கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு குடம் கண்ணீர்

Page 1


Page 2

ஒரு குடம் கண்ணிர்
- உண்மைக் கதைகள் -

Page 3
கர்ைரீைரின் ஒரு குடம் இங்கே இருக்கிறது. சமுத்திரங்கள் வெளியே இருக்கின்றன.
 

ஒரு குடம் கண்ணிர்
- உணிமைக் கதைகள் -
அஷ்ரஃப் சிஹாப்தீன்
سمرقت دہما

Page 4
ஒரு குடம் கண்ணிர் (உண்மைக்கதைகளின் தொகுப்பு) அஷ்ரஃப் சிஹாப்தீன் உரிமை அமீனா அஷ்ரஃப் முதற் பதிப்பு: நவம்பர் 2010 வெளியீடு: யாத்ரா தொடர்பு 37. ருரீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, வத்தளை, முரீலங்கா. egoso Cue: O777 3O3 818 விலை:3OO.OO ரூபாய்கள்
ORU KUDAM KANNEER (Collection of Faction - Stories) ASHROFF SHHABDEEN
C Ameena Ashroff First Edition: November 2010 - 37, Sri Sidhartha Mawatha, Mabola, Wattala, Sri Lanka Yaathra Publication O777 303 818 yaathracGhotmail.com - ashroffshihabdeenGgmail.com ashroff shihab de en yol asite.com a shroffs hi ha bdeen. blogspot. Com Price: Rs.300.00
Printers: Talent Printech
20 / 4, Madam pitiya Raod, Colom bo - 1 5 0 1 1436 7575
ISBN: 978-955-8448-06-9
 

காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தாய் மாமன் செய்யது ஷரிபுத்தீன் (ஆசிரியர்) அவரது பிஞ்சுப் புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலான நூற்றொரு பேருக்கும்!

Page 5

vii
ஆன்மாவின் முகத்தில் அறையும் கதைகள்
"உலகின் எல்லாத் தர்மங்களும் மீறப்படு வதன் மூலம் வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையிலான ஜீவமரணப் போராட்டத்தை அனுபவித்தவர்களின் கதைகள்தாம் இந்த நூலில் அடங்கியிருக்கின்றன. பாவப்பட்ட அப்பாவி ஆத்மாக்களின் உண்மையான அனுபவங்கள் இவை. இந்த அனுபவங்களைப் பேசத் தொடங்கும் போது மனிதாபிமானமிக்க எல்லா இதயங் களுமே நடுங்கத் தொடங்கும்."
இந்த நூலின் உண்மையான ஜீவனைத் தொட்டுக் காட்டும் நூலா சிரியரின் முன்னுரை வாசகங்கள் இவை. இங்கு பேசப்படும் நிகழ்வுகளின் சோகங்களும் பாத்திரங்களின் மனக் குமுறல்களும் உள்ளத்தை உலுக் கும் சம்பவங்களாக நம் மனக் கண் விரிகின்றன. ஒரு சிறு கதையோ என்று மயங்குமளவு இச்சம்பவங்களுடன் நடை பயிலும் எழுத்துக்களின் அழகு யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்ற மருட்சிக்குள் எம்மை ஒரு கணம் இட்டுச் செல்வது உண்மை. ஆனால் இவை கற்பனை கள் அல்ல. கற்பனையையும் தோற்கடிக்கும் இரத்தத்தை உறைய வைக்கும் உண்மைகள்.
கற்பனைச் சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த் தத்தை அதன் உள்ளமை குன்றாது முன் வைக்கும் நூலாசிரியரின் எழுத் அஷ்ரஃப் சிஹாப்தீன்

Page 6
WI11
துப் பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும் அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும் உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக் கியப் பதிவுகள் இவை. செய்திகளின், சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவணப் பதிவு களுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும் நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதை யும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது. இலக்கியமாகவும் ஆவணமாக வும் தன்னை வெளிப்படுத்தும் இந்நூல் தமிழில் ஒரு முன்னோடி முயற்சி யாக இருக்கக் கூடும். இங்கு கூறப்படும் நிகழ்வுகளும் சம்பவங்களும் அவற்றில் பங்கேற்கும் பாத்திரங்களும் எமது கவனத்தைத் திருப்பும் பல வரலாற்று உண்மைகளுக்குச் சொந்தமானவை. எமது காலத்தின் உலக அரசியல், ஐனநாயகம், புதிய உலக ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பில் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கமும் எழுப்பும் கேள்விகளும் மனிதர்கள் என்ற ரீதியில் பதில் தருவதைக் கட்டாயப்படுத்துகின்றன. கடந்த ஐம்பது வருட கால வரலாறும் அதற்கு முற்பட்ட வரலாறும் விட்டுச் சென்றுள்ள பிரச்சினைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எமக்கு நினைவு படுத்துவதே இந்நூலின் மிகப் பெரிய பங்களிப்பாகும்.
ஸ்டேன்லி ஜே. தம்பையாவின் பின்வரும் கூற்றுத் தரும் கருத்தி லிருந்து இப்பிரச்சினையின் ஆழத்தை நாம் உணர முடியும்.
"துக்ககரமான யதார்த்தமும் எமது காலகட்டத்தின் உண்மை யும்என்னவென்றால்எமது காலகட்டம்2ம்உலகமகாயுத்தத் திண்சாம்பலிலிருந்து உருவாகியதுஎன்பதாகும். அபிவிருத்தி, நவீனமயம், வைத்திய வசதி, கல்வி எழுத்தறிவு, பொருளா தாரம், அரசியல் எல்லாவற்றிலும் முன்னேற்றம் நடந்துள்ள போதும் பாரிய சிவில் யுத்தங்களையும் இனங்களுக்கிடை அஷ்ரஃப் சிஹாப்தீன்:

ΙΧ
யிலான இரத்தக் களரிகளையும் இந்த யுகம் உள்ளடக்கி ubirolTg)." (Stanly J. thambiah, Leveling Crowds, 1996.) அடக்குமுறை ஆட்சிக்கும், ஐனநாயக வேடமணிந்த சர்வாதி காரத்திற்கும், மேற்கத்திய ஆயுதங்களினாலும் ஊடகங்களினாலும் வலி மைப் படுத்தப்பட்ட கோஷங்களுக்கும், அடிப்படை வாதங்களுக்கும் விலைபோன பலவீனத்தை இந்த யுகம் பிரதிபலிக்கிறது. இனத்துவ வேறு பாடுகளும் அவற்றினால் எழும் மோதல்களும் 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பாதியில் கைத்தொழில் மய முதலாம் உலகிலும் வளர்ந்து வரும் மூன்றாம் உலகிலும் முன்னணி நிகழ்வுகளாகியுள்ளன.
சோவியத் ரஷ்யா சிதறியதுடனும் கிழக்கைரோப்பிய சமவு டைமை நாடுகளில் ஏற்பட்ட பிளவுகளுடனும் இனத்தேசியம் என்ற கருத்துக்களும் மோதல்களும் மேலும் அதிகரித்தன. அதாவது இன மோதல், இந்த யுகத்தின் பாரிய யதார்த்தமாக மாறியுள்ளது. குறைந்தது 48 நாடுகள் இனத் தேசியவாத மோதலில் அல்லது சண்டையில் சிக்குண் டுள்ளன. வட அயர்லாந்தில் கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்தியரும், பெல்ஜியத்தில் வலூன்களும (Walloon) ஃபிளமிஷ்களும் (Flemish), மலேசியாவில் சீனர்களும் மலாயரும், சைப்பிரஸில் கிரேக்கரும் துருக்கியரும், கிழக்குத் துருக்கியில் துருக்கியரும் குர்துகளும், காஷ்மீரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும், ஃபிஜி தீவில் ஃபீஜியரும் இந்தியர்களும், பாக்கிஸ்தானில் பட்டாணியரும் பீஹாரிகளும், பொஸ்னியாவில் சேர்பியரும் முஸ்லிம்களும் - ஈராக்கிலும் பாக்கிஸ் தானிலும் தொடரும் வீஆ-முஸ்லிம் மோதல்களும் என்று இப் பட்டியல் நீண்டு செல்கிறது.
இந்த மோதல்களில் வன்முறை, கொலை, தீ வைப்பு, சொத்துக் களை அழித்தல், கற்பழிப்பு என்ற எல்லா வகை அநீதிகளும் நடைபெறு கின்றன. மற்றொரு புறத்தில் இராணுவத்தின் தலையீட்டினால் பல சந்தர்ப்பங்களில் குடி மக்கள் கலகங்கள் வெடித்துள்ளன. உகண்டாவிலும் கெளத்தமாலாவிலும் இராணுவம் ஆயிரக் கணக்கில் மக்களைக் கொன்றது. ருவாண்டா, பாக்கிஸ்தான், இலங்கை, இந்தியா, இந்தோனே வழியா உட்படப் பல நாடுகளில் முடிவுறாத பிரச்சினைகளாக இவை |ඉංග්‍ය ගLශ්‍රී ඝණ්හාෆ්

Page 7
Χ
தொடர்வதைக் காண முடியும். இவை எல்லாவற்றிலும் நிகழும் மனித உரிமை மீறல்களும் மனிதச் சீரழிவுகளும்தான் இன்று உலகை முடிவுறாத சோதனைக் களமாக்கியுள்ளது.
சிவில் உரிமைகளை ஓர் அரசு வரைமுறையற்ற விதத்தில் கட்டுப் படுத்துவதற்கு முற்படும் போதும் பெரும்பான்மையினரால் சிறுபான்மை யினர் ஒடுக்குதலுக்குள்ளாகும் போதும் பிரிவினைக் கோரிக்கைகளுக் காக மக்கள் குரல் எழுப்பும் போதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக் காத விதத்திலும் ஜனநாயகத்துக்கு மாற்றமாகவும் அதிகாரம் வலிமைப் படுத்தப் படும் போதும் மனிதப் பண்பாடுகளை நிலை குலையச் செய்யும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. கம்போடியா, ஈரான், பர்மா, யூகோஸ்லாவியா, பெரு, ஹெய்ட்டி என்று உலகின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகள் இதன் பிடியில் சிக்கியுள்ளன.
சர்வாதிகாரத்தையும் இராணுவக் கட்டமைப்பையும் ஈரானில் மன்னர் ஷா வலிமைப்படுத்தியதிலிருந்து ஈரானில் சித்திரவதைப் படலம் ஓர் அசாதாரணமான இடத்தைப் பெறத் தொடங்கியது. 1953ல் அமெரிக்க (சி.ஐ.ஏ), பிரித்தானிய (எஸ்.ஐ.எஸ்) கூட்டுச் சதியின் மூலம், உள்நாட்டுத் தேசியவாதிகளின் ஆதரவுடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த முஹம்மத் மொஸாதிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முஹம்மத் ரெஸா :பஹற்லவி (மன்னர் ஷா) பதவியில் அமர்த்தப்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஷாவின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கும், எதிராளிகளைக் கண்காணிப் பதற்கும், விசாரணை நடத்துவதற்குமென சவாக்' என்ற சிறப்புப் புலனாய்வுப் பாதுகாப்புப் பிரிவை ஷா ஆட்சி, சி.ஐ.ஏயின் ஆதரவுடன் ஈரானில் உருவாக்கியது. சித்திரவதை தொடர்பான பயிற்சிகளை வழங்கும் விதத்தில் இஸ்ரேலிய மொஸாதின் உதவிகள் பெறப்பட்டன. அரச குடும்பத்தின் வரைமுறையற்ற ஊழல், ஒரு கட்சி ஆட்சி, அரசியல் எதிரிகளைப் பழிவாங்குதல் போன்ற விடயங்களை சவாக்" கவனித்துக் கொண்டது. இராணுவத்திற்கும் சவாக்கிற்குமிடையில் நேர டித் தொடர்புகள் இருந்தன. சுமார் ஐம்பதாயிரம் அங்கத்தவர்கள் இதில் சேவை புரிந்தனர். ஒரு கைதியைச் சாகடிக்காது எவ்வாறு சித்திரவதை செய்வது போன்ற உத்திகளை மொஸாத் அமைப்பு சவாக் சித்திரவதைக் ෆිබදු|Jäi சிஹாப்தீனி

Χ
காரர்களுக்குக் கற்றுக் கொடுத்தது.
பல்கலைக் கழக மாணவர்கள், தொழிற் சங்கங்கள், விவசாயி கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். வெளி நாட்டில் கல்வி கற்போர், தொழில் புரிவோர் மீது இப்பாதுகாப்பு வலைத் தொடர் விரிவு படுத்தப் பட்டது, அரசாங்கத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வைத்திருப் போர் கைது செய்யப்பட்டனர். தண்டிப்பதற்கும் தடுத்து வைப்பதற்கும் சட்ட ரீதியான அனுமதி பெற்ற புலனாய்வுத் துறையாக சவாக் மாறியது. மின்சார அதிர்ச்சி, அடித்தல் என்பவற்றுடன் கண்ணாடித் துண்டுகளையும் சுடு நீரையும் குதத்திற்குள் செலுத்துதல், விதைகளில் பாரங் கட்டித் தொங்க விடுதல், பற்களையும் நகங்களையும் பிடுங்குதல் போன்ற சித்திரவதை முறைகள் இதற்கென்று நிறுவப்பட்ட சித்திரவதைக் கூடங்களில் நடைபெற்றன.
இச்சித்திரவதைகள் பற்றிய செய்திகள் உலகெங்கும் பரவின. 1975ல் லண்டன் டைம்ஸ் இச்சித்திரவதைகளின் கொடுமைகள் பற்றி எழுதிய போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது:-
"தமது பிள்ளைகள் தமது கண்களுக்கு முன் னால் மிருகத்தனமாக நடத்தப்படுவதைப் பார்க்குமாறு கைதிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். "இது பார்க்கக் கூடிய விடயமல்ல. எனது கைகளில் கத்தியிருந்திருந்தால் எனது மகனைக் குத்திக் கொன்று அக்கொடுமையிலிரு ந்து அவசரமாகக் காப்பாற்றியிருப்பேன்.” (Bacground of confrontation: US and Iran - 960600Tu5 g56ITLD) எல்லை மீறிச் செல்லும் அல்லது ஜனநாயக வரம்பை உடைத் தெறியும் சித்திரவதைக் கொடுமைகளை மக்கள் எதிர்ப்பார்கள். ஆழமாக நோக்கினால் ஈரானிய இஸ்லாமியப் புரட்சியைத் தூண்டிய காரணிகளில் சித்திரவதைக்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பது தெரிய வரும். மன்னர் ஷாவின் சித்திரவதைக்கு எதிராகக் கிளர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் கொமெய்னியின் அணியில் ஒன்று திரண்டனர். கொமெய்னி அதைச் சரியாகப் பயன்படுத்தினார். அதனால் ஈரானியப் புரட்சி சமயப் புரட்சி அல்ல, அது மனித உரிமைப் புரட்சியாகும் என்று தரியுஸ் ரெஜாலி |ඉංග්‍ය ගuහී ඝණ්හා)

Page 8
xii
(2007) யின் புதிய ஆய்வு கூறுகிறது. இது ஈரரனியப் புரட்சியின் மற்றொரு பக்கத்தை மட்டுமன்றிச் சித்திரவதைக் கொடுமைக்கு எதிரான மக்களின் உணர்வுகளையும் எமக்குக் காட்டுகிறது.
1960 - 1980களில் கம்போடிய அரசியல் இராணுவ மயப்படுத் தப் பட்டதைத் தொடர்ந்து கம்போடிய மக்கள் இதே வகையான பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்தனர். பொல் பொட் ஆட்சியின் அடக்குமுறைகளும் சித்திரவதைகளும் உலகையே அதிர வைத்தன. எதிர்க் கட்சிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் பேச்சுச் சுதந்திரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. மனித உரிமைகள் அனைத்தையும் இழக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளவர்கள் இராணுவ விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறைக் கூடங்களில் சித்திரவதைக்கும் நிந்தனைக்கும் ஆளாக்கப்பட்டனர். நாட்டில் சிவில் யுத்தம் வெடித்தது. இத்தனைக்கும் பொல்பொட் அரசு தன்னை ஜனநாயக அரசு என்றே கூறிக் கொண்டது.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத மனித சுதந்திரங்களை அடக்குமுறைக்கும் ஆணைகளுக்கும் அடிபணிய வைக்கும் அரசியல் யாப்பு மாற்றங்களைப் பொல்பொட் நிர்வாகம் அமுல் செய்தது. இது மக்களின் அடிப்படையான வாழும் உரிமைக்கு விடுக்கப்பட்ட பெரும் சவா லாகியது. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் புரட்சியின் எதிரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைகளில் தள்ளப்பட்டனர். அல்லது கொடிய தண்டனைகளுக்குள்ளாக்கப்பட்டனர். பொல்பொட் இராணுவ ஆட்சியில் 3.3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். 147,868 பேர் அங்கவீனராக்கப்பட்டனர். 200,000 பேர் அநாதைகளாக்கப்பட்டனர்.
இவ்வாறான இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் அல்லது அடக்கு முறைகளைப் பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தும் ஏனைய நாடுகளில் ஊடகங்கள் நசுக்கப்படுவதும், ஊடகவியலாளர்கள் தாக்கப் படுவதும், குடிமக்கள் கைது செய்யப்படுவதும், அவர்கள் பல்வேறு தொந்தரவுகளுக்குள்ளாக்கப்படுவதும், எதிர்க் கட்சிகள் சின்னாபின்னம் செய்யப்படுவதும் பொதுவில் நடைபெறும் காட்சிகளாயின. அஷ்ரஃப் சிஹாப்தீன்:

xiii
இஸ்ரேல், பலஸ்தீனிய மக்களை நடத்தும் முறையும் அவர்க ளுக்கு இஸ்ரேல் இராணுவம் வழங்கும் தண்டனைகளும் சித்திரவதை களும் உலகின் மற்றொரு சோக வரலாறாகும். பலஸ்தீன மக்களை அவர் களது சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்களாக்கி அவர்களைப் பல்வேறு தொந்தரவுகளுக்கும் மனித நாகரிகத்திற்கு முரணான கொடுமைகளுக்கும் ஆளாக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அது தானே உருவாக்கும் சட்டங்கள் சர்வதேச அங்கீகாரங்கள் என்ற போர்வையில் இன்னும் தொடருகிறது.
உண்மையில் பலஸ்தீனியர் அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த இராணுவ அடக்குமுறைக்கும் கொடிய சித்திரவதைகளுக்கும் பலியாவதிலேயே கழித்துள்ளனர் அல்லது மரணத்தைத் தழுவியுள்ளனர். மருந்து, மின்சாரம் என்பவற்றைத் தடுப்பதோடு ஏனைய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவதன் மூலமும் முழு சமுதாயத்தையுமே இஸ்ரேல் சித்திரவதைக் கூடமாக்கி யிருப்பது சித்திரவதை முறையின் மற்றொரு பரிமாணமாகும்.
1967ல் பலஸ்தீனப் பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்ததிலி ருந்து பலஸ்தீனக் கைதிகளைத் திட்டமிட்ட வகையில் இராணுவம் சித்திரவதை செய்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆக்கிரமிக்கப்பட்டவர் களுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய சர்வதேச சமூகத்தின் சட்டங்கள் அனைத்தையும் இஸ்ரேல் மீறி ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் மீது இராணு வச் சட்டங்களைய்ம் அடக்குமுறையையும் இன்னும் உபயோகித்து வருகிறது.
இஸ்ரேலிய இராணுவத்தினர் பலாத்காரமாகக் கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்து பலஸ்தீனியரைக் கைது செய்கின்றனர். துப்பாக்கி வேட்டுக்களால் அங்குள்ள மக்களை அச்சத்தில் உறைய வைப்பதோடு சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகளையும் கட்டடங் களையும் புல்டோஸர் மூலம் தகர்த்துத் தரைமட்டமாக்கி விடுகின்றனர். கைது செய்யப்படுபவரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்துகின்றனர். சிறையில் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதுடன் கண்கள் கட்டப்பட்டுப் பல છe ඝLIහී ආගjගණ්

Page 9
XV
நாட்கள் சிறிய அறைகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். துர்நாற்றம் வீசும் சாக்குத் துண்டுகளால் முகத்தைக் கட்டிப் பல நாட்கள் அந்த நபரைத் தனிமைப்படுத்துகின்றனர்.
இஸ்ரேலிய சமூகத்தின் சித்திரவதைக் கோட்பாடு, ஒவ்வொரு பலஸ்தீனியனுமே பயங்கரவாதி என்பதிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும் கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு அவர்களிடம் குற்ற ஒப்புதல் பெறப்படுவதன் மூலம் பயங்கரவாதத்தை நிறுத்தி விடலாம் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நூலில் அஷ்ரஃப் சிஹாப்தீன் முன்வைத்துள்ள எண்ணற்ற சித்திரவதைச் சம்பவங்களைப் போன்ற ஒரு சிறு சம்பவத்தை இஸ்ரேலியச் சித்திரவதை முகாமிலிருந்து பார்க்கலாம். 16 வயது பெத்தலஹேம் சிறுவர் கைதி, அவனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகின்றான்:-
"நான் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தரையில் வீழ்ந்தேன். நான் விழுந்த பின்னரும் அவர்கள் என்னை அடித்தனர். இரண்டு மணி நேரம் அடித்த பின்னர் ஒரு சிறிய அறைக்குள் என்னைத் தள்ளிப் பூட்டினர். கடுமையான பணி கொட்டிக் கொண் டிருந்த அக்குளிர் காலத்தில் குளிரூட்டியைத் திறந்து விட்டனர். அது குளிரை இன்னும் மோசமாக்கியது. அரை மணி நேரத்துக்குப் பின்னர் வந்து குற்ற ஒப்புத லுக்குத் தயாரா என்று கேட்டு என்னை அடிக்கத் தொடங்கினர். சில நிமிடங்களின் பின்னர் குற்ற ஒப்புத லுக்குச் சம்மதித்தேன். அடிப்பதை நிறுத்திக் கொண்ட 60TL." (Ribby Sata mish, Nimer shaban, Torture of Palas tinian political prisoners in Isreli prisons - 2003) சித்திரவதை தனிநபர் ரீதியான வக்கிரங்களினால் மட்டும் நடை பெறும் ஒன்று அல்ல. சித்திரவதை என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கும் இயந்திரங்களினால் கருத்து வேற்றுமையை அல்லது சம்மதியாமையை ஒடுக்குவதற்காக நிகழ்த்தும் செயற்பாடுகளின் ஒரு Ugfungub. (Touture in the eighties - An Amnesty International Report, அஷ்ரஃப் சிஹாப்தீனி

XV
1984) தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், உளரீதியான தாக்குதல், உடல் ரீதியான வன்முறை முதலிய வதைகள், தொந்தரவுகள் மூலம் கைதிகளிடமிருந்து தகவல்களை அல்லது குற்ற ஒப்புதலைப் பெறுவதற் காக அரசாங்கத்தின் பல்வேறு பாதுகாப்பு முகவர் பிரிவுகள் இவற்றைச் செய்கின்றன. அவசர காலச் சட்ட ஏற்பாடுகள் சித்திரவதையைக் கருவி யாகக் கையாள்வதற்கு விரிவான அதிகாரங்களை அரச படைகளுக்கு வழங்குகின்றன. ஆனால் அரசையும் அரச நிர்வாக மற்றும் நீதித்துறை அலகுகளையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் போது இந்த நிலை இன்னும் மோசமடைவதைப் பல நாடுகளின் அனுபவங்கள் எமக்குக் காட்டுகின்றன.
ஒரு நாட்டின் அரசாங்கம் செயலிழந்து அந்நிய நாட்டுப் படைகள் அந்த நாட்டின் பாதுகாப்பு, சட்டம் என்பவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தோன்றினால் அது மற்றொரு வகையான பாதிப்பை யும் பயங்கரவாதத்தையும் மக்கள் முன் கொண்டு வருகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்று இந்த நிலை பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. மக்கள் மீதான சித்திரவதை இக் கொடுமைகளின் மைய இடத்தைப் பெற்றுள்ளது என்பது முக்கிய மானதாகும்.
றமளான் தாக்குதல் என்ற பெயரில் அழைக்கப்படும் ஈராக்கில் நடந்த பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஃபலூஜா மாநிலத்தைச் சேர்ந்த சாலிஹ் என்பவர் குற்ற விசாணையின் போது வெளிப்படுத்திய உணர்வுகள் இப்பிரச்சினையின் ஆழத்தை ஓரளவு சுட்டிக் காட்டுகிறது:-
"நான் ஃபலூஜாவைச் சேர்ந்த சாலிஹற்வை விசாரணை செய்து கொண்டிருந்தேன். குறைவான ஆனால் திருத்தமான ஆங்கிலத்தில் அவன் பேசினான். இவர்கள் சதாம் அரசின் ஆதரவாளர்களாக அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும். எனது கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருந்த சாலிஹற்நான் ஒரு அமெரிக்கன் என்று தெரிந்து கொண்ட
ஒரு குடம் கணினி

Page 10
xvi
தும் எனது பேச்சுக்கிடையில் குறுக்கிட்டான். முகத்தை எனது முகத்துக்கு அருகில் கொண்டு வந்து அவன் சொன்னான்:-
"ஃபலூஜியன் ஒருவனது வீட்டுக் கதவை அந்நியன் ஒருவன் உடைப்பது வெட்ககரமானது. அந்நியர்கள் எமது பெண்களைப் பாதைகளில் நிறுத்திச் சோதனை போடுவது வெட்ககரமானது. பாதைகளிலும் கட்டாந்தரைகளிலும் எங்களைப் படுக்குமாறு அந்நியர் கள் கட்டளை இடுவது வெட்ககரமானது. அந்நியரின் இச் செய்கைகளினால் ஃபலூஜியன் வெட்கப்படுகிறான். உனக்குத் தெரியுமா? இது பெரிய அவமானம்! அதனால் அவ்வாறு நடந்து கொள்ளும் இராணுவத்தைப் பழி வாங்குவது ஃபலூஜியனின் கடமை. அவர்களைத் தாக்கி அழித்தாவது அவமானத்தைக் கழுவிக் கொள் வதை அவன் கடமை என்று நினைக்கிறான். அவமா னம் ஓர் அழுக்கு. அதை ஃபலூஜியர்கள் கழுவித் துடைப் பார்கள். அதை நிறைவேற்றும் வரை அவர்கள் உறங்க மாட்டார்கள். மேலும் அவன் என்னை உற்றுப் பார்த்துக் கூறினான்:- "அமெரிக்கர்கள் மக்களை ஆவேசப்படுத்து கிறார்கள். அவர்கள் மக்களை மதிப்பதில்லை.” சிலர் உண்மையிலேயே குற்றவாளிகள் அல்லர். சிலர் குற்ற வாளிகளாக இருந்தாலும் அந்தக் குற்றத்தை எந்த வரையறைக்குள் தீமைப் பட்டியலில் சேர்ப்பது? சாலிஹின் கதை இதைத்தான் உரக்கக் கூறுகிறது.
பெரும்பாலும் அரசியல் எதிரிகளையும், பயங்கரவாதத்தையும், ஒடுக்குவதற்காகவும், அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் அரசின் பாதுகாவல் முகவர் அமைப்புக்கள் கைது செய்தல், விசாரணை செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதை செய்தல் போன்றவற்றை எதிரிகள் மீது அல்லது சந்தேக நபர்கள் மீது பயன்படுத்துகின்றன. சித்திரவதை என்பது மனிதன் மீது அதாவது தனி நபர் மீது உடல் வலியை, உள வேதனையைத்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

XV
திட்டமிட்டுச் செய்தல் என்பது பொது விளக்கமாயினும் அது மனிதனில் ஏற்படுத்தும் தாக்கமும் அவமானமும் அந்தப் பொது விளக்கங்கள் அனைத்தையும் தாண்டிச் சென்று விடுகிறது.
மனிதன் என்ற நிர்மலமான எளிய உணர்வையும் அதற்கே உரித் தான கெளரவத்தையும் சித்திரவதை நாசம் செய்கிறது. அவன் தன்னை ஒரு நாயை விடக் கேவலமாகக் கருதும் மிகத் தாழ்வான மன நிலைக்கு அது அவனைக் கொண்டு செல்கிறது. சித்திரவதையில் ஓர் அவமானம் தொற்றிக் கொண்டுள்ளது. அது அவனை மனிதனற்றவனாக அவனுக்கு உணர்த்துகிறது.
இந்நூலில் வரும் "ஏலி. ஏலி. எங்களை ஏன் கைவிட்டீர் கதையின் நாயகன் கூறும் வார்த்தைகளில் இந்த உண்மை பிரதிபலிப் பதை நாம் பார்க்கிறோம். ஜோஸப் ஷெர், ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான ஆயிரக் கணக்கான யூதர்களில் ஒருவன். அவனது கூற்றின் ஒரு பகுதி இது:-
“கரிய வெப்பம் மிகுதியாயிருந்தது. உண வோ நீரோ கிடையாது. தலையை உயர்த்தினால் மரணம் அன்றி வேறில்லை. ஒவ்வொரு பத்தாவது அல்லது பன்னிரண்டாவது நபரை அவர்கள் சுட்டு எம்மைப் பீதியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றார் கள். யூத வழிபாட்டுத் தலங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். நாங்கள் அவமானப்படுத்தப் பட்டோம். எங்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை. நாங்கள் எங்களை நாய்களைப் போல் உணர்ந்தோம்." சித்திரவதை என்றால் - அது என்ன என்பதை முழு அளவில் விளக்குவதற்கு இக்கதை ஒரு கருத்தைத் தந்துள்ளது. சித்திரவதை என்றால் ஒருவனைச் சீரழித்தல், அவமானப்படுத்துதல் என்று பெயர். அது அடித்துத் துன்புறுத்துவதோடு நின்று போகும் விடயம் அல்ல. கற்பழித்தல், பாலியல் கொடுமைகள், குடும்பத்தைக் கொடுமைப் படுத்துதல், மனைவியைக் கணவன் முன்னிலையில், மகளைத் தந்தையின் முன்னிலையில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குதல், அல்லது
ஒரு குடம் கண்ணீர்

Page 11
அவ்வாறு செய்யப் போவதாக அச்சுறுத்துதல் என்று அந்த நபர் கொடிய அவமானங்களைச் சுமக்க வேண்டும்.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாகத் தொடரும் இப்பிரச்சினை யின் கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் முக்கியமான காலப் பகுதியாக 20ம் நூற்றாண்டைக் குறிப்பிட முடியும். மனிதனைப் பற்றிய மதிப்பீடும் கெளரவமும் இந்த நூற்றாண்டின் சித்திரவதை உரையாடல் களில் முக்கிய இடத்தைப் பெற்றன. சுதந்திரம், இருப்பு, கெளரவம் என்ற சொற்களுக்கு அல்லது கருத்துக்களுக்கு நியாயம் செய்வதாயின் சித்திரவதை சிந்திப்பதற்கும் கடினமான எதிர் - மனிதச் செயல் என்பதை உணர்த்துவதற்கும் அதைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்டு வரும் முயற்சி களைக் குறிப்பிடாமலிருக்க முடியாது.
மனித உரிமைகள் உலகப் பிரகடனம் (1948) இதில் பிரதான இடத்தை வகிக்கிறது. இது தவிர ஜெனிவா ஒப்பந்தம (1966), எல்லா நபர்ளையும் சித்திரவதையிலிருந்து பாதுகாக்க உத்தரவாதமளிக்கிறது. மனிதனைச் சீரழிக்கும் மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகள் அல்லது தண்டனைகளிலிருந்து பாதுகாப்பளிப்பதற்கான ஐ.நா. பிரகடனம (1975) என்று சர்வதேச மற்றும் தேசங்களின் பட்டத்திலும் சித்திரவதை அழிப்பு அல்லது பாதுகாப்புச் சட்டங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. கொடூர மான, மனிதத் தன்மையற்ற, மனிதனைச் சீரழிக்கக் கூடிய விதத்திலான செயல்களையோ அல்லது தண்டனைகளையோ அல்லது சித்திரவதை யையோ எவர் ஒருவர் மீதும் நிகழ்த்துவதையும் கட்டாயக் குற்ற ஒப்பு தல் பெறுவதற்காகக் கொடூரமான தண்டனைகளை வழங்குவதையும் இவை தடுத்துள்ளதோடு அவை மனிதனின் கெளரவத்தைச் சீரழிக்கும் மோசமான செயற்பாடுகள் என்றும் குறிப்பிட்டுள்ளன.
சித்திரவதை மனித உரிமைகளின் அடிப்படையை மீறுவதாகும். மனித கெளரவத்துக்கு எதிரான குற்றச் செயல் என ஐ.நா. பொதுச் சபை சித்திரவதையைக் கண்டிக்கின்றது. சர்வதேச மற்றும் தேசங்களின் சட்டங்களின் அடிப்படையிலும் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சித்திரவதை தொடர்ந்து நிலை பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் அது பரவியுள்ளது. சித்திரவதையுடன் போராடுவதற்குச் சட்ட அஷ்ரஃப் சிஹாப்தீன்=

XIX
ரீதியான இந்தத் தடைகளுக்கு அப்பால் உடனடியான வேறு செயற்பாடு கள் தேவை என்று சர்வதேச மன்னிப்புச் சபை உலகை வேண்டுகிறது. (Touture in the eighties - An Amnesty International Report, 1984)
பல்வேறு விமர்சனங்கள், தடைகளுக்கு மத்தியிலும் சித்திர வதைகள் நடைபெற்ற வண்ணமுள்ளன. காவல் துறையின் தேவைக்காக, குற்ற ஒப்புதல் பெறுவதற்காக என்று இவை நடப்பதாகக் கூறப்படுகிறது. தலை கீழாகத் தொங்க விடுதல், அடி, உதை, மின்சார அதிர்ச்சி, உடலின் பாகங்களுக்குள் கம்பி போன்ற கூரான ஆயுதங்களைச் செருகுதல், இருட்டறையில் பல நாட்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் பூட்டி வைத்தல், பல நாட்கள் தூங்க விடாது தடுத்தல் போன்ற பல்வேறு முறைகளின் மூலமாக இச்சித்திரவதைகள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய சித்திரவதைக் கொடுமைக்குள் சிக்கித் தவித்த மனிதர்களின் வாக்குமூலங்களும் கதைகளும்தான் இந்நூலின் விடயப் பொருள். அதிர்ச்சிக்கும் மன வேதனைக்கும் வாசகர்களை இட்டுச் செல்லும் இக் கதைகள் ஒவ்வொன்றினதும் அடிப்படைக் கதைப் பொருள் சித்திரவதையும் துன்பங்களுமாகும். சித்திரவதையும் அதைச் சூழ்ந்தி ருக்கும் அச்சமும் அருவருப்பும் அவமானமும்தான் வாசகனை இவ் விடயம் பற்றிச் சிந்திக்கத் தூண்டுவதாக அமைய உள்ளது.
அடிமை முறை எவ்வாறு சமுதாயத்திலிருந்து வெறுத்தொதுக்கப் பட்டதோ அவ்வாறு சித்திரவதையும் உலகிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று இக்கதைகள் மனித மனச் சாட்சிக்கு விண்ணப்பம் செய்கின்றன. அடிமை முறை, நிற வேறுபாடு என்பவற்றிலிருந்து வெளியேற உலக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. யுத்தம், பயங்கரவாதம் உட்பட எந்த வகையாக இருந்தாலும் சித்திரவதை செய்வதில்லை என்று இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக நாடுகள் ஒரு பொது இணக்கத்திற்கும் சர்வதேசப் பிரகடனங்களுக்கும் தம்மை ஒப்புவித்ததை மனித நாகரிகத்தின் ஒரு பாய்ச்சல் என்றே கூற வேண்டும். ஆனால் அந்த இலட்சியத்தில் வெற்றி காண்பதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சிகள் சஞ்சலத்தையும் பெரும் சலிப்பையும் தருவதாக இருக்கின்றன. ஐனநாயகம் கூட இதற்குப் பலியாகி வருவதுதான் உலகின் Hஒரு குடம் கணினி

Page 12
இன்றைய கவலையாக உள்ளது.
உற்று நோக்கினால் சித்திரவதை சர்வாதிகாரத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. சில சிறிய வேறுபாடுகள் இருந்த போதும் சித்திரவதை என்ற பொதுத் தோற்றப்பாட்டிற்குள் ஜனநாயக நாடுகளும் உள்ளடக்கம். 'சித்திரவதையும் ஜனநாயகமும் (2007) என்ற தரியுஸ் ரெஜாலியின் நூல் இந்தப் பிரச்சினையை விரிவாகப் பேசுகிறது. இருபதாம் நூற்றாண் டின் ஜனநாயகம் சித்திரவதையைச் செய்தது மட்டுமல்ல சித்திரவதைக்குச் சர்வதேச ரீதியான இடத்தையும் வழங்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ். பிரித்தானியா போன்ற நாடுகள் நவீன சித்திரவதை முறைகளை அறி முகப்படுத்தியுள்ளதோடு அவற்றை உலகின் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் இருந்து வருகின்றன.
தமது அரசியல் தலைவருக்கு மக்கள் வாக்குகளை அளித்த பின்னர் தாம் சித்திரவதை செய்யப்படுவோம் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஜனநாயகத்தின் வேர்கள் என்று வர்ணிக்கப்படும் கிரேக்க, ரோம அரசுகளிலிருந்து தற்கால ஐனநாயக அரசுகள் வரை சித்திரவதை நிலையான இடத்தைப் பெற்றிருப்பது ஒரு சாதாரண காட்சியாகியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு வெகு காலத்துக்கு முன்னரே பிரித்தானி யாவும், பிரான்ஸ்" ம், அமெரிக்காவும் சித்திரவதைகளைத் தமது காலனித்துவ நாடுகளில் கையாளத் தொடங்கி விட்டன. தழும்புகளும் காயங்களும் தோன்றாத நவீன சித்திரவதை முறைகளை இந்த நாடுகள் தாம் அறிமுகம் செய்தன. சுத்தச் சித்திரவதை (Clean Torture) என்று இதை தரியூஸ் குறிப்பிடுகின்றார். வெளிக் காயங்களை இவை ஏற்படுத்தாத தால் இவை உளவியல் தொழில் நுட்பங்கள் அல்ல. சுத்தத் தொழில் நுட்பம், உடல் ரீதியான சித்திரவதையாகும். (Darius Rejali, 2007)
சுத்தச் சித்திரவதை, சீரமைக்கப்பட்ட நாகரிக முறையல்ல. இவை பிரித்தானியாவும் பிரான்ஸ"ம் தொடர்ந்து அமெரிக்காவும் நூறு வருடங்களுக்கு முன்னர் பல வடிவங்களில் தமது காலனித்துவ நாடுகளில் பயன்படுத்தியவை. இதே தொழில் நுட்பங்களைத்தான் ஆப்கானிஸ்தான், ஈராக், அல்ஜீரியா மோதல்களிலும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் பயன் படுத்துகின்றன. சுத்தச் சித்திர அஷ்ரஃப் சிஹாப்தீனி=

ΧΧΙ
வதையும் ஐனநாயகமும் கைகோர்த்துச் செய்வது தான் இன்றைய நிலை என்ற தரியுஸின் கூற்று அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் இவை நம் கண்முன்னால் நடந்து கொண்டிருப்பவையாகும்.
நவீன சித்திரவதை முறைகளைச் சட்டபூர்வமாக்குவதற்கு முன்னைய அமெரிக்க புஷ் நிர்வாகம் மேற்கொண்ட கடும் பிரயத்தனங் களை உலகம் அறியாமலில்லை. அமெரிக்க மக்கள் சபை இதைக் கடுமை யாக எதிர்த்த போதும் சி.ஐ.ஏ. முன்வைத்த இச்சிறப்புச் சித்திரவதைத் திட்டத்தை அமுலாக்கம் செய்வதற்கு புஷ் தயாராக இருந்தார். சிறப்புக்
குற்ற விசாரணையின் போது தண்ணீரையும் மின்சாரத்தையும் துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துவது, அடிப்பது, உணவு, நீர், மருந்துகளைத் தராமல் தடுப்பது, போலியான, பரிகாசமான விசாரணை களைச் செய்வது, பாலியலுக்குப் பலவந்தப்படுத்துவது போன்ற வெளித் தழும்புகள் தெரியாத நவீன (சுத்த) சித்திரவதை முறைகள் இவை. கைதிக ளிடமிருந்து தேவையான உண்மைகளைக் கறப்பதற்கு இது சிறந்த முறை என்று புஷ் நிர்வாகம் வாதாடியது. வெளித் தழும்புகளைத் தவிர்ப்பதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை மற்றும் ஊடகங்களின் கண்களில் மண்ணைத் தூவுவது இத்திட்டத்தின் உள் நோக்கங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தின் நோக்கம் சிறு அளவில் இயங்கும் மிகவும் ஆபத்தான குற்ற விசாரணை செய்து தகவல்களைப் பெறுவதாகும்" என்று நாட்டு மக்களுக்கு வானொலியில் ஆற்றிய உரையில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் குறிப்பிட்டார். தொடர்ச்சியான மெருகூட்டப்பட்ட இத்தகைய சித்திர வதைகள்அவசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குச் சிறப்பாக உதவுவதாகவும் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இதனால் காப்பாற்ற முடிந்ததாகவும் புஷ் வாதாடினார்.
சித்திரவதையற்ற உலகை ஜனநாயகத்திடம் எதிர்பார்த்துள்ள நிலையில் பாதகமான பதில்களாக இவற்றைக் கொள்ள முடியும்.
ஜனநாயக சமுதாயத்தில் சித்திரவதையின் இடம், தன்மை பற்றிய கேள்விகளை இது எழுப்புகிறது. அல்லது ஜனநாயகப் போர்வை
|ඉංග්‍ය ගLä ඝණ්හා)

Page 13
xxii
யில் நடைபெறும் பாஸிஸ் ஆட்சிகளில் இது ஒர் அங்கமாக உள்ளதா? சித்திரவதை பற்றிய உரையாடல் களத்தில் இக்கேள்விகள் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளன.
இந்நூலில் உள்ள மிகச் சிறந்த கதைப் பதிவுகளில் ஒன்றான அழகிய காஷ்மீரின் அழுகுரல் இன் கதாபாத்திரம் காஷ்மீர் சித்திரவதை களின் பின்னணியிலிருந்து இந்த உண்மையைப் பற்றித்தான் சிந்திக் கின்றது. அது இந்திய ஜனநாயகத்தைப் பற்றிய விமர்சனமாக இருந்தா லும் நியாயமற்ற முறையிலான சித்திரவதைகளினாலும் மிருகத்தன மாகக் கைதிகள் நடத்தப்படுவதனாலும் அல்லது தண்டிக்கப்படுவதனாலும் செயலற்றுக் கிடக்கும் ஜனநாயகம் பற்றிய வேதனை மிக்க விமர்சன மாகும்.
ஜனநாயகம் என்பது தலைகளை எண்ணி ஆட்சிப் பொறுப்பை இன்னாருக்கு என்று தாரை வார்க்கும் ஒரு சடங்கு அல்ல. அரசியலில் மனிதன் காண விரும்பிய மகத்தான கனவுகள் அதிலிருந்தன. மனிதப் பண்பாட்டின் பெரும் முன்னேற்றமாக அது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அஷ்ரஃப் சிஹாப்தீன் எமக்கு முன்வைக்கும் அந்தக் கதையின் பாத்திரம் எழுப்பும் ஐயங்கள், இனவாதப் பாஸிஸப் பாதையில் ஜனநாய கமா? என்ற அச்ச உணர்வுக்கு எம்மை இட்டுச் செல்கிறது. அதில் ஓர் உண்மை இருக்கிறது. அது சித்திரவதைக்கும் ஜனநாயகப் பண்பாட்டிற் குமிடையிலான முரண்பாடாகும். அந்தப் பாத்திரம் இவ்வாறு கூறுகிறது:-
". இனவாத பாஸிஸ் சக்திகளின் எழுச்சி யானது பயங்கரவாதத்துக்கு எதிரானது என்று அழைக் கப்படும் யுத்தத்தோடு இணைந்து இந்திய ஜனநாயகத் தின் அடித் தளக் கட்டமைப்பை மிக மோசமாக வேரறுத் திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனை கள், இரகசியச் சித்திரவதைகள், பிழையான முறையில் துரத்திச் சுடுதல். இவ்வாறான முறைகளைக் கொண்டு மக்களின் உறுதியை உடைப்பதானது அரசியலில் வங்குரோத்துத் தனத்தையே வெளிப்படுத்துகிறது. இது அஷ்ரஃப் சிஹாப்தீன்=

xxiii
இந்திய அரசியலின் ஜனநாயக அத்திவாரத்தை மொத்தமாகச் சிதைத்து விடுகிறது." ஜனநாயகத்திற்கும் மூர்க்கத்தனமான பாஸிஸச் செயற்பாடு களை முறியடிப்பதற்கும் இடையிலான பிரச்சினைகளை இது எமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இந்நூல் முன்வைக்கும் ஒவ்வொரு கதையினதும் பாத்திரங்கள் கூறத் துடிக்கும் மனக் குமுறல் இது என்றே நாம் உணர வேண்டும். எல் லோரும் மனிதர் என்ற அடிப்படைச் சிந்தனையிலிருந்து இதனை உணர நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கொலையை விடப் பெரிய பாவமாகச் சித்திரவதையைக் கருது வோர் உள்ளனர். கொலை, சித்திரவதை இரண்டுமே தீய செயல்கள் என்று கூறப்பட்டு வந்தாலும் அப்பாவி மனிதனைச் சித்திரவதை செய்து கொல்வது கொலை செய்வதை விடக் கொடியதாகும் என டேவிட் சஸ் மான் (David SuSSman) கூறுகிறார். சித்திரவதைகளிலிருந்து சுதந்திரமாக இருப்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக இன்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. சித்திரவதைகள் எந்தச் சூழலில் நடந்தாலும் ஒழுக்க ரீதியற்றது, நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்டது என உலக மனித உரிமைச் சாசனங்கள் உட்பட பல சர்வதேசப் பிரகடனங்கள் வெளிப்படை யாகக் கூறுகின்றன.
தொன்மைக் கிரேக்கரும் ரோமர்களும் விசாரணையின் போது சித்திரவதையைப் பயன்படுத்தினர். சிலுவையில் அறைதல், நீளமான முட் கம்பிகளால் தாக்குதல், உடம்பில் கொதி நீரைக் கொட்டுதல் உட்படப் பல மோசமான முறைகளைப் பண்டைய உலகம் கையாண்டது. 17ம் நூற் றாண்டில் மெய்யியலில் மனித நலவாத மறுமலர்ச்சி ஏற்படும் வரை இச் சித்திரவதைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே நடைபெற்று வந்துள்ளன.
அறிவொளிக் காலத்தில் ஐரோப்பாவில் சர்வதேச மனித உரிமைகள் பற்றிய கருத்து மேலும் வளர்ச்சியடைந்தது. சித்திரவதை எண்ணக் கரு மெய்யியல், ஒழுக்கவியல், சட்டம் ஆகிய துறைகளில்
=GE ELê detalfe

Page 14
xxiv
பெரிய பிரச்சினைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன.
யூதர், எகிப்தியர், சீனர்களிடையே சித்திரவதை அவர்களின் நீதித் துறையில் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. ரோமர்கள் குற்றவாளி களைச் சிலுவையில் அறைந்து (சித்திரவதை செய்து) கொன்றனர். யூதர்கள் கல்லெறிந்து கொன்றனர். எகிப்தியர் சுடுமணலில் சாக விட்டனர். சீனாவில் குற்றவாளிகளின் உடல்கள் சிறிது சிறிதாகச் சீவப் பட்டு இறுதியில் சாகடிக்கப்பட்டனர். கி.பி. 900 - 1905 வரை இச்சித்திர வதை முறை சீனாவில் அமுலில் இருந்தது. நன்கு கூராக்கப்பட்ட கத்தியி னால் காது, மூக்கு, நாக்கு, கைகள், கால்கள் என்று உடற்பாகங்களும் சதைகளும் சீவப்பட்டுப் பின்னர் அவ்வுடல் மக்களுக்காகக் காட்சிப் படுத்தப்பட்டது.
நம் காலத்தில் இப்பிரச்சினையை உலகின் முன் கொண்டு வந்ததில் மனித உரிமைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அநாகரிகமான, மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமைகள் சாசனம் உலக நாடுகள் அனைத்தை யும் ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுத்தது.
உலகில் சித்திரவதையின் வீழ்ச்சிக்கும் ஜனநாயகத்தின் எழுச்சிக்கும் தொடர்புகள் உள்ளன. மனித உரிமைகளைக் கண்டு பிடித் தல் (2007) என்ற நூலில் ஹன்ட் பின்வருமாறு கூறுகிறார்:-
"எல்லா மனிதர்களுக்கும் உடன் பிறந்த ஒன்றாக இருக்கும் கெளரவம் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதிலிருந்துதான் ஜனநாயகம் தோற்றம் பெறு கிறது. மற்றவர்களின் கெளரவத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் கெளரவத்தை நாம் கற்றுக் கொள்வதாயின் மற்றவர்களின் வலியும் வேதனையும் எமக்கு ஏற்படுவதற்குச் சமமானதுதான் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களைக் கெளரவிக்கக் கற்றுக் கொள்கிறோம்.
மனித உரிமைப் பிரகடனங்களுக்கு முன் மனிதனைப் பற்றிய
அஷ்ரஃப் சிஹாப்தீனி

XXV
மதிப்பீடுகள் சமத்துவமானதாக இருக்கவில்லை. பிரபுக்கள் சாதாரண மக்களை மக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அடிமைகளின் சாட்சியங் கள் சித்திரவதை மூலம் பெறப்பட்டால் மாத்திரமே ரோம அரசு அவற் றைச் சாட்சியங்களாக ஏற்றுக் கொண்டது. அடிமைகள் தன்னிச்சையாக உண்மையைக் கூறக்கூடியவர்கள் அல்லர் என்ற எடுகோளிலிருந்து ரோம அரசு இக்கொள்கையைக் கடைப்பிடித்தது.
தனி நபர் மீது அல்லது ஒரு குறித்த சமூகக் குழுவின் மீது நடத் தப்படும் சித்திரவதை அதன் நோக்கம் அல்லது கொள்கை எதுவாக இருந்த போதிலும் இது மனித கெளரவத்திற்கு எதிராக இழைக்கப்படும் அநீதியும் அத்து மீறலுமாகும் என்பதே இப்பிரச்சினையின் ஆழத்தில் கிடக்கும் உண்மையாகும். நீதியை அர்த்தமுள்ளதாக்க விரும்பும் எந்த சமுதாயமும் சித்திரவதையை அனுமதிக்காது. 17ம் நூற்றாண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சித்திரவதைக்கு எதிரான உலகின் அவதானம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது.
தண்டனையில் நீதியும் மனிதப் பண்பாடும் ஒன்று கலத்தல் என்பதைத்தான் உலகத் தண்டனைகளின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது. 'கண்ணுக்குக் கண் - பல்லுக்குப் பல்' என்ற இறை தூதர் மோசஸின் பிரகடனம் இதன் எதிரொலியாகும். முன்னர் பின்பற்றப்பட்ட இதனிலும் பாதகமான சித்திரவதைக்கான, தண்டனைக்கான தடைச் சட்ட மாகத்தான் அதைக் கொள்ள வேண்டும். சர்வதேச மன்னிப்புச் சபை முன் வைத்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் நீதியான ஆட்சி ஒன்று இருக்குமானால் சித்திரவதைக்கு அங்கு இடமில்லை. மனித நாகரிகத்தின் வளர்ச்சியாகவும் அத்தாட்சியாகவும் இது அமையும்.
மனிதனின் விலை மதிப்பற்ற கெளரவம் சித்திரவதைகளற்ற உலகில்தான் மேலும் பிரகாசிக்க முடியும். இது மனிதனின் பிரச்சினை. இதற்கு அவன் முயற்சிக்க வேண்டும். சித்திரவதையின் செய்திகளும் வேதனையும் சித்திரவதைக் கூடத்தின் சுவர்களுக்குள் மட்டும் கட்டுப் படுத்தப்பட்டதல்ல. அது இந்த உலகின் அரசியலிலும் உலக நிகழ்வு களிலும் ஒரு வேளை உணவிலும் சுயமரியாதையிலும் கலந்திருக்கும் மனிதனை நீதியாக நடத்தல் கொள்கையின் ஒரு பகுதி.
ගLIණී ආගන්‍ධගණ්

Page 15
XXvi
வெள்ளைத் தேசத்தில் ஒரு கறுப்பு அகதி என்ற கதையின் பாத்திரம் கூறும் பின்வரும் கூற்றினை உலகம் உணர வேண்டிய உண்மை யின் ஒலமாக அல்லது கட்டளையாக எடுத்துக் கொள்ளலாம். "முக்கியமாக நான் சொல்ல நினைப்பது என்னவெனில் மக்களை வேலை செய்ய அனுமதி யுங்கள் என்பதைத்தான். அதை நீங்கள் தடுத்தால்தான் குற்றவாளிகள் உருவாவார்கள். உங்கள் தெரிவு எது? நீங்கள் மனிதர்களை மனிதர்களைப்போல் நடத்த வில்லையென்றால் அவர்களுக்கும் மனிதர்களைப்போல் நடந்து கொள்ள முடியாமல் போகும்.”
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
1O.1O.2O1O
அஷ்ரஃப் சிஹாப்தீனி=

உண்மையைத் தவிர வேறில்லை!
LD60s.g5 குலத்துக்கிடையிலான சண்டையின் தோற்றுவாயைச் செய்த வர்கள் நமது மூத்த சகோதரர்களான ஆபிலும் காபிலுமாவர்.
மனித நாகரிகம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், எல்லாமே வளர்ச்சியடைந்து விட்டிருக்கின்றன. அதே விகிதத்தில் முரண்பாடுகளும் சண்டைகளும் வளர்ச்சியடைந்திருக்கின்றன. மனிதகுல மேம்பாட்டுக்காக எவையெல்லாம் உருவாகினவோ அல்லது உருவாக்கப்பட்டனவோ அவையே இந்த முரண்பாடுகளையும் சண்டைகளையும் தோற்றுவித் திருக்கின்றன. இல்லையெனில் அவற்றையே காரணிகளாகக் கொண்டு நாம் முரண்பட்டும் சண்டையிட்டும் வருகிறோம்.
தன்னையும் தான் சார்ந்தோரையும் முன்னுரிமைப்படுத்துவதில் தொடங்குகின்றன எல்லாப் பிரச்சினைகளும். அந்த முன்னுரிமைப் படுத்தல் இன்னும் ஒருவரையும் அவர் சார்ந்தோரையும் பாதிக்கின்ற போது அது ஒரு பெரும் போராட்டப் புயலாக மையங்கொள்ள ஆரம்பிக்கின்றது. இதுதான் இன்று வரை இனம், மதம், பிரதேசம், நாடு, கண்டம், மொழி என்ற ஆதாரங்களின் அடிப்படையோடு நடைபெற்று வரும் போராட்டங்களாக ஆகியிருக்கின்றன.
மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும் ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமை Hஒரு குடம் கணினிர்

Page 16
XXviii
யாளன் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நமது அன்றாட வாழ்வில் இவ்வாறான பல அனுபவங்கள் நமது கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. நாம்கூட ஒரு நாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகிறோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால் நடைகளையாவது அதட்டிக் கொண்டி ருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித இரத்தத்தில் கலந்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அநியாயத்துக்கும்கூட அநியாயத்திலும் ஓர் நியாயம் இருந்தேயாக வேண்டும். அதற்கு அப்பால் - அந்த எல்லையைத் தாண்டுகிற போதுதான் அக்கிரமம், அராஜகம், கொடுமை, காட்டுமிராண்டித்தனம் என்கிற பதங்களுக்கு அர்த்தம் வருகிறது. மனிதாபிமானம் அப்போது மதிக்கப்படுவதில்லை.
ஒருவர் மெல்லுவதற்கும் பலர் மெல்லப்படுவதற்குமான நிலை ஏற்படுகின்ற போது அந்த இடத்தில் உலகத்தின் எல்லா தர்மங்களும் மீறப்பட்டு விடுகின்றன. அவ்வாறு மீறப்பட்டதன் மூலம் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான ஜீவமரணப் போராட்டத்தை அனுபவித்த வர்களின் கதைகள்தாம் இந்த நூலில் அடங்கியிருக்கின்றன. அரசியலை யும் அரசியல் சார்ந்த துஷ்பிரயோகங்களையும் அனுபவிக்க நேர்ந்த பாவப்பட்ட அப்பாவி ஆத்மாக்களின் உண்மையான அனுபவங்கள் இவை. இரத்தமும் சதையுமாகவே நம்முடன் பேசுகின்றன என்பதை விட இரத்தமும் சதையுமே பேசுகின்றன என்பதே பொருத்தமானது.
இந்த அனுபவங்களை வாசிக்கும் போது மனிதாபிமானம் மிக்க எல்லா இதயங்களுமே நடுங்கத் தொடங்கும். காலாதிகாலமாகத் தொடரும் ஆதிக்க மனப்பான்மையின் அடக்குமுறைகள் நாளையும் தொடரும். நாம் இவற்றை வாசித்துக்கொண்டிருக்கும் போதுகூட உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பலநூற்றுக் கணக்கான மனிதர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீசப்படும் குண்டுகளில் கருகியும் துப்பாக்கிக் குண்டுகளில் அகப்பட்டும் பலர் மரணத்தைத் தழுவிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அஷ்ரஃப் சிஹாப்தீனி

XXix
எங்கேயோ நடந்ததாக ஒரு காலத்தில் நாம் கேள்விப்பட்ட விடயங்களைக் கடந்து போன கால் நூற்றாண்டில் நமது கண்களூடாகப் பார்த்திருக்கிறோம். உறவுகளையும், நட்புக்களையும் இழந்திருக்கிறோம். தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாகச் சுருங்கிய உலகத்தின் எல்லாக் கோடியையும் ஒரு கணத்தில் எட்ட முடிந்தது உலகத்தில் வாழும் அனை வருக்கும் எப்படிச் சாத்தியமாகியிருக்கிறதோ அதைப் போலவே ஆபத் துக்களும் ஆகிவிட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் நமது நாட்டில் நடந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கற்பழிப்புக்கள், விடுதலை இயக்கங்களின் சாகசங்கள், இன அழிப்பு முயற்சிகள் என எல்லாவற்றை யும் இவற்றினூடே நம்மால் ஒருமுறை மீட்டிப் பார்த்துக் கொள்ள முடியும். கிருஷாந்திகளையும், கோணேஸ்வரிகளையும்கூடத் தரிசிக்க முடியும்.
மற்றவர்களின் துயரங்களை எந்த ஒரு மனிதனாலும் மகிழ்ச்சி யாகக் கொண்டாட முடிவதில்லை. ரசிக்கவும் முடிந்ததில்லை. இங்கே எடுத்துத் தரப்பட்டுள்ள சம்பவங்களில் வரும் நபர்கள் என்னையும் உங்களையும் போன்றவர்கள்தாம். வருத்தங்களிலும் வாதைகளிலும் நாம் எப்படித் துடிப்போமோ அப்படித்தான் அவர்களும் துடிப்பார்கள். கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோமோ அப்படித்தான் அவர்களும் எதிர்கொள்ளுவார்கள். மனித சமூகம் இப்படியும் துன்புறுகிறது என்பதையும் அரசியலும் ஆதிக்கமும் எவ்வா றெல்லாம் கோர முகங்களுடன் செயற்படுகின்றன என்பதையும் இவற்றின் மூலமாக நாம் படித்துக் கொள்ள முடியும்.
உலகத்தில் வாழும் எல்லா மக்களுமே இன, மத பேதங்களுக்கப் பால் தங்களுக்குள் கைகளைக் குலுக்கிக் கொள்ளத்தான் ஆசைப்படு கிறார்கள். ஆனால் பிரதேசங்களாகவும் நாடுகளாகவும் கண்டங்களாக வும் நம்மாலேயே உடைத்துப் போடப்பட்டு இனம், மதம், சாதி என்ற பாகு பாடுகளாலும் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நம்மைச் சண்டையிடச் சொல் கிறது. ஆட்சியில் இருப்பவன் அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும் இல்லாதவன் அரசியல் அதிகாரத்தைப் பெறவும் போராடுகிறான். அதற் காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பதற்குத் தயாராகிறான். அதைத்தான் இந்த நூல் எடுத்துச் சொல்கிறது.
ஒரு குடம் கணினி

Page 17
XXX
இன்னொரு மனிதனின் உணர்வுகளை மதிக்காமல், அவனது வினாக்களுக்குப் பதிலளிக்க முடியாமல், அவனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், அவனது மாற்றுக் கருத்தைச் சகித்துக் கொள்ளா மல், எதிர் வினையாற்றுவதன் மூலம் ஜனநாயகத்தையும் கம்யூனிஸத் தையும் சோஷலிஸத்தையும் மக்களாட்சியையும் பேசிக் கொண்டிருப்பது என்பது வெறுங் கதையாடல்களேயாகும்.
எட்னாயாகி என்ற படைப்பாளி"Cross Fire என்ற தலைப்பில் எழுதி யிருந்த ஒரு கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருந் தேன். அதை அவர் எழுதியிருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது மாத்திரமல்ல வாசித்து முடிந்ததும் எனது கண்ணில் நீர் சுரந்தது. இந்த விதத்தில் இவ்வகையான உண்மைக் கதைகளின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டதும் தேடலை ஆரம்பித்தேன். கிட்டத்தட்டப் பத்து மாத காலமாக நான் மேற்கொண்ட உழைப்பு இது. சொந்தப் படைப்புக்களைக் கொண்ட ஒரு நூலை வெளியிடுவதை விட இது எனக்குப் பெரும் மன நிறைவைத் தந்திருக்கிறது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
கடந்து போன காலங்களில் உலகத்தின் வெவ்வேறு திசைகளில் சித்திரவதையினாலும் நியாய தர்மங்கள் மீறப்பட்டதாலும் பலர் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்வை இழந்திருக்கிறார்கள். யாருக்கும் தெரியா மல் எதற்காக இறந்து போகிறோம் என்பதுகூட அறியாமல் பலர் உயிரிழந் திருக்கிறார்கள். இந்த நியாய மீறல்கள் மனித குலத்தின் அவமானத்தைப் பறைசாற்றியபடி துன்பங்களைக் கொண்டு தரும் ஆட்சியாளர்களின் கோர முகத்தில் நீக்க முடியாத அசிங்கம் மிக்க வடுக்களாக நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன.
ஆட்சியாளர்கள் மட்டுமே இக்கொடுமைகளைப் புரிந்தார்கள் என்று மட்டுப்படுத்துவது அறிவீனமாகும். மக்களுக்காகவென்று போராட முன்வந்தவர்களில் தோல்வியடைந்தவர்களும் வெற்றி பெற்றவர்களும் இந்த வடுக்களோடுதான் சரித்திரத் தாள்களில் வாழ்கிறார்கள்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள நபர்களோடு தொடர்புடைய சம்பவங்களோடு நான் மிகவும் ஆழமாக ஈடுபட்டிருக்கிறேன். ஒவ்வொரு வரையும் எனது உறவினர் போல நினைத்து உருகியிருக்கிறேன். அவர் அஷ்ரஃப் சிஹாப்தீனி

XXX1
களில் சிலரைப் பற்றி எவ்வளவுக்குத் தேட முடியுமோ அவ்வளவு தேடியி ருக்கிறேன். சம்பவங்களோடு தொடர்புள்ள விடயங்களுக்கு அப்பாலும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள எனக்கு ஒரு பெரும் வாய்ப்பாக இந்த முயற்சி அமைந்தது.
எனது வளரிளம் பருவத்தில் வெறும் இலக்கிய நூல்களுடனும் பாட நூல்களுடனும்தான் காலத்தைச் செலவழித்திருக்கிறேன். அன்று நாம் எத்தகைய ஆபத்து நிறைந்த உலகில் வாழுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்வு இருக்கவில்லை. இன்று இணையமானது ஒரு பெரும் குப்பைத் தொட்டியாக இருப்பது போலவே ஒரு பெரும் பொக்கிஷமாகவும் இருக் கிறது. இன்றைய தலைமுறை தொலைக் காட்சியையும் இணையத்தை யும் ஒரு வரமாகப் பெற்றிருக்கிறது. இணையத்தோடும் தொலைக் காட்சியோடும் ஒன்ற முடியாதவர்கள் இந்த நூலின் மூலம் தமது வாழ்வு குறித்த ஓர் எச்சரிக்கை நிலையை எய்த அல்லது ஆகக் குறைந்தது ஒரு தெளிவைப் பெற வாய்ப்புண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த நூலில் உள்ள எந்தவொரு நபரது அனுபவத்தையும் நான் மேலதிக வார்த்தைகள் கொண்டு பேசவில்லை. சம்பவங்களுடன் சம்பந் தப்பட்டவர்கள் பற்றி வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டவற்றை ஒரு முகப்படுத்தி அவற்றின் அடிப்படையில் நான் கதைகளாக எழுதி யுள்ளேன். அவற்றில் அவசியங் கருதிக் குறைப்புச் செய்திருக்கிறேனே தவிரக் கூடுதலாக எதையும் சொல்லவில்லை. உள்ளத்தை நெருக்கும் வகையில் சொல்ல வேண்டும் என்றோ வாசிப்பவரை அடித்து வீழ்த்தி விடும் வகையில் சொல்ல வேண்டும் என்றோ மேலதிகச் சோடனைகள் எவற்றையும் நான் மேற்கொள்ளவில்லை. எப்போதும் புனைவுகளுக்கே சோடனைகள் தேவைப்படுகின்றன. உண்மைகளுக்கு அல்ல!
இக்கதைகளில் சில நேரடி மொழி பெயர்ப்புக்களாகவும் உள்ளன. ஆனால் அனேகமானவை தகவல்களைக் கொண்டு கதைகளாக வடிக்கப் பட்டவையே. தகவல்கள் நேர்த்தியான கலையமைப்புக்குள் கொண்டு வரப்படும் போது அவை இலக்கியமாக அமரத்துவம் பெற்று விடுகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள கதையின் தலைப்பொன்றை இந்த நூலின் பெயராக நான் கட்டவில்லை. அதை ஒரு பொதுவான
=|බ්‍රය ගLä ඝනdex)

Page 18
xxxi
தலைப்பாக இட்டுள்ளேன். அப்படி இடப்படுவதே பொருத்தமாக எனக்குத் தோன்றிற்று.
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ஓர் ஆய்வாகவே தமது அணிந்துரையை இந்நூலுக்கு வழங்கியிருக்கிறார். நூலுக்கு மேலும் சிறப்பைத் தரும் வகையில் அது அமைந்திருக்கிறது. இதற்கான அவரது உழைப்பு என்னைக் கெளரவித்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவருக்கு எனது நன்றிகள்.
இந்த நூல் வெளிவருவதில் அக்கறை கொண்ட நண்பர் எம்.எல். கலீலுர் ரஹ்மான், இம்முயற்சியில் என்னைப் பெரிதும் ஊக்குவித்த கவிஞர் அல் அஸமேத் இதை அழகுறப் பதிப்பித்துத் தந்த முனாப் அஸிஸ் ஆகியோருக்கு நான் நன்றிக் கடனுடையவன்.
அஷ்ரஃப் சிஹாப்தீன்
11.11.2O1O
அஷ்ரஃப் சிஹாப்தீன்

துளிகள்
அவன் ஒரு நட்சத்திரம் . Ο Ο1
செரப்ரனிகா - சனசங்காரச் சகதி . OO7
பிஞ்சுகளும் பிசாசுகளும் . O17
ஒரு மணிப்புறாவின் மரணம் . O25
தப்பிப் பிழைத்த பிக்கு O34
பாக்கிஸ்தான் போன பயங்கரவாதி. O 42
குரலற்றவர்களின் குரல் . O 49
Φί6ΦLί μΘbσπιμόg ... ... O59
பள்ளிக்கு வந்த பயங்கரவாதி . Ο 68
ειμΦπυιό . . Ο 76
அழகிய காஷ்மீரின் அழுகுரல் . O84 6ήlu Iί60ιπιό 6ildbbg και τα ιται 1O2
பிறந்த நாட்டைத் துறந்தவன். 1O6
போர் மறுத்தாள் காதை .121

Page 19
2Ο,
21.
22.
23.
24.
25,
அஷ்ரஃப் சிஹாப்தீன்=
எமது வன்முறைச் சமூகம் . 13 Ο δlpΘδπιρββ LILLπιδιψύδ . . 135
Lόόπέ5 Lησ6ΦσόδπU6δί - 145
கல்லும் கரையும் கதை 149 LIL-ιδιμπύ: Lπι ιδιμιρ ατν ττα τα σταται 158 வெள்ளைத் தேசத்தில் ஒரு கறுப்பு அகதி . 163 கன்னியாஸ்திரியின் கண்ணிர். see 179 வாழ்ந்துகொண்டிருக்கும் வாக்குமூலம் . 184 ஏலி. ஏலி. எங்களை ஏன் கைவிட்டீர் . 195 துயரத் தூண்டிலில் துடித்தவள் 217 ויוויזיוליווי
ஹிரோஷிமாவின் வேண்டுகோள் . a to be see 232

அவன் ஒரு நட்சத்திரம்
பலஸ்தீனச் சிறுவன் முஹம்மத், தனது கறுத்த விழிகள் மின்ன, எதிர்காலத்தில் ஓர் உதைபந்தாட்ட வீரனாகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு பந்தை கோல் போஸ்ட்டுக்குள் வெற்றிகர மாகச் செலுத்துவது போல் பாவனை செய்து காட்டினான். அவனுக்கு வயது பன்னிரண்டு. -
ஏனைய ஆறு குழந்தைகளின் நலன்களையும் கவனித்துக் கொண்டிருந்த அவனது தாய், முஹம்மத்தின் தலையில் செல்லமாகக் குட்டி விட்டுச் சொன்னாள், "ஆமாம். நிச்சயமாக ஒருநாள் நீவளர்ந்து பெரியவனாகவும் உறுதி மிக்கவனாகவும் வருவாய். பிறகு, ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போய் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வென்று வருவாய்.”
"ஆனால் உம்மா அதற்கு முன்னர்." அவன் மிகுந்த உற்சாகத் துடன் சொன்னான், "நான்முதலில் எனது பாடசாலை உதைபந்தாட்ட அணியில் ஒரு நட்சத்திரமாக மிளிர வேண்டும். அதற்குப் பிறகுதான் நான் ஒலிம்பிக்கில் ஆடுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்குவேன்."
இரண்டாயிரமாம் ஆண்டு செம்டம்பர் 30ம் திகதி முஹம்ம தின் தந்தையார் அவனுக்குச் சொன்னார், "மகனே. என்னுடன் வா. நாம் போய் நமது பழைய ஃபியட் காரை விற்று விட்டு வருவோம். எனக்கும் தொழிலில்லையாதலால் சிரமமாக இருக்கிறது. காரை விற்று
ஒரு குடம் கணினி

Page 20
O2
விட்டு வீட்டுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்களை வாங்கி வருவோம்."
அது நல்லது என்று முஹம்மத் நினைத்தான். ஆர்ப்பாட்டங் களைத் தவிர்த்துக் கொள்ள அது நல்லது. இஸ்ரேலியர்கள் பாட சாலைகளை பலவந்தமாக மூடியிருப்பதை மறந்திருக்க அது நல்லது. இரவுகளில் அமுலாகும் ஊடரங்குச் சட்டத்தை மறந்திருக்க அது நல்லது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது தன்னையொத்த சிறார்களின் சிரசுகளைக் குறிபார்த்தபடியிருக்கும் இஸ்ரேலிய துப்பாக்கி ரவைகளை மறந்திருக்க அது நல்லது. தந்தையாரோடு தனியே ஒரு பயணம் செல்ல வாய்ப்புக் கிடைத்திருப்பது நல்லது.
அவன் கோடுகள் கொண்ட தனது நீல நிறப் புதிய சட்டை யையும் நிறம் மங்கிய நீல நிற ஜின்ஸையும் அணிந்து கொண்டான். கருமையான அடர்ந்த சுருளான தலைமுடியை வாரினான். அரை குறையாகக் கட்டப்பட்டிருந்த மூன்று அறைகள் கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியேறினான். ஆழமாகப் புகையை உள்ளிழுத்து வெளிவிடுவதற்கென எந்நேரமும் சிகரட்டைப் பிடித்திருக்கும் தந்தையாரின் விரல்களைப் பற்றினான். தந்தையும் மகனும் பழகிப் போன தங்களது சிவப்பு நிற ஃபியட் காரில் ஏறிச் செம்மண் புழுதி யினூடே தமக்கு அறிமுகமான கார் வியாபாரியின் இடம் நோக்கிச் சென்றனர்.
தந்தை காரைச் செலுத்திக் கொண்டிருந்த போது முஹம்மத் காரின் ஸ்டியரிங்கைப் பற்றியிருக்கும் தந்தையாரின் உறுதி மிக்க கரங்களைப் பார்த்தான். இந்தக் கைகள்தான் என்னைப் பாதுகாப் பவை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். நீளமான உறுதியான கரங்கள். நாம் திரும்பி வருகின்ற போது தாயார் சுவை மிகுந்த உணவைச் சமைத்து வைத்திருப்பார் என்று அவன் கற்பனை பண்ணிய போது கலவரம் உறைந்து கிடந்த அவன்முகத்தில் ஒரு சந்தோஷ இழை நெளிந்தோடிற்று. ஆர்ப்பாட்டப் பேரணிகளின் காட்சிகள் மனதில் தோன்றுவதை அவன் தவிர்க்க முயன்றான். ஆர்ப்பாட்டப் பேரணிக ளில் கலந்து கொள்ளும் பலர் அவனது வயதையொத்தவர்கள் அல்லது அதற்கும் குறைந்த வயதுடையவர்கள். அதற்குப் பதிலாக உதை அஷ்ரஃப் சிஹாப்தீன்

O3
பந்தாட்டத்தில் தனது அணி வெற்றி பெறும் மைதானக் காட்சிகளைக் கற்பனை பண்ணத் துவங்கினான்.
கார் ஓரிடத்தில் கிறீச்சிட்டு நின்றது. தந்தையும் மகனும் காரை விட்டு இறங்கினார்கள். வியாபாரியும் தந்தையும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்ததை முஹம்மத் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரப் பேரம் பேசலுக்குப் பின்னர் "சரி. அதே விலைக்கு முடித்துக் கொள்வோம்” என்றார் தந்தை.
திரும்புவதற்காக வாடகை வண்டியொன்றில் ஏறுவதற்கு முன்னர் பணத்தை எண்ணி எடுப்பதற்குத் தந்தைக்கு உதவினான் முஹம்மத், வீட்டில் காணப்போகும் தாயாரின் மகிழ்ச்சி மிகுந்த முகத்தையும் தம்பி தங்கையரின் சந்தோஷக் கூச்சலையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். தாம் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறோம் என்பதையும் தந்தையாருக்குத் தொழில் இல்லை என்பதையும் இதற்குப் பிறகு குடும்பத்தின் வருமானத்துக்கு எந்த வழியுமே இல்லை என்பதையும் மறக்கடித்து விட்ட நினைவு அது.
அவன் நிமிர்ந்து பார்த்த போது அவனது தந்தை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர் அவனது கருமை படர்ந்த தலை முடியை வாஞ்சையுடன் கோதி விட்டார். அவனைத் தனது தோளில் சாய்த்து அணைத்தபடி சொன்னார். "எல்லாம் நன்றாகவே நடக்கும். முஹம்மத். நீ கவலைப் படாதே." பின்னர் சொன்னார் "நாம் வீட்டுக்குப் போவோம். சாப்பாட்டுக்கு ஏதாகிலும் வாங்கிக் கொள்வோம்."
முஹம்மதின் தாயார் அவனை ஒரு போதும் ஆர்ப்பாட்டங் களில் கலந்து கொள்ள அனுமதித்ததில்லை. ஏனென்று கேட்டால் அவர் சொல்வார். "துண்டந் துண்டமான பிணமாக உன்னை வீட்டுக்கு யாரும் அள்ளிக் கொண்டு வருவதை நான் விரும்பவில்லை. நீ இல்லாமல் நான் என்னதான் செய்வது?"
தாயாரின் கறுப்புக் கண்களை அவன் பார்க்குந்தோறெல்லாம் அவை அவனது கண்களைப் போலவே இருக்கும். அவன் அவற்றில் அமைதியும் பாதுகாப்பும் இருப்பதைக் காண்பான். அவனைப்
=ஒரு குடம் கண்ணீர்

Page 21
O4
பொறுத்தவரை அவனது தாயார் அன்பின் மொத்த வடிவம். சுதந்திரம் கோரும் போராட்டங்களில் இணைந்து கொள்ள அவன் எத்தனித்து வெளியில் சென்று திரும்பும் போதெல்லாம் அவனது தாயார் சொல்லுவார். "நீஒரு கெட்டிக்காரப் பையன். எல்லோரும் உன்னை மிகவும் விரும்புகிறார்கள். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனவே நீவெளியில் திரியாதே. நீபெற்றுக் கொள்ளும் கல்வி மூலமும் நீமிகவும் விரும்பும் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை அடைவதன்மூலமும் உனது மக்களுக்கு உன்னால் உதவி செய்ய முடியும்."
எனவே, அவன் தனது பாடப் புத்தகங்களே கதி எனக் கிடந் தான். அலறல்களை, கூச்சல்களைக் கேட்பதையும் வீட்டு யன்னல் களூடே பறக்கும் துப்பாக்கி ரவைகளையும் தவிர்த்து வந்தான். தனது சக்தியை ஆயுதத் தாங்கிகளுக்குக் கல் எறிவதைத் தவிர்த்துத் தனது தாயார் சொன்ன படி வேறு விடயங்களுக்குப் பயன்படுத்தி வந்தான். இதோ முஹம்மத் தன் தந்தையாருடன் வீட்டை நோக்கிச் செல்ல மஞ்சள் நிற வாடகை வண்டிக்காகக் காத்திருக்கிறான். வண்டி ஒன்று கிடைத்ததும் அவர்கள் ஏறி அமர்ந்தனர். அவனது தந்தையார் சாரதியிடம் சொன்னார். "வீட்டுக்குப் போ!"
முஹம்மத் தந்தையாருக்கும் சாரதிக்கும் நடுவில் அமர்ந்தி ருந்தான். அது வரை எந்த விதமான மோதல்களும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் இன்றைய நாள் அழகானது. இரக்கமற்ற வெப்பம் இந்தக் கோடை காலத்தில் அடங்கிக் கிடக்கிறது. கடலின் மணம் காற்றில் கலந்து வந்தது. முஹம்மதினால் உணரமுடிந்திருந்தால் கடற் பறவைகள் உணவு தேடிக் கரைவதைக் கேட்டிருக்க முடியும். எதிர்பாராத விதமாக அவனது உடல் நடுங்கிற்று. திடீரென மகனில் உண்டான திகிலைக் கெடுதியான சகுனமாகக் கருதி அவனைத் தனது கரங்களால் அவனது தந்தையார் அணைத்துக் கொண்டனார். ஆம்! அதுவும் அப்படி ஒரு நாள் தான்! துப்பாக்கிச் சன்னங்கள் சிதறும் ஒசையும் எதிர்ப்புப் பேரணியின் இரைச்சலும் கேட்டன.
"மகனே. நாம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம். வா, வண்டியிலிருந்து உடனே இறங்கு!”
முஹம்மத் அநேகமாகக் கீழே விழுந்தான். அவனது முழு eaశ్రీశి తీంDrజీటిF

O5
உடலும் பயத்தால் குலுங்கியது. அவன் செயலிழந்திருந்தான். அவனால் நகர முடியவில்லை. அவனது தந்தையோ அவனைப் பாதி சுமந்தபடி பாதி இழுத்தபடி ஒரு சிறிய சுவர் அருகே போய்ச்சேர்ந்தார்.
குனிந்தபடி தனக்குப் பின்னால் அவனை இழுத்து வீசினார். பின்னர் தனது ஒல்லியான உடலால் அவனை மறைத்துப் பிடித்தார். அப்போது அவன் சொன்னான். "வாப்பா. நீங்கள் கவலைப்பட வேண்டாம். அம்பியுலன்ஸ் வரும். அது நம்மைப் பாதுகாக்கும்."
ஆனால் துப்பாக்கிச் சன்னங்கள் மிக வேகமாகக் கலைந்து பறந்தன. அவன் தைரியமாக இருக்க முயன்றான். அவன் இறப்பதற்கு விரும்பவில்லை. இப்போது இல்லை. இந்தப் பன்னிரண்டு வயதில் இல்லை. மிகக் கடுமையாக வாழ்வை எதிர்கொள்ளத்துவங்கியிருக்கும் இந்த வயதில் இறப்பதற்கு விரும்பவில்லை.
அவன் பயத்தினால் அலறியபடி அவசர அவசரமாகத் தந்தை யாரை நெருங்கிச் சேர்ந்தான். அவரோ ஆபத்தை உணர்ந்தும் பொருட் படுத்தாதவராக அவனைப் பாதுகாக்க முனைந்தபடியிருந்தார். ஒரு மிபாட்ட மழையாக துப்பாக்கிச்சன்னங்கள் அவர்களைச்சூழ விழுந்தன.
ஒரு இஸ்ரேலிய ராணுவத்தினன் முஹம்மதைத் தனது
துப்பாக்கி இலக்குக்குள் கொண்டு வந்து குறி பார்த்தான். ஒரு அம்பியுலன்ஸ் வண்டி அவ்விடத்துக்கு அவசரமாக வந்து கிறீச்சிட்டுத்
தரித்து நின்றது.
முஹம்மதைக் குறிபார்த்த இராணுவத்தினன் முஹம்மதின் வயிற்றில் சுட்டான். பின்னர் அம்பியுலன்ஸ் வண்டிச் சாரதியின் தலையில் சுட்டடான். முஹம்மதின் தந்தையைத் துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையாக்கினான். அந்த இடத்தில் துப்பாக்கித் திருவிழாவொன்றே நடந்து முடிந்தது. அவர்களது இரத்தம் ஒன்றாகக் கலந்து அந்த நிலத்தில் ஒரு குளமாகத் தேங்கியது.
முஹம்மதுக்கு, ஒலிம்பிக்கில்உதைபந்தாடுவதற்கோ அல்லது குறைந்தது தனது ஆரம்பப் பாடசாலை அணியில் ஆடுவதற்காகவோ கூட வாழக் கிடைக்கவில்லை!
=|ඉංග්‍ය ආuර් ආණ්ඩෝ

Page 22
O6 ஆனால் எஞ்சியுள்ளதனது குழந்தைகளுக்காக வாழும் அவனது தாய் சொன்னாள்:-
"முஹம்மத் இப்போது சுவர்க்கத்தில் இருக்கிறான்; ஒரு நட்சத்திரமாக!”
குறிப்பு: அவனது மரணம் இஸ்ரேலிய ஆக்கிரப்புக்கெதிரான சுதந்திர பலஸ்தீனப் போராட்டத்தின் ஓர் அடையாளமாக மாற்றம் பெற்றது.
எட்னா யாகி மீடியா மொனிட்டர்ஸ் இணையம்
ඊlබදු|J&l சிஹாப்தீன்

செரப்ரனிகா சனசங்காரச் சகதி
எனது பெயர் ஹஸன் நுஹானோ விக். பொஸ்னியாவைச் சேர்ந்தவன். வயது 38. இரண்டாம் உலகப் போரின் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த நெஞ்சு நடுங்கும் செரப்ரெனிகா படுகொலைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் படுகொலைகளில் எனது முழுக் குடும்பத்தையும் நான் இழந்தேன்.
செரப்ரெனிகா எங்களது சொந்த இடம் அல்ல. கிழக்கு பொஸ்னியாவில் இடம் விட்டு இடம் பெயர்ந்து நாங்கள் வாழ்ந்து வந்தோம். இவ்வகையில்தான் கடைசியாக நாங்கள் செரப் ரெனிக்காவுக்கு வந்து அகப்பட்டுக் கொண்டோம். கிழக்கு பொஸ்னி யாவில் 1992க்கும் 1995க்குமிடையில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறின. எந்தவித வெளித் தொடர்புகளுமற்ற நிலையிலேயே செரப்ரெனிக்காவில் அகதிகளாக வாழ்ந்து வந்தோம். அநேகமாகவும் நாங்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதே பொருத்தமானது.
இந்த நிலையில் 1993ம் ஆண்டு ஐ.நாடுகள் சபை கனேடிய இராணுவத்தை அமைதி காக்கும் படையாக அனுப்பி வைத்தது.
ஒரு கடe கணினி

Page 23
08
ஆனால் அப்படி வந்தவர்களின் தொகை வெறும் 150 மாத்திரமே. நான் அவர்களது தளத்துக்குச் சென்று அவர்களுடன் உரையாடினேன். அவர் கள் என்னை மொழிபெயர்ப்பாளனாக நியமித் துக் கொண்டார்கள். பின்னர் கனேடியர்களுக் குப் பதிலாக டச்சுப் படையினர் அங்கு அனுப் பப்பட்டனர். அவர்களின் தொகை அறுநூறாக இருந்தது. சேர்பியர்களிடமிருந்து எங்களைக் காப்பது என்ற பெயரளவில்தான் அவர்கள்
ரடோவன் கராட்ஸிக்
செயற்பட்டார்கள். சேர்பியப் படையினரோ முழு செரப்ரனிக்கா விலும் பரந்திருந்தார்கள். செரப்ரனிக்காவின் பரப்பளவு சில சதுரகிலோ மீற்றர்கள்தான். மூன்றரை வருடங்களாக அந்தக் குறுகிய நிலப்பரப்பே எங்கள் உலகமாக இருந்தது.
அது ஒரு துயரமான வாழ்க்கை, ஒடும் நீர் நிலையோ மின் சாரமோ அங்கு கிடையாது. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஜூலை 1995ல் நடந்த மிகப் பெரும் மனிதக் கொலைகளை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? கடைசி மனிதப் பேரழிப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
நான் எதிர்பார்த்திருந்தது போலவே நடந்தது. ஐக்கிய நாடு களின் அமைதி காக்கும் படையினராக வந்திருந்த டச்சுப் படையினர் சேர்பியர்களுக்கு ஒரு கட்டத்தில் உதவுவார்கள் என்று நான் எதிர் பார்த்தேன். அவர்கள் சரியாக அதைத்தான் செய்தார்கள். டச்சுப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் ஒரு கட்டத்தில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், இளவயதினர் என்று வந்துகொண்டிருந் தார்கள். அவர்களில் சிலரை டச்சுப்படை உள்ளே வர அனுமதித்தது. பலரைப் புறக்கணித்தது. ஒரு கட்டத்தில் ஐ.நாடுகளின் தளப் பிரதேசத்துக்கு அப்பாலிருந்து உள்ளே வர முயன்றவர்களை நுழைய முடியாதவாறு டச்சுப் படை கதவுகளை இழுத்துமூடியது. தளத்துக்கு உள்ளே 5000 தொடக்கம் 6000 பேர் வரை இருந்தார்கள். வெளியே 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். தளத்துக்கு உள்ளே இருக்கும் வரை எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் வெளியே இருந்த
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

09
வர்களின்நிலைதான் அவலத்துக்குரியது. தளத்துக்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் அலறல்களையும் என்னால் கேட்க முடிந்தது.
உள்ளேயிருந்த யாரும் வெளியேற விரும்ப வில்லை. ஆனால் டச்சுப் படையினர் அவர்கள் அனைவரையும் பலி கொடுக்கத் துணிந்தனர். ஒலி வாங்கியொன்றை என்னிடம் கொடுத்து "இங்கிருக் கும் மக்களுக்கு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து தளத் திலிருந்து வெளியேறுமாறு சொல்” என்று என்னைப் பணித்தனர். உள்ளேயிருந்த பலருக்கு வெளியே காத்திருக்கும் பயங்கரம் தெரிந் திருக்கவில்லை. 'இப்போது நமக்கு இந்த டச்சுக்காரர்தானே பொறுப்பு; ஆகவே நாம் வெளியேறலாம்" என்று நம்பிக்கையோடு தான் அவர்கள் வெளியேறினார்க்ள்.
ரட்கோம்லாடிக்
தளத்தின் வாயிலைத் தாண்டிய போது அங்கே டச்சுப் படை யினருக்கு அப்பால் சேர்பியப் படையினர் இவர்களுக்காகக் காத்திருந் தனர். சேர்பியப் படையினர் ஆண்களையும் சிறுவர்களையும் தாய்மார், சகோதரிகளிடமிருந்து வேறாகப் பிரித்தெடுத்தார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவர்கள் உண்மையில் நாம் பாதுகாப்
பான இடத்துக்குக் கொண்டு செல்லப்படப் போகிறோம் என்றே
நினைத்திருந்தார்கள். டச்சுப் படையினர் தம்பாட்டில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில டச்சுப் படையினர் தளத்துக்குள் வந்து உள்ளேயிருந்தவர்களைப் பலாத்காரமாக வெளி யேற்றிக் கொண்டிருந்தார்கள்.
தளத்துக்கு உள்ளே எஞ்சியிருந்தது எனது குடும்பம் மட்டுமே. என்னால் முடிந்த வரை அவர்களை உள்ளே வைத்திருக்க நான் முயன் றேன். ஆனால் டச்சுப் படையைச் சேர்ந்த மூவர் எனது குடும்பத்தைப் பார்த்த படி "தளத்தை விட்டு இப்பொழுதே வெளியேறும்படி உனது குடும்பத்திடம் மொழி பெயர்த்துச் சொல்லு" என்று பணித்தார்கள். நான் உடைந்து அழுதேன். அந்த வேளை எனது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். எனது சகோதரனுக்கு 19 வயது. அவன் கதிரையில் அமர்ந்திருந்தான். ஆனால் -ஒரு குடம் கண்ணீர்

Page 24
10
வெளியே என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் எண்ண்ைப்பற்றிக் கவலைப் பட்டார்கள். அவ்வேளை அவர்களது மூத்த புதல்வனான நான் தளர்ந்து போகக் கூடாது என்று விரும்பினார்கள். நான் உயிருடன் இருந்தாலே போதும் என்ற நிலையில் அவர்கள் இருந்தனர்.
அவர்கள் வெளியேறி வாயிலை அடைந்ததும் "ஹஸன் நின்று கொள். நீ நிற்கலாம். உனது தம்பி எங்களுடன் இருப்பான். கவலைப்படாதே." என்று எனது பெற்றோர் சொன்னார்கள். நான் கதறி அழுதேன். "நானும் உங்களுடன் வருகிறேன்." என்றேன். எனது சகோதரன் என்னைப் பார்த்துக் கதறி அழுதான். "நீ வரவேண்டாம். நீ இருந்து கொள்.” என்று விட்டுச் சென்றான். அதுதான் நான் கடைசியாக அவர்களைப் பார்த்த சந்தர்ப்பமாகும்.
பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நான் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு கதைகளை ஒவ்வொருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உடல்கள் எங்காவது புதைக்கப் பட்டிருக்கலாம். சேர்பியர்கள் சதுப்புப் பிரசேங்களில் குவியல் குவியலாக உடல்களைப் புதைத்திருக்கிறார்கள். தோண்டியெடுக்கப் பட்ட மனித உடல் எச்சங்கள் பலவற்றை நான் பார்த்தேன். சில இடங்களில் கால்கள், சில இடங்களில் தலைகள், உடல்கள் என்று வெவ்வேறாகப் புதைத்திருக்கிறார்கள். அடையாளம் காண்பது அவ்வளவு இலகுவானதாக இல்லை.
எனது பெரியப்பாவின் மகன் கொலை செய்யப்பட்டான். அவனது தலை கண்டுபிடிக்கப்பட்டது. அதை நானும் பார்த்தேன். உங்களது மகனின் தலையைப் பார்த்தேன்' என்று ஒரு தந்தையிடம் எவ்வாறு என்னால் சொல்ல முடியும்? இது மிகவும் கவலைக்குரியது. நானும் எனது குடும்பத்தாரின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள இன்னும்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உண்மையை மனந் திறந்து சொல்வதானால் இவற்றையெல்லாம் தாண்டி நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்குப் புரியவில்லை.
அஷ்ரஃப் சிஹாப்தீன்

11
எனது தந்தையார் காடுகள் சம்பந் தப்பட்ட நிறுவனம் ஒன்றில் முகாமையாள s ராகப் பணியாற்றியவர். இந்தப் பிரதேசத்தி லேயே மிகவும் அறியப்பட்ட ஒரு பிரமுகர். இதனால் பிரதேச மக்கள் எந்த ஒரு பொதுக் காரியமானாலும் தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக அவரைத்தான் தேர்ந் தெடுப்பர்கள். இவ்வாறுதான் இணக்கப் பேச்சுவார்த்தையாளர் என்று சொல்லப் பட்ட மிலாடிக்குடன் அவர் பேசினார்.
உண்மையில் அவர்கள் இணக்கவாளர்கள் அல்லர். அவர்கள் இணக்கம் உண்டாக்கும் நிலையில் இருக்கவுமில்லை. மிலாடிக்குடன் எனது தந்தை பேச்சுவார்த்தை நடத்தும் ஒளிப்பதிவு இன்னுமிருக் கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் ஐ.நாடுகளின் தளத்துக்குள்ளும் வெளியிலும் 25000 மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் சார் பாகப் பேசுகிறோம். எங்களை மனிதர்களாக நடத்துங்கள்’ என்று எனது தந்தையார் வேண்டுகோள் விடுப்பதும் இம்மக்கள் அனைவ ரையும் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்வோம்’ என்று மிலாடிக் உத்தரவாதம் கொடுப்பதும் அந்த ஒளிப் பதிவில் தெளிவாக இருக்கிறது. செரப்ரனிக்கா பற்றி மக்கள் பேசும் போது ஜூலை 1995 பற்றி மட்டுமே பேசுகிறார்கள். உண்மையான செரப்ரனிகா என்பது ஐ.நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்றரை வருட காலத்தைக் கொண்டது.
ரட்கோமிலாடிக் ஒரு பெரிய மனிதராக இன்னும் தொடர்வது என்னைப் பொறுத்த வரை வேடிக்கையான ஒன்று. 1995, 96, 97 களில் இது ஒரு பெரும் கேள்வியும் கூட இப்போது இதுபற்றிப் பேசப்படுவ தெல்லாம் வெறும் பேச்சுக்களே. சில வேளை நடந்த பயங்கரங்களை நினைத்து அசைபோடுவேன். அப்போதெல்லாம் என்னுள் எழும் பெரும் கேள்வி என்னவெனில் இவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப் படாமல் இருக்கிறார்கள் என்பதுதான். நான் மிகவும் சலித்துப் போய் விட்டேன். அதனால் இவ்விடயத்தைத் தூக்கிக் கொண்டு அலைய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கிறதல்லவா?
ஒரு குடம் கணினி

Page 25
12
இந்தப் பாரிய படுகொலை நிகழ்வுகளை ஒரு பெரிய படமாக நீங்கள் பார்ப்பீர்களானால் எதிர்கால நலன் கருதிக் கைதுகள் நடக்க வேண்டும். தி ஹேக் நீதி மன்றில் - அம்மன்று அவர்களை இரண்டு பெரிய மீன்கள் என்றுதான் அழைக்க விரும்பும் - தடுப்புகளுக்குப் பின்னால் அவர்களை நிறுத்த வேண்டும். எனது கருத்துப்படி பெரிய மீன் முக்கியமானது. அதைவிடவும் சிறிய மீன் முக்கியமானது. மிலாடிக், கராட்ஸிக் இருவரும் மிக முக்கியமானவர்கள். பொஸ்னியா ஹேர்ஸகோவினாவின் ஒரு பிரஜை என்ற வகையில் சொல்கிறேன், போல்கன் பிராந்தியத்தின் அமைதி நிலைக்க வேண்டுமாயின் இவர் களைக் குறிவைப்பது அவசியம்.
இணைந்த நிறுவனங்களின் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்று இங்கு இப்போது செய்யப்பட்டிருக்கிறது. என்னுடைய தாய் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். என்னுடைய தாய் செரப்ரனிக்காவின் அருகிலுள்ள நகரில் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது சேர்பியர்கள் அறுவர் அவரைக் கற்பழிக்க முயன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்த வேளை அங்கிருந்த ஒரு சேர்பியரே எனக்குச் சொன்னார். தான் வைக்கப்பட்டிருந்த இடத்தி லிருந்த கண்ணாடியை உடைத்து அவர் தனது நரம்புகளை அறுத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த பிரதான பொலிஸ் அதிகாரியார் என்று எனக்குத் தெரியும், அரச அதிகாரிகள், பொலிஸ், இராணுவம் யாரும் இதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. யாரையும் கைது செய்யவும் இல்லை. இந்தப் பிரதான பொலீஸ் அதிகாரி சரஜேவோவின் ஏதோ ஒரு பகுதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உங்களால் இதைக் கற்பனை செய்ய முடிகிறதா? நானும் இங்கு வாழ்கிறேன். அந்தப் பொலீஸ் அதிகரியும் இங்கு வாழ்கிறார். ஒரு வேளை நான் அவரைப் பாதையில் சந்திக்க நேருமென்றால். அநேகமாக நான் அவரிடம் சென்று கேட்கக் கூடும். நான் ஹஸன் நுஹானோவிக். நீர்தானே பத்து வருடங்களுக்கு முன்னர் "வ்ள செனிகா வில் பொலிஸ் அதிகாரியாக இருந்தவர். எனது தாயாரின் மரணம் பற்றி நீர் என்ன சொல்கிறீர்? என்ன நடக்கப் போகிறது?
அஷ்ரஃப் சிஹாப்தீன்:

13
இம்மாதிரியான நிலையைத்தான் ” தற்போதைய இணைந்த நிறுவனங் களின் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சமரசம் செய்து வைக்கப் போகி றதா? இந்த விடயத்தைத்தான்நான் தொட்டுக் காட்ட விரும்புகின் றேன்.
உண்மையில் கராட்ஸிக் மற்றும் மிலாடிக் இருவரும் தேவைப் படுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு செய்வதற்கு ஏராளமான விடயங்கள் உள்ளன. சரஜேவோவிலும் ஒரு யுத்தக் குற்ற விசாரணைக்கான நீதிமன்றம் உண்டு. தி ஹேக்கிலும் உண்டு. இங்கே விசாரணை நடைபெறுவதே அதி சிறந்ததாக இருக்கும். அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு இந்த நாட்டில் நடந்தவற்றை வெளிச் சத்துக்குக் கொண்டுவர அது உதவும்.
அதே வேளை, பொஸ்னியாவை உலகம் மறந்து போய்விட்ட தாகத் தோணுகிறது எனக்கு. வேறு எங்காவது ஏதாவது நடந்து விட்டால் அதை நோக்கியே நமது கவனம் செலுத்தப்படும். அதை யிட்டே நாம் கவலைப்படுகிறோம். வளங்களையும் செயற்பாடுகளை யும் அதை நோக்கியே திருப்பி விடுகிறோம். உரிய நடவடிக்கைக்கான எல்லாம் இங்கே இருக்கவே செய்கின்றன.
எனது மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் பொஸ்னிய -சேர்பிய இராணுவத்தையே சாரும். ஆனால் இந்த விடயத்தில் சர்வதேச சமூகம், ஐ.நா. அமைதி காப்பாளர்கள், நியூ
யோர்க்கிலுள்ள ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ
ஆகியவற்றின் பங்கு வெட்கப்படத்தக்கது. அவர்கள் சில செயற்பாடு களை முன்னெடுத்திருந்தால் பாரிய அளவு படுகொலைகளைத் தடுத் திருக்க முடியும். அவர்களும் பொறுப்பாளிகளே. நெதர்லாந்து தனி நபர்களைப் பாதுகாத்தது. எனக்குத் தவறிழைத்தார்கள் என்பதற்காக நான் தனிப்பட்டவர்களைக் குற்றஞ் சுமத்தவில்லை. அந்த நாடு அவர் களைப் பாதுகாத்ததைச் சொல்லுகிறேன். நான் அத்தகைய தனிநபர் களுக்கும் நாட்டுக்கும் எதிராகத்தான் வழக்குத் தொடர்கிறேன்.
|GD ගLí ඝගlග්

Page 26
14
நான் நடைபெற்ற விடயங்கள் அனைத்தையும் எனது நூலில் 6561TódsuggirGoT6i. Under the U.N. Falg: The International Community and Genocide in Serebrenica என்பது எனது நூலின் தலைப்பு. உண்மையில் ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் நேட்டோவும் இத்தாலி யிலுள்ள அதன் விமானங்களை அனுப்பியிருந்தால் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் இன்று உயிர்வாழ்ந்திருப்பார்கள். இதை எனது நூலில் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திட்டமிட்டிருந்தபடி ஆரம்பத்திலேயே விமானங்களை அனுப்பி சேர்பிய இராணுவத்தைப் பயமுறுத்தியிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். முழு சேர்பிய இராணுவத்தையும் அழித்து விடுவது என்று நான் சொல்ல வில்லை. எங்களைக் கொல்வதற்காக அலைந்து திரிந்த யுத்தத் தாங்கி களையாவது அழித்திருக்கலாம் என்றுதான் சொல்லுகிறேன். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இந்தத் துயரம் மிகுந்த பேரழிவு ஏற்பட்டிருக்காது.
நான் எனது நூலில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அதே போல் பல கேள்விகளுக்கு விடையும் சொல்லியிருக்கிறேன். ஆதாரங்களைப் பல ஆவணங்களிலிருந்து நான் சுட்டிக் காட்டியிருக் கிறேன். நான் சொல்லும் ஆவணங்கள் ஐ.நா. வுடையவை. “மிக இரகசியமானது" என்று குறிப்பிடப்பட்டிருந்தவை. அவற்றை டேவிட் றோட் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டேன். அவர் செரப்ரனிக்காவைப் பற்றி "End Game’ என்ற நூலை எழுதியவர். அவர் எனது நெருங்கிய நண்பர். தவிர செரப்ரனிக்காவைப் பற்றித் தீர விசாரித்து எழுதியவர்.
இன்று பத்து வருடங்களுக்குப் பிறகு உங்களால் டச்சுப்படை களத்தில் எப்படி இயங்கியிருந்தது என்று பார்க்க முடிகிறது. எனது
(ரடோவன் கராட்ஸிக் 2008 ஜூலை 21ம் நாள் பெல்கிரேட் நகரில் கைது செய்யப்பட்டார். மறைந்திருந்த அவ்வேளை மாற்று மருத்துவ நிபுணராகத் தன்னை அறிமுகப்படுத்தியிருந்த அவர், தனது பெயரை டாக்டர். ட்ரகன் டேவிட் டெபிக் எனப் பயன்படுத்தினார். கராட்ஸிக், உண்மையிலேயே மனோவியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் கற்றவர். ஆறு கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்ட கராட்ஸிக் அவற்றிற்காக விருதுகளையும் பெற்றவர்.)
அஷ்ரஃப் சிஹாப்தீன்=

15
கணிப்பில் இப்படுகொலைகளுக்கு அவர்களும் பொறுப்புதாரிகளே. நேட்டோ விமானங்கள் தயாராக இருந்த நிலையில் விமானத் தாக்குதல் அவசியமான நிலையில் ஐ.நாடுகள் விமானத் தாக்குதலை அனுமதிக்காத காரணத்துக்காக அவர்களும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே. விமானத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதை உடனடியாகக் கைவிடும்படி ஐ.நாடுகள் கட்டளை பிறப் பித்ததாக ஒர் ஆவணம் சொல்கிறது. இரண்டு குண்டுகள் மாத்திரமே போடப்பட்டன. அவையுங்கூட இலக்குத் தவறி வீழ்ந்தன. பல ஆவணங்களின் தகவலின் படி நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளின்பேரிலேயே விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
இதேவேளை இந்தப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள் ஏற்கனவே பல ஏற்பாடுகளைச் செய்திருந்ததாகப் பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. படுகொலைகளுக்கு ஒரு மாதத்துக்கு முந்தியே ஐ.நா அதிகாரிகள், பிரான்ஸின் இராணுவ ஜெனரல் ஒருவர், பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவர் மற்றும் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் கூட சேர்பிய இராணுவத்தின் மீது மேலதிகத் தாக்குதலை நடத்துவதில்லை என்று ஜெனரல் மிலாடிக்குக்கு உத்தரவாதம் அளித்ததாக அறிய முடிகிறது. அதே போல் கிழக்கு
(ரட்கோ ம்லாடிக் காணாமல் போனவராயிருக்கிறார். அவர் தோன்றிய போது தனது மனைவியுடனே இருந்ததாகச் சிலர் தெரிவித்திருக்கின்றனர். இரு பெண்களுடன் அவர் இருந்ததை ஒரு வீடியோவில் ஒளிப் பதிவு செய்து ஓர் ஊடகவியலாளர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பிய போதும் அது 2008ல் எடுக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்ற வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. இதே வேளை அவருக்கு மூன்றாவது முறையும் இதயத் தாக்கு ஏற்பட்டு மரணமடைந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அவர் ஏழு வருடங்களாகக் காணாமல் போயிருப்பதால் இறந்து விட்டார் எனப் பிரகடனப்படுத்தும் படி ஜூன் 2010ல் அவரது குடும்பத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.)
|ඉq5 ගLiගී ඝගlගණ්

Page 27
16
பொஸ்னியாவில் உள்ள சேர்பிய இராணுவம் சுற்றி வளைத்திருந்த செரப்ரனிக்கா போன்ற பிரதேசங்களைத் தாக்கும் போது சேர்பிய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்று நேட்டோ இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அறிய முடிகிறது.
நான் நேரில் பார்த்து அறிந்ததற்கு ஏற்பவும் ஆவணங்களின் படியும் இரண்டு டச்சு நாட்டு ஜெற் விமானங்கள் இரண்டு குண்டு களைப் போட்டிருக்கிறன்றன. அவையும் இலக்குத் தவறிப் போடப் பட்டன. சில வேளை அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது. ஒரு தகவலின் படி அந்த இரண்டு குண்டுகளுமே இரண்டாம் உலக மகாயுத்த காலத்தவையாகும்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை உண்மையில் அகதி களுக்கான பொருட்களைக் கொண்டுவரும் போக்கு வரத்துக்கே பெரிதும் உதவியது. ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் கொல்லப் படுவதற்கு முன்னர் உணவளித்ததுதான். இதுதான் அமெரிக்கர்கள் அங்கு நேரடியாகத் தலையிடுவதற்கு முன்னர் செரப்ரனிக்காவில் நடந்தது.
நன்றி
Joe Rubin - January 2006 pbs.org
அஷ்ரஃப் சிஹாப்தீனி

பிஞ்சுகளும் பிசாசுகளும்
எனது பெயர் ரீட்டா கொமுண்டா. நானும் ரூத்தும் இரட்டையர்கள். மத்திய ஆபிரிக்காவின் களிமண் குடிசையொன்றில் 1988ம் ஆண்டு பிறந்தவர்கள். எமது அப்பா சாமும் அம்மா ரேச்சலும் மிக அன்பானவர்கள். ஆனால் திகில் நிறைந்த காலப் பகுதியில் வாழ நேர்ந்தவர்கள்.
அப்பாவும் அம்மாவும் விவசாயிகள். நாங்கள் வாழ்ந்த புருண்டியின் கிடேகா கிராமத் தில் ஆளும் டுட்சி இனத்தவரான எங்கள் மீது தினமும் எதிரணி யினரான ஹூட்டு இனத்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட உடல்கள் தெருவெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன. "நமது பெண் குழந்தைகளின் வாழ்க்கை இங்கு எவ்வாறு அமையப் போகிறதோ” என்று அப்பா அடிக்கடி அம்மாவிடம் கேட்பார். "நாம் பாதுகாப்பான ஒர் இடத்தைத் தேடிக் கொள்வது அவசியம்."
வடக்கே 242 கிலோ மீற்றர் தூரத்தில் உகண்டா அமைந் திருந்தது. அமைதியானதும் வாழ உகந்ததுமான இடமாக உகண்டா இருந்தபோதும் அதனை அடைய ருவாண்டாவைத் தாண்டியாக வேண்டும். ஆனால் ருவாண்டாவோ டுட்சி மற்றும் ஹ"ட்டு இனச் சண்டையின் போர்க்களமாக இருந்தது.
ஒரு குடம் கணினி

Page 28
18
தாமதம் ஆபத்து என்பதால், அப்பாவும் அம்மாவும் அவசிய மான சில பொருட்களை மூட்டையாகக் கட்டியெடுத்தனர். என்னை யும் ரூத்தையும் அவர்களது முதுகுகளில் வரித்துக் கொண்டனர். 11 வயதேயான எனது மாமி கேத்தியையும் அழைத்துக் கொண்டு புருண்டியிலிருந்து கால் நடையாக உயிர் தப்பியோடும் நூற்றுக் கணக்கான டுட்சி அகதிகளுடன் இணைந்து கொண்டார்கள்.
தப்பியோடுதல் என்பது இலகுவானதல்ல. தினமும் 5 கிலோ மீற்றரைத் தாண்டிச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. மரங்களில் உள்ள பழங்களைத் தவிர வேறு உணவு எதுவும் எமக்குக் கிடையாது. எதை நோக்கிச் செல்கிறோம் என்ற நோக்கமோ வரைபடமோ இல்லாத பயணம். நடை வழி வேறு கடும் வெப்பமாக இருந்தது. மலைப்பாங்கான பிரதேசங்களூடாகவும் மரங்களடர்ந்த பள்ளத் தாக்குகளூடாகவும் வழி கண்டு எங்களது பயணத்தைத் தொடர்ந் தோம். ஹ"ட்டு இனத்தவர்கள் டுட்சி இனத்தவரைத் தேடிக் கிராமங் களைச் சுற்றித் திரிந்தார்கள். அவர்கள் அண்மையில் இருக்கிறார்கள் என்பதை உணர வரும் போதெல்லாம் அநேகமாகப் பல நாட்கள் காடுகளுக்குள் ஒளிந்திருக்க வேண்டி வந்தது.
ஒரு மாதப் பயணத்தின் பின் ருவாண்டா எல்லையில் உள்ள முயிங்கா என்ற இடத்தை நாம் அடைந்தோம். "இங்கே இருந்து கொள்ளுங்கள். அண்மையில் வாழ்பவர்களிடம் ஏதாவது உணவு கிடைக்கிறதா என்று பார்த்து வருகிறேன்” என்று எம்மைத் தரிக்கச் சொல்லி விட்டு அப்பா புறப்பட்டுப் போனார். இரவு வந்தது; அப்பா திரும்பி வரவில்லை. அம்மா தவிக்க ஆரம்பித்து விட்டாள். அடுத்த நாள்தாமதிக்காமல் அவ்விடத்திலிருந்து புறப்பட்டோம். நாம் நடந்து சென்ற பாதையின் ஒரிடத்தில் அப்பாவைக் கண்டோம்; ஆனால் பிணமாக!
உடலைத் தூக்கிச் செல்லவோ அஞ்சலி செலுத்தவோ அவகாசம் இல்லையென்பதைச் சடுதியாக உணர்ந்த அம்மா சுதாகரித் துக் கொண்டாள். அப்பாவின் பிணத்தை அநாதரவாக விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். பயணம் ருவாண்டா எல்லையின் தென் கிழக்கில் உள்ள கிபுங்கோ மாகாணப் பிரதேசம் வரை தொடர்ந்தது.
அஷ்ரஃப் சிஹாப்தீனி

19
அந்த இடத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு குடிசைக்குள் டுட்சி இனத்தவர் பத்துப் பேருடன் நாம் பதுங்கியிருக்க, அந்தப் பிரதேசத்தில் ஹ"ட்டு இனத்தவரின் நடமாட்டம் இருக்கிறதா என்பதைப் பார்த்து வருவதற்காக அம்மா புறப்பட்டாள். ஆனால் அன்று பிற்பகல் அம்மா திரும்பி வரவில்லை. தத்து நடைக் குழந்தைகள் இருவரை வைத்துக் கொண்டிருந்த கேத்தி, "ரேச்சல் கட்டாயம் திரும்பி வருவாள்” என்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தக் குடிசைக்குள் நாட்கணக்காக, வாரக் கணக்காகத் தங்கிக் காத்திருந் தோம். எம்முடனிருந்த டுட்சி இனத்தவர்கள் அனைவரும் எம்மை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர். தனிமையும் ஏக்கமும் அச்சமும் நிறைந்த ஏகாந்த இரவுகளில் "அம்மா. அம்மா." என்று அரற்றத் தொடங்கினோம்.
இரண்டு மாதங்கள் கழிந்த பிறகுதான் 'அம்மா கடத்தப் பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம்' என்பதைக் கேத்தி ஏற்றுக்கொண்டாள். "இதன் பிறகும் இங்கு தரித்திருப்பது ஆபத்தானது; நாம் இங்கிருந்து சென்று விட வேண்டும்” என்றாள் கேத்தி, ஒரு சின்னஞ்சிறு பெண்ணான கேத்தி என்னையும் ரூத்தையும் அணைத்தபடி மழைக் காடுகளினூடே விரைந்து நடக்கத் தொடங்கி
6ԾTIT6YT
அந்தக் காடு சுவர்க்கலோகமாயிருந்தது. காலை வேளைகளில் பறவைகள் பாடின. காணுமிடமெல்லாம் விதம் விதமான பழங்கள் விழுந்து கிடந்தன. ஆனால் இந்தச் சுவர்க்கம் ஒரு கணத்தில் நரக மாகவும் மாறக் கூடியது. ஒர் இரவில் சில டுட்சி இனத்தவர்களைக் காட்டுக்குள் சந்தித்தோம். அவர்கள் குளிரைப் போக்குவதற்காக இரவில் தீமூட்டினார்கள். மூட்டப்படும் தீயும் ஹ"ட்டு இனத்தவரின் கவனத்தைக் கவரக் கூடியது. கொல்லப்பட்டு ஈக்களால் மொய்க்கப் பட்ட, தங்களது தாய் தந்தையரின் உடல்களின் அருகே அழுது கொண்டிருந்த ஏராளமான குழந்தைகளை நாங்கள் வழி நெடுகிலும் கண்டோம். அரைகுறை உயிருடன் கிடந்த சில தாய்மார் அந்த நிலை யிலும் கூடத் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்ட முனைவதையும் காணக் கூடிதாகவிருந்தது.
ஒரு குடமீ கணினி

Page 29
20
பத்துமாதப் பயணத்தின் பின் ஒருவாறாக உகண்டாவுக்குள் நுழைந்தோம். நானும் ரூத்தும் கேத்தியும் இப்போது பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம். ஆனால் உலகத்தில் நாங்கள் தனித்தவர்களாக இருந்தோம். வீசப்பட்ட மீதியுணவைப் பொறுக்கிச் சாப்பிட்டோம்; கரடு முரடான இடங்களில் உறங்கினோம். ஒரிரவு ஒரு கட்டிடத்தின் அருகே உறங்கியிருந்தோம். அடுத்த நாட்காலை கேத்தி ஒரு பெண்ணின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். "யார் நீங்கள்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
கேத்தி எங்களது முழுக் கதையையும் அப்பெண்ணிடம் சொன்னாள். கதை கேட்ட ஜேன் என்ற அப்பெண்ணின் கண்களில் கணிணிரைக் கண்டோம். அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ஜேனும் விவசாயம் செய்து வாழ்க்கை நடாத் தும் ஒரு பெண்ணாயிருந்தாள். அவளது வீட்டில் நான்கு வயதான அவளது புதல்வியும் இருந்தாள். (கடைசி வரை அவளது கணவனைப் பற்றி ஜேன் வாய் திறக்கவேயில்லை.) அவளது வீடு களிமண்ணாலும் கற்களாலும் எழுப்பப்பட்டிருந்தது. விரித்துப் படுப்பதற்குச் சாக்குகள் இருந்தன. நாங்கள் வாழ்ந்த வாழ்வோடு ஒப்பிடும் போது இது மிகவும் சிறப்பானதுதான். ஜேன் எங்களுக்கு உணவும் உடையும் நீரும் தந்து ஆதரித்தாள். "நீங்கள் மூவரும் இங்கு வாழலாம்” என்று சொன்ன ஜேன், "ஆனால் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தனது தோட்டத்திலும் வேலை செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டாள்.
இவ்வாறான ஒரு புதிய வீடு கிடைத்ததையிட்டு நாங்கள் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தோம். ஜேன் ஒரு தாயைப் போல அவளால் முடிந்த அனைத்தையும் எங்களுக்குச் செய்தாள். ஆனாலும் பெற்றோரை இழந்த தனிமை என்னை அவ்வப்போது வாட்டியது. இருந்த போதும் ஜேனின் அன்பு காரணமாக மனப்பாரங்களின் அழுத்தங்களிலிருந்து ஓரளவு விடுதலை பெற்றிருந்தேன்.
(20ம் நூற்றாண்டின் மாபெரும் துன்பியல் சம்பவங்களில் டுட்சி, ஹ"ட்டு இனங்களுக்கிடையிலான மோதல் முக்கியமானது. இதன் போது எட்டு லட்சம் முதல் 10 லட்சம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.)
அஷ்ரஃப் சிஹாப்தீனி

21
1993ம் ஆண்டளவில் புருண்டியிலும் ருவாண்டாவிலும் இனச் சண்டை பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்தது. ஹட்டு இனத் தவர்கள் டுட்சி இனத்தாரைத் தேடி அடிக்கடி உகண்டா எல்லைக்கு வர ஆரம்பித்தனர். 1995ம் ஆண்டு ஒர் இரவில் எமது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அப்போது எனக்கும் ரூத்துக்கும் ஏழு வயதாகி யிருந்தது. ஜேன் எங்களை உடனடியாக கட்டிலின் கீழ் ஒளிந்து கொள்ளப் பணித்தாள். கதவைத் திறந்தபோது துப்பாக்கிகளுடன் மூவர் நின்றிருந்தனர். தானும் தனது மகளுமே வீட்டில் வசிப்பதாக அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் அவர்களுடன் பேசினாள். அவர்கள் சென்ற பிறகு சொன்னாள்:- "அவர்கள் உங்களைக் கண்டு பிடித்திருந்தால் எங்களையும் சேர்த்தே கொன்று போட்டிருப்பார்கள்; நீங்கள் இங்கிருந்து போய்விட வேண்டும்.”
உண்மையில் சொல்வதானால் ஜேன் எங்களைப் போக விட்டிருக்க மாட்டாள். சற்று நேரத்துக்குப் பிறகு எங்களைத் தன்னுட னேயே இருந்து விடும்படி கேட்டுக் கொண்டாள். ஆனால் அங்கிருப் பது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்தேயிருந்தோம். அடுத்த நான்கு வருட காலத்தில் அவர்கள் இரண்டு முறை அந்த வீட்டுக்கு வந்தார்கள். அதிர்ஷ்டவசமாக நாங்கள் அவ்வேளைகளில் பாடசாலை யில் இருந்தோம்.
அப்போது நானும் ரூத்தும் பதினொரு வயதை எட்டியிருந் தோம். எங்களைச் சூழ்ந்திருந்த சஞ்சலமான நிலையிலும் நாங்கள் ஓரளவு மகிழ்ச்சியுடனேயே இருந்தோம். ஒரு சாயுங்கால வேளையில் கேத்தி திகைப்படைந்தவளாய் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். சமைய லறைக்குள் எங்களைக் கூட்டிக் கீழே அமரச் செய்துவிட்டுச் சொன் னாள்:- "பயப்பட வேண்டாம். சந்தோஷமான ஒரு செய்தியுடன்தான் வந்திருக்கிறேன். என்னை ஒரு முகவர் தேர்ந்தெடுத்துள்ளார்.”
இந்த மறைமுக அல்லது நிழல் முகவர்கள் பற்றி நாங்கள் ஏற்கனவே பாடசாலையில் கதைத்துக் கொண்டிருந்திருக்கிறோம். அவர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்து விட்டு உங்கள் நண்பர்கள் பற்றியும் உங்களது வாழ்க்கை பற்றியும் விசாரித்துத் தகவல் பெறுவார்கள். அவர்கள் தொண்டு நிறுவனத்துக்காகத் தொழில்
ஒரு குடம் கணினி

Page 30
22
புரிபவர்கள் என்று சிலர் சொல்லுவார்கள். அவர்கள் ஐ.நாடுகள் அமையத்தைச் சேர்ந்தவர்கள் என்று வேறு சிலர் சொல்லுவார்கள். நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றோ அல்லது தேவையுடனிருக்கி றிர்கள் என்றோ அவர்கள் கருதினால் உங்கள் தோள்களைப் பற்றி ஆபிரிக்கக் கண்டத்துக்கு அப்பால் உள்ள ஒரு தேசத்துக்குச் செல்ல உங்களுக்கு ஒரு விமானப் பயணச்சீட்டைத்தருவார்கள் - வெளிநாட்டு அகதியாகத் தஞ்சமடைவதற்காக!
கேத்திக்கு அவ்வாறான ஒரு வாய்ப்புக் கிடைத்தது எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அன்றிரவு நானும் ரூத்தும் தேம்பித் தேம்பி அழுதோம். அன்றும் இன்றும் எமது வாழ்வை நினைத்துப் பார்த்தால் கேத்தி எமது வாழ்க்கையின் அச்சாணியாக இருந்து வந்திருக்கிறாள். இப்போதும் அவள் புறப்படும் போதும் கூட எங்களை மீட்பதற்காக யாரோ ஒருவரை அனுப்பி வைப்பதாக அவள் எங்களுக்கு வாக்களித் தாள். எப்போதும் அவளைச்சார்ந்திருக்கவே வேண்டும் என்று நாங்கள் உணர்ந்திருந்தோம்.
கேத்திக்கு 21 வயதான பிறகு இவ்வாய்ப்புக் கிடைத்தது போல எங்களுக்கான ஒரு வாய்ப்பை அவள் பெற்றுத்தருவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று ஜேன் சொன்னாள். தான் அனுப்பப்படும் இடத்துக்குச் செல்லும் கேத்தி முதலில் தன்னை அங்கு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜேன் சொல்லிக் கொண்டிருந் தாள்.
எந்தவிதமான தகவல்களும் இல்லாமலேயே பல மாதங்கள் கடந்து போயின. நாங்கள் மிகவும் கவலை கொண்டவர்களாக இருந் தோம். நாம் வாழ்ந்த பிரதேசத்தில் ஹ"ட்டு இனத்தவர்கள் ஆயிரக் கணக்கான டுட்சி இனத்தவர்களைத் தேடித் தேடி வேட்டையாடிக் குவித் துக் கொண்டிருந்தார்கள். அவர்களி டம் அகப்படும் அடுத்தவர்கள் நாங்க ளாகவும் இருக்கலாம் என்ற அபாயம் எதிர் நோக்கியது. கேத்தி எங்களை மறந்து விட்டாளோ?
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

23
மூன்று வருடங்கள் கழிந்தன. நாங்கள் இப்போது 15 வயதை எட்டியிருந்தோம். உகண்டா வாழ்வின் நிச்சயமற்ற தன்மையையும் பயத்துடனான வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழப் பழகியிருந் தோம். இருந்தாற்போலொரு தினம் முகத்தில் பெரும் புன்னகையுடன் ஜேன் வீட்டுக்கு வந்தாள். "நான் சில முகவர்களைச் சந்தித்துக் கதைத்து விட்டு வந்திருக்கிறேன்" என்றாள். "நீங்கள் விரைவில் கேத்தியைச் சந்திப்பீர்கள்.”
ஜேன் இதைச் சொல்லிச் சில நாட்களின் பின்னர் ட்ரக் வண்டியொன்றில் வந்த ஒரு மனிதர் வீட்டுக் கதவைத் தட்டினார். என்னையும் ரூத்தையும் அவரது வாகனத்தின் பின் இருக்கைகளில் அமரச் செய்தார். வாகனம் நெடு நேரம் ஓடியது. பின்னர் விமான நிலையத்தை வந்தடைந்தது.
14 மணித்தியாலங்களுக்குப் பிறகு, 2003ம் ஆண்டு ஜூலை 2ம் திகதி நாங்கள் ஹித்ரூ விமானநிலையத்தில் இருந்தோம். எங்களை வரவேற்க எதிர்பார்த்து நின்ற கேத்தியை நோக்கி ஓடிச் சென்றோம். சந்தோஷ மிகுதியால் அணைத்துக் கொண்டு கண்ணிர் விட்டோம். பல நூறு அகதிகள் பட்டியலில் காத்திருக்க அதைத் தாண்டி எம்மை அழைத்தெடுக்க அவள் மேற்கொண்ட சிரமங்களையும் முயற்சிகளை யும் எங்களுக்குக் கேத்தி விபரித்தாள். "ஒரு போதும் நான் உங்களைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தேன்” என்று கேத்தி சொன்னாள்.
கிழக்கு லண்டனில் கேத்தியுடன் எஞ்சிய சிறுவயதுக் காலத் தைக் கழித்தோம். லண்டன் மாநகரின் அதி அழுக்கான பகுதியாக கிழக்கு லண்டன் கருதப்பட்ட போதும் எங்களுக்கு அது சுவர்க்க மாகவே இருந்தது. கேத்தி கணக்காளராகப் பயிற்சிபெற்றாள். நாங்கள் பாடசாலைக் கல்வியை மிகவும் கரிசனையுடன் கற்றோம். முடிந்த
வரை கெட்ட நபர்களின் சகவாசத்தைதத் தவிர்த்தோம்.
|@IB குபe கணிரீைர்

Page 31
24
இப்போது இருபது வயதை அண்டந்து விட்ட நான்பற் சிகிச்
சைத் தாதியாகக் கடமையாற்றி வருகிறேன். ரூத் பல்கலைக் கழகத்தில் வியாபார முகாமைத்துவம் கற்று வருகிறாள்.
'ரப்’இசைக் குழுவிலிருக்கும் ஒரு நண்பன் தான் ஒரு பெருஞ் சண்டியன் என்ற நினைப்பிலிருந்தான். ஒரு நாள் அவன் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எனக்குக் காட்டினான். தான் ஒரு பெரிய தலை’ யாகத் தெருக்களில் மதிக்கப்பட வேண்டும் என்று கதையளந்து கொண்டிருந்தான். எனது வாழ்க்கை பற்றியும் நான் அடைந்த துயரங்கள் பற்றியும் துப்பாக்கிகளுடன் திரிந்த பிசாசுசகள் பற்றியும் நாங்கள் தாய் தந்தையரை இழந்தது பற்றியும் அவனுக்கு மெதுவாக எடுத்துக் கூறினேன்.
என்ன நினைத்தானோ தெரியவில்லை - அடுத்த தினமே அவன் அந்தக் கைத்துப்பாக்கியைக் கைவிட்டான்!
நன்றி.
Nick Morgan
அஷ்ரஃப் சிஹாப்தீனி

ஒரு மணிப் புறாவின் மரணம்
மனிதர்களில் பலருக்கு வைக்கப்படும் பெயர் கள் அவர்களின் பண்புகளுக்கு நேர் எதிர்மாறான வையாக இருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் கண்டு வந்திருக்கிறோம். ஸ்டீவன் டேல் கிறீனும் அப்படியான ஒருவன்தான். பெயரில் மட்டுமே அவன் (Green) பசுமையாக இருந்தான்.
瓯
a AykłS
இயல்புக்கு மாற்றமான கிறீனின் நடத்தைகளைப் போலவே அவனைப் பற்றிய தகவல்களும் அமைந்திருக்கின்றன. சொந்த டெக்ஸாஸ் மாநிலத்தின் சீபுறுக்கிலும் ஜோர்ஜ் புஷ்ஷினது ஊரான மிட்லாண்டிலும் வளர்ந்தவன் கிறீன். அவனுக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அவனது பெற்றோர் விவாகரத்துப் பெற்றுப்பிரிந்து விட்டனர். அவனுக்கு எட்டு வயதாகும் போது அவனது தாயார் இன்னொரு திருமணம் புரிந்து கொண்டார். 2000 ஆம் ஆண்டில் கிறீன் மதுவருந்திவிட்டுக் கார் ஒட்டிப் பொலீஸாரிடம் அகப்பட் டான். கைதாகிய அவனைத் தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக அவனது தாய் கெஞ்சி மன்றாடினாள். ஆனால் அவன் ஆறு மாதம் சிறைக்கு அனுப்பப்பட்டான். 2002ல் பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டு டெக்ஸாஸின் மற்றொரு நகரமான டென்வருக்கு அவன் இடம் பெயர்ந்தான். அங்கு 2003ல் உயர் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டான்.
|ඉංග්‍ය ගuර් ඝනද්ග)

Page 32
26
கிறீன் அமெரிக்க இராணுவப்படையில் சேர்ந்த போது அவனுக்கு வயது 20. இராணுவத்தில் சேர்வதற் காக அவன் ஏதோ ஒருவழியில் நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றுக் கொண்டான். குற்றம் புரிவதற் காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டதனாலோ அல்லது ஜோர்ஜ் புஷ்ஷின் ஊர்க்காரன் என்பதனாலோ என்னவோ அச்சான்றிதழ் அவனுக்குக் கிடைத்தது. (இராணுவத்தில் போதாக்குறை ஏற்பட்ட போது அமெரிக்காவில் பிரஜாவுரிமையற் றிருக்கும் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்தால் பிரஜாவுரிமை வழங் கப்படும் என்று ஒரு முறை புஷ் நிர்வாகம் அறிவித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.) ஏதோ ஒரு வகையில் 502வது காலாட்படைப் பிரிவின் முதல் அணியின் பயிற்சிப் படை அணியில் அவன் இடம் பிடித்தான். செப்டம்பர் 2005 முதல் அவன் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
ஈராக்கின் தென் பகுதியிலுள்ள மஹமூதிய்யா பிரதேசத்தில் உள்ள ஒரு இராணுவச் சோதனைச் சாவடியில் அவன் கடமையில் அமர்த்தப்பட்டான். அந்தச் சாவடியிலிருந்து பதினைந்து மீற்றர் தூரத்தில்தான் அந்த வீடு அமைந்திருந்தது. அங்குதான் அபீர் ஹம்ஸாவின் குடும்பம் வாழ்ந்து வந்தது.
02.
அபீர் ஹம்ஸா ஒரு மணிப்புறா. அவளுக்கு வயது பதினான்கு. அஹமட் (1996), முஹம்மத் (1998) இரு சகோதரர்களுக்கும் ஹாதில் (1999)என்ற சகோதரிக்கும் மூத்தவள். தந்தை காஸிம் ஹம்ஸா ரவுத் அல் ஜனபரி அரசாங்கத்துக்குச் சொந்தமான உருளைக் கிழங்குச் சேமிப்பகத்தில் காவலராகத் தொழில் புரிந்து வந்தார். தாயின் பெயர் பக்ரியா தாஹா முஹம்ஸின்.
தாம் வளர்த்து வந்த மாடுகளுக்கு உணவளிக்கச் செல்லும் போது இராணுவ நிலையில் இருக்கும் அமெரிக்கர்கள் தன்னையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பதையும் சைகை காட்டு வதையும் தனது தாயாரிடம் பலமுறை அபீர் சொல்லியபடியிருந்தாள்.
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

27
அவர்களால் தனது மகளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தை அயல் வீடுகளில் உள்ளவர்களிடம் பக்ரியா பகிர்ந்து கொண்டிருக்கிறார். இப்பயத்தின் காரணமாக 09.03.2006 அன்று அயல் வீட்டுக்காரர்களில் ஒருவரான ஹஸூஸைன் முஹம்மதின் வீட்டில் அவரது பெண் பிள்ளைகளோடும் 11.03.2006 அன்று மற்றொரு அயல் உறவினரான ஒமர் ஜனபரி வீட்டில் அவரது மகளோடும் அபீர் ஹம்ஸா இராத் தங்கலுக்குச் சென்று வந்தாள்.
ஸ்டீவன் கிறீன் அபீர்ஹம்ஸா மீது ஒரு கண் வைத்திருந்தான். அதைப் பலமுறை சோதனைச்சாவடியில் தன்னுடன் கடமையிலிருந்த நண்பர்களிடம் சொல்லியுமிருக்கிறான். அபீர் ஹம்ஸா அச்சோத னைச்சாவடியைக் கடக்கும் போதெல்லாம் ஏதோ ஒருவகையில் கிறீன் சேட்டை செய்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். ஒருமுறை அவன் தனது சகோதரியின் கன்னத்தைத் தொட்ட போது அபீர் ஹம்ஸா பயத்தில் உறைந்து போனதைத் தான் அவதானித்ததாக அவளுடன் சென்றிருந்த அவளது சகோதரன் முஹம்மத் சொல்கிறான்.
03. - அபீர் ஹம்ஸாவின் தாயாரின் சந்தேகம் நியாயமானதாகவே இருந்தது.
ஸ்டீவன் கிறீனும் அவனது ஏனைய நான்கு சகாக்களும் அந்தச் சோதனைச் சாவடிக்குள் இருந்தபடி அபீர் ஹம்ஸாவைக் கற்பழிப்பது என்று ஏற்கனவே ஒரு திட்டத்தைப் போட்டுத்தானிருந்தனர். அதற் குரிய வேளை வரும்வரை அவர்கள் காத்திருந்தனர்.
12.03.2006 அன்று திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்திருந் தார்கள். அன்று காலையிலிருந்து மது அருந்துவதும் சீட்டாடுவது மாக நேரத்தைக் கழித்துவிட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் புறப் LILL - 60T.
அமெரிக்கர் ஐவரும் ஈராக்கின் ஷரீஆ ராணுவப் படையினரின் உதவியுடன் அபீர் ஹம்ஸாவின் வீட்டைச் சுற்றியுள்ள பிரதேசத்தைச் சுற்றி வளைத்தனர். அப்போது பிற்பகல் 2.00 மணியாக இருந்தது. ஈராக் படையினரை வீட்டைச் சுற்றி நிறுத்திவிட்டு அமெரிக்கர்களான
-6(D ගLiගී අංගliග)

Page 33
28
போல் கோர்ட்டேஸ், ஜேம்ஸ் பார்க்கர், ஜெஸ்ஸிஸ்பீல்மன், பிரையன் ஹோவார்ட் ஆகிய நால்வருடன் ஸ்டீவன் கிறீன் வீட்டுக்குள் நுழைந்தான். வானொலிச் சைகைகளைக் கவனிக்கும்படி ஹோவார் டைப் பணித்தான் கிறீன்.
காஸிம், அவரது மனைவி மற்றும் அபீர் ஹம்ஸாவின் தங்கை யான ஐந்து வயதான ஹாதில் ஆகியோரைப் படுக்கையறைக்குள் செல்லுமாறும் அபீர் ஹம்ஸாவை வரவேற்பறைக்குச் செல்லுமாறும் பணித்தான் கிறீன். போல் கோர்ட்டேஸ் மற்றும் ஜேம்ஸ் பார்க்கர் ஆகியோர் பதினான்கு வயது அப்பாவிப் பெண்ணான அபீர் ஹம்ஸாவைத் திணறத் திணறக் கற்பழித்துக் கொண்டிருந்த போது ஸ்டீவன் கிறீன் காஸிம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். பின்னர் அவரது மனைவியையும் ஐந்து வயது ஹாதிலையும் சுட்டுத் தள்ளினான். வெளியே வந்து நண்பர்களிடம் "அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டேன்” என்று வெகு சாதாரணமாகச் சொன்னான்.
தனது பெற்றோர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற அதிர்ச்சி யிலும் இருவரால் கற்பழிக்கப்பட்டுப் பாதி உயிர் போன நிலையிலும் உறைந்து போயிருந்தாள் அபீர்ஹம்ஸா, பதினான்கு வயதின் கனவுகள் ஒரு நொடியில் சிதைக்கப்பட்டன. என்னதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அவள் உணர்ந்து கொள்ளும் சக்தியற்ற வளாக இருந்தாள். கவலைகள் இல்லாமல் கலகலத்துப் பறந்து திரிய வேண்டிய வயதில் பாசம் மிக்க தனது தாய், தந்தையை, இடுப்பில் சுமந்து திரிந்த தனது சின்னத் தங்கையை இழந்தாள் அபீர். தனது வாழ்வும் முடிவுக்கு வரப் போகிறது என்பதை அறியாத அவளை கிறீன் கற்பழித்தான். முடிந்த பிறகு, அவள் அரை உயிருடன் போராடிக் கொண்டிருக்க கிறீன் அவள் முகத்தின் மீது தலையணையொன்றை வைத்து மூன்று முறை தனது ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டான்.
அவளது உயிர் பிரிவதற்கு முன்னர் அங்கு கிடந்த துணிகள் சிலவற்றை எடுத்து அபீர் ஹம்ஸாவின் நெஞ்சிலும் தலையிலும் போட்டுத் தீ வைத்தான். வந்த காரியம் கச்சிதமாக நிறைவேறிய திருப்தியில் அமெரிக்கப் படையினர் வீட்டை விட்டு வெளியில் வந்தார்கள். வீட்டுக் கூரைக்கு மேலால் புகை கசிய ஆரம்பித்தது.
அஷ்ரஃப் சிஹாப்தீன்:

29
அமெரிக்கப் படையினரின் வருகை, திடீரென முழங்கி முடிந்த துப்பாக்கி வேட்டுக்கள், வீட்டுக்கு மேலாகக் கசியும் புகை ஆகியவற்றை அவதானித்த அயல் வாசிகள் வெளியே தலை நீட்ட ஆரம்பித்த னர். அவர்களிடம் அல் கயிதா பயங்கரவாதி கள் காஸிமின் வீட்டுக்குள் புகுந்து அனைவ ரையும் கொன்று விட்டதாகக் கதை சொன் னது அமெரிக்க ராணுவம். வீடு தீப்பிடித்து எரியும் வரை காவல் நிற்பது அவர்களது திட்டமாக இருந்தது. யாரையும் வீட்டுக்குள் நுழைய அமெரிக்க ராணுவத்தினர் அனும திக்கவில்லை.
அபீர் ஹம்ஸா - ஏழு வயதில்
தேசியப் பாதுகாப்புப் படையினன் ஒருவனை ஹ"ஸைன் முஹம்மத் தைரியமாக அணுகினார். "நான் காஸிமுடைய அயல் வீட்டுக்காரன். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் காஸிமுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேர்ந்தவற்றை அவரது தந்தைக்கு என்னால் தெரியப்படுத்த முடியும்" என்று கேட்டுக் கொண்டார். அவன் அவரை உள்ளே செல்ல அனுமதித்தான்.
அவர் வீட்டுக்குள் நுழைந்து முதலாவது அறையை எட்டிப் பார்த்தார். அங்கே காஸிமும் அவரது மனைவியும் ஹாதிலும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இவ்வாறு சொல்வதை விட இரத்த வெள்ளத் தில் அவர்கள் மிதந்தனர் என்று சொல்வதே பொருத்தமாகும். அவர் களைப் புரட்டிப் பார்த்த போது யாரும் உயிருடன் இல்லை என்பது அவருக்குப் புரிந்தது. அவர்களது உடல்களிலிருந்து வழிந்த இரத்தம் அறையைத் தாண்டிக் கதவுக்குக் கீழாக வழிந்தோடியது.
அடுத்த அறையைப் பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹ"ஸைன் முஹம்மத், அங்கே அபீர் ஹம்ஸாவின் உடல் அலங்கோலமாகக் கிடக்கக் கண்டார். அபீரின் தலையிலும் நெஞ்சி லும் நெருப்பு வைக்கப்பட்டிருந்தது. அபீரின் வெள்ளை நிற ஆடை
ஒரு குடமீ கணினரீ

Page 34
30 கழுத்து வரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. உள்ளாடை கிழிக்கப் பட்டிருந்தது. கால்களுக்குக் கீழாக இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந் தது. அபீரின் உடலை அவர் பார்த்த அளவில் கால்மணி நேரத்துக்கு முன்னர்தான் உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
காஸிம் குடும்பத்துக்குக் குறிப்பாக அபீர் ஹம்ஸா என்ற அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துக் கலங்கி நின்றார். ஆனால் அவர் உணர்ச்சிகளை வெளிக் காட்டக் கூடாது. எந்தவொரு சந்தேகத்தையும் கேட்க வாய் திறக்கக் கூடாது. அப்படி முயன்றால் அவரால் உயிருடன் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உருவா கும். அல்லது அக்கொலைகளுக்காக அவரே குற்றவாளியாகக் கைதாக வும் கூடும். எனவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெளனமாக அங்கிருந்து வெளியேறினார். அப்படி மெளனமாக வெளியேறினால் தான் இந்தப் பயங்கரத்தைப் பார்த்த ஒரேயொரு இரத்தச் சாட்சியாக அவரால் இருக்க முடியும்.
அமெரிக்கப் படையினர் தொடர்ந்து அப்பகுதியைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் காவல் புரிந்தனர். “காஸிம் குடும்பம் ஷரீஆப் பிரிவினர் என்ற காரணத்தால் அவர்களைப் பயங்கரவாதிகள் கொன்று விட்டனர்' என்று அவ்வப்போது அமெரிக்கப் படையினர் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்கப்படை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்ததன் மூலம் தாங்களே அக்கொலையைப் புரிந்தவர்கள் என்று வெளிப் படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. ஏனெனில் அப்பிரதேசத்தில் காஸிம் பலரதும் மதிப்பைப் பெற்ற ஒரு சிறந்த பிரஜையாக இருந்தார். அமெரிக்கர்கள் சொன்னதைப் போல் அவர் ஷரீஆப் பிரிவைச் சேர்ந்தவர் அல்லர். அவரது குடும்பம் ஸுன்னி பிரிவைச் சேர்ந்தது.
மாலைத் தொழுகை நேரம் வரை காவல் நின்ற அமெரிக்கப் படை, உடல்களை அமெரிக்கத் தளத்துக்குக் கொண்டு சென்றது. அன்று இரவு உடல்கள் அங்கே வைக்கப்பட்டு, அடுத்த நாட்காலை அவ்வுடல்கள் மஹ்மூதிய்யா வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டன. அந்த வைத்தியசாலை நிர்வாகம் (வேறு வழியில்லாததால்) அஷ்ரஃப் சிஹாப்தீனி

31
அமெரிக்கர்கள் சொல்லிக் கொண்டிருந்தது போல் காஸிம் குடும்பத்தைப் பயங்கரவாதிகள் கொன்றதாகச் சொல்லிக் கொண்டி ருந்தது. ஹ"ஸைன் முஹம்மதுடன் வைத்தியசாலைக்குச் சென்ற காஸிமின்குடும்ப உறவினர்கள் உடல்களைப் பொறுப்பேற்று அன்றே நல்லடக்கம் செய்தனர்.
04.
ஹ"ஸைன் முஹம்மத் சொல்கிறார்:-
"இந்தப் படுகொலைகள் சம்பந்தமாக அமைதியாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு அயலவர்களான நாங்கள் வந்தோம். மனச்சாட்சியுள்ள எந்த ஒரு ஆத்மாவாலும் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது. உலகத்தின் காதுகளுக்கும் கண்களுக்கும் இச்செய்தி எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்று விரும்பினோம். முஜாஹிதீன்களின் கவனத்துக்கு இந்த அநியாயத்தை எடுத்துச் சொன்னோம். அவர்கள் இரண்டு தினங்களில் ஆக்கிரமிப்பு அமெரிக்கப் படையினரின் மீது ஏறக்குறைய முப்பது தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஆனால் எமது மனம் ஆறுதல் கொள்ளவில்லை. அப்பாவிச் சின்னப் பெண்ணான அபீர் ஹம்ஸாவுக்கு நிகழ்ந்த கொடூரத்தை நினைக்கும் போதெல்லாம் இரத்தம் கொதித்தது.
அல் அரேபியா தொலைக் காட்சி நிலையத்துக்குச் சென்று இச்சம்பவத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் அவர்கள் எமது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. நாங்கள் பொய் சொல்கிறோம் என்று சொன்னார்கள். அமெரிக்கப்படையினர் தரும் அதிகாரபூர்வத் தகவல் களையே தங்களால் ஒளிபரப்ப முடியும் என்றும் இவ்வாறான சம்பவங்கள் குறித்துப் பேசும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் அல் அரேபியா தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் அஹமட் அல் சாலிஹற் நேரடியாகவே எமக்குச் சொன்னார்.
நொந்து போன மனத்துடன் உள்ளூர் செய்திப் பத்திரிகை களின் அலுவலகங்களுக்குச் சென்றோம். நாங்களும் கொலையுண்ட குடும்பமும் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எமது முகத்துக்கு நேரே கதவுகளைப் படீர் எனச் சாத்தினார்கள்.
ஒரு குடம் கணினி

Page 35
32
மக்பிரத் அல் இஸ்லாம் செய்தி நிறுவனம் சம்பவம் நடந்த இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டது. இந்தச் செய்தி நிறுவனமே உலகத்துக்கு இந்தக் கொடூரத்தை எடுத்துச் சொன்னது. எனது சாட்சியத்தையும் பதிவு செய்தது. இந்தச் செய்தி நிறுவனச் செய்தியாளர் அங்கு வருகை தருவதற்கு முதல் நாள் அமெரிக்கப் படையினர் சிலர் அங்கு வந்தார்கள். அபீர்
ஹம்ஸாவின் ஜனாஸாவைப் பரிசோத
னைக்காக வெளியே எடுத்துத் தரும்படி அவர்கள் கோரியதோடு சாட்சியமளிக்க வருமாறும் என்னை அழைத்தனர். சரியாக நீதி வழங்கப்படுமானால் உலகத்தின் எந்தவொரு இடத்துக்கும் வந்து சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக நான் சொன்னேன்.”
05.
அபீர் ஹம்ஸா கற்பழிக்கப்பட்டுக் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. அத்துமீற லுடன் கூடிய அநியாயம் இழைக்கப்பட்டிருப்பது உலகின் கண்க ளுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அமெரிக்கப்படையினர் ஐவரும் கைது செய்யப்பட்டனர்; வழக்குத் தொடரப்பட்டது.
போல் கோர்ட்டேஸ், ஜேம்ஸ் பார்க்கர், பிரையன் ஹோவார்ட் ஆகிய மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பிரையன் ஹோவார்ட் குற்றமிழைத்தவர்களுடன் இயங்காமல் வானொலியில் கவனம் செலுத்தியபடி இருந்தான் என்பதால் ஐந்து வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய இருவருக்கும் முறையே 90, 100 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ஸ்டீவன் கிறீனும் மற்றொரு படையினனான ஜெஸ்ஸி ஸ்பீல்மென்னும் குற்றங் களை ஒப்புக் கொள்ளவில்லை. விசாரணை முடிவில் ஸ்பீல் மென்னு க்கு 110 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டது.
மரணதண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் பிரதான குற்றவாளியாக ஸ்டீவன் கிறீனின் வழக்கு விசாரணை அஷ்ரஃப் சிஹாப்தீன்:
 

33
முடிவுற்றிருக்கிறது. 08.05.2009 அன்றைய செய்திகளின் படி 16 குற்றங் களின் பேரில் அவன் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளான்.
ஜூரிகளில் ஒன்பது பேர் பெண்கள். மூவர் ஆண்கள். தண்டனை வழங்குவதில் ஒன்றித்த கருத்தை அவர்களால் அடைய முடியவில்லை என்று தெரிய வருகிறது. இதன்படி மரண தண்டனை யிலிருந்து ஸ்டீவன் தப்பி விட்டான். எனவே அது வெளியே வர முடியாதபடியான ஆயுள் தண்டனையாக மாறியிருக்கிறது.
குற்றவாளி மரண தண்டனையைப் பெற வேண்டும் என்பதே இவ்வழக்குக் குறித்த பொதுமக்கள் கருத்தாகும். வழக்குகளில் பொது மக்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்பது நாம் அறிந்ததே.
நன்றி.
01. Iraqi Resistance Report 1st July 2006 02. Dailywarnews.blogspot.com 03. Beverly Darling (World News.com) 04. thecommonills.blogspot.com
05. adelaideinstitute.org
ஒரு குடம் கணினி

Page 36
தப்பிப் பிழைத்த பிக்கு
2007ம் ஆண்டு ஒக்டோபர்18ந்திகதிகாலை 7.00 மணிக்கு நான் கைது செய்யப்பட்டேன். "நெற் கஃபேயொன்றில் எனது மின்னஞ் சல்களைப் பார்த்து விட்டு வெளியே வந்த அடுத்த சில நிமிடங்களில் இந்தக் கைது இடம்பெற்றது. அநேகமாக நெற் கஃபே'உரிமையாளர் நான் அங்கிருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
பிக்குகள் தலைமையில் செப்டம்பரில் நடைபெற்ற சஃப்ரன் புரட்சியையடுத்து நான் உட்பட பிரதான பிக்குகளைக் கைது செய்யு மாறு ஜூன்டா பிடியாணை பிறப்பித்திருந்தது எனக்குத் தெரியும். ராணுவ விவகாரப் பாதுகாப்புப் பிரிவு, அபிவிருத்திக்கும் ஒற்றுமைக் குமான அமைப்புக்களின் ஒன்றியப் பிரிவு மற்றும் பொலிஸார் எனது மடத்துக்கு மூன்று முறை என்னைத் தேடி வந்திருந்தனர். அதிர்ஷ்ட வசமாக அவ்வேளைகளில் நான் அங்கிருக்கவில்லை. எனவேதான் நான் மொணிவாவுக்கு இடம் பெயரத் தீர்மானித்தேன்.
மொணிவாவில் என்னைக் கைது செய்யக் கலகம் அடக்கும் பொலிஸாரும் ராணுவத்தினருமாக 25க்கும் 30க்கும் இடைப்பட்ட தொகையினர் வந்திருந்தனர். என்னிடம் சில விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் பொலீஸ் நிலையத்துக்கு வரும்படி கேட்டனர். "எந்த விபரம் வேண்டுமானாலும் இங்கேயே கேளுங்கள்; சொல்கிறேன்" என்று நான் சொல்லிப்பார்த்தேன். அதற்கு అ6& doDiజీటి

35
அவர்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் இல 1, மொணிவா பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு என் மீதான விசாரணை ஆரம்பமானது. எனது பதில் களில் அவர்கள் திருப்தியுறவில்லை. ஏனெனில் அவர்கள் தமக்கு எவ்வகைப்பதில்கள் வேண்டும் என்று என்னிடம் எதிர்பார்த்தார்களோ அவற்றை நான் சொல்லவில்லை. ராணுவ விவகாரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மிக மோசமான அதிகாரிகளான கோ கோ ஓங் மற்றும் யு சான் வின் ஆகியோர் அப்போது அங்கிருந்தனர்.
எனது கரங்கள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் எனது நெஞ்சிலும் முகத்திலும் அவர்களது இராணுவச் சப்பாத்துக்களால் ஓங்கி உதைத்தார்கள். அவர்களது ஒவ்வொரு வினாவும் எனது தலையில் அல்லது உடலில் ஏதாவதொரு பகுதியில் ஒரு தாக்குத லுடன்தான் வெளிவந்தது. நான் படிப்படியாக மயக்க நிலைக்கு வந்து கொண்டிருந்தேன். பின்னாலிருந்து அவர்கள் உதைத்ததன் காரணமாக முன்னாலுள்ள மேசையில் விழுந்தேன். எனது கைகளை வளைத்து முறுக்க முனைந்தார்கள். அதனால் கை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட் டதை உணர்ந்தேன்.
எனது விலா எலும்புகளை இரண்டு பக்கங்களிலும் நெருக்கி னார்கள். மூர்க்கத்தனமாக அறைந்து காதுகளைப் பிடித்துப் பலமாகத் திருகினார்கள். எனது முழங்கால்களில் ஏறி மிதித்தனர். இந்த வருத்தம் அவர்கள் எனக்குச்சிறைத் தண்டனை விதிக்கும் வரை இருந்தது. நடக்க முடியாத நிலைக்கு நான் வந்து விட்டேன். அவர்கள் என்னிடமிருந்து அவர்களுக்குத் தேவையான விடைகளைப் பெற்றுக் கொள்ள அவர் களாலான எல்லாப் பிரயத்தனங்களையும் வன்முறையூடு பிரயோ கித்தார்கள். எனது கால்களின் இரண்டு சிறு விரல்களும் வீக்க மடைந்தன. இதற்கு மேலும் சித்திரவதையைப் பொறுக்க முடியாத நிலையில் நான் இருந்த போது எனக்கு முன்னாலுள்ள மேசையில் எனது தலையை நானே பலமாக மோதிமயக்கமடைய முயற்சித்தேன். "அவ்வாறு செய்ய வேண்டாம் சங்கைக்குரிய பிக்குவே, மேலிடத்து உத்தரவின் பேரில்தான் நாங்கள் இவ்வாறு நடந்து கொள்கிறோம்" என்று அவர்கள் சொன்னார்கள்.
ஒரு குடம் கணினி

Page 37
36
அதற்குப் பிறகு சித்திரவதையின் கடுமையை அவர்கள் குறைத் தார்கள். ஆனால் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். 18ம் திகதி முதல் 24ம் திகதி வரை தொடர்ச்சியாது என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தனர். இந்த நாட்களில் ஒரு சொட்டு நீர் அருந்துவதற்குக் கூட அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. பிரதான அதிகாரிகள் சிலர் வந்ததும் வேறு ஒர் அறைக்கு என்னை அழைத்துச் சென்று அங்கே விசாரித்தார்கள். என்னை விசாரித்தவர்களிடம், "சரியான பதில் கிடைக்கும் வரைநிறுத்த வேண்டாம்” என்று பிரதான அதிகாரிகள் சொல்லிவிட்டுச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் "அடுத்த கட்டமாக உனது உடல் முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றுவோம்" என்று பயமுறுத்தினார்கள்.
88 பரம்பரை மாணவர்களுடனும் ஆங் சாங் சுகியின் தேசிய
ஜனநாயக லீக்குடனும் உனக்குள்ள தொடர்பு என்ன? என்று என்னைக் கேட்டார்கள். "நீங்கள் கேட்கும் எவையும் எனக்குத் தெரியாது; அவற் றுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை” என்று சொன்னேன். உன்னைப் பற்றிய எல்லா விபரங்களும் எங்களிடம் இருக்கின்றன என்று சொன்ன அவர்கள் 'மாணவர் சங்கத்துடன் உனக்குத் தொடர்பு ண்டா’ போன்ற வினாக்களையே மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்டு வந்தார்கள்.
எனது பைக்குள் இருந்த அமெரிக்க நிலைய நூலக அட்டையை அவர்கள் கண்டெடுத்த போது நிலைமை மிக மோசமானது. "அமெரிக்க நிலையத்தில் நடைபெறும் அரசியல் பயிற்சி வகுப்புக் களுக்குப் போவதுண்டா?” என்றும் "அங்கு பயன்படுத்தப்படும் உப கரணங்கள் எவை?” என்றும் கேட்கத் தொடங்கினார்கள். "நீ எங்க ளுடன் ஒத்துழைக்காவிட்டால் மிகப் பயங்கர அனுபவங்களைச் சந் திக்க நேரும்” என்று அச்சுறுத்தினார்கள்.
"நீ இப்போது எங்களது பிடியில் இருக்கிறாய். நாங்கள் எதை வேண்டுமானாலும் உனக்குச் செய்ய முடியும். எம்முடன் ஒத்துழைக் காவிடில் உன்னைப் பற்றிய ஒரு சொல்லோ அடையாளமோ இல்லா மல் கொன்று விட முடியும். எங்களது பதவியையோதராதரத்தையோ நாங்கள் கணக்கில் கொள்ளப் போவதில்லை. உன்னைக் கொல்வதற்கு
அஷ்ரஃப் சிஹாப்தீன்=

37
எத்தனையோ வழிமுறைகள் எங்களிடம் உள்ளன" என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
அரசாங்கத்துக்கும் தேசத்துக்கும் விசுவாசமாக நடந்து கொள்ளாமை, சட்டபூர்வமற்ற அமைப்புக்களுடன் தொடர்பு, சட்ட பூர்வமற்ற முறையில் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தமை போன்ற பல குற்றச் சாட்டுக்களை எனக்கெதிராகத் தயார்படுத்தினார்கள். ஆனாலும் சட்டபூர்வமற்ற முறையில் வெளிநாட்டுப் பணம் வைத்தி ருந்த குற்றமொன்றுக்காக மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கினார்கள். ஏனைய குற்றச் சாட்டுக்களை அவர்கள் எனக்கெதி ராகச் சுமத்த முடியாமற் போனதற்குக் காரணமிருந்தது. சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை என்பதை வெளி உலகுக்குக் காட்டுவதற் கான ஒரு நாடகமே அதுவாகும். அதற்குப் பின்னர் நான் மொணிவாச் சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டேன்.
சிறைக்குள் நடைபெறும் அனைத்து விடயங்களையும் கண்காணிக்க ஏராளமான உளவாளிகள் அங்கிருந்தனர். நான் யாரு டன்கதைக்கிறேன் என்பதைக் கூட அவர்கள் அவதானித்துக் கொண்டி ருந்தார்கள். யாருடனாவது கதைக்க முயலும் போதெல்லாம் "அவனு டன் நீ என்ன கதைக்க முயன்றாய்?" என்ற கேள்வியுடன் ஒரு காவலர் என் முன்னால் வந்து நின்று விடுவார். "நீதவறாக ஏதும் செய்ய முயன் றால் உனது பிக்கு அங்கி களையப்படும்” என்று எச்சரிக்கை செய்யப் பட்டேன்.
ராணுவ விவகாரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த யூ சான்வின், விசேட பொலீஸ் பிரிவைச் சேர்ந்த இருவர், மொணிவாவைச் சேர்ந்த ஷவேக்கு மடத்தைச் சேர்ந்த தலைமைப்பிக்கு யூ ஸ்விற்கா ஆகியோர் எனது பிக்கு அங்கியைக் களையும் நோக்கத்துடன் மூன்று நான்கு முறை சிறைக்கு வந்தார்கள். "உனது பிக்கு அங்கி களையப்பட்டால் உன்னால் சமயக் கிரியைகள் எதையும் செய்ய முடியாது போய்விடும். அத்துடன் பிக்குகளுக்கான அடையாள அட்டையும் ரத்தாகிவிடும். ஆனால் இப்போது நீயாக இணங்கிப் பிக்கு அங்கியைக் கழற்றிக் கொண்டால் பிறகு மீண்டும் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப் படும்” என்று அத்தலைமைப் பிக்கு என்னிடம் சொன்னார். அதே
=ஒரு குடம் கணினி

Page 38
38
வேளை சிறை உதவிக் காவலர் ஒருவர் எனது அங்கியைக் களைய முன்றார். அத்துடன் அத்தலைமைப் பிக்கு புத்த சமயம் சம்பந்தமாக வும் அதன் ஒழுக்க விதிகள் பற்றியும் பல வினாக்களையும் கேட்டார். சஃப்ரன் புரட்சியில் பங்கு கொண்ட புத்த பிக்குகள் அமைப்பைச் சேர்ந்த பிக்குகளைப் பற்றியும் அவர் என்னிடம் கேட்டார். எனது அங்கியைக் கழற்ற முயன்ற சிறை உதவிக் காவலர் ராணுவப் பாது காப்புப் பிரிவு அதிகாரியான யூ சான் வின்னுடைய உளவாளி என்று பின்னால் நான் அறிய வந்தேன்.
அச்சிறைக்குள் ஆறு புத்த பிக்குகளுடன் மொத்தமாகப் பத்து அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். மிற்கினாவைச் சேர்ந்த பழைய அரசியல் கைதியான யூசோ ஹூடுன் தனிச்சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். சிறைக்குள்ளும் கூட விசாரணை நடத்தித் தொந்தரவு கொடுத்தனர். யூகம்பிரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது ஆரம்பமானது. அனைத்து புத்த பிக்குகள் அமைப்பின் முக்கிய பிக்கு கள் எங்கிருக்கிறார்கள்? யூ அவ்பர்த்தா எங்கேயிருக்கிறார்? சஃப்ரன் எழுச்சிக்குத் தலைமை வகித்த பிக்குகள் யார்? என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டன. நான் இப்போராட்டத்தில் பங்கெடுத் துக் கொள்ளவில்லை என்று சொன்ன போதும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
2008 மே மாதம் 21ம் திகதி காலே சிறைக்கு மாற்றப்பட்டேன். அங்கு ஒரு வாரம் வைக்கப்பட்டிருந்த பின்னர்ச்சின்மாகாணத்திலுள்ள லென்ட் லான்ட் சிறையின் தொழில் முகாமுக்கு அனுப்பப்பட்டேன். காலே சிறையில்தான் கடூழிய முகாமுக்கு என்னை அனுப்புவதற்காக எனக்குக் கால் விலங்குகள் அணிவிக்கப்பட்டன. மொணிவா சிறை யிலிருந்து நூறு கைதிகள் அங்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் சிலர் கடூழிய முகாமிலிருந்து தப்பிச் சென்று பிடிபட்டவர்கள். சிலர் பாரம் தூக்குவதற்காக இராணுவச் செயற்பாட்டின் போது பயன் படுத்திக் கொள்ளப்பட்டவர்கள். தப்பிச் சென்றவர்களுக்குக் கால் களில் இரண்டு விலங்குகள் அணிவிக்கப்பட்டன.
கடூழிய முகாமில் விறகுக்குப் பயன்படுத்தும் பாரமான மரக் குற்றிகளைச் சுமக்க வேண்டும்; அதுவும் கால்களில் இடப்பட்டிருக்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

39
கும் விலங்குகளுடன், ச்சின் பிரதேசம் ஒடுக்கமானதும் செங்குத் தானதுமான மலைகளைக் கொண்டது. இப்பாரமான மரக் குற்றி களை மலையின் அடிவாரத்திலிருந்து மலையுச்சிக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். ஒய்வு நாள் என்பதே கிடையாது. ஒருவர் பின் ஒருவராக மரக்குற்றிகளைச் சுமந்து செல்வோர் முன்னால் செல்பவருக்கு இடை யில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் பாதுகாவலர்களால் தண்டிக்கப்படுவார். பாரந் தாங்காமல் யாராவது கீழே விழும் பட்சத்தில் பாதுகாவலர்கள் விழுந்தவரின் நெஞ்சில் ஓங்கி உதைப்பார்கள். நோவினை மிக்க இத் தண்டனையை நாம் அனுபவித்தேயாகவேண்டியிருந்தது.
கடூழிய முகாமில் வேலை கடுமையானது. ஆனால் வழங்கப் படும் உணவு குறைவானது. டன்போக்' என்ற (பிரியாணி?) பெயரில் தரப்பட்ட உணவு அந்தப் பெயரையே அவமானப்படுத்துவதாகும். உமியுடன் சமைக்கப்பட்ட அரிசிச் சோற்றில் சிறு சிறு கற்கள் கிடக் கும். எலிப் பிழுக்கையும் கலந்திருக்கும். இரண்டு வாரங்களில் போஷாக்குக் குறைவினால் கைதிகள் வெளிறிப் போய் நிறம் மாறிவிடு வார்கள். பாரங் குறைந்து மெலிந்து விடுவார்கள். இதனால் நோய்க் குள்ளானவர்கள் பலர் இருந்தார்கள். கால் விலங்குகள் காரணமாக சிலருக்கு புண்கள் ஏற்பட்டுச் சீழ் கட்டியது. எனது உடலிலும் கட்டி கள் தோன்றின. கொடிய இந்த நிலைமையில் தாக்குப் பிடிக்க முடியா மல் மைற்கினாவைச் சேர்ந்த ஒரு பிக்கு இறந்து போனார்.
ஒவ்வொரு கைதியும் தமது உழைப்புக்காக தினமும் இரண்டா யிரம் கியாத் உழைக்க முடிந்தது. இது இரண்டு டாலர்களை விடக் குறைந்த தொகை) ஆனால் இத்தொகை சிறை அதிகார சபைக்குச் செலுத்தப்பட்டது. முகாமில் வேலை இல்லாத நாட்களில் வேலைக் காக வெளியே அனுப்பப்பட்டோம். அவ்வாறு சென்று இரண்டா யிரம் கியாத்களுக்கு மேலே உழைத்தால் அந்த மேலதிகத் தொகை எங்களுக்கு வழங்கப்பட்டது. அதனைக் கொண்டு பான வகைகளை யும் சிற்றுண்டிகளையும் எங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
இதே வேளை ஆகஸ்ட் மாதம் சிறை அதிகார சபைக்கு 50,000 கியாத்களைத் தந்து கால் விலங்குகளில் நின்றும் வெளியேறினேன்.
=ஒரு குடம் கணினி

Page 39
40 செப்டம்பர் 15ம் திகதி மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. உளவுப் பொலிஸார் சிறைக்கு வந்து காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை என்னை மீண்டும் விசாரித்தனர். "அகில பர்மா துறவிகள் அமைப்பின் தலைவர் யார்? நீ அதில் அங்கத்துவம் வகிக்கி றாயா?" போன்ற கேள்விகளைக் கேட்டார்கள். நான் அவர்களது எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாத காரணத்தால் என்னை அடித்து உதைத்தார்கள். அன்று மதிய உணவு கூட எனக்கு வழங்கப்பட வில்லை. இவர்கள் மீண்டும் காலே சிறைக்கு என்னைக் கொண்டு சென்று புதிய குற்றங்களை என் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கலாம் என்ற ஒர் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவே கடூழிய முகாமிலி ருந்து தப்பிக்க வேண்டும் என்று அன்றிரவே நான் முடிவுக்கு வந்தேன். கடூழிய முகாம் இரண்டு மதில்களால் அமையப் பெற்றது. முதலாவது மதில் பத்து அடி உயரமானது. மரக் கட்டைகளில் காயங் களை ஏற்படுத்தக்கூடிய முட்கம்பியினால் சுற்றப்பட்டது. இதைத் தாண்டுவதற்குள் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அடுத்த மதில் பதினைந்து மீற்றர் உயரமானது. இதுவும் அவ்வாறே அமைக்கப் பட்டிருந்தது. இதைத் தாண்டுவதற்குள் உடல் முழுவதும் ரணகளமானது. இரண்டையும் மிகுந்த பயத்துடனும் அதே வேளை தைரியத்துடனும் தாண்டிய பிறகு ஓரளவு நிம்மதி ஏற்பட்டது.
பின்னர் எனது கையிலிருந்த ஒரே ஒரு சிகரட் லைட்டரின் துணையுடன் இரவு முழுக்கக் காடுகளூடே விரைவாக நடந்தேன். எந்தத் திசையை நோக்கிச் செல்கிறேன் என்ற உணர்வேயின்றி ஒடத் தொடங்கினேன். அது மலைப் பாங்கான பிரதேசமானபடியால் ஒடுங் கிய மலைச்சரிவுகளில் மிகுந்த அவதானம் எடுத்துக் கொள்ள வேண்டி யிருந்தது. சில சரிவுகளைத் தாண்டுவதற்கு நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் எடுத்தன.
அடர்ந்த காடுகளை எனது கைகளாலும் முழங்கால்களாலும் விலக்கிநடந்தேன். ஆபத்தானமிருகங்கள் பற்றிய பயம் எனக்கு ஏற்பட வில்லை. ஆனாலும் எவ்வளவு தூரம் முகாமை விட்டுத் தூரமாக முடியுமோ அவ்வளவு தூரம் சென்று விட வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருந்தது. பசியோதாகமோ எடுக்கும் வேளைகளில்
அஷ்ரஃப் சிஹாப்தீன்:

41
காட்டில் கிடைத்த பழங்களை உண்டேன். இவ்வாறு இரண்டு பகல் பொழுதுகளையும் இரண்டு இரவுகளையும் கழித்தேன்.
அதிர்ஷ்டவசமாக ச்சின் இன இளைஞன் ஒருவனைக் காட்டில் சந்தித்தேன். அவனது உணவுப் பொட்டலத்தையும் நீரையும் எனக்கு அவன் தந்தான். அத்துடன் அவனிடமிருந்த மூன்று வெள்ளரிக் காய் களையும் தந்தான். பசியின் கோரத்தால் நான் கொஞ்சமேனும் மிச்சம் வைக்காமல் அத்தனையையும் சாப்பிட்டேன். இந்திய எல்லைக்குச் செல்லும் வழியை எனக்குக் காட்டுமாறு அவனிடம் கேட்ட போது அவன் சரியான வழியை எனக்குக் காட்டினான். என்னிடமிருந்த இரண்டாயிரம் கியாத்களையும் அவனிடம் அன்பளிப்பாகக் கொடுத்து நன்றி சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினேன். பின்னர் இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தின் தலை நகரான ஐஸோலை அடைந்தேன்.
ஆங்கிலோ - ஜப்பானிய ஆதிக்கத்தில் கூட பர்மாவின் துறவி களை தற்போது ஜூன்டா நடத்துவது போன்று கேவலமாக நடத்த வில்லை. அதிகாரத்திலிருக்கும் ஜூன்டா அரசின் அராஜகங்களைச் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
என்னால் அவர்களுக்குச் சொல்ல முடிந்ததெல்லாம், "அராஜ கங்களைக் கைவிடுங்கள்; இல்லையேல் நீங்கள் குப்பைத் தொட்டிக் குள் வீசப்படுவீர்கள்" என்பதுதான்.
நன்றி
மின்ற் மாஉங், ஹயீபி மற்றும் இணையத் தகவல்கள் - 27.1O.2OO8
0 யூஅவ்பர்த்தா என்ற புத்த பிக்கு தலைமையில் அகில பர்மாதுறவிகள்
அமைப்பு ராணுவ ஆட்சிக்கு ஏதிராகப் போராடுகிறது.
0 1988ல் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை நடத்திய இளைஞர்
அமைப்பு 88 பரம்பரை என அழைக்கப்படுகிறது.
=&D குடமீ கண்ணிர்

Page 40
பாக்கிஸ்தான் போன பயங்கரவாதி
எனது பெயர் முராத் குர்னாஸ். நான் ஜேர்மனியின் பிரமன் நகரைச் சேர்ந்தவன். எனது பெற்றோர் துருக்கிய வம்சாவழியினர். எனது தந்தையார் மேர்சிடஸ் தொழிற்சாலையில் கடமை புரிகிறார். நான் பிறந்து வளர்ந்து வாழ்வதெல்லாம் ஜேர்மனியில்தான்.
2001ம் ஆண்டு நான் ஒரு துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்தேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்த போதும் இஸ்லாம் பற்றிய போதிய அறிவு எனக்கு இருக்கவில்லை. எப்படித் தொழுவது என்று கூட எனக்குத் தெரியாது. இஸ்லாம் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற் பட்டது. ஏனெனில் தெரிந்து கொண்டால்தான் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழ முடியும். பிரமணில் உள்ள இஸ்லாமிய இயக் கத்தில் விசாரித்த போது அவர்கள் பாக்கிஸ்தானுக்குச் செல்லுமாறு எனக்குச்சிபார்சு செய்தார்கள். நான்பாக்கிஸ்தானுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். ஆனால் அதை எனது குடும்பத்தாரிடம் நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயமாகச் சொல்கி றேன்; எனது தாய் என்னை அனுமதித்திருக்கவே மாட்டார்.
இந்தப் பயணத்தை நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தப் பயங்கரம் நடந்தது. அமெரிக்க உலக வர்த்தக அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

43
மையத் தாக்குதலைத்தான் சொல்கிறேன். உண்மையில் என்னை மிகவும் திகைப்படையச் செய்த சம்பவம் அது. உலக வர்த்தக மையத் தாக்குதலுக்கும் எனது பயணத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதால் நான் திட்டமிட்டபடி பாக்கிஸ்தான் நோக்கிப் புறப்பட் டேன். ஆனால் அப்போது அப்பயணத்தை நான் மேற்கொண்டிருக்கக் கூடாது என்பது இப்போதுதான் புரிகிறது.
அங்கு சில வாரங்கள் தங்கி எனது விடயங்களை முடித்துக் கொண்டு ஜேர்மனி திரும்புவதற்காக பஸ்ஸில் வந்து கொண்டிருந் தேன். பாதையில் ஒரு வழமையான பரிசோதனைத் தடை இருந்தது. அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. நான் அமர்ந்திருந்த ஆசனத் தருகே இருந்த யன்னல் கண்ணாடியைத் தட்டி "இவன்தான்” என்று ஒரு பாக்கிஸ்தானியப் பொலிஸ்காரன் சொல்வது கேட்டது. பொலிஸார் என்னை பஸ்ஸிலிருந்து வெளியே இறக்கியெடுத்தனர். எப்படி இது நிகழ்ந்தது என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. சில வேளை பாக்கிஸ்தானியருடைய உடல் தோலைவிடஎனது தோல் சற்று வெளிச்சமானதாக இருப்பதால் அவர்கள் என்னை வேறுபடுத்தி அடையாளப்படுத்தினார்கள் போலும். -
எனது பயணத்தைத் தடை செய்து என்னை அமெரிக்கப் படையினரிடம் பாக்கிஸ்தானியப் பொலீஸார் கையளித்தனர். இதற்குச் சன்மானமாக பாக்கிஸ்தானியப் பொலிஸாருக்கு அமெரிக்கத் துப்பாய்வுத் துறை 3000 டாலர்களைக் கொடுத்ததாக நான் அறிய வந்தேன். அமெரிக்கப் படையினர் என்னை விமானத்தில் ஆப்கானிஸ் தானின் கந்தஹார் நகரிலுள்ள அவர்களது தளத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு ஏற்கனவே களச் சண்டையில் பிடிபட்டோருடன் என்னை அடைத்து வைத்தார்கள். எனக்கு அவர்கள் வழங்கிய இலக்கம் 53. நான் அடைக்கப்பட்டிருந்த சிறை குளிரினால் உடல் சில்லிடக் கூடிய இடமாக இருந்தது.
ஒரு நாள் இரவு ஓர் அலறல் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது. போர்வையொன்றால் முகம் மறைக்கப்பட்டஒர் இளைஞ னின் தலையில் ஒரு தடித்த கட்டையினால் அடித்துக் கொண்டிருந் தார்கள். அந்தக் கூக்குரலில்தான் நான் எழும்பியிருக்க வேண்டும்.
=|ඉq5 ගuර් ආගlගණි

Page 41
44
அவனது வயிற்றில் உதை விழுந்தது. சரியாக எண்ணிப் பார்த்தேன்; அவனைச் சுற்றி ஏழு அமெரிக்கப் படைவீரர்கள் சூழ்ந்து நின்று தாக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலை அந்த இளைஞன் இறந்து விட்டான்.
அவர்கள் தினமும் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். எனது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சிச் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் பின்வரும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்கள். "ஒஸாமா பின் லேடன் எங்கேயிருக்கிறார்? நீஅல்கயிதா இயக்கத்தைச் சேர்ந்தவனா அல்லது தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவனா?” அப்போதெல்லாம் "நான் ஒஸாமா பின் லேடனைக் கண்டது கிடை யாது; அல்கயிதாவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என்று பதில் கூறி வந்தேன். "நான் புறப்பட்டு வந்ததிலிருந்து பாக்கிஸ்தானி லேயே இருந்தேன்” என்பதைத் தெளிவாக விளக்கிச் சொன்னேன்.
"நீங்கள் கேட்கும் எதைப் பற்றியும் நான் அறியாதவன். உங்க ளுக்கு அவசியமாயின் ஜேர்மனியில் எனது முகவரியைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களோ பைத்தியம் பிடித்தவர்களைப் போலத் திரும்பத் திரும்ப அதே வினாக்களைத் தொடர்ந்து கேட்டுத் தாக்கினார்கள்.
எனது இரு கைகளையும் பின்னால் கட்டி விட்டு அதிலேயே இன்னொரு கட்டுப் போட்டு உயரத்தில் தொங்க விட்டார்கள். அதாவது பின்னால் கட்டப்பட்ட எனது கரங்களினாலேயே எனது உடற் பாரத்தைச் சில வேளை நாட் கணக்காக நான் தாங்க வேண்டி யிருந்தது எனக்கு நிகழ்ந்த பெருங் கொடூரமாகும். உடலுக்குக் குறுக் காகக் கட்டித் தொங்க விடப்பட் டிருந்த ஒர் இளைஞனை ஒரு நாள் கண்டேன். இன்னொரு முறை ஊதிப் பெருத்த நீல நிறமான ஓர் உருவத்தையும் நான் கண்டேன்.
உடலில் ஆங்காங்கு வெள்ளை
அஷ்ரஃப் சிஹாப்தீன்
 
 

நிறத்தில் புள்ளிகள் இருந்தன. அநேகமாக அது ஐஸ் கட்டிக ளில் வளர்த்தப் பட்டுக் கொல் லப்பட்ட ஓர் உடலாக இருக் கும் என்று நினைத்தேன்.
அவ்வப்போது நீருக் குள் அமிழ்த்தித் தலையில் தாக்குவார்கள். வயிற்றில் உதைப் பார்கள். நீருக்குள் வைத்து வயிற்றில் அடிக்கும் போது மூச்செடுக்க முடியாது. மூச்செடுத்தால் நீரையே சுவாசிக்க வேண்டி யிருக்கும். இந்தக் கொடுமைகளை எந்தச் சொற்களில் விளக்கிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டு கால்க ளிலும் இரண்டு கைகளிலும் சங்கிலிகளால் கட்டி ஒரு விமானத்தைப் போல உயரத்தில் ஐந்து நாட்கள் தொங்க விடுவார்கள். ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை கீழே இறக்கி வைத்தியரைக் கொண்டு உடலைப் பரிசோதிப்பார்கள். அவர் எனது கண்களையும் இதயத் துடிப்பையும் பரிசோதிப்பார். ஆபத்தான கட்டத்தில் நான் இல்லை என்று தீர்மானித்தாரானால் “ஓ.கே” என்று சொல்லுவார்;
மீண்டும் நான் தொங்க விடப்படுவேன். அதாவது அந்த டாக்டர் வருவுது நான் வருந்துகிறேனா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு அல்ல; இன்னும் ஐந்து ஆறு மணித் துளிகள் என்னைத் தொங்க விடலாமா இல்லையா என்று சொல்வதற்குத்தான்.
ஆறுவாரங்கள் நீடித்த பலத்த சித்திரவதைகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் அமெரிக்கப் படைத் தளத்திலிருந்து எந்தச் சட்டங்களாலும் எட்டமுடியாத கியூபாவின் குவாண்டனாமோ சிறைக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டேன்.
அங்கு ஒவ்வொரு சிறைக் கூடமும் வித்தியாசமானவையாக இருந்தன. சித்திரவதைகளும் வித்தியாசமானவையாகவே இருந்தன. நான் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளிச்சம் கிடையாது. தனிமைப் படுத்துவதன் மூலம் சித்திரவதை நடக்கும். அவர்கள் வைத்திருந்த இயந்திரங்கள் மூலம் நான் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அதிகக்
|SC குபe கர்ைரீை

Page 42
46
குளிரை அல்லது அதிக வெப்பத்தைச் செலுத்தி வதைப்பார்கள்.
பல தினங்கள் உறங்க விடாமல் வைத்திருப்பது, கைதிகளை ஒரு விளையாட்டுப் பொருளைப் போல் பயன்படுத்திச் சிரிப்பது, தொடர்ந்து தொந்தரவு செய்வது, காற்று வராத இடத்தில் அடைத்து வைப்பது போன்ற ஆக்கினைகளையும் செய்தார்கள். நிமிர்ந்து இருக்க முடியாத, எழுந்து நடமாட முடியாத, சாதாரண ஒரு மனிதனின் நீளத்தை விடக் குறுகிய கம்பிக் கூண்டுக்குள் அடைத்து வைக்கப் படுவதன் மூலம் பாம்பு போல் சுருண்டுதான் கிடக்க முடியும். ஒரு மனிதனால் எவ்வளவு நேரத்துக்கு இவற்றைத் தாங்க முடியும்? அநேகமான காலப்பகுதியை இக்கூண்டுகளுக்குள்தான் குவாண்ட னாமோ கைதிகள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமையானது கேட்ட வினாக்களையே அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பது. இக்கேள்விகளுக்கு ஒய்வு ஒழிச்சலேகிடையாது. இத்தனைக்கும் எனது கால்களைச் சுற்றிக் கம்பி வளையமிட்டுச் சங்கிலிகளால் பிணைத்து வேறு வைத்திருந்தார்கள்.
என்னுடனிருந்த கைதிகளில் அப்துர்ரஹ்மான் மறக்க முடியா தவர். அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். உதைபந்தாட்டத்தில் மிகவும் நாட்டமுடைய அவர் கைதியாக வரும் போது என்னைப் போலவே அப்போதுதான் திருமணம் செய்திருந்தார். அவரைத் தினமும் கீழே போட்டு அடித்து நொருக்குவார்கள். அவரிடம் உள்ள சிறப்பு என்னவெனில் அவரை எப்படித் தாக்கினாலும் அவர் அழவோ சத்தமிடவோமாட்டார். அவ்வா
றான ஒரு மன உறுதியுள்ள மனி
ATER தனை நான் என் வாழ்நாளில் வேறு எங்கும் கண்டதில்லை. கடைசியில் அவரது முழங் கால் கள் இரண்டையும் அமெரிக்கப் படை டாக்டர்கள் வெட்டி அகற்றி விட்டனர். அதை விட வும் கொடுமை என்னவெனில்
* முகத்தை மூடி நீர் ஊற்றுதல்
 

47
அகற்றப்பட்ட பின்னர் அவரது புண்க ளுக்கு அவர்கள் மருந்து இடவில்லை. இரண்டு கால்களும் சீழ் பிடித்த நிலையில் கைவிடப்பட்டுள்ள அவர் இன்னமும் குவாண்டனாமோ சிறையில் இருந்து வருகிறார்.
தாக்கப்பட்டதன் காரணமாக இன்னொரு கைதியின் விரல் முறிக்கப் பட்டது. நீண்ட நாட்களாக அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. பின்னர் அந்த விரல் அப்படியே செயலிழந்து விட்டது. அதை அகற்றி விடுவதற்கு அமெரிக்கப் படை டாக்டர் களுக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் பரிதாபம் பாருங்கள். அவரது இரண்டு கைகளிலும் உள்ள இரண்டு கட்டை விரல்கள் தவிர அனைத்து விரல்களையும் அகற்றி விட்டார்கள்.
நான் விடுதலை செய்யப்பட்ட பின் பல விடயங்களை அறிய வந்தேன். அமெரிக்கப் படையின் துப்பாய்வுப் பிரிவு, நான் எந்தப் பயங்கரவாத இயக்கத்துடனும் சம்பந்தப்பட்டவன் அல்லன் என்ற முடிவுக்கு வந்திருந்தது. ஜெர்மனியின் உளவுப் பிரிவோ, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தமற்றவர் என்று அமெரிக்கா இன்னும் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் அநேகமாக ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குள் நான் விடுதலை செய்யப்பட்டு விடுவேன் என்றும் ஜெர்மன் அரசுக்கு அறிவித்திருந்தது. ஆனால் மேற்படி குறிப்புகள் 2002ல் எழுதப்பட்டவை. இதன் பின்னர் மூன்றரை வருடங்கள் நான் குவாண்டனாமோவில் இருக்க வேண்டி வந்தது.
ஜேர்மனியின் சான்சலர் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த வேளை எனது விடயம் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்தே எனது விடுதலை சாத்தியமாகியிருக்கிறது. இந்த விபரங் களை எனது விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொண்ட அமெரிக்க வக்கில் பெஹார் அஸ்மி எனக்குத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2006ல் நான் விடுதலை செய்யப்பட்டேன். என்னை ஏற்றிக்கொண்டு செல்ல வந்த விமானத்தில் கூட விலங்குகளுடன்தான் என்னை அழைத்து வந்தார்கள். அந்த விமானம் ஜெர்மனுக்குரியது. ஒரு குடம் கணினி

Page 43
48
என்னைச் சூழ அமெரிக்கப் படையினர் அமர்ந்திருந் தனர். நான் இறங்கிய பிறகே விலங்குகளை அவிழ்த்து விட்டார்கள்.
நான் பிடிக்கப்படும்போது எனது வயது பத்தொன் பது. விடுதலையான போது வயது 24. எனது மனைவி என்னை விவாகரத்துச் செய்து விட்டுச் சென்று விட் டாள். எனது சிறை நாட்கள் பற்றி "எனது வாழ்வின் ஐந்து வருடங்கள்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதில் இன்னும் விபரமாக எனக்கு நேர்ந்தவற்றை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.
விடுதலையாகிவந்து பாரிஸில் இறங்கிய போது அமெரிக்கப் படை அதிகாரி ஒருவர் ஒரு தாளை நீட்டிக் கையெழுத்துக் கேட்டார். அதை வாசித்துப் பார்த்த போது அல்கயிதாவோடு எனக்குத் தொடர்பு இருந்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.
நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.
நன்றி.
World Policy Journal - 2007
ඊlබද්jj8) சிஹாப்தீனி
 

குரலற்றவர்களின் குரல்
ஜன்ஸ் கொன்சியுலோ முரில்லோ பலாத்காரமாகக் கடத்திச் செல்லப்பட்ட போது அவளுக்கு வயது 24. ஹொண்டூராஸின் வட பகுதியிலுள்ள சிறிய நகரமான கொலோமாவில் உள்ள ஒரு புழுதித் தெருவில் அக்கடத்தல் நடந்தது. தனது சகபாடியான ஷூமேக்கர் ஜோஸே ஃபுளோர்சுடன் அவள் பிற்பகல் வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது குண்டர்கள் போல வந்த சிலர் அவர்கள் இருவரையும் தாக்கினார்கள். அதற்குப் பிறகு அருகே நிறுத்தப்பட்டிருந்த ட்ரக் வாகனத்தின் பின்புறத்தில் இருவரையும் தூக்கி வீசினார்கள்.
வாகனம் சென்று கொண்டிருக்கும் போது ஃபுளோர்ஸ், முரில்லோவிடம் சொன்னான்:- "சில வேளைகளில் நீகுற்றமிழைத்த வள் என்று சொல்லக் கூடும். அல்லது நீ குற்றவாளி என்று நான் சொன்னதாகச் சொல்லவும் கூடும். ஆகவே மடத்தனமாக மாட்டிக் கொள்ளாதே. ஏனெனில் நீ ஒரு அப்பாவி!”
ஆனால் உண்மையில் அவள் மடத்தனமானவளோ அல்லது அப்பாவியோ அல்ல. எந்தவிதச் சூழ்ச்சிகளும் அவளிடம் பலிக்க வில்லை. ஆனால்லோரன்ஸோ ஸெலாயா அமைப்பின் அங்கத்தவள் என்பது கடத்தி வந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்த ஆயுதம் தாங்கிய இடதுசாரி அமைப்பு வங்கிகளையும் பெரும் வர்த்தக நிலையங்களையும் பொலிஸ் ஆயுதங்களையும் கொள்ளையடித் ஒரு குடம் கணினி

Page 44
50
திருந்தது. இந்தச் செயற்பாடுகளிலெல்லாம் அவளது பங்களிப்பு இருந்தது என்பது அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவரினால் உறுதிப் படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அவளிடம் இருந்தது வேறு பெயர் கொண்ட அடை யாள அட்டை அகப்பட்டுக் கொள்ளாதிருப்பதற்காக தினமும் வெவ் வேறு இடங்களில் அவள் இரவைக் கழித்திருந்தாள்.
ஒரு மணி நேரப் பயணத்தின் பிறகு ஓரிடத்தில் வாகனம் நிறுத் தப்பட்டது. வாகனத்திலிருந்து அவர்கள் வெளியே இழுக்கப்பட்டு அந்த வாகனம் தரித்த வீட்டின் கீழ்த்தளத்தில் சுரங்கம் மாதிரியான ஒர் அறைக்குள் வீசப்பட்டனர். அந்த இடத்தில் நிலவிய குளிர் உட லைச் சில்லிடச் செய்தது.
அவர்களில் ஒருவன்முரில்லோவின் ஆடைகள் அனைத்தையும் களைந்தான். மற்றொருவன் அவளது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டினான். பின்னர் அவர்கள் அவளது பெயரைக் கேட்ட னர். அவள் மிகச் சாவதானமாக மரியா ஒடெலியா டுவோன் மெட் ரானோ என்று சொன்னாள். அந்தப் பெயர்தான் அவளது அடையாள அட்டையில் இருந்தது. அவர்கள் அவளை இழுத்து நீர் நிரம்பிய ஒரு தொட்டியுள் உடல் துவஞம் வரை தலையை அமிழ்த்திப் பிடித்தார் கள்.
அவள் ஒரு புதுக் கதையை அவர்களுக்குச் சோடித்தாள். ஒரு முறை நிக்கராகுவாவுக்குச் சென்றதாகவும் அங்கு காதலில் விழுந்த தாகவும் சொன்னாள். சன்டினிஸ்டாகிளர்ச்சியாளர்களுடன் சண்டை யிட்டதாகவும் பொய்களைச் சொன்னாள். தொடர்ச்சியாகப் பல தினங்கள் அவர்கள் இருவரையும் சித்திரவதை செய்தனர். உணவோ நீரோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கைகள் கட்டப்பட்ட நிலை யிலேயே அங்கு அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். நீ உறங்கினால் உன்னைக் கற்பழிப்போம் என்று அவர்கள் முரில்லோவைப் பயமுறுத்தினார்கள்.
அவ்வப்போது வந்து உயரே கட்டித் தூக்கி விட்டு அவளது மார்பகங்களில் வயர்களைப் பொருத்தி மின்சாரம் பாய்ச்சினார்கள். உடலில் மின்சாரம் பாயும் போதெல்லாம் அவளது உடல் அதிர்ந்து அஷ்ரஃப் சிஹாப்தீனி

நடுங்கும். வாய்க்குள் ஒரு துணியை அடைத்து விடுவதால் அல சத்தம் பெரிதாக வெளிவ ல. இருந்த போதும் அதையும் தாண்டி ஒரு மிருகத்தின் சத்தம் போல அந்த அலறல் வெளிக் கிளம்பும். இருந்தாற்போல ஒவ்வொருவராக வந்து தங்களது முஷ்டிகளால் தாக்கி விட்டுச் செல்வார்கள்.
இவ்வாறு பத்து நாட்கள் கழிந்த நிலையில் உணவும் உறக்கமும் இல்லாததால் அவளது உடல் நலிவடையத் தொடங்கியது. அடுத்த கட்டம் மரணம்தான் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
பதினோராம் நாள் மிகவும் ஆஜானுபாகுவான ஒர் அதிகாரி அவளிடம் வந்தான். அவளது கண்களை அவிழ்த்து விட்டான். அவன் பரிவுடன் நடந்து கொள்வது முரில்லோவுக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அவன் பருத்தியினாலான ஆனால் தடிப்பான ஒரு மேலாடையை அவளுக்கு அளித்தான். குளிரில் விறைத்த ஆனால் பார்ப்பதற்கு சிறந்த உணவு போலத் தோற்றமளிக்கும் உணவைக் கொடுத்தான். உண்பதற்காகக் கைகளை அவிழ்த்து விட்டான்.
அவன் மிகவும் பரிவோடு பேசினான். தங்களுடன் ஒத்துழைக் கும்படி வேண்டுகோள் விடுத்தான். இந்தச் சித்திரவதைகளெல்லாம் நிறுத்தப்பட்டு விடும் என்று வாக்குக் கொடுத்தான். "நாங்கள் முடிந்த வரை அலசிப் பார்த்து விட்டோம்; மரியா என்பது உனது பெயரல்ல. நீ முதலில் உனது பெயரைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். அவன் யார் என்பது முரில்லோவுக்குத் தெரியும். அவன் பெயர் மார்கோ டுயுலியோ றெகலாடோ,
முரில்லோ முதலில் ஒரு பைத்தியக்காரியைப் போலச் சிரித்தாள். சிரித்து விட்டு அவளதும் அவளது தாய், தந்தையினரதும் உண்மையான பெயர்களை எழுதிக் காண்பித்தாள். அவளது தந்தை யாரின் பெயரைக் கண்டதும் அவன் "தப்பிப் பிறந்தவளே. உனது தந்தையை எனக்குத் தெரியும்” என்று துள்ளி எழுந்தான். ஆம். அவளது தந்தை ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.
அவள் ஒரு முக்கியமான குடும்பத்துப் பெண் என்பது தெரிய
|ඉංග්‍ය අuá සහ්ය්

Page 45
52
வந்ததும் அவள் மீதான சித்திரவதை சற்றுத் தணிந்தது. அவ்வப்போது முஷ்டிகளால் தாக்குவதோடு நிறுத்திக் கொண்டார்கள். அவள் தூங்கும் போது கைகளை அவிழ்த்து விட்டார்கள். அவளது பெற்றோ ருக்கு அவள் உயிருடன் இருப்பதாக அனாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் தகவல் தெரிவித்ததாகச் சொன்ன அவர்கள் வெகு விரைவில் நீ கொல்லப்படுவாய் என்றும் சொல்லிவிட்டுப் போனார் கள். "கொல்லுவதாயின் இப்போதே என்னைச் சுட்டுக் கொன்று விடுங்கள்” என்று அவர்களிடம் அவள் சொன்னாள்.
இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் பலரும் கொலையுண்டிருக்கி றார்கள் என்பது அவளுக்குத் தெரியும். 1980களில் கம்யூனிஸ எதிர்ப்புச் செயல்பாடுகளுக்கென்றே 316வது படைப் பிரிவு இயங்கியது. இவர் கள் அனைவரும் விசாரிப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும் அமெரிக்க சி.ஐ.ஏ. யினால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அதற்கென முழு அதிகாரமும் அதற்குரிய ஆயுதங்களும் அவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தன. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்களின் 184 உடல்கள் ஆற்றுப் படுகைகளில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. கம்யூனிஸ எதிர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்க றேகன் நிர்வாகம் ஹொண்டூராஸ் மீது கடும் அழுத்தத்தைக் கொடுத்திருந்தது.
அவர்கள் கடத்தப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் கடந்த பிறகு ஒரு நள்ளிரவில் உறக்கத்திலிருந்த அவர்கள் எழுப்பப்பட்டார்கள். அதிகாரிகளின்முகங்களில் மிகக் கடும் கோபம் தெறித்தது. இருவரதும் கண்கள் கட்டப்பட்ட பின்னர் மேல் தளத்துக்குக் கொண்டு செல்லப் பட்டனர். தங்களைக் கொல்வதற்காகத்தான் அழைத்துச் செல்கி றார்கள் என்று எண்ணிய முரில்லோ அழத் தொடங்கினாள்.
ஆனால் அவர்கள் கொல்வதற்காக அழைத்துச் செல்லப்பட வில்லை. அவர்களை அதிகாரிகள் இரண்டரை மணிநேரப் பயணம் செய்து வேறு ஒரு வட்டவடிவான இராணுவத் தளத்துக்குக் கொண்டு சென்றார்கள். அது இராணுவத்தின் ஆட்டிலறிப் பிரிவின் பயிற்சித் தளம். பயங்கர ஆயுதங்கள் இயங்கும் காதை அடைக்கும் சப்தங்கள் அங்கிருந்து எழுந்ததை முரில்லோவினால் கேட்க முடிந்தது. அஷ்ரஃப் சிஹாப்தீன்

53
முரில்லோவை ஓர் அறைக்குள் தள்ளிவிட்டார்கள். அது ஒரு புகைப்படக் கூடமாக இருந்தது. இங்கிருக்கும் இரசாயனங்களைக் குடித்து நீதற்கொலை செய்து கொள்ளுவாய்' என்று சொல்லியபடி அங்கிருந்த இரசாயனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினார்கள். அவளுடன் அழைத்து வரப்பட்ட புளோர்ஸை வேறு எங்கோ கூட்டிச் சென்றார்கள்.
அங்கு வானொலியொன்று பெருஞ்சத்தத்தில் முழுநாளும் அலறிக் கொண்டிருந்ததை முரில்லோவினால் கேட்க முடிந்தது. ஆனால் சிறைகளுக்குள் இருப்போரின் அலறல்களை அந்தச் சத்தத் தினால் மிஞ்ச முடியவில்லை. குறிப்பாக அடுத்ததடுத்த சிறைகளி லிருந்து எழும் பெண்களின் அழுகைக் குரல்கள் அவளது காதுகளில் விழுந்தன. "உனது பெண்ணுறுப்புள் இப்போது இந்த இரும்புக் குழா யைச் செலுத்தப்போகிறேன்' என்ற ஓர் அதிகாரியின்தடித்த குரலையும் அதைத் தொடர்ந்து "வேண்டாம். வேண்டாம்." என்ற ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தையும் முரில்லோவினால் தெளிவாகக் கேட்க முடிந்தது. தன்னை உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவதற் காகவே மற்றையவர்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுகிறர்களோ என்று கூட முரில்லோவுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
பின்னர் மீண்டும் முரில்லோவைத் துன்புறுத்த ஆரம்பித்தார் கள். மீண்டும் அவளது ஆடைகள் அனைத்தும் களையப்பட்டன. கைகள் கட்டப்பட்டன. அவளை உறங்கவிடாமல் வைத்திருப்பதற் கான அனைத்து உபாயங்களும் கையாளப்பட்டன. ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு ஒரு முறையும் ஓர் அதிகாரி சிறிய கோப்பையில் நீர் கொண்டு வந்து அவளது தலையிலும் தோளிலும் ஊற்றிக் கொண்டே யிருந்தான். அந்த நீருக்குள் ஐஸ் கட்டிகள் கிடந்தன. அவள் குளிரினால் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஜேர்மானிய இனத்துப் பெரிய நாய் ஒன்றை அவளது கூண்டுக் குள் ஒருவன் கொண்டு வந்தான். கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவளை அதனைத்தடவுமாறு பணித்தான். அது மிகப் பயங்கர மாகச் சத்தமிட்டுக் குரைத்தது. அவளை ஆடாமல் அசையாமல் கம்பு போலநிற்குமாறு அந்த நாயைக் கொண்டு வந்த அதிகாரி பணித்தான். =|GAD ගLí ඝගdex)

Page 46
54
அவள் சற்று அசைந்தாலும் கூட அந்த நாய் அவளைக் கடித்துக்குதறும் என்று பயம் காட்டி விட்டு அந்த நாயை அவளைச் சுற்றி வரப் பணித் தான். அந்த நாய் அவளை உரசியபடி சுற்றி வந்தது.
மணித்தியாலக் கணக்கில் அவளை அசையாமல் நிற்கும் படி அவர்கள் அவளைப் பணித்தனர். சலம் கழிப்பதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. அவளால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சலம் கழித்த போது அவர்கள் கூக்குரலிட்டு எள்ளிநகையாடினார்கள். "நீங்கள் கம்யூனிசவாதிகள். உங்களுக்குத் தாய் கிடையாது. உங்களி டம் ஒழுக்கம் இல்லை. உங்களுக்குத் தேசமும் கிடையாது” என்று சொல்லிச் சிரித்தார்கள்.
றெகலாடோவைப் போல சி.ஐ.ஏ. யிடம் பயிற்சி பெற்ற மற்றொரு அதிகாரி கெபல்லரோ. இத்துன்புறுத்தல்களில் இவனது பங்கும் கணிசமானது. ஒரு முறை அவள் இன்னும் உயிருடன் இருக்கி றாளா? இன்னும் ஏன் நீங்கள் அவளைக் கொல்லவில்லை?" என்று கெபல்லரோ ஏனைய அதிகாரிகளிடம் வினவியதைத் தன் காதுகளி னால் தெளிவாகக் கேட்டாள் முரில்லோ, அங்குள்ள அதிகாரிகளால் ஒரு விருந்தாளியைப் போல் வரவேற்கப்பட்ட நபர் மிஸ்டர் மைக், இவன் ஒர் அமெரிக்கன்.
கண்கள் கட்டப்படும் போதேல்லாம் அவளது ஏனைய எல்லா உறுப்புகளும் மிக அவதானமாக விழித்துக் கொள்ளும். அவ்வாறான ஒரு நிலையில் அவளுக்குத் கடினமான பருத்தி ஆடை அணிவிக்கப் பட்டது. அன்று சிலர் அவளை நோக்கி வரும் காலடிச் சத்தங்கள் கேட்டன. ஒரு தாளில் பென்சிலால் எழுதி ஒருவருக்கொருவர் பரி மாறிக் கொள்வதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு நபரி னால் அவளிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அது ஹொண்டு ராஸைச் சேர்ந்த ஒருவரின் பாஷை அல்ல என்பதை முரில்லோவினால் உணர முடிந்தது. ஸ்பானிஷ் பாசையில் ஹொண்டூராஸ் வழக்கில் அக்கேள்விகள் அமைந்த போதும் அது நிச்சயமாக 316ம் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் கேள்விகள் அல்ல என்பதையும் அது மிஸ்டர் மைக்காகவே இருக்கும் என்றும் உறுதியாக நம்பினாள்.
இதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மிஸ்டர் மைக்
அஷ்ரஃப் சிஹாப்தீன்:

55
அவளைப் பார்க்க வந்திருந்தார். "உன்னைக் கடத்தி வந்தவர்களில் ஒருவர் நீவாழ்வதற்கான ஒரு வாய்ப்பைத் தர விரும்புகிறார். ஆனால் பத்திரிகையாளர்குழுவைச்சந்தித்து நீஒரு கெரில்லாப் போராளி என்று சொல்ல வேண்டும். அத்துடன் கம்யூனிசவாதிகள் குழு ஒன்று நாட் டின் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்து கொண்டிருக்கிறது என்று அதில் சொல்ல வேண்டும்" என்று நிபந்தனை விதித்தார். இரண்டு மணி நேரமாக அவளைச் சரி செய்து கொள்வதற்கு அவர்கள் முனைந்தார் கள். "நான் விடுதலை செய்யப்பட்டால் எனது குடும்பத்தை என்னால் பார்க்க முடியும்” என்று மட்டும் அவள் பதில் சொன்னாள்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவளுக்குச் சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இரண்டு மாதங்களின் பின் அவள் குளிப் பதற்கு அனுமதித்தார்கள். வேளைக்கு உணவு வழங்கப்பட்டது. படுப் பதற்காக ஒரு மெத்தையும் கூட வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அமெரிக்கரின் திட்டம் என்பதும் அவள் வாழ்வதா இறப்பதா என்பதைத் தீர்மானிப்பது அமெரிக்கர்களே என்பதும் அவளுக்குப் புரிந்தது.
வீடு திரும்புவதற்கான சாத்தியங்களைப் பற்றி அவள் யோசிக்க ஆரம்பித்தாள். ஆனால் அடுத்த தினமே அந்த நம்பிக்கையை அவள் இழந்து விட்டாள். அவளைக் கடத்தி வந்தவர்களிடம் முரில்லோ இரண்டு நிபந்தனைகளைவிதித்தாள். ஒன்று, பத்திரிகையாளர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும் என்பது. இரண்டு, அப்பத்திரி கையாளர் சந்திப்பின் போது தனது பெற்றோர் பிரசன்னமாகி இருக்க வேண்டும் என்பது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்ட அவர் கள் நாங்கள் முட்டாள்கள் என்றா நீநினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று அவளிடம் கேட்டார்கள். முடிவாகச் சித்திரவதைகள் மீண்டும் ஆரம்பமாயின.
ஆனால் முரில்லோவின் பெற்றோர்நம்பிக்கை இழக்கவில்லை. ஐ.நா பிரதிநிதியான ஜேர்மனியர் ஒருவரிடம் பணிபுரிந்த முரில்லோ வின் தாய் தனது தலைவரிடமும் அவர் மூலமாக ஹொண்டூராசில் இருந்த ஏனைய ஜெர்மனியர்களிடமும் உதவி கோரினார். ஜெர்மனிய அதிகாரிகள் பொதுவிடங்களில் வெளிப்படையாக இவ்விடயம்
=|ඉq5 ගuහී ඝණාස්ග්

Page 47
56
பற்றிப் பேசத் துணிந்தனர். தவிர தூதுவர்கள் மட்டத்திலும் இவ்விட யத்தை எடுத்துச் சென்றார். முரில்லோவின் தந்தை சீசர், முரில்லோவை உயிருடன் வெளியே கொண்டு வரப் போராடினார். பத்திரிகையாளர் கள், மனித உரிமை அவதானிப்பாளர்கள், அரச அதிகாரிகள், வெளி நாட்டுத் தூதுவர்கள் என எல்லோரிடத்திலும் பேசினார்.
ஹொண்டூராஸ் அதியுச்சநீதிமன்றத்தில் சீசர் வழக்குத் தொடுத்
தார். அதிஉச்சநீதிமன்றத் தலைவர், இராணுவம் குறித்து நான் அச்சப் படுகிறேன்; என்னால் இதில் செய்வதற்கு எதுவுமேயில்லை" என்று கையை விரித்தார். நீதிபதிகள் அவளைக் கியூபாவில் தேடிப் பாருங் கள்' என்று சொன்னார்கள். ஹொண்டுராஸின் தலைவரோ "காணாமல் போனவர்கள் அனைவரும் கம்யூனிஸவாதிகள்; அவர்கள் எல்லோரும் கியூபாவுக்கோ மொஸ்கோவுக்கோ அல்லது நிக்கராகுவாவுக்கோ சென்றிருப்பார்கள்’ என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.
சீசர் தனது மகள் பற்றிய பிரச்சாரத்தை அமெரிக்காவில் முன் னெடுத்தார். இரண்டு முறை அமெரிக்காவுக்குச் சென்று காங்கிரஸ் பின்னணியாளர்களிடம் உதவி கோரினார். ஹொண்டுராஸின் வெளி விவகார அமைச்சருக்குப் 'பிரிவு 316தனது மகளைக் கொண்டு சென்ற தைக் கடிதம் மூலம் தெரிவித்தார். அக்கடிதத்தில் தனது மகள் அவர் களிடம் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதில் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தனது மகள் எங்கிருக்கிறார் என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்து டன் தனது புதல்வி விடுதலை செய்யப்பட்டால் அங்கு நடந்த எதுவும் வெளியில் சொல்லப்படாது எனவும் தனது மகளை ஹொண்டூராஸ்" க்கு வெளியே வாழ அனுப்புவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதே வேளைமைக்கல் டப்ஸ் என்ற அமெரிக்கர் ஒருவர்தடுப்பு முகாம் உள்ள பகுதியில் கடமையில் உள்ளார் என்பதை அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். சன் பத்திரிகை அமெரிக் காவின் இன்டியானாவில் உள்ளமைக்கல் டப்ஸின் வீட்டை மோப்பம் பிடித்தது. ஆனால் கதவுகளினூடே பதிலளித்த நபர்முரில்லோ பற்றித் தகவல் சொல்வதை மறுத்தார்.
1983ம் ஆண்டு மே 27ம் திகதி ஹொண்டூராசின் பிரபலமான
அஷ்ரஃப் சிஹாப்தீன்

57
'எல் தியம்போ’ பத்திரிகையில் முரில்லோவின் பெற்றோர் ஒரு முழுப்பக்கத்தில் விளம்பரத்தை வெளியிட்டனர். அப்பக்கத்தில் பெரிய அளவிலான முரில்லோவின் படத்தைப் பிரசுரித்து அதற்குத் துணிவுடனிரு எம் மகளே' என்று தலைப்பிட்டிருந்தனர்.
நான்கு தினங்களுக்குப் பிறகு முரில்லோவையும் புளோர்ஸை யும் படைப் பிரிவு 316 விடுதலை செய்தது. அவர்கள் பொதுச் சிறைச் சாலைக்கு அழைத்து வரப்பட்டுப் பின்னர் நீதி மன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முரில்லோவின் பணப்பைக்குள்ளிருந்து பொலிஸ் நிலைகளின் வரைபடங்களும் பொலிஸ் அதிகாரிகளிடம் என்ன என்ன வகையான ஆயுதங்கள் உள்ளன என்ற விபரங்கள் இருந்தன என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்துடன் மார்க்ஸிய இலக்கியப் புத்தகங்கள் அவளிடம் இருந்தன என்றும் அரசைச் சீர்குலைக்கும் கவிதைகளை எழுதியதாகவும் மற்றும் வங்கிக் கொள்ளைகளில் சம்பந் தப்பட்டிருந்ததாகவும் தொலைபேசி நிலைகளைச் சேதப்படுத்திய தாகவும் குற்றங்கள் சாட்டப்பட்டன. முரில்லோவோடு சேர்ந்து இருந்தார் என்பதே புளோர்ஸ் மீது சாட்டப்பட்ட குற்றச் சாட்டாக இருந்தது.
முரில்லோவும் புளோர்ஸ்லிம்தாம் குற்றவாளிகள் அல்லர் என்று சாதித்தனர். அத்துடன் படைப் பிரிவு 316 னால் சித்திரவதைக்குட் படுத்தப்பட்டதையும் தெரிவித்தனர். முரில்லோவைப் பரிசோதித்த வைத்தியர் முரில்லோவின் உடலில் சில இடங்கள் கன்றிப் போயுள் ளன; அதற்குச் சித்திரவதைதான் காரணமென்று சொல்ல முடியாது’ என்று நீதிமன்றுக்கு அறிக்கை கொடுத்தார். அரசாங்கத்தைக் கவிழ்ப்ப தற்கான காரியங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவ ருக்கும் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 13 மாதங்கள் முரில்லோ சிறையில் இருக்க வேண்டும் எனவும் புளோர்ஸ் இரண்டு வருடங்களை முழுமையாகச் சிறையில் கழிக்க
வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறைத் தண்டனை
முடித்து 1986ல் மெக்ஸிக்கோ சென்று வாழ்ந்த புளோர்ஸ் 1994ம் ஆண்டு அங்கேயே காலமானார்.
முரில்லோ கொஸ்டாரிக்காவில் உள்ள மனித உரிமை
=|බ්‍රය ගLගී ඝණ්ඩෝ

Page 48
58
ஆணையத்திடம் தனக்கு நடந்தவற்றை வாக்கு மூலமாக அளித்திருக் கிறாள். படைப்பிரிவு 316ன் அடாவடித் தனங்கள் குறித்தும் தன்னால் அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்டவர்களையும் அங்கு வெளிச்சத்துக் கொண்டு வந்தாள். கடத்தப்படுவதற்கு முன்னர் முரில்லோ ஹொண்டுராஸின் மனித உரிமைகள் பாதுகாப்புக்குழுவில் கடமையாற்றியவள். இந்தக் குழு படைப்பிரிவு 316ன் செயற்பாடுகள் குறித்து அழுத்தங்களைக் கொடுத்து வந்திருந்தது.
கெளத்தமாலாவில் உள்ள ஐ.நாடுகளின் மனித உரிமைப் பார்வையாளராக முரில்லோ தற்போது கடமையாற்றி வருகிறாள். "ஒரு சமுத்திரத்தின் நடுவில் ஒர் ஒடத்தில் கடமையாற்ற வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது” என்று சொல்லும் முரில்லோ “நான் இப்போது பேசுவதெல்லாம் எனக்காக அல்ல; யார் யாரெல்லாம் பேச முடியாதிருக்கிறார்களோ அவர்களுக்காக!” என்கிறாள்.
நன்றி.
Gary Cohn & Ginger Thompson
Baltimoresun.com - 1995
அஷ்ரஃப் சிஹாப்தீனி

கட்டைப் பஞ்சாயத்து
2005 நவம்பர் மாதம் இரண்டாம் திகதி பிரபல ஹொலிவூட் நடிகை புறுாக் ஷரீல்ட்ஸ் "2005ம் ஆண்டுக்கான சிறந்த பெண்"ணுக்கான விருதுக்குரிய பெயரை அறிவித்த போது அந்த அரங்கு கைதட்ட லால் அதிர்ந்தது. செல்வச் செழிப்பில் வாழும் கனவான்களும் சீமாட்டிகளும் உயர்ந்த விலை ஆடையணிகளோடு எழுந்துநின்று கெளரவம் வழங்க முப்பத்து மூன்று வயதான, படிப்பறிவற்ற, சாதாரண பருத்தி ஆடை அணிந்த பெண்மணி மேடைக்கு வந்து அந்த விருதைப் பெற்றுக் கொள்கிறார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடம் உலகத்தின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றான நியூயோர்க், அந்தப் பிற்பகல் பொழுதுக்கும் அந்த நிகழ்வுக்கும் உலகம் முழுவதும் சுமார் முப்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகும் "கிளாமர்" சஞ்சிகை அனுசரணை வழங்கியது.
இது ஒரு சாதாரண விருது அல்ல. முன்னாள் அயர்லாந்துப் பிரதமரும் மனித உரிமைகள் ஆணையாளருமான மேரி ரொபின்சன் சி.என்.என். தொலைக்காட்சியைச் சேர்ந்த கிரிஸ்டியானா அமன்பூர், ஒரு குடம் கணினி

Page 49
60
ஹொலிவூட்டின் பிரபல நடிகைகளான கத்தரின் ஸிட்டா ஜோன், கோல்டீ ஹோர்ன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட விருது.
அந்த விருதைப் பெற்றுக் கொண்டவர் முக்தாரன் பீபி என அறியப்பட்ட முக்தார்மயி, பாக்கிஸ்தானின் பிரபலமற்ற புழுதி மண்டிய கிராமப் புறமான மீர்வாலா என்ற இடத்தைச் சேர்ந்தவர் அவர். 1972ம் ஆண்டு பிறந்த முக்தார்மயியின் கதை துயரம் மிக்கது.
பாக்கிஸ்தானின் சட்ட வரலாற்றில் பெரும் கவனத்துக்குள்ளா னதும் பாக்கிஸ்தானின் மரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்தியதும் உலகத்தின் உணர்வுகளில் அதிர்வை ஏற்படுத்தியதுமான "கோஷ்டி வல்லுறவுக்கு ஆளான அப்பாவிப் பெண்தான் முக்தார்மயி, அந்தத் துயரச் சம்பவம் நடந்த அடுத்த சில மணிகளில் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார். அந்தப் பிரபலத்தின் உச்சக் கட்டமே கிளாமர் சஞ்சிகை வழங்கிய சிறந்த பெண் விருது.
2002 ஜூன் 22ம் திகதி பிற்பகல் பொழுதில் முக்தார்மயியின் சகோதரன் ஷக்கூர், மஸ்தோயி பிரிவினரால் கடத்தப்பட்டான். மஸ்தோயி பிரிவின் நாஸிம் என அறியப்பட்ட சல்மா என்ற பெண் ணுடன்ஷக்கூர் உடலுறவு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டதே அதற் கான காரணமாகும். ஷக்கூர்குஜ்ஜார் பிரிவைச் சேர்ந்தவன். மஸ்தோயி பிரிவினர் அரசியல் ரீதியாகவும் ஆள்புல ரீதியாகவும் மிகவும் செல் வாக்குப் பெற்றவர்கள். தனது தங்கையுடன் உறவு கொண்ட ஷக்கூரை சல்மாவின் சகோதரன் அப்துல் ஹாலிக் தனது வீட்டுக்குக் கடத்திச் சென்றான். அதற்கு முன் கரும்புத் தோட்டத்துக்கு அவன் கொண்டு செல்லப்பட்டு மஸ்தோயி பிரிவு ஆண்கள் சிலரால் தன்னினச் சேர்க் கைக்கு ஆளாக்கப்பட்டான். அங்கு அவன் தாக்கப் பட்டபோது அவன் எழுப்பிய அபயக் குரலைப் பலர் கேட்டிருந்தனர். தகவலறிந்த முக்தார்மயி, தனது தாயார் மற்றும் தனது உறவினப் பெண்ணுடன் அங்கு சென்று சகோதரனை விடுவிக்கக் கோரினார். அப்துல் ஹாலிக் மறுத்து விட்டான். எனவே முக்தார்மயியின் தாயார் தனது சகோதரனைப் பொலிஸுஜூக்குத் தகவல் கொடுக்க அனுப்பினார். மீர்வாலா கிராமம் தொலைபேசி வசதிகள் அற்றது. பொலீஸ் நிலை யமோ 18 மைல்களுக்கு அப்பால் இருந்தது.
அஷ்ரஃப் சிஹாப்தீனி

61
சூரியன் மறைவதற்கு முன்னர் பொலீஸ்வந்து ஷக்கூரை மீட்டுப் பொலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றது. (சல்மாவுடனான உறவு குறித்த முறைப்பாடு இருந்ததால் பின்னர் அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்தியது பொலீஸ், உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது சாட்சிகள் இவர்களை இருட்டிலேயே பார்த்ததாகச் சொன்ன தால் அவன் குற்றவாளியென நிரூபிக்கப்படவில்லை. மீர்வாலா கிராமத்திற்கு மின்சார வசதியும் கிடையாது.)
இதற்கிடையில் முக்தார்மயி குடும்பம் ஒரு தீர்வை சல்மா குடும் பத்துக்கு அறிவித்தது. சல்மாவை ஷகூர் திருமணம் செய்து கொள்வ தென்பதும் முக்தார்மயி சல்மா குடும்பத்தில் ஒருவரைத் திருமணம் செய்வது என்பதும் அந்த முடிவு. அத்துடன் ஷகூர்நீதிமன்றத்தில் குற்ற வாளியாகக் காணப்படும் பட்சத்தில் ஷகூர் குடும்பம் சல்மா குடும்பத் துக்கு ஒரு காணியைத் தருவதாகவும் முக்தார்மயி குடும்பம் எடுத்த முடிவு மஸ்தோயி பிரிவுக்குடும்பத்தலைவன் பைஸானுக்குத் தெரிவிக் கப்பட்டது. பைஸான் அதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்ட போதும் அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மறுப்புத் தெரிவித்தனர். மறுப்புத் தெரிவித்ததோடு அவர்கள் நின்று விடவில்லை. உடலுற வுக்குப் பதில் உடலுறவே' என்ற ஒரு முரட்டுத் தனமான கருத்தையும் தெரிவித்தனர்.
பின்னர் முக்தார்மயி குடும்பத்தின் முடிவை ஏற்றுக் கொள்வ தாயின் அக்குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் மஸ்தோயி பிரிவி னரிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற செய்தி முக்தார்மயியின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டது. எனவே முக்தார்மயி, தனது தந்தை யார் மற்றும் தாய்வழி மாமன் ஆகியோருடன் அங்கு சென்றார். அங்கு இவர்கள் சென்ற போது மஸ்தோய் பிரிவினர் 70 பேரளவில் நின்றிருந் தனர். அப்போது அங்கு பிரச்சினைமுடிவுக்கு வந்து விட்டது என்றும் முக்தார்மயி குடும்பம் மன்னிக்கப்பட்டது என்றும் பைஸான் பிரகடனப்படுத்தினான்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து முடிவடைந்த சற்று நேரத்தில்தான் அந்தப் பயங்கரம் அரங்கேறிற்று. அவ்விடத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த முக்தார்மயி சரியாக நூறு மீற்றர் தூரத்தில் மறிக் |ඉංග්‍ය ගLර් සඟdex)

Page 50
62
கப்பட்டார். அங்கு அப்துல் ஹாலிக் துப்பாக்கி சகிதம் ஏறக்குறைய 40 பேருடன்நின்றிருந்தான். அவ்விடத்தில் ஒரு பஞ்சாயத்து நடந்தது. ஷகூர் தமது பெண்ணைக் கற்பழித்தமைக்குப் பதிலாக அவனது சகோதரி கற்பழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும்படி பஞ்சாயத் தில் தீர்ப்புச் சொல்பவர் வற்புறுத்தப்பட்டார். முக்தார்மயி தனது சகோதரனுக்காகப் பணிவுடன் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினார்.
சில நிமிடங்களில் மஸ்தோயி பிரிவைச் சேர்ந்தவர்கள் முக்தார் மயியைப் பிடித்துப் பலாத்காரமாக இழுத்தனர். "நான் உங்களது மகளைப் போன்றவள் உங்களது சகோதரியைப் போன்றவள். தயவு செய்து என்னை எதுவும் செய்து விடாதீர்கள்” என்று முக்தார்மயி மண்டியிட்டு அழுதார். பயத்தில் சுரம் குறைந்த முக்தார்மயியின் குரல் அவர்கள் காதுகளில் விழவேயில்லை. மஸ்தோயி பிரிவினர் நால்வரி னால் முக்தார்மயி மாறி மாறிக் கற்பழிக்கப்பட்டார். பயங்கரம் மிக்க அந்த நிலையில் முக்தார்மயியின் அலறல் சப்தம் கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட மஸ்தோயி பிரிவினரின் ஏளனச் சிரிப்பில் அமுங்கிப் போயிற்று.
ஏறக்குறைய 90 நிமிடங்கள் இடம்பெற்ற பயங்கரத்தின் பின் முக்தார்மயி கிழிந்த நாராய் தெருவில் வீசப்பட்டார். அவர் அணிந் திருந்த துணிகள் அனைத்தும் கிழிந்த நிலையில் வீசப்பட்டன. இந்த ஆடைகள் பின்னர் நீதிமன்றத்தின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப் பட்டன) உடம்பில் ஒரேயொரு கிழிந்த உடையுடன் அரை நிர்வாண மாகக் கிடந்த மகளைத் தந்தையாரும் மாமனும் தமது உடலினால் மறைத்தபடி அழைத்துச் சென்றனர். ஏழை விவசாயியான அவரால் அரசியல் ரீதியாகவும் ஆள்புல ரீதியாகவும் பலம் மிக்கவர்களிடம் தமது மகளுக்கு நேர்ந்த அவமானம் குறித்து எதைப் பேச முடியும்?
இரண்டு பிரிவினரும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் ஷகூரின் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அன்றிரவே மஸ்தோயி பிரிவினர் "பொலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். அதிகாலை இரண்டு மணிக்கு ஷகூரை அவனது தாய் மாமன் பொலீஸ் நிலையத்திலிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார். அஷ்ரஃப் சிஹாப்தீனி

63
அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை ஜும்ஆ (கூட்டுத் தொழுகை) பிரசங்கத்தின் போது முக்தார்மயிக்கு நேர்ந்த கொடூரத்தைத் தைரியத் துடன் கண்டித்தார் இமாம் அப்துல் ரஸ்ஸாக். அவர் அத்துடன்நின்று விடாமல் பிரதேச நிருபர் முரீத் அப்பாஸை அழைத்துக் கொண்டு முக்தார்மயியின் வீட்டுக்குச் சென்று விபரம் பெற்றுக் கொடுத்தார். முக்தார்மயியின் தந்தையை வற்புறுத்திப் பொலீஸ"க்குச் சென்று முறைப்பாடு செய்ய ஏற்பாடு செய்தார். 30.06.2002 அன்று அவர்கள் பொலீஸுக்குச் சென்றனர்.
அடுத்த சில தினங்களில் முக்தார்மயி பாக்கிஸ்தானின் செய்திப் பத்திரிகைகள் அனைத்திலும் தலைப்புச் செய்தியானார். மிருகத்தனம் கொண்டவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பாவச் சம்பவம் ஒரு பெருந்தியாக உலகம் முழுவதும் கொழுந்து விட்டெரிந்தது. ஜூலை 3ம் திகதி பி.பி.சி. இந்தச் சம்பவத்துக்கு வெளிச்சமிட்டது. டைம் சஞ்சிகை ஜூலை 8ம் திகதி இச்சம்பவத்தின் பின்னான நடவடிக்கைகள் குறித்து எழுதியது.
ஜூலை 2002ல் பாக்கிஸ்தானின் பிரதம நீதியரசர், "இது இருபத்தோராம் நூற்றாண்டின் மிகக் கொடிய நிகழ்வு” என்றும் "மனுக் குலத்தின் மரியாதைக்கும் மனித உரிமை மீதும் நிகழ்ந்த அவமானம்" என்றும் வர்ணித்தார். சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத் தைப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சி குறித்துத் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாட்டையும் தனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநிலப் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.
பாக்கிஸ்தான் ஜனாதிபதி முஷர்ரப் இவ்விடயம் சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டி வந்தது. அந்த நீதிபதிக்கு விசேட பாதுகாப்பு அதிகாரி களும் வழங்கப்பட்டனர்.
39
கற்பழிப்புக்குற்றவாளிகள் P
ஒரு குடம் கணினி

Page 51
64
அது பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற அதிகாரத்துடன் செயற்பட்டது. பஞ்சாப் ஆளுனர்/கிாலித் மக்பூல் மாநில அமைச்சர்கள் இருவரை மீர்வாலா கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் முக்தார்மயியின் குடும்பத்தவர்களையும் கிராமத்தவர்களையும் சந்தித்து உண்மைகளையும் இந்நிகழ்ச்சியைக் கண்டு கொள்ளாமல் மறைக்க முயன்ற பொலீஸார் பற்றிய தகவல்களையும் பெற்று வந்து 72 மணித்தியாலத்துள் ஆளுனருக்கு அறிக்கை கொடுத்தனர்.
இவ்விடயத்தில் பாராமுகமாக அல்லது பக்கச்சார்பாக நடந்து கொண்ட பிரதேசத்தின் பொலிஸாரும் அரசியல் பிரமுகர்களும் மஸ்தோயி பிரிவுப் பஞ்சாயத்துத் தலைவர்களும் தலைமறைவாகிய தோடு இராணுவ அரசாங்கம் தம்மீது நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற பயத்தில் பஞ்சாப் உயர் பொலிஸ் அதிகாரியின் துணையுடன் இவ்விடயத்தைச் சமாதானமாகத் தீர்த்து வைக்க முயன்றனர். அதன் படி முக்தார்மயியைக் கற்பழித்த நால்வரும் அக்குடும்பத்திடம் மன்னிப்புக் கோருவதெனத் தீர்மானித்தனர். நால்வரில் ஒருவர் முக்தார்மயியை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்வதென்றும் மஸ்தோயி பிரிவின் நான்கு பெண்களைகுஜ்ஜார் பிரிவு ஆண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதென்றும் முடிவெடுத்தனர். இரு பிரிவின ரும் இணக்கமாக இம்முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது நடைபெறவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வேறுவிதமாக இருந்தது. கற்பழிப்பில் ஈடுபட்ட நால்வருடன் கற்பழிப்புத் தீர்ப்பளித்த மஸ்தோயி இன முக்கியஸ் தர்கள் இருவருக்கும் சேர்த்து 31.08.2002ல் தூக்குத் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி வேலை நீக்கப்பட்டதோடு கைது செய்து அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் 5, 7, 2002 அன்று பாக்கிஸ்தான் அரசாங்கம் முக்தார்மயிக்கு 500,000 ரூபாய்களை நட்ட ஈடாக வழங்கியது. பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான அத்திய்யா இனாயத் துல்லாஹற்விடம் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது "அரசு எனக்கு உதவ முன்வரவில்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்ள லாம் என்று கூட நினைத்தேன்" என்று முக்தார்மயி தெரிவித்திருந்தார். அஷ்ரஃப் சிஹாப்தீனி

65
முக்தார்மயி 2010ல் ஒஸ்லோவில் உரையாற்றுகிறார்.
முக்தார்மயியின் எதிரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் அவரது பிரபலம் மேலும் அதிகரித்தது. அப்பிரதேசப் பெண்களது பாதுகாப்புக்கும் சுகவியல் வாழ்வுக்குமான ஆதார சுருதியாகவும் பாதுகாப்பரணாகவும் முக்தார்மயி விளங்கினார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசப்படும் ஒரு நபராக மாறினார். அரசாங்கம் கொடுத்த பணத்தைக் கொண்டு பெண்களுக்கும் ஆண்க ளுக்குமாக இரண்டு பாடசாலைகளை அவர் ஏற்படுத்தினார். மீர்வாலா கிராமத்தில் இதற்கு முன்னர் பாடசாலைகள் எதுவும் இருக்கவில்லை. அப்பிரதேசத்தவர் கல்வி பெறும் பாக்கியம் வாய்த்திருக்கவில்லை. மேலைத்தேய நாடுகளிலிருந்து அவரது திட்டத்துக்குப் பெண் நன்கொடையாளிகள் பங்களிப்புச் செய்தனர்.
இதேவேளை, தண்டனை பெற்ற எதிராளிகள் பஞ்சாப் மாகா ணத்தின் பெரிய நீதிமன்றமான லாஹூர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். எதிராளிகளை விடுவிக்க வேண்டாம் என்று முக்தார்மயி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். புகழ்பெற்ற பல வழக்கறிஞர்கள் அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரா கினர். ஆனால் அந்நீதிமன்றம் எதிராளிகளை விடுதலை செய்தது.
ஒரு குடம் கண்ணீர்

Page 52
66
பாக்கிஸ்தானின் ஷரீஅத் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைப் புறந் தள்ளிக்குற்றவாளிகளைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது. ஷரீஅத் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீற அதிகாரமில்லை என்றும் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. எனவே உச்ச நீதிமன்றம் எதிரா ளிகளின்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு 2002ல் முதன் முதலில் விசாரிக்கப்பட்டபோது இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேரையும் விசாரணைக்காகக் கைது செய்ய உத்தரவிட்டது.
முக்தார்மயி தனது பெயரில் "பெண்கள் நலன்புரி அமைப்பு' ஒன்றை ஏற்படுத்திப் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறார். இது தவிர பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனை நிலையமாகவும் இவ்வமைப்புச் செயற்பட்டு வருகிறது. 2007ல் தனது கிராமத்தில் உயர்நிலைப் பாடசாலை ஒன்றை யும் முக்தார்மயி அமைத்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச்சபையின் அழைப்பையேற்று 2005 ஜூன் மாதம் 10ம் திகதி லண்டன் செல்லவிருந்த முக்தார்மயியின் பெயர் நாட்டை விட்டு வெளியேறத் தடைசெய்யப்பட்டவர்களின் பட்டிய லில் சேர்க்கப்பட்டது. அவரது கடவுச் சீட்டு அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டது. முக்தார்மயிக்குப் பிறநாடுகளில் தரப்படும் வரவேற்பு பாக்கிஸ்தானின் நன்மதிப்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று அதிபர் பர்வேஸ் முஷர்ரப் கருதியதே இதற்கான காரணமாக இருந்தது.
14ம் திகதி இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு முக்தார் மயி பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்தார். இவருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நியூ யோர்க் டைம்ஸ்’ பத்தி எழுத்தாளர் நிக்கொலஸ் கிறிஸ்டொஃப் "முக்தார்மயி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்றும் "அமைதியாக இருக்கப் பணிக்கப் பட்டுள்ளார்” என்றும் எழுதினார்.
27.06.2005ல் அவரது கடவுச் சீட்டு அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 29.06.2005 அன்று தனது உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பர்வேஸ் முஷர்ரஃப் பின்வருமாறு குறிப்பிட்டி அஷ்ரஃப் சிஹாப்தீனி

67
ருந்தார்:- "முக்தார்மயி எப்போது விரும்பினாலும் எங்கு விரும்பி னாலும் செல்லலாம், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்.”
"கிளாமர் சஞ்சிகை வழங்கிய விருதுக்கு அப்பால் 2005 ஆகஸ்ட் 2ம் திகதி பாக்கிஸ்தான் அரசு முக்தார்மயிக்கு முயற்சிக்கும் துணிச்சலுக்குமான பாத்திமா ஜின்னாஹ் நினைவுத் தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியது. முக்தார்மயியின் வாழ்க்கைக் குறிப்பு கள் அடங்கிய நூல் அன்னை தெரசாவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஜேர்மனி,பிரான்ஸ் நாடுகளின் பல்வேறு அமைப்புக்களாலும் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் அதிகம் விற்பனையான நூல் களில் 3வது இடத்தை இந்நூல் பெற்றிருப்பதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2006.10.31ம் திகதி இந்நூல் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது.
முக்தார்மயியின் கற்பழிப்பு ஏற்படுத்திய விழிப்பும் சட்டத்தில் ஏற்படுத்திய சிக்கலும் பாக்கிஸ்தானிய நீதிச் சட்டங்கள் குறித்த திருத்தங்களுக்கு வழிகோலியுள்ளதுடன் பஞ்சாயத்து முறை தூக்கி வீசப்படுவதற்கும் ஏதுவாக மாறியிருக்கிறது.
2006.05.02ம் திகதி ஐ.நா.சபையின் அழைப்பில்,அங்கு சென்ற முக்தார்மயி ஐ.நா.தொலைக்காட்சியில் வழங்கிய பேட்டியில் “ஒவ்வொருவரும் தனது உரிமைக்காகவும் அடுத்த பரம்பரையின் உரிமைக்காகவும் போராட வேண்டும் என்ற செய்தியை முழு உலகத்துக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
நன்றி:
01. Sarajun Hoda Abdul Hassan- Aliran - vol - 25 -ii 02. New York Times (2007 - April) 03. wikipedia.org
04. equalitynow.org
ஒரு குடம் கணினி

Page 53
பள்ளிக்கு வந்த பயங்கரவாதி
ஒரு நாள் காலை ஒன்பது மணியளவில் எனது சகோதரன் அவசர அவசரமாக வந்து, ஷஹித் பஷர் கலந்தர் பள்ளிவாசலை அமெரிக்கர்கள் சுற்றி வளைத்திருப்பதாக என்னிடம் சொன்னான். இதைக் கேள்விப்பட்டதும் நான் பள்ளிவாசலை நோக்கி ஓடினேன். பள்ளிவாசலை அண்மித்ததும் அமெரிக்கப் படையினர் கனரக யுத்த டாங்கிகள் சகிதம் பள்ளிவாசலைச் சுற்றி நின்றிருப்பதைக் கண்டேன். எனது சகோதரனும் எனது நண்பனும் பள்ளிவாசலுக்கு அண்மித்தாக வுள்ள இருவழிப் போக்குவரத்து வீதியின் நடுவிலுள்ள புல்திட்டுகளில் அமர்ந்திருந்தனர். அவர்களது முகங்களில் பள்ளிவாசலைப் பற்றிய கவனமும் கவலையும் தெரிந்ததை அவதானித்தேன். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனது நண்பனைக் கேட்டபோது காலை எட்டரை மணிமுதல் பள்ளிவாசலைச் சோதனையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னான். பள்ளிவாசலின் இமாம் வந்து விட்டாரா என்று மீண்டும் அவனைக் கேட்டேன். இன்னும் வரவில்லையென்றான். அவர்கள் என்னதான் செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம் என்றேன்.
அமெரிக்கப் படையினர் ஏராளமான ஆயுதங்களைச் சுமந்த படி பள்ளிவாசலைச்சுற்றி அங்கும் இங்குமாக நடந்து திரிவதை ஏராள மான பொது மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். அவர்க்ளில் அநேகமானோர் சிறுவர்கள். எனது சகோதரர்களில்
ඌක8|8) නිඛplණීග්||

69
ஒருவர், அமெரிக்கரின்துப்பாக்கிச்சன்னங்களுக்கு முதியவர், சிறியவர் பேதங் கிடையாது என்பதால் சிறுவர்களை இங்கிருந்து அப்புறப் படுத்துங்கள்' என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.
சிறுவர்களை அப்புறப்படுத்திவிட்டுச் சோதனை நடைபெறு மிடத்துக்குச் சென்றபோது இமாம் அப்துல் ஜவாத் அவர்கள் அமெரிக்கரின் மொழிபெயர்ப்பாளரிடம் பேசிக் கொண்டிருப்பதை அவதானித்தேன். ஏதாவது ஆயுதங்கள் பள்ளிவாசலுக்குள் உள்ளனவா என்று மொழிபெயர்ப்பாளர் இமாமிடம் கேட்டார். "ஆம்! எம்மிடம் ஆயுதங்கள் இருக்கின்றன" என்று இமாம் சொன்னதைக் கேட்டு நான் ஆடிப்போனேன். பள்ளிவாசலில் இல்லாத ஆயுதங்களை இருப்பதாக ஏன் சொல்கிறார் என்ற கேள்வி என் சிந்தையைக் குடைந்தது. அவ்வாறு பதில் சொல்லி விட்டு விறு விறுவெனப் பள்ளிவாசலுக்குள் நுழைந்த இமாம் ஓர் அல் குர்ஆன் பிரதியுடன் திரும்பி வந்தார் மொழிபெயர்ப் பாளரை நெருங்கி "இதுதான் எமது ஆயுதம்!" என்று உறுதியான குரலில் சொல்லியபடி உயர்த்திக் காட்டினார். இமாமின் துணிச்ச லையும் இறையச்சத்தையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
அது ரமளான் நோன்புக் காலம் என்பதை அறிந்தும் கூட மொழிபெயர்ப்பாளர் அவ்விடத்தில் தனது சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார். பள்ளிவாசலின் புனிதத்துவத்தைச் சிறிதள வேனும் மனதில் கொள்ளாமல் ஈராக்கியருக்குப் பெற்றுத் தருவோம் என்று வாக்களித்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறந்து அவர் கள் பள்ளிவாசலில் சோதனை நடத்தினார்கள்.
எதையேனும் கண்டு பிடித்து வெற்றி கொள்ள இயலாத நிலையில் தொங்கிய முகத்துடனும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பைச் சுமந்த நெஞ்டனும் அவர்கள் பள்ளி வாசலை விட்டு வெளியேறி னார்கள். அவர்கள் இனிமேல் வெட்கத்தில் இந்தப் பக்கமே

Page 54
70
வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் என்ன ஆச்ச ரியம்! அவர்கள்திரும்பிச் சென்ற பதினைந்தாவது நிமிடத்தில் மீண்டும் வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். மிருகங்களை விடக் கேவல மானமுறையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத அசிங்கமான முறை யில் மீண்டும் சோதனை நடத்தினார்கள். சப்பாத்துக் கால்களுடன் பள்ளி வாசலுக்குள் இருந்த புனித குர்ஆன் உட்பட அனைத்தையும் அவமானப் படுத்தும் விதத்தில் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் கள்.
இரண்டாவது முறையும் அவர்களது சோதனையில் அவர்கள் வெற்றிபெறவில்லை. இல்லாத இடத்தில் ஒரு பொருளைத் தேடினால் அது எப்படிக் கிடைக்கும்? கண்களில் கோபம் தெறிக்க வெளியே வந்தவர்களின் பார்வை இளைஞர்களைக் குறிவைத்தது. அவர்கள் என்னையும் எனது நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர். என்னை நிலத்தில் கிடத்தினர். எனது தலையில் ஒர் அமெரிக்கன் தனது சப்பாத்துக் காலை வைத்து அழுத்தினான். பின்னர் என்னை இழுத்து எடுத்து எனது முகத்தை எதையோ கொண்டு மறைத்த பின்னர் வாகனமொன்றுக்குள் எறிந்தனர். அவர்களது தளத்தை அடையும் வரை என்னால் எதனையும் பார்க்க முடியவில்லை.
அது மிகக் குளிரான காலமாக இருந்தது. என்னையும் எனது நண்பர்களையும் பல்லோடு பல்லடிக்கும் அந்தக் குளிரில் சிறிய
அறைக்குள் தள்ளி மூடினார்கள். இந்த
இடம் பின்னர் ஏதோ ஒரு வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விபரங் களை எனக்குச் சொல்ல முடியாது. ஆனால் இது மனித உரிமை மீறப்படும் இடம் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்.
இரவுக்குளிரில் நாங்கள் உறைந்து போயிருந்தோம். நாங்கள் நோற்றிருந்த நோன்பைக் கூடத் துறக்க உணவோ நீரோ தரப்படவில்லை. விசாரணை
அஷ்ரஃப் சிஹாப்தீன்=
 

71
செய்யப்படுவது குறித்தே நாங்கள் பெரிதும் அஞ்சினோம். விசாரணைக் አክ கென அழைத்துச் செல்லப்படும் நண்பர்கள் சித்திரவதை செய்யப் படும் அலறல்களைத் தவிர வேறு " எதையும் அங்கு நாங்கள் கேட்ட : தில்லை. காலையில் ஒரு நண்பனை எடுத்துக் கொண்டு ஒர் அமெரிக்கன் வந்தான். என்னால் அந்நண்பனைப் பார்க்கச் சகிக்கவில்லை. சித்திர வதை காரணமாக உருமாறிப் போயிருந்தான். எங்களை அமெரிக்கன் பார்த்துக் கொண்டிருப்பதால் அவன் எங்களுடன் எந்த வார்த்தையும் பேசவில்லை. அடுத்து விசாரணைக்காக நான் எடுத்துச் செல்லப் பட்டேன்.
அங்கு ஒரு அமெரிக்க அதிகாரி கீழே அமர்ந்திருக்க முரட்டுத் தனமான, கட்டுமஸ்தான இருவர் அவனருகே நின்றிருந்தனர். அந்த அதிகாரி வாழ்நாளில் நான் அறியாத நபர்களைப் பற்றிக் கேட்டான். அவன் கேட்ட யாரையுமே நான் அறிந்திருக்கவில்லையாதலால் அவனது கேள்விகளுக்கெல்லாம் "எனக்குத் தெரியாது" என்பதைத் தவிர வேறு எதையும் என்னால் சொல்ல முடியவில்லை.
"நீ ஒரு பயங்கரவாதி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அந்த அதிகாரி என்னைக் கேட்ட போது மொழிபெயர்ப்பாள ரிடம் "நான் பயங்கரவாதி அல்ல” என்று பதில் சொன்னேன். பின்னர் "நான் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த போது என்னையும் சில இளைஞர்களையும் அமெரிக்கப்படையினர் கைது செய்து அழைத்து வந்தனர். இதுவே எனது குற்றம். அதாவது நான் ஒரு முஸ்லிமாக இருப் பது." என்று நான் நான் சொன்ன மறுகணம் அந்த அதிகாரி ஆவேசத் துடன் எழுந்து கதிரையொன்றைத் தூக்கி என் தலையில் ஓங்கி அடித் தான். எனது தலையிலிருந்து இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. "நீ ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டாயா?" என்று மீண்டும் கடுங்குரலில் கேட்டான். "அல்லாஹ் மீது ஆணையாக நான் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட்டதில்லை” என்று பதில் சொன் னேன். கதிரையால் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கினான்.
=ஒரு குடம் கணிணீர்

Page 55
நான் நிலை குலைந்து கீழே விழுந்தேன். என்னைச் சுற்றி இரத்த வெள்ளம். அந்த அதிகாரி அவனுடனிருந்த இருவரிடமும் "இவனை என்ன செய்தாவது குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள்” என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு அகன்றான்.
ஏனைய இருவரும் விழுந்து கிடந்த எனது முகத்திலும் வயிற்றிலும் மாறிமாறிக்கால்களால் உதைத்தனர். நான் எனது உடலின் எல்லாச்சக்திகளையும் இழந்த நிலைக்கு வந்து விட்டேன். அவர்களில் ஒருவன் பலமற்றுக் கீழே கிடந்த என்னைத் தூக்கிச் சுவரில் சாத்திப் பிடித்துக் கொண்டு அவனது கைத்துப்பாக்கியை எனது தலையில் வைத்து "ஏற்றுக் கொள்; இல்லையெனில் நீ இங்கேயே புதைக்கப் படுவாய்" என்றான். நானும் எனது அதே பதிலை மீண்டும் மீண்டும் சொன்னேன். துப்பாக்கியின் கைப்பிடியால் என் தலையில் ஓங்கி அடித்தான். நான் உணர்வற்றுக் கீழே சரிந்தேன்.
நான் கண்விழித்ததும் ஒரு மண்டபத்துக்கு அழைத்து வரப் பட்டேன். அந்த மண்டபத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கண்ணாடித் துண்டுகளுக்கு மேலாக வெறுங்காலுடன் ஒடுமாறு கூறினான். நான் ஓட ஆரம்பித்த அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

73
தும் எனது கால்களுக்கு அருகே சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினான். நான் ஒடிக்களைத்து கீழே விழும் வரை இந்தக் கொடுமை தொடர்ந்தது.
இதற்குப் பிறகு வேறு ஒரு அறைக்கு என்னைக் கொண்டு சென்றார்கள். அங்கே என்னைப் போல் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளான பலர் இருந்தனர். அந்த அறைக்குக் கதவுகள் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. இரவு முழுவதும் கடுங்குளிரில் இரத்தக் காயங்களுடன் மிகவும் அவஸ்தைப்பட்டோம். நாம் எங்கிருக்கிறோம், இதன் பிறகு எங்கு எடுத்துச் செல்லப்படுவோம் என்பது புரியாத நிலையில் இருந்தோம். திடீரென அங்கு வந்தவர்கள் எங்கள்தலையைக் கழுத்து வரை கருப்பு அங்கிகளால் மூடிவிட்டு விடியும் வரை கால்
களில் அடித்தனர். இரத்தக் காயங்களில் அடி விழும் போதெல்லாம்
உயிர் போய்த் திரும்பி வந்தது. காலையில் எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட வாகனம் மிக நீண்ட நேரம் பயணம் செய்தது. எந்தப் பாதையால் எங்கு செல்கிறோம் என்பது புரியவில்லை. இறங்கும் போதுதான் அது அபூகுரைப் சிறைச்சாலை என்பது தெரியவந்தது.
எங்களது ஆடைகள் களையப்பட்டன. நாங்கள் நிர்வாண மாகச் சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். எங்களில் சிலருக்கு ஆடைகள் திரும்ப வழங்கப்பட்டன. சிலருக்கு சிவப்பு நிற ஆடைகள் வழங்கப்பட்டன. சிவப்பு நிற ஆடைகள் வழங்கப்பட் டோர் வேறு எங்கோ அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கி றார்களா இல்லையா என்பது கூடத் தெரிய வில்லை. எங்களைக் கொண்டு சென்று அடைத்த அறையில் வேறு சில கைதிகளும் இருந்தனர்.
அங்கே ஃபலூஜா, ரமாடி, பக்தாத், திக்ரித் போன்ற இடங்களைச் சேர்ந்த பலரைச் சந்தித்தோம். அங்கு அடைக்கப் பட்டிருந்த ஒருவர் உன்னை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள் என்று கேட்டார்.

Page 56
74
நடந்தவற்றையெல்லாம் அந்த நண்பருக்குச் சொன்னேன். “இங்கே நடந்தவற்றோடு ஒப்பிடும்போது உனக்கு ஒன்றும் பெரிய சித்திர வதையை அவர்கள் செய்யவில்லை" என்று சொன்னார்.
பின்னர் அங்கு நடந்த கொடுமைகளை ஒவ்வொருவராக விவரிக்கத் தொடங்கினார்கள். நீருக்குள் அமிழ்த்தி அந்த நீரில் மின்சாரம் பாய்ச்சுவது, நாய்களைக் கொண்டு பாலியல் நடவடிக்கை களை மேற்கொள்வது போன்ற பயங்கரமானதும் அருவருப்பானது மான பல சித்திரவதைகளை அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பெண்கள் கொண்டு வரப்பட்டால் அவர்கள் பருகுவதற்கு இந்திரியம் வழங்கப்பட்டதையும் நிர்வாணமாக்கப்பட்டு நாய்களைக் கொண்டு உறவு கொள்ள வைத்ததையும் கேட்கக் கேட்க எனது இரத்தம் கொதித்தது. அவர்கள் மாறி மாறி அமெரிக்கர்களால் பகிரங்கமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று சொல்லக் கேட்ட போது ஈராக்கிய சகோதரிகளின் கதியை நினைத்து நினைத்து வாய் விட்டு அழுதேன்.
சிறைச்சாலை நீதிமன்றில் என்னை ஆஜர் படுத்தும் வேளை ஒரு கட்டுக் காகிதங்களுடன் அங்கிருந்த நீதிபதி, "நீ செய்த குற்றம் என்ன?” என்று கேட்டார். நான் பள்ளியில் இருக்கும் போது அமெரிக் கப் படையினரால் கைப்பற்றப்பட்டதிலிருந்து நடந்தவற்றைச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "உனக்கு நான்கு மாதங் கள் சிறைத் தண்டனை விதிக்கிறேன்” என்றார்.
சிறையில் பசியாலும்
தாகத்தாலும் சித்திரவதை களாலும் நாங்கள் துன்புற் றோம். தினமும் காலையில் ஐஸ் நீர் நிரப்பப்பட்ட தாச்சி களில் நாங்கள் நிற்க வைக்கப் படுவது வழக்கமாக இருந்தது. இந்தக் கடுஞ சோதனைகளில்
* நெருப்பில் சூடு காட்டுதல்
ඌlඛශ්‍රීjãã சிஹாப்தீனி=
 

75
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் ஓர் ஈராக்கிய இளம் பெண்
இருந்து காப்பாற்றுமாறு அல்லாஹ்வைப் பிரார்த்தித்தோம்.
நான்கு மாதங்கள் கழிந்ததும் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். நாங்கள் சிறைச்சாலைக்கு வெளியே வந்ததும் எங்களுக்காகக் காத்துக் கொண்டு ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் எங்களை வாழ்த்திக் கோஷம் எழுப்பியதுடன் அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் "அல்லாஹ" அக்பர்” என எழுப்பிய சப்தத்தில் நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதோம்.
எனது குடும்பத்தைப் பொறுத்தவரை நான் இருக்கிறேனா இல்லையா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தார்கள். நான் வீடு திரும்பினாலும் மனத்தளவிலும் உடலளவிலும் பாதிப்படைந்தவனாக இருந்தேன். என்னைக் கண்டதில் எனது குடும்பம் அளவற்ற மகிழ்ச்சி யில் திளைத்தது. என்னை அமெரிக்கப் படை எடுத்துச் சென்ற பிறகு எனது வீட்டுக்கு வந்த அமெரிக்கப் படையினர் சோதனை நிகழ்த்திய தாகவும் வீட்டிலிருந்த பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளை யிட்டுச் சென்றதாகவும் எனக்குச் சொன்னார்கள்.
எனது கதை மிகச் சிறியது. இதைவிடப் பெரிய கதைகள் நிறைய இருக்கின்றன. உங்களுக்கு எனது பெயரைச் சொல்ல மறந்து விட்டேன். எனது பெயர் அபூ ஹ"தைஃபா.
நன்றி.
form.mpacuk.org - 2005
படங்கள் - இணையத் தளங்கள்
|GD ආL|5 ආගlගණ්

Page 57
உபகாரம்
எனது பெயர் லூஸியா. நான் பலஸ்தீனக் கிறிஸ்தவப் பெண். நான் ஐந்து குழந்தைகளின் தாய். மூத்ததின் வயது 17. இளையதின் வயது 5. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அமைதியின் நகர் எனவும் அமைதி அரசரின் நகரம் எனவும் புகழ் பெற்ற பெத்தலஹேம் நகரில் வசித்து வருகிறேன்.
எனது கணவரான மைக்கேல் ஒரு நல்ல மனிதர். நல்ல கணவர். மட்டுமன்றி ஒரு நல்ல தந்தையாகவும் இருந்தார். தச்சுத் தொழிலில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மிகச் சிக்கலான காலப் பிரிவிலும் அமைதிக்காக உழைத்ததோடு மாத்திரமின்றி மனித குலத்தின் பாவங்களுக்காக வாழ்வை அர்ப்ப ணித்த யேசு பிரான் ஒரு தச்சுத் தொழிலாளியாக இருந்தார் என்பதை அவர் அதிகம் விரும்புகிறவராக இருந்தார். இங்கு பிரச்சினைகள் நிறைந்த போதிலும் எப்போதும் யேசு பிரான் புனிதராகவே எங்களது புனித பூமியில் மதிக்கப்பட்டார். "ஷெல்'களும் துப்பாக்கிரவைகளும் கொண்டு இஸ்ரேலியப் படையினர் எமது பகுதியைத் தாக்க ஆரம்பித்து விட்டால், மைக்கேல் பைபிளைக் கையிலெடுத்துக் கொண்டு அவசர அவசரமாக எங்களை ஒன்று கூட்டி விடுவார். நாம் எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம்.
இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் பலமாகச் சிரிப்பதும் வசைமொழிகளால் எங்களைத் தூவுரிப்பதும் அஷ்ரஃப் சிஹாப்தீனி

77
அடிக்கடி எங்களது காதில் விழும், யூதரல்லாதோரை அவர்கள் மிக்க இழிவானவர்கள் என்று கருதுகிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எனது மைக்கேலை இழந்தேன். சுகவீனமுற்ற தனது தாயைப் பார்ப்பதற்காக ஜெரூஸலத்தி னுாடாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவரை ஒரு யூதக் குடியேற்றவாசிசுட்டுக் கொன்று விட்டான். அன்றிலிருந்து கடும் வேலை, பசி, நோய், பட்டினி இவற்றைத் தவிர வேறு எதையும் நான் அறியமாட்டேன். எனது பிள்ளைகளுக்கு உணவுக்காகவும், உடை களுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும், பாடசாலைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காகவும் என்னிடமிருந்த பெறுமதி யுள்ள அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டேன். என்னிடம் தொழில் நுட்ப அறிவோ பயிற்சியோ கிடையாது. ஆனால் வீடுகளைச் சுத்தம் செய்யத் தெரியும். எனவே எமது அயலவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிப் பெண்ணாக மாறிவிட்டேன்.
எனது அயலவர்களும் என்னைப் போன்றே கஷ்டப்படுபவர் கள்தாம். ஆனாலும் இன்று வரை உணவு,உடை, பணம் என அவர்கள் தான் எனக்கு உதவுகிறார்கள். எனது வேலை கடுமையானதும் என்னை எனது பிள்ளைகளிடமிருந்து தூரப்படுத்துவதுமாக இருக்கிறது. கவலையுடன் அவர்களைப் பிரிந்து நான் உழைக்க வேண்டிருக்கிறது. மைக்கேல் சொல்வதை நான் இன்று வரை ஞாபகப் படுத்திக் கொள்கி றேன். அவர் சொல்வார், "பரவாயில்லை. கிறிஸ்து எம்முடன் இருக்கி றார். அவர் எங்களைப் பார்த்துக் கொள்வார். நான் எனது சகோத ரிக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டும். அவள் எனக்காக தனது பாடசாலைப்படிப்பைக் கைவிட்டு எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறாள். அவளை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.
எனது உடற் பாரமும் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினமும் மிகவும் களைப்படைந்து கொண்டே வருகிறேன். எனது இளைய இரண்டு பிள்ளைகளும் நீண்டநாட்களாக இருமல் மற்றும் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதனால் அடிக்கடி முழு இரவும் நான் விழித்திருக்க வேண்டியவ ளாயிருக்கிறேன். இது மிகவும் சிரமமான ஒரு வழக்கமாக மாறி
|ඉගැ5 ගL|5 ආණ්ඩෝ

Page 58
78
விட்டது. ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு ஆறுதல் எனது முஸ்லிம் அயலவர்கள்தான். அவர்கள் எனது வீட்டைச் சுத்தம் செய்தும் கழுவி யும் தருகிறார்கள். அடிக்கடி உணவு சமைத்தும் தருவதுண்டு.
சேர்ச்சுக்குப் போகும் அளவுக்கு எனது உடலில் சக்தி கிடை யாது. ஆனால் போதகர் இப்பக்கம் வருவதுண்டு. ஒர் இரவு நான் வீடு ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கிச்சத்தமும் அதைத் தொடர்ந்து பாரியதொரு குண்டு வெடிச்சத்தமும் கேட்டது. எனது இதயமே ஒரு கணம் நின்று விட்டது. நான் கிட்டத்தட்ட மூர்ச் சையாகும் நிலையை அடைந்து விட்டேன். 'ஆண்டவரே. அது எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது. எனது பிள்ளைகளாக இருக் கக் கூடாது. என்று என்னையறியாமல் சொல்லிக் கொண்டேயிருந் தேன். நான் எப்படி ஒடினேன் என்று எனக்கே தெரியாது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் ஓடினேன். எப்படியோ எனது வீடுவரை வந்து சேரக் கூடிய பலத்தை வரவழைத்துக் கொண் டேன். ஒ. யேசு பிரானே. எல்லாம் வல்ல ஆண்டவரே.
எனது வீட்டின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்தது. எல்லோ, ரும் அந்தத் தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள். நான் எனது பிள்ளைகளின் பெயர்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கூவியழைத்தபடி கதறியழுதேன். யாருடையவோ கரங்களில் நான் விழுந்தேன். அவர்கள் எனது குழந்தைகள் பத்திரமாக இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. எனது படுக்கையறை சாம்பராயிற்று. நான் மயங்கித் தரையில் வீழ்ந்தேன். கண்விழித்த போது எனது எல்லாப் பிள்ளைகளும் என்னைக் கட்டித் தழுவியபடி கதறிக் கொண்டிருந்தார்கள். என்னால் செய்ய முடிந்த தெல்லாம் ஆண்டவரைப் பிரார்த்திப்பதுதான். அன்று எல்லோரும் என்னைச் சூழ உறங்கினார்கள். அடுத்த நாள் எஞ்சியிருந்த ஒரே ஒரு அறையில் நாங்கள் வாழப் புகுந்தோம்.
பதினேழு வயதுடைய எனது மூத்த பையன் பெயர் ஜோன். கடந்த ஒரு மாதமாக இரவில் தாமதமாக வீட்டுக்கு வரத் தொடங்கி னான். அவன் வரத் தாமதிக்கும் போதெல்லாம் அவன் கைது செய்யப் பட்டு விட்டானோ அல்லது சுட்டுக் கொல்லப்பட்டானோ என்று
அஷ்ரஃப் சிஹாப்தீன்

79
எனக்குக் கவலையாக இருந்தது. நீ எங்கேயிருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்டால் தனது நண்பர்களுடன் படித்துக் கொண்டிருந்ததாக மாத்திரம் சொல்லிக் கொண்டான். சில வேளை களில் கடும் கோபமுற்றவனாகக் காணப்படுவான். சில நாட்ளரில் இரவில் நீண்ட நேரம் வரை பைபிள் வாசித்துக்கொண்டிருப்பான். இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளைத் தாண்டும் போதெல்லாம் அவன் மிகுந்த கோபத்துடன் இருப்பான். சோதனைச்சாவடியில் அவர் கள் கேள்விகள் கேட்பார்கள், சோதனை செய்வார்கள், சில வேளை களில் முரட்டுத்தனமாக முன்னால் தள்ளி விடுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவனது கோபம் மேலும் மேலும் அதிகரிப்பதைக் கண்டேன். திடீரென அவன் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டான். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவனை யாரிடமாவது அழைத்துச் சென்று அறிவுரை சொல்லும் படி போதகர் என்னைக் கேட்டுக் கொண்டார். எண்ணிடம் அதற்கான பணம் இல்லையென்றும் யாரிடம் அழைத்துச் செல்வது என்று தெரியாது என்றும் அவரிடம் நான் சொன்னேன். அவர் மறு நாள் வருவதாகச் சொல்லிச் சென்றார். -
அடுத்த நாட்காலை புதிதாகத் திறக்கப்பட்ட உளவியல் நலச் சிகிச்சையகத்துக்கு என்னைப் போதகர் அழைத்துச் சென்றார்.அதன் முன் கதவில் "புனித பூமி மன்றம்’ என்று எழுதப்பட்டிருந்தது. அங்கு அன்பான ஒரு பலஸ்தீனப் பெண்ணைச் சந்தித்தேன். அப் பெண் என்னைப் பற்றி இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். அவரிடம் எனது கவலைகளையும் பிரச்சினைகளையும் மறைக்காமல் திறந்து கொட்டினேன். அந்தக் கனிவு நிறைந்த பெண் என்னை ஆறுதல் படுத்தினார். நான் இனிமேல் தனியாக உலகை எதிர்கொள்ளும் அவசியம் ஏற்படாது என்று சொன்ன அப்பெண், ஆக்கிரமிக்கப்ப்ட பிரதேசங்களில் வசிக்கும் என்னைப் போன்ற ஆதரவற்ற ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு உதவுவது போல எனக்கும் உதவுவதாகச் சொன்னார். அடுத்த அறைக்குச் சென்ற அந்தப் பெண் ஒரு பெட்டி நிறைய உணவுப் பொருட்களும் உடு புடவைகளும் கொண்டு வந்து தந்தார். அவர்களது வாகனத்தின் சாரதி அவற்றையும் போதகரையும் என்னையும் ஏற்றி கொண்டு வந்து எங்களது வீட்டிலே விட்டுச் Hஒரு குடம் கணினி

Page 59
80
சென்றார். நான் வீட்டுக்குச் சென்ற போது உணவுகளையும் உடு புடவைகளையும் கண்ட பிள்ளைகள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நான் வரும்போது 'சாந்த குளோஸ்" ஐ அழைத்துக் கொண்டு வந்து விட் டேன் என்று சந்தோஷப்பட்டார்கள். போதகருக்கு வேறு வேலைகள் இருப்பதால் நாளைக்கு என்னுடன் வந்து இன்னும் பொருட்களை எடுத்துவர உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜோனிடம் கேட்டுக் கொண்டேன்.
அடுத்த நாள் ஜோனும் நானும் உளவியல் நலச் சிகிச்சையகத் துக்குச் சென்றோம். நான் அங்குள்ள கனிவான இளம் பலஸ்தீனப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்க, ஜோன் வைத்தியர் இருந்த அறைக்குள் சென்றான்.
எனது குடும்பம் 'புனித பூமி மன்றத்தின் உதவி பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இனி மேல் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அப் பெண் எனக்குத் தெரிவித்தார். உணவு, உடைகள், பல்மருத்துவம், மற்றும் பொது மருத்துவ உதவிகள், வருடத்தில் பாடசாலை ஆரம்பிக்கும் காலத்தில் பிள்ளைகளுக்குரிய பாடசாலைப் பொருட்கள், மனநல மருத்துவம் போன்றவை தொடர்ச் சியாக எங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அப்பெண் விபரித்துக் கொண்டிருக்க மகிழ்ச்சியில் என்னாலும் ஜோனினாலும் அதனை நம்பமுடியவில்லை.
மைக்கேல் சொன்னது சரிதான். யேசு எங்களைக் கவனித்துக் கொள்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்று அப் பெண்ணைக் கேட்டேன். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ் தவர்கள், யூதர்கள் வழங்கும் உதவிப் பணத்தைக் கொண்டு இயங்கும் அமெரிக்க அமைப்புத்தான் இந்த 'புனித பூமி மன்றம்’ என்று அவர் சொன்னார். இப்படிக் கிடைக்கப் பெறும் அன்பளிப்புகள் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் லெபனான், ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளில் வாழும் பலஸ்தீன அகதி முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அநேக நன்கொடையாளிகள் ஒரு முழுக் குடும்பத்தையோ அல்லது அநாதைகளையோ மொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொள்வதுமுண்டு. அவ்வாறான ஒரு பொறுப்பேற்
ඊlඛෂීjō?) சிஹாப்தீன்=

81
கப்பட்ட குடும்பமாகவே எம்மையும் பதிவு செய்துள்ளதாக அப் பெண் கூறினார். அமெரிக்கா அரசு இவ்விடயத்தில் மிகவும் உதவு வதாகத் தெரிவித்த அப்பெண் குறிப்பாக அமெரிக்க மக்களின் இரக்க சிந்தையைப் பாராட்டினார்.
ஒரு புறம் அமெரிக்கர்கள் எமது மண்ணை ஆக்கிரமிப்பதற்கு இஸ்ரேலியருக்கு ஒத்தாசை புரிந்து கொண்டு உணவையும் பணத்தை யும் எங்களுக்கு அனுப்பி எங்களை விற்பனை செய்து கொண்டிருக் கிறது என்று எண்ணி நான் ஒரு கணம் திகைத்தேன். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் உதவியும் அதன்மூலம் ஒரு நம்பிக்கையும் பிறந்திருப்பது குறித்து இறுதியில் மகிழ்ச்சியடையவே செய்தேன். இனி எனது பிள்ளைகளை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதில் நான் தனியாளாகச் சிரமப்படத் தேவையில்லை.
இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் ஜோன், டாக்ட ருடன் அவருடைய அறையிலிருந்து கண்ணிர் மல்கியவனாக வெளியே வந்தான். என்னை அவன் ஆதரவுடன் அணைத்து இதுவரை எனக்கு ஒத்தாசை புரிய முடியாமலிருந்தமைக்காக மன்னிப்புக் கோரி னான். மாதத்தில் ஒரு நாள் அவன் டாக்டரை வந்து சந்திக்க வேண்டும் என்று டாக்டர் கேட்டுக்கொண்டார். இருமலும் ஆஸ்த்மாவுமாக வருத்தப்படும் எனது இரு பிள்ளைகளையும் நாளை அழைத்து வந்து சிறுவர்களுக்கான வைத்தியரைப் பார்ப்பதாகச் சொன்னேன். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எனதும் ஜோனினதும் கண்ணிர்த் துளிகள் கைகளை நனைத்தன. ஆனால் முகங்களில் புன்னகை நிரம்பி யிருந்தது. எனது வாய் முணுமுணுத்தது. "யேசுவே. உங்களுக்கு நன்றி!”
அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் ஆண்டவனுக்கும் யேசுவுக்கும் மற்றும் தாராள மனப்பான்மையும் நல்லெண்ணமும் கொண்டு தங்களது நன்கொடைப் பணம் மூலம் எமக்கு உதவிய அமெரிக்க மக்களுக்கும் நன்றி கூறிப்பிரார்த்தித்தேன். உலகின் கண்களுக்குத் தோன்றாமல் நீண்ட காலமாக மெளனித்த நிலையில் நாம் கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறோம். அது இப்போது ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறது. மிகத்
=ஒரு குடம் கணினி

Page 60
82
தூரத்திலிருந்து தாராள சிந்தையும் நல்ல மனமும் கொண்ட அமெரிக் கரின் உதவியால் குறைந்தது பிள்ளைகளாவது கவனிக்கப் பெறுகிறார் கள். மைக்கேல் பயன்படுத்திய பைபிளைக் கையில் வைத்துக் கொண் டபடி முதல் முறையாக எவ்வித மனப் பாரமும் இன்றி அன்றிரவு உறங்கினேன்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே நித்திரை விட்டெழுந்தேன். பள்ளிவாயிலிலிருந்து அதிகாலையில் தொழுகைக்கான அழைப்பு ஒலிக்கக் கேட்டேன். எனது முஸ்லிம் அயலவர்கள் அன்று நோன்பு நோற்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ரமளான் மாதத்தில் கடைப்பிடிக்கின்ற ஸ்க்காத் மற்றும் ஸதக்கா உதவியை எனக்குத் தந்து வந்திருக்கிறார்கள். அமெரிக்க மக்களைப் போலவே உதவும் அவர் களுக்கு நான் மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
பின்னர் கையோடு ஜோனையும் அழைத்துக் கொண்டு 'புனித பூமி மன்றத்துக்குச் சென்றேன். அவர்கள் எனது மகனுக்கும் எனக்கும் உதவி செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் மிகவும் நல்லவர்கள்.
ஒஹற். ஆண்டவரே. எனது மகன் நம்ப முடியாமல் அலறி னான். சிகிச்சையகத்தின் கதவில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட் டிருந்த அறிவிப்பை அவன் வாசித்தான். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்டளையின் பேரில் சிகிச்சையகம் மூடப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. மன்றத்தின் பணத்தை ரமழான் மாதம் முழுவதற்கும் அவர் முடக்கியதோடு மாத்திரமின்றி உதவி வழங்கும் செயற்பாடு களையும் நிறுத்தக் கட்டளையிட்டிருந்தார். நான் கதறி அழுதேன். ஆண்டவரே ஏன் இப்படி எனக்கு நடக்கிறது. எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் இப்படி ஏற்படுகிறது. எப்போதும் நாங்கள் கஷ்டத்தில் உழலும் நிலை ஏன்?. ஏன்?" எனது வயிற்றில் யாரோகுத்தி விட்டதாக உணர்ந்தேன். எனது வாழ்வையும் சுவாசத்தையும் நம்பிக் கையையும் யாரோ தூர எடுத்துச் சென்று விட்டதாக உணர்ந்தேன். நான் பைத்தியம் பிடித்தாற் போல் அழுது கொண்டிருந்தேன். மன்றத் தைச் சேர்ந்த அந்தப் பெண் என்னிடம் வந்தார். தனது பையிலுள்ள பணத்தையெல்லாம் வாரித் துடைத்து என்னிடம் தந்து விட்டுச்
ඵ්කදී]]&) சிஹாப்தீன்

83
சொன்னார், "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அவன் விடாமுயற்சியுள்ளோரிலும் வருத்த முற்றோரிலும் அன்பு கொண்டுள்ளான்."
அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன். எனது கேள்வியைப் புரிந்து கொண்ட அவர் இறுதியாக இப்படிச் சொன்னார். "ஏரியல் ஷரோன், ஜோர்ஜ் புஷ்ஷை மிக அண்மையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் இரண்டாவது நாள் புஷ் எங்கள் செயற்பாடுகளை நிறுத்தி விட்டார். பல வருடங்களாக யூத, அமெரிக்க அமைப்புகளும் அமெரிக்க ஊடகங்களும் மற்றும் - அவரை உங்களுக்குத் தெரியாது - நியூயோர்க்கில் வசிக்கும் யூதரான செனற்றர் சார்ள்ஸ் ச்சூமரும் நாங்கள் பயங்கரவாதத்துக்கு உதவுவதாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஜனாதிபதியைக் கொண்டு சாதித்துக் கொண்டார்கள்.
நீண்ட நேரமாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஜோன் அங்கிருந்து போய் விட்டான் என்பதைப் பின்னர்தான் உணர்ந்தேன். அவனைக் கூப்பிட்டுப் பார்த்தேன். எந்தப் பதிலும் இல்லை. சில நிமிடங்களுக்குப் பின்னர் தூரத்தில் பாரியதொரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. திடீரென ஒரு பயம் என்னைப் பற்றிக் கொண்டது. திகைத்து நின்றேன். இல்லை. அப்படி இருக்காது. அது அவனாக இருக்காது! ஆண்டவரே, அது அவனாக இருக்கக் கூடாது!
காத்திராப் பிரகாரமாக போதகர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. என்னிடமிருந்து பெரியதொரு அலறல் வெளிப்பட்டது.ஏன்? எனது யேசுவே ஏன்?. ஏன்?
நன்றி:
முஹம்மத் குத்ர் மீடியா மொனிட்டர்ஸ் (இணையம்)
බ්‍රH5 ජෛLiඩී අංගණ්ණ්

Page 61
அழகிய காஷ்மீரின் அழுகுரல்
நான் காஷ்மீரைச் சேர்ந்தவன். பணி உறைந்த மலைச் சிகரங்களாலும் சிறப்பு மிக்க சினார் மரங்களாலும் குழப்பட்ட, மனதை மயக்கும்பின்னணியில் நான் பிறந்து வளர்ந்தவன். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை நினைக்கும் போது எனக்கு ஞாபகம் வருவது என்னவெனில் பிரச்சி னைகளால் கிழித்துப் பிரிக்கப்பட்டிருக்கும் எமது பூமியுடன் பிரிக்க முடியாதவாறு தொடர்புற்றி ருக்கும் எனதும் என்னைப் போன்ற ஏனைய காஷ்மீர் மக்களதும்
வாழ்வாகும்.
எலும்புகள் உடைக்கப்பட்டுக் காயங்களுடனான இளைஞர் களின் உடல்களை அடக்கம் செய்யும் துயரம் மிகுந்த பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். கற்பழிக்கப்பட்ட இளம் பெண்களின் கண் களில் தெரியும் துயரத்தையும் தங்களது பிள்ளைகளை ஆபத்திலிருந்து காக்க முடியாத பெற்றோரின் துயரங்களையும் நான் பார்த்திருக் கிறேன். கனவுகளுக்குப் பதிலாக துர்க்கனவுகளோடு வளர்ந்த எனது பிள்ளைகளையும் பார்த்திருக்கிறேன்.
எந்தவிதக் கசப்புணர்வோடும் நான் இந்த வார்த்தைகளை எழுதவில்லை. எனது துயரங்களுக்குக் காரணமான எந்தவொரு பொலிஸ்காரர் மீதோ நீதிபதி மீதோ அல்லது சிறையதிகாரி மீதோ
ඊlකදී]]&l சிஹாப்தீனி |=
 

85
எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்வும் கிடையாது. எனது காலத்தில் என்னைப் போன்று துன்பங்களை அனுபவித்த வேறு ஒரு காஷ்மீரி இருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான காஷ்மீரிகளைப் போல நானும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டவன். ஒரு பொய் வழக்குக்காகக் குற்றம் சுமத்தப்பட்டவன். இது உண்மை. என்னை அடைத்து வைத்திருந்த அதே சிறையில் இன்னும் பல காஷ்மீரிகள் ஏங்கிக் கொண்டிருக் கிறார்கள். மரண தண்டனைக்கான சிறையில் ஒரு வருடத்துக்குக் குறைவான காலம் நான் வைக்கப்பட்டிருந்தேன். அதேவேளை என் னைக் கொலை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நான் அதிர்ஷ்டக்காரனாக இருந்ததால் அவற்றிலிருந்து தப்பினேன். ஆனால் ஜனநாயக இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் கூடப் பிழையான தகவல்களின் அடிப்படையில் பல காஷ்மீரிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
2002 டிஸம்பர் 18ம் திகதி எனக்கு மரணதண்டனைதீர்ப்பாக வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. நான் இந்த விடுதலை குறித்து மகிழ்ச்சியுற்றிருந்த போதும் ஓர் அப்பாவி மனிதனின் விடுதலை கொண்டாடுவதற்குரியதல்ல என்று நினைக் கிறேன். எந்த விதச் சாட்சியங்களுமற்ற நிலையில் குற்றம் சுமத்தப்பட் டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது பற்றிய எனது எண்ணங் களைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று எண்ணுகிறேன்.
இந்திய ஜனநாயத்தையும் அதன்நிறுவனங்களது செயற்பாடு களையும் அருகிலிருந்து பார்ப்பதற்கு எனது அனுபவம் ஒரு வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. இனவாத பாஸிச சக்திகளின் எழுச்சி யானது "பயங்கரவாதத்துக்கு எதிரானது' என்று அழைக்கப்படும் யுத் தத்தோடு இணைந்து இந்திய ஜனநாயகத்தின் அடித்தளக் கட்ட மைப்பை மிக மோசமாக வேரறுத்திருக்கிறது என்று நான் நினைக் கிறேன்.
சிறையிலிருந்து விடுதலையான தினம் நடந்த பத்திரிகை யாளர் மாநாட்டில், காஷ்மீருடைய பிரச்சினை தீர்த்து வைக்கப் படாமல் பிராந்தியத்தில் அமைதி நிலவாது என்று நான் தெரிவித்தேன்.
=ஒரு குடம் கணினி

Page 62
86
அரசியல் இணக்கப்பாடுகளின் மூலமாக மாத்திரமே இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வை எட்ட முடியும். எனது அறிக்கை ஜனநாயக வழியில் நம்பிக்கை கொண்டவர்கள் உட்படப் பலரைக் கோபப்படுத்தியது. நானும் எனது ஆதரவாளர்களும் அமைதி முன்னெடுப்புக்களைச் சீர் குலைப்பவர்கள்' என்று அழைக்கப்பட்டோம்.
இதற்கு ஏன் அஞ்சுகிறார்கள் என்று புரியவில்லை. காஷ்மீ ரிகள் இந்தோ பாக்கிஸ்தான் நட்புறவை விரும்புகிறார்கள். ஏனெனில் அந்த நட்புறவு இல்லையென்றால் காஷ்மீர் அபிவிருத்தி அடையாது. ஆனால் அதற்கு முதலில் இவ்விரு நாடுகளும் ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது இன்றியமையாததாகும். காஷ்மீர் மக்கள் அமைப்பின் சுயநிர்ணயத்துக்கான கருத்து வெளிப்பாடானது ஒரு தனிமனிதனதோ, ஒரு இயக்கத்தினதோ அல்லது அரசியல் கட்சி யினதோ விருப்பத்தைக் குறிப்பதல்ல. உதாரணத்துக்கு. நாம் ஷேக் அப்துல்லாஹற்வை எடுத்துக் கொள்வோம். பல வருடங்களாக அவர் அமைப்பை நடத்தினார். சிறையிலடைக்கப்பட்டார். கடைசியில் 1975ல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுப் பணிய வேண்டிவந்தது. பதினான்கு வருடங்களின் பின்னர் காஷ்மீர் மக்கள் மீண்டும் அரசியல் ஏகபோகத்துக்கு எதிராகவும் நியாயமீறலுக்காகவும் கிளர்ந்தெழுந்து கலகம் செய்தனர்.
காஷ்மீர் மக்களது அபிலாஷைகளையும் விருப்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இந்தோபாக்கிஸ்தான் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு எட்ட முடியாது என்ற எனது நிலைப்பாட்டை நான் வற்புறுத் திக் கூறிய போது எனது விடுதலைக் காக உழைத்த புத்திஜீவிகளையும் படிப்பாளிகளையும் அது சங்கடப் படுத்தியது.
எனது சொந்த வழக்குப் பற்றியல் லாமல் பொது விடயங்களை ஏன் பேசு கிறீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். காஷ்மீர் மக்களை வேறு படுத்திவிட்டு எனது அனுபவங்களைப்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
 

87
பார்க்க முடியாது. நான் ஒரு காஷ்மீர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக் காகவே பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டேன். அத்துடன் நான் குற்றஞ்சாட்டப்படு வதில் உளவுத்துறையின் பங்கும் இருந்தது. * * * १९१४
காஷ்மீர் விவகாரம் பேச்சு ༡༠ གཞན་ வார்த்தை மூலம் தீர்த்து வைக்கப் பட வேண்டிய ஒர் அரசியல் விவ காரமே அன்றி உளவுத் துறையினரால் தீர்க்கக் கூடியது அல்ல. பிழையான தகவல்களை ஊடகத்துக்கு வழங்குவதன் மூலம் தனிநபர் களதும் அமைப்புகளினதும் நம்பகத்தன்மையை உளவுத் துறை திட்ட மிட்டு அழித்திருக்கின்றது. இம் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் அது நபர்களைப் பணங் கொடுத்து வாங்கிக் கொள்கிறது. அதிலும் தோல்வி காணும் பட்சத்தில் ஒத்துழைக்க மறுப்பவர்களை அழித்து விட முயற்சிகளைச் செய்கிறது.
ஆரம்பத்தில் நான் டில்லி வரும்போது காஷ்மீர் மற்றும் காஷ்மீர் மக்கள் பற்றி இங்குள்ள கல்வியாளர்கள், அறிஞர்கள் மத்தி யிலும் தவறான கண்ணோட்டமே நிலவி வந்தது. காஷ்மீர் குறித்து இந்திய அரசு வெளியிடும் செய்திகளை மட்டுமே அவர்கள் நம்பிவந்த நிலையில் இங்குள்ள காஷ்மீரிகளே அதை எதிர்க்கவில்லை. காரணம், அச்சம், பயம். காஷ்மீரின் உண்மைநிலை பற்றி சொல்லிப்புரிய வைக்க முயற்சி செய்து வந்தபோது தொடக்கத்தில் பலருக்கும் என்மீது கோபம் இருந்தது. உண்மை நிலை புரிய ஆரம்பித்ததும் குறைந்த பட்சம் காஷ்மீரிகள் பிரச்சினைக்குரியவர்கள் அல்லர் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
காஷ்மீரில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளா திருப்பவர்கள், அரசு ஏஜன்சிகளின் சம்பளப்பட்டியலில் உள்ளவர்கள் என்று டில்லியில் இரண்டு வகைக் காஷ்மீரிகள் உள்ளனர். இவர் களுக்கு மத்தியில் இருந்து ஒரு "மாஸ்டர் மைன்ட் தேவைப்பட்டது. சம்பளப்பட்டியலில் உள்ளவர்களைக் குற்றவாளிகளாக்க முடியாது.
|ඉq5 ගL5 හීහ්ග්

Page 63
88
மற்றவர்களை நம்பிப் புண்ணிய மில்லை. அப்படி வரும் போது காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசி வருகிற அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒருவரே இந்த வழக்குக்குப் பொருத்த மானவர். பாராளுமன்றத் தாக் குதல் சம்பவத்தைக் காஷ்மீர் பிரச்சினையோடு முடிச்சுப் போடத்தில்லியில் என்னைவிடப் பொருத்தமானவர் ஒருவரும் அன்று கிடைத்திருக்கவில்லை.
அரசுடன் ஒத்துப்போகுமாறு அரசிடமிருந்து பலமுறை எச்சரிக்கை வந்தும் நான் பணியவில்லை. கைதுக்கு முன்பும் பின்பும் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதில்லை. வாக்கு மாறும் பழக்கம் எனக்கு இல்லை.
உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு மூர்க்கத்தனமான சூழலை உருவாக்கியுள்ளன. தமது சொந்தக் காஷ்மீர்ச் சகோதரர்களின் கண்களில் நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் முற்போக்கான இந்தியத் தலைமை உருவாவதில் அவர்கள் விருப்பம் உள்ளவர்களாக இல்லை. தமது சூழ்ச்சிகளால் குழப்ப நிலையை ஏற்படுத்தித் தங்களது மேம் பாட்டை உயர்த்திக் கொள்பவர்களாகவே அவர்களைக் காண முடி கிறது. சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனைகள், இரகசியச் சித்திரவதைகள், பிழையான முறையில் துரத்திச் சுடுதல் என்பன காஷ்மீர் மக்கள் மீது ஒர் அரச கொள்கையாகப் பயன்படுத்தப்படு கிறது என்று சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் பதிவு செய்திருக்கின் றன. இவ்வகையான முறைகளைக் கொண்டு மக்களின் உறுதியை உடைப்பதானது அரசியல் வங்குரோத்துத் தனத்தையே வெளிப்படுத் துகிறது. இது இந்திய அரசியலின் ஜனநாயக அத்திவாரத்தை மொத்த மாகச் சிதைத்து விடுகிறது.
என்னை ஒழித்துக் கட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று எத்தனங்கள் இடம் பெற்றன. திஹார் சிறையில் இரண்டு முறைகளும்
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

89
2005 பெப்ரவரி 8ம் திகதி என்மீது இடம்பெற்றதுப்பாக்கிப்பிரயோக முமாகும். நான் அடைக்கப்பட்டிருந்த சிறையின் அறை, சிறை வளாகத் தின்விளிம்பில்அமைந்திருந்தது. சிறை அதிகாரிகள் தவிர வேறு யாரும் வரமுடியாத அந்தப் பகுதிக்குக் கையில் சத்திரசிகிச்சைக்கான சிறு பிளேடுகளுடன் மயக்க மருந்து கொடுத்து ஒருவரை அனுப்பிவைத்தி ருந்தார்கள். மயக்க மருந்தை உட்கொள்ளாமல் அவரால் என்னை நெருங்கக் கூட முடியாது என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். நான் உணவுக்கு வரும் நேரம் அவர் என் மீது பாய்ந்து தாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் தப்பித்துக் கொண்டால் சிறையின் மணி ஒலிக்கச் செய்யப்பட்டுக் கலகம் நடக்கும் நிலைபோல உருவாக்கி என்னைப் போட்டுத்தள்ள முடிவு செய்திருந்தனர்.
தாக்குதல் நடத்த அவர் மறுத்தால் அவரைப் போட்டுத் தள்ளி விடுவார்கள் என்றும் தாக்குதல் நடத்தினால் வெளியிலுள்ள எனது ஆதரவாளர்கள் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவார் கள் என்றும் அவர் மிகவும் மனக்குழப்பத்தில் இருந்துள்ளார். நான் ஒரு தாதா என்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளின் மூளையாக இயங்கு பவன் என்றும் ஏற்கனவே சிறையில் கதைகள் பரப்பப்பட்டிருந்தன. இத்திட்டம் ஏனைய சிறைவாசிகளுக்குக் கசிந்தது மட்டுமல்லாமல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நபரும் பின்பு இவ்விடயத்தை என்னி டம் சொன்னார். எனவே சிறையதிகாரி கள் இத்திட்டத்தைக் கைவிட்டு விட்டு எனது உணவில் நஞ்சு கலப்பதற்கு முயன்றனர். அதுவும் வெற்றியளிக்க வில்லை.
இம்முயற்சிகள் குறித்து அமர்வு நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணை யத்திலும் புகார்களைப் பதிவு செய்திருந் தோம். நடை பெற்ற விசாரணைகளின் போது 'சிறைக்குள் கத்தி போன்ற ஆயு தங்கள் கொண்டு வர அனுமதி இல்லை" என்றும் இவ்வாறான சம்பவங்கள்
= SCD ඝLiගී ඝගdiගණ්

Page 64
90
நடக்க வாய்ப்பே இல்லையென்றும் சிறையதிகாரிகள் மறுத்தனர். திஹார் சிறைக்குள் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பது வெளி உலகுக்கும் தெரியும். சிறைக்குள் போதைப் பொருட்கள் முதல் கொடிய ஆயுதங்கள் வரை கொண்டு வரப்படும் போது பிளேடுகள் எம்மாத்திரம் ஒப்புக்கு ஒரு விசாரணையை நடத்தினார்கள். அவ்வளவு தான்!
இந்தக் குற்றங்களை மேற்கொண்டவர்களையிட்டு எந்த விதத் தேடல்களோ நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை. இம் மூன்று முறைகளும் என்னை அழிப்பதற்குத் திட்டமிட்டவர்கள் உளவுத் துறையினரே என்று நான் நம்புகிறேன். எனது நண்பர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் 2005, பெப்ர வரி 9ம் திகதி பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும் இதே பயத்தையே தெரிவித்தனர். இருந்தபோதும் பொதுமக்களின் மனோ நிலையறியும் எந்த வழிமுறையும் உளவுத் துறையினரிடம் கிடையாது.
நான் கைது செய்யப்பட்ட தினம் ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது. வீட்டிலிருந்து ஆட்டோ பிடித்துச் சற்றுத் தூரம் சென்று பள்ளிவாசலுக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸில் இரண்டு மூன்றுபேரே இருந்தார்கள். இருவர் அமரும் ஆசனமொன் றில் நான் அமர்ந்த சிறிது நேரத்தில் என்னருகில் ஒரு நபர் வந்து நின்றார். இன்னும் சற்று நேரத்துக்குப் பிறகு என்னைத் தள்ளி அமருமாறு கேட்டுக் கொண்டார். "நான் அடுத்த தரிப்பில் இறங்கிக் கொள்ளப் போகிறேன்; நீங்கள் உள்ளே சென்று அமருங்கள்” என்று அவருக்குச் சொன்னேன். தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்றும் அவர்களின் உயர் هی^ as A அதிகாரி என்னைச் சந்திக்க
விரும்புவதாகவும் சொல்லி
என்னை இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.
கீழே இறங்கியதும் பஸ்ஸைத் தொடர்ந்து வந்த வாகனத்தில் என்னை ஏற்றி
 
 
 

எனது இருபுறமும் இருவர், அமர்ந்தனர். நான் அணிந்தி ருந்த சட்டைப் பையைச் சோதனை செய்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்ட அவர்கள் (அந்தப் பணத்துக்குக்) காரைநிறுத்தி ஏதோ பொருட்களை வாங்கி னார்கள். அவர்கள் கொள்ளைக்காரர்களாக இருக்குமோ என்ற சந்தே கத்தில் "நீங்கள் தப்பான நபரைக் கைது செய்துள்ளீர்கள் வேண்டு மானால் எனது அடையாள அட்டையைப் பாருங்கள்" என்றேன். முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர், "நீங்கள் பேராசிரியர் என்பது எங்களுக் குத் தெரியும், நாங்கள் சரியான ஆளைத்தான் பிடித்திருக்கிறோம்" என்றார். பின்னர் எனது கண்களைக் கட்டி ஒரு பண்ணை வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு விசாரணைகள் எதுவும் நடத்தாமல் எனது ஆடை களைக் களைந்து என்னை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். தரையில் நிற்க வைத்தும் தொங்க விட்டும் கும்பல் கும்பலாக வந்து தாக்கினார்கள். மூக்கிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. மயங்கி விழப்போன என்னைத் தூக்கி நிறுத்திப் பாராளுமன்றத் தாக்குதலைத் திட்டமிட்டது நான்தான் என்று ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தி னார்கள்.
எங்கள் குழந்தைகளின் முன் எனது மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகச் சொல்லிப் பயமுறுத்தினர். எனது காஷ்மீர்-முஸ்லிம் பிறப்பைச் சொல்லிவசைமாரிபொழிந்த அவர்கள் எனது முக்த்தில் எச்சில்துப்பிஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். நீபாக்கிஸ்தான் உளவாளி; இந்தியாவின் எல்லாப்பிரச்சினைகளுக்கும் நீதான் சூத்திரதாரி' என்று அவமானப்படுத்தினார்கள்.
தரையில் அமரச் செய்வது, பழைய செருப்புக்களின் மேல் படுக்கச் செய்வது, காஷ்மீர் மக்களைத் தரக்குறைவாக ஏசுவது போன்ற அக்கிரமங்களை எனக்குச் செய்தார்கள். கடும் குளிர்காலம் எனத்
ஒரு குடம் கணினி

Page 65
92
தெரிந்ததும் நான் அணிந்திருந்த மேல் கோர்ட், காலணி ஆகியவற்றைப்பிடுங்கி அவற்றை நார் நாராகக் கிழித்து வீசினார்கள்.
நீதிமன்றக் காவலில் நான்திகார்ச் சிறையில் இருந்த போது பயங்கர நாற்றமும் முழுக்க இருட்டுமான ஓர் அறைக்குள் என்னை உள்ளே விட்டுக் காவலர் ஒருவர் இப்படிச் சொன்னார்:-
"இதுதான்மக்பூல் பட் அடைக்கப்பட்ட அறை. அதோ அந்த இடத்தில்தான் அவர் தூக்கிலிடப்பட்டார். அதற்குப் பக்கத்தில்தான் அவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரும் காஷ்மீரைப் பற்றி நிறையப் பேசினார். இதில் உங்களுக்கும் படிப்பினை உண்டு. அந்த அனுபவம் உங்களுக்கும் வேண்டுமா?"
நீதிமன்றங்களோடும் பொலிசாரோடும் அருகிலிருந்து செயல்படும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் இருந்த போதும் பொலிஸார் அவற்றை அத்துமீறி வழக்கொன்றைக் கொண்டு நடத்துவதுதான் மிகவும் சங்கடத்துக்குரிய விடயமாகும். எடுத்துக் காட்டாகப் பொலிஸ் போலியான எனது கைதுச் சான்றிழைச் சமர்ப் பித்தது. எனது கைது சம்பந்தமாகப் பொய்ச் சத்தியம் செய்தது. ஒரு சட்டத்தரணியின் உதவியைப் பெற நான் மறுக்கப்பட்டேன். எனது கைது மற்றும் தடுத்து வைப்பு ஆகியவற்றில் மிக மோசமானமுறையில் எனது சட்ட உரிமை மீறப்பட்டது. எனது பிள்ளைகளையும் கைது
1938 பெப்ரவரி 18ம் திகதி பிறந்த மக்பூல் பட்ஜம்மு காஷ்மீர் தேசிய விடுதலை அமைப்பை ஆரம்பித்தவர். உருது மொழியில் பட்டதாரியான இவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் 1984 பெப்ரவரி 11ம் திகதி தூக்கிலிடப் பட்டார். 1968 ம் ஆண்டில் பூரீநகர் சிறைக்குள்ளால் சுரங்கம் தோண்டிப் பாக்கிஸ்தானுக்குத் தப்பிச் சென்றவர். இந்தியாவின் Fokker விமானத்தை பாக்கிஸ்தானுக்குக் கடத்திச் செல்லத்திட்டமிட்டவர் என்று சொல்லப்படுகிறது. கடத்தலின் பின் கடத்தியவர்கள் தாம் மேற்படி இயக்கத்துடன் இணைந்துள்ள தாகத் தெரிவித்திருந்தனர். நடைபெற்ற கொலையில் மக்பூல் ஈடுபட்டிக்க வில்லையெனினும் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற அடிப்படையிலேயே தூக்குத் தண்டனையளிக்கப்பட்டது.
ඊlබද්jශී) சிஹாப்தீன்:
 

93
செய்து பல தினங்கள் தடுப்புக் காவலில் வைத்தார்கள். குற்றவியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் சிதைக்கப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
டெல்லி உயர் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது உண்மை. ஆனால் கீழ் நிதிமன்றத்துக்கு எவ்விதக் கண்டனத்தையும் அது தெரிவிக்கவில்லை. பொலிஸார் போலி ஆவணங்களைத் தயாரித் திருந்ததையும் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டிருந்ததையும் உயர்நீதி மன்றம் கவனத்தில் கொண்டது. ஆனால் ஓர் அப்பாவி மனிதனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியமைக்காக அவர்கள் தண்டிக்கப்பட வில்லை. எனது விடுதலையின் பின்னணியில் நான் நீதித்துறை குறித்து விமர்சித்ததைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பியிருக்க வில்லை என்பதை நான் அறிவேன்.
உயர் நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்கள் சொல்லக் கூடும். இதுவரை அதன் அறிக் கையை நான் வாசிக்கவில்லை. வழக்குத் தொடுத்தல் குறித்தும் கீழ் நீதி மன்றம் குறித்தும் பொலிஸார் குறித்தும் அதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.
இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் காஷ்மீரிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது உண்மையானது. குற்றஞ்சாட்டப்பட்ட பலர் திஹார் சிறையில் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர் களில் சிலருக்கு இன்னும் குற்றப் பத்திரம் கூட வழங்கப்பட வில்லை. பலர் விசாரணைக்காக நீண்ட காலமாகக் காத்திருக் கிறார்கள். அவர்களுக்கு ஒரு சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ளும் உரிமை கூட மறுக்கப்பட்டிருக்கிறது. எனது வழக்குடன் சம்பந்தப் பட்ட முகமட் அப்ஸலுக் குக் கூட முறையான சட்ட

Page 66
94
உதவிபெற வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒரு முறையான திருப்திகரமான சட்ட விசார ணை இல்லாமல் எவ்வாறு ஒருமனிதனுக்கு ஆயுட்காலத் தண்டனையோ மரண தண்ட னையோ வழங்க முடியும்? தனது அன்புக் குரிய முதலாவது குழந்தையை சிறையில் பெற்றெடுத்த அப்ஸான்குருவின் உடல்நலம் பேண யார் வசதி வாய்ப்பளிப்பார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகான விடு தலை ஒரு குடும்பத்தை நடத்திச் செல்லும் கனவை நனவாக்கிவிடாது. அவரது கணவர் சிறையில் இருக்கிறார். அவரது புதல்வன் பெற்றோரற்ற நிலையில் வளர்ந்து சமூகத்தை எப்படி எதிர் கொள்வான் என்பதை நம்மால்
கற்பனை செய்து பார்க்க முடிகிறதுதானே!
சிறையில் இருக்கும் காஷ்மீர் மாணவர்களில் இன்னும் குற்றப்பத்திரம் கொடுக்கப்படாமல் இருப்பவர்களும் விடுவிக்கப் பட்டவர்களும் விடுதலைக்குப் பின்னர் மீண்டும் தங்களது கல்வி நிலையங்களுக்குத் திரும்ப முடியாது. அவர்களது தொழில் குறித்த எதிர்காலம் நொறுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக அமைப்புக்களைப் பாதுகாப்பதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். எனது அனுபவத்தில் துரதிர்ஷ்டமாக ஊடகம் சுதந்திரமாக இல்லை என்று உணர்கிறேன். இணைந்த செயற்பாட் டையும் தன்னிலைத் தணிக்கை வெளிப்பாட்டையும் கொண்டவை யாக அவை எவ்வளவு காலத்துக்குச் செயற்படப்போகின்றன என்று தெரியவில்லை. காஷ்மீர் மக்களின் துயரங்களைப் பரவலான தளங்
2ே001 டிஸம்பரில் நடந்த இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்கள் என்ற அடிப்படையில் கலாநிதி செய்யித் அப்துல் ரஹற்மான் கீலானியுடன் கைது செய்யப்பட்டவர்கள் முகம்மது அப்ஸல் என்ற அப்ஸல் குரு, அவரது உறவினரான செளகத்ஹ"ஸைன் குரு மற்றும் அவரது மனைவி அஃப்ஸான் குரு ஆகியயோர்.)
ඊ|තළීJශී.) சிஹாப்தீன்
 

95 களுக்கு எடுத்துச் செல்வதில் பாரிய பொறுப்பினை ஊடகங்கள் கொண்டிருக்கின்றன என்று நம்புகிறேன். காஷ்மீர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுக்குச் சார்பானவர்கள் என்ற ஒரு தோற்றத்தையே
அவை உருவாக்கி வைத்திருக்கின்றன.
நான் கைது செய்யப்பட்ட சில தினங்களில் எனக்கெதிரான அபாயகரமான ஒரு பிரச்சாரத்தைப் பொலிஸார் ஊடகங்களின் துணையுடன் மேற்கொண்டார்கள். நீதி மன்றத்தில் பொலிஸார் செயற்பட்டதை விடவும் மோசமாக - தகவல்களை மட்டும் வைத்து 'ளி தொலைக்காட்சி ஒரு படத்தையே தயாரித்திருந்தது.
உளவுத்துறை தரும் தகவல்களை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. தங்களது தலைப்புச் செய்திகளில் பாராளுமன்றத் தாக்குதலில் நான்தான் மூளையாகச் செயற்பட்டேன் என்றும் என்னைப் பல்கலைக் கழக தாதா என்றும் அவை வர்ணித்திருந்தன. பொறுப்புள்ள பத்திரிகை என்று உரிமை கொண்டாடும் "த ஹிந்து' இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் முன்னிலையில் இருந்தது. ஒர் இந்தி மொழிப் பத்திரிகை லண்டன் முதல் அலிகார் வரையிலான தீவிரவாத சங்கிலித் தொடரின் மூளையே இவர்தான்' என்று எழுதி யது. நீதி மன்றம் வந்து திரும்பும் போது பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அவகாசம் வழங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்த வழக்கில் நாங்கள் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டுள்ளோம். நீங்களாவது உண்மை நிலையை விசாரியுங்கள்’ என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை.
என்மீதான கொலை முயற்சிக்குப் பின்னரும் நான் பொலி ஸுக்கு வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று ஊடகங்கள் என் மீது தாக்குதல் நடத்தின. எனது காயங்கள் மருந்திடப்படாத நிலையில், எனது உடம்பெங்கும் பல்வேறு குழாய்கள் பொருத்தப் பட்ட நிலை யில், ஒரு சொட்டுத் தண்ணிர் அருந்த முடியாத நிலையில் அப்போது நான் இருந்தேன். நான் வேண்டுமென்றே வாக்குமூலமளிப்பதைத் தவிர்க்கிறேன் என்ற விதத்தில் அவர்கள் எழுதினார்கள்.
வைத்தியர்கள் ஒத்துழைக்காத நிலையில் டில்லி நிர்வாகம் மற்றொரு வைத்தியர் குழுவை என்னை மீண்டும் பரிசோதிக்க
ஒரு குடம் கணினி

Page 67
96
அனுப்பியது. அதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் இருந்தார். என்னை இழிவுபடுத்தும் வகையிலான பரிசோதனை நடந்த போதும் அந்த வைத்தியர்கள் நான் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கான உடல் நிலையில் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
வாக்குமூலம் கொடுத்த பின்னர் என்னைத் தாக்கியது விசேட அணி என்று நான் நம்புவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். என்னை மீண்டும் குற்றம் சுமத்தத் தயாராகினார்கள். எனது கணினியின் இதயப் பகுதியை அவர்கள் எடுத்துச் சென்று பரிசோதனைக்காக அஹமதா பாத்துக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து எவ்விதமான அறிக்கை வந்த தென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடந்த காலத்தில் என்னை அழிப்பதற்கு முயன்ற பொலிஸாரோ உளவுத் துறையினரோ என்னை மற்றொரு வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்யலாம் என்று பயந்தேன். பொலிஸாரதும் தகவல்களதும் அடிப்படையில் நான்தாக்கப்பட்டது குறித்துப் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. பின்னர் இதைத் திட்டமிட்டவர்கள் யார் என்பது பற்றித் தேடிக் கொண்டிருந்தன. அண்மையில் ஒரு பத்திரிகையில் என் மீதான தாக்குதல் சோட்டா ராஜன் என்கிற தாதாவினாலும் உளவுத் துறையினாலும் நடத்தப் பட்டதாகச் செய்தி வந்தது.
உண்மைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக ஊடகங்கள் என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தம்பாட்டுக்குக் குற்றச் சாட்டுக்களைத் தெரிவித்து வந்தன. நான் அவர்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் எனது விடயத்தில் சரியாக நடந்து கொண்டீர்களா என்பதைத்தான்.
நாம் எல்லோரும் வரலாற்றின் ஒவ்வொரு
பகுதிதான். மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கப் பயன்பட்டு வந்த ஒர் ஆசிரிய னான என்னை அரசு அதன் அரசியல் நோக் கங்களுக்கான கருவியாக்குவதற்கு முயன் றது. அதை எதிர்த்துப் போராடவில்லை
அஷ்ரஃப் சிஹாப்தீன்:
 

97
யென்றால் ஒருவேளை அந்தக் கருவியா கவே நான் மாறியிருப்பேன். அரச பயங் கரவாதத்தின் பிடியில் சிக்கியும் அஞ்சா மல் அதனைத் துணிச்சலோடு எதிர் கொண்ட ஒரு குடிமகன் என்ற வகையில் எனக்குப் புகழும் மரியாதையும் கிடைத் துள்ளன.
'ஜீலானி என்பது எப்போதா வது நிகழ்கிற ஒர் அபூர்வ சம்பவமோ அல்லது எதேச்சையாக நிகழ்ந்து விட்ட ஒரு தவறோ அல்ல. இதுபோன்ற அனு பவங்களை அரசு உருவாக்கிக் கொண்டே யிருக்கும் போது அதனை எதிர்த்துப் போராடி நம்மில் எத்தனை பேர் சத்தியத்தை நிலைநாட்டுகிறோம் என்பதே கேள்வி. ஆனால் ஒன்று மட்டும் உறுதியானது. அரசு அல்ல; மனிதனே பிரதானம். வரலாறு, அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் அதுவே மிகப் பெரும் உண்மை. அப்படிப்பட்ட உண்மைக்கு வலுச் சேர்க்க எனது அனுபவங்கள் உங்களுக்கும் பயன்படுமென்றால் அதுதான் எனக்குப் புகழ்.
எனது விடுதலைக்காக ஆதரவு வழங்கிய பலநூறு ஆண்கள் பெண்களைப் பற்றி எண்ணும் போது நான் உணர்வு மேலிட்டினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகிறேன். ஆசிரியர்கள், மாணவர்கள், குடி யுரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடு தழுவிய அளவில் இந்திய மக்கள் எனக்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். பலரிடமிருந்து வாழ்த்
துக்களும் பிரார்த்தனைகளும் மகிழ்ச்சிகளும் தெரிவித்த பல நூறு
கடிதங்கள் எனக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஜனநாயகத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்ற உண்மையைப் பிரதிபலிக்கும் நாடளாவிய ரீதியில் மக்களை அடைவதற்கு இடையிலுள்ளதப்பபிப் பிராயம், வெறுப்பு ஆகிய தடைகளைப் பாதுகாப்புக் குழு உடைத் தெறிய வேண்டும்.
ஒரு சிறு அளவிலான பிரஜைகள் குழு ஒன்றிணைந்து
ஒரு குடம் கண்ணீர்

Page 68
98
என்னைப் பாதுகாத்து எனது விடுதலைக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அவர்களில் பலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆண்களும் பெண்களுமாக இவர்கள் போராடியது ஒரு தனி மனிதனின் விடுதலைக்காக அல்ல. மாறாக இந்திய ஜனநாயகத் தைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவின் பிரதம நீதியரசருக்கு டில்லி பல்கலைக் கழக ஆசிரியர்களும் ஜவஹர்லால் பல்கலைக் கழக ஆசிரியர்களும் இணைந்து எனது விடயத்தில் நியாயமான விசாரணை இடம்பெறவில்லை என்று திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
நான் சொன்னதைப் போல எனது விடுதலைக்கான அவர் களது போராட்டமானது ஜனநாயக விழுமியங்களையும் நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அவர்களது அக்கறையுமாகும். அவர்களில் பலர் எனது நட்புக்குரியவர்களாகவும் ஆறுதலையும் அன்பையும் வழங்கியவர்களாகவும் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஒவ் வொருவருக்கும் மனந்திறந்த எனது நன்றிகளைச் சொல்ல விரும்பு கிறேன்.
பலர் எனது விடுதலைக்காக நம்பிக்கையுடன் பிரார்த்தனை யில் ஈடுபட்டதை நான் அறிவேன். கீழ் நீதிமன்றம் எனக்கும் அப்ஸலுக் கும் செளகத்துக்கும் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கியதும் காஷ்மீர் மக்கள் மூன்றுநாள் கடையடைப்பை (பந்த்) நடத்தினார்கள். அது காஷ்மீரிகளுக்குக் காஷ்மீரிகள் தெரிவிக்கும் ஆதரவின் அடையாள மாக அமைந்தது. பராமுல்லாஹற் மக்கள் எனக்களித்த வரவேற்பு என்னை நெகிழச் செய்தது.
Sas தனது அங்கத்தவர்களில் சில ருக்கு எனது அரசியல் நிலைப் பாட்டில் உடன்பாடு இல்லாத போதும் எனது விடுதலைக்கான ஆதரவை நல்கியமைக் காகப் பாதுகாப்புக் குழுவுக்கு நன்றி களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்புக் குழு எனக்குரிய சாட்சியங் களை ஏற்பாடு செய்வதிலும் இந்த விடயத்தை முழு இந்தியாவும் அறியச்
 

99
தெருக்களில் ஆறாய்ப் பெருகி ஓடும் காஷ்மீரிகளின் இரத்தம்
செய்வதிலும் பெரும் பங்கு வகித்தது.
எனது விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னரேயே எனது கல்விச் சேவையை மாற்றியமைக்க முனைந்த பாஸிஸ் சக்திகளுக்கு எதிராகப் போராடிய டில்லி பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களுக்கும் தத்தமது ஆசியரியர் சங்கங்கள் மூலம் எனது விடுதலைக்காகப் போராடிய ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். என் மீதான கொலை முயற்சியைக் கண்டித்து டெல்லி பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஒரு நாள் பந்த் நடத்தினார்கள். அவர்களுக்கும் எனது கைது நடந்தது முதல் எனக்காகச் செயற்பட்ட மாணவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். எனது கல்லூரியின் ஆசிரியர்கள் அல்லாத அன்புக்குரிய ஊழியர்கள் பல வழிகளில் எனக்கு உறுதுணையாயிருந்துள்ளனர்.
ஜவஹர்லால் பல்கலைக்கழகம் உட்பட எனது விடுதலைக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அகில வங்காளப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா ஆசிரியர்கள் ஆகியோருக்கு
= ඉdB ආu_I5 ඝගද්ග)

Page 69
100
நன்றி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக நான் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான போது இரத்தம் கொடுத்த மாணவர்களுக்கு எனது விசேட நன்றிகள்.
அநியாயம், சித்திரவதை, கொடுமைகள் ஆகியன நிறைந்த சிறையுலகில் தங்களது மனிதாபிமானத்தைத் தக்க வைத்திருக்கும் திஹார் சிறையிலுள்ள எனது நண்பர்களை நான் மறக்கவில்லை. பலர் தங்களது வாழ்க்கையைப் பணயம் வைத்து என்னைக் கொலைத் தாக்கு தல்களிலிருந்து பாதுகாத்துள்ளனர். அவர்கள் எனக்கு ஆறுதலும் அரவணைப்பும் தந்தவர்கள். உயர்நீதிமன்றம் என்னை விடுவித்ததும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு உதவுவதாக நான் வாக்களித்திருக்கிறேன். அற்புதமான நண்பர்களைக் கொண்ட ஒரு குழுவினர் எனது வாக்கைக் காப்பாற்றுமுகமாக எனக்கு உதவியிருக்கின்றனர். நாம் சிறைவாசிகள் மற்றும் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களின் உரிமைக்கான அமைப்பொன்றினைப் பதிவு செய்திருக்கிறோம்.
திரு.ராம் ஜெத்மலானி, காமினி ஜெய்ஸ்வால், என்.டி. பஞ்சோலி ஆகிய சட்டத்தரணிகள் இன்றேல் எனது விடுதலை சாத்திய மாகியிருக்காது. உயர்நீதிமன்றங்களுக்குச் சென்ற பின்னர்தான் எங்க ளுக்கு வழக்கறிஞர்கள் கிடைத்தார்கள். சிறந்த வழக்கறிஞர் என்றால் அதிகம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எம்மிடம் அவ்வளவு பணம் கிடையாது. மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எனக்காக இலவசமாகவே வாதாடினார். என்னை ஜாமீனில் எடுக்கப் போவதாக அவர் அறிவித்த மறு கணமே அவரது டில்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் தாக்கப் பட்டன.
வைத்தியர்களும் வைத்தியக் குழுவும் இன்றேல் நான் உயிரு டன் இருந்திருக்க மாட்டேன். அத்துடன் எனது நண்பர் குமார் சஞ்ஜய் சிங் மற்றும் எனது சட்டத்தரணி நந்திதா ஹக்ஸர் அவரது கணவர் செபஸ்டியன் ஹொங்ரே ஆகியோருக்கும் நன்றிகள்.
நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி. எனது குடும்பம் என்னு டன் நின்றது. நான் தடுப்புக்காவலில் இருந்த போது என்னை நான் நல்லுணர்வுடன் வைத்திருக்க எனது இரு பிள்ளைகள் நுஸ்ரத், ஆத்திப் ඌlකf|&l éකplණීහ්"|

101
ஆகியோர் உதவியிருக்கிறார்கள். அவர்களைச் சரியாகப் பாதுகாப்ப தற்காக உண்மை, ஜனநாயகம், நீதி ஆகியவற்றுக்காகப் போராட வேண்டியிருக்கிறது. நாம் ஒன்றாக உழைக்கும் போது ஒரு நல்ல உலகு உருவாகும்.
சித்திரவதைகளும் அழுத்தங்களும் என்மீது பிரயோகிக் கப்பட்ட போதும் எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதும் எனக்கு நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கையை ஓர் உருதுக் கவிதை எனக்கு வழங்கியது. 'சிப்பிக்குள் வாழ விரும்பாத நீர்த்துளி ஒரு போதும் முத்தாக மாற முடியாது’ என்பதே அந்தக் கவிதை.
நன்றி.
revolutionarydemocracy.org
Saadat.in
wikipedia.org The Bare Life of S.A.R Geelani, Ph.D.
- Ananya Vajpeyi (sacw.net)
ஜனாப். ஜாபர் சாதிக் பாக்கவி மாத்யமம் - சமநிலைச் சமுதாயம் - ஆகஸ்ட் -08
(ஜீலானி அவர்களின் அறிக்கையுடன் அவர் வழங்கிய பேட்டித் தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.)
|@abéLಹಿ ಹfಹಕೆ

Page 70
வியட்னாம் விருந்து
1960ம் ஆண்டு ஏப்ரல் 18ம் திகதிசைகொன் வீதியில் நான் கைது செய்யப்பட்டேன். கைது செய்தவர்கள் அமெரிக்கப் பாதுகாப்புப் படைப் பொலீஸார். காரணம், எனது போராட்டச் செயற்பாடுகள்.
ச்சோ லொன் என்ற இடத்திலிருந்த பா ஹொவா நிலையம் என்று அழைக்கப்படும் கொமாண்டோ நிலையம் ஒன்றுக்கு என்னை எடுத்துச் சென்றார்கள். அங்கு கொண்டு சென்ற அடுத்த நிமிடத்தில் அவர்களே விசாரணைகளை ஆரம்பித்தார்கள். போராளிகளுடனான எனது தொடர்பு பற்றி அவர்கள் கேட்டார்கள். நான் இக்கேள்வி களுக்குப் பதில் சொல்லவில்லை. எனவே சித்திரவதையை ஆரம்பித் தார்கள். வியட்னாமியர்களால் கொமாண்டோக்கள் என அழைக்கப் படும் அவர்கள் மதுசாரத்தை முகர வைத்தனர். பின்னர் என்னை வெறி மிகுந்த குரலில் சத்தமிட்டபடி அடிக்க ஆரம்பித்தனர்.
எனது இரு கரங்களையும் பின்னால் வைத்துக் கட்டியிருந்தனர். எனது மணிக் கட்டில் கயிற்றால் கட்டி முகட்டு வளையில் உயர இழுத்து உயர்த்தினார்கள். அதன் பின்னர் தடிகளால் அடிக்க ஆரம் பித்தார்கள். நான் மயங்கிவிடும் தறுவாயில் அடிப்பது நிறுத்தப்படும். மயங்கியதும் கீழே இறக்கி எடுத்து என் முகத்தில் குளிர்ந்த நீரை வாரி அடிப்பார்கள். மெதுவாக எனக்கு நினைவு திரும்பும். மீண்டும் வினாக் கள் ஆரம்பமாகும். நான் அமைதி காப்பேன். அவர்கள் சீற்றமடைய மீண்டும் நான் மேலே உயர்த்தப்படுவேன். இவ்வாறு பல முறை இடம் அஷ்ரஃப் சிஹாப்தீனி

103
பெற்றது. எத்தனை முறை என்பது எனக்கு ஞாபகம் இல்லை. இந்த விசாரணைக்கு டகோட்டா சவாரி” என்று பெயரிட்டிருந்தனர்.
எனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. முழு உடம்பும் தாங்க முடியாத வருத்தம் உண்டானது. ஒரு சிறிய அசைவையும் தாங்க முடியாத நோவினால் அவதிப்பட்ட நிலையில் எந்நேரமும் மயங்கி விழலாம் என்ற கட்டத்தை அடைந்திருந்தேன்.
ஒரு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் "நீர்மூழ்கிச் சவாரி"யை ஆரம்பித்தார்கள்.
என்னை முழு நிர்வாணமாக்கிய பின் முதுகுப் புறமாக ஒரு பலகையுடன் இணைத்துக் கட்டினார்கள். எனது தலையைப் பலகை யுடன் இணைத்துக் கட்ட ஒரு துவாய் பயன்படுத்தப்பட்டது. 200 லீற்றர் கொள்ளக் கூடிய ஒரு நீர்த்தாங்கிக்குக் கீழ் அமைந்திருந்த ஒரு கம்பத்தின் கீழ் என்னை நிறுத்தி வைத்தனர். நீர்த்தாங்கியிலிருந்து நீண்டிருந்த சிறிய குழாயிலிருந்து துளித் துளியாக நீர் என் தலைக்கு விழும். துவாய் முழுவதும் நனைந்து நீர் மூக்கு நுனியினால் வடியும். மூக்கினாலோவாயினாலோ நான் சுவாசிப்பதாயின் அந்நீரை விழுங்கி யாக வேண்டும். நான் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டேன். எனது வயிறு நீரால் நிரம்பி ஒரு பலூனைப் போல ஊதிப் பெருத்து விட்டது. நான் மயங்கிப் போனேன். கண்விழித்த போது இரண்டு கொமாண்டோக்கள் இரத்த வெறியுடன் என்னருகே நின்றிருப்பதைக் கண்டேன். எனது நெஞ்சிலும் வயிற்றிலும் அவர்கள் மாறிமாறி மிதித் தார்கள். எனது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் நீர் வெளியேறியது. ஆனால் அதில் இரத்தம் கலந்திருந்தது. வயிறும் நெஞ்சும் சொல்லில் விளக்க முடியாத அளவு நோவு எடுத்தது. எனது குடல்களையெல் லாம் புரட்டிப் போட்டதைப் போன்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து உயர் அதிகாரி "இவனுக்கு இன்னொரு உணவு கொடுங்கள்" என்று சொன்னான். அங்கு நின்றிருந்த இராணு வத்தினர் நான்கு திசைகளிலும் நின்று நடுவே என்னை நிறுத்தித் தடிகளால் அடிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் பந்தை ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் உதைப்பதைப் போல ஒவ்வொரு வரும் என்னை எட்டி உதைத்து விளையாடினார்கள். என்னை அவமானப்படுத்தும் Hஒரு குடம் கணினி

Page 71
104
விதமான வார்த்தைப் பிரயோகங்களைச் சத்தமிட்டுச் சொன்னார்கள். என்னுடைய தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. இரத்தம் உடலின் நாலா புறமும் வழிந்தோடியது. அடிப்பதை நிறுத்தி விட்டு எனது தலை மயிர்களை மழித்து மருந்திட்டுக் கட்டினார்கள்.
பின்னர் அச்சுறுத்தும் விடயங்களையும் நம்ப முடியாத விடயங்களையும் பரிவான பாஷையில் பேச ஆரம்பித்தனர். "பேசு. அப்போதுதான் உனது பிள்ளைகளை உன்னால் பார்க்க முடியும். இல்லையெனில் நீசெத்துப் போவாய். உனது பிள்ளைகள் அநாதை யாகி விடும்.", "பேசு. இல்லையெனில் உனது மருந்துச் சாலை யையும் உனது சொத்துக்களையும் நீ இழந்து விடுவாய். சகலதும் அழிக்கப்படும்", "பேசு. இல்லாவிடின் நீ சாகும் வரை உன்னைச் சித்திரவதை செய்வோம். தற்செயலாக நீ பிழைத்துக் கொண்டாலும் நீநடைப் பிணமாகவே இருப்பாய்." அவர்களது எந்த வார்த்தையும் என்னில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆத்திரத்தின் உச்சத்தில் பெரும் சத்தமிட்டபடி என்னைத் தூக்கிமுகம் குப்புற விழுமாறு நிலத்தில் வீசி எறிந்தார்கள்.
என்னைத் தரையில் கிடத்தி இரண்டு கால்களையும் இருவர் உயர்த்திப் பிடித்து முறுக்கினார்கள். பின்னர் ஒரு குண்டாந்தடியால் எனது பாதங்களில் அடிக்க ஆரம்பித்தார்கள். இத்தாக்குதலின் பின்னர் எனது கால்கள் இரண்டும் மிகப் பெரிதாக வீங்கிவிட்டன. எனது காற் பாதங்கள் நெருப்பில் எரிந்து போனது போல உணர்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து எனது கைகளைப் புள்ளடி முறையில் வைத்து யன்னல் கம்பிகளில் விலங்கிட்டார்கள். எனது கால்களின் கட்டைவிரல்கள் மாத்திரமே நிலத்தைத் தொட்டபடி இருந்தது. அந்த நிலையில் கைகளிலும் கால்களிலும் தாக்கினார்கள். எனது கைகள் குளிர்ச்சியடைந்து உணர்விழந்தன. ஆயினும் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் என்னிடமிருந்து வெளிவரவில்லை. எனவே என்னை எடுத்துச் சென்று ஒர் அறையில் போட்டு மாறி மாறி உதைத்தார்கள். இரத்தம் நிலத்தில் ஆறாகப் பரவியது. நான் மயங்கி விட்டேன்.
நினைவு திரும்பியதும் மீண்டும் பரிவான வார்த்தைகளால் எச்சரிக்கத் தொடங்கினார்கள். ஏனைய கைதிகளை விட்டு என்னை
ඊlකදී]]&f சிஹாப்தீன்:

105
பலங் கொண்ட மட்டும் தாக்குமாறு கேட்டார்கள். ஆனால் கைதிகள் எவரும் அதற்கு முன்வரவில்லை. எனவே அந்தக் கைதிகளை அடிக்கத் தொடங்கினார்கள். அந்த இடத்தில் ஆகக் குறைந்த மனிதாபிமானத் துக்குக் கூட இடமிருக்கவில்லை.
"அதி சிறந்த உணவு” எனக்குப் பரிமாறப்படும் என்று சொல்லி என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த காக்கி மரத்தில் என்னைப் பிணைத்தார்கள். அம்மரம் இருந்த இடத்துக்கு அருகில் கூண்டுக்குள் இரண்டு சிங்கங்கள் கர்ச்சித்தபடி இருந்தன. தென் வியட்னாமில் காக்கி மரம் சுவையான பழங்களுக்குப் பெயர் போனது. ஆனால் அம்மரம் நிறைய எப்போதும் சிவப்பு நிற எறும்பு கள் குடிகொண்டிருக்கும். இந்த எறும்புகளில் ஒன்று கடித்தாலே நாம் அலற வேண்டியிருக்கும். அது கடித்த இடம் உடனுக்குடன் தடித் தெழும்பும். ஒரு புறம் இந்த எறும்புகள். மறுபுறம் கர்ச்சித்தபடி என்னை நோக்கியிருக்கும் சிங்கங்கள். இன்னொரு புறம் கோபத் துடன் சத்தமிடும் அதிகாரிகள். மிகக் கொடுமை நிறைந்த அனுபவம் அது. ஆனால் அவர்களால் எதையும் என்னிடமிருந்து கறந்து கொள்ள முடியவில்லை.
அவர்கள் மீண்டும் பலங்கொண்ட மட்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்:- "நீ வாய் திறக்காவிட்டால் உனது கண்களுக்கு முன்னாலேயே உனது பிள்ளைகளைச் சித்திரவதை செய்வோம். உனது சகோதர சகோதரிகள் உனது பெற்றோர் யாவரும் சிறையிலிடப் படுவார்கள். உனது குடும்பம் அழித்தொழிக்கப்படும். உனது மருந்துச் சாலை உன்னிடமிருந்து பிடுங்கப்படும்.”
அதிகாலை ஆறு மணிக்கு என்னை ஒரு கூண்டுக்குள் வீசி எறிந்தார்கள். நான் எழுந்து நிற்பதற்கு முயற்சித்தேன். ஆனால் நான் அந்தக் குளிர் மிகுந்த தரையில் சுருண்டு விழுந்தேன்.
(டென்மார்க்கில் நடைபெற்ற இரண்டாவது நீதி விசாரணையில் பாம் தி யென் அளித்த வாக்கு மூலத்திலிருந்து)
= ஒரு குடம் கணிரீைர்

Page 72
பிறந்த நாட்டைத் துறந்தவன்
எனது பெயர் மாஹிர் அரார். நான் சிரியாவில் பிறந்தவன். எனது குடும்பம் கனடாவுக்குக் குடிபெயர்ந்த போது எனக்கு வயது 17. கனடியப் பிரஜாவுரிமை 1991ம் ஆண்டு எனக்குக் கிடைத்தது. மெக்கில் பல்கலைக்கழகத்தில் தொலைத் தொடர்புத் துறையில் கற்று முதுமாணிப் பட்டம் பெற்றேன். பல்கலைக் கழகத்தில்தான் நான் மோனியா மஸிஹைச் சந்தித்தேன். 1994ம் ஆண்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். 1997ம் ஆண்டு எங்களுக்கு ஒரு பெண்குழந்தை கிடைத்தது. அவளுக்கு ஃபாரா என்று பெயரிட்டோம்.
அதே ஆண்டில் ஒட்டாவாவிலிருந்து மொன்றியலுக்கு இடம் பெயர்ந்தோம். 1999ம் ஆண்டு பொஸ்டனில் உள்ள மிகப் பெரும் தொலைத் தொடர்பு நிறுவனமான "த மெத் வேர்க்ஸ்' கம்பனியில் எனக்குத் தொழில் கிடைத்தது. தொழில் ரீதியாக அடிக்கடி எனக்கு அமெரிக்காவுக்குப் போகவேண்டியிருந்தது. 2001ம் ஆண்டு மீண்டும் நாங்கள் ஒட்டாவா திரும்பினோம். அங்கு தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். பெப்ரவரி 2002ல் எமக்கு இரண்டாவது குழந்தை கிடைத்தது. அவளுக்கு ஹூத்" என்று பெயரிட்டோம்.
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 
 

107
நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக, ஒரு நல்ல பிரஜையாக வாழ்ந்தவன். பொலிஸுக்குச் செல்லுமளவு எந்தப் பிரச்சினையிலும் நான் ஈடுபட்டது கிடையாது. ஆனால் நடைபெற்றவைகளை நினைத்துப் பார்க்கும் போது என்னால் இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறது.
2002ம் ஆண்டு எனது ஓய்வு நாட்களைக் கழிப்பதற்காக நான் குடும்ப சகிதம் டியூனிஸியா சென்றிருந்தேன். த மெத் வேர்க்ஸ்’ நிறுவ னத்திலிருந்து என்னை அவசரமாக வந்து சில வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி அழைப்பு வந்தது. எனவே மனைவி குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு ஸலிரிச்வந்து நியூயோர்க் திரும்பிக் கொண்டிருந்தேன். அமெரிக்கன் எயார்லைன்ஸில் எனது விமானப் பயணம் ஸுஜூரிச்சிலிருந்து நியூயோர்க்கின் ஜே.எப்.கென்னடி விமான நிலையத்தினூடாகக் கனடாவின் மொன்றியல் செல்லும் வகையில் அமைந்திருந்தது.
2002.09.26ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நான் ஜே.எப். கென்னடி விமான நிலையத்துக்கு வந்து குடியகல்வு நடவடிக்கை களுக்கான வரிசையில் இணைந்தேன். எனது கடவுச் சீட்டுக் கணனி யில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அதிகாரி களால் வேறு ஒரு பக்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். இரண்டு மணித்தியாலங்களின் பின் எனது கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்து என்னைப் புகைப்படம் எடுத்தனர். இது வழமையான நடை முறைதான் என்று வேறு எனக்குச் சொன்னார்கள். விமான நிலையப் பொலிஸார் எனது பைகளைச் சோதனை செய்தனர். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்ட போது அவர்கள் எந்தப் பதிலும் கூற வில்லை. ஒரு தொலைபேசி அழைப்பை எடுப்பதற்குக் கூட அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை.
பின்னர் அமெரிக்கப் பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் எப்.பி.ஐ அதிகாரிகளும் வந்து, என்னை விசாரிக்க வேண்டியிருப்ப தாகவும் அது முடிவடைந்ததும் மொன்றியல் செல்லும் விமானத்தில் பயணத்தைத் தொடர அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே ஒரு சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ள அனுமதி கேட்டேன். நான்
ஒரு குடe கணினி

Page 73
108
அமெரிக்கப் பிரஜையாக இல்லாத காரணத்தால் அதற்குரிய உரிமை எனக்குக் கிடையாது என்று பதிலளித்தார்கள். நள்ளிரவு வரை மிகக் கடுமையான விசாரணை நடைபெற்றது. எனது தொழில், எனது சம்பளம், அமெரிக்காவில் எனது பயணங்கள், எனது நண்பர்கள் எனக் கேள்விகளால் என்னைத் துளைத்தெடுத்தனர்.
அப்துல்லாஹ் அல் மலிகி பற்றி விசேடமாக என்னிடம் கேட்டார்கள். அவரை மற்றவர்களைப் போலவே எனக்குத் தெரியும் என்றும் ஆனால் அவரது சகோதரர் நாஸிஹ"டன் ஒட்டாவா மற்றும் ஹல் ஆகிய இடங்களிலுள்ள மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங் களில் பணியாற்றியிருக்கிறேன் என்றும் சொன்னேன். அல்மலிகியின் குடும்பமும் எனது குடும்பமும் ஒரே காலப் பிரிவில்தான் கனடா வந்தன என்றும் குடும்ப ரீதியாக நாம் அறிமுகமானவர்கள் என்றும் சொன்னேன். அல்மலிகியைச் சந்தித்த சம்பவங்களை நினைவுபடுத்தி யும் சொன்னேன்.
திடீரென அவர்கள் எனக்குக் காட்டிய ஒர் ஆவணத்தைக் கண்டதும் நான் ஆச்சரியப்பட்டேன். 1997ம் ஆண்டு நான் ஒட்டாவா வுக்குக் குடிபெயர்ந்த போது வீட்டுக்கான குத்தகைப் பத்திரத்தில் அல்மலிகி சாட்சியாகக் கையெழுத்திட்ட ஆவணமே அது. அந்தப் பத்திரத்தில் கையெழுத்திடநாஸிஹைஅழைத்திருந்ததையும் அவருக்கு வர முடியாமல் போன காரணத்தால் தனது சகோதரனை அனுப்பி யிருந்ததையும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.
அவர்களது வினாக்களுக்குத் தாமதியாமல் நான் பதில் தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களது நடவடிக்கைகள் கடுமையாகவும் என்னை அவமானப்படுத்தும் விதத்திலும் கேலிக்குட் படுத்தும் விதத்திலும் அமைந்திருந்தன. என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அவர் களுக்குச் சொன்னேன். அவ்வப்போது சட்டத்தரணி ஒருவரை நான் அமர்த்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அவர்கள் பதிலிறுக்கவில்லை. எனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பொருத்தி மற்றொரு கட்டடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்தார்கள். அஷ்ரஃப் சிஹாப்தீன்:

109
அடுத்த நாள் 27.09.2002 அன்று காலை 9.00 மணிக்கு மீண்டும் என்னை விசாரணை செய்தார்கள். ஸுஜூரிச்சிலிருந்து வந்த பிறகு நான் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அன்றிரவு எனக்கு உணவு வழங்கப் படவும் இல்லை. உறங்குவதற்கு வாய்ப்பிருக்கவும் இல்லை.
எட்டு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். பலஸ்தீனம் மற்றும் ஈராக் பற்றியும் கேட்டார்கள். பின்லாடன் பற்றிய எனது அபிப்பிராயம் என்ன என்றும் கேட்டார்கள். நான் தொழுத பள்ளிவாசல்களின் விபரங்கள், எனது ஈமெயில் முகவரி, எனது வங்கிக் கணக்கு இலக்கங் கள் மற்றும் எனது உறவினர் விபரங்கள் அனைத்தையும் கேட்டார்கள். பின்னர் என்னைச் சிரியாவுக்கு அனுப்பி உதவுவதாக அவர்கள் சொன்ன போது நான் மறுத்தேன். நான் கனடா செல்ல வேண்டும் என்று சொன்னேன்.
இரவு எட்டு மணியளவில் விலங்கிடப்பட்டு ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னைப் பிரதான தடுப்பு நிலையத்துக்குக் கொண்டு வந்தார்கள். "இவையெல்லாம் எதற்காக?" என்று அடிக்கடி அவர்களிடம் கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஆனால் அவர்களிட மிருந்து இந்த வினாவுக்குப்பதில் வரவே இல்லை. எனது உடைகளைக் களைந்து என்னைச் சோதித்தார்கள். மஞ்சள் நிறத்திலான ஆடையை எனக்கு அணிவித்தார்கள். வைத்தியரின் பத்திரங்கள் என்று பத்திரங்கள் சிலவற்றை நீட்டி அதில் கையெழுத்திடக் கோரினார்கள். நோய்த் தடுப்பு ஊசி மருந்து ஏற்றப்பட்டது. "இது எந்த நோய்க்கான தடுப்பு மருந்து?" என்று கேட்டேன்; பதிலில்லை. அந்தத் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்ட பின் இரண்டு வாரங்களாக எனது கை சிவப்பு நிறமாக மாறியிருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சற்று நேரமே உறங்கக் கிடைத் தது. 28ம் திகதி அதிகாலை உறங்கிய நான் காலை 11.00 மணிக்கு எழுப்பப்பட்டேன். பிரதான தடுப்புநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் என்னை மட்டும் வித்தியாசமாக அவர்கள் நடத்துவதை அவதானித்தேன். ஏனைய கைதிகளுக்குப் பற்துளரிகை, பற்பசை, செய்தித்தாள் ஆகியன விநியோகிக்கப்பட்டன. எனக்கு அவை
Hஒரு குடம் கணினி

Page 74
110
வழங்கப்படவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகே ஒரு குர்ஆன் பிரதி எனக்கு வழங்கப்பட்டது.
மூன்று தினங்களுக்குப் பிறகு என்னிடம் ஓர் ஆவணம் தரப் பட்டது. நான் அமெரிக்கப் பிரஜையாக இல்லை என்பதும் சிரியா மற்றும் கனடிய பிரஜை என்பதும் என்னை அமெரிக்கா குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் 235 சி-ஷரத்துக்கேற்ப அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எனது வருகை மற்றும் விமானப் பயணம் போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்த துடன் வெளியுறவுச் செயலாளரினால் பயங்கரவாத அமைப்பு என்று இனங்காணப்பட்ட அல் கயிதா இயக்கத்துடன் நான் தொடர்புள் ளவன் என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
ஒக்டோபர் 2ம் திகதிவரை ஒரு சட்டத்தரணியை நாடுவதற்கோ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதற்கோ நான் அனுமதிக் கப்படவில்லை. 2ம் திகதி இரண்டு நிமிடங்களுக்குத் தொலைபேசி யில் உரையாட அனுமதிக்கப்பட்டேன். ஒட்டாவாவிலுள்ள எனது மாமியுடன் தொலைபேசியில் உரையாடி எனது நிலையைச் சுருக்க மாகச் சொல்ல முடிந்தது.
ஒக்டோபர் 3ம் திகதி 'உன்னைத் திருப்பி அனுப்புவதானால் எங்கு போக விரும்புகிறாய்?"என்ற விபரம் கோரும் படிவம் ஒன்றை என்னிடம் தந்தார்கள். நான் கனடாவுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுப் படிவத்தில் கையெழுத்திட்டேன். 4ம் திகதி கனேடியத் தூதுவராலயத்திலிருந்து மெளரின் கிர்வன் என்ற பெண்மணி வந்து என்னைச் சந்தித்தார். எனக்குத் தரப்பட்ட படிவங்களை அவருக்கு நான் காட்டினேன். அவர் குறிப்பெடுத்துக் கொண்டார். என்னை சிரியாவுக்கு அனுப்பி விடுவார்கள் என்று எனக்கு அச்சமாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். அவ்வாறு நடக்காது என்று அவர் எனக்கு வாக்குறுதியளித்தார். 5ம் திகதி சட்டத்தரணி அமல் ஒவ்மிஹற்என்ற பெண்மணி வருகை தந்தார். அவருடன் முப்பது நிமிடங்கள் பேச முடிந்தது. எனது பயம் குறித்து அவருக்குச் சொன்னேன். தனது முன்னிலையில் அல்லாமல் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டாம் என்று அவர் என்னைக்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

கேட்டுக் கொண்டார்.
ஒக்டோபர் 6ம் திகதி ஞாயிற்றுன் கிழமை இரவு 9.00 மணிக்கு காவலர்கள் வந்து எனது சட்டத்தரணி என்னைச் சந்திக்க வந்திருப்ப தாக எனது கூண்டுக்குள் இருந்து என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்ற போது வேறு அதிகாரிகள் எழுவர் அமர்ந்திருந்தார்கள். சட்டத்தரணி அங்கிருக்கவில்லை. சட்டத்தரணியை அழைத்ததாகவும் அவர் வரமுடியாதென மறுத்ததாகவும் எனக்குச் சொன்னார்கள். எனது சட்டத்தரணியோ பெண்மணி. அவர்கள் பொய் சொல்லுகிறார் கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. எதற்காக சிரியா செல்லமுடியாது என்று சொல்கிறாய்? என்று என்னை அவர்கள் கேட்டார்கள். "நான் அங்கு சென்றால் என்னைத் தண்டிப்பார்கள். ஏனெனில் நான் சிரியா விலிருந்து செல்லுமுன் படைப் பயிற்சி பெறவில்லை. எனது தாயாரின் உறவினர் ஒருவர் தனது இயக்கச் செயற்பாட்டுக்காகக் சிறை வைக்கப் பட்டிருக்கிறார்” என்று சொன்னேன். அப்போது ஒரு படிவத்தை நீட்டிக் கையெழுத்திடக் கோரினார்கள்; நான் மறுத்து விட்டேன். அன்று எனது கூண்டுக்குள் என்னை அவர்கள் கொண்டு சென்று விட்ட போது 7ம் திகதி அதிகாலை 3.00 மணி.
ஒக்டோபர் 8ம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு என்னை நித்திரையிலிருந்து எழுப்பி, இங்கிருந்து உன்னை அனுப்பப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு உணவு வழங்கப்பட்டது. ஒரு பெண்மணி என்னருகில் வந்து தனது கையிலிருந்த கடிதம் ஒன்றை வாசித்தார். “எமக்குக் கிடைத்த உமக்குத் தெரிவிக்க முடியாத தகவல் களின் அடிப்படையிலும் அப்துல்லாஹற் அல் மலிகி, நாஸிஹற் அல் மலிகி, அஹமட் அபூ அல் மாத்தி ஆகியோருட்பட பலருடன் நீர் தொடர்பு வைத்திருந்தமையாலும் குடிவரவுப் பணிப்பாளர் உம்மை சிரியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்." அவர் சொல்லி முடித்த தும் நான் இதை மறுப்பதாகச் சொன்னேன். ஆயினும் அதை அலட்சி யப்படுத்தி விலங்குகளை மாட்டித் தயாராக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்றனர்.
வாகனம் நியூ ஜேர்ஸி விமான நிலையத்தை அடைந்தது. நான் ஏற்றப்பட்ட விமானத்தில் நான் மட்டுமே பிரயாணியாகவிருந்தேன்.
= SCIB குடமீ கரீைனிர்

Page 75
112
மற்றவர்கள் என்னுடன் காவலுக்கு வந்த அதிகாரிகளாவர். விமானம் வாஷிங்டனில் தரையிறங்கியது. என்னுடன் வந்த அதிகாரிகள் அங்கு இறங்கிச் செல்ல புதிய காவலர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் பறந்து கொண்டிருந்த போது ஒர் அதிகாரி தொலைபேசியில், “நேரடி யாக இவனை ஏற்றுக் கொள்ள சிரியா மறுக்கிறது; ஜோர்தான் ஏற்றுக் கொள்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். விமானம் போர்ட் லண்ட் சென்று அங்கிருந்து ரோம் சென்றது. பின்னர் ஜோர்தான் தலை நகரான அம்மான் சென்றடைந்தது.
அம்மானுக்குச் செல்லும் பயணத்தின் போது எனக்கு ஒரு குளிருடையும் நீண்ட காற்சட்டையும் வழங்கப்பட்டன. இந்த உடை யைத்தான் நான் டிஸம்பர் கடைசி வரை அணிந்திருக்கப் போகிறேன் என்பது எனக்கு அப்போது தெரியாது.
ஒக்டோபர் 9ம் திகதி அதிகாலை மூன்று மணிக்கு விமானம் அம்மானில் தரையிறங்கியது. ஆறு அல்லது ஏழு ஜோர்தானிய அதிகாரிகள் என்னை எதிர் கொண்டனர். அவர்கள் என்னை விலங் கிட்டுக் கண்ணை மறைத்துக் கட்டி ஒரு வாகனத்தில் ஏற்றினர். வாகனத் தின் பின் ஆசனத்தில் முதுகை வளைத்துத் தலையைக் குனிந்து வைத் திருக்குமாறு பணிக்கப்பட்டேன். உடலைச் சற்று அசைக்கவோ அல்லது ஏதாவது பேசவோ முனைந்தால் தாக்கப்பட்டேன். முப்பது நிமிடப் பயணத்தின் பின் ஒரு கட்டடத்துக்குக் கொண்டு செல்லப் பட்டு முகமூடி நீக்கப்பட்டதும் விசாரணை ஆரம்பமாயிற்று. பிற் பகல் எனது கைரேகை பதிவு செய்யப்பட்டது. என்னைப் புகைப்படம் எடுத்த பின் முகமூடி அணிவிக்கப்பட்டேன். மீண்டும் மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை மொன்றியல் அனுப்புவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்கள்.
நாற்பது நிமிடப் பயணத்தின் பின் ஒரிடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது. அவ்விடத்திலிருந்து வேறு ஒரு வாகனத்தில் ஏற்றப் பட்டேன். தலையைக் குனிந்தவாறே அமர்ந்திருக்கப் பணிக்கப் பட்டேன். அவ்வப்போது தாக்கப்பட்டேன். ஏறக்குறைய ஒரு மணித் தியால ஓட்டத்தின் பின் வாகனம் நிறுத்தப்பட்டது. அது அநேக மாகவும் சிரியாவின் எல்லைப் புறமாக இருக்க வேண்டும் என்று நம்பு
ඊ|6දී]]&lf சிஹாப்தீன்

விமானத்தில் அழைத்துச் செல்லப்படும் பயங்கர(?)வாதிகள்
கிறேன். பிற்பகல் 6.00 மணிக்கு ஒரு கட்டடத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டேன். சிரிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பலஸ் தினக் கிளையின் கட்டடம் அது. அங்கு ஒர் அறைக்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை மேற்கொண்டவர்களில் ஒருவர் கேர்ணல் தரத்தில் உள்ளவர் என்று யூகிக்க முடிந்தது. நான் சிரியாவை விட்டுப் போனமைக்கான காரணம் கேட்கப்பட்டது. எனது குடும்பம் பற்றியும் வினாத் தொடுத்தனர். அவ்வப்போது அறையின் மூலையில் கிடந்த இரும்பு நாற்காலியைச் சுட்டிக் காட்டி அச்சுறுத்தப்பட்டேன். அந்த மின்சாரக் கதிரை சித்திரவதைக்குப் பயன் படுத்தப்படுவது என்பதைப் பின்னர் அறிய வந்தேன். சித்திரவதையைத் தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுடன் ஒத்துழைக்கத் தீர்மானித்தேன். எந்த விதத் தாக்குதலும் சித்திரவதையும் உபயோகிக்கப்படாமலேயே விசாரணை நான்கு மணி நேரம் இடம் பெற்றது.
அடுத்த நாள் அதிகாலை கட்டடத்தின் அடித்தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு என்னை அடைத்து வைக்கப்
ஒரு குடமீ கணினிர்

Page 76
114
பட்ட இடத்தை நான் 'கல்லறை' என்றுதான்குறிப்பிடுவேன். உண்மை யில் அது கல்லறைதான். அது மூன்று அடி அகலமும் ஏழு அடி நீளமும் ஆறு அடி ஆழமும் கொண்டது. இரும்புக் கதவு கொண்டது. கதவை மூடினால் ஒரு துளி வெளிச்சம் கூட விழாது. உள்ளேயிருப்பவருக்கு எதையாவது கொடுப்பதற்காக அக்கதவில் கதவோடு உராய்ந்து திறக்கக் (Siding) கூடிய சிறிய வழி இருந்தது. அதைத் திறக்கும் போதும் கூட ஒரு துளி வெளிச்சம் வராது. அந்தக் கதவு இரும்புக் கம்பிகளால் ஆனது. சிலவேளைகளில் அதனூடாகப் பூனைகள் சிறு நீர் கழிப்ப துண்டு. அந்தப் பகுதி முழுவதும் எலிகள் ஒடித் திரியும்.
அந்தக் கல்லறைக்குள் இரண்டு போர்வைகள், இரண்டு போத்தல்கள், இரண்டு கோப்பைகள் இருந்தன. பிறகு இரண்டு சிறிய பெட்டிகளை நான் பயன்படுத்தினேன். குளியலறைக்கு அனுமதிக்கப் படாத போது கழிவகற்ற ஒன்றையும் தொழுவதற்கு வுளு செய்வதற்கு நீர் வைத்துக் கொள்ள மற்றொன்றையும் பயன்படுத்தினேன்.
ஒக்டோபர் 11ம் திகதி முதல் 16ம் திகதி வரை காலையில் கட்டடத்தின் மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு உள்ளங் கை மணிக்கட்டு, பின்புறம், இடுப்பு போன்ற இடங்களில் முறுக்கப்பட்ட வயர் கற்றையினால் தாக்கப்பட்டேன். அந்த வயர் கற்றையின் விட்டம் இரண்டு அங்குலம் கொண்டது. இரும்புக் கதிரை, மின்சாரத் தாக்கு, டயர்களில் கட்டிப் போடுதல் போன்றவற் றைச் செய்து சித்திரவதை செய்யப்படுவேன் என்று அச்சுறுத்தப் பட் டேன். ஒரு நாள் எட்டு மணித்தியாலங்களாக அவ்வப்போது தாக்கப் பட்டேன். தாக்க வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சினேன். 'ஆப்கானிஸ்தானில் இராணுவப் பயிற்சி பெற்றதை ஒப்புக் கொள்ளு என்று என்னைப் பலவந்தப்படுத்தினார்கள். கைது செய்யப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தான் பற்றி எனது விவகாரத்தில் பேசப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
அடி தாங்க முடியாமல் "ஆம்" என்று ஒப்புக் கொண்டேன். எந்த முகாமில் பயிற்சி பெற்றாய் என்று கேட்டு ஒரு பட்டியலை என் முன் நீட்டினார்கள். நான் வேறு வழியறியாமல் அதில் ஒன்றைச் சுட்டிக் காட்டினேன். இந்த விசாரணையின் போது பயத்தில் என்னை
ඵ්කදී]]&l சிஹாப்தீனி

115
யறியாமல் இருமுறை சிறு நீர் கழித்தேன்.
இந்த விசாரணைக்குப் பிறகு என்னைக் கல்லறைக்கு அனுப்ப வில்லை. ஏனைய கைதிகள் விசாரணை செய்யப்படுவதும் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் எனது காதில் விழும்படி மேலேயே வைத்திருந்தார்கள். ஒரு முறை ஒரு கைதியின் தலையைப் பலமுறை பலமாக ஒரு மேசையில் மோதவைக்கும் சத்தம் அலறலுடன் என் காதில் விழுந்தது.
அடுத்த வாரம் நடந்த விசாரணைகளின் போது கார் டயர்களுக் குள் என்னைச் செருகினர். இச்சித்திரவதையின் போது ஒரு பக்கமும் அசைய முடியாது. கார் டயர்களுக்குள் செருகப்பட்டுக் கிடந்த ஏனைய கைதிகளையோ என்னையோ அவர்கள் தாக்கவில்லை. ஒக்டோபர் 17ந் திகதிக்குப் பிறகு சித்திரவதை அடி, உதை என்பதி லிருந்து மாறி வேறு வடிவம் எடுத்தது. எனது தலையை முழுவதுமாக மூடி ஒரிடத்தில் விடப்படுவேன். யாரையும் என்னால் பார்க்க முடியாத நிலையில் என்னைச் சுற்றி சிலர் நின்று கொண்டு, "இவனுக் குப்பயங்கரவாதிகள் பலரைத் தெரியும்", "அவர்களது இலக்கங்களை நாங்கள் பெற்று விடுவோம்", "இவன் ஒரு பொய்யன்", "இவன்நாட்டை விட்டு ஒடிப்போனவன்” போன்ற வார்த்தைகளை என்காதில் தெளி வாக விழுமாறு சொல்லுவார்கள். அவ்வாறு சொல்லிக் கொண்டு போகும் போது சட்டென முகத்தில் ஒரு குத்து விழும்.
ஒக்டோபர் 23ம் திகதி கல்லறையிலிருந்து நான் வெளியி லெடுக்கப்பட்டேன். முகத்தில் நிறைந்திருந்த எனது தாடி மழிக்கப் பட்டது. அதன் பின் நான் வேறு ஒரு கட்டடத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டேன். அங்கு விசாரணையாளர் களும் புலனாய்வாளர்களும் எனக் காகக் காத்திருந்தனர். நான் அங்கு அழைத்து வரப்படும் போது சித்திர வதை செய்யப்பட்டது குறித்து வாய்
=ஒரு குடம் கணினி

Page 77
116
திறக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டேன். அனைத்து அதிகாரி களும் ஒரு பதற்றத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கிருந்து வேறு ஒரு அறைக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அந்த அறை யில் கனேடியத் தூதரக அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்தார். விசாரணை யாளர்களும் சிரிய அதிகாரிகளும் என்னுடன் கூடவே வந்தனர். தூத ரக அதிகாரியைக் கண்ட நான் அவருடனிருந்த பத்து நிமிடங்களும் அழுது தீர்த்தேன். ஒக்டோபர் 29ம் திகதியும் கனேடியத் தூதரக அதிகாரி என்னை வந்து பார்த்தார். கனேடியத் தூதரக அதிகாரி என்னை வந்து சந்தித்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சிரிய அதிகாரி களும் விசாரணையாளர்களும் கூடவே இருந்தனர்.
நவம்பர் முதல் வாரத்தில் ஏழு பக்கங்களில் கைகளால் எழுதப் பட்ட ஆவணங்களில் எனது கைவிரல் அடையாளத்தைப் பலாத்கார மாகப் பெற்றுக் கொண்டனர். அதை வாசிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மற்றொரு மூன்று பக்க ஆவணத்தை நீட்டி அதன் இறுதியில் அவர்கள் சொல்வதை எனது கையெழுத்தினால் எழுதும் படி வற்புறுத்தப்பட்டேன். நான் ஆப்கானிஸ்தானில் இருந்த தாக எழுதும்படி சொல்லி எனது கைவிரல் அடையாளத்தையும் அதில் பெற்றுக் கொண்டார்கள்.
நவம்பர் 12ம் திகதி தூதரக அதிகாரி வந்த போது அவரிடம் ஆடைகள் மற்றும் சில பொருட்களை வாங்குவதற்காக ஒரு சிறு தொகைப் பணம் தருமாறு கோரிக்கை விடுத்தேன். இச்சந்திப்பின் பிறகு தூதரக அதிகாரியிடம் பணம் கேட்டதற்காகச் சிறை அதிகாரி கள் என் மீது கோபங் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கவில்லை. டிஸம்பர் 10ம் திகதி தூதரக அதிகாரி வருகை தந்து எனக்குப் பணம் வழங்கினார். அதைக் கொண்டு ஆடைகள் சில வும் வேறு சில தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடிந்தது. இதே மாதத்தில் மூன்று முறை என்னில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதை உணரந்தேன். மூன்று முறையும் என்னை மறந்து சத்தமிட் டுள்ளேன். ஒரு முறை எனது நிலையை அவதானித்த காவலர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று முகம் கழுவுமாறு கேட்டுக் கொண்டார்.
2003 ஜனவரி முதல் வாரத்திலும் பெப்ரவரிமுதல் வாரத்திலும் அஷ்ரஃப் சிஹாப்தீன்=

117
கனேடியத் தூதரக அதிகாரி என்னைப் பார்க்க வந்தார். இரண்டாவது முறை வந்த போது அந்த அதிகாரியிடம் "எதற்காக இவனை வந்து பார்க்கிறீர்கள்?" என்று காவலர்கள் கேட்டார்கள். "அவரது நலன்களை நாங்கள் கவனிக்கிறோம்” என்று தூதரக அதிகாரி பதிலளித்தார்.
ஏப்ரல் முதல் வாரத்தில் கல்லறையிலிருந்து வேறு ஒரு இடத் துக்கு மாற்றப்பட்டேன். அதாவது கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக் குப் பிறகு சூரிய வெளிச்சத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப் பட்டது. ஏப்ரல் 23ம் திகதி என்னை வெளியிலெடுத்து எனது தாடியை மழிக்கச் சொன்னார்கள். பின்னர் தலை முடியை வாரிக் கொண்டு முகம் கழுவுமாறு கேட்டுக் கொண்டார்கள். அங்குள்ள சிரிய அதிகாரிகள் ஒரு பதற்ற மனோ நிலையில் செயற்பட்டதை நான் அவதானித்தேன். பின்னர் என்னை ஒரு காரில் ஏற்றி வேறு ஒரு கட்ட டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஓர் அறைக்குள் சிரியாவுக் கான கனேடியத் தூதுவரும் இரண்டு பாராளுமன்ற அங்கத்தவர்களும் அமர்ந்திருந்தனர்.
நான் அங்கிருந்து வெளியே வரும் போது இந்த விடயம் சம்பந்த மாக ஓர் ஊடகச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்' என்று அவர்கள் பேசிக் கொள்வது எனது காதில் விழுந்தது.
ஜூன் மாதத்தில் ஒரு நாள் ஒரு புலனாய்வாளரைச் சந்திக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதற்கு வாய்ப்ப ளித்தார்கள். 'ஒரு மனிதப் பிறவியாக நடத்தக் கூடிய ஓரிடத்தில் என்னை வைத்துக் கொள்ளுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தேன். அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் ஈராக் நிலைமை மோசமாக இருந்ததால் அதிகாரிகள் வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இக்காலப்பிரிவில் எனது தோல் மஞ்சள் நிறமாக மாறி வருவதை அவதானித்தேன். அத்துடன் நரம்புத் தளர்ச்சி யால் நினைவுகள் தடுமாறுவதையும் உணர்ந்தேன்.
இடையில் ஒரு நாள் என்னை அழைத்து, "வில்லியம் சாம்சனை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். "தெரியாது” என்று சொன் னேன். அவர்களது கேள்விகள் மற்றும் உரையாடலிலிருந்து அவர் ஓர் ஊடகவியலாளர் என்பது தெரிய வந்தது.
ஒரு குடம் கண்ணீர்

Page 78
118
ஆகஸ்ட் 14ம் திகதி ஏழாவது முறையாகத் தூதரக அதிகாரி என்னைச் சந்திக்க வந்தார். எனது உடல்நிலை, நான் அடைத்து வைக் கப்பட்டிருக்கும் விதம், உடலியல் மற்றும் மனோவியல் ரீதியான மாற்றங்கள் மற்றும் சித்திரவதை என்பன குறித்துத் தூதரக அதிகாரி யிடம் மளமளவென்று ஆங்கிலத்தில் கொட்டித் தீர்த்தேன்."உம்மை சித்திரவதை செய்தார்களா?" என்று தூதரக அதிகாரி என்னைக் கேட் டார். சிரிய அதிகாரிகள் முன்னிலையில் எதைப் பற்றியும் யோசிக் காமல் "ஆம்" என்று சொன்னேன். இந்தச் சந்திப்புக்குப் பிறகு சிறையதி காரிகள் என்னுடன் மிகவும் கோபம் கொண்டார்கள். நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஆகஸ்ட் 19ம் திகதி என்னை மேல்மாடிக்கு அழைத்துச் சென்று இருத்தி வைத்தார்கள். கையில் ஒரு கடதாசியைத் தந்து, ஆப்கானிஸ் தானில் பயிற்சி பெற்றேன் என்று எழுதும்படி வற்புறுத்தினார்கள். நான் எழுத மறுத்தேன். மறுத்துப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னை உதைத்தார்கள். என்னைக் கார் டயருக்குள் செருகப் போவ தாகப் பயங்காட்டினார்கள். பலவந்தமாகக் கடைசிப் பக்கத்தில் கை விரல் அடையாளம் பெற்றார்கள். அதன் பிறகு என்னைப் பொது வாகப் பலரையும் அடைத்து வைக்கும் ஒரு கூண்டில் அடைத்தார்கள். அந்தக் கூண்டு கைதிகளால் நிரம்பி வழிந்தது. கல்லறைக்குள் நான் இவ்வளவு காலமும் இருந்ததையிட்டு ஏனைய கைதிகள் ஆச்சரிய மடைந்தனர்.
ஆகஸ்ட் 20ம் திகதி முகம் மறைக்கப்பட்டு செத்னயாச் சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு கொண்டு செல்லப் பட்டால் சித்திரவதை இடம் பெறும் என்று ஏற்கனவே கைதிகள் எனக்குச் சொல்லியிருந்தார்கள். கனேடியத்தூதரக அதிகாரி என்னைப் பார்த்து வருவதால் சிறைச்சாலையில் என்னை ஒன்றும் செய்யவில்லை. அங்கு பல கைதிகளுடன் சேர்த்து என்னை அடைத்து வைத்தார்கள். இங்கு ஏனைய கைதிகளுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பலஸ்தீனக் கிளைச் சிறையுடன் ஒப்பிடுகையில் இச் சிறைச்சாலை சொர்க்கமாகும் என்று சக கைதிகளிடம் சொன்னேன். சிறைக்குள்
அஷ்ரஃப் சிஹாப்தீன்

119
கூடவே இருந்த கைதிகளுக்கு நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தேன்.
ஒரு நாள் இன்னொரு கனேடியக் கைதிவந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. தாடி மழிக்கப்பட்டு ஒல்லியான, நலிந்த நிலையில் அவர் இருந்தார். நீண்ட நேரத் துக்குப் பிறகுதான் அவர் அப்துல்லாஹ் அல் மலிகி என்று என்னால் அடையாளங் காண முடிந்தது. தானும் பலஸ்தீனச் சிறையில் கல்லறைக்குள் என்னை விட அதிக நாட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் வயர்க் கற்றை மற்றும் டயர்களில் சித்திர வதை செய்யப்பட்டதாகவும் சொன்னார். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட செத்னயாச் சிறையில் தான் துன்புறுத்தப்பட்டதாவும் கூறினார்.
செப்டம்பர் 28ம் திகதி சிறைச்சாலையிலிருந்து மீண்டும் பலஸ்தீனக் கிளைக்குக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் விசாரிக்கப் பட்டேன். ஏழு நாட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தேன். நான் வைக்கப் பட்டிருந்த அறைக்குப் பக்கத்து அறைகளில் சித்திரவதைக்குள்ளாகும் கைதிகளின் உள்ளத்தை உலுக்கும் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.
அக்டோபர் 4ம் திகதி நான் கனடாவுக்கு அனுப்பப்பட இருப்ப தாகச் சொன்னார்கள். என்னதான் நடக்கிறது என்பது எனக்குப் புரிய வில்லை. அக்டோபர் 5ம் திகதி கேர்ணல் ஒருவர் வந்து எனது முகத் தைக் கழுவிக் கொள்ளும்படி உத்தரவிட்டார். அவரது முகமோ மகிழ்ச் சியைத் தொலைத்திருந்தது. எனது கைகளிலும் கால்களிலும் விலங்கு களைப் பொருத்தி என்னை ஒரு காரில் ஏற்றி அழைத்துச் சென்றார். கார், நீதி மன்றத்தை அடைந்தது. ஒரு சட்டத்தரணியை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென்று கேட்ட போது அதற்கு அவசிய மில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது.
நீதிமன்றத்தில் நான் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றதாக நானே கையெழுத்திட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நான் அதை மறுத்தேன். என்னைப் பலவந்தப் படுத்திக் கைவிரல் அடையா
= QCD a Lô baiauf:

Page 79
120
ளம் பெறப்பட்டதையும் அதில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை எனக்குப் படித்துப்பார்க்கவோ அல்லது படித்துக் காட்டப் பட வாய்ப்பளிக்கப்படவோ இல்லை என்பதையும் நீதிமன்றில் சொன்னேன். நீதிமன்றில் நான் விடுதலை செய்யப்பட்டேன்.
பின்னர் என்னைப் பலஸ்தீனப் பிரிவு புலனாய்வுக் கட்டடத் துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அக்கட்டடத்துக்கு வெளியே எனக்காகக் காத்து நின்ற கனடாத்தூதரக வானத்தில் நான் ஏறும் வரை கேர்ணல் கூடவே வந்தார். கனேடியத் தூதுவரின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நான் அவ்வீட்டில் குளித்துத் தயாராகிய பின் சிரியாவிலிருந்து கனடாவுக்கு விமானம் ஏறினேன்.
நன்றி.
01. mahirarar. Ca
02. cbc.ca 03. amnesty.ca 04. 911 review.org
அஷ்ரஃப் சிஹாப்தீனி=

போர் மறுத்தாள் காதை
எனது பெயர்: பிஸ்ரத் ஹெப்டே மிக்கேல். : 1981 ஜனவரி 10ம் திகதி எரிட்ரியாவின் தலை நகரான அஸ்மாராவில் பிறந்தேன். உயர் தர வகுப்பு வரை மூன்று பாடசாலைகளில் நான் கல்வி கற்றுள்ளேன். உயர்தரப் பரீட்சைக்கு நான் தோற்றும் போது எனக்கு வயது 15. எந்த வகுப்பி லும் நான் இரண்டு முறை கற்றதில்லை; மாறாக சில வகுப்புகளைத் தாண்டி முன்னேறியே வந்துள் " ளேன்.
எங்களில் பலர் சிறுவயதினராக இருந்த போதும் நாங்கள் தேசிய சேவையில் அடிப்படைப் பயிற்சி இராணுவப் பயிற்சி) முடிந்த பிறகே எங்களது பரீட்சைப் பெறுபேறுகள் வந்து சேரும் என்று எங்க ளுக்குச் சொல்லப்பட்டது. எனவே நானும் எனது 15வது வயதில் இராணுவப் பயிற்சியில் சேர்ந்தேன். பரீட்சைக்குச் சிறந்த முறையில் தோற்றியுள்ளபடியால் இராணுவப் பயிற்சியை முடித்துக் கொள்வது நல்லது என்று நான் நினைத்தேன். 1996ம் ஆண்டு நான் சேர்ந்த போது 'அடிப்படைப் பயிற்சிக்காக சவா என்ற இடத்துக்கு நாங்கள் கொண்டு
செல்லப்பட்டோம்.
சில இளம் பெண் பிள்ளைகள் சிறுவயதினராக இருந்த போதும் வீட்டிலிருந்து பெற்றோருக்குத் தெரியாமல் படைப் பயிற்சியில் வந்து
|ඉංග්‍ය ගLස් ආකාග්ග)

Page 80
122
சேர்ந்தார்கள். சில வேளைகளில் அவர்களின் பெற்றோர் அவர்களை அழைத்துச் செல்வதற்காகப் பயிற்சி முகாம்களுக்கு வருவார்கள். ஆனால் அதிகாரிகள் அவர்களை ஒரு போதும் விடுவிப்பதில்லை. "அவர்களாகவே பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி பெறட்டும்” என்று சொல்லி விடுவார்கள். பின்னர் ஒரு வேளை அப்பிள்ளைகளே வீட்டுக்குச் செல்ல விரும்பினாலும் கூட அவர்கள்
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சவாவில் இராணுவப் பயிற்சிக் காலம் மிகவும் கடினமானது. நாங்கள் பயிற்சி பெற்ற போது மழைக்காலமாக இருந்தது. அத்துடன் அங்கு வசிப்பதற்குப் பொருத்தமான வசதிவாய்ப்புகள் எதுவும் கிடை யாது. பலர் சுகவீனமுற்றார்கள். அநேகமானோருக்குக் கல்லீரல் அழற்சி ஏற்பட்டது. அடிக்கடி எல்லோருக்கும் விக்கல் எடுக்கும். சுக வீனமுற்ற நிலையில் இருப்போரும் கூடக் கணக்கெடுப்பின் போது சமுகமளித்தே ஆக வேண்டும். ஆபத்தான நிலை ஏற்பட்டால் மாத் திரமே பயிற்சியை இடை நிறுத்த அனுமதி வழங்கப்படும்.
இராணுவப் பயிற்சியில் நாங்கள் கசக்கிப் பிழியப்படுவோம். தளர்ந்து போகும் வரை கடுமையான பயிற்சிகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப் படுவோம். நாங்கள் தளர்ந்தோமா அல்லது இறந் தோமா என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. உயரதிகாரிகளின் உறவினர்கள் மாத்திரம் விசேடமாகக் கவனிக்கப் படுவார்கள். எந்த விதமான துன்பங்களும் இல்லாமலேயே அவர்கள் பயிற்சியை முடித்துக் கொள்வார்கள்.
பல பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். நிலைமைக்கேற்றவாறு தம்மை மாற்றியமைத்துக் கொள்ளத் தெரிந்தவர்களும் உயரதிகாரி களிடம் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்பவர்களும் கற்பழிப்பைத் தவிர்த்துக் கொள்ளமுடிந்தது. உயரதிகாரிகள் அனைவரும் ஆண்களா யிருந்தனர். உயரதிகாரிகளின் நோக்கங்களை அனுசரித்துப் போகாத வர்களும் அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் மிக மோசமான பணிகளில் அமர்த்தப்பட்டனர் அல்லது யுத்தப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டனர். கற்பழிக்கப்பட்டவர்களில் அதிகாரிகளை மதிக் காதவர்களும் யுத்த முனைக்கு அனுப்பப்பட்டனர். அதிகாரிகளின்
அஷ்ரஃப் சிஹாப்தீன்

123
மணமறிந்து நடப்பவர்களும் அழகானவர்களும் மிக நல்ல முறையில் நடத்தப்பட்டனர். அவர்கள் அடிக்கடி கர்ப்பவதிகளாயினர்.
ஆறுமாத அடிப்படைப் பயிற்சிக்குப் பின்னர் 38ம் படைத் தரப்பின் 1ம்பிரிவுக்கு வந்து சேர்ந்தேன். முறைப்படி நான் நிர்வாகப் பிரிவில் கடமையாற்ற வேண்டும். ஆனால் நான் யுத்த முனைக்கு அனுப்பப்பட்டேன். இது என்னை ஆச்சரியப்படுத்தியது. இராணுவப் பயிற்சியில் நான் பதினெட்டு மாதங்கள் கடமை புரிவது என்று உறுதி யளித்துள்ளேன். அடிப்படைப் பயிற்சி, விடுமுறை யாவற்றையும் கழித்தால் 8 மாதங்களே எஞ்சும். இக்காலப்பிரிவில் படையினர் விவசா யத்தில் ஈடுபடுத்தப்படுவதுண்டு. நான் இதற்காக விண்ணப்பித்த போது எனது உயரதிகாரி அதனை மறுத்தார். நான் அவருக்குச் சமை யல் செய்ய வேண்டும் என்றும் அவரது கைப் பொம்மையாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். நான் அதை மறுத்தேன். எனவே தான் எனது விடுமுறை வாய்ப்பை ரத்துச் செய்து என்னை யுத்த முனைக்கு அனுப்பினார்கள்.
கிர்மயிக் என்ற பிரதேசத்தில் உள்ள :பகா என்ற இடத்தில் நாங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டோம். வீட்டு மனைவியராக வாழ்வதை நிராகரித்த பெண்கள் தண்டனையாகக் காவல் சேவையில் இரவில் 3 மணித்தியாலம் தொடக்கம் 4 மணித்தியாலம் வரை கடமை புரியப் பணிக்கப்பட்டனர். இப்பெண்களுக்கு உதவ முன்வந்த இளை ஞர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் உச்ச வெய்யிலில் கம்பீர மாக ஆடாமல் அசையாமல் முழுநாளும் நிற்கப் பணிக்கப் பட்டார் கள்.
உயரதிகாரிகளின் விருப் பத்துக் கேற்ப ஆடியவர்கள் நல்ல முறையில் நடத்தப்பட் டார்கள். வசதியான தங் கும் அறை, நல்ல கட்டில் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு

Page 81
124
மாதம் ஒரு முறை வீட்டுக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்பட்டார் கள். ஆனால் அவ்வாறான பெண்கள் வெகு சிலரே. அநேகமானோர் மறுத்தவர்களே. நாங்கள் எப்போதும் நினைப்பதெல்லாம் இப்பயிற்சி யை ஒருவாறு முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட வேண்டும்' என்பதைத்தான்.
இவ்வாறான சிக்கல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் குடும்பத்தைப் பார்க்கும் ஆசையில் ஓடி விடுவதுண்டு. இவர்களில் சிலர் தாமாகவே திரும்பி வருவார்கள். மற்றையோரை இராணுவப் பொலீஸ் பிரிவுபிடித்துக் கொண்டு வரும். இவர்களுக்கு ஹெலிகொப் டர் அல்லது இல. 8 தண்டனைகள் வழங்கப்படும். சிலருக்கு வெய்யி லில் பல மணித்தியாலங்கள் நிறுத்தப்படுவதற்கு முன்னர் உடல் முழுவதும் பால் ஊற்றப்படும்.
இரண்டு கைகளையும் கால்களையும் உடம்பின் பின்னால் கட்டி வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளால் உடலைத் தாங்கியபடி வெய்யிலில், பனியில், மழையில் மேலாடையின்றிக் குறிப்பிட்ட தினங்கள் கிடக்க விடுவது ஹெலிகொப்டர் தண்டனை எனப்படு கிறது. உடல் இவ்வாறு கட்டப்பட்டு இடையிடையே உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக மாத்திரம் கட்டுக்கள் அவிழ்த்து விடப் படுவது இல8. தண்டனையாகும்.இவர்கள் ஒருமுழுநாளும் இத்தண்ட னையை அனுபவிப்பார்கள்.
அண்டை நாடுகளான எரிட்ரியாவுக்கும் எதியோப்பியாவுக்கு மிடையிலான யுத்தம் எல்லைப் பிரதேசமான Badme யை அடிப்படையாகக் கொண்டது. 1998 முதல் 2000 வரை நடைபெற்ற இந்த யுத்தத்துக்காக உலகின் 'உச்ச வறுமை நாடுகளான இவ்விரண்டும் பல மில்லியன் டாலர் பெறுமதியான தொகைகளைச் செலவிட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரு நாடுகளதும் எல்லைப் பிரதேசத்தில் வசித்தவர்கள் தாம் சிறையில் வாழ்வதைப் போல் உணர்வதாகச் சொல்லியிருந்தார்கள். தி ஹேக் சர்வதேச ஆணையத்தின் கருத்துப்படி எரிட்ரியா சர்வதேச சட்டங்களை மீறி எதியோப்பியாவின் மீது படையெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. ஐ.நாடுகள் தலையிட்டு யுத்தத்தை நிறுத்தியது; யுத்தத்துக்குக் காலான பிரதேசம் எரிட்ரியாவுக்குச் சொந்தமானது என்று சொன்னது. ஆனால் 2010 வரை இப்பிரதேசம் எதியோப்பியாவின் பிடியிலேயே உள்ளது.
அஷ்ரஃப் சிஹாப்தீனி=

125
இல8. தண்டனையை ஒருமுறை நானும் அனுபவித்துள்ளேன். ஒருநாள்முழுவதும் வெய்யிலில் நின்றிருக்கிறேன். எனது கொமாண்ட ரின் வீட்டில் வேலை செய்ய மறுத்தமைக்காகவே எனக்கு இந்தத் தண்டனை கிடைத்தது. கொமாண்டர் என்னில் ஒரு கண் வைத்திருந் தார். நான் அவரைப் பற்றி விமர்சித்ததை அறிந்து அது சட்டத்துக்கு முரணானது' என்று குறிப்பிட்டுத் தண்டனை விதித்தார்கள்.
18 மாத இராணுவப் பயிற்சியின் பின்னர் மேலதிகமாக இரண்டு மாதங்கள் கடமை புரிய வேண்டும். அப்போது யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அந்த நிலைமையை விபரிப்பது சிரமமானது. அது பயங்கர மானது. யுத்த முனையில் முன்னணியில் உள்ளவர்கள் காயப்பட்டால் முன்னணியில் உள்ளவர்களே அவர்களைத் தூக்கி வந்து தள வைத்திய
சாலையில் ஒப்படைக்க வேண்டும். பின்னணி வீரர்கள் அதைச் செய்ய
மாட்டார்கள். இவ்வாறு காயம் பட்டவர்கள் எடுத்து வரப்பட முடி யாத நிலையில் பலர் அங்கேயே கைவிடப்பட்டு இறந்தார்கள்.
முன்னணியில் இருந்தவர்கள் மீள அழைக்கப்பட்ட போது அனுமதி இல்லாமலேயே சிலர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். அவர்கள் திரும்பி வந்த போது நேரடியாகவே அவர்கள் முன்னணி நிலைகளுக்கு அனுப்பப்பட்டனர். சிலர் கொலை செய்யப்பட்டனர். பயிற்சியில் இருந்த இருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். குடும்பத்தினரும் திருமண ஜோடியும் திகதியைத் தீர்மானித்து விடு முறை கோரி விண்ணப்பம் செய்தனர். எரிட்ரியாவில் திருமணம் ஒரு முக்கியமான விடயம். ஆனால் மேலதிகாரி இந்த ஜோடிக்கு விடு முறை வழங்க மறுத்து விட்டார். எனவே திட்டமிட்ட தினத்தில் திரு மணம் செய்வதற்கு அந்த இருவரும் அனுமதியில்லாமலே சென்று விட்டனர். இராணுவத்தின் ஒரு படைப் பிரிவு திரண்டு சென்று அந்த இருவரையும் கைது செய்து வந்தது. அவர்கள் உடனடியாகவே களத்
தின் முன்னணி நிலைக்கு அனுப்பப்பட்டனர்.
யுத்தத்தில் எனக்கு அலுப்பு ஏற்பட்டது. நான் சுகவீனமுற்றிருப்ப தாகச் சொன்னேன். ஆனாலும் வீட்டுக்குச் செல்லும் அனுமதி கிடைக் கவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்து முறைப்பாடுகள் மேற் கொண்ட பிறகு ஐந்து நாட்கள் எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு குடம் கணினி

Page 82
126
ஆனால் நான் பத்துத் தினங்கள் விடுமுறையில் நின்றேன். பயத்துடன் முகாம் திரும்பினேன். பெரிய நீர்த்தாங்கியொன்றை ஒரு வார காலம் மலைப் பகுதிக்குத் தூக்கிச் சென்று திரும்பும்படியான தண்டனை வழங்கப்பட்டது.
1999ம் ஆண்டு மே மாதம் எனது பிரிவுக் கொமாண்டர் என்னைக் கற்பழிக்க முயற்சி செய்தார். நான் பயங்கரமாகச்சத்தமிட்டு அலறினேன். இதனால் பலர் அங்கு உதவிக்கு ஓடி வந்தார்கள். இதன் காரணமாக அன்று நான் காப்பாற்றப்பட்டேன். இந்தச் செயலுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் கற்பழிக்க முயன்றவரே இச்சம்பவம் குறித்து மேலதிகாரி களுக்கு முறைப்பாடு செய்யவேண்டியவராயிருந்தார். ஆதலால் எதுவும் நடக்கவில்லை.
எங்களது பிரிவுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்கப்பட்டது. நிதி முகாமைத்துவம் கற்றுத் தரப்பட்டது. நிர்வாகப் பிரிவில் வரவு செலவுக் கணக்கு விபரங்களைச் சரிபார்க்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. எனது பிரிவுக்குப் பொறுப்பாயிருந்தவர் என்னைப் பற்றிப் பொய்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அவரது விருப்பத் துக்கேற்ப நான் நடந்து கொள்ள மறுத்ததே அதற்குக் காரணமாகும். என் மீது அவர் பல்வேறு வகையான அழுத்தங்களைக் கொடுத்தார். நான் பணம் கையாடியதாகக் குற்றம் சுமத்தினார். ஆனால் அவர் என்றைக்குமே பணத்தை யாரும் எடுக்கும் வகையில் வைப்பதில்லை. இக்குற்றச் சாட்டை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்து நான் தண்டிக் கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
நான் அங்கிருந்து அஸ்மாராவுக்குச் சென்று குடும்பத்துடன் இணைந்து விட்டேன். ஒரு மாதம் கழிந்த நிலையில் நான் கைது செய்யப்பட்டேன். கெஜெரெட் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட் டுப் பின்னர் அடியாபெட்டோ கொண்டு செல்லப்பட்டேன். "என்னை எனது முகாமுக்குக் கொண்டு செல்லுங்கள். நான்தண்டிக்கப் பட வேண்டும் என்றால் அங்கேயே எனக்கான தண்டனையை வழங் கச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால் அடிய பெட்டோ சிறையிலிருந்து சில வாரங்களில் தப்பி ஓடி அடி
அஷ்ரஃப் சிஹாப்தீனி

127 செக்டோவுக்குச் சென்றேன்.
அங்கு ஒரு வருடகாலமாக ஒளிந்திருந்தேன். வெளியார் எவரும் அறியாமல் மறைந்திருந்தேன். நான் இருந்த வீட்டுக்கு அயல் வீட்டார் கூட என்னையறிய முடியாதபடி வாழ்ந்தேன். யாராவது என்னைக் கண்டுவிட்டால் பொலீஸுக்குத் தகவல் தந்து விடுவார்கள் என்ற பயம் எனக்கிருந்தது. எனது தந்தையின் நண்பர்களைத் தவிர வேறு யாருட னும் நான் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள்தாம் எனக்குப் பல்வேறு வகைகளில் உதவி புரிந்தார்கள்.
நான் சிறையிலிருந்து தப்பி அதிக நாட்கள் சென்றதால் எனது தந்தையாருக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள். கடைசியில் அவரையே கைது செய்ததாக அறிய வந்தேன். கிராமியப் பெண் போல ஆடையணிந்த என்னைத் தந்தையின் நண்பர்கள் கார் ஒன்றின் மூலம் டெஸனி என்ற இடத்துக்குக் கொண்டு வந்தனர். அங்கே ஒரு வாரம் தங்கியிருந்து பயண ஏற்பாடுகளைச் செய்து ‘பச்சை எல்லையூடாக விமானத்தில் சூடானுக்கு வந்து சேர்ந்தேன்.
சூடானை வந்தடைந்த போதும் கைது செய்யப்படுவேனோ என்ற அச்சம் என்னை விட்டு நீங்கவில்லை. இராணுவத்திலிருந்து தப்பி ஒடியோரைப் பிடித்து எரிட்ரியாவுக்குக் கொண்டு வருமாறு எரிட்ரி யாவின் ஜனாதிபதி கட்டளை பிறப்பித்திருந்தார். எரிட்ரிய அரசாங் கம் இவ்வாறு தப்பியோடிய இளையவர்களைக் கைது செய்து அனுப் பும்படி சூடான் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த வேண்டுகோளை ஏற்று சூடானிய அரசு அங்கிருந்த எரிட் ரியர்களை வேட்டையாடியது. அவ்வப்போது பலர் பிடிக்கப்பட்டு எரிட்ரியாவுக்கு அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்டவர் களில் அநேகர் சுட்டுக் கொல்லப்பட் வ
டார்கள். சிலர் என்னவானார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
அத்துடன் எரிட்ரிய இரகசிய சேவை சூடானில் மிகவும் சுறுசுறுப் பாக இயங்கிக் கொண்டிருந்தது. இள வயதினரை மட்டுமன்றி எரிட்ரிய

Page 83
'128
இராணுவத்திலிருந்து தப்பி வந்தோரையும் இரகசிய சேவையினர் கைது செய்தனர். இரகசிய சேவையினரிடம் பணம் கொடுத்தால் விட்டு விடுவார்கள். பணம் கொடுக்காதவர்களை எரிட்ரிய எல்லைக் குக் கொண்டு சென்று விடுவார்கள். தப்பி ஓடி வந்தவர்கள் ஐக்கிய நாடுகளின் உதவிக்காகக் காத்திருந்தார்கள். இவ்வாறு என்னைப் போல் தப்பி வந்தவர்கள் ஒன்றில் பெரு நகரங்களில் ஒளிந்திருக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு ஓடி ஒளிந்து வாழ வேண்டும்.
எனவே தப்பிய பலர் சஹாராப் பாலைவனம் ஊடாக லிபியா வுக்கு ஓடிச் சென்றார்கள். மேலும் பலர் காற்றடைத்த ஒடங்களில் பயங்கரமான ஆழக்கடலில் பயணம் செய்து நாட்டைவிட்டுத்தப்பிச் சென்ற வண்ணமிருந்தனர். எவ்வாறு இருந்த போதும் தப்பி ஓடுதல் ஆபத்தானதாகவே இருந்தது. மோல்டா அரசு இவ்வாறு தப்பி வந்த 200 பேரை எரிட்ரியாவிடம் ஒப்படைத்தது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. தப்பி ஓடிவந்தோரில் அதிர்ஷ்டவசமாக சிலர் ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றார்கள். அவர்கள் அங்குதங்கியிருக்க அனுமதியும் பெற்றார்கள். சூடானில் ஒரு மாத காலம் எனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவரின் உதவியுடன் கடத்தல்காரர்கள் மூலம் நான் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். இங்கு நான் சுதந்திரமாக இருக்கிறேன். அகதி அந்தஸ்துக் கோரிய எனது விண்ணப்பம் ஜேர்மனிய அரசாங்கத் தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நான் மீண்டும் விண்ணப்பித் துள்ளேன். ஆனால் அதில் அதிக நம்பி க்கை வைக்கவில்லை.
எனது குடும் பத்தின் நிலை என்ன * வென்று அறிய முடிய வில்லை. அதையிட்டு நான் கவலையுடன் இருக்கிறேன். அவர் களைத் தொடர்பு
அஷ்ரஃப் சிஹாப்தீன்=
 

129
கொள்ள என்னால் முடியாது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். எனது குடும்பத்தினர் எனக்கு உதவி செய்ததாக அறிந்தால் அதிகாரிகளால் அவர்களுக்குத் தொந்தரவு ஏற்படும்.
எனது தந்தையார் இன்னும் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனது உடன் பிறப்புகள் தேசிய சேவைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறிகிறேன். எனது தாயார் தனியேதான் இருப்பார். இதையெல்லாம் அவர் எப்படித் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.
நன்றி.
Yonas Bahta, Abraham Gebreyesus, Andreas Speck -28.05.2004 wriirg.org
=&5 cÐLỗ đeferff

Page 84
எமது வன்முறைச் சமூகம்
எனது பெயர் ராஃபி. நான் ஒரு அமெரிக்க இஸ்ரேலியன். இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் முன்னாள் அங்கத்தவனும் கூட
எமது சமூகம் குறிப்பாக அண்மைய பலஸ்தீன எழுச்சியில் எவ்வளவு மோசமான வன்முறைச்சமூகமாக மாறியிருக்கிறது என்பதை நினைக்கும் போது நான் அதிர்ச்சியடைந்து போனேன்.
நாம் தான் வன்முறைக்குள்ளானவர்கள் என்று உலகத்தையும் ஏன் எம்மையும் கூட நாம் ஏதோ ஒரு விதத்தில் நம்பவைத்துக் கொண் டுள்ளோம். ஆம். ஒரு கால கட்டத்தில் நாம் வெறுக்கப்பட்டவர் களாகவும் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்தோம். யூதர்கள் என்ற காரணத்திற்காக நாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழ்ந் தோம். கஷ்டத்திலும் துன்பத்திலும் அலைக்கழிந்து கொண்டிருந்த ஐரோப்பிய யூதப் பரம்பரை எங்கு அவமானத்தையும் அச்சத்தையும் வெறுப்பையும் சந்திக்காமல் நீண்ட காலம் வாழ முடியுமோ அப்படி யொரு இடத்தை நம்மில் சிலர் தேடிக் கொண்டிருந்தனர்.
நமது கற்பனை மிகவும் தவறானதாயிருந்தது. நாம் தேர்ந்தெ டுத்த நிலப்பரப்பானது ஏற்கனவே அதன் பூர்வீக மக்கள் வாழ்ந்த இடமாக இருந்தது. பயங்கரவாதம், ஒழித்துக் கட்டுதல், காட்டு மிராண்டித்தனம் ஆகியவற்றைப் பிரயோகித்து அமைதியான அந்த மக்களைப் பலவந்தமாக அவர்களது சொந்த இடங்களிலிருந்து ஒட ஒட விரட்டினோம். அவர்களின் ஒரு பகுதியினர் அண்டைய அறபு அஷ்ரஃப் சிஹாப்தீன்

நாடுகளுக்கு ஒடிப் போனார்கள். ஏனையோர் இன்று வரை நமக் குள்ள எந்த அதிகாரத்தாலும் அசைக்க முடியாதபடி சொந்த மண்ணிலேயே அகதிகளாகக் குந்தினார்கள்.
யூதர்கள் மீதான பெரும்
படுகொலைக்குப் பின்னர் நாம் வேண்டப்படாத அகதிகளாகத்தான் இருந்து வந்தோம் என்ற ஒரு காரணம் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு நம்மூடாக அறபு நாடுகளில் கால் பதிக்கும் ஒரு தேவையும் இருந்தது. இது நமக்கு ஆயுதங்களைச் சேகரிக்கவும் அமெரிக்க, பிரித்தானிய ராணுவ உதவியைப் பெறவும் இலகுவான வழியாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எம்மில் அதிகமானோர் எமது முன்னைய ஐரோப்பிய வாழ் விடங்களிலிருந்து இங்கு வந்தோம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த மக்களின் சொந்த மண்ணையும் அவர்களது வாழ்விடங்களையும் சண்டையிட்டு அடிமைப்படுத்தி ஆக்கிரமிக்கும் வழியையே தேர்ந்தெடுத்தோம்.
பின்னர் சூழ்ச்சிகளையும் சதித் திட்டங்களையும் மேற்கொண் டோம். வஞ்சகத்தனமாக எல்லாவற்றையும் மாற்றுவதில் மும்முரமாக இருந்தோம். வரலாற்றைத் திரித்துக் கூறினோம். நாங்களே இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் என்று உரிமை பாராட்டி உலகத்துக்குச் சொன்னோம். குறிப்பாக, நாங்களும் அப்படியே நம்பத் துவங்கி னோம். எவையெல்லாம் யூதர்களின் மனித உரிமைகளாக இருந்த னவோ அவற்றை மாத்திரமே மனித உரிமை என நாம் ஆதரித்தோம். எவையெல்லாம் யூதர்களது சுதந்திரம் என்று கருதினோமோ அவற்றை மாத்திரமே சுதந்திரம் என்று கருதினோம். மத்திய கிழக்கில் ஜன நாயகத்தின் தேவை குறித்துப் பிரஸ்தாபித்தோம்.
அதே வேளை எமது ஜனநாயகம் மிகச் சாதுரியமாக யூத மதத்தை உள்ளடக்கியதாக இருந்தது. யார் யாரெல்லாம் யூத மதத்தைப் பின்பற்றாதவர்களாக இருந்தார்களோ அவர்களையெல்லாம் எமது
=&D குபe கணிரீை

Page 85
132
அரசியலிலிருந்து தள்ளி வைத்தோம்.
எதிர்த்துச் சீறும் பலஸ்தீனியருக்கு ரமல்லாஹற்வில் பாதாள முகவர்கள் மூலம் விசாரணைகள் இன்றி மரண தண்டனை வழங்கிக் கொண்டே அவர்களைக் கொடூரமானவர்கள் என்றும் குற்றவாளிகள் என்றும் சொன்னோம். ஆனால் 'பெய்த் ஹதெஸ்ஸாவின் பாதையில் - நான் கண்டது கொடூரங்களையெல்லாம் மிகைத்த கொடூரமாகும்.
அது ஜனவரி 12ம் திகதி ஷாகிர் - அதுதான் அந்தப் பலஸ்தீ னிய இளைஞனின் பெயர். இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஜெரூஸலேம் தெருவில் அவனைத் துரத்திச் சென்றார்கள். ஜெரூஸ் லேம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புனித மானது. ஒரே இறைவன் என்ற கொள்கையைப் போதித்த தூதர்கள் நடந்த மண் அது. ஆனால் அதில் நான் கண்டது, புனிதமான ஒன்றோ அல்லது நேர்மையான ஒன்றோ அல்ல. நான் அதில் கண்டது என்ன வெனில். உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை எமது வீரர்கள் சிரித்தபடி கொடுமையான முறையில் தெருவில் இழுத்து வந்ததைத்தான்.
நகரின் எமது பகுதியின் தெருவில் அந்த உடலை இழுத்துக் கொண்டு வந்தார்கள். பெய்த் ஹெதஸ்ஸாவில் நமது யூதக் குடியேற்ற வாசிகள், இரத்தம் பொங்கிக் கொண்டிருந்த அந்த உடலைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். அடித்தே வதைக்கப்பட்ட அந்த உடலில் உயிர் பிரிவதற்கான மூச்சுத் திணறலை நான் அவதானித்தேன்.
நமது யூதக் குடியேற்றவாசிகள் பாடினார்கள். ஆடினார் கள். ஒருவருக்கொருவர் பலமான சத்தத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தபடி கைகளைக் குலுக்கிக் கொண்டாடினார்ள். சிறுத்தைகள் தான் அடித்துக் கொன்ற இரையை தம் இடத்துக்குக் கொண்டு வரும் காட்சிஎன் கண்முன்விரிந்தது. இவர்கள்ஒரு பலஸ்தீனிய இளைஞனின் பிணத்தின் மீது தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். இந்த இளைஞன் பலிகொள்ளப்பட்ட விதத்தில் எந்த வீரத்தையும் நாகரிகத் தையும் என்னால் காண முடியவில்லை.
இந்தக் கெடூரம் அத்தோடு முடிந்து விட வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் அப்படி முடிந்து விடவில்லை. சில இஸ்ரேலி அஷ்ரஃப் சிஹாப்தீனி

133
யர்கள் அந்த உடலின் தலையை நொருக்கிச் சிதைத்தார்கள். சிலர் கண் களைத் தோண்டியெடுத்தார்கள். ஒருவர் மூக்கை அறுத்தெடுத்தார். இறந்து போன உடல் இதனால் எந்த வேதனையையும் உணராது என்று கருதினாலும் கூட இவ்வாறு மிருகத்தனத்தை விடக் கோரமாக இவர்கள் நடந்து கொள்வதற்கு அந்த அப்பாவி இளைஞன் செய்த தவறுதான் என்ன? இப்படியொரு குரூரத்தை என் வாழ்நாளில் இதற்கு முன்னர் நான் சந்தித்ததேயில்லை.
ஷாகிர் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் பலியிடப் பட்டமைக்காக என்னை மன்னியுங்கள். அவன் அவ்வாறு அநாகரிக மான முறையில் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள் சட்டத் தின் முன் கொண்டு வரப்படல் வேண்டும். எங்களிலிருந்து யார் யாரெல்லாம் பாடி மகிழ்ந்தார்களோ, ஆடிக் களித்தார்களோ, கொண் டாடினார்களோ அவர்களெல்லாம் வெட்கத்தில் தமது தலைகளை எரித்துக் கொள்ள வேண்டும்.
நாம் மனித குலத்துக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்கள். நம்மை நாமே அழித்துக் கொள்ளும் இந்த வழியைத் தொடர்ந்து பின்பற்றி னோமேயானால் எங்களில் சிறிதளவு மனிதர்களும் எஞ்சப் போவ தில்லை. நீண்ட காலங்களுக்கு முன்னர் படுகொலையான நாம், பலஸ்தீனத்தில் புதிய படுகொலைக் களத்தை அமைத்திருக்கிறோம். அப்பாவிகளை அநியாயமாகப் பலியிடுவதை நிறுத்த இதுவே சரியான நேரம். ஆயுதங்களை ஏந்தாத அப்பாவிகள் மீது மோசடியும் பாசாங்கும் நிறைந்த எமது முகமூடிகளை அகற்ற வேண்டிய காலம் இது. நாம் இதுவரை எவ்வாறான கொடுமைகளையெல்லாம் இழைத்து வந்துள்ளோம் என்ப தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இதுதான்.
உலகத்துக்கும் நமக்கும் நாம் நியாயமற்றோராக இருக் கின்ற காலம் வரை நாம் ஒரு போதும் அமைதியைக் காணப் போவதில்லை.

Page 86
134
அடித்துக் குற்றுயிராகத் தெருவிலே இழுத்துவரப்பட்டு உதைத்து இழிவுபடுத்தப்பட்ட அந்த இளைஞன் அடிக்கடி எனது நினைவில் வந்துகொண்டேயிருக்கிறான். அவன் இற்ந்த பிறகு அவனது அங்கங்களை அறுத்தது என்னை இன்னும் வருத்திக் கொண்டே யிருக்கிறது.
இறைவன் எம்மைப் பாதுகாக்கட்டும்.
நன்றி.
எட்னா யாகி
(மீடியா மொனிட்டர் இணையம்)
“. . .
அஷ்ரஃப் சிஹாப்தீனி

சிறகொழுந்த பட்டாம்பூச்சி
முதன் முறையாக டற் மரினாவைப் (Tat Marina) பார்த்தீர்களானால், நீர் நிறைந்த, ஊடு ருவிப் பார்க்கும் அவளது கண்களை நோக்கித் தான் அவதானம் செல்லும். அதற்காக அவள் அழுது கொண்டிருந்தாள் என்று அர்த்தமாகாது. இயல்பாகக் கண்களைச் சிமிட்ட அவளால் முடியாது என்பதால் கண்கள் அவளுக்கு எரிச்சல் தருகின்றவையாக இருந்தன. மிக மோசமான நிலையிலிருந்த அவளது முகத்தை ஒருவாறு மீட்டெடுத்திருந்தார்கள். இப்போது அது ஒரு செப்பமற்ற ஒவியத்தைப் போல இருந்தது.
மரினா மூச்செடுத்து விடுவதற்குச் சிரமப்பட்டாள். வடுக் கொண்ட முகத்தின் உட்குழிந்த எலும்புப் பகுதியால் வலுக்கட்டாய மாகக் காற்றை இழுத்து வாயினால் வெளியேற்றினாள். மடிந்த, சிறிய துவாரங் கொண்ட அவளது மூக்கின் கீழ்ப்பகுதியிலுள்ள அநேகமாக வும் உணர்வற்ற மென்சதை, அவள் மூச்சு விடும் போது மேலெழுந்து இறங்கியது. மூச்செடுக்கும் இயந்திரத்தினூடாக அவள்மூச்சு விடுவது போன்ற சப்தம் வந்தது.
தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட படங்களில் அவளது எரிந்த மண்டைப் பகுதி தெரிந்த பாதும் அவள் அணிந்திருந்த தலை ஒரு குடe கணினிச்

Page 87
136
மறைப்பைத் தாண்டிச் செழிப்பாக வளர்ந்த விசாலமான கூந்தலைப் பார்த்தேன். சில வேளை அது பொய் முடியோ என்ற சந்தேகம் கூட வந்தது. ஏனைய பெண்களுக்குப் போல் அல்லாமல் வித்தியாசமாக அடர்ந்து வளர்ந்த அவளது தலைமுடிதான் அது என்பதைப் பின்னர் தான்நான் உறுதிசெய்து கொண்டேன். அறுவைச்சிகிச்சைநிபுணர்கள் ஒருவாறு அவளது முகத்தின் அடிப்படை அம்சங்களைச் சரி செய்த னர். இல்லாமற் போன காதுகள், கழுத்துப் பகுதி ஆகியன, சதைத் துண்டுகளைக் கொண்டு ஒட்டி, அடைத்துப் புள்ளிகளை இட்டதைப் போன்று இருந்தன. ஏற்கனவே இருந்ததைப் போல அவர்கள் மீட்டுக் கொடுத்தது, ஊடுருவிப் பார்க்கும் அவளது கண் மணிகளைத்தான்.
பொஸ்டனில் ஒரே ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் தனது சகோதரன் மற்றும் நண்பி ஆகியோருடன் மரினா திருப்தியற்ற நிலை யில் வாழ்கிறாள். நிமிர்ந்து பார்க்கும் அவளது கண்கள் உடனடியாக அவளது மடியை நோக்கிக் குனிந்து விடுகின்றன. அதற்குக் காரணம் கூச்சமாக அல்லது நாணமாக இருக்கலாம். நீள உடையில் மடியில் கைகளை வைத்தபடி திண்ணையில் அமர்ந்திருக்கும் மரினா இறுக்கமாக இருப்பது போல் தெரிகிறது. அதைப் பார்க்கும் போது சிறுவர்கள் பெரியவர்களைப் போல் விளையாடுவது மாதிரி இருக் கிறது. அவள் அதிகம் பேசுவதில்லை. ஒரு வருடத்துக்கு முன்னர் அவள் அமெரிக்கா வந்த போது ஆங்கிலத்தில் ஒர் அட்சரங் கூடத் தெரியாது. இப்போது அடிப்படைச் சொற்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்திருக் கிறாள். அவளது சகோதரன் மொழி பெயர்த்துச் சொல்கிறான். அவளது உறவுக்காரப் பெண் மரினா சொல்லுவதைத் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறாள். குறிப் பிட்ட வார்த்தைப் பயன்பாட்டுக்குள் அவள் வெளிப்படுத்துவதைப் புரிந்து கொள்ள முயன்றேன். சந்தோஷமாக இருக்கும் போது அல்லது பயமாக உணரும் போது கம்போடியர்கள் உணர்ச்சி வசமாகச் சிரிப் பது வழக்கம். கெமர் பண்பாட்டின்படி வெளிநாட் டவர்களைக் கண்டால் திகைப்புறுவார்கள். ஆனால் மரினா கொஞ்சமேனும் சிரிக்கவில்லை. அவள் சிரித்து ஒருவருடத்துக்கும் மேலாகி விட்டது. அவளது முகத் தசைகள் அதற்கு ஒத்துழை அஷ்ரஃப் சிஹாப்தீன்
 
 

137 க்கவில்லை போலும். வைத்தியர்களால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதிருக்கவும் கூடும். புருவமுயர்த்தவோ சரிந்த பார்வை பார்க் கவோ உள்ளத்து உணர்வுகளின் பிரதிபலிப்பை முகத்தில் கொண்டு வரவோ அவளால் இயலாது போல் தோன்றியது.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி முப்பது வருடங்களில் நோய், பட்டினி, யுத்தம் மற்றும் கொலைகளால் மூன்று மில்லியன் கம்போடியர்கள் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக கெமரூஜ் ஆட்சியின் போது பிரபல்யமாகப் பேசப்பட்ட (Kiling Fields) கொலை களில் 1970களின் பிற்பகுதியில் பதினேழு லட்சம் கம்போடியர்கள் - சனத்தொகையில் நால்வரில் ஒருவர் - இறந்திருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
ஆட்சியிலிருந்த கெமரூஜ் முக்கியஸ்தர்கள் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற் காகவும் அரசியல் எதிரிகளை விரிந்த ஒற்றர் படை மூலமாக அறிந்து சித்திரவதை செய்து கொலைகளைப் புரிந்தார்கள். உயர் பதவிகளில் உள்ளவர்களின் மனைவியர் தமது கணவன்மாரின் இரண்டாவது மனைவியரிடமிருந்து தமது கணவன்மாரைப் பாதுகாப்பதற்காகவும் தமது சமூக அந்தஸ்தை இழந்துவிடாதிருக்கவும் பற்களையும் நகங்க ளையும் பயன்படுத்திப் போராடுவதற்கும் தயாராயிருந்தார்கள். அங்கு அழகிய இளம் பெண்களுக்கு அறிவுறுத்தும் வாசகம் ஒன்றும் புழக் கத்தில் இருந்தது. அவர்களது நோக்கங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பீர் களாயின் நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள். அவர்களது மனைவி யரிடம் எச்சரிக்கையாயிருங்கள்; அவ்வாறு நீங்கள் மறுப்புத் தெரிவிக் காதிருந்தீர்களாயின் இவர்கள் உங்களைக் கொன்று விடுவார்கள்."
கம்போடியாவின் மிகப் பிரபல்யம் பெற்ற நடிகையும் நாட்டிய தாரகையுமான பிசெத் பிலிகா, ஜூலை 1999ல் பட்டப் பகலில் பெருந் தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மரணத்தின் ஒரு வாரத்தின் பின் அவரது நாட்குறிப்புக் கண்டு பிடிக்கப்பட்ட போது பிரதம மந்திரிஹலின் சென்னுக்கும் அவருக்குமிடையில் இருந்த உறவு வெளிச்சத்துக்கு வந்தது. நொம்பென்னில் கிசுகிசுக்கப்பட்டதும் நாட் குறிப்புப் புத்தகத்தின் மூலம் வெளி வந்ததுமான இந்த இரகசியம் ஒரு குடம் கண்ணீர்

Page 88
138
அறிந்திருந்த ஹஸீன் சென்னின் மனைவி இக் கொலைக்கு உத்தரவிட்டார். இந்தக் கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.
கம்போடியாவின் தலை நகரான நொம் பென்னில் மரபு முறையான பலகை வீட்டில் சிவ் சித்தா வளர்ந்தவள் மரினா. நொம் பெண் என்பது, அதிகாரமும் செல்வமும் கொண்டவர்கள் தங்களது தாறுமாறான வாழ்க்கைக்காகப் பொது மக்களை ஏழ்மையுறச் செய்யும் நகரமாகும். சராசரி மனிதனின் வாழ்வு 56 என்று கணிக்கப்பட்ட தேசத்தில் மரினாவின் பெற்றோர் ஐம்பது வயதினை அடையும் வேளை அவர்க ளுக்காகத் தனது படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டி வந்தது. இரைச்சல் மிக்க நகரத் தெருக்களின் ஒரத்தே நின்றும் அலைந்தும் பழரசம் விற்பது அவளது தொழில், பழரசத்துக்கு ஐம்பது சதமும் சிறு அன்பளிப்புத் தொகையும் கிடைக்கும். இந்தச் சிறு அன்பளிப்புத் தொகை பெரிய வியாபாரிகளிடமிருந்தும் அதிக சம்பளம் பெறும் மேற்கு நாட்டு உதவியாளர்களிடமிருந்தும் கிடைத்தது.
நாடு எப்படிருந்த போதும் கம்போடிய ஆண்களிடம் விபச் சாரத்துக்காகப் பெண்களிடம் செல்வதற்குப்பணம் இருக்கிறது. இதில் ஈடுபடும் பெண்களில் இதற்கெனக் கடத்தி வரப்பட்டவர்கள் மற்றும் தமது வறுமை காரணமாகப் பெற்றோரால் விற்கப்பட்டவர்கள் அடங் குவர். நல்ல தோற்றம் உள்ள இளம் பெண்களுக்கு களியாட்ட விடுதி களில் தொழில் புரிய வாய்ப்புக் கிடைக்கும். அவர்கள் அதிர்ஷ்டசாலி கள். மரினா பாதைகளில் பழரசம் விற்றது இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலம்தான். விரைவில் களியாட்ட விடுதிக்கு அவள் அறி முகம் செய்யப்பட்டாள். அவ்விடுதிகளில் மதுஅருந்த வருவோர் இவ் வாறான பெண்களைத் துணைக்கு வைத்துக் கொள்வதும் அவர்கள் விரும்பினால் நாட்டியம் ஆடுவதும் உண்டு. மரினாதன்திறமைகளை வளர்த்துக் கொண்டாள். அவளால் நன்கு ஆடவும் பாடவும் முடியு மாயிருந்தது. மரினாவின் நாட்டியக் குரு நாட்டின் பெயர் பெற்ற
அஷ்ரஃப் சிஹாப்தீனி=
 

139
நாட்டியக்காரியும் நடிகையுமான பிஸெத் பிலிக்கா.
1998 டிஸம்பரில்களியாட்ட விடுதியில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஸ்வே சித்தா மரினாவுக்கு அறிமுகமான போது அவளுக்கு வயது பதினைந்து மத்திரமே. கம்போடிய - அமெரிக்க வர்த்தகர் என்றும் திருமணமாகாதவன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சித்தா. இவ்வாறான நபர்கள் கம்போடிய பலகை வீடுகளில் வசிக்கும் வசதியற்ற இளம் பெண்களைக் குறிவைத்து வருவது வழக்கம். மரினா வைப் பொறுத்த வரை சித்தா ஒர் அழகான நபராகத் தோற்றமளிக்க வில்லையெனினும் சிறப்பானதும் மரியாதைக்குரியதுமான தோற்றத் தைக் கொண்டிருந்தார். மரினா நட்பு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று சித்தாவிடம் சொன்னாள்.
ஒரு வாரத்தின் பின்னர் மரினாவை சித்தா ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவளை மது அருந்த வைத்தபின் தன் இச்சைக்கு ஆளாக்கினார். அதனைத் தொடர்ந்து தனக்கு விருப்பமான போதெல்லாம் வந்து செல்ல வசதியாக ஒர் அடுக்குத் தொடர்மாடியில் ஒற்றைப்படுக்கையறையுள்ள வீட்டில் மரினாவைக் குடியமர்த்தினார். இரண்டு மாதங்களுக்குள் நாகரிக நகரான பட்டாம்பாங்குக்கு அவளை அழைத்துச் சென்றார். அங்கு மரினாவுக்கு எதையும் வாங்கிக் கொடுக்கவில்லையெனினும் விரும்பியதை வாங்கிக் கொள்ளப் போதுமான பணம் கொடுத்தார்.
மிகப் பெரிய வர்த்தகர்கள், இராணுவ மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடனான பல விருந்துபசாரங்களுக்கு மரீனாவை சித்தா அடிக்கடி அழைத்துச் சென்றார். அங்கு விலையுயர்ந்த மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டன. நாட்கள் செல்லச் செல்ல சித்தா அவர் சொன்னது போல ஒரு வியாபாரி அல்ல என்ற உண்மை புரிய ஆரம்பித் தது. அமைச்சரவையின் இரண்டாம் நிலைச் செயலாளராகவும் கம்போடிய இராணுவத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியுமாக அவர்
செயற்படுவதும் மரினாவுக்குத் தெரிய வந்தது. அதுமட்டுமன்றி
சித்தா கம்போடியாவின் பிரதமர் ஹஜூன் சென்னின் மிக நெருங்கிய சகா என்பதையும் அவர் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பதையும் மரினா அறிந்து கொண்டாள். மரினாவின் வயதையொத்த ஒரு மகள்
ஒரு குடம் கண்ணீர்

Page 89
140
உட்பட அவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருந்தார்.
மரினா தனது பாஷையில் சொன்னாள்:- "சித்தாவின் மனை வியை நினைத்து நான் வருந்தினேன். சித்தா திருமணம் செய்தவர் என்பதை அறிந்ததும் அவரை விட்டு விலகிவிடநினைத்தேன். ஆனால் நீ நினைத்த மாதிரி என்னை விட்டுப் போக நான் ஒன்றும் நாய் இல்லை" என்று சத்தமிட்டார்.” அதன் பிறகு மரினாவை மீண்டும் பட்டாம் பாங்க் அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு பெரிய ஹோட்டலில் அறையெடுத்து அங்கே தங்கச் செய்தார். ஆனால் அந்த அறைக்குள் அவளை நிர்வாணமாக்கிவிட்டு உடைகள் அனைத்தையும் எடுத்துச் சென்றார் சித்தா.
ஒரு பெண் நிர்வாணமாக இருப்பது கம்போடியாவில் பெரும் சாபக்கேடு என்று கருதப்படுகிறது. ஆனால் மரினா அந்த அறைக்குள் பத்துத் தினங்கள் நிர்வாணமாக அடைபட்டுக் கிடக்க நேர்ந்தது. பூட்டப்பட்ட அறைக்கு வெளியே காவலுக்கு ஆள் நின்றிருந்தான். ஹோட்டல் சிப்பந்திகள் உணவை அக்காவலாளியிடம் கொடுத்து விட்டுப் போவார்கள். ஆனால் அவள் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரியாது. கடைசியாக அவளைப் பார்க்க வந்த சித்தா, இத்தொடர்பை நீடிக்க விரும்புகிறாயா இல்லையா என்று கேட்டார். சித்தாவுக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டதோ என்று அவள் சந்தேகித்தாள். வேறு வழியில்லாமல் உடன்பட நேர்ந்தது. அதன் பிறகே அவளால் நொம்பென் திரும்ப முடிந்தது.
பட்டாம்பாங்கிலிருந்து நொம்பென் வந்து சிலமாதங்களின் பின் மரினாவைப் பயமு றுத்தும் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம் பித்தன. சித்தாவுடனான தொடர்பை விட்டு விட வில்லையாயின் மரினா வின்முகத்தில் எரிதிராவகம் (அசிட்) வீசப்படும் என்று அவ்வழைப்புகள் தெரிவித்
 

தன. மரினா அந்த அழைப் புக் குரலை இலேசாக அடை யாளங் கண்டாள். அது பழக் கப்பட்ட குரல். சித்தாவின் மனைவி குவொன் சோபா லின் மருமகனான குவொன் வான் டீயின் குரல் அது. எனவே சித்தா, மரினா இருக்
கும் வீட்டை மாற்றினார். பின்னர் மீண்டும் பட்டாம்பாங்குக்குச் செல்லப் பணித்தார்.
1999 டிஸம்பர் 5ந் திகதி தனது மூன்று வயது மருமகனுடன் பகிரங்கச் சந்தைக்குச் சென்றிருந்தாள் மரினா. அங்கு தலைநகருக்கு அப்பாலும் தொடர்பு படக்கூடிய கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கித்திரும்புவது மரீனாவின் நோக்கமாக இருந்தது. ஒரு கடையில் சிறுவனுக்குக் காலை ஆகாரத்தை ஊட்டிய பிறகு ஒரு முக்காலியில் அமர்ந்து தனது காலை ஆகாரத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். திடீரென யாரோ ஒருவன் அவளது தலைமுடியைக் கொத்தா கப் பிடித்து முக்காலியிலிருந்து இழுத்துத் தெருவோரத்துக்குக் கொண்டு வந்தான். "என்னுடைய கணவனைத் திருடிய மாயக்காரி; தப்பிப் பிறந்த பிடாரி” என்று சத்தமிட்டபடி உயர் குதிச் செருப்புக்கள் அணிந்த கால்களால் ஒரு பெண் அவளை உதைத்தாள். அந்தக் குதிகள் சித்தாவின் மனைவி சோபாலுடையவை. கீழே விழுந்து கிடந்த மரீனாவை அறுவருக்கு மேற்பட்ட சோபாலின் குடும்ப உறுப்பினர் களும் பாதுகாவர்களும் சுற்றி நின்று அடித்து உதைத்தார்கள்.
இரத்த வெள்ளத்துக்கு நடுவில் அரை மயக்கத்தில் கிடந்தாள் மரினா. அண்மித்தாக நிறுத்தப்பட்டிருந்த தனது மாமியின் காரி லிருந்து சோபாலின் மருமகன் வான் டீ, எரிதிராவகம் நிரம்பிய கொள் கலனை எடுத்து வந்து மரினாலின் உடல் மீது ஊற்றினான். உடல் துடிதுடிக்க அவள் அலறினாள். அவன் ஊற்றிய திராவகம் அவனது காற்சட்டையிலும் தெறித்தது. அந்தக் காற்சட்டையை அங்கேயே கழற்றிப் போட்டான். அவனது காற்சட்டையுடன் இணைந்த பை
|ඉංග්‍ය ගuá ඝණ්ටෝ

Page 90
142
அங்கு கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கொள்கலனில் இருந்த திராவகத்தில் நான்கில் மூன்று பங்கு அவளது தலையில் ஊற்றப்பட் டது. அவளது முகம், தலை, காது கள் என அனைத்து உறுப்புக்களும் ஒரு வினாடியில் கருகின. ஒரு கணத்தில் தனது அழகை அவள் இழந்தாள். அந்த அனுபவம் எரி மலைப் பிழம்பிற்குள் விழுந்தது போலிருந்தது என்று மரீனா பின்னர் தெரிவித்தாள்.
மரீனா மீது இடம்பெற்ற தாக்குதலைப் போல அவ்வருடத் தில் மட்டும் 127 தாக்குதல்கள் நொம்பென்னில் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 96 பேர் பெண்கள். ஒரு தாயின் மீது வீசப் பட்ட எரிதிராவகம் 3 வயது குழந்தைக்கும் பட்டிருக்கிறது.
மரீனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். தனது சிறு வயதில் அமெரிக்கா சென்றிருந்த அவளது சகோதரன் கம்போடியா திரும்பி நொம்பென்னிலிருந்து சிகிச்சைக்காக வியட்னாமுக்குக் கொண்டு சென்றான். கிட்டத்தட்ட களி மண்ணைக் கொண்டு செய்யப்படும் வேலை போல அவளது முகம் தசைத் துண்டுகளைக் கொண்டு வைத்தியர்களால் வடிவமைக்கப்பட்டது. அவளது அழகிய முகத்தில் ஒரு முகமூடியைக் கொழுவியது போல் இப்போது அவளது முகம் இருக்கிறது.
அமெரிக்காவில் தற்போது வசிக்கும் இந்த அப்பாவிப் பெண் தனது அழகிய தோற்றமுடைய பழைய புகைப்படங்களையும் தனது பாடல்கள் அடங்கிய ஒளிப்பதிவு நாடாக்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அது இளவயது அழகிய நடிகை தனது வயது முதிர்ந்த காலத்தில் தனது நினைவுகளை அசை போடுவதை நினைவு படுத்துகிறது. அவளது எண்ணங்களில் நடந்து போன துயரத்தை
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

143
மறக்க விரும்புகிறாளா அல்லது மனோவியலாளர்கள், பரிவுரை மூலம் திடப்படுத்துவோர் மற்றும் அறுவைச் சிகிச்சையாளர்கள் மூலம் நரகி லிருந்து வெளியே வந்து நிகழ் காலத்தைப் பழைய உற்சாகத்துடன் தரிசிக்க முயல்கிறாளா என்பது புரியவில்லை.
மரினா மீது தாக்குதல் நடத்தியமைக்காக சோபால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பயம் கொண்ட பொலீஸார் சோபா லைக் காணவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயரதி காரத்துக்கு எதிராக விரல் உயர்த்த எந்த அதிகாரியால்தான் முடியும். நொம்பென் பிரதான பொலிஸ் அதிகாரியோநான் வருவதற்கு முன்னர் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் குறித்த கைது உத்தரவு எதையுமே என்னால் இதுவரை காணக்கிடைக்கவில்லை என்று சொல்கிறார்.
ஆனால் இரண்டு முறை சோபால் மரினாவின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பில் தொடர்புகொண்டு 'சித்தாவுக்கு இனிமேல் மரினா தேவைப்படமாட்டாள்; ஏனெனில் அவள் இப்போது அருவ ருப்பான தோற்றமுடையவள்" என்று சொன்னதாக மரினாவின் சகோதரன் சொல்கிறான்.
ஆனால் அநேகமாக ஒவ்வொரு இரவும் சித்தா நொம்பென்னி லிருந்து மரினாவுடன் தொலைபேசியில் பேசுகிறார். மிகவும் சிரமப் பட்டு அவள் அவருடன் பேசுகிறாள். தாக்குதலின் பின் வைத்திய செலவுகளையும் பொஸ்டன் வந்த பின்னர் அவளது ஒரு வருடச் செலவையும் அவரே செய்திருந்தார். பலமுறை3000 டாலர்களை அவர் மரினாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இந்தப் பணம் அவளது அழகு அவரால் இழக்கப்பட் டது என்ற குற்ற உணர்வின் பேரிலா அல்லது தனது மனைவியையும் தனது பதவியையும் காப்பாற்றும் நோக்கத்திலா அல்லது அதற்கு வேறு ஏதும் காரணங்களுண்டா என்று தெரிய வில்லை.
மரினா சொல்கிறாள் - "அவர்கள் செய்ததற்குரியதை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பொது
=&D குடமீ கர்ைfை

Page 91
144
மக்களுக்கு இது ஒர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனது வாழ்வையும் எதிர்காலத்தையும் சிதைத்து விட்டார்கள். அதை நான் எப்படி அனுபவிக்கிறேன் என்பதை நான் மட்டுமே அறிவேன். இதை இன்னொருவர் அனுபவிப்பதை நான் விரும்பவில்லை!"
குறிப்பு: மரினா குறித்து ஆவணப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்குப் பிறகு சித்தா சோபாலை விவாகரத்துச் செய்ததாக வும் ஒரு தகவல் சொல்கிறது.
நன்றி:
01. Eric Pepe - 2006 02. The Cambodia Daily WEEKEND, Saturday and Sunday,
February 5-6, 2000 03. Cat Barton and Sam Rith - The Phnom Pene Post June 23, 2009
04. andybrouwner.co
ඌlක8||&) ශිකIDIfජ්ග්

பக்தாத் பிச்சைக்காரன்
எனது பெயர் ஆபெல். இது எனது கதை. ஈராக்கின் தெருச் சிறுவனான எனது வயது பத்து. பக்தாத் தெருக்களில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறேன்.
இந்த நாட்களில் பிச்சையெடுத்துப் பிழைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்குள்ள மக்களில் அதிகமானோர் பிச்சைக் காரர்களை விடக் கேவலமான நிலையில் இருப்பதே அதற்கான காரணமாகும். அவர்கள் செல்வதற்கு வேறு இடம் கிடையாது. அவர்கள் அடைக்கலம் கோர வேறு மனிதர்களும் கிடையாது. இதனால் நம்பிக்கை இழந்த நிலையில்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் மிக உன்னத தேசமாக இருந்த இந்நாட்டின் சிதைவுகளை விட்டு விட்டு, செல்வமும் செல்வாக்கும் உள்ள பலர் நீண்ட காலத்துக்கு முன்னர் சென்று விட்டதாக இங்கு பேசிக் கொள்கிறார்கள்.
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. முன்னர் ஒரு முறை அமெரிக்கர் எமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு மிகுந்த விருப்போடு 'பாலைவனப் புயல்" என்று பெயரும் இட்டிருந் தார்கள். உயிராபத்தை விளைவித்த மிகப் பயங்கரமான தாக்குதல் அது. நான் சொல்வதை நம்புங்கள். அது மிக மோசமான பயங்கரத் தாக்குதல். அந்தத் தாக்குதலில் அகதியாகவேனும் ஒருவரும் மிஞ்சவில்லை என்றால் பாருங்கள். வேண்டுமானால் எனது தகப்பனா |ඉංග්‍ය ආuහී ආකාග්ගහෝ

Page 92
146
ரைக் கேட்டுப் பாருங்கள். அந்த அமெரிக்கத் தாக்குதல்தான் அவரது உயிரைக் குடித்தது.
எனக்கு எனது தந்தையைச் சரியாக ஞாபகமில்லை. அவர் ஆங்கிலப் பேராசிரியராக பக்தாத் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார் என்று எனது தாயார் சொல்கிறார். எனது தாயார் ஷேக்ஸ்பிய ரிலிருந்து உதாரணம் சொல்வது போல முட்டாள்தனத்தின் காலம் ஆரம்பித்து விட்டது. நாளையும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் வரவே செய்தன. ஆனால் அவை நம்பிக்கையின்மையையும் நோயை யும் மரணத்தையும் தவிர வேறு எதையும் எமக்குக் கொண்டு வர வில்லை.
நான் என்னை அதிர்ஷ்டக்காரனாகச் சில வேளை எண்ணிக் கொள்கிறேன். குப்பைத் தொட்டிகளிலிருந்து பொறுக்கி அதிகமாகச் சாப்பிட்டும் இலகுவான, கிருமித் தொற்றுக்கு வழிகோலுகிற சாக் கடை நீரை அதிகம் குடித்தும் இருக்கிறேன். உங்களுக்குத் தெரி யுமா. ஒவ்வொரு மாதமும் ஐயாயிரத்துக்கும் ஆறாயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையில் என்னைப் போன்ற சிறுவர்கள் நோய் வாய்ப்பட்டு மரணித்துப் போகிறார்கள். ஓரளவு சக்தியுள்ளவர்கள்
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

147
நோயுடன் போராடிக் கொண்டிருக்கி றார்கள். கேவலம், மிருகங்களுக்குத் தரப்படும் அளவுக்காவது மருந்துகளோ மருத்துவ வசதிகளோ எங்களுக்குக் கிடையாது.
சில வேளை இவ்வாறான கேவல மான நிலையில் வாழ்வதற்கு நேர்ந்ததை நினைத்து நான் என்னை அதிர்ஷ்டமில் லாதவன் என்று நினைக்கிறேன். நான் தெருக்களிலேயே எனது அதிகமான நேரத்தைச் செலவிடுவதற்கு நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளேன். அப்படிச் செலவிட்
டால் தான் சில ரூபாய்களைப் பிச்சை யெடுத்து அன்றைய தினத்தின் முடிவில் எனது தாயாருக்குக் கொடுக்க முடியும். இது குளிர்காலம். பக்தாத் தெருக்களூடே செல்லும் குளிர்காலக் காற்று எனது இளம் எலும்புகளையும் துளைத்துச் செல் கிறது. என்னைப் போன்ற ஏனைய தெருச் சிறுவர்கள் - அவர்களில் பலர் அநாதைகள் - ஒன்றிணைந்து குப்பை கூளங்களைக் கொண்டு நெருப்பு மூட்டி எமது இளம் உடல்களைச் சற்றுச் சூடாக்கிக் கொள் வோம். ஆனால் எங்களது இதயங்களைச் சூடாக்கிக் கொள்வதற்கு வழியேதுமில்லை. எங்களது பிள்ளைப் பராயம் எங்களை மறுக்கிறது.
கிழிந்த உடைகளை அணிந்த தாய்மார், குச்சுக் கைகளையும் முகங்களையும் உடைய, நோய்வாய்ப்பட்ட கந்தலுடையுடனான குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு அலைந்து திரிவதை நான் எல்லா இடங்களிலும் காண்கிறேன். அக்குழந்தைகளின் உடல்களெங்கும் காயங்கள்!
எனது வயதொத்த ஏனைய சிறுவர்களைப் போலவே நானும் பாடசாலைக்குச் செல்வதில்லை, தெருவில் செல்லும் கார்களை நிறுத்தி, என்னை விடச் சற்று நல்ல நிலையில் இருக்கின்ற சாரதிகளிடம் சில்லறைகளுக்காகக் கெஞ்சுகிறென். "தயவு செய்து குடும்பதைக் காக்கும் சிறுவனான எனக்கு உதவுங்கள். எனது தாயார் ஒரு நோயாளி.
|છb ෙLiගී ඝගdiox)

Page 93
148
எனது சகோதரி சீனி வியாதிக்காரி.”
சிலவேளைகளில் குளிர்கின்ற ஒரு நாணயம் பனியில் உறைந்து போன எனது கைகளில் விழுவதை உணர்வேன். நான் கடும் பசியாக இருந்தால் அதைக் கொண்டு ஊசிப்போன ஒரு "சான்ட்விச்சை வாங்கிக் கொள்ளமுயல்வேன். அது எப்படியிருக்கும் என்று உங்களுக் குத் தெரியும் தானே. அதில் முழுக்கவும் பச்சைப் புள்ளிகள் நிறைந்தி ருக்கும். மிக மோசமாக எனது வயிறு பசிக்கும் போது கடும் வேத னையை உணர்வேன். அநேகமாக நான் எதையும் சாப்பிடுவேன்.
ஆனால் உலகில் ஏராளமான மக்கள் சகல மகிழ்ச்சிகளோடும் நிரம்பிய வயிறுகளோடும் குளிருக்கு இதமான வெப்பத்தில் அமர்ந் திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் சிறுவர்களைப் பொறுத்தவரை நாளைய நாள் கொண்டு வரப்போகும் உற்சாகமூட்டும் விடயம் பற்றிக் கனவு காண்பதற்கு மிகப் பொருத்தமானது. எனது நாளைய தினங்கள் வந்தன. போயின. ஆனால் இன்னும் எனது வயது பத்துத்தான்! எனது பிற்பகல்கள் மனக் கிலியும் பேய்க்கனவும் நிறைந்தவை. வளமான வாழ்வே மகிழ்ச்சி கரமான கனவுகளைக் கொண்டு வருகிறது என அறிந்து கொண்டேன்.
குளிர் உறைந்த இரவில் என்னைப் போன்ற சிறுவர்களுடன் சுள்ளிகளை எரித்து உடம்பைச் சற்று உஷ்ணப்படுத்திக் கொள்ளும் போது, எனது தந்தை அவரது அன்பு நிறைந்த கரங்களை நீட்டி என்னை அழைக்கும் காட்சியைக் காண்கிறேன்.
அவர் அழைக்கின்ற அந்த உலகத்தில் போரும் கிடையாது; வெறுப்பும் கிடையாது!
நன்றி
எட்னா யாகி
(மீடியா மொனிட்டரஸ் இணையத்தளம்)
ඊ|බද්|Jäü சிஹாப்தீனி

கல்லும் கரையும் கதை
பட்டம் பெறும் வேளை அணியும் அங்கியுடன் எடுத்துக் கொள்ளப்பட்ட புகைப்படத்தில் ஆஃபியாவின் கைகளில் சிவப்புமலர்கள் அடங்கிய ஒரு பூங்கொத்தும் இருந்தது. அப்படத்தை முதலில் பார்த்த போது அந்தப் பூக்களைவிட ஆஃபியா அழகா னவளாக இருந்தாள். முகத்தில் ஒரு தேவதையின் அப்பழுக்கற்ற பூஞ் சிரிப்பு, கன்னக் கதுப்புகளைக் காண அழைத்தது.
தன் முன்னாலிருக்கும் காலத்தில் தான் நாராய்க் கிழிக்கப்படப் போகிறேன் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது அவளது நிலையறிந்த யாரும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் மிகுந்த ஆவேசத்துக்கு உள்ளாவார்கள் என்பதை மட்டும் என்னால் அழுத்தமாகச் சொல்ல முடியும்.
தற்போது நியூயோர்க்கில் அமெரிக்காவின் இரும்புக் கரப் பின்னணியில் காற்று வசதிகளற்ற ஒரு சிறைக் கூண்டுக்குள் அதியுச்சப் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருக்கும் ஆஃபியா சித்திக்கி ஒரு டாக்டர்.
பாக்கிஸ்தானின் கராச்சியில் 1972ம் ஆண்டு மார்ச் 2ம் திகதி பிறந்த ஆஃபியாவின் தந்தை மொஹமட் சித்திக்கி இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற ஒரு டாக்டர். நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர். Hஒரு குடம் கணினி

Page 94
150
சித்திக்கியின் மிகக் கெட்டித்தனமான மூன்று பிள்ளைகளில் ஆஃ பியாவும் ஒருவர். கல்வியிலும் அறிவிலும் மேம்பட்ட ஒரு குடும்பமாக அது விளங்கியது. ஆஃபியாவின் சகோதரியான டாக்டர் பெளஸியா சித்தீக்கிதனது கற்கையின்போது அமெரிக்கப் பரீட்சைகள் பலவற்றில் 99 புள்ளிகள் பெற்றவர். அமெரிக்காவில் வாழும் ஆஃபியாவின் சகோதரர் கட்டடக் கலை நிபுணர்.
1990ல் ஆஃபியா அமெரிக்கா சென்றார். ஹரஜூஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு வருடப் படிப்பை மேற்கொண்ட பின்னர் புகழ்பெற்ற (மசாச்சூஸெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஒஃப் டெக்னொலொஜி) எம்.ஐ.ரி கல்லூரியில் இணைந்து கற்கையை மேற்கொண்டார். அதே வேளை :பிரண்டீஸ் பல்கலைக்கழகத்திலும் இணைந்தார். அங்கு புலனுணர்வு நரம்பியல் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்றார்.
துரதிர்ஷ்டவசமாக டாக்டர் ஆஃபியா சித்திக்கிற்கும் டாக்டர் முஹமட் அம்ஜத்துக்குமிடையிலான கல்யாணம் தொலைபேசியிலே நிச்சயிக்கப்பட்டது. ஆகாகான் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்ஜத் ஒருதனிமை விரும்பி அவர் வைத்திருந்த நீண்டதாடி அமெரிக்காவுக்கு வந்த போது காணாமல் போயிருந்தது. அறுவைச்சிகிச்சையின் போது உணர்விழக்கச் செய்யும் மருத்துவராக தஃப்ட்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார். திருமணத்தின் பின்னர் அமெரிக்காவில் மிகவும் இறுக்கமான சுபாவமுள்ளவராகவும் குழப்ப மான மனநிலையில் உள்ளவராகவும் அம்ஜத் காணப்பட்டார். தனக்குத் தொடர்பற்ற பேச்சுக்களில் ஆர்வம் காட்டும் அதே சமயம் அவற்றுக்கு ஆதரவு தருவது போல் பாசாங்கு செய்பவராகவும் அவர் செயற்பட்டார். ஆஃபியாவை அடிக்கடி மூர்க்கத் தனமாகத் தாக்கினார். ஆஃபியாவை மட்டுமன்றி அவர்களது மூன்று பிள்ளை களில் இளையவர்களான அஹமதையும் மர்யத்தையும் கூட அடிக்கடி அடித்துத் துன்புறுத்தினார்.
இத்தாக்குதலிலிருந்து தன்னையும் பிள்ளைகளையும் காத்துக் கொள்வதற்காக ஆஃபியா அமெரிக்காவிலேயே வசித்த தனது சகோதரி பெளஸியாவின் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். இயல் பான மனோ நிலையில் பிள்ளைகள் வளர வேண்டுமாயிருந்தால்
ඊ)කදී]]&lf சிஹாப்தீன்:

151
அவர்களைத் தந்தை இருக்குமிடத்தில் வைக்க வேண்டாம் என்று வைத்தியர்கள் ஆஃபியாவுக்கு ஆலோசனை வழங்கி யிருந்தனர்.
உலகத்தில் கல்வியில் மேம்பட்டு விளங்கிய குடும்பங்களில் ஆஃபியாவின் குடும்பமும் ஒன்று என்பதால் தனது பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வியை அளிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது கணவரோஅடிப்படை வாத மனோ நிலையுடன் காணப்பட் டார். எனவே நவீன கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று அம்ஜத் சண்டை பிடித்தார். மத்ரஸாக்களில் படித்தால் மட்டும் போதுமானது என்று பிடிவாத மாகச் செயற்பட்டார். இரவில் துலக்கமாகத் தெரியும் கண்ணாடியை அணிந்து கொண்டு ஜிஹாத் இயக்கத்தில் உள்ள உயர் நிலை அங்கத்தவர் போலப் பாவனை காட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் ஆஃபியாவின் அணுகுமுறை வித்தியாசமானது. இவ்வாறு இயங்குவது ஜிஹாத் அல்ல; அதற்குப் பெயர் பயங்கர வாதம்' என்று அம்ஜத்துக்கு ஆஃபியா சொல்வதுண்டு. தன் கணவரின் நடத்தையையிட்டு ஆஃபியாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தன்னையும் தனது பிள்ளைகளையும் தனது கணவர் ஏதாவது சிக்கலுக் குள் மாட்டி விடக்கூடும் என்று நினைத்தார்.
அம்ஜத்தின் சித்திரவதைகளுக்கு அப்பால் அம்ஜத்தும் அவரது தந்தையும் ஆஃபியாவின் பணப்பையை ஒரு சதம் மிச்சமின்றிச் சூறை யாடத் தொடங்கினர். அத்துடன் ஆஃபியா சேமித்து வைத்திருக்கும் ஆயிரக் கணக்கான டாலர்களை வங்கியிலிருந்து மீளப் பெறுமாறு உடலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கினர். ஆஃபியாவின் சகோ தரியும் சகோதரனும் பெற்றோரும் ஆஃபியாவுக்குப் பண உதவிக ளைச் செய்தனர். மூன்றாவது குழந்தை பிறந்த போதும் மருத்துவச் செலவுகளை பொஸ்டன் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது.
= ஒரு குடமீ கணினி

Page 95
152
ஆஃபியா உண்மையில் ஆசியப் பெண்களுக்கேயுரிய வெட்க சுபாவமுள்ள பணிவான பெண்ணாக இருந்தார். திருமணத்தின் பின் கணவருடன் ஏற்பட்ட பிணக்குகளைத் தனக்குள்ளேயே உள்வாங்கிக் கொண்டு பொறுமை காத்தார். இப்பிணக்கு வெளியே தெரியும் பட் சத்தில் பெற்றோர் மனத்துயர் அடைவதோடு குடும்ப கெளரவம் சிதைந்து விடும் என்றும் கருதினார். மூன்றாவது பிள்ளை சுலைமான் பிறந்த போது அம்ஜத் வந்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்த செய்தி தொலைபேசியில் அவருக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் கராச்சியிலுள்ள ஆஃபியாவின் வீட்டுக்கு ஒரு முறை அம்ஜத் வந்த போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் ஆஃபியாவின் வயது முதிர்ந்த தந்தையைப் பலமாகத் தள்ளி விட அவர் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். அப்போது அவருக்கு இதயத் தாக்கு ஏற்பட்டுப் பின்னர் காலமானார். சில மாதங்கள் கழிந்த பிறகு ஆஃபியாவுக்கு அம்ஜத் அனுப்பிய கடிதத்தில் ஆஃபியாவை 'இஸ்லாமிய சகோதரி என்று விளித்திருந்தார் அம்ஜத். அக்கடித்தில் ஆஃபியாவையும் குழந்தைகளையும் துன்புறுத்தியதற்காகவும் தகப்பனாரின் மரணத் துக்குக் காரணமாக இருந்ததற்காகவும் மன்னிப்பும் கோரியிருந்தார்.
ஆஃபியாவை விவாகரத்துச் செய்வதற்கு முன்னரே அம்ஜத் வேறொரு பெண்ணை விவாகம் செய்தார். அத்துடன்நின்று விடாமல் ஒவ்வொரு இரவும் தொலைபேசி மூலம் ஆஃபியாவைப் பயமுறுத்தி வந்தார். இந்தத் தொலைபேசித் துன்புறுத்தல் ஒரு சித்திரவதையாக மாறியது. எனவே ஆஃபியா இஸ்லாமாபாத்திலுள்ளதனது மாமாவின் வீட்டுக்கு இடம்பெயரத் தீர்மானித்தார். ஷிபா சர்வதேச வைத்திய சாலை முதல் பல்வேறு வைத்தியசாலைகள் அவருக்குத் தொழில் வழங்கப் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. எனவே ராவல் பிண்டிக்குப் புறப்பட ஆயத்தம் செய்தார்.
ஆஃபியாவின் தாய் டாக்டர் அம்ஜத்துடன் சேர்ந்து வாழுமாறு ஆஃபியாவை வற்புறுத்தினார். ஆஃபியாவின் தாயுடன் அடிக்கடி அம்ஜத் நல்ல மனிதனாகப் பேசி நடிப்பது வழக்கமாக இருந்தது. எனவே தனக்கு அம்ஜத் இழைத்த அநியாயங்களைத் தாயாருக்கு விலா வாரியாக எடுத்துச் சொன்னார். அதே வேளை டாக்டர் அம்ஜத் 17
ඊlඛශ්‍රීI&) சிஹாப்தீனி

153
நவம்பர் 2002 அன்று தனது பிள்ளைகளின் முழு உரிமைகளையும் பாதுகாப்பையும் ஆஃபியாவிடம் சட்டபூர்வமாகக் கையளித்தார்.
டாக்டர் ஆஃபியா இஸ்லாமாபாத் செல்வதை மோப்பம் பிடித்த அம்ஜத்தும் அவரது தந்தையும் வேறு ஒரு திட்டம் தீட்டினார் கள். அதன் படி ஆஃபியாவுக்குப் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பாக்கிஸ்தான் உளவுத் துறைக்கும் அமெரிக் காவின் உளவுத் துறைக்கும் தகவல் கொடுத்தார்கள். அமெரிக்காவில் ஆஃபியாவை பயங்கரவாதியாகச் சித்தரித்துச் செய்திகள் வெளியா கின்றன.
இக்காலப்பகுதியில் தனது அரசையும் தன்னையும் பாதுகாக்க யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் நிலையில் பாக்கிஸ்தான் நாட்டுத் தலைவர் இருந்தார். மார்ச் 30, 2003அன்று ராவல்பிண்டிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் ஆஃபியா தனது மூன்று பிள்ளை களுடனும் காணாமல் போனார். பாக்கிஸ்தான் உளவுத் துறை அவர் களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யிடம் கொத்தாக அள்ளிக் கொடுத்து விடுகிறது. ஆஃபியாவை ஆப்கானிஸ்தானிலுள்ள பக்ரம் சிறைக்குள் வைத்துக் கொண்டே ஆஃபியா காணாமல் போய் விட்ட தாகவும் அவர் ஒசாமா பின் லேடனுடன் தொடர்பு பட்டவர் என்றும் அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வெற்றி கரமாக நடத்திக் கொண்டிருந்தன.
பக்ரம் சிறை அதியுச்ச சித்திரவதைகளின் மத்திய நிலையமாக இருந்தது. இதற்குள்தான் ஆஃபியா தனது சக்திக்கும் மேலாகத் துன்பு றுத்தப்பட்டார். தொடர்ச்சியான வன்புணர்ச்சியினால் அவர் உடலும் உள்ளமும் சிகைக்கப்பட்டது. அவரது சிறுநீரகம் ஒன்று பிடுங்கப் பட்டது. பற்களும் மூக்கும் உடைக்கப்பட்டன. உதடுகள் கிழிக்கப் பட்டன. பக்குவமும் இஸ்லாமியப் பண்பாடும் கொண்ட அவர் அங்கு கேவலப்படுத்தப்பட்டார். அதி உச்ச இழிவுக்கு உள்ளாக்கப்பட்டார். பெண்களுக்கான சிறையில் அவரை வைக்காமல் ஆண்களுக்கான சிறையில் வைத்துத் தொடர்ந்து அவரைக் கற்பழித்து வந்தார்கள் அமெரிக்கர்கள். அடிக்கடி அவர்
|ඉq5 ගLර් ආගlග්

Page 96
154
எழுப்பும் ஒலத்தால் அச் சிறைச் சாலையே அவ்வப்போது அதிர்ந்து அடங்கியது.
அவருக்கு இழைக்கப்படும் துன்பங்க ளைக் காணவும் கேட்கவும் சகிக்காத சிறையி லுள்ள ஆண்கள் அவரைப் பெண்கள் சிறைக்கு மாற்றுமாறு உண்ணாவிரதம் மேற்கொணி டார்கள். உடல் முழுவதையும் எப்போதும் மூடி மறைக்கும் அவருக்குக் குறைந்த அளவு துணியே வழங்கப்பட்டது. ஒருவரின் தகுதிக்கும் தராதரத் துக்கும் ஏற்ப எவ்வாறு இழிவுபடுத்த வேண்டும் என்பதை அமெரிக்கர் தெளிவாக அறிவர். அதற்கேற்ற வகையில் அவரைத் துன்பத்தில் துவழ விட்டார்கள்.
கைதிஎண் 650 அவருக்குரியது. இந்த இலக்கத்தில் 'கிறே லேடி என்று அவரைச் சிறையிலுள்ள கைதிகள் அழைத்தார்கள். எல்லோரும் பார்க்கும் படி அமைந்த ஆண்கள் கழிப்பறைக்குள் அவர் இயற்கைக் கடன்களை முடிக்கும் படி வற்புறுத்தப்பட்டார். ஒரு மனிதப் பிறவிக் கான ஆகக் கடைநிலை கெளரவத்தையும் இல்லாதாக்கி அவரை அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவான் ரிட்லி
y
ஆஃபியாவின் வதை நிலையை வெளியே சொன்னவர் பிரிட் டிஷ் பத்திரிகையாளர் இவான் ரிட்லி (Yvonne Ridly). 2008 ஜூலை 6ம் திகதி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அந்தப் பெண் தொடர் ந்து ஒலம் எழுப்பிக் கொண்டேயிருப்பதாகவும் அவர் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் சொன்னதுடன் அவருக்கு உதவிக் கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுத்தார். ஆஃபியாவைப் போல் இன்னும் பல பெண்கள் அச்சிறைக்குள் துன்புறுத்தப்படுவதாகவும் ஒரு மேலைநாட்டுப் பெண் இவ்வாறு துன்புறுத்தப்படமாட்டாள் என்றும் சொன்னார். அதன் பின்னர் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுறுசுறுப்படைந்தார்கள்.
ஆஃபியாவைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முன்னெடுப்பின் போதும் பாக்கிஸ்தான் அரச இயந்திரமும் அமெரிக்க உளவுத் துறை யும் ஒவ்வொரு கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தது. அஷ்ரஃப் சிஹாப்தீனி=
 

155
0 மார்ச் 30, 2003ல் ஆஃபியா காணாமல் போகிறார்.
0 மார்ச் 1ம் திகதி கைது செய்யப்பட்ட காலித் மஹ்மூத் விசாரணையின் போது ஆஃபியாவின் பெயரைச் சொன்னதாக சி.என். என். ஏப்ரல் 3ம் திகதி சொல்கிறது. அதே வேளை ஆஃபியாவைப் பற்றி எதுவும் தெரியாது என்கிறார்கள் பாக்கிஸ்தானிய அதிகாரிகள்.
0 ஏப்ரல் 4ம் திகதிஆஃபியாவைக் கைது செய்யவோ தடுத்து வைக்கவோ இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை மறுக்கிறது.
0 ஆஃபியா அல்கைதா செயற்பாட்டாளரும் உதவியாளருமா வார் என்று மே 26ம் திகதி அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த ஜோன் அஷ்குறொஃப்ட் சொல்கிறார்.
0 மே 28, 2004ல் பாக்கிஸ்தானிய உள்துறை ஆஃபியாவை அமெரிக்க உளவுத்துறையிடம் கொடுத்ததாகச் சொல்கிறது.
0 2006ல் ஹியுமன்ரைட்வொக் ஆஃபியா பயங்கரவாதத்துக் கெதிரான யுத்தத்தில் காணாமல் போனவர் என்கிறது.
0 2007ல் ஹியுமன் ரைட் வொச் ஆஃபியா சி.ஐ.ஏ யினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது.
0 ஆஃபியாகராச்சிக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மிகக் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் ஏப்ரல் '3ம் திகதி ஹியுமன் ரைட் கொமிஸன் சொல்கிறது.
0 ஜூலை 7, 2007ல் இவான் ரிட்லி சிறைவாசி 650" ஐ அடையாளப்படுத்துகிறார்.
0 ஜூலை 11ல் அமெரிக்க லெப்டினன்ட் கேர்ணல் ரூமி நெல்சன் எந்தப் பெண்ணும் பக்ரம் சிறையில் வைக்கப்பட்டிருக்க வில்லை என்கிறார்.
0 ஜூலை 31ல் அமெரிக்க உளவுத்துறை ஆஃபியாவின் சகோதரரிடம் ஆஃபியா தங்களிடம் இருப்பதாகச் சொல்கிறது.
0 ஆகஸ்ட் 4ல் ஆப்கானிதானின் தேசிய பாதுகாப்புப் படை ஆஃபியாவை ஆப்கானின் கஸ்னி என்ற இடத்தில் கைது செய்ததாகவும் அடுத்த தினம் அவர் அமெரிக்க இராணுவ வீரரைச் சுடுவதற்கு முயன்ற ஒரு குடம் கணினி

Page 97
156
போது காயமடைந்துள்ளார் என்றும் ஒரு செய்தி வெளியாகிறது.
இவ்வாறுதான் ஆஃபியா வெளியுலகின் கண்களுக்குத் தெரிய வந்தார். ஆனால் அவர் மீதான குற்றச் சாட்டுக்கள் எவையும் நிரூபிக் கப்படுவனவாக இல்லை. புதிது புதிதாக அமெரிக்கர் குற்றச் சாட்டுக் களைச் சொல்லச் சொல்ல வழக்கில் ஒசோன் படை ஒட்டை போல இடைவெளி பெரிதாகிக் கொண்டே வந்தது. அவர் விடுவிக்கப் பட்டால் அமெரிக்காவினது கேவலமான மறுபக்கங்களின் குப்பை யும் அசிங்கமும் சேர்ந்து நாற்றமெடுக்கக் கூடும். இதற்கு உறுதுணை புரிந்த பாக்கிஸ்தானுக்கும் கூட இது தலைக் குனிவை ஏற்படுத்தலாம். எனவே அவர் மரணம் வரை சிறைக்குள்ளேயே வாழ்ந்து முடிய நேர லாம் என்றே நம்பவேண்டியிருக்கிறது.
அமெரிக்காவில் சிறைச்சாலைகள், பள்ளிக்கூடங்களுக்கு குர்ஆன் பிரதிகளை அன்பளிப்புச் செய்வதையும் கஷ்டப்படும் முஸ் லிம்களுக்கு உதவுவதையும் தனது மருத்துவச் சேவைக்கு அப்பால் பணி யாக முன்னெடுத்த ஆஃபியாவை ஓர் இஸ்லாமியப் பெண்ணாக முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய அப்பாவி’ என்று அவரது அமெரிக்கத் தோழிகளே சொல்கிறார்கள்.
பொஸ்னிய முஸ்லிம்களுக்காக ஒரு முறை உதவி கோரிய ஒரு கூட்டத்தில் ஆஃபியா ஒரு சோடிக்கு மேல் பாதணிகள் உள்ளவர்கள் ஒரு சோடிப் பாதணிகளை அன்பளிப்புச் செய்யுமாறு கோரினார். குளிர் காலத்தை எதிர் நோக்கும் முஸ்லிம்களுக்காக அவர் அந்த வேண்டுகோளை விடுத்த போது அப்பிராந்தியப் பள்ளிவாசலின் இமாம் கூடத் தனது பாதணியைக் கழற்றிக் கொடுத்தாராம். இவ்வாறு
டாக்டர். ஆஃபியா சித்தீக்கி யின் சகோதரிஃபெளஸியா சித்தீக்கி மற்றும்அவர்களது தாயார் - பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில்.
(d
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

157
மனிதாபிமானம் கொண்ட ஆஃபியா மனச் சிதைவுக்குள்ளான நிலை யிலும் கட்டைக் கையுடைய ஆடை அணிவிக்கப்பட்டு நீதி மன்றம் கொண்டு வரப்பட்ட போது அங்கு நின்றிருந்த பெண்மணியிடம் ஒரு துணியை வாங்கித் தனது தோளையும் கைகளையும் மறைத்துக் கொண்டாராம்.
2010 செப்டம்பர் 24 அன்றைய பாக்கிஸ்தானின் டோன் பத்திரி கைத் தகவல்களின் படி ஆஃபியாவுக்கு 86 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது ஏழு குற்றங்கள் இருப்ப தாக நீதிபதி ரிச்சர்ட் பேர்மன் தனது தீர்ப்பின் போது குறிப்பிட்டுள் ளார். "மேல் முறையீடு செய்வது கால விரயமாகும். நான் இறைவ னிடம் முறையீடு செய்கிறேன். நீதிபதி பேர்மனை நாம் மன்னிப் போம்” என்று தீர்ப்பின் பின்னர் ஆஃபியா தெரிவித்துள்ளார்.
ஆஃபியாவை விடுவிக்கக் கோரி உலகெங்கும் ஆர்ப்பாட் டங்களும் அமெரிக்காவை நோக்கி விண்ணப்பங்களும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
"மேலும் இரத்தம் சிந்தப்படுவதையும் தப்பபிப்பிராயங்கள் கொள்வதையும் நான் விரும்பவில்லை. யுத்தங்களை நிறுத்தி அமைதி யை ஏற்படுத்துவதையே நான் உண்மையாக விரும்புகிறேன்” என்பதே ஆஃபியா தீர்ப்பின் பின்னர் உலகுக்கு விடுத்த செய்தியாகும்.
நன்றி. 01. Dr. Aafia Siddiqi: A Case of Missed identity by Dr. Anwar ul Haq 02. Raping of Aafia Siddiqi by Stehpen Lendman 03. Will Aafia Siddiqi live to tell her tale? by Zofeen T. Ebrahim 04. Who's Afraid of Aafia Siddiqui? - Katherine Ozment
05. மற்றும் இணையத் தகவல்கள்
=|છb ගLiගී අංගද්ග)

Page 98
படம் பார்: பாடம் பழ!
‘ஸலாம்" என்ற பத்திரிகையை ஈரான் அரசு மூடியதை எதிர்த்து தெஹ்ரான் பல்கலைக் கழக மாணவர்கள் 1999 ஜூலை 9ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக் கையில் ஆர்ப்பாட்டத்தைப் படம் பிடித்துக் கொண்டு நின்றார் அஹமட் பாத்திபி. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் சுட்டபோது பாத்திபிக்கு அருகில் நின்ற மாணவன் தோள் மீது துப்பாக்கி ரவை பாய்ந்தது. சுடுபட்ட அந்த நண்பன் அணிந் திருந்த டீஷேர்ட்டை உருவிப் பீறிடும் இரத்தத்தை அடக்குவதற்கு அவர் பயன்படுத்தினார். பின்னர் அந்த மாணவனுக்கு அவசர மருத் துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த விடயங்களை முடித்துக்கொண்டு மீண்டும் ஆர்ப்பாட் டம் செய்த மாணவர்களுடன் வந்து சேர்ந்தார் பாத்திபி. ஆர்ப்பாட் டத்துக்குள் நின்றபடி இரத்தம் தோய்ந்த அந்த ஆடையை இதைத் தான் பொலிஸ் செய்தது' என்று பாத்திபிஉயர்த்திப்பிடித்துக்காட்டிய அந்த நொடியில் யாரோ அந்த உடையையும் அவரையும் சேர்த்துப் படம் பிடித்திருந்தார்கள். சில தினங்களின் பின்னர் தி இக்கனமிஸ்ட் சஞ்சிகையில் அந்தப் படம் அட்டைப் படமாக வெளி வந்து உலகம் முழுக்கக் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சஞ்சிகை வெளியான சில அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

159
தினங்களில் பாத்திபி கைது செய்யப்பட்டார். அப்படி ஒரு புகைப் படம் எடுக்கப்பட்டதும் வெளிவந்ததும் அவருக்குத் தெரிந்திருக்க வில்லை.
ஏறக்குறைய பதினேழு மாதங்கள் அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தக் காலப்பகுதிக்குள் அவர் நீதிமன்று க்குக் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் முகம் மூடப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்று சொல்லப்படுவதில்லை. இது ஒரு வகையான விசாரணை என்று மட்டுமே அவர் எண்ணினார். ஒரு முறை அவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டார்.
நீதிபதி சொன்னார்:- "இந்தப் படத்தின் மூலம் உனக்கான மரண தண்டனையை நீயே பெற்றுக் கொண்டாய். பூமியில் இறைவ னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமியக் குடியரசின்முகத்தை நீ கெடுத்து விட்டாய். இதற்காகவே நீ மரண தண்டனைக்குரியவனா கிறாய்."நீதிபதிக்கு முன்னால் அவர் நிறுத்தப்பட்டதும் அவர் பேசிய தும் வெறும் மூன்று நிமிடங்களோடு முடிந்து போனது.
தனிச்சிறையில் இருந்த பதினேழு மாதங்களும் அங்கு பொருத் தப்பட்டிருந்த மின் விளக்கு இருபத்து நான்கு மணிநேரமும் எரிந்தது. ஒரு குளியல் தொட்டியளவில் உள்ள கம்பிச் சிறைக்குள்தான் காலத் தைக் கழிக்க வேண்டியிருந்தது. வெளியுலகுடன் எந்த விதத் தொடர் பும் கிடையாது. இது உடலியல் ரீதியான பாதிப்பை விட உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
அதேவேளை உடலியல் ரீதியான துன்பங்களும் அங்கு அவருக்கு இழைக்கப்பட்டன. அவருடைய முகத்தில் உதைத்தார்கள். அதனால் அவரது பற்கள் உடைந்தன. முகத்தை கழிவறை நீருக்குள் அமிழ்த்திப் பிடித்தார்கள். பாதங்கள், பின்புறம் ஆகியவற்றில் வயர்க் கற்றையினால் தாக்கினார்கள். அவரது விதையில் அடித்தார்கள். சிறை யிலிருந்த காலமெல்லாம் இந்தச் சித்திரவதைகள் தொடர்ந்தன.
அந்த உடையில் இருந்த இரத்தம் உண்மையான இரத்தம் அல்ல என்று அவர் சொல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்
=ஒரு குடம் கணினி

Page 99
160
தார்கள். அது தக்காளி சோஸ் என்றோ அல்லது சிவப்பு மை என்றோ அல்லது மிருக இரத்தம் என்றோ அவர் சொல்ல வேண்டும் என்ற எதிர் பார்ப்பு அவர்களுக்கிருந்தது. ஆனால் அவ்வாறு சொல்வது தனது நண்பர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும் என்ற முடிவில் அவர் இருந்தார்.
அதனால் கைகளைப் பின்புறம் கட்டி உயரே தூக்கித் தொங்க விட்டார்கள். இரவு பகலாக உறக்கம் கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டார்கள். தூங்கி வழியும் போதெல்லாம் தட்டி எழுப்பிக் கொண்டேயிருப்பார்கள். இதனால் தான் எங்கிருக்கிறேன், என்ன நிலையில் இருக்கிறேன் என்ற உணர்வே அவருக்கு மழுங்கியது. எழுபத் திரண்டு மணி நேரமாக அவரை உறங்க விடாமல் வைத்துமிருக்கிறார் கள். அவரது கைகளில் வெட்டிக் காயம் ஏற்படுத்தி அவ்வப்போது உப்பைக் கரைத்து ஊற்றுவார்கள். தூக்கம் முட்டும் போதெல்லாம் உப்புக் கரைசல் ஊற்றப்படும்.
ஒரு நாள் அவரது கம்பிச் சிறைக்கருகில் அவரது தாயார் பேசும் ஒலி கேட்டது. அவர் திடுக்கிட்டார். வாழ்வில் ஒரு மனிதன் வரக் கூடாத இடத்துக்கு, மனிதர்கள் சித்திரவதை செய்யப்படும் இடத் துக்குத் தனது தாயையும் கொண்டு வந்து விட்டார்களோ என்று பதறிப் போனார். தனக்கு அடுத்த அல்லது அதற்கடுத்த சிறைக் கம்பிக ளுக்குள் தாயாரையும் கொண்டு வந்து விட்டார்கள் என்று கலங்கி னார். பின்னர்தான் அது ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் என்று தெரிய வந்தது.
ஒரு முறை ஒரு முக்காலியில் அவரை நிறுத்தினார்கள். அவருக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் முக்காலிகள் போடப்பட்டு மேலும் இருவர் நிறுத்தப்பட்டனர். மூவரின் கழுத்தி லும் தூக்குக் கயிறு இடப்பட்டது. உங்களுக்கு இப்போது மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. பின்னர் அவரது இருபக்க முக்காலிகளும் உதைத்துத் தள்ளப்பட அதில் நின்றி ருந்தவர்கள் சுருக்கில் தொங்கினார்கள். அவர்களது பாதம் நீல நிறமா வதை அவர் பார்த்தார். அவர்கள் இறந்துவிட்டார்கள். அடுத்து தனது
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 
 

161 முக்காலி உதைக்கப்படப் போகிறது என்று அவர் நடுங்கினார்.
எதிர்காலத்தில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடா திருக்க அல்லது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்காதிருக்கத் தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இது என்பதை அவர் உணர்ந் தார். இவ்வாறான நிலையில் எந்த ஒரு மனிதனும் ஆடிப் போவான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை இவ்வாறான பயமுறுத்தல் கள் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அந்தப் புகைப்படம் எவ்வாறு அவரைச் சித்திரவதைக்குள் தள்ளியதோ அதே போல அவரது உயிர் தப்பிப் பிழைத்தமைக்கும் அந்தப் படமே காரணியாக இருந்தது. அந்தப் படத்துக்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்பதால் உலகம் முழுக்கவும் இந்த விடயம் தெரியப்பட்டதாகியிருந்தது. எனவே அவரது உயிர் தப்பியது.
பதினைந்து வருடச் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப் பட்டது. ஆனால் ஒன்பது வருடங்களில் அவர் மருத்துவம் பெறுவதற் காகத் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டார். அதைப் பயன் படுத்திநாட்டை விட்டு ஓடிவிடத் தீர்மானித்தார். ஈரானிலிருந்து கார் மூலமாகவும் கழுதை மூலமாகவும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஈராக்குக்குள் கடத்தி வரப்பட்டார். அவரது பயணத்துக்குப் பாதாள உலக குர்திஷ் இனத்தவர்கள் உதவினார்கள். தனது சிக்கல் நிறைந்த பயணத்தைத் தனது கையடக்கத் தொலைபேசியில் வழி நெடுகிலும் படம் பிடித்துக் கொண்டே வந்து சேர்ந்தார்.
அவரது வழக்கறிஞர் வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொண்டு அவரை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ள அமெரிக்காவுக்குப் பழம் நழுவிப் பாலில் விழ அது நழுவி வாயில் விழுந்ததைப் போல் இருந்தது.
இப்போது வொய்ஸ் ஒப் அமெரிக்காவில் கடமை புரியும் அஹமட் பாத்திபி தனது உடல் அமெரிக்காவிலும் உயிர் ஈரானியச் சிறைகளில் நியாயங்களுக்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டவர் களிடமும் இருக்கிறது என்கிறார்.
ஒரு குடம் கணினர்

Page 100
162
அஹமட் பாத்திபி ஒரு புகைப்படக் கலைஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.
ஆனால் அதிசயம் பாருங்கள். அவரை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு வந்ததும் மீட்டெடுத்ததும் ஒரே ஒரு புகைப் படம்தான்!
நன்றி
cbsnews.com
அஷ்ரஃப் சிஹாப்தீன்

வெள்ளைத் தேசத்தில் ஒரு கறுப்பு அகதி
உங்களுக்கு நான் எனது கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் எனது பெயரை உங்களுக்குச் சொல்ல மாட்டேன். எனது கதையைக் கேட்பவர்கள் இது ஒரு நாய் வாழ்க்கை' என்று சொல்வார் கள். நீங்களும் கூட என்னை நாய் என்று அழைக்கலாம். நான் ஆபிரிக் காவைச் சேர்ந்தவன். ஆனால் ஆபிரிக்காவில் எந்த நாடு என்பதைச் சொல்ல மாட்டேன்.
நான் மிகச் சிறியவனாக இருந்த போது எனது அப்பா, எனது அம்மாவைக் கைவிட்டுச் சென்று விட்டார். அவருக்கு என்னில் அக்கறை இருந்ததில்லையாதலால் என்னால் அவரை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனது அம்மா தன்னால் முடிந்ததையெல் லாம் எனக்குச் செய்தார். அம்மாசந்தையில் பழங்கள் விற்பது வழக்கம். ஆனாலும் நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தோம். ஆபிரிக்காவில் உங்களிடம் பணம் இல்லையென்றால் படிப்பும் கிடையாது. நான் ஒரு போதும் பாடசாலை சென்றதில்லை.
அம்மா சில வேளைகளில் என்னை என் நண்பர்களுடன் விட்டு விட்டுத் தூரப் பயணங்கள் செல்வதுண்டு. நண்பர்களோ என்னைச் சரியாக நடத்தியது கிடையாது. சில நேரங்களில் எனக்குப் போதிய உணவு கூடக் கிடைப்பதில்லை. அதனால் நான் வீதிகளில் பிச்சை எடுத்திருக்கிறேன். அப்போது எனக்கு வயது ஐந்து அல்லது ஆறு என்று நினைக்கிறேன்.
Hஒரு குடம் கணினி

Page 101
164
எனது வாழ்வின் துவக்கமே சிக்கலாக இருந்தது. என்னைத் தயார்ப் படுத்துவது இறைவனின் விருப்பமாக இருந்திருக்கலாம். என்னை இறைவன் சரியாகத்தான் தயார்ப் படுத்தினார். ஏனெனில் எனது தாயார் மிகவும் நல்லவராக இருந்தார். அம்மா என்னில் மிகவும் அன்பு வைத்திருந்தார். கஷ்டப்பட்டு உழைக்கவும் திருட்டைத் தவிர்க் கவும் இறைவனை நம்பவும் அவர் கற்றுக் கொடுத்தார்.
ஒரு நாள் வெளியில் சென்ற அம்மா மீண்டும் வீடு திரும்ப வில்லை. அம்மா எங்கே என்று அம்மாவின் நண்பிகளிடம் சென்று கேட்டேன். அம்மாவுக்கு என்ன நடந்தது என்று யாரும் எதுவும் எனக்குச் சொல்லவேயில்லை. நீண்ட நாட்களின் பின் எனது அம்மா இறந்து விட்டதாக அவர்கள் எனக்குச் சொன்னார்கள். அப்போது எனது வயது பத்தாக இருந்தது. அம்மாவின் உடல் எங்கே புதைக்கப் பட்டது? அதற்காகச் செலவு செய்தவர்கள் யார்? போன்ற விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் எனது நண்பர்களுடன் சேர்ந்திருந் தேன். உணவுக்காகப் பிச்சை எடுத்தேன்.
ஒரு நாள் வீதியில் சென்ற ஒரு மனிதன் என்னை அழைத்தான். சில பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதாகச் சொன்ன அவன் என்னைத் துணைக்கு அழைத்துச் சென்றான். அவன் ஒரு கறுப்பு இனத்தவன். ஆனால் பிரான்ஸ் தேசத்தவன். அவன் ஒர் ஆபிரிக்கன் அல்லன்; பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி. "நீ ஏன் பாடசாலைக்குச் செல்வதில்லை?” என்று அவன் என்னிடம் கேட் டான். நான் எனது நிலையை அவனுக்குச் சொன்னேன். அதன் பிறகு அவன் எனது நாட்டுக்கு வரும்போதெல்லாம் என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்வான். நாட்கள் செல்லச் செல்ல அவன் எனது நண்பனாகவே மாறிவிட்டான்.
இரண்டு வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் "நீஒரு நல்ல பையன். நீபாடசாலைக்குச் செல்ல வேண்டும். நான் உன்னைப் பாடசாலைக்கு அனுப்புவேன். அல்லது உன்னை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல் வேன்" என்று அவன் என்னிடம் சொன்னான். நான் ஐரோப்பாவுக்கு வந்தேன்.
எனக்குரிய ஆவணங்களை எவ்வாறு அவன் தயார்ப் படுத்தி
அஷ்ரஃப் சிஹாப்தீன்

165
னான் என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் எந்த ஆவணங்களும் இருந்ததும் இல்லை. அவன் என்னைத் தனது மகன் என்று சொல்லி யிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். எதுவாக இருந்த போதும் எமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நாங்கள் பிரான்ஸுக்கு வந்தோம். பாரிஸில் அவன் தனது நண்பன் வீட்டுக்கு என்னை உடன் அழைத்துச் சென்றான். நாம் இனிமேல் அவனை “போல்’ என்று அழைப்போம்.
போலுடைய தங்குமிடம் மிகச் சிறியது. நான் திண்ணையில் படுத்தேன். போல் எப்போதாவது வெளியில் சென்றால் அவனுடைய கட்டிலில் நான்படுப்பதுண்டு. அவ்வப்போது வியாபாரிகள் இத்தங்கு மிடத்துக்கு வந்து சென்றார்கள். "எப்போது எனது வேலை ஆரம்ப மாகும்? எப்போது நான் பாடசாலை செல்வது?" என்று அவனிடம் நான் அவ்வப்போது கேட்பேன். ஆனால் எதுவுமே ஆகவில்லை. எனக் குரிய ஆவணங்களைத் தயாரிப்பதில் அவன் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினான் என்று நினைக்கிறேன். ஐரோப்பாவில் எல்லா விடயங் களுக்கும் பத்திரங்கள் தேவைப்பட்டன.
போலுடைய தங்குமிடத்தில் நான் நன்றாகத்தான் கவனிக்கப் பட்டேன்; ஆனால் ஒரு வேலைக்காரனைப் போல, அவன் எனக்கு உணவும் உடையும் தந்தான். ஆனால் பணம் தரவில்லை. நான் மிகவும் கெட்டிக்காரன் இல்லைத்தான். ஆனால் பொதுவாக விரைவில் விடயங்களைப் புரிந்து கொள்வேன். இருப்பினும் பிரெஞ்சுப் பாஷை யைப் பேசக் கற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. என்னில் ஒர் அச்சம் இருந்தது அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். பிரான்ஸியர்கள் அவர்களது மொழி குறித்துப் பெருமை கொண்டவர்கள். நீங்கள் பிரெஞ்சுப் பாஷையைச் சரியாகப் பேசாவிட்டால் அவர்கள் உங்களை விரும்ப மாட்டார்கள்.
சில வருடங்களுக்குப் பிறகு வியாபாரிகள் போலைத் தேடி வருவது குறைந்து போனது. என்னைத் தொடர்ந்து அங்கு வைத்துக் கொண்டிருப்பதை போல் விரும்பவில்லை. அவன் தூர இடத்துக்குச் செல்லப் போவதாகவும் தன்னுடன் என்னை அழைத்துச் செல்ல முடியாது என்றும் போல் ஒரு முறை என்னிடம் கூறினான். நான்
O = ஒரு குடம் கணினி

Page 102
ހ
166
அவனது அறையில் தனியே அடைபட்டுக் கிடந்தேன். அடிக்கடி அங்கு சிலர் வந்து நான் யார்? யாருடன் சேர்ந்திருக்கிறேன்? போன்ற விபரங்களைக் கேட்டபடியிருந்தார்கள். எனவே அந்த இடத்திலிருந்து நான் வெளியேறினேன். அப்போது எனக்கு வயது பதினாறு.
அடுத்த சில வருடங்கள் பாரிஸிலும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலும் உள்ள பாதையோரங்களில் நான் படுக்க நேரிட்டது. உணவுக்காகக் கையேந்தித் திரிந்தேன். இக்காலங்களில் நான் குளிக்க வில்லை. நள்ளிரவுக்குப் பிறகு இலவசமாகச் செல்லக் கூடிய டிஸ்கோ நிலையங்கள் மற்றும் பஸ் நிலையத் தாழ்வாரங்களில் எனது இரவுப் பொழுதுகள் கழிந்தன. எனக்கு அடிக்கடி அம்மாவின் ஞாபகம் வரும். நான் ஒரு போதும் குற்றமெதுவும் இழைத்ததில்லை. தேவை என உணர்ந்த சில வேளைகள் தவிர - மதுபானம் அருந்தியதும் இல்லை. ஆனால் ஒரு போதுமே நான் போதை மருந்துகளைத் தொட்டுப் பார்த் தது கிடையாது. நான் அவ்வாறான ஒரு மனிதனும் அல்லன்.
இப்போது எனக்கு இருபது வயதாகிறது. என் வாழ்வின் ஒரு பகுதி கழிந்து விட்டது. எல்லாம் எவ்வாறு நடந்து விட்டிருக்கிறது என்று நான் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. தெருவோரங்களில் வாழ்வைக் கழிக்க நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கைக்குச் சரி யான ஒரு திட்டம் அவசியம். நான் இங்கிலாந்து செல்ல முடிவெடுத் தேன். எனக்கு ஆங்கில மொழி தெரியும். நான் சந்திக்கிற ஆங்கிலேயர் கள் எனக்கு விருப்பமுள்ளவர்களாக இருந்துள்ளனர். நான் உதை பந்தாட்ட ரசிகன். உலகில் அதிசிறந்த உதைபந்தாட்டக் கழகமாக மென்ச்செஸ்டர் யுனைட்டட் திகழ்கிறது.
எனவே ஒரு நண்பனின் உதவியை நாடினேன். இங்கிலாந்து ஒரு கண்டம் அல்ல; அங்கு செல்வதாயின் உனக்கு ஆவணங்கள் தேவைப்படும்’ என்று நண்பன் சொன்னான். ஆனால் அங்கு போய் விட்டால் நிச்சயம் வேலை கிடைக்கும். நண்பன் எனக்கு உதவி செய் தான். அவன் எனக்கு நெதர்லாந்து அடையாள அட்டையும் விமானச் சீட்டும் தந்தான். விமானச் சீட்டு பெல்ஃபாஸ்ட்டுக்குப் பெறப்பட் டிருந்தது. அங்கு சென்று இறங்கியதும் அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் என்னுடையது அல்ல என்று சொன்னார்கள். நான்
ඊlබදු|&] சிஹாப்தீன்

167
அகதியாகப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன் னேன். அதற்கு அவர்கள் அதை இங்கிலாந்தில்தான் உன்னால் பெற முடியும் என்று சொன்னார்கள். நான்கு தினங்கள் என்னைத் தடுத்து வைத்து விட்டு நெதர்லாந்துக்கு விமானமேற்றி விட்டார்கள்.
நடந்தவற்றை என் நண்பனிடம் கூறினேன். அவன் ஒரு புதிய அடையாள அட்டையையும் புதிய பயணச் சீட்டையும் தந்தான். இம்முறை ரயில் பயணம். இம்முறை எந்தப் பிரச்சினையும் கிடையாது. பிரிட்டிஷ் குடிவரவு அதிகாரிகள் எனது அடையாள அட்டையை ரயிலில் பரிசோதனை செய்தனர். பரிசோதித்து விட்டுப் பாதுகாப் பான பயணத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். நான் அவர்களுக்கு நன்றி கூறினேன். அதுவே குடிவரவு அதிகாரிகள் என்னுடன் நட்புடன் உரை யாடிய இறுதிச் சந்தர்ப்பமுமாகும்.
ரயில் நிறுத்தப்பட்டதும் இது எந்த இடம் என்று ரயிலில் உள்ள வர்களிடம் கேட்டேன். அவர்கள் லண்டன் என்று சொன்னார்கள். லண்டன்! நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் லண்டனில் அகதிக் கோரிக்கை வைக்க முயற்சிக்கவில்லை. ஏனெனில் அது எனக் குக் கிடைக்காது என்று எனது பெல்ஃபாஸ்ட் நண்பன் சொல்லியிருந் தான். எனக்குத் தேவை வேலை! எனது நோக்கம் மீண்டும் தெருவுக்குப் போவது அல்ல. என்னை நான் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; நல்ல வாழ்க்கைக்காக! - ஒரு முகவர் நிலையத்துக்குச் சென்று வேலை கிடைக்குமா என்று கேட்டேன். நான் சொல்வது உண்மை - இங்கிலாந்தில் வேலை நிறைய உண்டு. நான் திறமையாக வேலை செய்வதால் பலர் என்னை விரும்பினார்கள். நான் பல இடங்களில் வேலை செய்தேன். சில வாரங் களுக்குப் பின்னர் ஒரு நிறுவனம் என்னை முழுநேர வேலைக்கு அமர்த்தியது. இனிமேல் கதிரைகளில் படுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. வாடகைக்கு ஒரு வீடு பிடித்தேன். எனது சொந்தக் கட்டி லில் உறங்கினேன். வாழ்க்கையில் முதல் முறையாக நான் எனக்காக வாழ்ந்த தருணம் அது. என்னாலேயே இதனை நம்ப முடியவில்லை. எனக்கு முழு நேர வேலைக்கு வாய்ப்புத் தருகிறார்கள். நான் இதனை மறுத்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவேன். எனவே நான்
|ඉq5 අLර් ඝණ්හා)

Page 103
168
துணிந்தேன். முகவர்நிலையத்துக்கு எனது அடையாள அட்டையைக் கொடுத்து அவர்களது அட்டைக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஒரு வாரத்தின் பின்னர் வருமாறு அவர்கள் எனக்குச் சொன்னார்கள்.
ஒரு வாரத்துக்குப்பின்னர் மீண்டும் அங்கு சென்றேன். கிடைக்க வில்லை. நான்கு மாதங்களாக இழுத்தடித்தார்கள். இன்னும் இது குறித்து விபரங்கள் சேகரிக்க வேண்டியிருப்பதால் இன்னும் தாமத மாகும் என்று சொன்னார்கள். நான் தினமும் வேலை செய்தேன். மேல திக நேர வேலையும் கூட. நான் எனக்குத் தேவையான தரம்மிக்க பொருட்களை வாங்கினேன். எனது வாழ்க்கையை முழுதாகவும் முதன் முறையாகவும் அனுபவித்தேன். வாடகை, ஏனைய சமாச்சாரங்கள் மற்றும் வீட்டு வரி அனைத்தையும் நானே செலுத்தினேன். அவற்றைச் செலுத்துவதை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்ந்தேன். எல்லாப் பற்றுச் சீட்டுக்களையும் நான் பத்திரமாக வைத்துக் கொண் டேன். யாரிடமும் ஒரு சதத்துக்காகவேனும் நான் கையேந்தவில்லை.
கடைசியில் ஒரு நாள் முகவர் நிலையத்துக்கு வந்து இலக்கத் தைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வந்தது. எனது நண்பர்கள் அங்கு போக வேண்டாம் என்று என்னைத் தடுத்தார்கள். அவ்வாறு அங்கு சென்றால் சட்டபூர்வமற்ற விதத்தில் வேலை செய்வதற்காக நான் கைது செய்யப்படுவேன் என்று சொன்னார்கள். நான் இதை நம்ப வில்லை. ஏனெனில் நான் எந்தக் குற்றமும் புரிந்திருக்கவில்லை. அந்த நிறுவனம் வரச் சொன்ன தினத்துக்காகக் காத்திருந்தேன். அன்று காலையில் பொலிஸார் வந்து என்னைக் கைது செய்தார்கள். நான் மோசடிப் பேர்வழி என்றும் குற்றம் செய்திருப்பதாகவும் சொன்ன போது ஆச்சரியமடைந்தேன்.
அன்றைய தினத்திலிருந்து நான் ஒரு குற்றவாளியானேன். ஆனால் நான் செய்தது என்ன? நான் யாரையும் காயப்படுத்தவில்லை. யாரையும் ஏமாற்றியதும் கிடையாது. நான் கடுமையாக உழைத்தேன். அதற்குரிய சம்பளம் எனக்குக் கிடைத்தது. ஆனால் நான்குற்றம் செய்த தாக அவர்கள் சொன்னார்கள்.
குடிவரவு அதிகாரிகள் வந்து என்னை விசாரித்தார்கள். வழக்கு விசாரணை வரைக்கும் எங்கேயும் ஓடிவிடாமல் வீட்டிலேயே இருக்க
அஷ்ரஃப் சிஹாப்தீன்

வேண்டும் என்று ஒர் அதிகாரி என்னைப் பணித்தார். வேலைக்குச்
செல்லாமல் ஆறு வாரங்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தேன்.
நல்ல இளைஞன்; உன்னைப் போன்றவர்களைக் காண்பது அரிது. எங்கும் ஓடிவிடாதே என்று நான் சொன்னதை ஏற்று மீண்டும் என்னி டம் வந்திருக்கிறாய்" என்று என்னைப் புகழ்ந்தார்.
நீதிமன்றத்துக்குச் சென்ற போது அங்கு எனக்குப் பன்னிரண்டு மாதச்சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அது என்னைப் பாதித்தது. நான் சிறையை விரும்பவில்லை. ஒரு மனிதனின் வாழ்வைச் சிறை சிதைத்து விடுகிறது. நான் எந்தக் குற்றமும் அறியாதவன் என்பது
எனக்குத் தெரியும். இருந்தும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பணிந்தேன்.
நான் எதிர்த்துச்சண்டையிட விரும்பவில்லை. சண்டையிட்டு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணம் என்னிடம்
அங்கு காலையில் நான் படிக்கச் சென்றேன். ஆங்கிலமும்
ஒரு குடமீ கரீைரீை

Page 104
17 Ο
கணினி விஞ்ஞானமும் கற்றேன். பிற்பகலில் பொதி செய்வது மற்றும் அவற்றை வாகனங்களில் ஏற்றுவது போன்றவேலைகளைச் செய்தேன். எனது தண்டனைக் காலத்தை முடிவு செய்த போது 300 பவுண்களை உழைத்திருந்தேன். நான் அங்கு கடுமையாக வேலை செய்தேன். சிறை யதிகாரிகள் என்னை விரும்பினார்கள். நான் ஒரு குற்றவாளி அல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
சிறையிலிருந்த போது க்ரோய்டன் என்ற இடத்திலிருந்து வந்த ஒரு பெண்மணி என்னைச்சந்தித்து அகதிக் கோரிக்கையை முன்வைக்கு மாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். "அதை நீ எனக்குத் தர வேண்டாம். எனது நேரத்தை சும்மா வீணடிக்க வேண்டாம்” என்று அவருக்குச் சொன்னேன். அவர் சொல்வதுதான் சரியான நடைமுறை என்று எனக்கு அப்பெண் விளக்கமளித்தார். எனவே அதற்குக் கட்டுப் பட்டேன். வாக்குமூலங்கள் பெறப்பட்டன. வாக்குமூலம். வாக்கு மூலம். வாக்குமூலம். முடிவே இல்லாமல் தொடர்ந்தது. சத்திய மாகச் சொல்கிறேன். இன்னொரு வாக்குமூலத்துக்கு நான் தயாராக இல்லை.
நான் ஆறுமாதங்கள் கடுமையாக உழைத்தேன். நன்னடத்தை கண்டு எனது சிறைக்காலம் முடிவுக்கு வந்தது. எனது விடுதலை நாளும் வந்தது. இந்த நாளை நினைக்கும் போதெல்லாம் நான் கசிந்து அழுது விடுவேன். விடுதலையாகி இறுதி வாயிலை நெருங்கும் போது "உள் நாட்டு அலுவலகம் இங்கிருந்து நீதிரும்பிச் செல்ல வேண்டும்” என்று அறிவித்திருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. ஏன் என்று அவர்களிடம் கேட்டேன். பிறகுதான் தடுப்பு முகாமில் இடவசதி இல்லை என்பதைக் கேள்விப் பட்டேன். இது யார் தவறு? உள்நாட்டு விவகார அலுவலகத்தினதா? என்னுடையதா?
ஒரு மாத காலத்துக்குப் பிறகு என்னைத் தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைத்தார்கள். இது ஒரளவு பரவாயில்லை. தொலைபேசியில் உரையாட முடியும்; வெளியே நடந்து திரியவும் முடியும். ஆனால் எல்லாம் நல்லது என்று சொல்வதற்குமில்லை. சிறைச்சாலையில் பணம் உழைப்பது போல இங்கு உழைக்க முடியாது. ஒரு தொலை பேசி அழைப்புக்கு வெளியே மூன்றரைப் பவுண் எடுப்பார்கள். இங்கு
அஷ்ரஃப் சிஹாப்தீனி=

171
ஐந்து பவுண்கள் எடுக்கிறார்கள். சில நேரங்களில் இதைவிட அதிக மாகவும் எடுப்பதுண்டு. சிறைக்கும் தடுப்பு முகாமுக்குமுள்ள வித்தி யாசம் என்ன? எதுவுமில்லை. இங்கே யாராவது உங்களைக் கண் காணித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களுக்காக அவர்கள் முடிவு களை எடுப்பார்கள். உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார்கள். அதாவது உங்களது புகைப்படம், கைவிரல் அடை யாளம், உங்களது டி.என்.ஏ மற்றும் உங்களது சுதந்திரத்தைக் கூட
இங்குள்ள சில அதிகாரிகள் சிறை அதிகாரிகளை விட மோசமா னவர்கள். அன்புடன் நடத்தக் கூடிய சில நல்லவர்களும் இருக்கி றார்கள். இங்கு நாங்கள் வெளிநாட்டவராகப் பார்க்கப்படுகிறோம். பிரிட்டிஷார் வெளிநாட்டவர்களை விரும்புவதில்லை. சில அதிகாரி கள் நாங்கள் மிருகங்கள் என்ற நினைப்போடு செயற்படுவார்கள். நீங்கள் சட்டபூர்வமற்றவராயின் நீங்கள் பிரிட்டனில் ஒரு மனிதப் பிறவி அல்ல. அதுதான் பிரச்சினை.
தடுப்பு முகாமில் ஆறுமாதங்கள் இருந்தேன். ஒவ்வொரு மாத மும் குடிவரவு அதிகாரிகளிடமிருந்து அறிக்கை வரும். ஆவணத் துக்காகக் காத்திருக்கவும் என்ற வாசகம் அதில் இருக்கும். எனக்குப் பெரும் குழப்பமாக இருந்தது. நான் மட்டுமல்ல, என்னுடன் அங்கி ருந்தோரதும் நிலை அதுதான். ஒரு வேளை சாகும் வரை காத்திருக்க வேண்டியிருக்குமோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
அதற்குப் பிறகு எல்லாவற்றையும் விட மோசமான விடயங் களை எதிர் கொண்டோம்; சட்டத்தரணிகள் ரூபங்களில்,
முதன்முதலில் நான்குற்றஞ்சாட்டப்பட்டபோது பொலிஸார் எனக்கு ஒரு சட்டத்தரணியை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் சிறைக்கு வந்த போது நான் சட்ட உதவிக்காகக் கையெழுத்திட்டேன். மீண்டும் வருவதாகச் சொன்ன அவர் வரவில்லை. உள்நாட்டுத் துறைக்கு எனது வழக்கு பற்றி எழுதியனுப்ப வேண்டும் என்று எனக்கு அவர் சொல்லி யிருந்தார். பிணையெடுப்பது பற்றியும் பேசினார். கடைசியில் எனக்கு பிணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் வந்த அவர், "உனது வழக்கில் உனக்குத் தோல்விதான் கிடைக்கும் போலிருக்கிறது. சட்ட |ඉංග්‍ය ගuෂී ආගlග්

Page 105
172
உதவிப் பிரிவு பணம் செலுத்தாது. எனவே உனக்காக என்னால் ஆஜ ராக முடியாது” என்று சொன்னார். இதை ஏற்கனவே நீங்கள் சொல்லி யிருந்தால் நான் மாற்று வழி ஒன்றைச் செய்திருப்பேனே என்று அவரிடம் சொன்னேன். நியோ அல்லது வேறு யாரோ உனக்காகப் பணம் தந்தால் என்னால் ஆஜராக முடியும்; அவ்வளவுதான்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதையும் மிகவும் பிந்தியே எனக்குச் சொன்னார்.
என்னுடைய வழக்குக்கு ஆஜராக அவர் 3000 பவுண்களைக் கேட்டார். என்னிடம் இவ்வளவு பணம் எங்கிருக்கிறது? வேண்டுமா னால் எனது நண்பியிடம் சொன்னால் 1000 பவுண்கள் பெறலாம் என்றேன். அவர் மறுத்து விட்டுச் சென்று விட்டார். நான் சிகரட் புகைக்கும் வழக்கமுடையவன் அல்லன். அன்றைய தினம் மூன்று பக்கட் சிகரட்டுகளைப் புகைத்தேன். நான் அன்றே நம்பிக்கையிழந் தேன். கிட்டத்தட்ட அன்றைய தினம் நான் இறந்து விட்டேன் என்று சொல்வதே பொருத்தமாகும்.
நீதிமன்றத்துக்குச் சட்டத்தரணி வரவில்லை. எனது நண்பரின் முகவரியைக் கூட அவர் பெற்றுத்தரவில்லை. எனக்காக அன்று நானே பேசினேன். நீதிபதிக்கு எனக்குப் பிணை வழங்கும் எண்ணம் இருந்தது. ஆனால் ஒரு முகவரி இல்லாமல் அதை எப்படிப் பெறுவது? எனவே அன்று பிணை கிடைக்கவில்லை.
நான் மீண்டும் மற்றொரு தினத்தில் முயற்சித்தேன். அன்று காலையிலேயே எழுந்து குளித்து, நல்ல ஆடையை அணிந்து தயாரா னேன். ஆனால் என்னை அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வில்லை. நான் காரணம் கேட்டேன். அதற்கு அவர்கள் வாகனம் சென்று விட்டதாகச் சொன்னார்கள். வாகனம் என்னை விட்டு விட்டுச் சென்று விட்டதா? அப்படியாயின் எனக்கு என்ன நடந்தது என்று நீதி மன்றம் கேட்காதா? நான் என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? நான் பறந்து செல்ல வேண்டுமா?
இதற்குப் பிறகும் அந்தச் சட்டத்தரணி என்னிடம் வந்து பணம் கேட்டார். ஆனால் அவருடனான தொடர்பை நிறுத்திக் கொண் டேன். நான் வேறொரு சட்டத்தரணியைத் தொடர்பு கொண்டேன்.
ඌබ&jãã නිකDiffග්H=

173
புதியவரை விட ஏற்கனவே இருந்தவர் எவ்வளவோ தேவலாம் போல் இருந்தது. புதிய சட்டத்தரணி என்னிடம் 200 பவுண்களைப் பெற்றுக் கொண்டு போனார். பிறகு அவரை இந்தப் பக்கமே காணவில்லை. ஒவ்வொரு முறையும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள் ளும் போது, "திரு. நாய் அவர்களே. நான் நிறைய வேலைகளில் இருப்பவன்." என்று சொல்லி முடித்துக் கொள்வார்.
ஒரு முறை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது
சட்டத்தரணி அவரது செயலாளரிடம், "நான் இங்கே இல்லை என்று சொல்லு" என்று சொல்வது கேட்டது. ஆபிரிக்காவிலிருந்து வருபவ னுக்கு உணர்வுகள் எவையும் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை மடையர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நான் மடையன் இல்லையே.
பிறகு வந்த ஒரு நீதிமன்றத் திகதியில் எனக்காகப் பேசுவதற்கு 9ք(5 பாரிஸ்டரை அமர்த்த 500 பவுண்கள் தேவைப்பட்டது. எனது நண்பர் அப்பணத்தைத் தந்தார். நாங்கள் நீதிமன்றத்தை அடைந்த போது பாரிஸ்டர் அங்கு வந்திருக்கவில்லை. கடைசி நேரத்தில் அந்த பாரிஸ்டர் வந்து எனக்காக ஏழு அல்லது எட்டு நிமிடங்கள் பேசினார். எனது வழக்கு பற்றி அவருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கவும் இல்லை.
பிறகு நீண்டநாட்களாக எதுவும் முன்னேற்றமில்லை. ஒருமுறை நீதிபதி எனது வழக்கு அர்த்தமற்றது என்று சொன்னார். நான் நகரசபை வீட்டில் வசித்ததாகச் சொன்னார். அதில் உண்மை இல்லை. நான் தனிப்பட்ட முறையிலேயே குடியிருந்தேன். எனக்கு மூன்று வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் சொன்னார். இதுவும் உண்மையற்றது. நான் இறுகிப் போனேன். நான் எதுவும் பேசவில்லை. சட்டம் என்னை மோசம் செய்தது. சட்ட உதவியாளர்கள், தனிப்பட்ட சட்டத்தரணி கள் எல்லோருமே ஒன்றுதான். என்னிடமிருந்து 700 பவுண்களைப் பெற்றுக் கொண்டு எனக்குச் செய்தது எதுவும் கிடையாது. என்னுடன் தடுப்பு முகாமில் இருந்த ஒரு நண்பனிடம் சட்டத்தரணி 1600 பவுண் களைப் பெற்றுக் கொண்டு ஒரு போதும் அவனுக்காகப் பேசியது கிடையாது. தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுப் பின்னர் நாடு கடத்தப்
= ஒரு குடம் கர்ைரீைர்

Page 106
174
படுவது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மால் என்ன செய்ய முடியும்? உள்நாட்டு அலுவலகம் இவ்வாறுதான் தனது விசாரணைகளை மேற்கொள்கிறது. இப்போது யார் குற்றவாளிகள் என்பது புரிகிறதா?
எனது முறையீடு (அப்பீல்) நிராகரிக்கப்பட்ட பிறகு நான் நம்பிக்கையை இழந்து விட்டேன். என்னிடம் பணம் இல்லை. எதுவும் கிடையாது. ஆனால் எனக்காக இறைவன் இருக்கிறான் என்று நம்பி னேன். நான் அடித்தளத்துக்குச் செல்கிற போது சில நல்லவர்களை இறைவன் அனுப்பி வைக்கிறான். ஒரு தொண்டர் என்னைப் பார்க்க வந்தார். அவர் எனக்காகக் குடிவரவுத் தடுப்புப் பிணை கோரினார். அவர் எனக்காக புதிய சட்டத்தரணியையும் ஏற்பாடு செய்தார். இப்போதைக்கு தொண்டு நிறுவனத்தாரும் நண்பரும் பிணைப் படிவமுமே எனது குடும்பம் என்று ஆயிற்று.
குடிவரவுப் பிரிவு வில்லங்கமானது. எவ்வளவுக்கு நம்மை அலுப் புக்குள்ளாக்க முடியுமோ அவ்வளவுக்கு அதைச் செய்யும். அப்பிரிவு நமது வாழ்க்கையையே சரித்து விடக் கூடியது. பிணையில் விடப் பட்ட மறுகணமே நம்மை நாட்டை விட்டு வெளியேற்ற அப்பிரிவு உடனடியாகச் செயல்படும். நான் ஒரு நிலையில் இல்லாமல் தத்த ளித்தேன். குடிவரவுப் பொறுப்பதிகாரியிடம் சென்று பேசிய போது பிரிட்டனை விட்டுப் போக முடியாது என்றால் நீ கேர்ண்புறுாக் சிறைக்குத்தான் செல்ல முடியும் என்று சொன்னார். நான் மிகவும் கவலையடைந்தேன். தடுப்புமுகாமில் சிலர் உண்ணாவிரதம் இருந்தார் கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். கடைசியில் என்னை கேர்ண்புறுநூக் அனுப்பினார்கள். அது அந்த உண்ணாவிரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை.
கேர்ண்புறுக் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அங்கு ஒரு தனிப் பகுதியில் என்னை வைத்திருந்தார்கள். ஒரு மனிதனால் 72 மணித்தியாலத்துக்கு மேல் அதில் இருக்க முடியாது. அந்த அறையைப் பற்றி நினைத்தாலே அழுகை வரும். பதினைந்து நிமிடங்கள் மட்டுமே வெளியே செல்ல முடியும். தொலைபேசி எடுக்க வேண்டுமானால்
c1680&f சிஹாப்தீனி

175
பத்து நிமிடம் மட்டும் வெளியே வரலாம். அது ஒரு தண்டனை. நான் என்ன செய்ய முடியும்? இந்தச் சிறை எந்த வசதிகளுமற்றது. அங்கிருப்போர் பைத்தியம் பிடித்தவர்கள் போல் இருந்தனர். ஒருவ ரைச் சிறைக் கூண்டுக்குள் தள்ளி விட்டீர்கள் என்றால் அவனது புத்தி மழுங்க ஆரம்பித்து விடுகிறது.
இந்தச் சிறையில் நான் ஆறு வாரங்கள் இருந்தேன். நான் வரும் என்று எதிர்பார்த்திராத அந்த நாள் வந்தது. பிணைக்குப் பொறுப் பெடுக்கும் இருவர், எனது நண்பி மற்றும் தொண்டு நிறுவன நண்பர் ஆகியோர் சகிதம் நான் நீதிமன்றம் சென்றேன். எனது சட்டத்தரணி ஒரு நல்ல பாரிஸ்டரை அனுப்பி வைத்திருந்தார்.
நான் பிணையில் விடுவிக்கப்பட்டேன் காவலர்கள் என்னிடம் எனது பொருட்களடங்கிய பெரிய பிளாஸ்ரிக் பையை எனக்குத் தந்தார்கள். அவ்வாறான பைகள் குற்றவாளிகளுக்கென்றே தயாரிக்கப் பட்டவை. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் வெளியே வந்து விட்டேன்.
அந்த நாள் சென்று எட்டு மாதங்கள் கழிந்து விட்டன. எட்டு மாதங்களாக எனது நற்பண்புகளைப் பாதுகாக்க நான் போராடி வருகி றேன். நான் எனது நண்பியோடு ஒர் அழகான வீட்டில் வசித்து வருகி றேன். இப்போது பாதையில் அல்ல; மெதுமையான கட்டிலில் படுக்கி றேன். நண்பி எனக்கு மிகவும் உதவுகிறாள். நான் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கிறேன். ஏற்கனவே கழிந்த எனது வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் இது சுவர்க்கம் என்றுதான் சொல்லு வேன்.
ஆனால் சிலவேளை நான் இன்னொருவர் வீட்டில் வாழ்வதான உணர்வு எழத்தான் செய்கிறது. அதுவும் ஒரு வீட்டு வேலை செய்யும் பையனைப் போல. நான் அப்படியான ஒருவன் இல்லை. எனக்கு வேறு கிடையாது அல்லவா? என்னால் வேலை செய்ய முடியாது. என்னால் நண்பிக்கு எதுவும் கொடுக்க முடியாது. நான்தங்கிவாழும் ஒருவனாகி விட்டேன். ஒரு பஸ் டிக்கற் பெறுவதற்கும் கூட அவளிடம் கேட்க வேண்டியிருக்கிறது. அவளிடமும் பெரும் பணம் இல்லை. சில வேளை என்னைச் சமாளிப்பதில் அவள் தடுமாற்றம் அடைந்து விடுகிறாள்.
|GD ආL|5 ඝණ්හා)

Page 107
176
சில நேரங்களில் நாங்கள் சண்டை போடுவதுண்டு. நண்பி சில வேளைகளில் மோசமான வார்த்தைகளைப் பாவிப்பாள். அவளும் மற்றவர்களைப் போல ஒருத்திதானே என்று பிறகு நான் உணருவேன். அவளும் எனக்கு வஞ்சகம் செய்தவள்தான். சத்தியமாக பிரிட்டனி லுள்ள எவரையும் நான்நம்பிக்கை வைக்கப்போவதில்லை, அது எனது புதிய சட்டத்தரணியாக இருந்தாலும் சரியே.
நான் பாடசாலை செல்கிறேன். ஆங்கிலமும் கணிதமும் படிக் கிறேன். நான் நன்றாகப் படிப்பதாக எனது ஆசிரியை சொல்கிறார். இந்தப் படிப்பு வாரத்தில் ஒருநாளில் ஒன்று அல்லது இரண்டு மணித் தியாலங்கள்தாம். மீதி நேரங்களில் வீட்டில் தூக்கத்தில் இருப்பேன். அல்லது எனது வழக்கைப் பற்றியும் இப்பிரச்சனையிலிருந்து விடுபடு வது பற்றியும் கடந்த காலங்களில் நான் பட்ட சிரமங்கள் பற்றியும் சிந்தித்தபடி உட்கார்ந்திருப்பேன். சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். நான் இப்போது சிறைக்குள் இல்லைத்தான். ஆனாலும் இதுவும் ஒரு வகைச் சிறைதான்.
உள்துறை அலுவலகத்துக்கு இப்படிச் சொல்ல இருக்கிறேன்:- "நீங்கள் என்னிடம் எதனை எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் என்னை நாடுகடத்தும் யோசனையில் இருக்கிறீர்களா? இதுவரைக்கும் நீங்கள் எனக்கிழைத்தவற்றுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? நீதிமன்றத்தில் பொய்யுரைத்தீர்கள். என்னை ஒரு குற்றவாளியைப் போல் சொல்லப் போனால் குற்றவாளியை விட மோசமாக நடத்தினிர்கள். என்னை ஒரு பயங்கரவாதியைப் போல கையாண்டீர்கள். ஆனால் நான் பயங்கர வாதியல்லன். நான் வேறு ஒரு தேசத்தவன். அவ்வளவுதான். உங்களால் என்னை என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்து கொள்ளுங்கள்." "என்னை ஏமாற்றிய பிரிட்டிஷ் வழக்கறிஞர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? என்னை ஏமாற்றிய தொழில் முகவர் நிறுவனத் துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்கள் எனது கடைசி மாதச் சம்பளம் 1300 பவுண்களைத் தரவில்லை. நான் கைது செய்யப்பட்ட போது அது எனது சொந்தப் பெயர் இல்லையென்று சொல்லி அந்தப் பணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பணத்துக்கான வேலையைச் செய்தது யார்? நானா அல்லது எனது பெயரா?”
அஷ்ரஃப் சிஹாப்தீனி=

177
நான் உள்துறை அலுவலகத்துக்கும் எனது கதையைப் படிக்கும் சகலருக்கும் சொல்வது என்னவெனில், நான் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் அனாதை. அதுமட்டுமல்ல பிரான்ஸிலும் ஹோலந்திலும் தெருக்க ளில் வாழ்ந்த ஒரு பையன். எனது வாழ்க்கையின் மோசமான விடயங் கள் எல்லாம் இங்கேதான் இடம்பெற்றன. முதலில் நீங்கள் எனது தேசத்துக்கு வந்து அங்கிருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வந்தீர்கள். நான் வேலை செய்து உழைத்து அப்பணத்தை இங்கேயே விட்டுச் செல்ல வந்தவன். நீங்கள் கத்தியில்லாமல் துப் பாக்கி இல்லாமல் கொல்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே என்னைக் கொன்று விட்டதாகச் சில நேரங்களில் நான் எண்ணுகிறேன்.
நான் இங்கு லாபங் கருதி வரவில்லை. அல்லது நகர சபையின் வீடு ஒன்றுக்காகவோ வங்கிக் கடன் பெறுவதற்காகவோ இங்கு வர வில்லை. எனது நோக்கமெல்லாம் வேலை செய்து பிழைப்பது ஒன்று தான். அது குற்றம் என்றால் அதைத்தான் நான் இவ்வளவு காலமும் செய்திருக்கிறேன். இப்போதும் நான் வெளியில் இருக்கிறேன். நீங்கள் என்னைத் தண்டித்துக் கொள்ளலாம். கையெழுத்திடுவதற்காக பொலிஸ் நிலையம் செல்லும் ஒவ்வொரு நேரமும் நான் இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 40 மைல்களுக்கு அப்பால் சென்று கையெழுத்திடப் பணித்துள்ளீர்கள். தொழில் இல்லாத ஒருவனால் எவ்வாறு இது சாத்தியமாகும்? முதலில் என்னை வேலை செய்ய அனு மதியுங்கள். எனக்கு எந்த லாபமும் வேண்டாம். வேலை செய்ய மட் டும் அனுமதியுங்கள். ஒரு வருடம் மாத்திரம் தொழில் செய்ய அனு மதித்தால் போதுமானது. நான் எனது நண்பிக்குச் செலுத்த வேண்டி யதைத் திருப்பித் தர முடியும். அந்த வாய்ப்பை நீங்கள் தந்தால் நான் தலை நிமிர்வேன்.
முக்கியமாக நான் சொல்ல நினைப்பது என்னவெனில் மக்களை வேலை செய்ய அனுமதியுங்கள் என்பதைத்தான். அதை நீங்கள் தடுத் தால்தான் குற்றவாளிகள் உருவாவார்கள். உங்கள் தெரிவு எது? நீங்கள் மனிதர்களை மனிதர்களாக நடத்தவில்லை என்றால் அவர்களுக்கும் மனிதர்களைப் போல நடந்து கொள்ள முடியாமல் போகும்.
நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் என்ன
ஒரு குடம் கணினி

Page 108
178
செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. நான் நேர்மையான ஒரு மனிதன். ஆனால் மனிதர்களை நீங்கள் நடத்தும் விதமானது அவர் களது மூளைகளைக் குழப்பி விடுகிறது. நீங்கள் எனக்குத் தொல்லை யளித்தால் நான் எவற்றைச் செய்யக் கூடாது என நினைக்கிறேனோ அவற்றைச் செய்யத் தூண்டுவதாகத்தான் அது அமையும்.
அவ்வாறு எதுவும் நிகழக் கூடாது என்று நான் பிரார்த்திக்கி றேன். என்னுடைய மன நிலையில் மாற்றம் வரக் கூடாது என்றும் என்னை நம்பிய யாருக்கும் துரோகம் இழைக்கக் கூடாது என்றும் பிரார்த்திக்கிறேன். எனது விடயத்தில் நான் சாகவும் தயாராகி விட் டேன். சத்தியமாகச் சொல்கிறேன். மீண்டும் என்னைத் தடுத்து வைப்பார்களானால் நான் ஒரு போதும் ஒத்துழைக்கப் போவதில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் நான் சாப்பிடுவேனா? யாரையாவது உதவிக்கு அழைப்பேனா? - இல்லை. ஒரு போதும் இல்லை.
வேண்டுமானால் அவர்களுக்கு என்னைக் கொல்லச் சொல்லுங்
95GT
ஆனால் எனது வாழ்க்கை இப்படியே கழிந்து விடுமா?
நன்றி.
Carole Angier - indipendent.co.uk
18.06.2007
அஷ்ரஃப் சிஹாப்தீனி

கன்னியாஸ்திரியின் கண்ணிர்
எனது பெயர் டயானா ஓரிட்ஸ், நான் ஒரு கன்னியாஸ்திரி. ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த வள். 1989ல் குவாத்தமாலாவில் உள்ள பூர்வீகக் குடி மக்களுக்கிடையே சமயப் பிரசாரப் பணிகளில் ஈடு பட்டிருந்தேன்.
ஒரு நாள் நானும் மற்றொரு கன்னியாஸ்திரி யும் அன்ரிகுவாவில் உள்ள பிரார்த்தனை மடத்துக்குச் சென்றிருந் தோம். நான் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேளை இரண்டு ஆண் கள் என்னை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருவனிடம் துப்பாக்கி இருந்தது.
என்னைத் தங்களுடன் வருமாறு அவர்களில் ஒருவன் அழைத்தான். இல்லாவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் காயப்பட நேரும் என்று எச்சரித்தான். பிரார்த்தனை மடம் அமைந்திருந்த தோட்டத்தின் பின்புறம் திறந்த வாயில் இருந்தது. அதனூடாக என்னை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் காரில் என்னை ஏற்றினார்கள். எனது முகத்தை மூடி என்னைப் பொலிடெக்னிகாவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
பொலி டெக்னிகா என்பது இராணுவத் தளம். ஐக்கிய அமெரிக்கத்தூதரகத்துக்கு அருகே அது அமைந்திருந்தது. அங்கு கீழ்த் ஒரு குடம் கணினி

Page 109
18O
தளத்தில் இருந்த கம்பிச் சிறைக்குள் என்னை அடைத்தார்கள். அங்கு தொடர்ச்சியாக என்னைக் கற்பழித்தார்கள். அங்கு நடந்தவைகளை நினைத்துப் பார்ப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. உடல் சிலிர்க்கும் சித்திரவதைகளைத்தான் சொல்லுகிறேன்.
என்னை அவர்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். நான் அவர்களது கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறினேன். ஆனால் எனது பதிலில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனது பின்புறத்தில் ஒவ்வொரு கேள்வியின் போதும் சிகரட் நெருப்பினால் சுட்டார்கள். எனது பின்புறத்தில் நூற்றுப் பதினொரு சிகரட் சூட்டு அடையாளங் கள் இருக்கின்றன என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்தக் கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் விரும்பும் பதில்களை அதாவது நான் சொல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்த பதில்களை நான் சொன்னேன்; அவை பிழையான பதில்களாக இருந்த போதும் கூட
ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி இந்தப் படத்தில் உள்ள பெண்ணை உனக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். "அந்தப் பெண்ணை நான் ஒரு போதும் கண்டதுமில்லை, கதைத்ததுமில்லை” என்று சொன்னேன். சிகரட் நெருப்பினால் சுட்டார்கள். இந்தப் பெண் உன்னைப் போல் இருக்கிறாள் அல்லவா? என்று கேட்டார்கள். அவள் உண்மையில் என்னைப் போல் இல்லையென்றபோதும் சிகரட் சூட்டு க்குப் பயந்து "ஆம் என்றேன்" அப்படிச் சொன்னதற்கும் சுட்டார்கள். (அழுகிறார்)
பயங்கரத் தோற்றத்தையுடைய நாய் மற்றும் எலிகளைக் கொண்டு என்னைச் சித்திரவதை செய்தார்கள். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது. அவர்கள் செய்தவற்றையும் என்னைச் செய்யுமாறு பலவந்தியப்படுத்திய விடயங்களையும் அவர்கள் ஒளிப்பதிவு செய்தார்கள். கேவலமான வெளியே சொல்ல நாக்கூசும் இந்தச்சித்திரவதைகளைப் படம் பிடிக்கும் போது அவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். இந்தப் படங்களை நண்பர்களுக்குக் காட்டி மகிழப்போவதாகப் பேசிக் கொண்டார்கள். இவற்றை எனது குடும் பத்தாருக்கு அனுப்பப் போவதாகவும் அவசியப்பட்டால் பிரசுரிக்கப் போவதாகவும் என்னைப் பயமுறுத்தினார்கள்.
அஷ்ரஃப் சிஹாப்தீன்:

181
இந்தச் சித்திரவதைகளுக்கு என்னதான் காரணத்தை நமக்கு நாம் சொல்லிக் கொண்ட போதும் அவை வாழ் நாள் முழுவதும் நம்மை அரிக் கக் கூடியவை. நாமே குற்றவாளி என்கிற மாதிரியான ஒரு எண்ணத் தைச் சிந்தையில் கொண்டுவரக் கூடியவை. காலங்கள் கடந்த பின் னும் நம்மை வருத்தப்படுத்துபவை.
சட்டவிரோதமான பல மறைவுச் சிறைக் கூண்டுகள் அங்கிருந் தன. அந்தச் சிறைக்கூண்டுகளிலிருந்து அலறல் சத்தங்களைப் பலமுறை நான் கேட்டேன். பலர் கொல்லப்பட்டனர். சில உடல்களையும் நான் பார்த்தேன். அவற்றில் சிறு பிள்ளைகளின் உடல்களும் கிடந்தன.
இந்தச்சித்திரவதையாளர்களுக்குத் தலைவனாக ஒர் அமெரிக் கனே இருந்தான். குவாத்தமாலாக்காரர்களை விட உயரமாக இருந் தான் அவன். தலையில் செயற்கைச் சுருள் முடி அணிந்திருந்தான். கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த அவனது தோல் மெல்லிய வெண் ணிறமானது. ஐரோப்பியத் தோற்றமுள்ளவனாக இருந்தான். சித்திர வதை நடந்து கொண்டிருக்கும் போது உள்ளே வந்து பார்த்துத் தப்பான வார்த்தையைப் பயன்படுத்தினான். ஸ்பானிய மொழியில் அவன் பேசுவதைக் கொண்டு சந்தேகமின்றி அவன் அவன் அமெரிக் கனே என்ற முடிவுக்கு வந்தேன்.
அவனது கட்டளைகளை அங்கிருந்தோர் ஏற்றுச் செயல்பட் டார்கள். என்னைக் கண்டதும் அவனது நெற்றி சுருங்கியது. நான் வட அமெரிக்கப் பெண் என்பதால் சித்திரவதையை நிறுத்தச் சொன்னான். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. நான் கடத்தப்பட்ட செய்தி எங்கும் பரவியிருந்தது. எனது கடத்தலைத் தொடர்ந்து வெளியே ஒரு கொந்தளிப்பு நிலையும் உருவாகியிருந்தது. அவனது கட்டளையை ஏற்று என்னைத் தனியறைக்குள் வைத்தார்கள். அதன் பின் அவர்கள் என்னைக் கற்பழிக்கவோ தொந்தரவு தரவோ முயல வில்லை.
||SIDID ELIổ Savierfở

Page 110
182
"நீ ஒரு அமெரிக்கனா?” என்று அவனிடம் நான் கேட்டேன். “ஏன் கேட்கிறாய்?" என்று கேட்டான். அமெரிக்காவில் பொதுவாகப் பயன் படுத்தும் சொல்லை அவன் உச்சரித்ததிலிருந்து \\ கண்டு பிடித்ததைச் சொன்னேன். அவனை க்ரமெஜோ அலிஜான்ரோ என்று அங்கிருந்தோர் அழைத்த معية னர். அவன் எனக்கு உதவ முயன்றான். எனக்கு ஆடைகளை அணிவித்தான். அக்கட்டடத்திலிருந்து என்னை அழைத் துக் கொண்டு அவனது ஜீப் வண்டியில் ஏற்றினான்.
வாகனம் சென்று கொண்டிருக்கும் போது எனக்கு நடந்த சித்திரவதைகளுக்காக மன்னிப்புக் கோரினான். அவர்கள் எல்லோரும் கம்யூனிசத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான். இவ்வாறு செயற்படவில்லையெனில் விரும்பத்தகாத விளைவுகள் உருவாகும் என்றான். நடந்த சித்திரவதைகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பதையும் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளதையும் அழகான அமெரிக்க ஆங்கிலத்தில் சொன்னான். அவை வெளியே வருமாயின் நான் மிகவும் அவமானத்துக்குள்ளாக நேரும் என்றான். இந்தச் சித்திரவதைகளை மன்னித்து மறக்காவிடில் ஒளிப்பதிவையும் புகைப்படங்களையும் ஊடகங்களுக்குத் தருவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றான். என்னை இப்படியே அழைத்துக் கொண்டு அமெரிக்கத் தூதரகத்தில் நண்பன் ஒருவனைச் சந்திக்கப் போவதாகக் கூறினான்.
இந்த நேரம் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனம் நிறுத்தப்பட்ட போது நான் அதிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினேன். என்னை அவன் கொல்வதற்குத்தான் கொண்டு செல்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. அதனாலேயே நான் தப்பி ஓடினேன்.
நான் கடத்தப்பட்ட செய்தி ஊடகங்களில் வந்திருந்தன.
(ஹெக்டர் அலிஜாண்ரோ க்ரெமெஜோ குவாத்தமாலா பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது ஏ.கு. 440 கிராமங்களைச் சேர்ந்த 75,000 பொது மக்கள் அமெரிக்கப் பின்னணியுடன் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். க்ரெமெஜோ 2004ல் தேனீக்கள் கொட்டியதால் இறந்து போனார்.)
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 
 

183
என்னை ஒரு பெண் அடையாளம் கண்டு அடைக்கலம் தந்தாள். ஏனைய கன்னியாஸ்திரிகள் வரும் வரை நான் அப்பெண்ணுடன் இருந்தேன். பின்னர் குவாத்தாமாலா சிற்றியிலுள்ள "மேரி நொள் ஹவ்ஸ்"க்கு வந்து பின்னர் வத்திக்கான் தூதரகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கு சுருக்கமாக ஒரு வாக்குமூலம் கொடுத்தேன். அதில் அமெரிக்கா பற்றி எதையும் நான் சொல்லவில்லை. அதை அப்போதைக்கு அங்கு சொல்வது பொருத்தமற்றது. எனவே நான் நாட்டுக்கு வந்ததும் இது குறித்து வெளிப்படையாகப் பேசினேன்.
அதேவேளை என்னைப் பற்றிய மோசமான பிரச்சாரத்தை அமெரிக்க அரசும் முன்னெடுத்தது. இந்தப் பிரச்சாரத்திற்கு குவாத்த மாலா அரசும் ஒத்துழைப்பு வழங்கியது. குவாத்தமாலா இராணுவத் துக்கு உதவிகள் வழங்கக் கூடாது என்று காங்கிரஸ்"க்குப் பரிந்துரைக்க முயலும் அரசியல் சக்தியாக இருக்கும் என்னை ஒரு பொய்க்காரி என்றும் பைத்தியம் பிடித்த பெண் எனவும் வர்ணித்தார்கள்.
1995ல் எனக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளுக்காக குவாத்தமாலாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஹெக்டர் க்ரமெ ஜோவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கின் மூலம் எனக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன.
சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கான ஒர் அமைப்பை அமெரிக்காவில் தொடங்கியுள்ளேன். Torture Abolition and Survivors Support Coalition International (TASSC) 6Taip Guufai Glarugi LIG) bg)55 அமைப்பானது சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்காக அமெரிக் காவில் இயங்கும் ஒரே ஒரு அமைப்பாகும். The Bindolas Eyes My Journey from Torture to Truth என்ற தலைப்பில் எனது முழுமையான துயர அனுபவங்களை பற்றிவுரியா டேவிஸ”டன் இணைந்து ஒரு நூலாக எழுதியுள்ளேன்.
(Cal for Justice Weekend ன் போது அளிக்கப்பட்ட வாக்குமூலம் - இணையத் தகவல்கள்)
நன்றி.
01. democracynow.org/2005
02. ndpteachers.org
|ඉq5 ගLä ආගlග්

Page 111
வாழ்ந்துகொண்டிருக்கும் வாக்குமூலம்
எனது பெயர் மார்த்தா குவே கும்ஸா, நான் டெம்பி டொலோ (Dembi Dollo) என்ற சிறிய நகரத்தில் பிறந்தேன். இச்சிறிய நகரம் எதியோப்பியாவின் தலை நகரான அடிஸ் அபாபாவிலிருந்து தென்மேற்குப் புற மாக எண்ணுாறு கிலோ மீற்றர் தூரத்தில் சூடான் நாட்டின் எல்லையில் அமைந்திருக்கிறது.
எனது தந்தையார் மதகுருவாக இருந்தார். குடும்பத்தில் நான் இளைய புதல்வியாகப் பிறந்தேன். நான் பிறந்த போது மருத்துவம் பார்த்த தாதியின் பெயரான மார்த்தா நினைவாக எனக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. மனதுக்குப் பிடித்த எனது பெயரில் உள்ள நடுச் சொல்லான குவே என்பது குரோமோ வரலாற்றின் கதாநாயகியைக் குறிக்கிறது. ஆனால் குரோமோ இனத்தவர்கள் எதியோப்பியாவில் அதிகமாக வாழ்ந்த போதும் அந்நாட்டின்குவேயாக நான்மாறுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. குரோமோ இனத்தவர்கள் சம பாத்தியதைக்காக எதியோப்பியாவில் இன்னும் போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.
எனது பாடசாலைக் கல்வியை முடித்ததும் மேற்படிப்புக்காக நான் அடிஸ் அபாபா சர்வகலாசாலைக்குச் சென்றேன். ஒரு பொறியி யலாளராக வரவேண்டும் என்பது எனது அவாவாக இருந்தது. 1974ம் ஆண்டின் முற்பகுதியில் நான் தலைநகருக்கு வந்த புதிதில் எதியோப் அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

185
பியாவில் புரட்சி வெடித்தது. முதியவரான மன்னர் ஹெய்லி செலஸ் ஸியை ஆட்சியிலிருந்து அகற்றி விட்டு மார்க்ஸிஸ அரசு பதவிக்கு வந்தது. மன்னரைப் பதவியிலிருந்து அகற்றும் போராட்டத்துக்காக நாங்கள் தெருவில் இறக்கப்பட்டோம்.
கூடியிருந்த மக்களுக்கு மேலாக ஒரு நாள் ஒரு ஹெலிகொப் டர் வட்டமடித்தது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற் காக மரங்களில் ஏறினோம். எங்களுக்கு மேலே குண்டுகளைப் போட வந்திருக்கிறார்கள் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் ஹெலி கொப்டரிலிருந்து துண்டுப் பிரசுரங்கள் மழையாகப் பொழிந்தன. புதிய இராணுவ அரசுக்கு மாணவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனது அனுவத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக அது மனதில் நிலைத்திருக்கிறது. இன்றும் கூட ஹெலிகொப்டர்கள் பறக்கும் போது அதிலிருந்து ஏதாவதொன்று விழும் என்று மனது நினைக்கிறது.
பல புரட்சியாளர்கள் நினைப்பது போல மன்னரைப் பழிப்பது மேற்கைப்பழிப்பதற்கொப்பாகும் என்றும் சோஷலிஸத்தை அணைத்துக் கொள்வதானது மக்களுக்கான நாட்டைப் பெறுவது என்றும் நானும் நினைத்திருந்ன்ே. புதிய அரசு தனியாரதும் வணக்கஸ் தலங்களுக்குரியதுமான உடைமைகளைத் தேசிய மயப்படுத்திற்று. ஆனால் நிலச் சுவாந்தாரர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். எனவே அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் இழுத்து மூடியது. மாண வர்கள் யாவரும் நிலத்தில் தொழில் செய்யப் பணிக்கப்பட்டனர்.
இந்தக் காலப் பகுதியில் அடிஸ் அபாபாவில் ஒரு நிறுவனத் தில் பத்திரிகையாளராகப் பயிற்சிபெற்றேன். இராசாயனவியல் பொறி யியலாளரான லீன்கோ லத்தாவைத் திருமணம் செய்து கொண்டேன்.
1975ம் ஆண்டு முதற் குழந்தை பிறந்தது. அரபு மொழியில் விடுதலையையும் சுதந்திரத்தையும் குறிக்கும் சொல்லானஹலிர்ரிய்யா என்ற பெயரை அக்குழந்தைக்குச் சூட்டினோம். எதிர்காலம் மகிழ்ச்சி யூட்டக் கூடியது என்று தெரிந்தது.
அந்த நாட்கள் எனது வாழ்வில் மிகவும் இனிமையானவை.
=9CD ගෞLiගී ඝගliග)

Page 112
186
ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 1977ல் சர்வாதிகாரி கேர்ணல் மெங்கிஸ்டு ஹெய்லி மெரியம் தனது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார். புரட்சிக்கு எதிராக, அரசுக்கு எதிராகப் பேசினாலோ அல்லது ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தாலோ அவர் கள் எதிரிகள் என்று கருதப்பட்டனர். இவ்வாறு சந்தேகத்துக்குட்பட்ட ஆயிரமாயிரம் எதியோப்பியர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்; படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வேளை எனது மூன்றாவது குழந்தையை நான் வயிற்றில் சுமந்திருந்தேன். தெருக்களில் நடக்கும் போது பலநூறு பிணங்களை நான் கண்டேன்.
எனது கணவர் ஒரோமோ விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் கடும் அரச எதிர்ப்பாளராகவும் செயற் பட்டார். ஆறுமாதங்களில் அவரை நான்கு முறை இரவு வேளையில் கடத்திச் சென்றார்கள். இரண்டு வயதான எங்களது மகன் ரொபேல் தனது தகப்பனாரை அவர்கள் ஏற்றிச் சென்றபோது எனது கால்களைப் பிடித்துக் கொண்டு வீறிட்டு அழுதான். அந்தத் தினத்துக்குப் பிறகு எனது மகன் வெளிச்சம் இல்லையெனில் உறங்க மறுத்தான். மூன்று முறைகள் லத்தாவைச் சித்திரவதைக்குள்ளாக்கிய பின்னர் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். நான்காவது முறை அவர் வீட்டுக்குத் திரும்ப வில்லை.
அவரைத் தேடித் தேடித் தெருவெங்கணும் நான் அலைந்து திரிந்தேன். கொலை செய்யப்பட்டுத் தெருக்களில் கிடக்கும் எல்லா உடல்களையும் புரட்டிப் பார்த்து அலுத்தேன். ஒரு வருட காலமாக நான் அவரைத் தேடிக் கொண்டேயிருந்தேன். ஆனால் தோல்வியே கிடைத்தது. குடும்ப உறவினர்கள் என்னுடன் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார்கள். என்னுடன் பேசினாலோ தொடர்புகள் வைத்துக் கொண்டாலோ தாங்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவோம் அல்லது கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சினார்கள்.
இந்த நிலையில் எனது மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அவளுக்கு ஒரோமோ மொழியில் பயங்கரம் என்பதைக் குறிக்கும்
ඊlක$]]8) சிஹாப்தீனி
 

187
சொல்லான கோலி என்று பெயரிட்டேன். உலகத்தில் நான் தனித்து விட்டதான உணர்வு என்னில் மேலோங்கியது. சித்தப் பிரமை பிடித்த வள் போல் வாழ்ந்தேன்.
பின்னர் எல்லாமே பழகிவிட்டது. ஒரோமோ செய்திப் பத்திரிகையில் பத்தி எழுத ஆரம்பித்தேன். அதன் மூலம் ஒரோமோ இனப் பெண்களிடம் தமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தேன்.
1980ம் ஆண்டில் ஒருநாள் வழமை போல எனது இரண்டு பெண்குழந்தைகளிடமும் ஆண் பிள்ளையிடமும் விடை பெற்றபின் வேலைக்குச் சென்றேன். எனது பிள்ளைகள் முறையே மூன்று, இரண்டு, ஒன்று என்ற வயதினராக இருந்தனர். அன்றைய தினத்துக்குப் பிறகு ஏழு வருடங்கள் நான் எனது பிள்ளைகளைக் காணாமல் இருக்க வேண்டியிருக்கும் என்பது எனக்கு அப்போது தெரியாது.
அன்று நான் வேலைக்குச் சென்ற போது மின்தூக்கியருகில் நான்கு பேர் என்னை நெருங்கி வந்தார்கள். அவர்கள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஒருமுறை எனது நண்பர் ஒருவரை இவர்களே அழைத்துச் சென்றிருந் தனர். அந்த நண்பர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. எனது இதயத் துடிப்பு அதிகரித்தது. அவர்களில் ஒருவன் தனது அடையாள அட்டை யைக் காட்டினான். எனது வழியை மறித்து நின்ற அவர்கள் என்னைச் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் பயத் தில் உறைந்து போனேன். இந்நபர்கள் அழைத்துச் சென்ற எவரும் திரும்பி வந்ததாக இல்லை. இதுவே எனது வாழ்வின் முடிவு என்று எண்ணினேன். அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் ஏற்றி எனது முகத்தை மூடி அழைத்துச் சென்றார்கள். கார் வேகம் எடுத்தது. கண் கள் அவிழ்க்கப்பட்ட போது பாதுகாப்புப் படைத் தளக் கட்டடத் துள் இருந்தேன். என்னை இழுத்துக் கொண்டு சென்று ஒர் அறைக்குள் விட்டார்கள். அந்த அறை என்னைப் போன்று அழைத்துவரப்பட்ட பலரால் நிரம்பி வழிந்தது.
நிலத்தில் பலர் விழுந்து கிடந்தார்கள். அவர்களது வாய்க ளிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சிலரின் முகங்கள் Hஒரு குடம் கணினிர்

Page 113
188
உருக்குலைந்திருந்தன. சிலரின் வாய்களிலி ருந்து சீழ் வழிந்தது. அந்த இடம் கெட்ட துர் நாற்றமுடையதாக இருந்தது. இவர்களைக் கண்டதும் நான் முதலில் அதிர்ச்சிக்குள்ளா னேன்.
என்னை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அரச எதிர்ப்பு நடவடிக்கை களில் நீஈடுபட்டாயா என்று என்னைக் கேட் மெங்கிஸ்டு ஹெய்லி மரியம் டார்கள். நான் இல்லை என்று மறுத்தேன். எனது கண்களை மறைத்துக் கட்டிப் பின்னர் கைகளையும் கட்டினார்கள். நிலத்தில் அமரச் செய்து கைகளை முழங் காலில் வைத்திருக்குமாறு சொல்லி இரத்தத்தில் நனைந்த துணியால் என்னுடைய வாயை அடைத்தார்கள். பின்னர் தலைகீழாகக் கட்டித் தூக்கினார்கள். பின்னர் பாதத்தில் சாட்டையால் அடித்தார்கள். அந்த அடிகளின் போது நான் வீறிட்டு அலறினேன். வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்ததால் தேம்பலாகவும் விக்கலாகவும் சத்தம் வெளிவந்தது. அடித்து முடிந்த பிறகு காற் பாதங்களில் ஏதோ ஒரு திரவத்தை விசிறினார்கள்.
ஒவ்வொரு அடியும் விழும்போது கூரைக்கு எம்பிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. திரும்பத்திரும்ப அடித்தார்கள். அவர்கள் அடித்து, உதைத்துச் சூடு போட்டுச் சித்திரவதை செய்யும் போதெல் லாம் நீ ஒரு எதிர்ப்பு அரசியல் இயக்கத்தில் இருக்கிறாயா என்று கேட்டார்கள். அவர்கள் எனது உடலையும் ஆன்மாவையும் சிதைக்க எண்ணினார்கள். எனக்கு அப்போது 24 வயதாக இருந்தது. கைது செய்யப்பட்ட முதல் வருடத்தில் பத்து முறை நான் சித்திரவதைக் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். நாட்டில் அப்போது கடும் பஞ்சம் நிலவியது. தடுப்பில் இருப்பவர்களுக்குத் திருட்டுத்தனமாக உணவு கொண்டு வரும் உறவினர்கள் மூலமாக இச்செய்தியை நான் அறிந்தேன்.
எனக்கு எதிராக ஒருபோதும் குற்றமெதுவும் சுமத்தப்பட வில்லை. வழக்குத் தொடரப்படவும் இல்லை. எனது சுதந்திரம் மறுக்
அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

189
கப்பட்டமைக்கான எந்தக் காரணமும் எனக்குச் சொல்லப்பட வில்லை. ஆனால் அங்கிருப்பவர்களுக்குள் நான் ஓர் அதிர்ஷ்டசாலி என்றே என்னைக் கருதினேன். மரணத்திலிருந்து நான் தப்பியிருப்பது நான் ஒரு பத்திரிகையாளி என்பதால்தான் என்பதை உணர்ந்தேன்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெயர் அறிவிக்கப்பட்ட பின் அழைத்துச் செல்லப்படுபவர்கள் அங்கு மீண்டும் திரும்பிவருவதில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கு என்ன நிகழப் போகிறது என்பதை ஒரு போதும் யாராலும் ஊகிக்க முடியாது. அப்படியொரு பயங்கரம் அடர்ந்திருந்தது.
இந்த இக்கட்டுக்குள்ளும் பிரெஞ்ச் மொழியைக் கற்றேன். மற்றைய கைதிகளுக்கும் கற்றுக் கொடுத்தேன். அந்தச் சிறைக்குள் உத்தி யோக மொழியாக இருந்ததிக்ரிக்னா (Tigrigna) மொழியையும் கற்றுக் கொண்டேன். உயிரியல், புவியியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கைதிகளுக்கும் சிறையதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் கற்பித்தேன். மிகச் சிறந்த மூளைசாலிகள் சிறையில் இருந்தார்கள். நாட்டின் அதி சிறந்த பள்ளிக் கூடமும் சிறைக் கூடம்தான் என்று கருதுகிறேன்.
அதே வேளை எனது பிள்ளைகள் குடும்பத்தவர்கள் மத்தியில் வெவ்வேறு வீடுகளில் வசிப்பதாக அறிய வந்தேன். அவர்கள் அடிஸ் அபாபாவில் இருப்பதை அறிந்து கொண்டதும் அவர்களைப் பார்ப்ப தற்காக ஒரு திட்டத்தைத் திட்டினேன். கடும் பல்வலியால் அவதிப் படுவது போல் நடித்தேன். தாங்க முடியாமல் அழுவது போலச் சத்த மிட்டு அழுதேன்.
மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறையிலி ருக்கும் முன்னாள் மன்னரின் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சிறையை விட்டு மருத்துவத்துக்காக வெளியே செல்ல அனுமதிக்கப் பட்டேன். கூட வந்த காவலர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது. பல்லைக் கழற்றுவதற்காகச் சென்ற மருத்துவ மனைக்குப் பிள்ளை கள் கொண்டு வரப்பட்டார்கள். எனது ஒரு பல் பிடுங்கப்பட்டது.
மூத்த பிள்ளைகள் இருவரும் என்னைக் கண்டதும் அழுது கொண்டே ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டார்கள். நான் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சத்தமிட்டு அழுதேன். மூன்றா = 60 duż dcłafił

Page 114
190
வது குழந்தை கோலி சற்று விலகியே நின்றிருந்தாள். நான் அவளிடம் ஓடினேன். அவள் என் முகத்தில் எச்சில் உமிழ்ந்தாள். நான் கைது செய்யப்படும் போது அவளுக்கு வயது ஒன்றுதான். "இதுதான் எனது தாயென்றால் எனக்குத் தாய் வேண்டாம்” என்றாள். அந்த வேளை எனது மனநிலையை நான் எந்த வார்த்தையில் சொல்ல முடியும்? அந்தச் சந்திப்பு வெறும் பதினைந்து நிமிடங்களில் முடிந்து போனது.
சில மாதங்களில் சிறையில் உள்ளவர்களைக் குடும்பத்தினர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பல தினங்களில் எனது பிள்ளைகள் தூரத்தில் வரிசையில் நிற்பதை நான் காண்பேன். அவர்கள் நெருங்கி வருவதற்குள் நேரம் முடிந்து விடும். அவர்கள் விரட்டப்படுவார்கள்.
சிறைக்குள் சில வருடங்கள் கழிந்த பின்னர்தான் 'பென்' அமைப்பு எனது விடுதலைக்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து அடிக்கடி தபால் அட்டைகள் வரும். அவை நாம் உன்னைப் பற்றி அறிவோம். நீ தனியாள் இல்லை" என்பன போன்ற வாசகங்களைத் தாங்கி வரும். இந்தத் தபால் அட்டைகள் எனக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தின. என்னை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று எண்ணிக் கொண்டி ருந்த எனக்கு என்னைப் பற்றியும் அறிந்தவர்கள் இருக்கிறார்கள் என்ப தும் எனது விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பெருமையையும் சந்தோஷத்தையும் தரக் கூடியதல்லவா.
கனேடிய நாவலாசிரியர் திமோத்தி ஃபின்ட்லி நம்பிக்கை யீனத்துக்கு எதிரான நம்பிக்கை' என்று எனக்குத் தகவல் அனுப்புவார். அவரை நான் கனேடியத் தந்தை என்று விளிக்கவே விரும்புகிறேன்.
ஒரு சனிக்கிழமைக் காலை நான் எனது தலை முடியைக் கழுவிக் கொண்டிருந்த போது ஒலிபெருக்கியில் எனது பெயர் அறிவிக் கப்பட்டது. ஒலிபெருக்கியில் பெயர் ஒலித்தால் உடனே ஒடிச் செல்ல வேண்டும். அது ஒன்றில் மரணம் அல்லது விடுதலை. நான் தலை முடியை அள்ளிக் கட்டிக் கொண்டு துவாயுடன் ஒடினேன். அவ்வாறு பெயர் சொல்லப்பட்டவர்களில் ஒரு கைதி மகிழ்ச்சியில் துள்ளினார். நான் மகிழ்ச்சியடையவில்லை. இது மரணத்தை நோக்கிய பயணமாக
அஷ்ரஃப் சிஹாப்தீன்

191
இருந்தால் என்ன செய்வது?
நானும் மற்றும் பல கைதிகளும் வாகனத்தில் ஏற்றப்பட்டுப் பாதுகாப்புப் படையின் பிரதான அலுவலகத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்குதான் முதலில் என்னைச் சித்திரவதை செய்தார்கள். அந்தக் கட்டடத்தை நெருங்குகையில் அனைத்துக் கைதிகளும் உறைந்து போய் இருந்தார்கள். ஒரு மயான அமைதி நில விற்று. ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். எந்த வார்த்தைகளும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. "நாம் மனிதர் களாகவே இறப்போம். அவர்களது முகங்களில் காறி உமிழ்வோம்” என்று நான் கொக்கரித்தேன்.
வாகனம் அந்த 'சிவப்புக் கல்' கட்டடத்தின் வாயில் அருகே தரித்தது. வாயிற் கதவு திறக்கப்பட்டதும் அங்கே புகைப்படக் கருவிக ளுடனும் குறிப்புத் தாள்களுடனும் பல நிருபர்கள் நின்றிருந்தார்கள். "எமது மரணத்தைச் செய்தியாக்க வந்திருக்கிறார்களோ' என்ற சந்தேகம் வந்தது எனக்கு. ஜெனரல் ஒருவர் நின்றிருந்தார். அவரது வாயசைப் புக்காக நான் நீண்ட நேரம் காத்திருந்தேன்.
"இந்த நிமிடத்திலிருந்து உங்களுக்கு விடுதலை" என்றார் அவர். கைதிகள் சிலைகளாக நின்றார்கள். அதே வசனத்தை அவர் மீண்டும் சொன்னார். ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுப்பி விட்டது போலிருந்தது எனக்கு. ஆண்கள் கைகளைத் தட்டப் பெண்கள் விம்மி அழுதார்கள். அந்த நிமிடத்தை என் வாழ்நாளில் ஒரு போதும் என்னால் மறக்க முடியாது.
90 அரசியற் கைதிகளும் 400 ஏனைய கைதிகளும் அன்று விடுதலை செய்யப்பட்டனர். எந்த விளக்கமும் இல்லாமல் எந்த மன்னிப்புக் கோரலும் இல்லாமல் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பு வதற்கான எந்தவித உதவி ஒத்தாசைகளுமில்லாமல் எனது வாழ்வின் பல வருடங்களை விழுங்கி விட்டு வெளியில் விட்டார்கள். நான் எங்கே போவது? நான் சந்தோஷமாகவோ கவலையாகவோ உணர வில்லை. அங்கிருந்து நான் மிஷனரிக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். பத்து வருடங்களாக நான் ஒரு கதவைத் திறந்ததில்லை. அப்படி ஒரு கதவைத் திறக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை கூட எனக்கு |ඉංග්‍ය ගuර් ඕෆ්ග්

Page 115
192
இருந்ததில்லை. ஒரு பாரிய முயற்சிதான். நான் பிள்ளைகளுடன் இணைந்தேன். ஆனால் கணவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நான் நம்பினேன். அதேவேளை குடும்பத்தை நடத்திச் செல்லத் தொழிலும் இல்லாத நிலையில் அல்லற்பட்டேன்.
எதியோப்பியாவின் அரசாங்கம் சீர்குலைந்திருந்த்து. அரசியல் நிலவரம் தொடர்ந்தும் அபாயகரமானதாகவே இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பயிற்சி முகாம்களை நடத்துமாறு என்னை அணுகிக் கோரிக்கை விடுத்தார்கள். அதனை மறுத்தாலும் மரணம்; ஏற்றுக் கொண்டாலும் மரணம் என்கிற நிலை. விடுதலை பெற்ற ஏழாவது மாதம் 'பென் அமைப்பின் உதவி யுடன் அங்கிருந்து தப்பி ஓடினேன். அங்கிருந்து 700 கிலோமீற்றர்கள் பயணம் செய்து கென்யாவின் எல்லையில் காட்டுக்குள் வந்து சேர்ந் தேன். அந்த இடத்துக்கு வந்த பிறகு நான் ஏன் இந்தக் காரியத்தைச் செய்தேன், ஏன் பிள்ளைகளையும் அழைத்து வந்தேன் என்று என்னை நான் நொந்து கொண்டேன். இரண்டு வாரங்கள் நாங்கள் காட்டுக்குள் பயணம் செய்தோம். எல்லைப் படை வீரர்களின் கண்களில் படாமல் அத்தனை துயரங்களையும் தாங்கியபடி ஒருவாறு பாதுகாப்பான ஓர் இடத்தை அடைந்தோம். கென்யாவில் இருந்தபடி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக செப்டம்பர் 1991ல் கனடாவினால் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டோம்.
இதேவேளை எதியோப்பியாவை ஆண்ட மெங்கிஸ்டுவின் அரசாங்கம் துண்டு துண்டாகச் சிதறி உடைந்தது. பாரிய எதிரணி
*:E) YOtjo881.VES உருவானது. அவை யாவும ETHOPIA ༦ས་ ༡༠.ཚ་བ་y_ ஒன்றிணைந்து எதியோப் பிய மக்கள் புரட்சிகர ஜன நாயக அமைப்பு ஒன்று ஏற்ப டுத்தப்பட்டது. இந்த அமைப்பு மே மாதம் 1991ல் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஜூலை மாதம் லண்ட
ඊlබදු|Jäü சிஹாப்தீன்:
 
 
 
 

193
னிலிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. என்ன அதிசயம்! அது எனது கணவர் லத்தா! பதின் மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரது குரலைக் கேட்டேன். அவர் உயிருடன் இருப்பது உறுதியா கிவிட்டது. எதியோப்பியாவின் புதிய இடைக்கால அரசின் கட்சி களுக்கிடையிலானதுதுவராக அவர் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரது குரலைக் கேட்டதும் கோபமும் அதே வேளை மகிழ்ச்சியும் பொங்கியது. அவருடன் பேச நான் விரும்பவில்லையெனினும் என்
' மனது கேட்கவில்லை.
நானும் பிள்ளைகளும் கனடாவுக்குச் செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் லத்தா கென்யாவுக்கு வந்து சேர்ந்தார். கடைசிப் பிள்ளையை அவள் பிறந்தது முதல் அவர் பார்த்திருக்கவில்லை.
கென்யா விமானநிலையத்தில் அவரைக் காண்பதற்காக நான் நின்றிருந்தேன். அவர் வந்ததும் இதுவரை எங்களைக் கைவிட்டிருந்த மைக்காக அவருடன் சண்டையிட வேண்டும் என்று நினைத்திருந் தேன். தூரத்தே கையில் சிகரட்டுடன் அவரைக் கண்ட போது என்னையறியாமல் அவரிடம் ஒடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டேன். அவரை நான் காணாதிருந்த பதின்மூன்று வருடங்கள் எனக்குப் பதின் மூன்று நிமிடங்களாக மட்டுமே தெரிந்தன.
எதியோப்பியாவின் புதிய அரசின் முக்கியஸ்தராக லத்தா இருப்பதால் குடும்பத்துடன் அங்கு போய் விடலாம் என்ற ஒர் ஆசை எனக்கு ஏற்பட்டது. எனது சேவை எனது நாட்டுக்கு வேண்டும் என்ற போதும் எனது பிள்ளைகளின் நலன் கருதிச் சிந்தித்தேன். எனவே கனடாவுக்குச் செல்லும் தீர்மானத்தையே இறுதியில் எடுத்தேன்.
ஒரு வருடத்துக்குப் பிறகு எதியோப்பியக் கூட்டணி அர்சு உடைந்தது. ஒரோமோ விடுதலை முன்னணிதனது ஆதரவை விலக்கிக் கொண்டது. நாட்டில் ஜனநாயகத்தை நடைமுறைக்கிடுவதில் தாமதங் களும் தோல்விகளும் ஏற்பட்டன. லத்தா 1993ல் லண்டன் சென்றார். மூன்று வருடங்களுக்குப் பிறகு கனடாவுக்கு வந்து அவர் எங்களுடன் இணைந்து கொண்டார்.
மாணவர்களுக்கான உதவித் தொகை பெற்றும் பகுதி நேரம் வேலை செய்தும் யோர்க் சர்வகலாசாலையில் எனது பட்டப்படிப்பை
ஒரு குடம் கணினி

Page 116
நிறைவு செய்தேன். 1996ல் மனித உரிமைக்கான நியூயோர்க் குழுவின் பரிசு எனக்கு வழங்கப்பட்டது. முதுமாணிப்பட்டத்தை டொரன்டோ பல்கலைக் கழகத்தில் 2002ல் பெற்றேன். 2004ல் கலாநிதிப் பட்டத் தையும் அதே பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டேன்.
தற்போது வாட்டர்லூவில் உள்ள வில்பிரட் ரோரியர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் சுயேச்சையான பத்திரி கையாளராகவும் பணி செய்து வருகிறேன்.
எனது கணவர் தற்போது நோர்வேயில் வாழ்ந்து வருகிறார். அங்கிருந்தபடி ஒரோமோ இனத்தவரின் நலனுக்காக உழைத்து வருகிறார். அதற்காக என்னையும் தன்னுடன் அழைத்துக் கொண்டி ருக்கிறார். உண்மையில் எனது சக்தியும் எனது சிறகுகளும் உயரே விரிந் துள்ளன. நான் எந்த இடத்தில் தரை தட்டுவேன் என்பதைச் சொல்ல முடியாதுள்ளது.
எனது வாழ்வின் திசையை அவர்கள் மாற்றினார்கள். பென் அமைப்பும் ஏனைய மனித உரிமைகள் அமைப்பும் இதில் தலையிட வில்லையென்றால் நான் எப்போதோ இறந்திருப்பேன். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவள்.
நான் கடந்து போன காலத்தின் வாழ்ந்து கொண்டிருக்கும் வாக்குமூலம்.'
நன்றி.
01. Oromiatimes.blogspot.com
02. amnesty.ca 03. penCanada.ca
அஷ்ரஃப் சிஹாப்தீன்=

ஏலி. ஏலி. எங்களை ஏன் கைவிட்டீர்?
எனது பெயர் ஜோஸப் ஷெர். போலந்து நாட்டின் க்ரெஸ்பீஸ் என்ற நகரில் 1917ம் ஆண்டு நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் சிமோன். அவர் தையற்காரராக இருந்தார். அவர் எப்போ துமே கோர்ட், டை, தொப்பி அணிவார். எனது தாயார் ஃபெலிஸியா தனது பிள்ளைகளையும் வீட்டையும் பார்த்துக் கொண்டார். அவர் மிகவும் கனிவானவர். அவரை எல்லோரும் சிட்டுக் குருவி என்று அழைத் தார்கள்.
நாங்கள் அறுவர். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள். அபே தான் மூத்தவர். நான் நடு இளையவன். எனது சகோதரர் லியோ கடைசிப் பிள்ளை. லியா, மென்யா, பிரெய்டா ஆகிய மூவரும் பெண் கள். கடைசிப் பெண்ணான பிரெய்டா மிகவும் அழகானவள்.
பிரெய்டாவினால்தான் எனது மனைவி முதலில் எனக்கு அறிமுகமானாள். எனது மனைவி அண்மையில் உள்ள நகரமான ஸெஸ்டகோவாவில் வாழ்ந்து வந்தாள். கோடைக் காலத்தின் போது அவள் க்ரெஸ்பீஸ9க்கு வந்திருந்தாள். பிரெய்டா ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது அவளை நிறுத்தி "நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். உனக்கு சகோதரர் இருக்கிறாரா?” என்று கேட்டிருக்கிறாள். இப்படித்தான் நான் ரேச்சலைச் சந்தித்தேன்.
=ஒரு குடம் கணினி

Page 117
196
எனது தந்தையார் நன்கு கல்வியறிவு பெற்ற மனிதர். அவர் போலிஷ், ரஷ்யன் மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகளில் எழுதக் கூடியவர். ஒப்பந்தம் மற்றும் சொத்துக்கள் பற்றிய - நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளும் செயலாளராக அவர் வேலை செய்தார். இது வழக்கத்துக்கு மாறான ஒரு விடயமாக இருந்தது. ஏனெனில் பொதுவாக யூதர்கள் அரசாங்கத்தில் வேலை செய்வதில்லை.
மதகுருமாருக்கான உடைகளை உருவாக்குவதில் எனது தந்தை கைதேர்ந்தவராயிருந்தார். உயர் மதகுருவானவர்களுக்கு மேலாடை தைக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்படுவார். அதை ஒப்ப்டைப்பதற்கு நானும் தந்தையாருடன் சென்றிருக்கிறேன். அதை ஒப்படைக்கு முன் அழுத்தி அழுத்தி அதை அழகு பெறச் செய்ய வேண்டும். அப்போது எனக்கு வயது பதின்மூன்று. என் கரங்களில் மதகுருவின் புதிய ஆடை பொதி செய்யப்பட்டிருந்தது. மதகுருவின் வீட்டுக்குள்நாங்கள் நுழைந்தோம். சுவர்களில் ஏராளமான சிலுவைகள் கொளுவப்பட்டிருந்தன. மரியாதை செய்யும் நிமித்தம் எமது தலை யிலிருந்த தொப்பிகளைக் கழற்றினோம்.
தந்தையார் தைத்த மேலாடையை அணிந்து அங்கிருந்த கண் ணாடி முன்நின்று மதகுரு தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டார். மகிழ்ச்சியுடன் அவர் "மிக அழகாகத் தைக்கப்பட்டுள்ளது" என்று சொல்லி விட்டு "மிஸ்டர் ஷெர், உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யட்டும்?" என்று கேட்டார். தந்தையார் கழற்றிக் கதிரையில் வைத்திருந்த தொப்பியை எடுத்த குருவானவர் அதை எனது தந்தையின் தலையில் அணிவித்து விட்டுச் சொன்னார்:-"நீங்கள் எனது மதத்தைக் கண்ணியப்படுத்தினிர்கள்; நான் உங்கள் மதத்தைக் கண்ணியப்படுத்து கிறேன்!”
நாங்கள் க்ரெஸ்பீஸில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது எனது சகோதரி மென்யா தொழில் தேடி ஸெஸ்டகோவாவுக்குச் சென்றார். அங்கு ஸ்டெஃபா என்ற ஒரு நல்ல பெண்ணைச் சந்தித்தார். இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யுமிடமொன்றில் இவர்கள் இரு வரும் வேலை செய்தனர். ஒரே இடத்தில் தங்கியுமிருந்தனர். யுத்தத் அஷ்ரஃப் சிஹாப்தீன்

197
துக்குப் பிறகு நான் திரும்பியதும் நானும் எனது சகோதரர் லியோவும் ஸ்டெஃபாவைப் பார்க்கச் சென்றோம். ஸ்டெஃபா ஒரு கடையை ஆரம்பித்திருந்தார். என்னைக் கண்டதும் அவர் கேட்ட முதற் கேள்வி "நீ இன்னும் உயிருடன் இருக்கிறாயா?” என்பதுதான். ஒரு தேனீரைக் கூட அவர் எங்களுக்குத் தரவில்லை. உண்மையில் எங்களைக் கட்டி அணைத்து ஏதோ ஒரு பரிசுப் பொருளைத் தரப்போகிறார் என்றுதான் எதிர்பாரத்திருந்தோம். மகிழ்ச்சிகரமான ஒரு வரவேற்பாகவும் அது இருக்கவில்லை. எனது சகோதரி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கி றாளா என்று கூடக் கேட்கவில்லை. ஐந்து நிமிடங்களின் பின்னர் நாங் கள் அங்கிருந்து சென்று விட்டோம். இத்தனைக்கும் அவரும் எனது சகோதரியும் மிக இறுக்கமான நண்பிகளாக இருந்தவர்கள்.
யூதர்களுக்குப் போலந்தில் எதிர்காலம் இல்லை. யூதர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக இருந்தார்கள். இயேசுவை யூதர்களே கொன்றார்கள் என்ற நிலைப்பாட்டில் கிறிஸ்தவ ஆலயம் இருந்தது. இதுவே வெறுப்பு உருவாகக் காரணமாக இருந்தது. பாடசாலையில் முழுநாளும் நான் கரங்களை உயர்த்தியபடி நிற்கவேண்டியிருந்தது. ஒரு போதும் என்னை அவர்கள் அழைத்ததில்லை. தெருவில் யூதன் அடிக்கப்பட்டான். எனது தாய் இல்லை, எனது தாய் மட்டுமல்ல எல்லாயூதத் தாய்மாரும் பாடசாலை முடியும் தறுவாயில் பாடசாலை க்கு வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள். ஏனெனில் பாட சாலை விட்டுத் தனியே பாதையில் செல்வது ஆபத்தானதாக இருந்தது.
1936ம் ஆண்டு ஒரு நாள் இத்திஷ்' பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த ஒரு செய்தியில் அவதானம் சென்றது. அமெரிக்காவிலிருந்து பாவிக்கப்பட்ட உடுபுடவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி சொன்னது. திருமதி ரூஸ்வெல்ட் எல்லாவழியிலும் உதவிக் கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னேன்.
- போலிஷ் மொழியில் ஒரு தபாலட்டை எழுதி அவருக்கு அனுப்பினேன். அதில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து விட்டு என்னை அமெரிக்காவுக்கு அழைத்து உதவுமாறு கோரியி ருந்தேன். 'நான் ஒரு நல்ல தையற்காரன், வர்த்தகம் தெரிந்தவன்; ஒரு
ஒரு குடம் கண்ணீர்

Page 118
198
நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அநேகமாக அவர் என்னை அழைத்துக் கொள்ள லாம் என்று நான் நம்பினேன். நான் அதிர்ஷ்டக்காரனாக இருப்பேன் என்ற நம்பிக்கையில் உதவிக்காக அதில் அழுதிருந்தேன். நான் காத்தி ருந்தேன். யுத்தம் ஆரம்பிக்கும் வரையில் காத்துக் கொண்டேயிருந் தேன். எந்தவொரு பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை.
குடும்பம் ஸெஸ்டகோவா நகருக்கு இடம்பெயர்ந்தது. ஜேர்மன் இராணுவம் புகுந்ததும் தெருக்களில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. 15 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட யூதர்களான எல்லா ஆண்களும் சந்தையில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டிருந்தது. அடுக்குமாடிக் கட்டடத்தின் மூன்றாம் மாடி வீடொன்றில் நாங்கள் குடியிருந்தோம். எனக்குப் பயம் ஏற்பட்டது. நான் வீட்டின் கூரையு டனுள்ள சிறு மறைப்புக்குள் ஒளிந்து கொண்டேன். 'என்னைக் கொல்லுவதாயின் இங்கேயே கொல்லட்டும்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனது தந்தையாரும் சகோதரன் லியோவும் சந்தைக்குப் போனார்கள். யூதர்கள் எல்லோரும் முகம் கவிழ்த்துப் பாதையில் செல்லுமாறு பணிக்கப்பட்டார்கள்.
சூரிய வெப்பம் மிகுதியாயிருந்தது. உணவோ நீரோ கிடை யாது. தலையை உயர்த்தினால் மரணம் அன்றி வேறில்லை. ஒவ்வொரு பத்தாவது அல்லது பன்னிரண்டாவது நபரை அவர்கள் சுட்டு எம்மைப் பீதியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றார்கள். ஹிட்லர் எனும் போது புரிவது இதுதான். அன்று நூற்றுக் கணக்கானோரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். அன்றைய தினத்தை நாங்கள் இரத்தத் திங்கள்’ என்று அழைத்தோம்.
யூத வழிபாட்டுத் தலங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தி னார்கள். யூதர்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கினார்கள். மஞ்சள் நட்சத்திரமும் மஞ்சட் கைப்பட்டியும் அணிந்தோம். நாங்கள் அவமா னப்படுத்தப்பட்டோம். எங்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை. நாங்கள் எங்களை நாய்களைப் போல் உணர்ந்தோம். ஜேர்மனியர்கள் எங்களில் உள்ள வசதி படைத்தவர்களை அடையாளங் கண்டு அவர் களை எங்களுக்குப் பொறுப்பாக நியமித்தனர். இது ஜூடன்ரட்"
அஷ்ரஃப் சிஹாப்தீனி

199
என்று அழைக்கப்பட்டது. ஜேர்மனியர் யூதர்களை பனிப் படிவுகளை அள்ளவும் குதிரைகளைக் கழுவவும் சப்பாத்துக்களைத் துடைக்கவும் குழிகள் தோண்டவும் பயன்படுத்தினார்கள். அழுக்குடன் சம்பந்தப் பட்ட அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடுத்தினார்கள்.
எனக்கு ஐஸக் பிளிட்ஸ் என்ற நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். இளையவர்கள் எல்லையூடறுத்து ரஷ்யாவுக்குள் செல்வ தாக அறிய வந்தோம். அது பாதுகாப்பானது என்பதால் நாங்களும் செல்லத் தீர்மானித்தோம். நான் எனது நண்பியுடனும் ஐஸக் தனது நண்பியுடனும் போவதென முடிவாயிற்று. ரேச்சலும் நானும் இந்த முடிவைப் பெற்றோருக்குச் சொன்னோம். இருவரும் திருமணம் செய்து விட்டுத் தம்பதியராகச் செல்வது நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர்களது சொற்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் எல்லையில் இறுக்கம் நிலவிற்று. ஆயிரக் கணக்கான மக்கள் எல்லை தாண்டிப் போயிருந்தார்கள். ஆயிரக் கணக்கானோர் எல்லையைத் தாண்டுவதற்குக் காத்துக் கொண்டிருந்தனர். நடந்து கொண்டிருப் பதை ரஷ்யர்கள் அறிய வந்தவுடன் எல்லையை மூடிவிட்டனர்.
ஹிட்லர் கிழக்கில் ஒரு பெருந் தெருவை அமைத்தான். அதில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். ஒவ்வொரு நகரமும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினரை அனுப்ப வேண்டும் என்று
போலந்தின் வோர்ஸோவில் உள்ள யூதக் குடியிருப்பிலிருந்து யூதர்கள் அகற்றப்படுதல்.
ඡLiගී අංගjග)

Page 119
200
உத்தரவிடப்பட்டது. அவர்கள் 20க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வர்களாக இருக்க வேண்டும். ஸெஸ்டகோவா சார்பாகக் குடும்பத்தில் ஒருவரை அனுப்புவதென முடிவானது.
எனது மூத்த சகோதரன் அபே திருமணம் செய்தவன். இளைய சகோதரன் லியோ இன்னும் 20 வயதை எட்டியிருக்கவில்லை. நான் தோற்றத்தில் சிறியவனாக இருந்ததால் லியோ பயப்பட்டான். லியோ வலிமையானவன். எனது சார்பாகத் தான் போகவா என்று லியோ கேட்டான். ஆனால் பெற்றோர் அதை அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னை நோக்கிப் பார்வையைச் செலுத்தியதும் நான் போவத்ெனத் தீர்மானித்தேன். இந்த வேளை எனது தாயின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
கால்நடைகளை ஏற்றும் வாகனத்தில் லுப்லின்' என்ற இடத் துக்கு எங்களை எடுத்துச் சென்றார்கள். அங்கிருந்து "சீஸனோவ்" என்ற இடத்துக்கும் அங்கிருந்து நெடுஞ்சாலை அமைக்கப்படும் இடத்துக் கும் கொண்டு செல்லப்பட்டோம். ஸெஸ்டகோவிலிருந்து நெடுஞ் சாலை அமைப்பு வேலைகளுக்குச் சென்ற இளைஞர்கள் ஆயிரம் பேரில் மூன்று பேர்தான் எஞ்சியிருந்தோம். அந்த மூவரில் நானும் ஒருவன். உடல் வலிமையுள்ளோரால் கூடத் தாக்குப் பிடிக்க முடிய வில்லை.
அதிகாலை 5.00 மணிக்கே வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட தால் எங்களை 4.00 மணிக்கே எழுப்பி விடுவார்கள். காலை உணவாக இரண்டு கிலோ பாண் வழங்கப்படும். அதை நான்கு பேருக்கிடையில் பங்கிட்டுச் சாப்பிட வேண்டும். சிலர் தங்களது பங்கை ஐந்து நிமிடங் களில் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். நான் எனது பங்கை எனது மேலாடைக்குள் வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு துண்டாக அவ்வப் போது சாப்பிடுவேன்.
களஞ்சியத்துக்குள் கிடக்கும் வைக்கோல்களில்தான் நாம் உறங்குவோம். குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகச் சாக்கு களால் கால்களைச் சுற்றிக் கொள்வோம். அவ்வப்போது பேன் பிடித் துக் கொள்ளும், பேன் பிடித்தவர்கள் இரவு முழுக்கத் தங்களது நகங்க ளால் சொறிந்து கொண்டேயிருப்பார்க்ள் கிருமித் தொற்று ஏற்பட்டுப் அஷ்ரஃப் சிஹாப்தீனி

2O1
பலர் இறந்தார்கள். குளிர் மைனஸ் பத்து டிகிரிக்கு இறங்குவதும் உண்டு. அவ்வாறான வேளைகளில் பனிக்கட்டியை உடைத்துத் தோண்டி உடற் சுத்தம் செய்வோம். பேன் தொல்லையிலிருந்து காத் துக் கொள்வதற்காக உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் நிர்வாண மாகத் திரிந்ததும் உண்டு. ஆடைகளைக் கழற்றி பனிக்கட்டிகளின் மேல் போட்டு விடுவோம். பத்து நிமிடங்களில் அவை இறந்து விடும். பின்னர் அணிந்து கொள்வோம். ஆனால் இரண்டொரு தினங்களில் மீண்டும் பேன் தொற்றிக் கொள்ளும்.
மலங் கழிப்பதாயின் காற்சட்டையைச் சம்பூரணமாகக் களைந்து விட்டே செல்ல வேண்டும். மலக் குழி மிகவும் பெரியது. துடைப்பதற்குக் காகிதங்கள் கிடையாது. இலைகளையே பயன் படுத்துவோம். எந்த நேரத்திலும் ஒரு துப்பாக்கி ரவை ஒருவனது உடம்புக்குள் செல்லலாம். உக்ரேனிய மற்றும் லித்வேனிய காவற் காரர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு எங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு மிக அண்மையில் ரவை செல்லக் கூடிய வகையில் அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினார்கள். மலங்கழிக்கையில் துப்பாக்கி ரவை பட்டவர்கள் அப்படியே அந்தக் குழிக்குள் விழுந்து விடுவார்கள். மோசமான உணவின் காரணமாக வாந்திபேதி ஏற்பட்டது.
எனக்கு அருகில் மலங்கழித்த ஒருவனின் உடலில் குண்டு பட்டபோது அவன் குழிக்குள் விழுந்தான். அவன் குழிக்குள் விழும்போது "ஷேமா இஸ்ரயேல்.’ என்று சொன்னதை நான் கேட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் எதற்காகவும் அலட் டிக் கொள்ளவில்லை. நடக்க வேண்டியது நடந்தே திரும், நாங்கள் கணம் கணமாக வாழ்ந்திருந்தோம்.
மரங்களைத் தறித்து வீழ்த்தினோம். மலைகளைத் தோண்டி னோம். குழிகளை நிரப்பினோம். நிலத்திலே தண்டவாளத்தில் ஊரும் கைவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு வண்டியை மலைப் பாங்கான இடத்தில் நால்வர் தள்ளிச் செல்வோம். திரும்பிப் பள்ளத்தில் இறங்குவதுதான் ஆபத்தானது. அந்த வண்டியை நிறுத்துவதற்கான இயந்திரநுட்பம் இல்லை. இரண்டுக்கு நான்கு அளவுதடிகளை அதன் ஒரு குடம் கணினிர்

Page 120
2O2
சக்கரத்துக்குள் செலுத்தியே நிறுத்த வேண்டும். வேலை செய்தவர்கள் தினம் இறந்தார்கள். பலர் அடிக்கப்பட்டார்கள். நான் அடிவாங்கிக் கொள்ளாமல் கவனமாகச் செயற்பட்டேன். அடிக்கத் தொடங்கினார் கள் என்றால் அவ்வளவுதான்!
ஒருநாள் ஒரு பெரிய :பரலைத் தனியே தள்ளிக் கொண்டிருக் கும் போது ஒரு உக்ரேனியக் காவலாளி எனது தலையில் கையிலுள்ள தடியால் அடித்தான். நான் அழத் தொடங்கினேன். "நான் தனியே ஒரு பெரிய காரியத்தைச் செய்கிறேன். நீங்கள் எதை நாங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்கிறேன். ஆனால் நீ அடிக்கிறாய்."என்றேன். பலர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அடுத்த நாள் அவர்களது உடல்களைக் குதிரையில் கட்டி எடுத்து வருவார்கள். நான் தப்பிப் பிழைத்ததற்கு இரண்டு ஜேர்மன் யூதர்களே காரணமாயிருந்தனர். அவர்கள் எங்களது குடியிருப்புக்கு அடுத்த பெரிய யூதக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பேரா சிரியர். மற்றவர் வைத்தியர். ஜேர்மனியர்களின் காரியாலயத்தில் அவர் கள் தொழில் புரிந்தார்கள். ஸெஸ்டகோவாவில் ஒவ்வொரு காலை யிலும் அவர்களது ஆடையை அழகாக அழுத்திக் கொடுப்பேன். அந்த ஆடையில் ஏதாவது பொருத்த வேண்டுமெனில் அதனையும் செய்து கொடுப்பேன். நான் இவ்வாறு வேலைக்காக அழைத்துச் செல்லப் பட்டுள்ளேன் என்பதை அவர்கள் கேள்விப் பட்டதும் என்னை மீட்டுத் தருவதற்குத் தம்மாலான உச்ச முயற்சியை மேற்கொள்வதாக எனது தாயாரிடம் சத்தியம் செய்திருந்தார்கள். ஜோஸப் ஷெர்ரை எப்படியாவது மீட்கவேண்டும்’ என்று சொல்லிக் கவலைப் பட்டுள் ளார்கள்.
அந்த வாக்கை அவர்கள் நிறைவேற்றப் பல மாதங்கள் சென்றன. ஒர் இரவில் நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு உக்ரேனியக் காவலர்கள் என்னைத் தட்டி எழுப்பினார்கள். என்னைச் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்களது விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.
அவர்களது விடுதியில் எனது கழுத்தைச் சுற்றிப் பட்டை ஒன்றை அணிவித்தார்கள். வேலையின் போது நான் விபத்துக்குள்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

203
ளானவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து குதிரை யிலும் பிறகு ஒரு சிறிய வாகனத்திலும் என்னை அண்மையிலுள்ள நகரம் ஒன்றுக்குக் கொண்டு வந்தார்கள். அங்கே வைத்தியரும் பேராசி ரியரும் எனக்காகக் காத்திருந்தார்கள். எனது கட்டுக்களை அவிழ்த்து புதிய ஆடைகளை அணிவித்தார்கள். ஒரு பிரயாணச் சீட்டைத் தந்து ரயிலில் ஏற்றி விட்டார்கள். அவர்கள் இதை எப்படிச் செய்தார்கள் என்பது எனக்குப்புரியவில்லை. வேலைமுகாமில் நான் ஒன்பது மாதங் கள் சிரமப்பட்டேன். ஏனையவர்கள் மீண்டும் திரும்பி வரவே இல்லை.
வீட்டுக்குத் திரும்பிய போது எல்லோரும் பொய் பேசினார் கள். நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறேன் என்றார்கள். நான் எவ்வளவு மோசமாக இருந்தேன் என்பது எனக்குத் தெரியும். எனது முகம் வற்றிப்போய் இருந்தது. நான் அழுக்காக இருந்தேன். எனது தாயார் வெந்நீர் வைத்துச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி என்னைச் சுத்தப்படுத்தி எடுத்தார். இரண்டு நாட்களின் பின் டைப்பஸ்" என்ற பயங்கரத் தொற்று நோய்க்கு ஆளானேன்.
இந்த நோய் தொற்றினால் ஜேர்மனியருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்குச் சொன்னால் அவர்களே ஆளை முடித்து விடுவார்கள். எனது சகோதரிக்கு அறிமுகமான வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டுக்கு வந்து என்னைப் பார்வையிட்டார். வீட்டில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி என்னை அதற்குள் விடச் சொன்னார். ஒவ்வொரு காலையும் ஒரு தாதியை அனுப்பிஎனக்கு மருத்துவம் செய் தார். ஒரு மூலையில் நான்கு வாரங்கள் ஒதுங்கிக் கிடந்தேன். இதனால் நான் மீண்டும் ஒரு முறை புதுசாகப் பிறந்தேன்.
நான் மீண்டு வருவதற்கு முன்னரே ஒரு பெரிய யூதக்குடி யிருப்பை உருவாக்கியிருந்தார்கள். 1942ம் ஆண்டு செப்டம்பரில் 'யொம் கிப்புர் விடுமுறையின் போது பெருமளவிலான நாடு கடத்தல் இடம்பெற்றது. நாங்கள் வசித்த கட்டடத்தில் பிரார்த்தனைக்காக ஒரு இடத்தை அமைத்திருந்தார்கள். பிரார்த்தனைக்குரிய சால்வையை அணிந்து கொண்டு இருபத்தைந்து பேருடன் நான் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். இதேவேளை ஜேர்மனியர் கட்டடத்
|ඉංග්‍ය ආLස් ආගloil"

Page 121
204
தைச்சுற்றிநிலை கொண்டிருந்தார்கள். கட்டடத்துக்குள் இருந்த அனை வரையும் அங்கிருந்த திடலுக்கு வருமாறு உத்தரவிட்டார்கள். நான் எனது சால்வையை அங்கேயே விட்டு விட்டுக் கட்டடத்தை விட்டு வெளியேறினேன்.
எனது பாட்டி கட்டடத்தை விட்டு வெளியே வரமாட்டேன் என்றார். தயவு செய்து வெளியேறுமாறு அவரைக் கேட்டுக் கொண் டோம். இளம் பெண்ணாக அவர் இருந்த காலத்தில் ஜேர்மனியில் ஒரு புடவைக் கடையில் வேலை செய்திருந்தார். எனவே அவர் மிக அட்சர சுத்தமாக ஜேர்மன் மொழி பேசக் கூடியவர். க்ரெஸ்பீஸில் ஒரு பேக்கரி நடத்திய அனுபவமும் அவருக் குண்டு. விதவிதமான தின் பண்டங்க ளைச் செய்வதில் வல்லவர். அவரை ஒரு பேக்கரிக்காரியாகப் பலர் அறிவர். கணவர் இறந்த பின்பும் அதனைத் தனியே நடத்தியவர்.
யூதக்குடியேற்றக் காவலர்களிடம் ஜேர்மன் மொழியில் தன்னால் பேசிக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் தன்னை விட்டு விடுவார்கள் என்றும் அவர் நினைத்திருந்தார். அவர் ஜேர்மனியரிடம் மிகப் பணிவாகப் பேசினார். "ஐயா நான் 92 வயதானவள். என்னை எங்கே இழுத்துக் கொண்டு செல்லப் போகிறீர்கள். என்னை எனது வீட்டிலேயே இருக்க விட்டு விடுங்கள்."
அந்த அதிகாரி இளம் வயதினன். ஒரு 23 வயது இருக்கலாம். அவன் சற்றுச் சினமடைந்தான். 'கிழட்டு ஆடே. நீ இன்னும் வாழ வேண்டுமா?” என்று சொல்லிவிட்டுதுப்பாக்கியைத் தூக்கி ஒருமுறை அவரைச் சுட்டான். அது அவரது உயிரைப் பறிக்கவில்லை."நாங்கள் யுத்தத்தை வெல்ல வேண்டும். ஒரு ரவைக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது" என்றான். நாங்கள் அனைவரும் அங்கு நின்றோம். எங்களால் என்னதான் செய்ய முடியும்?
எனது சகோதரன் லியோ யூதக்குடியேற்றத்துக்குப் பொறுப் பான அதிகாரியின் உதவியுடன் பத்துப் பேரின் உயிரைக் காப்பாற்றி னான். பொறுப்பதிகாரிக்குப் பிள்ளைகள் இல்லை. அவர்கள் ஒரு நாயைத் தமது பிள்ளையைப் போல் வளர்த்து வந்தார்கள். அந்த நாயின் நலன்களைக் கவனிக்க ஒரு பையன் தேவைப்பட்டான். யூதக்குடியிருப் புக் கவுன்சிலுக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் லியோ அதற்கு நியமிக்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

2O5
கப்பட்டிருந்தான். லியோ தனது கடமையைக் கச்சிதமாகச் செய்து வந்தான். அவனுக்கு ஜேர்மன் மொழியும் பேசமுடியுமாக இருந்தது. அந்த நாய் லியோவின் நண்பனாக மாறியிருந்தது. எனவே லியோவை அவர்கள் மிகவும் விரும்பினார்கள். தமது சொந்தப் பையனைப்போல் அவனைக் கவனித்தார்கள்.
ஒருநாள் பொறுப்பதிகாரி லியோவை அழைத்து, "நிலைமை சரியில்லை. நாளை குடியிருப்பிலிருந்து யூதர்களை அகற்றப் போகிறார்கள். எனக்குச் சொந்தமான பீங்கான் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. உன்னைக் குடியிருப்பில் வைத்துக் கொண்டிருக்க முடி யாது. நீ தொழிற்சாலையில் போய் இருந்து கொள்” என்று சொன் னார். உண்மையில் இந்தத் தொழிற்சாலை ஒரு யூதச் செல்வந்தருடை யது. ஜேர்மன் பொறுப்பதிகாரி அதைப் பலவந்தமாகத் தனதாக்கிக் கொண்டிருந்தார். லியோவுக்கு அவர் பத்துப் பேருக்கான அனுமதிச் சீட்டுக் கொடுத்திருந்தார். லியோ வீட்டுக்கு வந்து விபரம் சொன்னான். "நீங்கள் இளம் பிள்ளைகள். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் எங்களுக்கு உங்களால் உதவி செய்ய முடி யும்” என்று எனது தாயார் சொன்னார். நான் அழுதேன். எனது மனை வியும் அழுதாள். வீட்டிலிருந்த அனைவரும் அழுதோம்.
நான், லியோ, எனது மைத்துனன் உட்படப் பத்துப் பேர் தொழிற்சாலைக்குள் இருந்தோம். அன்று பிற்பகல் அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறி ஸெஸ்டகோவா நகரைப் பார்த்தோம். முழு நகரமும் இருள் மூடிக் கிடந்தது. யூதக் குடியிருப்புக்குள் தேடுதல் வெளிச்சம் இடப்பட்டிருந்தது. நாடுகடத்தல் படலம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு தினங்களின் பின் யூதக்குடியிருப்பு பூரண இருளில் கிடந்தது.
உயிர் தப்பிப் பத்து வாரங்கள் நாங்கள் தொழிற்சாலைக்குள் இருந்தோம். வெண்களியும் நீரும் நிரப்பப்பட்ட தடாகங்களுக்குள் நாள் முழுக்க நின்று நாட்டியமாடுவதே எங்களது தொழிலாக இருந் தது. இவ்வாறு செய்வதன் மூலம் களி பதப்படும். தொழிற்சாலையின் பணிப்பாளர் ஒரு யூத வைரி, கெட்ட பெயர்கனைக் கொண்டுதான் எங்களை அழைப்பார். ஒரு நாள் ஜேர்மன் குடியிருப்பின் பொறுப்ப திகாரி வேலைக்குச் சென்ற பிறகு பணிப்பாளர், வேறொரு ஜேர்மன்
ஒரு குடம் கணினி

Page 122
2O6
அதிகாரிக்கு “என்னிடம் பத்து யூதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்குத் தேவையில்லை. அவர்களை யூதக்குடியிருப்புக்கு திருப்பி அனுப்புங்கள்” என்றார். பொறுப்பதிகாரி எங்களைப் பாதுகாக்க முயன்றார். ஆனால் பணப்பாளர் அனுப்புவதிலேயே கண்ணாயிருந் தார். யூதக் குடியிருப்புக்குள் வாழ்ந்த நாற்பத்தையாயிரம் பேரில் 39,000 பேர் ட்ரெப்ளிங்காவில் உள்ள படுகொலை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சியிருந்தோர் வெகு சிலரே.
இவ்வாறு அனுப்பப்பட்ட பின் யூதக்குடியிருப்பு குறுகியி ருந்தது. நாங்கள் அங்கு வந்த போது தாயார் அங்கிருக்கவில்லை. மனைவியும் இருக்கவில்லை. சகோதரியும் இல்லை. தெரிவு இடம் பெற்ற போது அங்கு நடந்தவற்றை எஞ்சியிருந்த சிலர் சொன்னார்கள். எனது தாயார் வயதானவர்கள் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டி ருந்தார். ஏனெனில் அவருக்கு வயது 52 ஆக இருந்தது. வேலைக்கு ஆகாதவர்கள் குழுவில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
18 மற்றும் 16 வயதான எனது சகோதரிகள் வேலை செய்வ தற்கு இயலுமானவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் எனது சகோதரிகள் அம்மாவைத்தனியே விடுவதற்கு விரும்பவில்லை. எனவே அவர்கள் தாயுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனது மூத்த சகோதரிலியாவுக்கு ஒரு குழந்தை இருந்தது. எல்லாத்தாய்மாரை யும் போலவே அவரும் போயிருக்கிறார். இவர்கள் யாருக்கும் தாங்கள் கொல்லப்படப் போகிறோம் என்பது தெரியாது.
எனது மனைவி என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. அயல்வாசியொருவர் அவளை நேற்றுக் கண்டேன் என்று சொன்னார். என் மனைவி என்னைத் தேடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத் தேன். என் மனைவியை உயிருடன் வைத்திருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொன்னேன். கணவனை இழந்த நான்கு விதவைகளுடன் ஒரு அறையில் என் மனைவி ஒரு வருட காலம் வாழ்ந்திருந்தாள். பின்னர் மனைவியும் நானும் சிறிய யூதக் குடியிருப்புள் வாழ்ந்தோம்.
மற்றொரு தம்பதியுடன் இணைந்து வேறு ஒரு அறைக்குள் குடிபுகுந்தோம். ஒரு வாளியை எங்களது தேவைக்காக வைத்திருந் தோம். இரவில் கழிவறைக்குச் செல்வது ஆபத்தாக இருந்தது. ஒரு அஷ்ரஃப் சிஹாப்தீன்

2O7
நாளைக்கு நானும் மறுநாளைக்கு மற்றவருமாகக் காலையில் வாளி யைக் கழுவித்துப்பரவு செய்வோம். நாங்கள் இரு தம்பதியரும் மிகவும் நெருக்கமாகப் பழகினோம். நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களின் எதிரிலேயே செய்ய வேண்டியிருந்தது இதில் முக்கிய மான விடயம்.
மறைமுகமான ஒரு போராட்ட அமைப்பை ஏற்படுத்தச் சிலர் முயன்றார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. எனது மனைவி யின் மைத்துனன் கம்பிக்கு மேலால் நடந்து போக எத்தனித்தான். அந்தக் கம்பியில் சிக்குண்டு கால் உள்ளேயும் உடம்பு வெளியேயுமாக அவன் கிடப்பதை நான் கண்டேன். 1943ம் ஆண்டு மே மாதம் ஒர் அழகான நாளில் நாங்கள் வேலைக்குச் செல்லத் தயாராக இருந்தோம். ஜேர்மனியர் இயந்திரத்துப்பாக்கிகள், கவசவாகனங்கள் சகிதம் அந்தச் சிறிய குடியிருப்புப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்தனர். அந்தக் குடியி ருப்புப் பிரதேசத்தைத் துடைத்து அழித்து விடுவதே அவர்களது நோக்கமாக இருந்தது. அங்கு வந்திருந்த அதிகாரி அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. "அடுத்த வருடம் மே மாதத்தில் இந்த அழகிய தினத்தை நீங்கள் காண்பதற்கு உயிருடன் இருக்கமாட்டீர்கள்."
1943ம் ஆண்டு முதல் 1945 ஜனவரி வரையான யுத்த காலத் தில் நாங்கள் ஊழிய முகாமில் இருந்தோம். அங்கு ஜேர்மன் இராணு
வண்டி தள்ளுதல், இழுத்தல் போன்ற
கடூழியங்கள்
= ஒரு குடம் கணினி

Page 123
208
வத்துக்கு வெடி மருந்துகளைத் தயார் செய்தோம். நான்காயிரம் யூதர்கள் அங்கு தொழில் புரிந்தார்கள். நான் அதிர்ஷ்டக்காரன்; ஜேர் மன் அதிகாரிகளின் தையற்காரனாக இருந்தேன். எனது மனைவி வெடி மருந்துப் பொருட்களடங்கிய பெட்டிகளை வாகனத்தில் ஏற் றும் வேலை செய்தார். வெடிமருந்து நிரப்பும் தொழிலில் ஈடுபட் டிருந்த பெண்கள் அதைச் சுவாசித்ததால் மஞ்சள் நிறமாக மாறி னார்கள். அவ்வாறு நிறம் மாறியவர்களை ஜேர்மனியர்கள் அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மீண்டும் திரும்பிவருவதில்லை. ஆனால் எங்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுட்டுக் கொல் லப்படுவார்கள்.
ஆரம்பத்தில் நாம் கடவுளை நம்பினோம். ஒர் அதிசயம் நிகழப்போகிறது என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவுமே நிகழ்ந்த தாக இல்லை. நான் இறந்துபோய் விடுவேன் என்று எனது மனைவி ஒவ்வொரு கணமும் அஞ்சினார். மனைவி இறந்து விடுவாள் என்று நான் அஞ்சினேன். நாம் கடவுளைக் கேட்டோம். "ஏலி. ஏலி. ஏன் எங்களுக்கு இது?" ஆனாலும் நாம் கடவுள் நம்பிக்கையைக் கைவிட வில்லை.
ஜேர்மன் அதிகாரிகளுக்குச் சீருடை தைத்துக் கொண்டிருந்த போது, ஒரு யூதப் பொலிஸ்காரனை அவர்கள் துப்பாக்கியால் சுட்டதை நான் கண்டேன். ஜேர்மனியர் யூதக்குடியிருப்பை அவர் களே முன்னின்று பராமரிக்கவில்லை. அதற்காக யூதர்களிலிருந்து பொலிஸாரை அவர்கள் அதற்கென நியமித்திருந்தனர். இந்த யூதப் பொலிஸார் தாம் பாதுகாப்பாக இருப்பதாக நம்பிக் கொண்டிருந் தனர். அவர்கள் எல்லோரும் உண்மையில் பொலிஸ்காரர்கள் இல்லை. அவர்களில் சட்டத்தரணிகள், வைத்தியர்களும் இருந்தார்கள். ஜேர்ம னியர் விரும்பும் வேலையைச் செய்வதற்காக அவர்களுக்குத் தங்கம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அழகான சீருடைகளை அணிந்து திரிந்தார்கள்.
யூதர்களை நாடு கடத்துவதற்கு யூதப் பொலிஸாரை ஜேர்ம னியர் பயன்படுத்தினர். ஜேர்மனியர் சொல்வதையெல்லாம் அவர்கள்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

209
செய்தனர். யூதக் குடியிருப்பு முற்று முழுதாக ஒழிக்கப்பட்டதன் பின்பு யூதப் பொலிஸாரை ஒவ்வொருவராக கட்டடத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்த அறைக்கு அடுத்ததாக இருந்த அறைக்கு அழைத்து வந்தார்கள். கதவின் சாவித்துவாரத்தினூடாக நான் உற்றுப் பார்த்தேன். நாற்பது அல்லது ஐம்பது பேரளவில் இருந்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்ட போது அவர்கள் தலையை நிமிர்த்திக் கம்பீரமாக நடந்து வந்தார்கள். தங்களுக்கு பாராட்டுப் பதக்கம் வழங்கப்படப் போகிறது என்று நினைத்திருந் தார்கள்.
நடந்தது என்னவென்று நான் பார்த்த போது அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். எனது வாழ்நாளில் அப்படி யொரு அதிர்ச்சி எனக்கு ஏற்படவில்லை. அவர்களது பின் தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். உடல் கள் பட்ரக் வண்டியொன்றில் மையவாடிக்கு எடுத்துச் செல்லப் பட்டன.
1945ம் ஆண்டு ஜனவரியில் ரஷியப் படையினர் எமது முகாமை நெருங்கினார்கள். அவர்கள் நெருங்கியவுடன் ஜேர்மனியர் மறைந்தனர். ஒரு நாட் காலை பத்து மணிக்கு ரஷ்யப் படையினர் முகாமுக்குள் நுழைந்து உங்களுக்கு விடுதலை என்று சொன்னார்கள். முதல் முறையாக நாங்கள் சுதந்திரம் பெற்ற உணர்வில் களித்தோம். "எங்களுக்கு விடுதலை. எங்களுக்கு விடுதலை." என்று நாங்கள் கூச்சலிட்டோம். சுதந்திர உணர்வில் எங்களை மறந்து பைத்தியம் பிடித்தவர்கள் போலிருந்தோம்.
பிற்பகல் 2.00 மணிக்கு ஜேர்மனியர் மீண்டும் வந்தார்கள். அவர்கள் எங்களுடன் கனிவுடன் கதைத்தார்கள். "யூதர்களே நீங்கள் எங்களுடன் வந்து விடுங்கள். நீங்கள் அவர்களைக் கொல்வதற்கு வெடி பொருட்கள் தயாரித்த காரணத்தால் உங்களை அவர்கள் கொல்வதற்கு நினைத்திருக்கிறார்கள். அவர்கள் நம் எல்லோரையும் அழிப்பதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். நீங்கள் எங்களுடன் வாருங்கள், நாம் உங்க ளைப் பாதுகாப்போம்” என்றார்கள்.
கால்நடைகள் ஏற்றும் பெட்டிகளுடன் ஒரு ரயில் கார்
|@ab ಹLಹಿ ಹಯ್ರ್

Page 124
210
தொழிற்சாலையருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரயிலில் ஏற வேண்டுமானால் ஒரு சிறிய ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய பாலம் ஊடாக நடந்து செல்ல வேண்டும். வழமைக்கு மாறாக ஜேர்ம னியருக்குப் பின்னால் நாம் நடந்து சென்றோம். 'பாலத்தில் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம். எங்களை நாங்களே வெடிகுண்டுக்குப் பலி கொடுக்க நாம் தயாராக இல்லை" என்று அவர்களுக்குச் சொன்னோம். ஒரு ஜேர்மன்காரன் எனது மனைவியின் சட்டையில் பிடித்து இழுத்துக் கொண்டு பாலத் தில் நடந்து சென்று திரும்பி வந்து குண்டுகள் ஏதும் இல்லை என்று நிரூபித்தான்.
அந்த கால்நடைப் பெட்டிகளில் அநேகர் ஏறிச் சென்றார்கள். கடைசியாக எஞ்சிய 90 பேரில் நானும் என் மனைவியும் இருந்தோம். "அவர்களோடு போக வேண்டாம். அவர்கள் உங்களைக் கொல்வ தற்குக் கொண்டு செல்கிறார்கள். அப்படித்தான் ஹிட்லர் சொல்லி யிருக்கிறான்” என்று ஒரு மனிதன் எங்களிடம் சொன்னான். அந்த மனிதன் போலந்து ராணுவத்தைச் சேர்ந்தவன். ஒரு யூதனும் கூட. "ஹிட்லர் சரியாகப் பன்னிரண்டு மணிக்குத் தோல்வியைத் தழுவப் போகிறான். நம்மை 11.00 மணிக்குக் கொல்வார்கள்” என்று அவன் சொன்னான். நாங்கள் அவன் சொன்னதை நம்பினோம். ரயில் கார் நிரம்பி வழிந்து சென்றது. அது திரும்பி வரவே இல்லை.
ஜனவரியில் அதிகமாகப் பணி பொழிந்தது. எஞ்சிய நாங்கள் 90 பேரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தோம். நானும் எனது மனைவி யும் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவில் இருந்தோம், நாங்கள் காட்டுக் குள் இருந்தோம். தூரத்தில் ஒரு பண்ணை வீடு தெரிந்தது. கதவைத் தட்டி அந்த வீட்டில் இருந்த பண்ணையாளிடம் நாங்கள் யார் என்பதைச் சொன்னோம்.
"உங்களுக்கு உதவுவதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது. ஜேர்மனியர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தது தானே. அங்கேயிருக்கும் யாருமற்ற வீட்டுக்குச் சென்று இருங்கள். என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்" என்றான். காலையில் பண்ணைக்காரன் ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர்
அஷ்ரஃப் சிஹாப்தீன்=

211
கொண்டு வந்தான். "இது ஒன்றுதான் என்னால் செய்ய முடிந்தது. யூதர்களே. நீங்கள் நகரத்துக்குத் திரும்பிச் சென்று விடுங்கள். அங்கே யூதர்கள் ரஷ்யர்களோடு தெருவெங்கும் மகிழ்வாட்டம் ஆடுகிறார் கள்” என்று சொன்னான். நாங்கள் அவன் சொன்னதை நம்பவில்லை. எங்கே போவது என்று புரியாமல் தடுமாறினோம்.
நாங்கள் ஸெஸ்டகோவாவிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருந்தோம். நாங்கள் நகரை அடைந்த போது, கேள்விப்பட்ட செய்தி உண்மையாகத்தான் இருந்தது. தெருக்களில் அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். நானும் மனைவியும் எனது சகோதரன்அபேயும் மனைவியும் ஜேர்மனியர் இருந்த காரியாலயம் ஒன்றின் அறையை எடுத்துக் கொண்டோம்.
இரண்டு ரஷ்ய கெப்டன்கள் எங்களது அறைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் யூதர். பெயர் ஸல்மன் புரோட்ஸ்கி அவர் ஆறடி உயரம் கொண்டவராக இருந்தார். அவரது சீருடை அழகாக இருந்தது. ஒதுக்கு முகாம்களிலிருந்து உயிர் தப்பிய யூதர்கள் நாங்கள் என்று அவரிடம் சொன்னோம். கெப்டன் தனக்கும் தங்குவதற்கு அந்த அறை யில் இடம் கோரினார். நாங்கள் அவருக்குக் கட்டில் வசதி செய்து கொடுத்து விட்டு நிலத்தில் உறங்கினோம்.
அவர்கள் மீண்டும் முனைக்குச் செல்ல வேண்டியவர்களா யிருந்தனர். கெப்டன் புரோட்ஸ்கி, "எங்களிடம் தையற்காரர்கள் இல்லை. வீரர்கள் உள்ளாடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார். “ஜோஸப், என்னோடு வருகிறாயா.
y9
நாம் உன்னை நல்லபடியாகக் கவனித்துக் கொள்கிறோம்” என்று கேட்டார். அவர்களுக்கு உதவ எண்ணினேன். இங்கிருந்து நான் செய்வதற்கு எதுவுமில்லை. எனது மனைவியிடம் என்னை மீண்டும் அழைத்து வருவதாகச் சத்தியம் பண்ணிவிட்டு என் மனைவியின் கரத்தில் அவர் முத்தமிட்டார். எனது மனைவிக்கு இங்கு யாரும் இல்லை என்பதால் என்னை அனுப்புவதற்கு அவள் விரும்பவில்லை. "நீங்கள் போக வேண்டும் என்று நினைத்தால் போகலாம்” என்று என் மனைவி சொன்னாள்.
கெப்டன் எனக்கு ரஷ்யன் சீருடை தந்தார். எவ்வளவு தூரம்
ஒரு குடமீ கரீைரீைர்

Page 125
212
நாம் பயணம் செய்தோம் என்பதை எனக்குச்சரியாகச் சொல்லத் தெரிய வில்லை. ஏறக்குறைய 200 மைல்கள் ஜேர்மனிக்குள் நாங்கள் பயணம் செய்திருப்போம். இரவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது. ஒரு நகரத்தில் தரித்தோம். ஒரு ஜேர்மன் வீட்டி லிருந்த தையல் இயந்திரம் ஒன்றைக் கொண்டு வந்து எனக்குத் தந்தார் கள் அவர்களுக்குத் தேவையான உள்ளாடைகளைத் தைத்துக் கொடுத் தேன். அழுக்கும் அருவருப்பும் மிக்க, கிழிந்த உள்ளாடைகளைக்
களைந்து அவர்கள் வீசி எறிந்தார்கள்.
நான் இரவு பகலாக வேலை செய்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீரர்கள் என்னைப் பாராட்டினார்கள். சிலர் சொக்லேற்றுக்களைத் தந்தார்கள். ஒருவர் அழகான கல் பதித்த மோதிரம் ஒன்றைக் கொண்டு வந்து எனது விரலில் அணிவித்தார். ஒவ்வொரு நாட் காலையும் கெப்டன் புரோட்ஸ்கி என்னுடன் காலை உணவு உண்ணுவார். முகாமில் இப்போது இருந்திருந்தால் பட்டினி யோடு இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.
ஒரு நாள் கெப்டன் புரோட்ஸ்கி தூரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். எனவே சமையற்காரரிடம் எனக்குரிய உணவைச் சமைத்துக் கொடுக்கும்படி உத்தரவிட்டார். அடுத்த நாட் காலை உணவுக்காகச் சென்று அமர்ந்திருந்தேன். சொக்லட் பிஸ்கட் மற்றும் சூப், பாணி ஆகியவற்றை எனக்குச் சமையல்காரன் கொண்டு வந்து வைத்தான். என்னைச் சுற்றி ரஷ்ய அதிகாரிகள் இருந்தார்கள். நான்கு அடிகள் தூரத்தில் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் உயர்நிலை ரஷ்ய அதிகாரிகள் இருந்தார்கள்.
அவர்களிலொருவன் சமையற்காரனை அழைத்து, "அந்த மடையன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்?" என்று கேட்டான். "அவன் ஒரு தையற்காரன். ஒரு குடிமகன். ஸல்மன் புரோட்ஸ்கி அவனை அழைத்து வந்தார்” என்றான். சமையற்காரன் சொன்னதை அந்த அதிகாரி நம்பவில்லை. இராணுவத்தினர் இருவர் வந்து எனது கரங்களைப் பற்றி எழுப்பினர். நான் இருந்த நகரில் ஐயாயிரம் ஜேர்மன் யுத்தக் கைதிகளை வைத்திருக்கும் ஒரு முகாம் உள்ளது. அவர்கள் சேர்பியாவுக்கு அனுப்பப்படவிருந்தார்கள்.
அஷ்ரஃப் சிஹாப்தீன்

213
அந்த இருவரும் பெரியதொரு கதவைத்திறந்து அந்தச்சிறைக் குள்ளே என்னைத் தள்ளி மூடினார்கள். பார்வையை உயர்த்திய போது அங்கே ஐயாயிரம் யுத்தக் கைதிகளும் இருப்பதைக் கண்டேன். நான் நினைத்தேன், 'இதுதான் எனது சுதந்திரம்"
திரும்பி வந்த ஸல்மன் என்னை எங்கே என்று கேட்க நடந்த வற்றைச் சொல்லியிருக்கிறார்கள். ஒட்டிக் கொள்ளும் இருட்டு வேளையில் அவர்சிறைக்கு வந்து எனது பெயரைக் கூப்பிட்டார். நான் அழுதேன். "ஸல்மன். எனக்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தீர் களா?" என்று கேட்டேன். அவருடைய விசால மார்புக்குப் பொருத்த மான அவருடைய கோர்ட்டை எனக்கு அணிவித்தார். நான் உருவத்தில் சிறியவன். அது எனக்கு மிகவும் பெரியதாக இருந்தது. அவரது பன்னி ரண்டு அளவு சப்பாத்துக்குள் எனது சிறிய பாதங்களை நுழைத்தேன். சிறையை விட்டு வெளியே வருகையில் வாயிலில் நின்ற காவலர்கள் எனக்குரிய ஆவணத்தைக் கேட்டார்கள். ஸல்மன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னைச் சுடப்போவதாகப் பய முறுத்தினார்கள். அதற்கு ஸல்மன் சொன்னார்:- "அப்படிச் சுடுவதாக இருந்தால் என்னை முன்னாலும் இவரைப் பின்னாலும் வைத்துச் சுடுங்கள்!” ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
ஸல்மன் புரோன்ஸ்கி ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தார். எனக்குச்சீருடை அணிவித்தார். அவரே வாகனத்தை ஒட்டிக் கொண்டு வந்து ஸெஸ்டகோவாவில் இறக்கினார். நான் வீட்டுக்குள் நுழைந் ததும் சீருடையில் இருக்கும் என்னை என் மனைவி வியப்புடன் பார்த் தார். ஸல்மன் சொன்னார்:- "ஜோஸப். இப்போது உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து கொள்!" நான் அணிந்திருந்த சீருடை யைக் களைந்து அதைத் தீயிட்டுக் கொளுத்தினேன். அதுதான் எனது சுதந்திரம் இரண்டாவது சுதந்திரம்!
எனது மனைவியின் குடும்பம் மிகப் பெரியது. மனைவியின் பெற்றோர் வசதியாக இருந்தார்கள். அவர்கள் கீழ்த்தளத்தில் கடைத் தொகுதியுடன் கூடிய பெரிய மாடி வீட்டுத் தொகுதியில் வாழ்ந் தார்கள். நாங்கள் இருவரும் மனைவியின் வீட்டுக்குப் போனோம். வாயிற்காப்போன்கதவைத்திறந்த போது எனது மனைவியின் கட்டில்
=ஒரு குடம் கணினி

Page 126
214
முதல் அனைத்துப் பொருட்களும் அங்கிருந்தன. "நீ இன்னும் உயிரோ டிருக்கிறாயா. அவர்கள் உங்களைக் கொன்றிருக்கலாம் என்று நாங்கள் நினைத்திருந்தோம்” என்று வாயிற் காப் போன் சொன்னான். நாங்கள் எதுவும் பேசவில்லை. ஏனெனில் அவனை நாங் கள் நம்பவில்லை. தமது வீடுகளுக்குத் திரும்பிய யூதர்கள் பலர் கொல்லப் பட்டிருந்தார்கள். எனவே அங்கு தரிக் காமல் திரும்பினோம்.
ஹிட்லர் போருக்குப் பின்னர் சகோதரன் லியோ போலந்து இராணுவத்தில் சேர்ந் தான். அவனுக்கு நன்கு ரஷ்ய மொழி தெரிந்திருந்ததாலும் ரஷ்யர் களுக்கு உதவியதாலும் அவனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. யுத்தத்துக்குப் பின்னர் ஒளிந்திருக்கும் நாஸிகளைத் தேடிப் பிடிப்பது அவனுக்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. யூத ஏஜன்சியான "பெரிச்சா' என்ற அமைப்பு சட்டத்துக்கு முரணாக ஆட்களை இஸ்ரே லுக்குக் கடத்திக் கொண்டிருந்தது. செக்கோஸ்லவக்கிய எல்லையூ டாக யூதச் சிறுவர், சிறுமியரும் கடத்தப்பட்டார்கள்.
1946ல் அண்மித்தாக உள்ள கியெல்ஸ் என்ற நகரில் ஒரு வதந்தி பரவிற்று. யூதர்கள் ஒரு சிறுவனைக் கொன்று சமயச் சடங்கை நடத்துவதற்காக இரத்தத்தை உறிஞ்சியுள்ளார்கள் என்ற செய்தியே அது. (சிறுவர் இரத்தம் கொண்டு சமயச் சடங்கு செய்யும் வழக்கம் யூதர்களுக்கிடையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.) ஒரு தாய் தன் பிள்ளையைக் காணவில்லையென்று பெரிதாகக் கூச்சலிட்டாள். சிலர், 'அவனை யூதர்கள் கொன்றிருப்பார்கள்’ என்று சொல்லியிருக் கிறார்கள். அவனது உடல் யூதர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி வீடு களின் கீழ்த் தளத்தில் கிடந்ததாகச் சிலர் சொன்னார்கள். விளைவாக நாற்பத்து இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டனர்.
இதை நாங்கள் கேள்விப் பட்டதும் அடுத்த தினமே சுவீடன்
ඊlකදී]]&) சிஹாப்தீனி
 

215
கடவுச் சீட்டுப் பெறுவதற்காக சுவீடன் தூதரகத்துக்குச் சென்றோம். செக்கோஸ்லவக்கியாவுக்குச் சென்று அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தில் நான்கு வாரங்கள் தங்கியிருந்தோம். அமெரிக்க வலயத்துக்குள்ளிருந்த ஜேர்மனியின் இரும்புத் திரை எல்லையூடாகத் தவழ்ந்து சென்றோம். அங்கு நாடற்றவர் முகாமுக்குள் வாழ்ந்தோம். அங்குள்ள 22 யுவதி களுக்குத் தையல் பயிற்சியளித்தேன். எனக்கு நல்ல சம்பளம் கிடைத் தது. டேவிட் பென்கூரியன் முகாமுக்கு வந்து எங்களுடன் பேசினார். அவர் அதிகம் அழுதார். "உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று எனக்குத் தெரியும். உங்களுக்காக உலகத்துடன் பேசுவதற்கு என்னை அனுமதியுங்கள். இங்கே நான் எதைக் கண்டேன் என்பதை நான் அவர்களுக்குச் சொல்லுவேன்” என்றார்.
நியூ ஓர்லியன்ஸில் எனது மனைவியின் மாமி ஒருத்தி இருந் தார். நாங்கள் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் எங்களை அங்கு அழைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். எங்களது முதலாவது குழந்தை ஜேர்மனியில் பிறந்தது. 1949ம் ஆண்டு நாங்கள் கப்பல் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றோம். உயிர் தப்பி முதலில் நியூ ஓர்லியன்ஸ் வந்தவர்களில் நாங்களும் அடங்கு வோம். மார்ச் மாதம் கடல் கொந்தளிப்பாக இருந்தது. எங்களது கப்பல் மேலும் கீழும் சென்று வந்தது. அதிகப் பெண்கள் கடல் நோய்க் குள்ளானார்கள். எனது மனைவியும்தான்.
ஒவ்வொருவரும் குழந்தைகளின் அணையாடைத் துணியைப் பயன்படுத்தினார்கள். எங்களது குழந்தைக்குப் பதினொரு மாதங்களே நிறைவடைந்திருந்தது. குழந்தையின் அணையாடையைக் கழுவுவதற்கு எந்த வழியும் இருக்கவில்லை. எனது பயணப் பெட்டியைத் திறந்து அதற்குள் இருப்பவற்றைக் கொட்டி எடுத்து அதற்குள் முழந்தையின் அணையாடைத் துணிகளைப் போட்டு மூடினேன்.
நியூ ஓர்லியன்ஸ் போய்ச் சேர்ந்ததும் சுங்கப் பகுதியினர் பெட்டியைத் திறக்கக் கோரினர். எனக்கு வெட்கமாக இருந்தது. அதன் நாற்றம் பொறுக்க முடியாததாக இருந்தது. அவர்கள் அதைத் திறந்தால் சிலவேளை என்னை ஐரோப்பாவுக்கே திருப்பி விடுவார்கள் என்று பயந்தேன். காரணத்தைச் சொல்வதற்கு ஆங்கிலம் வேறு
=&D குடமீ கர்ைரீைர்

Page 127
216
தெரியாது. அங்கு யூத அமைப்பொன்றைச் சேர்ந்த ஒரு இத்திஷ் மொழி தெரிந்த பெண்மணி வந்தார். அவரிடம் அதற்குள் சுகவீனமுற்ற எனது மனைவி, குழந்தையின் கழிவுகள் துடைத்த புடவைகள் பெட்டிக்குள் இருப்ப தாகச் சொன்னேன். அதை அதிகாரிகளுக்கு அவர் சொன்னதும் அவர் கள் சிரித்துக் கொண்டு என்னைப் போக அனுமதித்தார்கள்.
நாங்கள் தளத்துக்கு வந்ததும் ஒரு பத்திரிகை நிருபர் விபரம் கேட்டு எங்களது கதையை எழுதினார். சில நாட்களில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. எனக்கு ஆங்கிலம் தெரியாததால் எனது உறவினர் ஒருவரிடம் கொடுத்துப் படிக்குமாறு கேட்டேன். அவர் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். ஒரு வருடத்துக்குப் பின்னர் அதில் என்ன எழுதியிருந்தது என்பது எனக்குத் தெரியவந்தது. "அங்கு ஹிட்லர் உன்னை எடுத்துக் கொள்ளவில்லையானால் இங்கு நாங்கள் எடுத்துக் கொள்வோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிள்ளைகள் சிறியவர்களாக இருந்ததால் நாங்கள் எப்படித் துன்பப்பட்டோம் என்பதைச் சொல்லவில்லை. அவர்கள் வளர்ந்த போது கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னோம்.
காலையில் ஆடையணிந்து தயாராகும் போது சில வேளை வேலைக்குச் செல்ல அலுப்பு ஏற்படுகிறது. நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். ஆனால் ஒதுக்கி வைக்கப்பட்ட முகாமில் இருப்பது போலவே தோன்றுகிறது. நினைவுகளுக்கூடாக மீண்டும் மீண்டும் மனது பயணம் செய்துகொண்டேயிருக்கிறது.
நன்றி.
about.com
அஷ்ரஃப் சிஹாப்தீன்:

துயரத் தூண்டிலில் துடித்தவள்
நான் ஒக்டோபர் 29ம் திகதி வெள்ளிக் கிழமை அதிகாலை 3.00 மணிக்குக் கைது செய்யப்பட்டேன். அப்போது நான் பெற்றோரின் வீட்டில் இருந்தேன். பலத்த சத்தமிட்டுக் கொண்டு பலமாகக் கதவைத் 5l Lq60TTjö56it-glug5Lbg5Tiálu -955 (The Guardia Civil) - அதிகாரிகள். கதவைத் திறக்கும்படி கூச்சலிட்டார்கள். நான் பயந்து நடுங்கியபடி எனது பெற்றோரின் படுக்கையறைக்குள் ஒளிந்து கொண்டேன்.
எனது தாயார்கதவைத்திறந்த போது அவர்கள்திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்தார்கள். கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. நான் எங்கே என்று கேட்டனர். எனக்கு வேறு வழியில்லை என்று தோன்றி
யது. நான் வெளியே வந்து "நான்தான் அமையா” என்று சொன்னேன். கதவோரத்தில் இருந்த கதிரையில் என்னை உட்காரச் சொன்னார்கள். ஒரு பெண் அதிகாரி என்னைக் கைது செய்யும் உத்தரவை வாசித்தாள். தனிநாடு கோரிப்போராடும் பாஸ்குகெரில்லா அமைப்பான ஈ.ரி.ஏ. (ETA) யுடன் இணைந்து செயற்படுவதற்காக என்னைக் கைது செய்வதாக அறிவித்தனர்.
முதலில் அவர்கள் எனக்குச் சத்தமிட்டு ஏசினார்கள். எனது பெற்றோரை நினைத்து நான் பயந்தேன். அடுத்த ஐந்து தினங்களில் என்ன நடக்கும் என்று அவர்கள் அறிவார்கள். அந்த விரும்பத்தகாத |ඉංග්‍ය ගuර් ඝනද්ග)

Page 128
218
சூழல் காரணமாக எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது.
என்னை எனது அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த அலுமாரிகளைத் திறந்து உள்ளேயிருந்த பொருட்களையெல்லாம் வெளியே இழுத்துப் போட்டார்கள். எனது ஆடைகளை உதறினார் கள். புத்தகங்களுக்குள் தேடினார்கள். அவர்களுக்குத் தேவையானவை என்று பட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். அவற்றில் சிறையிலிருப்பவர்கள் அனுப்பிய கடிதங்கள், தொலைபேசி விபரக் கொத்து, குறிப்புப் புத்தகம், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் புகைப்படங்கள் ஆகியன அடங்குகின்றன. ஆறு அதிகாரிகள் தேடுதலை நடத்தினார்கள். ஒருவன் மாடிப் படிகளில் நின்று கொள்ள மீதிப் பேர் எனது பெற்றோருடன் கதவருகில் நின்றிருந்தார்கள்.
எனது சகோதரனின் அறையைச் சோதிக்க ஆரம்பித்த போது, "எனது சகோதரன் சிறையில் இருக்கிறான்; அந்த அறையைச் சோதிக்க உங்களுக்கு உரிமை இல்லை" என்று சொன்னேன். அங்கு எதுவும் இல்லாதபடியால் என்னை முன் அறைக்குக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஆறுபேர் தேடுதல் நடத்தியதால் சோதித்து எடுத்த பொருட்களைச் சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ள என்னால் முடிய வில்லை.
அவர்கள் முகமூடியணிந்து எமது வீட்டுக்குள் இத்தாண்ட வத்தை ஆடியதை நினைக்க எனது மனம் தடுமாறியது. அவ்வப்போது எனது பெற்றோரை நான் அவதானித்தேன். எனது பார்வையில் நான் அமைதியாக இருப்பதைக் காட்டிக் கொள்ளும் அதே வேளை எனது பெற்றோர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும் அவதானித்துக் கொண்டிருந்தேன்.
பிறகு வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சோதித்தார் கள். அவர்களுக்குத் தேவையான சில ஆவணங்களை எடுத்துக் கொண்டார்கள். மயக்கம் வருவது போல் உணர்ந்ததால் என்னை சமையலறைக்குக் கொண்டு செல்லுமாறு பெண் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன். அங்கு சென்று கொஞ்சம் சீனி சாப்பிட் டேன். பின்னர் என்னை எனது அறைக்குக் கொண்டு வந்து ஆடை மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். ஆடைகள் சிலவற்றை எடுத்துக்
ඊlඛ$]]&l சிஹாப்தீனி

219
கொள்ளச் சொன்னார்கள். எனக்கு எதை எடுப்பது என்று தோன்ற வில்லை. சிலவற்றை எடுத்துக் கொண்டேன்.
என்னைக் கதவருகில் கொண்டு
வந்து எனது கரங்களைப் பின்னால் வைத்து விலங்கு பூட்டினார்கள். தலையைக் குனிந்து நடக்க வேண்டும் என்றும் தலையை உயர்த்துவது பற்றி நினைக்கக் கூட வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்கள். பாதை வரை இழுத்துக் கொண்டு வந்து ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். எனது தாயாரின் நம்பிக்கையூட்டும் சத்தத்தை பின்னால் கேட்க முடிந்தது. என்னையே நான்நம்பமுடியாத மனப் பயம் பிடித்துக் கொண்டது.
காருக்குள் இரண்டு அதிகாரிகளுக்கு நடுவில் தலை குனிந்த படியே நான்அமர்த்தப்பட்டிருந்தேன். எனது கைவிலங்கைக் கழற்றிக் கரங்களை முன்னால் வைத்து மீண்டும் விலங்கிட்டனர். ஒருவன் பேச ஆரம்பித்தான். "சின்ன அமைத்தா, நீ பிடிக்கப்பட்டு விட்டாய். நீ இதை உணர வேண்டும். எங்களுக்கு எல்லாம் தெரியும். நிதான் இவற்றைத் தெளிவு படுத்த வேண்டும். நீயாகவே எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லது. இதைப் பற்றி நீ இப்போது சிந்திக்க வேண்டும். இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இலகுவான வழி. மற்றது கஷடமான வழி. இப்போதிருந்தே நீ சொல்ல ஆரம்பித்தால் உனக்கு நல்லது. இல்லாவிட்டால் நான் இப்போதே உறங்க ஆரம்பித்து விடுவேன். பிறகு நீயாகச் சொல்லவேண்டி வரும்.”
எனக்குப் பயத்தில் நடுக்கம் எடுத்தது. மீண்டும் மயக்கம் வருவது போல் உணர்ந்தேன். எனக்குக் கொஞ்சம் சீனி வேண்டும் என்று அவனிடம் கேட்டேன். எனது வீட்டில் பெண் அதிகாரி சில சிறிய சீனிப் பொதிகளை அவனிடம் கொடுத்ததை நான் கண்டேன். அந்தக் காரில் என்னுடன் இருந்த நால்வரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் களில் ஒருவன் ஒரு சீனிப் பொதியை எடுத்துக் காட்டி விட்டு அதை யன்னலூடாக வீசப்போகிறேன் என்று சொன்னான்.
அவன் அதையே திரும்பத் திரும்பச் சொன்னான். பிறகு என்னைப் பேச ஆரம்பிக்குமாறும் இல்லையெனில் அடுத்த ஐந்து
ஒரு குடe கணினி

Page 129
220
தினங்களில் தமது கைகளிலேயே நான் இருக்கப் போவதாகவும் மீண்டும் செல்வது நடக்காது என்றும் சொன்னான். பின்னர் நடக்கப் போகின்றவை என்னைத் திகைக் வைக்கும் என்று பயங்காட்டினான். அவர்கள் எதைக் கேட்க விரும்புகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்கள் என்னை அடித்தாலும் கூட அமைதி காப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
"எனக்கு எதுவுமே தெரியாது” என்று சொன்ன போது இது ஒரு பிழையான ஆரம்பம்" என்று சொன்னார்கள். என்னுடன் பேசும் ஒவ்வொரு வசனத்தோடும் என்னை அமைத்தா என்றே அழைத்தான். இவ்வாறு என்னை எனது குடும்பத்தினரும் நண்பிகளும் நெருங்கியவர் களுமே அழைப்பதுண்டு. இவ்வாறு எனக்கு நெருக்கமானவர்கள் போல அவர்கள் என்னை அழைத்தது எனக்குப் பிடிக்கவில்லை.
பயணம் ஆரம்பித்ததிலிருந்து நீண்ட தூரம் வந்திருந்தோம். இடையில் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. அது ஒர் எரிபொருள் நிரப்பும் நிலையமாக இருந்திருக்க வேண்டும். நான் அதன் வாசனையை வைத்துத்தான் சொல்கிறேன். இரண்டாம் முறை நிறுத்தப்பட்டது நாம் இறங்க வேண்டிய இடம் என்று எண்ணினேன், சரியாக இருந்தது. என்னைக் கைது செய்த அவர்கள் மட்ரிட் நகருக்குக் கொண்டு வந்தி ருந்தார்கள்.
மட்ரிட்டில் அவர்களது தலைமைக் காரியாலயத்துக்கு வந்து இறங்கு முன்னர் எனது முகத்தில் ஒரு முகமூடியை அவர்கள் அணி வித்தார்கள். என்னுடன் காரில் பயணம் செய்த ஒருவன் என்னை மற்றொருவனிடம் பொறுப்புக் கொடுக்கும் போது "நாம் வந்து விட் டோம். இது வரை நீஎதுவும் பேசவில்லை" என்று சொல்லி விட்டுப் போனான். அங்கு ஒரு பெண் அதிகாரி என்னைக் குளியலறை யொன்றுக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் களையுமாறு சொன்னாள். குளிக்குமாறு சொல்லிகுழாயைத் திறந்து விட்டாள். ஐஸ் போன்ற குளிர்ந்த நீரில் குளிக்கையில் எனது உடல் விறைத்துப் போனது. முடிந்ததும் எனது மார்புக் கச்சையையும் கீழ் உள்ளாடை யையும் அணியச் சொன்னாள். எனது உடைகள், எனது கையிலிருந்த சங்கிலி, மோதிரம் யாவற்றையும் அவள் எடுத்துக் கொண்டாள்.
அஷ்ரஃப் சிஹாப்தீனி

221
எனது கண்களைக் கட்டி மீண்டும் சிறைக் கூண்டுக்குள் தள்ளினார்கள். ஒவ்வொரு முறை கதவு தட்டப்படும் போதும் நான் கதவுக்கு நேரே எனது பின்புறம் காட்டிச் சுவரைப் பார்த்தவாறு நிற்க வேண்டும் என்று ஒரு பெண் அதிகாரி சொன்னாள். அவ்வாறு நிற்கும் போது எனது கரங்கள் கழுத்துக்குப் பின்புறமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். குரலை வைத்துச் சொல்வதானால் இந்தப் பெண்தான் எனது வீட்டுக்கு வந்தவள் என்று சொல்ல முடியும். அந்தச் சிறைக்குள் ஒரு கட்டிலும் இரண்டு அழுக்கு பெட் சீட்களும் கிடந்தன. சிறை வெள்ளை நிறம் பூசப்பட்டது. சுவரில் ஒரு விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் கதவில் உற்றுப்பார்க்கும் ஒரு ஒட்டை இருந்தது. அதற்குள் அடைந்து கிடப்பது கொடுமை. எனக்கு எனது பெற்றோரை நினைத்துக் கவலையாக இருந்தது.
பத்து நிமிடத்துக்குப் பிறகு கதவு தட்டப்பட்டது. அவர்கள் என்னை எப்படி நிற்கச் சொன்னார்களோ அப்படியே நின்றேன். பயத்தினால் எனது உடல் நடுங்கியது. கதவு திறக்கப்பட்டதும் என்னுடன் காரில் வந்தவனது குரல் காதில் விழுந்தது.
அவனுடன் கூடவே கார்மெணி டியா என்ற ஒருவனும் வந்திருந்தான். அவன் சொல்லும் யாவற்றையும் கார்மெண்டியா செய்யக் கூடியவன். கதவைத் திறந்து வந்தவன் என உடல் மீது பாய்ந்தான். நான் என்னை விடுமாறு கூக்குரல் எழுப்பினேன். "தப்பிப் பிறந்தவளே வாயை மூடு” என்று அதட்டினான்.
அவர்கள் எல்லோரும் முகமூடி அணிந்திருந்தார்கள். என்னு டன் காரில் வந்தவன் ஆடை களைந்து என்னை நெருங்கினான். "நாங் கள் தலைவரின் நண்பியோடு . கப் போகிறோம்" என்று சொன் னான். அவனை எனது உடலிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத் திணறினேன். அழுதேன். அவர்களில் ஒருவன் என்னைக் கெடுக்கும் போது மற்றவர்கள் சூழ நின்று சத்தமிட்டுச் சிரித்தார்கள். "அடுத்து நான். அடுத்து நான்." என்று ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண் டார்கள். எனது அலறலை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஒருவன் என்னைக் கெடுக்கும் போது "உனது பங்காளி உன்னுடன் படுக்கும் போது என்ன சொன்னான்?" என்று கேட்டான்.
ஒரு குடம் கணினி

Page 130
222
நான் மயக்கமடைந்தேன். நான் இங்கிருக்கும் ஐந்து தினங் களுக்கும் அவர்கள் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்பதை நினைக்கவே எனக்கு நடுக்கம் உண்டாகிற்று. அவர்கள் வேண்டி யதைச் செய்து கொள்ளட்டும் என்றிருந்தேன். அவர்கள் போன பிறகு எனக்கு அழுவதற்குக் கூடக் குரல் எழவில்லை. ஒரு மூலையில் கிடந்த எனக்கு மேல் அந்த அழுக்கு பெட்சீட் கிடந்தது.
மீண்டும் கதவு தட்டப்பட்டது. அது எவ்வளவு நேரத்துக்குப் பிறகு தட்டப்படுகிறது என்பதைக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் எழுந்து நிற்பதற்குக் கூடச் சக்தியிருக்க வில்லை. "வேசை மகளே எழும்பு; சொன்னமாதிரி நில்” என்று சத்த மிட்டார்கள். கதவு திறக்கப்பட்டது. அவர்கள் சிரித்துக் கொண்டே நுழைந்தார்கள். எனது கண்களைக் கட்டினார்கள். கைகளில் விலங் கிட்டுத் தலையைக் குனிந்து நடக்குமாறு பணித்து அழைத்துச் சென்றார்கள். சில படிகள் இறங்கிச் சில படிகளில் ஏற்றி இரண்டு இடங்களில் திரும்பி ஒர் அறையில் கொண்டு விட்டார்கள்.
அதுவரை நான் கேட்டிராத குரலுக்குரிய ஒருவன் கதைக்கத் தொடங்கினான். நான் இதுவரை சுவையான எந்த விடயங்களையும் சொல்லாத காரணத்தால் எனக்கு நரகத் துயரம் ஆரம்பமாவதாகச் சொன்னான். எனக்கு முன்னாலிருந்த இரண்டு வழிகளில் கடினமான வழியை நான் தேர்ந்தெடுத்த காரணத்தால்தான் நீ துன்பங்களை அனுபவிக்கிறாய் என்றான். எனது மனதை மாற்றிக் கொள்ளும் எண் ணம் உண்டா என்று அவன் கேட்ட போது நான் அழத் தொடங்கி னேன். "எனக்கு எதுவும் தெரியாது என்றும் என்னை ஏன் கைது செய்து கொண்டு வந்தீர்கள் என்பது கூடத் தெரியாது” என்றும் அழுதபடியே சொன்னேன்.
99
"ஆக, இதைத்தான் உனது முடிவாகச் சொல்கிறாய். என்றவன்"நான் எனது அதிகாரிகளிடம் உன்னை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன்; நீ எந்த அளவு உறுதியானவள் என்பதையும் பார்த்து விடலாம்” என்று சொல்லிச் சென்றான். உடனே இன்னொருவன் எனது கரத்தைப் பற்றிப் பலமாக இழுத்து இன்னொரு அறைக்குள் கொண்டு சென்றான்.அந்த அறைக்குள் என்னைக் கொண்டு வந்ததும்
அஷ்ரஃப் சிஹாப்தீனி

223
கண்கட்டை அவிழ்த்து விட்டார்கள். அங்கே முகமூடியணிந்த ஐவர் இருந்தார்கள். அங்கிருந்த வெளிச்சம் என் கண்களைக் கூசச் செய்தது.
ஒரு கதிரையில் என்னை அமரச் செய்தனர். அவர்கள் ஒரு குப்பைப் பையைக் காட்டி "இது எதற்கு என்று தெரியுமா” என்று கேட்டார்கள். அது எதற்கு என்று விளங்கப்படுத்தினார்கள். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது ஏனையவர்கள் சத்தமிட்டுச் சிரித் தார்கள். எனக்குத் தரப்பட்ட வாய்ப்புக்களையெல்லாம் நான் பயன் படுத்தத் தவறிவிட்டதாகவும் இனிச் சித்திரவதையென்றால் என்ன வென்று நான் தெரிந்து கொள்ளப் போவதாகவும் சொன்னார்கள். எனது நண்பர்கள் மற்றும் பழக்கமானவர்களது பெயர்களைச் சத்தமிட்டுச் சொல்லி விட்டு இவர்கள் எங்கே வேலை செய்தார்கள் என்று கேட்டார்கள். அவர்களில் பலரை எனக்குத் தெரியும் என்றும் ஆனால் அவர்களுக்கும் ஈ.ரி.ஏ. இயக்கத்துக்கும் இடையில் நானறிந்த வரை தொடர்பு கிடையாது என்றும் சொன்னேன். அவர்கள் கோப முற்று "தப்பிப் பிறந்தவளே. நீ ஒரு பொய்க்காரி” என்று சத்தமிட்டு ஏசினார்கள்.
எனது தலைக்கு மேலால் அந்தப் பையைப் போட்டு மூடிப் பின்பக்கத்தால் இழுத்தார்கள். முதலில் எனக்குச் சூடாக இருந்தது. முகம்முற்றாக மூடப்பட்டதால்வியர்க்கத் தொடங்கியது. மூச்செடுக்க முடியாமல் அவதிப்பட்டேன். பையைப் பல்லால் கடித்தேன். பையில் ஒட்டை விழுந்ததால் குளிராக உணர்ந்தேன். எனது செவிகளில் தங்களது உள்ளங் கைகளால் அடித்தார்கள். எனது தலை சுழன்றது. அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு முடியாதிருந்தது. மீண்டும் மீண்டும் அப்பெயர்களையே சொன்னார்கள். நானும் அதே பதிலையே சொல்லிக் கொண்டிருந்தேன். எனவே மற்றொரு பையைப் போட்டார்கள்.
அவர்கள் எனது தலையை மூடிப் பையைப் போட்டு எவ்வளவு நேரம் வைத்திருந்தார்கள் என்று தெரியாது. ஏனெனில் நான் மயங்கிக் கதிரையோடு புரண்டு விழுந்திருந்தேன். நினைவு வந்ததும் நீர் அருந்தத் தந்தார்கள். மீண்டும் பழையபடி பையைப் போட்டுப் பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்த போது
=ஒரு குடம் கணினி

Page 131
224
கதிரையின் பின்னால் நின்று உதைத்தார்கள். பிறகு திடீரென எல்லாவற்றையும் நிறுத்தி எனது விலங்கைக் கழற்றிக் கைத்தாங்கலாக எனது சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அந்தச் சிறையறைக்குள் மிகவும் குளிராக இருந்தது. மார்புக் கச்சையும் இடைக் கச்சையும் தவிர வேறு ஆடையெதுவும் கிடை யாது. அங்கிருந்த அழுக்கு பெட்சீற்றினால் உடலைப் போர்த்துக் கொண்டேன். சுவரிலும் கதவிலும் தட்டினார்கள். உள்ளே வந்து விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. தட்டு விழுந்ததும் எழுந்து நிற்பேன். பின் அமர்ந்து விடுவேன். உடனே தட்டுவது கேட்கும். எழுந்து விடுவேன்.
நான் களைப்படைந்திருந்தேன். எந்நேரமும் பயம் இருந்து கொண்டேயிருந்தது. வயிறு குமட்டுவது போல் இருந்தது. ஒரு முறை அவர்கள் உற்றுப்பார்க்கும் ஒட்டையில் பார்த்த போது கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னேன். "நீமலத்தை வீசினாலும் அதை உண்ண வைப்போம்” என்றார்கள். மீண்டும் தட்டுவது கேட்டது. எழுந்து நின்றேன். ஒரு பெண் உள்ளே வந்து ஒரு போத்தல் நீர் தந்து விட்டுப் போனாள். பின்னர் அவ்வப்போது தட்டிக் கொண்டேயிருந் தார்கள். நானும் எழுந்து நிற்பதும் அமர்வதுமாக இருந்தேன்.
மீண்டும் விசாரணை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். காரில் என்னை அழைத்து வந்தவன் அங்கிருந்தான். அவன் பேசஆரம் பித்தான். என்னைக் கொண்டு வந்ததும் அவன் எனக்குச் செய்ததை நினைக்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனிடமிருந்து அதே வாசமும் குரலும் வெளிவந்தது. ஒரு மூலையில் சுவரைப் பார்க்குமாறு நிறுத்தப்பட்டேன். முழங்காலைப் பாதியில் மடித்து நிற்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு நிற்பது கஷ்டமானது. களைப்பும் சோர்வும் பயமும் கொண்ட நான் கால் மடிந்து விழும் போதெல்லாம் சுவர்ப் பக்கமாகத் தள்ளி விட்டார்கள். நான் இது வரையும் எதுவும் சொல்லவில்லை என்றும் பதிலை வரவழைக்க வேறு வழிமுறைகள் உள்ளன என்றும் சொன்னான். இங்கு வந்தவர்களில் நீ மட்டும்தான் இப்படி நடந்து கொள்கிறாய் என்று சொன்னான். அதனால்தான் நீ இங்கிருக்கிறாய் என்றான்.
அஷ்ரஃப் சிஹாப்தீனி

225
தூக்கமிழந்து நீண்ட காலத்தை இங்கு கழிக்க வேண்டியிருக்கு மென்றும் அதனால் எதையும் நீ அடையமாட்டாய் என்றும் சொன்னான். உனது நண்பன் இன் னொருத்தியோடு சுற்றுவது உனக் குத் தெரியுமா என்று கேட்டான். எனது நண்பிகளின் பெயர்களையெல்லாம் சொல்லி அவர்கள் எனது நண்பனுடன் படுத்ததாகச் சொல்லுகிறார்கள் என்றும் சொல்லி என்னை மனோவியல் ரீதியாகத் துன்புறுத்த ஆரம்பித்தான்.
நீண்ட நேரமாக இவ்வாறான
விடயங்களையே சொல்லிக் கொண்டிருந்தான். என்னால் நிற்க முடி யாது போனது. உடல் நடுங்க ஆரம்பித்தது. கண்ணிரும் வியர்வையும் போட்டி போட்டுக் கொண்டு உடலிலிருந்த வழிந்தன. எனது உடலை அவர்கள் விரும்புவதாகச் சொன்னான். நான் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும் மார்புக் கச்சை இல்லையெனில் இன்னும் அழகாக இருப்பேன் என்றும் சொன்னான். அங்கு இரண்டு அல்லது மூவர் இருந்ததாக எனக்கு ஞாபகம். நான் என்னைக் கொண்டு வந்தவுடன் இவர்கள் நடந்து கொண்டது போல மீண்டும் நடந்து கொள்வார் களோ என்ற பயத்தில் அழ ஆரம்பித்தேன். பிறகு மீண்டும் சிறைக் கூண்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.
சிறைக் கூண்டின் சுவரில் சித்திரங்களைப் போல என்னென் னவோ தோன்றின. அவை நகர்ந்து கொண்டிருந்தன. நான் உணர்வை இழந்து கொண்டிருப்பதால்தான் அவ்வாறு எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். நானிருக்கும் அறையின் அளவு வித்தியாசப்படுவது போல் தோன்றிற்று. சிறைக் கதவு நகர்ந்தது.
எனக்குப் பயம் அதிகரிக்கவே கதவின் உற்றுப் பார்க்கும் பகுதியை நீக்கிப்பார்த்தேன். வெளியே இருந்த ஒருவன்சத்தமிட ஆரம் பித்தான். இனிமேல் அதை நீக்கிப் பார்த்தால் உன்னை அடிப்பேன் என்றான். நான் உள்ளே வரும் போது நாங்கள் சொன்னது போல்
ஒரு குடம் கணினி

Page 132
226
உனது இடத்தில் நீநிற்க வேண்டும் என்றான். அவன் உள்ளே வந்து என்னை அடிப்பான் என்று பயந்து அழுதேன். அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை.
அவன் உள்ளே வந்து எனது கண்களைக் கட்டி அழைத்துச் சென்றான். அது வெள்ளைச் சலவைக் கல் பதிக்கப்பட்ட அறை. அங்கே நீர்வழிந்தோடும் சத்தம் கேட்டது. எதையோ ஊற்றிக் கொண் டிருந்த அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஏதோ செய்யப் போகிறார் கள் என்று எதிர்பார்த்தேன். எனது காதில் எனது பெயரைச் சொல்லிக் குசுகுசுத்துச் சிரித்தார்கள். பயமிகுதியால் என்னையறியாமலே எனக்குச் சிறுநீர் கழிந்தது. அவர்கள் சிரித்தார்கள். கோபங் கொண்டு அந்த அறையை நான் நக்கிச் சுத்தம் செய்ய வேண்டும் என்றார்கள்.
நீர் வழியும் ஒசை நின்றது. என்னை முன்னால் நகர்ந்து முழங்காலில் நிற்கச் சொன்னார்கள். கண் கட்டை அவிழ்த்து விட்ட னர். கைகளைப் பின்புறமாக வைத்து விலங்கிட்டனர். நான் பயத்
தடுமாற்றத்தில் பின்னால் மெதுவாக நகர்ந்தேன். ஆனால் நான்
அசைய முடியாதவாறு என்னைச் சுற்றி நின்றார்கள். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது புரிந்தது. அவர்கள் சில பெயர்களைக் குறிப்பிட்டு ஈ.ரி.ஏ. அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ள தென்று நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பி னார்கள். "நான் சொல்வது உண்மை. அவர்கள் நண்பர்கள். ஆனால் அவர்களைப் பற்றி வேறு எதுவும் எனக்குத் தெரியாது”என்று மீண்டும் மீண்டும் சொன்னேன்.
ஒருவன் எனது உடலையும் மற்றொருவன் எனது தலையை யும் பிடித்துப் பலமாக நீருக்குள் அமிழ்த்தினான். நான் தலையை வெளியே எடுக்க பலம் கொண்ட மட்டும் முயற்சித்தேன். முடிய வில்லை. வாயாலும் மூக்காலும் நிறைய நீரை நான்குடித்தேன். அவர் கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இன்னும் அதிகம் பெயர் களைச் சொன்னார்கள். மீண்டும் மீண்டும் நீருக்குள் அமிழ்த்தி னார்கள். பதிலொன்றைத் தருவதற்குக் கூட அவர்கள் அவகாசம் தரவில்லை. நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். எனது உடல் ஒரு பொம்மையின் உயிரற்ற உடலைப் போல் ஆனது.
அஷ்ரஃப் சிஹாப்தீன்

227
இனிமேலும் என்னால் தாங்கிக் கொள்ளும் நிலையற்றுப் போனதால் அவர்கள் சொன்னதற்கெல்லாம் ஆமாப் போட்டேன். எதில் வேண்டுமானாலும் கையெழுத்திட்டுத் தருவதாகச் சொன் னேன். என்னை மீண்டும் எனது சிறைக்கு எடுத்துச் சென்றார்கள். உடல் நனைந்து குளிரில் நடுக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த பெட் சீற்றினால் போர்த்திக் கொண்டு மூலையில் குந்தி அமர்ந்து அழத் தொடங்கினேன்.
சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. நான் எழுந்து நின்றேன். கண்களைக் கட்டித் திரும்பவும் விசாரணை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். சுவரைப் பார்த்தபடி நிற்குமாறு கேட்கப் பட்டேன். இப்போது கைவிலங்கு அகற்றப்பட்டது. என்னுடன் காரில் வந்த நபரின் குரல் பேசத் தொடங்கியது. என்னைக் கதிரையில் அமரச் சொன்னான். நான் அமரவில்லை. அவனை நான் நம்பவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே நான் அமரவில்லை. அவர்கள் மிகவும் சாந்தமாக நடந்து கொண்டார்கள். "நீஒரு புத்திசாலிப் பெண்; ஆனால் கொஞ்சம் கடுமையானவள். நீ எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னதாக எனது அதிகாரிகள் ஒரு நல்ல செய்தியைச் சொன்னார்கள்” என்றான். ஏற்கனவே வினவப்பட்ட வினாக்களை மீண்டும் படித்தார்கள். இது மிக நீண்ட நேரத்துக்கு நடந்தது.
எனது ஆடைகளைத் தந்தார்கள். தலையைத் துவட்டிக் கொள்ளத் துவாய் ஒன்றையும் தந்தார்கள். வினாக்களுக்கான பதில் களில் தாம் எதிர்பார்ப்பதற்கு மாறான பதில்கள் இருந்தால் மீண்டும் சித்திரவதை செய்யப்படுவேன் என்று மிரட்டினார்கள். வைத்தியர் ஒருவரிடம் என்னை அனுப்பப் போவதாகவும் அவரிடம் நடந்த எதையும் சொல்லக் கூடாது என்றும் அப்படிச் சொன்னால் என்ன நடக்கும் என்பது தெரியும்தானே என்றும் அச்சுறுத்தினர்.
ETA யின் இராணுவப் பிரிவுத் தலைவர் என வலுவாக pbLibuüLu(Bubo Miguel de Garikoitz Aspiazu Rubina 2008.11.16ம் திகதி பிரான்ஸில் கைதுசெய்யப்பட்டடார்.
|ඉංග්‍ය ගuණී ඝගlගණි

Page 133
228
கண்களைக் கட்டி மேல்மாடிக்கு அழைத்துச் சென்று ஒரு சிறிய அறையில் விட்டார்கள்.
அங்கே கணினியருகில் நான் சொல்வதைப் பதிவதற்காக ஒருவரும் வினாத் தொடுப்பதற்கு ஒருவரும் எனக்கும் பின்னால் ஒருவரும் இருந்தனர். எனக்குப் பின்னால் இருந்தவர் நீதிமன்ற சட்டத்தரணி அங்கு நான் நுழைந்ததும் ஒருவர் எனது உரிமைகளைப் பற்றி வாசித்தார். நான் சட்டத்தரணியைப் பார்க்கவோ பேசவோ கூடாது என்றனர். சடுதியாக நான் திரும்பியபோது அங்கு ஒரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவருக்குப் பின்னால் ஒரு கண்ணாடி இருந்தது. அந்தக் கண்ணாடியில் இலேசான இரண்டு தட்டும் சப்தங்கள் கேட்டன. என்னைச் சித்திரவதை செய்தவர்கள் கண்ணா டிக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண் டேன். நான் அவர்கள் சொன்னதற்கிணங்கி நடந்து கொள்ளாவிடின் என்னை மீண்டும் சித்திரவதை செய்வார்கள். அதேவேளை நான் சரி யாகப் பதில் சொன்னாலும் கூட என்னை அவர்கள் விடப்போவ தில்லை. எனக்கு மிகவும் தடுமாற்றமாக இருந்தது.
எனது நண்பர்களைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. அவர்களது வினாக்கள் அனைத்தும் பொய்களால் ஆனவை. பதில் களைச் சொல்லும் போது இடறியது. என்னை மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்பதை நினைக்க அழுகை வந்தது. கண்ணாடிக்குப் பின்னாலிருந்து தட்டும் சத்தம் கேட்டது. அதைக் கேட்காதது போல் பாசாங்கு செய்து விட்டு எனக்கு நீரும் சிகரட்டும் தர முயன்றான்
(ஸ்பெய்னில் 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது "பாஸ்கு தேசச் சுதந்திரம்" என்பதைக்குறிக்கும் Euskadi Ta Askatasuna அமைப்பு. சுருக்கமாக E.TA. என்று அழைக்கப்படுகிறது. மார்க்ஸிய லெனினிஸச் சித்தாந்தங்களின் அடிப்படையில் பாஸ்கு தேசத்தை உருவாக்குவதற்காக ஆயுதம் தாங்கிப் போராடும் இந்த அமைப்பை ஸ்பெய்ன், ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்திருக்கின்றன. இதன் 700க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் ஸ்பெய்னிலும் பிரான்சிலும் மற்றும் சில நாடுகளிலும் சிறைகளில் இருக்கிறார்கள், URIZARDE PAZ, AMAIA 19826) llp556ub.)
ඌ|බද්{Iශී.) சிஹாப்தீனி=

229
அங்கிருந்தவன். நான் மறுத்தேன். எனது பதில்களை முடித்துக் கொண்ட பிறகு அதன் பிரதியை என்னிடம் தந்து வாசித்துக் கை யெழுத்திடப் பணித்தான். நான் சொல்லாத விடயங்களும் அந்தத் தாளில் இருந்தன. இருந்தாலும் நான் கையெழுத்திட்டேன்.
பிறகு என்னை வைத்தியரிடம் அழைத்துச்சென்றார்கள். அது ஒரு சிறிய அறை. ஏதாவது வருத்தம் இருக்கிறதா என்று வைத்தியர் கேட்டார். எனக்கு அவரில் நம்பிக்கை வரவில்லை. நான் எனது கண்களைப் பார்க்குமாறு அவருக்குச் சொன்னேன். ஒஎனது ஒரு கண் இரத்தச் சிகப்பாக இருந்தது. நீரில் குளித்தாலும் அப்படி வரும் என்று வெகு சாதாரணமாகச் சொன்ன அவர் அதற்கு மருந்து தரட்டுமா என்று கேட்டார். நான் வேண்டாம் என்றேன். என்னை நீதிமன்றுக்கு எடுத்துச் செல்லும் போது எனது கண் சிகப்பாக இருப்பதை நீதிபதி யால் பார்க்க முடியும் என்று நினைத்தேன். அவர்கள் எனக்கு உடலில் சீனியின் அளவு குறைவது பற்றிவைத்தியருக்குச் சொல்லியிருந்தார்கள். எனது இதயத்துடிப்பை அவர் பரிசோதித்தார். ஏதாவது உண்பதற்குத் தந்தார்களா என்று கேட்டார். நீரைத் தவிர வேறு எதுவும் இல்லை யென்று சொன்னேன். அத்துடன் வைத்தியப் பரிசோதனைமுடிந்தது. என்னைச் சிறையறைக்குக் கொண்டு விடும் போது வைத்தியரிடமும் வாக்குமூலத்திலும் நான் சரியாகச் சொன்னேன் என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் எனது கண்களைக் கட்டி அழைத்துப் போனார்கள். ஒரு கதிரையில் அமர வைக்கப்பட்டுக் கைகளைப் பின்புறமாகவும் முன்னங் கால்களைக் கதிரைக் கால்களு டனும் வைத்துக் கட்டினார்கள். கண்கட்டு அவிழ்க்கப் பட்டுச் சுவ ரைப் பார்க்கும் படி அமர்த்தப்பட்டேன். எனது முன்னிலையில் முக மூடியணிந்த ஒரு நபர் பல புகைப்படங்களைப் பிரதி யெடுத்துக் கொண்டிருந்தார். "அப்புகைப்படங்களில் இருக்கும் பலரை நான் கிளப்பில் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் எங்கு வாழ்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விபரம் என்ற தெரியாது” என்று சொன்னேன். அங்கிருந்தவர்களில் பிரதானியாக இருந்தவன் “. வேசை. நீ இன்னம் பாடம் படிக்கவில்லையா? அடுத்து வரும்
= SCD CELIð கfைரீைர்

Page 134
230
தினங்களில் நீபாடம் படிப்பாய்” என்று சத்தம் போட்டுக் கத்தினான். “எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் சொல்லி விட்டேன்; வேறு எதுவும் தெரியாது" என்றேன். அழுகை முட்டியது.
"அழாதே" என்று சத்தமிட்டான். "விளையாட்டு முடிந்து விட்டது” என்று சொல்லிக் கொண்டே எனது கண்கட்டை விலக்கி ஒரு கைத்துப்பாக்கியைக் காட்டினான். நான் முகத்தைத் திருப்ப முயன்றேன். வேண்டுமானால் இதை நீ வைத்துக் கொள் என்றான். "உனது சகோதரனுக்கும் காதலனுக்கும் இருப்பது போல விதைகள் உனக்கு இருக்குமானால் சுட்டுக் கொள்” என்று சொல்லிச் சிரித்தான். "காட்டிக் கொடுக்கும் வேசை” என்று திட்டினான். எனது கால்களுக் கிடையில் துப்பாக்கியை வைத்தான். நான் வீறிட்டு அலறினேன். அவன் எனது உள்ளாடையை விலக்கி பெண்குறிக்குள்துப்பாக்கயைச் செருகினான். நான் தொடர்ந்து அலறினேன். எனது காதருகில் வந்து "உனது காதலன் உன்னுடன் படுக்கும் போது உனக்கு என்ன சொன் னான் ஈ.ரி.ஏ?" என்று கேட்டு உரக்கக் கத்தினான். பிறகு அவன் என்னைக் கற்பழித்தான். மீண்டும் துப்பாக்கியை எனது பெண்ணு றுப்புக்குச் செருகி "அது "லோட் செய்யப்பட்டுள்ளது, வெடித்தால் நாங்கள் பொறுப்பில்லை” என்றான். பின்னர் புகைப்படங்களைக் காட்டினான். நான் சொல்லத் தொடங்கினேன். முடிந்த பிறகு சிறை யறையில் கொண்டு வந்து விட்டார்கள்.
மீண்டும் விசாரணை அறைக்குக் கொண்டு சென்று புகைப் படங்களைக் காட்டி விபரம் கேட்டார்கள். எனது வாக்குமூலம் பெறப்பட்ட போது நடந்தவாறே எல்லாம் நடந்து முடிந்தது. பிறகு 'டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி கேட்டார்கள். என்னால் மறுக்க முடியவில்லை. வைத்தியரிடம் கொண்டு சென்றார்கள். அவர் எதுவும் செய்யாமல் எனக்கு மாதவிடாய் வந்தது எப்போது, வருத்தங் கள் உள்ளனவா என்று கேட்டு முடித்துக் கொண்டார்.
பின்னர் இன்னொரு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பெண்ணிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றேன். "சீக்கிரம் வா" என்று சொல்லி அனுமதித்தாள். உள்ளே நுழைந்து எனது உள்ளா
அஷ்ரஃப் சிஹாப்தீனி F

231
டையை அகற்றினேன். காயம் இருந்தது. கண்களை அங்கிருந்த அலுமி னியம் நீர் சூடாக்கியில் பார்த்தேன். சிகப்பு நிறம் மறைந்திருந்தது. கண்களில் கண்ணிரைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
எனது நண்பனைப் பற்றி இந்த முறை கேட்டார்கள். எனது படிப்பு, குடும்பம் போன்ற விபரங்களை வாக்குமூலமாகப் பெற்றுக் கொண்டார்கள். சிறையறைக்குள் விட்ட போது என்னைக் காரில் கொண்டு வந்த அதிகாரி வந்தான். நீதிபதியிடம் கொண்டு செல்லும் போது வாக்குமூலத்துக்கு மாறாகப் பேசக் கூடாது என்று பய முறுத்திவிட்டு உறங்குவதற்கு வாய்ப்பளிப்பதாகச் சொன்னான். ஒரு சான்ட்விச்சும் நீரும் தந்தார்கள். அதில் ஏதாவது போதை மருந்து கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நான் அவற்றைத் தொடவில்லை. அவற்றை மீண்டும் எடுத்துச் சென்றார்கள்.
திடீரெனக் கதவில் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. நான்கைந்து பேர் முரட்டுத்தனமாக நுழைந்தார்கள். அவர்கள் மாறி மாறி என்னைத்துவம்சம் பண்ணினார்கள். எனது உடலில் ஒரு துளி கூடத் தெம்பு இருக்கவில்லை. பின்னர் ஒரு பெண் என்னை இழுத்துச் சென்று குளிப்பாட்டிப் புதிய உடைகளைத் தந்தாள். நீதிபதிக்கு முன்னால் வாக்குமூலத்தை மாற்றிச் சொன்னால் நீ மீண்டும் இங்கு வருவாய் என்று எச்சரித்துச் சென்றாள். அதன் பின் காரில் ஏற்றி மட் ரிட்டில் உள்ள (Audiencia Nacional) உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
அங்கு சென்றதும் நான் அழத் தொடங்கினேன். அதன் பின் நான் நரகிலிருந்து தப்பினேன்.
நன்றி.
01. behatokia.info - 2004 02. indymedia.org 03. humanrights-china.org
04. expatica.com
|ඉub අuහී ආගdග්

Page 135
ஹிரோஷிமாவின் வேண்டுகோள்
அணுக்குண்டு போடப்பட்ட அறுபதாவது ஆண்டு நிறைவு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி நடத்தப்படும் உலகளாவிய அமைதி முன்னெடுப்புக் கான முதல்வர்களின் ஆறாவது மாநாட்டில் பங்கு கொள்ளும் உங்கள் அனைவரையும் முதலில் இதய
பூர்வமாக வரவேற்கிறேன். எனது பெயர் அகிஹிரோ தக்காவுரி. உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைக் கெளரவமாகக் கொள்கிறேன்.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்து 60 வருடங்கள் கழிந்து விட்டன. அணு ஆயதங்களைக் கூடிய விரைவில் அழித்து விடும்படி உங்கள் அனைவரிடமும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்து அறுபது ஆண்டுகள் கழிந்து போய் விட்ட போதிலும் மேலும் தாமதமாகாமல் உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தங்களிடம் விண்ணம் செய்கிறேன். காலம் எவ்வளவு வேகமாகக் கழிந்து சென்று விட்ட போதும் எவ்வளவோ முக்கியமான விடயங்கள் நிகழ்ந்து விட்ட போதும் அணுக்குண்டு ஏற்படுத்திய பேரழிவானது இன்னும் என் நினைவை விட்டுப் போவதாக இல்லை. இன்றும் கூட அணுக்குண்டு போடப்பட்ட தினத்தின் பாரம் என் ஞாபகங்களில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

233
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி காலை 8.15க்கு உலகின் முதலாவது அணுக்குண்டு ஹிரோவுரிமா நகரின் மீது போடப் பட்டது. அப்போது பதினான்கு வயதுச் சிறுவனாக இருந்த நான் கனிஷ்ட பாடசாலையின் இரண்டாம் ஆண்டில் கற்றுக் கொண்டிருந் தேன். நான் அப்போது விளையாட்டு மைதானத்திலிருந்தேன். குண்டு விழுந்த போது (Hypocenter) ஹைப்போ சென்டரிலிருந்து 1.4 கிலோ மீற்றர் அப்பால் நின்றிருந்தேன்.
குண்டு விழுந்தவுடனேயே பல மில்லியன் பாகை செல்ஸியஸ் வெப்பத்துடன் கூடிய ஒரு நெருப்புக் கோளம் ஆகாயத்தில் எழுந்தது. குண்டு விழுந்த மத்திய பகுதி - அதனால் எழுந்த குவியளவு - 3000 முதல் 4000 வரையான பாகை செல்ஸியஸ் பெரு வெப்பத்தைக் கொண்டிருந்தது. எல்லாத்திசைகளிலும் விசாலமான அளவில் அமுக்க அதிர்வலையொன்று எழுந்தது. அந்த அதிர்வலையைத் தொடர்ந்து மிகப் பலத்த காற்று எழுந்தது. அந்த அதியுச்ச வேகக் காற்று செக்க னுக்கு 440 மீற்றர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசமே வெப்பக் கதிர்களினால் பாதிக்கப் பட்டது. குண்டு வெடிப்பின் கதிர்வீச்சின் அழிவுகள் நமது கற்ப னைக்கு அப்பாற்பட்டது. பூமி பொசுங்கி, முழு நகரமும் எரிந்து போயிற்று. அங்கிருந்த மக்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள். எதையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இக்குண்டு போடப்பட்ட தானது தர்மங்களுக்கும் நியாயங்களுக்கும் அப்பாற்பட்ட, மனிதாபி மானமற்ற பெருங் கொடுமையன்றி வேறில்லை என்பதைத்தான் என்னால் சொல்ல முடியும். யுத்தத்தை வெல்வதற்காக நகரங்களை அழித்து ஆயதமேந்தாத அப்பாவி மக்களைக் கொலை செய்வது சரி காணப்பட்டது.
கொரியத் தீபகற்பத்திலிருந்து வேலைக்காகப் பலவந்தமாகக் கொண்டு வரப்பட்டவர்கள், அமெரிக்கப் போர்க் கைதிகள், சீன மற்றும் தென்கிழக்காசிய மாணவர்கள் உட்பட மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் குறிவைக்கப்பட்டார்கள். 1945ம் ஆண்டின் இறுதியில் ஏறக்குறைய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தார்கள். 1950ம் ஆண்டளவில் இறந்தவர்களின் தொகை இரண்டு லட்சமாக
|ඉq5 ගuගී ඝගlගff

Page 136
234
அதிகரித்தது. 2004ம் ஆண்டு மார்ச் மாதக் கணக்கெடுப்பின்படி அணுக்குண்டுச் சம்பவத்திலிருந்து தப்பிய இரண்டு லட்சத்து எழுபத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்துப் பதினெட்டுப் பேர் ஜப்பானில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஹிரோஷிமா நகரில் எண்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு பேரும் நாகசாக்கி நகரில் நாற்பத்தெட்டாயிரத்து எழுநூற்று நாற்பத்தொன்பது பேரும் வாழ்கி றார்கள். வடக்கே ஹொக்கைடோ முதல் தெற்கே ஒக்கினாவா வரை யுள்ள பிரதேசங்களில் அணுக்குண்டினால் பாதிக்கப்பட்ட சிறு தொகையினர் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு உயிர் தப்பியவர்களில் நானும் ஒருவன்.
ஜப்பான் பதினைந்து வருடங்கள் யுத்தத்தில் ஈடுபட்டது. 1931ம் ஆண்டு செப்டம்பர் 18ம் திகதி மஞ்சூரியன் சம்பவம் நிகழ்ந் தது. 1937 ஜூலை 7ம் திகதிய ஜப்பான் - சீனப் போருக்கு வழிவகுத்த ஆரம்பக் கலகம் என்றும் இச்சம்பவம் அழைக்கப்படுகிறது. இந்த யுத்தத் தொடர்கள் பசுபிக் பிராந்தியப் போராக 1941 டிசம்பர் 8ல் பேர்ள்துறைமுகத் தாக்குதலோடு ஆரம்பித்தது.
சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளை ஆக்கிரமிக்கும் யுத்த மொன்றை ஜப்பான் முன்னெடுத்தது. கொரியத் தீபகற்பத்தைத் தனது காலனியாக 36 வருடங்கள் வைத்திருந்தது. ஜப்பான் பெரிய தவறைச் செய்தது.
செல்லுங்கள். செல்லுங்கள். வீரர்காள்!" இந்த வார்த்தை கள் நான் ஆரம்பப் பாடசாலை மாணவனாக இருக்கையில் LITL
(மஞ்சூரியன் சம்பவம் Mukden Incident என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சூரியர்களைக் கொண்ட இப்பிரதேசம் சீன Qing அரச வம்சத்தால் உருவாக் கப்பட்டது. தென் மஞ்சூரிய ரெயில் பாதையருகே ஜப்பானிய ராணுவம் டைனமைற் மூலம் நிலத்தில் ஒரு குழியை ஏற்படுத்தியது. இது ராணுவ அதிகாரி களுக்கான நீச்சற் தடாகம் அமைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாக ஜப்பான் இராணுவம் தெரிவித்தது. டைனமைற் வெடிப்பின் காரணமாக 1.5 கி.மீற்றர் ரயில் பாதை சேதமுற்றதாகச் சொல்லப்பட்டபோதும் Changchun என்ற இடத்திலிருந்து வந்த ரயில் எவ்வித ஆபத்துமின்றி இந்த இடத்தைக் கடந்தது. எனினும் இச்சம்பவம் இரு நாடுகளுக்கு மிடையில் ஒரு கலகத்துக்கு வழிகோலியதைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தை ஜப்பான் கைப்பற்றியது.)
அஷ்ரஃப் சிஹாப்தீன்=

235
நூல்களில் இடம் பெற்றிருந்தவை. யுத்த காலத்தில் பாடப் புத்தகங் களில் இராணுவக் கல்விப் போதனை இருந்தது. எனவே உயர்நிலைக் கனிஷ்ட பள்ளிகளில் கற்பவர்கள் வளர்ந்ததும் இராணுவத்தில் கடமை புரியலாம் என்று நினைத்தார்கள். நான் கடற்படையின் ஆகாயப் பிரிவில் இளைஞர் அணியில் சேர்ந்துகொள்ள விரும்பினேன். இந்தத் தளம் இபறாக்கி பிரதேசத்தில் கசுமிகோறா என்ற இடத்தில் இருந்தது. கப்பற்படையின் ஆகாயப் பிரிவு வீரராக வருவது சிறந்தது என்றும் எதிரியின் பிரதேசத்துக்குள் வீறு நடை போட்டுச் சென்று எதிரிப் படையினரைக் கொல்வது சரியானது என்றும் அது ஜப்பா னுக்கு யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு அவசியமானது என்றும் எமது ஆசிரியர்கள் சொல்வார்கள். அப்படியே நாமும் நம்பினோம்.
எவ்வாறிருந்த போதும் யுத்தத்தில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது. இராணுவக் கொள்கையின் பிழையை உணர்ந்தோம். மேலும் ஆசியப் பிராந்தியத்தை அழுத்தங்களுக்கும் அனுதாபத்துக்கும் உள்ளாக்கியமைக்கு ஜப்பான் காரணமாக இருந்தது என்பதை உணர்ந் தோம். இதற்கான முழுத்தார்மீகப் பொறுப்பும் ஜப்பானிய அரசாங் கத்துக்குரியது என்பதை உணர்ந்தேன். ஜப்பானிய அரசாங்கமே யுத்தத்தை ஆரம்பித்தது. அதேவேளை யுத்த காலப்பகுதி முழுக்கவும் வாழ்ந்தவன் என்ற வகையில் - ஒரு ஜப்பானியப் பிரஜையாக - அந்த வேளை சிறுவனாக இருந்தபோதும் நான் மிகவும் வருந்தினேன். மக்க ளைக் கொல்வது சரியானது என்று எனக்குக் கற்பிக்கப்பட்டதை நான் சரியானது என்றே நம்பியிருந்தேன். அவ்வாறு எனக்குக் கற்பிக்கப் பட்டிருந்தாலும் அவ்வாறே நான் எண்ணியிருந்தாலும் கூட அது முழுமையாகப் பிழையான எண்ணம் என்று நினைக்கிறேன். அதற்காக இப்போது மிகவும் வருந்துகிறேன்.
யுத்த காலத்தின் போது உயர் கனிஷ்ட பாடசாலை மாணவர் களும் மாணவிகளும் சாதாரண மக்களுக்கு ராணுவ நடவடிக் கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தமது இடங்களைவிட்டுச் செல்லத் தயார்ப்படுத்து முகமாக இந்த விளக்கமளிப்புத் தொடர்ந்தது. உடைந்து சிதைந்த
=9GD Euò acciaio

Page 137
‘லிட்டில் போய்' (Little Boy) ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுக்குண்டு
வீடுகளில் வாழ்ந்தவர்களுக்குச் செல்லுமிடமில்லாமல் கிராமப் புறங்களுக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் பழக்கமானவர்களுடன் சென்று வாழ்ந்தார்கள். அவர்கள் அரசாங்கத்தின் கட்டளைக்கு ஏற்பக் கட்டாயமாக வெளியேற்றப் பட்டார்கள்.
ஆகஸ்ட் 6ம் திகதி அணுக்குண்டு போடப்படுவதற்கு முன்னர் அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக் கருதி மைதா னத்துக்குச் சென்று காலை ஆராதனை ஆரம்பமாகக் காத்திருந்தோம். எனது வகுப்பு நண்பர்கள் அறுபது பேர் உட்பட மொத்தமாக 150 பேர் மைதானத்தில் இருந்தோம். அப்போது அமெரிக்க மொடல் பி - 29 விமானம் அண்மிப்பதை நாங்கள் அவதானித்தோம். இந்த விமானம் அணுக்குண்டு ஒன்றைச் சுமந்து வருகிறது என்பதை நாங்கள் நினைத்திருக்கவில்லை.
அன்று காலை ஹிரோஷிமா நகரின் ஆகாயம் மிகவும் தெளி வாக இருந்தது. அந்த விமானம் எங்களுக்கு மேலால் அழகான புகை வாலை நீட்டிப் பறந்தது. நாங்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கிறோம் என்ற நினைப்பில் ஆகாயத்தில் அந்த விமானத்தைப் பார்த்து விரல்களை நீட்டி அதோ. என்று காட்டினோம். ஆசிரியர் களின் அறையிலிருந்து வெளிப்பட்ட எமது ஆசிரியர், மாணவர் தலைவரை அழைத்து எம்மை ஒன்றாகக் கீழே விழுந்து கிடக்குமாறு பணித்தார். அந்தக் குறிப்பிட்ட வேளையில் தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. அஷ்ரஃப் சிஹாப்தீனி
 

237
பயங்கரச் சத்தத்துடன் ஒரு வினாடி எனது கண்களை இருள் மறைத்தது. ஒர் அங்குல உயரத்தையேனும் என்னால் முன்னால் பார்க்க முடியவில்லை. என்ன நடந்திருக்கிறது என்பது புரியவில்லை. சிலர் ஒரு பெரிய வெளிச்சம் தெரிந்தது என்று சொன்னார்கள். எனக்கு அது ஞாபகம் இல்லை. அதிரும் வெடிப்பைத் தொடர்ந்து இள நீல நிற வெளிச்சம் எல்லா இடங்களிலும் பரந்ததைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை. ஆகக்குறைந்த தாக்குப் பிடிக்கும் சக்தியையும் இழந்த நிலையில் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.
மைதானத்தை மூடியிருந்த புகை மண்டலம் கலைந்து வெளிச்சம் உருவானதும் நான் சுயநிலைக்கு மீண்டேன். குண்டு வெடிப்பதற்கு முன்னர் நான் நின்றிருந்த இடத்திலிருந்து பத்து மீற்றர் தூரத்தில் நான் வீசப்பட்டிருந்தேன். என்னுடன் நின்றிருந்த ஏனைய 150 மாணவர்களும் மைதானத்தின் வெவ்வேறு திசைகளில் வீசப்பட்டு விழுந்து கிடந்தார்கள். பாடசாலை தரைமட்டமாகியிருந்தது. பாட சாலையைச் சுற்றியிருந்த வீடுகளும் கட்டங்களும் தகர்ந்து சின்னா பின்னமாகிக் கிடந்தன. நான் கூர்ந்து பார்த்த போது புதிதாகக் கட்டப் பட்ட சில வீடுகளைத் தவிர வேறு எவையும் தென்படவில்லை. ஒஹ. ஹிரோஷிமா காணாமல் போய் விட்டது!
எனது உடம்பைப் பார்த் தேன். எனது பாடசாலைச் சீருடை எரிந்தும் கிழிந்தும் வெப்பக் கதிர் களினால் சுடுபட்டும் காணப்பட் டது. குண்டு விழுந்த கணமே உடை யில் தீப்பற்றிக் கருகியிருந்தது. எனது பின் தலையிலும் பின் புறத்திலும் கைகளிலும் மற்றும் கால்களிலும் எரி காயங்களிருந்தன. வெப்பக் கதிர்க ளால் சுடப்பட்ட எரிகாயங்களில் எனது சிவப்புச் சதை வெளித் தெரிந் தது. என்னைச் சூழக் கிடந்த ஏனைய அணுக்குண்டு விழுந்த மாணவர்களைப் போலவே நானும் நேரத்தில் நின்ற மணிகூடு
ஒரு குடமீ கணிரீைர்

Page 138
238
இருந்தேன். விரைவாக நான் கிலி பிடித்த நிலையில் உறைந்து போனேன்.
வெளியேற்றம் சம்பந்தமான பயிற்சியின் போது விமானத் தாக்குதல் நடந்தால் ஆற்றுக்கு ஒடுவது பற்றி ஆசிரியர் சொல்லித் தந்தது ஞாபகத்துக்கு வந்தது. நான் மைதானத்தை விட்டு ஆற்றுக்கு ஓடுவதற்குத் தயாரானேன். நான் அவ்வாறு ஒடிக் கொண்டிருக்கும் போது எனது பெயரைச் சொல்லியாரோ அழைப்பது பின்னால் கேட் டது. "தக்காவி. தக்காஷி. கொஞ்சம் நில். நானும் வருகிறேன்.
99
திரும்பிப் பார்த்த போது எனது நண்பன் நின்றிருந்தான். எனது வகுப்புத் தோழனான தற்சுயா யமமோட்டோ நின்றிருந்தான். அவன் 'அம்மா. அம்மா. காப்பாற்று." என்று அழுதுகொண்டே யிருந்தான். "அழாதே. அழுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அழுவதற்குப் பதிலாக வாபோவோம். நாம் பெரிய ஆபத்தில் இருக்கி றோம். முதலில் இங்கிருந்து வெளியேறுவோம்” என்று சொன்னேன். அவனை அவ்வப்போது ஏசியும் அவ்வப்போது ஆதரவாகக் கதைத்துக் கொண்டும் அவனை இழுத்தேன்.
யுத்தத்தின் போது நாம் பயன்படுத்தும் தொப்பியை "போர்த் தொப்பி" என்று அழைப்போம். எனது தலையில் தொப்பி இருந்த இடம் தவிர ஏனைய இடங்கள் வெப்பக் கதிர்களினால் பொசுங்கி யிருந்தன. பொசுங்கிய இடங்கள் மொட்டையாக இருந்தன. தொப்பி பறந்து போயிருந்தது. குண்டுத்தாக்குதலின் பாதிப்புக்குள்ளான பெருந் தொகையானோர் பெருங் கூட்டமாக விரைந்தனர். பலரது கரங்கள் பொசுங்கியிருந்தன. ஆடைகள் யாவும் கிழிந்து கந்தலாகியிருந்தன. சிலர் முழு நிர்வாணிகளாக இருந்தனர். அவர்களின் சுடுபட்ட காயங் களூடாக சதைகள் சிவப்பு நிறமாகத் தெரிந்தன. ஒவ் வொருவரும் தம்மைத் தாமே இழுத்துக் கொண்டு செல்வது போல் வெறுங் கால்களுடன் நடந்து சென் றார்கள். பக்கமாக நின்று
அஷ்ரஃப் சிஹாப்தீனி=
 
 

239
பார்க்கையில் அந்தக் காட்சி பேய்கள் நடந்து செல்வதைப் போலிருந்தது.
பலர் மிக மோசமா கப் பாதிக்கப்பட்டிருந்தனர். கட்டடங்களிலிருந்து அதிர்வி னால் வெடித்துச் சிதறிய கண் ணாடித் துண்டுகள் சிதறி மனிதர்களின் உடல்களில் குத்தியிருந்தன. ஒருவரது உடல் முழுக்கக் கண்ணாடித் துண்டுகளைக் கண்டேன். எனது இருப்பிலும் கரங்க ளிலும் கூடக் கண்ணாடித் துண்டுகள் குத்தியிருந்தன. இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டிருந்த ஒரு பெண்ணின் ஒரு கண்ணுருண்டை வெளியே தொங்கியபடியிருந்தது. மற்றொரு மனிதனின் பின்புறம் முழுவதுமாக எரிந்து சதை சிகப்பாகத் தெரிந்தது. பிணங்கள் ஏராள மாகக் கிடந்தன. அவற்றில் ஒரு பெண்ணின் உடலின் உட்பாகங்கள் வெளியேறி நிலத்தில் கிடந்தன.
ஒரு பெண்ணின் அருகில் ஒரு குழந்தையைக் கண்டேன். அவர்கள் இருவரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். எரி காயங்களினூடாகச் சதை தெரிந்தது. குழந்தை வீறிட்டுக் கொண்டி ருந்தது. நாங்கள் சிறுவர்களாக இருந்ததால் எங்களால் அக்குழந்தைக்கு எவ்விதத்திலும் உதவமுடியவில்லை. உடல் முழுதும் எரிந்த நிலையில் ஒரு குதிரைஇறந்து கிடந்தது. அந்த முழுக்காட்சியும் பயங்கரமானது. நம்மால் அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எமக்கு முன்னாலிருந்த அச்சந்தரும் அந்த சூழலில் எம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம் ஆற்றை நோக்கி விரைந்தோம். ஆற்றுக்குச் செல்லும் ஒழுங்கைகள் யாவும் உடைந்துவிழுந்த வீடுகளின் சிதைவு களால் மறிக்கப்பட்டிருந்தன. அவற்றினூடாக நடந்து செல்வது சரிப் படாது என்பதால் உடைந்த கட்டடச் சிதைவுகளில் ஏறி ஒருவாறு ஆற்றையடைந்தோம். நாங்கள் ஆற்றையடைந்த அதே வேளை உடைந்து விழுந்த வீடுகளின் சிதைவுகளிலிருந்து ஒரு பெருந் தீ பரவ ஆரம்பித்தது. எரிமலை உடைந்து சிதறுவது போலச்சத்தம் கேட்டது.
=ஒரு குடம் கணினி

Page 139
240
"ஃபற்மேன் (Fat Man) நாகசாக்கியில் போடப்பட்ட
அணுக்குண்டு
தீச்சுவாலை ஆகாயத் தில் உயர எழுந்தது. இப்போது அந்தச் சூழ் நிலையை நினைத்தாலும் பயமேற்படுகிறது. நாங்கள் அதிர்ஷ்டக் காரர்கள். அந்தத் தீயிலிருந்து தப்பித்துக் கொண்டோம்.
இத்தீசிதைவுகளிலிருந்து எழுந்தது. குண்டு வெடிப்பின் பின் நிலவும் அதிகூடிய வெப்பம் காலை ஆகாரம் தயாரிப்பதற்காக மூட்டப்பட்ட தீயுடன் பற்றிக் கொண்டது. "சுப்பர் ஹை டெம்பரேச் சர் ஃபையர்’ என்று அதற்குச் சொல்லப்படுகிறது. உடைந்த கட்ட டங்களுக்குள் பலர் அகப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு உதவுவதற்கான வழிகள் ஏதும் இருக்கவில்லை. ஒரிருவர் சேர்ந்து இவர்களைக் காப்பாற்றுவது இயலாத காரியமாக இருந்தது.
சற்று நேரத்தில் இப்படிக் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய வர்களை நெருப்பு அணைத்துக் கொண்டது. ஹைப்போ சென்டரின் இரண்டு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் மரவீடுகள் உட்படத் தன்னால் எரித்துச் சாம்பலாக்க முடிந்த அனைத்தையும் அந்தத் தீ எரித்து முடித்தது.
மெதுவாக நகர்ந்து ஆற்றங்கரையை அடைந்ததும் ஆற்றுக் குக் குறுக்காக அமைக்கப்பட்ட பாலம் தப்பியிருந்ததைக் காண ஆச்ச ரியமாக இருந்தது. அந்தப் பாலம் எமது உயிரைப் பாதுகாத்தது. பாலத்தைத் தாண்டி அடுத்த பக்கம் சென்ற பின் திரும்பிப் பாரத்தால், எனது நண்பன் யமமோட்டோவைக் காணவில்லை. யாரோ ஒரு நபர் அவனை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டதாகப் பின்னர் அவனது தாயார் சொல்லக் கேள்விப்பட்டேன். ஆனால் ஆறுவாரங்களுக்குப் ඌ|තළී]]&) சிஹாப்தீனி
 

241 பிறகு - செப்டம்பர் 16ம் திகதி கதிர்வீச்சுத் தாக்கத்தால் அவன் இறந்து போனான்.
நான் ஆற்றின் அடுத்த பக்கத்துக்கு வந்து சேர்ந்து விட்டேன். இப்போது ஹைப்போசென்டரிலிருந்து மூன்று மீற்றருக்கு அப்பால் நான் நின்றிருந்தேன். இந்தப் பக்கம் தீவிபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புக் கிடையாது. ஒஹ. நான் உயிருடன் இருக்கிறேன்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனது கண்களிலிருந்து கண்ணிர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. அதே வேளை எனது உடல் தாங்க முடியா தபடி சூடாக இருந்தது. எனவே நான் ஆற்றில் இறங்கினேன். ஆற்றின் குளிர்ந்த நீரில் நிற்பது சுவர்க்க சுகமாக இருந்தது. அதேவேளை அந்த ஆற்றிலே மனிதர்களின் இறந்த உடல்கள் மிதந்து சென்றன. அந்த ஆறு பூமியின் நரகம் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான உடல்களைக் கண்டேன். பலர் தம்மைக் காத்துக் கொள்ள வழியின்றி ஆற்றுநீரை அருந்தினார்கள். பின்னர் ஆற்றுநீரோடு மரணத்தை நோக் கிச் சென்றார்கள்.
நான் ஆற்றிலிருந்து வெளியேறிய பின்னர் மலைகளிலிருந்து பெறப்பட்ட மூங்கில்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நிவாரண நிலையத்துக்கு வந்தேன். அங்கு ஒரு சிறு சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு சற்று நேரம் தங்கியிருந்தேன். குண்டு வீச்சினால் பாதிக்கப் பட்ட அநேகமானோர் சிகிச்சைக்காக
அங்கு வரிசையில் காத்திருந்தார்கள்.
திடீரெனக் கறுப்பு மழைத் துளி கள் பூமியில் விழ ஆரம்பித்தன. இதுதான் 'கறுப்பு மழை" என்று அழைக்கப்படுகி றது. குண்டு வெடிப்பினால் ஆகாயத்துக் குச் செல்லும் புழுதிமழை நீருடன் கலந்து பொழிகின்ற போது அது கறுப்பு மழை யாகிறது. கறுப்பு மழை கதிர்த் தாக்க முடையதாக இருந்தது. இந்த மழையில் நனைந்தவர்கள் பின்னர் கதிர்வீச்சுத்தாக்க நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். நல்ல
= SCB ELð sæfarfo

Page 140
242
வேளையாக இந்த நேரத்தில் நான் நிலையத்துக்குள் இருந்ததால் மழையில் நனையவில்லை. வாழ்வில் முதல் முறையாக கறுப்பு மழை பொழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்து. இதற்கு முன்னர் எப்போதாவது பூமியில் கறுப்பு மழை பொழிந்துள்ளதா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
மழை பெய்து முடியும் வரை காத்திருந்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். உடற்காயங்களின் வருத்தத்தோடு ஆறு கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல முடியுமா என்ற பயமும் இருந்தது.
நான் நடந்து கொண்டிருக்கும் போது "தக்காவுரி. தக்காவுரி. என்னையும் உன்னுடன் வீட்டுக்குக் கூட்டிச் செல்.” என்றொரு குரல் கேட்டது. அந்தக் குரலில் வேதனையின் முனங்கல் இருந்தது. சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் எனது வகுப்புத் தோழன் தொக்கு ஜிரோ ஹட்டா. தெருவோரத்தில் வருத்தத்துடன் குனிந்தபடி அமர்ந் திருந்தான். நாங்கள் இருவரும் ஒரேயிடத்தைச் சேர்ந்தவர்கள் மட்டு மல்ல இருவரும் சேர்ந்தே பாடசாலைக்கும் செல்வோம். அவனது பாதங்கள் கிழிந்து புண் தெரிந்தது. அவனால் நிச்சயமாக நடக்க முடியாது என்று தெரிந்தது. இங்கு எப்படி வந்து சேர்ந்தாய் என்று அவனைக் கேட்டேன். அறிமுகமற்ற ஒருவர் அவனை சைக்கிளில் கொண்டு வந்து விட்டதாகச் சொன்னான். அவன் எனது நண்பன். அவனை எப்படிக் கொண்டு செல்வது என்று யோசித்துக் கொண்டி ருந்தேன். அவனை அந்த இடத்தில் விட்டு விட்டு என்னால் வீட்டுக்குச் செல்ல முடியாது.
நடந்து போன துர்ப்பாக்கியத்துக்குள்ளும் அவனைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் இருந்தது. அவனது பாதங்களைத் தவிர உடலில் வேறு எந்த இடங்களிலும் காயங்கள் இருக்கவில்லை. அவனுக்கு உதவுவதற்கு இரண்டு வழிகளை யோசித்தேன். அவற்றில் ஒன்று, கைகளை ஊன்றி முழங்கால்களால் நடப்பது. நாய் அல்லது பூனையைப் போல அவன் நடந்து வரவேண்டும். இப்படி நடந்து வந்தால் அவனுடைய பாதம் பூமியில் படாது. அடுத்தவழி என்ன வெனில் எனது தோளில் சாய்ந்தபடி அவன் அவனது குதிக்கால்களால்
clay3, சிஹாப்தீன்

243
நடந்து வருவது. இந்த இருவழிகளையும் மாற்றிமாற்றிப் பயன்படுத்தி மெது மெதுவாக வீட்டை நோக்கி நகர்ந்தோம். இந்த வழிமுறைகள் அப்போது எப்படித் தோன்றியது என்பது பற்றி இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு நாங்கள் நகர்வதும் ஒய்வெடுப்பதுமாக நடந்து கொண்டிருந்த போது கணவனும் மனைவியுமாக எனது உறவினர்கள் வருவதைக் கண்டேன். அவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் என்னால் முடியுமானவரை சத்தமிட்டு அவர்களை அழைத்தேன். எங்களை அவர்கள் அந்த இடத்தில் கண்டதில் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இருவரும் எங்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றார்கள். அவர்களது உதவி கிடைக்கவில்லையாயின் நாங்கள் சிலவேளை தெருவோரத்திலேயே மரணத்தைத் தழுவியிருப்போம்.
நானும் நண்பனும் எனது பாட்டனார் கொண்டுவந்த ஸ்ட்ரெச்சரில் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். வீட்டை யடைந்ததும் எனது ஆடைகளைக் கத்தரிக்கோல் கொண்டு எனது தாயார்துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார். ஆடையைக் கழற்றினால் அது கைகளிலும் கால்களிலும் உள்ள புண்களில் பட்டு எனக்கு வேதனையைத் தரும் என்பதாலேயே எனது தாயார் அவ்வாறு செய்தார். அது அகற்றப்பட்டதும் கோடை காலத்தில் அணியும் பருத்தியினாலான "கிமோனோ" எனக்கு அணிவிக்கப்பட்டது. இரண்டு தினங்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 8ம் திகதி எனது நண்பன் ஹட்டா கதிர் வீச்சின் தாக்கத்தால் இறந்து போனான்.
அதன் பின் ஒன்றரை வருடங்கள் எனது காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வந்தேன். எங்களுக்கு அறிமுகமாக கண், மூக்கு, தொண்டை வைத்தியர் ஒருவர் எனக்கு வைத்தியச் சிகிச்சை மேற் கொண்டார். உண்மையில் அந்தப் புண்களுக்கு சிகிச்சையளிக்க அவர் பொருத்தமற்றவர்தான். எமது பிர தேசத்தில் வேறு வைத்தியர்களோ தாதிகளோ மருந்து வகைகளோ ஏன் உணவோ கூடக் கிடைக்கவில்லை.
ஒரு குடம் கணினி

Page 141
244
அணுக்குண்டு போடப்படுவதற்கு முன்னர் 300 வைத்தியர்களும் 1800 தாதிகளும் ஹிரோஷிமா நகரத்தில் இருந்தார்கள் என்று மதிப்பிடப் பட்டிருந்தது. அவர்களில் 70 வீதமானோர் குண்டு வீச்சின்போது கொல்லப்பட்டார்கள்.
நான் உண்மையில் அதிர்ஷ்டக்காரன். தகைமைகளுக்கு அப்பால் ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டி யது. பாதிக்கப்பட்ட பெருந் தொகையானோருக்கு வைத்திய உதவி கிடைத்திருக்கவில்லை. இவ்வாறுதான் நான் தப்பிப் பிழைத்தேன். உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன்.
எப்படியிருந்த போதும் சிகிச்சை வேதனை தரும் ஒன்றாக இருந்தது. மெல்லிய துணியில் மருந்து பூசப்பட்டு புண்மீது வைத்து மூடப்படும். அடுத்தநாட் காலை வைத்தியர் வந்து அதனை அகற்று வார். கோடை காலம் என்பதால் அந்தத் துணி புண்ணுடன் காய்ந்து போயிருக்கும். அவற்றை அகற்றும் போது வலியினால் துடிப்பேன். எனது பாட்டனார் அந்தத் துணியை அவித்துச் சுத்தப்படுத்திக் காய வைப்பார். அதற்கடுத்த தினம் அது மீண்டும் பயன்படுத்தப்படும். பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் நிலவிய தட்டுப்பாடு காரண மாகச்சரியான மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. குண்டு வீச்சிலிருந்து நான் தப்பிய போதும் கதிர் வீச்சுத் தாக்கத்தின் காரணமாக 1971லிருந்து கல்லீரல் அழற்சியினால் பாதிக் கப்பட்டேன். 14 முறைகள் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டேன். இப்போது வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை ஊசி மருந்து மூலம் வைத்தியம் செய்யப்படுகிறது. இப்போதும் நான் பல்வேறு வைத்தியர்களிடம் சிகிச்சைபெற்று வருகிறேன். தினமும் மன உழைச்சல் மற்றும் வாழ்வை எதிர்கொள்வதில் ஏற்படும் பல்வேறு வலிகளினால் அவதிப்படுகிறேன். இவ்வளவு துன்பங்களை அனுபவித் துக் கொண்டு எதற்காக உயிர்வாழ வேண்டும் என்று சிலவேளைகளில் நான் நினைப்பதுண்டு. நம்பிக்கை யீனம் ஏற்படுந்தோறெல்லாம் உயிர் தப்பி வாழக் கிடைத்திருக்கிறதே. எனவே வாழ்ந்தே முடித்துவிடுவோம்'
அஷ்ரஃப் சிஹாப்தீன்:
 

245
என்று என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன்.
புண்களால் ஏற்பட்ட தழும்புகள் எனது உடல் பூராவும் உள்ளன. எனது வலது : கரத்திலும் மணிக்கட்டு முதல் விரல்கள் வரையும் தோல் பொங்கியிருக்கிறது. எனது வலது முழங்கை 120 பாகையில் அப்படியே ሩ இருப்பதால் அதற்கு அப்பால் அதை வளைப் யமமோட்டோவின் பதற்கு முடிவதில்லை. கட்டை விரல் தவிர பாடசாலைச்சீருடை ஏனைய எனது விரல்கள் வளைந்த நிலையில் இருக்கின்றன. அவற்றை இயல்பாக நகர்த்த இயலவில்லை. எனது சுட்டு விரல் நகம் கறுப்பாகவும் தடிப்பானதாகவும் வளர்கிறது. குண்டு
வெடிப்பின் காரணமாகச் சிதறிய கண்ணாடித்துகள் நகத்துக் கூடாகச் சென்று நகத்தை உண்டு பண்ணும் கலங்களைச் சிதைத்து விட்டிருப் பதாக வைத்தியர் சொல்கிறார். அது மிகவும் கடினமானதாக இருப்ப தால் சாதாரணமான நகம் வெட்டும் கருவியால் அதனை வெட்டமுடி யாது. அதை இரண்டு மூன்று வருடங்களுக்கு வளர விடுகிறேன். பிறகு அதில் வெடிப்பு ஏற்பட்டு இயல்பாகவே விழுகிறது. ஹிரோஷிமாவின் அமைதிக்கான ஞாபகார்த்த அரும் பொருட் காட்சிச்சாலைக்கு அவற்றில் இரண்டு துண்டுகளைக் கொடுத்திருக்கிறேன். அவை காட்சிப் பொருட்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
எனது இரு காதுகளும் சுருண்டு சிறுத்துக் காணப்படுகின் றன. மென்சவ்வுகளில் சீழ் கட்டியதால் வைத்தியர் அதனை அகற்றிய போது காது சிறிய அளவில் சுருண்டுள்ளது.
எனது நண்பன் யமமோட்டோவின் பாடசாலைச் சீருடை யை அவனது தாயார் ஒரு ஞாபகார்த்தப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தார். அவனது உடன் பிறப்புக்கள் அணுக்குண்டுப் பாதிப்பு அரும் பொருட்காட்சிச் சாலைக்கு அந்தச் சீருடையை ஜூன் 2003ல் கைய ளித்தனர். 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் திகதி 59 வருடங்களுக்குப் பின் அந்தச் சீருடையை மீண்டும் பார்த்தேன். கண்ணிர் பொங்காமல் அதனை மீண்டும் என்னால் பார்க்க முடியவில்லை. அமெரிக்கா எதற்
HEID குடமீ கfைரீைர்

Page 142
246
காகக் கருணையில்லாமல் 7200 மாணவர்களைக் கொன்றது? மீண்டும் அமெரிக்கா மீது வேதனை, வெறுப்பை உணர்கிறேன். எப்படியாக இருந்த போதும் வெறுப்பு ஒரு போதும் இன்னொரு வெறுப்பை அழித்து விடாது. வெறுப்பு நிலவுகின்ற போது நாம் அமைதியை அடையமுடியாது. நாம் வெறுப்பைத் தாண்டிச் சென்றாக வேண்டும்.
எனது வகுப்புத் தோழர்கள் அறுபது பேரில் 14 பேர் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். யம மோட்டோ, ஹட்டா உட்பட ஏறக்குறைய 50 பேர் அணுக் குண்டி னால் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது மரணங்கள் அர்த்தமற்றவையாகி விடக் கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் யுத்த காலத்திலிருந்து நான் செயற்பட்டு வருகிறேன். இறந்துபோன பெருந் தொகை மக்களின் நல்லெண்ணத்தையும் அவர்களது கேட்க முடியாத குரலையும் உலகுக்கு முன்னால் எடுத்துச் செல்வது உயிர் தப்பிய எங்களது கடமை என்ற உறுதிப்பாட்டுடன் தான் நான் செயற்பட்டு வருகிறேன். உயிரிழந்த எனது நண்பர்கள் சார்பாகவே நான் வாழ்ந்தும் செயற்பட்டும் வருகிறேன்.
பரிசோதனை முயற்சியாகவே அணுக்குண்டு போடப் பட்டது என்பது தெளிவானது என்று நான் நம்புகிறேன். எனது பார்வைக்குச் சார்பானதாக மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது:- அமெரிக்கா இரண்டு வகை அணுக்குண்டுகளை உருவாக்கியது. அவற்றின் பேரழிவு வித்தியாசங்களை அமெரிக்காவுக்கு அறிந்து கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அவற்றில் ஒன்று ‘லிட்டில் போய்" -(Little Boy) யுரெனியம் வகையைச் சேர்ந்த இக்குண்டுதான் ஹிரோஷிமாவில் போடப்பட்டது. மற்றையது 'ஃபற் மேன்" - (Fat Man) என்று அழைக்கப்பட்டது. புளுட்டோனியம் வகை சார்ந்த இந்தக் குண்டு நாகசாக்கி மீது போடப்பட்டது. இவ்விரண்டு குண்டு களும் வித்தியாசமான அணுத்திணிவையும் வடிவையும் கொண்டவை.
இரண்டாவது:- தொழிற்பேட்டை, இணைந்த வீட்டுத் தொகுதிகள் கொண்ட நகர்ப் பிரதேசத்தைக் குறிவைத்துக் குண்டு போடப்பட்டது. இராணுவக் கொள்கையைக் கைவிடச் செய்வதற்கு பெருமளவிலான ஜப்பானிய மக்களைக் கொல்வது அவசியம்.
அஷ்ரஃப் சிஹாப்தீன்=

247
ஆண்டாண்டுகளuய்
நினைந்தழுதல்
மூன்றாவது:- ஏற்கனவே ஆகாயக் குண்டு வீச்சினால் பெரும ளவில் சேதமடைந்த நீகர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்போ திருந்தே இவ்வாறான நகரங்களில் மேலும் குண்டு வீசப்படுவது தடை செய்யப்பட்டிருந்தது. இம்மூன்று காரணங்களையும் கொண்டுதான் அணுக்குண்டின் பேரழிவைப் பரிசோதிக்க இந்த நகரங்கள் பயன்படுத் தப்பட்டன.
அணுக்குண்டு போடப்படுவது தன்னளவில் சரி என்று அமெரிக்கா கருதியது. அமெரிக்க அதிகாரிகள், ஜப்பானியப் பிரஜை கள் அடங்கலாகப் பத்து லட்சம் பேரைக் காப்பற்றலாம் என்றும் அது நினைத்தது. இவற்றையெல்லாம் நிறுத்திச் சிந்தித்துப் பார்க்கும் படி நான் அமெரிக்காவைக் கோருகிறேன். ஏனெனில் பத்து லட்சம் பேரைக் காப்பற்றலாம் என்பது அமெரிக்காவின் ஒரு அனுமானமாகத் தான் இருந்தது. ஆனால் ஹிரோஷரிமாவிலும் நாகசாக்கியிலும் போடப்பட்ட குண்டுகளினால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த உயிர்களைத் திரும்பிக் கொடுப் பதற்கு அமெரிக்காவினால் எதைச் செய்ய முடியும்?
அணு ஆயுதங்கள் அத்தனையும் அதிபயங்கரமானவை. பாதிக்கப்பட்ட நாம் அனைத்து யுத்தங்களையும் எதிர்க்கிறோம். பேராசை வெறுப்பு ஆகியவற்றை வேரறுத்து உலகில் உள்ள மொத்த அணுஆயுதங்களையும் அழித்துவிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு உலகத்தைக் கோருகிறோம்.
- ஒரு குடம் கணிரீைர்

Page 143
248
உலகில் தற்போது 16,000 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 90 வீதமானவை ஐக்கிய அமெரிக் காவிடமும் ரஷ்யாவிடமும் உள்ளன. அணு ஆயதங்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவும் ரஷ்யாவுமே முன்னிலை வகிக்கின்றன. அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அணுஆயுதப் பரம்பல் தடை உடன் படிக்கையின் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொண்டுள்ளன. இந்த முரண்பாட்டைச் சர்வதேச சமூகமும் அங்கீகரித்துள்ளது. குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட எம்மால் எதுவும் செய்யமுடியாத போதும் நியாயத்துக்கு அப்பாற்பட்ட, பகுத்தறிவுக்குப் பொருந்தாத இந்த நிலையையிட்டு நாம் மிகவும் வன்மையான எதிர்ப்புணர்வுடன் இருக்கிறோம்.
சர்வதேச நலன்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தும் அணுஆயுத சக்தியைக் கொண்டுள்ள கர்வத்தின் காரணமாகவும் அவற்றின் மீது தனது மேலாண்மையைப் பயன்படுத்த எண்ணும் அமெரிக்காவின் நிலைப்பாடு காரணமாகவும் நான் எதிர்பார்த்ததைப் போலவே அணுவாயுதப்பரம்பல்தடை உடன்படிக்கை பற்றிய கடந்த மே மாத மாநாடு எவ்வித உறுதியான தீர்மானங்களுமின்றி முடி வடைந்துள்ளது.
இருப்பினும் எவ்வளவு முறை தட்டிக் குனிய வைக்கப்பட்ட போதும் அணுக்குண்டு வீச்சில் தப்பிய நாம் மீண்டும் மீண்டும் எழு வோம். யுத்தங்களுக்கு எதிராக விடாப்பிடியாகக் குரல் கொடுப் போம். கடைசி மூச்சு வரை அணுஆயுத அழிப்புக்கான செயற்பாடு களை முன்னெடுப்போம்.
அணுஆயுதங்களை வைத்திருக்கும் ஐந்து நாடுகளையும் குறிப்பாகத் தனது நாட்டு நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அம்ெரிக்காவையும் மனித குலத்தின் பேரால் சர்வதேசத்தின் நலன் களுக்காக ஒன்று சேர்ந்து செயற்படுவதைத் தாமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
உலகம் இன்னும் வல்லாதிக்கச் சமநிலைக் கொள்கையினால் அதிகாரம் செய்யப்படுகிறது. இந்த நிலை உலகத்தின் அழிவுக்கே வழி அஷ்ரஃப் சிஹாப்தீனி

249
கோலுவதாக இருக்கிறது. இந்த அபாயகரமான சூழலில் உலகத்தின் ஒவ்வொரு நகரத்தையும் ஒவ்வொரு பிரஜையையும் நான்வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது என்னவெனில், எதிர் அணுகுமுறைகளைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலமாக ஒற்றுமையை வளர்த்து, நம்பிக்கை யின்மையைக் களைந்து, நட்புறவை மேற்கொண்டு, நமக்கிடையில் நாம் ஒன்று திரண்டு அணுஆயுத நாடுகளிடம் "உடனடியாக அணுஆயுதங்களை அழியுங்கள்’ என்று வற்புறுத்த வேண்டும்.
அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் அன்புக்குரிய தலைவர்களே, அணுஆயுதங்களை வைத்திருப்பதில் நீங்கள் இன்னும் விடாப்பிடியாக இருப்பீர்களாயின் அணுக்குண்டு வீச்சினால் பாதிக் கப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எங்களது அனுபவங் களை நீங்களும் சந்திக்க நேரும். அணு ஆயுத வெடிப்பின் வெப்பக் கதிர்களின் கொடூரங்களை முதலில் நீங்கள் அனுபவித்தவர்களாக இருந்திருந்தால், உங்களால் கதிர்த்தாக்கத்தின் பயங்கர விளைவுகளைச் சந்திக்க நேர்ந்திருந்தால் நீங்கள் எங்களது வேண்டுகோளின் நியாயத்தை உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
அணுவாயுத நாடுகளின் அன்புக்குரிய தலைவர்களே, இன்று நீங்கள் தயங்குவீர்களானால் நாளை ஒரு பேரழிவுக்கு அது இட்டுச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அணுவாயுத நாடு களின் தலைவர்கள் நினைத்தால் அணுவாயுதங்களை ஒரு கணத்தில் அழித்து விடலாம்.
சர்வதேசச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் உலகம் ஒருபோதும் அமைதியைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஈராக்கில் நாம் கண்டதைப் போல - அது உண்மையான வெற்றியல்ல. நிச்சயமாக ஒர் அதிகாரம் இன்னொரு அதிகா ரத்தை அடக்குவதன் மூலம் அமைதி தோன்ற முடியாது. உலக நாடுகள் மிகுந்த பிரயத் தனத்துடன் கட்டியெழுப்பி
* :XRK: ఖs:భ$xఖళ్ల జ్ఞ
REMEMBER HROSHInn ୫ NASAK,
|ඉq5 ගL|5 ඝගlගා)

Page 144
250
யிருக்கும் கட்டமைப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். ஏனைய மக்களோடும் மதத்தோடும் கலாசாரத்தோடும் ஒன்று பட்டு அமைதி யாக வாழ்வதற்குத் திடசங்கற்பம் பூணவேண்டும். அதுவே வளமும் பாதுகாப்பும் கொண்ட உலகைக் கட்டியெழுப்பும் அடித்தளமாகும் என்று நான் உறுதியாக நம்பு கின்றேன்.
யுத்தங்கள், அணுவாயுதங்கள், பயங்கரவாதம், பூகோளம் வெப்பமடைதல், பஞ்சம், அகதிகள், வன்முறை, மனித உரிமை மீறல் ஆதியன உள்ளடங்கலான 20ம் நூற்றாண்டின் எதிர்மறைப் பண்பு களால் மனிதக் குடும்பம் போராடிக் கொண்டிருக்கிறது.
21ம் நூற்றாண்டில் வாழும் மக்கள் இந்த எதிர்மறைப் பண்பைச் சரியாகக் கையாளத் தவறினால் இந்த நூற்றாண்டுதான் பூமியில் மனிதர்கள் வாழ்ந்த கடைசிக் காலப் பகுதியாக இருக்கும்.
நன்றி:
01, mayorsforpeace.org
02. wikipedia.org
తిండి తీDrజీటి;

நன்றி
ஜாஃபர் சாதிக் பாக்கவி ஷிராஸ் ஒஸ்மன் வநளஷாத் விமாஹிடீன்
D சமநிலைச் சமுதாயம் இந்தியா) விடிவெள்ளி நவமணி
|ඉංග්‍ය ගuර් ඝගlගff

Page 145
நூலாசிரியரின் பிற நூல்கள்
கவிதை
காணாமல் போனவர்கள் - 1999
உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 (மொழிபெயர்ப்பு)
என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது)
சிறுவர் இலக்கியம்
usion - 2007 ரூம் டு ரீட் நிறுவன வெளியீடு
கறுக்கு மொறுக்கு - முறுக்கு - 2009 ரும் டு ரீட் நிறுவன வெளியீடு
புல்லுக்கு அலைந்த மரில்லா - 2009 சேமமடு பொத்தகசாலை வெளியீடு
geo60Tu60D6)
தீர்க்க வர்ணம் - 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு)
பரீலங்காவிலிருந்து பரீரங்கப்பட்டணம் வரை - 2009 (பயண அனுபவங்கள்)
=|ඉq5 ගLä ඝගlග්

.. . .

Page 146
&
蕊
缀
இ3
ஒ
இ:
இ
怒 இ
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
88.88.
་་་་་་་་་་་་་་
3.