கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனோன்மணி நாடகம்
Page 1
DG 3Dai in a
APRCSE1 | N TA
- sy
FRANCIS KING
* వ్రా
螯
இ.
A. M. K. cuMARA's REGISTRAR OF UNIVE
fi J15TL35Li) ΑΛΑΝΙ
DRAMA MIL
BBURY, Յ. Բ,
RewoRs
VAMY, B, so, F. P. s. 捻S蕾擎 OF GEYLON
Page 2
ΝοτE oN THE ΑυτHοκ
The Rev. Francis Kingsbury, B, A, (a son of the veteran Tamil Scholar, Rao Bahadur C. W. Tamotharam Pillay, B. A., B. II, ) was
Professor of Tamil, United. Theological College, Bangalore, 1910-1919 Additional Editor of The Tamil Lexicon, / University of Madras, 1924-1926
Lecturer in Tamil, Ceylon University College, 4. Colombo, 1926-1936.
Author of several works in Tamil and English,
(3 t u g T G f u f ஆலப்புழை பெ. சுந்தரம்பிள்ளே இயற்றிய மனேன்மணியத்துக்கு வழிநூலாக
இயற்றமிழ்ப் போதகாசிரியர் கலைமாணி
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி எவர்க்கும் விளங்கும் தெள்ளியநடையில் எழுதின தமிழ் வசனநாடகம்
முதற்பதிப்பு ஐவது அழுத்தம்
சாவகச்சேரி
இலங்காபிமானி அச்சியங்கிரசாலை
நந்தன ளு 8ப்பசி மீ”
விலை சதம் 65
Page 3
Printed and Published by R C B È R T. K. 1' N G. S. B. U R Y
/s at THE LANK ABHI MANI PRESS .
Chavakachcheri
மனுேன்மணியம் என்னும் நாடகம் பற்பல துறைகளில் பற்ல அறங்களைப் போதிப்பது ; பல அழகு வாய்ந்தது. இதனை srgಧ್ಧಿ) பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பல கலைகளை நீந்திக் காைக்ண்ட புலவர் சிகாமணி, மனுேன்மணியத்தைப் போல் வேருெருநூல் தமிழில் இல்லை. இத்துணை மாண்பு வாய்ந்த நூலுக்கு வழிநூலாய்வந்த என் நூல் முதல் நூலி னது அழகையும் மாண்பையுமுடையது என்னும் விண் எண்ணம் எனக்கு இல்லை. தமிழ் மாணவர் யாவரும் மனுேன் மலீையத்தைக் கற்றல் வேண்டும் என்னும் எனக்குள்ள
ஆசையே அந்நூற்கு முதற்படியாக இதனை எழுத என்னை
ஏவியது, இது வழிநூலாகலின் கதையைச் சுருக்கியும்
ஒரோவிடங்களிற் கிரித்தும் எழுகியுள்ளது. முதல்நூல் செய்யுள் வடிவினது.
தமிழ் மூவகைய இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகக் தமிழ், நாடகக் கருத்தா, இயற்றமிழ் வடிவில் இயற்றமி ழிலக்கணம் சிதையாது நூல்செய்கல் வேண்டும் என்ற கட்டுக்கு உட்பட்டவன் அல்லன்; உலகவழக்குப்பேச்சையே தன் நூலுள் கொள்ள இடம்பெற்றவன், ஆயினும், மனுேன் மணியக் கதையில் வரும் ஆடவரும் அரிவையரும் உயர்குடிப்
* பிறப்பும் கல்விகலமும் பெற்றவராகலின் அவர் வாய்ப்பேக்
செல்லாம் உயர்நடைக்கும் இழிந்த கடைக்கும் இடையே
கற்றவர் இயல்பிற் பேசும் பேச்சிலே வரைந்துள்ளேன்.
இந்நாடகத்தில் அங்கம் 111 களம் 3ல் உள்ளவை எல்
லாம் புதியன்), பேராசிரியர் செய்த மனேன்மணியத்தில்
Page 4
繁
-
* iဗူy f
இல்லை. இவ்விஷயத்திற் பேராசிரியர் எண்ணம் வேறு, என் எண்ணம் வேறு, புருஷோத்தமனை கன விற் காணுவிடினும் கனவிற் கண்டபொழுதே தன் உயிரும் தன் காகலன் உயிரும் ஒன்றினபடியால் தந்தையின் எண்ண்த்துக்குச் சம்மகிக்க அவளால் இயலவில்லை. பேராசிரியர் எண்ணம் யாதோ
அறியேன். என் எண்ணத்தை அவர் அறியின் புன்செய். குற்றம் என்னர் என எண்ணுகின்றேன். இதனும் GSLI LI IT . சிரியர் பேரறிவுக்கு என் சிற்றறிவைச் சமஞ்செய்தேன்
எண்ணுர்,
கொழும்பு, விக்கிரமஹ்) ஆவணிமீ உக ல.
Of the REVEREND FRANCIS KINGSBURY it may be truly said
FORE WORD
He had too much satire in his vein And was determined not to starve it, Yet malice never was his aim : He lashed the vice, but spared the name.
Some of us who differed from him on issues most fundamental, delighted to sit at his feet and fearn of him. He was essentially a teacher, and he ever remained a learner. Error was to him the primal anathema, but he was gentleman enough to be ready to detect and recant his own errors as well the errors of others. To friends and foes alike, he was eminently fair, and he often drew attention to overlooked points which definitely weighted an argument in favour of his opponent. He was equally at home unravelling a mysterious passage in Tamil Literature or a difficult point in Christian Theology, and no less at home dancing and singing at a Children's party his inimitable
கள்ளிலே ஒருகுடி குடிச்சுக் கொண்டு கருவாட்டிலே ஒருகடி கடிச்சுக் கொண்டு.
The g at man's sons have placed us all in debt in bring out this delightful little drama which
Page 5
vỉ ,
was in manuscript at the time of author's demise. Aside from its intrinsic merit, it is full of those characteristics of Father Kingsbury which endeared him to his friends and admirers.
')
Colombo, Ceylon,
May 15th, 1948 A. M. K. CUMARASWAMY
வேகன் பாண்டிகாட்டரசன்
மனுேன் மணி சீவகன் மகள் சுந்தாமுனிவர் சீவகன் குரு (స్ట్రోణుar சீவகன் மந்திரி 57೨೮॥೫ ರ್ವ சீவகன் படைத்தலைவன் பலதேவன் குடிலன் மகன்
மனேன்மணி தோழி சகடன் வாணியின் தந்தை
வாணி காதலன்
செவிலியர் சேவகர் முதலியோர்
புருடோத்தமன் Gg J. Gír l't-si g aðr
அருள் வரதன் புருடோத்தமன் படைத்தலைவன்
சேவகர் முதலியோர்
Page 6
காப்பு
வெண்பா அமைய அருளனைத்தும் ஆட்டுமேல், நெஞ்சே, சுமை நீ பொறுப்பதெவன், சொல்லாய் ;-நமையு நாடகமே ஆட நவின்றால் அதற்கிசைய (மிந்த, ஆடுவம்வா ; நாணம் அவம்.
மனுேன்மணியம்
அங்கம் s களம் 1
இடம் திருநெல்வேலி பாண்டியன் கொலுமண்டபம்
சீவகன், குடிலன், நாராயணன் முதலியோர் கோலுவில் இருக்கின்றர்கள். 33.೧ ಹಿಗ್ಗೆ : மகாராசா ! சுந்தாமுனிவர் வாசலில் வந்து கிற்
கிருர், - சீவகன் : மக்கிரி, பிரகானி, நீங்கள் போய் முனிவரை
அழைத்துவாருங்கள். குடிலனும் நாராயணனும் போய்ச் சுந்தரரை அழைத்து வருகின்றர்கள்.
சீவ (தலைமேற் கைகுவிய) சுவாமிகாள் 1 வருக, வருக, இன்றல்லவோ இங்ககரமும்,இக்கோட்டையும், நானும் என் மணியும் செய்த தவத்தின்பேறு பெற்முேம், இந்த ஆசனத்கில் வீற்றிருக்க,
ടു சுந்தரர் இருந்தபின் எல்லோரும் இருக்கின்றனர்.
சுந். N சீவகா! உன்னையும் உன்குலத்தையும் பாண்டிய காட் டயும் இறைவன் காக்க எப்படி உங்கள் சேமம் ?
சீவ. வாமிகள் அருளிருக்க எங்களுக்கு என்ன குறை.
சுந், மனுேன்மணி சேமம் எப்படி?
Page 7
மனோன்மணீயம்
சீவ. சுந். சீவ.
சுந்.
சீவ. சுந். சீவ.
சுந்.
மணியும் சேமமுடையாள். நன்று, நன்று. சுவாமிகள் கோட்டையைப் பார்த்ததோ? (பராமுகத்தோடு) ஆம், பார்த்தேன். என் ஏ தாவது குற்றம் குறை உண்டோ? குற்றமொன்றுமில்லை. குறை? ஆம், குறை ஒன்று கண்டேன். இந்தக் கோட்டை யைப் பகைவர் முற்றினால் நீ தப்பிப்போக என வழி வைத்திருக்கிறாய் ? சீவகனும் குடிலனும் ஒரு வரை யொருவர் நோக்கு கின்றனர்.
சுவாமிகாள்! என் பெயரைக் கேட்டாலும் அரசரெல் லோரும் அஞ்சுவார்களே. இந்தக்கோட்டை எவ் வளவு வலிது ! இதன் அகழ், என்ன ! கோட்டை மதில்மேலுள்ள பொறிகளென்ன ! யாரேனும் மடையர் தட்டுத்தடுமாறி தெரியாமல் வந்தாலும் இந்தப் பொறிகளின் இயக்கத்தைக் கண்டவுடனே நடுநடுங்கி, கலங்கி ஓடிவிடுவார்களே. இப்படியிருக்க நான் தப்புவற்கு வழி ஏன் ? சம்போ! சங்கரா !....... சீவகா, உன் நன்மை யையும் மனோன்மணி சேமத்தையும் தேசத்தின் வாழ்வையும் எண்ணி நான் இக்கோட்டைக்குள் சில கிரியை செய்யவேண்டும். கோட்டைக்குள் ஓர் அறையில் நினைத்த நேரம் வரவும், போகவுந் தடை யில்லாதபடி
சீவ.
சுவா
எண்
பய6
அ ர ச
சுந்.
அங்கம் 1 களம் 1. 3
ჩბზე მას 8 || எனக்கு அறையின் திறவுகோலும் வேண்டும். தரு
வாயா? சுவாமிகள் சித்தம் என்பாக்கியம், சேவகா சுவா மிகள் காட்டுகிற அறையும் திறவுகோலும் சுவாமி களுக்குக் கொடு. வெற்றிபெறுக சீவகர !
சுந்தரர் எழுந்துசெல்ல எல்லோரும் வணங்கி வழி யனுப்புகின்றனர். சுந்தரர் சேவகனுெருவனுேடு வெளிச்சேல்கின்றனர்.
s
Page 8
களம் 2 இடம் : திருநெல்வேலிக் கோட்டை, கன்னிமாடம்.
மனோன்மணி இருக்க, வருகிறாள் வாணி.
மனோ.
வாணி ! வா வா ; ஏன் உன் முகம் வாடியிருக்கிறது ? வாணி. (பேசக்கஷ்டப்பட்டு) ஒன்றுமில்லை அம்மா. மனோ..
ஏன் ? என்ன விசேஷம் வாணி ? ஏன் அழுகிறாய்? வாணி, அம்மா, நான் எப்படிச் சொல்லுவேன் ? மனோ. என்ன, நடராசர் உன்னை ஏமாற்றிவிட்டுப் போய்
விட்டாரோ? வாணி. (இல்லையென்ற குறிதோன்றத் தலையை அசைக்கிறாள்) மனோ. பின்னை என்ன ; நேற்று உனக்கு என்ன சொன் னார் ? வாணி. நாங்கள். ஒருவரை ஒருவர் சந்தித்து இன்றைக்கு
அஞ்சுநாள். மனோ. " நாம் ஒருவரையொருவர் காணா நாளெல்லாம் வீணாம்
நாளே '' என்ற சொல் வெறும் பேச்சுத் தானோ ? இது தானோ காதல் ?
வாணித் தேம்பித்தேம்பி யழுகிறாள்.) மனோ. (வாணியின் கையிரண்டையும் தன் கைக்குள்
அடக்கி) தோழி, எனக்கும் ஒளிப்போ ? வாணி. அம்மா! என் தகப்பனுந் தாயு மென்னை நடராச,
ருக்குக் கொடுப்பதில்லையாம் ; அதுமட்டுமல்ல ' குடி லன் மகன் பலதேவனுக்குத்தான் என்னைக் கொடுப்
பார்களாம். மனோ. அதற்கென்ன ; பல்தேவன் மந்திரிமகன் அலவோ ?
கட்டழகன்; அதற்கேன் அழுவான் ?
6
4.1 த 1 - - -
அங்கம் 1 களம் 2
5
வாணி. அம்மா, நடராசரும் பலதேவரும் ஆனை யும் பூனையும்
போலல்லவோ? நடராசருக்கு என்னைக் கொடா விட்டாலும் நான் இப்படி விசனப்படேன். நான் அவரை நேசிக்கிறது அவருக்குத் தெரியும், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அதுபோ தும், மனமும் மனமும் பொருந்தின பின் மணம் அவ்வளவு அவசிய மில்லை. அ து அல்ல என்னை வருத்துகின்றது. பல தேவன் கையில் என்னைக் கொடாமல் இருந்தால் அதுபோதும்---எனக்கு வயது இருபத்துமூன்று ஆகியும் ஒருநாளும் என் தாய் தகப்பன் சொல்லை மறுத்ததேயில்லை, ஆனால் இன்றைக்கோ...... (தேம்பியழுகின்றாள்) அவர்களைப் பார்த்து......... ' என்னையல்ல........... என் பிணத்தையே ... பலதேவன் கையிற் கொடுப்பீர்கள் " என்றபின் இங்கே
ஒடிவந்துவிட்டேன். (தேம்பியழுகிறாள்.) மனோ. வாணி ! வாணி! அழாதே, அழாதே. ' கடவுளை
நம்பினோர் கைவிடப்படார்' என்று சுந்தரமுனிவர் நமக்குப் போதித்தது நீ மறந்துபோனாயோ? எனக்கோ ஒரே ஒரு ஆசை சுந்தாமுனிவர் திருவடி
யில் இருந்து ஞான வாசிட்டம் வாசிப்பதே. வாணி. நூலறிவு என்ன செய்யும் ? வேகுதே என் நெஞ்சு! மனோ. எதுக்கும் கடவுள் இருக்கிறார். வா, பந்தாடுவோம்.
வனெ .
1. 41
Page 9
3,3T 3.
இடம்: சீவகன் கொலு
சீவகன், குடிலன், நாராயணன் முதலியோர் இருக்க
சகடன் வருகிறன்.
JELGöI : in strater வாழ்க! வாழ்க Los targa சீவ. வாரும் சகடரே; சேமந்தானே? Gf. (5 afLDGub, LD4, it a star Tafair குடைக்கீழ் இருக்கிற் دوسری
எங்களுக்கு என்னகுறை ? درھیبسبر
சீவ குறையுண்டோவென்று நான் கேட்கவில்லயே, ஏதோ குறையிருக்கிறதுபோற் தோன்றுகின்றது. என்ன சங்கதிரி
கே. மகாராசா ! எனக்கு வயது ஐம்பத்தைஞ்சு, இத்தன்ை வருஷம் குறையென்ருல் என்ன என்று எனக்குத் தெரியாது. இப்போதோ. ஒருவரும் ஒரு தீங்கும் எனக்குச் செய்யவில்லை. யார் எனக்குத் தீங்கு நினைக்கிறவர்கள்? என் மகள் வாணிதான்
இப்போது எனக்கும் அவள் தாய்க்கும் இயமன் போல வந்திருக்கிருள்.
சீவ. சகடரே, அப்படிச்சொல்லாதேயும், வாணியை நான் அறிவேன். அவள் புத்தி என்ன படிப்பென்ன! குணமென்ன ! இதனுல் அல்லவோ மனேன்மணியும் வாணியும் ககமும் தசையும்போலச் சினேகிதிகள் வாணி ல்ேலவள்,
Fð,
அங்கம் 1 களம் 3 7
எல்லாருக்கும் கல்லவள்தான். எங்களுக்குத்தான் கொள்ளி வைக்க வந்தவள். - -
. ܝܼܠܐܛܝܢܝ "
என்ன சங்ககி ? *、 வானியை நம் மந்திரியார் மகன் பலதேவருக்குக் கன்னிகாதானம்செய்ய நானும் என் மனைவியும் எண் ணினுேம், இதை நாங்கள் கேற்று அவளுக்குச் சொல்ல, 8 பெட்டியிலே அடங்கியிருந்த காகம் சீறிக் கொண்டு படமெடுத்ததுபோல உருக்கொண்டாள். இதற்குமுன் ஒருநாளும் அவளை இப்படி காங்கள் கண்டதேயில்லை. −
ஏன், என்னசொன்னுள் ?
தான் செத்தாலும் பலதேவனுக்கு வாழ்க்கைப்படப்
போகிறதில்லையாம்.
- ஏன், என்ன காரணம் ?
இங்கே நடராசன் என்ற ஒரு பித்தன் கிரிகிறன். தான் வாழ்க்கைப்பட்டால் அவனுக்குத் தான் வாழ்க் கைப்படுவாளாம். இல்லாவிட்டால் இருக்கிறபடியே
இருப்பாளாம். இனி காங்கள் என்னசெய்வோம் ?
நடராசன் வடிவழகன். எந்தப்பெண்ணும் அவனைக்
கண்டால் மயங்குவாள் ; ஆணுல்.
எங்களுக்கு வேறே பிள்ளையில்லை. நாங்களிருவரும் காசிக்குப்போய் கங்கையிலே விழுந்து உயிரைவிடப் போகிருேம், போகுமுன் மகாராசாவுக்கு இதைச்
செல்ல வங்தேன்.
Page 10
(ລ.
செவி.
ತೆವು,
Gaga.
சீவ,
ଜ# ଗଁ,
சீவ.
மனுேன்மணியம்
சீச்சி, சகடரே, என்ன விண்பேச்சு ? நான் வாணி யைக் கண்டு பேசுவேன். என்பேச்சை அவள்
தட்டாள். உங்கள் விருப்பப்படியே அவள் பல
தேவனுக்கே வாழ்க்கைப்படச் சம்மகிக்கும்படி
செய்வேன். நீர் விண் ஆயாசத்தை விட்டுச் சங்கோ ஷக்கோடு போம். உமது மனைவிய்ையும் போய்த் கேற்றும். 0
மகாராசா ! எங்களுக்கு புது உயிர் வந்தது. வாழ்க,
வாழ்க பாண் டியகுலதீபமே
சகடன் போகிறன். குடிலனும் போகின்றன்; செவிலி ஒருத்தி வருகின்றள்,
நமஸ்காரம் சாt!
என்ன தாதி, உன்முகக் கிலே கலக்கங்தோன்று கின்றது ?
மகா சாயா, நம்ம காய்க்கு.
தாய்க்கு என்னடி உடனேசொல், ஒன்றும் ஒளிக்காதே.
இல்லை, மகாராய, கேற்று மாலை தாயும் வாணியும் பந்து விளையாடினர்கள் கிலாமுற்றத்திலே, அதன் பின் சாப்பிட்டுவிட்டு தாய் படுக்கைக்குப் போஞர் கள். இராக் கிரியெல்லாம் நல்ல தூக்கம். கான்
பக்கத்திலேயே படுத்திருந்தேன்.
* சொல்லு, சொல்லு, காரியம் என்ன என்று சொல்லு,
கதையை வளர்க்காதே.
/ܐܦ .
அங்கம் 1 களம் 3 9
செவி இல்லை, மகாராயா. தூக்கத்திலே வாய்குழறி ஏதோ பேசினர்கள். நான் உற்றுக்கேட்டேன். % நாதா !
காதா! நான் உம்மை ஒருநாளும் மறவேன்” என்ற
சொல்லுக்கேட்டது. அப்புறம் தாய் திடீரென்று அழுதார்கள். உடனே எழுப்பி என்ன என்று விசா ரித்தேன். "ஒன்றுமில்லை, சும்மா தொந்தரவு செய் யாதே ” என்ருரர்கள். ஆனலும், அதுமுதல் இம் மட்டும் காய்ச்சல் ; ரொம்பத்தாகம், பார்வை y வெருண்ட பார்வை ; ஒருத்தரும் பாராவிட்டால்
தானே சிகிக்கிறதும் அழுகிறதும். சாய்க்கு ஒரு 5ாளும் இப்படி இருந்த கில்லை, மகாராயா. Y (தேம்பியழுகிருள்)
பாண்டியன் எழுந்து செவிலியோடு செல்கிருன்,
Page 11
களம் 4.
இடம் : கன்னிமாடம்
மனோன்மணி சயனித்திருக்க சீவகன் பக்கத்தில் ஓர் ஆசனத்தில் இருக்க, வாணியும் செவிலியும் நிற்கிறார்கள்.
சீவ. மகளே ! உனக்கு என்ன செய்யுது? (அவள் நெற்றி
யில் அரசன் தன் கையை வைத்து) மனோ. (மெளனம்) சீவ. மகளே ! ஏன் ஒன்றும் பேசாமல் இருக்கின்றாய்? மனோ. அப்பா! என்னென்று சொல்ல ? எனக்கே தெரிய
வில்லை. இப்படி முன் ஒருபோதும் இருந்ததில்லை. என் மனத்தில் பெருங்குழப்பம்.
(கண்ணீர் சிந்துகிறாள்.) சீவு.
மணி ! ஏன் அழுகின்றாய் ? நீ அழுதது நான் ஒரு நாளும் கண்டதில்லை. பிள்ளைகள் இப்படித் தான் தங்களுக்கு நோயும் வருத்தமும் உண்டாக்கிக்கொள் வதுமன்றி மற்றவர்களுக்குங் கஷ்டந்தருதல். (வாணியைப் பார்க்கிறான்.) வாணி ! இங்கே வா. நீயும் இப்படித்தான், இதுவரை யிலும் நல்லபிள்ளையென்று பேரெடுத்த இப்போது
குழப்படிசெய்யத் தொடங்கிவிட்டாய். வாணி. மகாராசா ! நான் என்ன செய்வேன் ? சீவ.
சும்மா இரு, எனக்கெல்லாந்தெரியும் ; உன் தாய் தகப்பனை விட நீ அதிகம் படித்தவளோ? புத்தி சாலியோ? அனுபவம் முதிர்ந்தவளே ா? அவர்கள்
அங்கம் 1 களம் 4
11 பேச்சைக் கேளாமல் முரட்டாட்டம்பண்ணுகிறாய். (வாணி மெளனம் சாதிக்கிறாள்.) ஏன் வாணி, உன் தாய் தகப்பன்மார் உன்னைப் பலதேவ னுக்குக் கலியாணம் செய்துகொடுக்க எண்ணினால்
அதற்குச் சம்மதியாமல், மாட்டேன் என்கிறாயாம். வாணி. மகாராசா! நான் பலதேவனை நேசிக்கமுடியாது ;
நான் நேசியாத ஒருவனை விவாகஞ் செய்ய சம்மதிப் பது எப்படி?
அட்ட, புதுப் பேச்சுப் பேசுகிறாய், எங்கள் காலத் திலே பிள்ளைகளுக்குத் தாய் தகப்பன்மார் கலியாணஞ் 'செய்து வைப்பார்கள். அதன்பின் பிள்ளைகள் ஒரு வரை ஒருவர் நேசிப்பார்கள். இப்போது முதலிலே அறிந்து நேசிக்கவேண்டுமாம். அதற்குப் பிறகு
தானாம் விவாகம் செய்கிறது! இது கலிகாலம். வாணி. மகாராசா ! நேசம் என்பது இயல்பிலே வருவதோ
அல்லது கட்டாயத்தினால் வருவதோ ? ' நீ ஒருவனை
நேசி' என்றால் நேசிக்க முடியுமோ? சிவ.
உன் கெட்டித் தனத்தைக் காட்டுகிறது இங்கே அல்ல. நான் சொல்லுகிறபடி பலதேவனையே நீ விவாகஞ்
செய்யவேண்டும். வாணி. இல்லை என்றால் ? சீவ. நீ என்றைக்கும் கன்னியாயிருக்கவேண்டும். வேறொ
ருவனையும் நீ விவாகஞ்செய்வது இல்லை. வாணி. சம்மதம், சீவ. போடி, பிச்சி. நீ என்றைக்கும் கன்னியாயிருந்தால்
உன் அழகு எப்படிப்போம் ? அரைத்தால் அல் லவோ சந்தனம் மணக்கும்,
கலகத்
Page 12
12 மனேன்மணியம் *
வாணி, கறையான் அரித்தால் சுங்தனம் மணக்குமோ? ܂ܢ ܠ ܐ
சீவ. விடு விடு, பகிடி ; நான் சொல்லுகிறபடி செய்ய
வேனும், •
வாணி. மகாராசா, என்றைக்கும் கன்னியாய் இருக்கச்
சம்மதம். (சேவகன் வருகிறன்)
சேவ. சுந்தாமுனிவர் வந்திருக்கிருர் ; 'மகாராசாவைக்
காணலாமோ என்று கேட்ட்ார். சீவ. ஆம், ஆம் ; உடனே அவரைக் கூட்டிக்கொண்டு வா. A
(சேவகன் செல்கிருன்) (
சுந்தரமுனிவர் வருகிருர், சேவகன் பின்னுலே வ وبر | கிருன், JV சுவாமிகாள்! நமஸ்காரம் ; சுவாமிகள் வந்தது கல்ல
என்ன விசேஷம் ? (மனுேன்மணியைப் பார்க்கிருர்) மனுேன்மணிக்கு என்ன ? இாாத் கிரித் தொடக்கம் காய்ச்சலாம்; ஏன் என்று தெரியவில்லை, கேட்டால் ஒன்றுஞ் சொல்லுகிருள் இல்லை. ( சுவாமிகாள் ! என்னளன்று எனக்கே தெரியாததை LLLLLL LLLLLLY u Mu LLLLLLLLSLLLTTTTTT LLL With
கான் எப்படிச் சொல்வது. -¿
(இரண்டு விநாடி அவளை உற்றுநோக்கினயின்) சீவகா! உன் மகளுக்கு ஒருதீங்கும் இல்லை. இதெல்லாம் - சீக்கிரம் மாறிவிடும். கான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும். இங்கே வா. (தனியிடத்துக்கு அரசனை அழைத்துச்சென்று) மனேன்மணிக்கு விவாகம் செய்யும் பருவம் அடுத்தது. அவள் என்றைக்குஞ் சின்னப்பிள்ளை என்று நீ நினைக்கக்கூடாது.
அங்கம் 1 களம் 4 13
விவாகஞ்செய்து வைக்கவேண்டும். இவளுக்கு ஏற்ற கணவன் சேரதேசத்து மகாராசா புருஷோத்தம வருமனைவிட வேருெருவனும் இல்லை. அவனுக்கும் மனுேன்மணியைப்போல வேருெரு மனைவி கிடைப் பத்ம் முடியாது. இது நான் அறிந்த உண்மை, காலந்தாழ்க்காமல் உடனே சேரனிடம் தூதனுப்பி செய்யவேண்டிய ஒழுங்கெல்லாம் செய், சோனிடம் போய் ஒழுங்குசெய்யக்கூடியவன் நடராசன். உடனே அவனை அனுப்பு.
சுவாமிகாள்! இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்?
என்னையும் என் மணியையும் காக்க மதுரையை
விட்டு அடிகள் கிருநெல்வேலிக்கு வந்தது சிவன்
செயலன் ருே ? சுவாமிகள் சொல்லியருளியபடியே செய்வேன். ஆனல் அகற்குமுன் குடிலனையும் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளவேண்டும்,
சரி சரி,உன் எண்ணப்படிசெய். சம்போ, சங்கரா, "மகாதேவா! மனுேன்மணியை தோன் காக்கவேண்
டும்.
சுந்தரர் போகிருர்,
Page 13
N 36th 5
இடம் : குடிலன் வீடு, - நிலாமுற்றத்திலே குடிலன் முன்பின் உலாவிக்கொண்டு சிந்தனைசெய்கிறன்.
குடி (தனதுள்) புத்தியே சகலச்த்தியும். இதுவரையும் நினைத்ததெல்லாம் முடித்தேன். மதுரையைவிட்டு அரசனைப் புறப்படுத்தி,கிருநெல்வேலிக்குக் கொண்டு வங்தேன். மதுரையில் வரக்கூடிய தடைகள் கிரு நெல்வேலியில் வாரா. கோட்டையும் கட்டிமுடிச் தேன். அடுத்தபடி என்ன? யோசித்துச் செய்தால் எல்லாம் அனுகூலமாகவே முடியும். சுந்தீசனும் நாராயணனும் சீவகனக் காக்க கங்கணங்கட்டிக் கொண்டு கிற்கிருரர்கள், குடிலன் யாரென்று அவர் களுக்குத் தெரியாது. இயமன் கையிலகப்பட்டவனே ஒருவேளை மீட்கலாம். சாவித்திரி மீட்டாளாடிே சத்தியவான, குடிலன் கையிலகப்பட்ட சீவகனத் தப்புவிக்கத் தேவராலும் முடியாது; மூவராலும் முடியாது,ஆலவாய்ச் சுந்தரேசாரும், திருநெல்வேலி வேய்முத்திரும் கெட்டிக்காரரானுல் ஒருகை பார்க் கட்டும். நானும் ஒருகை பார்ப்பேன். ஆணுல் எல்லாம் காலம் அறிந்து செய்யவேண்டும் தகுந்தபடி யோசிக்கவேண்டும். இதிலே பிழையொன்றும் விடக் கூடாது. பாண்டிய6ாடு நமதே. நமக்குப்பின் 18ம் குமாரன் பலதேவன் பாண்டியனவான், குடில பாண்டியர் ; ஆகா, கன்று கொனிக்கின்றது. (சேவகன் வருகிருன்)
(
அங்கம் 1 களம் 5 15
சேவு, மகாப்பிரபு, மகாராசா எசமான்களை அழைத்துவரும்
படி என்னை அனுப்பினர். குடி, * என்ன விசேஷம் ?
இளவரசிக்கு இசாக்கிரிமுதல் காய்ச்சலாம், சுந்தர முனிவர் வந்து பார்த்துவிட்டுப் போனுர், இராசா விடத்திலே ஏதோ இரகசியம் சொன்னாாம். இரக சியம் எல்லாம் பரகசியமாய்ப் போய்விட்டது. மனேன்மணித் தாய்க்கு உடனே ஒரு கலியாணம் பேசி முடித்துவைக்கவேணும் என்ருராம்.
குடி, நல்லது, நல்லது. இந்தச் சுப விசேஷம் கொண்டு வந்த உனக்கு இதோ வெகுமதி. (தன் கழுத்திலி ருந்த முத்துமாலையை எடுத்துச் சேவகன் கழுத்தில் அணிகிறன்) போ, மகாராசாவிடத்திற் சொல்லு, ஒரு கொடியில் வந்துவிட்டேனென்று.
சேவ (சாஷ்டாங்க நமஸ்காரஞ்செய்து) பிரபு, பிரபு 1 எச மான்களைப்போலப் பெரியமனுஷரை உலகத்திலே
s பார்க்கலாமோ ? (எழுந்து வெளியே செல்கிருன்) (5lq-. کارا மடையன், இவனைப்போல் எல்லாரும் மடையர். இவன் பேதை, காராயணன் மட்டி, சுந்தான் மடை யன், சீவகன் மிலேச்சன், இவர்கள் எல்லாரையும்
இாாட்டினத்திலே ஒரு ஆட்டம் ஆட்டி வைப்பேன்.
(' , , , , x8 ல் in i s A i crv i : . - * --Cee
|9 - ი კი - مما يق دون بعض التي يسكنه لا الشكل κ. δ E. S. Y. %2 X. AJ} 。 リ。) 2. )7 ܚܨ
ശൃ 。
Page 14
களம் 6 இடம் : அரமனை. சீவகனும் குடிலனும்
சீவ.
குடி.
இதெல்லாம் சொன்னவர் சுந்தரமுனிவர்தான், புரு ஷோத்தமவருமனை, மணிக்கு ஏற்ற கணவன் என்று குறித்ததும் அவரே. சோனிடம் நடராசனைத் தூத னுப்பும்படி சொன்னவரும் அவரே." மகாராசா, இளவரசியின் விவாகத்தை நான் மறந் திருந்தவனல்ல. கோட்டை கொத்தளங்களெல்லாம் முடிந்தவுடனே அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய எண்ணியிருந்தேன். எல்லாம் கட்டிமுடிந்தன. இதைப்பற்றி மகாராசாவிடம் நாளைக்குப் பேசலாம் என்று நினைத்தேன், பஞ்சாங்கத்திலே நாளைக்கு நல்லநாள். சுந்தரர் இன்றைக்கே சொல்லிவிட்டார். சந்தோஷம், சந்தோஷம். இதைக் கேட்டவுடனே,- என் உள்ளத்தில் வந்த களிப்புக்கு அளவில்லை, ஆம், அறிந்தேன், நீ சேவகனுக்கு முத்துமாலை கொடுத்ததெல்லாம் வந்து சொன்னான். புருஷோத்தமன் பல நற்குணங்களுள்ளவன் ; வீரன்,
அஞ்சாநெஞ்சன். ஆனால்........ ஆனால் ? தன் னை விடப் பெரியவன் ஒருவனுமில்லை என்ற செருக்குள்ள வன். வாலிபனிடத்திலே செருக்கு இருப்பது இயல்புதானே. வயது முதிர, முதி, தன்னைப்போன்றவர்களும் தன்னிலும் பெரியாரும்
60
சீவ.
குடி.
சீவ.
குடி.
அங்கம் 1 களம் 6
17
'விெ 5
சீவ.
குடி.
கபல
இருக்கிறார்கள் என்பதை அறிவான். ஆகவே, இதை ஒரு பெருங்குற்றமென்று கொள்ள லாகாது. வே றொரு தடையுண்டு : பெண்வீட்டார் விவாகம் பேசிப் போவது முறை அல்ல ; வழக்கமுமல்ல ; அழகுமல்ல. ஆயினும் ஆபத்துக்குப் பாபமில்லை. நமக்கு அவசர மானால் நாம் தானே போகவேண் டும் !
அப்படி என்ன அவசரம் ? எனக்கும் என் மக ளுக்கும் பழிப்புக்கிடமானதொன்றும் நான் செய்யக் கூடாது, மகாராசா, இளவரசியாருக்கு புருஷோத்தமனே தக்க மணமகன் என்று சுந்தரர் சொன்னது முழு - வதும் சரி, அவனிடத்தில் இப்போதே தூதனுப்பி 'ஒழுங்குபண்ணவேண்டும் என்ற தி லும் தவறு இல்லை. ஆனால், முதலிலே கலியாணம் பேசாமல் வேறே விஷயங்களைப் பேசின பிறகு ஈ, கலியாணப்பேச்சு, எண்ணிப்போன காரியமாகத் தோற்றாமல் நடுவிலே இயற்கையில் எழுந்த ஒரு பேச்சுப்போலப் பேசி முடிவுகட்டவேண்டும். குடிலா, நீயல்லவோ மந்திரி ; வியாழபகவானும் * வெள் ளிபகவானும் உன்னிடத்தில் வந்து பிச்சை கேட்டாலும் அவர்களுக்கு இந்தப் புத்தி கிடைக் குமோ ? உன்னை மந்திரியாகப் பெற்ற என் பாக்கியத் து ககு என்ன சொல்லுவேன் ! மகாராசாவின் பக்கத்திலே இருக்க நாளுக்குநாள் என் புத்தி கூர்மை அடைகிறது, இதிலென்ன விசேஷம். சரி, என்ன சொல்லலாம். புருஷோத்தமனிடத்திற் போய் முதலிலே பேசுகிறதற்கு என்ன இருக்கிறது?
வுட்
சீவ.
'KT);
ப க - -
குடி.
கமலா
சீவ.
Page 15
18
குடி
மனேன்மணீயம்
இதுதான் அது : சேரநாட்டிலே தென்பாகத்திலே கன்செய்நாடு என்பது ஒன்று உண்டு. அதை காஞ்சி காடு என்று இப்போது வழங்குகிறர்கள். இந்த நன்செய் நாட்டுக்கு பழையபெயர் தென்பாண்டி. இதுமுன்னே பாண்டியைச் சேர்ந்தது. இதகுல் அல்லவோ இதற்கு தென் பாண்டி என்று பெயர் வக் தது, மேலும் இங்கே பேசுகிற பாஷையும் தமிழே: மலையாளம் அல்ல. ஆகவே இது மலையாளதேசத் கைச் சேர்ந்தது எப்படி? முன்னே வலிஇல்லாத பாண்டியனுெருவன் காலக்கில் படைவலியுள்ள சேர னுெருவன், இந்த நாட்டைப் பற்றியிருக்கவேண்டும். இப்போது நாம் வலியில்லாதவர்கள் அல்ல, ,மேத் நாட்டை நமக்கே கிருப்பிக்கொடுக்கும்படி, நாம் கேட்பது தப்பிகமுமல்ல. ஆணுல் புருஷோத்தமன் நன்செய்காட்டைக் கொடுக்கச் சிறிதும் இசையான். கொடேன் என்று அவன் மறுத்தால் நாம் சண்டைக்கு வருவதாகச் சொல்லவேண்டும், அதற்கும் அவன் அஞ்சுகிறவனல்ல. ' வாருங்கள் ஒருகை போம்” என்பான் ; அப்பொழுது ' என் வீனுகச் சண்டைபோடுவான் ? பாண்டியனுக்கு ஒரு மக ளுண்டு. வேறு பிள்ளை இல்லை. பாண்டியன் மகளை நீ விவாகஞ்செய்துகொண்டால், கன்செய்நாடு மட்டுமல்ல, பாண்டியநாடு முழுவதும் உனதாய் விடும். முன்னே தடாத கைப்பிராட்டியாரோதி
சோமசுந்தரபாண்டியர் பாண்டிநாட்டை ஆண்டது
போல இப்போதும் மனேன்மணி மகாதேவியோடு நீயே பாண்டிநாட்டையும் ஆளலாம்' என்று அவ ணுக்கு சொல்லவேண்டும்.
ද්ධl: சபாஷ் சபாஷ், என்மகளுக்கும் புருஷோத்தமவரும னுக்கும் சலியாணம் முடிந்ததென்றே நினைக்கின் றேன். இதில் எள்ளளவும் ஐயமில்லை. நான் செய்த தவமே தவம், குடி மகாராசா யோசனை நல்லதானுலும் இதைப் போய்ச் சொல்லுகிற தூதன் தேர்ந்தவனுயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் "காரியம் கெட்டுப்போம். முனிவர்
夔
சொன்ன கிலே ஒன்றுதான் பழுது : 'நடராசன
அனுப்பு ' S. தந்திரம் அவனுக்கு என்ன தெரியும்? பெண்களை , மருட்ட என்ருல் அவனுக்குக் தெரியும், புருஷோத் தமவருமனிடம் போக நடராசன் சிறிதும் தக்கவ
என்றரே, நடராசன் யார் ? இராச்சிய
மு ബ്
உனல்லன், சீவ. என்ன, முனிவருக்குமல்லவோ புத்தியினம் வந்தது. குடி, இதிலே அவரைப் பழுதுசொல்லக்கூடாது. அவரோ தபசி. அவருக்குப் பதிநூல், அறநூல் தெரியும். இராச்சியதந்திரம் எங்கே, முனிவர்கள் எங்கே? ஆகையால் முனிவரிலே பிழைஇல்லை. சீவ. யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் ? (மவுனம்) மந்திரி குடிலா! உன்மகன் பலதேவனைத் தவிர வேருெருவனையும் அறியேன்.
குடி, பலதேவனு? பாலன் அவன். அவனுல் இது முடி
யுமோ ?
சீவ. பலதேவன பாலன்? அவன் மிக்க சமர்த்தன் ; அன் றைக்குத் தமிழ்ச்சங்கத்திலே அவன் பேசியதைக் கேட்டேன். நான் அடுத்த அறையில் இருந்தது அவனுக்குத் தெரியாது. கேட்டபோது, இவன்
Page 16
20
குடி,
சீவ.
குடி,
மனுேன்மணீயம்
குடிலன்மகன் அல்லனே! தகப்பனுடைய சாமர்க் கியம் பிள்ளைக்கு இல்லாமற் போகுமோ என்று நினைத்தேன். தமிழ்ச்சங்கத்திலே பேசுகிறது வேறே, இராசசபை யிலே பேசுகிறது வேறே. இராசசபையிலே பேச அவனுல் முடியுமோ? ஏன்முடியாது ? நீ அவனுக்குப் போதிக்கவேண்டிய விதமெல்லாம் போகித்துப் பேசவேண்டியவிதமெல் லாம் சொல்லி அனுப்பினுல் உவன் உப்படியே செய்துவருவான் ; என் வேணடுகோளைத் தட்டாதே
ge ہے۔ سال سے மகாராசா சித்தம் எங்கள் பாக்கியம், 2.
功
V,
M
بی - s
அங்கம் 11
இடம் : திருவனந்தபுரம், சேரன் அரமனை
புருஷோத்தமவருமன் : (தனதுள்)
இஃது என்ன கனவு 1 ஒருநாள் அல்ல ; ஓர் இரவு அல்ல; இப்போது பத்து நாளாய் ஒவ்வொரு இரவிலும் தவருமல் இந்த ஒரே கனவு வருகிறது. என்ன புதுமை! எனக்கு வயது இருபங்தைந்து ஆகியும், ஊர்வசி கிலோத்தமை அல்ல, இாகியும், சசியும் என்முன்னே வந்து நின்ருலும் கலங்காத என்னைக் கலங்கச்செய்கிற இந்தப்பெண் யார்? இப் படிப்பட்ட பெண் பூமியில் இருக்கிருளோ? தேவ லோகத்தில் இல்லை. இக்கனவு கவருமல் பத்து இாாத்திரி வந்தாலும் இரவுக்குஇரவு அதிசயத்தோடு வளர்கிறது. முதல்நாள் பெண்ணின் உருவம் மட்டுங் கண்டேன். அன்று அவள் என்னைப் பார்க்கவில்லை. அடுத்தநாள் என்னை நோக்கினுள். அவள் முகத்தை கான் ஏறிட்டுப் பார்க்கவே எங்கள் கண்கள் சந்தித் தன. உடனே தலைகுனிந்து கண் கிலத்தைகோக்க, வலதுகாற் பெருவிரல் நிலத்தை உழுதது. இராக் கிரிக் கண்ட கனவிலோ கூந்தல்சோர, கான் அவள் முகத்தை கோக்கினுலும், நாணத்தை மறந்து புன் னகையோடு தன் இரண்டு கண்ணுலும் என்னை இடை
விடாது பார்த்த பார்வைதான் அம்புபோல் என்
நெஞ்சைப் பிளந்தது. சுந்தரி, நீ யார்? இராமன்
Page 17
22 மனேன்மணீயம்
கின்று எய்கிமுய், வாலியைத் தைக்க அம்பில்
ை
இராமன் பெயர் இருந்தது. நீ எறியும் அம்பில் உன்
பெயரைக் காணேனே! ஐயோ, உன்னை கான் எப் படி மறப்பேன் ? இப்பெண் உலகத்திலிருக்கி முளோ ? இருந்தால் எப்படியாவது நான் இவளைக் கண்டே தீரவேண்டும். இப்படி ஒருபெண் உலகத் கில் இல்லையானுல் இவளை நான் மறக்கவேண்டும். * கிட்டாகாயின் வெட்டென மற", மறப்பதெப்படி? யாசோடாயினும் போர்செய்ய நேர்ந்தால் ஒருவேளை போரில் அவளை மறக்கலாம். போசொன்று வா TITG5 IT P. . . . . . . . . . . . . . . . . . . . . .
கு
சேவகன் வருகிறன். グ
சேவகன் : மகாராசா, பாண்டியன் சபையிலிருந்து, தூதன்
வந்து வாசலிலே நிற்கிருன், புருஷோ. யார் அவன் ? அவன் பெயர் என்ன ? சேவ. பலதேவனும், புருஷோ, பலதேவன? அவன் இங்கே என்வந்தான்? சீவ கனுக்கு யார் எப்படிப்பட்டவர் என்று தெரியாது போலும், அவனை வரச்சொல். சேவகன் போகிருன், பலதேவன் வருகிறன். பலதே. மகாராசா, கமஸ்காரம் புருஷோ வந்த காரியம் என்ன? பலதே. பாண்டி மகாராசா சீவகவழுதி இங்கே இராசசமு கத்திற் தரும்படி ஒர் ஒலை என் கையிற் கொடுத்திருக் கிருர், இதோ அந்த ஒலை.
அங்கம் II 23
புருஷோ. (ஒலையை வாசித்தபின்பு) கன்செய்காட்டின் பழங் கதை எனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. α. அக்த காடு எனக்கு முன்னேயிருந்த மகாராசாவிட மிருந்து நான் பெற்றுக்கொண்டது. கான் பாண்டி காட்டிற்குவந்து அதைப் பிடித்துக்கொள்ளவில்லை. கன்ச்ெழ்நாட்டை நான் கொடுக்கப்போகிறதில்லை. பலதே. எங்கள் மகாராசாவின் ஒலையை முழுதும் பார்த்
தகோ ? புருஷோ, ஆம், ஆம் ; எல்லாம் தெரியும். சிவகன் இங்கே படையெடுத்துவா அவசியமில்லை; நானே என் படையோடு அங்கே வருவேன். இவ்விஷயம் அங் ܨ1 ܐܠ ܐ
கேயே தீர்த்துக்கொள்ளலாம். பலதே. மகாராசா 1 சோர் அதிபதியும் பாண்டியர்கோனும் போரை நாடினுல், இருபக்கங்களிலும் எத்தனை ஆயிர வர் சாவர்? எத்தனை ஆயிரவர் அங்கவினராவர்? "செல்லப்பிள்ளைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன்போகுது" என்பது போலல்லவோ முடியும் ? புருஷோ ே இங்கப் புத்திமதியை உன் இராசாவுக்கல்லவோ
சொல்லவேண்டும்?
பலதே. சொன்னல் என்ன ; அவர் கா கிலே இது ஏறது. g) a Tafa சொல்லாதது ஒன்று கான் சொல்லட்டுமா ? எங்கள் மகாராசாவுக்கு ஒருமகள் ; ஆண் சந்தகி இல்லை. சோர் அதிபதி அவளை மணந்துகொண் டால் கன்செய்நாடு மட்டுமல்ல, பாண்டிய காடும் அவர
*ாகும். புருஷோ. உங்கள் தேசத்திலே வண்டைப்பிடித்து, பூவிலே
தேன்குடிக்க விடுவார்கள் போலும் ? எங்கள் தேசத்
Page 18
24 மனுேன் மணியம்
திலே இருபுறத்திலும் காதல்மணமே அன்றி வேருெரு மணமில்லை. அன்றியும், என் சிங்காசனத் கிலே இருவர் பெண்களுக்கு இடமிராது. தாமதம்
வேண்டா, நீ போகலாம். இன்னும் இரண்டுகாளில் என்னையும் படையையும் திருநெல்வேலிக்கு அருகே காணலாம். சொல் இதை, 6) ਟੈਨ அனுப்பின * இராசாவுக்கு.
பலதே. (தனதுள்) முடிந்தது நான் வந்த காரியம். சீவகன்
காளைக்குப் படுவான் காய்படாப்பாடு ; படட்டுமே.
பலதேவன் போகிறன். *〉 エ
隱
அங்கம் II
alth 1
இடம் : திருநெல்வேலிக் கோட்டை
ܔ؟
சீவகன், குடிலன், பலதேவன், நாராயணன் இருக்கிறர்கள்.
சீவ.
குடி,
ମୁଁ ରା.
குடி,
நாரா. (ລ.
குடிலா, நாம் இப்பொழுதே போருக்கு ஆயத்தம் பண்ணவேண்டும். சேரன் இங்கேவந்து கோட் டையை முற்றுமுன் நாம் வெளியே சென்று அவனை மடக்கவேண்டும். உடனே புறப்படுவோம். மகாராசா இங்கே இருக்க நாங்கள் போய் அவனை மடக்குவோம். சீச்சி, அஃது ஒருபொழுதும் கூடாது. நான் வரு வேன். சித்தம், எல்லேமும் புறப்பட்டுப்போனுல் கோட் டையைக் காப்பவன் யார் ? அதற்கு மிகச் சமர்த்தன் ஒருவனை இங்கே வைத்துவிட்டுப் போகவேண்டும். சரி ; அப்படியே செய்யலாம். நாராயணு, நீ இங்கே நூற்றுவர் குதிாைவீரரோடு கோட்டையைக் காத் துக்கொள். மகாராசாவோடு வரும் படைத்தலைவன் யார்? பலதேவன் வருவான். நானே போகும்போது நீ வுசவேண்டிய அவசியமில்லை. அன்றியும், கோட் டையைக் காப்பவன் சமர்த்தணுயிருக்கவேண்டும், நீ இங்கேயிரு.
4.
Page 19
26
நீாரா.
முரு.
5 ETJIE.
粤画。
5 II J(T.
முரு.
Jb IJI.
(p(5.
bIJI.
மனேன்மணீயம்
சித்தம், மகாராசா, (நாராயண?னவிட்டு எல்லோரும் போகிறர்கள்)
முருகன் வருகிருன்.
ஐயா, இதென்ன கொடுமை. நீங்கள் இங்கே F LLDT இருக்கவும் பலதேவன் சேனையை நடத்தவும் வந்ததே காலம் இசாசாவுக்கு இப்படியும் புத்தி கெடுமோ? பத்திரம் ; இராசாவை அவமரியாதை செய்தால்
அது எனக்கும் மரியாதை என்று நினைத்தாயோ? பத்திரம் ; இனி இப்படிப் பேசாதே.
MP புக்கி, புத்தி; ஆனுலும் இதை யார்தான் சகிப்பார் ?
எல்லாம் கடவுள் செயல்; நடக்கிறது நடக்கும். ஆனலும் முருகா, ஒன்று கேட்கிறேன், நிகானித்து விடைசொல், இந்தக் கோட்டையை உள்ளே இருந்து காப்பதற்கு. எத்தனைபேர் அவசியம் ?
ஐம்பதுபேர் தாராளம், !
நான் உனக்கு ஐம்பதுபேர் கொடுத்தால் இந்தக்
கோட்டையைக் காக்க உன்னுல் முடியுமா ?
முடியும்.
சரி அப்படியே செய்கிறேன். நீ உடனே சென்று உன் ஐம்பதுபேரைத் தெரிந்துகொள். மற்றது, ஐம்பதுபேரும் ஆயத்தராய் இருக்கவேண்டும். எனக்கு ஒரு குதிசை ஆயத்தஞ்செய், என் சங்கு நாதம் ஒலித்தால் ஐம்பதுபேரும் என் குதிரையும்
அங்கம் 11 களம் 1 27
ஒரு நொடிக்குள் இங்கே நிற்கவேண்டும். போய் ஆயத்தம் செய்துவிட்டு வா.
முருகன் வெளியேபோய் சிறிதுநேரத்துள் திரும்பு கிருன். - (U)) எல்லாம்ல்ேகள் சொன்னபடியே ஆயத்தம்.
நாரா, சரி, சரி; (datas ir, அதோ பார், இங்கிருந்து புறப் பட்டுப்போன படையைக் கவனித்தாயா? γ. முடு, (உற்றுநோக்கி) ஆம், ஆம் ; குழப்பம் குழப்பம், 5ம் N முடைய சேனையிலேயே குழப்பம். மகாராசாவைச்
* , சுற்றிலும் குழப்பம், நாரா. முருகா, கோட்டையைப் பார்த்துக்கொள் ; பத்திரம், பத்திரம், (சங்கு ஊதுகிருன், தன் குதிரைமேல் ஏறி ஐம்பதின்மர் குதிரைச்சேவகரை வாயுவேகத் தோடு நடத்திக்கொண்டு போகிறன்.)
Page 20
5 TB T. சீவ.
நாரா.
சீவ,
J,6ITib 2
இடம்: திருநெல்வேலி அரமனை
சீவகனும், நாராயணனும்,
/* το 5η τη στη y
மகா--இராசா, நான்தான் இராசா, சண்டையிலே தோற்றுப்போன இராசா ! இனி அதுக்கொரு Dé57 --மகாராசா விளக்குமாற்றுக்குப் பட்டுக்
குஞ்சம் 1 நான் இராசாவுமல்ல, விஷத்கிரியனுமல்ல,
மனுஷனுமல்ல, மனிதப் பதர், ஐயோ, ஐயோ பாண்டியர்குலம் இன்றைக்கு என்னல் அவமானம் அடைந்ததே. இதற்கு முன்னே பாண்டியர்கள் சண்டையில் தோற்றதுண்டு. தோற்றவர்கள் போர்க் களத்திலேயே மாண்டார்கள். உயிரைச் சீனி என்று நினைத்துத் கப்பிவந்த பாண்டியன் இல்லை. நாரா யணு, தோன் என் சத்துரு. நீ வங்கிராவிட்டால் கான் போர்க்களத்திலேயே மாண்டுபோயிருப்பேன்.
o سسسسسسة****ٹ gy இப்போதுதான் என்ன. (உறைவாளை உறையினின் றும் உருவி தற்கொலைசெய்ய முயல்கிறன்) (வாளைப் பறித்து எறிந்துவிட்டு) மனுேன்மணிபாடு எப்படி முடியுமோ? தாய் இல்லாப் பிள்ளை ; உடன் பிறந்தாருமில்லை. இராசா, தம் வெட்கத்தை நினைக் கிருரே தவிர, மகளை மறந்துபோனுர், மனேன்மணி, மனுேன்மணி ! ܠ ܐ
· · · மனேன்மணி! மகளே ! உன்னையும் மறந்தேன் ; என்
செய்ய நினைத்தேன் ? இன்றைக்குத் தோற்றல்
சீவ. சுந்.
# ରା.
சுந்.
அங்கம் IT களம் 2 29
காளைக்கு வெல்லலாம். ஆம், அதுவே மனுேன் மணியைக் காப்பதே என் முதற்கடமை, (நாராயணன் ഭഖിധേ போகிறன்)
சுந்தரர் வருகிருர்,
கமல்காரம் சுவாமிகாள். சீவக,>நீ இன்றைகுச் சண்டையிற் தோற்றப் போனுய் என்று கவலாதே. கடவுள் இருக்கிருர் ; அவர் உன்னையும் மனேன்மணியையும் கைவிடார் ; அஞ்சாதே.
ஒன்றையும் அஞ்சவில்லை. சற்று முன்னே வெட்கத்தினுலே உயிர்விடத் துணிந்தேன். நாராயணன் மனுேன்மணியின் நிலையை எடுத்துக் காட்டி அந்த எண்ணத்தை விட்டுவிடும்படி செய்தான், காளைக்கு மறுபடியும் சண்டை கடக்கும். அதிலே வெல்வேன் அல்லது மடிவேன் ; இதுமெய், சிவகா, நாளைக்காரியம் நாளைக்குப் பார்க்கலாம். இந்த இரவிந்தானே நீ செய்யவேண்டியவேலை ஒன்று உண்டு. அதை உனக்குச் சொல்லவே இப்பொழுது வந்தேன். இரண்டு மாதத்திற்குமுன்னே நான் முதல் முதல் இந்தக் கோட்டையைப் பார்த்தவுடனே பகைவர் இதை முற்றினல் தப்பிப்போவதற்கு வழி ஒன்றுமில்லையே என்றேன். அப்போது என் பேச்சு உனக்குச் சிரிப்பை உண்டாக்கினது, கழிந்த பகல் பகைவர் கோட்டையை முற்றினர்கள். இப்படி ஒருசமயம் நேரிடக்கூடும் என்று நான் நினைத்து நீ எனக்குக் கொடுத்த அறைக்குள்ளே தொடங்கி என் ஆச்சிரமம் போகுமட்டும் ஒரு சுருங்கை செய்திருக் கின்றேன். இந்த இராத்திரி நீயும் மனுேன் மணியும்
Page 21
20
மனோன்மணீயம்
வே.
பாண்டியன்
- 5ண ன
என்னோடே வாவேண்டும். உங்களுக்கு ஒரு தீங்கு நேரிடுமானால் பாண்டியகுலமே அற்றுப்போகும். உன்னையும் உன்மகளையும் மட்டுமல்ல, பாண்டிய குலத்தைக் காப்பது என் கடமை. நான் சொல்லு கிறபடி நீ செய்யவேண்டும். சுவாமிகள் சொல்லுகிறது முழுவ, தும்' சரி. அனால் பாண்டியன் சண்டையிலே' தோற்றுப்போன பின் எங்கேயோ ஓடிப்போய்விட்டான் என்றபேர் நான் வாங்கமாட்டேன், என்ன நேரிட்டாலும் இன்று இராத்திரி நான் கோட்டைக்குள்ளேயே இருக்க வேண்டும். நாளைக்குச் சண்டைக்குப் போகவேண். டும். வெற்றி அல்லது வீரசொர்க்கம்- இரண்டில் ஒன்று. ஆனால் சுவாமிகள் திருவருளை நான் அலட் சியம் பண்ணியதாக நினைக்கவேண்டா. என் மகள் மனோன்மணியை சுவாமிகள் இன்று இரவு வந்து கூட்டிக்கொண்டு போய்விட்டால் அவளைப்பற்றிய கவலை ஒழியும், அதன் பின் வேறொரு கவலையும் இன்றி போரொன்றையே நினைத்து என்னால் ஆன மட்டும் ஒருகை பார்ப்பேன். சீவகா, நீயும் வா. சுவாமிகாள், அது ஒன்றுமட்டும் செய்ய என்னால் ஆகாது. இனி, நான் சுவாமிகளை இவ்வுலகத்தில் பார்ப்பேனோ என்பது எனக்குத் தெரியாது. இங்கே பாராவிட்டாலும் சிவபெருமான் திருவடி நிழலிலே சந்திப்போம். எப்படியும் இன்று இராத்திரிச் சந்திப்போம். நீ பிடிவாதம் செய்தாலும் மனோன்மணியை வந்து
கூட்டிக்கொண்டு போவேன்.
ஈயம் பட 9ல் சுவாமி... "சொர்க், "பாகவே
சுந்.
சீவ.
ತೆ೧.
சுந்.
குடி,
சீவ.
அங்கம் IT களம் 2 31.
சுவாமிகாள், அப்படியே செய்கருள்க, சுவாமிகள் சோன்னதை நான் குடிலனுக்கு அறிவிக்கின்றேன்.
வேண்டுமானுல் குடிலனுக்குச் சொல். ஆணுல் நான்
மனேன்மணியை அழைத்துப்போவது நிச்சயம். சுந்தரர் போகிருர், சேவகர், பந்திரியை உடனே அழைத்துவா,
சித்தம், மாராயா. (சேவகன் செல்கிறன், குடிலன் வருகிறன்)
நமஸ்காரம், மகாராசா.
குடிலா, கால் நாழிகைக்குமுன்னே சுங்கரர் இங்கே வந்தார். தாம் ஒரு சுருங்கை செய்கிருக்கிரு ராம். அதன் வழியே இன்று இராக் கிரி வந்து என்னையும் மணியையும் அழைத்துப்போவேன் என்ருர், எங் களே எப்படியாவது தம்மோடே வரவேண்டும் என் முர், குடிலா, என் குரு வார்த்தையை கான் இதற்கு முன்னே ஒருநாளும் தட்டினதில்லை. இன்றைக்கோ, நான் வரமாட்டேன் என்று உறுதியோடு சொல்லி விட்டேன். ஆணுலும், மனுேன்மணியை மட்டும் கூட்டிக்கொண்டு போகலாம் என்றேன். உன் ஆலோசனை கேட்க நீ இங்கே இல்லை ; என்ன நினைக்கிருய் ?
மகாராசா வாமாட்டேன் என்றது முழுதுஞ்சரி, இளவரசியைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்றது
ப்ரதிசரி.
என்ன அப்படிச் சொல்கிருய்?
Page 22
32
குடி,
ề6i.
குடி,
ଅଁରା.
மனேன்மணியம்
மனேன்மணி இந்த இரவே இந்த அரமனையை விட்டுப்போவது அவசியம், நமக்கு என்ன நேரிட் டாலும் இளவரசி தப்பினல் பாண்டியகுலம் அழி யாமல் கிற்கும். மனேன்மணி போகவேண்டும் ; முனிவரோடு போகிறதே சரி, ஆனல், ம்ணுேன்மணி குழங்கை அல்ல; வாலிபப்பெண்/முனிவர் all (5u it திபர். ஆனுலும் ஆடவன்தானே? கலியாணமாகாத வாலிபப்பெண் ஒர் ஆடவனேடே நடுஇராத்திரியிலே ஓடிவிட்டாள் என்ற பேச்சு மனுேன்மணி விஷயத்தில்
ஊரார் பேச நாம் இடம்வைத்துக்கொள்ளக்கூடாது.
மந்திரி, இதை நான் கொஞ்சமும் நிஜனக்கவில்&
கினையாமல் வாக்குக் கொடுத்துவிட்டேன். இப் போது என்ன செய்யலாம் ? முனிவரோடே மினேன் மணியை அனுப்பிவைக்க வேண்டும் என்கிருய், ஆனலும் கலியாணமாகாக பெண்ணை ஒர் ஆடவ னேடே தனிய அனுப்பக்கூடாது என் கிருய் , என்ன
மகாராசா, மனுேன்மணி போகவே வேண்டும். தனியே போகக்கூடாது. பின்னே என்ன செய்ய லாம் ; இந்த இரவிலேயே இளவரசிக்கு விவாகம் செய்து வைத்து மணமக்கள் இருவரையும் முனிவ ரோடு அனுப்பவேண்டும்.
நீ சொல்கிறது சரி; முழுதும் சரி. ஆனல், இதற் குள்ளே மணமகனை எங்கே தேடுகிறது? இராசன் எவனையும் கண்டுபிடிப்ப்து முடியாது. இgாசன்தான் வேண்டுமென்று தேடுவதும் புத்தியினம்; இந்தப் புருஷோத்தமவருமன் பிறப்பிலே இராசன்தான்,
அங்கம் III களம் 2 33
ஆனல் அவனுக்கு இராசகுணமில்லை. பிறப்பல்ல, குணமே பெரிது. பிறப்பை என் குடிலா ? நீ பிறப் பிலே க்ஷத்திரியனல்ல; உன் குணமோ பெரிது. உன் மகன் பலதேவன் எந்த இராசனுக்கு எதிலே குறைந்தவன்? என்மகள் மனேன்மணியை அவ
னுக்கே விவாகம் செய்துகொடுக்க எனக்கு ஆசை.
குடில7, இதற்கு நீ என்ன சொல்லுகிருய்? 3. a eaarra Pr, காலும் என் மகனும் அடிமைகள். மகா சாசா எங்கே, நான் எங்கே? மனேன்மணி எங்கே? சீவ. அப்படிச் சொல்லாதே, குடிலா நீ எந்த இராச லுக்குக் குறைந்தாய்? உன் மகன் எந்த இராச குமாரனுக்குக் குறைந்தவன் ? அப்படியல்ல என் முலும் இன்றைக்கு நான் வேறே என்னசெய்யலாம் ?
காலத்தை யறிந்து பேசு, குடிலா.
குடி மகாராசா வார்த்தைக்கு நான் எதிர்வார்த்தை பேசு வேனுே? என் மகன் சம்மதியேன் என்பானே?
அவன் மனேன்மணி அம்மைக்கு ஏற்றவன் அல்லா
விட்டாலும் இளவரசிக்கு இரவும் பகலும் ஊழியம்
செய்வான்,
சீவ. சரி சரி; இந்த நன்றியை நான் ஒருபோதும் மற
வேன். குடிலா, இன்று இராக்கிரி பத்து நாழிகைக்கு
முகூர்த்தம். அதற்கு ஒருநாழிகைக்கு முன்னமே முனிவர் வரும்படி நான் வேண்டிக்கொண்டதாக
அவருக்குச் செய்தி அனுப்பு. கான் மனேன்மணி , யைக் கண்டு இதை அறிவிக்கவேண்டும்,
Page 23
சீவ. மனுே.
சீவ.
மனுே. சீவ.
மனுே.
சீவ.
எமனுே.
சீவ.
9,6Tih 3
| இடம் : திருநெல்வேலி, அரமனை அந்தப்புரம்
சீவகனும், மனுேன்மணியும்.
இன்று நடந்ததெல்லாம் அறிவாயோ? ஆம், அறிந்தேன். எல்லாம் நாராயணர் சொன்னர் எனக்கு உங்களை நான் இன்னும் ஒருமுறை கண் டது ஈசன் செயல் ; நாராயணர் வீரத்தால், அதெல்லாம் இருக்கட்டும். நான் இப்பொழுது இங்கு வந்தது ஏன்? உனக்குத் தெரியுமோ ? தெரியாது. ) மகளே! இன்று நான் அடைந்த வெட்கத்தை எப்படி யாவது காளைப்போரில் தீர்க்கவேண்டும். நாளைக்குப் போரில் வெல்லுவேன், அல்லது மடிவேன், இவ் விரண்டில் எது நடக்குமோ கான் அறியேன். பகைவர் கோட்டையை முற்றியிருக்கிறர்கள். நீ இங்கு இருக்கும் ஒவ்வொரு கணமும் என் மனத் திற்குப் பாரம், ஐயோ! இதற்கோ நான் பெண் பிறந்தேன். நான் என்ன செய்வேன்? மணி, நான் உனக்குத் தந்தை ; நீ எனக்கு மகள், நான் சொல்வதைச் செய்வாயோ? அப்பா, கான் எப்போதாவது உங்கள் சொல்லை மறுத்த துண்டோ? உன் தோழி வாணி தாய்தகப்பன் சொல்லை மறுத்
அங்கம் l கள்ம் 3 35
மனுே அப்பா, வாணியைப்பற்றி இப்பொழுது ஏன் பேசு வான்? நீங்கள் சொல்லுங்கள், உங்கள் சொற்படி நான் செய்வேன்.
சீவ. செய்வாபோ ?
மனுே. எனக்கு முதலில் சோமசுந்தாக்கடவுள் ; அப்புறம்
நீங்கள் சொல்லுங்கள்.
ଓଁ, ରା. மணி, 'உனக்கு இன்று இரவு பத்து5ாழிகைக்கு
கவியாணம்,
மனுே, என்ன ! என்ன ?
சீவ. நான் சாகுமுன் உனக்கு கலியாண்ம் செய்யவேண்டும்
காளைக்குப் போர்முனையில் மடிந்தாலும் மடிவேன்.
மனுே. ஆருக்கு என்னைக்கொடுக்க எண்ணியிருக்கிறீர்கள் ?
சீவ, ஆருக்கென்ருல் உனக்கென்ன ?
மைே. என்னே மணப்பவன் யார் என்று கான் கேட்டது
பிழையோ ?
சீவ. நான் சொன்னேன், வானி உன் கோழி என்று.
மனுே, அப்பா, திரும்பவும் வாணியைப்பற்றிப் பேசுகிறீர் கள், அதை விட்டுவிட்டு என்னை யாருக்குக்கொடுக்கப் போகிறீர்கள் என்று தயைசெய்து தெரிவியுங்கள்,
சீவ. நமது மந்திரி, குடிலன் குமாரன் பலதேவருக்கே,
மனுே. சிவ சிவ சிவ இவ !
சீவ. ஏன் பலதேவருக்கு என்ன குறைவு?
மனுே. அவரில் குறைவுண்டென்று சொன்னேனே f
சீனு, பின் ஆன ?
மனுே. என்மனம் அவரை காடவில்லை.
#ରା, வாணியை உன்னேடு சேரவிட்டது பிழை.
மன்ே. கான் இன்று விவாகம் செய்வது அவசியமோ ?
Page 24
36 மனேன்மணியம்
சீவ. நாளைக்கு நான் செந்தபின் பகைவர் உன்னேயும் கொன்ருல் பாண்டியகுலம் வேரோடு அழிந்துபோம் அல்லவா? மனுே. நான் விவாகம்பண்ணியும் பிள்ளையில்லாமற் ச்ெத்தால்
பாண்டியர்குலம் அழியாதோ ? s
ਚੰ6. அதெல்லாம் ஈசன் செயல், மனுே. இதுவும் ஈசன் செயல்; நான் பலதேவனை perso. La La
sపడి, சீவ. இப்படிப்பட்ட பிள்ளையோ! நான் மலடனுணுல் ? மனுே, பாண்டியகுலம் அழிந்துபோம். | சீவ, உன்னை வைய வாய்வரவில்லை, என் பேச்சை சீ ,
கேட்கவேண்டா. சுந்தாமுனிவர் வந்தால் ഭ:" பாயோ? மனுே. எனக்கு நீங்களும் சரி, சுந்தாமுனிவரும் சரி. 96.9 லும் அவர் என்சொல்லைக் கேட்பார். எனக்கு விருப்பமில்லாதவனை நான் விவாகம்செய்ய வேண்டு மென்று சொல்லார், A சீவ. சொன்னுல் ? 。 ویسے மனுே. அப்போது பார்க்கலாம். K. சீவ. இன்னும் ஒரு நாழிகைக்குள் சுந்தார் வருவார். அவர் ,
உன்னேடு பேசுவார். (சீவகன் போகிறன்.) வாணிவருகிருள். மனுே, வாணி, உனக்கு ஒரு மங்களவார்த்தை சொல்லப்
போகிறேன்.
வாணி, என்னம்மா அது ? மனுே இன்று இராத்திரி உனக்கும் நடராசனுக்கும் விவாகம், வாணி, என்னம்மா, கனுக்கண்டீர்களோ ? இதுவும் உங்கள்
கனவா ?
மனே.
அங்கம் IT களம் 3 37
இல்லை, வாணி. ஒரு நாழிகைக்குமுன்னே மகா ராசா என்னிடம் வந்து, இன்று இராத்திரி நான் பலதேவனை விவாகம் செய்துகொள்ள வேண்டும்
என்றுசொன்னர். எனக்கு முதலிலே சம்மதமில்லை ;
ஆணுலும், இராச்சியத்தின் கிலையறிந்து மகாராசா விருப்பப்படி செய்வதே சரி என்று ஒப்புக்கொண் டேன். பலதேவனே நான் விவாகம்செய்யப்போகிற தஞலே நீயும் அவனுக்கே வாழ்க்கைப்பட்டால் தோழிகளாகவிருந்த நாம் சக்களத்திகளாய்ப் போ வோமே என்று அஞ்சி, நீ நடராசாவுக்கு வாழ்க்கைப் படுதற்கு இராசா சம்மதிக்கவேனும் என்று உடனே கேட்டேன். இசாசா சம்மதித்துவிட்டார். இதை உனக்குக் காட்ட ஒர் ஒலையில் எழுதிக்காவேண்டும் என்று கேட்டேன்; இதோ பார் ஒலையை,
சிவனே, சிவனே இதுவும் உன் விளையாட்டா ? அம்மா, நீங்கள் அந்தப் பலகேவன் கையிலே அகப் பட்டுக் தத்தளிக்கிற சமயத்திலே எனக்குக் கலி யாணம் ஒன்றுதான் குறைவு. அம்மா, நான் ஒன்று சொல்லப்போகிறேன் : இது சத்தியம் ; நீங்கள் பலதேவனுக்கு வாழ்க்கைப்படுவது இல்லை. உங்கள் கனவிலே இந்தப் பதினைந்து5ாளாய்த் தவருமல் வரு இற உத்தம புருஷனையே நீங்கள் விவாகம் செய்யப் போகிறீர்கள், அன்றைக்குத்தான் நானும் என் நடராசருக்கு வாழ்க்கைப்படப்போகிறேன்.
மனுே. இதென்ன பைத்தியம்? இப்போது ஏழு நாழிகை
யாயிற்று, இன்னும் மூன்று நாழிகைக்குள்ளே எனக்கும் பலதேவனுக்கும் கலியாணம், வாணி, நீ
Page 25
38 ". . . மனேன்மணீயம்
இப்போது என்னைக் குழப்பாதே, கனவையெல்லாம் மறக்கப்போகிறேன். கனவு கனவுதானே ? என் தகப்பனைப் பிரியப்படுத்துவது என் கடமை, அவர்
எனக்குத் தகப்பன் மட்டுமல்ல, தாயும் ஆனவர்; என்னைக் குழப்பாதே, வாணி. կի வாணி. அம்மா, கடவுள் என்று ஒருவர் இருக்கிருரா இல் லையா ? நீதிக்கும் அநீதிக்கும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் விக்கியாசம் உண்டா இல்ஜலயா ? கடவுள் என்று ஒருவர் இருந்தால் நான் சொல்லுகிறபடி நடக்கும் ; கடவுள் இல்லாவிட்டால் எது எக்கேடு கெட்டால் என்ன? ܗܘ மனுே, என்னிஷ்டப்படியே எல்லாம் நிறைவேறவேண்டும்"
என்பது ஒருநாளும் என் பிரமாணமல்ல, என் தகப்பனுர் எது சரி என்று சொல்லுகிருரோ அதன் படி நடக்க நான் பழகிக்கொண்டேன். வாணி. அம்மா, இந்த உலகத்தில் தாய்தகப்பன்மாாைவிடப் பெரியவர்கள் இல்லை, ஆலுைம் மனச்சாட்சி விஷ யத்திலே காம் தாய்தகப்பன் மாரைப் பிரியப்படுத்த , بـ . முடியாது. சுந்தா முனிவர் நமக்குப் பிரகலாதாழ் K வான் சரித்திரம் சொல்லிக்கொடுத்தாரே. * இரணி யாயநம என்பதா, ! நாராயணுய கம' என்பதா சரி? மனே. இதெல்லாம் யோகிக்க என் புத்தி என்னிடத்தில்
இல்லை. வாணி, பரமேசுவரா! நீயே துணை, வாணி. சுந்தாமுனிவர் உங்களைக் காண வந்து வாசலில் கிம்
கிறர். மனுே, அவரை உள்ளே அழைத்துவா, (வாணி சென்று
சுந்தரரை அழைத்து வருகிருள்)
அங்கம் II களம் 3 39
சுந், மணியை மகாதேவன் காக்க ! மனுே, நமஸ்காரம் சுவாமிகாள். வாணி, அம்மா, நான் இன்னும் ஒருநாழிகை கழித்து வரு
கிறேன். சுந், வாணி, நீயும் இங்கே இரு உங்கள் இருவிரையும்
காணவே வந்தேன். மூவரும் ஆசனத்தில் இருக்கிறர்கள், அரசன் சொல்ல எல்லாம் அறிக்தேன். பிள்ளைகளே,
கடவுளை நம்புகிறீர்களா P
வாணி. சுவாமிகளுடைய பத்தி எங்களுக்கில்லை. காங்களும்
என்னவோ கம்புகிருேம்,
சுந், இதுவரையிலும் கடவுள் உங்களைக் கைவிட்ட
துண்டா?
மனுே. இல்லை.
சுந் இப்பொழுது உங்களைக் கைவிடுவாசா ?
Q1 TGigi. அவர் கூத்தை ஆர் அறிவார்?"
சுந். அன்பர்கள் அறிவார்கள்.
மனுே, சுவாமிகாள், எங்கள் அன்பும் அன்போ ?
சுந், களங்கமற்ற உங்கள் அன்பே அன்பு கவலை ஒழி யுங்கள். அவர் அருளை இவ்விரவு பார்ப்பீர்கள், வாணி, அரசன் மணியைப் பலதேவருக்குக்கொடுக்கத் தீர்மானித்த கிமிஷமே நீ விடுதலையடைந்தாய், நீ பலதேவனை மணப்பதில்லை. இராசாவே அதை எனக்குச் சொன்னர்,
வாணி, அம்மா, என் விலங்கைக் கழற்றி உங்களுக்குப் பூட்டினுல் என் விலங்கு போச்சென்று நான் களிப் பேனுே? இல்லை, இல்லை ; நீங்கள் உங்கள் உள்ளத்தில்
Page 26
40
மனுே.
மனுேன்மணீயம்
நேசிக்கிற காதலரை மணக்கும் நாளே நான் கே. சாசரை மணக்கும் நாள். அதுவரையிலும் என் கவலை ஒழியாது.
உங்கள் இருவீர் எண்ணமும் இவ்விரவே நடை பெறும், சுவாமிகாள் !
சுவாமிகாள் !
y»
இது கனவல்ல ; இது கனவு.
என்ன ?
என்ன ? இதற்குமேல் நான் அறியேன் ; இதுதான் நான்
இராசா அழைத்தால் வா. கடவுளை நம்பு, வாணி, நீயும் மணியோடு வா. கடவுள் கூத்தை அங்கே பார்ப்போம். நான் இப்பொழுது இராசா விடம் போகிறேன், மனுேன்மணி மணவறைக்கு வரச் சம்மதித்தாள் என்று அரசனுக்குச் சொல்லு
வேன்.
மனுே.
மனுே.
சுவாமிகாள் பலதேவனுக்கு மாலைகுட்டுவேன் என்று நான் சொல்லவில்லையே ? இல்லை; அப்படி கான் சொல்லேன். சுவாமிகாள் அச்சம் என் நெஞ்சிலே குடிகொண்டது. சுவாமிகள் சொல்வக்ை கம்ப என் மனம் என்னை ஒரு
கலக்கம், அச்சம், ஐயம். நான் என்ன செய் வேன் ? N பிள்ளைகளே, இன்று எனக்கு எண்பத்தைந்து வயது. அறுபத்தைந்து வருஷத்துக்கு முன்னே என் குரு
○
அங்கம் II களம் 3 41.
உபதேசங் கேட்டுக் கடவுள் அருளைக் கண்டேன். எனக்கு அப்போது வயது இருபது. அப்பொழுதே எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள். எனக்கு நேரிட்டவைகளை எல்லாம் சொல்லப்போனுல் அது பெரும் பாரதமாய் முடியும். ஆணுல் ஒன்று நிச்சயம் ; கடவுள்" என்னை ஒருவினுடியும் கைவிட்டது இல்லை. இனி என்னேக் கைவிடுவதும் இல்லை, மறப்பதும் இல்லை.
(வானத்தை ஏறிட்டுக் கண்மூடி)
* அன்னையினும் தயையுடையாய் நீ மறந்தாயெனி னும் அகிலமெல்லாம் அளித்கிடு கின் அருள் மறவா தென்றே இன்று மிகக் களித்கிங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருட்சோதி எனக்கு விாைங் தருளே !'
(சுந்தரர் இதைப் பாடினவுடனே விரைந்து வெளியே செல்கிறர்.)
Page 27
களம் 4
இடம் : திருநெல்வேலிக்குப் புறம்பே
சேரன் பாசறை
(புருஷோத்தமவருமன் தனதுள்)
மலமா
எனபா4
புரு,
போர் வந்தால் அந்த ஆரவாரத்திலே உன்னை மறக்க லாமென்று நினைத்தேன். திருவனந்தபுரத்தை விட்டுத் திருநெல்வேலிக்கு வந்தால் நீ இங்கே வரமாட்டாய் என்று எண்ணினேன். இது தான் என் அறிவு ! இவ்வளவுதான் என் அனுபவம்! மனுஷருடைய அறிவெல்லாம் ஐம்புலன்கள் மூலமாய் வரும் என்பார் நூலார், என் அறிவும் என் அனுபவமும் புலன் களின் வழியாய் இன்றி, உயிரும் உயிரும் ஒன்றை ஒன்று நேரே அ றியலாம் என்று காட்டுகின்றன. உன்னை நான் அறிவேன் : என்னை நீயும் அறிவாய் ; இது நிசம். இதில் ஐயமில்லை. ஆயினும் நீ எங்கே இருக்கிறாய்? என் உள்ளத்தில் இருக்கிறாய் ! வெளியே எங்கே இருக்கிறாய்? உன் பெயர் என்ன ? ............. கடவுளே இதுபோதும், போதும். இதற்கு மேல் தாங்கமாட்டேன். என் காதலியை எனக்குக் காட்டையா, காட்டாமல் என்ன விளையாட்டையா? (குடிலன் வருகிறான் ; சற்றுத் தூரத்தில் நிற்கிறான். யாரோ நிற்பதைச் சேரன் உணர்ந்து திரும்பிப் பார்க்
கிறான்; குடிலனைக் காண்கிறான்.) சேரன், நீ யார், உன் பெயர் என்ன ?
அங்கம் III களம் 4
43
குடி •
குடி. (அரசனை அணுகி ) மகாராசர் ! குடிலன் என் பெயர் ;
பாண்டியன் மந்திரி நான். புரு. நீ இங்கே இந்த நேரத்தில் வந்ததென்ன ? குடி. -
மகாப்பிரபு, இன்று நடந்த போரில் எங்கள் பக்கத்தில் மட்டும் பதினாயிரவர் மாண்டார். உங்கள்பக்கத்தில் அத்தனை பேர் மடியவில்லைப் போலும் ; நாளைக்கும்
போர் நடந்தால் எங்கள் கதி அதோகதிதான். புரு.
இதை ஏன் நீ உன் இராசாவுக்குச் சொல்லவில்லை ? சொன்னேன், சொன்னேன் ; ஒருமுறைக்கு நாலு முறை சொன்னேன், சேரனிடம் அ பயம் புகும்படி. அவனோ வயதில் முதிர்ந்தும் செருக்கொழிந்தான் இல்லை. அவனுக்கு நல்லபாடம் படிப்பிக்கவேண்டும். (குடிலன் நாலுபக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து ஒருவருமில்லை என்று கண்டு தாழ்ந்த குரலில் பேசு கிறான்) : ' இங்கே ஒரு சுருங்கை இருக்கிறது. அதன்வழியே போனால் பாண்டியன் கோட்டைக்குள்ளே கொண்டு போய்விடும். மகாப்பிரபு; இப்போது என்னோடே வந்தால், பாண்டியனைப் பிடித்து மகாராசாவசம் ஒப்பிப்பேன். நாளைக்குச் சண்டைபோடவேண்டிய தில்லை. பாண்டியன் நாடும் சோமண்டலத்தைச் சேர்ந்துவிடும். மகாராசாவுக்குத் திருவுளமானால் நான் பாண்டி நாட்டின் தேசாதிபதியாயிருந்து வருஷம் தோறும் தவறாமல் கப்பங்கட்டுவேன். தாமிரவருணி ஆற்றில் ஒருகுடம் நீரும் வேப்பம் பூமாலையும் கொண்டுவந்து மகாராசாவின் திருவடியைக் கழுவி
மாலைசூட்டுவேன்.'
Page 28
44
புரு
குடி,
Ch.
மனேன்மணியம்
அருள்வாதா, வா இங்கே. கைவிலங்கு, கால்விலங்கு கொண்டுவா, ஐயோ, ஐயோ! (அருள் வரதன் விலங்கு கொண்டு வந்து குடிலனுக்குப் பூட்டுகிறன்) கான் சொன்ன தெல்லாம் சக்கியம். (அருள்வாதனை நோக்கி) அருள் ஆரதீர், மீயும் இருவர் சேவகர்களும் என்னுேடே வாருங்கள், இவனைப் பாண்டியனிடம் கொண்டுபோவோம். மகாராசாவைப் பாண்டியனிடம் அழைத்துப்போகக் தானே வந்தேன். மூடு, வாயை ; வந்தவழியே போ ஏமாற்றலாம் என்று நிரையாதே, வலதுபக்கம் இடதுபக்கம் தவ றினல் இந்த வாளுக்கு இரையாவாய் கட, முன்னே. (குடிலன் முன்னே, அவன்பின் அருள்வரதனும் சேவ கர்களிருவரும், அவர்பின்னே புருஷோத்தமனும்
சுருங்கைவழியே கடக்கிறர்கள்.) ܠ ܊
சீவ,
# ରା.
6).
al.
ᎦᏐs .
சுந்.
6).
J,GIT 5
இடம் : பாண்டியன் மணவறை
சுந்தர்ர், சீவகன், பலதேவன், நாராயணன், சகடன் முதலியோர்,
எல்லோரும் வந்துவிட்டார்களா ?
ஆம், மந்திரியாரைத் தவிர எல்லாரும் வந்துவிட்டார்
கள்.
பலதேவரே உமது தகப்பனுர் எங்கே?
மகாராசா, பொழுதுபட்டபிறகு கான் அவரைக்
காணவில்லை.
எங்கேயோ? இரவென்றுமில்லை, பகலென்று மில்லை; என் வேலையே அவர் கடமை,
ஆம், ஆம் 3 அவரைப்போல் இராசவிசுவாசியை எங்கே காணலாம் ?
முகூர்த்தம் வந்துவிட்டது. இன்னும் அரை நாழிகைக் குள்ளே விவாகம் நிறைவேறவேண்டும். தகப்பனர் வாாவிட்டால் என்ன ? குறை ஒன்தும்
$73aoT LLUIT f. சரி, சரி. நாராயணு, போய் மணியை அழைத்துவா, (நாராயணன் போகிருன்) மனுேன்மணி, வாணி, செவிலி முதலியோருடன் நாராயணன் வருகிருன், வாணி இப்போது ஒரு விண்ணப்பப் பா பாடு aut (Buur ?
Page 29
46
1 : நீர்நிலையில் முதலையின் வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன்
சுந்
மனேன்மணீயம்
வாணி பாடுகிருள் :
கொச்சகக் கலிப்பா
ஒர்முறை உன் பெயர்விளிக்க உதவினை வக்
(தெனவுரைப்பர் ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான்
(அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும், பிறகிடல் கின்
(பெருந்தகையோ ?
பாராசர் துகில் உரியப் பரிதவிக்கும் ஒருதெரிவ்ை சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள்,
- (எனஉரைப்பர்
ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியரின்
(அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதால் 。 (உனக்குரித்தே.
மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில் வசம் கொண்டான் முன்
(எனஉரைப்பர்
வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
நெறியறியேன் ஆயிடினும் கேர்நிற்றல் நினதருளே.?
மனேன்மணி, கடவுள் எல்லாம் அறிவார்; எடு பூமாலையை.
(மனேன்மணி பூமாலையை எடுக்கிருள்.) திரைக்குப் பின் இருந் து வருகிறன் புருஷோத்தமன்.
அங்கம் II களம் 5 47
கண்டேன், கண்டேன் ; கிருவே, கண்டேன் உன்ன்ை.
イ
கண்டேன், கனவிலே , கண்டேன், கனவிலே, மனேன்மணி கனவிலே கண்ட புருஷோத்தமனை கனவிலே கண்டு தெளிந்து, காந்தத்தை இரும்பு சேர்வதுபோல அவனை அணுகி, அவன் கழுத்தில் மாலையிட்டு, தன் அறிவழிந்து, அவன் மார்பிற் தலை சாய்கிருள்.) யார் இவன், சோான் ? சேரன், சோன் !
சேரன், சோரன் ! சோான், சோன் !
(குடிலனை வெளியே இழுத்து நிறுத்தி) சோரன் நான் அல்ல, இங்கே நிற்கிருன். குடிலா குடிலா, உனக்கும் இக்ககியோ ? (குடிலன் தலைகுனிந்து தரைநோக்கி ஒன்றும்பேசாது
மகாராசா, உங்கள் மந்திரி என்னிடம் வந்தான் : * சுருங்கை ஒன்று இருக்கிறது ; வாருங்கள், சீவ கனைப் பிடித்துக்கொடுக்கிறேன்' என் முன், சேரன் சோான் அல்லேன். உடனே அவனுக்குக் கைக்களை காற்றளை பூட்டி, உங்கள் மந்திரியின் துரோகத்தை உங்களுக்குக் காட்ட இங்கே கொண்டுவந்தேன். பதுமகாமசுவாமி கிருஅருளாலே கனவில் நான் கண்ட என் காதலியை இன்று கனவிற் கண்டேன். என் காகலியும் என்னைக் கண்டு எனக்கு மாலை இட்டாள். போதும் 3 மற்றவிஷயங்கள் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்,
Page 30
ද්රාෆ් 3ච් / 2
48
al,
5H JT.
சுந.
சீவ.
சுந்.
மனேன்மணீயம்
குடிலா, இது மெய்யோ ? (குடிலன் வாளா நிற் கிருன்)
ஏன், வாயைத்திறந்து பேசுமே. விடு, விடு; விசாரணைசெய்ய இது அல்லச் சமயம் எல்லாம் நன்றே ; கன்று முடியின், இவ்கா! என்ன யோசனை ? இதோ உன் மகளையும் மருமகனையும் வாழ்த்து. 9 மனேன்மணி 1 (மூர்ச்சை தெளிந்து தகப்பனைப் பார்க்கிருள்) புருஷோத்தம! நீங்கள் இருவீரும் மணியும் ஒளியும்போல, பூவும் மணமும் போல நீடூழி வாழ்க !
பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு,
பல்கோடி நூரு யிசம்,
4. வாழ்க அந்தணர், வானவர், ஆணினம் |
வீழ்க தண்புனல், வேந்தரும் ஒங்குக ஆழ்க தீயதெல் லாம் அரன் காமமே ;
சூழ்க வையக மும் துயர் தீர்கவே. 7
முற்றிற்று
*了
Page 31
- "|" /\
蘭○リー 『Aリ、AN
直ST蚤 N王更
Kingsbury's
*[
A SIMPLE AND,
E王S直DES AN
INTRODI
The Best Ta
- R இthasa' (சாந்திர *L蚤e of Jesus (ஏசுவி Ahaporu Kurai (gs * Kada vul Valthuքpa : * Manonimani" (DIGGØya
C.
M D BETTER TAMIL D OF TODAY NI) Tan Classics * YOU IEARN
CHASTE STYLE INTERESTING
JCTION TO mil Literaturi.e AD " - 巽。 。 காசம்) * 0-5--سن
エ) ・ ・ 1-59 ப்பொருட்குறள்) 0-25
(கடவுள் வாத்துப்டா)0-35
மணி நாடகம்) 0-65
ugsbury
navakachcheri