கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலத்தின் புன்னகை

Page 1


Page 2

காலத்தின் புன்னகை
சித்தாந்தன்
குலன் வெளியீட்டகம்

Page 3
காலத்தின் புன்னகை
கவிதைகள் (C) சித்தாந்தன்
(p;5i) பதிப்பு: மே, 2000 வெளியீடு:
குலன் வெளியீட்டகம் கோண்டாவில் வடக்கு
கோண்டாவில், யாழ்ப்பாணம்
அச்சமைப்பு:
வவுனியா வடக்கு ப.நோ.கூ. சங்கப் பதிப்பகம்
புதுக்குடியிருப்பு. அட்டை ஓவியம்: முல்லைக்கோணேஸ்
விலை: ரூபா 65,00
Kalaththin Punnakai Collection of poems by Shiththantham
First Edition: May, 2000
Publishers: Ku Man Publishers Kondavil North, Jaffna
Pint d;
Vavuniya north M. P C S Press
Puthukkudiyiruppu
Cover Drowings by Mullaikkonesh
Price. Rs 65/-

அண்ணன் பார்த்தீபனுக்கும் நண்பன் ஜேம்ஸ் றஜிவனுக்கும்

Page 4

புதிய உணர்முறையிலான சித்தாந்தன் கவிதைகள்
மொழியின் ஆகக்கூடிய சாத்தியப்பாடுகளைக் கொண்டியங்கும் கவிதை, மொழியினூடாக உணர்தலை யும், உணர்தலை மொழியினுரடாசவும நிகழ்த்திக் கொண் டிருக்கிறது. கவிதை உணர்வாகவும் அனுபவமாகவும் உணர்வினதும் அனுபவத்தினதும் கூட்டுத்திரட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கே சித்தாந்தன் கவிதை களிலும் இதுவே நிகழ்கினறது. சித்தாந்தனின் கவிதைகள் புதிய உணர்முறையிலானவை.
** * சித்தாந்தன் புதிய கவிஞர். புதிய உணர்முறையுடை யவர். மாறுதலான ச விதை குறித்துச் சிந்திப்பவர். அமைதியும் அந்த அமைதிக்குள் உள்ளி பக்கமும் கொண் டவர் , மொழியை சித்தாந்தன் பயன்படுத்கம் முறைமையி னுாடாக இவரின் கவிதைகள் புதிய வெளிப்பாட்டையும் புதிதான உணர்முறையினையும் இனங்காட்டுகின்றன, உணர்வின் சாரத்தோடு இணையும் மொழியினை இவர் அதிக சாத்தியப்பாடு +ளுடன் சையாள்கின்றார். இந்தத் தொகுதியின் முகல் கவிதையான 'அலைகளின் மொழி கடலை இவர் உணரும் விதத்தையும் அலைகள் இவரூடு உணர்வாகும் தன் மையையும் தன் மொழியினுாடு படிக் கும் மனதில் உணர்வாக்கும் முறையிலும் இதனை நாம் தெரிய முடிகிறது. இவ்வாறுதான் இவரது அநேக கவிதை கள் இயங்குகின்றன .
சித்தாந்தன் கவிதைகளிலுள்ள சொற்களின் அமைவு கள் புதிய படிமங்களை மனதில் நிகழ்த்துகின்றன. புதிய காட்சிகளை விரிக்கின்றன . புதிய உணர்வினைக் கிளர்த்து கின்றன. இத்தகைய புதிய கவிதை முறைமை தொண் ணுாறு 4ளின் பின்னான ஈழத்துக் கவிதைகளில் அதிகமாகத் தொனிக்கத் தொடங்கியிருக்கிறது, -

Page 5
VII
ஈழத்துக்கவிதைகளில் அநேகமானவை நிகழ்வுச் சித் திரிப்பாகவோ காட்சி விரிப்பாகவோ, அனுபவ இயம்புத லாகவோ கதை கூறுதல் போலவோதான் இருந்து வந்துள் ளன. ஒரு மரபாகவும் அந்த மரபின் தொடர்ச்சியாகவும் இன்றும் இவ்வாறு எழுதப்படும் கவிதைகள்தான் அதிக மாகவுள்ளது. நமது கவிதைப் பரிச்சயமும் அறிமுகமும் கூட இவ்வாறுதான் இருக்கிறது. எமது போராட்டமும் அது சந்தித்த வாழ்வும் கூட இத்தகைய ஒரு கவிதைப் பண்பையும் கவிதைப் போக்கையும் உருவாக்கியுள்ளது என்பதனையும் நாம் அவதானிக்க வேண்டும் வடிவங்க ளும் மாற்றங்களும் புதிய பண்புகளும் போக்குகளும் காலத் தோடு இணைந்தே உருவாகின்றன. எமது கவிதையில் இருந்த இந்தப் பண்பு ளும் இந்த அடிப்படையிலானதே. இனறு இந்கத் தசாப்தத்தில் மாற்றமுற முயலும் போக்கு
இவ்வாறான தே,
தொண்ணுரறுசளில் பரிணமித்துள்ள புதிய கவிதை முறை, கவிபனம, தான் உணர்வதை படிக்கும் மனதும் உணர்வதான 8 விதைகளாக தருகின்றது. ஒரு பொருளை அல்லது ஒரு நிசழ்வை அல்லது ஒன்றை கவிமணம் உணர் வதுபோல படிக்கும் மனதும் சுயமாக உணர்வதை இக் கவிதை கொள்கிறது. வாசகனை இருத்திவைத்துப் போதிக் கும் மேல்நிலை-அதிகார நிைைல-யை இக்கவிதை தகர்க் கின்றது ஆனால் தெளிவும் ஒழுங்கமற்று சொற்கு விய லாக எழுதித் தள்ளப்படும் சில ச விதைகள படிக்கும் மன தில் தங்கி விடாமல் அழிந்துவிடும் அபாயமும் இதில் உண்டு. இங்கே "செய்யப்படும் கவிதைகள்' இப்போது நினைவுக்கு வருகின்றன. கவிதையை ஒரு தொழில் நுட்ப மாக பயின்று எழுதப டும் கவி ைக ச ஞம் உண்டு. இப்படி எழுதப்படும் கவிதைகளில் கவிதையின் இயல்புத்தன்மை அழிந்து, சூழலின அடையாளம் தவறி, பண்பாட்டின் முகம் மாற காலத்தின் தடங்கள் மங்கி, இயந்திரத் தன்மை கூடிவிடுகிறது. இது படைப்பின் இயல்பையும் அதன் அடிப்படையான உயிர்ப்பு நிலையையும் இழந்து விடுகிறது. ஆனால், சித்தாந்தன் தன் கவி ைத்களில் இந் தப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு செயற்படுவதை நாம் உணர முடிகிறது.
தொண்ணுாறு களின் இறுதிப் பகுதியில் எழுத்தில் இயங்கத் தொடங்கிய சித்தாந்தன் கடந்த மூன்று ஆண்டு சளுள் எழுகிய கவிகைகள் இவை. எழுதத் தொடங்கிய ஆரம்ப நிம0 லயிலேயே தொகுதியாக வெளிவரும் சாத்தியம் ஒரு படைப்பாளிக்கு நிமது சூழலில் கிடைப்பது அரிது. அது சித்தாந்து னுக்கு வ ய்த்திருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது . இந்த மூன்று வருடங்களில் ஈழக்கவிதை

VII
மரபின் தொடர்ச்சியாகவும் அதிலிருந்து முன்னே பாய்வ தாகவும் தன் கவிதைகளை எழுதியுள்ளார் சித்தாந்தன். பி 1 கி லிப்புக்களும் சுய ஆக்கி முமாக ஒரு தொடக்க நிலைப் படைப்பாளியின் இயல் போடு வெளிக்கிளம்பியுள்ள சித் தாந்தனின் கவிதைச் செ ற்பாடு புதிதான அடை ய வாத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. எழுதப்பட்ட காலவரிசை ஒழுங்கு படுத்தப்படாவிட்டாலும் கவிதை கள் அதைக் காட்டுகின்றன அதேவேளை சித் தாந் கன் புதிய விடயங்களை நோக்கிச் செல்ல வேண்டிய அவ சியத்தையும் இக் கவிதைகள் உணர்த்துகின்றன
கவிதை அறம் சார்ந்ததும் அறிவார்ந்ததுமான ஒரு செயற்பாடு என்பதில் சித்தாந்தன் தெளிவாக இருக்கின் றார். வாழ்வை நோக்குவதிலும் அதனை இயம்புவதிலும் கவிதை முக்கியமாகத் தொழிற்படுகிறது. தீவிர அக்கறை யின் பாற்பட்ட அவதானிப்பும் சிந்திப்பும் கவிகையிலும் அமைந்திருக்கிறது. கவிதை வாசிப்பிலும் இந்தப் பிரக்ஞை யும் அவதானிப்பும் அவசியமாகிறது. அக்கறையற்ற வாசிப் பில் கவிதை வாசகனை விட்டு வெகு தொலைவில் விலகி நிற்கிறது. அக்கறையின் தளத்தில் இயக்கம் கொள்ளும் கவிதை காலம் சூழல் என இரண்டும் இணையும் புள்ளி யில் மனித மனத்தில் உருவாகிறது. சித் காந்தன் இந்கப் புரிதலுடன் தன் கவிதைச் செயற்பாட்டில் இயங்குவதை புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்க் கவிதைப் பரப்பு பெரியது, பல நூற்றாண்டு களைக் கடந்து தொடர்வது. ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் கவிதைகளுடனான அறிமுகமோ, பரிச்சயமோ மிகமிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வரலாற்றி னையும் வாழ்வையும் எமது கவிதைகளே அநேகமான தருணங்களில் பதிவு செய்து வந்திருக்கின்றன; இவை பற் றிய நோக்கினையும் பேசி வந்துள்ளன. எமது கவிதைக்கு பெரும் சரித்திரப் பின்னணி இருக்கின்றது. இன்றைய சவிஞனுக்கும் படிப்பாளிக்கும் இந்த அறிதல்" மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.
எந்தப் படைப்பும் ஒரு சரித்திரப் பின்னணியுடனேயே படைப்பாக்கம் பெறுகிறது. எழுதப்படும் போதும் எழுதப் படுவதை ஏற்கப்படும் போதும் இந்தச் சரிக் திரப் பினனணி முக்கியமான காக இருக்கிறது. எமது சரித்திரப்பின்னணி இன்று அரசியற் கவிதைகளை (கவிதையில் அரசியல் கவிதை, பிறக்கவிதை என்று பிரிவு புளோ அடையாளங் களோ இல்லை நேரிடையாகவும். வெளிப்படையாசவும் அரசியற் பிரச்சினை உளையும் அரசியற் கருத்துருவங்களை யும் சார்ந்தும் பிரதிபலித்தும் இயங்கும் கவிதைகளை

Page 6
V
இங்கே ஒரு புரிதலுக்காக அரசியல் கவிதைகள் எனக் குறிப் பிடுகிறேன்) எழுதும்படி கவிஞனைத் தூண்டுகின்றது. அர சியல் கவிதை ச ஞ க்கான எதிர்பார்க்கையும் வாசகரிடத்தே அதிகமாகவுள்ளது .
சித்தாந்தனின் "காலத்தின் புன்னகை யிலும் இந்தச் சரித்திரப் பி எனணியும் அதனாலான அரசியற் கவிதை களும் இடப் பெறுகின்றன போரையும் போர் வாழ்வையும் ஈழப்போராட்ட வாழ்வின் முகத்தையும் இந்தக் கவிதை களில் பல உணர்தளமாகக் கொண்டவை; இனவாத அரசியலின் உக்கிரத்தை எதிர்த்து நிற்பவை; அந்க அரசி யலின் கபடத்தனத்தை புலப்படுத்தும் ஒளிப்பொறி
lL||T 607 Gö36)f,
இந்தத் தொகுதியில் அரைவாசிக்கு மேலான கவிதை கள் அரசியல் பிரச்சினையின் உணர்வுகளே . இவர் தன் கவிதையில் கொண்டுள்ள உணர்வை (விசயத்தை) பிற கவி கள் எழுதியிருந்தாலும் இவரிடம் அவை வெளிப்பாடடையும் விகம் வேறானவை; புதியவை; கவனிக்கத்தக்கவை; உயிர்ப்புள்ளவை; உதாரணமாக ஆட்களற்ற கிராமத்தை சித்தாந்தன் உணரும் விகத்தை "மனிதர்களற்ற கிராமத் தின் கதை"யில் காணலாம்.
அரசியல் நேரடியாக வாழ்வைப் பாதிக்கம் போதும் அது சிதைந்த வாழ் வை ஒழுங்குபடுத்தும் போதும் கவி மன தில் பெறும் உணர்தல் கவிதையிலும் அமைந்து விடு கிறது. சித் காந் தனின் கவிதைகள் பலவற்றிலும் உள்ள தீவிரம் அதிவேகமாய்ச் சுழலும் மாபெரும் சிக்கரமாகி நமது உணர்தளத்தை அத் தனை வலுவுடன் தாக்குகிறது. சுழலும் சக்கரத்தின் இயங்குமையமாக இவரின் கவிதை மொழி உணர்வு கொள்கிறது.
இதனைப் புரிந்து கொள்வதற்கு புதிய முறையிலான கவிதை வாசிப்பு இங்கே அவசியமாகிறது . வாசக அறி வாற்றலையும் உணர்திறனையும் மனதின் இயங்க முனை களையும் வேண்டி நிற்கின்றன இவ்வாறான கவிதைகள். இந்தக் கவிதைசளுடன் பயணிக் கி முடியாத ஒரு படிப்பா ளன் மிகவும் தேங்கி ப நிலையிலேயே இருக்க வேண்டிய தாகிறது அதே வேளையில் அவன் மொழியினதும் சிந்த  ைனயினதும் உணர்முறையினதும் இயக்கத் ைசுத் தவற விட்டவனுமாகிறான். சித்தாந்தன் மொழியினூடேயும் உணர்முறையிலும் வலுவோடு ஊடுருவிச்செலகின்றார்.
சித்தாந்தனின் அநேக கவிதைகளில் இன்னொரு அம்சமும் உண்டு. எதிர்வெளியில் பாத்திரத்தைச்

X
சிருஷ்டித்து அதனுடன் உறவாடுகிறார்; சில சந் தர்ப்பங்களில் அந்தப் பாத்திரத்துடன் மோதுகிறார். தருணங்களில் விலகுகிறார்; குற்றம் சாட்டுகிறார்; பிடி வாதமாக நிற்கிறார்; தழுவுகிறார்; சரித்து வீழ்த்து கிறார். இப்படி பல வண்ணங்களில், தான் சிருஷ்டித்த பாத்திரத்துடன் அவரது உணர்தல் நிகழ்கிறது: இந்தப் பாததிரம் தருணங்களில் வேறு வேறு தளங் ஞக்குத்தாவி வெவ்வேறு இயல்புடன் நிற்கினறது. அது சித்தாந்தனின் காலத்திலும் சூழலிலும் இயங்கிக்கொண்டிருக்கும் அவ ரைப் பாதிக்கும் மையமே. இது வேளைகளில் பல பாத்திரங்களாக புலப்படுவதையும் நாம் உணரலாம், இது சித்தாந்தனுக்கு மட்டும் நேரும் நிலைமையல்ல. நமக்கும் கூட இப்படித்தான் நேர்கிறது.
ஒரு தொகுதியில் படைப்பாளியின் மனவுலகு நிச்சய மாகப் புலப்பட்டே தீரும், இங்கேயும் சித்தா ந்கனின் ம ைவுலகு நன்கு தெரிகிறது. அவசியமான இடைவெளி, மெளனப் பிரளயம், எதிலும் நானில்லை, ஆதியிலி ருந்து என் வருகை ஆகிய கவிதைகள் புலப்படுத்துகின் றன. - ܗܝ
"நீ இன்னும் , உன் சிறகுகளின் வலிமைக்கு R என்னை வலிந்திழுக்கிறாய். நீ போய் விடு -- தெ (ாடமடியாத தூரமாயே
எம் இடைவெளி இருக்கட்டும்'
என்று தன்னை நிலைப்படுத்தும் சித்தாந்தன் நம் மிடம் தன்னை மிக நிதானத்தோடு இருத்திவிடுகிறார். பல பரிமாணங்கிளுடைய இந்தக் கவிதை வரிகளினூடே எண்ணங்களாயும் உணர்வாயும் விரியும் இயல்போ டிருக் கின்றன. இவ்வாறு பல கவிதைகள் இந்தத்தொகுப்பில் உள்ளன. மனித உறவு, இயற்கை மீதான பிரியம், மனம் தாவும் வெளிகள் என பல கோலங் கிளைக் காட்டும் 4 வி தைகள் பல இவரின் கவிதைப்பரப்பை உணர்த்துகின்
· ዶD@J• | . ܐ ܡ ܥ
சமகால ஈழத்துக்கவிதைகள் ஒரே சுழலிலேயே வாசகனை அழைத்துச் செல்கின்றன. சித் தாந்தன் கவிதை களிலும் இவ்வாறான நிலையிருந் காலும் அவர் புதிய வெளிசளுக்கும் பயணிக்கின்றார். இந்தப் பயணிப்பே இனி இவரின் கவிதையாகட்டும் , - இயக்கச்சி, . கருணாகரன் 2000-02-27. 莺*、

Page 7
எழுத வேண்டிய குறிப்புகள்
- - - வாழ்வின் அர்த்தப்படுத்தலுக்கான போராட்டங்கள் : நிறைந்த எனது நாட்களில் மனதில் மூண்டு பெருகி வளர்ந்த உணர்வுகளின் பதிவே இந்தக காலத்தின் புன்னகை துயரங்களையும், கனவுகளையும் சுமந்துக்ால வெளியில் நடந்து உள்ளத்தின் உணர்வுகளுக்கு மொழியை வசப்படுத்தியிருக்கிறேன்.
நெருக்கடிகள் வலியகரங்களாய் நீண்டு, இருப்பை வளைத்த காலங்களில் எனது இருப்பின் மேலா ன அக்கறைகள் ஆழ்மனதில் படிவதை புரிய முடிகிறது. இந் தப் புரிதலே என்னை நீளமான மெளனத்துள் புதைத்து விடுகின்றது. மெளனங்களிலிருந்து வார்த்கைகள் உணர் வுகளை கிளர்த்தியபடி கவிதைகளாகி விடுகின்றன .
அர்த்தங்கள் நிறைந்த எனது மெளனப் பொழுது களில் வாழ்க்கையின் உள்முகம் ஒரு புள்ளியிலிருந்து வியா பிப்பதை எனது உணர்வுகள் சுட்டுகின்றன. இந் கச். கட்டுதலே நம் பிக்கையாகி துளிர்விடுகின்றது. வாழ்வின் அநுபவங்கள், மனதின் குமைச்சல்கள், சுதந்திரம் தேடிய தான பறத்தல் இவைகள் அ னைத்தும் கலந்த சங்க ja என்கவிதைகளில் பிரதிபலிக்கும் என நம்புகி
எனது சிறுபராயத்திலிருந்து ஒரு ஒ விய னாக ம் கனவே எண் ணங்களை ஆக்கிரமித்திருந்தது. கவிஞ னாக நான் வந்தது ஒரு விபத்துப் போலவே நடந்தேறி யிருக்கிறது. இது சாதாரண விபத்தன்று! எனது உணர் வுகள் முழுவதையும் கவித்துவப் படுத்தியிருக்கின் nது. எனது ஓவியம் பற்றியதான உணர்வோட்டம் எனது கவிதைகளிலும் ஒளிர்வதை சில இடங்களில் உணரமுடி கின்றது. துரிகைகளுக்குள் சிக்காத பல ஓவிய உணர்வு அஸ் லகள் விதைகளில் என்னையே வியப்பிற்குமளவிற்கு ஒளிரும் ஒவியங்களாய் எழுத்துக்களில் விரவி வந்திருக் கின்றன. இது எனது ஓவியனாகும் கனவுபற்றிய ஒர ளவு மனநிறைவை ஏற்படுத்தியிருக்கிறது.
 
 
 
 

Χ
இது எனது முதலாவது கவிதைத்தொகுதி தொண் ணுாறு +ளின் பிற்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகளிவை: எழுதப்பட்ட காலத்திலேயே தொகுப்பாக வருவது எல் லையற்ற மகிழ்வை எனக்களிகின்றது. இத் தொகுதி யிலுள்ள சில கவிதைகள ஏற்கனவே வெளியாகியவை. பல கவிதைகள் இத் தொகுதியிலேயே வெளிவருகின்றன. இத் தொகுதி வெளிவருவதறகு எனது அம்மா , அப்பா இருவருமே துணை செய்திருக்கிறார்கள் . அவர்களின் புன் ணகையிலேயே இந்தக் காலத்தின் புன்னகை"யும் பூத்துக் கிடக்கின்றது .
என்னுடைய கவிதை ஆர்வம் குறித்து அதிக அக்கறை யுடனிருந்து எழுதத் தூண்டியவர் நண்பர் யு.ஜேம்ஸ் றஜிவன் . ஒரு நண்பனாக இருந்து பல வழிகளிலும் இலக் கியத்துடனான சினேகத்தை ஏற்படுத்தித் தந்து என்னு டைய வளர்ச்சியில் முனைப்புக் கொண்டிருந்தவர். எனது தொகுதி ளௌரிவரும் இந்தப் பொழுதில் அவரை இழந்து போனது மிகுந்த வேதனையை எனக்குள் ஏற்படுத்தியிருக் கிறது .
எனது படைப்பாக்கத்திற்கு வழியேற்படுத்திய ஈழ நாட்டிற்கும், படைப்பாக்க வளர்ச்சியை மெருகூட்டிய வெளிச்சம் சஞ்சிகைக்கும் இன்னும் என்கவிதைகளை பிரசு ரிக் த நிலம், ஈழநாதம் போன்றவற்றுக்கும் நெருக்கடிகள் மிக்க சூழலிலும் படைப்பாளிகளின் நூல்கள் வெளிவரு வது குறித்து அதீத அக்கறை கொண்டு செயற்படுவ தோடு எனது தொகுதி வெளிவருவதில் மகிழ்ந்து, ஆ கரவு வழங்கிய கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர் சளுக்கும் இத்தொகுதி வெளிவருவதற்கு என்னைத் தூண் டியதோடு என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவருமான திரு. வளநாடன் அவர்களுக்கும் , எனது படைப்புலக வளர்ச்சிக்கும், இத் தொகுதி சிறப்பான முறையில் வெளி வருவதற்கு பல்வேறு வழி விலும் உதவியதோடு, தொகு திக்கான முன்னுரையையும் வழங்கிய நண்பர் திரு.கருணா கரன் அவர்களுக்கும். அட்டைப்பட த்தை சிறந்த முறை யில் அமைத்துதவிய முல்லைக் கோணேஸ் அவர்களுக்கம், இத் தொகுதியின் வடிவாக்கத்திற்கு பல்வேறு நிலைகளிலும் உதவிய அலெக்ஸ்பரந் காமன், கெ. பாஸ்கரன் சி.இராம காந் தன் பதிப்பகப் பொறுப்பாளர் திரு கே. பி. றெஜி ஆகியோருக்கும் இத் தொகுதி வெளிவருவதில் ஆவல் கொண்ட நண்பர்களுக்கும் மற்றும் பதிப்பகப் பணியாளர் சளுக்கும் எனது நன்றிகள்.
கோண்டாவில் வடக்கு, சித்தாந்தன் யாழ்ப்பாணம். 08 03, 2000

Page 8
့် ပုပ္
影 vas
V
*、
 
 
 
 
 
 
 
 

காலத்தின் புன்னகை V 01/V சித்தாந்தன் கவிதைகள்
ජෙෆිඩ්කාසකffණ්r 6) alry)
முளைத்து முளைத்து பெருகிவந்து எழுதிக் கொள்கின்றன அலைகள் தம் சித்திரங்களை அழித் கழித்து எழுதப்படும் அவற்றின் சித்திரங்கள் பிரளயத்தின் காலம் வரையிலும் தொடரலாம். கடலின் புன்னகையையும் அழுகையையும் அலைக் க | ங்களை விடவும் எவரால் எழுதமுடியும் . وهي - காற்றின் இடைவெளிகளில் காணாமல் போகும் அதன் குமுறலை அலைகளை விடவும் சொல்லுதற்கு யாருள்ளனர்: கடல் வெறும் கண்களின் பார்வையில் படுத்திருக்கும் திாவமாயே தெரியும் , அதன் மெளனத்திலும் ஆர்ப்பரிப்பிலும் அர்த்தச் சங்சமிப்புக்கள் அதிகம் , கோடி ஆண்டுகளின் அசைவுறும் தேக்கமாயே அது பரந்து கிடக்கிறது. நட்சத்திர இரவுகளில் மின்னும் கடலின் நுரைப்பூக் 4ளில் எம் சந்தோசிப்பே நிகழ்ந்து விடுகிறது. அலைகள் கரையேறி கரையே சொல்லிப்போகும் கடலின் சித்திரமொழிகளை எவருமே மனதிலெடுப்பதில்லை. அது ஓங்கியோங்கி பூமியின் காதுகளை தட்டுகிறது . ஆலகாலம் அருந்தியதாய்
அசைவற்றுக்கிடக்கிறது பூமி எப்போதும் .
*。

Page 9
காலத்தின் புன்னகை V 02 / சித்தாந்தன் கவிதைகள்
முகமற்ற ஒருவனின் நட்பு
வினயமாக வந்துபோய்க்கொண்டிருக்கிறாய். என் மனதின் ஆழத்தில் படிமங்களற்று உலாவித்திரிகிறாய். ஞாபகப்படுத்த முடியாதபடி எம் சந்திப்புக்கள் நிகழ்ந்தன. அது மூளையின் எந்த மூலையிலிருந்தோ சுவடழிந்திருக்க வேண்டும். எந்நேரங்களிலும் வந்துபோய்க்ரொண்டிருக்கிறாய் என் மேசையில் மீந்தி ருக்கும் வெற்றுத்தாள்களிலெல்லாம புரியாமலிருக்கின்றன உனது வனப்பொளி ரும் கோடுகள் அவைகள் கோடுகளில் தொடங்கி புள்ளிகளில் முடிந்திருக்க வேண்டும். எனக்குப் புரியவேயில்லை உனது வருகை பற்றியோ; உனது கோடுகளாலான மொழிபற்றியோ உன் பின்னால் பிரமாண்டமாக வளரும் நிழலில் கொற்புகள் முளைத்திருப்பதாயே தெரிகிறது,
எனது சினேகத்தை வேண்டி நிற்பதான புன்னகையை மலர்த்தி வருகின்றாய் பிறகேன், பூச்சியமொன்றினுள் போய் முடிகிறாய், உனது வருகை சேற்றின் அடியாழத்திலிருந்து அல்லது மலக்குழியிலிருந்து நடந்தேறுவதாய் முகர்ந்தறிகின்றேன்: உனது சினேகம் எனக்கு பயனாகப்போவதில்லை; உன்னை தீட்சணியப்படுத்துவதற்காய் அநித்தியத்தில் தொடங்கும் வருகையை வர்ணங்களால் தீட்டுவதற்காய் என்னிடம் வருவதாயும்; போவதாயுமிருக்கிறாய். எப்படியோ நான் ஏற்கப்போவதில்லை உன்னுடனான நட்பை,

காலத்தின் புன்னகை V 08 /w சித்தாந்தன் கவிதைகள்
இருளின் சபிப்பு
ஒரு வண்ணத்துப் பூச்சியை பிடிப்பதான பாவனையோடு உன் விரல்கள் நீள்கின்றன; இருள் கட்டிய கண்களில் பிரமையோடு கூடிய கருணையே பார்வையாகி விடுகின்றது. காலிடறி விழுந்தேன் உனக்குள் 5 சுற்றிலும் என் எல்லையாக முட்சுருள்களையே விரிந்திருக்கிறாய் உன் பிசிறடிக்கும் வார்த்தைகள் அலங் கார வளைவுகளாக ஒளி மின்னிச் சிரிக்கின்றன; என் வசந்த காலமாய் படுக்கை அறையையே கருதிக்கிடக்கிறாய்; உன்னை மொய்த்து துர்மணம் வீசிக்கொண்டிருக்கிறது. அடிக்4 டி புகைந்து கொள்கிறது என்மனம் உன்னோடான பொழுதுகளில் மரணக்குமைச்சலே தொண்டைக் குழியை அடைத் துக் கொள்கிறது. சுய மை பேசும் உன் ஆழ்மனப்பித்தில் இருளால் சபிக்கப்பட்டதாகிறது என் வாழ்வு.
*

Page 10
காலத்தின் புன்னகை V 04/\ சித்தாந்தன் கவிதைகள்
6του லோருடைய நாட்களுக்குமான பாடல்
நட்சத்திரங்களால் இந்நாளை அலங்கரிக் வே நினைக்கிறது மனது. அவை 4 வில் எரிநாவுகள் நீண்டிருக்கின்றன. என் பரிணாம நாட்சளின் முதல் விழிப்பு இந்நாளிலேயே நிகழ்கிறது: என் குரல்வளையின் அகண்ட திறப்புக்களில் பிரபஞ்சத்தை நிறைத்துவிடும் கனவுகள் மேவிப் பெருகியெழும்.
எப்படியோ இந்நாளை அலங்கரிக்கவே மனது நினைக்கிறது:
//
மாறி மாறி மர்மமாய் சூழ்ந்து உயிரணுக்களைச் சிதைத்து விடும் எரிகின்ற காலங்களுக்கிடையில் எப்போதுமே நிச்சயமினமையே பீதியாய் வளர்கிறது; எவற்றால் இந்நாளை அலங்கரிப்பது? பார்வைக் கால்சளில் இடறும் பிணக்குருதியின் சாயம் தடவியா? சாயத்தின் உலர்வில் என் உறவு 3 வின் துயரை ஞாபகப்படுத்தி கருமையல்லவா படர்ந்திருக்கும். வானத்தை உதைக்கும் உயிர் ஒலங்களுக்கிடையில் எனது பாடலை ஒலிக்கவைக்க முடியுமா?
||
காலம் முட்கரங்களில் விரிகிறது எனது நாள் சப்திக்கவியலாது விசக் காற்று மூச்சில் திணிகிறது எனது ந | எ தொலைந்தே விட்டது
இப்போது
எல்லோருடனும் சேர்ந்து கொண்டு - எல்லே. ருக்குமான நாட்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.
*

காலத்தின் புன்னகை V 05 / சித்தாந்தன் கவிதைகள்
மீள மீளத்துளிர்த்தல்
ஆழ்ந்த அமைதியைச் சிகைத்து முனைப்புத் திரளத்திரள விரியும் அகாலக்குரலின் ஆழ்பள்ளம் ஒன்றில் ஒடுங்கிப்போகிறது எனது பட்சியின் பாடல் துக்கத்தில் விக்கித்து துப்பியபாடல் பிரபஞ்சத்தை நீண்ட பிரமிப்பில் ஆழ்த்தியது. அலைகளாகிச் சுருண்ட காலம் திண்மத் திணிசுகளாகி உறைந்தது. எனது பட்சியின் குரல் கேரிற்று. முறிந்து முறிந்து மூழும் அதன் பாடல்
ணமாகிச் சதையாகி கற்கு வியலாய் மலை யெழுப்பி அசைவற்றுப் போனது, அதிர்ச்சியில் விழிகள் பெருத்திட காற்றின் வறண்ட வருடலில் சிறகுகள் சடசடக்க மீண்டும் பாடல் உயிர்ப்பதாய் ஈரக் கனவுகளை பெருக்கிக் கொண்டது பட்சி புள்ளியற்று நீளும் அதன் எதிர்பார்ப்பு மோகினி பிசாசுகளின் கோர ஒலியில் மோதி திசைகளில் அழிக் கழிந்து பின் மூழ்கிற்று குரலெடுத்து அமிழ் நது போன பாட லுக்காய் பின்னும் பாடலைப்பாட முனை கையில் பெருத்த வெற்றுக்காற்றே ஊதியது. அலகுகளால் மண் கிளறி இறக்கைகளை அடித்து மரண அவஸ்தையில் துடித்தது பட்சி, எனது உயிரிலிருந்து அவசரமாக இன்னொரு பட்சி வெளிக்கிளLபியது,
*

Page 11
காலத்தின் புன்னகை V 06 / சித்தாந்தன் கவிதைகள்
உயிர்ப்பெருவலி
என்ன நடந்திற்று உனக்கு? தலையை பிய்த்துதறி தெருவிலலைகிறாய், எந்த அகரன் உனது இதயத்தை பிடுங்கி எடுத்தான். மனமழிந்து பிதற்றுகிறாய். பகல் உதிர்ந்து இரவு பெருகும் பொழுதுகளில்
கள் விசளால் சூழ்ந்து என் மனம் சூறாவளித் துருப பாகிச் சுழலும் நிறங்களற்ற வெறுமையில் புளளிகளாய்ச் சொரியும் உன் ஞாபகத்தில் தொடங்கி மறு பகல் வரையிலும் விழிகள் ஈரத்தில் புரண்டபடியே இருக்கும் என்ன நடந்திற்று உனக்கு? என்னோடு ஏதும் பேசமறுக்கின்றாய். குழம்பிக் குழம்பி மன அலை ஒழிந்துபோகிறது. நெருஞ்சிகளாய் தைக்கின்றன உனது கருத்தழிந்த வார்த்தைகள் . இழை தொய்நது ஆதரவற்று வளர்கின்றன பிரமாண்டமான அச்சங்கள். நடுங்கும் என் விரல்களில் பூ ஒன்றிள் இதழ்கள் உதிர்ந்துபோகின்றன,
*
 

காலத்தின் புன்னகை V 07 A சித்தாந்தன் கவிதைகள்
தீ நிழல் பொழுது
அதிகாரத்திமிருடனான வாகன இரைச்சல்களின் ஒலியில் பொழுது புலர்ந்தது. குருதி வெடிலடிக்கும் பேய்க்குரல்களிலிருந்து வார்த்தைகள் உமிழப்பட்டுக்கொண்டிருந்தன; அந்தக் காலை பற்றி எழுத நினைக்கும் போதெல்லாம் மனம் வெளிறிக் கொள்கிறது. ஊரின் கோயிலில் எல்லா மனிதர்களும் சிறையாக்கப்பட்டனர்) சீருடை நிழல்களின் சூழ்வில் தீயெரிந்தது அரச மர அம்மன் கூட அதிர்ந்து போனாள்: பச்சைத் தொப்பிகளிலிருந்து முளைத்த கைகள் இரண்டு மனிதர்களின் கழுத்தைத் திருகி இழுத்துச் சென்றன; அரச மரத்தில் ஆடியகாற்று تسهي - அசைவற்றுப் பிணமாய்ப் போனது, - இரண்டு மனிதர்களினதும் கடைசிக்கணத்தின் அவலப்பிளிறல் எல்லோரினதும உயிர்த்துடிப்புக்களையும் உலுக்கிக்கொண்டிருந்தது, மாலை கவிந்த பொழுதில் சீருடைத் தீ நிழல் மறைந்து போனதும் வெளியே வந்தோம் .
தலையில்லாது போன எங் 9ளுரின் மனிதர்கள் கிடந்தார்கள். பிறகு பிரிவின் ஒலங்கள் திரண்டு திரண்டு காற்றின் மூர்ச்சையை கலைத்தன; அவர்களின் உடலங்கள் தீ வாயில் கரைந்து போன பின்னும் கருமையை முகத்திலப்பியது எனது ஊர் அரச மர அம்மன் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபடவேயில்லை 3
ܬܹܐ

Page 12
காலத்தின் புன்னகை V 08 /v சித்தாந்தன் கவிதைகள்
தீ எரித்த தெரு
எனது மனிதர்கள்
நிறைந்திருந்த சந்தியது: எாசனை பெருகிய கனவுகளோடும் நைந்துபோன காலத்து நினைவுகளோடும் கூடியிருந்தார்கள் அவர்கள். ஒரு கணத்தில் எல்லாமே நடந்து முடிந்தது. வானம் வெளிற காற்றின் மூச்சை திணறடிக்கும் மிகையொலி விமானங்கள் உமிழ்ந்த நெருப்புக்குண்டுகள் அவர்களின் மூச்சை எடுத்திருந்தன. அவலம் பீறிட புசை மூடிய தெருவெங்கும் − இன்னும் என் மனிதர்கள் சூழ்ந்தனர். நிணமாய்ச் சிதைந்தும்; கருகிய உடல்களையும் அவசரமாக அள்ளி வாகனங்களில் ஏற்றினர், பின்னரும் புகை மண்டிய சந்தியின் தெருவெங்கும் இறந்த என் மனிதர்களின் கனவுகள் சூழ்ந்து சூழ்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
*

காலத்தின் புன்னகை V 09 / சித்தாந்தன் கவிதைகள்
மரண கணங்கள்
அடுத்தடுத்துச் சூழ்கின்றன یافتنجهه மரணம் பற்றிய கனவுகள் . உறக்கம் பேய்களின் குகைகளில் மூச்சைத்திணறுகின்றது. நிசப்தம் விகாரமாய் விரிகிறது. மெளனம் சப்பிய மனதோடு அலைகிறேன் தெருவெங்கும். நிலம் முழுவதும் பெரியவைகளாய் நீண்டுகிடக்கின்றன அன்னியச் சுவடுகள் உயிர் வலி பெரு + விழிகள் பதற உறைந்துபோய் முழிக்கிறேன். இரவை சிதைத்துச் சிதைத்து இருளோவியங்கள் மொய்க்கின்றன: நிஜங் சளில் தீ பற்றிக் கொள்கின்றது, இதயத்கை பிளந்த ஒலிகள் மரண கணங்களில் நீள்கின்றன. சா விழையில் காலம் தலைகீழாய் தொங்குகிறது. எனது கண்களின் முன்னே எனது மரணம் இப்படித்தான் நடந்தேறுகிறது

Page 13
காலத்தின் புன்னகை V 10 / சித்தாந்தன் கவிதைகள்
குமுறல்களும் புஸ்பிக்கும் நினைவுகளும்
இலைகள் உதிர்ந்த தெருவில் கிழிந்து கிடந்து ஊரின் முகம் கரிசனையற்ற காற்று கிளைகளில் மோதித் தெறித்தது. மெளனத்தின் அடர்வினுள் என் ஆழ்மனத் தனிமொழி அமிழ்ந்து சுருங்கிப் போயிருக்கிறது. தலையற்றுத்திரியும் விதியை யார் விதித்தது எனக்கு? பேயிருள் கவ்விய தெருக்களில் எண்ணமழிந்து திரிகிறேன். அசுரனின் கால்கள் மிதித்து அழகு பொசுங்கிக் கிடக்கிறது என் ஊர். ஊர்பற்றிய என் கனவுகள் முழுவதிலும் நெருஞ்சி முட்களும் ஆந்தைகளின் கோரக் குரல்களும் எலும்புகள் துருத்திய தரவைகளுமே முகிழ்த்து முகிழ்த்து விரிகிறது. ஈரக்குடல் வற்றி இதயம் சுருண்ட நாய்கள் ஊளை களால் நிசப்தங்களை விரட்டி துரத்துகின்றன. பிரமாண்டப் பிண்டமாய் சிதிலம் முற்றிக்கிடக்கும் ஊரில் ஞாபகங்களைப் பினணிப் பின்னி சிறகசைக்கிறது உயிர்க்குருவி. பிரமைகள் முழுவதிலும் விஸ்பரூபிக்கிறது எழில் அப்பிய ஊர் நினைவுகள் .

காலத்தின் புன்னகை / 11 /w சித்தாந்தன் கவிதைகள்
சிறையிடுதல்
நான்கு கோடுகளுக்குள் முடக்கப்பட்டது என் வாழ்க்கை கனவுகளால் இழைக்கப்பட்ட இதயம் எல்லைசளுக்கப்பால் எகிறி விழுந்து நாளைகள் பற்றிய 1ረ÷விரிவு சஞக்காக ஏங்குகின்றது. ஆரவாரங்களற்ற மன வெளியில் பசுமையை நினைவுபடுத்தும் பழைய நினைவு கள ஊர்கோலமாகின்றன! இனி வருகின்றகாலம் உதறப்பட்டுவிடலாம். என் உரிமங்கள் மறுதலிக்கப்பட்டு உயிரின் தலை வக்கிரக் கரங்களால் நெரிக்கப்பட விழிகள் பிதுங்கியபடி வெறிக்கின்றன. புவளியாய் விழுந்த என் வியாபிப்பு மறுக்கப்பட்டு தீயின் கரங்களில் திணிக்கப்பட்ட போது வசந்தம்பற்றிய எதிர்பார்ப்புக்களின் வாசலடைக்கப்பட்டது . கீறப்பட்ட கோடுகளுக்குள் ஆவி போர்த்துக் கொண்ட அச்சத்தைத்தவிர எல்லாமே உரியப்பட்டன . நிர்வாண மே உடையாகிட நாகரீக மனிதம் என்னை நகைக்கிறது.
*

Page 14
காலத்தின் புன்னகை V 12 // சித்தாந்தன் கவிதைகள்
தொலைந்த முகவரி
என்
நினைவுகள் மீண்டும் நேற்றைய வானில் சிறகு விரிகசின்றன. சுகங்களையே அசைபோட்டு; அந்த சுமையறியாத பொழுதுகளுக்குள் தொலைந்து, இறந்தகால என்னை நிழ்ககால என்னோடு டொருத்திப் பார்க்கின்றது; எல்லாமே அதே அடையாளங்கள்! நான் நானேதான். என் இருப்பு மட்டும் முகவரி மாறி அஞ்சல் நிலையங்கள் என்னை விசாரிக்கின்றன.

காலத்தின் புன்னகை V 13 / சித்தாந்தன் கவிதைகள்
முள்
முட்சளின் மேல் என் இருப்பு. அடிக்கடி தீயுமிழும் ஒன சகள் என் செவிப்பறையை கிழிக்கும்.
எனக்குள்ளேயே நான் திரிவுபட்ட படி நாளைகளை எட்டிப்பிடிக்க நெகிழும் மனம் சோர்ந்து விழும்.
எல்லாம் இருப்பதாய் எண்ணிய என்னை இருப்பின்மைகள் பிட்ரி பிடித்து அமத்தும் விந்தை மனிதர்களின் வார்த்தை ஜாலம்
வெறும் பிரமையான வாழ்வு கவர்ச்சிகளுக்குள் மனிதர்கள் முடக்கப்பட்டும் நாளையை நிச்சயப்படுத்துவதாக பத்திரங்கள் பகிரப்பட்டும் சாயம் பூசப்பட்ட
மாய வாழ்வு சுழல்கிறது.
நிசப்த வெளிகளில் பூசிய நிறங்களும் பிழியப்படுகின்றன.

Page 15
காலத்தின் புன்னகை V 14 / சித்தாந்தன் கவிதைகள்
வார்த்தைகள் செத்த கனத்தில்.
இறந்த மனிதனின் புலன்கள் வானம் கிரீச் சிடத் திறந்து கொண்டன8 ஆழ்ந்த சட லின் அடியிலிருந்து உருப்பெருத்த மனிதன் பிரளயத்தோடு எழுந்து வந்தான் பறவைகள் அவன் மொழியின் குரலில் பிரதிபலித்துப் பறந் தன. தொண்மையில் உதிர்ந்த பூவின நெடி சுவாசத்துள் திரண்டு விரிந்தது. கண்கள் பெருத்து மிகப்பழைய காட்சிகளில் திளைத்தான். காற்று உடல் தீண்ட மகிழ்ந்து சிலிர்த் கான் அவன் தனது ராகம் செவிகளில் நுழைந்திட அதன் லயங்களில் குழைந்தான் , காலம் மீறி தன் புலன்கள் விழித்ததில் இதயம் பொருமி வெடித்து துயரடைந்து வார்த்தைகள் செத்து துடிதுடித்தான். மனம் சுருங்கிய மனிதர்கள் பூமியின் விரல்களை ஒடிப்பதைப்பார்த்து உயிரடங்கிக் கொண்டிருநதான். குடல் பெருகி அவனைப் புதைத்தது; புலன்களை மண்மூடிச் சிதைத்தது, வானத்தின் ஒளிர்வு
அவனின் ஆழ்மனத்தோடே அழிந்து கொண்டன.
*

காலத்தின் புன்னகை V 15 / சித்தாந்தன் கவிதைகள்
காலத்தின் புன்னகை
பொறிகளில் வலி பெருக அகாலத்தின் வெளியில் குரல்கள் கரைந்து வழிப தேவகுமாரனை சிலுவையில் அறைந்தீர்கள் , வானம் சுருங்கி பூமியின் பாதாளத்துள் புதைந்தது. நட்சத்திரங்கள் பிளவுண்டு தீக்கங்குகளால் திசைகள் நிறைந்தனg ஒரு உயிர்த்தலின் குரல்மட்டும் நிசப்தத்தின் வாயை பிளந்து சூழ்ந்து சூழ்ந்து அதிர்ந்தொலித்தது. ந ன் சிலிர்த்து மகிழ்ந்தேன்; தேவகுமாரனின் வருகையில் பூக்களை விசிறிக்கொண்டிருந்தது பூர்வீகக் காலச் செடி, வாசனையை பெருக்கியபடி ஆதியின் மூச்சுக் கலந்திருந்தது.
III
துஷ்டர்களின் விசமச்சிரிப்பு அவலத்தின் மூலத்துள் அலைந்கது: நான் மீண்டும் மீண்டும் புன்னகித்தேன்3 என் புன்னகை காட்டுப் பூக்களின் முகமாய் மிளிர்ந்தது. தேவகுமாரன் பிரபஞ்சம் முழுவதும் ஒளிர்ந்தான். தீயில் கரைந்தன அகாலத்தில் வழிந்த குரல்கள் 3
*

Page 16
காலத்தின் புன்னகை V 16 / சித்தாந்தன் கவிதைகள்
இனியகாதலின் சிதைவு
நட்சத்திரங்களுக்கிடையில் உன்னைக்கண்டெடுத்தேன். வழுவழுப்பான உன் பரப்பில் முஅம் பார்த்து புன்ன கித்தேன்; வாசனை பரததி பிரபஞ்சமெங்கும் புரண்டோம் நட்சததிரங்கள் பொறாமையில் வழிந்து புரள்வதாய் பெருமிதத்தில் சந்தோசித்தோம். மனதோடு மனம் பொருத்தி இரவு வானத்தில் ஒவியங்களை வரைந்தோம் விழிமலர்த்தி விழிமலர்த்தி ஓவியங் டி ஸ்ரின் ரேகைகளில் ஒளிர்ந்தொளிர்ந்து சிரித்தோம்:
l/
பகலின் துஷ்டக் கால்களில் இரவு சிதைந்து அழிந்து கொண்டிருந்தது: உன் வழுவி ழுப்பான பரப்பில் என் முகம் நடுங்கி டெலி நதுகொண்டிருந்தது. நீ பகலின் வெற்றிடங்களில் தொலைந்து போனாய். உஷ்ணம் பரவிய வானமெங்கும் வெம்மையில் சுருங்கித்தொங்குகின்றன கிழிந்து சிதறிய என் முகத்தினது துண்டுகள்

காலத்தின் புன்னகை V 17 / சித்தாந்தன் கவிதைகள்
குழம்பிப்போன மனத்தின் இரவு
விருட்சத்தின் இலைகளில் 鷲 ஞாபகங்கள் உதிர்ந்த பொழுதில் நீ வந்தாய் துயரத்தை நிரப்பிக்கொண்டு; உன் புல்லாங் குழலில் சுரங்கள் 臀 தீர்ந்துபோன காய் புலம்பினாய், நான் குழம்பிப்போனேன். பின், மனதை அவசரமாக அள்ளியள்ளி ஒழுங்குபடுத்தினேன்; உன் புன்னகை அழிந்த பொழுது பற்றி விசாரித்தேன். நீ விசும் லின் ஆழத்துள் புதைந்து கண்ணீர் பெருக்கினாய். உன் பொருட்டு நான் கவலைகொள்ளவில்லையென வார்த்தைகளில் வெடித்தாய்.
//
இரவு சூரியனை மெல்ல மெல்ல தின்று கொண்டிருந்தது. நீ இரவின் மடியை நிறைத்து உறங்கிக் கொண்டிருந்தாய். நான் குழப்பங்களில் மனம் மோதிட விழி*ள் பெருத்துக்கிடந்தேன். இரவு ஏளனம் ததும்ப என்னைப்பார்த்துச்சிரித்தது.

Page 17
காலத்தின் புன்னகை V 18 / சித்தாந்தன் கவிதைகள்
மனிதர்களற்ற கிராமத்தின் கதை
தனிமையின் பக்கங்களில் மோதிச் சிதறுகின்றன கிராமத்து ஆத்மாவின் குரல். மணிமு ர்களற்ற கிராமம் ஆதிமொழியின் குருதிச்சிவப்புவார்த்தைகளை திரித்துத்திரித்து தீயாய் பற்றிய துயரில் மிதக்கிறது. மின் மினிப் பூச்சிகள் பற்றிய நினைவுகள் அறுந்து தனிமையில் புரண்டு புலம்புகிறது. வயல்களை நிறை த்த அதன் கனவுகள் முட்களில் மூடுண்டு போனது. சூரியன், சந்திரன் இரண்டுமே கிராமத்தின் கண்களில் எரிந்தன: காற்று வெறுமையைச் சுமந்தலைகிறது. அதனுள் இசையாய் நிறைந்த ஆயிரமாயிரம் சப்தங்கள் சூனியமாகியதாய் கிராமத்து ஆத்மாவின் குரல் அண்டங்களைப் பிளந்து அதிர்கிறது: இருளடர்ந்த காலவெளியில் மனிதர்களின் சுவடுகளை சாப பல் பெருகிச் சிதைத்திருந்தது: இலைகள் உதிாந்த மரங்களில் மிகப் பழையதான இதயம் குருதி வற்றி சுருங்கி மரணித்துக் கிடப்பதாய் வார்த்தைகளைத் தொலைத்த பறவையொன்று அலகுசஞக்குள் குமுறிச் கொதிக்கிறது. அதன கண்களில் கிராமத்தின் கதை திரவமாய் பெருக்கெடுத்துப் பரவுகிறது. அவலம், பீதி, துயரம் எல்லாமே கலந்து பெரும் ஜலப்பிரவாகமாய் அலைகளை எழுப்பிப் பாய்ந்தோடுகிறது:
R%

காலத்தின் புன்னகை / 19 / சித்தாந்தன் கவிதைகள்
வழியில் தவறிய காதல்
காற்றின் மறைமுக வெட்டில் நுழைந்து ஒரு விபத்தாய் அது நிகழ்ந்தது: என் பருவங்களை உதிர்த்து என் பிரளயத்தைச் சுமந்தபடி அவள் நடக்கிறாள். என் நிழல் அவளின் காலடியில் நசுங்கி அழிகிறது. கடைசியாய் அவளிற்கிட்ட முத்தம் என் உதடுகளில் இன்னும் வாசனையாய் வீசுகிறது, அவளைப் புணர்ந்துகிடந்த என் கனவுகள் தீபில் எரிய நடக்கிறாள்; என் ஞாபகங்களிலெல்லாம் நறுமணம் கமழ்ந்துகொண்டிருக்கும் தன்னைப் பிரித்தெடுக்க முடியாமல் தன்னிஷ்டையாக செல்கிறாள்.

Page 18
காலத்தின் புன்னகை V 20 / சித்தாந்தன் கவிதைகள்
இருள் நகரத்து வெளி
இருள் நகரத்தின் வெளி
தன சூலறைகளில் இறப்புக்களை ஜனிப்புக்களாய்ச் சுமக்கிறது , ' உயிர் வதைகளின் ஒலம் சாக்கருவிகளின் கூரிய முனைகளால் மூர்ச்சையாக்கப்பட்டு வெண்சா மரத்தின் இடுக்குகளில் கிளர்ந்த நெருப்பின் தகிப்புக்களால் உடல்கள் உாருக்கப்பட்டு உப்பு வெளியில் ஒசையின் அதிர்வுகள் ஒடுங்கிய பொழுது சளில் தான் அவர்கள் அங்கே ஜனிக்க வைக்கப்பட்டார்கள். பூத்தடவிய காற்றின் மேனி கருகித்துரவலில் துர்நாற்றமாக உறைய இருளின் இறுகிய சரங்களால் − மறைக்கப்பட்டுத்தான் அந்தத் துன்பியல் நடந்தேறியது. இரு நகரததின் வெளி உயிரற்ற ஜனிப்புக்களின் பிரசவகால வேதனையில் பொருமுகிறது; இன்னும் அது மிகப்பெரிய உண்மையின் சாட்சியமாயுமிருக்கிறது.
3.

காலத்தின் புன்னகை V 21 / சித்தாந்தன் கவிதைகள்
அழிவு எழுதும் கோடு
இன்னும் முற்றுப்புள்ளிகளுக்குள் சிக்காது நீண்டுகொண்டே போகிறது ஒரு கோடு, மனிதர்களின் மூச்சுக்குழலை நசுக்கி, தான் நேர்த்தி கொளகிறதது. இசையின் காதுகளை அடைத்துக்கொண்டு துயரின் துளிகளை ஊறவிடுகிறது. இறுகிய இருளின் நிறத்தோடு கூடி காலத்தை பிடித்திழுத்து கறை பாய்ச்சி எத்தனை வர்ணங்களை அழித்து விட்டது. எத்தனை புன்னகைகளின் துளிர்ப்பில் நச்சுத்திரவம் ஊற்றியது. அந்தக்கோடு நீளகிறது! ஒலங்களாயும புலம்பல்களாயும் விம்மல்களாயும் நீளகிறது,
*

Page 19
காலத்தின் புன்னகை V 22 / சித்தாந்தன் கவிதைகள்
துருவ நட்பு
காலம் கல்லாகி கால் தடக்கிய பொழுதில் நாம் தூக்கியெறியப்பட்டோம் வெவ்வேறு துருவங்களுக்கு.
வெறுமை மொய்க்கும் ஒரு வெளியில் நான் மாறுதலில்லாத என் மனக்கிடங்கில் நினைவுகளின் மழை ஓய்ந்த பின் நுரை துளிர்க்கின்றன உன் ஞாபகங்கள்
மெளனத்தின் புஸ்பித்தல்களை மீறி ஆரவாரங்களை எழுதிச்சுழல்கின்றன. அவை
கால நீட்சியில் உனது துருவம்பற்றி என்னில் பல எண் ணங்கள் புரளுகின்றன,
நேசம் கனத்த மனசில் நான் துடிப்பதும். துவழிவதும் நீண்டு ஓடும் நதியின் சலசலப்பில் அழகு படுத்தப்படலாம்.
மாறுதலில்லாத என்மனம் நுரை துளிர்த்துக்கொண்டேயிருக்கும் eygil
நீ இல்லாத பொழுதுசளிலும் உனது கைப்பிடித்தேயிருக்கும்,
k

காலத்தின் புன்னகை V 23 / சித்தாந்தன் கவிதைகள்
சிதைந்துபோன இரவு
இதங்களில் படரும் இனிய இரவொன்று அதிர்வுகளின் பிடியிலுறைகின்றது. திசைகளை வெளிற வைக்கும் இயந்திரங்கள் உயிர் குலைக்கும் அடையாள ஒலிகளை உமிழ்ந்தபடி பூர்வீக நிலமுழுது விரைகின்றன. தொண்மை வழி மனிதர்களின் தூக்கத்தின் தோலுரித்து துளையிடுகிறது அதிர்வுகளின் ஒலி. நள்ளிரவு, நடைமனிதர்களால் நிறைந்து அவலத்துள் மறைகிறது. பூமியின் புதிய சுழற்சியில் நேற்றுப் பூசப்பட்ட சாம்பல்நிற படிவுகளே இன்னும் படருகின்றன,
စူဋီ၇

Page 20
காலத்தின் புன்னகை V 24 / சித்தாந்தன் கவிதைகள்
ஊழிப் பிரவாகம்
ஊர்ந்துார்ந்து உள் நுழைந்த து ஊழிப் பெருவெள்ளம் , உறக்கத்தின் மடி சாய்ந்த ஊரில் உடைப்பெடுத்துப் பெருகியது உடல் பிழிந்து உயிர் குடிக்கும் வெறியில் சாவின் தூதுவனாய் ஊர்க்குடில்களின் தாழ்வாரங்களை அரித்து தாழ்ப்பாள்களை உடைக்க திரண்டு எழுந்து நின்றது. ஊழிவெள்ளம் நுரைகளாய் தணல் சுமந்து தகித்து, வெப்பத்தின் வீசல் துயின்றிருந்த மனிதர்களின் சுவாசத்துள் ஏ அச்சத்தின் ஒலிகளைத் தூண்டியது. ஊழி வெள்ளத்து இரைச்சல் குடில் மனிதர்களின் வாய்களை வாரடித்து அடைத்தது. தத்தளித்தனர் மனிதர்கள் . வெள்ளம் பெருகிப் பெருகி அவர்களின் உயரத்தை தாண்டலாம்? அதற்குள் ஊழிவெள்ளத்தை உறிஞ்சிக் குடிக்கும் சூரியன் உள்நுழையாமலா விடும்!
}

காலத்தின் புன்னகை / 25 / சித்தாந்தன் கவிதைகள்
உள்முகத்தி
மெளனத்தில் அடவி கருமையை அப்பி
பொழுதுகள் இருக்கும்போதெல்லாம் என் மென்மைகளில் வன்மையை படர் விக்கும் கொதிப்பாய் மேலெழுந்து உள் முகத்தீ ஜ" வாலிக்கிறது. நெஞ்சின் ஒரங்களில் மூனடு எரிகிறது அது. கனவு +ளில் அடர்ந்திருக்கும் மன வெளியில் உணர்ச்சியை உமிழ்ந்து உலைவளர்க்கிறது உள்முகத்தீ அது இன்னும் உரசி உரசி மூண்டு என் அகவெளியைத் தாண்டி புறவெளியை நோக்கிப் பரவுகிறது:
ශ්‍රී

Page 21
காலத்தின் புன்னகை V 26 /w சித்தாந்தன் கவிதைகள்
விஷ விழி மனிதன்
துருவித்துருவி விசாரிக்கும் உன் விசால விழிகளை விட்டு விலக முடியவில்லை.
உன் அம்புகளைத் தொடுக்கும்
un riřGOlauusaleão ஆலகாலம் என் நெஞ்செங்கும் வியாபிக்கின்றது,
முறிந்து சரியும் மரக்கிளையில் தொட்டில் குழந்தையாய் உயிர் ஆடுகிறது.
நான் விழப்போகும் இந்த இடத்தில் யாராவது செயற்கைப் புற்கள் சிலவற்றை நட்டுவிடடடும்.
உன் பாதம்பட்ட எந்த இடத்திலாவது மீண்டுமொரு ஜனிப்பு நிகழ்ந்திருக்கிறதா??
(ရှ်)
 

காலத்தின் புன்னகை V 27 / சித்தாந்தன் கவிதைகள்
நிழல் அழிந்த மரம்
நிழல்கவியும் மரத்தின் கிளைகளை முறிக்கிறார்கள். என் ஆத்மாவின் நாகம் அதன் உதிர்தலில் தீர்ந்துபோகிறது: நிழல் மரத்தின் பூக்களில் என் புன்னகையிருந்தது . கிளைகளின் வகிடு பிரிதலில் உயிரின் பரவசப்பாடல் சுரம் பிரித்தது கிளைகள் ஒடிக்கப்பட்டுப் போகிற ஒவ்வொரு நொடிப் பொழுதுகளிலும் என்மனம் நைந்து போவதும் மெளனம் வெடித்து விசும்பல் எழுவதும் எனக்கு மட்டுமே புரியும் மொழியாயிருக்கிறது; நிழல்மரத்தின் மடி இப்போது பாலைவனமாய் விரிந்து கிடக்கிறது: அதன் சந்தோசங்களில் இருந்த என் சந்தோசங்களும் அவலத்தின் பாடலை உச்சரிக்கின்றன:

Page 22
காலத்தின் புன்னகை / 28 / சித்தாந்தன் கவிதைகள்
ජැසීඝgth
இது உனக்கான காலம்; நடத்து. மூச்சைத் திணறும் காற்றை எமது மண்டலத்தில் உதறிவிடு கருவறைகளைப் பிளந்து
ஜனிப்புக் களைக் குதறு. இரத்தக்கலப்பிற்காக குளிர்ந்த பூக்களின் மகரந்தங்களில் விந்துாற்று. மூலவேரில் பூரணப்படுத்தப்பட்ட அடையாளங்களில் அழிவின் சாயம் பூசு, இது உனக்கான காலம்,
இரவுகளை அச்சமுறுத்தி கோரக்குரலை கீதம'யிடு: ஊழைகளால் உல்லாசங்களை , உதிர்த்துவிடு.
ஒன்றை மட்டும் உணர்ந்திரு. பூமியின் சுழற்சியாய் காலமாற்றம் இது உனக்கான காலமாயிருக்கிறது: நாளை நமக்கான காலம்
திரைகளைக் கிழித்து நிமிரும்3
+x
 
 

காலத்தின் புன்னகை V 29 /v சித்தாந்தன் கவிதைகள்,
நீத்தியப்படுத்தல்
நான் விட்டுவந்த தடயங்களில் என்னை விசாரித்துக்கொண்டிரு மனிதத்தின் முகவரி மழுங்கிய மர்மத்துள் என்னை இழக்கப்பிடிக்கவில்லை. விசாலித்துப் பரந்த கனவுகளுக்கப்பால் விழுதெறியும் நினைவுகள் شاهنامه உயிருள்ள மகிழ்ச்சிகளில் உலாவுவதையே விருப்புறுகின்றன: நான் உரியப்பட, இன்னோர் கை என்மீது படிவதை என்னால் ஜீரணிக்க முடியாது. சாட்சியத்தோடான பொழுதுகளே என் சஞ்சரிப்புக்குரியவை . விழிகளை அச்சத்தால் நிரப்பி சாவாய் வழிவது என் முகவரிக்குரியதல்ல; சூரியன் இருளுள் விழுந்த பொழுதொன்றில் நடந்து நடந்து வெளிச்சத்துள் வந்தேன். வாசல்வரை வந்தம் நீட்டிய என்கைகளில் நீ விரல்பதிக்க மறுத்துத் திரும்பியது ஞாபக ஊசிகளாகிக் குற்றுகின்றன. இப்போது நீ உயிரில் தீ பற்றிக்கொள்ள வெளிக்கிளம்பும் விருப்புற்று இருப்பதாயறிந்தேன். வருவதற்குள் நீயும் உன் தடயங்களைப் பொறித்துவிட்டு வா.
*

Page 23
காலத்தின் புன்னகை V 30 / சித்தாந்தன் கவிதைகள்
கானாமல் போனவனின் குரல்
இருள் மண்டிய பொழுதொன்றில்
கவுயரமான சனவுகளுடன் நடந்த பொழுதிற் தான் கடத்தப்பட்டேன், என் ஊரின் தெருவில் வர்ண இழைகளால் வாழ்க்கையை நெய்வதுபற்றிய சனவுகளோடுதான் காணாமல்போனேன். என் சுவடுகளை எவருமே என் ஊரின் தெருக்களில் தேடாதீர்கள்: நான்_மனித தரிசன மற்ற ஒரு வெளியின் இடுக்கில் செருகப்பட்டிருக்கிறேன். நிலவுவரின் உப்பு நாவூடாய் வழிந்துறைகிறது. கோரப்பறவை வின் மண்கிளறும் சப்தமாயும் காற்றின் வன்ம ஊழையுமாய் இந்த வெளி நிறைகிறது. இவைகளைத் தாண்டி எப்படியென் குரல் வெளிப்பரவும்?
*

காலத்தின் புன்னகை V 31 / சித்தாந்தன் கவிதைகள்
சமாதானக் கனவு
இமைகளின் இறுக்சத்துள் குறுகுறுக்கும் ஒரு குட்டிக்கனவுபோல அதிருக்கிறது; எத்தனை எத்தனை வாய்களால் வர்ணம் பூசப்பட்டு அதன் வெண்மை கலைக்கப்பட்டிருக்கிறது இதயங்களுக்குள் எல்லாம் ஏக்கத்தின் பாடலாய் ஒலித்துக்கொண்டு விசாலிப்பதாய் அழிவுறுகிறது. தொட நீளும் விரல் வில் தூரமாகும் வானமாயும் அலைகளின் ஆரவாரிப்பில் குலையும் அமைதியாயும் இன்னுமின்னும் அது இருக்கிறது.
*

Page 24
காலத்தின் புன்னகை V 32 /w சித்தாந்தன் கவிதைகள்
அவசியமான இடைவெளி
நீ போய்விடு உன் வேகத்துக்கு என்னிடம் சிறகுகளில்லை. கோடிக் கனவிழைகளில் சினேகித்துவிட்ட வாழ்க்சையில் பாடுதலறியா குரல் மொழியால் உன்னை திருப்திப்படுத்த முடியாது. நீ இன்னும் இ ன் சிறகுசளின் வலிமைக்கு என்னை வலிந்திழுக்கிறாய். நீ போய் விடு. நேசமில்லாத உன் புன்னகையும் கருணையழிந்த பார்வையும் ரணங்களையே குவித்திருக்கின்றன. நீ போய் விடு. தொட முடியாத துராமாயே எம் இடைவெளி இருக்கட்டும்:

காலத்தின் புன்னகை V 33 / சித்தாந்தன் கவிதைகள்
D-600 Abedo
எல்லோருமாய் இருந்தும் ' இல்லாதது போலிருந்தேசம் மெளனத்தை நெய்துகொண்டு:
நீ என்னோடும் நான் உன்னோடும் எங்கள் மழலைகள் எம்மோடும் பேச விருப்பின்றி இருந்தோம்:
யன்னல் இடுக்குகளில் ஏராளம் சண்கள் மொய்த்தன எம் இருத்தலை உணர்த்துவதாய்,
శిక్ష

Page 25
காலத்தின் புன்னகை V 34/v சித்தாந்தன் கவிதைகள்
துளிர்க்கின்ற சுவடுகள்
என் மனதின் ஆழத்தில் மங்கலாகி அழிகறது உன்முகம்3 முன்னைய நாட்களில்
நிலவின் விகCப்பாய் அதிருந்தது.
என் புத் சக இடுக்குகளில் உன் விரல் + வரின் மெல்லிய ரேகைகளான அடையாளங்களில் கருமை படர்ந்து மேவி வருகிறது,
என் மெளனத்தின் சஞ்சரிப்புகளுள்ளும் விருட்சமாய் விரிந்த சந்தோசிப்பின் s: நினைவுகள் தேய்ந்து தேய்ந்து புள்ளிகளாய் குறுகிவருகின்றன.
உன் இல்லாமையில் வனப்புச்சுருங்கிய என் நந்தவனங்களில் மீண்டும் பசிய துளிர்ப்புக்கள் நிகழுகின்றன.
நீ ஏற்படுத்திப் போய்விட்ட அந்த இடைவெளி இப்போதில்லை புதிய சுவடுகளால் அது நிறைகிறது.
*

காலத்தின் புன்னகை / 35 A சித்தாந்தன் கவிதைகள்
பிணந்தின்னி
கரிய வானத்தில் به همه தன் சிறகுகளின் படபடப்புடன்
வட்டமிடுகிறது பிணந்தின்னி, பரவசத்தில் தோய்ந்த அதன் கனவுகளில் துர்நாற்றம் பிசிறிப்படர்கிறது.
அதன் கூரிய அலகுகளில் குருதி எப்போதுமே வழியும்: பிணந்தின்னி ஒரு பாலைநில வாசி; அது நீண்ட தன் இறக்கைகளை விரிக்கும்போதெல்லாம்
அ கினி ஜுவாலையாய் உதிரும் அதில் இருந்து எழும்
உயிர்களின் ஒலங்கள்
இருள் வானச் சுவரில் எதிரொலிக்கும் பிணந்தின்னி எல்லாப்பறவைகளையும் போலல்ல; ஆனால் அது ஒரு பறவையும் கூட அல்ல. அதன் உந்துதலின் ஒலியில்
உயிர் குடித் கலின் விகார ராகம் பிலிற்றியபடியே இருக்கும்.
*

Page 26
காலத்தின் புன்னகை V 36 / சித்தாந்தன் கவிதைகள்
Sup-Fé a Gor Galer
சூனியத்துக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது உன் மூளை, தேதி கழிந்துபோன நாட்காட்டியின் ஓவியப் புன்னகை யாய் ஒளிர்கிறாய். உன் நிலைப்பின் உறுதி அகாலத்தின் வெளிகளில் சப்கங்கள் ஒடுங்கி அலைவதை அறியா திருக்கின்றாய். நிறப்பிரிகைகளுக்குள் குமுழிகளாகும் உன் கனவுகள் காலத்தை திரித்கிறுக்கும் கயிறுகளாகிக்கிடக்கின்றன: நீ இன்னும் கனவுகளை நெய்கின்றாய். உன் மூலத்தின் ஒளிப்பிரவாகம் உனது காலத்தில் மட்டும் ஏன் தேங்கிச் சுழிக்கிறது.

காலத்தின் புன்னகை V 37 / சித்தாந்தன் கவிதைகள்
என் தெருப் பைத்தியக்காரன்
மழுங்கிப்போன கண்ணாடித் துண்டொன்றில்
முழு முகத்தையும் பார்த்துவிடும் முனைப்பு உன்னுள்
தலைநீவிச் செல்லும் காற்றில் புழுதியின் பிசுபிசுப்பு. தலையை கைகளால் கோதிவிடுகிறாய். அதில் உன்னைப் புறக்கணிக்கும் துர்நாற்றம் பரவுகிறது. நீ எதையுமே பொருட்படுத்துவதில்லை
மழுங்கிப்போன கண்ணாடித்துண்டு உன் அழகிய உலகமாய் خدمت تھی விரிந்துகொண்டே போகிறது.
உன் படுக்கையில் உன் சட்டைப்பையில் ஏதோ பிரசித்தமான பொருளாய் பத்திரப்படுத்துகிறாய்
சிலரின் விழிகளில் பைத்தியமாய் தோன்றி உதடுகளில் உரசல்களோடும் வருடல்களோடும் வந்து விடுகின்றாய்.
எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது:
உன்னைப் பைத்தியம் என்பவர்களை நீ பைத்தியம் என்பதில்லை. விசித்திரமான உன் செயல்களுக்குள்
ஒரு ஓவியத்தை கீறிக்கொண்டிருக்கிறாய். எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.
*

Page 27
காலத்தின் புன்னகை V 38 / சித்தாந்தன் கவிதைகள்
பேய்களின் வீடு
ஒருபோதுமே அது வீடாக இருந்ததில்லை; ஆந்தைகளின விழிகளாய் மின்னும் அதன் ஒற்றை வாசலில் மிருகக் குரல் வளையில் மனிதக் குரல்கள் இடைவெளியற்று பெருகியபடியே இருக்கும் என் இதயத்தை அச்சுறுத்தும்படி மர்மக்கதைகளில் வரும் பேய்வீடு பற்றிய படிமமாயே அது தெரியும், அவர்கள் வீடென்று அதைக் கட்டியபின் பூதங்களைச் சினேகித்தார்கள். மோ கினிகளின் புன்னகையால் அலங்கரித்தார்கள். தேவதைகள் வாசம் புரிவதை மறுத்து விஷநதியை வழிப விட்டார்கள். சிரிப்பவிழ்ந்த ஒவியங்களின் ஒளிர்வினால் இருளடர்ந்த மனதை மறைக்க முனைந்தார்கள், புலன்களை மீறி அது வெடித்தபோது மாபெரும் மனித மரணம் என்னுள் நிகழ்ந்தது,
||
பூதங்கள், மோகினிகள் எல்லாமே அவர்களின் முற்றத்தில் கூடி ஆாவாரித்தன. ஞாபகத்துள் சிக்காத நாளெனறில் மர்மக்குகையான இருப்பை பிய்த்துதறினர். தேவதைகள் தம்மைச் சபித்ததாய் திசைமுழுதும் வார்த்தைகளை எறிந்தனர்; மீண்டும் புன்னகையைப் பொருத்தி பூதங்4ள், மோகினிகள் வாழ்த்துரைக்க ஏதோ ஒரு தேவதைகளின் வனத்துள் ஒளிவர்ண ஒவியங்களால் அலங்கரித்து இருளடர்ந்த மனதோடு நுழைந்தார்கள். என்னைப்பிரமிக்க வைக்கிறது பேய்களின் வீடு,
*

காலத்தின் புன்னகை V 39 /w சித்தாந்த்ன் கவிதைகள்
மெளனப்பிரளயம்
நட்சத்திரங்கள் ஒளி சிந்தும் பொழுதில் மெளனத்துள் கரைந்து கொண்டிருந்தேன்,
நீ அருகில் இருந்தாய் உன்னோடு பேசப்பிடிக்கவில்லை. معجمي - என் மெளனத்தின் அர்த்தம் புரியவில்லை உனக்கு. நீ எனக்காக நெஞ்சுள் அழுதிருக்கலாம்: அல்லது நகைத்திருக்கலாம்
என்னை நீ எப்பொழுதுமே கனவுகளில் வழிபவனாயும் கற்பனைகளில் மிதப்பவனாயுமே நினைத்துக் கொண்டிருப்பாய்.
என் பெளனத்தின் வினாடிகளுள்ளும் ஒரு பிரளயத்தையே உருவாக்கும் வலிமை உறைந்திருப்பதை நீஅறிந்திட நியாயமில்லைத்தான்கு
நீ என் அருகே எப்போதுமே இருந்துவிடு. ஆனால் என் மெளனத்தில் கல்லெறியாதிரு,
*

Page 28
காலத்தின் புன்னகை V 40 A சித்தாந்தன் கவிதைகள்
நட்சத்திர ஞாபகங்கள்
இரவின் விசித்திரங்களிலிருந்து மிளிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். புன்னகையின் அழகைச் சொரிந்து உங்களுக்குத் தெரிந்த மெளனப்பாடலைப் பாடுகிறீர்கள் , நெடிய என் கனவுகளை நினைவூட்டியே ஒளிர்கிறீர்கள் எனது மனதில் முகிழ்க்கும்
ஒவ்வொரு முகங்களாகவும், நீங்கள்
என்னோடே எல்லாக் கணங்களிலும் இருந்து வருகிறீர்கள்: . . . .
赛

காலத்தின் புன்னகை V 41 A சித்தாந்தன் கவிதைகள்
கொதிப்பு
என்னோடு உனக்குச் சமரசமில்லை, உலைத் தீயை உமிழும்
உனது இதயத்தில் بھمبر-- வெண்சாமரம் வீசும் எனது வார்த்தைகள் எடுபட நியாயமில்லை நீ எனது வாஞ்சைகளில் சூனியத்தை விதைக்க நினைக்கிறாய். அலையாகத் தழுவும் எனது பூர்வீக ஆசைகளில் பூகம்பக் கொதிப்புக்களை உருவாக்க முனைகிறாய் எனது நெடிய கனவுகள் பற்றி நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. உன்னை வதைப்பதை நான் ஒருபோதும் விரும்பியதேயில்லை; நீயே உனது அழிவுக்கு என்னை காரணமாக திணித்தும் இருக்கின்றாய்; நான் நெருப்பானது உன்னால், நீ எனது பயணத்தில் கல்லா யும்; முள்ளாயும் இருக்கும்வரை நானும் நெருப்பாகவே இருப்பேன்.

Page 29
காலத்தின் புன்னகை V 42 / சித்தாந்தன் கவிதைகள்
அறுவடை நாள்
நேற்றைய பொழுதொன்றில் நிலவு அழுதது. நகரின் முழு முகம் நெருப்பில் எரிந்தது; நெல் வெளிகளில் முட்சளும், கம்பிகளும் பூத்தன3 புதிய கதிர்கள் கனல் சுமந்தனவாக கருவிகள் சுமந்தேகினர் நகரின் இருள் வீதியில் இன்றைய முழுநாளில் மல்லாக்கான நகரின்
வானில் நிலா வின் முகம் பொலிவுடன் எழுந்தது. கருவியேர் உழவர்கள் மீளவும் மீளவும் நகரைச் சூழ்ந்தனர். முடிவில் முட்களும், கம்பிகளும் உதிர்ந்தழிந்தன. நெல்வெளிசளின் கதிர்களில் புன்னகை நிறைந்தது. அது வீரம் விளையும் நிலம்!

காலத்தின் புன்னகை V 43 / சித்தாந்தன் கவிதைகள்
காலத்தின் முறிவு
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளில் என் கனவுகவி படபடத்தன, என் முற்றத்தில் என் வீதியில் நீண்ட என சுவடுகள் முளைத்திருந்தன, காலக்காற்று جه به نامه என் கனவுகளை ஏந்தியேந்தி ஒவியத்தூரிகையாகியது. பிறகொரு நாளில். காலக் காற்று தன் கைகளில் அழிவின் துடைப்பங்களை ஏந்தி குருதி வழிய_விசுக்கி ஆடியது. என முற்றத்தில் என் வீதியில் குருதி புரண்டு கிடந்தன சில வெண்புறாக்கள். அவற்றின் சிறகுகளுக்குள் பிணைந்திருந்த என் வண்ணத்துப் பூச்சிகள் நிறமிழந்து துடித்தன. காலக்காற்று கர்ஜித்தது என் கனவுகள் முடிந்து போனதாய் அதுக்குத் தெரியவில்லை னி என் காலத்தை நான் உருவாக்கப் போவது,

Page 30
காலத்தின் புன்னகை V 44 / சித்தாந்தன் கவிதைகள்
a esparere 6fo6ò aveno
என் கனவுகள் முழுவதையுமே கறையான்கள் தின்னுகின்றன, என் அன்பிலிருந்து அறிவிலிருந்து, புன்னசையிலிருந்து, எல்லாமே, கறையான்களின் கூர்வாயில் சிதைகின்றன? நான் என்ன செய்ய முடியும்? கறையான்களின் புற்று என்னை மூடி வருகிறது: புலன்களின் வாசல்களில் மின்னும் உயிரின் துடிப்புக்கள் சுருங்குகின்றன; இன்னும் கறையான்கள் மேய்கின்றன என் உணர்வுகளைச் சப்பிச் சிரித்து ஆனந்தப் பாடல் ஒன்றைப் பாடியபடி3 என்னில் இனி ஏது மிஞ்சும்?
 

காலத்தின் புன்னகை V 45 / சித்தாந்தன் கவிதைகள்,
எதிலும் நானில்லை
உங்கள் சுவர்களிலிருந்து என் சித்திரங்கள் உதிர்ந்துகொண்டிருக்கும் அவலம் கீறிய கோடுகளாலான இரு ஸ் படிந்த என் முகப்பிம் பங்கள் உங்கள் மனதில் சிதைந்தழிந்து கொண்டிருக்கும்: நிச்சயமாகச் சொல்கிறேன் உங்கள் கண்களில் எதிர்ப்படும் எதிலும் நாணில்லை. வெறுமையில் கரையும் இரவுகளில் தனித்தழுகின்றேன். ሸ பெயர் தெரியாத இரவுப்பூச்சியொ ன்று எனது துயரப்பாடலை எப்போவதாவது ஒருநாள் உங்கள் தலைகளின் மேலால் பாடிச் செல்லலாம். நீங்கள் புன்னகையை அதன் குரலுக்கு பதிலாக புரளவிடுவீர்கள் நான் சொல்கிறேன் உங்சள் கண்களில் எதிர்ப்படும் எதிலும் நானில்லை.
நான் எனது மூலங்களை எதன் ஆழத்துள்ளும் புதைக்கப்போவதில்லை; உங்கள் புன்னகைக்காக திசைகளில் விழிபரத்தி காத்திருக்கப்போவதுமில்லை என்றோ ஒருநாள் நீர்பெருகிய விழிகளுடன் நீங்கள் வருவீர்கள் மலர்கள் சிரித்துக் குலுங்கும்
என் வாசலில்
விம்மிச் சிதறும் வார்த்தைகளை பரவுவீர்கள்
அப்போதும் சொல்வேன் உங்கள் கண்களில் எதிர்ப்படும் எதிலும் நானில்லை,
R

Page 31
காலத்தின் புன்னகை V 46 /v சித்தாந்தன் கவிதைகள்
இருட்காலம்
ஒளி ததும்பி மிளிர்ந்த காலத்தில் நான் நின்ற பொழுதுகளில் ஆகாயம் பிரமிக்கும் சிறுகவிதையாக என் கைகளிலிருந்தது.
இதயத்துள் ஒளிர்ந்தன வண்ண வண்ண ஒவியங்கள். சரி க்திரப் புத்தகமாய் விரிந்த மனதில் எப்பொழுதும் பூத்துக் கிடக்கும் கவிதை புன்னகை முகத்தைக் காட்டும். அசையும் அதன் விழிகளில் மிதந்தேன்;
11 சருகுகள் பெருகி அழகு பொசுங்கியிருக்கும் முற்றத்தின் ஒற்றை வேம்பிலிருந்து பீதியையூட்டும் பறவையொன்று பாடுகிறது. தொங்கும் வெளவால்களின் துர்மணம் நாசியில் அடிக்கிறது. இது இருள் விரிந்ததோர் காலம்
மழைக் குமுழிகளில் முகம் பெருத்து அச்சம் விளைவிக்கும் என் முகம இரவின் வெறுமையில் பிரதிபலிக்கும்.
இருளில் ஒளியை விசிறியபடி பறக்கும் மின் மினிப் பூச்சியொன்று என் வாழ்வை ஞாபகப்படுத்திப் பறக்கிறது.
ဏွှိ ဒု

காலத்தின் புன்னகை V 47 Л. சித்தாந்தன் கவிதைகள்
துஷ்டர்கள் சூழ்ந்த பொழுது
இரவின் சித்திரங்களை ரசித்துக் கொண்டிருந்த பொழுது அவர்கள் வந்தார்கள் . குரூரத்தின் கெறிப்புக்களாய் வார்த்தைசளில் விசமொழுக என் மொழியிலேயே பேசினார்கள். வலுமிக்க கரங்களால் குரல்வளையை நெருக்கி குற்றச்சாட்டுக்களை போலிமைகளில் குழைத்து என்மீது அப்பினார்கள். தங்கள் வார்த்தைகளை மறுத்தபோதெல்லாம் என் உடலின் பாகங் ஈளில் கூரிய நகங்களால் கீறினர். என் கனவுகளை நேசிப்பதாய் பேசிப் பேசியே என்னை வதைத்தார்கள். பின்னர் அவர்கள் போனார்கள். அகங்காரமாய் வளர்ந்தபடி ஆழமான என் சுவடுகளை
அழிப்பதுபோல் மிதித்துக்கொண்டு.

Page 32
காலத்தின் புன்னகை V 48 / சித்தாந்தன் கவிதைகள்
ஆதியிலிருந்து என் வருகை
ஆதியிலிருந்து நான் வருகிறேன் என் வருகை முதலில் நந்தவனங்களுக்கூடாய் நிகழ்ந்தது. பின், எரிந்த வனங்களூ டாய் நிகழ்கிறது.
சாம்பல் மண்டிய மேடுகளில் என் சுவடுகள் முளைத்திருக்கின்றன:
யெளவனம் சுருங்கி துயர்கீறிய என் முகம் விழிகளை
நந்தவனக் கனவுகளுக்குள் தொலைத்திருக்கிறது. ۔
வெப்பம் வழியும் பொழுதுகளுக்குள்ளும் என் வருகை நிகழ்கிறது.
வீச்சு நிரம்பிய என் பாதங்கள்
அனலில் நனைந்து நனைந்து வீறடைந்து சுவடுகளைப் பெருக்குகிறது:
ஆதியிலிருந்து நான் வருகிறேன்:
என் வருகை நந்தவனங்சளூடாய் நிகழும் கனவுகளில் திளைத்திட நான் வருகிறேன்.
*
 
 


Page 33
சித்தாந்தன் புதிய கவிஞர். புதிய உணர்முறையுடையவர்
Onggbevin GT BGűleg குறித்து சிந்திப்பவர். அமைதியும் அந்த அமைதிக் ZSIGMYYEYY GESTIS மொழியை சித்தாந்தன் பயன்படுத்தும் முறைமையிஐ s கவிதைகள்
Au Q6hu6YflıUrTÜ6opLuqub புதிதான உணர்முறையினை இனங்காட்டுகின்றன.
சித்தாந்தன் கவிதைகளிலுள் சொற்களின் அமைவுகள்
II LIDIGUST மனதில் நிகழ்த்துகின்றன. புதிய காட்சிகளை விரிக்கின் புதிய உணர்வுகளை கிளர்த்துகின்றன.
assive"Tasyout.