கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரு விளக்கு

Page 1

*

Page 2
s
.
ܕܝܢ
ി
{x
%
,
,
a.
 
 
 
 


Page 3
। ।
। ।
Y
.
'
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரு விளக்கு
கவிதை நூல்)
_( Ye* "سمجسمہ بہت
99 துரையா
சு. துரைசிங்கம்
-Լ $6
جمہ محصہ
வெளியீடு
கந்தரோடை,
சனசமூக நிலையம்,
சுன்னகம்.

Page 4
G5 %Ö) 6. විලකු
(කවි පොත)
කර්තෘ
*තුරෙයර්”
| සු. තුරෙයිසිංගම්.
THERU VILAKKU
(Poetry Book)
ീ4; ''/agar Ꮨ Ꮺ S. Thuraisingam
Kantharodai East
Chunnakam.
First Edition,
1972 - November.
وقT) قال له)
பலர்
வருவார்
(3LI[[6uITĩ
Ug56)
பக்கம்
பார்த்து இரவிலோ
விளக்கு
இருந்தால்
இன்புறும்
១.uffigsr
ஏராளம்
ஒளியைக்
கண்டு
ஒடுபவர்கள் ஒடட்டும்
9066.96
விட்டே !

வெளியீட்டுரை என்னுரை முன்னுரை
முகிலே, கலைந்த கனவு உண்டு வழி
ஏனே p தொழில் தருக இதுதான் உலகம் நீங்கள் யார் ? பாரதியின் குருவே ! இலஞ்சமும் வஞ்சமும் யாழ்நகர வாலிபன் கண்டேன் இணையிலா ஈழநாடு நிர்வாணம் புயலே செல்வாய் பின் கதவு தீருமா ?
மூச்சு சந்தி சிரிக்கிறது மறந்தேன் மாட்டின் லூதர் கிங் துணை
போட்டி ஏன் எறிந்த கல் நாடு நலம்பெற .
உள்ளே
4.
6
7 11 12 14 16 17 19 20 2 22 23 24 25 26 27
نے
30 32 33 34 35 36 38 39 40
சிறுமை கண்டு
பொங்குவாய் மனிதர்கள் வந்தது பதிலும் σT(Lρ6), πιII வடு பற்று விடேன் மலர்ந்திடுமா செத்ததையே ! பற்றிவிட்டால் பணம் பறிப்போர் ஏக்கம்
பண்புடன் கலைத்தோம்
புன்னகை வீசியே ! உண்டு இல்லை அழகும் அவஸ்த்தையும் அப்பாவி இப்படியும்
சிறுவர்க்கு
வருவேனே ரோசாவும் நேருவும் நல்ல சிறுமிகள் காகித வள்ளம் தெய்வமாக வேண்டும் இலாபமா நட்டமா? நொண்டித் தாத்தா
4
44
45
46 47 49 50 5. 52 53 54 55 56 57 58 59
62
63 64 65 66 67 68 70

Page 5
வெளியீட்டுரை.
அன்று ‘ஐயன்ன" அவர்களின் *நாடகமாலை"யை எமது நிலையத்தின் சார்பில் வெளியிட்டோம்.
இன்று கவிஞர் துரையர் (சு. துரைசிங்கம் ஆசிரியர்) அவர்களின் தெரு விளக்கு என்னும் கவிதை நூலை வெளி
யிடுவதில் பெருமையும் பூரிப்பும் அடைகின்ருேம். *
சந்த அமைதியுடன் துள்ளி நடைபோடும் இவரது பாடல்கள் நொந்து வாழும் மனித குலத்துக்கு ஒளி தந்து நிற்கிறது.
எமது பணி சிறக்கவும், இவரது முயற்சிகள் மென் மேலும் வளரவும் என்றென்றும் ஆதரவு கிடைப்பதாக,
ஆசிரியர் சனசமூக நிலையம், க. கந்தையா
கந்தரோடை, தலைவர்.
 
 
 

ஈன்றே ர்க்குச் சான்றக
JA-III IIDispofu IIb - E51 JIGDIDI
அவர்கள்
சின்னக் கதைகள் சிறிய வயதினில் என்னைக் கவர்ந்திட எடுத்துக் கூறியும்
இன், நிலைக் குயர்த்திய எந்தை தாயர்க் கின்புடன் சமர்ப்பணம் இம்மலர் வைத்தேன்.

Page 6
என்னுரை.
தெரு விளக்கில் நீங்கள் வழி நடையைத் தொடரு முன் நான் நடந்துவந்த பாதையையும் பாதையில் விளக் காக நின்றவர்களையும் உங்களுக்குக் காட்டலாமென
நினைக்கின்றேன்.
உயர் வகுப்புகளில் தமிழ் கற்றுத்தந்த ஆசிரியர் களின் இலக்கியத் தென்றலில் சுகங்கண்ட என்னை கவி தைத்துறை தன்வசப் படுத்தியது.
பாடசாலைப் ப ரு வ விடுமுறை வந்துவிட்டால் எனக்கு ஒரே மகிழ்ச்சிதான். ஆசிரியமணி க. ஆறுமுகம் அவர்களின் வீட்டிற்கு வருகின்ற ஈழகேசரி முதற்கொண்டு ஏனைய வார மாதப் பத்திரிகைகள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு எடுத்துவந்து வாசிப்பில் நீந்துவேன்.
அவ்வேளையிற்ருன் வீரகேசரி எனது முதலாவது கவி தையைப் பிரசுரித்து சிருஷ்டிப் பாதையில் ஒளி கொடுத் தது. அவ்வொளியில் பதின்னன்கு ஆண்டுகள் நடந்து வந்து தெருவிளக்கொன்று நாட்டியுள்ளேன்.
இவ்விளக்குக்கு முன்னுரை தந்துதவிய விரிவுரையா ளர் திரு. சி. தில்லைநாதன் அவர்களுக்கும் முகப்புப்படம் வரைந்த ஒவியர் S. T. பத்மராஜ் அவர்களுக்கும் நன்றி என்றென்றும் இருக்கும்.
பிரதி செய்துதவிய செல்வி ஆப்தீன் ஆசிரியை அவர் களுக்கும் அச்சிடுங்கள் என்று ஊக்குவித்த எனது மனை விக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அழகிய முறையில் அச்சிட்டுதவிய திருவள்ளுவர் அச்சகத்தினருக் கும், குறிப்பாக வெளியிட முன்வந்த கந்தரோடை சன சமூக நிலையத்தினருக்கும் நன்றி.
கந்தரோடை கிழக்கு, ‘துரையர்'
சுன்னுகம். சு. துரைசிங்கம்.
ار
 

முன்னுரை.
இதுவரை மண்ணிலும் விண்ணிலும் கடலிலும் எத் தனையோ புதுமைகளைக் கண்ட மனித வரலாற்றிலே, மனித குல நலனுக்கும் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் பயன் படுவதில் மொழியை நிகர்த்த கண்டுபிடிப்பு வேருென்று மில்லை. மொழியைப் பொருள் வெளியீட்டுச் சாதனமாகச் செவ்விதிற் பயன் படுத்துவது ஒரு கலை. உணர்ச்சி அனுப வங்களுக்கு மொழிமூலம் அழகிய வடிவங்கொடுக்கும் கவிதை கலைகளுள் உன்னதமானது.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் என் றும் கவிதைக்கு உயரிய மதிப்பளித்து வந்திருக்கிருர்கள் காலத்தோடொட்டித் தமிழ்க் கவிதையும் பண்பிலும் பயனிலும் மாறுபட்டும் விரிந்தும் நெகிழ்ந்தும் வந்திருக் கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் போடப்பட்ட எல்லேக்கோடுகளையும் அது தாண்டி வளர்ந்து வந்திருக் கிறது. ஆட்சித் தலைவருக்கும் தெய்வங்களுக்கும் விருந் தாக்கப்பட்ட தமிழ்க் கவிதையானது அகன்ற மானி டத்தை அணைத்து அதன் ஆசாபாசங்களிலும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
கவிதைக்கு உருவம் முக்கியமா உள்ளடக்கம் முக் கியமா என்ற ஒரு சர்ச்சை இருந்து வருகிறது. சொல் லால் உருவாக்கப்படுவது கவிதை. எழுத்து உருவத்தால் மட்டும் ஒன்று சொல்லாகிவிட முடியாது. பொருள் குறித்து நிற்பதே சொல்லெனப்படுமென்று தொல்காப் பியரே கூறியுள்ளார். பொருள் குறியாச் சொல் இல்லை. அதேபோற் பொருள் குறியாக் கவிதையும் இல்லை. பொருட்சிறப்புக் கவிதைக்குச் சிறப்பாகும்.
" பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட ஞக உணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்."

Page 7
என்ற பவணந்தி முனிவர் கூற்று அவ்வுண்மையை வலுயுறுத்துவதே. அது உயிருக்கு உடல்போலப் பொரு ளுக்கு இடஞகக் கிடப்பதே எனும்போது பொருளுக்கே
தலைமையளிக்கப்பட்டிருப்பது தெளிவாகும். பயனற்ற
எளிதில் உணரக்கூடாத வார்த்தை ஜாலங்களையும் புதிர் களையும் எமது மகாகவிகள் கவிதைகளாக மதிக்கவில்லை என்பதற்குச் சவியுறத் தெளிந்து தண்ணென் ருெழுக்க முந் தழுவிச் செல்வது சான்ருேர் கவி என்ற கம்பன் கருத்தும் இலௌகிக வாழ்க்கையிற் பொருளினை இணைக் கும் பயன்நிறை அனுபவமே' கவிதை என்ற பாரதி கருத்தும் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
அரசியல், இசை ஆகிய இறக்கைகளிற் பறக்கும் போது கவிதை மிக உயர்ந்து செல்லும் என்பர் சோவி யத் நாட்டுக் கல்விமானும் இலக்கியத் திறனய்வாளருமா கிய கே, ஸெலின்ஸ் கி.
இசைத்தன்மை கவிதைக்கு அவசியமா என்று சிலர் கேட்கலாமாயினும் கவிஞன் தன் உணர்ச்சி அனுபவத்தை ஏனையோருக்கு ஏற்படுத்த உதவுவதாக இசை அமையும். கவிஞன் தன் நோக்கத்தை இதமாகவும் அழுத்தமாக
வும் நிறைவேற்றவும் தன் எண்ணங்களைப் படிப்போர்,
மனதிற் பதியவைக்கும் இசைத் தன்மை மிக இசைவான தாகும். சமூக உணர்வோடு இணைந்து தமிழ்க்கவிதையின் இசைப்பண்பும் வளர்ந்துவத்திருப்பதை நுணுகி நோக்கு வோர் அவதானிக்கலாம்.
சிலர் இசை என்றதும் முகஞ்சுழிப்பது போலவே அரசியல் என்றதும் முகஞ்சுழிக்கலாம். ஆயினும் தன் நன்மைக்காய்ச் சமூகத்தையும் அரசையும் அமைத்துக் கொண்ட மனிதகுலம் அவற்றின் காரியங்களோடு தொடர் பற்று அரசியற் பற்றற்று நிற்க முற்பட்டாற்கூட அரசி
யல் அதனை விடாது. வரலாற்றின் பல்வேறு காலகட் )
டங்களிலும் மாறுபட்ட தமிழிலக்கியப் பண்புகளே இதனை உள்ளங்கை நெல்லிக்கனியாக்கும்.
2

முரண்பாடுகளும் போராட்டங்களும் மிகுந்த இம் மக்கள் யுகத்திலே முன்னைய காலங்களைவிட மிகுதியான அளவிற் சுதந்திரம் பெற்றிருப்பவர்களும் அத்தகைய சுதந்திரம் பெற்ற மானிடத்தைச் சார்ந்து நிற்பவர்களு மான கவிஞர்கள் அரசியலுக்கு அப்பால் அதிக தூரம் சென்றுவிட முடியாது.
இதுவரை யான்கூறியது துரையரின் (சு. துரைசிங் கம்) இத் தொகுதியிலுள்ள கவிதைகளைப் படித்தபோது எனது உள்ளத்தில் எழுந்த சில எண்ணங்களேயாகும்.
எளிமையும் இசை தழுவிய இனிமையும் வாய்ந்த நடையிலே துரையர் தமது கவிதைகளை யாத்துள்ளார். வடு, தொழில் தருக, முகிலே, இணையிலா ஈழநாடு போன்ற கவிதைகளின் ஒசைநயம் குறிப்பிடத் தக்கது.
இந்த நாட்டிற் பற்றும் (இணையிலா ஈழநாடு) அந்
நியர் தளம் அகன்றத்தில் மகிழ்வும் (பண்புடன் கலைத்
தோம்), தேசிய ஒற்றுமையிலும் உயர்விலும் நாட்டமும் (உண்டு வழி) கொண்டவர் துரையர்.
அயல் வீட்டாரின் பசுக்கன்று காணிக்குள் வந்துவிட் டதற்கு, திருமண அழைப்பிலே தமது பெயர் போடாத தற்கு, எல்லைத் தடியை இழுத்ததற்கு, தாழ்த்தப்பட் டோர் கோயிற் கிணற்றிலே தண்ணிர் அள்ளியமைக்கு, கோடு தாண்டிக் கும்பிட வந்தமைக்கு - இப்படியானவற் றுக்காகவெல்லாம் சண்டையிடும் (இப்படியும் . . ) மணி தரின் சின்னத் தனத்தையும், இவ்வுலக வாழ்வை மிதியாப் பெருந்தவப் பேச்சுப் பேசிக்கொண்டு மிருகத்தனமாகச் சாதி வகுத்து வேலி வகுத்து வாழ்கின்ற பேர்களின் (மூச்சு) போலி வேசத்தையும் வெறுப்புத் தோன்றும் வகையில் எடுத்துக் காட்டுகிருர் துரையர்.
இலஞ்சமும் ஊழலும் ஏய்த்துப் பணம் பண்ணும் சிறு மையும் (இலஞ்சமும் வஞ்சமும், பணம் பறிப்போர்) வேலை யற்றுத்தவிப்போர் துன்பமும் (யாழ்நகர வாலிபன்) பல ருக்கு வேலைக்கேற்ற வேதனம் கிடைக்காது இருக்கையிற்

Page 8
சிலர் சுகபோகங் காணும் நிலையும் (மலர்ந்திடுமா, சிறுமை
கண்டு பொங்குவாய்) கண்டு சாம்பும் துரையரை வாழத்
துடிக்கும் ஏழை மக்களின் பேதம் பாராட்டாக் கண்ணி யம் (உண்டு இல்லை) கவர்கிறது. தொழில் வளம் பெற்ற நாட்டில் எல்லோரும் தொழில் பெற்று ஏற்றத் தாழ் வின்றி வாழவேண்டுமென்று (நாடுநலம் பெற, சிறுமை கண்டு பொங்குவாய், உண்டு வழி, தொழில் தருக, கலைந்த கனவு) அவர் விழைகிருர்,
பொதுவாக நோக்கும் போது, தன்னைச் சூழ்ந்த மக் களையும் அவர்களது சமூகத்தையும் அரசியலையும் அவதா னிக்கும் துரையர், துன்பப்படுபவர்களையும் துன்பப் படுத் துகிறவர்களையும் இனங்கண்டு தாம் யார் பக்கம் என்பதை எமக்குக் காட்டி நிற்பதோடு, எங்களையும் பார்த்து “நீங் கள் யார் ??" என வினவி நிற்கிருர்,
தனது கவிதைக்கும்,
*உண்ண உணவின்றி அலையும் மக்கள்
உய்யத் தொழிலிந்து உயர்த்தப் பணித்தேன் கண்ணுக் கிமைபோல் நாட்டினைக் காக்கும்
கருணை கொள்ளெனக் கண்ணே பணித்தேன்' எனக் (பற்று விடேன்) கட்டளை போடுகின்ருர்,
துரையரின் சமூகப் பிரக்ஞையும் மானிடப் பற்றும் கவியாற்றலும் மென்மேலும் வலுவுற்று வளரவும், இன் னும் பல கவிதைகளை அவர் படைக்கவும் வாழ்த்தும் வேளையில், எங்கள் யுகத்தின் இக் கவிஞரைத் தமிழ் பேசும் மக்கள் உற்சாகப் படுத்துவார்கள் என்றும் நம்பு கின்றேன்.
தமிழ்த்துறை, 9。 5i)2) shiftgisit இலங்கைப் பல்கலைக் கழகம், M. A. శ్లో லத பேராதனை. விரிவுரையாளர்
30-10-72.

س- 11 -- மு கி லே !
படித்துப் பேருகும் வாலிபர் போலப் பரந்து பெருகும் முகிலே - மனிதர்
குடித்து வாழக் குன்ரு நீரைக் கொட்டிச் செல்வாய் முகிலே !
காட்டில் எரியும் புகையைப் போலக் கறுத்துச் செல்லும் முகிலே - நம் நாட்டின் செல்வம் செழிக்க வென்று நனைத்துச் செல்வாய் முகிலே!
பருத்தி தந்த பஞ்சு போலப் பார்க்கத் தோன்றும் முகிலே - நீ பொருத்திப் பிளவை நாட்டில் துெவேம் பெருக்கித் தருவாய் முகிலே!
மாவின் பூக்கள் மண்ணில் சொரிய மழையைக் கொட்டும் முகிலே - உன்னைப்
Irgai) வைத்துப் பாடும் புலவர் பண்பை என்றும் புகலே.

Page 9
' - 12 - கலைந்த கனவு.
கவிதையினை யெழுதுதற்குக் கோலெடுத்தேன் கண்ணனவன் எதிர்வந்து கரம்பிடித்தான் குவித்தேனே கரமதனை அவன்தாளிற் கோகுலத்தின் நிலைகாண வரச்சொன்னுன்
பாவியானேன் அங்கெதற்கு என்றுநிற்கப் பாவெழுதப் பொருளுண்டு வாவென்முன் தாவினேனே இறும்பூந்து அவன்பின்னற் தக்கபொருள் காட்டிவிட்டு ஓடிவிட்டான்
நிரைவாகக் கண்டதெல்லாம் எழுதுதற்கு நிற்கின்ற பாவினங்கள் போதாவே விரைவாகச் சொல்கின்றேன் நேராக விட்டுவிட்டா ரென்றென்னை நோகாதீர்
மேய்கின்ற நிரையெல்லாம் பார்ப்பதற்கு மேனியிலே அங்கியில்லாக் காளையொன்று சாய்கின்ற மரமொன்றிற் சாய்ந்திருந்து சங்கீதம் படிக்கின்ருன் சீட்டியானல்
துள்ளியோடும் கன்றதனைப் பிடிப்பதற்கு துடியாகத் துடிக்கின்ற சிறுவர்கள் பள்ளியிலே தாம்படித்த ஒட்டங்கள் பயன்படுமா என்ருேடி அலைகின்ருர்
 

- 13 -
பாய்ந்தோடும் கன்றதனைப் பின்தொடர்ந்து பாசத்தால் தாய்ப்பசுவும் ஒடுகையில் தோய்ந்தாடும் மடியாலே பாலெல்லாம் சொரிந்தங்கு புழுதியெல்லாம் அடக்கினவே
இதையெல்லாம் பார்த்திருந்த எந்தனையே இடம்நோக்கி எதிர்வந்த காளையவன் ‘எதையெல்லாம் நோக்கிநீர் நிற்கின்றீர்' என்றெந்தன் பார்வையதை மாற்றிவிட்டான்
மாற்றத்தால் திகைப்புண்ட நிலைமாறி மந்தைகளின் உருத்தாளன் யார்தானென்று சீற்றத்தால் கேளாது சிரித்துக்கேட்க சிரித்தவனும் “மக்களது' என்றுரைத்தான்.
எந்தனது தடுமாற்ற நிலைமைகண்டு ‘ஏற்றமுடன் நடக்கின்ற கூட்டுப்பண்ணை சொந்தமது இவ்வூரின் மக்களுக்கு சொரிகிறது செல்வமெலாம்’ என்றனே.

Page 10
- 14 - உண்டு வழி.
இலங்கையின் மக்களெல்லாம்
இனத்தால் ஒன்றென்று துலங்குகின்ற மொழியதனைத்
தூக்காது துள்ளியெழும் விலங்குகளாய்த் திரிந்திங்கு
விசவார்த்தை பேசிநிதம் மலக்குழிக்குள் தள்ளுதற்கு
மாயங்கள் செய்வோரும்.
*கால்பிடித்து' முதலாளி
கைபிடித்துக் குறுக்குவழி *வால்பிடித்துத் தாம்வாழ
வர்க்கத்தை வதைத்திங்கு காலொடித்து முடமாக்கிக்
கண்ணிரில் மிதக்கவிட்டுக் கோலெடுத்து ஒடமதில்
கோழைகளாய்ச் செல்வோரும்.
மாடாக மலையேறி -
மலர்க்கையாற் கொழுந்தெடுத்து
நாடாக வளமூட்டும்
நம்மவர்கள் வாழ்வதற்கு

س- 15--
வீடாக ஒன்றில்லா
வேதனையும் நீங்குதற்குப்
பேடாகா இளைஞர்காள்
பெற்றிடுவோம் புதுப்பாதை
கடையிற் சரக்கல்ல
கண்டபடி வாங்குதற்கு
கடைசிச் சரக்கிங்கு
கண்ணியமாய் வாழ்வதற்கு
நடையிற் பிணங்களாய்
நடமாடும் எம்நாட்டார்
நடையிற் பொதுவுடமை
நல்லவழி கொள்ளவேண்டும்.

Page 11
ஏணுே ?
- 16 -
வள்ளுவனர் வாக்கெடுத்து வாழ்ந்திடவே தெரியாது வள்ளுவர்க்கு விழாவெடுத்து வாய்பிதற்றித் திரிகின்றீர்.
மனிதர்காள் வாழ்விங்கு மலராமை கண்டிடுவீர் இனியெனும் இன்னலெலாம்
உம்மைவிட் டேகாதோ.
பிறப்பெல்லாம் ஒக்குமிந்த பேருலக தனிலென்றும் அறப்பெரும் வள்ளுவனர் அறைந்தமொழி கொள்ளுகிலீர்,
இறப்பதற்கு முன்னிங்கு
எத்தனையோ இனம் வகுத்துக் கறுப்பனென்றும் சிவப்பனென்றும்
கணக்கிட்டு அழைப்பதேனே ?
 

- 17 - தொழில் தருக.
தொழில் தருக எமக்குத் தொழில் தருக
நாடு புகழ் ஓங்க நல்ல தொழில் வீங்க வாடும் எமை நோக்கி வாழும் வழி தூக்கித்
தொழில் தருக - எமக்குத் தொழில் தருக
இரும்பு ஆலை ஆக்கி
இரையும் காடு போக்கி கரும்பு சாறு கொள்ளக்
கட்டி ஆலை மெள்ளத்
தொழில் தருக - எமக்குத் தொழில் தருக
மலையில் வளரும் இறப்பர் மலி வுடனே விற்க உலையு மொன்று கொள்ள உருகு பொருள் தள்ளத்

Page 12
- 18 -
தொழில் தருக - எமக்குத் தொழில் தருக
காடு பலவும் போக்கிக் கழனி பலவு மாக்கி வீடு நிறைந் தோங்க விளைவும் பொருள் தேங்கத்
தொழில் தருக - எமக்குத் தொழில் தருக.

- 19 - இதுதான் உலகம்.
எண்ணிய தெல்லாம் ஏற்புடன் கிட்டிடின் திண்ணிய உலகினில் தேடுவ தென்னே
புண்ணியம் உண்டாம் புகழுமே யுண்டாம் கண்ணிய வாழ்வினில் கண்டிடின் நீதியே !
மனிதரை மனிதரே மிதித்திடும் உலகினில் கனிவுளம் காண்பது அருமையு மன்றே பனியென வாழ்வைப் பாரினில் உணர்ந்தோர்
இனியெனும் இன்னலை இளைக்கா திருப்பரோ !
தனக்கென வாழாத் தரணிக்கு வாழ்வோர் மனதினில் துன்பம் மருகுவ தியற்கையே “எனக்கென’ உலகினில் என்றே இருப்போர் தனக்கென வாழும் தரத்தவ ரன்ருே.

Page 13
- 20 -
நீங்கள் யார் ?
பலர் துன்பப்படுகிறார்கள் பார்க்கிறீர்கள் நீங்கள் பலர் துன்பப் படுத்து கிறார்கள் பார்க்கிறீர்கள் நீங்கள் சிலர் கண்டு சீறுகிறார் சிந்தித்தால் நீங்கள் யார் ?

- 21 - பாரதியின் குருவே !
விரிந்த தமிழ் பெற்றிருந்த ஞானி - தமிழ் வேணியவள் ஆட்சிசெய்த மேனி தெரிந்த தமிழ் சதாவதானம் கொடுக்க-உணர்ந்து தெய்வக்கவி தினம்வாயில் எடுப்பர்.
தென் நாட்டின் கோவையதில் இருந்து - எமக்கு தேன் தமிழில் நூலாக்கி விருந்து பன்னாட்டில் போற்றுமெங்கள் பாரதி - தமிழ் பாடல்கேட்
டுணர்ந்திருந்த சாரதி.
கவிஞனவன் பாரதிதான் தொடுத்த - சருக்க கவியதனில் இவ்வுண்மை எடுத்தும் புவியதனில் புதுமைபல பொருவு - கவிதை புனைந்தவன் ஞானசற் குருவே.
நாலாண்டு நிஷ்டையதில் இருந்தும் - தமிழில் நல்லபல நூல்யாத்து இருந்தும் காலாண்டு நூற்றுக்கு முன்னே - புகழ் கண் டீரே அருளம்பல மன்னே.

Page 14
- 22 - இலஞ்சமும் வஞ்சமும் !
வேலையொன்று நானெடுத்துத் தருவேனென்று வேதனையில் வாடுகின்ற வாலிபர்க்குப் பாலதிலே குளிப்பதுபோல் பசப்புப்பேசி பணத்தினைப் பறித்தெடுக்கும் பாதகரும். சாலையிலே படித்திடவே உன்மகனைத் தப்பாது நான்சேர்ப்பேன் என்றுகூறி வேலை யொடு வேலையாகப் பணம்பறிக்கும் வேடனாயும் வாழ்ந்திடுதல் எதுவரை யோ.

-- 23 - யாழ் நகர வாலிபன்.
வேலைதேடி வீதியெல்லாம் அலைபவன் - கொடும் வெப்பம் சூழ்ந்த யாழ்நகர வாலிபன் மாலை வேளை வீடுவந்து சேருவன் - இங்கு மனம் வருந்தி உணவருந்தி வாழ்பவன்.
நாலு மனிதர் நல்கஉதவி நாடுவன் - அவர் நாளைக்காலை வருகவென்றால் திரும்புவன் காலுகடுக்கச் சென்று சென்று திரும்புவன் - அவன் கண்டபலன் வீணலைச்சல் ஒன்றுதான்.
இன்று தொழிற் தேர்வு என்று ஏகுவன் - அங்கு இசைந்து பாட ஒருவரின்றி வாடுவன் மன்றம் மத்துத் தொழில்தேட முயன்றவன் - பெரிய மனிதர்களைக் கண்டு பேசி வாடுவன்.
காடுவெட்டிக் கமஞ்செய்வம் என்றவன் - நல்ல காணி நாடி மனுச் செய்து நின்றவன்
வீடுவிட்டுக் காடுசெல்லத் துணிந்தவன்-பலன் வீணலைச்சல் ஒன்றுதான் கண்டவன்.
நாடு நாளை போற்றவுள்ள வாலிபன் - செய்ய நாட்டிலொரு வேலையின்றி வருந்தியே ' வீடு தேடிப் பாடஞ்சொல்லித் திரிபவன் - வரும்
வேதனத்தில் உண்டிங்கு வாழ்பவன்.

Page 15
- 24கண்டேன்.
மாடி அறையின் மருங்கில் இருந்தே நாடி அன்றைய நாளிதழ் பார்த்து மூடி இருந்திடு சாளரம் திறந்தேன் தேடி அலைந்தது தெருவினில் கண்டேன்.
பாடித் தெருவினில் பவனி வந்தவன் ஆடிக் கால்களும் அந்தரத் தெழுந்திட சாடிப் போத்தலின் சாராயக் கையுடன் தேடி வீட்டினை சென்றவன் கண்டேன்.
பீடிப் புகையினைப் பின்னிழுத் தூதியே பாடிச் சினிமாப் பாட்டுடன் ஒன்ருய்க்
கூடிச் சென்றிடும் மாணவர் குழுவை
நாடிக் கண்டதில் நகைப்டி வருகுதே.
தாலி கட்டிய தன்னவன் பின்வர
கோலி வெட்டிய குறள்சடை யதனுடன் வேலி நீக்கிய பழத்தோப் பதுபோல்
சேலை கட்டிய மாதரைக் கண்டேன்
கூடை முதுகினில் கொஞ்சிடப் பெண்களும் வாடைக் குளிரது வலிப்பினை நீக்கவே தாடை வழிந்திடு தாம்புலத் துடனே காடை நோக்கிடும் காட்சியும் கண்டேன்.

- 25 - இணையிலா ஈழநாடு.
இரையுமலை மோதுகின்ற நாடு - என்றும்
இரத்தினம்போல் மின்னுமெங்கள் வீடு
விரையுநதி வண்டலுடன் செல்லும் - வரவை விளையும் நெல் வயல்களுமே கொள்ளும்.
துளிலரும்பித் தேயிலைமலை வளரும் - நல்ல சுகந்தமதும் செல்வமதும் பெருகும் தளிரரும்பி ஓங்கிவளர் ரப்பர் - பாலைத் தங்க மெனச் சுரந்தெம்மைக் காக்கும்.
கன்னியாயில் வெந்நீரூற் றுண்டு - குதிரைக் கன்னிமுகம் மாற்றருவி யுண்டு மன்னிமக்கள் எல்லோரும் கண்டு - நின்று வணங்குபுகழ் பாதமலை யுண்டு.
ஒவியத்தில் உயரஜந்தா போலே - உள்ளம் ஒன்றுசித்ர சீயகிரி உண்டு காவியஞ்சேர் கலைக்கோயில் ஒன்று - அன்று கண்டனராம் தம்புள்ளைக் குன்று.
தக்கவளம் சேர்ந்திலங்கும் நாடு - இதைச் சார்ந்த கோடி மக்கள் சமம் நாடி ஒக்கலரா யுண்டுறங்கும் நாடு - இது உலகிலிணை யிலா ஈழ நாடு.

Page 16
---- 26 -س- நிர்வாணம்.
நிர்வாணத்தைப் பற்றிச் சொல்கிறேன் நிச்சயமாக - நீர் நினைப்பது அங்கில்லை நீர் நினைப்பதை முன்னே நிறுத்தினல் கண்கூசும் நான் நினைப்பதை முன்னே நிறுத்தினுல் கண்கூசும்.
நிகழ்ச்சிகள், சாக்கடையில் புட்டுக் காட்டினுல்
புரளுமே புதிய பதவிகள், இலஞ்சம், பின் கதவு, இடைச் சொருகல் நியமனங்கள், கொள்ளை இலாபம்,
இதனைக் கண்டவர்கள் இன்புற்ருல் துரோகிகள் முகம் திருப்பினுல் முதல் தரக்கோழைகள் முயற்சிப்போர் அகற்ற .

புயலே செல்வாய்.
- 27 -
போகும் புயலே பொறுத்துப் போவாய் சாகும் நிலையில் சாற்றுவேன் கேளாய் நோயும் பிணியும் என்னை வாட்டிட தாயும் சேயும் தவியாய் தவித்திட பார்த்து இருந்தேன் பட்டினி பலநாள்
அதனுல் 1
சேர்த்து இருவரைக் கலமதில் வந்தனன் குடும்பப் பொறுப்பில் கொணர்ந்தேன் வலையை இடும்பன் நீயும் என்ன செய்தனை, உன்னை ஏசினல் ஒன்றும் ஆகாதே என்னை அறிவாய் என்கிளை யறிவாய் விதியோ விளையாட்டது தானே இல்லை சதியோ நாமறி யோமே என்றே கதியே யன்றிக் கண்ணிர் சொரிந்து *பதியே பதியே பார்க்க வாரீர்”* என்றே யலறும் எம்மவர் குடியினில் சென்றே நானும் செப்புவ துரைப்பாய்.
புயலே கேளாய்:
வள்ளமும் நாமும் வலையுடன் கடலில் தள்ளப் பட்டுச் செல்கையில் சிறுதுமி அள்ளித் தெளித்து அகன்றது தூர.

Page 17
。
அதனுல் ! -
صوبہ سر سے
*மெல்ல, நாங் மகிழ்ந்து-இருக்கையில்
*/சுருண்டன அலைகள்
ஆமென எண்ணி,
கனையே பரர்த்தோம் לשא குது Nவரையென அலையும்’
*வல் ᎧᏄᏬ , Ꮎ சொல்? Է«Քլ க்கையில் \சுழியுள் தாண்டோம்
றைவன_வணங்கித் துதித்து
அலையோ அலைத்து
க்கித் தூக்க *ஐயோ ஐே f ய வேளையில்
பலகை ஒன்று பக்கலில் வந்து விலக முயல்கையில் விரைந்து பிடித்து விறைத்துத் தவிக்கிருேம் விரைவாய் செல்லாது நீயும் சேதம் ஊரிலும் செய்யாது எம்மவர் தமக்கும் எடுத்துரை.
 
 
 
 

- 29 - Nபின் கதவு.
மச்சு வீட்டாரின் மாட்டுத் தொழுவத்திற் பச்சை வெட்டியிட்டு பசுக்கள் பார்ப்பதற்கும் எச்சில் இலையெடுக்கும் எந்தத் தொழிலதற்கும் பிச்சை யெடுப்பதற்கும் பின் கதவு வேண்டுமே.

Page 18
- 30 -
தீருமா ?
ஆலையின் சங்கு ஒலியெழுப்ப அத்தான் நினைவு துயிலெழுப்ப வேலையில்
நின்று வருமவற்கே வேண்டும் உணவு ஆக்கினளே.
வீதியை நோக்கிக் காத்திருந்தும் வேலாம் விழிகள் பூத்திருந்தும் சேதியை அறியும் ஆவலினால் செக்கல் ஆகியும் நோக்கினளே.
வந்த சிங்கன் உடைமாற்றி வார்த்தை பலவும் பரிமாற்றி சிந்தை அரிக்கும் எண்ணமதை செவியில் சேர்க்க எண்ணினனே.
கணக்கர் இன்னும் வரவில்லை காசும் எமக்குத் தரவில்லை பிணக்கை 'வளர்க்க விரும்பாது
பேதையர் நாமும் ஏமாந்தோம்.
சம்பளம் பற்றாய் நின்றுவர சமையலும் வீட்டில் குன்றிவர கம்பளம் மீதிற் கால்மிதிக்கும் கனவான் கண்கள் திரும்பலையே.

- 31 -
நீரும் மூன்று தரமேற்கும் நெஞ்சம் எமக்குப் பலவேற்கும் தீரும் மார்க்கம் கண்டேநாம் திரண்டே வேலை நிறுத்தினமே.
கண வன் வார்த்தை செவியேற்கக் கண்ணீர்த் துளிகள் புவியேற்கக் கணமே வாழ்வின் நிலைநோக்கிக் கல்லாய்ச் சமைந்து நின்றனளே.

Page 19
-32 -
வீட்டுக் கொருசாதி வீட்டுக் கொருவேலி நாட்டுக் கொருநீதி நமக்குள் ளொருநீதி
காட்டுக்குப் போகின்ற கடுந்தவப் பேச்சும் காட்டினில் வாழ்கின்ற
மிருகத்தின் மூச்சும்.
 
 

- 33 - சந்தி சிரிக்கிறது. -
என்னைக் கண்டவர் எல்லோரும் எச்சில் உமிழ்ந்து சென்ரூரே முன்னைச் சென்றவன் செயலாலே முகத்தைச் சுருக்கிச் சென்ருரோ ?
சந்தி சிரிக்க எனையிங்கு சாக்கிற் கட்டி இதமாகச் சந்தி மரமாம் ஆலதிலே சாய்ந்தா டத்தான் ஏன்விட்டார்.
இன்று சிரித்துச் செல்பவர்கள் என்னைக் கண்டா சிரிக்கின்ருர் அன்று செய்தவன் செயலையே ஆகா மூடம் என்கின்றர்.

Page 20
- 34 - மறந்தேன்.
உன்னகத் தெளிவை எண்ணி உணர்ந்தே என்னகத் தேயுனை இருத்தி அன்பால் உன்னகம் மகிழவே நட்பாய் இருந்தேன் உன்னகத் தாரென தள்ளியே வைத்தார்.
அன்பினில் வஞ்சக நீரதைக் கலந்தே இன்பமு தென்று ஏத்திடத் தந்தாய். அன்பினில் வேற்றுமை கண்டுமே நானும் துன்பினில் பிரிந்தே தூரவே நின்றேன்
வையகத் தோர்கள் வழங்கும் வசையினில் பையுள் கொண்டே பாசமாம் பிணைப்பினை கையினைக் கழுவியே காதலை வெட்டிட தையலாள் உன்னைத் தரணியில் மறந்தேன்
வாழும் நாள்களை வீணுக வாழேன்
வாழ்வில் சிறப்புறு தொண்டுகள் செய்வேன் வாழ்வை மயக்கிடும் மூடத்தை வெல்வேன் தாழ்வை வாழ்வினில் காணவும் மாட்டேன்.

- 35 - மாட்டின் லூதர்கிங்.
கறுத்தவர் படுந்துயர் கண்டுமே தரியா
அறுத்திட அவர்தழை ஆவலில் உழைத்தீர்
மறுத்தவர் தமக்கும் மதியினைத் தீட்டினீர்
வெறுத்தவர் உமையே வேட்டினில் வீழ்த்தினர்.
கறுத்தவர்க் குழைத்ததைக் கண்டுமே நோபலார்
நிறுத்திடத் தொண்டினை நீள்பரி சளித்தனர் மறுத்துமே நின்றநல் மாட்டின் லூதர் கிங்
வெறுத்தவர் தாமே வியக்கிருர் இன்றுமே !

Page 21
- 36துணை.
அன்பே வருகவே - எந்தன் அமுதே வருகவே
உள்ள மொத்த தாளில் ஊறும் வார்த்தை எழுதி மெள்ள எனக்குச் சேர்த்தும் மேலும் பதிலைப் பார்க்கும்
அன்பே வருகவே - எந்தன் அமுதே வருகவே
உறுதி உளத்தில் வைத்து உள்ளம் என்னில் தைத்து இறுதி வரையும் காக்கும் இலட்சிய வாழ்வை நோக்க
அன்பே வருகவே - எந்தன் அமுதே வருகவே
வீட்டில் தீபம் ஏற்றி வினையும் செய்து ஈற்றில் நாட்டில் துன்பம் தேய்க்கும் நாளும் தொண்டில் தோய்க்க

- 37 -
அன்பே வருகவே - எந்தன் அமுதே வருகவே
கல்வி யற்ற சிறுவர் கற்று ஞானம் பெறவும் சொல்லித் தினமும் போற்றி சோக வாழ்வை மாற்ற,
அன்பே வருகவே - எந்தன் அமுதே வருகவே
எந்தன் இதய வீட்டில் எவரும் சொந்தம் நாட்டில் உந்தன் இதயம் விரிந்தால் உற்ற துணைக்கு விரும்பி
அன்பே வருகவே - எந்தன் அமுதே வருகவே.

Page 22
- 38 - போட்டி ஏன்?
மருத நிலத்தார் மகிழ்ந்திடு காலமாம் கருதிய அறுவடை கண்டிடும் வேளையில் சொரிந்த நெல்லினை சேர்த்து எடுக்கவே வரிந்த சேலையின் வகிர்ந்த பாதியைத் தலையில் கட்டியும் தலைப்பா மூடியே வலையில் இருக்கா வாழைக் குடுமியைப் பெட்டியில் இட்டுப் பிதுங்க வமர்த்தியே கட்டிய குறுக்கைக் கழற்றிக் கட்டியும் ஆணும் பனையில் அலங்க லிலமைத்த “அடவியன்' தனையே அகங்கை எடுத்து மடவியள் தானும் மங்க்ைய ருடனே கண்ணைப் பறித்தும் காலதை எரித்தும் மண்ணை வறுக்கும் மதிய வேளையில் வயலில் சொரிந்து வளமாய்ப் பொலியும் நெல்ல தைக் கூட்ட நெற்றியும் சிலிர்த்தது வில்லதை ஒத்த புருவமும் நனைந்தது அங்கவள் முகத்தை அணுகியே நோக்கின் பங்கயம் புழுதியில் பட்டது போலும் பெட்டிக்கு வெளியில் பிதுங்கிய கேசமும் வெட்டிய செம்படை வெள்ளையர் சடையை ஒத்தே இருப்பினும் ஓங்கிய காற்றில் கத்தைப் புழுதியும் காவியைக் காட்டிட போட்ட தோடும் புழுதியில் புதைந்தே காட்டச் சிவப்புக் கல்லும் தெரியவே மஞ்சள் கயிறும் மார்பினில் தொங்கிட பஞ்சம் வாட்டிடப் போட்டியிற் கூட்டினவி

- - 39 - எறிந்த கல்.
மாங்காய்க்குக் கல்லெறிந்தேன்
மாங்கனிகள் தான்வீழ்த்தித்
தேங்காயைப் பின்பறித்து
தேயிலையின் காட்டினிலே
LT Äas Tš கொழுந்தெடுக்கும்
பாவையற்குச் சூட்டுதற்குப்
பூங்காவிற் பூவெடுத்துப்
பூரிப்பிற் கொடுத்ததுவே.

Page 23
{ = 40 سநாடு நலம்பெற.
காலை எழுந்த வுடன் கலப்பை நுகம் தோளேந்திச் சாலை தாண்டி வந்து சால் கட்டி உழுகின்ருேம்.
பகல் வெய்யி லென்று பாராது நாளெல்லாம் அகில் உயர்ந் தோங்க அயரா துழுகின்ருேம்.
ஈழம் பெற்றெடுத்த எந்திர வியல் வல்லுநரே ஈழம் குவிக்க உழும் எந்திரங்கள் தந்திடுவீர்.
அயல் நாட்டிலிருந்து அழைத்த தெல்லாம் போதும் இயல் (பு) உண்டு இங்கு எந்திரங்கள் தந்திடுவீர்

-- 41 / -۔ சிறுமை கண்டு டிொங்குவாய்.
மாடி அறையில் மாண்புடன் ஏறி நாடி எனது நல்விரிப் பதனையே பார்வை ஒருமுறை விட்ட பின்னர் சோர்வை நீக்கிடத் துணிந்து நானும் விளக்கை அனைத்து விட்டபின் விரிப்பினில் வழக்கம் போலே வந்து அமர்ந்தேன்.
அவ்வேளையில்
நிலவொளி தானும் நீண்ட தண்ணுெளி பலவழி யாகப் பரப்பிட அறைதனில் எனது இதயம் என்ருே ஒருநாள் மீட்டிய வீணை மிகுந்திடு தூசியில் தேட்டம் அற்றுக் கட்டினில் இருக்க விருப்புடன் நானும் அதனை எடுத்து துருப்பதைப் போக்கிடச் சுருதியை மீட்டினேன் ஏனே நரம்புகள் நாதம் தந்தில நானே பதைத்தேன் பலமுறை முயன்றேன்.
ஒருவேளை
மலையகக் குளிரினில் மரத்தன கைகளோ ? விலையிலா வீணை ஏன்தான் நின்றதோ என்று ஏங்கிடத் தந்திகள் போலே நின்று அடித்தன என்னுடல் அன்ருே.

Page 24
- 42 -
இவ்வேளையில்
“ஏன் புலம்பினிர்' என்றே யோர்பெண் தான்குரல் கொடுத்து எங்கோ நின்றனள் திகைப்பினில் இருந்திடத் திடுமென வீணையைப் பகைவரைப் போலே பறித்தனர் யரோ யான்தான் பறித்தேன் என்பெயர் ஈழமே ஏன்தான் நீவீர் இப்படி நடுங்கிறீர் நான்படும் சிறுமை நீரறி வீரோ? ஏன் மீட் கின்றீர் வீணையில் கீதம் கீதமா அல்லது கீச்சிடும் ஒலியின் நாதமா இன்ப வெள்ளம் போதுமா ?
N
என்றனள் V
ஆத்திரத்தில் நானே அலறிப் புடைத்தேன் பாத்திரம் போனதா பசியதோ வென்றேன் ஆவேசம் வேண்டாம் அன்பரே பொறுப்பீர் நாவேசம் போதும் என்னுரை கேளிர் நானிங் கடிமை என்பத நிவிரா ஏன்முழுச் சுதந்திரம் எனக்கு இல்லை அந்நியர் எனயே ஆடிச் சூறையை தன்னுயர் நாட்டிற்குச் செல்வத நிவிரா? உண்ண உணவிலை உடுக்க உடையிலே கண்ணுே முட்டிடும் கண்ணிர் பாரீர் ஆலை யின்றிதல் லாக்க மின்றி

எட்டடி அறையில்
م= 43 -
வேலை யின்றி வீணில் அலைவோரும் பாலை நிலத்திற் பருகா துற்றியே சோலை தன்னிற் சொகுசா வாழ்வோரும் ஏனே இருக்கிருர் என்பத ஹிவீரா ? ஒருவர் உணவை ஒரு *ஆபறிக்கின்ருர் ஒருவர் எச்சில் உண்டிட எடுக்கிருர்,
சிலரோ நானே உயர்ந்தோன் நீயோ இழியோன் ஏனே எம்முடன் ஏறினய் இங்கு கெட்ட குலத்தோன் கேவலக் குடியோன் முட்ட எம்முடன் முடியுமா இங்கு s' என்றிடும் சிறுமையைக் கண்டுமா நீயும் இன்றிங்கு வீணை இசைக்கப் புகுந்தாய் பொங்கி யெழுந்திடு புதுமை கண்டிடு அன்றேல் நீயிங் கிருப்பதிற் பயனிலை இன்னும் சிலவுள இடித்துக் கூறுவேன் கேட்பாய் மலையகக் ே டச் சிறுமைகள்
கட்டிய மனைவி காலதில் உறங்கத் தொட்டிடும் குழவி தூங்கிடத் தொடையில் முட்டுடன் வாழும் ஒருத்தனும் உளனே அன்னவன் வாழ்வு ஐம்பது குடும்பம் துன்புடன் ஒருங்கே தூங்கிடும் சிறுமையை இன்னுமா உணர்கிலாய் இயக்கம் இலையா துச்ச மெனநீ தூங்கிக் கிடந்தாய் பொங்கி யெழுந்திடு பொறுத்தது போதும்.

Page 25
- 44 - மனிதர்கள்.
அழுங்குரல் கேட்டு
ஓடி வந்து அழுகையை மாற்றினீர் அவ்வேளை மனம் அழுங்குரல் கேட்கிறதா ? நிறுத்த முயலுங்கள்
நீங்கள் மனிதர்கள்.

- 45 -
வந்தது பதிலும்.
கன்னத்தில் ஒன்று தரவிருந்தேன்
கடிதத்தில் ஒன்று காட்டிவிட்டாய் என்னத்தில் இன்பம் கண்டேனே ஏக்கத்தில் இருந்து வாடுகின்றேன்.
உள்ளத்தில் எதையோ வைத்திருந்தேன் ஊணுறக்க மின்றி வாடிநின்றேன் வெள்ளத்தில் என்னை வீழ்த்துதற்கோ வேளையே பார்த்து வருகவென்ருய், !
எண்ணிட்ட வேளை நினைவில்லை எப்படியோ நானும் வருவதென்றே தண்ணியு மின்றித் தவித்திருந்தேன் தருவாயே உடனே பதிலென்ன ?
வந்ததே பதிலும் வருகவென்று வார்ட்டினில் இருக்கிறேன் தரவேயொன்று சிந்திக்க வேண்டாம். அத்தானே சின்னவன் பிறந்தான் முத்தானேன்."

Page 26
எழுவாய்.
நித்திரை விட்டெழுவாய் - தம்பி நீண்ட பயணம் இருக்கிறது நித்திரை விட்டெழுவாய்.
உத்தமர் போல்வேசமே உனக்கிங்கு வேண்டாமே நித்தமும் உழைத்துண்பாய் நிலத்திடும் உன் புகழென்றும்.
நித்திரை விட்டெழுவாய் - தம்பி நீண்ட பயணம் இருக்கிறது நித்திரை விட்டெழுவாய்.
இத்தரைத் தொழிலெல்லாம் இனத்தால் ஒன்றென்ற சொத்ததனைக் கொண்டிங்கு சோர்வின்றி உழைத்திட.
நித்திரை விட்டெழுவாய் - தம்பி நீண்ட பயணம் இருக்கிறது நித்திரை விட்டெழுவாய்.
 

-- 47 -ت-
மின்னும் ஒளியிற் செந்நெல் வயலிற் கன்னம் குழிய அன்னம் பயின்ருள்.
சின்ன இடையிற் பன்னம் இளைத்த செந்நெற் கடகம் நன்ன நடந்தாள்.
மண்ணில் இருளின் வண்ணம் படிரக் கண்ணைப் பதித்து எண்ணி நடந்தாள்.
கண்ணை மறைத்து
விண்ணில் இருள
பண்ணை மகளும்
கண்ணன் மருண்டான்.
வந்த கண்ணன் சிந்தை இருத்தி வந்த அவளின் முந்த நடந்தான்.

Page 27
-- 48:-۔
இந்த நிலையிற் சிந்தை தளரத் தந்த உடலாள் நொந்து துவண்டாள்.
கிட்ட அணுகி வெட்டி விழியை எட்டிக் கரத்திற் துட்டன் பிடித்தான்.
பெட்டி கடகம் தட்டித் தரையில் முட்டிச் சிதற
எட்டி இழுத்தான்
மட்டே இல்லான் துட்டக் கரத்திற் சொட்ட இரத்தம் கொட்டக் கடித்தாள்.

- 49 - பற்று விடேன்.
வெல்லத் தமிழில் விளையும் சொல்லில்
வேதனை சேர்த்துனைப் புனைந்து மகிழ்ந்தேன் பொல்லாங் கொழிகெனப் போதித்து வைத்தே பொற்பா வைஉனைப் புனைந்து மகிழ்ந்தேன்.
மாவலி கங்கை வான்மடை மறித்தே
மாந்தர் வாழ்ந்தோங்க முறைகள் பணித்தேன் மாவலி மின்சக்தி மாதவ நாட்டினை
மாணிக்கமென மின்ன மங்கை பணித்தேன்.
போட்டி பொருமைத்தீ பொறுப்பில் தலைமை
போக்க இங்குனைப் டினைந்து விடுத்தேன் காட்டி நாட்டினைக் கெடுக்கும் கயவர்ைக்
உண்ண உணவின்றி அலையும் மக்களை
உய்யத் தொழிலிந்து உயர்த்தப் பணித்தேன்
கண்ணுக் கிமைபோல் நாட்டினைக் காக்கும்
கருணை கொள்ளெனக் கண்ணே பணித்தேன்.
காவியத்தில் உன்னைக் கம்பன் படைத்தான்
காளிதாசன் முன்னர் கட்டி அணைத்தான் பாவி யற்றிட வந்தவன் நானும்
பாவையே உன்தன் பற்று விடேனே.
கல்லறை சேர்த்திடக் கன்னி படைத்தேன்.

Page 28
-- 50 سي+
மலர்ந்திடுமா P
காரோடு காற்றும் இணையாமல் - வெள்ளம் கழனியுள் நிறைந்து வழிந்திடுமா ? நீரோடு நெல்லும் வளராமல் - நாட்டில் நித்தியம் பொங்கல் பொலிந்திடுமா ?
ஆலையோ டாக்கம் பெருகாமல் - மக்கள் ஆவல்கள் என்றும் நீங்கிடுமா ? வேலையொடு வேதனம் நெருங்காமல் - வாழ்வின்
வேதனை தானும் நீங்கிடுமா ?
தேவையும் தேட்டமும் இணையாமல் - இந்தத் ܝ ܲܬܝ தேசமும் செழித்து மலர்ந்திடுமா ? * பாவையும் பண்பும் இணையாமல் - இந்தப்
பாரினில் வாழ்வு மலர்ந்திடுமா ?
 
 
 
 

- 51 -
எத்தனை உயர்ந்த மோட்டார்கள் அத்தனை உயர்ந்த மனிதர்கள்
உத்தமர் போலும் இரவாட பத்தியில் வருவார் “இரவியக்கம்
உத்தமர் உடையில் வந்தவர்கள் மெத்தவும் மாந்துவர் மேல்நாட்டார் கத்தலில் வந்திடும் இசையுடனே ஒத்திட வந்திடும் குடிகளுமே.
பத்தினி வீட்டினில் இருந்திடவே பித்தனைப் போலுமே பிடித்திங்கு
சுத்தியே திரிவார் துரைமார்கள் பத்தினி யேனவே செத்ததையே.

Page 29
- 52 - பற்றிவிட்டால் 1
பக்கத்து வீட்டார்
பருத்த கல்வீடு தக்கபடி கட்டிடத்
தரியாத நீவீர் நித்திரையி லேனும்
நின்மதியைக் காணுது புத்தியது கெட்டிங்கு
புழுங்குதல் ஏனே ? கள்வரினுற் சண்டை
கயவரினுற் சண்டை பிள்ளைக்குப் பாகம்
பிரிப்பதிலே சண்டை எல்லையிலே சண்டை
எம் வீட்டிற் சண்டை தொல்லை விளைத்துத்
தொடர்வதை நீக்குதற்கு உண்டிங்கு உண்டு
உய்கின்ற மார்க்கம் பண்டுகண்ட நல்வழி
பற்றிவிடில் பொதுவுடமை .
 

- 53 - LJ 600. D பறிப்போர்.
கலக்கின்ருர்கள் - தினமும்
கலக்கின்ருர்கள்
சீனியுடன் குறுமாவும் சீரகத்தில் குச்சிகளும் ஏனிந்த அநியாயம் எத்தர்கள் நெஞ்சமதில்.
கலக்கின்ருர்கள் - தினமும்
கலக்கின்ருர்கள்
அரிசியுடன் கற்களுமே அளவாக உடைத்திடுவர் சரிபாதி சோளம்மா தப்பாது மிளகாயில்
கலக்கின்றர்கள் . தினமும்
கலக்கின்றர்கள் --
பாலுடன் நீராடும் பார்ப்பதற்குத் தடிப்பாகக் கோலமுடன் புட்டிமாவும் கூசாது உளமொத்துக்.
கலக்கின்றர்கள் - தினமும்
கலக்கின் ருர்கள்
வார்த்தையிலே பொய்யாடும் வாங்குகின்ற பொருட்களிலே பார்ப்பதற்குத் தெரியாதே பணம்பறிக்கும் ஆசையினுல்
கலகுகின்றர்கள் - தினமும் கலக்கின்றர்கள்.

Page 30
- 54 -
ஏக்கம்,
எடுப்பு
விரும்புவரா இல்லைத் திரும்புவரா
வீட்டுக்கு வந்தவர் - விரும்புவரா
தொடுப்பு
துரும்பாக இளைத்து இருந்திடுமென்னை
நரம்பென நினைத்து - விரும்புவரா
முடிப்பு
கரும்பாக நினைத்துக் கட்டிட வருவரோ இரும்பாக மனத்தினை இருத்தியே செல்வரோ மருந்தோடு இருந்திடும் மங்கை எனக்கேன் விரும்பினுல் வெட்டியாய் இருந்திடுவே னென்று
- விரும்புவரா

பண்புடன் கலைத்தோம்
நாட்டைப் பிடித்தவர் நாசம் செய்தவர் நம்வீரம் கண்டு - நடுங்கினர் வீட்டை நோக்கினர் வெற்றி ஈந்தனர் வேதனை கொண்டு !
வித்தை கற்ருேம் வேதனை விற்ருேம் விடிவதை நோக்கி - வீறுடன் பத்தை அறுத்தோம் பறங்கியை வெறுத்தோம் பாரிதை நோக்கி,
தாவிச் சென்றவர் தனத்தை மென்றவர் தாமினும் வருவோம் - என்றெண்ணி பாவிக்க நோக்கினர்
படையை நாட்டினர்
பண்புடன் கலைத்தோம்.

Page 31
- 56 - புன்னகை வீசியே!
பொன்மலர் விரியுது காவிலே - மது பொங்கியே வழியுது பூவிலே என்மனம் நெகிழுது ஆவலில் - அதை எப்படி எழுதுவேன் பூமியில்.
விண்ணினில் ஒளியது படரவே - அங்கு வேந்தனின் மகளெனப் பொலிகிருய் கண்ணினில் உனதுரு ஆடுதே - அதைக் காத்திட எனதிமை நாடுதே.
மண்ணினில் உனதெழில் கூடுதே - அதை மறைத்தொரு வேலியும் ஊடுதே எண்ணிடும் போதினில் உனையே - இங்கு ஏங்கியே தவிக்கிறேன் ஆவலில்,
தங்கையர் போற்றிடும் எழிலே - உன்னைத் தாவியே இருக்குது மயிலே மங்கையர் மலர்களில் ராணியே - என்னை மயக்கினய் புன்னகை வீசியே.

- 57 - உண்டு இல்லை.
தென்னை மரத்தடியில் தேங்காய் இல்லாமல் என்னதான் ஆக்கிநிதம் எப்படி வாழ்கின்ருர் சின்னத் தனமாகச் சிந்திப்போர் எத்தனையோ உன்னிப்பாய் உணர்ந்தோர் உண்மைபல தானறிவர். கலப்புமண மங்குண்டு கண்ணியம் மிகவுண்டு விலக்கியே வைக்கின்ற
வெறுஞ்சாதி யேதுமில்லை குலமெலா மொன்றென்று கூறியதற் கொப்பாகக் கலகலப்பாய் வாழ்கின்ற காசில்லாக் கூட்டமது. மொழிபேத மங்இல்லை மோகவெறி தானில்லை கழிவான உணவுகள்தான் காண்பதற்கு மிகவுண்டு இழிவான போலிகளுக் கிடமேது மங்கில்லை வழிதவற இல்லையவர்கள் வாழத் துடிக்கிருர்கள்.

Page 32
--58 جسے அழகும் அவஸ்த்தையும்.
ஓங்கி வளர்ந்த மலையடா - காட்சி உள்ளம் மகிழும் நிலையடா தேங்கி வழியும் அழகடா - தம்பி தேயிலை நிறைந்த மலையடா.
பாய்ந்து செல்லும் அருவியிலே - தம்பி பாலர் தொடக்கம் ஆடிடுவார் காய்ந்த முகத்துப் பெண்களுமே - நல்ல கணுவை எடுத்தல் பாரடா.
காற்று முகிலைத் தள்ளிடவே - அது காட்சி வீட்டினுள் கொடுத்திடுமே ஏற்ற வீடுகள் இல்லையேல் - அங்கு
எப்படி மக்கள் உறங்குவர்.
பனியும் நிறைந்த மலையடா - இங்கு பல்லும் ஆடிடும் குளிரடா கனியும் ஊற்றின் அழகினைத் - தம்பி கண்டு களித்திட வாராயோ.

அப்பாவி !
மாட்டுப் பட்டியின் மணத்தால் தோட்ட வெங்காயம் செழித்தது வாட்டம் கொண்ட உழவனும்
தேட்டம் கண்டிட நினைத்தான்.
கூட்டி வந்த தரகரும் கோட்டை கொழும்பு மலைநாடு ஆட்டிப் படைக்கும் மனிதற்கு
காட்ட வெங்காயத் தோட்டத்தை.
வந்தவர் உழவனைப் பார்த்து “இந்த வெங்காயம் விலைக்கு தந்தால் என்ன? வென்று
சிந்தை அரிக்கக் கேட்டார்.
தரகர் கேட்ட வினவினில் தரந்தான் இருந்திடக் கண்டுமே “தரத்தான் நினைக்கிறேன் என்ருலும் வரத்தான் விலையைப் பார்ப்போம்.'

Page 33
என்றே உரைத்த வார்த்தையை நின்றே கேட்ட தரகரும் *நன்றே நன்றே நானிங் கின்றே சொல்வதைக் கேளும்’
விலையது இனிமேல் ஏருது நிலையது மாறிக் குறையும் தொலைவுள பகுதியில் விளைச்சல் மலையாய் இருக்கிற தென்றர்.
“தலைநகர் இருந்து வந்தவர் தலையில் எதையும் கட்டாது விலையது நீதியாய் கொடுங்கள்' * கலையெனத் தரகர் உரைத்தார்.
மக்கள் வங்கியின் கடனும் மக்கள் இருவரின் படிப்பும் தொக்கலில் இருப்பதை உணர்ந்து விற்றிட நினைத்தார் உளவனும்.

- 61 -
“என்னைத் தேடி வந்தநீர். சொன்னுல் விலையது சரிதான் முன்னை விலையதைப் பார்த்து என்னை நினையும் தரகரே'
இதனை உணர்ந்த தரகரும் இதமாய் வார்த்தை பேசி இதற்கு இதுதான் விலையென மதித்து விலையது தீர்த்தார்.
முற்பணம் கொடுத்த முதலாளி விற்பவர் முகத்தைப் பார்த்து சொற்களாய்ச் சிரிப்பை சொரிந்து பற்றியே அழைத்தார் தரகரை,
தரகரின் உதவியைப் புகழ்ந்து தரகது போனுல் எனக்கு தருவது இலாபம் முதலில் இருமடங் கென்ருர் கொழும்பார்.

Page 34
அண்டை வீட்டாரின் ஆக்கன்று அறுத்துவந்து உண்ட மாங்கன்ருல் ஊரினையே கூட்டிவந்து சண்டை பிடித்திங்கு தரங்கெட்டு வார்த்தைசிந்திக் கண்ட பலனெதுவோ காசினியில் நாமறியோம்.
தங்கை திருமணத்தைத் தாங்கின்ற ஒலையதில் தங்கள் திருநாமந் தானில்லை என்பதினுல் பொங்கி எழுந்தவர்கள் போகாது திருமணமும் இங்கு நடக்கிறது ஏனிந்த அறியாமை,
எல்லைத் தடியதனை இழுத்தாரே யென்பதனல் தொல்லை பலசெய்து தொடுக்கின்ற வழக்கதஞல் எல்லை இல்லாமல் ஏராளம் செலவிடுவோர் முல்லைக்குத் தேரீந்த வள்ளலின் பரம்பரையோ?
கோயிற் கிணற்றினிலே கோலினனே நீரென்றும் வாயில் தாண்டிவந்து வணங்கிவிட்டான் இறையென்றும் நோயிற் சாதியெனும் தொற்றதனைப் பற்றிடுவோர்
காயில் நோயதனிற் காப்பது யார் குருதியதோ ?

- 63 - வருவேனே.
அப்பம் போன்ற நிலவே அம்மா காட்டிய நிலவே வெப்பம் தாங்க முடியாது வேக மாக வருவாயே.
சூரியன் உன்னைக் கண்டதும் சூழும் இருளில் மறைவானே வீரியன் உலகில் நியேயாம் விளையா டிடவே வாராயே.
ஏழை உணவு உண்ணவே எரியும் விளக்காய் இருக்கின்ருய் கோழை களவு எடுப்பதைக் காட்டிக் கொடுக்க வாராயே.
முகிலை இழுத்து மூடினல் முடியா தென்பது அர்த்தமா அகிலம் விட்டு நானும்மே அடைய உன்னை வருவேனே,

Page 35
- 64 - ரோசாவும் நேருவும்.
வட்ட ரோசாப் பூவேநீ வாடி வதங்கி இருப்பது மேன் இட்ட முள்ள நேருவையே இழந்த துடிப்பின் சோகமதோ.
கட்டுக் கடங்கா சோகத்தால் கண்ணிர் வடிக்கும் பாலரையே விட்டு நேரு சென்றதுமேன் விளம்பு மலரே இப்போதே.
நேரு நம்மைக் கண்டதுமே நேரில் வந்து அணைப்பாரே பாரில் நாங்கள் தவித்திடவே பறந்தார் எங்கே சொல்மலரே.
*நேரு தாத்தா போலேநாம் நேர்மை யுடனே வாழ்ந்துவிடின் யாரும் எம்மை வெறுக்காரே யாமும் ஒன்ருய் உயர்ந்திடுவோம்.

- 65 - நல்ல சிறுமிகள்.
கமலா நல்ல சிறுமி கணிதம் நன்ருய்ச் செய்வாள் விமலா அவளின் தோழி வீணில் அவளும் திரியாள்.
படிப்பில் இவர்கள் போலே பாலர் வகுப்பில் இலையே நடிப்பில் இவர்கள் சேர்ந்தால் நாலு வகுப்பே கூடும்.
சொன்ன வேலை உடனே துரித மாகச் செய்தும் சின்னப் பாட்டு பாடியும் சிரிக்க எம்மைச் செய்குவர்.
வகுப்பில் யாரும் அழுதால் வருந்திக் கண்ணிர் விடுவர் பகுப்பு ஏதும் கொள்ளார் பாங்காய்ச் சேர்ந்து படிப்பர்.

Page 36
- 66 - காகித வள்ளம்.
வள்ளம் ஒன்று மிதக்குதுபார் வாய்க்கால் மீது போகுதுபார் துள்ளித் துள்ளிப் போகுதுபார் தூரத் தூரப் போகுதுபார்.
மக்கள் யாரும் அதிலில்லை மாலுமி யாரும் துணையில்லை தக்க பாயின் விரியில்லை தானுய் மிதந்து போகுதுபார்.
அலையின் துணையில் அசையுதுபார் ஆழியை நோக்கி விரையுதுபார் மலைவு சிறிதும் இல்லாமல் மறைந்து மறைந்து போகுதுபார்,
கூம்பு கொஞ்சம் தெரியுதுபார் கொஞ்சம் கொஞ்சம் மறையுதுபார் பாம்பு போலே விரியுதுபார். பள்ளந் தன்னில் மறையுதுபார்.

- 67 - தெய்வமாக வேண்டும்.
பள்ளி செல்ல வேண்டும் - நன்முய் பாடம் படிக்க வேண்டும் துள்ளி ஆட வேண்டும் - உடலைச் சுத்தி செய்ய வேண்டும்.
அறிவு பெருக வேண்டும் - பெரியோர் அன்பு பெறவும் வேண்டும் வறிய நண்பர் வந்தால் - அவரை வாரி அணைக்க வேண்டும்.
மெய்கள் சொல்ல வேண்டும் - பள்ளி மேன்மை காக்க வேண்டும் செய்கை யாவும் நமக்கு - மனதில்
செம்மை யாக வேண்டும்.
தெய்வம் தொழவும் வேண்டும் - கலைகள் தேடிக் கற்க வேண்டும் தெய்வ மாக நாமே - வாழ்வில் சேவை செய்ய வேண்டும்.

Page 37
- 68 -
இலாபமா, நட்டிமா?
இலங்கை நண்பன்
தோழா தோழா இங்கேவா சொல்வாய் இதற்குப் பதிலேநீ தோழா உங்கள் நாட்டினிலே தோடம் பழங்கள் தானுண்டோ?
ருசிய நண்பன்
(Bj. 15.
நிறைய உண்டு அக்கனிகள் நித்தம் உண்போம் யாவருமே குறைகள் நினைக்க வேண்டாம்நீ கொண்டு வரவே மறந்திட்டேன்.
கனிகள் எனக்குத் தரவேண்டாம் கணிதம் ஒன்று நான்தருவேன் பணிகள் நிறைந்த நாட்டினிலே பாங்காய் வாழும் தோழரே.
என்ன கணக்குச் சொல்லிடுவீர் எதற்கும் விடையே தந்திடுவேன் பின்னக் கணக்கோ பிரித்தலதோ பிழைகள் இன்றி விடைதருவேன்.

பத்துத் தோடம் பழங்களையே பார்த்து இரண்டு ரூபாய்க்கே முத்து என்பான் வாங்கிரூபாய் மூன்ருய் விற்ருல் லாபமென்ன ?
என்ன சொன்னுய் என்தோழா எவரோ முத்து அவருக்கே சொன்ன ஐந்து வருடமதே *சொகுசாய்’ சிறையே தான்கிட்டும்.

Page 38
- 70 - நொண்டித் தாத்தா.
நொண்டித் திரியும் தாத்தா நோயும் உள்ள தாத்தா வண்டிச் சத்தம் கேட்குது வாராய் இந்தப் பக்கம்.
பையில் என்ன தாத்தா பார்க்கக் காட்டு வாயே கையில் உள்ள பேணி கனப்ப தேனே தாத்தா.
தங்கத் தாத்தா போலே தாடி நீண்ட தாத்தா கந்தைச் சேலை உமக்கு கட்டத் தந்தார் யாரோ.
* அப்பா அம்மா உமக்கு ஆரும் சொந்தம் இலையோ தப்பாய் ஏதும் சொல்வாய் சரியாய் எனக்குச் சொல்வாய்.
பாப்பா நானும் உமக்கு பகர்வேன் ஒன்று தாத்தா வாப்பா எங்கள் வீட்டில் வசதி யெல்லாம் தருவேன்.


Page 39
$?(Cلامہ> OS


Page 40
தோழர் சு. துரைசிங் ரோடை - சுன்னகத்தைப் பி. இன்று கம்பளையில் கல்வி கற் இலக்கியத்தில் நம்பிக்கைகொ பார்வையுடன் எழுதவேண் கொண்ட முற்போக்கு எழுத்
பெரு நோக்குடன் பொ டுழைத்து வரும் இவர் யாழ் உருவாக்கி உழைத்தவர்களுள் ஆண்டின் ஈழத்து இலக்கிய சங்கத் கிற்கு எத்தகைய பங் பங்கு இவருக்கும் உண்டு.
கவிதை இவருக்குக் ை தையே வீரகேசரியில் பிரசுர ஈழத்தில் அநேக நாளிதழ்கள் கள் மூன்று கவிதைத் தொகு: இலங்கை வானெலி கல்விப் இடம் பெற்றது குறிப்பிடத்த வகக் கதைகளும் பலராலும்
இக் கவிஞரது கவித்துவ கம் கொடுத்து வாழ்க்கைத்
ଗର୍ଭୂତ) ଅ[i][1/60.
feinted at the Thiruva
s
 
 

இவரைப்பற்றி
கம் துரையர்? அவர்கள் கந்த்
றப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் பிக்கும் இவர் என்றுமே இயக்க "ண்டவர். மனிதனுக்காகச் சமூகப் டும் எ ன் ற தெளிந்த ஞானம்
தாளர்.
ாதுத்துறையில் ஈடுபாடு கொண் = இளம் எழுத்தாளர் சங்கத்தை குறிப்பிடத்தக்கவர் 1960-ஆம் வளர்ச்சியில் இளம் எழுத்தாளர் குண்டோ அந்தப்பங்கில் பெரும்
ஈவந்த கலை, எழுதிய முதல் கவி "மாயிற்று அதனைத் தொடர்ந்து ரில் எழுதிவரும் இவரது படைப்பு தி நூல்களில் இடம் பெற்றுள்ளன. பகுதியிலும் இவரது கவிதைகள் க்கது. இவரது கவிதைகளும் உரு
பாராட்டப் பட்டுள்ளன. 。萼
. SS S SS SS SS SS SS SS இல்க்கிய வெளிப்பாட்டிற்கு ஊக் துணைவியாகப் பாமா உதவுகிருர், டாக்டர்; க. மகாலிங்கம்
s
luvar Press, Nallur Jaffna.