கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறளில் உணர்ச்சி வளம்

Page 1


Page 2
/
-
-
- བྱ་་བར་
-
- κ.
1
м :
- . - . ?$3$ز
*** و يء
ܦ
\
1.
 
 
 
 
 

முதற் புத்தகம்
இரத்தினம் நவரத்தினம், M.A., M.Litt.
சிவ தொண் டன் டிர ஸ்ட்
uusryp Lu Lurr 600TLD
குறளில் உணர்ச்சி வளம்

Page 3
Published by سیر« * Siva Thordan Trust
S.Road .كE . کF . Vannaponnai Jafna.
முதற் பதிப்பு 1958
பதிப்புரிமை பெற்றது
PRINTED IN INDIA AT THE JUPITER PRESS PRIVATE LTD., MADRAS-18
 

%
8,
1
6
1
7.
8.
19.
இன்ன செய்யாமை
nn7 جماهي
4. Z.Z. -s ঋs =
() ------ )مستحضجيجمع في و نه .ഴി பொருள்க்கம் " " سيديسيحيم محرم صحيح
ין ס ക*( அருளுடைமை ès ) ) . ' 9 '~ ஒப்புரவறிதல் స్థాంతాన్ని | || ... 12 : سیاسی வினை த்திட்பம் முடில் 15 ہم و تہہ‘‘ அடக்கமுடைமை ༦༢རྒྱ་ཐོབ་ཐང་། ༢༡ நடுவு நிலைமை . په دي hదీనితీసా. பயனில சொல்லாமை 25 "جمهيديقيه
அறிவுடைமை ebܔܛܠ ܧܵܗ రాకాళి "Ex 29
ܕ ܪ ܐ ܪ܊ f_ நீத்தார் பெருமை '.
ー % ஆ 翠穹 நட்பு 6ே% ༣ ཉལ་༽)ད།༽ y & 35 ஊக்கமுடைமை ( గా ଝୁଣ୍ଟି', +, 39, செய்ந்நன்றியறிதல் / C° இற்42?...
o శ్లో , (* كان يمية "," பொருள் செயல்வகை ... S46 * .
இடுக்கணழியாமை /. 53
இறைமாட்சி اسمه а о в 57 கல்வி ... 61
தீவினையச்சம் ... 64
பொறையுடைமை 68
&
வாய்மை 72
மெய்யுணர்தல் 75

Page 4
{ỳ.
 
 
 
 
 
 

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்
ஒளவையார்
ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிக விளங்கித்-தீதற்ருே ருள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு
மாங்குடி மருதனுர்

Page 5

鬣
மு கவு  ைர
நம் நாட்டு இள மாணவர்கள் வளர்ந்து பெரியவர்க ளாகும்போது, தமது வாழ்வை உயர்ந்த முறையில் நடாத்தி, நாட்டின் சிறந்த குடி மக்களாக வேண்டும். அவர்கள் அவ்வாறு வாழ்வதற்கேற்ற சீரிய பண்பாட்டை அடையச் செய்வது ஆசிரியர்களின் கடனுகும். நமது தமிழ் நூற்பரவையுள்ளே சமுதாய வாழ்வில் எழக்கூடிய பல குறைகளையும், குற்றங்களையும் மக்களாட்சி முறையில் தீர்ப்பதற்கேற்ற சிறந்த கருத்துக்கள் அறிவுரைகள் அடங்கிய நூலாகத் திகழ்வது திருக்குறளாகும். இந்நூல் உலகத்துக்கே ஒரு பொது மறையாக விளங்குகின்றது. இதனுலன்றே புதுமைக்கவி பாரதியாரும்,
* வள்ளுவன் றன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு?
என்று விதந்து பாடுவாராயினர்.
மாணவர்கள் திருக்குறளைப் படிப்பதால் ஆகும் பயன் பெரிது. ஆணுல், அதனை அந்நீதிமொழி வடிவாகவே படிப்பதால் அதன்கண் அடங்கிய சிறந்த நீதிப் பகுதிகளைப் பற்றி இலகுவிலே போதிய தெளிவான விளக்கமுண்டாதல் கூடுமென எதிர்பார்க்க முடியாது. அங்ங்னமன்றிக் குறளின் நீதிகளைக் கதைகள் மூலம் படிப்பது, இள மாணவர்களுக்கு எளிதில் விளக்கம் உண்டாவதற்கு ஏது வாகும். அன்றியும், கவர்ச்சியுடன் ஆர்வமூட்டுவதுமாகும். கதைகளைப் படிக்கிறேம் என்ற நிலையிற் சோர்வின்றித் திருக்குறள் நீதிகளில் ஈடுபாடுமுண்டாம்.
ஆதலின், இவ்வாறு கதைகள் மூலம் வள்ளுவர் கூறும் நீதிப் பகுதிகளை விளக்குவது சாலச் சிறந்த முறையாகும்.

Page 6
2
அது மாணவர்கள் பிற்காலத்தில் திருக்குறளிலேயே ஊன்றி நல்வாழ்வு வாழ்வதற்கு அவர்களைப் பரிபக்குவப்படுத்தும் சிறந்ததொரு வழியாகும். இங்குக் கூறப்படும் கதை, ஒவ் வொன்றும் திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்திலும் கூறப்படும் நடுநாயகமான குறளையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இவற்றைப் படிப்பிக்கும் ஆசிரியர்கள் உதாரணக் கதை மூலம் படிப்பிக்கும் நீதிக் குறள் அடங்கிய அதிகாரப் பொருள் முழுவதையும் நன்கு ஆராய்ந்து, கற்பிக்கும் அக்குறட்பாவோடு தொடர்புறும் ஏனைய காரண காரியமாதிய விஷயங்களையுஞ் சேர்த்து விளக்குதல் நன்று. மேலும், இங்குக் கூறப்படும் கதையை மாத்திரம் படிப்பிப்பதோடு நின்றுவிடாமல் அதனேடு தொடர்புபடும் வரலாறுகள், ஏதுக்கள், விளைபயன்கள் போல்வனவற்றை இக்கால முறைக்கேற்ப வெளிவரும் நூற் பொருள்களோடு சேர்த்துப் படிப்பித்தல் நன்று. இவற்றிற்கு ஏற்ற வழிவகைகளையும் ஆசிரியர்கள் கைக்கொள்ளல் வேண்டும். n
* கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக?
என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இணங்க, மாணவர் இக்கதைகளை அறிவதோடு நின்றுவிடாமல், அவற்றுள் அடங்கிய நீதிகளை நுட்பமாக உணர்ந்து அவற்றைத் தமது வாழ்க்கையிற் கையாளுதற்கு ஏற்ப, ஊக்கமூட்டும் முறைகளையும் மேற்கோடல் நல்லாசிரியர் கடனுகும்.
மாணவரது நல்வாழ்வு உறுதிப்படுவதற்கு வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறியே போதுமான துணையாகும். இக் கருத்தினையடக்கி மதுரைத் தமிழ் நாகனூர்
* எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத வெப்பொருளும் இல்லையால்? எனத் திருக்குறளைச் சுட்டிச் சிறப்புரை பகர்ந்திருக்கிறர். நூல்கள் எண்ணிறந்தனவாக உள்ளன. ஆணுல், ஒவ்வொரு
 

3
நூலும் ஒன்றே சிலவோ கருத்தினை உணர்த்துகின்றது. திருக்குறளோவெனின் பல்வேறு கருத்துக்களையும் எழில்பட எடுத்தியம்புகின்றது. இந்நூலின் எல்லாக் குறள்களும் ஐயத்தின் நீங்கிய தேற்றமும் திரிபின் நீங்கிய உண்மையும் பொருந்தி விளங்குவனவாகும். ஒளவையாரும், * அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத்தறித்த குறள்? என்று வியந்துரைத்திருப்பது, திருக்குறளின் முழுப் பயனும் பெற விரும்புவார் அதனை எவ்வளவு ஆழ்ந்து பயிலுதல் வேண்டுமென்பதை வலியுறுத்துவதாகும்.
வள்ளுவரைப்பற்றி எண்ணுவதே பெரும் பேறு.
இவ்வாறு எண்ணி இந்நூலை வெளியிடுமாறு என்னை
ஊக்கிய குருநாதரின் நன்றி போற்றற்குரியதாகும்.
இ. ந. Kanir”as- ÝR, موج اع C ^حه ۴ ܟܟܗܟܟ ܒܐܶ C83 r. Anahena

Page 7

ஆசிரியர்க்குரிய குறிப்பு
வரந்த நூலறிவினை உயர் தர வகுப்புக்களில் வளர்ப்பதற்குத் துணைப்பாட நூற் படிப்பு ஒரு சிறந்த வழியாகும். துணைப்பாட நூலானது, மாணவர் படித்து விரைவாகப் பொருள் உணர்ந்தும் சாரத்தைக் கிரகித்துக் கொண்டும் போவதற்கு உதவியாயிருத்தலான், அவர் அந்நூலிலுள்ள கதைத் தொடர்பையும், கதையில் வரும் ஆட்களின் குணநலன்கள், செயல்கள், நிகழ்ச்சிகளின் பேறுகள் போன்றவற்றையும் பொதுப்பட உணர்தலின் மூலமாக அவர்க்கு அவ்வித அறிவை விருத்தி செய்யும். இத்துணைப்பாட நூற்படிப்பின் பிரதான நோக்கமும் இதுவே.
மாணவர்கள் கதைகளை வீட்டில் ஆயத்தஞ் செய்து வரவேண்டும். முன்னுரையாக ஆசிரியர் அக்கதை நடக்கும் காலம், இடம், சூழ்நிலை முதலிய துணைக் குறிப்புக்களைச் சொல்லி விளக்கலாம். அதில், எந்நிகழ்ச்சி அல்லது எந்த மக்களின் குணதிசயம் தங்கள் கருத்தைக் கவர்ந்தது, எது சிறந்தது, அவ்வாறு கருதற்குரிய கார ணங்கள் எவை, என்பன பற்றி எ மு த ப் பயிற் சி கொடுக்கலாம்.
புலவர்களின் அரிய கற்பணு சக்தியோடு அவர்களின் உரை நடை செய்யுள் நடையாக உள்ள நூல்களைப் படிக்கும் மாணவர்களுக்குத் தம்மை அறியாமலே ஒரு தொடர்பு உண்டாகிறது. க ற் பனை யு ல கி ற் காணும் காட்சிகளைக் கூர்ந்து நோக்கியுணருங்கால், தாம் மேற் கொள்ளும் தீர்மானங்களும், கண்ட உண்மைகளும் சிறந்த உறுதி பயக்கும் இலட்சியங்களாக இருப்பின், அவை அவர்களின் உள்ளத்தில் நிலைத்து உரை நடையிலும் கம்பீரமாகத் தோன்றும். இங்ங்ணம் பெரியோரின் பரந்த

Page 8
6
Gநாக்கங்கொண்ட கருத்துக்களை மாணவர்கள் சுவைக்கவும் தத்தமக்கு ஏற்ற எளிய நடையில் எழுதவும் பயிலுவர்.
மொழிப் பயிற்சியில், பாட நூல்களிலமையுஞ் சொற் பொருள்களை உணரும் உணர்வை மாத்திரம் விருத்தி
செய்வதோடு அமைந்து திருப்தியுற்று நின்றுவிடாமல்,
இலக்கியச்சுவை உணரும் ஆற்றலையும் உண்டுபண்ணி,
இலக்கியப்பற்று மொழிப்பற்று முதலியவற்றை அபிவிருத்தி
செய்து, பாடசாலையைவிட்டு நீங்கியபின்னரும் மாணவர்க்கு அவை நிலைத்திருக்குமாறு செய்வதே ஆசிரியர் கடன். இந்
நூலில் அமைந்திருக்கும் உரைநடையும் செய்யுளுமாகிய பகுதிகளை மாணவர் கூர்ந்து உற்று நோக்கிக் கற்றுவர வேண்டும். பொருள் உணர்வதோடு சொல் நயம், பொருள் நயம் இவற்றைச் சுவைத்து இன்புறுவதும் இப்படிப்பின்
குறிக்கோளாகும்.
மேலும், கதைகளில் வர்ணித்திருக்கும் கதா பாத்திரங்களின் இயல்புகளை அறிதலும், பாட அமைப்பின் ஒழுங்கையும் இலக்கண நெறிப்பட்ட சொற்றெடர் மரபுகளையும் கவனித்து, உரை நடையாக்கத்தின் ஆற்றலை வளர்ப்பதுமே இந்நூலின் உயரிய நோக்கமாகும்.
மாணவர்கள் ஏற்ற இடங்களில் இந்நூலில் வரும் அரிய சொற்றெடர்களைத் தம் வாக்கிலேயே வைத்து
வழங்கும் பயிற்சி பெறவும், பிழையின்றித் தெளிவாகத்
தமிழ் மொழியைப் பேசவும், எழுதவும், கருத்துவளம் சொல்லாட்சிகள் முதலியன உறுதிபெறவும், ஒரு பகுதியில் ' வரும் பொருளைச் சுருக்கமாக அறிந்துகொள்வதோடு காரண காரியத் தொடர்புணர்ந்து ஆராயும் திறன் பெறவும், உரைநடைப் பாடங்கள் பாடத் திட்டத்தில் இடம் பெற் றிருக்கின்றன. இந்நோக்கங்களையெல்லாம் உள்ளடக்கின ஒர் உரை நடைப் பாட நூலைத் துணைக்கொள்வது சாலப் பொருத்தமாகும்.
.
 
 

உரைநடைப் பாடம் உதவுவதாம்.
an
பாடசாலைகளில் பிற பாடங்களும் தாய்மொழியிலேயே
நடப்பதால் துணைப்பாடமாகிய நூற்கருவி இன்றி
யமையாதது. தகுந்த உரைநடைப் பகுதிகளின் மூலம் மாணவர்கள் தம் அறிவை வளர்த்துக்கொள்ளவும், சொல் லாட்சி வளத்தைப் பெருக்கவும், சிறந்த கருத்துக்களை
எளிதில் உணரவும், பிழையின்றி எழுதவும் அவர்களுக்கு
வாய்ப்பு அளிக்க வேண்டும். சிறந்த விருத்தாந்தங்கள், கற்பனைகள், வாழ்க்கை வரலாறுகள், விவரணங்கள் ஆகிய வற்றிலிருந்து திரட்டப்பட்ட இத்தொகுப்பு நூலை மேல் வகுப்புக்களிற் கையாளலாம். அறம், அன்பு, வீரம், நடுவு நிலைமை, அடக்கம், அறிவு, பொறை, ஈகை, ஒழுக்கம் ஆகிய நன்னெறி வகைகளின் உணர்ச்சிகளை எழுப்பக்
கூடிய பகுதிகள் இலக்கியங்களிலிருந்து எடுத்து இந்நூலில்
தொகுக்கப்பட்டிருப்பதால், இந் நூலைப் பயிலுங்கால், இத் தொகுப்பு நூலின் மூல புத்தகங்களைப் படிப்பதில் மாணவர்கட்கு ஆவல் உண்டாதற்கேற்ற வழிகளைக் கையாளல் வேண்டும். அதனுல், மாணவர் சிறந்த
காவியங்களைப் படித்து இன்புறுவதற்கும் தூண்டுகோலாக
பாடம் நடத்துவதற்கு முன்னரே, ஏற்ற முறையில்,
படிப்பிக்கப்புகும் பொருளின் சாரத்தைப்பற்றி ஆசிரியர்
மாணவர்க்கு அனுபவ வாயிலாகத் தோற்றுவாய் செய்து விடலாம். அப்பாடத்தை மெளனமாக மாணவர்கள் வாசிக்கலாம். பின்னர் ஆசிரியரும் ஒரு முறை படித்து, அருஞ் சொற்களை விளக்கும் முறைகளைப் பின்பற்றி விளக்கிப், பொருளை மாணவர்கள் உணர்ந்தார்களா என அறிய, இடையிடையே ஏற்ற கேள்விகளைக் கேட்டு விடைகளைக் கூறவும் எழுதவும் பயிற்சி அளிக்கலாம். பாடத்தில் உள்ள பொருளின் சாராம்சத்தைச் சுருக்கமாக எழுதச் செய்யலாம். கதையாக இருப்பின், ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வாக்கியம் சொல்லிக் கதையை இரசிக்க

Page 9
8
ல்ாம். படித்த பொருளைச் சுருக்குதல், ஒரு பிரிவின் உட்கருத்தை எடுத்து அதற்குத் தலைப்புப் பெயரிட்டுச் சொல்லுதல், கதைகளைத் தம் வழக்கமான பேச்சு மொழியிற் கதை வடிவாகவும், உரையாடலாகவும் எடுத்துச் சொல்லுதல், கதையின் முடிவைப்பற்றி ஆராய்தல், கதாபாத்திரங்களின் குணதிசயங்களை ஒப்பிடுதல், நடிப்பதற் கேற்ற அம்சங்கள் கதையில் இருப்பின் அவற்றை நடித்தல், இவை போன்ற பயிற்சிகளைக் காலத்திற்கேற்ப நடாத்தல் வேண்டும்.
மேலும் பொருள்களை வகுத்துப் பார்க்கும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டாகுமாறும், கற்பித்த பகுதியை நல்ல முறையில் உளத்தமைக்குமாறும் ஆசிரியர்கள் மேல் வகுப்புக்களிலே கட்டுரைப் பாட நேரங்களில் ஒருங்கு கூடி ஆராய்தல் மிகவும் வேண்டப்படுவது. மாணவர்கள்
அடைந்த திறமையையும் தேர்ச்சியையும் அளப்பதற்கும்,
முன்னறிவைப் பரிசோதிப்பதற்கும் இம் முறை யை க் கையாளலாம்.
இங்ங்ணம் மொழியறிவை வளர்த்த ல் சொற் களஞ்சியத்தை மேன்மேலும் விருத்தி செய்தல், உலக
அறிவையும் பகுத்தறிவையும் வளர்த்தல், படிப்பில் ஒரு
தனி ஊக்கத்தை உண்டாக்குதல், விரைவாகப் படிக்கும் திறமையை உண்டு பண்ணுதல், பொருள் உணர்ந்து
கொள்ளுதல், சிந்தனைக்குரிய கருத்துக்களை ஆராய்தல்,
தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் வளர்த்துப் பிற் கால வாழ்க்கையில் பிறர் உதவியின்றித் தாமாகவே வேண்டியவற்றைப் படித்து இன்புறுவதற்குப் பழக்குதல் முதலியனவும் இந்நூலின் அடிப்படையான நோக்கங்க ளாம்.

அருளு டை  ைம
முற்காலத்தில் சிபி என்ற ஓர் அரசன் இருந்தான். அறிவிலும் வீரத்திலும் ஒழுக்கத்திலும் மிகச்சிறந்தவனுக
概
இருந்தான். அவன் மனுநெறி தவருது அரசு புரிந்து வந்தான். அவனுடைய புகழ் எங்கும் எட்டியது.
ஒரு நாள் அவன் தன் வனத்தில் உலாவிக்கொண்டி ருந்தான். அங்குள்ள இயற்கை அழகைக்கண்டு மெய்மறந்து
颖 சிருஷ்டியின் அற்புதத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டி ருந்தான். அப்போது ஒரு மாடப்புரு தன்னைக்கொன்று * உண்டற்குத் தொடர்ந்த வல்லூறுப் பட்சிக்கு அகப்படாமல் s " தப்பிப் பறந்து சென்று அவன் மடியில் விழுந்தது. அது '> தன்னிடம் சரணம் புகுந்தது என்றே அரசனுக்குத்தோன்
றிற்று; உடனே பின் தொடர்ந்து வந்த வல்லூறுப் பட்சியை يتم } மாடப்புருவின் அருகில் வரவொட்டாது சிபி தடுத்து விட்டான். அப்பொழுது வல்லூறு,மனிதக் குரலில் “எனக்கு இயற்கையாக இரையாய் ஏற்பட்ட இந்தப் புருவை நான் . தொடக்கூடாதென்று தடுப்பது நியாயமா? என்று கூறிற்று. புருவையும் காப்பாற்றி, வல்லூறுக்கும் நியாயம் பகர வேண்டிய அரசன், புருவின் நிறை எவ்வளவோ அவ்வளவு மாமிசத்தைத் தன் தேகத்திலிருந்து கொடுப்பதாக வல்லூ
Y 28 ܓܝܪ Α

Page 10
10
றுக்கு வாக்களித்தான். அதற்கு வல்லூறு இசைந்தது. அரசன் ஒரு தராசைக் கொண்டு வரச்செய்து அதன் ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொரு தட்டில் தன் தொடையி லிருந்து கொஞ்சம் மாமிசத்தை அறுத்து வைத்தான். புறா கனமாக இருந்தது. சிபி சந்தோஷமாக தன் உடலிலிருந்து மாமிசத்தை மேலும் மேலும் அரிந்து எடுத்துத் தட்டில் வைத்தான். எவ்வளவு வைத்தும் புறா இருந்த தட்டு கன மாகவே இருந்தது.
சிபி சற்று யோசித்து சீவகாருண்யத்தால் தூண்டப் பட்டுத் தானே அந்தத் தராசில் ஏறி நின்றான். இவ்வாறு சீவகாருண்யத்தால் தன் உயிரையும் இழக்க அவன் சித்தமா யிருக்கக் கண்டதும், வல்லூறும் புறாவுமாக வந்த தேவர்கள் தங்கள் நிஜரூபமாகிய தேவ சரீரத்துடன் எதிரே தோன்றினர்; சிபியின் சீவகாருண்யத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து அவனுக்கு இரணமற்ற சரீரமும் நீண்ட ஆயுளும் திரண்டசெல்வமும் உண்டாகுமாறு அனுக்கிரகித்து மறைந்தனர்.
சீவகாருண்யமாகிய அருட்செல்வம் ஏனைச் செல்வ மெல்லாவற்றிலும் உயர்ந்தது. இதை உணர்பவன் தன்னுயிர் போலவே மற்றெல்லா வுயிரையுங் காண்பான்; அவற்றிற்கு வந்த துன்பத்தை, அவன் த ன தெ ன த் தீர்ப்பான்; எவ்விதமான துன்பமும் அவனுக்கில்லை; அவன் என்றும் அருளுணர்ச்சியுடையவனாகவே வாழ்வான்.
'' மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை "'
(குறள் : 244) நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்து, அருளை மேற் கொண்டவனுக்குத் தன் உயிர் அஞ்சுவதற்குக் காரண. மாகிய தீவினைகள் உண்டாகா. அருள் நெறியில் நிற்பவன் எதிர்பாராதபடி ஒரு தீமை வந்துவிட்டாலும் அதற்காக

11
" துன்பப்படமாட்டான். அருளுடைமை என்பது எல்லா , உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்வது.
வினுக்கள்
1. பிறவுயிரைத் தன்னுயிர்போல் மதிக்கும் இயல்புள்ள
வரின் குணதிசயங்களை விளக்குக.
2. அன்புடைமைக்கும் அருளுடைமைக்கும் உள் ள
ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துக் காட்டுக.

Page 11
திருவள்ளுவர் திருமயிலையில் வாழும்பொழுது அவ்
வூரிலே ஏலேலசிங்கர் என்னும் ஒரு செல்வர் இருந்தார். அவர் நூல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தார். திருவள்ளுவர்
தமது துணி நெசவுக்குரிய நூலை ஏலேலசிங்கரிடத்திற்றன். வாங்குவது வழக்கம். இக்கனவானுக்கு அதிக விளை நிலங்கள் உண்டு. அவருடைய நிலங்களில் நெல் மிகுதியாக
விளையும். அந்த நெல்லை ஏலேலசிங்கர் சேர்த்து வைத்தி ருந்து பஞ்சக்காலத்திலே ஏழைகளுக்கு விற்பார். ஒரு
முறை மழை பெய்யாமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
மக்கள் உணவுப் பொருள்கள் அகப்படாமல் மிகவும் கஷ்டப் பட்டனர்.
ஏலேலசிங்கர் திருவள்ளுவர்மீது மிகுந்த பேரன்புடை யவர். ஆதலின் வள்ளுவர் அவருக்கு ஒரு கட்டளை யிட்டார். அவர் வாங்கி வைத்திருக்கிற உணவுப்பொருள்களை
வாங்கின விலையினும் குறைந்த விலைக்கு விற்குமாறு தெரிவித்தார். அவ்வாறு விற்றும் ஏலேலசிங்கருக்கு மிகுதி யாகப் பொருள் கிட்டியது. திருவள்ளுவரைப் பார்த்து * மிகுதியாகக் குவிந்துள்ள பொருள்களை என்ன செய்ய லாம்? என்று வினவினுர். அதற்குப் புலவர் * அப்பொருள்
 

* 13
களை எல்லாம் தங்கமாகமாற்றி ஒரே கட்டியாக்கிக் கடலில் எறிந்துவிடு? என்று விடை பகர்ந்தார்.
உடனே ஆசிரியர் ஆணைப்படி தம் பொருள்களை எல்லாம் தங்கமாக மாற்றி உருக்கி ஒரே கட்டியாக்கித் தம் Y பெயரையும் அதன்மேற் பொறித்துக் கடலில் வீசிவிட்டார். * அத்தங்கக் கட்டியைக் கண்ட பெரிய ஒரு மீன் அதனை இரையென்று எண்ணி விழுங்கிற்று. பின் ஒரு நாள் அம் மீன் வலைஞர்களுடைய வலையில் சிக்கியது. அவர்கள் அதை வெட்டியபோது அதன் வயிற்றுள் அத்தங்கக்கட்டி மாசு படிந்து கல்லைப்போன்ற தோற்றத்துடன் இருந்ததைக்கண்டு அதனை ஏலேலசிங்கரிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். ஏலேலசிங்கர், தம்மிடம் ஒப்படைத்த கல் மிகவும் கனமாய் இருந்ததால், கருங்கல்லாக இருக்கக்கூடும் என எண்ணிக் குளிக்கிற இடத்தில் போடச் செய்தார்.
அக்கட்டி பல காலம் மிதியுண்டு, தன்மேல் நீர்படப்பட ஒளி வீசத் தொடங்கியது. கட்டியின்மேல் எழுதப்பட்ட ? ஏலேலசிங்கர்? என்னும் பெயரும் விளக் க ம T ய் த் தெரிந்தது. அதனை ஏ வ லா ளர் எடுத்துச் சென்று எசமானனிடம் சமர்ப்பித்தனர். ஏலேலசிங்கர் அது முன்பு தாம் கடலில் எறிந்துவிட்ட தங்கக்கட்டி என்பதை ' உணர்ந்து, அதன் வரலாற்றை எடுத்துரைத்தார். அதைக் கேள்வியுற்ற பலரும் வந்து அப்புதுமையைக் கண்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது ? ஏலேலசிங்கன் பொருள் எழுகடலிற்போனுலும் திரும்பும்? என்று வள்ளுவர் கூறினர்.
இப்படிப் பலருக்கும் உபகாரஞ் செய்வதே ஒப்புரவு பரோபகாரத்திலும் சிறந்த செயல் வேறென்று இல்லை. தன்னலமற்றுப் பிறர்க்கு நல்லுதவி செய்தலே தேவர்க்கும் கிட்டாத பெரும் புகழை விளைக்கும். உலகின் நலத்தை விரும்பும் பேரறிஞனது செல்வம், பலருடைய குறைகளை யெல்லாந் தீர்த்துப் பிறர்க்குப் பயன்படுவதாகும்.

Page 12
4
UA *பயன்மரம் உள்ளூர்ப் பீமுத்தற்றற் செல்வம்
நயனுடை யான்கட் படின்? (குறள் : 216)
மிகுந்த பரோபகார சீலமுடையானிடத்தே செல்வம் உண்டாயின், அவன் அதனை, முட்டுற்றுத் தன்னிடம் வரும் யாவர்க்கும் ஈந்து உதவுவான். அங்ங்ணம் பலருக்கும் பயன்படும் அவன் செல்வம், ஊர்நடுவே எல்லார்க்கும் பொதுவாக நின்று பலவகையாலும் பயன்தரும் மரமானது தழைத்துப் பழுத்துப் பொலிவதை ஒக்கும்.
* ஒப்புரவறிதல்? என்பது கைம்மாறு கிருதாமல் பிறருக்கு உதவி செய்வது. அதாவது தம்மைச் சார்ந்த பிறரைத் தம்மோடொத்த நன்னிலை யடையும்படி செய்தல், ! அவருடைய குறைகளை யுணர்ந்து அவற்றை நீக்குவதற்கு உதவி செய்தல் ஒப்புர வெனப்படும்.
வினுக்கள்
1. ஏலேலசிங்கர் திருவள்ளுவர்மீது அன்பு நிறைந்தவர்
என்பதனை எவ்வாறு அறிகிருேம்? 2.66 முகில்போலே பலருக்குதவு?. விளக்குக
 
 
 
 
 
 

R
V
| (,
அடக் கமு டை  ைம
ஒரு மலைக்குப் பக்கத்திற் பெரிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டின் நடுவில் ஒர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் எப்பொழுதும் நீர் வற்றமல் ஒடிக்கொண்டே இருக்கும். அந்த ஆற்றின் கரையில் ஒரு தேக்கமரம் நின்றது. அது மிக உயரமானது. அதனருகில் நாணற் புற்கள் புதராக வளர்ந்திருந்தன.
இலேசாகக் காற்றடித்தாலும் நாணற்புல் வளைந்து வளைந்து ஆடும்; அப்போது அவை காற்றடிக்கும் பக்கமாகத் தலைவணங்கி நிற்பதைப்போல் தோன்றும். தேக்கமரம் எதற்கும் அசைவதில்லை. அதன் இலைகள் காற்றடிக்கும் போது சலசலக்கும். தேக்கமரத்திற்கு நாணலின் நிலைமை அருவருப்பாக இருந்தது.
ஒரு நாள் தேக்கமரம் நாணற்புற்களைப் பார்த்து, "நாணற்புற்களே, நீவிர் என்பக்கத்தில் இருப்பது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது; வேறு இடம் பார்த்துப் போய்விடுங்கள்? என்று செருக்குடன் கூறியது. நாணல்கள் தேக்கமரத்தைப் பார்த்து, “நண்ப, நாங்கள் உனக்கு ஒரு தீமையும் செய்யவில்லையே, நீ ஏன் வெட்கப் படுகிருய்?? என்று பணிவுடன் கேட்டன. அதற்குத் தேக்க மரம், “ இலேசாகக் காற்றடித்தாலும் நீங்கள் தலைவணங்கி

Page 13
16
விடுகிறீர்கள்; கோழைகள்; என்னைப் பாருங்கள்! எவ்வளவு பெருங் காற்றடித்தாலும் வளையாமல் இருக்கிறேன். எனவே நீங்கள் என்னருகில் இருப்பது எனக்குப் பேரிழிவாக இருக்கிறது? என்று சொல் லிய து. தேக்கமரத்தின் செருக்கான மொழிகளைக் கேட்டு, எல்லா நாணல்களும் சலசலத்தன. ஆயினும், பின்னர் அதனுடன் உரையாடாமல் 6 எல்லார்க்கும் நன்றம் பணிதல்' என்ற எண்ணத்துடன் அமைதியாக இருந்துவிட்டன.
ஒரு நாள் பெருங்காற்றடித்தது; சுழல்காற்றும் கலந்து வீசியது. பெருமழையும் பொழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நாணல்கள் சாய்ந்து சாய்ந்து தலை வணங்கிய வண்ணம் இருந்தன. எவ்வித ஊறும் அவற்றிற்கு நிகழ வில்லை. ஆணுல் செருக்குக் கொண்ட தேக்கமரம் பெருங் காற்றுக்குத் தலைவணங்காமல் எதிர்த்து நின்றது. அதனல்,
வேருடன் சரிந்து தரையில் வீழ்ந்தது. காற்றும் மழையும்
ஒய்ந்தன. தேக்கமரம் உயிர் பிரியும் நிலைமையில் வீழ்ந்து கிடந்தது. நாணற் புற்களோ வளத்தோடு நின்றன. நாணற் புற்களைப் பார்த்துப் பேசவும் தேக்கமரத்திற்கு வெட்கம் உண்டாயிற்று.
இக்கதையினுல் அடக்கத்தின் மாண்பு, அதாவது அடக்கத்தைச் சிறந்த ப்ொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும், உயிருக்கு அதனிலும் மேலாக நன்மை பயப்பது வேறு ஒன்றும் இல்லை என்ற உண்மை புலப்படுகிறது. மனமொழி மெய்கள் தீயவழியே செல்லாமல் அடக்குதல் பேருயர்வைக் கொடுக்கும். நாணற்புல்லின் பணிவு போன்ற பணிவு நன்மை தரும் தன்மையது.
* காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினுTஉங் கில்லை உயிர்க்கு? (குறள்: 122) அடக்கத்தை உறுதிப்பொருளாகக் கொண்டு போற்றுக ; அதனிலும் சிறந்த செல்வம் உயிர்க்கு வேறு இல்லை.
/
 
 

1.
2.
எதனுல்?
*அடங்கி நடத்தலே அறிவிற் கழகு என்பதை
)
விளக்குக.
17
வினுக்கள்
டில்
A.
விளையாட்டுக்காயினும் பிறரை இகழாதவ்ர் யார் ?
)

Page 14
வினைத் திட்பம்
ஆதிகாலத்தில் சந்தனு என்னும் மகாராசன் அஸ்தின புரத்தில் இருந்து அரசாண்டான். அவன் ஒரு முறை காட்டில் வேட்டையாடி மீண்டு வரும்போது கங்கைக் கரையிலே மானுடவடிவோடு நின்ற கங்காதேவியைக் கண்டான். அவளுடைய அழகைக் கண்டு அவளை விவாகம் செய்ய விரும்பினுன். அவளிடம் சென்று “நீ என்னை விவாகஞ் செய்யவேண்டும்; என்னுடைய இராச்சியம், மற்றும் செல்வம் யாவும் உனக்கே உரிமையாகும்? "என்றன்.
இதைக் கேட்ட கங்காதேவி, ‘பூபதியே, நீ என் விரத் நியதிக்கு உடன்படில் உனக்கு மனைவியாவேன். உனக்கும் பிறர்க்கும் தீங்கின்றி, யான் எவரும் நடுங்கி அஞ்சத்தக்க எக்கருமத்தைச் செய்யினும் என்னை நீ தடுக்காதொழிதல் வேண்டும். அங்ங்ணம் நீ பொறுக்குமளவும் உன்னுடன் மனைவியாய் வாழ்தற்கு உரியேன். எப்பொழுதாவது என் செயலை மறுப்பையேல், அப்பொழுதே உன்னை விட்டகல் வேன். இதுவே என் விரத நியதியாகும். இதற்கு நீ உடன் படின் உன்னை மணஞ்செய்து வாழ்வேன்; இது உனக்குச் சம்மதமா? என்று கேட்டாள். அரசனும் காதல் மிகுதியால் அவ்வாறு செய்வது இலகுவான காரியம் என்று எண்ணி,
فلما
f
s
 
 

19
* அப்படியே நடக்க உடன்படுகிறேன்? என்று சத்தியம் , செய்து கொடுத்தான்.
விவாகம் முடிந்தது. சந்தனு மகாராசனும் கங்கா தேவியும் இன்புற்று வாழ்ந்தார்கள். கங்காதேவி பல
' குழந்தைகளைப் பெற்றள். அக்குழந்தைகள் மிக்க
அழகுள்ளவை. ஆணுல் குழந்தைகள்' ஒவ்வொன்றையும், பிறந்ததும் கொண்டுபோய்க்கங்காநதியில் எறிந்து கொன்று விட்டாள். இதைக் கண்ட அரசன் கங்கையிடத்து வைத்த காதலாலும், அவளுக்குத்தான் முன்பு கொடுத்த வாக்குறுதி யினுலும், அவள் செய்கையைத் தடுக்காமல் வாளா இருந்தான்; ஏழு குழந்தைகள் வரையில் இவ்வாறு செய்வதைப் பொறுத்துக் கொண்டிருந்தான். ஆணுல், அழகும் ஒளியும் மிக்க எட்டாவது புதல்வனைப் பெற்ற வுடனே அவள் கொல்லாதபடி பிள்ளையைத் தான் எடுத்து, அவளைப் பார்த்து' என் குல விருத்தியின் பொருட்டு இம் மைந்தன் எனக்கு வேண்டும், நீ என்னை வெறுப்பினும் இம் மைந்தனைக் கொல்லற்க, யான் முன் செய்த வாக்குறுதியை மறுத்தேன் என்று வெகுளாது பொறுத்தருள்க? எனப் பரிந்து வேண்டினன். இதனுல், தான் அவளுக்கு முன்னரே செய்த சத்தியத்தின்படி நடக்க முடியாதவனுயினன்.
உடனே அவள், " மகாராசாவே, நீ முதலில் எனக்குச் சொன்ன சொல்லை மறந்தாயா? மகனிடத்தில் விருப்பம் கொண்டவனே, இனி நான் என் விரதத்தின்படி உன்னை விட்டுப்போகிறேன்? என்று சொல்லி மறைந்தாள்.
மனுேதிடமும், எடுத்த காரியத்தைச் சாதிக்கும் திறமையும், புத்தி சாதுரியமும் மிக்க அரசனே இவ்வாறு தனது சொல்லை நிறைவேற்ற முடியாமற் றன் சபதம் மீறினன்.

Page 15
20
* சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் ,
சொல்லிய வண்ணஞ் செயல்? (குறள் : 664) ) இவ்வாறு இக்காரியத்தை முடிப்போமென்று சொல்லுதல் யாருக்கும் எளிது. சொல்லியவண்ணமே செய்து முடித்தல் அரிது.
YA
வினுக்கள்
1. நாம் எவற்றைக் கவனித்தால் சொல்கிறபடியே செய்
பவர்களாக இருக்க முடியும்?
2. சந்தனு அரசன் சப்தம் மீறி நடந்தமையை நியாய
மானதாக நீர் கருதுகிறீரா? ஆராய்க. 'l
 

நடு வு நிலை  ைம
நமது தேசத்திற்கு வடமேற்கில் வெகுதூரத்தில் துருக்கி
என்றெரு தேசம் இருக்கிறது. அது மகம்மதியர்கள்
வசிக்கும் தேசம். துருக்கி தேசத்து அரசருக்கு சுல்தான் என்று பெயர். அவரும் மகம்மதியரே. துருக்கி தேசத்தில்
தீயீர்ஞ என்ற பெயருள்ள ஒரு சிறிய பட்டணம் இருந்தது. அங்கு மகம்மதுகான் என்ற பெயருள்ள ஒரு வர்த்தகன்
இருந்தான். அவன் பலசரக்குக் கடை ஒன்று வைத்துச்
சீவனம் பண்ணிக்கொண்டு வந்தான்.
மகம்மதுகான் பேராசைக்காரன். மிக விரைவில்
அதிகப்பொருள் சம்பாதிக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். ஆகையால் அவன் தன்
வர்த்தகத்தை முறைதவருக நடத்தி வந்தான். அவனுடைய
கடையில் இருந்த படி, தராசு, படிக்கல் முதலியவை சரியான
அளவுள்ளவையல்ல. இவ்விதமாய் அ வ ன் கள்ள அளவைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றிப்
பெருந்திரளான பணம் சம்பாதித்தான். அவனுக்கு
ஆமெட் என்னும் பெயருள்ள ஒரு குமாரன் இருந்தான்.
ஆமெட் சிறுவயது முதல் நற்குணமுடையவனுய் விளங்கினன். அவன் பொய் சொல்லான். பிறர் பொருளை
விரும்பான். நீதி நெறியினின்றும் தவறன். அவன் எல்லா

Page 16
22
விஷயங்களிலும் நேர்மையாகவே நடப்பவன். அனைவரும் அவனை நீதிமான் என்று புகழ்ந்து கொண்டாடினுர்கள்.
ஆமெட்டின் குணங்களை அறிந்த சுல்தான் அவனை வரவழைத்துத் தன்னிடத்தில் ஒர் உத்தியோகத்தில்
அமர்த்திக் கொண்டான். கடைவீதிக்குச் சென்று
வியாபாரிகள் வைத்திருக்கும் படிகள், தராசுகள் முதலியவை சரியாக இருக்கின்றனவா என்று சோதனை செய்வது அவன் வேலை. அவன் நான்கு சேவகர்களை அழைத்துக்கொண்டு குதிரை மேலேறிச் சென்று தினந்தோறும் அப்பட்டணத்தி லுள்ள கடைகளைச் சோதனை செய்வது வழக்கம். ஒரு நாள் அவன் தன் தகப்பணுருடைய கடையைச் சோதனை செய்வதற்காக அங்குச் சென்றன். தூரத்தில் தன் மகன் வருவதைக் கண்ட தகப்பன், சிறிதும் அஞ்சாது, தன் மகன் தன்னுடைய திருட்டுத் தனத்தை வெளிப்படுத்த மாட்டா னென்று எண்ணிக் கடைவாயிலில் தைரியமாக நின்று கொண்டிருந்தான்.
ஆமெட் அளவைகளைச் சோதனை செய்து அவைகள் கள்ள அளவுள்ளவைகள் என்று தெரிந்துகொண்டான். உடனே அவன் தன் தகப்பனுக்கு விலங்கிட்டு, நியாயாதிபதி யிடம் கொண்டு போகுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவு செய்தான். அவ்வண்ணமே அவர்கள் அவனை நீதிபதியிடம் அழைத்துச் சென்றர்கள். மறுநாள் விசாரணை நடந்தது. ஆமெட் நியாயஸ்தலத்துக்குச் சென்றன். அங்குத் தன் தகப்பனைக் கண்டவுடன் அவன் சாஷ்டாங்கமாகப் பணிந் தெழுந்து, "தந்தையே, நான் நமது சுல்தானுக்கும்,
தேசத்துக்கும், எனக்கும், கடவுளுக்கும் சம்மதமாகுமாறு
என் கடமையைச் செய்தேன். செல்வரென்றும், வறிய ரென்றும், தாய் தந்தையரென்றும், மற்றைய உறவின ரென்றும் கருதி நியாயமுறை தவறி நடத்தல் ஏற்றதன்று. ஆகையால் நான் என் கடமையை நடுவுநிலைமை குன்றது

என்று கருதாது அனைவரிடமு
23
நிறைவேற்றினேன். என்னேமன்னிக்கவேண்டும்” என்று
பிரார்த்தித்தான். தகப்பன் தான் செய்த இழிவான செயலை
நீதிபதி அவனுக்கு இருபது பவுன் அபராதம் விதித்தார். உடனே அவன் அபராதத்தொகையைச் செலுத்திவிட்டு வீடு திரும்பினன். மறுநாள் சுல்தான் இதையறிந்து ஆமெட்டி
னுடைய நேர்மையை மெச்சி அவனுக்கு நியாயாதிபதி உத்தியோகம் கொடுத்தான். மகம்மதுகான் அது முதல் தன் வர்த்தகத்தை நியாயமாக நடத்தி வந்தான். தன் I குமாரன் உயர்ந்த உத்தியோகம் அடைந்ததைக் குறித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தான். ,
இவ்வாறு நண்பன், பகைவன், உறவினன், அயலான்
நடக்கும் நடுவுநிலைமையே தக்க நல்லறம்ாகும். கேடில்லாது
நியாயப்படி நடக்கவேண்டும். சமமாகத் தூக்கி நிற்கும்
துலாக்கோல் போல சான்றேர்க்கு அழகு.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்? (குறள் : 113)
ஒரஞ்சாராத நடுவுநிலைமையே
நலம் தருவதாயிருந்தாலும் நடுவுநிலைமையின் நீங்கித்
தேடும் பொருளை விரும்பா தொழிக. நடுவுநிலைமை யுள்ளவன் நேர்மையில்லாத வழிகளில் வரக் கூடிய
செல்வத்தையோ செல்வாக்கையோ விரும்பமாட்டான்.
இந்த நடுவுநிலைமைக்குணம் பொதுவாகப் பல காரியங் களுக்கும் வேண்டியதானுலும், ஒரு வழக்கைச் சீர்தூக்கி நியாயம் செய்கிற நிலையை முக்கியமாக வைத்துச் சொல்லு வதானல், அப்படி நியாயம் சொல்லும்போது பாரபட்ச
மில்லாமல் சொல்லவேண்டும். இப்படிச் சீர்தூக்கி உண்மை
யான தீர்ப்புச் சொல்ல, மனம் நேராக இருக்கவேண்டும்.
அறநிலைப்பண்புடனே

Page 17
24
வினுக்கள்
1. ஆமெட் நடுவுநிலைமை தவருதவன் என்பதனை
எவ்வாறு அறிகிருேம்?
2. நாம் எவ்வழியில் நடுவுநிலைமையைப் போற்றி நடக்க
வேண்டும்? உதாரணக் கதையால் விளக்குக.
 
 
 

பய னில சொல் லா  ைம
முற்காலத்தில் இந்திரன் சபையில் பிருகஸ்பதி, வசிட்டர், நாரதர், கெளசிகர் முதலான முனிசிரேட்டர்கள் இருந்தனர். ஒரு நாள் இந்திரன் தன் சபையிலுள்ள முனிவர்களைப் பார்த்து, ‘பூவுலகத்திலே நல்லொழுக்கம் உடையவராய், ஒரு காலத்தும் பொய் சொல்லாதவராய் உள்ள குணசீலர் யாராவது இருக்கிருரோ? என்று விசாரித்தான். அதற்கு வசிட்ட முனிவர் எழுந்து, 8 ஆம், அயோத்தியாபுரியில் அரிச்சந்திரன் என்ற பெயரையுடைய ஓர் அரசன் உளன். அவன் சகல நற்குணங்களும் பொருந்தியவன்; சத்தியம் தவருதவன்; தான் சாக நேர்ந்தாலும் பொய் சொல்லான்? என்று கூறினர். அச்சபையில் இருந்த விசுவாமித்திரர், வசிட்டர் கூறியதை மறுத்து, “அவன் பொய்யன், நல்லொழுக்கம் இல்லாதவன்? என்று கூறி வீணன வாதம் புரிந்து சபதஞ் செய்தார். ஈற்றில் அதனை நிரூபிக்கமாட்டாமல், தாம் அவமானம் அடைந்ததுடன் தமது தவத்திற் பாதியையும் இழந்தார்.
தான் இந்திர சபையில் கூறியவற்றை நிரூபிப்பதற்கு அரிச்சந்திரனுக்கு எத்தனை யோ சொல்லுதற்கரிய கஷ்டங்களை உண்டாக்கினர். சத்திய விரதத்தைக் காப்பாற்றுவதற்காக அரிச்சந்திரன் அடைந்தகஷ்டங்களோ

Page 18
26
கணக்கிலடங்கா. விசுவாமித்திரர் பயனில்லாத 5 பல வேலைகளைச் செய்தார். அரிச்சந்திரனது நாடுநகரங்களைக் கவர்ந்தார். மனைவி மக்களைப் பிராமணனுக்கு அடிமை யாகச் செய்தார். கடைசியில் புலையனுக்கு அரசனையும் அடிமையாக்கி மயானம் காக்க வைத்தார். நாட்டைச் செங்கோல் முறை கெடாது காத்த அரிச்சந்திரன் தன் சத்திய விரதத்திற்காகவே, மனைவி மக்களை விற்றும், புலையனுக்கு அடிமையாகியும் வருந்தினான். ஈற்றில் தன் தேவி சந்திரவதியை வெட்டிக் கொல்லும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அந்நேரத்திலும் முனிவர் அவனிடம் ஓடிச் சென்று '' அரசனே, இறந்த உன் புதல்வனை எழுப்பித் தருகின்றேன், உன் இராச்சி யத்தையும் நீ பெற்றுக்கொள், உன் தேவியை வீணே வெட்ட வேண்டாம்; முன்பு எனக்குத் தந்த இராச்சியத்தைத் தரவில்லை என்று மாத்திரம் சொல்லு'' என்று கேட்டார். அந்நேரத்திலும் அரிச்சந்திரன் சத்தியம் தவறவில்லை.
- பொறாமையினாலாவது, பகைமையினாலாவது, அகங்' காரத்தினாலாவது, வேறு எக்காரணத்தினாலாவதும் வீணே பிறரை இழித்துரைத்தலும், தன்னைப் புகழ்ந்துரைத் தலும் - பயனில் சொற்களேயாம். பொய்யும் புனைந் துரையுமாகிய கதைகளை உள்ளன போலக் கட்டி வைத்துக் கூறும் சொற் க ளு ம், விலை பெற்ற அருமையான காலத்தை வீணே - கழியச் செய்யும் பயனில்லாத சொற்களேயாம். பிறர் ஏதும் உதவியைப் பெற விரும்பியாவது, ஏதும் பொருளைப் பெற விரும்பியாவது தன்னிடம் வந்து வேண்டினால், அதற்கு மனம் இயையாதவன் இயலாது என்று கூறிவிடுதலே உத்தமம். அங்ஙனம் சொல்லாது நாளைக்குப் பின்னைக்கு என்று தவணை சொல்லி அவர்கள் தன்னிடம் பல நாட்கள் திரிந்து வருந்தி வாளா மீளும்படி ஆசை வார்த்தை பேசுதலும்

27
பயனில சொல்லலேயாம். '
பயனில்லாத - சொற்களைப் , பேசுவோர் பலராலும் வெறுத்து இகழப்படுவர். சில சமயங்களில் அவர் கூறும் உண்மையான கூற்றும் வெறும் பேச்சாக மதிக்கப்படுதற்கு இடமாகும்.
''பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் ''
(குறள் : 191) என்பதையும் நோக்குக.
விசுவாமித்திரர் முன் பின் எண்ணாமல் வசிட்டருக்கு மாறாக அரிச்சந்திரனைப் பற்றி வீண் வார்த்தைகள் பேசித் தம் விவேகக் குறைவு வெளிப்பட்டு அவமானமடைந் தமையும் தமது தவத்தின் சீரும் சிறப்பும் இழந்தமையும் யாவரும் அறிந்த விஷயமே.
'' சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் ''
(குறள் : 200) யாதாவது சொல்லக் கருதின் பயனுடைய சொற்களையே சொல்லுக ; தனக்காவது பிறர்க்காவது பயன் தராத வீணாகிய சொற்களைச் சொல்லாதொழிக.
வினாக்கள்
பயனில்லாத சொற்களால் விளைவன எவை? கௌசிகரது பயனற்ற சொல் எத்தகைய துன்பத்தை விளைவித்தது என்பதை விளக்கிக் காட்டுக.

Page 19
பாரத யுத்தம் தொடங்கு தற்கு முன்னதாக,
துரியோதனனும் அருச்சுன்னும் கண்ணன் படைத் துணையை நாடிச் சென்றர்கள். அப்போது கண்ணன் நித்திரை செய்தமையால், துரியோதனன் கண்ணபிரானது சயனத்தின் தலைமாட்டில் இருந்த ஒர் ஆசனத்தி லமர்ந்தான். பிந்திச் சென்ற அருச்சுனன் கண்ணனது கால்மாட்டிற் சென்று பணிந்து நின்றன்.
துயிலொழிந்து விழித்த கண்ணபிரான், கண்ணெதிரே நின்ற அருச்சுனனைக் கண்டு நல்வரவு கூறி உரையாடினர். துரியோதனன் வந்திருப்பதை அருச்சுனன் கண்ண பிரானுக்குச் சுட்டியறிவித்தான். உடனே கண்ணபிரான்
படுக்கையினின்றும் எழுந்து சென்று துரியோதனனைத்
தழுவி * நீ வந்ததை எனக்கு அறிவியாமல் இருந்தது ஏன்? என்று கூறி, ' இருவரும் வந்த காரணம் என்ன? என்று வினவினுர்,
அவ்விருவரும் இனி நிகழும் யுத்தத்தில், அவரைத் தமக்குத் துணையாளராகப் பெறவே வந்ததாகக் கூறினர். அதற்குக் கண்ணபிரான், போரில் துணையாக நின்று உதவும்படி முன்பே தருமபுத்திரன் உபலாவியநகரில் என்னை வேண்ட உடன்பட்டுவிட்டேன்; இப்பொழுதும் அருச்சுனனை
 
 

b
s
29
முதலிற் கண்டதனுல் யான் அவர்கள் பக்கஞ் சேர்தற்குரிய வணுயிருக்கின்றேன் என்றர். துரியோதனன் * அப்படியா ணுல், நீர் யுத்தத்தில் என்பக்கத்தார்மீது படைக்கலம் விடுத் துப் போர் செய்யாதொழிக’ என்று வேண்டிக் கொண்டான்.
கண்ணபிரான் அதற்கு இயைந்து, அருச்சுனனை நோக்கி, 9 யான் படைக்கலம் எடர்மல் உங்கட்குச் செய்யத் தக்க உதவி யாது? என்றர். அவன் ‘நீர் என் தேரைச் செலுத்தி உதவி செய்தால் மூவுலகத்தாரையும் வெல்வேன்? என்றன். அது கேட்ட கண்ணபிரான் துரியோதனனது வேண்டுகோளுக்கு இயைய 'யான் அருச்சுனனுக்குத் தேர்
செலுத்துவதன்றி உன்பக்கத்தார்மீது படைக்கலம் விடுத்துப்
போர் செய்யேன்? என்றும், “என்னுடைய ஒர் அக்குரோணி சேனையைக் கிருதவன்மாவுடன் உனக்கு உதவியாக அனுப்புவேன்? என்றும் கூறி அவனைச் செல்ல விடுத்தார்.
இங்ங்ணம் அருச்சுனன், ‘ ஆயுதமெடாவிட்டாலும் நீர் தேர் செலுத்தி உதவினுற்போதும் ? என்று கண்ண பிரானைத் தம்பக்கத்திற் சேர்த்துக் கொண் டான். துரியோதனன், *நிராயுதபாணியாற் பயனில்லை; ஆயுத பாணிகளாகிய யாதவ வீரரே வேண்டும்? என்று அவர்களைத் தனக்குப் படைத்துணையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு யார் வென்றது யார் தோற்றதென்பது எல்லாருக்குந் தெரிந்த விஷயம். அருச்சுனன் அறி
வுடையான் ஆதலால், ஆவது அறிந்து கண்ணபிரானைத்
தன் படைத்துணைவனுகப் பெற்றன். சர்ப்பக் கொடியோ ணுகிய துரியோதனன் அறிவிலான் ஆகையால், இனி மேல் வருங்காரியத்தை அறியாமல் யாதவ வீரரைத் தன்ணுேடு கூட்டிக்கொண்டு தோற்று மடிந்தான்.
அறிவு தீமை வராமற் காத்தற்கு அனைவர்க்குமே கருவியாயுதவும் ; அதுவே பகைவரால் அழிக்க முடியாத அரணுமாகும். மனத்தைப் போன போக்கிலெல்லாம் போக விடாமல், தீமையின் விலக்கி நன்னெறியிற்

Page 20
30
செலுத்துவதே அறிவாம். எதனை யார் சொல்லக் கேட்டாலும் அதன்கண் உள்ள உண்மையை உணர வல்லதே அறிவு. அருமையான பொருளையும் எளியதாக எல்லார்க்கும் விளங்கச் சொல்லக் கருவியாய் உதவுவதும் பிறர் கூறுவனவற்றின் நுண் பொருள்களை விளங்கிக் கொள்ள உதவுவதுமான அறிவே சிறந்த அறிவு. அறிவுடையவர் எதனையும் வருமுன்னரே அறியும் ஆற்றலுடையர். அறிவில்லாதவர் அதனை அறிய மாட்டாதவ ராவர். அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் எவ்வளவு பெருஞ் செல்வமுடையராயினும் அதனை இல்லாதவரே யாவர்.
* அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்? (குறள் : 427)
பின் வருவதனை முன்னரே ஊகித்து அறிய வல்லாரே அறிவுடையவர். அவ்வாறு அறியமாட்டாதவர் அறி வில்லாதவர் ஆவர்.
அறிவுடைமையாவது கல்விகேள்விகளால் உண்டாகும் அறிவோடு ஊகித்தறியும் இயற்கை விவேகமும் உடைய ணுதல்.
வினுக்கள்
1. அறிவுடையாரின் தன்மைகளை மேற்கோளுடன்
விளக்குக.
2. கண்ணபிரான் பாண்டவர் பொருட்டுத் துரியோதன னிடஞ் சென்ற காலத்தில், பின் நிகழும் பாரதப் போரில் அப்பாண்டவர்க்கு வெற்றி யுண்டாகத்தக்க பல கருமங்களைத் தமது நுண்ணறிவினுல் நிறைவேற்றிய சரிதத்தைச் சுருக்கி எழுதுக.
 
 

நீத்தார் பெரு  ைம
இந்தியாவுக்கு வடக்கெல்லையாக இமயமலை என்னும் ஒரு பெரிய மலை இருக்கிறது. அதன் தென்பாகத்து அடிவாரத்தில் சாக்கியநாடு என்று பெயருள்ள ஒரு நாடு இருக்கிறது. அதன் தலைநகருக்கு கபிலவஸ்து என்று பெயர். அங்கே சுத்தோதனர் என்று பெயருள்ள ஓர் அரசர் அரசு செலுத்தி வந்தார். அவருடைய தேவிக்கு மாயாதேவி என்று பெயர்.
அவர்களுக்கு எல்லா விதமான செல்வங்களும் நிறைந்திருந்தன. ஆயினும் புத்திர பாக்கியம் ஒன்று
மட்டும் இல்லை. நெடுங்காலம் சென்றபின் அவர்களுக்கு
ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஏழாம் நாள் தாயாகிய மாயாதேவி இறந்தனள்.
' சுத்தோதனர் அக்குழந்தைக்குச் சித்தார்த்தர் என்று பெயரிட்டு மிக்க அன்புடன் வளர்த்து வந்தார். சிறு வயது முதல் சித்தார்த்தர் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு இன்பமாய் வாழ்ந்து வந்தார். தக்க பருவம் வந்தவுடன் சுத்தோதனர் அவரை இளவரசராக நியமித்து யசோதரை என்னும் கன்னிகையை அவருக்கு மணஞ் செய்து வைத்தார். சித்தார்த்தரும் அவர்

Page 21
மனைவியும் மனமொத்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு ஒர் ஆண் மகவும் பிறந்தது.
சித்தார்த்தர் இயல்பாகவே எல்லாப் பிராணிக ளிடத்திலும் அன்புடையவர். அவை துன்பப்படக் கண்டால் அவர் மனம் பதைப்பார். அவை மகிழ்ந் திருப்பதைக் கண்டால் ஆனந்தம் அடைவார். ஆகையால் அவர் எந்தப் பிராணிக்கும் எவ்விதத் துன்பமும் செய்த தில்லை. བ་
சித்தார்த்தருக்குச் சிறுவயதிலேயே சுத்தோதனர் சகல சாத்திரங்களையும் கற்பித்திருந்தார். ஒரு நாள் அவர் வீதி வழியாகப் போகும்போது ஒரு குஷ்டரோகி பிச்சை வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். மற்றெரு நாள்
வயது சென்ற கிழவனுெருவன் மிகத் தளர்ந்து வருந்தி நடப்பதைக் கண்டார். வேறெரு நாள் சிலர் பிண.
மொன்றைச் சுடுகாட்டிற்குக் கொண்டு போவதைப் பார்த்தார். -
இவ்விதமான காட்சிகள் அவருக்கு மிக்க துன்பத்தை உண்டாக்கின. அதனுல் அவர் உலகம் துன்பம் நிறைந்தது என்று முடிவு செய்தார். துன்பத்தை நீக்கி இன்பத்தை அடைவது எப்படி என்ற விசாரம் அவருக்கு உண்டாயிற்று. வேறு எந்த விஷயத்திலும் அவருக்கு மனம் செல்லவில்லை.
இருபத்தொன்பதாம் வயதில் துறவு பூண்டு இராகுலன்
- என்ற குழந்தையோடு உறங்கிக்கொண்டிருந்த யசோதரை
என்ற தமது துணைவியை ஒரு நொடியிலே பிரிந்து வெளிப்பட்டார். கடுமையான தவம் செய்தார். துன்பத்தை
நீக்கப் பல வழிகளை ஆராய்ந்து பார்த்தார். ஒன்றும்
தோன்றவில்லை. கடைசியில் அவர் ஒரு வேலங்காட்டில்
ஓர் அரசமரத்தின் கீழ் இருந்து கொண்டு இருபத்தெட்டு
நாள் ஊண் உறக்கம் இன்றித் துக்க நிவாரணத்திற்குரிய
鞑
 

33
வழியாதெனச் சிந்திக்கலாஞர். இருபத்தொன்பதாம் நாள் அவருக்கு ஞானம் உண்டாயிற்று.
பொருள்களின் மேலுள்ள விருப்பமே துன்பத்துக்குக் காரணமென்று அவர் அறிந்தார். இச்சையை நீக்கிக்கொள் வதால் துன்பத்தை நீக்கலாம் என்று அவர் உறுதி செய்து கொண்டார்; எல்லாரையும் நேசித்து, ஒரு பிராணிக்கும் ஹிம்சை செய்யக் கூடாதென்றும் தீர்மானித்தார். இந்த உண்மைகளைக் கைக்கொண்டால், இவ்வுண்மைகளைக் கடைப்பிடித்து ஒழுகினுற் பிறப்பு இறப்பை வெல்லலாம்
என்பது அவருடைய கொள்கை. சித்தார்த்தர் தமது
அருட்குண வசத்தால் உலக மக்களும் பிறவித் துன்பத்தின் நீங்கிப் பேரின்ப நிலை எய்த வேண்டித் தாம். அறிந்த
'உண்மைகளைப் போதித்து அவர்களை நல்வழிப்படுத்தக்
கருதினர். அதனுல் அவர் தமது புதிய மதத்தைப்
பரப்பினுர், அதன்பின் அவருக்குப் புத்தர் என்ற பெயர்
உண்டாயிற்று. புத்தர் என்ற சொல்லுக்குப் புத்திமான்ஞானி-என்பது பொருள்.
அரசாள்வதற்கு உரியவராகிய அவர் அதை வெறுத்துத் தள்ளிவிட்டு, இவ்விதமாகத் துறவியர்னுர். பிறவாமல் இருக்க வழி தேட வேண்டும் என்ற கருத்தினுல் உலகப் பொருள் களில் உளதாகும்பற்றைவிட்டுச் சிறந்த அருளற நெறியில் நின்று, உலகினர்க்கு உய்யும் நெறி காட்டி வாழ்பவர்களே
நீத்தார் எனப்படுவர். புத்தபெருமானைப் போலத் துறவு
பூண்டு உலகங்காக்கும் உத்தம ஞானிகளின் சரித்திரங்கள் உலக மக்களிடை நல்லறிவொழுக்கங்களை வளர்க்குந் தன்மைய வாய்ப் பெருமை மிக்கு விளங்குகின்றன.
*இருமை வகைதெரிங் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்றுலகு? (குறள் : 23) பிறப்பு, வீடு என்னும் இரண்டும் முறையே துன்பத்தையும் இன்பத்தையும் தருவன என்பதை
3

Page 22
34
ஆராய்ந்து அறிந்து, துன்பமயமான பிறப்பை ஒழித்தற்குத் துறவறம் பூண்டு வாழ்ந்த நீத்தார்களுடைய பெருமைதான் உலகிலுள்ள சக்கரவர்த்தி முதலாயினுர் பெருமையினும் மேலாக விளக்கம் ப்ெற்றதாகும். தாமும் உலக மக்களும் துன்பத்தின் நீங்கி இன்புற்று வாழ்தற்கு ஏதுவாகிய அருளற நெறியில் வாழ்பவராதலின், நீத்தாரது பெருமையே மேலாக விளங்குவதாயிற்று. நீத்தார் : உலகப் பொருள்கள் மேல் உண்டாகும் புறப் பற்றினையும் யானென்னும் அகப் பற்றினையும் துறந்தவர்.
வினுக்கள்
1. துறவிகள் பெருமையை எவ்வாறு எடுத்துரைத்தார்
குறளாசிரியர்?
2. ‘புத்தரின் தவப்பயனே, அசோகன் புகழுக்குக்
காரணம் ? என்பதை விளக்குக.
 

/5 ւ- ւլ
கிருஷ்ண பகவான் சாந்தீபினி மகா முனிவரிடம் குருகுலவாசம் செய்து வந்த நாளில் அவரோடு சுதாமா. என்னும் பிராமணச் சிறுவன் ஒருவன் கல்வி கற்று வந்தான். அப்பொழுது அ வ்விரு வரும் எவ்வகை வித்தியாசமுமின்றிப் பழகி வந்தனர். இவ்விதம் சில காலம் கல்வி கற்றபின் கிருஷ்ண பகவான் குருதட்சினை யளித்துவிட்டு, துவாரகைக்குச் சென்றனர்.
சுதாமாவும் தம்மால் இயன்ற குருதட்சிண அளித்துச் சென்று இல்வாழ்க்கையை மேற்கொண்டனர். அவருக்கு இருபத்தேழு பிள்ளைகள் பிறந்தார்கள். குடும்பப் பெருக்
கத்தால் வறுமை வந்தபோதிலும், அவர் அதை ஒரு
பொருளாக நினையாது, ஈசுவரத் தியான பூசைகளில் ஈடுபட்டு வாழ்ந்தார்; ஊரினருகிலுள்ள காட்டிற் சென்று அங்கே உதிர்ந்து கிடக்கும் நீவாரதானியத்தைப் (குளநெல்) பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் மனைவியிடங் கொடுத்து, அதனுற் பாகஞ் செய்யப்பட்ட கஞ்சியை உணவாகக் கொண்டு சீவனஞ் செய்தார்; வறுமையாற் பழங் கந்தையுடையைத் தைத்து உடுத்து வாழ்ந்தார்; அதனுல், அவருக்குக் குசேலர் என்று பெயர் உண்டாயிற்று.
இப்படியிருக்கையில் குழந்தைகளின் பசிக்கொடுமை மிகுதலைக் கண்டு தாங்கமாட்டாத அவர் மனைவி அவரை

Page 23
36
அணுகிக் குடும்ப நிலையை எடுத்துக் கூறி, ‘உணவுக்
குறைவால் பிள்ளைகள் பசி தீர உண்ண முடியாமல் வருந்துவதை என்னுற் சகிக்க முடியவில்லை; இவ்வாறு எவ்வளவு நாளைக்குச் சீவிக்க இயலும்? உங்களுக்குக் கிருஷ்ணபகவான் பால்ய சிநேகர் என்று சொல்லி யிருக்கிறீர்களே. அவரிடம் சென்று இந்தத் தரித்திரத்தைத் தீர்த்துக்கொள்ள வழி தேடினுல் உங்கள் பகவத் தியானத்திற்கு யாதொரு தடையும் ஏற்படமாட்டாதே? என்று விண்ணப்பம் செய்துகொண்டாள்.
குசேலர் தரித்திரத்தால் விளையும் நன்மையையும், செல்வத்தால் விளையும் தீமையையும் எடுத்துக் கூறினுர்; முடிவில் அவள் விரும்பிய வண்ணமே பகவானிடம் சென்று சம்பத்தைத் தாம் பெற்று வருவதாக ஒப்புக்
கொண்டு சென்றர். அவரைக் காணும் போது கையுறைப் -
பொருளாக அவருக்குக் கொடுத்தற் பொருட்டு அவளிட மிருந்து மூன்று பிடி அவலை வாங்கிக் கொண்டு துவாரகையை நோக்கிப் புறப்பட்டார்.
அங்கே சென்றதும் வாயில் காப்பாளரின் தடையால் பகவானைக் காண்டற்கு மாளிகையுள்ளே புகப்பெருமல் தவித்து, பின்பு மிகவும் பிரயாசைப்பட்டுப் பகவான் எழுந்தருளியிருந்த அந்தப்புரம் போய்ச் சேர்ந்தார். பகவானும் அவரைக் கண்ட உடனே எழுந்து ஒட்டமாக ஓடிவந்து மார்புறத் தழுவிக் கொண்டார். பால்யத்தில் நடந்த விஷயங்களை அன்புடன் எடுத்துரைத்து, அதிக ஆதரவுடன் தாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் அவரை அமரச் செய்தார்; அவருக்கு விருந்துபசாரங்களுஞ் செய்தார்.
பின்பு அவர் அன்புடன் கொண்டு வந்திருந்த அவலை வாங்கி, ' குசேலருக்கு மிகுந்த சம்பத்து உண்டாகக் கடவது? என்று திருவுள்ளத்தில் நினைத்து ஒரு பிடி
#
狩

37
அவலை எடுத்துத் தம் வாயில் போட்டுக் கொண்டார். உடனே குசேலர் வீட்டில் அஷ்ட ஐசுவரியங்களும் நிரம்பின. அதன்பின் மிகுந்த ஆதரவுடன் பகவான் அவரைத் தம்மிடம் வந்த நிலைமையாகவே மீண்டு செல்ல விடுத்தார். அவர் தமது ஊர் சேர்ந்ததும், பகவத் கிருபையினுல் அங்கே உண்டாகியிருந்த சம்பத்தைக் கண்டு வியந்தார்; பெருஞ் செல்வமுண்டாகப் பெற்ற பின்பும் பகவத் தியானத்தைவிடாது செய்து கொண்டு இனிது வாழ்ந்தார்.
உலகில் உண்மையான நட்பு வாய்க்கப் பெறுதல் மிகவும் அரிது. நாம் அடையக்கூடிய பேறுகளுள் நல்லோர் நட்பைப்போற் சிறந்ததொன்றில்லை. இத்தகைய நண்பர் உடனுறைந்து, அடிக்கடி கூடிப் பழகுதல் இல்லாத போதும் நலமே செய்வர். அவர் எங்கிருப்பினும் தம் உள்ளம் ஒன்றுபட்டு அன்புணர்ச்சி மிகுந்திடப் பெறுவர். கூடிப் பழகுதலால் மாத்திரம் உண்டாகும் நட்பினும் உணர்ச்சி யொத்தலாகிய மன ஐக்கியப்பாட்டால் உண்டாகும் நட்பே சிறந்த நட்பாம்.
‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்? (குறள் : 785)
ஒருவரோடொருவர் நட்புக்கொள்வதற்கு ஒரு தேசம் ஒரு குலம் என்றிவை முதலிய தொடர்பாவது பல நாட் பழகுதலாவது காரணமாக வேண்டுவதில்லை; உணர்ச்சி ஒத்திருந்தால் அதுவே சிறந்த காரணமாகி நட்பாதற்குரிய உரிமை தரும்.

Page 24
38
வினக்கள்
* மெய்ந்நட்பு எந்நிலையிலும் வேறுபடாது? என்பதைக் குசேலரது சரித்திரத்தின் மூலமாக விளக்குக. *நட்பு உண்டாதற்குரிய காரணங்கள் எவை? அவற்றுள் தலைமையாகச் சிறந்த காரணம் எது? வள்ளுவர் கூற்றைத் தழுவிக் கூறுக.

ஊக்கமுடைமை
அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறக் கைலையங்கிரிச் சாரலிற் கடுந்தவம் புரிகையில், சிவபிரான் அவன் தவ வைராக்கியத்தை வியந்து பார்வதி தேவியோடு வேட வடிவந்
தாங்கி, அவனைக் கொல்லும் பொருட்டுத் துரியோதனன்
ஏவியிருந்த மூகாசுரன் என்னும் பன்றியைக் கொன்று, அவ்வருச்சுனனுக்கு வரங் கொடுத்தருளக் கருதினர். அப்பன்றியைப் பின் தொடர்ந்தார்; அவருடன் பூத சேனையும் வேட வடிவங் கொண்டு சென்றன.
அப்பொழுது அருச்சுனன் தன்னெதிரே வெகுண்டு ஆரவாரித்து வரும் பன்றியைக் கண்டு, தன் தவத்தை அழிக்கு மென அஞ்சி, தன் வில்லை வளைத்து அப்பன்றியின் முகத்தைப் பிளந்து செல்லும்படி ஒர் அம்பினை விடுத்தான். அதே சமயத்தில் வேடர் தலைவனுக வந்த பரமசிவனும் அப்பன்றியது உடலின் பின்புறத்தைப் பிளந்து ஊடுருவிச் செல்லும்படி ஒர் அம்பினைத் தொடுத்து விட்டார். இருவருடைய அம்பும் பட்ட உடனே பன்றி இறந்து வீழ்ந்தது.
வீழ்ந்தவுடன் வேடர் தலைவனுகிய சிவபிரான், அருச்சுனனை நோக்கி 'யான் இலக்கு வைத்து எய்த பன்றி மீது நீ அம்பினை எய்தல் வீரமாகுமோ? என்று வாது செய்தார். அதற்கு அருச்சுனன் * முன்புவிட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ, நீ பின்பு விட்ட சரஞ் சிரத்திடை உருவுமாறு பிளந்தது; இங்ங்னமாக அடாத்தாக நீ கூறுவது உனது படை வலிமையினுலோ ?

Page 25
40
வில் வலிமையினலோ? யான் சருகினையே உணவாகக் கொண்டு தவஞ் செய்தலின் எனக்கு இப்பன்றி வேண்டுவ தில்லை. உனக்கும் உன் சேனைக்கும் உணவாக இப் பன்றியைக் கொண்டு செல். முறைமைக்கு மாறக உன் படை வலிமை கருதி நீ வெகுண்டு பொருவாயானல், என் அம்புகளால் உங்கள் தலைகள் சிதறும்படி செய்வேன் 9 என்றன்.
அதன் மேல் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் நோக்கங்கொண்ட திருவிளையாடலால், நீண்ட வாக்கு வாதஞ் செய்தருளிய சிவ வேடனுக்கும் தவ வேடனுக்கும் சண்டை நடந்தது. சிவபிரான் அர்ச்சுனனுடைய வின்னுணினை அறுத்துவிட்டார். ஆகையால் விற்றண்டு நீண்டது. அது கண்ட அருச்சுனனுக்குக் கோபம் மூண்டது. அவன் தன் நாணிற்ற வில்லால் வேடன் தலையில் மோதியடித்தான். அப்படி அன்பணுகிய அவன் செய்ததை இன்பமாய் ஏற்றுக்கொண்டு சிவபிரான் அவனுக்கு வேண்டிய பாசுபதாஸ்திர முதலிய வரங்களைத் துன்பந்தீர வழங்கினர். இதனுல் விடாத் தவ வைராக்கிய முயற்சியிற் சிறந்து ஊக்கமுடையவனுய் விளங்கிய அர்ச்சுனற்கு, சிவகடாகூடிமாகிய ஆக்கம் *அதர்வினுய்? வலிய வந்தடைந்தமை இக்கதையால் அறியற்பாலது.
ஊக்கம் உடையவரே உடையவர். அஃது இல்லா தவர்கள் வேறு எவற்றை உடைய வர்களாயினும் உடையவர்கள் எனப்படார். ஊக்கத்தையே பொருளாகக்
கொண்டவர்கள் பொருளையிழந்து விட்டோம் என்று
கலங்கமாட்டார்கள். ஊக்கம் உடையவனையே செல்வம் வழித்தேடிச் சென்றடையும். நீரளவேயாகுமாம் நீராம்பல் அது போல ஊக்கத்தின் அளவே உயர்வுண்டாகும்.
* உள்ளுவதெல்லா முயர்வுள்ளல் மற்றது, தள்ளினுங்
தள்ளாமை நீர்த்து? V* (குறள் : 596) என்பதன் கருத்து இதுவே.
0)

"מ
41
ஒருவன் உயர்ந்த காரியங்களையே எண்ண வேண்டும். அவை ஊழால் நிறைவேறவிடினும் அவ்வெண்ணம் முயற்சி இவைகளில் தாழ்வு இன்மையால் உலக மதிப் பேறும். கணைகள் பல தைத்தாலும் களிறு பின் வாங்குவதில்லை.
அது போல உயர்விற்குச் சிதைவு வந்தாலும் அறிவாளிகள்
சிந்தை தளரமாட்டார்கள். இவ்வுலகத்தில் “யாம் ஒரு வள்ளல் ? என்னும் பெருமை ஊக்கமில்லாதவர்களுக்கு இல்லை. ஊக்கமே ஒருவருக்கு வன்மை. இது இல்லாதவர்கள் வடிவால் மக்களே யல்லாது தன்மையால் மரமேயாவர்.
*ஆக்கம் அதர்வினுய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை? (குறள் : 594) செல்வம் வழிகேட்டுக்கொண்டு போய்ச் சேரும். யாவர்மாட்டு எனின், சிறிதும் தளர்வு இல்லாத மன ஊக்கத்தை உடையார்மாட்டு; அதாவது உறுதியான ஊக்கம் உடையவர்களிடம், எல்லாராலும் தேடப்படும் செல்வம் தானே பல வழியாலும் சென்று அடையும் என்பதாம்.
ஊக்கமுடைமை என்பது காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் செய்து முடிக்க
வேண்டும் என்ற துடிப்பும் கூடிய மனக்கிளர்ச்சி
யுடையவராக இருப்பது. இது எல்லாருக்கும் வேண்டியது.
வினுக்கள்
1. “ ஆழ் முயன்றல் ஆகாததில்லை?. ஒருவனது ஊக்கத்திற்கு தூண்டுகோலாயிருக்கும் வேறு பண்புகளைக் குறிப்பிடுக.
2. * ஊக்கமது கைவிடேல்? என்ற பொருள் பற்றி சிவாஜி, நெப்போலியன், லெனின் போன்ற பெரியாரின் கதையை ஒட்டிச் சிறு விளக்கக் கட்டுரை எழுதுக.

Page 26
செய் ந் நன்றியறிதல்
குந்தி வயிற்றில் சூரியனுக்குப் புதல்வனுகப் பிறந்தவன்.
கர்ணன். விதியின் பயணுக, பெற்ற தாயினுல் ஆற்றில் ஒரு
பேழையுள் வைத்துவிடப்பட்டான். திருதராட்டிரனுடைய
தேர்ப்பாகன் அப்பிள்ளையைக் கண்டெடுத்து அன்பாக வளர்த்து வந்தான். கர்ணன் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கியதேயன்றி விற்போர், வாட்போர், குதிரையேற்றம்
யானையேற்றம் இவற்றிலும் திறம் பெற்றுச் சிறந்த
போர்வீரனுகவும் விளங்கினுன்.
திருதராட்டிரன் புதல்வர்களுள் முதல் வணு கி ய
d
துரியோதனன் கர்ணனுேடு நெருங்கிய நண்பனுயினன். f
திருதராட்டிரன் புதல்வர்களுக்கும் பாண்டவர்களுக்கு
மிடையில் நடந்த ஆயுதப் பயிற்சிப் பரீட்சையில்
அருச்சுனன் சிறந்து விளங்கினுன். அதைக் கண்ட் துரியோதனன் அதிகப் பொருமை கொண்டான். அச் சமயம் கர்ணன் அங்கே சென்றன். அருச்சுனனைப் பார்த்து அருச்சுணு, நீ செய்து காட்டிய வித்தைகளுக்கு மேலாக நான் செய்து காட்டுகிறேன், பார்? என்றன்.
அது கேட்ட துரியோதனன் மிக்க மகிழ்வெய்தினுன். "உடனே கர்ணனைக் கட்டித் தழுவி, அது முதற்கொண்டு அவனை நண்பனுகக் கொண்டான். “ என்னையும் என்
Ꮧ))Ꭸ
 

43
பொருளையும் நீ இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்? என்றன். கர்ணன், “ அரசகுமாரனே, நான் அருச்சுன னுடன் யுத்தம் செய்து என் திறமையைக் காட்டவே வந்தேன். நீ என்மீது காட்டிய பிரியத்துக்கு என்றும் நன்றி யுள்ளவனுய் வாழ்வேன்? என்றன்.
அச்சமயம் கிருபாசாரியார் க ர் ண னை ப் பார்த்து, * அருச்சுனன் பாண்டு புத்திரன் ; நீ எந்த இராச குலத்தைச் சேர்ந்தவன்? அரசரோடன்றிக் குலமும் குலாசாரமும் அறியப்படாதவனுேடு இராச குமாரர்கள் சமயுத்தம் செய்யமாட்டார்கள் ? என்றர். அது கேட்ட கர்ணன் வெட்கமடைந்து வாய் திறவாது ஒருபக்கத்தே ஒதுங்கி நின்றன். உடனே துரியோதனன் சினத்து மறுப்பு நியாயங் கூறிக் கர்ணனை அங்க தேசத்துக்கு அரசனுக்
கினுன். கர்ணன் துரியோதனன் செய்த அந்நன்றியை
என்றும் மறவாதவனுக இருந்தான்.
இவ்வாறு க ர் ண ன் துரியோதனனுக்கு உற்ற நண்பனுக இருந்து வந்தான். பின்னர் பல வருடங்கள்
கழிய, பாண்டவர்க்கும் துரியோதனுதியர்க்கும் பாரத
யுத்தம் ஆரம்பித்தது. கர்ணன் தனது மகனே என அறிந்த குந்தி பாண்டவரும் கர்ணனும் பாரத யுத்தத்தில் இறவாமலிருக்க வேண்டுமென்ற விருப்பினுல், கர்ணனிடம் சென்ருள். தானே கர்ணன் தாய் என்றும், பாண்டவர் கர்ணன் தம்பியர் என்றும், அவனுக்குக்கூறினுள். கர்ணன் பாண்டவர் பக்கம் சேர்வதனுல் இராச்சியம் முழுவதற்கும் பேரரசனுய் விளங்கலாம் எனக் கூறினுள். ஆணுல் கர்ணன் அதற்கு உடன்படாதவனுய்த் தாயைப் பார்த்து “திருத ராஷ்டிரன்புத்திரர்களால் யான் எல்லாச் சுகமும், சொத்தும், மதிப்பும், மரியாதையும் இதுவரையில் எய்தி அனுபவித்த பின், யுத்தம் வந்த இப்போது பாண்டவர்களுடன் சேரச் சொல்கிருய், வில்வித்தை அ ரங் கே ற் று  ைக யில்
அருச்சுனன் எதிரில் என்னை இழித்துரைக்க நேர்ந்தபோது,

Page 27
44 ܀
துரியோதனன் என்னை அங்கநாட்டரசனுக்கி மரியாதை செய்தானல்லவா? அந்த நன்றிக்கு இந்த இராச்சியத் தையேயன்றி மூன்று உலகங்களையுமே கொடுப்பினும் ஈடாகுமா? என்று கூறி மறுத்துவிட்டான். குந்தி மனம் வருந்திச் சென்ருள்.
யுத்தம் தொடங்கி நடைபெறுங்காலத்தில் பத்தாம் நாள் யுத்தத்தில் பீஷ்மர் வீழ்ந்தார். கர்ணன் பீஷ்மரிடம் சென்றன். பீஷ்மர் கர்ணனைப் பார்த்து * கொடையும் வீரமும் பொருந்திய வீரனே, நீ உனது சகோதரர்களாகிய பாண்டவரைப் பகைத்தல் தகுதியன்று. அவர்களைச் சிநேகிப்பதே தருமம்" என்றர். அது கேட்ட கர்ணன் * பிதாமகரே, நான் குந்தி புத்திரன் என்பதை அறிவேன்.
ஆணுல் துரியோதனனது நன்றிகளைப் பெற்று வாழ்ந்த யான்
அவனுக்குச் செஞ்சோற்றுக்கடன் தீர்க்குங் கடப்பா டுடையேன். அதனுல், அவனை விட்டு நீங்கி அவனது விரோதிகளின் பக்கம் சேர்வது பெரும்பாதகம் ; இயலாத காரியம்? என்றன். இவ்வாறு கர்ணன் துரியோதனன் பக்கத்தில் நின்று போர் செய்து மாண்டான்.
உதவி செய்தாரை மறவாது அவர் செய்த நன்மையைப் போற்றுவது சிறந்த கடனுகும். அரசசபையில் கர்ணன் இழித்துரைக்கப்பட்டபோது துரியோதனன் அவனுக்குச்
செய்த நன்றியை அவன் என்றும் மறந்தானில்லை. பூமி
முழுவதுக்கும் தான் அரசனுகும் பாக்கியத்தைப் பெறலாம் என்று அறிந்தகாலையும் அதனைச் சிறிதும் விரும்பாதவனுய் நன்றி செய்த துரியோதனனுக்குத் துணையாகப் பொருது தன் உயிரையும் விட்டான்.
ஒருவன் தான் முன் ஒர் உதவியும் செய்யாம லிருக்கவும் தனக்கு ஒருவர் ஒருவித காரணமுமில்லாமலே மனமுவந்து செய்த உதவிக்கு நிகராகத் தான் அவருக்குச் செய்யத்தக்க கைம்மாறு இல்லை; மண்ணுலகம் விண்
ه
JPسمى

3. 45 ணுலகம் இரண்டையும் பதிலாகக் கொடுத்தாலும் அவை அவ்வுதவிக்கு ஈடு ஆகா. அறிவுடையார் தினையளவு உதவியைப் பெற்றலும் அதைப் பனையளவாகக் கொள் வார்கள். எவ்வாறன செய்ந்நன்றியையும் மறந்தவர்க்கு அப்பாவத்தினின்று உய்யும் வழி இல்லை.
‘எங்கன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ங்கன்றி கொன்ற மகற்கு? (குறள்) என்றர் வள்ளுவரும். இவருக்கு இப்போது நாம் உதவினுல், பின்னுக்கு இவரால் நமக்கு இன்ன கைம்மாறு கிடைக்கும் என்று கருதாமல் (ஒருவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர் பாராமல்) செய்யும் உதவியின் நயம் கடலினும் பெரியது. தன் உயிருக்கு ஆபத்தான பேரிடர் நேர்ந்த காலத்தில்
தனக்கு ஒருவர் செய்த உதவி பொருளின் அளவாற் சிறிதா
யினும், அக்காலத்தை நோக்குமிடத்து அது பூவுலகத்தினும்
பெரியதாகிய உதவியாகும்.
*காலத்தி ஞற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’ (குறள் : 102)
வினுக்கள்
1. கர்ணன் யார்? அவன் செய்ந்நன்றி மறவாதிருந்தான்
எனப் புகழப்படுவதேன்?
2. அறநெறி ஒழுக்கத்தில் வள்ளுவர் “நன்றி மறத்தல்? என்ற பாவ நெறியை எவ்விதம் மதிப்பிடுகிருர்?

Page 28
* 臀
பொருள் செயல் வகை
தேர்வண்மலையன் என்பவன் சிற்றரசனுகியபெருவீரன். இவன் இரு அரசர்க்கிடையில் யுத்தம் நேரிடுங்காலத்தில் தன்னை உதவிக்கு அழைப்போர் பக்கம் சார்ந்து தன் படைவீரருடன் சென்று திறமையாகப் போர் செய்து வெற்றியை உண்டாக்குவான். வென்ற அரசன் இவனது திறத்தைக் கண்டு கொடுக்கும் பொருளைத் தன்னிடம் வரும் புலவர், பாணர் முதலியோருக்குக் கொடுத்து மகிழ்வான். ஒருமுறை சோழன் பெருநற்கிள்ளி என்ற அரசனுக்கும் மாந்தரஞ்சேரல் என்ற சேர அரசனுக்கும் இடையில் சண்டை உண்டாயிற்று. பெருநற்கிள்ளி தேர்வண்மலை யனைத் துணைக்கொண்டான். இரு பக்கத்தினர்க்கும் இடையில் பயங்கரமான போர் நிகழ்ந்தது. தேர்வண் மலையனின் வீர மொழிகளினல் அவனுடைய படை வீரர்களும் சோழ அரசனுடைய படைவீரர்களும் மிக்க திறமையுடன் போர் செய்து வெற்றி பெற்றனர். சோழன் தனக்கு வெற்றி தந்த குறுநில மன்னனுகிய தேர்வண் மலையனைப் பெருமைப்படுத்தி அளவற்ற பொருள்களையும் கொடுத்தான். தேர்வண்மலையன் தான் பெற்ற பொருளைத் தன் வீரர்க்குக் கொடுத்து, எஞ்சியவற்றைத் தன்னிடம் வந்த புலவர், பாணர், கூத்தர் முதலாயினுர்க்கும் அளித்து மகிழ்ந்தான்.
a

A.
47
மன்னன் தேர்வண்மலையன் சிறந்த வீரன். அவன் இரப்போர்க்கு ஈந்து வா மும் வ ள் ள ல் என்பதை வடமவண்ணக்கன்' பெருஞ்சாத்தனுர் என்னும் புலவர் கேள்வியுற்றர். அவ்வரசன் சபையை அடைந்தார். கற்றரைக் களிப்புடன் வரவேற்கும் தேர்வண்மலையன் புலவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றன். அவர்க்குக் கொழுமை யுடைய இறைச்சியும் தேனும் அளித்தான். புலவர் உண்டு மகிழ்ந்தார். அரசனுடைய மனையில் அவனைச் சுற்றி
புலவர், பாணர், கூத்தர் முதலியோர் துன்பமின்றி அமர்ந்து
தேனும் இறைச்சியும் உண்பது கண்டும் உவந்தார். தாம் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்மையே என உணர்ந்தார்.
அரசனைப் பார்த்து “நீ இருதிறத்தினரும் புகழும் வண்ணம் போர் செய்து அதனுல் வரும்பொருளைப் பெற்று, பெற்ற அப்பொருளைப் புலவர்க்கும், பாணர்க்கும் கூத்தர்க்கும் ஈந்து, எஞ்சிய பொருளைக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்கின்றப். எருதானது நெற்பயிர் செய்வ தற்குப் பெரிதும் உதவுகிறது. நெல் விளைந்ததும் நெல்லைப் பிறர்க்குதவி எஞ்சிய வைக்கோலைத் தின்னுகின்றது. அது போலவே உன் செயலும் இருக்கிறது. நீ நெடுங்காலம்
* வாழ்க ? என்று கூறி வாழ்த்தினர். பொருளைத் தரும
வழியில் செலவிடல் வேண்டும் என்ற ஒரே நோக்கம் ,மாத்திரம் இருந்தாற் போதாது. தரும வழியிற் செலவிட வேண்டிய பொருளைத் தரும வழியாலே தேடவும் வேண்டும்.
* அவ்வாறு தேடப்பட்ட பொரு ளே அறத்தையும்
இன்பத்தையும் கொடுப்பதாய் அமையும்.
ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் எல்லாரும் மதிக்கச் செய்வது பொருளே. வறியாரை எல்லாரும் இகழ்வர், செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர். செல்வம் என்னும் மங்காத விளக்கு எண்ணிய தேசங்கள் எல்லாம் சென்று இருள் கெடுக்கும். அறவழியால் ஈட்டிய பொருள்

Page 29
48
)
அறத்தையும் இன்பத்தையும் கொ டு க் கும். அன்பு நெறியானன்றி ஆக்கப்படும் எப்பொருளையும் மக்கள் விரும்பலாகாது; அன்புடையராய் அருள் செய்வாராய் வாழ்வதற்குப் பொருள் அத்தியாவசியமாகும். நல்வழியிற்
பொருளை ஈட்டியவர்கட்கு அறமும் இன்பமும் தாமே வந்து
சேரும்.
'அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்? (குறள் : 754)
ஈட்டுதற்குரிய நல்வழியறிந்து ஒருவர்க்குங் கெடுதி
விளைக்காமல் தேடிய பொருள், அறத்தையும் இன் பத்தையும் கொடுக்கும்.
வினுக்கள்
1. தேர்வண்மலையன் என்ற அரசன் பொருளிட்டியது
எங்ங்ணம் ? செலவு செய்தது எங்ங்ணம் ? - விளக்குக.
2. திருவள்ளுவர் பொருட் செல்வத்தையும் போற்றக்
காரணம் யாது?
 

இன்னு செய்யாமை
இளவரசன் உதயகுமரன் மணிமேகலையை மணக்க விரும்பி அவள் சென்ற இடமெல்லாம் சென்றன். காய சண்டிகை வடிவத்துடனிருந்தவள் மணிமேகலையாகும் என்று கருதி, அவள் செய்தியை நன்கு அறிதற்கு அவளிருந்த உலக அறவி என்னும் அம்பலத்தே செல்ல, அவன் வரவை ஒளித்திருந்து கண்ட காயசண்டிகையின் கணவன் காஞ்சனன், உண்மையறியாதவனுய்த் தன் மனைவியிடத்தே இவன் கா த லா ற் செல்கின்றன் என்றெண்ணி அவ்வுதய குமரனை வெட்டிக் கொன்றன்.
உதயகுமரன் அன்னையாகிய இராசமாதேவி அதைக் கேட்டு வெயிலில் அகப்பட்ட புழுவைப் போலத் துடித்தாள்; அமுதாள், அலறிஞள். கணிகையின் மகளாகிய ஒரு பெண்ணினுல் என் மகன் இறந்தானே என்று ஏங்கினுள். அவள் உள்ளத்தில் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. சிறையிலிருந்த மணிமேகலையை விடுவித்து அவளை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்ருள். அங்கே மணிமேகலைக்கு உணவிலே அறிவை மயக்கும் மருந்தைக் கலந்து கொடுத்தாள். மறு பிறப்பையுணர்ந்த மணி மேகலைக்கு அம்மருந்து ஒன்றும் செய்யவில்லை. அதுகண்ட இராசமாதேவி வியப்படைந்து மணிமேகலைக்குத் தீய
4.

Page 30
50
ஒழுக்கப்பட்டங் கட்டுவதற்காக அவளை ஒரு தனி அறையிலே விட்டு, ஒர் இளைஞனை அனுப்பினுள். அப்பொழுது மணிமேகலை மந்திர வலிமையால் ஆண் வடிவங்கொண்டு இருக்கவே, இளைஞன் அதுகண்டு பயந்து ஒடிவிட்டான். பின் இராசமாதேவி மணிமேகலையை இரண்டு மூன்று நாள் வரையிலே உணவு கொடாது காற்றுச் செல்லாத ஓர் அறையில் அடைத்து வைத்தாள். பசிப்பிணி போக்கும் மந்திரம் அறிந்தவளாகையால் அதனை உச்சரித்து மணிமேகலை எக்கெடுதியுமின்றி இருந்தாள்.
இராசமாதேவி அப்பொழுதுதான் உண் ைம யுணர்ந்தாள். மணிமேகலை தெய்வத்தன்மை பொருந்தி யவளென்று பயம் அடைந்தாள். மணிமேகலையிடத்திலே மன்னிப்புக் கேட்டாள். ஆணுல், மணிமேகலை அரசியின் செயல்களுக்காக அவளை வெறுத்தாளில்லை; அத்தீமைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், மகனை இழந்து வருந்தும் அரசியின் துன்பத்தை நீக்குவதே தன் கடனுகும் என எண்ணி, உதயகுமரனது முற்பிறப்பையும் அவன் மரணம் பழவினைப்பயனே என்பதையும் விளக்கி அவளுக்கு ஆறுதல் சொன்னுள். நல்வழிப்பட்டு ஒழுகுதற்குரிய தருமங்களை அவளுக்கு உபதேசித்து அவளை உய்வித்தாள்.
மணிமேகலையின் உயர்ந்த குணத்தைப் பார்த்தீர்களா? அவளைப்போல, தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வது தான் பகுத்தறிவுடைய மக்கட்குச் சிறந்த குணமாகும். ‘இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர்காண
நன்னயஞ் செய்து விடல்? (குறள் : 314) என்றர் வள்ளுவர்.
தனக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தலாவது அவர் வெட்கமடையும்படி அவருக்கு மிகவும் உவப்பானவற்றைச்
-
*T
"و
A
I

51
செய்து, அவர் செய்த தீமையையும் தான் செய்த நன்மையையும் பாராட்டா திருத்தலேயாம்.
மாசற்ற நன்னெறியாளர் பிறர்க்குத் தீங்கு செய்யார்; அருள்வழிநடக்கும் தூயர் தம்மோடு தொடர்பு பூண்டபிறர் வறுமை முதலியவற்றல் வருந்துவரேல் தம்மால் இயன்ற உதவி செய்வர்; அவ்வாறு உதவாது தாம் செல்வச் சிறப்புடன் வாழ நினையார். எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைத்து அவைகளிடத்து அன்பும் அருளும் உடையவராய் வாழ்தற்கு அவசியமாகக் கைக்கொள்ள வேண்டுவது ஒர் உயிர்க்கும் துன்பம் செய்யாமையாகிய அறமாகும். மற்றை உயிர்க்குத் துன்பஞ் செய்யாமல் வாழ்வாரை உலகந் துதிக்கும். எல்லாரும் வாழவேண்டும் என்னும் அருளுணர்வு உள்ளவர்களுக்கு ஒரு குறையுமில்லை. பிறவுயிர்க்கு இன்னு
செய்தலாற் சிறப்புஞ் செல்வமும் பெறலாமெனினும்,
அங்ங்னஞ் செய்யாமல் வாழ்வதே மாசற்றவர்கள் கொள்கை யாகும். ஆகவே, தமக்கு ஏதும் நன்மையெய்தல் காரண மாக வாயினும் தற்காப்புக் காரணமாகவாயினும் பிறருக்கு இன்னு செய்தலை ஒழிதல் வேண்டும்.
இன்ன செய்யாமலிருப்பதற்கு உபாயம் யாதெனில் பிற உயிர்க்கு உற்ற துன்பத்தைத் தமக்கு உற்ற துன்பம் போலுணர்வதாகும். பிறர் தனக்கின்னு செய்யும்போது
தன் உயிர்க்குத் துன்பம் விளைவதையறிபவன், தான் பிற
உயிர்க்கு இன்னு செய்யப் புகும்போது அச்செயல் தனக்குப் போலவே அவ்வுயிர்க்கும் துன்பம் விளைக்குமெனக் கருதி உணரின், அவன் அதனைச் செய்யான். ஒருவன் முற் பகலிற் பிறர்க்கு இன்னு செய்தால், பிற்பகலில் அவனுக்குத்
துன்பங்கள் தாமாகவே வரும். ஆகையால், துன்ப
மெய்தாமல் வாழ விரும்புவோன் எவ்வுயிர்க்குந் துன்பஞ் செய்தலாகாது. பிறர்க்குத் துன்பஞ் செய்தற்கு ஏதுவாகிய தீய எண்ணமானது அவ்வாறு எண்ணுகின்றவனையே

Page 31
52
கெடுப்பதனுல், நாம் எந்நாளும் பிறர்க்கு நல்லனவற்றையே நினைத்தும் செய்தும் அவற்றல் நன்மை பெறுவோமாக.
கெடுவான் கேடு நினைப்பான்99 - 'தன்வினை தன்னைச் சுடும்? (பழமொழி)
விளுக்கள்
1. இன்ன செய்தவரை எவ்வாறு தண்டித்தல் வேண்டும்? 2. இராசமாதேவி மணிமேகலைக்குச் செய்த தீமைகள்
எவை? அப்படி இருந்தும் மணிமேகலை இராசமா தேவிக்கு என்னென்ன அறிவுரைகள் கூறினுள்?
 
 

இடுக்கணழியாமை
பாண்டவர்களுக்குப் பன்னிரண்டு வருஷ வனவாசம் முடியும் காலம் நெருங்கிற்று. ஒரு நாள் ஒரு மான் கொம்பிற் சிக்கி அந்த மானுற்கொண்டு செல்லப்பட்ட அரணிக்கட்டையை எடுத்துத் தரும்படி ஒரு பிராமணன் பாண்டவரிடம் வேண்டினன். பாண்டவர் மானைப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்றனர். அது ஒரு மாய மானுக இருந்ததால் பிடிபடாமல் ஒடி மறைந்தது. பாண்டவரும் களைத்துக் காட்டினுள் ஒரு மரத்தடியில் இளைப்பாறத் தங்கினர். தண்ணீர்த் தாகத்தினுல் வருந்திய தருமபுத்திரன் நகுலனப் பார்த்து எங்கிருந்தாவது தண்ணிர் கொண்டு வந்து தரும்படி கேட்டான். நகுலனும் ஒரு தடாகத்தை அடைந்து தண்ணிரைத் தானும் குடித்து மற்றவர்களுக்கும் கொண்டுசெல்ல எண்ணினன். தண்ணிர் குடிப்பதற்காகத் தடாகத்துள் இறங்கினன். அப்போது ஆகாயத்தில் ஒர் அசரீரி வார்த்தை உண்டாயிற்று.
* சாகசம் செய்யாதே இது என் வசமுள்ள குளம், மாத்ரீ புத்திரனே! என் கேள்விக்கு விடை கூறிவிட்டுப் பின்பு தண்ணிரைக்குடி? என்றது அது. நகுலன் திடுக்கிட்டான். ஆணுல் தாகத்தின் மிகுதியினுல் அதைக் கவனியாமல் நீரைக் குடித்தான்; குடித்தவுடன் மயக்க முண்டாகிக் கரை ஏறிக் கீழே விழுந்தான்.

Page 32
) 54
போன நகுலன் திரும்பி வ்ராமையால், தருமபுத்திரன் அவனைப் பார்த்து வரும்படி சகாதேவனை அனுப்பினுன் , சகாதேவனும் அங்குச் சென்று அவ்வாறே செய்து மயங்கி விழுந்தான். பின்னர் அர்ச்சுனனும் பீமனும் முறையே சென்று அவ்வாறே மயங்கி விழுந்தனர்.
நெடுநேரமாகியும் போன சகோதரர்கள் திரும்பாமை யால் தருமபுத்திரன் மிகவும் துன்பப்பட்டான். அவர்கள் ஏதாவது சாபத்தை அடைந்தார்களோ என்று எண்ணித் தானே சென்று பார்த்துவரப் புறப்பட்டான். அத்தடாகத்தில் அருகே சென்றன். அங்கே தன் சகோதரர்கள் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டு ஆச்சரியமும் துக்கமும் அடைந்தான்; தன் சகோதரர் ஒவ்வொருவரையும் குறித்து வருந்தினுன்.
தனக்குத் துணைவராய் இருந்த தன் தம்பியர் இவ்வாறு மாண்டனரே என்று வருத்தம் அவனை அதிகம் வாட்டினுலும் அதனுல் அவன் புத்தி கலக்கமடையவில்லை. அத்துன்பம் நேர்ந்த சமயத்திலும் மனத்திடமுள்ளவனுக அதற்குரிய காரணம் என்ன என்று ஆராயலானுன். தம்பியர் உடம்பில் காயமில்லாமலிருப்பதால் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்ப தாகவே எண்ணினுன். பின் தானும் தாகத்தினுல் தூண்டப் பட்டுத் தடாகத்தில் இறங்கித் தண்ணிர் குடிக்கச்சென்றன். அப்போது அசரீரியாகிய தெய்வம், ‘இது என் வசத்தில் இருக்கின்ற பொய்கை; என் வினுக்களுக்கு நீ விடை கூறிய பின் இப்பொய்கையில் இறங்கித் தாகம் தீர்த்துக் கொள்ளக் கடவை? என்றது. தருமபுத்திரனும், “உன் கேள்விகளைக் கேள்? என்றன். ஒன்றன்பின் ஒன்றக அசரீரி பல கேள்விகளைக் கேட்டது. தன் பகைவரை அழித்து நீதியை நிலை நாட்டுவதற்குத் துணையாக இருந்த உயிர்க்குயிரான தம்பியரை இழந்து தவிக்கிற அந்த நேரத்திலுமே தருமன் எவ்வளவு மனுேபலம் உடையவனுக நின்று மிகவும் புத்தி சாதுரியமாக அசரீரியின் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும்

55
பதில் அளித்தான்! அவனது அற்புதமான பதிலைக் கேட்ட அசரீரி மகிழ்ந்து, 'இறந்தவர்களில் ஒருவன உயிர் பெற்றெழச் செய்வேன். எவன உயிர்ப்பிக்க வேண்டு
கின்றப்? என்று வினவ, தருமம் தவருத அவன் நகுலன
உயிர்ப்பிக்கும்படி வேண்டினுன். அவனது நீதியினுல் ஆச்சரியமும் பெருமகிழ்ச்சியும் அடைந்த அசரீரியாக நின்ற தருமதேவதை நால்வரையுமே உயிர் பெற்றெழச் செய்தது. எவ்விதத்துன்பம் வந்தபோதும் அதனைப் பொருட் படுத்தாமல் மனுேதிடமுள்ளவராய்த் தம் கருமத்தைவிடாது முயல்பவர், முடிவில் காரிய சித்தி பெற்று மிகுந்த இன்பத்தை அடைவர்.
'இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்? (குற்ள் : 612}
என்றர் வள்ளுவர்.
ஒருவன் தனக்குத் துன்பம் வருங்கால் மனங்
கலங்காது மகிழக்கடவன். அத்துன்பத்தைக் கடப்பதற்கு
அம்மகிழ்ச்சி போல வேறெரு கருவியுமில்லை.
துன்பம் வந்தபோது மகிழ (துன்பத்தைக் கீழ்ப்படுத்தி வெற்றிபெற) வேண்டுமேல் மன உறுதி வேண்டும்; அறிவுத் தெளிவும் வேண்டும். இவ்வாறு மனத்தெளிவும் உறுதியும் இல்லாதவர்கள் மேன்மேலும் அழிவில்லாத் துன்பத்துக்கு ஆளாவர். பொறுப்புணர்ச்சி மிகுமேல் ஊக்கமுடை யவனுக்கு நிர்வாக சக்தியும் மிகும். செய்யக் கடவன வற்றையும் மிக ஒழுங்காகச் செய்ய நேரும். பொறுப் புணர்ச்சி மிக்கவன், தனக்கு ஏதும் ஒரு பொறுப்பு உள்ள வரையில் நம்மால் இயன்ற அளவு கடப்பாட்டைச் செய்வோம்’ என்று சோர்வின்றிச் செய்வன்; செயலால் வரும் துன்பத்தையும் இன்பமாகக் கொண்டு கடன்களைச் செய்து சிறப்படைவன்.

Page 33
56
வினுக்கள் துன்பம் ஏற்படும்போது அதனை மேலோங்கவிடாதுسمپس
கீழாக்கற்கு யாது செய்தல் வேண்டும்?
2. தருமபுத்திரனுக்கு நேர்ந்த இடுக்கண் யாது? அதனை ,
எவ்வாறு பொறுத்து நன்மை அடைந்தான் என்பதை விளக்குக. بتها
 
 
 

༼འི་
வருமாறு எடுத்துக் கூறினர்:
இறைமாட்சி
மதுரையில் இருந்தரசாண்ட தமிழ் அரசர்களுள்
நெடுஞ்செழியன் என்பவன் ஒருவன். அவன் புலவர்களை
ஆதரித்துத் தமிழை வளர்த்து வந்தான். வீரத்திலும் சிறந்து விளங்கினன். தலையாலங்கானம் என்ற இடத்தில் சேர அரசனேடு செய்த போரில் வெற்றி பெற்றன். அதனல்
இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனவும் பெயர் வழங்கப்பட்டான். பின் போர் செய்து வெற்றி பெறுவதொன்றையே பொருட்படுத்தி அவ்விஷயத்திற் காலத்தை மிகுதியாகக் கழிப்பானுயினன். குடிகளின் நன்மைக்காக தான் உழைக்கவேண்டுமே என்பதை மறந்தான். நாடு வளம் பெற்றுக் குடிகள் செல்வம் பெறுவதற்கு அரசனகிய தானே காரணம் என்பதை
எண்ணினனில்லை. அதனுற் குடிகள் வறுமையுற்று வாடினர். அதை அறிந்த குடபுலவியனர் என்னும் சிறந்த தமிழ்ப் புலவர் அரசனைக் காணச் சென்றர்; சென்று மன்னனைக் கண்டு அவன் கடமையின்னதென அவனுக்குப் பின்
*உலகம் அனைத்தையும் தம் முயற்சியால் உரிமை
யாக்கிக்கொண்ட பேரரசர் மரபில் வந்தோய், வளம் பொருந்தியமூதூரை உடையவனே, நீ மறுமை இன்பத்தை

Page 34
RRavialas
58
விரும்பினும், பகைவரை வென்று உன் ஒரு குடைக்கீழ் ஆள் விரும்பினும், புகழை விரும்பினும் அவ்விருப்பத்துக்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக: உயிர்கள் வாழ்வதற்கு இன்றி யமையாது வேண்டப்படுவது நீர். உணவால் உண்டாகி வளரும் உடலுக்கு உணவு முதற்காரணமாதலால், உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர். பெறத்தக்க பொருளாக அவ்வுணவு கிட்டுவது விளைநிலத்துக்கு நீர் கிடைத்தால் அல்லவா? விளை நிலத்துக்கு நீர் எப்பொழுதும் கிடைக்கச் செய்பவர், யாவர்க்கும் உணவைக் கிடைக்கச் செய்தவராவர். - இனிப் பருவத்தே விதை விதைத்துவிட்டு, நீருக்கு மழையை எதிர்பார்க்கும் நாடு பெரிதாயிருப்பினும், பஞ்சத்தால் வருந்தி அரசனது செங்கோலாட்சிக்கும் வெற்றிக்கும் பயன்படாது. ஆதலால் விளை நிலத்துக்கு நீர் எப்பொழுதும் கிடைக்கத் தக்கதாகச் செய்தலை நீ மேற் கொள்ளவேண்டும். அதற்கு, நிலம் குழிந்து பள்ளமா யிருக்கும் இடங்களிலெல்லாம் பெரிய குளங்களை உண்டாக்கி அவற்றின்கண் நீரைத் தேக்கி வைப்பாயாக; அங்ஙனம் செய்யின், நீ நாட்டின் பொருள் வருவாயைக் கூட்டி, மக்கள் வ று  ைம யை அகற்றினாயாவாய். இத்தகைய உனது முயற்சியால் உன் நாட்டு மக்களும் செல்வத்தோடு அறிவு பெற்று, அப்பொருளைத் தக்க வழியிற் செலவிட்டு, அறநெறி வழுவாது இன்புறுவர். குடியுயரக் கோனாகிய நீயும் உயர்குவாய்; அதனால், இம்மையில் வெற்றியும் - செல்வமும், இன்பமும், ஈகையும் புகழும் உனக்குக் கைக் கூடும் என்பதை அறிவாயாக. அவ்வழியில் உள்ளஞ் செல்லப் பெறுவாயாக '' என்றார்.
இது கேட்ட அரசன் தன் மானங் காத்தல் காரண மாகப் பகைவெல்லுதலிற் சென்ற விருப்பினால் நாட்டின் ஆக்கவேலையில் தான் சோர்வுற்றமைக்கு வருந்தினான். தனக்குப் புத்தி கூறித் தெருட்டிய புலவரை வியந்து போற்றினான். தன் தலைமையில் இருந்த நாட்டில் நீர்வளம்

59 )
பெருக்கி அதனுற் செல்வம் ஓங்கச்செய்து, குடிகளின் அன்பும் ஆசியும் பெற்று வாழ்ந்தான். குடிகளும் இன்பம் பெருகிக் காலங்கழித்தனர்.
இவ்வாறே ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் தலைமையாக இருந்து கடமையாற்றி வரும் ஒவ்வொருவரும் தத்தங் கடமையை உணரவேண்டும். அறவழியறிந்து முறை தவருது கடமையாற்ற வேண்டும். 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பதற்கு இயைய தாம் எப்படி ஒழுகுகிறர்களோ, அவ்வாறே தம் கீழ் வேலை செய்பவரும் ஒழுகுவர் என்பதை உணர்ந்து நடப்பாராயின், நாட்டில் சமாதானம் நிலவி யாவரும் இன்பமடைவர் என்பது நிச்சயம்.
எவ்வித ஸ்தாபனங்களிலும் தலைமை வகிப்போருக்கு அமையவேண்டிய இன்றியமையாத குணங்கள், எதிர்ப்பார் யாருக்கும் அஞ்சாமையும், ஈகையும், அறிவுடைமையும், ஊக்கமுமாம்; விரைந்து வினை செய்யும் வன்மையும் அதற் கேற்ற கல்வியும் ஆண்மை (நிர்வாக சக்தி)யுமாகிய இவையும் வேண்டுவன. அறநெறி நேர்மைகளில் தவருதவராய், வீரம் குன்றது பழி பாவங்களுக்கு அஞ்சி, பொருளாதார வாயில்களைப் பெருக்கிப் பொருளைத் தக்கவழியில் ஈட்டிக் காத்து, நல்வழியிற் செலவழிப்பதற்குரிய ஆற்றல் படைத்த வராதலும் வேண்டப்படும் குணமே. இன்னும், இவ்வாறு நாட்டில் முதலிடம் வகிப்போர் மக்களால் போற்றப்பட வேண்டுமாயின், யாரும் எக்காலத்திலும் சென்று தத்தங் குறைமுறைகளை நேரில் தெரிவித்துக் கொள்ளுமாறு எளிதிற் காணுதற்கு உரிய வசதியளித்தல் வேண்டும்.
கடுஞ்சொற் கூறுதலின்றி, இன்சொல்லுடையணுய், நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்து காக்க வல்ல தலைவனது கட்டளைக்கு அ  ைம ந் து வாழ்வார் ம க்க ள். நீதியும் நேர்மையும் உடையவனுய் ஒழுகுபவனே மக்கள் போற்றற் குரிய தலைவருவன்.

Page 35
60
"இயற்றலுங் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"
(குறள் : 385) பொருள் வரும் வழிகளை உண்டாக்கி வைத்தலும் பொருள்களைச் சேர்த்தலும் சேர்த்தவற்றைப் பாதுகாத்தலும், காத்தவற்றை நல்ல வழிகளிற் பகுத்துச் செலவிடுதலுஞ் * செய்ய வல்லவன் தக்க அரசனாவன்.
வினாக்கள்
சிறந்த அரசனொருவன் எப்படிப்பட்டவனாக இருக்க
வேண்டும்? *2. தலைமை தாங்கத் தகுதியுடையவர் யாவர்?
ம தா

- 4. iaa
கல்வி
ஆதி காலத்தில் தமிழ் நாட்டில் பெருஞ்சித்திரனார் என்னும் பெயருடைய ஒரு புலவர் இருந்தார். அவர் கல்வி அறிவு ஒழுக்கங்களில் மேம்பட்டவர் ; குமணன் என்ற அரசனது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். புலவர் அறிவுடையராயிருந்த போதிலும், செல்வம் இல்லாமையால் தம்மனைவி மக்களைப் பாதுகாக்க இயலாது அதிகம் வருந்தினார். ஒரு நாள் அவர் தம் குழந்தைகளின் பசித் துன்பத்தைக் கண்டு வருந்திக், குமணவள்ளலைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார். காடு மலையும் கடந்து அதிக தூரம் கால்நடையாகவே சென்றார். பசிக்களையும் மன "வருத்தமும் மேலிட மெலிந்த உடம்பினராய் ஈற்றில்
குமண வள்ளலின் அரமனையை அடைந்தார்.
இல்லையென்று இரந்தோர்க்கு வேண்டும் பொருள் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதிலே பெரிய இன்பம் அடையும் இயல்புடையவன் குமண மன்னன். புலவராம் பெருஞ்சித்திரனாரைக் கண்டதும் அவரை உபசரித்து
அவர்க்கு வேண்டும் பொருளை ஈந்தான்.
பெருஞ்சித்திரனார் தாம் பெற்ற பொருள் அனைத்தையும் கொண்டு வந்து தம் மனைவியிடம் கொடுத்தார். அவர் தம் மனைவியை நோக்கி, '' என் மனைக்கு உரியவளே, நான்
க0)

Page 36
62
Υ கொடுத்த பொருளைக் கொண்டு, உன்னை வேண்டி வந்த வர்க்கும், சிறந்த கற்பினையுன்டய முதுமகளிர்க்கும் உதவி செய்; நாம் பசியால் வாடுங்கால் பொருளைக் கடனுகக் கொடுத்துதவிய அனைவர்க்கும் கொடு; மேலும் விருந்தின ராக வீடு தேடிவரும் அனைவர்க்கும் கொடுத்து உதவுவாயாக. இப்பொருள் நாளைக்கு வேண்டும், இன்னும் பல நாளைக்கு வேண்டும் என்ற செட்டுத் தன்மையால் வேண்டுவோர்க்கு ஈயாது மறுத்து வாழாதே ; எல்லாருக்கும் பயன்பட வாழ்வாயாக? என்று கூறினுர்,
குமணன் பொருள் அளிப்பதற்கு முன் இருந்த புலவர் குடும்ப நிலைமையையும்,பொருள் பெற்றவுடன் இருந்த அவர் மன நிலைமையையும் நோக்க, நமக்கு எவ்வளவு வியப்பு உண்டாகிறது! இத் த  ைக ய மனப்பண்பாட்டிற்குக் காரணம், சிற்றுயிர்க்கு உற்ற துணையாய கல்வியறிவன்றே? ஆகவே, நாமும் பல நூல்களையும் ஆராய்ந்து சுற்றல் மாத்திரத்தோடு திருப்தியடையாது கற்றதன்படி ஒழுகி எமக்கும் பிறர்க்கும் நன்மை விளைப்போமாக.
கற்றற்குரிய அறம் முதலிய உறுதிப் பொருள்களேப் பயக்கும் நூல்களைக் குற்றமறப் படிக்க வேண்டும். படித்த வண்ணம் ஒழுக வேண்டும். எண்ணும் எழுத்தும் ஆகிய இரு கலைகளும், அறம் முதலிய உறுதிப் பொருள்களைக் கூறும் நூல்களை அறிதற்குக் கருவியாய், மக்களுக்குக்
கண்ணுகும். கற்றவர்களே கண் படைத்தவர்கள்.
கல்லாதவர்கள் புண் படைத்தவர்கள். கல்வியறிவுடையா ருடன் கூடிவாழும்போது மகிழ்ச்சியும் அவர் பிரியும்போது வருத்தமும் உண்டாகும். செல்வர் முன் வறியவர் நிற்பது போலக் கற்றர் முன் பணிந்து அடங்கியிருந்து படித்தவர்களே அறிவு படைத்தவராவார்கள். அவ்வாறு படிக்காதவர்கள் உயர் குடிப்பிறப்பு, செல்வம் முதலியன உடையராயினும் கீழ்ப்பட்டவராவர். தோண்டிய அளவாக
 

63
மணற்கேணியிலே நீர் சுரக்கும்; அதுபோலப் படித்த அளவாகவே மக்களுக்கு அறிவு சுரக்கும். படித்தவர்களுக்கு எல்லா நாடும் ஊரும் சொந்த நாடும் ஊரும் போலவேயாம். அப்படி இருந்தும் ஒருவன் சாகும் வரையில் படிக்காமல் காலங்கழிப்பது எவ்வளவோர் அறியாமை ! ஒருவன் ஒரு
பிறப்பிற் படித்த படிப்பின் பயணுகிய அறிவு அப்பிறவியோடு
அழியாது அவனுக்கு மேல்வரும் எல்லாப் பிறவிகளிலும் உடன் சென்று உதவும். அறிஞர் தமது கல்வியால் தாம்
- சிறப்பெய்தி இன்புறுதலைப்போல், உலகமும் இன்புறுதலைக்
கண்டு, அத்தகைய கல்வியை மேன்மேலும் விரும்புவர். தமக்கும் பிறர்க்கும் இன்பம் பயக்கத்தக்க அழிவற்ற
செல்வம் கல்வியேயாம்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (குறள் : 391) கற்கத்தக்கனவாகிய நூல்களை ஐயந்திரிபு அறக்கற்றல் வேண்டும். அப்படிக் கற்றல் அக்கல்விக்குத் தக்கபடி நன்னெறியிலே நிற்றல் வேண்டும்.
விஞக்கள்
്' ஒழுகல்-இவ்விரண்டனையும் விளக்குக.
புலவர் பெருஞ்சித்திரனுர் கற்றபடி ஒழுகினர் என்பது
எவ்வாறு விளங்குகிறது?

Page 37
தீவினையச்சம்
ஆதிகாலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நெடுஞ் செழியன் என்ற பாண்டியனுக்கு அணிகலன்கள் செய்யும் தட்டான் ஒருவனிருந்தான். அவன், தான் பொய் களவு முதலிய இழிதொழில்களில்லாத நல்லவன் போலத் தன்னைக் காட்டிக்கொள்வான். ஆணுல், அவன் உண்மையில் கள்வனே. ஒரு முறை அவன் அரசன் தேவிக்குச்
செய்த காற்சிலம்புகளுள் ஒன்றை வஞ்சித்துக் கள.
வாடினுன். அரசன் அச்சிலம்பை எவ்விடத்தும் தேடியும் அது கிடைக்கப்பெறவில்லை; பின்பு ஒரு நாளில் கள்வன் அகப்படுவான் என்று எண்ணி வாளா இருந்தான்.
அக்காலத்தில் தனது செல்வம் எல்லாவற்றையும் இழந்து வறுமையடைந்த கோவலன் காவிரிப்பூம்பட்டினத்தி
லிருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று வியாபாரம்
செய்து பொருளிட்ட எண்ணினுன் , தனது மனைவி கண்ணகியுடன் மதுரை நகரம் சென்றடைந்தான். அங்கே கண்ணகியை ஒர் இடைச்சி வீட்டில் இருக்கவிட்டு அவளுடைய ஒரு காற் சிலம்பை விற்பதற்காக அதனைக் கையிற் கொண்டு, மதுரை நகர வீதியிற் சென்றன்.
அரசியின் காற்சிலம்பைக் களவாடிய அரமனைத்
தட்டான் அவ்வழியே வந்தான். கோவலன் அத்தட்டானிடம்
ίζει
 
 

)
65
சென்று அரசியார் அணிவதற்கேற்ற காற்சிலம்பொன்றை விலை மதித்தற்கு வல்லையோ எனக் கேட்டான். பொற் கொல்லன் அச்சிலம்பு அரசன் தேவியின் சிலம்போடு
ஒத்ததாயிருத்தலைப் பார்த்து, 'இது கோப்பெருந்தேவிக்கு
ஏற்றதே; இதனை அரசனிடம் கூறி வருகிறேன், நீங்கள்
இங்கிருங்கள்? என்று சொல்லி அரசனிடம் சென்றன்.
கோவலனே அரசியின் காற்சிலம்பைக் களவாடிய
கள்வன் எனக் கூறித் தன் களவை மறைத்துத் தப்புவதற்கு
\ இதுவே தக்க சமயம் என எண்ணினன். அரசனைக்
கண்டு 8 அரசரேறே, தேவியின் சிலம்பைக் களவாடிய
கள்வன் அச்சிலம்போடு வந்து என் வீட்டிலிருக்கிறன் ??
எனக் கூறினன். அரசன் அது கேட்டுச் சிறிதும்
ஆராயாமலே அக்கள்வனக் கொன்று அச்சிலம்பைக்
கொண்டு வரும்படி தன் ஏவலருக்குக் கட்டளையிட்டான், ஏவலர் சென்று கோவலனை வெட்டிக் கொன்றனர்.
இச்செய்தி நகரெங்கும் பரவிற்று; கண்ணகி அதனை யறிந்ததும் அழுதாள் ; அரற்றினுள், விழுந்தாள், எழுந்தாள். சூரியனை நோக்கி “நீ யறிய என் கணவன். கள்வனே? என்று கதறினுள். பின் தன் கணவன் வெட்டுண்ட இடத்தையடைந்து புலம்பினுள். பின்னும் கோவலனிறந்த துக்கமும், ஆராயாது கொன்ற அரசன் மீது கோபமும் ஆருதவளாகித் தனது மற்றைக் காற் சிலம்புடன் அரசன் அரமனையையடைந்தாள். தனது கணவன் கள்வனல்லன் என்பதை தனது மற்றைச் சிலம்பைக் காட்டி நிரூபித்தாள். அரசன் தான் ஆராயாமல் கோவலனுக்குச் செய்த கேட்டை யெண்ணித் துன்ப மேலீட்டால் சிங்காசனத்திலிருந்தபடியே கீழே விழுந் திறந்தான். இது கண்ட அரசன் தேவியும் உடனே இறந்தாள்.
கண்ணகி இவற்றலும் கோபம் ஆருதவளாகித் தன் கற்பின் திறத்தால் மதுரையை எரித்தாள். பின் கடவு
5

Page 38
66
ளருளால் தன் கணவன் கோவலனைத் தேவ விமானத்தில் வரக்கண்டு அவனுடன் தேவலோகஞ் சென்ருள். பாண்டியன் கோவலனுக்காவது கண்ணகிக்காவது தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனல் அரசன் தண்டனை விதிக்கும்போது விசாரணை செய்ய வேண்டும். ஆராய்தலின்றித் தண்டனை விதிக்கும் தீச் செயல் என்றும் தீமையையே விளைக்கும் என்பதை மறந்தான். தட்டான் சொல்லை நம்பிக் கோவலனைக் கொல்லக் கட்டளையிட்டான்.
இந்தக் கட்டளையொன்றே அரசனைக் கொன்றது. அவன் மனைவியைக் கொன்றது. மேலும் அவன் நகரத்தையும் மக்களையும் அழித்துவிட்டது. அறிவின் சோர்வினுல் நினையாது செய்த தீச்செயல் இவ்வளவு பயங்கரமான கேட்டை விளைத்ததேல், நினைத்துச் செய்யும் கொடுஞ் செயல்கள் எவ்வளவு கொடுமையை விளைக்கு மென்பது சொல்லவும் வேண்டுமோ?
விதைக்கப்படுவது எதுவோ அதுவே விளைந்து பயன் தரும். அது போல ஒருவன் செய்யும் நல்ல செயல் நன்மையே பயக்கும். தீய செயல் தீமையே பயக்கும். தீயானது தான் சார்ந்த இடத்தில் சார்ந்த அப்பொழுது மட்டும் தீமை செய்யும். ஆனல் தீய செயல் பிற்காலத்திலும்
வேறு பிறவியிலும் செய்தவனைத் தொடர்ந்து சென்று தீமை"
பயக்கும். ஆகையால் தீயினுக்கு அஞ்சு வதினும்
மிகுதியாகத் தீய செயலுக்கு அஞ்ச வேண்டும். அறிவு
நிலைகள் பலவற்றினும் தலையானது பகைவர்க்கும் தீமை செய்யாமல் விடுவதேயாகும். தீய எண்ணம் எண்ணுவதும் எண்ணத்தளவில் விதைத்த தீமையாகும். அதனுலும் தீமை விளைந்தே தீரும். இது அறத்தின் சட்டமாகையால் மறந்தும் மற்றவனுக்குக் கேடு செய்ய எண்ணக்கூடாது.
தனக்கு ஏற்பட்ட வறுமையைத் தீர்க்க எண்ணிப் பிறர்க்குத் தீமை செய்வதும் கூடாது. செய்தால் அப்போது வறுமை தீர்வதுபோலத் தோன்றினும் மீளவும் வறியவ
*v
 

67
ணுகியே வாழ நேரும். ஆகையால் வறுமைக்கு மருந்து என்று எண்ணியும் தீயவை செய்யக்கூடாது. துன்பங்கள் வந்து தன்னை வருத்தாதொழிதலை விரும்புகின்றவன் மற்றவர்களிடம் தீய செயலைச் செய்யாமல் வாழ வேண்டும். , ஏனெனில் புறத்தில் தோன்றும் பெரிய பகை எவ்வளவு பெரும் பகையாக இருந்தாலும், ஒருவாறு ஓடி ஒளித்தாயினும் தப்பிக்கொள்ளலாம். ஆணுல், தீவினையாகிய
| பகை செய்தவனைவிட்டு நீங்காமல் அவனது நிழல்போலத் \ தொடர்ந்து வருத்தும். ஆகையால் ஒருவன் தனக்குத்
துன்பம் வாராமல் தன்னைத்தான் காத்துக்கொள்ள வேண்டுமானல் பிறர்க்குச் சிறிதளவும் தீங்குச் செய்யாதபடி தன்னைக் காத்து நடந்துகொள்ள வேண்டும்.
*மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ் சூழுஞ் சூழ்ந்தவன் கேடு” (குறள் : 204) ஒருவன் தன் அறிவின் சோர்வினுலும் மற்றவனுக்குத் தீமை பயக்கும் செய்கையை எண்ணுதொழிக. எண்ணுவா ணுயின், அவனுக்குக் கெடுதியையுண்டாக்கும் செயலை அறக் கடவுள் எண்ணும்.
நல்லொழுக்கம், நற்பழக்கம், நற்சேர்க்கை முதலிய
* சாதனங்களால் நாடோறும் மாசறுக்க வேண்டும். ஒருவன்
தீவினை செய்வதால் அவனுக்குத் துன்பமே விளையும். பகைவனுக்கும் தீமை செய்யற்க. அஃது அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவுடைமையாகும்.
வினுக்கள்
பாண்டியன் நெடுஞ்செழியனின் அழிவுக்குக் காரணம் யாது?
எக்காரணத்தினுல் தீவினையைத் தீயினும் அஞ்சி விலகல் வேண்டும்?

Page 39
பொறையுடைமை
தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தவர்க்கு உண்டாவது ஒரு நாளை இன்பமே; அதனைப் பொறுத்த வர்க்கு உலகம் அழியும்வரை புகழ் நிற்கும். பூவுலகிலுள்ள நாடனைத்தும் ஒருங்கே வென்று ஆளும் வீரம் படைத்தவர்
பஞ்சபாண்டவர். இத்தகைய திறம்படைத்தவர் சிற்றரச
கிைய விராடனிடம் வேலைக்கமர்ந்து தமது அஞ்ஞாத வாச காலமாகிய ஒரு வருடத்தைக் கழிக்கலாயினர். பஞ்ச பாண்டவருள் முதல்வரான தருமபுத்திரர் விராடராசனுக்கு ஆஸ்தானத் தோழராக இருந்தார். அருச்சுனன் பேடி
வடிவம் பூண்டு பிருகன்னளை என்ற பெயர் தரித்து அரமனையின் அந்தப்புரத்தில் இராசகுமாரிக்கு நாட்டியம்
பயிற்றிக் காலம் கழித்தான். இவ்வாறே பாண்டவருள்
ஏனையோரும் மாறு வேடம் பூண்டு வெவ்வேறு பெயருடன்
அரமனையில் வேலைக்கமர்ந்தனர்.
பஞ்சபாண்டவர் விராடன் நாட்டிலே வசிக்கின்றனர் போலும் என ஊகித்தறிந்த துரியோதனுதியர் உண்மையை அறிந்து வெளிப்படுத்தற்காக விராடராசன் மீது படை
யெடுத்துச் சென்றனர். துரியோதனன் சேனையில் ஒரு பகுதியார் முத்லில் விராடன் நகரின் தென்பக்கப் புறத்திற்
சென்று பசுநிரை கவர்ந்தனர். விராடன் அவ்விடம் தன்
 
 

69
படையுடன் சென்ற பின் மற்றெரு சேனை வட புறத்திற்
சென்று பசுக்களைக் கவர்ந்தது. அது கேட்ட விராடன் மகன் உத்தரன் பிருகன்னளையைத் தேர்ச் சாரதியாகக்கொண்டு அவ்வட பக்கத்துக்குப் பசுக்களை மீட்கச் சென்றன்.
முன்னரே தென் ப க் க லி ற் சென்ற விராடன் துரியோதனனுல் அனுப்பப்பட்ட சேனையுடன் வந்து
எதிர்த்த திரிகர்த்தராசனுடன் பொருது தோற்று அவனுற்
கட்டுண்டு சிறைப்பட்டான் ; பின்னர் தனது மடைத் தொழிலாளனுய் மாறு வேடம் பூண்டிருந்த வீமனுதவியால்
தப்பி அத்திரிகர்த்தனை வென்று தனது அரமனையை அடைந்தான். அடைந்ததும் தன் மகன் உத்தரன் மற்றெரு
புறத்தால் நூற்றுவர் கவர்ந்த பசுக்களை மீட்கச் சென்றன் என்றதைக் கேள்வியுற்று மிகவும் பயந்தான். தன் மகன் இறந்தேவிடுவான் என்று எண்ணித் துக்கத்தில் மூழ்கி யிருந்தான்.
ஆஸ்தானத் தோழராக இருந்த தரும புத்திரராகிய
கங்கர், அரசனுக்குப் பல ஆறுதல் வார்த்தைகள் கூறி,
அரசனைத் தேற்றினர். அச்சமயம் சில தூ த ர் க ள் வந்து உத்தரன் வெற்றி பெற்றன் எனக் கூறியதும் அரசன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான். அதனுல் கங்கரை யழைத்துச் சொக்கட்டான் விளையாட ஆரம்பித்தான். ஆடும்போது பேச்சும் நடந்தது. “ பார்த்தீரா என் குமாரன் உத்தரனுடைய சாமர்த்தியத்தை புகழ்பெற்ற கெளரவ வீரர்களைத் துரத்தி யடித்தான் ? என்ருன்.
* ஆம், உமது குமாரன் பாக்கியசாலி. பிருகன்னளை
அவனுக்குத் தேரோட்ட அமைந்தபடியால் அரசகுமாரன் வெற்றிக்கு ஆட்சேப மேது? அதிருஷ்டசாலியே என்பதில் சந்தேகமில்லை? யென்றர் கங்கர்.
*நீர் என்ன பிருகன்னளையைப் பற்றியே புகழுகிறீர்? என் குமாரனுடைய வெற்றியைப் பற்றி நான் பேசும்போது அந்தப் பேடியின் சாமர்த்தியத்தை ஒரு பெரிய விஷயமாகச்

Page 40
70
சொல்கிறீரோ ? என்று விராடன் கோபமாகச் சொன்னன். * அப்படிச் சொல்லலாகாது. பிருகன்னளை சாதாரண மானவள் அல்லள். அவளோட்டிய தேர் ஒரு நாளும் தோற்காது. அவள் நடத்தும் தேரில் நின்றவன் எதையும் செய்து முடிப்பான்? என்று திரும்பவும் கங்கர் சொல்ல அரசனுடைய கோபம் அதிகரித்தது.
* ஒ பிராமணரே! இம்மாதிரி பேசாதேயும்? என்று சொல்லி விராடன் ஆட்டத்துக்காயை எடுத்து தருமனுடைய முகத்தில் எறிந்தான். அதனுல் தருமபுத்திரர் முகத்தில் காயமுண்டாகி இரத்தம் வழிய ஆரம்பித்தது. அரசர்க் கெல்லாம் அரசனுய் விளங்க வேண்டிய தருமபுத்திரர்
விராடனுல் சொக்கட்டான் காயினுல் எறியப்பட்டதைப்
பற்றிச் சிறிதேனும் கோபங் கொள்ளவில்லை. பொறுமையை
மேற்கொண்டு பேசாதிருந்தார். அது மாத்திரமன்றி
பிருகன்னளை கண்டால் கோபங்கொண்டு விராடனத் தண் டிக்கவும் கூடுமெனப் பயந்து அவனுக்குத் தன் காயத்தைக்
காட்டாமல் மறைத்துக் கொண்டிருந்தார். தருமர் இவ்வாறு
பொறுமையை மேற் கொண்டு ஒழுகியமையாலன்றே அவர் துஷ்டராய நூற்றுவரையும் மற்றேரையும் பாரத யுத்தத்தில்
அழித்துத் தருமத்தை நாட்டில் நிலைபெறச் செய்தார்.
அதனுலன்றே அவர் புகழ் இன்றும் என்றும் உலகில் நிலவுவதாயிற்று.
நிலம் தன்னை அகழ்கின்றவரையும் விழாமல் தாங்கு
கின்றது. அதனுல் நிலத்தின் ஆற்றல் பெருமைகள் குறைத
லில்லை. அதுபோல, தம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த அறம். அவ்வாறு பொறுக்கப் பொறுக்க ஆற்றலும் பெருமையும் வளருமேயன்றிக் குறையா. தமக்குத் தீமை செய்தவர்க்கு எதிராகத் தீமை செய்து அவரைத் தண்டிப்பதனுல் ஆகும் பயன் என்ன? தண்டித்தவரின் மனமும் அகந்தைகொண்டு கெடும். தண்டிக்கப்பட்டவரின் மனமும் செற்றங்கொண்டு மேலுங் கெடும். அவர்கள்
 

) - 71 1) -
அதனுல் திருந்துதல் அரிது. அதனல், சான்றேர் தீமைக் குத்தீமை செய்து ஒறுத்தவரை ஒரு பொருளாக மதிப்ப தில்லை. பொறுத்தவரையே பொன்போலப் போற்றி எப்பொழுதும் மதிப்பார்கள்.
ஒறுத்தவர்க்குக் கிடைப்பது யாம் நினைத்ததுமுடித்தோ மென்று கொள்ளுகின்ற அந்த ஒரு நாளைய பொய்யின்பமே. பொறுத்தவர்க்கோ நிலைத்த இன்பமும் உண்டு; உலகம் அழியும்வரைக்கும் புகழுமுண்டு. இக்கருத்துப்பற்றியே, *ஒறுத்தார்க் கொருநாளையின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்? (குறள்: 156) என்றர் திருவள்ளுவர். நெறிகடந்து பேசுகின்றவர்களின் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமை சாலிகள் உலகப் பற்றினை விட்ட துறவிகளைப் போலவே மனத்தூய்மை பெற்றவராவார்கள். தவம் செய்வோர் தமது நன்மையையே கருதி உடற்றுன்பத்தைப் பொறுக்கின் றவராவார். ஆணுல், பொறுமையுடையாரோ வெனில், பிறர் நன்மையைக் கருதி அருள் பூண்டு அவர்களின் கொடுமையைப் பொறுக்கின்றர்கள். ஆதலால் பிறர் கொடுஞ் சொல்லைப் பொறுக்கின்றவர் தவத்தினரிலும் மிக்க பெருமை * யுடையவராவர். பிறர் செய்த தீமையை எப்போதும் பொறுப்பது நல்லது; அதைப்பற்றி நினைக்காமலே மறந்து விடுவது அதனிலும் மேலாக நல்லது.
விஞக்கள்
1. ஒறுத்தார் பொறுத்தார் - இவ்விரு திறத்தினர்க்கும்
இடையில் உள்ள வித்தியாசம் யாது?
Y ν 2. தருமபுத்திரர் பொறுமையினுல் சாதித்த காரியங்கள்
எவை? -

Page 41
வாய்மை
மகாத்மா என்று யாவராலும் புகழ்ந்து கொண்டாடப் படும் காந்தியடிகள் தம் வாழ்க்கையில் வாய்மை விரதத்தைக் கடைப்பிடித்து மங்கிக் கிடந்த மனித சமூகத்துக்குச் சிறந்தவோர் வழிகாட்டியாக விளங்கினார். வாய்மையாகிய விரதம் இன்னதென்று தெளிவாகக் கூறியதேயன்றித் தூய்மையுடன் அதனை அநுட்டித்துங் காட்டியுள்ளார்.
அந்த மகான் காட்டிய வழிதான் என்ன என்று ஆராய்வாம். தீமையை நன்மையால் தீர்க்க முயல்வது சிறந்த வழி ; அந்த நன்மையும் தூய்மையுள்ளதாக இருக்க வேண்டும். தூய்மையான நல்ல காரியங்களையே செய்து தீமையைத் தீர்க்க முடியாவிட்டால், அந்தத் தீமையைத் தீர்க்கப் பிரார்த்தனையும் தவமும் புரிந்து தன்னையே அதற்குப் பலியாகக் கொடுத்துவிட வேண்டுமேயல்லாமல், தன்னுடைய முயற்சிகளின் பரிசுத்தத்தைக் கெடுத்துக் கொண்டு வேறு முறைகளை விரும்பிவிடக்கூடாது. பொய் யைப் பொய்கூறி மாற்றிவிட இயலாது. மூர்க்கனை மூர்க்கத் தனம் காட்டி நல்லவனாக்கிவிட முடியாது.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று செய்யாமல், ஒரே தன்மைத்தாகிய உறுதியான தூய்மை வேண்டும். அப்படி

73
ஒரே வழியில் வெற்றி கிடைக்குமா என்று சந்தேகமே வரக் கூடாது. அந்த ஒரே வழியில் நின்று வெற்றி கிட்டாவிடில் அதற்காக உயிரையும் விட்டுவிடச் சித்தமாக இருக்க வேண்டும். உண்மை வழியினின்று விலகுபவன் பிறர்க்குத் தான் பொய்யனாய்த் துன்பம் விளைவிப்பவன் ஆவதேயன்றித் தனக்குத்தானே பொய்யனுமாகி விடுகிறான். சாந்த வழியை மேற்கொண்டு பொய்யை வாய்மையால் வென்று தீயவர் களுக்கு ஒரு மனமாற்றத்தை உண்டாக்க முடியாவிட்டால், அதற்காகப் பொய்யை மேற்கொண்டு விடாமல் பட்டினி யோடு தவங்கிடந்து மாண்டு போவதே புகழ்ச்சிக் குரியதாகும். இதுவே அகத்திருளை நீக்கும் வல்லமை நிறைந்த விளக்காகும்.
மற்றவர்களுக்கு யாதொரு தீமையும் ப ய வ ா த சொற்களைச் சொல்வது வாய்மை என்னும் அறமாகும். உள்ளன அல்லாதவற்றைக் கூறுவதனால் பிறவுயிர்க்குச் சிறிதும் தீங்கு உண்டாகாமல் நன்மை உண்டாகுமெனில், அவ்வகையான சொல்லைக் கூறலும் வாய்மை என்னும் அறத்தின்பாற்படும். - இவையே வாய்மை என்னும் அறத்திற்குத் திருவள்ளுவர் கூறும் இலக்கணமாகும். இவ் விலக்கணங்களைக் கூறும் குறள்கள் பின்வருமாறு:
''வாய்மை யெனப்படுவ தியாதெலின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்"
(குறள் : 291) ''பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்குமெனின்”.
(குறள் : 292) சொல்லப் புகுஞ் சொற்களால் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்து வாய்மையாகிய சொற்களைச் சொல்லல் வேண்டும். பொய் என்று தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் பிறர் அறியாரெனினும் சொல்லக்கூடாது. ஒவ்வொருவரும் தம் உள்ளத்தின் உணர்வுக்கு இயைய வாய்மையைப் போற்றுவதே கடனாகும். உடம்பு பரிசுத்தப்படவேண்டு

Page 42
74 , )
மானுல் நீரால் கழுவிச் சுத்தம் செய்யலாம். ஆணுல் மனம் பரிசுத்தப்படுவதற்கு வாய்மை பேசல் வேண்டும். வெளிய்ே யுள்ள இருளைப்போக்கி புறப்பொருள்களை மட்டும் காட்டும் உலகத்து விளக்குகள் சிறந்த விளக்காகா. வாய்மை என்னும் அறமாகிய விளக்கு உள்ளத்திலுள்ள அஞ்ஞான மாகிய இருளை நீக்கி கடவுள் முதலிய மெய்ப்பொருள்களை அறியவும் இன்ப வாழ்வை அடையவும் கருவியாய் உதவுஞ் , சிறந்த விளக்காகும். இக்கருத்தே பற்றி
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றேர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு? (குறள் : 299) .
என்றர் திருவள்ளுவர்.
ஒருவன் மனமொழி மெய்களால் பொய்யா தொழுகினுல் அவனுக்கு வேறு அறங்கள் செய்ய மேற்கொள்ளும் பிரயாசம் வேண்டுவதில்லை. ஏனெனில் வாய்மையாகிய அறமானது மற்றெல்லா அறங்களும் தரும் பயனைத் தானே தரவல்லது. ஆகையால் இத்தகைய சிறப்பு வாய்ந்த வாய்மையினும் உயர்ந்த அறம் வேறு இல்லை.
உலகப் பெரியாராகிய மகாத்மா காந்தி அடிகள் உண்மை நெறியொழுகி உயர்ந்தவர். உண்மையே உயர்வு; உண்மையே வெற்றி. ஆகையால் வாய்மையைக் கடைப் பிடித்தல் மக்களுக்கு அவசியம் வேண்டப்படுவதொன்றகும்.
வினுக்கள் 1. சான்றேர் சிறந்த விளக்காக மேற்கொள்ளுவது
எதனை?
காந்தியடிகளின் வாழ் க்  ைக இலட்சியம் யாது? விளக்குக.
 
 
 

மெய்யுணர்தல்
y
துரியோதனன் சூதாட்டத்திறுதியிலே நடுநிலைமை யுள்ள பெரியோர்களாற் கூறப்பட்டதும் தன்னுல் ஒப்புக் கொள்ளப்பட்டதுமான முடியின்படி, பாண்டவர்களது
அரசை அவர்கள் அஞ்ஞாதவாசம் முடித்து வெளிப்பட்ட
பின் திருப்பிக்கொடுக்க முடியாதென்று மறுத்தமையாற்
பாரத யுத்தம் தொடங்கியது.
துரியோதனன் சார்பாக பீஷ்மர், துரோணர், கிருபர், அசுவத்தாமர், கர்ணன், சகுனி முதலிய வீரர்கள் அமர் புரிந்தனர். இவர்களேயன்றித் துரியோ த ன னு க் கு உறவினரும் நண்பருமான பல சிற்றரசர்களும் உதவி புரிந்தனர். பாஞ்சால மன்னனும், மச்சநாட்டரசனும்
இன்னுஞ் சில மன்னரும் தங்களது சேனையுடன்
பாண்டவர்க்கு உதவியாகப் போர் செய்வாராயினர். கண்ணபிரான் கருணையினுல் காண்டீபனுக்குத் தேர்கடா
வுதற் கிசைந்தருளினர். மேலும், நியாயமும் பாண்டவர்
பக்கம் இருந்தது.
குருகூேடித்திரமென்னும் புண்ணிய பூமியில் பல நூற்றண்டுகளுக்கு முன்னே இப்பெரும்போர் பதினெட்டு நாட்கள் வரையில் நடந்தது. அத்தகைய போரின் முதல் நாளில் இரு திறத்தினரும் தங்கள் சேனைக் கடலை யுத்த

Page 43
76
களத்திற் பரப்பினர். வீரர்கள் கவசம் பூண்டு முன்னணியில் வந்து நின்றனர். போர் முரசு முழங்கின. அச்சமயம்
அருச்சுனன் தேரேறி அமர்க்களம் புகுந்தான். புகுந்ததும், ! தன்னிரு கண்களாலும் இரு சேனையின் பெருக்கத்தையும்
கண்டான்.
மேலும், தன் பாட்டனராகிய பீஷ்மரும், ஆசாரியராகிய
துரோணரும், மற்றுமுள்ள தனது சுற்றத்தார்களும்
தன்னுடன் பொருதற்கு விற்பிடித்த கையோடு நிற்கக் கண்டான். கண்டதும் அவன் மனம் கசிந்தது. காண்டீபம் கையினின்றும் நழுவியது. மெய்ச் சோர்ந்தது; தேர்த்தட்டிற் சாய்ந்தான். “கண்ணு, இஃதென்ன கடமை பன்னுட்களாக யான் வணங்கி வந்த பாட்டன் முதலிய பெரியோரைக் கொல்லவோ இங்கு யான் வந்தது. உற்றரைக் கொன்று உலகெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள்வதிலும் பேய் நடமாடும் பெருங் கானகத்தே வாழ்வது பன்மடங்கு நன்றே. ஆதலின் அமர் புரியேன்” என்றனன் விஜயன்.
அப்பொழுது கண்ணபிரான் “ பார்த்தனே, நீ புகன்ற வார்த்தைகள் உன்போன்ற உத்தம வீரர்கட்குத் தக்கன வல்ல என்பதை நீ சற்றும் சிந்தித்திலை போலும். பீஷ்மரும் துரோணரும் நீ வணங்கும் பெரியோர்களென்றும், துரியோதனுதியார் உன் சகோதரரென்றும், அவர்கள் யாவரையுங் கொன்றே உன் அரசைப் பெறவேண்டும் என்றும் இப்போதுதான் உணர்கின்றனயோ? வீரியம் பேசிப் போர்க்கோலம் பூண்டு அமர்க்களம் புகுந்து, உற்றர்
என்று உறவு கொண்டாடிச் சமர்புரியாது திரும்புவையேல், பூதலத்தார் ஏசாரோ? நீ அன்று மொழிந்த வஞ்சினமும்
பொய்த்திடாதோ? ஆலோசனையின்றி ஒரு காரியத்தைத் தொடங்குபவனும் ஆலோசித்து முடித்த தீர்மானங்களை நீதிக்கு மாறக மாற்றுபவனும், நுண்ணறிவில்லா மூர்க்கரே யாவர். திடபுத்தி இல்லாதவன் எக்காரியமும் செயலாற்றமல், தனக்கும் பிறர்க்கும் சற்றேனும் பயன்படான்.?
محرم
لاي
.
)
h
 

77,
), Y *உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தவருமற் செய்யவேண்டுங்கடன்கள் சிலசில ஏற்பட்டுள்ளன. " அவை கசப்பானவையாயினும் அவற்றை அவரவர் செய்தே
S தீரவேண்டும். உன் அரசைக் கவர்ந்த துஷ்டனுகிய , துரியோதனனைக் கொன்று அரசைக் கைப்பற்றுவது கூடித்திரியனுகிய உனக்கு ஏற்பட்ட கடனல்லவா? என்று கலக்கமுறு காண்டீபனது மனம் தெளிவுறுமாறு நிலையான . ' மெய்ப்பொருளை எடுத்துக் கூறினர்.
அவ்வுரைகளைக் கேட்ட அருச்சுனன் சோகம் நீங்கி உற்சாகமடைந்து யுத்தஞ் செய்தற்குச் சித்தமானன். ஆகவே, மெய்ப்பொருளல்லாதவற்றை மெய்ப்பொருளென்று கருதும் மயக்கத்தால் பயனில்லை என்பதும், எந்தப் பொருள் எவ்வியல்புடையதாகத் தோன்றினும், அப்பொருளின்கண் உள்ள மெய்யாகிய இயல்புகளைக் காண்பதே தெள்ளிய அறிவாகும் என்பதும், இதனுல் நன்கு விளங்கும். மெய்ப் பொருளை உணர்வது எப்போது கைகூடுமென்றல் விருப்பு, வெகுளி, அறியாமை என்ற மூன்று குற்றங்களும் அற்றபோதுதான் கைகூடும் என்று கண்ணபிரான் விசயனுக்கு அறிவுறுத்தினர்.
உலகத்திலுள்ள பொருள்களெல்லாம் பல் வேறு தன்மையினவாகக் காணப்பட்டாலும், அவை பிருதிவி 飒。 முதலிய தத்துவங்களின் காரியமாதலையும், அத்தத்து வங்களின் காரிய காரணத் தொடர்புகளையும் அவற்றின் * வேருகிய சீவான்மாவினையும் பரமான்வாகிய கடவுளையும் , உள்ளபடி அறியவல்லவனே மெய்யறிவன் (தத்துவ ஞானி)
ஆவன்.
“எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் 9 மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் : 355) வெளிப்படையில் எந்தப் பொருள் எப்படி நமக்குத்
தோற்றமளித்தாலும் அதன்கண் மறைபொருளாக நிலையாக நிற்கும் உண்மை யாது என்று கண்டறிவதே மெய்யறிவு.
舰

Page 44
மெய்ப் பொருளல்லாதவற்றை மெய்ப் பொருளென்று /
78
வினுக்கள்
கருதும் அருச்சுனனின் மயக்கத்தை விவரிக்க.
தோற்றத்தால் மயங்காத காட்சியாளரான தத்துவ ஞானிகளுள் ஒருவரின் கதையை எழுதுக.
 
 
 
 

|-|- |-~ -.- - ----- : ( )|- - - -常 事__-__ --~~~~ -...--~~~~ |-*メ『 |-|- - --- : ---- ---- - ---- - - --- |-|-|- - - - |- ... :) ----- ·~ |-|-·
·|-|-
·メ---- |-|-|-|-|- |- - -|- ----, , , ,|-|- |- |-** -- ···- - |- |- - |- |- |-|-|-|-|-|-
|-|- |-. |----
•------|-
------|--- 心心|- --)... - |----...-- |-、シ
· · ·-|-|- *|-----... :-(. .|----- |-* -|-|-!-- )! -*...! :-*----●--~~~~ ~~

Page 45