கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்த்தங்கள் ஆயிரம்

Page 1

வகள் என்ற
எஸ்.ஜெகதீசன்.

Page 2


Page 3
*,
 
 
 
 
 

*ᎡᎿAᏓᎪᎥ MԱM:
//
71.
இ%
ΝέΤΑ ΜΑ *ால் கேத்து 聲轉.轟。 :, ལོ་མའི་ཐབ་ཚོ་ཚམཆེ " " ༦ར་
- *轟鬍

Page 4

ங்கள் ஆயிரம்
எண்ணங்களின் கொந்தளிப்பு உணர்ச்சிகளின் மோதல்
சந்திப்புக்களின் தொகுப்பு

Page 5
ܙܝܚܢ.܀ܪܐ*
 
 
 
 
 
 
 
 
 
 

الأذكية ة تحتاج : نالد ، حرفية 388 04خر قة (இ)லண்டன் முரசின் (இ) லண்டன் நிருப் ராகப் பெருமை பெற்ற செல்வன் எஸ். ஜெக தீசன் நவமணிகளுள் முதன் மணியாம் கோமே தகமென எழுத்துலகில் மிளிர்கிருர். இ வ ர து *பேட்டிகளின் தொகுப்பு" வெளியீடு ஈழத்தில் தமிழன்னைக்கு ஒரு நவீன படைப்பாகும். தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு பாலமுமாகும்.
"பேட்டி" என்ருல் பெரியவரைக்காணுதல் என்கிறது மதுரைத்தமிழ் பேரகராதி. எனவே பொரியோரைச் சந்தித்து அளவளாவிக் கருத்துப் பரிமாற அவர் நிலைக்குத் தக்க பெரியவரே ஈடா வர். பேட்டிகாணல், "ஒரு குட்டி நாடகமாகவும்" "பட்டிமன்றமாகவும் "தூது உரைப்பதாகவும்" அமையவேண்டிய சிக்கலான முயற்சி என்பதால் இத்தனைக்கும் ஏற்புடைய ஒரு சிறந்த ந டிகர் திலகமாகவும் அமைபவரே சிறந்த பேட்டியாசி ரியராவர். மேலும், "ஒரு எறியில் இரண்டு மாங் காய்" என்னும் யுக்தியும் சேர, கொண்ட குறிக் கோளைப் பிறப்பிக்கவும் கொடுக்கவுமான கதா பாத்திரங்களாகவும் தி கழ ல் அவசியமாகிறது. எனவே, "பேட்டி காணல்" ஒரு தலைசிறந்த நவ மான நுண்கலையாக வளர்வதால் வெளியீட்டா சிரியரின் தனிப்பெருந்தன்மை ஈண்டு வானளா வியது என்பதே எமது துணிபு.
தூதுவனுகச் செல்பவரைப் பற்றி
*அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு என்கிறர் வள்ளுவர்.

Page 6
இன்று இன்னும் மேலாக துணிவு, தூய்மை, செல் வாக்கு, சகிப்பு, பன்மொழித்திறன், பணிவு, பிற ரைப்புரியும் உள்ளம் எல்லாம் சேர்ந்த பூரண புருடரே பேட்டிக்கும் பொருத்தமானவர். சிரித்த முகம் - சரிந்தசிரம் - விரிந்த மனம் - அருள்விழிகட்டுமஸ்தான உரு - வசீகரிக்கும் உடை நடை எல்லாமான செல்வன் எஸ். ஜெகதீசன் பெறு மதியான பேட்டியாசிரியர் என்பதைப் புதிய படைப்பைப் படிப்பவரே எளிதில் புரிந்து கொள் வர், |-
இளமையிலிருந்தே எமது நல்ல மாணவ ணுகவும் நண்பனுகவும் தனிப்பாடங்கேட்கும் தெரி யலான தொடர்பு வைத்தும் தமிழ்மொழியில் காட்டிய ஆர்வத்தின் பயனுய் நிருபர், பத்திரா திபர், பேட்டியாசிரியர், பதிப்பாசிரியர் என்ற வரிசையில் வளர்ச்சி பெற்று மொழிமூலம் சமு தாயத்துக்குப் பெருத்தொண்டாற்றும் இவரது தியாக சே  ைவ  ைய எழுத்துலகமும், வாசகர் உலகமும் பேணிக்காக்கக் கsமைப்பட்டுள்ளது; இவரது புதிய படிைப்பு இத்துறைக்கு முன்னுே டியாகி, பெரும் ஆதரவும் பெற்று இப் புதுப்பணி பாரெங்கும் பரந்து நீடுவாழ்வதாக என வாழ்த்
துவதில் பெரு மகிழ்வுறுகிருேம். மதிப்புரைக்கு
எம்மை நினைத்தற்காக மிக்க நன்றி.
வித்துவான் அ. சந்தியாப்பிள்ளை
* லிசிய இல்லம் "
இளவாலை, 15- 0.79

உங்களுக்கு
வார்த்தைகள்
சந்திப்பு இலக்கியம் என்பது சிறுவயதில் நாம் படித்த சொல்வதெழுதல் போன்றதல்ல, அதனிடமும் ஓர் உயிரோட்டம் இருக்கவே செய் கின்றது. ஒரு காலத்தில் கதாபாத்திரங்கள் தான் கதை பேசுவதாக எண்ணப்பட்டது. காலக்கிர மத்தில் அறிவு வளர வளர எழுத்தாளர்கள்தான் சித்திரிப்புகளுக்கு வடிவம் அமைத்து உருவகப் படுத்துகின் ருர்கள், என்ற உண்மை எல்லோர் மனதிலும் வேரூன்றியது.
பத்திரிகைத் தொழில் மூலம் பலருடன் பழகி னேன். பலதரப்பட்டவர்களுடன் உரையாடினேன் ஒரு நாட்டின் முதலமைச்சரை என்னுடன் பேச வைத்ததும், ஒரு நிதி அமைச்சருடன் அளவளாவ வைத்ததும், ஓர் இயக்கத்தலைவருடன் பே ட் டி காணவைத்ததும் பத்திரிகைகள்தான்,
இதயங்களை பேசவைத்து அந்த அனுபவங்க ளுடன் உறவாடியது எளிதில் மறக்க மு டி யாத ஒன்று. பலரைச்சந்தித்தேன், ப ல பி ர ச்சனைகள் அலசப்பட்டன, அவர்களின் கருவூலங்களுக்கு, எண்ணத்தின் ஓட்டங்களுக்கு செயல் வடிவ ம்

Page 7
கொடுத்தேன். கருத்துக்கள் அச்சில் இடம்பெற்ற தும், அளியாத ஓர் இடத்தைப் பெற்றுக் கொண் டன. ஆனல். கதாபாத்திரங்கள். , எனது நினைவில் தான் என்றுமே ஊசலாடுவார்கள்!
-ஆம் அவர்களில் சிலருக்கு தமிழ் தெரிய வில்லை. அவர்கள் ஆங்கிலத்தில் சொன்னர்கள். தமிழில் உருவாக்கிய பொறுப்பு என்னுடையது. சிலர் தமது தரத்திற்கு இப்படியான சந்திப்புகள் ஒத்துவராது ஏதோ ஒரு மேலான நிலையில். கற்பனை உலகில் சஞ்சரிக்கப் பார்த்தார்கள். அவர்களது கருத்துக்களையும் கறந்து எடுத்தேன் எழுதும் பொழுதும் அவர்களது மனுேபாவத்தை குறைக்கும் நோக்குடன் ஒருசரளமான நடையைக் கையாளவில்லை. பலர் கேட்டவுடனேயே அன் பொழுக என்னை ஆதரித்தார்கள். என்னையறியா மலேயே என்மீது ஒரு கெளரவம் பிறக்க வழி செய்தார்கள். எனது வேலையிலும் அசைக்கமுடி யாத மதிப்பை ஏற்படும்படி செ ய் த ரா ர் க ள். நோயாலும் வறுமையாலும் கோரமாகச் சித்திர வதை செய்யப்படும் என் மதிப்புக்குரிய பெரியவர் ஒருவர் தேனிர் தந்து உபசரித்தார். ஆனல் பல ஊர்களுக்குச் சென் ற வ ர் ஒரு வ ர் அகம் பாவத்தினுலோ என்னமோ தேநீர் அருந்துங்க ளேன் என்று சம்பிராயத்திற்குக்கூட கேட்பதற்கு இதயமற்றிருந்தார். சுவையான கருத்தொன்றை
எழுதிக்கொண்டிருக்கும்பொழுது பேச்சுவாக்கில்
ஐந்தாவதாகத் தனது கருத்தையும் எடுத் துக் கூறினர் எனது அதிகாரி ஒருவர். புறுாவ் பிரதியைத் தற்செயலாகக் கண்ட அவர் இதென் னடா, இந்தப் பெடியோடை பெரிய கரைச்சல்
 

அயத்து மறந்து தன்னும் வாய்திறக்க விடமாட் டான் போலிருக்கே என்று கூறி, பத்திரிகையில் வெளிவராமல் தணிக்கை செய்தார்,ஆணுல் அதை யும் இத்தொகுப்பில் இடபெற வைத்துள்ளேன். -பலரிடம் நேரில் போனேன். சில  ைரத் தொலைபேசியில் சந்தித்தேன். சிலர் தமது கருத் துக்கள் வெளியானதும் முக ம் சுழித்தார்கள். பலர் மனம் திறந்தே பாராட்டினுர்கள். ஒவ் வொரு அனுபவமும் எனக்கு. எனது எழுத்துக் களை விரும்பி சந்தாதாரர்களானதும் எனக்குத் தெரியும். எனது எழுத்துக்களால் வெருண்டெ ழுந்து சந்தாவை நிற்பாட்டியோரையும் எனக் குத் தெரியும்.
:எழுத்துலகில், அதைச் செய்யுங்கள்" அவ ரைச் சந்தியுங்கள்” “இவரிடம் போங்கள்" என்று சதா நச்சரித்தே என் னை உருவாக்கியவர்கள். தான் ‘ஈழநாடு" காரியாலயத்தில் பணிபுரிந்த பொழுதுவாரமலருக்குப் பொறுப்பாசிரியையாக இருந்த செல் வி குணமணி கதிரவேலு பி. ஏ, அவர்கள். அவர்களே எனது எழுத்து நிற்கும் வரை மறக்கவே முடியாது, கூடவே "ஈழநாடு" ஆசிரியரான திரு. எஸ். எம். கோபாலரத்தினம் அவர்களும் எனக்கென்று ஓர் உலகை நிர்ணயிப் பதற்கு அத்திபாரமிட்ட பெரியவர். தவிர எனது அபிமான எழுத்தாளர் திரு. ஈ. கே. ராஜ கோபால் அவர் களும் அக்கறையுடன் எனது ஒவ்வொரு எழுத்தையும் அலசியவர். அ வ் வ ப் பொழுது தகுந்த ஆலோசனைகள் கூறியவர், பர பரப்பான லண்டனில் ச த ரா சுறுசுறுப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கும் லண்டன் முரசு ஆசிரி யர் திரு. சபா. சச்சிதானந்தன் அவர் களும்

Page 8
கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
தவிர இந்த நூலுக்கு மதிப்புரை எழுதி எனக்குப் பெருமையைத் தேடித்தந்தவர் வித்து வான் திரு அ. சந்தியா பிள்ளை அவர்கள் எ ன து  ைக விரல் தேய சிறுவயதில் தமிழ் கற்றுத்தந்த சிறப்புக்குரியவர். கூடவே பின்பக்க அட்டையில் என்னைப்பற்றிச் சிலவார்த்தை கூறி யவர் திரு. ஆர் கந்தசாமி ‘ஈழநாடு’ பத்திரிகை யில் இருவரும் ஒரேநாளில் பணிபுரியத்தொடங் கினுேம், காலத்தால் அழிக்க முடியாத எனது நண்பன் அத்துட்ன் அட்டைப்படத்தை அழகுற அமைத்துத் தந்தவர். கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக்கலா சாலை விரி வு  ைரி யா ளர் திரு. பி, விசாகப் பெருமாள் அனைவருக்கும் மற்றும் ஆர் எஸ் அச்சகத்தினருக்கும் எனது இதயபூர்வ நன்றிகள்.
-எனது எழுத்துக்கலை இலங்கையில் ஈழநாடு தினகரன், சுதந்திரன், சிரித்திரன் ஆகியவைகளும் லண்டனில் லண்டன் முரசும், புலேஷியாவில் தமிழ்நேசனும் இந்தியாவில் குங்குமமும் பிரசுரித் திருந்தன. ', ' : "
இந்நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்களும் அறிவுரைகளும் அனுபவங்களும், ஆற்றல்களும்
எனது ஆற்றலை ஊக்குவித்தவராவர். அனைவருக்
*、*
உங்களுக்கு அர்த்தங்கள் ஆயிரமாகப் படுமோ? நான் அறிந்த வ  ைர யில் சந்திப்பு இலக்
கியத்தில் இது முதலாவது நூல் என்ற உள்ளப் பூரிப்புடன் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
: நன்றி!
வணக்கம்!!!
எஸ். ஜெகதீசன்.
 
 
 

பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ?
碟 警 ငါ့X
...)
சோக்கிரட்டீஸ் உலகப் புகழ்பெற்ற தத்துவ ஞானி, நாட்டில் மக்கள் அவரின் அறிவில் மயங் கிப் பின்சென்று கொண்டிருக்கையில் வீட்டில் இடியும், மின்னலும் மழையும்தானும் அவர் மனைவி மூலம் அவருக்குக் கிடைத்த இன்பம் சோக்கிரடீஸ் காலத்தில் மட்டுமல்ல இன்றும் இக்கதை தொடராமலில்லை. பலதுறைகளிலும் மக்கள் மத்தியில் பெயரும் புகழும் செல்வாக் கும் பெற்றுள்ளவர்களுக்கு அவரவர் வீடுகளில் எப்படி மதிப்பு?
"வி என். பி " என்கிற மூன்றெழுத்து இசை உலகம், எழுத்துலகம் மட்டுமல்ல, வாசக உலக மும் வானெலி உலகமும் பயபக்தியுடன் மதிக் கும் சக்தி பெற்றது. சங்கீத வித்துவாளுக மேடைகளிலும் வானுெலியிலும் கச்சேரிகள் செய் திருக்கிறது. இலங்கை வானெலியில் சிரேஷ்ட அறிவிப்பாளனுக நிகழ்ச்சிதயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறது. சிறந்த எழுத்தாளன், சிறந்த விமர்சகன் என்ற பெயரைப் பெற்றிருக் கிறது "வி. என். பி.’ என்ற மூன்றெழுத்தில் மட்டுமல்ல, "லாவண்யம்" "அந்தாள்" "வழிப் போக்கன்" என்று பல புனைபெயர்களில் நின்ரு டும் திரு. வி. என். பாலசுப்பிரமணியத்தைப் பற்றி அவரது வீட்டில் என்ன நினைக்கிருர்கள். அவரது தாயாரைக் கேட்டோம். அவர் சொன் னவற்றை அப்படியே உங்கள் பார்வைக்குச்
藝 ܝܬܐܢܽܘ. ܡܘ

Page 9
சமர்ப்பிக்கிறோம். பாசமும் பரிவும் நிறைந்த தாய்மைபைப் படித்துப் பாருங்கள்.
அந்த தாயாரை நாங்கள் சந்தித்துச் சில மாதங் களாகிவிட்டன, இந்தச் சந்திப்பு அவர் உயிரு டன் இருக்கையில் வெளிவரக் கூடாதென்பது ஆண்டவன் கட்டளையோ!
:***
அந்தத் தாயார் இரண்டு வாரங்களுக்கு முன் னர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தி இந்தச் சந்திப்பை வெளி யிடுகிறோம்.
நவாலியில் சோமசுந்தரப்புலவர் வீதியால் சிறிது தூரம் சென்றதும் இடதுகைப்பக்கத்தில் ஒரு தகரப்படலை படலையைத் தாண்டி உன்ளே சென்றதும் பழைய காலத்து நாற்சார வீடு.
யாரைப்பார்க்கவேண்டும்? என்று வி. என்வியே குரல் கொடுத்தார்
"வி. என். பியின் தாயாரைப்பார்க்கவேண்டும் - என்று நாங்கள் பதிலளித்தோம்.
'என்ன விஷயம்?' 'அது அவரிடம் சொல்லவேண்டிய விஷயம்! ' அப்படியோ நல்லது. அம்மா! அம்மா!' (உள்ளேயிருந்து குரல் வருகிறது) என்ன தம்பி! 'உன்னை யாரோ பார்க்க வந்திருக்கினம்'
'என்னையோ!' இப்படிக் கேட்டபடியே வீ, என். பி. சி. யின் 'அம்மா' வெளிவிறாந்தைக்கு வருகிறார்.
மெலிந்த உருவம், கறுத்தமேனி, நரைத்த தலை, தீட் சண்யமான பார்வை, பொக்குவாய், கையில் பொல்லு. ஆனாலும் நறுக்குத் தெறித்தாற்போன்ற தெளிவான பேச்சு.

அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறோம். அவரும் பதில் வணக்கம் செலுத்துகிறார். நாங்கள் வந்த விஷயத்தைச் சொல்லுகிறோம். கேள்வி : அம்மா உங்கள் மகனைப்பற்றி என்ன நினைக்கி
றீர்கள். அவற்றை நல்ல குணம் கெட்ட குணம் இரண்
டையும் ஓளிவு மறைவில்லாமல் சொல்லவேணும். பதில்; அவனை (வி.என்.பியை) பற்றி நல்ல அபிப்பிரா
யம் தான் எனக்கு இருக்குது. ஆனால் இடை யி லை கொஞ்சம் கெடுத்துக் கொண்டுது. மூளையையும், மனத்
தையும் அறிவையும்...' கே. ஏன்? ப. ஏதோ அது தன்னுடைய சீவியத்தைப் பழுதாக்கி இப்
(படிப்போய் வீட்டுது. கே. என்னத்திற்காக அப்படிப்போய்விட்டுது. ப. ஏதோ குடும்ப விஷயமோ அதோ இதோ எல்லாம்
அப்பிடியாய் போச்சு. கே. அவரைப்பற்றி வெளியிலை எல்லாம் நல்லாத்தானே
சொல்லுகினம். ப. நல்லாயிருப்பான் நல்ல கல்வி கற்றிருக்கிறான். எல்லா
ருக்கும் நல்ல விதம்.... ஒரு இதாக இருக்கிறான். மூளை
யைக் கொஞ்சம் விட்டு விட்டுது. கே. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் ? ப. இவன் ஒரு ஆள் தானெணை. ஒண்டே ஒண்டென்று
தெய்வம் போலை வைச்சு வளர்த்தன். அவருக்கு 4 வய திலை தகப்பன் செத்துப்போச்சு. அப்ப பாருங்கோ இந்தப்பிள்ளைக்கு தகப்பனின் சுகமுமில்லை. தந்தை யிருந்து படிப்பிக்கவுமில்லை. ஏதோ அது தன்ரை கெட் டித்தனத்தாலை நல்லாப்படிச்சிட்டான். ஒவ்வொரு வகுப்பிலும் பாஸ் பண்ணிறது... பெயில் விடவில்லை. அப்ப... நல்லமாதிரி வந்தாரென்று நானும் வேண்டியு

Page 10
கே.
G5.
هلا
கே.
வசதிகளைச் செய்து கொடுத்தனன் நல்லவேலையாஞர் நல்ல சம்பனமெடுத்தார். நல்ல குணமாயும் வந்தான் நல்லாய்ப் பாட்டுகள் பாடி வீணைகள் மீட்டி. அதிலை எனக்கு ரொம்பச் சந்தோஷம் பிறகு க லி யா ண ம் முடிச்சான். அதிலையிருந்து கொஞ்சம். கல்யாணத்திற்க்குப் பிறகு அவனுக்கு ஒன்றும் நல்லா
நீங்கள் கல்யாணம் முடிச்சு வைக்காமல் விட்டிருக்க Gunth
ஓம் ஓம். இவனென படத்திலை (சினிமாவில்) சேரப் போறனெண்டு நாண்டு கொண்டு நிண்டுது. அப்ப 22, 23 வயது . நான் பார்த்தன். இது படத்திலை சேர்ந்தால் மாண்டு போய்விடும் எங்களுக்கு உதவாது நானுமோ, அவரும் செத்து எல்லாரும் வேறை கலி யாணம் முடிக்கச் சொல்ல. இந்தங்பிள்ளையை வைச் சுப்பார்ப்பம் என்று இருந்தநான் எனக்கு வேறுதுணை யுமில்லை. இவனலை எனக்கும் பேர் புகழ்கிடைச்சுது இவன் சோதினை பாஸ் பண்ணினவுடனே எல்லாரும் எனக்குத் தந்தியடிப்பினம் ஆள் வலு கெட்டிக்காரன். அப்படியென்ருல் ஆகாய சூரன் என்று சொல்லுக் கோவன். இப்படியெல்லாம் நல்லாக வந்த பிள்ளைக்கு இடை யிலை சூத்தை குத்திப்போட்டுது
(இக்கட்டத்தில் கண்ணீர் விடுகிருர்) இப்பவும் உங்களிலே வலு அன்புதானே?
ஓம் வேறுயாரிலை அன்பு தாயைத்தானே பார்க்க வேண்டும்.
அவர் பேப்பரிலை எழுதுகிறதெல்லாம் வாசிக்கிற நீங் sorry?
ஓம் ஒண்டும் விடாமல் வாசிக்கிறனன்,

5
கே. சங்கீதம் எல்லாம் இவருக்குச் சொல்லிக் கொடுத்த
நீங்களோ?
ப. சின்னனிலை நான் பாடக்கேட்டுக்கொண்டு கிடப்பான்
தேவாரம்படி ஆச்சியென்று. பக்கத்திலை. கே. இப்ப. சாப்பாடெல்லாம். ப. அவனலை தான் நான் கூட ஏதோ ஆக்கிச்சாப்பிடுகி றன் இல்லாட்டி நான் என்னையும் கவனிக்கமாட்டன். கே. அவர் எந்தச்சாமத்திலை வந்தாலும் எழுப்பிச் சாப்பிட்
டுத்தான் படுல்பாரோ? ப. ஒ.ஓ.ஒ. அதுக்குக் கடவுள் உதவியனை எழும்பி
ஏதோசெய்து குடுப்வன். கே. கெட்டபழக்கம். ஏதும் இருக்கோ அவரிடம் ? ப. குடிக்கிறவர் கொஞ்சம். பழகிவிட்டார். கே. கொஞ்சமாகத்தான் குடிக்கிறவரோ? ப, (சிரித்துவிட்டு) அது யாருக்குத் தெரியும் அவன் ரை காசு அவன் செலவளித்துக் குடிக்கிறதை நான் கண் டனனே.
பாசமுள்ள தாயின் இதயம் கேட்கிறது.
கே. உங்களுக்கு அவர் காசெல்லாம் கொண்டுவந்து தரு
வாரோ?
ப. அங்கினை சிலவுக்குத் தருவார். கே. அங்கினை உங்களிடந்தந்துவிட்டு மீண்டும் கேட்பாரோ ப. ஒ. சிலவேளை கேட்பான் எப்போதும் கேட்கமாட்டான் கே. சின்னப்பிள்ளையிலை ஒருக்காலும் அவருக்கு நீங்கள்
அடிக்கவில்லையோ? ப. அடிக்க அம்பிடாணெனை.

Page 11
6
கே. அப்ப பெரிய திருகுதாலி? ப. ஒ திருகுதாலியல்ல. அடிக்கடி அம்பிடானெணை. ஒடி விடுவான். நானும் ஒன்டே ஒன்டென்று அடிக்கிறேல்லை கே. அடிக்காமல் வந்ததுதான் இப்பபிழை? ப. அது உண்மை! செல்லம் பண்ணிப்போட்டன். செல்
லம் பண்ணிறதுதான் கூடாது. கே. வெளியில் எல்லாம் வி. என். பி. வி என், பி. என்று
நல்லாச் சொல்லினம். ப. வெளியிலை இவருக்கு நல்ல மகிமையுண்டு. கே. அதுதான் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூற
வில்லையே,
ப. பொல்லாதசேயெனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிது முண்டோ", பொல்லாத தெண்டாப்போலை நான் விடப்போறனே. கே. இந்த வருஷப்பிறப்பு, பொங்கல், தீபாவளி, நாட்க ளிலெல்லாம் உங்களுடைய மகன் என்ன செய்வார்? ப. அதுகளைத்தான் கொஞ்சம் வேறைமார்க்கத்தில் விட்டு விட்டான். எங்களுடைய சைவமார்க்கத்தை-ஒழுங்கு களை கொஞ்சம் மாற்றிவிட்டான்: கே. ஏன் சமயம் மாறிவிட்டாரோ? ப. அப்ப சமயத்தில் நம்பிக்கையில்லைபோ என்னவோ.
இப்ப நம்பிக்கையிருக்கு. கே. சாமி கும்பிடுகிறவரோ? ப. ஓ.முந்தி நம்பிக்கை குறைவு, கே. ஏன். ப. முந்தி திராவிடநாடு. இந் த அண்ணுத்துரையோ
அண்ணுமலையோ எழுதிய புத்தகம் எல்லாத்தையும் தானும் படிச்சு என்னையும் படிக்கச் சொல்லி நிற்பான்

2
கடைசிவரைக்கும் கடவுள் நம்பிக்கை எனக்கிருக்கு. நான் என்ரை சமயத்தை விட்டுத் தவறமாட்டன். பிள்ளை பேசினலென்ன அடித்தாலென்ன நான் எல் லாம் கழுவி மெழுகி துப்பரவாய் இருக்கவேண்டும், தேகசுத்தி இருதயசுத்தி, ஆன்மசுத்தியென்று எல்லாம் சுத்தியாக இருக்கவேண்டும்,
கே. இப்ப அண்ணுத்துரையின்ரை இதெல்லாம் குறைஞ்
சிருக்கோ.
Llo அந்தப்பைத்தியம் இப்ப மாறிவிட்டது. முந்தித்தான்
கொஞ்ச நாள். கே. உங்களுடைய பிள்ளைக்கு பிள்ளையில்லையோ? ப. ஏன் இல்லை. நான் ஒரே ஒரு பேரப்பிள்ளையைக் கண் டதுமல்லாமல் பூட்டப் பிள் ளை ஒன்  ைற யும் கண்டுள்ளவள். இத்துடன் அந்த அன்புத்தாயாரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

Page 12
ஆண்டவனைக் eff GOOIGIT to
“க்னிவான பேச்சில் ஆண்டவனைக் காணலாம்; முக மலர்ந்த சிரிப்பில் அவனது அருளொளி நன்கு பரிணமிக் கும்: இனிவான இசையை அவன் விரும்பி ரசிப்பான்; புனிதமான சிந்தனையில் அவனது உள்ளொளி பிரவாகித்து ஓடும்,'
கேட்பவர் உள்ளங்களையெல்லாம் பத்திப்பரவசத்தி லாழ்த்தி, அவர்களை மெய்மறக்கச் செய்யும் கணிரென்ன குரலில் வாய்மலர்ந்தருளுகின்ருர் சுவாமி பிரணவானந்தஜி அவர்கள் மில்க்வைற் தொழிற்சாலையில் சுவாமியின் பேச் சைக் கேட்க அந்த நிறுவனத்தின் எண்ணற்ற தொழிலா ளர் பயபக்தியுடன் காட்சியளிக்கின்றர்கள்.
சுவாமி பிரணவானந்தாவுடின்
ஒரு சந்திப்பு.
ஆற்றல் மிக்க அவரது ஆத்மீக சிந்தனைகளை பத்தி ரிகை உலகிற்கு அழைத்துவர ஆலாய்ப்பறக்கின்றது எனது மனம். எனது எண்ணத்தை தயங்கியவாறே திரு. நடராசா விடம் சொல்லுகிறேன். மிக்க மகிழ்ச்சியுடன் அவர் அதி பர் திரு. கனகராஜாவிற்கு இக் கருத்தை வெளியிடுகின் முர், மற்றவர்களை வெள்ளையாகக் காணவிரும்பும் அவரது மனமும் வெள்ளை என்பதை உடனே என்னல் அனுமானிக் கும் வகையில் அவர் பலமாகச்சிரித்து அற்புதமான சிந்திப் புக்கு வழிகாட்டுகின்ருர்,
*

9
சுவாமி பிரணவானந்தாஜி முன் எனது கண்கள் கூசு
கின்றன. விளக்கின் முன்காணப்படும் விட்டில் பூச்சிபோலா
கின்றேன் நான் என்ன கேட்பதென்றே ஒருகணம் தயங்
கிய நான் என்னையே சுதரித்துக்கொண்டு அவரை இயக்கு கின்றேன். தவறு என்னையே இயக்குகின்றேன்.
வணக்கம் சுவாமி
சுவாமி வணக்கம் வண்ணக்கம்.
அல்லலுறும் மனித மனம் அமைதி காணுவதெவ்வாறு என்பது எனது கேள்வி.
சுவாமி கடமையைச் சரிவரச் செய்பவன் கடவுளைக் காண் கின்றன். அதனுல் அங்கு அமைதிபிறக்கின்றது. அதனுல் அவன் சாந்தசொரூபியாகின்முன். தவிரவும் சமய சிந்தனைகளில் தீவிர பற்றுவைக்கும் எந்தவொரு மனித னுக்கும் அமைதி அவனது காலடியில் தவழ்ந்தோடும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
கேள்வி: சமயத்துறையில் பத்திரிகைகள் போற்றக்கூடிய
பணியாற்றுகின்றனவா?
சுவாமி; சமயவளர்ச்சியையே குறிக்கோளாக எல்லாப் பத் திரிகைகளும் செயலாற்றமுடியாது எனவே அவை தம்மாலியன்றவரை சமயம் சிதைந்துவிடாமல் பாதுகாக் கத் தான் வழிவகுகின்றன.
கேள்வி சமயங்கள் எமக்குப்புகட்டும் பாடம் என்ன?
சுவாமி பசி-மூப்பு- பிணி-சாக்காடு இவற்றிருந்து விமோ - சனம் அடையும் வழியையே சமயம் எமக்குப் போதிக்சின்றது. பசி வந்தவன் உணவை உட்கொண்டு மூன்று மணி நேரத்துள் மீண்டும் உணவை நாடுகின்றன். பிணியால் பீடிக்கப்பட்டவனுக்கு அப்போதைக்கு மருந்து கள் கைகொடுத்தாலும் நிலைத்து நீடிப்பதில்லை. இதுவிதமே எல்லாம் ஆணுல் ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்ட எவருமே

Page 13
10
கடவுளின் அருளால் எல்லாவற்றையும் பெறும் பேறுடை யவர்களாவதால் அவர்சளுக்குப் பிரச்னையே தலைகாட்ட மாக்டாது. இதையேதான் சமயம் நன்கு போதிக்கின்றது,
கேள்வி: பிரார்த்தனை செய்வதால் எமக்கு ஏற்படுவது.
சுவாமி காமம், குரோதம், ஆணவம், மோகம், பேராசை ஆகிய கொடிய நோய்கள் அகன்று அன்பு, சகோ ரத்துவம், சமத்துவம் முதலியவற்றை எமக்கு அளிப்பவை தான் பிரார்த்தனைகள். கேள்வி: மனத்தின் உத்வேகத்தால் உந்தப்பட்டுச் சிலர் தற்கொலை செய்துகொள்ளுகிருர்களே. இவர்கள் வாழ்வை வலிந்து முடிப்பதால் இவர்களின் நிலை என்ன?
சுவாமி அவர்களது அவசரபுத்தி ஸ்தூல சரீரத்தை மாத்
திரமே மாய்க்கின்றது. ஆனல் அவர்களது ஆவி மிகவும் அவஸ்தைக்குள்ளாகின்றது என்பது அவர்களுக்குப் புரியாததொன்று “பொலிடோலை"ப் பருகியவனைப்பாருங் கள் நிம்மதியாகச் சாவதில்லை; அவஸ்தையின் உச்சஸ்தாயில் அல்லலுறும் அவன் "ஐயோ! காப்பாற்று" என்று கூக்குர லிட்டு விம்மி வெடிக்கிருன். இது கண்ணுக்குப் புலப்படக் கூடிய ஓர் அவஸ்த்தை நிக்லப்பாடு. அதிலேயே எவ்வ ளவோ இன்னலென்முல் ஆவிபடும் அவஸ்தையை சிந்திக் கக்கூடிய ஆற்றலுடைய எவனும் நன்கு உணருவான். மறு பிறப்புக்கு அந்த ஆத்மா பவ்விய மற்றதாகிவிடுகின்றது. கேள்வி மறுபிறப்புப்பற்றி? சுவாமி ஆம் பல நூல்கள் எமக்குப் போதிக்கின்றன
அவற்றின்படி பூர்வ சிந்தனைதான் மனிதனுக்குக் கிடைக்கும் மறுபிறப்பை நிர்ணயிக்கின்றது எ ன் பதை உணரக்கூடியதாயுள்ளது. மரணத்தறுவாயில் ஒருவன் ஆண் டவன் சிந்தனையுடன் சீவனத்தை முடிக்கும் பொழுது அவ னது மறுவாழ்வு அமைதி நிறைந்ததாக அமையும். என்று எத்தனையோ நூல்களும் சாஸ்திரங்களும் எமக்கு அறிவுரை கூறுகின்றன.
ܕܐܬ݂ܶܐ

11
சுவாமிகள் மறு பிறப்புப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகின்ருர். எனது சிந்  ைத அவரது பூர்வீகத்தை நாடி ஒடுகின்றது.
முழுமுயற்சியோடு யோகத்தைப் பயின்றல் சித்தன் ஆகலாம்
சுவாமிஜி அளவெட்டியில் பிறந்தார். நாகமுத்து தம் பதிகள் பொன்னையா எனப் பெயரிட்டனர். இளமையிலே சன்மார்க்கம் அவரைக் கவர்ந்து இழுத்தது ரிஷிகேசம் சென் றிருந்த பொழுது சுவாமி சிவானந்தரது அமைதியான வாழ்வில் இன்னல்களைத் தீர்க்கும் அருமருந்தைக் கண்டார். மலேஷியா தேசத்தில் 'எஞ்ஜினியராகப்" பணிபுரிந்தவரின் மனம் ஆத்மீகத்துறையையே சுற்றி வட்டமிட்டது. பதவி யிலிருந்து ஒய்வு பெற்றதும் சாதுவானர். ஆம்; சுவாமி பிரணவானந்தாஜியானர். மலேஷியாவில் திவ்ய ஜீவன சங் கத்தலைவராக இருந்த இவர் ஜீவன சங்கத்திற்கு 13 கிளை கள் அங்கிருப்பதாகக் கூறுகின்ருர்.
சிந்தனையிலிருந்து விடுபட்டநான் மீண்டும் கேள்விகளை தொடருகின்றேன்.
கேள்வி: இலங்கையில் இளைஞர்கள் சமயத்தைப் புறக்கணிப்
பதாகப் பரவலாகப் பேசப்படுகின்றதே உண்மை தானு? சுவாமி மற்றைய நாடுகளைவிட இங்குதான் இன்ஞர்
களுக்கு சமய அறிவு பல்கலைக்கழக நிலைவரை புகட் டப்படுகின்றது என்பதை அறியும் பொழுது இக் கூற்றுப் பொய்யாகிவிடுவதை உணரமுடிகின்றது. இந்தியாவிலோ அன்றேல் வேறெந்த நாடுகளிலோ சமயம் பல்கலைவரை போதிப்பதில்லை அல்லவா? அதனல் இலங்கையின் இளைஞர் களே இன்னும் நன்கு சமய அறிவுடன் வளர போதிய வாய்ப்பாகின்றது,

Page 14
12
கேள்வி: "யோ கம்? மனிதவாழ்வை வலுப்படுத்தும் ஒன்று என்பதை நம்மவர்கள் பலர் ஏற்கிருர்களில் லையே ஏன் ?
சுவாமி: யோகம் மனிதவாழ்வை வலுப்படுத்துவது மாத் திரமல்ல வளம் படுத்தவல்லதும் கூட என்பதை கீழைத்தேசத்தவர்கள் மாத்திரமல்ல. மேலே நாட்டு நாகரீ கத்தில் மூழ்கித்திளைத்த பல ரும் உணர்ந்துவருகிருர்கள் என்றுதான் சான்னுல் கூறமுடியும். "யாராயிருந்தாலும் முழுமுயற்சியோடு யோகத்தைப்பயின்ருல் சித்தன் ஆக லாம்; அவர் சிறியவரோ, முதியவரோ, அன்றித்தொண்டு கிழமோ, நோயாளியோ, பலவீனரோ எப்படியிருந்தாலும் சரி?" என்று ஹடயோகப்பிரதீபிகை கூறுகிறது.
நோய்வராது தடுப்பது மட்டுமல்ல, வந்தநோய்களை நிவாரணம் செய்வதும் ஆசனப்பயிற்சியின் அரும்பயணுகும்
சிந்தனைகள் மக்களைக் கவருகின்றன. நல்லவர்களுடன் இருக்கும்பொழுது நல்ல சிந்தனைகள் பரிமாற்றம் செய்யப் படுகின்றன. இது சம்பந்தப்பட்டவர்களை அறியாமலேயே நடக்கும் ஒரு செயலாகும். விருந்து இருவருக்கிடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்துகின்றது. இதன ல் தா ன் கட வுளுக்கு பிரசாதம் சமர்ப்பித்து பின் நாம் உட்கொள்கின் ருேம். இதனுல் எமது மனம் பக்குவப்படுகின்றது.
சுவாமிகளின் ஆத்மீக சிந்தனைகள் மனதில் எதிரொ
லிக்க கைகூப்பி விடைபெறுகின்றேன்.
 

பொப் மியூசிக்கில் ஒன்று மில்லை
'சத்தப் புழுதி'
வைரமுத்து : வணக்கம் ஐயா.
சொர்ணர் : ஆ. வைரமுத்து. வாங்க வாங்க..
வாங்க. வாங்க.
வைர ரொம்பகாலமையா. உங்களைச் சந்திச்சு.
சொர் அதுதான் நான் யோசிச்சனன். உங்களைக்கான வேண்டும் என்று இப்பகொஞ்சக்காலமாக நானும் அவ்வளவு வெளிக்கிடுகிறதில்லை.
வைர நாடகங்களைப்பற்றி உங்களுடன் பேசுவதில் எனக்கு
அலாதியான விருப்பம்.
சொர் : எனக்கும் உங்களோடை பேசுவதில் அலாதியான
பிரியம்,
வைர ஏதும் புதிசா சொல்லித்தாறதெண்டால் சொல்
லித் தாருங்கோ.
சொர் : என்ன புதிசு இருக்குது. நீங்கள் கொழும்பிலே போய் நடிச்சபோது நாடகத்திற்கு ஏதோ நவீன உத் திகளைக் கையாண்டதாக பேப்பரிலையிருந்தது.
வைர ; பத்திரிகையிலை வந்ததுதான். நாங்கள் பேச் சிலையோ நடிப்பிலையோ பழைய பாணியைக் கைவிட வில்லை. ஆனல். காட்சியமைப்புப் போன்ற விஷயங் களில்தான் நவீன உத்திகளைக் கையாண்டுள்ளோம்,

Page 15
14
சொர்; அந்தக் காட்சி யமைப்புகளைப் பற்றித்தான் நான் உங்களுக்கு சொல்வேண்டும். இப்பொழுது நவீன முறையென்று.
வைர : சொல்லுங்கோ.
சொர் : இப்ப உங்களைப் போன்றவர் எல்லாம் ஒரு “பிளே யின் கேட்டினில் அகட்பண்ணினுலும் அது ஏற்றுக் கொள்ளும்.
வைர நாங்கள் நெடுக ‘அப்படித்தான் செய்துவாறனங் கள். உங்கள் முன்னிலையில் கூட அப்படித்தானே செய் திருக்கிறம்.
சொர் : பலர் உங்கள் நாடகத்தைப் பார்க்கவருகினமல்லா
மல் ஸ்டேச்சை" பார்க்கவருகிறதில்லை,
வைர கொழும்பு ரசிகர்கள் புதிய மேடையமைப்பைத் தான் கொஞ்சம் விரும்பிக்னம். அதாலைதான் செய்து பார்த்தம்.
சொர் கொழும்பு ரசிகர்களுக்கு. அப்ப இந்த நாடகத் திலை கொஞ்சம் கரிசனையில்லைப் போலயிருக்கு அதா வது என்னென்று கேட்டால் . நாங்கள் யாரையா வது விருந்துக்களைத்தால் சாப்பாடு எப்படியிருக்குது என்றுதான் முதலில் கவனிக்கவேண்டும். பிறகுதான் சாப்பாட்டு மேசை எப்படி கோப்பை, பீங்கான் எவ்விதம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவ னிக்கவேண்டும்.
வைர : அது சரி ஐயா!
சொர் : ஆனபடியால் இப்ப நவீனமு ைஐயென்று நாடகத் திற்கு முகடுதி நடக்குதல்லாமல் வேறென்றுமில்லை. முதலாவதாக. இப்ப நடிச்சுக் கொண்டு இருக்கிற போது . பக்கத்திலையிருப்பவ்ர் லையிட்டை நடிப்பவ ருக்கு மாத்திரம் அடிக்கிறர்: அதனுலை மற்ற மேடை
யிலிருக்கிற நடிகர்களுடைய முகபாவனையை கவனிக்க
முடிவதில்லை.

15
வைர இல்லைத் தான் . இல்லைத்தான். அது உண்மை ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் ஒளியைக் கொடுத்தால் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிருர்கள் என்பதைச் சிந்திக்க முடியாமலிருக்கிறது.
சொர் : இரண்டாவது - இந்த "மைக் , ஒரு திறந்தவெளி யரங்கில் இந்த மைக்போடத்தான் வேண்டும் அல்லது கேளாது. ஆனல்.ஒரு மண்டபத்துக்குள்ளே இருப்ப வர்கள் கேட்கும்படியாகப் பேச முடியாதவர்களுக்கு என்ன நடிப்பு,
வைர : அது மெத்தச்சரி.
சொர் : நாடகம் நடந்துகொண்டிருக்கைக்கை நடிப்பவை மைக்குக்கு முன்னுல் வந்து பேசுவினம் இங்கு நடிப்பு எங்கையிருக்கப்போகுது. முகபாவம் எங்கு இருக்கப் போ குது . . உணர்ச்சியெங்கு இருக்கப்போகுது. இந்த "லைட்" முறைகளிலும் பழைய பாணிதான் எனக்கு நன்கு பிரியம். நான் பழைய காலத்து ஆள் தான். எந்த நாடகத்திலும் இந்த புட்லைட்ஸ் இருந் தால்த்தான் முகபாவனையோ மேக்கப்போ நல்லாகத் தெரியும், பகலிலைகூட லைட்போடாமல் நடிக்கக்கூடாது லைட்போடாமல் நடிச்சால் அங்கை முகபாவம் ஒன்றும் வடிவாகத் தெரியாது. இனி மேக்கப் விஷயத்திலையும் அந்தப் பாத்திரத்திற்கு தக்கமாதிரி மேக்கப்போட வேண்டும் என்று ஒரு வரும் யோசிப்பதில்லை. காரணம் என்னவென்ருல்..இன்றைக்கு ஒருவர் நாடகம் போடு கிழுர் என்று வைப்பம். அவர் எங்கையாவது ஒடித் திரிஞ்சு. கூலிக்கு மேக்கப்புக்காக ஒருவரை அமர்த்து வார், வந்தவருக்கு நடிகனின் குணுதிசயம் கதாபாத் திரத்தின் தன்மை ஒன்றுமே தெரியாத நிலேயில் அவர் கிறிசை அள்ளி முகத்தில் அப்பிவிட்டுப் போய்விடு வார். மற்ற அங்கங்கள் முழுக்க மேக்கப் இல்லாம லிருக்க, முகம் மட்டும் மேக்கப்புடன் காட்சி தந் தால் நடிகர். ரசிகர்களுக்கு " சோ ளங் காட்டுப் பொம்மை" போலத்தான் காட்சியளிப்பார். இது
)

Page 16
16
பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்ருதா? இதுகளை யோசிக்கிறதில்லை. இப்படியான வற்றில் டைரக்டர்கள் தான் அக்கறைகாட்ட வேண்டும். இது அவசியம், வைர ஐயா. எனக்காகச் சொல்லவேண்டாம். நீங் கள் கொஞ்சக்காலமாக நடிக்காமல் வீட்டிருக்கிற காலத்தில் பல மேடை நாடகங்களைப் பார்த்திருப்பீர் கள், பார்க்கிறபொழுது நீங்கள் விரும்புகிற அந்தப் பழைய மரபுமுறை தவருமல் நடிக்கிற இரண்டு மூன்று நாடகங்கள் இருக்கத்தானே வேண்டும். அதை ஞாபகத்திலை சொல்லமுடியுமோ? சொர் : ஒன்று உங்கடை மற்றது - அந்த - அந்த நெல்லி
யடியிலே. இரணியனின் போட்டது; வைர ஆ. வதிரி தமிழ் மன்றம், சொர் : மற்றது. பழைய முறையிலை. ஆர் உங்கை சரி
யாச் செய்கிறது. வைர "இந்த அடங்காப்பிடாரி" - புளுகர் பொன்னையா என்று நகைச்சுவை நாடகம் நடப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம். சொர் வெளிப்படையாகச் சொல்லக்கூடாது: " அடங் கணிப்பிடாரி”யை ஐந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்துவிட்டு மீண்டும் பார்க்கக் கூடாதென்று தீர் மானம் பண்ணிவிட்டேன்.
* சிச்சிச்சி சினிமாவிலே நூற்றுக்கு தொண்ணுாறு
பாட்டுக்கள் கூடாதவை அர்த்தமே கூடாத அர்த்தம்.
வைர அவர்களுடைய நாடக "ஒழுங்கு" என்னை நன்கு கவர்ந்துள்ளது. சிலசமயங்களில் அவர்களுக்கு நான் பக்கவாத்தியமும் வாசித்துள்ளேன்.

17
சொர்: ஓம். அது சரி. மேடையிஆல
மட்டும் கலகலப்பாகத்தான் இ சங்கதிகள் அவர் மேடையிலை இதை அவர்களுக்கே நெத்திக்கு ே டேன்,
அவர்கள் வந்துபோகு ருக்கினம். ஆணுல் சில செய்யக் கூடாது. தரேயே சொல்லிவிட்
வைர நீங்கள் சொன்னதாகக் கேள்வி. அவர்களே என்னி
-ம் சொன்னர்கள்.
சொர்! ஆனல் இரண்டு மூன்று நடிகர்கள் மிக நல்லாகச் செய்தார்கள். ஒருவர் வெகு நல்லாக நடிச்சார். அவரை நீங்கள் சந்திச்சிருப்பீர்களோ தெரியவில்லை. கனகய்யா. அந்த வியாதிக்காரக் கிழவனக வந்த பொழுது உண்மையிலே வியாதிக்கார கிழவனகத்தான் இருந்தார்.
வைர ; அது சரிஐயா கனகய்யா உங்களுடைய நாடகங்
கள் இரண்டு மூன்றிலும் நடித்தவரென்று கேள்வி.
சொர் ஒ.ஒ.ஓ சேர்ந்து நடித்துள்ளார்.
வைர : அந்தக் காலத்திலே நாடகங்களிலே களும் வைத்துத்தானே யிருந்திருப்பீர்கள்.
சொர் : ஒ . நானே பாடி.
பாட்டுக்
நானே அக்ட்பண்ணுகிறது. வைர ! உங்களாலை ஏலாவிட்டாலும். உதாரணமாக ஒரு
பாட்டு இப் சொல்லிக்காட்டுங்க பார்ப்போம்.
சொர் : ஆ.சரி. ம், *சேரும் கெதியில் .
. . . . . ... Tairy தொடங்கியபடி பாடி முடிக்கிருர்,
வைர : இந்த வயசிலேயும் சுதிதவழுமல் பாடிறியள்
பெரிய ஆச்சரியமாயிருக்குது!
(சொர்ணர் சிரிக்கிருர்.) வைர இது எந்த நாடகத்திலை வந்த பாட்டு.

Page 17
18
சொர், "பாதுகா பட்டாபிஷேகம்' வைர பாதுகா பட்டாபிஷேகத்திலை நீங்கள் நடிச்ச பாத் -1
திரம் என்ன?. சொர் ; .............பரதன் வைர ; இப்பவும் பாடியபடியே உங்களால் நடிக்கமுடி
யுமோ? சொர் : முடியும்....... ஆனால் உடம்பு இடம் கொடுக்கு
தில்லை ....... களைக்குது. இப்ப இதையெல்லாம் பாடு கிறபொழுது கொஞ்சம் களைப்பிருக்குது, பாட்டு
ஒழுங்காகத்தானேயிருக்கு? வைர : பாட்டு..... சுது ... தாளம் எல்லாம் அப்படியேதானி
ருக்கு ... இப்படிப் பாட்டுக்களை வைச்சுக்கொண்டு சினிமாவிலை நடிப்பது பொருந்தாதென்று நினைக்கிறேன். சொர் : சிச்சிச்சி... சினிமாவிலை எங்கையாலும் சில சில
பாட்டுகள் தான் நல்லாயிருக்கு. அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு பாட்டுகள் கூடாத பாட்டுக்கள், அதன் அர்த்தமே கூடாத அர்த்தம். (உதாரணத்துக்குச் சில பாடிக்காட்டுகிறார்.)
என்ன பாட்டு இது, சில வேளை பொடியள் சொல் லுவார்கள். கிழவர்மாருக்கு இது பிடியாதென்று. ஆனால் கிழவன் மாருக்கு மட்டுமல்ல இளமையிலே கூட
இப்படிப் பாட்டுகள் படிக்க நான் விரும்புவதில்லை. வைர : சமீப காலமாக இந்த 'பொப்பிசை' என்று ஏதோ
போட்டுச் செய்கிறார்கள்... நான் அதைப் பார்க்க வில்லை. நீங்கள் பார்த்திருந்தால் அதைப்பற்றி கொஞ்
சம்....... - சொர் ; பொப்பிசையென்று சொன்னால்.... எங்கள் சமு கம் அந்தமாதிரி வளர்ந்து வந்துவிட்டது .. நான் எத் தனையோ பேரை இதைப் பற்றிக் கேட்டபொழுது அதைப் பெடியள் விரும்புகிறார்களாம், பெடியளுக்கு

6.
இதைக் காட்டக் காட்ட அவங்களுக்கு இதிலேயே விருப்பம் வரும் பாருங்கோ, ஆனல் பொப்மியூஸிக் கிலிருக்கிறது ஒன்றுமில்லை. "சும்மா சத்தப்புழுதி" நான் திருவிழாவிற்குபோய் அங்கு மேளக்கச்சேரி நடந்து முடிவடைந்தபின் இந் த பொப்மியூஸிக் தொடங்க ஆரம்பித்தால் உடனே காரைத் திருப்பிக் கொண்டு வீடு வந்துவிடுவேன். வைர ; ஏன்? சொர் : உகாரணமாக. டேப்ரெக்கோடரில் முதல் ஒரு பாட்டைப்போட்டுவிட்டு திரும்பவும் அதன்மேல் ஒரு பாட்டைப் போட்டால் முன்னையது அழிந்துவிடும் . அதேபோல் நல்ல சங்கீதத்தைக் கேட்ட பின் பொப் பிசையைக் கேட்டால் முந்திக்கேட்டது அழிந்து போகும். மனதில் நில்லாது. வைர மற்றவர்களுடைய நாடகங்சளை - விடியும் வரை நடக்கும் நாடகங்களை கண்தூங்காம்ல் நீங்கள கவனிச் சுப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் அவதானித் திருக்கிறன். அது உங்களுக்கு நல்ல ஒரு சக்தி, வழக்க மும் தான். சொர் : என்க்கு இந்த நாடகங்கள் அலுக்கிறதில்லை. அதிலை
ஒரு ஆசை. வைர ! ஐயா என்னுடைய பூகத்தம்பி நாடகம் உங்களு டைய வீட்டுக்கு அண்மையில் கிட்டடியில் நடந்தது. நீங்கள். - f சொர் : அண்டைக்கு இஞ்சை பெரிய பிழைசெய்து போட் டாங்கள். நான் வாறனெண்டு சொல்ல. நீங்கள் வர வேண்டாம். நாங்கள் காரில்லை வந்து கூட்டிக் கொண்டுபோகிறம் நீங்கள் ஆயத்தமாக இருங்கோ என்று சொல்லிப்போட்டு ஏமாத்திப் போட்டாங்கள். வைர தான், நீங்கள் அந்நாடகத்தைப் பார்க்க வேண் டும். குறைகளைச் சொல்லித்தருவியள் என்று எதிர் பார்த்தது.

Page 18
20
சொர் : நானும் பார்க்க (36)յohr@ւ: என்று ஆசைப்பட்டி
ருந்தனன்.
வைர அது பரவாயில்லையய்யா இந்த
பதினறு பெண்கள் என்று சொல்லி ே டுவத்து.
சொர் : -என்று கேள்வி. அவர்களிஜ (நிர்வாகிகளிஜல) சிலர் எனக்கு வேண்டியவர்களாக விருந்தும் இந்த நாடகத்துக்கு என்னை அழைக்கவில்லை. ஒருவேளை எனக் குப் பிடிக்காதெண்டு நினைத்து விட்டுவிட்டார்களாக்கும்
வைர ஐயாவினுடைய குடும்பத்திலுள்ளவர்கள்
வது உங்களைப்போல நாடக கிருர்களா?
பத்துப்பதினைந்து மடையில் கொண்
ሀ ሆwዐrtr
த்துறையில் இறங்கியிருக்
சொர் : நம்முடைய பிள்ளைகள் "டான்ஸ்" பண்ணிச்சினம்,
வைர பரதநாட்டியம். நல்லதுதானே...!
சொர் : பரதநாட்டியம். கதகளி எல்லாம் பயின்றினம். கோபிநாத் இலங்கை வந்தபொழுது இவர்களிலை நல்ல விருப்பம் பேந்து நிற்பாட்டிப் போட்டன் என்று அவருக்கு பெரியகுறை படிப்பு பழுதாய் போயிடும் பாருங்கோ மற்றது என்னுடைய மருமகனுடைய மகன் . அவர் வந்து இப்ப கொழும்பிலை பெரிய ஆள்-இந்த இந்த பொப்மியூசிக்கிலை.
வைர : அவரும்.
சொர் : மெத்தப் பெரிய ஆள் . கேள்விப்பட்டிருப்பியள்
குமார் நவரத்தினம் என்று.
( இருவரும் சிரிக்கிருர்கள் )
சொர் ; மற்றது இவை திருகோணமலையிலிருந்து பொப்
மியூஷிக்கென்று. வந்தினமே
வைர ; "பரமேஸ் - கோணேஸ்?
சொர் : ஓம்! அவை மெத்த நல்லாகச் செய்யினம் மிக
ஒழுங் சாய் செய்தார்கள். கண்டபாட்டுக்கு எல்லாத்
ܪ,)

21
தையும் போட்டடிச்சு காதடைக்கப்பண்ணவில்லை...... அண்டைக்கு வேறு ஒரு பொப்மியூஷிக்கு தலைமை தாங்கப் போனனான். சுமார் ஒரு மணி நேரம் இந்த வாத்தியங்களைப்போட்டு அடி அடி யென்று அடிச்சு... நான் விட்டை ஓடட்டோ என்று கூட யோசிச்சனான்.
வைரமுத்து சிரிக்கிறார் சொர்ணரும் சேர்ந்து சிரிக்கிறார் வைர : அதிகநேரம் உங்களை வருத்தவிரும்பவில்லையய்யா
... கடைசியாக உங்களை...
சொர். நான் ஒன்று கேட்கவேண்டும்... நீங்கள் இப்பத்தே நாடகங்கள் எல்லாம் பார்க்கிறனீங்களெல்லோ ... குறிப்பாக மன்றங்களின் நாடகங்கள். இதிலை இந்தக் காதல் காட்சிகள் காட்டிகினம் கவனித்தீர்களா? வைர ; நான் இப்ப அதைக் கேட்க நினைத்தனான் நீங்களா
கவே சொல்லி விட்டியள், அதைப்பற்றி கொஞ்சம்
சொல்லுங்கோ .... சொர் : அது பெரிய பகிடி காதல் காட்கிகளென்று வந்த
வுடனை, கிராமபோன் ரெக்கோட்டை'ப் போடுகிறது. அவை கையைக்காலையாட்டி நெளிஞ்சு கொண்டு போ
னால் ஏதோ டான்ஸ் என்று நினைக்கிறது பெரிய வெட்ககேடு. பின்னுக்கு போறவை கையை இப்படி ... அப்படிப் பிடிச்சு... ஏ தோ விறாண்டுமாப்போலை போவினம்... இதென்ன காதல்!
(இருவரும் சிரிக்கிறார்கள் ) இதைச் சினிமாவிலை பார்த்துப் பிடிச்சிருக்கிறார்கள். சினிமாவிலை ஒரு காதல் என்றால் பெண்பிள்ளையை ஆண்பிள்ளையை விட்டுக்கலைச்சுக் கொண்டு திரிகிறது அல்லது ஒரு மரத்தைச் சுற்றித் திரிகிறது. இந்தவிதமாக அவங்கள் கலைக்கிறது தான் காதல் என்று நினைச்சுக் கொண்டாங்க்கள் போலை. காதல் பாருங்கோ ... காதல்
என்றால் அவை அசையாமல் நிற்க வேண்டும். வைர : அப்ப நான் அது தெய்வீகக்காதல்.

Page 19
22
சொர்: சகுந்தலை நாடகத்திலை சகுந்தலே துஷ்யந்தனைக் கண்டதும் அசையாமல் நிற்கிருள். அவளுக்கு என்ன செய்கிற தென்று தெரியாதநிலை. அதைத்தான் ரஸிக் கலாம், அதைவிட்டு, அவன் கலைக்க இவள் ஒட . வேதனை. வேதனை.
வைர இந்தக்காலத்திலை ஐயா, நாடகத்தை நல்லமுறை யிலை செய்ய ஏதாவது சுருக்கமான வழிசொல்லுங்கோ
சொர் : நல்ல முறையிலை செய்கிறதற்கு மன்றங்களை யெல் லாம் பதிவு செய்து நல்ல " சுப்பவிஷனுக்கு" க் கீழ் நாடகங்களை நடாத்த வேண்டும். இப்ப என்னடா வென்ருல் அந்த நிதி இந்த நிதி என்று பலர் வெளிகிக்ட்டு நாடகம் என்ற பெயரையே பழுதாக்குகிருன்கள். சரி வேறு என்ன கதைக்கப்போறியள். வைர : ஈழத்தின் சினிமா இனிவளருமா ஐயா அல்லது. சொர் : இலங்கையைப் பற்றிச் சொல்லப்போனல் இந்த தமிழன் இருக்கிருனே. மற்றவனை முன்னேறக் கொஞ் சம்கூட இடம் கொடுக்கிற துபெரிய வில்லங்கம். உகாாணமாக, இப்ப நீங்கள் இருக்கிறீங்க நீங்கள் அரிச்சந்திரஞக திறம்ாய் நடித்தாலும் நடிப்பைப்பற்றிச் சொல்லாமல் வேறு ஏதாவது சங்கதியைச் சொல்லி அவன் கூடாதவன். வைர கொஞ்சம் மட்டப்படுத்தி. சொர் : இது இலங்கையிலுள்ளவர்களுக்கு ஒரு வழக்கமாய்ப்
போய்விட்டது,
வைர இன்று சினிமாவைப் பொறுத்து. சொர் : சினிமாவும் அப்படித்தான். சினிமா "ஸ்ராட்" பண்ண முந்தியே காசடிக்கத் தொடங்கிருன்கள் யார் அதிலை சேர்ந்தவன்கள் என்ன செய்கிறது எனக்குக் காலம் போச்சு, இல்லாவிடின் எப்பவோ இ தி லை இறங்கி வேறு விதமாகக் கொண்டு வந்திருபன்,
朗
f

23
வைர : கனபேர் பட்டம் கொடுக்க வெளிக்கிடுகினம் அவை
கொடுத்தவற்றில் சில தான் நிலைக்குது இது ஏன்?
சொர் : நெஞ்சிணர்ந்து கொடுப்பதால் தான் சும்மாபிளிஸ்" கொடுத்தால் அது நிலைக்காது. எனக்கு கலையரசு என்ற பட்டம்தான் நிலைத்து நிற்கிறது.
வைர : இன்னுெரு முறை வந்து சந்திக்கிறன் உங்களுக்கு
வீட்டிலை.
சொர் : ஒருமுறையல்ல பலமுறை வரவேணும்
வைர வணக்கம்.
சொர் வணக்கம்,

Page 20
பனம் விதையில் ஆரம்பித்த எனது திட்டம் பரந்து வளர்கிறது.
என்கிறர் அகத்தூய்மைக்கும்
புறத்தூய்மைக்கும் உதவும்
மில்க்வைற் ஸ்தாபன அதிபர்
திரு. கனகராசா
சோம்பேறியே நீ எறும்பிடம் போ என்பது பழங்கதை, சோம்பேறியே நீ மில்க்வைற் நிறு வன அதிபர் திரு. கனகராஜாவிடம் போ என்று நமது கண்களில் அகப்படும் எந்தச் சோம்போறி யிடமும் துணிந்து இன்று கூறத்தக்க சுறுசுறுப் பான மனிதர்தான் மில்க்வைற் அதிபர். அவர் ஒடிஓடி இயங்கும் பாணி அவருக்கே கைவந்த ஒரு கலையோ என்று தான் எண்ணிப்பிரமிப் படையவைக்கிருர்,
நேரமும் சமயமும்,
நேரத்தை அவர் நன்கு மதிக்கிருர், சமயத்தை அவர் நன்கு வளர்க்கிருர், நல்ல காரியங்கள் ஆத்மீக அபிவிருத் திகள் எவைகளோ அவைகளில் பங்குபற்றி அக மும் முகமும் மலர்ந்து தம்மை அர்ப்பணித்து முன்னணியில் நிற்பவரான "சிவநெறிப்புலவர், சிவதர்ம வள்ளல், சிவ தர்ம பூபதி திரு. க. கனகராஜா, மக்களை உள்ளும் புற
هم{

*
25
மும் தூய்மையுடையவர்களாக மிளிர அரும்பாடுபட்டு வருகின்ருர், என்று இவர் பற்றி கூறினர் மூதறிஞர் பண்டித Losoof.
அவரைக் காணச் சென்றேன். வாசலிலிருந்த ராஜ கோபாலும், ராசையாவும் பண் புட ன் வர வே ற் ற பாணியே 'பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்’ என்ற பழமொழிக்கு நல்லதொரு உதாரணமாக அமைந்தது.
இயந்திரங்களின் அலறல் ஒசைக்குள்ளேயும் அதிபரது அறையில் ஆண்டவன் சன்னிதானத்தில் உள்ள ஆழ்ந்த அமைதிநிலவுகிறது 'மெளனம் சம்மதம்” என்ற ஆன்ருேரது வாக்கை எனக்கு அனுகூலமாக்கிக் கேள்வியைத் தொடங் குகின்றேன்.
கேள்வி. புறத் தூய்மையை தொழிலாகக் கொண்ட நீங்
கள் அகத்தூய்மையை ஊக்குவிக்க முனைந்ததெவ்வாறு?
பதில்: எனது ஸ்திரமான கொள்கைகமதுவும் புகைத்த லும் ஆகவே ஆகாதென்பது. அதனல் ஆண்டவன் அளித்த எனது வருமானத்தை அவனுக்கே திருப்பி அளிக்க அருமையான சந்தர்ப்பம் உருாவனது. எனவே ஆன்ருேர் "மணிவாக்குகளைத் தொகுத்து வெளியிட் டேன், மக்களின் ஏகோபித்த ஆதரவு என் முயற்சிக்கு நல்லதொரு உரமிட்டது. ":" "
கே; இதற்கான முதலீடு..?
அதுதான் ஏற்கனவே சொன்னேனே. எனது வரு 5וL ம்ானத்தின் சிறுபகுதியை எனக்கு எடுப்பதுடன் மிகு தியை 'இப்படியான ஆக்கப்பணிகளுக்குச் செலவிடு கிறன் .
கே; அப்படியாயின் உங்களது நல்லமுயற்சியில் நம்பிக்கை
கொண்டவர்கள் யாராவது உதவ முன்வந்தால்
ப போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்தாவதால்
அவர்களிடம் நான் பணத்தை வரவேற்பதில்லை, மாழுக

Page 21
26
கே:
கே
Gast
அவர்களையும் இவ்விதமாகச் செய்யும் வண்ணம் ஊக் குவிப்பேன்.
உங்களது ஆக்கபூர்வமான முயற்சிகள் இலவசமான புத்தகங்களை வெளியிடுவதுடன் நின்றுவிடுகிறதா?
என்கடன் பணி செய்து கிடப்பதே. ஆகவே என் ஞலான எந்த உதவிகளையும், எந்த ஆக்கபூர்வமான முயற்சிகளையும் கைகொடுக்கவே விரும்புகின்றேன். எனது குறிக்கோளும் அதுதான்.
உங்களது இலவச வெளியீடுகள் மக்கள் மத்தியில் பிர
பல்யமானவை; உங்களது மற்ற ஆக்கங்கள் வரவேற் கப்படுகின்றனவா?
நான் பிரபல்யம் டைய வேண்டும் என்பதற்காக எதை
யும் எடுத்தாள்வதில்லை என்னைப் பொறுத்தவரை "மக் கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். உதவி கோருவோருக்கு கைகொடுத்து உதவவேண்டும்.
உங்களது உள்ளக்கிடக்கை வரவேற்கத்தக்கதுதான். நீங்கள் உணவு உற்பத்திக்குக்கூட போற் றத் தக்க சேவை செய்கிறீர்கள் எனப் பலர் கூறக் கேட்டிருக்கி றேன்?
ஆண்டவன் மக்களது தேவையைப்பூர்த்தி செய்ய அனுசரணையாகவே எனக்கு ஓரளவு பணத்தைத் தந் துள்ளார். அதைக்கொண்டு ஆன்ருேர் மொழியைப் பிரசுரித்த நான் உள்ளத்தை நிறைவுறச் செய்தேன் இப்பொழுது உணவைத் திருப்திசெய்யவும் சிறுதொண் டாற்றுகிறேன்.
எங்ங்ணம் என்று கூறுவீர்களா?
உப உணவுப்பயிர்களை நாட்டில் அமோகமாகப் பரவ விடவேண்டும் என்பது எனது விருப்பம். அதனல் அவற்றிற்கான விதைகளை இலவசமாக வழங்கிவரு கிறேன்;
ܬܵܐ
*

R
கே:
G୫
கே;
கே
है।
27
விதைகளை எல்லோரும் நன்கு பயன்படுத்துகின்றர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அள்ளிக்கொடுப்பதையும் ஆராய்ந்து கொடுப்பதால் இப்படியான துர்ப்பாக்கிய நிலை ஏற்படாவண்ணம் பாதுகாக்கின்றேன். s எவற்றை நீங்கள் வழங்குகின்றீர்சள், முதலில் பணம் விதையில் ஆரம்பித்தேன். அந்த மரத் தின் திடகாத்திரத்தைப்போல் இத்திட்டமும் திடகாத் திரமாக அமைந்தது. இந்த எண்ணம் உங்களுக்கு ஏற்படக் காரணமாக அமைந்தது என்ன?
,
பலதரிசு நிலங்கள்தான். அத்துடன் வளமற்ற மண் பிரதேசங்களில் கூட பனையின் செழிப்பான வளர்ச்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது.
சில வரண்ட பிரதேசங்களுக்கு நீர்ப்பாசன வசதியை நீங்கள் மேற்கொண்டுள்ளதாக அறிகிருேம்? உண்மைதான். குடியேற்றத்திட்டங்களில் கிணறுகள் வெட்டிக்கொடுத்துள்ளேன்.
க: கடிதமூலம் இப்படி உதவி கோருவோருக்கு உடனடி
யாக உதவுவீர்களா?
ஏமாற்றுப்பேர்வழிகளின் போலித்தனத்தை தவிர்க்க இதை நேரடியாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவு செய்வேன் - நல்ல பல திட்டங்களை செயல்படுத்தும் நீங்கள் வலு மிக்க ஏழை விவசாயிகளுக்குக் காணி வழங்கி ஏன் அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடாது? நல்லதொரு திட்டம் தான். நாளடைவில் நடை முறை யிலாக்க முயற்சிப்போம்.

Page 22
28
கே.
G5.
உங்களது வாழ்வில் எவரது கோட்பாடுகளை- குறிக் கோள்களைப் பெரிதும் கடைப்பிடிக்கிறீர்கள்?
மகாத்மா காந்தி, பாரதி, நாவலர், ஒளவைப்பிராட்டி போன்ற மூதறிஞர்கள் என்னை வளர்த்தவர்கள். இவர்
கள் எல்லோருக்கும் மேலாக சுவாமி சிவர்னந்தர்
எனது மானசீகக்குரு; வாழ்வை வளமாக்கும் அவதார புருஷர் அவர்,
உங்களது தொழிலார்களை எவ்விதத்திலாவது உணவு உற்பத்தியில் ஈடுபடுத்துகிறீர்களா? அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறேன். அண்மையில் கூட அவர்களுக்கு உயர்ரக மண்வெட்டிகளை இலவச மாக வழங்கியிருந்தேன்;
மொத்தத்தில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
என்பதுதான் இந்த தொழில் அதிபரின் வாழ்வில் பரிண மிக்கிறது.
நாட்டுமக்களுக்குகிடைத்த நல்ல நீரூற்று அவர் என்ற
எண்ணத்துடன் இவரைப்போன்ற பலர் நம்-ம த் தி யி ல் தோன்றவேண்டும் என சிந்தித்துக் கொண்டு அவரிடம் விடை பெற்று விலகுகின்றேன்.
 

f
算
சைக்கிளில்
உலகம் சுற்றும் வாலிபன்
D
இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கிப் புறப் பட்டு, கிழக்கின் வாசலால் வீடு திரும்ப இருக் கும் கே. பார்த்தசாரதியை லண்டன் முரசு’ காரியாலத்தின் மேல்மாடியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் எதிர்பார்த்தபடியே அவரிடம் வீரத்தின் களை பளிச்சிட்டது. பருத்த மீசை அதற்கு முத்தாய்ப்பு வைக்கிறது. 38 வயது என்று சொல்கிருர், சிலவேளை எல்லாவற்றை யும் இரட்டிப்பாகத் தான் கூறுவாரோ என அங்கலாய்க்கிறது எனது அடி மனம், சிறிய உரு வம், அதற்க்ேற்ற சைக்கிள்" உலக வலம் வருவ தென்றல். நம்பவே முடியவில்லை.
"என்னு. சார்?' என்னை முந்தி, அவரே தொடங் குகிருர், அமைதியாக இருக்க அவரது கால்களும் விரும்பு வதில்லை. அதேபோல் மனமும் விரும்புவதில்லையோ?
9
"ஆமா, நீங்க எப்பொழுது." எனது கேள்வி முடியு முன்பாகவே "டெல்லியில் இருந்து 26-11-76ல் எனது உலக வலம் ஆரம்பமாயிடுச்சுங்க. அங்கிருந்து நேராகப் பங்களூர் போயிருந்தேன். அங்கேதான் நான்பணி புரிந்துவரு

Page 23
30
கிறேன். இந்துஸ்தான் ஏரோனேட்டிக்கல் கம்பனியிலை உதவி என்ஜினியராகப் பணிபுரிந்துட்டுவாறன். ஆமா. அவங்ககிட்டே அனுமதியும், ஆசியும் பெற்ருத்தான் நல்லா யிருந்திடும்னு தோணிச்சு, அதனலே அங்கே போயிருந் தேன். அதுவுங்கூட, என்னுடைய சைக்கிளிலே தானுங்க ég frif.
"அப்ப டெல்லியிலே உங்ககிட்டே ஆசி வழங்க எவ ருமே வரவில்லையா சார்? நான் தொடருகிறேன்.
இந்திரா காந்தி அமைச்சரவையிலை வெளிவிவகார உதவி அமைச்சராயிருந்த பூரீ விபின்பால்தாஸ"சங்க என்னை ஆசியுடன் ஆரம்பிச்சு வைச் சாருங்க 15 நாட்களிலை பங்சளூர் சேர்ந்தேன். மீண்டும் ஆறு நாட்களிலை பம்பாய்க்குத் திரும் பினேன். அங்கிருந்து கப்பல் மூலம் ஒமான் நகரை அடைந் தேன்.
உங்களது பிரயாண மார்க்கத்தை ஏற்கனவே திட்ட மிட்டபடி செயல்படுத்துகிறீர்களா?- நான் இழுக்கிறேன்.
**இல்லே அண்ணுச்சி! நான் ஏற்கனவே தீட்டியதிட்டங் களில் அவ்வப்பொழுது சின்னச்சின்ன மாற்றங்களை ஏற் படுத்தினேன் வந்ததுதான் வந்தோமே. இனி எப்ப வாற மோ என்னு தோணுச்சு . அதஞலே எனது நேர்வழிப் பயணத்தை விரிவுபடுத்தினேன். அதனுலே மேலும் பல ஊர்களுக்குப் போக முடிஞ்சுதுங்க '
* அதுசரி, வின்டர் ஸிஸனைச் சுகமாகவே உங்கள் பயணத்தில் சமாளிக்க முடிஞ்சுதா .?" லண்டனின் புறக் குளிரைப் போக்கடிக்கும் அறையின் ஹீட்டரை முடுக்கி விட்டவாறே அவரை வினவுகிறேன்.
**சைக்கிள் ஓட ஓட-உடம்பும் தன்பாட்டுக்கே சூடாகி விடுங்க- கூடவே குளிரும் ஓடிவிடும். சிலவேளைகளில் தொப்பி முதல் ஒவர் +ோட் முழுவதுமே பணியால் நனைந் திருக்கும். ஆணுலும் என் சைக்கிளும் விறைக்கிறதில்லை; நானும் விறைக்கிறதில்லை.
ر
 

31
ஒமானிலிருந்து-குவைத் - அபுதாபி, சவூதி அரேபியா வழியாக ஈராக் வந்ததாகச் சொன்னீர்களே?
**ஆமா சார் ! எனது அனுபவங்களை மீட்டுப் பார்க் கிறேன். அனேகமாக பகலிலே நல்ல வெயில் அடிக்கும், கூடவே பாலைவனப் பிரதேச மாச்சுங்களே அதனுல காற்று வீசும்போது கொதிக்கிற மன லேயும் அள்ளி வீசும் . பொது வாக, இரவிலேதான் நான் பயணஞ்செய்வேன். காலையில் சரியான வெயில், இரவில சரியான பனிக்குளிர், ஆணுல் குளிரைச் சமாளிக்கலாம்; கொதி மணலைத் தாங்கவே முடி யாது சார். ஈராக் வந்து சேர்ந்தனுங்களா? ரொம்ப ரொம்ப மோசடிப் பேர்வழிகளும், திருடர்களும் ஜாஸ்தி சார்! மிச்சம் எச்சரிக்கையாக இருக்கணும். இல்லாட்டி அவ்வளவு தான்.”*
'உங்களது பிரயாணங்களை எப்படி இலகுவாக்குவீர்கள்? ஒவ்வொரு நாட்டினதும் சாலைகள், முக்கியமான இடங்கள் இவற்றின் தகவல்கள் எல்லாம் எப்படிப் பெற்றுக்கொள்ளு 656fr?'"
"நான் எந்த நகருக்குப் போனுலுஞ்சரி, அங்குன்ள இந்தியத் தூதுவராலயத்தை முதலில் கண்டுபிடிப்பேன் பின்பு அவர்கள் எனக்குப்போதிய தகவல்களைத் தந்துதவு வார்கள், வழியிலை எனக்கு அறிமுகமான புதிய நண்பர் களும் எனது பெயருக்கு அங்குதான் கடிதம் போடுவார்கள். எனது மனைவி, மக்களும், ஏனைய நண்பர்களும் அங்குதான் முகவரியிடுவார்கள். அவர்களது சடிதங்களைப் பார்க்கும் பொழுது ஒரு புதிய தெம்பு பிறக்கும்.
ஈராக் தலைநகரான பக்தாத்துக்கு வந்த நான் நேரடி யாகவே துருக்கிக்குள் சென்றிருக்முடியும். அட லெபனு னிலைதான் சண்டை முடிஞ்சுடிச்சே அங்கேயும் ஒருக்காப் போய் வருவோமேன்னு தோணுச்சி. அதனல் பெய்ரூட் சென்று, பின்பு டமஸ்கஸ் வழியாகத் துருக்கி சென்றேன்.

Page 24
32
லெபனன் சண்டையின் பின்பு நிலவரங்கள் எப்படி என்று நான் தொடர்கிறேன்.
புயலுக்குப் பின் அமைதி தானுங்க. ஆனலும் வறுமை கோரமாகத் தாண்டவமாடுதுங்க. அதைவிடப்பொலிஸ் காரர் இருக்காங்களே, அவங்க இ ன் னும் கூடுதலாகத் தாண்டவமாடுவங்க. 150 கிலோ மீட்டருக்கு ஒவ்வொரு கூட்டம் நின்று, பாஸ்போர்ட் முதல் சகல உடைமைகளை யும் சோதனை செய்வாங்க. கட்டிடங்கள் எல்லாம் துவக்குச் சன்னங்களால் துளைக்கப்பட்டிருப்பதையும் எத்தனையோ அடுக்குமாடிக் கட்டிடங்கள் எல்லாம் அக்கினியில் சிதைவு பட்டிருப்பதையும், பார்த்து ஏன்தான் இங்கே வந்தேர்மோ என்று தோணுச்சு, அதைவிடப் பாதைகளும் சீராக இல்லை மேலும் சில இடங்களிலை செங்குத்தாக மேலே போக வேண்டும். சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்வதென்முல் கூட அவ்வளவு எளிதல்ல. இந்தச் சந்தர்ப்பங்களிலை நம்ப ஊரில ஊர்ந்து ஊர்ந்து செல்லும் லொறிகளை ஒரு கை யால் தாவிப் பிடிப்பவர்களது செயல்தான் எனக்குப் பய்ன் பட்டது. 堇義經稟
தேநீர் குடித்தால் நல்லது போலத் தோன்றிய எனக்கு அவருடைய சாப்பாடு எவ்வாறு என்று வினவும்படி தோன்றுகின்றது.
'நான் மரக்கறிக்காரனல்ல எதையுமே சாப்பிடுவேன். ஆனலும் அளவோடுதான். அதுதான் ஆரோக்கியத்துக்கு முக்கியம் வழிநெடுகிலும் ஏதாவது கிடைத்தால் சாப்பிடு வேன். கிடைக்காட்டா அவ்வளவுதான். மொத்தத்திலை. நான் பசியை நினைக்கிறதில்லை. அதனுலே அது எனக்கு தொல்லைகொடுப்பதுமில்லை' என்கிருர்,
'துருக்கி பொலிஸ்சாரர்கள் இருக்காணுங்கோ சார் சுத்த அயோக்கியப் பேர்வழிகள். லெபனன்காரன்க சும்மா செக்பண்ணிப்போட்டு விட்டு விடுவாங்க. ஆனல் இவங்க களவும் எடுப்பாங்க. அதோட் அடியும் போடுவாங்க
ܢܳܝܐ
 

R
33
s பாலுக்குக் காவல் பூனைங்க சார்! என்னிடம் இருந்த 260 ° டொலரை அநியாயமாக களவாடிட்டாங்க!
பல்கேரியாவில் விபத்து!
வேதனையோடு பல்கேரியா வந்த எனக்கு சோதனை காத்திருந்தது. மலைக்குன்று ஒன்றின் உச் சி யி லை யிருந்து லொறி ஒன்றினுல் மோதப்பட்டு ஆதாள பாதாளத்துக்கு தூக்கி எறியப்பட்டேன். அதனலே இடுப்பு எலும்பும் வேறு எலும்புகளும் முறிவு கண்டன.
இந்த நிலையில் என்னையே ஒருகணம் யோசிக்கின்றேன் பாடசாலை செல்லும் நாட்களில் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து சிறு உரசல் ஏற்பட்டாற்கூட ஒரு கிழமை பாட
சாலைக்குப் போவதில்லை. இப்படியான ஒரு சந்தர்ப்பம்
என்ருல் "ஐயோ ஆளைவிட்டால் காணும்' என்று என் பயணத்தை விட்டிருப்பேன்.
ஆனல் பார்த்தசாரதி என்ன செய்தார் தெரியும்ா? அவரே சொல்கிருர். s
பல்கேரிய சைக்கிள் வீரர்கள்.
**இது நடந்தது ஒரு இரவு எட்டுமணிபோல. அடுத்த நாட் காலையில் பத்திரிகைகள் எல்லாமே எனது உலகவலத்
தைப்பற்றிய செய்திகளை பிரசுரித்ததுடன் எனது விபத்தைப் பற்றியும் எழுதி கூடிய விரைவில் சுகமடையவும் வேண்டி
யிருந்தன. களைத்துப்போன உடம்புக்கு மீண்டும் புத்துயிர்
வந்தது. ஆஸ்பத்திரியில் மறுநாள் மாலை, பல்கேரியாவின் 172 சைக்கிள் வீரர்கள் ஆளுக்கு ஒரு சிவத்த நிறப் பூவும், சிவத்தநிறமுறையுடைய அப்பிளும் கொண்டுவந்து எனக்கு ஆசி வழங்கினுங்க. சுமார் ஒருமாதம் ஆஸ்பத்திரியால், எனது பயணம் தடைப்பட்டது. மீண்டும் மறுபிறவி எடுத்த நான் எனது சைக்கிளைத் தட்டி நிமிர்த்தி பெல்கிறேட் சென்றடைத்தேன். அங்கிருந்து நெடுஞ்சாலைகளால் ரோமைநோக்கி விரைந்தேன். சரித்திரத்திற்கு சான்று கூறும்

Page 25
அற்புதமான நகரம். நேசமனப்பான்மைக்குச் சிறந்த மக்கள். பின்பு ஐ நாடுகள் ஸ்தாபனத்துக்குச் செல்லுமுகமாக ஜெனிவா பயணமானேன் "ஜனிவா விலிருந்து ஜேர்மனி - பெல்ஜியம் - ஒல்லாந்து - டாரிஸ் ஈற்றில் லண்டன் வந்து சேர்ந்தேன் சார். வேகமாக கூறினவர் பெருமூச்சுடன் நிற் பாட்டவேண்டுமே? - ஹும்... அதுதான் இல்லை. முகத்தில் ஒரு புன்முறுவல் செயலில் ஒரு சாதனை புரிந்த கம்பீரம்.
ஆங்கிலமே பேசாத ஐரோப்பிய நாடுகளில் உங்கள் அனுபவம் எப்படியோ?
உண்மைதான் மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஆங்கிலம் சரளமாக உபயோகத்தில் இல்லை. எனவே அவர்களுடன் தமிழில் பேசினாலும் சரி, ஹிந்தியில் பேசினாலும் சரி பயன் ஒன்றேதான் . யாரோ அந்நியன் உதவி கோருகிறான் என்று கருதி தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள். அனால் ஆங்கிலத்திலேயே அவர்களுடன் பேச முதலில் முற் பட்டோமேயானால், அவர்களுக்குப் பிடிக்கவே பிடியாது. தெரியாத மாதிரிப் போய்விடுவாங்க. அவங்க மனோபவம் அப்படி. ஆனாலும் அன்றாடம் அந்த அந்த நாடுகளில் எனது படத்துடன் வெளியான பத்திரிகைகளின் 'கட்டிங்' களை அவர் களுக்குக் காட்டுவேன். நித்திரை கொள்ளவேண்டுமென்று சமிக்கை செய்வேன். உணவு என்றாலும் அல்வாறேதான். எல்லோருமே முடிந்தளவு உதவி செய்வாங்க. சில இடங் களில் பணம் கூட சேகரித்துக்கொடுத்து என்னை உற்சாகப் படுத்தினாங்க.
ஆனாலும் சில ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் சின்னச்சாதனை செய்தால் கூட பெரிசுபடுத்தி அமர்க்களப்படுத்துவாங்க. அயல் நாட்டான் பாரிய சாதனை செய்தால்கூட அக்கறைப்படுவதேயில்லை. உதாரணமாக நான் பாரில் சேர்ந்த அதேதினம் மூன்று பேர் காரில் இந்தி யாவுக்குப் யயணம் ஆரம்பிச்சாங்க. எனது சாதனையும், அவர்களது சாதனையும் ஒரே மாதிரியாகவே அவர் களுக்குப் பட்டது.

35
நம்ப நாட்டிலை என்றாலுங்க நிலைமை அப்படியில்லை. சின்னச்சாதனை என்றால் கூட பத்திரிகையில் ஜமாய்ந்து விடுவாங்க.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சைக்கிளுகளுக்கென் றே தனியான ஒரு சாலை அமைத்துள்ளார்கள். ஒல்லாந்தி லெல்லாம் அப்படித்தான். 89வீத மானவர்கள் சைக்கிளில் தான் பயணம் செய்வார்கள்.
பேட்டியின் இடையில் புதந்த நண்பரொருவர் சிகரெட் பாக்கெட்டை நீட்டுகிறார்.
'என்ன அண்ணாச்சி - எனது பயணத்தை இடையிலேயே நிறுத்திடச் சொல்லிடி றிங்களா?.
பல்கேரியாவிலை நான் பட்ட விபத்திலும் பார்க்க ஆபத் தானது புகைப்பழக்கம். நான் மதுவையும் தொடுவதில்லை, புகையும் பிடிப்பதில்லை. ஸ்போட்சிலே முன்னுக்கு வரவேண்டு மென்று நம்புகின்றவனுக்கு இவை தான் சத்துராதிகள். லண்டனில் இலங்கை மாணவர்
லண்டனுக்கு வந்தீர்களே! உங்களது குறுகிய கால் அனுபவங்கள்?
லண்டனில் சார்! வெள்ளைக்காரங்களிலும் பாக்க இலங் கை மாணவர்கள் கூடுதலாக இருக்கிறாங்கபோலுள்ளது. சார்! ஆனா ஒன்று ! மிக நாகரீகமாக இங்கிலீசைக் கையாளு வாங்க. பாரிசுக்கு வந்திருந்தேனா சார்! பத்து தமிழர்கள் ஒன்றுகூடினால் போதும்!! உடனே ஒருசங்கம் நிறுவிடுவாங்க. ஆனா லண்டனிலை அதிலும் மேலாக ஐந்து பேர் சேர்ந் தால்க்காணும்.புதுச்சங்கம் உதயமாகிவிடும் நிதி திரட்டு வாங்க கணக்குக் கேட்க எம் ஜி. ஆர். தான் வரனுங்க.
எம். ஜி. ஆர். பற்றிக் குறிப்பிட்டிங்களே தமிழகத்தில் உங்களுக்கு வரவேற்பளிக்க ஏதாவது ஏற்பாடுகள் ...?

Page 26
36
எனக்குக் கடிதம் ஒன்றைக் காட்டுகிறர்.
தாயகம் திரும்பியதும் மிகவும் பிரமாண்டமான வர வேற்பளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார் உலகம் சுற்றிய வாலிபன் எம். ஜி. ஆர் ஆன நான் அவர் கட்சிக்காரனில் லேங்க. எனக்கு அரசியல் பேதமே கிடையாது.
நீங்கள் அடுத்து எங்கே போக உத்தேசித்துள்ளிங்க?
நியூயோர்க் - வாஷிங்டன்-மெக்ஷிக்கோ-கலிபோனியாடோக்கியோ - ஹொங்கொங் - வியட்னும் - சிங்கப்பூர்- மலே ஸியா - தாய்லாந்து - பர்மா மீண்டும் இந்தியா! இதுதான் எனது பிரயாண ஏற்பாடு. சிலவேளை ஆங்காங்கே விஸ்
தரிப்பேன். அல்லது சில இடங்களை ரத்துச்செய்தாலும்
செய்வேன்.
எவ்வளவு அனுபவங்கள். எத்தனைவிதமான மக்கள். எத்தனை எத்தனை மொழிகள். மலைகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், பாலைவனங்கள். மாறுபட்ட கால
நிலேகள், வேறுபட்ட சூழ்நிலைகள் எல்லாமே அவருக்குத்தான் கிறது, சொந்தமோ?
வீதியில் நடந்துவரும் எனக்கு லண்டனின் குளிர் தோன்றவில்லை; அவருடைய சாதனைதான் நெஞ்சை நிறைக் அதனலேயே உடம்பும் சூடேறுகிறதோ?
சாதனைச் செம்மல்தான்!! உலகம்சுற்றும் வாலிபனே டொரு பயணம் சென்றவன் நான் அந்தப் பாடல் எனக் கோ அடிமனதில் இலேசாகக்கேட்கின்றது. எனக்காகத்தான அய்பாடலும் !!
ختم
 
 

தமிழ் நாட்டுக்கு வந்ததில்லை; தமிழ் கலாச்சாரத்தை நேரில் பார்த்ததில்லை; ஆனால் ...
தமிழ் படித்துத் தமிழ்ப் பெண்ணாக வாழ முயலும் ஜெர்மன் பெண் மணி
தமிழ் மொழி எவ்வளவு இனிமையானது! தத்தித் தடக்கிப் பேசும் மழலையின் மொழியில் ஓர் இனிமை!!
யாமறிந்த மொழிகளிலே இனிதாவது தமிழ் என்று கூறிய பாரதியாரின் வாக்கை நண்பர் ஒருவர் மூலம் அறிந் தார் கிழக்கு ஜெர்மனியில் வாழும் திருமதி மாரியா ஹெர்மன்! அப்படியென்ன இனிமை என்ற கேள்வியோடு ஆர்வம் மேலோங்க, தமிழ் மீது தீவிர கவனம் செலுத்தி னார் அவர்! சொல்லிக் கொடுக்க எவருமேயில்லை. வாசிக் கக்கூட ஒரு தமிழ்ப் புத்தகமும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது மனம் தளர்ச்சியடையவில்லை: தளம்பவில்லை. விளம்பரம்.
கிழக்கு ஜெர்மனி விதித்திருக்கும் கட்டுப்பாட்டின் படி அவரால் வெளிநாடுகளுக்குப் போக முடியவில்லை. எனினும்

Page 27
38
வெளி நாடுகளில் உள்ள பத்திரிகைகளில் தனது தணியாத ஆர்வம் பற்றி விளம்பரம் செய்தார். உதவி மனப்பான்மை தழைத்தோங்கியிருக்கும் தமிழர்கள் பலர் அவருக்கு ஊக் கம் அளித்தனர். பலனாக ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள் அவரை நாடி விரைந்தன. திருக்குறள் கிழக்கு ஜெர்மன் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் அதையே முதலில் படிக்க முற்பட்டார். அவருக்குக்கிடைத்த தமிழ் அரிசுவட்டின்மீது திரும்பத் திரும்ப எழுதினார். அவரது ஆர்வம் குன்றவில்லை, அறிவு தேயவில்லை. திருக்குறளின் மீது ஆர்வம்!
ஆனா ஆவன்னா எழு திய கைகள் மெய் எழுத்துக்களு டனும் விளையாடியது. கசடதபற என்றால் வல்லினம் என் பது எம்மவர்க்கு மறந்து போனாலும் அவருக்கு மறக்க முடியவில்லை. அரிச்சுவட்டையே ஒழுங்காகப் படிக்காத பிள்ளை திருக்குறளை அழகுப்பொருளாகவே எ ண் ணும். ஆனால் மரியா ஹெர்மனுக்கு அது ஒரு பொக்கிஷமாகப் பட்டது. அள்ள அள்ளக்குறையாத சுவையான பண்டமாக நினைக்க முடிந்தது.
தமிழ் மொழியில் தற்பொழுது நன்கு தனித்துவம் பெற்றவர்! வரைவிலேயே புலமைத்துவம் பெறமாட்டாரா?
இந்த அதிசயப் பெண்மணியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்!
பகட்டா பிள்ளையார் சுழி
- - - - பாகம் - அட அட. எடுத்த எடுப்பிலேயே அழகாக ' வணக்கம் ஐயா : என்ற பொழுது என்னால் என்னையே ஒரு கணம் நம்ப முடியவில்லை. 'குட்மோனிங்' என்று முகமன் கூறும் தமி ழர்களுக்கு மாரியா உண்மையிலே ஒரு சாட்டை அடி கொடுத்தார். "
தடுமாறிய என்னை அவரே இயக்குகின்றார்! ''தமிழ் மொழியின் வெற்றிக்கு பிள்ளையாரும் ஒரு முலகாரணமா வார். வினையெல்லாம் தீர்க்கும் விநாயகப் பெருமானை அவர்கள் வழிபாடு செய்வதால் வெற்றி பெற்றோங்குகிறார் கள். நான் கூட எப்ப எப்ப எதை எழுதினாலும் பிள்ளை

ܛܪ
39
யார் சுழியுடன் தொடங்கத் தவறுவதில்லை. எனது வெற் நிக்கும் அதுகூட ஒரு சாரணமே!"
அவரது பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. எவ்வளவு கூர்மையாக எமது மொழியை, எமது கலாச் சாரத்தை கவனித்து வருகின்ருர் மாரியா.
அவரது பதில்கள் மிக மெதுவாகவே வ ரு கி ன் றன பேசுமுன் யோசி என்பது கூட அவர் வாசித்ததில் ஒன்ரு யிருக்குமோ! அவரது உரையாடல் சுவாரஸ்யம் ததும்புவது தமிழ் மகாச்சையாக இருந்தது. முற்றிலும் தமிழுக்குப் புதியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. தமிழ்க் கலாச்சாரம்.
மாரியா உங்களுக்கு எமது கலாச்சாரம் பிடிக்குமா என்றேன்!
நிச்சயமாக என்னை நேரில் சந்திக்க முடிந்தால் அது நிரூபணமாகும். தமிழ்ப் பெண்களைப்போல சேலை கட்டுவது எனக்கு நன்கு பிடிக்கும். இப்பகூட சேலைதான் அணிந்துள் ளேன். ஒருமுறை கட்டிமுடித்தால் இலேசில் அவிழ்ப்பதே யில்லை. வேறுசேலை இல்லை என நீங்கள் நினைக்க வேண்டாம் ஆனல் அதைச் சுற்றிச்சுற்றிக் கட்டுவது இலகுவான வேலை யல்ல. எனது வீட்டின் அலங்காரம் கூட கூடுமானவரை தமிழ் உலக வீட்டின் அலங்காரங்களைப் போன்றதாகவே அமையும் வகையில் செய்துள்ளேன்.
நீங்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்றிருக்க முடியாதே. எவ்விதம் அவர்களது அலங்கார முறைகளை பின்பற்ற முடிகின்றது?
"நான் அறிந்த வரையில் புத்தகங்களும் நாவல்களும் தான் உங்கள் இனத்தை இலகுவாகப் புரிந்து கொள்ள ஒத்தாசை அளிக்கின்றன. நான் வாசிக்கும் கதைகளில் வர வேற்பறையை வர்ணிக்கும் போது என்னவிதமான அலங் காரம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஓரளவுக்குப் புரிந்து பெர்லின் நகரக்கடைகளில் அவற்றுக்காகப் படையெடுப் பேன்.

Page 28
40
மேலைநாடுகளில் எமது நடன நிகழ்ச்சிகள், படரதிங்ப்ை கள் சர்வசாதாரணமாகப் பெருகி வருகின்றனவே உங்க ளால் பார்க்க முடிந்ததா?
கதகளிநாட்டியம் மாத்திரம் பார்த்தேன் அதிகமான தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே நீங்கள் சொன் னவற்றைப்பார்கக முடியும் ஆணுல் பெர்லின் பகுதியில் எனக்குத் தெரிந்த ஒரு தமிழனுமேயில்லை. அதனல் என் ணுல் நடனங்களையோ,திரைப்படங்களையோ பார்க்கவும் முடி வதில்லை: O
தமிழில் தத்துவங்கள். சரித்திரம், சமயம், உடை யலங்காரம் கலாச்சாரம், சங்கீதம் போன்றனவற்றை நான் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொலைபேசித் தொடர்புனர் எனக்குத் தந்தநேரம் கால வதியாகி விட்டதாகக் கூறவும் மேலும் நீடிக்கின்றேன். தமிழ்த் தெரியாதவர் தமிழப்பேசும் பொழுது அதில்தான் எவ்வளவு இனிமை! அதில்தான் எவ்வளவு சுவாரஸ்யம்! தன்னிடம் சில தமிழ்ப்பாடல்கள் இருப்பதிாகக் கூறிய மாரியா நாணத்தாலே கால்கள் பின்னப் பின்னர் என்ற பாடலைப்பாடி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறும் கூறு கின்ருர், முடிந்தளவிற்கு செய்து முடிக்கின்றேன்.
வேற்று மொழிகள்.
உங்களுக்குத் தெரிந்த ஏனைய மொழிகள் எவை?
லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம், பிரஞ்சு, ஆங்கிலம் அத்துடன் கூடவே கொஞ்சம் கொஞ்சம் பாளியும், ரஷ் யனும் தெரியும் என்கின்ருர்,
தமிழில் நீங்கள் வாசித்த புத்தகங்கள் ஏதாவது? ஆமாம்! திருக்குறள் அப்பர். சுந்தரர் சம்பந்தர், வாசித் தேன் எனக்கூறி முடிக்கின்றர். சற்று நேரம் மெளனம் நிலவவே என்னைப் பயம் ஆட்கொள்கின்றது. அவர் திருக்
ܪܵ
 

41
குறளைப் பற்றியோ அப்பரைப்பற்றியோ என்னிடம் கேட் டால்..?
இதற்கு முன்னதாகவே நான் முந்திக் கொள்கின்றேன். தமிழ் மொழியில் ஆழமானவற்றைக்கூட உங்களால் சீர ணிக்க முடிகின்றதா?
மேலும் மெளனம் தொடர்கின்றது. தொலைபேசியில் தான் ஏதோ பிழை என நினைத்த எனக்கு தாமதமாகவே அவர் கூறுகின்ருர். நீங்கள் கேட்டதே எனக்கு விளங்க வில்லை என்று எனது கேள்விக்கான பதிலும் இதிலேயே அடங்கியதாகக்கருதிய நான் எவ்வளவு வரை படித்ததாக வினவினேன்.
நான் IMDOLOGY (?!) யூனிவசிட்டிவரை படித்துள் ளேன். இது பழைய கலாச்சாரங்களைப்பற்றியும் சங்கீதத் தைப்பற்றியும் கொண்டதாகும்.
கதகளி பார்த்ததாகக் கூறினீர்களே? இலகுவில் விளங் கியதா?
அருகில் இருந்த ஒருவர் எனக்கு விளங்கப்படுத்திய தால் எனக்குச் சிரமமிருக்கவில்லை மாருக நன்ருக ரஸிக்க முடிந்தது.
உங்களுக்கு கல்யாணமாகி விட்டதா?
கல்யாணமானது மட்டுமல்லாமல் விவாகரத்தும் செய்து விட்டேன். -
உங்களுக்குப் பிள்ளைகள்?
தற்பொழுது நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வய துடைய ஆஸ்திரிட் தான் எனது ஒரே மகள்.
உங்களது வயது?
35 வயதாகிறது.

Page 29
42.
எமது நடிகைகள் என்ருல் இப்படியான ஒரு கேள் விக்கு 18 வயதைத் தாண்டியிருக்க மாட்டார்களே என்று யோசித்துக் கொண்டே பெற்றேரைப்பற்றியும் அவர்களது உழைப்பற்றியும் கோருகின்றேன்.
வைமர் என்ற ஊரில் ஓய்வூதியம் பெற்று ஆறுதலாக வாழ்கின்ருர்கள் எனது பெற்றேர்கள் என்கின்றர்.
கனவுகளின் சின்னம்,
தமிழில் நன்கு பேசுவதற்கும் வாசிப்பதற்கும் முடி கின்றதா?
கொஞ்சம் கொஞ்சம் பேசமுடிகின்றது. -இது அவர் சொல்லாமலே எனக்குப் புரிகின்றது. வாசிக்க ஓரளவிற்கு முடிகின்றது என்கிருர், உங்களது வாழ்வின் ஆசைக்கனவு என்று ஏதாவது..?
இந்தியாவும், அதன்மக்களும் வாழ்வு முறையும் தமி மும், பாடல்களும் எனது கனவுகளின் சின்னமாகும். கூடவே
முறையாக பிள்ளையார் வழிபாடுபற்றியும் அறியத்துடிப்பது
எனது சிந்தையின் பிரதிபலிப்பாகும்
வெளிநாட்டுத் தமிழர்கள் உங்களுக்கு எந்தவிதத்தில் உதவமுடியும்?
தமிழை ஊக்குவிக்கும் சிறிய செய்திப் பத்திரிகை களையோ, புத்தகங்களையோ, நாவல்களையோ கவிதை களையோ, அனுப்பிவைப்பின் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டவளாவேன். எனது அறிவுச்சுடரைத் தூண்டிவிடும் பெரியவர்களாவார்கள் அவர்கள். என்றவர் முகவரியையும் சொல்லுகின்ருர்
திருமதி. மாரிாாஹெர்மன்
1 O55. EERLINWINS
STRASSE-51,
G, D. R.
Y

43
நீங்கள் வெளிநாடுகளுக்குப் போனதுண்டா?
தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு செல்ல யோசித்தாலும் எனது அரசின் தடையும் இந்நாட்டுச் சட்டதிட்டங்களும் கம்யூனிஸ நாடுகள் தவிர்ந்த எவற்றுக்குமே என்னைச் செல்ல விடாது தடுத்து நிறுத்தின.
தமிழர்கள் என்று எவர் ஜெர்மனிக்கு வந்தாலும் இன்முகம்காட்டி உபசரிக்கத் தவறுவதில்லையாம் மாரியா.
தமிழ் மொழிப் புத்தகங்களைத்தேடி பலமுறை கிழக்கு ஜெர்மனியிலுள்ள இந்தியத் தூதுவராலயத்துக்குப் 60 எடுத்ததாக கூறும் மாரியா அங்குள்ள வங்காள, இந்திப் புத்தகங்கள் பெரிதும் ஏமாற்றத்தை அளித்து வந்தனவாம்" ஆனல் அவர்களுடன் போராடியதன் விளைவாக தமிழக அரசின் ‘தமிழரசு" ஏடு தொடர்ந்து கிடைத்து வருகிற தாம்.
- அவர் ஒரு அதிசயப் பிறவி என்கின்றேன் நான்.
-எனது தொடர்பைக் கவனித்த நண்பரொருவர் அவர் ஏன் ஒரு கம்யூனிஸ உளவாளியாக இருக்க முடியாது என்கிருர்?-எது சரி?
ஈற்றில் விடைபெற முயற்சித்து வணக்கம் மாரியா என்கிறேன். வணக்கம் ஐயா எனத் தூயதமிழில் கூறிய அவர், துர்க்கா பூஜாவிற்கு எனது வாழ்த்துக்கள் என்கிருர்,
தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்விட்டது. நான் தொலைபேசியை வைக்கவில்லை, நவராத்திரி என்பதுகூட மறந்துபோச்சு. ஆனல் அவர் எதையுமே மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை.
எனது நண்பர் ஒகுவர் எதிர்படுகின்றர். வணக்கம் என்கின்றேன். குட்ஈ வினிங் தான் பதிலளிக்கின்றது.

Page 30
கதாசிரியர் அ. செ. மு. வின் அம்மா சொல்கிறர். அவனுக்கு நான்தான்; எனக்கு அவன்தான்! வேறு யார் எங்களுக்கு?
*சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, ஆகிய பத்திரி கைகளின் ஆசிரியர்குழுவில் கடமையாற்றியும் *எரிமலை’ எனும் வார இதழ் நடாத்தியும் புகழ் பெற்றவர். யாழ்ப்பாணக் குடாவின் கி ரா மிய வாழ்க்கை முறையை தத்ரூபமாக தனித்துவமான பாணியில் முதலில் எழுதியவர் அ. செ. மு. தற் போது நொந்த நிலையில் இருக்கும் இவரின் இலக் கியப் படைப்புக்கள் பற்றிப் பெருமையாகவும் உருக்கமாகவும் கூறுகிருர் அவரின் அன்னை.
LTழ்ப்பாணத்து கிராமிய வாழ்க்கை முறையைத் தத்ரூபமாக அதன் மண்வாசனை கமழ தனித்துவ நடையில் முதலில் கையாண்டவர் அளவெட்டியில் வசிக்கும் பழம் பெரும் எழுத்தாளர் அ. செ. முருகானந்தம் அவர்கள்.
அவரை சந்திக்கச் சென்றேன், தட்டிப்படலை திறக் கப்படும் சத்தம் கேட்கிறது. திறந்துகொண்டே கதவுக்கு அப்பால் இருட்டில் தலையை நீட்டி எப்டிப்பார்க்கிருர் முருகானந்தம்,
“ uዘrñ ?”
"உங்கள் அம்மாவைக்காணவேணும் ஆச்சரியத்துடன் அம்மாவையோ என்றவர் குரலை உயர்த்தி 'அம்மா' என்ற வாறே உள்ளே செல்கிருர்,
خ.
སྐོ་

45
சற்றுக்கழித்துத் தாயார் வெளியில் வந்தார், வணக்க மாய் சிரித்து விநயமாய் ஆரம்பித்தேன்.
*உங்கள் மகனைப்பற்றிச் சுவையான தகவல் ஏதாவது சேகரிக்கலாமென்று.
நல்லது, உள்ளே வாருங்க, போதிய காற்றேட்ட மும் வெளிச்சமுமற்ற சிறிய கொட்டில். உள்ளே கட்டி லொன்றும், இரு கதிரைகளும் அருகே தாம்பூலத்தட்டம் அதற்கு அப்பால் பழைய பேப்பர் கட்டுக்கள். துப்பல் படிகம்.
தாயாருக்கு வயது 71 என்று அ. செ. மு. கூறுகின்றர் நம்பவே முடியவில்ல்.
சோர்வையும் தளர்ச்சியையும் முதுமை அவருக்கு அளிக்கவில்லை. மாரு க ஒளிபடைத்த கண்ணுடன் உறுதி கொண்ட நெஞ்சுடன் தெளிவுபெற்ற மகிமையும் கவி படைத்தமொழியையும் உடையவராகவே அந்த அம்மை யார் தோன்றுகின்ருர், பாரதியார் இவரைக் கருத்தில் வைத்துத்தான் தீர்க்கதரிசனத்துடன் அப்பாடலைப் பா ஞரோ என்ற என் சந்தேகம் தீரமுன்.
"ஆமா சுவையான தகவல்களா..? அவனது வாழ்வே ஒரு காவியம்தானே" என்கிருர்,
கேளுங்கள்!
-அவரே தொடர்கிருர், கேள்வி: கதைகள் . நாவல்கள் எல்லாம் இயற்கையாகவே
இவருக்கு பரிச்சயமானவையா?
பதில் ஒமெண.மிகச் சிறிய வயதிலையே அவன் இத் துறையிலை இறங்கி விட்டான். விளையும் பயிரை முளை யிலேயே தெரிவது போல, இவன் பின்னலை நல்லாய் வருவான் எண்டு எனக்கு அப்பவே தெரியும்.
கே. இவருடைய சிறுகதைத்துறையிலே உங்களால் மறக்க
முடியாத அனுபவமெண்டு.

Page 31
46
ப; மிக ஆரம்ப காலத்திலேயே ... மூணாம் வகுப்புப்படித்
துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன்... மிகவும் தத்தருபமாக ஒரு கதை எழுதினவன். எனக்கு இப்ப
வும் ஞாபகம் கிடக்கு. கே: என்ன எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். ப: நாங்கள் அப்ப மாவிட்டபுரத்திலை இருந்த நாங்கள் ...
எங்களுடைய வீட்டிற்குப் பக்கத்திலை பெரிய பனந் தோப்பு .. அப்ப அவன் அதையே ஒரு காடாகக் கரு தினான். அதை வைத்தே ஒரு கதை புனைந்தான்.
கே: இக்கதை பிரசுரமானதா? ப; இல்லைமேனை . இவன் என்னடா நெடுகக் கிறுக்குகி
றான் எண்டு சொல்லி ஒரு நாள் இவளைப் பள்ளிக் கூடம் அனுப்பிவிட்டு அதைப்பார்தேன். அப்பதான் இவன்ரை கெட்டித்தனம் எனக்கு விளங்கியது. கே: அச்சிறுவயதிலேயே ஏன் இந்த ஆர்வம் அவருக்கு
ஏற்பட்டது? பா அப்ப புண்ணியமூர்த்தி வாத்தியாரென்று ஒருத்தர் எமது வீட்டுக்கு வந்து நிறையக்கதை அளப்பார், அவர் ஒரு பெரிய நாவல் எழுத்தாளன். அவரைப் பற்றிப் புகழ்ந்து சொல்லச் சொல்ல இவனுக்கும் அந்த ஆசை ஏற்பட்டிருக்குது. புகழ் வேண்டவேண்டும் பேர் அடி பட வேண்டும் என்று அவன் அப்பவே நினைச்சுத்தான்
கதை எழுத முற்பட்டான். கே: சங்கீதம் எல்லாம் இவருக்குச் சொல்லிக்கொடுத்த நீங்
களோ? ப : சின்னனிலை இசையும் ஓவியமும் இவனுக்கு பக்கபல
மாக இருந்தன. நான் பாடக்கேட்டுக் கொண்டு கிடப் பான் பக்கத்திலை தேவாரம் படி யெணை ஆச்சியெண்டு புராணம், இதிகாசங்களையும் கூட மிகவும் ஆவலோடு

கே:
கே:
47
நானும் எனது தாயாரும் படிக்க குழந்தை வயதிலேயே விரும்பி ரஸிப்பான்.
உங்களுக்கு இவர் ஒராள்தானுே?
ஒமெண. ஒன்றும் கன்றுமாக இவர் ஒன்றே ஒன்று தான். சின்னனிலை அவன் நல்லா வந்தான். நல்ல படிச்சான். எனக்கு வலு சந்தோஷம். ஆனல் இடையிலை தானெணை இந்த பொல்லாத தொய்வு அவனைச் சூத்தை குத்திப்போட்டுது. இவரது நோய்க்கு மருந்து செய்து மாற்றவில்லையோ? செய்யாத, மருந்தில்லை, காட்டாத வைத்தியரில்லை அவனுக்கொண்டெண்டால் எனக்கு வந்தமாதிரி எனக்கு ஒண்டெண்டால் அவனுக்கு வந்தமாதிரி இப்யவும்தான் எப்பவும்தான். அவனுக்கு நான். எனக்கு அவன்.
இவரது முதலாவது படைப்பு என்ன?
என்னடாமேன. அயத்துப்போனேன் ஆ. ஆ கண்டிக் கடைசி அரசன் இதுவெணை இந்தியாவிலை ஆனந்த போதினியாட்கள் பிரசுரித்தார்கள்.
இவரி கடமையாற்றிய பத்திரிகைகள் என்ன?
அவன் நல்ல கெட்டிக்காரன் முதலிலை பொன்னையா வாத்தியாரிடம் ஈழகேசரியிலை, பேந்து சுதந்திரனிலை சேர்ந்தான். அப்ப இவனுேடை நானும் கொழும்புபோய் அங்கு சீவிச்சம். வீரகேசரியிலும் வேலை பார்த்தான், மற்றது உனக்கு தெரியாதோமோனை ஈழநாட்டிலும் கடமைசெய்தவன்.
இவராகவே பத்திரிகைகள் நடத்தவில்லையா?
ஏனில்லை முதலிலைமறுமலர்ச்சி என்றொன்றையும் பேந்து எரிமலையென்றொன்றையும் நடத்தினவன்
கே இவரெழுதிய படைப்புக்களிலே நூல்வடிவம் பெற்
றவை எவையென!

Page 32
48
பா
சட்டென்று வரமாட்டேனங்குது.. என்ன பேர் ... பு.. ஓம் புகையில் தெரிந்த முகம் தான். 'மனிதமாடு' என்ற கதையை சென்னையிலை பிரசுரம் செய்தாங்கள். அது
கதைக் கோவை என்ற புத்தகத்திலை இடம் பெற்றது. கே? இவருக்கு பிடித்த கதை எது? ப: என்ன ... தம்பி... அது... மாணிக்கப் பொன்மணியாள்.
அது ஈழநாட்டிலே தானே வந்தது. கே: அவரது சிறுகதைகளை ஞாபகப்படுத்திச் சொல்லுங்கோ
பார்ப்பம்.
ஏண்டாமேனை பகிடி விடுகிறாய் என்னோட. அவன் எழுதி யவை நூத்துக்கு மேலையெல்லோ என்னண்டு சொல்லி
முடிக்கிறது நான் களைச்சுப்போவன். ... எண்டாலும் சிலவற்றை சொல்லுறன் வடிவா கேள்... 'ஆ... மாடு சிரித்தது' 'காப்பிலி' 'காமனும் ராமனும் ' 'பாடுபட்டுத் தேடி' 'பழையதும் புதியதும்' 'வியபாரியார்' விளம்பர வாழ்வு "கிழவி' அடிமைப் பரிசு, 'வெறுப்பும் வெற்றியும்' 'ஒன்றில் முடியுமா?'' 'அம்பிகை என்ன துயில்' ,பரம் பரைபளி' 'எச்சில் இலை வாழ்க்கை' ஏழையழுதகண்ணீர் 'விடியுமா?' ... நீண்ட பெருமூச்சுடன் நிற்பாட்டுகின்றார். கே: இவை ஏன் நூலுருப்பெறவில்லை? ப! அது தான் அவனது துர் திஷ்டம் தம்பி. நோயும், வசதிக்
குறைவும் அவற்றை முற்றாக தடுத்துவிட்ட தடா கே! இன்று அவர் இலக்கியத்தில் ஏன் கவனம் செலுத்த
வில்லை.
ப:
உண்மையான நிலையை உனக்குச் சொன்னால் நிச்சயம் நீ கண்ணீர் வடிப்பா...
வாழ்வையே எழுத்துத்துறைக்கு அர்ப்பணம் செய்து, ஈழத்து இலக்கியத்துறையிலே தமக்கென சிற ப் பா ன

49
இடம்வகித்த இவரது படைப்புகள் நூல்வடிவம் பெறும் நாள் எப்போது? எதிர்கால இலக்கிய உலகு அரியதொரு எழுத்தாளன து பொக்கிஷப் படைப்புகளை நூல்வடிவில் கண்டுகளிக்கும் நாள் விரைவில் வரும்.
- வீதியால் நடந்து வந்த எனது நெஞ்சில் அலைகள் மோதித்சிதறுகின்றன. ... 'மாடு சிரித்தது, 'காப்பிலி' 'எச்சில் இலை வாழ்க்கை' ' கிழவி' 'காமனும் இராமனும்'.. - அவரது சிறுகதைகள் எங்கோ எக்காளமிடுக்கின்றன!

Page 33
இயந்திர இயக்குநராக ஓர் இலங்கை டாக்டர்
இலங்கைப்பல் ட்ாக்டர் ஒருவர் லண்டனில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இயந்திர இயக்கு நராக வேலை பார்க்கிருர், கை நிறையச்சம்பாதித் துக்கொண்டு தாயகம் திரும்ப வேண்டும் இங்கு ஏழைகளுக்குப் பணிபுரிய வேண்டும். என்பது அவர் இலட்சியம். டாக்டர் கே. திருராஜா அளித் துள்ள சுவையான பேட்டி இது.
பரபரப்பான லண்டன் மாநகருக்கு அணித்தாகவுள் ளது நியூமோல்டன் என்ற நகரம், அங்கு ஒரு பிரசித்தி பெற்ற பிளாஸ்டிக் தொழிற்சாலை. அதனுள் காலடி எடுத்து வைக்கின்றேன். எத்தனை எத்தனையோ பாரிய இயந்திரங் கள். காதைத்துளைக்கும் அவற்றின்ஒலி கூடவே உடலைத் தகிரித்து விடக்கூடிய வெக்கை.
அங்கே ஒடி ஒடி ஆட்டோமாட்டிக் இயந்திரங்களைக்
கவனிக்கிருர் ஒருவர். நாற்பதுவயதிருக்கும். குள்ளமு மில்லே, உயரமுமில்லை, தலையை வழுக்கை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றது. முகத்தில் அனுபவத்தின் செறிவு நன்கு தெரிகின்றது. தூரத்தில் நின்றே அவரை அவதானிக்கிறேன். யாருடனுே ஏதோ கதைத்துக்கொண்டு நிற்கின்ருர் சமபா ஷனையின் சுவாரஸ்யத்தின் தோரணையில் தோளை உலுப்பு Saitori. -
அவரை ஒரு டாக்டர் என்று என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறர்கள். இலங்கையில் பல்வைத்தியத்துறையில் பல
Α
è
 

51
வருட அனுபவம் பெற்றதாகக் கூறுகின்றார். முல்லை த்தீவு மட்டக்களப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக் கின்றார் டாக்டர் கே. திருரா ஜா, 11, 11 5: , ,
(அல் அவரைப் பேட்டி காண்பதற்கு முன்பாக அவரைப்பற்றி மற்றவர்கள் சொல்லி வைத்தது எனது மனத்திரையில் விரைவாக ஓடிமறைகின்றது!
' 'வெட்டும் பற்களா, வேட்டைப் பற்களா, கடவாய்ப் பற்களா.... சூத்தையாகி விட்டாலோ வேறு என்னமாதிரி யான வலியோ, அன்புக்குப் பாத்திரமான அந்த டாக்டரிடம் போங்கள். பேச்சு வாக்கிலே உங்களுக்கு நிவாரணம் அளிப் பதில் சமர்த்தர். பரவலாக பல மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று அதன்மூலம் பிரபலம் அடைந்தவர்'' அந்த டாக்டர் என்கிறார் ஒருவர்.
- 1 - 'பண்பிலே சிகரம். தனது - கருத்தைத்தான் திணிப் 2 பார். ஆனால் என்றுமே ஆத்திரப்பட்டது கிடையாது. கதைப் பவர்கள் தமது கருத்துக்கு எதிர்மாறானவராக இருந்தாலும் கூட... அவர்களது போக்கிலேயே கதையை வளரவிட்டு தமது கருத்துக்களை மெல்ல மெல்லமாகத் திணித்துத் தமது பக்கமே அவர்களை நாடவைப்பதில் அந்த டாக்டர் மகா கெட்டிக்காரர் என்கிறார் இன்னுமொருத்தர். கே.
1ம் + 1
- 7 து.
நீ , கா கா 1 1 சார்., 24, 2 இங்கு அவர் பகுதி நேரமாகத் தான் வேலை செய்கிறார். பின்னேரங்களில் சுமார் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் தான் அவருக்கு வேலை, இலங்கையில் கூட பல்டாக்டர்மார் 'பாட்டைம்' வேலை தானே செய்கின்றார்கள். மத்தியானத் துக்குப்பின்பு அவர்களைக் காணவே முடியாதே. இதுபற்றி அவரிடம் கேட்டேன்,

Page 34
E. " பாழுது காலையில்
சுமார் மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே நோயாளர்களைப் ார்வையிடுவேன். உண்மையில் அரசாங்க பல்வைத்தியர்கள்
盟 ணிபுரிந்தெ
இலயிலும் மத்தியானச் சாப்பாட்டுக்கு பின்ன "ரும் நோயாளர்களைப் பார்வையிடவும்பரிசீலிக்கவும் கடமைப் பட்டுள்ளார்கள். எனக்கும் இது விருப்பமாக இருந்தது. ஆனல் பல டி. எம். ஒக்கள் இப்பழக்கத்தை நடைமுறைப் விரும்பவில்லை. நாமும் கிளினிக்குகளை பின்னேரங் வத்திராமல் கையெழுத்தேட்டில் மாத்திரம் t த்து வைப்போம். நோயாளர்கள் மத்தியி ... வைத்தியர் என்ருல் மதியத்துக்கு முன்பாகத்தான் செல்லவேண்டும் என்ற மனேபவம் வளர்ந்துவிட்டது. குறுகிய நேரத்தில் அதிகமான நோயாளர்களைப் பார்வையிடு வது சாத்தியமில்லை. எனவே முக்கியமான தீவிர நோயுடை வர்களை மட்டுமே கரிசனையுடன் பார்க்க முடிந்தது. என் னிடம் வருபவர்களிடம் அவர்களுக்கு என்னவிதமான நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை முதலில் விளக்குவேன். அத ஞல் எதிர்காலத்தில் மீண்டும் தவறுகள் நேராத வகையில் *ஜாக்கிரதையாக இருப்பார்கள். பின்பு நான் செய்யப்போ ஆகும் மருத்துவத்தைப் பற்றி விபரிப்பேன். இதனுல் அவர்கள்
ஒத்தாசையளிப்பார்கள். குறிப்பாகச் சொன்னூல் கிராமத்து மக்கள் பாமரமக்கள், வலியின் வேதனையால் எவ்வளவோ
ësinoriteti
வருக்கே ாதாரணமாக அந்த நோயாளி ார்த்து புதிய நோயாளர்கள் ளது பயமும் பறந்து விடும்.
"கற்பனை செய்து வந்திருந்த பயம் ஒடி மை றவதுடன் எமக்கும்.
'Hy(
னும் செய்யும் ஒப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

53
பல்லை உடைத்ததுண்டோ?
பல் டாக்டரான நீங்கள் யாருக்கென்ருலும் பல்லே உடைத்ததுண்டோ? சிரித்துக்கொண்டே கேட்ட என்னிடம் அவரும் சிரித்துக்கொண்டே சொல்கிருர், நான் சண்டைக் காரனல்ல. எனவே அச்சந்தர்ப்பம் எனக்கு ஏற்படவில்லேபலமான தாக்குதலால் பற்கள் சேதமுறுவது உண்மையே. ஆனல் தாக்கப்பட்டவர் சேதமுற்ற பல்லைக் கவனிக்காமல் விடும் பொழுது ஆபத்து மேலும் மேலும் கூடவே செய் கின்றது. எம்மைப் பொறுத்தவரை முன் வாய்ப்பற்களை அகற்றுவது சுகமான வேலைதான்." ஏனெனில் அவை ஆழ மாக வேரூன்ருதவை. ஆனல் கட்ைவாய்ப் பற்கள் ஆழமாக வேரூன்றியவை அவற்றை அப்புறப்படுத்துவது கொஞ்சம் சிரமமாகும். ஆனூல் அவற்றை அகற்றும் பொழுது கூட நோயாளிக்கு எவ்வித இடைஞ்சலும் தோன்ரும்ல் செய்வதில் ... f. நான் டாக்டர்களின் பலமும் தேவைப்படுகின்றது. திறமை
யும் மெருகடைகின்.(D9) •
心熬
நால், பல் டாக்டர்களாகப் னுதாபம் ஏற்படுகின்றதே யம் என்பது ஆண்
பல்லே அகற்றியதும் தமது வலி எ நிவாரணம் பெற்று விட்டதாகவே

Page 35
S4
அகற்றப்பட்ட பற்களின் இருமருங்கிலுமுள்ள புற்கள் காலக்கிரமத்தில் அந்த வெற்றிட்த்தை நோக்கி வளைகின் றன. கீழ்வாய்ப்பற்களை அகற்றியிருந்தால் அந்த வெற்றி டத்தை நோக்கி மேல்வாய்ப் பற்கள் கீழிறங்கிவிடுகின்றன. அதனல் பல்சீர்வரிசை கெட்டுவிடும். முகமும் மாறுதல டைந்து விடும். குழந்தைகளுக்குப் பாற்பற்கள் இயற்கை யாகவே விழுவதுதான் நல்லது. ஏனெனில் அவர்களது பற் களை அகற்றி அதை வெற்றிடமாக்கும் பொழுது, புதி தாக முளைக்கும் பற்கள் "தெத்தி யாவதற்கு இடமேற்படும். பாதிப்படைந்த பற்களைக் கூடுமானவரை பழுதுநீக்கி அடைப்பதுதான் சிறந்தமுறை. மோசமான பற்களைத்தான் அகற்ற வேண்டும், முன்வாய்ப் பற்களின் அரைக்கும் பகுதி களை அடைப்பது கொஞ்சம் சிரமம்.ஏனெனில் அடைக்கப் பட்டிஅப்பகுதிகள் மீண்டும் உணவுடன் அரைபடும் பொழுது அகன்றுவிட வழியுண்டு. அதனுல் அவற்றை அடைக்கும் பொழுது சிறிது குடைந்து இலகுவில் கழரமுடியாத வகையில் அடைக்கவேண்டியிருக்கும். பொதுவாகப் பற்களை அடைப் பதற்கு ஐந்து வழிகளை டாக்டர்கள் கையாளுவார்கள். இவை சற்று மருத்துவ ரீதியாக இருப்பதால் வாசகர்களுக்குப் கஷ்டம். பற்கள் சுத்தமாக இருந்தால் .
பல்லைச் சுத்தமாக வைத்திருந்தால் எவருக்குமே வியாதி இலகுவில் தோன்றது. ஒவ்வொரு உணவிற்கும் பின்பு பற்களை சுத்திகரிக்கும்படி பல் வைத்தியர்கள் வற்புறுத்தியும் நடைமுறையில் இப்பழக்கத்தைக் கையாளுபவர்கள் மிக வும்குறைவு ஆனல் நித்திரைக்கு முன்பு கண்டிப்பாகப் பற் களை சுத்திகரித்தேயாக வேண்டும். பிரஷ்போன்றவைதான் சாலச்சிறந்தவை இதனுல் பற்களின் இடுக்குகளில் உணவுத் துணிக்கைகள் தங்கி காபோவைதரேட் டுகளில் பக்ரீறியா வளர்வது தடைப்படுகின்றது.
ஆட்டோமட்டிக் இயந்திரம் நின்றுவிட்டதாக யாரோ
கூறவே, ஒருகணம் ஆங்கு சென்று அதைப் பழுதுபார்த்து
 

55
மீண்டும் இயக்கி விட்டு என்னிடம் வருகிருர், தோளேயும்
உலுப்புகிருர்,
இலங்கை டாக்டர்கள்
நீங்கள் இங்கு டாக்ட ராகப் பணிபுரியாமல் இயந்திரங்
களுடன் சங்கமிக்கின்றீர்களே. !
லண்டனில் படாக்டராக பணிபுரிய முடியாதோ என்று என் மனதில் தோன்றுகிறது. ஆனல் எப்படிக் கேட்பது எனத்தடுமாறுகையில் என து சந்தேகத்தை புரி ந் து கொண்டோ"என்னவோ அவரே பதில் சொல்கிருர்,
எமது பல்டாக்டர்களுக்கு இங்கு பணிபுரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதற்கு எம்து பல்கலைக்கழகங்கள் வழங் கும் தராதரப் பத்திரங்கள் தகுதி குறைந்தனவாகப்படுவ துதான் மூலகாரணம். இங்கு பணிபுரிய வேண்டுமாயின் மேலும் ஓர் அடிப்படைத்தேர்வில் சித்தியடைய வேண்டும். பின்னர் கூட தேசிய வைத்திய சபையில் பதிவு செய்தாக வேண்டும். அதற்குப் பின்புதான் எமது வேலை இங்கு ஊர் ஜிதமாகும். தவிர தனியார்துறையில் செயல்பட வேண்டுமா னலும் கூட மேற்படி இருமுறைகளையும் நாம் கையாள வேண்டும். கூடவே சுமார் 5000 பவுண்கள் காசும் தேவைப் படும், அப்ப்டியென்ருல்தான் தகுந்த வைத்தியச் சாமான் இள வாங்கித்தனிப்பட்டமுறையில் செயல்பட அனுமதி வழங்குவார்க்ள். இவை எல்லாமே இலங்கையிலிருந்து வந்த்'டாக்டர்களுக்கு சுயமாக நிர்ண்வம் பெறுவதில் ஏற்
Sih.gridiarreth.
总 ಸ್ನೀ
வலர் இப்பொழுது லண்டனுக்கு வருகிறர்களே? அது, வும் அங்குதாம் பார்த்து வந்த தரமான வேலைகளையும் ரீஜினும்ா செய்துவிட்டு. அவர்களுக்கெல்லாம் என்ன நடக்குமோ? 臀 线
அடுக்கான் எனது கேள்விகளுக்குச் சுருக்கமாகவே துவர் செல்கின்ருர், அவர்கள் எல்லாருமோலண்டன

Page 36
56
ஒரு தளமாக வைத்து வேறு நாடுகளுக்குப் போகவே முயல் கின்ருர்கள்.
அப்படியெனின் இங்கிலாந்து தவிர்ந்த ஏனைய நாடு கள் இலங்கையின் தராதரப் பத்திரங்களை அங்கீகரிக்கின்றன னவோ எனநான் தொடர்கின்றேன். *
அதுதான் இல்லை! இங்கிலாந்துடன் கூடவே ஜெர்மனி பிரான்ஸ், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் எம்மைப் புறக்கணிக்கவே செய்கின்றன. ஆளுல் வளர்ந்து வரும் ஆபிரிக்க நாடுகளும் மத்திய கிழக்கும் எமது திறமைகளுக்கு மதிப்பளித்து எமக்கு கெளரவம் கிடைக்கும்படி செயல்படு கின்ருர்கள். இலங்கையில் ஒருவருடத்தில் உழைக்க முடிவதை அந்நிய நாடுகளில் இரண்டொரு மாதத்திலேயே சேமிக்க முடிச்கின்றதே!
உங்களது பதிலேப் பார்க்கும் பொழுது பணநெருக்கடி இலங்கையின் டாக்டர்மாரைக்கூட விட்டுவைப்பதில்லையோ? ஆச்சரியத்துடன் அகலக்கண்ணை விரித்த என்னைப் புரிந் தர் வராக அவர் தொடர்கின்ருர், KIKBARE # s 概
அறிவு விரிகிறது.
வளமானவாழ்வு. சுலபமானவேலை, (LP தா யக் உயர்ந்த அந்தஸ்து, இனிய குடும்பம் இவை
படித்துப்பட்டம் பெற்ற அனைத்து டாக்டர்ம
தமானவையே. என்னைப் பொறுத்தவரையி
மனைவி, அன்பான பிள்ளைகள் மூவர், பங்களாமாதிரியான வீடு, கார், வேறு என்ன வசதிகளெல்லாம் வாழ்வை வளம்படுத்துமோ, அனைத்துமே இருக்கத்தான் செய்தன. ஆனல் வெளிநாட்டுக்குச் செல்லும்பொழுது முதலாவதாக எமது அறிவு பரந்து விரிகின்றது. எமது அனுபவம் மெரு கேறுகின்றது. இவற்றுடன் எமக்கும் எம்மவர்களின் வள மான எதிர்காலத்துக்கும் வழி கோலமுடிகின்றது. சிறிது
காலம் வெளியிடங்களில் பணிபுரிந்தாலே பின்பு எமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

57
வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக ஒரு தனியார்துறை மூலம் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். இன்னும் சில வருடங்களில் தாயகம் திரும்பியதும் வசதியாளர்களிடம் பணத்திற்காகவும், ஏழைகளுக்கு இலவசமாகவும் சிறந்த பணியாற்றுவதென்பதுதான் எனது குறிக்கோள்; எனது இளமைக்காலக்கனவு
மனங்கொண்டது மாளிகை
நீங்கள் இங்கு வைத்தியத்துறையில் பணிபுரியாமல் மெஷின்களுடன் போராடுகின்றீர்களே, க ஷ் ட மாக இல்லையோ?
முன்பு நான் கேட்க நினைத்ததை இப்போது வாங் விட்டுக்கேட்டேவிட்டேன்.
இலங்கையில் குனிந்து ஒரு கிடுகு எடுத்துக் கொடுத்தி ருக்க மாட்டேன். ஆனல் மனம் கொண்டதுதான் மாளிகை என்று பெரியோர்கள் சொல்லுவார்களே. அதனுல் இந்த வேலை எனக்குப் பாரதூரமாகவில்லை. மேலும் சிறிது காலத் துக்குத்தானே என்று ஒரு நிம்மதி!!
உங்களது வாழ்வில் ஒரு நாள் எவ்வாறு கழிகின்றது? இக்கேள்வியை அவரிடம் கேட்பதற்கு அடிமனதில் ஒரு காரணமும் இருக்கவே செய்தது! என்னைப் பொறுத்தவரை யில் படிப்பு-வேலை-சமையல் - சாப்பாடு-நித்திரை - நாட்கள் வேகமாக அள்ளப்பட்டு விடுகின்றன. அவரைப் பொறுத்த வரையில், அவரே சொல்கின்ருர்,
பொதுவாக அதிகாலையிலேயே எழுந்துவிடுவது தான் எனக்குப்பிடிக்கும். காலைக்கடன்களை முடித்தபின்பு கடவுளு டன் ஒரு ஐந்து நிமிடங்கள் சங்கமமாவேன் ஆரம்பக லத் திலிருந்தே கிறீஸ்தவ கல்லூரிகளில் படித்ததினுல் எனக்குத் தேவாரமோ, திருவாசகமோ அவ்வளவாகத் தெரியாது. தெரிந்த சிலவற்றைத் தியானிப்பேன். பின் பு இரண் டு மணித்தியாலங்கள் கட்டாயம் பல் சம்பந்தமாக ஏதாவது

Page 37
58 படிப்பேன். இலங்கையில் என்ருல் காலைச் சாப்பாட்டின் பின்னர் வைத்தியநிலையத்துக்குப் போவேன். மதியச்சாப் பாட்டின் பின்பு நித்திரை கொள்வேன். மாலையில் அந்தி மயங்கும்பொழுது எனக்கு நன்கு பிடிக்கும். செவ்வானமும், வயலால் வீடுதிரும்பும் உழவர்களும், கூடுநோக்கிவிரையும் குருவிகளும் நெஞ்சைவிட்டு அகலாதவை. சுமார் இரண்டு மைல் தூரமென்ருலும் நடப்பதில் எனக்கு அலாதிப்பிரியம், இரவினிலே படம் ஏதாவது இருந்தால் அங்கு போவேன். அல்லது வீடுதிரும்பி பிள்ளைகளுடனும், ரேடியோவுடனும் பொழுதைப் போக்குவேன். தினமும் இருதடவை குளிப்ப தில் எனக்குத் தீராத ஆசை !
ஆனல் இங்கு வாழும் முறையே வேறு? கால எட்டு மணிக்குத்தான் பொழுது விடிகிறது. அதுவும் வீட்டுக்காரன் சென்ரல் ஹீட்டரைப் போடாமல் விட்டால் இழுத்து மூடிக்கொண்டு படுக்கத்தான் தோன்றும். ஸ்ம்ரிஸிஸன் பிரமாதமாக அமையும்போலுள்ளதே என்றுகூறி என்னைப் பார்க்கின்ருர்,
எனது.அனுபவங்களைக் கொட்டி முழக்குகின்றேன் நான்!
மற்றவர்களுக்கு முன்மாதிரி
நீங்கள் புகைபிடிப்பதில்லையோ என்றவாறே ரொத் மன்ஸ்" சிகரெட் பைக்கெட்டை நீட்டுகின்ருர் நண்ப ரொருவர்.
வாழ்க்கையில் டாக்டர்கள் மற்றவர்களுக்கு முன்ம்ாதிரி யாக இருக்கவேண்டும். அந்த டாக்டரே குடிக்கிருர் நாம் குடித்தால் என்ன, உயிரா போய்விடப்போகின்றது என்ற மனப்பான்மை மக்களிடம் ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்ருல் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். எனவே நான் குடிப்பதுமில்லை. புகைபிடிப்பதுமில்லை. தவிர பற்களில் காவி பிடித்து அதன் வெண்மையும் காலக்கிரமத்தில் அகன்று விடுமில்லையா?

59
மற்றவர்கள் என்ருல் கான்ஸர் வந்துவிடும் என்பார்கள். பல் டாக்டராச்சே.! அதனுல்தான் காவியைப்பற்றிப் பிரஸ்தாபிக்கின்ருர் என்று நினைத்து சிகரெட் நண்பரின் பக்கம் திரும்புகின்றேன். அவர்மெல்ல இருமுகின்ருர், டாக் டர் முறு 3 விக்கின்றர். கூடவே தோளையும் உலுப்புகின்ருர்,
உங்களது எதிர்காலத் திட்டங்கள்.?
முன்பு அகில இந்தியாவையும் சுற்றிப் பார்த்த்தில் உலகம் சுற்றும் ஆசை பிறந்தது. விரைவில் யூ. கே. முழுவதையும் வலம்வர இருக்கின்றேன். பின்பு உலகின் எந் தெந்தப் பகுதிகளுக்கு நான் பணிபுரியச் சென்றலும் அந் தந்தப் பிராந்தியங்களை எல்லாம் முற்று முழுதாக ஆக்கிர மிப்பேன். இது தான் எனது அபிலாக்ஷை விரைவில் ஆபிரிக்க நாடொன்றில் நியமனம் கிடைக்குமென எதிர்பார்க்
கின்றேன்.
கதைத்துக்கொண்டிருந்தவரை-இடையில் புகுந்த காப் பிலி போமன் அழைத்துச்சென்ருர்,
தோளை உலுப்பித் தனது ரேட்மார்க்கை உறுதிப் படுத்திக்கொண்டே அவரும் செல்கின்றர்.
கஷ்டமான மெஷின்களும் அவருக்கில்லே சங்கடமான மெஷின்களும் அவருக்கில்லை.
'ஆட்டோ"வின் அரவணைப்பில் அவர் ஒரு பாக்கியசாலி
அன்பின் அரவணைப்பில் அவரது நோயாளிகள் பாக்கிய Fraó) sair!

Page 38
இலங்கை முஸ்லிம்களே இஸ்லாமிய பத்திரிகைத்துறை முன்னுேடிகள்
என்கிறர் இஸ்லாமிய ஆராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றி நாடு திரும்பிய எஸ். எம். கமாலுதீன்
விசாலமான ஒரு வீடு, முன்பக்கத்தில் போடப்பட்ட ஆசனத்தில் அமர்த்து அத்தகமொன்றில் மூழ்கியிருக்கிருர் ஒருவர் பார்த்தமாத்திரத்திலே அறிஞராகக் கணிக்க வைக் கின்றர். ஜனப் எஸ். எம். காமாலுதீனைச் சந்திக்கலாமா? என்று பீடிகைபோட்ட என்னை நிமிர்ந்து நோக்கி தீட்சண் யமம்ான பார்வையைச் சிந்தி ஆமா. நான் தான் கமாலு தீன். என்ன வேணும் என்கிருர், அண்மையில் இஸ்லா மிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தீர் களே அது சம்பந்தமாக.
ஆமா அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டாக அமைந்துவிட்டது. உடனேயே பதிலளிக்கிருர், அவரது பேச்சிலே புதிய தெம்பு தொனிக்கிறது. கேள்வி: ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்? கமால்தீன்: பல காரணங்கள் உண்டு. முதலாவதாக இஸ் லாமிய ஆராய்ச்சிக்கெனத் தனிப்பீடம் அமைக்க வழி வகுத்தது. இஸ்லாமிய இலக்கியம் சிதைந்துபோகாமல் தடுத்து ஆராய்ச்சியில் தீவிர பங்குபற்ற ஒவ்வொருவ ரையும் தூண்டியது. இளைஞர்களுக்கு கூடுதலான ஊக் கமளித்து அவர்களது இலக்கிய ஆர்வத்துக்கு மெரு கூட்டியுள்ளது. இப்படிப் பல.பல.

: 61
கே! புதிய திட்டம் ஏதாவது அமுலாக்க எத்தனிக்ப்கப் பட்டதா? -
கமா: நிச்சயமாக தமிழகத்திலுள்ள 5000 பள்ளிவாசல்க ளிலிருந்தும் வருடந்தோறும் பெறப்படும் வருமானத் தொகை மூலம் நூல்நிலையங்கள் அமைக்க எடுத்த முயற்சி எதிர்கால முஸ்லிம் இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்களிக்கும் இதனல் இஸ்லாமிய நூல்கள் மக்கள் மத்தியில் பரவலாக்கப்படுவதுடன் வெளியீட்டி லும் விற்பனையிலும் அதிகரிப்பு ஏற்படும்.
கே: தமிழக முஸ்லிம்களா அல்லது இலங்கை முஸ்லிம்
956TIT? *
கமா:இலங்கையரே முன்னணியில் என்று அடித்துக் கூறு வேன், பத்திரிகைத்துறையில் முதலில் இலங்கையர் தான் புகுந்தனர்,மற்றும் நூல்வெளியீடு, திருக்குர்ஆன் விளக்கம் ஆகிய எல்லாமே இங்கு சிறப்புற நடப்ப தால் நம்மவரே முன்னுேடிகளாவர்.
கே: சரி. இலங்கை முஸ்லிம்களே பத்திரிகைத்தொழில்
முன்னுேடிகள் என்கிறீர்களே. எங்ங்ணம்?
கமா: 1892ல் அறிஞர் சித்திலெப்பை அவர்கள் முஸ்லிம் நேசன் என்ற சஞ்சிகையை வெளியிட்டார். அதே போல முஸ்லிம்கள் மத்தியில் புதிய லங்காரி என்ற வேருெரு பத்திரிகை அக்காலத்திலேயே பெரும் சேவை செய்துள்ளது. ஆனல். தமிழகம் 1906ல் தான் முதல் முஸ்லிம் பேப்பரைக் கண்டதும் இஸ்லாம் என்பது தான் தமிழகத்தின் முதல் முஸ்லிம் பத்திரிகை இது ஒன்ற்ே போதாதா? -
கே: நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கலை
நிகழ்ச்சிகள் பங்குபெறவில்லையா?
கமா: ஏன் இல்லை. பெரிதும் முஸ்லீம் கலைஞர்களாலேயே படைக்கப்பட்ட அற்புத சிருஷ்டிகளை ரஸிக்க முடிந்தது.

Page 39
काजू
3, 62
கே:அவற்றில் உங்களைக் கவர்ந்தது..?
சுமா: ஹ"செயின் பாகவதரின் இசைக் கச்சேரியாகும். மஸ்தான் சாஹிப் பாடல்கள் ஞானசுரப்பா பாடல்கள் தக்களை பீர்முகம்மது போன்ருேரின் பாடல்களை தத் ரூபமாக பாடினர். இதனல் இஸ்லாத்தில் பொதிந்து கிடந்த பல பாடல்கள் வெளியுலகிற்குக் கொண்டு வரப்பட்டன.
கே: நீங்கள் மகரநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையாது? கமா: முதல் முஸ்லீம்களின் இலக்கிய மரபு ஆகும். கே: முதல் முஸ்லீம் நாவல் எப்பொழுது தோன்றியது? கமா: 1885ல் அறிஞர் சித்திலெப்பை எழுதிய "அசேன் பேயினுடைய கதையாகும். இது காலத்தால் மற்ற எல்லா நாவல்களேயும் விட முன்னுேடியா:தாகும் இலங்கையின் முதலாவது நாவல் என்ற பெருமை *இதற்குண்டு. አቶ கே: தமிழக அரசு தான் இந்த மாநாட்டை அமைத்ததா? கமா: தமிழக அரசு போதிய அளவு ஒத்துழைப்பு நல்கி யிருந்தாலும் திருச்சிஜமால் முகம்மது கல்லூரிப் பேரா சிரியர் ஜனுப் நைனமுகமது தான் முன்லிம்கள் மன தில் கடமை உணர்ச்சியுடன் ஏற்பாடு செய்தார் வணக்கம் கூறி,விடைபெறுகின்றேன்.
"சமூகத்தின் அடித்தளத்திலுள்ளோரது அபிலாசைகள்
பிரதிபலிக்கும் வகையாகவே இலக்கியம் அமையவேண்டும் பழமையை ஏற்கும் ஒவ்வொரு முஸ்லீமும் ஏனைய இனத் தவரோடு ஒன்றுபட்ட நிலையில் தமது தனித்துவம் குன்ரு மல் புதுமையான முற்போக்குச் சமுதாயத்தை உருவாக்க தீேவிரமாக முனையவேண்டும்.
மாநாட்டில் பேசிய பேச்சை ரேப்ரெக்கோடரில்? அவர் போட்டுக்காட்டியது வீதியில் வரும் எனது காதுக :ளில்தன்கு நீங்காரமிடுகின்றது.

ஜப்பானியர்
கதைகாரரல்ல
ser i? u biss mr grif as gir விருந்தோம்பலுக்கும் 多
மரியாதைக்கும் பேர்போன இவர்கள் கைகுலுக்கமாட்வார்கள்.
ப்ேப்ானியர் நெருக்கமாக ஒரு தீவில் வாழ்பவர்கள். ஒருவரின் வேலையில் மற்குெருவர் வீண்கவனம் செலுத்து வதில்லை. ஆகவே சச்சரவில்லாமல் வாழமுடிகின்றது. தவி ரவும் ஜப்பானின் இயற்கை அழகு மிகவும் மனேரம்மிய மானது நீர்வளமும் நிலவளமும் கொண்டு செழிப்புக்
கொழிக்கும் புனிதபூமி கைத்தடியைல் நட்டாலும் வேரூன்
றித்தழைத்துவிடும் என்று சொல்லக்கூடிய புண்ணிய நாடு'
கடந்த பல வருடங்களாக வேம்படி மகளிர் கல்லூரி யின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற பின்னர் யப் பான் சென்று அங்கு ஓர் உயர்கல்லூரியில் பணிபுரியும் செல்வி மேபல் தம்பையா தனது மறக்கமுடியாத ஒவ் வ்ொரு நிஜன்வோட்டங்களையும் ஒவ்வொன்ருகச்சொல்வ து
யெல்லாம் யப்பானுக்கே அழைத்துச் செ ல்வது
போல அமைந்தது.
பொன்னுகும் ஓய்வு
ஜப்பானியரிடம் நாம்படிக்கவேண்டிய கட்டிாயமான ாடங்கள், அவர்களதுசுறுசுறுப்பும் எல்லோருமே விடு

Page 40
64
முறையை வேறு தகுந்த வேலையிவிடுபட்டுப் பயன்படுத் துவதும், காலத்தைப் பொன்னென இதயபூர்வமாக உணர் வதுமேயாகும். தவிர அவர்கள் ஓய்வு நேரத்தைக் கூட தமக்குச் சாதகமாக்குகின்ருர்கள். அன்நியரை நன்கு மதிக் கும் அவர்கள் அணுவசியமாக அவர்களுடன் உரையாடுவ தில்லை. பஸ் வண்டிகளிலோ ரயில் நிலையங்களிலோ சதா பத்திரிகைளுடனும் சஞ்சிகைளுடனும் தான் அநேக ஜப் பானியர்கள் காணப்படுவார்கள். தமது அலுவலக நேரங் களில் பத்திரிகையை வாசித்து வேலைகளைப் பாழடிக்கும் பழக்கம் அவர்களிடம் அறவே இல்லை. டெலிவிஷனுக்கும் ஜப்பானிய மக்கள் தமது ஓய்வு நேரத்தில் முக்கிய இடம் கொடுக்கின்ருர்கள்
விடுமுறையின் பின்னர் பாடசாலை திரும்பும் சிறு வரைக்கூட, விடுமுறை எவ்விதம் அமைந்தது என்று கேட் கும் பொழுது ஒவ்வொருவரும், "நான் அந்த பக்ட்ரியில் பணிபுரிந்தேன். எனக்கு தந்த ஊதியம் இவ்வளவு தேச சேவையில் ஈடுபட்டேன் என்றே தெரிவிப்பார்கள். ஆனல் இவ்வளவும் வலுக்கட்டாயத்தின் பெயரில் செய்யப்பட வில்லையென்பதும் ஒவ்வொருவரும் மனமார விரும்பியே இப்பணிகளில் ஈடுபடுகின்றர்கள் என்பதும் தான் எம்மை புளகாங்கிதமடையவைக்கும் செய்தியாகும்.
அந்நிய நாட்டினருக்குவேலை வாய்ப்போ அன்றி மேற் படிப்பு வசதிகளோ ஜப்பானில் இலகுவாகப் பெறமுடி யுமா என்று எனது கேள்வியை தொடருகின்றேன்.
பிறதேசத்து மக்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு மிகவும் மந்தமான நிலையில்தான் உள்ளது. யப்பானில் ஆகமொத்தம் இருபத்தைந்து இலங்கைக் குடும்பங்கள் தான் பணிபுரிகின்றன. உலக நாடுகளில் இருக்கும் எத்த ஜனயோ இலங்கைக் குடும்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்த் தால் இந்த நிலைமை மிகவும் இலகுவாக விளங்கும், ஜப் பானில் வேலையில்லாப் பிரச்சனையில்லை. ஆனல் ஜப்பானி யருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

轉
65
ஜப்பூரினில் மேற்படிப்பு:மிதவும் சிரமழானது என்பதால் அந்நியூர் அதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. முக்கிய மாக அவர்களது மொழிப்பிரச்னை ஜப்பான் செல்லும் எவருக்கும் ஜப்பானியமொழி தெரிந்தேயரகவேண்டும்; ஆங் கில அறிவுடன் சமாளிப்பது மிசவும்.கஷ்டமாகும்.குறுகிய கால படிப்பை அதாவது ஆறுமாதமோ மூன்று மாதமோ படிக்கவெனச் செல்பவர்களுக்கு மாத்திரம் ஆங்கிலத்தில் போதித்கின்றர்கள். ஏனயோர் ஜப்பான் இமாழியிலேயே
தமது மிேற்படிப்பை மேற்கொள்ள வேண்டும். ஆதனுலே
யப்பான சியர்கல்விக்கென ஒருவரும் பெரிதும் விரும்புவ
தில்ல.
ஜப்பானியரிடம் உங்களைக் கவர்ந்ததன்மை எது என
இலேசாகக் கேட்கிறேன்.
அவர்களது தேசப்பற்றுத்தான் ஒவ்வொரு ஜப்பானியரும் ஜப்பான் தனது தேசம் என்பதை 'திரிகரண சுத்தியுடன்" உணர்கின்றர்கள். மற்றவனது பொருளை சுரண்டிப் பறிப் பதில்லை, அங்குள்ள வீடுகள் மிகவும் டிென்மையான கட்டி டங்கள். எனினும் வீடுடைப்புச் சம்பவங்கள் ஒன்றேனும் இடம்பெறுவதில்லைல் தவிர மக்களை வெருட்டி உருட்டி காவல்படை எக்காலத்திலும் பயன்படுத்தப்படுவதில்லை. கற்பாதுகாப்புப் பகையும்பொலிஸ் பிரிவினரும்தான் அங் குள்ள காவல்படைகளாகும். இவை அந்நிய ஆதிக்கத்திற்
தெதிராகவுேபயன்படுத்தப்படுகின்றன.
வேறு எந்த நாட்டுப் பிரமுகர்களும் ஜப்பானுக்கு வரும்பொழுது ராஜ மரியாதை அளிக்கத் தவருதஜப்பானிய மக்கள் தமது பிரதமர் ஆஸிய நாடுகளுக்கு செல்லும்போது
சிலகமயங்களில் ஏற்படும் அசம்பாவிதம் குறித்துவிநயத்
டன் விசாரித்தபொழுது உலக மகாயுத்தத்தில் ஆஸிய நாடுகளுடன் ஜப்பான் நடந்துகொண்டவிதத்தால் விளைந்த பயூம் இன்னமும் தெளிவடையவில்லையூென்றே சொல்லத் தோன்றும்,
ပျွိ ႏွင္မ်ားႏွစ္ထိ

Page 41
66
உல்லாசப் பிரயாணிகளுக்கு ஏற்ற இடமா எனக்கேட்டு முடியுமுன்பே நிச்சயமாக” என்கிருர் செல்வி தம்பையா, "பியூஜி மலை மிகவும் ரம்மியமானது. நவம்பர் தொடக் கம் ஜர்ன்வரை மூடுபனியால் உறைந்திருக்கும் காட்சி கண் கொள்ளாததொன்று.
புனித பியூஜி
மியூஜி மலையை ஜப்பானியர் மிகவும் புனிதமானதாகப் போற்றுவார்கள். "பியூஜி மலை மீதுள்ள பற்றின்காரண மாக அம்மலையைபியூஜி அவர்கள் என்றுதான் மரியாதையாக ஜப்பானியமொழியில் பியூஜிஸென் என அழைப்பார்கள்.
அடிவாரத்திலிருந்து ஐந்தாவது அடுக்குவரை காரிலேயே செல்லலாம். தொடர்ந்து மூடுபனியற்ற காலங்களில் ஏழா வது அடுக்கான உச்சிவரை கால்நடையாகவே செல்ல வேண்டும்.
ஜப்பானின் இன்னுமொரு அழகு ஆழ்ந்து அவிந்தடங் கிய எரிமலைகளாகும். கியூசூ மாநிலம் எரிமலைகளால் உல் லாசப்பிரயாண்களை கவருவதில் தவறுவதில்லை. கத்தோலிக்க மதம் புனித பிரான்ஸிஸ் சேவியரால் இங்குதான் ஜப்பான் மாநிலத்தில் முதன்முதலில் பரப்பப்பட்டது.
அடுத்த மாநிலம் நிக்கோ பிரமாண்டமான கலைச்செறிவு மிக்க பெளத்த ஆலயங்கள் இங்குதான் காணப்படுகின்றன. இறக்கில் நிக்கோவை தரிசித்த பின்னரேர் இற, எண் ஜப் பானில் வழங்கும் பழமொழியிலிருந்தே இதன் மகிமையை உணரலாம், 1.
யோட்டோ நகர் அழகு ததும்பும் ஜப்பானின் முன் னைய தலைநகர்களில் ஒன்று மாடமாளிகைகள், கூடகோபுரங் கள் அழகுமிக்க நந்தவனங்கள் போன்றவை இங்கு உண்டு. தலை நகர் டோக்கியோவும் முக்கியமானதுதான்.
-இவை அனைத்துமே உல்லாசப் பிரயாணிகளுக்கு பெரு விருந்தாக அமையும். அடுத்து என்ன கேட்பதென தெரியாது
臀

67.
திக்குமுக்காடிய” எனக்கு ஜப்பானின் விருந்தோம்பல் பற்றி அவரே தெரிவிக்கிருர், 溪、
விருந்தோம்பல் -
விருந்துக்கு அழைக்கும் முறை தனிப்பட்டது. அழைக்கப் பெறுபவன் எவ்வளவு பழக்கியவனக இரு ந் தாலும் நாளைக்குத் தங்களை வரவேற்கத் தகுதியில்லாத வீட்டில் மிகவும் அற்பமான மத்தியான உணவு சாப்பிடத் தங்களுக்கு இடையூறு ஒன்றுமில்லாவிட்டால் எங்கள் வீட்டுக்கு எழுந் தருளுவீர்களா..? என்றுதான் அழ்ைப்பார்கள். விருத்தினர் களும் நிச்சயமாக தொந்தரவு செய்ய வருகிறேன் என்றே கூறவேண்டும்.
சாதாரணமாக மிகவும் குறுகிய கதிரைகளும் மேஜை களும்தான் அங்கு காணப்படும் விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறுபவர் முழங்காலிருந்து பரிமாறுவார்.
ஜப்பானியரின் உணவுவார்ப்பதற்கு அழகாக இருக்கும். அநுபவித்துச் சுவைக்கக் கூடிய இனிய மணமும் அதற்கு உண்டு. அரிசிச்சாதமும் மீனும்தான் அவரிகள் அதிகம் விரும்பும் உணவு என்ருலும் எம்மைப்போல அதிக சாதத்தை விரும்புவதில்லை. பச்சையும் வேகவைத்ததுமான மீனத்தான் ஏராளமாக உபயோகிப்பார்கள். சில இனிப்புப்பண்டங் களில்கூட அவர்கள் மீனைச்சேர்ப்பது ணடு.
விருந்தின் முடிவில் தேநீர் வழங்கப்படும். மிக வும் கசப்பாக இருக்கும். ஆனலும் ருசியாகயிருக்கிறது என்று சொல்லியேயாக வேண்டும். இது அவர்களது பண்பு. இ அங்கு நடைபெறும் கல்யாணங்கள் பற்றி. நான் இழுக்கிறேன். , -எந்த ஆடவனுடனும் தன்னிச்சையாக சுற்றித் திரியும் இளம் ஜப்பானியப் பெண்மணிகள் இருபது வயதானதும் தமது பெற்றேரின் விருப்பத்தின்படியே தமது துண்வனை ஏற்றுக்கொள்வர். காதல் கல்யாணம் என்பது மிகவும்

Page 42
8
குறைவு: கல்யாணம் ஆடம்பரமான முறையில் பிரபலம் ஹோட்டல்களில் நடைபெறும்.
அங்கு ஒரு விநோதம் கல்யாண வைபவங்களுக்குச் செல்பவர்களுக்கே மணமக்கள் பரிசுப்பொருள்கள் வழங்கு வார்கள். நமது நாட்டில் கல்யாணவீட்டிற்குச் செல்பவர் கள் தானே மணமக்களுக்காக பரிசில்களைக் கொடுத்து அழுது வடிகிறார்கள்,
ஜப்பான் மக்கள் மதகுருவிற்கு மிகுந்த மரியாதை செலுத்துகின்றார்கள். அவரின் கட்டளையை எச்சந்தர்ப்பத் திலும் மீறுவதில்லை. கல்யாணத்திற்கு திகதி குறிப்பது அல் ரது பொறுப்பாகும். ஒருவர் மரணமானால்கூட அ ன தி எரிப்பதற்கு நாள் குறிப்பதும் பின்னர் சாம்பலைப் புதைப்ப தற்கு நாள் குறிப்பதும் மதகுருவின் பணியாகும்.
திருநெல்வேலியிலுள்ள செல்வி தம்பையாவின் வீட்டில் வரவேற்பு அறையிலிருந்த அநேக ஜப்பானியப் பொம்மை எள் தலை குனிந்தும் மரியாதை செய்யும் பாவனையிலிருந்ததை அவதானித்து தான் அதுபற்றிக் கேட்கின் றேன்,
கை குலுக்கும் வழக்கம் இல்லை
ஜப்பானில் கை குலுக்கும் வழக்கம் அறவே கிடையாது: பழக்கமே இல்லாதவர்கள்கூட" ஓ ரு வ ன ர் மதிப்பதற்கு அடையாளமாக 'தலையையே குனிகின்றார்கள். முன்னொரு காலத்தில் ஓவ்வொரு சொல் லுக்கும் தலைகுனியும் வழக்கம் இருந்ததும் தற்பொழுது வாக்கியம் முடிந்த பின்பே தலை குனிகின்றார்கள். சிலவேளைகளில் விருந்தினர் ஒருவருடன் பேசவேண்டுமென்றாலும் அவர் கவனிக்கும் வரை எவ்வளவு நேரமானாலும் தலைகுனிந்தே காணப்படுவது நமக்கு மிகவும் விசித்திரமாகவிருக்கும்,
நன்றிகூறி விடைபெற்ற எனக்கு ஜப்பானியர் நகைகளை விரும்புவதில்லை என்றும் சாப்பிடும்பொழுது;' தடிகளையே

69
பாவிப்பார்கள் என்பதும் பெளத்த ஆலயங்களின்
முன் பாக 'டோறி' அமைந்திருக்கும் என்பது பற்றியும் இவை தவிர மாணவர் விடுதிச்சாலைகள் ஜப்பான் நகரில் மிகவும் சேவையாற்றுகின்றனவெனவும் மக்களால் விடுதிச்சாலைகள் மிகவும் போற்றப்படுகின் றனவெனவும் செல்வி தம்பையா" கூறியலை மின்னி மறைகின்றன.
அட்டா....... இன்னொன்றையும் மறந்துவிட்டேனே... சீனாவைப்பற்றி அவர் நிறையக் கூறியிருந்தாரே. ஆம்.
அடுத்து.
• சீனா ஒரு புன்னகை பூத்தநாடு ' பற்றி சொல்லுவார் செல்வி பேபல்!

Page 43
" ஆல் இந்தியா ரேடியாவின்சென்னை வானெலி நிலையம். நே ய ர் க ள் இப் பொழுது நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வரத்தைக் கேட்கலாம். தவில் வாசிப் போர் அரித்துவார மங்களம் ஏ. கே. பழனி வேலும் திருவாளம் புத்தூர் டி. கே. கலிய மூர்த்தியும் ."
ஷேக் சின்னமெளலான சாஹிப்பின் நாதஸ்வரக் கச்சேரி இன்றுமாலை இடம் பெறுகிறதாமே. தவில் யார் தெரியுமோ? அரித்துவாரமங்களம் ஏ. கே. பழனிவேலும் திருவாளப்புத்தூர் டி.ஏ, சக்திவேலும்தான். சென்னை மியூஸிக் அக்கடடு மண்டப வாச லில் இவ்வாறு பேசிக்கொள்சின்றனர் இரு
T
இசைவிழா நிகழ்ச்சிகளில் இன்றுமாலை
மதுரை பொன்னுச்சாமி சகோதரர்கள் நாதஸ்வரம் வாசிப்பார்கள். தவில் அரித் துவார மங்களம் பழனிவேல் திருவாளப் புத்தூர் கலியமூர்த்தி இவ்வாறு கூறுகிறது நிகழ்ச்சிநிரலொன்று.
தவில் வாசிப்பில் தனித்துவம்பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பிர பல தவில் வித்துவான்கள் இருவரையும்
தென்னக தவில் வித்வான்கள் * பாராட்டு *
'தவில் வித்துவா
ܠܟܼܥܼ
ன்
தை'

71
இலங்கைக்கு அழைத்திருந்ததி ஈழத்துச் சிதம்பர தேவஸ் தானம்.
காரைநகரில் அலைமோதும் மக்கள் கூட்டத்தில் தமது அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிக்க தயாராகிய தென்னிந்தியத் தவில் வித்வான்கள் இருவரையும் அணுகி ஈழமக்களின் ரஸிகத் தன்மை குறித்து என்கிறேன்.
- அபாரம் ! ஒரே நொடியில் ஒத்த குரலில் பதிலளித்த இருவரும் சுற்றுமுற்றும் நோட்டம் விட்டு ஜனத்தொகையை பெருமை யுடன் நோக்குகின்ருர்கள். தொடர்த்து ஈழத்து ரஸிகர் களோ அல்லது எம்மவர்களோ ஒருவருக்கொருவர் சோடை யானவர்களல்லர். என்கிருர் பழனிவேல்,
கம்மா ஜமாய்ச் சுடுவாங்க என்கிருர் கலியமூர்த்தி.
பிரபல வித்துவான்களான உங்களுக்கு தென்னிந்தியா வில் இசைவிழாக்கள் ஜமாய்க்கும் இந்நேரத்தில் நிறைய புரோக்கிராம் இருந்திகுக்குமே ?
. ஆம்ா 1 ஆமா ! அங்கே பல கச்சேரிகள் இருக்கவே இருக்கத்தான் செய் தன. ஆனல் அவற்றை மீறி ஈழ ரசிகர்கள் இசைமீது கொண்டுள்ள பற்றும் அன்பும் நம்பிக்கையும் சேர்ந்து சில கச்சேரிகளே ரத்துச்செய்ய வைச்சுட்டுது ?
ஒருவேளை இங்கு சன்மானம் கூடவோ. இல்லீங்க 1 நாம்தான் அங்கிட்டு இருந்தாக்கா நிறைய சம்பாதிச்சிருப்போம், ஆன இங்குவந்து இலவசமாகவே வாசிப்பது, பலருடைய ஆவலைப் பூர்த்திசெய்யத்தானுங்க. அதுசரி இங்கு நீங்கள் இருக்கும் காலத்தில் ஏனடா இங்கு வந்தோம் . என்று தோன்றவில்லையோ?
.ரெம்ப ரெம்ப தப்புசார், உங்க அபிப்பிராயம் இவங்ககூட இருக்கேக்க நம்மநாட்டிலே இருக்கிற உணர் விலே எவ்வித பிசகுமேற்படவில்லீங்க. -
ஏற்கனவே நீங்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளீங்களா ? யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இதுவரை முதல் தரம் ஆன ஈழத்திற்கு இதற்குமுன்னரே பல தடவைகள்

Page 44
72
.வேல்க் கச்சேரிக்கு வந்துள்ளோம். அப்பொழுது காரை நகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தைச் சேர்ந்த திரு. கே. கே. சுப்பிரமணியம் யாழ்ப்பாணம் வரவேண்டும். என்று கண்டிப்பாக உத்தரவிட்டார். அந்த ஆன்டிக்கட்ட ெே.யை மீறமுடியாமல்தான் இச்சத்தர்ப்பத்தில் ஒபுேTடி வத்தோம்.
தவில் எல்லாம் அங்கிருந்தே கொண்டுவந்தீர்களா ? கற்ருரைக் கற்றரே காமுறுவர் என்று கூறுகிருங்க அது நம்மாளைப் பொறுத்த வரையில் மெய்யூரிங்பேரச்சு அவற்றை எல்லாம் , அங்கிருந்து கொண்டுவருவது சிரம முங்க, அதனுல நம்ம ஈழத்துக் கலைஞர்களே தந்துதவிஞங்க. இப்ப நடந்து முடிந்த கச்சேரியில் யாரு நாதஸ்வரம் வாசிச்சா என்று நான் கேட்கவும் ம்ேடையிலிருந்த ஒலிபெருக்கி தென்னிந்தியாவின் பிரபல தவில்வித்துவான் களான ஹரித்துவாரம் பழனிவேலும் திருவாளப்புத்தூர் கலியமூர்த்தியும் தற்பொழுது ஈழத்தின் நிகரற்ற நாதஸ் வித்துவான் எம். கே. பத்மநாதனுடன் கச்சேரி செய்ய வுள்னர் கூடவே குமர குருவும் புண்ணியமூர்த்தியும் தவில் வாசிப்பார். கேதீஸ்வரன் உடன் வாசிப்பார், என்று அறி விக்கின்றது.
இச்சந்தடியில் ஈழத்து சிதம்பர தேவஸ்தான சந்நிதி யில் சுவாமியின் நர்த்தனத்தில் ஈழத்தின் சகல தவில்வித் துவான்களும் நாதஸ்வர மேதைகளும் கலந்துகொண்டதாக யாரோ இருவர் பேசிக்கொள்வது எனது காதில் விழுந்து பிரமிப்புடையச் செய்கின்றது.
ஆமா என்ன கேட்டிங்க யாரு நாதஸ்வரம் வாசிக்கா எண்டா? நடந்த கச்சேரியிலே ஈழத்துச்சிதம்பர தேவஸ் தான வித்துவான் திரு. கணேசன்தானுங்க பங்குபற்றி ஞர். அடுத்து. அதுதான் ஒலிபெருக்கி அறிவிக்சுதே என்கிறேன் தான். நேரம்போகிறதென்ற அவதரம் எனக்கு ஈழத்தின் தவில்வித்துவான் தகஷ்ணுமூர்த்தி. கேள்வியை முடிக்குமுன்பாகவே அவர் நிகரற்ற மேஐத என்றதுடன்

73
இந்தியாவில் பல இடங்களில் மூ வரும் ஒன்றுசேர்ந்து தவில் வாசித்ததாகக் கூறுகிறர்கள்.
உங்களுக்குப் பிடித்த ராகம் எதுவுோ? என்றதற்கு ஷண்முகப்பிரியா என்கிருர் பழனிவேல், கல்யாணவசந்தம் என்கிறர் கலியமூர்த்தி, கல்யாண வசந்தம்பிடித்கும் உங்க ளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்கிருர் எனது நண்பர்: இல்லை என்று தெரிவித்த கலியமூர்த்திடதும் அதுதான் கல்யாணவசந்தம் உங்களுக்குப் பிடிக்குமோ என நகைச் சுவையாக நண்பர் கேட்க இருவரும் பலமாகச் சிரிக்கி முர்கள்.
பழனிவேல் வில்ாகமாகி மூவருக்குத் தகப்பனன ததை யைச் சொல்லிமுடித்தபின் பெருமூச்சுடன் நிறுத்துகின்ருர், உங்களது நெடுமூச்சைப் பார்த்தால் உங்கள் குழந்தை களை இத்துறையில் ஈடுபடுத்த மாட்டீங்கபோல் உள்ளதே
என்கின்றேன். -
அவர்கள் புகழ்பெறுவதற்கு உத்தரவாதமில்லை. பணம் சேகரிப்புதற்கு போதுமான நம்பிக்கையில்லை. எனவே அவர்கள் நிச்சயமாக இத்துறையில் ஈடுபட விடமாட் டேன் என்கிறர் பழனிவூேல்.
அடுத்த கக்சேரி ஆரம்பிக்கப் போஇதுற்கு சுகலுமும் ஆயத்தம் என்பதைத் தெரிவிக்கவோ என்னவோ ஒத்து ஊதுபவர் பீ. பீ. என்கிறர். விடைபெற ஆயத்த மான எமக்கு பழனிவேலும் கலியமூர்த்தியும் தாம் ஈழம் வரும்பொழுது முத்தமிழ் பேரவை என்ற கலைஞர்களின் இயக்கம் சார்பில் தமிழக அமைச்சர் மன்ன நாராயண அசாமி வாழ்த்துக்கூறியதையும், அவங்க திறமான ரஸிகங்க. நீங்க உங்கதிறமையெல்லாம்.காட்டணும்" என்று ஆசி கூறியதையும் முாபகமூட்டுகின்றர்கள்.
வா. தா. பி. கணபதிம்பதே. என்கிறர் பத்மநாதன். தவிலாலேயே பதிலளிக்கிருரர்கள் பழனிவே லும் கலியமூர்தியும்.
மங்தளம் எங்கும் தங்குகின்றது !

Page 45
* பல்கலைக்கழக அனுமதியில் பாரபட்சமில்லை ! A சிறுபான்மையினங்கள் மீது துவேஷமில்லை ! ! * கல்யாணமானதும் கணவன் பேரைத் தம்முடன்
இணைப்பதில்லை ! ! !
புன்னகை பூத்த நாட்டில்.
உலகின் மிகப்பெரிய நகரங்கனில் நான்காவது இடத்தைப் பெறுவது பீகிங், பீகிங் நகரமத்தியில் அமைந் துள்ளதுதான் தியன் அன்மென் என்ற சுதந்திர சதுக்கம் 1949-ல் சீனக் குடியரசை ஸ்தாபித்து முதன்முறையாக நாட்டுமக்களுக்கு தலைவர் மா சே துங் இங்கிருந்துதான் உரையாற்றிஞர். தியன் அன்மென் என்பது சமாதானத் தின் நுழைவாயில் என்று பொருள்படும் ச து க் கத் துன் மத்தியில் வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட் டுள்ளது. இதில் புரட்சிப் போராட்டங்களின் பிரதிபலிப் புகள் சித்திரவடிவில் இடம் பெற்றுள்ளன.
சதுக்கத்தின் மேற்குப்புறத்தில் கண் கவர் மண்டப
மொன்றும் கிழக்கே சீன சரித்திர புரட்சிகர நூதனசாலை யென் எழிலோவியமாகத் திகழ்கின்றன.
யப்பான் நாட்டைப்பற்றியும் அங்கு வாழும் மக்க ளின் மாண்பு பற்றியும் முன்பு எடுத்துக்கூறியிருந்த முன்னை நாள் வேம்படி மகளிர் கல்லூரி அதிபரான செல்வி மேபல் தம்பையாவே தனது சீன அனுபவங்களையெவ்லாம் ஒன்று திரட்டி என்னிடம் எடுத்துக் கூறுகின்ருர்,
தியன் அன் மென் சதுக்கத்தைப்பற்றிக் கூறியபின்னர் நீண்ட நெடுமூச்சுடன் என்னை நிமிர்ந்து பார்த்த செல்லி
ܬܬܐ
藝事
I

ή
75
மேபலை. யப்பான் நாட்டவரைப்போலவே சீன மக்களும் தலைகுனிந்துதான் வரவேற்பார்களோ ? என்கிறேன். "
*அதுதான் இல்லை. சீனமக்கள் ஆங்கிலேயரை வெறுத்து ஒதுக்கினலும் ஆங்கிலேயரிடமுள்ள சிறந்த நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்துள்ளார்கள் அவற்றில் கை குலுக்குவதும் ஒன்ருகும். தமிழ் நாட்டில் சந்தோஷமிகுதி யால் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவுவதுபோல சீன மக்க ளும் தமது அளவற்ற ம்கிழ்க்சி ஆரவாரத்தை கைகுலுக்கு வதன் மூலம் பரிவர்ந்தனை செய்துகொள்கிருர்கள்.
பெண் ஆண் வேறுபாடு காணவியலாது :
சீனுவைப் பொறுத்தமட்டில் பெண்கனை அனேகமாகப் பொது இடங்களில் காணமுடியாதென கூறுகிருர்களே ? இது எனது அடுத்த கேள்வி, வெறும் பம்மாத்துத்தன மான பேச்சு,
அங்கு ஒரு விசித்திரம் என்னவென்றல் பெண் எவர்,
ஆண் எவர் என்று இறகுவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாததுதான். எல்லோருமே அனேகமாக கறுப்புநிற நீண்ட கால்சட்டையும் நீ ல நிற மேற்சட்டையும்தான் அணித்து காணப்படுவார்கள், இதனல் வித்தியசம் காண்க பது இலகுவல்ல.
அவர்களது இன்னுேரு பழக்கம்கல்யாணம் ஆனதும்கூட தமது கணவரின் பேரை தம்முடன் இணைத்துக்கொள்ள மாட்டார்கள். அத்துடன் செல்வி என்ருே திருமதி என்றே எந்தப்பெண்ணையும் அழைப்பதில்லை. மாருக எவரையும் தோழர் என்றுதான் பெயரின்முன் குறிப்பிடுவார்கள்: பண்டைய சீனத்தில் நிலப்பிரபுத்துவமும் ஸ்தல எதேச் சாதிகாரமும் தலைவிரித்தாடிய காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம் தற்பொழுது விமோசன மடைந்து சமத்துவமாக வாழ்க்கை நடாத்துகின்றது, ,ולא מאי 5 מ', י"א מח"ט, האמנו

Page 46
76
சீனி தேசத்தில் தேசிய கிறுபரன்மை இனங்கள் மீது துவேஷம் காட்டப்படுவதாக அனேவு செய்திகள் கூறுகின் றனவே? உண்மையா என்று தொடருகின்றேன். சீனமக்கள் 畿 குடியரசின் பெரும்பான்மையினம் ஹான் இனத்தவர்களே இவர்களால் சோஸ்லிஸ்ப் புரட்சிக்கு முன்னர் சிறுபான்மை யினம் கொடூரமாக நடாத்தப்பட்டதாம். ஆனல் இன் றை நவசின் அவர்களுக்கு மொழிப்பிரச்&r தீர்வு உட்பட பல நன்ன்மகளை செய்துள்ளது.
அங்கு பல்வேறு மொழிகள் பேச்சு வழக்கிலுண்டோ?
சீன மொழியையே பிரதான மொழியாக கொள்கின் முர்கள். அடுத்துத்தரின் ஏனய மொழிகள் இடம்பெறு கின்றன. அண்மைக்காலத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள் ளது. அதனுல் ஒவ்வொரு பாட்சாலையிலும் ஆங்கிலம் இரண்டாவதுமொழியாகப் போதிக்கப்படுகின்றது, என்று பதில்ளித்த செல்வி மேபல் தம்பையாவை சீனுவின் கல்லி முறைபற்றி கூறுமாறு கேட்கின்றேன்.
கல்விமுறை
அங்கு ஆறுவரூடங்கள் ஆரம்பப் பாடசாலையிலும் பின்னர் மூன்று விருடங்கள் ம் த்திய கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு:சீகல்விபேர்தனமுறையை அமைத்துள்ளது: ஒவ்வொரு மாணவரும் ஒன்பது மாதகாலக்கி urrலை; படிப்பிலும் ஒருமாதம் எங்கேயாவது தொழிற்சாலைகளிலோ அன்றேல் விirயப்பண்ணைகளிலோ செலவிடுவர். இத ஞல்பர்ட்சர்லேவிாழ்க்கைமுறையிலேயேடு தாழிற் பயிற்சி யும் பெற்றுவிடுகின்ருர்கள்
பல்கலைக்கழகசீபிரல்ேசம் :
பல்கலைக்கழகப் பிரவேசங்கள் 6 Tsil IBIGOTLb அழைக்கின்
றன ? பாடசாலை வாழ்வு முடிந்த மாணவர்கள் உடனடி யாகப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லமுடி யாது. அவர்கள்

எங்காவது-வேலைசெய்யவேண்டும் இருவருடங்கள் சென்ற பின்னர் அவர்கள் வேலைசெய்த இத்தில் கிடைக்கும் சான்றிதழ் மூலம் ஏற்கனவே பாடசாலைகள் காட்டும் புள்ளி விபரங்கள் மூலம்தான் பல்கலைக்கழக அனு ம தி வழங்கப்படும். -
வேலைவாய்ப்போ அல்லது உயர்கல்வியோ அந்நிய நாட்டவருக்கு ஏற்றதாக அமைந்ததா? என அடுத்து வினவுகின்றேன்,
ஜப்பானைப்போலவே இங்கும் அந்த வசதி இல்லை. யென்று சுருக்கமாகக் கூறிவிடுகின்றர் செல்வி மேபல்,
உல்லாசப் பிரயாணிகளைப் பொறுத்தமட்டில் சீன என்ருல் ஏதோ பயங்கரமான ஓர் இடமாக உணர்கின் முர்களே என அபிப்பிராயப்பட்டபோது அதற்குப் பதி லளித்த செல்வி ம்ேபல் தம்பையா' 'உண்மை அப்படி யல்ல. நான்சுட சீன செல்வதற்கு முன்பாக மிக வும்: பயந்திருந்தாலும் எனது தவறை பின்னர்தான் உணர மூடிந்தது. மிகவும் அன்னியோன்னியமாக சீனமக்கள் அயல்நாட்டினருடன் பழகுவார்கள். அதிலும் இலங்கை மககளுடன் அவர்களது நேசமனப்பான்மை மிகவும் கூடுத லாகவேயுள்ளது.
சீனமக்களின் கலாசாரம் விவசாயப்புரட்சி, மக்கள்: பண்பாடு, மக்களது சம்பிரதாளங்கள் விஞ்ஞானத்தின் சாதனைகள்பற்றிய எல்லாம் விரிவாக கேட்க உத்தேசித் திருந்த எனக்கு ஏற்கனவே அவர் சுமார் இருபது நாட் கள்தான் சீனவிலிருந்ததாகக் கூறியது முட்டுக்கட்டையாக அமைகின்றது. درخ
நதிகள்:
உல்லாசப் பிரயாணிகளைக் கவரத்தக்க இயற்கை,
வனப்பு மிகவும் குறைவாக உள்ள மக்கள் சீனத்தில் நதிகள் மாத்திரம் கண்கொள்ளாக் காட்சிகளாக அமைந்

Page 47
78
துள்ளன வென்றும், அதன்மேல் அமைந்துள்ள பாலங்கள் கூட இலகுவில் மறக்க முடிபாதவகையில் இருப்பதாகவும் கூறுகின்ருர் செல்வி மேபல்.
அப்படி என்ன விசேடமோ என அதிசயித்த என்னைப் பார்த்து அவர் தொடருகிருர்,
அங்கு பொதுவாக அமைந்துள்ள மேம்பாலங்கள் விசேட கவர்ச்சியுடையவை. ஆற்றின் குறுக்கே ஒரு uחr 6מוט அமைந்திருக்கும் அதில் ரயில் வண்டிகள் ஒடும். அதற்கு மேலாக இன்னுமொரு பாலமமைந்து அங்கு சா 2%) 4: 6fr அமைத்திருப்பார்கள். யாங்கி சிக் கியாங் நதி இதற்கு நல்ல உதாரணம் அமைக்கின்றது.
சீனவில் இன்னுமொரு விசேடம் அதாவது நீண்ட மதிற்கவராகும். உல்லாசப்பிரயாணிகளை மிகவும் கவரும் இந்த மதில் ஆங்காங்கே சிதையுண்டுபோனலும் வெளி நாட்டவருக்குத் தமது பெருமையை கூறனண்ணி மதிலின் சில பகுதிகளை மெருகூட்டி புனரமைப்புச் செய்துள்ளார்கள்.
ஜனவரி மாதம் 31-ம் திகதிதான் சீனமக்களது வரு டம் பிறக்கின்றது அதை மிகவும் கோலாகலமாகக் கொண் டாடுவார்கள் தவிர வசந்தகால விழா ? வொன்றும் gar மக்களிடம் பிரபல்யம் பெற்றுள்ளது.
நவசீனம் தற்பொழுது அகழ்வாராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதால் அவர்களது பண்டையவாழ்வு முறைபற்றி இலகுவாக அறிய முடிகின்றது என்று கூறிய மேபலிடம் கரம்கூப்பி விடை பெறுகின்றேன்.
-எப்பொழுதும் புன்முறுவல் பூத்தமுகம். சாந்தமான பேச்சு குழந்தைகள்போல் விகல்பமற்ற உள்ளம் கஷ்டங் களை மிகைப்படுத்தாத சமநிலையான மனப்பான்மை வீடு களையும் சுற்றுப்புறங்களையும் அழகுமிளிர வைத்துக்கொள் ளும் பழக்கம் விருந்தினரை மனமார உபசரிக்கும் பண்பு
書
 

79
ஆகியவற்றுடன் இயற்கைச் செழிப்பும் மக்களின் பரந்த இயல்பும் கொண்ட சீனு உண்மையிலேயே ஒரு புன்னகை பூத்த நாடுதான்
--செல்வி தம்பையாவினது சீன நினைவுகள் எனது மனதில் அலை மோதுகின்றன.
எல்லாப் பாதைகளுமே சீனவை நோக்கித்தான் செல் கின்றன என்ற மாவோவின் வாக்கியம் அர்த்தபுஸ்டியுடன் எனது மனதில் சிரிக்கின்றது.

Page 48
வளமான வாழ்வுக்கும் வலுவான உடலுக்கும் அளவான சாப்பாடு வழிகோலும்
உணவுப்பொருட்களுக்கு நாட்டிலே தட்டுப்பாடும் விலையேற்ற மும் ஏற்பட்டுவிட்ட இவ்வேளையில் அளவுக்கு அதிகமாக மூன்று வேளையும் மூக்குமுட்டச் சாப்பிட்டு ஏப்பம்விடும் நம்மிற் பலர் இதனால் ஆபத்து வந்துவிட்டது என நினைக்கக்கூடு மல்லவா? ஆனால் அதிக உணவினால் ஆபத்தேயன்றி மித மான உணவினால் ஆபத்தில்லை; பதிலுக்கு உடல் நோய் நொடியின்றி வலுப்பெற்று ஆயுள் நீடிக்கும். இதை எப்படி என இங்கு விளங்கவைக்கிறார் யோகியார்.
அமைதியும், பக்தியும் தாண்டவமாடும் நல்லை ஞான சம்பந்தர் அ தீனம். அதிலிருந்து வருகின்றார் ஒரு யோகி. சாந்த சொரூபராகக் காட்சி அளிக்கும் அவர் முகத்தில் ஒரு தேஜஸ், அனுபவ ஞானமும் அறிவுச் சுடரும், அகத் தில் நிறைந்துள்ளதாக நீக்எம்மை அறியாமலேயே எம்முன் ஓர் உணர்வு தலை தூக்குகின்றது. கைகூப்பி வணங்குகின் றோம். ஆசீர்வதிக்கும் பாவனையில் சமிக்ஞை செய்கிறார்.
ஆம்! அவர் தான் சுவாமி ஸ்ரீ சிதானந்த யோகி,
மேலை நாட்டவர்களையே கவர்ந்திழுக்கும் யோகக்கலை யைப்பற்றி அறியும் ஆவல் எம்முள்ளத்தினுள் உந்துகின் றது. நாம் என்ன கேட்க நினைத்தோம் என்பதை ஊகித்து விட்டாரோ என்னவோ. புன்சிரிப்பொன்றை உதிர்க்கின்றார்.

81
அதுவே அவர் எந்தக்கேள்விகளையும் சமாளிப்பதற்கு தயாராகவிருக்கின்ருர் என்று எமக்கு உணர்த்துகின்றது.
வளமான வாழ்வு காணத்துடிக்கும் வாலிபர்கள் "கோழி தின்பது போன்று கண்டது கடியது எல்லாவற்றையும் உட்கொள்ளுகின்ருர்களே இச்செயல் உகந்ததா? என்று கேட்கிருர் எனது நண்பர்.
புன்னகைத்துக்கொண்டே சுவாமிகள், ஆகவே ஆகாது அளவான சாப்பாடே வளமான வாழ்வுக்கு மாத்திரமல்ல வலுவான வாழ்வுக்கும் வழிகோலும் என்ருர்,
கே! அப்படியாயின் அளவு முறையோ அன்றேல் கட்டுப்
பாடோ உணவு விடயத்தில் கூறமுடியுமா?
பதில் நிச்சயமாக இருபது வயதுக்கும் முப்பது வயதுக்கும் உட்பட்ட வாலிபர்கள் உட்கொள்ளக்கூடிய நாளாந்த உணவுத்திட்டம் பின்வருமாறு அமைதல் வேண்டும்,
காலையில் அப்பருவத்தினர் அரைப் போத்தல் பாலருந்த வேண்டும். அத்துடன் மிதமான உணவை உட்கொள்ள லாம், அதாவது இடியப்பமோ அப்பமோ, எண்ணிக்கையில் இவை பத்துக்குள்ளடங்கவேண்டும்.
மதிய உணவாக கிட்டத்தட்ட ஒரு இருத்தல் பெறு மானமுள்ள சோற்றுடன் ஒரு ருத்தல் மரக்கறியையும் புசித் தல் வேண்டும், அண்ணளவாக மதிய போசனம் இரண்டு இருத்தலாக அமையவேண்டும். அதற்காக யாராவதுதராசில் போட்டு அளந்து சாப்பிட முற்படுவார்களாயின் அது சிறு பிள்ளைத்தனமாகும். இரவில் அவர்களது உணவு ஒரு ருத்த லாக அமைதல் வேண்டும், சோற்றை உட்கொள்ளலாம் அல்லது லேசான உணவை உட்கொள்ளலாம். இதில் எவ் வித பேதமுமில்லை. y
கே: வயோதிபர்கள் கூட இந்த அளவு பரிணுமத்தைக்
கையாளலாமா?

Page 49
82
பதில்: அவர்சளுக்கு சராசரியாக இரண்டுருத்தல் உணவு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த அளவிலில் நின்றும் கூடுதல் கூடாது. கே: புலாலை மறுத்தானை.
பதில் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். அது வள் ளுவர் வாக்கு, மாமிச உணவில் அதிக சக்தி இருக்கிறதென்று கருதுவதற்கில்லே. அது குரோத குணத்தைத்தானே மனித ருக்கு அதிகமாக ஊட்டுகிறது. சாந்தமாகவோ அல்லது சிரித்துச் செயலாற்றும் தன்மையையோ மனிதர்களுக்கு அது அளிப்பதில்லை.
கே: நீங்கள் காரமான உணவையா அல்லது காரமற்ற உணவையா உண்ண உகந்ததாக ஆலோசனை கூறு வீர்கள்.
பதில் நிச்சயமாக காரமற்ற உணவையேதான் உண்ண வேண்டுமென நான் கூறுகிறேன். மிளகாய் குன்மவியாதி, நீரிழிவு, வாதநோய் போன்ற பலதரப்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு மூலகாரணமாக அமைகிறது. ஆரோக்கிய மான சுக வாழ்வைப்பாதிக்கிறது. பீட்றூட், கரட், கோ வா, கத்தரிக்காய், பயற்றங்காய், போன்றவற்றை உரிய முறையில் பாவிக்கலாம். நல்ல பலனளிக்கும்.
கே சில தாவர இலைகளோ அல்லது பூக்களோ நோய்க்கு நிவாரணிகள் என்று முன்னேர் கூறியுள்ளார்களே. பதில்: அம். ஆ. உதாரணமாக, முருங்கைக்காய் நரம்பு வளர்ச்சிக்கு ஒர் அருமையான மருந்து வல்லாரை பூச்சிகளை நல்லமுறையில் அழிக்கிறது. மூளைக்கு புத்துணர்ச்சியைப் பயக்கிறது. நரம்புநோய் அணுகவே அணு காது. 5/75/ வளை. அது மக்களுக்குக் கிடைத்த தேவாமிர்தமாகும். உரியமுறையில் பயன்படுத்தவேண்டும்.
ஆணுல் சிலசா மான்கள் கூடவே கூடாது. பாகற்காய் பித்தத்தை அதிகரிக்கும், இதனுல் பல தொல்லைகள்.

S3
இப்படியும் சில மரக்கறிகள் உள்ளன. அவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை சாதாரணமாக எந்தக் குடும்பப் பெண் ணுக்கும் தெரிந்தவையாகும்.
கே. செவ்வரத்தம் பூவைச்சிலர் உட்கொள்ளுகிருர்களே.
இது நல்லதா?
பதில்: சாதாரணமாக இது எங்கும் கிடைப்பதால் இதை நாம் மதிப்பதில்லை. ஆனல் இதன் சக்தி அபாரம். செவ் வரத்தம் பூக்களில் இருபத்தைந்து எடுத்து அவற்றை நன் முக அவித்தல்வேண்டும். பின் நன்கு வடித்து அவித்த நீரில் சிறிதளவு தேனைக் கலந்து உட்கொண்டுவந்தால், அசுத்தக்கிருமிகள் அழிவதுடன் உடலு & மெருகேறும்.
கே: இறக்குமதிப் பருப்புவகைகள் இப்பொழுது தட்டுப் பாடான நிலை  ைம  ைய அடைந்துவருகின்றனவல் ೧ು ಎr? இதற்கு மாற்றுமருந்து ஏதாவது உண்டா? பதில் நாம் அவ்வுணவுகளிலே ஊறித் திளைத்ததினுல் அவை இல்லாமல் போனது ஒரு பேரிழப்பாகத் தோன்று கின்றது. ஆனல் அவற்றிற்குப் பதிலாக சோழம், நிலக்கடலை குரக்கன், வரகு முதலியவற்றை நன்கு பயன்படுத்தல்ாம்.
கே! இதுவரையிலும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வழி சொன்னீர்கள். அடுத்து இல்வுலகிலும் அடுத்த உலகினி லும்வாழ வழி வகுக்கும் யோகக்கலைற்றி சிறிது அறிய விரும்புகிறேன். இக்கலை எல்லாருக்கும் ஏற்றதா? பதில்: நிச்சயமாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியது யோகக்கலை, கே: இதற்கு வாலிபர்கள், வயதானவர்கள் என்ற வித்தி
யாசமே இல்லையா?
பதில்: இல்லை. வாலிபர்கள், வயோதிபர்கள் மாத்திரமல் லாமல் நோயாளிகள் கூடக் கட்டாயம் செய்தல் வேண்டும்.
கே: இதனுல் நோய்கள் நீங்குமா?

Page 50
84
பதில்: நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்
Gast
உதாரணமாக ஆஸ்த்மா நோயுள்ளவர்கள் இப்பயிற்சி களை ஒருவருடம் தொடர்பாகச் செய்துவரின் ஆஸ்த்மா பூரண குணமடையும். வேறுபல நோய்களுக்குக் கூட இது நல்ல நிவாரணியாகும்.
எவ்வேளை இப்பயிற்சிக்கு உகந்தது?
பதில்: அதிகாலையே சாலச்சிறந்ததாகும்.
கே வாலிபர்களுக்கும் வயோதிபர்களுக்கும் வேறு வேறு
C
கே:
யோகாசனங்கள் உண்டா?
ஒரே முறைதான். ஆனல் நேரகாலங்களில் மாற்ற முண்டு. வாலிபருக்கு அதிகாலை 5 மணி முதல் 7மணி வரை பொருத்தமானதாகும். வயோதிபருக்கு காலை 4 மணி முதல் 6 மணி வரை பொருந்தும்.
வாலிபர்களிலும் பார்க்க வயோதிபருக்கு ஏன் அதி காலையிலேயே ஆரம்பிக்கின்றீர்கள்?
ஏனெனில் வாலிபர்களுக்கு எட்டு மணி நேரத்தூக்கம் முக்கியமானது, வயோதிபருக்கு அது அவ்வளவு அவ சியமில்லை. அவர்களால் அவ்வளவு நேரம் தூங்ஏ வும் இயலாது.
யோகாசனப் பயிற்சி தொடங்குமுன் ஏதாவது நடை முறைகளைக் கையாளுகிறீர்களா?
பதில்: ஆம், கண்டிப்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்
ઉ6:
தல் வேண்டும், இதன் தாற்பரியம் என்னவென்றல், இரவு முழுவதும் வறண்டிருந்த சுவாசப்பையும் மற் றும் உறுப்புக்களும் சிறிதளவு ஈரலிப்புத் தன்மையும் புத்துணர்வும் இதன் மூலம் பெறும் அப்பொழுது இப் பயிற்சிகள் இலகுவாவதுடன் நல்ல பயனுமளிக்கும்.
எவ்வளவு பேர் உங்களிடம் பயிற்சி பெறுகிறர்கள்?

L
Gy; :
85
சுமார் 300 பேர் வரையில். இதில் சிலர் பெண்கள் ஆஸ்த்மா நோய் காரணமாக வந்தவர்கள்.
இப்பயிற்சி வகுப்புகளை எங்கெங்கே நடாத்துகின்றீர்
a Git ?
நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம், காரைநகர், நீராவி யடி ஆகிய இடங்களில், அத்துடன் அகில இலங்கை ரீதியிலும் விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளேன்:
: இந்த ஆசனங்களை மாலைப்பொழுதில் செய்யமுடியாதா?
செய்யலாம். உணவுண்டு ஐந்து மணித்தியாலங்கள் சென்றிருக்கவேண்டும்.
புலால் உண்பவர்கள் யோகாசனம் செய்யலாமா?
புலால் உண்பவர்களோ, மது அருந்துபவர்களோ செய் யலாம். ஆனல் போதிய பலனளிக்காது. குரோதத் தன்மையை வளர்ப்பது புலால் சாந்தகுணத்தை அபி விருத்தி செய்வது யோகாசனம் எனவே இரண்டிற்கும் ஒத்துவராது. ஆகவே புலால் உண்பர்கள் நாளடை வில் அப்பழக்கத்தை நிறுத்தியே ஆகவேண்டும்,
புலால் உண்பவர்க்கும் மது அருந்துபவர்க்கும் போதிய பலனளிக்காது" என்கிறர் சுவாமி சிதானந்தயோகி.
கே? இன்னுமொன்று கேட்கவேண்டும். ஏன் பத்து வயதிற்
குட்பட்ட சிறுவர்கள் யோகாசனத்தில் பங்குபற்றுவ தில்லை.
பதி; அவர்களால் நல்ல முறையில் இதைச்செய்ய இயலாது.
அவர்களது சுரப்பிகள் இதற்கு இடமளிப்பதில்லை. ஆனல் செய்யமுடியாது என்று சொல்வதற்கில்லை. நோய்வாய் பட்ட குழந்தைகள் சிலர் இதைச் செய்கிருர்கள். நா

Page 51
86
மும் சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு ஏற்ற பயிற்சிகளைக் கொடுத்து நோயைக் குணப்படுத்துகின்ருேம், கே: ஆசனங்களில் பலவகைகளிருக்கலாம். அவற்றுள் ஒன்
றினல் ஏற்படும் நன்மைகளை விபரிப்பீர்களா?
பதி: ஆம், பத்மாசனத்தை எடுப்போம், இதை ஒழுங்காகச் செய்து வருவதால் பல நன்மைகளுண்டாகின்றன. சுவாசப்பைகள் வீரியம் அடைகின்றன. பிராணவாயு நன்கு சுவாசிக்கப்படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படு கின்றது. வருடக்கணக்காகத் தீராமல் இருந்துவந்த வயிற்றுவலி மாயீமாக மறையும் வாய்ப்பேற்பட்டது. சுசுமநாடி (வெள்ளை நரம்பு) முதுகுத்தண்டினுள் இருப் பது. இதுதான் வலுவடைகின்றது இதனுல் உற்சா கத்துடன் செயல்பட முடிகிறது. நிமிர்ந்து நடமாட லாம். இந்நரம்பு நோய்வாய்ப்பட்டால் கூன் விழுவது தவிர்க்கமுடியாததாகும். கிழவர்களைக்கூட வாலிபர்க ளாக்கும் வல்லமை பெற்றது இந்த ஆசனமாகும்.
பூவோடு சேர்ந்த நாரும் புண்ணியன் தலையேறும் என்பார்கள் அதேபோல்தான் உங்களைச் சந்தித்தபின் எனக்கும் யோகக்சலையில் ஆர்வம் முகிழ்க்கின்றது எனக்கூறிக் கரங்கூப்பி விடைபெறுகிருேம்.
புன்சிரிப்பொன்ருலேயே ** எப்பவும்வாருங்கள் ?? என்பதுபோலக்கூறி விடையளித்தார் சுவாமி பூரீ சிதானந்த யோகி,
 

* அமிர் இராசு தொண்டா ? இவர்களின் பின்
திரண்டு நிற்கும்
இலங்கைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கவேண்டும்.
விண்டனின் பிரபலமான சவோய் ஹோட்டல் உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பி வழிகின்றது ஜப்பா னியர்கள். அமெரிக்கர்கள், ஆசியர், ஆபிரிக்கர் மஞ்சள் நிறத்தினர், வெள்ளையர், மண்ணிறத்தவர், கறுப்பர்கள் என்ற பாரபட்சமேயில்லை. அனைவரும் பணத்தில் நன்கு புரள்பவராக இருக்கவேண்டும், அவர்களது ஆடை அகணி களே அதைச் சொல்லாமல் சொல்கின்றது,
தமிழக நிதியமைச்சரும், அகில இந்திய அண்ணு திரா விட முன்னேற்றக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான திரு. நாஞ்சில் மனேகரன் அங்குதான் தங்கியிருந்தார். காலை எட்டரைமணி 1 சவோய் ஹோட்டலின் கீழ்மாடி ஒரு வரவேற்பு மண்டபம் ஆங்காங்கே பலர் கூட்டம் கூட்ட மாகக் கூடியிருக்கிறர்கள். அதே மண்டபத்தின் ஒருமூலையில் தொலைபேசித் தொர்புனரின் அறையும் வரவேற்பாளர்களை உபசரிக்கும் அறையும் காணப்படுகின்றன. தொலைபேசி இயக்குநர் " வலு பிஸியாகக் காணப்படுகின்ருர், அவரிடம் அறை இலக்கம் 335 கான இணைப்தை எனக்காக கோரு கின்றேன். அங்கிருந்து குரல்வந்ததும் ரிசீவரை என்னிடம் நீட்டுகின்ருர் ' தொலைபேசி இயக்குனர்.

Page 52
88
* வணக்கம் ! மாண்புமிக்க நிதியமைச்சர் அவர்களே பேட்டிக்காக வரு படி அழைத்திருந்தீர்களே . அது தொடர்பாக" என்று ஞாபகமூட்டுகின்றேன்.
ஆமாம் 1 இன்னமும் அரைமணித்தியாவத்திலே எனது அறைக்கு வந்திடுங்க. தயாராகக் காத்திருக்கிறேன். என்று பதிலளிக்கின்ருர் நாஞ்சில்,
மீண்டும் மண்டபத்துக்குத் திரும்பி, அங்கு வசதியாக இருந்த ஆசனங்களிலொன்றில் அமர்ந்தவாறே பண்ட பத்தை நோட்டம் விடுகின்றேன். ஜப்பானியர்கள் இருவர் முதலில் சந்திக்கும்பொழுது ஒருவருக்கொருவர் தத்தமது தலைகளை முழங்கால்வரை சாய்த்து முகமன் கூறுகின்றர்கள்: வெள்ளை யர் தொப்பியை ஒருதரம் எடுத்துவிட்டு மீண்டும் அணிந்த வாறே தம்மவர்களுடன் உரையாடுகிருர்கள். சரம் கூப்பும் ஆசியர்களும் ஆரக்கட்டித்தழுவி அரவணைக்கும் காப்பிணி களும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றர்கள்.
ரூம் நம்பர் 335 கதவை லேசாகத் தட்டுகிறேன். என்னை வருமாறு வந்தகுரலைத் தொடர்ந்து கூள்ளே நுழை கின்றேன். எடுத்த எடுப்பிலேயே சவரக்கூடிய ஆஜானுபா குவான தோற்றம், அறிவுக்கும் ஆற்றலுக்கும் கட்டியம் கூறும் பரந்தநெற்றி ! பெரிய போட்டோகுரோமிக் கண் ணுடி சிறிய கீற்று மீசை கையிலே சிந்திர வேலைப்பாடமைந்த ஒரு சிறியகோல் சூட்டுடன் தோற்றமளித்தார்.
மேற்கு நாடுகளுக்கு வருவது இதுதான் முதல் தட வையா ? என்று ஆரம்பிக்கின்றேன், -
சோவியத் யூனியனின் அழைப்பை ஏற்ற மேதின வைபவங்களில் கலத்துகொள்வதற்காக அங்கு சென்றேன், வரும்வழியில் செக்கோஸ்லாவாகியாவிலும் சில தினங்கள் கழித்தேன். இப்பொழுது லண்டனுக்கு வந்துள்ள நான் பாரிஸ், ரோம் வழியாக தாயகம் பயணமாவேன். மேற்படி நாடுகளுக்கு இதுதான் முதல்தடவையாக விஜயம் செய்
கிறேன்.
۶۰ بریدهه
al

89
சோவியத் ரஷ்யாவிற்கும் செக்கோஸ்லாவகியாவுக்கும். உத்தியோகபூர்வமாக விஜயம்செய்தீர்கள். அங் கி ருந்து தமிழகம் பழகவேண்டியது என்ன ?
அவ்விருநாடுகளிலும் உழைக்கும் வர்க்கம் மனநிம்ம்தி யோடு நிறைவோடு எல்லாம் பெற்று. நாளையைப் பற்றிய கவலையின்றி வாழுகின்ற காட்சியைப்பார்க்க மு டி ந் த து இந்த இருநாடுகளிலும் தனிமனிதனை அவன் இளைஞனலும் சரி முதியவனென்ருலும் சரி அல்லது யுவதியோ கிழவியோ ஆட்கொண்டிருக்கின்ற ஒரே சக்தி அல்லது ஒரே உணர்வு தன்னம்பிக்கை தான் திட்டமிட்டு தொழில்புரியும் பாங்கும்
புதிய விஞ்ஞான தொழில் நுட்பங்களில் அவர்கள் காட்டும்
ஆர்வமும் அக்கறையும் தான் அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான ஆதாரங்களும் அவர்களை வாழவைக் கும் லட்சியங்களுமாகும்.
பிச்சைக்காரர்களோ விவசாயிகளோ கிடையாது
குறிப்பாக இவ்விருநாடுகளிலும் திருட்டு இல்லை விபச்
சாரம் இல்லை. பிச்சை எடுப்பவர்கள் இல்லை எனவே இவ்
விரு நாடுகளிலுமிருந்தும் தமிழகம் கற்கவேண்டியவை ஏரா ளம் ஏராளம்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தமிழகத்தில் பரவலாகக் கையாளத் தொடங்கவில்லையே?
காலப்போக்கில் இந்நிலை அபிவிருத்திகாணும். தமிழ் மொழிச்சீர்திருத்தம் காலஞ்சென்ற ஈ. வே. ரா. பெரியா ரின் தணியாத ஆசை. பெரியாரின் லட்சியங்களை, அண்ணு வின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதுதான் அ தி. மு. க. வின் முக்கிய நோக்கம்.
அண்மையில் திரு. ஏ. வி பி. ஆசைத்தம்பி மறைந்தார். பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தமிழ் பண்பாடு களுக்கு முரண்பட்டவை அல்லவா?

Page 53
90
காலஞ்சென்ற திரு. ஆச்ைத்தம்பியின் மறைவு ரொம்ப வேதனைக்குரியது. ஒரு காலத்தில் நாமனைவரும் தி. மு க. வில் ஒன்ருக இருந்தவர்கள். ஒருமித்துச் செயல்புரிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவரது எதிர்பாராத மறைவு அ. தி. மு. க. தலைவர்களைக் கடுமையான தாளமுடியாத வேதனைக்கு ஆளாக்கியதில் ஆச்சரியமில்லை. எனினும் அஞ்சலி செலுத் தச் சென்ற இடத்தில் மா. பொ. சி. மதுரைமுத்து, நாராயண சாமி, முதலி போன்றேர் தாக்கப்பட்டது கேவலமான, முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவமாகும். அதை ஞாபகப் படுத்துவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மனிதாபிமானம் நிச்சயமாகத் தனது ஆதரவைத் தராது.
அ. தி. மு. க. வினது பாரிய பொறுப்புகள் அனைத்தும் சிரேஷ்ட தலைவரான உங்களையே சாரவேண்டும். ஆனல் அவத்றில் சில திரு. நெடுஞ்செழியனது கைக்கு மாறுகின் றனவே?
அ. தி. மு. க. கூட்டுப்பொறுப்பில் நம்பிக்கையுள்ள கட்சி. எனவே ஜனநாயக மரபிற்கும் முறைக்கும் ஏற்ப அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. தவிர ஒருவர் இரண்டு பொறுப்புக்களை வகிக்கக்கூடாது என்பது கட்சியின் முடிவு. உதாரணமாக நிதியமைச்சரான நானே வேறு பொறுப்பான பதவிகளையும் எனதாக்குவது சரியில்லை, எமது முதல்வர்கூட தமது பொறுப்புகளை மட்டும் தானே கவத்துக்கொண்டு ஏனைய முக்கியமான பொறுப்புக்களை அந்தஸ்துக்களை மற்றவர்களுக்கு வளங்கியதன்மூலம் ஜன நாயக நெறிமுறைகளுக்கு இலக்கணமாகத் திகழ்கிருர்,
அ. தி.மு. க. வினது சாதனைகள் பற்றிச் சொல்வீர்களா?
சுருக்கமாகச்சொன்னுல் பொதுமக்கள் மத்தியில் லஞ்ச, லாவண்ய ஊழல்களுக்கு அப்பாற்பட்ட ஆட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பொறுப்புக்களில் கட்சி சியோ, உறுப்பினர்களோ தலையிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது.

91
தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு அதிக கண்டனம் தெரிவிக்கும் நீங்கள், ஈழத்தில் தமிழர்கள் மத்தியில் சிங் களம் புகுத்தப்படுவதையும் ஊடுருவுவதையும் கண்டும் பாராமுகமாக இருக்க முடிகின்றதா?
பாராமுகமாக இருக்கின்ருேமே என்பது முழுக்க முழுக்க கற்பனையானது. பொதுவாக திணிப்பு எங்குஇருந்து வந் தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அ. தி. மு. க" ஏற்றுக்கொள்ளாது, தாங்கிக்கொள்ளாது. தமதுஎதிர்ப்பைத் தெரிவிற்பதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமக்கெனச் சில வழிமுறைகளைக் கையாள்வதுண்டு அ. தி. மு. க. விற்கு தனிமுறையுண்டு. தனிவழியுண்டு. அந்த அடிப்படையில் அது தன்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக முதலமைச் ரைப்பற்றி அடிக்கடி ம்ேற்குநாடு களின் ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன என்ற போது "அப்படியா" என்ற நிதி அமைச்சர், அவற்றைப் படிப்பதில் அகமகிழ்வுடன் ஆர்வம் காட்டினர். இடையில் புகுந்த அவரது நண்பர் ஒருவர் "டிக்கிங்காம் பலளிக்குப் போகவேண்டும் நேரமாகிவிட்டது எனத் தெரிவித்தார். எங்கே இந்தப் பேட்டி இடையிலேயே முறிந்துவிடுமோ என்ற எனது நெஞ்சின் துடிப்பை அனுமானித்த திரு. நாஞ்சில் மனே கரன் தனது மனைவியையும் மற்றவர்களையும் அனுப்பிவிட்டு என்னிடம் மீள்கின்றர்.
அண்மையில் "ஒப்சோவர்?? இதழொன்றில் வெளி வந்த சட்டுரையொன்றில், எம். ஜி. ஆர். ஓர் அரசியல் அஞ்ஞானி அரசியலறிவில் அவர் ஒரு சைபர் என சோ குறிப்பிட்டதாக அறிவித்தேன். அதற்குப் பதிலளிக்கின்ருர் நாஞ்சில்,
ஜனநாயக ஆட்சியில் தனிநபர் சுதந்திரத்திற்கு தனி மரியாதை உண்டு. அந்தச் சுகந்திரத்தைப் பயன்படுத்துவது அவரவரது இயல்புகளை சிந்தனைகளை ஒட்டியது. கத்தி மருத்து வரின் கையிலிருந்தால் உயிரைக் காப்பதற்கு உதவுகின்றது,

Page 54
92
ஆனல் கொலைஞனின் கையிலிருந்தால் உயிரைப்பறிப்பதற்கு பயன்படுகின்றது.
இந்திய பாராளு மன்றத்தில் பலவருடங்கள் பணி புரிந்ததன் மூலம் உங்கள் அனுபவம் மெருகூடியதோ?
இந்தியப் பாராளுமன்றத்தில் பதினைந்து வருடம் பணி புரிந்தேன். முற்போக்கான கருத்துக்களுக்கு ஆதரவு தெரி விக்கின்றவகையில் தொலைதுரப் பார்வையோடு விசாலமான இதயத்தின் அடிப்படையில் நான் பணியுரிந்துள்ளேன். கட் சிக்கு அப்பாற்பட்ட அல்லது மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த அனைத்துத் தலைவர்களோடும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவன். எதிர்க்கட்சிகளை எதிரிகளின் கட்சிகளாக நோக்காத அளவிற்கு அமரர் அண்ணு அவர் களால் பயிற்றுவிக்கப்பட்டவன். மாற்ருன் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும், அவர்களது கருத்துக்கள் ஏற்புடைத்தான கருத்துக்களாக அமைந்தால் ஏற்றுக்கொள்ளவோ நிறை வேற்றிக்கொள்ளவோ தயங்கக்கூடாது. என உள்ளத்தால் துடிப்பவன் நான். இத்தகைய உணர்வுகளின் வார்ப்பிட மாக பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்ன்ை உருவாக்கியுள்ளேன். அந்தப் பலமான அடிப்படை தமிழக சட்டமன்றத்தில், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றது. எனக் கென்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ எதிரிகளே கிடையாது " என்பது எனது கணிப்பு நண்பர்களின் நிலப்பரப்பு விரிவடைகின்றது என்பது எனது
மேற்குலகில் ஒரே ஒரு தமிழ் மாத வெளியீடான லண் டன் முரசில் வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறை கொள் ளுமா ?
அதனை வளர்ப்பது எனது கையிலில்லை. சம்பந்தப்பட்ட வர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உரியமுறையில் அணுகினல தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும்.
لې؟
*
 

--
93
அ, தி. மு. க. வினது ஆதரவாளர்கள் பலர் இங்குமிருக் கிருர்கள், அங்குமிருக்கிருர்கள். எ ன் வே உலகரீதியாக விஸ்தரிக்கப் படுமா ?
அனணுவின் லட்சியங்கள் அனைத்துலக அளவிற்குப் பரவவேண்டும் என்பது எமது விருப்பம். ஆனல் அந்த லட்கியங்களை அ. தி. மு. க. அமைப்பின்மூலம்தான் உரு வாக்கிட முடியும் என்று எண்ணிடத் தேவையில்லை, உல கில் ஏதாவதொரு கட்சி அல்லது ஆட்சி அந்த லட்சியங் களை நிறைவேற்றுமானல் அதற்கு ஆதரவுதர வேண்டிய தார்மீகக் கடமை அப்பகுதிகளில் வாழும் தமிழ்ச்) சமுதா யத்தைச் சார்ந்தது.
தமிழக சட்டசபை நடவடிக்கைகள் டெலிவிஷனில் காட்டப்படப் போவதாக செய்திகள் வெளிவந்தன.
அதுபற்றி. இதுவரையில் அதற்கான பரிசீலனைக் குறிப்பு ܂ ܬܐ
களே முற்றுப்பெறவில்லை.
தஞ்சாவூரி இடைத்தேர்தலில் இந்திராகாந்தி போட்டி யிடுவாரா ?
நிச்சயமாக இல்லையென்றே நான் கூறுவேன்.
தமிழீழம் தனிநாடாகும் பட்சத்தில் அது தனித்தியங் காமல் தமிழ்நாட்டுடன் இணையவேண்டும் எனவும், தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக செயல்படவேண்டும் என்றும் சிலர் கூறுகின்ருர்களே. இது சாத்தியமாகுமா ?
பிரச்சனைகள் உருவாகுமுன்பே நாமாகக் கற்பனை செய்து கொண்டு விடைகாண முற்படுவது வீண் வேலையாகும். பாலத்தை நெருங்கும்போதுதான் கடப்பதற்கு முடிவுசெய்ய வேண்டும். தவிர உங்களது கேள்வியில் கூறப்பட்டுள்ள சிலர் யாரென்பதை ஈழமக்கள் சரியாக இ ன ம் க ன் டு கொள்ளவேண்டும். பாதை தவறிய கால்கள் என்றுமே ஊர்போய்ச் சேர்வதில்லை. வெளியார் தலையீடு இந்த விச

Page 55
94
யக்தில் கூடாதென்பதே எனது வாதம். போ லி யா ன வாதங்களுக்கு செவிசாய்காது அமிர்தலிங்கம், தொண்ட மான், இராசதுரை பே ன்ற தலேவர்கள் பின் திரண்டு நிற்கும் மக்கள் கூட்டம் ஒன்று கூடி தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கவேண்டும். வலுப்படுத்தவேண்டும். வளம்பெற வேண்டும்.
இங்கிலாந்தின் புதிய ஆட்சி பற்றி உங்களது கருத்துக் கள் எவை,
தாய்க்குலத்தைச் சார்ந்த ஒருவரி முதன் முறையாக பாராளு மன்றங்களின் தாய்வீடு எனக்சருதப்படும் பிரிட் டானியாவின் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளது வரவேற்புக்குரியது. பாராட்டுக்குரியது. மகிழ்சிக் குரியது. உளமார வாழ்த்துகிறேன். அது தனது பணிகளை இன்னமும் சரியாகத் தொடங்க ஆரம்பிக்சவில்லை. எனவே அதைப்பற்றி சொல்லுகிற அளவிற்குக் காலம் கனியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் மூலதனமிட வெளிநாட்டவர்களுக்கு அனு மதி வழங்கப்படுமா?
நிச்சயமாக மத்திய சர்க்காரின் அனுமதியைப் பெற்று தமிழகத்தில் முதலீடுசெய்ய முன்வருவோர்க்கு அணைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றது தமிழக அரசர்
மலேஷியாவின் தமிழ்நேசன் சஈர்பிலும், தமிழீழத்தின் ஈழநாடு சார்பிலும், லண்டனில் லண்டன்முரசு சார்பிலும் உங்களுக்கு எனது "மனமார்ந்த நன்றிகள் திரு. நாஞ்சில் மனுேகரன் அவர்களே, வணக்கம்.
நன்றி திரு. ஜெகதீசன், வணக்கம்
臀
 

பேச்சுவார்த்தைகள் மூலம்
ஒரு சமரசம்
காணமுடியுமா
திரு. சிவசிதம்பரத்திடம் கேள்வி
தீமிழீழத்தின் த லை ந க ரா ன யாழ்ப்பாணத்துக்கு அணித்தாகவுள்ளது. நல்லூர் என்ற நகரம். தேவர்களின் இடர்கள் தீர்த்து வைத்த முருகப்பெருமான் அங்கு கோயி லாகக் குடிகொண்டுள்ளார். அதேபோல் அவதியுறும் தமி ழிழ மக்களது துயரைத்துடைப்பதே தனது பணியாகக் கொண்டு அங்கு பாராளுமன்றப் பிரதிநிதியாக விளங்கு கின்ருர் திரு. எம். சிவசிதம்பரம். தமிழர்விடுதலைக் கூட் டணி என்ற ஏகோபித்த அமைப்பின் தலைவரும் அவர்தான்.
தோற்றத்தில் உயர்ந்து புகழால் வளர்ந்து பண்பாலும், நேர்மையாலும் பலரையும் கவர்ந்த அவர் அமெரிக்கா சென்று திரும்பும் வழியில் லண்டனில் தங்கினுர், அவர் என்ன சொல்கிருர் தெரியுமா? படியுங்கள்!
'அமரர் ஜி. ஜீ. பொன்னம்பலத்திடம் அ ர சி ய ல் பாடம் கற்ற தாங்கள் அதனல் அரசியல் வானில் பெற்ற அனுபவங்கள் என்ன?
"தமிழ் மக்கள் உரிமையற்ற மக்களாக வாழ்ந்தால் எப்பொழுதும் ஒற்றுமையாக ஒரே அணியில் ஒரே நோக் கத்துடன் செயல்படவேண்டிய அவசியத்தை முக்கியமான பாடமாக அவரிடமிருந்து சுற்றுள்ளேன். எந்த சந்தர்ப்

Page 56
96
பத்திலும் இனத்தின் நன்மையை முன்வைத்துச் செயல் பட வேண்டும். என்ற அரசியல் கோட்பாட்டையும் அவ ரிடமிருந்து கற்றுள்ளேன். அமரர் ஜீ. ஜி. யும், தந்தை செல்வாவும் இணைந்திருக்கின்ற காலங்களில் தமிழ் மக்க ளுடைய பலம் உச்சகட்டத்தில் இருப்பதைக் கவனித்து அந்த ஒற்றுமை வழியில்தான் ந ம து இனத்தினுடைய விமோசனம் உண்டு என்பதை நன்ருக உணர்ந்து செயல் படுகின்றேன் ??
* தமிழீழம் சுயஉரிமையுள்ள தன்னுட்சி பெற்ற சமு தாயமாக மலர்வதற்கு த. வி. கூட்டணி முன்வைத்துள்ள நடவடிக்கைகள் என்ன ?
"" நமது அணி இன்றைய சூழ்நிலையில் காந்தி அடிகள் காட்டிய அகிம்சை, சட்டமறுப்புப் போராட்டங்களில் ஈடுபடுவதுதான் சிறந்த முறை என்றுதான் கருதுகின்றது. பல சட்டமறுப்பு இயக்கங்கள் வடகிழக்கு மாகாணங்க ளின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது என்பது தென்படுகின்றது, இந்தச் சட்ட மறுப்பு இயக்கங்கள் தலைவர்கள் மத்தியில் மட்டும்தான ? அல்லது லட்சக்கணக்கான தொண்டர்களும் சேர்ந்து நடத் தும் இயக்கமாக அமையுமா ? என்பது சந்தர்ப்ப சூழ்நிலை களைப் பொறுத்தது. அரசாங்கக்கட்சி சார்பில் நாட்டைப் பிரிக்கப் பிரசாரம் செய்கின்ற மக்களுக்கு சிறைத்தண்ட
னையும் கசையடியும் கொடுக்கவேண்டும் என்று தனியார்
பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது, இதை அரசு ஏற்றுச் சட்டமாக்குமென்றல் அதை எதிர்த்து தண்டனையை ஏற் கத் தலைவர்களும், தொண்டர்களும் தயாராகிக்கொண்டி ருக்கின்ருேம், இப்படியான சட்டமறுப்புஇயக்கங்கள் ஆரம் பித்து நடந்துகொண்டிருக்கின்ற வேளையில் உள்நாட்டு அரசியலிலோ, அல்லது சர்வதேச நிலையிலோ மாற்றங்கள் ஏற்படுத்தி அவற்றை முற்ருகப் பயன்படுத்தி நமது சுதந் திரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவ்ோம்.
t
菁

97
அகிம்சையைக் கைக்கொள்ளுகின்ற அதேவேளையில் 77 ம் ஆண்டு ஆகஸ்மாதம் நடைபெற்ற அசம்பாவிதங்களும் மக்கள் மீதான அபாயகரமான தாக்குதல்களும் மீண்டும் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கவும் அவற்றை முறி யடித்துப் போராடவும் ஏற்ற வழிவகைகளை நாம் மேற் கொண்டுள்ளோம்."
* தமிழீழத்திக்காக போராடும் இயக் கங் களை யும் போராடத் துடிப்புள்ள இலைஞர்களையும் அரசு தணிக்கை செய்து வருகின்றதா'?
" அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என் பதை நன்கு உணர்ந்துதான் இவ்வியக்கத்தில் ந ம து இளைஞாகள் சேர்ந்துள்ளார்கள். ஆகையினுல் எதையும் தாங்கும் உள்ளம் கொண்டவர்களாகத்தான் அவர் க ள் இருப்பார்கள். ஆனல் மனித உரிமைகளை மீறுகின்ற அடக்கு முறைகளை அரசு கையாளுகின்றபொழுது சர்வதேச ஸ்தாபனங்களிலும், உள்நாட்டு நீதிமன்றங்களிலும் அவை களுக்கு எதிராகக் குரலெழுப்பி அதிகாரம்தேட த. வி. கூட்டணி முயற்சி எடுக்கும்.'
" தமிழீழம் தனிநாடாகும் பட்சத்தில் இந்தியாவுடன் இணைந்தே செயல்படவேண்டும் எனவும், அதன் ஒரு மாநில மாகவே. பணிபுரிய வேண்டும் எனவும் ஒருசிலர் கூறி வருவதை த. வி கூ. ஆதரிக்குமா ?”
' கூட்டணிக்கு அவ்வித எண்ணமில்லை. சு யா ட்சி பெற்ற மக்களுக்கு தம்மைத்தாமே ஆழவும், சுபீட்சமான எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நன்கு தெரியும்.'
* சைபிரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைகள்மூலம் பிரச் சனைகள் தீர்வுகாணவுள்ளதையும், எகிப்து - இஸ்றேல் மனஸ்தாபங்களில் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர் வு காணப்பட்டதையும் அண்மைக் காலங்களில் பார்க்கமுடிந் தது. தமிழீழம் பேச்சுவார்த்தைகள்மூலம் ஒரு சமரசம் காண மூடியுமா ? '

Page 57
98
• எம்மைப் பொறுத்தவரையில் எக்கட்டத்திலும் நாம் பேச்சுவார்த்தைக்குத் த பாராக இல்லை. அ ப் படி யா ன பேச்சுவார்த்தை கன்ள ஆரம்பிக்கின்ற பொறுப்பு சிங்கள அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் சார்ந்தது. பாரதப் பிரதமர் திரு. டொரார்ஜிதேசாய் சமரச பேச்சுவார்த்தை களுக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்குத தயாராக இருப்பதா கக் கூறியுள்ளார் என்பதையும் அதற்குத் த. வி. கூ என் றுமே ஆயத்தமாக இருக்கின்றது என த. வி. கூ, செய லார் நாயகம் கூறியதையும் இங்கு சுட்டிக் காட்டவிரும்பு கின்றேன்.
நைஜீரியா நாட்டிலிருந்து விடுதலைகோரிய "பயப்ரா" நாட்டினர் விடுதலையின் உச்சக்கட்டத்தில் பசியாலும், பட் டினியாலும் நலிவுற்றனர்" தமிழீழ மக்களுக்கு இது ஒரு பாடமாகாதோ?"
"அங்கு உள்ள சூழல் வேறு. ஏனெனில் உணவுப் பொருட்களெல்லாம் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எங்களது முக்கிய உணவான அரிசியை நமது பகுதிகளிலேயே நமக்குத் தேவையான அளவு உற்பத்தி செய்து கொள்ளலாம். அகையினூல் பயாபரா? நிலை இங்கு
ஏற்படுவதற்குக் காரணமில்லை என்றுதான் நான் கருது
கின்றேன்."
"ஐம்பதுக்கு ஐம்பது மாவட்டசபை, மலையகத்தமிழர் களது பிரச்சனை, கல்வியில் தராதரப்படுத்துதல் அரசக ரும மொழிச்சட்டத்தால் பாதிப்பு போன்ற இவையெல் லாமே கடந்தகாலத் தேர்தல்களின் முன்வைக்கப்பட்டு எதிலுமே வெற்றி கிடைத்ததாக இல்லையே?"
"வெற்றி கிடைத்ததாக இல்லை என்று கூறுவதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இவை எல்வாவற்றிலும் எதிர்ப்பின் தாக்கத்தால் அரசாங்கங்கள் ஒரளவு விட்டுக் கொடுத்துள்ளன என்பதை யாராலும் மறுக்கமுடியாது உதாரணமாக, மொழியை எடுத்துக்கொண்டால் மொழிப்
4.

99
பிரச் ச னை தீர்க் கப் பட்டு விட்டதாக பலமுறை சிங்களத்தலைவர்கள் கூறிவந்தாலும், காலத்துக்குக் காலம் இன்னும் பிரச்சனை உண்டு. அதற்கு இந்த வழியில் தீர்வு காணுவோம். நியாயமான நேர்மையான அரசியல் நோக் கங்கள் முற்ருகத் தோற்கடிக்கப் பட்ட தென்ற வரலாறே இல்லை. சில கால கட்டங்களில் அவை மங்கி இருந்திருக் கலாம். ஆனல் இறுதியில் வெற்றிகண்டதுதான் வரலாறு நம்முடைய இயக்கத்தின் எதிர்காலம் இதற்கு விதிவிலக் காக இருக்கமுடியாது!?
*ஒரு காலத்தில் தமிழினத்தில் பலபிரிவுகள் இருப்ப தால்தான் எமது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது எனவும், அதனல் ஒற்றுமை அவசியம் எனவும், வலியுறுத் தப்பட்டு வந்ததன் பலஞக தமிழ்த் தலைவர்கள் எல்லோ ரும் ஒன்று சேர்ந்து பெரும் பான்மை வாக்குகளால் திரண்ட பலத்துடன் பாராளுமன்றத்துக்குச் சென்றனர். பலன்?"
"இந்த நிலைமை ஏற்பட்டு இரண்டாண்டுகள் ஆகின்றன இதன் பலனுக நாட்டின் சரித்திரத்திலேயே ஒருதமிழன் எதிர்க்கட்சித் தலைவனுக வந்தது சாத்தியமாயிற்று. அந்த எதிர்க்கட்சித் தலைமை வகிப்பதனுல் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பலவற்றைச் சாதித்து முடிந்தது 78ம் ஆண்டு ஆக்கிய அரசியல் திட்டத் திலே மொழிக்கும் வேறுசில முக்கிய விடயங்களுக்கும் உள்ள உரிமைகள் கொடுத்திருக்கப்பட்டுள்ளதென்ருல் அது நமது ஒற்றுமையின் பலத்தின் வெற்றிதான். இன்னும் பல வற்றைச் சாதிப்பதற்கு இந்த ஒற்றுமையும் பலமும் அவசியம்: இந்த உண்மையை உணர்ந்து தான் அரசாங்கம் நம்மைப் பிரிப்பதற்குச் சூழ்ச்சிகள் செய்கின்றது. ஆனல் தனிப்பட்ட வர்களைத் தம்பக்கம் இழுத்துவிட்டால் மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையைக் குலைத்துவிடலாம் என அரசு இறுமாப்புக் கொள்வது போலியானது எனத்தெரியவரும் நாட்கள் அதிக தூரத்திலில்லே,"

Page 58
100
.இடையிடையே பல தொலைபேசி அழைப்புகள் வந்தா லும் இம்முறை வந்த அழைப்பால் அரைமணிநேர ஆறுதல் எனக்கு பேனையை மூடிவைத்தவாறே சிந்திக்கின்றேன். இலங்கையின் பெரிய தமிழ்க்கட்சிகளாகத் திகழ்ந்துகொண் டிருந்த கட்சிகளில் ஒன்றன தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் முக்கியமான பிரமுகர் திரு. எம். சிவசிதம்பரம் அவர்கள் பலமுறை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவரும், வகித்துக்கொண்டு இருப்பவருமான இவர் ஒரு சட்ட வல் லுனராவார். தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாகி தமிழ் போராட்டத்துக்கென தம்மைத் தயார்படுத்தி தமிழர்
விடுதலைக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய பொழுது
அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 20-7-1923ல் பிறந்த இவர் 49ம் ஆண்டு மணமானர். சத்தியேந்திரா, நிராஞ்சலி என்ற இரு பிள்ளைகளின் அன்புத்தந்தை. காலை யில் எழுந்து குளிப்பதும், பின் கடவுளுடன் குறைந்தது பத்து நிமிடங்களாவது மனமாரச் சங்கமிப்பதும் இவருக்கு நன்கு பிடித்தமானவை. தொலைபேசியில் கதைத்துவிட்டுத் திரும்பியவரிடம் எனது கேள்விகளைத் தொடங்குகின்றேன் நான்.
‘'எதிர்க்கட்சித் த%லவர் ஸ்தானமும், ஐ. தே. கட்சி யிடமே இருக்கவேண்டும் என்பதற்காக ஜே. ஆர். ஜெய வர்த்தணு சிலரை ஆளும் கட்சியிலிகுந்து எதிர்க்கட்சிக்கு அனுப்புவார் என வதந்திகள் அடிபட்டனவே?"
"அப்படியான முயற்சிகள் எடுத்தது உண்மை ஆளுல் வெளிநாடுகளில் தான் ஒரு ஜனநாயகவாதி என்பதைச் சிறப்பாக காட்டவேண்டும். என்ற நோக்கம் பிழைத்துவிடும் என்பதாலும், எதைச்செய்தாலும் நம்முடைய அணியினது போக்கைத் திசைதிருப்பமுடியாது என்பதாலும். எதிர்க் கட்சித்தலைமை கொடுக்கின்ற ஒருசில சலுகைகள் பறிபோய் விடுமே என்ற அச்சத்தினல், எமது மனத்தை மாற்ற முடியாது என்பதை அறிந்ததாலும் இம்முயற்சிகள் ை விடப்பட்டன என்றுதான் கருதுகின்றேன்."
نمو

101
"மட்டுநசர் முதல்வரி திரு. இராசதுரை அரசுடன் சேர்ந்து தேசவிரோதமான செயலெனினும், 3.வி. கூட்டணி அவரை உதாசீனப்படுத்தி வந்ததாகக் கூறப்படுவது குற்றச் சாட்டுகளுக்கு நடுநிலைமையாளரான தங்கள் பதில் என்ன?
"அவர் கூறுகின்ற அச்குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையுமில்லை, அவரை அரவணைத்து இயக்கத்திலே பூரண பங்கு பற்றச்செய்வதற்கு நாமெல்லோரும் முற்று முழுவதாக உழைத்தோம். உதாரண. ரக மட்டுநகரில் நடைபெற்ற ஒரு செயற்குழுக் கூட்டத்திற்கு அவர் வரத் தயங்கிக்கொண் டிருந்ததை அறிந்து திரு அமிர்தலிங்கம் அவரது வீடு சென்றே அழைத்துவந்தார். அவரை யாரும் உதாசீனம் செய்யவில்லை. அவராகவே படிப்படியாக ஒதுங்கி இச்செயலுக்கு ஆயத்தம் செய்துகொண்டார். திரு. அமிர்த லிங்கம் கூறியதுபோல் "அவருடைய சிந்தனே என்றே மறு பக்கம் சென்றுவிட்டது இன்று உடல்தான் அங்கு சென்றது?"
"சுய உரிம்ை பெற்ற பின்னர் தமிழீழம் பொருளா தார அபிவிருத்தியில் முற்றும் முழுதாக எதில் தங்கியிருக் கும்?" − ,狱
'அடிப்படையாக விவசாயத்தில் தங்கியிருந்தாலும் கைத்தொழில் அபிவிருத்தி செய்யாத நாடு சுபீட்சமான வாழ்வை மக்களுக்கு வழங்காது என்பது நன்கு உணர்ந்து செயல்படும். ஆகையினுல் உணவிலே தன் நிறைவு காண் கின்ற அதே நேரத்தில் குடிசைக் கைத்தொழில்கள், மற்றும் பாரிய தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்புகள் ஆகிய எல்லாவற்றிலும் அபிவிருத்தி காணுவதுடன் மீன்பிடித்த விதத்திலும் ஏற்றுமதியிலும் அக்கறைகொண்டு செயல்படும்"
'தமிழீழ விடுதலைக்கான போராட்டத்துக்குத் தம்மைத் தாமே தயார்படுத்திக்கொள்ளும் வெளிநாட்டில் வாழும் துடிப்புமிக்க' இளைஞர்களுக்கு த. வி. கூட்டணி கூறு ம் ஆலோசனைகள் என்ன?

Page 59
102
அவர்கள் செய்கின்ற முயற்சிகளைப் பார்ாட்டுகின்ருேம்
ஆணுல் அவர்களுடைய முயற்சியெல்லாம் கூட்டணிக்கு"
அமைவாக ஒரே திசையில் செல்லவேண்டிய அத்தியாவசி பத்தினை வலியுறுத்த விரும்புகின்றேன். ஒவ்வொருவரும் தனித்தியங்கத் தொடங்கினுல் இயக்கத்தை முறியடிப்பது இலகுவாகும். கூட்டணி செல்லுகின்ற வழி பிழையாயின் அதைத் தட்டிக்கேட்கும் உரிமை யாருக்கு முண்டு ஆன ல்
விலகித் தனிவழி செல்வதினுல் இனத்தினுடைய எதிர்
காலம் கடுமையாகப் பாதிக்கப்படும். வெளிநாடுகளில்வாழும் தமிழர்கள் கூட்டணியுடன் இணந்து அந்தந்த நாடுகளில் கூட்டணியின் பிரதிநிதிகளாக இயங்கவேண்டும், எ ன் று பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
லண்டனில் நீங்கள் பங்குபற்றிய கூட்டமொன்றில் பேசிய பிரமுகர் ஒருவர் திரு. வைகுந்தவாசனது ஐ. நா. சபை பிரலாகம் "ஒரு குரங்குச்சேட்டை ‘ எனக் குறிப்பிட் டதையும், அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய திரு. வைகுந்தவாசன். அதுகுரங்குச்சேட்டையல்ல "புலிச்சேட்டை? என பதிலடி கொடுத்ததையும் அவதானித் திருப்பீர்கள் தங் களது கருத்து ? -
திரு. கிருஷ்ன வைகுந்தவாசனது சாதனை பெரிய சாதனை யென்றே நான் கருதுகின்றேன். ஆம்ஸ்ரோங் சந்திரனில் காலடிவைத்ததும் சொன்னதுதான் இப்பொழுது நானும் சொல்லலாம். அவர் ஆற்றிய உரை நான்கு நிமிடமென்னலும் அதன் தாக்கம் உலகரீதியானது. நான்கு நிமிடத்தில் உலக கவனத்தை தமிழர் பிரச்சனையில் ஈக்கச் செய்துவிட்டார் அவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு “லண்டன்முரசு" தனது பணியைச் செவ்வனே செய்கின்றதா?
லண்டன்முரசு தனது பணியைச் செவ்வனே செய்கிறது. மேலும் பல பணிகளைச் செய்யவேண்டும். என்றே நாம் விரும்புகின்ருேம். குறிப்பாக அம்ெரிக்கத் தமிழ் மக்களது

103
போராட்ட நடவடிக்கைகளுக்கும். முயற்சிகளுக்கும் முக்கி யத்துவம் கொடுத்து பிரசுரித்து அவர்களையும் நன்முக ஊக்கப்படுத்த வேண்டும். தவிர ஒவ்வொரு பதிப்பிலும் ஈழ அரசியல் தலைவரின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகள் வெளியாவதையும் நான் விரும்புகின்றேன்.
நீங்கள் அரசியலில் எவ்விதம் புகுந்தீர்கள் அதற்குக் காரணமான தலைவர்கள் யார்?
மாணவனக இருக்கின்ற காலத்தில் எனதுகிராம மக்க ளது வாழ்க்கையில் அக்கறைகொண்டு உழைக்கின்றபோது மக்களுடைய வாழ்வைத்திருத்தி அமைப்பதற்கு அரசியல் அதிகாரம் முக்கியமானது என்பதை உணரத்தொடங்கி னேன். இதுதான் நான் அரசியலுச்குப் போவதற்கு முக்கிய காரணமாகியது. காலத்துக்குக் காலம் பல்வேறு அரசியல் தலைவர்களது கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன. முக்கியமாக லெனின், ஜவகர்லால் நேரு, போன்றவர்களுடைய சமதர்மக் கருத்துக்களும், அண்ணுவின் மொழிப்பற்றும் பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும் என்னைக்கவர்ந்தன. உள் நாட்டில் அமரர் ஜீ. ஜீ.யின் துடிப்பான போக்கும், தந்தை செல்வாவின் கொள்கைப் பற்றும், அவ்வழியில் நானும் செல்ல ஊக்கமளித்தன.
நன்றி! வணக்கம்!

Page 60
தமிழ் இசை மாநாடுகள் . . . உலக ரீதியில் இடம் பெறுமா?
-சீர்காழி பதிலளிக்கின்ருர் -
தமிழ் தெரிந்த நெஞ்சங்கள் எவற்றுக்குமே சீர்காழி எஸ். கோவிந்தராஜனை நன்கு தெரியும். குறுகிய சரீரம். ஆனல் உயர்ந்து நிற்கும் சாரீரம். வயது 45. நான்குமுழ வேட்டி, நீண்ட கைச்சட்டை, தெற்றியிலே விபூதிக்கீற்று. படிய வாரிக்கொண்டி தலை, உடலால் சற்றுக் கறுத்திருந் தாலும், உள்ளத்தால் கறுக்கவில்லை என்பதைக் காட்டும் வாய் நிறைந்த சிரிப்பு.
"லண்டன் முரசு" வாசகர்களுக்கு அவர் என்ன சொல் கிருர் தெரியுமா? படியுங்கள்.
மேற்கு நாடுகளுக்கு இதுதான் முதற் தடவையாக வருகை தந்துள்ளேன். பிரித்தானிய இந்துக்கோவில் அறக் கட்டளையினர் என்னை வரவேற்றிருந்தனர். ஆலயத் திருப் பணிக்காக வந்தது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின் றது. கூடவே தமிழகத்தில் இருந்துவந்த முதலாவது பாட கர் என்ற பெருமையும் என்னுடையதாகின்றது. 64-வது நாயனராக வர்ணிக்கப்படும் திருமுருக கிருபானந்தவாரி யார் லண்டன் வந்தபோதும், அகஸ்தியார் எனக் கூறப் படும் என்னைத் தமிழக மக்கள் வழியனுப்பி வைத்தபோதும், பாரதியார் ஞானதிருஷ்டியுடன் பாடிய "தேமதுரத் தமி ழோசையை உலகமெல்லாம் பரவும் வகை" செய்தல் வேண் டுமென்பது உண்மையாகின்றது என்ருர்கள்.
அமெரிக்காவுக்கோ அல்லது வேறு மேற்கத்திய நாடுக ளுக்கோ நீங்கள் சென்றதில்லையோ?
ஆண்டவனது கருணை இன்னமும் கிடைக்கவில்லை. அத னல் அங்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனல்
2༤།

f
氰
105
மதுரை மீனுட்சி அம்மன் ஆலயம் போன்ற கோவில் ஒன்று
அங்கு உருவாகி வருகின்றது. அதன் கும்பாபிஷேகத்துக்கு வருமாறு கோரப்பட்டுள்ளேன்.
பாரத நாட்டின் பெருமைச் சின்னமான வேட்டி சால் வையுடன் தான் உங்களது பயணங்கள் அமைகின்றனவா அல்லது? . கேள்வியை நான் முடிக்கவில்லை அவர் தொடர்கிருர், எமது நாட்டின், எமது இனத்தின் கலாச் சாரம் குன்று தபடி தான் என்றுமே நடப்பேன். அதனல் உடுப்புகளிலும்கூட மேற்கத்திய நாகரீகத்தை விரும்புவ தில்லை.
சமயத்திலோ அல்லது கலையிலோ அல்லது அரசிய லிலோ - பொதுவாக தமிழர்கள்-குறிப்பாக லண்டனில் இருப் பவர்கள் ஒற்றுமையாக இல்லாதிருக்கின்ற நிலை மாற்ற மடைவதை விரும்புவீர்களா?
"கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை” என்பது எமது கலையையோ கலாச்சாரத்தையோ வளர்ப்பதற்கு ஒரு முட் டுக்கட்டையாகும். எனவே எந்தத் துறையைச் சார்ந்தவர் களும் ஒற்றுமையால்தான் மேலோங்க வேண்டும். ஆறுபடை வீடுடன் ஏழாவதை லண்டனில் உருவாக்க ஒன்றுபட்டுப் படையெடுக்க வேண்டும். கட்டப்பட்ட கோவிலில் சமயம் தளைத்தோங்கவும், கலாச்சாரம் பாதுகாப்படையவும், வழி செய்தல் வேண்டும் - சிறப்பாக, வளரும் இளைய தமிழினத் தின் உள்ளங்களில் எமது கலாச்சாரம் உயர்ந்து விளங்க ஆவன செய்தல் வேண்டும். பக்திப் பாடல்கள் கொண்ட எமது இசைத்தட்டுக்கள், பலவற்றை கோவில் அறங்காவ லர்களிடம் அன்பளித்துள்ளேன். எதிர்காலத்தில் நன்கு உத வும், அத்துடன் இங்கிருந்து பயணமாகும்போது 'தம்பூரா"
வையும் கொடுத்துச் செல்வேன். எதிர்காலத்தில் வரும்
ஒவ்வொரு கலைஞனும் மிருதங்கம்" கஞ்சிரா, வயலின் இப் படியாக ஒவ்வொன்றை விட்டுச் செல்லும்போது காலக்கிர மத்தில் கோவிலுக்கென ஒரு அருமையான இசைப் பொக் கிஷம் திரண்டுவிடும்.

Page 61
106
லண்டனில் உங்களது கானமழையில் இன்புற பெருந் திரளான மக்கள் வந்திருப்பதை அவதானித்தீர்களா;
தீமிழ்நாட்டில் ஒரு கச்சேரி என்ருல் இன்னும் பலர் வருவார்கள். ஆனல் இங்கு இப்படியொரு கச்சேரிக்குச் சபை கொள்ளாத மக்கள் வந்திருந்தது எனக்குப் பெருமை யளித்தது. அதுவும் வேறெந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத வகை யில் எனது கச்சேரிக்கு 2300 தமிழர்கள் வந்திருந்தார்கள் என்பதை அறியும்போது உள்ளம் பூரிப்படைகின்றது முற் றிலும் எதிர் பாராதது.
இதற்கிடையில் பல குறுக்கீடுகள்! சீர்காழியையோ, என்னையோ நன்கு தெரியாத ஒருவர் - தள்ளாத வயதுடைய ஒருவர் - வருவதும் ஏதாவது கேட்பதும் போவதுமாக இருந் தவர் - பேட்டி முடியுமட்டும் எனது ஆசனத்துக்கு முன்னல் வந்தமர்த்து - எனது கேள்விகளுக்கு சீர்காழியை முந்திக் கொண்டு தானே பதிலளிக்க முற்பட்டார். அவரது பதில் களைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த சீர்காழி - பக்கவாத்தியக் காரருக்குச் சமிக்கை செய்வதுபோல எனக் கும் சமிக்கை செய்துகாட்டிப் பின்னர் ஆணித்தரமான தனது பதில்களைக் கூறினர்.
திரு. எஸ். டி. பூரீனிவாசய்யரிடம் 14 வயது முதல் இசை கற்றதாகக் கூறும் சீர்காழி 1949-ம் ஆண்டில் தமிழ்
இசைச் சங்கத்தில் சேர்ந்து 1950-ம் ஆண்டு இசைமணி
என்ற பட்டத்தைப் பெற்ருர், தொடர்ந்தும் இசையில் மேற்படிப்புப் படித்து சங்கீத வித்துவாஞன இவர், திரு. எஸ். சுவாமினதன் பிள்ளை என்ற பிரபல பாடகரின் பிரதம சிஷ்யனுக பத்து வருடங்கள் (1961) வரை திகழ்ந்தார்.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? எனக் கேட்டேன். ஆசைக்கென்று ஒன்று, ஆஸ்திக்கென்று ஒன்று. மூத்த வள் ஞானவல்லி மருத்துவத் துறையின் மூன்ருவதாண்டு
மாணவி. சின்னவன் சிவசிதம்பரம் மருத்துவத்துறையில் இரண்டாம் வருட மாணவன்,
حيگيf

107
எதிர்காலத்தில் இவர்களும் இசை விற்பன்னர்களாக வருவார்களா?
இசை என்பது தனிப்பட்ட சொத்து இல்லை. எல்லோ ருக்குமே பொதுவானது. தற்பொழுது மகன் சிவசிதம்பரம் மேடைகளிலும், சில திரைப்படங்களிலும் பாடி வருகின் முர். ஆனல் என்றுமே அவர்கள் இசையை ஒரு முழுநேர ஊதியத்துக்காக மேற்கொள்ள மாட்டார்கள் என்றே நம் புகின்றேன். ஒரு ஆத்ம சுகத்துக்காகவும், ஒய்வு நேரங் களில் வசதிப்பட்டாலும் அவர்கள் பாடுவதை ஒப்புக் கொள்ளலாம்.
உங்களது மனேவியும் பாட்டுப் பாடுவதில் சிறந்தவரோ?
எந்தத் தாயாரும் தாலாட்டுப் பாடும்போது அந்த இசையின் கவர்ச்சியால் குழந்தைகள் மெய்மறந்து தூங்கு கின்றன. அந்த மாதிரித்தான் எனது மனைவியும். எனது மனேவி நல்ல ரசிகை.
எத்தனையோ பாடல்களைப் பாடியுள்ளீர்கள். நீங்களாக இயற்றிப் பாடுவதுண்டா? தவிர உங்களைக் கவர்ந்த பாட லாசிரியர்கள் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
நானுக எதுவுமே இயற்றிப் படுவதில்லை. இந்தத் தலை முறையின் எல்லாக் கவிஞர்களுமே கவர்ச்சியாகவே பாட லமைக்கின்ருர்கள், மனதைத் தொடும்படி பாடி முடிப்பது எனது வேலை, திரை உலகில் எல்லாக் கவிஞர்களையும் எனக் குப் பிடித்திருந்தாலும், கவிஞர் கண்ணதாசன், மருதகாசி, வாலி போன்ருேரின் பாடல்களும், பக்தியில், உளுந்தூர்ப் பேட்டை சண்முகம், நெமிலிஎழில்மணி, திருச்சிபரதன், கீதப்பிரியன் போன்றேரின் கானங்களும் என்னைக் கவர்ந் தன.
சில கலைஞர்கள் தமது அங்கங்களை காப்புறுதி (Insurance)
செய்வார்கள். அதுபோலவே நீங்களும் உங்களது தொன் டையைக் காப்புறுதி செய்ததுண்டோ?

Page 62
ராசா கமலா
108
கடவுளை நம்பினோர் கைவிடப்படார். எனவே பகவான் தான் எனக்குக் காப்புறுதி!
ஏதாவது இருகின்றதே என்ற பழம்
வாய்ப்பாட்டைப் படிக்கும் ஒருவர் கூடவே பக்கவாத்தி யம் ஒன்றையும் பழகவேண்டும் என்ற பழக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றதே! உங்களுக்குக்கூட பக்கவாத்தி யம் ஏதாவது தெரியுமா?
நாம் படிக்கும் காலத்தில் வாய்ப்பாட்டுக்கே தீவிர சாதகம் தேவைப்பட்டதால் பக்கவாத்தியம் கற்றுக்கொடுக் கும் நிலைமை இருக்கவில்லை. இப்போது தீவிரமாக பயிற்சி கொடுக்கப்பட்டாலும் பல வசதிகளால் மாணவர்கள் பக்க வாத்தியமும் பயில முடிகின்றது.
உங்களது பாடல்களுக்கு மெட்டமைப்பது யாருடைய பொறுப்பு?
ஓரளவுக்குப் பாதிப் பக்திப் பாடல்களுக்கு நானே இசை அமைத்துள்ளேன். மீதியை வேறு இசை இயக்குனர்கள் கவனித்தார்கள். ''தள்ளாத வயதின்'' பொல்லாத சேட் டைகள் அதிகமாகவே, சீர்காழி விடைபெற முயல்கின்றார். ஒரு கேள்வியைக் கேட்டு - விட்டு நானும் விடை பெறு "கிறேன் ,
உலகத் தமிழராய்ச்சி மாநாடு, உலகத்தமிழ்ப் பண் பாட்டு விழா என்ற ரீதியில் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து விழாக்கள் எடுக்கின்றார்கள். இசையைப் பொறுத்தும், இசை ஆய்வு, கருத்தரங்கு, இசைக்கச்சேரிகள் இவற்றை மைய மாக வைத்து உலகத் தமிழ் இசை மாநாடுகள் ஏற்பாடு செய்ய முடியாதா? அதற்குத் தகுந்தவரான தாங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லதொரு கேள்வியைக் கேட்டீர்கள்? இதுவரை எவ ருமே சிந்திக்கவில்லை. ஆனால் இப்படியான விழாக்களுக்கு, அரசின் உதவியும், ஒத்தாசையும் தான் நன்கு தேவைப் :படும், எனினும் தமிழகம் சென்றதும் உங்களது யோசனை
யைக் கவனமெடுத்து முயல்கின்றேன்.

109
எழுந்து நின்றவர் லண்டன் முரசு பற்றிச் சொல்கின் முர். ,
லண்டன் முரசு உண்மையிலேயே ஒரு பாரிய சேவை! பாலைவனத்தில் கிடைத்த அருமையான குடிநீர்! அவர் களது சிரமங்கள் எல்லாமே கலையவும், வையகம் வாழவும் எனது வாழ்த்துக்கள்!- அவரது கச்சேரி முடிந்தாலும் பாடல் கள் எதிரொலிக்கத் தவறுவதில்லை. அதுபோலவே எனக்கும் அவர் சொன்னவை யாவும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.
ரசிகர்கள் கேட்டவை.
சீர்காழியின் இன்னிசைக் கச்சேரியில் அவரைப் பாடு மாறு கோரப்பட்ட பாடல்களில் அதிர் இடங்களைப் பெற் றுக்கொண்டது "அமுதும் தேனும் எதற்கு" என்ற பாடலே. வரிசைக் கிரமமாக அடுத்த பாடல்களையும் லண்டன் முரசு வாசகர்களுக்காக கீழே தருகின்ருேம். பல வேண்டுகோள் 'கள் இருந்த பொழுதிலும் இரண்டும் இரண்டுக்கு மேற்பட்
டவைகளுமே இங்கு இடம் பெறுகின்றன.
அமுதும் தேனும் எதற்கு?. 64. சமரசம் உலாவும் இடமே! . on Ole s 57. அறுபடை வீடுகொண்ட திருமுகா . 50. வினுயகணுே வினை தீர்ப்பவனே! . 47. திருச்செந்தூரின் கடலோரத்தில் . 30. சிரிப்புத்தான் வருகுதையா ... 14. எங்கிருந்தோ வந்தான் . 10. அலைபாயுதே கண்ணு. 10. நீயில்லால் தெய்வமில்லை. 9. கீதம் சங்கீதம் . O | O | O → o
கனகசபாபதிக்கு நமஸ்காரம் . 7.

Page 63
110
முதல் வணக்கம் எந்தன் முருகனுக்கே!. 5. கல்லிலே கலைவண்ணம் கண்டான் . 4. ஒருமுறைவா! திருமுருகா!திருவடி சரணம் 3. உள்ளத்தில் நல்ல உள்ளம். 3. மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா . 3. ஆடி அடங்கும் வாழ்க்கையடா!. 3. வானமீதில் நீந்தியோடும். 3 கலேயே என் சிலேயே. 2. ஞால முதல்வனே நாயகனே!. 2
பால்வடியும் முகம் நினைந்து நினைந்து. 2. 9 Lúb !bSuillsillGall) · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · 2. LD6 four sold .................................... 2. எனக்கொரு வரம் தரவேண்டும் . 2.
ஒரு பாட்டை ஒரு ரஸிகர் என்ற ரீதியில் 200க்கு மேற் பட்ட வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன. சிலர் சீர் காழி பாடாத வேறு பாடகர்களின் பாடல்களை பாடுமாறு கோரியிருந்தனர். சிலர் ஆங்கிலப் பாடல்களில் மோகம் கொண்டிருந்தனர். சிலர் இசைத்தட்டுக்கள் எங்குமே கிடைக் கும், எனவே உயர்ந்த ராகம் பாடுமாறு அபிப்பிராயப்பட் டிருந்தனர்.
உங்களது விருப்பமும் இருபத்தைந்தினுள் வந்திருந்ததா?
*
 

இரு தரப்பிலும் செல்வாக்குப் பெற்றுள்ள
தமிழக முதல்வர் மத்தியஸ்தம் வகிப்பாரா?
"பிரித்தானிய அரசு நீதிக்குப் பெயர் பெற்றது எனவே இங்கு நீதி நிர்வாகம் எவ்விதம் செய்யப்படுகின்றது என அறிய விரும்பினேன். நான் தெரிந்து கொண்ட வகையில் இங்கு நீதியும் நிர்வாகமும் வெவ்வேறு இடங்களில் இருப் பதால்தான் சிறப்புடன் செயல்படுகின்றது. ஆணுல் இந்தி யாவிலோ நீதியும் நிர்வாகமும் ஒரேயிடததில் இருப்பதால் பல குழப்படிகள் தோன்றுகின்றன. நீதியின் பெயரில் தண் டிக்கப்பட வேண்டியிருப்பவரே நிர்வாகம் தனது பொறுப் பில் இருப்பதால் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பை எழுதிக் கொடுத்து நீதிபதியின் வாயிலிருந்து வெளிப்படப்பண்ணி மிக இலகுவாகவே விடுதலை அடைகின்ருர், இந்த நிலைமை மாறவேண்டும். நீதி செம்மையாகச் செயல்பட வேண்டும். அதனல் நாட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடவேண்டும்."
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு செல் லும் தமிழக முதல்வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன், தனது லண்டன் அனுபவங்களை அழகாக எடுத்துரைக்கின்ருர், படங் களில் தோன்றுவது போன்று ஆஜானுபாகுவாக அவரது நேரடித் தோற்றம் இருக்கவில்லை. ஐந்தடியோ அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலானதோ தான் அவரது உயரம். வழமையான தொப்பியும், கறுப்புக் கண்ணுடியும் அவரை விட்டு என்றும் அகலமாட்டாதவை. சூட்டுடன் தோற்ற மளித்தார். வேட்டியிலிருந்த கம்பீபரம் அதில் காணமுடிய வில்லை.
தொடர்ந்து அமெரிக்கா செல்லவிருக்கும் நீங்கள் அங்கு
அவதானித்து தமிழகத்தில் மாறுதல் உண்டாக்க இருப்பவை
எவையோ?

Page 64
112
மெச்ஸிக்கோ சென்று கரும்புச்சக்கையில் காகிதம் உற் பத்தி - அதுவும் பத்திரிகைகளுக்கான காகிதத்தயாரிப்பு - பற்றிய இலகுவான வழி முறைகளைக் கண்டறிந்து அதைத் தமிழக மக்கள் பயன்படும் படியாக வழி கோலுவேன். கூடவே அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியத்தில் மூன்றுவார காலம் தங்கியிருந்து அங்கு காவல்துறை ஆற்றும் சேவை யைக் கவனிப்பதுடன், காவல்துறையினர் கண்ணியமாகக் கடமையாற்றும் விதங்களையும் தெரிந்துகொள்வேன் பின் னர் ஜப்பான் சென்று அங்கு குடிசைக் கைத்தொழில் வளர்ச்சிபற்றி நேரடியாகவே காண்பதுடன், தமிழக மக்க ளும் அவ்விதம் செயல்படுத்தலைத் தொடங்க ஏற்ற நட வடிக்கைகளை எடுப்பேன். ஈற்றில் சிங்கப்பூர் சென்று இரு நாட்கள் தங்கிவிட்டு, டிசம்பர் முதல்வாரத்தில் எனது பய ணத்தைப் பூர்த்திசெய்வேன்.
தமிழகத்தில் தர்மத்தின் ஆட்சி நிலவுவதாகப் பரவ லாக எங்கும் பேசப்படும் அதே வேளையில் அண்மையில் நடைபெற்ற ஹர்த்தாலைத் தொடர்ந்து கலைஞரின் வீடு சேதமுற்றதே? A
தீங்கு எங்கு நடந்தாலும் அது துடைப்பதுதான் அர சின் வேலை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கட்சி யானுலும் விசாரணைக்குத் தப்பமாட்டார்கள்.
அப்படியாயின் சக்காரியா கமிஷனில் குற்றம் சாட்டப் பட்ட எத்தனையோ பேர் இப்பொழுது அகில இந்திய அ. தி. மு.கவில் இருக்கின் ருர்களே. அவர்கள் அனைவரும் தூய்மையடைந்துள்ளார்களா?
அங்குதான் நீங்கள் தவறிழைக்கின்றீர்கள். குற்றம் நிரூ பிக்கப்படும் பொழுது அவர்களும் தண்டனைக்குத் தவற மாட்டார்கள். ஊழல்கள், லஞசங்கள் போன்றவற்றை விரட்டியடிப்பதுதான் எமது இலட்சியம். நீதிதேவதையின் தண்டனை அவர்வளை விட்டுவைக்கும் என்பதல்ல.
خکی
ہٹلر
 

一*
113
தங்களது மந்திரிசபையில் கூடுதலாக வழக்கறிஞர்களே காணப்படுகின்றர்களே? ஏனே?
திறமைக்கு முதலிடம் கொடுப்போம். முன்பின் தெரி யாத ஒன்றைப்பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வழக்காடக் கூடிய அவர்கள் நாட்டுக்கு நன்மையான திட்டங்களைக்கூடச் செம்மையாக ஆராய்ந்து செயல்பட மாட்டார்கள் என்ப
தற்கு என்ன சான்று?
தென்மாநில முதல்வர்கள் அண்மையில் ஒன்று கூடி னிர்களே? வெற்றியளித்ததா? ,
இந்தித் திணிப்பு முற்ருக நிறுத்தப்படவேண்டும் என் பதில் அனைவருமே ஏகோபித்த ஒற்றுமையான அபிப்பிரா யத்தைக் கொண்டிருந்தனர். எனவே அது வெற்றியளித் தது. தவிர நிதிப்பங்கீடு தொடர்பாகவும் அரிசிக்கான உத்தரவாத விலையை நிர்ணயிப்பது பற்றியும் விரைவில் மீண்டும் கூடி தீர்மானமெடுப்போம்.
மத்தியில் ஜனதா அரசை ஆதரிக்கும் அ.இ.அ.தி.மு.க. இடைத் தேர்தலில் இந்திராகாந்தியை ஆதரிக்கின்றாத?
மத்தியில் எந்த ஆட்சி எனினும் நல்லவை செய்யும் பொழுது அதற்கு ஆதரவு கொடுக்கவும், தீமையை எதிர்க் கவும் அகில இந்தியா அ. தி. மு. க. தயங்காது. ஆனல் இந்திராகாந்தி கண்டிப்பாகப் பராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர். அதனுல் ஆதரித்தோம்.
இந்தியை முழு மாநிலங்களுக்கும் திணிப்பதை ஏற்க மறுக்கும் தங்களுக்கு, ஈழத்தில் பரவலாக சிங்களம் புகுத் தப்படுவதை வரவேற்க முடிகின்றதா?
முதலாவதை எதிர்த்து நாம் போராடுகின்ருேம், பின் னதை எதிர்த்து ஈழத்தவர்கள் போராடுகின்ருர்கள். தவிர ஈழத்தவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தோ அல்லது நாம் சிங்களத் திணிப்பை எதிர்த்தோ கூக்குரலிடுவதில் பயனில்லை.

Page 65
114
பங்களாதேஷிடம் பிரிவினைப் போரின்போது இந்தியா
விலிருந்து உதவியதுபோல, தமிழ் ஈழப் போராட்டத்துக் குத் தமிழகத்தின் பணியென்ன?
தமிழர் எங்கிருந்தாலும், அவதியுறும் பொழுது உதவுவ தற்கு,தமிழர்கள் எங்கிருந்தாலும் தவறமாட்டார்கள். ஆனல் இலங்கை ஜனதிபதி திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தணு அண் மையில் சந்தித்தபோது இலங்கைத் தமிழரின் வளமான வாழ்வுக்குத் தான் வழிகோலியதாகத் தெரிவித்ததுடன் தமிழ் அமைச்சர்களே தனது அமைச்சரவையில் இடம் பெற் றுள்ளதால் பிரிவினைவாதிகளால் சுமத்தப்படும் குற்றச்சாட் டுகளுக்கும் ஆதாரமில்லை என்ருர்,
இலங்கைச் சிங்களவர் மத்தியிலும், தமிழர் மத்தியிலும் அமோக செல்வாக்குப் பெற்றுள்ள நீங்கள், பிரச்சி2ண்க ளுக்கு மத்தியஸ்தலம் வகித்து அவை தீர்வுகாண வழிசெய்ய முடியாதோ?
முதலாவது, வேறு நாடொன்றின் பிரச்சின்ை அது! அதில் எனக்கு வேலையில்லை! இரண்டாவது மத்தியஸ்தலம் எனப்படுவது இரு சாரருக்கும் பொதுவான நடுநிலை. ஆனல் எங்கே ஒரு தரப்பினர், மத்தியஸ்தலம் வகிப்பவர் மறுதரப் பைச் சேர்ந்தவரென எண்ணுகின்றரோ, அப்பொழுதே சரியான தீர்ப்பும் கிடைக்குமென அவர் எதிர்பார்க்கமாட்
டார். எனவே இந்நிலையில் என்னல் செய்யக்கூடியது எது
வுமேயில்லை.
அரசியல் வாழ்விற்கும், சினிமா வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி?
இரண்டுமே மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண் டுள்ளவை.
திரும்பவும் நடிக்கும் ஆர்வம். ? Flouið aldiðGLita து நடிக்கத் தவறமாட்டேன்.

115
வலது கையைத் திருப்பி மணிக்கூட்டை அவர் பார்க் கவும், எனக்காக ஒதுக்கப்பட்ட நேரம் பூர்த்தியடைவதை உணர்ந்த நான் அவரிடம் ஒன்றுகேட்டு விடைபெறுகிறேன்.
பொது வைபவங்களுக்கோ அன்றேல் வெளிநாட்டுப் பயணங்களுக்கோ தங்கள் மனைவியை அழைத்துச் செல்லா மால் சினிமா நடிகையருடன் தாங்கள் போவது.
அது தனி மனித விரும்பம். எனது மனைவி ஜானகியே இதுபற்றி ஆட்சேபிக்காத பொழுது மற்றவர்களுக்கு இதில் என்ன தவறுகாண முடிகின்றது. தவிர எனது அந்தரங்க செயலாளராக ஒரு பெண்மணி இருக்க்க்கூடாதோ. ஆனல் அந்தச் செயலர் பிரபல நடிகையாக இருப்பதால்தான் தவ ருக உங்களுக்குப் படுகின்றதோ,
அண்ணு நாமம் வாழ்க! என கூறியவாறே, அடுத்தவுரு
டன் தனது அலுவல்களைத் தொடருகின்றர் முதல்வர்.

Page 66
லண்டன் தெரு ஓரத்தில்
ஜெமினியைச் சந்தித்தேன்! ܓܰܖܳܬܐ
வெள்ளைக்காரரின் உலகில் ஒரு தென்னிந்திய வெள்ளை நிறத்தவரைக் காண முடிந்தது. காதலர்கள் சர்வ சாதா ரணமாகக் காணப்படும் நாட்டில் ஒரு தமிழ்நாட்டுக் காதல் மன்னனை எதிர்பாராத விதமாகச் சந்திக்க முடிந்தது. தமி ழக நாட்டியக் குழுவொன்றுக்கு தலைமை தாங்கி ஜெமினி கணேஷ் லண்டன் வந்திருந்தார்.
எதிர்பாராத விதமாக வீதியோரத்தில் சந்தித்திதேன். உடனேயே அடையாளம் காணமுடிந்தது. சுருண்ட அடர்த்தி யான கேசம், அழகாகக் "கிரீம்' வைத்து வாரிவிடப்பட்டி ருந்தது. ஐந்து அடிக்கும் சற்று அதிகமான உயரம். நீல நிறச் சேட்டும் காற்சட்டையும் அவரது தோற்றத்துக்கு - மெருகூட்டின. கத்தரிக்கப்பட்ட மீசையுடனும் கூலிங்கிளா சும் எடுப்பாகத் தோற்றமளித்தார். எனினும் 175 திரைப் படங்களுக்குமேல் நடித்துவிட்ட அசதியும் சற்று எல்லை மீறிவிட்ட வயதும் அவரது முகத்துக்குக் களைப்பூட்டுவதா கத் தெரிந்தது.
ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகின்ருர், பேச்சில் சுவ ராஸ்சியம் ததும்புகின்றது. ஆங்கிலேயர் எவருமே அவரை அக்கறை செய்ததாத இல்லை. ஆனல் சிறிது நேரமேனும் அவருடன் உரையாடியிருந்தால் கண்டிப்பாக பிரமிப்படைந் திருப்பார்கள்.
ஈழநாடு பற்றி
ܬܽܘ
பேச்சுவாக்கில் "ஈழநாடு’ பத்திரிகையைப்பற்றித் தெரி விக்கின்ருர், சமயம் வரும்பொழுதெல்லாம் அதைத் தவற விடுவதில்லையென அவர் கூறவும், ஒருவேளை எனக்காகத் தான் அவ்வாறு சொல்கின்றரோ என ஐயுற்ற என்னைப்
 

117
பார்த்து மேலும் தொடர்கின்றர். 'இலங்கையில் இருந்து வெளியாகும் "ஒரு கற்பான" பத்திரிகை அதுவாகும். ஆபாச மான செய்திகளுக்கு அதில் இடமேயிருக்காது" என்கிருர், பெருமையில் மிதக்கிறேன்.
இந்நேரம் எனது நண்பரொருவர் வந்து சேருகின்றர். அருகிலிருந்த அவரது வீட்டில் எனக்காக சில மணி நேரங் களை ஒதுக்குகின்ருர் ஜெமினி,
என்னையும் ஜெமினியையும் வரவேற்பறையில் இருத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டார் எனது நண்பர். பேட்டி தொடர்கிறது. -
எம். ஜி. ஆர். பற்றி
தமிழக முதல்வர். என்றதும் அவரே சொல்கின்ருர்,
"முகராசி' என்ற படம் மட்டும்தான் நான் அவருடன் இணைந்து நடித்த ஒரேயொரு படமாகும். நடிப்புத்துறை யில் மக்களின் கண்காணிப்பு அவரைப் பொறுத்தவரையில் எப்படியோ அரசியலைப் பொறுத்தும் அப்படியே. பொடி வைத்துப் பேசிய ஜெமினி என்னைத் தர்மசங்கடத்துக்குள் ளாக்கி விட்டு மேலும் தொடர்கின்ருர்,
நடிப்பில் அவருக்கு ஒரு இணையில்லை என நினைப்பவர் களுக்கு அவரது அரசியலையும் நன்கு பிடிக்கின்றது. நடிப்பை அவரிடம் எதிர்பார்க்காதவர்கள் அரசியலில்கூட என்ன பிரமாதமாகச் செய்துவிடப்போகின்ருர் என்றேதான் பேசிக் கொள்கின்ருர்கள். ஆனல் ஒன்றுமட்டும் உண்மை! தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையுமே இக் குறுகிய காலத்தில் அவரது அரசு செய்ததாக இல்லை.
தரையில் படுத்தபடி சுகம் அனுபவித்தார்
கதிரையில் அமர்ந்திருந்த ஜெமினி தனது சேட்டையும் சப்பாத்துக்களையும் கழட்டிவிட்டு எனக்கெதிரில் தரையில்

Page 67
வி
118
படுக்கின்ருர், மேடு கட்டிய வயிறு பிரத்தியட்சமாகத் தெரி கின்றது. அதை நான் கவனிப்பதை அறியாத ஜெமினி சொல்கின்றர். தரையில் படுப்பதுதான் எனக்கு எப்பவும் நன்கு பிடிக்கும். அதிலே உள்ள சுகம் மெத்தையிலே எங்கு கிடைக்கப்போகின்றது. அவரது எளிமை என்னை வியப்பி லாழ்த்துகின்றது. O
நிலத்தில் படுத்துக்கொண்டு சுவையாக உரையாடினுர்
இந்தியாவில் கூட எளிமைதான் எனக்கு நன்கு பிடிக் கும். எனது வீட்டிற்கு வந்தால்கூட நீங்கள் அத ைநன்கு அவ தானிக்க முடியும். எனது முதல் மனைவி பாப்ஜி போதித்த பாடம் இது. எனது வீட்டின் வரவேற்பறையில்கூட எனது இளமைக் காலப்படம் ஒன்று மட்டும்தான் போடப்பட்டி ருக்கும் எனது வாழ்வின் கறை படாத நாட்களில் எடுக் கப்பட்ட படமாதலால், எனது மனைவிக்கு அதுதான் நன்கு பிடித்தமானது.
மனைவிமார்
உங்களது ஒரு மனைவி பற்றிக் குறிப்பிட்டீர்கள். மற் றவர். அல்லது மற்றவர்கள். -
இரண்டாமவர் நடிகை புஷ்பவல்லி! இந்தித் திரைவா னில் புகழ்பெற்ற பானுரேகாவின் தாயார்.
சாவித்திரியின் தொடர்பு
"மூன்ருமவர் சாவித்திரி அவருக்கும் எனக்கும் கடந்த பத்து வருடங்களாகச் சரியில்லை. திருப்பங்கள் - வாழ்க்கை யில்தான் எவ்வளவு திருப்பங்கள். யாரோ ஒரு கவிஞன் சொன்னன், "ஏ" வீரனே! உனக்குப்போரில் பட்ட காயத் தைவிட என் முகத்தில் பிளேட்டினல் விழுந்த கீறல்தான் எனக்குப் பெரிதாகப்படுகின்றது. ஏனெனில் நான் மனிதன்! அவர் சொல்கின்றர். எனக்கு எதுவுழே புரியவில்லை,
خلہ
 

119
சரி! நாலாவது? என்னை அறியாமலேயே கேட்டுவிட் டேன்.
ராஜ்பூரீயுடன் எனது பெயர் அடிபடுவதால் அப்படிக் கேட்கிறீர்கள் போலுள்ளது. அப்படியானுல் எனக்கு எத்த னையோ வேறும் "கேள் பிரண்ட்ஸ்" இருக்கிருர்களே எனக் கூறி மூடிக்கின்ருர்,
இந்நேரம் யாரோ கதவைத் தட்டவே, சிலவேளை யாரா வது பெண்களாகவிருந்தால் என்று கூறியவாறே எழுந்து தன்னைச் சுதாகரித்துக்கொண்டு கதிரையில் அமர்ந்திருக்கி முர் ஜெமினி எதிர்பார்த்தது போலவே ஒரு பெண்மணி தான் வருகின்ருர். பேச்சுவாக்கிலேயே அவரது அழகைப் புகழ்கின்றர் ஜெமினி நேரடியாகப் போற்ருமல் தனது காதலிகள்கூட இவரைப் போலத்தான் கொள்ளை அழகு என்க் குறிப்பிடுகின்ருர் அவர், பெண்களைத் தன் வசமாக் குவதில் எவ்வளவு நிபுணர் என எண்ணுகின்றேன் நான்.
உங்கள் காதலியிடம் செல்லும்போது, மனைவி என்ன செய்வாளோ? என்றேன்.
நான் எங்கு சென்ருலும் மனைவியிடம் சொல்லிவிட்டுத் தான் செல்வேன். எந்த நேரத்தில் எங்கு இருப்பேன் என் பது அவள் அறிந்ததுதான் மறந்தவளை மறக்காத மாதவி மகளொருத்தி காதலை வெறுக்கக் கடுந்துறவு பூண்டதும் தமிழில்தான். காதலை வேண்டி ஆண்டாள் கடுந்துறவு பூண் பதும் தமிழில் தான்.
இந்தக் காலத்துப் பெண்கள் எதையுமே சுலபமாகப் புரிந்து கொள்கின்றர்கள். தங்கள் கணவனைத் தவிர, என ஆஸ்கார் ஒயில்ட் சொல்லிவைத்தது எனது நினைவில் ஒடி மறைகின்றது.
அரசியல் தொடர்புகள்
நட்சத்திர வானில் புகழ்பெற்ற உங்கள் மூலம் அரசி
யல் கட்சிகள் எதுவுமே லாபம் தேட முற்படவில்லையா?

Page 68
120
உண்மையாக நடத்த விரும்புவனுக்கு அரசியல் ஒரு முட்டுக்கட்டை. அதனல் நான் எவ்வித அரசியல் தொடர்பு களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படியெனின் உங்களுக்குப் பிடித்தமான அரசியல் கட்சி என்று எதுவுமே இல்லையா?
இல்லையென்றேதான் கூறமுடியும். இந்திரா காந்தி ஆட்சி செய்த பொழுது, நிலங்களைச் சுவீகரித்தார். அதனல்கூட எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்படவே செய்தது,
ஆனல் ஒன்று மாத்திரம் உண்மை. தமிழக வரலாற் றில் தி. மு. க. ஆட்சிக்காலம் சிறந்தது. முன்பு "லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்' என ஆங்கிலத்தில் பேசினுல்தான் கூட்டத்தினர் "மளமளவென கைதட்டுவார்கள். தி. மு. க. ஆட்சியின் பின்பு "யோவ்" தமிலிலே பேசய்யா என்பார் கள். அந்தளவுக்கு மாறுதலை உண்டாக்கி தமிழின்பால் எல் லோருக்கும் ஓர் ஆர்வத்தை உண்டுபண்ணியவர்கள் அவர்
356T. -
ஜெமினியின் ரசம்
எனது நண்பர் சுவையான சாப்பாடு தயார் என்ற வாறே வந்து சேருகின்றர். மேலும் அதற்குச் சுவையூட்ட சரசம் வைக்கின்றேன் நான் என்றவாறே ஜெமினி சமைய லறைக்குள் நுழைந்து விரைவாகச் செயல்படுகின்ருர், தம யந்தியிடம் அன்னத்தைத் தூதுவிட்ட நளமகாராஜன், காத
லில் மட்டுமல்ல சமைப்பதிலும் திறமைசாலி என வாசித்
ததுதான் எனது நினைவுக்கு வந்தது. 'ரசம் வைத்து முடித்த ஜெமினி எமக்கு சுவைக்கத் தருகின்ருர், இலங் கையர்கள் வைக்கும் ரசம் மாதிரி, மிகவும் காரமாக இல் லாமல், இதமாக இருகின்றது அது.
ரசத்தைக் குடித்தவாறே மதுரசம் பற்றி அவரிடம் வின வுகின்றேன்.
وولگہ

121
குடியில் மிதப்பது எனக்கு வழக்கமல்ல! எப்பவாவது குடிப்பேன். −
தற்பொழுது திரைப்படங்கள் அதிகமாக உங்களுக்கு இல்லையா? எனக் கேட்டேன்.
"நான் அவனில்லை" என்ற படம் எனது அண்மைக், கால வெளியீடு. அத்துடன் எனது சொந்தத் தயாரிப்பும் கூட! என்கிருர்:
,
யாழ்ப்பாணத் தமிழில் கதைத்தார்,
அருகிலிருந்த பெண்மணி, உங்களுக்கு யாழ்ப்பாணத் தமிழ் கதைக்கத்தெரியுமோ என்று ஒரு போடு போடவும் கடகடவென்று அசல் யாழ்ப்பாணத் தமிழில் சில வார்த் தைகளைச் சொல்லி முடிக்கின்ருர் ஜெமினி. தொடர்ந்து, மலையாளம், ஹிந்தி போன்ற பாஷைகளிலும் சிலவற்றை அழகாகச் சொல்லி விளக்கமும் கூறினர்.
அவர் தலைமைதாங்கி வந்த நாட்டியக் குழுவில் ஒரு சிலர் லண்டனுக்கு வந்த மறுதினமே. அண்ணே! மசாலா தோசைக் கடைக்குப் போவோமா? என வாய் கிழியக் :: குறிப்பிட்டுவிட்டு, லண்டனில் பார்க்கவேண் டிய இடங்கள் எத்தனையோ உண்டு. அதை விடுத்து ஏன் தான் மசாலா தோசைக்கடையில் அவ்ர்களது மன்ம் லயிக் கின்றதோ தெரியவில்லை எனவும் மனவருத்தப்பட்டார்.
மிஸ் மாலினி. யாரோ அவரது காதலி ஒருத்தியின் பெயரை உக்சரிக்கின்ருர் என நான் எண்ணும் பொழுதே அவர் சொல்கின்றர்.
அதுதான் எனது முதலாவது படம் இரசாயன * ରୋମif வுரையாளராக இருந்த என்னை திரைப்பட நடிகனுக்கியது.
இரு துறைகளிலும் நீங்கள் பெற்ற அனுபவங்கள் என்ற போது.

Page 69
122
இலங்கையிலிருந்து லண்டனுக்கு வந்த என்னையே உதா ரணமாக்குகின்றர்: முன்பு வேறு அனுபவம். பின்பு வேறு அதுவும். ஆஞ்ல் கண்டிப்பீர்க அறிவு வளரவே செய்கின் றது. அனுபவம் கூடவே செய்கின்றது.
பெயர்வந்த காரணம்
ஏன் ஜெமினி" என்று பெயர் வந்தது? ஜெமினி நிறு வனத்தார்தான் "மிஸ்மாலினியைத் தயாரித்தார்கள். அதில் முதலாவதாக நடித்தாலும், பின்னர் கண்ேசன் என்ற பெயரில் இருந்தாலும், புதுக்கோட்டையிலிருந்து ஆர். கணே ஷர் வந்திநான் ஜெமினி கண்ேஷ் ஆனேன்.
நீங்கள் சென்ற நாடுகள்.? 1950-ம் ஆண்டு முதல் தினக்கும், 1940ம் ஆண்டு முதல் லண்டனுக்கும் பல தீவி விஜயம் செய்துள்ளேன். தவிர அமெரிக்காத னடா, பிரான்ஸ்: ரஷ்யர், ம்லேசியா, சிங்கப்பூர் தென் ஞபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் போயுள்ளேன்.
துங்களுக்குப்பீடித்த பீங்கள் பற்றி .?
கணவனே கண்கன்ட தெய்வம், யார்பையன், மிஸ்ஸி யம்மா கல்யாணப்பரிசு, சுமைதாங்கி, வஞ்சிக்கோட்டை வாலிபன் அப்படிப் பல பல என்கின்ருர்,
அவருடன் ப்ேசப் பேச் நேரம் போவதே தெரியவில்லை. ஆணுல் அவருக்கும் வேலைகள் எனக்கும் வேறு வேலைகள், !
- காலங்களில் அவள் வசந்தம் கலைகளில்ே அவள் ஓவியம்ஜெமினி திரைப்படிம்ொன்றில் பாடியபடியே ஒடு வது எனது மின்ச்சுண்ணில் நன்கு தெரிகின்றது.
ܢܓܵܠܵܐ
 
 
 
 

வாலயங்களில்
கத்தோலிக்க
மறுமலர்ச்சி
(தமிழ்ப் பகுதிகளிலுள்ள கத்தோலிக்க தேஜா லயங்களில் இப்பொழுது தமிழிலேயே ஆராத னைகள் நடை பெறுகின்றன, நாதஸ்வர இசை யும் சில தேவாலயங்கள்ல் ஒலிக்கத் தொடங் கியுள்ளன. பெண்கள் பூமுடித்து நெற்றியில் குங்குழத் திலகமிட்டும் (தேவாலயத்துக்குச் செல்கிறர்கள். இவை இப்போது ஏற்பட்டு வரும் மாறுதல் இந்த மாறுதலுக்கு என்ன காரணம் ? இதை கத்தோலிக்க மக்கள் வர
வேற்கிறர்களா?
நாலுபேரிடம்கேட்க நினைத்தோம்.மூவர் தான் ஆகப்பட்டனர். அவர்கள் சொன் னதை இங்கு தருகிருேம்.)
தமிழ் அறிஞரும் சமீபத்தில் புலவர் பட்டம் பெற்றவரு மான சவரிமுத்து ஆடிகளார் என்று அழைக்கப்படும் வண.
நீ, மரியூசேவியர் அவர்கள் :
ஈழத்துக்குக் கிறிஸ்தவ மறையைக் கொணர்ந்தவர்கள்
அதைப் பரப்பியவர்கள் வெளிநாட்டவர்கள்தான். தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களையும் கலை கலாசாரப் பாரம்
பரியத்தையும் அவர்கள் நன்கு புரிந்துகொள்ளவில்லை4 சம யத்துறையில் ஈடுபட்டிருக்கும் இன்றைய தொன்டர்களோ
தமிழ்ப் பண்பாட்டில் ஊறித் திழைத்து, அதையே உயிர்த்
துடிப்பாகக் கொண்டவர்கள். எனவே கிறிஸ்தவ சமய
{。
சிந்தனையில்-வழிபாட்டில் இன்று தமிழ்மணம் கமழ்வது
வியப்பன்று.

Page 70
124
மங்கள விழாக்களில் நெற்றியில் திலகமிடுவது நமது பண்டையதொரு பழக்கம் 1 கி ரீ ஸ் த வ விழாக்களிலும் பூவுடனும் பொட்டுடனும் தோவிலுக்கு வரும் மகளிரின் தொகை பெருகிவருகிறது, ஆண்கள் பெருமளவில் இப் பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை.
திருவழிபாட்டு வேளையில் நாதஸ்வரத்தின் மங்கள இசையைக் கலப்பதும், இன்று நடைமுறைக்கு வந்துவிட் டது. வயலின், மிருதங்கம், ருத்ர்வீணை முதலிய வாத்தி யங்களையும் நாம் இன்று சர்வசாதாரணமாகப் பயன்படுத்து கிருேம். இவைகளை நான் முதன்முதலில் எனது பழைய பங்கொன்றில் அறிமுகம்செய்து வைத்தபோது, கேள்விக் கணைகள் கிளம்பத்தான் செய்தன. இருந்தும் பெரும்பா "லான மக்கள் முகம் சுழிக்காமல் வரவேற்கிருர்கள். தமிழ்ப் பண்பாட்டுக் கருவிகள் அழிந்துபோகாமல் புத்துயிர் பெறு
வதாகப் பெருனமயடைந்தார்கள்.
பாடல்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும், மேல் நாட்டு இசையும் நம்முடைய இசையும் கலந்த பண்களையே நாம் கைய்ாளுகிருேம். காரணம் இந்தப் பாடல்களில் சங்கீத ஞானம் இல்லாதவர்களும் கலந்துகொள்ள வேண் டும் என்பதுதான். இருந்தும் நமது யாழ்மறை மாவட் டத்தைப் பொறுத்தளவில், எத்தனையோ பாடல்களைக் கர் நாடக சங்கீத மெட்டுக்களில் புதிதாக அமைத்துவருகி ருேம். உதாரணமாக, கிறிஸ்தவ திருமணச் சடங்குகளிலே பாடப்படும் பாடல்களை நான் எழுதினேன். அதற்குத் திேருமறைக்கலாமன்ற இசையமைப்சாளர் எம். யே. தாஸ்
தூய கர்நாட்க மெட்டில் இசையமைத்துள்ளார்.
இன்று சிறப்புத் திருவிழாப் பூ  ைசகளில் பூசைக்கு வரும் குருவை வணங்கி, மாலையிட்டு, பொட் டிட்டுஆராத்திசெய்து வரவேற்கும் அம்சங்களும் நம்வழி பாட்டு முறைகளில் புகுந்துள்ளன. -
*、
ܓܵ
4
 

125
ருேமை மாநகரில் நடந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்கங்கத்தின் நியதியின்படி, தமிழர்கள் வாழும் இடங் k களில் தமிழிலேயே வழிபாடுகள் நடக்கின்றன. தத்தம் மொழியிலேயே வழிபாட்டை நடாத்தும் சிறப் பும், பேறும் சைவமக்களுக்கு இன்னும் கிட்டவில்லை, இதில் நாம் ஒருபடி உயர்ந்துதான் நிற்கிருேம்.
f : . V,,
கிறிஸ்தவர்களும் பொங்கல் விழாவும் :
* பொங்கல்விழா ** அது தமிழ் மக்களாகிய நம்து தங்கவிழா " என்று ஒரு விழாவில் நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு தமிழ் பேரவை உறுப்பினர் என்னைப் பாராட்டிஞர். ஆனல் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது. பொங்கல் விழா இறைவனுக்கு நாம் (உழவர் கள் சிறப்பாக ) செலுத்தும் நன்றி விழா என்ருல் இதில் - மத பேதத்திற்கு இடம் ஏது ? எத்தகைய வேறுபாடுமின்றி "நாம் எல்லோரும் அதை நமது விழாவாகக் கொண்டாட
வேண்டும், -
இறுதியாக, கிறீஸ்தவ சமுதாயத்தில் தமிழ்க் கலை கலாச்சாரத்தை ஒட்டிய முறையில் இன்று ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது என்ருே நடந்திருக்கவேண்டு மென்ருலும் இன்றும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று, நடைமுறையில் மேலும்மேலும் செயலாற்றப்பட வேண் , :ஒன்று ש-4ו
தேவாலயத்தில் தொண்டுசெய்ய முன்னிற்கும் இளவாலை யைச் சேர்ந்த இளைஞர் திரு. எஸ். ஜேம்ஸ் ரட்ணராஜா ஜி. ஸி. ஈ. (உயர்தரம்) பயின்றவர். அவர் சொன்ன கருத்து இதோ: இன்றைய வாலிபர்கள் எ தி லுமே புரட்சியையும் புதுமையையும் காண விழைபவர்கள். இப்பொழுது நடை " முறையில் பிரபல்யம் அடைந்துவரும் சந்தனத்திலகமிடும் பழக்கத்தை சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே இன்றைய இளைஞர்கள் ஆதரித்து வந்துள்ளனர். சிறிய வயதில் புதுமையாகக் கண்ட எமக்கு இன்று ஒரு புரட்சியாகத்

Page 71
126
in G தன்படுகி றது இப்பழக்கம். அடுத்து சைவ மங்கையர்கள் குங்குமம் அணியும் பொழுது அவர்சனில் புதியதொரு
கவர்ச்சியைக் காண முடிகிறது. ஆணுல் இன்றைய கிறிஸ்
தவ சமுதாயம் காலப்போக்கில் இந்த மாற்றத்திற்கும் நிங்சயம் தலைவணங்கும் என்று உறுதியுடன்நம்பலாம்.
எம்மவர்சளில் சிலர் கருதுவதுபோல பொங்கல்விழாவை
6 Thorraio நல்ல முறையில்  ைக யாஹா முடியாதென்பதே எனதுகருத்து. இதைத் தமிழர் பண்பாடு ன்ன்ருே கலாச்
சாரம் என்ருே சிலர் வர்ணிக்கலாம். அப்படியாயின்
தமிழருக்கே உரித்தான சிற்பவேலுைகளையும் சைவ ஆலயூங் களில் காண்பதுபோல ஏன் எம்மாலும் எமது ஆலயங் களில் புகுத்த முடியாது? இது எவ்வாறு நடைமுறைக்கு ஒவ்வ்ாத முரண்பாடோ, அவ்விதம்தான் பொங்கல் விழா வையும் - அதன் புனிதம் கெடாமல் ஏம்மவர்களால் செய்யமுடியாது.
கர்நாடக இசையின் மத்துவத்தை உணர்ந்துள்ளவர் களிலும் பார்க்க மெல்லிசையின் கவர்ச்சியில் வயப்பட்ட
மெல்லிசைப் பாடல்களையே ரவிக்கிழுங்கள். ஆகவே தேவாலயங்களில் பாடப்பெறும் கீர்த்தனைகள் எல்லோருக்
கும் விளங்டும்படியாக நன்கு ரஸிக்கும்படியாக ஆள்ள
தற்போதைய முறையே தொடர்ந்தும் அமுலிலிருக்க வேண்டும். −
எமது ஆலயங்களில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்வது ஒருசம்பிரதாயமாகும். இதனல் கோவி லின் புனிதத்தன்மை கெட்டுவிடாதா என்று சிலர் ஐயப் :டுகிருள்கள் ஆளுல் எந்த சாக்கடை நீரும்கூட ஆண்ட வனின் திருவடியில்படும்பொழுதே புளிதத்தன்மைபெற்று விடுகிற தென்பதை உணரவேண்டும். ஆண்டவனின்கால் பட்டு புனிதத்தன்மை எய்துவதென்பது பொய்யாயின் பாலசங்கீர்த்தனம் கிடைக்குமென்பது தவறயின் ஆதலிகை பின்கதை எவ்விதழ்கத்திழக்கிககும் -
 

127
யாழ்ப்பாணம் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் ஒரே ஒரு பெண் உறுப்பினரும் சமூக சேவகியும் பக்தையுமான திருமதி: அந்தோனியா சுவாமி நாதரிடம் கேட்டபோது அவர் கூறியதா வது:
கிறிஸ்தவம் மேல்நாட்டு மிஷனரிமாரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இது அகிலஉலகமும் பரவியுள்ள சமயம். அந்நியராதிக்காலத்தில் சம்யவழிபாட்டிலும் அவர் களின் கலை, கலாச்சார, நாகரீகத்துக்கே முதலிடமளிக்கப் ". இப்பொழுது உலகம் மிதிவருகிறது.நாடுகள் விடுதலையடைந்துள்ளன அந்தந்தப் பகுதிம்க்கள் தமது புராதன கலை கலாச்சாரத்தைப் பேணி மறுமலர்ச்சிகான விரும்புகிறர்கள். இந்தவகையில் கத்தோலிக்கத் தமிழ் toksoir 5D gi தமிழ்க்க்லை: கலாச்சார நாகரீகத்திற்குப் புத்துயிர் அளிக்க முன்வந்து சமய அனுஷ்டானங்களோடு ஒத் துப்போகக்கூடிய மாறுதல்களைச் செய்வது வரவேற்கக் கூடிய விஷயம்.
#్య

Page 72
கல்யாணம்
இதை எப்படிச் செய்வது கல்யாண வைபவத்தை
எப்படி நடத்துவதென
ஐவர் சொல்கிறார்கள்
இப்பொழுது கல்யாண சீசன் அல்லவா? சாதாரணமாக நம்மவர்கள் வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்று கூறுவார்கள். இரண்டும் பணச் செலவை உண்டுபண்ணுவது என்பதே இதன் அர்த்தம். இன்றைய பொருளாதார சூழ் நிலையில் முன்னர் போல் ஆடம்பரமாகக் கல்யாணத்தைச் செய்ய முடியாது. ஆதலால் சம்பிரதாயங்களை முறியடிப்பதா? அல்லது மிக வும் சிக்கனமாக நடாத்துவதா? அல்லது பதிவுத் திரு மணம் செய்து கொள்வதா?* கல்யாணத்தை எப்படிச்
செய்யலாம்?
இது பற்றி நால்வரிடம் கேட்க நினைத்தோம் கல்யாணம் $ என்றால் கொண்டாட்டம் தானே ஐவர் அகப்பட்டு விட் 3 டனர் அவர்கள் சொன்ன சுவையான கருத்துக்களை இங்கு
தருகிறோம்.

129
இந் தப் பிரச்சனைக்குப் பதில் சொல்லக்கூடிய பொருத் தமான பிரமச்சாரி அட்வகேட் ராஜேஸ்வரன் தங்கராஜா இவர் திறனாய்வுக் கழகத் தலைவர். இவரைக் கேட்டோம் அவர் இவ்வாறு கூறினார்.
கல்யாணத்தை இயன்றளவு சம்பிரதாய முறைப்படி செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். சிலர் சமயா சாரச் சடங்குகள் எதற்கு? குருக்கள் ஏன்? இவையெல் லாம் தேவையில்லை. என்பார்கள். சமயம் வாழ்க்கையில், அவசியமானதொன்று. மதத்தை எதிர்ப்பவர்களே மதா சாரியான குருக்களை வேண்டாம் என்பார்கள்.அவர்கள் பின்பு கோயில் எதற்கு என்பார்கள். இப்படி மதத்துக்கு அழிவு தேடிவிடுவார்கள். ஆதலால் மணவிழாவில் குருக்கள் அவ சியமானவரே.
அடுத்து இயன்றனவு நண்பர்கள் உ ற வி னர் க ளை அழைத்து உணவு கொடுப்பது நல்லது. ஒரு நூறு பேருக்கி உணவளிப்பதால் அந்த நூறு பேரின் வீட்டிலும் ஓரளவு சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறதல்லவா? வசதியானவர்கள் எத்தனை பேருக்கும் உணவு அளிப்பதில் தவறில்லை.
என்னத்தைச் செய்தாலும் மனதைப் பொறுத்தது. ஆனால் சூழ்நிலைக்குத் தக்கவாறு கருமங்களைச் செய்தலே 3 சிறந்ததும் உசந்ததுமாகும். கல்யாண விஷயத்தில் சமூகம் தொடக்கம் சட்டம் வரை சுதந்திரம் அளிக்கப்படவேண்டும்
சட்டத்தின் மூலம்:
சட்டத்தின் மூலம் எங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத் தக்கூடாது. கல்யாணத்துக்கு இவ்வளவு பேர் தான் வர வேண்டும். இப்படித்தான் செய்யவேண் டும் என்றெல்லாம் சட்டம் இருக்கக்கூடாது. அப்படி வந்தால் அதன்பின் விளைவுகள் அதிக தீமை விளைவிக்கக்கூடியதாகவே இருக்கும். அரசாங்கம் எங்கள் சொந்த வாழ்க்கையைக் கட்டுப்படுத்

Page 73
13O
தும் அளவுக்கு வைக்கக்கூடாது. இந்த விடயத்தில் எங்க ளுக்குப் பூரண உரிமை இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தளவில் திருமணம் வந்தால் அப் போதைய சூழ்நிலைக்கேற்ப என்மன நிலையைப் பொறுத்து சம்பிரதாய முறைப்படி நண்பர்கள் உறவினர்களே அழைத்தே திருணம் செய்வேன்.
இளம் வழக்கறிஞர் கேசவன் கனகரத்தினம் இவரும் ஒரு பிரமச்சாரி. க்ல்யாணச் சந்தை யில் நிற்பவர். எங்களுக்குப் பதிலளிக்கப் பொருத் தமான இளைஞர். இவரிடம் கேட்டபோது அவர் கூறிய சுவையான பதில்:-
சிக்கனமாகவே திருமணத்தை மு டி த் து க் கொள் ள வேண்டும். இன்று பவுண் விற்கும் விலையில் அதிக பவு ணில் எல்லோரும் தாலிக்கொடி செய்து கட்ட முடியாது.
மஞ்சள் கயிறே கட்டுவேன்.
பவுணில் தாலிக்கொடி எல்லோரும் செய்து கட்டத் தக்க வசதிவரும் வரை நான் பவுணில் தாலி கட்டமாட் டேன். மஞ்சள் கயிற்றிலேயே தாலி கட்டுவேன்.
கல்யாணத்தின்போது வருபவர்களுக்கு பசிக்கு உணவ ளிக்கவேண்டும். அதில் கடும் சிக்கனத்தைக் கைக்கோள்
ளக் கூடாது. ஆனல் ஆடம்பர உணவுகள் செய்ய இன்று
பொருட்களில்லை. பணமில்லை, ஆதலால் ஆடம்பர உணவு களான கேக். பட்டீஸ், கட்லட்ஸ் போன்ற பண்டங்களை அறவே நீக்கிவிடலாம்,
கல்யாண வைபவத்துக்கு ஆட்கள் வரத்தான்வேண்டும். சபை இருந்தால்தானே சபையோர் சாட்சியாக எனக்கூற லாம். கல்யாணத்தில் கட்டாயம் சம்பிரதாயங்கள் இருக்க வேண்டும். கல்யாணம் புனிதமான வைபவம். அது சமயா சாரப்படி நடக்கவேண்டும்.

131
மேலும் சீதன வழக்கமும் விவாகத்தைச் சிக்கலாக்குவ தொன்று. அது ஒளிக்கப்பட வேண்டும். சீதனம் வளங்கா மலே நான் விவாகம் செய்து கொள்ளுவேன். இதை ஒரு சமூக ஊழல் என்றே குறிப்பிட வேண்டும்.
வாழ்வில் ஒருநாள் தானே:-
விவாகமானவர் இந்த வழக்கறிஞர், சம்பிர தாய முறைப்படி, ஒரளவு ஆடம்பரமாக விவா கம் செய்து கொண்டவர் இவர்தான் வழக்கறி ஞர் திரு. வல்லிபுரம் இவர் கூறுகிருர்,
'திருமணம் என்பது நமது வாழ்க்கையில் ஒரு முறை தானே வருவது. அதை நன்ருக மகிழ்ச்சியாக நாலுபேரறி யக் கொண்டாடினுல் தான் என்ன. இந்த நிகழ்ச்சிக்கு நாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், இந்த நிகழ்ச்சியில் இடம் பெறும் பாரம்பரிய சம்பிரதாய முறை கள் இருக்கத்தான் வேண்டும்.
ஆனல் வரவேற்பு உபசாரங்கள், சோடனைகள் ஒலி பெருக்கிகள், அளவுக்குமிஞ்சின இசைக்கச்சேரிகள் ஆகியன இருக்கக் கூடாது. இதனுல் எவ்வளவோ பணத்தை மீதப் படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளலில் கல்யாணத்தின் போது சாப்பாட்டுக்கும் உடைக்கும் செலவுகள் செய்வது அதிகம், இந்தச் செலவுகளை இன்றைய பொருளாதார நிலையில் ஒரளவு கட்டுப்படுத்தலாம்.
மேற்கூறிய மூவரதும் கருத்துக்கு முரண்பாடானது இந்த நண்பரது கருத்து பிரபலவர்த்தகர். இவர் செய்து கொண்ட பதிவுத்திருமணம், தனது பெயரோ புகழோ பத் திரிகையில் வர விரும்பாதவர். வளமான வாழ்வு வாழ்கி ருர், இவர் கூறும் கருத்து:

Page 74
132
இன்றைய சூழ்நிலையில் சிக்கணத் திருமணம் செய்வது தான் சிறந்தது. எத்தனையோ வேலைகளுக்குப் பணம் தேவை யாக இருக்க இதில் ஏன் பணத்தை அதிகம் செலவு செய்ய வேண்டும். திருமணம் புனிதமானதுதான், நான் மிகவும் சிக் கனமாகவே எனது திருமணத்தைச் செய்து கொண்டேன்.
எனது தாய் தந்தையரே எனக்குத் தெய்வம், அவர்க ளின் படங்களுக்கு முன்னிலையில் தாலி, கூறையாகியவற்றை வைத்துப் பிரார்த்தித்தேன். இதற்கு முன்னர் விவாகப் பதிவைப் பதிவுக்காரரை அழைத்துச் செய்துகொண்டேன். தாய் தந்தையரை வணங்கிவிட்டுத் தாலியை எனது மனை வியின் கழுத்தில் கட்டினேன். மகிழ்ச்சியாகவே எ ங் கள் திருமணம் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. சந்தோ ஷமாகவே வாழ்கிருேம்.
திருமணச்சடங்கில் பிரதான இடம் வகிப்ப பவர் மதகுருவல்லவா? அவரின் கருத்தும் நமக்கு இவ்விடயத்தில் அவசியம் வண்ணை வைத்தீஸ் வரன் கோவில் பிரதம குகுக்கள் பிரம்மனு எஸ். கைலாசநாதக் குருக்களைக் கேட்டோம். அவர் கூறி HU 95 TT 31 gif .
குறிப்பிட்ட வயதுடைய ஆணும் பெண்ணும் தாய், தந்தையர் சகோதரர்கள், உற்ருர் உறவினர்கள் குரு
பெரியோர் முதலியவர்களின் ஆசி ப்ெற்று மணவிழா சபையில்
தான் கைப்பிடிக்கும் பெண்ணை அன்பு சத்தியம் நேர்மை தவருமல் வாழ்நாள் முழுவதும் ஈருடலும் ஒருயிரும் போல் வாழ்வதாக உறுதி செய்து திருமாங்கல்யம் (தாலி) கட்டு வதே திருமணவிழா,
கலியாடடமாக கூடிாது,
மேற்படி வைபவத்தைக் கூடியவரையில் ஆடம்பர் மின்றி பக்திச் சூழ்நிலையில் செய்வதே சாலச்சிறப்புடையது
 

133
சத்தியப் பிரமாணம் செய்வதற்கு ஒப்பானதுதான் திரு மணம் பக்திச் சூழ்நிலையின்றி ஆடம்பரமாக நடைபெற் முல் அது களியாட்டம் மாதிரி பிற்கால வாழ்க்கையைப் பாதிக்கலாம். உதாரணமாக திருமண  ைவ பவ த் தி ன் போது அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல் முதலிய சில நிகழ்ச்சிகள் பெண்களுக்கு எப்போதும் வாழ்க்கையில் உறுதி யான மனநிலையையும் கற்பின் மேன்மையையும் அறிவிப் பதாக உள்ளன.
மற்றும் தற்காலத்தில் திருமண வைபவம் வைதீக சம் பிரதாயம் இல்லாமல் திருக்குறள் உவமை கூறியும் இன்னும் கடவுள் இல்லை என்ற கொள்கை வெளிப்படக்கூடிய மாதி ரியும் விவாகங்கள் நடைபெறுகின்றன. அந்த விவாகம் எமது சைவ சமயத்தில் உள்ளவர்கள் வைதீகசம் பிரதாயத் தில் உறுதிபண்ணி செய்யும் திருமணத்திற்கு ஈடு இண்ை பாகாது.
உதாரணமாக ஒரு கதையை நாம் புத்தகத்தில் படிப் பதைவிட அதைக் காட்சி ரூபமாக நீாடகத்திலோ திர்ை யிலோ பார்க்கும்போது மனதில் கூடுதலாகப் படிகிறது. மனதில் படியும் நிலையை ஒததுத்தான் நாங்களும் தொழில் படுகிருேம். ஆகையால் வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தின் உள்ள சில நிகழ்ச்சிகள் மணமக்கள் மனத் தில் பதிந்து பிற்கால வாழ்க்கையில் மன நிலை மாறும் போது எங்கள் மனநிலே திருந்த உபயோகப்படுகிறது.
பக்திச் சூழ்நிலையின்றி ஆடம்பரமாகச் செய்யும் விவா கங்களினல் பணம் விரயமாவது அல்லாமல் ஒரு நன்மை, யும் இல்லை. இன்னும் தற் கால சட்டவிதிகளுக்கமைய நடக்கும் விவாகப் பதிவுகளை கூடியவரையில் சமய முறைப் படி நடந்தவுடன் செய்வது தான் நலம்,
விவாகப்பதிவு முடிந்து சமய முறைப்படி விவாகம் நடைபெறும் முன்பு பிரிந்து ஷ்டமுறும் குடும்பங்களும் உள. சமய முறைப்படி நடைபெறும் விவாகத்தில் மண மக்களின் மனநிலையும் பக்குவமடையக் கூடிய நிலையிலிருப் பதால் எத்தனையோ குடும்பங்கள் பிரிவதற்கு சந்தர்ப்பமும் இருக்காது.

Page 75
இலக்கியத்தில்
நியூ வேவ்
(சினிமா, சங்கீதம், நாட்டியம் எல்லாவற்றி
லுமே " நியூவேவ் " என்ற புதிய அலைகள் தோன்றி யுள்ள இக்காலத்தில் இலக்கியத்திலும் "நியூவேவ்" என்ற புதிய அலைகள் அலைமோதிக் கொண்டிருக் கின்றன, இது பற்றி நம்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள்நால்வரைக்கேட்டோம்,நாலுபேர் சொன்னதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டு மல்லவா ! )
மறுமலர்ச்சி எழுத்தாளரான சிந்தனைச் செல்வர்
அ. செ. முருகானந்தன் கூறுகிறர் :
புதுமை இலக்கியத்தின் வளர்ச்சி பெற்ற கிளையாகவே இந்த நியூவேவை நான் கருதுகின்றேன். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்ப்ொருள் மெய்ப்பொருள் காண் பது தான் அறிவு பண்பாட்டின் அடிப்படையை நியூவேவ் சீரழித்திடாவிடின் அதைக் கரம்நீட்டி வரவேற்கலாம்.
கல்வியின் தரத்தை அதனுல் மெருகூட்ட முடியுமாயின் அதிைப் போற்றிப் பாராட்டலாம். பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்கக்கூடிய எந்த ஒரு கலையும் நிச்சயம் உகந்ததே,
پ
 

தமிழ்மணம் கமழும் எந்தவொரு இலக்கியமும் தனித் துவமிக்கவையாக மிளிரமுடியும். எப்போது ? அவைஉரிய முறையில் செயல்படும் பொழுது, தமிழ்க் கலாச்சாரத்தை அணுவளவும் பிசகாமல் நெறிப்படுத்தும்போது,
இளைஞராக இருந்தபோது இதிகாசங்களை விரும்பியநாம் இப்போதைய இளைஞரும் அதைத் தான் எதிர்நோக்க வேண் டும் என்று அபிப்பிராயப்படுத்துவதில் அர்த்தமேயில்லை. காலம்மாறுபாட்டால் ஊரோடு ஒத்துவாழவே விரும்புவார் கள் அவர்கள்.
ஆலமரம் மேல்நோக்கி வளருகிறது. ஆனல் அதன் விழுதுகளும் கனிகளும் கீழ்நோக்கத்தான் முடியமேதவிர மேலே செல்ல முடிவதில்லை. பின் கீழேவந்த அவற்றி லிருந்து உருவமாகும் புதிய தலைமுறை நிச்சயம் மேலோங் (35 LD.
புதிய அலைகள் அலை அலையாக வரினும் அங்கே ஆபத் துக்கு இடமேயில்லை. ஆனல் தமிழர் பண்பாடு, கலாச் சராம் பரிணமிக்கவேண்டும். பாதுகாக்கப்படல் வேண்டும்.
பழுத்த இலக்கியவாதியான ரவலிகமணி. இலக்கியச் செல்வர் கனக செந்திநாதனின் கருத்து :-
கள்ளிப்பலகையால் செய்த மேசைபோன்றதுதான் புதிய அலை இலக்கியமும் அதனல் உடனே ஏதாவது உபயோக மிருப்பினும் நீண்ட நெடுங்காலத்திற்கு பலனளிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
பத்திரிகைகள்தான் ஒரு நாட்டின் கைநாடி, அதன் மூலம்தான் சமூகத்தின் நோயை அறியமுடியும், அதற் கேற்ற நிவாரணத்தையும் செய்யமுடியும் நோயாளிக்கு ஏற்ற மருந்தைக் கொடுப்பதுதான் சிறந்தமுறை. "நியூவேவ்" என்ற வியாதி. இலக்கிய சுவைஞர்களின் ஆரம்பக்கட்டத் தில் வருவது அதற்கு இதிகாச காப்பியங்களையும் காவியங்

Page 76
136
களையும் உருட்டிக்கொடுத்து நாளைக்கு 8 நேரம் சாப்பிடு என்று பத்திரிகை திணிப்பதால் அவனின் இரத்தம் சுத்தி கரிக்கப்பட்டுவிடாது, அவன் விருப்பும் வண்ணம் செயல் பட்டால்தான், மேலும் மேலும் அவன் இலக்கியத்தைத் தேடி ஒடுவான். காலப்போக்கில் அவனிடம் நல்ல இலக்கியவளர்ச்சி கரைபுரண்டோடும் புதிய அலைகளால் இழுக்கப்பட்டு - நடுக்கடலுக்குச் செல்லும்போது அங்கே அலையே இல்லாத ஒரு சமுத்திரத்தை நன்கு உணர்வான் ஊறித்திளைப்பான். அந்தப்பெரிய சமுத்திரம்தான் பண்டிதர் காணும் இலக்கிய உலகு. அப்போழுது பாமர இலக்கியம் என்ற புதியஅலை வைராக்கியம் பெற்ற அவனது பாண்டித் தியம் என்ற மனக்கல்லில் பட்டுச்சிதறி நீர்த்துளிகள் போல் ஆகிவிடும்.
தெரிந்தோ தெரியாமலோ யாரோ வைத்த இந்தப் பெயர்தான் எவ்வளவு பொருத்தம் என்பதைப்பார்த்தீர் களா?
அலைகள் மீண்டும் மீண்டும் தோன்றினலும் சுவடுதெரி யால் மறைந்து போகின்றன. என்பது அனுபவரீதியான உண்மை.
காலத்தால் சகாவரம் பெற்றவைதான் பழையகாரியங் கள். அவற்றுடன் புதிய அலைகள் ஒப்பு நோக்கும்போது பரந்துவிரிந்த ஆலமரமொன்றும் அதன்கீழ் முளைத்திருக் கும் சிறுபுல்பூண்டுகளும்தான் எமது நினைவிற்கு வரமுடியும். பன்னெடுங்காலம் வாழும் அவை எங்கே?, மாருக சிறிய காலம் உலகில் தலைகாட்டும் இவை எங்கே?
பலதுறை எழுத்தாளரான Ex
சில்லேயூர் செல்வராஜன் சொல்கின்றர்
'நியூவேவ், என்பது தரக்குறைவானதோ, தீண்டப் படத்தகாததோ அல்ல, அங்கு அருவருப்போ அல்லது ஆபா

சமோகூட அவ்வளவாக இல்லை, இதுதான் சரியான வலுவும் பொலிவும் மிக்க நியூவேவ்.
ஆணுல் நம்மவர்களின் பலர் அதை நல்லமுறையில் கையாளுவதில்லை அவர்களது பேணுமுனையின் குறிக்கோள் மொழியிலேதான் அக்கறைகொண்டுள்ளது. அது சுற்றிச் சுழண்டு வேகமாக நடைபோடுகிறது. கையாளும் பாஷை யை எழுத்தாளர்கள் பலர் லாவகம்ாக கையாளுகின்றர் கள், சரளமான ஒருபாணியை உருவாக்குகின்ருர்கள். வள மானதமிழ் நடையை அவர்கள் புட்டுப் காட்டுகின்றர்கள்.
இதனுல் நியூவேவ் கதைகளைப் பெரிதும் ஆதரிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகினலும், அநேகர் எடுத்தாளும் கருப்பொருளில் உள்ள முரண்பாடுகள், எமது எ ன் ண அலைகளைத் திசை திருப்பிவிடுகின்றன என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான், பிளிமவுத் காரும் மழை யும் காற்றும் ஊடலும் கூடலும் அதிகமாகக் கதைகளில் அலைமோதுவதை நாம் அவதானிக்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராத இந்த வீண் விதண்டாவாதங்களை ஏற்றுக் கொள்ள மக்கள் என்றுமே தயாராக இல்லை என்பதுதான் எனது கருத்து, இதனல் நியூவேவ் நிராகரிக்கப்பட வேண் டியவஸ்துவாக மாறி விடுகின்றது.
பெண்மையைக் சித்தரிக்கும் ஒருவனது கதையில் - அச்சம் - மடம் - நாணம் இழையோட வேண்டும். அதன் பின்னணியில்தான் பிளிமவுத்காரோ மற்றதெல் லாமோ வரவேண்டும். அப்படி இயற்கையை ஒட்டியே நியூவேவ் அமையுமாயின் அதன் எதிர்காலம் பிரகாசம்ான தொன்றுதான்,
இதற்கு நல்லதொரு உதாரணமாக புதுமைப்பித்தன் எழுதிய, பொன்னகரத்தை குறிப்பிடலாம். திருநேல்வேலித் தமிழை கையாண்டு எழுதிய அந்தக்கதையில் கருப்பொரு ளுக்கு, உரியமுக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருந்தது

Page 77
138
இதனுல் நாம் உணரக்கூடியது.ஒன்றுதான். வசனநடை யால் மாத்திரம் " நியூவேவ் " என்ற பெயரைக் கையாள்வ தில் எவ்வித அர்த்தமுமேயில்லை; மாருகப் பொருள்தான் பரிணமிக்கவேண்டும். பொன்னகரம், வரவேற்படைந் திருந்தும் ஆளமான வார்த்தைகள் தொடரப்படவில்லை, ஆனல் அதன் பிரதிபலிப்பு மகத்துவமானதாக அமைந்தது.
சொல்வீச்சினை அள்ளிச்சொரியும் உத் வே க எழுத் தாளர்களது நாட்டம் கருத்துவீற்றினை மையலிட்டால்.
-அங்கு நியூவேவ் தத்ரூபமாகச் சிறப்படையும்.
சினிமாவுக்கோ நாடகத்திற்கோ நியூவேவ் ஒரு புதிய உத்திமுயையாகக் கருதப்படும் பட்சத்தில் உருவம் சம்பந்தப் பட்ட பிரச்னைதான் இது. தெருக்கூத்திலிருத்து மேட்ைக்' கூத்தும், மேடைக் கூத்துகளிலிருத்து வட்டமேடைகள் அமைக்கப்பட்ட வசனம் வாசாப்புமுறைகளும் இவைகளி லிருந்து நாட்டுக்கூத்துமுறையையும், இதிலிருந்து டிருமார் வும் அதற்கப்பால் சினிமா முறையும். மாறிவந்தமை தொழில் இயந்திர சாதன வளர்ச்சியாலேயாகும். இந்தச் சினிமா, முறையில் நவீனப்பட்ட நிலைதான் நியூவேவ்",
எந்த முறையில் எப்படிச் செய்தாலும் சொல்லப்படும் விஷயத்தின் அடிநாதம் என்ன என்பதுதான் கவனத்திற் குரியதாகும். அது நியூவேவ் முறையாக இருந்தாலென்ன. தெருக்கூத்து முறையாக இருந்தாலென்ன எந்தக் கலையாக
இருந்தாலும் அது எளிமைப்பட வேண்டும். மக்கள் மத்தியில்
ஜனரஞ்சகமாக வேண்டும். சில புதுக்கவிதைகள் போல அவை, எளிமைப்படுத்தப்படுவதற்குப் பதில் கடினமடிையு மாயின்.அது, தூக்கி வீசப்படவுேண்டியதே.
மாருததென்பது உலகில் மாற்றம்" என்ற ஒன்றைத் தவிர வேறென்றுமில்லை. புதிதான ஒன்று தோற்றுவிக்கப் படும்போது அதன் அவசியம் சமூகத்திற்குத் தேவையென காணவே தோன்றுகிறது நியூவேவ் முறையும் அதற்குட்பட் . .,وقLG
2. A
༦༽ ༈ ག་ན་
if t.
 

139
கணவனுக்குக் கஞ்சிக்கலயம் எடுத்துக்கொண்டு வயல் வரம்பால் நடந்து செல்லும் ஒரு இளம் (குறுக்குக்கட்டு) மனைவியைப் படமாக்க முனையும்போது பல கோணங்களிலி ருந்து அவளைப் படம் பிடித்துக் கொள்ளலாம். இதனை நியூவேவ் முறை என்றும் சொல்லப்படுகிறது. இரசிகர்களைக் கதையின் மூலக்கருவை விட்டுவிட்டு எங்கோ இழுத்துச் செல்வது ஒரு சண வேளையாக இருந்து இந்தக்காட்சிகள் அந்தக் கதையின் மூலக்கருவுக்கு ஊட்டம் கொடுப்பதற்காக வாக இருந்தால் அது அப்படிக் காட்டப்பட வேண்டியது தான.
இரசிகனைக் கெடுப்பதென்பது நியூவேவ் முறையல்ல ஒரு விபச்சாரியின் வாழ்க்கைச் சித்தரிப்பில் எத்தனையோ அசூசையான சம்பவங்கள் வரலாம். ஆஞல் எந்தவரையில் அந்தச் சம்பவங்களை இரசிகனுக்கு முன்னல் காட்டுவதென் பதற்கு "நியூவேவ்' முறைக்கு மட்டும் வரையறை இருக்க வேண்டியதில்லை; அந்த வரையறை அந்தப்படத்தையோ, நாடகத்தையோ படைப்பவனுக்குத்தான் இருக்கவேண்டும்.

Page 78

பெண்கள் இப்பொமுது சகல துறைகளிலும் முன் னேறி வருகின்றர்கள் என்பது எவராலும் மறக்கமுடியாத உண்மை, எந்தக் காரியாலயத்துக்குச் சென்ருலும் அங்கு ஒரு பெண்ணுகுதல் கடமைபுரிந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பெண்களின் இடம் அடுப்படிதான் என்ற பழமை மொழி இன்று மிகவேக மாக மாற்றப்பட்டு வருகிறது. அல்லது அழிக்கப்பட்டு வருகிறது.
படித்தபெண் வேண்டாம் என்று ஒருகாலத்தில் குரல் கொடுத்தவர்கள் இன்று படித்த பெண்களே வேண்டும் என்று வற்புறுத்திக் கூற ஆரம்பித்து வருகின்றர்கள். பெண்கள் படித்திருந்தால்தான் எதிர்கால சந்ததி நன்ருக முன்னேறும் என்ற உண்மை இப்போது எல்லோராலும் உணரப்பட்டு வருகிறது.
இந்த நேரத் தி ல் 'மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம்" என்ற பாரதியின் அரு மையான ஒரு குரல் கேட்கிறது,
பச்சடியையும் 'சலட் டையும் எப்படிச் சரிக்கட்டு வது என்பதைப்பற்றி யோசித்துவந்தகாலம் அல்ல இது பாரெல்லாம் மகிழ என்னசெய்ய வேண்டும் எ ன் ப து
பெண்களின் பொறுப்பாக மாறிவிட்டது.
மடம் கியூரி போன்றவிஞ்ஞான மேதைகள், விஜய லக்ஷமி போன்ற அரசியல் துறை மேதைகள், பேரில்பக் போன்ற இலக்கிய மேதைகள் இவர்கள்பற்றியும் இவர்கள் உலகுக் காற்றிய உலகுக்கு அளித்த அழிக்கமுடியாத சே வையையும் நினைவில் கொள்ளவேண்டும்.
இதுபற்றியெல்லாம் நன்கு சிந்தித்து 21-ம் நூற் முண்டில் நமது பெண்கள் எப்படி வாழவேண்டுமென்று விரும்புகிருர்கள் நால்வரைக் கேட்டோம். அவர்கள்
சொல்கிறர்கள்:-

Page 79
142
அரசியல் வாதியும், குடும்பப்பெண்ணுமான
திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்
sh
கூறும் கருத்து:-
ங்ெகள் சமூகத்திலே தாங்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்று நமது பெண்கள் எவ் வளவுதான் வீராப்புப் பேசிவிட்டாலும் ஆண்மைக்கும். பெண்மைக்கும் எவ்வளவோ வேறுபாட்டைக் காணத்தான் முடிகிறது. 19ம் நூற்ருண்டுக்கும் அதற்குமுன்பும் 20ம் நூற்ருண்டுக்கும் அதற்குப்பின்பும் எப்படி நம் பெண்மை வாழ்ந்தது, வாழ்கிறது, வாழப்போகிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். உடையில், நடிையில், பாவனை யில், கல்வியில், பழக்கவழக்கங்களில், அரசிய்ல் அனுபவங் களில் நாம் முன்னேறியிருக்கலாம், ஆனல் பெண்மை என்ற அந்தப் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒரு சக்தி எவ்வித மாறுபாடுமின்றிப் பெண்ணுக்குள்ளே ஆட்சிபுரிந்துகொண்டு தானிருக்கிறது. அது எந்த சகாப்தத்திலும் மாறுபட்டதே யில்லை.
சங்ககால இலுக்கியத்தில் நாம்கண்ட தமிழ்ப்பெண்களின் அறிவு வளர்ச்சியையும் அதன்பின் பெண்மை மூடக் கொள் கைகள்லும் அடிமைத் தனத்திலும் சிக்கிச் சீரழிந்த நேரத் திலும், பாரதிசைகாப்தம் தோன்றிப்பெண்ணடிமை நீங்கப் பிரயத்தனங்கள்செய்து 20ம் நூற்றண்டில் பெண்களுக்கு அரசியலில் சட்டப்படி உரிமை கிடைத்த நேரத்திலும் முன்பிருந்தவளர்ச்சி குன்றி இடையில் தேய்ந்து பின்னர் யந்திரகதியில் முன்னேறியிருக்கின்றது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் பார்க்காத தொழில் இல்லை. பாரதியின் பு துமைப் பெண்களாகவ்ே ஆகிவிட்ட னர் இன்றைய நம் அரிவையர்கள். 署
"சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும்
பாரினில் பெண்கள்."
 

ار
143
பெருந்தொகையாகக் குவிந்து பல்கிப் பெருகிப்பணி புரி கின்றனர்.
சங்ககால அரசியலில் அமைச்சராக விளங்கிய ஒளவை யையும் ஏனைய இனங்களில் இன்றைய அரசில் இருக்கும் பெண்களையும் ஒப்பிட்டு நோக்குவோம். சமீபத்தில் வந்த பத்திரிகையில் படித்த ஒரு செய்தியை இங்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். நாடற்ற ஒரு அநாதை இனமாகச் சிதறிக்கிடந்த யூதஇனம் தமக்கென்று ஒரு பாலைவனத்தை தேடி எத்தனையோ இன்னல்சள் மத்தியில் தமக்கென்று ஒரு பூமியைப் பொன்கொழிக்கும் பூமியாக்கி ஏனைய இனத் துக்கு இன்றும் போர் முழக்கம் செய்து புத்தி புகட்டிக் கொண்டிருக்கும் நாடான இஸ்ரவேலைத்தான் இங்கு குறிப் பிடுகிறேன். அந்தநாட்டின் இ ன்  ைற ய வீரப்பெண்ணுக விளங்கும் பிரதமர் கோல்டாமெயர் அவர்கள் போர்வீரர் களைப் பரிமாறும் நேரத்தில் தன்னுட்டு வீரர்களைப் பார்த்த வுடன் உணர்ச்சியால் கண்ணீர் சிந்தினர்' என்று படித் தேன். அந்தப்பெண்மை அங்கே தாய்மை உருவில் ஒளி விட்டது. உணர்ச்சிவசப்பட்டது. அதே பெண்மைஎன்ற சக்தி தமிழ் பெண்களுக்கு இன்னும் எங்கள் பண்பாடு, பழக்க வழக்கங்களால் எங்களைவிட்டுப் பிரித்தெடுக்கமுடி யாத ஒன்ருக விளங்குகிறது. ஒரு புது மெருகோடு,
நாகரீகம் என்றும் முன்னேற்றம் என்றும் சொல்லிச் சீரழியும் பெண்களாக நாம் இருக்கக்கூடாது. எனவே எவ்வளவுதான் அங்கும் இங்கும் அலையுண்டு, ஓடி, முன் னேறி யந்திரகதியில் நமது பெண்கள் வளர்ச்சியடைந்திருக் கிறர்கள் என்று வைத்துக் கொண்டாலும், கடிகாரநாக்கு அந்தக்கோடிக்கும் இந்தக்கோடிக்கும் ஓடுவதைப்போல நாக ரீகம், முன்னேற்றம் என்று தேடியலைந்தாலும் ஒரு சமநிலை பெண்மை வாழும் நிலை. நடுநிலையடையத்தான் வேண்டும். வேகம் பெற்ற ப்ெண்மைக்கும் ஏற்றதாகத்தானிருக்கின்றன வள்ளுவன்தந்த வான்மறையில் பெண்மைக்குக் கூறப்பட்ட கருத்துக்கள். "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் "பெண்

Page 80
144
என்றதற்கமைய 21ம் நூற்றண்டிலும் தமிழ் பெண்மை வாழவேண்டும் என்பதையே ஒரு குடும்பப்பெண் என்ற முறையில் அரசியல் அனுபவம் இருந்தாலும் விரும்புகிறேன்.
சிறந்த சமயப் பேச்சாளரும் ஆசிரியையுமான சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி கூறுகிறர்.
21வது நூற்ருண்டில் சமயத்தின் நிலை எவ்வாறு அமை யும்? சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன். தீர்க்கதரிசனத் திற்கும், கற்பனைக்கும் நடுவிலே ஊசலாடும் ஒருபிரச்சனை இது.
காலா காலமாக எதிர்நீர்சலடித்து வளர்ந்து வந்த எந்தவொரு சமயமும் முற்ருக நிராகரிக்கப்பெற்று விடும் எப்பொழுது என்றுகூறுவதற்கில்லை இப்பொழுது நம் கண் முன்னே காணக்கூடியதாக விருக்கும் இளைஞர்களிடம் உள்ள சமய உத்வேகம், அடுத்த நூற்றண்டில் அவர்கள் பெரிய வர்களாகத் திகளும் நாளையில் நன்குபுடமிடப்பட்டிருக்கும். எனவே சம்யங்கள் அழிந்துபோகக்கூடிய சூழ்நிலையை அவர் கள் அனுமதிக்க மாட்டார்கள் மாருக எதிர்ப்புக்களையும் வலுவுடன் சமாளிப்பார்கள்.
ஆலய ஆதீனங்களுக்குச் சார்ந்ததாக இருக்கும் ஏகப் பட்டா நிலங்கள் எல்லாம் அன்று அவ்விதம் காட்சியளிக்க மாட்ட பெருகிவரும் மக்கள்தொகை விரும்பியோ விரும் பாமலோ அவற்றில் அத்துமீறியேனு 2 குடிபேறக்கூடும். அதனல் ஆலயங்களது புனிதத்தன்மை மாசுபடும் என்ப தாகக் கூறிவிடமுடியாது. அண்மையில் சிங்கப்பூரில் நான் இருந்தபோது, அந்த நாட்டின் ஆலயங்களைக் கவனித்தேன் ஆடம்பரமில்லா ஆத்மீகம் அங்கு தவழ்ந்தோடியது. சிறிய கோயில்கள் தான்; சிறப்பு சொல்லற்கரியது. இந்நிலை அங்கு ஏற்பட்டதற்கு அங்குள்ள சனநெரிசலும் ஒரு காரணம். இதே நிலை எங்கும் 21-ம் தூற்ருண்டில் உருவாகியிருக்கும்
鳢
 

145
"வேதம் ஓதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை எருதேறி" -ஆம் எல்லோரும் தமிழ் நெறியைத்தான் கையாள்
வார்கள். இப்பொழுது எத்தனையோ ஆலயங்களில் வேற்று
மொழிகள் மறைந்து தமிழ் தழைத்தோங்குகின்றது. தமிழ் மறையும், தேவார திருவாசகங்களும் இனிமையாக ரீங்கார மிடும் நாள் அப்பொழுது கட்டாயம்வரும். தற்பொழுது இந்து சமயத்தில் மாத்திரமல்ல கிறிஸ்தவ சமயத்திலும் கூட தமிழ்தான் வழிபாட்டு மொழியாக இருந்து வருகின் றது. இந்த நல்ல ஒரு சுமூகமான நிலை 21-ம் நூற்ருண்டில் எங்கும் வியாபித்திருக்கும்.
ஆலயங்கள் அப்பொழுது கலைவளர்க்கும் கூடங்களாகப் பரிணமிக்கும் மிரு தங்கம் முதல் நட்டுவாங்கம்வரை எல்லா விதமான கலைகளும் ஆலயங்களில் ஆள்வைத்துச் சொல்லிக் கொடுக்கும் ஒரு அரிய நிகழ்ச்சியாக அழகுபடுத்தும் என் பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆண்கள் மேலாடையின்றித்தான் ஆலயங்கள் செல்ல வேண்டும் என்ற அநாகரீகமான செயல் முழுமையாக மாற்ற மடையும்.
R
எல்லாம் நல்லபடிதான் நடக்கும் ஆணுல் இந்தப் பாழும்
வறுமை மனிதர்களைப் பீடிக்கக்கூட்"தே! பசிவந்தால் பத்தும் மறந்துவிடும் மனிதன் சமயத்தைப் பேணிக்காக்கவும், சமய
அனுட்டானங்களைச் சிறப்புடன் அனுசரிக்கவும் எங்ங்னம் முனைவான் என்று எதிர்பார்க்கமுடியும்.
முன்னர் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதவர்க் கம் இன்று பகுத்தறிவுடன் நடக்கின்றது அல்லவா? நாளை
அவர்கள் தார்மீகப்பண்பு நிறைந்தவர்களாகத்தான் திகழ்
வார்கள்,
ஆடையற்ற அலங்கோல நிலையை விரும்பாதநான்
எதிர்காலத்தில் அந்நிலை அமைவதைச்கூட அருவருக்கத்
தக்கதாக கருதுவேன்.
鄱

Page 81
146
19-ம் நூற்ருண்டில் மாக்களாகத் திகழ்ந்தவர்கள் பலர் 20-ம் நூற்ருண்டில் அவ்விதம் இருப்பவர்கள் சிலர், 21-ம் நூற்றண்டில் ஒருசிலரேனும் அவ்விதம் இருக்கமாட்டார்கள் என நம்பலாம்.
யாழ் லங்கா ஆயுள்வேத வைத்தியக் கல்லூரியின் 2-ம் வருட மாணவி செல்வி நகுலேஸ்வரி ஆறுமுகம் கூறும் கருத்து.
இயந்திரகதியில் உருண்டோடும் இயந்திர உலகம் 21-ம் நூற்றண்டில் அளப்பரிய முன்னேற்றத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டுவரும் என்பது நம்பிக்கை, அந்நேரத்தில் ஆயுள்வேதம் உலக அங்கீகாரம் பெற்றிருப்பதுடன் மக்க ளிடமும் பூரண நம்பிக்கையை உருவாக்கிம்கத்தான மருந் தாகத் திகழும்.
"அட்வான்ஸ் லெவல் சித்தி பெற்றவர்கள்தான் ஆயுர் வேதக் கல்லூரியில் அனுமதிக்கப் படு வார்கன் என்ற கோட்பாட்டால் ஆங்கில மருத்துவம் சமத்துவமடையும்.
வலிமைமிக்க ஆயுள்வேத ஊசிமருந்தால் வளமான வாழ்வு காண்பார்கள். 21ம் நூற்ருண்டு மக்கள் அப்பொழுது இப்பழக்கம் நடைமுறையில் செயல்படுவது சாத்தியமானது மட்டுமல்ல நிச்சயமும் கூடத்தான்.
இப்பொழுது இப்பழக்கம் இருந்தாலும் எதிர்காலத்தில்
அது மிக மெருகுடன் திகழும் என்பது திண்னம்.
ஆயுர்வேதத்தில் சத்திரசிகிச்சை நிலயங்கள் அப் பொழுது பிரசித்திபெற்றவையாகவிருக்கும். வீதிதோறும் ஆயுர்வேத சத்திரசிகிச்சை நிபுணர்களின் பெயர்ப்பலகை களைக் காண்பது சாதாரண சம்பவமாகிவிடும். இன்று பெரிய பாரிய சத்திரசிகிச்சைகள் நடைமுறையிலில்லை என் பதும் சிறிய சிகிச்சைகளே கையாளப்பட்டு வருவதும் தெரிந்தவைதானே.
+f,

*
147
இம் மருத்துவம் இன்றும் விஞ்ஞான ரீதியாகச் செயற் படினும் அப்போது இன்னும் வியக்கத்தக்க வகையில் முன் னேறி பிரமிப்பாகப் பணிபுரியும்.
அத்துடன் 21-ம் நூற்றண்டிலே அண்ட அகிலமெல் லாம் ஆகாய விமானமோட்டும் விமானிகளாகக் காட்சி யளிப்பார்கள் ஆண்கள், பெண்கள் என்ன சளைத்துப்போய் விடுவார்கள் என்று எண்ணுகிறீர்கள். அதுதான் இல்லை. அவர்கள் பஸ் சாரதிகளாகப் பரிணமிப்பார்கள் அப்பொழுது பிரசுரமாகும் பத்திரிகைகளும் விபத்து சம்பந்தமாக திருமதி அல்லது செ ல் வி. கைதுசெய்யப்பட்டார் என்றுதான் செய்தியைப் பிரசுரிக்கும்,
யாழ்ப்பாணத்தில் பிரபல ஸ்தாபனமொன்றில் கடமையாற்றும் செல்வி ரி. சங்கரப்பிள்ளை கூறும் சுவையான கருத்து:
தீன்னிச்சையான 4 தனித்துவமான உசுதந்திரமுள்ளஎதேச்சாதிகாரமற்ற வாழ்வை இன்றைய நூற்ருண்டில் எந்த ஒரு மனிதனலும் வாழ முடிவதில்லை. ஏன் இந்தநிலை. தெரிந்தோ தெரியாமலோ பொருமைத்தீயால் அவனது வள மான வாழ்வு கருக்கப்பட்டுவிடுகின்றது. பிறர்மீது அபாண்
"டத்தைச் சுமத்தி அதன்மூலம் தன்னை ஏதோவொரு பெரிய
கொம்பாகக் காட்டிக்கொள்ள மு ய லு ம் பதர்கள்தான் எம்மத்தியில் எத்தனை? மற்றவர்களைத் தாழ்த்தி - அவனது தொண்டைக்குளியை ஆவேசத்துடன் அமிழ்த்தி அதன்மூலம் தன்னைப் பெரியவனுக்கிக்கொள்ள முயல்பவர்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை.
இவையெல்லாவற்றிற்கும் தீர்வுதான் என்ன?
முடிவற்ற பஞ்சப் பிரபஞ்சங்களுடன் இ  ைவ யு ம் சங்கம்மா?
மனிதன் சகோதர உணர்வுடன் சமத்துவமாக் வாழும் நாள் எப்போது? -

Page 82
148
எக்காளமிடும் இந்தக் கேள்விகளுக் கெல் லாம் ப தி ல் மனித சமுதாயம் குரங்குக்கூட்டமாக மாறுவது தான்!
இந்த மாற்றம் தவறுதலாகவோ தவிர்க்கமுடியாமலோ இருபத்தியோராம் நூற்றாண்டில் வருமானால்
- அன்றுதான் நிலையற்ற நிம்மதி எல்லோர் மனதிலும் நிச்சயம் இடம்பெறும்.
சடாதாரிகளாக திரிந்த வேடர்களின் நிலை இன்று மெல்ல மெல்லத்தலை காட்டும் போது
- உடலை மறைக்க' உடையேது மின்றித் திரிந்த காலம் நாகரீகப்போர்வையில் அத்து மீறி எம்முன் மீண்டும் பிரவே சித்த போது
கிழங்குவகைகளையும் நல்ல நறுகனிவர்க்கங்களை யும் உட் கொள்ளும் காலத்துக்குள் நாம் மிகப்பலவந்தமாக திணிக்... கப்படும் போது.
- ஏன் குரங்கிலிருந்து பிறந்த மனித சமுதாயம் மீண்டும் அந்தக் குரங்குக் கூட்டமாக மாறத் திரணியில்லை என்று தான் எண்ணத்தோன்றுகின்றது.
காமவெறி கொண்டலையும் ஒரு குரங்குக் கூட்டம். கபட நாடகமாடும் மற்றொரு குாங்கினம்களவெடுத்து வாழ்வை நடாத்தும் இன்னுமொரு வர்க்கம்.
கொலை வெறியையே கருத்தில் வைத்து - இரத்தருசி பிடித்தலையும் 'கொரிலா'க் குழுக்கள் •
இவை மத்தியில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று வாழும் இருபதாம் நூற்றாண்டிலும் பார்க்க ஐந்தறிவு படைத்த அமைதியான - ஆற்றல் மிக்க குரங்காகவே இரு பத்தியோராம் நூற்றாண்டில் மாறி விட்டால்... வாலைச் சுருட்டினாலும் நீட்டினாலும் கேட்பாரில்லை. - 1

கோவிலில் திருமணம் GQ JFIULIIGD IDAT?
கோப்பாய் எம். பியும் சட்டத்தரணியுமான எஸ். கதிரவேலுப்பிள்ளை கூறுகிறர்.
எமது அகத்தில் பற்றிப்படர்ந்திருக்கும் அழுக்கையே போக்கி எம்மை ஆட்கொள்ளவல்ல ஆண்டவன் த ன து சந்நிதானத்தில் மணவிழா தவடபெறவதற்கும் முட்டுக்கட் " டைபோட விரும்பமாட்டான். புறஅழுக்குகள் என்று : ஏதாவது தோன்றினல்கூட அதை அகற்றும் சர்வவல்லமை படைத்தவனல்லவா அவன். ஆகவே கல்யாணத்தை கோ விலின் உள்மண்டபத்தினுள் வைப்பதால் ஆசாரம் குறை கிறது என்ற பேச்சு அர்த்தமில்லாததொன்ருகிவிடுகிறது.
மாப்பிள்ளை மணவறையில் தலைப்பாகையுடன் வீற்றி ருப்பது ஆண்டவனுக்கு பொறுக்கக்கூடிய செயல்தான என்று சிலரது மனதில் ஐயமேற்படலாம். ஆனல் நிச்சய மாக அப்படிச் செய்வதாலோ அல்லது தவிர் க் க ப் ப டு வதாலோ ஆண்டவன் எம்மிது பாராபட்சம் காட்டவும் ம்ாட்டான். வெறுப்படையவும் மாட்டான் ஏனெனில்: தத்துவநிலைக்கு அப்பாற்ப்பட்டவன் அல்லவா இறைவன்.
*、
ஆனல் கோவிலில் தனியொரு மண்டபத்தை இப்படி யான வைபவங்களுக்கென ஒதுக்குவது சகலருக்கும் வசதி யளிப்பதாக அமையும்.
உள்ளம் ஆத்மீக சிந்தனையில் இருக்குமாயின் ஆசாரம் என்ற பேச்சு வெறும் உலகத்துக்குக் காட்டும் ஒரு பகட் டாகத்தான் எனது கருத்து. ஆகவே உள்ளத்தூய்மையை

Page 83
150
நல்லூர் சிவன் தேவஸ்தானத்தினதும், லோபம் முனீஸ் வரம் தேவஸ்தானத்தினதும் பிரதம் குருக்கள்.
ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் பொழுது மங்கள வைய வத்தை எங்கேயும் வைக்கலாம்.
மாமிசத்தைத் தவிர்த்தவர்கள், மதுவைத் தொடாத
வர்கள் சிவதீட்சை பெற்றவர்கள், இப்படி ழனிதவர்க்
கத்தை கூட்டிப்பிரித்துப் பிரித்துச் செயல்படிாததால், அவர்களது மங்களவைபவத்தையும் ஆலயங்களில் அனுமதிப் பதில் ஒன்னதவறு வந்துவிடப்போகின்றது.
தவிரவும் மணமேடையில் பரமேஸ்வர சொரூபராகவே ம்ணமகனைக் கணித்து கன்னிகையைத் தானம் செய்துவைக் கின்ருேம், அப்பொழுது நாம் சொல்லும் சுலோகமும் பர மேஸ்வர சொரூபரான இந்த மாப்பிள்ளைக்கு கன்னியைத் தானம் செய்து வைக்கின்ருேம் என்றுதான் பொருள் படுகிறது:
- மற் றது.சிவாக்கினியை ஆக்கினி குண்ட த்தில் வளர்க்கும்.
போது அது சுற்ருடல்சூழலில் உள்ளவர்களை புடமிடுவதால்
அவர்கள் எல்லோருமே தூயவர்களாகி விடுகிறர்கள்என்று சொல்ல முற்பட்டால் அது பிழையாகுமா?
அபரக்கிரியைகளுக்கு பயன்படுத்தும் துஷ்ட தேவதை களை நாம் மங்கள விழாவில் அழைப்பதில்லை. மாருக சிவனையும், பார்வதியையும், நவக்கிரகங்களையும் வேறு இன்னுேரன்ன தெய்வங்களையும் அழைத்து மணமக்களுக்கு நல்வாழ்வு நல்கும்படி வேண்டித்தான் கன்னிகாபூஜையை நிறைவேற்றுகின்முேம், இப்படியான நிலைமைக்கும் ஆலயம் நன்கு சாதகமாக அமைவது இயற்கைதானே!
இரண்டுபரப்புக் காணிக்குள் நாலுவீடுகளைக் காணக் கூடிய இன்றைய நாட்களில் கல்யாணவைபவம் வீடுகளில் திறம்பட நடத்தமுடியும் என்பது ஒரு சிக்கலான பிரச்சனை என்பது யாவரும் அறிந்த உண்மையே
-
#ܝ
 

i51
அகில இலங்கை `தாகம சபைத்தலைவராயிருந்து
அபிப்பிராயம்: . .
மணவிழாக் காண விழையும் எந்தவொரு தம்பதியும் கோவிலையோ அல்லது கோவிலின் சூழ்நிலையோ முற்றுகை யிடுவது மிகவும் தவறனதொரு கொள்கை மாத்திரமல்ல மிகவும் மடைத்தனமானதும் கூட. கோயில் கேளிக்கைக் குரிய இடமல்ல; வழிபாட்டுக்குரிய ஒரு புண்ணிய பூமி. புண்ணிய ஸ்தலம் என்பதை எவருமே மறக்கக்கூடாது. வழிபாட்டுக்கு வருவோருக்கும் கல்யாணம் காண வருவோ ருக்கும் மனேநிலையில் மிகவும் முரண்பாடு இருக்கும் என்பது படித்த எவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மையாகும். ஆசார ஒலர்களாக தரிசனத்துக்கு எங்கும் பக்தகோடிகள் பலரை வழிபாட்டின்போது காணலாம். ஆனல் ஆசாரத் தைக் கவனியாத ஆசூசையிருந்தாலும் அசட்டைபண்ணுத மாறுபட்ட அனுட்டானங்களையுடைய புறசமயத்தவர்.பல ரைத் தான் கல்யாண வைபவத்தில் அதிகம் காணக்கூடிய தாக்விருக்கும். இவர்களால் கோவிலது புனிதத்தன்மையில் மாசு படிவதுடன், பண்டைக்காலம்முதல் பேணி ாேது காக்கும் சைவசமயத்தின் பாரம்பரியம் கூடத்த புரண்டு விடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
முடியாததுதான்.ஆனல் அதனது சமயச்சடங்குகள் எல்லா வற்றையும் முறைப்படி கைக்கொள்ள ஆலயம் என்றுமே இடமளியாது.
நம்புவர்கள் கோவில் பிரகார த்தில் மணமுடிக்க
னிப்பது மூடத்தனம்மாத்திரமல்ல வியப்புக்குரியது: 。
எனவே கோவிலின் பிரகாரம் தவிர்ந்த ஒரு கிறம்பான

Page 84
152
திருமணம் நடத்தினல், யாருக்குமே அதனல் பாதகமில்லை
இந்த அபிப்பிராயத்தை இவரது சிரேஷ்ட மகனும், ஈழத்துச் சிதம்பரமான காரைநகர் சிவன்கோவிலின் பிரதம குருவானவருமான பிரம்மபூரீ க. தியாகராசக்குருக்கள் தெரி வித்தார். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இங்கு வந்திருந்தவரான பிரம்மறி விஸ்வநாதசர்மா கூறியதை அப்படியே தருகிறேம்.
எத்தனை வைதீகங்காை நாம்மாள் வைவிட்டுக்டான் - அதெல்லாம் எவர்மீதும் கு ற் றம் சொல்லக்கூடாது பாருங்கோ, - : . . . .
ஆமா. நாங்க பல வைதீகாளுக்கு கல்யாணம் செய் துட்டிருக்கிருேம், கோயில் மண்டபத்திலேதான், அதுக் கிண்ணு மண்டபம் இருக்குது. அதிலேதான் நடத்தினேம். அது கோவிலிலே வெளிக்கோரமண்டபம்தாங்க, அப்படின்ன ஆசாரம் பழுதுபடாது. கல்யாணத்துக்கு வாறவ ஆசா த்தை எங்கே கவனிக்கப்போரு, டயறியிலே குறிச்சு வைச் சிருப்பாங்க, திகதி சட்டுன்னு ஞாபகம்வந்திடிச்சின்ன உடனே ஓடியந்துடுவாங்க வீட்டிலே என்ன செஞ்சானே .
மாமிசம் சாப்பிட்ட  ைக கூட க கழுவிக்கமாட்டானுக,
ஆத்துக்காரிக்கு வீட்டுவிலக்கன்ஜக்கூட கவனிக்கப்பாறகு கல்யாணம்தானே கூட்டியந்துட்டிருப்பான். அத்தோடை ,
சிலவேளை குளிச்சுக்கூட இருக்கமாட்டாள். அபச்சாரம்! அபச்சாரம் - : :-
Tio...ĝis. கோவில் மண்டபத்துள்ளே வைச்சாக்கா இன்னுமொரு கெடுதியும் இருக்கு மாப்பிள்ளை தலைப்பாவை கழட்டுவான? மாட்டென்டுவான். அப்ப நாம் ஆண்டவனுக்கு பிழை செஞ்சவனய் முடிஞ்சுடாதா?
ஆணுல். இப்ப எல்லாம் தலைகீழாப் போச்சுன்னு அப் பப்பர் பேகிக்கிழுங்க. -
 
 
 

பெண்களின் பெயர்கள் ராகங்களுக்கா?
-என். கே. பத்மநாதன் விளக்குகின்றர்
ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர மன்னன் என். கே.
பத்மநாதன் குழுவினர் லண்டனுக்கு வந்திருந்தார்கள். மேற்படிப்புக்காக அவர்கள் இங்கு வரவில்லை. வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்களையும் விட தமது இசையின் மகத்துவம் உயர்ந்தது என்பதை நிரூபிக்கவே வந்தார்கள். அவர்கள் வந்தது வீண்போகவில்லை. புகழ் உயர்ந்தது. இசை யின் இனிமை பரந்தது.
திரு என், கே. பத்மநாதனுடன் லயஞான கலாநிதி குமரகுருவும், மங்கள இசை இளவரன் திரு கேதீஸ்வரனும், திரு.சிவகுருநாதனும், திரு. முருகதாசும் வந்திருந்தனர். பிரித்தான்ரிய பாராளுமன்றச் சதுக்கத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் இவர்களது இசை விருந்து இடம் பெற்றது.  ̈ "የ"  ̈ -- ( ሐጫwዛ ...
பின்னர் பேட்டிக்காகச் சந்தித்தேன். நாதஸ்வரத்தின் சிறப்பு என்ன?
நாகசுரம் கர்நாடக இஒகயை முழுமையான வடிவில் மக்கள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து உதவும் இபருழை பெற்றது. கர்நாடக இசையை மக்கள் கேட்டு ரசித்துக் கற் றுக் கொள்ளவும் அதன் சிறப்பினை உணர்வும் பேருதவி புரிந்து நிற்கின்றது. ழங்கள் காரியங்களின் போதும் ஆல யூங்களில் உற்சவங்கள் சிறுப்புப் பூசைகள் நிகழும் போதும் இசைக்குப்புடுவது நாகசுரமே. இவ்வாத்தியம் தெய்வ அர்ட் பணமான ஒரு கருவியாகப் பேசப்படுவதையும் நாம் நூல் களிலே காண்கின்ருேம்.
நாகசுரம் வாசிப்பதில் தேர்ச்சி பெறுவது எல்லோருக் கும் ஒத்துவரக் கூடியது தானு? - -

Page 85
154
சிறு வயதிலிருந்தே பயிற்சி பெற்றுவந்தால் வாசிக்க முடியும்; ஆனல் இயற்கையாகவே நாகசுரப் பயிற்சிக்கு ஒரு அபார சக்தி தேவை. அதனல் மற்ற வாத்தியங்களைப் போல எல்லோராலும் இதைக் கையாள முடியாது. தவிர இவ்வாத்தியத்தை வாசிப்பவருக்கு சரவேகமும் வாய் உதடு முதலியவற்றின் அசைவும் கற்பன சக்தியும் நீண்ட நேரம் காற்றுச் செலுத்தக்கூடிய உடலுறுதியும் கட்டாயம் தேவை யாகும.
வேறு வாத்தியங்களை வாசிக்க முடியுமா?
நாகசுரத்தில் வல்லமை பெற்றவர்களால் வேறு வாத் தியங்களையுமா இலகுவாகவே வாசிக்க முடியும்?
கேட்பதற்கு இனிமையாகவுள்ள நாகசுர இசையைக் காற்றினை அழுத்தமாகவும் மென்மையாகவும் செலுத்துவ தால் ஏழு துளைகளில் இருந்து ஏழுஸ்வரங்களும் இரண் டரை ஸ்தாயிவரையும் வாசிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. உதட்டின் பிடிப்பால் அரை சுரமும் கமகம போன்றவையும் வாசிக்கப்படுகின்றன. ஆனல் மற்ற வாத்தியங்களான புல் லாங்குழலோ கிளாரினெட்டோ இந்தச் சுரக்கட்டுப்பாட் டுக்குள் இல்லை. சுரவேறுபாடுகளால் நாகசுர விற்பன்னர்கள் மற்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. எனினும் திறமை மிக்க ஒரு சிலர் மட்டுமே இரு வாத்தியங்களையும் கையா ளுகின்ருர்கள்.
நாகசுரத்தின் மறுபெயர்கள் என்ன?
நாகசுரம் என்பதுதான் பொருத்தமானதும் சிறப்பான துமாகும். எனினும் நாயனம், நாகஸ்வரம், நாகசின்னம், நாதஸ்வரம், புஜங்கஸ்வரம் எனப் பல பெயர்கள் வழக் கத்திலுண்டு.
நாகசுரத்தில் அமைந்துள்ள துளைகள் பற்றி.?
மேல் அணைவுக்குக் கீழாக சுமார் நான்கு அங்குல இடை வெளிவிட்டு உடற்பாகத்திலும் அங்குலத்துக்கு ஒன்ருக ஏழு
༣ །
摩

155
துளைகளும் வரிசையாக இடப்பட்டிருக்கும் இத்துளைகளின் மூலமே ஏழுஸ்வரங்களும் இசைக்கப்படுகின்றன. இவற்றுக்கு கீழே நான்கு அங்குலம் தள்ளியும் ஒருதுளையும் அதனை நடுவாகக்கொண்டு அதன் இரு மருங்கிலும் இரண்டு துளை களும் உண்டு. முதல் ஏழு துளைகளையும் முறையே ஈசன், கெளரி, விஷ்ணு, கும்பமுனி, பிரமன், இந்திரன் எனக் கூறப்படுவதுமுண்டு. -
ஏழுஸ்வரங்களின் எத்தனையோ ராகங்கள் உருப்பெறும். அந்த ஏழுஸ்வரங்களும் எவை?
ஸட்ஜம், ரிஷபம், காந்தம், "மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஆகிய ஏழுமே இசையின் ஸ்வரங் களாகும். தமிழில் சொல்லுவதாயின் குரல், சத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று வரும்.
ராகங்களின் பெயர்கள்
ராகங்களின் பெரும்பான்மையானவை மாதரின் பெய ருடையனவாகவே அமைந்திருக்கின்றன. உதாரணமாக வசந்தா. நீலாம்பாரி, கல்யாணி, பைரவி, ஜகன்மோகினி இன்னும் பல. இதற்கு ஏதாவது காரணங்களுண்டா?
ராகங்களின் பெயர்கள்தான் பெண்களுக்குச் சூட்டப் பட்டதேயன்றி பெண்களின் பெயர்கள் ராகங்களுக்குக் குட் டப்படவில்லை. பெண்களைக் கவர்ச்சிக் குரியவர்களாகவும் இனிமையானவர்களாகவும் பார்க்க விரும்புவதால் அப்பெயர் கள் சூட்டப்பட்டிருக்கலாம் என்பது முதலாது காரணம்.
"விண்" என்னும் உத்தரத்தின் "அன்பு" என்கின்ற தாம்பு இட்டு மண் என்ற தொட்டிலிட்டு கண்வளராய் என்று கனிவோடும் கருணையோடும் அன்போடும், ஆர்வத் தோடும், அக்கறையோடும், அரவணைப்போடும் இன்னிசை என்ற செல்வத்தை தாலாட்டிச் சீராட்டுபவள் தாய்,

Page 86
56 அத்ஞல் பெண்கள் இனிய ராகங்களின் பெயர்களைப் பெற் றிருக்க்ாலாம்.
மூன்ருவது வேங்கடமகி என்ற முனிவர் 72 மேளகர்த் தாக்களை அண்மத்தார் என்றும் சரஸ்வதி கடாச்சம் பெற்றே அமைத்தார் என்றும் அதனல் அம்பாளுக்கு அர்ப்பண்மாக் தாய்க்குலத்தாருக்கு இராகங்களின் பெயர்கள் சூட்டப்பட் டனரென்றும் கொள்ளலாம்.
பெற்ற விருதுகள்
நீங்கள் பெற்ற விருதுகள்..? அவற்றை சொல்ல முற்
பட்டால் அடுக்கிக் கொண்டே போக முடியும் எனினும்
சுருக்கமாகச் சொல்கின்றேன். மகாதேசாதிபதியாக இருந்த திரு. வில்லியம் கோபல்லவா அவர்களிடம் தங்கப்பதக்கம் பெற்றேன். தவிர எனது நாகசுரத்தில் காட்சி தரும் மெடல் கள் எல்லாமே எனக்குக் கிடைத்த பரிசுகள்தான். நாதஸ் வர கலாநிதி, நாதஸ்வர மன்னர், எழிலிசை வேந்தர், நாதஸ் வர கலாநிதி போன்றவை எனக்கு கிடைத்த பட்டங்கள்.
தவில் மேை த
خیال 48:ہ:پrg ;(3 - چلی۔۔۔
நாதசுர இசையின் இனிமையைத் தவிலின் உதவியின்றி!
முழுமையாக உணரமுடியாதே எனவே தான் தவில்மேதை திரு. குமாருவிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அவருடன்
பழகினவர்களுக்கு அவர் எவ்வளவு நகைச்சுவையுடன் பேச
வல்லவர் என்பது தெரியும். எனக்கும் அந்த அனுப்வம்
தான். ஆனல் அதை முழுக்க அப்படியே எழுதினல் பத் திரிகை தணிப்புக்குள்ளாகுமே...!
படுத்தப்படுவதில்லை?
மிருத்ங்க் கையிஞல் அ தவில் சுழியிஞல் அடிக்கப்படுவது என்வே ஓங்கி அடிப்பதால் பாடுவோரின்
భ* ## جت&خرجتياز. s. வாய்ப்பாட்டுக்கு பக்கபலமாக தவில் ஏன் உப்யோகப்
W
 
 

157
சத்த்த்தை தவிலின்ஒசை விழுங்கி விடுமென்ப் பச்ர்வ்லாக அபிப்பிர்ர்யப்படுவார்க்ள். ஆஞல் நான் சொல்லுவேன் தவில் வாத்தியம் எதற்கும் பயன்படும். ஒல்லியான எவு ரும் சத்தம்போட்டு பேசமுடியாதா. அல்லது ஓங்கி உரக் கச் சத்தம் போட்டு பேசும் ஒருவனல் மென்மையாக்ப்பேச முடியாதா. எனவே தவிலில் தேர்ச்சி பெற்றவர்களால் சந் தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வாசிக்க முடியும் என்பதே எனது கருத்து இதனையாரும் மறுக்க முடியுமா? தவிலுக்குப்பயன் படும் சுழியும் ம்ற்றும் நாதசுரமும் எந்த மரத்தினுலும் செய்ய முடியுமா?
-தவிலுக்குத் திருவாத்திமரமும், நாகசுரத்துக்கு ஆச்சா, சந்தனம், கருங்காலி, வேங்கை, பலா, வேம்பு மூங்கில்
ஆசிய மரங்களும் பயன்படுகின்றன.
ஈழத்தில் கிடைக்கும் தவிலே நாகசுரமோ எங்கிருந்து பெறப்படுகின்றன?
-நாகசுரம் இந்தியாவிலிருந்தே வரவழைக்கப்படுகின்றது. தவிலுக்கான கொட்டும் கோலும் இலங்கையில் பெறமுடி கின்றன. மற்றயவை இந்தியாவிலிருந்தே கிடைக்கின்றன.
நாகசுரத்தில் வேகமாக முன்னேறிவரும் துடிப்புள்ள ஆர்வம் மிக்க இளைஞர்களான திரு. கேதீஸ்வரனும், திரு, சிவகுருநாதனும் பதில் தருகின்ருர்கள் இதோ:
காலையில் இடம்பெறும் ஒரு வைபவத்திற்கு வாசிக்கப் படும் ராகங்கள் மாலையில் தடைபெறும் அதே போன்ற வேறுவைபவத்திற்கு வாசிக்க முடியுமா?
-ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு ராகம் உண்டு காலையில் ராகங்களை இரவில் வாசிப்பதில்லை. இன்னமும் விளக்கமாக்ச் சொன்னல் காலையில் பூபாழம் பிலஹரி. கேதாரம், மத்தியத்தில் காவேரி- ஆரபி. சுருட்டி, மால்ையில்

Page 87
158
கல்யாணி, தோடி பைரவி, காம்போதி, இரவில் ஆனந்த பைரவி இப்படியே வித்தியாசமான ராகங்களே வாசிக்கப் படும்,
வடமொழியிலும் தெலுங்கு மொழியிலும் பல பாடல் கள்- கீர்த்தனைகள் அமைந்துள்ளனவே. தமிழில் பாட முடிவதில்லையா?
தமிழ்மொழி எந்த மொழிக்கும் புனிதத்திலும் இனி மையிலும் சிறப்பிலும் குறைந்ததல்ல. பன்னிரு ஆள்வார் களது பிரபந்தங்களும் நாயன்மார் தேவாரங்களும் இதற்கு நல்ல உதாரணமாகின்றன. இசை மொழியக் கடந்தது" ஆனல் சொந்த மொழியில் அழகாகப் பாடப்படும் பொழுது அவற்றின் பொருளையும் சேர்த்து அனுபவிக்க முடிவதுடன் இனிமை ரசனையும் அதிகமாகின்றது. கர்நாடக இசையின் ரசனை இளைஞர்களிடையே குறைந்து "பொப் இசையில் ஆர்வம் அதிகரித்து வருகின்றதே!
இசையாற்றின் நீரோட்டம் போன்றது. தேங்கினல் இனிமை குன்றும் என்ற மனப்பான்மை அவர்களுக்கு ஆனல் துள்ளிசை நெஞ்சைத் தொட்டு இதமளிப்பதில்லை என்ற உண்மையை கர்னடக சங்கீதத்தை ஆறுதலாகக் கேட்பதால் உணர்ந்து கொள்வார்கள். -
நாதசுரனாத்தியத்தில் அழியாப் புகழ்பெற்று நமக்கும் கர்னடக சங்கீதத்திற்கும் பெருமை அழித்த நாதசுர மேதை களில் உங்களை கவர்ந்தவர்கள் யாரோ? என்றதற்குப்பதில் தருகிருர் திரு என். கே. பத்மநாதன்; தமிழகத்திலே மன் னர்குடி சின்னப் பக்கிரியாப்பிள்ளையும், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் ஈழத்திலே அண்ணுசாமி நாதஸ் வரக்காரரும் முருகையாபிள்ளையும் என்றென்றும் என் நெஞ் சில் நிற்பார்கள்.
தவில் வாசிப்பதில் தலை சிறந்தோங்கி அவர்கள் மறைந் தாலும் அவர்கள் பெற்ற புகழ் மறையாமல் இருப்பவர்க

iss
ளில் தன்னைக் கவர்ந்தவர் பற்றிக் கூறுகின்ருர் திரு. குமர குரு. தமிழகத்திலே நீடாமங்கலம் மீனுட்சி சுந்தரம்பிள்ளை, பஞ்சாபிகேசபிள்ளை, ஈழத்திலே காமாட்சி சுந்தரம்பிள்ளை, தெட்சணுமூர்த்தி.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், பாரிஸ், ஜெனிவா, ரோம், நியூயோர்க், லா ஸ்ஏஞ்சல், கனடா
கலைஞர்களின் இசை எங்குமே வியாபிக்கின்றது. அவர் களது புகழ் எங்குமே பரவுகின்றது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குகின்றது.

Page 88
160
லண்டன் மாநகரில் வாரியார் நிகழ்த்திய
கதாகாலட்சேபம்
வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் போலத் தோற்றத்தால் உயர்ந்து, புகழால் வளர்ந்து, ' சாலைகளில் அமைதி கலைந்தாலும் முகத்தில் அமைதி ததும்ப, அரு ளொளி சுடர்விட, காரை விட்டு பிரமாண்டமான மண்ட் பமொன்றின் வாயிலில் இறங்குகின்றர் அருள்மிகு திரு முருக கிருபானந்தவாரியார், நான்குழுழ வேட்டியுடனும், கழுத்துநிறைய உருத்திராக்க மாலைகளுடனும், நெற்றி முழுக்க விபூதியுடனும், மேலாடை எதுவுமின்றிக் காட்சி யளிக்கும் அவர், மிதமான குளிரைக்கூட இதமாக ஏற்று எம்மை எல்லாம் வியப்பிலாழ்த்துகின்ருர்,
கதாகாலட்சுேஷபத்தில் அவர் ஏற்படுத்திய நிகரற்ற பாணியை நேரில் ரஸிக்கவோ அல்லது சதா இயந்திரமய மான வாழ்வின் சிலமணி நேரங்களையாவது "கந்தபுராண விரிவுரையைக் கேட்டு ஆறுதல் பெறவோ கூட்டம் பெரி தாகவிருக்கிறது. சாரி அணிந்த வாலைகளை ஏராளமாகக் காணமுடிந்த போதிலும் வேட்டியணிந்த வாலிபரையும்கூட காணமுடிந்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த லண் டன் முருகன் கோவில் நிறுவனத்தினரும், அதன் தலைவர் திரு. கே. ரங்கநாதனும் பாராட்டுக்குரியவர்கள்.
திருமுருக கிருபானந்தவாரியாரைப் பேட்டிக்காகச் சந் தித்தேன். ஆனல் இக்கட்டுரையை பேட்டிவடிவில் செய்யா மல்; கதாகாலட்சேஷ்ப பாணியிலே செய்தால் எனது சிந் தஜன நீளநீள வாரியாரது கருத்துக்களும் திரும்பத் திரும்ப எதிரொலிக்கின்றன.
அவர் கதைசொல்லத் தொடங்குகின்றர்.
நம பார்வதி பதயே! ஹர ஹர மகாதேவ!

161
எல்லாம் வல்ல வயலூர் ஞானபண்டிதன் கருணையின லும் எனது மானஸிகக்குருவான அருணகிரிநாதசுவாமி களின் கிருபையினுலும் பெரியோர்களுக்கும், தாய்மார்க ளுக்கும் தாமதமாகி இக்கூட்டத்திற்கு வரவிருப்போருக்கும் எனது, நன்றி கலந்த வணக்கத்தைக்கூறி சிறிது நேரம் எனது கருத்துக்களை எடுத்துக்கூற விரும்புகின்றேன்.
வரவிருப்போருக்கும் வணக்கம்
இரண்டு விடயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். வரவிருப்பவர்களுக்கு ஏன் வாரியார் வணக்கம் கூறுகின் முரோ என்பது முதலாவது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தில்லைவாழ்தம் அடியாருக்கு மடியேன்” என்று தொடங்கி தனக்கு முன்பிருந்த பெரியவர்களையெல்லாம் நினைவுறுத்தி
அம்பாலும்டிசார்ந்தாருக்கு மடியேன்” என்று கூறி "தவறு
தலாக தனது நினைவுக்கு வரத்தவறிய பெரியோர்களையும், எதிர்காலத்தில் வரவிருக்கும் சிவதொண்டர்களையும் ஞாபகப் படுத்திப்பாடியிருந்தாரே அடியேனும் அவ்வாறே அதனல் தான் வரவிருப்பவர்களுக்கும் வணக்கம் கூறினேன்.
அடுத்துஎப்பளிப்ப? உபந்யாசத்தை மேற்கொண்டா லும் 'கைத்தலம் நிறைகனி என்றே நான் ஆரம்பிப்பது வும்ாகுகுலுணக்கத்துக்காகவேயாகும். அருணகிரிநாதர்க்கவா மிகள் தான் எனது மலிைக குரு. தமிழ்ச்சுவையும், இனி மையும் குன்றுதலுயாடல்கள் அவையாகும்,
குருபக்திதான் சிறந்தது என்றதற்கு ஓர் உதாரணம் சொல்வேன்,
தங்கத்தை விலைக்கு வாங்கலாம். வைரத்தை வாங்க லாம்.துணிகள் வாங்கலாம். நிலம் வாங்கலாம், பங்களா வாங்கலாம். ஞானத்தை எங்காவது வாங்க முடியுயா? ஞானம் "ஷொப்" என்று எங்கேயாவது உண்டா? அந்த ஞானத்தைக் கொடுப்பவர்தான் குருநாதர், எனவேதான்
குருபக்தி மேலானது

Page 89
162
120 டிகிரி வெபில். கடுமையாக இருக்கின்றது. அ+கு ஒரு வேட்டியை வைத்தால் எரிந்து போவதில்லை. ஆனல் சூரியகாந்தக்கல் மூலம், சூரிய ஒளிக்கதிரை வேட்டியில் பாய்ச்சும் பொழுது ‘பக்" என்று தீப்பிடிக்கும், நேராக வரும் பக்தி இறைபக்தி சூரியகாந்தக் கண்ணுடிக்குக் கீழாக வருவது குருபக்தி குருவாய் வருவாய் அருள்வாய் என்பது பெரியவர் வாக்கு! பயிருக்கு முள்வேலி பணத்துக்குத் தரு மம் வேலி ஆறுதலையமலன் ஆறுதலை அருள்வான், வேலை யுடையவனிடம் வேலைகேள். நாவை அடக்கினல் சாவை அடக்கலாம்.
ஒருவேளை சாப்பிடுபவன் யோகி இருவேளை உண்ப வன் போகி. மூன்றுதரம் புசிப்பவன் ரோகி! எனவே அர சன் வீட்டு உணவானலும் அளவோடு உண்ணப் பழகுங் கள். ஒரு சிறிய உதாரணம் சொல்வேன்.
நம்முடைய வீட்டிலே அப்பா, அம்மா குழந்தை என மூவர் உளர். காற்படி அரிசி உலையியே வெந்துகொண்டி ருக்கின்றது. மேலதிகமாக இரு விருந்தாளிகள் திடீரென்று வந்துவிட்டனர். முன்பு வெந்துகொண்டிருக்கும் உலையிலே மீண்டும் அரைப்படி அரிசியைக் கழுவிப்போடுவார்களா? பெண்களுக்குத்தெரியும், பாதி வெந்திருக்குமென்று! எனவே அதில் போடமாட்டார்கள். அது போலவே எட்டு மணிக்
குப்போட்ட ஆகாரம் வெந்து கொண்டிருக்கும்போது ஒன்
பது மணிக்கு மீண்டும் போடலாமா?
"அற்ருல் அளவறிந் (து) உண்பான் அஃதுடம்பு பெற்றன் நெடிதுய்க்குமாறு' என்பது குறள்.
குருநாதர் வாந்தி, பக்தசிஷ்யனுக்கு தேவாமிர்தமாகி யது என்கின்றது புராணம். குழந்தை வாயிலிருக்கும் மிட் டாயை நமது வாயிலே வைத்தாலும் எச்சிலாகப்ப்டுவதில்லை. அதனுல்தான் கண்ணப்பந7யனர். கடித்துக்கொடுத்த இறைச் சித்துண்டை தேவமிர்தமாக உட்கொண்டார் சிவபெரு
y
-

N
163
மான். பக்தி என்ன செய்யாது என்கின்ருர் ஆதிசங்கரர். பக்தசபரி கொடுத்த எச்சில்கனி இராமனுக்கு திவ்ய பழ மாக இருந்தது, அன்பு அதிகமாக இருந்தால் என்ன தெரி யாது? எச்சில் தெரியாது.
காலம் கெட்டுப்போச்சு
ஆனல் இப்ப காலம் கெட்டுப்போச்சு. மொரார்ஜி தேசாயும், ராஜ்நாராயணும் என்ன சொல்கிருர்கள்? சிறு நீரை அதிகாலையில் குடிக்கட்டுமாம். அது கூடாது, கழிவுப் பொருள்.
நல்ல குணமுள்ள மனைவி வாய்த்தால் விமானத்தில் போவதுபோலாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டியில் போவது போலாகும். முற்பிறப்பில் கூட்டு வியா பாரத்தில் மோசம் செய்தால் இப்பிறப்பில் மனைவியாக வந்து வீட்டிலுள்ள தானியங்களை உனக்குத் தெரியாமல் விற்று மோசம் செய்வாள். மறுபிறப்பு உண்டுதான எனச் சிலர் சந்தேகமுறுவது வழக்கமாகிவிட்டது. நான் லண்ட வந்ததினம் பத்திரிகையில் யாரோ ஒரு கோடீஸ்வரர் கால மாகியிருந்ததாகச் செய்தி வெளியாகியிருந்தது. எத்தனை கோடியிருந்தும் என்ன பயன்? கூட வருமா அவரது உட மைகள் கூடவருமா? இரண்டாம் தாரம் திருமணம் செய்து கொண்ட அந்த அம்மாகூட வருவாங்களா? இல்லவேயில்லை. ஆணுல் ஒன்றுமட்டும் கூடவரும். அவரது ஞானம் கூடவரும். நன்மை தீமைகள் கூடவரும். சிறுகுழந்தைகள் ஞானிகளாக இருப்பதற்கும் அதுதான் காரணம், போன பிறப்பில் ஞானி களாக இருந்து சில சங்கற்பத்தாலே மீண்டும் அவதரிக்கின் ருர்கள். ז * קבעו.." "יר , , Aלאלן קו א . . .
ஒருமைக்கண் தான்கற்ற கல்வியொருவற் (கு) ,
எழுமையும் ஏமாப் (பு) உடைத்து என்பது வள்ளுவர் வாக்கு,

Page 90
164
ஆண்டவன் வைக்கும் கணக்கு
நமது பாவச் செயல்களுக்கு ஆண்டவன் கணக்கு வைத் திருப்பாரா என யோசிப்பவர்களுக்கு ஒன்று சொல்லுகின் றேன்.
நாம் எண்ணும் எண்ணம் எல்லாம் ஆண்டவன் பதிவு செய்கின்றன். நாம் ஓர் ஏழைக்கு பத்துச்சதம்போட்டால் அதுவும் அங்கு பதிவாகின்றது. ஒரு நாள் ஒரு சாதுவுக்கு ஒரு வாழைப்பழம் வாங்கிக்கொடுத்தால் அதுவும் அங்கு பதிவாகின்றது. கதவை மூடிக்கொண்டு மின்விசிறி போடு வோம். லைட் போடுவோம். மின் வாரியத்தில் பதிவாகும். அலுவலகத்தில் இருந்து கொண்டே அவன் எமக்குக் கணக்கு அனுப்புவான். அதுபோல இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மீட்டர் பெட்டி வைத்திருக்கின்றன். நாம் இங் கிருந்து போனவுடன் மீட்டர் பெட்டியில் கணக்குப்பார்க் கப்படும். கோவிலிலே திருடியவன் எவனெவனே அவனவன் மறுபிறப்பில் வெளவாலாக அதே கோவிலில் பிறப்பான்.
வாரியாரின் பூர்வீகம்
வாரியார் மறுபிறப்பு பற்றி அழகாக எடுத்துரைக்கின் ருர், எனது மனம் அவரது பூர்வீகத்தை நாடி ஒடுகின்றது: மல்லையதாசர் - கனவல்லி தம்பதிகளுக்கு வயலூரில் பிறந் தார் வாரியார். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் 'ரு' வரும்படியாக அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. 19 வய திலே வயலூர் முருகனது அனுக்கிரகம் பெற்ருர், மல்லைய தாசர் அக்காலத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற கதாகால்ட் க்ஷேப வித்துவான். குட்டியும் இலகுவில் நீந்தக்கற்றுக்கொண் டது. 16 வயதிலே"முதன் முறை மேடையேறியபொழுதே சபையோரைக் கவர்ந்திழுத்தார். 72 வயதாகும் வாரியார் வருடந்தோறும் 450 விரிவுரைகளுக்குக் குறையாமல் 30 நாட் களில் 60 ஊர்கள் என்ற ரீதியில் செய்து வருகின்றர். புத் தகம் பார்க்காமலேயே விரிவுரைக்செய்வது அவரது நிபுணத் துவத்தை நிரூபிக்கின்றது.

165
வெள்ளித் தம்ளரில் சூடான பாலருந்திய வாரியார் தொடர்கின்ருர், அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் விளக் கம் இலகுவாகவே கொடுக்கமுடியும்.
ஞானம் அஞ்ஞானம்
அஞ்ஞானம் இருக்குமானல் துன்பத்தை இன்பமாக எண்ணுவார்கள். விட்டில் பூச்சி துன்பம் என்று எண் ணுதபடி விளக்கில் விழுந்து சாவது அஞ்ஞானம். எத்த னையோ பேர் அறுபது வயதாகியும் இரண்டாந்தரம் செய்து கொள்வார்கள். இவருக்கு அறுபது, அந்த அம்மாவிற்கு இருபது. அந்த அம்மாவை இவர் கரும்பாக எண்ணுவார். அவரை இந்த அம்மா துரும்பாகக் கருதுவாள். இதுவும் அஞ்ஞானத்தின் எடுத்துக்காட்டு. சிறைத்தண்டனை விதிக் கப்பட்டவன் தப்பித்து ஓடினல் எப்படி மீண்டும் பிடிபடு வானே, அவ்விதம்தான் தற்கொலை செய்துகொள்பவர்களும் தப்பவே மாட்டார்கள். ஆனல் ஞானம் என்பது தெளிந்த நிலை, எதையும் சீர்செய்து பார்க்கக்கூடிய நிலை.
சமயத்தில் நன்கு பற்று வைத்தவர்கள் பயமெதுவுமற்ற வர்கள் என்கிறர் வாரியார். பரீட்சை முடிவுகள் வரவிருப் பதால் "கடவுளே என்கின்றேன் நான். அவர் மேலும் தொடர்கின்ருர், 器
*மகேந்திரவர்மனின் ஆட்கள் வந்து அப்பர் சுவாமிகளைச் சித்திரவதை செய்வதற்கு அழைத்தபொழுது எண்பத்தோ ராவது வயதிலும்கூட, "நாமார்க்கும் குடியல்லோம்" என வீரகர்ஜனை செய்தாரே அப்பர் சுவாமிகள். எனவே அப் பர்வாக்கை என்றுமே pேperவாக்காகவே கொள்ளவேண்
டும்.
சமயம் மாறுதல்
அவர் கமயம் மாறிஞர். அல்லற்பட்டு ஞானம் தொளி வடைந்தபொழுது சைவத்துக்கு வந்தார். எமது சமம்மே

Page 91
166
உயர்ந்தது : அநாதியானது; இன்பம் தருவது. உழைப்புக் கருதி, ஆடம்பர வாழ்வு கருதி எம்மவர்கள் முன்பு சமயம் மாறினார்கள். ஆனால் உழைப்பை உதறித்தள்ளி உண்மை யைக் குறிக்கோளாகக் கொண்டு பல வெள்ளையர் இன்று சைவத்துக்கு வருகின்றார்கள்.
போதும் என்ற மனம்தான் பொன் செய்யும் மருந்து. ஆடம்பரவாழ்வு , கூடாது; எளிமையாக வாழவேண்டும். அதுதான் மகிழ்ச்சியான வாழ்வின் அடிப்படை.
துன்பம் வரும்பொழுது சிலர் கடவுளைத் திட்டித்தீர்க் கின்றார்கள்; இது அறியாமை. ஒருவன் ரயிலில் பிரயாணம் செய்யும்பொழுது." அவன் டிக்கட் வாங்கிய ஸ்டேசனில் ரயிலை விட்டு இறங்கினால், மத்திய ரயில்வே அமைச்சரைத் திட்டுவானா?
துன்பங்களுக்கு நமது வினைகள் தான் காரணமாகின்றன. எனவே கடவுளையோ மற்றவர்களையோ நோகக்கூடாது. இதைத்தான் கம்பரும்
1. '' "லடி க'. " .. யானிந்த வினையினால் இவ்விடர் தானெடுத்த தாயினும் அன்பினோய் கூனில் கொடியா ரவேயிலர் போன காரியம் எண்ணலை புந்தியோய் என்றார்.
எனவே நாம் துன்பமின்றி இன்பமாக வாழவேண்டும் என்றால் மற்றவர்களுக்கு மனம் வாக்குக் காயங்களாலும் துன்பம் செய்யக்கூடாது. நன்மையே செய்யவேண்டும். இது தான் பண்பாடு.
சிலர் என்னிடம் புதிதாக தேவாரங்களோ திருவாசகங் களோ ஏன் இயற்றுவதில்லை எனக் கேட்டு வருகின்றனர். பாடி வைத்ததையே பாடி முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. ஆகவே மேலும் தேவையா?..

167
கந்தபுராணம் மகிமை வாய்ந்தது, ஏன் அதற்கு விழா எடுப்பதில்லை என்று என்னிடம் கேட்டதற்கும் விடைகூறி உங்களிடம் விடை பெறுகின்றேன்.
தங்கச்சங்கிலி எல்லோராலும் வாங்க முடியும். செப்புக் காப்புகளையும் எல்லோராலும் வாங்க முடியும். ஆனல் வைர நெக்லஸ் எல்லோராலும் அணிய முடிவதில்லை! அது போலவே கந்தபுராணமும் எல்லோராலும் சொல்வதற்குமில்லை, விழா எடுக்கும்படியாகவுமில்லை. -
உருவா பருவ யுளதா யிலதாய் மருவா மலராய் மணியாய் யொளியாக் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவா வருவா யருள்வாய் குகனே!
தட்டுத்தடங்கலின்றி வாரியர் கூறிமுடிப்பது எனது அடிமனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றது.
பழமையும் புதுமையும் இணைந்த ஓர் இதமான நூலை வாசித்த, ஒரு தத்துவச் சோலையில் அமைதிகண்ட, சம்ப வக் கருவூலத்தில் இனிமை கண்ட, வாழ்க்கையை அமைதி யாகச் சுவைத்து அனுபவிக்கத்தந்த ஒரு வழிகாட்டியைச் சந்தித்த - மனத்திருப்தி எனக்கு!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

Page 92
பாலுணர்வும் பத்திரிகைகளும்
இன்றைய பத்திரிகைகளில் பல பாலுணர்வுக்கு முக் கியத்துவம் கொடுத்து ஆபாசமான கருத்துக்களையும் படங்களையும் பிரசுரிக்கின்றன.
இவ்விடயம் சம்பந்தமாகப் பத்திரிகைத துறையிலும் எழுத்துத்துறையிலும் ஆற்றலும், அனுபவமுமிக்க நால்வரிடம் கேட்ட்ோம். அவர்கள் கூறியதை உங்க ளுக்குத் தருகிறேம்
களையைக் களைவோம் பயிரை வளர்ப்போம்!
-பண்டிதமணி. பாலுணர்வையே பரப்பும் பத்திரிகை நஞ்சு
வரதர்
பாலுணர்வுப் பத்திரிகை நாட்டின் சாபகேடு
-சுந்தர்,
நிதானம் தவறி அணுகின் அது விற்பனைத் தந்திரம்
-gaur.
மூதறிஞர் சி. பண்டிதமணி அவர்கள் தக்கதருணத் தில் நமக்கு அரிய சிறந்த புத்திமதிகளையும் கருத்துக் களையும் வழங்குபவர். இவ்விடயமாக அவரிடம் கேட் டோம். அவர் கூறுகிறர்.
 

XV
தரமான பத்திரிகையை உருவாக்க முனைபவர்கள் ஆபாச இலக்கியத்தை நாடமாட்டார்கள். அதனல் பிரசுரகர்த்தாக் களுக்கோ வாசகர்களுக்கோ எவ்வித ந ன் மையும் இருக்க முடியாது. காதல் என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம்தான். அதை தணிப்பதற்குத்தான் பத்திரிகை வழி வகுக்க வேண்டும் என்ருர் மகாத்மா. ஆண்டவனின் ஆதீ னங்களையெல்லாம் ஆடலரசிகளின் அரங்குகளாக்கி அதனல் சீர்குலைந்தவர்கள் எத்தனையோ பேர். முன்னேற்றவாதிகளும் முற்போக்கு வாதிகளும் கடுமையாகச் சாடியதன் பேரில் இந்நிலை சீராக்கப்பட்டது.
மற்றது பத்திரிகைக்கென்று ஒரு தனி லட்சியம் இருக்க வேண்டும். தனித்துவம் மிளிரல் வேண்டும். அதைக் கண் காணிப்பதுதான் பத்திரிகையாளனின் முக்கிய கடமை. உண் மையான கலையைச் சரியாகத் தீர்பபவர்கள் யார்? ஜனநா யகவாதிகளா? அதுதான் இல்லை. அறிஞர்கள்தான். அவர் கள் ஆபாச இலக்கியங்களை இருகரமும் நீட்டி வரவேற்றதை எங்கேயாவது அறிந்ததுண்டா? ஆபாச இலக்கியங்கள் சரி யானவையாயின் அவர்களால் ஏன் வரவேற்கப்படவில்லை. இதைத்தான் ஒவ்வொரு பத்திரிகையும் நன்ருக உணரவேண் டும். கூடாத பாத்திரங்களை யதார்த்த ரீதியாக என்றுமே மனிதமணம் வரவேற்க மாட்டாது அவை பதர்களை ஒத்த வையாகும்,
பத்திரிகையானது காற்றடிக்கும் பக்கம் செல்வதாக அமைவது கண்டிக்கத்தக்கது.
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல் லுக்கு மாங்கே பொசியும் வகையையும் பத்திரிகைகள் சந் தர்ப்பங்களில் கையாளலாம். சினிமா ஆபாசக் காட்சிகளுக்கு இடம் ஒதுக்கும் பத்திரிகைகளைக் கூறுகிறேன்.
சில பாமர மக்கள் ஆபாச இலக்கியத்தில் ஊறித் திளைத்தவர்கள்ாக இருத்தல் கூடும். அதனுல் சினிமாவிற்கு

Page 93
என்று அவர்களுக்கு ஒருபக்கம், ஒதுக்குவது அவ்வளவு தீவ ருதாது, அதை வாசிக்கும் அவர்கள் பத்திரிகையின் மற். றப்பகுதிகளால் ஒரு சிறிதாவது அபிவிருத்தியை அறுவடை செய்வார்கள். -
ă ಫಿ**:*
ஆறுமுக நாவலரும் மகாத்மா காந்தியும் எவ்வளவு தூரம் ஆபாச இலக்கியத்தைப புறக்தணித்தார்கன் என்ப தும் வன்மையாக எதிர்த்தார்கள் என்பதும் வ்ரலாறு எமக் குப் புகட்டும் பாடமாகின்றது.
எனவ்ே களையைக் களைவோம்! பயிரைச் செழிப்பாக வளர்ப்போம்.
 
 

171
பத்திரிகையாளர் பிரசுரகர்த்தா நல்ல எழுத்தாளர் வர்தர் (தி. ச. வரதராசன்) இவரிடம் கேட்டோம் அவர் கூறும் கருத்து.
*பாலுணர்வும் பத்திரிகைகளும்" என்ற தலைப்பில் சிந் திக்கிறேன். -
"பாலுண்ர்ச்சி பற்றி எழுதுவதே ப்ாவ்ம்" என்று கிறி அறிஞர்களும், அப்படியான விடயங்களைப் மகாபாவம் என்று நீனைக்கிற "கற்பு வாசசீர்களும் இருக் கிருர்கள்.
பாலுணர்வு சம்பந்தமான விடயங்கனைக் கண்டிப்பது ஒரு “கெளரவம் என்று கிருதுகிறவர்கள் நம்மின்ட்யே மிக
அதிகம்.
எந்த ஒரு விஷயத்தையும் எல்லோரும் பார்க்கிற கோணத் தில் மட்டுமன்றி, எதிர் கோணத்திலிருந்தும் பார்க்க வேண்டு மென்ற ஆவல் எனக்கு எப்போதுமே உண்டு: "உண்மை’ யைத்தரிசிக்க விரும்பும் எவருக்குமே இந்தப் பழக்கம் இருக் தத்தான் செய்யும். -
இந்த உலகிலுள்ள மனிதகுலம் மட்டுமல்ல, உயிரினங் கள் எல்லாமே பாலுண்ர்வின் வயப்பட்டவைதானே? பாலு ணர்வு என்று ஒன்றில்லாவிட்டால் இந்த உலகம் வளர்ந்து கொண்டிருக்குமா? எப்போதோ பாலைவனமாகிப் போயிருக் குமல்லவா?
பாலுணர்வைப்பற்றிக் சண்டிக்கிருர்களே, அவர்கள் எல்லோருமே பாலுணர்வின் வயப்பட்டவர்கள்தாம்.
"பாலுணர்வு" என்பது இரகசியத்தில் அனுபவிக்கவேண் டிய விடயம் என்று அவர்கள் கருதுகிறர்கள்,

Page 94
T
172
அதில் உண்மை இருக்கிறது. ஆனல், அவர்கள் அப்ப டியயா சொல்சிருர்கள் ?பாலுணர்வையே வெட்டிப்புதைத்து விடவேண்டும் என்பது போலல்லவா சொல்கிருர்கள்?
பொதுவாக இக்காலப் பத்திரிகைகள் இந்தப் பாலுணர் வுக்கு சற்று அதிகமாகவே தீனி போடுகின்றன என்பது e sårødld.
பாலுணர்வு விடயத்தில் தகப்பனரின் நடைமுறைகள் எப்படியிருந்தனவோ, அதே மாதிரி மகனுடைய நடைமுறை கள் அமையமுடியாது. உலகெங்குமே இந்தப் பாலுணர்வு விடயத்தில், "மறைப்பு குறைந்து கொண்டுதான் வருகிறது.
ஆனல்,
உலகத்தில் பாலுணர்வைத் தவிர வேறு சங்கதிகளே இல்லாததுபோல, இந்த ஒரு விஷயத்தையே படு ஆபாச மாக ஒரு பத்திரிகை பரப்பிக்கொண்டிருக்குமானுல்,
அது நஞ்சு அளவுக்கு மிஞ்சினல் அமிர்தமும் நஞ்சு என்ற மாதிரி,
அதேசமயம் "பாலுணர்வு விஷயமா மூச்! என்று பதி விரதை'யாக ஒரு பத்திரிகை இருக்குமானல்- 蠶
அப்படி ஒரு பத்திரிகை இந்தக் காலத்தில் இருக் கிறதா? இருக்க முடியுமா?
 
 
 

173
முற்போக்கு எழுத்தாளரும் "மல்லிகை" ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா ಸ್ಧಿ' கூறுகிறர்,
கவர்ச்சி என்பது எந்தக் கலைப்படைப்புக்கும்- பொது வாக- பொதுஜனரசனையை விரும்பப்படுவது. ஆனல் அதே சமயம் இந்தக் கவர்ச்சி என்பது எல்லை மீறி பால் உணர் வில் தூண்டுதலாக அமைவது உண்மையான கவர்ச்சியல்ல.
இன்றைய உலகம், விரும்பியோ விரும்பாமலோ விளம் பரயுகமாகிவிட்டது. பெண்களே பாவிக்கமுடியாத பொருட் களுக்குகூட பெண்களின் அரை நிர்வாணப்படங்களை விளம் பரமாகப்போட்டு விற்பனை செய்யும் வியாபார யுகம். இந் தப்பாதிப்பு அந்தச் சமுதாயத்தில் வாழும் மக்களையும் அதே மக்களைப் பிரதிபலிக்கும் பத்திரிகைகளையும் தாக்கத்தான் செய்யும், இது சில சமயங்களில் தவிர்க்கமுடியாமல் பத்தி ரிகைகளைப் பாதிப்பதும் உண்டு.
இது ஒரு புறமிருக்க; பாலியல் பிரச்சினை மனித சமு தாயத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. விஞ்ஞான பூர்வமானதும், மனேதத்துவ ரீதியானதுமான பாலியல் அறிவு நிச்சயம் நமது இளஞ் சந்ததிக்கு தெரிந்திருக்கவேண் டும். அதனுல் சமுதாயத்திற்கு பல நன்மைகளுண்டு. இன் றைய இளந்தலைமுறை சென்றகாலத் தலைமுறையைப் போன் றதல்ல. வீட்டு வாசற்படியைக் கடந்து ஒரு யுவனே, யுவ தியோ வெளியுலகில் காலடி எடுத்து வைத்தவுடன் விளம் பரங்களாகவும் சுவரொட்டிகளாகவும் சினிமாக்காட்சிகளா கவும் பாலியல் காட்சிகள் சில்லறைத்தனமாக மலிந்துபோய்க் காட்சியளிக்கின்றன. இதைப் பார்க்கும்போது எந்த ஓர் இளம் நெஞ்சும் நிச்சயம் தடுமாறத்தான் செய்யும். சில சம யங்களில் இதே நெஞ்சங்கள் தவறவிடவும் கூடும்.
ஆதலால்தான் வெகுஜனத் தொடர்புள்ள பத்திரிகை களுக்கு இப்பிரச்சினையில் மிகப்பெரும் பங்குண்டு என நான்

Page 95
174
கருதுகிறேன். இந்த நாட்டில் பத்திரிகை படிக்கும் பலதரப் பட்ட மக்கள் கூட்டம் இன்று பெருகிவருகின்றது. ஒரு சர்வகலாசாலையின் சமூகப்பாதிப்பைவிட ஒரு பத்திரிகையின் சமூகப் பாதிப்பு மிகப் பெரியது. இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போதுதான் வாலியல் பிரச்சினையை ஒரு பத்திரிகை அணுகும் விதம் திெரியும்
சர்வதேச ரீதியாக இந்தப் பாலியல் பிரச்சினை பலவாத விவாதங்களை உருவாக்கியுள்ளது. பத்திரிகைகளில் இந்தப் பிரச்சினை நிச்சயமாக விவாதிக்கப்படவேண்டிய தொன்று. ஆணுல் இது ஒரு மிகநுட்பமான பிரச்னையாகும். நிதானம் தவறி இப்பிரச்சினையை' நாம் அணுகினுல் இது ஒருவிற்ப னவும் தந்திரமாகவும் அமைந்து விடக்கூடிய ஆபத்து உரு வாகிவிடும்.
பாலியல் பிரச்னைகளைப் பத்திரிகைகள் எடுத்தாளக் கூடாது என்ற வாதமும் பாலியலைக் கண்டிப்பாக பத்திரி கைகள் எடுத்தாளத்தான் வேண்டும் என்ற வாதமும் தவரு னவை, சமூகத்தில் மிக முக்கியமானி அம்சமான இதை, தேவையறிந்து - சமூகநிலையறிந்து எடுத்தாள்வதும்வழிகாட் டுவதும் இன்றைய பத்திரிகைகளின் இன்றியமையாத கட மையாகும் 9 . . .
 
 
 
 
 
 

1雳
மாதாமாதம் உங்களே மகிழ்ச்சிக்குள்ளாக்கி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது *சிரித்திரன்' சஞ் சிகை. இன்று பத்தாவது ஆண்டை எட்டிப்பிடித்து வெற்றிப்படி ஏறிநிற்கும் 'சிரித்திரனின் ஆசிரியர் திரு. சிவஞானசுந்தரம் (சுந்தர்) கூறும் கருத்து. என்னைப் பெற்ற தாய் தாராளமாக வாசிக்க விரும்பும் ஒரு பத்திரிகையைத்தான் நான் விரும்புகின்றேன்.
எனது தந்தை மனக்கிலேசமற்றுமுறையில் தங்குதடை நன்றி வாசித்து ரஸிக்கும் ஒரு பத்திரிகையைத்தான் நான் வரவேற்கிறேன்:
இறுவர்களிடையே பத்திரிகைக் ஏங்கும் மனப்பா மையை உருவாக்கும் ஒரு நல்ல பத்திரிகையைத்தான் நான் மனதார ரஸிக்கிறேன்.
பாலுணர்வைப் பரப்பும் பத்திரிகைகள் ஒரு நாட்டின் Frrucos
ம்ை தரும் கனிமரங்கள் மத்தியிலுள்ள நச்சுமரங்கள் Ayonal
மற்றவர்களுக்குப் பயந்து மூடிமறைத்து வாசிக்கும் இலக் வியப் படைப்புக்களால், மனதில் ஏக்கம்தான் மிஞ்சும்! ஆபாசப் படைப்புக்களை அனர்த்தனமாகத் தாண்டவ மாட விடுதலால் ஆபத்துக்கள்தான் பதிலாகும்.
சலனமற்ற ஆசைகளுக்கு தூபம்போட்டு அதன் மூலம் அறிஞர்களாக விழைப்பவர்கள் நிச்சயமாகப் போலிகளே !
இலட்சியப்படைப்புகளிலும் பார்க்க மஞ்சள் பத்திரிகை ன் நாட்டில் அதிகம் நடமாடுகிறதே என்று சாடுகிறர்கள் 52Syrir.

Page 96
176
அதற்காக பாற்சாலையிலும் பார்க்க மதுச்சாலையில் அதிக மக்கள் காணப்படுவதால் அங்கு அதிக பயனுண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.
அழகை தத்துரூபமாகச் சித்தரிப்பதன் மூவம் நல்ல தொரு கவர்ச்சியை சித்தரிக்க முடியும்.
அஜந்தா ஒவியங்கள் அழகு ததும்புபவை! ஆனல் ஆபாசம் அங்கு இல்லை. சிகிரியாவின் சித்திரங்கள் சிறப்பு மிக்கவை. ஆனல் அவை அங்கங்களில் ஆபாசம் வடித்தனவா!
தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாக ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்றவர்களை உருவாக்கவேண்டிய பத்திரிகை உலகு, உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டும் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டும், பின்னும் கால்களுட னும், பிசையும் கரங்களுடனும் யார் பார்த்து என்னவித மான பரிகாரம் செய்கிருர்களோ என்ற அச்சத்துடன் நட ாடும் நிலையை - பாலுணர்வைத் தூண்டுவதன் மூலம் செயல்படுத்திவிடும்.
முற்றும்.
”
 
 
 


Page 97


Page 98
S/ 47o
ఇC919 లతిగ్రి
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 99
مخت
6
RFழநாடு பத்திரிகையில் நாள்
கால ஓட்டத்தில் அவன் சர் இறுக்கமாகி
அர்த்த ហ្គលិកា வாழ்க்கையின்
வதைக் கண்டேன். -
அதற்குள்ளா அவன் பிரிந்து guonio 4 ஆண்டுகளுக்கு" தாயகம் திருப்பிய அவனச் விமான நிலையம் போனேன் நீங்கள்.' என்று அவ:
மரியாதை சுடு து
இது லண்டன் அவனே மாற்ற
போலித் தன்மைகளுக்கும் இதயத்தில் இடமில்லை. அவனுடன் சேர்ந்து பணி. மறக்கவே முடியாது இதயத்தால் பழகுபவன் அ களால் இதயங்களைப் பேச வி ஆயிரமாயிரம் 35visel333 இன்றன. அவனுடன் நெருங்கிப் பழகு $୩୬5, - 15 1 அவனுக்கு அர்த்லங்கள் ஆ.
ஈழநாடு த. பெ. இல, 49
யாழ்ப்பாணம்,
இலங்கை.
ஆர் எஸ் அச்சகம்,

ன் அவனைச் சந்தித்தேன். }5նւլ եւ սոն, 5ւtւ
* அடிநாதமாக அவன் திகழ்
து போகவேண்டும்?
பின்னர் லண்டனிலிருந்து
சந்தித்து அழைத்துச் செல்ல
ன எறிட்டு விழிக்கிறேன். ' - அவன் இதயம் பேசு
புவனே யாரு மாற்ற
தன்மைகளுக்கும் அவன்
ய த்திரிகை அனுபத்தை
வன்! அதனுல் தன் எழுத்துக் வைக்கிருன்,
சுவை விருந்தாக அமை
வதே ஒரு சுவையான தொடர்
in Jub
இ. கந்தசாமி
սյո լքէն I / 6ծծrւb.