கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்பன் மகன்

Page 1


Page 2


Page 3

கம்பன்மகன்
(நாட்டுக்கூத்து)
விழுத்துருவாக்கம் யோ.யோணர்சன் ராஜ்குமார்
எழுத்துக்கம் அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா
வெளியீடு
திருமறைக் கலாமன்றம் 238,பிரதான வீதியாழ்ப்பாணம்

Page 4
நூல் விடயம் ஆசிரியர்
முதற்பதிப்பு பதிப்புரிமை வெளியீடு
அச்சாக்கம்
கணணிஅச்சுக்கோப்பு அட்டைப்படம் விலை
Name of Book Author "First Edition CopyRight Published by
Print by Type setting Cover Design Price
கம்பன் மகன் நாட்டுக்கூத்து யோ.ஜோண்சன் ராஜ்குமார் 425,நர்வலர் வீதி, யாழ்ப்பாணம். பெப்ரவரி 2003 யோ.ஜோண்சன் ராஜ்குமார் திருமறைக்கலாமன்றம் புனித வளன் கத்தோலிக்க அச்சகம் யாழ்ப்பாணம்.
புஸ்ரெலா
அ.ஜ"ட்ஸன்
100/=
Kampan Magan J.Johnson Rajkumar February 2003 J.Johnson Rajkumar Thirumarai Kalamanram Centre for Performing Arts St.Joseph's Catholic press P.Stela
A.Judeson
IOD/=
ISBN - 955 - 922 - 23 - 8

சமர்ப்பணம்
திருமறை மன்றின்
ஆஸ்தான கவிஞன் அமரர் யாழ் ஜெயம் (விக்ரர்)
அவர்களின் பாதகமலத்திற்கு
இந் நூல்
சமர்ப்பணம்

Page 5
முன்னுரை
இருவாரங்களுக்கு முன் கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் இந்திய நடன நிகழ்ச்சியொன்று மேடையேற்றப்பட்டது. ஆடியவர் 'ஆதித்தி மங்கல் தாஸ்' கதக் நடன வடிவங்கள் பருவ மழையைப் பொழிய வைத்தன; கோடையின் வெப்பத்தை வீசச் செய்தன; இலையுதிர் காலச் சூழலையும், ஒப்பாரியின் அவலத்தையும் காட்சிக்கேள்விப்பொருட்களாக்கி பார்வையாளர்களைச் சில கணங்களுக்கு மெய்மறக்க வைத்தன. இசைஒலிஒளிஆடை போன்ற தனிமங்களின் சிறப்பு ஒருபுறமிருக்க, நடனமாடியவரின் கற்பனையும், அக்கற்பனையை நடனமாட விட்ட அசையும் அழகுப் பிமீ பங்களும் நிகழிச் சிக்கு உயிர்த்துடிப்பைக்கொடுத்தன. ஆடியதோ கதக்,அளிக்கையோ புத்தாக்கம். ஆதித்தி, கதக் நடனத்தின் இலக்கணத்தை நன்கு கற்றுத்தேர்ந்தவர். என்பதை அவரது ஆடல் மட்டுமன்று, இந்தியாவில் கதக் கலையில் தலைசிறந்து விளங்கும் திருமதி குமுதினி லக்கியாதிருயிர்ஜீ மகாராஜ் போன்றவர்களே அவரது குருக்களென்ற அறிவித்தலும் தெரிய வைத்தது. கதக் என்னும் நடன இலக்கணக் கோடுகளுக்குள் நின்றே சமகால இலக்கியம் ஒன்றைச் சமைத்தது தான் அன்று 'ஆதித்தி நிகழ்த்திய ஆற்றுகையின் சிறப்பாக எனக்குப்பட்டது. அதனாலே தானோ என்னவோ, அந்நிகழ்ச்சி பல இளம் உள்ளங்களையும் கவர்ந்திருந்தது.
அந் நிகழ்ச்சியைப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளை நமது மண்ணின் கலையாகிய கூத்து இளம் உள்ளங்களையும் கவரும் வண்ணம் இலக்கணம் தவறாமலும் சுவைகுண்றாமலும் அளிக்கப்பட்டால் . என்ற ஆதங்கம், என் உள்ளத்தில் உதித்தது. திருமறைக்கலாமன்றத்து நாட்டுக்கூத்துப்பிரிவு கம்பன் மகன் என்னும் கூத்தினை மேடையேற்றும் இவ்வேளை, இம்மன்றத்தின் கலைஞர்கள் கூத்தைச் சுவைபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் என்பதாலும், இக்கலைவடிவத்தை தாயகத்திலிருந்து கடல் கடந்து பல நாடுகளுக்கும் எடுத்துச் சென்றவர்கள் என்ற முறையிலும், நடப்பு ஆண்டில் நாட்டுக்கூத்துக்கு சிறப்பிடம்
CIVD

கொடுத்துச் செயற்பட திட்டமிட்டுள்ளார்கள் என்ற வகையிலும், கூத்தைப்பற்றிய ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
ஈழத்தமிழர்களுடைய அண்மைய வரலாற்று ஓட்டத்தில், அடக்குமுறை அரசியலின் விளைவாக ஆழமான தேசிய உணர்வொன்று பிறந்ததும்,மொழி,கலை, பணிபாட்டுத்தளங்களில் தமக்கே உரித்தான வேர்களையும், அடையாளங்களையும் அவர்கள் தேடத்தொடங்கினார்கள் அரங்கக்கலைகளைப் பொறுத்த மட்டில் இறக்குமதியான கலைவடிவங்கள் பல இருப்பினும், தமது LA6ງ 6ງ. முகிழ்ந்தவைகளையும் தமது மணிணிண் மைந்தர்களால் வளர்த்தெடுக்கப் பட்டவைகளுமான அரங்கக் கலைவடிவங்களை இனங்கண்டார்கள். அவைகளின் ஒட்டுமொத்த உருவம் நாட்டுக்கூத்து' என்பதை பொதுவாக ஏற்றுக்கொண்டார்கள், கூத்தின் மூல ஊற்று தென்னகத்திலிருந்து வந்திருக்கலாம். (வந்துள்ளது) என்பதையும் விட, அது நம் சொந்த மண்ணின் காற்றிலும் மணத்திலும் இழையோடி, மக்களின் வாழ்வில் கலந்து நம்மவர்களால் பேண்ப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதா என்பதேஅளவுகோலாகியது.
நவீன வரலாற்றில் ஒரு கட்டத்தில் நாட்டுக்கூத்துக் கற்றவர்களாலும் மேல்மட்டத்தவராலும் போற்றப்படாது கைவிடப்பட்டிருந்தது என்பது கசப்பான உணி மைதான். ஆயினும் அணிமைக்காலத்துத் தேசியத் தேடலில், அரங்கக்கலைகளுள் அது ஈழத்தமிழரின் தனித்துவத்தின் அடையாளமாக இருப்பதற்கு இயைந்து தேசிய கலைத்தேவையை நிறைவு செய்துள்ளது என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். -
நாடகத்துறையில் பேராசிரியர் சரச்சந்திராவின் தேடல் முயற்சி, சிங்களக்கலை வரலாற்றிற்கு ஈட்டிக்கொடுத்த வெற்றியே, பேராசிரியர் வித்தியானந்தனை அதற்கு ஒப்பான முயற்சியில் ஈடுபடவைத்தது. இவ்விருவருடைய சாதனைகளின் பெறுபேறுகளும் வெவ்வேறாக எடைபோடப்பட வேண்டியவையாக இருக்கிறது. அடுத்து, கற்றவர்களின் கருத்தை ஈர்க்கும் எதற்கும், எவருக்கும் விமர்சனக்
இலக்கண வரையறை செய்து, அதைப்பிரித்தும் தொகுத்தும், ஒப்பிட்டும், குணத்தையும் குற்றத்தையும் காட்டியும் வினைப்படுத்துவது ஆய்வாளர்களின் போக்கு, பல முறைகளில் ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு பொருள் பற்றிய முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதும் நடைமுறையில் காணக்கூடியதொன்று.
CVD

Page 6
நமது கூத்துக்களைப் பொறுத்த மட்டில், வெவ்வேறு நிலப்பரப்புகளில் அந்தந்த மண்ணின் மணமும், குணமும் சுவறிவளர்ந்த இக்கலைவடிவங்கள் கூறுபோடப்பட்டு, அலசி ஆராயப்பட்டு, பாங்கென்றும், மோடியென்றும் பல்வகையாகப் பிரிக்கப்பட்டும் உள்ள நிலையில், கருத்துக்குழப்பங்கள் பெரிதளவில் எழுந்துள்ளன. ஆய்வுகளும் அலசல்களும் தெளிவை ஏற்படுத்த வேண்டியவை. மாறாக அவை ஆய்வாளர்கள் தோன்றாக் காலத்திலேயே தெளிவுடன் தமது கலையை ஆற்றுகை செய்து வந்த பரம்பரைக்கூத்துக்கலைஞர் மத்தியிலும், மாணவர் மத்தியிலும் புரியாமையைப் புகுத்தியுள்ளன. நாட்டுக்கூத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வரலாற்றையும் செயல்முறைகளையும் முறையாகப்படித்து வரும் மாணவன் ஒருவன் எழுப்பிய அங்கலாய்ப்பான கேள்வி. எம்மத்தியில் எது, வடமோடி எது தென்மோடி என்ற திட்டவட்டமான தெளிவை ஏற்படுத்த, 'சங்கப்பலகை ஒன்றினை அமைத்தால் என்ன? ஆய்வாளர்களின் முடிபுகளை அடியொற்றி நிற்கும் ஒரு சில இலக்கண அளவைகளுக்குள் அனைத்துக் கூத்து வடிவங்களும் அடக்கப்படாமல் இருக்கும் நிலமை, இவ்விலக்கண அளவைகளை மீள்பார்வைக் குட்படுத்தும் தேவையை உணர்த்தி நிற்கின்றது.
சமகால கூத்து இலக்கியங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பினும்,ஆய்வின் தொடக்கநிலையில் தான் உள்ளனபோல் தோன்றுகின்றன. அனைத்து நிலப்பரப்புகளிலும, வேறுபாடுகளுடனும் தனித்துவங்களுடனும் அளிக்கப்பட்டு வந்த கூத்தின்(கூத்துக்களின்) முழுமையான வரலாற்றையும், தன்மைகளையும் கசடறக்கற்றறிந்தவர் எவருமில்லை. அதனால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கூத்தின் முழுமை வெளிக்கொணரப்படவேண்டிய நிலையில்தான் நாம் நாளையும் இருப்போம் (பொதுவாகக் கூறின்) நாட்டுக்கூத்துக்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது,ஒருசில பொதுமைகள் காணப்படுவது தெளிவு. ஈழத்தின் வடபுலம்,கிழக்குப்புலம் இரண்டிலுமே "அடித்தள நிலையில் தமிழர்களிடையே பொதுவான ஒரு கூத்து மரபு நிலவியது" என்ற கூற்றும் நீண்டகாலத்தொடர்பின்மை பிரதேசச்சூழல் காரணமாக ஏற்பட்ட தனித்துவங்கள் காரணமாக "கூத்துக்களுள் மேலோட்டமான வேறுபாடுகள் காணப்படுகின்றன." என்ற கூற்றும் சிந்திக்கத்தக்கவை. கலைக்கண்ணுடன் பார்க்கும் போது கூத்துக்கள் அனைத்திலும் அழகான பாடல்கள் (அகவல்கலித்துறை,கலிவெண்பா போன்றவை) சுவையான ஆடல்கள் (எட்டு,நாலடிதுள்ளல்,வீசாணம் முதலியன), கற்பனைக்குறியீடுகள், கதாபாத்திரத்துக்கும் கூத்தின் தன்மைக்கும் ஏற்ற ஆடை அணிகலன்கள்,ஒபபனை போன்றவை சங்கமிக்கும் அரங்கு ஒன்றினை பல்வேறு வடிவங்கள் ஊடாகபபெற்றுள்ளோம். அவைகளை அந்த நிலப்பரப்பின் கலை
(VD

வெளிப்பாடாகப் பேணி வேறுபாடுகளுடனும்பொதுமையுடனும் வளர்க்க வேண்டியது எமது கடமை. கூத்துக்கலை; ஒரு சடங்காகப் பேணப்பட்ட நிலை அல்லது 'ச்டங்குடன் இணைந்த நிலை" இன்று பல இடங்களிலும் அருகி வருகிறது. இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின், அதாவது சடங்குடன் இணைந்து ஆற்றுகைப்படுத்தக்கூடிய பக்குவம் பரம்பரை பரம்பரையாக கூத்து நிகழ்த்தப்பட்ட இடங்களில் ஏற்படுத்தப்படுமாயின் கூத்தின் 'புனிதம்' பேணிக்காக்கப்பட ஏதுவாக இருக்கும். ஓர் ஊரின் வாழ்வியலுடன் இக் கலையும் கலந்துநின்று மறைந்தொழியாதிருக்க பாதுகாப்பாகவும் அமையும்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கொழும்புக்கு அண்மையிலுள்ள 'கடவத்த' என்னும் ஊரில் சிங்கள நடன ஆசான் சித்திரசேனா இத்தகைய முயற்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தார். நடனக்கலையுடன் தொடர்புள்ள அச்சடங்குகள் இரண்டு நாட்கள் இரவும் பகலும் நடைபெற்றன. அதைப்பார்ப்பதற்கும் ஏராளமானவர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆயின் இத்தகைய சடங்கை அல்லது சடங்கு ஆட்டத்தை மேடையேற்றும் போது எதிர் பாராச்சங்கடங்கள் ஏற்படுகின்ற்ன. அறுபதுவயதான நடிகன் பதினாறு வயது நிரம்பாத கண்ணகி பாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது, பார்வையாளர் மத்தியில் சிரிப்பும் கேலியும் எழுவது இயல்பு, சடங்கிற்கு உரிய தளம் சடங்குக்கள்மே. ஆயின் அச்சடங்குடன் இணைந்த அளிக்கையை ஆடுகள இணக்கத்துடன் சிறந்த அரங்க நிகழ்ச்சியாக அமைகக் முடியும் அண்மக்கவும் வேண்டும்.
மேலும், நாட்டுக் கூத்துக்களைச் செம்மைப்படுத்திச் சுவை படுத்தி இளையவர்களையும் அதில் ஈடுபடச் செய்யும் போதே, கூத்துக்கலைக்கு எதிர் காலம் உண்டு என்பது உறுதியாகும். பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் கூத்துக்கலை புதுமைகளை உள்வாங்கி, மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் தனதாக்கி இன்று நமது கலையெனப் பெருமைப் படக்கூடிய அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது ஆயின் காலங்கள் வேகமாக மாறுகின்றன. சமகாலம் அசுரவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.நமது அடுத்த சந்ததி இக்கலைக்கு, நாம் இக்காலகட்டத்தில் புத்துயிர் அளித்தோமா புது மெருகூட்டினோமா எனக்கேட்கும் அதற்கு நாம் என்ன பதிலைச்சொல் வடிவில் கொடுக்கப்போகின்றோம்?மெரு கூட்டல் என்பதுஅடிப்படைகளை,தாளங்களை, இராகங்களை, ஆட்டங்களை, மாற்றியமைத்தல் என்று பொருள்படாது. அது இத்தனிமங்களுள் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. அத்தோடு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இயைய ஒலி,ஒளி,ஒப்பனை,
GVID

Page 7
மே ைகாட்சியமைப்பு என்பவை கவர்ச்சியாக கையாளப்பட வேண்டும். அப்போது கூத்து இன்றைய இளம் உள்ளங்களையும் கவரும் அரும் விருந்தாக அமையும், தவிர கரும்பொருளிலும் சமகாலப் பிரச்சினைகளும் அணுகப்பட வேண்டும் "கந்தன் கருணை" இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மேலும், கூத்து எந்த ஒரு சமூகத்துடன் மட்டும் ஒட்டிப்பின்னி நிற்பதை விடுத்து, ஆர்வமுள்ள எவரும் கூத்துக்கலையைக் கற்கவும், வளர்க்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும். பறை மேளக் கலை இன்று தமிழர் மத்தியில் இல்லாது போய் விட்டது போல் தெரிகிறது. சிங்களவர்கள் மத்தியிலோ அக்கலை மெருகூட்டப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
கூத்தின் ஆணிவேராக இருப்பவர் அண்ணாவி, அவரை யாரும் எந்த நிறுவனமும் "பிறப்பிக்க" முடியாது. அவரது பிறப்பியல்பில் குரல்வளம், நடிப்பு,சிறப்பு, ஆடற்கலை,அளிக்கை ஆற்றல் செறிந்திருக்குமீ. அவரை இனங்கணிடு மற்றவர்கள் பாராட்டி, வளர்த்தெடுத்துப் பயன்படுத்த முடியும். அண்ணாவி சடுதியாக தோன்றுபவர் அல்ல; கூத்துக்கலையை குற்றமறத் தெரிந்த ஓர் Seoel Grorressor மாணவனாக அவர் இருந்திருப்பதும் இன்றியமையாதது. அதனாலே தான்கள ஆய்வாளர்களும் அளிக்கை தயாரிப்பாளர்களும் அண்ணாவியின் உதவியை நாடுகின்றனர். (சில வேளைகளில், உதவி பெற்றவர்கள் பெயர் எடுப்பதும் அவர்களுக்கு உந்து சக்தியாக நின்ற அண்ணாவி மறக்கப்படுவதும் கலையுலகில் நிகழ்ந்து வரும் கவலையான நிலை) ஆக, கூத்துக்கலை நம்மத்தியில் வாழவேணடுமானால், அண்ணாவிமார் போற்றப்பட வேண்டும். பெயர் புகழில் அவர்களுக்குரியது. அளிக்கப்பட வேண்டும்.கலை உலகைப் பொறுத்தமட்டில் காழ்ப்புணர்ச்சி, இருட்டடிப்பு காட்டிக்கொடுத்தல் என்பன தலைதூக்கி நிற்பது வேதனைக்குரியது.
கூத்துக்கலைத் துறையிலும் உண்மைகளை மூடிமறைப்பதும் திறந்த மனத்துடன் ஆய்வுகளை மேற்கொள்ளாமையும் குறிப்பிட்ட வாய்ப்பாடுபோல் எழுதப்பட்ட தரவுகளுக்குள்ளேயே மட்டுப்பட்டு நின்று செயற்படுவதும் அண்மைக்காலங்களில் அரங்கியலாளர்களிடையே காணப்படும் மிக முக்கியமான குறைபாடாகவுள்ளது. இது ஆரோக்கியமானதல்ல கூத்துக்கலையை ஆத்மீகமானதாக நினைத்து தூய்மையாகச் செயற்படும் பலரை இச்செயற்பாடுகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக உயர்கல்வி மட்டத்தினர் இது பற்றி அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.

நிறைவாக,
அண்ணாவி பேக்மன் ஜெயராசாவின் முயற்சியால் திருயோஜோணிசன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துருவில் வடிவெடுத்த "கம்பன் மகன்", கூத்துக்கலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை கூறிநிற்கின்றது. பேக்மன், அண்ணாவி, பூந்தான் ஜோசேப்பு அவர்களிடம் முறையாக இக்கலையைப்பயின்றவர், குரல்வளத்தில் இன்றும், ஈடும் இணையுமின்றி விளங்குபவர், ராஜ்குமார், பத்தாண்டுகளுக்கும் மேலாக இக்கலையில் ஈடுபட்டவர் தம்போன்ற இளைஞர்களையும் சேர்த்து, செம்மைப்படுத்தப்பட்ட ஆட்டங்களால் கூத்துக்கு மெருகூட்டி, வெளிநாடுகளிலும் கூத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டியவர், இவர்களுடள்"கம்பன் மகன்"கூட்டுமுயற்சியில் இணைந்து நிற்கும் பல இளைஞர்கள் நெஞ்சில் கூத்துக்கலைமேற் கொண். பற்று தீப்பிளம்பாக எரிகின்றது. திருமறைக்கலாமன்றத்தினால் மேடையேற்றப்படும் "கம்பண்மகன்" கூத்தின் ஆற்றுகைக்கு அப்பால் "நாமும் நமக்கோர்நலியாக் கலையுடையோம்" என்ற இன்றைய பூகோளமயமாகி வரும் உலகிலும் நிமிர்ந்து நின்று உரக்கக்கூறும் ஆற்றல் படைத்தவர்களாய் இக்கூத்தர் குழாம் இருக்குமென்பது உறுதி.
"கம்பன் மகன்" என்னும் அரங்க நிகழ்ச்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
நீமரிய சேவியர் அடிகள்,
இயக்குனர் " திருமறைக் கலாமன்றம்,

Page 8
அணிந்துரை
திருமறைக்கலாமன்ற வெளியீடாக கம்பன் மகன் என்னும் நாட்டுக்கூத்துநூல் வெளிவருகின்றது. அம்பிகாபதி அமராவதி காதல்க் கதைபற்றி பலர் அறிந்திருப்பர். அக்கதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே இந்நாட்டுக்கூத்து. அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராஜா மிகச்சிறந்த நாட்டுக்கூத்துக்கலைஞர். அவருடைய கம்பீரமான மதுரமான குரல் கேட்டுப் பலதடவை நான் பரவசம் அடைந்துள்ளேன். அண்ணாவியாருடைய எழுத்தூக்கத்துடன் திரு.யோயோண்சன் ராஜ்குமாரின் எழுத்துருவாக்கமாக கம்பன் மகன் நாட்டுக்கூத்து உருவாகியுள்ளது.
மேடையிலே நடிப்பதற்கு ஏற்றவகையிலே உரிய குறிப்புக்களுடன் நூல் அமைக்கப்பட்டுள்ளது. காதலென்றால் உணர்வின் வயப்பட்டது. அறிவினாலே அதனை ஓரளவாவது கட்டுப்படுத்தாவிட்டால் எத்தகைய பெரும் துன்பம்விளையும் என்பதை கவிதைப்போட்டியிலே அவசரப்பட்ட, அமராவதி - அம்பிகாபதியின் செயற்பாடு பலருக்கும் ஒருபாடமாக அமைகின்றது.
நாட்டுக்கூத்து மெட்டுக்களுக்கு ஏற்றபடி பாடல்கள் புனையப்பட்டுள்ளன. தமிழின் இனிமையிலே ஈடுபட்டு யோணி சன் ராஜ்குமார் அருமையான தமிழிசைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
தித்திக்கும் செந்தமிழ் பாவிலே வல்ல என்
சோதி அழகான நாதனே - உந்தனை கண்டதும் நெஞ்சிலே பொங்கிடும்
ஆனந்தமே அதுவே என் நாதா என்று அமராவதி பாடும் பாடலை எடுத்துக்காட்டாக நோக்கலாம். நாடக உருவாக்கம் செய்பவன் எழுத்தாளனாகவும்,கலைஞனாகவும்,கவிஞனாகவும் நாட்கக்காரனாகவும் திகழ்கின்றான்.யோணிசன்ராஜ்குமாரும் இத்தகைய திறனுடையவராக உள்ளார். பேக்மன் ஜெயராஜாவுடன் இவர் இணைந்து மேற்கொள்ளும் கம்பன் மகன் நூலுக்கு இச்சிறு அணிந்துரையை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் அ.சண்முகதாஸ், தலைவர்
தமிழ்த்துறை யாழ்பல்கலைக்கழகம்

அண்ணாவியார் உரை
ஈழத்தமிழர்களின் பாரம்பரிய நாடக வடிவமாக திகழ்வது நாட்டுக்கூத்து ஆகும். இது எமது மூதாதையர்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு முது பெருஞ் சொத்து ஆகும். அன்றைய காலத்தில் கிராமமக்களே ஒன்று திரண்டு வட்டக் கொட்டகைகளில் தீப்பந்தகங்களின் வெளிச்சத்துடன் ஆடியும், பாடியும் மகிழ்வுடன் விளையாடிய இந்தக்கூத்துப் பாரம்பரியம் எமது மூதாதையர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்து வந்துள்ளதை யாவரும் அறிவர். ஆனால் இன்றோ வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணனி, என்று நவீன வசதிகள் குவிந்து கிடக்கின்றன. எமது இளைஞர்கள் யுவதிகள் இந்த நவீன சாதனங்களைப்பற்றிக் கொள்ளுகிறார்களேயொழிய எமதுபாரம்பரியத்தை கைவிட்டு விடுகிறார்கள். இது மிகுந்த வேதனைக்குரிய தொன்றாகும். இன்று இளைஞர்களைக் கொண்டு கூத்துப் பழக்குவிப்பது என்பது மிகுந்த சிரமத்திற் குரிய தொன்றாகவுள்ளது. எனினும் என்னால் இயன்ற அளவு விடாமுயற்சியுடன் இப்பணியை செயற்படுத்தி வருகின்றேன். திருமறைக் கலாமன்றம் இதற்கு சிறந்த களமமைத்துக் கொடுக்கின்றது.
60,70 களில் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருந்த காலங்களில் எனது பிரதமகுருவும், நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தியுமான அமரர் பூந்தான் யோசேப்பு அவர்கள், சினிமாவுடன் போட்டியிட்டு நாட்டுக்கூத்து நிலைக்குமளவுக்கு அரும்பாடுபட்டு உழைத்தார் அவரையும் அவர் ஆற்றிய பணிகளையும் என்நினைவிற் கொண்டு செயலாற்றி வருகின்றேன். அவரது மறைவிற்குப்பின் கூத்தரங்கு சற்றுப்பின்னடைந்தது. என்பது யாவருக்கும் தெரியும். அந்த இடைவெளியைத் தடுத்து நிறுத்தியவர் திருமறைக்கலா மன்ற இயக்குனர் வணக்கத்துக்குரிய நீ, மரியசேவியர் அடிகளே. அவர் என்னை நண்பர் பாலதாசுக்கூடாக அழைத்து "நாட்டுக்கூத்தை பூந்த்ானோடு கைவிட்டுவிட வேண்டாம், அதை வளர்ப்பதற்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன் இப்போதே ஒரு கூத்தைப்பாடி நடியுங்கள்" என்று கூறிஉற்சாகப்படுத்தினார். நண்புர்பாலதாஸ் மூலமாக பாடுவிக்கப்பட்ட "நீஒரு பாறை"நாட்டுக்கூத்தில் பிரதான பாத்திரமேற்று நான் நடித்தேன். அதன் பின் மீண்டும் கூத்து எழுச்சி யடையத் தொடங்கியது எனலாம். அதற்குப்பிற்பாடு திருமறைக் கலாமன்றத்துக் கூடாக நாட்டுக் கூத்தை வளர்ப்பதற்கு நாம் பல முயற்சிகளை ஆற்றி வருகின்றோம்.
கூத்து விழாக்கள், போட்டிகள், இளைஞர்களுக்கான கூத்துப்பயிற்சிகள் என்று பலவற்றையும் செயற்படுத்தி வருவதோடு ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு சென்று மேடையேற்றி வந்துள்ளோம். அதே வேளை இளைஞர்களை இதில் சிறப்பாக ஈடுபட வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவர்களைக் கொண்டே கூத்தையும் எழுதுவிக்க வேண்டுமென
CXD

Page 9
நினைத்தேன். எனது எண்ணத்தைச் செயற்படுத்த எண்ணி எனது மாணவர்களான (தற்போது பிரதி இயக்குநர்களாக இருக்கின்றனர்)சாம் பிரதீபனையும், ஜோண்சன் ராஜ்குமாரையும் அணுகினேன். அவர்கள் இருவருமே தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
அதன்படி முதலில் "சோழன் மகன்" நாட்டுக்கூத்தை திரு. சாம் பிரதீபனைக் கொண்டு இராகங்களைக் கொடுத்துப் பாடுவித்தேன். மிக அருமையான சந்தங்களுடன் அதனை எழுதித் தந்தார் அக்கூத்து மிகுந்த வரவேற்பை பெற்றது. இங்கு மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் அதனை மேடையேற்றி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றோம். அதன் பின்னர் யோன்சன் ராஜ்குமாரை அணுகி கூத்தில் பலரும் பாவிக்காது விட்ட பலஇராகங்களைப் புகுத்தி ஒரு புதிய கூத்தினை எழுத வேண்டுமென்ற அவாவில் என் நோக்கத்திற்கு துணைபுரியக்கூடிய கதையாகிய "அம்பிகாபதி - அமராவதி" கதையைக்கூறி கூத்தாய்ப்பாடும்படிபணித்தேன். அவர் மிகுந்த மகிழ்வுடன் அதனை ஏற்றார்.
நான் இராகங்களை வழங்க அவர் பாடல்களை இயற்றினார். அவரது பாடல் கள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன. "கருவிலே திருவமைந்த புலமையாளன்" என்பதைக் காட்டி விட்டார்.
இவர் சிறந்த கற்பனை வளமும், வாக்கு வல்லமையும் உடையவர். சிறந்த நியாயவாதியாக திருமறைக் கலாமன்றத்தில் செயற்படும் இவரின் பணிகள் சிறக்கவுமி, மேலும் மேலும் பல கூத்துகளைப் பாடி மரபுவழிக் கலைகளை பாதுகாக்கு மொருவராக இவர் மாறவேண்டு மென்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன். இந்தக் கூத்தை நூலாக்க வேண்டு மென்ற அவாவில் இப்போது அச்சுவாகன மேற்றுகின்றோம். இந்நூல் வெளியீட்டுக்கு நிதியுதவி வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும். எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றேன். இந்நூல் பலருக்கும் பயன்படும் ஒன்றாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
அபேக்மன் ஜெயராஜா, நாட்டுக்கூத்துப் பொறுப்பாளர், திருமறைக்கலாமன்றம்
O,O2SOO3,

வெளியீட்துரை
காலத்தின் தேவையறிந்து செயலாற்றிவரும் எமது திருமறைக் கலாமன்றம் தனது பணியில் ஒரு நீண்ட தொடர்ச்சியைக் கொண் டுள்ளது. கலையின் பல கோணங்களிலும் தன் பயணத்தைத் தொடர்ந்து இன மத மொழிகளுக்கப்பால் 'மனிதத்துவ வித்துக்களை அது சமூகம் நோக்கித் துாவ விளைகிறது. ஒவ்வொரு இனமும் தனது பாரம்பரியம் கலாசாரம் பண்பாட்டு விழுமியம் பற்றித் தமக்குள்ளேயே மட்டும் ஆய்வுகள் செய்து விதந்துரை புனைந்து பொன்னாடை மலர்மாலை என கெளரவங்கள் செய்தலுக்கப்பால், ஏனைய இனத்தாருடன் இணைந்து கலைப்பரிவர்த்தனைக்கூடாக ஒரு கலாச்சாரப் புரிந்துணர்வையும் , பாரம்பரியத் தெளிவையும் ஏற்படுத்தி சமத்துவமும் சமாதானமும் கொண்ட எதிர்காலம் ஒன்றைக் கட்டி எழுப்ப முனைப்புடன் செயலாற்றியும் வருகின்றது.
'கலை கலைக்கானது 'கலை பொழுது போக்கிற்கானது 'கலை சமூக மாற்றத்திற்கானது' என சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் காலத்திற்குக் காலம் கலைக்கு வரைவிலக்கணம் கூறமுயலும் தற்கால வழக்கில் "கலை" என்ற ஒரே ஒரு சந்தர்ப்பத்தை காலத்திற்குக்ந்த வகையில் எடுத்தாள முயலும் உத்திகளில் ஒன்றுதான் எமது மன்றத்தின் இலக்கியப் பணியுமாகும்.இந்த இலக்கியப் பணியின் ஒரு அம்சமாகவே திரு.ஜோண்சன் ராஜ்குமாரின் "கம்பன் மகன்’ நாட்டுக் கூத்து நுால் வெளியீடு செய்யப்படுகின்றது. காலத்தின் பல் பரிமாணப் பயணத்தில் எமது பாரம்பரியம் செத்துவிடக் கூடாது என்ற உயிர்த்துடிப்புடைய
כGI

Page 10
சிந்தனையே, மன்றத்தின் நாட்டுக்கூத்து' 'இசைநாடகம' 'கிராமியக் கலை’ போன்ற பிரிவுகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளும் அரங்காற்றுகைகளும் ஆவணப்படுத்தல்களும் நூல் வெளியீடுகளும் ஆகும்.
இந்த வகையில் செம்மைப்படுத்தப்பட்ட இராகங்களுடனும் நன்கமைக்கப் பட்ட தாளக்கட்டுடனும் அண்ணாவியார் திரு.பேக்மன் ஜெயராசா அவர்களின் வழிகாட்டலில் சந்தம் தெளிவுற்று கருத்தாளம் வலுப்பட்டு திரு.ஜோண்சன் ராஜ்குமாரின் படைப்பாக்கமாய் “கம்பன் மகன்” வெளிவருகின்றது.இதனை வெளியிட்டு வைப்பதில் திருமறைக் கலாமன்றம் பெரு மகிழ்வடைகின்றது.திரு.ஜோண்சன் ராஜ்குமார் அவர்கள் எமது மன்றத்தின் பிரதி இயக்குனர்களில் ஒருவரும்; யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடம் மகாவித்தியாலய ஆசிரியரும் ஆவார்.இவர் ஈழத்தின் நாடக உலகிற்கு ஆற்றிய பணி அளப்பரியது.சிறந்த நாடக ஆசிரியராகவும் நெறியாளராகவும் நடிகராகவும் கவிஞராகவும் நிர்வாகியாகவும் திகழும் இவரது இந்த நுால் காலத்தால் முக்கியம் பெற்று நிலைக்குமென்று நம்புகின்றோம்.
ம.சாம் பிரதீபன், பிரதி இயக்குனர், திருமறைக்கலாமன்றம்.

என்னுரை
"கம்பன் மகன்' என்ற இந்நாட்டுக்கூத்து நூல் எனது முதலாவது பிரசுரநூல் இவ்வெளியீட்டில் மகிழ்வெய்தும் நான் இவ் வெளியீடு தொடர்பான விடயங்களையும் இதுவரைகால எனது கலைப்பயணத்தின் "அடைவு' தொடர்பான ஒரு மீள் பார்வையை நன்றியுடன் நோக்கவும் முனைகின்றேன். "நாட்டுக்கூத்து' எமது மரபு வழிக்கலைவடிவம்; அது எமது பண்பாட்டின் வேர்களுக்குள் உறைந்து மண்ணின் கலாசார கூறுகளில் ஒன்றாக எஞ்சி நிற்பது; ஒருவகையில் பண்பாட்டாளனாக தன்னை முன்னிறுத்த விரும்பும் ஒவ்வொருவரின் மூக்சுக்காற்றிலும் கலந்திருக்க வேண்டியது. "எங்களுடையது”என நாம் இனம் காணும் பலவற்றுள் இதுவும் ஒன்று. இதனை, இதன் வேர்கெடாது புதியவை துளிர்க்கும் பசுமரம்போல் மாற்றவேண்டியது அரங்கவியலாளர் ஒவ்வொருவரினதும் கடமை என்று நான் நினைக்கின்றேன். அந்த உணர்வேகடந்த பத்து வருடங்களாக நாடகத்துறையில் ஈடுபட்டாலும் நாட்டுக்கூத்துத்துறையிலும் அதிக கவனமெடுத்துச் செயலாற்ற என்னை உந்தியது.கூத்தை அதன் வேர்களிலிருந்து அறிந்துகொள்ளும் ஒரு தேடல் முயற்சியின் கற்றல்சார் சிறிய வெளிப்பாடாகவே இந்த நூலுருவாக்கம் அமைந்து நிற்கின்றது.
ஏற்கனவே நான்கு கூத்துக்களை எழுதியிருந்தாலும் அச்சுவாகன மேறும் பேற்றை இந்தக் கூத்தே பெற்றது எனலாம். இதற்கு மூலகாரணமாக இருந்தவர் அண்ணாவியார் பேக்மன ஜெயராஜாவே. இதன் கதைதெரிவு முதல் வெளியீட்டுக்கான திட்டம், நிதி சேகரிப்பு, அரங்கேற்றம் என்ற அடிப்படைச் செயற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டவர் அவரே. ஈழத்தின் விரல்விட்டு எண்ணத்தக்க தகுதிவாய்ந்த அண்ணாவிமார்களில் ஒருவராக த்திகழும் பேக்மன் ஜெயராஜாவின் வழிநடத்தலில் இக்கூத்தை எழுதக் கிடைத்தமையையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
ஆனால் யாப்பிலக்கணம் அறிந்து மரபுக்கவிதையின் நெறிகளை கற்ற அனுபவத்தைக் கொண்டு நான் கூத்தை எழுதவில்லை. அந்தளவு
G&VD

Page 11
நிபுணத்துவத்தை நான் கொண்டவனல்ல ; பாரம்பரியமான கூத்துக்கள் பெரும்பாலும் "யாப்பிலக்கணம்" தவறாதவை அனுபவம் வாய்ந்த புலவர்களினால் எழுதப்பட்டவை ஆனால் என்னுடைய எழுத்துக்கள் அவற்றின் முன் நிற்கும் தகுதியற்றவை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் கூத்தின் இராகச்சீர்களுக்கு அமையவே இதன் பாடல்களை எழுதியுள்ளேன் ஆனால் அரங்கிற்குரிய அளிக்கைப்பண்பையும் பழைய கூத்துக்களில் இருந்த இலக்கிய வன்மையையும் கொண்டிராது எளிமையான மொழிநடையைக் கொண்டு "அரங்கில் வாழும்" தன்மையுடன் இக்கூத்து அமைந்திருக்கின்றது என நம்புகின்றேன். கூறியது கூறல், இலக்கணப் பிறழ்வுகள,சீர்தளை முரண்பாடுகள் போன்ற பல வழுக்கள் இருக்கலாம். இதற்காக தமிழறிஞர்கள் என்னை மன்னிப்பார்களாக,
இக்கூத்தின் கதைத் தெரிவுடன் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லாது விடினும் ஜனரஞ்சகம் மிக்க ஒரு கூத்தை அளிக்கை செய்து மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் பயன்படுத்தப்படாத பல இராகங்களை போடுவதற்குரிய சந்தர்ப்பம்உள்ளதான கதை தேவையென்ற அண்ணாவியாரின் விருப்பிற்கிணங்வே இக்கதையை எடுத்தாண்டாலும், அதற்கான "வியாக்கியானத்தை’ நானே தீர்மானித்தேன். அதேவேளை பாரம்பரியமாகப் பேணப்பட்ட கதையையே இதில் பயன்படுத்தியுமுள்ளேன். ஆனால் கதை தொடர்பாக பல முரண்பாடுகளும் வரலாற்று ஆய்வுகளும் உள்ளன. உதாரணமாக குலோத்துங்க சோழனின் காலத்தில் கம்பராமாயணம் எழுதப்படவில்லை என்றும் அவனின் தந்தை ஆதித்த சோழனின் காலத்திலேயே எழுதப்பட்டது என்றும் பிரதான பாத்திரங்களான கம்பர் ஒட்டக்கூத்தர் இருவருமே சமகாலத்தவர்கள் அல்ல என்றவாறாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றின் உண்மைகளுக்கும், முரண்பாடுகளுக்குள்ளும் பெருமளவில் தலையை நுளைக்காமல் மறைமலை அடிகளாரின் "அம்பிகாபதி அமராவதி" நாடக எழுத்துருவின் கதையை பெருமளவில் அடியொற்றியே இத்கூத்தின் கதையை ஆக்கியுள்ளேன்.
அதே வேளை எமது எழுத்துருக்களில் இராகம்,தாளம்,மெட்டுபோன்ற பலவற்றையும் குறிப்பிடும் வழக்கு உள்ளது. பொதுவாக நாட்டுக் கூத்துப்பாடல்கள் சுத்தமான கள்நாடக சங்கீத வகைளை சாராதவையாகவும் அவற்றின் சாயல்களைமட்டுமே கொண்டவையாகவும் இருக்கின்றன; என்பது ஆய்வாளர்களின் கருத்து ஆகும். எனவே கூத்துக்குச் சொந்தமாக இருப்பது அதன் வழிவழிவந்த மூல மெட்டுக்களே. எனவே தான் இதில் இராக தாளங்களைத்தவிர்த்து கூத்தின் பழமையான மெட்டுக்களையே ஆதாரமாக குறிப்பிட்டுள்ளேன். வழக்கொழிந்து போன பல மெட்டுக்கள் இக்கூத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இக்கூத்தானது இன்னும் இருவாரத்தில்
CXviD

அளிக்கை செய்யும் தயாரிப்பு நிலையிலுள்ளது. அச்சேறி அரங்கேறும் சந்தர்ப்பத்தை இக்கூத்துப்பெறுவதையிட்டு மகிழ்வடைகின்றேன் அரங்கியலாளர்களும் கூத்து அபிமானிகளும் இதனை வரவேற்பார்களென எண்ணிநிற்கின்றேன். கூத்தின் சில அடிப்படைத்தகவல்களை பலரும் அறிந்து கொள்ளும் நோக்கோடு இக்கூத்தின் பிறப்பாக்கத்திற்கு மூல காரணமான அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் நேர்காணலையும் இந்நூலில் இணைத்துள்ளேன்.
இது எனது முதல் பிரசுரம் என்ற வகையில் எனது இதுவரைகால கலைப்பயணத்தில்துண்டிகளாகவும், துணையாகவும் நின்றவர்களை நன்றியுடன் நினைக்கும் ஒரு களமாகவும் இதனை நினைத்து அவர்களுக்கு நன்றிகூற முனைகின்றேன் . பட்டியல்நீளலாம் வாசகர்கள பொறுத்துக் கொள்ள வேண்டும்.
என்னைத்தனது உதரம் சுமந்து ஈன்ற பொழுதில் மகிழ்வெய்திஎனது வளர்ச்சிகளுக்கு அத்திவாரமாக நிற்கும் என் தாய் (ஞானப்பு)காலம்சென்ற தந்தை (யோசவ்) இருவரும் என்றும் எனஇதயத்தின் நன்றிக்குரியவர்கள். நான் கலைப்பணிகளில் மூழ்கும் போதெல்லாம் என் சுமைகளைத் தாம் சுமந்து வேருக்கு நீர் போல நிற்கும் சகோதரர்கள், குறிப்பாக இயலாமையிலும் என் நண்பனாய் சகோதரனாய் பாசத்துடன் இணைந்து நிற்கும்சகோதரன் அன்ரன் ஜெயக்குமார்,என்றென்றும் நன்றிக்குரியவர்கள்.
என்பாலகப்பருவத்திலேயே இரவிரவிரவாக நாரந்தனை, கரம்பன், தம்பாட்டி, மெலிஞ்சிமுனை என்று கிராமங்கள் தோறும் நடைபெறும் கூத்துக்ளைப் பார்க்க ஊக்கமளித்து “கலைஆர்வம்' என்னும் வித்தை என்னில் ஊன்றிய என் அன்புடைய பேத்தியாரும் அண்ணாவியார் சவீன சந்தியாப்பிள்ளையின் மகளுமாகிய காலஞ்சென்ற திருமதி.டேவிட் றோசமுத்துவை நன்றியுடன் நினைத்துக்கொள்ளுகின்றேன். நாடகத்தில் ஆர்வத்தையுயூட்டி அதில் தீவிரமாக செயற்படவைத்த "என்கலைக்குரு' "தலைக்கோல்” “பிரான்சிஸ் ஜெனம்' கூத்தின் ஆடல்களின் அரிச்சுவட்டை கற்றுத்தந்தவர்;அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா, அண்ணாவியார் பாலதாஸ் ஆகிய இருவரும்நான் கூத்தில் களம் இறங்க காலாக இருந்து, எனது கூத்துக்கலையின் ஆசான்களாகச் செயற்பட்ட வர்கள். இவர்கள் என்றும் என நன்றிக்குரியவர்கள்.
எனது கலை ஆர்வத்திற்கு களம் அமைத்துத்தந்த
திருமறைக்கலாமன்றமும் அதன் மூத்த கலைஞர்கள் பலரும் நன்றிக்கு உரியவர்கள் குறிப்பாக நான் மன்றத்துடன் இணையக் காரணமாக
QIVD

Page 12
இருந்ததுடன, அரங்கின் அடிப்படைகளைக் கற்றுத்தந்து இன்றும் நல் ஆலோசகராகச் செயற்படும் GPபேர்மினஸ், மன்றத்தின் மூத்த கலைஞர்களான V.ர.கொன்சன்ரைன், C.M.நெல்சன் ,M.தைரியநாதன் , A.ர.அன்டர்சன் N.S.ஜெயசிங்கம் ,M.யேசுதாசன் , S.A.அழகராசா எழுத்துத்துறையில் என்னை அதிகம் ஊக்குவித்தPS.அல்பிரட் அவர்கள், என் நண்பர்களாக இருந்து ஊக்கிவித்த எல்விஸ், லோஷன், கெனத் மேரிஜென், இக்னேஷியஸ்(பிரபா), எமில் போன்றோரையும்,விஜயன்,கொலின் ஆகியோரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் முல்லைத்தீவுக்கூத்து மரபை அறியத்துணை புரிந்த செ.மெற்றாஸ் மயிலும் நன்றிக்குரியவர்.
இவைகளுக்கப்பால் இந்நூலுக்கு முன்னுரை தந்ததுடன் ஒரு தந்தையாய்க்குருவாய் ஆலோசகனாய் என் வளர்ச்சிகளில் 'கிரியா ஊக்கியாக ‘உலகையும், கலையுலகையும், அறிய வைத்த என் அன்புக்குரியஅருட் தந்தை மரிய சேவியர் அடிகள் என்றென்றும் என் நன்றிக்குரியவர்.
அதேவேளை இந்த வெளியீட்டிற்கு என்னை எழுதத்துண்டி எழுதியதை அச்சேற்ற வைத்து உந்துசக்தியாகத்திகழ்ந்த அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவுக்கும் இதன் கணனி அச்சுக்கோப்புப்பணியை எந்தப்பிரதி உபகாரங்களும் பாராமல் பல மணி நேரங்களை கணனியுடன் செலவழித்துப் நிறைவு செய்த உடன்பிறவாச் சகோதரிPஸ்ரெலாவுக்கும் அட்டைப்படத்தை சிறப்புடன் அமைத்துத் தந்ததுடன் அச்சுப்பணிகளையும் பொறுப்பேற்ற நண்பன் ஜுட்ஸனுக்கும் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் அணிந்துரை வழங்கிய பேராசிரியார் சண்முகதாஸ் அவர்களுக்கும் வெளியீட்டுரை வழங்கி என்றும் என்பணிகளுக்கு துணையாளனாக நின்று சகோதரனாய் நண்பனாய், ஆலோசகனாய், மாணவனாய், பல தளங்களில் கூட நிற்கும் திருமறைக் கலாமன்ற பிரதிஇயக்குனர் சாம்பிரதீபனுக்கும்,சகோதரி றஜித்தாவுக்கும் இந்நூலை அழகுற அச்சிட்டுத்தந்த கத்தோலிக்க அச்சகத்தினருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைக்கூறி நிற்கின்றேன்.
நன்றிகள்
அன்புடன் யோ.யோண்சன் ராஜ்குமார், 425,நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

பாத்திரங்கள்
கட்டியகாரன் - 1 }
O O கதை சொல்வோர் 5LLu35sTUST - 2 அம்பிகாபதி (கம்பரின் மகன் புலவன்) அமராவதி - (குலோத்துங்கமன்னன்மகள்.இளவரசி) குலோத்துங்கன் - (சோழன் மன்னன்) அங்கயற்கன்னி - (அரசி)(குலோத்துங்கனின் மனைவி) கம்பர் (புலவர்) ஒட்டக்கூத்தர் - (புலவர்) குலசேகரன் で (பாண்டிய இளவரசன்) மந்திரி (அமைச்சர் நம்பிப்பிள்ளை) தோழி - 1 தோழி - 2 } அமராவதியின் தோழிகள் மழுவர் - 1 } கொல்லுந்தொழில் செய்வர் மழுவர் - 2
கதைச்சுருக்கம்
சோழ மன்னன் குலோத்துங்கன் இலங்கைமீது படையெடுத்து வ்ெற்றியு டன் மீளும் சம்பவத்துடன் கதை ஆரம்பிக்கின்றது. சபையில் "மன்னனை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்ற பின் இராமாயிணத்தைத் தமிழில் எழுதவேண்டும் என்ற வேண்டுகோள் அமைச்சர் நம்பிப்பிள்ளை அவர்களால் முன்வைக்க்ப் படுகின்றது.அப்பொறுப்புகம்பரிடம் கொடுக்கப்படுகின்றது. அதை ஒட்டக்கூத்தள் கடுமையாக எதிர்க்கின்றார். அதில் அம்பிகாபதியும் கார காரமாக கூத்தரை எதிர்க்கின்றார். ஈற்றில் இராமாயணம் பாடும் பணி கம்பரிடம் கொடுக்கப் படுகின்றது. ஆத்திரமடைந்த ஒட்டக்கூத்தர். கம்பருக்கெதிராகவும்,
அம்பிகாபதிக்கெதிராகவும் சூழ்ச்சி செய்ய முற்படுகின்றார். அவரின் சூழ்ச்சிக்கு

Page 13
அமராவதியை அடையத்துடிக்கும் பாண்டிய இளவரசன் குலசேகரன் துணைபுரிகின்றான்.
அம்பிகாபதியின் தமிழ்புலமையால் ஈர்க்கப்பட்ட அமராவதி அவன்மேல் மையல் கொள்ளுகின்றாள். கம்பரின் இராமாயணத்தைக் காணும் நோக்கில் கம்பரின் வீட்டுக்கு அரசபிரதானிகளுடன் செல்லும் அமராவதிக்கும்.அம்பிகாபதிக்குமிடையே காதல் துளிர்க்கின்றது. அதேவேளை கம்பராமாயணம்.இராமனைத்தொழுது பாடும் காவியம் என்றும் அதனை அங்கு அரங்கேற்றக்கூடாதெனவும் வாதிடுகின் றனர்.அவ்வேளை அமராவதி அதனைத் திருவரங்கத்தில் வெளியிடும் ஆலோசனையை கூறி பலரின் பாராட்டைப்பெறுகின்றாள்.
அம்பிகாபதி - அமராவாதியின் காதல் தொடரும் அதே வேளை அமராவதிக்கும் குலசேகர பாண்டியனுக்கும் திருமணம் செய்து வைக்க ஒட்டக்கூத்தரின் முயற்சியால்மன்னனும்,அரசியும், ஆலோசனை செய்கின்றனர். இதை அறிந்த அமராவதி தன் காதலைத் தாயிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அரசி அங்கயற்கன்னி. அவளை வெளியில் செல்லவிடாது தடுக்கின்றாள். இதை அறிந்த அம்பிகாபதி இரகசியமாக அந்தப்புரத்துக்குச்சென்று அவளை சந்திக்கின்றான்.
இதனை குலசேகரன் மூலம் அறிந்த கூத்தள்மன்னனை அழைத்துச்சென்று அவர்களைக் கையும் மெய்யுமாக பிடிக்கச்செய்துஅம்பிகாபதியை சிறையில் அடைக்க உத்தரவிடுகின்றான். அதே வேளை அவன் ஒரு புலவன் என்ற காரணத்தால் அவனை கவிதைப்போட்டியொன்றில் ஈடுபடவைத்து நூறு பாடல்களை பேரின்பப்பொருளில் பாடி தண்டனையை இல்லாது விலக்குமாறு பணிக்கின்றனர்.
அந்தப்போட்டிக்குச் சம்மதிக்கும் அம்பிகாபதி, களமிறங்குகின்றான். போட்டியில் அவனது முதலாவது பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கின்றது. இதை அறியாத அமராவதி அதை எண்ணிக்கையில் சேர்த்து தொண்ணுாற் றொன்பதாவது பாடலுடன் போட்டி நிறைவு என்று சபைக்குவர அவளைக்கண்ட அம்பிகாபதி சிற்றின்பப்பாடலை பாடத்தொடங்குகிறான். இதனால் போட்டியில் தோல்வி கண்டதால் அம்பிகாபதி சிரச்சேதம் செய்யப்படுகின்றான். அவன் இறந்த செய்தி அறிந்த அமராவதியும் அவனருகே வீழ்ந்து இறக்கின்றாள். அறிந்த கம்பர் நெந்து வருந்துகிறார். காதலுக்கு சாட்சிகளான இவ்விருவரின் இறப்பும் சோழ மன்னனின் நீதியற்ற ஆட்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துவிடுகின்றது.

அநாதிநம யே.ம.சூதுணை
காப்பு
ஆதி சியாடு அந்தமில்லா வேதசிமண நின்றுயிர
பஞ்சமதுவே இயங்கும் மூலச்சுஉருமாதி
நாதியது நீசியனவே நாமுணர வைத்த தமது
திரித்துவத்துக்கே சீரம் பணிந்து போந்நி சேதியதுவே ugësë சிசந்தமிழில் பாவெடுத்தே
ஆடுகள மீதினிலே நாடகத் தமிழினாலே நீதியதுவே பிழைத்த கோவினது கதை யுரைக்க
களமமர்ந்தோம் கடவுளருள் காப்பதாமே

Page 14
GESTEDLJJUJò
விண்ணுறை தேவனை போற்றி செய்தே
கண்னெனவே நிகர் கலைதனையே
மண்ணதிலேற்றிட மாந்தர் வந்தோம்
தண்ணவனே கரந்தாராய்
காலமெல்லாங் கடந் தேகி யவா
சீலமதே உரு ஆகியவா
ஞாலமதில் உனை நாடிவந்தோம்
நல்லவனே எமை ஆள்வாய்
கம்பரெனுங் கவி மா மணியின்
அன்பு மகன் அம்பி காபதி சால்
துன்பம் மிகு அருங் காவியத்தை
அரங்கினி லேற்றிட வந்தோம்
தாளங்கள் நாதங்கள் சேர்ந்திசைக்க தரிகிட மேளமும் தகவமைக்க
தளமதில் தரமுயர் கலைபடைக்க
கடவுள் பதஞ் சரணாமே

பின்னணியில் "காப்பு,"தோடையம்" என்பவை பாடிநிறைவுபெற திரை
விரியும் கட்டியகாரர் இருவர் தோன்றுவர்
சபைவிருத்தம் கைதனில் கோலுங்கொண்டு கிங்கிணித்தாளம் பாட மெய்தனில் குறியுமிட்டு மேன்மைகொள் சேதிகூற சபைதனில் சலங்கையாட சங்கதி கூறவென்றே அரை தனில் பட்டி மின்னும் கட்டியரும் வந்துற்றாரே
35Liquids/TUTT 6).J6)
(மெட்டு :- "இராசமகா இராசன் ." தேவசகாயம்பிள்ளை பக்.O7)
பல்லவி கட்டியகாரரும் வந்தோம் - காதையுரைக்க கட்டியகாரரும் வந்தோம்
அனுபல்லவி கிங்கிணித் தாள மொலிக்க
மத்தளம் முழங்கியெழ
மங்கிடாப் புகழ் பதித்த
துங்கனின் காதையுரைக்க
சரணம் பட்டுடை பளபளத்திட - பார்வையிலே
கட்டுடல் நடம்புரிந்திட வட்டமேயடித்துலாவி
இட்டமாய் கதை படித்து கட்டியமுரைத்திடவே
தட்டிய தாளத்துடனே

Page 15
கட்டியர் தரு
(மெட்டு :- "கலை தங்கு மொழி. விஜயமனோகரன் பக்.23)
கட்டியன் 1
கட்டியன் 2 :
கட்டியன் 1 :
கட்டியன் 2 :
கட்டியன் 1
கட்டியன் 2 :
கட்டியன் 1
கட்டியன் 2
கட்டியன் 1 :
கட்டியன் 2 :
கட்டியன் 1
சதிராடுஞ் சதுரர்கள் ஆடவே - ஒரு
கதை சொல்வோம் கவனமாய் கேளுங்கோ
ஜதியோடு இசைபாடப் பாருங்கோ - கர
வொலியோடு கவனமுஞ் சேருங்கோ
நீதிக்குப் பேர்போன தேசமாம் - அங்கு
வாசமலர்ரெண்டு பாசமாம் - அதை
மோதி அழித்திடப் போனதாம் - சோழ
இராச குலோத்துங்கன் ஆட்சியாம்
அம்பிகாபதியவன் цаоlsтi - மங்கை
அமராவதி இளவரசியாம் - அவர்
உம்பரே புகழ்ந்திட்ட ஜோடியாம் - பாவம்
அன்றில்கள் போலானார் சேதியாம்.
செங்கோலது சரிந்தாண்டதால் - அந்த
சின்னஞ்சிறுசுகள் மாண்டதே
மங்காப்புகழ் கொண்ட காதலே - அதை
சொன்னால் சுவைகுன்றும் "- பாருமே
(வசனம்) காலம் கடந்தும் வாழும் காதல்!! ஞாலம் முழுதும் நிறைந்த காதல்!! காவியங்கள் சொன்ன காதல்
காவியமாய் ஆன காதல் இந்தக் காதையிலே வந்து போகும் இதில் சோகமுண்டு
சுவையுமுண்டு

கட்டியன்
கட்டியன்
கட்டியன்
கட்டியன்
கட்டியன்
கட்டியன்
- அநீதியுண்டு |
:- 'സ്ത്രഗ്രീ0 |
:- சாவு உண்டு |
- சதியுமுண்டு
- அனைத்திற்குள்ளும் சேதியுண்டு!
- அறியும் வரை பராக் பராக் பராக்
தொடர்ந்து அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர், கம்பன், குலோத்துங்க
மன்னன் போன்றோரின் வரவு நிகழும்
அம்பிகாபதி வரவு
( மெட்டு :- "மெல்லச்செல்லுவேன்." எஸ்தாக்கியர் பக்.56)
கம்பனாங்கவி வள்ளலின் மகன்
அம்பிகாபதியே - நானும் துங்க பூபதியே - கவி தங்கும் ஓர் மகனே - எழில் கொஞ்சுமோர் விறல் கண்டுமே - எனை கெஞ்சினாருளரே - மனம் பஞ்சுபோன்றவனே
தொட்டெனத் தரும் கேணிபோலொரு அட்சய மனமே - கவி கொட்டிடுந் தினமே - மனம் பட்டிடுமிதிலே - எந்தன் கட்டுடல் கவிச் செட்டுடன் கண்டு பட்டவர் பலரே - மனம் கெட்டவருளரே.

Page 16
ஒட்டக்கூத்தர் வரவு
(மெட்டு - "சங்கினங்கள் . மரியதாசன் பக்.06)
பொங்கு தமிழ் தேசமெங்கும்
தங்கு புகழ் நேச நாதன் துங்க முடி இராச குலோத்.
துங்கன் பாதம் செல்வேன் பங்க மில்லாப் பாஷையிலே
பாங்குடன் கவி படித்தே மங்கிடாப் புகழ் படைக்க
மாளிகை செல்வேனே
ஆடகச் சிலம் பொலிக்கும்
நீடகத் திரு நாட்டிலே பாடலைப் படைக்க வல்ல
ஒட்டக்கூத்தன் நானும் பாட்டுடன் கவி படித்தே
ஏட்டினில் பெயர் பதித்தே நாட்டினில் புகழ் பெறவே
நாடியே செல்வேனே
(மெட்டு :- "என்னாசைப்பாலரை. "எஸ்தாக்கியர் பக்.78)
தங்க மணித்திரு நாட்டினிலே - கவி தந்திடும் பாவலனே - கலைமகள் தங்கிடுமோர் கவியே
அனுபல்லவி நாவிலுறைந்திடு நாயகியை நிதம்
பாவிலலங்காரம் பூணும் புலவன் நான் பூவிலமர்ந்திடும் பேரொளியை தினம்
பாடுதலாலுயிர் வாழு மொரு கவி

(வேறு) (மெட்டு :- “பானுலா விந்தநகள். "தேவசகாயம். பக்.130)
நாவிலே தேவி புகழ் பாவிலே ஒது கவி பூவிலே வாழுமிறை யாளையே நாளுந்துதி
ஆதியாம் சோதியின் மாமறை நீதியாம் ஞான நிறைகுடம் நாளுமே காத்திடு மெந்தனை தாளுமே பணிந்துதி ஏற்றுவேன்
கம்பநாடீந்திட்ட கவிதையின் காவலன் கம்பன் எனும் நாமம் கொண்டிட்ட பாவலன் சிந்தையில் எந்தையே போற்றுதல் செய்துமே முந்தையில் மன்னனை காணிடச் செல்லுவேன்
நாவிலே தேவி புகழ்.
நெஞ்சிலே வஞ்சமில்லை சொல்லிலே பொய்யுமில்லை பஞ்சினை ஒத்தயென் நெஞ்சமோ நல்லதே செய்திட எண்ணும்
மங்கிடா புகழுடை மண்ணிலே பொங்கிடு தமிழுறை மன்றிலே மன்னனை போற்றியே வாழுவேன் மக்களை மனங்களில் ஏற்றுவேன்
மளமள என நடைபயின்றுடன் ஏகுவேன் மன்னனை போற்றிட மாளிகை செல்லுவேன் புகழுடை தமிழவள் தளைத்திட ஒதுவேன் விறலுடை வேந்தனை வாழ்த்தியே பாடுவேன்
குலோத்துங்க மன்னன் வரவு
(மெட்டு :- “அகிலமும் புகழும் .* கண்டி அரசன் பக் - O3)
செந்தமிழோங்கிடு சோழ வள நாட்டில்
எந்தையர் மரபினில் ஆட்சி செய்திடும்
சுந்தர நேர் குடை சிந்தையிலனி செய்ய
முந்தையர் ஒதிய ஆதியாம் வழியிலே
நெறிகள் பிறழா நீதி முறைகள் குறைகளின்றி
உறையும் தேசராச குலோத்துங்கன் நானே

Page 17
அலை இசை பாடிடும் ஈழநாட்டிலே
அசைந்திடப் புலிக்கொடி ஏற்றி மீண்டுமே
திசையெழு புரமெந்தன் நாமம் போற்றிட
விசையொடு வீரமாய் தேசம் மீழுவேன்
நதிகள் கடல்கள் சூழு நகரின் பெருமையோடு தமிழின் புகழேயோங்க தாயகம் செல்வேன்
(திரை விலக புலவர் சமூகம் மன்னன் குலோத்துங்கனை வாழ்த்தும்
மந்திரி எல்லோரும் மந்திரி எல்லோரும்
மந்திரி எல்லோரும்
கம்பன்
பாவனையில் அமர்ந்திருப்பர் 1
A சபைவிருத்த்ம் ஈழமது சென்று படை வென்று சமராடி வந்தானி சோழ நிலச் சிங்கமாம் குலோத்துங்க கோமகனே வேழ மதுவே நிகர்த்த வேந்தனைப் பாடவென்றே தூய கவிப்பாவலர்கள் சேர்ந்து சபை வந்துற்றாரே
- படை கொண்டு சமராடி வென்ற மன்னன் - வாழ்க! வாழ்க! - ஈழ மண்ணில் கொடியுயர்த்திவந்த மன்னன் :- வாழ்க! வாழ்க!
- வாழ்க! வாழ்க!
(மெட்டு :- இசலி )
:- குடை கொண்டு நீதி கோலோச்சும் வீரா
படைகண்டு வந்த பாவலா
கொடைவள்ளலான குலோத்துங்கவேந்தே
கடையே முவள்ளல் நிகரானவா
முடையென்று வந்தோர் மடிகொண்டு செல்வம் விடைதந்து ஏக வழிசெய்த வா
தடையேதுமில்லா முடிகொண்டு வாழ
கவி கொண்டு வாழ்த்தி வணங்கினேன்.
C08)
 

கூத்தர் : -
அம்பிகாபதி ;-
மன்னன் ; ཚམས་
(மெட்டு :- வெண்பா)
ஈழவள நாடதுவே இலங்கப் போர் செய்தவனே சோழ மண்ணின் சுந்தரனே சோதியனே - அற்புதஞ்சேர் ஆளுகைக் கதிபதியே குலோத்துங்க பூபதியே
சூழுலகிலே யமர்வாய் சொர்ண வடிவானவனே.
(மெட்டு :- கலித்துறை)
கோல் நிலையகலாக் கொற்றவனே நற்பெருமைக் கோமகனே ஞாலச் சிறப்பதனை நல்லுலகில் பெற்ற பெரும் பொன்மகனே
பேரொளியே ஈழச்சமராடி சோழப் பெயர்நாட்டி வந்த சுந்தரஞ்சேர் மன்னவனே ஏழைப்பாவலர்கள் ஏற்றுமொழி பாடிவரும் செந்தமிழின்
சோதியனே வாழியவே
(வசனம்) மந்திரியாரே. மதிமிகு புலவர் பெருமக்களே. ஈழப்போர் கண்டு வந்த என் சிந்தைக்குத் தங்களின் வாழ்த்தொலிகள் சாமரம் வீசுகின்றன. நல்மணம் பொருந்திய தங்களின் வாழ்த்துக் களினாலேயே இந்தச் சோழப் பேரரசு சிறந்தோங்குகின்றது . மந்திரியாரே.
(மெட்டு : “மாகருணாகர . " தேவசகாயம்பிள்ளை பக். 36)
மன்னன் : -
மந்திரி -
திட்டமிட்ட போரில் வெற்றியடைந்தெதிரி கொட்டமடக்கிவிட்டோம் மந்திரி இட்டமுடனிப்போ செய்திட வேண்டிய நற்பணியேதுமுண்டோ தந்திரி
தேவ பாஷையிலே ஒதியதாம் சிறீ இராகவன் காதையினை இப்போதே செந்தமிழாமவள் எந்தாய் மொழியினில் செய்திட வேண்டுமதே தப்பாதே
C09)

Page 18
மன்னன் - ஆகா. அருமையான யோசனை. ஈழவள நாட்டுக்கு இப்போது
தான் படைகொண்டு சென்று வந்தேன்.அந்த நாட்டுடன்தொடர்புடைய இராமாயணத்தை நாம் தமிழிலே . படைத்திடுதல் பொருத்தமானதே. அது பற்றிசுடத்தரே.
(மெட்டு : “அப்பனே அப்பனே. " தேவசகாயம் பிள்ளை பக் - 32)
மன்னன் m ராகவன் காதையை தமிழில் பாட
தடையுண்டோ கூத்தரே கூறுவீரே கவி வல்ல சபையோரே கருதுஞ் செய்தி எது வென்று சபை வந்து ஒதுவீரே
கூததர் = தமிழென்ன தரமற்ற தரணியாளோ
தமிழோடு வட மொழிபொருது மாமோ வான் மீகி கதையென்ன வரலாறாமோ கதை வாங்கத் தமிழுக்குப் பஞ்சமாமோ
மந்திரி ܩܘ ܀ தமிழுக்கோர் தடையெல்லை போடலாமோ
தவளை போல் கிணற்றுக்குள் வாழலாமோ கவி வல்ல கம்பனின் கைத்திறத்தால் காவிய முருவாகும் கள்வமேனோ
மன்னன்
வேசனம்)புலவர் பெருமானே இப்பணியை செய்யக்கூடிய வரும் நீர்தான். ஆதலால் .
மெட்டு :- "தேங்கும் புகழ். * மரியதாசன் பக்.4
கம்ப நாடு தந்த கவிக்கோவே - இப்போ ராகவ கதையது பாடிடவே உம தாவலை உடனடி ஓதிடு வீருடன் கலை மகளின் கவியருளே உரையீர்.
கம்பன் ܩܗ ܀ செந்தமிழின் சேவகனே வேந்தே - சிறீ
இராகவ கதையது நயம்பல உறைந்தது
மானிட ரறமது மாண்புடன் நிறைந்தது மா பணியை சிரமதிலே கொள்வேன் .

(மெட்டு :- "சரண மென்றோதிய . "எஸ்தாக்கியர் பக் - 10)
மன்னன்
அம்பிகாபதி :
கூத்தர்
மந்திரி
அம்பிகாபதி :
மந்திரி
கவியரசாம் கம்பன் அருமகனே இளங் கவிஞனே இந்தக்கதைக்கு உமதுயர் கருத்தென்னவோ அதை யொப்புவீர் .
பாவலர் போற்றிடும் காவலனேசோழ வேந்தனே அந்த - வான் புகழ் ராகவ காதையதால் தமிழ் ஓங்குமே .
(வசனம்) சங்கம் வைத்துத் தமிழ் வளர்ந்த சோழ மண்ணில் அந்திய மொழிக்குரிய காவியத்தைஅரங்கேற்றிஅன்னைத் தமிழை அவமானப்படுத் போகிறீர்களா?. என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொறுதிகூத்தரே. பொறுதி. நல்லவைகள் நடக்குங்கால் அவற்றை இன்முகத்துடன் வரவேற்பது தானே பொருத்தமானது அதைவிடுத்து.
(மெட்டு :- சந்ததததாழிசை)
யாதுமூரே என்றுரைத்த ஆதியாம் புலவரின்
பாவினைப் பயின்ற நாமும் பண்பிழந்து போவதோ
செந்தமிழவள் செழிக்க செய்யுங் காவியத்திலே
அர்த்த மேயில்லாத வாதம் செய்தலென்ன நீதியோ
பாரதத்திலே புகழ் நிறைந்த ராகவன் கதை
கம்பனின் கவிப்படைப்பினாலுயர்ந்து ஓங்குமே .
மானிடஞ் செழிக்க வல்ல காவியங்களாயிரம்
நானிலத்திலே படைத்தல் பாவலர்களின் கடன் காதையாற் களங்க மொன்றும் வந்து சேர்வதில்லையே
பேதை போலவே பயந்து பீடையைச்சுமப்பதோ பாற் கடலுறைந்தவன் பரம்பொருள் படைப்பதை
நாற் திசை அறியவே யுரைத்தலே தவறதோ.
(வசனம்) மன்னவா இளவல் அம்பிகாபதியுரைத்தது போல எங்கள் தமிழ்மொழிக்கு நாங்களே எல்லை வகுத்தல் பொருத்தமற்றது.
G11)

Page 19
கம்பன் : "
அம்பிகாபதி ;-
மன்னன் ܗ ܕ
கம்பன் a
மந்திரி : -
கம்பன் : mu
மந்திரி : ܡܗ
எல்லோரும் :-
அது மட்டு மன்றி. தமிழில் இதுவரை எழுந்த இலக்கியங்கள் முற்றும் தமிழுக்குக் குரியனவல்லவே .
ஆமாம் . பாரதமே போற்றுகின்ற இராம காவியத்தை வசிட்டரும் போதாயணரும் வான்மீகியும் படைத்துப் பெருமை பெற்றார்கள். அந்த அருங்காவியத்தை கம்பர் அழகு தமிழில் அமைத்து முடித்தல். அன்னைத் தமிழுக்கோர் புதிய ஆபரணம் அமைப்பது போன்றது. உங்களில் பலரின் பெருவிருப்பே. என்னுடைய விருப்பமாகும்.
(மெட்டு :- சந்ததம் )
செந்தமிழ் பாவிலே அந்தமில் ராகவ
காதை யமைந்திடவே எந்தைப் பெருங் கவி கம்பரருங்கரம்
பாடிட வேண்டுமதே . சாதி மதங்கடந் தோங்கு தமிழ் மொழி ஓங்கி வளர்ந்திடவே கம்பநாடான் தருங் காவிய மாமிதில்
எந்தமிழ் வாழியவே.
(வசனம்)தமிழிற்கே பெருமை தரும் கம்பவள்ளவே. தாங்களே பெரு மனதுடன் இப்பணியை ஏற்று செய்யக் கடவீர்களாக. வெகு விரைவாக நாம் கம்ப இராமாயணத்தைக் காண வேண்டும்.
மன்னர் மன்னா. கரும்புதின்னக் கைக்கூலியா. என்றாலும் பெரும் பாற் சமுத்திரமாகிய அந்த இராம காதையை . சிறிய பூனையை போன்ற நான். நக்கிக்குடிப்பதற்குஒப்பானதே.இந்தச்செயல
இந்தப்பணியை உம்மையன்றி யாரும் செய்ய வல்ல வரல்லர்.
என் நாவில் நின்றாடும் கலைமகள் துணை கொண்டு இந்தப் பெரும் பணியை . யான் இன்றே ஆரம்பிக்கின்றேன்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன்
வாழ்க!. வாழ்க . l
அரங்கில் ஒளிமங்க சபை கலைகின்றது கூத்தர் மிகுந்த கோபத்துடன்
வெளியேறுகின்றார் ) C12)

(அமராவதியும் தோழிகளும் பூங்காவனத்தில் ஆடிப்பாடி வருதல்)
(மெட்டு :- "கொஞ்சுங்கிளிமொளி ." விஜயமனோகரன். பக் -56)
அமராவதி
தோழி 1
அமராவதி
தோழி 1
தோழி 2
தோழி 1
பஞ்செனவே நிகள் பூஞ்செடி மீதிலே
நெஞ்சயர்ந் தேங்கியதே
குஞ்சின மாங் குயில்கள்
வஞ்சியே கூவுதடி
அஞ்சுக மாமெழில் கொஞ்சிடு மோர் மயில்
அமராவதியிவளே
மிஞ்சுடுமா மொழி தேவியே
மேவிய துன் அழகை
நீரிலே அன்னமிரண்டு மருண்டங்கே
மறைந்தேனோ போனதடி
மாரனின் அம்புகள் பாய்ந்தவை மகிழ்வாக கூடுதோடி.
வேல் விழி மானேயுன் நடைதனை
கண்டவை நாணியே ஒடுதம்மா
பால் நிலாவே யுனது வதனங்
கண்டஞ் சுதம்மா.
மொட்டு அலர்ந்து மலர்ந்து மிளிர்ந்திடும்
மலர்போலே மனம் மிளிர
பட்டாம் பூச்சியைப் போலே
பறப்பதின்றேனோ அம்மா.
(ബ്രീ) ീ00് . இன்று . நீங்கள் வழக்கம் போல் இல்லையே .

Page 20
அமராவதி :-
தோழி 1
அமராவதி
தோழி
அமராவதி
வழக்கம் போலா . ஏன் அப்படி சொன்னாய் .
என்றுமில்லாதவாறு. தங்கள் கவனத்தில் காதல் மொழி பேசும் கிளிகளும். ஜோடியாகத் திரியும் அன்னங்களும். வந்துபோவது தான். எனது சந்தேகத்திற்குகாரணம். தங்கள்மனதை கவர்ந்தவன். աng24ԶՈ.?
அம்மா. குங்குமம் போல் சிவக்கின்ற தங்களின் வதனம் எங்களின் கூற்றை.நிருபிக்கின்றதே.
நேற்றைய அரசசபையில். இராமாயணம் பாடுவிக்கப்பட வேண்டு மென்று. தன் செந்தமிழ்த் திறத்தால் சேதி சொன்னானே.
(மெட்டு :- “துளிக்குமா.” விஜயமனோகரன் பக் - 30)
அமராவதி ;-
தோழி 1 s
அமராவதி ;-
தோழி 2 ܡܗ ܐ
செந்தமிழ் வல்ல சிங்க மென - அவன்
செஞ்சொல் பகர்ந்தானடி - சேயிளை
எந்தன் சிந்தையெல்லாம் - அவன்
பின்னால் நகர்ந்ததடி.
கம்பராம் முனி பெற்ற அருங்கவி அம்பிகாபதியே - அவன்
உம்பரே புகழ் கொண்ட எழில்மிகு தங்க இளஞ்சுடரே
வெஞ்சினங் கொள்ளுஞ் சிந்தையிலும் - அவன்
செங்கதிரோன் போலே வஞ்சியே
அவன் நெஞ்சினிலே கொண்ட
நேர்மையை கண்டேனடி
தேவியே அந்த ஒது கவியவன்
காதலனாகிய தேன் - உங்கள்
ஒவிய மொத்த இந்த வதனமே
வெந்து சிவந்தது மேன்
C14)

அமராவதி தீயிலே பட்ட தூசி யென எந்தன்
தேகஞ் சுழலுதடி - அந்த தீரனின் புஜஞ் சேர வென்றே யெந்தன்
ஆவி துடிக்குதடி
(வசனம்) அம்மா. இளவல் அம்பிகாபதி உங்கள் இதயத்தைக் கவர்ந்தது நியாயமானது தான்; ஆனால். நீங்களோ பார்போற்றும் வேந்தானின் மகள் அவனோ.
தோழி 1
அமராவதி - அப்படிச் சொல்லாதே. நான் அதிகம் நேசிப்பது. அன்னைத்தமிழை
தமிழ் வல்ல ஒருவனுக்கு வேறு எந்தத் தகுதியும் வேண்டியதில்லை.
தோழி 2 - ക്രീ00ff. அம்பிகாபதிஅரச மரபிலுதக்கவில்லையே தவிரவேறு எந்த வகையிலும் குறைந்தவனல்ல. அவன் எழுதிய தண்டியலங்காரம் இன்று பேசப்படும் இலக்கியமாகவுள்ளது.
அமராவதி - அப்படியா. அதனை நான் பார்க்க வேண்டும். பொழுது அந்தியாகி
விட்டது. நீங்கள் சென்று வாருங்கள்
(தோழியர் இருவரும் வெளியேற அமராவதி அம்பிகாபதியை நினைந்துப்
புன் முறுவலுடன் அரங்கைவிட்டு அகல்கின்றாள்)
குலசேகரன் வரவு
(மெட்டு :- “அதியுக்ரம வீரன். "தேவசகாயம் பிள்ளைபக் - 07)
விறல் மேவிய திறலோன் - உலகில் திறம் போர் புரி மறவோன் - சோழநில
அரசாய் வருமொரு விருப்போடுலவிடு இளவல் இராஜகுல சேகரன் நானே அமராவதியவளை அடைந்திடும் அயரா வெறியுடனே - அநுதினம்
அலைபாய் மனத்துடன் அவளுறை பரமதில் நிலைதளர் விழியுடன் நடைபயில்வேனே

Page 21
மதிதங்கிய முதலோன் - அதிஉயர்
சதிமிஞ்சிய கவியோன் - கூத்தரவர்
பதமே சரணடைந் தவளை அடைந்திடு விதமே யறிந்திட விரைந்து செல்வேனே
கூத்தனும் குலசேகரனும் சந்தித்தல்
விரக்தியுடன் நிற்கும் கூத்தரை குலசேகர பாண்டியன் தயக்கத்துடன்
குலசேகரன்
கூத்தர்
குலசேகரன்
கூத்தர்
குலசேகரன்
கூத்தர்
குலசேகரன்
கூத்தர்
குலசேகரன்
சந்தித்தல்)
இருப்பதன் காரணத்தை நான் அறியலாமா?
இளவரசே.குலசேகரா. இன்று அரசசபையில் நடந்த சம்பவமொன்று என்மனதை வெகுவாக பாதித்து விட்டது.
அதை நான் அறியக்கூடாதா..?
(மெட்டு :- "பெரிய சுழல் காற்றின் முன். * சங்கிலியன்)
மன்னன் தனை மயக்கி மாயக்கவிபடித்து கம்பன் காவியமொன்றை ஆக்க நினைவுகொண்டான்.
தென்னோனர சபையில் இராமன் கதையெழவோ அன்னாருரைமறுக்க யாருஞ் சபையில்லையோ.
எந்தன் உரை மறுத்து பங்கஞ்சபையில் செய்து நிந்தைப்பதராய் என்னை நொந்து நலியச்செய்தார்
சோழப் பெருமரசில் ஞானச் சிறப்புடையோன் மாளப் பழிபுரிந்த கம்பன் முன்னாவதோ.
ஈனச் செயலே செய்து ஞானச்சுடரோனென்று மோனச் சபதஞ் செய்த தீனனழிய வேண்டும்
எந்தன் வலிமையோடு உந்தன் அறிவுசேர நிந்தை புரிகம்பரை வென்று விடைதடுவோம்
○

கூத்தர்
குலசேகரன்
கூத்தர்
கூத்தர்
குலசேகரன்
கூத்தர்
குலசேகரன்
இன்று சபதஞ் செய்தேன் அந்தப்புலவன் தன்னை வென்று மமதை கொன்று நிந்தையடைய செய்வேன்
சிந்தையதிலே நீரும் நொந்து வருந்த வேண்டாம் உந்தன் துணையாய் வந்து முந்தை தனிலே நிற்பேன்
எந்தன் பலமெனவே முந்தை தனிலுறையும் விந்தை புரி தீரனே உந்தன் பலமே போதும்
(வசனம்) குலசேகரா. . கவிபாடிப் புகழ்மாலை மட்டுமே தரித்த என் வாழ்வில் இன்று வெட்கித் தலை கவிழும் வேதனையை தந்துவிட்டான் கம்பன்.
கவலையை விடுங்கள்.கூடிய விரைவில் எந்த இராஜ சமூகத்தில் தங்கள் பேச்சு தூக்கி எறியப் பட்டதோ அந்தச்சமூகத்தில் இருந்து கம்பனையும் அவன் மகன் அம்பிகாபதியையும் தூக்கி எறிந்து விடுவோம் .
குலசேகரா.நீகூடஇருக்கும் போது எனக்கென்ன கவலை.அத்துடன் நீ ஆசை வைத்த அந்த அம்பிகாபதியை அடைவதற்கு. நான் வழிசமைக்கிறேன்.
நன்றி புலவரே அமராவதியை அடைவதையே எனது வாழ்வின்
இலட்சியமாகக் கொண்டுள்ளேன். அதை அடைவதற்குத் தாங்கள்.
தான் உதவ வேண்டும் நான் வருகிறேன்.
கம்பரை அவரின் இல்லத்தில் மன்னன் குலோத்துங்கள , மந்திரி கூத்தன்,
அமராவதி முதலானோர் சந்தித்தல 1
சபைவிருத்தம் காவியங் காண வேண்டி கவிமனை தன்னை நாடி தேவியாம் அமராவதியும் திருவுடை சமூகம் தானும் மேவிய புகழே கொண்ட மன்னவன் தன்னுடனே பாவித மோடு கம்ப வாயிலை வந்துற்றாறே
○

Page 22
கம்பன் - மன்னர் மன்னா. வரவேண்டும் வரவேண்டும்.இந்தஏழையின் வாயில்
இன்று பெரும் பேறு கண்டது.
( கொச்சகம் )
கோவே கொலுவே குலோத்துங்க வேந்தே இவ் ஏழை வாயிலுக்கே வரவுந் திருவுளமோ துரையே தூதுரைத்தால்
யான் வரேனோ தேவே திருவடிவே தாரணியின் தலைமகனே
தரு வேந்தனே மன்னவனே வேழம தொத்தவனே
சோழப் பெருந்தலைவா வாரீர் மனையதற்கே வந்தனைக்கேயுரிய செந்தாள் மடல்களிங்கே
வந்ததேனோ ஜயே ஏழைமாடமிதற்கே
மன்னன் - புலவனே கவிவல்லானே கலைமகள் அருளுள்ளோனே
உனதுயர் வாயில்வரல் ஏந்தலென் கடனே பாவலர் போற்றி வந்த பண்டைத்தமிழ் மரபை
சோழப் பெருமன்னவன் செய்தான் தவறிதுவோ.
அமராவி - வசனம்) வாருங்கள் மன்னா. தங்களின் பாதங்கள் எங்கள்
இல்லத்தில் படுவதற்கு நாம் என்ன தவம் செய்தோமோ
(மெட்டு :-"வாராய் பைங்கிளியே." எஸ்தாக்கி யார் பக் -34)
வாரும் மன்னவனே மனையே நாடி இங்கே
வந்த கோமகனே - உமைகாணவே
ஏழைகள் எமதில்லமே மகிழ் வெய்தவே
தவம் செய்ததோ மனை
மந்திரி - கவிதை கோமகனே கலையே நிறைவாய்க்கொண்ட
பாவலன் மகனே - இம்மாடத்தில் கம்பனின் தனிக்காவியமது கண்டிட
மன ஆர்வம் மேலெழ

மன்னன்
கம்பன்
மன்னன்
"கம்பன்
அமராவதி
மன்னன்
கம்பர்
புலவர் பெருமானே. தங்களின் இல்லத்தில் அமர்ந்திருக்கும் போது அரண்மனையில் இல்லாத அமைதி ஏற்படுகிறது. தாங்கள் வடிக்கின்ற காவியத்தின் வரிகள் சிலவற்றை யாவது காது குளிரக் கேட்டுச்செல்வோம். என்ற ஆதங்கத்தில். வந்தோம் . காவியம் என்ன நிலையில்இருக்கிறது புலவரே.
முதலாவது காண்டம் நிறைவேறிவிட்டது மன்னவா. தாங்கள் காட்டுகின்ற ஆர்வம் என்னை கிளர்ந்தெழச் செய்கின்றது விரைவிலே முடித்து விடுவேன் மூலபாடங்களில் முரண்பாடுகளும் தெளிவின்மைகளும் நிறையவே உள்ளன. பகல்முழுவதும் அவற்றை தெளிவாக்கிக் கொண்டு இரவிலே). என்காவியத்தை பாடுகிறேன்.
ஓகோ. ஆய்வின் பின்னர்தான் ஆக்கம் பிறக்கின்றது. அது ஆரோக்கியமானது தான். அம்பிகாபதிதங்கள் பணிக்குத் துணையாக நிற்கின்றானா..!
ஆமாம். அவனில்லாது விடில். என்னால் காவியம் பாட
தந்தையே. காவியத்தின் சிலவரிகளை. நாங்கள் சுவைக்க முடியாதா..?
பார்த்தீரா புலவரே. என்மகளின் தமிழார்வத்தை . காவியம் காணும் ஆர்வத்துடனேயே.அவள் என்னுடனே கூட வந்துள்ளாள்
நிச்சயமாக.எனது காவியத் தலைவன் இராமனும் தலைவி சீதாபிராட்டியும் முதல் முதல் சந்திக்கின்றனர். அவர்கள்
எண்ணரும் நலத்தினாள்
இணையல் நின்றெழில் கண்ணொடு கண்ணினை
கவ்வி ஒன்றை ஒன்றே உண்ணவும் நிலை பெறாது உணர்வு மொன்றிட அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
G19)

Page 23
கூத்தன் - (வசனம்) ஆகா அதனை நானும் நோக்கினேன்.
மன்னன் - ஆகா. அற்புதம். அன்னைத்தமிழ் உங்கள் நாவிலே நடனமாடு
கிறாள் புலவரே.
மந்திரி - நால்வர் படைத்த இராமாயணத்திலும் கம்பரின் இராமாயணமே
சிறந்தது என்று கூறுங்காலம் வெகுவிரைவிலேயே வரும் புலவரே
அமராவதி - சிரிராகவனுஞ் சீதையும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
பாத்திரங்கள். அப்படித்தானே புலவரே.
கம்பன் - ஆமாம். காலங்கடந்தும் வாழும் காoரியங்கள் .
மன்னன் - புலவரே. காவிய வரிகள் பூரண திருப்தியைத்தருகின்றன.
வெகுவிரைவிலேயே நாம் இதனை வெளியீடு செய்தல் வேண்டும்.
கம்பன் - அடுத்த பெளர்ணமிக்கு முன் எப்படியும் முடித்துவிடுவோம் மன்னா.
மன்னன் - அதுபோதும். நாங்கள் புறப்படுகின்றோம்.
கம்பர் - சென்று வாருங்கள்.
இராஜ சமூகத்தவர் செல்ல , அம்பிகாபதியும் அமராவதியும் ஒருவரை யொருவர் பார்வையால் விடை கூறிச்செல்லுகின்றனர்.
நந்தவனத்தை நாடி வரும் குலசேகரன் அமராவதியைஅங்கேகண்டதும் வர்ணித்துப்பாடுகிறான்.
(மெட்டு :-“ஆகா இவள் என்னருபமோ." கண்டியரசன் ) கொச்சகம் குலசேகரன் - ஆடியே வருந்தேரோ அழகுரத ஒவியமோ
பாடியே வரும்புனலோ பைந்தமிழின் பாவடிவோ தேடியே கிடைக்காத தென்றலதன் வரிவடிவோ
5(b. அழகின் அவதார மிவளோ - மாரன் தொடுத்த மலராயுதக் கணையு மிவளோ,
 

அமராவதி
குலசேகரன்
அமராவதி
குலசேகரன்
அமராவதி
சிற்பிகள் செதுக்கிடாத செம்பொற் சிலையிவளோ சிற்றிடை நுடங்கும் சுந்ர அற்புதக் கலையகமோ சிந்தனைச் சுவரிலெல்லாம் சித்திரமாய் நிற்பவளோ. வந்தனைக்குரிய தேவ மடந்தையோ மானிடளோ.
அழகின் அவதார.
(வசனம்) அமராவதி.உன்னை நாடி .நாள் தோறும் உன் நிழல் தேடி வரும் இந்த குலசேகரனை உன் கண்கள் கண்டு கொள்ளவில்லையா.
- பாண்டிய இளவலுக்கு இங்கு என்ன வேலை. உன்னைப்பார்க்கவே
எனக்குப் பிடிக்கவில்லை என் முன்னால் நிற்காது சென்றுவிடு
(மெட்டு :-“பொறையு முத்தம்.” மரியதாசன் பக் -34)
- காந்தள முகக் கூந்தலோ - நிறை
வேந்தனின் மகளே - எழில் சாந்தமே யுரு வான உந்தனில்
காதலே மயிலே
- மான மற்று நீ மங்கை பற்றியே
உற்றதுந் தவறே - இந்த கொற்றவ மனை முற்றமே வரை வந்ததுந் தவறே
உந்தனின் எழில் எந்தனைக் கவர்ந்
துற்றதே மயிலே - கோர
நிந்தனை மொழி தந்திடா தெனை
வந்தணை மனமே
நெஞ்சிலே பெரு நஞ்சுமே நிறை
வஞ்சனே யகலாய் - உந்தன்
பஞ்சமா பிழை கண்டு அஞ்சினேன்
மிஞ்சிடா தொழிவாய்
G2)

Page 24
அமராவதி
குலசேகரன்
- (வசனம்) மூடனே. உன்னுடைய வஞ்சக மனத்தினை நான்
அறிந்தேன். தமிழை நேசித்து தமிழ் மகளாய் என்னை போர்சிக்கும் ஒருவனையே நான் மாலை இடுவேன். മ മസ്തി 6Uff) 0്) மறந்தவனை நிச்சயம் நான் மணம் புரியேன். என் வெஞ்சினத்தைக் கூட்டாது சென்று விடு.
கவி
அறிவையென் ஆரணங்காளே
அயராதுனைப் பின் தொடர்ந்தே இறைதலால் அடையவென்று
உளமது கொண்டலைந்தேனே தவறு மேல் குமுறிடும்
எனது உயர் சினத்தினாலே இறுகுவாய் இது எனது
உறுதியுரை அறிகுவாயே .
(வசனம்) ஆனால் கேளாய் பெண்ணே. நீயே எனது வாழ்வின் துணையென்று நான் என்றோ தீர்மானித்து விட்டேன். இதற்கு நீ இணங்கியே ஆக வேண்டும் தவறு வாயெனில் என் கொடிய சினத்துக்கு ஆளாகுவாய்.
கோபமாக உரைபகர்ந்துவிட்டு குலசேகரன் வேகமாக வெளியேறு கின்றானி அமராவதி சில கணங்கள் உறைந்து நின்று விட்டு
சுதாகரித்துச் செல்லுகிறாள்)
திரைவிலகும் போது சபைக்கவி ஒலித்துக்கொண்டிருக்கும் சபையில் மந்திரி பிரதானிகளுடன் புலவர்களும் மன்னன் குலோத்துங்கனும் வீற்றிருப்பர்.)
சபைக்கவி
மனு நீதி பிறழாது மரபாளும் சபை மீது கவி யோதிக் கலைசெய்யும் காவியர் புடைசூழ புவி யோர் பயனாளப் பாங்குறுங் காவியத்தை அரங்கேற்ற அமர்ந்தார் அத்தானி மண்டபத்தே.
G22)
 

- மந்திரியாரே. மதிமிகு புலவர்களே இன்று நாம் மிக முக்கியமான
முடிவென்றை எடுப்பதற்காக இங்கே கூடியுள்ளோம். புவிச்சக்கர வர்த்திகளெல்லோரும் போற்றுகின்ற கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரின் இராமாயண காப்பியத்தின் வேலை முடிந்து விட்டது. அதனால்.
(பாடல்) (மெட்டு - "கலைமதிநிகரான."மரியதாசன் பக்.07)
மன்னன் - கம்பனின் தனிக் காவிய மாமதை
சிந்தைசேர் அறிவோர் சபை மீது இன்புடன் அரங்கேற்றுதல் என்னென்
றோதுவீர் மதி மந்திரியாரே
:- காலமே கடந்தேயுயிர் வாழ்ந்திடுங்
காப்பியம் கம்ப இராகவ காதை ஞாலமே புகழ்ந்தோதிடவே பெருஞ்
சீருடன் அரங்கேற்றுதல் வேண்டும்.
:- இராமனின் கதை கண்டு தெளிந்தவர்
கீதை போல் அதில் இன்பமடைவார் ஆகையால் அதை ஆன்றோர் சபைதனில்
ஏற்றுவீர் விரைவாக முயன்றே.
- (வசனம்) கம்பனின் புகழ்பாடியது போதும் நல்லதோர் கலையை நாடுதலும்
போற்றுதலும் நல்வார் இயல்பே ஆகையால் முதலில் காவியத்தின் காப்பினை விளம்பி கம்பகாவியத்தின் கருத்துரைக்கட்டும். அதன்பின அரங்கேற்றம் பற்றிப்பேசுவோம்.
- புலவரே. கூத்தரின் விருப்பத்தை நிறைவேற்றுதல் பொருத்தமானதே
- உத்தரவு மன்னா. என்காவியத்தின் நோக்கமும், கருவும் இந்தப்
பாயிரத்திலேயே உறைந்துள்ளதால் அதனைப் பாடுகின்றேன்.

Page 25
கூத்தர்
அம்பிகாபதி :
கூத்தர்
மந்திரி
கூத்தர்
மன்னன்
(மெட்டு :- இசலி.)
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே ராமர் என்றிரண்டெழுத்தினால்
நிறுத்தும.!!
(மெட்டு :- “வீரசூரரான. * எஸ்தாக்கி பக் 19)
ஏது பாடலோதி வந்தீரோ - விதி மறந்து
சோதியைத்துறந்தே உறைந்தீரோ - தூயமறை வைணவம் சமணம் சைவம் சாக்கியசமயமில்லா
இராமனைத் தொழுதுபாடி ஊறுகாப்பெழுதினாயே
காப்பில் லூறு கண்டறைந்தீரோ - அன்றேல்மனக்
காழ்ப்பினால் உரைபகர்ந்தீரோ - மூத்தவர்நீர்
மூப்பினால் முடிபழுத்தீர் ஆப்பெனத்தடை விதித்தீர்
தப்பெனப் பகர்ந்துமது சித்தமே யுரைத்துவிட்டீர்
துள்ளியே பதில் சொல்லியோதுவீரோ - பயமறியா கன்றெனக் கருத்தே யுரைப்பீரோ
புள்ளியாய் பிழை உள்ளதாயினும் தள்ளியே விடலேமுறையது
இச்சபையது மீதிலே அரங்கேறுதல் பிழை என்பதே பதில்
கூத்தரே பொறுதி. காப்பிலே தவறு கண்டு காவியத்தை புறந்தள்ளுதல் முறையாகாது.
அது எப்படி இருப்பினும் நெறிபிறழாத இச்சபையில் இராமனைத் தொழுது பாடும் காப்பியம் அரங்கேறுதல் முறையல்ல.இதுவே எனது முடிவான கருத்து
புலவர் பெருமானே. தாங்கள் மெளனமாக நிற்பதன் காரணமென்ன.

மன்னன்
கம்பன்
மன்னன்
அமராவதி
மன்னன்
அமராவதி
மன்னன்
மந்திரி
மன்னன்
கம்பன்
(பாடல் )
(மெட்டு :- "தங்கம்போல்." எஸ்தா பக்145)
வேந்தர் புகழ் கீர்த்தி நிறை கவிஞனே - கம்ப
வள்ளலே கருதுஞ்சேதி என்னவோ
மாந்தரங் கூறுமரும் பாவதே - ஏற்றும்
முறையதை ஒதுவீரே சபையிலே
நீதி தவறா நெறி அறிந்த நற்றவா - சோழ
தேசமே காக்கும் நிறை கொற்றவா
சேதியிது என் செவியில் உற்றதே - ஆனால்
என்னாவல் லுன் அரிய சித்தமே
(வசனம்) மன்னா சிறிராகவனின் காதைக்கூடாக மானிடம் உய்ய வேண்டிய நெறிமுறைகளை யான் வடித்துள்ளேன் இதனை இங்கே அரங்கேற்ற வேண்டுமென்று நான் எண்ணிய வனல்ல. காரணம் தமிழ்கூறும் நல்லுலகனைத்தையும் இது சென்றடைய வேண்டுமென்று யான் விரும்புகின்றேன். உங்கள் விருப்பம் எதுவோ அதுவே நடை பெறட்டும் ஆனால் எனது பாயிரத்தையாரும் திருத்துவதை நான் விரும்பவில்லை.
0മസ്കാീ00 தந்தையே சிறியவளாகிய எனது கருத்தை உரைப்பதற்கு என்னை அனுமதிக்கவேண்டும்.
சொல் மகளே உனது இலக்கிய ஆர்வத்தை நான் அறிவேன்.
இளங்கவி அம்பிகாபதி கூறியது போல மக்களுக்குப் பயன்படும் இவ்வரிய இலக்கியம் வெகுவிரைவிலேயே அரங்கேற்றம்செய்யப் படவேண்டும். அதனால் இதனை திருவரங்கத்தில் வெளியீடு செய்தால் என்ன.
ஆகா அருமையான யோசனை பகர்ந்தாய் மகளே.மந்திரியாரே
மன்னவா. இளவரசியின் கூற்று மிகவும் பொருத்தமானது.
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மன்னவா.
○

Page 26
மன்னன் :- அம்பிகாபதl .2
அம்பிகாபதி - இளவரசியார். சிறந்த சிந்தனைவாதி என்பதையே நிரூபித்து
மன்னன் - பின்பு என்ன உடனடியாக ஆயத்தங்கள் நடக்கட்டும். மந்திரியாரே. -
மெட்டு - ஆசிரியம் சந்நதி நாடி மேன்மைகள் கூடி
மாண்புடனவர்தனை யேற்றி பரிவட்டங்கட்டி பட்டாடை சாற்றி
பொன்னாடை தனைப் போர்த்தி
பாங்குடனவர்தனைப் பல்லக்கிலேற்றியே
பவனியாய் பரிகரிபுடை சூழ
கவிகையும் சிவிகையும் வெண்குடை கவரியும்
சாலவு மணியது செய்தே
மேளமும் தாளமும் திரிசங்கு நாதமும் குழலொடு தம்பையும் சேரவே
அணியணியாய்ப் பலராடியே அழகுற
எழிலொடு பவனிகள் செய்வீர்
மன்னன் - மந்திரியாரே கம்பரின் இராமாயண அரங்கேற்றமானது என்றுமில்லாத அளவு பெருஞ் சீருடன் திருவரங்கரத்தில் நடத்தப்பட வேண்டும். அதற்குரிய ஆயத்தங்களை செய்து முடியுங்கள்.
மந்திரி - உத்தரவு மன்னா.
மன்னன் :- இத்துடன் சபை கலையட்டும்.
சபை கலைதல். கூத்தர் மிகவும் கோபமாக வெளியேறுதல், அம்பிகாபதி, அமராவதியை வைத்தகண் வாங்காது பார்த்தபடி வெளியேறுதல்)

அம்பிகாபதி - அமராவதி காதல் திரைவிலக கம்பர் இராமாயண வரிகளை எழுதியபடியே பாடிக் கொண்டி ருக்க, அம்பிகாபதியும்.அமராவதியும் பூங்காவனத்தில் சந்திப்பர்)
மெட்டு - அகவல்
கம்பர் -" என் அரு நலத்தினாள் இணையல் நின்றுழிக் கண் ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வு மொன்றிட அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
(மெட்டு - ஆசிரியம் ) சுழலிடு கூந்தலும் துகிலும் சோர் தர தழலிடு வல்லியே போலச் சாம்பினாள் தையல் சிற்றிடையாள் ஒரு தாழ் குழல் உய்ய மற்றவள் உள்ளத்து ஒடுங்கினான் வையம் முற்றும் வயிற்றில் அடக்கிய ஐயனில் பெரியார் இனி யாவரோ
மெட்டு :- கொச்சகத்தரு
அம்பிகாவதி ;- மன்னன் திருமகளே மகிமை மிகு
மாநிறத்துப் பூங்கொடியே நின்னைக் கண்டடைய இப்புவியில்
என்ன தவம் நான் புரிந்தேன் உன்னை என்னகத்தே மின்னும் சுடரெனவே
கொண்டிருப்பேன் கோமளமே
35(5
கொஞ்சு மொழி கோதையானவளே - நெஞ்சமர்ந்த புன்சிரிப்பால் மிஞ்சு மோரழகினாரணங்கே - என்தேவி பஞ்சு விரல் தொட்டதுமுடனே - பட்டாம்பூச்சி போல நெஞ்சு பட்டலர்ந்த தேனடிமானே
○

Page 27
- 9in JITsuj :-
அம்பிகாபதி :
அமராவதி :-
அம்பிகாபதி ;-
(பாடல் -
அம்பிகாபதி ;-
அமராவதி :-
அம்பிகாபதி ;-
நெஞ்ச மலர் வந்த மன்மதனே - உந்தனைக்கண்டு எந்தன் நெஞ்சம் கொள்ளைபோன தெந்தன் மன்னவனே மிஞ்சு கவி வாளனே யழகா - நின்புலமைக் கென் மனமே என்று மடிமை யுண்மை யென் தலைவா
(வசனம்) எனதன்பே. இந்த ஏழைப்புலவனை உன்னுடைய மணம் நாடிய தென்ன. எத்தனையோ.இளவரசர்கள் உன்னை அடைவதற்கு ஏங்கிக் கொண்டிருக்க. ஏதுமற்ற இந்தப்புலவன்.
போதும் உங்கள் பாராயம். வெறுமனே செல்வமும் அந்தஸ்தும் மட்டும் இருந்தால் போதுமா. ஒரு அம்பிகாபதியை போல அழகுத்தமிழில் எழுதமுடியுமா . இனிமைத் தமிழில் பாட
முடியுமா. அதர்மத்தைக் கண்டு பொங்கிஎழத்தான் முடியுமா. உங்களை முதன்முதலாக பார்த்த போதே.என்மனம் உங்களுக்குப்
(அமராபதி நாணத்துடன் ஓடுதல் )
மெட்டு :- “ஆசைப்பிராணேசா ..." எஸ்தாக்கியார் பக் -19)
தாமரையே நிகள் தாரகையே - உயிர்
தோகை மயிலாளே அமரா
எந்தனைக் கண்டதும் உந்தன் வதனமே
செந்தூரமானதென்ன அழகே
தித்திக்கும் செந்தமிழ் பாவிலே வல்ல என்
சோதியழகான நாதனே - உந்தனை கண்டதும் நெஞ்சிலே பொங்கிடும்
ஆனந்தமே அதுவே என்நாதா
மாடத்து மானவள் நெஞ்சத்தில் நீந்திட
வந்தது உண்மையதோ - கனவோ சோழத்து மான்விழி ஏழைப்புலவனை
நாடிய தேனடியே கிளியே

அமராவதி ;-
காதலுணர்ந்திட்ட காரிகை நெஞ்சத்தில்
கெளரவம் தோன்றிடுமா - கண்ணாளா
ஆதவனை யொத்த ஆணழகே உந்தன்
ஆலிந்தம் போதுமதே மன்னவா
அமராவதி - (வசனம்) ஜயையோ. பொழுதும் அந்தியாகி விட்டது தங்களுடன்
இருக்கும் போது நாழிகை கடப்பதே தெரியவில்லை . . என்னை தேடப் போகிறார்கள். நான் சென்று வரவா.
அம்பிகாபதி - இளவரசி. தங்கள் காதலைப் பெற நான் எவ்வளவுபாக்கியம்
பெற்றவன் என்பதை உணர்கின்றேன்.தங்கள் வரவு காண. என் கண்கள் என்றும் காத்திருக்கின்றன் என்பதை மறவாதீர்கள். சென்று வாருங்கள்.
அரசி அங்கயற்கன்னி வரவு
(மெட்டு :- “அரிராமராமா."தேவசகாயம்பிள்ளை பக்.45)
அதி உத்தம தேச அதிகார இராசன்
உயர் பத்தினி நானே அங்கயற் கன்னி பதி பாதம் நாடி மனத்துயர் ஒதி
விடை பெற நானே விரைந்து செல்வேனே
கயற் கொடி ஆடும் செழியர் குல மாது
எழிலோங்கிடு சோழ இராஜகுமாரி
அயற் தேச மெங்கும் அறிவார் ரெனையாரும்
அழியா புகழோங்க மனையாழுவேனே
காலில் கொலிசாட கரத்தில் வளை மேவ
சிரத்தில் தமிழோங்க பரனைத் தினம் போற்றி
நுதலில் திலகொளிர சடையில் சரஞ்சேர
நடையில் ஒயிலோங்க நடமே புரிவேனே

Page 28
(அந்தப்புரத்தில் சிந்தனையுடன் அரசி அங்கயற்கன்னி நின்றிருக்க மன்னன்
மன்னன்
அரசி
மன்னன்
அரசி
அரசி
மன்னன்
கூத்தள்
மன்னன்
கூத்தர்
தேடிவந்து உரையாடுதல்)
(வசனம்) தேவி..இன்று என்றுமில்லா வகையில் உன்னுடைய ബ0070 சிந்தனையில் ஆழ்ந்திருப்பதன் காரணம் தான். என்னவோ..! மன்னா. நாங்கள். எமக்குரிய கடமைகளை உரியகாலத்தில் செய்ய வில்லையோ என்ற கவலை என்னை வாட்டுகின்றது.
எமது அருமை பெருமையானஒரேமகள் .இரவுத்தூக்கத்திலே பேசிய காதல் வார்த்தைகளைக்கேட்டேன். அவளுக்கும் திருமணப் பருவம் வந்து விட்டது. அதனால்
(மெட்டு :- “தேனலங்கிர்த் .." எஸ்தாக்கியர் பக்.66)
பூவுலகமே போற்றும் என்னிறை
காக்குமோர் பொறையான ராசனே எங்களின் மகள் இன்பமாம் மணக் கோலம் காணவே
என் மனமோ ஏனோ ஏங்குதே.
எந்தனின் எழில் தேவியே - உந்தன்
கேள்வியே துளை போடுதே என்னை
என்னருமகள் மாலை காணவே
செய்கிறேனே யானுமோர் வினை
கூத்தர் நுளைதல்
മസ്ക00 நான் நினைத்துக்கொண்டு வந்தகாரியத்தை நீங்களும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். இதிலே நான் ஒரு கருத்தைக்கூறலாமா.
வாருங்கள் புலவரே தங்களுக்கில்லாத உரிமையா.கூறுங்கள். தங்கள் கருத்துத்தான் என்ன..?
(மெட்டு :- "காதறுக்காதே."கருங்குயில் குன்றத்துக்கொலை)
பூங்கொடிக்கொரு மாலை வந்திடவே - பொன்னானதோர்
கோமகன் தனைக் கொண்டு வந்திடுவேன்
கட்டழகொடு காசினியிலே வித்தகன் குலசேகரனவன்
தத்துவனவன் தன்னையே நும்புத்திரிக்கிணையாக்குவேனே

அரசி :- கேட்டிடக் குளிரோடுதே மனதில் மகிழ்வேதரவே - அந்த
கட்டழகனைக் கொண்டு வந்திடுவீர் இட்டமாயொரு நாளிலே மணதிட்டமேயிடுவோமுடன்
பட்டமே நிறை பாவலனவன் பூமகள்தனை கைப்பிடித்திட
மன்னன் - எந்தனின் மகள் உள்ளமேயறியா மணமா உயிரே நீயும்
எண்ணவேண்டா மெந்தனின் துணையே சித்தமேயறியாமலே யொரு திட்டமேயிடுவோமெனில் - அவள்
தட்டியேவிடுமோர் நிலை வரும் புத்திரியவள்
சித்தமேயினி.
(வசனம்) புலவரே தங்களின் நல்ல எண்ணத்திற்கு என்றும் என் நன்றிகள். ஆனால் என் மகளின் திருமணத்த்ை தீர்மானிக்க வேண்டியவள் அவளே அவளின் விருப்பம் அறியாமல் நாம் முடிவெடுப்பது தவறு.
கூத்தன் - நான் அதை மறுக்கவில்லை மன்னா.கூடியவிரைவில் மகளின்
சம்மதத்துடன் இந்தத் திருமணத்தை நிறைவேற்ற வேண்டும் தவறின் நிலைமைகள் மாறினாலும் ஐயப்படுவதற்கில்லை .
அரசி :- என் மகளை நான் இன்றே சந்திக்கின்றேன். இதற்கு
விரைவிலேயே முடிவு எடுக்கவேண்டும்.
கூத்தன் - அவனின்றி அணுவும் அசையாது அனைத்தும் அவனது திட்டமே
நான் விரைவாக இதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுகிறேன் நான் சென்று வருகின்றேன்.
கூத்தர் வெளியேற மன்னனும் அரசியும் சிந்தனையில் ஆழ்ந்தபடியே வெளியேறுவர் அவ்வேளை அனைத்தையும் மறைந்து நின்று கேட்ட தோழி அவசரமாக ஓடிச்செல்வாள்)

Page 29
(தோழி பதட்டமாக ஓடி வருதல் அமராவதி அதிர்ச்சியுடன் வினாவுதல்)
தோழி 1
அமராவதி
தோழி 1
அமராவதி
தோழி 1
அமராவதி
தோழி 1
அமராவதி
- (வசனம்) அம்மா. அம்மா
தங்கள் காதலுக்கு ஆபத்து வந்துவிட்டது.
- என்ன உளறுகிறாய் . பதட்டப்படாமல் சொல் .
- அம்மா.தங்கள் அன்னையும்மன்னனும்கூத்தப்புலவரும் கூடி நின்று
உரைத்த வார்த்தைகள் என் செவியில் விழுந்ததம்மா.
என்ன வார்த்தைகள் சொல்
(மெட்டு :- "தார் தலத்தோர்
圆 圆 幽 盟 幽" தேவசகாயம் பக்.84)
- கார்குழலே தேவி - பகர்ந்திடு
வேனம்மா ஒர் சேதி
குலசேகர பாண்டியர்க்கே - உம்மை
மணம் செய்திட திட்டமிட்டார்
என்ன சொன்னாய் சேடி
- இதயத்தை
நோகவிட்டாய் போடி
கம்பரரும் மகனை விடுத்
மன்னனையும்
தொரு
மணவேன்
:- தந்தையுடன் தாயும் புலவராம்
கூத்தருமே கூடி ஒதிய சேதியை யே
உரைத்தனன் எந்தனருந்தேவி
எந்தனினொப்புதலே - இல்லா
மணம் செய்திடுவாரோடி செத்திடுவேனுடனே - என்சேடி
செப்பிடுவாயுடனே.
C32)
 

அமராவதி
அரசி
அமராவதி
அரசி
அமராவதி
அரசி
அரசி
(அரசி தேடிவருதல் . அமராபதி ஓடிச்செல்லல்)
(வசனம்) அம்மா . என்னவேலை செய்தீர்கள் என்ஒப்புதலே இல்லாமல் எனக்கு மணப்பொருத்தம் செய்தீர்களா.
மகளே . உன் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கவேண்டியவர்கள் நாங்கள் தானே . அதிலென்ன தவறு
அதில் தவறு இல்லையம்மா . எனக்குரியவரை நானேதெரிந்து கொள்ளும் உரிமையை நீங்கள் பறித்துவிடாதீர்கள்.
என்ன வார்த்தை சொன்னாய் மகளே.உன் விருப்பத் திற்கு மாறாக நாங்கள் செயற்படுவோமா.அப்படி உன்மனதில் நிலைத்த இளவரசன்யாரம்மா.
அமராவதி. என்ன வார்த்தை சொன்னாய்..?
(மெட்டு :- "ஆச்சிகனிவாச்சி."எஸ்தாக்கி பக்.68)
என்ன சொன்னாய் என்மகளே
எந்தன் நெஞ்சம் பதறுகுதே அம்மா
மன்னன் மகள் மான் விழியே
மாளிகையின் மரபை மீறலாமோ
ஐயிரண்டு மாதமென்னை உன்னுதரம்
சுமந் தவளே தாயே - எந்தன்
எண்ண மேயறிந் தவளே
அம்பிகா வதியை சேர செய்வாய்
(வசனம்) அமராவதி. நீசோழப்பேரரசின் ஒரேயொரு வாரிசு என்பதை மறந்து போகிறாய். உன்னை மணக்கும் தகுதி இன்னுமொரு இளவரசனுக்கு மட்டுமேயுள்ளது. என்பதை மறவாதே .
அம்பிகாபதிக்குஅரசு இல்லாது இருக்கலாம் . ஆனால் ஆணன் மகனுக்குரிய எல்லாத்தகுதியும் அவரிடந்தான் உண்டு.
C33)

Page 30
(மெட்டு :- "சொல்லரிய நீலகண்டா . "தேவசகாயம்பிள்ளை பக். 95)
அரசி :- மாளிகையின் மங்கை நீயும்
மாண்பு டைத்துனை இழந்து பாடு கவி தன்னையே
மணக்கலாமோ ஒது
அமராவதி - காதலுக்குப் பேதமுண்டோ
சாதலின்றி வாழ்வோருண்டோ ஆதரவை நீருந் தாரும்
அரசி - சாதியுண்டு பேதமுண்டு
மானிட ரறமும் உண்டு மீறிடுந் தவறதனை
நீ யுணருவாயே
அமராவதி - செங்குருதி எங்கணுமே
செந்நிறம் மறந்ததுண்டோ சாதி பேதம் மானிடப்
பிறப்பிலுண்டோ கூறு
அரசி - (வசனம்) அமராவதி.எப்போது இப்படிப் பேசக்கற்றுக் கொண்டாய்
(மெட்டு :- “போடா வாடா வொன்று." செனகப்பு)
வாய்க்கு வாய் காட்டினாய்
வாலைக் குமரியே போ
வாசல் தாண்டாமலே
போவாய் நீ உள்ளே
அமராவதி ;- என்ன வினை தன்னை
செய்தாலும் தாயே நான் கொண்ட கோலமதை
மாற்றிடேன் பாராய்
ga.)

அரசி : amo காதல் கண்டவுடன்
கோலங் கொண்டாயுன்னை கண்டாலுதைத்திடுவார்
தந்தையாருண்மை
அமராவதி ;- உதையு மடியும் பெற்று
உயிரை இழக்கிலுமே
மனதை இழந்து மட
மாதுவாய் ஆகேன்
(மெட்டு :- கவி)
- மாளிகை மரபு தன்னை மீறி நீயும் செல்வதாலே
நாழிகை இது முதலே வாயிலைக்கடக்கவேண்டாம் தோளிலே சுமந்த பிள்ளைபோலவே எண்ணிநின்றேன் இந்நாளிலே நீதி கூறித் தாழினை மீறினாயே.
முடியாது எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அரசி கோபத்துடன் வெளியேற திரை மூடுகிறது)
அம்பிகாபதி அமராவதியின் வருகையை எதிர்பார்த்து வாடுதல்
பின்னணியில் சபைக்கவி ஒலிக்கும்
சபைக் கவி நாழிகை கழிந்தமர மேழியர் மனை திரும்ப காரிகை கனிந்த முகங்காணாதுயிர் வருத்த காலிகை போல இருள் காவியே மனது கொல்ல காளையுங் காத்திருந்து கவியெழுதி கவலையுற்றான்
G35)

Page 31
(மெட்டு - “கச்சள மெத்துநெய் உருண்டுதிரண்டு.”அலங்காரரூபன்)
அம்பிகாபதி - தென்றலு மெந்தனை நகைத்துச் சிரிக்க கொன்றிடு சிந்தனை வதைத்து உருக்க
வாடிடச்செய்தாளே - தனிமையில் பாடிடச் செய்தாளே - பித்து பிடித்திடச் செய்தாளே - உளம் துடித்திடச் செய்தாளே
சந்திரனை யொத்த மஞ்சள் முகமவள்
இந்திரனை மாய்த்த கொவ்வை யழகவன்
காணக்கிடையாளோ - களி கூரக்கிடையாளோ - கூடி ஆடக்கிடையாளோ - உடன் கூடக்கிடையாளோ
தங்க நிறத்தவள் எந்தனுயிரவள்
அங்க மெல்லாம் ஒயில் தங்கு மொரு மயில் ஏக்கந்தணிப்பாளோ - உள்ளத் தாக்கமழிப்பாளோ - எந்தன் தூக்கந் தவிற்பாளோ - துயர் போக்கி யருள்வாளோ,
தன்னை மறந்து பாடியவாறு ஏட்டிலே பாடல் எழுதிய படி நின்ற அம்பிகாபதியை நோக்கி தோழி பதட்டத்துடன் ஓடிவருதல)
அம்பிகாபதி - தோழி. நீபதட்டத்துடன் வரும் காரணம்தான் என்னே. அமராவதி
எங்கே?
தோழி 1 - ஐயா. மன்னிக்க வேண்டும். அம்மா இங்கு வரமாட்டாள்.
அம்பிகாபதி - வரமாட்டாளா . ஏன்?

தோழி 1 :- காதலிக்காய் காத்திருக்கும் - கவியே
கன்னி வாராள் அறிகுவாயே காதலது தாய் அறிந்தாள் - கடுங்
காவலிலே வாடுறாளே .
அம்பிகாபதி : என்னவளை காணாமலே - எந்தன்
நாழிகை கழிந்திடுமோ
என்ன தடை வந்த போதும் - பெண்ணவளை
அங்கே காண்பேன்
தோழி 1 - ஐயா. தாங்கள் அனைவரும் அறிய அரண்மனை வருதல் இலகுவான
காரியமல்ல . அப்படி வருவதானால் நாங்கள் பூப்பறிக்கும் அந்தப்புரக்கோடியினால் . யாரும் அறியாமல் வரவேண்டும் .
அம்பிகாபதி - ஆகா. நீயே எனக்கு நல்ல ஆலோசனை தந்தாய் நான் இன்றே என்
அமராவதியை சந்திப்பேன் என்று சொல்.
தோழி 1 எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் .நான் சென்று வருகிறேன்.
தோழியும் அம்பிகாபதியும் அரங்கை விட்டுப்பிரிந்து செல்ல அம்பிகாபதியின் கவி ஒலை கீழே விழுகிறது அவ்விடத்தே வந்த குலசேகரன் அந்த ஒலையை எடுத்துப்படிக்கின்றான்
குலசேகரன் - ஆகா. இப்படியும் ஒரு நாடகம் நடக்கிறதா. நான் அடைய
r வேண்டிய அமராவதியை . அம்பிகாபதி அடைவதா. இவவு
காத்தகிளியாய் இளவரசன் நான் காத்திருக்க . ஏழைப்புலவன்
அவளை தட்டிச்செல்வதா. அவன் காதலில் உளறிய காவியவரிகள் போதும் இந்த ஒலையைக் கொண்டே அவன்கதையைமுடிக்கின்றேன்.

Page 32
கூத்தர்
குலசேகரன்
கூத்தர்
குலசேகரன் சினத்துடன் கூத்தரைத் தேடி வருதல்)
குலசேகரர. சினத்தால் உன்சின்ன விழிகள் சிவந்திருக்கின்றனவே என் காரணம் கூறு
மெட்டு - விருத்தம்
பேர்பெற்ற வேந்தர்கள் பார்த்துமே காத்திருக்க
பார் போற்றும் குலோத்துங்கன் கோமகளை
சீரற்றுச் சேவகமே செய்கின்ற பாவலனும்
சேயிளையை சேர்ந்திடவும் பார்த்திருந்து தோற்றிடவோ
நேரற்ற வழியிலவன் காதலித்தான் காமுற்றான்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என்னிடத்தில் மாட்டிவிட்டான்
காதகனின் காதலுக்கு சாட்சியிந்த ஒலை வரி
சேதியிதை அறிந்திடுவாய் செயல்வீரா.
என்ன சொன்னாய் . அரசிழங்குமரியை அம்பிகாபதிமனப்பதா. இதனை நான் அன்றே சந்தேகித்தேன்.எங்கே .அந்த ஒலையைக்
கல்வெட்டு
சேதியது செவியதிலே செந்தழலாய்ப் புகுந்துடலில்
தீமூட்டிச்சினம் பற்றியெரிகிறதே
கம்பனாம் வம்பனின் கவிமகனும்
காதலிக்கக் கோ மகளா கூறு
அமராபதியவளை அடைந்திடவே நீயிருக்க
அம்பிகாபதிக்கென்ன அதிகாரமவளுருவில்
கோமகளும் கவிமகனும் கூடுதலும் ஆகிடுமா.
 

சிந்து
பல்லவி கூத்தர் : - இப்படித் துணியலாகுமோ - குலம்மறந்து
இப்படித் துணியலாகுமோ .
இப்படித்துணிந்துடன் கவிபடித்துயர்வு பெற செப்படி வித்தையிட்டவள் நெஞ்சினைக் கவர்ந்துசெல்ல எப்படிப் பொறுத்தவனின் தப்பினைத் தொடரச்செய்வோம் இப்புவியிலேயவனும் செத்திடச்சதியே செய்வேன்
சரணம் குலசேகரன் - சித்திரத்தைப் போன்ற அந்த செந்தூரதிருமகளாள்
இத்தினத்திலேயவனை கைப்பிடித்துடனே வர
எப்படிப் பொறுத்திருப்பேனோ - தவறிதனை செய்திட யொத்தே யிருப்பேனோ - பார்பாரிந்த
பாட்டினாலவனையின்று மாட்டியே மடிந்து விட
போட்டியாகவே தொடுக்கும் போரிலே அழிந்தொழிய
கூத்தர் - சதியொன்று செய்வேனே - அதுவேயவன்
விதியொன்று முடியாதோ - இப்போநானும்
அரசசபையே சென்று அவனின் சதி யுரைத்து சிரசு தரையில் விழ பரிசது தான் கொடுப்பேன்
புத்தியில் வித்தகனிந்த கூத்தனை யெதிர்த்தவனும்
சித்திரத்துப் பாவையவளை யொத்தே மணம்புரிய
இத்தரையில் விடுவேனோ - அவனைநானும் இத்தினமே முடியேனோ - உனதுயிர்
சக்தியா மராபதியை மெத்தவும் மணம் புரிய
எத்தனைநாள் காத்திருந்தாய் இத்தருணமோடிவர
குலசேகரன் :- இதனை நான் விடுவேனா.இலவுகாத்த
கிளிபோல ஆவேனோ - புலவனவன்
பயந்தே பதறியோட பதராய்ப் பறந்துபோக
முறையாய் தொடுக்கும் போரில் முகமே இழந்து போவான்

Page 33
கூத்தள்
குலசேகரன்
கூத்தர்
(வசனம்)குலசேகரா. நீஎதற்கும் கவலை கொள்ளாதே இந்த ஒலையைக்
கொண்டே அம்பிகாபதி காதலுக்கு வேலை வைக்கிறேன்.நெடுநாளாக
காத்திருந்த எனக்கு . இன்று தான் நல்ல காரணம் கிடைத்திருக் രിസ്ത്ര. கம்பனையும் அவன் மகனையும் ஒரு
நான் சென்று வருகின்றேன். அமராபதியை என்னுடையவளாக்க வேண்டியது உங்களின் பொறுப்பு அதை மறந்து விடாதீர்கள். கவலையைவிடு காரிகை உனக்கேயாவாள்
(அம்பிகாபதி கம்பர் சந்திப்பு)
திரைவிலக துயர் தோய்ந்த முகத்துடன் அம்பிகாபதி இல்லத்தில்
கம்பன்
அம்பிகாபதி :
கம்பன்
அம்பிகாபதி :
கம்பன்
வீற்றிருத்தல்,கம்பர் அவனை நாடிச் செல்லுதல் 1
(வசனம்)மகனே.அம்பிகாபதி உன்னுடைய மகிழ்ச்சி பொங்கும் வதனத்தில் இருநாட்களாக துயரங்குடிகொண்டிருப்பதன் காரணம் தான் என்ன. நீ என்றும் இப்படி இருந்த தில்லையே.
தந்தையே.முதலில் என்னை மன்னத்து விடுங்கள் சிறுவயதில் இருந்தே எந்தச் செயலையும் தங்கள் அனுமதியுடன் செய்யும் நான். தங்களிடம்
கூறாது ஒரு தவறைச் செய்து விட்டேன்.
தவறா. என்மகன் அம்பிகாபதியும் தவறு செய்வானா .கலங்காமல்
சொல் மகனே. அதை நான் அறிய வேண்டாமா. அது. வந்து . நான் சில நாட்களாக ஒரு பெண்ணை. (தயங்குதல்)
 
 

அம்பிகாபதி - அவள் வேறுயாருமில்லை . மன்னன் மகள்அமராவதி.
கம்பன் :- அமராவதி!!. என்னவார்த்தை சொன்னாயப்பா. மலைக்கும் மடுவுக்கும் பொருத்தமுண்டாகுமா. மாண்புமிகு இளவரசி இந்த ஏழைப் புலவனின் வீட்டுக்கு வரமுடியுமா. தகுதிஅறியாது மணம்வைத்து விட்டாயோ. அவளை மறந்துவிடு.மகனே
அம்பிகாபதி - தந்தையே. என்னை இறந்து விடு என்று கூறுங்கள் அதில் மகிழ்ச்சியடைவேன். அவளை மறந்துவிடு என்று மட்டும் கூறாதீர்கள். .
கொச்சகம்
கம்பன் - எந்தனருமகனே இந்தமொழி என் செவியில் நீதரவோ
நிந்தையது வந்திடுமே சிந்தையது மாற்றிடுவாய் என்திருவே மன்னவன் மாளிகையும் காவலனின் சிறு பூங்குடிலும் சேர்ந்திடுமோ செகமதிலே சோதனையை நீவிடுப்பாய் சோதியனே
5(b (மெட்டு :- “கண்ணாரும் வெண்நகையும்.”தேவசகாயம் பக106)
மாடத்தினருள் ஒளியை - ஏழை
பாடத்தவர் நாமும் அடையலாமோ
நாடாத் துயரமதை நாமே
நாடிடல் கூடிடுமே என் மகனே
அம்பிகாபதி ;- பூலோகம் மீதினிலே - வந்த
மானிடரில் வேறு பாடு உண்டோ
காதலது வந்துவிட்டால் வேறு
காரணங்களேதும் மேவிடுமா
கம்பன் - (வசனம்) ஐயோ.என்மகனே உன்னுடைய உறுதி என்னைநிலைகுலையச்
செய்யுதடா.நின்பாட்டினால் இந்த உலகையே வெல்லுவாய் என்று
கனவு கண்டு கொண்டிருந்த என்மனதில்சஞ்சலம் தோன்றி
விட்டதடா.

Page 34
- இன்னிசை கம்பன் - நிந்தையிலா எந்தன் மகா வாகை நிறை வாழ்விழந்து
வெந்த ழுது வாழ்வழிந்து வாள்முனையில் மாண்டுவிட
Ֆ(U5 ("சாகாவரம் பெற்றோர் ." தேவசகாயம்.பக் . 124)
வேண்டாம் மகனே இப்பொல்லாக்காதலை விட்டிடாய் - அன்றேல் மாண்டுமே மடிந்துயிர் போக்கியுன்னை நீயும் மாய்க்கவோ
அம்பிகாபதி - காதலுக்காயுயிர் ஈந்தவர் ஆயிரந்தந்தாய் - இந்தக்
கம்பனருமகன் காவியம் ஆகுவான் எந்தாய்
(வசனம்) தந்தையே . தங்கள் மகன் மன்னனாய் பிறக்கவில்லையே தவிர. வேறு எந்தக்குறையுமில்லாதவன். ஏழைபணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன். அரசன் அடிமை என்று இந்த மானிடன் போட்ட வேலிகளை உடைக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் காதல்தான் தந்தையே . தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்.
கம்பன் - மகனே. அம்பிகாபதி
அம்பிகாபதி வேகமாக வெளியேறுதல்
(அம்பிகாபதியும் அமராபதியும் இரகசியமாக அந்தப்புரத்தில் சந்தித்தல்)
அமராவதி - (வசனம்) வந்து விட்டீர்களா. உங்களைக்காணாமல் நான்
அடைந்த வேதனைக்கு எல்லையே இல்லை.
அம்பிகாபதி - அன்பே . அழியாத காதலின்சுடர் எந்த திக்கிலும் ஒளிவீசும் ஆழ்கடலில்
கொண்டு சென்று மறைத்தாலும் அன்பெனும் காதல் அங்கும் சுடர்விடும் உன்விழிகளில் நீர் எதற்கு . ஏன் கலங்குகின்றாய் . வாழ்ந்தால் நாம் ஒன்றாக வாழ்வோம் மடிந்தாலும் ஒன்றாக மடிவோம்.
 

அமராவதி - ஆமாம் சரியாகச் சொன்னீர்கள். அழியாத தெய்வீகக்காதல்
நம்முடையது. அண்ட வெளிகளில் எங்கள் ஆன்மாக்கள் செய்யும் காதவை யார்தான்தடுத்துவிடமுடியும்.
(மெட்டு :- "விட்டுப்பிரியாதே.*.தேவசகாய பக்.34)
பல்லவி முத்து நவரத்தினமே - எனதுயிர் சொத்தே சுடரொளியே
சரணம் அமராவதி - சொத்தென்ன சுகமென்ன நித்திய வாழ்வென்ன
இத்தினமே உயிர் செத்திடில் தானென்ன இரத்தினமேயுன்னை இத்தரை மீதிலே
நத்தினேன் என்னுயிர் உன்னுடனேகுமே
அம்பிகாபதி :
ஆதவனை அடைத்தே மதில் போடினும்
ஆய வெளிதனை யார் மறைத்தேகுவார்
ஆழியிலேயெமைக் கொண்டு மறைத்தாலும்
தூளியிலே எங்கள் காதல் தளிர்க்குமே
அம்பிகாபதி :
அமராவதி :- காலமதே கடந்தேகியே போயினும்
ஞாலமதில் வேறுபாடுகள் காட்டினும் ஈருடலோருயிரான எம் காதலே
இவ்வுலகோர் பிரிக்காதிடாக் காதலே
(இவ்வேளை திடீரென மன்னர் சமூகம் கூத்தருடன் அந்தப்புரத்தில் நுளைதல்)
கூத்தர் - பார்த்தீர்களா. மன்னா.யாரும் நளையாத அந்தப் புரத்திலே
நளைந்து இளவரசியை மயக்கும் தங்கள் இளங்கவிஞனை. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் இவனைகையும் மெய்யுமாகப் பிடித்த பின்னும் . மெளனம் ஏன்.

Page 35
கழிநெடில் சிந்து
மன்னன் : - அண்டமிடியுண்டதோ
கண்டமுடையுண்டதோ மண்டலமுருண்டோடியதோ மன்னனென் மாடத்தில் மாற்றான் நுளையவோ மங்கையுடல் பற்றியாளவோ புண்ணுடை நெஞ்சினாய் புல்லனைப் போன்றவா புரவலன் வீட்டிலா பெண் கொள்ள வந்தாய் புலவனோ நீயும் பொறையிதோ கூறுனை பொடிப் பொடியாக்குவேன்
(மெட்டு :- "கூனற்றவளைசங்கு." தேவசகாயம் பக். 30)
கொண்ட குலம் மறந்து மன்னனென நினைத்து
உண்ட வீடதனிற்கு ரெண்டகம் நீ செய்து
அண்டு நன்மை மறந்து முண்டும்நினைவு கொண்டு
பெண்டாள வந்தாயோ கம்பன் மகனே நீயும்
மனதார மாறாத மாதாம் மகளவளை நீயும்
உனதாரமாக்கிடலாமென்று வந்தாயோ.
கம்பன் - தீமையதை மறந்து தூய்மையதாய் இவர் (கள்)
தாபமோடு காதல் கொண்டார் சிறியவர் (கள்) தானை பொருதிய வீரப்பிரபாகனே
கோபமதையொழித்தே சாந்தியடைகுவீரே இது இந்த புவி தந்த மொழி எந்தன் தேர்வேந்தே
நாம் ஈந்த மகள் செய்த பிழை நொந்தேன் பொறுதியே

(மெட்டு :- "ஆழிப்பார். “தேவசகாயம் பக்.73)
மன்னன் - பாசத்தால் உன் மகன் ஊறதை
நீசத்தால் நியாயமதாக்கினீர் வேசத்தால் என் மகள் தூய்மையை
நாசத்தாலழித்திட வோதினாய்
அமராவதி :- கோபத்தால் வெந்திடும் தந்தையே
மோகத்தால் வந்தவரல்லர் நாம் வாதத்தில் நிந்தனை வேண்டாம்
பாவத்தில் என் பங்கு னிடே
மன்னன் - (வசனம்) அமராபதி. மூடுவாயை.
(மெட்டு :- "சொல்லரிய நீல கண்டா. தேவசகாயம் பக்.95)
மன்னன் is என்னுடைய பெண்மகளா
மன்னனுடை மான் மகளா
மானமதை நீ இழந்தாய்
ஓடி மறை வாயே
மந்திரி :- வெஞ்சினந் தணிந்திடுக
வேந்தனே பொறுதி தங்க உந்தனின் மகளவளே
நிந்தனை செய்யாதே
கம்பன் - (வசனம்) மன்னவா பொறுத்தருள்க. தங்களின் கோபம் நியாயமானது
தான்.ஆனால்.காதல் என்பது சாதிகுலம், கோத்திரம் அறிந்து வருவதில்லை. இரண்டு ஆத்மாக்களின் அன்புறவின் வெளிப்பாடே
கூத்தர் :- கம்பரே. என்ன வார்த்தை கூடறுகின்றீர் நாடாளும்
மன்னனும் பாவாளும் நாமும் சமமென்று வாதிடப்போகின்றீரா?
மந்திரி - அமைதி. தயவு செய்து வார்த்தைகளை அவதானமாக
வெளிவிடுங்கள்.இது ஒன்றும் உலகத்தில் நடக்காத

Page 36
மன்னன்
கூத்தர்
மந்திரி ma கூத்தர் tour
மந்திரியாரே.எமது மாட்சிமைமிகு ஆட்சியில் புவவர்களை மதித்துப்போற்றிடும் என் புண்ணிய குணத்திற்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது.சகவதும் அறிந்த தவத்தவர்களே இப்படி உண்டவீட்டிற்குஇரண்டகம்செய்வார்களென்றால்.சாதாரணமக்கள்.
0മീ. பொறுதி. அம்பிகாபதிசெய்தது மிகப்பெருந்தவறு. அதில்மாற்றுக்கருத்திற்கிடமில்லை .அவனுடைய செயலைத்தீர்ப்பிடும் பணியை கலைமகளுக்கே கொடுத்து விடுவோம்.
கூத்தரே.என்ன.குழப்புகின்றீா. குழம்பவில்லை கூறுகிறேன்.
(மெட்டு :- "தார்தலத்தோர் போற்றும் ." தேவசகாயம் பக். 34)
கூத்தர் ma
அம்பிகாபதி ;-
கம்பன் ; sm
அம்பிகாபதி ;-
சாலப் பெருங்கவியே சாற்றிடாய் பாவிலே போர் பொருத பேரின்பப் பொருளே கொண்டு
நூறுபாடல் ஒதிடச் சம்மதமா.
நீசப் புலவா கேளு - காதலதை சோதிக்க வா புகுந்தாய் மோசமெது வரினும் நூறுபாக்கள்
ஓதிட நான் துணிந்தேன்
R
(வசனம்)கூத்தரே இது என்ன விபரீத விளையாட்டு
நீதி உடைத்தவனா - கலைமகள்
தீர்ப்பதனைத் தருவாள்
ஓதி நிரூபணஞ் செய் உன்
ஆற்றலை உலக முணர்ந்திடவே
நஞ்சு நிறைந்தவனே - உந்தனது
நெஞ்சமெல்லாஞ் சதியே
மிஞ்சு கவியினாலே எந்தனிறை ஆசி உரைத்திடுவேன்

சந்தத் தாழிசை
மன்னன் :- உண்டவீடதற்கு நீயும் ரெண்டகம் புரிந்தவன்
பண்டையப்புலவரின் பெருமையை அழித்தவன் கண்டதுண்டமாகவுந்தன் கட்டுடல் தறித்துமே மண்டலஞ்சிரிக்கவுன்னை மாளவே யழிப்பனே மேன்மைகொள் புலவரின் மரபிலே தரித்ததால் பாவிலே பொருதியுந்தன் தூய்மையை துணிந்திடு காதலோடு கூடு பாக்களேது மோதிடாமலே
நூறு பாக்களோதியுந்தன் நீதி காத்து நீங்கிடுவாய்.
(வசனம்)அம்பிகாபதிகண்டதும் உன்னை கொன்றிடும் கோபமே மேலோங்கி நின்றாலும் உன் தந்தையை நான்மதிக்கிறேன்.உன்கவிப் பெருமையை நான் மதிக்கிறேன் அதற்காக நூறு பாடல்களை பேரின்பப்பொருளில் பாடி உன் தூய்மையை நிரூபித்துவிடு . கலைமகளே உனக்கு நீதி வழங்கட்டும். அடுத்த சுபவேளையில் உன்னுடைய வாழ்வை நிர்ணயிக்கும் போட்டி நடைபெறும் அதுவரை நீ சிறையிலே இருக்க வேண்டும் இப்போட்டியில் நீ தோற்றால் உடனடியாகஉனக்குமரணதண்டனை' இது சோழமனனஉத்தரவு கம்பன் :: - „loajazylif ......?
மன்னன் வேகமாக வெளியேறுதல் ஏனையோர் பதட்டங்களுடன் வெவ்வேறு திசைகள் செல்லுதல்)
கூத்தரும்,குலசேகரனும் சதிபலித்த மகிழ்வில் ஆடிப்பாடுதல்)
(மெட்டு :- "ஓடுதுபாராய்." எஸ்தாக்கி.பக்,83)
பல்லவி மாட்டிக் கொண்டானே - அம்பிகாபதி மாட்டிக் கொண்டானே
சரணம் கூத்தர் un மாட்டிக் கொண்டானெந்தன் மாயவலையிலே
பாட்டில் நூறுபாட ஒத்துக் கொண்டானவன் ஏட்டிலே எழுதாது என்னென்று ஒரு நூறு
பாக்களைப் பாடிட போகிறான் பார்க்கிறேன்
G7)

Page 37
குலசேகரன் :- பாட்டிலே தோற்பவன் காதலை போக்குவான்
காட்டிலே உயிர்போக மாட்டியே விடுவோமே சூட்டிய புகளெல்லாம் பாட்டிலே வீழவே
மாட்டிவிட்டானவன் மாண்டிடுவானினி
கூத்தர் : = கவியால் கனமே கொண்ட கம்பனும் மாழுவான்
கன்றாம் மகனுயிருஞ் சாகவே காணுவான் மன்னன் அரசசபையில் நானே சபைக்கவி
கூத்தனென் புகழினி காத்திலே பரவுமே
குலசேகரன் :- அம்பிகாபதியவன் மாண்டு மடிந்து விட
அமராவதியவளை மாலையிடுவேனே சிம்மாசன மதில் இன்பமாய் ஏறியே
செஞ்சுடரோன் போல செய்திடுவேனாட்சி
(வசனம்)ஆகா.புலவர் பெருமானே தந்திரத்திலே தங்களை
மிஞ்சுவதற்கு யாருமில்லை.அருமையான திட்டத்தை எளிமையாக போட்டுவிட்டீர்கள்.
கூத்தா :- குலசேகரா. எது நடக்குமோ.அது நடந்ததே தீரும்.
இனிமேல் நடப்பதைப்பார்.
கோரமாக சிரித்தபடி அரங்கை விட்டு வெளியேறுவர்)
திரை விலக அத்தானி மண்டபத்தில் மன்னன் அரியணையிலும் ஏனைய புலவர்கள் பக்கங்களிலும் அமர்ந்திருப்பர். அம்பிகாபதி பாடல்ப் போட்டிக்குத்தயாராக அமர்ந்திருப்பான் இளவரசியும் தோழிகளும் பிறிதொரு மண்டபத்தே போட்டியைப் பார்த்தபடிநிற்பர்.1 (சத்ததம் ) மன்னன - சோழப் பெருஞ்சபை மீதினிலே யொரு
சாபம் விழுந்தது போல் சாலச் சிறந்திடு பாவிலுயர்ந்தவர்
மேலைச் சபையிதிலே. பாவம் புரிந்திட்ட பாதகனாமிவன்
பாவிலே போட்டியிடடே.
 

பூவை அடைவதோ சாவினை ஆள்வதோ
சாற்றிடும் சபைதனிலே.
காதற் சுவையின்றி ஞானச்சுவைமிகு
பாடல்கள் நூறினையே
ஒதற்குரிய கடனதை மீறினால்
சாவை அடைகுவனே.
கூத்தர் - (வசனம்) மீண்டும் மீண்டும் விதிகள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அம்பிகாபதி பேரின்பப் பொருளில் நூறு பாடல்கள் பாடவேண்டும் . பாடினால் மன்னன் மகளையே மணந்திடும் பேறைப்
பெறுவான் மீறினால் சிரம்தரையில் தனியே விழ கொல்லப்படுவான் போட்டியை .ஆரம்பிக்கலாம்.
(அம்பிகாபதி பாடத்தொடங்குதல்
LJ Godf
அம்பிகாபதி - பூவிலுறை தேவியே யென் தாயே வாராய்
நாவிலுறைந் தோது கவி நூறெழுத.
வாவேனம்மா வந்தருளே தந்திடுவாய்
பாவிலுனை நான் தொழுவேன் வரந்தாராய்
அமராவதி - ஆகா! அற்புதமாக முதற்பாடல் பாடிவிட்டார். தோழி. பாடல்
ஒன்று . இந்தப்பூக்களால் எண்ணிக்கையை . நீகவனித்துக்கொள் நூறுபாடல் முடிந்ததும் . என்மன்னவனை தேடி நான் மாடத்தில் நளைவேன்.
கூத்தர் - (வசனம்) அம்பிகாபதி.இது கணக்கிலே சேராது.காரணம்
காப்பு. இனிமேல்த்தான் போட்டி ஆரம்பி.
(மெட்டு :- "மிகவும் இரக்கமுள்ள.." செனகப்பு)
அம்பிகாபதி - வெள்ளைக்கமல வாணி தாயே அம்மா
பிள்ளை யுன்னை அழைத்தேன் வாராய் தாயே நிந்தையே செய் பூவுலகில் உந்தனையே பாட எந்தையை ஆள்பவளே தாயே வரந்தாருமே

Page 38
அமராவதி
அம்பிகாபதி :
கூத்தர்
அம்பிகாபதி :
அமராவதி
அம்பிகாபதி :
அமராவதி
தோழி 1
அமராவதி
(வசனம்) தோழியூவைப் போட்டாயா. இருபது பாடல்கள் நிறைவு பெற்று விட்டன.
(மெட்டு : “யோபு ஞானியே."யோபு)
முந்தை வினாயகா எந்தையானவா
வந்திடுவாயையா இந்த அரங்கிலே
ஆனை முகத்தவா அரனை அழித்தவா
பரனைத் துதித்திட பாவாயெனில் வாராய்
(வசனம்) ஐம்பது பாடல்கள் தானேமுடிந்துள்ளது.பொறுத் திருந்துபார்ப்போம்.
(மெட்டு :- குறம் ) ஆறு முகா ஏறுமயில் ஏறிவிளையாடி - இப்போ
ஓடி வாராய் உன் குழந்தை பாடுகிறேன் வாராய் சூரனையே போரதிலே மோதியவா முருகா - இன்று
வள்ளி தெய்வானையுடனே வந்தருள்வாய் குமரா
பாடல்கள். இன்னமும் இருபது பாடல்கள்
பாடவேண்டும். கலைவாணியே நீதான் அருள் கொடுக்க வேண்டும்.
(மெட்டு :- "ஆகமமாய்." தேவசகாயம் பிள்ளை பக்.42)
ஆதியுமாய் ஓ மென்னும் நாமமுமாய்
ஜோதியாய் - உலகிருள் அழித்தவா ஆடும் சிவா - அம்பலமே ஆளும் முகா
பாடுமெனையே பாராய் பரனே
எத்தனை. பாடல்கள் .?
இனி நூறாவது பாடலம்மா.
பாடல் நிறைவுற நான் அரங்கு செல்ல வேண்டும்.

(மெட்டு :- "செப்பரிய பூவில்வருகென்ன.." தேவசகாயம் பக்.44)
அம்பிகாபதி - மூசுகடல் மீதுறங்கும் கண்ணா - இப்போ
மாசுநிறை பூவுலகம் மீதே ஆசு கவி நூறு ஓதி நானே - இப்போ
நாவரண்டு பாடுகிறேன் வாராய்.
அமராவதி வேகமாக ஓடி வந்து சபையில் நுளைதல்)
அமராவதி - (வசனம்) அன்பரே நூறு பாடல்கள் நிறைவு பெற்று விட்டன தாங்கள்
வென்று விட்டீர்கள்.
அமராவதியின் குரலைக்கேட்டதும் அம்பிகாபதி சிற்றின்பப்பாடலைப்பாடுகிறான்) (மெட்டு :- "மதுரக்கிளியே. "அலங்காரரூபன்)
அம்பிகாபதி - அழகினொளியே எந்தன் மயிலே
அன்பின் உயிரே - இந்த சபையில் வந்தாடுவாயென் கிளியே
அமரா பதியே எந்தன் எழிலே - உந்தன் வதனங்கண்டயர்ந்தேனே நிலவே
இதழின் அழகோ கொவ்வைப் பழமோ
செம்மை நிறமோ - உந்தன் கூந்தல் அழகோ கங்கா நதியோ
கொங்கை அழகோ வரை முகடோ கைகளிரண்டும் வாளை மடலோ
கண்களிரண்டும் கயல் மீனோ
மயல் தானோ - உந்தன் கன்னஞ் சிவந்த நிறச் சிமிழோ
அன்ன நடை கண்டயர்ந்தேனே - உன்னை கண்டதால் என்னை இழந்தேனே
கூத்தர் - அம்பிகாபதி. நிறுத்து. தொண்ணூற்றொன்பது பேரின்பப்
பாடலையும் எண்ணிக்கையில் சேர்த்துவிட்டாள்.
C5)

Page 39
மன்னன்
அரசன் to
(அமராவதி அழுதபடி ஓடிச்சென்று மறைதல்)
கல்வெட்டு - கண்டபடி ஒதுகவி என்சபையிலோதியே
நின்றபடி காதலதைபாடியே மாட்டினாய் சொன்னபடி நூறுகவி பாடிடு முன்னமே
சின்ன மனக் கோலமதை பாடியே தீர்த்தனை பாடு பொருள் மாறியே நெறிதவறி நீயுமே
கேடு தரு காதலை நாடியுனை காட்டினாய் பேடு அவளைக் கண்டவுடன் பாடலையே மாற்றினாய்
பாருடனே வாளினால் கூறுதறியாக்குவேன்
சிந்து காதலுக்காய் கவியை விற்றாயே - கணம் மறந்து சாதலுக்காய் பொருளை விட்டாயே
கம்பரின் அருமகனாய் உம்பரின் புகளேயோதும் நம்பிடும் புலவனென்று மன்றிலேயெண்ணியிருக்க வெம்பிடும் பழம் போலவே வேறு திக்கு மாறி நீயும் தப்பிலிப்பதரைப் போல இப்படி நெறி பிறழ்ந்தாய்
காதலுக்காய்.
உண்ட வீடெனக்கு நீயும் ரெண்டகம்புரிந்தழிந்து பெண்ணவளை கண்டு குல மென்பதனையே மறந்து காதலில் விழுந்தாயோ - கோவாமெனது ஆதரவை இழந்தாயே இப்போ உன்னை
கண்டதுண்டமாக வெட்டி
முண்டமாய் உடல் கிடக்க
கொண்ட கோபமே தணிக்க
கண்டவர் கலங்கியோட
காதலுக்காய். (வசனம்) மதிமிகுந்த சபையோரே.சோழமண்ணின் சொத்துக்களே நீதியற்றமுறையில் குலோத்துங்கன் நடந்துகொண்டான் என்ற பெரும் பழியை விரும்பாமலே இந்தப் போட்டியை ஏற்பாடு செய் தேன் அவன் போட்டியில் தோற்றான். அவன் தவறை கவைமகளே உணர்த்தவரிட்டாள்.இனமேல் காருண்யத் தற்கரிடமில்லை. நான் கூறியபடியே தண்டனை அளித்துவிடுகிறேன்.
○

கம்பர்
மன்னன்.
கம்பன்
மன்னன்
கலைமகளே தீர்பளித்தாள். தொண்ணுாற்றொன்பது பாடல் களைப் பேரின்பப்பொருளில் பாடியவனால் ஏன் ஒரு பாடல் பாட முடியாது போனது.
கூத்தரே.நீரும் புலவரல்லவா கவியின் ஊற்றைக்கண்ட வரல்லவா.நீர் இப்படிக்கூறலாமா.இப்படியொரு போட்டி நடத்தப்படலாமா. மேன்மை மிக்க சோழப்பெருஞ்சபை சின்னஞ்சிறுசுகளின் காதலை அரசியல் நீதியாக்கி சாவுக்குத் தீர்ப்பளிப்பது நீதியா. சொல்லுங்கள்.சங்க காலம் முதல் நாம் போற்றி வந்த காதலொழுக்கத்திற்கு நாங்கள் களங்கம் கற்பிக்கப் போகிறோமா. சொல்லுங்கள் மன்னா. மேன்மை மிக்க தமிழப்பணிகளையாற்றினான் குலோத்துங்கன் என்ற பெரும்பெயரைப் பெற்ற நீங்கள் இப்படி அற்பத்தனமாக நடந்து ஒரு இளங் கவிஞனைச்சாவுகொள்ளச் செய்யலாமா.
நாளை வரலாறு உம்மைப் பழிக்காதா.
(மெட்டு :- “ஆலநிறைத்துளதொரு .”.விஜயமனோகரன பக் 41)
நீதி உரைத்தொரு வாத மெடுத்திட
அத்தனை தத்துவ முற்றது வாமோ
நாதி யழித்திடு வித்தக னுன் சுதன்
சத்திய வானென ஒப்புதலாமோ
காதலதே பிழை காரிய மென் றொரு
காரண மெங்கணுங் கூறியதாமோ
சாதலதை விட வேறொரு தண்டனை
பூதலம் மீதினிலே கிடையாதோ !
கொற்றவனென்னரு பொற் கொடி மீதினில்
உற்கட முற்றவன் எப்படியாவான்
நற்றமிழோதிடு நல்லவனென்றுமை
இத்தரை நம்பிய தென் தவறாமே
G53)

Page 40
கம்பன்
மன்னன்
பாதகமே புரிகாதல தாயினும்
பாதி பிழை அமராவதியே யாம்
சாதகமாய் விதி மாற்றுதலானது
நீதி பிழைத்திடு மோர் முறையேயாம்
(வசனம்) போதும் புலவரே. புண்ணுடைய நெஞ்சுடையவர் தான் நீரும் என்றுகாட்டி விட்டீர்.குலோத்துங்கன் கட்டளையை மீளப் பெறுவதில்லை. மந்திரியாரே.நாளை சூரிய உதயத்தில் அம்பிகாபதி செய்த குற்றத்திற்காய் சிரச்சேதம் செய்யப்படும்.
ஐயோ.மன்னா.இது அநியாயம்.
மன்னனி வேகமாக வெளியேற அரச பிரதானிகளும் சோகமாக வெளி
சேவகள்கள் அம்பிகாபதியை இழுத்துச் செல்வர் கம்பர் துயரத்துடன்பாடுவா
யேறுவர்.
கம்பன்
கொச்சகம்
பெருந்தவமே புரிந்துனையே ஈன்றெடுத்தோம் - என்மகனே பருந்துலகமுனைப்பிரிய சதிபுனைந் தெழுந்ததுவே - என் சுதனே உருழுலகே வான் நிலவே வயல் நிலமே - என் மகனை உயிரோடே வாழுதற்கு வழி செய்வீரே - வரமிரந்தேன்
(மெட்டு :- "சொன்னபாற்பதயுரம .” தேவசகாயம் பக்.69 )
என் மகனே ஆருயிரே நிர்மல சூரியனே சுதனே
நின்னையுலகிது மூடி அழித்திட வந்ததுவே மகனே
வசனகவி
மன்னவனும் நீயோ வள நாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் காதலை ஏற்காக் காதகனானாய் சாதலைத் தந்திட்ட பாதகனானாய் நீ

(மெட்டு - "மாகொடும்பாவி ஐயோ..”கோவலன் கண்ணகி.)
காதலையே யறியா பொல்லா காதகனே மன்னா
பாலனையே கொல்லும் காவலனே அழிவாய்
பெத்தமனமறியா பொல்லா தப்பிதமே செய்தாய்
உத்தமனென்றிருந்தேன் நீயோ சத்துரு வாகி னாயே .
கம்பர் புலம்பியவாறு வெளியேறுதல்
மழுவர் வரவு
(மெட்டு :- "சுற்றாத தேசமெல்லாம்." தேவசகாயம் பக். 70)
மழுவன்! - வெட்டரிவாளோடு வேகங்கொண்டு நாமும்
சட்டென நடந்தரச சபை நாடிச் செல்வோம் சண்டை யென்றால் மூடர் கண்டவர்க்கோ வீரர் கொல்லுந் தொழில் செய்து வரும் சூரதீரர் நாமே
மழுவன் 2 - மன்னரிட்ட கட்டளை மண்டியிட்டுச் செய்துமே
சொன்ன தொழில் செய்யும் விண்ணர் என்ற பெயருள்ளவர் எட்டி வாடா தோழா ஏனோ மன்னனழைத்தான் தப்பிதஞ் செய்தவனை நாம் தண்டிப்போமே வாடா
மழுவன்1 - (வசனம்)அண்ணே நடந்துகொண்டே நான் செய்த வீரதீரச்
செயல்களைச் சொல்லுகிறேன் கேளும்
கள்ளனன்று வந்தான் கூரையைப்பிரித்தான் கண்டுங்காணாதவன் போல கண்ணை மூடிக்கிடந்தேன் காவுகொண்டு போனான் போனபின்னர் நானே வெட்டரிவாள் தூக்கி வீர கர்ஜனை செய்தேனே
○

Page 41
மழுவன்?
(வசனம்) அட இது தானா.நான் சொல்லுகிறேன். கேளு.
பத்தினியை ஒருவன் பற்றியே தான் இழுத்தான் பார்த்துமே பார்க்காதவன் போல ஒடி மறைந்தேனே என்னவள் விட்டறையில் அன்னவனோ மறைந்தான் போன பின்னர் ஓடி வந்து வீர சபதஞ் செய்தேன்
(வசனம்) மாளிகை வாயிலுக்கு வந்து விட்டோம் விரைவாக
வாமன்னரிடஞ் செல்லுவோம்.
மழுவர் இருவரும் அம்பிகாபதியை கொலைக்களத்திற்கு இழுத்து வருதல்
LAQgshift 1
மழுவர் 2
பின்னணியில் சபைக்கவி இசைக்கப்படும்
சபைக்கவி கொன்றிடு தொழிலே செய்யுங்
கொலுவோர் சபையது ஏகி கன்றவன் அம்பிகா பதியை
களமது கொண்டு சென்றே கூற்றுவ ரெனவே அவர்தம்
சிரமதைக் கொய்ய வென்றே கொற்றவன் கட்ட ளைக்கே
கொண்டுமே வந்துற்றாரே
(மெட் டு:- "என்னடா.எந்தனின்."ஏகலைவன்)
சொல்லுங் கட்டளைகள் மீறிடாமலே
கொல்லுந் தொழிலையே செய்பவர் நாமே
அல்லலுந் தொல்லையும் அடியோர்க்கு வேண்டாம்
கொல்லையில் தீட்டிய கொடுவாளை கொண்டா
அண்ணனே ஐயனே கொஞ்சம் பொறுப்பாய்
சின்னஞ்சிறுசுகள் காதலைக் கொல்ல
நெஞ்சிலே கொஞ்சமாய் வாஞ்சையும் வந்து
கையைத் தடுக்குதே என்னண்ணே செய்வேன்
G56)

மழுவன் 1.
அம்பிகாபதி :
அம்பிகாபதி :
மழுவன் 2
மழுவன் 1.
மழுவன் 2
மழுவன் 1
(வசனம்) கவிஞனே மன்னன் இட்ட கட்டளையை மாசில்லாமல் செய்துமுடிப்பவர் நாங்கள்.இன்றய சூரிய உதயத்திற்கு முன் உன் சிரம் கொய்ய வேண்டுமென்பது அரசன் கட்டளை. உனது இறுதி வேண்டுதலை செய்வாயாக.
(மெட்டு - பரணி ) கொஞ்சுமொழி பஞ்சுமணப் பூரணமே
நெஞ்சிலுனை கொண்டுயிரே போக்குவேனே. நஞ்சுநிறை இவ்வுலகில் மிஞ்சிடுமா காதலதே
மூச்சாய் உறைந்திட்ட என்னவளே விடையே தாராய்
பரணித்தரு
எந்தன் - மயிலே யுனைப் பிரிந்தே
ஏகுறேனே எந்தன் ஆரணங்காளே
அருமணியே வெண்புறாவே - நின்னை
விட்டுடலே செத்திடினும் சித்தமே
உன்னுடனே அமரா பதியாளே
காதலதே அழியாத காவியமே
சரி உன்னுடைய நேரம் முடிந்து விட்டது எம்முடன் உடனடியாக ஏகுவாயாக..
(மெட் டு: “என்னடா.எந்தனின்.'ஏகலைவன்)
ஐயனார் பாடிய பாடலுங் காதல்
அவர் சாவு வந்ததன் காரணங் காதல்
குறிநேரம் வந்ததே கொடுவாளைக் கொண்டா
கொன்றிடுவோம் விரைவாகவே நாமே
காதலுக்காயுயிர் கவர்ந்திடத்தானே
கைகாலெல்லாந் தவஞ் செய்யுதே யண்ணே என்னாலே ஏலாது என் நெஞ்சமொவ்வாது
அண்ணனே நீதானே கொன்றிடுவாயே.. (வசனம்)எங்களுடைய கடமையை நாங்கள் செய்ய வேண்டும்.இப்படிவருவாயாக.
G57)

Page 42
(அம்பிகாபதியை சிரச்சேதம் செய்தல் அமராபதி அழுதபடி ஓடிவருதல் )
அமராவதி ;-
அமராவதி -
60)
ஐயோ. என் நாயகனே. உன்னைக் கொன்றே விட்டார்களா. நீஎன்னைப்பிரிந்து சென்று விட்டாயா. ஐயகோ. கொதிக்கும் அன்பின் சுவையறியாசூழலே.
அரசே.நீயே கூற்றுவனாகினாயே .
(மெட்டு :- ஒரிசம்)
எழிலுற்றவா கவி பெற்றவா கருணைநிறை மனமுற்றவா மரணத்திலா மனமொத்து நாம் மணம் பற்றியே வாழ்வெய்து சிரமற்றதாய் சிலகிந்தமாய் பிணமாகவோ உனையான் காண்பது பரநித்தியா எனதுயிர்பற்றவா துணையற்று நான் தனியாகினேன்
அமராவதி வீழ்ந்து இறத்தல் உயிராலயம் உடையுண்டதோ அன்றில்களாய் அவையானதோ மநு நீதியின் மரபற்றதோ மனமாலைகள் சருகானதோ கண்ணிரூடன் செந்நீருமே மண்ணேகியே மறைவானதோ விண்ணாடியே வெண் சோடிகள் சுடராகியே அருவானரோ
(வேறு தரு)
(மெட்டு :- மதிபோல வதன ஒளி. செனகப்பு)
மலர் போல் வதன முக கவிதைக்கோவே நீ எங்கே அமுத மொழி உரைத்தவுயிர் உலகைவிட்டே ஏகியதே
காலங்களெல்லாம் கூடவே வருவேன் கலங்காதே என்றவன் காவியமாகினான் ஞாலமே சீலமே நல்லரசாட்சியே நாயக நுயிர் தனை தந்திடுவீரோ,
35(5 பதறுதே அங்கமெல்லாம் பதியே யென் ஆருயிரே காதலனே உயிர் காவியே யென்னை கொண்டு ஏகாயோ

வசனகவி காலனாய்க் காதலே கடுகியே வந்த பின் காவியம் ஆகியே நின்னுயிர் போக்கினாய் கூடவே வருகிறேன் கூடுவிட்டென்னுயிர் ஏகவே நாதனே அருள் தனைத் தாருமே
அமராவதியும் அம்பிகாபதியின் உடலருகே வீழ்ந்து இறத்தல் 1 அரங்கு உறைநிலையில் மெளனமாக, பின் குரல் ஒலிக்கும்)
பின் குரல் - மநுநீதிக்குப் போர்போன சோழ சாம்ராஜ்சியத்தில் மற்றுமொரு அநீதிக்கான அறுவடை, அன்புடையோரிருவர் அமரத்துவமாகினர் நேசம் வைக்கும் மனுவரீகத்திற்கு குலம்,கோத்திரம்சாதிபேதம் உயர்வு தாழ்வு தடைக்கற்களாய் அமையும் சம்பிரதாயத்திற்கு இதுவுமொரு உரைகல். இந்தக்கதை காதலுக்காக கண்ணிர் சிந்த வைப்பதற்கானதல்ல அது காதையின் வெளிவரைவு, சமூக மேலோங்கிகளின் சமாந்தரமற்ற பார்வைக்கோளாறுக்கு பலியாகும் மணிதம் பற்றிய அவலமே இதன் உள்ளுறை, உணர்ந்திடல் உங்களின் கடன்.
(உரை நிறைவுபெற கட்டிய காரர் தோன்றுவர்) கட்டியர் வரவு
(மெட்டு - “வானோன் கிருபைபெறு”தேவசகாயம் பிள்ளைபக் 120) கட்டியர் 1 - கட்டிய காரரும் வந்தோம் வந்தோம் வந்தோம் காதையை முடித்திட
நிறைவில் வந்தோம்
கட்டியர் 2 - அம்பிகாபதியுடனே - மங்கை
அமராவதியு மிறந்தனளே காதலோ இறப்பதில்லை - அது
காலங்கடந்துயிர் வாழ்ந்திடுதே

Page 43
கட்டியர் 1 - நீதி பிழைத்ததுவே - குல
வாத மெழுந்துயிர் பறித்ததுவே பேய் ஆளும் பூமியிலே - என்றும்
பிணந்தின்னுஞ் சாத்திர முணர்ந்திடுவீர்
கட்டியர் 2 - சாதி பேதம் மறந்துமே - எங்கள்
சமரச பூமியை படைத்திடுவோம் கோத்திரங் குலங்கடந்தே - நல்ல
நேர்த்தி மிகு சமூகம் அமைத்திடுவோம்.
இக்குறியிட்ட பாடல்கள் கம்பராமாயணத்திலிருந்து நேரடியாக
Wருக்கப்பட்டவை

மங்களம்
மங்களம் மங்களமே மங்களம் - சுப மங்கலம் - எங்கணுமே தங்கணும்
ஆதிபரனாருக்கு மங்களம் - அந்த
சோதி யுறைந்ாேனுக்கு மங்களம்
வேத முதலோனிற்கு மங்களம் - ஐந்து
காயஞ் சுமந்த கர்த்தா மங்களம்
ஆடல் புரிந்தவர்க்கு மங்களம் - கூத்து
ஆட்டுவித்தோருக்கும் மங்களம்
பார்க்க வந்தோர்க்கும் மங்களம் - மேடை ஏற்ற உட்தவியோர்க்கும் மங்களம்
ஈழ வள நாட்டிற்கு மங்களம் - இங்கே
சாந்தி நிறைந்திடவே மங்களம்
நீதி செழித்தோங்கிட மங்களம் - மண்ணில்
மாந்தள் நிறைந்திடவே மங்களம்,

Page 44
கம்பன் மகன்
நாட்டுக்கூத்து முதல்மேடையேற்றம் οι, ο2, ιρίτίτό 2oo3
முதல்மேடையேற்றத்தில் பங்கெடுத்த கலைஞர்கள்
அம்பிகாபதி - A.R.6iggu (5 DITFr. அமராவதி - F.ஜீவிதா. கம்பன் - A.பேர்க்மன் ஜெயராஜா. குலோதுங்க மன்னன் - Fuபூலீஸ் கொலின். அங்கயற்கன்னி(அரசி) - T.சுஜானந்தி. குலசேகரன் - J.யோண்சன்ராஜ்குமார். ஒட்டக்கூத்தர் - S.ஜோர்ஜ் ஹென்றி. மந்திரி - J.இக்னேசியஸ். கட்டியகாரன்-1 - F.X.85656t). கட்டியகாரன்-2 - A.அன்று யூலியஸ். LD(Lg6)I6öT-1 - N.S.Gagudrilastb. шD(цp6ш6ӧї-2 - ஜெயகாந்தன். தோழி-1 - A.அன்ரனிற்றா. தோழி-2 - S.நிரஞ்சலா. வீரன் - M.சாம்பிரதீபன்
நெறியாள்கை அண்ணாவியார்
A.பேர்க்மன் ஜெயராஜா.
ஹார்மோனியம் - அண்ணாவியார் A.பாலதாஸ். உதவி - T.ஜஸ்ரின் ஜெலூட். மிருதங்கம் - P.கபிலன். உதவி - M.வசன்பேர்க்,
தயுாரிப்பு . . திருமற்ைக்கலாமன்றம்


Page 45

அண்ணாவியார் பேர்க்மன் ஜெயராஜாவுடன்
நேர்காணல்
(ஈழத்தன் தென்மோடி நாட்டுக்கூத்து மரUல் எஞ்சி நிற்கின்ற சில அண்ணாவிமார்களில் பேக்மன் ஜெயராசாவுமொருவர். பறங்கித் தெருவை பிறப்பிடமாகக் கொண்ட இவர்பூந்தான் யோசேப்புவின் காலம் முதல் இன்று வரை சிறப்பாக செயற்பட்டு வருபவர். பல கூத்துக்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருப்பதுடன் பல கூத்துக்களை நெறிப்படுத்தியும் வந்துள்ளார். இக்கூத்து மரபை வகைத்துய்மையுடன் சான்று பகரதக்க ஆளுமையும் ஆற்றலையும் கொண்ட இவரின் ஊக்காத்தினாலேயே "கம்பன் மகன்’ கூத்து எழுதப்பட்டது. இவர் பல முற்பட்ட அண்ணாவிமாருடனும், பிற்பட்டவர்களுடனும் பரீட்சமுள்ளவராக இருந்த காரணத்தினால் கூத்துப்பற்றிய அடிப்படைகளை ஓரளவு சிறப்பாக அறிந்தவராகவும் இருப்பதினால் இவரது நேர்காணலுக்கூடாக கூத்துப்பற்றிய பல தகவல்களை இளைய தலைமுறையினருக்கு வழங்கும் நோக்கத்தோடு இந்த நேர்காணல் இந்நூலில் இணைக்கப்படுகிறது.)
G65)
ണ്ണ്.ഡെസ്ക്രസ്തുത്ര0്

Page 46
*நீங்கள் முதன்முதல் எத்தனை வயதில் நாட்டுக்கூத்தில் ஈடுபடத் தொடங்கினிர்கள்?
18 வயதிலிருந்து ஈடுபடத்தொடங்கிவிட்டேன்பூந்தான் யோசேப்புவினுடைய சங்கிலியன் நாட்டுக்கூத்தில் தான் முதன்முதல் நடித்தேன்.அதற்குப் பிறகு நாவாந்துறை வின்சன் டி போலின் நாட்டுக் கூத்துக்களிலும் நடித்தேன்.அதிகமாக பூந்தான் யோசேப்புவினுடைய நாட்டுக்கூத்துக்களிலேதான் நடித்தேன்.தற்போது திருமறைர் கலாமன்ற நாடகங்களில் நடிக்கிறேன்.
*இதுவரை எத்தனை கூத்துக்களில் நீங்கள் நடித்துள்ளீர்கள்?
இதுவரை ஏறத்தாழ 40 கூத்துக்களுக்கு மேல் நடித்துள்ளேன்.
*இதுவரை எத்தனை கூத்துக்கள் பழக்கியுள்ளிர்கள்? சிலவற்றைக் கூறமுடியுமா?
ஏறத்தாழ 20 கூத்துக்களுக்கு மேல் பழக்கியிருப்பேன்.ஜெனோவா, விஜய மனோகரன்,
எஸ்தாக்கியார், சங்கிலியன், மனம்போல் மாங்கல்யம், சவேரியார், அரிச்சந்திரன், சோழன் மகன், கருங்குயில் குன்றத்துக் கொலை, மரியதாசன். என அது நீண்டு செல்லுகிறது.
*உங்களுக்குப் புகழ் தேடித்தந்த பாத்திரங்களைக் கூறமுடியுமா?
கருங்குயில் குன்றத்துக் கொலையில் அனந்திரன் பாத்திரம், சங்கிலியனில் பரநிருபசிங்கன், நீ ஒரு பாறையில் இராயப்பர், யோபு நாடகத்தில் யோபு, சோழன் மகனில் முனிவர் போன்றவை.
*நாட்டுக்கூத்தில் ஈடுபடும் உங்கள் குடும்பத்தில் எவ்வாறான ஆதரவு இருந்தது. இருந்து வருகின்றது ?
குறிப்பாகச் சொல்லப்போனால் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் அன்றைய காலத்தில் நாட்டுக்கூத்தில் இறங்கியிருக்கவும் முடியாது இன்று இவ்வளவு வேகத்தி ) . நாட்டுக்கூத்தை வளர்த்திருக்கவும் முடியாது.
* நீங்கள் மரபுரீதியாக ஆடிவரும் கூத்து எத்தவகையைச் சார்ந்தது?
நாங்கள் நாட்டுக்கூத்து என்றுதான் கூறிவருகின்றோம். அதைவிட நாடகம் என்றும்

கூறுவோம். பிற்பட்டகாலங்களில் தான் இதை "தென்மோடிக்கூத்து’ என்று கூறி அழைக்கும் வழக்கம் அல்லது தேவை வந்ததென்று கூறலாம்.
米 இதனை கத்தோலிக்க கூத்துமரபு என்றும் கூறுகின்றார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பெரும்பாலும் கத்தோலிக்கர்களே ஆடி வருவதால் இந்த வழக்கு வந்திருக்குமென்று நினைக்கிறேன் அத்தோடு இந்த மரபில் இருக்கின்ற பழமையான நாடகமெல்லாம் கிறிஸ்தவ கதையையே கொண்டுள்ளன, அத்துடன் மெலிஞ்சி முனை, கரம்பன், நாரந்தனை, நாவாந்துறை, குருநகர், பாஷையூர், கொழும்புத்துறை, கிளாலி, செம்பியன்பற்று, தாளையடி. என்று அதிகமாக கிறிஸ்தவ கிராமங்களிலே இந்தக்கூத்துமரபு ஆடப்படுகிறது, அத்துடன் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபின் ஏற்படுத்திய பலமாற்றங்கள் இந்தக்கூத்துக்களில்தான் அதிகமாக இருக்கின்றது, உதாரணமாக இந்து மக்கள் மத்தியில் ஆட்டத்துடன் கூடிய கூத்துக்களே அதிகமுள்ளது; இதில் இல்லை.
* மட்டக்களப்பில் ஆடப்படும் தென்மோடிக்கூத்துக்களில் நிறுதிட்டமான ஆடல் பண்புகள் காணப்படுகின்றன. இந்தக்கூத்துக்களில் இல்லை. அதனால் இதனை 'கூத்து' என்று கூறுவதே முறையல்லை என்ற விவாதங்கள் கூட உள்ளன. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
யாழ்ப்பாண தென்மோடிக்கூத்துக்களில் ஆட்டமில்லை என்ற கூற்றை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்டம் இன்றும் உள்ளது. ஆனால் பழைய பாரம்பரிய முறைகள் பலதும் விடுபட்டிருக்கலாம். காரணம் கிறிஸ்தவர்கள் இந்தக்கூத்துமரபை ஆடத்தொடங்கியதன் பின் புனிதர்கள் வேதசாட்சிகள் ஆடுவது பொருத்தமற்றது என்ற கருத்து நிலவி வந்தது; அதனாலையே ஆட்டங்கள் விடப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்தக்கருத்து சரியானது ஏனென்றால் புனிதர்கள் தவிர அரசர்கள் சேனாதிபதி வீரர் போன்ற பாத்திரங்கள் இன்றும் ஆடியே வருகின்றன. அதைவிட நான் மிகச்சிறிய வயதில் பார்த்தகூத்துக்களில் அண்ணாவியார் மேடைக்கு நடுவில் நின்று வரவுப்பாட்டுப்பாட பாத்திரங்கள் தாளத்துடன் ஆடிவந்ததை பார்த்திருக்கின்றேன். பின்பு ஆடிக்கொண்டு பாடுவது கடினமானது என்று நினைத்தார்களோ? என்னவோ? அவ்றை விட்டு விட்டார்கள். ஆனால், ஒருவகை சிந்துநடை துள்ளல், எட்டுவட்டம் போடுதல், அரைவட்டம் 'ப'வடிவ வட்டம், நீள்வட்டம் போட்டு ஆடிப்பாடும் வழக்கம் இன்றும் உள்ளது. அது மட்டுமன்றி கூத்துக்கு நிச்சயமாக ஒழுங்கு படுத்தப்பட்ட ஆட்டமிருக்க வேண்டுமென்று வாதிடுவது மிகவும் தவறானது.
○

Page 47
* நீங்கள் சிறிய வயதில் பார்த்த பழமையான கூத்துகளுக்கும் தற்போதுள்ள கூத்துகளுக்குமிடையேயான வேறுபாடுகளைக் கூற முடியுமா..?
பழைய காலத்தில் மின்சார வசதியோ. ஒலிபெருக்கி வசதியோ கிடையாது லாம்புகள்பந்தங்கள், ஹாஸ்லைற்றுக்கள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது.அப்போ கூத்தைப்பாடுவதற்கு குரல்வளம் உள்ளவரைத் தேடியெடுப்பார்கள்.அத்தோடு பொருள் வளம் உள்ள வரையும தேடியெடுப் பார்கள் . காரணம் கூத்துமேடையேற்றத்துக்குரிய செலவை அதில் நடிக்கும் நடிகர்களே பங்கு பிரித்து காசு சேர்த்து நடிப்பார்கள்; அப்போ சுருதிக்கு முதன்மை கொடுக்கப்படவில்லை காரணம் கூத்துப்போடும்போது பெரிய வெளிகொண்ட இடமாய் கொட்டகை போடுவார்கள். அந்தக்கொட்டகையில் இருந்து 500 யார் வரையில் மக்கள் கூத்துப்பார்க்க இருப்பார்கள் அதனால் தாங்கள் பாடும் பாட்டின் சத்தம் அவர்களைச்சென்றடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் சுருதியைப்பற்றிச்சிந்திக்காது போட்டிபோட்டு மிகவும் பெரிய சத்தமொடுத்துப்பாடுவார்கள் அப்போது, இப்போ இருப்பது போல ஹார்மோனியமோ மிருதங்கமோ கிடையாது. மத்தளம் கைத்தாளம் போன்ற கருவியுடன் தான் கூத்துநடக்கும் அக்கூத்தின்பக்கப்பாட்டிற்கென ஒவ்வொருகூத்து நடிகரின் உறவினரும் தாங்களே பாடவேண்டும் என்ற நோக்கில் பக்கப்பாட்டிற்கு 25 பேர்மட்டில் கொட்டகைக்கு முன்னிற்கு இருப்பார்கள்.
சில நாடகம் இரண்டு இரவுகள் விடிய விடிய பாடப்படும். அப்போது நடிக்கப்பட்ட கூத்திற்கு மக்களை உற்சாகப்படுத்துவதற்கும் நித்திரை கொள்ளாமல் தடுப்பதற்கும் இடையிடையே பயூன் (கோமாளி) வந்துபாடிப்போவார். நித்திரையாய் இருப்பவர்களும் எழும்பிவிடுவார்கள். ஒரு கூத்து நடிப்பதென்றால் ஆறுமாதத்திற்குமுன்பே தொடங்கிவிடுவார்கள். பாத்திரங்களை 1ம் இராசா, 2ம் இராசா, 3ம் இராசா என்று பிரிப்பார்கள். அதேபோல் சரித்திரக்காரரையும் முன்னுக்கு, நடுவுக்குப், பின்னுக்கு என்று பிரிப்பார்கள். அதேமாதிரி மந்திரிசேனாதிபதி, பெண்பாத்திரங்களும் பிரிக்கப்படும். பெண்பாத்திரங்களுக்கு ஆண்களே நடிப்பார்கள் இரண்டு இரா சரித்திரமென்றால் நடிகர்கள் முப்பது அல்லது நாற்பது பேர் என நடிகர்களைக்கூட்டுவார்கள்; காரணம் இரண்டு இரவுகள் ஆடும்செலவைச் சமாளிப்பதற்கும் அவர்களின் உறவினர்களின் உதவியைப்பெறுவதற்குமாகும். கூத்துநடிப்பதற்கு கொட்டகை போடுவதற்கு இரண்டு மாதத்திற்கு முந்தியே கொட்டகையின் நான்கு மூலைக்கும் பனைமரமோ அல்லது தென்னைமரமோதறித்து நான்கு கப்புக்குப்பதிலாக் நட்டுவிடுவர்கள்.அதற்கொரு முக்கிய காரணமும் உண்டு அதுதான் அந்தக்கூத்தின் விளம்பரம். போறவர் வாறவர் வாயிலெல்லாம் கூத்து நடக்கப்போகின்றது என்ற பேச்சே அடிபடும். அந்தக்கூத்து நெருங்குகின்ற காலத்தில் நடிகர்களின் உறவினர்கள் முன்வந்து கொட்டகை போட

உதவிசெய்வார்கள். பனைமரத்துண்டுகள் தறிக்கப்பட்டு மேடைபோடப்படும். தென்னோலைகளால் சுற்றிவர அடைக்கப்படும்; தாங்கள் ஆடும் கூத்தில் என்ன காட்சி வருகின்றதோ அதைச்சோடினைக் காரணுக்கு, அறிவித்து காட்சி வரையப்பட்டு அந்தந்தக் காட்சிக்குரிய திரை கட்டப்படும்பெண்பாத்திரத்திற்கு அப்போ பெண்கள் முன்வருவதில்லை அந்தப்பாத்திரங்களை ஆண்களே நடிப்பார்கள். சேலை, மிகவும் விலைகூடியதான கூறைச்சேலைகளையே கட்டுவார்கள். போடும் ஆபரணங்கலெல்லாம் தங்கத்தினாலேயே இருக்கும், கூத்துப் போடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பணக்கூத்து என்று ஒரு நிகழ்வு செய்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒத்திகை
TTLTT36
கூத்து மேடையேற்றுகின்ற நாளில் ஊரே களை கட்டும். நாடகம் தொடங்கினால் அண்ணாவியார் காப்புப் பாடி தோடயம் பாடி ஆரம்பிப்பார் ஒவ்வொரு நடிகரும் வரும் போதும் வரவு கவி பாடப்படும். அதன் பின்தான் நடிகர்கள் தங்கள் பாடலுக்கு வருவார்கள். இராசா வரும்போது குதிரையில் வந்து மேடையில் இறங்கி தனது பாட்டைத் தொடங்குவார். ஒவ்வொரு காட்சி மாற்றத்திற்கும் குறைந்தது கால் மணித்தியாலம் இடைவெளி இருக்கும். மக்கள் சலிப்படையாது இருப்பார்கள் காரணம் அன்றைய கால கட்டத்தில் வேறு பொழுது போக்குகள் கிடையாது. இடையில் எழுந்து போவதென்றால் வீதியில் வெளிச்சம் கிடையாது ஆகவே அரிக்கன் லாம்பின் உதவியுடனும் இரவுச் சாப்பாடு போன்ற ஆயத்தத்துடனும் வண்டில் கட்டிக் கூத்துப்பார்க்க வருவார்கள். விடிந்தால்தான் போகலாம். ஆகவே மக்கள் விடியும்வரை மிகவும் சந்தோசமாக கூத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். கூத்துப் பழக்கம் தொடங்கிய காலம் தொடக்கம் அது மேடையேறும் வரை மதுபானவகை இரவுச் சாப்பாடு போன்ற செலவீனங்களுக்கு ஒரு தலைவரை நியமிப்பார்கள்; அவரிடம் காசைச் சேர்த்துக் கொடுத்து அந்தச் செலவுப் பொறுப்பை அவரிடமே விடுவார்கள். செலவுக்குப் பின்வாங்க மாட்டார்கள்.மூன்று தடவை கூத்து மேடையேறிய பின் கூத்து ஆடிய அத்தனை பேரும் ஒவ்வொரு வீடு வீடாய்ச் சென்று பாடுவார்கள்.அங்கேயும் மக்களால் காசு கொடுக்கப்படும்(அது அவர்கள் கூத்து முடிந்த பிற்பாடு ஒரு விருந்து வைப்பதற்கு உதவும். பின்பு கோவிலுக்கு அதே வேசத்துடன் சென்று தேவாரம் பாடி மங்களம் பாடி நாடகத்தை முடிப்பார்கள்மங்களம் பாடுவதன் நோக்கம் அந்த நாடகத்தில் குற்றம் இருந்தால் அதை நிவர்த்தி செய்யப் பாடுவார்கள்.அவ்வாறு பாடாதுவிடின் ஏதாவது நோய்துன்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது.
இப்போது சினிமா வானொலி தொலைக்காட்சி நவீன நாடகம் என்று இன்று எல்லாம் மாறி விட்டது. நாட்டுக்கூத்து இன்று பின்தங்கியுள்ளது. அன்று விடிய விடிய
(39)

Page 48
நடந்த கூத்துக்கள் நேரங்கள் குறைக்கப்பட்டு மூன்று மணித்தியாலம் ஆக்கப்பட்டு, மீண்டும் குறைக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் இன்று மேடையேறுகிறது. இன்றைய கூத்தின் வீழ்ச்சிக்கு இன்றைய அண்ணாவிமாரும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அன்று ஒரு கூத்தை எடுத்தால் காப்பில் இருந்து மங்களம் வரை எல்லா இராகத்தையும் சேர்த்துப் பாடுவார்கள். ஆனால் இன்றைய அண்ணாவிமார்களோ வீரப் பாட்டுக்களையும் வேட்டைப்பாட்டுக்களையும் வைத்து நாடகத்தை எழுதி முடிக்கிறார்கள். இதனால் மக்களின் மனதில் கூத்தைப்பற்றி ஒரு சலிப்புநிலையும் வேறு இராகம் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இராகங்கள் நாளடைவில் மறைக்கப்பட்டுக்கொண்டே போகின்றது, அடுத்த காரணம் அன்று மக்களின் பொழுது போக்கு கூத்து மட்டும் தான். ஆனால் இன்று நவீன சாதனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளதாலும் மக்களுக்கு நேரம் கிடைக்காமையாலும் கூத்துக்களை விடியும் வரை பாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூத்தை இரண்டு மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலம் என்று சுருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இன்று ஹார்மோனியம் இல்லாமல் கூத்துப் பாட முடியாது. சுருதி எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஓர்கன் சேர்க்கப்பட்டது. காட்சி அமைப்புக்கள் எல்லாம் காட்சித் திரையில் காட்டிய நிலை மாறி திறந்த மேடையில் காட்சிகள் குறியீடாகக் காட்டப்படுகிறது, உடுப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மணியுடுப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. ஒப்பனை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேடையமைப்பு கூத்து அமைப்புக்கு அப்பால் சென்று நவீன நாடகத்திற்கு அமைப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பக்கப் பாட்டுக்கள் குறைக்கப்பட்டுள்ளது. கூத்தின் கதை நீண்ட கதையானால் அது உரைஞர் மூலம் சுருக்கிக் கூறப்படுகிறது. மரபுவழி ஆட்டங்கள் மறக்கப்பட்டு நவீன ஆட்டங்கள் இணைந்து மெருகுபடுத்தப் பட்டுள்ளது. அன்றைய கூத்துக்கள் அண்ணாவி மரபில் நடத்தப்பட்டுள்ளது. இன்றைய கூத்துக்கள் நாடக மன்றங்கள் கிராமப்புற சனசமூக நிலையங்கள் பாடசாலைகள் போன்ற நிறுவனங்கள் மத்தியில் நவீன மயப்படுத்தப்பட்டு மேடையேற்றப்படுகின்றது. எனவே பல பெரிய மாற்றங்கள் இப்போது உள்ளன.
IN
*'பணக் கூத்து முறை பற்றிக் கூறினீர்கள் அதன் தன்மைபற்றி விரிவாகக் கூறமுடியுமா..?
அந்தக் காலத்தில் கூத்துப்பழகும் காலத்திலேயே 'பணக்கூத்து' செய்யப்படும். பணச்சடங்கு போலப்பணம் சேமிப்பது தான் இதன் நோக்கம். என்று கூறலாம். அந்தப்பணம் அண்ணாவியாருக்கே வழங்கப்பட்டது; பிற்பட்ட காலங்களில் கூத்து
70

மேடையேற்றச்செலவுக்காக அந்த பணம் பயன்படுத்தப்பட்டது. அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது. என்றால் குறிப்பிட்ட நாளில் கூத்தில் நடிக்கின்ற நடிகர்கள் எல்லோரும் தமது உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். பொருத்தமான ஒரு இடத்தில் உறவினர் ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கூத்தைப்பழக்கும் அண்ணாவியாரும் நட்புறவுடைய வேறு அண்ணாவிமார்களும் சேர்ந்து அதனை நடத்துவார்கள். கூத்தில் நடிக்கும் சிலர் வேஷம்கட்டுவர், உதாரணமாக சரித்திரகாரன், பெண்பாத்திரம், ஏனையோர் வேஷம்கட்டுவதில்லை அண்ணாவியார் உரத்ததொனியில் பாத்திரத்தின் பெயரைக்கூறி அழைப்பார் அந்தப்பாத்திரம் தனது வேஷத்தின் சில பாட்டுக்களைப் பாடும். அப்போது அவரின் உறவினர்கள் அண்ணாவியாரின் அருகே வந்து தமது பங்களிப்பைச்சொல்லுவர். அண்ணாவியார் அவர்களின் பெயரை பெரிதாகக்கூறி, உண்டியலை அல்லது காசுச்செம்பினை நீட்ட, அவர்கள் அதற்குள் பணத்தை யிடுவார்கள். இவ்வாறுபாடுவதிலும் பணம்போடுவதிலும் போட்டி ஏற்பட்டுவிடும். தாராளமாகக் காசு சேரும் அதேநேரம் மகிழ்ச்சியாக விளையாட்டாக நடக்கும் நிகழ்ச்சிபோலவும் அது இருக்கும், அதைவிட மதுபானம் அருந்துவார்கள். சண்டைபிடிப்பார்கள். ஆனால் எப்படியும் நாடகத்தை மேடையேற்றி விடுவார்கள்.
米 யாழ்ப்பாணத் தென்மோடி நாட்டுக்கூத்துப் பாரம்பரியத்தில் எழுபது, எண்பது களில் ஒரு புத்தாக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பர். இதனுடன் நீங்களும் தொடர்புள்ளவராதலால் இதற்கான காரணங்களையும் ஏற்பட்ட மாற்றங்களையும் விபரிக்க முடியுமா..?
எழுபது எண்பதுகளில் சினிமா பொப்பிசை போன்ற நிகழ்வுகளால் கூத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. அதற்கு ஒரு உதாரணம் திறந்தவெளி அரங்கில் பொப்பிசை இசை நிகழ்ச்சிக்கு முன்னால் சங்கிலியன் நாட்டுக்கூத்து இடம்பெற்றது. அப்போ பரணித்தரு என்ற ஒரு பாடல் கூத்தில் பாடும் பொழுது: வீதியால் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் ஐயோ யாரோ இறந்து விட்டார்கள் என்று கத்திக்கொண்டு ஓடினார்கள். இதனைக் கேட்டு அரங்கிற்கு முன்னால் உட்கார்ந்து இருந்தவர்கள் கூத்துப் பாடிக்கொண்டு இருந்தவர்களைப் பார்த்து பொறுமை இழந்து "உள்ளுக்குப் போ’ என்று சொல்லி கற்களால் எறிந்தார்கள். முடிவில் கூத்தை அரைவாசியுடன் குழப்பி விட்டார்கள். அதன் பின்புதான் யாழ்நவரச நாட்டுக் கூத்துக் கலாமன்றத்தினால் அண்ணாவியார் பூந்தான் யோசேப்பின் தலைமையின் கீழ் நாம் நாட்டுக்கூத்தை நவீனப்படுத்த முற்பட்டோம். பெண் பாத்திரத்திற்கு பெண் பிள்ளைகளைப் போட்டு காட்சிகளை அமைத்தும், கூத்தை இரண்டு மணித்தியாலங்களாகச் சுருக்கியும் மேடையேற்றத் தொடங்கினோம். அதன் பலாபலன் எங்களுக்கு வெற்றியை அளித்தது. அதன் பின்னர் பள்ளிக்கூடங்கள் மத்தியிலும் நாட்டுக்கூத்தைப் பழக்குவதற்கு
C7D

Page 49
எங்கள்மன்றத்தைக் கேட்டுக் கொண்டார்கள், நாங்கள் அனேகமான பள்ளிக்கூடங் களுக்குச் சென்று பழக்கினோம். கூத்து நவீனப்படுத்தலால் பள்ளிக்கூட மாணவர் மத்தியிலும் ஒரு ஆர்வம் ஏற்பட்டது; இளைஞர் யுவதிகள் மத்தியிலும் ஒரு ஆர்வம் ஏற்பட்டது; சனசமூக நிலையங்கள் மட்டில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் இலங்கை வானொலியிலும் அனைத்து நாட்டுக்கூத்துக்களையும் ஒலிபரப்புச் செய்தார்கள். இத்தனையும் கூத்தின் நவீனப்படுத்தலால் நடந்தது. ஆனால் கூத்து நவீனப்படுத்தலால் இன்று கிராமங்கள் தோறும் மன்றங்கள் தோறும் கூத்து நடைபெற்று வருகின்றதே என்ற மகிழ்ச்சி எம் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
"நீங்கள் நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்திற் கூடாகவும் தனியாகவும் பல அண்ணாவிமார்களை இணைத்து பல நாட்டுக்கூத்துக்களை மேடை யேற்றியுள்ளீர்கள் இம் முயற்சியின் விளைவுகள் பற்றிக் கூறமுடியுமா..?
பொதுவாக ஒவ்வொரு அண்ணாவிமாரும் தனித்துவமானவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு விசேட அம்சம் இருக்கும். இந்த தனித்துவத்தால் தான், முரண்பாடுகளும் நிறைந்திருக்கின்றன. ஒருவர் இன்னொருவரை விமர்சிப்பதும் முரண்படுவதும் பொதுவாக இருக்கின்ற பிரச்சினை தான். இந்த வேற்றுமைக்குள் ஒற்றுமை காண விரும்பினார் பூந்தான் யோசேப்பு. எனவே நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்திற்கூடாக மேடையேற்றிய கூத்துக்களில் பல அணி ணாவிமார்களை இணைத்து மேடையேற்றினார். "கருங்குயில் குன்றத்துக் கொலை "எஸ்தாக்கியார் போன்ற கூத்துக்களைக் குறிப்பிடலாம் ஒவ்வொரு அண்ணாவி மாருக்கும் சிறப்பான சரீரவளம் அமையப்பெற்றிருப்பதால் அவர்கள் இணைந்து நடிக்கும் போது பெரும் போட்டியே ஏற்பட்டுவிடும். பாடுகின்ற போது ஒருவர் ஒரு சுருதியில் பாடினால் மற்றவர் அதற்கு மேலாகப் பாடிடும் முனைப்பிற்கு வருவார். ஒரு வகை இசைப் போட்டியே அவர்கள் மத்தியில் எழும் எனலாம் ஆரம்ப காலங்களில் ஹார்மோனியம் கூத்துக்களில் வாசிப்பதில்லை என்ற காரணத்தினால் அவ்வளவாகப் பிரச்சினை எழுவது கிட்ையாது. இந்த ஒன்றிப்பிற்கூடாக பல நன்மைகளும் பல தீமைகளும் இருந்தன எனலாம். பல அண்ணாவிமார் நடித்த காரணத்தினால் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பானதாக இருந்ததுநாடகம் தொடங்கி முடியும் வரை கூத்து விறுவிறுப்பாக இருக்கும் அத்துடன் ஒவ்வொரு அண்ணாவிமாரின் இரசிகர்களும் இதனைப் பார்க்க வருவதால் பார்வையாளர் வட்டம் அதிகரித்துக் காணப்படும் ஒவ்வொருவருக்கும் இடையே போட்டி இருந்ததால் கூத்து அதிக சிறப்பைப்பெற்றது.அதிக இடங்களில் அதனைக் கொண்டுபோய் மேடையேற்றும் சந்தர்ப்பங்களும் அதிகரித்தது என்று கூறலாம்.
○

இவ்வாறு பூந்தான் யோசேப்பு அவர்கள் மேற்கொண்ட "அண்ணாவிமாரை இணைத்த கூத்துக்கள் ஒருவகையில் வட மானிலத்திலேயே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.அதே வேளை பல்வேறு போட்டிகள் முரண்பாடுகள் போன்றனவும் இச் செயற்பாடுகளால் ஏற்பட்டனயூந்தார் அவர்கள் இறந்த பின் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவுதினத்துக்கும் பத்தாம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகளுக்கும் அண்ணாவிமாரைச்சேர்த்து, சவேரியார், தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியார் போன்ற கூத்துக்களை நான் பொறுப்போற்றுப் பழக்கினேன். அதில் மூத்த அண்ணாவிமார் பலர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பைத்தந்தனர். அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பாடு உடையவன்.
பூந்தான் யோசேப்புவின் செயற்பாடுகளைப் பாராட்டும் அதேவேளை அவர் தனது சொந்தப்பணத்தைக் கொண்டு தன் செல்வாக்கால் உயர்ந்தார் என்ற கருத்தும் உள்ளது.இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பூந்தான் யோசேப்பு தனது சொந்தப்பணத்தால் கூத்துச் செல்வாக்கைத் தேடினார் எனச் சொல்பவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால். அவர் கூத்திற்குச் செலவழித்த பணம் ஐந்து தலைமுறை உட்கார்ந்து சாப்பிடப் போதுமானது.அவர் கூத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் பணத்தை இறைத்தாரே தவிர செல்வாக்கைத் தேட அல்லநாடகத்தில் நடிக்கும் கலைஞர்கள் பங்குவீதம் பணம் போட்டுத்தான் நாடகத்தை செய்தார்கள்,பணம் கட்ட முடியாது கஷ்டப்பட்ட நடிகர்களுக்கு அவர்களின் பங்குப்பணத்தை தானே கட்டி அவர்களை நடிக்கச் செய்தார்.காரணம் புகழுக்காக அல்ல அந்தக் கலைஞனும் வருங்காலத்தில் நாட்டுக்கூத்தை இளம் சமுதாயத்தினிடையே வளர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கோடு செய்தார்.ஆகவே அவர் புகழுக்காகக் காசைச் செலவு செய்தர்ா என்பதை என்னால் ஏற்கமுடியாது. இது அவரது பணியை பொறுதுக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு கொண்டவர் கூறுகின்ற கருத்து. பூந்தாரின் நேர்மைமிகு செயற்பாடுகளுக்கு, நானும் என்போன்ற பல அண்ணாவி மாரும் சாட்சி பகர்கின்றோம்.
இந்தக் கூத்தில் ஏறத்தாழ எத்தனை இராகங்கள் இருக்கின்றன.அவற்றில் சிலவற்றைக் கூறலாமா?
இராகங்கள் என்று கூறும் வழக்கும், பிற்பட்டுத்தான் வழக்கத்தில் வந்தது. பாடல்களின் தொடக்கச்சொற்களின் அடிப்படையைக் கொண்டு மெட்டுக்களுக்குப்பெயரிட்டனர் யாப்பு இலக்கணத்தின் பெயர்களும் மெட்டுக்களுக்கு ஆகிவந்தது. ஏறத்தாழ 175
○

Page 50
இராகத்திற்கு மேல் வழக்கில் உள்ளது.வண்ணத்தரு, ஆகமுமாய், அன்பின் அருளொளி, இகந்துள்ளோர்கள், மஞ்சார்சந்தணவிருச்ச, வாழனையே வருவிழியே, சித்திரமணிமகுடம், சிந்தாரும்அரும்பெருங்கப்பலை, சொற்கேளாப்பிள்ளை, வந்ததிந்த மாயமென்னே, ஏல ஏலோ, ஆழிப்பார், கூனற்றவழர், கனகமயமெழில், சாகாவரம்பெற்றொர், மானே மறையாதே, சொன்னபற்பநாதபுரம், சொல்லமுடியாதுதோழனே. நவரெத்தின முடிபெற்ற என்மகளே பொன்மகளே, என்ஆசைப்பாலரே, கிருடத்தரசர்முடி, குறம், கொச்சகம், வெண்பா, கலித்துறை, கலிப்பா, இசலி, சந்தத் தாழிசை, சந்ததம், ஒரிசம், கல்வெட்டுச் சிந்து, விருத்தம், கவி, துக்கஇராகம், காதல், பரணி. இன்னும் அனேக மெட்டுக்கள் வழக்கில் உள்ளன.
* நீங்கள் கூத்தரங்கில் ஈடுபட்ட காலத்தில் இருந்து சிறப்பாக செயற்பட்ட அண்ணாவிமார்கள் என்று கருதுகின்றவர்கள் பற்றியும்அவர்களது சிறப்பியல்புகள்
பற்றியும் உள்ள, உங்களின் மனப்பதிவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா..?
என்னுடைய நாடகக் காலத்தில் அண்ணாவியார் பூந்தான்யோசேப்பு அவர்கள் நாட்டுக்கூத்துக்காக என்னையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கிராமம் கிராமமாகச்சென்று தனது முழுநேரத்தையும் அதில் ஈடுபடுத்தினார். அத்தோடு நின்று விடாதுஇளைஞர்கள் யுவதிகள் மட்டத்திலும் அந்தக்கலையை விரிவு படுத்தினார். அவருடன் தொடர்புடைய சம்பவமொன்று நினைவில் வருகிறது. அவர் வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருந்த நேரத்திலும் என்னை அழைத்து "நான் இனி உயிர் வாழ மாட்டேன் நீ இந்த நாட்டுக்கூத்தை அழியவிடாதே. அவற்றை பாடசாலை மத்தியிலும் வளர்த்து எடுத்துவிடு."என்று கண்கலங்கக் கூறினார். அவர் தன்னுடைய இறப்பைப்பற்றியும் சிந்தியாது நாட்டுக்கூத்துப்பற்றி சிந்தித்து வேதனையுடன் இறந்தார் அந்த மாமேதையை இப்போதும் என் மனக்கண்முன் பார்க்கிறேன்.
அடுத்த படியாக குணசிங்கம் என்னும் பாஷையூர் அண்ணாவியார் அவர்களின் பண்பைச்சொல்ல வேண்டும். எந்தப்பாத்திரத்த்ைகொடுத்தாலும் சலிப்பில்லாது ஏற்பார் நாடக்திற்கு எந்த ஆடையைக்கட்டினாலும் மறுக்காமல் ஏற்பார். அவரை ஒருமுறை நான் பழக்கிய "மனம்போல் மாங்கல்யம்" நாட்டுக்கூத்திற்கு ஒட்டகப்புலத்திற்கு உதவியாக அழைத்துச்சென்றேன் அங்கே உள்ளவர்கள் அவரை யாரென்று கேட்போது நான் அவரை அறிமுகப்படுத்தினேன். அத்தனை நடிகர்களும் அவரைத் தொட்டுக்கும்பிட்டுக்கட்டி அணைத்தபோது அவர் தன்னை மறந்து கண்ணிர் விட்டார். இது என்நெஞ்சத்தில் இன்றும் நின்று நிழலாடுகிறது.
○

அடுத்தபடியாக நாரந்தனை அண்ணாவியார் அருளப்பு அவர்கள் "தான் ஒரு அண்ணாவி’ என்று பெருமிதம் கொள்ளாமல் மிகவும் பண்போடும் அடக்கத்தோடும் ஒடுக்கத்தோடும் மக்களுடன் பழகுவார். ஒருமுறை பூந்தான் யோசேப்பு அண்ணாவியார் பழக்கிய "சங்கிலியன்" நாடகத்தில். நான் பரநிருப சிங்கனாகவும் அவர்காக்கை வன்னியனாகவும் பழகிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கட்டத்தில் "ஈது பெருங் காரியமோ சீரிய நேசா" என்ற பாடலை இருவரும் பாடும் போது நான் அவரிடம் "இந்தப்பாடலை சற்று நவீனப்படுத்திப்பாடுங்களேன்" என்று கூறினேன் அப்போது அவர்கூறினார் "என்னால் அப்படிப்பாடவும் முடியாது அடுத்ததாக நாட்டுக் கூத்து மரபை மீறிப்போகவும் மாட்டேன்" என்று ஆணித்தரமாகக்கூறினார். உண்மையில் அவரின் "நாட்டுக்கூத்து மரபு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற ஆர்வத்தை" இன்றும் நினைத்து மகிழ்கின்றேன்.
அடுத்து நாவாந்துறை நீ.வின்சன்டிப்போல் அவர்களை குறிப்பிட விரும்புகிறேன். அவர் தனது இனிய குரல்வளத்தால் மக்களைக்கவர்ந்தவர். எனக்கும் சிறியவயதில் நாட்டுக்கூத்து இரசனையை ஏற்படுத்தியவர். அவர்பாடிய சில பாடல்களை அவரின் வழியில் இன்று நானும் பாடுகிறேன். ஆனால் அவரையும் இவ்வேளையில் நான் நினைவு கூருகிறேன்.
அடுத்தபடியாக குருநகரைச்சேர்ந்த அண்ணாவியார் அந்தோனிப்பிள்ளை (நட்டுவன்) அவர்களையும் குறிப்பிட விரும்புகிறேன். மரபு தவறாதுஆணித்தரமாக பாடக்கூடியவர்களில்இவரும் ஒருவர்பூந்தார் பழக்கிய தேவசகாயம் பிள்ளை நாட்டுக்கூத்தில் இவர் தேவசகாயம் பிள்ளையாகவும் நான் முதலாம் அதிகாரியாகவும் நடித்தேன். ஒருகட்டத்தில் அவருடன் பாடுவதற்கு எனக்குக் கடினமாக இருந்தது. நான் அவரிடம் "அண்ணாவியார் கொஞ்சம் குறைத்துப்பாட முடியுமா." என்ற கேட்டேன். அவர்சிரித்துவிட்டு முதுகிலே தட்டிச்சொன்னார்."நாட்டுக்கூத்தென்றால் இப்படித்தான் பாட வேண்டும் நீ பாடுவாயென்ற நம்பிக்கையில்தான் பூந்தார் என்னோடு போட்டிருக்கின்றார். நீ பாடுவாய் பாடு" என்று என்னைத்தட்டி ஊக்கம் கொடுத்தார் இன்று நான் மேலே குரலெடுத்துப்பாடுவதற்கு அவரும் ஒருகாரண கர்த்தாவாக இருக்கின்றார். அவரையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மேற்கூறிய அணிணாவிமார்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர்.இவர்கள் எனது கூத்துவளர்ச்சிக்கு உதவி இருந்தார்கள் என்பது மட்டுமன்றி ஈழத்தின் மிகச்சிறந்த அண்ணாவிமார்களாகவும் திகழ்ந்தனர். இவர்களைவிடவும் நாவாந்துரை பெலிக்கான், குருநகர் சாமிநாதர், பாஷையூர் அல்பிரட், பாலதாஸ், சில்லாலை மனோகரன், மரியதாஸ் போன்ற சமகால அண்ணாவி மார்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அண்ணாவி பாலதாசிற்கு கூத்தில் ஒரு தனி இடமுண்டு.
○

Page 51
ஹார்மோனியத்தை கூத்தில் சரியாகப் பயன் படுத்தியது பாலதாஸ் தான் என்றால் மிகையாகாது.
“உங்களது காலத்து சிறந்த நாட்டுக்கூத்து நடிகர்கள் பற்றிக் கூற முடியுமா..?
அரச பாத்திரத்தினை கலாநிதி பூந்தான் யோசேப்பு அவர்களும் பாஷையூர் அருளானந்தம் அவர்களையும் ஒட்டகப்புலம் அல்பிறேட் அவர்களும், பாஷையூர் அல்பிறேட் அவர்களும் மிகவும் சிறப்பாகச் செய்ய வல்லவர்கள். அடுத்ததாய் நாடகக்காரன் பாத்திரங்களுக்கு குருநகர் பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறை வின்சன்டி போல் அவர்களும் குருநகள் சாமிநாதன் அவர்களும், நாவாந்துறை பெலிக்கியான் (வடக்கு) அவர்களும், மானிப்பாய் திருச்செல்வம் அவர்களும் பாஷையூர் குணசிங்கம் அவர்களும் மிகவும் திறம்பட பாடி நடித்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குணசித்திரப்பாத்திரத்தில் குருநகள் இளையப்பா, சுவாம்பிள்ளை, பாஷையூர் பாவிலுப்பிள்ளை நாவாந்துறை பாக்கியம் (வடக்கு) ஆனைக்கோட்டைத்தம்பித்துரை இவர்கள் மிகத்திறம்பட பாடி நடித்துள்ளனர். அடுத்தபடியாக பவூன் (கோமாளி) பாத்திரத்தில் பாஷையூர் அலெக்சாண்டர்நாவாந்துறை குமார் திறம்பட ஆடிப்பாடி நடித்து இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றனர். தற்போது இளவாலை A.R.விஜயகுமார் சிறந்த ராஜபாட் நடிகனாக வெளிப்பட்டு நிற்கின்றார், பூந்தான் யோசேப்புவிற்கு பின் அவரைப்போல செய்யக்கூடிய ஒருவராக விஜயகுமாரை நான் இனங்காணுகிறேன்.
米 கூத்துமரபை வளர்ப்பதற்கு கத்தோலிக்க திருச்சபை எடுத்த முயற்சிகள்பற்றிக்
கூறமுடியுமா..?
இந்தக்கூத்து மரபு ஓரளவுக்க உயிர்வாழ்வதற்கு திருச்சபையும் ஓர் அடிப்படைக்காரணம். ஏனென்றால் ஆலயத்திருவிழாக்களை ஒட்டித்தான்அனேகமான கூத்துக்கள்ஆடப்பட்டன. பல குருக்கள் கூத்தின்செலவை தாமே பொறுப்பேற்றுக் கூத்தை நிகழ்த்திவித்தமையுமுண்டு. அத்துடன் கூத்தை ஒரு ஒழுங்கு கட்டுப்பாடு என்று ஒழுங்குபடுத்தியதிலும் திருச்சபையின் பங்கு குறிப்பிடத்தக்கது. முன்பு கூத்தை மேடையேற்றும் போது மீசாமுக்குப்பொறுப்பாக இருக்கின்ற பங்குத்தந்தையிடம் காட்டி அனுமதிபெற்றபின்பே நடிக்கவேண்டும் என்ற ஒழுங்குவிதிகள் அதிகம் இருந்தது. கூத்துக்கலைஞர்களைக்கெளரவித்தல் மேடையேற்றவதற்கு உதவிசெய்தல் கூத்துநூல்களை எழுதுவித்தல், அச்சிடுதல் என்ற பல செயற்பாடுகளுக்கு திருச்சபை உதவிபுரிந்தது. குறிப்பாக ஓய்வு பெற்ற ஆயர் மேதகு தியோகுப்பள்ளை ஆண்டகை அவர்கள் இக்கூத்துமரபை வளர்த்தெடுப்பதற்கு பெரும் பங்களிப்புப் புரிந்தார். அவர் கூத்துமரபிற்கு முன்னுரிமை அளித்து நிதி உதவி செய்து பல கலைஞர்களைக்
○

கெளரவித்து பல செயற்பாடுகளை ஆற்றினார்.
அதே வேளை திருச்சபையின் சில செயற்பாடுகள் பாதகமான சில விளைவுகளையும் தந்தது எனலாம். குறிப்பாக கூத்தில் ஆட்டம் இல்லாது போனமைக்கு திருச்சபையும் ஒரு காரணம். அதேபோல சனிக்கிழமைகளில் கூத்துப்போடுவதற்கு தடைவிதித்தனர்.(ஞாயிறு திருப்பலிக்கு மக்கள் வரமாட்டார்கள் என்ற காரணத்தினால்) சில பங்குகளில் பல்வேறு காரணங்களால் கூத்து ஆடுவதைத் தடைசெய்துமுள்ளார்கள் ஆனால் திருச்சபை அளித்த பங்களிப்பு கூத்து உலகில் என்றும் மறக்க முடியாதது.
வானொலியிலும் நாட்டுக்கூத்துக்கள் பதிவு செய்து ஒலிபரப்புச் செய்யப்பட்டது எனக்கூறினீர்கள் அச் செயற்திட்டத்தில் நீங்களும் ஈடுபட்டீர்கள் என அறிய முடிகின்றது.அது பற்றிய விபரங்களை எமக்குத் தர முடியுமா?
வானொலியில் நாட்டுக்கூத்தை ஒலிபரப்புச் செய்யவேண்டும் என்று முதன்முதல் குரல் கொடுத்தவர் பூந்தான் யோசேப்பு அவர்கள். அப்போது இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் இருந்தவர் திருவாளர் சிவஞானம் அவர்களும் அவருக்கு உதவியாக இருந்தவர் (நாட்டுக்கூத்துப் பகுதி) K.M.வாசகர். பின்பு டேவிட் ராஜேந்திரன் அதன் பின் தார்சீசியஸ் அதன்பின் மதியழகன் ஆகியோர் கடமையாற்றினார்கள்நாங்கள் அலங்காரரூபன் நாடகம் ஒலிப்பதிவு செய்யப்போகும் போது அங்கு எமக்கு பல சோதனைகளும் காத்திருந்தது. நானும் குணசிங்கமும் இசை பாடுகிறோம் என்றும் (Drama) எங்களை பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்றும் முனைந்தார்கள். அத்தனையையும் முறியடித்து நாட்டுக்கூத்தைச் சிறப்பாக ஒலிப்பதிவு செய்ய முயற்சி செய்தோம். இப்படிப் பல அனுபவங்கள் எல்லாவற்றையும் கூறமுடியாது. மதியழகன் செயற்பட் காலத்தில் யாழ்ப்பாணக்கூத்துக்களுக்கு நானே பொறுப்பாக இருந்து செயற்பட்டேன். -
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாட்டுக்கூத்துக்கள் எதிர்காலத்தில் எவ்வாறான நிலையை அடையும் என்று நினைக்கிறீர்கள்?
இது நல்ல கேள்வி. நாட்டுக்கூத்து வளர்க்கப்படுவதும் வீழ்ச்சி அடைவதும் இன்றைய சந்ததியினரும் இனிவரும் சந்ததியினரும் சிந்திக்க வேண்டியதும் முயற்சி
எடுக்கப்படவேண்டியதும் ஆகும்நாளை என்ன நடக்குமோ படைத்தவன்தான் பதில் சொல்ல வேண்டும்.
○

Page 52
வடமாகாணத்தில் அரங்கேறிய சில நாட்டுக் கூத்துகளும், பாடியவர்களும்
கூததுக்களின் பெயர்
அந்தோனியார் தொன் நீக்கிலார் கத்தறினாள் மரிய கரிதாள் கிறிசாந்தப்பர் ஞானரூபன் புனிதவதி லேயோன் சத்தியவந்தன் கிறிஸ்தோப்பர் கண்டியரசன் கட்டபொம்மன் சத்தியநாதன் பவுலினப்பள் LiC36)TLssOThLDIT ஞானசவுந்தரி சவீனகன்னி கற்பகமாலா செபஸ்தியார் பிரகாசராசன் அருளானந்தர் இம்மனுவேல் சற்குணானந்தன் மரியகொறற்றி கிளியோபத்திரா நொண்டி சம்பேதுரு பாவிலு சூசையப்பர் யாக்கோப்பு வரப்பிரகாசம் சுளியார் யூதகுமாரன் சவீன கன்னி மூவிராசாக்கள்
பாடியவர்
புலவர் அதிரியார் புலவர் சுவாம்பிள்ளை புலவர் சுவாம்பிள்ளை புலவர் சுவாம்பிள்ளை புலவர் சுவாம்பிள்ளை புலவர் சுவாம்பிள்ளை புலவர் தொம்மையார் புலவர் தொம்மையார் புலவர் மிக்கோர் சிங்கம் புலவர் மிக்கோர் சிங்கம் புலவர் மிக்கேல் சிங்கம் புலவர் மிக்கேல் சிங்கம் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் பெ.கிறிஸ்தோபர் புலவர் ஆசெகராசா புலவர் எ.சூசைப்பிள்ளை புலவர் எ.சூசைப்பிள்ளை புலவர் எ.சூசைப்பிள்ளை புலவர் அவுறாம்பிள்ளை புலவர் அவுறாம்பிள்ளை புலவர்அவுறாம்பிள்ளை புலவர்அவுறாம்பிள்ளை புலவர்அவுறாம்பிள்ளை புலவர் சந்தீயோகு புலவர் சந்தியோகு புலவர் சந்தீயோகு
இடம் காலம்
tJTഞഖ്യf பாஷையூர் 1810 IJITഞഖ്യ 1810 LITഞഖ്യ 1810 IJITഞഖ്യ 1810 IJIഞഖ്യ 1810 LIT60)6)Գաi LJT60)6)gui ԼյT60)6)Գայfi LIഞഖ്യ பாஷையூர் 1947 LIT60)6)Գայli 1961 Lിങ്ങഖ്യ 1929 LT606)gui 1935 LITഞഖ്യ 1939 LJT60)69 usi 1940 JT60)69ui 1943 (JT606)gui பாஷையூர் 1950 பாஷையூர் 1976 பாஷையூர் 1976 பாஷையூர் 1959 பாஷையூர் 1961 பாஷையூர் 1971 பாஷையூர் 1976 கரையூர் 1815 கரையூர் 1815 கரையூர் 1815 கரையூர் 1815 கரையூர் 1815 கரையூர் 856 கரையூர் 1856 கரையூர் 1856

34. என்றிக் எம்பிரதோர் புலவர் சந்தியோகு கரையூர் 1856
35. இசிதோர் புலவர் சந்தீயோகு கரையூர் 1856 36. சந்தீயோகுமையோர் படைவெட்டு புலவர் சந்தியோகு கரையூர் 1856 37. செனகப்பு புலவர் சந்தீயோகு கரையூர் 1856 38. மாகிறேற்றம்மா புலவர் நீக்கிலாஸ்(பரிகாரி) கரையூர் 1915 39. தீத்துாஸ் புலவர் நீக்கிலாஸ் கரையூர் 40. பங்கிராஸ் புலவர் நீக்கிலாஸ் கரையூர் 41. ஆட்டு வணிகன் புலவர் நீக்கிலாஸ் கரையூர் 42. ஊசோன் பாலன் புலவர் நீக்கிலாஸ் கரையூர் 43. கனகசபை புலவர் தம்பாப்பிள்ளை பறங்கித்தெரு 1975 44. தாவிது கோலியாத்து புலவர் சந்தீயோகுதம்பாப்பிள்ளை பறங்கித்தெரு 1975 45. ஞானசவுந்தரி புலவர் சுபவாக்கியாம்பிள்ளை பறங்கித்தெரு 1895 46. உடைபடாமுத்திரை புலவர் சுடவாக்கியாம்பிள்ளை பறங்கித்தெரு 1895 47. சஞ்சுவாம் புலவர் பொன்னையா சுண்டிக்குளி 1915 48. மத்தேசு மவுற்றம்மா புலவர் பொன்னையா சுண்டிக்குளி 1915 49. கிறிஸ்தோப்பர் புலவர் யாக்கோப்பு சுண்டிக்குளி 1915 50. மெஞ்ஞான வர்த்தகன் புலவர் யாக்கோப்பு சுண்டிக்குளி 1915 51. தானியேல் புலவர் யாக்கோப்பு சுண்டிக்குளி 1915 52. மரியதாசன் புலவர் வெ.மரியாம்பிள்ளை சுண்டிக்குளி 1932 53. விசய மனோகரன் புலவர் வெ.மரியாம்பிள்ளை சுண்டிக்குளி 1932 54. LDTid585 Lusi புலவர் சந்தியாப்பிள்ளை சுண்டிக்குளி 1932 55. மனம்போல் மாங்கல்யம் புலவர் எம்.வி. ஆசீர்வாதம் சுண்டிக்குளி 1976 56. தேவசகாயம்பிள்ளை புலவர் முத்துக்குமாரு அராலி 1836 57. அதிரூப அமராவதி புலவர் முத்துக்குமாரு அராலி 1836 58. அலங்கார ரூபன் புலவர் முத்துக்குமாரு அராலி 1836 59. காந்த ரூபன் ரூபி புலவர் முத்துக்குமாரு அராலி • 1836 60. மீகாமன் (வெடியரசன்) புலவர் முத்துக்குமாரு அராலி 1836 61. துரோபதைவஸ்திராபரணம் புலவர் முத்துக்குமாரு அராலி 1836 62. அழகவல்லி புலவர் முத்துக்குமாரு அராலி 1836 63. வாளபிமன்னன் புலவர் முத்துக்குமாரு அராலி 1836 64. கற்பருபவதி புலவர் தம்பிமுத்து LDITg556) 1910 65. தொம்மையப்பர் புலவர் தம்பிமுத்து மாதகல் 1910 66. பிரான்சிஸ் சவேரியார் புலவர் தம்பிமுத்து மாதகல் 1910

Page 53
67.
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88,
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
10.
102.
103.
104.
திருஞானதீபன் எஸ்தாக்கியார் சங்கிலியன்
கருங்குயில் குன்றக்கொலை
இம்மனுவேல்
மூவேந்தள் சிங்கக்குலச்செங்கோல் வித்துக்கள் புனித அசீசியார்
பண்டாரவன்னியன் ராஜராஜசோழன் பனைஅரசன் ஞானசவுந்தரி செந்துாது புரட்சித்துறவி தியாக இராகங்கள்
நீ ஒரு பாறை அனைத்தும் அவரே இடமில்லை புனித பத்திரிசியார் வீரத்தளபதி மனுநீதிச்சோழன் 5]&bഞേങ്ങ கும்பகர்ணன் புனித ஆசீர்வாதப்பர்
கம்பன் மகன் சோழன் மகன் அல்லிராணிக் கோட்டை
ஞானத்திறவுகோல்
தம்பிமுத்து ம.சூசைப்பிள்ளை ம.சூசைப்பிள்ளை
L|606] ji L|സെഖf Լ|6Ù6)lit
புலவர் ம.சூசைப்பிள்ளை புலவர் நீ.மரியசேவியர் புலவர் நீ.மரியசேவியர் தேவதாசன்
தேவதாசன் ஞா.ம.செல்வராசா ஞா.ம.செல்வராசா ஞா.ம.செல்வராசா ஞா.ம.செல்வராசா மிக்கேல்பிள்ளை மிக்கேல்பிள்ளை மிக்கேல்பிள்ளை A.பாலதாஸ் A.பாலதாஸ் A.பாலதாஸ் A.பாலதாஸ் A.பாலதாஸ் யோ.யோண்சன் யோ.யோண்சன் யோ.யோண்சன் யோ.யோன்சன் யோ.யோண்சன் ம.சாம்பிரதீபன் தேவதாசன் பா.அமிர்தநாயகம்
ராஜ்குமார் ராஜ்குமார் ராஜ்குமார் ராஜ்குமார் ராஜ்குமார்
அரிச்சந்திர மயானகாண்டம் பா.அமிர்தநாயகம்
சீதா கல்யாணம் கவிஞன் கண்ட கனவு பனங்காமத்து அரசன் ஞானசெளந்தரி இழந்தவர்கள் குருமணி ஜோசவ்வாஸ் குன்றின் குரல் முத்தாமாணிக்கமா
பா.அமிர்தநாயகம் பா.அமிர்தநாயகம் பா.அமிர்தநாயகம் பா.அமிர்தநாயகம் அருட்சகோதரர்கள் ஆஜெகராஜசிங்கம் யேசுதாசன் சூசைப்பிள்ளை
மாதகல் 19 () மாதகல் 195 மாதகல் 1915 மாதகல் 95 மாதகல் 1915 உரும்பிராய் 1968 உரும்பிராய் 1971 பாஷையூர் 1990
பாஷையூர் 1987
ஊர்காவற்றுறை1975 ஊர்காவற்றுறை 1980 ஊர்காவற்றுறை1981 ஊர்காவற்றுறை1973
குருநகர் 1991 குருநகள் 1990 குருநகள் 1994 திருமறைகலாமன்றம் 1989 தி.க.ம 1991 தி.க.ம 1993 LTഞഖ്യf 1994 g5.35.LD 1998
நல்லுார் 1993 நல்லுார் 2000 நல்லுார் 2002 நல்லுார் 1999 தி.ம.க 2002 குருநகர் 1998 LITങ്ങഖ്യി 2000 யாழ்ப்பாணம் 1972 uJTLIT600TLD 1970 uJITp(JLJT600TLD 1970 யாழ்ப்பாணம 1976 uJITp(JLJT600TLD 1972 யாழ்ப்பாணம 1976 சவேரியார் குருமடம் பாஷையூர் 1988 பாஷையூர் 1994 பாஷையூர் 1980
தடித்த எழுத்துக்களிலுள்ளவை அச்சுருப்பெற்றவை (இந்நூல் பட்டியல் பூரணமானதல்ல)


Page 54


Page 55
வெள
திருைைறக்
238, L
u JITU
TP : O21E-mail : cpaja website: www.c
Computer Cover Designing & P
 

ரதான வீதி,
JUT600TLD. 222 2393 ffna Geureka.lk
pateam.Org
rinting by JudeSon-0777-241885