கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம்பெயர் கவிதை

Page 1
கலாநிதி. 8.569601
யாழ்ப்பாணம் தேசி 35rលំបmú.
 
 
 
 
 
 

தவிலகு
ணர்த்துமுறை
பிள்ளை விசாகரூபன்
t
கல்வியியற் கல்லூரி, யாழ்ப்பாணம்.

Page 2
-
8
 
 
 
 
 
 


Page 3

புலம்பெயர் கவிதை:
உருவில், உஃAடத்தல், உணர்த்துமுறை
கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் B.A (Hons); Mphil (Jaffna) PG Dip, in Journalism and Mass Communication (Madurai) P.G.Dip.in. Temple Arts (Karaikkudi) Ph.D (Thanjavour) சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ബൈണിu് யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், யாழ்ப்பாணம்.

Page 4

அணிந்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் அவர் களின் புலம்பெயர் கவிதை (உருவம், உள்ளடக்கம், உணர்த்து முறை) என்ற நூலை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வெளியீடாக வெளிக்கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
புலம் பெயர்ந்த தமிழர்களுடைய இலக்கிய வெளிப்பாட்டு முயற்சிகள் குறித்த கவனிப்புக்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துச் செல்வதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களுடைய எழுத்துக்களைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா முதலான தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளிலும் விரும்பி வாசிக்கும் நிலை வேகமாக வளர்ச்சி பெற்றுவருகிறது. இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் மற்றும் பண்பாட்டுத் துறைகளின் பாடவிதானங்களில் புலம்பெயர் இலக்கியம் பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதனையும் இவ்விடத்தில் குறிப்பிடல் வேண்டும்.
உலகத் தமிழர்களின் பார்வை இன்று ஈழத்துத்தமிழ் இலக்கியம் மீது திரும்பியிருக்கிறது. இந்தப் பெருமையில் பெரும் பங்கு புலம்பெயர் இலக்கியங்களையேசாரும். பெண்ணியச் சிந்தனைகள், புகலிடங்களில் சந்திக்கும் புதிது புதிதான வாழ்க்கை அனுபவங்கள் பலவும் புலம்பெயர் கவிதைகளின் உள்ளடக்கங் களிலே கணிசமான இடத்தைப் பிடித்துள்ளதனைக் காண முடிகிறது. கவிதை வெளிப்பாட்டு முறையிலும் கவனிக்கத்தக்க மாற்றங்களைப் புலம்பெயர் கவிதைகள் ஏற்படுத்தி வருவதனையும் பார்க்க முடிகிறது.

Page 5
இலண்டன், கனடா ஆகிய நாடுகளுக்கு கல்விச் சுற்று லாவினை மேற்கொண்டிருந்த காலத்தில் அந்த நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளை நேரில்கண்டும், கேட்டும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. படைப்பாளர்கள், கலைஞர்கள், தமிழறிஞர் கள், கல்வியாளர்கள் எனப் பலதரப் பட்டவர்களையும் சந்தித்துப் புகலிட இலக்கிய வெளிப்பாடுகள் குறித்தும் அவற்றின் அண்மைக்காலப் போக்குகள் குறித்தும் விரிவாக விவாதித்தேன். புகலிட இலக்கியங்களின் அண்மைக்கால வளர்ச்சிப் போக்குக் குறித்து அவர்கள் தந்த தரவுகள் என்னைப் பெருவியப்பில் ஆழ்த்துவனவாக அமைந்தன. காத்திரமான பல இலக்கிய வெளிப்பாடுகள் அந்நாடுக ளில் கிரமமாக வெளிவந்து கொண்டிருப்பதனைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
கலாநிதி. கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் அவர்கள் காலத்தின் தேவையினை உணர்ந்து புலம்பெயர் கவிதை குறித்து ஆய்வு செய்துள்ளதாகவே எனக்குப்படுகிறது. தமிழ் பயிலும் மாணவர் களுக்கு குறிப்பாக உயர்தர வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் தமிழைச் சிறப்பாகப் பயில்கின்ற மாணவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வியல் நடைமுறைகளை விளக் கிக்கூறும் இந்நூலைத் தமிழியல் ஆர்வலர்கள் அனைவரும் விரும்பி நுகர்வார்கள் என்பதில் ஐயமில்லை.
எமது கல்லூரியின் ஆலோசனைச் சபை (Advisory Board) உறுப்பினர்களில் ஒருவராகவும், வளஅறிஞர்களில் (Resource

Person) ஒருவராகவும் இருந்து வருகின்ற கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபனின் முதலாவது நூலை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வெளியீடாக வெளிக் கொணர்வதில் கல்லூரிச் சமூகம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது.
கலாநிதி விசாகரூபன் ஆழ்ந்த தமிழறிவினைக் கொண்ட இளைஞர். எவ்விடயத்தினையும் கூர்ந்து அவதானித்து, சீர்தூக்கிப் பார்த்துக் கருத்து வெளியிடும் ஆற்றல் கொண்டவர். ஒவ்வொரு விடயத்திலும் ஆழ்ந்த புலமையுள்ளவர் போன்று அமையும் அவரின் செயற்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. மண் மீது விருப்பு, தமிழ் மாணவர் கல்வித்தரம் உயர வேண்டு மென்ப தில் அவருக்கிருக்கும் ஆர்வம் அவரது பல்வேறு செயற்பாடு களில் இருந்தும் அவதானிக்கக்கூடிய உயர்வான பண்புகள், பிறருக்குதவுவதில் மகிழ்ச்சி காணும் இயல்பு கொண்ட கலாநிதி கி.விசாகரூபன், இது போன்று புலம் பெயர் நாவல், புலம் பெயர் சிறுகதைகள் குறித்தும் ஆராய்ந்து நூல்களை இயற்ற வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல வித்தகவிநாயகர் நல்லருள் புரியப் பிரார்த்திக்கின்றோம்.
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன், பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி. கோப்பாய், யாழ்ப்பாணம்.

Page 6
முன்னுரை
தமிழ் இலக்கியப் பரப்பிலே புலம்பெயர் தமிழர்களுடைய இலக்கிய வெளிப்பாடுகள் பிரதான இடத்தைப் பெறத் தொடங்கியுள்ளன. புலம்பெயர் தமிழர்களுடைய எழுத்துக்களை விரும்பிப் படிக்கும் வழக்கம் வேகமாக வளர்ச்சி கண்டு வரு கின்றது. புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்றொடர் சிறுகதை, நாவல், கவிதை முதலான இலக்கிய வெளிப்பாடுகளைக் குறித்து நின்ற போதிலும் கவிதைகளே தனியான கவனம் பெறுவனவாகவும், புலமைச் சிரத்தைக்கு அதிகம் உட்படுவனவாகவும் அமைந்
துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புலம் பெயர் கவிதைகள், அவற்றின் உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை ஆகியவற்றால் புதியதொரு போக்கைத் தமிழிலக்கியப்பரப்பில் ஏற்படுத்துவனவாக அமைந்து காணப்படு கின்றன. தமிழிலக்கிய உலகில் வீச்சுமிக்க கவிஞர்களைத் தோற்றுவித்த பெருமை இக்கவிதைப் பாரம்பரியத்திற்கும் உண்டு. இதனை இலங்கை விமர்சகர்கள் மட்டுமல்லாது தமிழகத்து
ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கலாநிதிப்பட்ட ஆய்விற்காக இந்தியாவிலே தங்கியிருந்த காலப்பகுதியில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுடைய எழுத்துக்கள் பற்றி அங்குள்ள தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ச் சிறப்புக்கலை மாணவர்களுடன் விரிவாக விவாதிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர்களுடன் நான் விவாதித்துக் கொண்ட விடயங்களை ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தமிழ் நாட்டிலேயே ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் விளைவே இந்நூலாகும்.

புலம்பெயர் கவிதை குறித்த இந்நூலில் இலங்கைத் தமிழர் களின் புலப்பெயர்ச்சி, அதன் பன்முகத்தன்மை, அதற்கான ஏது நிலைகள், புலம்பெயர் கவிதைகளின் உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை ஆகியன குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட் டுள்ளன. இந்நூல் புலம்பெயர் எழுத்துக்கள் தொடர்பான வாசிப்பை, கவனத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என நம்புகின்றேன்.
யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த கல்வி நிர்வாகிகளில் ஒருவரா கவும், கல்வியாளராகவும் இருந்து வரும் எனது அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள் தனது அணிந்துரையின் மூலம் இந்நூலுக்கு அணிசேர்த்துள்ளதோடு, இந்நூலைத் தனது கல்லூரியின் வெளியீடாகவும் வெளிக்
கொணர்ந்துள்ளார்.
அறிவுடன், அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை முதலான பண்புகளை என்னுள் விதைத்து, இன்று புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் அங்கிருந்தபடியே என்னை ஆசீர்வதித்து வழிநடாத்தி வரும் எனது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய குரு பேராசிரியர் கலாநிதி இயாலசுந்தரம்.
எனது ஆய்வு முயற்சிகளிற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து வரும் பெருமதிப்பிற்குரிய பேராசான்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ்.
நணர்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் எனக்கு அனைத்துமாக இருந்து வரும் எனது அன்புக்கும் பெருமதிப் புக்குமுரிய எனது ஆசான் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா.

Page 7
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட இருந்த நிலையை மாற்றி, பிறநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கலாநிதிப்பட்டம் பெற வைத்து, எனது ஆளுமையை வளம்படுத்தியதோடல்லாமல் எனது ஆராய்ச்சி முயற்சிகளையும் ஊக்குவித்துவரும் எனது அண்ணர், இந்து நாகரிகத்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் 'சித்தாந்தரத்தினம் டாக்டர்.மா.வேதநாதன்.
இந்த ஆய்விற்குரிய நூல்கள் சிலவற்றிற்கு என்னை ஆற்றுப்ப டுத்திய திரு.சு.குணேஸ்வரன், தூண்டி திருதிசெல்வமனோகரன்.
இந்நூலை அழகுற அச்சிட்டுதவிய ஹரிஹணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தார்.
இவர்கள் எல்லோரும் நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள்.
-கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்.

உள்ளுறை
அணிந்துரை i முன்னுரை iv இயல் - 01 0-08
புலம்பெயர் கவிதை
(உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை) புலப்பெயர்வின் பன்முகத்தன்மை இயல் - 02 09-12
புலம்பெயர் கவிதை புலம்பெயர் கவிதை : உருவம் இயல் - 03 13-90
புலம்பெயர் கவிதை: உள்ளடக்கம்
பிரயாண நிலை அவலம் வசதியற்ற தங்குமிடம் 'வீசாச் சிக்கல் நிறவெறி இயந்திரமயமான வாழ்வு அந்நிய மனோபாவம் அகதி உணர்வு தாயகம் பற்றிய ஏக்கம் தகுதிக்கேற்ற தொழிலின்மை புதிய பண்பாட்டுச் சூழல் பெண்நிலைவாதக் கருத்துக்கள் சீதனக் கொடுமை பாலியல் அரசியல் விமர்சனம் உலகு தழுவிய பார்வை புலம்பெயர் தமிழர்களின் பன்மொழியறிவு
இயல் -04 91 - 99
புலம்பெயர் கவிதை: உணர்த்துமுறை நிறைவுரை 00-104 துணை நூற்பட்டியல் 105-108 சுட்டி 109-115

Page 8
இuன் - 07 O O O புலம் பெயர் கவிதைகள் உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை
முன்னுரை
ஈழத்துத் தமிழ் இலக்கியத் தளத்திலே புலம் பெயர் இலக்கியங்களின் வரவானது புதிய அனுபவங் களையும், அதிர்வுகளையும் உருவாக்கி வருகிறது. புலம் பெயர் இலக்கியங்களினுடைய கலாபூர்வமான சிருஷ்டிப்புத் தன்மை அது பற்றிப் பேசவேண்டி யதான ஒரு நிலைப்பாட்டைத் தமிழ் வழங்கும் நாடு களில் ஏற்படுத்தியுள்ளது. தாய்மண்ணில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களது இலக்கிய வெளிப்பாட்டு முயற்சிகளைப் ‘புலம் பெயர் இலக்கியம்" என்ற தொடர் குவிமையப்படுத்தி நிற்கிறது. கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், குறுநாவல், மொழி பெயர்ப்பு என இவ்வெளிப்பாட்டு
வடிவங்கள் பலதிறப்பட்டனவாக அமைந்துள்ளன.
புலம் பெயர்ந்தோர்களது இலக்கிய வெளிப் பாட்டு வடிவங்களுள் கணிசமான இடத்தை நிறைத்து நிற்பனவாக “கவிதைகள்’ காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் புலம் பெயர்ந்தோர் கவிதைகளையே குறித்து நிற்கும் அளவுக்கு கவிதைகளின் மேலாதிக்கத்தினைப் பார்க்க முடிகிறது. இக்கவிதைகள் புதிய வடிவத்தை, புதிய மரபைத் தோற்றுவித்தமை காரணமாக விசேட

கவனம் பெறுபவை. புதிய மனிதர், புதியமொழி, புதிய நிறம், புதிய அனுபவங்கள், சமயம், உடை, பழக்கவழக்கங்கள் முதலானவை உள்ளிட்ட புதிய பண்பாட்டுடனான ஊடாட்டத்தினால் தமிழ்க்கவிதை புதிய குறியீடுகளையும், புதிய படிமங்களையும், புதியபாடு பொருள்களையும் பெற்று மேல் நோக்கிய அசைவியக்கத்தினைப் பெற்று வருவதனைப் பார்க்கமுடிகிறது. தமிழ்க் கவிதைப் பாடுபொருளின் அகற்சித்தன்மை குறிப்பிட்டுப் பேசக்கூடிய ஒன்றாக அமைந்து வருகிறது. இக்கவிதைகள் மேற்கிளப் பியுள்ள உரிப் பொருள் தமிழ்மரபு அதுவரை கண்டி ராத எல்லைகளைத் தொட்டு நிற்கிறது. மரபுவழி இலக்கியங்களுக்கூடாக ஐவகை நிலம் பற்றியே கண்டும் கேட்டும் வந்த தமிழருக்கு ஆறாம் திணை யாகப் பனிபடர்ந்த பாலையையும் “அப்பாலையில் வாழமுயற்சிக்கும்” புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை யின் பல்வேறு அம்சங் களையும் இக்கவிதைகள் காட்டி
நிற்கின்றன.
புலப்பெயர்வின் பன்முகத்தன்மை
இலங்கைத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல் பொருளாதார இணைப்புக்களுடன் தாம் தொன்று தொட்டே வழிவழியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக, அது அரசியல் நிலைப்பட்ட தாகவோ, பொருளாதார நிலைப்பட்டதாகவோ

Page 9
அமையலாம். மேற்படி இணைப்புக்களில் இருந்து விடுபட்டு முற்றிலும் வேறுபட்டதான ஒரு பிர தேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு
எனக்கருதிக் கொள்ளலாம் போலத் தெரிகிறது.
இவ்வாறான புலப்பெயர்வைப் பலவாறாக வகைப்
படுத்தலாம்.
es)
இலங்கைக்குள்ளேயான புலப்பெயர்வு
ஆ) புலமையாளர் மற்றும் வள அறிஞர்களது மேலை
இ)
FF)
நாட்டை நோக்கிய புலப்பெயர்வு இலங்கைக்குள்ளேயான இடப்பெயர்வு (இராணுவம் நிலைகொண்டுள்ள பல்வேறு பிரதேசங்களையும் சார்ந்த மக்களது இடப் பெயர்வு) எடுத்துக்காட்டாக பலாலி, மயிலிட்டி, கீரிமலை, வசாவிளான், மாங்குளம், ஓமந்தை, முல்லைத் தீவு, ஆனையிறவு, பரந்தன். முதலியவற்றை வகை மாதிரி இடங்களாகச் சுட்டலாம்.
இந்தியாவுக்கான இடப்பெயர்வு (வசதி படைத்த மக்கள் மற்றும் வசதி இல்லாத மக்களது இடப்பெயர்வு இவற்றில் குறிப்பிடத் தக்கவை) வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் முதலான இடங்களைச் சேர்ந்த வசதி படைத்த மக்களில் பெரும்பான்மையோர் திருச்சி, சென்னை முத

லான இடங்களில் வசதியான வீடுகளை வாங்கி
வசதியாக வாழ்கிறார்கள். பிறிதொரு சாரார்
மண்டபம், புழல் முதலான அடிப்படை வசதி
களற்ற அகதி முகாம்களில் வாடுகிறார்கள். உ) யாழ்ப்பாணத்து முஸ்லீம்களது புலப்பெயர்ப்பு.
இலங்கைத் தமிழர்களது புலப்பெயர்ச்சியானது ஏறத்தாழ 1950களில் இருந்தே நடைபெற்று வந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. ஆரம்பகாலப் புலப்பெயர்வுகள் இலங்கைக்குள்ளேயே தொழில் துறை மற்றும் வியாபாரம் சார்ந்ததாக அமைந்தி ருந்தன. சிங்களப் பகுதிகளில் அரச உத்தியோகம் நிமித்தமாகச் சிலரும், வியாபார நிலையங்களை அமைப்பதற்காகச் சிலரும் புலம்பெயர்ந்து சென்ற காலமது. பெரும்பாலும் புங்குடுதீவு, காரைநகர், வேலணை, ஊர்காவற்துறை முதலான தீவுகளைச் சேர்ந்தவர்களே வணிக நோக்கில் இடம் பெயர்ந் தார்கள். இவ்வாறு இடம் பெயர்ந்து சென்ற தமிழ் மக்களது வணிகரீதியான மேல் ஆதிக்கம் இன்றும் தென் இலங்கையில் தொடர்வது குறிப்பிடத்தக்க தாகும்.
மேற்குறிப்பிட்ட புலப்பெயர்வைத் தொடர்ந்து நடந்த புலப்பெயர்வுகளைப் பின்வருமாறு வகைப் படுத்திப் பார்க்கலாம் போலத் தெரிகிறது. அ) 1950 - 1960களில் ஏற்பட்ட புலப்பெயர்வு ஆ) 1960 - 1970 களில் ஏற்பட்ட புலப்பெயர்வு

Page 10
இ) 1980களில் ஏற்பட்ட புலப்பெயர்வு
1950களில் ஏற்பட்ட புலப்பெயர்வு பெரும்பாலும் மேல்நோக்கிய அசைவியக்கத்தின் ஒரு வெளிப்பாடா கவே அமைந்தது எனக் கருதலாம். இக்காலப்பகுதி யில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்கள், போராட்டங்கள், அதன் கெடுபிடி கள் காரணமாக குறிப்பாக ஆங்கிலம் தெரிந்த புலமையாளர்கள், வள அறிஞர்கள், மேலைநாடு களுக்கு குறிப்பாக இலண்டன், அமெரிக்கா முதலான நாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர் கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பிறதொழில் சார் வல்லுநர்கள் முதலானோரை உள்ளிட்டதான புலமை சார் மக்களது புலப்பெயர்வே இக்கால கட்டத்தில் பெரிதாகக் காணப்பட்டது. 1956களில் காணப்பட்ட அரசியற் போராட்டங்கள் இப்புலப் பெயர்வினை மேலும் அதிகரிக்கச் செய்தனவாக அமைந்திருந்தன.
1960களில் பிறிதொரு மக்கட்கூட்டம் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி மெல்ல மெல்லப் புலம் பெயரத் தொடங்குகிறது. இவ்வாறு புலம்பெயர்ந் தவர்களில் பலரும் தமது உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். சாதாரண வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட இவர்களது
புலப்பெயர்வு, சமூகவாழ்க்கையை மேம்படுத்துதல்,

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், அபிலாசைகளைப் பூர்த்தி செய்தல் முதலானவை காரணமாகவே இடம் பெற்றது. சாரதிகள், மின்இணைப்பாளர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள், கட்டடப்பணியாளர்கள், மருத்துவத்தாதிகள், வீட்டுப்பணியாளர்கள் முதலா னோர்களாக இவர்களில் பெரும்பான்மையோர்
காணப்பட்டனர்.
புலம்பெயர் இலக்கியத்தைப் பெரிதும் பாதித்த புலப்பெயர்வு என்பது 1980களில் ஏற்படத் தொடங்கு கிறது. இப்புலப்பெயர்வு வித்தியாசமானதாக அமைந்திருந்தது. 1970களில் முளைகொள்ளத் தொடங்கிய இப்புலப்பெயர்வு 1980களில் உச்சநிலை யைப் பெறுகிறது. இலங்கையில் தமிழர்களது இருப்பே கேள்விக்குறியாகிய நிலையில் பாரம்பரிய மாக வாழ்ந்து வந்த தமது தாயகத்தை விட்டு விலகி ஓடவேண்டிய ஒரு நெருக்குவாரம் இக்காலப்பகுதி யில் பலருக்கும் ஏற்பட்டது. பெருந்தொகையான இளைஞர்களும் இவர்களில் பெரும்பாலானோர் பதினாறு வயதிற்கும் இருபது வயதிற்கும் இடைப் பட்டவர்களாக இருந்தார்கள், குடும் பங்களும் சாரிசாரியாக மேற்குலகை நோக்கிப் பயணித்தார்கள். இப்புலப்பெயர்வு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்ந்தது. இப்புலப்பெயர்வு இலண்டனுடன் மட்டும் நின்றுவிடாது ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து,

Page 11
கனடா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என உலகின் பல்வேறு கண்டங் களில் உள்ள நாடுகளை நோக்கியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. உயிர்ப்பாதுகாப்பை முன்னி றுத்திய இப்புலப்பெயர்வில் பொருளிட்டுதல் என்ற முயற்சி இரண்டாம் நிலைக்குத்தள்ளப்பட்டது.
இலங்கைக்குள் குறிப்பாக வடக்குக்கிழக்கில் அவ்வப்போது ஏற்பட்ட இராணுவப் படையெடுப் புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் காரணமாகத் தமிழ் மக்களில் பலர் இலங்கைக்குள்ளேயே இடம்பெயர
வேண்டியவர்களானார்கள்.
இத்தன்மை காரணமாகத் தமிழ்மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சில, அம்மக்கள் வாழமுடியாத சூனியப் பிரதேசங்களாயின. இவர்களிற் பெரும்பா லானோர் தமிழர்கள் வாழ்ந்து வந்த பிறபிர தேசங்களில் வந்து குடியேறலானார்கள்.
மேற்குறிப்பிட்ட இடப்பெயர்வின் பிறிதொரு வடிவமாக இந்தியாவை நோக்கிய இடப்பெயர்வு அமைந்தது. வசதி படைத்தவர்கள், வசதி இல்லாத வர்கள், இயக்க அகமுரண்பாடுகளுக்குள் சிக்கிய வர்கள் எனப் பலதிறப்பட்டவர்கள் இந்தியாவை
நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.

திருச்சி, மதுரை, இராமநாதபுரம் முதலான மாவட்டங்களிலுள்ள பல்வேறு சிற்றுார்களும் இவ் வாறு இடப்பெயர்ந்து சென்ற மக்களினால் முழுமை யாக ஆக்கிரமிக்கப்பட்டதனைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு இலங்கைத்தமிழர்களின் செறிவு இக்கிராமங்களில் மிகுந்து காணப்பட்டது.
புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அண்மைக் காலமாக மெல்லமெல்லப் பேசப்படுகின்ற ஒருவிடய
t
மாக யாழ்ப்பாணத்து முஸ்லிம் மக்களது புலப் பெயர்ப்பு” இடம்பெற்றுள்ளது. அரசியற் கொந் தளிப்பு மற்றும் வன்முறைத் தவிர்ப்பு முதலான பல்வேறு காரணங்களினால் மேற்கொள்ளப்பட்ட தாகக் கருதப்படும் இப்புலப்பெயர்ச்சி மிக அண்மைக் காலம் வரை பெரிதும் பேசப்படாத பொருளாகவே இருந்து வந்துள்ளது. தாயக மண்ணின் அமைதிச் சூழல் தந்த வாய்ப்புக்கள் காரணமாக அண்மைக் காலப் புலம்பெயர் இலக்கியங்களில் இவ்விடயம்
குறித்த பாதிப்பை ஓரளவு காணமுடிகிறது.
எனினும் முஸ்லிம்கள் அல்லாத பிற படைப்பா ளர்கள் இவ்விடயம் குறித்துப் பெரிதும் பேசவில்லை என்றே குறிப்பிடலாம். வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற மிகச்சிலர் இவ்விடயம் குறித்துத் தமது படைப்புக் களில் கருத்துக்களை வெளியிட்டுள்ளர்.

Page 12
இயன் - 22 புலம் விபயர் கவிதை
1980களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் கலை இலக்கிய முயற்சிகளில் ஏதோ ஒருவகையில் தம்மை ஈடுபடுத்தியவர்களாக இனங்காட்டிக் கொண்டவர்களாகக் காணப்பட்டார் கள். அதிலும் குறிப்பாகக் கவிதைத்துறையில் தம்மை இனங்காட்டியவர்களே அதிகமாகக் காணப்பட்டனர். இவர்களிற் சிலர் தாயகத்தில் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட கவிஞர்களாகவும் இருந்தார்கள்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து முற்றிலும் புதியதான ஒரு சூழலில் தமக்கு ஏற்பட்ட அனுப வங்களை ஆவணப்படுத்துவதிலும் அவற்றைக் கலாபூர்வமாகப் பிறருடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர்கள் காட்டிய ஆர்வம் அல்லது முனைப்பு கனதியான பல்வேறு கவிதைகளை வெளிக் கொணர்ந்தது. இக்கவிதைகள் ஈழத்துத் தமிழ் இலக்கி யப் பரப்பின் எல்லைகளைப் பிறிதொரு தளத்தில், தடத்தில் கொண்டு செல்வனவாக அமைந்திருந்தன எனக் குறிப்பிடலாம்.
சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், திருமாவளவன், பிரதீபா, சுகன், சக்கரவர்த்தி, நட்சத்திரன், செவ் விந்தியன், செழியன், கி.பி.அரவிந்தன், அருந்ததி, செல்வம், தமயந்தி, இளவாலை விஜயேந்திரன்,

மைத்திரேயி, ராஜாத்தி, இளைய அப்துல்லா, வசந்தி ராஜா, சுமதிரூபன், ரஞ்சன், செழியன், பாலமோகன், ஆனந்தபிரசாத், நிருபா முதலானோர் இக்கவிதைப் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலிருந்து வெளிவரு கின்ற பல்வேறு இதழ்கள், சஞ்சிகைகள், பத்திரிகை கள் முதலியன இவர்களது கவிதையாக்க முயற்சிக்குக் களம் அமைத்துக் கொடுப்பனவாகக் காணப்படுகின் றன. மேலே சுட்டிய கவிஞர்கள் பலருடைய கவிதை கள் தனித்தொகுப்புக்களாகவும் கூட்டுத் தொகுப் புக்களாகவும் நூல்வடிவிலும் வெளிவந்துள்ளன. புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் மட்டுமன்றி இலங்கை மற்றும் தமிழ்நாட்டிலும் இக்கவிதைகள் பலராலும் மிகவும் விரும்பிப் படிக்கப்படுவதனை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. உருவம், உள்ள டக்கம் மற்றும் உணர்த்துமுறை ஆகியவற்றில் இக்கவிதைகள் ஏற்படுத்திய தாக்கங்களே இப்பரவ லான வாசிப்பு ஆர்வத்துக்கான அடிப்படைகளாக
உள்ளன எனக்கூறலாம்.
புலம் பெயர் கவிதை: உருவம்
கவிதைப் படைப் பாக்கச் செயனர் முறையினர் வெற்றியில் உருவத்தின் பங்களிப்பும் கணிசமான ஒன்றாகும். எணர்ணங்களை, கருத்துக்களைப் “பாட்டு" வடிவத்தில் படைத்துவிட்டால் மட்டும் கவிதை பிறந்து விடும் எனக் கருதமுடியாது. தமிழ் இலக்கிய மரபில் கவிதை இயற்றுவதற்கெனப் பல்வேறு வகையான யாப்புக்கள் வழக்கில் இருந்து
()

Page 13
வருகின்றன. பல்வேறு வகையான எண்ணங்களை யும், வெளிப்படுத்த வெவ்வேறு வகையானயாப்புக் கள் தேவைப்படுகின்றன. கம்பராமாயணத்தின் வெற்றியில், விருத்தப்பாவுக்குரிய பங்களிப்பினை எவரும் இலகுவில் மறுதலித்துவிட முடியாது. அந்த அளவுக்கு கம்பனின் எண்ண ஓட்டங்களுக்கு விருத்த ப்பா இசைந்து, நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. 2
யாப்புக்களை அணிசெய்ய முனைந் து, அவ்வடிவங்களுக்குள் "இறந்து பிறந்த" கவிதை களும் ஏராளமாக உள்ளன. கவிஞன் பேசவந்த கருப்பொருளுக்குத் தகுந்தவாறு அதன் "உருவம்” இருக்க வேண்டும். கருப்பொருளின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் இடந்தந்து நிற்பதாக அதன்
உருவம் அமைந்திருத்தல் அவசியம்.
புலம்பெயர் கவிதைகளின் "உருவம்" என்பது பெருமளவுக்கு "புதுக்கவிதை " வடிவத்தைச் சார்ந்ததா கவே உள்ளதனை அவதானிக்க முடிகிறது. 1: மரபு சார்ந்த கவிதை வடிவங்களை எடுத்தாளுகின்ற தன்மை, இல்லை என்றே சொல்லும் அளவுக்கு
அருந்தலாகவே காணப்படுகின்றது.
கணிசமான கவிஞர்கள் புதுக்கவிதை" என்ற வடிவத்துக்குள் நின்று கொண்டு சிறிய சிறிய கவிதைகளாகத் தங்களது உணர்வுகளை வெளிப்ப டுத்தி வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. பத்து முதல் இருபது அடிகள் வரையான கவிதைகளை
(11)

இப்பாரம்பரியத்தில் பெருமளவாகப் பார்க்கமுடிகி றது. வேறு சிலர், நீண்ட கவிதைகளை அல்லது நெடும்பாடல்களை இக்கவிதைத் தளத்தில் நின்று படைத்து வருவதனையும் அவதானிக்கமுடிகிறது. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், கி.பி.அரவிந்தன் முதலா னோருடைய கவிதைகளை இவ்விடத்தில் வகை மாதிரிகளாகச் சுட்டலாம். புதுக்கவிதை மரபில் இவ்வாறான நெடும் பாடல்களின் வரவானது கவனத்தை ஈர்க்கின்ற ஒரு விடயமாகவும் உள்ளது.
புலம்பெயர்ந்துள்ள தேசங்களிலிருந்து கவிதை படைக்கின்றவர்களிற் பலரும், தாயகத்தில் தங்கியி ருந்த காலப்பகுதியில் இவ்வாறான படைப்பாக்க முயற்சிகள் எவற்றிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்களாக, இனங்காட்டிக் கொள்ளாதவர் களாகவே இருந்திருக்கின்றனர். புலம் பெயர்ந்துள்ள சூழலில் மரபுக்கவிதை வடிவங்களை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் இவர்களுக்கு அதிகம் இல்லை என்றே குறிப்பிடலாம். இதனாலும் மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவது சாத்திய மில்லாது போயிருக்கலாம். தவிர, தங்களது உணர்வுகளை எடுத்துச் சொல்ல மரபுக்கவிதை வடி வங்களைவிட, புதுக்கவிதை வடிவமே சாலச்சிறந்தது எனச் சிலர் கருதியிருக்கவும் கூடும். மரபுக்கவிதை வடிவங்களில் ஆட்சி பெற்ற கவிஞர்கள் சிலர்கூட, புதுக்கவிதை வடிவத்தில் தொடர்ந்தும் எழுதி வருவ தானது இவ்வாறான எண்ணப்பாங்கைத் தோற்றுவிப் பதாக உள்ளது.
12

Page 14
SBuild - ØRTS
புலம் லபயர் கவிதை உள்ளடக்கம்
கவிதை எதனைச் சொல்ல முனைகின்றதோ அதுவே அக்கவிதையின் உள்ளடக்கமாகும். தமிழ் இலக்கிய மரபில் இதனை, உள்ளிடு, பாடுபொருள், கொளு, விஷயம், கரு, பாவிகம் முதலான பல்வேறு சொல்லாட்சிகளால் வழங்குவர்.
புலம்பெயர் கவிதைகளின் உள்ளடகக்கத்தினை நோக்குகின்றபோது அவை பலதரப்பட்டனவாக அமைகின்ற தன்மையினை நோக்க முடிகிறது. இப்பாடுபொருட்பட்டியலானது காலத்திற்குக் காலம் அகற்சி பெற்றுச் செல்வதனையும் அவதானிக்க முடிகிறது. எனினும் இக்கவிதைகள் முனைப்புறுத்தி நிற்கும் பாடுபொருட்களை தாயகம், புகலிட அனுப வங்கள், இனவாதம், செய்தொழில், புகலிட வாழ்வுக் கெடுபிடிகள், பெண்நிலைவாதம், மேலைப்புலத்தின் முன்னேற்றம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை, பண்பாட்டுப்புரிதலின்மை, வேலையில்லாப் பிரச்சினை, சாதி, கலப்புத்திரு மணம், கோஷ்டி மோதல்கள், சர்வதேச விவகாரங்கள் எனப் பொதுவாகப் பிரித்து நோக்கமுடிகிறது.
ஆரம்பகாலக் கவிதைகளின் உள்ளடக்கங்களை முறைப்படுத்திப் பார்க்கின்றபோது அவற்றில் பெரும்பாலனவும் புலம்பெயர்ந்து சென்றபோது
S.

பிரயாண நிலையில் புலம்பெயர்ந்தோர் சந்திக்க வேண்டிவந்த அவலங்களையே முதன்மைப்படுத்தி யுள்ளமையினைக் காணமுடிகிறது. இவ்வாறான கவிதைகள் மிகவும் தத்ரூபமானவையாகவும் படிப்பவர் மனதை மிகவும் பாதிப்பனவாகவும் அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து வதி விட அனுமதி, வேலையைப் பெற்றுக் கொள்ளுதல், தாயகம் பற்றிய ஏக்கம், உறவுகளைப் பிரிந்ததனால் உண்டான தனிமை, சோகம் முதலான விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன எனக்கூறலாம்.
பிரயாண நிலை அவலம்
புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக் கும் பறந்து செல்வது என்பது மிகவும் எளிதான சுலபமான ஒரு காரியமாக இருக்கவில்லை. பிரயாண நிலையில் மாதங்களை, வருடங்களைத் தொலைத்த வர்கள் கணிசமானோர். பிரயாணக் காலத்தில் பிறருடனான அனைத் துத் தொடர்புகளும் துண்டித்தே காணப்பட்டிருந்தன. புலம் பெயர்ந்து செல்கையில் முறையான “பாஸ்போர்ட்" (Passport), “வீசா" (Visa) என்பன இல்லாததனால் அஞ்சிப் பயந்து மிகவும் கடினமானவழிகளில் கூட பிரயாணம் செய்ய நேரிடுகிறது.
உடல் விறைக்கும் கடல்வழியேயும், மூச்சுமுட் டும் “பெற்றோல் பவுசர்’களிலும் பாரஊர்திகளி லும், பல்வேறு வகைக் கொள்கலன்களிலும் இன்னும் பல்வேறு அவலவழிகளிலும் இப்பிரயாணம் தொட

Page 15
ரும். இப்பிரயாண முயற்சியில் தம் வாழ்வை முடித்துக் கொண்டு முகமழிந்து போனவர் பலர்'
“ வரும் வழியில் ” என்ற தலைப் பிலான கி.பி.அரவிந்தனின் கவிதைவரிகள் வழி அனுப்பி வைத்த நணர் பணினி துயர முடிவு குறித் துப் பின்வருமாறு சித்திரிக்கின்றன.
alaltar aoskvadra aosub
எல்லாமும்கணப்பொழுதில்
எத்தகைய பொய் இது.
*எப்போதும்சந்திக்கலாம்
என்றிருந்த நண்பர்கள்
நினைவுச் சுழற்சிக்குள்
கனவுப்பொருளாகிப்போயினர்
சந்திக்காமலேயே
எனக்கும் அவர்க்குமான
Ово ČLJI" I-LuarQuor
உயிர்துறக்கும் தூரம்
urritsólariřísadorf கிரேக்கக்கடலில் மூழ்கியும்
ஹங்கேளி நெடுஞ்சாலையில்
1. செக்கோஸ்லாவாக்கியாவில் 21.10.1998 அன்று மின்சாரஇரயில் பாதையைக் கடக்க முயன்று எதிரே வந்த இரயிலினால் மோதுண்டு சுமார் 30 பேர்வரை இறந்து போனார்கள். இத்தாலியின் மால்டா தீவில் 24.12.1996 அன்று அளவுக்கதிகமான புலப்பெயர்வாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 290 தமிழர்கள் இறந்து போனார்கள். இவ்விபத்துக்கள் வகைமாதிரியான எடுத்துக்காட்டுக்களாகும்.

பாரவண்டியின் மூச்சுமுட்டியும் பாதி வழியில் கழிந்தது soQNñrasafaañr L6A3
கிரேக்கக்கடல்மடியில் குளிரில் நீவிறைக்கையில் ororodor floorksmcum உண்பெயரை நாள்
பத்திரிகையில் கண்ணுற்றேண் கொப்பளித்துப்பொருமியது வெடிக்காமல் போயிற்றுநெஞ்சு" மேற்படி கவிதைவரிகள் பிரயாண நிலை அவலச் சித்திரிப்பின் ‘பதச்சோறாக அமைந்துள் ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“தேடுகை” என்ற தலைப்பிலான திருமாவள வனின் கவிதை, இலட்சிய நாட்டை நோக்கிய பிரயா ண முயற்சியின் அவலங்களை, சோகங்களைத் “தடையங்களாக”ச் சித்திரித்துளது. கவிதை வரு
மாறு.
“காட்டில் கடல் வெளியில் கரிசல் பூமி அகதி முகாம்களில் முகமிழந்த கடவுச் சீட்டில் சரக்குக்கப்பலின் அணியக் கிடங்கில். பனியில்
s
1.திருநாவுக்கரசுய; (தொ.ஆ): புலம்பெயர்ந்தோர் கவிதைகள்: பக்.96-97

Page 16
பன்மொழிக்கலப்பில் துருவக்கொடுங்குளிரில் இவை எல்லாம்
28 ஆம் தரிப்புக்கள் அல்ல. தடையங்கள்.. (1)
ந.சுசீந்திரனின் கவிதைவரிகள் பிரயாண நிலையில் படுகின்ற அவலத்தினைப் "பாடுகள்” என்ற படிமத்தினூடே மிகத்தத்ரூபமாக விளக்கி நிற்கின்றன. கவிதை வரிகள் வருமாறு,
"ஊரானரிழந்து நாடிழந்து | தேசத்தெருவெங்கும் தமிழரெனத்திரிகின்ற எங்களது “பாடுகளை" என்றும் நினைத்திருங்கள் ஒடுவதே எங்கள் உயிர்வாழ்வாய் ஆகியதன் உண்மைதனை நினைத்திருங்கள் காசுக்காய் இளமைகருகியதனைப்பாருங்கள்,
மூச்சடங்கிப்பெட்டிக்குள் பொதியாகிப்போகையிலே மூச்சடங்கி வீதியிலே முடிந்ததுண்டு நம்வாழ்வும் போலந்தை, ஜேர்மனியை பிரிக்கின்ற நதியிறங்கி ஆசைக்கனவோடு அக்கரைக்குப்போகையிலே நீரிழுக்க அவலக்குரல்கேளாக்கரையோரம் நிறைந்த பிணச்சடலங்கள்
இந்துக்கடல் நீங்கும் என்னுடைய சந்ததியே உன்னோடு போமோ ஓடி உயிர்பிழைத்தல்."2
என இக்கவிதை வரிகள் புலம்பெயர்வதான முயற்சி யில் புலம்பெயர்ந்து சென்றோர்பட்ட, படுகின்ற துன்பங்களைச் “சிலுவைப்பாடு" என்ற
1. திருமாவளவன்; இனியும் சூல் கொள், ப54 2. திருநாவுக்கரசுய; (தொ ஆ); புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப102

படிமத்தின் துணையூடே விளக்கி உள்ளமை குறிப் பிடத்தக்கதாகும்.
சொந்த நாட்டின் போர்ச்சூழலால் தாயகத்தை விட்டு நீங்கிச் சென்றவர்கள் தமது “கனவு லக’ப்பிரயாணத்தில் நீண்ட நாட்களைச் செலவிட் டனர். மனிதர்கள் பிரயாணம் செய்யமுடியாத வழிகளில்ெலாம் பிரயாணம் செய்ய முயன்று முகமிழந்த பிணங்களாகி ஐரோப்பிய நாடுகளின் கடல் மற்றும் ஆற்றங்கரைகளிலும், தெருக்களிலும் பிற இடங்களிலும் மரணித்தவர்கள் பலர். வெளிநாடு செல்வதான முயற்சியில் தாம் பட்டுவந்த கடன்களை அடைக்க வேண்டியும், குடும்பத்தின் பொருளாதார நிலையினை உயர்த்த வேண்டியும் தமது “இளமை” கருக இயந்திரமாகச் செயற்பட்ட, செயற்படுகின்ற இளைஞர் தொகை ஏராளம். இவை எல்லாவற்றையும் மேற்படி கவிதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
“இருத்தலிற்காய்" என்ற தலைப்பிலான சுகனின் கவிதை பிரயாண நிலை அவலத்தின் பிறிதொரு முகத்தினைக் காட்டுவதாக அமைகிறது.
"இரவோடு இரவாக
இன்னோர் எல்லைக்குள்
போவதறிவார்கள் போகும்
வகையறிவார்கள்
அத்திலாந்திக் பசுபிக் கரீபியன் கடல்

Page 17
கட்டுச்சோறுமின்றி காற்றின் துணையுமின்றி கடப்பதறிவார்கள் கடலுள் அமிழ்ந்தது மறிவார்கள் இந்தப் பனிமலையின்இடுக்குளூடு இடுப்பிலிரண்டு குழந்தைகள் ஏந்தி இவ்விருளும் பொழுதைக் கடந்து விட்டாலோ இத்தாலி வந்துவிடும் என்ற மொழிகேட்டு எட்டிவைத்த கால்கள் தளர இறந்த குழந்தைகள் கதையறிவார்கள் தீவுகள் சமுத்திரம் பெருநிலப்பரப்புகள் திக்கொன்றாகி இருக்கிற உறவுகள் தேடியலைந்தும் துரத்தப்பட்டும் பைத்தியம் பிடித்தும் பாதியில் திரும்பியும் திருப்பித்திருப்பி வெளிக்கிடுகின்றார் விதிக்கெதிராக இருத்தலிற்காய்" “இருத்தலிற்காக”ப் புலம்பெயர்ந்து சென்ற வர்கள், சென்ற வழிகளிலெல்லாம் பட்ட இன்னல் களை, இழப்புக்களையெல்லாம் சுகனின் கவிதை
வரிகள் உணர் ர்வமாக விளக்கவனவாக உள்ளன.
கு
வசதியற்ற தங்குமிடம்
அகதி வாழ்வின் அவலங்களில் அதிகம்
பேசப்பட்ட விடயமாக வசதி அற்ற தங்குமிடமும்
காணப்படுகின்றது. அடிப்படை வசதிகள் மிகவும்
1. திருநாவுக்கரசுய; (தொ.ஆ); புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப.122
O

மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அகதிகளில் பெரும்பாலானோரும் அடைத்து விடப்பட்டிருந் தார்கள். வெளி நாடு குறித்த பல்வேறு கனவோடு வந்தவனுக்கு இந் நிலைப்பாடு மிகவும் வேதனை யைக் கொடுத்ததில் வியப்பேதுமில்லை.
வசதியற்ற தங்குமிடத்தை, அதன் அவலத்தைச் சித்திரித்து நிற்கும் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை வரிகள் வருமாறு,
"சூல் கொண்ட பன்றியின் கருவறை போன்ற பிராங்போட் நகரச்சந்தியில் ஓர் அறை போர்வையில் சுருண்ட யாழ்ப்பாணத்து நடைப்பிணம் சிலது எகிப்திய மம்மியாய் அடுக்கிக் கிடக்கும்...' (1)
இருப்பிடத்தின் இட நெருக்கடியைக் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு குட்டிகளைத் தனது கருப்பையில் சுமந்திருக்கும் பெண் பன்றியின் கருப்பையை உவமையாக்குவதும், வெளி நாட்டுப் பிரயாண முயற்சியில் தனது முகமிழந்து (தலை மாற்றிய பாஸ்போர்ட்) முகவரியிழந்து பரதேசியாகத் திரியும் யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞனை "நடைப்பிணத்துக்கு" உவமையாக்குவதும் மிகவும் இயல்பாக அமைவனவாக உள்ளன.
1. ஜெயபாலன்.வ.ஐ.ச: வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் - பெருந்தொகை;
ப.213
20)

Page 18
வண்ண வண்ணக் கனவுகளுடன் தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து வந்தவர்கள் பனிபடர்ந்த இரவுகளில் பற்றியெரியும் உள்ளத்தோடு நாட்களைக் கழித்தமையினைப் பின் வரும் கவிதைவரிகள் புலப்படுத்துகின்றன.
"இருளடைந்துபோன
இந்தக்கூடுகளில்
அடைபடுவதற்காகவா
இறக்கை கட்டி
வானத்தில் பறந்து வந்தோம்"
கூணர்டில் அடைபட்ட பறவையொன்றினர் மனநிலையினை புலம் பெயர்ந்து பறந்து வந்தவ னின் மனநிலையுடன் ஒப்பிடுவதாக இக்கவிதை வரிகள் அமைந்துள்ளன.
*விசாச்” சிக்கல் (Visa)
தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென் றோரில் பலரும் தாம் சென்றடைந்துள்ள நாடுகளில் சட்ட ரீதியாகத் தங்குவதற்கான “விசா" இன்றியே பிரயாணத்தை மேற்கொண்டனர். அவ்வந்நாடு களுக்குரிய சட்டங்கள் புலம்பெயர்ந்து சென்றவர் களை வெவ்வேறு விதமாகக் “கவனித்தன? வீசாப்
1. அருந்ததி; சமாதானத்தின் பகைவர்கள்; ப.09
2. புலம்பெயர்ந்த நாடுகளில் சிலர் வருடக்கணக்கில் சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிலர் உடனடியாகவே நாடு கடத்தப்பட்டனர். அபராதத் தொகை கட்டப் பணிக்கப்பட்டனர்.

பிரச்சினை காரணமாகத் தாம் தங்க எண்ணியுள்ள நாட்டுக்குள்ளும், பிற நாடுகளுக்கும் சுதந்திரமாகப் போய் வருவது என்பது இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாகவே காணப்பட்டது.
11 (கோ. தமது சொந்த நாட்டில் நெருங்கிய உறவுகள் குறிப்பாகத் தந்தை, தாய், சகோதரங்கள் உயிரிழக்கும் சூழ்நிலைகளில் கூட இவர்களால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. இந்த இயலாமை புலம் பெயர்ந்த தமிழர்களைப் பெரிதும் பாதித்த ஒரு விடயமாக இருந்தது. "இரவல் கொள்ளி' வாங்கி எரிந்து சாம்பலாகிப் போன பெற்றோர்களுக்காகப் பல்லாயி ரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்த பிள்ளை களால் கண்ணீர் வடிப்பதைத்தவிர காரியம் எதை யுமே செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.1)
லாமை
இளவாலை விஜயேந்திரன் இந்த இயலாமை குறித்துப் பின்வருமாறு சித்திரித்துள்ளார்.
"எனக்கு "விசா' தந்த அதிகாரி மனைவிக்கு விசா மறுக்கிறான் யாழ்ப்பாண வடலிகளின் நிழலில் அம்மம்மா
1. கொள்ளி வைக்கப் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் உடலைப் பதப்படுத்திக் கிழமைக் கணக்கில் வைத்திருக்கும் வழக்கம் காணப்படுகிறது. சில சமயங்களில் குறித்த நேரத்தில் பிள்ளைகளால் வரமுடியாத சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன.
22

Page 19
"போய்ச் சேர்ந்து விட்டாலும்" சென்று திரும்பல் இயலுமோ சொல் ரொறன்ரோவில் லண்டனில் எனது சதைகளும் இரத்தமும் ஆன சகோதரங்கள் எந்தத் தூதரகத்திலும் எனது நிறத்தை நம்பத் தயாரில்லை "அகதி" என்ற தமிழ்ச்சொல்லின் அர்த்தம் தேவை நான் விரும்பும் யாரையும் பாராமல் வெறுப்பு மிகும் முகங்களையே பார்க்கும் விதி எனக்கு." வேற்றுக்கிரகத்து மனிதனாய் இந்தப் பூமிப்பந்தில் வாழும் எனக்கு “அகதி" என்ற சொல்லின் அர்த்தம் தேவை" தமிழனாகவும், கறுப்பனாகவும்
உலகெங்கும்
தமிழன் படுகின்ற அவலங்களை அவமதிப்புக்களை மேற்படி கவிதைவரிகள் அச்சொட்டாக வெளிப்படுத் தியுள்ளன. புலம்பெயர்ந்தவர்களை வேற்றுக்கிரக மக்களைப் பார்ப்பது போல அருவருப்பாக நோக்கும் பண்பு இன்றும் பல்வேறு நாடுகளிலும் காணப்படு கின்றது.
1. திருநாவுக்கரசுப; (தொ.ஆ); புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பக்.45-46
23

“சென்று திரும்பல் இயலுமோ” என்பதில் பல இலட்சங்களைக் காவுகொடுத்து வந்து சேர்ந்துள்ள நாட்டை விட்டு 'அந்தரம், ஆபத்துக்குப் போவது சுலபம், வருவது முடியாத காரியம் என்பதனையும்
கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார்.
வந்து சேர்ந்துள்ள நாட்டை விட்டு வெளியே சுதந்திரமாகப் போய்வருவதற்கு அனுமதி மறுக் கப்பட்ட தமிழர்கள், தாம் தங்கி உள்ள நாட்டுக் குள்ளும் கூட சுதந்திரமாகச் சென்று வரமுடியாத நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள். விசா
ரணைகள் முடிவுற்று நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும் வரை கூட இந்த நிலை தொடர்வதுண்டு.
OOOO நான் இருக்கும் ஜேர்மனியில் என் நகரம் தாண்டி
அடுத்த நகரம்
செல்லும்
சுதந்திரம் மறுக்கப்பட்ட
நிலையில் இங்கு நான் மேற்படி கவிதைவரிகள், ஜேர்மனியில் குறிப்
phl)
பிட்ட ஒரு மாகாணத்தில் தம்மை அகதிகளாகப் பதிவு செய்துகொண்டுள்ளவர்கள் ஜேர்மனியின் பிற மாகா
1. மேற்கோள்; செ.யோகராசா, புலம்பெயர் கலாசாரமும் புகலிட
இலக்கியங்களும் - ப52.

Page 20
ணங்களுக்குள் சென்றுவர முடியாத சூழ்நிலையில் இருந்தமையினை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்தநிலைமையானது ஜேர்மனியில் மட்டுமல்லாது பிற ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து வருவதைனைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. குறித்த நாட்டின் குடியுரிமையினை முறையாகப் பெற்ற பின்னரே சுதந்திரமான நடமாட்டத்துக்கு இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாயகத்து உறவுகளைப் பிரிந்தவர்கள் புகலிடத்திலுள்ள தமது உறவுகளுடனும் அன்பைப் பாராட்ட முடியாத இக்கட்டான நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
நிறவெறி
புலம் பெயர்ந்த சூழலில் எதிர்கொள்ளுகின்ற இன, நிற அடிப்படையிலான பாகுபாடுகள், அதனால் வெளிப்படுகின்ற தாழ்வுணர்ச்சி மற்றும் அந்நிய மனோபாவம் முதலானவையும் கவிதைகளில்
பரவலாகப் பதிவாகியுள்ளன.
கறுப்பர், வெள்ளையர் என்ற நிறவாதக் கெடுபிடிகள் ஆபிரிக்கர்களை மட்டுமல்லாது ஈழத் தமிழர்களையும் கணிசமாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி யுள்ளது. கறுப்பு நிறத்தைக் கண்டாலே அருவருப் பாக, வெறுப்பாகப் பார்க்கும் வெள்ளையரின் மனோ நிலையின் வெளிப்பாடாக அமையும் தம்பாவின் கவிதை வரிகள் வருமாறு,
S

"கற்றுக்கொள் கறுப்பு நாயே
சாகப்பிறந்த பன்றியே
தொழுவத்தை விட்டு ஏன் வந்தாய் வெளியே
கறுப்பர் அழிந்தால் மட்டும் புனிதமடையும் பூமி")
குடிவரவு அதிகாரியின்அக்கினிப் பார்வையின்
முன்னால் “கறுப்பண்" என்ற $8)يوJ காாரணத்தினால் கூனிக்குறுகிப் போன தமிழனினர் நிலையினை செல்வம் அருளானந்தத்தின் கவிதை பின்வருமாறு
சித்திரிக்கின்றது.
"தலித்தாய் பிறந்து தமிழனாய் குனிந்து கறுப்பனாய் எனை உணர்ந்தேன்" சொந்த நாட்டில் தலித்தாய் அவமானப்பட்டவன் பிறநாட்டில் தமிழனாய், கறுப்பனாய், அவமானப்
படுத்தப்பட்டமையைப் பார்க்கமுடிசிறது.
“விழு” என்ற தலைப்பிலான துஷ்யந்தனின் கவிதை, மனித உரிமைகளுக்குப் பெயர்போன மேலைநாடுகளிலே வெள்ளைக்காரர்களின் பார்வை யிலே கறுப்பர்களாகத் தெரிபவர்கள் படுகின்ற பாடுகளை, அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
"நிலமெல்லாம் வெள்ளையாய் பணி
உடல் செத்துப் போன பின்னும்
1. திருநாவுக்கரசுய:(தொ.ஆ); புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப.81 2. மேலது; ப-66

Page 21
அவள்
ம், பக்கம்
உள்ளிருந்து ரத்தமாய் விழும்துளி நிலத்தில்
அதையும் மிதித்தபடி வெளி நாட்டவன் கறுப்பன்
அகதி பிச்சைக்காரன் நாடோடி என வரும் வார்த்தைகள் பனியையும் கரைத்தபடி நிலத்தில் வேரூன்றும் நான் நீ .
குலன், சி அவன்
அழியாசத்தில் பத்ததி
4.சிரிக்க நாங்கள் நீங்கள்
அசாம் இவை எல்லாம் போய் வெளி நாட்டவன் கறுப்பன் அகதி பிச்சைக்காரன் நாடோடி இவை எல்லாம்
0 களம் | இலக்கணமாய் மாறும் பனியே! நிலத்தின் மேல் விழுந்தது போதும் இனி மனிதர் மேல் வெள்ளையாய் விழு
27)
12

இனவாதம் நிறவாதம் யாவும் கரைய வெள்ளையாய்" (1)
இக்கவிதையிலே பயின்று வருகின்ற வெளி நாட்டவன், கறுப்பன், அகதி, பிச்சைக்காரன், நாடோடி ஆகிய சொற்கள் மேலை நாடுகளில் புகலி டம் தேடுகின்ற கீழைத்தேசத்தவர்கள் அனைவர்க்கும் பொருந்துவனவாகவே உள்ளன. வெள்ளையர்கள் அல்லாத பிறரை, (அவர்கள் நீக்ரோக்களாகவோ அல்லது அவர்கள் அல்லாதவர்களாகவோ இருக்க லாம்) மதிக்காத சுபாவம் இன்றும் மேலை நாடுகளில் தொடரவே செய்கிறது. ' புகலிடம் பெற்றுள்ள நாடுகளில் புலம் பெயர்ந்து சென்றுள்ளோர் புரிகின்ற ஊழல்கள், மோசடிகள், மற்றும் வன்முறைகள் இது தொடர்பான சுபாவத்தை மேலும் வளர்ப்பனவாக உள்ளதனையும் இவ்விடத்தில் குறிப்பிடல் வேண் டும். மேலை நாட்டவர்களது வேலை வாய்ப்புக்களில் புலம் பெயர்ந்து சென்றுள்ளோர் ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புக்களும் இவ்வாறான மன நிலையினைத் தோற்றுவிப்பதில் பெரும் பங்கினை ஆற்றி வருகின்
றன .(2)
1. திருநாவுக்கரசுய; (தொ ஆ )புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்:140-141
2. புலம்பெயர்ந்தவர்களிற் பெரும்பாலானோர் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யத்தயாராக உள்ளதால் தொழில்கொள்வோரும் அவர்களையே பெருமளவில் வேலைக்கு அமர்த்துகின்றனர்.
2

Page 22
நிறவேற்றுமை, நிறவாதம் தோற்றுவிக்கும் வெட்கம், அவலம் இவை யாவும் இத்தகு கவிதைகளில் இயல்பாக வெளிப்பட்டுள்ளமையினைப் பார்க்க முடிகிறது. புலம் பெயர்ந்த சூழலில் எல்லோருமே தம்மைத் தலித்துக்களாகவே பாவனை செய்வதனை யும் காணமுடிகிறது. வெள்ளைக்காரனின் மேலாண் மைக்குள் எந்தவிதமான வேலைகளையும் வயிற்றுப் பிழைப்புக்காகவும், மேலதிக வருமானத்துக்காகவும் செய்ய வேண்டிய நிலையிலேயே இவர்கள் இருக்கின் றார்கள். இந்நிலையானது தமிழ்ச்சமூகத்தின் பாரம் பரியமான சமூக அதிகார அடுக்கு நிலையினையும் கேள்விக்குரியதாக ஆக்கி வருவதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
இயந்திரமயமான வாழ்வு
மேலைநாட்டு வாழ்க்கை முறையானது இயல் பாகவே இயந்திரமயமானது. உயிர்வாழ்வதற்கா கவும்; மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்காகவும்; ஊரில் பட்டுவந்த கடன்களை அடைக்க வேண்டியும்; ஓடி ஓடி உழைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புலம் பெயர்ந்தோரில் பலருக்கு இருந்திருக்கிறது. கண வன், மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு விதமான “நேரகுசி யில்” (TimeTable) பொதுவான ஒரு இணக்கப்பாட்டில் வேலைக்குச் செல்லும் நிலையினைப் பார்க்க
முடிகிறது. கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள்

ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுவது, ஒரே மேசையில் அமர்ந்து உணவு அருந்துவது கூட கிழமைக்கணக்கில் இழுபடும் நிலை கூட இருந்து வருகிறது. பாரம்பரிய மாக மனைவியிடமிருந்து அன்புரிமையுடன் எதிர் பார்க்கும் பல்வேறு பணிவிடைகளையும் கணவன் மார்கள் பலரும் பணம் உழைப்பதான முயற்சியில் விட்டுக் கொடுத்து வருவதனையும் அவதானிக்க முடிகிறது.'
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மொழிகளில் குறிப்பிடுவதனால் இவர்களின் நிலையை "செக்கு மாடுகளுக்கு இணையாகவே கருதமுடிகிறது. ஊரில் உள்ள இரத்த உறவுகளின் மிகையான பொருளாதார எதிர்பார்ப்பு இவர்களின் 2 L6l); உளநிலைகளை; வாழ்வுச்சூழல்களைப்பெரிதும் பாதிப்பனவாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலை “ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்” என்ற தலைப்பிலான சுகனின் கவிதை மிக அழகாக ஆவணப்படுத்தி யுள்ளது.
“எங்கள் பரமபிதாவே
சீதனத்தின் பாதித்தொகை
1. மனைவியின் பரிமாறலை எதிர்பாராது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவுவகைகளைத் தாமே எடுத்துச் சூடுகாட்டிச் சாப்பிடும் கணவன்மார் தொகை அதிகமாக உள்ளது.

Page 23
ஏஜென்சிக்குப்போய்விட்டது அரை வருடச்சம்பளத்தின் மிச்சம் சீட்டுக்கழிவுக்குப் போய்விட்டது ஒருமாதச் சம்பளம் இயக்கத்துக்குப் போனபின் எனக்கென்று ஆணிச்செருப்புக்கூட வாங்கமுடியாமலிருப்பதேன் உயிர்த்தெழுந்த யேசுவே! வேலைக்குப் போகும்போது தூக்கத்தில் அருகில் இருக்கும் பெண்ணின் மேல்சாய அவள் சிரிக்க பதிலுக்குக் கூடசிரிக்கமுடியாது வேலை என்னைத் துரத்துகிறது எனது ஆண்டவரே! விடியலுக்குச் சற்று முன் தூங்குகிறேன் காலை எழுந்து ஓடுகிறேன் மிகச் சிறந்தமேய்ப்பரே! உம்மிடம் இறைஞ்சிக் கேட்கிறேன் எனது தேசத்தில் என்ன நடக்கிறது? இந்த நற்செய்தியை மட்டும் சொல்லியருளும் şQLDesir") என்ற கவிதை, புலம்பெயர்ந்த சூழலின் இயந்திர மான வாழ்வுச்சூழலை மிகவும் விஸ்தாரமாக விவரிப்
1. திருநாவுக்கரசு.ப;(தொ.ஆ); புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,
பக்123-124

பதாக அமைந்துள்ளது. சொந்த நாட்டில், சொந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கூடக் கிரகிக்க முடியாத அவசரமான உலகத்தில் வாழும் தமிழ்ச்சமூகத்தின் அவலத்தினி ஆவணங்களாக இக்கவிதை வரிகள் காட்சி தருகின்றன.
“நினைவுத் தொடரில்" என்ற தலைப்பிலான பாமினியின் கவிதைவரிகள்,
“இயற்கை இழந்த
இயந்திரம் விழுங்கிய
தலைநகரில் எனது
நாட்களை இழக்க
நிர்ப்பந்திக்கப்பட்டேன்"
எனவும், “இரணர் டாவது பிறப்பு” என்ற தலைப்பிலான அருந்ததியின் கவிதைவரிகள்,
கரைந்துகொண்டிருக்கிறது காலம் வெயில் நேரத்து
தெருக்களில் உறைந்த பனிக்கட்டிகளைப் போல.
வாழ்க்கையை ஆற்றிலே தொலைத்து குளத்திலே தேடும் சுந்தரர்களாய் இரண்டாவது பிறப்பெடுக்கத் தற்கொலை புரிந்தவர்கள்
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ); புலம் பெயர்ந்தோர் கவிதைகள், ப77
3.

Page 24
கண்களை விற்றுச் சித்திரம் வாங்கி காட்சிப் பொருட்களாய்" (1) எனவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் வாழ்வதற்காகப் படுகின்ற பாடுகளை இயல்பாக விளக்குவனவாக அமைந்துள்ளன. தாயகத்திலுள்ள உறவுகளுக்குப் பணம் அனுப்பவேண்டியும், மேலை நாடுகளின் அதிகரித்த வாழ்க்கைச் செலவுகளைச் சரிக்கட்ட வேண் டியும் இயந்திரமாக இவர்கள் , உழைக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்நியமனோபாவம்
முன்பின் அறிமுகம் இல்லாத நாட்டில் முற்றிலும் புதியதான ஒரு வாழ்வியற் சூழலில் தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கும் நிலையில் ஏற்படுகின்ற அந்நிய மனப்பான்மையின் வெளிப்பாடுகளாகப் பல்வேறு கவிதைகள் காணப்படுகின்றன. நிறம், மொழி, நடையுடை பாவனை, இனம், முதலியன எல்லாமே இவ்விதமனோநிலையின் வெளிப்பாட் டுக்கு காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
"பெயர் தெரியாத சிறகுகள் முளைக்காத
இதபுரம்
ஆடு (1) சின்னக்குருவி
என் சின்ன அறையில்
அ அ சின்னஞ்சிறு குருவிக்கிருக்கும்
1, 2, த, நக கூடு கட்டும் தகைமைகூட
கோர்ட்
1. திருநாவுக்கரசு..;(தொ.ஆ); புலம் பெயர்ந்தோர் கவிதைகள், பக்.94-95
|33

எனக்கு
இல்லை
சின்னக்குஞ்சு என்ன தான் தின்னுமாக்கும்? எண் அறிவுக்கு எட்டவில்லை நேற்று வரை தாயின் கூட்டில்! இன்று அந்நியமாகிப் போன என்னுடன்
கீக்.கீ.என பசியால் கத்தும் சின்னக்குருவிக்கு திண்னக்கொடுக்க என்ன உண்டு என்னிடம்? பழஞ்சோற்றுப்பருக்கைகளை எட்டிப் பார்த்தேன் பழக்கமில்லாத குருவி துப்பிவிட்டது அந்நியமாகிப் போன என்னுடன் என்சின்ன அறையில் என்னுடன்")
என்ற கவிதைவரிகள் புலம் பெயர்ந்தோரிடத் துள்ள அந்நிய மனோபாவ நிலையினை மிகவும்
கலாபுர்வமாகச் சிக்கிரிப்பனவாக உள்ளன.
닝 த
1. மேற்கோள்; செ.யோகராசா, புலம்பெயர் கலாசாரமும் புகலிட
இலக்கியங்களும் - ப51.

Page 25
தாயகச் சூழலில் இருந்து பிய்த்தெறியப்பட்டு அந்நியமாகிப் போனவனுக்குத் துணையாகச் சின்னக் குருவி மட்டும் உடனிருக்கிறது என்பதனூடாக அவனுடைய தனிமைச்சூழல் குறியீடாக வெளிப்படுத் தப்பட்டுள்ளது. பழஞ்சோற்றுப் பருக்கைகளைப் பழக்கமில்லாத குருவி துப்பிவிட்டது' என்றவாறாக அமைகின்ற கவிதை வரிகள் தாயகம் குறித்த ஏக்கத்தின் பிரதிபலிப்புக்களாக அமைந்துள்ளன.
தாய் நாட்டின் அவலநிலைகளால் சொந்தங் களை, சுற்றங்களைவிட்டுப் பிரிந்து வந்தவனுக்கு புகலிட நாட்டின் தனிமை கொடுமையாவதை வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைவரிகள் பின்வருமாறு விவரித்துள்ளன.
"நான் மந்தையைப் பிரிந்த தனி ஆடு
போர் என்ற ஒநாயின்
பிடிஉதறித்தப்பிய நான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிரில் கூட
வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின்
நாடு வந்தேன்
நமக்கிடையே
ஏழுகடலும் இணைந்தன்றோ கிடக்கிறது
"விசா" என்ற பெயரில்"
1. ஜெயபாலன்.வ.ஐ.ச; வஐச.ஜெயபாலன் கவிதைகள் - பெருந்தொகை:
ப.101

புலம் பெயர்ந்து சென்றவனுக்கு வதிவிட “விசா" எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை ஏழுகடலுடன் தொடர்புபடுத்தியுள்ளது இக்கவிதை.
தனிமை தந்த சூழலில் உறவுகளை எண்ணி
ஏங்கித் தவிக்கும் ஜோர்ச். இ.குருசேவின் “தனிமை” என்ற தலைப்பிலான கவிதைவரிகள் பின்வருமாறு அமைகின்றன.
"நிழல் மட்டுமே துணையான தனிமை சுற்றி வரக்காடுகள் மனிதர்களாக முட்களாய் குத்தும் உறவுகள் நான் தனிமையில் வெறுமையாக என்றோ தொலைந்துபோன என்னைத்தேட விரும்பாத உறவுகள் அன்புக்காக ஏங்கி நின்ற தேடலில் தாய் காதலி நட்பு
LD6RT நேசித்தஎல்லாமே பொய்மையின் நிஜங்கள் உயிர்கள் கைகளிலே! உறவுகள் எப்படித்தொடரும்? சிரிப்பதற்குச் சேரும்

Page 26
சொந்தங்கள்
அழும்போது மட்டும்
மறக்கப்படும்
எது நிஜம்
நான் நானாக
6Tg5 SAD6)
எனக்கு நான்
எதைத்தேடி?
எனக்குள்ளே என்னை
வெறும் சடங்குகளில்
சமுத்திரத்தில்
நான்
தனிமையில் வெறுமையாக
எப்போது
என்னை அன்பு
துளிர்க்க வைக்கும்"
‘எப்போது எண்னை அன்பு துளிர்க்க வைக்கும்' என்ற கவிதைவரிகள் உறவுகளைப் பிரிந்து உயிர்ப் பிழந்து போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான புலப் பெயர்வாளர்களின் மணிநிலை வெளிப்பாடுகளாக
உள்ளன.
புலம்பெயர்ந்து சென்றோரிற் பலர் வருடக்கணக் கில் குடும்பங்களைப் பிரிந்து இருப்பது என்பது சாதாரணமான ஒரு நிலையாகக் காணப்படுகிறது. மணம் முடித்தோர் மணம் முடித்த கையுடன் வெளி
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ); புலம் பெயர்ந்தோர் கவிதைகள்;பக்118-119
37

நாடு சென்று சிலவருடங்களின் பின்னர் மனைவி யைத் தம்முடன் அழைத்துக்கொள்வதும், குழந்தை பிறந்தவுடன் பிரிந்துசென்றவர்கள் தமது பிள்ளை களின் சாமத்தியச் சடங்கு, திருமணச் சடங்கு முதலான “நல்லது கெட்டது'களில் பங்கெடுப்பதும் பரவலாகக் காணக்கூடிய காட்சிகளாக உள்ளன. குடும்பத்தைப் பிரிந்து வந்து வருடக்கணக்கில் கடிதத்திலேயே குடும்பம் நடாத்தும் ஆயிரக் கணக்கான தமிழர்களின் சோகத்தைச் சுமந்து நிற்கும் செல்வத்தின் கவிதை வரிகள்
“இந்தத் தேசத்தில்
நாங்களோ
கடிதங்களில் வாழும் மனிதரானோம்
ஐந்து வருடங்கள்
மனைவியுடனும் சின்ன மகனுடனும்
கடிதத்தில் குடும்பம் நடத்தும்
என் நண்பன்
எட்டு வருடங்கள்
தாயின் முகத்தை
கடிதத்தில் தேடும் என் மச்சான்
கடிதங்களில் வாழும் மனிதர்களானோம்
உருத்துக்கள் உறவுகள்
நெருப்புக்குள் வாழ.
அவர்கள் இருப்பின் சுகமறிய
காலைகள் விடிந்ததும்
கடிதங்களைத் தேடுகிறோம்
வீட்டுக்கு வெளியே குளிர் கொட்ட
நெஞ்சுக்கூடு நெருப்புக்குள் அவியுது

Page 27
இருப்பதற்காய் வாழாமல் மற்ற மனிதரைப் போல்
வாழ்வதற்காய் இருக்கும்
காலங்கள் வர GaussarGib'
இக்கவிதைவரிகள் சுமந்து நிற்கின்ற சோகங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. “வீட்டுக்கு வெளியே குளிர் கொட்ட நெஞ்சுக் கூடு நெருப்புக்குள் அவிகின்ற மனோநிலையிலேயே பெரும்பாலான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தாயகத்தில் நிலவிய போர்ச்சூழலில் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்ததோ என்ற ஏக்கம் இவர்களை இயல்பாக இருக்கவிடவில்லை. வெளிநாட்டுக் "கவர்களைத் தாங்கி வருகின்ற கடிதங்களைக் காணர் கையில் இவர்களின் முகங்கள் அடையும் பிரகாசத்தினைப் பல்வேறு கவிதைகளும் பதிவு செய்துள்ளன. “வாழ்வதற்காக இருக்கும்' மேலைநாட்டினரது வாழ்வியல், புலம்பெயர்ந்த தமிழர்களைப் பெரிதும் பாதித்துள்ளமையினைப் பரவலாகக் காணமுடிகிறது.
"நாங்கள் நல்ல சுகம்
உங்கள் சுகம் எப்படி
பொய் எழுதி பொய் எழுதி
பேனாவே நகைக்கிறது"?
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ); புலம் பெயர்ந்தோர் கவிதைகள் பக்:53-64. 2. மேலது; ப85
39

எனவரும் கவிதைவரிகள், கடிதங்கள் சுமந்து வரும் சம்பிருதாயபூர்வமான வாசகங்களின் பொய்ம்
மைகளை எள்ளி நகையாடுவதாக அமைந்துள்ளன.")
“பணித்துளி வாழ்வு” என்ற தலைப்பிலான அர்ச்சனாவின் கவிதை வரிகள் வருமாறு,
"உனக்கென்ன வெளிநாட்டில்
ராசா வாழ்க்கை
செலவுக்குப் பணம் கேட்டு வருகின்ற
தபால்களின் கேலிகள்
குளிர்காற்று மோதும் சாமங்களில் தூக்கம் கலைந்து தனிமைச் சிறையில் அடைபட்ட கைதியாய் நெஞ்சில் மூச்சு அடைபட ஓவென ஜன்னலைத் திறந்து வயற்பரப்பில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும் ஒருரழை விவசாயியைப்போல கணிகளைக் கூராக்கி பார்வையைச் செலுத்தித் தேடுவேன் எங்கே இருக்கிறது
எனது 5rrusitibo"o
1. தனது பிரச்சினைகளை எழுதினால் அப்பா, அம்மா மற்றும் சகோதரர் கள் கவலைப்படுவார்கள் என மகனும்; தங்களுடைய இட்டல், இடைஞ்சல்களை உள்ளபடி எழுதினால் மகன் கவலைப்படுவான் எனப் பெற்றோரும் நினைப்பதனால் பலவிடயங்களை இருதரப்பாரும் மறைத்தே கடிதங்கள் எழுதுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
2. திருநாவுக்கரசுப;(தொ.ஆ)புலம்பெயர்ந்தோர் கவிதைகள்,ப-108

Page 28
தாயகம் பற்றி ஏக்கத்தின் உச்ச நிலை வெளிப் பாடுகளாக இக்கவிதைவரிகள் அமைந்துள்ளன. வெளிநாட்டில் உள்ளவர்கள் தொடர்பாகத் தாயகத் தில் இருப்பவர்கள் கொண்டிருக்கின்ற, மனநிலை வெளிப்பாட்டையும், வெளிநாடுகளில் தமிழர்கள் தாயகத்து நினைவுகளால் (நாடு, இனம், உறவு, சுற்றம்.)படுகின்ற அவஸ்தைகளையும் இங்கே கலாபூர்வமாகப் பார்க்கமுடிகிறது.
அகதி உணர்வு v
புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்து சென்றுள்ள நாடுகளில் மேற்கொள்கின்ற, பார்க்கின்ற ஒவ்வொரு அசைவுகளிலும் "அகதி" என்ற உணர்வையே காண்கின்றனர். இந்த அவல நிலையின் வெளிப்பாடுகளாகப் பல்வேறு கவிதைகள் காணப்படுகின்றன. புலம்பெயர் இலக்கியங்களில் கவிதைகளிலேயே இந்த உணர்வைத் துல்லியமாக அவதானிக்க முடிகிறது.
மனித எண்ணங்கள் அனைத்திலும் அகதி நிலை உணர்வின் வெளிப்பாட்டைச் சுட்டி நிற்கும் கவிதை,
"நான் மட்டும் அசைவது போல்
எழும் நினைப்பிலும் கூட
அகதி என உணர்கிறேன்"
என இந்த அவலத்தினைக் குறிப்பிடுகிறது.

புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள மக்கள், புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழர்களுக்கு அகதி முகம் பொருத்தி மகிழ்ச்சி கொள்ளும் மனநிலையி னைக் கண்டு வருந்துவதனையும் கவிதைகள் சில காட்டி நிற்கின்றன.
“அகதிமுகம் பெறவா
உயிர்க்களையை
நான் இழந்தேன்"
"கனவுப் பணம்தேட
கடல் கடந்தோம்
நானும் நாங்களும்
அகதித் தரையில்
முகமிழந்தோம்"
கவிதைகளை, கவிஞர்களைப் பிறருக்கு அறி முகப்படுத்துவதான சூழல்களில் கூட “அகதி" உணர் வின் வெளிப்பாட்டைக் காணமுடிகிறது.
“செல் அடிக்குத்தப்புவது எப்படி
6T6
கற்றுக்கொண்டஒரு தேசத்தின்
அகதிகளாய் ஆகினோம்”
“நாமோ இரத்தவாடை மிதந்து வரும் செய்திகளில் அழும் எங்கள் மனங்களும் எங்களுக்காய்க் காத்திருக்கும் கோப்பைகளுடன்
42

Page 29
ஆலை இயந்திரங்களுடன்
போராடும் கரங்களுமாய்
அகதிகளானோம்"
என்பதாக அமையும் கவிதைகள் எல்லா வற்றிலும் “அகதி’ என்ற உணர்வும், அது தந்த சோக மும் கலந்து இழையோடி இருப்பதனைக் காண முடிகிறது. இவ்வுணர்வானது ஒரு வகையான தாழ்வுச்சிக்கலையும் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு ஏற்படுத்தி உள்ளதையும் பார்க்க முடிகிறது.
“நாராய் நாராய்” என்ற தலைப்பிலான சி.சிவசேகரத்தின் கவிதைவரிகள் வருமாறு அமைந் துள்ளன.
“நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படுபனையின் கிழங்கு பிளந்து பயன் மிகு அறிந்த பனை செறி நாட்டார் வழிபல சென்றே பலதிசைப் பரந்தார் வருகுவதெந்நாள் அறிவையோ நாராய் திரைகடல் ஒடித் தம்முயிர் பேணத் திரிந்தவர் தமக்கோ எங்கணும்அவலம் கரியவர் அயலவர் என வசைகேட்போர் கவலைகள் நீயும் உணர்வையோ நாராய் அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி அந்நில மண்ணில் அண்டிக் கிடந்து மிக நலி மாந்தர் தம்நகர் மீளும்
1. மேற்கோள், சுதர்சன், செ, புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் அகதி
உணர்வு,
43

வகையென ஒன்றேன் மொழிவையோ நாராய் பெருங்குளிர் வருமுன் கடல்பல தாண்டிப் புலம்பெயர் புள்நீ கிளையுடன் மீண்டும் வருகுவை நின்மண் தவறுதல் இன்றி பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நாராய் நினக்கோ யாதும் ஊரே நாராய் நின் இனம் யாவரும் கேளிர் பாராய் எங்கள் மனிதரின் நிலையை நாராய் நமக்கோர் நல்வழி கூறாய்" அகதி வாழ்வின் அவலங்கள் நீங்கி, கரியவர், அயலவர் முதலான வசைமொழிகளிலிருந்து மீண்டு, தமது சொந்தத் தாயகத்துக்கு எப்போது சென்றடை வோம் என்ற ஏக்கத்தினை இக்கவிதை வரிகள் உணர்த்தி நிற்கின்றன. உடலை வாட்டி எடுக்கும் பெருங்குளிர்க் காலத்தைத் தவிர்த்தல் வேண்டிக் கடல்பல தாண்டிச் செல்லும் துருவப் பறவைகள், மீண்டும் தம் கிளையுடன் தாயகத்துக்கு மீள்வதான காட்சிகள், புலம்பெயர்ந்து நைந்து வாழ்கின்ற தமிழர்களை மேலும் வருத்துவனவாக அமைந்துள் ளன. “பயண் மிக அறிந்த’ பனை செறிநாட்டாரது ‘கையறு நிலையினை இக்கவிதை மிகவும் துல்லிய மாக விளக்கி நிற்கின்றது.
மேலைநாடுகளில் அகதியாக வாழ்வதில் புலம் பெயர்ந்தோர் எதிர்கொண்டு வருகின்ற ஏளனப்
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ)புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப-35

Page 30
பார்வைகளை மேலும் பல கவிதை வரிகளிலே கண்டு கொள்ள முடிகிறது. தாம் சென்றடைந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்குவதற்கு “அகதி அந்தஸ்தைக்” கோரி நின்றோர் பின்னர் அந்த அந்தஸ்தையே ஒரு இழிநிலையாகக் கருதினர்.
கோடைக்கும் குளிருக்கும் ஏற்றதாய் வாழ்வை ரசிக்கும் மனிதரின் உலகில் கோடைகாலத்து சலனம் ஏதுமில்லை என்னிடம் இன்று என் நினைப்பெல்லாம் முற்றுப்பெறாத ஒரு அகதி விண்ணப்பம் பற்றியதாய் இருக்கிறது மழைக்காலப் பொழுதில் அகதியான தேசத்தையும் மனிதரையும் கூட மறந்து நாளாயிற்று மறுகரையில் காத்திருக்கும் மனைவிக்கு முற்றுப்பெறாத எண் விண்ணப்பம் பற்றி புதிதாய்க் கூற ஒரு வாக்குறுதி தேவை யார் தருவீர் மேன்மையானவரே கோடையில் துயருற்றிருக்கும் என்னையும் ஒரு அகதியாய் ஏற்றுக்கொள்ள மாட்டீரோ?"
உயிர்ப் பாதுகாப்புத் தேடியும், பொருள் தேடியும் சென்ற புலப்பெயர்வாளர்களுக்குத் தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள அகதி
அந்தஸ்துத் தேவைப்பட்டது. “அகதி" எனப்
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப-108

பெருமை கொள்வதில் இருந்த பெருமை நீங்கி, தங்களையும் அவ்வந் நாடுகளின் “நஷனாலிற்றி களாக'க் (Nationality) காட்டும் பெருவிருப்பிலேயே இன்று பலரும் இருக்கின்றனர். யாழ்ப்பாணத்துச் சீதனச் சந்தையில் “நஷனா லிற்றி” மற்றும் "S.-gir' (Permanent resident) g 6ft 6T DIT' 6ft 6061Tas ளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
“அகதி வாழ்வின்
அவலமும்
நிறமுகூர்த்தத்தில்
வெள்ளையாய் இல்லாமையும்
நையாண்டிப் பேச்சுக்கள்
துளைத்தெடுக்க
வாழ்வுகூனிக்குறுகும்"
எனவரும் கவிதைவரிகள் அகதிகளாகவும் கறுப்பர்களாகவும் எம்மவர்கள் சந்தித்து வருகின்ற
அவமானங்களின் சாட்சிகளாக உள்ளன.
“ஊரிலிருந்து ஒரு கடிதம்' என்ற தலைப்பிலான மைத்திரேயியின் கவிதை வரிகள் சொந்தநாட்டில் அகதியாக வாழ்வதற்கும், பிறநாட்டில் அகதியாக வாழ்வதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு உணர்த்தி நிற்கின்றன.
“சொந்தமண்ணிலேயே
அகதியாய் வாழ்வதற்கும்
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப-110
46

Page 31
அந்நிய மண்ணில் அகதியாய் வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்? என்று நீ கேட்கலாம் ஆனால்
31 'இருப்புக்கும்' 'வாழ்வுக்கும்' என்ன வித்தியாசமென்று
த) வல்நான் சொல்லத் தேவையில்லை” (1)
என வருகின்ற கவிதைவரிகள் வாழ்வதற்காக அகதியாகத் தமி ழர்கள் உலகெங்கும் படுகின்ற இழி நிலைகளைக் குறியீடாக வெளிப்படுத்தி நிற்கின்றன.
48 185
பிப் 2012 தாயகம் பற்றிய ஏக்கம்
ன் புலம் பெயர் கவிதைகளின் உள்ளீடுகளில் பெரும்பாலானவை தாயகம் பற்றிய ஏக்கங்களாகவே காணப்படுகின்றன. இந்த ஏக்கமானது தாயகம் பற்றியதாகவோ(ஊர், நாடு), குடும்பம் பற்றியதாக வோ இன்னும் இவை தவிர்ந்த பிற விடயங்கள் பற்றியதாகவோ வெளிப்படலாம். இந்த ஏக்கத்தினை எழுத்தில் வடிக்கும் பாங்கு மிக அற்புதமாக அமைந்தி ருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
21 22 ம்
"ஏக்கம்" என்ற தலைப்பில் ராஜாத்தி எழுதிய கவிதை பின்வருமாறு அமைந்துள்ளது.
1. திருநாவுக்கரசுப (தொ.ஆ)புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப-48
'47)

“கோரப்பனிக்குளிரில் உதடுகள் வெடித்து உதிரம் சொட்ட உறக்கமிழந்த அந்த இரவில் ஸ்ரேலிங் பவுண்களை எண்ணுகிறபோது
உனது நினைவுகள் என்னை ஓலமிட்டுஅழவைக்கும் இன்னும் எனக்குஞாபகமிருக்கு அப்போ எனக்கு பன்னிரண்டு வயதிருக்கும் நம் வீட்டு முன்றலிலே நான் தடுக்கி விழுந்து என்உதட்டில் மெல்லியதான கீறலுக்கே நீஓவென்று அழுதாயே இங்கே எனக்காய் அழுவதற்கு யாரிருக்கார் இந்த ஐரோப்பிய நாட்டில்
அனாதையாய்
வெந்துபோகிறது மனது
எப்போது என் நாட்டில்
எப்போது என் வீட்டில்
எப்போது உன்மடியில்."
தாயையும், தாய்நாட்டையும் பிரிந்தவனின் சோகங்களைப் பல்வேறு நிலைகளில் இக்கவிதையி
1. மேற்கோள், கொன்ஸ்ரன்ரைன்; புலம்பெயர்தலும் புலம்பெயர்ந்த
ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும் - ப-21.
48

Page 32
னுடே தரிசிக்க முடிகிறது. இக்கவிதையின் இறுதி அடிகள் தாயகம் குறித்த ஏக்கத்தின் பல்வேறு தளங்களையும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்
6T6T.
தமயந்தியின் கவிதை வரிகள் பின்வருமாறு இந்தச் சோகத்தினை உணர்த்துகின்றன
“என்னைப் பிரிந்தஎனது தேசவனப்பும் வனப்பின் எழிலுஞ்சிறப்பும் காதல் கொண்டகடலுங்கரையும் எல்லாம் எனக்கு மீளவேண்டும்
யாரிடம் சென்று விண்ணப்பம் செய்வேன் பனிமலைச் சுவரில் பட்டியல் எழுதி பனிமுகிலிடமா முறையிட்டழுவேன்." புலம் பெயர்தேசம் தந்த புதிய சூழலில் தாயகம் பற்றிய ஏக்கம் பீறிடுகிறது. ஊர், உறவுகளுடன் கூடி உறவாடி இருந்த அந்த நாட்களை ஏக்கத்தோடு இரை மீட்கும் கவிதைவரிகள்.
“ஒரு சனிக்கிழமையாய் இருக்கும் கிணற்றடியில் இறைத்துக்கொண்டிருக்கும் தண்ணிரில்அள்ளித்தோய்ந்து பலா இலையை மடித்துக்கோலி ஈர்க்கில் துண்டைமுறித்துச்செருகி ஒடியல் மீன் கூழை வார்த்து அம்மா, அப்பா, தம்பி, ஆச்சியென சுற்றம் சூழ இருந்து
49

உறிஞ்சிக்குடித்த நாட்கள் உங்களுக்கும்நினைவுக்குவரக்கூடும் இழந்தோம் நாட்களை இழந்தோம் பதிவுகளை இழந்தோம். தேசத்தையும் மண்ணையும் மொழியையும் மறந்து புதிய தலைமுறை வளர்கிறது அகதிகள் கூட்டத்தின் முகங்களை இழக்கும் முகமூடிமனிதர்களுடன் பேசுவதற்கு அதிகம் இல்லை
நான் என் தேசத்திற்குச் செல்வேன் தேசம் எரிகின்றபோதும் அது எழுகின்றபோதும் வாழ்கின்ற என் தேசத்து மனிதர்களோடு புன்னகை செய்வேன்")
என்பதாக அமைகின்ற இக்கவிதைகளிலே குடும்ப உறவுகளைப் பிரிந்த ஏக்கம் பலவாறு வெளிப் பட்டு நிற்கின்றது. அத்துடன் தேசம் பற்றி எரிகையிலே அதனை விட்டுவிட்டு வந்த குற்ற
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ);புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்-68-89

Page 33
உணர்வையும் இக்கவிதையிலே கண்டுகொள்ள
முடிகிறது.
இயந்திரமயமான சூழலிலே தனி ஊரினர் நினைப்பு மேலிடுகிறது. சூரியஒளி, செம்மண், செம்பருத்திப்பூ தென்னோலை இவை எல்லாமே கனவுப்பொருட்களாக, கைக்கெட்டாப் பொருட்களா கிப் போனமை குறித்து வருந்துவதான கவிதை வரி கள் வருமாறு.
“சிறுகுருவி வீடுகட்டும் தென்னோலை பாட்டிசைக்கும் சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவைப் புணரும்என் ஊரின் இருப்பிழந்தேன் அலையெழுப்பும் கடலோரம் ஒரு விடும் செம்மண் பாதையோரம்ஒர் தோட்டமும்" சொந்தநாட்டின் மக்கள், போர் தந்த கொடுமை களைத் தாங்கி மண்ணை விட்டகலாதிருக்க, தாய கத்தையும் அதன் மீதான வாழ்வையும் தொலைத்து வந்தவன் வெட்கப்படுகிறான். வேதனைப்படுகிறான். “நிலவுக்குப் போதல்” என்ற தலைப்பிலான தா.பாலகணேசனின் கவிதை வரிகள் புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களின் மனப்பிரதிபலிப்புக் களை அச்சொட்டாகப் பதிவு செய்துள்ளன.
"..என் வாழ்வோடிருந்த நிலவில் நெருப்புப் பிடிக்கையில்
1. செல்வம், கட்டிடக் காட்டுக்குள் - ப-29.
S

பிடில் வாசித்தவனின் பேரப்பிள்ளையாகி ஊரைக் கடந்தவன் செம்புள்ளியும் கரும்புள்ளியும் குத்திக்குத்தி மனது காயப்படுகிறது ஆண்டி குண்டிமணிணைத் தட்டிவிடுகிறாற்போலவா எல்லாம் முடிந்தது. நேர்த்திக்கடன்பூண்ட செதில் காவடி ஆட்டக்காரன் போல் தேகமெல்லாம் குத்தி இருக்கிற கோடி வதைகள்." மூடுபனிக்குள் சபிக்கப்பட்டது என்வாழ்வு" மாட்சிமிக்க மணிணின் வாழ்வு மங்கிய நிழற்படச் சுருள்களாக மனக் கண்ணில் விரிந்து மானுடத்தைசதா உறுத்தும் ஆயினும் இன்னும் அகதி மனிதன் நான் நிலவுக்குப் போகிற கனவோடுதான் இருக்கிறேன்" நடுங்கவைக்கும் குளிரினிலும் நாடுவிட்டு நாடு பாயாமல் தன் சொந்த மண்ணிலேயே கால் பதித்து
1. திருநாவுக்கரசுப்;(தொ.ஆ);புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்: 127-128.

Page 34
நிற்கும் “மக்பை என்ற பறவையைப் பார்க்கும் போது புலம்பெயர்ந்தவனுக்கு “வெட்கம்" மேலிடுகிறது. தாயகத்தைப் பிரிந்த வெட்கம் குற்ற உணர்வாக வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை வரிகளினூடே வெளிப்படுகின்றது.
*மக்பாய் மக்பாய்
எல்லாப் பறவைகளும்
என்னுடையதாய் நாட்டின் திசைகளிலே
சூரியனைத்தேடிப்புலம்பெயரும்
குளிர்நாளில்
நீ மட்டுமிந்தத்துருவத்தில் தரித்தென்ன?
துருவத்துப் பறவைகளே தேடுமுந்தன் தாய்நாட்டை
வழிப்போக்கன்
குண்டி மண்ணைத்தட்டுவதுபோல்
தட்டிவிட்டு வந்தவன் நீ.
மக்பை சொல் தீக்கோலாய்
மனதில் குறிபோடும்."
“மக்பை” என்ற பறவை தாய் மண்ணின்மீதான அகலாத பற்றின் குறியீடாக இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது.
“இலையுதிர்கால நினைவுகள்” என்ற தலைப்பிலான வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை வரிகள் “வாழ்வை விற்று வாழ்வை வாங்கச்
1. ஜெயபாலன்வஐச; வஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்-பெருந்தொகை;
103

சபிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான யாழ்ப்பாணத்து இளைஞர்களின் குரல்களாக வெளிப்பட்டுள்ளன.
உலகெங்கும் வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற மனிதச்சருகுகளாய்ப்புரள்கின்றோம் என்ன நாம் தாய்நாடு ஓயாமல் இலை உதிர்க்கும் உயிர்ப்பிழந்தமுதுமரமா? யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வண்ணியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிறாங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா வந்துவிட்டஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம்குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்குகிழித்தெறியும் பஞ்சுத்தலையணையா?"
என அமைகின்ற கவிதைவரிகள், யாழ்ப்பாணத்
தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கும்
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ)புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப38.
S4

Page 35
பொருந்துவனவாகவே உள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திக்குக்கொன்றாகத் திசையெங்கும் பரந்து கிடந்து, நல்லது கெட்டது'களில் கூடப்பங் கெடுக்க முடியாமல் இருந்து வருவதை அறியாதார் இல்லை என்றே கூறலாம். குடும்பமே சீர்குலைந்து அவலப்படுகின்ற கொடுமையினை “விதிக்குரங்கு காற்றில் கிழித்தெறியும் பஞ்சுத் தலையணை’ என்ற உவமையினுாடே கவிஞர் சுட்டியிருப்பது எல்லோ ரையும் தங்கள் தங்கள் அனுபவங்களை அசைபோட வைப்பதாக உள்ளது. தாயகத்தை. உறவுகளை, சுற்றங்களைப் பிரிந்து மேலைப்புலங்களில் மனிதச் சருகுகளாக வருத்தப்படும் புலம்பெயர்ந்துள்ள மக்களின் மனோநிலையினை வ.ஐ.ச.ஜெயபாலன்
அருமையாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
நாடு என்பது வெறுமனே புவியியல் காட்சி மாத்திரமல்ல. அதற்கும் மேலாக உறவுகள், சுற்றம், குடும்பம் என எல்லாவற்றையும் அது சுமந்து நிற்கிறது. சொந்த நாட்டின் பெளதீக, கலாசார மற்றும் ஆன்மீகத் தளங்களின் பிரிவு புலம் பெயர்ந் துள்ள தமிழர்களைப் பெருமளவு பாதித்துள்ளமை யினைக் கவிதைகள் அச்சொட்டாகப் பிரதிபலித்து நிற்கின்றன. பிறந்த மண்ணின் நினைவுகளை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இக்கவிதைகளில் இயல்பாக வெளிப்பட்டு நிற்பத னைக் காணமுடிகிறது. அதற்கும் அப்பால் தமிழ்ச்
S
55

சமூகத்தினது இருப்பை வெளிப்படுத்தி நிற்கும் குறியீடுகளாகவும் இவற்றைக் கருதமுடியும்.
தகுதிக்கேற்ற தொழிலின்மை
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் புரிந்து வரும் தொழில்களுக்கும் அவர்களது கல்வி மற்றும் பிற தகைமைகளுக்கும் தொடர்பே இருப்பதாகத் தெரியவில்லை. நிறம் மற்றும் இன ரீதியான வேறுபாடுகள், அதிகபணம் உழைக்க வேண்டும் என் நிர்ப்பந்தம், வேலை யினர் மை முதலான காரணங்களினால் எந்த வேலையையும் செய்ய வேண்டி இருக்கிறது.
“ஒரு படிப்பாளியின்ஆதங்கங்கள்” என்ற தலைப் பிலான ஆனந்தபிரசாத்தின் ச விதை வரிகளை இவ்விடத்தில் தருதல் பொருத்தமானதாகும். "நானூறு பாகை நரகக் கொதிநிலையில் தானூறு வருகின்ற பீங்கானும் கோப்பைகளும் முக்காலும் தானுணர்ந்த முனிவர்கள்தாம் வளர்க்கும் அக்கினியின் கர்ப்பத்தில் அவை சுத்தமாகி வர கையால் தொடமுடியாத கருமம் பிடிச்ச சொதி மெய்யாலும் சூடேறி மெலிகின்ற நேரத்தே குளிர்ப்பதன் அறையினில் குதூகலம்தான் பழவகைகள் தளிரிலைகள் தின்று தாகம்தணித்திடலாம் குக்களின் பேயறுவை குறிப்பறிந்து சிரித்தாலோ அற்புதமாய் ஒருணவுஅன்பளிப்பாய் வீற்றிருக்கும் சற்றே இளைப்பாறி சலாட்டைஓர் கை பார்த்து

Page 36
மீண்டும்உயிர்பெற்றுமெசினருகே போனாலோ கோப்பை நிறைந்து குவிந்து வழிந்திருக்கும் சாப்பிட்டயாவுமே சடுதியில் மறைந்துவிட தட்டில் கிடப்பதை தட்டிவிடும்போதெல்லாம் பட்டப்படிப்பின் சான்றிதழ்களாய்த்தெரியும்" மேற்படி கவிதை வரிகள் முற்றிலும் புதியதான தொழிற்கள அனுபவங்களைப் பதிவு செய்வனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். புகலிடத தமிழர்களது விதம்விதமான தொழிற்கள அனுப வங்களை விவரிப்பது மாதிரியான கவிதைகள் அண்மைக் காலங்களில் கணிசமாக வெளிவரத்
தொடங்கி உள்ளன.
“இனி எழுந்து” என்ற தலைப்பிலான தேவி கணேசன் என்பவரது கவிதைவரிகள், வாழ்வியற் தேவைகளை நிறைவு செய்வதற்காகத் தங்களது படிப்பு, தகுதி, ஊதியம் எல்லாவற்றையுமே புறக்கணித்துவிட்டு “எந்த வேலையையும்" செய்யத் தயாராய் உள்ள பல்லாயிரக் கணக்கான சராசரி இளைஞர்களின் நிர்ப் பந்தங்களை எடுத்துக் கூறுவனவாக அமைந்துள்ளன.
“ஒவ்வொரு தொடக்கங்களிலும்
இடறி வீழ்கின்றேன்
மீண்டும் எழுவேன் எனும் நம்பிக்கையில்
1. மேற்கோள்; செ.யோகராசா, 'புலம்பெயர் கலாசாரமும்
புகலிடஇலக்கியங்களும் ப51.
S 7

வீழ்வது கவலையில்லை
யதார்த்தங்களை மறந்து போனதில்
அல்லது
நினைக்க மறுத்ததில்
இருப்புக்கள் தலைகீழாக
எத்தனங்கள் ஒவ்வொன்றும்
6Ter
சூழலிடத்தையே மாற்றியது
தகுதி - வேலை - ஊதியம்
சமன்பாடு குழம்பிய நிலையில்
இன்னுமொருமுதலாளித்துவத்தெருவில் நான்
ஒரு பிராங்கெனினும்
எண்வாதியம் பெருக்க
முதலாளி குண்டியைக் கூட
துடைக்கத் தயார்
என்னைப் பார்த்து
இன்னொரு துடைப்பான்
சிரிப்பதாயினும் சரி
இப்போது
யதார்த்தத்தைப் புரிந்த
9@
அகதித்தொழிலாளி நான்."
ஊதியத்தைப் பெருக்குவதற்காக எந்த வேலையை யும் முகம் சுழிக்காது செய்யக் கூடிய பக்குவ நிலைக்கு வாழ்வியல் தேவைகள் இவர்களை மாற்றியிருக் கின்றன. தாயகச் சூழலிலே இன்ன இன்னார் தான்
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ)புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப-132
S8

Page 37
இந்த இந்த வேலைகளைச் செய்வது என்ற மரபுவழியான வழக்கங்கள் எவையும் இவர்களைக் கட்டப்படுத்துவதாகத் தெரியவில்லை. ஆயினும் இந்தச் சமத்துவம் எல்லாம் வேலைத் தளங்களில் மட்டும் தானி என பதனையும் இவ் விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
“வீதியும் செம்மண்கால்களும்” என்ற தலைப்பி 6)6OT மணிவண்ணனது கவிதைவரிகள், “கறுப்பர் கள்”, “நாடோடிகள்” , “பிச்சைக்காரர்கள்” என வெள்ளைக்காரர்களால் இகழ்ந்து பேசப்படும் கீழைத் தேச நாட்டவர்களது உழைப்பினைச் சுரண்டும் வெள்ளைக்காரர்களது கொடுமையினைப் பின்வரு மாறு ஆவணப்படுத்தியுள்ளன.
தசை விழுங்கும்
இருமுதலைகளின்
தடித்த வாய்களின் கீழ்
ஒருதையல்கடைஇயங்குகிறது.
ஆபிரிக்க இளைஞன் ஒருவன்
ஆடைதைக்கத்தொடங்கினான்
உடுப்புக்கட்டொன்றை எடுத்தான்
வெட்டிய பாகங்களை மூட்டினான்
மூட்டிய பக்கங்கள்
மடித்தும்
பிளந்தும்
ஓர் துர்க்கிய இளைஞனால்
அயன் பிடிக்கப்பட்டன
பொக்கெற்போடும் இயந்திரத்தால்

அரபு பெண் பொக்கெற்றுக்களை போட்டுக் கொடுத்தாள் எஞ்சிய பக்கங்களை தைத்தான்
இரு கைப்பக்கங்களை மூட்டினான் பொலத்தைக்கும் இயந்திரத்தால் இருபக்கத் தோள் மூட்டிலும் பொலத்துகளை தைத்தான் மொறக் நாட்டு இளைஞன் துபிளியூர் தைக்கப்பட்டு பிறவளம் திருப்பப்பட்டது தெறி விளிம்புகள் பாகிஸ்தான் இளைஞனால்
அயன் பிடிக்கப்பட்டன ஓர் சீனுவா இளைஞனால் தெறி ஓட்டைகளும்
தெறிகளும்
அடிக்கப்பட்டன
சிறிலங்கனால் ஆடை அயன் பிடிக்கப்பட்டு துர்க்கிய பெண்ணால் நூல்கள் வெட்டப்பட்டு உறையிடப்படுகிறது
460L.
53% Polyester
43%Laine
4%Lycra
MadeinFrance"()
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.146-147

Page 38
என அமைந்துள்ள கவிதை வரிகள் துருக்கி, அரபு, மொறாக்கோ, பாகிஸ்தான், சீனா, சிறிலங்கா முதலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களால் உருவாக்கப்படும் உற்பத்திப் பொருட்களுக்கு வெள்ளைக்காரன் மிகச் சுலபமாக ‘உற்பத்தியுரிமை கோருவதனை வெளிப்படுத்தி நிற்கின்றன. மிகக் குறைந்த ஊழியத்தில் கீழைத்தேச நாட்டவர்களது மனித வளங்களைப் பயன்படுத்தும் மேலைநாட்டாரது கொடுமைகளையும்
இக்கவிதையினுாடே தெரிந்து கொள்ள முடிகிறது.
புதிய பண்பாட்டுச் சூழல்
எந்த ஒரு இனமும் தனது பணர்பாட்டையும் அப்பண்பாட்டின் உப கூறாகிய மொழியையும் எவ்வா றான சூழல்களிலும் விட்டுக்கொடுக்க விரும்புவ தில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அவர்களது பண்பாட்டின் அடையாளங்களைத் தாம் சென்ற டைந்த தேசங்களில் பேணுவது, பேணி அடுத்த தலை முறையினர்க்குக் கையளிப்பது முதலான விடயங்கள் பிரதானமான சவால்களாகவே உள்ளன. புலம் பெயர்ந்து சென்றோரில் பெரும்பாலானோர் தாம் சென்றடைந்துள்ள நாடுகளிலும் தாய் மண்ணினது நினைவுகளுடனேயே வாழ்வது பற்றிப் பல்வேறு கவிதைகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தமிழ் மொழிப் பயில் வு, நாட்டியப் பயில் வு, கர்நாடக இசைப் பயில்வு, வாத்தியப் பயில்வுகள்,

யாழ்ப் பாணத்து மேளக்கச்சேரி, குளிர்வாட்டி யெடுக் கும் பனிபடர்ந்த தெருக்களில் அங்கப் பிரதட்சணம், விரத அனுட்டானங்கள், தேரிழுப்பு முதலான இவை எல்லாமே தமிழ்ப்பண்பாடு பற்றிய பிரக்ஞையின் வடிகால்களாகவே தோற்றமளிக்கின்றன. கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், கலாசார விழாக் களை அதுவும் தமிழர்களுடைய பாரம்பரியமான விழாக்களை விமரிசையாகக் கொண்டாடுதல், பல் வேறு விதமான சங்கங்களை அமைத்தல், தாயகத்து அறிஞர்கள், கலைஞர்கள் முதலானோரை வரவழைத் துச் சிறப்புச் செய்தல் முதலான அனைத்துமே தமிழ்ச் சமூக மீளுருவாக்க முயற்சியின் வெளிப்பாடுகளா
கவே காணப்படுகின்றன.'
தமிழ்ப் பணி பாட்டின் அடையாளங்கள் என்று கருதுகின்றவற்றைக் கூட அந்தந்த வேற்று நாட்டு மொழிகள் மூலமே கற்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம்; குறிப்பிட்ட வயதுவரை பிறமொழிகளை, அது தாய் மொழியாக இருந்தால் கூட கற்பிக்க முடியாத சூழ்நிலை; வீட்டில் ஒருமொழிப்பாவனை வெளியில் ஒரு மொழிப் பாவனை என மொழிப் பேணுகை என்பது பெரிய ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
1. புலம்பெயர்ந்த தமிழர்களிற் கணிசமானோர் தமது ஊழியத்தின் பெரும் பகுதியைத் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கீழைத்தேசக் கலைகளான மிருதங்கம், நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை முதலானவற்றையும் தமிழ் மொழியையும் கற்றுக் கொடுப்பதில் செலவு செய்கிறார்கள்.

Page 39
சொந்த நாட்டின் சமூகக் கொடுமை விலங்குகளை முதுசொமாகக் கொண்டு செல்லும் ஈழத்தமிழர் அவலத்தைச் சாடும் “வியாகுலப்பிரசங்கம்' என்ற தலைப்பிலான செல்வம் அருளானந்தத்தின் கவிதை வரிகள் வருமாறு.
*வெளிக்கிட்டு
முப்பத்து மூன்றாம் நாள் வந்து சேர்ந்தேன்
காலம் எல்லாம் நடந்தவன் போல
குடிவரவு அதிகாரி
கடும் வெய்யில் கண்டவர்போல்
சிவத்திருந்தார்
தலித்தாய் பிறந்து
தமிழனாய் குனிந்து
கறுப்பனாய் எனை உணர்ந்தேன்
ஏன் வந்தாய்? என்றார்
அக்கிரமம் தலைதூக்கி
அன்பு தணிந்துபோன காலத்தில்
பிறந்தவன் ஐயா என்றேன்
கல்லாகிப் பொல்லாகி இரும்பாகிக்
கலிபர் ஐம்பதான காலத்தில் வாழ்ந்தவன்
திரும்பவும் முறைத்து
நீ ஏன் வந்தாய்? என்றார்
அண்ணனும் தம்பியும் அடித்து
அடுத்த வீட்டானும் அதற்கு அடுத்தவீட்டானும் துரத்த
ஆர் ஆரோ பட்டதுயரெல்லாம் என் கதையாகி
அவர் கலங்கி,
என்ன கொண்டு வந்தாய்? என்றபோது
மூவாயிரம் ஆண்டு இழுந்து வந்த சிலுவை இருக்குது
63

முப்பதாண்டுகளாய்ச் செய்த ஆணிகள் இருக்குதென்றேன் போய் நீ உன்னையே அறை என்று கைகுலுக்கிக் கனடாவுக்குள் அனுப்பி வைத்தார் இங்கே இலைகொண்ட கொடி ஆட என்னை அறைவேன் சிலுவையிலே' என்றவாறான கவிதை வரிகள் தமிழ்சமூகத்தினர் தாம் சென்றடைந்துள்ள நாடுகளிலும் தாயகத்தில் நிலவிய சமூக அதிகார அடுக்கு நிலைகளைப் பேணித்தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் அவலநிலையின் சித்திரிப்புக்களாக அமைந்துள்ளன.
“மனிதர் காட்சிச்சாலை” என்ற தலைப்பிலான திருமாவளவனின் கவிதை வரிகள், புலம் பெயர்ந்து செல்கையில் எந்தவிதமான வேறுபாடுகளையும் காட்டிக் கொள்ளாது “அகதி’ என்ற முகம் சூடிச் சென்றவர்கள் தமது கனவுலகத் தேசங்களிலே காலூன்றி விட்ட பின்பு தங்களது சுயரூபங்களை வெளிக்காட்டிக் கொள்வதனை வெளிப்படுத்து வனவாக அமைந்துள்ளன.
“கொடுங்கோடை
வெய்யில் கொளுத்த
கொளுந்தெரிந்த தேசம்
மூட்டை முடிச்சுக்களோடு
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.66-67
64

Page 40
முகங்களை மாற்றினோம் கழுதைக்கும் மனிதமுகம் தெருநாய்க்கும் மனிதமுகம் பன்றிக்கும் கரடிக்கும் குரங்கிற்கும் பறவைக்கும் பச்சோந்திக்கும் பல்லிக்கும் அதுவே. மனிதரும் கூட தங்கள் சொந்த முகங்களை அழித்து இரவல் முகங்களை எழுதிக் கொண்டோம் படர்ந்தோம்
புலம்பெயர்ந்து உலகின் திசைகள் பதினாறிலும் மனிதர்கணத்து சமநிலை கெட்டது உலகு மாற்றிய முகங்களை பிடுங்கி எறிந்தோம் மீளத்தோன்றியது இயல்பு பிறகென்ன கூட்டம் கொண்டாட்டம் குழிபறிப்பு குழையடிப்பு கோவில் சடங்கு - சங்காரம் சந்திச் சண்டித்தனம் குரங்காட்டம் கரடி வித்தை எல்லாம்
பிறகென்ன மீளத்தோன்றிற்று இயல்பு இப்போது பனிபொழிய மறுக்கிறது
துருவம்

அடியெடுத்து வீதியில் அலைகிறது மிருகம் தப்பித்துக்கொண்டனர் புத்தி தெளிந்தவர் அகப்பட்டது அப்பாவிகளும் நானும் என வரும் இக்கவிதைவரிகள் புலம்பெயர்ந்த
(l)
நாடுகளிலும் சாதிச்சண்டைகள், கட்சிச்சண்டைகள், குழுச்சண்டைகள் முதலானவை பரவலாக நிகழ்ந்து வருவதனைக் காட்டி நிற்கின்றன. கத்தியால் வெட்டியும், துப்பாக்கிகளால் சுட்டும் ஒருவரை ஒருவர் பழி தீர்த்துக்கொள்வதான சண்டைகள் இன்னும் தொடர்வதனை ஊடகச் செய்திகள் மூலமும் அறிய முடிகின்றது. குறிப்பாகக் கனடா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இவ்வாறான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சாதி மற்றும் பிரதேச ரீதியான சங்கங்களினது தொழிற்பாடு களையும் இந்நாடுகளில் பரவலாகப் பார்க்க முடி கிறது. முகமிழந்த கடவுச் சீட்டில் புலம் பெயர்ந்து போகையிலே இருந்த ஒற்றுமை உணர்வினைப் புலம் பெயர்ந்த தேசங்களிலே காணமுடியாதுள்ளது.
பெண்நிலைவாதக் கருத்துக்கள்
பெண்ணியம் சார்ந்த கருத்துக்களைப் பாடு பொரு
ளாகக்கொண்ட கவிதைகள் அண்மைக்காலங்களில்
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்129-130

Page 41
மிகப் பெருவரவாக வெளிவரத்தொடங்கி உள்ளன.
மேலைத்தேய நாடுகளில் வழக்கில் உள்ள ஆண், பெண் சமத்துவம், பெண்ணியச் சிந்தனைகளின்
பரம்பல், பெண்களிடையேயான விழிப்புணர்ச்சி
இந்த நாடுகளில் பெண்களுக்கு கிடைக்கின்ற
பொருளாதாரச் சுதந்திரம், அதிகரித்துக் காணப்படும்
வாழ்க்கைச் செலவில் பெண்களின் பொருளாதாரப்
பங்களிப்பின் இன்றியமையாமை முதலானவை
இவ்வாறான சிந்தனைகளுக்கு உந்து சக்திகளாக
அமைந்துள்ளன.
பெண்ணியம் சார்ந்த கவிதைகளில் பெண்ணின் தனித்துவம், ஆணர், பெணி சமத்துவம், பெணி அடிமைத்தனம், ஆணாதிக்க எதிர்ப்புணர்வு, சீதன எதிர்ப்புணர்வு, அடிமை வாழ்வு எதிர்ப்பு, முதலான விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளமையினை
பார்க்க முடிகிறது.
தமிழ்ச் சமூகக்கட்டமைப்பில் பெண்களுக்கிருந்த மரபுவழியான தளைகளை எல்லாம் உடைத்தெறியப் புலம் பெயர் சூழல் வாய்ப்பாக உள்ளமை பற்றிக் குறிப்பிடும் வசந்திராஜா விண் கவிதைவரிகள்
வருமாறு,
“போர் தருகின்ற
சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய்
சிலிர்த்துக் கொள்ளுகின்றேன்

புலம்பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
என் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும்"
புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளின் தேசவழ மைகள் பெண்களுக்கு எவ்வளவு தான் உரிமைகள் தந்தாலும் சொந்தநாட்டில் காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டு வந்த அந்தச் சொந்த அனுபவம் சென்றடைந்த நாடுகளிலும் தலைதூக்க முற்படுவதை “நாமும் மனிதராய்” என்ற மைத்திரேயியின் கவிதைவரிகள் புலப்படுத்துக் னிறன.
"அன்றொரு விருந்தில்
வழமைபோல்
ஆண்களும் பெண்களும்
தனித்தனியாய் குழுமியிருந்தபோது
ஏதோ பகிடிகேட்டு
வாய்விட்டு நாம் சிரித்தோம்
நாம் நாமாய்
நாமும் மனிதராய்
எவ்வித தடங்கலுமின்றி
அப்போது நீ சொன்னாய்
ஐயைய்யோ பெண்பிள்ளைகள்
இப்படிச் சிரிக்கலாமா
அப்போது தெரிந்து கொண்டேன்
உன் மாற்றத்தின் திசை
1. மேற்கோள், கொன்ஸ்ரன்ரைன், புலம்பெயர்தலும் புலம்பெயர்ந்த
ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும், பக். 23-24.
68

Page 42
முன்னோக்கியல்ல பின்னோக்கி அதுவும் பாட்டி காலத்துக்கு.
குடும்பச்சூழலில் பெண்களிடமிருந்து பாரம்பரிய மாக எதிர்பார்க்கப்படும் ஊழியங்களும் நியமங்களும் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களிடையேயும் வழக் கில் இருந்து வருவதனையும் கவிதைகள் வெளிப் படுத்தத் தவறவில்லை. குறிப்பாக புலம்பெயர்ந்து செனிற முதலாவது தலைமுறையினரிடையே இவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு இருந்துள்ளதனைக் காணமுடிகிறது. சுமதிரூபணினி கவிதையை இவ்விடத்தில் வகைமாதிரியாகச் சுட்டலாம்.
"அவள் கால்சக்கரங்கள்
ஓய்வின்றி சுழல்கிறது
சூரியப்புலவிண்முன் இங்கேயும்
பெண்ணின் பெருமைக்காய் எழுதல்
நிகழத்தான் செய்கிறது
குளிரோ வெயிலோ
காலத்தோடு புணர்தல்
கடமைக்காய் பம்பரமாதல்
புலம்பெயர்ந்தபோதும் மாறுபடாத
ஒன்று
உழைப்பு பெருக்கப்பட்டு
உடல் வருத்தப்பட்டாலும்
பத்தினிப் பட்டத்திற்காய் புன்னகைத்து
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.81-82

பாடாய் படுவது
முதுகில் ஏற்றப்பட்ட புதிய பழு"
கல்யாணியினர் "சாம்பற் பூச்சிகள்” என்ற தலைப்பிலான கவிதைவரிகள் ஆணாதிக்க சமுதா யத்தில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வணி முறைகளையும், அதனை நியாயப்படுத்த முனையும் பிற்போக்குச் சக்திகளையும் கடிவதாக அமைகின்றன.
"எங்களைப் பாருங்கள்
எங்கள்
சேலையையும் ரவிக்கையையும் அல்ல
எமது உணர்ச்சிகளை
எங்கள்
முகத்தையும் மார்புகளையுமல்ல
மனக்குமுறல்களை"?
“விற்பனை" என்ற தலைப்பிலான பாமினியின் கவிதை,
"சமையல் தொடங்கி
படுக்கை வரை
இலவசசேவை
வழங்கியது போதும் சுமைகளும்
1. மேற்கோள், கொன்ஸ்ரன்ரைன், புலம் பெயர்தலும் புலம் பெயர்ந்த
ஈழத்தமிழரின் இலக்கியமுயற்சிகளும் 2. கல்யாணி, மறையாத மறுபாதி, ப31.

Page 43
துளிதுளியான துன்பத்தின் வெளிப்பாடுகளும் மட்டுமே உனதல்ல சூழ உள்ள சகலவற்றிலும் உனக்கும் சமபங்குஉண்டு. வெளியே வா."
என பெண் தனது உரிமைக்காகத் துணிந்து போராட வேண்டுமென அறைகூவல் விடுப்பதாக அமைந்துள்ளது.
"ஆண்" என்ற தலைப்பிலான பாமினியின் கவிதைவரிகள் பெணி கள் சொந்த நாட்டில் மட்டுமல்ல, புகலிடம் பெற்றுள்ள தேசங்களிலும் சீரழிக்கப்படுகின்றமையினை உணர்த்தி நிற் கின்றன.
“அன்று
கூலிப்படை
எனதுடலை
பதம் பார்த்தது
பின்பு
அந்நிய இராணுவம்
தன்னை
திருப்தி செய்தது
இன்று
1. மேற்கோள், நா.சுப்பிரமணியன்; புலம்பெயர் இலக்கியங்களில் ஈழத்தமிழர்
சமூகம், ப.05

மண்ணின்
மைந்தர்கள்
தமது தேவைகளையும் வேறுபாடேதும் இன்றி செய்தே முடித்தனர் இவையாவும் தாய் நாட்டில் என்னால் பிராங்போட் வந்திறங்கியும் ஐரோப்பிய சுகத்தில் விரக்தியுற்றவர்கள் தமது கைவரிசையை இங்கும் காட்டத் தவறவில்லை இவர்கள்
urtit
எமது உடன்பிறப்புகள் என்று சொல்லிக்கொள்ள
நாக்கூசும்
உதவாக்கரைகளே” (l)
கூலிப்படையினர், இந்திய இராணுவத்தினர்,
மண் ணினி மைந்தர்கள், ஐரோப்பியர்கள் என
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.78-79
72

Page 44
எல்லோருமே பெண்களைச் சீரழிப்பதில் 'ஆண்க ளாக ஒரே மாதிரியாகவே செயற்படுகின்றமையினை இக்கவிதையினுாடே காணமுடிகிறது.
“ஏனிந்த வித்தியாசங்கள்" என்ற தலைப்பிலான மல்லிகாவின் கவிதைவரிகள், பெண்கள்தொடர்பாகத் தாயகத்தில் பயில்நிலையில் இருந்து வரும் அதே “கட்டிறுக்கங்களைப்' புலம் பெயர்ந்த நாடுகளிலும் அமுல்படுத்த முனையும் யாழ்ப்பாணத்தின் சராசரித் தாய்மார்களையும், சமூகத்தையும் கடிவதாக அமை கின்றன.
“லொவி மரத்தினில் ஏறிக்கொள்ளவும் நல்ல பழங்களை பிடுங்கியுண்ணவும் இனி எனக்கு விலக்கப்பட்டுள்ளதாம் நான் இனி வளர்ந்த பெண்ணாம் மணற்குவியலில் புரளவும் தம்பியுடன் சண்டைபிடிக்கவும் இனி என்னால் முடியாதாம் நான் இனி வளர்ந்த பெண்ணாம் தோழிகளோடு கூடியிருக்கவும் வெளிக்கிணற்றினில் அள்ளிக்குளிக்கவும் இனி எனக்கு விலக்கப்பட்டுள்ளதாம் நான் இனி வளர்ந்த பெண்ணாம் பள்ளிக்கு முழுக்குப் போடவும் வீட்டு வேலைகள் தெரிந்து கொள்ளவும் விரைவில் எனக்கு ஏற்படுமாம் நான் இனி வளர்ந்த பெண்ணாம்

பெற்றோரைத் திருப்தித்து விருப்பமில்லா மணஞ்செய்ய விரைவில் எனக்கு ஏற்படுமாம் நான் இனி வளர்ந்த பெண்ணாம்.' எனத் தொடர்கின்ற கவிதைவரிகள் பெண்ணடி மைக்கு எதிராகப் பெண்கள் தங்களது மெளனத்தை உடைத்தெறிந்து கிளர்ந்தெழவேண்டும் என அறை கூவல் விடுப்பதாக அமைந்து செல்கின்றன. பெண் கள், தங்களுக்கான சமஇடத்தினை எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி அடைந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு அண்மைக் காலங்களில் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதனையும் இவ்விடத் தில் குறிப்பிடல் வேண்டும்.
“எதுதான் எமக்குச் சாதகமாக’ என்ற தலைப்பி லான கேதீஸின் கவிதைவரிகள், எந்தவிதமான ஒப்புதல்களுமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ‘ஏற்றி அனுப்பப்படுகின்ற பெண்கள், தங்கள் விதியை நொந்து கொண்டு பெற்றோரால், உடன் பிறப்புக் களால் கைநீட்டிக் காட்டப்படுகின்ற மாப்பிள்ளைக ளை மணந்து கொள்ளும் அவலத்தினைப் பின்வரு மாறு ஆவணப்படுத்தியுள்ளன.
"12 பேர் மனைவியரானோம்
யாருக்கென்று கேள்
ஒருத்தி அந்நியனுக்கு
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.167-168

Page 45
ஒருத்தி எருமைமாட்டிற்கு
ஒருத்தி கல்லுக்கு
ஒருத்தி ஆஸ்பத்திரிக்கு
ஒருத்தி எதிரிக்கு இப்படியாக
எப்போதேனும் ஓர் குளிர்காலத்தில்
ஒருத்தன் வருவான்
உன்னைக் கடத்திப்போக
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டபின்
வேறு வழியில்லாமல் போவாய் - மனைவியாக"
மேல்வரும் கவிதைவரிகள் திருமணப்பந்தத்திலே யாழ்ப்பாணத்தில் பெண்கள் சந்தித்து வருகின்ற பல்வேறு நெருக்குவாரங்களையும் முறைப்படுத்து வனவாக அமைந்துள்ளன.
சீதனக் கொடுமை
சீதனக்கொடுமை (வரதட்சணை)யின் தாக்கத் தினைப் புலம் பெயர்ந்த நாடுகளிலும் உணரமுடிகி றது. பணம் என்பது இவர்களைப் பொறுத்தவரை அவ்வளவு பிரச்சினைக்குரிய ஒருவிடயமாக இல்லாது விடினும், தமது சமூகத்தைச் சீரழிக்கும் ஒரு விதமான கொடிய நோயாகவே இவர்கள் இதனைப் பார்க்கின்
D60TT.
“மாப்பிள்ளைக்கு வந்தனங்கள்” என்ற தலைப்பி
லான நிருபாவின் கவிதையிலே,
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப.178.

" ......... பூமியை விட்டு
நான் செவ்வாயில் வாழச் சென்றால்
சூரியனையும் சந்திரனையும்
சீதனமாகக் கேட்பீரோ"
எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. என்ன விலை கொடுத்தாவது சாதிமரபு, அந்தஸ்து, படிப்பு என்பன வற்றில் குறைவில்லாத மாப்பிள்ளையை வாங்கத் துடிக்கும் தமிழ்ச் சமூகத்தின் நிலையை,
பதுங்குகுழியும் கூட
பாதுகாப்பற்றதே
எமது இன்றைய வாழ்வு
அஸ்தமித்த சூரியன்
அரங்கிற்கு வருமுன்பே
குண்டு கொட்டிச்
செல்லும் கொலைவிமானங்கள்
நாசிக்குப் பழக்கமான
கந்தகக் காற்றும்
காதுக்கு நெருக்கமான
கனத்தஒலியும்
காலைப்பொழுதுகள்
எமக்கு
இந்நிலையில்
அம்மா
படிப்பு, சாதியுடைய
அந்தஸ்து கெளரவமுடைய
குடும்பத்தினைத் தேடியலைகிறாள்
ஓர் மாப்பிள்ளை வாங்குவதற்காய்
அண்ணாவும் தம்பியும்
1. நிருபா, மாப்பிள்ளைக்குவந்தனங்கள் (கவிதை)
76

Page 46
கூடவே அக்காவும்
அடிமை நிலைதீர்க்க
அக்கறையோடு புறப்பட்டு
விடுதலை பற்றி
சுமந்து வந்த
எமது சமூகத்தின்
அழுக்குகள் அத்தனையும்
நானும் சுமக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பா
அம்மா
மனிதனை மனிதனாக
பார்க்க முதலில்
பழகிக்கொள்வோம்
நாளைய இருப்பு பற்றிய
நம்பிக்கையற்ற நடமாடும்
உயிர்ப் பிணங்கள் நாம்
உயிர் தப்ப வேண்டுமானால்
ஊரை விட்டு ஒடுவோம்
ஆனால் விலை கொடுத்து
வாங்கியவனுடன் மட்டும
ஒட நான் தயாரில்லை."
என்ற கவிதை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. காலம் காலமாகத் தமிழ்ச் சமூதாயத்தில் தொடர்ந்து வரும் சீதனக் கொடுமைக்கு எதிரான குரலை இக்கவிதையினுாடே கேட்கமுடிகிறது. சமூக வேறு பாடு, சீதனக்கொடுமை முதலான சமூகக் கொடுமை
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.187-188

களை, சமூக அழுக்குகளை இன்றைய இளைய தலைமுறையினர் வெறுத்து ஒதுக்கத் தலைப்பட் டுள்ளனர். ஆயினும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சமூகத்திலே, படிப்பு + சாதி + உத்தியோகம் இவை மூன்றும் இணைந்தே உள்ள மாப்பிள்ளைக்கான “கிராக்கி' இன்னும் தொடர்ந்து கொணர்டே இருக்கிறது. இலட்சங்கள் பல கொடுத்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்கும் வழக்கம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்ந்த நாடுகளி லும் பெருவழக்காக உள்ளதனைப் பார்க்க முடிகிறது.
தனது உடன் பிறந்த சகோதரிக்கு வசதியான ஒரு வாழ்க்கையை அமைத்துத் தர, தனது வாழ்க்கையைத் தொலைத்தவனின் வாக்கு மூலமாக அமைவது “பண்டமாற்று” என்ற தலைப்பிலான கவிதை.
"இயற்கையை நகைக்க வைக்கும்
இயந்திரமாக நான்
வாழ்வை விற்று வாழ்வை
வாங்கித்தர
பணத்திற்காய் அலைகிறேன்
ஆம் ஈழத்துத் தங்கைக்கோர்
கணவனை வாங்கித்தர"
மேற்படி கவிதை வரிகள், புலம் பெயர்ந்துள்ள சூழல்களிலும் பாரம்பரியமான நடைமுறைகளில்
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப.112

Page 47
நெகிழ்ச்சி ஏற்படாத ஒரு இறுக்கமான சூழ்நிலையி னை வெளிக்காட்டி நிற்பனவாக அமைந்துள்ளன.
பாலியல்
ஆண்,பெண் உறவு தொடர்பான விடயங்களை வெளிப்படையாகப் பேசும் பண்பு கீழைத்தேயச் சமு தாயங்களில் அருகியே காணப்படுகின்றது. மேலை நாடுகளில் இந்நிலை நேர் எதிர்மாறானதாகக் காணப்படுகின்றது. தமது உணர்வுகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் பாலியல் தேவைகள் குறித்து கூச்சமின்றி வெளிப்படையாகப் பேசும் பணிபு மேலைநாட்டில் LJU 66UT 35 வழக்கில் உள்ளதனைக் காணலாம். புலம் பெயர்கவிதைகளிலும் இப்பண்பு பிரதிபலிக்கக் காண்கின்றோம். பெண்ணிய இலக்கிய வெளிப்பாடுகளில் ஏற்பட்ட ஒரு பாரிய மாற்றமாகவே இதனைக் கருத வேண்டி உள்ளது. பாலியல் குறித்த பல்வேறு விடயங்களைத் தமிழ் இலக்கியங்களின் வழிக் கண்டு கொள்ள முடிந்தாலும் பெண்ணே தனது உணர்வுகளை வெளிப்படுத்துவது மாதிரியான தன்மை புதியதாகவே படுகிறது.
‘புரிதலின் அவலம்' என்ற தலைப் பிலான ரஞ்சனியின் கவிதைவரிகள், ஆண் பெண் கலவியில் திருப்தி காணாத பெண், தனது ஏக்கத்தை வெளிப் படையாகச் சொல்வதாக அமைகின்றன. கவிதை
வரிகள் வருமாறு,

“முத்தங்களாகி கலவியில் மயங்கி இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி கரைந்துபோகும்.அடுத்த நிமிடமே நீஆணாகி விடுகிறாய் நான் வேண்டிய நீ முழுமையாகக் காணாது ஆணாக விஸ்பரூபம் எடுக்கிறாய் ஒருநாள் மறந்துவிடலாம் இருநாள் மன்னித்து விடலாம் ஒவ்வொரு நாளும் பைத்தியமாகிறது உறவு நீ எழுதுகிறாய் பேசுகிறாய் இதில் பெண்ணுரிமை வேறு எதையுமே நீபுரிந்ததில்லை எப்படி முடிகிறது உங்களால் என்னால் முடியவில்லை விட்டுவிடு எல்லாத்தையுமே")
பாலுறவில் ‘பேசாப் பொருளாக இருந்த உணர்வுகளின் கலாபூர்வமான சித்திரிப்பாக மேற்படி கவிதை அமைந்துள்ளது.
அரசியல் விமர்சனம்
புலம் பெயர் கவிதைகளின் பாடுபொருள்களில்
அரசியலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளமை
யினைப் பார்க்கமுடிகிறது. தாயகச் சூழலில்
1. திருநாவுக்கரசு:ப;(தொ.ஆ):புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப.172.
St.

Page 48
மெளனிக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அரசியல் உணர்வுகள் புதிய சூழல்களில் சுதந்திரமாக வெளிப்படுகின்றன.
தாயகத்தின் இனப்போராட்டச் சூழல், அது தந்த இழப்புக்கள், விடுதலை இயக்கங்களின் எழுச்சி, இயக்க முரண்பாடுகள், சகோதரப் படுகொலைகள், இந்திய இராணுவக் கொடுமைகள், வடபுலத்திலி ருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை, உள் நாட்டு இடம்பெயர்வுகள் முதலானவையாக இப்பாடு பொருட் பட்டியல் நீண்டு செல்வதைக் காண
முடிகிறது.
அரசியல் விமர்சனத்தில் இயக்க அகமுரண்பா டுகள் முக்கிய இடம் பிடிப்பனவாக உள்ளன. சொந்த மண்ணில் இருந்து சரி பிழை கேட்க முடியாத நிலை யில் புலம் பெயர்ந்துள்ள நாடுகளிலிருந்து கொண்டு இயக்கங்களின் சண்டைகளையும், எதேச்சாதிகாரப் போக்குகளையும் கடிவதாகப் பல்வேறு கவிதைகள் வெளிவந்துள்ளன.
இளவாலை விஜயேந்திரனின் கவிதைவரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
"பெற்ற புதல்வர்கள்
ஒருவரோடொருவர்
துப்பாக்கிகளால் மட்டும்
பேசாதிருக்கலாம்

பிணக்குத் தீர்க்கவந்தவர்கள்
பிணங்களை வீழ்த்தாதிருக்கலாம்"
என்பதாக அமைகின்ற கவிதைவரிகள் ஈழப் போராட்டச் சூழலின் அத்தனை முகங்களையும் தோலுரித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
“நந்தவனத்திலோர் ஆண்டி' என்ற தலைப்பி லான செல்வத்தின் கவிதைவரிகள் வருமாறு அமைந் துள்ளன.
“இராமனும் பரதனும் அடிபடும்
இந்த இராமாயணம்
உலகம் நம்மாலே கற்கும்
நான் பெரிது நீ பெரிது
எண் சாதி உன்சாதி
என் இயக்கம் உன் இயக்கம்"
என அமைகின்ற இக்கவிதை வரிகள் உள்ளக முரண்பாடுகளையும், சகோதரப்படுகொலைகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்துவனவாக அமைந்து உள்ளன. சகோதரர்கள் தம்முள் அடிபடுவதை விளக்க இராமன், பரதன் ஆகிய தொண்மப் பாத்திரங்களைக் கவிஞர் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாக
உள்ளது.
வடபுலத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்
பட்டமையினால் உண்டான விரிசல்கள் குறித்தும்
1. விஜயேந்திரன், இளவாலை: துருவச் சுவடுகள் ப70 2. செல்வம், கட்டிடக் காட்டுக்குள், ப.42.

Page 49
கவிஞர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளமையினைப் பார்க்க முடிகிறது. வ.ஐ.ச.ஜெயபாலன், இளைய அப்துல்லா, சக்கரவர்த்தி முதலானோர் இவர்களில்
குறிப்பிடத்தக் கவர்களாக உள்ளனர்.
“எட்டாவது பேய்" என்ற தலைப் பிலான வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை, வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்துக் கடு மையான தனது ஆட்சேபனையினைத் தெரிவிப்ப தாக அமைந்துள்ளது.
“பல்லின மலர்களால் பின்னப்பட்ட
எங்கள் ஈழத்தமிழ் மணி கிழித்து
புண்படஉம்மைப் பிய்த்தெறிந்தனரே
வழிதவறி எமது பிள்ளைகள்.
ஐந்துவேளை பாங்கொலியோடு
திரும்பி வந்தெம்மைக் காப்பாற்றுங்கள்."
“எங்கள் தாயகமும் வடக்கே” என்ற தலைப்பி லான கவிதையினுாடே இளைய அப்துல்லா இந்தப் பிரச்சினையை மிகவும் உணர்வு பூர்வமாகச் சித்திரித் துள்ளார்.
"இன்னும் என் கோடையின்
வாசம் மறக்கமுடியவில்லை
இன்னும் என் கல்விடும்
அந்த மரமும் தேக்க வேலியும்
1. ஜெயபாலன், வ.ஐ.ச, வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்-பெருந்தொகை;
U.62
83

நினைவிலே கிடந்ததுதான்
கச்சான் பாத்தி நடுவே
நீராடியதும்
பசுமையான வயல்பரப்பில்
ஓடிவிளையாடியதும்
எல்லாம்இழந்தனம்
என் பூமி இழந்தனம்
சுமை இழந்த எண் மக்கள்
மீண்டும் வருவார்கள்
மீண்டும் பாங்கொலி
கேட்கும் பள்ளிகளைத்
(3) ”gظ0pئھ
புலம் பெயர் கவிதைகளிற் சில, இலங்கையின் அரசியல் விவகாரங்களையும், அனைத்துலக அரசியல் விவகாரங்களையும் ஒப்பு நோக்குவனவாகவும்
அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் விமர்சனம் குறித்த கவிதைகளில் சொந்தநாட்டு அரசியல் பற்றிய நம்பிக்கை, நம்பிக் கையின்மை, ஆதங்கங்கள் முதலானவற்றை அதிகம் பார்க்க முடிகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பத்திரிகைச் சுதந்திர வசதி, மனித உரிமைகளுக்கான மதிப்பு, பிரசுர வாய்ப்பு முதலியன இத்தகு கவிதை களின் வரவுகளுக்கு ஊக்குசக்திகளாக அமைந்
துள்ளன எனக் கூறலாம்.
1. மேற்கோள், கொன்ஸ்ரன்ரைன் புலம் பெயர்தலும் புலம் பெயர்ந்த
ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும்
84

Page 50
உலகு தழுவிய பார்வை
உலகு தழுவிய பார்வை என்பது தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. பண்டைத்தமிழ் இலக்கியங்கள் பலவற்றி லும் உலகு தழுவிய பார்வையினைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுச் செய்யுளடி உலகப் பிரசித்தமான தொடராக வழக்கிலிருந்து வருகிறது. பல்லினப்பணி பாட்டுச் சூழலில் வாழ்கின்ற புலம் பெயர் கவிஞர் களது கவிதைகளிலும் உலகு தழுவிய பார்வையி னைக் காணமுடிவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரானில் உள்ள ஹவல்ஜா நகரில் ஈராக் நடாத்திய தாக்குதலைக் கடியும் ராகவனின் கவிதைவரிகள்
வருமாறு:
“மனிதநேயத்தின்
உன்னதமறியா
அந்த முல்லாக்களும்
இன்னும் தீர்க்கமாய்
போரினைத்தொடர்வர்
எதிரிலே தோண்டப்படுகின்ற
சவக்குழிகளை
அறிந்திடாமலே")
1. மேற்கோள், செ.யோகராசா, புலம்பெயர் கலாசாரமும் புகலிட இலக்கி
யங்களும் ப53.
8S

ஜேர்மனியில் தொழிற்பட்ட புதிய நாசிகளின் நிறவாதக் கொடுமைகளினால் கொண்றொழிக் கப்பட்ட ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த மனிதர்களின் அவல நிலையினைக் கண்டு அதற்காக வருத்தப்படும் நிருபாவின் கவிதைவரிகள் வருமாறு,
“ஜேர்மனியத் தெருவிலே ஆபிரிக்க மனிதன் கொன்றொழிக்கப்பட்டான் அநாதரவாய்
இனவாத நெருப்பில் இன்னும் எத்தனை மனிதங்கள் சுட்ட்ெரிக்கப்படுமோ" இனவாதத்தின் கொடுமைகளை நேரில் கண்டும், கேட்டும் அனுபவித்தவர்களால் எந்த ஒரு இன வன்முறைகளையும் சகித்துக்கொள்ளமுடியவில்லை என்பதனையும் இக்கவிதை காட்டி நிற்கின்றது.
"வானலையில் யாரோ" என்ற தலைப்பிலான ரவியின் கவிதைவரிகள் உலகில் எங்கெங்கெல்லாம் கொடுமைகள், அநியாயங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் பாதிக்கப்படுகின்ற மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவன வாக அமைந்துள்ளன.
சொற்களை நான் உற்பத்தி செய்து கொண்டெ
இருக்க விரும்புகிறேன் புதிது புதிதாய்
1. நிருபா, சக்தி, ப03
86

Page 51
பட்டினிப் பிசாசு தின்னும் ஓர் ஆப்பிரிக்கக் குழந்தைக்காய் வழியும். என் கண்ணீரை என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும் கடன் கேட்கவும் எனது உணர்ச்சிகளை அழுது வடிய மட்டும் உத்தரவிடவும் இந்தப் பெருவாய்க் காற்றால் முடியுமெனில் அதையும்தான் நான் வெறுக்கிறேன்"(0) | என்ற கவிதைவரிகளிலே நாடு, இன, மதபேத மின்றிக் கவிஞர்களின் குரல்கள் அனைத்துலகு தழுவியதாக மேற்கிளம்ப வேண்டும் என்ற ஆதங் கத்தைப் பார்க்க முடிகிறது.
19 புலம்பெயர் தமிழர்களின் பன்மொழி அறிவு
உலகின் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் அந்தந்த நாடுகளின் சுதேசிய மொழிகளில் சரளமாகப் பேசவும் ஓரளவு எழுதவும் தம்மைத் தயார்ப்படுத்தி உள்ளதைக் காணமுடிகிறது முதலா வது தலைமுறையினரில் பெரும்பாலானோர் பிற மொழிகளைப் பேசக்கூடியவர்களாகவே காணப்பட, இரண்டாவது தலைமுறையினைச் சேர்ந்தவர்கள் அவ்வந்நாட்டு மொழிகளிலேயே தமது கல்வியைத் தொடரக்கூடிய அளவுக்கு அவ்வந்நாட்டு மொழிகளில் தேர்ச்சி உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
1. திருநாவுக்கரசு ய;(தொ.ஆ) புலம்பெயர்ந்தோர் கவிதைகள், ப117.
| 87

இந்நிலையில் புலம்பெயர் கவிதைகள் பலவும் , ஆங்கிலம், பிரெஞ்சு, டொச், சுவீடிஸ், டேனிஷ், இத்தாலி முதலான இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்களை உள் வாங்கி யனவாக வெளிப்பட்டு வருவதனைப் பார்க்க முடிகிறது. இக்கவிதைகளில் பயின்று வரும் மேற்படி மொழிகளைச் சார்ந்த பல்வேறு சொற்களையும் புரிந்து கொள்வதற்குப் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு அடிக்குறிப்போ, அகராதிகளோ தேவைப்படுவதில்லை. அந்த அள வுக்கு இச்சொற்கள் நன்கு பரிச்சயமானவையாகக் காணப்படுகின்றன.
*மொப்பும் வாளியும் என்னை வேலைக்கு ....'' "'மாரித் வாழ்க்கையில் 80 வருடங்களை ...'
பா மீன், "'ஹாய்' எனச் சுகம் வினாவ" (1) * மண்ணில் ... பேர்ச் இலைப்பழுத்தல் ஒன்று "(2) "'லொவி' மரத்தினில்...' (3)
18 2 ! "காத்ஒரேஞ் மனிதனாய்" (4) "பாஸ்காவின் மனிதக் கறைகள் (5) ''செற்றியில் சாய்கிறேன்" "சிலவேளை பிசாவுடன்)
தே,
1. தம்பா, துருவச் சுவடுகள்: ப28. 2. ஜெயபாலன், வ.ஐ.ச, துருவச்சுவடுகள், ப21. 3. திருநாவுக்கரசு ய;( தொ ஆ) புலம் பெயர்ந்தோர் கவிதைகள் ப167. 4. சுகன், 'அ, ஆ.இ 5. திருநாவுக்கரசுய; (தொ ஆ) புலம் பெயர்ந்தோர் கவிதைகள் ப162. 6. மேலது ப81.
88

Page 52
“ஒல்ம் sin L.” (l)
*மனிதராய் அன்றிஐஸாய் உறைந்து? “ஈபிள் கோபுரம்மாத்திரமல்ல' "எண்மதுக்கினத்தை உயர்த்தி "ஸ்கோல்" என்கிறேன்'சி “படத்தட்டில் இருக்கும்பத்து சென்ரிம்" “இன்னொருவரின் ‘விசாவில் வேலை" “ஒரு பிராங்கெனினும்."
NoBlackNoDog"(8)
"Asian Basted
என்றபின்னரும்" “இப்போது QystLSofisë'Aut'Umn' வசந்தத்தில் குளிக்கும் மாநகரம்" “றெஸ்ரோரண்டில் இருந்து இன்னுமொருவன் வந்து விடுவான்" *ரிடோ மோலின்
. திருநாவுக்கரசுய; (தொ.ஆ);புலம் பெயர்ந்தோர் கவிதைகள்: ப81. . மேலது ப83. . மேலது. ப91. . மேலது. ப.115.
மேலது. ப:120. மேலது, ப:45,
. மேலது. பl32. . மேலது, ப:133. . மேலது, பl34.
10. மேலது. ப:136. 11. மேலது, ப:145.
89

அழுக்கு வழியும் நடைவழிப்பதையில்"
“சப்வே பிச்சைக்காரிமேல்")ே
“மொப்”, “மாரித்’, ‘ஹாய்”, “பேர்ச்’, “பேரியான்”, “லொவி’, முதலான பிறமொழிச் சொற்களின் பயன்பாடு புலம்பெயர்ந்தோர் கவிதை களில் தவிர்க்க முடியாதபடி அமைந்துள்ளது. “மொழி பண்பாட்டோடு இரண்டறக் கலந்துள்ளதால் சில சொற்களை இலகுவாக மொழி பெயர்க்க முடியாத சிக்கல் இவர்களிற் பெரும்பாலானோர்க்கு இருந்தி ருக்கலாம். பிறமொழிச் சொற்களைத் தமிழ் மயப் படுத்தியமை, புதிய சொற்கள், சொற்றொடர்களின் பயன்பாடு முதலானவை புலம் பெயர் தமிழர்களது பனி மொழியறிவின் பிரதான அறுவடைகளாக
உள்ளன.
பன்மொழி அறிவு என்ற நிலையில் மொழி பெயர்ப்பு முயற்சிகளையும் இவ்விடத்தில் குறிப்பிடல் வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் முதலான மொழிகளில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மேற்படி மொழிகளுக்கும் பல்வேறு விடயங்களையும் மொழிபெயர்ப்பதான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. ஈழத்தமிழர்களின் இலக்கியவளத்தி னைப் பிறமொழிப் பணி பாட்டினரும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை இம்மொழிபெயர்ப் புக்கள் உருவாக்கியுள்ளன. பொயட்தம்பிமுத்து, கலாமோகன், சியாம்செல்லத்துரை, சிவானந்தன், நேமிநாதன் முதலானோரை இவ்விடத்தில் வகை மாதிரியாகக் குறிப்பிடலாம்.
1. திருநாவுக்கரசுய:(தொ.ஆ), புலம் பெயர்ந்தோர் கவிதைகள்) பக்150. 2. மேலது பக்.50.

Page 53
இப்படி'
இயல் - 04 8 (AIKMA ' த 400 பு)
புலம் பெயர் கவிதை: உணர்த்துமுறை
கவிதையின் உருவம், அதன் உள்ளடக்கம் என்பன வற்றைவிட அக்கவிதை சொல்லப்படும் முறையே அக்கவிதையின் வெற்றியினைத் தீர்மானிப்பதாகக் காணப்படுகிறது. உணர்த்துமுறையைக் கவிதையின் "இதயம்" எனக்கூறலாம். தமிழ் மரபில் இதனை, வெளிப்பாட்டுமுறை, உத்தி, பாணி, பாவம் முதலான பல்வேறு சொல்லாட்சிகளால் வழங்குவர். உருவம், உள்ளடக்கம், உணர்த்து முறை இவை மூன்றும் பொருத்தமுற் இணையும் போதே நல்ல கவிதைகள் பிறக்கின்றன. உணர்த்துமுறை என்ற உயிரில்லாத சொற்கூட்டம் வெறும் சடலமாகவே அமையும்.
பாரம்பரியமான தமிழ்க்கவிதைப் பாடுபொருள் மரபில் புதிய மாற்றங்களை, அதிர்வுகளைக் கொண்டு வந்த புலம்பெயர்கவிதை, கவிதை வெளிப்பாட்டு முறையிலும் புதிய மாற்றங்களையும், பரிசோதனை முயற்சிகளையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்துள் ளது. இம்மாற்றங்களைப் புலம்பெயர் கவிதைகளில் மாத்திரமல்லாது சிறுகதை, நாவல் ஆகிய புனைகதை இலக்கியங்களிலும் உணரமுடிகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். கதை சொல்லும் முறை, கதை அமைப்பு முறை முதலான விடயங்களில் புலம்பெயர் புனை கதை இலக்கியங்கள் புதிய போக்குகளை வெளிப்ப
97

டுத்தி வருவதனை இவ்விடத்தில் சிறப்பாக குறிப்பிட முடியும்.
இந்தியா புலம் பெயர் கவிதைகளில் பயின்று வருகின்ற மொழி நடை, உவமைகள், உருவகங்கள், குறியீடுகள், படிமங்கள் முதலானவை வெளிப்பாட்டு முறையில் அல்லது உணர்த்து முறையில் குறிப்பிடத்தக்கனவாக அமைந்துள்ளன.
"முகங்கொள்'', "மறையாத மறுபாதி'', "பனி வயல் உழவு", "கட்டிடக்காட்டுக்குள்", "இனியும் சூல்கொள்'' ''யுத்தத்தைத் தின்போம்'' முதலான கவிதைத் தொகுப்புக்களின் தலைப்புக்கள் கூட, குறியீடுகளாக நின்று சொல்லாத சேதிகள் பலவற் றையும் வெளிப்படுத்துவனவாகவே அமைந்து காணப்படுகின்றன.
|னவெ
சொந்த நாட்டின் போர்க்சூழல் தந்த பல்வேறு கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து தாய் நாட்டிலி ருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் இடம் பெயராது இருக்கும் மண்ணின் மைந்தனைக் குறித்து நிற்கும் குறியீடாக ''மக்பை" என்ற பறவை சுட்டப்படுகிறது.
"இன்பக்கனவு போல் தோன்றி மறைந்தது கோடை காற்றுக் குதிரைகளில் குளிர் சாட்டை சொடுக்கு வரும் வெயிற் சுகம் தேடி
92

Page 54
வடதுருவப் பறவைகளும்
என் தாய் நாட்டின் திசை நோக்கி
தங்களது இறகசைக்கும்
வான் நோக்கி
கையுயர்த்தித் தொழுகின்ற
கறுப்பர்களைப் போல
இலையுதிர்த்தி நிற்கும்
ஒக் மரங்களின் கீழே
தனித்தலையும் "மக்பை" பறவையொன்று
இழிவாக எனை நோக்கும்.
வானில் ஒரு பரதேசி போல
குளிர்ந்து போன சூரியனின் பரிதாபம்
மண்ணில் மஞ்சளாய்தலை நரைத்த மரங்களின் கீழ்
பொன்னாய் இறகசைத்து
வண்ணத்திப் பூச்சியாய் பகட்டி
பேர்ச் இலைப்பழுத்தலொன்று புல்லில் தரையிறங்கும்
ஒரு புதுஅகதி வந்தது போல்."
பழைய குறியீடுகள் புதிய அர்த்தங்களில் கவிதை களில் பயின்று வருவதனையும் அவதானிக்க முடிகி றது. வடபுலத்து முஸ்லீம்களின் வெளியேற்றம் குறித்து வருந்துவதாக அமையும் இளைய அப்துல்லா வின் கவிதையிலே, யாழ்ப்பாணத்தின் “கோடை” வெப்பமும், அது ஏற்படுத்தும் பெளதீக நிலை
மாற்றங்களும் வசந்தங்களாகக் காட்டப்படுகின்றன.
1. திருநாவுக்கரசுய:(தொ.ஆ), புலம் பெயர்ந்தோர் கவிதைகள் பக்36-37.
93

"இன்னும் என் கோடையின்
வாசம் மறக்க முடியவில்லை" (1) பிறந்த நாட்டைப் பிரிந்த சோகத்தைச் சொல்ல "கோடை'' இங்கே குறியீடாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதனைப் பார்க்க முடிகிறது.
FPஅ' fi
புலம் பெயர்கவிதைகளில் படிமங்களின் (Image) செல்வாக்கினையும் பரக்கக் காணமுடிகிறது.ஒரு கவிதையின் உணர்சிக் கூர்மை, வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்களுக்குள் வண்ணக் கலவையாகச் சிறகு விரிக்கின்ற மின்னற் பொழுதே "படிமம்'' எனலாம். வாசகமனத்திரையில் பளீரென ஓர் ஒளிச்சித்திரத்தை வரைந்து போகிற மாய ஓவியத் தூரிகையே "படிமம்'' எனப் படிமத்துக்குப் பல்வேறு விளக்கங்களைத் தரமுடியும். வாசகனை இழுத்துப் பிடித்து அவன் மனதில் தைக்கிற வேகம் அல்லது வெறி படிமத்துக்கு மிகமிக வேண்டிய ஒரு பண்பாக உள்ளது. ஒற்றைப் பரிமாணப் பொருளைத் தருகின்ற குறியீட்டிலிருந்து (Sympo1) படிமம் (Image) வேறுபடும். படிமம், படைப்பு மேதைமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வித்தியாசமான சூழ் நிலைகள், பருவகாலங்கள், கால நிலைகள் முதலானவை புதிய இயற்கைப் படிமங்களைத் தோற்றுவித்து வருவதனையும் பார்க்கமுடிகிறது.
Iாக
1. மேற்கோள், கொன்ஸ்ரன்ரைன் புலம்பெயர்தலும் புலம்பெயர்ந்த
ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும்'
94

Page 55
'நந்தவனத்திலோர் ஆண்டி' என்ற தலைப்பிலான செல்வத்தினர் கவிதை வரிகளில், “தொன்மம் சார்படிமம்’ இயக்க அகமுரண்பாடுகளால் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் தம்முள் அடிபட்டுக் கொள்ளும் அவலநிலைச் சித்திரிப்புக்குக் கைகொடுத்துள்ளது.
“இராமனும் பரதனும் அடிபடும்
இந்த இராமாயணம்
உலகம் நம்மாலே கற்கும்
நான் பெரிது நீ பெரிது
என் சாதி உண்சாதி
என் இயக்கம் உன்இயக்கம்"
இக்கவிதையின் தலைப்புக்கூட தமிழ் மரபிலே பாரம்பரியமாக வழங்கி வரும் நந்தவனத்திலோர் ஆண்டிக் கதைமரபின் படிமமாகவே அமைந்துள் ளமை குறிப்பிடத்தக்கதாகும். இயக்க உறுப்பினர்கள் தம்முள் தாமே அடிப்பட்டுத் தமிழரது சுதந்திரத்தைக் 'கொண்டாடிக் கொண்டாடிப் போட்டுடைக்கும் நிதர் சனத்தைக் குறிக்கும் படிமமாக இக்கவிதையின் தலைப்பு அமைந்துள்ளது.
நாடோடிகளாகத் தேசத்தெருவெங்கும் அலையும் தமிழர்களது அவலநிலைச் சித்திரிப்புக்களை விளக் கும் கவிதை ஒன்றில்,
“ஊரான ஊரிழந்து நாடிழந்து
தேசத்தெருவெங்கும் தமிழரெனத் திரிகின்ற
1.செல்வம், கட்டிடக் காட்டுக்குள், ப.42.

எங்களது “பாடுகளை" என்றும் நினைத்திருங்கள் ஓடுவதே எங்கள் உயிர்வாழ்வாய் ஆகியதன் உண்மை தனை நினைத்திருங்கள்"
என்ற கவிதையிலே தமிழ்ச்சமூகம் உயிர்வாழும் முயற்சியில் புலம்பெயர்ந்த நாடுகளில் படுகின்ற துணி பங்களை, சோகங்களை இயேசுபிரானின் “சிலுவைப்பாட்டு’ப் படிமத்தினுாடே வெளிப்படுத்து வதனைக் காண முடிகிறது.
“... GTadt GAITCBarnbbps filassifildi)
நெருப்புப்பிடிக்கையில்
Shqd QITAAssalafat
பேரப்பிள்ளையாகி (2) ஊரைக் கடந்தவன்.”
போர்ச்சூழலில் நாட்டை விட்டு ஓடிவந்தவனது செய்கையின் "படிமமாக" தனது சொந்தநாடு பற்றி எரிகையில் பிடில் வாசித்துக் கொண்டிருந்த ரோம் நாட்டு மன்னனது செய்கை குறிப்பிடப்படுகிறது.
“இரண்டாவது பிறப்பு” என்ற தலைப்பிலான அருந்ததியின் கவிதை, தாயத்திலே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழ்க்கையினை அனுபவிக்க முனைந்து தோற்றுப் போனவைர்களைப் பின் வரும் படிமத்தினுாடே
வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
1. திருநாவுக்கரசுப;(தொ.ஆ), புலம் பெயர்ந்தோர் கவிதைகள் ப02 2. மேலது. பக்: 126-127

Page 56
“இங்கேயும் நிலவும் வானும் காற்றும் மழையும் ஆயினும் எங்கே எங்கே வாழ்க்கையை
ஆற்றிலே தொலைத்து குளத்திலே தேடும் சுந்தரர்களாய்"
புலம் பெயர்கவிதைகளில் பிறமொழிச் சொற்கள் பலவும் சரளமாகப் பயின்று வருவதனையும் பார்க்க முடிகிறது. பிரெஞ்சு, ஆங்கிலம், டேனிஷ், சுவீடிஸ், இத்தாலி, டொச் முதலான பிறமொழிகளைச் சேர்ந்த சொற்களைக் கவிதைகளில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளில் அச்சொற்களைத் தமிழ் மயப் படுத்தாது அவ்வாறே கவிதைகளில் வழங்குவதுகூட ஒருவகையான வெளிப்பாட்டு முறை உத்தியாகவே தென்படுகிறது. மொழி, பண்பாட்டோடு இரண்டறக் கலந்துள்ளதினால் சில சொற்களை மொழி பெயர்த்தால் அச்சொற்களால் உணர்த்தக்கூடிய அர்த்தங்கள் மாறுபடக்கூடியவாய்ப்பும் காணப்படு கின்றது. புலம்பெயர் கவிதைகளில் பயின்றுவரும் பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்ச் சொற்கள் போலவே நன்கு பரிச்சயமானவையாகவும் அமைந்
துள்ளமை இவ் விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
கவிதைகளில் பயின்று வருகின்ற உவமைகள்,
உருவகங்கள், உள்ளுறைகள் என்பனவும் கவி தைகக்கு
1. திருநாவுக்கரசு.ப;(தொ.ஆ), புலம் பெயர்ந்தோர் கவிதைகள், ப94.

அழகு சேர்ப்பனவாகவே உள்ளன. புலம் பெயர் தமிழர்களது அனுபவப் பரப்புக்குள்ளும், காட்சிப் பரப்புக்குள்ளும் உள்ளடங்குவதான இந்த உவமைக ளால் கவிதைகளினூடே சொல்ல முனைகின்ற செய்திகளை மிக இலாவகமாகச் சொல்ல முடிகின் றமையையும் இவ்விடத்தில் சுட்டியாக வேண்டும்.
"சூல்கொண்ட பன்றியின் கருவறைபோல் பிராங்போட் நகரச்சந்தில் ஓர் அறை" "எகிப்திய மம்மியாய்" (1) ''வழிப்போக்கன் குண்டி மண்ணைத் தட்டுவது போல்" (2) "வள்ளத் தளத்தில் வீசியடித்த
கடுக்கா நண்டுகளாய்") "வழிதவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்" (4) "கரைந்து கொண்டிருக்கிறது காலம்
வெயில் நேரத்து தெருக்களில் உறைந்த பனிக்கட்டிகளைப் போல" (5) "வானத்தை அண்ணாந்து பார்க்கும்
ஒரு ஏழை விவசாயியைப் போல்"(6) 'உறங்கி விழித்தெழும் சிசுப்போல்"(7) "செதில்காவடி ஆட்டக்காரனைப் போல்
1. ஜெயபாலன்.வ.ஐ.ச; வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் - பெருந்தொகை,
ப:213. 2. மேலது, ப:103. 3. திருநாவுக்கரசுய;(தொ.ஆ), புலம் பெயர்ந்தோர் கவிதைகள், ப:103 4. மேலது, ப:38. 5. மேலது, ப:94. 6. மேலது, ப:108. 7. மேலது, ப:125
98)

Page 57
தேகமெல்லாம் குத்தி இருக்கிற கோடி வதைகள்"
“சுற்றிவரக்காடுகள் மனிதர்களாக"?
“பேர்ச் இலைப் பழுத்தல் ஒன்று புல்லில் தரை இறங்கும்
ஒரு புது அகதி வந்ததுபோல்"
என்பதாக அமைகி ன்ற உவமைகளும், உருவகங் களும் கவிதை வெளிப்பாட்டு முறைக்கு மேலும் வளம்
சேர்ப்பனவாக அமைந்துள்ளன.
புலம்பெயர் கவிதைகளின் உணர்த்துமுறை உத்திகளில் குறியீடு, படிமம், பிறமொழிச் சொற்க ளின் கையாளுகை, உருவகம், உவமை முதலான அணிகளின் பயன்பாடு ஆகியனவற்றைக் குறிப் பிட்டுச் சொல்ல முடிகிறது. இவற்றுக்கு அடுத்த நிலையில் இக்கவிதைகளின் சொல்லாட்சிகளையும் குறிப்பிடலாம். எளிமையான சொற்கள், பேச் சோசைப் பண்புள்ள சொற்கள் முதலானவை இவ் விடத்தில் விசேட கவனம் பெறுவனவாக உள்ளன. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், கி.பி.அரவிந்தன், முதலானோருடைய கவிதைகளில் இவ்வாறான சொல்லாட்சிகளைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
1. திருநாவுக்கரசு.ப;(தொ.ஆ), புலம் பெயர்ந்தோர் கவிதைகள்
ሠ: 127-128.
2. மேலது. ப:118.
3. ஜெயபாலன்வஐச; துருவச் சுவடுகள், ப21.
مهم "

நிறைவுரை
புலம் பெயர் தமிழர்களுடைய இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களில் கவிதைகளின் செல் வாக்கு அதிகமாகவே இருக்கின்றது. இக்கவிதைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலையை நன்கு வெளிப்
படுத்துவனவாக அமைந்துள்ளன.
ஆரம்பகாலக்கவிதைகளின் பாடுபொருட்பட்டிய லில் பிரயாணநிலை அவலங்கள், அகதி வாழ்வின் அவலங்கள் முதலானவை பிரதான இடம் பிடித்தன. காலப்போக்கில் இந்நிலை மாறி, தாயகம் பற்றிய ஏக்கம், புதிய பணி பாட்டுச் சூழலில் தம்மை இயைபுபடுத்திக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள், பெண்ணியச் சிந்தனைகள், அரசியல் விமர்சனம், தனிமனித சுதந்திரம், பாலியல், சமூகக் கொடுமைகள் முதலாக இப்பாடு பொருட்பட்டியல் நீண்டுகொண்டு செல்வதைப் பார்க்கமுடிகிறது.
பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகள் பரவலாக வெளிவரத் தொடங்கியுள்ளமை புதிய திருப்பமாகக் காணப்படுகிறது. பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய புதிய உள்ளடக் கங்கள் புலம்பெயர் கவிதைகளின்பால் உலகின் கவனத்தை ஈர்க்கச் செய்வனவாக உள்ளன.
()()

Page 58
புலம் பெயர் கவிதைகளின் பாடுபொருள்களி னுாடே $905 விதமான சோகக்குரலை இனங்காண முடிகிறது. அது தாயகம் பற்றிய ஏக்கமாகவோ, உறவுகளைப் பிரிந்த ஏக்கமாகவோ அல்லது புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் எதிர்கொள்ளும் எதிர் பாராத அவலங்களாகவோ மேற்கிளம்புவதாக
இருக்கலாம்.
தாயகம் பற்றிய ஏக்கங்கள், கவலைகள், புலம் பெயர்ந்து சென்றுள்ள முதலாவது தலைமுறை யினர்க்கு (First Generation) ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். சொந்த நாட்டின் பெளதீக, கலாசார, ஆனி மிகத் தளங்களினர் பாதிப்பு புலம் பெயர் கவிதைகளில் துல்லியமாகப் பதிவு பெற்றுள்ளது. தாயகம் பற்றிய ஏக்கங்களைப் பாடுபொருளாகக் கொண்ட வளமான கவிதைகளை இரண்டாவது
தலைமுறையினரிடத்தில் (Second Generation) காண
(ԼքԼգ-աTՖl.
புலம்பெயர்ந்தோர் தம் சுதேசியப் பண்பாட்டுக்கும் புலம் பெயர்ந்துள்ள தேசத்தின் பண்பாட்டுக்குமிடை யிலான மோதுகையினைப் பெருமளவிலான கவிதைகள் பாடுபொருளாக்கியுள்ளன. காலம் காலமாகப் பேணி வந்த தமிழ்ப்பண்பாடு எதிர் காலத்தில் படப்போகிற “பாடுகள்' பற்றிய பிரக்ஞை
()

கவிதைகள் பலவற்றிலும் வலுவாகவே வெளிப்பட்டு நிற்கிறது.
புலம் பெயர்ந்துள்ள தேசங்களிலே கிடைத்த புதிய அனுபவங்களுக்கேற்ப புதிய பருவநிலைகள், புதிய கருப்பொருள்கள், புதிய உரிப்பொருள்கள் என்பவை காரணமாகக் கவிதையின் உருவம் மற்றும் உணர்த் தும் முறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய குறியீடுகள், புதிய படிமங்கள், உவமைகள், உருவகங்கள், மொழிக்கையாளுகை எனப் பல்வேறு நிலைகளில் புலம் பெயர்க்கவிதைகள் ஏற்படுத்தி யுள்ள வெளிப்பாட்டுமுறை உத்திகள் அல்லது உணர்த்துமுறை உத்திகள் கவனத்துக்குரிய விடயங்
களாகவே அமைந்துள்ளன.
தேசியத்தின் இருப்புக்கும், தேசியத்தை நிலை நிறுத்துவதற்கும் சுயமொழி இலக்கியங்களினுடைய பங்களிப்புக் கணிசமானதாகும். அந்த வகையில் புலம் பெயர்ந்தோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவு செய்யவும் முனைந்தமை காரணமாக வீச்சு மிக்க கவிஞர்கள் பலரையும், கவிதைகள் பலவற்றையும் இம்மரபு தோற்றுவித்தி ருக்கிறது.
பிறமொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புலம் பெயர்ந்தோர் கவிதைகளில் மிக இயல்பாகக் கலந்து
102

Page 59
வருவதனைப் பார்க்க முடிகிறது. குறித்த சில பிறமொழிச் சொற்களுக்கான அர்த்தம் தெரியாத நிலையில் இக்கவிதைகளில் சிலவற்றை அனுபவிக்க முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்து சென்றால் அடுத்து வரும் சந்ததியி னர்க்குத் தமிழில் பேசுதல், எழுதுதல் என்பன சிரமமான விடயங்களாகவே இருக்கப்போகின்றன. ஆயினும் உலகமயமாக்கல் தொடர்ந்து கொண்டே செல்லும் போது ''ஈழத்தமிழர்'' என்ற அடையா ளத்தைப் பேண வேண்டித் தமிழில் இலக்கிய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
ஈழத்தமிழர்களின் சுய அடையாளத்தை இம்முயற் சிகள் ஓரளவு இழுத்துப் பிடித்துத் தக்கவைக்கலாம். இந் நி லை யில் இந்த அடையாள நிலை வெளிப்பாடுகள் தமிழர்களின் சுதேசிய மொழியான தமிழ்மொழியில் அமையாமல், ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், சுவீடிஸ், டொச், இத்தாலி முதலான பிறமொழிகள் வாயிலாகவும் வெளிப்படக் கூடிய
ஆபத்துக்களும் நிறையவே இருக்கின்றன.
தமிழ் மொழியில் பேசுதல், எழுதுதல் என்பன புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள இரண்டாவது சந்ததி யினர்க்குப் (Second Genaration) பெரிய பிரச்சினையா கவே இருந்து வருவதனையும் இவ்விடத்தில் குறிப்
103

பிட்டாக வேண்டும். இந்நிலையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல புலம்பெயர் இலக்கிய வெளிப்பாடுகள் தொடர்ந்தும் தமிழில் வெளி வருமா என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
()4

Page 60
பிரன், துணைநூற் பட்டியல்
இ-பு 1) அரவிந்தன்.கியி
கனவின் மீதி
பொன்னி வெளியீடு 2) அருந்ததி
சமாதானத்தின் பகைவர்கள்
சென்னை, பிரான்ஸ், 1989 3) உயிர்நிழல்
பிரான்ஸ், 1999 4) கல்யாணி
மறையாத மறுபாதி,
பிரான்ஸ், 1992 5) சத்தியமூர்த்தி.வெ.இராம்
இலக்கியத்தில் படிமம்,
செந்தமிழ் அச்சகம், சென்னை, 1983. 6) செகந்நாதன் ஆ
புதுக்கவிதை - ஒருதிறனாய்வு
மேலையூர், 1978. 7) செல்வம்
கட்டிடக் காட்டுக்குள் ஈழம் கலைகள் சமூக விஞ்ஞானக்
கழக வெளியீடு, பிரான்ஸ், 1992. 8) சேரன்
நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன் கவிதைகள் ஒரு நூறு
காலச்சுவடு பதிப்பகம், சென்னை, 2000 9) தமிழவன்
புதுக்கவிதை, நான்கு கட்டுரைகள்
பாளையங்கோட்டை, 1977. 10) திருமாவளவன்
இனியும் சூல்கொள்,
பிரான்ஸ், 1997. 11) திருநாவுக்கரசு
புலம்பெயர் கவிதைகள், (தொகுப்பாசிரியர் )
நிழல் வெளியீடு,
சென்னை, 2001. 12) துருவச் சுவடுகள்,
நோர்வே, 1989 (கவிதைத் தொகுதி)
20
105

12) நட்சத்திரன் செவ்விந்தியன் எப்போதாவது ஒரு நாள்,
தாமரைச் செல்வி பதிப்பகம்,
சென்னை - 1999. 13) பாலா
புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வை
அகரம், சிவகங்கை, 1983. 14) பிச்சமுத்து, ந
திறனாய்வும் தமிழ் இலக்கியக் கொள்கைகளும், சக்தி வெளியீடு
சென்னை - 1983. 15) புலம் பெயர் தமிழர் நல மாநாடு, (மலர்) நிறப்பிரிகை ., திருச்சி, 1994. 16) பொன்னம்பலம்.மு
திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்,
Printed page setters, கொழும்பு, 2000. 17) முப்பத்திரண்டாம்
இந்தியப் பல்கலைக்கழகத் கருத்தரங்க
தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி, ஆய்வுக்கோவை,
இந்தியா, 2001. 18) முருகேசன்.ந.
டர்.
புதுக்கவிதைகளில் படிமங்கள், தேதி
மணிவாசகர் பதிப்பகம்,
சிதம்பரம் 1986. 19) வல்லிக்கண்ணன்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், அகரம்,
கும்பகோணம் 1999. 20) ஜெயபாலன், வ.ஐச
வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் - பெருந்தொகை, ஸ்நேகா வெளியீடு,
சென்னை, 2002. பெ
கள் ; அவர்களால் காதல்
'1 (06

Page 61
l)
2)
3)
4)
5)
6)
7)
கபிடுரைகள்
கொண்ஸ்ரண்ரைன், கொ.றொ, 'புலம்பெயர்தலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சி களும் “காலம்" - இதழ், 18, ரொறண்டோ,
560STLT.
சிவத்தம்பி.கா. ‘புலம்பெயர் தமிழர் வாழ்வு', மூன்றாவது மனிதன், கொழும்பு,2000.
சுதர்சன்.செ, ‘புலம்பெயர் கவிதைகளில் அகதி உணர்வு நிலை", ஞானம், (சிறப்பிதழ்) பெப்ரவரி, 2004.
சுந்தரம்பிள்ளை.செ, ‘புலம்பெயர் காரணிகளும் புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் சவால்களும், பூரணி, இதழ் - 1.
சுப்பிரமணியம்.நா. ‘புலம் பெயர் இலக்கியங்களில் ஈழத்தமிழர் சமூகம்' கருத்தரங்கத் தொடர் - 8, யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், 1998 - 1999.
சுரேஷ் கனகராஜா, 'ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி', இன்னுமொரு காலடி, இலண்டன், 1998.
நந்தகுமார்.இ, ‘புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களினி அங் கலாயப் ப் பு’, தடம் - 02, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம், 2000.

8) யமுனா இராஜேந்திரன், ‘புலம்பெயர் இலக்கியம் கோட்பாடு பற்றிய பிரச்சினை', சுவடுகள் நோர்வே, இதழ் -68, 1995.
9) யோகராசா, செ. ‘புலம்பெயர் கலாசாரமும் புகலிட இலக்கியங்களும்', பண்பாடு, மலர்-5, இதழ் -1.
10)யோகராசா.செ. ‘ஈழத்துப் புகலிட இலக்கிய வளர்ச்சி - ஒரு நோக்கு, ஞானம் (சிறப்பிதழ்), பெப்ரவரி,2004.
11)விசாகரூபன்.கி, இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் எதிர் நோக்கும் சிக்கல்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தண் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்
கல்லூரி, கோப்பாய், யாழ்ப்பாணம், 2003,

Page 62
0.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
அக்கிரமம், 83 அக்கினி, 56 அக்கினிப்பார்வை, 26 அகதித்தரை, 42 அகதிமுகம், 18 அகமுரண்பாடு, 7.81 அகராதி, 88 அகற்சித்தன்மை, 2 அங்கப் பிரதட்சணம், 61 அசை, 55 அசைவியக்கம், 2 அசைவு, 41 அடிக்குறிப்பு, 88 அடிப்படை, 10 அண்மைக்கால ஆய்வு, 10 அணி, 11 அணியக்கிடங்கு, 18 அதிகார அடுக்கு நிலை, 29 அந்நிய ராணுவம். 71 அந்நியன், 74 அநாதை, 48 அபராதம், 21 அபிலாசை, 8 அபிவிருத்தி, 13 அமைதிச்சூழல், 8 அயலவர், 44 அயன், 60 அர்த்தம், 23 அருந்தல், 11 அருவெருப்பு, 23 அலாஸ்கா, 54
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
6.
62.
அவலம், 14 அவலவழி, 14 அவஸ்தை, 41 அழுக்கு, 77 அற்புதம், 47 அறுவடை, 90 அறைகூவல், 71 அன்பளிப்பு, 56 அன்புரிமை, 30 அனுபவம், 9 ஆக்கிரமிப்பு, 7 ஆசைக்கனவு, 17 ஆட்சேபனை, 83 ஆடை, 80 ஆண்டவர், 31 ஆண்டி, 52 ஆணாதிக்கம், 87 ஆணி, 31, 84 ஆதங்கங்கள், 56 ஆவணப்படுத்துதல், 9 ஆறாம் திணை, 2 ஆன்மீகம், 55 இடப்பெயர்வு, 3 இடைஞ்சல், 40 இணக்கப்பாடு, 29 இயக்கம், 31 இயந்திரம், 18 இயலாமை, 22 இரண்டாம் நிலை, 7 இரத்தவாடை, 42 இரவல் கொள்ளி, 22
()9

63.
64。
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
இரவல் முகம், 85
இராணுவப் படையெடுப்பு 7
இராமாயணம், 82 இருப்பு, 6 இலக்கணம், 27 இலட்சம், 24 இழப்பு, 19 இளமை, 17 இறக்கை, 21 இன்பக்கனவு, 92 இனவாதம், 13 FF'ssi, 89 உச்சநிலை, 6 உடல் உழைப்பு, 5 உடன்பிறப்பு, 72 உணர்த்துமுறை, 10 உதடுகள், 48 உதிரம், 48 உந்துசக்தி, 67 உயிர்க்களை, 42 உயிர்ப் பாதுகாப்பு, 7 உயிர்ப் பாதுகாப்பு, 45 உருத்து, 38 உருவம், 10 உலகமயமாக்கல், 103
உவமை, 20 உள்ளடக்கம், 10 உள்ளுறை, 97 உற்பத்தியுரிமை, 61 ஊக்குசக்தி, 84 ஊடாட்டம், 2 ஊதியம், 28, 57 ஊழல், 28 எகிப்திய மம்மி. 98 எண்ணப்பாங்கு, 12
98.
100.
101.
102.
103.
104.
105.
06.
107.
108.
109.
110.
11l.
112.
113.
114.
115.
116.
7.
118.
19.
20.
121.
122.
123.
124.
125.
26.
27.
128.
129.
30.
131.
132.
எண்ணம், 11 எத்தனம், 58 எதிர்பார்ப்பு, 30 எதிர்ப்புணர்வு, 67 எதேச்சாதிகாரம், 81 ஏக்கம், 14 ஏளனப்பார்வை, 44 ஏழுகடல், 35 ஏஜென்சி, 31 ஐரோப்பியசுகம், 72 ஐஸ், 89 ஒட்டகம், 54 ஒடியல், 49 ஒல்ம், 89 ஒளிச்சித்திரம், 94 ஒற்றைப் பரிமாணம், 94 ஒலம், 48 கச்சான், 84 கட்டிடக்காடு, 51 கட்டிறுக்கம், 73 கட்டுச்சோறு, 19 கடல்வெளி, 16 கடவுச்சீட்டு, 16 கடுக்காநண்டு, 98 கணிசம், 10 கந்தகக்காற்று, 76 கம்பராமாயணம், 11 கர்நாடக இசை, 61 கர்ப்பம், 56 கரிசல்பூமி, 16 கரியவர். 44 கரு, 13 கருப்பொருள், 11 கரும்புள்ளி, 52 கருமம், 56

Page 63
133.
134.
135.
136.
137.
138.
39.
140.
141.
142.
143.
144,
145.
146.
47.
148.
149.
50.
151.
152.
153.
154.
55.
156.
157.
158.
59.
160.
161.
162.
163.
164.
165.
66.
167.
கருவறை, 20, 98 கல்வித்துறை, 9 கல்வீடு, 83 கலப்புத் திருமணம், 13 கலாபூர்வம், 1 கலை இலக்கிய முயற்சி, 9 கவிதையாக்கம், 10 கறுப்பன், 23 கனத்தஒலி, 76 கனதி, 9 கனவுப்பணம், 42 கணவுப்பொருள், 15 காட்சிச்சாலை, 64 காட்சிப்பொருள், 33 கிரகிப்பு, 32 கிராக்கி, 46 கிரேக்கக் கடல், 15 கிளை, 44 குடியுரிமை, 25 குடிவரவு, 26, 83 குதுாகலம், 56 கும்பாபிஷேகம், 61 குரங்காட்டம், 65 குழையடிப்பு, 85 குளிர்ப்பதன், 56 கூட்டுத்தொகுப்பு, 10 கூலிப்படை, 71 கெடுபிடி. 5 கேள்விக்குறி. 6 கேளிர், 85 கொடுமை, 51 கொந்தளிப்பு, 5 கொளு, 13 கோடை, 45 கோப்பை, 42
68.
169.
170.
71.
172.
173.
74.
175.
176.
177.
78.
179.
80.
181.
182.
183.
184.
185.
86.
87.
88.
189.
190.
191.
192.
93.
194.
95.
196.
197.
98.
99.
200.
201.
கோஷ்டி மோதல், 13 சக்கரம், 69
சங்கம், 61
சங்காரம், 85
சட்டம், 21
சடங்கு 36
சடலம், 91
சடுதி, 56 சந்ததி, 17, 103 சந்திச் சண்டித்தனம், 85 சப்வே, 90 சம்பிரதாயபூர்வம், 40 சமத்துவம், 58 சமன்பாடு, 58 சமாதானம், 21 சமூகக்கட்டமைப்பு. 67 சமூகம், 56 சமையல், 70 சர்வதேச விவகாரம், 13 சரக்குக் கப்பல், 16 சராசரி, 20
சரளம், 97
Ꭶ6ᎠIIL " , 56 சவக்குழி, 85
சவால், 61
சாதகம், 74
சாதி, 13 சாம்பற்பூச்சி. 70 சாமத்தியச் சடங்கு 38 சான்றிதழ், 56 சித்திரம், 33 சித்திரிப்பு, 64 சிருஷ்டிப்புத் தன்மை, ! சிலுவை, 83 சிலுவைப்பாடு, 17

203.
204
205.
206.
207.
208.
209.
20.
2.
22.
23,
214.
25.
26.
27.
28.
29.
220.
22.
222.
223.
224。
225.
226.
227.
228.
229.
230.
23.
232.
233.
234.
235.
236.
237.
சிற்றுர், 8 சிறுகதை, 91 சிறகு, 33 சீட்டுக்கழிவு, 31 சீதனம், 30 சீரழிப்பு,73 சுதந்திரம், 8
சுதேசியப் பண்பாடு, 101 சுயரூபம், 64 Sgòpid, 49 சூரியப்புலவு 69 சூல், 92 சூனியப்பிரதேசம், 7 செக்குமாடு, 30 செதில் காவடி, 52 செம்பருத்திப்பூ 51 செம்புள்ளி, 52 செம்மண், 51 செறிவு, 8 சேலை, 70 சொல்லாட்சி, 13 சொற்கூட்டம், 91 சோகம், 14 தகுதி. 57 தகைமை, 56 தங்கத்தட்டு, 70 தங்குமிடம், 19 தசை, 59
தடம், 9 தடையம், 16 தத்ரூபம், 14 தபால், 40 தம்பா, 25 தரிப்பு, 17 தலித், 83
238。
239.
240.
241。
242.
243.
244。
245.
246。
247.
248.
249。
250.
25l.
252.
253.
254.
255.
256.
257.
258.
59.
60.
6.
262.
263.
264.
265.
266.
267.
268.
269.
270.
27.
272.
தலைமுறை, 50 தளம், 9
தளிரிலை, 56 தற்கொலை, 32 தனித்துவம், 87 தனித்தொகுப்பு, 10 தனிமனித சுதந்திரம், ஸ்ே தனிமை, 14 தனிமைச்சிறை, 40 தாக்கம், 10
தாயகமண், 8 தாழ்வுச் சிக்கல், 43 திருமணப்பந்தம், 75 திரைகடல், 43 தீக்கோல், 53 துடைப்பான், 58 துப்பாக்கி, 81 துபிளியூர். 60 துருவப் பறவைகள், 44 துருவம், 17, 58 துல்லியம், 41 தெறி, 60 தேக்கவேலி, 83 தேடுகை, 16 தேர்ச்சி. 87 தேரிழுப்பு, 61 தொழுவம், 26 தொன்மம், 95 தோட்டம், 51 நகரம், 24 நடையுடை பாவனை, 33 நந்தவனம், 82 நரகக் கொதிநிலை, 56 நல்வழி, 44 நற்செய்தி, 31

Page 64
273.
274.
275.
276.
277.
278.
279.
280.
28.
282.
283.
284.
285.
286.
287.
288.
289.
290.
29.
292.
293.
2.94.
295.
296.
297.
298.
299.
300.
301.
302.
303.
304.
305.
306.
307.
நஷனாலிற்றி, 46 நாசி, 88 நாட்டியப் பயில்வு, 61 நாடோடி, 27 நாராய், 43 நாவல், 91 நியமம், 69 நிதர்சனம், 95 நிர்ப்பந்தம், 29, 56
நிரந்தரம், 45 நிறமுகூர்த்தம், 46 நிறவாதம், 28, 88 நினைவுச் சுழற்சி, 15 நினைவுத்தொடர், 32 நீக்ரோ, 28 நூல் வடிவு, 10
நெஞ்சுக்கூடு, 38 நெடும்பாடல், 12 நெருக்குவாரம், 6, 75 நேர்த்திக்கடன், 52 நேரகுசி, 29 நையாண்டி, 46 பகிடி, 88 பகைவர்கள், 21 பங்களிப்பு, 10 பச்சோந்தி. 65 Lugi 60s, 84 பஞ்சுத் தலையணை, 54 பட்டப்படிப்பு, 56 பட்டியல், 13
பட்டினிப் பிசாசு, 87 படிமம், 2 படுக்கை. 70
படைப்பாக்கச்செய்ன்முறை, 10
பண்டமாற்று, 78
308.
309.
310.
3.
32.
313,
34.
35.
316.
37.
3.18.
39.
320.
32.
322.
323.
324.
325.
326.
327.
328.
329.
. 330.
33.
332.
333.
334.
335.
336.
337.
338.
339.
340.
. பாரவண்டி, 16 342.
பண்டைத்தமிழ், 85
பண்பாடு, 2, 13 பண்பு, 23 பணிவிடை, 30 பத்திரிகைச் சுதந்திரம், 84 பத்திரிகை, 16 பத்தினிப்பட்டம், 69 பதச்சோறு, 16 பதுங்குகுழி, 76 பயில்வு, 61 பரதேசி, 93 பரவல், 38 பரவலான வாசிப்பு, 10 பரிதாபம், 93 பருக்கை, 31 பல்லினமலர், 83 பலாஇலை, 49 பலதிறப்பட்டவர்கள், 7 பவளக்கூர்வாய், 44 பன்முகத்தன்மை, 2 பன்மொழிக் கலப்பு, 17 பன்றி, 20
பனி, 16
பனை, 44 பாகுபாடு, 25
பாங்கொலி, 83 பாட்டி, 69
பாடு, 96 பாடுபொருள், 2 பாணி, 91
பாதிப்பு, 8 பாரஊர்தி, 14 பாரம்பரியம், 6
பாலியல், 13

343.
344.
345.
346.
347.
348.
349.
350.
351.
352.
353.
354.
355.
356.
357.
358.
359.
360.
361.
362.
363.
364.
365.
366.
367.
368.
369.
370.
371.
372.
373.
374.
375.
376.
377.
பாவிகம், 13 பாஸ்போர்ட், 14 பிசா, 88
பிடில், 52 பிணக்கு, 82 பிணம், 18
பிரக்ஞை, 61 பிரகாசம், 39 பிரச்சினை, 22 பிரசித்தம், 85 பிரசுரவாய்ப்பு, 84 பிரதிபலிப்பு, 33 பிற்போக்குச் சக்தி, 70 புதிய பழு 70 புதிய மரபு, 1 புரிதல், 79 புரிதலின்மை, 13 புலப்பெயர்வு, 3 புலமைசார் மக்கள், 5 புவியியல், 55
புழல், 4
புனிதம், 26
பூர்த்தி, 6 பெண்ணடிமை, 74 பெண்ணியம், 66 பெண்நிலை வாதம், 13 பெருந்தொகை, 53 பெருவரவு. 67 பெற்றோல் பவுசர், 14 பேசப்படாத பொருள், 8 பேசாப்பொருள், 80 பேர்ச் இலை, 93 பொய்மை, 36 பொருளிட்டல், 7 பொலத், 80
378.
379.
380.
381.
382.
383.
384.
385.
386.
387.
388.
389.
390.
39.
392.
393.
394.
395.
396.
397.
398.
399.
400.
401.
402.
403.
404.
405.
406.
407.
408.
409.
410.
411.
412.
போர்ச்சூழல், 18 போராடும் கரம், 43 பெளதீகம், 53 மக்கட் கூட்டம், 5 மக்பை, 53 மண்டபம், 4 மண்ணின் மைந்தர், 72
Ln600TLh, 36 மணற்குவியல், 73 மதுக்கிண்ணம், 89 மழைக்காலம், 45 மறுதலிப்பு, 11 மறையாத மறுபாதி, 70 மனநிலை, 21 மனிதக்கறை, 88 மனிதச் சருகு, 54 மனிதநேயம், 85 மனிதர், 27 மனோபாவம், 31 LDITS5/T600TLE, 24 மாப்பிள்ளை, 74 மார்பு, 70
மாரித், 88 மாற்றம், 88 மானுடம், 52 மிகநதி மாந்தர், 43 மிருகம், 66 மின் இணைப்பான், 6 மீன்கூழ், 49 முகவரி, 20 முதலை, 59 முதுசொம், 83 முதுமரம், 54 முல்லா, 85 முன்றல், 48

Page 65
பரபரப்பு
413. முனிவர், 56
443. வள அறிஞர், 5 பல் 414. முனைப்பு, 9
444. வன்முறைத் தவிர்ப்பு, 8 415. முஸ்லீம், 81
445. வன்னி, 54 416. மூலதனம், 5
446. வனப்பு, 49 417. மேலாதிக்கம், 1
447. வாய்ப்பு, 12 418. மேலாண்மை, 29 ..
448. வாழ்க்கைத் தரம், 5 419. மேளக் கச்சேரி, 61
449. வானவை, 86 420. மேற்குலகு, 6
450. விடுதலை இயக்கம், 81 421. மொழிப்பாவனை, 62
451. விண்ணப்பம், 30, 49 422. மொழிப் பேணுகை, 62
452. வித்தியாசம், 73 423. மொப், 88
453. விதிக்குரங்கு, 54 I 424. மோசடி, 28).
454. வியாகுலப்பிரசங்கம், 63 425. மோதுகை, 101 if 1940
455. விரக்தி, 72 426. யதார்த்தம், 58 )
456. விரத அனுட்டானம், 61 427. யாப்பு, 10 தேதி
457. விருத்தப்பா, 11 (2) 428. யேசு, 31
458. விருந்து, 68
A 429. ரகசியம், 67 யா
459. விலங்கு, 63 430. ரவிக்கை, 70
460. விவகாரம், 84 ரிட்ம் 431. லொவி, 73 பகிர்
461. விவசாயி, 40 432. வகைமாதிரி, 12
462. விழிப்புணர்ச்சி, 67 433. வசந்தம், 89
463. விஸ்தாரம், 31 434. வடபுலம், 82
464. விஸ்வரூபம், 80 தி. 435. வடலி, 22
465. விஷயம், 13 436. வடிகால், 61
466. வீச்சு, 102 Nராம் 437. வணிகநோக்கு, 4.
467. வீசா, 14 மந்த - 438. வதிவிடம், 14
468. வெட்கம், 29 439. வந்தனம், 75 ' பட்டதில்
469. வெறுப்பு, 25 : 440. வயற்பரப்பு, 40 91
470. வேதனை, 20 009701) 441. வருமானம், 29 914
471. வேறுபாடு, 46 சதி 2 442. வழிப்போக்கன், 98 கி.
472. ஸ்கோல், 89 ரன் பா) இ '),
-கம்
15


Page 66


Page 67