கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்ம நாதம்

Page 1


Page 2


Page 3


Page 4

*
சுத்தானந்த LD 6n) 2.
ஆத்ம நாத்
一、一
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
LITT LQ-UL Ugl.
ల6ష్ట్రాక్ష్త్రిళ్ళ,
ஆத்மஜோதி வெளியீடு, நாவலப்பிட்டி, இலங்கை,

Page 5
முதற் பதிப்பு 1 - 8 - 1962
உரிமை ஆசிரியருக்கு.
விலை ரூபா 3.
ஆத்மஜோதி அச்சகம், நாவலப்பிட்டி, (இலங்கை)
 
 
 
 
 

ஆத்ம நாத விளக்கம் ,
சுத்தானந்த மகரிஷி 22-11-61 ஞாயிறன்று இலங்கைக்குவந்து அன்பருக்கு அருளமுதம் பொழிந் தார்.
இன்பமே சூழ்க, எல்லாரும் வாழ்க; அன்பே வளர்க, அருளே நிறைக; சுத்த சக்தி ஓம் சிவம். வேல் முருகா ஓம்.
என்ற ஒலிகளை இலங்கை முழுதும் எழுப்பி னர். சுத்தானந்தர் நமது ஆத்மஜோதி நிலையத் திற்கு 25-11-61 வந்து தியானமும் கவிதையும் அருட்பணியுமாக மூன்று நாட்கள் இருந்தார்.
அவர் வரவின் நினைவாகவே ஆத்ம நாதம் வெளிவருகிறது. -
ஆத்ம நாதம் சுத்தானந்தரின் இதய ஒலி; இதயக் குகையிலிருந்து அவரது சுத்தாத்மா மனித சமுதாயத்திற்கு இசைக்கும் அனுபவ உண் மைகளே ஆத்ம நாதம், ஆத்ம நாதம் மடமட வென்று மலையருவி போலத் தாவிப் பொழிந்து ஒடுகிறது. அது ஒரு ஜீவ நதி, எக்காலமும் மனித சமுதாயம் ஓதி ஓதிப் பயன் பெறத் தக் கது, இந்த ஆத்ம நாதத்தைத் தொடங்கினுள் முடிக்கும் வரையில் அருள் மின் அருவி போல நம்மை ஈர்த்துச் செல்கிறது.
ஆத்ம நாதம் பகவான் ரமண மஹரிஷிகள் கேட்டுச் சுவைத்தது. திருவண்ணுமலை மேல் விரு பாட்சி குகையில் நமது கவியோகி நிட்டையிலி ருந்து அருளப் பெற்றது. ஆத்மநாதத்தின் இரண்

Page 6
டாம் பகுதி குருநாதம் 1926ல் சுத்தயோக சமாஜம் கவியோகியின் உள்ளத்தில் எழுந்தது. தமது கவிச் சிற்பத்தால் அதற்கு ஒலி யுருவளித் தார் மகரிஷி சுத்தானந்தர். சுத்தானந்தருக்கு யோக குரு சுத்த சக்தி பரமாத் மனே. அவனே உள்ளிருந்து அருளி அவரை ஆட்கொண்டு எம்மை ஆளாக்கினன். ஆதலால் அந்தப் பரமாத் ம குரு விற்குக் கவியோகி குருநாதப்பண் பாடினர் “ஞான மாலை" என்ற அரிய நூலை முன்னே வெளியிட் டோம். அதில் சுத்தானந்தரின் யோகக் கொள்கை விளங்கும். அதன் தொடர்பாகவே ஆத்மநாதம் வெளிவருகிறது.
சுத்தானந்தர் நம்முன் விளங்கி நம்முடன் குழந்தை போலப் பழகும் மாசற்ற கவியோகி, மகரிஷி அவரது நூல்கள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அவர் காலத்திலேயே அவற்றைக் கோத்து நல்ல முறையில் வெளியிட ஆத்மஜோதி முன் வந்துள்ளது.
ஆத்மநாத வெளியீட்டிற்காக மலாயா அன் பர் திரு. T. வீரசிங்கம் அவர்கள் 400 ரூபா பண உதவி செய்தார்கள். அடுத்து வெளி வர இருக்கும் பாட்டாளி பாட்டு என்ற நூலைத் தாமரை வல்லித் தோட்ட அதிபர் திரு. அ. வ. கிருஷ்ணபிள்ளை அவர்கள் தாமே அச்சேற்றுவதாக முன் வந்துள்ளார்கள். இவ்விருவரதும் ஞானதா னம் வளரப் பிரார்த்திக்கின்ருேம்.
தமிழர் அன்பும் இறைவன் அருளும் எம்மை வழி நடத்துக.
浔 நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்,
1 - 8 - 6 2.
 

பூத்தகாலை போலவே
புன்னகை பொலிகவே கோத்தமாலை போலவே
குலவி மாந்தர் வாழவே தீத்தணலைப் போலவே
திகழ்க யோக சக்தியே ஆத்மநாதச் சங்கொலி
அனைவருள்ளும் ஆர்க்கவே!
- சுத்தானந்த பாரதி.

Page 7
பொருளடக்கம்
39
1. ஆத்ம நாதம் (முற் பகுதி)
ஆத் ம நாதம் (பிற் பகுதி - குரு நாதம்)
இதயதாகம் 4. பக்தி பரவசம் 5. ஞான முழக்கம் 6. வாழ்த்து
59 125 195 231
ஒ0*தி.

ஒம் ஜய ஓம் '
ஆத்ம நாதம்
1. ஆதி பரமாத்மனே
ஆதிபர் மாத்மனே அகிலாண்ட நாதனே,
அக நாடகத் தரசனே, அனந்த குணனே குணா தீதனே, அமலனே
அருவனே அரு ளுருவனே!
சாதிமத வாதங்சுள் சாராத சாட்சியே,
சக்திக் கதிர்ப் பிழம்பே...! சாந்தவொளி வீசிடும் சன்மார்க்க தீபமே,
சத்திய சொரூபமே ஓம்!...
பூதபெள திகமான பேதங் கடந்த சிற்
- போதமே, சிவ போகமே!. பொங்குபரி பூரணப் பொருளே, புவிக்கெலாம்
புகலான வான் கருணையே!...
சோதி மயமாம் அமுத வெள்ளமே, உள்ளமே
தூயவுள் ளத்தி னுணர்வே துரியபரி பூரண சுதந்தர நிரந்தர
சுயம் சச்சிதானந் தமே!

Page 8
-2-
ஆங்கார மற்றவர் அகத்தொளிரு ஞானமாய்
ஆனந்த வானமாகி ஐம்பூத நிலையமாய், அகரத்தின் சிகரமாய்
ஆருயிர்க் குயிர் நாதமாய், நீங்காத சகசசன் மார்க்கத்தின் சோதியாய்
நித்தியச் சுக ராசியாய் நிலையாத மனதினை நிலைநிற்க நாட்டிடும்
நிகரற்ற ஜப நிட்டையாய் ஏங்காத நெஞ்சிலே தூங்காத சாட்சியாய்
இருந்தபடி நிற்கும் அதுவாய் ஏக ரசமாய் ஆத்ம போகரசமாய், ஒங்கும்
எல்லை யில்லா வின்பமாய் ஓங்கார மாகி ஒளியாய் உயிர்க்குயிராய்
உலாவிடும் உயர் பரமனே! ஒன்றென்றும் நன்றென்றும் என்றென்றும் உன் உள்ளொன்றி நிற்க வருளே! (னையே அன்பான நெஞ்சிலே அருளான சாட்சியாய்
ஆனந்த நடன மிடுவாய்; அரகர சிவாய நம எனுமடியர் வாக்கிலிசை
அருவியென வேபெருகு வாய்! உன்பாத மலரன்றி வேறென்றும் அறிகிலேன்
ஒருமையுடன் உன் பெருமையை, உயர்வான தமிழ்பாடி உலகெலாம் புகழவே
ஒதநான் காதல் கொண்டேன் என்பால் இரங்கியருள் இரவுபகல் இல்லாமல்
இதயகுகை ஒளிர் இரவியே எண்ணியதை ‘இந்தா' எனத் தரும் தந்தையே
எனையூட்டி வளர் அன்னையே! இன்பான ஜோதியே, ஏகாந்த மோனத்தில்
இனிதுவரும் அனுபூதியே, இதந்தரு சுதந்தர பதந்தரு திகம்பர
சிதம்பர பரம் பிரமமே!
s

- 3 -
தானுகி நின்றெலாச் சகமாகி யுகமாய்ச்
சலிக்கின்ற கால மாகித் தன்னுளே யாவுமாய் யாவிலுந் தானுய்த்
தனித்தொன் றனந்த மாகி, வானகி வளியாகி யணலாகி நீராகி, மண்ணுகி மண் ணுலகிலே மாயையாய், மாயியாய் மட்டுக் கடங்காத
மன்னுயிர்க் குயி ராடலாய், நானகி, நீயாகி, அவனுகி, அவளாகி
நானுவிதப் பொருள் களாய், நலியும்வினை யுடலிலே நலியாத ஒன்ருகி,
நடுநின்ற சாட்சி யாகித் தேகிைப் பாலாய்த் தெவிட்டாத கனியாய்த்
தியானத் திலே இனிக்கும் திவ்ய குணமே குணு தீதமே, போதமே,
சிற்சுகா னந்த சிவமே!. 4.
சத்தாகிச் சித்தாய்ச் சதானந்த L DIT GG3Lu
தானே தனக் குவமையாய்ச் சக்திமழை பொழிகின்ற சண்டமா ருதமே,
தழைத்தோங்கும் அருள் வெள்ளமே!. உத்திமன மெட்டரிய உத்தம ரகஸ்யமே,
உள்ளன் பினுக் கமுதமே உரையாத மந்திரம் உரைத்தனை, யதன்பெருமை
உரையால் உரைக்க வசமோ?. தித்திக்கும் இன்பரச மெல்லாந் திரண்டொரு
தெவிட்டாத பேரின்பமே. சிந்தையற நின்றே சிவானந்த முக்திவிளை சித்துவிளை யாடும் அரசே! WT தொத்துறு மிருட்பகைமை நிர்த்துரளி பட்டிடச்
சுடர்காந்து ஞான மழுவே! தொந்தமறு நிர்க்குண சுகாதீத மே, சுயஞ்
சோதிமய மான பரமே!

Page 9
-
2. சிவகாந்தம் பிறப்பிலே யென்னுட் பிறந்த சிற் காந்தமே,
பெரியவுல கத்தின் இயல்பைப் பிள்ளையாம் போதிலே பேசியறி வித்தெனைப்
பிரியாக் கவிக் காந்தமே, மறப்பிலே கண்மூடி மாயத்தில் வீழாது
மனதினைக் கவர் காந்தமே, மாசைத் துடைத்தன்பு மதியைத் துலக்குகிற
மாதவ ஒளிக் காந்தமே!. இறப்பிலாப் பேரின்பம் இதுவென உணர்த்தியுள் ளெழுந்திரு வருட் காந்தமே! - இரவுபக லற்றவிடம் என்னேடு யானகும்
எல்லையறும் ஏகாந்தமே!. சிறப்பிலே உள்ளமாம், பொதுவிலே உலகமாம்,
சிற்றம் பலக் காந்தமே, சித்தாந்த வேதாந்த சிரமான பரமான
திருவான சிவ காந்தமே!. 6
கார்கொண்ட வள்ளலே, கதிர்கொண்ட ஜோதியே,
கடல்கொண்ட கருணை விரிவே, கண்கொளா மின்வீசு கணிமுறுவ லேயென்
கருத்தினைக் கொண்ட கவினே, சீர்கொண்ட மார்பே, செயங்கொண்ட கையே,
சிவங்கொண்ட ஞான மனமே, சித்திக ளெலாங்கொண்ட முக்தியே, சக்தியருள்
திவ்யசிற் காந்த ஒளியே! பார்கண்ட போதிலும் அன்புமயம் என்றுருகும்
இன்பமய மான பொருளே, ஏர்கொண்ட உலகிலே எல்லோரும் அருளாட்சி
எய்திடச் செய்யும் இரவியே!
தூர்கொண்டெம் வாழ்விலே துரியகற் பகமென்று
தோன்றிய சுகப் பெருக்கே, சுத்தான்ம சமரச சுதந்தர நலம்பெருகு
சோதியே. தூய சுடரே !. 7
 

L5 -
நீயின்றி நாணில்லை, நீரின்றி வளமில்லை நெஞ்சின்றி நினை வில்லையே! நிலையான சுடரின்றிக் கலையான உலகில்லை,
நிதியின்றி அரசும் இல்லை; தாயின்றிச் சேயில்லை, தனுவின்றி வடிவில்லை.
தறியின்றி யாடை யில்லை, சத்திய மிலாதுபொது மதமில்லை, சன்மார்க்க
சாதன மிலாத் தவமிலை; பாய்திரையும் ஆழியும் இரண்டென மருண்டமதி
பதியன் பியல் பறியுமோ?. பார்வையும் ஒளியும் பகுத்துவிழி பார்க்குமோ,
பசுமையற மரம் வளருமோ?. ஆய்ந்தவரின் அனுபவமெ லாந்திரண் டாராயின்
அருளுநீ, பொருளு நீயே!. ஆன்மபரி பூரண சுகானந்த வாரியே,
அறிவான பர தெய்வமே!. 8
நீயே எனக்கன்னை, நீயே எனக்கப்பன்,
நீயே எனக்கு சுற்றம். நீயே யெனக்குலகு, நீயே யெனக்குறவு,
நீயே யெனக் கிகபரம். -
நீயே யெனக்கு நிதி, நீயே யெனக்கு மதி,
* நீயே யெனக்கு கதியே.
நீயே யெனக்கு குரு, நீயே யெனக்கு மாழி,
நீயே யெனக்கு வழியே!.
நீயே மயனக்குணர்வு, நீயே யெனக் குயர்வு,
நீயே யெனக் கனுபவம். நீயே யெனக்கருமை, நீயே யெனக்கபயம்,
நீயே யெனக் கிறைவனே!. ஆயிரங் கதிர்வீ சருட்பெருஞ் சோதியே,
ஆன்ம நிறைவே, ஆதியே!.
அருள் பெருகு மறிவுவளர் மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே! 9

Page 10
- 6 -
உண்ணுவது முன்னுல், உயிர்ப்பதுவு முன்னுல், உணர்வதுவு முன்ற னலே, 。 ஊருவது முன்னுல், உரைப்பதுவு முன்னல்,
உவப்பதுவு முன்ற னுலே! எண்ணுவது முன்னல், இயங்குவது முன்னல்,
இருப்பதுவு முன்ற ஞலே, ஏதேது செய்திடினும் எல்லாமு னிச்சையே,
எல்லாமுன் ஆராதனை. - கண்ணிருந் துங்கருத் தற்றவர்கள் காண்பரோ,
க்ண்ணுளே காண் கண்ணனே! காட்சியே, ஜகஜீவ சாட்சியே, காட்சிதரு
கதிரே, கதிர்ப் பிழம்பே' அண்மைக்கும் அண்மையே, அப்பாற்கும் அப்பால்
அதற்கும் அப்பா லியங்கி, அருள்பெருகு மறிவுவளர் மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே1. I O
3. அன்புமயம் அன்பே யுனக்குவமை, அன்பே யுனக்குருவம்,
அன்பே யுனக் காலயம், அன்பே யுனக்கு மலர், அன்பே நிவேத்தியமும்
அன்புவழி பாடு னக்கே. அன்பே யுனக்காகும் ஆசார நியமமுள்
ளன்பே யெனக் கறநெறி, அன்பே யெனக்குமதம், அன்பே யெனக்குசுகம்,
அன்பே யெனக்கு முக்தி, அன்பே யெனக்குடலம், அன்பே யெனக்குயிருன்
னன்பே யெனக் குலகெலாம். அன்பே யெனக்குவரம், அன்பே யருந்தவமுன் .
னன்பே யனந்த பதவி, அன்பழகு டொங்கிநிறை யன்பலை புரண்டோடும்
அன்புமய மான பொருளே ! அருள்பெருகு மறிவுவார் மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே!. 11

- 7 -
எப்போது முன்பூசை யெப்போது முன்னெண்ணம்
எப்போது முன்ற னுறவே, எப்போது முன் சக்தி, எப்போதுமுன்முக்தி,
எப்போது முன் சித்தியே! . எப்போது முன்சுத்த மெப்போது முன் ஸத்ய
மெப்போதும் உன் சமரசம் எப்போதும் உன்யோக மெப்போதும் உன்போ
எப்போதும் உன் தாகமே!. 55th எப்போதும் உன்சச்சி தானந்த மயமாகி என்றென்றும் உன்ற னுடனே, ஏகாந்த நித்திய சுகாதீத நிஷ்டைபெறும்
இன்பப் பசிக் கமுதமே! அப்பனே யுனையன்றி யெனையாவ ரறிகுவார்? .
அனந்த ஞானப் புனிதனே! அருள் பெருகு மறிவுவளர் மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே1. 1 2
இன்னிய துணைவனுனை யல்லாமல் இவ்வுலகில் எவருமிலை, யாங்கும் இல்லை; 泌 ஈசவுன் முன்னிலையி லைந்தவித் தென்னையினி
தேகாந்த மாக்கி விட்டேன். தன்னிக ரிலாத்தடங் கருணையே, உன்பதந்
தஞ்சம் புகுந் தொழிந்தேன்; சதானந்த யோகந் தழைத்திடற் காகிய
தனிப்பெரிய மெளன உறவே1. கன்மங்கள் யாவையும் கதிர்கண்ட பனியெனக்
காய்ந்திடும் தவ நெருப்பே ! கட்டவிழ்த் தென் மனக் கவலையினை முற்றும்
களைந்தசுடர் ஞான வானே! அன்னிய மெனுதசக சானந்த மருளுவாய்,
அன்புநீ, யாதரவு நீ ஆன்மபரி பூரண வகண்டசுக வாரியே,
அறிவான பர தெய்வமே!. - I 3

Page 11
- S -
நீயின்றி யாருண்டு நில்லாத வுலகிலே
நிலையான பரமாத்மனே நின்னடி யலாமலொரு நிழலில்லை, இதுவுண்மை;
நின்னருளிலாது வாழேன். ஞாயிறில் லாதுநல் லொளியில்லை, சூடில்லை,
ஞாலத்தில் வளமை யில்லை. நல்குவான் இல்லாது பல்லுயிர்க் குலமில்லை,
நாடின்றி வீடும் இல்லை. ஆயாவுன் னன் பின்றி யென்பிலா வுயிரென்ன
அகநெருப் பில் வாடுவேன்;
அம்மையப் பாவுன்னை யல்லாது வேறென்றும்
ஆதரவிலேன் அதிை. தீயினில் இரும்புசெந் தீயாத லெனவுனச்
சேர்ந்து நீ யாக வருளாய். தெள்ளிய சுகாதீத வெள்ளமே, உள்ளமே,
தேடரிய சிவஞானமே...! 4 எல்லோரும் இன்புறுத லென்னின்ப மாக்கின,
எனதியா னென்ப தறவே என்னுட் கலந்தவா றெங்கணும் விளங்கின;
இயல்பாய் இருந்த படியே! தொல்லுலகை யுன்னனை யாடலாய்த் தோற்றின;
தோற்றியதை மாற்றி மாற்றி, தொழில்களெண்பதுகோடி சோர்வற இயற்றியுந் - தொழிலறு சமர்த்த ஞணுய்;
சொல்லரிய துரியமெய்விண்ணுெளிக் கப்பால்
துலங்கிடும் வெட்ட வெளியே! துதிக்கத் துதிக்கத் தித்திக்குமுத் தமிழெனச்
சொக்குஞ் சுகப் பெருக்கே! இல்லையென் பாருளு மிருக்கிறே னிங்கென்னு
மெல்லையறு தில்லை யறிவே! எச்சமய மும்பணிந் தேத்தரிய பொதுநடத்
தெந்தையே போற்றி, போற்றி!. 1 5
 
 

- 4) -
4, கண நாதனே! ஒம்வடிவ மாகிய வினாயகக் கடவுளே,
உன்னைச் சரண் புகுந்தேன்! உள்ளத்தில் உள்ளபடி உலகெலாம் உன்னை
உயிர்த் தொகுதியாய் உணர்ந்தேன். தீம்புனல் இசைத்துவரும் சிவகங்கை யென் ன த்
தெளிந்த நல்வாக் கருளுவாய், தேடித் திரிந்ததைத் தியானத்திலே வந்து
தீம்பா லெனத் தந்தனை. பூம்புவிக் கோயிலிற் பொலிகின்ற தெய்வமே,
புண்ணியக் கண நாதனே! பூரணத் தவயோக சித்திக்கு வித்தே,
புகழ் மணக்குங் கருணையே! ஆம்பணிக ளின்பயன் அனைத்தும் நிவேதனம்
அறிவான குரு நாதனே! அகரமும் உகரமும் மகா மும் பொலிவேத
சிகரமும் ஆன சிவமே!
முன்னவா, ஓமொலி இசைத்திடும் யானை
முகத்தவா என் னகத்தவா, மூன்றினை விளக்கியே நான்கினை நிறைவேற்ற
முன்னிற்கும் என் அப்பனே, பொன்னவா புகழவா மண்ணவா பெண்ணவா
பொருளற்ற பொரு ளவாக்கள், புலன்வழி புகுந்து தற் போதத்தி லாழ்த்தியே
புண்படுத் தாது ஞானம் சொன்னவா, தூய்மையும் வாய்மையும் ஒருமையும்
சுத்தான்ம நேய வுறவும் துகளற்ற பொது நலத் தொண்டிலே வாழ்க்கை
தோயத் துணை செய்குவாய்.
யும் என்னவா, என்ன வா, நீயின்றி நானில்லை
எனவாழும் இன்ப மொன்றே; ஏகாந்த மோனத்தில் யானா யிருந்திடும்
இதயப் பரஞ் சோதியே!

Page 12
- O -
ஒன்ருகி யிங்கே உயிர்க்குலம் அன்புடன்
உன்னருளில் ஒங்க வேண்டும். ஒவ்வாத சாதிமத நாடுநிற பேதங்கள்
ஒய்ந்துபட் டொழிய வேண்டும். நன்முக உண்டுடுத் தெல்லோரும் வறுமையற
நலமோங்கி வாழ வேண்டும். நானென் றெழும்பாமல் நீயென்று நம்பியிஞ்
ஞாலம் நடக்க வேண்டும். மன்ருன உள்ளே மகாதுரிய சிவஜோதி மங்கலம் பொழிய வேண்டும். மனித வாழ்க்கை தெய்வ வாழ்க்கையாய் மாறி
மாதவச் சித்தி வேண்டும். டும் வென்றிமேல் வென்றிகண் டெம்பணிகள் உலகிலே
侬
வேரூன்றி வளர வேண்டும். வேதாந்த சித்தாந்த தேசிக வினயகா
வேண்டினேன் வர முன்னையே!. 1 8
உன்னையே நம்பியில் வுலகிலே வாழ்கிறேன்
ஒமிசைக்கும் வாலாமே. உன்னல் உயிர்க்கிறேன், உன்னல் நடக்கிறேன்,
உன் பணிகளைப் புரிகிறேன்; பின்னே யிருந்து பல பிரிவினைச் சூழ்ச்சிசெய்
பேய்களின் இடர்கள் வீழப் பெரிய தவ யோகநெறி பிழையின்றி நிறைவே பேசியுன் ஆசி தாராய். றப் இன்னலே தொழிலாய் இயற்றிடும் ஆணவம்
இடர்செயா தொழிய வருளாய்; - இந்திரன் முருகன் இராமகிருஷ் ணதியர் எனப் பெருகும் ஆற்றல் ஈவாய்;. தன்னையே தந்தநல் லன்பனுக் குன்னையே
தந்திடுந் தயவு மிக்காய். சக்திசிவ சித்திபர முக்திதரு சத்தியத்
தத்துவக் கண நாதனே! 19
 

-1-
அஞ்சாத நெஞ்சமும் அருளான்ம வீரமும்
அருளன்பர் நேய வுறவும் ஆத்திரப் பகைவர் பொருமையை அதஞ்செயும்
அறிவாற்றலும் பெருகவே1. கெஞ்சாத வுரிமையும் கேடுகுழாத நற்
கேண்மையும் வளர் ஆண்மையும் கீழான நினைவற்ற மேலான செய்கையும்
கீர்த்தியும் பெருக நாளும் எஞ்சாதி உஞ்சாதி யென்னத சமரஸ் இணைப்புடன் வாழும் உறவும் イ。 ஏமாற்ற மில்லாத காரியத் திண்மையும்
இயல்பாய் எனக் கருளுவாய்.
துஞ்சாத தியானச் சுகத்தில்வளர் சோதியே,
சுருதியின் இறுதி மொழியே சுத்தான்ம தத்துவச் சுடரே, வணக்கம்!
சுதந்தரக் கண நாதனே! 20
5. கோயில் மணி மணியடித் ததுசுத்த மாகவா, நெஞ்சமே,
வணங்குமுன் கோபுரத் தை. வளர்கொடியை நந்தியை வணங்கிமுன் வந்ததும்
மலர்தூவி ஒளி காட்டியே, கணபதியை மூலவரை அம்மையைக் கந்தனைக்
கலைதரும் தென்னப் பனைக் கருணைமிகு குரவரைச் சண்டேசரைப் போற்றிக்
கவலை யறவே ஜபம் செய். பணிவுபெற உட்குவிந் துள்ளத்தில் உணர்வான
பரிசுத்த சக்தி பெறுவாய்; பக்திவை ராக்கியப் பண்புடன் பாடுவாய்.
பசுபாச வினை நீங்குவாய். அணியுடன் மணிபோல் அருட்சிவ னுடன்கூடி,
ஆனந்த மாகும் உயிரே 1. ஆன் மலய மாகிடும் ஆலயத் தொழுகையால்
அன்புமயம் ஆகும், உலகே 1. 2 II

Page 13
-12
எழிலோங்கி யழகோங்கி இல்லறத் திருவோங்கி
இகபர சுகங்களோங்கி இயல்பான நல்லறப் பொருளோங்கி யருளோங்கி
இன்பவளம் எங்கு மோங்கிப் பொழிலோங்கி வயலோங்கி தனுகரண புவனுதி
போகபோக் கியம் ஓங்கியே, . பொன்னுேங்கி மணியோங்கிப் பொதுநலப் புக பொங்குமனே மக்க ளோங்கித் (ழோங்கிப்
தொழிலோங்கி எண்ணித் துணிந்தவினை சயமோங் துன்பமணுகாத ஞானச் கித் சுடரோங்கி வாழ்கவே, தொண்டர்குல மிங்கே.
துலங்குவாய் மயில் மீதிலே! . மொழியோங்கும் ஓங்கார முடிமிசை நடம்புரியு
முத்தமிழ்க் குரு நாதனே! மூலகுண்டலிசுத்த சக்திக் குமாரவேள்
முருகா , குகா , சண்முகா!. 22
அன்பிலே வேரூன்றி அறநெறிக் கிளைபரவி
அருள்மண மலர் குலுங்கி அறிவுக் கணித்திரள் பழுத்தமுத ரசமொழுகி
ஆனந்த நிழ லளிக்கும்
உன்பால் உயிர்க்குலம் ஒருமையுடன் வந்தான்ம
உரிமையுடன் வாழ வேண்டும். உலகெலாம் ஒம்சுத்த சக்தியெனு மந்திரம்
ஒளிவீசி யிலக வேண்டும். என்பால் இலக்குமி கடாட்சமுடன் வாணியின்
இன்னிசை விளங்க வேண்டும். எப்போதும் என்னுளம் இருந்துசிவ சக்தியருள்
இனிதுவழி காட்ட வேண்டும். பொன்போல மேனியும் புண்ணியச் செய்கையும்
புகழோங்கும் அறிவும் வேண்டும். பூரணத் தயானந்த பரிசுத்த சக்தியே,
புவி யாலயத் தரசியே!. 23
 
 
 
 

-13
பொற்பதத் துணையலாற் புகலிலேன், புகலிலேன்,
பொய்யுலகை நம்ப மாட்டேன் பொன்னையான் வேண்டிலேன், பொருளையான் பூவையர் பிணிச் சுகத்தைச் (வேண்டிலேன் சொற்பனத் தேனும்யான் வேண்டிலேன் வேண்டி சொகுசுநடை யுடை வேண்டிலேன். (லேன் சோதித் தெனக்கோடி சூழ்ச்சியாற் காணுவாய்,
சோதியே, எங்கு நிறைவே! இப்போ திருப்பதுவும் இனியான் இருப்பதுமுன்
இன்பத் திருப்ப தல்லால் ஏழையேன் எங்கிலும் இருப்பொன்று மில்லேன்,
விருப்பொன்றும் எதிலும் இல்லேன். . அற்பவுல கத்தினை மதித்திலன் ஐயனே,
யாவுநீ என மதித்தேன். அருள்பெருகும் அறிவுவளர் மருவுதிரு மலைவள ஆனந்த மோன வடிவே1. (ரும் 24
எத்திசையும் உன்னன் பிருக்கவிலையோ? சற்றும்
என்மேலும் அஃதில்லையோ? எல்லாமுன் னிச்சையின் படியே இயங்கியிங்
கிவ்வுலகு சுழல விலையோ?.
முத்துமுத் தாய்த் திகழு முத்தமிழ் மாலையை
முதிர் ந்தவுள் ளன்பர் சூட்டி, முத்துநகை யோடுனது முக்தியமு துண்டென்று
மோனத் திருக்க விலையோ?. பத்தன் யான் இரவுபகல் பாடியா டிக்கூவிப்
பலபல தவம் பயின்றும், பார்த்துள மடங்கியுன் பரிவலாற் கதியிலேன்,
பரிகாரம் வேறென்றிலேன். அத்தனே, உன்னடிப் பித்தாகி நம்பினேன்,
அனைத்துமுன் சித்த மென்றே. அருள் பெருகு மறிவுவளர் மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே!. 25

Page 14
6. பன்மையில் ஒருமை எம்மொழியி லெவ்வகையர் எம்முறை வழுத்திடி எல்லா முவக்கும் இறையே 1. னும் இன்பத் தமிழ்மலரொ டெக்காலும் உன்னையே
இடையரு தோதுகின் றேன், உன்மொழியும் என்மொழியும் வேறுபட் டுள்ள உள்ளதொரு மொழி யல்லவோ? I (361st? ஓங்கார உட்பொருட் குயிரே, அகாரமே,
உலகெலாம் நிலவும் ஒன்றே. தன்மயத் தீபமே, சின்மயக் கதிர்பரவு
சாட்சியே சக்தி விரிவே! தாரா தலத்திலெத் தனையர்திரு வுள்ளமுந்
தானென விளங்கு நிறைவே! அம்மையப் பாவுனக் காவியுட லன்றே
அடைக்கலம் வைத்து கந்தேன். அருள் பெருகு மறிவுவளர் மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே! 26
கர்ச்சித் தெழுந்துவிழு திரைகளுக்காதியாம்
கடலலாற் கதியு முண்டோ? கரைபுரண் டோடுமிக் காணுற்றி னுக்கருட்
கடலலா லமைதி யுண்டோ? தர்க்கித் தெழுந்துதான் ரு:னெனும் வாதமுந்
தன்னறி விலாற் றணியுமோ? சகத்தினை யலைக்குஞ் சழக்கும் சமர்களும்
சாந்தமல் லாற் றீருமோ? துக்கசுக தொந்தமுறு முக்குண வகந்தை துளிர்க்கு மன மாயை தோன்ருச் சுத்தசிவ ஜோதிவளர் துரியசம நிலையே
சுதந்திரப் பதவி யென்பார். அக்கதிக் காளாகி யானுமிங் குய்யவருள்,
ஆன்ம நேயப் பரமனே. அருள்பெருகு மறிவுவள மருவுதிரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே1. 27

-15
ஆசையெனு மதயானை தனையடக் கிடவெனக்
கங்குசம் போன்ற ஞான அமைதியை யளித்தனை, அகந்தையிருள் மாற் அகத் துறவிலே வளர்த்தாய்!. றினை வேசைவிழி போலவலை வீசுமா மாயமன வெறியாட்டும் வீண் மினுக்கும் வேடங்கொள் சூழ்ச்சிகளும் வெட்டவெளி யாக விடுதலைக் கன லீந்தன. வொரு தேசைச் சிதைக்கின்ற பாசக் குழிக்குள் யான்
சிக்காது பாது காத்தாய்; சிறுவயதி லேயெனைத் திடமாக வுன்வழி
திருப்பித் திருத்தி வந்தாய். ஆசானு மன்னையுமெ னப்பனும் அருந்துணையும்
ஆனவிஞ் ஞான மூர்த்தி ஆன்மபரி பூரண வகண்ட சுக வாரியே,
அறிவான பர தெய்வமே! . 28
மறைகளோ பலபல , மதங்களோ பலபல,
வகைவகை முரண்கள் பலவாம், மனிதமதி யாலே வகுப்புண்ட விதிகள் பல,
வாதிபே தங்கள் பலவாம். குறைமல்கு கோடிநூற் சுமைகொண்டு பரசுகக்
குன்றின் மிசை யேற வ5 மோ?. கோதற்ற வாதற்ற குறியற்ற நெறியற்ற
குணமூன்று மற்ற நிலையே! நிறைவான நின்னேடு நீயாய் இருந்திடும்
நிரந்தர சுதந் திரத்தில் நீநான் அவனவள் அதுவென்னு முலகற்ற
நிர்மலா னந்த மருளாய் அறைவாத மதபேத மனுகாத நுட்பமே,
அத்வைத சித் தாந்தமே, ஆன்மபரி பூரண வகண்டசுக வாரியே
அறிவான பர தெய்வமே!. 29

Page 15
سن 16 سم
எத்தனை மதங்களுள் எத்தனை வகுப்புகள்,
எத்தனை பிரிவினைகள்!. எத்தனை மடங்களிங் கெத்தனை தடைகளிங்
கெத்தனை எதிர்க் கடைகள்1. எத்தனை கொள்கைகள் எத்தனை கோலங்கள்,
எத்தனை மதப் பித்துகள்! s எத்தனை முக்குண விகாரங்கள், அத்தனையும்
எண்ணவோ ரெண்ணும் உண்டோ? இத்தனையும் அல்லா திருந்தபடி யென்றும்
இருந்திடும் ஒருமை தருவாய். இவ்வொருமை நிலையிலே இதயத் திருப்பதே
இயல்பாகு மின்ப நிலையே; அத்தனே, பதுவே அடைவதற் கரியநிலை;
ஆராய்ந்த உண்மை யிதுவே! ஆன்மபரி பூரண சுகானந்த வாரியே,
அறிவான பர தெய்வமே! 30
7. பரம குருவே!
குருவே, யெனேக்கொண்டு கோதறுத் தாண்டசற்
குணமே, குணங் கடந்தேர் கூடிடும் சமரச சிவானந்த முத்திவளர்
குன்றமே, யென்று முள்ள பொருளே, பொருண்மேவு போதமே, யப்பெரும்
போதங் கடந்த விரிவே1. பொங்கிப் பொலிந்துநிறை மங்கலக் காட்சியே,
புகலரிய சகஜ நிலையின் உருவே, உணர்வாகும் உறவே, உளங்காணு
மொளியே, பரந்த வெளியே, உண்மைநீ உண்மைநீ யெனையாண்ட பகவனே!
உலகாளு மருளாளனே.
அருவே, அருட்பெருஞ் சோதியே, ஆதியோ
பந்தமில் லாப் பரமனே!. ஆன்மபரி பூரண வகண்டசுக வாரியே,
அறிவான பர தெய்வமே!. 3
 
 

தாயா கிலும் வறுமை சாற்றியிலே யென்னுவாள்;
சகோதரர் துணை மறுப்பார், தந்தையும் சிந்தையிற் சங்கடப் படுவனுன்
சக்தியினை யார் தடுப்பார்?. வாயால் அறிந்திடா வள்ளலே, வெள்ளமாய்
வாரிக் கொடுக்கும் அரசே, மண்ணுலகை மழையாய் வளர்த்திடும் கொண் வரம்பிலா வான்கருணையே! டலே, தூயா, திருத்தொண்டர் நேயாவுன் சேயனைத்
துன்பங் கெடுத் தாளுவாய், தொல்லுலகில் அல்லலுறு துணையில்லை. சுந்தரத்
தோழ நின் இணையும் இல்லை; ஆய7 மல் ஓயாமல் அலறியும் அருளினில் அடைக்கலம் புகுந்து விட்டேன்; அருள்பெருகும் அறிவுவள மருவு திரு மலைவளரும் ஆனந்த மோன வடிவே!. 32
காமிய அழுக்கின்றி உன் கருனை யாலெனக்
கைமலரில் அர்ப் பணித்தேன். கரணம் உட லுயிர்பொருள் கருத்தன் பனைத்தை காலடியில் அர்ச் சித்தனன். யும் சேமமுற எனையாண்டு கொள்ளுவாய், சாந்தச்
சிவானந்த சிற் காந்தனே! சிறியனேன் பிழைகளைச் சிட்சித்து ரட்சித்து
சிந்தைவைத் தாளாக்குவாய்! நீமனது கொண்டநல் விசையினே நிரப்புவாய்
நின்வீணை யென் வாழ்க்கையே! நீயின்றி நினைவில்லை, கலையில்லை, நிலையில்லை
நெறியில்லை அற நாதனே. ஆமென்றும் அன்றென்றும் ஒன்றுபல வென்று நல்
லருளென்றும் ஒத நின்ருய் அன்பாகி யறிவாகி அறிவுக்குள் ஒளியாகி
ஆடல் புரியும் பரமனே! 3
gک e)

Page 16
-18
உள்ளபொருள் உள்ளபடி யுள்ளதனி லுள்ளவிடம்
உள்ளுறவி லொன்றி யதுவாய். உண்மையறி வின்பவொளி யொருகோடி பக ஒளிவீசு தவ்வொளி யெலாம் (லென்ன தெள்ளறி வளித்தகுரு சின்மயா னந்தனே,
தீபவழி பாடு னக்கே! தேசுபெறு மோனத்தி லேகாந்த நிலைதந்த
தேசிக சிகா ரத்னமே!. அள்ளிக் கலந்தென்னை யன் பிற் கரைத்தபர
DIT 35T AF LIDIT GJT Gîrf)GBGJ ! அகமாயை யந்திரச் சுழலினின் றடியனை
யகற்றிய தயா மூர்த்தியே!. துள்ளிக் குதித்துத் துயர் செய் தடங்காத
துட்ட மனதைச் செற்றனை தொந்த மறு நிர்க்குண சுகாதீதமே, சுயஞ்
சோதிமய மான பரமே! 34
அன்னையின் அருள்மிகுமென் அப்பனுய ரறிவினுக்
காயிரம் கால் போன்றவன்; யானுரென் ருராய்ந் தடங்குவோ ருள்ளத்தில்
அதுநான் எனத் திகழுவோன். சின்மயக் கனல்வீசிச் செய்யநல் லன்பர்பிணி செற்றிடும் செங்கண் வேலன்; - சிந்தனைக் கமுதினுந் தீஞ்சுவை யளிப்பவன்,
செகசிவ பரம் ஒன்றெனத் தன்னிலையில் உள்ளபடி சாந்தக் கதிர்பரவும்
சன்னிதிப் பெருமையாளன்; தானன்றி வேறிலா ஸதஸத் விலாஸனுந்
தத்வமஸி மந்த்ர வடிவோன்.
என்னிதய வெளியிலே எப்போதும் நீங்காம
லின்பநட மாடு முதல்வன். ஏகனு மநேகனம், சிற்சத்தி போகனும்,
இறைவனென் குரு பரமனே!. 35
 
 
 
 
 
 

*
- 198. உலகியல்பு
கால்வீழ்ந்து கைகட்டி வாய்பொத்தி முகமனுற்
காரிய முடித் தேகுவார்; கைதந்த நன்றியைக் காலினல் எத்துவார்,
கடன்வாங்கி இல்லை என்பர்; வால்கெட்ட நரிபோல, கால்கெட்ட புலிபோல
வஞ்சக மதம் பேசுவர்; வாக்கினை மறுப்பர், பிறர் வாழ்வைக் கெடுத்திட
வழக்கிற் கிழுத் தடிப்பார். சேல்விழியர் மோகவலை சிக்கியே சீரழிவர்,
தீமையே செய்து மகிழ்வார், சீடர்போன் ருஷாடபூதிவேலை செய்வார்.
தெய்வத் தையுந் தூற்றுவார். தோல்வருண பேதங்கள் ஆயிரஞ் சொல்லுவார்,
சுத்தசன் மார்க்க மறியார்; - சுயநலக்கும்பலின் சூதொழிவ தென்றுகாண்,
சுத்த பரமாத்ம குருவே1. 36
எழுதின்னு மெழுதின்னு மென்றெழுதி வாங்குவார்
எழுதுமைக் காசுமீயார்; எழுதிக் கொடுத்ததைப் பணமாக்கி யெண்ணு எமதுரிமை நூல் என்னுவார்; (6) ιππί , உழையின்னு மெனவேலை வாங்குவார்; பணமெனில்
ஊமையும் செவிடு மாவார்; ஊருக் குழைத்ததாய்ப் பேர்பண்ணி வந்ததை
ஒளித்தொளித் துண்டு மகிழ்வார்;
உழுதிடும் விவசாயி ஒருவேளை உண்ணவும்
உண்டெனத் தந் துதவிடார்; g?u 1İT göl பொதுவுடமை பேசுவார்; ஏழையெனில்
ஒரு பருக்கையு முதறிடார். தொழுவார்கள்; பிறர் கெடக் கடவுள் துணை வேண் துட்ட டிக்கப் புகழுவார்; (டுவார்; சுயநலக் கும்பலின் சூதொழிவ தென்றுகாண் சுத்த பரமாத்ம குருவே1. 37

Page 17
--20-۔
இன்றுநே சித்தவர்கள் நாளையே வெருகுபோல்
இகல்வேட்டை யாடும் உலகம், எமன் வரினும் இணையருேம் என்றென்றும் அன்
என்றுருகு காத லாளர், (புளோம்
சென்றுண் டுறங்கிமன மொன்றென்று கொஞ்சி
செல்வச் சிறப்பின் வளமே, (**யென் S. தேனினும் பாலினும் தித்திக்கும் இன்பமே
திருவே' எனக் கலந்து நின்றவர் செருக்குறு சினம்வர நிலைதவறி
நேர்பகைவ ராய்ப் பொருதுவார்; நிறைகெட்டு மதிகெட்டு நெறிகெட் டலைவரிது
நீசவுல கத்தின் இயல்பே; தொன்றுதொட் டிவ்வுலகை நன்றுதேர்ந் துன்னை
துணையென நம்பி யுள்ளேன்: (யே சுத்தபரி பூரண சுகானந்த வாரியே,
சுடர் பரவு சோதி மலையே!. 38
ஊரென்ன? பேரென்ன? உறவென்ன? மத மென்ன?
உள்ளடுசல் வங்க ளென்ன? ஒதிய வகுப்பென்ன? உத்தியோகம் என்ன?
ஊதியம் மாத மென்ன? சீரென்ன? வீட்டின் சிறப்பென்ன? செய்பென்ன?
செய்தந்த விளை வென்னவோ? சீதனங் கொண்டுவரு மனையின் சிறப்பென்ன?
செல்வரின் செவ்வி யென்ன?
பாரென் னிசைகளைப் பாரெனது பங்களா,
பாரெனது காரை யென்பார்; பயனற்ற கேள்விகள் அடுக்குவார், வம்பிலே
பகலிரவு போவ தறியார். μ யாரென்ன வினவிநான் அதுவென் றிருந்திடார்,
யாதோ புகன்று திரிவார்; யாதிலுந் தாக்கின்றி யாங்கனுந் தாய்ை
அமர்ந்த பர மானந்தமே.! 岛9

(
-21
யாரிறைவ னெங்குளான்? யாங்குமுள தெங்ங்ணம்?
யாது குலம் எந்தச் சமயம்?
எவ்வண்ணன்? எவ்வடிவன்? எப்படிப் பேசுவான்?
எதிரே நிறுத் தென்னுவார்; பாரிலவன் உண்டென்னில் எம்மெண்ண மெல்
பலித்துவர வேண்டு மென்பார்; (லாம் பல்லுயிர்கள் ஆண்பெண் படைப்பா யிருக்கை பரமன் படைத்த வகையென்? (யில்
வேரினி லெழுந்த மர மோவிதைய தோமுதல்?
வினைவிளைவு மெய் யல்லவோ? வேதாந்தம் அதுநான்’ எனில்வேறுகடவுளேன்?.
வித்தகக் குருநாதன் ஏன்?. போரிடும் புலவரிக் கேள்விக ளடுக்குவார்,
புந்திநிலை நின்று பாரார்; புன்னகை புரிந்திதய! மன்றிற் பொலிந்திடும்
பொருளே விளங்கு மருளே! 40
9. சத்தச் சந்தை சங்கையறு சாத்திரச் சக்கைசுக மீயுமோ?
சடவாழ்வில் இன்ப முறுமோ? சடசடெனச் சபைமெச்சச் சந்தம் பொழிந்தும்
சமாதான மாகி விடுமோ? அங்கண்மா வுலகைத் திருத்துவோம் யாமெனும்
அரும்பணியும் அமைதி தருமோ? அருநிதிக ளெல்லாம் அமைந்தோங்கி னும் மன
மடங்கிட வுபாய மாமோ? கங்கையுந் தானமும் கருமமுங் காவியும்
கவலையை ஒழித்து விடுமோ? காயக் கிலேசமும் கற்பகமும் மூச்சுங்
கடைத்தேற வழியு மாமோ? தங்குதடை யில்லாச் சதானந்த மோனந்
தனக்கிணை சகத்தி லுண்டோ? சர்வசம ரசசுத்த சாந்தநிலை யொளிவளரு
சச்சிதா னந்த மயமே!. 4 I

Page 18
-22
தத்வமஸி யென்பர் சிலர் ; தானடங் கிடவே
சமாதானம் என்பர் சிலபேர்;
தானன்றி வேறில்லை யென்பர் சிலர்: சாட்சியா ந்
தனிநிலைய தென்பர் சிலபேர்.
சத்தநிர்க் குணமென்பர், துரியநிலை என்னுவார்,
சூனியம தென்பர் சிலபேர்; 臀 சொன் மன மடங்காத பொருளென்பர், உலகெ தோன்றுவது மாயை யென்பார்; (லாந் சத்தென்பர், சித்தென்பர், தற்போத மற்றவழி சார்ந்து தித்திக்கு மென்பார்; -
தந்தை தாய் காதலன் றனையனென் றுருகுவார்
சங்கீர்த் தனஞ் செய்குவார்; அத்துவித வத்துதா னது வாய் உணர்வார்கள்;
அதுவின்றி யாது முனரார், அதுவென்று மிதுவென்றும் அவளென்று மவ அவையென்று மான பரமே! (னென்றும் 42
மதமெமது மதமென்பர் மற்ருெரு மதத்தை
மதங்கொண்டு தாக்கு வார்கள்; மண்ணுலகில் வானரசை மாண் புறக் கொணரு மகிமையைப் பாரு மென்பார்; (மெம்
சதமான பொன்னுடலம் ஈவோம் சரண் புகுமின்,
சாகாக் கலை கற்றயாம். தவயோக மில்லையணு சக்திக் கதிர்களே.
தாரணியை வெல்லு மென்பார்; அதஞ்செயப் பாய்ந்திடும் ஆகாச குண்டரே,
அதிகார வீர ரென்பார்; ஆருயிர்க ளஞ்சித் தமக்கடிமை செய்யவே,
ஆரவாரஞ் செய்வர் காண்! இதயத் தடங்காமல் என்னென்னவோ செய்வர் ,
எமனுண்டு துப்பு முலகோர். இயல்பான தன்னில் இருந்துலக சாட்சியாய்,
என்றைக்கும் உள்ள பொருளே ! 4.3
s
 

N
ஊருண்டு, நிலமுண்டு, உணவுண்டு, பணமுண்டு
உறவுண்டு, சுற்ற முண்டு; உருவான திருவுண்டு; திருவான மனையுண்டு
உலவிடச் சிவிகை யுண்டு.
பேருண்டு, புகழுண்டு, பேரிடத் தன் புண்டு,
டேசிட மதிப்பு முண்டு - பின்னிந்த ஊரிலெம் பேச்சிற் கிரண்டில்லை;
பெரியம் யாம் என்ற பேரில், யாருண்டு நிலையாய்?. அகந்தையினில் உண்டுண்
டுருண்டவர்க் களவு முண்டோ?. அலைபோல் எழுந்துவிழும் அரசியல் ஆட்சியும்
அரசமாய்ப் போவ தன்ருே??. தூருண்ட நீரெனச் சுகமுண்டு நின்னருள்
சுவைத்தென்னை உண்டு விடுக! சுத்த பரிபூரண சுகானந்த வாரியே,
சுடர் டரவு சோதி மலையே!. 44
பெற்ருலுன் அமர நிலை ம பறவேண்டும் இல்லை பிறவிதனே மாய்க்க வேண்டும். (யேற் பேசினல் உன் மகிமை பேசவேண்டும் அலாற்
பேசாத தனிமை வேண்டும். உற்ருல் அருட்பணிக் குறவேண்டும்; இல்லையேல்
ஒடுங்சியுள் ளடங்க வேண்டும். உன்னினல் உன் பெருமை யுன்னவேண்டும். அ உன்னலறும் அமைதி வேண்டும். (லால் பற்றில்ை உன்னையே பற்றவேண்டும்; அலால்
பற்றற் றிருக்க வேண்டும். பார்த்தாற் சுயஞ்சோதி பார்க்கவேண்டும்; அலாற்
பார்வையுள் ளாக்க வேண்டும். அற்ருலென் பந்தவினை யறல் வேண்டும்; இன்றேலுன்
அருள் ஆடல் புரியவேண்டும்! ஆன்மபரி பூரண அகண்டசுக வாரியே,
அறிவான பர தெய்வமே 1 - 45

Page 19
--2410. மனப்பிழை வருந்தல் கண்ணுர யான்செய்த கர்மங்களை எண்ணிக்
கண்ணிர் விடுத்து னடியிற் கதறுகின் றேன்பாவி, யுன்கருணை யென்முகம்,
கானுமோ, நானுமோ தான்?
வண்ன்ை சுமைக்கமொ 5(D60) g;61st 9,60T (LDGT
கு ரு கழுதை
வன்சுமையை யார் சுமப்பார்? (டென் வாயைத் திறந்துனை வழுத்தவும் வகையில்லை;
வஞ்சனேன் விதி யப்படி!. அண்ணு, திருக்கரம் அளித்தென்னை மேலேற்றி
ஆகாத வினைமூட்டையை அடியிலே தள்ளியுன் அருண்மலையின் முடியிலே
ஆனந்த நிலையத்திலே, புண்ணுறி யான்மாறி யுன்போத மாகவளர்
புண்ணியம் எனக் கருள் வையோ?. புகலே, எனக்குவழி புகலே புகற்கரிய
பூரணு னந்த வாழ்வே1. 46
தெரிந்தியான் செய்பிழை பலகோடி, பலகோடி,
தெரியாத தெண்ண வசமோ? சிந்தையி லகந்தைவெஞ் சிறுபேய் புகுந்தெனைச்
சீரழித் தது கொஞ்சமோ? கரந்தியான் செய்தவினை கைமேற் பலித்திடக்
கர்மங்களைக் கரைத்தாய். கண்பார்த்து நீயெனைக் கைதுரக்கிவிட்டாய், உன்
கருணையால் ஆளாயினேன்! மரந்தலைச் சிதல்போலென் மனதைத் துளைத்தி
மயக்கங் களைக் களைந் தாய்; மறலிவாய் வீழ்ந்தவனை மகனென்று மீட்டமா
வாழ்வின்பம் ஈந்து காத்தாய். சுரந்தமு திடைவிடா துரட்டியிச் சேயினைத்
துரியமாந் தொட்டி லிட்டாய்; சுத்தபரி பூரண சுகானந்த வாரியே,
சுடர்பரவு சோதி மலையே!. 47

- 25
நாயேன், நவின்றிடவு நாலுபேர் சீயென்னு
நச்சுவினை கொச்சைப் பயல், நலந்தீ தறிந்திடா நரகவாழ் வைப்பற்றி
நாறிக் கிடந்த புலையன். தீயேன், பகற்றிருடன், சிற்றினச் சேர்க்கையே
செய்திடுங் கைதவசடன், திட்டும் பொருமையும் வஞ்சமும் கோளும்
திருட்டும் உருட்டி வார்த்த
GI JGB JGör, எனக்குமொரு பேரன்பு பாலித்த
பெருமைபெறு பெரிய பொருளே! பிள்ளையென் றெத்தனை பொறுத்தனை பெரும்பிழை
பேசரிய கருணை வள்ளால் 1. துர்யமதி தந்தே தடுத்தாண்ட துங்கமே, துறைசேர்த்த அருள் வங்கமே! சுத்தபரி பூரண சுகானந்த வாரியே.
சுடர்பரவு சோதி மலையே! 48
இன்னுமொரு வழிகான வியலாம லலைகின்றேன்.
இந்திர ஜாலக் கனவிலே, ஏமாற்று மாயா விகாரங்க ளின்பமென்
றிகல்செயுங் கொடுமை தாங்கேன் பொன்விலங் கும்விலங் கேயல்லவோ? மணிப்
பூட்டுமோர் பூட் டல்லவோ? போகமென வருகின்ற மோ காந்த காரமெனப்
புதைகுழியிலே தள்ளுமே. கன்மபந் தங்கள் கழன்றுவிடு தலைபெற்றுன்
காட்சிபெறல் எந்த நாளோ?. கண்கட்டி விளையாடிக் காட்டிலே கைவிடும்
காமக் குரோதா திகள், - என்னைநய வஞ்சமாய்ப் பற்றியிடர் செய்யாமல்
என்னுள் விழித் திருப்பாய்; இவ்வுலகில் வேறுகதி இல்லேன், அைைதயான். ஈ ஏனே, உயிர் நேசனே! 49

Page 20
-26எனையுனக் கின் பமாய் ஈந்தனன் இறைவனே,
ஏற்றுன்னை என்னுள் வைப்பாய், என்மாய இருளெலா மில்லாம லோடியான்
என்றென்று முன்ற னுடனே இணைவுற் ற ருட்சுடர் குளித்தங் குலாவுவேன் ;
ஏகாந்த மோனத்திலே... | இயற்கைவிளை யாட்டையுன் இச்சைவிளை யாட
றெண்ணியான் பார்த்திருப்பேன்... (லென் தனையீந்த உயிரினுக் குனைமுற்று மீந்தருளும்
சக்திச் சுடர்ப் பிழம்பே! தர்க்கவா தங்களைத் தாண்டி யொளிர் உண்மை
தாயிற் றயா மூர்த்தியே!...
(யே அனைவர்க்கு மெளியனே, யாதினும் அரிய பெரும்
மாகார சக்தி மயனே!. அன்பருடன் அணுவளவும் அகலாத நேயனே,
ஆருயிர்க் குயிர் நாதனே!
50 11. மனக் குரங்கு அரை நொடி யிதற்கிட மளித்திடிற் போச்சுதென்
னாவியை யலைக் கு தந்தோ! ஆகாத பேயலைகள் ஆயிரம் எழுப்பி யென்
னமைதியிற் புயல் வீசுதே! உரிமையினை உரிமை கொண் டெனை வாட்டி யுலகெ
ஓட்டிக் கு தி த் தாடுமே
(லாம் உதவாத கனவிலும் ஊர்வம்பு தன்னிலும்
உ லகா யதச் சேற்றிலும் கரையற்ற கன்மபந் தங்களி லும், ஆசையாங்
கானல் வெஞ் சுர மதனிலும் காமாந்த காரமாங் காட்டினிலு மென்றனைக்
கண்கட்டி விளையாட்டு தே துறுதுறுக் குந்துட்ட மன தினை யடக்கவொரு
சூட்சுமஞ் சொல்லை யனே! சுத்தபரி பூரண சுகானந்த வாரியே,
சுடர்பரவு சோதி மலையே!
51

-27
உறங்கிடினும் என்னு ளிவ் வோயாத மர்க்கடம்
- ஓடியா டித் திரிகுதே! ஓகோ, விதன் கூத்தை யோதவும் ஒல்லுமோ
உரை நிறை யதற்கும் உண்டோ? திறங்கெடுத் தென்னைத் திடீர்பகீ ரென்னத்
திடுக்கிடுங் காட்சி களுடன், செகமெலாஞ் சலனத் திரைப்படச் சுருளாக்கிச்
சிந்தனை நடம் புரிகுதே! இறந்தகா லந்தனி லியற்றிய வினைகளை
யெதிர் கொண்டு விளையா டுதே! இங்கங்கும் எங்குமொரு கங்குகரை, காணாமல்
இருவிகற் பத்தி லுழலும் சுறட்டனை யுனக்கொரு குறட்டெனப் பூட்டுவாய்
துரையே யனந்த நிறைவே! சுத்தபரி பூரண சுகானந்த வாரியே.
சுடர்பரவு சோதி மலையே.
52
செவ்வழியிலே சென்று சென்மம் டேறயான்
செய் தவத்தைக் கெடுக்கும்; சிந்தை கலங்கச் சிரித்துவிளை யாடிடும்;
செக்சால் விழி காட்டிடும்; வெவ்விய பசிக்குணவு தேடிவரு வேங்கையென
விழைகொண்டு மேற் பாய்ந்திடும், வெம்முதலை போலப் பிடித்ததை விடாதுடன்
விழுங்கி யேப்பம் விட்டிடும், ஒவ்விய சுகானந்த நிட்டைக் கிடர்க்கட்டை
ஒய்யார மாய்ப் போட்டிடும், ஓட்டஓட் டச் சென்று வந்தின்னு மொட்டிடும்
ஓரா யிரஞ் சூழ்ச்சியால் இவ்வுலக மாயத்தின் ஏமாற்று வித்தைகளை
என்னால் இயம்ப வசமோ? ஏகாந்த மௌனத்தில் எனைவைத்த கடவுளே,
இன்பமே, அன்பு மயமே...!
53

Page 21
-28
இனிமேல் இதற்கிடம் ஒருக்காலும் ஈந்திடேன்,
இஃதுறுதி யுறுதி சொன்னேன்; எத்தனை முறைச்சபத மிட்டுரைத்தேன்; முடிவில்
இமையாது பார்த்து நின்றேன்; தனிமையில் கட்டிச் சதாமோன மென்னுந்
தனித்தவாய்ப் பூட்டும் இட்டேன்; தானறு சமாதியிற் சகமற்று நிற்கவொரு
சகஜபீட மும் அமைத்தேன் ; கனவுவளர் முன்னிலைச் சுட்டறக் காண்பதே
கவலையறு காட்சி யென்றேன். கலங்காமல் இனியிது கதிக்கான முக்திபெறக்
காப்புநீ கருணை வள்ளால்! துணிவுற்ற கட லுநீ, கலமுநீ, கரையுநீ,
துணைவநீ தூய குருவே! சுத்த பரி பூரண சுகானந்த வாரியே,
சுடர்பரவு சோதி மலையே!...
54
ஒருமையில் இருப்பதைப், பன்மையில் இழுத்தே
யுலட்டுங் கருங் குரங்கே! உள்ளே யிருக்காது துள்ளிப் புலன்வழியில்
ஓடி யலையுங் குரங்கே!. அருமைபெறு நல்லோரை அகராதி யாய்ப்பேசும்
ஆணவச் சிறு குரங்கே! ஆகாத கசடரிடம் அறியாது சிக்கியே
அசடு வழியுங் குரங்கே! இருமைவினை மேடைமேல் ஏமாற்ற நாடகம்
இயற்றும் மடக் குரங்கே!.. எல்லோரையும் நம்பி ஏளனப் படுகின்ற
ஏழை மோழைக் குரங்கே!.. குருமணியின் மாசற்ற கொள்கையறி யாதுள்றும்
கோமாளி நாய்க் குரங்கே! குகையினில் அடங்கிக் குணத்துடன் இருக்கக்
குறித்திடு மனக் குரங்கே!...
55

-29
12. தவ உறுதி மலையுண்டு மாதவத் திற்கரிய குகையுண்டு.
டமனமொன்றி நின்று விடினோ, மனமாய வினைகளை மாற்றிநிம் மதிசேர
மவுனமந் திரமும் உண்டு. கலையுண்டு, கவியு65எடு, செவியுண்டு, கண்ணுண்டு,
காட்டிடக் குருவு முண்டு; கனமான கவலையும் கதிர்கண்ட பனிபோற்
கரைந்திடக் கருணை யுண்டு. நிலையுண்டு, சிற்சக்தி நினைவுண்டு, குண்டலி
நெருப்புண்டு, நெஞ்சத் திலே நீங்கா த ஒளியுண்டு, தூங்காத சுடருண்டு,
நீண்ட மின்னடன முண்டு; தொலையுண்டென் னருகிலே தோன்றிமனை யேகி.
துணைவருந் தோழ னுண்டு;
(டத் சுத்தபரி பூரண சுகானந்த வாரியே,
சுடர்பரவு சோதி மலையே!
56
வேறென்ன நெஞ்சே, விரும்பிய விருப்புகள்
விரும்புவா றீந்து விட்டேன்; வேண்டினேன் உன்னையொரு மேலான நன்றி
வேண்டாமை வேண்டி யருளாய்; (யினை, சோறென்ன, பணமென்ன, சொகுசென்ன சோம்
சுகமெலாங் கண் டலுத்தாய்; (பலாஞ் தொல்லுலகி னல்லலைத் துகளற வறிந்துளஞ்
சோதித் தியல்பு கண்டாய்; மாறிமா றித்தேயு ம தவிகா ரத்திலே
மாறுபட் டலையா மலே மாசற்ற சுத்தசிவ சன்மார்க்க யோகமே
வாழ்வெனத் தந்த குருவே, ஆறுதல் எனக்குன்றன் அருளமுத வெள்ளமே,
அகமக மெனுங் கூத்தனே! - ஆன் மபரி பூரண வகண்டசுக வாரியே,
அறிவான பர தெய்வமே!...
57

Page 22
-30
எத்தனை இடர்வரினும் எக்கொடிய நோய்வரினும்
என்னென்ன இன்னல் வரினும், ஏழ்மைவரி னும்பிறர் இகழ்ச்சிவரினும் உடல்,
இளைத் தென்பு முருகி விடி னும், சித்திவரினும் எனைச் செகமெலாம் பித்தெனச்
சீறிச் சினக்க வரினும், தெளிந்துட் கலந்தமெய்ச் சிவகாம மதனிலே
சிறுமையொன் றுண்டாகு மோ?... எத்திசையும் எக்கணமும் எவ்விட மும் என்னுள்
இரண்டறக் கூடி நின்றாய் . இன்பனே, நண்பனே, இறைவனே, பரமனே,
எல்லாம் உனக் காக்குக!.. தொத்துறு துயர்க்குலத் தூசியேனை யணுகுமோ?
பரிதியைச் சூறை தொடுமோ? சுத்த பரி பூரண சுகானந்த வாரியே,
சுடர்பரவு சோதி மலையே!.
58
தாரா தலத்தினிற் சாற்று மொழி யாவினுந்
தமிழினிது தமிழினிது காண்; தாராள வாஞ்சையுள் தமர்சுற்ற முறவினுந்
தாயுறவு மிகவினிது காண்! பாராதி தனிலுள்ள கண்டங்களிற் புனித
பரதகண் டம் பெரிது காண்!.. பண்புற முயல்வினைகள் பலவினுந் தனை வென்ற
பரமதவ மினிதினிது காண். சீராதி பெருமைக ளியாவினுஞ் சீரிய து
சித்தவை ராக்கியங் காண்!. தேடரிய சித்திகளி லோங்கியது, தேட்டற்ற
சிவதுரிய சகஜ நிலை காண்! யாரா ரெனக்கினிது செய்திடினும், ஆராயின்,
யானே யெனக்கினிது காண்!.. ஆன்மபரி பூரண வகண்டசுக வாரியே,
அறிவான பர தெய்வமே!
59

-31 -
சொல்லரிய விண்ணின்று ஜோவெனப் பொழியுதே
சோதியா னந்த மழையே! துரியவள நாட்டரசு தோன்றுதென் னுள்ளே
சுதந்திரப் பொற்கோயிலாய் எல்லையறு முலகெலாம் இதயவிரி வானதோர்
ஏகரச மாய்க் காணுதே எங்கெங்கு பார்த்தாலும், எனையாளும் உன்னையே
எல்லாம் எனக் காண்கிறேன் அல்லலுறும் அமரநிலை என்றுநீ அன்று நான்
என்னுமறிவான நிலையே, ஆடாவிளக்கென்ன சகஸ்கார மணிமாடம்
அமைதியாய் அமரு நிலையே
வெல்லரிய தன்னட்சி பெற்றநிலை, வெற்றிநிலை
வேதநிலை போதநிலை யே! வேதாந்த சித்தாந்த வேறுபா டற்றநிலை,
விரவிடுந் துரிய மயமே! 60
13. சாதனம் உலகெலாம் கோயிலாய் ஒவ்வொருவர் உள்ளமும்
உள்ளிறைவன் சன்னிதி யதாய், உள்ளன்பு மலராக, உண்மை மந்திரமாக
உள்ளலே பூசையாக,
பலசாகி மத மற்ற பொதுவான பரமனே,
பரிவான மூர்த்தி யாக, பலனிலே பற்றற்ற நற்ருெண்டு செய்வதே,
பழுதற்ற கிரியை யாக நலமான சன்மார்க்க நாதமே சங்கமாய்,
நாம ஜபமே பேரியாய் நானென்ற நடுவிலே நீயென்ற போதத்தை
நாட்டலே யோக மாக - இலகான்ம நேயத்தில் எல்லாரும் ஒன்ருய்
இருத்தலே ஞானமாகும். எண்ணரிய சாதனம் பண்ணலே யின்பமாம்
இதயத்தில் உள்ள பொருளே! 6 I

Page 23
-32
ஆயிர விதழ்மலரில் அரியணை யமைத்தனன்;
அறிவொளி விளக் கேற்றினேன்; ஆர்வத்தில் ஊறிவரும் அன்புப் பெருக்கால்
அகங் குளிர நீராட்டினேன், தூய மனமே நல்ல துகிலாய் உடுத்தினேன்,
சுகுணத்தை அணி யாக்கினேன், துரியபர நாதகண் டாமணி முழக்கினேன்,
சுகந்த சாந்தம் பூசினேன்; வாயார வரகவியின் மலர்மாலை சூட்டினேன்,
வாழ்வெல்லாம் அர்ச் சித்தனன்; மன்னுயிர்த் தொண்டுதரு மாசற்ற பலனையே
மாண்புற நிவே தித்தனன்; ஆயா, உனக்கிந்த ஞான வழி பாட்டையே
அனுதினமும் ஆற்றி மகிழ்வேன்; அது வென்றும் அவனென்றும் அவளென்றும் அன் அகநாடகப் பரமனே!. (பர் தொழும் 62
என்னைக் கொடுத் ததுவு முன்னைக் கொடுத்தனை,
எனதியா னென்ப தினியேன்? என்னுயிர்க் காதலா, உன்னிளம் புன்னகையில்
இன்னுயிர் குளித்து வந்தேன். பொன்னை நெருப்பினிற் பொலிவேற வாட்டிடும்
பொற்கொல்லன் டோற் சீவனைப் புவிமாயை தன்னிலே வாட்டிமாற் றேற்றியுன்
பூங்கழற் கணி யாக்கினை.. உன்னைவிட் டாலெனக் குயிரில்லையுட லில்லை
- உலகில்லை யுறவு மில்லை; ஒன்றில்லை, பலவில்லை; ஒளிர் திருச்சக்தியால்
ஒன்றுபல வான ஒருவா.. அன்னை மடி விளையாடு மருமைக் குழந்தைபோல்
அடி.மலரில் விளை யாடவே அங்கிங்கு மெங்குமென் னாருயிர்க் கின்பமாம்,
ஆனந்த மான பரமே!
63

-33
புதுவாழ்வு தந்தாய், புதுத்திறல் அளித்தாய்,
புதல்வனென் றென்னை யாண்டாய்; பூராய மாகவே புவியினை யறிந்துன் பகல், 2:5ாயன யறிந்துன்
புகல்பெறச் சிந்தை தந்தாய், எதுவுமிடை நில்லாம லென்னையாட் கொண்டுநின்
னிச்சையினை என்னுள் வைத்தாய்; இதயகுகை தன்னிலே யெப்போதும் வேள்வி யன
லென்ன நீ சுட ரோங்கினை!... வெதுவெதுப் பாசவுன் சிற்சக்தி வெள்ளம்
விரைந்தெனுட் சுழ லுதையே! வெ ற்றின்ப மாயையாம் சிற்றின்பம் வேண்டி
விருப்பிந்த முற் றின்பமே; .. -
(லேன் இதுபோது மப்பனே, எல்லோர்க்கு மிதனையே .
ஈந்திடும் தொண்ட னானேன். இனிவேறு நினைவில்லை வினையில்லை, மொழியில்லை,
எல்லாமுன் னின்ப மயமே!.
6 4
சாதிமத பேதமே சாராத சமரசச்
சன் மார்க்க ஒ ளிகாட்டினை ; சாந்தமாய் நாளெலாம் யோகசாதனமாய்த்
தழைத்திடச் சக்தி தந்தாய்; வேதமுங் கீதையும் குறளுடன் பைபிளும்
வித்தகர் அருட் செல்வமும் வேதாந்த சித்தாந்த தத்துவ விளக்கமும்
விளங்கு கலை வாழ்வு தந்தாய்; ஓதியறியா அறிவை உள்ளே யுணர்த்தினை ;
உலகிற் கதைத் தந்திட, ஒளிவாக் களித்தனை யதுவே யெனக்கினி
உயிர்த் துடிப் பாவ தாமே.. ஆதிமுதல் என்னுடன் யானாய் அமர்ந்திடும்
அருளான அன்பு மயமே... ஆதார கமலத்தின் மீதேறி விளையாடும்
ஆனந்த ஜோதி யழகே!...
65

Page 24
一34一 14. ஜெய சுத்த சக்தி ஒம்! அருளோங்கு மொளியோங்கு மறிவோங்கு மானந் அருவியென வாழ்வி லோங்கும். (தம் அத்யாத்ம சித்திக ளனைத்துமோங் கும். ஆற்றல்
அளவற் றிலங்கி யோங்கும். பெ ருளேrங்கும், புவிதரும் போகபோக் கியமோங்
புண்ணியப் புகழு மோங்கும், (கும் s புலமையெழி லழகுகலே பொருள்வளமை யோங் பொங்குமனை யின்ப மோங்கும். (கிடும்
இருளோங்கு மடமைத் துயர் வறுமை யின்னல்க
ளில்லாம லோடி மறையும் எண்ணிய செயல்வெற்றி யிளநகைச் சுடரோங்கு
மினிய பொது நலமோங் கிடும். திருவோங்கு மங்கலச் சிவமோங்கும் பேரின்ட்ச்
செல்வமெல் லாம் ஒங்கிடும்; தியான மலர் தூவியுள் ளன்புசெயும் அன்பர்க்கு, ஜெயசுத்த ஓம்சக்தி ஓம்! . 66
காரிருள் வானம் பளிரெனக் காந்திடும் கடுமின்னல் வெறிநகை யுடன் கடகடென ஊழியிடி பஞ்சக் கடும்புயற்
கடியதே ரூர்ந்து வருவாய்; தேர்மதி விவேகமொடு சித்தமும் மனமும்
திறல் கொண்ட பிராணன் முதலாம், சேவக ரெலாருமே திமிர் கொண் டலைகுவார்,
செருக்குடன் வணங்க மாட்டார்; போர்செ யுங் காமாதி ராக்ஷஸப் புல்லரென்
புந்தியைச் சிறை கொண்டனர் பொருதிவர் பொடிபடப் பொல்லா வினைகளைப்
பூண்டுடன் அழிக்க வேண்டும். சீர்பெருகும் அருளாட்சி, சித் திபெறு யோகம், செழித்துநீ டோங்க வேண்டும்; 鬣, ஜயவாணி, ஜயகாளி, ஜயலக்ஷ்மி, கல்யாணி,
ஜயசுத்த ஓம் சக்தி ஒம்!. 67

سس-35--
ஆகாய மீன்களைப் பகலிலே அந்தகனும்
அளவிட் டுரைக்க வைப்பாய்; ஆகாத முடவனையும் அடர்கான் மலைதாண்டி
அப்புறஞ் செல விடுப்பாய் பாகாய செந்தமிழ்ப்பண்பேச ஊமைக்கும்
பக்குவந் தந் துதவுவாய் பாராளுஞ் செல்வரும் பார்த்ததிச யிக்கவே
பஞ்சையைப் பதவி சேர்ப்பாய். வாகாய திறலீந்து மெலியவரை வாகை பெறு , வலியவர்க ளாக்க வல்லாய் -
வறள் வனந் தரமண்ணில் வளமையுண் டாக்கு வரமுனக் கரிய துண்டோ? (வாய் தேகாதி யிடர்தாண்டித் தேகியென யான மரச்
சிற்ககோ தயமருளு வாய் ஜயவாணி, ஜயகாளி, ஜயலக்ஷமி, கல்யாணி
ஜயசுத்த ஓம்சக்தி ஒம்! 68
உன் சக்தி என்சக்தி உன்னன் பென் அன்பதாய்
உன்னுணர் வென் னுணர்வாய்; உன்யோக மென்யோக முன் சித்தி யென் சித்தி
யுனனுடல் என ஆடலயே, உன்னெண்ணம் என்னெண்ணம், உன்னுயிர்ப் பென் புன்னுறுதி யென் னுறுதியாய் (னுயிர்ப் உன்னுருவ மென்னுருவ முன்னருவ மென்னருவ
முன்னழகென் பொன் னழகதாய் உன் காட்சி யென் காட்சி, யுன் சாட்சி யென்சாட்சி,
உன்னமைதி யென் னமைதியாய், உன் விளக் கம்என் விளக்கமாய், உரையற்ற d உன் மெளனம் என் மெளனமாய்,
"உன்னுண்மை யறிவின்ப மென்னுண்மை யறிவின் உன்கோவில் என் உள்ள மாய், (பம், உள்ளபடி யுனையொன்றி நீயா யிருக்கவருள்,
ஒம்சுத்த ஓம்சக்தி ஒம்!. 69

Page 25
-36ஐம்பெருந் தேவர்க்கும் ஐம்பெரும் சக்தியாய், ஐந்தொழில் புரிந்து வளர்வாய்; N அறிவாகிக் கலையாகி யழகான திருவாகி
யனல் வீசிடுங் காளியாய். ஐம்பெருங் கோசத்தும் ஆதார மலரேறி
ஆடிக் களித்து வருவாய். ஐந்து திணை யுலகெலாம் உனது நாடகசாலை,
அதனிலொரு கவியோகி யான்;
ஐம்பூதம் ஐந்துதன் மாத்திரைப் பொறிபுலன்
ஐந்துடன் நான்கு கரணம், ஆத்மவித் யாசிவத் தத்துவமெலாம் பூண் டென்
அகம் புற மிலங்கும் அருளே! ஐம்பெருந் தந்தைதாய் குருதெய்வ மாகுவாய்,
ஆம்சுத்த சக்திஜய ஒம்!. ஆயுளும் செல்வமும் அறிவாற்றல் வெற்றியிசை யாக்குவாய் அருளம்மை யே! 7 O
15. வரமும் வாழ்த்தும்
ஆதி வேதஞ்சொலும் அத்யாத்ம தீரமும்
ஆனந்த வாழ்வும் வேண்டும். அரியசங் கரர்சொலும் தன்னறிவு மிகவேண்டும்
அப்பர் சொலும் அன்பு வேண்டும். கீதைசொலும் நிஷ்காம்ய கர்மயோகம் வேண்டும்,
கிறிஸ்துவின் பொறுமை வேண்டும், கிருஷ்ணசை தன்யரின் பக்திபர வசம்வேண்டும்
கரீம்நபியின் உறுதி வேண்டும் பேதமறு வள்ளலின் பெரிய சம ரசம்வேண்டும்,
பேய்மனம் அடங்க வேண்டும்; பிரியாத சிவசக்தி போலாண்மை பெண்மையுடன்
பேரின்பம் உண்ண வேண்டும்; சாதனம தாஞ்சரியை கிரியை யோக ஞான
சன்மார்க்க சித்தி வேண்டும், தன்மயச் சின்மயப் பன்மயத் தெய்வமே,
சச்சிதா னந்த பரமே. 71
 

臀
-37
எளியவர்கள் வயிருர உண்ணவேண்டும்; செல்வர்
இறுமாப்பு நீங்க வேண்டும். இடரான சாதிமத பேதவினை யறல்வேண்டும்;
எல்லோரும் ஒர்குலம் போல், வலியவர்கள் கொடுமையற வாழவேண்டும்; பொய்
வழக்கினை ஒழிக்க வேண்டும். வறுமையிரு ளடிமையெனும் வார்த்தையே யில் வையஞ் செழிக்க வேண்டும், (லாது மெலியவரு பிணிதுயர் பொருமைவஞ் சத்தீமை
வேரோடு மாய வேண்டும். வீரமிகு கனல்வேண்டும். விடுதலைத் திறன் வேண் வினைவேள்வி வெல்ல வேண்டும். (டும்
நலியவரும் அசுரபலம் அழியவேண்டும், இந்த
நாட்டில்விண் ணரசு வேண்டும். நானிலமெலாம்பரவி நானென் றுளத்திலே
ஞான நட மாடும் அரசே! 72
வானரசு கூடியே மானிடத் தேவரிம்
மண்மிசை யுலாவ வேண்டும். வளர்சுத்த யோகமும் போகமும் ஏகமாய்
வாழ்வினை நடத்த வேண்டும். ஞானமுங் கல்வியும் நவசக்தி விஞ்ஞான χ
நலமுடன் பொலிய வேண்டும். ஞாலவுயிரின் அமுத நாடியில் ஆனந்த
நடராஜன் ஆட வேண்டும். தேனிசை யுடன் வேணு கோபால நாரணன்
சித் தமிசை யிலக வேண்டும். செயலவன் செயலாகி, ஜீவனில் வெற்றியொளி
திகழின்ப மோங்க வேண்டும். மோன மலை யூறிவரு முத்தருவி யெனவாக்கு
முத்தமிழ் இசைக்க வேண்டும். முச்சுடர் நிலையத்தின் உச்சத்தில் அரசாளும்
மூலப் பரஞ் சோதியே!. 73

Page 26
-38
நல்லவர் திருக்கூட்டம் ஓங்கவேண்டும்; உலகில்
ஞான வொளி வீசவேண்டும். நாடெலாம் கல்விகலை செல்வத் தொழில்வளமை
நாடோறும் ஒங்க வேண்டும்.
பொல்லாத கோள்பொய் பொருமைநோ புடன்
போராட்டம் ஒழிய வேண்டும். (LD5l. பூமியை இரத்தகள மாக்கிடும் அரக்கர்குலம்
பூண்டோடு மாள வேண்டும்.
எல்லோரும் சரிநிகர் சமானசன் மார்க்கராய்,
இன் புற்று வாழ வேண்டும். இன்சொலும் ஈகையும் இரக்கமுந் தூய்மையுடன்
இகவாழ்வி லோங்க வேண்டும். வெல்லவேண் டும்வாய்மை வீரவிடு தலைவேண்டும்;
விஞ்ஞானம் ஓங்க வேண்டும் வேதாந்த முக்தியும் சித்தாந்த சக்தியும்
ரவவரு பரம சிவமே!. 74 போக்குவர வற்றபரி பூரணப் பொருளையே பொருளென்னும் அன்பர் வாழ்க!
பொய்யடிமை யில்லாத மெய்யடியார் வாழ்கவே
புண்ணியத் தொண்டர் வாழ்க! வாக்கமுதினுல் இறைவன் வான் புகழ் இசைக்கின்ற
வரகவி மகான்கள் வாழ்க! வன்புலனை வென்றுமண் மொன்றியித யத்திலே
வளர்தியான யோகர் வாழ்க! நீக்கமறு சகஜநிலை நின்றஞா னிகள்வாழ்க!
நித்தியச் சித்தர் வாழ்க! நிஜதுரிய மலையிலே நிலவுநின் மலர் வாழ்க!
நிருவிகற்பர் வாழ்கவே! தாக்கறப் பலகோடி யுலகெலாந் தாங்குந்
தயாபரன் கருணை வாழ்க!. - தன்னையென் னுள்வைத்த சிவஞான குருவாழ்க, 75
சச்சிதா னந்தம் வாழ்க!.
 

குரு காதம்
-్క్వట్జ్గె --
1. LI TA' ID (g5(536)!
என்னுளே யறிவா யிருந்திடுங் கடவுளே
என் மனச் சாட்சி யா இவ்வழிச் செல்லென்னும் இயல்பான வேதமே
இதயப் பரஞ்ஜோதியே!
தன்னுளே தானுய்த் தழைத்தநல் லின்பமே
தாயினுங் கருணை மிக்காய் சக்தியாய்ச் சிவமாய்ச் சதாசச்சிதானந்த
சகசநிலை தனில் விளங்கும்
பொன்னுளே பொலிவெனப் பொலிகின்ற போதமே
புகலரிய பர நாதமே போதாந்த வேதாந்த சித்தாந்த மாகிபரி
சுத்தாந்த மான பொருளே
உன்னுளே என்னெலாம் ஒன்றித் தழைக்கவருள்
உள்ளத்தி னுள்ள மைதியே - ஒம் சுத்த சக்திவளர் யோகச்சமாஜத்தில்
ஓங்கிடும் பரம குருவே!
臀

Page 27
*
40
2. பெருக் அருளாய் கல்வியும் கேள்வியும் கற்றவழி நிற்றலும்
கலைவாணர் நேச வுறவும் காலத்தை யமரக் கவிச்சோலை யாக்கிடும்
கங்கா ப்ரவாக வாக்கும் பல்வகைக் குண தொந்த வுலகிலே ஒருமயப்
பான்மையும் ஆன்ம வுறவும் பசிக்குநற் பொதுநலப் பண்புள்ள தொழிலும் பாரா லயப் பணிகளும், (இப்
செல்வச் செழிப்புடன் செழித்தநல் ஈகையும்
செகம் புகழும் அன்பும் அருளும், தியானமும் பக்தியும் செபயோக சித்தியும்
தினந்தினம் பெருக வருளாய் சொல்லரிய சூட்சுமக் கதிர் பரவி என்னுட்
சுழல்கின்ற ஒம் பரமனே! சுத்தயோகந்தரு சமாஜத்திலே வளரும்
ஜோதியானந்த குருவே! 77
- 3. யோக விதானம் الممر ஆருயிர் வடிவாம் உனைப்பாடி யனுதினமும்
அன்புசெயல் பக்தி யோகம் அருளாடு முலகா லயப்பணி பரா வலென்
ஆர்வமுறு கர்ம யோகம் நேருயிர்க் கடமைகளை நிறைவாய் இயற்றலே
நிசமான ஹட யோகமாம் நெஞ்சத் துடிப்பெலாம் ஒம்சுத்த சக்தியென
நிகழலே ஜப யோகமாம் தேருயிர்க் குயிரான வேரிலே ஊன்றுந்
தியானமே ராஜ யோகம் திரிபறத் தன்னுளே தான யிருப்பதே 枋
திறமான ஞான யோகம் ஒருயிர் மகிழ்ந்திடினும் என்னுயிர் மகிழ்ந்திடும்
ஒருமையே ஆத்ம யோகம் ஒம்சுத்த சக்தியோ கந்தரு சமாஜத்தில்
ஒளிரான்ம நேய குருவே 78

-41 -
4. என் செய்தாய்? ஆசையாணவ வுலக மாயமே என்செய்தாய்?
அழுக் காற்றிலே மூழ்கினை அடுத்தவர் வாழ்ந்திடின் அடிவயி றெரிந்த வர்
அழிந்திடச் சூழ்ச்சி செய்தாய் காசாசை பற்றிக் கழுத்தறுத்தாய் - கெட்ட
கயவரை தூண்டி விட்டுக் கதியற்ற சாதுவைக் கதை கட்டிவைதனே
கடவுளையும் கேலி செய்தாய்
நேசம் புரிந்திட நெடும் புளுகணிக்கோளை
நிதமேற்றிக் கத மேற்றுவாய் நிலை மனத் தூயரை நினைத்தபடி யேசுவாய்
நினை யடக்கிட ஒருவழி பேசரிய தனிமையிற் பேசியறி வித்தனன்
பெரிய ஞானப் புலவனே பிரியாது யோகச் சமாஜத்திலே வளரும்
பிரியமுள்ள மெளன குருவே! 7. 9
5. ஆண்டாய் கல்லிலும் கல்லா லெடுத்தகோ விலினிலும்
கலமிடு சமயத் திலும் காசுக் கிசைந்தபடி பூஜைமணி யாட்டிடும்
கற்பூர தீபத் திலும் கொல்லலைமுனி யாண்டிமக மாரியின் கூத்திலும்
கொட்டிலும் பலி வெட்டிலும் கூட்டுறவி லாத மத நூலின் குழாத்திலும்
குருபீட கோட்டை களிலும் தொல்லைசெயும் ஆயிரஞ் சூழ்ச்சியிற் சிக்கி
சுதந்திர மிழந்திடாமல் சுத்த சிவ யோகவே தாந்தசித் தாந்தமருள்
ஜோதிவழி காட்டி யாண்டாய் எல்லையறு வானுலகில் இதய சந் நிதியில்வளர்
இயல்பான தியான வடிவே எழிலோங்கு யோகச்சமாஜத்தி லேவளரும்
இன்பமே அன்பு மயமே!. - 80

Page 28
-426. பாச வுலகிலே
பா சமிகு முலகிலே பணவலை வீச்சும் பகட்டும் பசப்பு மொழியும் பகைவர்தரு தொல்லையும் பந்தமிகு தொல்லையும்
பசித்தீ தருந் தொல்லையும் நாசமிகு காமாதி நரகமிகு தொல்லையும்
நானு ைொனுந் தொல்லையும் s நஞ்சினை வெல்லமெனும் வஞ்சகர் தொல்லையும்
நாக ரீகத் தொல்லையும் மோசமிகு மூர்க்கப் பொருமைதரு தொல்லையும்
மோ கதாகத் தொல்லேயும் முளையாமல் உபசாந்த் முக்திவழி காட்டியென்
முன்னின்றருள் புரிகுவாய் ஆசிதரு முன்னன்பு வழிபற்றி யெந்நாளும்
ஆருயிர் நடக்க வருளாய் அத்யாத்ம யோகச் சமாஜத்தி னுயிராகும்
ஆனந்த ஜோதி குருவே!. 8I. - 7. எங்கே எங்கே லெமூரியா? குமரிகண்டம் எங்கு?
எங்குபன் மலை யடுக்கம்? எங்குபஃ றுளியாறு? எங்கே கபாடபுரம்?
எங்குகரி கால னுாரே! எங்கே எகிப்தியக் கோபுரப் பிணவுயிர்,
எங்கு பாபிலனப் பொழில்? எங்கு சிந் துக்கரை யெழுந்தே முகிஞ்சகலை?
|ங்டு கவீ தோன த ரிசை? பொங்குமட் லாண்டிசும் பொட்டலாய்ட் போ பூமியும் உரு மாறுதே ! (னதே, புரட்சி செய் காலத் தலங்கோல மெத்தனை 屬
புரண்டு விழும் அரசெத்தனை இன்றிங் கிருப்பதனை நாளே யு மிருக்குமென்
றேமாறு மாய மின்றி, என்றும் இருப்பதனில் என்றும் இருக்கவருள்
எப்பொருளும் ஆன பொருளே! 82

-438. சகச குண்டலி சக்திபெறு மிடகலை சிவம்பெறும் பிங்கலை
சண்முகாக்கினி சுழுமுனை சந்திக்கு முச்சுடர் தகதகென கணகனென
சகச குண்டலி யாடவே வித்தகக் குககுகென மயிலாடக் குயில்பாட
வீறுபெறும் வாசியேறி விரைவாக ஆறேறி ஏழேறி எட்டேறி
விளையாட வருஞானமே சத்த மறுசத்தத்துள் சங்கீதநாதமே சதாமோன மானபேச்சே சாதியறு சமரஸச் சோதியுட் சோதியே
சன்மார்க்க வுலகிரவியே சுத்தயோ கந்தரு சமாஜத்தினுயிராய்ச் சுழல்கின்ற தெய்வ மணமே சொல்லரு மகாதுரிய சித்தி பெற்ருேங்கும்
சுதந்தரா னந்த குருவே! 83
9. உள்ளதோ ? கூடுகட்டி வாழுங் குருவியின் இன்பமிக் குடும்ப மாந்தர்க் குள்ளதோ? கொண்டா கொண்டாவெனக் கொழுநனை நை காடிசுற்றி மக்கள் சுற்றி (LDL-5 ஆடுபோல் அசைபோட்டு மாடுபோற் பாடுபட்
டாசைப் பிசாசு களுடன் ஆட்டமும் அழுகையும் அழிலீலை பலவுமாய்
ஆயுளைச் சூதாடியே ஒடுபோல் நெஞ்சம் உடைந் தவலமாய் முடிவில்
ஒருபாயும் பல நோயுமாய் உருண்டு மண்ணுவதே உயிர்வாழ்வெனில் அந்த
உதவாக்கரை வாழ்க்கையேன்? பாடுவதும் உள்ளே பராவுவது மாகநான்
பகலிரவு வாழ வருளாய் பரமாத்ம யோகச் சமாஜத்தி லேவளரும்
பரிசுத்த ஜோதி குருவே! 84

Page 29
-4410. ஒன்றே ஒன்றே பரம்பொருள்; அதே சுத்த சக்திமயம்
ஒன்றுவா னுலகாலயம் ஒன்றே யுளந்தோறு நடமாடும் ஆத்துமா
ஒன்றே யுயிர்க் குயிரதாம் நன்றே தியானத்தி னுலிதை யுணர்ந்துலகு
நன்மையுற ஒன்றி வாழ்க! நச்சு மன மாயத்தை ஞானத்தினுல் வென்று
நானு விகார மின்றி நின்றே கருத்தொன்றி நீளன்பு நேயராய்
நேரான கடமை செய்தே நிலவுலகில் அமைதியின் பருளாட்சி நிலவவே
நீடூழி மாந்தர் வாழ்க! என்றே இடைவிடா தெண்ணிவழி பட்டென்றும்
எழிலோங்கி வாழ வருளாய் இயல்பான யோகச் சமாஜத்திலே வளரும்
இதயான்ம ஜோதி குருவே! 85
11. கொடிய உலகம் வித்தகச் சங்கரரை, விஞ்ஞான புத்தரை,
வினைய மிகு சொக்கராத்தனை, வேதமுர சாகிய தயானந்த மகரிஷியை,
விடமிட் டொழித்த வுலகம், உத்தம கிறிஸ்துவைச் சிலுவையேற்றிய உலகம்
ஒடோட முகமது நபி உடல்குருதி யொழுகவே கல்லால் அடித்தபுவி
உயிர்க் கருணை வடிவமான சத்திய கரம்சந்த்ர காந்தியைச் சுட்டபுவி,
சன் மார்க்க வள்ளலாரைத் தாக்கிய புவிநல்ல சாதுவாம் யோகியைச் 雉
சள்ளைசெய் கள்ளப் புவி, சுத்த சாதுவின்மீது பழிசுமத்தும் புவிச் சூழ்ச்சிகள் வீழ்ச்சி பெறவே, சுடர்பரவு யோகச் சமாஜத்தை யாளுவாய்
சுத்தான் o॰ಣ குருவே! 86

-45
12. அகங்காரமூட்டை சரிகையும் பட்டும் தளுக்கா யணிந்துமிகு
தங்கமணி முத்து மின்னச் சதங்கை குலுங்கும் தளிர்மேனி இன்பமே
சதமென மயங்கி வீழ்வார். அரிசி மூட்டைச் செலவில் ஆகிய புலாலுடல்,
அகங்கார மூட்டையாகி, அழகுச் செருக்கில் அழிந்தழிந் தொருகாலம்
அத்தி வற்றல் மூட்டையாம் முரசதிரு மரசுடன் மூய்ந்து போம் செல்வமும்;
முக்குணக் கூத்துலகமே முவ்வழியும் இவ்வுலகை மூலை முடுக்கெலாம்
முற்றிலும் பார்த் தலுத்தேன், அரிசிவா என்றினி யடங்கியுள் ளமர்வதே
அமைதியென் றுள் ளுணர்ந்தேன் அறிவான யோகச் சமாஜத்தின் உயிரான
ஆனந்த மோன குருவே!
87 13. உலகைச் சுற்றி கடலிலும் தரையிலும் ககனத் திலும், உலகைக்
கண்டனு பவம் பெற்றதும் காட்சிமிகு ரஸ்யா, கவின்பெறு சுசர்லாந்து,
கடமையுணர் ஜப்பானியம், இடமகல் அமெரிக்க யந்திரச் செல்வமுடன்
இங்கிலாந் தின் வாணிகம், எழில் மிக்க பிரான்சின் கலைவளம், இதாலியின்
இன்னிசை வளங் கண்டதும், வடநாட்டு வேளாண்மை, தென்னாட்டுத் தாளாண்
வளர்பரத நிலை கண்டதும்,
(மை மாநில மெலாஞ்சுற்றி மாந்தர் நிலை கண்டதும்
மன நிலை நிலை கண்டதும், உடலெனும் ஊர் தியின் உள்ளத் திருந்து நீ
உந்திய தனிக் கருணையே! உரிமைமிகு யோகச் சமாஜத்தின் உயிரான,
ஓங்கார நாத குருவே!
88

Page 30
-46
14. பல நாட்டார் பண்பு சப்பான் ஒழுக்கமும், சீனரின் உழைப்புடன்
சருமனியர் தொழில் நுட்பமும், சாந்தமிகு சுசர்லாந்தர் சமுதாய வாழ்க்கையும்
சமதர்ம உருசியா வின் ஒப்பரிய கல்வியும் ஓங்கிவளர் பண்ணையும்
உலாந்தினர் உணவு வளமும் உவகைமிகு பாரிசின் ஒதுகலை வளமையும்
ஊகமிகும் ஆங்கிலேயர் கப்பல் வாணிகமும், அமெரிக்கரின் செல்வமும்
கன்னடியர் கட்டுறுதியும் கனலேறும் ஆப்பிரிகர் கனிவளமையும், பெருங்
காட்டு வளமையுங் கண்டனன் இப்பாலிவ் விந்தியரின் ஆத்ம ஞானத்தினுல்
எண்ணத்தை விரிவாக்கி இதயகுகை தன்னில் இருந்தபடி நிலவிடும்,
ஏகாந்த மான குருவே!. 89,
15. வைத்தாய் சந்தைக் கடைக் கூச்ச லில்லாது விலகியே
சாந்தமாய் வாழ வைத்தாய் சபைகனக சபையென சஹஸ்ரார மணிமன்று
சார்ந்தே தியானத்திலே சிந்தையுற வைத்தாய், செகத்தியலகத்திலே
தெரியவுள் ளறிவு வைத்தாய் சிதையாத தனிமையிற் புலமையை வளர்த்தாய்
தியானத்தைக் கவிதை செய்தாய் விந்தைவிந்தை மாந்தர் விளைதய ரனத்தையும்
வெல்ல ஒர் வீறு தந்தாய் விரிகடல் மீனும் விடாயால் வருந்துமோ?
விசனமினி என யணுகுமோ? தந்தாய், தயாபரத் தாயே வணக்கம்!
சரண் புகுந்தேன் என்னையாள் சர்வாத்ம யோகச் சமாஜத்திலே வளர்
சதானந்த மோன குருவே! 90

-4716. சுத்த யோகம்
அறிவே பரம்பொருள், அருளே அதன் வடிவம்
அன்பே அதன் விளக்கம் அதனுடல் உலகம், உயிர்க்குல மதன்மயம்
அதனுறவு நல்லமைதி யாம். பொறிபுலனடக்கிப் புறஞ்செல் மனத்தினைப்
புந்தியால் உள்ளடக்கிப் பொது மன்றமாம் இதய வெளி கூடி நிற்றலே
பொருந்திய தியானமாகும் செறிவான சங்கற்ப முடன்விகற் பங்களைச்
சித்தம் நிலைத்து வென்றே தேடரிய சுத்தான்ம சேதனத் தாழ்வதே
சீரிய சமாதி யாகும். நிறைவான ஒன்ருகி, நிறைவாக வாழலே
நிறைவான சுத்த யோகம். நிறைவான யோகச் சமாஜத்தி னுயிராய்
நிறைந்த மக துரிய குருவே! 9 |
17. பூத்த மலர் பூத்த மலர் போலவே புன்னகை மணம்பரவிப்
பொங்குதேன் வண்டு நுகரப் பூமியில் உதிர்ந்துரம தாவதன்றி வேறு
புகலேதும் அறிகிலேன் யான்;
தீத்தணலில் வெந்துபிடி சாம்பலாம் உடலொரு
செடிக்குரம தாவதே மேல், தேகமே சதமென்னு மோகத்தை விட்டுளே
தேகியான் என வுயிர்ப்பேன். நீத்தவினை யையினி நினைப்பதறி வாகுமோ?
நித்தியம் உடலாகுமோ? நித்திய வுடல்பெற்ற யாரையும் நேரிலே
நேற்றுவரை கண்ட தில்லை. பாத்திரம தாகிநின் னருளினல் உள்ளான்ம
பக்குவம் பெற வேண்டினேன் பத்தர் மிகு யோகச் சமாஜத்திலே வளரும்
பரமாத்ம ஞான குருவே! 92

Page 31
-43
18. எவ்வுயிரும் எவ்வுயிரும் என்னுயி ரெனும் அன்பு வேண்டினேன்
எல்லாரு மின்ப முறவே, எல்லாரும் எல்லார்க்கும் இனியதே செய்திடும்
இயல்பான வாழ்வு வேண்டும். ஒவ்வா த சாதிமத நாடுநிற வேதனைகள்
உடனே ஒழிந் துலகெலாம் ஒருமையுறும் ஆன்மநே யத்திலே ஒன்றாய்,
உளங்கனிய வாழவேண்டும். வெவ்வாத வித்தைக ளணுகா த பரஞான .
வீறுபெற் றொளிர வேண்டும். விஞ்ஞான சக்தியும் வேதாந்த யோகமும்
விரவுபுது வாழ்வு வேண்டும். எவ்வாத தர்க்கமும் இல்லா தெனக்குள்வளர்
ஏகாந்த மோன ஒளியே, ஏற்றமிகு யோகச் சமாஜத்தி லன்புருவம்
ஏந்தியொளிர் ஞான குருவே.
19. எத்தகைய எத்தகைய உத்தமர்கள் எனினுமிவ் வுலகம்
இழுக் குரைத்துத் தூற்றிடும், இறந்தபின் சேகண்டி கொட்டிப் புகழ்ந்திடும்
இயல்பினை யறிந்து கொண்டோம். பித்துலகர் இசை வசைப் பேதங்களை மிகப்
- பெரிதென்று கருதி டாமல் பேரின்ப வானிரவி நேரமைதி யுற்றிடுவர்
பெரிய மோனப் பெரியரே! கத்துலகின் வஞ்சப் பொறாமைக் கடைகளைக்
( கண்டுளங் கலங்க மாட்டார்; காணரிய தன்னுறுதி தன்னறிவு தன்னுரிமை
கருது தன் மான முடனே, ஒத்தமைதி கொண் டொரு சிறந்தவினை செய்துள்
ளொடுங்கிநிட் டையி லிருப்பார். ஓடிப் புகழ்வேட்டை யாட மாட்டார், தாய.
யோக உணர்வில் வாழுவார், :
94
93

-49அத்தகைய வாழ்வை யளித்தகுருவே, எனக்
கன்பான தாய்தந்தை நீ; அருளோங்கு சுத்தச் சமாஜத்தின் உயிரான
அமராத்ம நேய குருவே!..
94 20. கூவினேன் யோகக் கலைவாழ்வு தந்தந்த வாழ்வெலாம்
உள்ளான்ம நேய வுறவாய், உள்ளுறவி னின்பெலாம் ஊற்றெடுத் தோடிடும்
ஒண்மணிக் கவி யருளுவாய், வேகக் கவியுள்ளம் விண்டநல் லுண்மைகள்
விதவித மலர்க ளாகி வேதாந்த சித்தாந்த வித்தகர் விருந்தாய்
விளங்கிடச் செய்த சிவமே!.. ஏகக் குடும்பமாய் இப்புவிக் கோயிலில்
என்னவர் மகிழ்ந்து வாழும் இதயான்ம வித்தையை யிலக்கினை, அதன்வழி
இருந்து பயி லன்பர் வரவே, தாகத்துடன் கூவினேன் உனது பணிபரவத்
- தக்காரை ஈந் தருளுவாய், சக்திமிகு யோகச் சமாஜத்தி லேவளர்
சதானந்த ஞான குருவே!..
9 5 21. உன்னருளினால் திருக்குறள் வாசகம் திருமந்திரம் கீதை
திருக்குரான் பைபிள் முதலாம் தெய்வநூல் கற்றதும் திடமான யோகவழி
சென்றனு பவங் கண்டதும் உருக்கமாய் உன்னையே இசைபாடி நாடோறும்
உண்ணுமுன் வழி பட்ட தும் ஓம்சுத்த சக்தியென உள்ளே உயிர்த்ததும்
யோகசித்திக் குறளுடன் .. பெருக்கமாம் பாரத மகா சக்தி காவியம்
பெற்றதும் உன்னருளினால். பேசாது பேசியென் பேச்சினைத்தூண்டினாய்,
பேசினேன் உனது புகழே!
உ

Page 32
-50-- சுருக்கமாய்க் கூறினேன், சுடர்நீ விளக்குநான்
சுவைநீ, சுவைக்கு நா நான் தூயநல் யோகச் சமாஜத்தின் உயிரான
சுத்த பரமாத்ம குருவே! ,96
22. வாழ வேண்டும் மாந்தரெல் லாங்கூடி, மாண்புடன் உலகிலே
வாழ்வாங்கு வாழ வேண்டும். மன மயக் காம் சாதி மதபேத மில்லா
மனச்சாட்சி நிலவ வேண்டும். தாந்தம தெனுஞ்செருக் கின்றியித் தரையெலாம்
தண்ணி ரெனப் பொதுமையாய்த் தாளாண்மையுடனன்பு வேளாண்மை செய்திடத்
தாராளமாக வேண்டும். வேந்து குடி யென்பதற வித்தகச் சித்தர்வழி
வீரர் அரசாள வேண்டும்; விஞ்ஞான சக்தியும் யோகவே தாந்தமும்
விரவுகலை வாழ்வு வேண்டும். சாந்தமுறு ஞானமும் பக்தியும் கர்மமும்
சமதர்ம வாழ்வில் வேண்டும், γ. சகம்புகழும் யோகச் சமாஜத்தின் உயிரான
சக சநிலை கண்ட குருவே! 97
23. வேண்டினேன் வந்தவினை நிறைவேறி வாரா திருக்கவொரு
வழிதேடி யுதவ வேண்டும். வறுமையிரு ளடிமைநோ யச்சம் பொருமைதுயர்
வாரா திருக்க வேண்டும். பந்தவினை எதனிலும் பட்டுக் கொளாத பரி
பக்குவத் திண்மை வேண்டும். பாசவலை வீசிடும் பாதகப் பகைவரென்
பக்கம் வராமை வேண்டும். சொந்தமென் பதுநின் சுகந் தருந் திருவருட்
சோதியே யாக வேண்டும், சுத்தசக் திக்கனல் சுழன்றிட மகாதுரிய
சூட்சுமத் தவம் வேண்டினேன்.
')

-51சந்ததமும் உன் புகழ் இசைத்திடத் தீஞ்சுவைச்
சந்தத் தமிழ் வேண்டினேன். - சாந்தமிகு யோகச் சமாஜத்தில் வாழ்கின்ற
சச்சிதா னந்த குருலே!. 9 8
24. குரு யார்? யோனிவாய் உடலில்லை, ஊத்தைவாப் பேச்சில்லை
ஓங்கார நாத வடிவம். உள்ளமைதி வெளியிலே உண்டாகும் அருள்வார் ஒருகோடி சூரியன் போல் (த்தை ஞானவொளி வீசிடும் விஞ்ஞான சக்தியது,
நானுவி லொருமை யதுவே. நான ரெனுங்கேள்வி நானுறத் தானென
நடம்புரியு மிதயத் திலே. தேனமுத வெள்ளந் தெவிட்டத் திதித்துத்
தியானத் திலே வருவதாம்; தெய்வவாழ் வைத்தரு சிதானந்த போதமது
ஜீவனுட் சிவ மானது. மோனமாம் வானென முளைத்ததொரு பொருளையே
ஒம்சுத்த சக்தி' யென்போம்; முறையாக யோகச் சமாஜத்தில் அன்பர் தொழும் மூலகுரு தெய்வ மதுவே!. 99
25. மனுேன்மணி மங்கல மணம்பரவு மலர்தலைக் காலைபோல்
மனமாய இருள் போக்குவாய் மாசிலாத் தென்றலென வந்தெனது சோர்வினை
மாற்றிநல் வீறு தருவாய். செங்கதிர் போலெனது சித்தத் தெழுந்தறிவு
திகழச் சுடர் வீசுவாய் திருமூல மந்திரந் தருபொரு ஞணர்ந்திடத்
தியானம் நிலைக்க வருளாய். பொங்குதிரை யாழிபோற் பூரிக்க வுள்ளம்
பொருந்துமுழு மதி யாகுவாய். புண்பட்ட நெஞ்சிலே வெண்பட்டு நிலவெனப்
புன்னகை பொழிந் திலகுவாய்.

Page 33
-52தங்கமென மேனியும் சக்திவளர் ஞானமும்
சச்சிதா னந்த நிலையுந் தந்தருள், மனேன்மணி வளர்சுத்த யோகச்
சமாஜத்தி லோங்கு குருவே1. I 00
營 26. அம்மையப்பன் உருவா யிருந்தன உலகாய்ச் சுழன்றன
உயிராய்த் துடித்த ஒன்றே! உள்ளன்பு பொங்குமருள் வெள்ளம் பொழிந்தனை
உயர்ஞான விண்ணி னின்றே குருவா யிறங்கினை, குவலயஞ் செய்யுங்
கொடுந்துயர் பொறுத்து வென்முய் குணமுள்ள சமயசஞ் சீவியாய்க் கோரினோர்
குறைதீர்த் திரட்சித் தனை அருவா யிருந்தனை, அருளாய் நிறைந்தனை,
அபய ப்ரதான மீந்தாய். *அஞ்சற்க யானுளேன் என்றெனத் தேற்றிடும்
அம்மையப் பன் வடிவமே 1. திருவோங்கு யோகச் சமாஜத்தின் ஜோதியே,
தியானச் சுடர் விளக்கே! சிவயோக சித்திதரு நவயோக குருவே,
சிரஞ்சீவி யே வணக்கம்!.
27 தொண்டர் படை சுத்தான்ம சக்திவளர் சுகமுறு தியானமும்
ஜோதிவழி பாடும் வேண்டும். தூயசிந் தனையுடன் சோர்விலாப் பொதுநலத்
தொண்டுசெய் கருணை வேண்டும். முத்துாய்மை யுற்றெனது மூச்சுடன் பேச்செலாம்
மும்முயற் சியில் இணைந்தே, முதல்வனைப் பாடவும் கூடவும் அவனிச்சை
முறைசெய்த படி யாடவும், சத்தமில் லாதமக துரியச் சமாதியின் சாந்தத்தில் ஊன்றி யுலகில் சன்மார்க்க யோகந் தழைத்திடத் தொண்டர்
தகவுறக் கூட வேண்டும். (L160)L
 

-53
சத்திய யுகத்தொளி தழைத்த விண்ணரசையித்
தரணியில் இலக்க வேண்டும் சாந்தமுறு யோகச் சமாஜத்தி லேவளர்
சதானந்த மோன குருவே!...
102
பி.

Page 34

இதயதாகம்
(கவியோகி சுத்தானந்த பாரதியார்)

Page 35

இதயதாகம்
'இதய தாகம்' என்னும் இப்பா மலர்கள் அடிகளின் கடவுளார்வத்தினின்றுமலர்ந்தவை. அடி கள் வாழ்க்கை கடவுட்கலப்பில், ஊன்றி வளர்ந் தது. அவ்வப்போது அடிகள் தமது ஆர்வங்களைக் கடவுளிடமே பாடி முறையிட்டு வந்தார். அவ்வாறு அவர் பாடிய பாமாலைகள் பல. அவற்றுட் சில இந் நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. நூலின் அரு மையை, அதிலுள்ள அருளாவேசத்தை, படிப்ப வர் எளிதில் அறிவார்கள். இந்நூல் கடவுளன் பை உறுதியாக உள்ளத்தில் நாட்ட வல்லது.

Page 36

காப்பு
செவிக்கினிய சொல்லுந் திருவருள் வாக்கும் புவிக்கினிய நல்ல பொருளும் - கவிக்கினிய சந்தத் தமிழும் தழைக்கநட மாடுகவென் சிந்தைக் கமுதாம் சிவம்.
. . . . ' . ! தெள்ளியருள் ளத்தே திருவார் நடம்புரியுங் கள்ளார் மலரடிக்கே கைகுவித்துத் துள்ளு மனமடக்கியன்பு மலர்தூவு மின்பந் திண்மருள்க சுத்த சிவம்.
1. G6 II (3LD
தொல்புவி வடிவாய்த் தோன்றிடும் பரனே
தொண்டனேன் அண்டினேன் உனையே இல்லை யென் பாரின் இதயத்தும் பேசும் எம்பிரான் உன்னையே நம்பிப் பல்புவிப் பணிகள் பரவினேன் உனக்கே பணிகளின் பயனெலாம் ஈந்து செல்கிறேன்; பாரிற் சீவித்தேன் உனக்கே!
சீவனந் தூயமெய்க் சிவமே,

Page 37
-60
இதயதாகம்
வானக் கருணை வடிவாக
மண்ணை வளர்க்கும் தாயமுதே ஞானக் கொழுந்தே சுத் தான்ம
ஞாயி முன பரஞ்சுடரே மோனக் குகையின் முழுக்கணலே
மூலப் பொருளுன் பெருமைகளைத் தேனைக் குழைத்த தமிழினிலே
செப்பக் கவிதை செய்வாயே! 2
எல்லா ருக்கும் கல்விதொழில்
எல்லா ருக்கும் இல்லின்பம் எல்லா ருக்கும் உணவாடை
எல்லா ருக்கும் உடலுறுதி எல்லா ருக்கும் மனமகிழ்வு
எல்லா ருக்கும் இறைவனருள் எல்லா ருக்கும் நல்வாழ்க்கை
எய்தி யுலக மோங்குகவே! 3
தாயின் அன்பு தழைத்திடவே
தருண மழைபோ லுதவிடவே சேயின் எளிமை சேர்ந்திடவே
சேர்ந்து மாந்தர் வாழ்ந்திடவே நோயின் கொடுமை யற்றிடவே
நூருண் டிங்கு நலம்பெறவே தூய இன்பந் துலங்கிடவே தொண்டன் பேசத் துணிந்தேனே! 4

-61
G6au GLID
அருமை யான மானிடத்தின்
அன்புக் கனவைக் கவியாக்கி உரிமை யான மூச்சை யெல்லாம்
உலகா லயப் பொற்பணி யாக்கிக் பெரிய நினைவைச் செயலாக்கிப்
பேசா மோனக் குகையினிலே ஒருமை பூன்றி யின்புறவே
உடலைச் சுமந்து திரிந்தேனே, 5
முதுமறையின் கருத்துக்கு முரணின்றி
முக்காலு ஏற்கு மிந்தப் பொதுமறையைச் சொல்லுகிறேன்.இப்ாதுநடனப்
பெருமானென் னுள்ளே சொல்லப் புதுமறையென் றெள்ளாதீர் புவியெல்லாம்
ஒரு குலமாய்ப் பொலிந்து வாழ இது மறையா மறை மாந்தர் எல்லாரும்
இன்பமுற எழுந்ததாமே. 6

Page 38
--62
இதயதாகம்
2. பரம் பொருளே
மலையினு மாண்பே, வானினும் விரிவே
மழையினுங் கருணையா ரமுதே, அலைகட லாற்றை யுண்டது போலே
யகப்புறச் சமயங்க ளுண்டு. நிலைபெறு நிறைவே, நேயர்தந் தூய
நெஞ்சுளே வந்துவந் தினிக்குந் தலைபெறுஞ் சுகமே, மறைகளி னகமே.
- சதாசிவ மாம்பரம் பொருளே.
கொங்கலர் மலர்வாய்க் குறுநகை புரிவாய்:
குயில்களி லிசையமு தளிப்பாய்; செங்கதி ராகத் திருவிழி பார்ப்பாய்;
தென்றலாய் வந்தெனை யணைவாய்; பொங்கவென் னுள்ளம் பூரண மதியாய்ப்
பொலிகுவா யியற்கையைப் போர்த்தே சங்கையில் லாத சீவராய்த் திகழும்
சதாசிவ மாம்பரம் பொருளே
கண்ணெலா முனது காட்சியே காணும்;
கருத்தெலா முன்னையே கருதும்; பண்ணெலா முனது பெருமையே பாடும்;
பாரெலா முன்னருள் பரவும்; விண்ணெலா முனது பொன்மணி யொளிரும்;
வீடெலா முன துயிர் துடிக்கும்; தண்ணெலா முனது தண்மையே காணும்
சதாசிவ மாம்பரம் பொருளே.

பரம் பொருளே
எச்சம யத்தார் எப்பெயர் வடிவில்
எவ்வகை யன்புசெய் தாலும், அச்சம யத்தார்க் கவ்வகை யருளும் அம்பலக் கூத்தனே சரணம்! உச்சமாம் துரிய முடிமிசை யிருந்தே
உலகெலாம் ஒளிவளர் விளக்கே, அச்சமே போக்கி யடியனை யாளும்
அழகிய சிதம்பர குருவே! I 0.
பாரெலா முனது திருவிளையாடல்;
பலவுயிர்க் குலமுன துடலம்; காரெலா முனது கடலுண்ட கருணை
கதிரெலா முன்விழிக் கனலாம்; தாரிலே நார்போ லுலகினைத் தாங்கும் சமரஸ் சுதந்தரப் பொருளே சீரெலாம் பொழியும் சித்தனே சரணம்
சிவசிதம் பரம்வளர் குருவே! II.

Page 39
இதயதாகம்
3. எப்படி உய்குவேன்?
சிறியனே னுனது நாமமே சொல்லித்
திரிகின்றேன்; மலரடி யல்லாற் பிறிதிலே னுனது பேச்சலாற் பேசாப் பித்தனேன்; உலகிய லறிவை யறிகிலேன்; அறிந்தார் தம்மையு மனுகேன்
அறிவுன தறிவலால் வேண்டேன். இறைவனே யென்னை யின்முகம் பாரேல்
எப்படி யுய்குவே னெளியேன்? 12
படிப்பிலே கேள்விப் பயனிலே மூழ்கிப்
பார்த்திலேன்; பாரினி லெதிலும் பிடிப்பிலே னுனது பெயரையே பிதற்றும்
பேதையே னுலகினர் போல நடிப்பிலே னன்று நாயன்மார் துதித்த நளிர் மல ரடியினிற் கண்ணிர் வடிப்பதே யுவந்தேன்; வந்தருள் புரியேல்
வறியனேன் எப்படி யுய்வேன்? I 3
பெற்றவள் வெறுத்தாற் பிஞ்சிளஞ் சேய்க்குப்
பிழைப்புண்டோ? பேதையேன் முகத்தை மற்றவர் வெறுத்தால் வெறுப்பதோ நீயும்?
வஞ்சனேன் செய்திடுங் கோடிக் குற்றங்கள் பொறுத்தாய்; குணநிறைக் குன்றே!
குளிர்மனக் கருணையி னுலே சற்றெனைக் காணத் தயவிலை யாகிற்
சகத்தினி லெப்படி யுய்வேன்? 14
 

-65
எப்படி உய்குவேன்?
வான்கண்ட பயிர்போல், மழைகண்ட மயில்போல்,
வன மலர் கண்டவுண் டினம்போல், ஊன் கண்ட வுயிரி லுன்னையே கண்டுள்
ளுவந்திடு முவப்பெனக் கருள்வாய்; தேன்கண்ட தமிழிற் செப்பியுன் புகழைச்
செகமெலாந் திருவரு ளாட்சி நான்கண்டு குளிர நாடினேன்; என்னை
நடத்துவாய் ஞானமா விளக்கே! I 5
உண்ணலு முனதே, உயிர்த்தலு முனதே,
உடலுயிர் மனமெலா முனதே எண்ணலு முனதே, இச்சையு முனதே
என்செயற் பயனெலா முனதே கண்ணுறுங் கதிருங் காட்சியு முனதே காலனை யுதைத்தகா லுனதே அண்ணலே யின்னுஞ் சோதித்தாயாகில்
யாங்வன முய்குவே னடியேன். 16

Page 40
66
இதயதாகம்
4. வேண்டினேன்
வேண்டினே னுனையே வேறென்றும் வேண்டேன்
வினையினே ரிைடரெலாந் தீரத்
தீண்டினே னுனது திருவடி மலரைத்
- தெண்டனிட் டெனநிவே தித்தேன்.
தூண்டியென் னுள்ளே யுன்னருட் சுடரைத்
துயரிருட் குலத்தினை விலக்கி
ஆண்டவா வுன்ற னறிவினைத் துலக்கி
யாண்டரு ளன்பெனுஞ் சிவனே! II 7
புலைமன மயக்கைப் பூண்டொடும் போக்கிப்
புந்தியுன் மந்திர மாக்கி, அலைவுரு தினியுன் மலரடி பற்றி,
அன்பினுல் வழிபட வருளாய். நிலையிலாச் சித்தச் சுழலினை நிறுத்தி, நிலைபெற வுன்னிலென் னுள்ளம், மலையிலக் காகத் தோன்றுவாய் குருவே
மஹாசிவ சம்புவே சரணம்! 18
ஓரிரண்டறியேன், உள்ளவா றுனையே
உள்ளத்தில் உள்ளமா யுணர்ந்தேன்; சீரிய வாழ்வுச் செடியுன தருளாற்
செழித்துநல் வளம்பெற விடுத்தேன், பாரெலாம் விளங்கும் பரஞ்சுடர் விளக்கே,
பல்லுயிர்க் குலமென வுலவும் பேரரு விறைவா, பிள்ளையேன் மீது
பிரியம்வைத் தாண்டுகொள்ளாயே! 19
ܬܛ.
 

67.
வேண்டினேன்
எப்பெயர் தனினும் உன்பெயர் கேட்பேன்;
எவ்வடி விலுமுனைக் காண்பேன்.
துய்ப்பதி லேநீ சுவைப்பதை யுணர்வேன்; துயிலிலுன் புணர்ச்சியைச் சுகிப்பேன்.
செப்புநன் மொழியில் உன்மொழி செவிப்பேன்
சிவன் எனச் சேவடிக் காளாய்
வைப்பனென் றேயான் வழுத்திநிற் கின்றேன்
வள்ளலே யென்னையாண் டருளாய் 20
அன்னையே யென்கேன்; அப்பனே யென்கேன்
அவனவள் அதுவெனப் புகல்வேன்; உன்னையே யல்லா லுறவுமற் றில்லேன்
ஊரிலேன், ஒண்டியாய் வளர்ந்தேன்; பொன்னையே நிகர்த்த வண்ணனே யுன்னைப்
புகழவே வாய் திறக் கின்றேன் என்னையே யுன்னுட் கரைத்திட விழைந்தேன்
என்னவா, மன்னவா சரணம்! 2

Page 41
-68
இதயதாகம்
5. அருளுறவே வேண்டும்
கஞ்சியே தேடிக் காரிகை யாரின் கலவியே சுகமென நாடி, வஞ்சமே புரிந்து, வாய்மையை யிழந்து
வறுமையே வரவரச் சுமந்து, நஞ்சமே யுண்ட பஞ்சரக் கிளியாய்
நாளுமே நலிகின்ற ருலகோர். அஞ்சினே ரிைவரை ஆண்டவா வுன்றன் -
அருளுற வேயெனக் கருளாய்! 22
கண்ணயர் போதுங் கழுத்தினை நெரிப்பார்;
காரியக் கள்ளராய்ச் சிரிப்பார். η λ. και எண்ணரு மாந்தர் இமைப்பினி லிறக்கும் | از
இயந்திரச் சூழ்ச்சிகள் விரிப்பார். விண்ணிலே யேறி மேதினி யழிய
வெடியுடன் விஷப்புகை பொழிவார். மண்ணையே வேட்டு மடிபவர் உறவேன்?
மன்னவுன் னருளுற வருளாய்! 23
உயிர்க்கொலை புரிவார்; கொலையுண வுண்பார்;
உலகினை யுலைத்திடக் கொதிப்பார். அயர்விலாப் பொன் பெண் ணுசைகளாலே யதர்மமே கடனெனப் புரிவார். பயிர்களை யரிக்கும் விஷப்புழுப் போலே பாரினில் எளியரை நலிப்பார். கயவரி னுறவைக் கனவிலுங் கருதேன்;
கடவுளே யுன்னுற வருளாய். 24
s
 

-69
அருளுறவே வேண்டும்
பட்சிக ளிடையே கூட்டுற வுண்டு
பாரினர் ஓரினம் பேசிக் கட்சிவேற் றுமையாற் கலகங்கள் செய்வார்.
காக்கைபோற் கூடியே கலைவார். உட்சினம் வைத்தே யுதட்டினிற் சிரிப்பார்.
ஊரினுக் குழைப்பது போலே குட்சியை நிரப்புங் கும்பலைக் கூடேன்;
குலவுக வுன்னரு ஞறவே! 25
கொள்ளிபோல் விழியார், பிறர்குடி கெடுப்பார், குத்திரங் கோள் பொய்யே யுரைப்பார். கள்ளினைக் குடிப்பார்; கற்பினை யழிப்பார், காலத்தைச் சூதினில் இழப்பார். வெள்ளியின் வலையில் வீழ்ந்ததஞ் செய்வார்
விதவிதக் கொடுமைகள் இழைப்பார். உள்ளினு முள்ளஞ் சுடுமுற வணுகேன்;
உள்ளவா வுன்னுற வருளாய்! 26

Page 42
-70
இதயதாகம்
6. வழி நடத்தாய்
சரியை கிரியை யோகாதி
சாத னங்கள் செய்தறியேன். அரியை யுன்னை யடைந்திடவே
யார்வங் கொண்ட தொண்டனெனும் உரிமை கொண்டு கேட்கின்றேன்:
உனக்கே மீளா ஆளானேன் துரிய ஞானச் சுடர்க் கொழுந்தே
துணைநின் றென்னை வழிநடத்தாய்! 27
மாய்ந்து மாய்ந்து வல்வினையேன்
மாயப் பிறவிக் கடலினிலே தோய்ந்து தேய்ந்து துரும்பானேன்
துணிந்துன் பாதப் புணையினேயே பாய்ந்து பற்றிக் கூவுகின்றேன்,
பரந்த மாய விருளினிலே சாய்ந்தி டாமல் வழிநடத்தாய்
சரணம் சரணஞ் சங்கரனே! 28
பட்டாங் கொன்றும் படித்தறியேன்; பாடி யாடப் பாட்டறியேன். அட்டாங் கத்தைப் பயின்றறியேன்
அன்பே செய்துன் னடிபிடித்தேன். *எட்டாங் குருவத் தெம்மானே
ஏழை யிந்த வுலகறியேன் ஒட்டாங் கெதிலும் முன்னடியில்
ஒட்டி நிற்க வழிநடத்தாய்! 29
* ஐம்பூதம், இரவி, மதி, ஆன்மா இவை இறைவனது எட்டுருக்களாம்.
 

71.
6. வழி நடத்தாய்
என்று முன்னை மெய்யடியேன்
இறைஞ்சி யிறைஞ்சிக் கரைகின்றேன். ஒன்றுஞ் சொல்லா திருப்பாயேல்
ஒகோ கருணைத் திற மென்னே? கன்றுக் கிரங்காத் தாயுண்டோ?
கல்லோ வுனது நெஞ்சகமும்; இன்று நாளை யென்னுமல்
இப்போ தென்னை வழிநடத்தாய்! ፵ 0
யானே துன்னை யல்லாதே
யாதுமான சோதியனே? வானே, துரிய வளநாட்டின்
வாழ்வே, வாழ்விற் கின்னுயிரே, தேனே தெளிந்த சித்தமிசை
தித்தித் தூறுந் தெள்ளமுதே ஊனே போற்றித் திரிவேன.
உன்னை நோக்கி வழிநடத்தாய்! 31
ఉ

Page 43
-72
இதயதாகம்
7. பரம்பொருளே
பித்துப் பிடித்துப் புலனலையப்
L96 Gao LDTu pGOTLDa)uj: சித்த மலைய நிலையின்றித்
தியான மூன்றத் தலங்காணேன் புத்தி யலையா துன்னடியிற்
பொருந்தி நிற்கப் புகலருளாய். சுத்த முத்த சமரஸ் மாஞ்
சோதி யான மெய்ப்பொருளே!
புல்லேன் உனது பெருங் கருணைப்
புணையை மருவிக் கரையேற
வல்லே னில்லேன், வலியுற நீ
வணக்கி னன்றியுனே வணங்கக்
கல்லேன். வஞ்ச மனக்கல்லைக்
கரையேன். உனது திருப்புகழைச்
சொல்லேன் எவ்வா றெனையாள்வாய்
சொல்லைக் கடந்த மெய்ப்பொருளே!
வம்பர் பின்னே வழிநடந்தேன்,
வறியேன் வஞ்சக் கொடுமனத்தேன், அன்பின் பெருமை யானறியேன்
அடியார் கதைகள் பல கேட்டும், நம்பா துன்னை யுலகினையே
நம்பி நம்பி நான் கெட்டேன்! என்பா லொளிந்த வுனை யறியேன்
இதய மான மெய்ப் பொருளே!
32
33
34
 
 
 

73.
பரம்பொருளே
வேண்டு முனது திருநாமம்
வெய்யேன் பொய்கள் விலகிடவே
வேண்டு முனது திருவடியே
வெறியேன் மதியின் மயக்கமற
வேண்டு முனது திரு நோக்கம்
வெளியே செல்லும் புலனடங்க. வேண்டு முனது திரு வருளே
வேதங் கடந்த மெய்ப் பொருளே! 35
கருணையான கனிரசமே
கட்டித் தேனே பசும்பாலே அருண கிரணப் பொன்னழகே
ஆர்வங் கொண்டு கூவுகிறேன் இருண ரகாம் இகவாழ்வில்
இன்பம் உன்மே லன்பொன்றே தருணம் வந்தென் குறைதீராய்!
தாபந் தணிக்கும் தாயமுதே! 36
గ్మ్య్మాని

Page 44
74
இதயத T)
8, மன்று ளாடு
நில்லா வுலகை நிலை யென்று
நின்னை மறக்கக் கடவேனுே? எல்லா முனது விளையாட்டென்
றிருந்த படியா னிருந்திடவே, கல்லா லடியிற் கற்பித்த
கல்லாக் கல்வி யெனக்கருள வல்லா யோவென் வாழ்வமுதே!
மன்று ளாடு மாமணியே!
மீறி மீறிப் புறஞ் செல்லும்
வேகப் புலனை வென்றடக்கி நூறி நூறி யாணவத்தை
நுண்ணு டலின் சேட்டை யெல்லாம் ஆறி யாறி அரகரவென்
றடியா ருடனே யடி பெயர்த்து மாறி மாறி யாடேனே
மன்று ளாடு மாமணியே!
சினத்தை யடக்கி, நிலையில்லாச்
சித்த மடக்கி, மதி மயக்கும் இன்த்தையேடக்கித் தீவினையின் T எழுச்சி யடக்கி, யடங்காத கனத்த காமப் பேயடக்கிக்
கருதி யுன்னைக் கசிந்துருக மனத்தை யடக்கக் கடவேனே
மன்று ளாடு மாமணியே
37
38
39
 
 
 

-75
மன்று ளாடு மாமணியே
வீசி வீசி வார்த்தைகளை
விருப்பு வெறுப்பு வினைமலியப் பேசிப் பேசி வீணுனேன்,
பெரிய மெளனத் தடங்கடலே, ஆசை யடக்கி யானென்னும்
அகந்தை யடக்கி, அலைந்தோடும் வாசி யடக்க வழிதிறப்பாய்
மன்று ளாடு மாமணியே! 40
பதியை மறந்து மர்க்கடம்போற்
பாசா டவியிற் சுழன்றினிய
கதியை மறந்து தீவினைசெய்
கடைய ஞகி நொந்திறக்கும் விதியைத் துறந்து, நிலையின்ப
வெளியை நாடி யுனைக்கூட மதியைத் திறந்துன் னருள்பொழிவாய்
மன்று ளாடு மாமணியே! 4

Page 45
-76
இதயதாகம்
9. சிவகுருவே
உனைப்பே ரன்பு செய்வேனை
உலக மாய மேவுகின்ற வினைப்பேய் பற்றி னென்செய்வேன்
விரிந்த ஞானச் சுடரொளியே! எனைப் (பேரின்ப வழி நடத்தி
இரண்டற் றுனது பொற்பாத நினைப்பே யாக நிலை நிறுத்தாய்!
நீயே தஞ்சம் சிவகுருவே!
தேசி லாத சிறுமதியேன்
சித்த மலைய யானலைவேன், பேசிப் பேசிப் பிழை செய்வேன்
பெரிய மோன வாரிதியே! மாசி லாத மணிமன்றில்
வாவி யாடுந் திருவடிக்கீழ்த் தூசி யாகி யுய்வேனோ
துரியா னந்தச் சிவகுருவே!
43
பாரோர் மெச்சக் கவிபாடிப்
பட்டுச் சால்வை பெற்றுமென்ன ஊரோர் புகழைப் பெற்றுமென்ன
- உயர்ந்த பதவி வகித்து மென்ன நேரோர் நாளி லெமன் வருவான்
-நில்லா வுயிருஞ் செல்லு முடன் பேரே யன்றிப் பிணமென்பார்
பிறந்த தேனோ சிவகுருவே!

-77
சிவகுருவே
முன்னே செய்த தீவினைகள்,
மூட மதியின் சேட்டையினல் பின்னே செய்த தீவினைகள்,
பெரிய பெரிய மலையளவாம். இன்னே யின்னுந் தீவினைக்கே
யிழுக்கும் புலனை யடக்கிடவே அன்னை யப்பா மனவுறுதி
யருளாய் சுத்த சிவகுருவே! 45
புரையே செய்யும் பொய்ப்புலனைப்
புறமே செல்லா துள்ளடக்கித் திரையே துள்ளாச் சித்தத்திற்
சிதையா துன்னைச் சிந்தித்துக் கரையே யில்லாப் பேரின்பக்
கடலி லா டக் கடவேனே, துரையே ஞானச் சுடர்க்கொழுந்தே,
சுத்த சக்தி சிவகுருவே! 46
محصے حصے مجسمصے *محصےح

Page 46
-78
இதயதாகம்
10. என்னுயிர் வேந்தனே
ஆண்ட வாவுன தடிமலர்த் தேனை
அள்ளி யன்னியான் பருகிட வேண்டும் வேண்டும் உன்னடி யார் திருக் கூட்டம்
வினையினேன் பிறப் புய்ந்திட வேண்டும். வேண்டு முன்னருள் வேட்கையென் னுள்ளம்
வேறு வேட்கைகள் ஆறிட வேண்டும். வேண்டு முன்புகழ் பாடிடு மின்பம்
விமல னே,யென தாருயிர் வேந்தே ! 47
உலகி லுன்பர மானந்த முண்ண
வுட லுயிருட னுள்ளமு மீந்தாய் நிலவு பெண்மையு மாண்மையு மானுய்
நிறைந்த யோகமும் போகமு மானுய் மலநி னைவுக ளின் றியுன் அன்பே
வளர வாழ்ந்திடும் வாழ்வெனக் கீவாய் இலகு நெஞ்சினிற் கோயில்கொண் டாளும்
இறைவ னே, யெனதின்னுயிர் வேந்தே! 48
அம்மை யப்பனு நண்பனு மாவாய்
அருட்பெருங் குரு தேவனு மாவாய்
எம்ம தத்திற்குஞ் சம்மதமா வாய்
எவ்வு யிர்க்கும் உயிர்க்கன லாவாய்
பன்மை யாம்ஒரு பான்மையுமாவாய்
பரம நீசக சீவனுமாவாய்
இம்மை யம்மைப் பயன்களு மாவாய் இதய நாடக னே, சுடர் வேந்தே !
 
 

-79
என்னுயிர் வேந்தனே
மறந் திடாதுனைப் போற்றிசெய் வாக்கும்
மாசிலாத தவம்புரி வாழ்வும் சிறந்த சிந்தையும் செய்கையுங் கொண்டே
சிவபூசை செயுந் திருத் தொண்டும் பிறந்த நற்பயன் பெற்றிடும் பேறும்
பிரிவிலா துனேக் கூடிடும் பெட்பும் அறந் தனேநிலை நாட்டிடும் வீறும்
அப்ப னேயெனக் கருள் புரிவாயே! 50
காட்ட வேண்டுமுன் கதிர்மணிச் சோதி,
கரந் துளேயிருந் தாய்விரிந் தாய்நீ; கூட்ட வேண்டுமுன் குறையறு மின்பம்
கொண்டெனை யெனுட் கூத்திட வேண்டும் பூட்ட வேண்டுமென் பொய்ப்புல வாயை
பொழிய வேண்டுமென் மெய்ச்சிவ போகம் ஆட்ட வேண்டுமென் யாக்கையை நீயே
அமல னே;யென தாருயிர் வேந்தே! 51
ஆயுளைத் தினந் தினகர வாளால்
அறுக்குதே விதி யழைத்தது காலம் சேயுடல் இளஞ் செழுமை யுற்றின்று தேயுடலாய் முதிர்ந்து தளர்ந்தே வீயுநாளில் விசன மிகுந்தே
வீண்கவலை சுமந் தொழியாமல் நீயுடன் எடுத் தாண்டிட வேண்டும்
நிமல னே,யென தாருயிர் வேந்தே!

Page 47
80
இதயதாகம்
உலப்பிலா வுலகங்களை யாக்கி
உருவிலாமல் உலாவி யருளிச்
சலிப்பிலாது தொழில்களைச் செய்தும்
சார்பிலாத தனித்த முதல்வா
ஒலிப்பிலா துறையுட் கடல்போலே
உள்ளடங்கி ஒருமை யுடனே
கலப்பிலா துனைக் காதலிக் கின்றேன்
கட்டிக் கொள் எனக் காணுயிர் வேந்தே! 53

V
-81
11. குருமணிக் கண்ணி
ஆனந்த ஜோதி யருள்வெள்ளம் பாய்ச்சியென்னுள் ஞானப் பயிர்விளைப்பாய் ஞானக் குருமணியே! 54
பிடித்துன் மலர்ப்பாதம் பித்தாகிக் கூவும் அடியேனைக் காத்தருள்வா யன்புக் குருமணியே! 55
நினையே நினைத்துருகி நீள்விழிநீர் பாய்ச்சும் எனையாண்டு கொள்வதெப்போ தின்பக் குரு மணி GBuL , . 5 6
பேறென்றுன் பொன்னடியில் பிள்ளையென வாழ்வ தல்லால் வேறென்று மிச்சையிலேன் வீரக் குருமணியே! 57
ஆண்டா ளடிமையினை யப்பா பிறிதொன்றும் வேண்டாமை வேண்டுகின்றேன் வேதக்குருமணியே!
அத்தா வுலகில் அலைந்து பரிதபித்தேன்
சுத்தசன் மார்க்கச் சுடரே குருமணியே! 59
பல்சமயத் தத்துவத்தைப் பார்த்துப் பயின்றுமின்னு அல்லலறு ஞானம் அறியேன் குருமணியே 60
தாம்தாம் உயர்வென்று தம்பட்டம் போடுகிறர் மாந்தர் மனமயக்கை மாற்ருய் குருமணியே! 91
பொல்லா மனமாயைப் பூண்டுதனை வேரோடுங் கெல்லாயுன் பார்வையினுற் கீர்த்திக் குருமணியே!

Page 48
-82
இதயதாகம்
நின்ற நிலையினிலே நின்றுன் சுகமருந்தி யென்று மிருக்கவரு வீசா குருமணியே! 63
சித்தத் திரையடங்கிச் சின்மயத்தீ கூடியின்ப முத்திப் பெருக்கருளாய் முத்தர் குருமணியே! 64
இன்றென்று நாளையென்று மேமாற்றங் கொள்ளா ԼԸ 6ն) என்றென்று நிற்குநிலை யீவாய் குருமணியே! 65
சாதனமுஞ் சித்திகளுஞ் சக்திகளு முன்னருளே ஆதலினு லுன்னை யடைந்தேன் குருமணியே! 66
பாரெல்லாந் தானும் பரமனைச் சாதனத்தால் ஒராது கெட்டார் உலகோர் குருமணியே! 6 7
சாதிக்கொரு சாமி சாமிக்கொரு கோவில் வீதிக்கொரு மதமேன் வேதக் குருமணியே! 68
ஆளையாள் மீறி அடியிலே யிறங்கி நாளைக் கொலை செய்வார் நல்ல குருமணியே! 69
அறியே னறிவெதுவும் ஆண்டா யுனக்கே யுரியே னதுபோதும், உண்மைக் குருமணியே! 70
வற்ருச் சிவானந்த வாரிதியே உன்னருளைப் பெற்ற லினிக் குறையேன்? பேசாய் குருமணியே!

-83
குருமணிக் கண்ணி
கண்ணுர வுன்னையெங்குங் காணவே யென்னுள்ளக்
கண்ணுகி நின்றருள்வாய் காட்சிக் குருமணியே! 19
உன்னைப் பிரியாதென் உள்ளத்திலே வைத்தேன் என்னைப் பிரியா திருப்பாய் குருமணியே! 2O
ഉളTത്ര (91-ഉ) முனதொளியைக் காட்டிடவே ஞானசித்தி நீயருளாய் ஞானக் குருமணியே! 21
வாய்மை யுபசாந்த வாழ்வு நலமுறவே
துரய்மை யருள்புரிவாய் சுத்தர் குருமணியே! 22

Page 49
-84
இதயதாகம்
12. பரமாத்மா
உள்ளமாகிய ஒம்பர மாத்மா
உருகி யுன்னை யுபாசித்து நின்றேன் கள்ள மாயக் கவலைக ளின் றிக்
கட்டிலாத விடுதலை கண்முன் வெள்ளமான கருணையில் ஆடி
விண்ணமு தென உன்னருளுண்டு தெள்ளுடலுந் திருமணி யாகுந்
தெய்வ மாறுத லீந்தருள்வாயே!
வான் வளைத்திடும் வட்டவுலகே
வன்ன நன்மணி மந்திரமாக ஊன் வளைத்த உயிர்த்தொகை நீயாய்
உள்ளன் பாலுனைப் பூசனை செய்வேன் தேன்விளைத்த திருவருள் வாக்கும்
தியானமும் பரமோனமும் ஈவாய் யான் களித்திட என்னுளம் ஆடும்
இறைவனே யருளின்ப மெய்யரசே!
ܥܳܠܥܳA
76
ሥ”
7 7
 

-85
13. அருட்சோதிக்கண்ணி
சீரான தூய சிவகிரியிலே விளங்கும் தாராள ஞான தருவே யருட்சோதி! 78
உன்னைச் சரணடைந்தே னெப்பில்லா வான்கருணை மன்னு கருணைபொழி வான்போ லருட்சோதி! 79
தேனுேங்கு மின்பத் திருவடியில் வண்டாக யானுேங்கு மின்பமரு ளப்பா வருட்சோதி! 80
யான்வேறு நீவேறென் றன்பிற் கிரண்டுண்டோ? நான்வேறுற் றுய்வேனே நாதா வருட்சோதி! 81
பொல்லா மனமாயை போக்கியெனை நீக்கமறப் புல்லாய் பரமசுக போதா வருட்சோதி! 82
காமமெனுங் காட்டினிலே கண்கட்டி யாட்டாமல் நீமகிழ்ந்தென் காதலனுய் நிற்பா யருட்சோதி! 83
பெண்ணுமண்ணும் பொன்னும் பிரித்தென்ற னன் பை யெல்லாம் உண்ணுது நீயே யுகப்பா யருட்சோதி! 84
உப்புமப்பும் போலவுன்னை யொன்ற வொருகுட்சி செப்பி வழிநடத்தாய் சித்தா வருட்சோதி! 85
யோகசித்தி பெற்றுன் உணர்வாம் பரிசுத்த போகசித்தி யெய்தப் புரிவாய் அருட்சோதி! 86
தாயாகப் பெண்ணைச் சமமா யுயிர்க்குலத்தை,
நீயாகப் பாரை நினைப்பே னருட்சோதி! 87

Page 50
-86
இதயதாகம்
ஆண்டவனும் சக்தியும்போல் ஆண்பெண்ணைக் கா ணுமின்பம் வேண்டினேன்; பேதபுத்தி வேண்டே னருட்சோதி!
அன்பெல்லா முன்னன்பே யார்வமெல்லா நீயா - னேன்; என்புருகு மன்போ டிணைவா யருட்சோதி! 89
உருவு மருவுநீ; உய்யவென்னை யாண்ட குருவுநீ யென்றறிந்து கொண்டே னருட்சோதி! 90
உன்காத லென்னை யுருக்கி விழுங்கியதை நன்குன் மணமறிவாய் நாதா வருட்சோதி! 9 I
என்னுண்மை யுன்னுண்மை யென்னவி நீயென்னில் உன்னைப் பிரிந்துய்வு முண்டோ வருட்சோதி! 92
சுற்றித் திரிந்து சுகங்கெட் டுனதடியைப் பற்றினே னென்முகத்தைப் பாரா யருட்சோதி! 93
தான மழிந்தே தரங்கெட்டுத் தாழாது மானமுடன் வாழவைப்பாய் மன்னு வருட்சோதி!
உன்னைய நிந்தடங்கி யுன்மயத்தை யெண்ணியெண் ரிை யென்னை யறிந்தடங்க லின்பம் அருட்சோதி! 9.5

-87
அருட் சோதிக் கண்ணி
அத்தைத்தின் ருங்கே யமர்ந்திருக்கு மானந்தத் தத்துவமாஞ் சித்திதனைத் தாரா யருட்சோதி! 96
சுத்தான்ம நேயந் துலங்க வுலகமெல்லாம் சித்தாடல் செய்வாய் திருவே யருட்சோதி! 97

Page 51
-88.
இதயதாகம்
14. துய்யனே
துய்யனே எனதாருயிர்த் துணையே *
துரியனே பரஞ்சோதிச் சுடரே ஐயனே யடியார் துயர் தீர்க்கும்
அப்பனே உனதன் பெனக் கீவாய் பொய் பொருமைகள் புண்படுத்தாத புனிதமான பொதுநல வாழ்வும் வெய்ய பாச வினையறு வீறும்
விமலனே யெனக் கருள்புரிவாயே! 9 8
முத்தலை கடல் உன்முர சென்பேன்
முழுமதி யுன்முகமெனக் காண்பேன் ஒத்த மீன்கள் உலாவும் ஒழுங்கை ቐ” ̈
உனது சக்தி யுலாவெனக் காண்பேன் சித்த வீணையின் சிற்பர நாதம்
தியான மந்திர மென்று செபிப்பேன் பித்தனகி யுனைப் பிரியாத
பிள்ளையேனைப் பிரிவற நிற்பாய். 99
ஆசை யாணவ மோகங்க ளின்றி அச்சமின்றி யகப்பகை யின்றி மாசிலாத மனத்திரு யாழுன்
மாமறைகளை மீட்டிட வேண்டும். 。、 வாசியை மதிவட்டத்தில் வைத்தே يخ
மலர்ந்த குண்டலி யமுதினையுண்டே பேசிலாத பெருஞ்சுக மெய்தும்
பிறப்புரிமை பெறுந் திற லீவாய்! 100
 
 

-89
துய்யனே
கனலும் வானமுன் காதற் கடிதம்
காற்று நீ நிதமாற்றிடும் பேச்சு அனலுன் சக்தி யென்னுர்வமே தூபம்
அழகிய வுலகானந்த வீடு மனதுன் காதலி நீ மணவாளன்
வாழ்வு மங்கல மாமனே யாட்சி உனதுவகை யெனதுயி ரின்பம்
உண்மை யின்பறிவான ஒருவா! I 0 1
எட்டி நிற்பதுணக் கழகில்லை
ஏழையேன் பிழையேது மிருந்தால் குட்டிக் குட்டிக் குறையைத் திருத்திக்
கூட்டிக் கொள் எனக்கொண்ட மனுளா தட்டிச் சொல்லத் துணிவெனக் கில்லை
தழுவிக் கொண்ட தயாபர மூர்த்தீ ஒட்டிக் கொண்டுயிருன் மயமாகும்
ஒருமைதா எனதுள்ளுயிர் வேந்தே! I O2

Page 52
-90
இதயதாகம்
15. மனப் பேய்க் கண்ணி
நானு விகாரமின்றி நாயகனைக் கூடிடவே ஞானச் செழுமுடியை நாடாய் மனப்பேயே! 103
இந்திரஜா லங்காட்டி யென்னை யிழுத்தடித்தாய்; சொந்த நிலை காணிற் சுகமாம் மனப்பேயே 104.
ஊரெலாஞ் சுற்றி யுலகெலாம் வட்டமிட்டுப் பேரெலாம் பெற்றவெறும் பேதை மனப்பேயே!
ஒன்பதுவா யில்களிலு மோடி நடித்தாயே! வம்பைப் பெருக்கும் வலுத்த மனப்பேயே! I O 6
கள்ளக் குரங்கே கடுங்காம நோய்க்குரங்கே! துள்ளாது ஞானமலை தூங்காய் மனப்பேயே! 107
உயிர்வீட்டி னுள்ளே யொளிவீ டுனக்கிருக்கத்
துயர்வீட்டைத் தேடித் துவண்டாய் மனப்பேயே!
நாக்கை யடக்கி நலந்தீதைப் பார்த்துபுலப் போக்கை யடக்கிடடா பொய்யா மனப்பேயே!
தீனியிலு மேனியிலுஞ் சித்த மலையாமல் ஞான முயற்சிதனை நாடாய் மனப்பேயே! 1 1 0
நாக்கிற்குங் கண்ணிற்கும் நாற்ற வயிற்றிற்கும் யாக்கைக்குங் கட்டுண்டாய் ஐயோ மனப்பேயே!

-91ه
மனப் பேய்க் கண்ணி
மாதரெல்லாந் தெய்வசக்தி மாதாவென் றேயுணர் வாய்
தீதொழியும் காமத்தீ தின்னு மனப்பேயே! II 2
கண்ணை யுருட்டிக் கருத்தினுக்குக் கண்ணிவைக்கும்
கண்ணிலகப் பட்டுக் கலங்கேல் மனப்பேயே! 113
நாவென்னுங் கொம்பேறி நாட்டியங்க ளாடுகின்
ருய் காவலை மீறுங் கசடா மனப்பேயே! I I 4
பூத்த மலர்போலப் பொற்பைநீ பார்த்திடுவாய்; தீத்தினவு சென்று திருவாம் மனப்பேயே! Il II 5
அன்பாகத் தாயார் அளித்த வமுதிருக்கத் துன்பச் சுவைக்கே துடித்தாய் மனப்பேயே! 116
என் பேச்சைக் கேளாமல் எங்கெங்கோ சுற்றுகிருய் உன்பேச் செனக்கேன், உதவா மனப்பேயே! 117
தண்ணீர் மதியலைந்தாற் சாந்தமாய் நின்றிலகும் விண்ணின் மதிக்கென் விளம்பாய் மனப்பேயே! 118
மதியாதார் வீடுகளின் வாயிலிலே நின்று சதிசெய் தெனக்கெடுத்தாய் சண்டி மனப்பேயே!
ஈயாதார் வாசலிலே யீபோ லிருந்துவெறும் வாயையே மென்ரு ய் வறட்டு மனப்பேயே! I 20

Page 53
س92
இதயதாகம்
நாக்கை யடக்கியுள்ள நாடி யடக்கியுன்றன் போக்கை யடக்கிடுவேன், பொல்லா மனப்பேயே!
வாயைத் திறவாதே வார்த்தை வீணுடாதே மாயம் புரியாதே வாவுள் மனப்பேயே! 1 22
ஏடு மெழுத்து மிசையும் வசையில்லா நீடுசுக மாமோ? நிலையாய் மனப்பேயே! 1 2 3
கைதட்டிப் பேசிக் கருத்திலே வஞ்சமுடன் பைதட்டி வைத்திழந்தாய் பாழு மனப்பேயே! 124
முந்திழைத்த தீமைதனை முன்னே நிறுத்தியென்னைச் சந்திக் கிழுப்பாய் சனியே மனப்பேயே! I 25
நெஞ்சாரப் பொய்சொல்லி நின்னைப் புகழுமந்த
வஞ்சத்தை வாள்கொண்டு மாய்ப்பாய் மனப்பேயே
துய்த்துப் பிழைக்கத் துணிந்து நீ நாடோறும் பொய்மூட்டை கட்டியது போதும் மனப்பேயே!
வாயெல்லாம் பொய்யாகி வஞ்சகமே நெஞ்சகமாய் சீயின்னும் வாழாதே திருட்டு மனப்பேயே! l 28
யார்வருவார் வாராரென் றங்குமிங்கும் பாராதே பூராய மாயுள்ளே போடா மனப்பேயே!

-93
மனப்பேய்க் கண்ணி
பிறர் குற்றம் பேசாதே பேசுவதைக் கேளாதே அறிவாயுன் னுள்ளே யடங்காய் மனப்பேயே! 130
உன் குற்றம் போக்கியுள்ளே யுள்ளபடி நின்றுயர்ந் தால் என் குற்ற மின்னுெருவ ரீவார் மனப்பேயே! 131
அகவழுக்கு நீங்காமல் அம்பலத்தி லாடிப் புகழுக் கலையாதே புல்லா மனப்பேயே! I 32
உள்ள மலரூன்றி யுச்சிமலர்த் தேனுண்ண மெள்ள மெள்ள மேலேறு; மேலா மனப்பேயே! 133
தனிமைத் தவநலமும் சான்ருேர் திருத்தொண்டும் இனிய துணையா மியற்ருய் மனப்பேயே. 34
கட்டிப்பே ட் டுன்னைக் கவலை யொழிப்பமெனில்
எட்டியெட்டித் தாவுகிருய் எட்டா மனப்பேயே.
இறங்கெட் டலைந்தென்னைச் சீரழிக்கா தேபோ உறங்குகின்ற போதும் உறங்கா மனப்பேயே. 136
நல்ல பதமிருக்க நாய்ப்பதத்திற் காளாகி யல்லற் படுத லழகோ மனப்பேயே. I 37
சச்சிதா னந்தசுகந் தன்னை யறியாமல் எச்சிற் கலைச்சுகங்கள் ஏனுே மனப்பேயே. 138

Page 54
-94
இதயதாகம்
துணையென்று வந்தாருந் தூற்றிப் பிரிந்தார் இணையற்ற நண்பன் இறைவன் மனப்பேயே. 139
ஏமாற்ற நாடகங்கள் எத்தனையோ பார்த்துமின்
னும் நா மாற்ற நண்பரை நீ நம்பிவீண் போகாதே 140
தானை தத்துவத்தை தன்மயத்தி லொன்றதே நானென் றகங்கரிக்கு நாசா மனப்பேயே. 141
ஒருபேயி னலேயுலகெல்லாம் பேயாச்சே வருவதெல்லாம் உன்னுலே வம்பு மனப்பேயே. 142
முன்னுலும் பின்னலும் மூட்டைகட்டி வெவ்வினை கள் என்மேற் சுமத்துகின்ரு ய் ஈன மனப்பேயே. 1 4 3
உன்னை யொழிப்பேன் உருவில் மனப்பேயே, 144
சுத்தான்ம ஞானத்தாற் சுட்டெரித்துன் சேட்டை - கள் வைத்த படியிருக்க வாராய் மனப்பேயே. I 45
Ess sessess
Aggi

24 ܐ
-95
16. வண்ணமுதே
கட்டி மாம்பழங் கதலி பலாதேன்
கருப்பஞ் சாறு கமலையொ டாப்பிள் G)g5L ʻ ll q.L’i L j[T 6n) 60)L l G)g:GA)65) G)g5"Tui`uuu fT சுமிசு டனிஞ்சு சபோடா கொட்டி மிந்திரி சாரப்பருப்பு
குழகு சீனியுடன் குழைத் தேநெய் விட்டுக் கிண்டிய பாகினு மினியாய்
விண்ணமுதே யெனை மேவாய். 146
முல்லை மல்லிகை தாமரை ரோஜா
முறுவலே மணத் தென்றற் குழலே ஒல்லெனும் மலையாற் றிசை யாழே
உயர வானின் ஒளிமணிச் சொக்கே கல்லையுங் கலையாக்குங் கவினே
ககன ராசியின் அற்புதக் கூத்தே எல்லையற்ற இயற்கை யுயிரே
ஏழையேனுனை எப்படிக் காண்பேன். 147

Page 55
-96
இதயதாகம்
- 17. சாந்தம்
சாந்தமெங்கே சாந்தமெங்கே யெங்கே யென்றே
சடுகுடுபாய்ந் துலகமெலாஞ் சலித்துப் பார்த் தேன் மாந்தர்களின் உதட்டுறவில் மனதைக் காணேன்
மனவுறவுந் தினவுகளை வளர்க்கக் கண்டேன் வேந்தர்களின் விருந்துடனே மருந்துங் கண்டேன் வீரரிடம் பேர்க்கொலையின் வெறியே கண் டேன் சார்ந்ததுவே தானுக நிற்பதொன்றே
சாந்தமிது தன்மயமாம் சகச வாழ்வே. 148
கண்கெட்ட காமாதிக் காடு சுற்றிக்
கதிகெட்டுப் போனவரோ கணக்கில் கோடி மண்கட்டி யாண்டிடவே மமதை கொண்டு
மடித்த பிண மலைமேலே மடிந்தார் கோடி விண்னெட்டப் புகழ்சிறந்தும் விஷப் புழுப்போல்
விசனப்பேய்க் கிரையாகி விழுந்தார் கோடி பண் கட்டிப் போற்றிநிதம் பர மோனத்திற்
பதிந்திருப்பதே பரம சாந்தமாமே. 49
வல்லரசு நாடுகளைப் பார்க்கப் போனல்
வழியெல்லாம் பட்டாளம்; வானும் பூவும்
கொல்லசுரர் களியாட்டம்; கொலையின் கூத்து
கொடுமைகளை நினைத்தாலும் மனங்கொதிக்கும்
வெல்லுவது வெடிகுண்டு; “வென்றே னென்று விருப்புப் பேசினவர் குண்டால் வீழ்ந்தார்
மல்லரக்கர் மதிமண்டலஞ் சென்ருலென்?
மனவெறியுஞ் சினவெறியு மற்போராமே. 150

-97
18. வேதப்பொருள்
ஆதிப் பொருளே யநேகவித மானதென வேதப் பொருளே விளம்பியபின் - மேதினியே 151
சாதிமதச் சச்சரவைக் கட்டிவைத்துச் சன்மார்க்கச் சோதிவழி நின்றே சுகம்பெறுவாய் - நீதியுடன்
எம்மதத்தைப் பார்த்தாலும் இன்பப் பொருளொ ன்றே சம்மத மாகுமது சத்தியமே - திம்திமென 153
மத்தளங்கள் கொட்டி மகரவீணை தடவிப் பக்தர் பரவசமாய்ப் பாடுவதும் சித்த மிசை 154
உள்ளடங்கி யோகமுனி தேடுவதும் கூடுவதும் விள்ளரிய ஞான வியன்பொருளே - தெள்ளறிஞர்
ஓம் தத்ஸ்த் ஒம்என்பர்; ஓம்நமச்சி வாயவென்பர் ஒம்நாராய னவென்பர் ஒன்றினையே - தாமதனைத்
தாயென்பர் தந்தையென்பர் சக்தியென்பர் சாந்த மென்பர் நீயென்பர் நானென்பர் நித்தனென்பர் சேயென்பர்
புத்தா சரணமென்பார் சித்தா சரணமென்பார் சுத்தசக்தி ஒம்எனவே சொல்லிடுவோம் அத்தகைத் தீ 158
தன்னைப் பணிவார் ஜரதுஷ்ட்ரர் - வானுலக மன்னைப் பணிவார் மதியூதர் - கன்னிமகன் 1 5 9

Page 56
-98
இதயதாகம்
ஏற்ற சிலுவையினை யேத்திடுவார் ஏசுபக்தர் ஆற்றல் வளரிஸ்லாம் அன்பர்கணம் காற்றதிர 160
அல்லாஹோ அக்பரென்றே ஆண்டவனைத் தாள் LIGONOfG IT fif எல்லா மினி துவப்பான் ஏகணவன் - சொல்லாலே
இல்லையென் பார்க்கும் இதயத் துடிப்பாவான் எல்லையில்லா தெங்கும் இயல்பானுன் - உள்ள பொருள் 162
ஒன்றே; மதஞ்சார் உலகோர் பலவென்பார்
நின்றே யறிவார் நிலைபொருளை - மன்றுள்
நடம்புரியுஞ் சித்தனென்பர் சுத்தனென்பர் எல்லா உடம்பு மவனுறையும் வீடே - மடல்விரிந்த 164
பூவின் மணம்போலும் பூதபெளதிகங்களிலே மேவி விரிந்து விளையாடும் - ஆவியென்பார் 165
பேர்வடிவப் பேதப் பெரும்போர் ஒழிந்துவிட்டால் யார் வடிவம் ஒன்றே யணிவடிவாம் - பாரினிலே
நானுர்நீ யாரவனுர் நானு விதமான ஊனு ருடலெல்லாம் ஒர்நிறைவாம் - ஞானமிதைச்
சிந்தித்து வாழுந் திருவாளர் மற்ருேரை நிந்திக்கச் சம்மதியார் ; நேரேதாம் - வந்திக்கும்
ܨܠ ܐ.
ዖ∞ ̈

-着
-99
வேதப்பொருள்
ஒன்றே பலவடிவா யுற்றதெனக் கண்டுநிதம் நன்றே புரிவர் நயமுடனே - வென்றுமணம் 169
அச்சம் பகையின்றி யாத்திரைப்பொருமையின்றித் துச்ச மொழியின்றித் துயர் செய்யும் - நச்சு 170
மரம்போல வாழாது நாத்திகமே பேசாது வரம்பெற்ற கற்பகம்போல் வாழ்வார். சிரம்பெற்ற
உண்மையறி வின்பமய மொன்ரும் பரம்பொருளின் தன்மையறிந்து தமையறிந்து - பன்மையாம் 172
எவ்வுயிருந் தம்முயிரென் றின்பமே செய்வரிது செவ்வியவே தப்பொருளாந் தேர். 173

Page 57
-100
இதயதாகம்
9. மாயக்காரி
(விழித்த ஞான வீரன் மாயத்தில் மயங்காதிருக்கும்படி மனத்திற்கு அனுபவ வாயிலாகப் புத்தி கூறுகிறன்.)
நல்லவ ளென்றிவளை
நம்பியே மாந்தேனடி பொல்லாத கள்ளியிவள் - மனமே
பொய்ம்மாயக் காரியடி! I 74
முன்னுெரு காலத்திலே
மோகப்ப டுத்தியென்னைப்
பின்னம் புறம் அறைந்தாள் - மனமே
பேய்நட்புப் பொல்லாதடி! I 7 5
அன்புமிகக் கொண்டேன்
ஆசையெல் லாமுரைத்தேன்
வம்புவ ளர்த்தாளடி - மனமே
மானங்கெ டுத்தாளடி ! I 76
கண்டதை யில்லையென்பாள்
கற்பனைப் பொய்யுரைப்டாள்
கொண்டக ணவனையும் - கிளியே
கொஞ்சிக் கழுத்தறுப்பாள்! 17 7
சாமிவ ணங்கும்போதும்
சரஸவுல் லா ஸ்முடன்
காம வலை வீசுவாள் - மனமே
கண்கொத்திப் பாம்படியோ! 178

-101
மாயக்காரி
இகழ்ந்து புறம்பேசி
இப்புறம் வஞ்சகமாய்ப்
புகழ்ந்துகு டிகெடுப்பாள் - மனமே
புல்லியு யிர்குடிப்பாள்
ஒத்து வருவதுபோல்
ஒட்டம் பிடித்திடுவாள்
பித்துப் பிடிக்கச் செய்வாள் - மனமே
பின்னேகல் லையெறிவாள்!
தோத்திரஞ் செய்வதுபோற் சூனியம் வைத்திடுவாள்
நாத்திகப் பிண்டமடி - மனமே நம்பிட வேண்டாமடி!
இசையென்றும் பட்டமென்றும் இதமாய்ப் பிடித்துநம்மைக்
கசையடி யீவாளடி - மனமே
கருத்தைக் கெடுப்பாளடி!
அறிவா யிருந்துவெல்வோம்
அந்நிய மாயத்
நெறிகண்டு முன்னேறுவோம் - மனமே
நித்திய னைத் தேறுவோம்!
ܡܦܝܕ
179
I 80
I 8 1
I 82
183

Page 58
-102
இதயதாகம்
20. இன்பப் பேறு
மோன மேவடி வாகிய முதலே
முத்திக் கேவழி காட்டிய சித்தே, Aவானி னும்விரி வாகிய பரமே,
வள ருயிர்க்குல மாகிய வுயிரே, தேனி னும்திதிப்பாகிய சுவையே.
தேவர்க் கும்அரி தாகிய வமுதே, ஈன னகிலும் உன்னடி யேற்றேன்
இன்பப் பேறெனக் கருள்புரிவாயே! I 84
நானெ னும் செருக் கற்றிட வேண்டும் நலிவி லாதுனை நம்பிட வேண்டும் தானென் றென்னு ளெழுந்துன் சொரூபம் சாந்த மாகந டஞ்செய வேண்டும் வான ரசு விளங்கிட வேண்டும்
வாய்மை யான விடுதலை வேண்டும் ஞானத் தாகத்தைத் தீர்த்திட வேண்டும்
நாத னேயருட் சோதி முதல்வா! I 85
அவனி நோய்கள் அழிந்திட வேண்டும்
அமர வாழ்க்கை செழித்திட வேண்டும் எவ ரெவர்க்கும் அடிமையில் லாமல்
எங்கும் உன்னருள் ஆண்டிட வேண்டும் சவ வுறக்க மொழிந்திட வேண்டும்
தனிய கந்தை தணிந்திட வேண்டும் தவ வினைகள் சயம்பெற வேண்டும்
சச்சி தானந்தப் பேறெனக் கருளாய்! 186

-103
இன்பப்பேறு
விடய வாதனை யற்றிட வேண்டும்
வினை யிரண்டு மகன்றிட வேண்டும்
மடமை வெவ்விருண் மாறிட வேண்டும்
மாறி லாதசு தந்தரம் வேண்டும்
கடலிலாறு கலப்பது போலே
கனியி லேசுவை காண்பது போலே
உடலி டங்கொ ஞயிர்க்குயி ரேயுன்
ஓங்கு ணர்வெனை யுண்டிட வேண்டும். 187
எவ்வு யிரு மெனதுயிர் போலே
எண்ணி யன்பு புகச்செய வேண்டும் வெவ்வி ருட்பகை நீங்கிட வேண்டும்
வேற்று மைகள் விலகிட வேண்டும் துவ்வினிய சகோதர ராகத்
தொல்லு லகினர் ஒன்றுபட் டென்றும் திவ்வியத் திரு வாழ்வுறல் வேண்டும்
சின்ம யானந்தப் பேறெனக் கருளாய்! 188

Page 59
-104
இதயதாகம்
21. இதயக் கனிகள்
இன்பமெய் விண்ணே, யென்றன் இதயமே இத யத் துள்ளே அன்புமெய் விளக்கே, என்னுள் யானெனு மறிவனு 3)լ յ பண்புடன் வளரு நட்பே, பகலிர வற்ற பார்ப்பே தன்பதந் தானே யான சச்சிதா னந்த வாழ்வே 189
ஆய்வுறுங் கலைக ளெல்லாம் அருக்கன்முன் மீன்க
ளன்னத் தேய்வுறச் சுடரு ஞானச் செங்கதிர்ப் பிழம்பே
யென்றன் வாய்மனங் கடந்த மோன வானமே தானே தானு U 15
தோய்வற வுலகிலேந்து தொழில்புரியருளே போற்றி!
உலகெலாங் கோயி லாகி யுயிரெலா மேனி யாகிப் பலபல தோற்ற மெல்லாந் தன்னருட் பன்மை யாகி அலைமன மடங்கி நிற்கு மமைதியில் ஒருமையாகி, நிலைபெயராத வுண்மை நேயமே போற்றி போற்றி!
அண்டத்தி லுள்ள வாறே யக மக மென்றித் தூலப் பிண்டத்து ளாடு மான்மத் தெய்வமே பிறவி நோ
6) I G. கண்டிக்கு மருந்தே ஞானக் கனலின லென்னை முற் - றும் உண்டிரண் டற்று நிற்கும் உண்மையாம் ஒன்றே போற்றி! 192

- 105
இதயக் கனிகள்
மறப்பனே வுன்னை? நீங்கி வாழ்வனே மாயச் சேற் றிற் பிறப்பனே? வினையேன் செய்த பிழைகளைப் பொ றுத்த வுன்னைத் துறப்பனே? தொடர்பு நீங்காத் துரியவிண் ணடை ந்த பின்பும் இறப் னே? உன்னை யன்றி யிருப்பனே நெஞ்சத் தேவே! 193
வானெடு நீலம் போலும், வாழ்வொடு வளியே போலும் தேனெடுந் திதிப்பைப் போலும், சித்தொடுஞ் சத் தைப் போலும், ஞானமு ஞேய மொன்று ஞானியைப் போலு மென் [DJ LD யானெடு நீயாய் வாழு மற்புதங் கண்டு கொண் டேன். 194
கண்டதோ ரிடமெ லா முன் கனிமுகங் கண்டேன் - உள்ளஞ் சென்றதோ ரிடமெ லாமுன் செம்பொனர் மேனி கண்டேன்! நின்றதோ ரிடமெ லாநீ யென்னுளே நிற்கக் கண்
GB_6T வென்றதோர் வெற்றி தன்னில் வீர நீ விளங்கக் கண்டேன்! 195
போற்றியென்னுயிரே,பூத பெளதிகச் சட்டைபூண்டு காற்றினை யுயிர்த்தெ னுள்ளே கதிரெனக் கனலும் தீயே,

Page 60
- 106
இதயதாகம்
சாற்றிட வொண்ணுச் சீவ சாட்சியாய்க் காணுங் கண்ணே, ஏற்றரு ளன்புச் சேயின் இதயப் பொற் கணிக ளெல் 6) ITL) 19 6
சாந்தமே பரமசுத்த சச்சிதானந்த சக்திக் காந்தமே வீசுகின்ற கண்ணனே கருணை கொண்டு வேந்தனே வேந்தர் போற்றும் வித்தகர்க் கிறையே - நாளும் ஏந்து சீருலகு போற்றும் இதயனே இன்பத் தேவே.
யோகமுங் கலையும் தொண்டும் உலக சேவையுமாம்
ஆத்மத் தாகமும்கொண்டஎன்னைச் சகசநிட்டையிலே கூட்டி வேகங்க ளடக்கி மோன வெளியிலே நிறுத்தி யிந்தத் தேக நீயல்லை யென்றுந் தேகிநீ யென்ரு ய் போற்றி!
பிறந்த நாளில்லை யாரும் பெற்ற நாளில்லை பூவைத் துறந்ததாளிலை தற்போதமிறந்து தன்னறிவு தோன்
றிச் சிறந்தநாள் மடமையெல்லாம் செற்ற நாளதுவே மாறிப் பிறந்த நாள் என்னை நானே பெற்ற நாளுற்ற நாளே. 199

-107
22. திருவடிப்பற்று
எச்ச மயத்தும், எவ்வுல கத்திலும் உச்ச மாகவுன் சீர்த்திக ளோங்குக! நச்சை யுண்டிந்த ஞாலத்தைக் காத்தனை அச்ச மில்லை அன்பருக் கென்றுமே! 200
எங்குச் சுற்றிலு முன்மன முன்னடி தங்கி நிற்கத் தயவு செய் தந்தையே! அங்கு மிங்கு மலைய விடாதினி இங்கெலுள்ளத் திருந்தெனை யாண்டுகொள்! 201
அறிவு றுத்து முனதரு வரின் றியான் சிறகி ழந்த சிறுகிளி யாகினேன் மறலி யஞ்சுமுன் மாணடி பற்றினேன் இறைவ வேறெனக் கோர்கதி யில்லையே. 20 2
உன்பர மெனும் உண்மை யறிந்த பின் என்பர மென் றெனத்தையுஞ் செய்கிலேன் தன்ப ரஞ்சுட ராகிய சக்தியால் இம்பரா யிருந்தா யியல் பாகவே! 20.3
ஆட்டி வைத்திடின் ஆடுவ தல்லது நாட்டி லேபணி நான்செய வல்லனே? காட்டு கின்றதைக் கண்டுன் கதிரினல் மீட்டு கின்றனன் மின்னுயிர் யாழிலே, 2 O 4
மருள்செய் மாய மயக்கினைச் சுட்டபின் இருள்செய் தீவினை யின்னு மிருக்குமோ? பொருள் செய் போகமும் புல்லிய தென்னவே அருள்செய் யற்புதம் காட்டு மரசனே! 205

Page 61
- 108
இதயதாகம்
துன்ப மெத்தனை தோன்றினு முன்னடி நம்பி னேர்க்கு நலிவொன்று மில்லையே;
அன்பினலுன் அருளினைத் தேடினேன் ܢ ܕ ܐ
இன்ப மாகுமென் னுள்ளத் திறைவனே! 206
வாய்மை யோங்கி வளர்கவென் வாக்கிலே தூய்மை யோங்கித் துலங்குக நெஞ்சிலே நேய மோங்கி நிலவுக வாழ்விலே கோயி லாக வுடலினைக் கொண்டவா! 2 C 7
 

-109
23. உலக நாயகி
உலக நாயகி உத்தம நாயகி இலகு சக்தி இறைவி மனேன்மணி நலிவு தீர்த்து நலந்தரும் அம்மையே பொலிவுறச்செய் புதுயுக நாயகி 208
ஏக சக்தியே இன்ப வரந்தரும் யோக சக்தி உயிர்க்குயி ராகிய போக சக்தி புனித பராசக்தி நாக பூஷணி நாரணி அம்மையே 2 O 9
தேகச் சட்டை அணிந்திடும் சீவனின் சோக நாடகம் தீர்த்து சுகோதய யோக சித்தி யுடன்பெறச் செய்தருள் நாக பூஷணி நல்ல பராசக்தி. 2 II 0
வீழ்க தீய வினைக்குலம் யாவையும் சூழ்க தூய சமரசச் சோதியே வாழ்க மன்னுயிர் வானருள் பாலிப்பாய்
ஊழ் கடந்தொளிர் ஒம்சுத்த சக்தியே. 211
粽

Page 62
-1 10
இதயதாகம்
24. இன்பச் சிலிர்ப்பு
கரை கடந்து களித்ததென் னுள்ளமே,
கட்டு டைந்ததென் காவிய வெள்ளமே,
உரை கடந்த தென் அன்பின் உருக்கமே,
உலகை யாக்கிடு மோனப் பொருத்தமே
வரை கடந்த மகிமையைக் கண்டனன்
வாழ்வை யோகமதாக்கி மகிழ்ந்தனன்
திரை கடைந்தெழு தேவர் அமுதெனத்
தித்தித் தாவி சிலிர்த்தது நாதனே. 2 I 2
இன்ன லுற்றினி யெவ்வித முய்குவேன்
‘இறைவ னேயபயம்’ எனக் கூவினேன் மின்ன ணரிக்கர மீந்துயர் சாந்தவிண் மீது யர்த்தினை ஆதிப் பரமனே! அன்னை போலிவ் வனுதைக் குழந்தையை
ஆத ரித்தனை, யன்பு துளிர்த்திடும் புன்ன கைமுகங் காட்டியென் புண்னெலாம்
போக்கி னையினி தாக்கினை வாழ்க்கையை! 213
காண நாளுங் கவலைகொண் டேங்கினேன்,
கண்ணை மூடிப் பின்கட்டை யவிழ்த்தனை மாணு லகம னையிலுன் னுடலே
வளரக் கண்டு மகிழ்ந்து வியந்தனன் ஆணவப் பெரு மாயை யடங்கலும்
அனைத்தும் நீயென் றறியத் தொடங்கினேன் வீணை யாகவென் வாழ்வினை மீட்டினை,
வேனிற் சோலைக் குயில்களின் பாட்டெணு 214

Α.
-111
இன்பச் சிலிர்ப்பு
புல்லனேன் உனக் கீந்ததிப் பொய்யுடல்
புழுத்த நாயும் புகாப்பழம் பாழ் மடம் தொல்லை யாசைப் பசிதொளை தோற்குடம்
தூயனே, யதைத் தொட்டுப் பொன்னக்கினை எல்லை யற்றவுன் னின்ப வளத்தினுல்
எளிமை தீர்த்தனை! என்னிகர் செல்வர்யார்? கல்லைக் கற்கண்டுக் கட்டியென் முக்கினை
கசந்த வாழ்விற் கனிரசங் காட்டினை 2 I 5
பாச மெல்லாம் பகவநின் பால் வைத்தேன்
பரம சாந்தச் சுகநிலை பாலித் தாய் ஊச லாடிடுஞ் சித்தத்தை யுன்னடி
ஊன்றி னேனதி லுன்செய லாற்றுவாய் நேசனே யுன்னைக் கூடி யிருக்கையில்
நீண்ட நேரம் நிமிஷ:மென் முனதே தேசனே யென்கலையுடன் காலமுந்
தியான மாமலராக தினமுமே. 2 I 6
கான லோடுங் கடுஞ்சுர வெய்யமண்
கண்குளிர் பசுங் காவெனச் செய்குவை வாணும் பூவு மணளனும் பெண்ணும்போல் வாழ வைத்துப் புதுமர பாக்குவை மானி டரை யமரராய் மாற்றுவாய்
மழையைப் போல விஞ்ஞானம் வழங்குவாய். தேனும் பாலுந் தெவிட்டக் கவிதரும்
தெய்வ ஜீவன சித்தநீ வாழ்கவே! ( 2 Ι 7.

Page 63
-1 12
இதயதாகம்
கண்கொட் டாதெனக் காணும னளனே
காணு லகுன்கு ஞலயக் காட்சியே, எண்ணி லாவுயி ரான ஒருவனே,
எல்லை யற்ருெலி வீசு மிரவியே அண்ண லப்பனென் னன்னே யருந்துணை
அரசன் சோதி யருட்குரு யாவுநீ! விண்ண ருவி யெனவிளை மாகவி
வேந்த, உன்ஜய பேரிகை யாகுக! 2 I 8
சிந்தை செய்திடச் சித்தங் குளிருதே;
திருவ டிமல ரிற்சிரம் வைத்துணை வந்தனை செய்ய வானருள் கொட்டுதே வரத ராஜ மணிக்கரம் பட்டதும் பந்த பாசப் படர்வினை பட்டதே
பழைய தொல்லை பளிச்சென விட்டதே, எந்தையே பர சக்தி யிறைவனே,
என்னை யாளருட் சோதி யரசனே! 2 I 9
உன்பர மெனும் உண்மை விளைந்ததும்
உன்னின் வேறில்லை யென்னத் தெளிந்ததும் என்பர மென் றெதுவுமிங் கில்லையே
என்னை யாட்டும் விசையுன திச்சையே! பம்பரஞ் சுழல் பாருக்குச் சாட்டைநீ,
பரிதி போன்ருெரு பற்றறு சாட்சிநீ! உம்பர் காணும் உடுக்கணம் யாவையும்
உன்ம ணிச்சுட ரின்னுதிர் பூக்களே! 220

-113
இன்பச் சிலிர்ப்பு
ஆட்டி னலுன் மனப்படி யாடுவேன்
அடங்கென் முற்பெட்டிப் பாம்பென் றடங்கு வேன் காட்டி னலுனை யெங்கிலுங் காணுவேன்
கண்ணை மூடிற் கலந்துட் குவிகுவேன் வாட்டி னலன்பைத் தீட்டும் வகையென்பேன் மண் செழிக்கும் மழையென வான்சுதை ஊட்டி னல் அம ரானந்த மோங்குவேன்
யோகத் தாலென் னுயிரிற் கலந்தவா 221
வளர்ந் தழகு மணந்திடு மென்மலர் வாடி மங்கி யழியுமந் நாளிலே கிளர்ந் திரவினைக் கேலிசெய் மின்னலோ
கெடிகை யிற்பளிச் சென்று மறைந்திடும் அளந்த மானிட வாழ்வெனும் பாலத்தை
அதிவி ரைவில் உயிர்நதி தாவிடும் வளைந்து சோர்ந்திடும் வாலிபத் தெம்பலாம்
மாறித் தேயுமிம் மாந்தரின் காதலே! 222

Page 64
-114
இதயதாகம்
25. சக்தியே சதம்
சக்தி யேசத மாவதுன் சிற்பரா
சக்தி யேசக மாவது வாழ்வெலாம் சக்தி யின் விளை யாடல்; உயிர்க்குலம்
சக்தி யன்னை யுயிர்ப்பெனச் சாற்றுவோம்! சக்தி யல்லது சாதனை யுள்ளதோ
சக்தி யல்லது சித் தியொன் றுள்ளதோ ? சுத்த சக்தி சொரூப சதாசிவ
சோதியே சரணம் சுகநாதனே 223
சிவிகை யேறி நிதித்திரள் கொண்டிங்கே
சீர்த்தி மன்னருண் சேவடித் தொண்டிற்கே குவிகை யோடு குழுமி வருகின்றர்
கொண்டல் வண்ணநின் கொள்கை சிறக்கவே கவிதை கொண்டுன் கருணையில் வாழுவேன் கலையின் பத்திற் கடவுளைக் காணுவேன் நவயுகக் கதிரே யிந்த ஞாலத்தில்
நானு முன் கதிராகிட நீயருள் 2 24
உன்றன் வான்புகழ் வானமளாவுக!
உலகெலாம் உன தாட்சி பரவுக! பொன்றி ராக்ஷஸ் மாயையுன் புண்ணிய! போக யோகத் திருநெறி யோங்குக இன்றெ முக புதுயுகச் செங்கதிர்
இன்னு யிர்க்குல முன்னரு ளொன்றுக! ஒன்று நீ பல வாகிய வுண்மையை
ஒதி வெற்றி முரச மதிர்கவே! 225

-15
26. முனிவர் பெருமை
எனதியான் என்னும் ஆசையை அடக்கி
இருவிகற் பற்றவர் யாவர் தனகன வாழ்வின் சாம்பலைக் கண்டே
சகவியல் பறிந்தவர் யாவர் மனதினை வென்ற மாசிலார் யாவர்
மமதையை மாற்றினுர் யாவர் எனதிரு கரத்தால் அவரடி பிடித்தே
இறைஞ்சலின் இன்பமொன் றுளதோ? 226
பிறந்தவர் யாரும், பிணி, துயர், மூப்பின்
பிடியினில் வாழ்ந்துமண் ஞகும் திறந்தனை யறிந்தே நித்திய மான
சிவந்தனை நாடியே, அனைத்துந் துறந்தவர் யாவர், திருவருளுக்கே
தொண்டு செய் அன்பர்கள் யாவர் சிறந்தவர் அவரே; அவர் திருவருளின்
சிந்தையென் ஆனந்தமாமே, 22 7
துங்கமா முத்தி முடிமிசை வாழுந்
துரியசி வானந்தர் வாழ்க! தங்கமே யான சத்திய சுத்த
சமரளச் சாந்தர்கள் வாழ்க எங்குமே தெய்வத் திருவருட் செய்து
யிலக்கிடுந் தொண்டர்கள் வாழ்க பொங்குயர் தெய்வ வாழ்வினைப் புகன்ற
பூரண யோகியர் வாழ்க! 228

Page 65
-1 16
இதயதாகம்
27. மெளன சாதனம்
தாயே யெனதன் புத் தந்தையே யுன்னைச் சரண் புகுந்தேன் பேயே யெனத்திரி நெஞ்சையுன் அன்பிற் பிடித்த , L Lc5f5c5j5 TT UL / நோயே தருமவ தூறுகள் மிக்க நுவலுகின்ற வாயே யடங்கவோர் மந்திரப்பூட்டு வழங்குவையே!
தண்ணுர் கருமுகி லேயுனைத் தஞ்சம் புகுந்தொ
ழிந்தேன்
பண்ணுர் துதிகளைப் பாடியுன் பாதம் பணிவதல்லால் எண்ணு லெழுத்தா லுரையாலும் வேறெவ் வித்த் தினலும்
மண்ணுர் வழக்குகள் பேசாதென் வாயை யடக்கு வையே! 230
கோளும் பொருமையும் குத்திரப் பொய்யொடு
நாத்திகமும்
நாளும் புகன்று தடிப்பேறி, நஞ்சு தடவியதோர் வாளும் புரியா வடுக்களைச் செய்து மனங்கலக்கும் வேலின் கணையினும் வேந்நாக் கொழுப்பை யிறக்
குவையே! 231
ஊரார் வினைகளைப் பேசியே போதை யுதறுகின்ற போரார் பறையினும் பொல்லாதநாவைப்புறஞ்செ
(ου Πέ5) பேரார் திருப்புகழ் பேசவும் பாடிக் களித்திடவும் சீரார் அருள்வாக்கு நல்குவாய் தெய்வசிகாமணியே

-1 17
மெளன சாதனை
கண்டதைப் பேசிக் கலகம் விளை நாவைக் கடிந்து னடித் தொண்டரைப் பேசித் துதித்துனை வாழ்த்தி வணங் இடவே வண்டறை நாண்மலர் போலவென் வாயும் மலர வருள் கொண்டெனை யாண்டுண்மை மெளன மளித்த குருமணியே 233

Page 66
-1 18
இதயதாகம்
28. மனவுறுதி
மொத்துதிரைக் கடலினிலேமுனைத்தசிறுகலம்போல்
மும்மாயச் சங்கடத்தில் இம்மாய மனமே, எத்துறையும் காணுமல் இங்குமங்குஞ் சுழன்றே
ஏங்குதையே கவலைமிக வோங்குதையே நாளும் சித்துருவங் காட்டிப்பரி சுத்தவொளி கூட்டிச்
சிதையாதுன் மலரடியிற் சிந்தனையை நாட்டி மத்துகடை தயிரெனவே யலைமதியை நிறுத்தி
மனவுறுதி தந்தருள்வா யென திதயப் பொ
ருளே 234
உனை நினைந்தே பணிந்துநிதம் உன்னருளால் உயிர்க் தேன் உன்பணியே யென்பணியென் றுள்வணங்கிப் புரந்தேன்
எனைமறந்தேன், அகந்துறந்தேன் எல்லாமுன் பரமே என்றடைந்தேன்; என்னரசே எனதெனவொ ன்றில்லேன் தனையடைந்தார் தாரகமே சாசுவதச் சுகமே தாய்தந்தை தமர்சுற்றம் சற்குருநீ இன்ப மனையுனது திருவடியே; மகிழ்ந்ததனில் ஊன்ற
மனவுறுதி தந்தருள்வாய் எனதிதயப் பொரு G36T 235
2.

-1 19
29. சுத்தான்ம வாழ்க்கை
வீதியெல்லாம் கலைவிளங்க விரிந்தறிவு பரவ
வெவ்விருளும் வேற்றுமையும் விரைவினிலே LD 600 m)ш தீதிரிய நலம்வளரச் சிறுமை யெல்லாந் தேயத்
திரைவிலகிமாந்தரெலாந்தெய்வவொளிகான; நீதிவளர் சன்மார்க்கம் வீடுதொறும் நிலவ
நேர்மையுள்ள வாழ்வினிலே நிறையின்பம் பொலிய ஆதியரு ளாட்சியொன்றே யகிலமெல்லாம் பரவி ஆத்மசுதந் தரவெளியில் அன்பரெல்லாம் வாழ் G36 TLb 236
பொய்யடிமை போயொழியப் போர் வெறிக ளொ ழியப் புன்செயல்கள் ஒழிந்திடவே புண்ணியங்கள் பொலிய மெய்யறிவுத் திறம்விளங்கத் திவ்விய வாழ்வோங்க வெருவுமதச் சண்டையெல்லாம் வேருடனே வீழத் தெய்வகுலம் பூமியிலே திருவோங்கிச் செழிக்கத்
தேடரிய சித்தியெலா நாடிநம்மைச் சேரத்
துய்யசம ரஸ்வெளியிற் சோதியடி யார்கள்
சுத்தான்ம நேயர்களாய் நித்தியமும் வாழ் GBGJ TLD . 2 3 7

Page 67
-120- .لې
இதயதாகம்
30. அருளின்பம்
புள்ளுலவுஞ் சோலையிலே பூமணக்கும் காற்றில்
பொற்கனிகள் உண்டியற்கை யற்புதத்திற் கூடி எள்ளுமொரு கவலையின்றி யெண்ணமெலாந் துற ந்தே எல்லாமாய் நிற்குமுன்னை யெண்ணுவதே இன் பம்
உள்ளுருகி உயிருருகி ஊனுருகிச் சித்தம்
உள்ளடங்கி உரையடங்கி உன்னுணர்வி லூன் றுந் தெள்ளறிலா லெய்து மந்தத் திருவருட் பேரின்பம் தெவிட்டாம லெனக்கருள்வாய் சின்மயனே சரணம்! 238
பளபளக்குஞ் சுவடிகளைப் படித்துநித மலுத்தேன் பரமபதக் கதைகளெல்லாம் பார்த்துமனஞ்
சலித்தேன் வளவளக்கும் வார்த்தை மிகப் பேசிடநாட் கழித் - தேன்
வாயடங்கி மனமடங்கி வாழவினி யெழுந்தேன் அளவரிய கடல்போலே அன்புமய மாகி
அன்பெல்லாம் உன்னடிக்கே அபிஷேக மாக்கி உளமறிய வுனைக்கலக்கும் உறுதியதை யருளாய்
உண்மையறி வின்மயப் புண்ணியனே சரணம்.

-121
31. அமரக் கனல்
நன்னெஞ் சமலர் மிசை"நான்’ என வாழ் அன்னத் திருவே யமைதிச் சுடரே மின்ன யிரமொத் தமிளிர் நகையே இன்னு ரமுதே யெனதா ருயிரே! 240
கெடல்வேண் டுமென் கீழ் மையகந் தையிருள் விடல் வேண் டும்விகா ரவினைக் குலமே உடல்கொண் டுனையொன் றிடவேண்டு முளக் கடல்கண் டுகளித் திடுவான் மதியே! 24. I
எங்கும் உனையன் றியிலை யெதுவும்: அங்கந் தொறுநீ யமரக் கனலாய்ப் பொங்கப் பொலியும் புனிதர்க் கெதுவே! பங்கம் பயமின் னல்பயப் பதுவே 242
பிறவிப் பிணிசெற் றிடவேண் டுமெனின், வெறிகொள் வினைவேட் கைவிடுத் திடுவாய்; பொறிவா யிலடைத் துபுறங் கருதா தறிவா யிருவென் றகவுங் குயிலே. 2 4 3
பெண்ணு ணெனவிங் குபிறந் துழலும் எண்ணு ணுயிருள் ளுயிரே யுணர்வே பண்கோடி பராவு பரஞ் சுடரே கண்கோ டிகளுக் கொருவான் கதிரே! 245
முத்திக் கினியென் முயல்வேன் பரமா! தித்தித் தெனுளஞ் செழிசி ற்சுகமே, பத்திக் கனல்பற் றியுன்பற் றுவிடேன் சத்திக் கனலே சரணம் சரணம். 2 4 5

Page 68
-122
இதயதாகம்
32. உறுதி தாராயோ
பிலகரி) (ஆதி
1.66)
உறுதி தாராயோ - பரமா வுறுதி தாராயோ - அன்பின் உறுதி தாராயோ?
சரணங்கள்
துள்ளு மனத்தினை யுள்ளத் தடக்க
துஷ்டப் புலனுக்குச் சூடு கொடுக்கக்
கள்ளர்சூழ் காமாதி காட்டை யெரிக்கக்
காதலைப் பூரணன் சோதியி லுய்த்திட (உறுதி)
போதி யடியினில் புத்தர் பெருமான்
பொய்யறக் கண்டதோர் மெய்யறம்பற்றித்
தீதற நன்மை செழித்தரு ளோங்கச்
சித்தம் நிலைத்துத் தியானங்கை கூடிட (உறுதி)
தீனர் பிரானெனும் ஏசு கிறிஸ்து
செப்பிய செந்தண்மை மெய்ப்பட வாழ்வில்
ஞானப் பொறுமைச் சிலுவையைத் தாங்கி
ஞாலத்தில் வானுலகாட்சியைநாட்டிட(உறுதி)
ஹீராக் குகையில் முகம்மது சல்லம்
இன்னுயிர் யாவையும் இன்புறப் பெற்ற
மாருத பக்திவை ராக்கியத் தீயென்
மனதி லெழுந்திட வாழ்வு பொலிந்திட(உறுதி)
كل من

- 123
உறுதி தாராயோ
பாற்கட லிற்பள்ளி கொண்டது போதும்.
பாரினைக் காத்திட வாரும் விரைந்தே;
நாற்றிசை யும் தர்ம நாதச்சங் கூதும்
நாரணரே, ஹரி நாரண ரே, யென (உறுதி)
‘என் முகம் பார்த்தருள்; சண்முக துரையே
ஏறும் குண்டுப் போரை யொழிக்கத்
தண்முகமே பார்த்தருள் சங்கடந் தீர
சக்திவேல் சக்திவேல் சக்திவே லென்றிட (உ)
வானம் பனிமலர் வார்த்து வணங்கும்
மஹாசக்தி கெளரி மலைவளர் தாயை,
ஞான மலர் தூவி நானும் வணங்கி
நாடெலாம் வாழவோர் நல்வரம் பெற்றிட (உ)
விண்ணினைக் கொஞ்சிடும் வெள்ளி மலைமேல் மேவும் சதாசிவ வேந்தனைக் கண்டென்
கண்ணுர நீர்மல்கிக் காதல் பெருகிக்
கனிந்து, பணிந்து கலந்து களித்திட (உறுதி)
'

Page 69

பக்தி பரவசம்
(கவியோகி சுத்தானந்த பாரதியார்)

Page 70

1. ஒன்றே பல.
ஒன்றே யாகிப் பலவாகி
யுள்ள மாகி யுயிராகி * நன்றே யாகி நானகி
ஞான மாகி மோனத்தே நின்றே யொளிரு மணிவிளக்காய்
நிருவி கற்ப நிட்டையிலே மன்றேய்ந் தின்ப நடமாடும்,
வானே நினை வாழ்த்துவனே!
அட்டாட் சரமாய் ஐந்தெழுத் தாய்
ஆருய் வாக்கு மன மாதி எட்டாத் தூய வுணர்வாகி
ஏழு நிலையும் கடந்ததுவாய், முட்டா மோன நிலையினிலே
மூலக் கனலின் சுடராகித் தட்டா தருளுந் தண்ணமுதே
தாயே, நின்னை வாழ்த்துவனே!

Page 71
- 126
பக்தி பரவசம்
சுத்த சக்தி மயமாகித்
துலங்குஞ் சோதி வடிவாகிச் சத்தி யத்தி லுதித்தன்பர்
சாந்த நெஞ்சில் ஒளிவீசிச் சித்த மெல்லாம் சிவமாகித்
தேனும் பாலும் அமுதுமெனத் தித்தித் தூறும் பேரின்பத்
தெளிவே, நின்னே வாழ்த்துவனே! 3
பழிசெய் பஞ்ச பாதகங்கள்
பலவே டங்கள் புனைந்தாடும் அழிசெய் யரங்கா முலகினிலே
அறிவு மயங்கித் திகைக்கின்றேன் இழிசெய் பகைவர் இடரின்றி
தயக் குகையில் உனைக்கூடும் வழிசெய் தென்னைக் காத்தருளும், خلاقي"
வள்ளால் உன்னை வாழ்த்துவனே! 4.
令***

-1 27
2. அருளமுதம்
அன்பில் விளையும் அருளமுதை,
அறிவு நிலையின் குறிப்புணர்த்தும் தன்பா லப்பன் மவுனத்தே
சிவமாய்ப் பொங்கும் அருளமுதைத்
தன்பா லடைந்த மெய்யடியார்
தா கந் தணிக்கும் அருளமுதை
என்பா லூறி யுலகுண்ணச்
செய்வாய், எல்லாம் வல்லவனே!
சித்தங்குவிந்து மனமடங்கித்
தியானங் கலந்த மோனநிலை, சத்தங் குவிந்த சாந்தநிலை,
சதசத் தான ஞானநிலை, சுத்தங் கடந்த சக்திநிலை,
துரியா தீத முக்திநிலை, நித்தங் கலந்த பேரின்ப
நிலையிற் பொங்கும் அருளமுதே!
வாயா லியம்ப முடியாத,
மனதா லெண்ண வொண்ணுத தூயா னந்தச் சுகப் பெருக்கே! துரிய மலையின் அருவியிலே வீயா தோங்கும் விண்ணிசையே,
விரும்பும் அன்பர் இன்புறவே தாயா யளிக்கும் தண்ணளியே,
தாகந் தீர்க்கும் அருளமுதே!
5

Page 72
- 128
பக்தி பரவசம்
ஆக்கி யாக்கி யுலகுயிரை
யாட்டி யாட்டி விளையாடி நீக்கி நீக்கி மாயவினை
நெடிய கொடிய மன மடங்க ஊக்கி ஊக்கி யோகவழி
யுய்த்து ஞான முக்திதரும் வாக்கில் ஊறும் அருளமுதை, வாரி வாரிப் பருகுவமே!
4
8

129
3. ஆத்ம குரு வணக்கம்
வானத்தைப் போல்விரிந்த வுள்ளத்தில்
வளமான கருணை மிக்கான் ஞானத்தைப் பொழிகின்ற மழைபோன்றன்
ஞாலத்து நாடகத்தை மோனத்துச் சாட்சியெனக் கண்டிருப்பான்
முத்திரையின் மூன்றைக் காட்டி தேனெத்து மலருலகில் வாழ்கவெனச்
செப்புகின்ற தெய்வம் வாழ்க! 9
இருளான பாசத்தை யில்லாமல் ஒழிக்கின்ற
இரவி தன்னை மருளான கவலைதரு மனதைச்சின்
மயமாக்கும் மாசிலானே அருளான திருவமுதை ஆருயிருக் களிக்கின்ற ஆத்மசக்திக் குருவான தெய்வத்தைக் கும்பிட்டுக்
கும்பிட்டுக் குறைதீர் லோமே! 1 O
சாதிமத நாடுநிறத் தனியகந்தைச் சழக்கின்றி வழக்க தின்றி பேதை மனப் பேதமெனும் பேய்க்குலத்தைப் பெயர்த்தெறிந்து பெரிய வான் கீழ் ஆதிபரா பரணருளில் ஒர்குலமாய் ஆலயமாம் உலகு வாழப் போதகுரு வாய்வந்த புனிதனையெம்
புண்ணியனைப் போற்றி வாழ்வோம் 1

Page 73
-130
பக்தி பரவசம்
அருளான வேரூன்றி அன்பான கிளைபரவி
ஆன்ம நேயப்
பொருளான தளிர்வைத்துப் பொன்னன
மலர் பூத்துப் புதிய வாழ்வாம் தெருளான கனிமல்கிச் சிவமான
மணம்பரவி யின்பஞ் செய்யும் குருவான கற்பகத்தைக குயிலான
குரலெடுத்துப் போற்றி செய்வோம்.
செய்யொத்த பயிருக்குச் செழுமைதரு
நீர்வளம் போற் செழுமையாக வையத்தில் வாழ்வாங்கு வாழும்வகை
வகுத்தளிக்கும் வண்மை நாட்டி கையொத்த நல்லுதவி மனமொத்த
கருணையுறக் காட்டுகின்ற தெய்வத்தை முன்னிட்டுச் செய்கடமை
செய்துநலஞ் செழித்து வாழ்வோம்.
தேடுகின்ற தொண்டருக்குத் தேனகக்
கனியாகத் தீம்பாலாக ஓடிவந்து தண்ணருளைப் பொழிகின்ற
ஓங்கார வேத ஊற்றை வாடுகின்ற பயிரினுக்கு வானமுதம்
போலுதவும் வள்ளல் வேந்தைப் பாடுகின்ற வாயினிக்கும் பகர்கின்ற
சொல்லினிக்கும் பான்மையாமே!
1 2
13
14.

-131
ஆத்ம குரு வணக்கம்
மாயவிருட் காட்டினிலே மதிமயங்கி
வழிதடவி வாடுகின்ற சேயனைய சீவனுக்குச் சிவஞான
ஒளிகாட்டித் திருவார் அன்புத் தாயனைய தனிக்கருணை யமுதளித்த தந்தையினை யான்ம நேயத் தூயவனை சுத்தசக்தி யாண்டவனைத்
தொண்டுடனே துதிகள் செய்வோம். I 5
ஒளியொளிரும் ஒளியேநல் லுயிராகி
யுடலாகி யுள்ளமாகித் தெளிவளரு மனமாகி நினைவாகி
நினைவொடுங்குந் தியானமாகி வெளிவளரும் ஒமாகி வளிவளரும்
உயிர்ப்பாகி வேதமாகி அளிவளரு மானந்தத் தேனுகி
நானகி அமைந்தான் வாழ்க! 6
காயனைய மனதினையுங் கனியாக்கிக் கருணைரசக் கட்டி யாக்கித் துரயபர மானந்தச் சுவையாக்கிச்
சுதையாக்கிச் சோதியாக்கி மாயகத்தைக் கடந்துணரு மோனத்தில்
வளருகின்ற மகிழ்ச்சி யாக்கி தாயகமாய் வாழ்வுக்குத் தாரகமாய்
விளங்குகின்ற தயவே போற்றி. 17

Page 74
- 132
பக்தி பரவசம்
தேவாரப் பண்களிலுந் திருவாச
கத்தினிலும் மூலர் சொன்ன பாவாருந் தமிழினிலும் வேதத்தின்
பதத்தினிலும் சமயத் தூதர் நாவாரப் பேசியநல் லுரையினிலு நவில்சுத்த சக்தி நாதன் தேவாதி தேவகுரு தேவனருள்
வல்லமையைச் சிந்தை செய்வோம்.
பூதவுட லைத்தாண்டிப் பொறிபுலனைத்
தாண்டிமனப் போரைத்தாண்டி சாதிமத வாதனையைத் தாண்டியுல
கோார்மதிக்கும் சடங்கைத் தாண்டி ஒதரிய உள்ளத்தில் உள்ளபடி உள்ளபர மோனந்தன்னை ஆதியந்த மற்றவனை ஆகாய
வடிவாகப் போற்றி செய்வாம்.
வன்பாரை யினும் வலிய ஆணவத்தை
ஊனுக்கி வளமையான அன்பாக்கி யருளாக்கி ஆனந்தப்
பயிராக்கி யான்மவாழ்வை இன்பான கனியாக்கி வளமாக்கி
இயல்பான ஞானத்தேனை உண்பாருக் கெளிதாக்கும் உயர் தூய
யோகியினை யுணருவோமால்,
18
“ށf ,
19
20
 
 

- 133
ஆத்ம குரு வணக்கம்
பித்துலகர் பிதற்றிடமிகத் தூற்றுகின்ற
பச்செல்லாம் இடர்க ளெல்லாம் செத்துமடிந் திடமெளனத் தனிமையிலே
யான மலர் மாலை சூட்டி நித்தியனைக் கலந்தமர நிலைபெற்ற நிறைபெற்ற வாழ்வினுனை சுத்தசக்தி யருவியென வருவானை
குருவரனைத் துதிகள் செய்வோம். 2 I
எனைத்தானும் உலகிடரை எதிர்க்காமல்
இசைவசையைப் பாராட்டாமல் மனத்தானும் வாக்கானுஞ் செயலானு
மகத்தான சேவை செய்தும் தினைத்தானுஞ் சோராது தவயோக
சித்தியிலே திளைத்த வேந்தை அனைத்தானும் பெரியானைத் தனைத்தான
யறிந்தானை யறிந்து வாழ்வோம். 22
பெண்வலையிற் சிக்காமல் பொன்வலையிற்
சிக்காமற் பேரவாவாம் மண்வலையிற் சிக்காமல் மாமாய
மனவலையைக் கிழித்தெறிந்தே கண்கருத்தை யுள்ளாக்கி யுள்ளமெல்லாம்
கடவுளின்பக் கணியதாக்கி வண்மையினுல் அனுபவத்தை வாரியுல
கிற்களித்த வரதன் வாழ்க. 23

Page 75
-134
பக்தி பரவசம்
வெறுத்தாரும் இகழ்ந்தாரும் வேதனைகள்
செய்தாரும் வெம்மையாக ஒறுத்தாரும் பிரித்தாரும் ஒன்றுமிலை
யென்ருக உண்மைகொண்டு A பொறுத்தானைக் கறுத்தார்க்கும்
புன்னகையே காட்டுகின்ற புனிதன்றன்னை மறுக்காது வானுலகு மகதுரிய
சித்தனென வாழ்த்து மாலோ. 24
கருநீலப் பசும்செம்பொன் வெண்ணுெளியைக்
கடந்துகண் ணுடிச் சோதி யுருவாகி ஓங்கார ஒலியாகி
உணர்வாகி ஒருமை யாகி அருவாகி அறிவாகி ஆனந்த மயமாகி :"
அதுதTளுனை குருவாகி குணங்கு றியொன் றில்லாத
தன்ம யனைக் குகையுட் காண்போம். 25
தேகசுதந்தரமுடனே போகசுதந்தர முதவித்
தியான மோன யோகசுதந் தரத்தினையும் ஒப்பற்ற ஒருவனுக்கே யுதவி யென்றும் ஏகசுதந் தரமாகத் திருவருளால் - ܕ ܝ ܢܬ̇
இனிதவனே யியக்க நம்மை மோகசுதந் தரமற்ற முத்திவரும்
எனமொழிந்த முதல்வன் வாழ்க, 26
 

-135
ஆத்ம குரு வணக்கம்
ஏமாதி சித்திகளும் இந்திரியம்
அமுதாகி இரசமாகும் வாமாதி சித்திகளும் வாழ்வெல்லாம்
பேரின்ப வளமை யாகும் சோமாதி சித்திகளும் ஒமாதி
சுத்திகளும் சுத்த சக்தி நாமாதி சித்தியினல் அருள்சித்தர்
நாயகனை நாடுவோமே. 27
ஆங்கார வினையற்றுப் பேராசைத் தினவற்றங் கமைதியாகி ஓங்கார மண்டபத்தில் மகதுரிய
யோக பீடத்தில் ஊன்றி நீங்காத பரமாத்ம சக்தியுடன்
நிட்டைசெயும் தூய சித்தி நாங்கான நல்குகிற நாதாத்ம
போதகனை நாடுவோமால்
2
8
நீங்காத மோனத்தில் உடலுயிரு நெக்குருகும் உள்ளமாகி ஓங்கார உட்பொருளை யுணரன்பு
நேயத்தில் உலகைக் கண்டே ஏங்காத மோனத்தில் இருந்தபடி
இருந்ததுவே யியல்பதாகித் தூங்காத தூக்கத்தில் துடியாத
சூக்குமத்திற் காணுவோமே. 29

Page 76
-136
பக்தி பரவசம்
முருகிளைய முகத்தான முத்துதிரு மொழியான மோகமற்ற திருவுடைய சீமானைச் சிவமுடைய
மனத்தானை செங்கதிர்போல் உருவுடைய ஒளியான ஒருமையுறும் உளத்தானை உண்மைஞானக் கருவுடைய கருத்தானைக் கனலுடைய கண்ணுனைக் கலந்து வாழ்வோம்.
*
மரணபய மில்லானை, உயிர்மாறிப்
பிறக்கின்ற வகையை நல்கும் கிரணம் விரி யகத்தானைக் கிளரன்பு முகத்தானைக் கேடு நீங்கக் கருணைபொழி தாயானை எவ்வுயிரும் தன்னுயிராய்க் கருதுவானை தருணமழை போலேநந் தாகத்தைத்
தனிப்பானைத் தணிந்து கொள்வோம்.
எத்தனையோ சமயங்கள் எத்தனையோ
சாத்திரங்கள். பிரிவினைகள் அத்தனையுங் கண்டுமனம் அயர்ந்தபொழு
தன்பாக உள்ளந் தொட்டே சுத்தசக்தி ஒம் என்னு மந்திரத்தைத்
துலக்கியநல் வீறுதந்த வித்தகனை வேதாந்த சித்தாந்த
வேதியனை விளம்புவோமால்
30
3 i
32

-137
4. சுத்த சன்மார்க்க நிலையப் பாசுரம்.
சித்தமே சிவமாய்ச் சேவையே தவமாய் திருவருள் ஆட்சியே குறியாய்
ஒத்தநல் லான்ம நேயமே உயிராய், உலகெலாம் கருணையே நிலவச் சுத்தசன் மார்க்க நிலையத்தில் யோக சித்தியாம் d#f L Lrf 69?6)T

Page 77
-138
பக்தி பரவசம்
யான் என தென்னும் இனச்செருக் கின்றி இழிமனச் - செருக்குக ளின்றி வான்குடை நிழலில் வள்ளலே யுனது வளம்பெ றுந் திருவரு ளாலே ஊன் வளர் உயிர்கள் அன்புயிராகி ஒருமையும் உரிமையும் பேணி ஆன்மநே யத்தில் அமைந்திடும் பணிக்கே அமைத் தெமை நடத்துவாய் அரசே! 36
பஞ்சமும் பிணியும் பட்டினித் துயரும் பாழ்செயு மடமையு மின்றி நஞ்சினுங் கொடிய பொருமை நோயின்றி, நாத் திகக் கொடுமையுமின்றி, வஞ்சமா மாய வலைகளுமின்றி, வாழ்வெலாம் உன் னருட் பணிக்கே தஞ்சமே யாகும் தகையெமக் கருளாய், தற்பர மாம் சிவ குருவே! 37
வெற்றுரை யின்றி வீண்பொழு தின்றி வேலைசெய் துண்டுடுத் துயிர்கள் கற்றறிவுடனே அருட்கலையறிவும் கைத்தொழிலறி வுடன் செழித்தே முற்றறி மோன முதல்வனைப்போற்றி முழுமனக் கருணையினலே ஒற்றுமையுடனே யுலகினில் வாழ, உள்ளவா உள் ளிருந் தருளாய்! 38

-139
சுத்த சன்மார்க்க நிலையப் பாசுரம்
வேதமாமுனிவர் ஆகமச்சித்தர் வியாசர்சங் கரர் சுகா மூலா வாதவூ ரடிகள் அப்பர் சம்மந்தர் வள்ளலார் தாயு மானுர்கள் சாதிபே தமிலாச் சத்திய சுத்த சமரச சுதந்தரப் பொருளே, சோதிநீ யென்று துலக்கினர். அந்தத் தூயமெய்ச் சுடரெமக் கருளாய்! 39
எத்திசை யுலகும் எவ்வுயிர்க் குலமும் இனப்பகை மனப்பகை யின்றிப் பக்தியும் பணியும் பரஞ்சுடர் அறிவும் பண்புடன் அன்புடன் குலவ ஒத்தினி திங்கே ஆன்மநே யத்தில் ஒரளுட் குல மென ஓங்கச் சுத்த சன்மார்க்க யோக சமாஜம் துலங்கிடச் செய், பரஞ் சுடரே! 40
ஞானமந் திரமும் தியான மந் திரமும் நவில்கலை நல்குமந் திரமும் கானமந் திரமும் கருணைமந் திரமும் கைத்தொ ழிற் சாலைகள் பலவும் நானவூற் றுகளும் பண்ணையும் பொழிலும் நல்வ ளம் பசுமையுங் குலுங்கும் தேனமர் சுத்த யோக சமாஜந் திகழுறத் திருவ ருள் புரிவாய் 41

Page 78
-140
பக்தி பரவசம்
பறவையின் பாட்டும் பாசுரலுலியும் பைந்தமிழ் யாழ்குழ லிசையும் கறவையின் பாட்டும் கழனியின் பாட்டும் கைத் தறி ராட்டினப் பாட்டும் அறிவுநூற் கலைகள் அளித்திடு மிசையும் அழகு டன் அருள்வளர் கனிவும் இறைவதின் கருணை யருவியின் இசையும் இடை விடா தோங்குக யினிதே! 42
அவம்பெருந் தீமை யணுகிடாத் தூயர் அருட் பெருந் தொண்டு செய்யறவோர் தவம்பெறு சாந்த சத்தியசீலர் தணல்பெறு சக்தி கள் கூடிச் சிவம்பெறு சுத்த யோக சமாஜம் தியானமந் திரத்தினைச் சுற்றி நவம்பெறச் செழிக்க நல்லவர் குழுவை நல்குவாய் செயம்பெற நன்றே! 43
கொலைபுலை களவு குடிமடி சூது குணங்கெடுங் காம நோ யின்றிக் கலைவளர் அறிவும் கையிலே தொழிலும் கருத் லே கடவுளுங் கொண்டே மலைவளர் அருவி போலவே யுதவி யின்னுயிர் உய் திடத் தூய நிலையமிங் கெழுக நின்னரு ளாலே, நெஞ்சிலே நிறை பரம் பொருளே; 44

-141.
சுத்த சன்மார்க்க நிலையப் பாசுரம்
உண்மையும் அன்பும் அருளுடன் அறிவும் ஒருமை யுந் தூய்மையும் போற்றி வண்மையும் அறமும் வளமையும் பெருக்கி வள் ளுவர் குறள்வழி வாழ்வோம்; தண்மையும் ஆத்மசக்தியும் வீரத் தணலுடன் சுதந்தரம் பொலிய விண்மணிக் குடைக்கீழ் விளங்கிடவருளாய், வேத வான் விளக்கொளிச் சுடரே! 45
பலபல சாதி மதங்களை வேண்டோம், பலபல கட் சிகள் செய்யும் கலகங்கள் வேண்டோம் கட்டுகள் வேண்டோம் கருணையில் லாட்சியை வேண்டோம்: நலம்பெற வுழையாச் செல்வத்தை வேண்டோம்; நாதனே பொதுநடத்தரசே! உலகெலாம் உனது திருவருட்பொதுவில் ஒங்கிடும் ஒருமை வேண்டுவமே! 46
சுத்தமே கடவுள், சக்தியே வடிவம், துரியவான் சோதியே விளக்கம் சத்திய சாந்த சுத்தசன் மார்க்க சாதனமே, எங் கள் சமயம்! வித்தக மூலர் வள்ளலார் முதலோர் விளம்பிய ானமே ஞானம் நித்திய யோக சித்தியே நியமம், நிலமெலாங்
5 Tua)(Ti, a TLDd, G35 47

Page 79
- 142
பக்தி பரவசம்
உழைக்கும்வேர் வையினல் உலகுபொன் விளைய உழுதுண்டு நூற்றுநெய் துடுக்கும் ஒழுக்கமே சரியை, உயிர்க்குயிரான ஒன்றினை வண ங்கலே திரியை அழுக்கறு மனதால் அன்புடன் அதனை அகங்கலந் திருத்தலே யோகம் பழுக்குநல் லான்ம நேயமே ஞானம், பாரெலாம் பயிலுக நன்றே! 48
பதியருட் பாட்டின் அருவிடமின் சாரம் பாரத சக் தியாய்ப் பெருகி, துதியருள் தியான மந்திர ஒளியைச் சூழ்ந்தருட் குலத்தினை வளர்த்தே கதியருள் யோக சித்தியால் ஆண் பெண் காண்சிவ சக்தியாய்ப் பொலியும் சுதியருள் சுத்த சமரச வுலகம் துலங்கிடத் துணை யருள் பரனே! 49
மாசிலாப் பிரமச் சரியத்தில் ஊன்றி, மணிதிகழ் பொன்னெனப் பெண்ணுண் தேசுலாம் செல்வத் திருவளர் யோகம் செழித்த நன் மனையறம் கிளைத்தே காசினியெங்கும் கருணைத்தேன் பொழியும் கற்பக மலர்களைச் சொரிந்தே பாசமில்லாத பதியறிவாகப் பழுத்திடும் தூய வாழ் வருளாய்! 50
ތ%/
ܠܐ ܢܕܐ

-143
சுத்த சன்மார்க்க நிலையப் பாசுரம்
சத்திய சாந்த தீரர்கள் வாழ்க!, சமரசப் புலவர் கள் வாழ்க! ஒத்தநல் லுரையும் உள்ளமும் உடைய உத்தமர் ஊர் தொறும் வாழ்க, இத்திரு வுலகில் ஒம்சுத்த சக்தி எனுந்திரு மந் திர முடனே! சுத்தசன் மார்க்கந் துலங்குக நீடு, சுயமருட் சோ தியே போற்றி! 51
துர யநல் லுடலும் தூ யநல் லுயிரும்
தூ யநற் புலன்களும் மனமும் தூயநல் லுள்ளும் தூயநற் புறமும் துலங்கிடுந் தூயநல் யோக நேயர்கள் ஆன்ம நேயத்திற் கூடி
நிலவுல கின்புறும் பணிகள் ஆயிரம் செய்யும் அருட்பணிச் சோலை
யாக்கிட வரமருள், சிவமே! 52

Page 80
-144
பக்தி Lf sj 618 to
5. பாதமாலை
தஞ்சமென் றடைந்த தூயர் தடைகளைத் தகர்க் கும் பாதம், அஞ்சலென் றருளும் பாதம், அன்பருள் கூடும் பாதம் செஞ்சிலம் பார்க்கத் தொண்டர் செயம்பெற நல் கும் பாதம்
குஞ்சித பாத நீழல் குடியிருந் துய்கு வோமே! 53
ஆக்கியில் வுலகை யெல்லாம் அருள்விளை யாடல்
செய்து நீக்கிவெவ் வினைக் குலத்தை நின்மல மாக்கும் பாதம் பாக்கியம் பழுத்த தூயர் பரவிடும் பசும்பொற் பாதம்
தூக்கிய நடனபாதம் துணையென நம்புவோமே! 54
கலங்கிய போதெம் சித்தம் களித்திடக் குதிக்கும்
鷺。 பாதம் லவினை யறுக்கும் பாதம், மறலியை யுதைத்த பாதம் புலன்களை வென்ற வீரர் புந்தியிற் போற்றும் பாதம் நலன்களை நல்கும் பாதம், நம்பி வீடடைகுவோமே!
ܠܐ ܢܕܐ
 
 
 
 
 

-145
பாதமாலை
மாசிலாத் தொண்டர் நெஞ்ச மலர்மிசை நிலவும்
LJ T35th பூசனை புரிந்து நல்லோர் புண்ணியம் பொலியும் பாதம் நேசம் வைத் தவரின் வாழ்வு நிறைவுறச் செய்யும் L J PT g5 LD
ஈசனூர் பாத மேயெம் இன்னுயிர்த் துணைய தாமே!
பக்தியை வளர்க்கும் பாதம், பரகதி யளிக்கும் LIFT35 LD சக்தியைப் பொழியும் பாதம், சமயசஞ் சீவியாக உத்தமர்க் குதவும் பாதம், உயிரினில் ஆடும் பாதம் சுத்தசன் மார்க்க யோகம் துலக்கிடும் பாதம் போற்றி 57
சாதியு மதமுங் காணுச் சமரசம் கண்ட பாதம் ஆதிசுத் தான்ம நேயம் அளித்திடும் அன்புப் பாதம் ஒதிய பொருளை யுள்ளே உணர்த்திட நடத்தும்
LITT 35 LD
மேதினி வணங்கு கின்ற மேதகு பாதம் போற்றி! 鷺 刁、
சுழுமுனை துடிக்கும் பதம்,சுத்தசை தன்ய ஊற் ய் எழுமுனை யிலகும் பாதம், இதய நடேச பாதம் கொழுமுனை விளை நிலம்போல் கொழுவளங் குலவு பாதம் தொழுமுனை யான தெய்வத் துதிவளர் தூயபாதம்!

Page 81
-146
பக்தி பரவசம்
அப்பர்மா னிக்கர் ஆழ்வார் அறிஞராம் தாயுமா சூறா முப்பொருட் புலவர் யோக முதல்வர்கள் முனிவர் சித்தர் செப்பிய பாதம், அன்பர் சிந்தனைக் கினிய பாதம் ஒப்பறு பாதம், உள்ளத் துடிப்பினில் உணரு வோமே! 60
பயத்தினை நீக்கும் பாதம், பாபத்தைப் போக்கும்
பாதம் வியப்புயிர் உள்ளந் துள்ளி விசையினை நடத்தும் பாதம் நயப்புறு தொண்டருக்கு ஞானத்தை யளிக்கும் பாதம்
செயத்திருப் பாத சேவை செய்தினி துய்குவோமே!
போற்றிசங் கரனர் பாதம், போற்றி நாரணனர்
பாதம் போற்றி ஷண் முகனின் பாதம், போற்றி ஒம் சக்திபாதம் போற்றிஒம் கணேச பாதம், போற்றிநல் லருளே யெம்முள்
ஊற்றிடும் இன்பத் தூய உயர்குரு பாதம் போற்றி!
A
" ليون
 

-147
5. சன்மார்க்கப் பதது
வானமும் கடலும் ஆக்கி மாமழை அமுதம் ஆக்கி கான்மலை யருவி யாக்கிக் கனிமலர்ச் சோலை யாக்கி ஊன் வளர் உயிராய் அந்த வுயிர்வளர் உலகாய்
ஆங்கே நான்வளர் தானுய் ஞானநடம்புரி சிவனேபோற்றி!
அஞ்சலென் றங்கை காட்டி, அழகிய முறுவல் காட்டிக்
குஞ்சித பாதங் காட்டிக் குறித்தொரு பொருளைக்
d5(TLL9 (5 செஞ்சுடர்ச் சோதி காட்டிச் செகவிளை யாடல் d5 ITL L9நெஞ்சுளே நடஞ் செய்கின்ற நித்தியப் பொருளே போற்றி! 64
சவத்தினில் ஆடுஞ் சீவன் சச்சிதா னந்த மான சிவத்திருப் பொலியத் தூய சிகரவான் சோதியாகத் தவத்தணல் வீசு கின்ற தாரகசுத்த யோக நவத்தனிக் குருவே, ஆத்ம நாதனே போற்றி போற்றி! 65
பொய்யிருட் காட்டிற் சிக்கிப் புகலறு சீவ னுக்கு மெய்யருட் சோதி காட்டி வேதவான் பொருளைக்
காட்டித் துய்யசன் மார்க்கங் காட்டித் துரியநாட் டுரிமை
காட்டி
உய்வழி தருவாய், ஈற்றில் ஒருவனே போற்றி போற்றி! 66

Page 82
-148
பக்தி பரவசம்
உள்விசை யசைய ஒசை யுடன்புற விசை யசைந்து முள்ளசைந் தசைந்து கால முறை தரு கடிகாரம்
போல் வள்ளலுள் ளசையவேயில் வையகமசையுந் தன்மை மெள்ளவுள் விளக்கும் ஆன்ம வேந்தனே போற்றி!
அன்பினுல் உருகி நாளும் ஆர்வமே பெருகி 'யப்பா உன்பர மென்றுன் சோதி யுணர்விலே யுறைந்
துறைந்து கன்மனங் கரைத்தே, தெய்வக் கனலெழும் ஆன்ம நேயர் இன்புற நடத்தாய், எங்கள் இதயமாம் பரனே போற்றி! 68
சத்திய வாக்கைப் போற்றிச் சாதுக்கள் உறவைப் - போற்றிச் சித்தசுத் தியினைப் போற்றித் தியானமும் ஜபமும் போற்றி இத்தலக் கோயில் வாழும் இன்னருட் பணியைப் போற்றிச்
சுத்தசன் மார்க்கம் போற்றிச் சுகமுறச் செய்வாய் எந்தாய்! 99
வான்வளை யுலக மொன்றே மனம்வளை யுள்ள மொன்றே ஊன்வளை உயிரு மொன்றே உயிரினுக் குயிரு - மொன்றே நான் வளை நீயு மொன்றே, நடுநின்ற சுத்த சக்தி தான் வளை வாழ்வி னுக்கும் ஒருமையைத் தருக மாதோ! 70

-149
சனமாககப பதது
காலையிற் கமலம் போலக் கனிமுகப் பொலிவுகாட்டி சேலையிற் பாவும் ஊடும் செறிந்தது போலக் கூடி மாலையின் மணியைப் போல மனமொன்றி யினமு
மொன்றி
வேலையிற் படகு போல மேவுக வுலக வாழ்வே!
கடலுண்ட மேகம் போலக் கடமையே புரிந்து நெஞ்சில் இடமகல் உலக வுண்மை துடித்திட இயற்கை போ லக் கடமையைக் காத்து வீரக் காதலுங் கற்புங் காத்து நடையுயர் நேய ராக நாடெலாங் கூடி வாழ்க! 72

Page 83
-150
பக்தி பரவசம்
6. இலிங்க மாலை
மலைநதி வளங்கள் சூழ மாதவச் சித்தர் சூழக் கலைதரும் புலவர் சூழக் காவிய விருந்து சூழ நிலைபெறுங் கோயில்கொண்ட நிலவிடும் பரம லிங்கம் அலைமனம் அமைதி சேர அருள்புரி லிங்க மாமே!
நெஞ்சகங் கோயில் கொண்டு நிலவிடுஞ் சிவ லிங் éᏂ Lib செஞ்சுடர் வீசு கின்ற சிகரமா ஜோதி லிங்கம் பஞ்சகோ சங் கடந்த பசுபதி யான லிங்கம் அஞ்சலென் றபய மீயும் அகத்திரு லிங்கமாமே!
வானமு தாக வந்து வளம்பல சுரந்து நீடு நானில வுயிர்கள் வாழ நலம்புரி கருணை லிங்கம்
நானெனக் கிளம்புகின்ற மனதினை நலிய வாட்டித்
தானெனத் தழைத்த லிங்கம்,சச்சிதானந்த லிங்கம்!
அகப்புறத் தத்துவங்கள் அனைத்தையுங் கடந்த சித்தாய் இகப்பறச் சுகமாய் என்றும் இருந்தவா வியல்ப தாகி உகப்புறு யோகி உள்ளம் ஒளிநடம் பயிலு கின்ற குகப்பொரு ளான லிங்கம் குடமுனி தொழுத லிங் q, Lil 76
به ضر

-151
இலிங்க LDT?sv
பாபத்தைப் போக்கி நல்ல பரிசுத்த வாழ்வு நல்கித் தாபத்தை நீக்கி ஆத்ம சாந்தியை ஈந்து நாளும் ஆபத்தில் உதவி செய்யும் அன்புருவான லிங்கம் தீபத்துட் கனலைப் போலச் சீவனுட் கலந்த லிங்கம்!
நச்செனும் பாசம் போக்கி நானெனும் செருக்கை மாற்றி இச்சையாம் வரங்க ளிந்தே இன்பமே யான லிங்கம் உச்சமா ஞான சக்தி ஒளிவளர் சுத்த லிங்கம் நிச்சி நெஞ்ச லிங்கம், நிலவுக வுலக மெல்லாம்!
O o so e as ao

Page 84
-152
பக்தி பரவசம்
7. கணபதி சிவமே
தேனையே குழைத்த தீந்தமிழ் பாடித்
தினந்தினம் போற்றிசெய் யடியார் வானையே வளைத்த வையத்தில் இன்ப
வளம்பெற வாழ்ந்திடச் செய்தாய். ஊனையே கருதா துன்னையே கருதும்
உத்தம யோகசித் தரைநீ ஆனைமே லேற்றிப் பவனிசெய் அன்பை
அறிந்தனன் கணபதி சிவமே! 7. 9
வட்டமா வுலகக் கோயிலில் உனது
வான்புகழ் விளங்கிட வேண்டும்! திட்டமா யெனது வாழ்வெலாம் தூய திருப்பணிக் காகிட வேண்டும் விட்டவோர் குறையைத் தொட்டுநான் முடித்தே
விடுதலை பெற்றிட வேண்டும். கட்டிலா மோன நிலையெனக் களித்த
கஜமுக கணபதி சிவமே! 80
நோயிலா வுடலும் பேயிலா மனமும்
நூறுநல் லாண்டுகள் வாழ்வும் தாயினன் புளமும் சேயெனத் தெளிவும்
சமரஸ் சுத்தசன் மார்க்க நேயரோ டிசைந்து நின்னரு ளாட்சி
நிலவிடத் தொண்டுசெய் திறனும் தூயசிற் சக்தி யோகமுந் தருவாய்
துணைவனே கணபதி சிவமே! & f

-153
கணபதி சிவமே
பக்தியும் பணியும் பதியறி வுணர்வும்
பழுதறு ஒழுக்கமும் ஆன்ம சத்தியும் பரம சாந்தமும் வீறும் சபதப யோகத்தால் எய்தும் சித்தியும் தூய சிந்தையுங் கொண்ட சிலரோ டினிதுயா ன் கூடிச் சுத்தசன் மார்க்க யோகமே வளர்க்கத்
துணைபுரி கணபதி சிவமே! 82
என்னுயி ராக மன்னுயிர் போற்றும் இரக்கமும் கருணையும் அருளாய் உன்னத மான யோகசித் தியினல்
உயிர்ப்பணி புரிந்திட வருளாய். உன்னரு ளாட்சி யுலகெலாம் விளங்கும்
ஒருமையும் பெருமையுந் தருவாய் மன்னவா சுத்த சக்தி மெய்யிறைவா
மங்கள கணபதி சிவமே! 83

Page 85
-154
பக்தி பரவசம்
8. ஆனந்த சிவனே
தருணமா மழைபோல் அன்பருக் குதவும்
தாயினுந் தயவுடை வள்ளால் இருள்நர காகி யின்னலே செய்யும் இகத்தினில் உய்வழி யறியேன் கருணையே பொழியுங் கரமலர் காட்டிக்
கவலையைத் தீர்த்தருள் புரிவாய் அருணமாச் சோதி யம்பலத்தாடும்
அழகனே யானந்த சிவனே! 84
வஞ்சமுஞ் சூதும் வன்மமும் மிகுந்தே வள்ளென வாழுமிவ் வுலகில் நஞ்சவெங் கொடிய நாடக வுலகில்
நமன் விடுந் திரை மறை யுலகில் r r பிஞ்சிளங் குழந்தை யெனத் திகைக்கின்றேன் பிதாவென நின்னேயா னடைந்தேன் அஞ்சலென் றென்னைத் தஞ்சமீந் தருளாய்
அருட்பர மானந்த சிவமே! 85
பனம்பணமென்றே பாபங்கள் மேவும்
படுகுழி விழுந்துவீழ்ந் தழுந்திக் குணங்கெடும் உலகில், கொள்ளையுங் கோபக்
கொடுமையுங் கூத்திடு முலகில் மணங்கமழ் ஞான மாணிக்கமேநின்
மலர்க்கரங் காட்டியில் வழியே இணங்கிவா என்றே எளியனை நடத்தாய்
இதயமாம் ஆனந்த சிவமே! 8 6
 
 
 

- 155
ஆனந்த சிவனே
சிந்தனை யெல்லாம் சிவசிதம் பரமே செய்கையும் சிவனருட் பணியே வந்தனை யெல்லாம் குஞ்சித பாத
மலருக்கே யெனவுயிர்த் திடுவேன் பந்தனையெல்லாம் போக்கிநின் கையாற்
பரிந்தென்னை அழைத்தினி தாளாய் தந்தெனை முற்றும் சரண் புகுந் தொழிந்தேன்
தந்தையே ஆனந்த சிவனே! 87
கலகமுந் துயரும் கவலையுங்கட்டும் கன்மவா தனைகளு மின்றி உலகினில் அன்பும் ஒருமையும் ஆன்ம
வுரிமையுங் கருணையும் பொலிய நலமெலாந் துலங்கத் தீதெலா நலிய
நடத்துவாய் வெற்றியீந் தென்னை இலகுமெய் யறிவின் ஏரொளிச் சுடரே
ஈசனே யானந்த சிவனே! 88

Page 86
-156
பக்தி பரவசம்
9. சுத்த யோகம்
ஆதிப் பரம் பொருள் அருளிய வேதமே - சுத்த Gu (T3, Li ஆரணப் பூரணர் ஒதிய போதமே சுத்த
GuLIFT 55 L D
மேதினி யைவிட மிக்கப் பழையதென் இந்து தர் LDL fo மேலான உண்மையை மேனியாய்க் கொண்ட தெம் சுத்த யோகம், 89
எங்கும் நிறைந்த பராபரன் ஒன்றெனும் இந்து தர்மம் இதயத்தி லேஅருள் உதயத்தைக் காண்பதென் சுத்த யோகம் தங்கு தடையில்லாச் சமரசச் சன்மார்க்கம் சுத்த G3u j [T

Page 87
- 158
பக்தி பரவசம்
வீர விஜயன் சிவாஜி இலக்குமி போலவே
வில்லரும் மல்லரும் மல்கிப் பணிசெய்த பூரண சக்தி பொலிந்து தருவதெம் சுத்தயோகம்
பூமிக்கெல் லாட பொது வாகிடப் போற்று A
வோம் தோழரே! 96
له ځږي.
ܕ ܲܓ݂

- 159
10. நரகாசுரன் எங்கே?
எங்கே கண்ணன்? எங்கே நரகன்? எங்கே யென்றே இரவின் இருளில் தேடினேன்; மத்தாப்பு சிரித்தது: வெடிகள் கடகட நகைப்புடன் கைகள் அடித்தன! மாப்பிள்ளை யுண்ணும் மாப்பணிகாரம் வெள்ளையப்பம் விழுமிய வடைகள் ஒன்றிலும் அரக்கன் ஒளியக் காணேன் பட்டும் சரிகையும் பகட்டும் கோலம் எதிலும் அரக்கன் இருப்பதைக் காணேன் ஆங்கொரு சண்டை, ஆத்திரச் சண்டை
சீர் செனத்தியிற் சிறுமை செய்தீர் வரதட்சினையில் வரட்சி செய்தீர் ஏலோம் பெண்ணை யென்ருெரு கூச்சல்' பணப்பேய் வடிவாய்ப் பகாசுர நரகன் அங்கே ஒடி ஆடிடக் கண்டேன் எனதியான் என்னும் இறுமாப் பாலே மனிதனை மனிதன் மதியாது தெம்புப் பேச்சிலும் வீச்சிலும் மூச்சிலும் அரக்கன் பிரியமாய் வாழும் உரிமையைக் கண்டேன் அணுக்குண்டுடனே ஆணவக் குண்டன் உலகை அழிக்கும் ஊழிக் கூத்தைக் கண்டேன் - கண்ணனைக் காணத் தவித்தேன் அன்புக் கலையில் ஆழ்ந்த கவிகளின் இன்ப வுள்ளத்தில் இருக்கிறேன் என்றென் யோகக் கனவில் மோகனக் குழலிசை கேட்டேன் உள்ளக் இளர்ச்சி கொண்டேனே.
தீபத் திருவிழா திருவுற வேண்டின் அறிவுந் தொழிலும் அன்பும் அருளும்

Page 88
- 60
பக்தி பரவசம்
ஒருமையும் குலவும் பெருமையிற்கூடி ஒன்றே யுலகம் ஒன்றே உயிரினம் ஒன்றே கடவுள் என்றே வாழும் பொன்னுள் அதுவே நன்னுளாகப் போற்றி முயலுக பூவுல கீரே!
令令令令
97

-161
11. g6nu udsI 25v
நாளை நாளையென் றேநலி யாதுநீ வேளை யுண்டு விழிதுயில் நெஞ்சமே வேளை வென்ற விரதப் பெருந்தகை காளை யார் சிவன் கால் பிடித் துய்வையே. 98
வானப் பேரின்பம் வாழ்வில் இனித்திடும் ஊனப் போர்வினை ஒய்ந்து நலந்தரும் ஞானப் பேரொளி ஞாலத் துலாவிடும்
கானப் போர்சிவன் காதல் கொண்டாருக்கே! 99
ஊட்டங் கூடி யுறங்கு முலகிலே கூட்டங் கூடிக் குரல்கள் எழுப்பியென் ஆட்டம் பாட்டத்தி னப்புறஞ் சொல்லாமல் ஒட்ட மாகும் உலகின் இயற்கையே! 100
வித்தகப் பெரியார் விரிவே தமும் சத்தச் சந்தைச் சனத்தினுக் கேறுமோ சுத்த ஞானச் சுடர்விளக் கென்னவே
சித்த சாந்தியி லேதழை நெஞ்சமே. 1 O I
இடிமுழக்க மெழுந் தொழிற் சாலையின்
படபடப் புடன் பாட்டுப் பொருந்துமோ!
'சடசடத் திடுந் தத்துவப் பேச்சுகள்
சடவுலகின் சலிப்பினுக் காகுமோ. 1 O2
சந்திரனைச் சயிக்கக் கிளர்ந்திடும்
விந்தையான விமான யுகத்திலும்
முந்தையோர் முறையிட்ட முறைப்படி சிந்தை செய்யச் சிவானந்த மாகுமே. I 03

Page 89
- 162
பக்தி பரசிவம்
ஏந்து சீர்த்தி யிளமை யெழிலுடன் தீந்தமிழெனச் செல்வ மளித்திடும் மாந்தர் வேண்டும் லரங்களைத் தந்திடும் சாந்த மீயும் சதாசிவ சக்தியே! I O 4
எண்டிசையும் இருந்த நிலையிலும் கண்டு கேட்டுக் கடந்த நிலையிலும் தொண்டர் போற்றுந் துரிய சதாசிவம் உண்டுள் ளுண்டது ஓம் சுத்த சக்தியே. II 0 5
வந்து செல்லுமிவ் வல்வினை வாழ்விலே தந்த பல தெனச் சண்டை யிடாமலே சொந்த நாதன் சுகம் பெறுங் காந்தை போல்
சிந்தை யற்ற சிவநிலை சேர்மினே. I 0.6
மனக் கவலே வலையை யறுத்திடும் இனப் பகையை யிடரின்றி நீக்கிடும் தனக் குவமை யிலாத சிவசக்தி எனக்கு நற்றுணை யேன்றிரு நெஞ்சமே! 10 7
NA
 
 

-163
12 சிவாஷ்டகம்
நவரோஜ் ராகம்) (ரூபக தாளம்
மற்றுப்பற்றெனக்கின்றி என்ற பண்போல் மெட்டு) (மற்றுப்பற்றெ
வந்து வந்து வினைசுமந்து வருந்துவீர் வழி கானிலிர் முந்து சுந்தரர் பாடி வேண்ட முதலை யுண்ட மத யைத் தந்து காத்த தயாபரன் அவிநாசி சங்கர ஓம்சிவம் மந்திரஞ்சொல மனிதவாழ்வது தேவமாறுதல் எய்துமே. 108
தெய்வ பக்தியும், சைவசித்தியும், செல்வமாகிய கல்வியும் துய்ய உள்ளமுந் தூய கோயிலுந் தொண்டர் கூட் டமும் பேணுவோம் கொய்மலர் மணச் சோலைமேவிய கொங்கு நாட் டருட் சோதியை ஐயனே அவிநாசி ஒம்சிவம் என்னில் அற்புதம் ஆகுமே! 109
அற்புதக்கலே ஆடல்பாடல் அருட்கவிச்சுவை யழ குடன் சிற்ப சித்திரப் புலமையும் வளர் சிந்தனைக் கமு தாகுமே. கற்புயர் பதி யன்பர் போற்றிடக் கருணைசெய் ருக்கோயிலான் சிற்பரன் அவிநாசி ஒம்சிவம் என்னவே சிவ மோங் குமே! 110

Page 90
-164.
பக்தி பரவசம் ,
ஓங்கு மாமலைக் காடுநல்ல கனிஜம் உத்தமச் செல் வங்கள் தாங்கிப் பொன்னி பவானி சாதரி தமிழெனத் தழை நாடிதே தீங்குயிலொடு கிள்ளை கொஞ்சும் திகழியற்கையின் ஆலயம் நீங்கிடான் அவிநாசிஓம்சிவம் என்னத் துன்பமே நீங்குமே. 111
துன்பமேதினித் தொல்லையேதினித் துயர்தரும்வினை யேதினி? அன்புயிர்த்திடுந் தொண்டர் யாவரும் அருளுயிர்த் திட வம்மினே சம்பு சாம்பவ கெளரி சங்கர சந்த்ர சேகர ஒம் ஹரா இன்பமே அவி நாசிஓம்சிவம் என்னும் வாய் அமிழ் துாறுமே. 112
அமிழ்தி லேசுவை யாகினன்; அவன் அறிவிலே
அறி வாகினன் தமிழிலே இசை யாகினன்; அவன் சகவுயிர்க்குயி ராகினன் உமிவிதைபயி ராகினன் அவன் உள்ளிருந்தருள் செய்குவான்
எமதிறை அவி நாசிஓம்சிவம் என்னில் இன்பம தென்றுமே. 113

-165
சிவாஷ்டகம்
என்றும் உள்ளது நெஞ்சுதோறும் இருக்கிறேன்
எனச் சொல்வது; மன்றுளே நடமாடி ஐந்தொழில் வடிவமானது
GJIT GðITLD Tui நின்றிலிங்கம தாய் அருவுரு குருபரன் என நில
விடும் ஒன்றதுண்டவி நாசிஓம்சிவம் என்றதும் அறிவா குமே. 114
அறிவதாயுணர் சுத்தசக்தி அகக் குருடர் அறிவ ரோ?
பொறி புலன்வழி திரிமனம்புரி போர்க்களத்தில் அமைதியோ? வெறியடங்கி யமைதிசேர விளங்கி விண்ணரசோங்
இட
நெறியருள் அவி நாசிஓம்சிவம் எனவரும் சிவநே Li G3LD. 115

Page 91
-166
பக்தி பரவசம்
13. அன்புக் கலை
அன்புக் கலையை அனைவரும் பயில்வோம் அதுவே உலகப் பொதுநலத் திறனும் A. அன்பே உடலாம் அன்பே உயிராம் அன்பே உள்ளம் அன்பே வாழ்க்கை! சேயை வளர்க்கும் தாயின் அன்பும் மண்வளஞ் செய்யும் வானின் அன்பும் பயிரை ஊட்டி உயிரை ஊட்டி ஆழியிற் கலக்கும் ஆற்றின் அன்பும் வசந்த சோலையில் வாவெனக் கூவும் குயிலின் அன்பும் கொண்டலைக் கண்டு மகிழ்ந்து கூத்தாடும் மயிலின் அன்பும் இசைந்த காதலர் இனிதுறப் பேசிக் கனிவுகொண் டுருகுங் காதலி னன்பும் உடலுயிர் மனமெலாங் கடவுளுக் கீந்தே فيقرر பாடிப் பணிசெயும் பத்தரி னன்பும் உலகிற் குதவும் உத்தடம் ரன்பும் மாந்தர் நெஞ்சில் வளர்ந்தால் உலகில் வானர சாட்சி வளம்பெற நிலவும் அமரத் தன்மை ஆவியிற் புலனும் ஆசை பொருமை அமர்க்கள மின்றி ஆன்ம நேயத்தில் அனைவரும் வாழலாம் அன்பே அமைதி அன்பே இன்பம் அன்பே தாரகம் அறிகநல் லுலகே! 1 16
 

- 167
14. மழை பொழிவாய்
விண்ணமுதே உலகுயிராய் விளையாடும் அமுதே பெண்ணமுதாய்ச் சேய் வளர்க்கும் பிரியமுள்ள LiG36. கண்ணமுதே பண்ணமுதே கலையமுதே இன்பக் கடலமுதே காரமுதே கைகுவித்தோம் உனக்கே. மண்ணமுத விளைவேற மன்னுயிர்கள் செழிக்க மாதவங்கள் பொலிந்திடவே ஆதவன் சேர்கடலே மழை பொழிவாய், மழை பொழிவாய் நல்ல மழை பொழிவாய், I 1 7
பயிர் வேகப் புல்லின்றிப் பசு மெலிந்து வேகப் பருகிட நீரின்றி யிந்தப் பாலைவனப் பாழில் உயிர் வேக மனம் வேக உணர்புலனும் வேக உடல் வெந்து புண்ணுகக் குடல் வெந்து குழையத் துயர்வேகும் கண்ணிரும் துன்பத்தால் வேகச் சொல்வாயும் வேக மிகத் தொல்லையினித் தாங்
தோம் , தய வானத் தண்ணருளே தஞ்சமுனை யடைந்தோம் தருணமழை பொழிந்திடுவாய் வருணபக வானே!
நஞ்சத்தை ஊட்டுகின்ற நமன்போல வெய்ய நரகத்தீக் காற்றெமது நாடிகளை உலர்த்தப் பஞ்சத்தால் பசிபிணியால் படுகவலைத் துயரால் பரிதவிக்கும் பாவி மக்கள் சாபவினை தீர வஞ்சத்தாற் பணம் குவித்தோர் வலியமனங்கரைய வாகா உழைப்பாலே வையமெலாம் வளர நெஞ்சத்தே நிலவுகின்ற நீதியருட் சுடரே நேரான மழைபொழிவாய் நீடுலகு வாழ! 119

Page 92
-168
பக்தி பரவசம்
வேலையில்லை, கூலியில்லை விளைவுகளும்இல்லை விதியென்று மயங்குகின்ருர் கதியறியா வீணர் காலையிலும் மாலையிலும் கனலேறிக் கொதித்துக் கவலைப்பிணி துயரமெல்லாம் காலனுக்கே சொல் 6) I [TTT . பாலைவனப் பொட்டலிலே பரிதவிக்கும் மக்கள் பச்சைவளங் கண்டுலகில் பஞ்சமின்றிப் பிழைக்கச் சோலைவளங் குலுங்கிடவேசோதியருட் கடலே ஜோவென்று மழைபொழிவாய் சுத்தசக்தி யமுதே!
பருவமழை தவறிமிகப் பாதகங்கள் பெருகிப் பதங்கெட்டுச் சன்மார்க்கப் பழக்கமெல்லாங்கெட்டு தருமநிலை தவறி வெறும் சாம்பிணமாய் மக்கள் தட்டழிவதுன் கருணைச் சம்மதமோ தாயே! அருமைபெரும் அருட்சோதி யாட்சிநலந் தழைத்தே ஆனந்தமாயுலகம் அமரநிலை சேரக் கருணையுள்ள சுத்தசக்திக் கண்ணே என் கதிரே காரமுதம் பொழிந்திடுவாய் சீரமுதக் கடலே! 121
 
 

-169
15. ஈரோடைத் திருப்பதிகம்
தேவகாந்தாரி)
(ஆதி
நீராய் நெக்குருகி
நெஞ்சம் கரைந்தோட காரார் மழைபோலே
கருணைக் கண்பொழிய ஈரோ டுடையானை
இன்பப் பெருமானைப் பாரோ ரெல்லாரும்
பணிமின் பணிமினே! 1 22
பணிமின் மலர்தூவிப்
பரமன் அவன்பாதம் அணிமின் ஆர்வத்தால்
அஞ்சாத் திறலெய்தும் பிணிபாவம் போகும்
பெம்மான் ஈரோடை மணியை அகக்கண்ணின்
மணியைக் காண்மினுே! 123
அகமாய்ப் புறமாகி
அருளாய்ப் பொருளாகிச் சகமாய்ச் சீவனுய்த்
தானுய் வானகி இகமாய்ப் பரமானுன்
ஈரோ டெம்மானே புகலானன் ஒருவன்
புகல் மின் பாரீரே! 24

Page 93
-170
பக்தி பரவசம்
பாரோர் உயிர்க்கெல்லாம்
பத்திக் கனலோங்க! வேரோடே தீய
வினைகள் அறநிங்க! சீரோடரு ளோங்க
ஈரோடைச் சிவனின் பேரோடே செல்வோம்
பிறப்பை வெல்வோமே!
பிறவாப் பெருமானைப்
*பேசாக் குறியானை இறவாப் பகவானை
ஈரோ டுடையானை மறவா நினைவாளர்
வாழ்வே வாழ்வாமே இறைவா சரண் என்ருல்
இல்லை தொல்லையே!
இல்லை என்பார்க்கும்
இதயத் துடிப்பானுன் சொல்லும் பொருளானன்
சொல்லா மறையானுன் *கல்லில் உருவானுன்
கல்ஆல் குருவானுன் நல்லான் ஈரோடை
நம்பன் எம்மானே!
1 25
126
127
*பேசாக் குறியான் - தென்முகக் கடவுள் (தகஷிணுமூர்த்தி)
*கல் ஆல் குரு -
அ 9 99.
ܐܬܐ,
(بخS
 
 

-1.71 -
ஈரோடைத் திருப்பதிகம்
நம்பும் அன்பர்க்கு
நடனச் சிலம்பானுன்!
வம்பர் இடர்தீர்க்க
வாய்ப்பூட் டவனனன்
இம்பர் ஈரோடின்
இறைவன் இணையில்லான்
உம்பர் உயர்வானுன்
ஊனுள் ளுணர்வானுன்1 128
ஊனுய் உயிராகி
உயிருக் குயிராகி நானுய் நீயாகி
நடுவே சாட்சியாய் தேனுய்த் தித்திக்கும்
சித்தாய் ஈரோடைக் கோனுய் நின்ருனே
கூற்றை யுதைத்தானே! 129 。
கூற்றங் குதிப்போமே
கொடுமை கெடுப்போமே தூற்றித் திரிவாரின்
துடுக்கைத் துணிப்போமே போற்றிப் புகழ்வோமே
ஈரோடைப் புனிதன் ஏற்றுப் புகலிவான்
இருளும் இனியுண்டோ!

Page 94
- 172
பக்திபரவசம்
இருளார் மடநெஞ்சர்
இடரென் இனிச்செய்யும் உருளார் உலகெல்லாம்
ஒன்றிப் புகல்மினே தெருளார் ஈரோடைச்
சிவனே பரனே அருளார் திருத்தொண்டர்
அன்பர் என்பீரே! I 3
அப்பன் அறிவாளன்
அம்மை அருட்சக்தி எப்பா ருலகுக்கும்
இறைவன் குருசுத்தன் இப்பால் ஈரோடை
எம்மான் புகழ்பாடி ஒப்பார் மிக்காரில்
ஒருவன் என்போமே! 132
ஒருவன் பலவான்ை
ஒளியின் ஒளியானுன் குருவும் “குருகாட்டும்
குறியும் அவனனன் உருவன் உள்ளத்தான்
ஈரோடுடை யண்ணல் அருவன் ஆனந்தன்
அம்மான் என்போமே! 133
*குரு காட்டும் குறி - சின்முத்திரை.

-17 3
ஈரோடைத் திருப்பதிகம்
அம்மான் அறிவாளர்
அறியும் அறிவானன் இம்மா னிடர்க்கெல்லாம் t இதயச் சிவமானுன்
எம்மான் ஈரோடை
எழிலார் பரஞ்ஜோதி பெம்மான் என்பீரே
பெருகும் பேரின்பே ! 134
பெருகும் திருவெல்லாம்
பிணிகள் பிறகோடும்
உருகும் அடியாரின்
உள்ளே உணர்வானுன்
குருவே ஈரோடைக்
கோவே எனச்சொல்லின்
N. சொருபச் சுடர்கண்டே
சுகம்பெற் றுய்வீரே! I 35
உய்யும் உலகெல்லாம்
ஓங்கும் வளமெல்லாம் பெய்யும் விண்மாரி
பெருகும் பெருஞ்செல்வம் ஐயா, ஈரோடை
அப்பா என்பீரே *துய்யீர் உம் வாழ்வு
சுத்தா னந்தமே! I 36
* துய்யிர் - தூய்மையிர் ,

Page 95
-174
பக்தி UJ6) go
ஆன்ற திருவும்
அறிவும் ஈரோடைகளைப் போன்றுவளர் “பொன்னிவளப்
பூநகரில் - ஈன்றுவளர் அன்னையப்பன் போலென்னை
ஆதரிக்கும் அன்பான *சென்னியப்பன் வாழ்கசிவம். 137
*பொன்னி காவேரி ஆறு. *சென்னியப்பன் - (சென்னி x அப்பு x அன்) தலையில் கங்கை நீரைத் தாங்கியவன்.

-1.75
19. ஆர்வக் குமுறல்
தேனருவிச் சோலைவளர் தென்றல் கொஞ்சச்
செந்தமிழின் இசைகொஞ்சத்திருக்கள்கொஞ்ச வானமுதச் சுவைவந்து வாழ்விற் கொஞ்ச
மனமெல்லாம் சுத்தான்ம வளமை கொஞ்ச ஞானவொளி சித்தத்தை நயந்து கொஞ்ச
ஞாலமெலாம் சுத்தான்ம நலமே கொஞ்ச ஆனந்தப் புதுவுலகில் அன்பு கொஞ்ச
அருளான கவிக்குயிலே அகவுவாயே! I 38
விள்ளரிய சகானந்த வெள்ளந் தன்னில்
விளைந்தபரங் கனியேயென் விருப்பை நாளும் கொள்ளைகொளும் அருட்சோதிக் குன்றேதன்னைக் கொடுத்தடியார் குறைதீர்க்கும்கோவே அன்பர் உள்ளத்திலே ஓங்காரச் சிலம்பொலிக்க
ஓங்குநடம் புரிகின்ற சிவமே உன்னைத் தெள்ளினிய செந்தமிழால் வழிபட் டுய்யச்
சிறியேனுக் கருள்புரிவாய் பெரிய தேவே 139
மண்ணிர் காற் றனல் வானச் சுடர்க ளாவாய்
மன்னுயிருக் குயிரான மன்ன னவாய் கண்ணுவாய் கண்காணுக் காட்சி யாவாய்
கதியாவாய் கதிக்கேற்ற மதியு மாவாய் பெண்ணுவாய் ஆணவாய் பெண்ணுண் ஆவாய்
பெயர்வடிவ பேதமிலாப் பெரிய ஞவாய் விண்ணுவாய் வியன்ஞால விரிவு மாவாய்
வியக்கின்றேன் உனைவிளம்பத் திகைக்கின்றே G360T l l 40

Page 96
- 176
பக்தி பரவசம்
எச்சாதி யானுலும் எவரா ஞலும்
எச்சமய மானுலும் எங்கா னுலும் உச்சிமிசைக் கரங்கூப்பி யுனைவணங்கும்
உண்மையடியார் ஒன்றே குலமென்பார்கள் அச்சாதி அச்சமயம் அவருக் காங்கே
ஆர்வமறிந் தன்னைபோல் அருளும் அப்பா அச்சமிலேன் ஐயமிலேன் அயலென் றெண்ணேன் அனைத்தும்நீ யென்றறிவேன் அன்புத் தேவே!
உருவாகி உலகாகி யுள்ள மாகி
உள்ளத்தே உணர்வாகி யுணர்வி னுேங்கும் அருவாகி அவனவளும் அதுவு மாகி
அம்மையப்ப னகிநல் லன்பா லெய்தும் குருவாகிப் பலகோடி குணங்க ளாகிக்
குணதொந்த மில்லாத கொள்கை யாகிக் கருவாகிச் சின்மயமாம் காட்சி யாகும்
கடவுளே நீயல்லாற் கதியு முண்டோ? 142
பலபலவாம் சாத்திரங்கள் அலசிப் பார்த்தும் பல சாதி மதங்களேயும் பழுது பார்த்தும் புலவர்செயும் வாய்வாதப் போர்கள் பார்த்தும் புவியாள்வார் சூழ்ச்சிகளைப் புகுந்து பார்த்தும் கலகமிலாச் சாந்தமதைக் காணலாமோ?
கண்ணின்றிக் கண்ணுடி முகங்காட் டும்மோ இலகுபரம் பொருளேநின் இச் சையின்றி
இரவகலும் பகலவனும் எழுவதுண்டோ? 143

- 177
ஆர்வக் குமுறல்
அன்பென்னும் உள்ளத்தில் அடங்கி நின்ருய் அகிலாண்ட கோடிகளை யாண்டு நின்ருய் துன்பென்ற புயலிலே துடிக்குந் தோணி
துறைசேர மெய்ஞ்ஞானத் துணையாய் நின்ருய் பொன்பரவும் அருணப்புன் ணகையாய் என்னைப் புதுமலர்ச்சி பெறச் செய்த புனிதா னந்தா உன் பரமென் றெனயீந்தேன் உடலுன்கோயில்
உள்ள மெலாம் உன்னருளின் வெள்ளமாமே!
பலபலவாம் சமயங்கள் சாத்திரங்கள்
பலபலவாம் சாதிவகுப் புகளின் பான்மை பலபலவாம் தேசங்கள் ஆசாரங்கள்
பலபலவாம் கொள்கைகள் ஐதீகங்கள் உலகையிவை பிரித்ததெலாம் போதும் போதும் உண்மையறி வின் பவொளி ஒன்றே என்றே கலகமிலாச் சுத்தமுத்த சமரசத்தில்
கலந்துலகம் வாழச்செய் கருணை வேந்தே! 145
ஆண்டவனே ஆருயிரின் அப்பா உன்னை
அருவாகப் பணிகின்றேன் குருவே போற்றி மூண்டஇருள் அரங்கினிலே மூடர் செய்யும்
முழுமோகக் கூத்துகளை யுரைக்கப் போமோ! முழுமோகக் கூத்துகளை யுரைக்கப் போமோ!
மீண்டுமிந்த மேதினியில் அறம் விளங்க வேண்டுகிறேன் உணதருளே விமலா போற்றி!
மெய்யடியார் குறைதீர்க்கும் துய்யா போற்றி!

Page 97
-1.78
பக்தி பரவசம்
எண்ணுத தீமையெலாம் எண்ணுகிருர்
இயற்ருத வஞ்சமெலாம் இயற்றுகின்ருர் பண்ணுத கொடுமையெலாம் பண்ணுகின்ருர்
பகராத பழிச் சொற்கள் பகருகின்றர் பெண்ணுசை மண்ணுசை பொன்னின் ஆசைப்
பேய்பிடித்துப் பொருமையெனும் நோய்பிடித் துக கண்ணுரக் காணுெண்ணுக் கலகம் செய்வார்
கடவுளே யிவருக்குங் கதியுண்டாமோ? 147
அறமான கோட்டையினை அழிக்கின்ருர்கள்
அதர்மமே தொழிலாகி அமைகின்ருர்கள் திறமான நீதிவழிச் செல்லுவோரைத்
திட்டுகின்ருர் தெய்வத்தை நிந்திக்கின்றர் புறமான நாத் திகத்தைப் போற்றுகின்ருர்
பொருமையினல் வஞ்சனைகள் புனைகின்ருர்கள் அறிவான மெய்நூலை எரிப்பார் அந்தோ!
ஆண்டவனே இவர் திருந்த வேண்டுவேனே!
கதறுகிறேன் கசிந்துருகிக் கண்ணிர் விட்டுன்
கருணையெனக் காக்குமெனுந் துணிவு கொண் * (டேன் சிதறியழி மாந்தரைநல் லான்ம நேயச்
சிற்சபையில் ஒன்ருக்கிச் சேர்ந்து வாழ உதவுமொரு தொண்டுசெய வுயிரும் ஈவேன்
உயிர்க்குயிரே களைகண்ணே உண்மை யன்பர் பதறுகிற போதபய மீந்து காக்கும்
பரம்பொருளே என்னப்பா பணிகின்றேனே!
 

- 179
ஆர்வக் குமுறல்
தாயறியாச் சூலுண்டோ தந்தாய் நீயென்
சங்கடத்தை யறியாயோ சாற்றிக் கேட்க வாயில்லேன் உனையறிய வகையு மில்லேன்
வந்துநீ சிந்தையிலே தந்தா லன்றி துரயவருட் டிறமறியேன் சுத்த ஞானச்
சுடரொளியே எனக்குவழி துலக்கி யாளாய் நீயறியா நானுண்டோ? நின்பணிக்கே
நிலவுலகில் என்னை நீ நியமித் தாயே! 150
உலகமெலாம் உன் பெயரை ஒதவேண்டும்
உள்ள மெலாம் உன்கோயி லாகவேண்டும் சலசலத்துத் தாவிவரும் அருவி போலுன்
சக்திநதி யென்னுள்ளே தழைக்க வேண்டும் கலகமெலாந் தீர்ந்த மனக் கருணை கொண்டுன்
காவலிலே மாந்தரெல்லாம் வாழ வேண்டும் இலகுபரா பரனேயுன் இரக்கத் தாலே
இன்னுலகம் பொன்னுலகா யிலகச் செய்யே.
பலசாதி மதவேறு பாடு நீங்கிப்
பகையச்சம் பழிநீங்கிப் பாபம் நீங்கி, நலமான தொண்டுகளை நாடு செய்து
நானென்னும் அகந்தைவெறி நாயை ஒட்டி உலகமெலாம் ஒருகுலமாய் வாழ வேண்டும்
உனையறிவா யுயிர்க்குலங்கள் வணங்கவேண்டும் நலவழியைக் காட்டியெனை நடத்த வேண்டும்.
ஞானனந் தப்பொருளாம் வானே போற்றி!

Page 98
- 180
பக்தி பரவசம்
எம்மாயத் துன்பங்கள் இடர் செய் தாலும்
இறப்பென்னும் இருட்கணவாய் எதிர்நின்ரு
இம்மாந்தர் இகலென்ளை வாட்டி னுலும்
எதிர்ப்புடனே ஏமாற்றம் எதிர்சூழ்ந்தாலும்
வெம்மாயப் பாசங்கள் வெருட்டி னலும்
வேதனைகள் எனைவந்து சோதித்தாலும்
உன்வாய்மை வழிநடப்ப துறுதி சொன்னேன்
உயர்பொருளே ஒளிகாட்டி உய்விப்பாயே!
மாசான மனமாய வஞ்சத் தாலே
வலைப்பட்டுப் பாருயிர்கள் வருந்தக் கண்டேன்
கூசாது காமவெறி கொண்ட தூர்த்தர்
கோதையரைக் கற்பழிக்கும் கொடுமை கண் - (டேன் தேசமெலாம் கள் வெறியும் கத்திக் குத்தும்
திருட்டுருட்டு வேலைகளும் செருவுங் கண்டேன் ஈசனே புவிக்கெல்லாம் இறைவா போற்றி
இவ்வுலகம் உய்நெறியை இலக்கு வாயே! 154
எனையறிவார் உனையன்றி எவருமில்லை
ஏழைக்குன் இரக்கமலாற் புகல்வே றில்லை உனையன்றி வேறுயர்ந்த பொருளு மில்லை
உலகிற்குன் கருணையலால் உய்வு மில்லை தனையொவ்வாத் தனிக்கருணை வள்ளால் உன்னைத் தஞ்சமடைந் தேனை நீ தயைவைத் தாளாய் மனேவிரிவாம் உலகமன மாசுதீர
வழிகாட்டி நடத்திடுவாய் வானே போற்றி!
(லும்

-181
ஆர்வக் குமுறல்
பிழைப்பிற்குப் பஞ்சமிலை பெரிய வானம்
பெயுமட்டும் வளமுண்டு நிலமும் உண்டு உழைப்புதவும் பலன்களை நாம் ஒருமித் துண்போம் உழையாமல் யாருக்கும் உணவிங் கில்லை செழிப்புறவே பொதுநலமாம் தொழிலே நன்ரும் தினந்தோறும் தியானமுடன் வேலை செய்வோம் தழைப்பதற்கே தாளாண்மை செய்வோம் என்றுந் தளராது வேளாண்மை செய்வோம் நாமே!
ஆர்வாழ்வும் சதமில்லை அவனி தன்னில் ஆருயிரோ டுள்ளவரை அன்பேயாகி
ஊர் வாழ உயிர்வாழ உலகு வாழ
உற்ருர்பெற் ருர்வாழ உதவ வேண்டும்
பேர்புகழின் வேடுவனுய்ப் பேதுரு மல்
பிறந்தவினை யறிந்தாற்றிச் சிறந்த வாறு தேர்ந்து சரியை கிரியை யோக ஞானத்
திருநெறியால் அருட்சித்தி சேர்வோம் வாரீர்!
வீணுன சடங்குகளைப் பெருக்க வேண்டாம்
வெவ்வேறு சாமிகளால் விளைபோர் வேண்டாம் மாருத சாதிமத மயக்கம் வேண்டாம்
மனமலைந்து புறந்திரியும் வழக்கு வேண்டாம் ஆணுகிப் பெண்ணுகி யாவு மாகி
அகிலமெலாம் ஒன்ரும்சுத் தான்ம நேயம் பூணுது பொய்வேடம் புனைய வேண்டாம்
பொதுவழியில் பொதுப்பொருளைப் புல்லு (βόλι Τ (31 Ο Ι 5 8

Page 99
-182.
பக்திபரவசம்
நன்மறைகள் சொல்லு நடுப்பொருளாம்; வேத நாதவிந்து கலேகடந்த சத்தாம்; என்றும்
தன்மயமாம் தன்னிலை நின் றருளால் ஐந்து
சகத்தொழில் செய் தாக்கற்ற தனியாம் தன்
(பால்
அன்புறுதி கொள்ளறிஞர்க் கமுதாம்; சச்சி
தானந்தக் கனிரசமாம்; அருந்து வோர்க்கே
இன்பவெளி காட்டியருள் இரவியாகும்
இதயத்தில் அகமக மென் றியங்கும் ஒன்றே!
எழுத்தாலும் வாயாலும் இயம்பொ னுதாம்
எள்ளை மலை யாக்கியினம் பிரித்துப் போர்செய் கொழுத்தமன மாயத்தை ஒழித்த பேர்க்குக்
குளிர் அருவிப் பாட்டொலிக்கும் சக்திக் குன் - (n?ம் அழுத்தமாய்ச் சொல்லுகிறேன் யானும் நீயும்
அகிலமெலாம் அப்பொருளின் ஆட லாகும் வழுத்த ஒரு சொல்லுண்டோ? மனமும் உண்டோ? மனமிறந்த தியானத்தால் வாய்க்கும் அஃதே.
என்றெப்வம் உண்மையறி வின் பத் தெய்வம்
இதயவெளி எழுந்து நட மியற்றுந் தெய்வம் கன்றைத்தாய் காப்பதுபோல் கருணை பன்பர்
கடைத்தேறக் காப்பாற்றும் கருனைத் தெய்வம்
ஒன்ருகி அருட்பலவாய் ஒளிருந் தெய்வம்
ஒதுமறை ஒமென்னும் உயர்ந்த தெய்வம்
என்றென்றும் எல்லார்க்கும் இனிய தெய்வம்
இருந்த படி யிருந்துலவும் இயற்கை யாமே 161
து

- 183
ஆர்வக் குமுறல்
சூரியனுக் கொளியாகச் சுடருந் தெய்வம்
தூயவுளக் கண்ணுடி துலக்குந் தெய்வம் பேர்வடிவப் பேதமிலாப் பெரிய தெய்வம்
பெருகுமத வாதங்கள் பேசாத் தெய்வம் நேராகச் சக்தியினல் நிலவுந் தெய்வம்
நெஞ்சத்திற் கோயில் கொண்டு நிற்குந் தெய் (வம் ஒராமல் அன்னியத்தை உணருந் தெய்வம்
உள்ளத்தில் உள்ளபடி உள்ளதாமே. 162
தானேதா னுயிருக்கும் தனித்த தெய்வம்
சர்வாத்ம வடிவான சக்தித் தெய்வம் நானுகி நீயாகி நடுவு மாகி
நானுபா வங்களிலும் ஒருமை யாகித் தேனுகிப் பாலாகித் தீஞ்சா ருகித்
தெவிட்டாது தியானத்தி லினிக்குந் தெய்வம் மோனத்தில் உணர்கின்ற முழுமை யின்பம்
மூலசக்தி யாகஒளிர் முதல்வ னுமே! I 63
அடலரிய மனக்குரங்கை யடக்கி னலே
அமைதிவரும் என்றெண்ணி அன்பரானேர் திடமுடனே சிவவிஷ்ணு பக்தி செய்வார்
தீர்த்தமுடன் மூர்த்தி தலம் சேவிப் பார்கள் உடல்மடக்கிக் குடல் கலக்கி மூச்சைக் கட்டி
உரையடக்கி உணவடக்கி மலைகான் ஒடி அடராச யோகங்கள் அமர்ந்து செய்வார்
அவற்ருலே நாடிசுத்தி யாவ தாமே! 164

Page 100
-184
பக்தி பரவசம்
இயல்பா மூச்சினைஓம் சுத்த சக்தி
என்றெண்ணிக் கவனித்தால் பிராணுயாமம் செயலான பலனுகும் சித்தம் ஊன்றும்
செயல்வினையைத் தெய்வநிவே தனமேயாக்கிப் " பயனுள்ள பொதுநலங்கள் பரிந்து செய்தால்
பார்வடிவாம் பரமனருள் பெறுத லாகும் அயலெண்ணு துள்ளத்தில் அடங்கி விட்டால்
அதுவான பரம்பொருளை அறித லாமே. 165
நானுனனென் றகங்கரிக்கும் நச்சுப் பேயாம்
நலந்தீதில் அலைகின்ற நாசப் பேயாம் போனதையும் வந்ததையும் பேயாம்
பொல்லாத குரங்கு மனப் போக்கடங்கி தானுன தலைவனடி பணிந்து நின்ருல்
சகவிவகா ரங்களறச் சாந்த மான மோனனந் தக்கடலின் மூழ்கி மூழ்கி
முத்தான ஞானத்தை முகக்க லாமே. 166
இது
பதரான நாருரித்துப் பகுத்தே ஒட்டைப்
பருப்படையும் பாங்காகப் படர்ந்த சித்தப்
புதர்நீக்கிப் பொய்யகந்தை ஒட்டை விட்டே
பொருளான தனையறிந்து பொருந்தலாமே
அதுமயமாய் அனைத்தினையும் காண லாயின் Ys"
அவனியெலா ந் தானென்றே காண லாகும்
பொதுவினிலே ஒருமித்து வாழு கின்ற
பூரண வாழ் வெய்து மிந்த போதத்தாலே. 167
 

-185
ஆர்வக் குமுறல்
பாழான பகையின்றிப் பொருமை யின்றிப்
படுநாசப் போரின்றிப் பங்க மின்றிச் சூழுலகம் சுத்தான்ம சித்தி பெற்றே
சு கந்தரமாய் முன்னேறும் சூட்சு மத்தை ஆழ்ந்துள்ளே யறிந்துணரத் தியான மொன்றே
அற்புதமாம் சாதனமாம்; ஆதலாலே வாழுலக நேயர்காள், மனத்தைக் கட்டி
மாசற்ற பரம்பொருளைத் தியானிப் பீரே!
எல்லையிலா உலகை யருட் கோயி லென்போம்
எவ்வுயிரும் எம்முயிரென் றினிதே செய்வோம் தொல்லைசெயும் சாதிமதச் சார்பை நீப்போம்
சுத்தான்மப் பொதுவினிலே ஒத்து வாழ்வோம் அல்லலிலை கலக்கமிலை அச்சமிலை;
அடிமையலோம் நாமார்க்கும் குடியு மல்லோம் நல்ல திருத் தொண்டரெலாம் வாரீர் இங்கே;
நம்பெருமான் பணிசெய்ய நாடுவோமே! 169
உடலிளமை பெறநாளும் உறுதி செய்வோம்
ஊணுறக்க நெறிகாப்போம் உண்மை காப் (போம்
அடலரிய புலன்களை நாம் அடக்கி வெல்வோம்
அறவழியைப் போற்றிடுவோம் ஆவி போலே திடவுறுதி கொண்டுலகஞ் சேர்ந்து வாழத்
தெள்ளியசன் மார்க்கநிலை செழிக்கச் செய் (வோம் கடலருந்தி வான்பொழியும் கருணை போலே
காசினியில் உண்டுதிருத் தொண்டு செய்வோம்.

Page 101
。
-186
பக்தி பரவசம்
பசித்தீக்குச் சுசிருசியாய் உண்ண வேண்டும்
பருகுநீர் சுத்தமதா யிருக்க வேண்டும் புசித்ததனைச் சீரணித்தே புசிக்க வேண்டும்
பொதுமையுறப் புவிப்பொருளைத் துய்க்க வே (ண்டும் வசிக்குமிடம் இயற்கைவளம் பொலிய வேண்டும் வாழ்வெல்லாம் தவயோக மாக வேண்டும்
விசித்திரமாம் ஐம்பூதப் பஞ்சரத்தில்
விளையாடும் பைங்கிளியைக் கொஞ்ச வேண்டும்
கடலேகனி காயரிசி பருப்பையுண்டு
கட்கொலையூண் காமவெறித் தீமையின்றி
நடலையிலா நடையுடனே நாலுபேர்க்கு
நலமாக ஞாலத்தில் வாழவேண்டும் 7
உடலையொரு கோயிலென உள்ள வேண்டும்
உடையானே உள்ளமுற வுணர வேண்டும்
அடலரிய புலன்களை நன் றடக்க வேண்டும்
ஆனந்த ஊற்றினிலே அருந்து வோமே! 172
கார்கலந்த மின்னனைய காட்சியானைக்
கண் கலந்த கதிரனேய காட்சியானே
வேர்கலந்த தினையனைய உலகவாழ்வை
வினைகலந்து விளையாட்டும் சக்திமானே போர் கலந்த தனுகரண புவனபோகம் الخيه
பொருத்தியுயிர் மாசெல்லாம் போக்குவான ஊர்கலந்தும் பேர்கலந்தும் உலவுவானை
உள்ளத்தில் உள்ளமாய் உணருவோமே 173

- 187
17. சிவலோகநாதர் பதிகம்
இராகம் - நேரிசைப் பண்) (தாளம் - ஆதி
அருவமாய் நின்ற ஒன்றே
அன்பரின் அன்பு கொண்ட உருவமாய் ஒளிரும் ஒன்றே
ஒம்சிவ லோக நாதா அருமலர் மாலை போலே ஆருயிர் கூடி வாழத் திருவருள் புரிவாய் போற்றி
திருப் புங்கூர்க் கோயிலானே! 74
என்னுயிர்க் குயிர தாகி
எவ்வுயிர்த் திரளு மாகிப் 》 பொன்னுயிர் மணியைப் போலும்
பூவிலே மணத்தைப் போலும்
சின்மய வுணர்வுத் தேனுய்ச்
சித்தத்தில் தித்தித் தோங்கும்
தன்மயச் சிவமே போற்றி
சச்சிதா னந்த ஜோதி!
。 குறிப்பு;- புன்கூர், ஜீவனும் சிவனும் சேரும்படியான மிக
நுண்ணிய சைதன்ய நிலை.
- The subtle evolutionary point where the soul is in 鬱 tune with the blissful divine.” (golf 361)

Page 102
-188
பக்தி பரவசம்
மண்வளர் வளமை யாகி
மனம் வளர் நினைவு மாகிக் கண்வளர் காண்பா னுகிக்
காணுநல் லியற்கை யாகி விண் வளர் சோதியாகி
வியன் சிவ சக்தி யாகிப் பண்வளர் ஒலியு மான
பழம்பொருள் போற்றி போற்றி!
வான்குடை நிழலின் கீழே மனிதருந் தேவ ராகி
யான் எனதென்ப தற்றே
அன்பினில் அருளு ணர்வில்
ஊன்வளர் மாயக் கூட்டில்
ஒளிவளர் உன்னைக் கூடித் தேன்மலர் போல வாழத்
திகழ்சிவ லோக நாதா !
உலகமெலாம் ஆன்ம நேய
ஒருமை கொண்டுறவு மேவிக் கலகமாம் சாதி வாதக்
கவலைக ளின்றி வாழ நிலவுவாய் சுத்த சக்தி
நேயனே தூய வாழ்வே தலமுயர் திருப்புங் கூரிற்
சதாசிவ லோக நாதா!
I 7 6
· A
17 7
178

-1.89
சிவலோகநாதர் பதிகம்
நந்தனர்க் கருளிச் செய்த
ஞான மாச் சோதி வள்ளால் இந்த மா வுலகிற் சாதி
யினமுறு கலக மின்றித் தந்தைநின் கருணை வான்கீழ்
சராசர மெல்லாம் வாழத் தந்தருள் ஆன்ம நேயம்
சச்சிதா னந்த சோதி! 79
பழகிய வுணர்விற் கூடிப்
பதிபசு கலந்து நிற்கும் குழகிய நிலை யுணர்ந்து
குவலய வுயிர்கள் வாழும் அழகிய சைவ முத்தி
யருள்சிவ லோக நாதா இளகிய நெஞ்சி னுள்ளே
எழும் அருட் சோதி எம்மான் ! 180
வேகமாம் காலத் தேரில்
வேகமாய்ச் செல்லு கின்ற மோகமாம் உயிர்க்கு லங்கள்
முன்வினை மாசு நீங்கித் தாகமாய் உன்னைக் கூவிச்
சரண்புகுந் தன்பு மேவி யோகமாய் வாழச் செய்வாய்
உள்ளொளிர் சிவமே போற்றி! I 8 1

Page 103
190
பக்தி பரவசம்
தெள்ளிய புனல் செழிக்கத்
தீங்கணிப் பொழில் செழிக்கப் புள்ளிசை செழிக்க நல்ல
பூங்குழலிசை செழிக்க að உள்ளிசை ஒம் செழிக்க
யோக ஞானம் செழிக்க வள்ளலே யருளாய் உள்ளே
வளர்சிவ லோக நாதா ! 82
எத்திசை யுலகினிலும்
எம்மதப் பொருளினிலும் சுத்தியும் சிவமு மாகத்
தழைத்தனை கருணை வள்ளால் ஒத்தினி துயிர்க்கு லங்கள் مريم
உன்னி லொன்ருக வாழும் சித்தினைப் புரிவாய் இங்கே
சிவலோக நாதா போற்றி! 1 83
蠶
 
 

- 191
18. காலடியில் சிவசக்தி தரிசனம்
ஆலடி வீற்றி ருந்தே அங்கைமுத் திரையால் அன்று நாலறி வாள ருக்கு ஞானத்தை யளித்த மோனி கோலமே உலகம் உய்யக் குருவடி வாக வந்து காலடி யமர்ந்த தந்தக் காலடி யமர்ந்தேன் யானே.
வாரிதி கலந்த தூய வரநதி யின்பம் போலே பாரதி வித்யாதீர்த்தபகவனக் கலந்துகொண்டேன்
சாரதா சத்தி யின்மேற் சதாரதி யான யோகி
பாரதி ஜீவன் அன்னை ஆரதிப்பயனதாமே. I 84
ஐயநான் ஆயு ளெல்லாம் ஆற்றிய தவத்தி னுலே
தை வெள்ளிக்கிழமை தேவிசாரதா சரண் புகுந்தேன் வையகமெல்லாம் வேதவாழ்வினை வாழ்ந்துகாட்டும் தெய்வபலத்தையிந்து திருத்தொண்டு பரவச் செய்
(வாய் 185 துங்கமாம் இமயத் தேவன் சுருதிசெய் வீணைபோ
(ன்ற) கங்கையைப் போல வேதக் கருத்தினை யிசைத்த (தேவன்
அங்கையின் நெல்லிபோலே அத்வைதஞானம் தந்த சங்கரர் வளருகின்ற சாந்தமா நிலையம் வாழ்க! தேனினும் இனிய சொல்லான் தீச்சுடர் போன்ற (துரய ஞானியென் குருவாய் வந்த நரசிம்மம் வணங்குஞ் V (ஜோதி ஊனுயிர் துடிக்கும் உள்ளக் குகையினில் ஒளிரும் (போதிங் கேணினிக் கவலை யான் செய் தவமெலாம் பலித்த (தின்றே 187

Page 104
- 92
பக்தி பரவசம்
பொங்குயர் மோன வெள்ளம் பூரிக்கப் பொலியும் (வேதச் செங்கதிர்ப் பிழம்பே ஞானத் தீச்சுடர் மணியே! (ஆதி சங்கர பகவன் போற்றும் சனதன தருமம் வாழ மங்கள வேதாந்தத்தின் மழைபொழி முகிலே போ
(ற்றி 188
அவத்தினைப் போக்கி யாசை ஆணவ மாசைப் (போக்கி நவத்திரு வுலக நோயாம் நாத்திகத் தீமை போக்கி சிவத்திரு விளங்கிச் வேன் சின்மயந் துலங்க வேண்
(டித் தவத்திரு வளர்த்தேன் ஆன்ற சத்திய தருமம் (வெல்க 189
நாதவே தத்தின் வேராய் நானெனும் அதுவாய் உள்ளே பேதமில் லாமல் ஓங்கும் பேரின்ப நிறைவா ம் ஒன் றின் போதமாய் விளங்கு கின்ற பூரணக் கதிர் பரப்பும் ஆதிவேதாந்த ஞானம் அருள்சிவசக்தி போற்றி!
அங்கிங்கெ னது பூவில் அவரிவ அதுவெ ஞமல்
எங்குந்தா னேதா னுகும் இயல்நிலை யினிது கண்ட
துங்கவே தாந்தத் தொண்டர் தொகை தொகை யாகச் சென்று சங்கர சிவனைப் போற்றிச் சகமெலாம் பணிசெய் (36 ft (3 p. 19 1
"

(ldر
-193.
காலடியில் சிவசக்தி தரிசனம்
சிலைதரு சிற்பி போலே சிந்தனைச் சிற்பி யாகிக் கலைபெற ஞான தீரர் கணத்தினைக் கணத்திற் கூட்டி மலையரு வியைப்போல், அன்னுர் மாமறை வழங்கு
LÉ) GỗT t u
நிலைபெற வேண்டியிங்கே நிலைதவம் புரிகின்றேனே.
ஆணவ மாயம் போக்கி அன்னிய வலைகள் போக்கி பாணினி பட்டர் பாதர் பகவரின் படிவ மாகக் காணரு குருவின் ஞானக் கலையினைப் பயிலும் அன்பு
மாணவ னுக வாழும் வாழ்வெனக் இன்ப மாமே.
அன்பிலே ஆழ ஊன்றி அழகிய மலர் குலுங்கிப் பொன்பழுத் தமுத மூறும் பூரண வேதாந்தத்தின் பண்புகள் பரவி யிந்தப் பாரெலாம் அமைதி சேரும் இன்பநாள் கண்டபோதே என்னுயிர்க்கின்ப மாமே.
முப்பொருள் விளக்கங் காட்டி முழுப்பரம் பொரு ளைக் காட்டி அப்பொரு ளாடல் காட்டி அதுவுல கென்று காட்டி மெய்ப்பொரு ளது நீ யென்று விளக்கிமுந் நூலைக் காட்டி அப்பநீ அறிவாற் செய்யும் அற்புதம் என் சொல்
வேனே! 195)
பிரமத்தை யறிந்த ஞானி பிரமமே யாகு முண்மை உரம்பெற விவேக சூடா மணியினை வாழச் செய்
GI (7 ulij கரம்பெறு கனியேபோலக் கைவல்யசுகத்தையீவாய் சிரம்பெறு சுத்த சக்தி சிவமயமான ஒன்றே 196
s

Page 105
- 194
பக்தி பரவசம்
இருளர சினிலே துன்புற் றேங்குமிவ் வுலக முய்ய மருளறு மருந்தாய் வந்த மாதவ மணியே போற்றி அருளொளிப் பிழம்பே போற்றி அகமுக குகையி
லோங்கும் குருமணி சிவமே நின்சீர் குலவுக வுலக மெல்லாம்.
*%აყ;
ܐ ܬܪ
 

臀
ஞானமுழக்கம்

Page 106

ஞானமுழக்கம்
ہیوسٹ&yھی چلام چھوٹیخھی ہیں۔ .
1. பரம்பொருளே
மோன மான பரம் பொருளே
மோக சோக தாகமில்லாத் தான மான வுள்ளத்தே
தானென் றெழுந்த சுகப்பெருக்கே வான மான பரவெளியே
வாக்கு மனமு மெட்டாத ஞான மான பொருளே யிஞ்
ஞான மாலை அணிந்தருளே!
2. உயிர்க்குயிர்
எல்லா உயிர்க்கு முயிராகி
எல்லாப் பொருளுந் தானகி எல்லாங் கடந்த தனிமுதலாய்
இலகு முன்னைக் கலந்ததுமே எல்லா வுயிரு மென்னுயிரே
எல்லா வுடலு மென்னுடலே எல்லா மனமு மென்மனமே
ஏக மானபரம்பொருளே.

Page 107
- 196
3. முத்தியின்பம் வேண்டும்
கத்தை கத்தை புத்தகங்கள்
கற்ரு லென்ன? கேட்டுமென்ன? சித்த மடங்கி யுள்ளத்தே
சீவ லிங்கஞ் சிவமாக y பக்தி ஞானம் பயின்றுலகப்
பற்றற் றுள்ளே அருள்பழுத்த முக்தி யின்பம் வேண்டுமையே
மோன மான முதற்பொருளே
4. சுகக்கனலே
அங்கு மிங்கும் அலையாதே
அருகே யமர்த்தி யானந்தம் இங்கே யுள்ள தறியென்றென்
இதயந் தொட்ட சுகக்கனலே எங்கே எங்கே என்பவரை صروس
இருந்த படியே இன்பமுறச் செங்கை நீட்டி அழைக்கின்ற
சிவமே யுன்னைச் சரண் புகுந்தேன்
5. நானேயென்று கிளம்பாதே
நானே யென்று கிளம்பாதே
நலமுந் தீது நாடாதே ஊனே பேணித் திரியாதே
உலகைத் திருத்தப் பாயாதே வானே பாகி வளியொளியாய் 3.
வாரி யாகி வளர் புவியாய்த் தானே யாகி நீயாகித்
தழைத்த ஒன்றை அறிவாயே.
 
 

ܠ ܐ .
- 197
6. சிற்போதம்
முப்பொழுதும் மூவிடமும்
முக்குணமும் முப்பிரிவும் முப்பொருளும் மும்மலமும்
முடமனக் கட்டுகளும் தற்போதத்தே உண்டாகும்
தன்னைக் கண்டு விழித்திருக்குஞ் சிற்போதத்தே இருப்பார்க்குச்
சீவனெல்லாஞ் சிவமயமே.
7. நீங்காப் பற்று
தாங்க வொண்ணுத் தலைச்சுமையைத்
தள்ளி யுனது திருவடியில் ஓங்கும் அமைதி கொண்டுவிட்டேன் ஒன்றுங் கவலை யில்லையினி நீங்க முடியா துன்னை
நீ வேறில்லை; யுனை மறந்து துரங்க முடியா துலகினிலே
துரியா னந்தப் பரம்பொருளே,
8. சுகந்தான்
அகந்தை யற்றுப் போனதுவும்
அழுக்கா ருெழிந்து மறைந்ததுவும் சகந்த னுரடே யாரிடமுஞ்
சண்டை யில்லை; பகையில்லை மிகுந்த காமம் ஒழிந்ததுவும்
வேக மான மோகமில்லை; சுகந்தான் மிச்சம் என்னுள்ளே
சுத்தா னந்தச் சுடரொளியே

Page 108
-198
சத்தே யாகிச் சித்தாகிச் சகசீவ பரங் கடந்து சுத்தாத் துவித தத்துவமாம்,
சுக சொருப மறியாதே | à வைத்த நிலை தப்பி யின்னும்
வந்துழன்று செல்கின்ற பித்த மனப் பின்செல்லேன்
பிரியேன் உன்னைப் பெருமானே!
10. மாமணியே
அகந்தை யென்னும் பேய்ச்சரக்கை
யானு ரென்னும் தடியாலே இகந்து பூர்வ் வாசனைகள் ஏருதிந்த மன மடக்கி, முகந்து கடலை மழைபொழிந்த து"
மூய்ந்து போகு முகிற்குலம்போல் மகிழ்ந்துன் னருளில் மறைந்திடுவேன்
மன்றுளாடு மாமணியே.
11. உபசாந்தந்தா
போகந் தந்த சுகத்தினிலும்
புவியோர் தந்த புகழினிலும் தேகந் தந்த வனப்பினிலும்
செல்வந் தந்த செருக்கினிலும் மோகந் தந்த துயரமொன்றே s
முழுதும் முழுதும் கண்டலுத்தேன்; தாகந் தீர வுபசாந்தந்
தந்தா ளென்னைத் தற்பரமே!
 
 
 

ار
-199
12. 356OT 5 6i) ulu T26JT
கனவில் யானை சிங்கத்தைக்
கண்டு விழிக்குங் கதிபோலே, மனதின் மாயா சாலத்தில்,
வலியச் சிக்கி வசமிழந்தே எனது யானென் றிறுமாக்கும்
இழிந்த நிலையை ஒழித்திடவே, உனது போதந் தனை நினைத்தேன் உண்மை யறிவுக் கேசரியே!
13. மெத்தப் படித்து
மெத்தப் படித்து மேடையிலே,
மேட்டி மையாய்ப் பேசுவதும் சத்தம் போட்டுச் சகத்தையெல்லாம்
தாமே திருத்தக் கிளம்புவதும் புத்தம் புதிய மதமாக்கிப்
புலியை மாற்றப் புகுவதுவும் கத்துக் குட்டி வேலையென்றே
கண்டேன் உன்னைக் கண்டதுமே!
14. சித்தத் திரை
சித்தத் திரையைப் போக்கிமிகச்
சீறும் செருக்கின் முளைபோக்கி மத்தக் கரியைப் போலெதிர்க்கும்
மமதை தன்னை யுள்ளடக்கி செத்துச் சங்கற் பங்களெல்லாம்
சீவ சாட்சி யாயிருந்தாற் சுத்த முத்தி சித்தியெல்லாந்
துலங்கும்; சாந்த நிலையதுவே!

Page 109
-200
15. சிவ குருவே!
வாய்மை யான வாக்கமுதம்,
வளமை யான பொருளினிமை தூய்மை யான சிந்தனைகள்,
சுத்த மான வாழ்வின்பம், நோய் களற்ற உடலுறுதி, நுட்ப மான நல்லறிவு தாய் மனம்போல் அன்புறுதி,
தந்தா ளென்னைச் சிவகுருவே!
16. தித்தித்துள்ளே
தித்தித் துள்ளே யள்ளுறும்
தேனே ஞான வானமுதே எத்திக் கினிலும் உயிர்க்குயிராய் இருந்து கருணை மிகச்சுரந்து முத்திக் கேநல் வழிதிறப்பாய்
முதல்வா உனது திருவடிக்கே பித்தாய் நின்று பிதற்றுகின்றேன்
பேதங் கடந்த பெரும்பொருளே.
17 உருகி யுருகி
உருகி யுருகி உள்ளத்தில்,
ஊற்ருய் ஆர்வத் தடங்கண்ணிர் பெருகிப் பெருகிப் பேச்சற்ற
பெரிய மோன வாரிதியை மருவி மருவிப் பிறநினைவை
மறந்துன் அன்பு பெருகிவளர் அருவி யாக வாழேனே?
அருளானந்தப் பரம்பொருளே,
ܣܛܪ܀
 

-201 -
18. பட்டும் அரக்கும்
பட்டும் அரக்கும் உரசிடவே
பற்றிக் கொண்ட மின்னுெளிபோல் கட்டை தன்னைக் கடைந்தவுடன்
களுக்கென் றெழுந்த கனலைப்போல் நட்டு வார்த்து வளர்த்தவிதை
நாளுங் காட்டும் பசுமையைப்போல் நிட்டை கூடி நின்ஞான
நெருப்பா யிருக்க நீயருளே.
19. ஆளில்லாத மங்கை
ஆளில்லா தமங்கையைப் போல்,
அர சில்லாத குடிகளைப் போல் வாளில்லாத வீரனைப் போல்
வர மில்லாத கவியினைப் போல், தோளில்லாத மாலையைப் போல்
சுடரில்லாத விளக்கினைப் போல் தூளில்லாத பூவினைப் போல் சுத்தா னந்த மில்லாரே.
20. சித்தமே சிவம்!
கள்ளார் பூவின் விருந்தாலே
காடு முழுதும் பூமணமாம் உள்ளார் ஞானமலர் விரிந்தால்
உலக மெல்லாம் அருள் மணமாம் புள்ளார் காலே முகத்தினிலே
பூத்துப் பொங்குங் கதிரவன்போல் தெள்ளார் சித்தஞ் சிவமானுல்
சீவ வுலகுஞ் சிவமயமே.

Page 110
-202
21. தொல்லையற்ற சுகம்
செல்வச் சாலைச் சேவகர் போல்
சேயை வளர்க்குஞ் செவிலியைப் போல் நல்லி சைசெய் வீணையைப் போல்
நாத கான முரளியைப் போல் } எல்லை யற்ற வானகம் போல்
இந்த உலகில் இருப்பவரே தொல்லை யற்ற சுகம்பெறுவார்
சுத்தா னந்தச் சுடரொளியே.
22. தூரிய பரம சக்தி
பெரிய கடலின் ஆவியிலே
பிறந்த மழையைப் பருகியதும் சிறிய விதையி னின்றெழுந்தே
செழிக்கும் பயிரும் உயிருமெனத் துரிய பரம சக்தியிலே a
தோன்றி யிந்த உயிருலகம் 69fflu J 69)rfu 1 6936öTG3u ITTä9)
வெட்ட வெட்ட வளருவதே.
23. இயல்பான என்னை
பிறந்தே னென்று பேசுவதும்
பிறந்த தொல்லை நீங்கிடவே துறந்தே னென்று பேசுவதும்
துன்பப் பிணிகள் பலவருந்தி இறந்தேன் என்று பேசுவதும் ܐܸܬܹܝܬ݂
இயல்பா யிருக்கும் என்னைநான் மறந்தேன் என்று பேசுவதே
மாயாதீதப் பரம் பொருளே
 
 

-203
24. சுருதி முட்டை
சுருதி முட்டை பல சுமந்தே
சோர்ந்து ஞான மலையேறக் கருதிக் கருதிக் கால்சறுக்கிக்
கவலை யேறிக் கிடப்பேனை வருதி வருதி என்றருளின்
பரிதியாக வழி காட்டி இருதி என்றன் இதயத்தே
ன் பங் காட்டி யிருப்பவனே
25. LJ Lğı 56in Lu L6n)ıp
LJl – sålgssit Lil 6vLb L. Jl Gv LDFTull
பாடி யாடிப் பாய்ந்திடினும் திடங்கள் வெள்ளித் திரையிலகும்
தீப சாட்சி என்றிருந்தால் கடங்கள் கோடி நிறைந்தாலும்
கட் டில்லாத காற்றினைப்போல் இடங்கள் உலக நாடகத்தை
இருமை யின்றிப் பார்ப்பவனே!
26. கணபதியே
கண்கள் இரண்டு மலராகக்
கருத்திற் கனிந்து பணிந்தேத்தி எண்கள் நிறைந்த நினைவுகளை
எடுத்து மாலை தொடுத்தளித்தேன் உண்க வென்றன் மனக்கவளம்
உருட்டி யுருட்டி உவந்தளித்தேன் பண்கள் ஈந்து பாடுவித்த
பரம ஞன கணபதியே!

Page 111
-204
27. சும்மா யிருக்கும் சூட்சுமம்
நம்ம திடத்தே நாமூன்றி
நான பாவம் அற்றிருந்தாள் இம்மி யேனும் அச்சமில்லை ܗ
எள்ளி னளவும் கவலையில்லை ம தம்மா லிந்தத் தாரணியிற்
சகல வினையு நடக்குமப்பா சும்மா விருக்குஞ் சூட்சுமத்தைத்
துருவித் துருவி யறிவாயே.
28. அறிவிற்கறிவாம் அறிவு
எதுவே யன்றி யுலக மில்லை
எந்த உயிர்க்கும் உயிர்ப்பில்லை எதுவே யன்றி எண்ண ரிதாம்
இந்த வுலகிற் செயலில்லை பொதுமன் ருடும் பொருளதுவே -്
போதா னந்தக் கடலதுவே அதுவே நானென் றறிவதுவே
அறிவிற் கறிவாம் அறிவாமே!
29. அ லைக்கு மனம்
இல்லை யென்றும் உண்டென்றும்
இனிய தென்றும் கசப்பென்றும் நல்ல தென்றும் தீதென்றும்
நண்ப னென்றும் பகையென்றும் அல்ல தென்றும் ஆமென்றும்
அலைக்கு மனத்தை வேரனுத்தால் எல்லை யில்லா ஒன்றினிலே
இயல்பாய் இருக்க வழியாமே!
 
 
 
 

-205
30. அல்ல வுடலம்
அல்ல உடலம், அல்ல மனம்
அல்ல சித்தம் புத்தியல்ல அல்ல உலகம் என்ருெதுக்கி
ஆர்யான் பின்னே என வினவி நல்ல சுத்த சொரூபத்தை
நானென் றிருக்கு ஞானநிலை வல்ல சகச நிட்டர்களே
வாய்மை யாக வாழ்ந்தவராம்.
31. சாகாப் பொருள்
சாவை நன்முக ஆராய்ந்தால்
சாகாப் பொருளின் அறிவுதிக்கும் யாவு மதுவென் றமர்ந்துவிடின் அன்னி யத்திற் கிடமிலையே பூவும் பூவின் உயிர்க்குலமும்
பூவைக் கடந்த பொருளுடனே யாவுந் தேவும் உன்னுள்ளே
அறிவா யிலகும் அதுவாமே!
32. அவனே நீ
நனவில் யாரே நடப்பவனே
நனவே யற்ற நீண்டதொரு கனவில் யாரே உயிர்ப்பவனே
கன வொழிந்த சுழுத்தியிலே தனை யறிந்தார் சுகிப்பவனே
சத்த7 ந் துரிய நிலையினிலே அனைய தாரென் றறிபவன் யார்
அவனே நீயென் றறிவாயே.

Page 112
-206
33. 6 T6ör 3FM un 6i)
கிளரு நினைப்பை யாரென்றே
கேட்டு வெளியே ஒட்டி விட்டால் வளருஞ் சங்கற் பாதிகளின்
வலிய பாசத் தொல்லை யில்லை குளிரு நீரில் ஆடுமதி
குடைசெய் வான மதி நிழலே மிளிரு முலகம் என்சாயல்
வேருென் றில்லை யென்பாயே.
34. மலை மலையா நிலை
நாமே யிருக்கு நன்னிலையே
நன்ருய் ஊன்றிக் கொண்டிருந்தால்
பூமேல் வண்டு போலவந்தே
புந்தியாதி வாசனைகள்
சகசா னந்த நிட்டரெல்லாம்
மாமேரு மலை போலத்தாம்
மலையா துள்ளே நிலையானுர் .
எதிலே எல்லாம் உதித்ததுவோ
எதிலே எல்லாம் உறைவதுவோ
எதிலே எல்லாம் அடங்கிடுமோ
எதுவே உயிருக் குயிரா மோ
அதிலே மனதைக் கரைத்ததுவே
அகில வுலகம் என்றறிந்தால்
புதிதே இல்லை முதியதில்லை
புறமும் உள்ளும் பூரணமே.
/*

-207
36. தலைச்சுமை
மாண்டு மாண்டு செல்லுவதும்
மாய உலகில் உடல்கொண்டு மீண்டு மீண்டும் வருவதுவும்
மெய்மை உணரா தின்னுமின்னும் ஈண்டு வினைகள் சேர்ப்பதுவும்
இடர்க் குலத்தை எளிதாகத் தாண்ட முடியா திருப்பதுவும்
தன்னை யறியாத் தலைச்சுமையே.
37. தன்னை அகலாதிருப்பதுவே
தன்னை யகலா திருப்பதுவே
தலையாங் கரும முலகினிலே தன்னை யறிவும் அருளறிவே
தலையாம் அறிவாம் உலகினிலே தன்னை யன்றி வேறெண்ணுத்
தனமே துறவாம் உலகினிலே பின்னை யென்ன பெற்ருலும்
பெற்ற தொன்றும் இலையாமே
38. இருக்கும் இடத்தில்
இருக்கு மிடத்தில் இருந்து விட்டால் இரண்டு மில்லை மூன்றுமில்லை தருக்க வாதத் தொல்லையிலை
சாத்தி ரத்தின் சண்டையிலை பெருக்கப் பேசும் சாதனத்தின்
பெயரு மில்லை அகங்கார வருக்க மில்லை தனையறிந்த
வாய்மை யொன்றே வாழ்வாமே.

Page 113
-208
39. ஆசைப் (8Lilii
ஆசைப் பேயை அடக்கிவிட்டால்
அகந்தைப் பாம்பை அடித்துவிட்டால் பாச வலையை பறித்துவிட்டால்
பார்க்கு முலகிற் பற்றுவிட்டால் வேசை மனத்தை வென்று விட்டால்
விருப்பு வெறுப்பை விட்டுவிட்டால் ஈச சீவ சகபேதம்
இல்லை இன்பம் உண்டாமே!
40. காட்டுவானும்
காட்டு வானுங் காண்பானுங்
காட்சி யாய்நல் லறிவனைத்தும் ஊட்டுவானு மாகி யென்றும்
உள்ளே யுள்ள ஒருபொருளே நாட்ட மூன்றி யறியாத
நானுபாவ முற்றுலகோர் வீட்டி லொளிந்த பண்டத்தை
வீதி யெங்குந் தேடுவரே!
41. தன்னை வெல்ல
தன்னை வெல்ல முடியாதே
தடித்த மூடச் செருக்காலே முன்னே யுள்ள உலகாள
முரசு கொட்டிச் சமர்புரிவார் ۔۔۔۔ ι. என்னே கண்டா ரிறுதியிலே ལྟ་
இரத்த வெள்ள மேகண்டார். பின்னே புரியைக் காட்டியெமன்
பேசா திழுத்துச் செலக்கண்டார்!
 
 

. ܝ ܠ ܐܟܠ
-209
42. பொம்மைக் கூத்து
நாக்கைத் துருத்தி இருப்பதுவும்
நாடிப் பாம்பை யாட்டுவதும் மூக்கைப் பிடித்து வருத்துவதும்
முகத்தைச் சிவக்க வைப்பதுவும் யாக்கை நீட்டி மடக்குவதும்
யாரென் றறிந்து மனக்குரங்கின் போக்கை யடக்க மாட்டாதார்
புரியும் பொம்மைக் கூத்துகளே.
43. சுற்றிச் சுற்றி
சுற்றிச் சுற்றிப் புலன்வழியே
சுழன்று சுழன்று மனமயங்கி வெற்றி யென்றுந் தோல்வியென்றும்
விருப்ப மென்றும் வெறுப்பென்றும் எற்றும் புயலில் அகப்பட்டே
இருவி காரச் சுழலினிலே பற்றிப் பற்றி யலைவார்கள்
பாசம் பிடித்த பாரினரே!
44. இருள் உண்டோ
பொன்னங் கனியைக் காட்டியபின்
பூவுக் கங்கே நிலையுண்டோ? இன்னு னிரவி எழுந்ததுவும்
இரவுக் கதன்முன் இடமுண்டோ? பன்னு ளலைந்து பதங்காணப்
பரம ஞான குருமணியுன் முன்னுல் வந்த பிறகிந்த
மூட மனத்துக் கிருளுண்டோ?

Page 114
-210
45. விடுதலையே
எந்த வேலை செய்தாலும்
எங்கே யிருந்து பிழைத்தாலும் அந்த வேலை ஜகதீசன்
ஆணை யென்றே செய்திடுவாய். சொந்த வேலை யில்லாத
சூட்சு மத்தைக் கண்டருளால் வந்த வேலை செய்வாயேல்
வாய்மை யான விடுதலையே.
46. காமரூபப் பேய்
காம ரூபப் பேயடங்காக்
காளி வேடங் கட்டியொரு
நாம ரூப பேதமில்லா
நடுவாம் பொருளை நாடுவதும்
ஆமை ரோமங் கயிருக்கி
ஆகா சத்திற் கேணிகட்டி
ஊமை சொல்ல முடமே
உயரச் செல்லுங் கதையாமே.
47. உன்னு HöðT Han LD
வந்த தோடு போனதையும்
வாத னைப்பட் டெண்ணுதே சிந்தை யாதி கரணங்கள்
சேட்டை யடங்கி நின்றிடவே பந்த பாச வினையொழியும்
பரம துரியச் சுடர் விளங்கும் அந்தச் சுடரே உன்னுண்மை
அறிவாய் உள்ளே அறிவோனே
h
 

-211
48. தற்போத ஒழிவு
கற்போற் குகையி லசையாமல்
கற்ப கால மிருந்திடினும் விற்போ லுடலை வளைத்திடினும்
வீர வேலை செய்திடினும் அற்பு தங்கள் காட்டிடினும்
அவதா ரப்பேர் பெற்றிடினும் தற்போ தத்தை ஒழிக்காதார்
சாந்த மெய்த மாட்டாரே.
49. வழியாமே
ஆச னங்கள் போடுவதும்
அட்சா தனங்கள் பயிலுவதும் வாசி தன்னைக் கட்டுவதும்
வாயின் மோனங் காப்பதுவும் பூசை செய்து துதிப்பதுவும்
புண்ணி யங்கள் செய்வதுவும் ஆசை மனத்தை அலையாமல்
அடக்கி வைக்க வழியாமே.
50 உடம்பென்று
உடம்பென் றுன்னை நினைக்குமட்டும் ஒதி யுணர்ந்தும் பயனில்லை அடங்கள் புரிந்தும் பயனில்லை
அகங்கா ரங்கள் கிளம்புமட்டும் விடங்கொள் அரவு போலவரும் விடய நாற்றம் உள்ளவரை இடங்கொள் சுத்த சுதந்திரத்தில்
இன்ப மெய்தல் முயற்கொம்பே,

Page 115
-212.
51. அறிவானந்தம்
பொறிக ளடக்கி மனமடங்கிப்
புத்தி யடங்கிப் புறஞ்செல்லும் வெறிகள் அடங்கிப் புகழ்விரும்பும்
வேட்டை யடங்கிப் பொய்ச்சமய நெறிக ளடங்கி நானென்று
நினைவு மடங்கி யுள்ளத்தே அறிவை அறிந்தங் கறிவானால்
அறிவா னந்தம் பெறலாமே.
52. ஆணவமே
முகத்தைப் பூசி மினுக்குவதும்
மூன்று பாஷை நூலறிவால் சகத்தைப் பேசி மயக்குவதும்
தருக்கஞ் செய்யக் கிளம்புவதும் அகத்தை யடக்க மாட்டாமல்
அறிந்த தாகப் பிதற்றுவதும் சுகத்தைக் காண முடியாது
தொல்லை செய்யும் ஆணவமே.
53, அதுவே நீ
சகவுடலத் தற்போதஞ்
சாராது சகமதாய்ச் சுக்கனமாய்ச் சொல்லிறந்த
துரியமகிழ் வானமுதாய் தகரவியன் பாழ்வெளியாய்த்
தான்மயமா யுன துள்ளம் அகமகமென் றாடுதுபார்
அதுவே நீயென் றறிவாயே!

-213
54. சொக்குப் பொடி
கருசேர் வினையைக் கரைக்காமல் ககன குளிகை பண்ணுவதும் குருநா னென்று சீடர்களைக்
கூட்டி யமளி செய்வதுவும் முருகன் கண்ண னெனநீண்ட
முரசு கொட்டி வருவதுவும் சொரூப ஞான மில்லாதார்
சொக்குப் பொடி யென்றறிந்தேனே,
55. திரியா யானென்
சடமா முடலில் யானில்லை
சமயச் சரக்கில் யானில்லை
இடமா முலகில் யானில்லை
எங்கே யலைந்தும் யானில்லை
அடமா மாசை யாணவத்தை
அடக்கிப் பார்வை யுள்ளொடுக்கித்
திடமா யிருக்குந் தீபநிலை
திரியா யானென் றறிந்தேனே,
56. தூண்டாச்சோதி
ஆண்டா னடிமை யாவதுவும்
அன்புத் தீயில் உருகுவதும் வேண்டாப் புவியைத் துறப்பதுவும்
வேகப் புலனை யடக்குவதும் தாண்டா மனையைத் தாண்டுவதும்
தன்னை யறிந்து தானகித் - துரண்டாச் சோதி மயமாகிச் ܘ ܐ ܐ ܢ ܀
சுத்தா னந்தங் கண்டிடவே.
鬣
འོང་

Page 116
-214
57. அடங்கிய மோனம்
கடபடவென் றேயுருட்டிக்
கால மோட்டுங் கலைவேண்டேன் உடலுலக முண்மை யென்றே
உளப் பொருளை மறக்கின்ற } படபடத்த பணி வேண்டேன்
பற்றில்லாத பார்ப்பானுய் அடங்கி நிற்கும் மோனமதே
ஐந்தொழிலின் வேண்டுவனே!
58. கண்ணுறங்கி
கண்ணு றங்கிக் கருத்துறங்கிக்
கனவு றங்கிக் கருத்தலையும் மண்ணு றங்கிப் போனுலும்
மனதைக் கடந்த நானுறங்கேன் எண்ணு மைந்து பூதங்கள்
இணைந்த வுடலங்கள் கழன்ருலும் உண்மை யான நானிருப்பேன்
உண்மை யான உண்மையிதே.
*
59. இடத்தைக் கட்டி
இடத்தைக் கட்டி யாண்டிடவும்
இந்த மண்ணிற் பலர் வணங்க மடத்தைக் கட்டி மணிகட்டி
மனித ரெல்லாம் எனதுருவப் படத்தைப் பூசை செய்திடவும் ལྗོན་
பரத்தை மறந்து வீணுகச் சடத்தைப் பூசை செய்திடவுந்
தாளே, வேண்டேன் சத்தியமே!
 

ܝܼ ܠܼܲܢ ܬܐ.
-215
60. மயக்கொழித்த முனிவர்
மையுறையு மாதர்விழி
மயக்க மொழிந்த மாமுனிவர் கையுறையுங் கேளார்கள்
காலில் விழச் சொல்லார்கள் பையுறவைப் பாரார்கள்
பாரபட்சஞ் செய்யார்கள் பொய்யுறையைக் கிழித்துன்னுள்
பொலியு முண்மை காட்டுவரே !
6 . எனது தேகம்
எனது தேக மென்பதுவும்
என்ன தில்ல மென்பதும் எனது சீடர் என்பதுவும்
இதுவென் சொந்த மென்பதுவும் தனதே உண்மை என்பதுவும்
தனக்கே வணக்கம் தேடுவதும் மனது செய்யு மாயமென்பார்
மாரு ஞான மன்னர்களே!
62. ஞான வரன்
ஊனைப் போட்டு மீன்பிடிக்கும்
உபாயம் போலிவ் வுலகினிலே தேனைப் போலப் பேச்சுதிர்த்தே
சீடர் பிடிக்கும் வலைஞருண்டு மோனக் கள்ளர் பலருண்டு
முத்துக் குளிக்கு முயற்சியைப்போல் தானே தன்னுட் சென் ருழ்ந்தே
தானு யிருப்பவன் ஞானவரன்

Page 117
216
63.
முக்கு ணங்கள் போராடி
மோது கின்ற கருங்கடலில் திக்கெ துவும் அறியாதே
திண்டாடும் உயிர்ப் படகைப் பக்க முள்ள துறைகாட்டிப்
பரிவொ ளிரும் விளக்கனையார் எக்கு ணமும் இல்லாமல்
இருந்த படி இருப்பவரே
64. உண்மை வாழ்வு
பொன்றும் பொருளை நாடாமல்
போக்கு வரவைத் தேடாமல் கொன்றுண் பவரைக் கூடாமல்
கோபத் தீயிற் குதியாமல் என்றும் உள்ள பொருளினையே
யென்னுள் யானென் றேயறிந்தே மன்றுள் வாழும் பேரின்ப
வாழ்வே உண்மை வாழ்வாமே.
65. இறவாக் கலைஞர்
பெருக்கப் பெருக்கப் பேசியென்னே?
பெரிய நூல்கள் எழுதியென்னே? உருக்க உருக்கப் பாடியென்னே?
உலகப் புகழைச் சூடியென்னே? தருக்க மின்றி வாயடங்கி 1 ܐܝܼܪܕ
தன்னுள் மூழ்கிச் சலனமின்றி இருக்கும் பேறு பெற்றவரே
இறவாக் கலையைக் கற்றவராம்
 

ܜܢ
-21 7
66. தம்முள் நினைத்தார்
நின்று மிருந்தும் கிடந்துமிந்த
நிலையி லுலகி லெங்கெங்கே சென்று காலம் வேண்டுவினை
செய்தும் பட்டுக் கொள்ளாதே நன்று தம்முள் ளேநிலைத்த
நல்லோ ரில்ல றத்திருந்தும் வென்றி வீரன் வாளினைப்போல்
விகார மில்லா திருப்பாரே
67. தலைச்சுமை
பொன்னைக் கண்டு பொன்னியும்
போகங் கண்டு போகசு கப் பெண்ணைக் கண்டு, கலைஞானப்
பெருமை கண்டு மயங்காதே உன்னைக் கண்டால் இவையெல்லாம் ஊமை யாகித் தலைகுனியும் தன்னைக் கண்ட பரமுக்தர்
தாங்கார் உலகத் தலைச்சுமையே!
68. முக்திக்கேற்ற முடிபு
முற்றுக் கொடுத்தே சரணடைந்து
முதல்வன் பாதப் போதினையே பற்றிப் பற்றிக் கதறுவதும்
பாடிப் பாடி யாடுவதும் அற்றுப் பந்த பாசங்கள்
அகந்தை யற்றுச் சுத்தமன முற்றுத் தன்னுள் அடங்குவதும்
முத்திக் கேற்ற முடிபாமே.

Page 118
-218
69. விழித்தேனே
குருவாய் நின்று மொழிவதுவுங்
குறிப் புணர்த்தி வழிகாட்டி யருவாய் நின்று விளக்குவதும்
உரையு மனமுங் கடந்துணரும் அருவாய் நின்றே கலப்பதுவும்
ஆத்மா வென்றே அறிந்தவுடன் வெறுவாய் மெல்லும் வித்தையெல்லாம்
வீணெ ன் ருெதுக்கி விழித்தேனே!
70. சகஜ சித்தி
தினைத்து னையும் பேதை மனந்
தீண்டா துள்ளே தியானித்தே அனைத்து மான்மக் கடவுளென்றே யானு மதுவே யாவனென்றே நினைத்து நினைத்துப் பழகிவிட்டால் நின்ற நிலையே நிலையாகித் தனைத் தவிர்த்து வேறில்லாச்
சகஜ சித்தி அதுவாமே!
p
71. சகத்திற் கமைதி
கனவி னுடலை மறப்பதுபோல்
கண்ணை விழித்து வாழ்கின்ற நனவில் உடலை நானென்னும்
நரவு ணர்வை மறந்து மனத் தினவில் லாது சித்தத்தே
திரையில் லாது திடமான தனது நிலையிற் ருனிருந்தால்
சகத்திற் கமைதி தரலாமே.
ܓܠ ལྷའི་སྐུ་
 

-219
72. கார்த்திகை
நானு வுலகின் மருளற்ருர்
நாதங் கடந்த துரியவெளி மோனுகார மாய் விளங்கும் முக்திச் சிகர மலையேறி நானு ரென்னும் தகழியிலே
நான் நான் என்னும் திரிமயக்கி ஞான ஒளி யேற்றுவதே
நல்ல தொரு கார்த்திகையாம்.
73. யோக சித்தி
மோன மென்னும் ஆழியிலே
மூழ்கி யுலக முயிர்இறையாம் ஆன மூன்று நிலையின்றி
ஆண்பெண் பாவின் உணர்வின்றி ஞான வெள்ள நிறைவாகி
நானு தியா உபசாந்தந் தானே யாகித் தழைப்பதுவே சகச யோக சித்தியதாம்!
74. அது சுகமே
சுற்றித் திரியு மனக்குரங்கைச்
சும்மா விருக்கச் செயும்வித்தை கற்றுத் தெரிந்து சித்தத்தைக்
கட்டத் தெரிந்துள் ளமைதியினைப் பெற்றுத் தெளிந்து பேசாத
பெருமை யடைந்து முக்குணங்கள் அற்றுப் பற்று மற்றின்றி
அறிவா யிருக்கும் அதுசுகமே.

Page 119
را به بین
-220
75. யோகப் பயிற்சி
கள்ளச் சிந்தை களைவிடுத்து
காமம் வெகுளி யச்சமின்றி மெள்ள மெள்ளப் புலன் மனத்தை
வேகங் குறைத்து மோகமின்றி உள்ளே யுழைக்கக் கற்பதுவே.
உண்மை யோகப் பயிற்சியதாம் அள்ளி அள்ளிப் பேரின்பம்
அளிக்கு மதனை யாரறிவார்?
76. ஆத்மா யான்
ஆத்மா யானென் றறிவதுவே
அறிவிற் கறிவா மறிவாகும்
ஆத்மா உண்பைய என்பதுக்கு
யானுமி உணமை யாவதுவாம
ஆத்மக் காதல் வளர்ப்பதுவே
அன்புக் கடவு ளன்பாகும்
ஆத்மா யானென் றிருப்பதுவே
ஆனந் தத்தின் வீடாமே!
77. எனது வீடு
வஞ்ச வுடலின் புரைதாண்டி
வளரு மாசைத் திரைதாண்டி
நெஞ்ச மலையைத் தாண்டியெழும்
நினைவுப் படலந் தாண்டியபின்
பஞ்ச கோசச் சுவர்தாண்டிப்
பார்க்கும் உலகப் படர்தாண்டி
எஞ்சி நிற்கும் உளம்தாண்டி
எனது வீடு சேர்ந்தேனே!

-221
78. எரிந்த தாம் பு
பொரிந் தெழுந்த பொய்யகந்தை
புறத்தே ஒழிந்து மனமாயங் () கரிந்து போகக் சுண்டுவிட்டாற் ') கவலை யில்லை, யச்சமில்லை
எரிந்த தாம்புக் கயிற்ருலே
யெதையுங் கட்ட முடிந்திடுமோ? அறிந்த மனத்தின் அகவுணர்வும்
அவ்வா றுன்னைத் தளைக்காதே!
79. g. 665 ust 65
மண்ணுகு முடலல்லேன்
DTu L'IG). Itu p60T Lpoi) (36)6T
புண்ணுகும் வினையல்லேன்
புவியல்லேன் புகழில்லேன்
எண்ணுகி யுரையாகி
யெண்ணுயிர்க்கும் அப்பாலாய்
கண்ணுகிக் காண்கின்ற
காண்பான் யானென் றறிந்தேனே,
அமர நிலைமை யாவதுவும்
அமுத பானம் செய்வதுவும்
நமனை வெல்லுந் தந்திரமும்
நாட்டந் தன்னை யுட்குவித்தே
தமதா மிதயப் பரம்பொருளே
தாமே யென்றங் கறிந்தடங்கும்
அமைதி யின்ப மொன்றேகாண்
ஆர்வ முள்ள நன்நெஞ்சே!

Page 120
-222
81 இலே ஞானி
காலமிடங் காரணங்கள்
கற்பனைகள் இவைகடந்தே
கோலம்பல கொண்டாடுங்
குணதொந்த வினைகடந்தே
ஞாலமெனுந் திரைகாட்டும்
நாடகமெல் லாங்கடந்தே
சீலமுள்ள ஞானிதன்னுட்
சிற்சுகமாய் இருப்பவனும்
82. புனலிற் படகு
புவியினிலே தாமிருந்தும்
புனலினிலே படகினைப்போல் எவரிடையும் சிக்காமல்
இருவினையிற் பற்ருமல் சவவுடலை நம்பாதே
தற்போத மிழந்திருக்கும் அவரேயுள் ளுண்மையினை
அறிந் தடங்கும் பெருந்தகைய7ர்.
83. கற்றழைக்கு
பற்ரு துள்ளப் பரம்பொருளைப் பாரா துள்ளே பார்ப்பவனை ܐ ܕܠ ܐ முற்ரு தறிவின் மோனநலம்
முயலா தான்ம முக்தியினை இற்றே யுலகைத் திருத்திடுவோம்
என்றே பாயு முயற்சியெலாம் கற்றழைக்கு முட்பிடுங்கிக்
காயங் கட்டும் கதையாமே.
 
 

-223
84. grın LDI இரு
ஏறி இறங்கும் அலைபோலே
இருட்டி விடியு நாட்போலே மாறி மாறிக் காலவினை
மண்ணில் விளே யாடுதப்பா கூறும் பிரமன் பானைகளைக்
கூற்ருர் உடைக்குங் கொள்கையினை மீறி யுலக மில்லை யப்பா
விருப்பு வெறுப்பற் றிருசும்மா!
85. பிட்டுப்பிட்டு
முன்னே செழித்த தமிழகத்தை
மூரி யுண்டு தேக்கெறியும் முன்னே வாழ்ந்த நாகரிகம்
முகிஞ்ச தரையின் புதைபொருளாம் இன்னே முளைத்த புதுமைகளும்
இனிமண் ஞகிப் பழையனவாம் பின்னே காலம் வந்துலகைப்
பிட்டுப் பிட்டு விழுங்குதப்பா!
86. பழுதில்லை
திங்க ளுக்குங் கறையுண்டு 。
தேவ ருக்குங் குறையுண்டு செங்க திர்க்கும் வீழ்வுண்டு
செகத்தி னுக்கும் அழிவுண்டு தங்கத் திற்கும் பழுதுண்டு
தானே தானும் மோனமுனி புங்க வனின் உபசாந்தப்
பொலிவிற் கென்றும் பழுதிலையே.
ୋ;

Page 121
-224
87. gro Lost (og 6)
மங்க லமும் மாரடிப்பும்
மணப் பறையும் பிணப்பறையும் பொங்கு கின்ற புகழிசையும்
புல்லர் சொல்லும் இழிவசையும் கங்கு லுடன் பகலும்போற்
கால வுலகைக் கலக்குமப்பா திங்க ளைப்போற் செங்கதிர்போற் சிரித்துச் சும்மா செல்வாயே!
88. புல்லாச்சே
முத்த ளேயிற் பட்டுக்கொண்ட மூட மன வுலகினிலே செத்த வரை எழுப்பிடுவோம்
தேகத்தைப் பொன் னுக்கிடுவோம் இத்த லத்தில் வானகத்தை
இறக்கிடு வோம்எனப் புகன்ருர் எத்த னையோ சித்தர்களும் -
இருந்த இடம் புல்லாச்சே
89. தீவினைகள்
உண்ணச் செய்யுந் தீவினைகள் உண்ட பிறகு மதமேறிப் பெண்ணே யென்னும் பெருங்காமப் பித்தர் செய்யுந் தீவினைகள் கண்ணே செய்யுந் தீவினைகள் ཀྱི་
கருத்தைப் பற்றுந் தீவினைகள் கண்ணே கண்ணே காணுயிக்
காலம் உண்ணும் வினையுலகை.
 
 
 

- 225.
90. சிரிப்பு
மண்ணு லாகி மட்குடம்போல்
மண்ணுய் முடியும் உலகினிலே கண்ணிற் புத்தி விட்டுமதி
கலக்கி ஆளைச் சீரழிக்கும் பெண்ணிற் புத்தி விட்டு வீண் பேச்சுப் பேசி யிறப்பவரை எண்ணி எண்ணி எனக்குநிதம்
எரிப்புஞ் சிரிப்பும் வருகுதையே!
91. உன்னுள் என்னை
தன்னைப் போலே பிறரென்றே
தத்துவங்கள் பேசியுடன் என்னைப் போலே யாருமில்லை
எனதே உண்மை என்னுதே முன்னே நின்று முழுப்பொருளை மோன மாகக் காட்டுகின்ற உன்னைப் போல யானிருக்க
உன்னே என்னுள் வைத்திடுவாய்
92. உலகம்மா
பட்டுக் கொண்ட பேர்களை நீ
படுத்தி வைக்கும் பாட்டையெல்லாம் பட்டுப் பட்டுப் பார்த்துவிட்டேன்
பரதே வதையே உலகம்மா கிட்ட வந்தென் முக்தியினைக்
கெடுக்கா தே போர் தொடுக்காதே எட்டி நின்றே விளையாடாய்
இயற்கையான முக்குணமே.

Page 122
-226
93. வருமோ?
கனமாய் வெல்லங் கரைத்தாலும்
கடலிற் பான கம்வருமோ? தனமாய்க் கட்டிக் குவித்தாலும்
தன்னுள் இன்பந் தான்வருமோ? இனமா யுலகம் சேர்ந்தாலும்
ஏகாந் தத்தின் சுகம் வருமோ? மனமா யத்தாற் கற்ருலும்
மாரு ஞான மதி வருமோ?
94. உன்னேத் தவிர
உன்னைத் தவிர யாரிடம்போய்
உரைப்பே னென்ற னுள்ளமெல்லாம் என்னைப் பெற்ற சுத்தசக்தி
யிறைவா, கருணைத் தடங்கடலே பொன்னைப் பெற்ற போகமெலாம்
புளித்துப் போகப் பூரணனும் நின்னைப் பெற்ற பரமசுக
நிட்டையாக நீ வளர்வாய்
95. அங்கு மிங்கும்
அங்கு மிங்கு மலேயாமல்
அதையும் இதையும் பற்ருமல் எங்கும் இருக்கும் சுத்த சக்தி
இறைவா உன் இதயத்தே தங்கி யிருந்து தானன
சகச நிலையிற் கலந்திருக்கும் துங்க மான யோகமருள்
துரியா தீதப் பரம்பொருளே !
 

-227
96. அருவியைப் போல்
நிலை யறியா மனப்பேயை
நின்று நிறுத்தி யுள்ளத்தே கலை வளரும் உள்ளத்தைக்
கவிதை யிலே கட்டவிழ்த்து மலை வளரும் அருவியைப் போல்
வாழ்ந்துன் இன்பக் கடலினிலே அலை புரளும் தூயசச்சி
தானந்தம் ஆக வருள்.
97. காவாய்
அலையா திருக்கப் பேதை மனம் அழியா திருக்க உள்ளன்பு குலையா திருக்க மதிப்பொலிவு
குன்ரு திருக்க தவச்செல்வம் மலையா திருக்க வுலகினிலே
மயங்கா திருக்கப் பொய்மயக்கில் கலையா திருக்க மகதுரியம்
காவாய் இன்பத் தடங்கடலே.
98. இயல்பா யிருக்க
மோகங் கொண்ட வுலகினிலே
மூர்க்க வஞ்சக் காட்டினிலே தாகங் கொண்டுன் வானருளைச்
சரண் புகுந்து கூவுகின்றேன் வேகங் கொண்ட வெம்மாய
வெறிக ளென்னைத் தாக்காமல் ஏகங் கொண்ட உன்னுணர்வில் இயல்பா யிருக்க நீயருளே!

Page 123
-228
99. ஊறிடுவாய்
ஊரார் என்னைப் புறம்பேசி
ஒதுக்கி வம்பு செய்திடினும் பாரா லயத்தின் பெருமானே
பற்றை யெல்லாம் உன்னிடமே பேரா திருக்கச் செய்துநிதம்
பேசி யென்னுள் அருட்கவிதை ஒரா யிரமாய் ஊறிடுவாய்
உயிருக் குற்ற ஒர் துணைவா!
100. ஆன்ம வீணை
பேச்சில் நாளைச் சூதாடிப்
பேரும் புகழும் மிகத்தேடி மூச்சைப் போக்கும் இழிவின்றி
மோனக் குகையில் இனி திருந்தே ஏச்சுக் காட்டும் உலகினிலே
ஏமா ருமல் உன்னருளால் ஒச்சி யான்ம வீணையொலி
ஒமென் றிசைக்க வருவாயே!
101. ஆசைப்பேய்
ஆசைப் பேயும் அடங்காத
ஆண வாதிப் பேய்க்கணமும் தேசைப் பறிக்கும் பெருங்காமத் தீய பேயும் பொறுமையற்ற நாசப் பேய் பொருமையெனும் நரகப் பேயும் பிடிக்காமல் நேசப் பட்டுன் அன்புநிலை
நிற்குந் தூய்மை அருள்வாயே!
 
 
 

-229
102. நீயும் நானும்
நாயைப் போலே வள்ளென்னும் நச்சுக் கோபப் புயலொழிய பாயும் கொச்சைச் சூதொழியப்
பங்கப் படுத்தும் பொய்யொழிய நீயும் நானும் ஒன்ருகி
நீயே உலக வாழ்வாகி வாயைத் திறந்தால் உனைவாழ்த்தும் வரமே யருளென் னுடையானே!
103. பாடிப்பாடி
ஒடி ஒடி உலகெல்லாம்
ஒவ்வொ ருவர் நாட்டினையும் நாடி நாடி நன்ரு க
நலமுந் தீதும் கண்டறிந்தேன் தேடித் தேடித் திரிந்தெல்லாஞ்
சிறுமை யுற்றுத் தேய்ந்ததினிப் பாடிப் பாடி யுனைக்கூடிப்
பரமா னந்த மெய்துவனே.
104. நெருங்க நெருங்க
நெருங்க நெருங்க மாந்தர்களை
நெஞ்சந் தொட்டுக் கண்காணப் பெருங்கோ ளச்ச மழுக்காறு பிரிந்த சாதி மதச்சள்ளை நொருங்குஞ் செல்வச் செருக்குகளே
நூருண்டாகக் கண்டலுத்தேன் அரும்பும் அன்பைக் கண்டிடவே
ஆசை கொண்டேன் அம்மானே!

Page 124
-230
105. நேசங் கனிய
நேசங் கனிய நின்பாலே
நினைவு கனிய நின்னன்புப் பாசங் கனிய அநுபவத்தைப்
பார்த்துக் கனிய நன்மனது ஓசை கனிய ஒளி கனிய
உள்ளங் கனிய உள்ளைந்து கோசங் கனியக் குணங்கனியக்
குணங் கடந்த கனிவருளே!
106. உலகிரே
ஒன்றே கடவுள் என்றறிவீர்
உள்ளங் கூடி உணர்ந்திடுவீர் ஒன்றே எல்லா வுயிர்க்குலமும்
உண்மை யான்ம நேயமுறீர் 。 நன்றே நாடி நலம்புரிவீர் '
நானே நானே யென்னுதீர் வென்றே புலனை ஆண்டிடுவீர்
விரிவான் சூழும் உலகீரே.
107. தாயின் கருணை
தாயின் கருணை காட்டிடுவீர்
தருண மழைபோல் உருகிடுவீர் சேயின் உள்ளத் தெளிவுடனே
சேர்ந்து வாழப் பழகிடுவீர் கோயி லான வுலகினிலே *。
குயில7ர்சோலை எனச் செழிப்பீர் தூய இன்பச் சுடரான
சுத்த சக்தி அருளாலே!

வாழ்த்து
ஆண்மைபெறு வேதாந்த கேசரிகள் வாழ்கவே
அச்சத்தை வென்ற முனிவர் அதுதான் எனக்கண்ட மகரிஷிகள் வாழ்கவே ஆனந்த யோகி வாழ்க! - கேண்மை மிகு கண்ணனுடன் அரவிந்தர் வாழ்கவே
கிறிஸ்து வின்சிலுவை வாழ்க! கிளர்தெய்வம் ஒன்றெனும் நபிநாயகம் வாழ்க
கீர்த்திமிகு புத்தர் வாழ்க! மாண்மையுறு ராமக்ருஷ்ணு திகள் வாழ்கவே
மகாவீர சித்தர் வாழ்க! மகிமைபெறு வியாசர் வால்மீகி ஷேக்ஸ்பியர் கம்பர்
வாக்கிணிமை வாழ்க வாழ்க! சேய்மையை அண்மையிற் காட்டுவிஞ்ஞானிகளின்
செய்ய புலமை வாழ்கவே தேடரிய யோகச் சமாஜத்தின் உயிரான
தெய்வகுரு நாதன் வாழ்க!
ஆத்ம நாதம் முற்றிற்று.

Page 125

ஆத்மநாதம் பிழை திருத்தம்
ந்த அச்சுப் பிழைகளைத் த்திக் கொண்டு (b. ԼՔ (Th
நூலைப் படிக்கவும்.
பக்கம் வரி பிழை திருத்தம்
"ბა, 4. 28 செய்யும் செயும் 5 23 மாழி மொழி 7 28 வானே வாளே I 8 I 8 கால் பகல் 2I 27 கற்பகமும் கற்பமும் 23 22 ஒடுங்சி ஒடுங்கி 26 13 பெரும  ിT !), 82 13 அடியிலே அடிகடியிலே 84. 4. கண்முன் கண்டுன் 92 6 நிலை நினை 915 4. டனிஞ்சு ப்பழம் ஈஞ்சு
(கிசுமிசுப்பழம் ஈஞ்சு சபோடா) 8 யெனை யெனேநனி 98. 14. வடிவம் வடிவும் 1 99 3 யாத்திரை யாத்திர a ፱ 0 ጁ 12 புக மிக
A 07 4. மில்லை மில்லையுன் 5 முன் மன மென்மன I I I I9 வாணும் வானும் 2 4. ருெலி ருெளி I I 4. 1 0 மன்னருண் மன்னருன் I 23 7 முகமே முகம் 1 4 0. 8 யினிதே வினிதே
4 T 24. 6ስ)| Iዳና G) TIL 鲇。 48 4 போற்றி போற்றி போற்றி 50 3. கொண்ட கொண்டு
Gai 661 9 p. 4 றியல்ப 外 இகப்பற இகப்பர % .99 *�ܲܕ
1 5 E 8 நிச்சி ” நிச்சய 16 7 22 Go! TT 55f ff (ITGSIT 67 沮72 6 பரனே பரனேறும்
99. 8 அன்பர் - அன்பா

Page 126
jäUGD
I 75 I 8. 84
186 1 90
192 197
1 98 2O3
ΟΦ foo /
வரி
13 19
9 II 19
9 O 13 结
I 8 14 24
I 4 24
I 2O 18
பிழை
உள்ளத்திலே
LDITO?35
நானுன
வந்ததையும்
ைேர
யுலகினிலும்
பொருளினிலும் அவரிவ
(LDL
பொழிந்த எனற ை திடங்கள் இடங்கள்
நன்ருக
6)jöban)65) u u நானென்று சகமதாய் தான் தாளே உடலங்கள் யிருப்பவன் பருவாய்
என்பதுக்கு தன் 燃
உருகிடுவீர்
CO
திருத்தம்
உள்ளத்தில் LD Π (σου) έ5 நான
வந்ததையும் புரட் (டும்
Gr யுலகானலும்
பொருளானலும்
அவரிவர் €ԼՔ Լபொழிந்து என்றென் திடங்கொள் இடங்கொள் நன்ருய் வலையைப் நானென்ற g- 55F | p35 ITEL தன் தாளேன் gd | I - (GN) 4 s) இருப்பன் யுருவாய ஒளியை என்பதுவே உன்னை உதவிடுவீர்
 
 
 
 
 
 
 
 


Page 127


Page 128