்தார்.
மு க ஸ் து தி செய்துகொண்டு மற்றவர்கள் உழைப்பில் உண்டு களித்துத் திரியும் புல்லுருவி களிருக்கிறர்களல்லவா? அவர்களில் ஒருவன்தான் நாகரத்தினம் சதா விஸ்வநாதரின் பக்கத்தி லிருந்துகொண்டு அவர் மனதைக் கலைத்தான். கடைசியில் தன் ஐம்பத்தைந்தாவது வயசில் மறு மணம் செய்து கோள்ள அவர் ஒப்புக்கொண்டார். இந்த முயற்சியில் நாகரத்தினனுக்கு லாபம் என்ன வென்று எண்ணிவிடக் கூடாது. பெண் வீட்டா ரிடம் அடிக்கடி போய் வயிறு புடைக்கச் சாப் பிட்டுக் கொள்வான். விஸ்வநாதர் வீட்டிலும் ஏகபோக உரிமையோடு கிடைப்பதைச் கருட்டிக் கொள்வான்,
விவாகம் முடிந்து பெண்ணும் புகுத்த வீட் டுக்கு வந்துவிட்டாள். கூப்பிட்ட குரலுக்கு வேலைக் காரரும், வெளியே செல்ல மோட்டாரும், அலங் கரித்துக்கொள்ள ஆடை ஆபரணமும் இருந்தும் இதயம் நிறைய ஏற்றுக்கொள்ள ஒரு பொருள் இல்லாமலிருந்தது அவளுக்கு நாட்கள் செல்லச் செல்ல உள்ளுணர்வு விஸ்வநாதரை வதைத்தது. உற்சாகமில்லாமலிருக்கும் மனைவியை நினைக்க நினைக்க அவர் இ தய ம் வேதனைப்பட்டது.
鲁载

721
'மகளுக்கு நிகரான பெண்ணை மனைவியாகக் கொள்ள எப்படி என் மனம் இசைந்தது” என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இப் பொழுதுதான் அவருக்கு நாகரத்தினன் மீது அடங்கா ஆத்திரம் வந்தது.
இனி என்ன சேய்வது? கறந்த பால் முலைக் கேறுமா? சம்பிரதாயப்படி மணந்தாய்விட்டது. அவளுக்கு எப்படி இனி இன்ப வாழ்வளிப்பது, அவள் முகத்தில் சிரிப்பையே காணவில்லையே.
இப்படியான பச்சாத்தாப உணர்ச்சி எல்லாக் கிழவர்கள் உள்ளத்திலும் ஏற்படுவதில்லை. இயற் கையிலேயே தயாள குணமும் பண்பாட்டுணர்ச் யும் மிக்க விஸ்வநாதரின் உள்ளம் அவரைச் சித்திரவதை செய்தது. கெளரவத்தைப் பெரிதாய் மதிக்கும் அவர் அதற்கு இழுக்கேற்பட்டு விடுமோ என்று தீய்ந்தார்.
பின் தோட்டத்துச் சலவைக் கல்லில் சிந்தனை யில் ஆழ்ந்துபோய் தன்னை மறந்திருந்த சொர் ணம் தன் பெயரைக் கூறி யாரோ அழைப்பதைக் கேட்டுத் திரும்பினள். பின்னல் ராஜநாயகன் நின்றுகொண்டிருந்தான். "ராஜ" நீ ஏன் இங்கு வந்தாய். என்று கேட்டாள் பதறியபடியே.
16

Page 86
122
''சொர்ணா ஏன் இப்படிப் பயந்து நடுங்குகிறாய்? உன் கணவரைத்தான் பார்க்கலாமென் று வந்தேன் அவர் வெளியே போய்விட்டார் என்றும் நீ தோட்டத்தில் இருக் கிறா யென்றும் வேலைக்காரி கூறினாள். இவ்வளவு தூரம் வந்து விட்டு உன்னைப் பார்க்க மல் போக உள்ளம் இடந்தரவில்லை. உனக்கு இஷ்டமில்லையென்றால் நான் இப்பொழுதே இந்த இடத்தை விட்டுப் போய் விடுகிறேன்.''
| “இஷ்டமில்லைத் தான் போய்விடு.....'' இத யத்தை அழுத்திப் பிடித் துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள். அவனோடு சேர்ந்து மனக்கோட்டை கட்டியவள் - அவன் வருகைக்காக ஏங்கிக் கண் ணீர் வடித்தவள் - இதயத்திலே இருத்திப் பூஜை செய் தவள், ஆவலாகப் பார்க்க வந்தவனை நிஷ்டூர மாகப் 'போய்விடு' என்று கூறுகிறாள்.
ராஜூ போய்க்கொண்டிருந்தான். திடீரென்று திரும்பி ''சொர்ணம் இதை உன் கண வரிடம் சேர்ப்பித் தவிடு'' என்று கூறி ஒரு உறையை அவள் காலடியில் எ றி ந் து வி ட் டு விடுவிடென்று நடந்தான்.
உறையைக் கையில் எடுத்தவள் நிமிர்ந்து பார்க் குமுள் ராஜூ கேட்டைத் தாண்டிவிட்டான். இது என்ன வாயிருக்கும் என்று அவள் சிந்தித் தாள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிரித்துப் பார்க்கும்படி உள்ளம் தூண்டியது. சீ அநாகரிகம்

123
986 2
என்று தன்னைத்தானே கண்டித் துக் கொண்டாள். சிறிது நேரந்தான் அவள் ஆவலை அடக்க முடிந் தது. சபல குணத்தின் பிறப்பிடமான அவள் உறையைப் பிரித்தாள். உள்ளே ஒரு மனுப்பத் திரம் இருந்தது. காலியாயிருக்கும் காரியதரிசிப் பதவிக்கு ராஜ மனுச் செய்திருந்தான். பாவம் எவ்வளவு காலம் வேலையில்லா மல் கஷ்டப்படு கிறான். ஒருவேளை என் கணவருக்குத் தன்னை சிபார்சு செய்யும்படி என்னைக் கேட்க வந்திருப் பானோ.
- கேட்டைத் தாண்டி மோட்டார் - உள்ளே நுழைவதைக் கண்ட தும் கணவர் வந்துவிட்டார் என்று தெரிந்து கொண்டாள். உறை பிரித்தபடி கையிலிருந்தது. அவசரமாக அதை இருந்தது போல வே ஒட்டினாள்.
• 'யாரோ என்னைப் பார்க்க வந்ததாக வேலைக் காரி கூறினாள். காரணம் என்னவென்று வந்த வரை விசாரித்தாயா சொர்ணம் ?''
''ரா ஜநாயகன் அவர் பெயர். காரியதரிசிப் பதவிக்கு ஒரு மனுக் கொண்டு வந்திருந்தார்.'' என்று கூறியபடியே உறையை அவர் முன்னால் வைத்தாள்.
- ''மனுப்பத்திரமா? - அதைத் தபாலிலேயே அனுப்பியிருக்கலாம். நான் வேறு காரியமாக யாராவது வந்திருப்பார்களோ என்று நினைத் தேன்.''

Page 87
124
'நான் சிபார்சு செய்வேன் என்று நினைத்து நேரிலேயே கொண்டுவந்திருக்கலாம். அவரை எனக்குத் தெரியும். இப்படியான விஷ யங்களில் நான் தலையிடமாட்டேனென்பது அவருக் கெப்படித் தெரியும்?
விஸ்வநாதர் வந்த சிரிப்பை மெதுவாக அடக்கிக்கொண்டார். என்ன நசுக்காகச் சிபார்சு செய்கிருள், என்று எண்ணி அவள் புத் தி க் கூர்மையை வியந்தார்.
ராஜ சவே காரியதரிசிப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டான். அவள் உள்ளூர மிகவும் சந் தோஷப்பட்டாள். விஸ்வநாதர், அவளுக்காகவே அவனைத் தனது காரியதரிசியாக அமர்த்திக் கொண்டதாக கூறிப் பெருமையடித்துக் கொள்ள வில்லை. நாட்கள் சென்றுகொண்டிருந்தன.
ஒருநாள் ஒரு முக்கிய காரியமாக முதலாளி யைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு வந்தான் ராஜ" அப்பொழுது வீட்டில் சொர்ணந்தான் இருந்தாள். அவன் வாசலில் நின்றபடியே "முதலாளி இருக் கிருரா அம்மா” என்ருன்.
"ராஜ சவா! அவர் மில்லுக்குங் போயிருக் கிருர், வரக் கொஞ்சநேரமாகும். வெளியிலேயே நிற்கிறயே, உள்ளே வந்து உட்காரேன்.'
'இல்லை, நான் மறுபடி வருகிறேன். முதலாளி வந்தால் நான் வந்துவிட்டுப் போனதாகச் சொல்லுங்கள்."

125
''என்ன ராஜு, 'நீங்கள் ' 'நாங்கள் எல்லாம் பலமாகப் போட்டுப் பேசுகிறாயே..............'' அவள் வசனத்தை முடிக்குமுன் அவன் வெளியே போய் விட்டான். அவன்
போவதையே பார்த்துக் கொண்டிருந்த அவளால் ஏனோ அழுகையை
அடக்கமுடியவில்லை.
ரா ஜூ வந்து போன செய்தியை அறிந்த விஸ்வநாதர் ரெலிபோனில் ராஜூவைக் கூப்பிட் டார். ரா ஜூ மறுபடியும் வீட்டுக்கு வந்தான். இரவு ஒன்பது மணி வரையில் இருவரும் தொழில் விஷயமாக ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். வீட்டுக்குச் செல்ல எழுந்த ராஜுவை விஸ்வ நாதர் ''இந்த அகால வேளையில் நீ எப்படி வீட்டுக்குப் போகமுடியும். இரவு இங்கேயே தங்கிவிட்டு நாளை போகலாம்.'' என்று கூறினார். அவனும் மறுக்க முடியாமல் தங்கினான். சொர்ணம் வசிக்கும் அதே வீட்டில், அவள் தூங்கும் அறைக்குப் பக்கத்து அறையில் தான் படுத்திருப்பதை நினைக்க அவன் உள்ளம் கிளுகிளுத்தது. பழைய சிந்தனை களில் சிக்குண்டு தூங்க முடியாமல் தத்தளித்தான்.
''ராஜூ இன் று நான் வெளியூர் செல்லுகிறேன். நாங்கள் திறக்கவிருக்கும் கிளை ஸ்தாபன பைல்களை யெல்லாம் நீ நன்றாகப் பார்வையிட்டு ஆகவேண்டி யன செய் ஒரு வாரத்தில் நான் திரும்பிவிடுவேன் நான் வரும்வரையில் நீ என் வீட்டிலேயே தங்க லாம்.'' என்றார் முதலாளி. ராஜு சித்தனையி லாழ்ந்தவனாய் 'உம்' போட்டு வைத்தான்.

Page 88
126 幢
பைல்களில் புதைந்துபோய்த் தன்னை மறந் திருந்தான் ராஜ". சிகரெட் புகை அவனைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. மணிக்கூடு பத்து முறை அடித்து ஓய்ந்தது. கதவு திறபடுவதைக் கண்டு நிமிர்ந்தான். உள்ளே சொர்ணம் நுழைந் தாள். 'ஏன் ராஜ", நேரம் பத்து மணியாகி யும் வேலை செய்துகொண்டிருக்கிருயே. சாப்பிட
G6 ada LT LDay?”
பைல்களை மூடி வைத்துவிட்டு மெளனமாக எழுந்தான் ராஜ ச. சாப்பிடும்பொழுது குனிந்த தலை நிமிர வேயில்லை. அவள் ஆவலோடு பரி மாறினுள். அது வேண்டுமா, இது வேண்டுமா? என்று அவனைக் கேட்டுத் திணறடித்தாள். அவன் சங்கோ சப்பட்டவன் போல் காணப்பட்டான்.
'சிரிக்கச்சிரிக்கப் பேசுவானே, அந்த ராஜ" தான இவன். என்னை எப்படியெல்லாம் கேலி செய்வான் நான் கோபங் கொண்டவள் போல் பாசாங்கு செய்தால் "அம்மணி கோபித்தால் கன்னங்கள் சிவந்துவிடும் அப்புறம் வண்டுகள் ரோஜா மலரென்றெண்ணி. என் கன்னங்களை ஆசையோடு கிள்ளுவானே. அவைகளையெல்லாம் உண்மையில் மறந்துவிட்டான? அல்லது காதலில் ஏற்பட்ட ஏமாற்றம் அவன் உள்ளத்தை மறக்கச் செய்து விட்டதா? அல்லது இன்னுெருவனுக்குச் சொந்தமானவளோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு என்று வாளாவிருக்கின்றன? வேதனை கலந்த அவன் சிந்தனை எங்கெல்லாமோ உறை விடங் காணுது அலைந்தது.

1 27
மூன்று நாட்கள் கழிந்து விட்டன. அவன் அறையை விட்டே வெளிவருவதில்லை. அது வேண்டுமா, இது வேண்டுமா" என்று கேட்டுக் கொண்டு சில சமயங்களில் அவள் உள்ளே நுழை வாள். அவன் ஒரே வசனத்தில் பேச்சை முடித் துக்கொள்வான். முன்னெருபோது அவளைக் காண அவன் தோட்டத்திற்குச் சென்ருன். அப்போது அவள் போய்விடு' என்று நிட்டூரமாகக் கூறினுள். இன்று அவன் பாராமுகமாயிருப்பது அ வ ள் உள்ளத்தைப் பிழிந்தது. கலகலப்பாகப் பேச மாட்டானு என்று ஏங்கினுள்.
அன்று இரவு அவள் தூங்கவேயில்லை. வாழ் வில் ஏற்பட்ட வரட்சி - காதலித்தவனை வீட்டில் வைத்துக்கொண்டு படும் அவஸ்தை, எல்லாமாகச்
சேர்ந்து தூக்கத்தை விரட்டியடித்தன. மறுநஈட்
காலை மண்டை கொதித்தது. சுரமுமடித்தது அவள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. மத்தி பானம் சாப்பிடும்போது 'எஜமானி அம்மாள் எங்கே காணவில்லையே’ என்று வேலைக்காரியைக் கேட்டான் ராஜ".
'சுரமாகப் படுத்திருக்கிருர்கள், டாக்டரை அழைக்க வேண்டுமா என்று கேட்டேன், அதற்கும் மறுத்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரிவிக்கட் டுமா என்று கேட்டதற்கும் அவசியமில்லையென்று கூறிவிட்டார்கள்’ என்ருள் வேலைக்காரி.

Page 89
128
சுகவீனமாகப் படுத்திருக்கிறாள் என்று கேட் டதும் அவனுக்கேற்பட்ட துயரம் கொஞ்சமல்ல. அவள் தன் முன்னிலையில் நடமாடாதது அவ னுக்கு என்னவோ போலிருந்தது. நீறு பூத்த நெருப்புப்போலிருந்த காதலுணர்ச்சி அவன் கண்ணில் நீர் முட்டச் செய்த்து.
தன் அறைக்குள் ராஜூ நுழைவானென்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் உடையைச் சரி செய்து கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ''சொர்ணம் உன் அறைக்குள் நான் உத்தர வில்லாமல் நுழைந்தது தவறானால் மன்னித்துக் கொள். உனக்குச் சுரமென்பதை எனக்குக்கூடத் தெரிவிக்க வேண்டா மென் ) - சொன்னாயாமே? ஏன் என்று கண்களில் நீர் துளிக்கக் கேட்டான் ராஜூ.
திடீரென்று அவன் வார்த்தையில் ஏற்பட்ட குழைவு அவளைச் சிறு குழந்தையாக்கி விட்டது. தேம்பித் தேம்பி அழுதாள். கண்கள் இரத்தமெனச் சிவந்தன. காலை துவக்கம் ஒன்றுமே சாப்பிடாத தா லும், ச ர த தின் வே சத்தா லும் களை ப்புப் போட்டு கட்டிலிலே சாய்ந்தாள்.
அவன் பதறிப்போய் விட்டான். 1 'சொர் ணம் டாக்டரைக் கூட்டி. வரட்டுமா?'' என்று ஆதரவோடு கேட்டான். அவள் வேண்டாமென் று சைகை செய் து "ஒருவருக்கும் பிரயோசனமில்

29
லாத என்மேல் ஏன் இவ்வளவு அக்கறை காட்டு கிருய் ராஜூ, போ. நீ போய் உன் வேலையைக் கவனி. அனுபவிக்கப் பிறந்தவள் அனுபவிக் கிறேன்.”
ராஜூ பதில் கூருமல் கட்டிலில் உட்கார்ந் தான். அவள் பக்கத்திலுட்கார்ந்ததும் அவன், உடல் நடுங்கியது. அவள் இதயமும் வேகமாக அடித்தது. அவள் நெற்றியில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தான். அவன் கையின் குளிர்ந்த ஸ்பரிசம் இதமாயிருந்தது. அவன் கையை எடுத்து விடுவானே என்று பயந்தவள் போல் அவள் கையை இறுக அழுத்திப் பிடித்துக்கொண்டாள். பேச நா எழவில்லை. இருவரும் மோன நிலையி லிருந்தனர். நெற்றியில் கிடந்த கை அவள் கன் னத்தை வருடியது. அவள் ஒன்றையுமே தடுக்க வில்லை. எங்கோ ஒரு கண்காணுத உலகிலே - உல் லாச புரியிலே - கற்பன உலகிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். இவ்வுலக நினைவே அவளுக் கில்லை. இந்த நிலையில் எவ்வளவு நேரமிருந்தரர் களோ அவர்களுக்கே தெரியாது.
"ராஜ" என்ருள் கனவுலகிலிருந்து திரும் பியவளாய். உணர்ச்சி மிகுதியால் பாதி மூடப் பட்டுக் கிடந்த அவள் கண்களை உற்றுப் பார்த் தான் அவன்
17

Page 90
130
?நீ உண்மையில் என்னைக் காதலிக்கிருயா putrigga ?” ”
'சொர்ணு, நீதான இந்தக் கேள்வியைக் கேட்கிருய்?"
'உண்மைதான், நீ எவ்வளவு தூரம் என்னைக் காதலித்தாய் என்பது எனக்குத் தெரியும். விவா கத்தினுல் காதல் எப்படி அற்றுப்போக முடியும். கடமை உணர்ச்சியினுல் காதலைக் கட்டுப்படுத்த முடியுமேயல்லாமல் உள்ளத்தில் இருந்து முற்றக அழித்துவிட முடியாது.”
?எது கடமை, துளிர்க்கவேண்டிய செடிக்கு வெந்நீர் வார்ப்பதுதான் கடமையா? வாழவேண் டியவள் நீ. உன் தேவைகள் யாவற்றையும் பணத்தைக் கொண்டே நிவர்த்தி செய்து விட முடியுமா? இளமை இறந்து போன உன் கிழக் கணவனின் இதயத்திலிருந்து இன்ப ஊற்று இனித்தோன்ற முடியுமா? சொர்ணு நான் சொல்லு கிறேன் கேள். பணம் வேண்டாம், பதவி வேண் டாம், பட்டம் வேண்டாம், போவோம். ஒன் ருகக் கைகோத்துக்கொண்டு போவோம். பரந்த உலகில் எங்களுக்கு இடமில்லாமல6 போய்விடும். துரோகமென்று நினையாதே. பருவத் துடிப்புகள் அடங்காத ஒரு இளம் பெண்ணைப் பதம் பார்க்க முன்வரும் கிழவன் மட்டும் துரோகம் செய்ய வில்லையா? நாம் மட்டும் அப்படி என்ன துரோகம் செய்து விட்டோம்.
雪
 

I ές Ι
அவள் மெளனமாய் அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் மெளனம் அவன் எண்ணத்தை அவள் ஆதரிக்கிருள் என்பதை
எடுத்துக்காட்டியது.
ஐந்தாவது நாள் தன் கணவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினுள் சொர்ணம். அதில், இத்தனைநாள் தன்னை வைத்து ஆதரித்ததற்கு நன்றி செனுத்தி, வீட்டை விட்டுப் புறப்படும் வரை தான் கட்டிய புருஷனுக்குத் துரோகம் செய்யவில்லையென்றும், சிறு வயசு முதல் ஒன்ரூகக் கூடி விளையாடி உயிராய்க் காதலித்தவனேடு கண்காணுத தேசத்திற்குப் போவதாயும் குறிப் பிட்டிருந்தாள். கடிதத்தை கணவனின் அறையில் மேசைமேல் வைத்துவிட்டு வெளியே வந்தஈள். அவள் உள்ளம் பயத்தால் நடுங்கியது.
முன் ஏற்பாட்டின்படி ஒதுக்குப்புறமாயுள்ள சன சந்தடி இல்லாத பிள்ளையார் கோவில் நோக்கி ஒரு சிறு கைப்பேட்டியோடு நடந்தாள் சொர்ணம். அப்பொழுது இரவு சுமார் ஒரு மணி யிருக்கும். அங்கு அவளுக்காக ராஜூ காத்துக் கொண்டிருப்பான். இருட்டிலே முக்காடிட்டபடி வேகமாக யார் கண்ணிலும் படாமல் பதுங்கிப் பதுங்கி குறித்த இடத்தைச் சென்றடைந்தாள்.

Page 91
132
அவள் எதிர்பார்த்தபடி அங்கு ராஜூ இல்லா தது அவளுக்குக் கலவரத்தை உண்டுபண்ணியது. சற்று நேரம் பொறுத்துப் பார்க்கலாம் என்ருல், அவ்வேளையில் மரண அமைதி நிலவும் ஜன சஞ்சாரமற்ற அந்த இடத்தில் தனியே நிற்க அவளுக்குப் பயமாயிருந்தது. ஒருவித உத்வேகத்தில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு விட்டாளேயல்லாமல் புறப்பட்டபின் பச்சாத்தாபப் பட்டாள். கடிதத் தைக் கண்டதும் கணவர் எப்படிப் பதறித் துடிப்பார், என்று எண்ணியதும் துக்கம் தொண் டையை அடைத்தது. வீட்டுக்குத் திரும் அவள் உள்ளம் மறுத்தது. ஒடுகாலியாய் புறப்பட்டவள் வீடு திரும்புவதா? என்ன செய்வது..? "தற்கொலை' ' தற்கொலை' என்று இதயம் அலறி யது. தற்கொலை செய்துகொள்ளலாம், ஆணுல் அவள் யாருடனுே ஓடிவிட்டாள் என்றுதானே உலகம் தூற்றும் - கணவரும் எண்ணுவஈர்.
மனக்கண்முன் அவள் தங்கைகள் வந்து நின் றனர். கண்ணிரும் கம்பலையுமாய் அவர்கள் 'விப சாரி, எங்களுக்கு முன் ஏன் பிறந்தாய். எங்கள் பிற்கால வாழ்வை நாசமாக்கவா? என்று அவளைப் பார்த்துக் கேட்பதுபோல் பிரமை ஏற்பட்டது. தீர்க்கeான ஒரு முடிவுக்கு வந்த வளாய் வேகமாக வீடு நோக்கி நடந்தாள். பூனைபோல் உள்ளே நுழைந்தவள் வாசலில் மோட்டார் நிற்பதைக் கண்டு திகைத்தாள். அவள் முகம் சவம்போல்
 

ο
I 33
வெழுத்து விட்டது. திரும்பி ஒட எத்தனித்தாள். அச்சமயம் 'சொர்ணம்” என்று யாரோ அழைப் பதைக் கேட்டு அசையாமல் சிலைபோல் நின்ருன், அவள் கணவர்தான் வந்தார். அவளுடைய கை கால் உதறலெடுத்தது. 'எனக்கு எல்லாம் தெரியும். இனிமேல் இப்படியான அசட்டுக் காரியங்கள் செய்யாதே போ. உள்ளே போய்ப் பேசாமல் படுத்துக்கொள்’ என்ருர் அமைதியாக,
அவள் கண்கள் நீரைப் பெருக்கின. 'என் கணவர் என்னை மன்னித்து விட்டாரா?
**வாலிபக் கணவர்களிடம் இல்லாத ஒரு பெரிய பொருள் உன் கிழக்கணவரிடம் இருக் கிறது” என்று அவள் உள்ளுணர்வு இடித்துக் கூறியது.
குறிக்கோளில்லாத இடத்திற்கு பிரயாணம் செய்துகொண்டிருந்த ராஜா அவள் உள்ளத் திலிருந்து தூரத்தூர விலகிக்கொண்டிருந்தான்.

Page 92
18. பெண்ணின் பெருமை
இரண்டாவது யுத்தம் முடிந்து உலகம் சற்று ஓய்ந்திருந்த காலம், நான் நேவியில் பொறுப்பான உத்தியோகம் வகித்துக் கொண்டிருந்தேன். தேவி யில் என்றதும் ஏதோ கப்பற் படையில் என்று எண்ணிவிடாதீர்கள். திருகோணமலை "டொக் யாட்' டிலிருந்த நேவல் பொலிஸ் காரியாலயத் தில் சிவிலியன் கிளாக்காக இருந்தேன். இதுதான் பொறுப்பு வாய்ந்த உத்தியோகமா என்கிறீர்களா? சற்றுப் பொறுங்கள் எனக்குக் கீழ் சுமார் ஐம்பது கிளாக்குகள் கடமையாற்றினர்கள். கமாண்டரி லிருந்து எஸ். பி. வரை எனக்கு மதிப்பளித்தார் கள். முக்கிய ஆலோசனைகளில் நானும் பங்குபற்று வேன். ஒரு பிரதம கிளாக்குக்கு இருக்கவேண்டிய அதிகாரங்களில் சற்று அதிகமாகவே எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒரு மு க் கி ய காரணமுமிருந்தது. யுத்த காலத்தில் கையெழுத் துப் போடத் தெரியாத வெள்ளைக்காரர்களுக் கேல்லாம் பெரிய பதவிகளைக் கொடுத்துப் பிற நாடுகளுக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களிற்
凈

135
பலர் ' டொக்யாட்” டிலுமிருந்தார்கள். உண்மை என்ன வென்றால் அவர்கள் என் மேலதிகாரிகள். அவர்கள் தயாரிக்கவேண்டிய அறிக்கைகளையெல் லாம் நான் தயாரித்துக் கொடுத்தேன். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து என்ற பெயரில் எதையோ கிறுக்கி வைப்பார் கள்.
நான் ஒன்றும் பெரிய படிப்பாளியல்ல. சாதா ரண எஸ். எஸ். ஸி. தா ன் , இருந்தாலும் ஆங்கி லத்தில் பேசும் எழுதும் திறமை பெற்றிருந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். எனது அண்ணன் மாரெல்லாம் படித்தவர்கள். சற்று மேல் நாட்டுப் பாணியில் வாழ்க்கை நடத்துபவர்கள். என து மூத்த சகோதரன் நான் சிறு பையனாக இருந்த போதே வேறு சாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். அவரைப் பின் பற்றி மற்ற அண்ணனும் அப்படியே நடந்து கொண்டார். அதனால் வீட்டில் நாங்கள் ஒரு பொது மொழியைப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்த து. அதோடு வீட்டில் உள்ளோர் எல்லோரும் ஆங்கில நாவல்களையே விழுந்து கட்டிப் படிப்பார்கள், அந் தப் பழக்கம் என்னையும் தொற்றிக் கொண்டது. அவைகள் தான் என் ஆங்கில அறிவைச் சற்து வளர்த்துவிட்டிருந்தன. அதன் பயனாக பொலிஸ் இலாக்காவில் மட்டுமல்லாமல் மற்ற இலாக்காக் களிலும் எனக்கு நிறைய வெள்ளைக்கார நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் இலவசமாகத் தந்து உத விய சிகரெட்டுத்தான் இன்று நான் வருமானத்

Page 93
136
துக்கு அதிகமாகச் சிகரெட் பிடிப்பதற்கும் அந்தப் பழக்கத்தை விட்டுத் தொலைக்க முடியாமல் அவஸ் தைப்படுவதற்கும் காரணம்.
இந்த முகவுரைக்கும் நான் கூறப்போகும் சம் பவத்துக்கும் தொடர்புமில்லை. ஆனல் எனக்கு "டொக்யாட்" டில் இருந்து வந்த செல்வாக்கை வலியுறுத்த வேண்டியது அவசியமாகிவிட்டது. நான் இருந்த வீட்டுக் கெதிரேயிருந்த அந்த பெரிய மாடி வீட்டில் ஒரு அறையில்தான் அவனும் அவ ளும் தங்கியிருந்தார்கள். நல்ல பொருத்தமான ஜோடி என்று அவர்களைப் பார்த்து நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அவனுக்கு இருபத்தைந்து வயசி ருக்கும். அவளுக்கு பத்தொன்பது அல்லது இருபது
வயசிருக்கலாம். நல்ல கட்டுமஸ்தான உடலமைப்
போடு கூடிய அழகிய வாலிபன் அவன்.
அவள் அவனுக்கேற்ற அழகி. வாளிப்பான அவளது உடலில் இளமையின் கதகதப்பு கொப் பளித்துக் கொண்டிருந்தது. திரட்சி பெற்ற அவ ளது அங்கங்கள் ஒவ்வொன்றும் உடலிலே பிடித்து வைத்தது போலிருந்தது. அவளது அழகை அணு அணுவ்ாய் ஆராய்ச்சி செய்ததற்கு நான் வாலி பணுய்" இருந்தது மட்டுந்தான் காரணமல்ல. பொருமையும் அதற்குக் காரணம்.
அந்த மாடி வீட்டுச் சொந்தக்காரனைப் பற்றிப் பல வதந்திகள் அடிபட்டன. அவன் ஒரு ஒண்டிக் கட்டை, பணக்காரன், இளங் குடும்பங்களுக்கு அவன் தன் வீட்டில் இடங் கொடுப்பான் நேர்மை யானவர்கள் ஒரு மாதங்கூட அங்கு நிலைத்

I
ܗܝ ܕ ܢ ܐ
137
திருப்பதில்லை. நானறிந்து அதிக காலம், அங்கு தங்கியிருந்தது ஒரேயொரு குடும்பந்தான். அந்தப் பெண் கெட்டிக்காரி. அவள் அந்த வீட்டுச் சொந் தக்காரனின் பணத்தில் அரைவாசியைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டாள் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.
இந்தப் புதுக்குடும்பம் மாடிவீட்டு அறைக்கு வந்து பதினைந்து நாட்கள் தா னிருக்கும். அதற் குள் பெட்டி உடுக்கைகளோடு அவர்கள் வெளி யேறுவதை யன்னல் ஊடாக நான் பார்த்துக் கொண்டு நின்றேன்.
அவர்கள் போய்விட்டது எனக்கு எவ்வித உணர்ச்சியைக் கொடுத்தது என்று நிச்சயமாகக் கூறமுடியாது. வீட்டுக்காரன் தன் கைவரிசை யைக் காட்ட ஆரம்பித்ததால்தான் அவர்கள் வீட் டைக் காலி செய்துவிட்டுப் போகிருர்கள் என்பதை நான் யூகித்துக் கொண்டேன். அதை நினைக்கும் போது மனதுக்கு ஓரளவு சாந்தி ஏற்பட்டது. ஆனல் இனி நான் அவளைப் பார்க்க முடியாதே என்ற நினைவு உண்மையில் வருத்தத்தைக் கொடுத் தது. அவள் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்ற பின் இரண்டு மாதங்களாக அவளை நான் பார்க் கவே இல்லை. திடீரென்று ஒருநாள் அவன் எங்கள் காரியாலயத்துக்கு வந்து ஒரு கிளாக்கோடு பேசிக் கொண்டு இருந்ததைக் கவனித்தேன். அவனும்
18

Page 94
138
என்னை அடிக்கடி திரும்பிப்பார்த்தான். ஆனல் நான் ஒன்றையும் பொருட்படுத்தாதவன் போல் வேலையில் மூழ்கி இருப்பதாகப் பா சாங் கு செய்தேன்.
எனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு கிளாக் வேலை நேரத்தில் இன்னுெருவனுேடு பேசிக்கொண் டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தால் நானும் அதை அனுமதிப்பதுபோல் ஆகிவிடுமல் லவா? சிறிது நேரத்தில் அவன் எழுந்து சென்று விட்டான். இந்த இரண்டு மாத இடைக் காலத் தில் அவனில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. அவன் முகத்தில் பழைய நீரோட்டமில்லை. உடல் கூடச் சற்றுக் கறுத்திருந்தது. அவன் உடுத்திருந்த உடைகூட எடுப்பாக அமைந்திருக்கவில்லை. சிறிது நேரத்திலேயே அவனை நான் மறந்துவிட்டேன்.
மாலை சுமார் மூன்று மணியிருக்கும். அந்தக் கிளாக் உள்ளே நுழைந்து வணக்கங்கள் தெரிவித் தான். நான் நிமிர்ந்து பார்த்தேன். 'சேர், எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றன். அவன் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறன். அவனுக்கு ஏதேனும் ஒரு வேலை o a oo e s so o ’ 'இங்கு வேலை ஒன்றும் காலி இல் லையே. போய் உன் வேலையைக் கவனி.” இப்படி நான் கூறிவிட்டது, 'மண்டைக் கணம்' என்று நீங்கள் நினைக்கக்கூடும். இந்த மாதிரிப் பலர் வேலை தேடிவந்து என் உயிரை வாங்கினர்கள். என் காரியாலயத்தில் வேலை செய்பவர்களில் சுமார்
بیچ$'
 

1 39
இருபத்தைந்து பேர் என்னல் வேலை கொடுக்கப் பட்டவர்கள். ஆஞல் அவர்களுக்கு அந்த நன்றி இருப்பதாகத் தெரியவில்லை. நான் மாலையில் ஆஸ் பத்திரியிலுள்ள மருத்துவப் பெண்கள் விடுதிக்குச் செல்லும் விஷயத்தைத் துப்பறிந்து ஊர்முழுக்கப் பரப்பியவர்கள் இந்த நன்றி கெட்ட கிளாக்குகள் தான். மேற்கொண்டு யாருக்கும் வேலை கொடுப்ப தில்லை. என்று நான் என் ருே முடிவு 45 l ‘tg-69?l *G3L—6ö7. அல்லாமலும் தற்பொழுது வேலையும் காலியாக இருக்கவில்லை.
அன்று மாலை நான் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கும்போது யாரோ அறைக் கதவைத் தட்டினர்கள். கதவைத் திறந்தேன். அந்த வாலிபனே தம்பதி சமேதராய் நின்றுகொண் டிருந்தான். அவனேடு அவன் மனைவியும் வந்திருந்த தால் நான் தடுமாறிப் போனேன். எதிர்பாராத வருகை' உட்காருங்கள்” என்று சோல்லும்போதே நாக்குத் தடுமாறியது. தயங்கியபடியே இருவரும் உட்கார்ந்தனர். சிறிதுநேர அமைதி. பின் அவன் ஏதேஈ கூறினன்.
எனக்கு ஒன்றுமே கா தில் விழவில்லை. நாணிக் கோணிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த அழகுச் சிலையைச் சுற்றி என் எண்ணம் வட்ட மிட்டுக் கொண்டிருந்தது, இனம் தெரியாத சோகத் திரை அவள் முகத்தில் கவிந்திருந்தது போன்ற பிரமை,

Page 95
240
*எனது தராதரப் பத்திரங்களை வேண்டு EDn (6)6. கொண்டுவந்து காட்டுகிறேன், சேர்' என்று அவன் கூறியபோது மயக்கமான நிலையில் 'உம்' கொட்டினேன். அவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினன். அவள் தனியே என் அறையில் இருக்கின்ருள் என்ற நினைவு வந்த போதுதான நான் சுயநிலைக்கு வந்தேன்.
ஆமாம், அவன் உத்தியோகம் தேடித் தரும் Li9. கேட்டுக்கொண்டிருந்தான். நாண் மெளனமாக இருந்ததால் அதை நல்ல சீகுனமாக அவன் எண்ணியிருக்கக்கூடும். திராதரப் பத்திரங்களைக் கொண்டுவரச் சென்றவன் இன்னும் திரும்ப வில்லை. நேரம் ஏறிக்கொண்டிருந்தது. ஒரு வேளை அப்படியுமிருக்குமோ? இந்த நினைவு வந்ததும் சிறிது சபலம் தட்டியது. அவளைப் பார்த்தால் அப்படிப் பட்டவளாகத் தெரியவில்லையே. மாடி வீட்டை அவர்கள் காலி செய்ததின் உண்மைக் காரணத்தைத் தெரிந்திருந்தும் நான் கிட்டப் போய்க் கன்னத்தில் அறை வாங்கலாமா?
இரவு பத்து மணியாகி விட்டது. அவன் இன்னும் திரும்பவில்லை. ஏன்? சுமார் நாலு மணி நேரம் ஒரே இடத்தில் அவள் அசையாது சிலைபோல் உட்கார்ந்திருக்கிருள். என் உள்ளப் போராட் டத்தை நான் சிகரெட்டாகப் புகைத்துக்கொண் டிருந்தேன். 'போன வரை இன்னும் காணவில் லேயே?’ இப்பொழுதுதான் நான் அவளோடு

14
முதன்முறையாகப் பேசினேன். அவள் தலை நிமிர்ந் தாள். அந்தக் கண்கள் கதை கதையாய் எதையோ சொல்லின, குவிந்திருந்த உதடுகள் சற்றுவிரிய மூன்று சொற்கள் - சொற்களா அவை - மூன்று முத்துக்கள் உதிர்ந்தன.
"அவருக்கு வேலை கொடுங்கள்' நான் பேசா து அவளையே பார்த்துக்கொண் டிருந்தேன். அழகான முத்துப் போன்ற பல் வரிசை,
'வேலை கிடைக்காவிட்டால் அவர் இறந்தே போய்விடுவார். கல்யாணமாகி இந்த ஆறு மாதங் கள் நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. எங் களுக்கு வேறு வசதியில்லை. கையில் இருந்த சில ரூபாக்களும் தீர்ந்துவிட்டன.”
பாழாய்ப்போன காதல் பெற்ருேரை விட்டு அவளே அவனுேடு ஓடிவரச் செய்திருக்குமோ? எனக்கது வேண்டாத ஆராய்ச்சி. அவளைச் சாப் பிடச் சொல்லி வற்புறுத்தினேன். முதலில் தயங்கி யவள் பிறகு சாப்பிட்டாள். எனக்கு வந்த சாப் பாட்டை அவளோடு பகிர்ந்து சாப்பிட்டேன். அதிலேதான் எவ்வளவு இன்பம் என் எச்சில் கோப்பையை எடுத்து அவள் கழுவினுள், கிளாசில் தண்ணிரை வார்த்து நீட்டினுள். அதை நான் வாங்கும்போது அவளது விரல் என் விரலை ஸ்பரி சித்ததால் என் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்
5,

Page 96
42
பதினெரு மணியளவில் அவன் வந்தான். தாமதமானதற்கு நான் காரணம் கேட்கவில்லை. அவனும் கூறவில்லை. தராதரப் பத்திரங்களை என் னிடம் கொடுக்கும்போது அவன் கைகள் நடுங்கின. அவன் முகத்தில்தான் எவ்வளவு வேதனை உணர்ச்சி. குற்றவாளியைப்போல் தலை குனிந்தபடி வெளியே இறங்கி நடந்தான், அவளும் நிழல்போல அவனைத் தொடர்ந்தஈள்.
இரண்டு நாட்கள் பொறுத்து மறுபடியும் அவன் வீட்டுக்கு வந்தான். நான் 'முயற்சிக்கிறேன்? என்று பதில் கூறி அனுப்பினேன். அவன் விஷ யத்தை நான் மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மை,
அடுத்த நாள் மாலை அவன் வீட்டுக்கு வந்
தான். 'எனக்கு ஏதாவது வேலை வேண்டும். உங்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யலாமென் ருல் உண்மையில் என்னிடம் பணம் இல்லை. என் னிடம் உள்ளதெல்லாம். அவன் குரலில் எத்தனை கீறல்கள். “தயவுசெய்து இரவு எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வாருங்கள். உங்களை உப சரிக்க என் மனைவி ஆவலோடு காத்திருப்பாள். .
சிறுபிள்ளை பாடம் ஒய்பிப்பதுபோல் அவன் விட்டு விட்டுப் பேசினன். என் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் ஒரு துண்டுக் கடிதத்தை மேசையில் வைத்துவிட்டு வேகமாக வெளியே சென்ருன்,
حر
که چ'
 

43
கடிதத்தை எடுத்துப் படித்தேன். என் கண்களையே என்னல் நம்பமுடியவில்லை. மாடி வீட்டை விட்டுப் பதினைந்து நாட்களில் வெளியேறியவள் இதற்கு எப்படி உடன்பட்டாள்? ஒருவேளை வறுமை அவளை இந்த முடிவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்குமோ?
ஒரு மணி நேரமாக உட்கார்ந்து சிந்தித்தேன். என் மனிதத்தன்மையை மீறிக்கொண்டு அவளது அழகு உருவந்தான் என் முன்னல் வந்து நின்றது. கடிதத்திலிருந்த வீட்டு விலாசத்தை மீண்டும் ஒரு (p60s) பார்த்துவிட்டு வெளியே கிளம்பினேன்.
என் அலங்காரத்தைப் பார்க்க எனக்கே சிரிப்பாயிருந்தது. இவ் வ ள வு அக்கறையோடு என்னை என்றுமே நான் அலங்கரித்ததில்லை. ஏற் கெனவே 'டீக்” காக உடை உடுப்பவன் என்று பெயர் எடுத்திருந்தேன். ஆனல் இன்று என்னைப் பார்ப்பவர்கள் நிச்சயம் மறுமுன்றயும் திரும்பிப் பஈர்ப்பார்கள்,
அவர்கள் வீட்டைக் கண்டு பிடிப்பதில் ஒன் றும் சிரமம் ஏற்படவில்லை. ஒரு பெரிய வீட்டின் முன் அறையை அவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜன்னல் திறந்திருந்தது. உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசலுக் குச் சென்று கதவைத் தட்டப் போனபோது உள்ளே பேச்சுக் குரல் கேட்டதால் சற்றுத் தயங்கி நின்றேன்.

Page 97
1 44
'தயவுசெய்து என்னை மன்னித்துவிடு. இதைத் தவிர எனக்கு வேறே வழியே தெரியவில்லை.”
"அவரை நீங்கள் தப்பாகப் புரிந்துகோண் டிருக்கிறீர்கள். உடன் பிறந்த அண்ணனைப்போல் தன் கையால் எனக்கு அமுது படைத்த அவரை நான் தவருக நினைக்கவே மாட்டேன். மாலையி லிருந்து இரவு பதினெரு மணி வரை அவரோடு தனி அறையில் அன்று இருந்தேன். அப்பொழு தெல்லாம் எவ்வளவு பண்போடு அவர் என்னுடன்
பழகினர்.”
*உனக்கு இன்னும் உலகத்தைப் பற்றி நன்ரு கப் புரியவில்லை. அவனைப்பற்றி நன்கு கேள்விப் பட்டுத்தான் கடைசியில் வேறு வழியில்லாமல் இந்த முடிவுக்கு வந்தேன்."
‘அந்த மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிருன் என்பதற்காக உடனேயே வீட்டைக் காலிசெய்த நீங்கள் இன்று இப்படி மாறிவிட்டீர்கள்?"
“நாங்கள் இருவருமே தற்கொலை செய்து மடிந்துபோவதைக் காட்டிலும் ஏதாவது வழி இருந்தால் இன்னும் சிறிது காலத்துக்கு வாழலா மென்று ஆசைப்படுகிறேன்."
* சிறிது நேரம் மரண அமைதி நிலவியது. பின் அவளது குரல் கேட்டது.
 

45
'அவர் வருவதற்கு ஒப்புக்கொண்டாரா?'
*அவன் ஒன்றுமே கூறவில்லை. ஆனல் நிச்ச யம் வருவானென்று எனக்குத் தெரியும்.'
"நிச்சயம் வரமாட்டார் என்று நான் கூறு கின்றேன்."
'ஏன் ??
'அவர் நல்லவர்,”
'அவ்வளவுதானு? "அதுமட்டுமல்ல. உங்களுக்கு வே லை யு ம் தேடித்தருவார் - உங்களுக்கு நல்ல நண்பனுகவும் என் மீது அக்கறை கொண்ட அண்ணனுகவும் இருப்பார்.”
பேச்சு முடிந்துவிட்டது. அ வ ன் அலட் சியமாகச் சிரிப்பது கேட்டது. நான் கதவைத் தட்டினேன். அவன் கதவைத் திறந்தான். அவள் சிறிது நேரம் பேயறைந்தது போல் என்னைப் பார்த் துக்கொண்டிருந்துவிட்டுச் சிரிக்க முயன்ருள். நான் கூறினேன். 'விருந்துக்கு வர முடியாமையைக் கூறிவிட்டுப் போகத்தான் வந்தேன். அதோடு ஒரு நல்ல செய்தி. நாளை என் காரியாலயத்துக்கு வாருங்கள், நேவல் 'காஷ்” ஆபீஸில் ஒரு வேலை காலியாக இருப்பதாக இப்பொழுதுதான் அறிந் தேன். அந்த வேலையை நிச்சயம் உங்களுக்கு வாங்கித் தருகின்றேன்.”
19

Page 98
46
நான் செல்லத் திரும்பும்போது அவள் ஒடி வந்து 'அண்ணு,’ என்று அழுதாள்.
*" என் கையால் தயாரித்த சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்' என்று வற்புறுத்தினுள். மறுக்க முடியவில்லை. சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.
நீங்கள் நினைப்பதுபோல் என் உள்ளத்தில் ஏமாற்றம் நிறைந்திருக்கவில்லை. சாந்திதான் குடி கொண்டிருந்தது. திடீரென்று ஏற்படும் தடுமாற் றம் எப்படி ஒருவனைக் கெட்டவனுக்கி விடுகிறதோ அதேபோல் திடீரென்று ஏற்படும் மனமாற்றம் ஒருவனை நல்லவனுக்கியும் விடுகிறது. யார் நல்ல வன் யார் கெட்டவன் என்று எப்படி நிர்ணயிக்க முடியும்?
இப்படித்தான் நான் நினைத்தேன். ஆனல் சூத்திரக் கயிறு வேறு எங்கே இருக்கிறது என்ற உண்மையை மூன்று வருடங்களுக்குப் பின் எனக்கு மணமாகி ஒரு வருடத்துக்குப் பின் உணர்ந் * rش6 رقيق)
அவனும் அவளும் பேசிக்கொண்டிருந்ததை நான் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது.
* "பார்த்தாயா? அவன் எவ்வளவு நல்லவன். கடைசியில் உன் அபிப்பிராயந்தான் சரியா யிருந்தது.”
ܐܝܼܢ ܠܝܼ.

47
"உண்மையில் அவர் நல்ல வர்தான். இல்லா விட்டால் அவர் அ ப் படி த் திருந்தியிருக்க முடியுமா ?”
'திருந்துவதா?”
'உங்கள் அபிப்பிராயம் தவருனதல்ல. அவ ரைப்பற்றி நீங்கள் விசாரித்தறிய வேண்டியிருந் தது. நான் பெண் மாடிவிட்டில் குடியிருந்த போதே அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் கண்களைப் பார்த்தே தெரிந்து கொண்டேன். அன்று மாலை அவர் வீட்டில் என்னை விட்டுச் சென்றீர்கள். அவர் அறையில் தனியேயிருந்த அந்த நாலு மணி நேரம் அவர் எப்டிடித் துடி யாய்த் துடித்தார் என்பதை என் பெண் உள்ளம் நன்கு புரிந்து கொண்டிருந்தது. ஆனல் அவர் என்னைத் தீண்ட முடியவில்லை. அவர் இதயத் தன் எங்கோ ஒரு கோடியில் பண்பாடும் இளையோடி இருந்ததே அதற்குக் காரணம். அதனுல் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனுலேயே கடைசி நேரத்தில் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அந்தத் தந்திரத்தையும் கையாண்டேன்.?
' என்ன ! தந்திரத்தைக் கையாண்டாயா?
"ஆமாம், தந்திரத்தான். அதற்காக இன்று நான் எவ்வளவு சந்தோஷப் படுகிறேன் தெரியுமா? வரவிருந்த களங்கம் விலகியது, எனக்கு ஓர் அன் புள்ள அண்ணனும் கிடைத்தான்.

Page 99
748
"சரிதான் விஷயத்தைச் சொல்லேன்."
**அன்று நீங்கள் விருந்துக்கு அழைத்ததும் அவர் நன்ருக அலங்கரித்துக் கொண்டுவந்து விட்டார். ஏன் வந்தார் என்பது கூட எனக்குத் தெரியும். ஜன்னல் கதவு திறந்திருந்ததால் அவர் வந்து கொண்டிருப்பதை நான் கண்டுவிட்டேன். பதறிப்போன நான் கடைசி முயற்சியாக, அவர் பண்பாடுள்ளவர் என்றும் நிச்சயம் வரமாட்டார் என்றும் புகழ ஆரம்பித்தேன். நான் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. அவரும் உண்மையில் நல்ல வராகவே மாறிவிட்டார்.”
அவர்கள் சம்பாஷணை முழுவதையும் தான் கேட்கும்படி நேர்ந்துவிட்டதற்காக நான் கவலைப் படவில்லை. என் சிந்தையில் ஒரு புதிய சித்தாந் தம் உருவாகியது. எவ்வளவு கெட்டவன் ஆனலும் ஒரு பெண் அவனை நல்லவன் ஆக்கிவிட முடியும் என்பதுதான் அது.
 

14. வற்ருத நீரூற்று
தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறி ட் டு அலறியது. அன்னையின் அன்புக் கரங்கள் குழந் தையை ஆதரவோடு அணைத்தன. அவள் தூக்கம் இன்னும் கலையவில்லை. பழக்கத்தின் காரணமாக உதடுகள் மட்டும் அகிலா. துரங்கடா
கண்ணே' என்று அசைந்தன. பெற்றதாயின்
உடலின் கதகதப்பிலே பிள்ளை சிறிது ஆறுத
லடைந்தது. "ப்பா. lf. If ... . . . . . . . எ ன ற முத்து முத்தான ஒலி குழந்தையின் செவ்விதழ் களில் மலர்ந்து உதிர்ந்தது. ஒரு வயது கூட நிரம்பாத சவலையின் மழலைக் கருத்துக் கூற அங்கு யாரும் விழித்துக் கொண்டிருக்கவில்லை.
அகிலன் அவளது மூன்ருவது குழந்தை ஒரு வயது கூட இன்னும் சரியாகப் பூர்த்தியாகவில்லை. பசி எடுத்தபோது அழுவான். பால் குடித்ததும் சிரிப்பான். பொக்கை வாயைத் திறந்து கன்னம் குழியச் சிரிக்கும் ஜாலவித்தையிலே உலக செளந் தர்யம் அனைத்தையும் பெற்றவள் கண்டாள், குழந்

Page 100
I 50
தைக்குப் பேசத் தெரிந்த சொற்கள் இரண்டே இரண்டுதான். ம்மா. என்பான் ப் பா. என் பான். இந்த இரண்டு சொற்களையும் ‘குழந்தை அமுதமென மழலை பொழிகிருன்." என்று அவள் வர்ணித்தாள்.
குழந்தையின் ப்பா. . ஒலி தொடர்ந்தது. அவள் கண்விழித்து எழுந்தாள். குழந்தையை அன்பு சொரிய அனைத்து பாலூட்ட முனைந்தாள். அப்பொழுது தான் குழந்தை விக்குவது அவளுக்குத் தெரிந்தது. குழந்தை நன்ரூக அழு திருப்பானே? நல்ல தூக்கம் , தன்னைத்தானே நொந்து கொண்டாள். குழந்தை விக்கிக்கொண்டேயிருந் தது. பால் குடிக்கவும் மறுத்தது . அவளுக்குத் தெரியும் குழந்தைக்குப் பசியில்லை. அப்போ ஏன் அழுகிருன்? வயிற்றல் வலி கண்டிருக்குமோ?
அவள் பயந்து விட்டாள். எழுந்திருக்து குழந் தையை மடியில் எடுத்துக் கொண்டாள். குழந்தை இப்பொழுது அழவில்லைத் தான். ஆனல் விக்கிக் கெ ண்டிருந்தது. "ப்பா. குழந்தையின் உதடு கள் பெ7ருமலோடு அசைந்தன.
அன்று மாலை நடந்த சம்பவத்தை அவள் எண் னிப் பஈர்த்தாள் மூன்று நாள் விடுமுறையில் அவள் கணவன் ஊருக்கு வந்திருந்தான். அகிலன்மேல் அவனுக்குக் கொள்ளை ஆசை. விடுமுறையில் நின்ற மூன்று நாட்களும் குழந்தையை அவன் கையிறக்க
| "سيج"
 
 

1 5
வில்லை. தூங்கும்போது கூட அவன் குழந்தையை அணைத்துக் கொண்டே தூங்கினன். பாலூட்டும் போது மட்டும் அவள் குழந்தையைத் தன் அருகே அணைப்பாள். பாலூட்டியதும் தானகவே குழந் தையை அவனருகே படுக்க வைப்பாள். தந்தையும் தனையனும் ஒருவரையொருவர் அணை த் து க் கொண்டு தூங்கும் காட்சி அவள் இதயத்தே அணை யாத இன்ப அலையைப் பரப்பியது. குழந்தையின் அமுதூறும் வாயிலிருந்து உதிரும் "ப்பா. என்ற சொல்லைக் கேட்டதும் அவன் காதில் தேன் மாரி பொழிந்தது. இன் பத்தின் எல்லையை எட்டிப் பிடித்தவன்போல் மகிழ்ந்தான்.
"கள்ளனுக்கு அப்பாவைத் தெ ரி கிற து "அப்பா" என்று கூப்பிடுகிருன் பார்த்தீர்களா ?” என்று அவள் இன்பப் போதையில் மெய் மறந்து கூறும்போது அதை ஆமோதிப்பவன் போல் ஆசை யோடு குழந்தையை அள்ளி அவன் முத்தமிடுவான்.
மூன்று நாட்கள் மூன்று வினுடிகளாகக் கழிந்து விட்டன. நேற்று மாலே அவன் பயணம் புறப்பட்டு விட்டான் . மூத்தவனுக்கு ஐந்து வயது. விபரத் தெரிந்தவன். "அப்பா நானும் கூட வருகிறேன்.” என்று ஒலமிட்டான். இரண்டாவது பெண் குழந்தை அவளுக்கு மூன்று வயசிருக்கும். அப்பாவோடு செல்லப்போவதாக அடம் பிடித்தாள்.

Page 101
152
குழந்தைகளைச் சமாதானப் படுத்திவிட்டுப் புறப்பட்டான். அன்னையின் ஒக்களையில் அகிலன் வீற்றிருந்தான். அப்பா எங்கேயோ போகிழுர் என்ற விபரம் அவனுக்குத் தெரியாது. பற்றற்ற ஞானி யைப்போல் அவன் முகம் நிர்மலமாயிருந்தது. குழந்தையின் மாம்பழக் கன்னத்திலே அப்பா முத்தமிடும்போது அகிலன் தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தான். அந்த இன்ப நினைவோடு அவன் பின்யாணமானன்.
அப்பா வெளியூர் சென்றுவிட்டதை அறிய முடியாத பருவம் என்று அன்னை எண்ணினுள். குழந்தையின் உள்ளத்துள் புகுந்து அதன் உணர்ச்சி களை அறிய அவளால் எப்படி முடியும்,
குழந்தை இன்னும் விக்கிக் கொண்டேயிருந் தது. "ப்பன. மந்திரத்தை ஒயாது உச்சரிக் கும் குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அடக்க முடியாத வேதனை குழந்தையின் முகத்தில் பிரதிபலிப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. அப்பாவின் நினைவு குழந்தையை வாட்டுகிறதோ வென்று பயந்தாள். குழந்தை அப்பாவைப் பற்றிக் கனவு கண்டிருக்குமோ?
தன் குழந்தைப் பருவத்தை எண்ணிப் பார்த் தாள். ஐந்து ஆறு வயசில் நடந்த சம்பவங்கள் தான் - நிழல்போல் அவள் நினைவுக்கு வந்தன. ஒரு வயதுக் குழந்தையின் உள்ளத்தை ஊடுரு

I 53
விப் பார்க்க அவளால் முடியவில்லை. இப்பொழுது
அவர் பிரயாணம் செய்து கொண்டிருப்பார், நேற்று இக் நேரம் அவர் குழந்தையை அணைத்தபடி தூங் கிக்கொண்டிருந்தார். அவர் உள்ளத்திலும் இந்த நினைவுச் சக்தி என் குழந்தையின் உள்ளத்தோடு தொடர்பு கொண்டு விட்டதோ..?
*ப்பா. குழந்தை விக்கியது. பாலூட் டிஞள். தாலாட்டினுள். தோழில் சாய்ந்தபடி முற்றத்தில் உலாவினுள். குழந்தையின் விக்கல் அடங்கவில்லை. அவள் கண்களில் நீர் முட்டியது. செய்வதறியாது திகைத்தாள். குழந்தையை ஆற்ற அவள் கையாண்ட முயற்சியெல்லாம் வீணுயின.
மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கைத் தூண்டிவிட்டாள். அறையிலே ஒளி பரவியது. சுவரிலே மாட்டியிருந்த கணவனின் உருவப் படத் தருகே குழந்தையைக் கொண்டு சென்ருள்.குழந்தை 'gjurr......... என்றது. அதன் குஞ்சுக் கரங்களை எடுத்து முத்தமிட்டாள்.

Page 102
15. சுனந்தாவதி
அவன் இலங்கைப் பிரஜையாகத் தன்னைப் பதிவு செய்து கொள்ள ச்சேய்த முயற்சிகள் யாவும் பயனற்றதாய்ப் போய்விட்டன. இலங்கைப் பிரஜை யாவதற்குத் தேவையான சகல ஆதாரங்களிருந் தும் அரசாங்க சட்டத்தை அமுல் நடத்தும் முறை களினுல் நாடற்றவர்களாக - அரசியல் அஞதைக் காக ஆக்கப்பட்டு அல்லலுறுபவர்களோடு அவன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தான். 'நீ கந்தசாமி யல்ல, கந்தசுவாமி. ஆகவே உனக்குப் பிரஜா உரிமை வழங்க முடியாது'' இந்த முறையில் சட் டம் அமுல் நடத்தப்படும்போது. அவன்?
அவன் இலங்கைக்கு வந்ததே சில ஆண்டு களுக்கு முன்தான். பெற்ற தாயையும், பிறந்த பொன் நாட்டையும், உற்ருர் உறவினரையும் பிரிந்து அவன் இலங்கையில் தங்கிவிட ஏன் ஆவல் படுகிருன்? எல்லோருக்கும் இது புதிராய்த்தானி ருந்தது. அவனுக்கு இலங்கையில் சொத்து சுதந் திரம் ஒன்றுமே கிடையாது. பின்.?
-

155
அவன் தன்ரு கப் படித்தவன், கண்ணியமான நாகரிகமான குடும்பத்தில் பிறக்தவன். இலங்கை யில் ஒரு முன்னேற்றமுள்ள கம்பெனியில் உத்தி யோகம் பார்த்துக்கொண்டிருந்த சுப்பையா என்ற ஒரு இந்தியர் விடுமுறையில் இந்தியாவிற்கு வந் திருந்தார். அச்ச188பம் அவன் படிப்பை முடித்துக் கோண்டு உத்தியோக வேட்டையில் இறங்கியிருந்த காலம்,
'ரகு நீ இலங்கைக்கு வா. உனக்கு எங்கள் கம்பெனியிலேயே ஒரு நல்ல வேலை பார்த்துத் தரு கிறேன்” என் ருர் சுப்பையா. அவனுக்கு இலங்கை யைப் போய்ப் பார்க்கவேணுமென்ற ஆசையிருந் தாலும் பெற்ருேரைப் பிரிந்து தூரதேசம் செல்ல மனம் ஒப்பவில்லை. இரண்டு மூன்று மாசங்களில் வருகிறேன் என சுப்பையாவிடம் கூறினன். இந்தி யாவிலேயே வேலை கிடைத்துவிட்டால் இலங்கைக் குப் போகவேண்டிய தேவையில்லை.
அவன் எண்ணியபடி ஆறு மாசங்கள் கழிந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. கடைசியில் இலங்கை செல்வதென்று தீர்மானித்தான். சுப் பையா கொடுத்துச்சென்ற விலாசம் அவனிட மிருந்தது.
நேராகக் கொழும்பு வந்து சேர்ந்தான். இயற்கை வனப்பு மிக்க இலங்கை அவனுள்ளத்தை ஆகர்ஷித்தது. எங்கு பார்த்தாலும் பசுஞ்செடிகள்

Page 103
156
செழுமையோடு குலுங்கிக் கொண்டிருந்தன. பரந்த வெளிகளெல்லாம் பச்சைப் பசேலென்றிருந்தன. பட்டின எல்லையைத் தாண்டிச் சென்ருல் தென்னந் தோப்புக்களும், ரப்பர்த் தோட்டங்களும் பண்டை அரசர்களால் கட்டப்பட்டு இப்போ பாழடைந்து கிடக்கும் ஆயிரங்கால் மண்டபத்தை நினைவுக்குக் கொண்டுவந்தன.
உளம் நிறைந்த உற்சாகத்தோடு கொழும்பின் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்தவன் ஒரு திருப்பத்தில் திரும்பியதும் கம்மென்று நாற்றம் வீசுவதைக் கண்டு திகைத் துப்போனுன் , கூண் டோடு சுவர்க்கம் சென்ற தருமருக்கு நரக தரிசனம் கிடைத்தது போலிருந்தது. அந்த நாற்றத்தின் சூழலில் ஏற்பட்ட அலங்கோலக் காட்சி.
ஆமாம் அது கள்ளுக்கடைதான். கடைக்கு முன்னுல் நடைபாதையில் சுமார் ஒரு பர்லாங்கு தூரத்திற்குச் சனங்கள் நின்றுகொண்டும், இருந்து கொண்டும், படுத்துக்கொண்டும் "தில்லானு” பாடி னர்கள். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் இருந்தனர். மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒட்டம் பிடிக்கப் பார்த்தவன் திடீரென்று திகைப்பூண்டை மிதித்தவன்போல் சிலைபோல் நின்ருன், அவன் கண்களில் நீர் வந்தது. அவ்வளவு பேர்களும் இந்தியர்கள். அவன் தாய்நாட்டு மக்கள். நரகத் தில் தன் உடன்பிறந்தாரேயே கண்டார் தருமர் grico), . . . . . . . .?

157
ஒரு பெண்ணை அவள் கூந்தலில் பிடித்து இழுத்தான் ஒருவன். குடிவெறியிலோ கோபத் திலோ அவள் முகம் சிவந்திருந்தது. அவள் கையி " லிருந்த கொட்டாங்கச்சி நிறையக் கள்ளிருந்தது. அவன் கூந்தலைப் பிடித்திழுக்கும்போது கூட அவள் அதைக் கொட்டிப் போகாதபடி கெட்டியாகப் பிடித்திருந்தாள். ஆமாம் கொழும் பு நகரத் தொழிலாளர் தான். அந்நிய நாட்டிலொருவன் இக்காட்சியைக் கண்டால், இலங்கையைப் பற்றிக் கீழ்த் தரமாக எண்ணுவதற்கு இடமிருக்கிறது. 'இலங்கையின் சா : க் கே டா ன இவர்கள் தொலைந்து போகவேண்டுமென்று சிங்களவர் ஒல மிடுவதிலும் நியாயம் இருக்கிறது' என்று தன்னை யும் மீறிய வெறியில் ஒரு கணம் எண்ணினன்.
தலைவர்கள்" என்று தங்களைக் கூறிக்கொண்டு வேண்டாத பிரச்சனைகளிலெல்லாம் பொழுதைக் கழிக்கும் இந்தியத் தலைவர்கள் இந்த அக்கிர மத்தை ஒழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள்தான் படிப்பு வாசனையற்ற தெஈழிலாளி கள். நல்லதையும் கெட்டதையும் அவர்கட்கு எடுத்துரைத்து அவர்கள் ஏன் சமூக முன்னணிக்கு கொண்டுவரக் கூடாது? அவன் ஆத்திரம் இப் போது இலங்கை இந்தியத் தலைவர்கள் மேல்த் திரும்பியது. சிந்தனைச் சூழலில் சிக்குண்டு மேலே நடந்தான்.

Page 104
158
விலாசத்தின் படி சுப்பையா கடமையாற்றும் கம்பெனியைப் போயடைந்தான். சுப்பையா மூன்று மாதத்திற்கு முன்பே தொழில் நடத்தும் நோக்கத்தோடு கம்பெனியை விட்டு விலகிவிட் டார் என்ற செய்தி அவனுக்குக் கலவரத்தை உண்டுபண்ணியது. அவன் கொண்டுவந்த பணமும் அரைவாசி தீர்ந்துவிட்டது. இந்த நிலையில் இலங் கையில் தங்கி உத்தியோகம் தேடுவதெப்படி? இந்தி யாவில் ஒரு வாரத்தைக் கழிக்கப் போதுமான பணம் இங்கு ஒரு நாளைக்குக் கழிக்கப் போதாம
லிருந்தது.
தொடர்ச்சியாக இன்று நடந்த சம்பவங்களால் அவன் மூளை குழம்பிக் கிடந்தது. நிம்மதி வெகு முக்கியம் என்பதை உணர்ந்த அவன் "கால்பேஸ்'' மைதானத்தை நோக்கிச் சென்றான் . மோதும் அலை களில் சிந்தையைச் செலுத்தியபடி புல் தரையில் உட்கார்ந்திருந்த அவன் உள்ளுணர்வு வருங் காலத்தை நோக்கி  ெம ல் ல நகர்ந்து கொண் டிருந்தது.
- நேரம் மாலை எட்டு மணிக்கு மேலிருக்கும். காற்ற வாங்க வந்தவர்கள் அநேகமாக எல்லோ ரும் போய்விட்டார் கள். நேரம் போனதே தெரி யா மல் அமர்ந்திருந்தவன் எழுந்து மெல்ல நடந் தான். அப்போ து இரு சிங்களவர்கள் அவன் பின் னால் நடந்து வந்தனர் அவர்கள் பேசிக்கொண்டு வந்ததை முதலில் அவன் கவனிக்கவில்லை. கொச்

59
சைத் தமிழில் 'கள்ளத்தோணி' என்றதும் அவன் திரும்பிப்பார்த்தான். அவர்கள் கொல் லென்று சிரித்தனர். ஆத்திரத்தால் அவன் ரத்தம் கொதித்தது நரம்புகள் அடைத்தன. சிங்களவரும் அவனைச் சமீபித்ததும் " என்ன ஒய் பார்க்கிறது கள்ளத்தோணி’ என்ருர்கள் மறுபடியும். சமீபத் தில் இரு சிங்கள யுவதிகள் தன்னைக் கவனிக் பதைக் கண்டதும் அவன் ஆத்திரம் எல்லை மீறியது. சூழ்நிலையை மறந்து ஒருவனின் முகத்தில் படீ
ரென்று அறைந்தான். ஒரு இந்தியன் - அதுவும் கொழும்புப் பட்டினத்தில் இவ்வளவு துணிகரமாகி அடிப்பான் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இருவருமாகச் சேர்ந்து அவனைத் தாக்கினர்கள். ரகு நல்ல தைரியமான வாலிபன், இரு வரையும் சமாளித்தான் இதற்குள் எங்கிருந்தோ பொலிஸ் காரர்கள் இருவர் அவ்விடத்திற்கு வந்து மூவரை யும் கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு இட்டுச் சென்றனர்.
இரு பொலிஸ்காரரும் நடந்து கொ எண் ட விதம் 'ஒரு இந்தியனுக்கு இவ்வளவு தைரியமா' என்பது போலத்தா னிருந்தது. வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. கோப உணர்ச்சி அடங்கிய பின் தான் அவன் பச்சாத்தாபப்பட்டான். மூவரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்ட பின்பு நடந்த அந்த எதிர்பாராத சம்பவம் இன்றும் அவன் உள் ளத்தை விட்டு அகலவில்லை. கால்பேஸ் மைதானத்

Page 105
及禽0
தில் தகராறு நடந்தபோது நின்ற இரு பெண்களில் ஒருத்தி பொலிஸ் நிலையத்துள் நுழைந்து தானுகவே "வாக்குமூலம் கொடுத்தாள். அவள் கொடுத்த வாக்குமூலம் ரகுவுக்குச் சாதகமாகவேயிருந்தது. அவளொரு சிங்களப்பெண். கெளரவமான குடும் பத்தைச் சேர்ந்தவள். அவளால் ஒரு இந்திய வாலிபனின் உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிந் தது. எவ்வளவுதான் இந்தியத் துவேஷம் இலங் கையில் பரவியிருந்தாலும் சேய் நாட்டின் இரத்த பாசம் முற்ருக சிெத்து விடவில்லை என்று உணர்ந் தான். பண்பாட்டின் சிகரமான அந்த யுவதியின் மேல் அவனுக்கு அளவு கடந்த அபிமானம் ஏற் L't L - g5i.
வழக்கு அவனுக்குச் சாதகமாக முடிந்ததற்கு அவளது சாட்சியம்தான் மூலகாரணம் என்பது அவனுக்கு நன்ருகத் தெரியும், அவள் யாரோ, அவன் யாரே ஈ ஆணுல் அவள் வழியில் தொல்லையை விலைக்கு வாங்கினுள். ஏன். p
அவள் வீட்டிற்குச் சென்று தன் நன்றியைத் தெரிவிப்பதுதான் முறையென்று எண்ணினன். ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு வெள்ளை வத்தையில் இருக்கும் அவர்கள் வீட்டுக்குச் சென் முன் அவ்ஸ் அன்பாக அவனை வரவேற்ருள். தாய்க்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தாள். தந்தை அவனை ஏற்கனவே நீதிமன்றத்தில் சந்தித் திருக்கிருன் அவர்களது அன்பான உரையாடல்

6
அவனது உணர்ச்சி வசமாக்கியது. இவர்களைப் போலவே இலங்கை வாழ் மக்கள் அனைவருமிருந் தால் இத்தியன் - இலங்கையன் துவேஷத்திற்கே, இடமில்லாது போய் விடுமே என்றெண்ணினன், அடிக்கடி அவனே வந்து போகும்படி அவனை அன் பாக வேண்டிக் கொண்டனர். செல்வர்கட்கு இப் படியான மனப்பாங்கு அமைவது அபூர்வம்தான்.
ரகு அடிக்கடி சென்று அவர்களோடு இணைந்து பழகுவான். பல விஷயங்களையும் தினம் விட்டுப் பேசுவான். காலகதியில் அவன் உத்தியோகமில் லாமல் இருக்கிருனென்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். கள்ளங்கபடமற்ற அவன் உயர்ந்த போக்கு அவர்கள் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது.
அன்று வழக்கம்போல் அவன் வெள்ளவத் தைக்குச் சென்றன். அவர்கள் அன்பாக வரவேற் றனர். "மிஸ்டர் ரகு உங்கள் உத்தியோக விஷ யமாய் அப்பா எவ்வளவோ முயற்சிக்கிருர், இந்தி வர்களை வைத்துக்கொள்ள அநேக ஸ்தாபனங்கள் தயங்குகின்றன. உங்களுக்கு இஷ்டமானுல் ஒரு நல்லவேலை கிடைக்கும் வரையில் உதவி சுப்பிரின் ரென்டாக எங்களுக்குச் சொக்தமான ஒரு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். கெளரவமான உத்தியோகமாயிருக்க வேண்டு மென்பதற்காகப் பெயரளவில் சுப்பிரின் ரென்டன்டேயல்லாமல் சம்
21

Page 106
62
பளம் ரூபா 150/= க்குமேல் கொடுப்பது மிகவும் சிரமம் என்று அப்பா கூறினர்." என்று சிரித்துக் கொண்டே கூறினுள். சுனந்தாவதி அதுதான் அவள் பெயர்.
அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். சிக்கன மாக வாழ்க்கை நடத்த நூற்றைம்பது ரூபா நன்ருகப் போதும். அல்லாமலும் இப்படி யான நல்ல குணம் படைத்தவர்களிடம் வேலை செய் வதே பெரும் பாக்கியம் என்று கருதினன். அவ னுள்ளத்தெழுந்த நன்றி யுணர்ச்சியை எப்படி
வெளிப்படுத்துவதென்றே அவனுக்குத் தோன்ற
வில்லை.
அவன் உத்தியோகமேற்று வருடங்கள் மூன்று கழிந்துவிட்டன. நேர்மையான அவன் உழைப்பு அவர்களுள்ளத்தில் அவ னு க் கு நிரந்தரமான இடத்தை வகுத்து விட்டிருந்தது. விடுமுறை நாட் களைக் கழிக்க அவர்கள் தோட்டத்துப் பங்களா வில் போய்த் தங்குவது வழக்கம். அச்சமயங்களில் அவர்கள் ரகுவைத் தங்களின் கீழ் உத்தியோகம் பார்ப்பவனக மதிப்பதில்லை. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனுகவே மதித்தார்கள். இவ்வளவு லாப மென்றே இவ்வளவு நஷ்டமென்ருே அவன் கூறி ணுல் சரிதான். அவ்வளவு நம்பிக்கை அவன் மேல்.
அலாசாலைக் கடைசி வருஷம். பரீட்ஷைக்கு முன் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறை நாட்களில் கொழும்பிலிருந்தால் நிம்மதியாய்ப்
" |
ܐܝyܬ

63
படிக்க முடியாது. தந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு ரப்பர் தோட்டத்திற்குச் சென் ருர் சுனந்தா, அவளுக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுத்தான் ரகு, வேலை முடிந்து மாலை நேரங் களில் இருவரும் பல விஷயங்களைப் பற்றியும் பேசுவார்கள். அநேகமாக எந்த விஷயத்தை எடுத் துக்கொண்டாலும் இருவர் அபிப்பிராயமும் ஒற்று மையாயிருக்கும். விடுமுறை நாட்களை நெருங்கிக் கழித்தவர்கள், பிரியும்போது இதயம் அலறுவதை உண்ர்ந்தார்கள். ஏதோ ஒரு சக்தி அவர்களை அறி யாமலேயே இரு உள்ளங்களையும் பிணைத்துவிட்டது.
"மறு லீவுக்கு வருகிறேன் ரகு" என்று கூறும் போது அவள் குரலில் கீறல் விழுந்தது. நீர் முட் டிய கண்களை மறைக்க அவன் முகத்தைத் திருப் பிக்கொண்டு மெளனமாகத் தலையசைத்தான்.
எத்தனையோ விடுமுறைகள் வந்து அவர்களைக் கற்பணு லோகத்தில் தூக்கி எறிந்துவிட்டுப் போய் விட்டன. அவர்கள் அன்பு கற்பனை - காதல் கற் பனை - வாழ்வே கற்பனைதான். என்றைக்கும் அவர் கள் காதல் நிறைவேருது என்பது அவர்கட்கே தெரியும். அவள் எதற்கும் தயாராக இருந்தாள். ஆணுல் அவன்.? பெற்ற ம க னரிலும் பேரன்பு காட்டி உத்தியோகம் தந்து தன்னை ஆத ரித்த அவள் பெற்ருேருக்குத் துரோகம் செய்வானு? அவர்கள் கெளரவத்திற்கு இழுக்கை உ ண் டு
பண்ணுவானு? உண்மையான இதயகாதல் என்றும்

Page 107
64
அழிவற்றது. அவள் எங்காவது நன்ருயிருந்தால் போதும் என்ற அளவிற்கு அவன் தன் உள்ளத் திற்கு இஸ்திரப்படுத்திக் கொண்டாலும் அது தவித்துக்கொண்டேயிருந்தது.
இந்த நிலையில்தான் தற்காலிக வாச அனுமதிச் சீட்டுக் காலாவதியானவர்கள் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டுமென்ற சட்டம் ஐரூராக இலங்கை அரசாங்கத்தால் அமுல் நடத் தப்பட்டது. அவன் இலங்கைப் பிரஜையாக ஆவல் பட்டான். அவளை விட்டுப் பிரியப் பேச கிருே மென்பதையே அவனுல் நினைத்துப் பார்க்க மூடிய வில்லை. சட்டம் காதலுக்குத் தாழ்ந்து கொடுக் குமா? போகவேண்டிய நாள் வந்துவிட்டது. அவன் கொழும்புக்கு வந்தான். பிரயாணத்தின் முதல்நாள் வெள்ளவத்தையில் தங்கினன். நந்தா வதியின் கண்கள் அழுதழுது வீங்கிங்போயின. *நந்தா அழாதே எங்களை அறிமுகப் படுத்திய விதியே மறுபடி பிரித்துவிட்டது. உடலைப் பிரிக்கச் சட்டத்துக்கு வலுவிருக்கிறதேயல்லாது எங்கள் உள்ளத்தைப் பிரிக்க அதனுல் முடியுமா? அரசியல் நிலை என்றும் ஒரேமாதிரியிருக்காது. நாங்கள் மறுபடியும் சந்திப்போம் என்ற சபலம் என்னிட மிருந்து முற்ருக நீங்கவில்லை. எல்லோரும் ஒர் குலம் யாவும் நமதுரரே என்ற நிலை ஏற்பட்டால் எவ்வளவு சுபீட்சம் உலகில் நிலவும். அழாதே நந்தன. நீ அழுவதைப் பார்த்தால் என்னுல் சகிக்க (Lp Lqt-JL DIT?... • • • • • • • • •

I 65
'ரகு நான் அப்பாவிடம் என் விருப்பத்தைக் கூறி எப்படியும் சம்மதிக்க வைக்கிறேன். அதன் பின் நாங்கள். 99
அவளது நிறைவேருக் கற்பனையை எண்ணி ம ன ம் வருந்தினன் ரகு, கலாசாலையில் பயி லும் ஒரு பெண் இன்னும் குழந்தைபோல் கதைக்கிருள். பா வம் அளவு கடந்த அன்பு அவள் கண்ணை மறைத்து விட்டது. அவன் பதில் கூற வில்லை. விதியிருந்தால் ஒன்று சேருவோம் என்று மட்டும் சொல்லி வைத்தான்.
கொழும்பிலிருந்து மோட்டாரிலேயே தல்ை மன்னர் போய்ச்சேர்ந்தார்கள். தன்னை வழியனுப்ப நந்தாவும் அவள் பெற்ருேருல் வந்திருக்கிருர்கள் என்பதை நினைக்க அவன் இதயம் நன்றியுணர்ச் சியால் விம்மியது.
*ரகு போய்வா அப்பா இந்தக் கிழவனே மறந்து விடாதே. அடிக்கடி கடிதம் போடு. s நந்தாவின் தந்தை உணர் ச் சி களை அடக்கிக் கொண்டு இரண்டு வசனங்கள் பேசினுர் . ஆணுல் தொண்டை கம்மியது. வெகு சிரமப்பட்டுப் வொங்கிவரும் துக்கத்தை அடக்கிக்கொண்டார்.
ரகு சிறு குழந்தைாேல் விக்கி விக்கி அழுதான். அடக்கி வைத் திருந்த துக்கம் அணையை உடைத் துக்கொண்டு பாய்ந்தது. அவன் நந்தாவிடம் திரும்

Page 108
166
பினன். அவள் சோகமே உருவாய் வாடிய கொடி போல் நின்ருள். தந்தைக்கு முன்னிலையிலேயே அவள் துளிர்க்கரங்களை எடுத்துக் கண்களில் ஒற் றிக்கொண்டான். வாய் திறந்து அவனுல் பேச முடியவில்லை. 'போ. tü 6JG) . . . . . . கி. றேன்" என்று மட்டும் கூறினன். கண்களிலிருந்து நீர்
குபுகுபுவென்று பாய்ந்தது.
'அப்பா என்று அலறியபடியே தந்தையின்
நெஞ்சில் முகத்தைப் புதைததுக்கொண்டு விக்கி
விக்கி அழுதாள் நந்தா”
- நிலையில்லாமல் தண்ணிரிலேயே தத்தளிக்கும்
கப்பலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டு நின்றனர் அவள் பெற்றேர்கள்,
*
 

16. கடமையும் கருணையும்
"ஐயோ அம்மா. *" என்ற அலறல். அரைத் தூக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டுக் கண் விழித்தேன். மூன்ருவது கட்டிலில் படுத்திருந்த நோயாளிதான், அம்படிப் பரிதாபமாக ஒலமிட் டான். அப்பொழுது இரவு பதினெரு மணி இருக் கும். ஆஸ்பத்திரி வார்ட்டிலுள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு விட்டன. நடை பாதை யில் ஒளி குறைந்த மின் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்ததால் வார்ட்டிலும் இருள் கவிந்த மெல்லிய ஒளி வியாபித்திருந்தது. ஐந்தாவது கட்டிலில் படுத்திருந்த நான் மெல்லத் திரும்பி அந்த நோயாளியைப் பார்த்தேன். சமுத்திரத்தில் வீழ்ந்து தத்தளிப்பவன், கையில் அகப்பட்டதை எப்படிப் பற்றிப் பிடிப்பாணுே அதேபோல் ஒரு தலையணையை மார் போடு அழுத்திப் பிடித்தபடி சுருண்டு கிடந்தான். அவன் மறுபடியும் "ஐயோ P. P. O. ’ என்ற ஒலம் அமுக்கலாகக் கேட்டது.

Page 109
68
'சனியன், தானும் தூங்காது மற்றவர்களையும் துரங்க விடாது’ என்ற வார்த்தைகளை அனுபாச மாக உதிர்த்துக் கொண்டு மூன்ரு வது கட்டி லண்டை சென்ருன். ஒரு நர்ஸ் மற்றவர்கள் என்று அவள் நோயாளிகளைத் தான் குறிப்பீட்டாளr அல்லது தன்னைத்தான் கூறினுளா தெரியவில்லை. அவள் நைட் டுட்டி நர்ஸ் என்பது எனக்குத் தெரியும். ஆனலும் பத்துமணி யடித்து வார்ட்
விளக்குகள் அணைக்கப்பட்டதும் - நாற்காலியில் உட்கார்ந்து மேசையில் தலையைச் சாய்த்தபடி "நைட்டூட்டி’ நர் ஸ்கள் கோ பூழி த் தூக்கம்
போடுவதை நான் கவனித்திருக்கிறேன். அதனுல் தான் எனக்கு அப்படியொரு சந்தேகம் எழுந்தது. 'ஏன் இப்படி உயிரை வாங்குகிருய்?’ என்று பூட்ஸ் காலை நிலத்தில் உதைத்தபடியே கர்ச்சித் தஈள் நர்ஸ். நோயாளி அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் முனகினுன் , அ வ ள் அதட்டுவ தொன்றும் அவன் கா தில் வீழ்ந்ததாகத் தெரிய வில்லை. மறுபடியும் அம்மா. ’ என்ற அவ லக் குரல் வஈர்ட்டிலுள்ள அத்தனை பேரையும் கிடுகிடுக்க வைத்தது.
'இரு, இரு வருகிறேன்” என்று கருவிக் கொண்டே நகர்ந்தாள் நர்ஸ், சிறிது நேரத்தில், தூக்கத்துக்குப் போடும் ஊசி மருந்தை ஒரு பெரிய குழாயில் நிரப்பியபடியே அவள் திரும்பினுள். இரண்டு அங்குல நீள ஊசியால் நோயாளி மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள நினைத்தாள்.

69
ஆணுல் அவள் எண்ணம் நிறைவேறவில்லை. பத்து விரல்களின் கொடுக்குப் பிடியில் தலையணை பிதுங் கிக் கிடக்க அந்த நோயாளி அசைவற்றுக் கிடந் தான். ஒரு முறை அவன் தலையை நிமிர்த்திப் பார்த்த அந்த நர்ஸ் ஒரு வெள்ளைத் துணியால் பிணத்தை மூடிவிட்டு மெல்ல நகர்ந்தாள். அவளி டம் எவ்வித உணர்ச்சி பாவமும் தேன்படவில்லை.
ஆஸ்பத்திரிகளில் இது சர்வசாதாரண நிகழ்ச்சி. தினசரி எட்டுப் பத்து நோயாளிகள் இறந்து கொண்டு தானிருப்பார்கள். கரும்பலகையில் ஏற் கனவே எழுதப்பட்டிருக்கும். இறந்த நோயாளி களின் எண்ணிக்கையை மேலும் ஒன்றைக் கூட்டி எழுதிவிட்டுச் செல்வதைத் தவிர நர்ஸ்கள் ஒப்பாரி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான். ஆணுலும் எனக்கு என்னவோ மாதிரியிருந் தது. கடைசி மூச்சுப் பிரியும்போது கூட ஒரு இத மான வார்த்தையைக் கேட்க அவன் கோடுத்து வைக்கவில்லையே என்று என் இதயம் அழுதது,
*அவன் கார்ட்டியக் அஸ்மா வால் அவஸ் தைப்பட்டான். அவன் சீக்கிரமே இறந்துபோக வேண்டும் என்று நான் ஆண்டவனே பிரார்த்தித் துக் கொண்டிருந்தேன். அப்பப்பா, எவ்வளவு அவஸ்தைப்பட்டான் தெரியுமா?” என்றுநாலாவது கட்டிலில் - அதாவது எனக்குப் பக்கத்துக் கட்டி வில் - படுத்திருந்த நோயாளி மெதுவான குரலில் என்னிடம் கூறினர்.
22

Page 110
I 70
அந்த வார் ட் டி ல் அனுமதிக்கப்பட்டிருந்த அத்தனை நோயாளிகளும் இருதயநேசயால் பீடிக் கப்பட்டவர்கள். மார்புவலி என்று ஆஸ்பத்திரிக்கு வந்த என்னை ஆஸ்பத்திரியில் நிறுத்தி விட்டார் கள். 'கொரனரிதொரம்பஸிஸ்’ என்று டாக்டர் கூறினர். "அப்படியென்றல்..” என்று மெல் லக் கேட்டேன். அதற்குள் டாக்டர் எட்டாவது கட்டிலுக்குப் போய்விட்டார்.
'உஸ். பேசக்கூடாது. "தரம்பஸிஸ்’ வந்தவர்கள் பிழைப்பதே அரிது. எதைப்பற்றியும் சிந்திக்கவோ, கவலைப்படவோ கூடாது. 99 என்று அடுக்கிக்கொண்டே போனள் நர்ஸ்.
'சாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தனித ஞல் இருக்க முடியுமா? என்று அவளைக் கேட்டேன். அவள் எரித்து விடுபவள் போல் என்னை நிமிர்ந்து பார்த்தாள். "என்ன விஷயம்?' என்று கேட்டுக் கொண்டே மற்ருெரு நர்ஸ் வந்தாள். ஒன்றுமில்லை இது 'தரம்பஸிஸ்? கேஸ், எந்த நிமிஷம் மோர் றரிக்கு பிரயாணமாகிருரோ தெரியாது. அதற்குள் தன் ஹாஸ்யத்தை ரசிக்க உன்னையும் என்னையும் அழைக்கிருர். பாவம். ’ இருவரும் கலகல வென்று சிரித்தபடியே சென்ருரர்கள்.
நான் கேட்டதில் ஏதாவது ஹாஸ்யம் இருக் கிறதாக எனக்குப் படவில்லை. ஆனல் அவள் கூறியதில் ஹாஸ்யம் கலந்த பயங்கர உண்மை யிருப்பது எனக்குப் புரிந்தது. எந்த நிமிடமும் நான் இறந்து விடலாம்.
سجاؤ

/
71
"மிஸ்டர், இது உங்களுக்கு முதல் "அட்டாக் கா? நாலாவது கட்டிலில் படுத்திருந்த நோயாளி தான் கேட்டார்.
"ஆமாம்" என்றேன் கவலையோடு.
"எனக்கும் கொரனரிதரம்பஸிஸ் தான். ஆனல் இது ஒன்பதாவது 'அட்டாக்" பதினைந்து வரு டங்களுக்கு முன் முதல் அட்டாக்" ஏற்பட்டது.
நான் ஆச்சரியத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்தேன்.
"ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறேனென்ரு? நான் என் றுமே சாவதைப்பற்றி நினைக்காமலிருப்பதுதான் இன்னும் உயிர் வாழ்வதன் ரகசியம். 99
நல்ல ஒர் நோயாளி நண்பர் கிடைத்துவிட் டார் என்ற மனநிறைவு ஏற்பட்டது. புதியதோர் தென்பு உடலெல்லாம் வரவியது. பத்து நாட்களுக் குள் இருவரும் நெருங்கிய ந ண் பர் க ளா கி 69. GLm Lb. -
'நோய் வந்தால் வேதனைப்பட வேண்டித் தானிருக்கிறது. அதற்காக இறந்துவிட வேண்டும் என்று பிரார்த்திப்பதா?' என்று அவனைத் திருச் பிக் கேட்டேன்.

Page 111
172
நீங்கள் கூறுவது உண்மைதான். ஆணுல் இவன் கடந்த ஆறு மாதகாலம் உயிரோடு செத்துக் கொண்டிருந்தான். நான் சென்ற முறை ஆஸ்பத் திரிக்கு வந்தபோதும் இவன் இங்கு நோயாய்ப் படுத் திருந்தான். அப்பொழுதும் இப்படித்தான் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தான். ஆனல் இவன் அப்பொழுதே செத்திருந்தால் நன்ருயிருந் திருக்கும். 9 )
அவர் சிந்தனையோடு கூறி வந்ததை நிறுத் தினர். அவர் பேசுவு தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இவன் முன்பே இறந்திருந்தrல் நன்ற யிருக்குமா? ஏன்? என் சந்தேகத்தை அடக்கி வைக்க என்னுல் முடியவில்லை.
சனியன் என்ற சுடு சொல்லை வாங்கிக்கொண்டு
தன் கடைசி மூச்சை விட்டிருக்கிருன் பாவம்.
இவன் அன்று இறந்திருந்தால் ஒரு அன்புத் தெய்
வத்தின் அரவணைப்போடு இவன் ஆவி பிரிந்
o 9
நான் ஒன்றும் புரியாமல் அவரையே பார்த் துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்.
* நோயாளிகளுக்குச் சிசுருவுை செய்வதற்கே தமது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு நமது ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றி வந்த கன்னியாஸ் திரிகள்மீது நமது இலங்கை அரசாங்கம் எவ்வித

፲ 7 8
நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது உங்களுக் குத் தெரியும். தொண்டையும் மதத்தையும் தொடர்புபடுத்தி உண்மையான சேவைக்கு உரிய இடத்தைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். நாண் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. ஆணுல் இதே நோயாளி மார் புவலியால் அவஷ்தைப்படும் போதெல்லாம், பொறுமையே? டு கண் விழித்து இவன் 18ார்பை இதமாக வருடி விட்ட அந்த அன்புக் கரங்களை என்னுல் எப்படி மறக்க முடியும்? அவர்களை ஒட்டிக் கலைத்துவிட்ட பெருமையில் நம் நாடு வெற்றிவிழாக் கொண்டாடலாம். நாம் பட்ட நன்றிக் கடனை என்றுமே நம்மால் ஈடு செய்ய (Lp sil. . . . . . . . . . . . ys
நமது ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றி வந்த கன்னியாஸ்திரிகளை நீக்குவதற்கு நமது அரசாங் கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி அவர் உணர்ச்சியோ டு பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் எதையோ நினைத்து விட்டு புன்முறுவலோடு கூறினர்.
'எனது மூன்றுவது "அட்டாக்" கின் போது நான் இந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டிருந்தேன். அப்பொழுது ரசமான ஒரு சம்பவம் இங்கு நிகழ்ந்தது. 99
கட்டிலின் பின் சட்டத்தில் தலையணையைச்
சாத்திவிட்டு, சற்று நிமிர்ந்து சாய்ந்தபடி அவர் கூறும் கதையைக் கேட்கத் தயாரானேன்.

Page 112
174
இரவு சுமார் எட்டுமணி யிருக்கும். மயக்க மான நிலையில் ஒரு நோயாளியை வண்டியில் வைத் துத் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அந்த நோயா ளிக்குச் சுமார் முப்பது வயசிருக்கும். அச்சமயம் பெரிய டாக்டர் இல்லாததால் "ஹவுஸ் சர்றன்" நோயாளியைப் பார்வையிட்டாா. நர்ஸிகளிடையே ஏற்பட்ட பரபரப்பிலிருந்து "கேஸ் ரொம்ப மோச மானது என்று நான் புரிந்துகொண்டேன்.
"லிஸ்டர் ‘இந்த கேஸ்" ரொம்ப சீரியஸ்? பிழைக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். எதற்கும் இதில் எழுதியுள்ளபடி ஊசி கிருந்தை முதலில் கொடுத்துவிட்டு, பின்னுல் குறிப்பிட்ட நேரத்துக்கு மற்ற மருந்துகளைக் கொடுங்கள். அவசியமென்ருல் எனக்கு டெலிபோன் செய்யுங் கள்” என்று கூறிவிட்டு சின்ன டாக்டர் சென்று விட்டார்.
மருந்துப் பட்டியலைப் பஈர்த்தபடியே நெடு நேரம் அந்த "லிஸ்டர்’ நின்று கொண்டிருந்தார்.
அவர் முகத்தில் கணத்துக்குக் கணம் தோன்றி.
மறையும் உணர்ச்சி அலைகளை எடை போட்ட படியே நான் கட்டிலில் படுத்திருந்தேன். ஸிஸ்டரின் உள்ளத்தில் மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் முக த் தி ல் பிரதிபலித்தன. "

175
"ஸிஸ்டர், உங்களுக்கு இப்பொழுது "டூட்டி’ நேரம் முடிந்து விட்டதல்லவா?" என்று கேட்ட படியே 'நைட்டுட்டி நர்ஸ் வந்தாள்.
**ஆமாம்” என்று கூறிவிட்டு சிறிது நேரம் தயங்கியபடியே நின்ருள் லிட்டர். பிறகு ஏதோ உறுதியான முடிவுக்கு வந்தவராக த ர்  ைஸ் ப் பார்த்துக் கூறினர்.
'இந்த நோயாளி மிகவும் மோசமான நிலையி லிருக்கிருர், ஒரு சமயம் இரவு பன்னிரண்டு மணி யளவில் இறந்துவிடவுங் கூடும். பன்னிரண்டு மணி தாண்டிவிட்டால் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனல்.”
"என்ன ஸிஸ்டர், ஏன் தயங்குகிறீர்கள்?”
'ஒன்றுமில்லை. இதில் எழுதியிருக்கும் மருந்து கள் ஒன்றையும் கொடுக்க வேண்டாம். நான் எழுதித் தரும் மருந்துகளிைக் கொடுங்கள் . அதனுல் ஏற்படும் விளைவுகளை ஏற்றுக்கொள்வதென நான் முடிவு செய்து விட்டேன்.”
நர்ஸ் திகைத்துப்போய் சிறிது நேரம் பேசா மல் நின்ருள். பின் ஒருவாறு சமாளித்துக் கொண்டு "அதெப்படி ஸிஸ்டர் முடியும்? டாக்டர் எழுதிய மருந்துகளைத் தானே தான் கொடுக்க வேண்டும். உங்கள் கட்டளையைத் தான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று. 99

Page 113
176
'உண்மைதான் நான் உங்களுக்குக் கட்டளை
செய்து .
'என் மீது நடவடிக்கை எ டு ப் பார் க ளே ஸிஸ்டர். 》咒
'அப்படியென் ருல் நா ே ஊசி மருந்தை ஏற்று கிறேன்?
! * 6yტ)6yo) I — Fir??
'என்னைத் தடுக்க வேண்டாம்”
'நான் டாக்டருக்குப் புகார் செய்ய வேண்டி யிருக்கும்’
"ஆமாம் தயவுசெய்து எனக்காக இப்பொழுதே டெனிபோனில் புகார் செய்யாதே, நாளைக் காலை பெரிய டாக்டர் வந்ததும் உனது புகாரை எழுதிக் கொடு ..?
மறுநாள் காலை பத்து மணியளவில் பெரிய டாக்டர் வந்து புதிதாக வந்த நோயாளியைப் பார்வையிட்டார். நோயாளியின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. கையில் பிடித்த கடிதத்தோடு முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடிக்க ஹவுஸ் சர்றன்? நின்று கொண் டிருந்தார். கொலைக் குற்றவாளியைப் போல்

177
குணிந்த தலையோடு மெளனமாக நின்று கொண் டிருந்தார். ஸிஸ்டர், ஆஞலும் ஒரு உயிரைக் காப்பாற்றிவிட்ட பெருமை கண்களில் மிளிர்ந்தது.
"டாக்டர், உங்கள் புகாரை நீங்கள் பெருந் தன்மையோடு வாபஸ் பெற்றுக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். எப்படியோ நோயாளி பிழைத்துவிட்டான். .” என்ருர் பெரிய டாக்டர்.
- P
'நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது டாக்டர்
திருந்தால் நோயாளி இறந்திருப்பான் என்று சுட் டிக் காட்டுகிறீர்கள். நான் ஒரு டாக்டர் எனது கட்டளையை ஒரு சாதாரண நர்ஸ் மீறி, தன் இச் சையாக நடப்பதை என்னுல் பொறுக்க முடியாது. எனது புகாரை நீங்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கத் தான் வேண்டும்.
'லிஸ்டர், நீங்கள் ஏதாவது விளக்கங் கொடுக்க விரும்புகிறீர்களா?"
'இல்லை டாக்டர். நான் செய்தது தவறு என்று வேண்டுமானல் எழுதிக் கொடுக்கிறேன்"
"டாக்டர், தான் செய்தது தவறு என்று ஸிஸ்டர் ஒப்புக் கொள்ளுகிருர், அவர் உங்களிடிம் மன்னிப்புக் கோசி ஒரு கடிதம் எழுதிக் கொடுத் தால் உங்களுக்குத் திருப்திதானே. ...'

Page 114
78
"என்னை மன்னியுங்கள் டாக்டர். இந்த விஷ பத்தை மேலிடத்துக்குப் புகார் செய்வதென்று நான் முடிவு செய்துவிட்டேன்.
பெரிய டாக்டர் மெளனமாகச் சென்ருர், அவர் முகம் வேதனையால் வாடிவிட்டது. ஆனல் பெரிய டாக்டர் வருந்திய அளவிற்கு ஸிஸ்டர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, கடமைக்கும், கருணைக்குமிடையே அவர் உள்ளத்தில் நிகழ்ந்த போராட்டத்தின் பிரதிபலிப்பை முதல் நாளே தான் கண்டுவிட்டேன். கடைசியில் கருணை ஜெயித் ததும் அவர் சாதாரண நிலைக்கு வந்துவிட்டார். விளைவு எதுவானுலும் அதை ஏற்றுக் கொள்வ தென்ற முடிவுக்கு அவர் ஏற்கனவே வந்துவிட்ட தால் புதிதாக இன்று அதிர்ச்சியடைவதற்கு ஒன்று மிருக்கவில்லை.
சுகாதார இலக்கா மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது. பெரிய டாக்டர் ஸிஸ்ட ருக்குச் சாதகமாகத் த ன து "ரிப்போர்ட்டை” அனுப்பியிருந்தார். ஆணுறும் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்
நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவு -
ஸிஸ்டர் இந்தியாவில் உள்ள ஒரு ஆஸ்பத் திரியில் தன் சேவையைத் தொடரக் கிளம்பினுர், ஆஸ்பத்திரியில் கடமையாற்றியவர்கள் ஸிஸ்ட ருக்கு அளித்த பிரிவுபசார விருந்தில் பெரிய டாக் டர் உட்பட சகல ஊழியர்களும் பங்குபற்றினர்.
t

79
ஸிஸ்டரின் தன்னலங்கருதாத பெரும்பணி யைச் சிலாகித்து பலரும் பேசினர். பெரிய டாக்டர் உணர்ச்சியோடு பேசினர். ஸிஸ்டர் பிரிந்து செல் வற இலங்கைக்குப் பெரிய நஷ்டமென்றும், சிக்க லான கேஸ்கள் வரும் போதெல்லாம் தான் ஸிட் டரைக் கலந்து ஆலோசிப்பது வழக்க மென்றும் அவ்வம்போது தகுந்த ஆலோசனைகள் கூறி பல நோயாளிகளை அவர் காப்பாற்றியிருக்கிருரென்றும் பாராட்டினர்.
கடைசியாகப் பேசிய மேட்ரன்" லிஸ்டரைம் பற்றி வெளியிட்ட தகவல் எல்லோரையும் பெரும் வியப்பிலாழ்த்தியது.
ஒரு மனிதனுக்கு என்னென்ன நோயெல்லாம் ஏற்படுமோ அதாவது இருதய நோய், காச நோய், புற்றுநோய் முதலிய பல நோய்களில் தனித்தனி நிபுணத்துவம் பெறுவதற்காக சுமார் பதினைந்து வருட காலம் பயின்று டாக்டராக அதுவும் ஸ்பெஷலிஸ் டாக இருந்த போதிலும் நோயாளி களுக்கு சிசுருவுை செய்வதே தன் லட்சியமாகக் கொண்டு கடமையாற்றி வருவதாகக் கூறினர்.
பெரிய டாக்டரும், நேர்ஸ்களும், மற்றவர் களும் வியப்பினுல் பிரமித்துப்போய் விட்டார்கள். இத்தகைய திறமை வாய்ந்த ஒரு பேரிங் டாக் டரா இத்தனை காலம் நேர்ஸாக கடமையாற்றினர்? விருத்து முடிந்து எல்லோரும் ஸிட்டரை வாழ்த்தி விட்டுச் சென்ருர்கள். ஸிஸ்டர் ஆஸ்பத் திரியை விட்டுச் செல்வதற்குக் காரணமாயிருந்த அந்த சின்ன டாக்டர், ஸிஸ்டரின் கையைப் பிடித்

Page 115
180
துக் குலுக்கும்போது தான் கவனித்தேன். நெருப் பைத் தொடுவது போன்ற தயக்கம், கண்களில் பணிவு, பக்தி, பச்சாத்தாபம் யாவும் ஒருங்கே பிரதிபலித்தன. -
'என்னை மன்னியுங்கள் ஸிஸ்டர், நான் அறியா இல் செய்த. ...'
அவரை மேலே சேவிடவில்லை ஸிஸ்டர். 'நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. நான் என் லுமே ஒழுங்கு விதியை மீறியவளல்ல. அன்று நான் செய்தது தவறுதான். கடமையிலும் பார்க்க ஒரு உயிரைக் காக்க வேண்டுமென்ற கருணை மேலோங்கி நின்றதால் விதி முறைகளை மீறி விட்டேன். இத்தனை மைல்களைக் கடந்து வந்த எனக்கு உலகில் எங்கிருந்தாலும் ஒன்றுதான். எனக்கு ஒருவித மனத்தாங்கலுமில்லை."
ஸிஸ்டர் அமைதியாக இறங்கி நடந்தார். அன்பின் மறு உருகிக் கொண்ட அந்த நிறை குடத்தை என்னுல் எப்படி மறக்க முடியும்? கதை முடிந்தது “நைட்டூட்டி நேர்ஸ் வந்து வார்ட் லைட் களை அணைத்ததும் தூங்க முயற்சித்தேன்.
 

மனிதன் ஏன் உடையணிகிருன்? உடை மனி தனுக்கு அவசியந்தான? அப்படியானல் அவன் எப்பொழுது உடை உடுக்கத் தொடங்கினன்? உலகில் யார் முதலில் உடை அணியத் தொடங் கினர்கள்? இப்பிரச்சனைகளுக்கு நாம் எப் பொழுதோ விடை கண்டுவிட்டோம். ஆகையால் அதைப்பற்றி இப்பொழுது நாம் பேசுவது மிகை யாக இருக்கும்.
ஷேட்டுக் கால் ச ட்  ைட யி ன் ஆதி கர்த் தாக்களைக் காட்டிலும் வேஷ்டி ஜிப்பாக்காரர்கள் உடையின் அவசியத்தை முதலில் உணர்ந்து விட் டார்கள் என்பது சரித்திரம் கண்ட உண்மை. வேஷ்டிக்காரர்களின் பண்டைய தா க ரி க ம் மேன்மை வாய்ந்தது. நாகரீகத்துக்கு அவர்கள் வழிகாட்டியாக வாழ்த்திருக்கிருர்கள். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றித்தான் கால் சட் டைக் காரர்கள் நாகரீகமடைந்தார்கள். அரையிலே

Page 116
182
வேட்டியை உடுக்கத் தெரியாததாலேயே அவர்கள் உடையை உறை போலத் தைத்து நாரியில் கயிற் ருல் கட்டிக் கொண்டார்கள். அந்தக் கயிறுதான் பின் ரூல் மாறி அதாவது ஒருவகைத் துணியாக மாறி அதாவது இப்போது பெல்டா கி விட்டது. வெகு விாகப் பின் தங்கவிட்ட அவர்களது நாகரீகத்தை இன்று உலகம் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் என்ன , என்பதற்குச் சரித்திரம் சான்று கூறும். உலகின் பெரும் பகுதி அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் நாகரீகம் மற்றவர்மேல் திண்க்கப்பட்ட தற்கு வேறு காரணம் வேண்டுமா?
வழம் பெருமை பேசுவதில் பயனில்லை. எமது தேசிய உடையைக் காட்டிலும் அவர்களது இறக்கு மதி உடை வசதியானது என்பதுதான் என் அபிப் பிராயம், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வேட்டியணிவதைக் காட்டிலும் ஷோட்ஸ் அணிந்து கொள்வது வேலை செய்வதற்கு வசதியாயிருக்கும், உடற்பயிற்சியின் போது ஆண் களும் சரி பெண் களும் சரி மேல் நாட்டு உடை முறையைத் தான் பின் பற்ற வேண்டும். உண்மையை ஒப்புக் கொள்ள மறுப்பது பேடித்தனமல்லவா?
நாம் ஷேட் அணிகிருேமே அவைகளில் எத்தனை ரகம்? கொலர் ஷேட், புஷ் ஷேட் டீ ஷேட், லோங் சிலீவ் ஷேட், ஷோட் சிலீவ் ஷேட் அப் பப்பா இப்படி எத்தனையோ ஷேட்டுக்கள் இன்று நம் மத்தியில் உலாவுகின்றன.
 

183
அந்தக் கா லத் து மேடை நாடகங்களில் 'பயூன்" பாத்திரம் கதாநாயகன் கதாநாயகி பாத்திரங்களுக்கு இணையான முக்கிய பாத்திர மாய் விளங்கும் ஹாஸ்யத்துக்காகத் தான் இந்தப் பாத்திரம் முதலிலிருந்து கடைசிவரை இயங்கு கிறது. மக்களும் இதை நன்கு ரசித்தார்கள். பபூ னின் உடையே ர சி கணு க் கு விலாப்புடைக்கச் சிரிப்பையூட்டும். பபூன் அணிந்திருக்கும் சட்டை பல வர்ணங்களில் காட்சியளிக்கும். சினிமா வந்த பின் நாடகங்களின் பாணி மாறிவிட்டது. ஹாஸ்ய நடிகர்கள் வர்ண வேஷம் போடுவதை நிறுத்தி விட்டார்கள். ஆனல் அதேபோன்ற வர்ணச் சட்டைகளை இங்பொழுது நாம் அணிய ஆரம்பித்து விட்டோம். அதைப் பார்த்து யாரும் சிரிப்பதில்லை. எல்லோருக்குமே  ைபத் தி யம் பிடித்துவிட்டால் பார்த்துச் சிரிப்பதற்கு யார்? பாக்கியிருக்க மாட் Lyri sa Taipapan ?
வேலை செய்பவர்கள் குள்ளமான கையுள்ள சட்டையை அணிவார்கள். கையெழுத்து மட்டும் போடுபவர்கள் நீளக் கையுள்ள சட்டையை அணி கிருர்கள். ஆனல் சிலர் நீளக் கைச்சேட்டை அணித்துசேட்டுக் கையை முழங்கை வரை மடித்து விடிகிருர்கள். ஆணுல் சிலர் மணிக்கட்டுக்கு மேல் இரண்டங்குலம் சுருக்கி விடுகிருர்கள். கையில்

Page 117
184
கட்டியிருக்கும் கடிகாரம் வெளியில் தெரியவேண்டு மென்பதற்காகவே இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். காலகதியில் கடிகாரம் கட்டாதவர் களும் நாகரீக மென்று நினைத்து இரண்டு மடிப்புப் போட்டு விடுகிறார்கள். நன்றாய் மடித்துவிடட்டும் நமக்கென்ன? அநியாயமாய் அரையார் துணி பயன் படாமல் போகிறதே யென்றுதான் கூறுகின்றேன்.
ஒரு நாள் மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஒரு "பேத்டே'' பார்ட்டிக்குப் போகவேண்டுமென்று என் மனைவி அடம்பிடித்தாள். என் மனைவியின் சிநேகிதி ஒருத்தியின் பிள்ளைக்குப் பிறந்தநாளா கையால் போகவேண்டியது தவிர்க்க முடியாத தாய் விட்டது. என் நண்பர்களுக்கு பேத்டே யென்றால் ஐந்து ரூபாயைக் கொட்டிக் கொடுக்கப் போகிறே னென்று மல்லுக்கு நிற்பாள். இது அவளுடைய சிநேகிதி யாகையால் தான் போக வேண்டியது தவிர்க்க முடியாத தென்று கூறுகிறேன்.
- பெட்டியைக் குடைந்தேன். ஒரு நல்ல ஷேட் டாவது இருந்தால் தா னே , என் அவஸ்தையைப் பார்த்து அனுதாபப் படுவதற்குப் பதில் டான்ஸ் ஆடத்  ெத ா ட ங் கி விட்டாள் என் வீட்டுத் தேவதை. போடச் சேட்டில்லையென்று அழாக் குறையாய்ச் சொன்னேன்.

185
உங்களுக்கு என் சிநேகிதி வீட்டுக்குப் போக விருப்பமில்லையென்ருல் வெளிப்படையாய்ச் சொல் லுவதுதானே. உங்கள் பிள்ளையின் பேத்டேக்கு அவள் கொண்டுவந்த சட்டை பத்து ரூபாய் பெறும் அதோடு சவுக்காரம் பவுடர். அடுக்கிக்கொண்டே போனுள்.
நான் வரமுடியாதென்ரு சொல்லுகிறேன்.
இன்று கத்தோருக்குப் போட்டுக் கொண்டுபோன
ஷேட்டையே போட்டுக்கொண்டு வருகிறேன். அது கொஞ்சம் அழுக்காயிருக்கிறதென்று பார்த்தேன் see e o so அதென்ன சேட்டுப் போலவா இருக்கிறது? கை துடைக்கக்கூட உதவாதே. நீங்களும் உங்கள் கந்தோரும். நான் மட்டும் உங்கள் அதிகாரியா யிருந்தால் உங்கள் பிடரியில் பிடித்து வெளியில் தள்ளியிருப்பேன்.
வீட்டில் நீ இருக்கும் விஷயம் என் அதிகாரிக் குத் தெரியும், அதனுல் அவர் அனுதாபப் படுவாரே பல்லாமல் ஒரு நாளும் வெளியே விரட்ட மாட்டார்.
ஏன் உங்கள் ஷேட்டையெல்லாம் ந ஈ ன போட்டுக் கொள்ளுகிறேன்?
என்னிடம் ஷேட்டிருந்தாலல்லவா நீ போட் டுக் கொள்வதற்கு? பணமெல்லாம் சாறியாகவும் ஜாக்கெட்டாகவும் மாறும்போது ஷேட்டென்ன வானத்திலிருந்தர் குதிக்கும்?
24

Page 118
186
ஆகா, நீங்கள் வாங்கித்தந்த சாரிகளை அடுக்கி வைக்க இடமில்லாமல் நான் கஷ்டப்படுகிறேன்.
கத்தரிப்பூ வர்ணச் சேலையொன்று வஈங்
கித் தரும்படி கேட்டு ஆறு மாதமாய் விட்டது. இந்த மாதச் சம்பளத்தில் வாங்கித் தரும் படி கேட்டு விடுவே னென்று இப்பொழு திருந்தே அடிபோடு கிறீர்கள் மற்றப் புருஷர்களும் உங்களைப் போலத் தான் இருக்கிருர்களா இவன்று ஏன் நீங்கள் சிந்தித் துப் பார்ப்பதில்லை.
பேச்சை அளவு மீற விடாதே. மற்றப் புருஷர் களை இங்கு குறிப்பிட்டாயோ காதடி சிவக்கும்.
எப்படியாவது சண்டையைத் தொ ட க் கி வசுமதி வீட்டுக்குப் போகாமல் விடுவதுதானே உங் கன் லட்சியம்.
அதிகம் பேசினுல் கன்னம் அப்பளமாகி விடும். கொண்டுவா ஒரு ஷேட் இப்பொழுதே புறன் படுகிறேன்.
இந்தாருங்கள் ஷேட் புறப்படுங்கள்.
இதென்ன ஷேட்டா இது? இதற்குக் கையிருக்
கிறதா பார். உன் கண்ணென்ன கெட்டா போய் விட்டது.

f
Y.
87
எனக்கொன்றும் கெட்டுப் போகவில்லை. நான் நல்லாப்த்தானிருக்கிறேன். பேசாமல் உந்தச் ஷேட் டைம் போட்டு மேலே இந்தக் கோட்டைப் போட் டுக் கொள்ளுங்கள். கையில்லை என்ற விஷயம் உங்களையும் என்னையுந் தவிர வேறு யாருக்குத் தெரியப் போகிறது.
ஒரு மாதிரியாக பார்ட்டிக்குப் போய்ச் சேர்ந் தோம். நேரம் ஆறு, ஏழு, எட்டு மணியென்று ஏறிக்கொண்டே யிருந்தது. எத்தனையோ முறை சமிக்கை செய்தும் என் பத்தினி கிராமபோன் மாதி ரிப் பேசிக்கொண்டே யிருந்தாள். கடைசியில் சமிக்கையை விட்டுவிட்டுக் கொஞ்சம் உரக்கவே சொன்னேன். ஒரு முறை அவள் என்னை அலட்சிய மாய்ல் பார்த்துவிட்டு மறுபடி றெக்கோட்டைப் போட்டாள்.
என்ன மீனு, உன் கணவர் ஏன் இப்படி அவ சரப் படுகிருர், நேரம் ஒன்பது மணியாய் விட்டது. இங்கேயே சாப்பிட்டுக்கொண்டு போகலாமே என் ருள் என் மனைவியின் சிநேகிதி வசுமதி. சாப்பிடா மல் இவர்களை யார் விடப்போகிருர்களாம் என்று மனைவிக்கு ஒத்தூதிக் கொண்டு வந்தான் வசுமதி யின் கணவன்,
அப்படியல்ல. என் நண்பன் கணேஷ் எங்களை இன்று இராச் சாப்பாட்டுக்கு அழைத்திருக்கிருன். நாங்களும் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிருேம் என்றேன். என் குரல் நடுங்கியது.

Page 119
88
அப்படியா? அதைப்பற்றி இவள் ஒன்றும் கூறவே இல்லையே, என்ருள் வசுமதி.
**அவருக்குப் பைத்தியம். இப்படித்தான் பேசு வார். ஊரெல்லாம் விருந்துக்குப் போக என்னுல் முடியுமா? இப்பொழுதே ஒன்பது மணியாய் விட் டது. அவர் நண்பர் வீட்டுக்குப் போகுமுன் பன்னி ரண்டு மணியாய் விடும். அவர்கள் சட்டி பானை பைக் கழுவி வைத்துவிட்டு தூங்கியும் விடுவார்கன் என்ருள். என்னை வாழவைக்க வந்தவள். ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கண்டவர்கள் போல் எல் லோரும் கொல்லென்று சிரித்தார்கள். என் மனைவி யும் சேர்ந்து சிரித்தாள். என் உடல் ஆத்திரத் தில் படபடத்தது.
வசுமதி மேசையில் சாப்பாட்டை எடுத்து வைக்கப் போய்விட்டான். நான் கண்சாடை காட்டி என் மனைவியைக் கூப்பிட்டேன். அதுமட்டும் பிறந் தியார் வீடாக இல்லாவிட்டால் ஒரே அடியில் அவள் மண்டையைப் பிளந்திருப்பேன். அவள் தழுக்கு நடை போட்டுக்கொண்டுவந்து என்முன்னுல் போட் டோவுக்குப் போஸ் கொடுத்துக்கொண்டு நின்றுள்,
"உனக்கு மூளைகீளை இருக்கா சாப்பிடும்போது கோட்டைக் கழற்றும்படி கூறினர்களானுல் என்ன செய்வது?
அதற்கென்ன , கழற்றி வைத்துவிட்டுச் சாப் பிடுவதுதானே'
Wー

89
ஷேட்டுக்குக் கையில்லையேடி, நீ ஏன் இப்படி என்னைக் கொல்லாமல் கொல்லுகிருய்?
ஒகோ, நான் மறந்து விட்டேன். சரி நீங்கள் கோட்டைப் போட்டபடியே சாப்பிடுங்கள்.
மீன, உன் காலப் பிடித்து மன்ருட்டமாய்க் கேட்கிறேன். என் மானத்தை நீதான் காப்பாற்ற வேண்டும். எப்படியாவது நாங்கள் இங்கு சாப் பிடாமல் கிளம்ப ஏற்பாடு சேய் என்று மன்ருடி னேன்.
இதென்ன நாடகமிது. கோட்டைக் கழற்ருமல் சாப்பிட்டால் குடியா கெட்டுவிடும். ஏன் என் பிராணனை வrங்குகிறீர்கள். தோள் பட்டையை ஒரு அசைப்பு அசைத்துவிட்டு அவள் தன் சிநே கிதிக்கு உதவி புரியப் போய்விட்டாள்.
சாம்பிட எல்லோரும் உட்கார்ந்தோம். நான் எதிர்பார்த்தபடியே அவன் கோட்டைக் கழற்றி விட்டு வசதியாக உட்கார்ந்து சாப்பிடும்படி கூறி ணுள். தான் திக்குமுக்காடினேன் என்ன கூறுவ தென்றே எனக்குத் தோன்றவில்லை.
அவர் வீட்டிலும் இப்படித்தான். கோட்டுப் போட்டபடியேதான் சாப்பிடுவார். அவருக்கென் னவோ அது பழகிப்போய் விட்டது என்று என் மனைவி சாதுகியமாய்ப் பேசினுள், நான் அசடு வழி யச் சிரித்தேன்.

Page 120
190
அவரவரே கறிகளைப் பரிமாறிக் கொண்டோம், கரண்டியை எடுத்து டிஸ்ஸுக்குள் வைத்துப் போஞ் சிக் கறியை எடுத்தேன். அதே சமயத்தில் என் கோட்டு இரண்டு கரண்டி குளம்பை அள்ளிவந்து மேசையில் கொட்டிவிட்டது. சிலர் சிரித்தார்கள், சிலர் அனுதாபப்பட்டார்கள். வசுமதியின் கணவன் மட்டும்; "பாதகமில்லை கோட்டைக் கழற்றிப் பையனிடம் கொடுங்கள் கழுவிக் கொடுப்பான்" என்ரூன், தான் அதெல்லாம் ஒன்றும் வேண்டா மென்று கூறிவிட்டு வெலும் சோற்றை அள்ளி அவசரமாக விழுங்கினேன். என் மனைவியின் மீது தான் ஆத்திர மாத்திரமாக வந்தது.
எப்படியோ சாப்பாடு முடிந்தது. எல்லோரும் கோட்டைக் கழற்றிக் கையில் கொண்டு போகும் படி கூறினர்கள். நான் முடியா தேன்று மறுத்தேன்.
இந்த மனிதனுேடு எப்படித்தான் வாழ்க்கை நடத்துகிருயோ என்று என் மனைவி மீது அனுதாபப் பட்டாள் அவள் சிநேகிதி வசுமதி.
"எல்லாம் என் தலை எழுத்து" என்ருள் என் மனைவி. என்னை யாராவது வைதால் அவளுக்குங் பரம திருப்தி,
"என்ன இருந்தாலும் நீர் கொஞ்சம் சோஷ லாக நடக்கப் பழகவேண்டும், மிஸ்டர்" என்று கூறிவிட்டுத் தன் ஷேட்டுக் கொலரை உயர்த்தி
 

„í
】扇】
விட்டுக் கொண்டான் வசுமதியின் கணவன். பெரு மிதத்தோடு தன் கணவரை நிமிர்ந்து பார்த்தாள் வசுமதி.
நாங்கள் வீடு போய்ச் சேரும்போது பதினுெரு மணியாகி விட்டது. நிம்மதியாக த துரங்க விடாமல் எஸ் மனைவி பழம் சேலை கிழிவதைப் போல் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் குற்றம் கூறியதெல் லாம் என்னைத்தான். சிகரெட் புகைக்கும் செல வைச் சேமித்து வைத்தால் மாசத்தில் இரண்டு ஷேட்டு வாங்கலாம் என்ருள். கந்தோருக்கு பஸ் ஸில் போகாமல் நடந்து போனுல் மாசம் ஒரு
ஷேட்டு வாங்கலாமென்ருள். கந்தோரில் மத்தி
யாணம் சாப்பிடாவிட்டால் ஐந்து ஷேட்டு வாங் கலாமென்ருள். நான் எல்லாவற்றையும் பொறுமை யோடு கேட்டுக் கொண்டிருந்தேன். தான் செய் யும் செலவுகளைப் பற்றி அவள் ஒன்றும் பிரஸ்தா பிக்கவேயில்லை. இவ்வளவு சம்பவத்துக்கும் மூல காரணமான, கதாநாயகன் அந்த கையிழந்த ஷேட் பேசாமல் தூங்கிக் கொண்டிருந்தது.

Page 121
18. சைக்கிள் சக்கரம்
அடி வானத்தை அனைத்து முத்துமிட்டுக் கொண்டிருந்த பரந்த கடலின் முடிவில்லாத அலை களை ரசித்துக் கொண்டிருந்த நண்பர்களின் கவர் னம் சமீபத்தில் வந்து கொண்டிருந்த ஒரு ஜோடி யில் சேன்று லயித்தது.
"அழகான அந்த வாலிபனின் பக்கத்தில் உருண்டு செல்லும் அந்த ஆரணங்கு யாரோ என்று ஒருவன் கூறியதும், அவனது ஹாஸ்யத்தை ரசிப்பது போல் கூட இருத்த நண்பர்கள் கொல் லென்று சிரித்தனர். பொறுப்பற்ற வாலிபர்களின் கேலிப் பேச்சுக்கு இலக்கான அந்தத் தம்பதிகள் ஆனந்தமாக உரையாடிக் கொண்டு சென்றனர்,
உண்மையில் அவன் வசீகரமான தோற்ற முள்ளவன். ஆனல் அவன் மனைவி? கொஞ்ச மேனும் அவனுக்குப் பொருத்தமானவள் அல்ல. குட்டி யானையொன்று நடந்து செல்வது போல் அவனுக்கும் கேட்டிருக்குமோ? மடையர்கள் இங்
ー
 
 

193
கிதம் தெரியாதவர்கள். அவன் ஏன் அவளை மணந்து கொண்டானென்ற விஷயத்தை அவர் களா ல் உணர முடியுமா?
பெற்றார் ஒரு குழந்தை வேண்டுமென் று தலம் கிடக்கவில்லை. அவர்கள் விரும்பியோ விரும்பா மலோ இயற்கை கோபாலனை உல கில் தோற்று வித்தது. சத்துப் பொருட்கள் நிறைந்த தின் பண்டங்களைத் தேடிப் பெற்றார் அவனுக்கு ஊட்ட வில்லை, பஞ்சு மெத்தையிலும் பட்டு விரிப்பிலும் அவன் படுக்கவில்லை. ஆகாயத்தைக் குடையாக வும் பூமியைத் தலையணை யாகவும் கொண்ட அவன் புழுதியிலே புரண்டு விளையாடினான். அழுகிய மாம் பழம் அவனுக்கு அமுதம். ஹோட்டலில் சாப் பிடும் செல்வந்தர் கள் தொட்டியில் வீசுவதைத் தன் நண்பர்களோடு போட்டியிட்டுப் பங்கு போடு வான். அவன் எப்படி வளருகிறான் என்ற கவலை பெற்றோருக்குக் கிடையாது. அவன் எப்படியும் வளருவான் என்பது அவர் களுக்குத் தெரியும். வாழும் முறையை அவனுக்குக் கற்றுக் கொடு த் தவர்கள் அவர்கள் தானே.
அவன் எட்டு வயசாயிருக்கும்போது தேய்ந்த டயர்களையும், பழைய சயிக்கிள் சக்கரங்களையும் வேகமாக உருட்டிக் கொண்டு ஓடுவான். அது அவனுடைய முக்கிய விளையாட்டு. மோட்டா
25

Page 122
194
ரிலோ விமானத்திலோ செல்வதைக் காட்டிலும் சயிக்கிள் சக்கரங்களை உருட்டுவதில் அவனுக்கு அதிக உல்லாசம்.
அது ஒரு பெரிய பட்டினம். வானே முட்டும் கட்டிடங்களுக்கு இடையே தீ இடைவெளி விட் டிருந்தார்கள். தீ இடைவெளி ஒன்றின் ஒரமாக உடைந்த வண்டிக் கூடார மொன்றிருந்தது. அது தான் அவன் பெற்றேரின் வீடு. பழை காலத் தைத் தவிர மற்ற வேளைகளில் அவன் வெளியில் தான் துரங்குவான். அவன் தாயார் மட்டும் கூடா ரத்துக்குள்ளே எப்பொழுதும் தூங்குவாள். ஏனெ னில் சில ரூபாய்கள் அவளிடமிருந்தன. அது அவள் சொந்த சேமிப்பு. அவள் கணவனுக்குக் கூட அவ ளிடம் பணமிருக்கும் விஷயத் தெரியாது. தெரிந் தால் எப்பொழுதோ அது கள்ளுக் கடையை நாடிச் சென்றிருக்கும். கூடாரத்துக்குள்ளே அந்த ரூபாய் களைப் பதுக்கி வைக்க அவள் படும் பாடு ஆண்ட வனுக்குத் தான் வெளிச்சம்
அருகில் தான் அந்தச் சயிக்கிள் பழுது பார்க் கும் கடை இருந்தது தினசரி வருமானம் மிகக் குறைவாக இருந்த போதிலும் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தை அந்தக் கடை வாழவைத்துக் கொண்டிருந்தது. அந்தக் கடைக்காரர் தயவு வைத்தால்தான் கோபாலன் சயிக்கிள் சக்கரச் சவாரி செய்ய முடியும் ஒரு உடைந்த சக்கரம் இனமாகப் பெறுவதற்கு ஒன்பது மாதம் கோபா
سق\

95
லன் கடையில் உதவி செய்யவேண்டும். சயிக்கி ளுக்குக் காற்றடித்து விட்டால் வேலை வாங்கிய வர்கள் ஐந்து சதத்தை வீசி எறிந்துவிட்டுப் போவார்கள். அந்தப் பணம் கடைக்காரனைச் சீேரும் டியூப்பில் துவார மிருக்காவென்பதைக் கோபாலனே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கூறுவஈன். அதன்பின் கடைக்காரர் மேற்கோண்ட வேலையைக் கவனிப்பார். இப்படியான சிறு சிறு
வேலைகளைக் கோபாலன் விரும்பியே செய்தான்.
அவனுக்கு அதில் வெறுப்பே ஏற்படவில்லை. ஒழிந்த நேரங்களில் கடைக்குப் பின்புறமிருந்த கடைக்கா ரன் மனைவிக்கு ஏதாவது ஒத்தாசை செய்வான்.
அவர்களின் கடைக்குட்டி மகள்தான் கனகம்;
ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். 'கோபு குண்டு விளையாடுவோம் வாவேன்" என்று அவள் கூப்பிட் டதுதான் தாம்தம் எந்த வேலைய7யினும் விட்டு விட்டு கனகத்தோடு போய்விடுவான் குழந்தைகள் இரண்டும் அ ந் த ஸ்  ைத ப் பொருட்படுத்தாது இணைந்து விளையாடி மகிழ்ந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல கடைக்காரரின் மனைவி கோபாலனை வெறுக்க ஆரம்பித்தாள். கனகம் பற்றிய இனந்தேரியாத பயம் அவளைப் பிடித்தது. கடைக்காரர் மட்டும் கோபுவை விரும் பினுரா என்ன? அவன் ஒரு உதவாக்கரை என்பது அவருக்குத் தெரியும். அவன் பெற்றேர் இன்னமும் பிச்சைதான் எடுத்தும் பிழைக்கிருர்கள். கோபு இப்பொழுதும் எச்சில் இலை ஏந்தித்தான் பிழைக்

Page 123
196
கிமுன். ஆனல் சயிக்கிள் பழுது பார்க்கும் நுணுக் கங்களை அவன் நன்கு தெரிந்திருக்கிருன் , அவரி டந்தான் அவன் வேலை பயின் ருன் ஆயினும் அவ ரைக் காட்டிலும் அவன் திறமைசாலி யென்பது அவர் உள் மனத்துக்குத் தெரியும். முன்புதான் அவன் பழைய சயிக்கிள் சக்கரத்துக்காக உழைத் தான். இப்பொழுது? அவர் கொடுக்கும் அந்த ஒரு பீடிக்காகவா? அவருக்கு ஒன்றும் அரியாவிட் டாலும் அவனை 'வராதே' என்று கூற அவரால் முடியவில்லை. காதலை வளர்த்து வந்தது. எழுத் தறியாத இருவரும் காதல் கவிதை பாடினர்.
இவர்கள் காதல் விவகாரத்தைப் பற்றி ஒன் றுமே யறியாத கனகத்தின் பெற்ருேர், மிகளுக் குச் சுமாரான இடத்தில் ஒரு வரன் பார்த்தனர். சிறு வயசிலிருந்தே அடங்கி வாழ்ந்து பழகிய கன கத்தால் தன் மனசிலுள்ளதைப் பெற்றேரிடம் துணிந்து கூற முடியவில்லை. ஆனல் இரகசியமாகக் கோபுவைச் சந்தித்துக் கண்ணிர் விட்டுக் கதறி ஞன், கோபுவின் காதல் உண்மையானது. கனகத் தின் காதலையும் அவன் சந்தேகிக்கவில்லை. ஆனல் அவள் பெற்றேர் மீது அவனுக்கு அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது. நல்ல சூழ்நிலையில் வளர்க் கப்படாத அவன் மதுபானத்தை அருந்திவிட்டுக் கனகத்தின் தந்தையிடம் சென்றன். கையில் கத்தி யோடு வந்திருக்கும் கோபுவைக் கண்டதும் கன கம் உட்பட வீட்டிலுள்ள அனைவருமே பயந்து அலறினர். சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள் தலை
 

97
யிட்டுக் கோபுவைத் தாக்கினர். கனகம் வீழ்ந்து கிடந்த கோபாலனை அணைத்துக் கொண்டு அழு தாள். பலபேர் மத்தியில் தனது மகள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்துச் சகிக்காத அன்னை அவள் கூந்தலைப் பிடித்து உள் ளே இழுத்துச் சென்ருள்.
கோபாலன் ஊரைவிட்டே போய்விட்டான். அன்று எல்லோருமாகச் சேர்ந்து அவனைத் தாக் கியதை எண்ணும்போது பெருத்த அவமானமாக இருந்தது. கனகம் அவள் நல்லவள், இந்நேரம் அவள் இன்னுெருவனுக்கு மனைவியாக இருப்பாள். அவளை மணந்தாலும் என்னுல் அவளைக் காப்பாற்ற முடியுமா?
அவனுக்கு வீடு வாசல், சொத்து ஒன்றுமே கிடையாது, அவன் எங்கு வாழ்ந்தாலும் சரிதான். அவன் பிரிவைக் குறித்து அவன் பெற்றேர் கூடக் கவலைப்பட மாட்டார்கள், மன அமைதிக்காக அவன் கனகத்தைப் பிரிந்து தொலை தூரத்திற்கு வந்துவிட்டாள். இங்கும் பழைய தொழிலை மேற் கொள்ள அவன் விரும்பவில்லை. கஷ்டப்பட்டா வது வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அவனுக்கு ஒரு தொழிலிலும் அனுபவம் போதாது. சயிக்கிள் பழுது பார்க்கும் தொழில் மட்டும் கொஞ்சம் அனுபவமிருந்தது. அதை வைத்துக்கொண்டு அவஞல் என்ன செய்ய முடியும்? ". .

Page 124
198
ஒரு மோட்டார்க் கம்பெனியில் கையாளாகச் சேர்ந்தான். ஆரம்பத்தில் அவனுக்கு சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்தார்கள். சில மாசங் களுக்குப் பின் சொற்ப சம்பளங் கொடுத்தார்கள். சம்பளத்தைக் காட்டிலும் பெரிய தன வந்தர்கள் கோடுக்கும் 'இணும் அதிகமாக இருந்தது. விரை விலேயே அவன் மிகவும் திறமைசாலி என்று பெயர் எடுத்துவிட்டான்.
கையில் பணம் சேர்ந்ததும் மோட்டாருக்குத் தேைைவயான சாமான்கள் விற்கும் சிறிய கடை பொன்றைச் சொந்தத்தில் ஆரம்பித்தான். அங்கு பழைய சாமான் களை இட்டும் வைத்து வியாபாரம் நடத்தி வந்தான் , வருங்காலம் அவனுக்குச் சாதக மாக இருக்கவே பழைய மோட்டார்ச் சாமான் கடை "கோபால் கார் மார்ட்" டாக மாறிவிட் டது. அவனது கம் பெனியில் இன்று நூற்றுக் கணக்கானுேர் வேலை செய்கின்றனர்.
அந்த தீ இடைவெளியிலே இன்னமும் அந்த
வண்டிக் கூடார மிருந்தது. மோட்டாரை நிறுத்
தியவன் இறங்கிச் செல்ல தயங்கினுன் பெற்ருே ரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங் கவே, பழைய கூடாரத்தை நோக்கிச் சென்றன். உள்ளே கிழவி முடங்கிக் கிடந்தாள். அவன் தந்தை இற ந் து இர ண் டா ன் டு க ள ஈ கி விட்டன. முதலில் மகனை அடையாளங் காண முடியாது யாரோ சுகாதாரப் பகுதி அதிகாரி
 
 

99
யென்று எண்ணிக் கொண்டு அலறிப் புடைத்த படியே எழுந்து உட்கார்ந்தாள். ஏற்கெனவே கூடாரத்தைக் காலிசெய்ய வேண்டுகிேன்று மூன்று முறை அவள் எ ச் ச ரி க்  ைக ப் பட்டிருந் தாள். 'அம்மா நசன் தான் கோபு, என்னைத் தெரியவில்லையா?" என்று அவன் கூறியதும் கிழவி ஒவென்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள். அவளுக்குக் கணவனின் நினைவு வந்துவிட்டது போலும்.
மகன் நல்ல நிலையில் இருப்பதைக் கேட்டுப் பெற்ற மினம் ஆனந்தப்பட்டது. அவன் கனகத் தைப் பற்றி பிரஸ்தாபித்ததும் கிழவி துக்கத்தோடு கூறினள்.
"அது ஒரு பைத்தியகாரப் பெண். நீ ஊரை விட்டுச் சென்ற சில் நாட்களில் அதுக்குக் கல்யா ணம் நடைபெறுவதாயிருந்தது. கால கஷ்டம் , அதற்குள் அது ஏதோ நஞ்சைக் குடித்து விட்ட தாம். ஆஸ்பத்திரியில் ஆறு மாதத்துக்கு மேலி ருந்து வைத்தியம் செய்தபின் தான் உயிர் பிழைத் தது. ஆணுல் ஏதோ விஷ நீர் உடம்பில் கலந்து விட்டதாம். தினசரி உடம்பு ஊதிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் அதை யார்தான் கல் யாணம் செய்யப் போகிருர்கள் ੭੭
so no to geoe
கனகத்தின் வீட்டை நோக்கி அவன் யந்திரம் போல் சென்ருன், கனகத்தின் தந்தையால் அவ னைத் தெரிந்துகோள்ள முடியவில்லை. தங்கக் கடி

Page 125
200
காரமும், வைரக்கல் மோதிரமும், ஜரிகை அங்க வஸ்திரமும், அவன் ஒரு செல்வந்தன் என்பதைப் பறைசாற்றின. பாவம் கடைக்காரர் பயபக்தி யோடு எழுந்து நின்ருர், வே லை யி லி ரு த் து 'கோபு' என்று குரலொன்று உணர்ச்சியோடு ஒலித் தது. குரல் வத்த திசை நோக்கினுள் கோபாலன் , சதை மலையென்று நிற்பதுபோல் கனகம் நின்று கொண்டிருந்தஈள். அவள் கண் த ஸ் வழியே உணர்ச்சி வழித்தது. கனகத்தைக் கண்டதும் கோபு திகைத்துவிட்டான். அழகி கனகமா இந்த அவலட்சணக் கோலத்தில் நிற்கிருள். அவ ன் திகைப்புறுமுன் கனகத்தின் தந்தை பேசினர். ** கோ புவா ? ஆளே மாறிவிட்டாயே.
இப்போது எங்கே இருக்கிருய் தம்பி. 99
அவரது குரல் தடுமாறியது.
"நான் ஒரு மோட்டார்க் கம்பெனி வைத்து
நடத்தி வருகிறேன். அம்மாவை அழைத் துப் போக வந்த இடத்தில் உங்களையும் பார்த்துப்
போகலாம் என்று வந்தேன். கூறி முடித்து
விட்டுக் கனகத்தைத் திரும்பிப் பார்த்தான் கோபு. அவள் கண்களில் முட்டி நின்ற கண்ணிர் கன்னங் களிலே வடிந்தது.
"மாமா நீங்கள் சம்மதித்தால் கனகத்தைத்
திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
ー

„s -
201
அவன் கூறி முடிக்குழன் 'என்ன கனகத்தை நீ மணந்து கொள்கிருயன?’ என்று ஆச்சரியத்தோடு G54 I. L– a fi gy6.Jti.
நான் அந்தஸ்தையோ, அழகையோ விரும்பிக் கனகத்தைக் காதலிக்கவில்லை. நான் அவள்மீது கொண்ட காதல் என்றுமே அணையாதது. இதை உங்களால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் தன் காதலின் உறுதியைப் புலப்படுத்த அவள் உட்கொண்ட நஞ்சு அவள் உருவையே குலைத்துவிட்டது. அவள் காதலின் சக்தியைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாளல்ல தான்.
"அத்தான்'
** (pLibي 6 4
'என்ன, ஏதோ பெரிய சிந்தனையில் ஆழ்ந்து விட்டீர்களே. . அந்த வாலிபர்கள் என்னைக் கேலி செய்கிருர்களேயென்ற கவலையா?"
"கவலையா? நீ கிடைத்தற்கரிய மாணிக்கம் என் பதை தான் மட்டும் தெரிந்திருந்தால் போதனதா? மற்றவர்களைப் பற்றி எனக்கு என்ன கவலை." போங்கோ அத்தான் என்று சும்மா வாயால்தான் அவள் கூறினுள். ஆனல் அவள் இதயம் உணர்ச் சியால் விம்மித் தாழ்ந்தது.
26

Page 126
19. மனக்குகை
ஆசிரியருக்கு,
வணக்கம். இக்கடிதத்தை ஆத்ம திருப்திக்காக நான் எழுதவில்லை. உலகம் அறிய வேண்டுமென்ப தற்காகவே எழுதுகிறேன். 'இதில் என்ன எழுதி இருக்கிறது, இது கடித மா, சுயசரிதையா, கதையா? கதை யென்றால் கட்டுக் கோப்புயிருக்கிறதா, பீஜம் இருக்கிறதா', என்றெல்லாம் ஆராயாமல் எனக் காக இதை உங்கள் பத்திரிகையில் கட்டாயம் பிரசுரியுங்கள்.
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை ஒரு சிறிய கடை வைத்திருந்தார். அதில் கிடைக்கும் வருமானம் ஏதோ வயிற்றைக் கழுவப் போதுமாயிருந்த து. எனக்கப் பொழுது கவலை தெரியாத வயசு. பாடசாலையால் வந் ததும் புத்த கங்களை எறிந்து விட்டுச் சாப் பிடத் தான் தெரியும்.

203
அப்பா சந்தைக்குப் போய்ச் சாமான் வாங்கி வருவதற்கென ஒரு சயிக்கிள் வைத்திருந் தார். அதை எப்பொழுது வாங்கினாரோ தெரியாது. எனக்கு விருத்தெரிந்த காலந்தொட்டு, அது சுவ ரிலே சாத்தியிருப்பது நினைவிருக்கிறது. அப்பா இல் லாத நேரங்களில் அதை எடுத்து உருட்டுவேன். அம்மா கண்டுவிட்டால் முதுகிலே 'பளார்' என்று அறை வைப்பாள். நான் அழுது கொண்டே ஓட்டம் பிடிப்பேன்.
எனக்குப் பதின்மூன்று வயசாயிருக்கும்போ து தான் அப்பா இறந்தார். சில நாட்கள் கடை மூடப்பட்டுக் கிடந்தது. ஜீவனோபாயத்தை முன் னிட்டு அம்மா கடையைத் திறந்தாள். 'அவமானம், அவமானம்' என்று மாமா தலையிலடித்துக் கொண் டார். ஆனால் அம்மா பிடிவாதமாயிருக்கவே அவர் தன்பாட்டுக்குப் போய்விட்டார்.
இந்த மாமா இருக்கிறாரே, இவர் அம்மா வுக்கு முன் பிறந்தவர். ஒரு எண்ணெய்க் கடை யில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். சம்பளம் மிக மட்டமானாலும் அத்தை கொண்டு வந்த பணம் அவர்களைப் பணக்கார வரிசையில் சேர்த் து விட் டிருந்தது. நல்லம்மா அவர்கள் ஏக புதல்வி, என்னை
விட மூன்று நாலு வயசு இளயவன்.
என் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு அவள் எய், எய்; என்று குதிரை விட நான் நாலு காலில் தவழ்ந்து செல்வது எனக்கு இப்பொழு

Page 127
204
தும் நினைவிருக்கிறது. அப்பாவின் சயிக்கிளில் அவளை ஏற்றித் தள்ளிக்கொண்டு போய் எத் தனையோ ந ஈ ட் கள் போட்டடித்திருக்கிறேன். அவள் குய்யோ முறையோ என்று ஒலமிடும்போது அத்தை விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவஈள். என் மனம் நோகும்படியாய் ஒன்றுமே சொல்ல மாட்டாள். மாமாவை விட எவ்வளவோ நல்ல வள் அத்தை.
அப்பா இறந்தபின் இரண்டொருவர் வந்து சயிக்கிளை விலைக்குத் தரும்படி அம்மாவைக் கேட் டனர். எவ்வளவோ கஷ்டமான நிலையிலும் அவள் ஏணுே அதை விற்க ஒருப்படவில்லை.
நான் இப்பொழுது ஏழாம் வகுப்பில் படித் துக்கொண்டிருந்தேன். சந்தைக்குத் தேங்காய் வாங்கப் போவதாலும், கடைத் தெருவிற்குச் சாமான் வாங்கப் போவதாலும் ஒழுங்காய்ப் பாட சாலைக்குப் போக முடியவில்லை. அல்லாமலும் கடமையுணர்ச்சி தலைகாட்டக் கூடிய வயக வந்து விட்டதாகையால் அம்மாவைத் தனியே கஷ்டப் பட விட என் மனம் ஒப்பவில்லை.
அம்மாவுக்கு ஒத்தாசையாகக் க  ைட  ைய நடத்த ஆரம்பித்தேன். கடையில் ஒரு சாமானு மில்லை, வாங்கிப் போடக் காசுமில்லை. தினசரி ஒரு ரூபா, அல்லது இரண்டு ரூபாவுக்குத்தான் வியா பாரம் நடக்கும். அந்தக் காசை அப்படியே எங்கள்

205
செலவுக்கு எடுத்துக்கொண்டால் மறுபடி சாமான் வாங்கிக் கடைக்குப் போடுவதற்கு எங்கே போவது, வேறு ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் தலைகாட்டியது.
அப்பாவின் சயிக்கிள் என்னிடந்தானிருந்தது. அதன் வ&சு என்னைவிட அதிகமாய்த்தானிருக்கும். தினசரி ஏதாவது பிழை ஏற்பட்டுக் கொண்டே யிருக்கும். அதனுல் என்க்கொரு லாபமுண்டாகியது. சயிக்கிளை சுக்கு வேறு ஆணி வேருகக் கழற்றி மறுபடி பொருத்தக் கற்றுக்கொண்டேன். சயிக்கிள் எப்பொழுதும் கடை வாசலிலேயே கிடக்கும்
ஒரு நாள் ஒருவர் வந்து °தம்பி இந்தப் பம் பைக் கொஞ்சம் எடுக் கட்டுமா?' என்று கேட்டார். நான் ஆமென்று தலையசைத்து விட்டு என் வேலை யைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தனது சயிக்கிளுக்குக் காற்றடித்த சீர், காற்று ஏறவே யில்லை. சனியன்' என்று அலுத்துக்கொண்டே எழுந்து நின்ருர் . நான் அவரிடம் போய் ' என்ன சங்கதி?' என்று விசாரித்தேன்.
‘ஒரு அவசர அலுவலாய்ப் பட்டணம் போக வேண்டியிருக்கிறது. ஆணுல் கா ற் று ப் போய் விட்டதே' என்று கூறி அங்கலாய்த்தஈர். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
属鄱憩
வேண்டுமானுல் உங்கள் சயிக்கிளை விட்டு விட்டு என் சயிக்கிளைக் கோண்டுபேரங்கள். ஏதா வது ஆணிகீனி குத் திவிட்டதா வென்று நான்

Page 128
206
கழற்றிப் பார்க்கிறேன்.” என்று கூறினேன். அவர் நன்றி கூறிவிட் டு எனது சயிக்கிளில் சென்றவர், மாலை திரும்பிவந்து என் சயிக்கிளுக்கு வாடகை யாக ஐம்பது சதமும், அவர் சயிக்கிள் டியூப்’ ஒட்டிய கூலியாக இருபத்தைந்து சதமும் கொடுத் தாா.
அன்று தொடக்கம் நான் ஒரு புதுத் தொழி
லேக் கண்டு பிடித்துவிட்டேன். வருமானம் அதிக
மில்லாவிட்டாலும் முன்போல் கஷ்டப்படாமல் வாழ்க்கை நடத்தினுேம்,
நான் வாலிபணுகி விட்டதும், அம்மா கிழவி யாகி விட்டதும் இயற்கையின் குற்றமேயல்லாமல் எங்களின் குற்றமல்ல,
அம்மா அடிக்கடி கூறுவாள் 'அந்தஸ்துக்கு மேம்பட்டவர்களோடு சிநேகம் செய்வது எப்பொ ழுதும் ஆபத்தாகவே முடியும்” என்று. ஏனம்மா அப்படிக் கூறுகிருய் என்று கேட்டால் "சும்மா தான்” என்று பதிலளிப்பாள்.
எ ன க் கு ம் நல்லம்மாவுக்கு மிடையேயுள்ள அந்நியோன்னியத்தைப் பற்றியே அம்மா மறை முகமாகக் குறிப்பிடுகிருளென்பதை நான் நன்கு புரிந்துகொண்டேன். அவளும் நானும் அன்பாகப் பழகுவதை அத்தை வேண்டுமானுல் தடுத்திருக் கலாம். ஆனல் அவள் என்றுமே அப்படி நடிந்த
鞑
β

2O7
தில்லை. இன்றும் சொல்லுகிறேன். அம்மாவுக்கு அடுத்தபடியாக என் மீது அன்பு செலுத்திய ஒரு ஆத்மா அத்தைதான்.
நல்லம்மா எஸ். எஸ். ஸி. பாஸ் செய்துவிட்டு எச். எஸ். ஸி. பரீட்சைக்குப் படித்துக் கொண் டிருந்தஈள். அவன் நன்ருகப் படிக்கிருள் என்பதை காண நான் ஆனந்தமடைந்தே னல்லாமல் ஏழாம் வகுப்போடு என் படிப்பு முடிந்து விட்டதையிட்டு நான் என்றுமே சிந்தித்ததில்லை. நல்லம்மாவைப் பற்றி ஏதாவது கூற ஆரம்பித்தாள் அம்மா மட் டும் விரக்தியோடு ஏதாவது கூறி வைப்பாள். அவள் பேச்சில் உற்சாகமே காணப்படாது,
அன்ருெருநாள் நல்லம்மாவைப் பற்றி ஏதோ கூற வாய் திறக்கு முன் தெரியும்? அவளைப் பெண் பார்க்க வந்துவிட்டுப் போகிருர்கள், மாப் பிளேக்கும் கொழும்பிலே பெரிய உத்தியோகமாம்? என்று அம்மா கூறினுள்,
நான் கல்லாய்ச் சமைந்து போனேன். ' அத் தான், அத்தான்’ என்று அன்பொழுகப் பேசு வாளே, அவள் ஏன் சம்மதித்தாள். துக்கம் தொண் டையை அடைக்கக் கண்ணிர் விட்டழுதேன்.
இரண்டு மூன்று நாட்களின் பின் நல்லம் மாவைச் சந்தித்தேன். அவள் முகம் உண்மையில் வாடியிருந்தது. ‘அத்தான்’ என்று கூறிக் கதறியே

Page 129
208
விட்டாள். 'உன் முடிவுதானென்ன? என்று கேட்டேன். 'அத்தான் நீ என்ன செய்யச் சொல்லு கிருயோ, அப்படியே செய்கிறேன். ஊர் தேசம் விட்டு உன்னேடு கிளம்ப வேண்டுமென்று சொல்லு கிருயோ, அதற்கும் நான் தயாரத்தான்'
அவள் அன்பு உண்மையானது. அதைச் சந் தேகிக்க முடியாது. ஆனல் எனக்குத்தான் தைரிய மில்லை. இருவரும் களவாக ஒடிவிடலாம். ஆனல் என் அம்மா ? வயேrதிப காலத்தில் அலையவிட்டு, பெற்றவளே ஒரே மகன் பிரிந்து விட்டானென்றல் அதை விடத் துரோகம் வேறென்ன இருக்கிறது. மற்றது என் அத்தை வளர்த்த கடா மார்பில் பாய்வது போல், அழியாத அன்பு காட்டிய என் அத்தையை அழ வைத்துவிட்டு அவள் மகளை அற் பத்தனமாய்த் த ட் டி க் கொண் டு போவதா? அப்போ. என் நல்லுவை இன்னெருவன் கைப்பிடிக்க விட்டுவிட்டு நான் நடைப்பினதாய் வாழ்வதா? ஒரு தீர்க்கமான முடிவுக்கு என்னுல் வர முடியவில்லை.
நல்லுவுக்கு விவாகப் பதிப்பு முடிந்துவிட்டது. கண்ணிரில்தான் அவள் கையொப்பமிட்டாள். தன் காதலில் அத்தானுக்கு நம்பிக்கை யில்லை யென்று கூட அவள் எண்ணியிருக்கலாம். அன் து தொடக்கம் எனக் கொன்றிலுமே புலன் செல்ல வில்லை பிறந்தநாள் தொடக்கம் அவளோடு ஒன் ருகக் கூடி விளையாடி அவள் எனக்கே சொந்த
 

209
மானவள் என்று திடமாக நம்பியிருத்த எனக்கு ஏமாற்றத்தைச் சகிக்க முடியவில்லை. நான் முயற்சி செய்திருந்தால் அவளை அடைந்திருக்கலாம். ஆனல் எனக்குத்தான் தைரியமில்லை. அவள் இன்னுெரு வனுக்குச் சொந்தமாவதை என்னுல் கற்பனை தானும் செய்து பார்க்க முடியவில்லை.
எனது தந்தையின் திவிஷத்தை வருடா வரு டம் கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் திவிஷத்தைக் கீரிமலையில் செய்வதென்று திட்டம் வகுத்தேன், அரிசி காய்கறி சாமான்களோடு கீரி மலைக்குப் புறப்பட்டோம். தான், அம்மா, மாமா, அத்தை, நல்லு ஐவரையும் சுமந்துகொண்டு மோட் டார் கீரிமலையைப் போயடைந்தது.
மடத்தில் ஒரு அறையில் எல்லோருந் தங்கி னுேம், அன்று தங்கி மறுநாள்தான் செல்வதென்ற எங்கள் தீர்மானம். மாலை ஆறரை ஏழு மணியிருக் கும். நான் நல்லுவைத் தனியே அழைத்துக் கேணிக் குக் குளிக்கப் போக வரும்படி அழைத்தேன். அவள் "அப்பா இந்நேரத்தில் தனியே போக விட மாட்டாரே என்று பயந்தாள். நான் கூறினேன் அப்பாவுக்கு மட்டுமல்ல அம்மாவுக்குமே என்ணுேடு குளிக்கப் போவதாகச் சொல்லாதே. சீக்கிரம் குளித்துவிட்டு வருவதாக அத்தையிடம் சொல்லி விட்டுப் புறப்படு” என்று.
27

Page 130
210
அவளுக்கு முன்னாலேயே நான் புறப்பட்டு வந்து கேணிக்கரையில் காத் துக் கொண்டு நின் றேன். எப்படியோ தா யாரிடம் கூறிவிட்டு வந்து விட்டாள். கேணிக்கரையில் நிற்கும் என்னைக் கண் டதும், சிரித்தபடி யே ' ' அத்தான் , அம் மாவை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டேன். நான் குளித்து விட்டு வருகிறேன் , நீ சீக்கிரம் குளித்து விட்டு நில். என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே அப்புறம் எனக்குப் பயமாயிருக்கும்.'' எள்று கூறினாள். அப் பொழுது செக்கலான நேரம்; கேணிக்குள் யாருமே இல்லை.
' 'இந் நேரத்தில் யாருமே குளிக்க வர மாட் டார்கள். இருவருமே ஆண்களின் கேணிக்குள் குளிப்போமே, என் னோடு குளிக்கப் பயமா நல்லு. இன்னும் சில நாட்களுக்குத்தானே உன் மீது எனக்கு உரிமையாயிருக்கும்'' என்று கூறினேன்.
அவள் என்ன நினைத்தாளோ, என் கையைப் பிடித்துக்கொண்டே தண்ணீருள் இறங்கிவிட்டாள். அத்தான் மேல் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை. சிறு குழந்தைபோல் தண்ணீரில் விளை யாடினாள். சிறிது நேரம் இருவரும் நீந்தி விளையாடினோம். தென் கிழக்கு மூலையிலிருக்கும் குகைக்கு அவளைக் கையைப் பிடித்துக்கொண்டு சென்றேன். முதலில் உன் ளே புகப் பயந்தாள். நான் முன்னால் சென் மதம் என்னைத் தொடர்ந்து உள்ளே வந்துவிட்

211
டாள். புலிக் குகையானாலும் அ த் த ா னை த் தொடர்ந்து செல்ல அவள் பின் வாங்க மாட்டா ளென்பது எனக்குத் தெரியும்.
உள்ளே ஆளையாள் தெரியாத இருட்டு. 'அத்தான் .............'' என்றாள் நான் ' ' என்ன'' என் றேன். ( ' வா, இனி வெளியில் போவோம், எனக்குப் பயமாயிருக்கிறது'' என்றாள்.
* வெறி கொண்டவன் போல் அவளைக் கட்டி யணைத் தேன். கன்னத்தில் மாறி மாறி முத்தமிட் டேன். என் கைக்குள் அவள் கொடி போல் கிடந் தாள். அவள் திமிறிப் பறிக்கவில்லை.'' 'உனக் கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா அத்தான்'; என்று சாவதானமாய்க் கேட்டாள்.
' 'பைத்தியந்தான், நல்லு பைத்தியந்தான் என் கண்ணே, நீ இன் னொருவனோடு வாழ மாட் டாய், எனக்கு நீ, உனக்கு நான் இது சத்தியம் . நல் லு ............. தப்பாக எண்ணாதே............. உன்னை
மற்றவனோடு வாழவிடவே மாட்டேன்.
அன்று உண்மையில் நான் பைத்திய நிலையில் தானிருந்தேன். கடைசிவரை நல் லு - என்னைச் சந்தேகித்திருக்க மாட்டாள். ஆனால்....... அவள் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமுக்கினேன். அதை யொரு விளையாட்டு என்று அவள் எண்ணி யிருக்கலாம். ஆனால் அவள் உயிர் பிரியும் வரை தலையை அமுக்கிப் பிடித்தபடியே யிருந்தேன்.

Page 131
2 | 2
ஒன்று மறியாதவன் போல் மடத்துக்குப் போனேன். 'நல்லு, இன்னும் வரவில்லையேடன அவளைக் கண்டாயா' என்று அம்மா கேட்டாள் - அத்தை கேட்டாள். "
"ஏன், எங்கே போனுள், நான் காணவில்லையே? என்று ஒன்று மறியாதவன் போல் கூறினேன்.
"சொல்லச் சொல்லக் கேளாமல் குளிக்கப் புறப்பட்டான்' என்று கூறிக்கொண்டு அத்தை புறப்பட்டான், தொடர்ந்து மாமா, அம்மா, நான் எல்லோருமே கேணியடிக்கு வந்தோம். வெகு சிரமத்தின் பேரில் பிரேதத்தை கண்டு பிடித்து வெளியே கொண்டுவந்து கிடத்தினர்கள். எல்லோரும் ஓவென்று கதறினர்கள். என் தொண் டைத் தண்ணிர் வற்றும் வரையில் கதறியழுதேன். நடிப்பல்ல; என் செல்வத்துக்காக இதயம் வெடிக் கும் வரையில் அலறினேன்.
அவளுக்குப் பின் என் வாழ்வை நான் வளர்த் துக்கொள்ள ஆசைப்படவில்லை. ஆனல் அம்மா ஒரு பாரமாயிருந்தாள். நல்லு இறந்து ஒரு வாரஹாய் விட்டது அம்மா படுக்கையில் விழுந்துவிட்டாள். அதைக் கண்டு நான் துடிக்கவில்லை. அன்று அம்மா சைகை செய்து என்ன அழைத்தாள். பக்கத்தில் செ ன் று உட்கார்ந்தேன் அவள் கூறினுள். நல்லுவை நீதான் கொன்ருயென்பது எனக்குத் தெரியும். உன் அத்தைக்குந் தெரியும். மாமாவுக்கு
ir |

2 13
மட்டும் ஒரு சமயம் தெரியாமலிருக்கலாம். அவள் அன்று அத்தானுேடு குளிக்கப் போகிறேன் என்று கூறும்போது நான் எவ்வளவோ தடுத்தும் உன் அத்தை சம்மதங் கொடுத்துவிட்டாள். 'சிறிசுகளின் ஆசைக்கு நாம் குறுக்கே நிற்கக் கூடாது." என்று கூறினள். அத்தையின் அன்புக்கு நீ பிரதி செய்துவிட்டாய். அவள் முகத்தில் விழிக்கப் பயந்தே என் வா பூழ்  ைவ நான் மூடித்துக் கொண்டேன். நீ ஏதாவது சொல்லவேண்டியிருந் தால் சொல்லு. நாளை உன் அம்மாவை நீ பார்க்க LIDTL FT diu. ””
நான் தலையைத் தாழ்த்திக்கொண்டு விக்கி விக்கி அழுதேன். அம்மாவும் போய்விட்டாள். இப்பொழுதுதான் எனக்குத் திருப்தியேற்பட்டது. ஆசிரியரே, இக்கடிதம் உமது கையில் கிடைக்கும் போது என் இவ்வுலக வாழ்வு முடிந்திவிடும். என் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யுங்கள். இக் கடிதத்தை அவசியம் பிரசுரித்து விடுங்கள்.
இப்படிக்கு

Page 132
20. யார் அந்த அவன் ?
"சேர் உங்களை ஆசிரியர் கூப்பிடுகிருர்." என்ருன் ஆபிஸ் பையன். ந ஈ ன் எழுந்து சென்று ஆசிரியர் முன்னுல் நின்றேன்.
'அடுத்த வாரத்துக்கு நீங்கள்தான் கதை எழுதிக் கொடுங்கள்" என்ருர் ஆசிரியர், நான் **சரி சேர்' என்று கூறிவிட்டு வந்து எனது ஆச னத்தில் அமர்ந்தேன்.
நினைத்தவுடன் எழுதக்கூடியதா கதை? எனது கதைகளைப் படிக்கும் நண்பர்கள் அடிக்கடி எழுதும் படி என்னைத் தூண்டுவதுண்டு.
ஏதாவது ஒரு நிகழ்ச்சி, என்ருவது ஒருநாள் சிந்தையில் உறைக்கும், அந்த நிகழ்ச்சி தூங்கும் போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதுக் நினை வைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். சிந்தனை யில் அந்நிகழ்ச்சி சீனப்பட்ட பின்தான் பேணு வைக் கையில் எடுத்து அதைக் கதை உருவில் வடிப்பேன்.
 
 

215
என் நெருங்கிய நண்பர்களுக்கு இதைப்பற்றி ந ஈ ன் கூறியிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் அவர்கள் என்னை அடிக்கடி எழுதும்படி தூண்டுவ தில்லை
எனது ஆசிரியர் விஷயம் அப்படியல்ல. அவ ருக்குக் கீழ் நான் கடமையாற்றுபவன். அவர் சொன்னுல் சொன்னபடி செய்ய நான் கடமைப் பட்டவன்.
நல்ல கதையாக அமைந்துவிட்டால் பாராட்டு வார். கதை ஒரே மாதிரியாகப் போய்விட்டால் அபத்தம், என்று கூறித் தலையில் அடித்துக் கொள் வார், அவர் பாராட்டும்போது நான் ஆனந்தப் படுவதுமில்லை. அபத்தம்’ என்கிறபோது துக்கப் படுவது மில்லை. ஆமாம் ய ந் தி ர ம் போல என் கடமையைச் செய்வேன்.
கிளிப்பில் மாட்டப்பட்ட ஒரு கட்டுப் பேப் பர் முன்னுல் விரிந்து கிடக்க, கையில் பேணுவைப் பிடித்தபடி முகட்டைப் பார்த்துக்கொண்டு உட் கார்ந்திருந்தேன். கதைக்கு ஏதாவது "புளட்’ அகப் படுமோ என்ற சிந்தனையில்.
வணக்கம் சேர்?
நிமிர்ந்து பார்த்தேன். முன்னல் ஒருவன் நின்று
கொண்டிருந்தான். பதில் வணக்கம் கூறிவிட்டு அமரச் சொன்னேன்.

Page 133
21 6
* சேர், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்ருன் வந்தவன்.
நான் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ஏதாவது பண உதவி கேட்கப் போகிருணுே வென்ற பயம் எனக்கு, வந்தவன் ஆரம்பித்தான்.
**சேர் எழுதத் தெரியாததால்தான் உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்?
அவன் பீடிகையோடு ஆரம்பித்ததும் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
"சேர், இது உண்மையாக என் வாழ்க்கை யில் நடந்தது. "இப்படியும் நடக்குமா? என்று எண்ணிவிடாதீர்கள். நான் சொல்லும் சம்பவத்தை நீங்கள் எழுதி உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும்?
கதைக்குப் புளட்" கிடைக்கப் போகிறது. என்ற உற்சாகத்தில் அவனைத் தூண்டினேன்
'வீட்டுக்கு நேரம் கழித்து வந்தால் என் மனைவி குதிக்க ஆரம்பித்து விடுவாள். இத்தனைக் கும் நானென்றும் கெட்டவனல்ல சேர். சத்திய மாகச் சொல்லுகிறேன். 99
'விஷயத்தை வளர்க்காமல் சுருக்கமாகச் சொல்லப்பா என்றேன் அலுத்துக்கொண்டு.
 
 
 

2 7
"படம் பார்க்கும் பழக்கம் மட்டுந்தான் என்னிடமுண்டு. இரண்டாவது ஆட்டத்துக்குப் போய்விட்டு இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்தால் பூனைபோல் என் மனைவியை எழுப்பாமல் உள்ளே போய்ப் படுத்துக் கோள் வேன்.
அன்றும் அப்படித்தான் எங்கோ போய்விட்டு வந்தேன் போலிருக்கிறது. படுக்கை அறையில் யாரோ பேசும் குரல், மெல்ல உள்ளே நுழைந் தேன். அங்கே நான் கண்ட காட்சி -
ஐயோ, இப்போ நினைத்தாலும் என் இதயம் வேகிறது. அழகான ஒரு வாலிபன் - செக்கச் செவே லென்று சிவந்த மேனி - என் மனைவியோடு சல்லாபித்துக் கொண் டி ரு க் கி ரு ன். கையில் கிடைத்த ஒரு இரும்புக் கதையை எடுத்துக் கொண்டு புலிபோல் அவர்கள் முன் பாய்கிறேன். கண்ணை விழித்தேன். உடல் எல்லாம் வியர்த் துக் கோட்டியது . ... '"
'ஒகோ, நீ கண்ட கனவைப் பற்றிச் சொல்ல வந்திருக்கிருயா ?' என்றேன் அலட்சியமாக,
**சேர், சேர் கொஞ்சம் பொறுங்கள் சேர்.
அவசரப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள்?
'நான் கண்டது கனவுதான். ஆணுல் அந்த
மனிதனை - என் மனைவியோடு சல்லா பித்தவனைப்
பல மாதங்களாகியும் என்னல் மறக்க முடியவில்லை.
28
YA

Page 134
2. H 8
அவனது சிவந்த முகம் சதா என் மனக் கண்மு ன் சுற்றிச்சுற்றி வந்தது. அவனது நினைவு என்னை நோயாளியாக்கிவிடுமோ என்று கூட நான் பயத் தேன்.
ஒரு நாள் -
அறையில் உட்கர்ந்து யாருக்கோ கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ விழும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன், சுவரில் கறை பெயர்ந்து உதிர்ந்து கொண்டிருந்தது. நான் அப் படியே அதிர்ந்து விட்டேன்.
எனக்குப் பைத்தியம் என்று நினைத்துவிடா தீர்கள் சேர். நான் சொல்வது அவ்வளவும் உண்மை, சுவரில் கறை பெயர்ந்த இடத்தில் அவன் முகம் அப்படியே எழுதி வைத்தது போல் இருந்தது. அந்தக் கூரான மூக்கு அகன்ற நெற்றி - அச்சு அசல் அவன்தான். என் உடல் வெட வெட வென நடுங்க ஆரம்பித்து விட்டது.
என் நிம்மதியே குலைந்துபோய் விட்டது. என் மனைவி என்னைப் பார்த்து பயந்துபோனள். அவளுக் கும் அந்தக் கறை பெயர்த்த இடத்தைச் சுட்டிக் காட்டினேன்.
"சுவர் உடைந்துபோய் விட்டதே எ ன் று க வலைப்படுகிறீர்களா ?' என்று அவள் சாதாரண மாகக் கேட்டாள். அவளுக்கு அந்தக் க  ைற
பெயர்ந்த இடத்தில் ஒரு முகமும் தெரியவில்லை.
 
 

219
வீட்டில் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போ விருந்தது. தீர்த்த யாத்திரை போவோம் என்று மனைவியையும் அழைத்துக்கொண்டு இந்தி யாவுக்குப் போனேன். தென்னிந்தியாவிலுள்ள ஸ்தலங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தபின் கல்கத் தா வுக்குப் பயணமானுேம்,
அங்கே ஒன்றுவிட்ட தம்பி ஒருவன் பி. ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தஈ என். அவன் எங் களே ஹோட்டலில் தங்க விடவில்லை. தனது நண் பன் ஒருவனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன். நாங்கள் வாசலில் கால் வைத்ததும் என் தம்பியின் நண்பன் குதூகலத்தோடு எங்களை வர வேற்ருன் அவனை நிமிர்ந்து பார்த்த நான் அப் படியே உறைந்து போனேன்.
அவன் தஏ ன் - கனவில் என் ம ன வி யே r டு சல்லா பித்தவன் - சுவர்க் கறையில் நான் கண்ட மனிதன் பிரத்தியட்சமாக என் முன்னுல் நின்று கொண்டிருந்தான்.
அங்கே ஒரு நிமிஷங் கூடத் தங்காமல் மனைவி பையும் அழைத்துக்கொண்டு வெளியேறி விட் டேன். அவன் வட நாட்டுக்காரன். ஆணுல் நான் கனவில் கண்டவன் அவன்தான் என்று சத்தியம் செய்வேன். நிம்மதியைத் தேடி வந்த இடத்திலும்
என் நிம்மதிதான் குலைந்தது.
இலங்கைக்கு வந்தோம். எட்டு மாதங்கள் ஓடிக் கழிந்துவிட்டன. என் மனைவி இப்பொழுது
பூரண கர்ப்பவதி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு

Page 135
אליר J C
220
அழைத்துச் சென்றேன். சில மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று நேர்ஸ் வந்து என் னிடம் கூறினுள்,
மருத்துவப் பெண்கள் அங்குமிங் குமாக ஒடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் சென்று விஷயம் என்னவென்று விசா சித்தேன்.
குழந்தை பிறக்கப் போகிறது. சத்திர சிகிச்சை யின் மூலந்தான் குழந்தையை எடுக்க வேண்டும். டாக்டரை அழைத்துவர ஆள் போயிருக்கிறது. செய்தியைக் கேட்டதும் நா ன் துடித்துப் போனேன். ஆண்டவனே, என் மனைவியைக் காப் பாற்று' என்று பிரார்த்தித்தேன்.
தூரத்தே டாக்டர் வந்துகொண்டிருந்தார். கழுத்திலே ஸ்டெதஸ்கோப்" தொங்க வெள்ளை அங்கி அணிந்து அவர் வந்துகொண்டிருந்தார்.
ஹா! அந்த டாக்டர் யார் தெரியுமா ? அவன்தான்; கனவிலே என் மனைவியோடு சல்லா பித்தவன்- சுவர்க் கறையிலே அழிபாச் சித்திர மாய் இன்றும் இருப்பவன் - நான் கல்கத்தாவிலே கண்டவன்-அவனேதான் வந்து கொண்டிருந்தான்
'நீ என் மனைவிக்குச் சிகிச்சை செய்ய விட மாட்டேன்' என்று கத்தினேன்.
நான் தமிழில் கூறியது புரியாமல் அவன் விழித் துக்கொண்டு நின்றன். மருத்துவப் பெண்கள் "உனக்கென்ன பைத்தியமா ? என்று அதட்டினர்
 
 
 
 

221
யார் வார்த்தையும் நான் லட்சியம் செய்ய வில்லை, மனைவியை ஏற்றிக்கொண்டு மோட்டாரில் F) விரைந்தேன். மற்ருேர் ஆஸ்பத்திரிக்கு வழியில் ஐயோ, அவள் இறந்துவிட்டாள் சேர், நான் வேண்டுமென்று அவளைக் கொல்லவில்லை.
நான் செய்தது சரியா ? தப்பா ? என்ஞல் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நீங்கள் என்ன நினைக் கிறீர்கள் சேர்?"
அவன் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான். அவனை எப்படிச் சமாதானம் செய்வதேன்றே எனக்குத் தோன்றவில்லை. -
அவன் சொன்னது உண்மையோ, பொய்யோ ? எனக்குப் "புளட் கிடைத்துவிட்டது. பேணுவை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.
விவேகானந்த அச்சகம், யாழ்ப்பாணம்.

Page 136


Page 137