கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேராசிரியர் அல்லாமா உவைஸ்

Page 1


Page 2
. , , ,
ਨੌਨ
3 ਨ Koni

பேராசிரியர் அல்லாமா உவைஸ்
(பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பங்களிப்பினைப் பற்றிய ஆய்வு)
(ெபா) கோதரர்
Wiாட்டம் போடு
ஏ.ஏ.எம்.புவாஜி
-SC) கோ -
சஹீமா பதிப்பகம் மாத்தளை, இலங்கை.

Page 3
ii
Bibliographical Data
Title of the Book : Professor Allama Uvais ,
Author : A.A.M. Fuwaji
Date of Publication : April 1997,
Copy Right : Author
MANO PRINTERS Printers 69, Triplicane High Road,
Madras - 600 005. (O 843400
Publishers : Shaheema Publishers
111A, Godapola Road, Matale, Sri Lanka
Price : RS. 100/
Laser Typeset : Sumathi Lasers, Chennai - 6. Ph:
O44-8523424. INDIA.
t
ൻ ?'
 
 

iii
േ
1ൂി
ൻ
(
தம் சுகங்களை அர்ப்பணித்து என் கல்வியை மேம்படுத்திய என் அன்புப் பெற்றோர் அப்துல் அளிஸ் - சய்தா உம்மா இருவரினதும் நினைவுக்கு இந்நூல் சமர்ப்பணம். இறைவா! என் மீது என் பெற்றோர் காட்டிய அன்பை நீ அவர்கள் மீது காட்டுவாயாக. உன் மேலான சுவன வாழ்க்கையை நீ அவர்களுக்கு வழங்குவாயாக.
}\} \,\, ി ീ

Page 4
iv
தமிழ்நாடு முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம்.எம். இஸ்மாயில் அவர்கள் வழங்கிய அணிந்துரை
மறைந்த பேராசிரியர் அல்லாமா டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்களைப் பற்றியும் அவர்களது தமிழ் இலக்கியப் பணிகளைப் பற்றியும் ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி அவர்கள் எழுதியுள்ள இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் பெரும கிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் உவைஸ் அவர்களை நான் நீண்ட காலமாக நன்கு அறிந்திருப்பவன். அவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தைப் பற்றிய ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் அறிஞராவார்.
அன்னாருடன் நெருக்கத்துடன் பழகும் வாய்ப்பும் அவர்க ளுடைய படைப்புக்களில் பலவற்றைப் படிக்கும் சந்தர்ப்பங்க ளும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. பூரீலங்காவில் அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவர்களுடைய விருந்தினனாக இருக் கும் வாய்ப்பும், அவர்கள் சென்னைக்கு வந்தபோது, அவர் களை எனது விருந்தினராக உபசரிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியுள்ளன.
உவைஸ் அவர்களோடு நீண்ட காலமாக பழகி வந்ததின் காரணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த அறிவையும் ஆர்வத்தையும் ஒருங்கே கண்டு வியப்பும் மகிழ்ச் சியும் கொண்டிருக்கின்றேன்.
அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தபோது, அவரைக் கெளரவிப்பதற்காக இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

V
பாராட்டு விழாவில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்குக் கிட்டியது. அதற்கும் மேலாக, இஸ்லாமியத் தமிழ் இலக்கியங் களைப் பற்றி உலகில் பல பாகங்களிலும் வாழும் தமிழ் பேசும் மக்கள் உணர்ந்து கொள்வதற்கு டாக்டர் உவைஸ் அவர்கள் ஒரு கருவியாக இடம் பெற்றதிற்குக் காரணமாக இருந்தவர்க ளில் நானும் ஒருவன். நான் இங்கே குறிப்பிடுவது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறைத் தலைவராக அவர்கள் ஆனதை தான். ஏனெனில், இந்த தலைமைக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்த குழுவில் அங்கம் வகித்தவர்களில் நானும் ஒருவன். உவைஸ் அவர்கள் அந்த துறையின் தலைவராக வந்திராவிட்டால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்க முடியாது; அவற்றினை இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளி லும் வாழும் தமிழ் முஸ்லிம்கள் படிப்பதற்கும் வாய்ப்பு கிட்டியிராது.
டாக்டர் உவைஸ் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்க ழகத்தில் பணி புரிந்த காலத்தில்தான் பல்வேறு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்தன. அந்த செயல்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பரப்பினை உலகுக்குக் காட்டியது. அவர்கள் அத்துறையில் இருக்கும்போது பதிப்பித்த நூல்கள் பல. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினையே பல தொகுதிகளாக பதிப்பித்து, பல்கலைக் கழகத்தின் வாயி லாக வெளியிட்டுள்ளார்கள்.
இத்தகைய உழைப்பின் காரணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பரப்பையும் விரிவையும் விசாலத்தையும் உலகுக்கு உணர்த்த ஒரு வாய்ப்பு உண்டாயிற்று.
இவ்வாறாக பல நூல்கள் வெளியிட்டதிற்கு மேலாக இன்னோர்.அற்புதமான நூலையும் டாக்டர் உவைஸ் அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். அதுதான் தமிழ் இலக்கிய அரபுச் சொல் அகராதி" என்பது முஸ்லிம்களின் அடிப்படை மத நூல் திருக்குர்ஆன் என்பதனாலும், அது அறபு மொழியில் இருப்பத

Page 5
vi
னாலும், அதைப் பின்பற்றி உலகில் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்கள், அவர் அவர்களுடைய மொழிகளில் உரை எழுதும்போதும் விளக்கும் போதும் அறபியில் உள்ள மூலச் சொற்கள் அப்படியேயோ அல்லது அந்தந்த மொழிகளின் அமைப்புக்கு ஏற்ப மருவியோ இடம் பெறுவது தவிர்க்க முடியாதவொன்று.
இந்த நிலையினால் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்க ளில் அறபு, பார்சி ஆகிய மொழிச் சொற்கள் அப்படியேயோ அல்லது சற்று வேறுபட்டோ இடம் பெற்றிருக்கின்றன. அத்தகைய சொற்களின் பொருளை, தமிழை மாத்திரம் அறிந்த வர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. சொல்லப் போனால், அதுவும் ஒரு தமிழ்ச் சொல்லே என்று எண்ணி அதனுடைய பொருளைக் காண முயலத் தோன்றும்.
இவ்வாறு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ள அறபு, பார்சி மொழிச் சொற்களின் ஆட்சியை முழுமையாக புரிந்து கொள்ளவேண்டுமானால், அதற்கு ஒரு வழிகாட்டி தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை. இங்கே தான் டாக்டர் உவைஸ் அவர்கள் பதிப்பித்த தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி பளிச்சென மிளிர்கிறது. இந்த நூலுக்கு அன்னார் எழுதி இருக்கும் முன்னுரையே அற்புதமாக அமைந் திருக்கின்றது என்று சொல்லலாம். அந்த முன்னுரையிலிருந்து சிற்சில பகுதிகளை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமு டைத்தாகும். அவர்கள் கூறுவதாவது:
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர். அகத்தின் அழகினை முகம் பிரதிபலிப்பது போன்று மக்கள் வாழ்க் கையைப் பிரதிபலிப்பது இலக்கியம். எனவே மக்கள் பண்பாட்டியல்புகளை இலக்கியக் கண்ணாடியில் பார்க்க லாம். ஓர் இனத்தின் பண்பாடு பெரும்பாலும் அந்த இனம் பின்பற்றும் சமய நெறிகளையே அடிப்படையாக கொண்டிருக்கும். அந்த மார்க்கம் எந்த மொழியில் தோன்றி வேரூன்றி இருக்கிறதோ அந்தக் மொழியின்

Vii
தாக்கத்தை அந்த மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய வேற்று மொழி இலக்கியங்கள் பிரதிபலிக்கக் காணலாம். அது அந்த இலக்கியத்தின் சிறப்பம்சமாகவும் அமைந்து விடுகின்றது.'
மேலே எடுத்துக்காட்டிய பொது நியதியை பெளத்தம், சமணம், வைணவம் போன்ற மதங்களின் இலக்கியங்கள் வழியாக விளக்கி விட்டு, இஸ்லாத்தைப் பற்றி, அடியில் கண்டவாறு கூறுகின்றார்:
'இஸ்லாம் தோன்றிய மொழி அறபு. இன்றும் இஸ்லாத் திலிருந்து பிரிக்க முடியாத மொழியாக விளங்குவது அறபு மொழி. அது இஸ்லாத்தின் சமய மொழியாகத் திகழ்கிறது. பாரசீகத்தில் வழங்கும் மொழி பார்சி. அறபு எழுத்துக்களில் இன்று எழுதப்படும் பார்சி மொழி ஏறத்தாழ அறபு மொழியின் ஒரு கிளை மொழி என்று கூறக்கூடிய தன்மை வாய்ந்து உள்ளது எனக் கூறலாம்.
பார்சி மொழியும் இஸ்லாத்துடன் நெருங்கிய தொடர்பு டைய மொழியாகும். எனவேதான் இஸ்லாமிய அடிப்ப டையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலே ஏராளமான அறபுச் சொற்களும் ஓரளவு பாரசீகச் சொற்களும் கலந் துள்ளன."
"இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலே இஸ்லாமியக் கலைச் சொற்களையும் கருத்துக்களையும் சிறந்த முறையில் விளக்குவதற்கு அறபு, பார்சிச் சொற்கள் இன்றியமையாதனவாயுள்ளன. இஸ்லாமியக் கலைச் சொற்களை நேரடியாக தமிழில் பெயர்க்க முடியாது. பெயர்த்தாலும் அச் சொற்கள் அவற்றின் கருத்துக்களைப் பிரதிபலிக்கா. இறைவனைக் குறிக்கும் அல்லாஹ்” என்னும் அறபுச் சொல்லை எந்த மொழியில் பெயர்த்தாலும் அது அங்கு பொதிந்துள்ள கருத்தினைச் சுட்டாது. ஒரே சொல்லாகவும் அதனை

Page 6
viii
மொழி பெயர்க்க முடியாது. எனவே அல்லாஹ் என்றே உபயோகிக்கப்படுகிறது.'
இத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஆழமான முன்னு ரையோடு இந்த தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி டாக்டர் உவைஸ் அவர்களால் படைக்கப் பெற்று இருக்கின்
[I0ჭნJ.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் காட்டில் உள்ள இளந் தருக்களை முழுமையாக கண்டு, உணர்ந்து அனுபவிக்க உதவக்கூடிய ஒரு கைவிளக்கு என இவ் அகராதியை வர்ணிக்க
GN)sTLD),
இத்தகைய அகராதியைப் படைப்பதற்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலானவற்றின் அமைப்பினை யும் ஆழத்தையும் கண்டிருக்க வேண்டும். அத்தகைய பெரும் பேற்றினை இறைவன், மறைந்த டாக்டர் உவைஸ் அவர்களுக் குக் கொடுத்திருந்தான்.
பேராசிரியர் அல்லாமா உவைஸ்" எனும் தலைப்புடன் வரும் இந்நூல் டாக்டர் உவைஸ் அவர்களுடைய வாழ்க் கையை ஒரளவு விளக்கிவிட்டு, அன்னார் படைத்த நூல்களை யும் அன்னாரின் இலக்கியப் பணிகளையும் விரித்துக் கூறுகின் றது. டாக்டர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யப் படைப்புக்களை வெளிக் கொணர்ந்ததன் மூலமாக இலங்கை இலக்கிய உலகில் ஒரு புரட்சியையே உண்டு பண்ணி விட்டார் என்று சொல்ல முடியும். வேறு பல பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்த போதிலும், அவர் இஸ்லா மியத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த பணி தான் அளவிலும் தரத்திலும் தலைசிறந்து நிற்கும்.
இந்நூலாசிரியர் ஜனாப் புவாஜி, டாக்டர் உவைஸ் அவர்க ளைப் பெரிதும் மதிப்பவர். இந்த மதிப்பின் விளைவே இந்நூல். டாக்டர் உவைஸ் அவர்களின் வாழ்க்கையைச் சற்று சுருக்கமாக எடுத்துக் கூறிவிட்டு, அவருடைய இலக்கியப் பணிகளை ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கின்றார்.

ix
டாக்டர் உவைஸ் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளைத் தவிர அறபு, பார்சி எனும் மொழிகளை யும் தெரிந்தவராதலின் அவருடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டைத் தீட்டப்பெற்ற வைரங்களைப் போல ஜொலிப்பதைக் காண முடிகின்றது.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பணிக ளைப் பற்றிய இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பினை ஒரு பெரும் பேறாகக் கருதுகிறேன். இந்த நூலினைப் படிப்பவர்கள் டாக்டர் உவைஸ் அவர்களு டைய படைப்புக்களையும் படித்து பெரும் பயன் அடைவர் என்று எண்ணுகின்றேன். அப்படியே அடைய வேண்டு மென்று அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
8, ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை மு.மு.இஸ்மாயீல். மைலாப்பூர், 19.3, 1997. சென்னை - 600 004.

Page 7
X
உவைஸ் எனும் ஒரு தமிழிலக்கிய மைல்கல்
பேராசிரியர் உவைஸ் பற்றி ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி எழுதியுள்ள நூலுக்கான முன்னுரைக் குறிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி வருகைப் பேராசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகம் செங்கலடி,
இலங்கை.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் மறைவுக்கு எம்மைப் பழக்கிக் கொள்ளும் துன்ப அனுபவத்தினூடே அவரின் பெருமை யும் புகழும் பேடிப்படியாக மலையிலிட்ட் விளக்குப் போலத் துலாம்பரமாகிக் கொண்டு வருவதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஜனாப் ஃபுவாஜி ஒரு முக்கிய சாதனையைத் தமதாக்கிக் கொண்டுள்ளார். வருங்காலத்தில் பல்கலைக்கழக மட்டங்களிலும் தன் ஆய்வு அறிஞர் மட்டத்திலும் வெளிவரப்போகும் உவைஸ் அவர்கள் பற்றிய ஆய்வுகளுக்கெல்லாம் தள நூலாக அமையப் போகும் இந்த முதல் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பெருமை ஃபுவாஜியைச் சார்ந்ததாகின்றது.
ஃபுவாஜி அவர்களின் இந்த ஆக்கம், பெரும் வரவேற்புடைய ஒரு நூலாக அமைவது திண்ணம். பேராசிரியர் உவைஸ் அவர்க ளின் பிரதான சாதனையான இஸ்லாமியத் தமிழிலக்கிய மீட்புப் பணியை முனைப்புறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரி யர் உவைஸ் அவர்கள் பற்றிய தகவல்களை அந்தப் பணியின் பின்புலத்தில் ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்.
பேராசிரியர் கலாநிதி உவைஸ் அவர்கள் பற்றிய மதிப்பீடு கள், தமிழ்நிலை நின்று பார்க்கும்பொழுது, இரண்டு பெரும்பகுதி களாகச் செய்யப்பட்ல் வேண்டும்.
முதலாவது இவர் தமிழ் இலக்கியப் பரப்பிலே ஏற்படுத்தி யுள்ள விஸ்தரிப்பு ஆகும். அதாவது இலை மறைகாயாக இருந்த இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் பால் தமிழிலக்கியகாரர்களின தும் தமிழ் ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்து, அந்த இலக்கியப் பரப்புப் பற்றிய பிரக்ஞையை முனைப்புப்படுத்திய

மையாகும். கிறிஸ்தவத் தமிழ் இலக்கியங்களின் மீட்புக்கு கிறித்தவ தேவ ஊழிய நிறுவனங்களும், சில அறிஞர்களும் பாடுபட்டனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பரப்பெல்லை ஜனாப் உவைஸ் அவர்களாலேயே முதன்முதலில் இனங்காட்டப் பெற்றது. இது ஒரு பெருஞ் சாதனை. இவரை வழிநடத்தியோ ரும், இவருக்குத் துணைநின்றோரும், இவருக்கு உதவினோரும் எனப் பலர் இவருடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் இந்தப் பணி முற்று முழுக்க அவருடையதே. அவரது ஊக்கமும் தொழிற்பாடும் இல்லையேல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய பிரிவு கிட்டியிருக்காது.
+ முது' : 81 : இது ( தேடு $4 இல் 1:38 ஆக இந்த விஸ்தரிப்புப் பற்றிப் பேசும் பொழுது, இந்த ஆய்வுத் துறையில் ஆர்வம் காட்டிய, வழிகாட்டிய இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையினதும், அதன் முதல் இரு பேராசிரியர்களின தும் ஆராய்ச்சித் தீட்சண்ணியத்தைப் பதிவு செய்தல் அவசியம். (பேராசிரியர்கள் சுவாமி விபுலானந்தர், கணபதிப்பிள்ளை ஆகி யோரின் அகண்ட பார்வையினதும், திறந்த உள்ளங்களினதும் பேறு உவைஸ் அவர்களின் இந்த ஆய்வுச் சாதனையாகும்.
இந்த வகையிலேதான் பேராசிரியர் ம.மு.உவைஸ் அவர்கள் தமிழிலக்கிய வரலாற்றின் மைல் கல்லாகிறார். தமிழ் வளர்ச்சி யின், அதன் அகற்சியின் பாதையில், உவைஸ் அவர்கள் ஒரு முக்கிய மைல் கல்லாகிறார். தமிழிலக்கிய வரலாற்றில் இந்தப் பேறு விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலருக்கே கிட்டியுள்ளது (சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர்) உ இரண்டாவது இந்த இலக்கிய மீட்டெடுப்பின் வழிவருவதா கும். அதாவது தமிழ் எனும் மொழிப் பண்பாட்டுப் பரப்பினுள் இஸ்லாமியப் பண்பாட்டின் இடம் வற்புறுத்தப் பட்டமையாகும். இது இலக்கியத்துக்கும் அப்பாலே செல்கிற பண்பாட்டு நிலை முக்கியத்துவமாகும். தமிழின் 'பலம்' என்று கூறப்படத்தக்க ஓர் அம்சத்தை இது வலியுறுத்துகின்றது. அதாவது, ஒன்றுக்கொன்று
முரணான உலக நோக்குக் கொண்ட பல்வேறு மக்கள் தத்தம் கருத்துக்களை மயக்கமின்றி வெளியிடுவதற்கான அகண்ட பண் பாட்டுத் தளத்தைத் தமிழ் கொண்டுள்ளது. இதனால் பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தமிழைத் தாய்மொழியா கக் கொண்டவர்களாக இருக்கக்கூடிய ஒரு 'கருத்துச் சமநிலை' தமிழுக்கு உண்டு." தொழில் நுட்ப நாகரிகத்துக்கு ஆட்படாத மொழிகள் பல, குறித்த ஓரிரு மதப் பண்பாடுகளுடனேயே

Page 8
xii
தொடர்புபட்டு நிற்பனவாய் அமையும் என்பது ஓர் உண்மையா கும்.
"தமிழுக்குள் இஸ்லாத்தின் இடம் பற்றிய வற்புறுத்துகை' தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியச் சமூகத்துக்கு முக்கியமான ஒன்றாகும். இந்த வற்புறுத்துகையின் பரிமாணம் நாட்டுக்கு நாடு வேறுபடும். தமிழ்நாட்டில் இது தமிழ் பேசும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களின் ஊடாட்டத்தில் ஒரு புதிய பண்பாட்டு இனங்காணுகைக்கு இடமளிக்கின்றது. இலங் கையிலோ தமிழ் இலங்கை முஸ்லிம்களின் 'வீட்டு மொழியா, தாய்மொழி'யா என்ற ஒரு விவாதம் கல்வி மொழி மட்டத்திலும், உத்தியோக மொழிச் சிக்கல்களாலும் கிளப்பப்பட்டபொழுது, இந்தப் பண்பாட்டு வற்புறுத்துகை, தமிழை இலங்கை முஸ்லிம்க ளின் 'மதப்பண்பாட்டிலும் இடம் பெறும் அவர்தம் தாய்மொழி என்பதை நிலைநிறுத்திற்று. அரபு மதமொழியாகவும் தமிழ் தாய்மொழியாகவும் தொழிற்படும் பண்பாட்டு முக்கியத்துவம் நிலைபேறுடையதாயிற்று.
இந்த வகையிலே பார்க்கும்பொழுது உவைஸ் அவர்கள் ஏற்படுத்திய இலக்கிய மீட்புப் பணி, இலக்கியத்துக்கு அப்பா லான சமூக - பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டதாக விளங்குவ தைக் காணலாம்.
இது காரணமாகப் பேராசிரியர் உவைஸ் வரலாற்று முக்கியத் துவம் உள்ள ஒரு தனியாள்"ஆக மேற்கிளம்புகிறார்.
காலம் செல்லச் செல்ல உவைஸ் அவர்களின் இந்த ஆளுமை விஸ்வரூபம் எடுக்கப் போகின்றது. அதன் காரணமாக, அவர் காலத்தில் வாழ்ந்து, அவருடன் அந்நியோன்னிய உறவு வைத்தி ருந்த எமக்கு ஒரு முக்கிய பணி உள்ளது. அவர் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நேர்சீராகப் பதிவு செய்து வைத்தல் அவசியம் ஆகும்.
அந்தப் பணியில் ஜனாப் ஃபுவாஜியின் இந்த நூல் பேராசிரி யர் உவைஸ் அவர்களின் வாழ்க்கை பற்றிய பல தகவல்களைத் தருகின்றது. பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கிய, மத, பண்பாட்டுச் செயற்பாடுகளுக்குத் தளமாக அமைத்த அவரது ஆளுமைப் பண்புகள், மனைவி, பிள்ளைகளின் இயல்புகள், அரசியற் சமூக கருத்து நிலைகள் ஆகியன மிக முக்கியமானவை யாகும். அவற்றையும் பொறித்து வைத்தல் வேண்டும். குறிப்பாக

xiii
கலாநிதி பதியூதீன் மஹ்மூத்துக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு களும், சிறப்பாக அவர் இஸ்லாமிய சோஷலிச முன்னணியில் இடம் வகித்தமையும் மிக முக்கியமான வரலாற்றுத் தரவுகளாகும்.
சிங்கள மொழி மூலம் அவர் சாதித்தவையும் அதனால் ஏற்பட்ட இன உறவு விளக்கங்கள் பற்றிய தெளிவும் இருத்தல் வேண்டும்.
இவற்றுக்குப் பின்புலமாக விளங்கிய அவரது சிங்கள, தமிழ் மொழியறிவு ஆழம் பற்றிய பதிகையும் அவசியமாகும். குறிப்பா கத் தமிழில் நவீன காலத்துக்கு முந்திய தமிழிலக்கியத்தில் அவருக்குச் சிறப்புத் தாடனம் இருந்தது. அத்துடன் இலக்கணம் பற்றிய தெளிவான அறிவும் இருந்தது, வித்தியோதயாவில் அவர் தமிழ்ப் பாடத்தில் இலக்கணப் பகுதியினைப் படிப்பித்து வந்தவர். பேராசிரியர் உவைஸ் அவர்களின் நினைவை சரிவரப் பேணுவதற்கு நாம் உடன் செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அது அவர் பற்றிய ஒரு வரன்முறையான கருத்தரங்கை ஒழுங்கு செய்வதாகும். அக்கருத்தரங்கில் அவருடன் தொடர்பு கொண்டி ருந்த நண்பர்கள், ஆய்வாளர்களை ஒருங்கு சேர்த்து அவர்கள் தரும் வரலாற்றுத் தகவல்கள் பதிவு செய்யப்படல் வேண்டும். குறிப்பாக அவர் பதிப்பித்த, வெளியிட்ட நூல்களின் கால அட்டவணை நன்கு தயாரிக்கப்படல் வேண்டும். அப்பொழுது தான் அவரது வளர்ச்சி நன்கு புலனாகும்.
பேராசிரியர் உவைஸ் அவர்கள் பற்றிய ஒரு நல்ல அறிமு கத்தை, குறிப்பாக அவரது இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணி பற்றிய விளக்கத்தை இந்நூல் தருகின்றது.
ஜனாப் ஃபுவாஜி அவர்கட்குத் தமிழ் கூறும் நல்லுலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. ",".
24. II.96 கார்த்திகேசு சிவத்தம்பி

Page 9
Xiv
என்னுரை
'மனிதனுக்கு நன்றி நவிலாதவன் தன் இறைவனுக்கு நன்றி நவின்றவனாக மாட்டான்'. இக்கூற்று நபிகள் நாயகத்து டையது. அப்படியென்றால் -
தன் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உதவிய மாமனிதர்களை மறந்து விடுகின்ற, நினைவு கூர மறுக்கின்ற சமூகத்தையும் இறைவனுக்கு நன்றி கூற மறந்த சமூகம் என்று கருதலாம் தானே?
ஆனால் ஒன்று - ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத் தவர்கள் - அதன் உயர்வுக்கு உதவியவர்கள் - அதன் மேம்பாட் டுக்காக உழைத்தவர்கள் - அச்சமூகத்திற்குச் சரியாக இனம் காட்டப்பட்டிருக்க வேண்டும். இத்தகையோரைத் தம் சமூகத் திற்கு இனம் காட்டுவது அச்சமூகத்து இலக்கியவாதிகளின் தலையாய கடமையாகும்.
எனவே, இவ்வாறு இனம் காட்டப்படாத ஒரே காரணத்தி னால், ஒரு சமூகம் தான் நன்றிக்கடன் பட்டிருக்கின்றவர்க ளுக்கு நன்றி கூறாது இருந்தால், குற்றம் அச்சமூகத்தினுடைய தல்ல; குற்றவாளிகளாக சுட்டிக்காட்டப்பட வேண்டியவர்கள் அச்சமூகத்து இலக்கியவாதிகளே.
இந்த சிந்தனைப் போக்கின் அடிப்படையிலே நாம் இலங்கை இஸ்லாமியச் சமூகத்தைக் கணிப்புக்கு உட்படுத்து வோமானால், அச்சமூகத்தின் இலக்கியவாதிகள், இனங்காட் டப்பட வேண்டியவர்களைச் செவ்வனே இனம் காட்டத் தவறியமையால், இலங்கை முஸ்லிம் சமூகம் அது பெரும் நன்றியுணர்வுடன் நினைவு கூர வேண்டிய பலரைப் பற்றி போதியளவு அறியாத அவல நிலையிலேயே இருக்கின்றது என்பதை உணர்வோம்.

XV
எல்.
தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும் தமிழின் அகற்சியைப் பொறுத்தவரையில் ராவ்பகதூர் சி.வை.தாமோத ரம் பிள்ளையோடும் மஹாமஹோ பாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யரோடும் ஒப்பிடப்படக் கூடியவர் என்றும் பேராசி ரியர் சிவத்தம்பி அவர்களால் எடைப்போடப்பட்டுள்ள பேரா சிரியர் முகம்மது உவைஸ் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாவார். RT மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் இருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முதுசத்தை மீள்கண்டுபிடிப்பு செய்து அத னைத் தமிழ் இலக்கியத்தின் ஒரு தனிப் பிரிவாக உயர்த்திய பேரறிஞர் உவைஸைப் பற்றி, அவரின் பாரிய இலக்கிய, சமூகப் பங்களிப்புக்களைப் பற்றி எம்மில் எத்தனைப் பேர் நன்கு அறிவோம்? பொதுமக்கள் மத்தியில் - தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல, முஸ்லிம்கள் மத்தியிலும் கூட - அவர் எந்தளவு அறியப்பட்டுள்ளார்? அவரது பாரிய பங்களிப்புக்கள் எந்தளவு உணரப்பட்டுள்ளன? இவற்றினைப் பற்றி ஆய்வுகள் நடத்தினால், பெறப்படும் முடிவுகள் மகிழ்ச்சியைத் தருவதாக
இராது என்பது நிச்சயம்.
4 4 1- 2 -3 - 4. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதையே தன் வாழ்வுப் பணியாக கொண்டு உழைத்தவர் மறைந்த பேராசிரியர் உவைஸ். ஆனால் அவர் சரியாக முஸ்லிம்களுக்கும் மற்றவர்க ளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாரா? இல்லை என்பதே பதில்.
கடல் தாம், T என் ரக்பு, டார் 1930, 41. இக்கட்டி, க (15) > டாக்டர் உவைஸ் அவர்களின் ஆற்றல்களை, சேவைகளை விளக்கும் இரண்டு மலர்கள் வெளியாகியுள்ளன என்பது உண்மை. இம் மலர்களில் அடங்கியிருப்பவை பேராசிரியர் உவைஸைப் பற்றிய, அவரது சாதனைகளைப் பற்றிய, அவரது பங்களிப்புகளைப் பற்றிய தனித் தனிக் கட்டுரைகள். இவை யாவும் தகுதி நிறைந்தவர்களால் எழுதப்பட்டவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் டாக்டர் உவைஸை முழுமையாக வெளிக்காட்ட இவை போதுமானவையல்ல என்பதையும் ஏற்கவே வேண்டும். ) டக் -லாரக் (841 1.ல 2: 1AN 1.AR (த 1 த |
ட காலத்து 32) ஈத (5810 , 2, 4 தோ 12:21:341 Risார் 13 st)

Page 10
Xvi
பேராசிரியர் உவைஸ் அவர்களைப் பற்றி முதல் நூல் எழுதிய பெருமை, தமிழ் மன்றம் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களையே சாரும். உவைஸ் அவர்களின் எழுத்தை முதன் முதலில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர் தான்; டாக்டர் உவைஸை முதன் முதலாக நூல் மூலம் அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். ஆனால் ஹாஜி ஹனீபா வின் நூல் வெளிவந்தது 1981 ஆம் ஆண்டிலாகும். அல்லாமா உவைஸ் மரணித்ததோ 1996 ஆம் ஆண்டிலாகும். எனவே எஸ்.எம்.ஹனீபாவின் நூல் ஒன்று மாத்திரம் போதாது.
ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணுாறுகளில் கூட, இஸ் லாமியத் தமிழ் இலக்கியப் பேரறிஞர் பேராசிரியர் உவை ஸைப் பற்றிய ஒரு முழுமையான நூலொன்று இல்லை என்ற குறைபாடு நிலவவே செய்தது. இக்குறையைப் போக்க வேண் டும் என்ற என் எண்ணத்தின் விளைவே உங்கள் கரங்களில் இப்போது இருக்கும் இந்நூல்.
முதுகலைமாணி பட்டதாரி ஒருவர் காமராசர் பல்கலைக்க ழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்காக, 'இஸ்லாம் மற்றும் இஸ் லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு ம.மு.உவைஸ் அவர்கள் ஆற்றிய பணி’ எனும் தலைப்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார் என சென்ற மாத இறுதியில் கேள்விப்பட் டபோது பெருமகிழ்ச்சியடைந்தேன். இவ் ஆய்வு, நூலாக வெளிவரும் போது எம் சமூகம் பெரும் பயனடையும்.
எம் சமூகத்திற்குத் தேவையான ஒரு பணியை நிறைவாக செய்துள்ளேன் என்ற திருப்தி என் மனதில் நிலவுகின்றது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஒரு சிறிய பங்களிப்பை வழங்கியுள்ளேன் என்ற பெருமிதம் என் உள்ளத்தின் ஒரு பக்கத்தில் மெல்ல எழத்தான் செய்கிறது. எனவே மகிழ்ச்சிகர மான இவ்வேளையிலே, எனது இந்நூல் வெளிவருவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்களை நன்றியு ணர்வோடு நினைவுகூருவது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.
டாக்டர் உவைஸ் அவர்களைப் பற்றி நூல் ஒன்று எழுத வேண்டும் என தீர்மானித்ததும், என் எண்ணத்தைப் பேராசிரி

XVii
யர் அவர்களுக்கு அறிவித்து அவரது அனுமதியையும் மேலான ஆசீர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டேன்.
இந்நூல் தொடர்பாக பேராசிரியர் உவைஸ் அவர்களின் பிள்ளைகள் எனக்கு வழங்கிய உதவிகள் அனந்தம். அவர்கள் அனைவர் மீதும் அருளாளன் அன்புடையோன் தன் பேரரு ளைப் பூரணமாகப் பொழிய வேண்டுமென மனங்கசிய வேண் டுகின்றேன்.
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வாழும் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவரென கணிக்கப்படும் அல்ஹாஜ் எஸ். எச்.எம். ஜெமீல், பல்கலைக்கழக நாட்களிலே என் நண்பராக வும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். இன்றும் இந்நிலையில் மாற்றம் இல்லை. என் எழுத்துலகப் பிரவேசத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவரும் இவரே. நண்பர் ஜெமீல் தந்துதவிய நூல்களை வைத்தே நான் பேராசிரியர் உவைஸைப் பற்றிய ஆய்வை ஆரம்பித்தேன். நூல் எழுதும் போது ஆக்கப்பூர்வ மான ஆலோசனைகள பல தந்து, எழுதிய பிறகு தேவையான திருத்தங்களைச் செய்து உதவியவர் ஹாஜி ஜெமீல், பெரும் ஊக்கத்தைத் தந்ததோடு டாக்டர் உவைஸின் பல ஆக்கங்களை யும் எனக்கு தந்துதவியவர் கவிமணி எம்.சி.எம். ஸ"பைர். இவ்விரு எழுத்தாளர்களுக்கும் என் நன்றி என்றும் உடையது.
கவிமணி ஸ"பைரைப் பற்றிய எனது நூலுக்கான முழுச் செலவினையும் ஏற்று, தமிழ் இலக்கிய உலகில் என் கால்க ளைப் பதித்துக் கொள்ள உதவிய என் அன்பு மாணவர், கொழும்பு மதீனா எண்டர்பிரைஸஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.பவுeர் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
பேராசிரியரைப் பற்றிய ஆய்விலே நான் ஈடுபட்டிருந்த போது எனக்கு உந்துச் சக்திகளாக திகழ்ந்தவர்கள் ஹாஜி ஏ.ஏ.எம்.வை. மரிக்கார், ஜனாப் எம்.எம்.பீர் முகம்மது, ஹாஜி எம்.ஏ.எஸ். ஹமீத் ஆகிய என் உடன்பிறவா அன்புச் சகோதரர் களே. என் இலக்கிய வளர்ச்சிக்கு இம்மூவரும் செய்துள்ள உதவிகளை நான் மறக்கவே முடியாது. இத்தகைய அன்பு தம்பிகளை எனக்கு ஈந்த அல்லாஹ"க்கு என் நன்றி.

Page 11
XV111
இலங்கையின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவ ரான டொமினிக் ஜீவா அவர்களுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு ஏற்பட்டது அண்மையிலேயே. எனது இல்லத்திற்கு வருகை தந்த அவர், பேராசிரியர் உவைஸைப் பற்றி நான் எழுதி வைத்திருந்தவைகளை மேலோட்டமாக பார்த்தார். அன்றிலிருந்து அதனை நூலாக வெளியிடுவதற்கு அவர் எடுத்த முயற்சிகள், வழங்கிய ஆலோசனைகள், காட்டிய ஆர்வம் - இவை யாவும் எனக்கு உயர் ஆதர்ஸங்களாக திகழ்கின்றன. இவர் எத்தகையதோர் இலக்கியவாதி என நான் பிரமிப்பு அடைந்த சந்தர்ப்பங்கள் பல.
நான் எழுதிய 'மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்’ எனும் நூல், மாத்தளையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவிலே வெளியிடப்பட்ட போது, இலங்கையின் அன்றைய பிரதம மந்திரியான திரு. ரனில் விக்கிரமசிங்கவின் மூலம் எனக்குப் பொன்னாடை போர்த்த வைத்து, என்னைக் கெளரவித்த என் மதிப்புக்குரிய ஆசிரியர் ஜனாப் ஏ.இஸட் ஒமர்தீன் அவர்களை யும் சகோதரர் ஹாஜி ஏ.ஆர்.எம்.இக்பால் அவர்களையும் நினைக்கின்றேன். பத்திரிகையில் வெளிவந்த இப்படத்தைக் கத்தரித்து, பெருமையோடு தன் 'எல்பத்தில் ஒட்டி வைத்து பாதுகாத்த அன்பு ஆசிரியர் மர்ஹ7ம் சனி முகம்மது அவர் களை நினைக்கின்றேன். எனது நூல் வெளியீடு ஒன்று மாத்த ளையில் நடக்கவிருந்ததை பத்திரிகையில் வாசித்து விட்டு, நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மூதூரில் இருந்து வந்து, விழாவில் பங்கு பற்றி என்னைப் பெருமைப்ப டுத்திய என் ஆசிரியர் திரு. கதிர்காமத்தம்பி அவர்களை நினைக்கின்றேன். எனது புத்தகமொன்றின் ஏராளமான பிரதி களை வாங்கி எனக்கு உற்சாகமூட்டிய என் அன்பு ஆசிரியர் அல்ஹாஜ் எம்.செரிப் அவர்களை நினைக்கின்றேன். இவர்கள் தந்த உற்சாகம்தானே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.
என் இலக்கிய வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் உதவிகள் புரிந்து வரும் ‘வீரகேசரி துணை ஆசிரியர் திரு. வி.தேவராஜ், சிவநெறிச் செம்மல் மாரிமுத்து செட்டியார், இலக்கிய ஆர்வலர்துரை விஸ்வநாதன், அல்ஹாஜ் ஏ.எஸ்.எம். வnர், சிவசக்தி எஸ்.சந்திரசேகரன், ஹாஜி எம்.ஐ.எச்.

XLIX
இனூன், பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம்.பாரூக், ஜனாப் எஸ்.எம்.ஹஸன், பொறியிலாளர் ஹாஜி எம். மொஹிதீன், இரா. இராமன், எம்.எச்.எம்.தெளபீக், எம்.எச்.எம். பரீன் ஆகி யோரை நன்றியோடு நினைவு கூர்கின்றேன்.
அல்லாமா உவைஸ் அவர்களின் இலக்கியப் பங்களிப்புக் களைப்பற்றிய இவ் ஆய்வு நூலுக்கு, தமிழ்நாடு முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம்.எம்.இஸ்மாயில் அவர்களி டம் அணிந்துரை பெறுவதே மிகப் பொருத்தமானதாக இருக் கும் என்ற எண்ணம் நீண்டகாலமாக என் நெஞ்சில் இருந்த தைப் பலரும் அறிவர். எனது இவ் ஆசையை நிறைவேற்றித் தந்த அல்லாஹ"க்கே புகழ் அனைத்தும். மிக உயர் கல்விமா னான நீதியரசர் அவர்களைச் சந்தித்ததையும் அவர்களோடு சற்றுப் பழக எனக்குக் கிடைத்த வாய்ப்பையும் பெரும் பாக்கியமெனக் கருதுகின்றேன். தன் சிரமத்தைப் பாராது, என்னை மதித்து, என் வேண்டுகோளை ஏற்று அணிந்துரை ஒன்றினை வழங்கி என்னையும் இந்நூலையும் கெளரவித்த மாண்புமிகு தலைமை நீதியரசர் அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
புகழ்ப்பூத்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், அல்லாமா உவைஸ் மீது பேரன்பும் அபிமானமும் வைத்திருப்பவர். நானும் தம்பி, மரிக்கார் ஹாஜி அவர்களும் முன்னுரை ஒன்றினைத் தருமாறு கேட்பதற்காக பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது இல்லத்துக்குச் சென்ற போது, அப்பெ ருந்தகை எங்களை வரவேற்ற முறையும், காட்டிய அன்பும் இன்றும் நெஞ்சுக்கு இதமாக இருக்கின்றது. தனக்கே உரித்தான அணுகுமுறையிலும் கண்ணோட்டத்திலும் பேராசிரியர் சிவத் தம்பி அவர்கள் அன்போடு வழங்கியிருக்கும் முன்னுரைக் குறிப்பு, நான் இருநூறு பக்கங்களில் சொல்ல முயற்சிப்பதை நான்கே பக்கங்களில் கூறி முடிக்கும் ஓர் அருமையான படைப்பாகும். நான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்குப் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இந்நூலை அச்சிடுவது தொடர்பாக பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய அறிஞர் கெப்டன் அமீர் அலி, முதுபெரும் எழுத்தாளர் செய்யது முஹம்மது ஹஸன், இலக்

Page 12
XX
கிய ஆய்வாளர் தக்கலை எம்.எஸ்.பவுதீர், இலக்கியப் புரவலர் அல்ஹஜ் எம். இத்ரீஸ் மரைக்காயர், சீறா விரிவுரையாளர் டாக்ட் கரீம் ஆகியோருக்கு என் நன்றி.
நான் சென்னையில் தங்கிய ஒரு மாதமும், என்னை அன்போடு உபசரித்து, எனக்குச் சகல வசதிகளையும் செய்து தந்த என் ஆருயிர் நண்பர் ஹாஜி மஹ்மூத் நெய்னா அவர்களுக் கும், ஜனாப் எஸ்.ஐ. அப்துல்லா அவர்களுக்கும் சென்னை பல்லாக் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஏனையோர்களுக் கும் நான் நன்றி கூறாவிடில் செஞ்சோற்றுக் கடன் மறந்தவனா வேன்.
வீட்டு வேலைகளை மறந்து நான் எழுத்து வேலைகளி லேயே ஈடுபடும்போது என் அன்பு மனைவி நஸிஹா கோபிப் பது உண்டு. ஆனால் விரைவில் கோபம் தணிந்து விடும். உதவ ஆரம்பித்துவிடுவார். அவரின் உதவியின்றி எனக்கு இந்நூலை வெளியிட்டிருக்க முடியாது. அவருக்கு என் நன்றி கள். எனது சகல காரியங்களிலும் துணை நிற்கும் எனது அருமை மகன் சப்ரிக்கும் என் நன்றிகள்.
111, கொடப்பொல ரோட் ஏ.எ.எம்.புவாஜி மாத்தளை இலங்கை.
 

ம்.உவைஸ்
O
ர் அல்லாமா அல்ஹாஜ் எம்.எ
பேராசிரிய

Page 13
ணத்தின்போது
தியினர் புனித ஹஜ் பய
உவைஸ் தம்ப
 

XKX1
தனது நண்பர்கள் சிலருடன்

Page 14
l
5.
11.
2.
Xxiv
உள்ளே.
பிறப்பும் பாடசாலைக் கல்வியும்
பல்கலைக்கழகக் கல்வி
தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் இலக்கிய முதுசம்
முஸ்லிம்களின் தமிழ்த்தொண்டு - வரலாறு படைத்த
முதுமாணி ஆய்வு
பக்கம்
13
22
47
இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைப் பற்றிய ஆய்வு 74
பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி எனும்
ஊடகங்கள் மூலம் அறிஞர் உவைஸ் ஆற்றிய தமிழ்த்
தொண்டு
தமிழ் இலக்கியப் பாடவிதானங்களில் இஸ்லாமியத்
தமிழ் நூல்கள்
பேராசிரியர் உவைசும் இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாடுகளும்
அல்லாமா உவைஸ் எழுதிய, மொழி பெயர்த்த,
பதிப்பித்த நூல்கள் 「"-1、ノ、リ 10.
டாக்டர் உவைசும் தமிழிலக்கிய அரபுச் சொல் அகராதியும் ஸ்ல்ே
ဇ် စူ, Os O O O بيلا لم يل தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இலக்கியப் பாலம் அமைத்த பண்பாளர் உவைஸ்
பட்டங்களும் பாராட்டுக்களும்
業
102
117
142
165
178
19.
 
 
 

1. பிறப்பும் பாடசாலைக் கல்வியும்
“எழில் அலைகளின் ஒயில் கருதி இந்து மகா சமுத்திரத்தை மேற்கு எல்லையாகவும், நளினம் மிகு ஒரு நர்த்தகியின் நடன லயம் சிந்தும் பொல்கொடை ஆற்றை வடக்கு எல்லையாகவும், பசுமை போர்த்திய மருத நில வயல்களையும் முல்லைக் காடுகளையும் கிழக்கு எல்லையாகவும், கழுகங்கையிலிருந்து காதலனை அரவணைக்கக் கரம் நீட்டும் வாக்கில் கிளைவிட்ட நல்லுருவை ஆற்றைத் தெற்கு எல்லையாகவும் கொண்ட கவினும் வளனும் இசைந்த பாரிய நகரே பாணந்துறை." இது இலங்கை யின் தலைநகரான கொழும்புக்கு அண்மையில் அமைந்துள்ள தன் ஊரான பாணந்துறையைப் பற்றி எழுத்தாளர் ஜனாப் மொய்ன் சமீன் வரைந்துள்ள அழகான வர்ணனை.
அமெரிக்கரான கேணல் எச்.எஸ்.ஒல்கொட்டும் இரஷ்ய மங்கை நல்லார் பிளாவட்ஸ்கி அம்மையாரும் இலங்கை வருவதற் கும், அவர்களது வருகையினால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தங்களிலே ஏற்பட்ட பெளத்த மத மறுமலர்ச்சிக்கும் தேசிய எழுச்சிக்கும், கால்கோளிட்ட மகத்தான நிகழ்ச்சி, 1873ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதக்குருமார்களுக்கும் மிக்கட்டுவத்த குணா னந்த தேரர் எனும் பேச்சாற்றல் மிகு பெளத்த பிக்குவுக்கும் இடையே நிகழ்ந்த சர்வதேச புகழ்ப்பெற்ற சமய விவாதமாகும்.
இவ்விவாதம் நடைபெற களம் அமைத்துக் கொடுத்து, பெளத்த மத வரலாற்றிலே ஒர் உன்னதமான இடத்தைச் சுவீகரித் துக் கொண்ட பாணந்துறை, தேடுவாரற்று, நாடுவாரற்று, போற்று வாரற்று ஒரு சிலரின் பழைய பெட்டக்கங்களிலும் க்வீட்டுப் பரண்களிலும் முடங்கிக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைத் தமிழுல கிற்கு மீள் அறிமுகம் செய்து, அவற்றுக்குப் புதுப்பொலிவும் புதுவாழ்வும் வழங்கிய அல்லாமா அல்ஹாஜ் பேராசிரியர் டாக்டர் எம்.எம்.உவைஸ் அவர்களை ஈன்றெடுத்ததனால், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஓர் அழியா இடத்தைத் தன்னுடை யதாக்கிக் கொண்டது.
தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள தமிழ்த்தாத்தா? மஹா மஹோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்க

Page 15
2
ளின் அருஞ்சேவைக்கு நிகரான உயர் சேவையை இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்துள்ள கலாநிதி உவைஸ் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், அவரின் பிறந்த திகதி 1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினெட்டாம் நாள் என்று குறிப்பிடுகின்ற போதிலும் அவரது சரியான பிறந்தநாள் ஜனவரி பதினைந்தாம் திகதியேயாகும். .
உவைஸின் சரியான பிறந்த திகதியை அறிவதற்கு உதவியது, அவரது தந்தையார் ஓர் இஸ்லாமியக் கீர்த்தனைப் புத்தகத்தில் உவைஸின் பிறப்பைப் பற்றிப் பதிந்திருந்த ஒரு குறிப்பே. இவ்வாறு பெரியார் உவைஸ் அவர்களின் வாழ்வின் ஆரம்பத்தி லேயே இஸ்லாமியத் தமிழ் நூலொன்று அவருக்கு உதவியது, அவர் பின்னர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குச் செய்யவிருக் கும் பெருந்தொண்டிற்கு, அவ்விலக்கியம் முன்கூட்டியே ஆற்றிய நன்றியுரையோ தெரியாது. -
குழந்தைகளின் விவேக வளர்ச்சி அவற்றின் பரம்பரைக ளோடு தொடர்புடையதா அல்லது அவை வளரும் சூழலின் தன்மைகளில் அடங்கியுள்ளதா என்ற கேள்விக்கு இதுவரை உளவியலாளர்கள் தீர்க்கமான ஒரு பதிலை வழங்கிடவில்லை என்றபோதிலும், உவைஸ் அவர்களின் தந்தை வழி மூதாதையர்க ளின் தகுதிகளை, தன்மைகளை நோக்கும்போது, அவர்களின் பேரறிவு பாரம்பரியமே உவைஸ் எனும் உரு எடுத்ததோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. அந்தளவு உயர்ந்த ஓர் அறிவுப் பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாகவே அவரின் தந்தை வழி மூதா தையர் மிளிர்கின்றனர். 3
அல்லாமா உவைஸின் தந்தை மஹ்மூது லெப்பை ஹாஜியார் அவர்கள், ஊர் ஜும்ஆ பள்ளிவாசலின் கதீபாகவும், குர்ஆன் மத்ரஸாவின் முஅல்லிமாகவும், நபவியத்துல் காதிரிய்யா தரீக்கா வின் தக்கிய்யா கலீபாவாகவும், முஸ்லிம் விவாகப் பதிவாளராக வும் பணியாற்றியவர். 鰲 -
பாணந்துறையில் அமைந்திருந்த ஹேனமுல்ல, கொரக் கான, சரிக்காமுல்ல, ஹொறதுடுவ, கட்டுவ, பள்ளியமுல்ல, வத்தல்பளை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர்களுக்குப் படிப்பதற்கு ஒரு தமிழ்ப் பாடசாலை இல்லாத குறைன்ய உணர்ந்து, அதனையிட்டு கவலையுற்று, வீடு வீடாகச் சென்று அரிசி சேகரித்து, அதனை விற்று திரட்டிய பணத்தினால் ஒரு தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்தவர்; கல்வியில் அத்துணை அக்கறை காட்டியவர். -

3
காலப்போக்கில் அரசினால் கையேற்கப்பட்ட இப்பாடசா லையின் தலைமையாசிரியராகக் கடமையாற்றிய திரு.சாமுவேல், உவைஸின் தந்தையார் மஹ்மூது லெப்பையின் திருமணத்தின் போது, மணமங்கல வாழ்த்து பாடியுள்ளார் என்பது, மஹ்மூது லெப்பை கல்விமான்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந் தார், அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் என்பதை உணர்த் துகிறது. கோட்டாறு கெளது பாவா சைகு முகம்மது கெளதில் காதிரி அவர்களோடும், வித்துவத்தீபம் அருள்வாக்கி அப்துல் காதர் புலவரோடும் அவருக்கிருந்த நெருக்கமும், கோட்டாறு கெளதில் காதிரி அவர்கள் இலங்கையுடன் தொடர்புடைய பல இறைநேசர்களைப் பற்றிப் பதங்கள் இயற்றுவதற்கு அவர் தூண்டு கோலாக இருந்தார் என்பதும் அவருக்கிருந்த இலக்கிய ஆர்வத் தைக் காட்டுகின்றன.
மஹ்மூது லெப்பையின் தந்தைவழிப் பாட்டனாரோ, குப் பைத்தம்பி முகாந்திரம் எனப் பெரும் கண்ணியத்துடன் அழைக் கப்பட்ட சைகு அப்துல் காதர் லெப்பை என்பவர் ஆவார். பெரியார் உவைஸின் தந்தையின் தாயாரோ, பாணந்துறை முஸ் லிம்களால் நாகூர் ஆலிம் எனப் போற்றப்பட்ட சைகு அஹமது ஆலிம் அவர்களின் புதல்வி ஆவார். நாகூர் ஆலிமின் தந்தை சைகு முகம்மதுவும் ஒர் ஆலிமே. சைகு முகம்மது ஆலிமின் பிதா சைகு அஹமது ஆலிம், பெரும் மார்க்க ஞானியும் புலவருமான சதக்கத்துல்லா அப்பா அவர்களின் சகோதரராவார். இவ் உறவுமுறைகள், பேராசிரியர் உவைஸ் அறிவார்ந்த, உயர் இலக்கியப் பாரம்பரிய மிக்க, சமயப்பற்று மிகுந்த ஒரு பரம்பரை யின் வழித்தோன்றல் என்பதை வெகு நிதர்சனமாக உணர்த்துகின் றன.
தன் தந்தையிடம் அரபு மொழிக் கல்வியையும் மார்க்கக் கல்வியினையும் பெற்றுக்கொண்ட உவைஸ், உலகியல் கல்வி யைப் பெறுவதற்காக இன்று ஜீலான் முஸ்லிம் மகா வித்தியால யம் என்ற பெயரோடு இலங்கும், அன்றைய ஹேனமுல்ல அரசினர் தமிழ்ப் பாடசாலையில் 1927ஆம் ஆண்டில் சேர்க்கப்பட் டார். அவரின் தந்தையின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அரசினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலையே இது.
கனிஷ்ட தராதரப் பத்திரப் பரீட்ஷையில் தேர்வு பெறும் வரை, தமிழை மாத்திரமே போதனா மொழியாகக் கொண்டிருந்த இச்சிறு பாடசாலையிலேயே உவைஸின் படிப்பு தொடர்ந்தது. யாழ்ப்பான கரவெட்டியைச் சேர்ந்த திரு. சி.கார்த்திகேசு அப் போது இப்பாடசாலையின் தலைமையாசிரியராகப் பணியாற்றிக்

Page 16
4.
கொண்டிருந்தார். உவைஸின் தமிழாசிரியர்களில் ஒருவராக கட மையாற்றியவர் பண்டிதரும் சைவப்புலவருமான த.பொ. கார்த்தி கேசு. புகழ்ப்பெற்ற இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பிதாவான இவரும் கரவெட்டியைச் சேர்ந்தவரே. திரு. வே.செல்லையா, பண்டிதர் கந்தையா ஆகியோரும் இப்பாட சாலையில் உவைசுக்குப் பல வருடங்கள் படிப்பித்துள்ளனர்.
1937ஆம் ஆண்டு கனிஷ்ட தராதரப் பத்திரப் பரீட்ஷைக்காக ஹேனமுல்ல பாடசாலையிலிருந்து உவைசும், வே.குணசிங்கம், யு.எல்.எம். சுஐப், எஸ்.எம்.எம். முஸம்மில் என்ற மூன்று மாணவர்களும் மாத்திரமே தோற்றினர். சில மாதங்களின் பின்னர் இலங்கை நாளிதழான வீரகேசரியில் வெளிவந்த பரீட்ஷை பெறுபேறுகள், இந்நால்வரில் உவைஸ் மாத்திரமே சித்தியடைந்தி ருந்தார் என்பதை வெளிப்படுத்தின. பேராசிரியர் உவைஸ் அவர்களின் பெயர் பத்திரிகையில் வெளியான முதல் சந்தர்ப்பம் இதுவே. இப்பரீட்ஷை முடிவுகள் ஓர் அதிர்ஷ்டமான நாளிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அன்று முதன்முறை யாக அச்சில் வெளியான உவைஸின் நாமம், படைத்தவனின் பேரருளினால், தொடர்ந்து பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், நூல்களிலும் வெளியாகும் புகழ்ப்பூத்த திருநாமமாகவே திகழ்கி றது. அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு சில யாழ்ப்பாணத் தமிழ் ஆசிரியர்கள் கடைப்பிடித்த சில தவறான போக்குகளை அடிப்படையாகக் கொண்டு பொது வாக யாழ்ப்பாணத் தமிழ் ஆசிரியர் அனைவருமே முஸ்லிம் சிறார்களின் கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயற்சித்தனர், கெடுக்க முயற்சித்தனர் என்ற தப்பபிப்பிராயம் இன்றும் கணிசமான அளவு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நிலைபெற்றுள்ளது. இந்த அபிப்பிராயம் தவறானது, அடிப்படையற்றது, பிழையான ஊகங்க ளினால் உருவானது என்பதை டாக்டர் உவைஸ் அவர்களின் பாடசாலை வாழ்வு நிரூபிக்கின்றது.
உவைசுடன் படித்து, பரீட்ஷைக்குத் தோற்றிய குணசிங்கம் எனும் தமிழ் மாணவர், ஹேனமுல்ல பாடசாலைத் தலைமையாசி ரியர் திரு. கார்த்திகேசுவின் மருகர்; தலைமையாசிரியரின் இல்லத் திலிருந்தே பாடசாலைச் சென்றவர். பரீட்ஷையில் அவர் சித்திய டையவில்லை; ஆனால் உவைஸ் சித்தியடைந்தார். உவைசுக்கு மேலதிகமாக படித்துக் கொடுக்க அவரது வீட்டில் யாரும் இருக்கவுமில்லை; அவர் ‘டியுஷன் என்று எவரிடமும் படித்தது மில்லை. அவர் படித்தது அத்தனையும் பாடசாலையிலேயே; கற்றதெல்லாம் பாடசாலை ஆசிரியர்கள் கற்பித்தவற்றை மாத்தி

5
ரமே. இது அன்றைய யாழ்ப்பாண ஆசிரியர்களில் பலர் இன, மத வேறுபாடின்றி, மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவேண்டி யவை அத்தனையையும் ஒழுங்காக கற்பித்தனர் என்பதைக் காட்டுகின்றது. எனவே பெறுபேறுகள் வேறுபட்டதற்கு, மாண வர்களின் கிரகித்தல் சக்தியிலும் அவர்களின் தனிப்பட்ட முயற்சிக ளிலும் இருந்த வேறுபாடுகளே காரணங்களாக இருந்தன என்பது தெளிவு.
உவைசும் அவரது சக பரீட்ஷார்த்தி நண்பர்களும் பரீட்ஷை எழுதுவதற்கு பாணந்துறைக்கு அண்மையில் அமைந்துள்ள வாதுவை எனும் நகரத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பரீட்ஷை முதல் நாளன்று இவர்களை வழியனுப்ப பஸ் தரிப்பு நிலையத் துக்கு வந்திருந்த தலைமையாசிரியர் திரு. கார்த்திகேசு, தமிழ் இலக்கியப் பாடத்திற்கு
'வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்."
என்ற நாலடியார் பாடலை நினைவுறுத்திக் கொள்ளும்படி ஞாபகம் ஊட்டியதையும் அப்பாடல் பற்றிய வினாவொன்று பரீட் ஷைக்கு வந்ததைப் பற்றியும் டாக்டர் உவைஸ் பல சந்தர்ப்பங்க ளில் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்நிகழ்வு திரு. கார்த்திகேசு அவர்களின் ஊகத்திறமையை மாத்திரம் உணர்த்தவில்லை; இன, மத பேதமின்றி அவர் தன் மாணவர்கள் மீது காட்டிய கரிசனையையும் துலாம்பரமாக காட்டு கின்றது. பரீட்ஷைக்குச் செல்லும் தம் மாணவர்களை வழியனுப்பு வதற்காக பஸ் நிலையத்துக்கே செல்லும் தலைமையாசிரியர்கள் எத்தனை பேர் இருப்பர் என்பதைச் சிந்தித்துப்ேெவார்த்தால்
இவ்வுண்மை புரியும். ,ܐܶܠܳܐ ܐܶܬ݂ܳܐ
பண்டிதரத்னம் உவைஸ் படித்த ஹேனமுல்ல தமிழ்ப் L's TL– சாலையில் பணியாற்றிய தமிழாசிரியர்களின் கற்பிக்கும் திறனை யும், கடமை உணர்வையும் பேராசிரியர் ம.முகம்மது உவைஸ் மணிவிழா மலரில், அதன் பதிப்பாசிரியரும், பல தரமிக்க நூல்களின் ஆசிரியரும், கல்விமானுமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் எழுதியுள்ள 'உவைஸ்" ஓர் அறிமுகம் என்னும் கட்டுரையில் காணப்படும் கீழ்வரும் வரிகள் துல்லியமாக உணர்த்துகின்றன.

Page 17
6
"1938ஆம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற உவைஸ் 1946ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும் வரை, தமிழை ஒரு பாடமாக எந்த ஒரு கல்வி நிலையத்தி லும் படிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. தக்ஸலா வித்தி யாலயத்திலோ, புனித யோவான் ஆண்கள் பாடசாலை யிலோ தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படவில்லை. தமிழ் ஆசிரியர்களும் இருக்கவில்லை. இந்த காலகட்டத்தில் தோற் றிய எல்லா பரீட்ஷைகளுக்கும் உவைஸ் தமிழை ஒரு பாடமாக எடுத்த போதிலும், ஆசிரியர் எவரும் இல்லாம லேயே உவைசுக்குத் தமிழ் மொழியைக் கற்க வேண்டி இருந்தது. சுய முயற்சியினாலேயே தமிழைக் கற்க வேண்டிய நிலையை எதிர்நோக்க வேண்டி இருந்தது. சிரேஷ்ட பாடசா லைத் தராதரப் பத்திர பரீட்ஷைக்கும் தமிழை ஒரு பாடமாக எடுத்த உவைஸ், ஆசிரியர்களின் உதவியின்றி, சுய முயற்சியி னாலேயே தமிழில் சித்தி பெற்றார் என்பது உவைஸ் பெருமைபடக்கூடிய ஒரு சாதனைதான்.'
அல்ஹாஜ் ஜெமீல் கூறுவது போலவே ஆசிரியர்களின் உதவி யின்றி, தமிழைப் படித்து, சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்ஷையி லும் உயர்பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷையிலும் உவைஸ் சித்தியடைந்தது ஒரு சாதனைதான். ஆனால் இச்சாதனை உவை ஸின் ஆற்றலையும் ஆர்வத்தையும் மாத்திரம் பிரதிபலிக்க வில்லை. ஹேனமுல்ல தமிழ்ப் பாடசாலைத் தலைமையாசிரியர் திரு. சி.கார்த்திகேசுவும் அப்பாடசாலை ஆசிரியர்களான பண்டிதர் த.பொ.கார்த்திகேசு, பண்டிதர் சி.கந்தையா, திரு. வே.செல்லையா ஆகியோரும், உவைஸின் மொழித்திறனை, மொழி வளத்தை எந்தளவு விருத்தி செய்திருந்தனர், எத்துணை பலமான தமிழ் மொழி அத்திவாரத்தை அவருக்கு அமைத்துக் கொடுத்திருந்தனர் என்பதையும் பிரதிபலிக்கவே செய்கின்றது.
1976ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'கலாநிதி உவைஸ் மலருக்கு தான் எழுதிய'தமிழும் உவைசும்’ எனும் கட்டுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, தன் தந்தையார் திரு. த.பொ. கார்த்திகேசு, உவைஸ் அவர்களுக்கு ஹேனமுல்ல பாடசாலையில் தமிழ் படிப்பித்துள்ளதையும், தனது ஊரான கரவெட்டியைச் சேர்ந்த திரு. சி.கார்த்திகேசு அப்பாடசாலையில் தலைமையாசிரிய ராகப் பணியாற்றியதையும் குறிப்பிட்டு விட்டு, "ஜனாப் உவைஸ் அவர்களின் நெறிப்பாடான தமிழ் வளர்ச்சிக்கு கரவெட்டி வழி கோலிற்று என்பது வெறும் புகழுரையாகாது' என்றும் நவின்றுள் ளார். பேராசிரியரின் இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய ஒன்றே.

7
கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷையில் சித்தியடைந்த உவைஸ், சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்காக படிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். இதுவே பொதுவான வழக்கம். ஆனால் அதற்கு மாறாக உவைஸின் தந்தையார் தன் மகனை ஹேனமுல்ல பாடசாலையிலிருந்து நீக்கி, ஹேனமுல்லைக்கு அண்மை பகுதியான சரிக்காமுல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயம் என்னும் ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கிலம் கற்பதற்காகச் சேர்த்தார். பெரியவர் உவைஸின் வாழ்வின் போக்கிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத் திய இந்நிகழ்வுக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷையில் சித்தியடைந்த பின்னர் . தொடர்ந்து தமிழ் மொழியிலேயே சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரத்தைப் பெறுவதற்காக உவைசுக்குப் படித்து இருக்கலாம். இப்பரீட்ஷையில் தேர்வு அடைந்தால் ஆசிரியர் நியமனம் ஒன்றைப் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது; பெரும்பாலும் அவ்வளவே. ஆனால் ஆசிரிய நியமனம் ஒன்றைத் துச்சமாக மதிக்கும் நிலையில் உவைஸின் குடும்ப பொருளாதார நிலை அன்று இருக்கவில்லை. உண்மையில் ஆசிரிய நியமனம் அவரது குடும்ப பொருளாதார நிலையைக் கணிசமான அளவு உயர்த்தியே இருக்கும். எனவே உவைஸ் தொடர்ந்து தமிழில் படிக்கக்கூடிய சாத்தியம் இருக்கவே செய்தது. ஆனால் 1938ஆம் ஆண்டின் ஆர்ம்பத்திலே, தென்பிராந்திய கல்விக் காரியாலயத்தில் இருந்து அக்காரியாலயத்தின் அதிகாரத் துக்குற்பட்ட சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்ட ஒரு சுற்றுநிருபம், தமிழ் மொழி மூலம் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்குப் படிக்க விரும்பிய மாணவர்களுக் கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்திருந்தது. தமிழ் படிப்பதனால் கிடைக்கக்கூடிய ஒரே ஓர் அரசாங்க உத்தியோகமான ஆசிரியர் பதவியைக் கூட எதிர்பார்த்து, தமிழில் உயர்க்கல்வியினைப் பெற முயற்சிப்பது ஏமாற்றத்தைத் தரக்கூடியதே என்பதே இச்சுற்று நிருபத்தின் உள்ளடக்கமாகவும் உள்ளர்த்தமாகவும் இருந்தது.
அன்று தமிழ் மூலம் படித்தவர்கள் பொதுவாக பொருள் வளம் குன்றிய மாணவர்களே. இவர்கள் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரத்தைப் பெற விரும்பிய ஒரே நோக்கம், ஆசிரியர் நியமனம் ஒன்று கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பே. இத்தகைய நியமனம் கிடைப்பது குதிரைக் கொம்பு என்று கூறாமலே கூறிய சுற்று நிருபம் வந்தவுடன் தென்பிராந்திய கல்விக் காரியாலயத்தின்

Page 18
8
பரிபாலன எல்லைக்குள் அடங்கியிருந்த காலி மாவட்டத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் அமைந்திருந்த தமிழ்ப் பாடசாலைக ளின் உயர் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த பெரும்பான்மை யான மாணவர்கள் தம்முடைய படிப்பை நிறுத்திக் கொண்டனர். வெறும் அறிவுக்காக மாத்திரம் படிக்கக்கூடிய நிலையில் அவர்கள் இருக்கவில்லையே.
இதில் பெரும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவ்விரு மாவட்டங்களிலும் அமைந்திருந்த அத்தனைத் தமிழ் மொழிப் பாடசாலைகளும் முஸ்லிம் பாடசாலைகளாகவே அமைந்திருந்த தாகும். எனவே இச்சுற்றுநிருபம் ஒரு குறிப்பிட்ட இனத்தை, முஸ்லிம் இனத்தை மாத்திரம் பாதிப்பதாகவே இருந்தது.
இச்சுற்று நிருபம் வந்தவுடன் ஹேனமுல்ல பாடசாலையில் உவைசுடன் படித்த மற்ற மூன்று மாணவர்களும் படிப்பை நிறுத்திக் கொண்டனர். ஆனால் மஹ்மூது லெப்பை ஹாஜியார் தன்னுடைய புதல்வனின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வில்லை. மாறாக தன் மகனை, சரிக்காமுல்லையில் இயங்கிய தக்ஸலா வித்தியாலயத்தில் ஆங்கிலம் கற்பதற்காகச் சேர்த்தார். மேலே குறிப்பிடப்பட்ட சுற்று நிருபம் வராதிருந்திருந்தால் மஹ்மூது லெப்பை ஹாஜியார் தன்னுடைய மகனைத் தொடர்ந்து தமிழில் படிக்க வைத்திருப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விக்குச் சரியான பதில் கூறுவது இன்று கடினமானதே.
உவைஸ் தமிழ்ப் பாடசாலையிலிருந்து விலகியதற்கும் கல் விக் காரியாலயத்திலிருந்து அனுப்பப்பட்ட சுற்று நிருபத்திற்குமி டையே எவ்வித தொடர்புமில்லை என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. தன்னுடைய மகன் ஓர் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என விரும்பிய மஹ்மூது லெப்பை ஹாஜியார், தன் மகனுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்குவதன் மூலமே இது சாத்தியமாகும் என்பதை உணர்ந்திருந்தார் என்றும், எனவேதான் உவைஸ்ை ஆங்கிலப் பாடசாலையில் அவர் சேர்த் தார் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் கூறுவது போல் மஹ்மூது லெப்பை ஹாஜியார் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்தார் என்பது உண்மையானால் உவைஸ் ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவரை ஆங்கிலக் கல்விக்கு மாற்றாது, ஏன் எட்டாம் வகுப்பு சித்தியடையும் வரை காத்திருந்தார் என்ற கேள்வியும் எழும்பத்தான் செய்கிறது. ஆங்கிலம் படிக்க ஆரம்பிக் கும்போது உவைஸ் பதினைந்து வயதினை எட்டியிருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

9
ஆனால் எது எப்படியிருந்தாலும் கல்வியின் மேன்மையை அறிந்த ஒரு மனிதராக மஹ்மூது லெப்பை ஹாஜியார் விளங்கி னார் என்பதை ஏற்றே ஆகவேண்டும். பொருள்வளம் குறைவான நிலையில் இருந்த போதிலும், தன் மகனை ஒரு தொழிலுக்கு அனுப்பித் தன் சுமையைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்காது, எப்பாடுபட்டேனும் தன் மகனுக்குத் தன்னால் இயன்றவரை கல்வியை வழங்கவேண்டும் என்ற திடசங்கற்பத்தோடு வாழ்ந்த ஓர் உயர்ந்த மனிதராகவே உவைஸின் தந்தையார் காட்சி அளிக்கின்றார்.
டாக்டர் உவைஸின் வாழ்வு உயர அவர் பெற்ற ஆங்கிலக் கல்வியும் பெரிதும் உதவியது. ஆனால் 1938ஆம் ஆண்டிலிருந்து உவைஸ் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்ததற்குத் தென்பிராந்திய கல்விக் காரியாலயம் அனுப்பிய சுற்று நிருபம் காரணமாக இருந்ததா அல்லது தன் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் ஆசை காரணமாக இருந்ததா என்பதற்கு உறுதியான பதிலை அளிக்க முடியாது.
உவைஸின் பாலியப் பருவத்தை அவதானிப்போர் எடுக்கக்கூ டிய முடிவு ஒன்றே. அருளாளன், அன்புடையோன், சர்வ வல்லமை மிகு அல்லாஹ், உவைஸ் ஒரு பெரும் ஆய்வாளராக, அறிவுலகம் போற்றும் ஒரு மேதையாக பரிணமிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டான்; எனவே உவைஸின் வாழ்வின் சகல நிலைகளிலும் தனது ஏற்பாட்டுக்குச் சாதகமான நிலைகளையே அவன் உருவாக்கினான் என்பதே அம்முடிவு.
ஆங்கிலம் கற்பதற்கும் ஆங்கில மொழி மூலம் கற்பதற்கும், பாணந்துறை பிரதேசத்திலே ஏராளமான வாய்ப்புகளும் வசதிக ளும் இருந்தன. பாணந்துறை நகரினிலே புனித ஜோன்ஸ் கல்லூரி என்ற தரமான கல்விக்கூடம் இருந்தது. அண்மை நகரான மொரட்டுவையில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்கள், ஆங்கில மொழி மூலம் கல்விப் புகட்டிக் கொண்டிருந்தன. ஆனால் இக்கல்லூரிகள் ஒன்றில் தன் மகனைச் சேர்க்க உவைஸின் தந்தையார் எவ்விதமான பிரயத்தனமும் எடுக்கவில்லை. இக்கல் லூரிகளில் தன் மகனைச் சேர்க்கக்கூடிய அளவிற்கு அவரின் நிதிநிலை உயர்வானதாக இல்லாதிருந்ததே இதற்குரிய காரணமாக இருந்திருக்கலாம்.
எனவே வறிய மாணவர்களின் புகலிடமாக, ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஒரு பாடசாலையாக விளங்கிய, சரிக்காமுல்லை

Page 19
1O
தக்ஸலா வித்தியாலயத்தில் உவைஸ் சேர்க்கப்பட்டார். இப்பாட சாலையிலே ஒன்றரை ரூபாய், இரண்டரை ரூபாய், மூன்றரை ரூபாய் போன்ற சிறு தொகைகளே மாதக் கட்டணங்களாக, வகுப்புகளுக்கேற்ப அறவிடப்பட்டன. ஆனால் இச்சிறிய தொகை யினைக் கூட உரிய காலத்தில் செலுத்த முடியாது உவைஸ் அவதிப்பட்ட சந்தர்ப்பங்கள் பல ஏற்படத்தான் செய்தன.
ஆனால் தனது பள்ளிப் பிராயத்திலே தான் சந்தித்த ஏழ் மையை மறைக்க அல்லாமா உவைஸ் ஒரு போதும் முயன்ற தில்லை. சகல வசதிகளோடும் வாழ்ந்து கொண்டிருந்த வேளை யிலே, தனது அழகான, பாரிய இல்லத்தில் அமர்ந்து கொண்டு, தான் இளமையிலே அனுபவித்த வறுமையைப் பற்றி எவ்வித லஜ்ஜையுமின்றி, மாறாக ஒருவித பெருமித உணர்வோடு அவர் என்னிடம் நினைவுகூர்ந்ததும், அவர் அவ்வாறு நினைவு கூர்ந்த போது, அவர் மீது நான் ஏற்கனவே கொண்டிருந்த உயர் அபிப்பிராயம் மென்மேலும் என் உள்ளத்திலே உயர்ந்து கொண்டே போனதும் இன்றும் என் நினைவில் நிழலாடுகின்றது.
ஹேனமுல்ல பாடசாலையில் சற்றேனும் ஆங்கிலம் கற்றிருக் காத காரணத்தினால், தக்ஸலா வித்தியாலயத்திலே சிறிய வகுப் பொன்றிலேயே உவைஸை சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால் அவரது இயல்பான திறமையும் ஆர்வமும் கைகொடுக்க, இரட்டை வகுப்பேற்றங்கள் பல பெற்று, 1943ஆம் ஆண்டு, அதாவது ஐந்து வருடங்களுக்குள் ஆங்கில மொழி மூலம், கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்குத் தோற்றும் தகுதியைப் பெற்றதுமட்டுமன்றி, அவ்வாண்டிலேயே அப்பாட ஷையில் தேர்ச்சியும் பெற்றார். தக்ஸ்லா வித்தியாலயத்தில் சிங்களமும் பாளியும் படிக்கும் வாய்ப்பும் உவைசுக்குக் கிட்டியது; இது பின்னர் அவருக்குப் பெரும் அனுகூலமாக இருந்தது.
தக்ஸ்லா வித்தியாலயம் மூலம் பரீட்ஷைக்குத் தோற்றிய மற்றுமொரு மாணவரும் இப்பரீட்ஷையில் சித்தியடைந்தார். சிங்கள இனத்தைச் சேர்ந்த இம்மாணவர் உடனடியாக ஓர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றுக் கொண்டார். உவைஸ் விரும்பியிருந்தால் அவருக்கும் ஓர் உத்தியோகத்தைப் பெற்று இருக்கலாம். ஆனால் உவைஸின் தந்தையாரோ, தன் மகன் உயர்க் கல்வி பெறவேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அவரைப் பாணந்துறையில் அமைந்திருந்த புனித யோவான் கல்லூரியில் சேர்த்தார்.

11.
இக்கல்லூரியில் தலைமையாசிரியராகக் கடமையாற்றிய திரு. எட்மன்ட் டயஸ் அவர்களின் உதவியினால் இங்கு இலவசமாகப் பயிலும் வாய்ப்பு உவைசுக்குக் கிட்டியபோதிலும், ஒரு பெரிய கல்லூரியில் சேர்ந்ததனால் அவருக்குச் சில மேலதிகச் செலவுகள் ஏற்படவே செய்தன. இப்புதிய செலவுகள் மஹ்மூது லெப்பை ஹாஜியாரின் சுமைகளை அதிகரித்தன என்றபோதிலும் அவர் மனம் தளரவில்லை.
தன் அன்பு மகனின் உயர்வுக்காக மஹ்மூது லெப்பை ஹாஜியார் எந்த சிரமத்தையும் ஏற்க தயாராயிருந்தார். ஏழ்மையில் வாழ்ந்த போதிலும் தன் மகனுக்கு மாத்திரம் சம்பா சோற்றைத் தவிர வேறெந்த சோற்றையும் வழங்கியறியாத அவர், தன் உன்னதமான தியாகத்தினால் தன் மகன் உவைஸை 'அவையத்து முந்தி’ இருக்க வைத்து, ஒரு தந்தை ஆற்றவேண்டிய கடமையை நிறைவேற்றினார். அல்லாமா உவைசும் தன் தந்தையின் தியா கத்தை விழலுக்கு இறைத்த நீராக்காது, பெரும் அக்கறையோடு படித்து, "இவன் தந்தை என் நோற்றான் கொல்' என ஊராரும் உற்றாரும் வியக்கும்படி கல்வித் துறையில் முன்னேறி ஒரு மகன் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்தார். அல்ஹம்துலில்
லாஹ.
கனிஷ்ட தராதரப் பத்திரப் பரீட்ஷைக்கு அடுத்த பரீட்ஷை யான சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டிய ஒரு பாடநெறியாகும். இவ்வகுப்பில் சேர்வதற்காக உவைஸ் புனித யோவான் கல்லூரிக்குச் சென்ற போது, அவரது தரத்தை மதிப்பிடுவதற்காக ஆங்கிலக் கட்டுரை ஒன்று எழுதுமாறு பணிக்கப்பட்டார். இக்கட்டுரையைத் திருத்திய திரு.மதிவ் எனும் ஆசிரியர், கட்டுரை எழுதப்பட்டுள்ள முறையி னைக் கண்டு பெரும் திருப்தியுற்று, சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்குத் தோற்ற உவைசுக்கு ஓராண்டு படிப்பு போதுமானது என சிபாரிசு செய்தார்.
1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்குத் தயாராகிக் கொண்டிருந்த உவைஸ், அப்பரீட்ஷைக்குச் சிங்களம், தமிழ் ஆகிய இரு பாடங்களையும் தெரிவு"செய்திருந்தார். ஆனால் இப்பரீட்ஷை நேரசூசி அவருக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. உவைஸ் தமிழையும் சிங்களத்தையும் இரு வெவ்வேறு பாடங்களாக தெரிவு செய்திருந்த போதிலும், பரீட்ஷை நேரசூசி இவ்விரண்டு பாடங்களும் மாற்று பாடங்கள் என்ற கருத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. எனவே இவ்வி

Page 20
12
ரண்டு பாடங்களும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெறும் என்றே நேரசூசி அறிவித்தது.
ஒரு மாணவன் சிங்களத்தையும் தமிழையும் ஒரே பரீட்ஷைக் குத் தெரிவு செய்யக்கூடாது என எவ்வித நியதியும் இருக்க வில்லை என்ற போதிலும், எந்த ஒரு மாணவராவது இவ்விரண்டு மொழிகளையும் இரண்டு பாடங்களாக தெரிவு செய்யக்கூடும் என்பது பரீட்ஷைத் திணைக்களம் எதிர்பார்க்காத ஒன்று. இதுவே உவைசுக்குப் பிரச்சினை எழும்புவதற்குக் காரணமாக இருந்தது.
உவைஸ் எதிர்நோக்கிய இப்பிரச்சினையை அவரது கல்லூரி அதிபர், பரீட்ஷைத் திணைக்களத்திற்கு அறிவிக்க, உடனடியாக அத்திணைக்கள அதிகாரிகள் மாற்று ஒழுங்குகளைச் செய்து கொடுத்தனர். உவைஸ் இப்பரீட்ஷையில் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாக சித்தியடைந்தார். சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷையில் சிங்களத்திலும் தமிழிலும் ஏக காலத்தில் சித்தியடைந்த முதல் பரீட்ஷார்த்தி என்ற பெருமையினையும் அவர் அடைந்து கொண்டார்.
:
உவைஸ் முகம் கொடுக்க வேண்டியிருந்த அடுத்த பரீட்ஷை பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்ஷையாகும். இப்பரீட்ஷைக்குரிய வகுப்புகள் புனித யோவான் கல்லூரியிலேயே இருந்தபடியால், அக்கல்லூரியிலேயே அவரின் படிப்பு தொடர்ந்தது. இப்பரீட் ஷைக்கு உவைஸ் தெரிவு செய்திருந்த பாடங்கள் தமிழ், சிங்களம், வரலாறு, ஆட்சி இயல் என்ற நான்குமாகும்.
தமிழை ஒரு பாடமாக உவைஸ் தேர்ந்தெடுத்திருந்த போதி லும், அவரது பாடசாலையிலே தமிழ் படிப்பதற்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பெயரளவிற் குத் தமிழ் கற்பிப்பதற்குக் கூட ஓர் ஆசிரியர் இருக்கவில்லை. எனவே உவைஸ் சுய முயற்சியிலேயே இவ்வகுப்புக்குரிய தமிழ் நூல்கள் அனைத்தையும் படித்தார்.
1945ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்ஷையில் சித்தியடைய உவைஸ் தவறியதற்கு, தமிழ் படிப்பதற்கு ஓர் ஆசிரியரின் உதவி இல்லாதிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எனினும் 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றியீட்டி, சர்வகலாசாலை யில் படிக்கும் வாய்ப்பை உவைஸ் பெற்றுக் கொண்டார். இவ்வெற்றியினால் அவரின் பெற்றோர்கள் செய்த பெரும் தியாகங்களுக்கும் ஓர் அர்த்தத்தை வழங்கிவிட்டார்.

16) ஆதர்சம 12இதன் அர.
19 Sw ம் 143 கேடு : மே 2. பல்கலைக்கழகக் கல்வி
தகம்
12
1946ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பினை உவைஸ் பெற்றார். இந்நூற்றாண்டின் ஐந்தாம், ஆறாம் தசாப்தங்களில் சர்வகலாசாலையில் படிக்கும் வாய்ப்பு கிட்டுவது ஒரு பெரும் பேறாகவே கருதப்பட்டது. உ சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்குப் பின்னரும் படிப்பைத் தொடரும் மாணவர்த் தொகை மிகச் சிறியதாகவே விளங்கிய காலகட்டமது. இலங்கை முழுவதற்கும் ஒரு பல்கலைக்கழகமே அன்று இருந்தது. அதற்கு அனுமதிக்கப் பட்ட மாணவர்த் தொகையும் சொற்பமே.
பல்கலைக்கழகத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்றவர்களை அரவணைத்துக் கொள்ள அன்று உயர் பதவிகள் காத்துக் கொண்டிருந்தன. செல்வச் சீமான்களோ பட்டதாரிகளைத் தம் வீட்டு மருமக்களாக வரவேற்க பெரு விருப்போடு நின்றனர். எனவே ஆடவன் ஒருவன் பல்கலைக்கழ கத்தினுள் நுழைந்துவிட்டால் அவன் வாழ்க்கையில் உயர்நி லையை அடைந்து விடுவது, குறைந்தபட்சம் பொருளாதார ரீதியிலாவது உயர்நிலையை அடைந்து விடுவது நிச்சயம் என கருதப்பட்ட பொற்காலத்திலேயே , உவைஸ் பல்கலைக்கழக மாணவரானார்.
-அன்று கொழும்பில் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்க ழகத்திற்குத் தலைமைத்துவமும் வழிகாட்டலும் வழங்கிக் கொண் டிருந்தவர், சர்வதேசப் புகழ்ப்பெற்ற யாப்பியல் விற்பன்னரும் ஆட்சிஇயல் மேதையுமான சேர் ஐவர் ஜென்னிங்ஸ் ஆவார். பட்டதாரி மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் உயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் பிரசித்திப் பெற்ற பெரும் கல்லூரிகளில் கற்றவர்களாகவுமே விளங்கினர். பல்கலைக்கழகச் சூழல் உயர் சிந்தனைகளை உருவாக்குவதாகவும், அறிவை வளர்ப்பதாகவும், பார்வைகளை விரிவுபடுத்துவதாகவும், கண்ணி யமான உளப்பாங்குகளை நல்குவதாகவும் விளங்கியது. .
பல்கலைக்கழகத்தினுள் நுழைய வேண்டுமென்ற தன் கனவு நிறைவேறிவிட்டது என்ற பெருமித உணர்வினால் உவைஸின் நெஞ்சம் நிறைந்து இருந்தபோதிலும், அவரது ஆரம்ப பல்கலைக்

Page 21
14
கழக நாட்கள் ஓரளவு சஞ்சலம் நிறைந்தனவாகவே விளங்கின. பல்கலைக்கழக வாழ்வின் சம்பூரணமான பயனைப் பெற அப்பல் கலைக்கழகச் சூழலிலேயே முழுமையாக வாழக்கிடைப்பது பெரும் பயனுடையதாகும். எனவே கொழும்பில் இருந்த பல்க லைக்கழக விடுதியான 'யூனியன் ஹொஸ்டலில் உவைசுக்கு இடம் கிடைத்தது மனதுக்கு நிறைவை வழங்கி இருக்கக்கூடிய வொன்றே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது விடுதி வாழ்க்கை ஒருநாள் மாத்திரமே நீடித்தது. கி.
முதல் நாளன்றே, : விடுதி - மூத்த மாணவர்கள், புதிய மாணவர்களான உவைசுக்கும் ஏனையவர்களுக்கும் செய்த கலாட் டாக்கள், கட்டுப்பாட்டோடும் உயர் ஒழுக்க விழுமியங்களோடும் வளர்க்கப்பட்டிருந்த உவைசுக்குப் பெரும் வெறுப்பையும் அச்சத் தையும் ஏற்படுத்த, அவர் அடுத்த நாளே விடுதியை விட்டு வெளியேறி விட்டார். அதன் பிறகு பட்டம் பெறும்வரை தனது ஊரான பாணந்துறையிலிருந்து வந்தே அவர் படித்தார்.
பல்கலைக்கழக விடுதியிலிருந்தே படித்திருந்தால் உவைஸின் பல்கலைக்கழக வாழ்வு, பல துறைகளில் மேலும் கூடுதலாக சோபித்து இருக்கலாம். ஆனால் விடுதியை விட்டு வெளியேறியது அதிர்ஷ்டவசமாக உவைஸின் உள்ளத்தில் பாரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தவில்லை. தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு வீட்டிலிருந்து படிக்க வருவதே ஏற்றது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளக்கூடிய தன்மை இளம்வயதிலேயே உவைஸிடம் அமைந்து இருந்ததனால் இப்பிரச்சினை அவரது நெஞ்சத்தில் நீங்கா வடு எதனையும் ஏற்படுத்தவில்லை.
தேறி) 4 பல்கலைக்கழக வாழ்வின் நுழைவாயிலில் நிற்குங் காலை உவைசுக்கு ஏற்பட்ட இரண்டாவது விசனம், அவர் படிக்க விரும்பிய பாடமொன்றினை அவருக்குப் படிக்க முடியாது போனதாகும். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு பரீட்ஷைக்கு ஒரு மாணவர் மூன்று பாடங்களைத் தெரிதல் வேண்டும், அவை பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுப் பரீட்ஷைக்கு அம்மாணவர் தோற்றிய பாடங்களாக அல்லது அவற்றுடன் தொடர்புடையன வாக இருத்தல் வேண்டும் என்ற நியதியும் இருந்தது.
இவ்வடிப்படையில் உவைசுக்குத் தமிழ், சிங்களம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களில் மூன்றினைத் தெரிவு செய்து இருக்கலாம். தமிழ், சிங்களம் ஆகிய இரு பாடங்களையும் தெரிவு செய்த உவைஸ், தனது மூன்றாவது பாடமாக அரபு அல்லது பாரசீக மொழியைத் தெரிவு செய்ய விரும்பினார். இப்பாடங்களுக்
_மாக

15
குப் பொறுப்பாக இருந்த விரிவுரையாளர் அவர்களை அணுகி அனுமதி கோரியபோது அது மறுக்கப்படவே, உவைஸ் தனது மூன்றாவது பாடமாக பொருளியலைத் தேர்ந்தெடுத்தார்.
அரபு மொழியையோ பாரசீக மொழியையோ பாடமாக எடுக்க உவைசுக்கு அனுமதி வழங்க அப்பாடங்களுக்குப் பொறுப் பாகவிருந்த விரிவுரையாளர் மறுத்ததில் குறைகாண முடியாது. அவரின் மறுப்பு நியதிக்கு உட்பட்டதாகவே இருந்தது. எனினும் அரபு மொழியையோ, பாரசீக மொழியையோ பல்கலைக்கழகத் தில் படிக்கும் வாய்ப்பு உவைஸ் அவர்களுக்குக் கிட்டியிருந்தால், பிற்காலத்தில் இவ்விரண்டு மொழிகளோடும் நெருங்கிய தொடர் புடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையே தன் வாழ்வின் நோக்காக கொண்டு சீவித்த அவருக்கு, அது பெரிதும் உதவியிருக்கும் என்பது நிச்சயம்.
உவைஸின் பல்கலைக்கழக வாழ்வின் ஆரம்ப நாட்களில் அவரை எதிர்நோக்கிய மூன்றாவது பிரச்சினை முதலாம் ஆண்டு பாடநேர சூசியோடு தொடர்புடையதாகும். அவரை எதிர்நோக் கிய பிரச்சினைகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிக்கல் கூடியதாகவும் இருந்தது இதுவே. “ܕܘܼܬ݁
உவைசுக்கு முன்னர் எந்தவொரு மாணவரும் சிங்களத்தை பும் தமிழையும் ஏக காலத்தில் பாடங்களாக எடுத்ததில்லை. அப்படி ஒருவர் எடுப்பார் என்று பல்கலைக்கழக நிர்வாகத்துறையி னர் எதிர்பார்த்ததுமில்லை. எனவே நேர சூசியில் சிங்களமும் தமிழும் ஒரே நேரத்தில் நடைபெறும் இரண்டு பாடங்களாகவே குறிக்கப்பட்டிருந்தன. ஆனால் உவைஸோ இவ்விரண்டு மொழிக ளையும் பாடங்களாக தெரிவு செய்திருந்தார். இப்பிரச்சினைக்குத் நமக்கு சாதகமான ஒரு தீர்வை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், சிங்களத்தை அல்லது தமிழை விடவேண்டியி ருக்கும் என்ற இக்கட்டான நிலையிலேயே அவர் இருந்தார்.
தன்னை எதிர்நோக்கிய பிரச்சினையை உவைஸ் அப்போது இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் விளங்கிய முத்தமிழ் வித்தகர் தவத்திரு விபுலானந்த அடிகளாரிடம் முன் வைத்தார். உலகப் பற்றினைத் துறந்திருந்த போதிலும் தமிழ்ப் பற்றினையும் மனிதநேயத்தினை யும் துறக்காத அடிகளார், உவைஸை எதிர்நோக்கிய பிரச்சினை யைத் தீர்ப்பதைத் தன் கடமையாகவே கருதி செயல்பட்டார்.
நேரகுசியினை மாற்றியமைத்து இப்பிரச்சினையை எளிதாக தீர்த்திருக்கலாம் என்பது உண்மை. ஆனால் நேரசூசியினை

Page 22
16
மாற்றியமைப்பதென்பது இலேசான காரியமல்ல; அது பல நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதுங்கூட. எனவே சுவாமி விபுலானந்தர் பொருத்தமான வேறு மாற்று ஒழுங்கு ஒன்றினைக் கண்டு பிடித்தது மட்டுமன்றி, சிங்கள மொழித்துறைத் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் ரத்னசூரிய அவர்களிடம், அதனை விளக்கி, அவரது ஒப்புதலையும் பெற்றுக் கொண்டார்.
உவைஸின் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்ப்பதற்கு அடிகளா ருக்கு உதவியது, அக்காலத்தில் இலங்கை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் டிப்ளோமா வகுப்புகளாகும். இப்பாட நெறிக்கு வகுக்கப்பட்டிருந்த பாடத்திட்டமும் கலைமாணி முதல் வருட மாணவர்களுக்குரிய தமிழ்ப்பாட விதானமும் ஒன்றாகவே இருந்தன. எனவே முதலாண்டு மாணவர்களுக்குச் சிங்களமும் தமிழும் நடைபெறுகின்ற வேளையிலே, உவைஸ் சிங்கள விரிவுரைகளுக்குச் சமுகமளிக்க வேண்டுமென்றும், தமிழ் டிப் ளோமா வகுப்புகளுக்கு சமுகமளித்துத் தமிழ் படிக்க வேண்டு மென்றும் முடிவு செய்யப்பட்டது; உவைஸின் பிரச்சினையும் தீர்க்கப்பட்டது. தமிழ் டிப்ளோமா பாட நேரங்களோடு பொருளி யல் பாட வேளைகள் முரண்படாது இருந்தமை உவைஸின் அதிர்ஷ்டம்.
உவைஸின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுயமாக பல பிரயத்தனங்களை மேற்கொண்ட சுவாமி விபுலானந்தர் தான் நல்கிய உதவிகளுக்கு அவரிடம் கேட்ட கைம்மாறு விநோதமா னது; அது சுவாமிகளின் தமிழ்ப் பற்றினைக் காட்டுவதாகவும் இருந்தது. உவைஸிடம் அடிகளார் கேட்ட ஒரே கைம்மாறு முதலாண்டு பரீட்ஷையில் பொருத்தமான முறையில் சித்தியடைந் தால், உவைஸ் கலைமாணிப் பட்டத்திற்குத் தமிழைச் சிறப்புப் பாடமாக தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டுமென்பதே.
உவைஸின் பல்கலைக்கழக வாழ்வின் ஆரம்ப நாட்களில் சிறு புயல்கள் வீசியது உண்மை; அவர் வேதனைகள் பட்டதும் உண்மை. ஆனால் பொதுவாக அவரது பல்கலைக்கழக வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே இருந்தது. உவைஸின் நிதிநிலையில் ஏற் பட்ட சில மாற்றங்கள் இம்மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படை யாகவிருந்த காரணங்களில் ஒன்றாக விளங்கியது என்று கூறலாம்.
பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் வரை, படிப்புச் செலவுக ளுக்குத் தேவையான பணத்தைப் பெற முடியாது உவைஸ் பல சிரமங்களை அனுபவித்தார். ஆனால் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தபோது அவருக்குச் சில நிதி உதவிகள் கிடைத்தன. வறிய, ஆனால் திறமைமிகு மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின்

17
உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், உவைசுக்கு மாதம் முப்பத்து மூன்று ரூபாய் கிடைத்தது. அறிஞர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது தலைமை யில் இயங்கிக் கொண்டிருந்த இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதி உவைசுக்கு மாதம் நாற்பது ரூபாய் நிதி உதவியினை அளித்தது. இது மாத்திரமின்றி அவசியமான நூல்களை வாங்குவ தற்குத் தேவையான பண உதவிகளையும் இந்நிதி அளித்தது.
இவ்விரண்டு உதவித் தொகைகளும் உவைஸின் நிதிநிலை யைக் கணிசமான அளவு உயர்த்திவிட்டன. சுருங்கக்கூறின் இந்நிதி உதவிகளினால் உவைஸ் வசதிமிக்க ஒரு மாணவராகவே மாறிவிட் டார். பல்கலைக்கழக முதலாண்டு பரீட்ஷைக்குப் பின்னர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்தியாவுக்குச் சுற்றுலா செல்லும் அளவுக்கு இந்நிதி உதவிகள் உவைஸின் பொருளாதார நிலையை மாற்றி அமைத்துவிட்டன.
உவைஸின் இந்த புதிய "பணக்காரத்தனம் அவருக்கு மறக்கமுடியாத ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்கியது. உவைசுடன் பல்கலைக்கழகத்தில் படித்த சிங்கள சக மாணவர் ஒருவர் தனக்குத் தேவைப்படும் போதெல்லாம் உவைஸிடமிருந்து சிறு தொகைகளைக் கடனாகப் பெறுவார். சில வேளைகளில் கடன் திருப்பிக் கொடுக்கப்படும்; சில வேளைகளில் கடன் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் உவைஸ் இதனைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நண்பர் கேட்கும் போதெல்லாம் தொடர்ந்து கடன் கொடுக்கவே செய்தார்.
பட்டம் பெற்ற பின்னர் சிநேகிதர்கள் இருவரும் வெவ்வேறு உத்தியோகங்களில் சேர்ந்தனர். உவைஸின் நண்பர், கொழும்பு வங்கி ஒன்றில் நியமனம் பெற்றார். அதே வங்கிக் கிளையில் உவைசும் ஒரு கணக்கை ஆரம்பித்திருந்தார். சில மாதங்கள் சென்றன. தனது வங்கிக் கணக்கு மாதாந்த அறிக்கையைப் பார்த்தபோது, இருக்கவேண்டிய தொகையிலும் பார்க்கக்கூடிய ஒரு தொகை தன் கணக்கில் இருப்பதை உணர்ந்த உவைஸ், அதனை வங்கி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். உவைஸின் கணக்கு சார்பாக செய்யப்பட்ட வைப்புகளைப் பரிசீலனைச் செய்தபோதே, உவைஸின் பல்கலைக்கழக நண்பரான வங்கி அதிகாரி, பல்கலைக்கழகத்தில் தான் உவைசுக்குக் கொடுக்க வேண்டியிருந்த கடன்களை எல்லாம் எழுதி வைத்திருந்து, தன்னிடம் பணம் சேர்ந்ததும் அம்முழுத்தொகையையும் உவை ஸின் கணக்குக்குச் செலுத்தி இருக்கின்றார் என்ற உண்மை தெரிய வநதது.

Page 23
18
இச்சிறு சம்பவம் பல்கலைக்கழகத்தில் கிடைத்த பண உதவிகள், உவைஸின் நிதிநிலையை எந்த அளவு மாற்றியிருந்தன என்பதை உணர்த்துவதோடு, உவைஸ் தன்னுடைய இளம் பருவத்தில் கூட எத்துணைக் கண்ணியமானோருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் உணர்த்துகின்றது.
பல்கலைக்கழக நிதி உதவியும் முஸ்லிம் கல்விச் சகாய நிதி உதவியும், தனது படிப்பின் செலவினங்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டிய பரிதாபமான நிலையிலிருந்து உவைஸ் அவர்களை அகற்றிவிட்டதனால், அவருக்கு நிம்மதியாக தன் படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. எனவே பல்கலைக்கழக முதலாண்டு பரீட்ஷையில் தமிழ், சிங்களம், பொருளியல் ஆகிய மூன்று பாடங்களிலும் உவைஸ் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். இவற்றில் எந்த ஒரு பாடத்தையும் கலைமாணி கெளரவப்பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கும் உரிமை யும் அவருக்குக் கிடைத்தது.
பொருளாதார மெளசு குறைந்தது என்ற போதிலும் உவைஸ் தமிழ்ச் சிறப்பு பாடநெறியையே தேர்ந்தெடுத்தார். உவைஸின் இத்தெரிவு சாமான்யமான ஒன்றல்ல; பெரும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் கால்கோளிட்ட மகத்தான தெரிவு அது. இருப தாம் நூற்றாண்டில் எந்த ஒரு தனி மனிதன் எடுத்த முடிவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு, உவைஸ் எடுத்த முடிவு ஏற்படுத்திய பாரிய பாதிப்பைப் பார்க்கினும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது என்று கூறமுடியாத அளவிற்கு, உவைஸ் எடுத்த முடிவு, தமிழ் இலக்கிய வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது; அதனை விசாலப்படுத்தியுள்ளது.
தமிழ்ப் பரோபகாரி சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் 'செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னாளே டுகளை' அச்சு வாகனம் ஏற்றவேண்டும் என்று எடுத்த முடிவு, கற்றறிந்தார் போற்றும் கலித்தொகையையும் தொல்காப்பியத்தை யும் வேறு ஒன்பது நூல்களையும் தமிழுக்கு வழங்கிற்று. தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தமிழ் ஏட்டுச் சுவடிகளைக் கல்லார்களிடமிருந்தும் கரையான்களிடமிருந்தும் காப்பதற்கு எடுத்த முடிவு எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டை யும், சீவக சிந்தாமணியையும் வேறு பல உன்னதமான பனுவல்க ளையும் தமிழுக்கு அளித்தது. ஆனால் உவைஸ் எடுத்த மகத்தான முடிவோ, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழுக் குக் கொடுத்தது. அது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற பெரும் பாரம்பரியத்தையே தமிழன்னைக்கு வழங்கி, தமிழ் மொழியை ஒரு படி அல்ல, பல படிகள் உயர்த்திவிட்டது.

9
உத்தியோக வாய்ப்புகளைப் பொறுத்தவரையிலும் மாத்திர மன்றி, பல்கலைக்கழகச் சமூக அந்தஸ்தைப் பொறுத்தவரையிலும் கூட மிகக் குறைவாகவே அன்று மதிக்கப்பட்ட தமிழ்ச் சிறப்பு கலைமாணிப் பட்ட பாடநெறியை உவைஸ் தெரிவு செய்தது ஆச்சரியத்தை ஊட்டும் நிகழ்வாகவே தோன்றுகின்றது. தமிழின மாணவ, மாணவிகள் கூட இந்நெறியினைப் பயில விரும்பாத காலமது என்பதனை 1948, 1949, 1950 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழ் கெளரவ கலைமாணிப் பட்ட பாடநெறியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரே மாணவர் உவைஸே என்ற புள்ளிவிபரம் தெளிவாக உணர்த்துகிறது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்து, பின்னர் அப்பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராய், பேராசிரிய ராய் உயர்ப்பணியாற்றிய கலாநிதி வித்தியானந்தன் அவர்கள், தனது மாணவரான உவைஸைப் பற்றித் தானெழுதிய கட்டுரை யொன்றில்
'தமிழைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாகப் பயிலு வோர், பிறரால் இழிசனர் என்று இகழப்பட்டு வந்த காலத்திலே, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்ற உவைஸ் அவர்களின் துணிவை நாம் மெச்ச வேண்டும். அத்துடன் அவர் நிற்கவில்லை; தமிழைத் தமிழரே சிறப்புப் பாடமாக பயில முன்வராத காலத்திலே, அவரை ஒரேயொரு மாணவ னாக தமிழ்ச் சிறப்புக் கலை வகுப்பிற் கண்டபோது எனக்கு அவரிடம் நன்மதிப்பு ஏற்பட்டது' என்று மனந்திறந்து பாராட்டியிருப்பது, அன்று உவைஸ் தமிழைச் சிறப்புப் பாடமாக தேர்ந்தெடுத்துப் பயில முன்வந்தது ஒர் அசாதாரண செயலே என்பதை நன்கு புலப்படுத்துகின்றது.
இத்தகைய ஒரு காலகட்டத்திலே தமிழைச் சிறப்புப் பாட மாக எடுப்பதற்கு எவ்வெக் காரணங்கள் உவைஸை உந்தின என்பதை இன்று திட்டவட்டமாக கூறமுடியாது என்ற போதிலும், சுவாமி விபுலானந்தர் அவர்களின் வேண்டுகோள் ஒரு முக்கிய காரணமாக விளங்கியது என்பதை 'நெஞ்சில் நிலைத்த சுற்றுலா என்ற நூலில் தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெறவேண்டும் என்று என்னை ஊக்கியவர்களுள் விபுலானந்த அடிகளும் ஒருவரா வார் என்று உவைஸ் கூறியிருப்பது உறுதிப்படுத்துகிறது.
தமிழ்ச் சிறப்புப் பாடநெறியைப் படித்த உவைஸ் தனது உப பாடமாக சிங்களத்தைத் தெரிவு செய்திருந்தமை குறிப்பிடப் பட வேண்டியதாகும். இதுவரை உவைஸைத் தவிர வேறு யாரும்

Page 24
2O
இத்தகைய பாடக்கூட்டினைச் செய்ததில்லை என்பதும் நினைவில்.
க்கப்படவேண்டிய ஒன்றே. Olg55 Lg (Li 260TV51)
உவைஸ் தமிழ்ச் சிறப்புப் பாடநெறியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கு யாழ்நூல் ஆசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் வேண்டுகோள் ஒரு முக்கிய காரணமாக இருந்த போதிலும், அப்பேரறிஞரிடம் நீண்டகாலம் தமிழ் படிப்பதற்கு உவைஸ் கொடுத்து வைத்திருக்கவில்லை. காரணம் 1948ஆம் ஆண்டில் தவத்திரு அடிகளார் இவ்வுலக வாழ்வை நீத்தமையே. அடிகளா ரின் பிரிவு உவைசுக்கு ஒரு பேரிழப்பே. இவ்விழப்பை, "ஒரு நண்பனின், வழிகாட்டியின், ஆலோசகரின், தத்துவஞானியின் தன்னலமற்ற ஆதரவு உவைசுக்கு அற்றுப் போய்விட்டது' என்று ஒரு கட்டுரையில் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் மிக பொருத்த மாக வர்ணித்துள்ளார்.
உவைஸ் பட்டதாரி மாணவராக விளங்கிய காலை பேராசிரி யர்களான க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம், சு.வித்தியானந் தன், ஆ.சதாசிவம் ஆகியோரும் முதுத்தமிழ்ப் புலவர் மு.நல்லதம் பியும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்க ளாக பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரினது அன்பையும் உவைஸ் பெற்றிருந்த போதிலும் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களுக்கும் உவைசுக்குமிடையே நிலவிய அன்பும் பாசமும், அன்னியோன்யமும் அலாதியானவையாகும்.
உடலாலும் உள்ளத்தாலும் பெரியவரான பண்பாளர் பேராசி ரியர் வித்தியானந்தன், உவைஸின் வளர்ச்சிக்கு, பல்வேறு நிலைக ளிலும் செய்துள்ள பாரிய உதவிகளை, உவைஸ் நன்றியுணர்வுடன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள், தான் எழுதிய ஒரு கட்டுரையில்
“எனக்கும் உவைஸ் அவர்களுக்கும் உள்ள தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெருங்கிய உறவாகும். நாம் அவருடன் தோழமையுடன் பழகிய போதும் அவர் குருபக்தியுடனேயே நடந்து கொள்வார். அவரைப் போன்ற பண்பான இஸ்லாமியச் சகோதரரை நாம் இன்னும் காணவில்லை."
என்று கூறி உவைஸைப் பாராட்டி இருப்பது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் அல்லா தோர் மத்தியிலும் பிரபல்யப்படுத்துவதில் முன்னணியில் நின்ற பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள், அவ்விலக்கியத்தைக் குன்றின் மீதிட்ட தீபமாக ஒளி வீசச் செய்த டாக்டர் உவைஸ் அவர்கள் மீது எந்தளவு பாசம் வைத்திருந்தார்கள், எத்துணை

21
உயர்வாக அவரை மதித்தார்கள் என்பதைத் துல்லியமாக உணர்த்து கிறது. ' , ', .
தமிழ் விரிவுரையாளர்கள் அனைவரும் உவைஸின் மீது பேரன்பு காட்டியது போலவே, அவரின் தமிழறிவு வளர்ச்சியிலும் பெரும் அக்கறை காட்டவே செய்தனர். பேராசிரியர்,உவைஸ் எழுதிய தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள், இஸ்லா மும் இன்பத் தமிழும், நெஞ்சில் நிலைத்த சுற்றுலா போன்ற நூல்களும், டாக்டர் அஜ்மல்கான் அவர்களுடன் இணைந்து எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் தொகுதிக ளும், சென்னை புதுக் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்த ரங்கு மகாநாட்டில் அவர் வாசித்த ‘ஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்’ எனும் ஆராய்ச்சிக் கட்டுரையும், இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர்கள் தமிழ் மொழியையும் அதன் பாரிய இலக்கியத் தையும் உவைசுக்கு எத்துணை விரிவாகவும் ஆழமாகவும் புகட்டி யுள்ளனர் என்பதைத் துலாம்பரமாக உணர்த்த போதுமானவை. உண்மையில் உவைஸ் நிர்மாணித்த இஸ்லாமியத் தமிழ் இலக்கி யம் எனும் இராஜ கோபுரம், இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினர் அவருக்கு வழங்கிய தமிழ்ப் பாண்டித்தியம் என்னும் உறுதியான அத்திவாரத்தின் மீதே எழுப்பப்பட்டது என்பதை மறக்கவோ, மறைக்கவோ முடியாது.' *
1949ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உவைஸ் தமிழ்ச் சிறப்பு கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்; அப்பட்டத்தைப் பெற்ற முதல் இலங்கை முஸ்லிம் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். உவைஸ் அவர்களது பாடசாலை வாழ்வின் போதும் அவரது பல்கலைக்கழக வாழ்வின் போதும் அவரின் ஆற்றல்கள் பல சிறப்பாக வெளிப்பட்டன என்பது உண்மை. ஆனால் அவ்வாற்றல்கள் விதிவிலக்கானவையாகவோ, அசாதாரணமான வையாகவோ திகழவில்லை. தசர்தக்குமரன் இராமன் பிறக்கும் போதே வரம்பற்ற ஆற்றல்களோடு பிறந்தவன்தான். ஆனால் ராஜரிஷி விஸ்வாமித்திரருடன் இணைந்து, தாடகை வதத்திற்குப் புறப்பட்ட பின்னரே கோசலை மைந்தனின் வீரப்பிரதாபங்கள் ஜகத்தோர் உள்ளங்களை வெல்ல ஆரம்பித்தன. அதேபோல உவைசும் கலைமாணிப் பட்டம் பெற்ற பின்னரே ஒர் ஒப்பற்ற அறிஞராக, ஒர் இனத்தின் உன்னத இலக்கியப் பாரம்பரியத்தை மீள் கண்டுபிடிப்பு செய்த ஒரு மாபெரும் இலக்கிய ஆய்வாளராக விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தார்.

Page 25
3. தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் இலக்கிய முதுசம்
தமிழ்ச் சிறப்புப் பாடநெறியில் கலைமாணி கெளரவப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட உவைஸ் தமிழ் முதுமாணிப் பட்ட பாடநெறியினைப் படிக்க தன்னை உடனடியாக பதிவு செய்து கொண்டார். இப்பட்டத்தினைப் பெறுவதற்கு பரீட்ஷார்த் திகள் எழுத்துப் பரீட்ஷையொன்றில் சித்தியடைய வேண்டியிருந்த தோடு தாம் தேர்ந்தெடுத்த துறையில் ஆய்வேடொன்றையும் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இவ்ஆய்வுக்காக உவைசுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு 'இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டு என்பதாகும்.
தமக்கு தரப்பட்டிருந்த தலைப்பில் ஆய்வினை நடத்துவதற் குத் தேவையான இஸ்லாமியத் தமிழ் நூல்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும் அவசியமான தகவல்களைச் சேகரித்துக் கொள்வதற்காகவும் தமிழகம் சென்ற உவைஸ் அப்போது சென் னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்
றிக் கொண்டிருந்த மூதறிஞர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை.
அவர்களைச் சந்தித்தால் தமது ஆய்வுக்கு உதவக்கூடிய ஆக்கபூர்வ மான ஆலோசனைகளையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள லாம் என்ற எதிர்பார்ப்பில், அன்னாரைச் சந்திப்பதற்குச் சென் னைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். ஆனால் உவைஸ் சென்றபோது சேதுப்பிள்ளை அவர்கள் அங்கு இருக்கவில்லை. எனினும் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் தீக்சிதர் அவர்களைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு உவைசுக்குக் கிட்டியது.
இருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் மூலம் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்களைத் திரட்டுவதற்காகவே உவைஸ் தமிழகம் வந்துள்ளார் என்பதை அறிந்த சரித்திரப் பேராசிரியர் பெரும் ஆச்சரியம் அடைந்தார். உமறுப் புலவரின் சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் சாகிபுப் பாடல்கள் ஆகிய இரண்டினைத் தவிர வேறு இஸ்லாமியத் தமிழ் நூல்கள் இருக்கின்றனவா என வியப்புடன் கேட்டார். முஸ்லிம் களை ஏளனம் செய்யும் எண்ணத்தில் எழுப்பப்பட்ட கேள்வி யல்ல அது; இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டினை உதாசீனம்
རྫི་

23
செய்யும் நோக்கில் கேட்கப்பட்டதுமல்ல. இவ்விரண்டு நூல்க ளைத் தவிர, வேறு எந்தவோர் இஸ்லாமியத் தமிழ் நூலினைப் பற்றியும் பேராசிரியர் தீக்சிதர் உண்மையில் கேள்விப்பட்டிருக்க வில்லை என்பதே இக்கேள்விக்குக் காரணமாக இருந்தது.
இன்று பாமரர் ஒருவர் கேட்டாலும் கூட நகைப்பை ஏற்படுத்தக்கூடிய இவ்வினா ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுக ளின் ஆரம்பத்தில் நியாயமான ஒன்றாகவே இருந்தது. காரணம் அன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையையும் செழுமையையும் முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கவில்லை; எனவே இதனைப் பற்றி பிறமதத்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. உண்மையில் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்தை அறியாமை இருள், மூடி மறைத்து இருந்தது.
பேராசிரியர் தீக்சிதரும் வேறு பலரும் நம்பியது போல் உண்மையில் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் என்று பெருமையோடு சுட்டிக்காட்டப்படக் கூடியவைகளாக சீறாப் புராணத்தையும் மஸ்தான் சாகிபுப் பாடல்களையும் தவிர வேறு எவையும் இருக்கவில்லையா? பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்களின் ஆய்வுகளும் அவற்றை அடிப்படையாக வைத்து உவைஸ் அவர்க ளும் ஏனைய இஸ்லாமியத் தமிழ் அறிஞர்களும் எழுதிக் குவித்துள்ள நூல்களும், திருச்சி, சென்னை, காயற்பட்டணம், கொழும்பு, கீழக்கரை, நீடூர் போன்ற நகரங்களிலே வெகு கோலாகலமாக நடந்து முடிந்த அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாடுகளும் அக்கேள்விக்குக் கொடுக்கும் பதில் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் எனச் சுட்டிக்காட்டப்படக் கூடியவை இரண்டல்ல, இரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கின் றன எனபதாகும. *
மறைந்தும் மறக்கப்பட்டும் இருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை உலகுக்கு மீள் அறிமுகப்படுத்தியவர் என்ற பெரும் தகுதியே தமிழ் இலக்கிய வரலாற்றில் டாக்டர் உவைஸ் அவர்களுக்கு நிலையான ஓர் இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக் கின்றது. எனவே டாக்டர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கும் அதன் உயர்ச்சிக்கும் ஆற்றியிருக் கும் சேவையின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து கொள்வதற்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் பரப்பையும் ஒரளவாவது அறிந்திருத்தல் இன்றியமையாததாகும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு டாக்டர் உவைஸ் வ1^ங்கியுள்ள பாரிய பங்களிப்பினை நியாயமான முறையிலே

Page 26
24
எடை போட வேண்டுமென்றால் அவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றியுள்ள தொண்டினை அறிவதற்கு முன், இஸ்லாமியர் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ள பங்களிப் பினை அறிந்து கொள்வது அத்தியாவசியமானதாகும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வைதீக சமயங்களான சைவத் தையும் வைணவத்தையும் சார்ந்தோர் எத்துணை விசாலமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனரோ அதே அளவிற்கு சமணர், சாக்கியர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் போன்ற ஏனைய சமயத்தவர் களும் பங்களிப்புகளை நல்கியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமணத்தின் தொடர்பு தமிழுக்குச் சிந்தையை அள்ளும் சிலப்பதிகாரத்தையும் சீர்கெழுமிய சிந்தாமணியையும் வழங்கிற்றென்றால், பெளத்தம் மணிஆரமாம் மணிமேகலையைச் சூட்டித் தமிழன்னையை அழகுபடுத்தியது. மேலைநாட்டவர்க ளான கிறிஸ்தவர்களின் வருகை வசனநூல்கள், அகராதிகள், செய்தித்தாள்கள், விஞ்ஞான, அறிவியல் நூல்கள் ஆகியவற்றை வழங்கியது. இவ்வாறே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் உன்னதமான செய்யுள் இலக்கியங்களையும் வசன நூல்களையும் படைத்துத் தமிழை வளர்த்துள்ளனர்.
உலகில் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் முஸ்லிம் கள் இலக்கிய வளர்ச்சிக்கும் உதவியுள்ளனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. நூல்களின் தாய்' எனப் போற்றப்படும் அருள் மறையாம் திருமறையால் உணர்ச்சி பெற்று, அதன் அடிப்படை யில் சிந்தித்து, இலக்கியம் படைத்த இஸ்லாமிய அறிஞர்களும் இலக்கியவாதிகளும் தத்தம் தாய்மொழிகளின் இலக்கிய வளர்ச் சிக்கு வழங்கியுள்ள பங்களிப்புகளை இலக்கிய ஆர்வலர் ஜனாப் எஸ்.ஏ. செய்யது ஹஸன் மெளலானா, தான் தொகுத்தளித்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்’ எனும் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் கீழ்வருமாறு விளக்கியுள் (ộTTTTT.
'எகிப்தில் பிறந்த இமாம் பூஸரி (ரஹ்) அவர்கள் கஸிதத்துல் புர்தாஹ் என்னும் அற்புதமான காவியத்தை இயற்றியருளி னார்கள். அல் கஸிதத்துல் ளரிய்யா', அல் கஸிதத்துல் முகம்மதிய்யா ஆகிய இலக்கியப் படைப்புக்களும் அன்னா ருடையனவாம். பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் 'ருபய்யாத் என்னும் உலகப் புகழ்ப் பெற்ற தத்துவார்த்த இன்பப் பாடல்களைப் பாடினார். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்க ளைப் பற்றி ஏ.ஜெ.வென்ரிக் என்ற பிரஞ்சுக்காரர் குறிப்பி டும்போது, "ஐம்பத்தைந்து வருடம் உலகில் வாழ்ந்த இமாம்

25
கஸ்ஸாலி அவர்கள் எழுதியுள்ள எழுத்துக்களின் அளவைக்
கணக்கிட்டால், அவர்கள் பிறந்த அன்றிலிருந்து இறையடி
சேர்ந்த தினம் வரையுள்ள நாட்களில் நாளொன்றுக்கு
ஐந்தரைப் பக்கம் புத்தக அச்சுத்தாள் அளவுக்கு எழுதியிருக்கி
றார்கள்' எனக் கூறி வியக்கிறார். 'குலிஸ்தான்', "போஸ்
தான், ஆகிய இலக்கியங்களைப் படைத்த மகான் சஅதி
அவர்களும், 'குராஸானின் கண்ணீர் எழுதிய அலி அவ்ஹா துத்தீன் அன்வரி அவர்களும், துஹற்பத்துல் இராகைன்'
என்னும் மஸ்னவிப் பாடல்களை எழுதிப் புகழ்பெற்ற
கர்கானி அவர்களும், உலகப் புகழ்மிக்க பஞ்ச காவியங்க
ளான 'மக்ஸானுல் அஸ்ரார், இஸ்கந்தர் நாமா, ஹப்தே
பைகார், குஷ்ரு வ ஷிரீன், லைலா வ மஜ்னூன் என்பனவற் றைப் படைத்த இல்யாஸ் அபு முகம்மது நிஜாமுத்தீன் அவர்களும் 'கஸாயினுல் புதூஹ் என்னும் உயரிய இலக்கி யப் படைப்பை நல்கிய க்வாஜா காபிஸ் அவர்களும்,
குராஸான் மாகாணத்தில் பிறந்து தொண்ணுாற்றாறு நூல்கள் வரை எழுதி உலகப் புகழ்பெற்ற நூறுத்தீன் அப்துல் ரஹ்மான் (ஜாமி) அவர்களும் இஸ்லாமிய உலகுக்கு என்றும் அழியாத இலக்கியச் செல்வங்களை நல்கியவர்களாவர்;
உர்து இலக்கியத்தில் புதிய எழுச்சியையும் மறுமலர்ச்சியை யும் ஏற்படுத்திய மெளலவி அல்த்தாப் ஹ"ஸைன் ஹாலி என்பவர் பர்ஸாத், உம்மீத், ஹ"ப்பெவதானி, முஸத்த
ஸெஹாபி என்னும் இலக்கியப் படைப்புகளை ஆக்கியருளி
TITT.''
அரபு, பாரசீகம், உர்து ஆகிய மொழிகளைத் தாய் மொழியா கக் கொண்ட முஸ்லிம்கள் எவ்வாறு தத்தம் மொழி வளர்ச்சிக்கு இலக்கிய முயற்சிகள் மூலம் பங்களிப்புகளை வழங்கியுள்ளனரோ அவ்வாறே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பாரதத்தின் தென்பகுதியிலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம்களும் தமது பாரிய இலக்கிய முயற்சிகள் மூலம் தமிழ் மொழிக்கு வளத்தை யும் வனப்பையும் வழங்கியுள்ளனர்.
ஆதரிப்பாரின்றி, அரவணைப்பாரின்றி தமிழ் இலக்கியம் நலிவுற்றுக் கொண்டிருந்த ஆபத்தான காலகட்டத்திலே, முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும் அபயக்கரம் நீட்டி தமிழன் னைக்கு வாழ்வு வழங்கினர் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மையாகும்.
சோழராட்சி முடிவோடு ஆரம்பித்த பதினான்காம் நூற்றாண் டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்ப

Page 27
26
குதி தமிழ் இலக்கிய வரலாற்றிலே நாயக்கர் காலம் என அழைக்கப்படுகின்றது. இக்காலப் பரப்பிலே தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்டிருந்த நாயக்கர் எனும் வம்சத்தினரின் ஆதிக்கத்துக்குள்ளேயே தமிழ்நாடு வீழ்ந்திருந்தது.
அரச அவைகளிலும் குறுநில ஆட்சியாளர்களான பாளையக் காரர்களின் சபைகளிலும் தெலுங்கும் மராத்தியுமே கொலு வீற்றிருக்க, ஆட்சி மன்றங்களில் தம்மை நோக்கி நேசக்கரம் நீட்டுவார் இல்லாத காரணத்தினால் தமிழ்ப் புலவர்கள் அம்மன் றங்களை விட்டு ஒதுங்கி வாழத் தலைப்பட்டனர். நாயக்கர் காலத்தைத் தொடர்ந்த ஐரோப்பியர் காலத்திலும் தமிழ் மொழி அரச ஆதரவைப் பெறவில்லை. எனவே எத்தனையோ நூற்றாண்டு களாக ஒரு வற்றாத ஜீவநதியாக பிரவாகம் எடுத்து ஒடிக்கொண்டி ருந்த தமிழ் இலக்கியம் எனும் கங்கையின் கம்பீர ஓட்டத்திலே தடை ஏற்பட்டுவிடுமோ என கற்றோர் கலங்கிய காலகட்டத்திலே, தமிழுக்குக் கதியாகத் தம்மை இனங்காட்டிக் கொண்டு, அதன் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் கரம் கொடுத்தவர்கள் முஸ்லிம்களே என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும். இக்காலப்பகுதி யிலே இஸ்லாமியப் புலவர்களும் புரவலர்களும் கைக்கோர்த்து நின்று, எண்ணற்ற நூல்கள் இயற்றி, தமிழ் இலக்கிய வளர்ச்சி யிலே ஏற்பட்ட தேக்கத்தை அகற்றினர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலே வகுதாபுரியிலே ஆட்சி செய்த வின்னன் என்னும் ஓர் இஸ்லாமிய மன்னரைப் பாட்டு டைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பல்சந்தமாலையோடு ஆரம்பமானதாகக் கருதப்படும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு எனும் பிரவாகம் எவ்வித தங்கு தடையுமின்றி பல நூற்றாண்டுகளாக காவியங்கள், கலம்பகங்கள், மாலைகள், அந்தா திகள், நாமாக்கள், கிஸ்ஸாக்கள், ஏசல்கள், தாலாட்டுக்கள், மஸ்அலாக்கள், முனாஜாத்துக்கள் எனப் பல கிளைகளாகப் பிரிந்து பாய்ந்து, தமிழ் இலக்கியத்தையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் வளம்படுத்திக் கொண்டே இருந்தது என்பது பெரியார் உவைஸ் அவர்களின் ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டு மக்களுக்கு எடுத்துக் காட்டிய உண்மையாகும்.
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய நூல்களை, ஏற்கனவே தமிழில் வழக்கிலிருந்த பிரபந்தவகைகளை அடிப்ப டையாக வைத்து எழுதப்பட்டவை, தமிழில் அது காலம்வரை கையாளப்படாத இலக்கிய வடிவங்களுக்கமைய இயற்றப்பட்ட வையென இருபெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் காணப்படும் காப்பியங்கள், அந்தாதி

27
கள், மாலைகள், கோவைகள், பிள்ளைத்தமிழ், திருப்புகழ், சதகங்கள், கலம்பகங்கள், ஆற்றுப்படைகள், அம்மானைகள், கீர்த்தனைகள், கும்மிகள், ஏசல்கள், சிந்துக்கள், தாலாட்டுக்கள் போன்றவை முதல் பிரிவைச் சாரும். படைப்போர்கள், நாமாக் கள், முனாஜாத்துக்கள், கிஸ்ஸாக்கள், மஸ்அலாக்கள் ஆகியவை இரண்டாவது பிரிவில் அடங்கும்.
இலக்கியத்துக்கு அணி சேர்ப்பது அதன்கண் தோன்றியுள்ள காப்பியங்களே; இலக்கிய வடிவங்களுள் முதன்மை பெறுவதும் அவையே. காவியங்களே ஒரு மொழியின் தொன்மை, சொல்வ ளம், சொல்லாட்சி, அதன் அழகு, அதில் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சிச் செறிவு போன்றவற்றை மிக துல்லியமாக வெளிப்படுத் தும். இத்தகைய காவியங்கள் நிறைந்த மொழிகள் உலகில் ஒரு சிலவே; அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
ஐம்பெருங்காப்பியங்கள் என வழங்கப்படும் சீவகசிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டல கேசி என்பவையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என அழைக்கப்படும் சூளாமணி, யசோதர காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாக குமார காவியம் என்பவையும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் ஈடு இணையற்ற இராமாயணமும், 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" எனப் போற்றப்பட்ட சேக்கிழார் பெருமானின் பெரிய புராணமும், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணமும், பெருந்தேவனாரின் பாரதமும், வீரமாமுனிவரின் தேம்பாவணியும் தமிழணங்கு தன்னை அழகுபடுத்திக் கொள்ள சூடிக்கொண்ட காவிய ஆபரணங்களாகும்.
தீந்தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்டு, அதனைப் படித்து, பாண்டித்யம் பெற்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி என்ற கோஷத் தைத் தம் தாரக மந்திரமாகக் கொண்டு தம் பங்குக்குத் தரமான பல காவியங்களை இயற்றித் தமிழன்னையின் அழகுக்கு மேலும் பொலிவூட்டியுள்ளனர். தமிழ்க் காவிய மரபுகளை அடியொட் டியே பாடப்பட்டுள்ள இக்காவியங்கள் தமிழக முஸ்லிம்களின் தமிழ்ப் பற்றினையும், தமிழில் அவருக்கிருந்த பரந்த அறிவினை யும் பாண்டித்யத்தையும், தமிழ் மண் மீது அவர்கள் கொண்டிருந்த பேரபிமானத்தையும் நிதர்சனமாகக் காட்டுபவையாக அமைந்துள்
66.
இக்காவியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் பெரும்பாலும் அரேபியா, ஈராக், எகிப்து போன்ற பிறநாடுகளைச் சேர்ந்தவர்க

Page 28
28
ளாக இருந்தபோதிலும் நாட்டு வர்ணனை, நகர வர்ணனை போன்றவற்றில் தமிழ்நாடே சித்தரிக்கப்பட்டுள்ளது. கங்கை நாடு கம்பர் காவியத்தில் காவிரி நாடானது போல, அராபியப்பாலைவ னம் இஸ்லாமியக் காவியங்களில் நெல் விளையும் தண்புனல் நாடாகவே திகழ்கின்றது.
இஸ்லாமியத் தத்துவங்களையும் சிந்தனைகளையும் விளக்கு வதற்காகவும், தீர்க்கதரிசிகளினதும் இஸ்லாமியச் சமயப் பெரியார் களினதும் முன்மாதிரியான வாழ்வுகளை முஸ்லிம்களுக்கு எடுத் துக்காட்டுவதற்காகவும் எழுதப்பட்ட காவியங்களில் கூட அவற்றை இயற்றிய முஸ்லிம் புலவர்கள், ஆங்காங்கே தம்மை மறந்து, இஸ்லாத்திற்கு முரணான சில தமிழ்க் கலாச்சார வெளிப்பாடுகளைப் புகுத்தியிருப்பது அவர்கள் எந்த அளவிற்குத் தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒன்றியிருந்தனர் என்பதையே உணர்த்து கின்றது.
தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமிய காப்பியமாக, ஆலிப் புலவர் அவர்கள், 1590ஆம் ஆண்டில் அரங்கேற்றிய மிஃராஜ் மாலை கருதப்படுகின்றது. இதற்கு ஏறத்தாழ அறுபது ஆண்டுக ளுக்குப் பின்னர் நபிகள் நாயகத்தின் திருப்பேரரான இமாம் ஹ"ஸைன் அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கனகவிராயர் இயற்றிய கனகாபிஷேகமாலை தோன்றியது. இஸ் லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்களின் கொடுமுடி யாய்க் கருதப்படும் சீறாப்புராணம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டது.
நமக்குக் கிடைத்துள்ள இஸ்லாமியத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது என்று கருதப்படும் சீறாப்புராணம், காப்பிய இலக்கணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, அறிஞர்க ளின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றதாய் இன்றும் இலக்கிய வானில் சுடர்விட்டுக் கொண்டு இருக்கின்றது. ஐயாயி ரத்து இருபத்தேழு விருத்தங்களைக் கொண்டதாய், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் முதல் ஐம்பத்தொன்பது ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களை மிக நுணுக்கமாக வர்ணிப்ப தாய் அமைந்துள்ள இக்காவியத்தை இயற்றிய கவிஞரேறு உமர் புலவர் அவர்களை, சீறாப்புராணம்' எனும் ஓர் ஆய்வுக் கட்டுரை யில் ஜனாப் எஸ்.ஏ. செய்யது ஹஸன் மெளலானா அவர்கள் பின்வருமாறு மதிப்பீடு செய்துள்ளார்கள்.
"தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல் என்பனவற்றிலுள்ள காப்பியச்

29
சுவை, காப்பிய அலங்காரம், காப்பியநடை, வனப்பு, வண்ணம் முதலானவற்றைக் கற்றுத் தெளிந்து, பெருங்காப்பி யங்களைப் படைத்துதவிய முஸ்லிம் சான்றோர்களில் உம றுப்புலவர் முதன்மை பெற்று விளங்குகின்றார். தமிழ் இலக்கிய மரபோடு இஸ்லாமிய இலக்கிய மரபும் சிறப்பாய மைய சீறாவென்னும் பெருங்காப்பியம் இயற்றியிருப்பது பொன்மலை மீது மின் பளிச்சிடுவதை நிகர்க்குமென்க. அரபுத்தமிழ்ச் சொற்கள் அழகுற மின்னியொளிரும் உமறுப்பு
லவர் தம் கவிதைகளில் தனக்கெனச் சிறப்பு முறையின மைந்த கவித்துவ மேம்பாட்டால் தனித்துவம் பெற்று விளங்குகின்றார்.'
மெளலானா எழுதியுள்ள இக்கூற்றின் உண்மையை உணர்த்த, சீறாப்புராண நபியவதாரப் படலத்தில் நபிகள் பெருமானின் பிறப்பின் மாண்பைப் பற்றி கவிஞர் கோமான் உமறு பாடியுள்ள
"பானுவின் கதிரா லிடருறுங் காலம்
படர்தரு தரு நிழ லெனலாய் ஈனமுங் கொலையும் விளைத்திடும் பவநோ
யிடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த் தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைஷியர் திலதமே யெனலாய் மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய்
முகம்மது நபி பிறந்தனரே." என்ற விருத்தம் போதுமானதாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்தின் 'கம்பன்' என உமரை வர்ணிப்பது சரியானதே.
உமறுப்புலவரின் சீறாப்புராணம் அண்ணல் நபியின் வாழ் வின் இறுதி நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பிரஸ்தாபிக்கவில்லை. இதனை ஒரு குறையாக கருதிய காயற்பட் டணத்து பனி அகுமது மரைக்காயர் எனும் புலவர் ஆயிரத்து எண்ணுற்று இருபத்தொன்பது பாக்களைக் கொண்ட சீறாவென் கின்ற புராணம்’ என்ற காப்பியத்தையெழுதி இக்குறைப்பாட் டினை நிவர்த்தி செய்தார். இன்று இக்காவியம் 'சின்ன சீறா? என்று வழங்கப்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிப் பகுதியில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை விளக்கும் மற்றுமோர் காவியம் சேகுனாப் புலவர் என்றும் புலவர் நாயகம் என்றும் பொதுவாக அழைக்கப்படும் சேகு அப்துல் காதிறு நெய்னார் லெப்பை ஆலிம் அவர்களால் இயற்றப்பட்ட புதூகுஷ்ஷாம்

Page 29
30
என்பதாகும். வளம் கொழிக்கும் நாடான சிரியாவை முஸ்லிம்கள் பைசாந்திய பேரரசிடமிருந்து வென்ற வீரக்காதையை இது இயம்புகின்றது. இது புன் புது
புதிர் (553) அராபியர்கள் சிரியாவை ஷாம் என்றே அழைத்தனர்; புதுஹ் என்ற அரபுச் சொல் வெற்றியைக் குறிக்கின்றது. எனவே புதுகுஷ்ஷாம் என்பது ஷாமை வெற்றிக்கொள்ளல் என்ற பொரு ளைத் தருவதாகும். முகம்மதிய்யா, சித்தீக்கிய்யா, பாரூக்கிய்யா என மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள புதூகுஷ்ஷாம் ஆறாயிரத்து எழுநூற்று எண்பத்தேழு விருத்தங்களைக் கொண்ட ஒரு பார காவியமாகும். இஸ்லாமியர்களால் இயற்றப்பட்ட தமிழ்க் காவியங்களுள் ஆகக் கூடுதலான பாக்களையுடையது இதுவே. 18: த ( 3 - தெரு 201821 ஆம் ஆண்டில் இதனை அரங்கேற்றிய புலவர் நாயகம், இதற்கு முன்னரே இப்ராஹிம் நபி (அலை) அவர்களின் வாழ் வினை விளக்கும் திருமணிமாலை, முகியத்தீன் ஆண்டகை என்றும் குதுபுநாயகம் என்றும் போற்றப்பட்ட அப்துல் காதர் ஜெய்லானி என்ற மனிதப் புனிதரின் வரலாற்றையும் உயர் மார்க்கப் பணிகளையும் சித்தரிக்கும் குதுபுநாயகம், நாகூரில் அடங்கப்பட்டுள்ள சாஹல் ஹமீது ஒலியுல்லா அவர்களின் மாண்பையும் மாட்சியையும் எடுத்துக்கூறும் திருக்காரணப்புரா ணம் ஆகிய மூன்று பெருங்காவியங்களைப் படைத்து புகழீட்டியி ருந்த ஒரு பெரும் புலவர்.
தீனையும் தீந்தமிழையும் வளர்த்த காயற்பட்டணத்திலே, இரத்தின வணிகர் குடும்பம் ஒன்றில் பிறந்த இப்புலவர், இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தவர்; தமிழ், அரபு, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய பன்மொழிகளைக் கற்றுத் தேர்ந்த மகாபண்டிதர்; வேத வித்தகர்; திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்த ஹாபிஸ்; இருமுறை ஹஜ்ஜூச் செய்த மார்க்கச் சீலர்; இறைநேசர்; பதினாறு அவதானங்களைப் புரிந்த சோடசாவதானி; ஞானமேதை குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களுடன் ஒரு சாலை மாணாக்கராய்ப் பயின்று அம்மகானின் ஆப்த நண்பராக விளங்கியவர்; திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், சபாபதி முதலியார் போன்ற பெரும் தமிழறிஞர்களின் மேலான நட்பைப் பெற்றவர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் இலக்கிய உலகின் சாம்ராட்டாக பீடுநடை பயின்றவர். புலவர் நாயகம் அவர்களின் மேதா விலாசத்தையும் புலமையையும் அவர் இயற்றிய காவியங்களும் நாகையந்தாதி போன்ற சிற்றிலக்கியங்களும் மிகத் துல்லியமாக பிரதிபலிக்கின் றன.

31
புதிய இலக்கியம் படைப்பதில் ஆர்வம் காட்டிய புலவர் நாயகம் தம் முன்னோர்கள் இயற்றிய நூல்களைப் பதிப்பிப்பதி லும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது பிரபல்யப்படுத்தப் பட வேண்டிய உண்மையாகும். தொல்காப்பியம் எழுத்ததிகா ரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிட்டு பதிப்புத்துறை யில் தமிழ் அபிமானிகளுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மழவை மகாலிங்கையர் என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தமது இலக்கிய வழி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் கள். மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியத்தை அச்சிட்டது 1847ஆம் ஆண்டில் ஆகும்.
சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் பதிப்புப் பணி 1868ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. பண்டைய தமிழ் இலக்கி யங்கள் பலவற்றைப் பதிப்பித்து அத்துறையில் அழியாப் புகழ் பெற்ற தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பிறந்ததே 1855ஆம் ஆண்டில்தான். ஆனால் உமறுப் புலவரின் அமரகாவிய மான சீறாபுராணத்தை, புலவர் நாயகம் அவர்கள் அச்சிட்டதோ 1842ஆம் ஆண்டிலாகும்.
எனவே பதிப்புத்துறையில் மழவை மகாலிங்கையர் அவர்க ளுக்கும், தாமோதரம் பிள்ளை அவர்களுக்கும், சாமிநாதய்யர் அவர்களுக்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்த வர் புலவர் நாயகம் என்பது வெளிப்படை. ஆனால் இவ்வுண்மை தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களால் இன்றுவரை மறக்கப் பட்டோ அல்லது மறைக்கப்பட்டோதான் வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
கவிதா ஆற்றலிலும் கற்பனை வளத்திலும் புலவர் நாயகத் தோடு சம ஆசனத்தில் இருத்திப் போற்றப்படக் கூடியவர் மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப்புலவர் ஆவார். கவிக்கோ கம்பனுக் கும் சோழப் பேரரசன் குலோத்துங்கனின் ஆஸ்தானப் புலவர் ஒட்டக்கூத்தருக்கும் இடையே ஒரு பெரும் வித்துவப்போட்டி இருந்தது என்று கூறப்படுவதைப் போலவே புலவர் நாயகத்துக் கும் வண்ணக்களஞ்சியப் புலவருக்குமிடையே கடுமையான போட்டி மனப்பான்மை நிலவியது என நம்பப்படுகின்றது. வண்ணக்களஞ்சியப் புலவர் முஹியத்தீன் புராணம் என்னும் குதுபுநாயகம், இராஜநாயகம், தீன் விளக்கம் எனும் மூன்று காவியங்களை இயற்றி தமிழ் இலக்கியத்துக்குப் பொலிவூட்டி, பெரும் கெளரவத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்தவர்.
இஸ்லாமிய அடிப்படையில் காவியங்கள் இயற்றிய மற்று மோர் இஸ்லாமியப் பெரும்புலவர், பாண்டித்துரை தேவர்

Page 30
32
அவர்களால் அமைக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நக்கீரர் எனப் போற்றப்பட்ட மகா வித்துவான் குலாம் காதிறு நாவலர் ஆவார். இவரால் ஏறத்தாழ 1893ஆம் ஆண்டளவில் இயற்றப்பட்ட காவியம், வட இந்தியாவைச் சேர்ந்த மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறந்து, தனது நாற்பதாம் வயதில் நாகூர் வந்து, அங்கே இருபத்தெட்டு ஆண்டுகள் உயர் மார்க்கச் சேவையினைச் செய்து, அப்பதியிலேயே அடங்கப்பட்டிருக்கும் மகான் சாஹ"ல் ஹமீது ஆண்டகை அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட மைந்துள்ள நாகூர்ப் புராணமாகும்.
குலாம் காதிறு நாவலர் அவர்களால் படைக்கப்பட்ட மற்று மொரு காவியம் ஆரிபுநாயகம் என்பதாகும். ரிபாயி ஆண்டகை என மக்களால் பெரும் கண்ணியத்துடன் அழைக்கப்பட்ட இறைநேசர் அகுமது கபீர் ரிபாயி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை யைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது இக்காப்பியம். இக்காவி யத்தின் கொடைநாயகர்கள் இருவரில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முகம்மது லெப்பை மரைக்காயர் என்பதுவும், இது ஆறுமுகநாவலரின் மருகரும் மாணாக்கருமான வித்துவ சிரோ மணி ச.பொன்னம்பலம் பிள்ளை அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண வண்ணார்பண்ணைக் கல்லூரியில் அரங்கேற்றப்பட் டது என்பதுவும் ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெருமித உணர்வினை ஊட்டக்கூடியனவாகும். நாகூர் ஆண்டகை அவர்களின் வாழ்வில் நடந்த ஒர் உன்னதமான நிகழ்வினை விளக்கும் முகாஷபா மாலை எனும் காவியமும் குலாம் காதிறு நாவலர் இயற்றியதே.
சேகாதி நயினார் புலவர் இயற்றிய திருமணக் காட்சி, பதுருத்தீன் புலவர் படைத்த முகியத்தீன் புராணம், குஞ்சு மூசு லெப்பை ஆலிம் புலவர் எழுதிய இறவுசுல்கூல் படைப்போர், ஐதுறுாசுப் புலவரால் பாடப்பட்ட நவமணிமாலை, முகம்மது நூருத்தீன் என்பவரால் எழுதப்பட்ட மூஸா நபி புராணம், முகம்மது முகிரீன் லெப்பை அவர்களால் இயற்றப்பட்ட சாதுலி நாயகம் ஆகியவை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் இயற்றப் பட்ட ஏனைய தமிழ்க் காவியங்களாகும்.
சிறப்புற்று இலங்கும் இஸ்லாமியத் தமிழ்க் காவிய வரலாற் றினை நுணுகி ஆராயும் போது இரண்டு பெரும் உண்மைகள் புலப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, ஆயிரத்து எண்ணுாற்று ஏழாம் ஆண்டுக்கும் ஆயிரத்து எண்ணுாற்று இருபத்தொறாம் ஆண்டுக்கும்

33
இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகளில் குதுபுநாயகம் (கி.பி. 1807) இராஜநாயகம் (கி.பி. 1807) திருக்காரணப்புராணம் (கி.பி. 1812), குதுபுநாயகம் என்னும் முகியத்தீன் புராணம் (கி.பி. 1814), திருமணிமாலை (கி.பி.1816), முகியத்தீன் புராணம் (கி.பி. 1816), இறவுசுல்கூல் படைப்போர் (கி.பி. 1821), தீன் விளக்கம் (கி.பி.1821) புதுகுஷ்ஷாம் (கி.பி. 1821) ஆகிய ஒன்பது காவியங் கள் தோன்றியுள்ளன என்பதாகும். இத்தகைய குறுகிய கால எல்லைக்குள் இத்தனைக் காப்பியங்கள் தமிழ் இலக்கிய வரலாற் றின் வேறு எந்தக் காலகட்டத்திலும் தோன்றியதில்லை.
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களைத் தவிர வேறு எந்த ஒரு புலவரும் இரண்டுக்கும் மேற்பட்ட காவியங்களை இயற்றிய தில்லை என்பது இரண்டாவது உண்மையாகும். புலவர் நாயகம், வண்ணக்களஞ்சியப் புலவர், குலாம் காதிறு நாவலர் ஆகிய மூவரையும் தவிர, வேறு எந்த ஒரு தமிழ்ப் புலவரும் ஒன்றுக்கு மேற்பட்ட காவியங்களை இயற்றியதில்லை; கிரேக்க நாட்டுப் பெரும் கவிஞர் ஹோமர் கூட இலியட், ஒடிஸி என்ற இரு காவியங்களை மாத்திரமே படைத்துள்ளார். இவ்விரண்டு உண் மைகளும் இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டின் ஆழத்தினையும் பரப்பினையும் நன்கு புலப்படுத்துகின்றன.
பேரிலக்கியமான காவியங்களை இயற்றுவதில் காட்டிய அதே ஈடுபாட்டினையும் ஆற்றலையும் சிற்றிலக்கியங்கள் என கருதப்படும் ஆற்றுப்படை, அந்தாதி, கலம்பகம், மாலை, திருப்புகழ், பிள்ளைத்தமிழ், ஏசல், தாலாட்டு போன்ற பிரபந்தங் களை இயற்றுவதிலும் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் காட்டியுள்ள னர்.
இஸ்லாமியர் இயற்றிய ஆற்றுப்படை நூல்களில் சிறப்பான தோர் இடத்தைப் பெறுவது குலாம் காதிறு நாவலர் இயற்றிய மதுரைச் தமிழ்ச் சங்கத்துப் புலவர் ஆற்றுப்படையாகும். மதுரைச் சங்கத்திலே பரிசு பெற்ற ஒரு புலவன், வேறொரு புலவனை அச்சங்கத்துக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கும் இந்நூலில் தமிழ்நாட்டின் தொன்மையும் மதுரையின் பெருமையும், அந்நக ரில் அமைந்திருந்த தமிழ்ச்சங்கத்தின் மாண்பும் அதனை நிறுவிய பாண்டித்துரை தேவர் அவர்களின் தமிழயிமானமும் கொடைத்திற னும் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
"இக்கால வழக்கிலுள்ள சில கருத்துக்களைக் குலாம் காதிறு நாவலர் தமது புலவராற்றுப்படையில் வழங்காமல் இருந்தி ருப்பாரேயானால் இவ்வாற்றுப்படையும் பழங்காலத்தைச்

Page 31
34
சேர்ந்தது என்றே படிப்போர் எண்ணுவர். நடையும் பெரும் பாலும் சங்ககால ஆற்றுப்படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்சுவை, பொருட்சுவை பொதிந்த இப்புலவ ராற்றுப்படை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களுள் குறிப்பி டத்தக்க நூலாக விளங்குகின்றது."
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இஸ்லா மியத் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில், காதிறு நாவலரின் ஆற்றுப்படையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள இக்கருத்து பொருத்த மானதே.
இலங்கைக் கரைத்தீவு எனும் கிராமத்தில் பிறந்த அந்தகக்கவி சேகு அலாவுத்தீன் அவர்கள் தாம் பிறந்த புத்தளம் பிரதேசத்தை நிலைக்களனாகக் கொண்டு இயற்றியுள்ள புலவராற்றுப்படையும் குறிப்பிடவேண்டிய ஓர் இலக்கிய முயற்சியாகும்.
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய வடிவங்களுள் எண்ணிக் கையில் மிக அதிகமான நூல்களைப் பெற்றிருப்பது மாலை எனும் இலக்கிய வடிவமாகும். இருநூறுக்கும் அதிகமான மாலை நூல்கள் இஸ்லாமிய இலக்கியத்தில் காணப்படுகின்றன. மாலை இலக்கியங்கள் மக்களின் பேச்சு வழக்கோடு பெருமளவு தொடர்பு உடையனவாக இருக்கின்றபடியால் அவை மக்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் பெற்றுள்ளன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தில் காணப்படும் மாலை நூல்களை, நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறுபவை, ஏனைய இஸ்லாமியப் பெரியார்களின் வாழ்க்கையை விளக்குபவை, இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டுபவை, பொழுது போக்குக்காக எழுதப்பட்டவை என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
இஸ்லாமிய மாலை நூல்களுள் காயற்பட்டண 'காமில் ஒலி சுலைமான் லெப்பை இயற்றிய அதயுமாலை, பக்கீர் மதார் சாகிபு இயற்றிய இராஜமணிமாலை, முகியத்தீன் மாலை, செய்கு சுலைமான் எழுதிய இரசூல் மாலை, செய்தக்காதிப் புலவர் இயற்றிய அபுஷகுமா மாலை, கொத்தலகான் புலவர் எழுதிய பலூலூனசுகாபி மாலை, மின்னா நூருத்தீன் இயற்றிய பொன்னரிய மாலை ஆகியவை இஸ்லாமியரால் பெரிதும் போற்றப்படுபவை யாகும்.
இஸ்லாமியச் சிற்றிலக்கியப் பரப்பிலே காணப்படும் மற்று மோர் இலக்கிய வடிவம் கலம்பகம் என அழைக்கப்படுகின்றது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவ
னாகக் கொண்டு இயற்றப்பட்ட நந்திக் கலம்பகமே தமிழ்

35
இலக்கிய வரலாற்றிலே கலம்பக இலக்கியத்துக்கு முன்னோடி யாக விளங்கியது. இதுவரையில் தமிழில் எண்பத்தியைந்து கலம்பக நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றுள் மக்காக் கலம்பகம், மதீனக் கலம்பகம், திருமதீனக் கலம்பகம், பதாயிகு கலம்பகம், குவாலிர் கலம்பகம், திருக்கோட்டாற்றுக் கலம்பகம், திருபகுதாதுக் கலம்பகம் ஆகிய ஏழும் இஸ்லாமிய அடிப்படை யில் தோன்றியவையாகும்.
பக்தி மார்க்கத்தை எடுத்து இயம்புவதற்கு மிகப் பொருத்த மான இலக்கிய வடிவங்களுள் ஒன்றாக கருதப்படுவது அந்தாதி என்னும் அமைப்பாகும். தமிழிலக்கியத்தில் அந்தாதி இலக்கியப் பிரிவில் ஏறத்தாழ முந்நூறு நூல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சைவ, வைணவ அடிப்படைகளில் எழுந்த அந்தாதிகளே எண்ணிக் கையில் அதிகமானவை; இவ்விரண்டு சமயங்களுக்கும் அடுத்த நிலையில் எண்ணிக்கை அளவில் அதிகமான அந்தாதி இலக்கியங் களைப் பெற்றிருப்பது இஸ்லாமிய சமயமேயாகும்.
இஸ்லாமிய அடிப்படையில் தமிழில் தோன்றியுள்ள அந்தாதி களின் எண்ணிக்கை பதின்மூன்றாகும். இப்பதின்மூன்றில் திருமதீ னத்தந்தாதி, திருமதீனத்து வெண்பா அந்தாதி, திருமதீனத்து யமக அந்தாதி, திருமதீனத்துப் பதிற்றுப்பத்தந்தாதி என்ற நான்கினையும் இயற்றியப் பெருமைக்குரியவர், இலக்கண்க் கடல்" எனத் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட ஆ.கா.பிச்சை இப்ராஹிம் புலவ
JfTG)/ITfT.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவ னாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழை முன்மாதிரியாகக் கொண்டு நூற்றுக்கணக்கான பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழில் தோன்றியுள்ளன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் பிள்ளைத்தமிழ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. MEBIA .
இதுவரை இருபத்திநான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் இஸ்லா மியப் புலவர்களால் இயற்றப்பட்டிருக்கின்றன என்று உறுதியாகக் கூறலாம். இவற்றுள் மீரான் சாகிபுப் புலவர் இயற்றிய பாத்திமா நாயகிப் பிள்ளைத் தமிழ், கலைமாமணி கா.மு.ஷெரிப் அவர்கள் இயற்றிய ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ் ஆகிய இரண்டுமே இஸ்லாமிய அடிப்படையில் எழுதப்பட்ட பெண்பால் பிள்ளைத்த மிழ் நூல்களாகும். இஸ்லாமிய ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஐந்து, அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளன; வேறு ஐந்து நாகூர் ஆண்டகையை

Page 32
36
யும் நான்கு முஹியத்தீன் ஆண்டகையையும் பாட்டுடைத் தலைவ ராகக் கொண்டமைந்துள்ளன.
அகப்பொருள் சார்ந்து நிற்கும் தமிழிலக்கிய வடிவங்களுள் ஒன்று கோவை என்பதாகும். அகத்துறைப் பாடல்கள் மூலம் பக்திச்சுவையை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகவே கோவை எனும் இலக்கிய வடிவத்தைத் தமிழ்ப் புலவர்கள் உருவாக்கினர். கோட்டாறு சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், அப்துல் காதிறு ராவுத்தர், நாகூர் தர்கா வித்துவான் செவத்த மரைக்காயர் போன்ற இஸ்லாமியப் புலவர்கள் இக்கோவை எனும் இலக்கிய வடி வத்தை இஸ்லாமியப் பக்தி வளர்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய இலக்கியப் பரப்பிலே கோவைகள் என்ற பெயரில் பல நூல்கள் தோன்றியுள்ள போதிலும் மக்காக் கோவை, விஜயன் அப்துல் ரஹ்மான் அகப்பொருள் பலதுறைக் கோவை, ஷம்சுத்தாசீன் கோவை ஆகிய மூன்று நூல்கள் மாத்திரமே, கோவை இலக்கணத்திற்கு அமைய எழுதப்பட்டுள்ளன. ஆசாரக் கோவை, கொள்கை மணிக்கோவை, முகம்மது காசீம் பொன்மொ ழிக் கோவை போன்றவை நன்னெறிகளைக் கூறும் அறநூல்களா கவே விளங்குகின்றன; கோர்க்கப்பட்டவை என்ற பொருளி லேயே இவை கோவை என்றழைக்கப்பட்டிருக்கின்றன.
தான் பெற்ற சிவானுபவங்களைப் புலப்படுத்த சதகம் என்ற இலக்கிய வடிவத்தை மாணிக்கவாசக சுவாமிகள் கையாண்டதைப் போலவே இஸ்லாமிய ஞானிகள் பலரும் சதகம் எனும் இவ்விலக் கிய வடிவம் மூலம் தத்தம் பக்தியனுபவங்களை வெளிப்படுத்தி யுள்ளனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் நாம் இருபத்து மூன்று சதகங்களைக் காண்கின்றோம். சதக இலக்கிய எண்ணிக் கையில் சைவ சமயத்துக்கு அடுத்த நிலையில் இஸ்லாமே இருக்கிறது.
இஸ்லாமிய அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் சதகங் களை, நபிகள் நாயகத்தைப் பற்றியவை, இறைநேசச் செல்வர்க ளைப் பற்றியவை, சூபித்துவக் கொள்கையை விளக்க முயற்சிப் பவை என மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். ஞானச்செல்வர் மஸ்தான் சாகிபு அவர்களின் முகியத்தீன் சதகம், அகத்தீசர் சதகம், தக்கடி செய்கு பஷிர் லெப்பை கலீபா அவர்கள் இயற்றிய மெஞ்ஞானச் சதகம், பக்கீர் முகம்மது இயற்றிய திருமுகம்மது நபி சதகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும். காத்தான்குடி கவிஞர்திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்கள் இயற்றியுள்ள

37
இரசூல் சதகத்திற்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிச்சயமான ஓர் இடம் இருக்கும். ,
தமது பக்தியனுபவங்களைச் சித்தரிக்க இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்திய மற்றுமோர் இலக்கிய வடிவம் திருப்பு கழ் என்பதாகும். தமிழ் இலக்கியப் பரப்பிலே திருப்புகழ் என்று கூறும்போது, "வாக்குக்கு ஒர் அருணகிரி எனப் போற்றப்பட்ட அருணகிரிநாதர் டாடிய திருப்புகழையே குறிக்கும். அவ்வாறே இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பினிலே திருப்புகழ் என்று குறிப்பிடும்போது, அது வரகவி காசிம் புலவர் இயற்றிய திருப் புகழையே குறிக்கும். அந்தளவுக்கு காசிம் புலவரின் திருப்புகழ் சுவைக்கச் சுவைக்கத் தெவிட்டாத தேனமுதாகவே திகழ்கிறது.
யாழ்ப்பாணத்து அசனா லெப்பைப் புலவர் பாடிய நவரத்தி னத் திருப்புகழ், சையது முகியத்தீன் கவிராஜர் இயற்றிய முஹி யத்தீன் திருப்புகழ், காயற்பட்டணம் செய்யது முகம்மது அப்துல் ரஹ்மான் இயற்றிய மனோரஞ்சிதத் திருப்புகழ் ஆகியவை இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்தும் ஏனைய திருப்புகழ்களில் சிலவாகும்.
தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்றான அம்மானையும் முஸ் லிம் புலவர்களின் கவிதா வளத்தினால் பொலிவு பெற்றுள்ளது. உமறுப் புலவரின் புதல்வரான கவிகளஞ்சியப் புலவர் 1715ஆம் ஆண்டு நபியவதார அம்மானை என்ற நூலை இயற்றினார். அமீருல் மூமினின் அலியின் (ரலி) புகழ்ப்பாடும் ஓர் அம்மானை நூல் பப்பரத்தியார் அம்மானை என்பதாகும். இதனை செய்யது மீராப்புலவர் என்பவர் இயற்றி உள்ளார்.
இவ்வாறே ஏசல், தாலாட்டு, குறவஞ்சி, கீர்த்தனம், கும்மி போன்ற பிரபந்த வடிவங்களிலும் நூல்கள் பலவற்றை இயற்றி இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் ஊட்டியுள்ளனர். தமிழ் இலக்கியத்திலே ஏற்கனவே கையாளப்பட் டிருந்த அத்தனைப் பிரபந்த வகைகளிலும் இலக்கியங்கள் படைத் துள்ள முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழ்ப் பிரபந்த வகைகளைச் சார்ந்தவை என இனங்காட்ட முடியாத சில புதிய பிரபந்த வடிவங்களிலும். ஏராளமான நூல்களை இயற்றியுள்ளனர். இவ் வாறு ஐந்து புதிய பிரபந்த வகைகள் முஸ்லிம் புலவர்களால் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று தமிழ்ப் பெயராலும், ஒன்று பாரசீகப் பெயராலும், மூன்று அரபுப் பெயராலும் அழைக்கப்படுகின்றன.

Page 33
38
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிரபந்த வகைகளில் தமிழ்ப் பெயரால் அழைக்கப்படும் ஒரே பிரபந்தம் படைப்போர் என்பதாகும். படைப்போர் என்னும் பிரபந்தம், யுத்தங்களைக் கருப்பொருளா கக் கொண்டு இயற்றப்படுவதாகும். தமிழ்ப் படைப்போர்களில் அனேகமானவை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் அல்லாதோருக் கும் இடையே நடந்த யுத்தங்களையே அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ளன.
தமிழில் தோன்றிய முதல் படைப்போர் இலக்கியம், வரிசை முகியத்தீன் புலவர் என்பவரால், 1686ஆம் ஆண்டு அரங்கேற்றப் பட்ட சக்கூன் படைப்போர் என்பதாகும். ஈராக் நாட்டினைச் சேர்ந்த சக்கூன் என்பவனது படைக்கும் நபிகள் நாயகத்தினால் அனுப்பப்பட்ட இஸ்லாமியச் சேனைக்குமிடையே நிகழ்ந்த போரினை இந்நூல் விவரிக்கின்றது. இந்நூலுக்கு ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் இரண்டாவது படைப்போர் இலக்கிய மான ஐந்து படைப்போர் தோன்றியது. பெயருக்கேற்ப இபுனியன் படைப்போர், உச்சி படைப்போர், வடோச்சி படைப்போர், தாகி படைப்போர், இந்திராயன் படைப்போர் என ஐந்து யுத்தங்களை விளக்கும் இந்நூலை ஹஸனலிப் புலவர் இயற்றியுள்ளார். இப்படைப்போரின் பாட்டுடைத் தலைவர் நபிகள் நாயகத்தின் மருகரும் மாவீரருமான அலி (ரலி) ஆவார்.
சல்கா படைப்போர் எனவும் அழைக்கப்படும் இறவுசுல்கூல் படைப்போர் குஞ்சு மூசு புலவர் என்பவரால் பாடப்பட்டதாகும். சையிதத்துப் படைப்போர் என்னும் பிரபந்தமும் இவர் இயற்றி யதே. காளை அசனலிப் புலவர் ஹ"ஸைன் படைப்போர் என்பதை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தை வளம்படுத்தியுள் østftf.
தமிழ்ப் படைப்போர் நூல்கள் அனைத்துக்கும் முகம்மது இப்னுல் உமருல் வாக்கிதி என்பவர் 82ஆம் ஆண்டில் அரபு மொழியில் இயற்றிய போர்களின் நூல் என்று பொருள்படும் 'கிதாபுல் மகாசி எனும் நூலே முன்னோடியாக இருந்துள்ளது.
முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ள பிரபந்த வகைகளிலே, அவர்களால் கூடுதலான அளவு பயன்படுத் தப்பட்டிருப்பது முனாஜாத்து என்பதுவே. முனாஜாத்து பாடல்கள் பாடாத முஸ்லிம் புலவர்கள் இல்லையோ என்று நினைக்கக்கூடிய - அளவிற்கு அவர்கள் முனாஜாத்துக்களைப் பாடியுள்ளனர்.

39
கவிக்கோமான் புலவர் நாயகம் பாடிய ஹக்கு பேரில் முனாஜாத்து இவற்றுள் பிரபலமிக்கதாகும். 1843ஆம் ஆண்டு சென்னை மாநகரில் வேகமாக பரவிய பேதி நோயிலிருந்து தமக்குப் பாதுகாப்புப் பெற்றுத் தருமாறு அந்நகர் வாசிகள் புலவர் நாயகத்தை வேண்ட, படைத்தவனின் உதவிக் கோரி அவர் பாடிய முனாஜாத்து இது. இதில் வரும்
"வள்ளல் மகுமூ தெனுநயினார் வழியில் லொழுகி உன்னுடைய விள்ளு மார்க்கந் தனையெடுத்து விளக்குந் தீனோ ராகையி னால் گھر தெள்ளு மறிவே மெய்ப்பொருளே தெளிவே எங்கள் கண்ம ணியே எள்ளு மாபத் தணுகாமல் இன்பம் புரிவாய் றகுமானே,' எனும் அடிகள் இம்முனாஜாத்தின் தன்மையையும் அதன் சிறப்பி னையும் உணர்த்துகின்றன.
"இறைவனிடம் கையேந்துங்கள்; அவன் இல்லையென்று சொல்வது இல்லை" என்பதை நம்பும் முஸ்லிம் புலவர்கள் வல்லோனின் பெருங்கருணையை வேண்டி பாடிய முனாஜாத்து கள் ஒருவகை என்றால், அல்லாஹ்வின் நல்லடியார்களான இறைநேசர்களைப் போற்றிப் பாடப்பட்டுள்ளவை மற்றொரு வகையினவாகும்.
புலவர் நாயகம், நபிகள் நாயகத்தின் மீதும் முஹியத்தீன் ஆண்டகை, சாஹ"ல் ஹமீது ஆண்டகை போன்ற இறைநேசர்கள் மீதும் பல முனாஜாத்துக்களைப் பாடியுள்ளார். பதுருத்தீன் புலவர், கீழக்கரை செ.மு.செய்யது முகம்மது ஆலிம் புலவர் ஆகியோரும் முனாஜாத்து இலக்கியத் துறையில் பாரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.
அரபு மொழித் தொடர்பினால் தமிழ் இலக்கியம் பெற்ற பெரும் பயன்களில் ஒன்றாக கிஸ்ஸா, இலக்கியத்தின் அறிமு கத்தை நாம் கருதலாம். கிஸ்ஸா என்பதன் பொருள் கதை என்பதாகும். தமிழ்நாட்டில் மதுரை வீரன், நல்லதங்காள், பழைய னுர் நீலி போன்ற கிராமியக் கதைகள் தோன்றியதைப் போலவே, அரபு நாட்டிலும் வீரர்களின், கொடை வள்ளல்களின், இறைநேசர் களின் வாழ்வினைச் சுற்றி கதைகள் பல, மக்கள் மத்தியில் ஊற்றெடுத்திருந்தன. ஆரம்பத்தில் வாய்மொழி வழக்கிலேயே வழங்கப்பட்டுவந்த இக்கதைகளுள் பிரபல்யம் அடைந்தவை, காலப்போக்கில் எழுத்துரு பெற்றன. தமிழ்நாட்டிலும் கிஸ்ஸாக்க

Page 34
40
ளின் வளர்ச்சி இதே அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்பதை அவதானிக்கலாம்.
தமிழில் ஏறத்தாழ இருபது கிஸ்ஸாக்கள் இயற்றப்பட்டுள் ளன. இவற்றுள் பெரும்பாலானவை உரைநடையிலேயே அமைந் துள்ளன: யூசுபுநபி கிஸ்ஸா, முகம்மது அணிபு கிஸ்ஸா ஆகியவை செய்யுள் நடையிலே இயற்றப்பட்டுள்ளன; சைத்தூன் கிஸ்ஸா, சம்ஊன் கிஸ்ஸா போன்றவை செய்யுளும் உரைநடையும் விரவிய முறையில் எழுதப்பட்டுள்ளன. எனவே கிஸ்ஸா இலக்கியம் இன்ன வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை அற்றே வளர்ந்திருக்கிறது என்று கூறலாம்.
கிஸ்ஸா என்ற பெயரில் தோன்றிய முதல் தமிழ் இலக்கியம் சேக் லெப்பை என்பவர் இயற்றிய சைத்தூன் கிஸ்ஸாவாகும். இது 1874ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப்துல் வஹாப், சாஹ"ல் ஹமீது, அப்துல் காதர் சாகிபு, அப்துல் ரஸாக், மகுதூ முகம்மது போன்ற புலவர் பெருமக்கள் பல கிஸ்ஸாக்களை இயற்றியுள்ளனர். தலா நான்கு கிஸ்ஸாக்களை இயற்றி உள்ள ஆம்பூர் அப்துல் காதர் சாகிபு அவர்களும் அய்யம்பேட்டை அப்துல் ரஸாக் அவர்களும் கிஸ்ஸா இலக்கியத் துறையில் ஈடு இணையற்றவர்கள் ஆவர்.
முஸ்லிம்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த கொடைக ளுள் மற்றொன்று மஸ்அலா எனும் இலக்கிய வடிவமாகும். மஸ்அலா என்ற அரபுப் பதத்தின் நேரடியான பொருள் பிரச்சினை அல்லது வினா என்பதாகும். தம் மக்களின் மத்தியில் இஸ்லாமிய அறிவைப் பரப்ப இந்த மஸ்அலா என்ற பிரபந்த வடிவத்தை இஸ்லாமியத் தமிழ் புலவர்கள் கையாண்டனர் என்பது மஸ்அலா இலக்கியங்களைப் படிக்கும் போது புலனாகின்றது.
ஒரு கதையை உருவாக்கி, அதில் வரும் ஒரு பாத்திரத்தின் மூலம் அல்லது பாத்திரங்களின் மூலம் இஸ்லாமிய மார்க்கச் சம்பந்தமான கேள்விகளைக் கேட்க வைத்து, வேறு பாத்திரங்கள் மூலம் அவற்றுக்கான பதில்களைக் கூறவைத்து, தம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவைப் பெருக்க விரும்பிய முஸ்லிம் புலவர்களின் முயற்சிகளின் விளைவே இஸ்லாமியத் தமிழ் மஸ்அலா இலக்கியம் என்று கூறலாம். மஸ்அலா என்ற அரபுச் சொல் மஸ்அலா, மசலா, மஸாலா என பல வடிவங்களில் தமிழில் கையாளப்பட்டிருக்கிறது.
தமிழில் மூன்று மஸ்அலா நூல்கள் தோன்றியுள்ளன. இவற் றுள் காலத்தால் முந்தியது மதுரை நகர்வாழ் வண்ணப் பரிமளப்

41
புலவர் இயற்றிய 'ஆயிரம் மஸ்அலா வென்று வழங்கும் அதிஜய புராணமாகும்." இது 1572ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது என் பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள கடவுள் வாழ்த்து தெளிவாக உணர்த்துகின்றது.
கைபரைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சலாம் எனும் யூத வேதியர் தம் இனத்தவர் எழுநூறு பேருடன் வந்து நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாம் மார்க்கம் பற்றி தம் மனத்தில் தோன்றிய ஆயிரம் கேள்விகளைக் கேட்டதையும், அவற்றுக்குத் திருப்திகரமான பதில்களை அண்ணல் அவர்கள் வழங்க, அப் துல்லா இப்னு சலாமும், அவரோடு வந்த ஏனைய யூதர்களும் இஸ்லாமிய நெறியினை ஏற்றதையும் மிக அழகாக சித்தரிக்கும் இந்நூலில், அரபுச் சொல்லாட்சி மிக அதிகமாகும். இதில் இடம் பெற்றுள்ள ஆயிரத்துத் தொண்ணுாற்றிரண்டு பாடல்களில் ஓர் அரபுச் சொல் கூட இல்லாத பாடலினைக் காண்பது கடினமானது என்றே கூறவேண்டும்.
மஸ்அலா இலக்கியத்தில் காலத்தால் இரண்டாவது இடத்தி னைப் பெறுவது காயற்பட்டணம் செய்கப்துல் காதிறு லெப்பை இயற்றிய தவத்துது என்ற வெள்ளாட்டி மஸ்அலா’ என்பதாகும். 1856ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் ஈராக் நாட்டு தாருஸ்ஸலாம் எனும் நகரைச் சேர்ந்த ஒரு வணிகரிடம் பணி புரிந்த, மார்க்க அறிவு நிரம்பிய தவத்துது என்ற பெண்ணிடம் மார்க்க அறிஞர்கள் நால்வர் தொடுத்த அறுநூற்று அறுபத்தொன் பது வினாக்களையும் அவற்றுக்கு அப்பணிப்பெண் வழங்கிய பதில்களையும் தருகின்றது.
பகுவிறு நாட்டு மன்னன் மகள் மெஹர் பானு கேட்ட நூறு கேள்விகளுக்கு அப்பாஸ் எனும் இளவரசர் பதிலளித்து மங்கை யின் மனதையும் கரத்தையும் கைப்பற்றியதை விளக்கும் நூல் நூறு மஸ்அலா’ என்பதாகும். ஆயிரத்து எண்பத்தேழு கண்ணிக ளையுடைய நூறு மஸ்அலாவின் இலக்கியத் தரத்தினை உணர்த்த மெஹர் பானு முதன்முறையாக அப்பாஸின் முன் தோன்றும் அழகுத் தோற்றத்தை விளக்கும் 'அஞ்சுகம் போற் றிதுநுதலாள் வெகு ஆடவரைக் கொலும் விழியாள் வஞ்சியெனும் மிடையுடையாள் புதுவாலையெனு மதிமுகத்தாள் கிஞ்சுகஞ்சேர் கனிவாயாள் செழுங் கிம்புரிக் கொம்பிள
முலையாள்

Page 35
42
மஞ்சணியுங் குழல் சரிய அந்த மன்னவன் முன்வந்து நின்றாள்' எனும் இரு கண்ணிகள் போதுமானவையாகும்.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட பிரபந்த வகைகளில் பாரசீகப் பெயரினால் அழைக்கப்படும் பிரபந்த வடிவம் நாமா என்பதாகும். கதை அல்லது தொடர். வரலாறு எனப் பொருள்படும் 'நாமே' எனும் பாரசீகச் சொல்லின் தமிழ் வடிவமே நாமா என்பது.
( பாரசீக மொழியில் தோன்றிய ஷாநாமே, காபுஸ் நாமே, ஸியாஸத் நாமே ஆகியவற்றைப் பின்பற்றி மிஃராஜ் நாமா, அலி நாமா, இபுலீசு நாமா, தஜ்ஜால் நாமா, நூறு நாமா, லுக்மான் நாமா என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாமா நூல்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்டன. ,
தமிழ் நாமா இலக்கிய வளர்ச்சிக்குப் பாட்டை அமைத்துக் கொடுத்த மதார் சாகிபுப் புலவரின் மிஃராஜ் நாமா 1751ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்ட போதிலும், தமிழ் நாமா இலக்கியத் தின் பொற்காலம் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டு காலப்பரப்பே. இவ்விரண்டு நூற்றாண்டுகளிலுமே நாமா இலக்கி யங்கள் அதிகமாக எழுந்திருக்கின்றன.
இவ்வாறு காப்பியங்கள், பிரபந்தங்கள், உரைநடை நூல்கள் ஆகியனவற்றை இயற்றி, இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் வளம் சேர்த்துள்ளனர். இலங்கையில் புகழ்ப்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் வித்தியானந்தன் அவர்கள் 'இலக்கியத் தென்றல்' என்ற தனது நூலில் இஸ்லாமிய ரின் தமிழ்த் தொண்டினைக் கீழ்வருமாறு எடை போட்டுள்ளார்:
''கடந்த சில நூற்றாண்டுகளாக எண்ணிறந்த இஸ்லாமியர் தலைசிறந்த புலவராக விளங்கினர். மிகச்சிறந்த தமிழ் நூல்கள் பலவற்றை அவர்கள் இயற்றி இருக்கிறார்கள்." நூல் அமைப்பு முறையிலும், நடையிலும், போக்கிலும் இந்த இஸ்லாமியரின் நூல்களுக்கும் பேர் பெற்ற தமிழ் இலக்கியங்களுக்கும் அடிப்படையான வேறுபாடு அதி -- கம் இல்லை. அவர்களின் நூல்களுக்குத் தலைவராக அமைவோர் வேறு வேறாக இருப்பினும் தமிழ் மரபுக்கு ஒத்தனவாகவும், தமிழ்ப் பண்புக்கு இயைந்தனவாகவும் அவர்களுடைய இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. கற்பனைத் திறத்திலும் பொருட் சிறப்பிலும் சொல்லழகி லும் கவியமைப்பிலும் இஸ்லாமியப் புலவரின் நூல்க ளும் சிறப்புடன் விளங்குகின்றன.''
( 4 (234)

43
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இந்த மதிப்பீட்டை எழுதிய காலகட்டத்திலே, இன்று நாம் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் என மிக பெருமையோடு இனங்காணும் நூல்களின் பெரும்பகுதி மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய உண்மையாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் அத்தனையும் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் பார்வைக்கு எட்டியிருந்தால் அவரது மதிப்பீடு இதனைப் பார்க்கினும் எத்துணை உயர்வானதாக இருந்திருக்கும் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டியவொன்றே.
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் நூல்களை இயற்றுவதில் எந்தளவு ஆர்வம் காட்டினார்களோ அதே அளவு ஆர்வத்தை அந்நூல்களை வாங்குவதில் இஸ்லாமியச் சமுகத்தினர் காட்டினர் என்பதை இஸ்லாமியத் தமிழ் நூல்களின் அச்சு வரலாறுகள் உணர்த்துகின்றன. 1842 ஆம் ஆண்டில் சீறாப்புராணம் முதன்முறை யாக பதிப்பிக்கப்பட்டது. 1862ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன் இக்காவியம் மேலும் நான்கு பதிப்புகளைக் கண்டது. தொழுகை நாமா ஆறு முறைகளும் சக்கராத்து நாமா நான்கு முறைகளும் அச்சிடப்பட்டுள்ளன. மிஃராஜ் நாமாவும் ஆறு பதிப்புகளைக் கண்டுள்ளது. வெள்ளாட்டி மஸ்அலா ஐந்து முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது; நூறு மஸ்அலாவோ ஏழு பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்புள்ளி விவரங்கள் இஸ்லாமியத் தமிழ் நூல் களை வாங்குவதில் எந்தளவு கரிசனையை இஸ்லாமியர்கள் காட்டியுள்ளனர் என்பதை புலப்படுத்துகின்றன.
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் ஆயிரக்கணக்கான தர மான நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என்ற போதிலும், அவ்வாறு இயற்றப்பட்டுள்ளவைகளில் பெரும்பாலானவை. அச்சிடப்பட் டுள்ள போதிலும், அவற்றுட் பல ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புக ளைக் கண்டுள்ளபோதிலும், தமது உயர் இலக்கியப் பாரம்பரியத் தைப் பற்றி முஸ்லிம்கள் கூட அறியாத நிலை காணப்பட்டது எவ்வளவு வேதனையானது. எந்த ஓர் இனமும் மார்தட்டிப் பெருமைப்படக்கூடிய ஓர் உயர் இலக்கியப் பாரம்பரியம் தன்ன கத்தே இருக்க, இஸ்லாமியத் தமிழ் நூல்கள் எனக் கூறக்கூடியவை ஓரிரண்டைத் தவிர வேறு இருக்கின்றனவா என்ற கேலிப் பேச்சுகளுக்குச் செவிமடுக்க வேண்டியிருந்த இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்தின் நிலை எவ்வளவு விசனமானது.
தாம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் நூல்களை மீள் கண்டுபிடிப்பு செய்து, அவற்றை உலகத்தோர் பார்வைக்கு முன்வைத்து, இஸ்லா
(1) 1. 3

Page 36
44
மியச் சமுகத்தைப் பீடித்திருந்த ஈனநிலையை முற்றாக அகற்றி, அவர்களுக்குக் கண்ணியத்தையும் கெளரவத்தையும் கொடுத்த பெருமை டாக்டர் உவைஸ் அவர்களையே சாரும். இஸ்லாமியத் தமிழ் நூல்களின் மீள் கண்டுபிடிப்புப் பணியை டாக்டர் உவைஸ், அவர் ஆரம்பித்த காலத்தில் ஆரம்பிக்காதிருந்திருந்தால் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியம் பெருந்தொகையான நூல்களை நிரந்தரமாக இழந்திருக்கும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகி றது. பேராசிரியர் உவைஸ் அவர்களின் தூய பணி எத்துணை உயர்வான ஓர் இலக்கியப் பாரம்பரியத்தை அழிவில் நின்றும் பாதுகாத்து, அதனை இஸ்லாமியச் சமுகத்துக்கு அதன் முது சொமாக வழங்கியுள்ளது, என்பதை உணர்த்துவதற்காகவே, இஸ் லாமியரின் தமிழ் இலக்கியப் பங்களிப்பு இவ்வத்தியாயத்தில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.
இருபதாம் நூற்றாண்டின் ஆறாம் தசாப்தத்திற்கு முன்னர் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் மறக்கப்பட்டதற்கும், மறைக்கப்பட் டதற்கும், மக்கள் பார்வையினின்று ஒதுக்கப்பட்டதற்கும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களே தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும். இதற்கு தமிழ் பேசும் ஏனைய மக்கள் மீது குறை காண முடியாது. இந்நூல்களில் பெரும்பாலானவை இஸ்லாமியச் சமயச் சார்புடை யனவாகவும், இஸ்லாமியச் சித்தாந்தங்களையும் கோட்பாடுகளை யும் விளக்குவனவாகவும் அமைந்திருந்த படியால் அவை பிற மதத்தவர்களின் அபிமானத்தைப் பெறவில்லை; எனவே இவற் றைப் பாதுகாப்பதில் அவர்கள் அக்கறை காட்டாததில் வியப்பேது மில்லை.
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவைப் பரப்பும் நோக்குடன் நூல்கள் இயற்றினரே ஒழிய, வேற்று மதத்தவர்களைத் தம் மதத்தின் பால் ஈர்க்கும் எண்ணத்துடன் அவற்றை எழுதவில்லை. எனவே வேற்று மதத்த வர்களுக்கு விளங்காத, ஆனால் தம் மதத்தவர்களுக்குப் பரிச்சய மான அரபு, பாரசீக, உருது சொற்களைத் தமது நூல்களில் கையாளுவதற்கு முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் சிறிதேனும் தயக்கம் காட்டவில்லை.
தமக்கு விளங்காத அரபு, உருது, பாரசீகச் சொல்லாட்சி காரணமாகவும், இஸ்லாமியச் சித்தாந்தங்களையும் கோட்பாடுக ளையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாதிருந்தபடியாலும், பிறமதங்களைச் சார்ந்த தமிழர்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் ஆக்கங்களை வாசிப்பதிலோ,

45
பாதுகாப்பதிலோ கிஞ்சித்தேனும் சிரத்தை காட்டவில்லை; இதற் காக அவர்களைக் குறைகூறுவதிலும் நியாயம் இல்லை.
தென்னிந்திய முஸ்லிம்களின் கலாச்சார வளர்ச்சியினைப் பிரதிபலிக்கும் இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பாதுகாத்து, அவற்றினை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் பொறுப் பினைத் தென்னிந்திய முஸ்லிம்களே ஏற்று இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அச்சமுகம் தன் கடமையை உதாசீனப் படுத்தி விட்டது. இவ்வுதாசீனமும் வேறு சில காரணங்களும் இஸ்லாமியத் தமிழ் நூல்களின் மறைவுக்கு வழிகோலின.
மிக நீண்ட உழைப்புக்குப் பின்னர் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்தபோது, தான் ஐநூறு பிரதிகள் மாத்திரமே அச்சிட்டதாக, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்கள். திருத்தக்க தேவரின் ஒப்பற்ற காவியமான சிந்தாமணியே இந்தளவுதான் அச்சிடப்பட்டதென்றால், இஸ்லா மியத் தமிழ் நூல்களும் குறைந்த அளவிலேயே அச்சிடப்பட்டிருக் கும் என்று அனுமானிப்பது தவறாகாது.
இஸ்லாமியத் தமிழ் நூல்கள் குறைந்த அளவே அச்சிடப் பட்ட போதிலும், அவற்றில் கூட அத்தனைப் பிரதிகளும் விருப்பத்துடனேயே வாங்கப்பட்டிருக்கும் என்று கூற முடியாது. பல பிரதிகள் வேறு வகையான நிர்ப்பந்தங்களுக்காக வாங்கப்பட் டிருக்கலாம். நிர்ப்பந்தங்களுக்காகவோ, முகத்தாட்சண்ணியத்துக் காகவோ நூல்களை வாங்கியோர் அவற்றைப் பாதுகாப்பதில் கரிசனை காட்டியிருக்கப் போவதில்லை. விருப்பத்துடன் வாங்கி யவர்களைப் பொறுத்தவரையில் கூட, அவர்கள் காட்டிய அதே அக்கறையை, அவர்களின் சந்ததியினர், இந்நூல்களைப் பாதுகாப்ப தில் காட்டியிருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது. சிலர் குப்பைக் கூளங்களோடு இப்பழைய நூல்களையும் வீசி எறிந்திருக்கலாம்; வேறு சிலர் இவற்றை வீட்டுப் பரண்களில் ஒதுக்கி வைத்திருக்க
GROTTLD.
இந்நூல்களில் கையாளப்பட்டுள்ள கடினமான மொழிநடை யும் இந்நூல்களின் பால் புதிய தலைமுறையினர் ஆர்வம் காட்டாது இருந்தமைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் நான் காம், ஐந்தாம் தசாப்தங்களில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது பெருமளவுக்கு அறியப்படாத ஒன்றாகவே அல்லது மறக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது என்று நிச்சயமாகக் கூறலாம்.

Page 37
46
உமறுப் புலவரும் மஸ்தான் சாகிபும் செய்த அதிர்ஷ்டம் அவர்க ளின் இலக்கியத் தொண்டினை ஒரு சிலர் நினைவில் வைத்திருந்த னர். ஏனைய புலவர்களைப் பற்றி அதிகமானோர் அறிந்திருக்க வில்லை. எனவே கெளதம முனிவரின் சாபத்திற்குற்பட்ட அகலிகை தனது விமோசனத்துக்காக இராமனது வருகைக்காக காத்திருந்ததைப் போல, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தன் ஜென்ம சாபல்யத்துக்காக ஆய்வாளர் உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பிரவேசத்தை எதிர்பார்த்து காத்திருந்தது என்றே கூறவேண்டும்.
業

4. 'முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு" - வரலாறு படைத்த முதுமாணி ஆய்வு
உமறுப் புலவரின் சீறாப் புராணத்தையும் குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் ஞானப் பாடல்களையும் தவிர வேறு இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பற்றி, படித்த தமிழர்கள் மத்தியில் கூட அனேகமானோர் அறிந்திருக்கவில்லை என்பது உண்மை என்ற போதிலும், முஸ்லிம்கள் மத்தியிலும் இதே நிலைதான் நிலவியது எனக் கூறுதல் பொருந்தாது. தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம்களில் பலர் இராஜமணிமாலை, முஹியத்தீன் மாலை, இரசூல் மாலை, ஹாத்திம்தை கிஸ்ஸா, நான்கு பக்கீர் கிஸ்ஸா, பப்பரத்தியார் அம்மானை, சைத்தூன் கிஸ்ஸா, காசிம் படைப்போர் போன்ற இஸ்லாமியத் தமிழ் நூல்கள் சிலவற்றைப் பற்றி ஒரளவு அறிந்தேயிருந்தனர். சிலர் இஸ்லாமியத் தமிழ் நூல்களில் ஓரிரண்டை தம் இல்லங்களில் வைத்திருந்தனர்; ஒரு சிலர் இவற்றை ஆர்வத்தோடு படிக்கும் வழக்கம் உடையோராயும் இருந்துள்ளனர்.
இதனை, 1934ஆம் ஆண்டில் அரசாங்கப் பாடசாலையொன் றில் ஆசிரியராக நியமனம் பெற்ற காத்தான்குடிக் கவிராயர் கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்கள், தமது சுயசரிதையில், தமது மாணவப் பருவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கூறியுள்ள கீழ்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
"எனது தமையன் முஹம்மது இஸ்மாயில் ஆசிரியர், பிரவேசப் பண்டிதர் பரீட்ஷையில் சித்தியடைந்தவர். இவருக்கு ஆங்கில அறிவு இல்லை. தமிழிலுள்ள புரா ணங்கள், நன்னூல், தொல்காப்பியம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகிய நூல்களிலிருந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பேரகராதி ஈறாக எல்லாம் தன்னிடம் வைத்திருந் தார்; இஸ்லாமிய இலக்கியப் புராண நூல்களும் அவரிடத் திலிருந்தன. ஜனாப் ப.தாவுத்ஷா எழுதிய எல்லா நூல்க ளையும் வைத்திருந்தார். நான் இவர் வைத்திருந்த நூல்க ளைக் கொண்டே தமிழறிவை வளர்த்தேன்." கவிஞர் திலகம் எழுதியுள்ள இவ்வசனங்கள் ஆயிரத்துத் தொளாயி ரத்து இருபதுகளிலும் முப்பதுகளிலும் ஒரு சில முஸ்லிம்களாவது

Page 38
48
இஸ்லாமியத் தமிழ் நூல்களின் பால் கரிசனை காட்டியே வந்துள்ளனர் என்பதைப் புலப்படுத்துகின்றன.
கலாநிதி உவைஸ் மணிவிழா மலரில் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான்,
"எனது சிறிய வயதில் எனது தந்தையாரின் பெட்டகத்திலி ருந்து இறவுசுல்கூல் படைப்போர், முகம்மது ஹனிபா யுத்த சரித்திரம், தறிக்குல் ஜன்னா, காசிம் படைப்போர், நூறு நாமா, வெள்ளாட்டி மஸ்அலா, பெண்புத்தி மாலை, மரண விளக்கம் மனதைத் துலக்கும், பப்பரத்தி அம் மானை, கசசுல் அன்பியா, பிஸ்மில் குறம் போன்ற எத்தனையோ வகையான புத்தகங்களை நான் எடுத்து படித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது’ என்று எழுதியுள்ளதும்,
"எனது தந்தையார் அவர்கள் சீறாப்புராணம், முகியத்தீன் புராணம், திருமணிமாலை, நாகையந்தாதி எனப் பல பிரபல இஸ்லாமிய இலக்கிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள். அது மட்டுமன்றிப் பெரும்பாலும் மஃறிப் தொழுது இஷா வரையிலுள்ள இடைநேரத்தைச் சீறா முதலான சீரிய இலக்கியங்களை இசையோடு பாடி மகிழ்வது அவர்களது வழக்கமாக இருந்தது' என்று கவிமணி எம்.சி.எம். ஸ"பைர் எழுதியிருப்பதும் ஆயிரத் துத் தொளாயிரத்து நாற்பதுகளிலும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நூல்களில் கரிசனை காட்டுவதை நிறுத்தி விடவில்லை என்பதை உணர்த்துகின்றன.
நாற்பதுகளின் பிற்பகுதியில் என் தாயார் பப்பரத்தியார் அம்மானை போன்ற இஸ்லாமியக் கதைகளை எனக்குக் கூறுவ தும், நான் சுகவீனம் உற்றால், என் அருகே அமர்ந்து புலவர் நாயகம் இயற்றிய ஹக்குப் பேரில் முனாஜாத்து பாடல்களை அழகாக, பொருள் தெளிவாக விளங்கும் வகையில் பாடுவதும் என் இதயத்தில் பசுமையாக பதிந்துள்ள நினைவுகளாகும். முஸ்லிம் ஆண்கள் மாத்திரமின்றி, முஸ்லிம் மாதர்கள் கூட இஸ்லாமிய இலக்கியங்களுடன் ஒரளவு பரிச்சியமுடையவர்களா கவே இருந்தனர் என்பதை இது காட்டுகின்றது.
எனினும் ஒரு சில முஸ்லிம் இல்லங்களில் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் இருந்தன என்பதனாலும், அவற்றை வாசிக்கும் வழக்கம் சிலரிடம் இருந்தது என்பதனாலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் எண்ணிக்கை, அவற்றின் இலக்கியத்தரம், தமிழி

49
லக்கியப் பரப்பிலும் வரலாற்றிலும் அவற்றிற்குரிய இடம் போன்ற இன்னோரன்னவற்றை முஸ்லிம்கள் விரிவாக அறிந்திருந் தனர் என்ற எண்ணத்தையோ, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பிரிவுகளையோ, வடிவங்களையோ, உள்ளடக்கங்களையோ தெளிவாக விளங்கியிருந்தனர் என்ற சிந்தனைப் போக்கையோ வளர்த்து நாம் எம்மை ஏமாற்றிக் கொள்ளக்கூடாது.
உண்மையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தி னையோ, பரப்பினையோ எந்த ஒரு முஸ்லிமும் நன்றாக உணர்ந்திருக்கவில்லை. தாம் எத்துணை பரந்துபட்ட ஓர் இலக்கி யப் பாரம்பரியத்தின் வாரிசுகள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை. தம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய உன்னதமான இலக்கியத்தின் பெருமையை உணராத முஸ்லிம்கள், தமக்குத் தெரிந்த ஒரு சில இஸ்லாமிய நூல்களைப் படிப்பதோடு திருப்தி கண்டு, தம் உயர் பாரம்பரியத்துக்கு ஒவ்வாத ஒருவித தாழ்வு மனப்பான்மையை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு, தமிழ் இலக்கியத்தின் இராஜபாட்டையிலிருந்து விலகியே வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய இலக்கிய நூல்கள் வைக்கப்பட்டிருந்த இல்லங்க ளிலும், தலைமுறைகள் மாறியபோது, அவை கவனிப்பு இழந்து சிதறுண்டன. கவிஞர் அப்துல் காதர் லெப்பை தன்னுடைய தமையனார் திரட்டி வைத்திருந்த நூல்களுக்கு அவரது மறைவுக் குப் பின் ஏற்பட்ட கதியைக் கீழ்வருமாறு விளக்கியுள்ளார்: "இவரது நூல்கள் யாவும் இவரது மரணத்தின் பின் கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் அங்குமிங்கும் சிதறி விட்டன. பேரகராதி, சீறாப்புராணம், இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் ஆகிய மூன்று நூல்களையும் அமீரலி தனது புத்தக அலமாரியில் வைத்திருப்பதைக் கண்டேன்." இஸ்லாமிய நூல்களை வைத்திருந்த ஏனைய வீடுகளிலும் ஏறத் தாழ இதே கதைதான்; வீட்டுக்கு வீடு வாசல்படிதான்.
இத்தகைய காலகட்டத்தில்தான் கலைமாணி உவைஸ் இஸ் லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் காலடி எடுத்து வைத்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நலிவுற்று, செல்லும் திசையறி யாது, தள்ளாடிக் கொண்டிருந்த வேளையிலே, அதற்குப் புத்துணர் வும் புத்துயிரும் ஊட்ட, பின்னர் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்த, அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் முதுமாணிப் பட்ட ஆய்வுக்கு, 'முஸ்லிம்கள் தமிழுக் காற்றிய தொண்டு" எனும் தலைப்பினை அனுமதித்து, இஸ்லாமி

Page 39
50
யத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர் என்பது முஸ்லிம்கள் நினைவில் வைத்தி ருக்க வேண்டிய ஓர் உண்மையாகும்.
இவ்வாறு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மீள் கண்டுபி டிப்பிற்கு வித்திட்டவர் காதலியாற்றுப் படையினைத் தந்த பெருங்கவிஞரும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அன்றையத் தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமான கலாநிதி க.கணப திப்பிள்ளை அவர்கள் ஆவார்கள். வரலாறு படைத்த இவ் ஆய்வுக்கு தமது மாணவர் உவைசுக்கு உறுதுணையாக நின்று அவரை நெறிப்படுத்தியவர் கலாநிதி வித்தியானந்தன் அவர்கள்.
பேராசிரியர் உவைசும் டாக்டர் அஜ்மல்கான் அவர்களும் இணைந்து எழுதிய, எக்காலத்திலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யக் கடலில் முத்தெடுக்க முனைவோர்க்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழப்போகும் 'இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு' எனும் காத்திரமான படைப்பின் முதலாந் தொகுதிக்கு வழங்கிய நன்றியுரையில் அல்லாமா உவைஸ்
"இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெறும் வகையில் முதல் நடவடிக்கை எடுத்த பெருமை கொழும்பில் மாத்திரம், அன்று அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தையே சாரும். 1949ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் அதன் தமிழ்த்துறை யில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இத்தகைய நிலைக்கு மூலகர்த் தாவாக விளங்கியவர் அன்றையத் தமிழ்ப் பேராசிரியரா கத் திகழ்ந்த டாக்டர் க.கணபதிப்பிள்ளை ஆவார். அவ ருக்கு உறுதுணையாக இருந்தவர் இன்றைய யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் சு.வித்தியானந்தன்
அவர்கள் ஆவார்'' என்று எழுதி இவ்விரு பேராசிரியர்களுக்கும் இஸ்லாமியத் தமிழ்ச் சமுகம் பட்டிருக்கும் நன்றிக் கடனை நினைவு ஊட்டியுள்ளார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினர் வழங்கியுள்ள பங்களிப் பினை, அப்பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளரும் தரமிகு இலக்கிய விமர்சகருமான ஜனாப் எம்.எஸ்.எம். அனஸ் பின்வருமாறு மிக நேர்த்தியாக எடை போட்டுள்ளார்.

51
''பேராசிரியர் வித்தியானந்தன் தனது பல்கலைக்கழக வாழ்வில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாம் மியப் பண்பாட்டம்சங்களுக்கும் வழங்கிய இடம் முஸ் லிம் உலகம் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். ஆனால் இப்பரந்த மனப்பான்மையின் ஊற்று அவருக்கும் முன் னரே ஆரம்பமாகிவிட்டது. 1946ஆம் ஆண்டு ஆரம்பித்த உவைஸின் பல்கலைக்கழகக் கல்வியோடு இதன் ஆரம் பத்தை அவதானிக்க முடிகின்றது. அப்போதைய தமிழ்த்து றைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த சுவாமி விபுலானந்தர் கொண்டிருந்த 'இன மத எல்லைகளைக் ப கடந்ததே தமிழ்' என்ற கருத்தும் இஸ்லாமியப் பண்பாட் டின் மீதான் அவரது நேச மனப்பான்மையுமே பின்னால்
வளர்ந்த பரந்த மனப்பான்மைக்கான ஊற்றாக அமைந் (தன. நேர்முகப் பரீட்ஷையின் போது மாணவர் உவைஸி
டம் சுவாமி விபுலானந்தர் கேட்ட "இஸ்லாமிய அடிப்ப டையில் தோன்றிய செந்தமிழ்க் காப்பியம் ஒன்றின் பெயரைக் கூறுவீரா?” என்ற கேள்வி தற்செயலானதல்ல.
அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் தனது முஸ்லிம் கல்விச் சகாய (150 நிதியை உருவாக்கவும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி
யின் மத்திய நிலையமாக விளங்கிய கொழும்பு ஸாஹிரா வின் அதிபர் பொறுப்பை ஏற்கவும் விபுலானந்தருடன் அஸீஸ் கொண்டிருந்த நெருக்கமும் சுவாமிகளின் அறிவு ரைகளுமே ஆதர்ஸமாகின என்பது அஸிஸின் சொந்த வாக்கு மூலமாகும். அடிகளின் இஸ்லாமியருடனான நேச மனப்பான்மை இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய தாகும். எனினும் அவர் முன்வைத்த இப்பண்பாட்டுச் சமரச மனப்பான்மை பேராசிரியர்களான கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன் போன்றோரினால் இன்னும் பரந்த எல்லைகளுக்கு வளர்த்தெடுக்கப்பட்டது. முஸ்லிம் இலக்கிய உலகு இன்று கொண்டாடும் உவைஸின் உருவாக்கமும் அவரது முதலாவது ஆய்வுக் கட்டுரைக் கான அங்கீகாரமும் வழிகாட்டுதலும் முற்றிலும் இவ்விரு
பேராசிரியர்களையே சார்ந்ததாகும்''. விரிவுரையாளர் அனஸ் அவர்களின் இக்கணிப்பு நியாயமானதே.
போர் என்றால் வாளும் முக்கியந்தான்; வேலும் முக்கியந் தான். ஆனால் வாளும் வேலும் மாத்திரம் போரினை வென்றிட மாட்டா; அவற்றை ஏந்துபவனின் ஆற்றலைப் பொறுத்ததே போரின் முடிவு. அவ்வாறே இஸ்லாமியத் தமிழ் இலக்கிய

Page 40
52
மறுமலர்ச்சிக்குப் பேராசிரியர்களான கணபதிப்பிள்ளையும் வித்தி யானந்தனும் வழங்கிய பங்களிப்பு மகத்தானது என்ற போதிலும் இஸ்லாமிய இலக்கியம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள அனுமதித்ததும் அதனை நெறிப்படுத்தியதும் மாத்திரம் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்தின் பரப்பினையும் அதன் பாங்கினையும் வெளி உலகுக்கு முழுமையாகக் காட்ட போதுமானவைகளாக இருந்திருக்க மாட்டா. இந்த ஆய்வினை மேற்கொண்ட உவைஸ் அவர்களின் தகைமைகளும் அவரிடம் குடிகொண்டிருந்த அசாதார ணமான திறமைகளும் ஆற்றல்களுமே அவரது ஆய்வினை வரலாறு படைத்த ஓர் உன்னத ஆய்வாக பரிணமிக்க வைத்தன.
ஒர் ஆராய்ச்சியாளனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத பண்புகளான கடின உழைப்பு, விடாமுயற்சி, கிரகிக்கும் ஆற்றல், நிதானம், அபார ஞாபகச் சக்தி போன்றவை உவைஸிடம் நிரப்பமாக இருந்ததைப் போலவே இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்தினைப் பற்றி ஆய்வினை மேற்கொள்வதற்கு அவசியமான தகைமைகளான தமிழ்மொழிப் புலமை, தமிழிலக்கியங்களைப் பற்றிய நிறை அறிவு, இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பற்றி, அதன் வரலாற்றைப் பற்றி விரிவான ஞானம், பன்மொழிப் புலமை ஆகியனவும் அவரிடம் குறைவர அமைந்து இருந்தன. இத்தகுதிகளும் தகைமைகளுமே அல்லாமா உவைஸ் அவர்களை இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையில் ஓர் ஒப்பற்ற ஆராய்ச்சி யாளராக உயர்த்தியுள்ளன.
இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டினைப் பற்றிய ஆய்வில் வெற்றிப் பெறுவதற்குத் தேவையான சகல தகுதிகளும் உவைஸி டம் இருந்த போதிலும் அவரை எதிர்நோக்கிய ஒரு பிரச்சினை அவரது உள்ளத்திலே தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்பிரச் சினை பணத்தோடு தொடர்புடையதாக இருந்தபடியால் உவை ஸைப் பொறுத்தவரையில் அது உக்கிரம் வாய்ந்ததாகவே விளங்கி யது. காரணம் பணம் அன்று உவைஸிடம் இல்லாத ஒரு பொருளாக இருந்தது.
இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டினைப் பற்றிய ஆய்வுக்கு நூல்களே அடிப்படையாக இருந்தபோதிலும், நூல் நிலையங்க ளில் மாத்திரம் அமர்ந்து செய்யக்கூடிய ஆய்வாக அது இருக்க வில்லை. நூல் நிலையங்களில் இருந்து, அங்கு கிடைக்கும் நூல்களை ஆராய்வதற்கு முன்னர், ஆய்வுக்குத் தேவையான வேறு பல நூல்களைத் தமிழகத்திலும் இலங்கையிலும் ஊர் ஊராகச் சுற்றி ஒன்று திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப ஆய்வாளரான உவைசுக்கு இருந்தது.

53
உண்மையில் தாம் செல்லவேண்டிய பாதையைத் தானே வெட்டி முன் செல்லவேண்டிய நிலையிலேயே உவைஸ் இருந்தார்.
தமிழகத்திலும் இலங்கையிலும் சிதறிக்கிடந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளவேண்டிய பிரயா ணங்களுக்குத் தேவையான பணத்தை எங்கிருந்து பெறுவது என்பதே உவைஸை எதிர்நோக்கிய பெரும் பிரச்சினை. இக்கட் டத்தில் உடுக்கை இழந்தவன் கைபோல உவைசுக்கு உதவ முன்வந்தது, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய மிக பெரும் அறிவு ஜீவியும் சமூக உணர்வுமிக்கவருமான அறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்களின் சிந்தனை வளத்திலும் அயரா உழைப்பிலும் நிறுவப்பட்டு, அன்னாரின் ஆளுமைமிகு தலை மைத்துவத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி.
உவைஸின் வரலாற்றுப் புகழ் மிகு முதல் ஆய்வுக்கு மர்ஹ"ம் அஸிஸ் அவர்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை, உவைஸ் மணிவிழா மலரின் பதிப்பாசிரியர் அல்ஹாஜ் ஜெமீல் அவர்கள், அம்மலரில் எழுதியுள்ள 'உவைஸ் ஓர் அறிமுகம் என்ற ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு விதந்துரைத்துள்ளார்.
"இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுமாறு மர்ஹ"ம் அஸிஸ் உவைஸைத் தூண்டிய தோடு நின்று விடாது, ஆக்கப்பூர்வமான பண உதவி செய்யவும் முன்வந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளைத் தேடும் பணியில் ஈடுபட்டு தமிழகத்துக்குச் செல்வ தற்கான பண வசதிகளையும் இலங்கை முஸ்லிம் சகாய நிதி மூலம் செய்து கொடுத்தார்." அல்ஹாஜ் ஜெமீல் குறிப்பிட்டுள்ள இந்நிதி உதவி கிடைத்திராவிட் டால் உவைஸ் தன் ஆய்வில் எந்தளவு வெற்றி பெற்றிருப்பார் என்று கூறுவது கடினமானதே.
இலங்கை முஸ்லிம் கல்வி சகாய நிதி நிறுவனத்தின் உதவி தனது ஆய்வுப் பணிக்குக் கிடைக்கும் என்பதை அறிந்த உவைஸ் உவகையுற்றார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் டாக்டர் வித்தி யானந்தனும் காட்டிய கரிசனை அவருக்கு உற்சாகத்தினையும் தெம்பினையும் ஊட்டியது.
எனவே, ஆங்காங்கே புத்தக அலமாரிகளிலும் வீட்டுப்பரண்க ளிலும், பழைய பெட்டிகளிலும் முடங்கிக் கிடந்த இஸ்லாமிய இலக்கிய நூல்களை, ஏற்றுவார் போற்றுவார் இன்றி புறக்கணிக் கப்பட்டு, நிரந்தர மறைவின் விளிம்பின் ஒரத்தில் தொங்கிக்கிடந்த

Page 41
54
இஸ்லாமியத் தமிழ் நூல்களைச் சேகரிக்கும் தூய பணியில் பெரும் உத்வேகத்தோடு உவைஸ் காலெடுத்து வைத்தார்.
இதுவே தன் வாழ்வுப் பணியாக திகழப் போகின்றது என்பதையோ அல்லது தமது இப்பணியால் தமிழிலக்கியம் ஒரு பெரும் இலக்கியப் புதையலைப் பெற்று வளம் சேர்க்கப் போகின்றது என்பதையோ உவைஸ் அன்று உணர்ந்திருக்க வில்லை.
இப்பணியினை ஆரம்பிக்கும் போது இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அழிவினின்று காக்கவேண்டும் என்ற உயர்க்கு றிக்கோளோ அல்லது இவ்விலக்கியங்களை மீள் அறிமுகம் செய்து தன் இனத்துக்குச் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற சமுக நோக்கோ உவைஸை உந்திக் கொண்டே இருந்திருக்கும் என்று எண்ணி எம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது.
உண்மையில் இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டின் மாண்பை உவைஸ் கூட அன்று அறிந்திருக்கவில்லை. அன்று உவைஸின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது; முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான இஸ்லாமியத் தமிழ் நூல்களை எவ்வாறாவது திரட்டிக் கொள்ள வேண்டுமென்பதே அது.
தமிழகம் சென்றால் தனது ஆய்வுக்குத் தேவையான நூல்க ளையும் தகவல்களையும் மிக எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு உவைஸ் அங்குச் சென்றார். உவைஸ் பேராசிரியர் தீக்சிதரைச் சந்தித்ததும், உமறுப் புலவரின் சீறாப்புரா னம், மஸ்தான் சாகிபுப் பாடல்கள் ஆகிய இவ்விரண்டையும் தவிர வேறு இஸ்லாமியத் தமிழ் நூல்கள் உண்டா என்ற புகழ்ப் பெற்ற கேள்வியைத் தீக்சிதர் எழுப்பியதும், உவைஸின் இப்பய னத்தின் போதே.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரபு, பாரசீக, இஸ்லாமிய இயல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் முகம்மது நயினார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் இப்பயணத் தின் போது உவைசுக்குக் கிட்டியது. இஸ்லாமிய இலக்கியத்தைப் பற்றிய ஆய்வை உவைஸ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்பேராசிரியர் விடுத்ததோடு மட்டுமன்றி, ஆய்வு முடியும்வரை உவைசுக்கு ஓர் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுத்தரவும் தாமாகவே பெருவிருப் போடு முன்வந்தார்.

55
இஸ்லாமிய இலக்கியங்களில் நிரம்பிய பயிற்சிப் பெற்றிருந்த பேராசிரியர் நயினார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆய்வினை நடத்துதல் தனது பணியைப் பல வழிகளிலும் எளிதாக்கும் என்பதை உவைஸ் நன்கு உணர்ந்தே இருந்தார். இருப்பினும் இவ்வேண்டுகோளை ஏற்று பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர் களுக்கு மனவேதனையை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை. எனவே பேராசிரியர் நயினார் அவர்களின் அழைப்பை உவைஸ் பவ்வியமாக மறுத்துவிட்டார்; தான் எத்தகையதோர் பண்பாளர் என்பதனையும் உணர்த்தினார்.
ஓர் அன்பரைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து கீழக்க ரைக்குச் சென்ற உவைஸ் அங்கே அகஸ்மாத்தாக செய்யது அஹமது ஆலிம் எனும் புலவரைச் சந்தித்தார். இச்சந்திப்பு உவைசுக்குப் பெரிதும் உதவிற்று. இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பற்றி அறிந்திருந்த புலவர் பிரயோசனமிகு பல தகவல்களை அளித்ததோடு இஸ்லாமியத் தமிழ் நூல் பட்டியல் ஒன்றையும் எழுதிக் கொடுத்தார்.
சென்னை திரும்பிய உவைஸ் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் தேடுதலை ஆரம்பித்தார். சென்னையிலும் ஏனைய ஊர்களிலும் இயங்கிய பல நூல் நிலையங்களுக்கு அவர் சென்றார். ஆனால் எந்த ஒரு நூல் நிலையத்திலும் தேவையான நூல்களோ தகவல் களோ உவைஸ் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உவைஸின் தமிழக விஜயம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லையென்றே கூறவேண்டும். எனவே பெரும் மனத்தளர்ச்சியுடனேயே உவைஸ் தாயகம் திரும்பினார்.
ஒரு சில தினங்களில், இஸ்லாமியத் தமிழ் நூல்களைத் தேடும் படலத்தை உவைஸ் மீண்டும் தொடங்கினார். ஆனால் இம்முறை தேடுதல் மேற்கொள்ளப்பட்டது இலங்கையில். தமக் குத் தேவைப்பட்ட நூல்களைப் பெற்றுக் கொள்வதற்கு உவைஸ் மேற்கொண்ட முதல் வழிமுறை கொழும்பிலும் சுற்றுப்புறங்களி லும் இருந்த புத்தகக் கடைகளுக்கு, குறிப்பாக இஸ்லாமியப் புத்தகக் கடைகளுக்குச் சென்று அங்கே தனக்குத் தேவையான நூல்களைக் கண்டால், அவற்றைத் தனக்காக ஒதுக்கீடு செய்து கொள்வதாகும்.
இவ்வாறு ஒதுக்கீடு செய்த நூல்களின் பட்டியலொன்றைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் பரிந்துரையோடு இலங்கைப் பல்கலைக்கழக நூலகராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த திரு. என்ரைட் என்பவரிடம் உவைஸ் சமர்ப்பிக்க

Page 42
56
வேண்டும் என்றும் அப்படிச் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நூல்களைப் பல்கலைக்கழக நூலகம் உடனடியாக வாங்க வேண்டும் என்றும் ஏற்பாடாகி இருந்தது. திரு. என்ரைட் வழங்கிய ஒத்தாசையை அல்ஹாஜ் உவைஸ் பல சந்தர்ப்பங்களில் பெரும் நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்துள்ளார். வாங்க வேண் டிய நூல்களை அந்தளவு துரிதமாக வாங்கி உவைசுக்கு உதவியுள் ளார் அந்நூலகர்.
உவைஸின் ஆய்வுக்கு உதவுவதற்காக அன்று புத்தகக் கடைக ளிலும் பிரசுர நிலையங்களிலும் விற்பனைக்கிருந்த அத்தனை இஸ்லாமியத் தமிழ் நூல்களும் இலங்கைப் பல்கலைக்கழக நூலகத்துக்காக வாங்கப்பட்ட போதிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பரப்பையும் சிறப்பையும் முழுமையாகக் காட்ட அவை போதுமானவையாக இருக்கவில்லை. எனவே வேறு வழிமுறைகளிலும் நூல்களைச் சேகரிக்க வேண்டிய அவசியம் உவைசுக்கு ஏற்பட்டது.
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நூல்களில் காணப்பட்ட நூல் விலைப் பட்டியல்கள் தனக்குத் தேவையான புத்தகங்களைத் தேடுவதற்கு உவைசுக்குப் பெரிதும் உதவின. இன்று வெளியாகும் தமிழ்ப் புத்தகங்களின் பின் அட்டைகளை அப்புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் தொடர் பான சில குறிப்புக்களை வழங்குவதற்குப் பயன்படுத்தும் வழக்கம் பரவலாய் பின்பற்றப்படுவதைப் போலவே, இந்நூற் றாண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்களின் பின் அட்டைகளை, அந்நூல்களை வெளியிட்ட பிரசுர நிலையங் கள் தமது ஏனைய வெளியீடுகளின் பெயர்களையும் விலை விவரங்களையும் விளம்பரப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் வழக் கம் பெருமளவு காணப்பட்டது என்பதை அக்காலத் தமிழ் நூல்களோடு பரிச்சியம் உடைய அனைவரும் அறிவர்.
இத்தகைய புத்தகங்களை இளைய தலைமுறையினரில் பலர் காணாது இருக்கலாம். அத்தகையோரின் பார்வைக்காக சென்னை இட்டா பார்த்தசாரதி அன் ஸன்ஸ் என்ற பிரசுர நிலையத்தினரால் மதுரை மீனாட்சி விலாஸ் பிரஸில் அச்சிட்டு 1926ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இரத்தின முகம்மது காரண சரித்திர வசன ரூபகம் என்ற புத்தகத்தின் பின் அட்டையில் காணப்படும் விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

57
முகம்மது மார்க்கப் புத்தகங்கள்
ரூபா அனா பைசா
8
2
முகையதின் மாலை 5 முனாஜாத்து சேர்ந்தது O ராஜமணி மாலை O நான்கு பக்கிரி யெனும் சார்தர்வேஷ் கதை O இரத்தின முகம்மது காரணச் சரித்திரம் O நசீகத்துல் இஸ்லாம் அனுபியா O மேற்படி - ஷாப்பியா O பப்பரத்தியாரம்மானை O மரண விளக்கம் மனதை துலக்கும் O சீறாப்புராணம் கவி 4. சையித்தூன் கிஸ்ஸா O பிஸ்மில் குறம் O ஞான மணி மாலை Ο ஷம்மூன் றலியார் கிஸ்ஸா O மெஞ்ஞானரத்தின அலங்காரக் கீர்த்தனை இறவுசுல்கூல் படைப்போர் வசனம் 2 ரசூல் மாலை மீறான் மாலை O இரத்தின விலாசம் I சைதத்துப் படைப்போர் O - O
O
O
I
O
O
O
O
O
O
O
O
O
O
Q
O
O
I
O
காசிம் புலவர் திருப்புகழ் பயஹாம்பரவதாரப் பல வண்ணச் சிந்து நபி அவதார அம்மானை ஐந்து படைப்போர் பாமாளிகை பதம் 2 பாகமும் திருமுடி யிறக்கிய ஹதீது நூறு மசலா
குறமாது பெண் புத்தி மாலை தொழுகை அடவு சலவாத்துப் பாட்டு தீதாறு மாலை தொழுகை நாமா பருலு மாலை நசியத்து நாமா காசிம் படைப்போர்
தெளஹிது மாலை
2

Page 43
58
சக்கராத்து நாமா
02 ) அபிஷேக மாலை புக: ச , பதுக்கல் 22 கோடி
04 0 சத்துரு சங்காரம்
10 0 இன்னும் வேண்டிய புத்தகங்களுக்கு அடியில் கண்ட விலாசத் திற்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.
கோவிந்தசாமி நாயுடு தெரு
இ.பா. நா. புக் ஷாப், தானம்
புதுமண்டபம், மதுரை. (பாகம் 1) இந்த விளம்பரத்தின் தலைப்பும் அதில் காணப்படும் அனுபியா, ஷாப்பியா போன்ற சொற்களும் இஸ்லாமிய மார்க்க அறிவு குறைந்த நிறுவனங்களாலும் இஸ்லாமிய நூல்கள் அச்சிடப் பட்டுள்ளன என்ற உண்மையை உணர்த்தும் அதே வேளையில் இத்தகைய நிறுவனங்களால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய நூல்க ளில் எத்தனைப் பிழைகள் இருக்குமோ என்ற ஐயப்பாட்டையும் தோற்றுவிக்கவே செய்கின்றன.
பிரசுர விளம்பரங்களைத் தாங்கிவந்த இத்தகைய சில புத்தகங்கள் உவைஸ் அவர்களுக்குக் கிடைத்தன. விளம்பரப்படுத் தப்பட்டிருந்த நூல்களில் அனேகமானவை, உவைஸ் புத்தகத் தேடலை ஆரம்பித்திருந்த காலக்கட்டத்திலே புத்தகக் கடைக் ளிலோ, அவற்றை விளம்பரப்படுத்தியிருந்த பிரசுர நிலையங்க ளிலோ விற்பனைக்கு இருக்கவில்லை. எனவே விளம்பரங்களில் காணப்பட்ட அத்தனைப் புத்தகங்களையும் வாங்கிக் கொள்ளக்கூ டிய வாய்ப்பு உவைசுக்குக் கிடைக்கவில்லை."
எனினும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் எனக் கருதப்படக்கூடியவை எத்தனை வெளிவந்துள்ளன, என்னென்ன வெளிவந்துள்ளன என்பதை அறியாத நிலையிலேயே இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஆய்வினைத் தொடங்கிய உவைசுக்கு இப்புத்தக விளம்பரங்கள் பெரிதும் உதவின. அது வரை வெளிவந்திருந்த இஸ்லாமிய நூல்களின் பெயர்களை அறிந்து கொள்ள இவை உதவின; புத்தகங்களின் பெயர்களை அறிந்து கொண்டது அவற்றைத் தேடுவதற்கு உதவியாக இருந்தது. ப: இது மாத்திரமின்றி, அதுவரைத் தனக்குக் கிடைக்காத புத்தகங்களின் பெயர் பட்டியல் எத்துணை நீளமானது என்பதை இவை உவைஸ் அவர்களுக்குப் புலப்படுத்தியதோடு புத்தகங்க ளைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்குப் புத்தகக் கடைகளை மாத்திரம் நம்பிக் கொண்டிருந்தால் போதாது, வேறு வழிவகைக ளையும் கையாள வேண்டும் என்பதையும் உணர்த்தின. 1
ਆ! ਇਸ ਤੋਂ

59
தாம் கடைகளிலும் பிரசுர நிலையங்களிலும் வாங்கியது போக, தேடிப் பெறுவதற்கு இன்னும் இஸ்லாமிய நூல்கள் எத்தனையோ இருக்கின்றன என்பதை புத்தக விளம்பரங்கள் மூலமும், கீழக்கரை செய்யது அஹ்மது ஆலிம் புலவர் அவர்கள் தந்துதவிய நூல் பட்டியல் மூலமும் உணர்ந்துக் கொண்ட உவைஸ், அவற்றுட் சிலவற்றையாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு உறவினர்களையும், நண்பர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் அணுகினார்; இஸ்லாமியப் புத்தகங்க ளைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களுடைய உதவியை வேண்டி னார். கடிதங்கள் எழுதி பலரின் ஒத்தாசையைக் கோரினார்; பலரை நேரில் சந்தித்தார். எவ்வெவரின் இல்லங்களில், எவ்வெவ் ஊர்களில் இஸ்லாமிய நூல்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட் டாரோ, அவ்வவ் ஊர்களுக்கும் இல்லங்களுக்கும் உவைஸ் சென்றார்; அங்கிருந்த நூல்களைப் பெற்றுக் கொண்டார்.
உவைஸ் கடைப்பிடித்த இவ்வழிமுறை அவரின் எதிர்பார்ப் புக்கு மிஞ்சிய வெற்றியை அளித்தது. உதாரணமாக மக்கோனை யைச் சேர்ந்த ஜனாப் அப்துல்லா சிப்ளி தன்னுடைய தந்தை அப்துல் ஹமீதுப் புலவர் சேகரித்து வைத்திருந்த பல இஸ்லாமியத் தமிழ் நூல்களை உவைசுக்குக் கொடுத்து உதவினார்; இரக்வானை யைச் சேர்ந்த இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர் ஒருவர் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் உட்பட பல நூல்களை வழங்கினார்; பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்கள் குலாம் காதிர் நாவலர் அவர்களின் புலவராற்றுப்படை பிரதியொன்றினைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
இவ்வாறு தனது பல்வேறுப்பட்ட முயற்சிகளின் மூலம் கீழே தரப்பட்டுள்ள இஸ்லாமியத் தமிழ் நூல்களையும் அரபுத் தமிழ் நூல்களையும் ஒன்று திரட்டுவதில் உவைஸ் வெற்றி கண்டார்.
அகந்தெளியும் மாலை முகம்மது ஹம்ஸா லெப்பை அடைக்கல மாலை அப்துல் காதிர் புலவர் அதயு மாலை சாமு நயினா லெப்பை அதிநூதன அலங்காரக் முகம்மது இப்ராஹிம் கீர்த்தனை
அபுஷகுமா மாலை செய்தக்காதிப் புலவர் அறுக்கான் மாலை சாமு நயினா லெப்பை ஆசாரக் கோவை அப்துல் மஜீது ஆனந்த சாஹித்தியம் சாகுல் ஹமீதுப் புலவர் ஆயிர மசலா வண்ணப் பரிமளப் புலவர்
இந்திராயன் படைப்போர் அசன் அலிப் புலவர்

Page 44
இபுனியன் படைப்போர் இரத்தின விலாசம் இராஜமணி மாலை இன்சான் காமில் நுட்பம் உச்சி படைப்போர் உலூமுத்தீன் ஊஞ்சற் பாட்டு எண்ணைச் சிந்து
ஏசல் ஐந்து படைப்போர் ஒலி நாயகரவதாரச் சிந்து
கதீஜா நாயகி திருமண வாழ்த்து
கப்பற் சிந்து கல்வத்து மாலை கப்பற் பாட்டு
கற்பு
காசிம் படைப்போர் காசிம் மாலை காரண அலங்காரக் கும்மி காலங்குடி மச்சரேகைச் சித் தன் திருப்பாடல் காலியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸா காஜா ஜுனைதுல் பக்தாதி சீவிய சரித்திரம் கிறிஸ்து மத திரியேகத்துவ மறுப்பு .ולאן கீமியாயே சஆதத்து குணங்குடி மஸ்தான் சாகிபு திருப்பாடல் கும்மிப்பாட்டு சக்கூன் படைப்போர் சங்கீத சிந்தாமணி
சன்மார்க்க இலகுபோத வினா விடை சீறா கீர்த்தனம்
அசன் அலிப் புலவர் செய்கு முகம்மது லெப்பை பக்கீர் மதாருப் புலவர் முகியத்தீன் லெப்பை அசன் அலிப் புலவர் செய்யது அகுமது கபீர் முகம்மது புலவர் மரைக்காயப் புலவர் அகுமது லெப்பை ஆலிம் அசன் அலிப் புலவர் முகம்மது இப்ராஹிம் லெப்பை
ஹம்ஸா லெப்பை காளை அசன் அலி
அப்துல் காதர் ராவுத்தர் அப்துல் காதர் ராவுத்தர் முகியத்தீன் பக்கீர் புலவர் தம்பி சாகிபுப் புலவர் செய்கப்துல் காதிறு ஆலிம் மெளலானா ஐதுறுஸ் முகம்மது அப்துல்லா லெப்பை
மொழிபெயர்ப்பு
முகம்மது சம்சுதீன் சாகிபு
மொழிபெயர்ப்பு சுல்தான் அப்துல் காதர் லெப்பை ஆலிம் காதிறு முகியத்தீன் மீரான் கனி அண்ணாவியார் முகம்மது வரிசை முகியத்தீன் புலவர்
மீரான் முகியத்தீன்
செய்யது அபூபக்கர் புலவர்

சீறாப்புராணம்
சீறா வசனம் சீவிய சரித்திரக் கும்மி சுகிர்த மெஞ்ஞான சங்கீர்த்தனம் சுபுஹான மவுலிது மாலை சுல்தான் இப்ராஹிம் இப்னு அத்ஹம் காரணமாலை சூறத்தின் முனாஜாத்து செய்கு அப்துல்லா ஒலி கதை சையிதத்துப் படைப்போர் சைத்தூன் கிஸ்ஸா
சொர்க்க நீதி
ஞான ஆனந்தக் களிப்பு ஞான ஒப்பாரி
ஞானக் குறம் ஞான நடனம்
ஞானப்பால் ஞானப் புகழ்ச்சி ஞானப்பூட்டு ஞானமணி மாலை ஞானமதி அழகுமலை ஞான முச்சுடர்ப் பதிகங்கள் ஞான ரத்தினக் குறவஞ்சி ஞானரத்தின சாகர மதாரிய்யா ஞான வாக்கியம்
ஞானாந்த ரத்தினம் தங்கப் பாட்டு மாலை
தமீமன்சாரி மாலை தரீக்குல் ஜன்னா தன்பீஹால் ஸாலிஹீன் தாகி படைப்போர்
தாலாட்டு திருக்காரணச் சிங்காரக் கும்மி திருமக்காத் திரிபந்தாதி
உமறுப் புலவர் சாகுல் ஹமீது லெப்பை முகியத்தீன் நாவலர் அப்துல் காதிறு லெப்பை
காளை அசனலி அப்துல் ரஹ்மான்
சிஹாபுத்தீன் சாகிபு சிஹாபுத்தீன் சாகிபு குஞ்சு மூசுப் புலவர் அப்துல் காதர் சாஹிப் செய்கப்துல் காதிர் நெய்னா லெப்பை பீர் முகம்மது சாகிபு செய்யிதலி வாலை குரு மஸ் தான்
பீர் முகம்மது சாஹிபு பீர் முகம்மது சாஹிபு பீர் முகம்மது சாஹிபு பீர் முகம்மது சாஹிபு பீர் முகம்மது சாஹிபு பீர்முகம்மது சாஹிபு மீறாசா ராவுத்தர் பீர் முகம்மது சாஹிபு பீர் முகம்மது சாஹிபு குஞ்சாலி சாஹிபு செய்கப்கல் காகிm வாலை :T? தறு ༢ ཡོད ། དོན་ அப்துல் கனி சாஹிபு" செய்கு சுலைமானுல் காதிரிய்யி செய்கு லெப்பை செய்யது அப்துல் வஹாப் சாகுல் ஹமீதுப் புலவர் அசன் அலிப் புலவர்
மதுரகவி மதாறுப் புலவர் குலாம் காதிறு நாவலர்

Page 45
திருமதீனத்தந்தாதி திருப்புகழ் திருமெஞ்ஞான சரநூல் தீதாறு மாலை தொழுகை உறுதி நாமா தொழுபவர்களுக்கு நல்லறிக்கை தோகை மாலை தோழிப் பெண் பாட்டு தெளஹlதுப் பதம் நபி நாயகம் பிள்ளைத் தமிழ் நபியவதார அம்மானை நவநீத புஞ்சம்
நவரத்தினத் திருப்புகழ் நஸிகத்துல் மூமினின் மாலை நாகூர் காரணச் சதுர்ப் பிரபந்தம்
நாகூர்ச் சிறப்பு நாகூர் பிள்ளைத்தமிழ் நாகையந்தாதி
நூறு நாமா
நூறு மசலா நேர்வழி விளக்கம் தீன் மணி முழக்கம் நோன்பாளி நன்கொடை சீமான்கள் செங்கொடை பஞ்சரத்தினத் தாலாட்டு பஞ்சா வரலாற்று விளக்கம் பத்துகுல் மன்னான் பத்துகுல் மிஸ்ர் பப்பரத்தியாரம்மானை பயஹாம்பரவதாரப் பல்வண் ணச் சிந்து பல வித்துவான்கள் பாடிய பதங்கள் பலுலூன் அசுஹாபி மாலை பன்னிரண்டு மாலை
பிச்சை இப்ராஹிம் புலவர் காசிம் புலவர் பீர் முகம்மது சாஹிபு செய்கு பீர் முகம்மது மாமு நெயினாப் பிள்ளை மகுமூது மூஸா சாஹிபு
சிகாபுத்தீன் சாஹிபு
செய்யது அனபியா சாஹிபு கவிக் களஞ்சியப் புலவர் செய்யது முகிய்யதீன் கவிராஜர் அசனா லெப்பை காதர் முகியத்தீன் புலவர் அப்துல் ரஹ்மான்
உதுமா நயினார் ஆரிபு நாவலர் செய்கப்துல் காதிறு நெயினா லெப்பை
செய்யது அஹமது
செய்கு அப்துல் காதிறு ஆலிம் முகம்மது அப்துல்லா
காளை அசனலி காதிறு கனி புலவர் முகம்மது இப்ராஹிம் முகம்மது லெப்பை ஆலிம் செய்யது மீறாப் புலவர் செய்கப்துல் காதிறுப் புலவர்
கொத்தலகான் புலவர் சைகப்துல் காதர் லெப்பை

பாத்திமா நாயகி திருமண வாழ்த்து
பிஸ்மில் குறம் பீருகா அம்மால ஹதீது புகழ்ப்பாவணி புகாரி மாலை புதுகுஷ்ஷாம் புலவராற்றுப்படை பூவடிச் சிந்து பெரிய ஹதீது மாணிக்க LD ITGS)6) பொன்னரிய மாலை மஅரிபத்து மாலை மகிழ் மணி மாலை மகுபூபு காதல் மணிமுத்து மாலை மரணத்துலக்க மணிமாலை மரண விளக்கம் மனதைத் துலக்கும் மாணிக்க மாலை
மிஃராஜ" நாமா முகியத்தீன் ஆண்டவர் கார ணச் சரித்திரம் முகியத்தீன் ஆண்டவர் திருப் புகழ் முகியத்தீன் ஆண்டவர் பிள் ளைத்தமிழ் முகியத்தீன் ஆண்டவர் பேரில் தாய் மகள் ஏசல் முகியத்தீன் மாலை முதுமொழி மாலை முன்கிறீன் மாலை முனாஜாத்து முனாஜாத்துப் பதிகம் முஸ்லிம் அத்வைத மூலமொழி
மெஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு
முகம்மது புலவர்
பீர் முகம்மது சாஹிபு சிகாபுத்தீன் சாஹிபு அசனா லெப்பை காதர் சம்சுதீன் புலவர் முகம்மது புலவர் குலாம் காதிர் நாவலர் காளை அசனலிப் புலவர் சாம் சிஹாப்தீன்
மின்னா நூறுத்தீன் புலவர் பீர் முகம்மது சாஹிபு முகம்மது முகியத்தீன் புலவர் முத்து மீறாப் புலவர் முகம்மதப்துல் காதிறு பஹ"ருத்தீன் ஹ"ஸைன் முகம்மது இப்ராஹிம்
செய்யது முகியத்தீன் கவிராஜர் மதாறு சாகிபுப் புலவர் இமாம் அப்துல்லாஹில் யாபிகு செய்யது முகம்மது கவிராஜர்
செய்யது முகம்மது கவிராஜர்
ཙམ་ ༥
சாஹ"ல் ஹமீதுப் புலவர்
பக்கீர் மதாறுப் புலவர் உமறுப் புலவர் நெய்னா முகம்மதுப் புலவர் முகம்மது அப்துல் காதர் காசிம் புலவர் முகம்மது அப்துல் ரஹ்மான்
பீர் முகம்மது சாஹிபு

Page 46
மெஞ்ஞானத் தூது மெஞ்ஞான மனதலங்காரப் புகழ்ச்சி மெளலானா ரூமி ஜீவிய சரித் திரம்
யூசுபு நபி கிஸ்ஸா வடோச்சிப் படைப்போர் வெள்ளாட்டி மசாலா
வேத புராணம் சலவாத்துப் பாட்டு ஹக்கு பேரிற் புகழ்ப்பாட்டு ஹக்கு தஅபூலா பேரில் முனா ஜாத்து ஹஸ்ரத் நபி (ஸல்) ஜீவிய சரித்திரம் ஹமீதிய்யா சங்கீர்த்தனை ஹ"ஸைன் படைப்போர் ஹர்மூஜ் கதை சகராத்தின் விபரம்
MIT DIT) GR)
செய்கு முஸ்தபா ஆலிம் செய்கு முகம்மதப்துல்லா
மொழிபெயர்ப்பு
மதாறு சாகிபுப் புலவ்ர் அசன் அலிப் புலவர் செய்கு அப்துல் காதிறு லெப்பை பெரிய நூஹ் ஒலி உதுமா நெய்னார் லெப்பை மகுதூ முகம்மதுப் புலவர் அபூபக்கர் லெப்பை
அப்துல் ஹமீது காளை அசனலிப் புலவர் சின்ன வாப்பு மரைக்காயர் முகம்மது மூஸா சாகிபு செய்கு சுலைமானுல் காதிரிய்யி
அரபு தமிழ் நூல்கள்
அஸ்ஸ ஜர்ததுல் முகம்மதிய்யா கஸிதத்துல் அரலிய்யா சுஅபில் ஈமான் ஞான தாலாட்டு தக்கபுறுலு மாலை தக்வியத்துல் அஸ்பியா தஸ்கியத்துல் கவாதிர் தாலாட்டு மாலை துஆ தாலாட்டு மாலை திரு மெஞ்ஞான அருமை காரணமாலை கீர்த்தனைகள் நஸ்ருல் ஜவாஹிர் பத்ஹ"த் தய்யான்
சாஹ"ல் ஹமீது
முகம்மது ஹனிபா
ஜமாலுத்தீன் புலவர் ஹஸன் அலி
சாஹ"ல் ஹமீது சாஹ7ல் ஹமீது அப்துல் ஹமீது அப்துல் ஹமீது முகம்மது லெப்பை
நஸிருத்தீன் முகம்மது சாஹிபு செய்யது முகம்மது ஆலிம்

புருஷனைத் திட்டும் பூவையர் பாங்கு
பைலுர் ரஹ்மான்
மஆனி
மறாஹிபுல் மவாஹிர் மீஸான் மாலை
முகியத்தீன் ஆண்டவர் பேரில் முனாஜாத்து மெஞ்ஞான காரண ஆனந்தக் களிப்பு
ரஹ்சுல் கெள்ல் ரசூல் மாலை
ரிஸாலா ஜவாஹிருல் ஹம்ஸா ஹக்குத்தஅபூலா பேரில் முனா ஜாத்து
ஹகீகத்து மாலை
ஹத்யா மாலை ஷம்ஊன் கிஸ்ஸா
65
காதர் முகியத்தீன் புலவர்
ஹபீபு முகம்மது செய்யது முகம்மது ஆலிம் சாஹ"ல் ஹமீது செய்கு முஸ்தபா ஆலிம் சாகிபு செய்யது அப்துல்லா சாஹிப்
முகம்மது லெப்பை ஆலிம்
மஹ்தூம் புலவர் சாமு நெய்னா லெப்பை ஹமீது
முகம்மது கெளஸ் செய்கப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் சின்ன உவைக நய்னார் லெப்பை ஆலிம் செய்யது முகம்மது சாஹ7ல் ஹமீது
உமறுப் புலவரின் சீறாப்புராணம், மஸ்தான் சாகிபுப் பாடல் கள் தவிர வேறு இஸ்லாமியத் தமிழ் நூல்கள் இருக்கின்றனவா என சாதாரண மக்கள் மாத்திரமின்றி, பேராசிரியர்கள் கூட பெரும் வியப்புடனும் ஐயத்துடனும் கேள்விக்கணைகள் தொடுத்த கால கட்டத்திலே, இஸ்லாமிய அடிப்படையிலே எழுதப்பட்ட நூற்றி எழுபத்தேழு தமிழ் நூல்களை ஒன்று சேர்ப்பதில் உவைஸ் பெற்ற வெற்றி அன்று ஒரு சாதனையாகவே கருதப்பட்டது. சேர்க்கப் பட்ட நூல்களின் தொகையினைக் கண்டு முஸ்லிம்கள் பெருமித முற்றனர்; ஏனையோர் அதிசயப்பட்டனர்.
இந்நூல்களைத் தேடிப் பெறுவதற்குத் தான் பட்ட கஷ்டங் களை, துரதிர்ஷ்டவசமாக உவைஸ் பகிரங்கப்படுத்தவில்லை; தன்னடக்கம் அவரைத் தடுத்திருக்க வேண்டும். தமிழ் பேகம் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் எல்லாம் சிதறுண்டு கிடந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களில் இந்தளவு கணிசமான ஒரு தொகையினை ஒன்று சேர்ப்பதற்குத் தனி மனிதரான உவைஸ் எத்துணை துன்பப்பட்டிருப்பார்; எத்தனைச் சிரமங்களை அனுப வித்து இருப்பார்; எத்தனைத் தியாகங்களைச் செய்திருப்பார்

Page 47
66
என்பதனை ஊகிப்பது கூட இன்றைய தலைமுறையினருக்குக் கடினமானதே.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் சிதறிக்கிடந்த தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் திரட்டுவதில் தாம் பட்ட கஷ்டங்களை, பெற்ற அனுபவங்களைத் தமிழ்த் தாத்தா மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தனது சுயசரிதையில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இக்குறிப்புகள் உவைஸ் பட்ட சிரமங்களை அனுமானிக்க உதவும் என்பதால் அவற்றிலொன்று கீழே தரப்படுகின்றது.
"அது காறும் தேடாத இடங்களுக்குப் போய்ப் பார்க்கலா மென்ற நினைவு உண்டாகவே, சேலத்தைச் சார்ந்த இடங்களில் தமிழ்ச் சுவடிகள் கிடைக்கலாம். சிலப்பதிகா ரத்தின் பிற்பகுதிக்கு உரை கிடைக்கவில்லை. தஞ்சை வாணன் கோவைக்கு உரை எழுதிய சொக்கப்ப நாவலர் முதலிய புலவர்கள் சேலத்தில் இருந்ததாகக் கேள்வி. அவர்கள் பரம்பரையினர் இருந்தால் தெரிவிக்க வேண்டு கின்றேன். அங்கே தேடிப் பார்த்தால் எவையேனும் கிடைக்கலாம். தங்கள் உதவி வேண்டும்’ என்று சேலம் இராமசாமி முதலியாருக்கு எழுதினேன். குன்றக்குடி மடத்தில் முக்கியமான காரியஸ்தராக இருந்த அப்பாப் பிள்ளை என்பவருக்குச் சிவகங்கையைச் சார்ந்த இடங்க ளில் தமிழ் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கக் கூடுமென்றும், இருக்கும் இடம் தெரிந்தால் நான் வந்து பார்ப்பேனென் றும் எழுதினேன். அக்காலத்தில் பொ.குமாரசாமி முதலியார் தம்முடைய குமாரரைப் படிப்பிக்கும் பொருட்டு லண்டனுக்குச் சென் றிருந்தார். அங்கிருந்து அவர் எனக்குக் கடிதம் எழுதினார். அங்கே சில காலம் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி முதலிய தேசங்களைப் பார்த்துக் கொண்டு வர உத்தேசித்திருப்பதா கவும் அங்கே பல சிறந்த புத்தகசாலைகள் உண்டென்றும் இந்தியாவிலிருந்து பல ஏட்டுச்சுவடிகள் அவற்றிலுள்ளன வென்று தெரிவதாகவும் அவர் அதில் தெரிவித்தார். நான் உடனே சிலப்பதிகாரம் இருக்கிறதா என்று ஆராயவேண் டுமென்று பதில் எழுதினேன். சேலம் இராமசுவாமி முதலியாரிடமிருந்து அனுகூலமான விடை வந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலப்பதிகார நூல் சம்பந்தமான யாத்திரையைத் தொடங்கிச் சேலத்துக்குப் புறப்பட்டேன். சேலத்துக்குப் புறப்பட்டுச் செல்லுகையில் திருச்சிராப்பள்

67
ளியில் இறங்கி அங்கே சில இடங்களில் ஏடு தேடலா னேன். திரு.பட்டாபிராம பிள்ளையின் உதவியால் சில வித்துவான்களுடைய வீடுகளுக்குச் சென்று பார்த்தேன். எஸ்.பி.ஜி. காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த அண்ணாசாமி பிள்ளை என்பவரிடத்தில் புறந்திரட்டும் வீரசோழிய உரைப்பகுதியும் இருந்தன. அப் பால் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த வரகனேரியில் பிள் ளையவர்களுடைய மாணாக்கராகிய சவரிமுத்தாபிள்ளை யெனும் கனவானது வீட்டுக்குப் போனேன். கிறிஸ்தவ ராக இருந்தாலும் அவர் பல சைவப் பிரபந்தங்களையும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையும் சேகரித்து வைத்திருந்தார். அவற் றில் எனக்கு வேண்டிய சிலவற்றைப் பெற்றுக் கொண் டேன். நேஷனல் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஆறுமுக நயினார் என்பவரிடம் சில ஏடுகள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். பதினெண் கீழ்க்க ணக்கு நூல்களில் சிலவற்றைக் கண்டேன். இன்னும் சில இடங்களையும் பார்த்தேன். ஓரிடத்திலும் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கவே இல்லை. திரிசிரபுரத்தருகே உள்ள ஒரு பேட்டையில் இருந்த வித்துவான் சுப்பிரமணிய ஐயரிடமிருந்து சில அருமையான பிரபந்தங்கள் முதலி யவை கிடைத்தன. திருச்சிராப்பள்ளியிலிருந்து குழித் தலை சென்று அதன் அருகிலுள்ள ஊர்களில் ஏடுகளைத் தேடினேன். எனக்கு உதவியாக ஒன்றும் கிடைக்க வில்லை. அப்படியே சேலத்தை அடைந்தேன். சேலம் இராமசுவாமி முதலியாருடைய உதவியால் என் முயற்சி எளிதில் நிறைவேறுமென்று மகிழ்ந்தேன். சொக்கப்ப நாவலருடைய பரம்பரையினர் யார் இருக்கிறார்களென்று விசாரித்தபோது சபாபதி முதலியாரென்று ஒருவர் இருந் தது தெரிந்தது. அவர் வீடு தேடிச் சென்றேன். நான் எதிர்பார்த்தபடியே அங்கே பல பழைய ஏட்டுப் பிரதிகள் இருந்தன. மிக்க வேகத்தோடு அவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். பெரும்பாலான ஏட்டுச் சுவடிகள் பழுதுபட்டும், குறைந்தும், ஒடிந்தும், இடைஇடையே முறிந்தும் மிகவும் சிதிலமுற்றும் காணப்பட்டன. அவற் றில் எனக்கு வேண்டியதாக ஒன்றும் கிடைக்கவில்லை."
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள இக்குறிப் புகள் சிலப்பதிகார உரையொன்றினைப் பெறுவதற்கு அவர்

Page 48
68
எத்தனை மைல்கள் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது, எத் தனை ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது, எத்தனை மனிதர்க ளைச் சந்திக்க வேண்டியிருந்தது, எத்தனைச் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது என்பதைப் புலப்படுத்துகின் றன. மேலும் பல முயற்சிகளுக்குப் பின்னரே, தான் தேடிய சிலப்பதிகார உரை அம்மாபெரும் தமிழ் ஆராய்ச்சியாளருக்குக் கிடைத்தது என்பதை அவரது சுயசரிதையான 'என் சரித்திரம்" விளக்குகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே, முற்றாக மறைந்து விடக்கூடிய நிலையில் இருந்த தமிழ் ஏட்டுச் சுவடிக ளைத் தேடியலைந்த தமிழ்த் தாத்தாவின் மாபெரும் பணியோடு, இருபதாம் நூற்றாண்டின் ஐந்தாம் தசாப்தத்திலே அச்சு நூல்களைத் தேடிய உவைஸின் பணியை ஒப்பிடுவது தவறானதுதான். எனி னும் எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டையும், சிந்தாமணியை யும் சிலப்பதிகாரத்தையும் தேடிப் பெற்றுக் கொள்வதற்குச் சாமிநாதய்யர் அவர்கள் பட்ட சிரமங்களில் பத்தில் ஒரு பங்கு அளவாவது, தான் திரட்டிய நூற்றியெழுபத்தேழு இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, உவைஸ் பட்டிருக்க மாட்டாரா என்று சிந்திப்பது தவிர்க்க முடியாததே.
மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதய்யர் அவர்கள் தமிழ்ச் சுவடிகளைத் தேடுவதில் பட்ட கஷ்டத்தில் பத்தில் ஒரு பங்கினை யல்ல, நூற்றில் ஒரு பங்கினையாவது, தமிழின் வளர்ச்சிக்காக ஒருவர் அனுபவித்து இருந்தால் அவர் தமிழ் பேசும் மக்கள் அனைவர்களது இதயங்களிலும் நிச்சயமாக நிரந்தரமாக நிலைத்தி ருக்க வேண்டியவரே.
தான் திரட்டிய இஸ்லாமியத் தமிழ் நூல்களை அடிப்படை யாக வைத்து, தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு" எனும் ஆய்வுக் கட்டுரையை எழுதி, அதனை உவைஸ் முதுமா ணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பித்தார். இவ் ஆய்வு ஏற்றுக் கொள்ளப்பட்டது; எழுத்துப் பரீட்ஷையிலும் உவைஸ் சித்திய டைந்தார்; முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்துவம் வாய்ந்த ஒரு புதிய இலக்கியப் பாரம்பரியம் தோற்றமும் பொலிவும் பெறுவதற்கு வித்தாக அமைந்த இவ் ஆய்வினைப் பற்றி, ஜனாப் எம்.எஸ்.எம். அனஸ் தான் எழுதிய 'இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகளும் பண்பாட்டுப் பங்களிப்பும்" எனும் கட்டு ரையில் மிக விரிவான விளக்கம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

69
அனஸ் அவர்களின் கட்டுரையில் தரப்பட்டுள்ள விளக்கத் தைப் பார்க்கினும் தெளிவாக, காத்திரமாக உவைஸ் அவர்களின் ஆய்வின் சிறப்புகளையும் அதன் உள்ளடக்கத்தினையும் விவரிப் பது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் உவைஸின் முதல் ஆய்வினைப் பற்றிய அவரின் விளக்கமும் விமர்சனமும் அப்ப டியே கீழே தரப்படுகிறது.
'தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பி னைப் பகுப்பாய்வு செய்யும் முயற்சியே இவ்வாய்வுக் கட்டுரை என்ற முன்னுரைக் குறிப்புடன் 1951ஆம் ஆண்டு எம்.எம்.உவைஸ் தனது முதுமாணிப் பட்டத்திற்காக இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்த தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு (Muslim Contribution to Tamil Literature) 6 TGðıp suiùGyáji 35LGGOJ முஸ்லிம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அதன் மீள் கண்டுபிடிப்பிற்கும் ஆதாரமாய் அமைந்த ஆய்வாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு புத்தூக் கத்தை இவ்வாய்வு வழங்கியது எனில் அது மிகையாகாது.
1953-ல் இந்த ஆய்வுக் கட்டுரை நூல் வடிவம் பெற்ற போது இலங்கையிலும் தமிழகத்திலும் அறிஞர் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நீண்ட காலத் தேவையை மிகச் சிறப்பாகச் செய்துமுடித்த உயரிய ஆய்வென இது போற்றப்பட்டது. இஸ்லாமிய இலக்கிய உலகம் இதுவரை செயற்படுத்தாத ஆனால் நவீன கல்வியு கத்தின் தேவையாயிருந்த தற்கால ஆய்வறிவு முறைகளுக் குரிய வகையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை அணுக முயன்ற முதல் நூலாகவும் இது அமைந்தது.
இஸ்லாமிய இலக்கியங்களின் எண்ணிக்கை, அவற்றின் இலக்கியத்தரம், தமிழிலக்கியப் பர்ப்பிலும் வரலாற்றி லும் அவற்றிற்குரிய இடம், இஸ்லாமியத் தமிழ் இலக்கி யப் பிரிவுகள், வடிவங்கள், அவற்றின் உள்ளடக்க விடயங்கள் என்ற பல்வேறு அம்சங்களை அடக்கியிருந் தார். இக்கட்டுரை நான்கு பிரதான பிரிவுகளைக் கொண்டி ருந்தது. 1. இலக்கிய வடிவங்கள் 2. உரைநடையாக்கங்கள் 3. சூஃபி ஞானியரும் அவர்களின் பாடல்களும் 4. இஸ் லாமிய இறையியல் நூல்களும் ஒழுக்கவியல் நூல்களும்.
இதன் அறிமுக அத்தியாயம் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யங்கள் எழுந்த காலத்து தமிழ்நாட்டு அரசியல் சூழலை

Page 49
7Ο
யும் இஸ்லாத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பண்டைத் தொடர்புகளையும் ஆராய்கிறது. இலக்கிய வடிவங்களில் ஜனரஞ்சக இசைப்பாடல் வடி வங்களான மாலை, ஏசல், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கும்மி, ஆனந்தக்களிப்பு முதலிய இலக்கிய வடிவங்க ளைக் கையாண்டு முஸ்லிம் புலவர் பலர் யாத்துள்ள கவிகளைப் பற்றி இக்கட்டுரையின் இரண்டாம் அத்தியா யம் விரிவாக ஆராய்கிறது. -
காவியத்தைப் பற்றிய முதலாவது அத்தியாயம் சீறாப்புரா ணத்தைப் பற்றிய ஆய்வாக அமைந்துள்ளது. உமறுப்புல வர் கடிகை முத்துப்புலவரிடம் தமிழ் கற்றிருந்த போதும், தமிழ் காவியங்களினதும் இலக்கியங்களினதும் செல்வாக் கிற்குட்பட்டிருந்த போதும் உமறுப்புலவரின் சீறா இஸ் லாமியப் பண்புகள் பலவற்றைத் தெள்ளிதிற் புலப்படுத்தி நிற்பதை சொல்லியல் ஆய்வு மூலமும், ஒப்பீட்டாய்வு மூலமும் உவைஸ் எடுத்துக் காட்டுகிறார். கடவுள் வாழ்த்துப் பாடல்களில் அல்லாஹ்வின் நாமமும் ஏகத்துவ மும் கூறப்படுவதும் அரேபியாவின் ஆறுகளில்லாத சூழ லைக் கொண்டு படலங்களை உமர் அமைத்திருப்பதும் யுத்த படலங்களில் ஒட்டகைகளைப் புகுத்தியிருப்பதும் அரபுப்பதப் பிரயோகங்களும் என்று பல்வேறு உதாரணங் களின் மூலம் இக்கருத்தை அவர் நிறுவ முயன்றுள்ளார். உரைநடை ஆக்கம் பற்றிய அத்தியாயத்தில் அரபு மொழி யிலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை யும் பாரசீக உர்து மொழிகளின் தழுவல் தமிழாக்கங்கள் பலவற்றையும் உவைஸ் அறிமுகம் செய்கிறார். முஸ்லிம் கள் தமிழிலக்கிய மரபிற்குப் புதிதாகத் தந்த அல்லது முஸ்லிமல்லாதோரால் இயற்றப்படாத படைப்போர், மஸ்அலா, முனாஜாத், நாமா, கிஸ்ஸா என்ற புதிய இலக்கிய வடிவங்களும் இதில் ஆராயப்பட்டுள்ளன. இப்படைப்புக்களைப் பற்றி செய்யப்பட்ட முதல் ஆய் வும் இதுவே என்று கூறலாம்.
சமயக் கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்த நூல்களில் அத்வைத மூலமொழி, உலூமுத்தீன், பஞ்சா வரலாறு, கிறிஸ்து மத திரியேகத்துவ மறுப்பு ஆகியவற்றை உவைஸ் எடுத்துக்காட்டுகிறார். இலக்கியத் துறைக் கருத்து

71
புy 46 இது
முரண்பாடுகளைத் தோற்றுவித்த நூல்களில் குலாம் காதிர் நாவலரின் நபியவதாரப்படலம்; இது சீறா நபியவதாரப்ப டலம் என்றும் கூறப்பட்டது. காதர் அசனா மரைக்கார் இதற்கு மறுப்புரையாக சீறா நபியவதாரப்படல உரைகடி லகம் என்ற நூலை வெளியிட்டார். - குலாம் காதிறு சி நாவலர் இதனை மறுத்து சீறா நபியவதாரப்படல் உரை கடிலக நிராகரணம் என்ற நூலை வெளியிட்டார். இஸ்லா மிய இலக்கிய உலகிற்கு இதுவரை அறிமுகமாகாத இப்படைப்புக்கள் பற்றியும் உவைஸ் விளக்கியிருந்தார். இஸ்லாமிய ஒழுக்கவியல் விடயங்களைக் கூறுவதாக இருப்பும். ஆசாரக்கோவை, திருநெறிநீதம் எனும் இரு நூல்கள் கோம் இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன. இஸ்லாமிய இறையியல் படைப்புக்களாக பெரிய நூஹ் என்பவரின் வேத புராணம் மற்றும் மஃரிபத்து மாலை, சுஅபில் ஈமான் போன்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்தம் இதுவரை பேசப்படாத துறைகளையும் இஸ்லாமிய (L) இலக்கிய உலகுக்கு அறிமுகம் பெற்றிராத நூல்களையும் உவைஸ் தமது ஆய்வில் குறிப்பிட்டார். இரு நூற்றுக்கும் ( அதிகமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அவர் பின்
இவ்வாய்வுக்காகப் பயன்படுத்தியிருந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் இடத்தை மதிப்பீடு செய்ய தமிழ் இலக்கியங்களுடனான ஒப்பீட்டையும் அதே வேளை இஸ்லாமிய இலக்கியங்களின் தனித்துவ மான பண்பினையும் அவர் இவ்வாய்வுரை முழுக்க, ஒரு முக்கிய இலட்சியமாக அமைத்திருந்தமை இவ்வாய்வின் சிறப்பிற்குப் பிரதான அடிப்படையாக அமைந்தது. உவைஸ் கையாண்ட இந்த முறையினால் 'இஸ்லாமியத் (1) தமிழ் இலக்கியக் கண்ணோட்டம் பற்றிய முதல் நூலாக' | அது பெயர் பெறும் தகுதியைப் பெற்றது. தமிழ் இலக்கியங்களுடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அவர் ஒப்பீடு செய்ததும் இதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தமையும் இங்கு முக்கியமாக குறிப்பி டலாம்.'' 4) 11/09
24 ( 14 இ), 1 - TCNNT - Nis (2) பேராசிரியர் உவைஸ் அவர்களின் முதல் ஆய்வினைப் பற்றி ஜனாப் அனஸ் அவர்கள் எழுதியுள்ள இவ்வழகான விமர்சனம்
- 4 ( i Vis.)
சரி ரத்து

Page 50
72
நேர்மையுடனும் பெரும் பொறுப்புணர்வோடும் எழுதப்பட்ட ஒன்றாகும்.
1951 ஆம் ஆண்டில் உவைஸின் இவ் ஆய்வு பல்கலைக் கழகத்தால் ஏற்கப்பட்டு அவருக்கு முதுமாணிப்பட்டம் வழங்கப் பட்ட போதிலும் இவ் ஆய்வுக்கு அச்சு வாகனம் ஏறும் பாக்கியம் 1953ஆம் ஆண்டிலேயே கிடைத்தது. தனது ஆய்வினை அச்சிட உவைஸ் அவர்களிடம் பணவசதி இல்லாதிருந்ததும் இப்பணியை நிறைவேற்ற அவருக்கு எவரும் உதவ முன்வராதிருந்ததுமே இத்தாமதத்திற்கு முக்கிய காரணங்களாகும். எனவே சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை என்ற கதையாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் போடப்பட்டது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் செய்த புண்ணியம் பேரா தனை வளாகத்தில் படித்துக் கொண்டிருந்த அல்ஹாஜ் எஸ்.எம்.ஹ
னீபா, 1953ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நூலகத்தில், எதேச்சை யாக உவைஸின் ஆய்வுக் கட்டுரையின் தட்டெழுத்துப் பிரதியி னைக் கண்டார்; அதனைப் படித்தார்; அதனால் ஆட்கொள்ளப்பட் டார். தமிழ்ப் பற்றும் சமூகப் பற்றும் மிக்க எஸ்.எம். ஹனீபா, உவைஸின் ஆய்வு தமிழுக்கும் தம் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடியது என்பதை உணர்ந்தார். அதனை அச்சிட்டு மக்கள் பார்வைக்கு வைத்தல் ஒரு தலையாய சமுகப் பணி என உறுதியாக நம்பினார்.
உவைஸின் ஆய்வுக் கட்டுரையின் பெறுமதியை உணர்ந்த ஹாஜி எஸ்.எம்.ஹனீபா 'தமிழ் மன்றம்' எனும் பெயரிலே ஒரு பதிப்பகத்தை நிறுவி, உவைஸின் ஆய்வினைப் பதிப்பித்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அன்று ஹாஜி ஹனீபா அவர்கள் அசாத்திய துணிச்சலோடும், வேகத்தோடும், பெரும் ஈடுபாட்டோ டும் உவைஸ் அவர்களின் முதல் ஆய்வினை வெளியிட முன்வரா திருந்திருந்தால் நிச்சயமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறும் லர்ச்சி மேலும் சில ஆண்டுகள் பின்போடப்பட்டே இருக்கும்.
இந்நூல் வெளியீட்டைப் பற்றியும் அது சமூகத்தில் ஏற்படுத் திய விளைவுகளைப் பற்றியும், உவைஸின் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் 'உத்தமர் உவைஸ்' எனும் தனது நூலில் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனீபா பின்வருமாறு அழகாக கூறியுள்ளார்: ''இவ்வாராய்ச்சி நூலை, எமது கல்ஹின்னைத் தமிழ் மன்றம், அதன் முதல் நூலாக வெளியிட்டது. இந்நூல் வெளியிட்டதன் பின்னர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்

73
என்னும் ஒரு பிரிவு தமிழ் மொழியின் ஓர் அம்சமாக உள்ளது என்பதைப் பலரும் அறியத் தலைப்பட்டனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையிலே ஒரு மறும் லர்ச்சி ஏற்படலாயிற்று. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டி ருந்தமையினால் இதன் தமிழ் மொழி பெயர்ப்பு அவசி யம் என்னும் பொது உணர்வு தமிழ் கூறும் நல்லுலகில் ஏற்படலாயிற்று. முஸ்லிம் அறிஞர்கள் கூட இந்நூல் வெளியீட்டின் பின்னரே, இத்தகைய ஒரு பிரிவு உள்ளது என்பதை உணரத் தொடங்கினர். இது பற்றி நூல் எழுதவும் தலைப்பட்டனர்.
இந்த நூலைப் படித்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் இந்நூல் வெளிவந்ததின் மூலம் தமிழ் ஒரு படி உயர்ந்துவிட்டது எனத் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார். -
முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு என்னும் 50 இந்த நூல் வெளிவந்ததனால் இந்நூலுக்குக் கிடைத்த மதிப்புரைகள், அதன் ஆசிரியருக்குப் பேரூக்கம் அளிப்ப க னவாய் அமைந்து விட்டன. இதன் பயனாக அவர்தம் ஆராய்ச்சி ஆர்வம் அதிகரித்தது.''
உவைஸ் அவர்களின் முதல் ஆய்வினுக்கு அறிஞர்கள் மத்தியிலும், இலக்கிய ஆர்வலர்கள் மத்தியிலும் கிடைத்த பெரும் வரவேற்பு, தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் தொடர்ந்து பெரும் ஈடுபாட்டினைக் காட்டுவதற்குத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவருக்கு அளித்தது என்று தமிழ் மன்றம் ஹாஜி எஸ்.எம். ஹனீபா கூறியிருப்பது சரியானதே என்பதை டாக்டர் உவைஸ் அவர்களின் பெரு வாழ்வு நிதர்சனமாக உணர்த்துகின்றது.
ட்க :
அதே பகுத109 கிட்ட தப - அம்பாசம்
பேர் முன்பு சில எ இ (900-த்தல் ஆற்கவிலப்பக்கத்தில் அதன் தேதி
அத்ருத் தெரு க புத்தர் பிலால் குத்தி பரிதி பக்கத்த காகம்

Page 51
5. இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைப் பற்றிய ஆய்வு
‘முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு எனும் ஆய்வினுக் குக் கிடைத்த பெரு வெற்றியும் சமூக அங்கீகாரமும் இயற்கையா கவே உவைஸிடம் அமைந்திருந்த ஆராய்ச்சி ஆர்வத்தைக் கொழுந்து விட்டெரியச் செய்தன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பாக மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை அவரது சிந்தையில் நிலைபெற்றது.
தான் இதுவரை தேடிப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் நூல்களை விட, வேறு பெருந்தொகையான நூல்களையும் தான் முயன்றால் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை கலைமுதுமாணி உவைஸ் அவர்களின் உள்ளத்தில் துளிர்விட்டது. உடனடியாக இவை தேடப்படாவிட்டால் சிலவேளை இவை அழிந்து படலாம் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். சமூகப் பொக்கிஷங்கள் எனக் கருதப்படக்கூடிய இந்நூல்களை அழிவினின்றும் காப்பது ஒரு முக்கியமான சமூகப்பணி என நம்ப ஆரம்பித்த அவர், அதுவரை பெறப்படாத இஸ்லாமியத் தமிழ் நூல்களை ஒன்று திரட்டும் பணியில் மீண்டும் பெரு வேட்கையோடு ஈடுபட்டார்.
உவைஸின் ஆய்வு, அவருக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்துக்கும் பெற்றுத்தந்த சமூக அங்கீகாரத்துக்கு ஒரு சிறந்த உரைகல்; அவ் ஆய்வு நூலுருவில் வெளியாகிய ஒரு சில ஆண்டுகளுக்குள், முதல் ஆய்வில் பயன்படுத்திய நூல்களைவிட மேலும் பல இஸ்லாமியத் தமிழ் நூல்களைத் தேடிப் பெற்றுக் கொள்வதில் உவைஸ் அடைந்த பெரும் வெற்றியாகும். தனது முதல் ஆய்வுக்காக நூற்றி எழுபத்தேழு இஸ்லாமியத் தமிழ் நூல்களை உவைஸ் ஒன்று சேர்த்தது, அக்காலகட்டத்திலே ஒரு சாதனையாகவே கருதப்பட்ட போதிலும், அன்று அவரால் ஒன்று திரட்டப்பட்டவை அதுவரை இயற்றப்பட்டிருந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களின் ஒரு சிறு பகுதியே என்பதை உவைஸ் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்.
தான் தனது முதல் ஆய்வுக்குத் திரட்டியதிலும் பார்க்க கூடுதலான ஒரு தொகை நூல்களைச் சேகரித்துக் கொள்ள

75
உவைசுக்கு முடியாமல் போனமைக்குப் பல காரணங்கள் இருந் தன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின்பால் முஸ்லிம்களில் பலருக்கு எவ்விதமான அக்கறையோ அதனைப் பற்றிய ஒரு பெருமிதமான உணர்வோ இல்லாதிருந்ததும், உவைசுக்கு அன்று தனி மனித ரீதியில் பெருத்த சமூகச் செல்வாக்கோ அங்கீகாரமோ இல்லாதிருந்ததும் இவற்றுள் இரண்டாகும்.
உவைஸ் தனது முதுமாணி ஆய்வில் ஈடுபட்டிருந்த காலகட் டத்திலே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஓர் உயர்வான எண்ணமோ, அதன் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவுவது பயன்மிகு சமூகப் பணி என்ற கருத்தோ, முஸ்லிம்களின் மத்தியில் வளர்ந்திருக்கவில்லை. எனவே உவைஸ் தன் முயற்சி யில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்லாமியச் சமூகம் அது வழங்கியி ருக்க வேண்டிய அளவு ஒத்தாசைகளை அவருக்கு வழங்க முன்வரவில்லை.
இதே நேரத்தில் யார் யாரிடம் இஸ்லாமியத் தமிழ் நூல்கள் இருக்கக்கூடும் என உத்தேசமாக நினைத்துப் பார்க்க கூடிய அளவிற்குக்கூட தன் சமூகத்தில் இருந்த இலக்கிய ஆர்வலர்களைப் பற்றி உவைஸ் அறிந்திருக்கவில்லை. அவ்வாறே உவைஸைப் பற்றி இஸ்லாமியச் சமூகமும் அதிகம் தெரிந்திருக்கவில்லை. உதவிகள் வழங்கப்பட்டால் அவர் பெரிய மாற்றங்களைச் செய்யக் கூடிய ஆற்றல் மிக்கவர் என்ற கணிப்பும் அன்று இஸ்லாமியச் சமூகத்தில் உருவாகியிருக்கவில்லை.
ஆனால் உவைஸின் ஆய்வு அச்சில் வெளி வந்ததும் இஸ்லாமியச் சமூகத்தின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற் றங்கள் ஏற்படலாயின. இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பாரம்பரி யம் என்ற ஒன்று இருக்கின்றது; அது உயர்வு மிக்கது; சிறப்பு பொருந்தியது என்ற எண்ணம் சமூகத்தில் மெதுவாக வளர ஆரம்பித்தது. அது காலம் வரை சீந்துவாரற்று, மூலைகளில் முடங்கிக் கிடந்த தமிழ் நூல்களை முஸ்லிம்கள் தூசி தட்ட ஆரம்பித்தனர்; பரண்களில் ஒதுக்கப்பட்டிருந்த இஸ்லாமியத் தமிழ் நூல்கள், வீட்டு வரவேற்பறை அலுமாரிகளை அலங்கரிக் கும் காலம் வெகுத் தூரத்திலில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் தோன்றலாயின. பழைய இஸ்லாமியத் தமிழ் நூல்கள் தம் வீடுகளில் இருக்கின்றன என்று கூறுவது கூட கெளரவமானது என்ற எண்ணம் வெகு விரைவில் பரவிவிடும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.
உவைஸின் ஆற்றலிலும் ஆராய்ச்சித் திறனிலும் இஸ்லாமியச் சமூகம் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தது. தம்மாலான உதவிகளை

Page 52
76
உவைஸுக்கு வழங்கினால் அவர் இஸ்லாமியச் சமூகத்தின் இலக்கியப் பங்களிப்புக்களை வெளி உலகிற்குத் தெளிவாகக் காட்டக்கூடியவர் என்ற எண்ணம் ஒரு சில முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சிலர், தம்மிடம் இருந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களைத் தாமாகவே உவைஸிடம் கையளிக்க ஆரம்பித்தனர்; வேறு சிலர் தமது இல்லங்களில் இருந்த இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பற்றிய விவரங்களை அவருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி கண்டனர்; மற்றும் சிலர் தமக்குத் தெரிந்த இலக்கியத் தகவல்களை அவருக் குத் தெரிவித்தனர்.
இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த இலக்கிய அபிமானிகளின் உதவி, அவர்கள் ஒரு சிலரே ஆக இருந்தபோதிலும், உவைசுக்கு எத்துணை பயன்மிக்கதாக இருந்தது என்பதை, அவர் தனது இரண்டாவது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த தலைப்பு துல்லியமாக உணர்த்துகிறது. சமூகம் தனக்கு நல்கிய அங்கீகாரத்தாலும் ஒத்தா சைகளாலும் உந்தப்பட்ட முதுமாணி உவைஸ், 1962-ஆம் ஆண் டில் கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக இலங்கைப் பல்கலைக்கழகத் தில் தம் பெயரைப் பதிவு செய்தபோது, இப்பட்டத்திற்கான ஆய்வுக்கு அவர் தெரிவு செய்த தலைப்பு 'தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியக் காப்பியங்கள்' என்பதாகும்.
இத்தலைப்பு உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறை யில் நிபுணத்துவம் பெற விரும்பினார் என்பதை துலாம்பரமாக உணர்த்தியதோடு, தனது முதல் ஆய்வுக்கும் 1962 ஆம் ஆண்டுக் கும் இடைப்பட்ட பத்து, பதினொரு ஆண்டுகளில் அவருக்குப் பல இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள் கிடைத்துவிட்டன என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றது. தனது முதல் ஆய்வில் உமறுப் புலவரின் சீறாப்புராணம் என்னும் காப்பியத்தைப் பற்றி மாத்திரமே உவைஸ் குறிப்பிட்டிருந்தார். ம்
அன்று இஸ்லாமியக் காப்பியங்களில் சீறாப்புராணம் ஒன்று மாத்திரமே அவருக்குக் கிடைத்திருந்தது. இதனைத் தவிர வேறு காவியங்கள் இருக்கின்றன என்பதை அன்றைய இஸ்லாமியச் சமூகமும் அறிந்திருக்கவில்லை. ஆனால் 1962-ஆம் ஆண்டிலோ, இஸ்லாமியத் தமிழ்க் காவியங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள் ளக்கூடிய அளவிற்கு அவை உவைசுக்குக் கிடைத்துவிட்டன. .
இதனைப் பேராசிரியர் உவைஸ் அவர்கள் 'தமிழ் இலக்கியத் தில் இஸ்லாமியக் காப்பியங்கள்' என்ற தனது ஆய்வு நூலுக்காக எழுதிய முன்னுரையில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
10 ( 13 , 6 2 3. 12.

77
"பட்டப் பின் படிப்பு ஆய்வுக்கும் தகுதியான ஒரு துறையாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையை ஏற்றதனால் இலங்கைப் பல்கலைக்கழகம் அவ்விலக்கியத் துக்கு வழங்கிய அங்கீகாரத்தினால் அத்துறையில் ஆய்வு நடத்துவதற்கு நான் உந்தப்பட்டேன். முதுமாணிப்பட்டத் திற்காக, 'முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு' எனும் தலைப்பின் கீழ் ஆய்வு நடத்தி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்த முதல் ஆய்வாளன் எனும் பெருமையைப் பெற்றேன். அவ்ஆய்வினிலே இஸ்லா மிய அடிப்படையிலே இயற்றப்பட்டுள்ள பல இலக்கிய வடிவங்களைப் பற்றிப் பொதுப்படையாக விவரித்துள் ளேன். இவ்வாறு விவரிக்கப்பட்ட இலக்கிய வடிவங்க ளுள் காப்பியமும் ஒன்றாகும். இஸ்லாமிய அடிப்படை யில் தோன்றிய ஒரு காப்பியம் மாத்திரமே அன்று எனக்குக் கிடைத்திருந்தது. இவ்வடிப்படையில் வேறு காவியங்கள் ஏதாவது தமிழில் இயற்றப்பட்டிருந்ததா இல்லையா என்பதை அன்று யாரும் அறிந்திருக்க வில்லை. காலப்போக்கில் வேறு பல இலக்கிய அன்பர் 4 தி
கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அக்கறை காட்டம் ப ஆரம்பித்தனர். 1953-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பல் எனது ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்த நூல்களே இவ்வி (1) லக்கிய அன்பர்களின் பூரண கவனத்தையும் ஈர்த்தன. TI நானும் சிறிது சிறிதாக மேலும் பல இஸ்லாமியத் தமிழ் தே. நூல்களை ஒன்று திரட்டலானேன். அவ்வாறு நான்
சேகரித்த நூல்களில் பல காவியங்களும் இருந்தன... 2 இஸ்லாமியக் காப்பியங்களில் ஒன்றினைத்தவிர, ஏனை # யவை கிடைப்பதற்கு அரியனவாகும். இவற்றை வைத்தி ருந்த சொற்பமானோரும் அவற்றை நூதனச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் காட்சிப் பொருள்களைப் போலவே மிகப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். எனவே இத்தகைய அரிய நூல்களைத் தந்துதவிய மக்கோனை யைச் சேர்ந்த ஜனாப் ஏ.எச்.எம்.அப்துல்லா (சிப்ளி), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாப் எம்.எம்.அப்துல் குத் தூஸ், கல்ஹின்னை எம்.சி.எம். ஸுபைர், பதுளை ஜனாப் எம்.பி.எம்.காதர், மருதமுனையைச் சேர்ந்த ஜனாப் ஜே.எம்.எம்.அப்துல் காதர், நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப் எஸ்.ஏ.செய்யது ஹஸன் மெளலானா, கொழும்பு ஜனாப் எம்.அல்லா பிச்சை ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடத் தவறின் நான் நன்றி மறந்தவனாவேன்.''
:11:

Page 53
78
ஹாஜி உவைஸ் தந்துள்ள இவ்விளக்கம் அவருக்குக் காப்பி யங்கள் எப்படிக் கிடைத்தன, எவ்வெவரிடமிருந்து கிடைத்தன என்பதைப் புலப்படுத்துகின்றது.
1982-ஆம் ஆண்டில் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவர்க ளின் வழிகாட்டுதலின் கீழ் உவைஸ் தன் ஆய்வை உற்சாகமாய் ஆரம்பித்தபோதிலும் பேராசிரியர் அவர்களின் மறைவு அவ்ஆய் வுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளியை இட்டது. பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்து றைத் தலைவராக நியமனம் பெற்ற பின்னரே, 1971-ஆம் ஆண்டில் மீண்டும் உவைஸ் தன் ஆய்வினை ஆரம்பித்தார்.
இவ்ஆய்வினை நெறிபடுத்தும் பொறுப்பு பேராசிரியர் வித்தி யானந்தன் அவர்களுக்கே வழங்கப்பட்டது. உவைஸின் ஆய்வின் வெற்றிக்குப் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் பங்களிப்பு கணிசமானதாகும்.
தனது ஆய்வுக்குக் கருப்பொருளாக இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களை உவைஸ் தேர்ந்தெடுத்தது முக்கியத்துவம் பொருந் தியதாகும். எந்த ஒரு மொழி இலக்கியத்தினதும் கொடுமுடியாக கணிக்கப்படுவது அவ்விலக்கியத்தை அழகுபடுத்தும் காப்பியங் களே. இலக்கியத்தின் மாண்பையும் மாட்சியையும் உன்னதமான முறையில் வெளிப்படுத்துபவை அவையே. இவ்வுண்மை இஸ் லாமியத் தமிழ் இலக்கியத்துக்கும் பொருந்தும். "இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்களுள் காப்பியங்கள் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அக்காப்பியங்கள் அவற்றின் மகுடமாகத் திகழ்கின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்னும் மாட மாளிகையில் உச்சிக்கோபுரமாக விளங்குகின்றன அக்காப்பியங்கள்."
இஸ்லாமிய அடிப்படையில் ஏறத்தாழ இருபது காப்பியங்கள் தோன்றியுள்ளன என்று இன்று கருதப்படுகின்றபோதிலும், உவைஸ் காப்பிய ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளை, அவருக்கு இவற்றுள் உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம், பனி அகமது மரைக்காயர் எழுதிய சீறா வென்கின்ற புராணம், வண்ணக்களஞ்சி யப் புலவரின் கைவண்ணத்திலும், கலைவண்ணத்திலும் தோன் றிய இராஜநாயகம், குதுபுநாயகம், தீன் விளக்கம் எனும் காவியங்கள், புலவர் நாயகம் எனப் போற்றப்பட்ட காயற்பட்ட ணத்துச் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் இயற்றிய குதுபு நாயகம், திருக்காரணப்புராணம், திருமணி மாலை, புதுகுஷ்ஷாம், பதுருத்தீன் புலவர் எழுதிய முகியத்தீன் புராணம், குலாம் காதிறு நாவலர் இயற்றிய நாகூர்ப் புராணம்,

79
ஆரிபு நாயகம், கனகவிராயர் எழுதிய கனகாபிஷேகமாலை, குஞ்சு மூகலெப்பை ஆலிம் புலவர் எழுதிய இறவுசுல்கூல் படைப்போர் ஆகிய பதினான்கு இஸ்லாமியக் காப்பியங்களே கிடைத்திருக்க வேண்டும். இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர்ந்த ஏனைய பன்னிரண்டு காவியங்களையுமே உவைஸ் தன் ஆய்வுக்குக் கருப்பொருளாகக் கொண்டு ஆராய்ந்துள்ளார்.
காவிய வளத்தைப் பொறுத்தவரையில் உலகில் எந்த ஒரு மொழியும் தமிழை மிஞ்சுவது கடினம்; அந்தளவு தரத்திலும் எண்ணிக்கையிலும் மிக்க உன்னதமான காவியங்கள் தமிழ் இலக்கியத்துக்குக் கனம் சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காப்பி யங்களைத் தவிர ஏனையவை காவிய தர்ஸம்" எனும் வட மொழி நூலைத் தழுவித் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணங்களுக்கு அமைய எழுதப்பட்டவையாகும்.
தண்டியலங்காரம் விளக்கும் காவிய இலக்கணங்களைப் பேராசிரியர் வி.செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாறு எனும் தனது நூலில் பின்வருமாறு சுருக்கித் தந்துள்ளார்.
'கடவுள் வாழ்த்து முதலியவற்றை முதலிலுடையதாய், ஒப்பற்ற குணங்களையுடைய ஒருவனைத் தலைவனாகக் கொண்டு, அவனுடைய நாடு, நகர், பிறப்பு, அவனுடைய செயற்கரிய செயல்கள் முதலியவற்றை, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற் பொருளும் பயப்பக் கூறுவது பெருங்காப்பியம் என்றும், அறம் முதலிய நான்கனுள் ஒன்றேனும் குறைபாடுடையது சிறுகாப்பியம் என்றும் கூறுவர்.'
தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணங்களுக்கு அமைய இயற்றப்பட்டுள்ள பன்னிரண்டு இஸ்லாமியத் தமிழ்க் காவியங்க ளைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்ப டுத்தியதோடு அவை எவ்வாறு தண்டியலங்கார காவிய இலக்க ணங்களுக்கு அமைய எழுதப்பட்டுள்ள தமிழ்க் காப்பியங்களுக்கு ஒப்பாக இருக்கின்றன என்பதையும் உவைஸ் தனது இவ் ஆய்வில் நிறுவியுள்ளார். பல்கலைக்கழக விதிகளுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ் ஆய்வு, உவைஸ் அவர்களின் பரந்த தமிழ் இலக்கிய அறிவையும், தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த பேரீடுபாட்டையும் துல்லியமாகப் புலப்படுத்துகின்றது.
உவைஸின் இவ் ஆய்வின் உயர் தரத்தினை இலங்கைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் விரிவுரையாளர் கலாநிதி

Page 54
8O
ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வழங்கியுள்ள விமர்சனம் செவ் வனே எடுத்துக் காட்டுகின்றது.
"ஜனாப் எம்.எம்.உவைஸ் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெறுவதற்காகச் சமர்ப்பித்த தமிழ் இலக்கியத்தில் முஸ் லிம் காப்பியங்கள்’ என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை நூல் வடிவில் பார்த்தேன். இன்றைய முஸ்லிம் அறிஞர்க ளும் தமிழ்க் கல்விமான்களும் அறிந்திராத துறை என்று கூறத் தக்க தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பகுதி ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொன் றும் ஆயிரக்கணக்கான செய்யுள்களையுடைய பன்னி ரண்டு முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களை ஆசிரியர் ஆராய்ந்துள்ளமை தனியே பாராட்டுக்குரியது. முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் அல்லாத ஏனைய தமிழ்க் காப்பியங் களையும், காப்பியங்கள் பற்றிய ஆங்கில நூல்களையும் ஆசிரியர் நன்கு கற்றுள்ளார். இவ்விருவகையிலும் ஆசிரி யருடைய புலமை நூலில் விளங்கித் தோன்றுகின்றது. முஸ்லிம் தமிழ் இலக்கியங்களையும் ஏனைய தமிழ் இலக்கியங்களையும் அவர் ஒப்பிட்டு முன்னையவற்றின் தனிச் சிறப்புக்களைத் தொகுத்துள்ளார். அரேபியப் பாலைவனத்திலே நிகழ்ந்த கதைகளும் தமிழ் மொழியி லும் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றபோது, முஸ் லிம் தமிழ்ப் புலவருக்கு ஏற்பட்ட சிரமத்தை அவர் விளக்கி, அப்புலவர் அத்தகைய சந்தர்ப்பங்களிலே நடந்து கொண்டமையைச் சுவைபடச் சுட்டியுள்ளார். நான்கு பாகங்களாக அமைந்துள்ள அவர் ஆய்வு முதற் பகுதியாக வாழ்த்தைக் கொண்டுள்ளது. மூவகை வாழ்த்துக்களை எடுத்து விளக்குவதற்காக மூன்று அதிகாரங்கள் வகுத்துள் ளார். ஏனைய தமிழ்க் காப்பியங்களிலிருந்து பிரித்துக் காட்டக்கூடியதாக, முஸ்லிம் தமிழ்க் காப்பியம் ஒவ் வொன்றும் தனி வழியில் அமைந்திருப்பதை அவர் தெளிவாகக் காட்டியுள்ளார். நூலின் அரைவாசிப் பகுதி என்று கூறத்தக்க ஏழு அதிகாரங்களில் வருணனைகளைப் பற்றி அவர் ஆராய்ந்துள்ளார். முஸ்லிம் தமிழ்க் காப்பியங் களையும் ஏனைய தமிழ்க் காப்பியங்களையும் ஒப்பீட்டு முறையிலே நோக்கி இயற்கை வருணனையை ஆராய்ந் துள்ளார். நில வருணனையிலுள்ள தனித்துவம் மூன்று அதிகாரங்களிலே வெளிக் கொணரப்பட்டுள்ளது.
காப்பியங்களிலே பாத்திரப்படைப்பு மிகவும் முக்கியமா னது. தன்னிகரில்லாத் தலைவர்கள், வில்லன்களும்,

81
தலைவிகளும் பிற பெண் பாத்திரங்களும் என மூன்று அதிகாரங்களை நூலாசிரியர் இப்பகுதிக்கு ஒதுக்கியுள் ளார். ஏனைய தமிழ்க் காப்பியங்களிலே இவ்விடயங்கள் பற்றி இடம் பெறும் பகுதிகளை ஆசிரியர் ஒப்பிட்டு சம்பந்தப்பட்ட புலவர்களை மதிப்பீடு செய்ய முயன்றுள் ளமை பாராட்டப்பட வேண்டியது. இஸ்லாமியக் கருத் துக்கள், கதைகளோடு தொடர்புடைய பெருந்தொகை யான அரேபிய, பாரசீக மொழிச் சொற்கள் இடம் பெறுவது முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களின் தனித்துவங்க ளில் ஒன்றாகும். உவைஸ் அவர்கள் அத்தகைய சொற்க ளைத் தொகுத்து அவற்றுக்கு விளக்கமும் கொடுத்துள் ளமை முஸ்லிம் அல்லாத தமிழ் அறிஞர் முஸ்லிம் இலக்கியங்களைப் படிப்பதற்கு மிகவும் உதவியாக அமை கிறது. நூலின் பிற்சேர்க்கைகளில் நூலாசிரியர்களையும் வள்ளல்களையும் பற்றி அமைந்துள்ள பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஒரு புதிய பகுதியாக அமைய வேண்டியது.'
பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் மதிப்பீடு டாக்டர் உவைஸ் அவர்களின் ஆய்வின் சிறப்புக்களைத் தெளிவாக உணர்த்துகின்றது.
தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள்’ என்ற ஆய்வை ஏற்று, இலங்கைப் பல்கலைக்கழகம் 1975-ஆம் ஆண்டில் உவைசுக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது. இது தமிழ்த்துறை யில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமை யையும் உவைசுக்கு ஈட்டிக் கொடுத்தது. உவைஸின் சாதனையைக் கண்டு பெருமிதம் கொண்ட இலங்கை இஸ்லாமியச் சமூகம் உவைஸின் வெற்றியை ஒரு தனி மனிதனின் வெற்றியாக கருதவில்லை; அதனைத் தன் வெற்றியாகவே கருதி புளகாங்கிதம் கொண்டது.
கவிமணி எம்.சி.எம். ஸ"பைர் 1976 -ஆம் ஆண்டில் டாக்டர் உவைஸைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் 'தமிழில் இஸ்லாமி யக் காப்பியங்கள்' பற்றிய ஆராய்ச்சி செய்ததின் பயனாக நமது இலங்கைப் பல்கலைக்கழகத்திற் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் அவர் என்ற பெருமையும் அண்மையில் அவர்களுக்குக் கிடைத்தது அல்லாஹ்வின் அருளாகும். அவர்கள் பெறும் புகழ் அன்னைத் தமிழ் பெறும் புகழ். அதனூடே முஸ்லிம்களாகிய

Page 55
82
கா!
நாம் பெறும் புகழ்" எனக் கூறியிருப்பது உவைஸின் வெற்றியை இலங்கை இஸ்லாமியச் சமூகம் எவ்வாறு நோக்கியது என்பதை ஓரளவு உணர்த்துகிறது.
இவ்வுணர்ச்சி இலங்கை முஸ்லிம்களோடு மாத்திரம் ஒடுங்கி விடவில்லை; இந்திய முஸ்லிம் தமிழ் இலக்கிய அபிமானிகளும் உவைஸின் சாதனையில் தம் இன எழுச்சியின் அறிகுறிகளைக் காணவே செய்தனர் என்பதை பெரும் புலவர் பேராசிரியர் நெய்னார் முகம்மது ''தற்காலத்தில் தமிழ் இலக்கியங்களை முறையாகக் கற்றுப் பல்கலைக்கழகங்களில் முதுமாணிப்பட்டம் பெற்ற முஸ்லிம்கள் பலருளர், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். பிற சமயத்துத் தமிழ் ஆசிரியர் பலர் ஆய்வு நிகழ்த்தி கலாநிதிகளாக காட்சி தருகின்றனர். ஆனால் இதுவரை முஸ்லிம்க ளில் யாருமே கலாநிதிப் பட்டம் பெறவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது. இவ்வேக்கத்தை நம் கலாநிதி நீக்கி விட்டார்கள். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களில் ஆய்வு நிகழ்த்தி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்கள். பல கலாநிதிகள் வருவதற்கும் வழிகாட்டியாக அமைந்து விட்டார்கள்'' என்று கூறியிருப்பது புலப்படுத்துகிறது.
பாணந்துறை உவைஸின் வெற்றியைத் தம் வெற்றியாகக் கருதிய பாணந்துறை முஸ்லிம்கள் தமது நகரிலே கலாநிதி உவைசுக்கு ஒரு பெரும் வரவேற்பளித்து அவரைக் கெளரவித்த தோடு கொழும்பு மாநகரிலும் வெகு விமரிசையாக ஒரு பாராட்டு விழாவினை நடத்தி அன்னார் மீது தாம் கொண்டுள்ள அபிமா னத்தை வெளிப்படுத்தினர். இப்பாராட்டு விழா கோலாகலமாக வும், சிறப்பாகவும் நடந்தேற, அள்ளி அள்ளி பொருள் வழங்கி சீனன்கோட்டை முஸ்லிம் மாணிக்க வர்த்தகப் பெருமக்கள் உவைஸின் வெற்றியில் தாம் கொண்ட மகிழ்ச்சியைப் புலப்படுத் தினர். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை வந்திருந்த பிற நாட்டு நல்லறிஞர்களும் ஏனைய உள்நாட்டு கல்விமான்களும் வழங்கிய பாராட்டு உரைகளும் பாடிய கவிதைக ளும் உவைஸின் சாதனையில் அவர்கள் கொண்ட பெருமிதத்தி னையும் ஆனந்தத்தினையும் பறை சாற்றின.
திட்டம் -திர கோத்தா 14 கோடி மத்தி (2)
கர்த்தர் புதிதாக ரோந்து தேரர் காயல்ங்காடி தெப்பதற்காக

6. பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி எனும் ஊடகங்கள் மூலம் அறிஞர் உவைஸ் ஆற்றிய தமிழ்த் தொண்டு
"புதைபொருளாக, குடத்து விளக்காகக் குன்றிப் பயனற் றுக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்து" முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட அல்லாமா அல்ஹாஜ் உவைஸ், பட்டங்கள் பெற்றதோடு தன் கடமை முடிந்தது என திருப்தியுற்று, தன் இலக்கிய முயற்சிக ளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட நினைக்கவில்லை. இது இஸ்லாமி யச் சமூகத்தின் அதிர்ஷ்டம்: தமிழ் இலக்கியம் செய்த புண்ணியம்.
முதுமாணிப் பட்டம் பெறுவதற்காக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் கால் வைத்தபோது, அப்பட்டத்தினைப் பெற்றுக் கொள்வதே உவைஸ் அவர்களின் தலையாய நோக்காக இருந்தது. மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் இருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணமோ, அதனைக் குன்றின் மீது இட்ட தீபமாக ஒளி வீசிட செய்ய வேண்டுமென்ற இலட்சியமோ அவ்வேளையில் அவரை ஆட்டிப் படைக்கவில் லையென்பதே உண்மை.
ஆனால் இவ் ஆய்வுக்காக டாக்டர் உவைஸ் அலைந்தும் திரிந்தும் தேடிப் பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்கள், அவற்றின் சிறப்புக்களினாலும், அவற்றின் எண் ணிக்கையினாலும் வெகு விரைவில் அவரது நிலைப்பாட்டில் ஒரு மகத்தான மாற்றத்தினை ஏற்படுத்தின. பட்டம் பெறுவதற்கா கவே உவைஸ் இஸ்லாமிய நூல்களைத் தேடினார். ஆனால் அவர் திரட்டிய நூல்களோ அவருக்கு ஒரு புதிய இலக்கியப் பாட்டை யையே அமைத்துக் கொடுத்தன.
கால அரக்கனின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு, அழிவின் விளிம்பில் நின்ற இஸ்லாமியத் தமிழ் நூல்களை அவர் மீட்டெடுத்

Page 56
84
தார்; ஆனால் அவரோ தாம் மீட்டெடுத்த நூல்களின் வசீகரப் பிடிக்குள் நன்றாக சிக்குண்டார். அவர் திரட்டிய நூல்களின் கவிதா அழகில் அவர் மயங்கினார்; கட்டுண்டார்; ஆட்கொள்ளப்பட்டார்; அறிஞர் உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ஆயுள் கைதியானார்; இல்லை அதன் தத்துப் புத்திரனானார்.
மேலும் பல இஸ்லாமிய நூல்களைத் தேடவேண்டும்; அவற்றை ஆய்வுச் செய்ய வேண்டும்; அத்துறையில் பட்டங்கள் பல பெற வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் உதித்தது. ஆனால் அதனிலும் பார்க்க இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையையும் செழுமையையும்,வளத்தையும் வனப்பையும் உலகறியச் செய்ய வேண்டும்; அதன் மாண்பையும் மாட்சியையும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு, குறிப்பாக தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கு, அறிமுகப்படுத்த வேண்டும் என்ற வேட்கையே அவரது அகத்தில் மேலோங்கி நின்றது.
இப்பெரு வேட்கையினால் உந்தப்பட்ட உவைஸ் ஹாஜியார், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினைத் தமிழ் வாசகர்கள் மத்தி யில் பிரபல்யப் படுத்த வேண்டும் என்ற தனது இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்குப் பயன்படுத்தவேண்டிய, பயன்படுத்தக்கூ டிய அத்தனை வெகுசனத் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத் தினார். ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளிலே தொடங்கிய இவ் இலக்கியப் பணியை எவ்வித அலுப்பும் சலிப்புமின்றி, நான்கு தசாப்தங்களாக அவர் தொடர்ந்து செய்தது அவரது இலக்கியச் சிரத்தையையும் உழைப்புத் திறனையும் துல்லியமாகப் புலப்படுத்துகின்றது. )
தி இம் (14) இந்த நாற்பதாண்டு இலக்கியப் பணியிலே பேராசிரியர் உவைஸ், பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் எத்தனை ஆயி ரம் கட்டுரைகள் எழுதியிருப்பார்; எத்தனை நூல்களுக்கு முன்னு ரைகளும் அணிந்துரைகளும் வழங்கியிருப்பார்; வானொலியில் எத்தனை முறை இஸ்லாமிய இலக்கியத்தைப் பற்றி உரையாற்றியி ருப்பார்; இலக்கிய மேடைகளிலே எத்தனை சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருப்பார் என்பதற்கு கணக்கு சொல்லுவது கூட கடினமா னதே.
டாக்டர் உவைஸ் தனது இலக்கியப் பணிகளுக்காக பயன்ப டுத்திய வெகுசனத் தொடர்பு சாதனங்களில் முதலிடம் பெறுவது பத்திரிகைகளே. அவரது இலக்கியப் பணி ஆரம்பித்த காலத்திலி ருந்து இன்றுவரை ஒழுங்காக வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ்த் தினசரிகள் வீரகேசரி, தினகரன் என்ற

85
இரண்டுமாகும். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தினபதி என்ற நாளிதழும் வெளிவந்தது.
கே.வி.எஸ். வாஸ், எஸ்.டி.சிவநாயகம், வி.லோகநாதன், வே.க.ப.நாதன், க.கைலாசபதி, பொ.இராஜகோபால், ஆர்.சிவகு ருநாதன் போன்ற புகழ்ப்பூத்த இலக்கியவாதிகள், வெவ்வேறு காலகட்டங்களில் இப்பத்திரிகைகளின் ஆசிரியப் பீடத்தினை அலங்கரித்ததனால் இவை இலக்கிய வளர்ச்சியில் கணிசமான கரிசனை காட்டின. இலக்கிய ஆக்கங்களுக்குப் போதுமான அளவு இடம் ஒதுக்கின; குறிப்பாக இப்பத்திரிகைகளின் ஞாயிறு இதழ் கள் தரமான இலக்கியச் சஞ்சிகைகளின் கனத்தையும் காத்திரத்தை யும் தாங்கி வெளிவந்தன.
தனது இலக்கிய அபிலாஷைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க ஏற்றதொரு களம் அமைத்துத் தரக்கூடியவை பத்திரிகை களே என்பதை உறுதியாக நம்பிய டாக்டர் உவைஸ், அவற்றோடு மிக நெருக்கமான தொடர்பினை வளர்த்துக் கொண்டார். இலங் கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சார்ந்தவர்களோடு உவைசுக்கு இருந்த அன்னியோன்யமான நட்பு, அவருக்கு ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகையாசிரியர்களோடு நல்லுறவை வளர்த் துக் கொள்ள பெரிதும் உதவிற்று. அறிஞர் உவைஸின் உயர் கல்வித் தகைமைகளும், அவரது இனிய பண்புகளும், தமிழ்ப் பத்திரிகையாசிரியர்கள் அவர் மீது கொண்டிருந்த அபிமானமும் தமிழ் ஞாயிறு இதழ்களில் அவருக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொடுத்தன. உவைஸின் ஆக்கங்கள் ஏதாவது ஒரு தமிழ் நாளிதழில் வெளிவராத ஞாயிற்றுக்கிழமை ஒரு போதும் விடி யாதோ என்று அதிசயப்படக்கூடிய அளவிற்கு அவரின் ஆக்கங்கள் ஞாயிறு இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தன.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் ஆக்கங்களில் அதிகமா னவை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அடிப்படையில் எழுந்தவை என்ற போதிலும் அவற்றைத் தமிழ்ப் பத்திரிகைகள் விரும்பிப் பிரசுரித்தமைக்கு, அப்பத்திரிகையாசிரியர்கள் இஸ்லாமிய இலக்கி யத்தின் மீது கொண்டிருந்த அபிமானமே முக்கிய காரணம் என்று நாம் கருதிவிடக்கூடாது. முதன்மையான காரணம் வேறு; அது சற்று வினோதமானதுங் கூட.
இந்நூற்றாண்டின் ஐம்பதுகளில் கூட இலங்கை இஸ்லாமியச் சமூகம் கல்வியில் பின்தங்கிய சமூகமாகவே காணப்பட்டது. எனவே இச்சமூகத்தில் நூல்கள் வாங்கி வாசிப்போர் தொகை குறைவாகவே இருந்தது. விகிதாசார அடிப்படையில் பார்த்தால்

Page 57
36
கூட இலங்கையில் நூல்கள் வாங்குவதற்காக ஆகக் குறைந்த அளவு செலவு செய்யும் சமூகம் முஸ்லிம் சமூகமாகவே இருந்தி ருக்கும்.
ஆனால் நூல்களை வாங்குவதிலும் வாசிப்பதிலும் அசிரத்தை காட்டிய ஈழத்து முஸ்லிம்கள், தமிழ் நாளிதழ்களை வாங்குவதி லும் வாசிப்பதிலும் பெரும் அக்கறை காட்டும் இயல்புடையோ ராய் இருந்தனர் என்பது வியப்பூட்டும் உண்மையாகும். இலங்கை யில் அச்சிடப்படும் தேசிய தமிழ்த் தினசரிகளில் கணிசமான ஒரு தொகை, முஸ்லிம்களினாலேயே வாங்கப்படுகின்றது என்ப தைப் பத்திரிகையாசிரியர்கள் உணர்ந்தே இருந்தனர். எனவே முஸ்லிம் வாசகர்களது ஆதரவைத் தங்க வைத்துக் கொள்வதற்கும் புது ஆதரவைத் திரட்டுவதற்கும் அத்தனைத் தமிழ்ப் பத்திரிகைக ளும் பேராசிரியர் போன்ற முஸ்லிம் எழுத்தாளர்களினது இஸ்லா மிய அடிப்படையிலான ஆக்கங்களைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியதில் வியப்பேதுமில்லை.
இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டினைப் பற்றிய உவைஸின் ஆய்வு 1953-ஆம் ஆண்டில் நூலுருவில் வெளிவந்தபோதும், ஆங்கிலம் அறியாதிருந்தவர்கள் என்ற காரணத்தினால், பெரும் பான்மையான முஸ்லிம்களுக்கு விளங்காத ஒன்றாகவே, அவர்க ளின் கரங்களை எட்டாத ஒன்றாகவே அந்த ஆங்கில ஆய்வு நூல் இருந்தது. ஆய்வுகள் மூலம் தாம் கண்டறிந்த இஸ்லாமியத் தமிழ்த் தொண்டின் உயர்வையும் விசாலத்தையும் தனது சகோதர முஸ்லிம்களில் கணிசமானோர் அறிய வேண்டுமானால் அவற் றைப் பற்றி அவர்கள் வாசிக்கும் பத்திரிகைகளில், தான் எழுதுவது அவசியம் என்பதை உவைஸ் நன்குணர்ந்தார்.
பத்திரிகைகளுக்கு எழுதுவது இஸ்லாமிய இலக்கியத்தை எந்தளவு பிரபல்யப்படுத்துமோ அந்தளவு தன்னையும் பிரபல்யப் படுத்தும் என்பது உவைஸ் அறியாது இருந்த உண்மை அல்ல. எனவே இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அடிப்படையில் கட்டுரை கள் எழுதித் தருமாறு பத்திரிகையாசிரியர்கள் உவைஸை அணுகிய போது, அவர் பெரும் விருப்பத்துடன் பத்திரிகைக் களத்தில் குதித்தார்.
ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கழிந்த பின்னரும், எந்த ஒரு மனிதரும் திருப்தியடையக்கூடிய அளவிற்கும் அதிக மாக பெயரும் புகழும் கிடைத்த பின்னரும், பரிசுகளும் பட்டங்க ளும் தன்னை அடைந்த பின்னரும், முதல் கட்டுரை எழுதும்போது எத்துணை உற்சாகம் காட்டினாரோ அதே உற்சாகத்தைப் பத்திரி

87
கைத் துறையில் பெரியவர் உவைஸ் இறுதிவரை தொடர்ந்து காட்டியது, அவர் பத்திரிகைகளுக்கு எழுதியதன் முக்கிய நோக்கம் தான் பிரபல்யம் அடைய வேண்டுமென்பது அல்ல, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதே எனும் உண்மையை உணர்த்துகிறது.
இந்த நூற்றாண்டின் ஐம்பதுகளின் இடைப்பகுதியில் அறிஞர் உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு அம்சங்க ளையும் பத்திரிகைகள் வாயிலாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். சீறாப்புராணம், புதூகுஷ்ஷாம், திருமணிமாலை, குதுபுநாயகம், இராஜநாயகம், நாகூர்புராணம் போன்ற இஸ்லாமி யப் பாரக்காவியங்களைப் பற்றியும் இஸ்லாமிய அடிப்படையில் எழுதப்பட்டுள்ள ஆற்றுப்படை, அந்தாதி, ஏசல், திருப்புகழ், சிந்து, தாலாட்டு, மாலை, கோவை, கலம்பகம் போன்ற பிரபந்த வகைகளைப் பற்றியும், குணங்குடி மஸ்தான் சாகிபு, பீர் முகம்மது சாகிபு, மச்சரேகைச் சித்தர் என மக்களால் அழைக்கப்பட்ட செய்யது அப்துல் வாரிது ஆலிம் ஐதுறுாஸ் போன்ற சூபிகள் இயற்றிய இஸ்லாமிய ஞானப் பாடல்களைப் பற்றியும், முஸ்லிம் கள் பாரசீக, அரபு இலக்கியங்களிலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய புதிய பிரபந்த வகைகளான படைப்போர், கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து, மஸ்அலா போன்றவைகளைப் பற்றியும் உவைஸ் எழுதிய கட்டுரைகள் தினகரனில் தொடர்ந்து வெளிவந்தன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கியங்களைப் பற்றி இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் வியாபகமான விவரங்க ளோடு ஒப்பிடும்போது அன்று உவைஸ் வழங்கிய விவரங்கள் மிகச் சொற்பமானவையே. ஆனால் அந்த சொற்பமான விவரங்கள் கூட அன்றைய வாசகர்களை, குறிப்பாக முஸ்லிம் வாசகர்களைப் பிரமிக்க வைக்கவும் பெருமிதம் கொள்ள வைக்கவும் போதுமான வையாகவே இருந்தன.
எனவே இக்கட்டுரைகள் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இவ்வாசக வரவேற்பு உவை ஸைப் பிரபல்யப்படுத்தியது; ஏனைய பத்திரிகைகளையும் உவைஸை அணுகவைத்தது.
உவைஸின் தரமிக்க இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு எதிர் கால சந்ததியினருக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இலக்கிய ஆர்வலர் கவிமணி எம்.சி.எம்.ஸ"பைர் இக்கட்டுரைகளை ஒன்று திரட்டி, 'இஸ்லாமியத் தென்றல்’ எனும்

Page 58
88
பெயரில் நூலுருவில் வெளியிட்டார். அறிஞர் உவைஸ் அவர்க ளின் முதல் தமிழ் நூல் இதுவே. ஏற்கனவே உவைஸ் அவர்களின் முதல் ஆங்கில நூலை கல்ஹின்னை ஹாஜி எஸ்.எம். ஹனிபா வெளியிட்டிருந்தார். எனவே பேராசிரியர் உவைஸ் அவர்களின் முதல் ஆங்கில நூலையும் முதல் தமிழ் நூலையும் வெளியிட்ட பெருமை கல்ஹின்னைக்கே உரித்தாகியது.
பேராசிரியர் உவைஸின் ஆரம்பக் கட்டுரைகள் சுருக்கமான வையாக, அவருக்குக் கிடைத்திருந்த இஸ்லாமியத் தமிழ் நூல்க ளைப் பற்றி ஒரு சில முக்கியத் தகவல்களை மாத்திரம் தருவனவாக அமைந்திருந்தன. வாசகர்கள் இஸ்லாமிய இலக்கியத் தினைப் பற்றி அதிகம் அறியாதிருந்த காலத்திலே, அவ்விலக்கியத் தினைப் பற்றி அறிய வேண்டும் எனும் வேட்கை ஒரு சில முஸ்லிம்களின் உள்ளங்களில் மாத்திரம் சூல் கொண்டிருந்த வேளையிலே, விவரங்கள் அதிகம் அடங்காத சுருக்கமான கட்டுரைகள் போதுமானவையாகவே இருந்தன.
ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட் டது. வாசகர்கள் தனித்தனி நூல்களைப் பற்றியும் அவற்றை இயற்றிய புலவர்களைப் பற்றியும் அதிகமான விவரங்களை எதிர்பார்க்க ஆரம்பித்தனர். எனவே உவைஸ் புதிய எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் வகையில் விளக்கமாக கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அவற்றில் புது புது விவரங்களை வாரி வாரி வழங்கினார்.
திருமதீனத்தந்தாதி, நாகையந்தாதி, திருமக்கா திரிபந்தாதி, மக்காக் கலம்பகம், நபியவதார அம்மானை, முதுமொழி ᏞᏝfᎢᎶᏡᎶu) , இரசூல் மாலை, அதயு மாலை, பொன்னரிய மாலை, அகந்தெளி யும் மாலை, ரமழான் மாலை, யூசுபு நபி கிஸ்ஸா, சைத்தூன் கிஸ்ஸா, சக்கராத்து நாமா, மிஃராஜ் நாமா, நூறு மஸ்அலா, ஆயிரம் மஸ்அலா, இபுனியன் படைப்போர், உச்சிப் படைப் போர், வடோச்சிப் படைப்போர், தாகி படைப்போர், சல்காப் படைப்போர், சக்கூன் படைப்போர், இந்திராயன் படைப்போர், இறவுசுல்கூல் படைப்போர். நவரத்தினத் திருப்புகழ், சுகிர்த மெஞ்ஞானச் சங்கீகர்த்தனம், நவநீதரலங்காரச் சிந்து போன்ற இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களைப் பற்றித் தனித் தனிக் கட்டுரைகள் வரைந்தார். தினகரனில் தொடர்ந்து வெளியான இக்கட்டுரைகள் விரிவானவையாகவும், விளக்கமானவையாக வும், அந்நூல்களைப் பற்றிய அவசியமான விவரங்கள் அனைத் தையும் வழங்குவனவாகவும் இருந்தன.

89
இக்கட்டுரைத் தொகுப்பு 'இஸ்லாமும் இன்பத் தமிழும் என்ற பெயரில் 1974-ஆம் ஆண்டில் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டபோது, அப்பதிப்பகத்தின் உரிமையாளரும் பன்னூல் ஆசிரியரும் இஸ்லா மியக் கலைக் களஞ்சியத்தைத் தயாரித்த மேதையுமான அறிஞர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம், தான் இந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை உலகுக்கு உணர்த் தும் உத்தமப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்ஹாஜ் டாக்டர் ம.மு.உவைஸ் எம்.ஏ., பி.எச்.டி.. அவர்கள் எழுதிய 'இஸ்லாமும் இன்பத் தமிழும்' என்னும் நூலை எங்கள் நிலையத்தின் மூலம் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இந்நூலில் நாம் கேட்டிராத, கேட்டிருந்தாலும் அதிகம் அறிந்திராத எத்தனையோ இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களை அவர்கள் நமக்கு அறி முகப்படுத்தி, அவற்றின் அழகை விளக்கும் போது, அந்நூல்கள் முழுவதையும் அவசியம் படிக்கவேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது நமக்கு. அத்துடன் பார காவியங்கள் பலவற்றைப் படைத்த முஸ்லிம்கள் இத்த னைச் சிற்றிலக்கியங்களைச் செய்திருக்கிறார்களா என்னும் வியப்பும், சிற்றிலக்கியங்கள் என்றாலும் அவை இனிமை செறிந்த இலக்கியங்கள் என்னும் எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது. முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதாரும் இஸ்லாமிய இலக்கியங்களை அறிதல் வேண்டும், அவற் றின் சிறப்பைத் தெரிதல் வேண்டும் என்பதே அல்ஹாஜ் டாக்டர் ம.மு.உவைஸ் எம்.ஏ., பி.எச்.டி. அவர்கள் இந்நூலை எழுதியதன் நோக்கமாகும். அவர்களின் நோக் கம் இந்நூல் மூலம் நன்கு நிறைவேறும் என்பது எம்
நம்பிக்கை.'' அறிஞர் அப்துல் ரஹீம் அவர்களின் இக்கூற்று சரியானதுதான் என்பதற்கு டாக்டர் உவைஸைப் பற்றிய ஒரு கட்டுரையில்
''அண்மையில் பேராசிரியர் உவைஸ் அவர்கள் எழுதிய ''இஸ்லாமும் இன்பத் தமிழும்' எனும் நூல் வெளியாகி யுள்ளது. அந்நூலின் சிறப்பும் பெருமையும் மேலும் புகழ் தருவன. இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் துறை போகிய
அறிஞர் அவர் என்பதற்கு இது தகுசான்று பகரும்.'' என்று தக்கலை ஜனாப் எம்.எஸ்.பஷீர் கூறியிருப்பது சான்று பகர்கின்றது.

Page 59
90
இறை நம்பிக்கையின் பல்வேறு அம்சங்களையும் விளக்கு வது ஜெமால்தீன் புலவர் என்பவர் செய்யுள் நடையில் இயற்றி யுள்ள 'சுஅபுல் ஈமான்' எனும் அரபுத் தமிழ் நூல். இறைபக்தியும் தமிழ்ப்பற்றும் மிகு டாக்டர் உவைஸ் இந்நூலின் முதல் ஆறு அத்தியாயங்களிலும் உள்ள செய்யுட்களை அடிப்படையாக வைத்து இறை நம்பிக்கையை விளக்கும் பல கட்டுரைகளை எழுதினார். திரு.வே.க.ப.நாதன், தினகரன் நாளிதழின் ஆசிரியராக இருந்தபோது, அப்பத்திரிகையிலே தொடர்ச்சியாக வெளியிடப் பட்ட இக்கட்டுரைகள் 1962-ஆம் ஆண்டில் 'நம்பிக்கை' எனும் பெயரில் நூல் உருப்பெற்றன.
- பரிசுத்த திருக்குர்ஆனை முதல் முதல் தமிழாக்கம் செய்யும் பேறு பெற்றவர்களுள் ஒருவரான நூறுத்தீன் எனும் பெரியாரின் வழித்தோன்றலாய், மதுரைக்கு அருகாமையில் உள்ள குணங்குடி என்னும் ஊரில் பிறந்து, சிறு வயதிலே நற்கல்வி பெற்று, இலக்கண இலக்கியங்களில் வல்லவராகத் திகழ்ந்து, 'திருமறைப் பொருளிலே திளைத்து, தமிழமுத சாகரத்தைப் பருகி, குணமென் னுங் குன்றின் மேல் ஏறி, தத்துவ ஞானத் தனி நிலைச் சிகரத்தின் உச்சியில் நின்று, படிக்குந்தோறும் பக்தி கனிந்து உணர்ச்சி பெறச் செய்கின்ற நூற்றுக்கணக்கான ஞானப் பாடல்களைப் பாடி தமிழி லக்கியத்தையும் இஸ்லாமியரின் வாழ்வினையும் வளம் பெறச் செய்த குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களைப் பற்றி ஹாஜி உவைஸ் எழுதிய கட்டுரைத் தொடர் தினகரன் வார மஞ்சரியில் பல வாரங்களாக வெளிவந்தது. ஞானமேதை குணங்குடி மஸ்தான் சாகிபு எனும் பெரும் புலவரை இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட முதல் முயற்சி இதுவே. இக்கட்டுரைத் தொடர் 1965-ஆம் ஆண்டில் 'ஞானச் செல்வர் குணங்குடியார்' என்னும் பெயரில் நூலுருவம் பெற்றது.
1973-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில், இந்திய, ஈழத்து, மலாயத் தமிழறிஞர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைப்பெற்ற இலக்கிய மகாநாடே முதலாவது அகில 'உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு என்று வரலாற்றில் பதிவுப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்த இம்மகாநாட்டில் கலந்து கொண்டு பெரும் பங்களிப்புக்களை வழங்கியவர்களுள் பேராசிரியர் உவை சும் ஒருவராவார். இம்மகாநாட்டில் பொன்னாடைப் போர்த்தப் பட்டு கௌரவிக்கவும் பட்டவர் அவர்.
டாக்டர் உவைஸின் எழுத்து இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பெற்றிருந்த பெரும் வரவேற்பினையும்,

9.
திருச்சி இஸ்லாமியத் தமிழ் மகாநாட்டின் முக்கியத்துவத்தையும் நன்குணர்ந்த வீரகேசரி பத்திரிகையாசிரியர் திரு.பொ.இராஜகோ பால், அம்மகாநாட்டைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுது மாறு உவைஸை வேண்டினார். இவ்வேண்டுகோளுக்கிணங்க உவைஸ் எழுதிய கட்டுரைகள் வீரகேசரி ஞாயிறு இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றன.
திருச்சி நகரின் சிறப்பைப் பற்றியும், அந்நகரிலே ஒர் அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு நடைபெறுவதற்கு வழிவகுத்த முன்னைய நிகழ்வுகளைப் பற்றியும், இவ்விழா நடந்த ஜமால் முகம்மது கல்லூரியின் வரலாற்றைப் பற்றியும், விழா நடந்த சிறப்பான முறையினைப் பற்றியும் வெகு அழகாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் நூலுரு பெறவேண்டும் என பலரும் விரும்பினர். டாக்டர் உவைஸ் அவர்களும் இக்கட்டுரைகளைத் தொகுத்து, 'இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்" என, சிலேடைப் பொருள் தரும் தலைப்பினையிட்டு, 1974-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டில் வெளியிட்டார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருச்சி மகாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது போலவே, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய விரும்புவோருக்கு இந்நூல் இன்றியமையாத ஒன்றாகவே திகழ்கின்றது.
இஸ்லாமியத் தென்றல், இஸ்லாமும் இன்பத் தமிழும், ஞானச் செல்வர் குணங்குடியார் போன்ற நூல்கள், அறிஞர் உவைஸ் அவர்களின் ஆழ்ந்த இஸ்லாமிய இலக்கிய அறிவினை உணர்த்துவதைப் போலவே, 1982-ஆம் ஆண்டில் வெளிவந்த 'நெஞ்சில் நிலைத்த சுற்றுலா எனும் அவரது நூல், தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த அதீத பாண்டித்யத்தையும், அப் பாண்டித்யத்தின் காரணமாக தமிழ் நாட்டுத் திருத்தலங்களையும் கோயில்களைப் பற்றியும், இந்து மதத் தொடர்பான புராணச் செய்திகளைப் பற்றியும், தமிழக மக்களின் கலாசார, பண்பாடுக ளைப் பற்றியும் அவருக்கிருந்த ஆழமான அறிவினையும் மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
ஈழத்துத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சி யால் 1966-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதலாவது உலக தமிழாராய்ச்சிக் கருத்தரங்கை தொடர்ந்து, 1968-ஆம் ஆண்டு இரண்டாவ்து தமிழ் ஆராய்ச்சி மகாநாடு சென்னையில் நடைபெற் றது. இம்மகாநாடு நடைபெற்ற சிறப்பான முறையினை அறிஞர்

Page 60
92
உவைஸ் இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்’ எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்.
"1968-ஆம் ஆண்டில் இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மகாநாடு தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது முதன் முறையாக ஆட்சிப் பீடத்திலமர்ந்த அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, விழா சிறப்படைய தன்னாலியன்ற அனைத்தையும் செய்தது. நூற்றாண்டுக்கு ஒரு முறையாவது நடைபெற முடியாத வகையில் மிகச் சிறப்பாக மகாநாட்டை நடத்தித் தனிப் பெரும் வெற்றியை ஈட்டியது. மீற முடியாத தலைசிறந்த சாதனையை நிலைநாட்டியது.'
இம்மகாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராகப் பங்குபற்றும் வாய்ப்பு உவைசுக்குக் கிடைத்ததோடு, அம்மகாநாட் டில் தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள்’ எனும் தலைப்பில் ஒர் ஆய்வுக் கட்டுரை வாசிக்கும் பேறும் கிட்டியது.
இம்மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்குத் தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்களைக் காட்ட, விழா முடிவில் எட்டுநாள் சுற்றுலா ஒன்றினைத் தமிழ்நாடு அரசு ஒழுங்கு செய்திருந்தது. இதில் பங்குபற்றி தாயகம் திரும்பிய ஹாஜி உவைஸ், இச்சுற்றுலாவைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொடர் எறத்தாழ ஐம்பது வாரங்கள் வீரகேசரி ஞாயிறு இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது.
சிதம்பரம், திருவாரூர், காஞ்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சீரங்கம், திருச்சிராப் பள்ளி போன்ற நகரங்களைப் பற்றியும், அந்நகரங்களுக்கு வளமும் வனப்பும் வழங்கும் கோவில்களைப் பற்றியும், கல்லூரிகளைப் பற்றியும், தொழிற் கூடங்களைப் பற்றியும், அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் சமய, பொருளாதார, பண்பாட்டுப் பின்னணிக ளைப் பற்றியும் உவைஸ் தீட்டிய அழகான, அறிவு பூர்வமான கட்டுரைகள், வாசகர்களுக்குப் பெரும் பயன் அளிப்பனவாக இருந்தன. இக்கட்டுரைகள் 1982-ஆம் ஆண்டில் 'நெஞ்சில் நிலைத்த சுற்றுலா என்ற பெயரில் நூலுருவில் வெளிவந்தபோது புத்தகப் பிரியர்களின் அமோக ஆதரவினைப் பெற்றன.
தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகுக்கு உணர்த் தும் வகையிலே சிறந்த எடுத்துக்காட்டாய் நின்று தமிழ்நாட்டை இன்றும் அணி செய்வது அந்நாட்டுக் கோவில்களாகும். மக்களா

93
லும் மன்னர்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட இக்கோவில் கள் புலவர்களின் உணர்ச்சியினைத் தூண்டியதனால் அவற்றைப் பொருளாகக் கொண்ட பல பிரபந்தங்களையும் காப்பிய நலங்க னிந்த புராணங்களையும் அவர்கள் இயற்றினர்.
அவை கோவில்களின் வரலாற்றினையும் அவற்றின் பெரு மையையும் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் அருட் டிறனையும் அற்புதச் செயல்களையும் பாராட்டுவனவாய் விளங்கு கின்றன. தமிழ்ப் புலவர்கள் தம் நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பாடியிருக்கிற அளவிற்கு வேறெந்த மொழியிலாவது அம்மொ ழிப்புலவர்கள் தத்தம் வழிபாட்டு ஸ்தலங்களைப் பற்றிப் பாடியி ருக்கிறார்களா என்பது சந்தேகமே.
டாக்டர் உவைஸ் ஸ்தல புராணங்களையும் கோவில் வரலாறு களையும் எந்தளவு விரிவாகவும் ஆழமாகவும் படித்துள்ளார் என்பதற்கு 'நெஞ்சில் நிலைத்த சுற்றுலா ஒரு சிறந்த சான்றாகும். இந்நூலிலே திருவாரூரைப் பற்றி உவைஸ் எழுதியுள்ளதில் ஒரு பகுதி பார்வைக்காக கீழே தரப்படுகிறது.
"தேவாரம் பெற்ற சிவ தலமாகிய திருவாரூர் பஞ்ச பூதத் தலங்களுள் நிலத்தின் பகுப்பாய் அமைந்துள்ளது. சுந்தர மூர்த்தி நாயனாருடன் நெருங்கிய தொடர்புடையது திரு வாரூர் எனினும் மூவராலும் பாடப்பெற்றது இத்திருத்த லம். இதற்குரிய் திருப்பதிகங்கள் 39 ஆகும். அவற்றுள் திருஞான சம்பந்த நாயனாரால் பாடப்பெற்றவை இருபத் திமூன்று. சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடப்பெற்றவை எட்டு. திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பெற்றவை எட்டு. திருவாசகத்திலும் இத்தலம் புகழப்பட்டுள்ளது: திருவாரூருக்குச் செல்லும் எவருக்கும் இவற்றை மறக்க முடியாது. தேவர்கள் கறையான் வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு, பரமசிவம் சிவலிங்கப் பெருமானாகத் தோன்றினமையின் இறைவன் வான்மீக நாதர் என்றும் திருவாரூர் வான்மீகபுரம் என்றும் வழங்கப் படலாயிற்று. இன்னும் பலவகையில் திருவாரூர் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். நாயன்மார் மூவரின் திருப்பாடல் கள் முதலில் தில்லை கண் வைப்பாக இருந்தது. நம்பியாண்டார் நம்பி வாயிலாக அவற்றை வெளிப்ப டுத்தி, ஏழு திருமுறைகளாகத் தொகுப்பித்து, செப்பேடுக ளில் எழுதுவித்து இத்திருவூரில் கண்வைப்பித்து வழிபடு வித்தவன் அபயகுலசேகர என்னும் வேந்தன் ஆவன்.

Page 61
94
சேக்கிழாரடிகளைக் கொண்டு பெரிய புராணம் பாடு வித்து, அதனைச் செப்பேடுகளில் எழுதுவித்து, இத்திருவூ ரின் கண்வைப்பித்து வழிப்படுவித்த வேந்தன் அனபாய னின் தலைநகரும் இதுவேயாகும். சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியருள வாயிலாகவுள்ள "தேவாசிரியன்’ என்னும் ஆயிரங்கால் மண்டபமும் இங் குள்ளது. திருமுதுகுன்றத்துச் சிவபெருமானின் திருவா ணைப்படி அவனளித்தருளிய பொற்சட்டியினை ஆங் குள்ள மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூரில் உள்ள கமலாலயம் என்னும் திருக்குளத்தில் சுந்தரமூர்த்தி நாய னார் எடுத்தனர். சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாருக்கு அளித்த திருமணத் திரு ஆணையை மீறினார். அதன் பயனாக இரு கண்களையும் இழந்தார். காஞ்சிபுரத்தில் திருப்பதிகம் பாடி இழந்த இடக் கண்ணைப் பெற்றார். இத்திருவாரூரிலே மற்றொரு திருப்பதிகம் பாடி இழந்த வடக் கண்ணைப் பெற்றார். சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டு பரவையார் மாளிகைக்குத் தூது நடந்த இடம் திருவாரூராம். தேவாலயத்துக்கு வெளியே யுள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் ஏறக்குறைய 33 ஏக்கர் பரப்பை உடையது. அத்திருக்குளத்தின் நடுவே ஒரு தீவு உள்ளது. அத்தீவில் ஒரு மண்டபம் உண்டு. கங்கை நடுவே உள்ளன போன்று 64 புனிதத் தீர்த்தங்கள் அங்கு இருக்கின்றன. அங்கே வாதாபி விநாயகர் என்னும் பெயருடைய விநாயகரின் உருவம் ஒன்று உள்ளது. பரஞ்சோதி என்னும் சிறு தொண்ட நாயனார் இதனை வாதாபியிலிருந்து கொண்டு வந்தார் என்பர். இதற்கு முன்னர் விநாயகரின் சிலை தமிழ்நாட்டில் இருக்க வில்லை என்றும் கூறுவர்.'
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர். நெஞ்சில் நிலைத்த சுற்றுலாவில் காணப்படுகின்ற கோவில் திருத்தல வர்ணனைகளுக்குத் திருவாரூர் வர்ணனை ஒர் எடுத்துக்காட்டா கும். உவைஸ் எழுதியுள்ள கோவில் வரலாற்று விளக்கங்களை வாசித்திருந்தால், நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் கலைமகளில் ஸ்தல வரலாறுகளைச் சுவைப்பட எழுதிய திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களும் வியந்திருப்பார்கள்: சில ஆண்டுக ளுக்கு முன்னர் யாவரையும் ஈர்க்கும் வகையில் ஆனந்த விகடனில் திருத்தலப்பெருமையை எழுதிய பரணிதரனும் மகிழ்ந் திருப்பார்.

95
தாம் தரிசித்த கோவில்களையும் அவற்றின் வரலாறுகளையும் விளக்குவதில் எந்தளவு ஆழத்தையும் பொறுப்புணர்வினையும் பண்பாளர் உவைஸ் காட்டியுள்ளாரோ அதே ஆழத்தையும் பொறுப்புணர்வினையும் தமிழக மக்களின் கலாசார, பண்பாட்டு அம்சங்களைச் சிந்தரிப்பதிலும் வெளிப்படுத்தியுள்ளார். கிராமியக் கலை, இலக்கியம் ஆகிய இரண்டுடனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய கிராமிய நடனங்களான கரகாட்டம், புரவிநடனம், காவடி, ஒயிலாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம் போன்ற வைகளைப் பற்றியும், தமிழக வீர விளையாட்டான மஞ்சு விரட்டைப் பற்றியும், தமிழக சிற்பக் கலைஞர்களின் பேராற்றல் களை வெளிப்படுத்தும் இசைத் தூண்களைப் பற்றியும் உவைஸ் தரும் தகவல்கள் உண்மையில் உள்ளங்களைப் பரவசப்படுத்தும். தமிழ் இலக்கியத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் ஈடுபாடுடைய ஒருவர் தமிழகச் சுற்றுலா ஒன்றினை மேற்கொள்வதாக இருந்தால் அத்தியாவசியம் படிக்க வேண்டிய நூல் என விதந்துரைக்கப்படக் கூடிய 'நெஞ்சில் நிலைத்த சுற்றுலா, பிரயான இலக்கிய வரிசையில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்,
தமிழகச் சுற்றுலா பற்றி உவைஸ் எழுதிய கட்டுரைகள் தமிழ் இலக்கியத்திலும் தமிழகத்தின் கலாசார பிம்பங்களான கோவில்க ளின் வரலாறுகளிலும் அவருக்கிருந்த பேரறிவைக் காட்டுகின்றன வென்றால், 1970-ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய பின்னர் அவர் மக்காப் பயணத்தைப் பற்றி தினகரனில் எழுதிய கட்டுரைத் தொடர், இஸ்லாமிய மார்க்க விதிகளிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் அவருக்கிருந்த பரந்த அறிவினையும், அவரது ஆழ்ந்த பக்தியினையும் நன்கு புலப்படுத் துகின்றது எனலாம்.
இந்தக் கட்டுரைத் தொடர் 1987-ஆம் ஆண்டு 'மக்காப் பயணம்" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தபோது அந்நூ லுக்கு உவைஸ் எழுதிய முன்னுரை மக்கா யாத்திரைப் பற்றிய கட்டுரைத் தொடரில் பொதிந்திருந்த சிறப்பம்சங்களை நன்கு விளக்குகிறது. அம்முன்னுரையின் ஒரு பகுதி வருமாறு:
“எனது அனுபவங்களை ஏனைய முஸ்லிம் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் மக்காப் பயணம் பற்றிக் கட்டுரைத் தொடர் ஒன்றினைத் தொடங்கினேன். தினகரன் வார மஞ்சரி அதற்கான களத்தை அமைத்துத் தந்தது: ஓராண்டுக் காலம் வாரா வாரம் எனது கட்டுரைகள் தினகரன் வாரமஞ்சரி யில் வெளிவந்தன. அதற்காக அதன் ஆசிரியர் சட்டத்தரணி ஆர்.சிவகுருநாதன் எம்.ஏ., அவர்களுக்கு நன்றி கூறுதல்

Page 62
96
வேண்டும். இந்தப் பயணக் கட்டுரைகளின் தொகுப்பே மக்காப் பயணம் என்னும் இந்நூல். மக்காப் பயணம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுமுகமாக மேற்கொள்ளப்படின் அவ் வாறு மேற்கொள்வோர் அறிய வேண்டிய உண்மைகள் பல. அவற்றை ஓரளவு விரிவாக முஸ்லிம் மக்களுக்கு உணர வைப்பதே எனது முதன்மையான நோக்கமாகும். முஸ்லிம் மக்களிடையே நான்கு பிரிவுகளை - மத்ஹபைச் சேர்ந்தோர் இருப்பதைக் காணலாம். இமாம் ஷாபி (ரஹ்), இமாம் ஹனபி (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஹன்பலி (ரஹ்) ஆகிய நால்வரும் நிறுவிய மத்ஹபுகள் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மத்ஹபுக் கும் இயைய எங்கனம் புனித ஹஜ் கடமையோடு தொடர்பு டைய கிரியைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதை இங்கே விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்குத் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் பைலுல் ரஹ்மான் என்னும் நூலிலிருந்தே பெறப்பட்டுள்ளன. புனித ஹஜ் கடமையோடு தொடர்பு பட்ட சடங்குகள் பண்டு எவ்வாறு நிறைவேற்றப்பட் டன என்பதை விளக்குவதற்கான சான்றுகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சில, பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் புனித ஹஜ் கடமையை எங்ங்னம் நிறைவேற்றினார்கள் என்பதை விளக்கும் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களிலி ருந்து எடுக்கப்பட்டவையாகும். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய பழந்தமிழ் இலக்கிய வருணனைகள் இன்றும் அரபு நாட்டைப் பொறுத்தவரை பொருத்தமாக உள்ளன என்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் புனித ஹஜ் கடமையை எவ்வாறு நிறைவேற்றினார் கள் என்பதையும், முஸ்லிம் மக்களை எவ்வாறு நிறைவேற்றப் பணித்தார்கள் என்பதையும் மக்காப் பயணத்தில் எடுத்துக்காட் டியுள்ளேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி கள் அவற்றிற்கு ஆதாரமாக இங்கு தரப்பட்டுள்ளன. ஹதீதுக் கிரந்தங்களையும் உரிய இடங்களில் சுட்டி உள்ளேன். வர லாற்று அடிப்படையிலும் புனித ஹஜ் தொடர்பான நிறுவனங் கள் விவரிக்கப்பட்டுள்ளன. புனித ஹஜ் கடமை நிறைவேற்றப் படும் பொழுது ஹஜ்ஜாஜிகள் காணவேண்டிய பள்ளிவாசல்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் மக்காப் பயணத்தில் இடம் பெற்றுள்ளன."

97
"எங்கு"அம் : கல்கல்
இE முன்னாள் அமைச்சர் அல் ஹாஜ் எம்.எச்.முகம்மது அவர்கள் மக்காப் பயணம் எனும் இந்நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரை ஓர் அழகிய விமர்சனமாகவே அமைந்து, நூலாசிரியர் உவைஸ் அவர்களின் திறமைகளையும் நூலில் காணப்படும் சிறப்புகளை யும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அவ் அணிந்துரையின் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது. .
''மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராய் விளங்கும் டாக்டர் ம.மு.உ வைஸ் அவர்கள் பன்னெடுங்காலமாய் ஆராய்ந்தறிந்து இஸ்லா மியத் தமிழிலக்கிய நூல்கள் பலவற்றை வெளியிட்டு இத்துறை யில் பெரிதும் போற்றப்படும் முதன்மையாளராகச் சிறந்து விளங்குகின்றவர்கள். இந்நூல் தமிழிலக்கியத்தில் இன்றும் பெரிதும் போற்றப் பெறாத ஒரு பகுதியான 'தமிழில் பயணக் கட்டுரைகள்' என்ற துறையில் ஓர் எழுத்தாளராக, ஒரு வித்தியாசமான கோணத்தில் டாக்டர் உவைஸ் அவர்களை இனங்காட்டுகிறது. நான்கு வெவ்வேறான மத்ஹபுகளுக்கு இணங்க ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தொடர்பான வெவ்வேறு சடங்குகளை இந்நூலில் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். ஹஜ் தொடர்புடைய சில நிறுவனங்களின் வரலாற்றையும் சுருங்கக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலிலும் கூட டாக்டர் உவைஸ் அவர்களின் நுண்மாண் நுழைபுலம் இல்லாமலில்லை. ஹஜ் தொடர்பான சடங்குகள், 'நிறுவனங்கள் பற்றிய குறிப்புகளை, இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களில் விளக்கியுள்ளபடி குறிப்பிடத்தக்க வகையில் முதன்முறையாக எடுத்துக்காட்டியுள்ளார். இந்நூல் களிப்பூட்டுவதோடு மட்டுமல் லாமல் கற்பிக்கவும் செய்கிறது. ஐயமில்லாத வகையில் மாணவர், அறிஞர், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்நூல் பெரும் பயன் தருவதாகும்.''
- 1019 மக்காப் பயணம் என்ற நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதியுள்ள முன்னுரையும் அல்ஹாஜ் எம்.எச்.முகம்மது அவர்கள் வழங்கி யுள்ள அணிந்துரையும், அந்நூலில் என்ன தரப்பட்டுள்ளது, அது எப்படி தரப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகின்றன.
பேரறிஞர் உவைஸ் இதுவரை எழுதியுள்ள பத்திரிகைக் கட்டுரைத் தொடர்களில் ஒரு சிலவற்றைப் பற்றி மாத்திரமே குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர வேறு பல கட்டுரைத் தொடர்களையும் நூற்றுக்கணக்கான தனிக் கட்டு ரைகளையும் பல பத்திரிகைகளுக்கு "எழுதி அவர் பெரும் இலக்கியப் பணி புரிந்துள்ளார்.

Page 63
98
இந்நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்களை, விவசாயத்திலும் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யப் படுத்துவதற்கு, உவைஸ் எடுத்த பல்வேறு வகையான முயற்சிக ளில் ஆகக்கூடுதலான பலனை அளித்தது அவர் பத்திரிகைகள் மூலம் எடுத்த முயற்சியே என்று உறுதியாகக் கூறலாம். அவ் வாறே பத்திரிகைகள் மூலம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்கு உவைஸ் ஆற்றி யுள்ள தொண்டுக்கு நிகராக இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறெந்த அறிஞரும் செய்ததில்லை என்பதையும் உறுதியாகக் கூறலாம்.
டாக்டர் உவைஸ் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகள் பொது வாக சராசரி வாசகர்களையே மையமாக கொண்டிருந்தன. நன்றாக படித்த வாசகர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இவற்றை வாசிக்கவில்லை; அவற்றால் பயன்பெறவில்லை என்பது இதன் பொருளல்ல. எனினும் இக்கட்டுரைகளின் உள்ளடக்கமும், அமைப்பும், சொல்லாட்சியும் சாதாரண பத்திரிகை வாசகர்க ளுக்கே கூடுதலாக பொருந்துவனவாக இருந்தன.
கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், இலக்கிய அபிமா னிகள் போன்ற பிரிவினர்களையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்தின் பால் திசை திருப்ப வேண்டுமென்றால், அவர்களுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினைப் பற்றி ஒரு மலைப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவ்விலக்கியம் கனதி யான முறையிலே, ஆழமான முறையிலே வழங்கப்படவேண்டும் என்பதை உவைஸ் அறியாதவரல்லர். ஆனால் இத்தகைய கட்டுரை கள் செய்திப் பத்திரிகைகளுக்கு உகந்தவையல்ல என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார்.
எனவே இத்தகைய கனமான கட்டுரைகளை ஏந்தி வருவதற் குப் பல்கலைக்கழகத் தமிழ் இதழ்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மலர்கள், இலங்கைச் சாகித்திய மண்டலத்தினால் வெளியிடப் பட்ட 'கலைப்பூங்கா’ எனும் சஞ்சிகை, இலக்கிய மகாநாடுகள் போன்ற விஷேச சந்தர்ப்பங்களில் வெளியிடப்படும் இலக்கியக் கட்டுரைத் தொகுப்புகள் போன்றவற்றை ஏற்ற ஊடகங்களாக உவைஸ் பயன்படுத்தினார். இத்தகைய உயர்மட்ட வெளியீடுக ளில் பிரசுரமான உவைஸின் ஆக்கங்கள், படித்த மக்களிடையே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பிரபல்யப்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றன.

99
'கலைப்பூங்கா இதழொன்றில் வெளியான இஸ்லாமும் தமிழும்', அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மூன்றா வது மகாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர் தாங்கி வந்த இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களும் செந்தமிழ்ச் சொற்க ளின் சிறப்புப் பிரயோகங்களும், கொழும்பு மகாநாட்டில் வெளியிடப்பட்ட 'பிறைக்கொழுந்து' எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'புதூகுஷ்ஷாம் வருணிக்கும் ஆற்றல் சால் காலிதண் ணல், மணவை முஸ்தபா தொகுத்த 'சிந்தைக்கினிய சீறா’ எனும் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள 'சீறாவில் வரலாற்றுக் குறிப்புக் கள்', 'சீறாவில் அரபு, பாரசீகச் சொற்கள் போன்ற, அறிஞர் உவைஸின் உயர் படைப்புக்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கனமிகு கட்டுரைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் சிலவா கும்.
முதுபெரும் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, மெள லவி அப்துல் வஹாப், டாக்டர் க.ப.அறவாணன், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் நயினார் முகம்மது போன்ற தமிழறிஞர்களின் எழுத்தோவியங்களை ஏந்தியுள்ள 'சிந்தைக்கி னிய சீறா’ எனும் தொகுப்பில் டாக்டர் உவைஸ் அவர்களின் இரண்டு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியுள்ள 'சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஆ.கா. அப்துல் ஸ்மத், அதில் டாக்டர் உவைஸ் அவர்களின் கட்டுரைக ளைப் பற்றிக் கீழ்வருமாறு விதந்துரைத்துள்ளார்.
"முன்னூறு பக்கங்கள் கொண்ட இந்நூலில் நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் கலாநிதி அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் அழியா வரம் பெற்ற இரு எழுத்தோவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கலாநிதி அவர்கள் சீறாவில் உள்ள வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துக்காட்டும் முறை யும், அதிலுள்ள அறபு, பாரசீகச் சொற்களை விளக்கிக் காட்டும் விதமும், அவர் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமல்லர், இஸ்லாமிய மொழியில் மேதையுமாவார் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன." சொல்லின் செல்வர் அல்ஹாஜ் அப்துல் ஸமது அவர்களின் இக்கணிப்பீடு, பேராசிரியர் உவைஸ் எழுதிய கட்டுரைகளின் உயர் தரத்தினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை மக்கள் மத்தியில் பிரபல் யப்படுத்துவதற்குப் பேராசிரியர் உவைஸ் பெரிதும் பயன்படுத் திய மற்றுமொரு வெகுசனத் தொடர்பு சாதனம் வானொலியாகும்.

Page 64
1 OO
தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படும் வரை வானொலியே இலங்கையில் மிகச் சக்தி வாய்ந்த வெகுசனத் தொடர்பு சாதனமாக விளங்கியது. سمبر
இலங்கையர் மத்தியில் எழுத்தறிவு விகிதாசாரம் மிகக் கூடியதாக இருந்தபோதிலும் அவர்கள் மத்தியில் வாசிக்கும் வழக்கம் குறைவே. இக்கூற்று சிங்களவர்களையும் தமிழர்களை யும் பார்க்கிலும் முஸ்லிம்களுக்குக் கூடுதலாக பொருந்தும். எனவே தமிழ்ப் பேசும் மக்களின் நெஞ்சங்களை, குறிப்பாக முஸ்லிம் மக்களின் நெஞ்சங்களை, எழுத்தைக் கொண்டு தொடுவ திலும் பார்க்க, அங்கு இங்கு என்றில்லாதபடி இலங்கையில் எங்கும் காணப்படும் வானொலியில் நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் தொடுவது எளிதானதாகும். இவ்வுண்மையினை உணர்ந்த டாக்டர் உவைஸ் கடந்த நான்கு தசாப்தங்களாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வானொலி மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்குப் பெரும் பிரயாசை எடுத்தார்; தனது முயற்சியில் கணிசமான வெற்றியும் பெற்றார்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பான உவைஸின் நூற்றுக்க ணக்கான உரைகளில் வழியும் மொழியும்’ எனும் தலைப்பில் வாரா வாரம் அவர் ஆற்றிய தொடர் உரை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வுரைத் தொடரில் பேராசிரியர் உவைஸ், இராஜகம்பீரம் என்னும் பதியைச் சேர்ந்த கனகவிராயர் இயற்றிய கனகாபிஷேகமாலை, ரஹீம்கான் சாகிபு என்பவரால் பதிப்பிக்கப்பட்ட திருமக்காப் பள்ளு, சேகாதி நயினார் புலவர் பாடிய திருமணக் காட்சி, பனி அகுமது மரைக்காயர் இயற்றிய சின்ன சீறா, புலவர் நாயகம் இயற்றிய குதுபுநாயகம், வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றிய இராஜநாயகம், நாகூர் ஆண்டகை சாஹ7ல் ஹமீது நாயகம் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புதச் சம்பவங்களை விளக்கும் திருக்காரணப் புராணம், பதுறுத்தீன் புலவர் இயற்றிய முகியத்தீன் புராணம், புலவர் நாயகம் எழுதிய திருமணி மாலை போன்ற நூல்களை ஆழமான முறையில் வானொலி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
வானொலி மூலம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பிரபல்யப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளில் மிகச் சிறந்ததொன் றாக கருதப்படும் 'வழியும் மொழியும்’ எனும் இவ்வானொலி உரைத் தொடர், அதே தலைப்பில் நூலுறுப் பெற்று, 1991-ஆம் ஆண்டில் வெளிவந்தது.

101
பேராசிரியர் உவைஸ் ஆற்றியுள்ள வானொலி உரைத் தொடர்களில் குறிப்பிடத்தகுந்த இன்னொன்று சீறாப்புராணத்தைப் பற்றி அவர் ஆற்றிய உரைத் தொடராகும். இஸ்லாமிய மார்க்க விதிகளைப் பற்றியும், ஆரம்ப இஸ்லாமிய வரலாற்றைப் பற்றி யும் உமறுப்புலவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையைச் சீறாப்புரா ணத்தில் காணப்படும் செய்யுட்களை அடிப்படையாக வைத்து, எடுத்துக்காட்ட டாக்டர் உவைஸ் மேற்கொண்ட முயற்சியே இவ்வுரைத் தொடராகும். இஸ்லாமிய மார்க்க விதிகளைப் பற்றி நிறை அறிவு பெற்றுள்ள ஒருவரே தெரிந்து வைத்திருக்கக் கூடிய பல மார்க்க கோட்பாடுகளைப் பற்றி சீறாப்புராணத்தில் உமறுப்பு லவர் விளக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, உமறு ஒர் ஆலிமே என்பதை நிறுவினார் டாக்டர் உவைஸ்.
இந்த வானொலி உரையின் பெறுமதியை உணர்ந்த சென்னை ஏவி.எம். ஜாபர்தீன் நூர்ஜஹான் நம்பிக்கை நிறுவனம் அதனை 'உமறுப்புலவர் ஓர் ஆலிமா என்ற பெயரில் புத்தகமாக வெளியிட் டது. உமறுப்புலவரைப் பற்றியும் சீறாப்புராணத்தைப் பற்றியும் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாக கருதப்படும் இந்நூலையும், வழியும் மொழியும் என்ற நூலையும் படித்துள்ள, நியாய உணர்வுள்ள எவ்வாசகரும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் ஆற்றியுள்ளதைப் போலவே, வானொலி மூலமும் அறிஞர் உவைஸ் பாரிய இலக்கியச் சேவையினை ஆற்றியுள்ளார் என் பதை ஏற்கவே செய்வர்.
ஆனால் பத்திரிகை, வானொலி போன்ற வெகுசனத் தொடர்பு சாதனங்கள் எட்டியது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிறு பகுதியையே என்பதை நாம் மறந்து விடலாகாது. இஸ்லாமியச் சமூகத்தினரின் ஒரு சிறு தொகையினரே பத்திரிகை கள் வாசித்தனர்; அவர்களிலும் அனேகமானோர் உலக நடப்புக ளையும் ஊர் நடப்புகளையும் வாசித்தனரே ஒழிய இலக்கிய ஆக்கங்களை வாசிப்பதில் அக்கறை காட்டவில்லை. அதே போல, வானொலியில் பாட்டுகளையும் நாடகங்களையும் கேட்பதில் காட்டிய ஆர்வத்தை, இலக்கிய உரைகளைக் கேட்பதில் காட்ட வில்லை. எனவே உவைஸ் எழுதிய கட்டுரைகளும், அவர் ஆற்றிய வானொலி உரைகளும் இலங்கை முஸ்லிம்களில் ஒரு சிறு பகுதியினர் மீதே ஆழ்ந்த பாதிப்பினை ஏற்படுத்தின என்பதே
உண்மை.
崇

Page 65
7. தமிழ் இலக்கியப் பாடவிதானங்களில்
இஸ்லாமியத் தமிழ் நூல்கள் இதுதான்
பழைமை மிகு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் காலக் கரையான்களுக்கு இரையாகி விடாமல் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைத் தமிழ் இலக்கிய உலகுக்கு மீள் அறிமுகம் செய்தது உவைஸ் புரிந்த ஒரு சாதனைதான். ஆனால் அதனிலும் பார்க்க பெரிய சாதனை, தான் கண்டுணர்ந்த இலக்கிய உண்மைகளை இலங்கை முஸ்லிம் மக்களிடையே பிரபல்யப்ப டுத்துவதில் அவர் பெற்ற பெரும் வெற்றியாகும். தான் மதித்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை, தான் நேசித்த தனது சமூகத்தினரிடையே பிரபல்யப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றி
அத்துணை விசாலமானதாகும்.
தனது மூதாதையராம் உமரையும், வண்ணக்களஞ்சியப் புலவ ரையும், புலவர் நாயகத்தையும், குலாம் காதிர் நாவலரையும் ஏனையோரையும் ஈழத்து முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது குறிக்கோளில் வெற்றியடைய அறிஞர் உவைஸ் பத்திரிகைகளையும் வானொலியையும் பயன்படுத்தி னார்; நூல்கள் பல இயற்றினார். ஆனால் இவற்றின் மூலம் அவர் எதிர்பார்த்தது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியையே; அவ ருக்கு இவை மூலம் கிடைத்ததும் அத்தகையதொரு வெற்றியே.
உவைஸின் இம்முயற்சிகள் இலங்கை இஸ்லாமியச் சமூகத் தின் ஒரு சிறு பிரிவினர் மத்தியில் மாத்திரமே பாதிப்புக்களை ஏற்படுத்தின; ஒரு சிறு சாரார் மத்தியில் மாத்திரமே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவ தில் வெற்றி பெற்றன. அப்படியானால் இன்று ஈழத்து முஸ்லிம் ஆண், பெண் இருபாலார் மத்தியிலும் பெருந்தொகையானோர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்திருப்பதற்குக் காரணமாய் இருப்பது என்ன என்ற வினா எழும்பவே செய்கின்றது.
மனமகிழ்ச்சியைத் தரும் இந்நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்ஷைகளுக்குரிய தமிழ்மொழி,

103
சேனா"ந்தார் "ருந்தது
தமிழ் இலக்கியப் பாட விதானங்களில் இஸ்லாமியத் தமிழ் நூல்களுக்கு ஏற்றதோர் இடம் அளிக்கப்பட்டமையாகும். இவ் வாறு இஸ்லாமியத் தமிழ் நூல்கள் பாடநூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கு, டாக்டர் உவைஸ் எடுத்த முயற்சியே
முக்கிய காரணட ரக இருந்தது. - இஸ்லாமியத் தமிழ்த் தொண்டு எனும் தனது ஆய்வின் மூலம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தன்னகத்தே கொண்டிருந்த அரும் பொக்கிஷங்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தார் உவைஸ்; பத்திரிகைகள், வானொலி டே என்ற வெகுசனத் தொடர்பு சாதனங் களின் மூலம் அவற்றை மக்கள் மத்தியில் ஓரளவு பிரபல்யப்படுத்த வும் செய்தார். பாகம் 1.. தக்க பேராசிரியர் உவைஸ் அவர்களின் முன்மாதிரியினாலும் தூண்டுதலினாலும் உந்தப்பட்ட எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம், ஆர்.பி.எம். கனி, ஹாபிஸ் எம்.கே. செய்யது அஹ்மது போன்ற தென்னிந்திய முஸ்லிம் அறிஞர்களும், அல்ஹாஜ் ஆ.மு. சரிபுத் தீன், ஜே.எம்.எம்.அப்துல் காதர், ஏ.ஆர்.எம். சலீம், எஸ்.எம்.ஏ. ஹஸன், அ.ச.அப்துல் சமது, எம்.வை.எம். முஸ்லிம், எம்.சி.எம். ஸுபைர் போன்ற இலங்கை எழுத்தாளர்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பிரபல்யப்படுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இக்கூட்டு இலக்கிய முயற்சி இஸ்லாமி யத் தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கின்றது; அதனையிட்டு முஸ்லிம்கள் பெருமிதம் அடையலாம் என்ற உண்மையைத் தென்னிந்திய முஸ்லிம்களினதும் இலங்கை முஸ்லிம்களினதும் சிந்தனைப் போக்கில் நிலைபெறச் செய்தது. அ அதே வேளை அழிவிலிருந்து மீட்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் முஸ்லிம்கள் மத்தியில் வேரூன்ற வேண்டுமானால் அவற்றுள் ஒரு சிலவாவது பாடசாலை மட்டத் திலே பரீட்ஷைக்களுக்குரிய பாடப்புத்தகங்களாக்கப்படல் வேண் டும் என்ற கருத்து இலங்கை முஸ்லிம் அறிவு ஜீவிகள் மத்தியில் வலு பெற ஆரம்பித்தது. இந்த எண்ண போக்குக்கு ஒரு கட்டுக்கோப்பான வடிவமைப்பைக் கொடுத்து, அதற்குத் தலைமை தாங்கியவர் பேராசிரியர் உவைஸ் அவர்களே.
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளுக்கு முன்னர் இஸ்லா மியத் தமிழ் நூல்கள் எவையும் பாடசாலைகளில் பாடப்புத்தகங்க ளாக படிப்பிக்கப்படவில்லை. ஒரு சில இஸ்லாமியத் தமிழ்ப் பாடல்களுக்கு விளக்கம் கூறிய 'இலக்கியப் பொய்கை' எனும்

Page 66
O4
நூல் கனிஷ்ட வகுப்புகளிலே சில பாடசாலைகளிலே ஓர் உப பாட நூலாக பயன்படுத்தப்பட்டது; அவ்வளவே.
நாற்பதுகளில், ஐம்பதுகளில் இலங்கைப் பாடசாலைகளில் பயின்றுக் கொண்டிருந்த இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர் "கள் அத்தனைப் பேரும் தமிழ் இலக்கியம் என்று படித்துக் கொண்டிருந்தது சைவ, வைணவ, பெளத்த, சமண தமிழ் நூல்களை மாத்திரமே. அன்று தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக படித்திருந்த ஒரு சராசரி முஸ்லிம் மாணவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததை அறிந்திருந்தான்; அவர் பரியை நரியாக்கியதைத் தெரிந்திருந்தான்; தன் தோழர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக அவர் காதல் தூது போனதைப் படித்திருந்தான்.
ஆனால் தனது வாய்மையினால் கொடிய கள்வர்களைத் திருத்திய மனிதப் புனிதர் செய்யதுனா அப்துல் காதர் ஜெய்லானி யைப் பற்றியோ, தமிழகத்தில் அற்புதமான இஸ்லாமியப் பணி புரிந்த நாகூர் ஆண்டகை சாஹ7ல் ஹமீது ஒலியுல்லாவைப் பற்றியோ, பைசாந்தியப் பேரரசையே தன் பராக்கிரமத்தினால் திணறடித்த இஸ்லாமிய வீரத் தளபதி காலித் இப்னு வலிதைப் பற்றியோ, பாரசீகச் சக்கராதிபத்தியத்தை மண்டியிட வைத்த மாவீரர் ஸகது இப்னு அபீ வக்காஸைப் பற்றியோ அவன் அறிந்திருந்தது எதுவுமில்லை.
பெரிய புராணத்தையும் திருவிளையாடல் புராணத்தையும் அவன் படித்திருந்தான்; ஆனால் சீறாப்புராணத்தையோ, புதுகுஷ் ஷாத்தையோ அவன் தொட்டுப் பார்த்ததுமில்லை.
இந்நிலை மாறவேண்டுமானால், முஸ்லிம் மாணவ, மாணவி கள் தமது வரலாற்று நாயகர்களைப் பற்றி சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டுமென்றால், இஸ்லாமியத் தமிழ் நூல்கள் ஓரிரண்டாவது பரீட்ஷைக்களுக்குரிய பாடப் புத்தகங்களாக இடம் பெற வேண்டும் என்று உவைசும் ஏனையோரும் எண்ணியது grfGu.
இந்நூற்றாண்டின் ஐம்பதுகளின் பிற்பகுதியில் இலங்கை இஸ்லாமியச் சமுகத்தின் கல்வி நிலையில் ஏற்பட்ட சில வளர்ச்சிகளும், டாக்டர் உவைஸ் அவர்களின் உத்தியோக வாழ்க் கையில் ஏற்பட்ட சில மாற்றங்களும் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்கான தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் இஸ்லர்மியத் தமிழ் நூல்கள் சில இடம் பெறுவதற்கு அனுகூல மாக அமைந்தன.

105
1956ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலமே இலங்கையின் அரசகரும மொழியாக இருந்தது. எனவே அரசாங்க உத்தியோகங்க ளில் பெரும்பாலானவை ஆங்கில அறிவு வாய்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆங்கில மொழியறிவை வழங்கக் கூடிய பாடசாலைகளோ, சில பெரிய நகரங்களில் மாத்திரமே அமைந்திருந்தன.
இதனால் ஆங்கிலக் கல்வி என்பது, நகரங்களில் வாழும் மாணவர்களுக்கும் நகரங்களுக்குப் போய்ப் படிக்கக்கூடிய பொரு ளாதார வசதி படைத்த கிராம மாணவர்களுக்கும் மாத்திரமே உரித்தானதாக இருந்தது.
கிராமப் பாடசாலைகளிலே சிங்கள, தமிழ் மொழிகள் மூலம் கல்வி கற்ற மாணவர்கள், தாம் கற்கும் கல்வி உயர் அரசாங்க பதவிகளைப் பெற்றுத் தராது என்ற காரணத்தினால், பெரும்பா லும் இடையிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டனர். இதனால் மேல் வகுப்புக்களிலே கல்வி கற்கும் மாணவர்களின் தொகை குறைவானதாகவே இருந்தது. இக்கூற்று சிங்கள, தமிழ் மாணவர்க ளுக்கு எந்தளவு பொருந்தியதோ அதே அளவு முஸ்லிம்களுக்கும் பொருந்துவதாகவே இருந்தது. எனவே முஸ்லிம்கள் மத்தியிலும், மேல் வகுப்புகளில் கற்கும் மாணவர்களின் தொகை மிகச் சிறியதாகவே இருந்தது.
ஆனால் 1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிகரமான அரசியல் மாற்றங்கள், சிங்கள, தமிழ் மொழிகளில் படித்தவர்களுக்கும் உரிய தொழில் வாய்ப்புகள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியதனால், அம்மொழிகள் மூலம் உயர்வகுப் புகளில் கற்கும் மாணவர்களின் தொகை கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்தது. இதற்கேற்ப மேல் வகுப்புகளில் கல்வியைத் தொடரும் முஸ்லிம் மாணவர்களின் தொகையிலும் குறிப்பிடக்கூ டிய அளவிற்கு அதிகரிப்பு ஏற்பட்டது. உயர்வகுப்புகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டதனால் அரசாங்கப் பரீட்ஷைகளுக்குப் பாடவிதானம் அமைக்கும் போதும், பாட நூல்கள் தெரிவு செய்யும் போதும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் உரிய மதிப்பு கொடுக்க வேண்டிய நிலை உருவாகத் தொடங்கியது.
இவ்வாறு முஸ்லிம்கள் கல்வியில் கூடிய அக்கறை காட்ட ஆரம்பித்த காலகட்டத்தின் போது, இலங்கைப் பரீட்ஷைத் திணைக்களத்தில் பணியாற்றும் வாய்ப்பு உவைசுக்குக் கிடைத்

Page 67
106
தது, முஸ்லிம் இனத்துக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. 1957ஆம் ஆண்டிலிருந்து 1959ஆம் ஆண்டு வரை, ஆக இரண்டு மூன்று வருடங்கள் மாத்திரமே உவைஸ் பரீட்ஷைத் திணைக்களத் தில், நிரந்தர அடிப்படையில் பணியாற்றியுள்ள போதிலும், அந்த குறுகிய காலத்திற்குள்ளேயே அந்த திணைக்களத்தில் பணிபுரிந்த பல உயர் அதிகாரிகளின் நட்பையும் விசுவாசத்தையும் அவர் வென்று இருந்தார். இந்த நெருங்கிய நட்பு உவைஸ் அவர்களின் வளர்ச்சிக்கு உதவியதைப் போலவே, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், பாடசாலைகளில் நிலை பெறுவதற்கும் பெரிதும் உதவிற்று.
பரீட்ஷைத் திணைக்களத்தில் பதவியேற்ற காலத்திலிருந்தே இஸ்லாமியத் தமிழ் நூல்கள், தமிழ் இலக்கியப் பாட விதானத்தில் இடம் பெறவேண்டியதன் அவசியத்தை உவைஸ் அத்திணைக்கள அதிகாரிகளிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரஸ்தா பித்துக் கொண்டே இருந்தார். உவைஸின் இவ்வேண்டுகோள்கள் அவர்களின் சிந்தனாப்போக்கிலும் கணிசமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியே இருந்தன. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் பாடநூல் ஆலோசனைச் சபை உறுப்பினராக உவைஸ் நியமனம் பெற்றதும், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சாதகமான ஓர் ஏதுவாகவே அமைந்தது.
1 4:17 18 இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஈழத்து முஸ்லிம் கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி, டாக்டர் உவைஸ் அவர்களும் ஏனைய முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களும் இவ்விலக் கியத்தைப் பிரபல்யப்படுத்துவதில் காட்டிய பேரார்வம், உவைஸ் அவர்களுக்குப் பரீட்ஷைத் திணைக்கள அதிகாரிகளோடு வளர்ந்தி ருந்த நட்பு, அவர் பாடநூல் ஆலோசனைச் சபை உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தமை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர வகுப்புகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்த் தொகை அதிகரித்தமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் 1962ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்குத் தமிழிலக்கியப் பாட நூல்களில் ஒன்றாக விளங்கிய கம்பராமாயண கும்பகர்ண வதைப்படலத்துக்கு ஒரு மாற்று நூலாக சீறாப்புராணத்தின் பதுறுப்படலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
டாக்டர் உவைஸ் அவர்களின் சிபாரிசின் அடிப்படையி லேயே பதுறுப்படலம் ஒரு மாற்று நூலாக ஏற்கப்பட்டது. இஸ்லாமியத் தமிழ் நூலொன்றை ஒரு முக்கியமான அரசாங்கப் பரீட்ஷைக்குப் பாடநூலாக இலங்கைப் பரீட்ஷைத் திணைக்க

O7
ளத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது உவைஸ் பெற்ற ஒரு பெரும் வெற்றியே. ஆனால் இதனோடு தன் கடமை முடிந்தது என்று திருப்திபடக்கூடிய நிலையில் உவைஸ் இருக்கவில்லை. தன் சமுகத்தை, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை நோக்கி வழிநடத் தும் பொறுப்பு மாத்திரந்தான் உவைசுக்கு இருந்தது என்றில்லை; வழிநடத்திச் செல்ல வேண்டிய பாதையை வெட்டும் பொறுப்பும் அவருடையதாகவே இருந்தது.
1962ஆம் ஆண்டு க.பொ.த. பரீட்ஷைக்குத் தமிழ் இலக்கியப் பாடநூல்களில் ஒன்றாக சீறாப்புராணம் பதுறுப்படலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதிலும் பரீட்ஷைக்குத் தோற்றவிருந்த மாணவர் தொகைக்கு ஏற்ப சீறாப்புராணப் பிரதிகள் இலங்கையில் இருக்கவில்லை. இருந்த சொற்பமானவையும் ஆசிரியர்கள், மாண வர்கள் தகைமைகளுக்கேற்ப பொழிப்புரைகள், பதவுரைகள், விளக்கவுரைகள் ஆகியனவற்றை உள்ளடக்கியனவாக விளங்க வில்லை.
1962ஆம் ஆண்டு க.பொ.த. பரீட்ஷைக்குத் தமிழிலக்கிய பாடத்துக்குத் தோற்றவிருந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு மிக அவசியமாக தேவைப்பட்டவை மாணவர்களின் தரத்திற்கேற்ற விளக்கவுரைகளோடும் பதவுரைகளோடும் அமைந்த பதுறுப்படல பிரதிகளாகும். இஸ்லாமிய மாணவ சமுதாயத்தின் இந்த உடனடித் தேவை காலதாமதமின்றிப் பூர்த்திச் செய்யப்படாதிருந்திருந்தால் முழு முஸ்லிம் சமுகமுமே பரீட்ஷைத் திணைக்களத்தைச் சாடியி ருக்கும்; சபித்திருக்கும். பரீட்ஷைத் திணைக்களமும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தும் விபரீத முயற்சியினைக் கைவிட்டிருக்கும்.
இப்பிரச்சினையின் ஆழத்தினை உணர்ந்த உவைஸ் அதற்குத் தீர்வு காணும் தார்மீகப் பொறுப்பைத் தன் மீதே சுமத்திக் கொண்டார். மாணவர்களுக்கு விளங்கக்கூடிய முறையிலே உடன டியாக பதுறுப்படலத்திற்கு உரையெழுதி அச்சிடவேண்டும் என்று தீர்மானித்தார். டாக்டர் உவைஸ் விரும்பியிருந்தால் ஒரு சில தினங்களுக்குள் தானே இப்பணியினைச் செய்து முடித்திருக்க லாம். ஆனால் அவரே உரையெழுதி பதுறுப்படலத்தை வெளியிட் டிருந்தால், தன் சுய இலாபத்திற்காகவே அவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பிரபல்யப்படுத்த முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒரு சிலராலாவது எழுப்பப்பட்டு இருக்கலாம்.
இப்படிப்பட்ட ஒரு நிலை தோன்றுவதை டாக்டர் உவைஸ் விரும்பவில்லை. எனவே பதுறுப்படலத்துக்கு உரையெழுதி

Page 68
1O8
வெளியிடும் பொறுப்பை அவர், கவிமணி ஸ"பைரிடம் ஒப்ப டைத்தார். தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்பினைச் செவ்வனே முடித்த ஸ"பைர், தான் அப்புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் கீழ்வரும் குறிப்பைத் தந்துள்ளார்.
'1960ஆம் ஆண்டு அல்ஹாஜ் உவைஸ் அவர்களிடமிருந்து எனக்கொரு தந்தி வந்தது. பாணந்துறையில் அவர்களது இல்லத்திலேயே சென்று சந்தித்தேன். சீறாப்புராணம் பதுறுப்படலம் க.பொ.த. (சாதாரண) வகுப்புக்கு இலக் கிய நூலாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி யைக் கூறியபோது, அவர் முகத்தில் தவழ்ந்த பெருமிதம் என்னைப் புல்லரிக்கச் செய்தது. அந்தச் செய்யுள் பகுதிக்கு உடனடியாக உரையெழுதி, அச்சிட்டு வெளியிடவேண் டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள். நானும் விரும்பின துறையானபடியால் பல சிரமத்துக்கு மத்தியில் எனது நண்பர் பதுளை பி.எம்.எம். அப்துல் காதர் ஆசிரியர் அவர்களுடன் இணைந்து அந்தப் பணியைச் செய்து முடித்தேன்." ஸ"பைரின் இக்கூற்று இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எழுச்சியில் டாக்டர் உவைஸ் கொண்டிருந்த ஆர்வம் எத்தகையது என்பதைப் புலப்படுத்துகின்றது.
சீறாப்புராணப் பதுறுப்படலத்தைத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு மாற்று பாடநூலாக ஏற்றுக்கொள்ள வைத்தமை, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஈட்டிய ஒரு மகத்தான வெற்றியே என்பதை மறுக்க முடியாது. ஆனால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைச் சீரிய முறையில் பாடசாலைகளில் அறிமுகப்படுத் துவதற்கு இது ஒன்று மாத்திரம் போதாதே?
கடலில் மிதக்கும் பனிமலையின் விளிம்பை மாத்திரம் காட்டி அதன் விசாலத்தை உணர்த்த முடியுமா? நீரில் அமிழ்ந்து இருக்கும் பாறையின் ஒரு பகுதியையாவது காட்டினால்தானே அந்த பனிமலையின் விசாலத்தை ஓரளவாவது ஒழுங்காக எடை போட முடியும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், முஸ்லிம் மாணவர்களின் வாழ்வோடு ஐக்கியப்பட வேண்டும்ானால், பாடவிதானத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு தனிப்பிரிவே சிருஷ்டிக்கப்பட வேண்டும் என்பதை உவைஸ் உணர்ந்தே இருந்தார். ஆனால் இந்த கோரிக்கை நேரடியாக விடுக்கப்பட்டால் ஓர் எதிர்ப்புணர்வு தோன்றலாம் என அவர் அஞ்சினார். இந்த

109
கோரிக்கை எழுப்பப்படும்போது அக்கோரிக்கையின் பின்னணி யில் தான் இருப்பதைக் காட்டிக்கொள்வதும் உசிதமானதல்ல என்றே அவர் கருதினார். எனவே தன் குறிக்கோளில் வெற்றியீட்ட ஓர் உபாயத்தைக் கையாள வேண்டிய அவசியம் உவைகக்கு ஏற்பட்டது.
தமிழ் இல்க்கியப் பாடத்திட்டத்தில் இஸ்லாமியத் தமிழ் நூலொன்று மாற்றுப் பாடமாகவாவது இடம்பெற வேண்டும், தமிழ்ப் பாடநூல் ஆலோசனைச் சபையில் ஒரு முஸ்லிமும் நியமனம் பெறவேண்டும், தமிழ் இலக்கியத்திற்குத் தோற்றும் முஸ்லிம் பரீட்ஷார்த்திகளின் விடைத்தாள்கள் முஸ்லிம் பரீட்ஷகர் களாலேயே திருத்தப்படல் வேண்டும் என்ற மூன்று கோரிக்கைக ளையுடைய மகஜர் ஒன்றினைத் தயாரித்து அதனை இலங்கை அரபு மொழி வளர்ச்சிச் சங்கம், இஸ்லாமிய ஆராய்ச்சி மஜ்லிஸ், கல்ஹின்னைத் தமிழ் மன்றம் என்ற மூன்று இஸ்லாமிய அமைப்பு களின் ஊடாக, அன்று கல்வி அமைச்சராக சேவையாற்றிக் கொண்டிருந்த டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக் குச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் டாக்டர் உவைஸ் செய்து முடித்தார்.
இலங்கை அரபு மொழி வளர்ச்சிச் சங்கத்தின் சார்பாக மெளலவி அலவி அபுல் ஹஸன் அவர்களும், இஸ்லாமிய ஆராய்ச்சி மஜ்லிஸ் சார்பாக மெளலவி எம்.ஜே.எம். ரியால் அவர்களும், தமிழ் மன்றத்தின் சார்பாக அல்ஹாஜ் எஸ்.எம்.ஹ aபா அவர்களும் கையொப்பமிட்டு, இம்முறையீட்டைக் கல்வி அமைச்சரிடம் கையளித்தனர்.
தன்னிடம் வந்த இந்த மகஜரைக் கல்வி அமைச்சர், அக்காலை பரீட்ஷை ஆணையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு. எஸ்.ஈ.ஆர். பேரின்பநாயகம் அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அவருக்கு அனுப்பி வைத்திருந்தார். முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சினையைப் பற்றியும் டாக்டர் உவைஸ் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக் கும் வழக்கத்தைக் கொண்டிருந்த திரு.பேரின்ப நாயகம், இலங்கை வணிகர் மன்றத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த உவைஸ் அவர்களை உடனடியாகத் தனது காரியாலயத்திற்கு வரவழைத்து, முஸ்லிம் சமுகத்தின் சார்பாக அனுப்பப்பட்டிருந்த முறையீட்டைக் கையளித்து, அவரது கருத்துக்களைக் கோரினார்.
உவைஸ் தயாரித்த மகஜர் என்று அறியாமல் அதனைப் பற்றி அவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக

Page 69
11 Ο
பரீட்ஷை ஆணையாளர், உவைஸிடமே அதனைக் கொடுத்த போது, நிச்சயமாக பல்வேறுப்பட்ட உணர்வுகள் உவைஸின் உள்ளத்தில் தோன்றியே இருக்கும். தான் சமர்ப்பித்த கோரிக்கைக ளைத் தானே சிபாரிசு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது உவைஸின் உள்ளத்தில் நகைப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அதே நேரத்தில் தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்த மகஜர், தான் தயாரித்ததுதான் என்பதைத் தன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த திரு. பேரின்பநாயகத்திடம் கூறமுடியாது இருந்தது நிச்சயமாக பண்பாளர் உவைஸ் அவர்களுக்குப் பெரும் மன வேதனையை அளித்தே இருக்கும். அம்மகஜர் தான் தயாரித்தது தான் என்று உவைஸ் பரீட்ஷை ஆணையாளரிடம் கூறியிருந்தால், ஆணையாளரான திரு. பேரின்பநாயகம் தர்மசங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார். தன்னிடம் கையளிக்கப்பட்ட மகஜர் உவைஸ் தயாரித்தது என்பதை அறிந்த பின்னர் அதனை நிராகரிப்பது பெரியவர் பேரின்பநாயகம் அவர்களுக்குப் பலத்த மனச்சஞ்சலத்தையும் வியாகூலத்தையும் வழங்கியே இருக்கும். எனவே அதனைப்பற்றி அவரிடம் உவைஸ் எதுவும் பிரஸ்தாபிக்க வில்லை.
மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்த முதல் இரண்டு கோரிக்கைக ளும் ஏற்கனவே பரீட்ஷை ஆணையாளரினால் நிறைவேற்றப்பட் டிருப்பதைச் சுட்டிக்காட்டிய உவைஸ், தொடர்ந்து அவ்விரண்டு கோரிக்கைகளைச் செயல்படுத்துவதும் கடினமானதாக இருக்காது என்பதனையும் ஆணையாளருக்கு உணர்த்தினார். ஆக தீர்வு இல்லாது இருந்தது, முஸ்லிம் மாணவர்களின் தமிழ் இலக்கிய விடைத்தாள்களை முஸ்லிம் பரீட்ஷகர்களே திருத்தவேண்டும் என்ற மூன்றாவது கோரிக்கை மாத்திரமே.
மூன்றாவது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அவசிய மான வழிமுறைகளைப் பரீட்ஷை மண்டபத்தில் கடைப்பிடித் தால், பரீட்ஷை நிலைய ஒழுங்கு முறை சீர்குலைந்து விடலாம் என்ற அச்சத்தைப் பரீட்ஷை ஆணையாளர் வெளிப்படுத்தினார். இது உவைஸ் அறிந்திராத ஒன்றல்ல. அன்று நிலவிய பரீட்ஷை அமைப்பிலே தனது மூன்றாவது கோரிக்கையை அமுல்படுத்து வது கடினமானது என்பதை அறிந்திருந்தும் உவைஸ் ஏன் இந்த கோரிக்கையைத் தன் மகஜரில் இணைத்திருந்தார்?
பதுறுப்படலம் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு மாற்று நூலாக ஏற்கப்பட்டிருந்ததால் முஸ்லிம் பரீட்ஷார்த்திகளின் விடைத்தாள் களை முஸ்லிம்களே திருத்தவேண்டும் என்ற கோரிக்கையில்

111.
நியாயம் இருக்கவே செய்தது. ஆனால் இக்கோரிக்கை நியாயமான தாக இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் இஸ்லா மியத் தமிழ் நூல்களை மாத்திரமே கொண்ட ஒரு புதிய பாடத்திட்டத்தை அமைப்பதுதான் ஒரே வழி என்பதை உவைஸ் உணர்ந்திருந்தார். பரீட்ஷை விடயங்களில் பெரும் அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றிருந்த திரு. பேரின்பநாயகம், இஸ்லாமிய இலக்கியங்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு புதிய பாடத்திட் டத்தை அமைப்பதன் மூலமே தான் விடுத்திருந்த மூன்றாவது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பார் என்பதையும் உவைஸ் அறிந்தே இருந்தார். தான் தயாரித்த மகஜரில் இருந்த கோரிக்கை களை எந்த அமைப்பில் நிறைவேற்ற பரீட்ஷை ஆணையாளர் சிந்திப்பார் என்று உவைஸ் எதிர்பார்த்தாரோ அதே முறையி லேயே பரீட்ஷை ஆணையாளர் சிந்தித்தது உவைஸ் அவர்களின் நுண்ணறிவைப் புலப்படுத்துகின்றது.
முஸ்லிம் நிறுவனங்கள் எழுப்பியிருந்த மூன்றாவது கோரிக் கைக்குத் திரு. பேரின்பநாயகம் தீர்வு கண்ட முறையினை டாக்டர் உவைஸ் இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்’ எனும் நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
"கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவருக்கு நீரினுள் மூழ்காமல் பிடித்துக் கொள்வதற்கு ஒரு பற்றுக்கோடு கிடைத்ததைப் போன்று சிந்தனைக் கடலிலிருந்து வெளியே வந்தார் பரீட்ஷைக் கமிஷனர் அவர்கள். அவருடைய முகம் மலர்ந்து 'தம்பி என்று மீண்டும் அன்புத் தொனியில் அழைக்கலானார். இஸ்லாமியப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ் நூல்கள் இருக்கின்றனவா? தரமான இலக்கியப் படைப்புக்கள் முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்டுள்ளனவா? இலகு வில் கிடைக்கக் கூடியனவாய் அத்தகைய படைப்புக்கள் உள்ளனவா? என்று இன்னோரன்ன கேள்விச் சரங்களை எழுப்பினார் தேர்வுத் திணைக்கள ஆணையாளர் திருவா ளர் எஸ்.ஈ.ஆர். பேரின்பநாயகம் அவர்கள்.
பழம் நழுவி பாலில் விழுந்தது போன்றிருந்தது. எந்தத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கி றேனோ அந்தத் துறையினைப் பற்றி என்னிடம் வினவும் பொழுது நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். சீறாப்பு ராணம் பற்றிப் பரீட்ஷைக் கமிஷனர் அறியாமலில்லை, ஆனால் அதனை விட் வேறு நூல்கள் இருக்கின்றனவா என்றுதான் அவர் கேட்டார். 'ஒன்றல்ல, இரண்டல்ல,

Page 70
112
நூற்றுக்கணக்கில் இருக்கின்றன என்று பரீட்ஷை ஆணை யாளரிடம் கூறினேன். இலங்கைப் பல்கலைக்கழக முது மாணித் தேர்வுக்காக 'முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு என்னும் பொருளில் ஆராய்ச்சி நூலை எழுதி னேன் என்றும் அதனை எழுதுவதற்கு அவசியமான நூல்களை இலங்கையிலேயே தேடி எடுத்தேன் என்றும் நான் தேடிப் பெற்ற அத்தகைய நூல்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் அதிகமாகும் என்றும் அவரிடம் கூறினேன். இந்த விடைகள் சிக்கலான இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியது போன்று அவருக்குத் தோன்றியது என் பதை அவருடைய முகபாவனையிலிருந்து உணர்ந்து கொண்டேன்.
'சரி தம்பி அப்படியென்றால் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் (சாதாரண தர) பரீட்ஷைக்குத் தோற்றும் முஸ் லிம் மாணவரின் நன்மையைக் கருதி இஸ்லாமிய இலக்கியங்களைக் கொண்ட ஒரு புதுப் பாடத் திட்டத் தையே உருவாக்குவோமே. நான் இந்த ஆலோசனையைக் கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கின்றேன். அவருடைய அங்கீகாரம் கிடைத்ததும் இதனை விளம்பரப்படுத்து வோம்" என்று கூறிச் சிக்கலான இந்தப் பிரச்சினைக்குச் சீரானதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு முடிவை எடுத்த பெருமை இப்பொழுது ஒய்வு பெற்றிருக்கும் முன்னை நாள் தேர்வுத் திணைக்கள ஆணையாளரான திருவாளர் எஸ்.ஈ.ஆர். பேரின்பநாயகம் அவர்களையே சாரும் எனக் கூறின் அது மிகையாகாது."
இவ்வாறு தமிழிலக்கியம் 'ஆ' பாடத்திட்டம் என்ற ஒன்று, தனியாக இஸ்லாமியத் தமிழ் நூல்களை மாத்திரம் உள்ளடக்கிய தாக உருவாவதற்கு காரணகர்த்தா என அன்றைய பரீட்ஷை ஆணையாளர் திரு. பேரின்பநாயகம் அவர்களையே டாக்டர் உவைஸ் பெருந்தன்மையோடு சுட்டிக்காட்டிய போதிலும், இஸ் லாமியத் தமிழ் இலக்கியத்தின் நவீன பிதாமகர் உவைஸின் உழைப்பும், தலைமைத்துவமும், சாதுரியமுமே இதனைச் சாத்திய மாக்கியது என்பதை இலங்கை முஸ்லிம் சமுகம் எளிதில் மறந்து விடமாட்டாது; மறக்கவும் முடியாது; மறக்கவும் கூடாது.
உவைஸ் அவர்களுடன் முப்பதாண்டுகளுக்கு மேல் நெருங் கிய உறவு பூண்டிருந்த துணைவேந்தர் வித்தியானந்தன் அவர்கள் "உவைஸைப் போன்ற பண்பான இஸ்லாமியச் சகோதரரை நாம் இன்னும் காணவில்லை" என்று ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.

113
அந்தளவுக்கு நலமான குணங்களும் கண்ணியமான பண்புகளும் ஒருங்கே பொருந்தியவர் பேராசிரியர் உவைஸ்.
அத்தகையதோர் உயர் கண்ணியவான், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு தனி வினாத்தாள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த மகஜரைப் பரீட்ஷை ஆணையாளர், தனது ஆலோசனையைப் பெறுவதற்காக தன்னிடம் தந்தபோது எத்தகை யதொரு சஞ்சலமான நிலையில் இருந்திருப்பார்? அந்த மகஜர் வேறு சிலரின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்டிருந்த போதி லும் அதனைத் தயாரித்தவர் தானே என்ற உண்மையைத் தன் மீது பூரண விசுவாசம் வைத்திருந்த திரு. பேரின்பநாயகத்திடம் கூட மறைக்க வேண்டியிருந்ததை எண்ணி பண்பாளர் உவைஸ் எத்துணை மானசீக அவஸ்த்தை பட்டிருப்பார்? இக்கேள்விகளின் ஆழத்தை, அவற்றின் தாற்பரியத்தை, உவைஸ் அவர்களின் உயர் உளப்பாங்குகளை அறிந்தவர்கள் நன்கு உணர்வர்.
வானரத் தலைவன் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக "சிறியன சிந்தியாதான் ஆற்றல்மிகு வாலியை மறைந்திருந்து கொன்று தனது இயல்பான உயர் நெறியிலிருந்து சற்று விலகினான் அயோத்தி இராமன். தன் துணைவியாம் கற்பின் செல்வி மைதிலியை இராவணனிடமிருந்து மீட்பதற்காக சீதாரா மன் செய்த தியாகம் அது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு, இஸ்லாமியர் மத்தியில் உரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்ப தற்கு, உவைஸ் தான் பெரிதும் மதித்த திரு. பேரின்பநாயகத்திடம் கூட இச்சந்தர்ப்பத்திலே தன் இயல்புக்கு மாறாக, பாசாங்காக நடந்து கொண்டார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் உயர்ச்சிக் காக உவைஸ் செய்த தியாகம் இது.
பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டிலே, ஒரு சிறுபான்மை இனம் தனக்குரிய அத்தனை உரிமைகளையும் பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட உபாயங்களைக் கையாள்வது அவசியமாகும். டாக்டர் உவைஸ் கையாண்டதும் அத்தகையதோர் உபாயமே. இந்த உபாயம் கையாளப்படாதிருந்திருந்தால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், இலங்கைப் பாடசாலைகளில் ஆயிரத்துத் தொளாயி ரத்து அறுபதுகளிலேயே நிலைபெற்றிருக்க மாட்டாது என்று உறுதியாகக் கூறலாம்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்ஷைக்கென தமிழ் இலக்கியம் 'ஆ' பாடத்திட்டம் அமைக்கப்பட்டபோது, அதற்கு ரிய பாடநூல்களைத் தேர்ந்தெடுக்கும் முழு பொறுப்பும் டாக்டர் உவைஸ் அவர்களிடமே விடப்பட்டது. அவர் செய்யுள் நூல்கள்

Page 71
114
என்ற அடிப்படையில், புலவர் நாயகம் இயற்றிய குதுபுநாயகம் என்ற காவியத்தையும், கவிஞர் சாரண பாஸ்கரன் எழுதிய யூசுப் சுலைகா என்னும் காப்பியத்தையும், வசன நூல்கள் என்ற அடிப்படையில் புதுகுஷ்ஷாம் என்னும் வசன நூலின் முதலாம் காண்டமாகிய காண்டம் முகம்மதியாவையும், டாக்டர் வித்தியா னந்தன், 'பிறையன்பன்' என்ற புனைப்பெயரிலே எழுதிய "கலையும் பண்பும்" எனும் நூலையும் தேர்ந்தெடுத்து மாணவர்க ளுக்கு அறிமுகப்படுத்தினார்.
இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பாடசாலைகளில் அறிமுகப் படுத்தும் கொள்கை, பின்னர் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் (உயர்தர) பரீட்ஷைக்கும் நீடிக்கப்பட்டது. இப்பரீட்ஷைக்குத் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு வண்ணக்களஞ்சியப் புலவர் இயற்றிய இராஜநாயகம் என்னும் காவியம் ஒரு மாற்றுப் பாடநூலாக அறிமுகப்படுத்தப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு புலவர் நாயகம் இயற்றிய புதுகுஷ் ஷாம் ஒரு மாற்றுப் பாடநூலாக கற்பிக்கப்பட்டது.
பேராசிரியர் வி.செல்வநாயகம் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் (உயர்தர) பரீட்ஷைக்குரிய தமிழ்ப் பாட நூல் குழுவின் தலைவராக கடமையாற்றிய போது மாற்றுப் பாடப் புத்தக அமைப்பில் நல்லதொரு மாற்றத்தைக் கொணர்ந்தார். மாற்றுப் பாடத்திட்டம் என்ற முறையை முற்றாக நீக்கிய அவர், பரீட்ஷைக் கென விதந்தோதப்படும் எல்லா நூல்களையும் எல்லா மாணவர்க ளும் படித்தல் வேண்டும் என்ற முற்போக்கான கொள்கையினை அறிமுகப்படுத்தினார்.
இதற்கிணங்க சைவசமய அடிப்படையில் தோன்றிய பெரிய புராணத்தின் ஒரு படலமும், கிறிஸ்தவ சமய அடிப்படையில் பாடப்பட்ட இரட்சணிய யாத்திரிகத்தின் ஒரு படலமும், இஸ்லா மிய அடிப்படையில் இயற்றப்பட்ட சீறாப் புராணத்தின் ஒரு படலமும் க.பொ.த. (உயர்தர) பரீட்ஷைக்குத் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் அத்தனை மாணவ, மாணவிகளும் கட்டாயம் கற்க வேண்டிய பாடநூல்களாக அமைந்தன. இவ்வமைப்பு இஸ்லாமிய நூலொன்றினை முஸ்லிம்கள் அல்லாத மாணவர்க ளையும் படிக்க வைத்தது என்பதால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை ஒருபடி உயர்த்தியது என்றே கூறவேண்டும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் பாட நூல்களாக அறிமுகப்படுத்தப்பட்டதன் நல்விளைவுகள், இவை அறிமுகப்ப டுத்தப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளிலேயே தென்பட ஆரம்பித்தன.

115
1962ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், புதுகுஷ்ஷாம் வசன காவியத்தின் முதலாம் பதிப்புக்கு டாக்டர் உவைஸ் எழுதிய முன்னுரையின் கீழ்வரும் பகுதி இதனை நன்குணர்த்துகிறது.
"தமிழ் இலக்கியம் 'ஆ' பாடத்திட்டம் மாற்றுப் பாடத் திட்டமாக வகுக்கப்பட்டு, இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல்களை அப்பாடத்திட்டத்துக்கான பாடப் புத்தகங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலே முக்கிய ஒரு நிகழ்ச்சி எனத் துணிந்து கூறலாம். இதன் பயனாக இஸ்லாமிய அடிப்ப டையில் எழுந்த மிகப் பலவான தமிழ் நூல்கள் கவனிப் பாரற்றுக் கிடந்த காலம் மலையேறிவிட்டது என உறுதி யாக நம்பலாம். இத்துறையில் இப்போது புத்துணர்ச்சி தோன்றி உள்ளது என ஒரளவு திருப்தியடையலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சிப் பாதையில் செல்லத் தலைப்பட்டு புதிய ஒரு திருப்பத்தை அடைந் துள்ளது என உள்ளம் பூரிப்படையலாம்.'
இஸ்லாமியத் தமிழ் நூல்கள் பாடசாலைகளில் அறிமுகப்ப டுத்தி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு முன்னரே, ஈழத்து முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் காட்டிய அக்கறையில், இந்தளவு பாரிய மாற்றங்களை டாக்டர் உவைஸ் அவதானித்திருக்கின்றார் என்றால், கடந்த மூன்று தசாப்தங்களிலே எத்தகைய மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமென்பதை ஊகித் துக் கொள்ளலாம்.
இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் பெருமளவுக்குப் பிரபல்யம் அடைந்திருப்பதற்கு மிக முக்கிய காரணம், இஸ்லாமியத் தமிழ் நூல்கள், க.பொ.த. சாதாரண, உயர்தரப் பரீட்ஷைகள் இரண்டினுக்கும் பாடநூல்களாக அறிமுகப் படுத்தப்பட்டமையே ஆகும். இவை பரீட்ஷை நூல்களாக அறிமுகப்படுத்தப்பட்டதனால், இலக்கியத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் அவற்றை விருப்போடு படித்தனர்; அவற்றின் அழகினாலும், கற்பனைச் சிறப்புக்களினாலும், உவமை நயங்களி னாலும் கவரப்பட்டனர்; பாடசாலை படிப்பு முடிந்த பின்னரும் அவ்விலக்கியங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டினர்.
இலக்கியத்தில் சிரத்தையில்லாத மாணவர்களும் பரீட்ஷை
யில் தமிழ்ப் பாடத்தில் சித்தியடைய வேண்டுமென்பதற்காக
இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் படித்தனர். பரீட்ஷைகள்

Page 72
116
முடிந்த பின்னர், இஸ்லாமியத் தமிழ் நூல்களை, இத்தகையோர் ஏறெடுத்தும் பார்க்கவில்லையென்ற போதிலும், பரீட்ஷைக்காகப் படித்த இஸ்லாமியத் தமிழ் நூல்களின் பெயர்களையும், அவற்றை இயற்றிய புலவர்களின் பெயர்களையும், அந்நூல்களின் உள்ளடக் கங்களையும் முற்றாக மறந்துவிடல் இவர்களுக்குக் கூட அத் துணை எளிதாக இருக்கவில்லை. இத்தகையோர் கூட தமது அன்றாட பேச்சுகளில் சிலவேளைகளில் இந்த நூல்களிலிருந்து உதாரணங்கள் காட்டுவதை நாம் அவதானிக்கலாம்.
இஸ்லாமியத் தமிழ் நூல்கள் பாடநூல்களாக ஏற்கப்படாதிருந் திருந்தால் இந்த உயர்நிலை ஒருபோதும் உருவாகியிருக்காது என்று திடமாக கூறலாம். எனவே இஸ்லாமியத் தமிழ்நூல்களை இலங்கைப் பரீட்ஷைத் திணைக்களம் பாடநூல்களாக ஏற்பதற்கு பிரதான காரண கர்த்தாவாக இருந்த டாக்டர் உவைஸ் அவர்களை இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றென்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூரவே செய்யும்.

8. பேராசிரியர் உவைசும் இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாடுகளும்
'இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் என்ற தனது நூலுக்கு எழுதிய முன்னுரையில் அல்லாமா டாக்டர் உவைஸ் 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகோலியது திருச்சி மாநகரில் நிகழ்ந்த முதலாவது அனைத்து லக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மகாநாடு' எனக் கூறியுள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தின் தற்கால எழுச்சிக்குத் தனது ஆய்வுகள் மூலம் வித்திட்ட பெரியார் உவைஸின் இக்கணிப்பீடு, வசிஷ்டர் வாயினாலேயே பிரம்மரிஷி என விளிக்கப்படுவதற்கு நிகரானதே.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் இன்று கண்டுள்ள மாபெரும் எழுச்சிக்கும், மகோன்னதமான வளர்ச்சிக்கும் அடிப்படையாகவி ருந்த முக்கிய காரணிகளுள் ஒன்று, திருச்சி, சென்னை, கொழும்பு, காயற்பட்டணம், கீழக்கரை, நீடூர் போன்ற நகரங்களில், வெகு கோலாகலமாக நடந்து முடிந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடுகளாகும் என்பது இலக்கிய ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும். இஸ்லாமிய இலக்கியத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தமிழறிஞர்களையும், எழுத்தாளர் களையும், அவ்விலக்கியத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இலக்கிய அபிமானிகளையும், சமூகப் பற்று மிகு இஸ்லாமிய தனவந்தர்களையும் ஒரே கூரையின் கீழ்ச் சேர்த்து, அவர்களிடம் மலிந்திருந்த வேறுபட்ட சக்திகளை ஒன்றிணைத்து, இம்மகாநா டுகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிக் காண்பதற்குப் பெரிதும் உதவியுள்ளன.
ஒரு மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கு, அவ்விலக்கியம் தொடர்பான மகாநாடுகள் ஆற்றும் உதவிகளின் தன்மையை டாக்டர் உவைஸ் 'மருதை முதல் வகுதை வரை எனும் தனது நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார். 'ஓர் இலக்கியம் வளர அது பரப்பப்படல் வேண்டும். அது பற்றி ஆய்வுகள் நடத்தப்படல் அவசியம். அடிக்கடி இலக்கியம் உரையாடலுக்கு இலக்காக்கப்ப டல் இன்றியமையாதது. பழைய கருத்துக்கள் கவனமாக அலசி ஆராய்தல் நிகழ்த்தபடின், அது புது மெருகூட்டப்படும். புதுக்கருத்

Page 73
118
துக்கள் புகுத்தப்படின் இலக்கியம் புதுப் பொலிவு பெறும். அதனைப் பயிலும் மக்கள் உள்ளங்களில் அது பதிந்து விடும். அது அழிந்திடாது வாழும். அதன் பயனாகப் பல்கிப் பெருகும். வளம் பெற்று வளர்ச்சி அடையும். சில துறைகளில் ஏனைய இலக்கியங்களுடன் சமமாகவும் வேறு சில துறைகளில் ஒப்பற் றும் விளங்கும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பரப்பு யாது, அதன் சிறப்பியல்புகள் எவை, அதனைப் பயில்வதனால் ஏற்படும் நற்பயன்கள் யாவை எனத் தோன்றும் இன்னோரன்ன வினாக்க ளுக்கு விடைகள் காணவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய கலந்துரையாடல்கள் இன்றியமையாதவையாகின்றன.'
'மருதை முதல் வகுதை வரை எனும் நூல் எழுதப்பட்ட காலம் வரை நடந்து முடிந்திருந்த நான்கு அகில உலக இஸ்லாமியத் தமிழ் மகாநாடுகளிலும் பங்கேற்று, அம்மகாநாடுகள் இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள பாரிய பங்களிப்புக்களை நிதர்சனமாக கண்டுணர்ந்துள்ள டாக்டர் உவைஸ் அவர்களின் மேற்படி கருத்துக்கள் நெஞ்சத்தில் நிறுத்தபட வேண்டியவையே. இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பற்றிய உவைஸின் ஆய்வு கள் நடைபெற்றிடாவிடில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநா டுகள் கூடியிருக்க மாட்டா என்று கூறுவதில் நியாயம் இருக்கின்ற போதிலும், மகாநாடுகள் நடத்தி இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உவைஸின் சுயசிந்த னையில் தோன்றிய ஒன்றல்ல என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையே. முதலாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு 1973ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெறுவதற்கு முன்னரே உலகளாவிய அடிப்படையில் கோலாலம்பூர், சென்னை, பாரிஸ் ஆகிய மாநகரங்களில் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தன. இம்மகாநாடுகள் மூலம் தமிழ் இலக்கியம் பெற்ற நன்மை களை முஸ்லிம் தமிழ் அறிஞர்கள் அவதானிக்கத் தவறவில்லை. இம்மகாநாடுகளில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வழங்கப்படவே யில்லை என்பதையும், அம்மகாநாடுகளில் பங்கு பற்றிய இஸ்லா மிய இலக்கிய ஆர்வலர்கள் கவனிக்கவே செய்தனர்.
எனவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் பரப்பினையும் செம்மையாக ஆராய்வதற்குத் தனி மகாநாடுகள் நடாத்தி அவ்விலக்கியத்திற்குப் புதுப் பொலிவினை வழங்க வேண்டுமென்ற சீரிய சிந்தனை பெரும் புலவர் பேராசிரியர்

1.19
நெய்னார் முகம்மது, ஜமால் முகம்மது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் சாஹிபு, இறையருட் கவிமணி பேராசிரியர் கா.அப் துல் கபூர், டாக்டர் உவைஸ், அறிஞர் ஏ.எம்.எ.அஸிஸ் போன்ற முஸ்லிம் தமிழ்ப் பெருந்தகைகளின் உள்ளங்களை உந்த ஆரம்பித் தது. இந்த ஆக்கப்பூர்வமான சிந்தனையின் விளைவே இதுவரை நடந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடுகள்.
இதுவரை திருச்சி, சென்னை, காயற்பட்டணம், கீழக்கரை, நீடூர் எனும் தென்னிந்திய நகரங்களில் அனைத்துலக அடிப்படை யில் ஐந்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடுகள் நடைபெற் றுள்ளன; ஒன்று இலங்கையின் தலைநகரான கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கொழும்பில் நடந்த மகாநாட்டைத் தவிர்ந்த ஏனைய ஐந்து மகாநாடுகளினதும் அமைப்பு வேலைகளில் டாக்டர் உவைஸ் அவர்களினது பங்களிப்பு, பேராசிரியர் நெய்னார் முகம்மது போன்றோரின் பாரிய பங்களிப்புகளோடு ஒப்பிடும் போது குறைவே என்ற போதிலும், இதுவரை நடந்துள்ள ஆறு மகாநாடுக விலும் மிகக் கனமான, காத்திரமான ஆய்வுரைகளை வழங்கி அவற்றின் வெற்றிக்குக் கணிசமான பங்களிப்பினை வழங்கியவர் இலங்கை முஸ்லிம் தமிழறிஞர் டாக்டர் உவைஸ் அவர்களே என்பதை எவரும் மறுக்கத் துணிந்ததில்லை. உண்மையில் உவைஸ் கலந்து கொள்ளாத இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு ரோமியோ இல்லாத "ரோமியோ ஜூலியட் நாடகத் திற்கு ஒப்பானதாகவே இருந்திருக்கும்.
இதுவரை நடைபெற்றிருக்கும் ஆறு மகாநாடுகளிலும் உவைஸ் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளினதும், அவர் ஆற்றிய சொற்பொழிவுகளினதும் உள்ளடக்கங்களை ஆராய்ந்து பார்க்கின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடுகளின் தரம் உயர்வதற்கு அவரின் நுண்மாண் நுழைபுலம் எத்துணை அளவு உதவியிருக் கிறது என்பது புலப்படும்.
திருச்சி மாநகரில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டுக்கு முன்னோடியாக அமைந்தது இலங்கை மருதமுனையில் 1966 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவே. அயல்நாட்டுப் பிரதிநிதிகள் ஒரு சிலர் மாத்திரம் பங்கு பற்றியிருந் தால் இவ்விழாவே முதல் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு என்ற அழியாப் புகழைப் பெற்றிருக்கும்.

Page 74
12O
இம்மருதமுனை மகாநாட்டின் சிறப்பினை அறிஞர் உவைஸ் 'இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் என்னும் நூலில் பின்வருமாறு மதிப்பிட்டுள்ளார்:
"1966 ஆம் ஆண்டு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த பொன்னாளன்று மருதமுனை விழாக்கோ லம் பூண்டது. கிழக்கு மாகாணத்தின் தலைநகராம் மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ளது மருதமுனை என்னும் பதி. அந்தப் பெரும்பதியில் அல்மனார் மகா வித்தியாலயத்தில் கோலாகலமாக அந்த விழா நடைபெற் றது. ஈழத்தில் அத்தகைய ஒரு விழா நடைபெற்றது அதுதான் முதல் தடவையாகும். அங்கே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை அரியணை அமர்த்திய பெருவிழா வுக்குக் காலாக இருந்தவர் ஜனாப் எஸ்.ஏ. செய்யது ஹஸன் மெளலானா என்பவரே. அன்று அங்கே நடை பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா, இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடொன்றை நடாத்த வழி கோல வேண்டும் என்பது அவ்விழாவில் பங்குபற்றிய அனைவரினதும் ஒரே அபி லாஷையாக இருந்தது. அந்த அபிலாஷை தமிழகத்தில் திருச்சி மாநகரத்தில்தான் நிறைவேற வேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்து விட்டான், அல்ஹம்துலில்லாஹ்."
ஏ.எம்.ஏ.அஸிஸ், ஏ.பெரியதம்பிப்பிள்ளை, எம்.எம். உவைஸ், வீ.சாமித்தம்பி, ஜே.எம்.எம்.அப்துல் காதிர், ஹாபிஸ் எம்.கே.செய்யது அஹமது போன்ற பெரும் தமிழறிஞர்கள் கலந்து கொண்ட இம்மருதமுனை இலக்கிய மகாநாட்டில் சீறாப்புராணம், சையிதத்துப் படைப்போர், இராஜநாயகம், முதுமொழி மாலை, காசிம் திருப்புகழ், மிஃராஜ் மாலை, வேதபுராணம் போன்ற பல இஸ்லாமியத் தமிழ் நூல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இம்மகாநாட்டின் இரண்டு அமர்வுகளில் ஒன்றுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்த டாக்டர் உவைஸ் அவர்கள், "முஸ்லிம் தமிழ் இலக்கிய மரபு எனும் தலைப்பில் மிக ஆழமான ஓர் ஆய்வுக் கட்டுரையினைட் வாசித்தும் இம்மகாநாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையின் ஊடாக உவைஸ் அவர்கள் முன்வைத்த இரண்டு கருத்துக்கள், அவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் எத்தகைய ஆழமான பயிற்சியினைப் பெற்றிருக்கின்றார் என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகின்றன. அவற்றுள் முதலாவது கீழே தரப்படும் கருத்தாகும்.

21
"தமிழ் நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் புலவர்கள் பெரும்பா லும் இந்து மதச் சூழலிலேதான் வாழ்ந்து வந்துள்ளனர். பெரும்பாலும் சைவ, வைணவ மதக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தமிழ் நூல்களில் அவர்கள் பாண்டித்யம் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாத் துக்கு முரணான கருத்துக்கள், முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்ட தமிழ் நூல்களிலே புகுத்தப்பட்டுள்ளன. சில சமயங்களில் அத்தகைய கருத்துக்கள் இஸ்லாத்துக்கு முரணானவை என அறியாமலேயே முஸ்லிம் புலவர்கள் அவற்றைப் புகுத்தியிருக்கலாம். அத்தகைய கருத்துக்கள் இஸ்லாத்துக்கு முரணானவை என்பதை உணராமல் இருந் திருக்கலாம். புலவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் பொழுது இத்தகைய முரண்பாடுகள் அவர்களுக்குத் தோற்றாமலிருக்கலாம்.
தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழ் நாட் டிலே கமக்காரர் வயல்களிலே வேலை செய்யப் போகும் முன்னர் சூரியனைக் கையால் தொழுவர். தத்தம் குலங்க ளுக்குரிய தெய்வங்களை வணங்குவர். இன்னோரன்ன சமயாசாரங்களைப் பின்பற்றுவர். சீறாப் புராண ஆசிரியர் உமறுப் புலவர் அறபு நாட்டிலேயும் இவ்வாறே நடந்தது எனத் தமது நூலில் பாடியுள்ளார். அறபு நாட்டுக் கமக்காரரும் 'கதிரவன் றனைக் கையாற் றொழுது, குலந்தரு தெய்வ வணக்கமும் செய்து நெல் விதைத்தனர் என உமறுப் புலவர் சீறாப் புராணத்திலே குறிப்பிடுகிறார். இந்துக்கள் தத்தம் விழாக் காலங்களில் தத்தம் இல்லங்க ளுக்குச் செல்லும் முன்றில்களில் "கோலங்கள் இடுவர். அவ்வாறு கோலங்கள் இட்டுப் பூசை செய்வர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தவப் புதல்வியான பாத்திமா (ரலி) நாயகியின் திருமண வைபவத்தைப் பாடப்புகுந்த உமறுப் புலவரே பழைய மணலை அகற்றிப் புதுமண லைப் பரப்பும் படி பறையடிக்கப்பட்டதாகக் கூறுவ தோடு நின்று விடவில்லை. வீட்டு முற்றங்களிலே கோலங்களை இடும்படியாகவும் பறைசாட்டப்பட்டதா கப் பாடுகின்றார். இதனைத் தொடர்ந்து வரும் வர்ணனை களிலே அறபு நாட்டிலே மக்கமா நகரிலே உள்ள வீடுகளின் முற்றங்களிலே கோலங்கள் வரையப்பட்டதாக வும் விவரிக்கிறார். இது உமறுப் புலவரின் குற்றமன்று. அவருடைய அன்றைய சூழ்நிலை அவரை அவ்வாறு

Page 75
22
செய்யத் தூண்டி விட்டது. பறை சாற்றுவதைப் பற்றிக் கூறிய உமறுப் புலவர் அவர்கள் அறபு நாட்டிலும் வள்ளுவர்களே பறை சாற்ற உபயோகிக்கப்பட்டனர் என்று கூறும் அதே சந்தர்ப்பத்தில் அவ்வாறு பறை சாற்றுவதற்குத் தமிழ் நாட்டைப் போல் யானைகள் உபயோகிக்கப்படவில்லை; ஒட்டகங்களே உபயோகிக் கப்பட்டன என்று பாடுகிறார். இவ்வாறு தமிழ் இலக்கிய மரபைப் புகுத்துவதோடு நின்று விடாது அதனை அறபு நாட்டு இயற்கையோடு பொருந்தக் கூடிய முறையில் அமைத்துச் செல்வதையும் முஸ்லிம் புலவர்கள் மேற் கொண்டுள்ளனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இவ் வாறு இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்கள் முஸ்லிம் புலவர்களின் தமிழ் நூல்களிலே இருக்கக் காணலாம். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்க ளைப் பதிப்பித்துப் பிரசுரிப்போர் இவற்றைச் சுட்டிக் காட்டி வெளியிடுதல் அனைவருக்கும் பயனுடைய கைங் கரியமாகும்."
மருதமுனை மகாநாட்டிலே டாக்டர் உவைஸ் எடுத்துக்காட் டிய இரண்டாவது முக்கியமான உண்மை பாரசீக மொழி, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் நிலைநாட்டியுள்ள செல் வாக்கு சம்பந்தமானதாகும். உவைஸின் ஆய்வுக் கட்டுரை அத னைப் பின்வருமாறு விளக்குகிறது.
'அறபு மொழியால் பாரசீக மொழி வளம் பெற்றது என்பது உண்மையே. எனினும் முஸ்லிம் புலவர்களின் தமிழ் நூல்களிலே தூய பாரசீகச் சொற்களும் இடம்பெற் றுள்ளன. அத்தகைய சொற்களுள் பயகாம்பர் என்பது ஒன்று. பயகாம்பர் என்ற பாரசீகச் சொல்லை நபி' என்ற அறபுச் சொல்லுக்குப் பதிலாகப் பாரசீக மொழியில் உபயோகிப்பர். முகம்மது நபி (ஸல்) அவர்களின் வபாத் துக்குப் பின்னர் இஸ்லாமியப் பேரரசின் அதிபர்களாக நான்கு கலீபாக்கள் பதவி வகித்தார்கள். முஸ்லிம்களின் பேச்சு வழக்கிலும் இலக்கியத்திலும் அந்நான்கு கலீபாக்க ளும் நாலு யார்கள் என்று வழங்கப்படுகின்றனர். 'நாலு யார்’ என்ற இச்சொற்றொடரிலும் ஒரு பாரசீகச் சொல் இருக்கிறது. நாலு யார் என்ற சொற்றொடரில் உள்ள "யார் என்பதே அப்பாரசீகச் சொல்லாகும். பாரசீக, உறுது மொழிகளிலே 'யார் என்பது முதல் நான்கு கலீபாக்களை யும் குறிப்பிடுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ள

123
சொல்லாகும். எனவே அந்த 'யார் என்ற பாரசீகச் சொல் கலீபாக்களைக் குறிக்கும் அதே பொருளில் முஸ்லிம்க ளின் தமிழிலக்கியங்களிலும் ஆளப்பட்டுள்ளது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அலி (ரலி) அவர்களுடைய பெயரோடு 'யார் என்ற இச்சொல் சேர்ந்து 'அலியார் என்று வழங்கும் போதும் 'யார் என்பது பாரசீகச் சொல்லாகவே இருக்க Ꮆu)fᎢLD. **
தென்னிந்திய, ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலிருக் கின்ற அலியார் என்ற பெயர் எவ்வாறு தோன்றியுள்ளது என்பதை டாக்டர் உவைஸின் விளக்கத்தைக் கேட்ட பின்னரே பெரும்பான்மையான முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையே.
முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு என்று கருதப்படக் கூடிய அல்லது முதல் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனக் கருதப்படக் கூடிய மருதமுனை மகாநாட்டில் அறிஞர் உவைஸ் வாசித்த ஆய்வுக் கட்டுரை எத்துணை ஆழமும் சத்தும் நிறைந்த தாக இருந்ததுவோ, அத்துணை ஆழமும் சத்தும் நிறைந்தனவா கவே இதுவரை நடந்து முடிந்துள்ள அத்தனை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடுகளிலும் அவர் வாசித்த ஆய்வுக் கட்டுரைகளும் ஆற்றிய சொற்பொழிவுகளும் திகழ்கின்றன.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று இஸ்லாமியத் தமிழ் இலக் கிய ஆர்வலர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படுவது 1973 ஆம் ஆண்டில் திருச்சி மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற முதலாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநா டாகும். இம்மகாநாட்டில் பேரறிஞர் உவைஸ் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளும் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் தென்னிந்திய இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் களிப்பை யும் வியப்பையும் ஏற்படுத்தின; இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தைப் பற்றித் தாம் இதுவரை அறிந்திராத எத்தனையோ பாரிய உண்மைகளை உவைஸின் மூலம் செவியுற்ற அவர்கள் அம்மேதை யைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினர்; அவரோடு பேசுவதையும் பழகுவதையும் பெரும் பாக்கியமெனக் கருதினர்.
இறையருட்கவிமணி கா.அப்துல் கபூர், பெரும் புலவர் நெய்னார் முகம்மது, தா.பிச்சை முகம்மது, கா.முகம்மது பாரூக், குளச்சல் எஸ்.சாஹ"ல் ஹமீது, மெளலானா மெளலவி அப்துல்

Page 76
124
வஹாப், ஏ.எம்.ஏ.அஸிஸ், எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் போன்ற உயர் அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் உவைஸ் பொன்னாடைப் போர்த்திக் கெளரவப்படுத்தப்பட்டதோடு இம்ம காநாட்டின் முதல் நாள் கருத்தரங்குக்குத் தலைமை தாங்கும் பெருமையையும் பெற்றார். இம்மகாநாட்டில் டாக்டர் உவைஸ், 'இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் என்ற தலைப்பிலும், திருக்குர்ஆனும் முஸ்லிம்களின் தமிழ்ப் பேச்சு வழக்கும் இலக்கிய வழக்கும் என்ற தலைப்பிலும் முத்தான இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து, அரங்கில் குழுமியிருந்த இலக்கிய ஆர்வலர்களின் செவிகளுக்குப் பெரு விருந்து படைத்தார்.
திருச்சி மகாநாட்டின் ஆலோசனை அமைப்புக் கூட்டத்தில் பேராசிரியர் உவைஸ் முன்வைத்த சிந்தனை, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒர் அறைகூவலாகவே விளங்கியது. வாசகர்களின் பார்வைக்காக அச்சிந்தனை கீழே சமர்ப்பிக்கப்படு கின்றது.
'இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவற்றை இலங்கையி லேயே தேடிப் பெற்றுக் கொண்டேன். இன்னும் எனது கைக்கெட்டாமல் இலைமறைகாயாக எத்தனை இஸ்லாமி யத் தமிழ் இலக்கியப் படைப்புகள் இருக்கின்றனவோ யார் அறிவர். அத்தகைய அனைத்தையும் ஒன்று திரட்டு தல் வேண்டும். ஒரு முகப்படுத்துதல் வேண்டும். இன்று நாம் எவ்வளவு உற்சாகத்தோடு விழாக்கோலம் பூணுகி றோமோ, எவ்வளவு ஆர்வத்தோடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை அரியணையில் அமர்த்த முயற்சிக்கி றோமோ அதனை விடக் கூடுதலான விழிப்புணர்ச்சியு டன் அவற்றைத் தேடிப் பெற்று நல்ல முறையில் பதிப்பித்துத் தமிழ் கூறும் நல்லுலகம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புக்களையும் நாம் மேற்கொள்ளுதல் வேண் டும். இத்துறையில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றக் கூடிய ஒரு நிறுவனமாக நாம் இன்று இங்கு நிர்மாணிக்க எண்ணியுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் அமைதல் வேண்டும். உரிய முறையில் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்றுப் பணியாற்றுதல் வேண்டும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள குறையை நிவர்த்தி செய்தல் வேண்டும்.

25
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிதாகப் பதிப்பிக்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டி யது ஒன்றுண்டு. எங்களுடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திலே அதன் சிறப்பம்சமாக அமைந்துள்ள அறபுச் சொற்களைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் முஸ்லிம் அல்லாதோரி டம் செல்வாக்கைப் பெறத் தவறியமைக்குரிய ஒரு காரணம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்க ளிலே இடம் பெற்றுள்ள அறபுச் சொற்களே என்று உறுதியாகக் கூறலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளைப் புதிதாகப் பதிப்பிக்கும் பொழுது அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் அறபுச் சொற்களைச் சுட்டிக் காட்டி அவற்றை விளக்குதல் வேண்டும்.
ஓர் உதாரணத்தை ஈண்டு எடுத்துக் கொள்வோம். உமறுப் புலவர் தமது சீறாப் புராணத்தில் பல இடங்களில் தீன் என்ற அறபுச் சொல்லையும் குபிர் என்ற அறபுச் சொல்லையும் பயன்படுத்துகிறார். உணவு என்னும் பொருளைக் குறிக்கத் தீன் என்று தமிழிலும் ஒரு சொல் இருப்பதால் அறபு புரியாத ஒருவர் அறபுச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்படுகின்றது. 'தீன் என்னும் பயிரை வளர்த்துக் குபிர் என்னும் களையை அகற்றுதல் வேண்டும்,' எனப் பொருள்பட உமறுப் புலவர் அவற்றை ஆண்டுள்ளார். அறபு மொழிப் பயிற்சி இல்லாத ஒருவர் தீன் பயிர் என்பதைப் பார்க்கும் பொழுது உணவுக்கான பயிர் என்று பொருள் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது. ஆனால் உமறுப் புலவர் கருதியது அது அன்று. தீன் என்று அழைக்கப்படும் இஸ்லாம் மார்க்கத்தை வளர்த்து குபிர் என வழங்கப்படும் இஸ்லாம் அல்லாத தன்மை ஆகிய களையை அகற்றுதல் வேண்டுமென்று கூறவே உமறுப் புலவர் இவ்வாறு தீன், குபிர் என்னும் அறபுச் சொற்களை ஆண்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. தீன், குபிர் போன்ற பல்லாயிரக்கணக் கான அறபுச் சொற்களை வகைப்படுத்தி அவற்றை எமது புதிய புதிய பதிப்புகளில் விளக்குதல் வேண்டும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல தொண்டுகள் புரியக்

Page 77
126
கூடியவர்களாக நாம் இருக்கிறோம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களை மக்கள் அறிந்து பயனடையச் செய்யலாம். இத்தகைய கருத்தரங்கு கள் ஆண்டாண்டு தோறும் நடைபெறல் வேண்டும் எனக் கூற விரும்புகின்றேன். அவ்வாறு வருடாந்தம் நடைபெ றும் பொழுது அத்தகைய மகாநாடுகளையும் கருத்தரங்கு கவியரங்குகளையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் படைத்த புலவர்களின் பிறப்பிடங்களைத் தெரிவு செய்து, அத்தகைய இடங்களில் நடத்தலாம். இவ்வாறு இஸ்லாத் துக்கும், தமிழுக்கும், இலக்கியத்துக்கும் நாம் அளப்பருந் தொண்டு புரியக்கூடியவர்களாக இன்று இருக்கிறோம். எங்கள் முயற்சிகள் சிறந்த முறையில் பயனளிக்க எல்லாம் வல்ல அல்லாகுத் தஆலா அருள் புரிவானாக."
1973 ஆம் ஆண்டில் டாக்டர் உவைஸ், இஸ்லாமியத் தமிழ் அறிஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் விடுத்த இவ் வேண்டுகோள் பெரும் வேட்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் விளை வுதான் இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமி யத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்கு ஒர் இருக்கை அமைக்கப்படக் கூடிய அளவிற்கு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தும் அளவிற்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர்ச்சி கண்டிருப்பதாகும்.
திருச்சி மகாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது, அன்று நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் புத்தகக் கண்காட்சியாகும். இக்கண்காட்சியின் மகத்தான வெற் றிக்கு உவைஸின் பங்களிப்பே மிக முக்கிய காரணமாக இருந்தது. இப்புத்தகக் கண்காட்சியைப் பற்றி டாக்டர் உவைஸ் தனது நூலொன்றில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
'திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிப் பொருட்காட்சிச் சாலையில் புத்தகக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது. சம்பிரதாய முறைப்படி அல்ஹாஜ் எஸ்.ஒ.ஹபீப் அவர்க ளால் புத்தகக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதும் பேராளரும் ஏனையோரும் புத்தகக் கண்காட்சியில் வைக் கப்பட்டிருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் அரும் பெரும் செல்வங்களைக் கண்ணாரக் கண்டு களித்தனர். இலங்கை, தமிழகம் போன்ற பல்வேறு பிரதேசங்களிலி

127
ருந்து கொண்டு வரப்பட்ட நூல்கள் காட்சிக்காக வைக்கப் பட்டிருந்தன. சில நூல்கள் கண்ணாடிப் பெட்டிகளுக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இன்னுஞ் சில இஸ் லாமியத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்கள் கொண்டு வந்தோர்களின் ஒழுங்கு முறையில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
உமறுப் புலவரின் சீறாப் புராணம், பனி அகுமது மரைக்காயரின் சின்ன சீறா, செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவரின் புதுகுஷ்ஷாம், திருக்காரணப் புராணம், திருமணிமாலை, குத்பு நாயகம், நாகையந்தாதி, மக்காக் கலம்பகம், தோத்திர மாலை, சித்திரக் கவிகள், வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம், குலாம் காதிர் நாவலரின் நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம், திருமக்காத் திரிபந்தாதி, குவாலிர்க் கலம்பகம், பதாயிகு கலம்பகம், பதுருத்தீன் புலவரின் இரண்டு பாகங்களைக் கொண்ட முகியத்தீன் புராணம், பிச்சை இப்ராஹிம் புலவரின் திருமதீனத்தந்தாதி, செய்யிது அனபியா சாகிபின் நபி நாயகம் பிள்ளைத் தமிழ், செவத்த மரைக்காயர் சீரியரின் மக்காக் கோவை, குஞ்சு மூசு லெப்பை ஆலிமின் இறவுசுல்கூல் படைப்போர், கனகவிராஜரின் கனகாபிஷே கமாலை, கவிகளஞ்சியப் புலவரின் சீறா வண்ணமும் சித்திர கவியும் ஆகிய நூல்களும் கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்தன. இவற்றை நான் எடுத்துச் சென்றிருந்தேன். இவை இலங்கையில் நான் தேடிக் கண்டெடுத்த நூல்க ளின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தன."
E A II.
திருச்சி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளின் சிகரமாக அமைந்தது புத்தகக் கண்காட்சியே என்பதும் உண்மை; இக் கண்காட்சியின் மகுடமாக அமைந்தவை டாக்டர் உவைஸ் அவர்கள் கொண்டு சென்றிருந்த நூல்களே என்பதும் உண்மை. எனவே முதலாம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு ஈட்டிய பாரிய வெற்றிக்கு ஈழத்துத் தமிழறிஞர் உவைஸ் வழங்கிய பங்களிப்பு கணிசமானது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
1974 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டிலும்

Page 78
*
128
உவைஸின் பங்களிப்பு கணிசமானதாகவே இருந்தது. இம்மகா நாட்டில் டாக்டர் உவைஸ் வாசித்த ‘ஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரை, அவர் தமிழ் இலக்கிய நூல்களில் பெற்றிருந்த பெரும் பயிற்சியைத் தென்னிந்திய முஸ்லிம் அறிஞர்களுக்குத் தெளிவாக உணர்த்தியது; அவர்கள் அனைவரையும் பெரும் வியப்புக்குள் ஆழ்த்தியது.
இன்றும் அவ் ஆய்வுக் கட்டுரையை வாசிக்கும் ஈழத்து முஸ்லிம்கள், பழங்காலத்தில் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயிலப்பட்ட பல தமிழ்ச் சொற்கள் அழிந்துபடாமல் வழக்கில் இருப்பதற்குத் தாமே காரணம் என்ற தெம்பையும் பெருமித உணர்வினையும் பெறவே செய்வர். பார்வைக்காக அக்கட்டுரையின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
'ஈழத்து முஸ்லிம் மக்களின் தமிழ்ப் பேச்சு வழக்கினை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய செய்யுள் வழக்குக் கும் உலக வழக்குக்கும் செந்தமிழுக்கும் கொடுந்தமிழுக் கும் பெரிதும் வேற்றுமை இருக்கக் காணலாம். அவர்க ளின் செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும் அறபுச் சொற்கள் பயிலப்பட்டு வருவது அத்தகைய வேறுபாட் டிற்குரிய காரணமாகாது. மேல் வாரியாகப் பார்க்கும் பொழுது முஸ்லிம்களின் தமிழ்ப் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் பல தமிழ்ச் சொற்கள் செய்யுள் வழக்கில் பயின்று வரும் செந்தமிழ்ச் சொற்களிலிருந்தும் பெருமளவில் வேறுபடுவதாகத் தோன்றும். எனினும் அவற்றை நுணுக்கமாக ஆராயப் புகுந்தால் நிலைமை அவ்வாறன்று என்பது புலனாகும். கொடுந்தமிழ்ச் சொற் கள் என்று எமக்குத் தோன்றும் சொற்கள் உண்மையி லேயே உருக்குலைந்து காட்சி அளிக்கும் செந்தமிழ்ச் சொற்களாகவே இருப்பதை நாம் காணலாம்.
இந்தக் கருத்தினை விளக்கவே ஒரு சில எடுத்துக்காட்டுக ளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஈழத்து முஸ்லிம்க ளின் தமிழ்ப் பேச்சு வழக்கில் பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ஆண்டுள்ள சொற்கள் அதே கருத்தில் உபயோகிக்கப்பட்டு வருவதை எடுத்துக்காட்ட விரும்பு கின்றேன். சில சமயங்களில் முஸ்லிம் தமிழ்ப் பேச்சு வழக்கில் சங்ககால இலக்கியத்துள் உள்ள சொற்கள் அதே

129
உருவத்தில், அதே கருத்தில் உபயோகிக்கப்படுவதைக் காணலாம். மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஒரெழுத்து அல்லது இரண்டு எழுத்துக்கள் குறைந்து காணப்படலாம். வேறு சில சமயங்களில் சிக்கனம் போன்ற காரணங்களால் அத்தகைய சொற்கள் உருக்குலைந்து அல்லது திரிந்து காணப்படும். இன்னும் சில இடங்களில் பழந்தமிழ்ச் சொற்கள் உருக்குலையாமல் கருத்து மாத்திரம் வேறு பட்டு உபயோகிக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கும்.
இத்தகைய அழகிய முன்னுரை ஒன்றினை வழங்கிய பின்னர், டாக்டர் உவைஸ் ஈழத்து முஸ்லிம்கள் அன்றாடப் பேச்சு வழக்கில் கையாளுகின்ற பல சொற்களை உதாரணமாகக் காட்டினார். அவற்றுள் ஒன்று முஸ்லிம்கள் சாதாரணமாகப் பாவிக்கும் 'ஊத் தை' என்ற சொல்லாகும்.
"ஊத்தை என்றால் அழுக்கு என்று பொருள். முஸ்லிம் மக்கள் அழுக்கு என்பதனை தமது நாளாந்தப் பேச்சு வழக்கில் உபயோகிப்பதில்லை. ஊத்தை என்பதனையே உபயோகிப்பர். ஊத்தைக் கமிசை, ஊத்தைப் பிடவை எனப் பலவாறு ஊத்தை என்னும் சொல்லைப் பயன்படுத் துவர். ஊத்தை என்னும் சொல் அழுக்கு என்று பொருள் பட 'ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்’ என்று ஆரம்பிக்கும் திருப்பாசுரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தத் தில் பெரியாழ்வாரின் நான்காம் பத்தில் இடம் பெற்றுள்ள காசுங்கறையுடை என்னும் ஆறாம் திருமொழியில் உள் ளெது.' இது உவைஸ் தான் கொடுத்த உதாரணச் சொல்லுக்கு வழங்கிய ஆதாரப்பூர்வமான விளக்கம்.
மேற்குறிப்பிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் உவைஸ் எடுத்துக் காட்டிய வேறு பல உதாரணங்களில் சிறுக்கன், சிறுக்கி என்ற இரண்டு சொற்களும் அடங்கும். இவ்விரண்டு சொற்கள் தொடர்பாக அவரது கட்டுரையில் காணப்படும் விளக் கங்கள் பின்வருவனவாகும்.
"சிறுவனைச் சிறுக்கன் என்றும் சிறுமியைச் சிறுக்கி என்றும் ஈழத்தின் சில பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தமது தமிழ்ப் பேச்சு வழக்கில் சர்வசாதாரணமாக உபயோகிப்பர். பெரி

Page 79
3O
யாழ்வார் தமது முதற்பத்தில் உள்ள தன்முகத்து என்னும் நான்காம் திருமொழியில் உள்ள ஏழாம் பாசுரத்தில்
"................................................................................................................... பண்டொருநாள் ஆலிலை வளர்ந்த சிறுக்கனவன்'
என சிறுக்கன் என்ற சொல்லை அதே கருத்தில் ஆண்டுள்ளார். "சிறுக்கி களுக்குறவாமோ' என அருணகிரிநாதர் தமது திருப்புகழில் சிறுக்கி எனும் சொல்லை சிறுமி என்னும் பொருளில் உபயோகித்துள்ளமை ஈண்டு நோக்கற்பாலது."
தாம் நாளாந்தம் பாவித்த ஊத்தை, சிறுக்கன், சிறுக்கி போன்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே என்ற உண்மையை டாக்டர் உவைஸ் அவர்கள் உணர்த்துவதற்கு முன்னர், பெரும்பான்மை யான முஸ்லிம்கள் அறிந்திருக்கவில்லை என்பது சரியான கூற்றே.
1976 ஆம் ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடந்தேறிய சீறாப்புராணக் கருத்தரங்கில் "சீறாவில் வரலாற்றுக் குறிப்புகள், "சீறாவில் அரபு, பாரசீகச் சொற்கள்’ என்கின்ற தலைப்புகளில் ஆழமிகு ஆய்வுக் கட்டுரைகள் வாசித்த டாக்டர் உவைஸ், 1978 ஆம் ஆண்டில் காயற்பட்டணத்தில் மிக விமரிசையாக நடை பெற்ற மூன்றாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டில், 'முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் - புலவரும் புரவலரும்', 'காயற்பட்டணம் வளர்த்த தீன் தமிழும் தீந்தமிழும்" என்ற மகுடங்களின் கீழ், தரமிகு இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து, அவையோரைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.
காயற்பட்டணம் வளர்த்த தீன் தமிழும் தீந் தமிழும் என்ற ஆய்வுக் கட்டுரையின் ஊடாக டாக்டர் உவைஸ் முன்வைத்த 'தமிழ் இலக்கியப் பரப்பிலே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங் களை இயற்றிய புலவர்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஆனால் தீன் தமிழ் இலக்கியத்திலே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றிய புலவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். காப்பியங்கள் இரண்டை இயற்றித் தீன் தமிழுக்கு அழகு செய்பவர் நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களாவார். மூன்று காப்பியங்களை யாத்துத் தீன் தமிழுக்கு மெருகு அளிப்ப வர் மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் அவர்களேயாவர். ஆனால் நான்கு பெருங் காப்பியங்களை இயற்றித் தீன் தமிழுக்கும் தமிழ் பேசும் நல்லுலகுக்கும் காயற்பட்டணத்துக்கும் பெருமை யைத் தேடித் தந்தவர் புலவர் நாயகம் என்றும் சேகுனாப் புலவர்

13.
என்றும் புகழ்ப் பெயரைப் பெற்றுள்ள செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் அவர்களேயாவார். ஓர் இலக்கியத்துக்கு தனிச் சிறப்புடையதாக அமைந்து அதற்குப் பெருமையை அளிப்பது அதன் காப்பியங்களே. அத்தகைய காப்பியங்கள் நான்கினை இயற்றி அக்காப்பியங்கள் பாடப்பட் டுள்ள மொழிக்குப் பெருமையை அளித்துள்ளவர் புலவர் நாயகம் ஒருவர் மாத்திரமே என்று பெருமையுடன் கூறலாம். இந்த நான்கு காப்பியங்களிலும் எமது புலவர் அவர்கள் 12,600 திரு விருத்தங்க ளுக்கு குறையாமல் பாடியுள்ளார் என்றால் அது சிறந்த ஒரு சாதனையாகத்தான் இருத்தல் வேண்டும். இவ்வாறு ஒரே மொழி யில் ஒரே புலவர் நான்கு காப்பியங்களைப் பாடியுள்ளமையை வேறு எந்த மொழியிலும் காண முடியாது. புலவர் நாயகம் அவர்கள் நான்கு வெவ்வேறு பொருள்களிலே தமது நான்கு காப்பியங்களையும் யாத்துள்ளார். இவ்வாறு ஒரே புலவர் நான்கு வெவ்வேறு பொருட்களில் நான்கு காப்பியங்களைப் பாடியுள்ள ஒரு மொழியையோ ஒரு நாட்டையோ காண முடியாது. தமிழ் மொழியில் கூட இத்தகைய சாதனையை நிலை நிறுத்தின ஒருவரைப் பற்றி யாம் இன்னும் அறியவில்லை. புலவர் நாயகம் அவர்கள் ஏறத்தாழ பத்து ஆண்டுகளிலே நான்கு காப்பியங்களை யும் இயற்றி உள்ளார்.' என்ற கருத்து, அரங்கத்தில் குழுமியிருந்த முஸ்லிம் தமிழ் இலக்கிய அபிமானிகளுக்குப் பரவசத்தையும் புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லையே.
தனது ஒப்பீட்டாய்வுகளின் மூலம் டாக்டர் உவைஸ் வெளிப் படுத்திய உண்மைகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்குப் புகழ் சேர்த்தன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் பொதிந்துள்ள சிறப்புக்களை வெளிக் கொணர்வதற்குத் தாமும் தம்மால் இயன் றதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இவை முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்களின் இதயங்களிலே வேரூன்ற வைத்தன.
1979 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாடு, கொழும்பு நகரில் அமைந் துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பார்வையாளர்கள் அத்தனைப் பேரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் வகையில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இம்மகாநாட் டினைப் பற்றி மிக விரிவாக எழுதிய தமிழ்நாட்டுப் பத்திரிகை யான முஸ்லிம் முரசு தன் கட்டுரையைப் பின்வரும் முறையில் முடித்திருந்தது.

Page 80
132
"யாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது கொழும்பு மகாநாடு, முந்திய மூன்று மகாநாடுகளைக் காட்டிலும் கூடுதலான அளவுக்கு வெற்றிகரமானதாக அமைந்திருந்தது, பயனுள்ளதாக இருந்தது, மறக்க முடி யாத ஒன்றாக இருந்தது என்று கூற முடியும். அதற்கு ஆரம்ப முதல் உறுதுணையாக இருந்து இறுதி வரை அயராது உழைத்த அனைவரும், குறிப்பாக டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்களும் நம் உளப்பூர்வமான பாராட் டுகளுக்கு உரியவராவார்கள்."
1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காயற்பட்டணத்தில் நடைபெற்ற மூன்றாவது மகாநாட்டின் போதே நான்காவது மகாநாடு இலங்கையில்தான் நடைபெற வேண்டுமென்ற முடிவெ டுக்கப்பட்டு விட்டது. மகாநாடு முடிந்து இலங்கை திரும்பிய கலாநிதி உவைஸ் உடனடியாக தன் காலத்தையும் நேரத்தையும் அறிவையும் ஆற்றலையும் 1979 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஈடுபடுத்தினார்.
மகாநாடு ஏற்பாடுகளைப் பற்றிய ஆலோசனைக் கூட்டங்க ளுக்குப் பெரும்பாலும் அக்காலகட்டத்தில் இலங்கைப் பாராளு மன்ற சபாநாயகராக திகழ்ந்த அல்ஹாஜ் பாக்கிர் மாக்கார் அவர்களே தலைமை தாங்கினார்கள். அத்தகைய ஒர் ஆலோச னைக் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை டாக்டர் உவைஸ் அவர்கள் 'மருதை முதல் வகுதை வரை என்ற நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்கள்.
"ஒரு கூட்டத்தில் நான்காவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டுக்கான செலவுகளைச் சமாளிப்பது பற்றி ஆராயப்பட்டது. அதற்கென நிதி திரட்டும் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. எங்கனம் நிதி திரட்டுவது, யார் யார் நிதி திரட்டச் செல்வது போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டன. தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பணம் திரட்டப்பட்டால் பணத்தை வங்கியில் இடுவதைப் பற்றியும் ஆராய்ந்து முடிவெடுக் கப்பட்டது. பொதுமக்களிடம் நிதி சேர்க்கச் செல்வது டாக்டர் உவைஸ் அவர்களுக்கு அவ்வளவு பிடிக்காது. இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஓரிரு கொடைவள் ளல்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பொழுது மகாநாட்டுக்கான நிதி திரட்டும் உத்தேசம் பற்றிப் பிரஸ்தா பித்து உள்ளார். ஆனால் அத்தகையோரின் பதில் அவ்வ ளவு திருப்திகரமான ஒன்றாக அவருக்குப் புலப்பட

33
வில்லை. அதன் பயனாக மனத் தளர்ச்சிக்கு உள்ளான அவர், அவருடைய நெருங்கிய உறவினர்களுடன் தொடர்பு கொண்டார். மாநாடு பற்றியும் மாநாடு நடத்துவதற்காகப் பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்னும் அமைப்புக்குழு தீர்மா னத்தைப் பற்றியும் வசதி படைத்த உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசினார். "எவராவது மனம் உவந்து தந்தால் பெற்றுக் கொள்ளுங்கள், யாரிடமாவது பணம் கேட்டுப் போக வேண் டாம்,' என்று அவருடைய உறவினர் அவரைப் பணித்தனர். “தேவையான பணத்தை நாங்களே தருகின்றோம்" என்றும் கூறினர். இதனால் மனத்தளர்வு நீங்கப் பெற்றுப் புதுத் தெம்புடன் செயல்படத் தொடங்கினார் டாக்டர் உவைஸ்.'
பேராசிரியர் உவைஸ் அல்ஹாஜ் பாக்கிர் மாக்கார் அவர்களிட மும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் தன்னோடு ஒன்றாக ஈடுபட்டிருந்த ஏனைய இலக்கிய ஆர்வலர்களிடமும், தனது நெருங்கிய உறவினர்கள் மகாநாட்டுச் செலவுகளுக்கு தேவைப்படும் பணத்தைத் தாமே தந்துதவுவதாக வாக்களித்திருப் பதை மகிழ்வோடு தெரிவித்தார். இந்த வாக்குறுதியை வழங்கிய வர்களின் பெயர்கள் கூறப்பட்ட கணத்திலேயே, இனி மகாநாட் டுச் செலவினங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்ற திடமான நம்பிக்கை சம்பந்தப்பட்ட அத்தனைப் பேர்களது உள்ளங்களிலும் குடிகொண்டு விட்டது. காரணம் வாக்குறுதிகள் வழங்கியவர்கள் அத்தனைப் பேரும் அகண்ட செல்வத்திற்கும் பரந்த ஈகைக்கும் பெயர் போனவர்களாக இருந்தமையே.
டாக்டர் உவைஸ் அவர்களின் மைத்துனர்களான அல்ஹாஜ் எம்.டபிள்யு.எம்.சாலி, அல்ஹாஜ் எம்.டபிள்யு.எம். உவைஸ், அல்ஹாஜ் எம்.டபிள்யு.எம்.பாயிஸ், அல்ஹாஜ் எம்.டபிள்யு.எம். அலி வபா, அல்ஹாஜ் எம்.டபிள்யு.எம். அஜ்வாத் ஆகியோரும், சகலர்களான அல்ஹாஜ் ஏ.எச்.எம். சித்தீக், அல்ஹாஜ் எம்.எம். ஹனபி, அல்ஹாஜ் எம்.ஜே.எம்.நிஸாம் ஆகியோரும், ஒன்று விட்ட மைத்துனர்களான அல்ஹாஜ் நவ்பல் எஸ்.ஜாபிர், அல் ஹாஜ் எம்.ஐ.எம். ஹாமித் சாலி, அல்ஹாஜ் எம்.ஐ.எம்.மர்சூக் சாலி ஆகியோரும், உவைஸின் சம்பந்தியான அல்ஹாஜ் சி.எம். அப்துல் கபூர் அவர்களும் மகாநாட்டுச் செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்ட போதெல்லாம் உவைசுக்கு மனம் கோணாது பணம் கொடுத்து கொழும்பு மகாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு உதவினர்.
கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெரு பி.எஸ்.கே.வி. பல்லாக் லெப்பை நிறுவனத்தின் பிரதம பங்காளரான பி.ஏ.சதக்

Page 81
34
ஹாஜியார் அவர்களும், சிங்கப்பூர் வணிகப் பிரமுகரான அல் ஹாஜ் எம்.அப்துல் கரிம் அவர்களும் கணிசமான நன்கொடை களை வழங்கினர். நன்கொடைகள் வழங்கியோரின் தொகை சிறியதே; ஆனால் அவர்கள் வழங்கியத் தொகைகள் கணிசமான வையாகவே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் கொழும்பில் இஸ்லாமிய இலக்கிய மகாநாடு வெகு விமரிசையாக, பெரும் பொருட் செலவோடு நடந்த போதிலும், பணம் சேகரிப்பதற்காக வேறு எவரிடமும் செல்லவேண்டிய அவசியம் இம்மகாநாட்டின் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த எவருக்கும் ஏற்படவே இல்லை.
சதக் ஹாஜியாரையும் அப்துல் கரிம் ஹாஜியாரையும் தவிர, பண உதவி வழங்கிய அத்தனைப் பிரமுகர்களும் டாக்டர் உவைஸ் அவர்களின் மிக நெருங்கிய உறவினர்களே. எனவே பேராசிரியர் உவைஸின் சொந்த செலவிலேயே நடைபெற்ற ஒரு மகாநாடு போலவே நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக் கிய மகாநாடு கொழும்பில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
ஏற்கனவே பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத் தில் நடைபெற்ற ரோட்டரி இயக்க மாவட்ட மகாநாடு ஒன்றில் பங்கு பற்றி அம்மண்டபத்தின் விஸ்தாரமான ஆசன வசதிகளைப் பற்றி நன்கு அறிந்திருந்த முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுன ரும், தென்னிந்திய வர்த்தகப் பிரமுகரும், சென்னையில் நடந்த இரண்டாம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட் டின் வரவேற்புக் குழுத் தலைவராக பணியாற்றியவருமான அல்ஹாஜ் சங்கு செய்யது இப்ராஹிம் அவர்கள், நான்காவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு, அப்பாரிய மண்டபத்தில் தான் நடைபெற போகின்றது என்று கேள்விப்பட்டவுடன், அம்மண்டபத்தின் அரைப்பகுதியைக் கூட, தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் நிரப்புவது கடினமானதாக இருக்குமே என்ற ஐயத்தை, அச்சத்தைப் பெரும் கவலையோடு எழுப்பினாராம். சங்கு இப்ராஹிம் எழுப்பிய ஐயப்பாடு யதார்த்தமானதே.
ஆனால் மகாநாட்டின் தொடக்க விழாவன்று அப்பிரமாண்ட மான மாநாட்டு மண்டபம் இலக்கிய அபிமானிகளால் நிரம்பி வழிந்தது என்பதே உண்மை. பலர் மண்டப வாயில்களிலும் ஒரங்களிலும் நின்றே விழாவை ரசிக்க வேண்டிய அளவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. இது டாக்டர் உவைஸ் அவர்களின் கடின உழைப்பிற்கும், அவர் வழங்கிய உன்னதமான தலைமைத்து வத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியே.

135
இலங்கையின் அன்றைய ஜனாதிபதியான மாண்புமிகு ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களையும், அன்றைய பிரதமரான மாண்பு மிகு ஆர்.பிரேமதாச அவர்களையும் கொழும்பு இஸ்லாமிய மகாநாட்டில் கலந்து கொள்ள வைத்தது டாக்டர் உவைஸ் பெற்ற மற்றுமொரு வெற்றியாகும். ஒரு நாட்டின் ஜனாதிபதி பங்கு பற்றிய முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு இதுவே என்பது நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்றே.
அக்காலக்கட்டத்திலே இலங்கையிலே அமைச்சர்களாக விளங்கிய மாண்புமிகு நிஸங்க விஜயரத்ன, மாண்புமிகு எஸ். தொண்டமான், மாண்புமிகு அல்ஹாஜ் எம்.எச்.முகம்மது, மாண்பு மிகு கே.டபிள்யு.தேவநாயகம், மாண்புமிகு சி.இராசதுரை ஆகி யோரும், தமிழக அமைச்சர்களாக விளங்கிய மாண்புமிகு சி.அரங் கநாயகம் அவர்களும், மாண்புமிகு ராஜா முகம்மது ஆகியோரும் இம் மகாநாட்டில் கலந்து கொண்டு அதற்குச் சிறப்பினை வழங்கினர். இதுவும் டாக்டர் உவைஸ் அவர்களின் அயரா உழைப்பிற்கும் அணுகுமுறைக்கும் கிடைத்த வெற்றியே.
அன்றைய அரசியல் வானிலே சுடர் விட்டுப் பிரகாசித்த அரசியல் தாரகைகளை மகாநாட்டுக்கு வரவழைப்பதில் டாக்டர் உவைஸ் எத்துணை சிரத்தை காட்டினாரோ, அதே சிரத்தையை அல்லது அதனிலும் பார்க்கக் கூடிய சிரத்தையை அன்றைய தமிழ் இலக்கிய வானிலே ஒளி வீசிக் கொண்டிருந்த இலக்கியத் தாரகைகளைத் தம் மகாநாட்டுக்கு வரவழைப்பதில் அவர் காட் டவே செய்தார். உண்மையில் இதுவே கொழும்பு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டின் உன்னத வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
மாண்புமிகு நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில், சிராஜுல் மில் லத் ஆ.கா.அப்துல் சமது, மெளலானா மெளலவி அப்துல் வஹாப், முதுபெரும் இஸ்லாமிய எழுத்தாளர் எம்.செய்யது முகம்மது ஹஸன், டாக்டர் ஏ.என்.பெருமாள், டாக்டர் உ.வே. சுப்பிரமணியன், ஹாபிஸ் செய்யது முகம்மது, செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது போன்ற புகழ்ப்பூத்த தென்னிந்திய தமிழறிஞர் களும் பேராசிரியர்களும் சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ், டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி, அல் ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன் போன்ற ஈழத்துத் தமிழறிஞர்களும் பங்கு பற்றி பங்களிப்புக்கள் நல்கிய கொழும்பு இஸ்லாமிய இலக்கிய மகாநாடு தரமிக்கதாய், பயன்மிக்கதாய் விளங்கியதில் வியப்பேதுமில்லை.

Page 82
136
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் யாவும் விடுமுன்றக்காக, மே மாதத்தில் மூடப்படுவதனால், அக்கல்லூரிகளில் கடமையாற் றும் பேராசிரியர்களுக்குப் பங்குபற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்ற காரணத்தினால் டாக்டர் உவைஸ் அவர்கள் மே மாதத்தி லேயே மகாநாட்டை நடத்த திட்டம் வகுத்திருந்தார். இந்த அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் கூட அனுப்பப்பட்டன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில தவிர்க்க முடியாத காரணங்க ளுக்காக, டாக்டர் உவைஸ் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்ட காரணங்களுக்காக, மகாநாட்டை ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகாநாட்டுக் குழுவினருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்புலவர் நெய்னார் முகம்மது, கவிக்கோ அப்துல் ரஹ்மான் போன்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சுடர்களுக்குக் கொழும்பு மகாநாட்டில் பங்கு பற்றும் வாய்ப்பு கிட்டவில்லை. இவர்களது பங்களிப்புகளும் கிடைத்தி ருந்தால் கொழும்பு மகாநாட்டின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்திருக்கும்.
நான்காவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு வழங்கிய மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, பன்னிரண்டு நூல்கள் வெளிவருவதற்கு உறுதுணையாக நின்றதாகும். பிறைக் கொழுந்து (மாநாட்டுச் சிறப்பு மலர்), பிறை மலர்கள் (ஈழத்து இஸ்லாமியச் சிறுகதைத் தொகுதி), பிறைத் தேன் (ஈழத்து இஸ்லாமியக் கவிதைத் தொகுதி), புது குஷ்ஷாம் உரையுடன் - இந்நான்கு நூல்களும் மகாநாட்டுச் செலவில் அச்சிடப்பட்டு மகாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டன. இம்மகாநாட்டின் போது வெளியிடப்பட்ட ஏனைய எட்டு நூல்கள்: இசைவருள் பாமாலை, ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், சின்ன சீறா, தமிழக இஸ்லாமிய சிறுகதைத் தொகுதி, சென்னை பல்கலைக்கழ கத் தத்துவத்துறை ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு, இலங்கை முஸ்லிம்களின் திருமணச் சம்பிரதாயங்கள், பர்பரீன், யசஹாமி என்பனவாகும்.
மாண்புமிகு டாக்டர் நிசங்க விஜேரத்ன, மெளலானா மெள லவி மு.அப்துல் வஹாப், சிராஜுல் மில்லத் ஆகா. அப்துல் சமது, பேராசிரியர் வித்தியானந்தன், அல்ஹாஜ் எஸ்.எம்.கமால் தீன், ஹாபிஸ் செய்யது முகம்மது, செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது ஆகிய அறிஞர் பெருமக்களுக்கு மகாநாட்டில் பொன்னாடைகள் போர்த்திக் கெளரவிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த பேராசிரி யர் உவைஸ், ஜனாப் செய்யது முகம்மது ஹஸன், புலவர்

137
மணி ஆ.மு. சரிப்தீன், ஒவியர் எம்.ரி.எம்.ஹ"ஸைன், கவிஞர் அப்துல் காதர் லெப்பை ஆகிய பெருந்தகைகளுக்குப் பொற்கிழி கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். பொற்கிழிகளை வழங்கியவ்ர் டாக்டர் உவைஸின் மைத்துனரான அல்ஹாஜ் எம்.டபிள்யு.எம். ஸாலி என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு ஒரு தனி மனிதனாக நின்று, பொதுமக்களிடம் நிதி திரட்டாது, தன் நெருங்கிய உறவினர்களிடம் மாத்திரமே நிதி திரட்டி, மிக நேர்த்தியாக, வெகு விமரிசையாக நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டை நடத்தி முடித்து வெளிநாட்டுப் பேராளர்களையும், ஈழத்து இலக்கிய ஆர்வலர்களையும் அசத்தி விட்டார் பேராசிரியர் உவைஸ். டாக்டர் உவைஸின் தனி மனித சாதனையைக் கண்டு பூரிப்படைந்த இலக்கிய நெஞ்சங்கள், மதுரையில் நிறுவப்படவிருந்த இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகவும் பேராசிரியராக வும் டாக்டர் உவைஸ் அவர்களே நியமிக்கப்படுவார் என்ற நற்செய்தியை, தமிழகத்தின் அன்றைய கல்வியமைச்சர் மாண்பு மிகு சி.அரங்கநாயகம், மகாநாட்டு அரங்கத்திலே பகிரங்கமாக அறிவித்தபோது, 'பதவிக்கேற்ற உவைஸ்; உவைசுக்கேற்ற பதவி என உவகை உற்றன.
மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் மகாநாடு நிறைவு பெற்றபோது, மகாநாட்டில் பங்கு பற்றியவர்கள் அத்தனைப் பேர் உள்ளங்களிலும் ஊசலாடிக் கொண்டிருந்த உணர்வுகள் இரண்டே ஒரு மாபெரும் மகாநாட்டில் கலந்து கொண்டோம் என்ற பெருமித உணர்வு ஒன்று; இதன் பின்னர் இந்தளவு சிறப்பாக ஓர் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டை நடத்த முடியுமா என்ற ஏக்க உணர்வு மற்றொன்று. அந்தளவு சிறப்பாக கொழும்பு மகாநாட்டை நடத்தி முடித்திருந்தார் பெரியார் உவைஸ்.
1979 ஆம் ஆண்டில் கொழும்பில் நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு முடிவடைந்த பின்னர், அடுத்த மகாநாடு நடைபெறுவதற்குப் பதினொரு ஆண்டுகள் கழிய வேண்டியிருந்தது. இப்பதினொரு ஆண்டு காலப்பிரிவுக்குள் இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடந்து முடிந்திருந் தன. ஆனால் இஸ்லாமிய இலக்கிய மகாநாடு ஒன்று நடைபெறுவ தற்குரிய சாத்தியக்கூறுகள் எதுவுமே தென்படவில்லை.
இதுகூட ஒரு வகையில் பார்க்கும்போது கொழும்பில் நடந்த மகாநாட்டுக்கும் அதனை நடத்திய உவைஸ் அவர்களுக்கும்

Page 83
138
இஸ்லாமிய இலக்கிய உலகம் வழங்கிய மனப்பூர்வமான பாராட்டு என்றே கொள்ள வேண்டும். கொழும்பு மகாநாடு அத்தகையதொரு பெரும் பிரமிப்பை இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தியிருந்தது.
மகாநாடு நடத்தினால் அது உவைஸ் நடத்திய மகாநாடு போல் அமைய வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு; ஆனால் அம்மகாநாட்டைப் போல ஒன்றினை நடத்த முடியாதே என்ற யதார்த்தமான உணர்வு; இதனால் ஏற்பட்ட ஆதங்கம்; அச்சம். இவையே இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு ஒன்று 2-L-60ILLU Isić5 நடைபெறுவதற்குத் தடையாக விளங்கிய காரணிகள்.
1990 ஆம் ஆண்டில் ஐந்தாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டைக் கோலாகலமாக நடத்தும் பொறுப் பினைத் துணிந்து ஏற்றனர் எண்ணற்ற புலவர்களையும் புரவலர்க ளையும் ஈன்றெடுத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பிலே மங்காப் புகழ்ப் பெற்றுள்ள கீழக்கரை எனும் மூதூரிலே பிறந்த வணிகப் பெருமக்கள். பணபலமும் ஆட்பலமும் நிறைய பெற்றி ருந்த இச்செல்வந்தர்களின் ஆர்வமும் கொடைத் திறனும், இஸ்லா மியத் தமிழ் இலக்கியப் பாரம்பரியமிக்க இம்மண்ணிலே பிறந்த இலக்கிய ஆர்வலர்களின் உழைப்பும் ஈடுபாடும் ஒன்றுசேர, கீழக்கரை இலக்கிய மகாநாடு, இலக்கிய அபிமானிகளின் கண் ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
முதல் நான்கு இஸ்லாமிய இலக்கிய மகாநாடுகளுக்கும் ஐந்தாவது இலக்கிய மகாநாட்டுக்கும் இடையே ஒரு கணிசமான கால இடைவெளி காணப்பட்டதால் முதல் நான்கு மகாநாடுகளி னால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பெற்ற ஊக்கத்தினதும் உத்வேகத்தினதும் நல்விளைவுகளை ஐந்தாவது மகாநாட்டின் போது கண்கூடாக, நிதர்சனமாக காணக்கூடியதாகவிருந்தது. இதனை அறிஞர் உவைஸ் 'மருதை முதல் வகுதை வரை என்ற தனது நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்.
'திருச்சியில் நடைபெற்ற முதலாவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டில் வித்திடப்பட்ட இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்துறை சென்னையில் நடைபெற்ற இரண்டாவது மகாநாட்டில் முளைக்கத் தொடங்கியது. காயற்பட்டணத்தில் நிகழ்ந்த மூன்றாவது மகாநாட்டில்

139
பூத்துக் காய்த்தது. இலங்கை கொழும்பில் நடைபெற்ற நான்காவது உலக இஸ்லாமியத் தமிழ் மகாநாட்டில் அது கனிந்தது. பயன்படக் கூடிய பழமாய் முதிர்ச்சி அடைந் தது. அதன் பலாபலன்களை வகுதை மகாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது. 1973 இல் துரிதமாக முன்னேற் றம் அடையப் பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம் 1990 இல் வகுதை மகாநாட்டை அடையும் பொழுது பயனுடைய முயற்சிகள் பலவற்றை உருவாக்கக் கூடியதாக அமைந்திருந்தது. இந்தக் கால எல்லையுள் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய பெருங்காப்பியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தங்குத் தடையின்றித் தோன்றலாயின. அறிஞரின் ஏகபோக உரித் தாயிருந்த பல நூல்கள் பாமரரும் பயன்பெறக் கூடிய வகையில் அச்சேறலாயின. பயனுடைய உரைகளுடனும் விரிவான குறிப்புக்களுடனும் பதிப்பிக்கப் பெறலாயின. மக்களால் போற்றப்படலாயின. தூசு படிந்தனவாய் முடங் கிக் கிடந்த பெருங்காப்பியங்கள் புது மெருகூட்டப் பெற்றுப் புதுப் பொலிவுடன் திகழலாயின. ஆய்வாளரின் நன்மதிப்பைப் பெறலாயின. அங்கனம் தோன்றிய நூல் களை அடிப்படையாக வைத்துப் பல நூல்கள் உருப்பெற லாயின. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பல்கிப் பெருக லாயின. இது காறும் பதிக்கப் பெறாத பல நூல்கள் அச்சியற்றப் பெற்றன, வகுதை மகாநாட்டுக்காக."
பேராசிரியர் உவைஸ் கூறியிருப்பதைப் போலவே பன்னி ரண்டு நூல்கள் கீழக்கரை மகாநாட்டில் வெளியிடப்பட்டன. இவற்றுள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காத்தான்குடி எனும் ஊரில் வாழ்ந்த அகமதுகுட்டி எனும் புலவர் கி.பி.1844 ஆம் ஆண்டில் பாடி முடித்த இசுவா அம்மானை என்ற நூலும் அப்துல் மஜீதுப் புலவர் இயற்றிய கீர்த்தனை மஜீது என்ற நூலும் முக்கியமானவையாகும்.
இசுவா அம்மானை என்னும் நூல் ஏட்டு ரூபத்தில் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டளவில் இவ்வேடு சாய்ந்தமருது எனும் ஊரைச் சேர்ந்த ஜனாப் அலியார் முஸம்மில் எனும் இலக்கிய ஆர்வலரின் கரங்களை எட்டியது.
தனக்குக் கிடைத்த இசுவா அம்மானை ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாப்பதில் ஜனாப் முஸம்மில் வெற்றி பெற்ற போதிலும்,

Page 84
14O
அதனை அச்சுவாகனம் ஏற்ற அவருக்கு முடியாது போயிற்று. ஈற்றில் கலாநிதி எம்.ஏ.நுஃமானின் ஆலோசனைப்படி ஜனாப் முஸம்மில் 1990 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலே தன்னிடம் இருந்த இசுவா அம்மானை கையேட்டுப் பிரதியினை டாக்டர் உவைஸிடம் ஒப்படைத்தார். இந்நூலின் அருமையை உணர்ந்த டாக்டர் உவைஸ், ஜனாப் ஹஸன் தம்பி என்னும் செல்வந்தரின் உதவியைப் பெற்று இந்நூலை அச்சிட்டு, கீழக்கரை மகாநாட்டில் அதனை வெளியிட்டார்.
இவ்வாறு நூற்றி அறுபது ஆண்டுகளாக கையேட்டுப் பிரதியாகவே இருந்த இசுவா அம்மானை எனும் நூலை, காலப்போக்கில் செல்லரித்து அழிந்து போயிருக்கக் கூடிய ஒர் இலக்கியச் செல்வத்தை, அலியார் முஸம்மில் எனும் ஒர் இலக்கிய ஆர்வலரின் நீங்கா ஆர்வமும், டாக்டர் உவைஸ் அவர்களின் உழைப்பும் செல்வாக்கும், ஜனாப் ஹஸன் தம்பி என்பவரின் தமிழயிமானமும் கொடைத்திறனும் ஒன்றிணைந்து அச்சு வாகனம் ஏற்றி, அதற்கும் அதனை இயற்றிய அகமது குட்டிப் புலவருக்கும், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகிலே, ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொடுத்ததைக் கீழக்கரை மகாநாடு கண்டு களித்தது.
கீழக்கரை மகாநாட்டிலே வெளியிடப்படுவதற்காக மறு பதிப்பாக அச்சிடப்பட்ட ஒரு பழைய நூல் கீர்த்தனை மஜீது என்பதாகும். ஆசாரக்கோவை எனும் புகழ்ப் பெற்ற நூலின் ஆசிரியரான அப்துல் மஜீதுப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் 1906 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டிருக்கின்றது. அக்காலை இந்நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றது.
காலப்போக்கில் இந்நூல் மறைந்து விட்டது. டாக்டர் உவைஸ் இஸ்லாமிய இலக்கிய நூல்களைத் தேடித் திரிந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் இது அவருக்கு கிடைக்கவில்லை; இதனைப் பற்றி எவரும் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளின் ஈற்றுப் பகுதியில் அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் தன்னிடம் கையளித்த ஒரு பழைய நூலொன்றில் கீர்த்தனை மஜிதின் இரண்டு பாகங்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்ததை உவைஸ் எதேச்சையாக கண்டுபி டித்தார். இந்நூலின் அருமையை உணர்ந்த அவர், கீழக்கரை , முகம்மது இத்ரீஸ் மரைக்காயர் ஹாஜியாரின் உதவிப் பெற்று, இதனைப் பதிப்பித்து கீழக்கரை மகாநாட்டில் வெளியிட்டார்.

141
இம்மகாநாட்டின் இரண்டாவது நாள் இடம் பெற்ற காப்பியக் கருத்தரங்குக்குத் தலைமைத் தாங்கிய டாக்டர் உவைஸ் பதி னைந்து ஆண்டுகளில் ஒன்பது காப்பியங்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை அம்மகாநாட்டுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந் தது. கீழக்கரை மகாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் டாக்டர் உவைஸ் அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி, பொற்கிழி வழங்கி, பரிசில்கள் பல ஈந்து தம் பேரன்பையும் பேரபிமானத்தை யும் வெளிப்படுத்தினர். - 1994 ஆம் ஆண்டில் நீடூரில் நடைபெற்ற ஆறாவது அனைத்து லக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டிலும், பேராசிரியர் உவைஸ் கணிசமான பங்களிப்பினை நல்கினார். இங்கும் பேராசி ரியர் உவைஸ் அவர்கள், அவரது ஒப்பற்ற இலக்கியச் சேவைக்காக பொருத்தமான வகையிலே இலக்கிய அபிமானிகளால் கெளரவிக் கப்பட்டார்.
இவ்வாறு இலக்கிய மகாநாடுகள் மூலம் அல்லாமா உவைஸ் அவர்கள் ஆற்றியுள்ள இலக்கியப்பணி கணிசமானதாகும்; காத்திர மிக்கதாகும். இம்மகாநாடுகளில் டாக்டர் உவைஸ் இதுவரை சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரைகளதும், ஆற்றிய சொற்பொழிவு களினதும் தரத்தையும் கனத்தையும் எடைபோட்ட, ஆனந்த விகடன் முன்னாள் உதவி ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ஜனாப் ஜே.எம்.சாலி அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
'இலக்கிய மகாநாடுகளில் டாக்டர் உவைஸ் அவர்கள் வழங்கிய கட்டுரைகள் மிக ஆழமானவை. நுண்மாண் நுழைபுலம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அமைந்தது அவருடைய ஆராய்ச்சித் திறன். மிக நுட்பமான, ஆழ மான, அகலமான ஆராய்ச்சியில் பேராசிரியர் உவைஸ் ஈடுபட்டு வருவதற்குத் தலையாய காரணம், அந்தத் துறைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதுதான்..... எனவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், ஆராய்ச்சி என்று யார் அணுகினாலும் பேராசிரியர் உவைஸ் அவர்களிடம், அவர்களை ஆற்றுப்படுத்தத் தொடங்கினேன். ஏனெனில் அவருடைய பங்கும் பணியும் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி முற்றுப் பெற இயலாது.'' ஜனாப் சாலி அவர்களின் மதிப்பீடு நியாயமானதே.
- றி - 4
- - அல் 'ப

Page 85
42
9. அல்லாமா உவைஸ் எழுதிய, மொழிபெயர்த்த, பதிப்பித்த நூல்கள்
1949 ஆம் ஆண்டில், கொழும்பில் மாத்திரம் அமைந்தி ருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் மூலம் கலைமாணி சிறப் புப் பட்டத்தினைப் பெற்ற உவைஸ் அவர்களுக்கு, அப்பல்கலைக் கழகத்திலேயே பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. 1953 ஆம் வருடத்தில் இலங்கை சர்வகலாசா லையின் கலைப்பிரிவு பேராதனை வளாகத்திற்கு மாற்றப்படும் வரை உவைஸின் இப்பகுதி நேர விரிவுரையாளர் பணி நீடித்தது. எனினும் கலைப்பிரிவு பேராதனைக்கு மாற்றப்பட்டபோது, தனக்கு மனநிறைவினைத் தந்து கொண்டிருந்த இப்பணியினைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது; வேறு ஓர் உத்தியோகத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய அவசியமும் உருவாகியது.
ஆனால் உத்தியோகம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வது பட்டதாரியான உவைஸ் அவர்களுக்கு அத்துணை கடினமானதாக இருக்கவில்லை. உவைஸ் வேலை இன்றி இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரை அன்புக்கரம் நீட்டி வரவேற்றது கொழும்பு சாஹிராக் கல்லூரி. இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இலங்கை வானொலியில் அப்போது ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக விளங் கும் வாய்ப்பும் உவைஸ் அவர்களுக்குக் கிட்டியது.
1957ஆம் ஆண்டில் உவைஸ் ஆசிரியர் பதவியினைத் துறந்து, இலங்கை பரீட்ஷைத் திணைக்களத்தில் மொழிப்பெயர்ப்பாளராக இணைந்தார். ஆனால் 1959 ஆம் ஆண்டில் இதனையும் உதறி விட்டு, இலங்கை வணிகர் மன்றத்தின் மொழிபெயர்ப்புப் பகுதியின் பிரதம ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தார்.
இலங்கைக் கல்வி வரலாற்றில் 1959 ஆம் ஆண்டு முக்கியமிக் கதாகும். இவ்வாண்டில்தான் வித்தியோதய, வித்தியாலங்காரப் பல்கலைக்கழகங்கள் கலாசாரப் பல்கலைக்கழகங்களாக வப் பட்டன. வித்தியோதயப் பல்கலைக்கழகத்தின் தலைவரானி கலா
 
 

43
நிதி ஆனந்த குருகே, டாக்டர் உவைஸ் அவர்களை அப்பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களில் ஒருவராக நியமித்தார்; பின்னர் உவைஸ் அப்பல்கலைக்கழகத்தின் நவீன கீழைத்தேய மொழித் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
எனவே தகுதிகள் இருந்தும் அதுவரை உவைசுக்கு வழங்கப் படாதிருந்த வாய்ப்பு - பல்கலைக்கழக மொன்றில் நிரந்தர விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு - 1959 ஆம் ஆண்டி லேயே அவருக்குக் கிட்டியது. இந்நியமனத்திற்குப் பின்னரே எம்நாடு உவைஸ் அவர்களின் வியாபகமான அறிவைப் பூரணமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது எனலாம்.
அதுவரை உவைசுக்கு வழங்கப்பட்டிருந்த பதவிகள் யாவும் கவிக்கோ அப்துல் ரஹ்மானின் மொழியில் கூறுவதாக இருந்தால் அம்மிகள் கொத்துவதற்கு மைக்கல் எஞ்சலோக்களைப் பயன்படுத் தும் பொருத்தமற்ற வேலைகளாகவே விளங்கின. வித்தியோதயப் பல்கலைக்கழக நியமனத்திற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1979 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தில் ஆராய்ச்சிப் பேராசிரியராக டாக்டர் உவைஸ் நியமிக்கப்பட்
Ī.
இவற்றை விட ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளில் உவைஸ் இலங்கை வர்த்தக கூட்டுத் தாபனத்தின் இயக்குனராக சிலவாண்டுகள் பணிபுரிந்துள்ளார்; பாடநூல் ஆலோசனைச் சபை உறுப்பினராக பல வருடங்கள் சேவையாற்றியுள்ளார்; இலங்கை சாகித்திய மண்டல உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்; வேறு பல அமைப்புகளிலும் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு பட்டம் பெற்ற காலத்திலிருந்து பொறுப்பான பதவிகள் பலவற்றில் அமர்ந்தும், வேறு பல அமைப்புகளில் அங்கத்துவம் வகித்தும் திருப்திகரமாக சேவையாற்றிக் கொண்டி ருந்த உவைஸ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. அவரது பலதரப்பட்ட வேலை பளுக்களுக்கு மத்தியில் இத்தனை நூல்கள் எழுத அவருக்கு நேரம் எங்கிருந்து கிடைத்தது என்ற வினா எம் உள்ளத்தில் எழும்புகின்றது.
1966 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி 'ஆனந்த விகடன்’ இதழில் பிரசுரமாகியுள்ள ஒரு சுவையான துணுக்கு இவ்வினாவுக் குப் பொருத்தமான ஒரு பதிலாக அமைகின்றது. அத்துணுக்கு இதோ:

Page 86
144
'காலம் சென்ற நமது பிரதமர் நேரு ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை வேலை செய்வதி லேயே கழித்து வந்தார். ஒரு முறை வினோபா அவர்கள் நேருஜியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது "நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.
"இரவில் 6 மணி நேரம் தூங்குவது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி குறைவாகத்தான் கிடைக்கிறது. பகலிலும் 15 நிமிடம் ஒய்வு எடுத்துக் கொள்ள முயலுகின்றேன். மீதி இருக்கும் நேரம் முழுவதும் வேலையில்தான் செலவாகிறது. படிப்பதற்குக் கூட நேரம் கிடைப்ப தில்லை. ஆனால் அதற்கும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறேன்’ என்று பதில் சொன்னார் நேரு, "படிப்பதற்கு எதிலிருந்து நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்?" "நேரம் எங்கே கிடைக்கிறது. திருடிக் கொள்கிறேன்." "எங்கிருந்து திருடுவீர்கள்?" "தூங்கும் நேரத்திலிருந்துதான்’ சிரித்தபடி பதில் சொன்னார்
நேரு, பெரியவர் உவைசும் இவ்வாறுதான் தூங்குவதற்கும், ஒய்வெ டுப்பதற்கும், குடும்பத்துக்கும் ஒதுக்கியிருந்த நேரங்களிலிருந்து திருடிய அவகாசத்தையே நூல்கள் எழுதுவதற்குப் பயன்படுத்தி யுள்ளார் என்பது வெளிப்படை. பேராசிரியர் உவைஸ் அவர்களின் இந்த ஈடில்லா இஸ்லாமியத் தமிழ் இலக்கிய் அபிமானமே இன்று அவ்விலக்கியத்தை உலக இலக்கிய வரிசைக்கு உயர்த்தியிருக்கி றது. இந்த ஈடுபாடுதான் பெரியார் உவைஸைப் பற்றி தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
டாக்டர் உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அபிமானத்தின் விசாலத்தையும் நேர்மையையும் நாம் அறிந்திருந் தாலும், எண்ணற்ற வேறு பல வேலைகளுக்கு மத்தியிலும், இதற்கென நேரத்தை ஒதுக்கி அவர் எழுதியுள்ள நூல்களின் தொகையினையும் அவற்றின் தராதரங்களையும் பார்க்கும் போது ஒரு வித மலைப்புணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதவொன்றே. பேராசிரியர் உவைஸ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.

i
13.
l4.
l6.
16.
17.
18.
l9.
மக்காப் பயணம்
நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
145
தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு (ஆங் கிலம்)
. இஸ்லாமியத் தென்றல்
நம்பிக்கை
ஞானச் செல்வர் குணங்குடியார் நீதியும் நியாயமும் இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் இஸ்லாமும் இன்பத் தமிழும் இஸ்லாம் என்றால் என்ன?
. சீறாப்புராணம் - பதுறுப்படலம் - கட்டுரைகள்
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபு . தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள் l2.
இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பி யங்கள். திருக்குர்ஆனும் முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கும் இலக்கிய வழக்கும். தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்கள். முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள். தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள். மட்டக்களப்பு நாட்டார் பாடல்களில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய அம்சங்கள்.
பெருமானார் பெருவாழ்வு
வாய்மையின் வெற்றி
2. முஸ்லிம் ஜோன் ஒப் ஆர்க் 23. மதுரைக் கலம்பகமும் மக்காக் கலம்பகமும் 24. பொற்காலப் பெருங்காப்பியம் புதுக்குஷ்ஷாம்
. புதுக்குஷ்ஷாமில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்கள் . புலவரும் புரவலரும் . காயல்பட்டணம் வளர்த்த தீன்தமிழும் தீந்தமிழும்
28. சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்களும்
பாரசீகச் சொற்களும்.
29. இலங்கை முஸ்லிம்களின் பேச்சு மொழி - தமிழின் கிளை
மொழி.
30. நம்பிக்கையும் நடைமுறையும்
. தமிழ் இலக்கிய அறபுச் சொல்லகராதி

Page 87
45
47.
48,
56
46
இஸ்லாம் வளர்த்த தமிழ் தமிழிலக்கியத்தில் ஊறியுள்ள இஸ்லாமியச் சிந்தனைகள் அருள்மொழி அகவல்
மருதை முதல் வகுதை வரை 15 ஆண்டுகளில் 9 காப்பியங்கள் தமிழிலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அல்குர்ஆனின் கருத்துக்கள்.
வழியும் மொழியும் இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக் கோவை. முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு உமறுப்புலவர் ஓர் ஆலிமா?
அருள்மொழி வெண்பா இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்கள் (ஆங்கிலம்) இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு - தொகுதி - ஒன்று - தொடக்க காலம் முதல் கி.பி. 1700 வரை,
இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு - தொகுதி இரண்டு
- காப்பியங்கள். இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தொகுதி மூன்று - சிற்றிலக்கியங்கள். இஸ்லாமிய்த் தமிழிலக்கிய வரலாறு - தொகுதி நான்கு - மெய்ஞ்ஞான இலக்கியம்.
இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தொகுதி ஐந்து
- அறபுத் தமிழ் இலக்கியம்.
இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு - தொகுதி ஆறு
- பழங்கால வசன நடை.
இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக் கோவை - (ஆங்கிலம்)
பேராசிரியர் உவைஸ் பதிப்பித்தவை
பிறைக் கொழுந்து பிறைப் பூக்கள் - தொகுப்பாசிரியர் அ.ஸ.அப்துல் ஸ்மது பிறைத்தேன் - தொகுப்பாசிரியர் எம்.சி.எம்.சுபைர்
புதுக்குஷ்ஷாம் - பாரூக்கியா காண்டம் - பாகம் 1 -
உரை - ஆ.மு. சரிபுத்தீன்,
புதுக்குஷ்ஷாம் - பாரூக்கியா காண்டம் - பாகம் 2 -
உரை - ஆ.மு.சரிபுத்தீன்.
புதுக்குஷ்ஷாம் - பாரூக்கியா காண்டம் - பாகம் 3 -
உரை - ஆ.மு.சரிபுத்தீன்

57.
59.
6.
67.
69.
70.
71.
72.
73.
147
புதுக்குஷ்ஷாம் - பாரூக்கியா காண்டம் - பாகம் 4 - உரை - ம.மு.உவைஸ்.
புதுக்குஷ்ஷாம் -சித்தீக்கியா காண்டம் - உரை ஜே.எம்.
எம்.அப்துல் காதர். புதுக்குஷ்ஷாம் - முஹம்மதியா காண்டம் - உரை ஜே.எம்.எம்.அப்துல் காதர்.
ஆசாரக்கோவை - மூலம் - கீழக்கரை அப்துல் மஜீதுப்
புலவர் புதுக்குஷ்ஷாம் - மூலம் - முகம்மதுப் புலவர் இயற்றிய வசன காவியம்.
. அலங்காரக் கீர்த்தனம் - கெளது பாவா சைகு முஹம்மது
கெளதில் காதிரி.
புகழ்ப்பாவணி - மூலம் - யாழ்ப்பாணம் அசனாலெப்
பைப் புலவர்.
திருமக்காக் கோவை - மூலம் த.செவத்த மரைக்காயர். . ராஜநாயகம் - மூலம் வண்ணக்களஞ்சியப் புலவர். . மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை - மூலம்
- குலாம் காதிறு நாவலர் குத்பு நாயகம் - மூலம் சைகு அப்துல் காதிர் நயினார் புலவர்.
மொழி பெயர்ப்புக்கள்
வாணிஜ அங்க கணிதய - மூலம் டி.என்.தேவராஜன்
வர்த்தக எண் கணிதம் - தமிழிலிருந்து சிங்களத்திற்கு, நபிநாயக சரிதய - மூலம் - அப்துல் ரஹீம் - நபிகள் நாயகம் - தமிழிலிருந்து சிங்களத்திற்கு
அல்குர்ஆன் அமா பிந்து - மூலம் அப்துல் வஹாப் சாகிபு - தித்திக்கும் திருமறை - தமிழிலிருந்து சிங்களத் திற்கு, இலங்கைப் பொருளாதார முறை - மூலம் - ஐ.டி.எஸ். வீரவர்தன - சிங்களத்திலிருந்து தமிழுக்கு. பொருளியற் பாகுபாடு - மூலம் - எப்.ஆர்.ஜயசூரிய சிங்களத்திலிருந்து தமிழுக்கு. பிரித்தானிய யாப்பு முறைமை - மூலம் - ஐ.டி.எஸ். வீரவர்தன சிங்களத்திலிருந்து தமிழுக்கு.

Page 88
148
74. கிராமப் பிறழ்வு - மூலம் - மார்ட்டின் விக்கிரமசிங்க
சிங்களத்திலிருந்து தமிழுக்கு. 75. முஹம்மது நபி (ஸல்) மனிதரில் தலை சிறந்தவர்கள்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. 76. இஸ்லாம் யணு குமக்த - மூலம் - மெளலானா மவ்தூதி
ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு. 77. கதாமுது - முதலாம் பாகம் - ஆங்கிலத்திலிருந்து
சிங்களத்திற்கு. 78. கதாமுது - இரண்டாம் பாகம் - ஆங்கிலத்திலிருந்து
சிங்களத்திற்கு. 79. கதாமுது - மூன்றாம் பாகம் - ஆங்கிலத்திலிருந்து
சிங்களத்திற்கு.
சொந்தப் படைப்புக்கள், மொழிபெயர்ப்புக்கள், பதிப்புக்கள் என மொத்தம் எழுபத்தொன்பது நூல்களைப் பேராசிரியர் உவைஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாறு டாக்டர் உவைஸ் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் பன்னிரண்டு மொழி பெயர்ப்புக்களாகும். இவற்றுள் இலங்கையின் பொருளாதாரத் திட்டம், பொருளியல் பாகுபாடு, பிரித்தானிய யாப்பு முறைமை போன்றவை இந்நூற்றாண்டின் அறுபது, எழுபதுகளில் தமிழ் மொழி மூலம் பொருளாதாரம், ஆட்சி இயல் போன்ற பாடங்களைப் படித்த மாணவர்களுக்குப் பெரிதும் பயனுடையனவாக விளங்கின.
இஸ்லாம் தொடர்பாக பேராசிரியர் வெளியிட்டுள்ள மொழி பெயர்ப்பு நூல்கள் சிங்களம் தெரிந்த முஸ்லிம்களுக்கும் இஸ்லாத் தைப் பற்றி அறிய விரும்பிய சிங்கள சகோதரர்களுக்கும், இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகத்தைப் பற்றியும் உணர்த்து வதற்கு ஓரளவு உதவின என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.
மெளலானா மெளலவி எம்.அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய 'தித்திக்கும் திருமறை” எனும் நூலினை 'குர்ஆன் அமாபிந்து’ எனும் பெயரிலும், அறிஞர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம்" என்னும் நூலினை நபிநாயக சரித்தய' என்னும் பெயரிலும் டாக்டர் உவைஸ் அவர்கள் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டமை குறிப்பி டப்பட வேண்டியதாகும்.

149
இந்நூற்றாண்டில் இஸ்லாத்தைப் பற்றி தமிழில் எழுதப்பட் டுள்ள மிகச் சிறந்த நூல்கள் என பத்து நூல்களைத் தேர்ந்தெடுத் தால் அவற்றுள் இவ்விரு நூல்களும் அடங்கும் என உறுதியாகக் கூறலாம். அத்தகைய உயர்தரமான இரண்டு இஸ்லாமிய நூல்க ளைச் சிங்களம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தியது உவைஸ் செய்த ஒரு பெரும் சேவையே.
சிங்களத் தீவின் வைக்கம் பஷிர்தகழி சிவசங்கரன் பிள்ளை என்றெல்லாம் போற்றப்படக் கூடிய புகழ்ப்பூத்த சிங்கள எழுத்தா ளரான மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் எழுதிய கம்பெரலிய" எனும் உன்னதமான நாவலை டாக்டர் உவைஸ் "கிராமப் பிறழ்வு' எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதும் போற்றப் பட வேண்டிய ஒரு பணியே.
தென்னிலங்கை கிராமமொன்றின் சமூக மாற்றத்தை மண் வாசனையோடும், யதார்த்தத்தோடும், அழகுணர்வோடும் சித்தரிக் கும் இந்நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது அது இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசப் படவிழாவொன்றில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கமயில் விருதினைச் சுவீகரித்துக் கொண்டது.
சர்வதேச விருது, சிங்களவர்கள் அல்லாதவர்களையும் இப்ப டத்தினைப் பார்க்க வைத்தது. படத்தைப் பார்த்த பலரும் மூல நாவலை வாசிக்க விரும்பினர். ஆனால் அதனை வாசிக்க முடியாத நிலை; காரணம், புரியாத மொழி.
இந்நிலையைப் பல்கலைச் செல்வர் கலைவாதி கலீல் தான் எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு அழகாக வர்ணித் துள்ளார்.
"அந்தப் படத்தை நான் பார்த்த நாளிலிருந்து, நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் என்னை உந்தித் தள்ளி யது. ஆனால் எனக்குச் சிங்கள மொழி தெரியாது; புரியாது. திரைப்படத்தில் சொல்ல முடியாததை நாவலில் அற்புதமாகச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையுடைய வன் நான். எப்படியாவது 'கம்பெரலிய'வைப் படித்து விடவேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்தது. அந்த நேரத்தில் தான் நாவல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். 'கிரா மப் பிறழ்வு’ என்ற மகுடத்தில் வெளியான கம்பெரலிய வின் தமிழ் வடிவ நூலைத் தேடிப் படித்துப் படித்து

Page 89
150
ஆவலைத் தணித்துக் கொண்டேன். நாவலில் மெய்மறந்து போனேன். ??
'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்றான் மகாகவி பாரதி; சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்துக்கும் மொழிபெயர்ப்புகள் பல செய்து சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையே கலாசாரப் பாலமொன்றை அமைத்தார் பேரா சிரியர் ம.மு.உவைஸ்.
சிங்கள இலக்கிய ஆக்கங்களைத் தமிழுக்கும், தமிழ் படைப் புகளைச் சிங்களத்துக்கும் மொழி பெயர்த்து சிங்கள, தமிழ் மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் கலாசார பரிவர்த்தனையை யும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோஷம் இப்போது சிங்கள, தமிழ் இலக்கியவாதிகளால் மும்முரமாக முன்வைக்கப்படுகின் றது. இன ஒற்றுமையையும் சமரச மனப்பான்மையையும் வளர்க் கக் கூடிய இந்த எண்ணப் போக்குக்கு, இன்றைக்கு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே, பேராசிரியர் உவைஸ் செயல் வடிவம் கொடுத்துள்ளார் என்பது நினைவில் நிறுத்தப்பட வேண் டிய உண்மையாகும். டாக்டர் உவைஸ் அவர்களின் சிங்கள இலக்கிய அறிவு, வரன்முறையான சிங்கள மொழியறிவு எனும் அடித்தளத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்டதென்பதும் அவர் பாளி மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதும் கூட நினைவில் நிறுத்தப்பட வேண்டிய உண்மைகளாகும்.
புதுக்குஷ்ஷாம், இராஜநாயகம், குலாம் காதிறு நாவலர் அவர்களின் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை, அப்துல் மஜிதுப் புலவரின் ஆசாரக் கோவை போன்ற பல பழந்தமிழ் நூல்களை முஸ்லிம் மக்கள் மத்தியிலே பெரிதும் பிரபலப்படுத்திய பேராசிரியர் உவைஸ் அவர்களின் பதிப்புப் பணியும் விதந்தோதப்பட வேண்டியவொன்றே.
"புதுக்குஷ்ஷாம் எனும் மாபெரும் காப்பியத்தின் கையேட்டுப் பிரதியொன்று - செல்லரித்து பழுதுண்டது - அவர்கள் கைக்குக் கிட்டியபோது அவர்கள் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை. தாம் கண்டெடுத்த இரு நிதிகளைப் பிரித்துரைத்து, பகுத்துரைத்து, வகுத்துரைத்து, விரித்துரைத்து, தொகுத்துரைத்து இற்றை நாளில் எம்மவர் முன் நடமாடச் செய்த பெருமை டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களையே சாரும்.”

151
மு.கா. செய்யது யூசூப் அவர்களின் இக்கூற்று பதிப்புப் பணியில் பேராசிரியர் உவைஸ் காட்டிய பேரார்வத்தைக் காட்டு கின்றது. ஏறத்தாழ பதினேழு நூல்களைப் பேராசிரியர் உவைஸ் பதிப்பித்துள்ளார் என்பது நினைவில் நிறுத்தப்பட வேண்டிய ஓர் உண்மையாகும்.
மொழிப்பெயர்ப்புத் துறையிலும் பதிப்புத் துறையிலும் காட்டிய அதே ஆற்றலையும் ஈடுபாட்டையும் கவிதைகள் இயற்று வதிலும் டாக்டர் உவைஸ் காட்டியுள்ளார். பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலும் பெரும் பாண்டித்யமும் பரந்த தமிழ் மொழியறிவும் பெற்றிருந்த டாக்டர் உவைஸ் செய்யுள்கள் இயற்றுவதில் வல்லவராக இருந் தது வியப்புக்குரிய விடயமல்ல. அருள் மொழி அகவல்' எனும் அவரது கவிதை நூலொன்றில் காணப்படும் கீழ்வரும் கவிதை பேராசிரியருக்கிருந்த கவிதா திறனை நன்கு புலப்படுத்துகின்றது.
மனமாம் மங்கையர் மகிழ்வுடன் மகிழ்ந்து குணமே குனிய குவலயம் குளிர முறையாம் முதுமொழி முனைப்புடன் முகிழ்த்து துறை பல துலக்கித் துயரையும் துமித்து முத்தும் முறுவல் (Upg5 D51 முகைத்து கத்தும் கன்னியர் கடவது கனிந்து மன்னும் மறையை மண்ணில் மடுத்து துன்னும் துன்பம் துணிவுடன் துடைத்து Ф—tйшциb உணர்வை உளத்தே உறுத்தி வையம் வைகலும் 606) ( IT வைகவும் சுயமே சுவனச் சுகமது சுகிக்கவும் நன்னெறி நவின்றார் நபிமணி நயமே
இக்கவிதையினை மேலிருந்து கீழாக ஊன்றி அவதானித்தால் இதில் உள்ள சிறப்பம்சம் புலப்படும். இவ்வாறே நம்பிக்கையும் நடைமுறையும்', 'அருள் மொழி வெண்பா போன்ற பேராசிரிய ரின் கவிதா ஆக்கங்களும் அவருக்கு மரபு கவிதைகள் இயற்றுவ தில் குறிப்பிடத்தகுந்த திறமை இருந்தது என்பதைப் புலப்படுத்து கின்றன.
ஆனால் பேராசிரியரின் இக்கவிதா ஆற்றல், அவரது உரை நடை, சமூகத்துக்கு வழங்கிடாத எந்த ஒரு விசேஷ நன்மையையும் வழங்கிடவில்லை என்பதை ஏற்றே ஆகவேண்டும். பத்தோடு

Page 90
152
கவிதை
பதினொன்று என்ற ரீதியில் கணிப்பிடக்கூடியதாகவே டாக்டர். உவைஸ் அவர்களின் கவிதைகள் விளங்குகின்றன என்று சொல்லு வதே நேர்மையானதாகும். இன்னும் ஒருபடி மேலே செல்லுவதா கவிருந்தால்
அலை ''மரபுக்
மாண்புடன் போற்றி மரபு
பிழையா
மார்க்கக் "
கருத்தினை நம்பும்
வகையும் )
நடைமுறைத் தொகையும் சொம்புந்
தமிழில்
சொல்லும் நோக்கோடு எவரும்
புரியும்
ஏற்புடைய நடையில் கவரும்
பாணியில் பல கனிந்து மொழிந்திட' படம் பேராசிரியர் கொண்ட ஆசையினை அவரது கவிதைகள் தீர்த்து வைத்தன என்று கூறலாம். அவ்வளவே.
பேராசிரியர் உவைஸ் வெளியிட்டுள்ள நூல்களின் நீண்ட பட்டியலிலிருந்து அவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும் பதிப்பிக்கப்பட்ட நூல்களையும் அகற்றிவிட்டால் கூட அப்பட்டி யல் நீளமானதாகவே இருக்கும். அவர் வெளியிட்டுள்ள எழுபத் தொன்பது நூல்களில் ஏறத்தாழ ஐம்பது அவரது சொந்த ஆக்கங்கள் என்பது இன்ப அதிர்ச்சியை ஊட்டும் ஓர் உண்மையாகும். ஆனால் இவ்வைம்பதும் ஒரே தரமானவை என்றோ, ஒரே வகையான உயர் பயன்களைக் கொண்டவை என்றோ அல்லது அவை அத்தனையும் காலவெள்ளத்திற்கு ஈடுகொடுத்து சிரஞ்சீவி ஆக்கங் களாக திகழும் கனமும் காத்திரமும் பொருந்தியவை என்றோ கூற முடியாது. டாக்டர் உவைஸ் அவர்களின் சில நூல்கள் அவை வெளிவந்த சில ஆண்டுகளில் வாசகர்களின் நெஞ்சங்களிலிருந்து அகன்று விட்டன என்பதும் உண்மையே.
பேராசிரியர் எழுதிய நூல்களில் இஸ்லாம் என்றால் என்ன?, நம்பிக்கை, பெருமானாரின் பெருவாழ்வு, வாய்மையின் வெற்றி, நீதியும் நியாயமும், முஸ்லிம் ஜோன் ஒப் ஆர்க், மக்காப் பயணம் என்ற ஏழு உரை நடை நூல்களும் நம்பிக்கையும் நடைமுறையும், அருள்மொழி அகவல், அருள்மொழி வெண்பா என்ற மூன்று கவிதை நூல்களும் இஸ்லாமியக் கோட்பாடுகளோடும் இஸ்லா மிய வரலாற்று நிகழ்வுகளோடும் தொடர்புடையனவாகும். இவை, இஸ்லாமியர் ஓரளவுக்காவது இஸ்லாமிய நெறி முறைக ளைப் பற்றியும் இஸ்லாமியரின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்தி ருக்க வேண்டும் என்ற ஆசையினால் எழுதப்பட்டவையாகும்.)

153
டாக்டர் உவைஸ் அவர்களின் மேதா விலாசத்தை உணர்த்துவதற்கு இவை சரியான உரைக்கற்கள் அல்ல.
டாக்டர் உவைஸ் எழுதிய ஏனைய நாற்பது நூல்களும் தமிழ் இலக்கியத்தோடு, குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தோடு நெருங்கியத் தொடர்புடையவையாகும். இவற்றுள் தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்கள்", "சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அரபுச் சொற்களும் பாரசீகச் சொற்களும்', 'புதுக்குஷ்ஷாமில் இடம் பெற்றுள்ள அரபுச் சொற்கள்’ என்ற மூன்று நூல்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள அரபு, பாரசீகச் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் தருகின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இஸ்லாமியரல் லாதோருக்கும் அறிமுகப்படுத்த பேராசிரியர் உவைஸ் எடுத்த ஆரம்ப முயற்சிகள் என்றே இவை கணிக்கப்பட வேண்டும். அவரின் மகத்தான சாதனைகளில் ஒன்றெனக் கருதப்படும் தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதியின் தோற்றத்திற்கு முன்னோ டிகளாக இருந்தவையும் இவையே.
இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் நடை பெற்ற தமிழிலக்கிய மகாநாடுகளில் பேராசிரியர் உவைஸ் ஆற்றிய உரைகளில் சிலவும், அவர் அம்மகாநாடுகளில் வாசிப்ப தற்காக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் சிலவும் பின்னர் நூலுரு பெற்று வெளிவந்தன. பேராசிரியர் எழுதிய நூல்கள் என்ற பட்டியலில் தரப்பட்டுள்ள கீழ்வரும் நூல்கள் இத்தகையனவாகும்.
1. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபு 12 பக்கங்கள் 2. தமிழிலுள்ள முஸ்லிம் பிரபந்தங்கள் 16 பக்கங்கள் 3. திருக்குர்ஆனும் முஸ்லிம் மக்களின்
தமிழ் பேச்சு வழக்கும் இலக்கிய
வழக்கும் 41 பக்கங்கள் 4. முஸ்லிம்களின் பேச்சு வழக்கில்
பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள் 32 பக்கங்கள் 5. மட்டக்களப்பு நாட்டார் பாடல்களில்
இடம்பெற்றுள்ள இஸ்லாமிய
அம்சங்கள் 32 பக்கங்கள்

Page 91
i0.
III.
12.
13.
l4.
15.
16.
154
தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்கள் 20 பக்கங்கள்
சீறாப்புராணத்தில் இடம்பெற்றுள்ள அரபுச் சொற்களும் பாரசீகச்
சொற்களும் 89 பக்கங்கள் காயல்பட்டணம் வளர்த்த தீன்தமிழும்
தீந்தமிழும் 34 பக்கங்கள்
புலவரும் புரவலரும் 35 பக்கங்கள் புதுக்குஷ்ஷாமில் இடம்பெற்றுள்ள அரபுச் சொற்கள் 20 பக்கங்கள்
பொற்காலப் பெருங்காப்பியம்
புதுக்குஷ்ஷாம் 22 பக்கங்கள்
மதுரைக் கலம்பகமும் மக்காக்
கலம்பகமும் 20 பக்கங்கள்
தமிழிலக்கியத்தில் ஊறியுள்ள இஸ்லாமியச் சிந்தனைகள்
15 ஆண்டுகளில் 9 காப்பியங்கள் 8 பக்கங்கள் தமிழிலக்கியத்தில் இடம்பெற்றுள்ள அல்குர்ஆனின் கருத்துக்கள் 12 பக்கங்கள் இலங்கை முஸ்லிம்களின் பேச்சு மொழி - தமிழின் கிளை மொழி 16 பக்கங்கள்
இந்நூல்களில் சில, பல முக்கியமான தகவல்களைத் தருகின்
றன. இவை பேராசிரியர் உவைஸ் அவர்களின் அறிவின் ஆழத்தையும் அவரது ஆய்வுத் திறனையும் கோடிட்டுக் காட்டுகின் றன என்ற போதிலும், மகாநாடுகளின் அமைப்பாளர்கள் வழங்கிய நேர அளவுகளுக்கு ஏற்பவே தமது உரைகளையும் கட்டுரைகளை யும் அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு இருந்தபடியால் இவ்வுரைகளும் கட்டுரை களும் கூட அன்னாரின் மேதா விலாசத்தை உணர்த்துவதற்குச் சரியான உரைக்கற்கள் என்று கூற முடியாது.
இவ்வகையான நூல்கள் போக எஞ்சியுள்ள இருபது, இருபத்
தைந்து நூல்களை அடிப்படையாக வைத்து டாக்டர் உவைஸ்

155
அவர்களை மதிப்பீடு செய்வதே சரியானதும் நியாயமானதுமா கும். ஆனால் இந்நூல்களைக் கணிப்பீடு செய்யும் போதும் கூட, இவற்றுட் சிலவற்றை எழுதும்போது, அக்கால சூழ்நிலைகளா லும் தேவைகளினாலும் அவர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார் என் பதை நாம் மறந்து விடக் கூடாது.
மேலே குறிப்பிடப்பட்ட நூல்கள் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளுக்கும் தொண்ணுாறுகளுக்கும் இடைப்பட்ட நாற்ப தாண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டவையாகும். எண்ணுாறு ஆண்டுகளைக் கொண்டது என்று கருதப்படும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாற்பதாண்டுகள் என்பது ஒரு குறுகிய காலப்பகுதியே.
இருப்பினும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளுக்கும் தொண்ணுறுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு காலப்பகுதி என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அத்துணை மகத்தான மாற்றங்களை, மாபெரும் வளர்ச்சியினைச் சந்தித்த காலப்பகுதியாகும் அது.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒன்று உண்டா? என இலக்கிய வித்தகர்கள் வியப்போடு வினா எழுப்பும் அளவிற்கு, நான்கு பேர் அறியாத ஒன்றாகவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் இருந்தது. ஆனால் தொண்ணுறு கள் முடிவடைவதற்கு முன்னரே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை உள்ளடக்கிய ஓர் அகண்ட சாகரம் என்ற பேருண்மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. ஏனைய இலக்கியங்களில் காணப்ப டாத சில சிறப்புக்களை இஸ்லாமியத் தமிழிலக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந் தது.
இந்த நூற்றாண்டின் ஐம்பதுகளின் பிற்பகுதியில் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியம் எனும் கோஷத்தை உவைஸ் எழுப்பிய போது அவரை ஏளனத்துடன் நோக்கிய இஸ்லாமியக் கண்கள் அனேகம். இல்லாத ஊருக்கு வழி தேட முயற்சிக்கின்றார் உவைஸ் என அவரை நோக்கி கண்டனக் கணைகள் எறிந்த முஸ்லிம்கள் பலர். ஆனால் தொண்ணுறுகள் கழிவதற்கு முன்னரே இஸ்லாமிய மக்களே ஒன்று திரண்டு அனைத்துலக அடிப்படை யில் ஆறு மகாநாடுகளை நடத்தி முடிக்கக் கூடிய அளவிற்கு

Page 92
கரிசனைமிக்கவர்களாக மாறியிருந்தனர் என்பது வரலாறு காட்டும் உண்மை.
இந்த மகோன்னதமான மாற்றத்திற்குக் கால்கோளிட்டு அம் மாற்றத்தின் சூத்திரதாரியாக விளங்கியவர் பேராசிரியர் உவைஸ் அவர்களே. அவரின் பத்திரிகைக் கட்டுரைகளும், வானொலிப் பேச்சுகளும், மேடைச் சொற்பொழிவுகளும், குறிப்பாக அவர் எழுதிய இலக்கிய நூல்களுமே இப்பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரக் கோல்கள்.
எனவே டாக்டர் உவைஸ் அவர்களின் இலக்கிய நூல்களை மதிப்பீடு செய்யும்போது, அவர் எந்த மக்களை மையமாக வைத்து எழுதினாரோ அந்த மக்கள் அன்று பெற்றிருந்த இலக்கிய அறிவு மட்டத்திற்கேற்பவும் அவர்களின் கிரகித்தல் சக்திக்கேற்பவுமே எழுத வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எனவே பேராசிரியர் எழுதிய நூல்கள் ஐம்பதுகளுக்கும் தொண்ணுறுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகு தியில் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியினைச் சித்தரிப்பனவாகவே திகழ்கின்றன எனலாம். ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் அவர் எழுதிய இஸ்லாமியத் தென்றல்’, 'இஸ்லாமும் இன்பத்தமிழும்" போன்ற நூல்களை அவர் பின்னர் எழுதிய இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு, தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள், உமறுப் புலவர் ஓர் ஆலிமா? ஞானச் செல்வர் குணங்குடியார் போன்ற நூல்களு டன் ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கூற்றின் உண்மை புலப்படும்.
பேராசிரியர் உவைஸ் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்ணுாறுகளின் முதல் பாதியிலும் எழுதிய ஞானச் செல்வர் குணங்குடியார், உமறுப் புலவர் ஒர் ஆலிமா?, தமிழ் இலக்கியத் தில் முஸ்லிம் காப்பியங்கள், நெஞ்சில் நிலைத்த சுற்றுலா, தமிழ் இலக்கிய அறபுச் சொல்லகராதி, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விவரக் கோவை, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு போன்ற நூல்களே அவரது அறிவின் தீட்சண்யத்தையும் அதன் தேஜஸையும், தமிழ் இலக்கி யத்திலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திலும் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவினையும் ஆளுமையினையும் பூரணமாக வெளிப்ப டுத்துகின்றன என்று கூறலாம்.
இவற்றுள் முதல் ஐந்து ஆக்கங்களினதும் சிறப்புக்கள் ஏற்கனவே இந்நூலின் ஏனைய அத்தியாயங்களில் எடுத்துக்காட் டப்பட்டுள்ளன. இவ்வைந்து நூல்களைப் பற்றியும் தமிழ் இலக்கி

157
யம் பெருமைப்படுகின்றது. அவற்றைப் பற்றி நிச்சயமாக பேராசி ரியர் உவைஸ் அவர்களும் பெருமைப்பட்டிருக்கலாம்.
அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் அறிவின் ஆழத்தையும், விசாலத்தையும், அயரா உழைப்பையும் ஆராய்ச்சித் திறனையும் பெருமளவுக்குப் பிரதிபலிப்பது, அவர் டாக்டர் அஜ்மல்கான் அவர்களுடன் இணைந்து எழுதி வெளியிட்ட 'இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக்கோவை' எனும் நூலாகும். இஸ்லாமி யத் தமிழிலக்கியத்தின் பாரிய பரப்பினை வெளிப்படுத்தும் இந்நூலின் சிறப்பினை டாக்டர் அஜ்மல்கான் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
'இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபட விரும்பு வோர்க்கு பேராசிரியர் டாக்டர் உவைஸ் அளித்திருக்கும் கொடை இசுலாமியத் தமிழிலக்கிய நூல் விவரக் கோவை' என்னும் நூலாகும். இந்நூலும் மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாக அண்மையில் நடைபெற்ற கீழக்கரை இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாட்டின் போது வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தம்முடைய "முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு என்னும் ஆய் வேட்டிற்காக இருநூறு இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் இருப்பதைத் தேடிக் கண்டறிந்து வெளியிட்டதைப் பெரும் வெற்றியாக கருதிய தமிழுலகு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக்கோவை மூலமாக இரண்டாயிரத்துக்கும் குறை யாத இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் இருப்பதை அறிந்து பெரும் வியப்பில் ஆழ்ந்துள்ளது என்றே கூறவேண்டும். இந்நூல் விவரக்கோவை பேராசிரியரின் ஆர்வத்திற்கும் ஈடு இணையில்லாத உழைப்பிற்கும் கிடைத்த மிகப் பெரிய மாபெரும் வெற்றி என்றே கூற வேண்டும். இந்நூலினை பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் உருவாக்கித் தந்ததின் மூலமாக ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஆய்வு நிகழ்த்தக் கூடிய இஸ்லாமியத் தமிழிலக் கிய ஆய்வுக் களத்தை ஆய்வுலகிற்கு அறிமுகம் செய்வித் துள்ளார் என்றே கூறலாம்.'
இலக்கிய ஆர்வலரும் சமூக சேவையாளருமான தமிழக
வழக்கறிஞர் அல்ஹாஜ் நீடூர் ஏ.எம்.சயித் இந்நூலை எவ்வாறு கணித்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.

Page 93
158
"இந்நூல் விவரக் கோவையுள் இஸ்லாமியத் தமிழிலக்
கிய வரலாற்றின் தொடக்கம் முதல் 1950 வரை வெளிவந்
துள்ள இஸ்லாமியத் தமிழிலக்கியத் தொடர்பான நூல்கள்
பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்
டுள்ளன. ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிஞர்களுக்கு இது
மிகுந்த அளவு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை."
இது அல்ஹாஜ் சயீத் அவர்களின் கணிப்பீடு. இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக்கோவை எனும் நூலின் மாண்பினைக் காட்டுவதற்கு டாக்டர் அஜ்மல்கான் அவர்களும் ஹாஜி சயீத் அவர்களும் வழங்கியுள்ள பாராட்டுரைகள் போதுமானவை யாகும்.
தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழிலக் கியத்திற்கு ஆற்றியுள்ள பாரிய சேவைகளின் கொடுமுடியாக கருதப்படக் கூடியது, தமிழக அறிஞர் டாக்டர் அஜ்மல்கான் அவர்களுடன் இணைந்து, அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தின் சார்பாக எழுதிய இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு ஆகும். ஆறு பாரிய தொகுதிகளாக எழுதப்பட்டுள்ள இவ்வுன்னத மான நூல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தினைத் துறை போக கற்க விரும்புவோர்க்கு ஒர் ஒப்பற்ற வரப்பிரசாதமாகும்.
இந்நூலின் முதல் தொகுதியில் கி.பி.1700 ஆம் ஆண்டு வரையிலான தொடக்க கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்தின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கிவிட்டு, இத்தொகுதி தொடக்க இஸ்லாமிய நூல்களான பல்சந்தமாலை, யாகோபு சித்தர் பாடல்கள், ஆயிரம் மசாலா, மிகுராசு மாலை, திருநெறிநீதம், கனகாபிஷேக மாலை, சக்கூன் படைப்போர், முதுமொழி மாலை, சீறாப்புராணம், திருமக்காப் பள்ளு போன்றவற்றினை ஆராய்ந்திருக்கிறது.
இந்நூலின் இரண்டாவது தொகுதி இஸ்லாமிய அடிப்படை யில் எழுந்த காப்பியங்களைக் கருப்பொருளாக கொண்டு அமைந் துள்ளது. இதில் உமறுப் புலவரைத் தொடர்ந்து இஸ்லாமியத் தமிழ்க் காப்பிய வானிலே சுடர் விட்டுப் பிரகாசித்த சேகாதி நயினார்ப் புலவர் இயற்றிய திருமணக் காட்சி, பனி அகமது மரைக்காயர் இயற்றிய சின்ன சீறா, சேகனாப் புலவர் என்றும் புலவர் நாயகம் என்றும் கண்ணியத்தோடு அழைக்கப்பட்ட செய்கு அப்துல் காதிறு நயினார்ப் புலவர் இயற்றிய திருக்காரணப்

重59
புராணம், குத்பு நாயகம், திருமணிமாலை, புதூகுஷ்ஷாம், மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் கைவண்ணத்திலும், கலைவண்ணத்திலும் உருவாகிய இராஜநாயகம், குதுபு நாயகம், தீன் விளக்கம், குஞ்சு மூசு லெப்பை பாடிய இறவுசுல்கூல் படைப்போர், ஐதுறுசு நயினார்ப் புலவர் படைத்த நவமணி மாலை, பதுறுத்தீன் புலவர் இயற்றிய முகியத்தீன் புராணம், நாகூர் தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் இயற்றிய நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினான்கு காப்பியங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. ஏறத்தாழ அறுநூற்று ஐம்பது பக்கங்களைக் கொண்டது இவ்விரண்டாம் தொகுதி.
முதல் இரண்டு தொகுதிகளைப் பார்க்கினும் சிறியதாக, ஐநூற்று தொண்ணுறு பக்கங்களைக் கொண்ட மூன்றாம் தொகுதி வேதபுராணம், பொன்னரிய மாலை, மூஸா நபி புராணம், யூசூபு நபி காவியம், புத்தாகுல் துறுப், முகாஷபா மாலை, சாதுலி நாயகம் எனும் ஏழு இஸ்லாமியக் குறுங்காப்பியங்களை ஏறத்தாழ எழுபத்தைந்து பக்கங்களில் ஆராய்ந்து விட்டு, இஸ்லாமிய அடிப்படையில் தமிழில் தோன்றியுள்ள படைப்போர், முனா ஜாத்து, கிஸ்ஸா, மஸ்அலா, நாமா, கலம்பகம், அந்தாதி, ஆற்றுப்படை, கோவை, மாலை, சதகம், திருப்புகழ், கீர்த்தனை கும்மி, சிந்து, தாலாட்டு, ஏசல், குறவஞ்சி, பிள்ளைத் தமிழ் போன்ற பிரபந்த இலக்கியங்களை மிக விரிவாக, ஏறத்தாழ நானூற்றி எண்பது பக்கங்களில் அறிமுகப்படுத்துகின்றது.
இத்தொகுதிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் குத்தாலிங்கம் வழங்கியுள்ள அணிந்துரை இதன் மேன்மையை நன்கு உணர்த்துகின்றது. அவ்வணிந்துரையின் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.
"இத்தொகுதி இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இந்நூலை முன்னாள் பேராசிரியர் டாக்டர் ம.மு.உவைஸ் அவர்களும் தற்போ தைய இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறைத் தலைவர் டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் அவர்களும் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர்.
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (1) குறுங் காப்பியங்கள் (2) முஸ்லிம் தமிழ்ப் பிரபந்தங்கள் (3) முஸ்லிம் மரபுப் பிரபந்தங்கள் (4) மக்கள் வழக்குப் பிரபந்தங்கள் என்ற நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு விளக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் இஸ்லாமியச்

Page 94
16O
சமயத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய குறுங் காப்பியங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவ தாகிய முஸ்லிம் பிரபந்தங்கள் என்னும் பகுதியில் இஸ்லாமியர் தமிழுக்களித்த சிறப்பிலக்கிய வடிவங்க ளான படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, நாமா, மஸ்அலா ஆகிய இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைகள் தனித்தனியே இடம் பெற்றுள்ளன. மேலும் விரிவான ஆய்வுக்குரியவை இந்நூல்கள் என ஆசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
‘முஸ்லிம் மரபுப் பிரபந்தங்கள்’ என்ற மூன்றாம் பகுதியில் கலம்பகம், அந்தாதி, சதகம், கோவை போன்ற தமிழ்ச் சிற்றிலக்கிய மரபுகளைப் பின்பற்றி அமைந்த இஸ்லாமியத் தமிழ் நூல்கள் பற்றி விரிவாக விளக்கப்பட் டுள்ளன,
"மக்கள் வழக்குப் பிரபந்தங்கள்’ என்ற தலைப்பின் கீழ்த் திருப்புகழ், கீர்த்தனை, கும்மி, சிந்து, குறவஞ்சி என்ற பெயர்களில் அமைந்துள்ள இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் புலவர் பெருமக்களின் தமிழ்ப் பற்றினை யும், தமிழ்த் தொண்டினையும் அறிந்து கொள்வதோடு மட்டுமன்றி, இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் பரப்பை யும் வீச்சையும் அறிந்து கொள்ள பெரிதும் துணை செய்வது இந்நூல். இந்நூலைப் படைத்த ஆசிரியர் இருவரும் நமது பாராட்டுக்குரியவர்கள்." துணைவேந்தர் டாக்டர் குத்தாலிங்கம் அவர்களின் இம்மதிப் பீடு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூன்றாம் தொகுதியின் சிறப்பினைச் செவ்வனே எடுத்துக் காட்டுகின்றது.
இந்நூலின் நான்காவது தொகுதி சூபித்துவ அடிப்படையில் தோன்றிய இஸ்லாமிய ஞானப்பாடல்களையும் அவற்றைப் பாடி யருளிய குணங்குடி மஸ்தான் சாகிபு, மெய்ஞ்ஞானி தக்கலை பீர் முகம்மது சாகிபு, மச்சரேகைச் சித்தர் என மரியாதையுடன் அழைக்கப்பட்ட சைகு அப்துல் வாரிது ஆலிம் மெளலானா ஐதுறுாஸ், ஞானியார் சாகிபு, சைகு முஸ்தபா ஒலியுல்லாஹ், கலீபத்து சைகு சாஹ"ல் ஹமீது அப்பா, சின்ன ஆலிம் அப்பா என அன்பாக வழங்கப்பட்ட மீறா லெப்பை ஆலிம், மேளைப்பா ளைய மெய்ஞ்ஞானி பவரொலி, செய்கு பாவா செய்கு சுலைமா னுல் காதிரி, கனியாபுரம் செய்கு அப்துல் காதிறு வாலை

16.
மஸ்தான், சூரங்குடி செய்கு தர்வேஸ் மீரானொலி, கீழக்கரை ஆசியா உம்மா, தென்காசி இரசூல் பீவி, கூத்தாநல்லூர் பீர் முகம்மது ராவுத்தர், குஞ்ஞாலி சைகு முகியத்தீன் சாகிபு போன்ற ஞானிகளைப் பற்றியும் வெகு விரிவாக ஆராய்கின்றது.
இஸ்லாமிய அடிப்படையில் தமிழில் தோன்றிய உன்னத மான ஞானப் பாடல்களை வெளிச்சம் போட்டு காட்டும் இத்தொகுதி, முஸ்லிம்கள் அல்லாதோருக்கு மாத்திரமல்ல, முஸ் லிம்களுக்குக் கூட ஒரு புதிய, அதுவரை அவர்கள் நன்கு அறியாதிருந்த ஒர் அற்புதமான இலக்கிய உலகினைக் காட்டுகின் றது என்றே கூறவேண்டும். இலக்கியத்தில் ஒரளவு ஆர்வம் கொண்டிருந்த முஸ்லிம்கள் கூட குணங்குடி மஸ்தான் சாகிபு, தக்கலை பீர் முகம்மது சாகிபு, மச்சரேகைச் சித்தர் போன்ற ஒரு சில இஸ்லாமிய ஞானப் புலவர்களைப் பற்றி மாத்திரமே சிறிது அறிந்திருந்தனர். ஆனால் உவைஸ் இத்தொகுதியில் ஆராய்ந்துள்ள ஞானியர்களின் தொகையும் அவர்களது புலமைத் திறனும் வாசகர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமது உள்ளார்ந்த ஆத்மீக அனுபவங்களையும் ஆத்மீக எதிர்பார்ப்புகளையும் தமி ழில் வெளிப்படுத்துவதில் அவர்கள் காட்டியுள்ள லாவகம் படிப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
வேறொரு வகையிலும் இத்தொகுதி முஸ்லிம்களுக்குப் பெரும் பயன்மிக்கதாக அமைந்துள்ளது. குணங்குடி மஸ்தான் சாகிபு, மச்சரேகைச் சித்தர் போன்ற இஸ்லாமிய ஞானியர் சிலரின் பாடல்களில் கையாளப்பட்டுள்ள சிவம், சக்தி, உமை, மனோன் மணி, அம்பிகை, தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரன், இந்திரன், பஞ்சாட்சரம் போன்ற இந்து மத தொடர்பான சொற்கள் முஸ்லிம் வாசகர்களின் நெஞ்சங்களில் மருட்சியை ஏற்படுத்தவே செய்கின் றன; அந்த ஞானியரின் ஈமானின் தன்மையைப் பற்றி சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. இந்து வேதாந்தத்திலும் இஸ்லாமி யச் சித்தாந்தத்திலும் ஆழமான அறிவு பெற்றிருந்த பேராசிரியர் உவைஸ் அவர்கள் அறிவுப்பூர்வமான விளக்கங்களால் மிக நுட்பமான முறையினில் இச்சந்தேகங்களைப் போக்கியுள்ளார்.
"தமிழ் நாட்டுக்கோ அல்லது வேறு எந்தப் பிரதேசத் துக்கோ சூபித்துவம் எடுத்துச் செல்லப்படும் பொழுது, எடுத்துச் செல்லப்பட்ட அந்த நாட்டின் மண்வாசனை சூபித்துவத்தில் ஒரளவு கலப்பதை இயல்பானது என்றே கொள்ளவேண்டும். அந்த மண்வாசனை அந்த சூபியாக்க ளின் இலக்கியங்களிலே கமழ்வதைக் காணலாம். சில சமயங்களில் அது வெளிப்படையான மண்வாசனையாக

Page 95
162
12
இருப்பதே அன்றி உள்ளுறை மண்வாசனையாக அமைந்து விடுவதில்லை. ஆழமான ஆராய்ச்சியினாலேயே அத்த
கைய வேறுபாட்டை அறியக் கூடியதாக இருக்கும்.'' பேரறிஞர் உவைஸ் வழங்கியிருக்கும் இவ்விளக்கம் திருப்தியளிப் பதாகவே இருக்கின்றது.
இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் பரப்பினையும் வீச்சினை யும் அறிய விரும்புவோருக்கு ஓர் அரிய பொக்கிஷமாக, அள்ள அள்ள வழங்கும் வற்றாத நீர்ச்சுனையாக திகழும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற இந்த உன்னதமான நூல் தோன்றுவதற்குக் கால்கோளிட்ட நிகழ்ச்சியினை டாக்டர் அஜ்மல் கான், தான் 'உவைஸ் மணி விழா மலருக்கு எழுதிய கட்டுரையில் பின்வருமாறு சித்தரித்துள்ளார்.
இன் பித்தம்
''பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறைத் தலைவராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொறுப்பேற்ற பின் அன்றைய துணைவேந்தர் தமிழ் மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார் அவர்களைச் சந்திப்பதற்காக நானும் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களும் சென்றோம். அப்போது துணைவேந்தர், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற வினாவினை எழுப்பினார்கள். அத்துடன் இஸ்லாமியத் தமிழ்க் காப்பிய மாக சீறாப்புராணம் தவிர வேறு என்ன இருக்கிறது? 4:3ன் என்ற வினாவினையும் எழுப்பினார்கள். அப்போது நாங்க கள் பதினான்கிற்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ்க் 1காப்பியங்கள் இருப்பதை எடுத்துக் கூறி விளக்கமளித்த 14 போது பெரும் வியப்பில் ஆழ்ந்த துணைவேந்தர் அவர்கள் பெரும் உவகையுடன் இத்தகைய இலக்கியப் பரப்பி னைத் தமிழிலக்கிய உலகு இனம் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது பெரும் 'பிசகு' என்று கூறி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவாக எழுதும் பணியினைத் தொடங்கும்படியும் எங்களுக்குக் கல் கட்டளையிட்டார்கள். இந்நிகழ்ச்சியே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலமாக இஸ்லாமியத் தமிழ் இலக் கிய வரலாறு உதயமாவதற்குக் காரணமாக அமைந்தது.''
எந்தக் குறைபாட்டினை நிவர்த்திச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுத வேண்டும் என துணைவேந்தர் மாணிக்கனார் பணித்தாரோ
தி 471 ' ' - 07

163
அந்நோக்கத்தினைப் பேரறிஞர் உவைஸ் பரிபூரணமாக நிறைவேற் றியுள்ளார் என்பதை டாக்டர் அஜ்மல்கான் அவர்களின் பின்வரும்
கூற்று நிரூபிக்கின்றது.
''பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது இஸ்லாமியத் தமிழிலக்கியத் திறனாய்வுப் பணிக்கு சிகரமாக அமைந் துள்ள பணி அன்னாரின் 'இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின்' உருவாக்கமே என்று கூறலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இப்பணி ஆறு பகுதிகளைக் கொண்டதாக அமையும். முதல் நான்கு ) பகுதிகள் முற்றுப் பெற்று விட்டன. இன்னும் இரு :) பகுதிகள் விரைவில் முடிவுறும், ஒவ்வொரு தொகுதியும்
அறுநூறு பக்கங்களுக்கும் மிகுதியான செய்திகளை உள்ள, டக்கியுள்ளது. தமிழிலக்கிய வரலாற்றிற்கே இதுபோன்ற விரிவான இலக்கிய வரலாறு உருவாக்கப்படவில்லை என்று கூறி பாராட்டும் வகையில் இஸ்லாமியத் தமிழிலக் கிய வரலாற்றின் முதல் மூன்று தொகுதிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளன. வ இதில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் ஒவ்வொன்றும் இ விரிவான திறனாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.'' : இந்நூலின் இரண்டாம் தொகுதிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் டாக்டர் தி.முரு கரத்தினம் வழங்கியுள்ள அணிந்துரையின் கீழ்வரும் பகுதி அந்நூலின் சிறப்பினை வேறொரு கோணத்தில் நின்று காட்டுகின் றது. ) .
''மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட டுள்ள உமறுப்புலவர் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கட் டில் இவ்வரலாற்றினை வரையும் பணியை மேற்கொண் டுள்ளது. நாலு தொகுதிகள் உருவம் பெற்றுவிட்டன; இரண்டு தொகுதிகள் அச்சேற்றம் பெற்றுள்ளன. இக்கட்டி லில் பணிபுரியும் பேராசிரியர் எம்.எம்.உவைஸ் அவர்க ளும், இணைப் பேராசிரியர் பி.எம்.அஜ்மல்கான் அவர்க ளும் அரும்பணி புரிந்து இவ்வரலாற்றை வரைந்திருக்கின் றனர். இந்த நூல் வரிசையில் காணப்படுவன வரலாற்று நோக்கும் இலக்கிய நோக்கும் ஆகும். நூலாசிரியர் வாழ்க்கை, காலம், நூலின் அமைப்பு, அணிகள் முதலான இலக்கிய நயங்கள், மொழி வழக்கு ஆகியவை இங்குச் 9 சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றன. பிற நோக்குகள்

Page 96
164
பின்னர் மேற்கொள்ளலாம். பேராசிரியர்கள் முயற்சி தமிழுக்கு ஆக்கம் தருகிறது; பிறருக்கு ஊக்கம் தருகிறது; தமிழுலகம் வரவேற்புத் தருகிறது; தமிழ்த்துறை நன்றி தருகிறது.'
அறிஞர் உவைஸ் பத்திரிகைத் தொடர்கள், வானொலிப் பேச்சுத் தொகுப்புக்கள், மொழிபெயர்ப்புக்கள் என்ற அடிப்படை களிலும் வேறு பல அடிப்படைகளிலும் ஏறத்தாழ ஐம்பது நூல்களை வெளியிட்டுள்ள போதிலும், எதிர்வரும் நூற்றாண்டுக ளில் அவரது பெயரை மக்கள் மனங்களில் நிலைபெறச் செய்யப் போவது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினைப் பற்றி அவர் செய்துள்ள அரிய ஆய்வுகளும், அவ் ஆய்வுகளை அடியொட்டி அவர் எழுதியுள்ள இலக்கிய நூல்களுமே. இந்நூல்கள் யாவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினைப் பற்றி அறிய விரும்பும் இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்றியமையாதவையாக, நிகரற்ற பொக்கிஷங்களாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. டாக்டர் உவைஸ் அவர்களின் நூல்களை ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை ஆராய்வது என்பது சிந் தித்து பார்க்கவும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.
அல்லாமா உவைஸ் அவர்களின் நூல்களைப் பற்றி சிங்கை அறிஞர் மு.கா. செய்யது யூசுப் 'டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்க ளின் பல்சுவை மிகு நூல்களை, நூல் தலைப்புக்காக ஒரு முறை, டாக்டர் உவைஸ் ஹாஜியாரின் நற்பெயருக்காக ஒருமுறை, சொல்லுக்காக ஒரு முறை, சொல்லின் செறிவுக்காக ஒரு முறை, பொருளுக்காக ஒருமுறை, பொருளின் பொலிவுக்காக ஒருமுறை, அவர்கள் எடுத்தாளும் பாவுக்காக ஒருமுறை, பாவின் இனத்துக் காக மற்றுமோர் முறை படிப்போரில் இதை எழுதுவோனும் ஒருவன்' என்று கூறியிருப்பது சற்று உயர்வு நவிற்சியாக தென்படுகின்ற போதிலும், அது உண்மைக்கு முற்றிலும் மாறான தல்ல என்ற நினைப்பு எங்கள் மனங்களிலும் எழவே செய்கின்றது.

10. டாக்டர் உவைசும் தமிழிலக்கிய அரபுச் சொல் அகராதியும்
"அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் பணிகளில் மிகவும் சிறந்த பணி, பிற சமய - சமுதாய நண்பர்களும் இஸ்லாமிய இலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் வகை யில் அறபுச் சொற்களுக்கு விளக்கந்தரும் அகராதி ஒன்றி னைத் தொகுத்து அவர் வெளியிட்டிருப்பதாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ்ச் சொற்களோடு அறபுச் சொற்களும் ஆங்காங்கே கலந்தே படைக்கப்பட்டி ருக்கின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்று. தமிழுக்குப் புதிய படைப்புமாகும். இவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. எனவே இந்நிலை அகல வேண்டும் என்ற நோக்கில் - ஒரு வழிகாட்டி நூல் போல - எந்தெந்த கவிதை வரிகளுக்கிடையே என்னென்ன அறபுச் சொற்கள் கலந்து இருக்கின்றன, அவற்றுக்கான பொருள் என்ன என்ற விவர அட்டவணையாக - அறபுச் சொற்பொருள் விளக்க அகராதியை வரிசைப்படுத்தி அனைவரும் புரிந்து தெளிந்து, இஸ்லாமிய இலக்கிய நயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்த அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் - இஸ்லாமியர் அல்லார் மற்றும் இஸ்லாமிய இலக்கியங்களுக்கிடையே பாலம் போல் விளங்குகிறார் என்றால் பொருத்தமாகும்.'
மேலே தரப்பட்டுள்ள வரிகள் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹிதாயத் துல்லா எனும் தமிழக இலக்கிய ஆர்வலர், பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பணிகளை மதிப்பீடு செய்து எழுதிய ஒரு கட்டுரையில் காணப்படுபவையாகும். தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதி ஒன்றினைத் தொகுத்ததையே பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பணிகளுள் முதன்மை மிக்கதாக இக்கட்டுரையில் ஹாஜி ஹிதாயத்துல்லா கணித்துள்ளார். தமிழி லக்கிய அறபுச் சொல் அகராதி தொகுப்பே டாக்டர் உவைஸ் அவர்களின் தலையாய இலக்கியப் பணி என்ற மதிப்பீடு

Page 97
166
மறுக்கப்பட வேண்டிய ஒன்று என்ற போதிலும் அது அன்னாரின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
ஒரு வேதம் எந்த மொழியில் தோன்றி வேரூன்றி இருக்கி றதோ அந்த மொழியின் தாக்கத்தை, அந்த மார்க்கத்தை அடிப்ப டையாகக் கொண்டு தோன்றிய வேற்று மொழி இலக்கியங்கள் பிரதிபலிப்பதைக் காணலாம். அது அந்த இலக்கியத்தின் சிறப்பம் சமாகவும் அமைந்து விடும்.
பெளத்த மதம் தோன்றிய மொழி பாளி. பெளத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த மணிமேகலை போன்ற தமிழி லக்கிய நூல்களில் பாளிச் சொற்கள் பல இடம் பெற்றிருக்கின்றன என்பதை எவரும் அறிவர். சமண சமயத்தின் மொழி பாகவதம். சமண சமயக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கோடு இயற்றப் பட்ட சீவக சிந்தாமணி போன்றவற்றில் பாகத மொழிச் சொற்கள் விரவி வருவதை அவதானிக்கிறோம். வைணவ மத அடிப்படை யிலே தோன்றிய தமிழிலக்கியங்களிலே, அம்மதங்களோடு நெருங்கிய தொடர்புடைய சங்கத மொழிச் சொற்கள் மலிந்திருப்ப தைக் காணலாம்.
இஸ்லாம் தோன்றிய மொழி அரபு. அது இஸ்லாத்தினின்றும் பிரிக்க முடியாத மொழியாகவே இன்றும் விளங்குகிறது. அவ் வாறே பாரசீக மொழியும் இஸ்லாத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலே, ஏராளமான அரபுச் சொற்க ளும் ஒரளவு பாரசீக சொற்களும் கலப்பது தவிர்க்க முடியாததா கவே இருந்தது.
முஸ்லிம்களின் வேத நூலான திருக்குர்ஆன் அரபு மொழியில் தான் அருளப்பட்டது. முஸ்லிம்களின் தொழுகையும் அரபு மொழியில்தான் நடத்தப்படுகின்றது. எனவே அரபு மொழி, ஒரு முஸ்லிமின் வாழ்வில், அவன் எந்நாட்டினைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, எம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருப் பவனாக இருந்தாலும் சரி, பிரிக்க முடியாத ஒர் அங்கமாகவே விளங்கும். ஆகையால் ஒரு சராசரி முஸ்லிம் கூட, நூற்றுக்கணக் கான அரபுச் சொற்களையும், அவற்றின் மூலம் அரபு மொழியி னையும் ஓரளவு அறிந்தே இருப்பார்.
இரு வெவ்வேறு மொழிகளில் தன் எண்ணங்களை வெளியி டும் ஆற்றல் உள்ள ஒருவன், ஒரு மொழியைப் பேசும் போது தன்னை அறியாமலேயே மற்ற மொழிச் சொற்களையும் சொற்றொ

167
டர்களையும் உபயோகிப்பான் என்று ஜே.வான்ரீஸ் எனும் மொழியியலறிஞர் கூறியுள்ளார். எனவே அரபு மொழியோடும் பாரசீக மொழியோடும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமிய அடிப்படையிலே தமிழில் நூல்கள் இயற்ற ஆரம்பித்த போது அவற்றில் அரபு, பாரசீகச் சொற்கள் நுழைவது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. அராபியர்களும் பாரசீகர்களும் பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் நாட்டு மக்களுடன் வர்த்தகத் தொடர்புகளை வளர்த்திருந்த னர். இத் தொடர்பின் காரணமாக பல அராபிய, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்தன. பிற மொழிச் சொற்கள்தானா என்று ஐயம் ஏற்படுமளவுக்குத் தமிழ்ச் சொற்கள் போல் விளங்கும் இவை பொதுத் தமிழ்ப் பேச்சு வழக்கில் சர்வசாதாரணமாகப் பயன்படுத் தப்படுகின்றன. உதாரணமாக பதில், இனாம், வக்கீல் போன்ற அரபுச் சொற்களை நாம் சுட்டிக் காட்டலாம். இச்சொற்களுக்குப் பதிலாக முறையே விடை, நன்கொடை, பிரதிநிதி என்ற தூய தமிழ்ச் சொற்களை உபயோகிக்க முடியும் என்ற போதிலும் எல்லோரும் அவ்வாறு செய்வதில்லை. இதனைப் போலவே காகிதம், சுமார், தராசு, தயார் போன்ற பாரசீக சொற்களும் திசைச் சொற்களாக தமிழில் புகுந்துள்ளன.
ஆனால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலே அவ்விலக்கி யத்தின் சிறப்பம்சமாக அமைந்துள்ள அரபு, பாரசீகச் சொற்கள் இத்தகைய சொற்களினின்றும் வேறுபட்டவையாகும். இஸ்லாமி யத் தமிழ் இலக்கியங்களிலே அமைந்துள்ள அரபு, பாரசீகச் சொற்களின் தன்மைகளை, பேராசிரியர் உவைஸ், தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதிக்குத் தான் எழுதிய முன்னுரையில் பின்வருமாறு விவரித்துள்ளார்.
'இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கி யங்களிலே அவ்விலக்கியத்தின் சிறப்பியல்பாக அமைந் துள்ள அறபு, பார்சிச் சொற்கள் தமிழ்ப் பொதுவழக்கிலே இடம்பெற்றுள்ள அத்தகைய சொற்களிலிருந்து வேறுபட் டவையாகும். அவற்றை விட மேலதிகமாக தமிழ் மொழியில் சேர்ந்துள்ளவையாகும். அத்தகைய அறபுச் சொற்களுள் சில அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களாக அமைந்துள்ளன. வேறு சில அல்குர்ஆன் சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் திருவசனங்களின் பகுதிகளாகவும் இடம்பெற்றுள்ளன. மற்றும் சில இஸ்லாமிய மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இன்றியமையாதன வாக அமைந்துள்ளன. இன்னும் சில சமூக, கலாசார

Page 98
168
நிகழ்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாக இடம் பெற்றுள்ளன. இடப்பெயர்களும் இயற்பெயர்களும் அறபு நாடுகளின் இடப்பெயர்களும் முஸ்லிம் பெரியா ரின் இயற்பெயர்களும் அறபுப் பதங்களாக அமைந்துள்ள சந்தர்ப்பங்களும் உண்டு. அறபு மொழிக்குப் புறம்பான இயற்பெயர்களும் உள்ளன. அவை முஸ்லிம் அல்லாதா ரைக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய இலக்கியங்களில் விவரிக்கப் பட்டுள்ள நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அல்லா தாரின் பெயர்களாகவே அவை அமைந்துள்ளன. அவை முஸ்லிம் அல்லாத பெயர்களாயிருந்த போதிலும் இஸ்லா மியத் தமிழ் இலக்கியங்களிலே அறபு எழுத்துக்களில் எழுதப்படும் முறையிலேயே இடம் பெற்றுள்ளன. அறபு நாட்டிலே பல்கிப் பெருகியிருந்த எண்ணிறந்த குலங்க ளின், கோத்திரங்களின், கூட்டங்களின் பெயர்கள் அறபுச் சொற்களின் தொகுதியில் அடங்கும் மற்றொரு பகுதியா கும். முஸ்லிம் ஆட்சிச் சம்பந்தப்பட்ட அறபுச் சொற்கள் மற்றொரு தொகுதியில் அடங்கும். நல்லடியார்களையும் இஸ்லாமிய மார்க்கக் கோட்பாடுகளுக்குட்பட்டு இயங்கி வரும் பல்வேறு குழுக்களின் தலைவர்களையும் குறிப்பி டும் பொதுப்படையான அறபுச் சொற்கள் மற்றொரு தொகுதியைச் சார்ந்தனவையாக அமையும். ஆடை, அணி கள், பாதரட்சைகள் முதலியவற்றைக் குறிக்கும் அறபுச் சொற்கள் இன்னொரு தொகுதியாக அமையும். அறபு இலக்கணத்தின் பல்வேறு பிரிவுகளைச் சுட்டும் அறபுச் சொற்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறத் தவறவில்லை. சூபிகள் என வழங்கப்படும் முஸ்லிம் மெய்ஞ்ஞானிகள் தமது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தும் கலைச் சொற்கள் மற் றொரு தொகுதியாக அமையும். இஸ்லாமிய அடிப்படை யில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்களை இத்தகைய பல்வேறு தொகுதிகளாக வகுக்கலாம்.' பேராசிரியர் உவைஸ் அவர்களின் இக்குறிப்புகள் அரபு, பாரசீகச் சொற்கள் எவ்வெவ் வகைகளில் இஸ்லாமியத் தமிழ் நூல்களில் புகுந்துள்ளன என்பதை நன்கு புலப்படுத்துகின்றன.
தமது தமிழ் இலக்கிய ஆக்கங்களிலே இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் பெருவாரியாக அரபு, பாரசீகச் சொற்களைக்

69
கையாண்டு இருப்பதற்குப் பல காரணங்களைச் சுட்டிக்காட்ட லாம். மொழியியலறிஞர் வான்ரீஸ் கூறியிருப்பது போல அரபு, பாரசீகம், தமிழ் போன்ற மொழிகளில் பரிச்சியம் பெற்றிருந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தம்மை அறியாமலேயே தமது தமிழ் நூல் ஆக்கங்களில் தாம் வழக்கமாக பாவித்த அரபு, பாரசீகச் சொற்களைக் கையாண்டிருக்கலாம். ஆனால் இது மாத்திரமே காரணம் என்று கூற முடியாது.
தமது எண்ணங்களை, நம்பிக்கைகளைத் தமிழில் வடிக்க முயன்ற முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்த அரபு, பாரசீகச் சொற்களை ஆங்காங்கே பயன்ப டுத்துவது அத்தியாவசியம் என்பதை உணர்ந்தனர். உண்மையில் இஸ்லாமிய அடிப்படையில் உருவாக்கப்படும் தமிழ் இலக்கியங் களிலே இஸ்லாமியக் கலைச் சொற்களையும் கருத்துக்களையும் தெளிவான முறையிலே விளக்குவதற்கு அரபு, பாரசீகச் சொற்கள் இன்றியமையாதனவாகவேயுள்ளன. இஸ்லாமியக் கலைச் சொற் கள் பலவற்றை, அவற்றில் முழுமையான கருத்துக்கள் புலப்படும் வகையில் மொழிப்பெயர்ப்பது முடியாததாகவே இருந்தது. உதார ணமாக இறைவனைக் குறிக்கும் அல்லாஹ்” எனும் அரபுச் சொல்லை எந்த பாஷையில் மொழிப் பெயர்த்தாலும் அந்த சொல்லில் பொதிந்துள்ள முழுமையான கருத்து வெளிப்படமாட் டாது. எனவே அல்லாஹ் என்ற சொல்லை அப்படியே உபயோ கிப்பதே சிறப்பானதாக இருந்தது. இவ்வாறே 'காபிர் என்ற அரபுச் சொல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு தமிழ்ச் சொல்லினால் ஏற்படுத்துவது முடியாததே. எனவே இத்தகைய அரபு, பாரசீகச் சொற்களை நேரடியாகவே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுக்கு ஏற்பட்டது.
இக்காரணங்களை விட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழ் இலக்கியம் படைப்பதற்குப் புறப்பட்ட நோக்கம் கூட அவர்களின் ஆக்கங்களில் அரபு, பாரசீகச் சொற் பிரயோகங்களை ஊக்குவிப்ப தாகவே அமைந்தது. தாம் படைக்கும் இலக்கியங்கள் பிற மதத்தவர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணமோ, மத மாற்றத்திற்கு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்போ முஸ்லிம் தமிழ்ப் புலவர்களுக்குச் சிறிதேனும் இருக்கவில்லை. இதனால் பிற மதத்தவர்களுக்கும் விளங்கும் வகையிலேயே தமது நூல்களை எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இருக்க வில்லை.
தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்குத் தமது நூல்கள் உதவ வேண்டும் என்பதே

Page 99
17Ο
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது. முஸ்லிம்களை மையமாக வைத்தே இஸ்லாமியத் தமிழ் இலக்கி யங்கள் படைக்கப்பட்டதால், முஸ்லிம்களுக்குப் பரிச்சயமான அரபு, பாரசீகச் சொற்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வித தயக்கத்தையும் காட்ட வேண்டிய அவசியம் முஸ்லிம் புலவர்க ளுக்கு ஏற்படவில்லை.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களில் சிலர் அவசியமான சந்தர்ப்பங் களில் மாத்திரமே அரபு, பாரசீகச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர். வேறு சிலரோ அளவுக்கு மீறிக் கூட இவ்விரண்டு மொழிச் சொற்களையும் தமது தமிழ் ஆக்கங்களில் கையாண்டுள்ள னர் என்று கூறலாம்.
முகம்மது நூறுத்தீன் புலவர் என்பவர் இயற்றிய மூஸா நபி புராணம் எனும் காப்பியத்தில் வரும்
"வல்லவன் ஹபீபாய் வந்த வரிசைநேர் நபியுல்லாமேல் நல்லொளி பிறங்கு மீமான் நன் மனத் துடையோருக்கு சொல்லறா பறக்கத் தீந்து சிந்தையில் சுடருண்டாக்கி தொல்லை யொன்றில்லா வாழ்க்கைத் தருவனென் றிறை வன் சொன்னான்’
என்ற செய்யுளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹபீப், நபியுல்லா, ஈமான், பறக்கத் ஆகிய அரபுச் சொற்கள் முஸ்லிம்கள் தமது அன்றாட வாழ்வில் சாதாரணமாக பாவிக்கும் சொற்களாகும்.
ஆனால் பதுறுத்தீன் புலவர் இயற்றியுள்ள முகியத்தீன் முனாஜாத்தில் வரும்
'அலிபதின் அஸ்லாய் நின்ற அட்சரஞ் சுழித்து வீசிப்
பொலிவுறும் இஷ்கு காத்துட் புதைந்து ஹே மீமதாய்
நின்
றலிபெனும் இஷ்கு மீறி அஹது மீ மஹ"மதான
மெலிவிலா சிபத்துள் மீமாய் வெளிதரு முகியத் தீனே.” என்ற பாடலில் அன்றாட பேச்சு வழக்கிலில்லா அரபுச் சொற்கள் மலிந்திருப்பதைக் காண்கின்றோம்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்ட அரபு, பாரசீகச் சொற்கள், அவ்விலக்கியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பரிச்சய மானவையாகவே இருந்திருக்கும். ஆனால் காலப்போக்கில் முஸ் லிம்கள் மத்தியில் அரபு மொழியறிவு குறைய, முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்களுக்குக் கூட இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் பாடி

171
யுள்ள பல பாடல்களைப் பூரணமாக விளங்கிக் கொள்ளல் கடினமானதாகியது.
பிற மதத்தவர்களைப் பொறுத்த வரையிலோ, அரபு, பாரசீகச் சொற் பிரயோகம் காரணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளைப் புரிந்து கொள்ளல் முடியாத ஒன்றாகவே இருந்தது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை இஸ்லாமியரல்லாதோர் சுவைப்பதற்குத் தடைக்கல்லாக நிற்கும் இதனை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவர் தமிழண்ணல் டாக் டர் இராம.பெரிய கருப்பன் கீழ்வருமாறு விளக்கியுள்ளார்.
"இசுலாமிய இலக்கிய வளர்ச்சியைக் கணித்தறியும் பொழுது, அஃதொன்றே தனி ஒரு இலக்கிய வரலாற் றிற்கு வேண்டிய அளவு பல்வேறு கிளைகளாகப் பல்கி இருக்கிறது. இவ்விலக்கியப் பகுதிகள் சில அவ்வப்போது மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்படுகின்றன. இலக் கிய ஒப்பீட்டறிஞர்கள் இசுலாமிய இலக்கியங்களைக் கற்க விழைகின்றனர். இச்சமயம் சார்ந்தார் தாமும் இவ்விலக்கியச் செல்வங்களைப் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர். ஆயின் இவர்களனைவருக்கும் அந்நூல்க ளைப் பயிலுங்கால் ஏற்படும் தடையொன்றுளது. பாடல்க ளிடையே இடம் பெறும் அரபுச் சொற்கள் எளிதில் பொருள் விளங்கிக் கொள்ள இயலாமையால் தொடர்ந்து படிப்பதற்குத் தடைக்கற்களாக அமைகின்றன. இந்நூல்க ளைப் பதிப்பிப்போரும் பொருள் விளங்காச் சொற்கள் பலவற்றை அப்படியே விட்டு விடுகின்றனர். உரையாசிரி யர்கள் நழுவி விடும் இடங்களும் உள."
டாக்டர் தமிழண்ணல் வெளியிட்டுள்ள கருத்துக்களோடு டாக்டர் உவைஸ் அவர்களுக்கும் உடன்பாடு உண்டு என்பதை அவர் எழுதியுள்ள கீழ்வரும் வரிகள் நன்கு உணர்த்துகின்றன.
"இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறபு, பார்சி மொழிச் சொற்கள் காரணமாக அறபு, பார்சி மொழிச் சொற்களை அறியாதோர் அவ்விலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்வதில் பெரிதும் இடர்ப்படுவர். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங் கள் எல்லோராலும் நயக்கத்தக்கனவாய் அமையாமைக்கு ரிய ஒரு காரணம், அத்தகைய நூல்களில் மலிந்துள்ள அறபு, பார்சி மொழிச் சொற்களேயாம். முஸ்லிம் அல்லா தோர் மாத்திரம் அன்றி முஸ்லிம் மக்கள் கூட இஸ்லாமி

Page 100
172
யத் தமிழ் இலக்கியத்தை முழுமையாகப் படித்துப் பயன்பெற முடியாமற் போனமைக்கு இது ஒரு காரணமா கும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் உள்ள சீறாப்புரா ணத்தையும் மஸ்தான் சாகிபு பாடலையும் மாத்திரமே பெரும்பாலான தமிழ் இலக்கியச் சுவைஞர்கள் அறிந்தி ருக்கின்றனர். ஏனைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் அத்தகையோரின் கவனத்தை ஈர்க்கத் தவறி விட்டன. அத்தகைய நூல்களில் இடம் பெற்றுள்ள அறபு, பார்சிச் சொற்களைத் தமிழ் இலக்கிய வல்லுநர்களால் இனங் கண்டு கொள்ள முடியவில்லை. அதற்காக அவர்களைக் குறை கூற முடியாது. அத்தகையோர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்பாக அமைந்துள்ள அரபு, பார்சிச் சொற்களைப் புரிந்து கொள்வதற்குத் துணையாக, அத்தகைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கருவூலங்களை முதுசொமாகக் கொண்ட முஸ்லிம்கள் அத்தகைய சொற் களை இனங்காட்டிக் கொடுக்காமல் இதுகாறும் வாளா இருந்து விட்டனர். முஸ்லிம்களின் முதுசொமான இஸ்லா மியத் தமிழ் இலக்கியமும் ஒரு சில அறிஞரைத் தவிர ஏனையோரால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இது அவர்க ளின் குறையையே எடுத்துக்காட்டுகின்றது. அவர்கள் தமது கடமையைச் செவ்வனே நிறைவேற்றி இருந்தார்க ளேயானால் இத்தகைய புறக்கணிப்பு ஏற்பட்டிருக்காது. அவ்விலக்கியங்களை எல்லோரும் படித்துப் பயன் அடைந்திருப்பர். ஆய்வுக்கு இலக்காக்கி இருப்பர்; விதந்து பாராட்டி இருப்பர்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறபு, பார்சிச் சொற்கள் அவற்றைப் பற்றி ஓரளவாவது பரிச்சியம் இல்லாதவர்களைத் திணற அடித்து வைக்க வல்லவையாகும். இஸ்லாமிய அடிப்படையில் தோன் றிய தமிழ் இலக்கியங்களிலே பெருமளவில் பயன்படுத் தப்பட்டுள்ள ஓர் அறபுச் சொல் 'தீன் என்பதாகும். தமிழ் மொழியில் தீன் என்றால் உணவு என்று பொருள்படும். சில சந்தர்ப்பங்களில் இச்சொல் தீன் பயிர் எனச் சொற்றொடராக அமைவதும் உண்டு. இத்தகைய சந்தர்ப் பங்களில் இச்சொல்லை அறபுச் சொல் என அறியாதவர் கள் "உணவுக்கான பயிர் எனப் பொருள் கொள்வதற்கு இடமுண்டு. ஆனால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளிலே இச்சொற்றொடர் தீன் என்னும் பயிர் எனப்

173
பொருள்பட வந்துள்ளது. அறபு மொழியிலே தீன் என்பது இஸ்லாம் மார்க்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதே கருத்தில் இச்சொல் அல்குர்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈமான் என்பது மற்றோர் அறபுச் சொல். இஸ்லாமியக் கோட்பாடுகளிலே மிக முக்கியமான ஒரு சொல் இது. நம்பிக்கை அல்லது விசுவாசம் எனப் பொருள்படும். இதனை அறபுச் சொல் என்று அறியாதோர் இதனை ஒரு சொற்றொடராகக் கொள்ள வாய்ப்பு உண்டு. அவ்வாறா யின் "ஈ மான்’ என இரண்டு சொற்களாக அவ்வறபுச் சொல் கொள்ளப்படும். அவ்வாறு கொள்ளப்படின் ஈமான் என்னும் அறபுச் சொல்லின் பொருளுக்கு நேர்மாறான கருத்தே பெறப்படும்.
இஸ்லாமிய மூல மந்திரம் கலிமா என வழங்கப்படும். இந்த அறபுப் பதத்தின் பொருள் 'சொல்' என்பதாகும். வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முகம்மது அவனின் தூதராவார் என்று பொருள்படும் 'லா இலாஹ இல்லல்லாஹ" முஹம்மது றசூலுல்லாஹ்” என்னும் அறபுச் சொற்றொடரே முதலா வது கலிமாவாகும். ஆனால் அறபு தெரியாத ஒருவர் அச்சொல்லை 'கலி மா’ என்னும் இரண்டு சொற்றொடரா கக் கொண்டு பொருள் கொள்ள முற்பட்டால் முஸ்லிம்க ளிடையே வழங்கும் கலிமா என்னும் அறபுச் சொல்லின் பொருளுக்கு நேர் மாற்றமான பொருளை உடையதாகப் புலப்படும்.
இத்தகைய அறபுச் சொற்களுள் மற்றொன்று 'சலவாத்து" என்பது. நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களின் பேரில் கூறப்படும் வாழ்த்தினை இவ்வறபுச் சொல் குறிக்கும். ஆனால் முன்னைய சொற்களைப் போன்று இச்சொல்லையும் 'சல வாத்து' என்னும் இரண்டு சொற்க ளைக் கொண்ட அறபு அல்லாத ஒரு சொற்றொடராகக் கொண்டால் அதன் கருத்து முற்றிலும் முரணான தொன்றா கப் புலப்படும்." டாக்டர் உவைஸ் அவர்களின் இந்த நீண்ட விளக்கம், பிற மதத்தவர்கள் இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் படிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மிகத் தெளிவாக உணர்த்துகிறது எனலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலே வரும் சலவாத்

Page 101
174
தொலி என்ற சொல்லை மாணவர்களுக்கு விளக்க முயற்சித்த தமிழ்ப் பண்டிதர் ஒருவர் அச்சொல்லினை சலம் + வாத்து + ஒலி என பிரித்து பொருள் கூறிய கதை பலரும் அறிந்ததே.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களில் மலிந்து காணப்ப டும் அறபு, பாரசீகச் சொற்கள், அவற்றோடு பரிச்சியம் அற்றவர்க ளுக்கு அவ்விலக்கியங்களைச் சுவைத்து மகிழ்வதற்குப் பெரும் தடையாக இருந்தன என்பதை இஸ்லாமியத் தமிழ் இலக்கியவாதி கள் அனைவரும் நன்கு உணர்ந்தே இருந்தனர். இருப்பினும் அவ்வராபிய, பாரசீகச் சொற்களை அவற்றோடு பரிச்சியம் இல்லாதவர்களுக்குத் தெளிவாக விளக்குவதற்கு, பொருத்தமான, ஓர் அறிவுப் பூர்வமான முயற்சியினை பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு முன்னர் எவரும் எடுத்திருக்கவில்லை என்பது வியப்பான ஆனால் யதார்த்தமான உண்மையாகும்.
தமிழக முஸ்லிம் மக்களிடையே அரபு மொழி பெற்றிருந்த அளப்பரிய முக்கியத்துவத்தின் காரணமாக அரபு மொழி அகராதி கள் தமிழ் நாட்டிலே தோன்றுவது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. இதற்கேற்ப இருபதாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தம் விடியுமுன்னரே மூன்று அரபு தமிழ் அகராதிகள் தோன்றி விட்டன. ஆனால் இம்மூன்றுமே அரபு மொழியினை ஒரளவாவது அறியாதவர்களுக்குப் பயனற்றவையா கவே விளங்கின.
தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே முதன் முதலாக வெளிவந்த அரபுத் தமிழ் அகராதி என்ற பெருமை, சென்னையைச் சேர்ந்த ஹக்கீம் பா.முகம்மது அப்துல்லா சாகிபு என்பவரால், 1905 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அகராதியினையே சாரும். ஆனால் இது அரபு அரிச்சுவடியின் முதல் மூன்று எழுத்துக்களால் ஆரம்பிக்கும் சொற்களை மாத்திரமே முழுமையாகக் கொண்டிருந் தது. நான்காம் எழுத்தோடு ஆரம்பிக்கும் ஒரு சில சொற்களுக்குப் பொருள் கூறியது. அவ்வளவே.
ஹக்கீம் முகம்மது அப்துல்லா சாகிபுவின் அகராதி வெளி வந்து எட்டு ஆண்டுகளின் பின்னர், அதாவது 1913 ஆம்ஆண்டில் முதுகுளத்தூர் மன்பஉல் ஹஸனாத் அரபுக் கல்லூரியில் போதனாசி ரியராக கடமை ஆற்றிய அல்ஹாஜ் மெளலவி முகம்மது இப்ராஹிம் என்பவர் இயற்றிய துஹபத்துஸ் ஸமதிய்யா பி தர்ஜ"மதில் அல்பாழில் அறபிய்யா எனும் அகராதி வெளிவந்தது. இவ்வகராதி முழுமையானவொன்று என்றபோதிலும், இதில் அரபுச் சொற்களுக்குத் தமிழ்க் கருத்துக்கள் அரபு எழுத்துக்களி

175
லேயே வழங்கப்பட்டிருந்ததனால் அரபு தெரியாத மக்களுக்குப் பயனற்ற ஓர் அகராதியாகவே இது விளங்கியது.
இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள வலிகாமம் எனும் ஊரைச் சேர்ந்த சையது யாஸின் மெளலானா என்பவர் இயற்றிய 'காமூசுல் அரபி வ அர்வி என்ற அரபு-அரபுத் தமிழ் அகராதியும் அரபு எழுத்துக்களில் பயிற்சி அற்றவர்களுக்குப் பிரயோசனம் இல்லாததாகவே அமைந்தது.
எனவே இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை -9/UL-| அறியாதவர்களும் சுவைக்க வேண்டுமென்றால், இஸ்லாமியத் தமிழ் நூல்கள் பிற மதத்தவர்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற வேண்டுமென்றால், அந்நூல்களில் கையாளப்பட்டுள்ள அரபு, பாரசீகச் சொற்களின் பொருளைத் தமிழில் வழங்கும் பொருத்த மான அகராதி ஒன்றினைத் தொகுப்பது அத்தியாவசியமானதாக இருந்தது. உண்மையில் அது காலத்தின் தேவையாகவும் இருந்தது.
இத்தகைய அகராதி ஒன்றினை இயற்றுவது சாமான்யமான செயல் ஒன்றன்று. இந்த முயற்சியில் ஈடுபடுபவருக்கு இஸ்லாமி யத் தமிழ் இலக்கிய நூல்களில் பெரும் பாண்டித்யம் இருக்க வேண்டும்; அரபு மொழி, அரபு வரலாறு, அராபிய வரலாறு போன்றவற்றில் நிறை அறிவு இருக்க வேண்டும்; அசாத்திய பொறுமை இருக்க வேண்டும்; அளவற்ற ஈடுபாடு இருக்க வேண்டும். இத்தகுதிகள் அனைத்தையும் உடைய அறிஞர் ஒருவர் இருக்கவே செய்தார்; பேராசிரியர் உவைஸே அவர். எனவே அவரே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமாக இருந்த அரபு தமிழ் அகராதியினை அமைத்தார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் அரபுச் சொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதியினைத் தயாரிப்ப தற்குத் தேவையான தகுதிகள் யாவும் அறிஞர் உவைஸ் அவர்களி டம் இருந்த போதிலும் அத்தகைய அகராதியினைத் தயாரிக்கும் பாரிய பொறுப்பில் ஈடுபடும் வாய்ப்பு பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றும் போதே கிடைத்தது. அப்பல்க லைக்கழகத்தின் உந்துதலும் அது வழங்கிய ஊக்கமுமே அவரை அகராதியினை அமைக்கும் பெரும் சிரமமான பணியில் ஈடுபடுத் தின எனலாம். இதனை அல்லாமா உவைஸ் அவர்கள் தான் இயற்றிய தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதிக்கு எழுதிய நன்றியுரையில் பின்வருமாறு உணர்த்தியுள்ளார்.

Page 102
176
'இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள திசைச் சொற்களைப் புரிந்து கொள்ள முடியாத ஒரே காரணத்தினால்தான் இஸ்லாமிய அடிப்படையில் தோன் றிய தமிழ் இலக்கியங்கள் முஸ்லிம் அல்லாதோர் மத்தி யில் பெரு வழக்கைப் பெறவில்லை. ஆதலினால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள திசைச் சொற்களான அறபு, பார்சி மொழிச் சொற்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத் தும் முகமாக அத்தகைய சொற்களின் அகராதி ஒன்று இன்றியமையாததாகின்றது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறை தொடங் கப்பட்ட காலத்திலேயே இப்பணியின் முக்கியத்துவத்தை எமக்கு அப்போதைய துணைவேந்தராகக் கடமையாற்றிய அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் உணர்த்தினார்கள். அத்தகைய அகராதியினைத் தயாரிக்கும் பணியை மேற் கொள்ளுமாறு எம்மை பணித்தார்கள். அதன் பெரும் பேறே இந்த அகராதி."
மேலே தரப்பட்டுள்ள வரிகள் பெரியவர் உவைஸ் அவர்க ளின் நன்றியுணர்வினையும் அடக்கத்தினையும் காட்டுகின்ற அள வுக்கு, அரபு அகராதியினை அமைப்பதில் அவர் அனுபவித்த சிரமங்களை, செய்த தியாகங்களை வெளிப்படுத்துகின்றன என்று கூற முடியாது. பரந்துபட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அரபு, பார்சிச் சொற்களை வகைப்படுத்தி, இனம் பிரித்து, அட்டவணை தயாரித்து, ஆய்வட்டைகளை வரிசைப்படுத்தி அகராதியினை முழுமைப்படுத்துவது என்பது பெரும் தலைவலியைத் தரும் வேலையாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் அதீத வளர்ச்சியில் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்ட உவைஸ் போன்ற ஓர் அறிஞரால் மாத்திரமே இத்தகைய ஒரு பெரும் பணியினைச் செய்திருக்கலாம்.
டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் அவர்களின் உறுதுணையோடு டாக்டர் உவைஸ் செய்து முடித்த இப்பாரிய பணி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த இணையற்ற பாண்டித்யத் தைத் தெட்டென புலப்படுத்துகின்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேரிலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் உள்ள டக்கிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட் டுள்ள இரண்டாயிரத்து இருநூற்றி நாற்பத்தொன்பது அரபு, பார்சிச் சொற்களைத் தேடிப் பெற்று, அவற்றின் கருத்துக்களைத்

177
தமிழில் மிகத் தெளிவாகத் தரும் தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதியை இயற்றி வழங்கியது, தாம் மனமார நேசித்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு அல்லாமா உவைஸ் ஆற்றிய பெரும் பணிகளுள் ஒன்றாகும்.
பல தசாப்தங்களாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பிற மதத்தவர்கள் சுவைப்பதற்குத் தடையாக இருந்த அரபு தமிழ் அகராதி இன்மை என்ற பெருங் குறைபாட்டைப் போக்கியதன் மூலம் பேராசிரியர் உவைஸ், இஸ்லாமியரல்லாத தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நிலைபெறுவ தற்கு வழிவகுத்துள்ளார் என்பதை தமிழறிஞர்கள் ஏற்றுக் கொள் கின்றனர். தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதியினை வெளியிட்ட தன் மூலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அதன் பெருமை யைக் கூட்டிக் கொண்டது என்று கூறி அவ்வகராதியின் மாண் பினை எடுத்துக்காட்டியுள்ளார் காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் தமிழண்ணல் டாக்டர் இராம. பெரிய கருப்பன். எனவே தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதியினைத் தயாரித்ததை டாக்டர் உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற் குச் செய்த நிலையான தொண்டுகளில் ஒன்றெனக் கூறலாம்.

Page 103
11. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இலக்கியப் பாலம் அமைத்த பண்பாளர் உவைஸ்
நூல்கள் எழுதியும், வானொலியிலும் மேடைகளிலும் பேசியும், இலக்கிய மகாநாடுகள் நடத்தியும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை வளர்த்த அறிஞர் பெருமகன் பேராசிரியர் உவைஸ் அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த அழகிய பண்பு கள் கூட, இவ்விலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அது பிரபல்யமடைவ தற்கும் உதவின என்று கூறுவது விநோதமானதாக தோன்றலாம்; வியப்பினையும் ஏற்படுத்தலாம். ஆனால் டாக்டர் உவைஸ் அவர்கள் ஈழத்து வாழ் இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களோடும், தமிழகத்து முஸ்லிம் அறிஞர்களோடும் வளர்த்துக் கொண்ட நல்லுறவுகள், அந்நல்லுறவுகள் இவ்விரு நாட்டு மக்களுக்குமி டையே ஏற்படுத்திய இலக்கியத் தொடர்புகள், பிணைப்புக்கள் போன்றவற்றினை ஆராயும்போது அக்கூற்றிலே கணிசமான உண்மை பொதிந்திருக்கிறது என்பதை உணர்கின்றோம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே நிலவும் நல்லுறவு
மிக தொன்மையானது. அது கிறிஸ்து சகாப்தம் உதயமாவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிய ஒன்று. அரசியல், கலை, கலாசாரம், சமூகம், பொருளாதாரம் என சக20 அம்சங்களி லும் இவ்வுறவின் முத்திரைகள் பதிந்துள்ள ဇီ/%ချွံ႔မှီ இவ்வுற வில் ஓங்கி நிற்கும் அம்சம் கலை, கலரசிரமே. இலங்கை கலாசாரம் தனித்துவம் மிக்கதென்ற போதிலும் அது இந்திய உபகண்டத்து கலாசார வளர்ச்சியினை அடியொட்டியே அமைந்தி ருக்கின்றது என்பதை அவதானிக்கலாம்.
இக்கலாசாரத் தொடர்பு திமிழ் இலக்கியத்தினையும் தன்ன கத்தே அடக்கியே இருந்தது என்பதற்கு சங்கத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகிை, அகநானூறு என்பவற்றில் காணப்படும் புலவர் பெருமகன்/ஈழத்துப் பூதந்தேவனாரின் பாக்களே தக்க சான்றுகள். பூதந்தீேவனாரால் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஊன்றப்பட்ட திமிழக -ஈழத் தமிழிலக்கிய உறவு என்ற இளந்தளிர், ப்லர், சி.வை.தாமோதரம் பிள்ளை, நா.கதிரைவேற்
 

179
பிள்ளை, சிவசம்புப் புலவர், சுவாமி விபுலானந்தர் போன்ற ஈழத்துத் தமிழறிஞர்களின் பங்களிப்புக்களினால் வேர்விட்டு, கிளைபரப்பி இன்று பெரு விருட்ஷமாக வளர்ந்திருக்கின்றது என்பது எவரும் அறிந்த உண்மை.
தமிழகத்து மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையே எவ்வாறு தமிழ் இலக்கியம் ஒர் இணைப்பை ஏற்படுத்தியதோ அவ்வாறே தென்னிந்திய தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையில், இஸ்லாமியத் தமிழ் இலக் கியம் ஓர் ஆத்மார்த்தமான பிணைப்பினை, தொடர்பினை ஏற்ப டுத்தியது. தென்னிந்திய முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் இயற்றப் பட்ட சீறாப் புராணமும், இராஜநாயகமும், நூறு மசாலாவும் பப்பரத்தியார் அம்மானையும் ஈழத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன.
மகாவித்துவான் சதாவதானி செய்குத் தம்பி பாவலர், நாகூர் தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் போன்ற தமிழக முஸ்லிம் புலவர்களும், நவரத்தினத் திருப்புகழை இயற்றிய யாழ்ப்பாணத்து அசனா லெப்பை புலவர், கோட்டாறு பாவா சுலைமானுல் காதிரி, வித்துவத்தீபம் அருள்வாக்கி அப்துல் காதர் போன்ற ஈழத்து முஸ்லிம் புலவர்களும், பதுறுத்தீன் புலவரின் முகியத்தீன் புராணத்திற்குக் கொடைநாயகராக விளங்கிய யாழ்ப் பாணத்து செய்கு மீறான், குலாம் காதிறு நாவலரின் ஆரிபு நாயகத்தின் கொடைநாயகர் 'முதுநகர் யாழ்ப்பாணம் வாழ் முகம்மது லெப்பை யென்ற விதுநிகர் பாக்கியப்பா’ போன்ற வள்ளல்களும், காசிம் புலவரின் திருப்புகழ், புலவர் நாயகத்தின் குதுபுநாயகம், பனீ அகுமது மரைக்காயரின் 'சின்னச் சீறா? போன்ற நூல்களை அச்சில் இட்ட யாழ்ப்பாணத்து பரிகாரி மரைக்கார் பக்கீர் முகியத்தீன் போன்ற இலக்கிய ஆர்வலர்களும், காலத்துக்குக் காலம் ஈழத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனும் நீர்ப் பிரவாகத்தைத் தென்னிந்திய இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனும் சாகரத்துடன் ஒன்றிணைக்கும் இலக்கியக் கால்வாய்களாக விளங்கினர்.
ஆனால் இவ்வுயர் ஈழத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் உத்தம வாரிசாக தோன்றிய டாக்டர் உவைஸ் அவர்களோ, பொங்கிப் பாயும் நதிகளின் போக்கினையே மாற்றிய மைத்த எம் சிங்கள மன்னர்களைப் போல, தமது அயரா உழைப்பினாலும் ஆராய்ச்சித் திறனாலும் அறிவின் ஆழத்தினா லும் ஈழம் தமிழகத்தினை நோக்கி நின்ற நிலையினை மாற்றி, அதற்கு மாறாக, தமிழகம் ஈழத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியப்

Page 104
180
பிரவாகத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டிய ஒரு புரட்சிகரமான நிலையினை உருவாக்கி, இவ்விரண்டு பிரதேசங்க ளையும் கலாசார ரீதியில் இணைப்பதற்கு ஓர் இலக்கிய ராஜபாட் டையையும் அமைத்தார் என்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தயங்காது ஏற்றுக் கொள்ளும் உண்மை.
இதனையே கவிக்கோ அப்துல் ரஹ்மான்
2, 17:52 ''உவைசார் அவரோர் உலவும் நூல் நிலையம்
இEால் - சுவைசார் செந்தமிழ் நீர்ப்பரப்பில்
இது இது இஸ்லாம் மலர்த்திய இலக்கியப் பூக்களின் கொங்கு தேர் வாழ்க்கை கொண்ட வண்டு தமிழகத்தோடு தனிப் புகழ் ஈழத் தீவை இணைக்கும் தீந்தமிழ்ப் பாலம்.' என்று தன் பாணியில் வர்ணித்துள்ளார். ஆனால் இக்கவிதையில் வரும்
தி
di 115 F%82) ''தமிழகத்தோடு தனிப்புகழ் ஈழத்
சிகா திலகம்
, (ਲ ਪਰ ਸਿੱਖ ਮੈਂਬਰ தீவை இணைக்கும் தீந்தமிழ்ப் பாலம்.''
இந்தத் தலைப்பாம்பு ) எனும் அடிகள்,
ரத்த தமிழகத்தினைத் தனிப் புகழ் ஈழத் தமிழாக்கம் தீவோடு இணைக்கும் தீந்தமிழ்ப் பாலம் (208) என அமைந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
எத்தனையோ நூற்றாண்டுகளாக ஈழத்து முஸ்லிம்களுக்கு இலக்கியத் தலைமையையும் இலக்கிய வழிகாட்டலையும் வழங்கி வந்த தமிழகத்து முஸ்லிம்கள், அந்த உயர் நிலையிலி ருந்து இறங்கி, இலங்கை முஸ்லிம்களின் இலக்கியத் தலைமைத்து வத்தையும் வழிகாட்டலையும் எதிர்பார்க்க ஆரம்பித்த காரணந் தான் என்ன? இப்பாரிய மாற்றத்துக்கு ஒரே காரணம் டாக்டர் உவைஸ் என்ற ஈழத்துப் பேரறிஞர்தான் என்பதை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலும் இருப்ப தாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் புலவர் நாயகம், வண்ணக்களஞ்சியப் புலவர், குஞ்சு மூசுப் புலவர், குலாம் காதிறு நாவலர் போன்ற இஸ்லாமியத் தமிழ்க் கவிச்சக்கரவர்த்திகளின் கம்பீரத் தலைமையிலே பீடு நடை பயின்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம், நான்காம் தசாப் தங்களில் ' சோபை இழக்க ஆரம்பித்தது; பொலிவு குன்ற துவங்கியது.
- (மர் டே

8.
மக்களின் கவனத்தையும் கரிசனையையும் ஈர்க்கக் கூடிய புலவர்கள் தோன்றாதது, இத்துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தமிழக முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களையும் சிற்றிலக்கியங்களையும் வாசிப்பதில், அவற்றைத் தமது சகோதர முஸ்லிம்களுக்கு விளக்குவதில் அக்கறை காட்டுவதைக் கைவிட்டது இந்த அவல நிலை ஏற்படுவதற்கு உதவிய இன்னொரு காரணியாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பாராயணம் செய்யும் ஆற்றலுடையோரும் அவற்றைச் சுவைக்கத் தெரிந்தோரும் கிராமங்கள் தோறும் இருக்கவே செய்தனர். ஆனால் அம்மரபு பாதுகாக்கப்படவில்லை. ஜனாப் எம்.எஸ்.எம். அனஸ் கூறுவது போல "புதிய கல்வியும் புதிய நாகரீக சமய சூழல்களும் மக்களை இவற்றிலிருந்து அந்நியமாக் தின. "
எனவே தமிழகத்து முஸ்லிம்கள், சராசரி முஸ்லிம்கள் மாத்திரமின்றி, பட்டங்கள் பெற்றவர்கள் கூட, பெருமைமிகு தமது இஸ்லாமிய இலக்கியப் பாரம்பரியத்தினை அறியாதவர்க ளாகவே வாழ்ந்தனர். இதனால், சீறாப்புராணத்தையும் குணங்குடி மஸ்தான் சாகிபுப் பாடல்களையும் தவிர, இஸ்லாமிய அடிப்படை யில் எழுந்துள்ள வேறு தமிழ் நூல்கள் எதுவும் இருக்கின்றனவா என்று பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சிலர் யதார்த்தமாகவும், வேறு சிலர் ஏளனமாகவும் கேட்டபோது, "எமக்கு சிறப்புமிகு ஓர் இலக்கியப் பாரம்பரியம் இருக்கின்றது' என்று உரக்கக் கூறக் கூடிய, ஆதாரத்துடன் கூறக் கூடிய திராணி படைத்தவராக எந்த ஒரு தமிழக முஸ்லிமும் இருக்கவில்லை என்பது தலைகுனி வோடு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இக் கேள்வி கேட்கப்பட்ட போது வெட்கத்தால் தலைகுனிந்த முஸ் லிம்கள் பலர்; வேதனையால் உளம் சோர்ந்த முஸ்லிம்கள் வேறு L J Gol) [T.
தமிழகத்து முஸ்லிம்கள் தமது இலக்கியப் பாரம்பரியத்தி னைப் பற்றி எதுவும் அறியாது, வேதனைப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலேதான் கலைமாணி உவைஸ், முதுமாணி பட்டம் பெறுவதற்காக தமிழிலக்கியத்துக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்க ளிப்பினைப் பற்றிய ஆய்வினில் ஈடுபட்டார். இவ் ஆய்வின் விளைவை பேராசிரியர் அஜ்மல்கான் பின்வருமாறு எடை போட்டுள்ளார்.
"சமயச் சான்றோர் வளர்த்த தமிழ் மொழியின் பட்டியலில் முஸ்லிம் புலவர்களின் பெயர்கள் ஏதும் இடம்பெற

Page 105
182
வில்லை. தமிழிலக்கிய வரலாறு படைத்த சான்றோர் பலரும் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு என்றால் என்ன? என்று அறிய முடியாத காலகட்டத்தில், பேராசிரி யர் அவர்கள் வானத்தில் தோன்றிய விண் நிலவாக இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவிற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் 1951 ஆம் ஆண்டில் தம் முதுமாணிப் பட்டப் படிப்பிற்குரிய ஆய்வு ஏட்டிற்குரிய தலைப்பாக 'முஸ்லிம் கள் தமிழுக்காற்றிய தொண்டு என்னும் பொருளினைத் தெரிவு செய்து ஆய்வு மேற்கொண்டார்கள். இதன் விளைவு அதுவரை மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டிருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பிரிவிற்கு ஒரு விடிவு காலம் தோன்றத் தொடங்கியது என்றே கூற வேண்டும். பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களின் சீரியப் பணி யின் விளைவாகவும், ஈழத்திலும் தமிழகத்திலுமுள்ள பல ஊர்களிலும் அவர்கள் சுற்றித் திரிந்து இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவில் அடங்கும் நூல்களைத் தொகுத்த தின் பயனாகவும் புதை பொருளாக, குடத்து விளக்காகக் குன்றிப் பயனற்றுக் கிடந்த இருநூறு இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் குன்றிலிட்ட விளக்காக ஒளிவீசத் தொடங்கின. இந்த பெருமை பேராசிரியர் உவைஸ் அவர்களையே சாரும். எத்தனையோ கருத்தரங்குகள், இலக்கிய மகாநாடுகள், திறனாய்வு அரங்குகளைச் சந்தித் துக் கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரி வின் இன்றைய காலகட்டத்திற்கான முதற் பணியாக, முன்னோடிப் பணியாக அமைந்ததுவும் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது 'முஸ்லிம்கள் தமிழுக்காற் றிய தொண்டு என்னும் இவ்வெழுத்துப் பணியாகும். இது நூலுருவம் பெற்றதின் பயனாகவே தமிழிலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் கவனமும் முதன் முதலாக இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்ற குரலின் பால் ஈர்க்கப்பட்டது என்றே கூறவேண்டும். அன்று 1951 ஆம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்பட்டதின் விளைவாக அதுவரையில் தமிழிலக்கிய உலகில் அறிமுகமாகாத எண்ணற்ற முஸ்லிம் புலவர்களின் பெயரையும் அவர்தம் இலக்கியப் படைப்புகளையும் முதன் முதலாக தமிழுலகு அறியத் தொடங்கியது. எனவே 'முஸ்லிம்கள் தமிழுக்காற் றிய தொண்டு என்னும் பேராசிரியரின் அரிய, ஆரம்பப் பணி இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவில் முதல்
மைல்கல் என்றே கூறவேண்டும்."

183
எம்.எம். உவைஸ் அவர்களின் முதல் ஆய்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய பாரிய தாக்கத்தைக் கனகச்சித மாக டாக்டர் அஜ்மல்கான் எடை போட்டுள்ளார் என்று கூறலாம்.
டாக்டர் உவைஸ் அவர்களின் முதல் ஆய்வு தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் பலரை வியப்புக்குள் ஆழ்த்தியது. இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைப் பற்றிய அவரது இரண்டாவது ஆய்வோ, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களை வியப்பின் எல் லைக்கே கொண்டு சென்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் நவீன பிதாமகராக டாக்டர் உவைஸ் அவர்களை இஸ்லாமியத் தமிழுலகம் ஏகமனதாக ஏற்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தைப் பற்றி அறிய விரும்பியோர் டாக்டர் உவைஸ் அவர்களை நோக்கியே தம் முகங்களைத் திருப்பினர்.
தமிழக இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் பலரும் உவைஸ் அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தமிழகத் தில் அமைந்துள்ள புகழ் மிக்க முஸ்லிம் கல்லூரிகள் பல அவரோடு உறவுகளை வளர்த்துக் கொண்டன. தமிழக முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்கள், ஈழத்து அறிஞர் உவைஸ் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைப் பெரும் பாக்கியமெனக் கருத ஆரம்பித்தனர். 189 / HIRIN
டாக்டர் உவைஸ் அவர்களின் இரண்டாவது ஆய்வு, அவரை மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பேராசிரியர் இருக்கையில் அமர்த்தியது. இப்பல்க லைக்கழகத்தில் பணியாற்றும் போது அவர் தேடிப் பெற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியத் தமிழ் நூல்களும், புலவர் நாயகம் நான்கு காப்பியங்களை இயற்றியுள்ளார், வண்ணக் களஞ்சியப் புலவர் மூன்று காவியங்களை அரங்கேற்றியுள்ளார், உலகத்தில் வேறு எந்தப் புலவனும் புலவர் நாயகத்தினதும் வண்ணக்களஞ்சி யப் புலவரினதும் சாதனையை மீறியதுமில்லை, எட்டியது மில்லை போன்ற உண்மைகளை அவர் அசைக்க முடியாத ஆதாரங்களோடு காட்டியதும், தென்னிந்திய முஸ்லிம் இலக்கிய அபிமானிகளின் உள்ளங்களில் உவகையை ஊட்டின. அவர்களில்' பலர் டாக்டர் உவைஸ் அவர்களைத் தமது நெஞ்சம் எனும்
அரியாசனத்தில் நிரந்தரமாக அமர்த்திக் கொண்டார்கள்.
தென்னிந்திய அறிஞர் ஜனாப் எம்.ஆர்.எம்.முஸ்தபா அவர்க ளின் கவிதை ஒன்றின் பின்வரும் வரிகள், டாக்டர் உவைஸ் அவர்கள் தமிழக முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்படுத்தியிருக் கும் பெரும் பாதிப்பினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

Page 106
184
சாகவிருந்த தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிற்கு
உயிர் அளித்தவர்
g. Golu. FT.
ஒருவருக்கும் தெரியாதிருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஊரறியச் செய்தவர்
gᎧ 600ᎧᏗᎧufᎢ?
"ஆம்" என்பதுதான் நாம் அளிக்கத் தக்க
அழுத்த பதில். உ.வே.சா. குறிப்பிடப்படுவார் 'தமிழ்த் தாத்தா' என்று. உவைஸை நாம் தாத்தாவாக்க விரும்பவில்லை. உண்மையில் உவைஸ் இஸ்லாமியத் தமிழின் தாதா.
அவரிடம் நாம் கேட்க விழைவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை இன்னும் தா தா
இறுதியில் நாம் அவர் பற்றி
இயம்ப வருவது:
அவர் இலங்கைக் குடிமகனாக
இருக்கலாம்.
இஸ்லாமியத் தமிழுக்கு
அவர் ஆற்றிய பணியால்
நாம்
உரிமையுடன் உரைப்போம்
அவர்
எம் எம் உவைஸ்.
ஈழத்து எம்.எம்.உவைஸை எம் எம் உவைஸ் என பேரன்பு
டன் கருதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர், ஜனாப் எம்.ஆர்.எம்.முஸ்தபா மாத்திரமல்லர்; அவ்வாறு கருதியவர்களில் அவர் ஒருவர்; அவ்வளவே.

185
தமிழ் நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள், பேராசிரியர் உவைஸ் அவர்களை எந்தளவு மதித்தார்கள், எந்தளவுக்கு மதிக்கின்றார்கள் என்பதை கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பின்வரும்
கூற்று தெள்ளிதாகப் புலப்படுத்துகின்றது.
''இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை இலங்கையர்கள் பெருந்தொண்டு செய்துள்ளார்கள். டாக் டர் உவைஸ் போன்றவர்கள் இல்லாவிட்டால் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியங்களை அறிந்திருக்க முடியாது. ஒரு நாள் டாக்டர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள் இருபத்தொன்று இருப்பதாக சொன்னார் கள். அன்று முதல் அவர்கள் சொல்வதை நம்புவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதன் பின்னர் அவர்கள் காப்பியங்களுக்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்தபோது வியந்து போய்விட்டேன். இலங்கை மக்கள் தமிழுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இஸ்லாமிய இலக்கியத் துறைக்கு டாக்டர் அவர்களை மிஞ்சிய ஒரு பேரறிஞர் இந்திய தமிழ்நாட்டிலேயே கிடையாது. அவர்கள் போன் றவர்களால் தான் நாங்களும் கூட பல விஷயங்களைத்
தெரிந்து கொண்டோம்.''
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றி பெருமளவில் அல்ல, பெயரளவில் கூட தெரியாது இருந்த தென்னிந்திய முஸ்லிம்கள், டாக்டர் உவைஸ் அவர்களின் பேரறிவைக் கண்டு அதிசயப்பட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அவரது பேரறிவு தமிழக முஸ்லிம்களின் மத்தியில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக் கும்; மதிப்பினை வளர்த்திருக்கும். ஆனால் நட்பினை, அன்னி யோன்யத்தை, அபிமானத்தை, பாசத்தை ஏற்படுத்த அறிவொன்று மாத்திரம் போதுமானதாக இருந்திருக்க மாட்டாது. ஆனால் டாக்டர் உவைஸ் அவர்களுக்கும் தென்னிந்திய முஸ்லிம் இலக் கிய ஆர்வலர்களுக்குமிடையில் ஏற்பட்ட பிணைப்போ அறிவுரீதி யானதாக மாத்திரம் இருக்கவில்லை; அது இறுக்கமான ஒரு பாச பிணைப்பாகவும் இருந்தது.
டாக்டர் உவைஸ் அவர்களின் இஸ்லாமிய இலக்கிய அறிவு தென்னிந்திய இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களில் மலைப்பை ஏற்படுத்தியது; டாக்டர் அவர்கள் பால் ஒரு பாரிய மதிப்பை உருவாக்கியது. ஆனால் பேராசிரியரின் எளிமை, அகந்தையின்மை, உதவும் மனப்பான்மை, பிறரைக் கண்ணியப்ப டுத்தும் தன்மை, விருந்தோம்பல் போன்ற உயர் குணநலன்கள் இம்மதிப்பை வெறும் மதிப்பாக மாத்திரம் வைத்திருக்க விட

Page 107
136
வில்லை; அவை அம்மதிப்பை நட்பு கலந்த மதிப்பாக, பாசம் கலந்த மதிப்பாக, சகோதரத்துவப் பிணைப்பாக மாற்றின.
உண்மையில் டாக்டர் உவைஸ் அவர்களோடு பழகியவர்க ளுக்கு அவர் மீது அன்பு செலுத்தாமல் இருப்பது சுலபமானதல்ல. டாக்டர் அவர்களின் தன்மை அப்படிப்பட்டது. அத்தன்மை பிறரை வசீகரிப்பது; ஒருமுறை பழகி விட்டால் மறுமுறை எப்போது சந்திப்போம் என்று ஏங்க வைப்பது. பேராசிரியர் உவைஸ் அவர்களின் இத்தன்மையால் கவரப்படாதவர்கள் குறைவே.
இலங்கையின் பிரபல கலை, இலக்கியவாதியான கலைவாதி கலீல், டாக்டர் உவைஸ் அவர்களோடு நெருக்கமாகப் பழகியவர்க ளில் ஒருவர். இருவருக்குமிடையே உறவை ஏற்படுத்தியது இலக்கியமே. இவ்விலக்கியத் தொடர்பே 'விரிவடைந்து நெருக்க மாகி இறுக்கமடைந்தது. டாக்டர் உவைஸ் அவர்களோடு தன்னை ஒட்டவைத்த காரணம் எது என்பதை கலைவாதி விளக்கும் வகையைப் பார்ப்போம்.
"பேராசிரியரிடம் ஏராளமான நற்பண்புகள் குடிகொண் டுள்ளன. பொதுவாகக் கல்விமான்களிடையே இத்தகைய பண்புகள் நிறைந்திருப்பது ஒன்றும் புதிய விடயமில்லை. ஆயினும் பேராசிரியர் உவைஸ் ஒரு "எக்ஸ்ட்ரா ஒர்டின றி. வீதியில் செல்லும் போது கண்டுவிட்டால் தனது வண்டியில் ஏற்றிச் செல்வது, சிறு குழந்தைப் போல பெருமை பாராட்டாமல் யாருடனும் சகஜமாக உரையாடு வது, இல்லம் சென்றால் தேனீர் அல்லது குளிர்பானம் தருவதோடு நிறுத்திக் கொள்ளாமல் போசனமளித்து அனுப்புவது, தான் எழுதிய, பெறுமதி வாய்ந்த நூல் களை, தேடி வருபவர்க்கு அன்பளிப்புச் செய் 63d . . . . . . . . . . . . . . இவையெல்லாம் "எக்ஸ்ட்ரா ஒர்டினரி அல்லாமல் வேறென்ன? நானும் நூற்றுக்கணக்கான அறி ஞர்களை, கல்விமான்களை, கலைஞர்களை எழுத்தாளர் களை, ஏன் அரசியல் பிரமுகர்களைக் கூடச் சந்தித்திருக்கி றேன். ஏனோ தெரியாது கலாநிதி உவைஸ் ஏனையோரிலி ருந்தும் வேறுபட்டவராகவே என் கண்களுக்குப் புலப்படு கிறார்."
கி.பி.1844 ஆம் ஆண்டில் காத்தான்குடி அகமது குட்டி எனும் புலவரால் இயற்றப்பட்டு, ஏறத்தாழ நூற்று நாற்பது வருடங்கள்

187
கழிந்தும் அச்சுவாகனம் ஏறும் வாய்ப்பு கிட்டாது கையேட்டுப் பிரதியாகவே இருந்த இசுவா அம்மானை' எனும் நூலை அச்சிடும் நோக்கத்துடன் 1990 ஆம் ஆண்டளவில் டாக்டர் உவைஸ் அவர்களுடன் தொடர்பு கொண்ட சாய்ந்த மருதூர் அலியார் முஸம்மில், டாக்டர் உவைஸ் அவர்களைப் பற்றியும் அவரது குடும்பத்தினரைப் பற்றியும் வர்ணிக்கும் பாங்கினைக் கீழே பார்ப்போம்.
"எனது சிறிய மகளுடன் மனைவியைக் கூட்டிக் கொண்டு கொழும்புக்குச் சென்ற எனக்கு பேராசிரியர் உவைஸ் அவர்களைக் கண்டு கதைக்க வேண்டுமென்ற அவா ஏற்பட்டது. ஒரு நாட்காலை நாங்கள் மூவரும் அவரது இல்லத்திற்குச் சென்றோம். பேராசிரியரின் பாரியார் நுழை வாயிலருகே நின்று கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் இன்முகத்துடன் வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஆசனத்திருத்தி அன்புடன் பேசி ஆதரித்தார். வீட்டில் அவர்களின் மக்கள் எவரும் இருக்க வில்லை. எங்களுக்கு மதிய உணவளித்துக் கெளரவித்து, சின்ன மகளுக்கு விலை உயர்ந்த சட்டை ஒன்றையும் பரிசாக வழங்கி வழியனுப்பி வைத்த பேராசிரியரையும் அவரது மனைவியையும் எனது மனைவி மக்கள் என்றும் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்கினர்."
பேராசிரியர் உவைஸ் அவர்களிடம் குடிகொண்டிருந்த நற்கு ணங்கள், தென்னிந்திய இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் பலரை அவரோடு இறுக பிணைத்தன. சென்னையிலோ, திருச்சி யிலோ, நெல்லையிலோ, நீடூரிலோ, காயற்பட்டணத்திலோ, கீழக்கரையிலோ அல்லது வேறு எந்த தமிழக ஊர்களிலோ இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்றம் அளிக்கும் கூட்டங் கள் எதுவும் ஒழுங்கு செய்யப்பட்டால், அக்கூட்டங்களுக்கு டாக்டர் உவைஸ் அவர்களைச் சிறப்புப் பேச்சாளராக அழைப்பது ஒரு சம்பிரதாயமாகவே வளர்ச்சிப் பெற ஆரம்பித்தது.
முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தமிழக ஊர்கள் அத்தனை யையும் தன்னுடைய சொந்த ஊர்களைப் போல் கருதக் கூடிய அளவிற்கு அத்தனை ஊர்களிலும் டாக்டர் உவைஸ் அவர்களுக்கு நண்பர்களும் அபிமானிகளும் இருந்தனர்; இருக்கின்றனர். டாக்டர் உவைஸ் தமிழ்நாட்டிற்கு மேற்கொண்ட பயணங்கள் பல; அங்கே அன்னாருக்குத் தம் இல்லங்களில் விருந்தோம்பி மகிழ்ந்தோர் LIGA) IT.

Page 108
188
பேராசிரியர் உவைஸ் அவர்களின் சுகத்தை விசாரிக்க, அவருக்குத் தம் சலாம்களை எத்திவைக்க, தமிழகத்து இஸ்லாமி யத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் காட்டிய அக்கறையைப் பற்றி, தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை முஸ்லிம் இலக்கிய வாதிகள் பலர் இன்றும் வியப்போடு நினைவு கூர்கின்றனர். பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு அந்தளவு உயர் ஸ்தானத்தைத் தம் உள்ளங்களில் கொடுத்திருக்கின்றனர் தென்னிந்திய இஸ்லாமி யத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள். இது வல்லவன் அல்லாஹ் பண்பாளர் உவைஸாருக்கு வழங்கியிருந்த தனி நிஃமத்; பேரருள்.
தென்னிந்திய இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் பேசுவது, அவர்களின் இல்லங்களில் தங்குவது, அவர்களோடு விருந்துண்பது என்பவற் றோடு மாத்திரம் தன் உறவினை டாக்டர் உவைஸ் நிறுத்திக் கொண்டிருந்தால், தென்னிந்திய இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்க ளுக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குமிடையில் அவர் ஏற்படுத்திய பிணைப்பு இந்தளவு உறுதியாக இருந்திருக்க மாட்டாது.
ஆனால் பேராசிரியர் உவைஸ் பல படி மேலே சென்றார். தமிழக அறிஞர்களை, குறிப்பாக தமிழக இஸ்லாமியத் தமிழ் அறிஞர்களை, இலக்கிய ஆர்வலர்களை இலங்கைக்கு வரவழைத் தார். அவர்களைத் தம் இல்லத்திலே தங்கவைத்து உபசரித்தார். தம் சொந்த செலவில் அவர்களைப் பல இடங்களுக்கும் அழைத் துச் சென்று இலக்கியச் சந்திப்புக்களை ஏற்படுத்தினார். அவர்கள் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கு மேடைகள் அமைத்துக் கொடுத் தார்.
வெளிநாட்டு இலக்கிய அதிதிகளை உபசரிக்கும் இந்த உயர் சமூக கைங்கர்யத்தில் பேராசிரியரின் அன்பு மனைவி ஹாஜியானி சித்தி பாத்தும்மா வழங்கிய பங்களிப்பு அலாதியானது; அளப்பரி யது. நற்பண்புகளுக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர்பெற்ற ஓர் உயர் குடும்பத்திலே பிறந்த அச்சீமாட்டி இஸ்லாம் காட்டும் விருந்தோம்பலுக்கு நடமாடும் இலக்கணமாகவே திகழ்கின்றார். தன்னுடைய துணைவரின் அன்பு நாடி தம் இல்லத்திற்கு வருகை தந்த விருந்தினர்களின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை, அவர் காட்டிய கரிசனை அவரின் உயர்குடிப் பிறப்பை உணர்த் தும். இறைவன், அல்லாமா உவைஸ் அவர்களுக்கு வழங்கியிருந்த பாக்கியங்கள் பல; அவற்றுள் மிக உயர்ந்த பாக்கியம் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்த வாழ்க்கைத் துணைவியாகும்.

189
பேராசிரியர் உவைஸ் அவர்களினால் இலங்கைக்கு வரவ ழைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டவர்களுள் பேராசிரியர் நெய்னார் முகம்மது, இறையருட் கவிமணி பேராசிரியர் அப்துல் கபூர், நீதியரசர் மு.மு.இஸ்மாயில், தக்கலை எம்.எஸ்.பவுதிர், நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயித், பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், பேராசிரியை சா.நஸிமா பானு, மெளலானா மெளலவி அப்துல் வஹாப் போன்ற தென்னிந்திய இஸ்லாமியத் தமிழ் அறிஞர்களும் அடங்குவர். டாக்டர் உவைஸ் அவர்களின் இல்லத்தில் தங்கி, அன்னாரின் விருந்தோம்பலைச் சுவைத்த இலக்கிய ஆர்வலர்க ளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போனால் பட்டியல்
நீண்டுவிடும்.
பேராசிரியர் உவைஸ் - ஹாஜியானி பாத்தும்மா தம்பதியி னரின் விருந்தோம்பலைப் பற்றி அதனை அனுபவித்த விருந்தினர் என்ன கூறுகின்றனர்? இதோ தக்கலை பவுதிர் பேசுகின்றார்:
"டாக்டரோடு உடனுறைந்து தங்கிய அனுபவங்கள் எல் லாம் என் மனத்திரையில் நிழலாடுகின்றன. என்னையும் இலங்கைக்கு அழைத்துச் சென்று அவர் இல்லத்தில் ஓரிரு மாதங்கள் தங்க வைத்து, இலங்கையின் பல பாகங்களுக் கும் என்னுடன் வந்த நாட்களை எல்லாம் ஒர்மிக்கின் றேன். அறிஞர் உவைசு அவர்களது அன்பு இல்லத்தரசி யார் கலாவல்லி ஹாஜியானி சித்தி பாத்தும்மாவும் அவரது குடும்பம் யாபேர்களதும் அன்பும் பாசமும் அரவணைப்பும் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.'
பதம் பார்ப்பதற்கு ஒரு பானைச் சோற்றையும் உண்ண வேண்டிய தில்லையே. ஒரு பருக்கை சோறு போதாதா? பேராசிரியர் உவைஸின் உபசரிப்பை உணர்வதற்கு தக்கலை பவுதிரின் மதிப்பீடு ஒன்று போதும்தானே.
தென்னிந்திய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக் கும் உவைஸ் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அன்பு பிணைப்பு, தமிழகத்திலும் இலங்கையிலும் இஸ்லாமிய இலக்கி யம் தழைத்து வளர்வதற்கு பல்வேறு வகைகளிலும் உதவியுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது எனும் ஊரில் வாழ்ந்த அலியார் முஸம்மில் அவர்களின் கைவசம் இருந்த இசுவா அம்மானை என்ற ஏட்டுப் பிரதி தமிழகத்தில்

Page 109
190
வாழ்ந்த ஜனாப் ஹஸன் தம்பி அவர்கள் வழங்கிய பொருளுதவியி னால் அச்சிடப்பட்டதற்கு டாக்டர் உவைஸ் இவ்விரண்டு சமூகத்த வர்களுக்குமிடையே உருவாக்கியிருந்த அன்புப் பிணைப்பே காரணமாக இருந்திருக்கிறது என்பதை அவரது மருதை முதல் வகுதை வரை என்ற நூல் தெளிவுபடுத்துகிறது. பேராசிரியர் உவைஸ் தமிழக இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களுக்கும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களுக்குமிடையில் ஏற்படுத்திய நல்லுறவினால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு இது ஓர் உதாரணம்.
134 di Ase Liਘ % sexy a ਮੰਨੇ ਜਾ ਅਨਸਰ੬੧ Ris a M
Lei ( ਸਾਤ
ਹੈ ਕਿ ... ਪਰ ਪਰਮ ਉੱਤਕ 10 .
ਨਾਨਕ ਸੋ ਆ ਕੇ 16 ਮ ਕਰਨ ਤੇ E ਨੂੰ ਆ l ਉਤੋਂ ਕੰਬਣ Gyiea ਅਤ ਸਿੰਘ
ਵੇ , 43 ਮਈਲ ਨੇ ਉਨ RxRA RAM 9wi Yਰ . ਨੇ ਆਂ ਨਾ ਮਿਲ ਸਕਦੀ ਹੈ ਕਿ ਕਆ ਵ Res11 ਕਰ ਦੇ ਇਲ ' ਖ਼ਤਮ ਚ ਉਪ ਅਕਾਲ 55 ਮਈ PAS Away Maa Hi AK
ਆ /& 2 ਕਾਰ ਪਚ ਜig hot ਦਾ ਵੀ dayragg Rs fhyar A WAR Saha easy afg
- & ਕਲਾਸ 1 & 22 ਜੂਨ ਪੰ, ਨਾਂ Myers & Tr Rin at 4 ਮੁਲਕ
21 1 celk d
ਕੀ , 2 B ਅੰਦਾ ਕਰਨ ਦੇ
L ਅoe u Mਨ ਨੇ ਆਸ਼ਕ ਇਕ ਕ.
sy ਆ ਪਾy 1 ਸੰਖ ਲੀ 3 - ਚ ਆ _ ਉਸ
ਚ De & Rਨ ਵਲੋਂ 26 k read it .
ਵਿਖwਪ dise he a g ਸਿਉ ਨੇ ਆਉ 3 4 5 ਆ 59 ਲਾਖ 35 u hi e ਦੀ a yਰਮ ਅਸਤਰ 7 ਕਰੋ
ਸria , ਆ ਸwਪਣਾ ਆ
· 6uਜਾਬ ਦੀ ਮਾਂ , Bible ) , ਸਪਾ ਦੀਆਂ 17 ਇe it
4 5 6 7ਕ Byjit , ਤੇ 9

புத்தகத்த போது ரத்தக்குற்றம் தவிர்
12. பட்டங்களும் பாராட்டுக்களும் பல
தனது சமூக மேம்பாடு ஒன்றினையே நோக்காக கொண்டு ஆய்வுகளில் ஈடுபடும் ஓர் இலக்கியவாதிக்கு அவனது ஆய்வுகள் மூலம் பணமோ, பட்டமோ, பதவியோ கிடைக்காது இருக்கலாம். இது அவனுக்குச் சில வேளைகளில் பாரிய உளச்சோர்வையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஏமாற்றங்கள், மனத்தளர்ச்சிகள் மாத்திரம் அவன் தன் சமூகத்தின் உயர்வுக்காக மேற்கொண்டுள்ள இலட்சியப் பயணத்தில் நின்றும் அவனைத் திசைத் திருப்பப் போதுமானவையாக இருக்க மாட்டா. ஆனால் அவன் எத்தனையோ சிரமங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் நடத்தும் ஆய்வுகளுக்குச் சமூக அங்கீகாரம் கிடைக்கா விட்டால், பாராட்டுக்கள் வழங்கப்படாவிட்டால், அவனது பங்க ளிப்புக்கள் உதாசீனப்படுத்தப்பட்டால், நிச்சயமாக அவன் சோர்வ டையவே செய்வான்; அவனது பிரயாசைகளில் தளர்ச்சி ஏற்ப டவே செய்யும்.
ஒரு கலைஞனுக்கோ கவிஞனுக்கோ, ஓர் எழுத்தாளனுக்கோ ஆய்வாளனுக்கோ உற்சாகத்தைக் கொடுத்து, உத்வேகத்தை ஊட்டு வது அவனது சமூகம் அவனுக்கு வழங்கும் அங்கீகாரமும் பாராட்டுக்களுமே. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, இலங் கையில் வாழ்ந்த ஆய்வாளர்களில் பெரும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக நாம் டாக்டர் உவைஸ் அவர்களைக் கருதலாம். இவர் ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளாக, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் ஆய்வுகள் செய்து, பல அற்புதமான உண்மைகளைக் கண்டறிந்து, அவ்விலக்கியத்திற்கு ஏற்றம் அளித்தமைக்கு உறுதுணையாக விளங்கியவை, இஸ்லாமி யச் சமூகம் அவருக்கு வழங்கிய பாராட்டுக்களும் உதவி ஒத்தாசை களுமே. ல த ர்: து
18 (44) இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிக பட்டங்கள் பெற்ற வர் பெரியவர் உவைஸ் அவர்களே. அவர் பெற்ற பட்டங்கள் இருவகையினவாகும்.
கலைமாணி, முதுமாணி, கலாநிதி - இவை முறைசார் பல்கலைக்கழக அடிப்படையில் உவைஸ் சுவீகரித்துக் கொண் டவை. இம்மூன்று பட்டங்களும் இலங்கைப் பல்கலைக்கழகத்தி
னால் வழங்கப்பட்டவையாகும். இவை ஒரு வகை.

Page 110
192
மற்றவை, சான்றோர்கள் மத்தியில் சான்றோர்களால் வழங்கப்
பட்ட கெளரவப் பட்டங்களாகும். வழங்கப்பட்ட பட்டங்களின் பொருள்களையும் அவற்றை வழங்கிய நிறுவனங்களின் தராதரங்க ளையும் பற்றிச் சிந்தித்தால், இலங்கையிலும் தமிழகத்திலும் அறிஞர் உலகம், பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு எத்துணை உயர் அந்தஸ்த்தினை அளித்து வந்திருக்கின்றது என்பது புலனா கும். இவை யாவும் பொருத்தமான ஒரு மனிதருக்கு வழங்கப் பட்ட பொருத்தமான பட்டங்கள் என்பதே தமிழறிஞர்களின் ஏகோபித்த முடிவு.
முதன் முதலாக கெளரவப் பட்டமொன்றினை டாக்டர் உவைஸ் அவர்களுக்குச் சூட்டிய நிறுவனம் என்ற பெருமை, சென்னை அடையாரில் இயங்கிய ஆயுள் ஐஸ்வரிய ஆரோக்கிய ஆச்சிரமம் என்ற அமைப்பினையே சாரும். 1965ம் ஆண்டில், இவ்விஸ்தாபனம் அன்றைய தமிழ்நாடு சட்டசபைச் சபாநாயகர் திரு. எஸ்.செல்லப்பாண்டியன் அவர்களின் தலைமையில் விழா வெடுத்து, "பண்டிதரத்னம்’ என்ற பட்டத்தினைச் சூட்டி அறிஞர் உவைஸைக் கண்ணியப்படுத்தியது.
தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள்’ எனும் தனது ஆய்வு நூல் மூலம் தமிழ் இலக்கியத் துறையில் கலாநிதி என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையை உவைஸ் 1975 ஆம் ஆண்டிலே தனதாக்கிக் கொண்டபோது, அவரைப் பெற்றெடுத்த பாணந்துறையும், அவ ருக்குப் பெண் கொடுத்து பெருமை பெற்ற வேர்விலை சீனன் கோட்டையும், அவரது வெற்றியைத் தம் வெற்றியாகவே கருதி பேருவகை கொண்டன.
தம் ஊருக்கும் இஸ்லாமியச் சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்த டாக்டர் உவைஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவெடுக்க பாணந்துறை முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்கள் முனைந்தபோது, பாணந்துறை செல்வந்தர்களும் சீனன்கோட்டைத் தனவந்தர்களும் பெருமகிழ்வோடு நிதி உதவிகள் வழங்கினர். எனவே 1976 ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி கொழும்பு சாகிராக் கல்லூரியில், 'கலாநிதி அல்ஹாஜ் எம்.எம்.உவைஸ் பாராட்டு விழா மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியது. வெளியாரின் எவ்வித உந்துதலுமின்றி, தம்மவர்களே எடுத்த இப்பெருவிழா, நிச்சயமாக உவைஸ் அவர்களின் இதயத்திலே பெருங்களிப்பை ஏற்படுத்தியே இருக்கும்; தன் சமூகத்தின் உயர்வுக்காக மென்மேலும் உழைக்க வேண்டுமென்ற உறுதியை உள்ளத்திலே உருவாக்கியே இருக்கும்.

93
தமிழக அறிஞர் மாண்புமிகு நீதியரசர் ஜனாப் எம்.எம்.இஸ் மாயில், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தெ.பொ.மீ னாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன், கலா நிதி கா.சிவத்தம்பி, திரு. கே.ஜி. அமரதாச, தினகரன் முன்னாள் ஆசிரியர் திரு. ஆர்.சிவகுருநாதன், தேசிய நூலக சேவை முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன் போன்ற அறிஞர்களும், மாண்புமிகு ஏ.எல்.அப்துல் மஜீத், மாண்புமிகு ஐ.ஏ.காதர், அல்ஹாஜ் எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார், ஜனாப் எஸ்.ஏ.ரஹீம் போன்ற அரசியல் தலைவர்களும் நளிம் ஹாஜியார், அல்ஹாஜ் எஸ்.எம்.ஜாபிர், ஹாஜி பி.எஸ்.சதக் போன்ற உயர் வர்த்தக பெருமக்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் 'இஸ்லா மிய இலக்கிய மணி’ எனும் பட்டம், டாக்டர் உவைஸ் அவர்க ளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்குபற்றுவதற்காகவே சென்னையிலிருந்து வந்த நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்க ளின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களின் தன்மைகள், தகைமைகள் விழா எத்துணைச் சிறப்பாக நடந்திருக்குமென்பதை உணர்த்த போதுமானவையா கும்.
இவ்விழாவில் பிரசன்னமாயிருந்த மக்கள் வெள்ளத்தைப் பற்றி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனீபா தனது 'உத்தமர் உவைஸ்" எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"ஸாகிராக் கல்லூரி மண்டபம் இடமளிக்க முடியாத அளவுக்கு பாராட்டு விழாவில் பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்டது இன்னொரு சிறப்பம்சமாகும். விழா நடைபெற்ற மண்டபத்தில் போதிய அளவு இட மில்லாமலிருந்ததால், மண்டபமருங்கிலும், வெளியிலும் கூட பலர் நின்று கொண்டே நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.'
அன்று கொழும்பு சாகிராவிலே திரண்டிருந்த மக்கள் கூட் டம், ஒரு மாபெரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பினைத் தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவித்த இலக்கிய வித்தகர் டாக்டர் உவைஸ் அவர்களை ஈழத்துத் தமிழிலக்கிய உலகம் எந்தளவு ஏற்றிப் போற்றியது என்பதை நிதர்சனமாக காட்டுவதாக அமைந்தது. தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலி ருந்தும் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவென்றே, இலக்கிய அபிமானிகள் பலர் கொழும்பு வந்திருந்தது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

Page 111
94
சாஹிரா விழாவன்று வெளியிடப்பட்ட 'கலாநிதி உவைஸ் மலர் ஏந்தி வந்த கட்டுரைகள், கவிதைகள், விழா நாயகர் உவைஸ் அவர்களின் இனிய பண்புகளையும் உயர் தகைமைகளையும் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை, பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் டாக்டர் அ.சின்னத்தம்பி, பேராசிரியர் சி.தில்லைநாதன், அல்ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன், வித்துவான் எம்.ஏ.ரஹ்மான், அல்ஹாஜ் ஆ.மு.சரிபுத்தீன், அல்ஹாஜ் எஸ். எம்.ஏ.ஹஸன் போன்ற ஈழத்து அறிஞர்களின் ஆக்கங்கள், இலங் கையில் டாக்டர் உவைஸ் எத்துணை உயர்வாக மதிக்கப்படுகின் றார் என்பதைப் புலப்படுத்துகின்றன என்றால், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில், அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம், பேராசிரியர் நெய்னார் முகம்மது, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முகம்மது பாரூக், கவிஞர் முகம்மது மூஸா, கவிஞர் சாரணபாஸ்கரன், அதிரை அஹ்மது போன்ற தமிழக அறிஞர்களின் சிருஷ்டிகள், தென்னிந்திய இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் உள்ளங்களிலும் எம்மவர் உவைஸ் எத்துணை உயர்வான ஸ்தானத்தில் வீற்றிருந்தார் என்பதை நன்கு உணர்த்து கின்றன.
மே மாதம் 19 ஆம் திகதி கொழும்பு சாஹிராக் கல்லூரியில், அரசியல் தலைவர்களும், கல்விமான்களும், வர்த்தகப் பிரமுகர்க ளும், இலக்கிய ஆர்வலர்களும் நிறைந்திருந்த அவையிலே, சான்றோர்களால் வழங்கப்பட்ட பாராட்டுக்கள் நிச்சயமாக டாக் டர் உவைஸ் அவர்களின் உள்ளத்தில் உவகையை ஊட்டியே இருக்கும். சமூக ஏணியின் உச்சியில் நிற்பவர்களின் பாராட்டுக் களை மதிக்காதார் யார்? விரும்பாதார் யார்?
ஆனால் இவ்விழாவை விட மே மாதம் 20 ஆம் திகதி பாணந்துறை ஹேனமுல்லையில் டாக்டர் உவைஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட திவரவேற்பு, அவரின் உள்ளத்தைத் தொட்டிருக்கும்; அவரின் அடி மனதை இதமாக வருடியிருக்கும். அவர் சிறுவனாக ஓடி, ஆடிய ஊரிலே, இளைஞனாக கனவுகள் நிரம்பிய கண்களு டன் சுற்றித்திரிந்த நிலப்பரப்பிலே, ஊரார் உறவினர் மத்தியிலே, உயர் சமூக அந்தஸ்து பெற்ற பலரால் பாராட்டப்பட்டது டாக்டர் உவைஸ் அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தே இருக்கும்.
அன்று ஹேனமுல்லை தன்னுடைய பெயரை உலகறிய வைத்த தனது தவப்புதல்வன் உவைஸின் சாதனையைக் கொண் டாட சிலிர்த்தெழுந்தது; விழாக் கோலம் பூண்டது. அலங்கரிக்கப்

95
பட்ட வீதிகள் ஊடாக ஊர்வலமாக டாக்டர் உவைஸ் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே நீதியரசர் இஸ்மாயில், சிங்கை ஜனாப் எம்.சி.செய்யது யூசூப், பாணந்துறை பாராளுமன்ற உறுப்பினர் திரு. லெஸ்லி குணவர்தன, ஜனாப் எச்.எம்.பி. மொஹிதீன், அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மெளலானா போன்ற தலைசிறந்த சொற்பொழிவாளர்கள், டாக்டர் உவைஸ் அவர்களின் சாதனையின் மகத்துவத்தை பாணந்துறை மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்; அவர்களின் உள்ளங்களை உவகையால் நிரப்பினார்கள். தன் புதல்வன் உவைஸை அவை யிலே முந்தியிருக்க வைத்து விட்டது ஹேனமுல்லை; இவரைத் தன் புதல்வனாக பெற ஹேனமுல்லை என்ன புண்ணியம் செய்ததோ என ஏனைய ஊர்களை ஏங்க வைத்து விட்டார் உவைஸ்.
தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வு செய்து கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையை உவைஸ் தனதாக்கிக் கொண்டபோது இலங்கை முஸ்லிம்கள் எந்தளவு மகிழ்வெய்தி னரோ அந்தளவு தமிழக முஸ்லிம்களும் களிப்படையவே செய்த னர். திருச்சியிலும் சென்னையிலும் நடந்து முடிந்திருந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடுகளில் அறிஞர் உவைஸ் ஆற்றிய உரைகளும் வாசித்த ஆய்வுக் கட்டுரைகளும் ஏற்கனவே தமிழக இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களின் இதயங்களிலே உவைஸின் பால் பாரிய மதிப்பினை ஏற்படுத்தியிருந்தன; ஆனால் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைப் பற்றிய ஆய்வின் மூலம் உவைஸ் இப்போது எடுத்துக்காட்டிய புதிய உண்மைகள் அவர்க ளைப் பிரமிக்க வைத்தன; உவைஸின் மீது அலாதியான ஒரு மதிப்பை ஏற்படுத்தின.
1976ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் மிகச் சிறப்பாக நடந்த இரு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாக்கள், தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அபிமானிகள் டாக்டர் உவைஸ் மீது வளர்த்திருந்த பேரபிமானத்தையும் பெருமதிப்பை யும் பிரதிபலிப்பனவாக அமைந்தன. சென்னை புதுக்கல்லூரியில் ஜனாப் ஹாஜா ஷெரிப் அவர்களின் தலைமையில் நடந்த பாராட்டு விழாவிலே, தமிழக முஸ்லிம்கள் டாக்டர் உவைஸ் அவர்களுக் குப் பொன்னாடைப் போர்த்தி, தீன் தமிழ்க் காவலர்’ எனும் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். இப்பாராட்டு விழா உமறுப் புலவர் தமிழ்ப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டதாகும்.
அதே ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி சென்னையில் கலைமாமணி கா.மு.ஷெரிப் தலைமையில் இயங்கிய முஸ்லிம்

Page 112
196
தமிழ்க் கவிஞர் மன்றம், டாக்டர் உவைஸ் அவர்களுக்கு ஒரு.
பாராட்டு விழாவினை ஒழுங்கு செய்திருந்தது. இவ்விழாவிலே டாக்டர் உவைஸ் அவர்களுக்கு இலக்கியச் சித்தர் என்ற கெளரவப் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவிலே கவிஞர் மு.முஹம்மது மூஸா பாடிய
இந்நாள் அகத்திய இருவழியே உவைசே! முன்நாள் சேகனா முறைவழிப் பேரனே! உவே சாவென உரைக்க, வாலிப ஆவே சத்தொடு அரும்நூற் றொண்டு புரிந்திட யாத்திரை போகிய தாதையே! இரும்பல மொழித்தேர் இன்முகப் புலவனே! காட்சிக் கெளியனே கண்ணனே ஞான மாட்சிக் குடையனே மாநன் மனத்தனே!
எனத் தொடங்கி
திசைமொழி யரசாய்த் திகழுமாங் கிலத்து முஸ்லிம் எபிக்ஸ் இன் தமிழ்லிட்ட ரேச்சர் Muslim Epics in Tamil Literature எனும் ஒரு பெயரில் எய்திய ஆய்வை இனமாம் எங்கள் ஏழைச் சமூகமும், பல்கலைக் கழகமும், பாரதும் உயர நல்கிய நின்னை நன்றியில் வியந்து டொக்ட்டரென் றோதும் துன்னிய பதத்தால் மிக்குயர் பட்டம் மிலைந்தனர்; அவர்தம் உண்மை நாட்ட உயர்வினை, திறத்தைக் கண்ணினில் ஒற்றிக் களித்தே எங்கள் மரியா தையை வைத்தே போற்றி உரியோய் உவைசே உன்வர வேற்று(ஏ) இலக்கியச் சித்தர் எனும்ஒரு பட்டம் துலக்கிட நிற்குச் சூட்டி, நிமிர்ந்து(ஏ) உவக்கின் றோம்யாம் உவக்கின் றோம்எம் அவைக்கண் எழுந்த அன்பே வாழ்க! இறைவன் அல்லாஹ் இன்னருள் பெருகி நிறைவாய் நலங்கள் நித்தமும் பொழிக! என முடியும் வாழ்த்துப்பா, டாக்டர் உவைஸ் மீது கவிஞர் மூஸாவும் அவரது சக முஸ்லிம் தமிழ்க் கவிஞர்களும் வைத்தி ருந்த அன்பையும், மரியாதையையும் துல்லியமாக புலப்படுத்துகி (Dgil.

197
"பண்டிதரத்னம்', 'இஸ்லாமிய இலக்கிய மணி', 'தீன்தமிழ்க் காவலர்', 'இலக்கியச் சித்தர் என்ற நான்கு கெளரவப் பட்டங்க ளும் டாக்டர் உவைஸ் அவர்களுக்குத் தனிப்பட்டோர்களின் அமைப்புக்களினால் வழங்கப்பட்டவையாகும். இவையாவும் சான்றோர்களால், சான்றோர்கள் மத்தியில் வழங்கப்பட்டவை என்ற போதிலும், நாட்டின் அரசு ரீதியில் டாக்டர் உவைஸ் அவர்களுக்கு எந்த கெளரவப் பட்டமும் கிடைத்ததில்லையே என்ற மனக்குறை இஸ்லாமிய இலக்கிய அபிமானிகள் பலருக்கு இருக்கவே செய்தது.
இந்த சிறிய, ஆனால் நியாயமான மனக்குறையை, சொல் லின் செல்வர் மாண்புமிகு செ.இராசதுரை அவர்கள் இந்து கலாசார அமைச்சராக செயல்பட்டபோது தீர்த்து வைத்தார். இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட 'கலைமாமணி’ என்ற பட்டமே டாக்டர் உவைஸ் அவர்களுக்கு அரசு ரீதியில் வழங்கப் பட்ட முதல் கெளரவப் பட்டமாகும். மாண்புமிகு திரு. பி.பி.தே வராஜ் அவர்களின் தலைமையில் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு 1991 ஆம் ஆண்டில் கண்டியில் நடாத்திய தமிழ் சாகித்திய விழாவில் டாக்டர் உவைஸ் அவர்களுக்கு இலக்கியச் செம்மல்" எனும் கெளரவப் பட்டம் வழங்கப்பட்டது.
மீண்டும் 1992 ஆம் ஆண்டில் இலங்கை அரசு பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு 'கலாசூரி' எனும் உயர் தேசிய விருதினை வழங்கி கண்ணியப்படுத்தியது. இதனை, "பண்டிதரத்னம், இஸ் லாமிய இலக்கிய மணி, தீன்தமிழ்க் காவலர், இலக்கியச் சித்தர் என்னும் பட்டங்களுடன் இலங்கை அரசு 1992 மே 22 இல் தேசிய வீரர்கள் தினத்தன்று 'கலாசூரி' எனும் பட்டத்தையும் வழங்கித் தேசிய வீரர்கள் மட்டத்திற்கு உயர்த்தியிருப்பது கலாநிதி உவைஸ் அவர்களின் இலக்கியப் பாதையின் செம்மையை இனங்கண்டு விரிவுபடுத்துகின்றதெனலாம்' என கவிஞர் ஏ.இக் பால் ஒரு கட்டுரையில் வர்ணித்திருப்பது கன கச்சிதமானதாகவே தோன்றுகின்றது.
'கலாசூரி' என்பது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெரும் சேவையாற்றியுள்ள சாதனையாளர்களுக்கு இலங்கை அரசு வழங் கும் உயர் விருது என்ற போதிலும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பற்ற சேவையினை ஆற்றியிருக்கும் பேராசிரி யர் உவைஸ் அவர்களுக்குப் பொருத்தமான, தனித்துவமிக்க ஓர் உயர் பட்டத்தினை வழங்க வேண்டும், அவருக்கு ஒரு பெரும் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற பேரெண்ணம், போற்றப்பட வேண்டியவர்களைப் போற்றி, வாழ்த்தி அவர்க

Page 113
198
ளுக்கு மென்மேலும் உற்சாகம் ஊட்டுவதில் தனி மகிழ்ச்சியினைக் கண்ட ஒரு மாமனிதரின் உள்ளத்தில் தோன்றியது.
‘வாழ்வோரை வாழ்த்துவோம்' என்ற சங்க நாதத்தை எழுப்பி, சமூக மேம்பாட்டிற்காக தொண்டாற்றியுள்ள அறிஞர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் முகமாக 'அல்குர்ஆன் இறங்கிய அறபு மொழியில் பட்டம் வழங்கி, விருது தந்து, சான்றிதழ் அளித்து, பணவோலைப் பரிசளித்து' கெளரவித்த அந்த மாமனிதர், முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், தம் சமூகத் திற்கு ஒப்பற்ற சேவையினை நல்கியுள்ள பேராசிரியர் உவைஸ் பொருத்தமான முறையிலே கெளரவிக்கப்பட வேண்டும் என மனப்பூர்வமாக விரும்பினார்.
அன்றைய முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் அஸ்வர் அவர்களும், அவ்வமைச்சு செயலா ளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களும், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அல்ஹாஜ் யு.எல்.எம். ஹாலிதீன் அவர்களும் ஒருங்கிணைந்து, பெரும் கரிசனையுடனும், நுணுக்கத்துடனும் செயல்பட்டு, மிக உன்னத மான முறையினிலே, 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினெட் டாம் திகதியன்று கொழும்பில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு எடுத்த பெரும் பாராட்டு விழா இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பேராசிரியரின் அபிமானிகளுக்கும் மன நிறை வையும் பூரணத் திருப்தியையும் வழங்கியது என்றே கூற வேண்டும். அரசியல், கல்வி, சமூக, வர்த்தக மட்டங்களில் உயர்நிலை வகித்த பலர் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் அல்லாமா' எனும் கெளரவப் பட்டம், டாக்டர் உவைஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது இவ்விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்கியது.
இலங்கைப் பிரதமரின் உத்தியோக வாசஸ்தலமான அலரி மாளிகையில் அன்றைய பிரதமர் திரு. ரனில் விக்கிரமசிங்க, பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தது இவ்விழாவின் மற்றுமோர் சிறப்பம்சமாக திகழ்ந் 55l.
எனினும் இப்பாராட்டு விழாவின் மிக முக்கியமான அம்சமா கவும் நிலையான பலன் அளிப்பதாகவும் இருந்தது, இவ்விழா நிமித்தமாக வெளியிடப்பட்ட "பேராசிரியர் அல்ஹாஜ் ம.முகம் மது உவைஸ் மணிவிழா மலரே.

199
இம்மலரின் பதிப்பாசிரியரான அல்ஹாஜ் ஜெமீல் அம்மல ருக்குத் தான் எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள் GYTfts 7.
"இலங்கை முஸ்லிம் பேரறிஞர்களிடையே முதன் மையாக வைத்தெண்ணத்தக்கவர் பேராசிரியர் அல்ஹாஜ் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களாவார். 71 வயது நிரம்பப் பெற்ற பேராசிரியர் உவைஸ் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக வும், இஸ்லாமியத் தமிழ் எழுச்சிக்காகவும் செலவிட்டுள் ளார். இளைஞராய் இருக்கும் பொழுது இப்பணியை ஆரம்பித்த இவர் இற்றைவரை அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அத்தகைய ஒருவரைக் கெளரவித்து விழா எடுக்க வேண்டுமென்ற எண்ணம் மாண்புமிகு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் பா.உ. அவர்களுக்கு எழுந்ததின் விளைவே இப்பாரிய மலராகும். மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் அவர்கள் இப்பணிக்காக முஸ்லிம் மக்களி டையே மட்டுமன்றி, இந்நாட்டில் மட்டுமன்றி, தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் அறிஞர்களிடையே என்றும் tếìỏLuử.”’
இம்மலர் பதிப்பாசிரியரின் இக்கூற்றில் ஒரு திருத்தம் செய்வது பொருத்தம். அவர் கூறியிருப்பது போல் இம்மலருக்காக மக்களின் மனங்களில் நிற்கப் போவது அமைச்சர் மாத்திரமல்லர்; அம்மலரோடு சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் மக்களின் மனங்களில் நிரந்தரமாய் நிலைக்கவே செய்வர். இம்மலர் அந்த ளவு நிறைவானதாகவும், காத்திரமானதாகவும் விளங்குகிறது. கவர்ச்சியான அமைப்பு, கனமான உள்ளடக்கம் இவை இரண்டும் இம்மலரின் தரத்தை உயர்த்துகின்றன. ஒரு கண்ணியமான மனித ருக்கு, கண்ணியமான மனிதர்களால் வழங்கப்பட்ட கண்ணிய மான ஒரு பரிசென்றே நாம் இம்மலரை வர்ணிக்க வேண்டும்.
உவைஸ் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பதிப்பாசிரியர் ஹாஜி ஜெமீல், பேராசிரியர் உவைஸ் அவர்களின் வாழ்க்கைப் பின்னணியை விளக்கியெழுதிய நீண்ட ஆய்வுக் கட்டுரையையும், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, ஹொங்கொங் போன்ற நாடுகளில் வசிக்கும் அறிஞர் பெருமக்கள் பலர் உவைஸ் அவர்களின் உயர் பண்புகளையும் அவரது

Page 114
2OC
பணிகளின் சிறப்புக்களையும் விளக்கி எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் ஏந்தி வந்த இப்பாராட்டு மலர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஓர் இலக்கியப் பொக்கிஷமாகும். அறிஞர் உவைஸின் வாழ்வையும் பணிகளையும் விளக்கும் ஒரு மலர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மீள் கண்டுபிடிப்பையும் அதன் மாண்பையும் அறிவதற்கு உதவும் ஒரு கைநூலாகத்தானே இருக்கும்.
சுயாதீன அமைப்புகளும் அரசு நிறுவனங்களும் நடாத்திய பாராட்டு விழாக்கள் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்குப் பெரும் மகிழ்வ்ையும் மனநிறைவினையும் வழங்கி இருக்கும். அவற்றில் வழங்கப்பட்ட பட்டங்களும் பாராட்டுரைகளும் நிச்சயமாக அவ ருக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்திருக்கும்.
ஆனால் வாய்மொழி பாராட்டுக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. அவை எட்டுவது சொற்ப தொகையினரையே; எட்டிய மக்களின் மனங்களில் நிலைப்பதும் ஒரு சில தினங்களுக்கு மாத்திரமே.
மாறாக, அரசியல் தலைவர்களால், அறிஞர்களால், இலக்கிய விமர்சகர்களால், கவிஞர்களால் பத்திரிகைகளிலே, நூல்களிலே, சிறப்பு மலர்களிலே வழங்கப்படும் பாராட்டுக்கள் கூடிய தொகை யினரை எட்டுவது மாத்திரமன்று, அவற்றின் நிலைப்புச் சக்தியும் அதிகமே. பேராசிரியர் உவைஸ் அவர்களுக்குக் கிடைத்த இத்த கைய பாராட்டுக்கள் ஏராளம். இவை அவருக்குப் பெரும் மனத்திருப்தியையும் தெம்பையும், மென்மேலும் சமூகத்திற்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் வழங்கின என்றே கூற வேண்டும்.
இந்த வகையில் தமிழ் மன்றம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா அவர்கள் எழுதிய 'உத்தமர் உவைஸ்" எனும் நூல் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
"மிகச் சிறந்த இஸ்லாமிய இலக்கியங்களை அறிமுகம் செய்து வைத்து நல்ல முன்மாதிரி காட்டியுள்ள ஒருவர், இன்னமும் இலக்கிய உலகுக்கு ஓரளவேனும் அறிமுக மாக்கப் படாமலிருந்தது பற்றிக் கவலையடைந்து, செய லில் இறங்கியதின் பயனே இந்நூல். முப்பதாண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகியதன் விளைவால், தெரிந்து கொள்ள முடிந்த விபரங்களை எல்லாம் திரட்டி, நூல் வடிவில் தந்துள்ளேன். மேலும் விரிவான வாழ்க்கை

2O1
வரலாறொன்று பின்னர் வெளிவருவதற்கு, இந்நூல் வழி கோலுமென நம்புகின்றேன்."
என இந்நூல் முன்னுரையில் ஹாஜி ஹனீபா கூறியிருப்பதுபோல, 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகம் பேராசிரியர் உவைஸ் அவர்களின் குடும்பப் பின்னணி, வாழ்க்கை வரலாறு, இலக்கியத் தொண்டுகள் போன்றவற்றினை விரிவாக விளக்குகின் றது. பெரியவர் உவைஸைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் எழுத விரும்புவோருக்கும் இன்றும் பெரிதும் உதவும் இந்நூலை எழுதிய அல்ஹாஜ் எஸ்.எம். ஹனீபா தமிழ் இலக்கிய உலகின் நன்றிக்கும் பாராட்டுக்குமுரியவராவார்.
டாக்டர் உவைஸ் அவர்களுக்குப் பெரும் ஆத்ம திருப்தியை யும் உளப் புளகாங்கிதத்தையும் வழங்கிய படைப்பு, முஸ்லிம், சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்ட "பேராசிரியர் அல்ஹாஜ் ம.முகம்மது உவைஸ் மணிவிழா மலரா கும்."
காத்திரமான இம்மலரின் காரணகர்த்தாவான அன்றைய அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள், தாம் இம்மல ருக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள் GTITIT.
"இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை யில் பேராசிரியர் உவைஸ் அவர்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். இலங்கையிலோ வெளிநாடுகளிலோ எந்த ஓர் ஆய்வாள ரும் மேற்கொள்ளாத, இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளைக் கண்டுபிடித்து ஒன்று திரட்டி வகைப்படுத்தி விளக்கந்தந்து ஆற்றிய பணி உண்மையிலேயே போற்றற் குரியதாகும். இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வாழும் சாதாரண ஒரு மனிதன் கூட உணரும் அளவுக்கு இந்நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களின் இஸ் லாமியப் பணியை அறிமுகப்படுத்தியுள்ளார் எனத் திட னாக எடுத்துக் காட்டலாம்.' அமைச்சரின் கணிப்பீடு கருத்தில் பதிக்க வேண்டிய ஒன்றாகும். "முஸ்லிம்கள் தமிழுக்குச் செய்த பணியைப் பற்றி முதல் முதலில் தமிழ் கூறும் நல்லுலவுக்கு மட்டுமல்லாது, அகில உலகுக்கும் உணர்த்திய பெருமை இலங்கையில் தோன்றிய டாக்டர் எம்.எம்.உவைஸ் எம்.ஏ., பி.எச்.டி., அவர்களையே

Page 115
202
சாரும்'' என அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் வெளியிட்ட 'இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்' கூறுவது, அமைச்சர் அல்ஹாஜ் அஸ்வர் அவர்களின் கூற்று நட்பின் அடிப்படையில் வெளிப்பட்ட தல்ல, நியாயமான மதிப்பீட்டின் அடிப்படையில் தோன்றியதே என்பதை நன்கு நிரூபிக்கின்றது. இது
, 'ஓர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியம்' என்ற தலைப்பில், பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பணிகளை மதிப்பீடு செய்து எழுதிய ஓர் ஆழமான ஆய்வுக் கட்டுரையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஜ்மல்கான் பின்வருமாறு கூறியுள்ளார்.
"இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்றவுடன் எல்லோர் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் வார்த்தை டாக்டர்க எம்.எம்.உவைஸ் என்பதுதான். ஆம், இஸ்லாமியத் தமிழி லக்கியங்களிலிருந்து தம்மைப் பிரித்துக் காண முடியாத படி தம் வாழ்வை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களுடன் ஒருங்கிணைத்துக் கொண்டவர் பேராசிரியர் எம்.எம்.உ வைஸ் அவர்கள். தமிழிலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவிற்குரிய இடத்தைப் பெற்றுத் தருவ தற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் டாக்டர் எம்.எம்.உவைஸ் அவர்கள்.''
பேராசிரியர் அஜ்மல்கான் அவர்களின் இக்கூற்றும் இதே கட்டுரையில் அவர் எழுதியுள்ள,
"இயற்கை தந்த வரமாக, அறிவியல் வித்தகராக, இஸ்லா மியத் தமிழிலக்கியங்களின் விளக்கங்களை விரல் நுனி யில் வைத்திருக்கும் இலக்கியத் திறனாய்வாளராக நம்மி டையே இருக்கும் டாக்டர் எம்.எம்.உவைஸ் அவர்களை 'ஓர் இஸ்லாமியத் தமிழ்க் கலைக்களஞ்சியம்' என்று
கூறுவது மிக மிகப் பொருத்தமானதே" என்ற வசனமும் பேராசிரியர் உவைஸ் மீது, அவர் கொண்டிருக் கும் பாரிய மதிப்பினைப் புலப்படுத்துகின்றன.
பேராசிரியர் உவைஸ் அவர்களுடன் இணைந்து பல வருடங் கள் பணியாற்றியுள்ள டாக்டர் அஜ்மல்கான் அவர்களின் மதிப்பீடு புறக்கணிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. அம்மதிப்பீடு, பேராசிரியர் உவைஸ் அவர்களின் அறிவு, ஆராய்ச்சித் திறன், மொழி ஞானம், அர்ப்பணிப்பு ஆகிய இன்னோரன்ன தன்மைகள், டாக்டர் அஜ்மல் கான் அவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்புக்களின் பிரதிபலிப்பாகும்.
இந்த 472 10491 ம்

2O3
இஸ்லாமியச் சமூகத்தின் ஏற்றத்திற்கும் உயர்ச்சிக்கும் பேராசிரியர் உவைஸ் அவர்களின் வாழ்வுப் பணி எவ் வாறு கால்கோளிட்டது என்பதை பன்னூல் ஆசிரியர் பேரறிஞர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் அவர்கள், கவிதையில் மிக அழகாக வடித்துத் தந்துள்ளார் கள். அர்த்த புஷ்டி நிறைந்த அக்கவிதையின் ஒரு பகுதி:
"செந்தமிழில் நான்கு காப்பியங்கள் எவன் செய்தான்? பைந்தமிழின் பாவாணன் பார்புகழும் என் பூட்டன் சேகனாப் புலவன் செய்தளித்தான் என்றுரைத்தான் மேகம்பழி பாமழையை மிகப் பொழிந்தான் என மொழிந் தான். ஒருநூ றவதானம் உலகினிலே எவன் செய்தான்? அருமைமிகு என் பாட்டன் அசாதா ரணமனிதன் செய்குதம்பிப் பாவல்லான் செய்தனனே எனப்புகன்றான் செய்குதம்பி போல்வல்லான் செகம்பிறக்க விலையென் றான். நேற்றுதினம் நிலாமுதுகில் நிமிர்ந்து நின்ற ஆம்ஸ்ட்ராங்கும் சாற்றினான் நிலாவிருந்து சகமதனைப் பார்க்குங்கால் கைவிளக்கு போன்று காட்சிஅஃ தளித்ததென்றே. மெய்விளக்காய் மேதினியில் வந்துற்ற மேதகையாம் மாண்புமிகு நபிகள்மன் ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னர் அல்லா(ஹ்)வைத் தரிசிக்க விண்ணகமே ஏகியக்கால் கண்விளக்கின் வெளிச்சத்தால் மண்ணகத்தைப் பார்த்திடவே மாடக்குழு விளக்காய் அன்னதுவே தோற்றம் அளித்ததுவே என்றனர்காண். இன்ன அருஞ் செய்திதனை என்னுடைய முப்பாட்டன் ஆலிப் புலவரெனும் அருட்கவிஞன் மிஃராசு மாலைதனில் நானூறு ஆண்டுகள்முன் பாடிவைத்தான் என்றுமே இயம்பி இஸ்லாத்தின் மாண்புதனை மண்புவியில் முழக்கி மகிழ்வுற்றான் இப்புலவன் இத்தரையில் இவன்இயற்றி ஈந்தநூல் அத்தனையும் முத்துக்கள், வைரங்கள், முதல் தரமாம் மாணிக்கம் இவன் அளித்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இவன் பணியின் மகுடமதில் இலங்கிநிற்கும் கோகினூர் இத்தரணி இவன் பிறந்து இஸ்லாமியத் தமிழர்களின் மெத்தவும் சிறந்த மாப்பணியை மேதினியோர் அறிந்திடவே செய்து அவனிதனில் நாம் யார்க்கும்

Page 116
2O4.
சிறிதுமே இளைத்தோமிலை என்றுமே தீனோரைத் தலைநிமிர்ந்து முழங்கிடவே தனித்து நின்றே இவன் செய்தான் நிலை உயர்த்தி அவர்களையே நிமிர்ந்து நிற்க வழிவகுத் தான்." தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 'இஸ்லாமியத் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கு வழிவகுத்தவர் டாக்டர் உவைஸ் என பாராட்டப்பட்ட போது, அதுவும் "வாழ்த்து மொழியும் பாராட் டும் உரியவர்க்கன்றிப் பிறர்க்கு வழங்காத் தீரமும் உறுதியுமுடைய பெருந்தகையாளர்’ பேரறிஞர் அப்துல் ரஹீம் அவர்களால் பாராட்டப்பட்ட போது, நிச்சயமாக டாக்டர் உவைஸ் மனம கிழ்ச்சி அடைந்தே இருப்பார். அப்பாராட்டு அவருக்குப் பெரும் உளத்திருப்தியை வழங்கியே இருக்கும்.
மறைந்த பேராசிரியர் கைலாசபதிக்கு நிகரான இலக்கிய விமர்சகர் என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, டாக்டர் உவைஸ் அவர்களின் இலக்கியச் சேவை யின் மாண்பினை வேறொரு கோணத்தில் நின்று மதிப்பிட்டுள்
ΘΤΠΠ.
"தமிழிலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டுக்கான இலக் கிய வரலாறு எழுதப்படும் பொழுது, தமிழிலக்கிய வரலாற்றுப் பரப்பின் அகற்சிக்குக் காரணமாக இருந்த சிலர் முக்கிய இடம் பெறுவர். அத்தகையோருள் இலங்கை பாணந்துறை ஹேனமுல்லை ம.முகம்மது உவைஸ் நிச்சயமாக இருப்பார். தமிழிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்து, அந்த இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ் இலக்கியப் பண்பாட் டின் ஒன்றிணைத்த ஒரு கூறாக ஆக்கிய பெருமை இவரைச் சாரும்." என்றும்
"இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு உவைஸ் எனும் வாய்க்கால் வழியாகவே ஓடி வளம் பெருக்கியது. இந்தச் சிறப்பின் உச்சம், இந்தப் பணியின் பெருமை தமிழகத்து முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டமையேயாகும். உண்மையில் இலங்கைக்குத் தமிழகத்தில் புகழீட்டிய பெரியார்கள் வரிசையில் உவைஸ் அவர்களின் பெயரும் இடம் பெறல் வேண்டும்."

205
என்றும் கூறி பேராசிரியர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை வேறொரு பரிமாணத்தில் எடை போட்டுள்ளார் பேராசிரியர் சிவத்தம்பி. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்க ளோடு பேராசிரியர் உவைஸ் தன்னை இரண்டற இணைத்துக் கொண்டதால் பெரும்பாலான இலக்கிய விமர்சகர்கள், உவைஸ் அவர்களது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அறிவை எடுத்துக் காட்டிய அளவிற்கு, அவருக்கு பண்டைய தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் இருந்த பாண்டித்யத்தை வெளிச்சம் போட் டுக் காட்டவில்லை என்றே கூற வேண்டும்.
உண்மையில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு இஸ்லாமி யத் தமிழ் இலக்கிய நூல்களில் எந்தளவு பாண்டித்யம் இருந்ததோ அந்தளவுக்கு பண்டைய தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களிலும் பெரும் பாண்டித்தியமும் ஈடுபாடும் இருந்தது என்பதே உண்மை. டாக்டர் உவைஸைப் பற்றி எழுதும் போது பொதுவாக அதிகம் அலசப்படாத இந்த அம்சத்தைப் பின்வருமாறு கூறி விளக்கியிருக்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி.
"உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அறிவு வரன்முறையான தமிழறிவு எனும் அடித்தளத்திலி ருந்து கட்டியெழுப்பப் பெற்றதாகும். காலத்துக்கு முற் பட்ட தமிழிலக்கிய, தமிழிலக்கணப் பாரம்பரியத்தில் உவைஸ் அவர்களுக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. இக்கட்டத்தில் அவர் கொழும்பில் அமைந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியப் பயிற்றுவிப்புப் பொறுப்பாளராகவும் விளங்கியமையையும் அக்காலங்க ளில் தமிழின் செந்நெறி இலக்கியங்களை அவற்றுற்குரிய இலக்கண விளக்கங்களுடன் செம்மையுறப் பயிற்றுவித்த மையும் குறிப்பிடல் வேண்டும்.'
இவ்வாறே பேராசிரியர் உவைஸ் அவர்களின் தமிழ்ப் புலமைக்குக் கவிதையில் கட்டியம் கூறியுள்ளார் காத்திபுல் ஹக் அல்ஹாஜ் எஸ்.ஐ. நாகூர் கணி.
"தமிழில் இஸ்லாமிய இலக்கியம் என்றொன்றுண்டா? இப்படிக் கேட்ட பண்டிதப் புலிகளுக்கு பல்கலைக்கழக மட்டத்தில் விடை பகர்ந்த

Page 117
2O6
நீங்களே ஒரு நடமாடும் பல்கலைக் கழகமல்லவா?
அதனால் இன்னொரு பாண்டியன் இப்போதிருந்தால் தனக்குண்டாகும் கூந்தல் சந்தேகத்தை கேட்டுத் தெரிய உங்களையே கூப்பிட்டனுப்புவான்.
தருமியைத் திணறடித்த
நக்கீரர் கூட
பழந்தமிழ் இலக்கியத்தின்
பழைய தகவலுக்காய்
உங்கள் வீட்டுக்
கதவையே தட்டுவார்.
பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றும் கவிஞர் நாகூர் கனியின் கவிதையும் உவைஸ் அவர்களின் தமிழ் இலக்கியப் பாண்டித்தியத் தைத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.
பேராசிரியர் உவைஸ் அவர்களிடம் மிளிரும் மிக உன்னத மான பண்புகளில் ஒன்று தனது நிறை அறிவையும் தன்னிடம் இருந்த நூல்களையும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர் காட்டிய வேட்கையாகும். தம்மிடம் இருக்கும் நூல்களை, ஆய்வுகளுக்குக் கூட கொடுத்துதவாத பலரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் எமக்கு அறிஞர் உவைஸ் ஓர் அதிசயமான மனிதரா கவே தென்படுகின்றார். உவைஸ் அவர்களிடம் காணப்பட்ட இந்த உயரிய குணத்தைப் பலர் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர்.
டாக்டர் உவைஸ் அவர்களோடு மிக நெருங்கிய தொடர்பு களை வைத்திருந்த ஒர் அறிஞர் பேராசிரியர் சி.தில்லைநாதன் ஆவார். பேராசிரியர் உவைஸை நன்கு அறிந்தவர் அவர். எனவே,
'அறிவினைத் தேடுவதில் கொண்டளவு வேட்கையினை, அவ்வறிவினை ஏனையவர்களோடு பகிர்ந்து கொள்வதி லும் கொண்டவர் உவைஸ். அகப்பட்ட புத்தகங்களையும் அறிவினையும் முடக்கிச் சுயலாபத்துக்கு முதலாக்குவோர் பலருக்கு மத்தியில் அவற்றையெல்லாம் திறந்த மனத்து

2O7
டன் கரவின்றிப் பரிமாற விரும்பும் பேராசிரியர் உவைஸ் அவர்களது பரந்த உள்ளம் பாராட்டப்பட வேண்டியதா கும்.
'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்.' என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் கற்றறி வாளர் உவைஸ்’ என பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் டாக்டர் உவைஸ் அவர்களிடம் அமைந்திருந்த இந்த உயர் பண்பைச் சித்தரிக்கும் போது அதில் சத்தியம் ஜொலிக்கின்றது.
தமிழக முஸ்லிம் வழக்கறிஞரும் இலக்கிய ஆர்வலருமான அல்ஹாஜ் நீடூர் ஏ.எம்.சயித், டாக்டர் உவைஸ் அவர்களின் இந்த
அழகிய
பண்பினை தான் எழுதிய ஒரு கட்டுரையில் ஆதாரத்துடன்
எடுத்துக் காட்டியுள்ளார்.
"ஒரு சாதாரண எழுத்தாளனாக, சொற்பொழிவாளனாக இருந்தாலும், அறிஞர் உவைஸ் அவர்களுக்கு கடிதம் எழுதினால் அதற்கும் மதிப்பு கொடுத்து பதில் எழுதும் பண்பு அறிஞரிடம் உண்டு. அது மட்டுமல்லாமல் யாரும் தம்மிடம் வெளியில் கிடைக்காத அரிய நூல்கள் வேண்டி எழுதினாலும் தயங்காது, சிரமம் பார்க்காது கொண்டு வந்து தரும் உயர்ந்த குணத்தைக் கண்டு, கேட்டு வியந்த நிகழ்ச்சிகள் பல.
காரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் திறமைமிக்க தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருக் கும் அன்பர் ஜனாப் எஸ்.ஏ.கமால் அப்துல் காதிர் எம்.ஏ., பி.எட்., அறிஞர் உவைஸ் இஸ்லாமிய சிற்றிலக்கிய மகாநாட்டில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார் என்பதை அறிந்தவுடன் தமக்கு எங்கும் கிடைக்காத சேகுனாப் புலவரின் புது குச்சாம் என்ற காப்பிய நூலை வேண்டி இலங்கைக்குக் கடிதம் எழுதி அனுப்பச் சொல்லி இருக்கிறார். முன்பின் அறிமுகமில்லா தவர் என்றாலும் அந்த அன்பு கட்டளையை ஏற்று, அந்த நூலை எடுத்து வந்து நேரில் கொடுத்த நிகழ்ச்சியை நன்றி உணர்ச்சியோடு மனம் நெகிழ்ந்து அன்பர் அப்துல் காதிர்
என்னைச் சந்தித்து சொன்னபோது, அறிஞர்மேல் நான்
வைத்திருக்கும் மதிப்பு மேலும் உயர்ந்தது."

Page 118
2O8
ஹாஜி சயீத் அவர்களின் இக்கூற்று உவைஸ் அவர்களின் உயர் பண்புகளைப் புலப்படுத்துகின்றது. ஹாஜி உவைஸ் அவர்களிடம் இயல்பாகவே அமைந்திருந்த இந்த பிறருக்கு உதவும் நற்பண்பை எடுத்துக் காட்டும் சம்பவங்கள் ஏராளம்.
இதைப் போலவே அறிஞர் உவைஸ் அவர்களிடம் காணப் பட்ட அடக்கம், கர்வமின்மை, பிறரை மதித்தல், விருந்தோம்பல், மார்க்கப்பற்று போன்றவற்றைப் பலர் பாராட்டிப் பேசியுள்ளனர்; எழுதியுள்ளனர். அவ்வளவு புகழ்ச்சிகளுக்கும் பாராட்டுக்களுக் கும் பொருத்தமானவரே அவர்.
பேராசிரியர் உவைஸ் எம் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ள பெருமகன்களில் ஒருவர். அவர் ஒரு பெரும் தமிழறிஞர். 'புதைப் பொருளாக குடத்து விளக்காகக் குன்றிப் பயனற்றுக் கிடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேடிப் பெற்று அவற்றை குன்றின் மேல் இட்ட தீபமாக ஒளிவீசச் செய்த மாபெரும் ஆய்வாளர். காத்திரமான கட்டுரைகள் எழுதி, தரமிக்க நூல்கள் பல இயற்றி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பால் உலகின் கவனத்தைத் திருப்பிய பேரறிஞர். மன்ற மேடைகளிலே, மகாநாட்டரங்குகளிலே சொற்பொழிவுகளாற்றி, ஆய்வுக் கட்டுரை கள் படித்து, சேகனாப் புலவர் மீதும் செய்குத் தம்பிப் பாவலர் மீதும், பிச்சை இப்ராஹிம் புலவர் மீதும் தக்கலை பீர் முகம்மது சாகிபு மீதும், வண்ணக் களஞ்சியம் மீதும் ஜவ்வாதுப் புலவர் மீதும் முஸ்லிம் மக்களைப் பிரேமை கொள்ள வைத்த பெருமகன். தன் முன்மாதிரிகளாலும், தான் வழங்கிய ஊக்கத்தினாலும் ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்துலக வேந்தர். தன் அறிவினால், தன் அடக்கத்தினால், தன் அன்பினால் அறிஞர் உலகை ஆட்கொண்ட பண்பாளர்.
இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு வளர்ச்சியிலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் டாக்டர் உவைஸ். ஒரு நூற்றாண்டுக்கு மேல் இலங்கையின் ஆட்சி மொழியாகவிருந்த ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களமே ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்ற போராட்டம் இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளிலே உக்கிரமும் உத்வேகமும் பெற்றபோது, இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமி ழைக் கைவிட்டு விட்டு சிங்களத்தையே தமது தாய்மொழியாக வும் போதனா மொழியாகவும் ஏற்பதே அவர்களது பாதுகாப்புக் கும் முன்னேற்றத்திற்கும் உகந்தது என்ற கருத்து சில முஸ்லிம் தலைவர்களால் முன்வைக்கப்பட்டபோது, அவ்வெண்ணப் போக் கினை எதிர்த்து, தமிழுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையே அமைந்திருந்த நெருங்கிய உறவைத் துண்டிக்க எக்காலத்திலும்

2O9
இடமளிக்கக் கூடாது என பிரச்சாரம் செய்த முஸ்லிம் அறிஞர்க ளுள் பேராசிரியர் உவைஸ் முக்கியமானவர் ஆவார். தமிழையே போதனா மொழியாக கொள்ள வேண்டும் என்ற கருத்தினையே பெரும்பான்மையான இலங்கை முஸ்லிம்கள் ஏற்றனர்.
தமிழுக்காக பிரச்சாரம் செய்த முஸ்லிம் அறிஞர்கள் தமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களில், இஸ்லாத் திற்கும் தமிழ் இலக்கியத்துக்குமிடையே ஸ்தாபிக்கப்பட்டிருந்த நெருங்கிய தொடர்பு, ஒன்றாகும். சிங்களத்தைப் போதனா மொழியாக ஏற்றால் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முதுசத்தைத் தாம் இழக்க வேண்டிவருமே என்ற அச்சம், இலங்கை முஸ்லிம்க ளைத் தொடர்ந்து தமிழையே தம் போதனா மொழியாக ஏற்க வைத்த முக்கிய காரணிகளில் ஒன்றென கூறலாம். இந்த இலக்கிய முதுசமோ முழுக்க முழுக்க பேராசிரியர் உவைஸ் அவர்களின் ஆய்வுகளாலும தேடலகளிலும் இஸ்லாமியச் சமுகத்திற்கு உணர்த்தப்பட்டதாகும். இந்த ரீதியில் பார்க்கும் போது அறிஞர் உவைஸ் அவர்களின் இலக்கியப் பங்களிப்பு விசாலமான ஒரு பரிமாணத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்; இலக்கிய எல்லை களைக் கடந்து இலங்கை இஸ்லாமியச் சமுகத்தின் பண்பாட்டு வளர்ச்சியிலும் அது கணிசமான செல்வாக்கினைச் செலுத்தியிருப் பதைப் பார்க்கின்றோம். எனவே இஸ்லாமியத் தமிழ் அறிஞர்க ளின் மத்தியில் அல்லாமா உவைஸ் பெற்ற கெளரவம் மிகப் பெரியதாகும். இதனால்தான் உவைஸ் எனும் அறிவுக் களஞ்சியத்தை
"பொங்கிடும் உணர்வினோடு பொலிவுறும் உவகையோடு மங்கள மாலை சூடி மணவறை காணும் பெண்போல் சிங்களத் தீவு பெற்ற செந்தமிழ்ச் செல்வனான எங்களின் உவைஸைப் போற்றும் இதயமே ஏற்றம் காணும்! மற்றவர் இலக்கியத்தில் மயங்கியே கிடந்த எம்மை உற்றவர் இலக்கியத்தின் ஒளியினால் விழிக்கச் செய்து பெற்றவர் மதலையர்தம் பெருமையை யுனரா நாளில் கற்றவர் வியக்கக் காட்டும் கலாநிதி உவைஸே வாழ்க! ஆய்ந்திடும் திறத்தினோடு ஆன்றவர் தரத்தினோடு பாய்ந்திடும் உணர்வினோடு பழமையில் புதுமைகாணத் தோய்ந்த நல் லிலக்கியத்தின் தொண்டுக்கே தன்னை ஈந்து ஆய்ந்திடும் பணியில் தேர்ந்த அறிவுசால் உவைஸே வாழ்க!

Page 119
210
நாடெலாம் சுற்றிச்சுற்றி நகரெலாம் அலைநதலைநது வீடெலாம் தேடித்தேடி முன்னவர் பாடித்தந்த ஏடெலாம் திரட்டிச் சேர்த்து இலக்கியச் செல்வமென்று நாடெலாம் போற்றத் தந்த நற்றமிழ் உவைஸே வாழ்க!
என வாயார வாழ்த்தியுள்ளார் யூசூப்-சுலைஹா எழில் வரலாற் றைத் தமிழ்க் காவியமாக தந்த கவிஞர் சாரண பாஸ்கரனார்.
அத்தீந்தமிழ்ப் பாவலரது அடியொட்டி, "அருளாளனே! அன்புடையோனே வல்லவனே! வாழ்வளிப்போனே நபி வழி நடந்து, தீன் முறை வாழும் பண்பாளர் பேரறிஞர் எம்.எம்.உ வைஸ் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பணி புரிந்து நலன் குவிக்க யா அல்லாஹ் நீ அருள் புரிவாய் என்ற வேண்டுதலோடு இந்நூலை நிறைவு செய்ய வேண்டுமென்றே நான் நினைத்திருந் தேன். ஆனால் இறைவனது நாட்டமோ வேறாக அமைந்து விட்டது. புத்தகத்தை அச்சிடுவதற்கு 1996 மே மாதத்தளவில் தமிழகம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பேராசிரியர் உவைஸ் அவர்களோ 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி காலை நான்கு மணியளவில் வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஉளன்.
தமிழகத்தில் நடக்கவிருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக டாக்டர் உவைஸ் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சென்றார். ஏற்கனவே கண் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர், சிகிச்சைப் பெறுவதற்காக கண் வைத்திய நிபுணரான நண்பர் ஒருவரைச் சந்திக்க, அவர் உடனடியாக சத்திரச் சிகிச்சை செய்ய வேண்டியதன் அவசியத்தை உவைஸ் அவர்களுக்கு எடுத்துரைத்தார். இது உவைஸின் குடும்பத் தினருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக சென்னை சென்றனர். உவைசுக்குச் சத்திரச் சிகிச்சையும் செய்யப் பட்டது. எழுபத்து மூன்றாம் வயதில் செய்யப்பட்ட கண் சத்திரச் சிகிச்சை; எனவே பேராசிரியர் உவைஸ் வெகு கவனமாக இருந்திருக்க வேண்டும். வாசிப்பு, எழுத்துப் பணிகளை முற்றாக ஒதுக்கிவிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து மாதங்களாவது பூரண ஒய்வு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரோ சத்திரச் சிகிச்சை முடிந்த ஒரு சில தினங்களுக்குள்ளேயே எழுத, வாசிக்க ஆரம் பித்து விட்டார். இது அவரது உடல் நிலையைப் பெரிதும் பாதித்தது.

2.
பேராசிரியரைச் சுகப்படுத்த செய்யக் கூடிய காரியங்கள் அத்தனையையும் அவரது பிள்ளைகள் எவ்வித குறைவுமின்றி செய்தனர். நேரம், பணம், தமது தொழில் எதனையும் அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. பெறக்கூடிய அத்தனை மருத்துவ ஆலோசனைகளும் பெறப்பட்டன. ஆனால் பேராசிரியரின் உடல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் எதுவும் ஏற்பட வில்லை. மார்ச் 25 ஆம் திகதி வபாத்தாகியும் விட்டார்.
நான் பெரிதும் மதித்த, விரும்பிய பேரறிஞர் உவைஸ் ஹாஜியார் வபாத்தாகிவிட்டார் என்ற செய்தி தொலைபேசி மூலம் அன்று காலை என்னை எட்டியபோது சொல்லொனா வேதனை என் இதயத்தைக் கெளவியது என்பது உண்மை. ஆனால் அச்செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கவில்லை. நான் இறுதியாக அம்மேதையைச் சந்தித்தது பெப்ரவரி முதலாம் அல்லது இரண்டாம் வாரத்திலாகும். அன்று பல விடயங்களைப் பற்றி அவர் என்னிடம் பேசிய போதிலும், அவரது உடல்நிலை கவலை தருவதாகவே இருந்தது. எனவே பேராசிரியர் அவர்களது வபாத்துச் செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்த வில்லை.
அல்லாமா உவைஸ் அவர்களின் வபாத்துச் செய்தி அதிர்ச் சியை ஏற்படுத்தாத போதிலும் என் இதயத்தில் ஒரு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நாடு ஒரு நல்லவரை இழந்து விட்டதே என்ற ஆதங்கம். எம் சமூகம் ஒரு பேரறிஞரைப் பறிகொடத்து விட்டதே என்ற ஆதங்கம். உவைஸ் எனும் அந்த உயர் பண்பாளரோடு இன்னும் சிலவாண்டுகள் பழகும் பெரும் வாய்ப்பு அற்றுப் போய்விட்டதே என்ற ஆதங்கம். அவரைப் பற்றிய இந்நூலை அச்சிட்டு முடித்து, ஒரு பிரதியை அவரிடம் காட்டும்போது அவரது அழகிய வதனத்திலே பரவும் மகிழ்ச்சி ரேகைகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்காது போயிற்றே என்ற ஆதங்கம். அவர் அதனை வாசித்து விட்டு, 'நன்றாக இருக்கிறது" என்று சொல்லுவதைக் கேட்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாது போயிற்றே என்ற ஆதங்கம்.
உள்ளத்தால் உயர்ந்தோர்கள், நல்லோர்கள், பெரியோர்கள் - இத்தகைய உன்னதமான மனிதர்களை, 'சரித்திர நதியின் அணைக்கட்டுக்கள், அனுபவக் கல்லூரியின் பேராசிரியர்கள், அறிவெனும் தந்தா விளக்கின் ஜுவாலைகள்' என வர்ணித்த கவிஞர் கண்ணதாசன், அத்தகைய உயர்ந்தோர்களின் ஜனனம் ஒரு பொது விசேஷமாகக் கருதப்பட்டதில்லையென்ற போதிலும்

Page 120
212
மரணமோ சரித்திரத்தில் மகத்தான மணிமண்டபமாகக் கருதப்படு கின்றது என்று அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தனது நூலில் கூறியுள்ளார்.
அம்மகா கவிஞனின் கூற்றில் பொதிந்துள்ள உண்மையை, பேராசிரியர் உவைஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தின் போது ஹேனமுல்லயில் வெகு நிதர்சனமாக காணக்கூடியதாக இருந்தது. ஜனாஸா நல்லடக்கத்தைப் பற்றி அல்ஹாஜ் எப்.எம். பைரூஸ் தினகரனில்" எழுதியிருந்த கீழ்வரும் செய்தி இதனை மிக அழகாக உணர்த்துகிறது.
"பேராசிரியர் அல்லாமா கலாநிதி அல்ஹாஜ் எம்.எம்.உ வைஸின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பாணந் துறை ஹேனமுல்லை பகுதியில் பெளத்த அன்பர்கள் பலரும் கூட தமது வர்த்தக நிலையங்களை திங்களன்று மூடினர். அல்லாமா உவைஸின் ஜனாஸாவை தமது சந்தைக்கடைப் பகுதி வழியாகச் சுமந்து வந்து மையவாடிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்ட னர். இதன்படி ஜனாஸா சந்தைப் பகுதியைச் சுற்றியே மையவாடிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பாணந்துறை வரலாறு காணாத அளவுக்கு பெரும் சனத்தொகையினர் நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந் தும் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கு பற்றினர். ஜனாஸாத் தொழுகையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெளத்த - முஸ்லிம் உறவை வளர்க்கப் பாடுபட்ட இந்த மாமனிதரின் 'மர்களி? இல்லம் சனவெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. பெளத்த குருமாரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். ஜனாஸா மர்கஸி இல்லத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட போது இலேசாக மழைத் தூறலும் விழுந்தது.'
ஆம், பேராசிரியரின் ஜனாஸா அவரது இல்லத்திலிருந்து முற்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த சில நிமிடங்கள் மாத்திரம் சிறு தூறல் மழை பெய்தது என்று கூட சொல்ல முடியாது; சின்னஞ் சிறிய மலர்களைத் தூவுவது போல சில மெல்லிய மழைத் துளிகள். ஈழத்து முஸ்லிம்களின் கலாசார வழக்கங்களுக்கு ஏற்ப தன் வீட்டு வைபவங்களுக்கு வருகை தரும் அதிதிகளைப் பன்னீர் தெளித்து வரவேற்ற பேராசிரியர்

213
உவைஸ் அவர்களை, வானவர்கள் பன்னீர் தெளித்து வானுலகிற்கு வரவேற்கின்றார்களோ என்ற ஐயப்பாட்டையே, உவைஸ் அவர்க ளின் ஜனாஸா வெளியே கொண்டுவரப்பட்ட வேளையிலே விழுந்த அந்த இளம் தூறல் என் நெஞ்சத்தில் எழுப்பியது.
ஹேனமுல்ல முஸ்லிம் மையவாடி, அங்கே நிரம்பி வழிந்த சனக் கூட்டம். உறவினர்கள், ஊரார்கள், பிற ஊர்களைச் சேர்ந்தவர் கள், பேராசிரியர் உவைஸ் அவர்களோடு நெருங்கிப் பழகியவர் கள்; உவைசுக்கு யாரென்றே தெரியாதவர்கள்; பட்டங்கள் பல பெற்றவர்கள்; சாமான்யமானவர்கள்; உயர் பதவிகள் வகிப்போர் கள்; புகழ்ப்பெற்ற பெரும் வர்த்தகர்கள்; அரசியல்வாதிகள்; இலக்கிய ஆர்வலர்கள்; சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள்; முதிய வர்கள்; இளைஞர்கள் - இப்படி பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய சனக்கூட்டம்.
இறுக்கமான சூழ்நிலை. எல்லோர் முகங்களிலும் சோகம்; உள்ளங்களில் பெருங் கவலை. "உவைஸ் வபாத்தாகிவிட்டாரே! ஐயோ பாவம்' என்ற உணர்வில் தோன்றிய கவலையல்ல அது. அறிஞர்களால் பெரும் மேதையென போற்றப்பட்டு, உள்நாட்டி லும் வெளிநாட்டிலும் பல உயர் பதவிகள் வகித்து பெருவாழ்வு வாழ்ந்தவர் டாக்டர் உவைஸ். அறிஞர் அல்ஹாஜ் ஜெமீல் மிகப் பொருத்தமாக சுட்டிக் காட்டியிருப்பது போல
"உடமையிற் பணத்திற் சாதி உயர்ச்சியில்
வணக்கந்தன்னில்
மடைமையில் அழகில் ஒவ்வா மாட்சியில்’ சிறந்து விளங்கிய ஓர் உன்னதமான பெண்மணியைக் கரம் பிடித்து, நாற்பத்திரண்டு ஆண்டுகள் 'அறனிழுக்கா இல் வாழ்க்கை" சுகித்து மன அமைதி கண்டவர் அவர் முகம்மது அஹ்ஸன், பாத்திமா நிலுரபர், அகமது அஜ்மல் இஸ்பஹானி, முகம்மது அஹ்கம் ஸப்ரி, முகம்மது அர்ஷத் உஸ்ரி என்ற பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, அவர்களை முறையாக வளர்த்து, தகுதி மிகு குடும்பங்களிலே அவர்களுக்கு வாழ்க்கைத் துணைகளைத் தேடிக் கொடுத்து, அவர்கள் அத்தனைப் பேரும் அல்லாஹ்வின் பெருங்கருணையால் சீரும் சிறப்புமாக வாழ்வ தைக் கண்டு களித்தவர் அவர் முகம்மது பஸ்னி, மஹ்மூது ஹ"ஸ்னி, மஹ்மூத் ருஸ்ணி என்னும் பேரர்களையும், பாத்திமா ரிஸ்வியா, ஆயிஷா ஷஹானி, சித்தி மஸாஇமா, பாத்திமா பர்ஸியா, ஜைனப் களிமா, ஜைனப் மர்யம் என்னும் பேத்திகளை யும் நெஞ்சார கொஞ்சி ம்கிழும் பாக்கியம் பெற்றவர் அவர்.

Page 121
214
இஸ்லாமிய நெறி பிரளாது வாழ்ந்தவர் டாக்டர் உவைஸ். இருமுறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவர் அவர். தமது வாழ்நாளில் எவரையும் என்றும் நோவித்திராதவர் அவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் அவர் தான் மரணப்படுக்கை யில் இருக்கும் போதும் கண் கலங்கும் தன் மனைவியைப் பார்த்து, 'போனால் போகட்டும் போடா - மற்ற அடி தெரியும் தானே?' என்று ஹாஸ்யமாக பேசக் கூடிய மனத் திண்மையுட னும் உறுதியான ஈமானுடனும் வாழ்ந்தவர் அவர் மறை வழி ஒழுகி, மாநபி வழி நடந்த முகம்மது உவைஸ் என்ற அந்த அழகிய முஸ்லிமின் மறுமை வாழ்க்கை, மாண்புமிகு அவரது இம்மை வாழ்விலும் பார்க்க பன்மடங்கு உயர்வானதாகவே, சிறப்பானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை, அவரைத் தெரிந்த, அவரோடு பழகிய அத்தனை அன்பர்களது மனங்களிலும் நிறைந்தி ருக்கும் போது 'உவைஸ் வபாத்தாகி விட்டாரே! ஐயோ பாவம்' என்று அங்கலாய்ப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லையே?
எனவே அன்று ஹேனமுல்ல மையவாடியில் குழுமியிருந்த வர்களின் உள்ளங்களிலும் வதனங்களிலும் நிலவிய பாரிய சோகத்திற்கு அடிப்படையாக இருந்தவை வேறு வகையான உணர்வுகளே. ஹேனமுல்ல வாழ் மக்கள், தமது ஊரை மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தக் கூடிய ஒரு மாமனிதரைக் காலன் கவர்ந்து விட்டானே என கண் கலங்கினர். பேராசிரியரை நன்கு அறிந்தவர்கள் நாடு எத்தகைய தோர் நல்லவரை இழந்து விட்டது என்று கவலையுற்றனர். தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் தமிழ்க் கூறும் நல்லுலகம் ஓர் உயர் தமிழறிஞரின் சேவையை இழந்து விட்டதே என்று வியாகூலம் அடைந்தனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள், உவைஸ் எனும் மாபெரும் ஆய்வாளரின் மறைவு அவ்விலக்கியத்தின் அசுர வளர்ச்சி வேகத்தைக் குறைத்து விடுமோ என அஞ்சினர். மனித பண்புகளுக்கும் உயர் விழுமியங் களுக்கும் முக்கியத்துவம் நல்குபவர்கள் பண்புமிகு ஒரு பெருந்த கையை இழந்து விட்டோமே என்று மனம் வருந்தினர்.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் வபாத்து தமிழ் இலக்கியத் திற்கு ஏற்படுத்திய நஷ்டம் எத்துணை பாரியது என்பதை "தமிழ் வெள்ளம் இந்த அல்லாமா' என்ற தலைப்பில் 'தினகரன்' நாளிதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தின் கீழ்வரும் பகுதிகள் நன்குணர்த்துகின்றன. 扈。,
'ஒரு வரலாறு வற்றி விட்டது. கலாநிதி உவைஸின் மறைவை இப்படித்தான் வர்ணிக்கலாம். மறைந்து போயி

215
ருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செழுமைகளை யெல்லாம் தேடியெடுத்துத் தூசு தட்டி முழு உலகுக்கும் வெளிக்கொணர்ந்த மாபெரும் இலக்கியக் கடல் அவர். இந்த நாட்டில் பேசப்படும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளோடு அரபு, சமஸ்கிருதம் ஆகியவற் றிலும் பாண்டித்யம் பெற்றிருந்த இந்தப் பேரறிஞரை மரணம் காவு கொண்டு விட்டது. தமிழன் மட்டும்தான் தமிழ் இலக்கியத்துறையைச் செழு மைப்படுத்தினான் என்று கரடி விட்ட கபோதிகளுக்கு இஸ்லாமியத் தமிழின் இலக்கியச் செழுமையை இடித்துக்
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியராக, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முதல் தலைவராக, பல்கலைக்கழகங்களில் பகுதிநேர விரிவுரை யாளராக, இஸ்லாமியக் கலை, இலக்கிய பாடநூல் வெளியீடுகளின் ஆசானாக, தமிழாராய்ச்சி மாநாடுகளி லும் முன்னோடி உழைப்பாளியாக, காமராஜர் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராகப் பரந்த முனைகளில் சேவையாற்றியவர் அவர் இஸ்லாமியர்களும் தமிழர்களா? அவர்களும் தமிழ்த் தொண்டாற்றினார்களா? என்று நெற்றிக் கண்ணை விரித்துக் காட்டி கேட்டவர்களுக்கு, தன் திறமையால், இலக்கியச் செழுமையால் தலையில் போட்டுக் காட்டிய இப்பெருந்தகை, தமிழ், சிங்கள மக்களின், இலக்கியச் செழுமையின் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்தார். ஒன்று இரண்டல்ல, எழுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார்.
சுவாமி விபுலானந்தருக்குப் பின் இந்தியப் பல்கலைக்கழ கமொன்றினால் கெளரவிக்கப்பட்ட இலங்கையரான இந் தப் பேரறிஞர் சாகமாட்டார். அவரது எழுத்துக்கள் என்றும் அவரது உயிர் மூச்சை வெளிப்படுத்திக் கொண் / டேயிருக்கும்.'
தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் அளப்பரிய தொண்டட்ாற் றியுள்ள பேராசிரியர் அல்ஹாஜ் முகம்மது உவைஸ் அவர்களைப் பற்றிய நியாயமான, ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய மதிப்பீடாக இவ்வாசிரியத் தலையங்கம் அமைந்துள்ளது.

Page 122
216
தமிழ் இலக்கியம் வாழும் வரை அல்லாமா உவைஸின் நாமமும் வாழும். அவர் எழுதியுள்ள அருமையான நூல்கள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும். பேராசிரியர் உவைஸ் வீதி என அவரின் வபாத்துக்குப் பின் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரப், திரு. மகிந்த ராஜபக்ஸ் எனும் இரண்டு அமைச்சர்களின் முன்னிலையில் பெயர் சூட்டப்பட்ட வீதி - அறிஞர் உவைஸின் இல்லத்தைச் சுற்றி ஒடும் வீதி - அம்மண்ணின் பெரு மைந்தன் மகுமுது முகம்மது உவைஸின் புகழைப் பாடிக் கொண்டே ஓடும். தக்வாதாரி ஹாஜி உவைஸ் அவர்களின் ஆத்மார்த்தமான ஆசைக்கிணங்க, அவரின் பிள்ளைகள் முன் நின்று பெரும் பொருட் செலவில் ஹேனமுல் லையில் நிர்மாணித்திருக்கும் அழகிய ஜும்ஆ பள்ளிவாசல் உவைஸ் ஹாஜியார் அவர்களின் இறை நேசத்துக்கும், அவரின் பிள்ளைகள் அவர்மீது கொண்டுள்ள மரியாதைக்கும் சான்றாக நிற்கும்.
அருளாளனே! அன்புடையோனே! நீ வழங்கிய வேத நெறிக ளுக்கேற்ப வாழ்ந்தவர் பேராசிரியர் உவைஸ். உனது அருமைத் திருத்தூதரின் அழகிய முன்மாதிரிகளைப் பின்பற்றி வாழ்ந்தவர் அவர். எனவே எம் இறைவா! உன் அடியார் உவைஸின் நல் அமல்களை ஏற்றுக் கொள்வாயாக! அவரின் பாவங்களை மன்னித் தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும் அவரைக் காத்தருள் வாயாக! உன் அருளால் உன் வேதனையடங்களை விட்டும் பயமற்றிருக்கும் தன்மையைக் கொடுத்தருள்வாயாக. அவரின் குடும்பத்தவர்களின் சகல கருமங்களிலும் உதவியாக நீ இருப்பா யாக! யா அல்லாஹ் உன் மேலான சுவன வாழ்வை அவருக்கு வழங்குவாயாக! கிருபையாளனுக்கெல்லாம் கிருபையாளனே! அவருக்கு உன் அருளை அளித்திடுவாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
 

■*

Page 123
談
னாரின் சக கால மான தன், செங்கை ஆழியான் ம்நாதன், செம்பியன் ଗ4 பல இலங்கை எழுத்; இந்நூல் மூலம் ஜனாப் இவர்கள் வரிசையில் இ ஆசிரியர் ஏற்கெனவே ம லிம்களின் வரலாறு, சுபைர் ஆகிய திகழ்ந்தவர்.
ஜனாப் ஃபுவாஜி லாற்று ஞானம் படைத் தன் மெளனத்தின் ( பெருப்பித்து விசாலப் வர். ஆய்வு நூல்கை மட்டுமல்ல எழுதவும் கையதொரு பயன்தரு
 

மாத்தளை சாகிராக் மலூரியில் அதிபராகக்
மை புரி ந்து ஓய்வு பற்ற ஜனாப் ஃபுவாஜி வர்கள் பல்கலைக்கழ கதுப் பட்டதாரி., அன் வர்களாக செ.யோகநா ஈ, மௌனகுரு கதிர்கா சல்வன் ஆகியோர் பிர தாளராக விளங்கினர். ஃபுவாஜி அவர்களும் ணைந்து கொள்கிறார். எத்தளை மாவட்ட முஸ் கவிமணி எம்.சி.எம். டுகளின் ஆசிரியராகத்
அவர்கள் ஆழமான வர தவர். அமைதியானவர். மூலம் சிந்தனையைப் படுத்தக் கற்று வருப் எத் தேடிப் படிப்பது ஆர்வமுள்ளவர். அத்த ம் படைப்பே இந்நூல்.
டொமினிக் ஜீவா