கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமண பந்தத்தில் கணவன் மனைவி

Page 1


Page 2
事

திருமண பந்தத்தி - கணவன் மனைவி
ता।
எண்
வரவு' 11
* エ
வெளியீடு: மறுமலர்ச்சி ஒன்றியம் - இறக்காமம்.
\\n o

Page 3
Asaf سابقت es
\ ÙկՀ
ஆசிரியர்
ஆசிரியர் முகவரி
எழுத்தளவு
பதிப்பகம்
பக்கங்கள்
உரிமை
பிரதிகள்
9h eoLIULib
கணனி வடிவமைப்பு
*
; ;
2003 ஏப்ரலி
கலையரசன் (சுலெ, லரீப்)
236, பாடசாலை வீதி
இறக்காமம். தொலைபேசி: 063 - 23161.
11 புள்ளி
செலக்ஷன் ஒப்செட் - அக்கரைப்பற்று. 99 + iy
ருக்கே.
800
easib N.T.
ஸ்பீட் கிரஃபிக் லேன்ட் - அக்கரைப்பற்று.
வெளியீடு மறுமலர்ச்சி ஒன்றியம்,
85ÊmpéisesTuDib.
விலை Price 100/-
வகுப்பு
GTS
{ | |
• *Ta! !!g 1. U
எண்
 

முதெங்களை ரு கொடி நிழலில்
ாண்டமர்த்தி

Page 4
அணிந்துரை
“உங்களுடைய மனைவியர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்; (அதேபோன்று கணவர்களாகிய) நீங்கள் உங்கள் மனைவியருக்கு ஆடை போன்றவர்கள்.” என்று புனித திருக்குர்ஆன் கூறுகின்றது. ஒருவருடைய நிர்வாணத்தை எவ்வாறு ஆடை மறைக்கின்றதோ, அவ்வாறே கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவர் மற்றவருடைய கற்புநிலையைத் திருமணத்தொடர்பினால் பாதுகாத்துக் கொள்கிறார்கள். உடலுக்கு ஆடை சுகம் தருகின்றது. அதைப் போன்றே ஒரு கணவன் தன் மனைவியின் தோழமையில் சுகம் பெறுகின்றான். அவ்வாறே மனைவியும் தன் கணவனுடைய தோழமையில் இன்பம் அடைகின்றாள்.
மேலும், “பெண்கள் உங்களில் சரி பாதியானவர்கள்’ என்று பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இல்லற வாழ்வு என்றும் இனிமையானது. இதில் ஏற்படும் பிணக்குகள் யாவும் பேசித் தீர்க்கக் கூடியவைகளே. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், ஆண் பெண்ணாகிய இரு பகுதியினரிடமும் இருக்குமேயானால், திருமண வாழ்வு சொர்க்கபுரியாகவே இருக்கும்.
“திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இன்பம் அனுபவிக்காதோர் என்னைச் சார்ந்தவர்களல்ல” என்று நபிகள் பெருமானார் நவின்றுள்ளார்கள். இதிலிருந்து இல்லற வாழ்வின் சிறப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். உல்கம் வாழ்வதற்கு மூல காரணம் திருமணம் என்றால் அது மிகையாகாது. இறைவன் மனிதனுடைய நலனிற்காக, மனிதகுலத்தை வாழ்விப்பதற்காக, அவனுடைய இன்ப துன்பங்களில் பங்கு பெறுவதற்காக, அவனுக்குத் துணை நிற்பதற்காகப் பெண்ணை உலகில் படைத்துள்ளான். இப்பெண்களை அழகின்திருவுருவாக, அன்பின் இருப்பிடமாகப் படைத்து, இல்லற வாழ்வில் இனிய சுகங்களை அனுபவிக்க, மனித இனத்தை அவன் தூண்டிக் கொண்டிருக்கின்றான்.

உலகப் புகழ்பெற்ற கவிஞன் மில்ட்டன் “பெண்மை; படைப்புகளிலெல்லாம் அழகானது, இறுதியானது, மேலானது” என்று உள்ளங்கனிந்து புகழ்கிறான்.
இவ்வளவு சிறப்புக்கள் பொதிந்துள்ள திருமண வாழ்வு பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும், அதனூடே எழும் சுழிவு நெழிவுகள் பற்றியும் அன்பர் கலையரசன் ‘திருமண பந்தத்தில் - கணவன் மனைவி' எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் ‘கடுகு சிறிதானாலும் காரம் பெரிது’ என்னும் பழமொழிக்கேற்ப கருத்தாழமும், சுவையும், நல்ல எடுகோள்களையும் கொண்டதாக இருக்கின்றது. இது, வாசிப்போர்களுக்கு நல்ல பயன்களைக் கொடுக்கும் என்பது என் அசையாத நம்பிக்கையாகும்.
இல்லற வாழ்வு என்பது ஆழம் காண முடியாத சமுத்திரம் போன்றது. இது பற்றி, எத்தனையோ அறிஞசர்களும், ஞானிகளும், எழுத்தாளர்களும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறார்கள். இந்நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புக்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக புனித திருக்குர்ஆனும், நபிகள் ருெமானும் திருமணம் பற்றி தெளிவுறக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இந்நூல், இல்லறம் புகும் இளம் மணமக்களுக்கு நல்ல பயன்களைக் கொடுத்து மணவாழ்வு சிறப்புற உதவுமென்று நம்புகின்றேன். இந்நூலை எழுதிய எழுத்தாளர் கலையரசன் பாராட்டுக்குரியவர். இவர் வருங்காலத்தில், இதைப் பார்க்கிலும் நல்ல இறுக்கமான, ஆழமான கருத்துக்களையும், விளக்கங்களையும் கொண்ட நூல்களை படைத்தளிக்க வாழ்த்திப் பிராத்திக்கின்றேன்.
எஸ். முத்துமீரான் தாஜூல் அதீப், கலாபூஷணம், தமிழ் மாமணி, சட்டத்தரணி

Page 5
ஆசிர்வாதம்
கிழக்கு மாகாணத்திலே இறக்காமத்தில் கவிதை நூல்கள் நிறைய வெளி வந்திருக்கின்றன.
எழுத நினைக்கின்ற எல்லோருக்கும் கவிதை கைவந்த கலையாகி விடுகின்றது. உரைநடை இலக்கியங்கள் அருகிவிட்டன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பதுபோல், பேனா எடுத்தவன் எல்லாம் கவிதை எழுதத்தொடங்கிவிட்டான். ஒருசிலரின் படைப்புக்கள்தான் கவிதை என்ற வரம்புக்குள் இருக்கின்றன.
"கலையரசன்’ என்கின்ற இளம் படைப்பாளி, எதிர்காலத்தில் சிறப்புக்குரிய எழுத்தாளராக மிளிர்வார் என்பது அவரின் எழுத்துக்களை நுகர்வோருக்கு விளங்கும். பிரபல தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சொல்லுகின்றார் நூறு படைப்புக்கள் காரியாலயத்திற்கு வந்தால் அதில் தொண்ணுாறு கவிதைகளாக இருக்கின்றன ஐந்து சிறுகதைகளாக இருந்திருக்கின்றன இரண்டு தொடர்கதைகளாக இருக்கின்றன. பாத்தீர்களா?
இன்னும் கொஞ்சநாட்கள் சென்றால் உரைநடை இலக்கியங்கள் படைப்பதற்கு ஆட்களே இல்லாமல் போய்விடும். தற்போது எழுதப்படுகின்ற கவிதைகளைப் போல் லேசுபட்ட காரியமல்ல உரைநடை இலக்கியம். இதனை "கலையரசன்' போன்ற ஆற்றல்மிக்கோரால்தான் படைக்கமுடியும்.
எதிர்காலத்தில் நிச்சயம் அவர் புகழ்பெறத்தான் போகின்றார். கலையரசனே எழுத்துலகிற்கு நீ அரசனாக வாழ்த்தி, விடைபெறுகின்றேன்.
- ஒலுவில் அமுதன் -

சொந்தக்காரர்கள்.
மனதில் தோன்றுவதையெல்லாம் கவிதைகளாகவும், காவியங்களாகவும் படைத்துவருகின்றார்கள் இலக்கியவாதிகள். இன்று, இலக்கியவாதிகளுக்கும், நூல்களுக்கும் பஞ்சமில்ல்ை நாளுக்குநாள் குவிந்து கொண்டு வருகின்றன. அதனைப்படித்து நன்மைபெறுகின்ற வாசகள்களைத் தேடுவதில்தான் பஞ்சம்.
வாசகள்கள் நூல்களை மனங்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், அவர்களின் அறிவுகளாலும், இலட்சியங்களாலும் எங்கேயோ சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி ஒருகுறை
மனித சமூதாயத்தில் நடைபெறுகின்ற உண்மைச் சரித்திரங்களை எழுதி, மக்களுக்கு உணர்த்துவதில் எழுதுகோலுக்கு வரம்புமீறிய விருப்பம். அதைத்தான் எனது படைப்பும் ஒப்புவிக்கின்றது.
நன்றாக முற்றிப் பழுத்து அனுபவித்த எழுத்தாளனுமில்லை; இடையில் வெம்பிப் பழுத்து தலை தெறிக்க உரை நிகழ்த்தும் அரசியல் வாதியுமில்லை; வயது முதிர்ந்து திராணி பெற்ற மேதையுமில்லை. சொல்லப் போனால் மக்கள் என்ற சமுத்திரத்திற்கு நல்லவைகளை எழுதிப்போடும் ஒரு சாதாரண சமூகத்தொண்டன். அவ்வளவுதான்
சஞ்சிகை என்ற ஒரு துளியில் கால்மாத்திரைபதிக்க மைதொட்ட இறகு, இம்மாத்திரம் வரையும் கொண்டமர்த்தியிருக்கிறது என்றால், என் வாசகர்களினது அங்கீகரிக்கப்பட்ட ஆசிர்வாதங்கள்தான் காரணம்.

Page 6
கணவன் மனைவி - குடும்ப வாழ்வின் இரு திசைகளையும் கண்டவன் நான். அதிலும் குறிப்பாக இடர் பட்டு தடம் புரளும் காட்சிகளே கண்டதில் அதிகம்!
திருமணவாழ்வை நைல் இடர்படுபவர்களுக்களுக்கு இன்னுமொரு
திருமணவாழ்வை நையாண்டி பண்ணுகின்றவர்களுக்கு இந்நூல் சவாலாக அமைவதுடன், இல்லறவாழ்வில் இடர்படுபவர்களுக்கு முன்மாதிரியாகவும், முழு ஆசானாகவும் இருப்பதுடன், இடர்பாடுகள் அல்லாதவர்களுக்கு இன்னுமொரு படிதாண்டி மெருகூட்டும் கூரிய ஆயுதம் என்பதில் பொய்யில்லை. சொல்லப்போனால் சம்பூரண வாழ்வுக்கு இது ஒரு வழிகாட்டி!
உரை நடை இலக்கியத்தின் வரம்பைவிட்டும் தூர நின்று கையசைக்கின்ற பாமர நெஞ்சங்களையும் இந்நூல் சென்றடைய வேண்டுமல்லவா? அதற்காகத்தான், மிக எளிய வசன நடையிலும், பொருள் வடிவிலும் சிறுசிறு பகுதிகளாக ஒருங்கமைத்து தொட்டுத் தொட்டு வைத்திருக்கின்றேன்; சில சம்பவங்களை திரைப்படங்களைப் போன்று படம் பிடித்துக் காட்டியும் இருக்கின்றேன்.
இதனை மணமக்கள் தனது அன்றாட வாழ்வில் கையாண்டு வருவார்களேயானால், முதுமை என்ன? இறப்பு வரையிலும் அவர்களது மணவாழ்வு மங்களகரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்நூல் திருமணமானவர்களுக்கு மாத்திரமல்லாது, எதிர்கால மணமக்களுக்கும் கூடிய பயன்களை அள்ளி வீசும் என்பது எனது கருத்து.
இந்நூல் வெளியீட்டுக்கு பலரது உதவிகளும் எனக்குத் தேவைப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ, எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் (சட்டத்தரணி) அவர்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் என்ற வரிசையில்; எஸ். முத்துமீரான், ஒலுவில் அமுதன், அன்புடீன், எம். முஹம்மட்தம்பி, ஏ. நளீம், யூ.எல்.எம். ஜிப்ரி, கணனி வடிவமைப்பு ஸ்பீட் கிரஃபிக் லேண்ட் அ.பற்று
ஆகியோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
- கலையரசன் இறக்காமம்

திருமண பந்தத்தில் - கணவன் மனைவி
மணவாழ்வு மங்கள் கரமானது! மணம் வீசக்கூடியது!
மனிதன் பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட சில ஆண்டுகாலங்கள் வரைக்குந் தான் அவனோ அவளோ தனித்து வாழ வேண்டியிருக்கின்றது. குறிப்பிட்ட காலங்களை தாண்டுகின்ற போது - அதுதான் பருவகாலத்தை எட்டிப்பிடிக்கின்ற போது, ஓர் ஆணும் பெண்ணும் உரிய முறைப்படி பெரியவர்களால் முத்திரை குத்தப்பட்டு சட்டப்படி கணவன் மனைவி என்கின்ற சுற்றுவட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றார்கள். இப்போதுதான் அவர்களுக்கு கூட்டுவாழ்க்கை ஆரம்பிக்கின்றது.
கணவன் மனைவி ஒருத் தருக் கொருத் தர் உதவியாளர் களாகவும், பாதுகாவலர் களாகவும் , இன்பதுன்பங்களில் பங்கேற்றவர்களாகவும், உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும் மதித்து பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருந்து, பிள்ளைகள் பெறுவது முதல், கணவன் - மனைவி - பிள்ளைகள் - குடும்ப வாழ்வில் எந்த நேரமும் மகிழ்ச்சி பொங்கவும், மணம் வீசவும் விதைக்கப்படுகின்ற விதைதான் திருமணம்.
திருமணத்திற்கு பிறகுதான் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கை என்பதே ஆரம்பிக்கின்றது. உலகத்தைப்பொறுத்த மட்டில் திருமண வாழ்வுக்குத்தான் நீண்ட ஆயுள்; நீண்ட பயணம். மணம் வீசி எழுகின்ற திருமணத்தையும் அதில் குடிகொண்டு வாழத் துடிக்கின்ற மணமக்களையும் நோக்கி, (01)-
கலையரசன்

Page 7
‘வாழ்க்கை’ என்ற பாடம் படிப்பினை காட்ட நினைக்கின்றது; போதனை செய்யவும் துடிக்கின்றது. அதனை தேடிப்படிப்பதிலும், அதன்படி ஒழுகுவதிலும்தான் மணமக்கள் அதிக கவனம் எடுப்பதில்லை. அதில்தான் பல சிக்கல்களையும் எதிர்நோக்குகின்றார்கள்.
சாதாரண ஒரு பட்டம், உத்தியோகம் எடுப்பதற்காகவேண்டி எத்தனை ரூபாக்களையும், கால நேரங்களையும் செலவு செய்கின்றோம். ஆனால், நீண்ட கால வாழ்வுக்கு - அதுதான் கணவன் மனைவி இல்லறம் பற்றி படிப்பதற்கும், நடப்பதற்கும் எவ்வளவு ரூபாக்களை செலவு செய்கின்றோம்? என்று பார்த்தால், விடை பூச்சியம்.
திருமணத்தைப்பற்றி கேட்டால் சிலர் நையான்டியாக பேசுவார்கள்:
0 திருமணமா? அது ஒரு சிறைத் தண்டனை.
0 திருமணமானால் அவர் சிறைக்கைதிதான்.
என்ற விளையாட்டுப்பேச்சுக்களால், மணவாழ்க்கையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஆடவர்களையும், மங்கையர் களையும் நம்பவைக் கலின்றார்கள். சிலருடைய மண வாழ்வைக் கண்டு இவர்கள் எதிர்காலம் பற்றி அச்சம் கொள்கின்றார்கள்.
அச்சம் கொள்ள தேவையில்லை! மணவாழ்க்கை இலகுவானது; இனிமையானது; நீண்டகாலம் நிலைத்துநின்று ஒளிவீசக் கூடியது. இதனை மணமக்கள் கைநழுவ விடுகிறார்கள். அதனாலேதான், இன்று எத்தனையோ மணவாழ்க்கைகள் சீர்குலைவதிலும், விவாகரத்து செய்வதிலும் திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

நாளுக்கு நாள் குறைவுபடாமல் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை. கணவன் மனைவிக்குள் பொறுமை இல்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லை. சரியான புரிந்துணர்வுகள் இல்லை. அணுகு முறைகள் தெரியாது. அன்புறவுகளில் சோம்பேறிகளாகவும், அலட்சியம் செய்தவர்களாகவும் இருந்து விடுகிறார்கள். வீணான சந்தேகங்கள். அத்துமீறிய கோபதாபங்கள்.
இன்னும், இதுபோன்ற எத்தனையோ காரணங்களால் இன்று அடிக்கடி மணமக்கள் சீர்குலைவதும், பல்வேறு திசைகளில் பிரிந்து வாழ்வதும் பிரபல்யமாகிவிட்டன. எது எப்படி இருந்தாலும், கணவன் மனைவி இல்லற வாழ்வுக்கு தனி அர்த்தம் ஒன்று இருக்க வேண்டும். அர்த்தம் இல்லாத வாழக்கை; குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வெறுமனே ஆலம்பழத்தை போன்றதுதான்.
அது அப்படி இருக்க. இன்று, கணவன் - மனைவிக் களிக்கின்ற கடமைகளை தவற விடுவதினாலும், மனைவி - கணவனுக்களிக்கின்ற கடமைகளை தவறவிடுவதினாலும் கணவன் மனைவிக்கிடையில் நாள்தோறும் எழுகின்ற சிறுசிறு பிரச்சினைகளையும், மனக்கசப்புகளையும், அதனோடு ஒட்டிய சில ஆலோசனைகளையும் சிறிது கவனிப்போம்.
கலையரசன்

Page 8
குடும்பத்தலைவனே. தலைமகனே.
ஒரு பெண் அவளது பிறந்த வீட்டை விட்டு கணவன் வீடு நோக்கி காலடி எடுத்து வைக்கின்ற போது - சிறு அச்சத்துடனும், நீண்டதோர் எதிர்பார்ப்புடனுந்தான் வரநினைக்கிறாள்.
சிறு அச்சம் என்கின்ற போது - எனது வாழ்க்கை எப்படி அமையப்போகின்றது? எனக்கு கிடைக்க வரும் கணவர் நல்லவராக இருப்பாரா? கணவனது உறவினர்கள் என்னை கவனித்துக் கொள்வார்களா? என்பதுதான் அந்த அச்சம்.
நீண்ட எதிர்பார்ப்பு என்பது - வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும், கணவன் என்னை உயிருக்குயிராக நேசிக்கவேண்டும், அன்பு காட்ட வேண்டும், கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும், பிள்ளை குட்டிகள் பெற்று வாழ்க்கையின் முழு இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும், கணவனுக்கும் எனக்கும் இடையில் எந்த விதமான சண்டை சச்சரவுகளும் இடம்பெறாமல் இரு கண்கள் போலவும் ஒன்றாக இருந்திட வேண்டும், வாழ்நாள் பூராவும் கணவன் மடியில்தான் கண்ணுறங்க வேண்டும் - என்கின்ற அளவில்லாத ஆசைகளையும், கற்பனை கனவுகளையும் தன்மனதில் சுமந்துகொண்டுதான் கணவனே! உங்களை தேடிவருகின்றாள்; உங்களின் தாலிக்கயிற்றுக்கு கழுத்தை நீட்டுகின்றாள் அந்தப்பெண்
இப்பொழுது அவள் உங்களின் மனைவி. உங்கள் மனைவியின் எதிர்பார்ப்புக்களையும், ஆசைகளையும்,
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி --

கடமைகளையும் நீங்கள் எப்படிச் செய்ய வேண்டும்? உங்களை நம்பி வந்த மனைவியை வாழ்க்கை பந்தலில் வைத்து எப்படி வாழ்க்கை நடாத்துகின்றீர்கள்? என்பதை, ஒரு கணம் யோசனை செய்து பாருங்கள்.
தலைமகனே! திருமணம் செய்து ஒருவருடமோ, இரண்டு வருடமோ மனைவி மீது அளவில்லாத அன்பும், பிரியமும் வைத்திருந்து மனைவியின் சொற்படி அவளின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற வாழ்க்கை நடாத்திய நீங்கள், அதன் பின்னர் எப்படி மாறிவிடுகின்றீர்கள்? உங்களது கவனிப்புகளும், அணுகுமுறைகளும், பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் எங்கனம் மாறிவிடுகின்றன? என்பதை எண்ணிப்பார்க்கின்ற
கவலைப்படுவதைத் தவிர வேறு வழிஇல்லை.
தொழில் விடயமாக காரியாலயம் என்றும், விவசாயம் என்றும், வியாபாரம் என்றும் காலையில் வீட்டை விட்டு வெயியேறுகின்ற நீங்கள், பகல் முழுவதும், இரவு முழுவதும் காலத்தை தொழில் விடயங்களிலேதான் கூடியளவு களிக்கின்றீர்கள் - மனைவி மக்களையும், அவர்களின் அபிலாசைகளையும் எளிதில் மறந்துவிடுகின்றீர்கள். வீடு ஒன்று இருக்கின்றதே, வீட்டில் மனைவி ஒருத்தி வழிமேல் விழி வைத் து காத் தரிருக் கலிறாளே, பசிபட் டினியுடன் அமர்ந்திருக்கிறாளே, வேலைமுடிந்தவுடன் வீடுதிரும்பவேண்டுமே, வீட்டுக்கு தேவையானதையும், மனைவி மக்களுக்குத் தேவையானதையும் வாங்கிச்செல்ல வேண்டுமே - இது போன்ற இன்னும் எத்தனையோ எண்ணங்களையும், கடமைகளையும் சில கணவர்கள் மறந்துவிடுகின்றார்கள் - மறந்துவிடுகின்றீர்கள்.
கலையரசன்

Page 9
மணமகனே! கணவன், மனைவிவிடயத்தில் "பூரண கவனம்” செலுத்துதல் வேண்டும். "பூரண கவனம்” என்ற பதத்தினுள் நிறையக்கருத்துக்களும், விடயங்களும் குவிந்து, புதைந்து கிடக்கின்றன. முதலாவது மனைவிக்கு தேவை கணவனின் பூரண திருப்தி! அவைகளில் எந்த விதமான குறைவுகளும், அலட்சியங்களும் இல்லாமல் உரிய முறைப்படி, தேவைப்படும் வேளைகளில் எல்லாம் கணவனிடம் இருந்து தனது மனைவிக்கு சென்றடைய வேண்டும்.
மனைவி அவளது ஆசைகளையும், உணர்ச்சிகளையும் வாய்விட்டு சொல்லமாட்டாள். ஆனால், எதிர்பார்க்கின்றாள் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இந்த சமயத்தில் அவளது உணர்வுகளும், ஆசைகளும் தன் கணவனால் உணரப்படாமல் புறக்கணிக்கப் படுகின்றபோது அல்லது கோபதாபங்களுக்காக, சிறு சிறு மனக்கசப்புகளுக்காக உங்கள் மனைவியை அலட்சியப்படுத்துகின்ற போது, மனைவி உங்களை வெறுக்க ஆரம்பிக்கின்றாள்; தன் கணவன் மீது கோபம் கொள்கின்றாள். இப்படியாக, பல தடவைகள் தன் கணவனால் புறக்கணிக்கப்படும் சந்தர்ப்பங்களினால்தான், சில மனைவியர்கள் கணவனுக்கு துரோகம் செய்யவும், இன்னுமொரு புது உறவை நாடவேண்டிய நிலமைக்கும் வந்துவிடுகிறார்கள்; ஆசையை தீர்த்துக்கொள்வதற்கு!
சில பிரச்சினைகள் இப்படித்தான் அரும்பெடுக்கின்றன. பகல் முழுவதும் வேலை, வேலை என்று ஓடியாடித்திரிந்த கணவன் இராப்படுக்கைக்குச் சென்றபோது, களைப்பினால் நாலுகால் பாய்ச்சலில் கிடக்கிறான். இதனைக்கண்ட அவனது மனைவி, தன் கணவன் மீது பரிதாபம் கொள்வதுடன் களைப்பில் கிடக்கும் தன் கணவனை தொந்தரவுக்கு
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

A{3}}PATT)
2|
Tu (£?.
இடம்கொடுக்காமல் சற்று ஓரமாக சாய்ந்து கொள்கின்றாள். இப்படியான நிலைமைகளும், சந்தர்ப்பங்களும் ஒரு நாள், இரண்டு நாள் ஏற்பட இடமளித்தாலும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதை கணவன்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்,
கணவன் மனைவி இரண்டுபேரும் ஒன்றாக இருக்கும் நேரம் எதுவென்றால், கூடிய பகுதி இரவு நேரங்கள்தான். அதிலும் தூங்கும் நேரம். காலையில் சென்ற கணவன் பகலுணவுக்கு வருகின்றான்; பகல்வேளையில் சென்ற கணவன் இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் கடை பஜாரில் உலாவிவிட்டு வீடுதிரும்பவும், கணவன் மனைவிக்கிடையில் சண்டை! தானும் சாப்பிடாமல், சாப்பாட்டை மூடிவைத்துக்கொண்டு காத்திருந்தவள் தன்கணவனை கண்டதும் ஆத்திரத்தை கொட்டிவிடுகின்றாள்.....
''இங்க ஒருத்தி இருக்காளே என்ற எண்ணம் கொஞ்சமாவது இருக்குதா? இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் எங்கே படுத்துறங்கிட்டு வாறீங்க? '' என்று மனைவி வெடிக்கிறாள். இப்பொழுது கணவன் மனைவிக்கிடையில் வாதங்கள் இடம்பெறத்தொடங்கி, கடைசியில் இரண்டுபேருக்கும் இரண்டு அறைகள் தேவைப்படுகின்றன. இப்படியான சம்பவங்கள் நாளுக்கு நாள் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இடம்பெறுகின்றபோது, இவைகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண் டு வேறு வேறு பிரச் சினைகளை காரணங்களாகச்சொல்லி, அன்புத்தலைவனே! உங்களை வெறுக்க நினைக்கின்றாள் மனைவி.
0 மனைவியையும் பற்றி சற்று சிந்திக்கத்தான் வேண்டும். 0 உங்களது வெளிக்கள் வேலைகள் முடிவடைந்து
விட்டால் உடன் வீடுதிரும்பி விட வேண்டும்.
(07)
கலையரசன்

Page 10
0 எதிர்பார்த்து இருக்கினற உங்களது கண்ணகியை அன்புக்கடல் கொண்டு சந்தோசப்படுத்திடவும் வேண்டும். அப்போதுதான், கணவன் மனைவி உங்களுக்கிடையில் சந்தோசமும், கலகலப்பும் நிலைத்துவிடும்.
அன்புத்திருமகனே! நன்கு சிந்தியுங்கள். துர இடங்களில் வேலை செய்கின்ற நீங்கள் கிழமைக்கு ஒரு தடவை அல்லது மாதத்துக்கு ஒரு தடவைதான் வருகின்றீர்கள். வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாக இருந்தால் பல வருடங்களுக்கு மேலாகின்றது உங்கள் வருகை. இப்படியான சமயங்களில் வீட்டில் இருந்து, உங்களையே நினைத்து நாட்கணக்காக உருகிக்கொண்டிருக்கும் மனைவியை பற்றியும் சிந்திக்கத்தான் வேண்டும் . மனைவியரினுடைய உணர்வுகளையும் , கஷ்டங்களையும் பரிபூரணமாக அறிய வேண்டிய ஒருவராக இருந்தால் அது நீங்கள் மாத்திரமேதான்.
உங்கள் மனைவி எப்போதுமே, கணவன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும், கணவன் மடியில்தான் கொஞ்ச நேரமாவது நித்திரை கொள்ள வேண்டும், கணவன் சாப்பிட்ட மிச்ச சொச்சத்தைதான் தான் சாப்பிட வேண்டும். என்றெல்லாம் ஆசைப்படுகின்றவள். நீங்கள் இல்லாமல் ஒருநாள் கூட நிம்மதியான தூக்கம் இல்லாமல் பயந்து கொண்டிருப்பவள். "அவள் வீட்டில் இருக்கிறாளே” என்ற எண்ணங்கள் உங்களின் மனதை உசுப்பிக்கொண்டு இதயத்தில் ஊடுருவ வேண்டும்.
நீங்கள் சாதாரணமாக கடைத்தெருவுக்கோ, வெளிவேலை களுக்கோ சென்றுவிட்டால் - வீட்டில் உங்கள் மனைவி, "என்கணவர் எப்போதுடா வருவார். அதோவருவது அவராகத்தான்
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

இரக்கும், இதோவருவது அவராகத்தான் இருக்கும்’ என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கின்ற அதே வேளையில், நீங்கள் மாதக் கணக்கிலும், வருடக்கணக்கிலும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லாதவர்கள் போல் அல்லது தொடர்புகள் குறைந்தவர்களாக இருப்பீர்களாயின் உங்கள் மனைவி எப்படி நிம்மதி பெறுவது? அவள் எப்படி நிம்மதியாக தூங்குவது? "இன்று வராமாட்டாரா? நாளை வரமாட்டாரா? ” நீங்கள் வரவேண்டும், உங்களைப் பாரக்க வேண்டும் என்றுதான் துடிக்கிறாளே தவிர நீங்கள் வரக்கூடாதென்றோ, கணவன் இன்றல்ல நாளைதான் வர வேண்டும். நாளை அல்ல அடுத்த நாள் தான் வரவேண்டும். என்று சொல்லி எந்த மனைவியும் தனது கணவனை எதிர்பார்ப்பதில்லை.
எனவேதான், இப்படியான கணவன் மனைவி மீது அடிக்கடி தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கடிதத்தின் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ! தொலைபேசியில் உரையாடுவதுதான் இன்று பிரபல்யமாகிவிட்டன. அப்படி அமைகின்ற போது மனைவியுடன் மனம்திறந்து - மனைவியின் மனதை சந்தோசப்படுத்தும் பேச்சுக்களாகவும், மனதை உறுதிப்படுத்தும் சொற்களஞ்சியங்களாகவும் அமைதல் வேணி டும் . மனைவியரினுடைய தேவைகளையும் , குணநலன்களையும் முக்கியமாக கேட்டுக்கொள்ளுதல் வேண் டும் . இவ் வாறு உங்களது பேச் சுக் கள் அமைகின்றபோதுதான் மனைவி மன நிம்மதியடைகின்றாள்.
0 என் கணவர் என் ஞாபகத்துடன்தான் இருக்கிறார்.
0 அவர் எங்கு சென்றாலும் என்ஞாபகம்தான். 0 நான் என்றால் அப்படியொரு பிரியம் அவருக்கு.
கலையரசன்

Page 11
இவ்வாறுதான் உங்களது மனைவி பெருமைப்படுகின்றாள்; தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றாள் என்பதை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் நினைக்கின்றீர்களா? மனைவிக்கு நான் தேவைப்படுகின்ற போது மட்டும் அவளைத் திருப்திப் படுத்திவிட்டால் போதும்தானே, அவளை தனியறையில் வைத்து சந்தோசப்படுத்திவிட்டால் போதும்தானே, என்றுமட்டும் நினைக்கின்றீர்களா? இது திருமணவாழ்வின் ஒரு பகுதி மாத்திரமேதான். மீதியான பகுதி எங்கே இருக்கின்றது? என்பதைப்பாருங்கள். தேடியாராயுங்கள். அதுதான் தனியறை தவிர்ந்த வீட்டுவளாகத்திலும். வீட்டுவளாகத்திலும்; தவிர்ந்த வெளிப்புறங்களிலேயும் தான் - என்பதை உணரவும், விளங்கவும் வேண்டும்.
தனியறையில் கொடுக்கின்ற சந்தோசத்தைப் போல் மற்ற மற்ற இடங்களிலும் நீங்கள் அதனை வழங்குகின்றீர்களா? மனைவி பெறுகின்றாளா? என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் மனைவி அன்பு, அக்கறை, அரவணைப்பு இம்மூன்றையும் தான் பெரிதாக எதிர்பார்க்கின்றாள். அது ஓர் இடத்தில் மட்டுமல்ல தனது அன்றாட வாழ்வு முழுவதிலும், முழுஇடங்களிலும் கிடைக்கப்பெறல் வேண்டும்.
மணமகனே! உங்கள் மனைவி உங்களுக்காக வேண்டி
எத்தனையோ சொல் லொண்ணா துயரங்களையும், கஷ்டங்களையும் சந்திக்கின்றாள் என்பதை ஒரு கணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள். காலையில் மனைவிக்கு தலைப்பட்ட வேலைகள். அதிகாலையில் உங்களுக்கு
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

முன்னதாகவே படுக்கையைவிட்டும் எழும்புகின்ற மனைவி, இரவுப்படுக்கை விரிப்பில் விழுகின்ற நேரம் வரைக்கும் ஒடியாடி எவ்வளவோ வேலைகளைச் செய்கின்றாள். காலை உணவு தயாரிக்க வேண்டும், பாடசாலைக் குச் செல்லுகின்ற பிள்ளைகளை குளிப்பாட்ட வேண்டும், உடைமாற்ற வேண்டுமி, உணவூட்ட வேண்டும், தலைசீவி, மணம்போட்டு அவர்களின் முடக்குகளை சீர்செய்து வழியனுப்பவேண்டும். இப்படியான நேரங்களிலெல்லாம் மனைவி பம்பரம் போன்றுதான் சுழல்கின்றாள். இதனால், உங்களைக் கவனிப்பதில் சிறு சிறு குறைகள் வைத்துவிட இயல்பாகி விடுகின்றாள்.
ஒவ்வொரு நாளைக்கும் வீட்டு வேலைக்காரி போல் இருந்து அவளது பணிகளைச் செய்கின்ற அதேவேளையில்; உடம்பில் நோய்களையும், நோயின் காரணமாக சோம்பறித் தனங்களையும் மனைவி தன்னகத்தே சுமந்து கொண்டிருக்கின்றாள் என்பதை எண்ணிப்பாருங்கள். சில மனைவியர்கள் தனது உடம்பில் இருக்கின்ற நோய் நொம்பலங்களை தன் கணவனிடம் மறைத்து விடுவார்கள். கணவன் கவலைப்படுவார்; வேலை எதுவும் செய்யவிடமாட்டார். என்ற எண்ணங்களினால்!
இதன் விளைவாகத்தான் இன்று அவள் நோயாளியாகவும், சோம்பறியாகவும் இருந்துவிடுகிறாள்; படுக்கையை விட்டும் சற்று தாமதமாகவேதான் எழும்பவும் நினைக்கிறாள். இதனை அறிந்து கொள்ளாத அவளது கணவன் மனைவியைக் குறைகூறுகின்றான். வேலைத்தளத்திற்கு செல்லப்போகும் நேரத்தில், தன்னோடு எடுத்துச் செல்ல வேண்டிய ஏதாவதொன்று காணாமல் போனால் அந்தநேரத்தில் மனைவியைத் திட்டுகின்றான்.
11 கலையரசன்

Page 12
தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, தனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து தரவில்லை. என்றெல்லாம், நினைத்தபடி தனது மனைவியைத்தான் குறைகூறுகின்றான்.
சில மனைவியர்கள் அரசாங்க தொழில் பார்ப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இப்படியானவர்களுக்கு மூன்று கடமைகள்: பிள்ளைகளைக் கவனிக்கவேண்டும் . கணவனைக் கவனிக்கவேண்டும். தன்னையும் கவனிக்கவேண்டும்.
எனவே, இந்த சமயத்தில் நீங்கள் மனைவிக்களிக்கின்ற சிறு சிறு உதவிகளும், மன்னிப்புக்களும்தான் - நீங்கள் பொறுமைசாலி என்பதையும், உங்களுக்கு வாழ்க்கைப்பட்டதில் புண்ணியங்கள் நிறைய உண்டு என்பதையும், அவளால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது.
தலைமகனே! இணைந்து செயற்படுங்கள். குறைகண்டு - குறைகூறி முகம் சுருட்டாதீர்கள்.
உங்களை மனைவி வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில்
செய்து கொள்கின்ற பணிவிடைகளை எண்ணிப்பாருங்கள். வீட்டில் உள் அறைகளை பெருக்குவதிலும், முற்றத்தை கூட்டித் துப்பரவு செய்வதிலும், பூச் செடிக்கு தண்ணிர் தெளிப் பதலும் , அலங் கோலமாகக் கரிடக் கரின் ற சாமான்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைப்பதிலும் நின்று விடாமல், உங்கள் மனைவி வருகின்றாள் குளியலறைக்கு உங்களின் துணிகளையும், உங்கள் பிள்ளைகளின் துணிகளையும்தான் அவள் துவைக்கின்றாள். அதற்கு மட்டும் எத்தனை மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன? என்பதைக் கண்களால் பார்த்தால்தான் கணக்கிட்டுக் கொள்வீர்கள். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி - 12

துவைத்த துணிகளை உலர வைப்பதில் மட்டும் நின்று விடாமல், உங்கள் மனைவி வருகின்றாள் சமயலறைக்கு! அங்கேதான் இருக்கின்றது ஆயிரம் வேலைகள். எத்தனை பாத்திரங்களைக் கழுவவேண்டும், மினுக்கவேண்டும். அடுப்பு மூட்டி, உலைவைத்து, காய் கறிகள் நறுக்கி - அதற்கிடையில் தொட்டில் குழந்தை அழுதால் அதனை அரவணைத்து உணவூட்டி, பள்ளி செல்லாத பிள்ளை வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியின் பாடு அதேபாடுதான்! அவர்களின் முடக்குகளை நேராக்கி ஒரு சீரான நிலைக்குக் கொண்டு சேர்த்து விட்டுத்தான் அதனுடன் பகல்நேர சமையல் வேலைகளையும் முடித்துவிடுகிறாள்.
சீதேவிமகனே! வேலைவிட்டும் வீடு திரும்பிவிட்டால் சாப்பாடு தயாராக இருந்து விடவேண்டும் உங்களுக்கு! சமையல் முடிப்பதற்கு சற்று நேரதாமதமாகி விட்டால் போதும். உங்கள் முகத்தை யார் பார்ப்பது? உங்கள் முன்னிலையில் யார் பேசுவது?
"நேரம் என்னாச்சு? இரண்டு, இரண்டரையாகுது இவ்வளவு நேரமும் ஒரு சோறும் கறியும் தானடி சமைச்ச? வீட்டில் இருந்து கொண்டு என்னத்தடி கிழிச்ச.?” என்ற, உங்களது வார்த்தைகளால் தினமும் மனைவி செத்துப் பிழைக்கவேண்டி இருக்கின்றது.
உங்கள் மனைவி நாளுக்கு நாள் சமைத்துப்போடுகின்ற சமையலுக்காகவேண்டி எப்போதாவது ஒரு தடவை நன்றி செலுத்தியிருக்கின்றீர்களா? அவளது சமையலை வைத்து பாராட்டிப் பேசி இருக்கின்றீர்களா? என்பதை சிந்தனை செய்து பாருங்கள்.
கலையரசன்

Page 13
உங்களைப் பொறுத்தமட்டில் நாவுக்கு ருசியான சமையல் கிடைக்கவேண்டும். உண்மைதான். நாவுக்கு ருசியானவைதான் தேவை! மனைவி சமைத்துப் போடுகின்றாள்; அதனை ருசித்துவிட்டு எழுந்து செல்கிறீர்கள். ஒரு நாள் அல்லது இரண்டுநாள் சாப்பாட்டில் ருசியில்லாமல் போனால், உப்பு, காரம் சற்று கூடிக்குறைந்து போனால் கொஞ்சமாவது பொறுத்துக் கொள்கிறீர்களா? மாதத்தில் முப்பது நாட்களுக்கும் காரசாரத்துடன் இருந்து நாவுக்கு ருசியாக சமைத்துப் போட்ட சாப்பாட்டைப்பற்றி பாராட்டாத நீங்கள் - எதையுமே பேசாது எழுந்து சென்ற நீங்களி, ஒருநாள் சாப்பாட்டில் குறைகூறி மனைவியின் முகத்தை வார்த்தைகளால் சுட்டுவிடுகிறீர்களே! இது நியாயமா? நன்றி கெட்டவர்களாக இருந்து விடக்கூடாது? “என்னடி சமையல்? உப்பு விளைந்து கிடக்குதா?” என்றெல்லாம் கணவனி, மனைவியின் முகத்தில் சாதாரணமாகவே கூறிவிடுவது உண்மையான ஒன்றுதான்.
இன்று, சாப்பாடு குழைந்து விட்டதே, கெட்டு விட்டதே, என்ன நடக்கப்போகுதோ? என்ற பதட்டத்துடனும், மன அச்சத் துடனும் அவள் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் - நீங்களும் சீறிப்பாய்ந்து இடையில் உதறி விட்டுச் சென்று விட்டால், உங்கள் மனைவியின் முகம் எப்படியெல்லாம் கருகிப் போகின்றது என்பதை சற்று அவதானித்தால்தான் விளங்கும்.
கணவன் வீடு வந்த பிறகுதான் நான் சாப்பிடுவேன்; கணவன் சாப்பிட்ட மிச்சசொச்சத்தைத்தான் நான் சாப்பிடுவேன். என்று சொல்லிக் கொண்டு பட்டினியுடன் தவம் கிடந்த அந்த அப்பாவி பெண், உங்களின் இந்தச் செயலினால் அன்றையதினம் பட்டினி கிடக்கின்றாள்; நீங்கள் சாப்பிடவில்லை என்பதற்காக வேண்டியும் தானும் விலகிக் கொள்கின்றாள். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

மணமகனே! மனைவி சாப்பிடவில்லை என்பதற்காகவேண்டி கணவன் சாப்பிடாமல் இருந்ததில்லை. அப்படியான சரித்திரமும் இல்லை, இருந்தால் ஒன்று அல்லது இரண்டு என்றுதான் சொல்லலாம். ஆனால், கணவன் சாப்பிடவில்லை என்பதற்காக வேண்டி மனைவி சாப்பிடாமல் இருந்திருக்கின்றாள்; இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றாள். இது உலகம் அறிந்திருக்கின்ற உண்மை!
சமையல் வேலைகளில் மனைவிக்கு ஒத்தாசையாக இருந்து விடுங்கள்!
சில பெண்கள் (மனைவியர்கள்) இப்படியும் இருக்கிறார்கள் தன்பெற்றோர்களினால் செல்லத்திலும், செல்வத்திலும் வளர்கின்றவர்கள், பிறந்த வீட்டிலே வீட்டுவேலைகளைக் கற்றுக்கொள்ளாதவர்களாகவும், கணவன் வீடு சென்ற பிறகுதான் வீட்டுவேலையே கற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்துவிடுகிறார்கள்.
தன் பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் வளர்கின்ற போதெல்லாம் இவைகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமே.! என்ற அக்கறையே இல்லாமல் தனது படிப்பிலும், பொழுது போக்கிலும், அசட்டுத்தன்மையிலும் வளர்கின்றார்கள். இப்படியான இடத்தில் இருந்து பெண்பிள்ளைகளை வளர்க்கின்ற தாய்மார்களும் அதனைக் கவனித்தில் கொள்வதில்லை.
அவள் சிறு குழந்தைதானே! கைக்கும், காலுக்கும் ஆட்கள் இருக்கும் போது இவள் எதற்காக சமைக்க வேண்டும்? அடுப்பூத வேண்டும்? என்ற எண்ணத்தினாலோ என்னவோ? பெண் மகள் வேலை செய்யவேண்டும், சமையல் வேலைகளைக்
கலையரசன்

Page 14
கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்களையே மறந்து விடுகிறார்கள். தாய்தான் முன்னின்று வேலைகளைச் செய்து கொடுக்க, தான்மட்டும் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே எழுந்து விடுவார்கள் அந்த குமரிப்பெண்கள். இதன் விளைவாகத்தான் திருமணம் முடித்து கணவன் வீடு சென்ற போது, சமையல் வேலைகள் செய்வதில் கஷடங்களை அனுபவிக்கிறார்கள்; கணவன், பிள்ளைகளுக்கு ருசியான முறையில் சமைத்துப்போடுவதிலும் பல சிரமங்களையும் எதிர் நோக்குகின்றார்கள்.
எனவேதான், இவைகளையெல்லாம் உணர்ந்த கணவனாக நீங்களிருந்தால், உங்களது வேலைகள் தவிர்ந்த நாட்களில் சமையலறையில் மனைவிக்கு துணையாக இருந்து பாருங்கள். நீங்கள் பெரிதாக அடுப்பூத வேண்டும் என்பதல்ல.! சமையலறைக்குள் சென்றுபார்த்தாலே போதும்; கண்டிப்பாக உங்களை மனைவி விரட்டி விடுவாள்.
"உங்ளுக்கெதுக்குங்க இந்தவேலைகள்? சமைத்துப்ப போடத்தானேநானிருக்கன்..!
“சமைத்துப்போடுவதற்கு மட்டும்தானா? கட்டிலறைக்கும் சேர்த்துத்தானே?” என்று, நீங்கள் ‘தமாசாக பேசுவதனால் உங்கள் மனைவி உணர்ச்சிபொங்க சிரித்துவிடுகிறாள். இவ்வாறு மனைவியின் உள்ளத்தை குளிரவைக்கும் படியான பேச்சுக்களை எப்போதும், எந்த இடத்திலும் சமயசந்தர்ப் பங்களைப் பார்த்து கணவனே! நீங்கள் பேசிக்கொண்டால் என்ன?
சமையலறையில் வேண்டிய பேச்சுக்களை பேசிக் கொள்வதற்கும், சிரித்து மகிழ்வதற்கும் வாய்ப்பு வசதிகள் திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

அதிகம். இப்படி அமைகின்ற போது மனைவிக்கு சமையல் வேலைகளும் இலகுவாகிவிடும். மனசுக்கு இசையாகவும் மாறிவிடும். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் சமையலறைக்குள் அடிக்கடி தன் மனைவியுடன் இருப்பதும், பேசிக்கொள்வதும் அவள் மனதில் அப்படியே பதிந்து விடுகின்றன. நீங்கள் வீட்டில் இல்லாத சமயங்களில் மனைவி உங்கள் ஞாபகத்தில்தான் இருந்து விடுகிறாள். நீங்கள் பக்கத்தில் இருப்பதாகவும், 'தமாசா'ன பேச்சுக்களை நினைவுபடுத்தியும் அடிக்கடி சிரித்துக் கொள்கிறாள்.
0 சமைத்துப்போடுவது மட்டுமேதான் என் வேலை - என்ற, அவளது அவநம்பிக்கைகளெல்லாம் அதே கணம் மறக்கடிக்கப்படுகின்றன.
சில கணவர்கள் பேசிக்கொள்வார்கள் "இங்கே நிண்டு கொண்டு வேடிக்கை பாக்காம ஒன்ட அடுப்படி வேலையைப் போய் கவனி’ தன் மனைவியை வீட்டுவேலைக்காரி போலவேதான் நினைத்துக் கொள்கிறார்கள்; மட்டம் தட்டிவிடுகிறார்கள். சமைத்துப் போடுவதெல்லாம் மனைவியி னுடைய கடமைகள்தானே? என்று, விவாதிக்க வருபவர்களும் கணவர்கள் மத்தியில் ஏராளம்!
சீதேவி மகனே! சாப்பாடு பாரிமாறுகின்ற சமயங்களில் கூட, மனைவி உங்களை எப்படி எல்லாம் கவனித்துக் கொள்கின்றாள் என்பதை நீங்கள் கண்திறந்து பார்க்கத்தான் வேண்டும். நீங்கள் சாப்பிட்டு முடியும் வரைக்கும் உங்கள் பக்கத்திலேயே அமர்ந்து, உங்களை வயிறு நிறைய உண்ணவைக்கிறாளே மனைவி; எப்போதாவது நீங்கள், மனைவி சாப்பிட்டு முடியும் வரைக்கும் அவள் அருகில் அமர்ந்
கலையரசன்

Page 15
திருக்கிறீர்களா? அள்ளி வைத்து அவளது வயிற்றை நிறைய வைத்திருக்கிறீர்களா? அரிதிலும் அரிது.
ஒரு நாளைக்கு தன் நண்பர்களுடன் வீணாக எத்தனையோ மணித்தியாலங்களையும், நிமிடங்களையும் கழிக்கின்றீர்கள்? எத்தனை மணித்தியாலங்களை கடைபஜார்களிலும், பொழுது போக்குகளிலும் கழிக்கின்றீர்கள்? ஆனால், ஐந்து நிமிடங்கள் மட்டும் மனைவியின் அருகில் அமர்ந்து, அவள் சாப்பிட்டு முடியும் வரைக்கும் கவனித்துக்கொண்டால் என்ன? குறைந்தா போய்விடும்?
பசியாறும் நேரத்தில் கணவன் தன் பக்கத்தில் அமர்வதையும், எதையாவது பேசிக் கொள்வதையும், சிரிப்பூட்டும் நகைச் சுவைகளை நயம் பட உரைப்பதையும் எல்லா மனைவியர்களும் விரும்புவார்கள்.
கணவன் சாப்பிட்டு எஞ்சியதை சாப்பிடுவதில் மனைவியின் வயிறு நிறைகிறது. அதில் தான் அவள் சுகத்தையும் அநுபவிக்கிறாள். எனவே, நீங்கள் சாப்பிட்டு முடியும் போது - தான் அளவளாவியதில் சிறிதளவை மீதப்படுத்திவிட்டு கைகழுவுங்கள். இதனால் மனைவியின் உள்ளம் நாளுக்கு நாள் குளிரடையவும், உங்களது எண்ணங்கள் அவள் மனதில் நிறைந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
உங்கள் மனைவின் கவனிப்புகள் இத்தோடு நின்று விடாமல், நீங்கள் வேலை முடிவடைந்து வீடுதிரும்புகின்ற போது,
பாதிவழிக்கு வந்து உங்கள் கையில் கொண்டு வந்திருக்கின்றதை தானும் பங்குகொண்டு உங்களை
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

இன்முகத்துடன் வரவேற்கின்றாள். உங்களது ஆடைகளை மாற்றுவதற்கு உதவியாக இருந்து, உங்கள் களைப்பைப் போக்குவதில் மும்முரமாக இருந்து, உங்கள் மன ஆறுதலைப் பெறுவதென்றால் மனைவியை விட வேறு யாருமாக இருக்க முடியாது.
பெண்மனதில் நிறைந்திருக்கின்ற அரசனே! வீட்டுக்குள்ளே காலடி எடுத்துவைக்கின்ற போது - எந்தெந்த முகத்துடன், என்னென்ன கோலங்களிலெல்லாம் நுழைகின்றீர்கள்? வேலைத் தளத்தில் இடம் பெறுகின்ற பிரச்சினைகளுக்காக, வரும்வழியில் நண்பருடன் ஏற்படுகின்ற சிறு சிறு மனக்கசப்புகளுக்காக, பலதெருக்களைக் கடந்து வருவதினால் உங்களுக்கு ஏற்படுகின்ற களைப்பு, தலையிடிக்காக வேண்டி - வந்து சேர்ந்த அதே வேகத்தில் மனைவியும் ஏதாவது அசட்டுத் தனமாக இருந்துவிட்டால் போதும். அத்தனை பிரச்சினை களையும் வைத்து உங்கள் மனைவி மீதுதான் தீர்த்துக் கட்டுகின்றீர்கள்.
کی " "*
கணவன் வந்தவுடன் - மனைவி முன்னாடி நிற்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. ஆனால் எல்லாத்தினங்களிலும் நீங்கள் நினைப்பது நடக்காது.
0 அவசரத் தேவைகளுக்காக மனைவி பக்கத்து
சகோதரியின் வீட்டுக்கு சென்றிருக்கலாம்.
0 தாய் தகப்பனை கவனிப்பதில் அக்கறையுள்ள மனைவி
அதற்காக சென்றிருக்கலாம்.
0 பெண்கள் அடிக்கடி பாத்ரூம் செல்லும் பழக்க
முடையவர்கள்- அதற்காக சென்றிருக்கலாம்.
கலையரசன்

Page 16
0 பகல் முழுவதும் வேலை செய்த களைப்பினால் சற்று
சோம்பலாக இருந்திருக்கலாம்.
0 முன்பு நான் கூறியது போன்று - சின்னச் சின்ன நோய் நொம்பல்களுக்காக வேண்டி சற்று கண்ணயர்ந் திருந்திருக்கலாம்.
இவைகளை எல்லாம் அறிந்திருந்தும், அதனைக் கவனத்தில் கொள்ளாது மனைவி மீது விசமம் கொள்வது சரிதானா? “நான் வந்து எவ்வளவு நேரமாச்சு. எங்கடி போன?” எனற வார்த்தைகளால் மனைவியைத்தாக்குவது சரிதானா?
மனைவியின் சுதந்திரங்களையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள். தான் எந்த நேரமும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடப்பதனால் தன்சகோதரியை அல்லது பக்கத்து வீட்டு நண்பியைக் கண்டால், அதைவிட பெரிய ஆனந்தம் வேறெதுவுமில்லை. இரண்டு பேரும் மனம் திறந்து பேசவும், பல செய்ததிகளை பரிமாறவும் , சிரித் துமகழவும் நினைக்கிறார்கள். இதனால் சில நேரங்களில் வெளியிலிருந்து வந்த தன் கணவனை கவனிப்பதில் குறைவாக இருந்துவிட்டால் அதனைப் பொறுத்துக் கொள்வதாகவும், விட்டு விடுவதாகவும் நீங்களில்லை.
அன்புத்தலைவனே! சில வேளைகளில் உங்கள் மனைவி உண்மையாகவே அசட்டுத்தனமாக இருந்துவிடுவது உண்மை. அதனை அவள் வழக்கமாக்கிக் கொள்வாள். கணவனை வேலைக்கனுப்புகின்ற விடயத்திலும் சரி, வரவேற்கின்ற விடயத்திலும் சரி, கணவனான உங்களோடு பேசுகின்ற விடயத்திலும் சரி , சமைத்துப் போடுகின்ற விடயத்திலும் சரி, வீட்டுவாசலை கூட்டி துப்பரவு செய்வதிலும் சரி - அதாவது, திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

மனைவி உங்களுக்களிக்க வேண்டிய அத்தனை கடமைகளிலும் அசட்டுப் போக்காகவும், விருப்பக்குறைவாகவும் இருப் பது மட்டுமல்லாமல், தனது (மனைவியின் ) சொந்தவிடங்களைக் கவனிப்பதிலும் கூட விருப்பக் குறைவாகவே இருந்துவிடுகிறாள். பார்ப்பதற்கு அசிங்கமாகவும், அலங்கோலமாகவும்....
முடிக்கு எண்ணெய் தேய்த்தால் முடியைச் சீவமாட்டாள். முடியைச் சீவினால் முகத்தை அலங்கரித்துக் கொள்ளமாட்டாள். 0 இவைகளெல்லாம் இருந்தால் - நல்ல ஆடைகளை அணிவதிலும், தன்னைப் பிறர் மனமுவந்து பேசுவதிலும் நாட்டம் வைக்கமாட்டாள்; என்றால், அதற்குக் காரணம் கணவன்தான். கணவன்தான் அதற்குப் பொறுப்பு. நீங்கள் எந்தளவுக்கு மனைவியின் விடயத்தில் அக்கறை உள்ளவராகவும், அன்பு உள்ளவராகவும் இருந்திருக் கின்றீர்கள் என் பதைக் கண்டுகொள்ளலாம்.
நீங்கள் மனைவிக்கு பிடித்தமானவாராக இல்லாமல், மனைவி உங்கள் மீது விருப்பம் வைக்கக்கூடியவளாக. இல்லாமல் இருந்திருப்பீர்கள். அதன் விளைவுகளால் தான் இத்தனை செயற்பாடுகளும்! என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கணவனை விரும்பாத எந்த மனைவியும் உலகத்தில் இருக்கமுடியாது. அவள் கணவனை தெய்வமென மதிக்கிறாள்; விருப்பம் வைக்கிறாள். ஆனால், சில கணவர்களின் அணுகு முறைகளாலும், அடக்கு முறைகளாலும், நடைமுறைகளாலும் தான், இன்று எத்தனையோ மனைவியர்கள் தங்களைப்பற்றிய
21)
கலையரசன்

Page 17
தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். அவர்கள் செய்கின்ற கடமைகளிலெல்லாம்...
ஏனோ தானோ...! தனக்கு எதற்காக இவைகள்? என்ற மன எழுச்சியினால் இன்று இருட்டறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சீதேவி மகனே! நீங்கள் உங்கள் மனைவிக்கு அளிக்க வேண் டிய கடமைகளை தவறவிடும் போதும் , விலகிக்கொள்ளும் போதும், கவனக்குறைவாக இருந்துவிடும் போதும், அலட்சியப் படுத்துகின்றபோதும், அன்பு ஆசை , அவள் மனதில் செஞ்செழிப்பை, முகமலர்ச்சியை, கதைத்துச் சிரிக்கும் சுதந்திரங்கள் - இவைகளையெல்லாம் முளையிலேயே கிள்ளிவிடுகின்ற போது மனைவி உங் களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை, பணிவிடைகளை, சந்தோ சங்களை மட்டும் நீங்கள் எப்படி எதிர்பார்ப்பது? நீங்கள் அப்படி எதிர்பார்க்கலாமா? தன்மேல் பிழைகளையும், தவறுகளையும் வைத்துக்கொண்டு அப்பாவிப்பெண் மீது - அவள்தான் உங்கள் மனைவி மீது, “எனக்கு அதைச் செய்யவில்லையே, இதைச் செய்யவில்லையே, என்னை அலட்சியம் செய்கிறாளே...'' என் றெல் லாம் குறை கூறுவது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றுதான்.
நீங்கள் மனைவி மீது அன்பு காட்டினால், அளவுகடந்த பாசத்தை அள்ளிவீசினால் போதும். உங்களுக்களிக்கின்ற அத்தனை கடமைகளையும் முகம் சுழிக்காமல் அள்ளி வீசுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றாள் உங்கள் மனைவி. கணவன், மனைவியை கண்கலங்காமல் வைத்திருக்கின்ற போது எந்த மனைவியும் தன் கணவனை எளிதில் பொடுபோக்காக நினைத்ததில்லை. திருமண பந்தத்தில் - கணவன் மனைவி
22)

0 தன் உயிரை விடவும் மேலாகத்தான் கணவனை
மதிக்கிறாள். 0 தன் கணவனுக்கோ, கணவனின் உறவினர்களுக்கோ
ஏதாவது துன்பதுயரங்கள் என்றாலும் கூட, துடித்துப் போகிறாள் அவன் மனைவி.
'கணவனே கண்கண்ட தெய்வமென மனதில் வைத்து பூஜைசெய்கின்ற மனைவியர்களும் உண்டு.
"ஹும்...'' என்ற நீண்ட பெருமூச்சுடன் தொடங்கி, "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். என்ன செய்யலாம்? '' என்று, கையை விரிக்கின்ற மனைவியர்களும் பெண்ணினத்தில் இருக்கவேதான் செய்கிறார்கள்.
சீதவி மகனே! அப்படி அமைதல் கூடாது. 0 மனைவிக்கு அன்பையும் பாசத்தையும் அள்ளி
வீசவேண்டும். 0 மனைவி, கவலை மறந்து சிரித்துப் பேசும்
சுதந்திரங்களைக் கொடுக்கவேண்டும். 0 மனைவிக்கு ஏதாவது குறைகள் வைத்திருந்தால்
அதனைக் கண்டறிந்து நிறைவுபடுத்த வேண்டும். 0 அவளது ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்க
வேண்டும். அப்போதுதான் மனைவியின் உள்ளம் சிரிக்கின்றது. கணவனாகிய உங்களை, "என் கணவன், என் கணவன்'' என்று தோளின்மீதி தாவிப்பிடிக்கவும் வருகிறாள்.
பிள்ளைகள் செய்கின்ற குற்றத்திற்கும், வேலையாட்கள் செய்கின்ற குற்றத்திற்கும், தனிநபர்கள் செய்கின்ற
23)
கலையரசன்

Page 18
குற்றத்திற்கும் மனைவியைச் சீறிப்பாய்வதை முற்று முழுதாக நிறுத்திப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!
சில கணவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக் கிறார்களாம் என்றால் வீடே நடுங்கிப்போய்விடும். வீட்டிலுள்ள மனைவி மக்களெல்லாம் பயந்து ஒடிங்கிப் போவதைக் காணலாம். இது மனைவியையும் மட்டுமல்ல வீட்டில் வளர்கின்ற பிள்ளைகளையும் சேர்த்துதான் பாதிக்கின்றது. சில வேளைகளில் தந்தையின் நடைமுறைகளை தன்பிள்ளைககளும் கடைப்பிடிக்கக் கூடியவர்களாகப் பழகிக் கொள்கின்றார்கள்.
எந்த நேரத்திலும் கணவன் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதனால் வீட்டில் நிம்மதி இல்லை. வெளியே சென்றுவிட்டார் என்று சொன்னால்தான் மனைவிக்கு நிம்மதி. கணவர் வருகின்றார் என்று சொன்னால் முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிடுவார்கள் சில மனைவியர் கள் ; சில மனைவியர் கள் கணவனை இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் காரணங்களைத் துருவி ஆராய்கின்ற போது, தலைமகனே! அது உங்களது தவறுகள்தான், நடைமுறைகள் தான் முக்கிய காரணம்.
உங்கள் மனைவியின் இதயத்தில் நீங்கள் நிறைந்திருக்க வேண்டும். என் தாய்தகப்பனைவிடவும் என் கணவர்தான் எனக்குப் பெரிது - என்று மனைவி பிறரிடம் பெருமையடிக்கும்படி உங்கள் நடைமுறைகளும், அணுகுமுறைகளும் அமைந்து விடுதல் வேண்டும்.
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

02,
எனவேதான், மனைவியை அன்புக்கரம் நீட்டி கவனிக்கும் விடயத்தில் கூடிய கவனம் எடுக்கக்கூடியவராக இருந்து விடுங்கள்.
இவைகள் தவிர்ந்த வெளிப்புற நடவடிக்கைகளிலும் அன்புக்கரம் நீட்ட வேண்டும். வீட்டில் அடைபட்டு கூண்டுக் கிளிபோல இருப்பவளை கிழமைக்கு ஒரு தடவையோ அல்லது மாதத்திற்கு ஒரு தடவையோ எங்கேயாவது அழைத்துச் செல்லுங்கள். காண்பிக்கக்கூடிய சில சில இடங்கள் இருக்கின்றன. தேன்நிலவு. அதுதான் கடற்கரையோரங்கள். ஏன் உறவினர்களின் வீடுகளுக்குக்கூட அழைத்துச் செல்லலாம். கடைப்பிடித்துப் பாருங்கள். அதன் பின் மனைவி உங்கள் பக்கம்.
குடும்பத்தின் ஒளி விளக்கு நீங்கள் தான்! குழந்தை கிடைப்பதற்கு முன்பெல்லாம் மனைவி மீது எந்தளவு பிரியமுள்ளவராக இருந்தீர்கள். குழந்தை கிடைத்தவுடன் மனைவி மீது இரக்கம் வைப்பதை குறைத்துக் கொள்கின்றீர்கள்!
பிள்ளைகளுடன் சேர்த்து மனைவியையும், “குழந்தை” என்ற இஸ்தானத்தில் வைத்துப்பழகுங்கள். குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் அன்பு செலுத்துகின்றீர்களோ, எப்படியெல்லாம் செல்லம் கொடுத்து வளர்க்கின்றீர்களோ அதேபோலவே மனைவியையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பிரயாணம் செய்து வீடு திரும்பினால், வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பினால் பிள்ளைகளுக்கு ஏதாவது தீன் பண்டங்கள் வாங்கிக் கொள்கிறீர்கள். வீட்டுக்கு வந்தவுடன் முதன் முதலில் உங்களைக் கவனிப்பது மனைவி மட்டுமேதான். பிள்ளைகள் கவனிப்பது உங்களை அல்ல;
நீங்கள் கொண்டுவருகின்ற பொதியைத்தான்.
(ծ,} } { { ug: கலையரசன ᎶᎻ Ꭷ2 ;Ꭵ
설 『) () 6)IIյ6)յլ 1 113, 371 1. مسك حل لم
O - --Draâ

Page 19
கடைக்குள் நுழையும் போது பிள்ளைகளைத்தானே நினைக்கின்றீர்கள்? மனைவியை நினைக்கின்றீர்களா? பிள்ளைகளுக்கென்று வாங்கியதில் தானே உங்களது மனைவியும் சேர்ந்து கொள்கின்றாள். இது வழமையாக எல்லா வீடுகளிலும் நடந்து வருகின்ற பழக்கங்கள்தான். மனைவிமீது தனிப்பட்ட அன்பு செலுத்துபவராக நீங்கள் இருந்தால், பிள்ளைககளுக்கு வாங்குகின்ற தீன்பண்டங்களோடு உங்கள் மனைவிக்கென்றும் வாங்கிக் கொள்ளுங்கள்.
அதில்தான் மனைவியுடைய சுகம்! தனிப்பட்ட அன்பை வெளிக்காட்டுகின்றீர்கள்.
அதற்காக வேண்டி பெரிதாக ஒவ்வொரு நாளும் அதிக பணம் செலவு செய்ய வேண்டும் என்பதல்ல கருத்து. சொல்லப்போனால் உங்களின் மனைவியை சிறுகுழந்தையாக நினைத்து "பஞ்சுமிட்டாய்” ஒன்றைக் கொண்டு அவள் முன் நீட் டிப் பாருங்கள் விளையாட் டாக! "நானென் ன சின்னக்குழந்தையா?” என்று இதைத்தான் சொல்லுவாள் உங்கள் மனைவி. "ஆமாம் தேவி. நீ மூன்று குழந்தைகளுக்குத் தாயானால்தான் எனக்கென்ன? நீ எப்போவுமே எனக்கு சின்னக்குழந்தைதான்.” என்று சொல்லிவிட்டு அவளது உதட்டிலோ, கன்னத்திலோ ஒரு தட்டு தட்டிவிட்டுப் பாருங்கள்; அதன் பின் நடப்பது என்னவென்று சிறிதாக இருந்தாலும் அது அவளுக்கு பெரிதுதான்.
0 கணவருக்கு என்மீது தனிப்பட்ட அன்பு - என்பதைத் தான் வெளிக்காட்டுகின்றது உங்கள் மனைவிக்கு
0 கணவர் என்னை விடவும் அவர் பிள்ளைகள் மீதுதான் அதிக செல்லமாகவும், இரக்கமாகவும் இருக்கிறார்;
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

என்னைப்பற்றிய அக்கறையே அவருக்கு இல்லை. என்ற, அவநம்பிக்கைகள் அதேகணத்தில் அவளது மனதில் இருந்தும் அப்புறப்படுத்தப்படுகின்றன.
ஏதாவது விஷேசமான தினங்கள் என்றால். பிள்ளைகளின் பிறந்ததினமோ, கணவன் மனைவி யாராவது ஒருவருடைய பிறந்ததினமோ, கணவன் மனைவி திருமணம் செய்து கொண்ட தினமோ, தொழில் விடயமான பதவி உயர்வுக்கான தினமோ அல்லது மனதுக்கு சந்தோசம் கொடுக்கக்கூடிய ஏதாவதொரு தினம் வருகின்ற போது, உங்களது மனைவிக்கு அத்தினத்தை ஞாபகமூட்டக்கூடிய சிறு அன்பளிப்பு பொருளொன்றை வாங்கிக் கொடுப்பதில் அதிக "இன்றஸ்ட்” எடுத்துப்பாருங்கள்.
மனைவிக்கு, ஏன்? பெண்களுக்கே. நகைநட்டு, உடை வாங்குவது, போட்டு அழகுபார்ப்பது என்று சொன்னாலே உயிர்! இந்தவிடயத்தில் அதிக கவனம் எடுத்துப்பாருங்கள். நகைநட்டு என்று சொல்கின்றபோது நான் இன்னும் ஒரு விடத்தையும் குறிப்பிடத்தான் வேண்டும். சில கணவர்கள் இருக்கிறார்கள் வருடம் முழுக்க முழுக்க மாடாக உழைத்தது போதாமல் தன் மனைவியின் கையிலும், கழுத்திலும், காதிலும் கிடந்த ஒரே ஒரு நகையையும் கொண்டு அடகுபிடித்துவிடுகிறார்கள்; அல்லது விற்றுவிடுகிறார்கள்.
சீதேவி மகனே! கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். பெண் மனம், நீங்கள் வர்ணிக்கின்ற பூவை விடவும் மென்மையானது, பலவீனமானதும் கூட! தன் கணவனின் கஷ்டங்களையும், பொறுப்புக்களையும் அறிந்த மனைவி நீங்கள் கேட்பதற்கு முன்னதாகவே, "இதோ இருக்குங்க. இதை வைத்துவிட்டு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளுங்க.”
கலையரசன்

Page 20
என்று உங்கள் முன்னாலே நீட்டுகின்றாள். நீங்கள் நினைக்கின்றீர்களா மனைவியின் உள்ளம் அந்த நேரத்தில் சந்தோசத்துடன்தான் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒரு நகையை வாங்கிக்கொண்டு மனைவியின் முன்னால் நீட்டிய போது அவளது முகம் மலர்ந்ததையும், அவளது உதடுகள் புன்னகைத்ததையும் - இப்போது அதனை மீண்டும் பெறுகின்ற போது அந்த மலர்ச்சியையும், புன்னகையையும் காண்பீர்களா? நிச்சயமாக முடியாது.
உங்களது மனைவி இன்முகத்துடன் அதனை நீட்டினாலும் கூட அவளது மனதில் ஓர் ஏமாற்றம். ஏமாற்றத்துடன்தான் அவள் உங்கள் முன்னாடி நிற்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தவிர்க்கமுடியாத அவசர தேவைகளுக்காக, நோய் நொம்பல்களுக்காக அடகுவைத்து விட்டு பணத்தை பெறுகின்ற நீங்கள், பணம் கிடைத்தவுடன் அதனை மீட்டிக்கொடுக்கின்றீர்களா? என்பதைப்பாருங்கள். சம்பூரண மாகவே அதனை விற்று பணம் எடுக்கின்ற நீங்கள், வாய்ப்பு வசதிகள் கிடைத்தவுடன் வாங்கிக்கொடுக்கின்றீர்களா? என்பதையும் பாருங்கள்.
ஏமாற்றம் அடைவது உங்கள் மனைவிதான். நீங்கள் மனைவியின் உள்ளத்தை ஏமாற்றுகின்றீர்கள். திருமண வைபவங்களுக்கோ, திருவிழாக்களுக்கோ, கொண்டாட் டங்களுக்கோ மனைவி செல்லவேண்டிய நிலைமை வந்தால், அவள் எப்படியெல்லாம் அவமானப்படுகின்றாள் என்பது தெரியும் உங்களுக்கு பக்கத்து வீட்டுக்குச் சென்று - அவள் கணவன் வாங்கிக்கொடுத்த நகையைத்தான் உங்களது மனைவி, உங்கள் முன்னாடி, உங்களுடன் அணிந்துகொண்டு வருகின்றாளே! இது உங்களுக்கு அவமானமாக தெரிவதில்லையா?
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

மனைவிக்கு, உங்களால் கழுத்திலோ காதிலோ வாங்கிப் போட வக்கில்லை என்பதைத் தானே மற்றவர்களுக்கு
அன்புக்குரியவனே! இப்படியெல்லாம் உங்களது வாழ்க்கைப் பயணங்கள் அமைந்துவிடுதல் கூடாது. உங்கள் மனைவியை நீங்கள்தான் அழகுபடுத்தல் வேண்டும். உங்கள் மனைவிக்கு நீங்கள்தான் ரசிகன்! என்பதை உங்கள் மத்தியிலும, மனைவியின் மத்தியிலும் நீங்களே உருவாக்க வேண்டும். உங்கள் மனைவியை பார்த்து மற்றவர்கள் பெருமை பாராட்டவேண்டும். சிறுமைப்படுத்தாமல் பெருமையுடனும், நிறைவுடனும் பேசுவதற்கு தகுந்தபடி நீங்கள்தான் உங்கள் மனைவியை வழிநாடாத்த வேண்டும். அது உங்களது கையில்தான் தொங்கிக்கிடக்கின்றது.
இன்று எல்லாக்கணவர்களும் நினைப்பது இதைத்தான்: நான் சொல்வதைத்தான் மனைவி கேட்க வேண்டும், நான் கட்டளையிட்டால் அவள் செய்யத்தான் வேண்டும். என்று, தன்னை மட்டுமேதான் உயர்வுபடுத்திக் கொள்கிறார்கள் மனைவியினுடைய கட்டளைகளையும், ஆலோசனைகளையும் ஒதுக்கிவிடுகிறார்கள்.
0 பெண்ணின் கதையை யார் கேட்பது? 0 என்னதான் இருந்தாலும் பெண்புத்தி பின்புத்திதானே என்று மனைவியை தட்டிட் $தின்ற, மனைவியின்
حصہ سے
கிேரிஜ
مسلمونیمیاء کی چحد
كمصمم

Page 21
மனைவியின் பேச்சுக்களைக் கேட்காமல் கணவன் மட்டும் ஒரு திட்டத்தை மேற்கொள்கின்றான்! ஒரு தொழில் முயற்சியில் இறங்குகின்றான்; ஒரு வீட்டைக்கட்டுவதற்கு தேவையான நிதி விடயங்களில் யோசனைகளைத் திருப்புகின்றான். என்று சொன்னால், மனைவி தாமாகவே அதில் இருந்தும் விலகிக்கொள்கிறாள்; கணவனால் விலக்கப்படுகிறாள்.
"அவர் நினைத்தபடி எதையாச்சும் செய்து கொள்ளட்டும். என்ன நடந்தாத்தான் எனக்கென்ன” என்று கூறிவிட்டு மனைவி அடுப்பு வேலையை கவனிக்கின்றாள்.
கணவனது தீர்மானங்களின் படி வேலைகள் நடைபெற்று ஏதாவது நடக்கக் கூடாதது நடை பெற்றுவிட்டால் - தொழில் முயற்சியில், வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்பட்டுவிட்டாலே அல் லது இவைகளுக் கான கடன் பழுக் கள் அதிகரித்துவிட்டாலோ. இப்போது கணவனுக்கு தலையிடி! மூளை குழம்பி, ஆடுபிடித்த பூனைமாதிரி அங்குமிங்கும் ஓடித்திரிகின்றான். இதனை மனைவியும் பார்த்துக் கொண்டு சும்மாவேதான் இருந்துவிடப்போகின்றாள். அவள் என்னவென்று கவனிப்பது?
"அவர் பார்த்த விடயத்தை அவரேதான் பார்த்து முடிக்க வேண்டும். என்னிடத்தில் ஒரு வார்த்தை கேட்டாரா? கேட்டிருந்தால் இப்படி வந்திருக்குமா..? என்று கூறிவிட்டு கண்களைப் பொத்திக் கொள்கிறாள் மனைவி.
மணமகனே! உங்கள் கருத்துக்களைத்தான் - மனைவி கேட்க வேண்டும் என்றோ, மனைவியின் கருத்துக்களைத்தான் - நீங்கள் கேட்க வேண்டும் என்றோ நான் குறிப்பிடவில்லை. "வாழ்க்கை” என்ற கூரையின் கீழ் நீங்கள் கணவன் மனைவி எவ்வாறு பின்னிப் பிணைந்திருக்கிறீர்களோ அதே போன்றுதான் திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

இந்த விடயத்திலும. இரண்டு பேரும் சரிசமமாக இருந்துவிடுதல் வேண்டும். ஒரு தீர்மாணத்தை எடுக்கும் போது உங்களது கருத்து ஒரு பகுதியும் - மனைவியின் கருத்து மறுபகுதியுமாக இருந்து, இருவரது கருத்துக்களும் ஒன்று சேர்ந்த பிறகுதான் எந்த முயற்சியிலாவது இறங்க வேண்டும்.
இன்றைய மனைவியர்கள் (பெண்கள்) சில ஆண்களை விடவும் அறிவில் கூடியவர்களாகவும், நல்ல கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்கக் கூடியவர்களாகவும், கூடிய அனுபவம் உள்ளவர்களாகவும் இருந்துவிடுகிறார்கள். எனவே தான், உங்கள் மனைவிக்கும் இப்படியான தகுதிகள் நிறைந் திருக்கக்கூடும். பின், எதிர்பாராத விதமாக பாதகமான விளைவுகள் நேர்ந்துவிட்டால் கூட மனைவி உங்கள் வலது கையாகவும், தோளாகவும் அமைந்துவிடுவாள்; நல்ல ஆலோசனைகளையும் வழங்குவது மட்டுமல்லாமல் தனது உறவினர்களையும் அதில் பங்குகொண்டு உங்களுக்கு ஏற்பட்ட சிக்கலில், நஷ்டத்தில் இருந்தும் உங்களை விலக்கிவிடுவாள் என்பது உண்மை. இவ்வாறு நீங்கள் இணைந்து செயற்படுகின்ற போது.
0 என் கணவர் என்னை கேட்காமல் எதையும் செய்வ
தில்லை. 0 எந்தக் காரியத்திலும் இறங்கியதுமில்லை. 0 எல்லாவற்றுக்கும் எனது உதவிகள்தான் அவருக்குத்
தேவை. என்ற எண்ணங்கள்தான் உங்கள் மனைவியின் மத்தியில் நிறைந்து விடுகின்றன. இதனால் அவளுக்கொரு சந்தோசம். பெருமை. எனவேதான், “பெண்புத்தி பின்புத்தி’ என்று கூறுகின்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாகவும் சவாலாக இருந்து விட்டால் என்ன?
கலையரசன்

Page 22
இன்று, எத்தனையோ கணவர்கள் தன் மனைவியின் புத்தியினால், ஆலோசனையினால், வழிகாட்டலினால் வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள்; தொழில் வியாபாரங்களில் முன்னேறியிருக்கிறார்கள்; நாலுபேரும் மதக் கக் கூடியவர்களாக, பல சொத்துகளுக்கும் உரிமையாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்றால், இத்தனைக்கும் அவர்களது மனைவியர்தான் காரணம் என்பதை புத்தக வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும், அனுபவ வாயிலாகவும் நாம் கண்டிருக்கின்றோம்.
0 எனவேதான், மனைவியின் நல்ல கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள்.
கலைமகனே! உங்களுக்கு ஏற்படுகின்ற நோய் நொம்பல்களுக்கும், சில தீராத வியாதிகளுக்கும் மனைவி நோயைத் தீர்க்கும் நிவாரணியாக, நோயைக் குணப்படுத்தும் மனிதப்பிராணியாக அமைந்துவிடுவதை நீங்கள் காணவில்லையா? நீங்கள் எதிர்பாராத விதமாக நோய்ப்பட்டால் அல்லது ஆபத்துக்களில் சிக்குண்டால் முதன் முதலில் துடித்துக் கொள்பவளும், கண்ணிர் சிந்துபவளும், உங்கள் அருகிலே இருந்து ஆறுதல் சொல்பவளும் உங்கள் அன்பு மனைவிதான். அதன் பிறகுதான் உங்களது தாய் தந்தை, ஏனைய உறவினர்களெல்லாம்.
வைத்தியரின் ஆலோசனைகளுக்கிணங்க நீங்கள் கட்டுப்பாட்டுணவு (பத்திய உணவு) எடுக்க வேண்டுமென்றால் உங்கள் மனைவி பட்டினி கிடக்கிறாள். உங்கள் நோய்க்குத்தேவையான உணவுகள் தயாரிப்பதிலும், மூலிகைகள் தேடுவதிலும், அதனை அரைத்துப் பூசுவதிலும் மட்டும் நின்று விடாமல் எத்தனையோ நேர்ச்சைகள்! இரண்டு மூன்று நாட்கள்
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

நோன்பு நோற்று உங்களுக்காக வேண்டி கடவுளிடம் மன்றாடுகின்றாள்.
சீதேவிமகனே! சற்று அவதானித்துப்பாருங்கள். இரவில் தூங்குகின்ற நேரங்களில் கூட நீங்கள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருப்பீர்கள்; ஆனால் உங்கள் மனைவி எத்தனை தடவைகள் கண்விழித்து உங்களை பார்வையிடுகிறாள். உங்கள் போர்வைகள் சற்று விலகி இருந்தால் அதனை சரி சமமாக இழுத்து மூடிவிடுகிறாள் என்றால், இப்படி நீங்கள் உங்கள் மனைவிக்குச் செய்கின்றீர்களா? செய்வீர்கள். செய்கிறீர்கள். எப்படிச் செய்கிறீர்கள்? மனைவி நோய்ப்பட்டால் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து வகைகளை வாங்கிக் கொடுப்பதுடன் மட்டும் உங்கள் கடமைகள் நின்றுவிடுகின்றன.
மனைவிக்காக நீங்கள் எப்போதாவது மூலிகைகள் அரைத்துப் பூசியதுன்டா? சொல்வீர்கள் "அதற்கெல்லாம்தானே அவள் தாய் இருக்கிறாள்; சகோதரிகள் இருக்கிறார்கள்; நானென்ன பொம்பளயா? இந்த வேலைகளெலலாம் செய்வதற்கு.”?
உங்கள் மனைவிக்காக எப்போதாவது கட்டுப்பாட்டுணவு எடுத்ததுண்டா? இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என் மனைவி நோயுற்றவளாக இருக்கிறாளே என்று சொல்லி, அவள் பக்கத்தல் அமர்ந்து ஆறுதல் படுத் தரியதுண் டா? இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படி சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு போனால், நீங்கள் மனைவியினுடைய எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும்தான் சம்பாதிக்க நேரிடும்.
33 கலையரசன்

Page 23
0 என் இன்பதுன்பங்களில் கலந்துகொண்ட மனைவியை நான்தான் கவனிக்க வேண்டும்.
0 நான் தான் இத்தனை பணிவிடைகளையும் அவளுக்களிக்க வேண்டும். என்ற ஆழமான உணர்வுகள் உங்கள் அடிமனதில் இருந்து எழும்புகின்ற போதுதான் மனைவி சந்தோசப்படுகிறாள். அந்த சந்தோசத்தினாலேதான் அவளது நோய்கள் தீரவும், குணமடையவும் காத்திருக்கின்றன. சமுதாயத்தில் இப்படியான கணவர்கள் இல்லை என்று சொல்வதற்கில்லை; இருக்கிறார்கள். ஆனால் குறைவு.
எதிர்பாராத விதமாக, நீங்கள் ஏதாவது ஆபத்தில் சிக்குன்டு வீட்டோடு முடங்கிவிட்டால் அல்லது தீராத வியாதி ஒன்றினால் கிடந்த கிடக்கையில் கிடந்தால், உங்களின் நிலமை என்ன? ஏன் சிலர் கிடக்கின்றீர்களே.! உங்களை யார் கவனித்துக் கொள்கிறார்கள்? உங்களின் நாளாந்த காலைக்கடன்களைக் கூட யார் கவனித்துக் கொள்கிறார்கள்? உங்களுடைய தாய் தந்தையர்கள் செய்துவிடப் போகிறார்களா? சகோதரிகள் செய்துவிடப் போகிறார்களா?
மணமகனே! நீங்களே சிந்தியுங்கள். உங்களுடைய அன்பு மனைவி, நேசத்துக்குரிய மனைவிதான் அத்தனை கடமைகளையும் தன் கையாலே செய்துவிடுகின்றாள். அப்படியான ஒரு பெண், எப்படி பொறுமையுள்ளவளாக உங்களுடன் நடந்து கொள்கின்றாள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இது போன்ற கடமைகளை தன்னால் செய்துவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. இத்தனை கடமைகளையும் , பணிவிடைகளையும் நீங்கள்தான் மனைவிக்குச் செய்ய
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

வேண்டும் - என்று நான் வாதிடவில்லை. மனைவிக்கு நன்றியுள்ளவராக இருந்தால் மட்டும் போதும்; உங்களது வாழ்க்கை சுகம் பெறுவதற்கு!
உங்களால் சுமத்தப்பட்ட சுமையை மனைவி சுமக்கிறாள். எந்தச் சுமையை சுமக்கிறாள்? அதுதான் உங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். சொல்லொண்ணா நோவுகளையும், வலிகளையும் தாங்கிக்கொண்டு கடைசி நேரத்தில் அந்தக் குழந்தையை பெற்றெடுப்பதற்காக அவள் படுகின்ற அவஸ்தைகளையும், அடிபட்ட பாம்பு துடிப்பது போல உங்கள் மனைவி துடிப்பதையும் நீங்கள் காணவில்லையா?
இத்தனை வேதனைகளையும் அனுபவித்த மனைவி, "எனக்கு இன்னுமொரு குழந்தை வேணும் தேவி..” என்று நீங்கள் சிறுகுழந்தை போல் அடம்பிடிக்கின்ற போது உங்களை விலக்கிவிடாமல், முகம் சுழிக்காமல் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றாளே - அவளை எப்படி நீங்கள் மறப்பதும், சீர்குலைப்பதும்?
தலைவனே! தலைமகனே! அன்புக்குரியவனே! நீங்கள்தான் உங்கள் மனைவியின் நோய்தீரும் மருந்து. அதற்கு நிவாரணம் உங்கள் கையிலேதான் ! உங்களது மருந்தையும் , நிவாரணத்தையும் அவள் காண்கின்ற போதுதான் நோய்கள் எங்கோ பறந்துவிடுகின்றன. நீங்கள் அந்த நேரத்தில் கொடுக்கின்ற ஆறுதல் வார்த்தைகள்தான் அவளது உடலைக் குணப்படுத்துகின்றன. என்பதை, நான் சொல்லி நீங்கள் ஏற்பீர்களா?
- *
"^ : -
மனைவியின் உடலுக்கு உற்சாகத்தையும் , தைரியத்தையும் கொடுப்பதை விட்டுவிட்டு அவளது மனதையும்
கலையரசன்

Page 24
சேர்த்தல்லவா சிலர் காயப்படுத்துகின்றீர்கள்? கணவன் மனைவிக்குள் ஆயிரம் பிரச்சினைகளும், பித்தனாக்களும் இருக்கலாம். ஆனால், அவைகள் எல்லாம் இந்த நேரத்தில் விலக்கப்படல் வேண்டும். கணவன்- தான் கணவனின் ஸ்தானத்திலும், தாய் என்ற நாமத்திலும் இருந்து மனைவியின் நோய் தீர.
பல சேவைகளை செய்திட வேண்டும். கணவன் - அவள் பக்கத்தில் அமர்ந்திட வேண்டும். உணவு குடிபானங்கள் புகட்டிட வேண்டும். மூலிகைகள் அரைத்து அவள் நெற்றியில் பூசிட வேண்டும். தலைதடவி, முகம்கழுவி தாதியாகிட வேண்டும்.
வழிமுறைகள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. இப்படியெல்லாம் நீங்கள் தன் மனைவிக்கு செய்கின்ற போது உங்களை எப்படியெல்லாம் வைத்திருப்பாள். என்பதை அப்போது காண்பீர்கள்.
பக்குவமுள்ளவனே! செய்துபாருங்கள். அதன்பின் மனைவி உங்கள் கையில்! வாழ்க்கையில் வெற்றி உங்கள் கையில்! இன்பம், சந்தோசம், சுகம் உங்களை தேடிவரும்!
பெண்மனதில் குடியிருப்பவனே! மனைவியை மட்டும் இடம்பிடித்தால் போதாது, குறிப்பாக மனைவியின் தாய் தந்தை, உறவினர்கள் மீதும் உங்களது பார்வைகளும், கவனிப்புக்களும், உதவிகளும் திசைதிரும்ப வேண்டும். இதனால் மனைவிதான் உங்களின் பக்கம் திசைதிரும்புகின்றாள். எப்படி என்கிறீர்களா?
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

நீங்கள் மனைவியின் குடும்பத்திற்கு மூத்த மாப்பிள்ளையாகவோ அல்லது இளைய மாப்பிள்ளையாகவோ இருக்கலாம். எப்படி அமைந்தாலும் இந்தக் குடும்பத்தை கொண்டு செல்வது, வழிநாடாத்துவது எனது கையிலேதான் இருக்கிறது; அதில் ஒரு பகுதி என்னையும் சார்ந்திருக்கிறது. என்ற எண்ணம் உங்கள் மனதில் பதிந்திட வேண்டும்.
மனைவியின் தாய் தந்தையருக்கு, உடன்பிறப்புகளுக்கு, உறவினர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், துன்பங்கள், நோய் நொம்பலங்கள், பணஉதவிகள், வறுமை பிடி என்பன போன்ற விடயங்களால், சில சமயங்களில் திக்குமுக்காடக் கூடிய வாய்ப்புக் கள் நிறைய இருக்கலின்றன. இவ்வாறான சமயங்களில்தான் நீங்கள் முழுமூச்சாக இயங்கவேண்டியும் இருக்கின்றது. இந்த இடத்தில் இவ்வாறான சமயங்களில் எல்லாம் சாதாரணமாக நினைத்து நீங்கள் கைநழுவி விடக்கூடாது; புறக் கணித்துவிடக்கூடாது; அலட்சியம் செய்துவிடக்கூடாது; சோம்பேறியாகவும் இருந்துவிடக்கூடாது. தன்னால் இயன்ற அளவிலான உதவிகளை செய்திட வேண்டும். 0 பண உதவிகள் தேவைப்பட்டால் அதனைச் செய்திட
வேண்டும். 0 உடல் ரீதியான உதவிகள் தேவைப்பட்டால்
அதனைச்செய்திட வேண்டும். 0 அறிவு, ஆலோசனை ரீதியான உதவிகள்
தேவைப்பட்டால் அதனைச்செய்திட வேண்டும்.
இவ்வாறான உதவிகளை நீங்கள் அவர்களுக்கு அள்ளி வழங்குகின்ற போது, அதனை பார்த்து முதன் முதலில் சந்தோசப்படுபவள் உங்கள் மனைவிதான். மனைவி பெருமைப் படுகிறாள். "என் கணவர் எவ்வளவு மனசுள்ளவரு. இவருக்கு மனைவியாக கிடைத்ததில் நான்தான் கொடுத்து வெச்சிருக்கனும்”
கலையரசன்

Page 25
மனைவி மட்டுமல்ல அவளது உறவினர்களும் கூட உங்களை போற்றிப்புகழ்கின்றார்கள்; மரியாதை செய்கிறார்கள்; மதிப்பளிக்கிறார்கள்.
'என் மூத்த மருமகன், இளய மருமகனை விடவும் தங்கமான மனுசன்; இப்படியெல்லாம் உதவிகள் செய்றாரு.'
என்றெல்லாம், தங்களுக்குள்ளே உங்களைப் பற்றித்தான் புகழ்ந்து பாடுகிறார்கள். அவர்களது குடும்பத்தில் ஏதாவது நல்ல தீர்மானங்கள், திட்டங்களுக்கெல்லாம் உங்களைத் தேடித்தான் வருகிறார்கள் என்றால் அதற்கு பொருள் என்ன?
இவைகளை எல்லாம் கண்களால் பார்க்கின்ற, காதுகளால் கேட்கின்ற உங்களது மனைவிதான் நிறைவு பெறுகிறாள். என்கணவர் தான் எங்கள் குடும் பத்துக்கே பெரியவர். என்கணவரைக் கேட்டுத்தான் எனது குடும்பத்தினர் எதையும் செய்வார்கள்... என்ற தற்பெருமைகள் எல்லாம் உங்கள் மனைவியின் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.
இவைகள் அனைத்தும் நீங்கள் மனைவிக்கு போடுகின்ற உரம்! மனைவி உங்கள் பக்கம் திரும்புகிறாள். உங்களின் தாய் தகப்பன், உடன்பிறப்புக்கள், உறவினர்கள் மீது கவனம் செலுத்துகிறாள். உங்களின் உறவினர்களுக்கு சொல்லொன்னா துயரங்கள் என்று சொன்னாலும் கூட மனைவி எப்படியெல்லாம் செயல்படுகிறாள் என்பதை அப்போது காண்பீர்கள். இன்று எத்தனையோ மனைவியர்கள் கணவனின் தாய் தகப்பனை கண்ணும் கருத்துடனும் வைத்து குடும்ப வாழ்க்கை நடாத்துகின்றார்கள் என்றால், அதெற்கெல்லாம் காரணம்: உங்களைப் போன்ற நல்ல கணவர்கள்தான்! உங்களின் நடத்தைகளும், குடும்ப நிருவாக தலைமைத்துவம் சீராக அமைவதும் - அமையப்போவதும் தான் முக்கிய காரணம். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி
(38)

சில குடும்பங்களையும் நிருவாக அமைப்புகளையும் கண்திறந்து பாரக்கின்ற போது தலையிடியும், காய்ச்சலும்தான் வர நினைக்கிறது. கணவன் மனைவியை கட்டிவிடுகிறான். கயிற்றினால் அல்ல. சொல்லால் - கட்டளையால். எப்படி? கணவன் மனைவியைப்பார்த்து சொல்கிறான். அவள் தனது தாய்தகப்பனை பார்ப்பதற்கும், சுகம் விசாரிப்பதற்கும், சில உதவிகளை செய்து கொடுப்பதற்கும் தடைபோட்டுவிடுகிறான் கணவன்.
உடன் பிறப்புக்களை, குடும்ப உறவினர்களை பார்க்கச் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைதான் மனைவிக்கு. குடும்பத்தில் என்றைக்காவது ஒரு நாள் இடம்பெறுகின்ற திருமணவைபவங்கள், பெருநாள் தினங்கள். இது போன்ற இன்னும் பல விஷேட தினங்களுக்கெல்லாம் கணவன் மனைவியை அதட்டிவிடுகின்றான். ஏன் நோய் நொம்பலங்கள் என்று சொன்னாலும் கூட சரியான முறையில் சென்று சுகம் விசாரிக்கவும் காலமும் நேரமும் மனைவிக்கு அமைவதில்லை.
இவ்வாறான தடைகளையும், கட்டுப்பாடுகளையும் கணவன் மனைவிக்கு விதிக்கின்ற போது, மணமகனே! உங்களது உறவினர்களை விட்டும் மனைவி தூரமாகிக்கொள்கிறாள். அவள் ஒரு பெண். தடைஏதும் விதிக்கமாட்டாள் உங்கள் மீது. ஆனால் தனக்குள்ளே ஒரு தடை ஒன்றையும், கட்டுப்பாடு ஒன்றையும் வைத்துக் கொள்கிறாள். நீங்கள் பார்த்திருப்பீர்கள். மனைவியை அனுகி உங்களின் தாய்வீடோ, உறவினர்கள் வீடோ செல்வதற்காக அழைக்கின்ற போது எடுத்தஉடனே மறுத்துவிடுவாள்.
'எனக்குசுகமில்லை; எனக்கொரு மாதிரியா இருக்கு; இப் போதைக்கு என்னால முடியாது; பிறகு பார்ப்பம் என்றெல்லாம்
கலையரசன்

Page 26
ஒரு சில காரணங்களை முன்வைத்து விலகிவிடுகிறாள் உங்கள் மனைவி.
இரண்டு மூன்று தடவைகள் இப்படி கணவன் மனைவிக் கிடையில் இடம்பெறுகின்ற போதுதான் உண்மை வெளியாகும்.
0 எனது தாய்தகப்பனை என்னவென்றும் திரும்பிப்
பார்க்கிறீர்களா? 0 அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்றாவது
உங்களுக்கு தெரியுமா? 0 அவர்கள் நோய் வாய்ப்பட்டுக் கிடந்த போது
என்னையாவது விட்டீர்களா? 0 இப்படி நீங்கள் இருக்கும்போது, எனக்கு மட்டும் என்ன அக்கறை உங்கள் தாய் தகப்பன் மேல.? என்றெல்லாம் மனைவி வெடிக்கத்தொடங்குகிறாள்.
கணவனே! உங்கள் வாழ்க்கையில் இப்படியான சம்பவங்களும், சரித்திரங்களும் ஏற்படக்கூடாது. அதனை நீங்கள்தான் கண்ணும் கருத்துடனும் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனைவியின் உறவினர் மீது திசை திரும்புங்கள். நோய் நொம்பலங்களை சென்று விசாரியுங்கள். கஷடங்களில் பங்குகொள்ளுங்கள். மனைவியையும் பங்கு கொள்ளும்படி தூண்டிவிடுங்கள். அது உங்களுக்கு வெற்றியளிக்கும்!
பெண்மலரை ஆட்சி செய்பவனே! நீங்கள் நாள் சம்பளம் பெறுகின்றீர்கள். மாதாந்த சம்பளம் பெறுகின்றீர்கள். தட்ட வட்டமாக, இவ் வளவு தொகைப் பண நீ தான் நான்தெரியமுடிகிறதா? சொல்லி இருப்பீர்களா? இல்லையென்று திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

தன்வசமே வைத்துக்கொள்ள, மல்ன்வி தனது செலவுகளுக்கு நாளுக்கு நாள் Ng LĎ* பெற்றுக் கொள்ளக் கூடிய அளவில் தரிxஆ மனைவியர்கள் இருந்துவிடுகிறார்கள்.
உங்களைப் போன்றுதான் மனைவியும்; உங்களுக்கு ஏற்படுகின்ற செலவுகள் போன்றுதான் மனைவிக்கும். என்னசெலவென்று நினைக்கிறீர்களா..?
0 உங்களுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப்
போடவேண்டும் - அதற்கு பணம் தேவை. 0 உங்களது பிள்ளைகளுக்கு சில தேவைகள்
இருக்கின்றன - அதற்கு பணம் தேவை. 0 நீங்கள் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் எதிர்பாராத விதமாக உங்களது பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ - நோய், திடீராபத்துக்கள் நேர்ந்து விடக்கூடும். அதனைக் கவனித்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்கு பணம் தேவை.
இப்படியான சில தேவைகளுக்கெல்லாம் வீட்டில் இருக்கின்ற மனைவி முகம் கொடுக்கக்கூடியவளாகவும்,
அடிக்கடி பணம் தேவைப்படக்கூடியவளாகவும் இருப்பதை
நன்கு அறிவீர்கள். அறிந்திருந்தும் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதில் என்ன தாமதம்?
சில நேரம் மனைவியின் முகத்தில் ஏசிவிடுவதும், முகம் சுழித்துக்கொள்வதும் இயல்பாகி விட்டது சில கணவர்களுக்கு. மனைவி தனது தேவைகளை முன்னிறுத்தி பணம் கேட்கின்ற போது, "காலையில தானே இத்தனை ரூபா கொடுத்தன்; அதுக்குள்ள இப்படிச் செலவா?. இதுக்கெல்லாம் எந்தவாப்பா
கலையரசன்

Page 27
உழைச்சிக் கட்டுற.? " என்று மனைவியின் முகத்தில் கேட்டுவிடுவதும் உண்டு. இப்படி கணவன் மனைவிக்கிடையில் நடைபெறுகின்ற போது மனைவி சில நேரங்களில் பின்வாங்கு கிறாள்; தன் கணவனிடம் பணம் கேட்டுக் கொள்வதைக் குறைத்துக்கொள்கிறாள்.
தலைமகனே! நீங்கள் தான் உங்கள் மனைவியை புரிந்து கொள்ளவேண்டும். மனைவியின் தேவைகளையும், தேவைக் கேற்ற செலவுகளையும் நீங்கள் தான் நன்கு அறிவீர்கள். உங்கள் மனைவி உங்களிடம். “எனக்கு இன்னது வேணும்; இவ்வளவு தேவ" என்று அவளாக உங்களைக் கேற்பதற்கு முன்னரே நீங்கள் தான் அவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் கணவனின் கடைமையும்!
மனைவி சில நேரங்களில் தேவைகளை வைத்துக்கொண்டு வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்வதும் உண்டு. "அடிக்கடி பணம்கேற்பதால எதையாவது நெனச்சிக்கு வாரோ?” என்ற எண்ணங்களினால் அப்படியே விட்டுவிடுவாள்.
சில நேரம் உங்களது மனைவிக்கு - அடிக்கடி தலைவலி, காய்ச்சல், உடல் நோவு, உற்சாகமின்மை போன்ற சிறிய சிறிய நோய்களும் வந்து செல்லக்ககூடிய உண்மைகள். இப்படியான சமயங்களில் மனைவி ஊமையாகிவிடலாம். எனவே, இவைகளை எல்லாம் கணவன் நன்கு அறிந்திருக்க வேண்டும்; அதன் படி நன்கு செயல்படவும் வேண்டும்.
முதலில் நீங்கள் பெறுகின்ற சம்பளப் பணம் "இவ்வளவுதான்.” என்பதை மனைவியிடம் காண்பிக்க வேண்டும். இந்த மாதம் என் கணவருக்கு இவ்வளவு தொகைதான் சம்பளமாக கிடைத்தது. என்ற ரகசியம் மனைவிக்கு தெரிய
வேண்டும். မြို့ကြီးဖုံ}பந்தத்தில் - கணவன் மனைவி -

கணவனாகிய உங்களுக்கு குடும்பச்செலவுகள் என்றும், தனிப்பட்ட செலவுகள் என்றும் ஏராளமான செலவுகள் உங்கள் தலையில்! உங்களுக்குத் தெரியாமலே கைகளால் நாளுக்கு நாள் செலவுகள். எடுக்கின்ற சம்பளப்பணத்தை முதன் முதலில் மனைவியின் கையில்தான் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு மனைவியின் கைகளால் உங்களுக்கு தேவையான தொகைகளை முன்னிறுத்தி பெற்றுக் கொண்டது போக, மீதிப்பணம் மனைவியின் கண்காணிப்பில் இருந்துவிடும். அந்த நேரத்தில் மனைவி பெருமைப்படுகிறாள்.
0 முதலில் என்னிடத்தில்த்தான் கொண்டுவந்து தருவார். 0 என் கணவர் எனக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் கூட
எடுத்ததில்லை செலவு செய்வதுமில்லை. 0 என்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்.
என்றெல்லாம் மற்றையவர்களிடம் புகழ்ந்து பேசுமளவுக்கு இருந்துவிடுகிறாள் என்பதை அறிவீர்கள். சில கணவர்கள் மனைவி மீது வீணாக சந்தேகிப்பதும் உண்டு. இவளிடம் பணத்தைக்கொடுத்தால் கண் தலை தெரியாமல் செலவு செய்துவிடுவாள் என்று சிந்திப்பதும்; பணத்தை மோசம் செய்துவிடுவாள். அதுதான் தாய்,தகப்பன், சகோதரர்களுக்கு செலவு செய்துவிடுவாள் என்று, தேவையற்ற வீண்பழி சுமத்துவதும் இன்று பிரபல்யமாகிவிட்டது.
சீதேவி மகனே! இவ்வாறான சிந்தனைகளையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. எல்லா விடயங்களிலும் மனைவி மீது தெளிவும், நம்பிக்கையும் பலமாக இருந்துவிட வேண்டும். பெண் என்பவள் எப்போதுமே "சிக்கனத் தன்மையுள்ளவள். ஆடம்பரமான செலவுகளையும், ஆடம்பரமான வாழ்வையும் அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளாதவள். தன் கணவன் அதனை விரும்பினாலும் கூட சில புத்தி மதிகளையும், சில
கலையரசன்

Page 28
காரணங்களையும் முன்னிறுத்தி செலவுத்தானங்களைக் குறைப் பதற்கு முயற்சி செயப் பவள். இப் படியான கொள்கையுடைய உங்கள் மனைவியிடம் நீங்கள் பணப்புழக்கம் செய்வதனால் உங்களது பணத்துக்கு என்றுமே பாதுகாப்புத்தான்.
பொறுப்பு சுமத்தப்பட்ட பொறுப்பாளி நீங்கள். எடுக்கின்ற சம்பளப் பணங்கள் முழுவதையும் முப்பது நாட்களுக்குள்ளும் செலவு செய்துவிடக் கூடாது. செலவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போக, ஒரு குறிப்பிட்ட சிறுதொகைப் பணம் எந்த நேரமும் தன் வீட்டில் இருப்பிலிருந்துவிடல் வேண்டும்; கணவன் மனைவி இருவரது பார்வைகளுக்கும் தென்படும் அளவுக்கு! தற்பாதுகாப்புக்காக! அதுதான் திடீராபத்துகளுக்கும், நோய் நொடிகளுக்கும் என்று!
சிலர் இப்படியான பழக்கங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள். எடுக்கின்ற அத்தனை ரூபாக்களையும் கண் தலை தெரியாமல் செலவு செய்து விடுவார்கள். அவசரமாக பணம் தேவைப்படுகின்ற போது. அதற்கு மட்டும், கணவர் மனைவியரை விரட்டிவிடுவர்கள்; கிள்ளிவிடுவார்கள்; அக்கம் பாக்கத்தில், உறவினர்களிடத்தில் பணம் திரட்டுவதற்கு!
அன்புக்குரியவனே! உங்களுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் உரிமைகளிருக்கின்றன. உங்களிடம் சில கெட்ட செயல்கள், பழக்கங்கள், பேச்சுக்கள் இருந்தால் அதனைக் கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும் மனைவிக்கு உரிமைகள் இருக்கின்றன. அதனை நீங்கள் கேட்டு நடந்தால், தனது மனைவியை மதித்து அவளது பேச்சுக்களையும் செவிமடுத்து நடந்தால் அதன் மூலமாக பெருமைப்படுவதும், சந்தோசப்படுவதும் உங்கள் மனைவிதான்.
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

போதை வஸ்து, புகைத்தல், வேற்றுப்பெண்களுடன் அளவுக்கு மீறிய பேச்சுத்தொடர்புகள், அதிகமாக போக்கு வரத்துச் செய்தல் - என்பன போன்ற பழக்கங்கள் எந்த மனைவிக்கும் பிடிக்காத விஷயம் தான். இப்படியான பழக்கங்களுக்காக மனைவி உங்களை எச்சரித்திருப்பாள்; கண்டித்திருப்பாள். சிலர் செல்லமாகக் கோபிப்பதுமுண்டு!
இவைகளையெல்லாம் நீங்கள் கேட்கவேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லை. உங்கள் கூட இருக்கின்ற மனைவி சொல்வதையே கேட்காத நீங்கள்.? இருந்தாலும், மனைவியை நீங்கள் மதிக்க வேண்டும் அல்லவா? சொல்கிறாளே என்பதற்காக வேண்டி புகைக்கின்ற பழக்கத்தை மறைவிலாவது வைத்துக் கொள்ளவேண்டாமா?
நீங்கள் மனைவிக்காக வேண்டி மாற்றிக் கொள்கின்ற போது, அவளது பேச்சுக்களுக்கு செவிமடுக்கின்ற போது, "பழகின பழக்கம் கணவனை பிடியில வெச்சிருந்தாலும் என்னை மதிக்கிறார்; என்பேச்சுக்களை கேட்கிறார்; அது ஒன்று போதும் எனக்கு!” என்று உங்கள் மனைவிதான் பெருமைப்படுகிறாள். நீங்கள் முற்று முழுதாக அதிலுருந்தும் விலகிவிட்டால் இந்த உலகத்தில் அதைவிட பெரிய சந்தோசம் வேறெதுவுமில்லை உங்கள் மனைவிக்கு "நான் சொல்லவும் விட்டுட்டாரு; அதைவிடவும் நான் தான் அவருக்கு உயிர்.” இப்படியெல்லாம் உங்கள் மனைவி நினைப்பதுண்டு.
அன்புக்குரிய கணவனே! கணவன் மனைவிக்கிடையில்
வீணான சந்தேகங்களை உண்டு பண்ணி.
0 வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள்.
0 வாழ்க்கையை குலைத்துவிடாதீர்கள்.
0 நீண்டகாலக் கனவுகளை சின்னாபின்னப்படுத்தி
விடாதீர்கள்.
கலையரசன்

Page 29
மெளனத்தால் மனைவியைக் கொல்லாதீர்கள். பார்வைகளால் மனைவியை திண்டாதீர்கள். வார்த்தைகளால் மனைவியைத் தண்டிக்காதீர்கள். நம்பிக்கையை இழந்து, விவாகரத்து "நோட்டீஸ்” பெற்றுக்கொடுத்து கண்மணியை - அவள்தான் உங்கள் மனைவியை பிரித்து விடாதீர்கள். -
சந்தேகம் ஒர் ஆட்கொல்லி நோய். ஏன் அது ஒருகளையும் கூட! ஒருவனது மனதில் சந்தேகம் குடிகொண்டுவிட்டால், முதன் முதலாக அவன் சந்தோசத்தை, மன நிம்மதியை இழந்துவிடுகிறான். மனிதனுக்குள் இரண்டு நோய்கள் மட்டும் குடிகொள்ளக்கூடாது.
0 புற்று நோய் 0 சந்தேக நோய் - இவைகள் இரண்டிற்கும் உலகில் மருந்தே கிடையாது. எனவேதான் உங்களது உள்ளம் குழப்பத்திலிருந்தால், ஒரு விடயம் சம்மந்தமான சந்தேகம் உங்களது உள்ளத்தில் ஊடுருவினால் - தலைவனே! நெருங்குங்கள்; உங்கள் மனைவியிடம் நெருங்குங்கள்; வாய் 'திறந்து பேசுங்கள்.
மனதுக்குள் அப்படியே பூட்டி விடுகின்ற போதுதான் நீங்கள் தவறு செய்ய ஆரம்பிக்கின்றீர்கள். அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா..? வீணாக நீங்களாகவே கேட்டு அலட்டிக் கொள்கின்ற போது ஒரு கேள்வி இன்னும் பல கேள்விகளாக அதிகரிக்கின்றன.
இப்பொழுது உங்களது உள்ளம் பல கேள்விகளுக்கு மத்தியில் தாண்டவமாடவும், நிம்மதியில்லாமல் அலைந்து திரியவும், மனைவி மக்களையிழந்து நிராயுத பாணியாக
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

நிற்கின்ற நிலைமைகளும்தான் உங்களுக்கு உருவாக இருக்கின்றன.
எமக்கு தீராத பிரச்சினைகள் இடம்பெற்றுவிட்டால், மனதில் கவலைகள் நிறைந்து மனச்சுமைகள் அதிகரித்துவிட்டால் அதனை நாம் யாரிடத்தில் தீர்த்துக்கொள்வோம்? யாரிடத்தில் அதனை இறக்கி வைத்து நிம்மதி பெறுவோம்.? எமது உடலோடு உயிராக ஒட்டியிருக்கின்ற நண்பனிடத்தில்தான்!
மனச்சுமைகளை இன்னொரு நபரிடத்தில் இறக்கிவிடுகின்ற போதுதான் மனசுக்கு சற்று ஓய்வும், நிம்மதியும், தீர்வுகளும், ஆலோசனைகளும் கிடைக்கின்றன. எனவேதான், சீதேவி மகனே! உங்களது மனைவியை - மனைவியாக மட்டுமல்லாது, நண்பியாகவும் ஆக்கிக்கொண்டால் என்ன?
நீங்கள் கணவன் மனைவி நண்பர்களாக இருந்து விட்டால் வாழ்க்கையில் எந்தப்பிரச்சினைகளும் எளிதில் இடம்பெற போவதில்லை. உங்களது சந்தேகங்களையும், குழப்பங்களையும் நண்பியாகிய மனைவியிடத்தில் வெளிப்படையாகவும், விளையாட்டாகவும் கேட்டுவிடுகின்ற போது.
0 மனைவியும் உடனுக்குடன் பதில் தரக்கூடியவளாகவும், உங்களது பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்வாகக் கூடியதாகவும் அமைந்து விடுகிறதல்லவா? 0 மனதுக் குள் வைத்துக் கொண்டு சலி லாபம் விளையாடுவதற்கு நேர அவகாசமும் இருக்கப் போவதில்லை.
பொதுவாக எந்தப் பெண்ணைத்தான் (மனைவியை) எடுத்துக் கொண்டாலும், "என்கணவர் எனக்கு மட்டும்தான்” என்று நினைப்பவள்.
கலையரசன்

Page 30
எதையும் விட்டுக்கொடுப்பாள்; பகிர்ந்து கொள்வாள்; ஆனால், தன் கணவனை மட்டும் இன்னொருத்திக்கு விட்டுக்கொடுப்பதற்கோ, பகிர்ந்து கொள்வதற்கோ ஒரு போதுமே சம்மதிக்க மாட்டாள்.
சாதாரணமாக நீங்கள் வேற்றுப் பெண்ணொருவள் மீது அளவுக்கு மீறிய அன்பு பாசங்கள் புரிவதையும், கதைத்துச் சிரிப்பதையும், போக்குவரத்துச் செய்வதையும் உங்களது மனைவி பார்க்க நேரிட்டால் அதனை அவள் பொறுத்துக் கொள்ள மாட்டாள். அந்தளவுக்கு அவளது மனதில் ஈரமுமில்லை, இரக்கமுமில்லை. இது எல்லா மனைவியர் களிடமும் குடியிருக்கின்ற இயல்பான ஒன்றுதான்.
அவளை அறியாமலேயே எரிந்துவிடுகிறாள். இதனைக் கண்டு என் மனைவி என்னை சந்தேகப்படுகிறாள்; என்மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறீர்கள். உங்கள் மீது எப்படித்தான் மலை போன்ற நம்பிக்கை அவள் வைத்திருந்தாலும் சில சமயங்களில் கணவனது நடத்தை களினாலும், முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்களினாலும்..... 0 சில மனைவியர்கள் கணவன் மீதுள்ள நம்பிக்கையை
இழந்து விடுகிறார்கள். 0 கணவன் மீது சந்தேகம் கொள்கிறார்கள்.
எனவேதான், கணவனே! மணமகனே! மனைவி மீதுமட்டும் அளவு கடந்த அன்பைச் செலுத்துங்கள். அதனைக் களங்கப்படுத்தி விட நினைக்காதீர்கள். அன்புக்கு வேலி போட்டு சந்தேக நோய்க்கு அவளைத்திசை திருப்பிவிடாதீர்கள்.
0 பெண் மனம் அடிக்கடி குழம்பக்கூடியது என்பதை,
நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி
(48)

சீதேவி மகனே! எதற்கெடுத்தாலும் மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நல்ல காரியம்தானா? உங்கள் மனைவி தனக்குத் தெரிந்த, பழக்கமான ஆண்களுடன் கதைத்துச்சிரிக்க கூடாதா? தன்னோடு வேலை பார்கின்ற அதிகாரிகளுடன், வேலையாட்களுடன், பணியாட்களுடன் பேச்சுத்தொடர்புகள் வைத்துக்கொள்ளக் கூடாதா? இப்படி அசுத்தமான பார்வைகளும், சிந்தனைப் போக்குகளும் உங்களது மணவாழ்க்கையில் என்றைக்குமே இடம்பெறக் கூடாது.
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு வழிகளைத் தேடுங்கள்; சந்தேகம் வரும் போதுதான் நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்ளுங்கள். அதுதான் அதற்குறிய சரியான மருந்து.
0 நீங்கள் வாழும் இல்லறம் மகிழ வேண்டும். 0 உங்களது உள்ளங்களும் மகிழ வேண்டும். 0 உங்களது மணவாழ்வுக்கு இலட்சியமொன்று வேண்டும். 0 இலட்சியத்தின் மூலம் சாதனைகள் பலவும் படைத்திட
வேண்டும்.
கணவன் - மனைவி - பிள்ளைகளுடன் எப்போதுமே கலகலப்பும், செஞ்செழிப்பும் இருந்திட சீதேவி மகனே! நீங்களே உங்களை சீர்செய்து கொள்ளுங்கள்.
இதுவே உலகின் இன்றைய தேவை
| (49)
கலையரசன்

Page 31
6! -'
1ெ ) ! ! ! ! !
குடும்பத்தலைவியே..! தலைமகளே...!
திருமண வாழ்வின் இலட்சியப் பாதைக்கு சிறந்த ஓர் உசாத்துணை இல்லத்தலைவிதான். இல்லறம் என்ற கட்டடத்திற்கு மனைவிதான் தூண். எனவேதான், மணமகளுக்கு கூடிய போதனைகளும், உபதேசங்களும், வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. இதன் நிர்மித்தம் மணமகளின் தலைமேல் அதிகப்படியான பொறுப்புக்களும், கடமைகளும் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. அப்படியானால், மனைவி - கணவன் மீது நூதனாமாகவும், நுணுக்கமாகவும் நடந்துகெள்ள வேண்டிய
தேவைகளும் நிறைந்திருக்கின்றன.
கணவன் எத்தனையோ சுமைகளைச் சுமக்கின்றான். குடும்பத்தின் அத்தனை பொறுப்புக்களையும், சிக்கல்களையும், நிருவகிப்புக்களையும் தலைவன் ஏற்று நிற்கின்றான். இப்படியான பொறுப்புக்களை ஏற்று நிற்கின்ற கணவனைச் சுமக்கின்றீர்கள் என்றால், நீங்கள் எப்படிப்பட்ட சீதேவியாகவும், பொறுமை சாலியாகவும், பொறுப்பாளியாகவும், புத்திசாலியாவும் அமைந்து விடுதல் வேண்டும்? என்பதை மணமகளே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
0 நான் யார்? 0 எதனுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றேன்? 0 என் னை நம் பி வருகை தந் திருக் கின்ற
கணவனை எவ்வாறு கவனித் துக் கொள் ள வேண்டும்? 0 எனது பொறுப்புக்களும் கடமைகளும் என்ன?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு நீங்கள் திசை திரும்பக் கூடியவளாகவும், விடையளிக்கக் கூடியவளாகவும் இருக்கின்றீர்கள். - திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -
- 50)

0601
மணமகளே ! உங்களது கணவர் நீண்ட எதிர்பார்ப்புடன் தான் உங்களைத் தேடி வந்திருக்கின்றார். தாய் தகப்பனுடைய அன்பு பாசங்களை விட்டும், உடன் பிறப்புக்களின் அன்பு பாசங்களை விட்டும்! இவர்களை விடவும் என் மனைவி இருப்பாள்; இனி எனக்கெல்லாமே மனைவிதான் - என்ற இறுமாப்போடுதான் உங்களை ஏற்றுக் கொண்டார் என்பதனை மணமகள் அறிந்திருக்க வேண்டும்.
சில கணவர்கள் இப்படியும் வருகிறார்கள்; தாய் வீட்டில் இருந்து வாழ்க்கை வெறுக்கப்பட்ட நிலையில், தாய் தந்தையர் பாசத்தில் குறைவு பட்டவர்களாகவும் அல்லது கிடைக் காதவர்களாகவும், உடன் பிறப்புக்கள் இருந்தும் அவர்களுடைய அன்பு பாசங்களால், பணிவிடைகளால், கவனிப்புகளால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் வருகிறார்கள். இவர்களிடம் திருமணம் என்று சொன்னதும் சிறிது அச்சப்பட்டடிருப்பதும் உண்மை.
என்னவென்று கேட்கிறீர்களா? எனது தாய் தகப்பன், சகோதரிகளைப் போலவே கிடைக்கின்ற மனைவியும் இருந்திடுவாளோ? என்ற மனக் குழப்பந்தான் அந்த அச்சம்!
தலைமகளே! இவ்வாறு பல வழிகளிலும் திக்குமுக்காடப் பட்டு உங்களது காலடிக்கு வருகின்ற போது, நீங்களும் திக்கு முக்காட வைத்து விட்டால் உங்கள் கணவனின் நிலமை என்ன? பெண்ணுக்கு அழகு அவளது முகமுமல்ல, முடியுமல்ல, அவள் அணிகின்ற உடையுமல்ல. பொறுமைதான் அவளுக்கிருக்கின்ற ஆகப்பெரிய சொத்து. மணமகள் கொண்டு வருகின்ற சீர் வரிசையும் இதுதான். இந்தப் பொறுமை உங்களிடத்தில் முழுமை கொண்டிருந்தால் பெண்ணுக்குரிய நான்கு குணங்களையும் நீங்கள் அடைந்திருப்பீர்கள். (51)
- கலையரசன்

Page 32
எனவேதான், பொறுமைக்குரிய தகைமையை நீங்கள் அடைய வேண்டும். அப்போதுதான் கணவனின் எதிர் பார்ப்புக்களை நிறைவேற்ற உங்களால் முடியும்.
அதிகாலை நேரத்துடன் கண்விழிக்கின்ற நீங்கள் கணவன், பிள்ளைகளுக்கு தேனிர், டீ பருகக் கொடுக்கின்ற விடயத்திலிருந்துதான் உங்களது கடமைகள் ஆரம்பிக்கின்றன. தன் கைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரை கொண்டு மலர்ந்த முகத்துடன், இதமான புன் சிரிப்புடன் கணவர் முன்னிலையில் நீட்டுகின்ற போதுதான் அவருக்கு மலர்ந்த நாள். விடியற் காலையிலேயே கணவரது உள்ளத்தில் சந்தோசமும், உதட்டில் புன்னகையும் பதிந்து விடுகின்றன. நீங்கள் மலர்ந்த முகத்துடன் நீட்டினால்த்தான் இத்தகைய மாற்றங்கள் என்பதை மணமகள் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
கணவன் படுக்கையறையை விட்டும் வெளியேறுகின்ற போது, குளியலறைக்கு வேண்டிய வசதிகளை நீங்களாகவேதான் செய்து கொடுக்க வேண்டும்.
0 பல் துலக்கு வதற்கான ஏற்பாடுகள்.
0 தேய்த்துக் குளிப்பதற்கான ஏற்பாடுகள்.
அணுகு முறைகளுக்கு வேண்டிய இரகசியங்கள் இருக்கின்றன. அவைகளைக் கையாண்டால் நிச்சயம் கணவர் உங்கள் கையில் !
கணவனை மலர்ந்த முகத்துடன் வேலைக்கு அனுப்புகின்ற விடயம் மிக மிக முக்கியமானதும், மணமகள் கவனத்தில் கொள்ள வேண்டியதுமான விடயமும் கூட !
0 சேட் அயன் பண்ணவில்லையா?
0 "ட்ரெளசர் அயன் பண்ணவில்லையா? திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

0 காலை உணவு இன்னமும் தயாராக வில்லையா?
என்ற குற்றச்சாட்டுக்களும், கோபதாபங்களும், முகம் சுழித்தலும் காலையில் இருந்தே இடம் பெறுதல் கூடாது. சுழித்த முகத்துடன் வேலைத்தளத்திற்கு செல்கின்ற போது, அன்றைய தினம் சூனியமாகிவிடுகின்றது உங்கள் கணவனுக்கு.
எனவேதான் இவைகளையெல்லாம் விடுத்து கணவரது எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக சகல வசதிகளையும் செய்து கொடுக்கின்ற போது, கணவர் முகமலர்ச்சியுடன் தான் உங்களை விட்டும் வேலைத்தளத்திற்குச் செல்கின்றார். வீட்டை விட்டு வெளியெறும் போதே கணவர் மனதில் சந்தோசம்.
அவருடைய அத்தனை வேலைகளும் மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் அமையவிருக்கும். பணியாட்களுடன், வாடிக்கையாளர்களுடன் அன்பான முறையில் பேசவும், அவர்களது தேவைகளை இலகுவாக நிறைவேற்றவும் அன்றைய தினம் உங்களது கணவரை எதிர்பார்த்து நிற்கின்றது.
பல மணி நேரங்களை கழித்துவிட்டு வீடு திரும்புகின்ற கணவரை இன்முகத்துடன் வரவேற்று, அவரது களைப்பைப் போக்குவதில் உங்களை விட்டால் வேறுயாருமாக இருந்துவிட முடியாது. வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்புகின்ற வேளையில் கணவனை எதிர் பார்த்து நிற்பதும், கணவன் வருவதைக் கண்டதும் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு, கணவனின் பக்கம் திரும்புவதும் வரவேற்கின்ற தொரு விடயம் தான்.
மாற்றுடைகளை அணிவதில் உதவியாளராக இருப்பதும், அமரவைத்து சற்று ஓய்வு பெறுவதற்கான ஏற்பாடுகளைச்
கலையரசன்

Page 33
செய்து கொடுப்பதும் வரவேற்கின்றதொரு விடயம்தான்.
0 மின் விசிறியை சுழலவிடுகின்ற விடயம்.
0 மின் விசிறி இல்லாத இடங்களில் தன் கையாலே
அதற்கு உதவியாளராக இருக்கின்ற விடயம்.
0 பருகுவதற்குத் தக்க குளிர் பானங்களைக் கொண்டு
நீட்டுகின்ற விடயம்.
0 களைத்த உடலைக் கழுவிக் கொள்வதற்கான
குளியலறை ஏற்பாடுகள்.
இத்தனை கடமைகளையும் தாண்டிய பின்னர்தான் கணவனுடன் பேசுவதற்கும், செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் மனைவி முன்வருதல் வேண்டும். வெளியில் இருந்து வருகின்ற கணவன் பல்வேறு கோணங்களில் வந்திருக்கலாம். இதனால் சிறு சிறு குறைகளுக்கும் கோபங்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய உண்டு என்பதை, மணமகள் நன்கு விளங்கிக் கொள்ளல் அவசியம்.
இவ்வாறான சமயங்களில் உங்களது பொறுமையும், அமைதியும்தான் கணவனின் கோபத்தை அடக்குவதற்கான சரியான பொறி. கணவனை ஆறி அமரவிட்டு அன்போடு அணுகி பிரச்சினைகளையும், சிக்கல்களையும் மெதுவாக கேட்டு கணவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும், வழிகளையும் காண்பிக்க வேண்டும்.
கேள்விகேற்கின்ற விடயத்தில், தான் புத்தியுடன் நடந்து கொள்வது மிகமிக அவசியமாகும். அதில் தான் மணமகள் தவறுகள் செய்கிறாள். கணவனிடம் அளவிற்கு மீறிய கேள்விகள் கேட்பதையும், அடம் பிடிக்கும் அளவிற்கு, பலாத்காரப்படுத்தும் அளவிற்கு கேள்விகள் கேட்பதையும் மணமகள் முற்று முழுதாக மாற்றிக் கொள்தல் வேண்டும். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

கணவன் தாமாகவே விரும்பி சொல்கின்ற வரையில் பொறுமையுடன் இருப்பது நல்லது. சில நேரங்கள் மறதியுடன் விட்டிருக்கலாம். எனவேதான், இனியும் இயலாத பட்சத்தில் மட்டும் ஒரு தடவை வாய் திறந்து, நீங்கள் கேட்கவிருந்த
0 போனவிடயம் என்ன?
0 போன காரியம் நல்லதாக முடிந்ததா? என்று மெதுவாகக் கேட்கலாம். அதற்கு உங்களது கணவனிடமிருந்து பதில் ஏதும் வராவிட்டால், நீங்கள் அதனை அப்படியே விட்டு விடுவதுதான் சாலச் சிறந்தது.
இவைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு 'வக்கீல்" தனமான கேள்விகளை கணவர் முன்னிலையில் தூவி விடுகின்ற போது கணவர் சினம் கொள்ளவும், முகம் சுழிக்கவும் துவங்குகிறார். அதிலும் சில மனைவியர்கள் இருக்கிறார்கள், வெளியில் சென்று திரும்பிய கணவன் வீட்டில் காலடி எடுத்து வைப்பதை எதிர்பார்த்திருந்தவர்கள் போல்.
0 போன விடயம் என்ன? 0 நான் இன்ன பொருள் வாங்கிவரச் சொன்னேனே -
அது வாங்கிவர வில்லையா? 0 பிள்ளைகளுக்கு இன்னது தேவை. அதைப்பற்றிய
ஞாபகம் வரவில்லையா? இது போன்ற கேள்விகளை கணவர் முகத்தில் விதைத்து விடுகின்ற போதுதான், கணவர் மனைவி மீது அன்பு செலுத்துவதில் கஞ்சத்தனம் செய்வதற்கு ஒரு காரணம்! களைப்பு ஒரு பக்கம். அவர்களது அசட்டுத் தனமான கேள்விகள் இன்னொரு பக்கம். பிள்ளைகளின் தொல்லைகள் மறுபக்கமாக இருந்து, கணவரை சீறிப்பாய இடம் கொடுக்கின்றன.
55 கலையரசன்

Page 34
தந்தையைக் கண்ட பிள்ளைகள் நிலத்தில் சும்மா நிக்கப் போவதில்லை.
)ெ தகப்பனைத் தாவிப்பிடித்து விளையாடுவார்கள்.
0 தனது தேவைகளை முன்னிறுத்தி அடம்பிடித்த
ழுவார்கள்.
0 பிள்ளைகளுக்குள்ளே சண்டைகளை மூட்டிக்
கொள்வார்கள்.
0 கோபம் கொள்ளக் கூடிய சிறு சிறு செயல்களில்
ஈடுபடுவார்கள்.
எனவே, இவ்வாறான முடக்குகளையெல்லாம் சீர்செய்து, கணவர் சற்று ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலைகளை மனைவிதான் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் - உங்கள் மணவாழ்வு துளிர்விடுவதற்கு!
மணமகளே! தங்கள் தங்களுக்கென்று ஒரு சில இரகசியங்கள் இருப்பது உலக நியதி. அதனை மற்றவர்கள் அறியாத படி மறைத்து விடுவதும் இயல்பு. கணவனுக்கென்று சில இரகசியங்கள் இருக்கின்றன. அதனைக் கிண்டி ஆராய்ந்து சுவைத்துப் பார்ப்பது சில மனைவியர்களுக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. இதன் இரகசியம் என்ன? இதன் மர்மம் என்ன? எதற்காக என்னிடத்தில் மறைக்க வேண்டும்? என்ற அசட்டுத் தனமான எண்ணங்களால் கணவனது இரகசியங்களை அறிந்து கொள்ள எத்தணிக்கின்ற போதுதான், கணவனின் வீண் பழிகளை மனைவி சுமக்க வேண்டியிருக்கின்றன.
எல்லாக் கணவர்களும் தங்களது இரகசியங்களை மறைப்பதில்லை. சிலர்தான் அப்படி இருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு: திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

தந்தையைக் கண்ட பிள்ளைகள் போவதில்லை.
〈。ヘ みo 0 தகப்பனைத் தாவிப்பிடித்து விை யாடுவார்கள்?
0 தனது தேவைகளை முன்
ழுவார்கள். 0 பிள்ளைகளுக்குள்ளே சண்டைகள்ை
கொள்வார்கள். 0 கோபம் கொள்ளக் கூடிய சிறு சிறு செயல்களில்
ஈடுபடுவார்கள்.
எனவே, இவ்வாறான முடக்குகளையெல்லாம் சீர்செய்து, கணவர் சற்று ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலைகளை மனைவிதான்' ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் - உங்கள் மணவாழ்வு துளிர்விடுவதற்கு!
மணமகளே! தங்கள் தங்களுக்கென்று ஒரு சில இரகசியங்கள் இருப்பது உலக நியதி. அதனை மற்றவர்கள் அறியாத படி மறைத்து விடுவதும் இயல்பு. கணவனுக்கென்று சில இரகசியங்கள் இருக்கின்றன. அதனைக் கிண்டி ஆராய்ந்து சுவைத்துப் பார்ப்பது சில மனைவியர்களுக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. இதன் இரகசியம் என்ன? இதன் மர்மம் என்ன? எதற்காக என்னிடத்தில் மறைக்க வேண்டும்? என்ற அசட்டுத் தனமான எண்ணங்களால் கணவனது இரகசியங்களை அறிந்து கொள்ள எத்தணிக்கின்ற போதுதான், கணவனின் வீண் பழிகளை மனைவி சுமக்க வேண்டியிருக்கின்றன.
எல்லாக் கணவர்களும் தங்களது இரகசியங்களை மறைப்பதில்லை. சிலர்தான் அப்படி இருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு:
- கலையரசன்

Page 35
இரகசியத்தை பரகசியமாக்கிவிடுவாள் - என்ற அச்சம். இது மனைவிக்குத் தேவையில்லை - என்ற தீர்மானம். இதனைச் சொல்லி என்ன பிரயோசனம்? - என்ற மனச்சலிப்பு. இதனைச் சொன்னால் என்மீதுள்ள அன்பை, பாசத்தை இழந்து விடுவாள் - என்ற கவலை. இது மனைவிக்கு தெரியாமலிருப்பதே நல்லது - என்ற தீர்மானம். இதனைச் சொன்னால் மனைவி கோபங்கொள்வாள். என்ற எதிர்பார்ப்பு.
இது போன்ற காரணங்களினால் கணவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்தாமல் தன்னோடு வைத்துக் கொள்கிறார்கள்.
மணமகளே ! கணவனுக்கென்று இருக்கின்ற ஒரே சொத்து நீங்கள் தான். கணவன் உங்களை நம்பி, உங்களது நல்ல ஆலோசனைகளை எதிர்பார்த்து, தீராத பிரச்சினைகளின் இரகசியங்களை உங்கள் காதுகளுக்குள் பொத்தென ஊதிவிடுகின்ற போது, நீங்கள் அதனை எப்படிப் பாதுகாக்கின்றீர்கள்? தீர்வுகாணாத சில பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் எதிர்பார்க்கின்ற துணைவனுக்கு நீங்கள் துணைவியாக இருந்து விடுகின்றீர்களா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரகசியங்களை பரகசியமாக்கி விடுவதும், புறக்கணித்து விடுவதும், கவனயீனமாக இருந்து விடுவதும் உண்டு. இவ்வாறான கொள்கைகள் உங்களிடத்தில் இருக்கின்ற போதுதான் தரம்பிரித்து கணவனால் ஒதுக்கப் படுகின்றீர்கள்.
கணவர் உங்களை மறந்து விடுகிறார். மறைத்து விடுகிறார். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

ஊமையாகி விடுகிறார் - என்பதை மணமகள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
கணவன் உங்களைத் தேடிவர வேண்டும். மனைவியிடத்தில் தான் இதற்கான சரியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். என்ற எண் ணம் கணவனது மனதல் பூரணமாக உறைந்துவிடுதல் வேண்டும். மனைவி என்னைவிடவும் இரகசியங்களை பேணிப்பாதுகாப்பவள் என்ற தற்பெருமை, உங்கள் கணவன் மத்தியில் நிலவ வேண்டும். அதில்தான் உங்களுக்கு வெற்றி இருக்கிறது.
அன்புத் தலைவியே கணவனுக்கு மட்டுமல்ல உங்களுக்கென்றும் சில இரகசியங்கள் இருக்கின்றன. அந்த விடயம் இன்னொருவருக்குத் தேவையில்லை என்ற எண்ணப்பாடுகளும் உங்கள் உள்ளத்தில் மலருகின்றன.
இரகசியங்களை மறைப்பதன் மூலமாக எதையும் சாதித்து விட முடியாது. உங்களது முகம் சோகத்தில் தள்ளாடுவதையும், உங்களது உள்ளத்தில் கவலைகள் நிறைந்து தன்னை மாய்த்துக்கொள்வதையும் கணவனால் உணரமுடிகின்றது.
முகத்தில் சந்தோசத்தை இழந்து விடுகிறீர்கள். உடலில் உற்சாகத்தை இழந்து விடுகிறீர்கள். இதன் மூலமாக கணவன், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், பொறுப்புக்களையும் முறைப்படி செய்வதற்கு தவறிவிடுகிறீர்கள்; அல்லது குறைவு படுத்திவிடுகிறீர்கள்; சோம்பலாக இருந்து விடுகிறீர்கள்.
இவ்வாறு உங்களளவிலே அறிகுறிகள் தென்படுகின்ற போது கணவன் கவலைப்படுவதற்கும், எதையோ என்னிடத்தில்
கலையரசன்

Page 36
மறைக்கிறாள் என்ற எரிச்சல், மூட்டை மூட்டையாகக் குவிந்து விடுவதற்கும் சூழ்நிலைகள் நிறையக் காத்திருக்கின்றன.
சில மனைவியர்கள் இருக்கிறார்கள்; கணவன் அறிந்திருக்க வேண்டிய சில உண்மைகளையும், இரகசியங்களையும் அப்படியே மறைத்து விடுகிறார்கள். நாட்டார் கூறுவது போல். “ஊர்வாயை மூட உலாமூடி போதுமா?, முழுப்பூசணிக்காயை சோத்துக்கல்லைக்குள் மூடி மறைத்து விட முடியுமா? " சிறு சிறு கசிவுகளால் கணவனது காதுகளுக்குள் வந்து சேர்கின்ற போதுதான் கணவனுக்கும் மனைவிக்கும் இடையou 'ல் வீச ஆரம்பிக்கின்றது. எல்லாக்கணவர்களும் உடனுக்குடன் கேட்டுவிடுவதில்லை. சிலர் மனதுக்குள் அப்படியே போட்டுவிடுவார்கள்; சமயம் பார்த்து உடைத்து விடுவார்கள். சிலர் தேவையில்லை என்று விட்டுவிடுவார்கள்.
எவ்வாறிருந்த போதிலும், கணவன் உண்மைகளை அறிந்த நிலையில் தெளிவு பெறுவதற்காக வாய்திறந்து கேட்கின்ற போது, எடுத்த மாத்திரத்திலே மறைத்து விடுவதும், எரிந்து விழுவதும், கோபத்துக்குள்ளான பேச்சுக்களை வளர்த்துக் கொள்வதும் சில மனைவியர்கள் மத்தியில் குடியிருக்கின்ற பழக்கங்கள்தான்.
உண்மைகளை மறைக்கக் கற்றுக்கொண்டால் போதாது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். 0 ஆமாங்க அப்படித்தான். நேற்று உங்களிடம் சொல்லலாம் என்றுதான் பார்த்தன் நீங்க ரொம்ப பிசியாக இருந்ததால சொல்லக்கிடைக்கல்ல. 0 சொல்லணும் என்றுதான் வந்தன். ரொம்ப டயடா’ இருந்தீங்க. பிறகு சொல்லாம் என்று விட்டதால மறந்து போயிட்டு.
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

'பொய்' என்ற சொல் - முதன் முதலில் கணவனது தன்னம்பிக்கையை இழந்து விட வைப்பதுடன், அது கடைசியாக தன் மனைவியை சந்தேகப் படவும் வழியமைத் துக் கொடுக்கின்றது.
என் மனைவி உண்மையை மறைத்து விட்டாளே! கேட்டும் கூட பொய் சொல்லி விட்டாளே ! என்ற சிறியதொரு நோவும், சிறயதொரு கோடும் மனதில் விழுந்து விடுகின்றது உங்களது கணவனுக்கு இவ்வாறான சம்பவங்கள் பலதடவைகளில் இடம் பெறுகின்ற போதுதான், கணவன் - மனைவி மீதுள்ள நம்பிக்கையை இழந்து விடத் துவங்குகிறான்.
சர்வசாதாரண விடயங்களுக்கே இப்படி நடிப்பவள், மலை போன்ற விடயங்களில் எப்படி ஆடிப்போவாள்.?
என்ற வீணான சிந்தனைகளாலும், குழப்பங்களாலும் கணவர் உங்கள் மீது சந்தேகப்பட ஆரம்பிக்கின்றார். இது கணவனின் உள்ளத்தில் அவரை அறியாமலேயே உதிக்கின்ற உணர்வுகள். (இந்த இடத்தில் கணவன், மனைவியை சந்தேகப்படுவதை குறையாகக் கருதவில்லை. கணவன் சந்தேகப் படுவதற்கு மனைவி இடமளிப்பததைத்தான் குறையாகக் கருதுகின்றேன்.)
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையையும் நெருங்காது. என்பதைப் போல், உங்களது கருத்துக்களும், ஆதாரங்களும் உண்மைக் குண்மையாக இருந்தாலும் கூட, அதனை ஏற்றுக்கொள்ள கணவன் தயாரில்லை. ஏனென்றால் கணவர் உங்களால் சூடு கண்ட பூனையல்லாவா? கணவர் குற்றக் கண்கொண்டுதான் உங்களை நோக்குகிறார் என்பதை மணமகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கலையரசன்

Page 37
“ س .
மனைவி என்பவள் குடும்பத்தினுடைய கொடி மரம்! அது படர்ந்து மலர் விடுவது போல், நாளடைவில் கணவன் - மனைவி மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைகள் வளர்ந்து அது மேலும் மேலும் விரிவடைய வேண்டும். பக்க வேர்கள் போன்று கணவனின் மனதில் கவ்விப்பிடித்திருக்கவும் வேண்டும்.
0 என்மனைவி எதையும் மறைப்பதில்லை.
0 என்மனைவி அப்படிப்பட்டவளில்லை.
0 என்னைக் கேட்காமல் எதைச் செய்வதாக இருந்தாலும் அதைச் சரியாகத்தான் செய்வாள் - என்பன போன்ற எண்ணங்கள் கணவன் மனதில் நிலவ வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பெருமை.
சிந்தேகம் என்ற சொல் கூடியபாகம் பெண்களைத்தான் சாரந்து நிற்கின்றது. கணவன் மேல் சந்தேகப் படுகின்ற விடயம். கணவன் சந்தேகப்படுவதற்கு மனைவி இடமளிக்கின்ற விடயம். இவைகள் இரண்டும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்.
மணமகளே ! கணவன் மீது உயிரையே வைத்திருக்கின்ற நீங்கள், சிறு சிறு குற்றங்களைக் காணுகின்ற போது அதனைத் தூக்கிப் பிடித்துக் கொள்கிறீர்கள். உங்களை அறியாமலேயே எரிச்சல் வந்து விடுகிறது. இனம் புரியாத கோபங்கள் உங்களுக்கு ஏற்பட்டு விடுகின்றன. குத்துக் கதைகளும், வெட்டுக் கதைகளும், சுடு பேச்சுக்களும் உங்கள் மத்தியில் நிலவிவிடுகின்றன.
கணவனுக்கு பழக்கமான ஒரு பெண் சுகம் விசாரித்தால் போதும். எழுத்து மூலம் ஒரு மடலை எழுதிப் போட்டால் போதும். இவள் யார்? இவளுக்கு என்ன உரிமை அடிக்கடி திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

என் கணவரை சுகம் விசாரிப்பதற்க்கும்? தொடர்புகள் வைத்துக் கொள்வதற்கும் என்ற வீணான குழப்பங்கள்தான் உங்களிடம் நிறைந்து விடுகின்றன.
தொலைபேசியில் ஒரு பெண் குரலைக் கேட்டால் போதும். அதனைப் பெரிதுபடுத்திக் கொள்கிறீர்கள். உங்களது முகம் சுருண்டு விடுகின்றது. இதனைப் பற்றி கணவனிடம் கேட்கும் வரைக்கும் தூக்கமே கிடையாது உங்களுக்கு. கணவன் வீடு சேர்ந்ததுதான் தாமதம் " தொலைபேசியில ஒருவள் பேசினாள் யாரது ? என்னேரமும் உங்களத்தான் விசாரிக்கிறாள்" என்று கணவனின் முகத்தில் ஆவேசத்துடன் கேட்டு விடுகிறீர்கள்.
சில மனைவியர்கள் இருக்கிறார்கள் - கணவனுக்கு நெருக்கமான உறவுப் பெண்களுடன் நகைத்துச் சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். "இவருக்கென்ன இவ்வளவு பாசம் பொங்கிவழியிற?” என்று மனதால் எரிந்து விடுவார்கள். சில நேரம் "இவளுகளோடல்லாம் உங்களுக்கென்ன கதை பேச்சு?’ என்றெல்லாம் கணவர் முகத்தில் குத்திப் பேசி விடுவதும் சிலருக்குப் பழக்கமான ஒன்றுதான்.
வெளியே சென்ற கணவருக்கு ஆயிரம் வேலைகள்! அதற்காகத்தான் அவர் வெளியெ செல்வதும். நினைத்த வேலைகள் நினைத்த நேரத்தில் முடிவடைவதில்லை. காலதாமதம், நேர தாமதம் ஏற்படுவதும் உண்மை. அவ்வாறு நடந்து விட்டால் மனைவியின் முகத்தை யார் பார்ப்பது?
இவ்வளவு நேரமும் எங்க போன? இந்த சின்ன விசயத்த முடிப்பதற்கு இவ்வளவு நேரம் தேவைதானா? என்ற பேச்சுக்களால் கணவனின் முகத்தை சுட்டுவிடுகிறார்கள்.
கலையரசன்

Page 38
சீதேவிமகளே ! இவ்வாறான சந்தேக எண்ணங்களும், பார்வைகளும், பேச்சுக்களும் கணவனின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன. நீங்கள் சர்வசாதரணமாக பேசிவிடுகின்ற குத்துப் பேச்சுக்களும், வெட்டுப் பேச்சுக்களும், கணவனின் மனதை ஆழமாக பாதிக்கின்றன.
எனவே, நீங்கள் கணவனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற காலமெல்லாம் அவர் நிரபராதி ஆகிவிட முடியாது. அவர் எப்போதுமே உங்கள் முன்னிலையில் குற்றக் கைதிதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கணவனை சந்தேகப்படாமல் இருந்தால் மட்டும் போதாது. கணவன் உங்கள் மீது சந்தேகப்படாமல் இருப்பதைப் பற்றியும் சிந்திக்கத்தான் வேண்டும். உங்களது மணவாழ்வு சீர் குலைவதற்கு சிறு நூல் இடைவெளி போதுமானது. அந்த இடைவெளியை நீங்களாகவேதான் உருவாக்கி விடுகிறீர்கள். கணவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் என்னைச் சந்தேகக் கண்கொண்டு நோக்கக் கூடாது. அதற்கு நான் இடமளிக்கவும் கூடாது. என்ற எண்ணங்கள் இயல்பாகவே உங்கள் மத்தியில் உருவாக வேண்டும். இந்த சிந்தனை மனதில் மிகைத்து விட்டால் போதும். செயல்பட்டு விடுவீர்கள்.
மணமகளே! எல்லா ஆண்களும் (கணவர்களும்) ஒரேமாதிரியாக இல்லை. என்பது நீங்கள் அடிக்கடி கூறிக்கொள்கின்ற ஒன்று. உண்மையும் அதுதான்.
சில் கணவர்கள் இருக்கிறார்கள், தன் மனைவி நன்கு பழக்கப்பட்ட வேற்று ஆடவர்களுடன் பேச்சுத் தொடர்புகள் வைத்துக் கொள்வதையும், நகைத்துச் சுவைப்பதைப்பற்றியும் எந்த வகையிலும் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களுடன் தானும் சேர்ந்து கொள்வார்கள். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி
(64)

ஆனால் இவ்வாறான சிந்தனைகள் சிலருக்கு இருப்பதில்லை.
வேற்று ஆடவர்களுடன் நகைத்துச் சுவைப்பது - என் கணவருக்குப் பிடிக்காது....
என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், அதிலிருந்து விலகிக் கொள்வதுதான் மனைவியின் கடமை. அதுதான் நீங்கள் கணவருக்கு செய்யவேண்டிய சேவையும் கூட!
இதனைப் புரிந்து கொள்ளாத மனைவிக்கு கணவன் எச்சரித்திருப்பதும், தடை செய்திருப்பதும் உண்மை. ஒரு பெண் திருமணத்துக்கு முன் எப்படியும் வாழ்ந்திருக்கலாம். தான் நினைத்ததை சாதித்திருக்கலாம். தனது இஸ்டங்கள் போல் சிந்தித்திருக்கலாம். உங்களது அன்றைய காலங்களை எடுத்து நோக்குகின்ற போது......
தனது நண்பிகளுடன் சேர்ந்து நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்று காலத்தைப் கழித்திருப்பதும், உங்களுடன் பழக்கமான அல்லது கல்வி பயின்ற நண்பர்களுடன் சாதாரணமாகப் பேசிச் சிரித்து, நாட்களைக் கடத்தியிருப்பதும் உண்மைதான். அது அந்தக் காலம்.
திருமணம் முடித்து நீங் கள் கணவனின் சுற்று வட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பழைய காலங்களும், பழைய வாழ்க்கைகளும், பழைய பழக்கங்களும் அப்படி அப்படியே அதே இடத்தில் நின்று விடுதல் வேண்டும். இப்பொழுது பழைய வாழ்க்கைகளும், பழைய பழக்கங்களும் உங்களுக்கு பகைவன் - என்பதை மனதில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
65)
கலையரசன்

Page 39
இன்பம் - துன்பம், நல்லது - கெட்டது, நோய் - சுகம், நண்பன், காதலன் இனிமேல் அத்தனை உணர்வுகளும் உங்களுக்கு கணவர்தான். என்ற சிந்தனை, திருமணமான அதே மேடையில் உங்களது இதயத்தில் நிறைந்து விடுதல் வேண்டும். ஏன்? நிறைந்திருக்கவும் வேண்டும்.
பழைய காலங்களையும், பழக்கங்களையும் இப்போதும் வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்கு உங்களால் கணவனின் மனதை திருப்திப் படுத்த முடியும்?
மனைவியின் கதை பேச்சுக்களினால் ஒரு சில கணவர்களுக்கு எரிச்சல் வந்து விடுகிறது. ஒரு சிலருக்கு சந்தேகம் பிறந்துவிடுகிறது. எவ்வாறு என்று கேட்கிறீர்களா? தன் கணவனிடத்தில் அல்லது கணவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இன்னொரு ஆடவரைப்பற்றி புகழ்ந்து பேசுவதாலும், பெரிது படுத்திப் பேசுவதாலும் !
0 எனக்கு இன்னவரால நிறைய உதவிகள் கிடைத்
திருக்கிறது.
0 எந்த உதவியைக் கேட்டாலும் முன்நின்று செய்து தருவார். இது போன்ற பேச்சுக்களை எந்த நேரமும் கணவனிடத்தில் பேசிக்கொள்வதினால், கணவனுக்கு சிந்தனைகள் அதிகரிக்கின்றன. சில நேரங்களில் மனைவி தன் கணவனை சிறுமைப்படுத்தி விடுவதும் உண்டு.
0 உங்களால முடியாது. இன்னாரால் முடியும்.
என்று, இன்னொருத்தரை ஒப்புமைகாட்டி பேசுகின்ற பேச்சுக்கள் கணவனின் உள்ளத்தில் அம்பு போல் பாய்ந்து
விடுகின்றன; மனதை தாழ்த்தி விடுகின்றன.
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி

சீதேவிமகளே! உங்களது கணவனை நீங்கள்தான் புகழ்ந்து பேச வேண்டும். நீங்கள்தான் பாராட்டவும் வேண்டும். அதற்கு உங்களை விட்டால் வேறுயாராலும் முடியாது. எனவே, மனைவி இன்னொருத்தரைப்பற்றி அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுவதனால், கணவனுக்கு இயல்பாகவே சந்தேகம் பிறந்து விடுகின்றது என்பதை மணமகள் ஏற்று கொள்ள வேண்டும்.
தலைமகளே! கணவன், உங்கள் மீது மலை போன்ற அன்பையும், பாசத்தையும் சொரிந்து விடுவது உண்மை. நீங்கள், என் கணவர் எனக்கு மட்டும்தான் என்று நினைப்பதைப் போலவே தான் - உங்கள் கணவர், என் மனைவி எனக்கு மட்டும்தான் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதனை நினைத்து பெருமைப்பட வேண்டியவர்கள் நீங்கள்தான்.
வேற்று ஆடவர்கள் மூலமாக, எனக்கும் மனைவிக்கு மிடையில் பரிவினை வந்துவிடுதல் கூடாது. மனக் கசப்புகள் கலந்துவிடுதல் கூடாது. சந்தேக உணர்வுகள் பிணைந்து விடுதல் கூடாது. என்பதற்காக வேண்டி, கணவன் சற்று முன்னெச் சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும் வைத்திருப் பதனால் என்னதவறு இருக்கிறது? இவ்வாறு நினைக்கின்ற கணவனை வேற்றுக்கண்கொண்டு பார்ப்பதும், குத்திப் பேசுவதும் சரிதானா?
0 என் மீது உங்களுக்கு சந்தேகம்.
0 என் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை. என்று கணவனை வீண் பழிக்கு இட்டுச் செல்வது முறைதானா? இவ்வாறான சிந்தனைகளை விட்டும் நீங்கள் களைந்தெரியப்படல் வேண்டும்.
சீதேவிமகளே! நீங்கள் திருமாணமான ஒரு பெண். தாலிக் கயிறு கட்டியவர்தான் என் கணவர். என்பதை நீங்கள்
கலையரசன்

Page 40
ஏற்று கொண்டிருந்தால் உங்களது பழைய 5Tதலையும், காதலனையும் அடியோடு மறந்து விடுதல் வேண்டும்.
சில மனைவியர்கள் அப்படி இல்லை. காதல் தோல்வியாகி பெற்றோர்களது கட்டாயத்தின் பேரால் இன்னொருவரை மணந்து கொண்டதால் - பழைய காலங்களும், பழைய காதலனும் ஒழிந்து மறையாது இவர்களுக்கு! அதனை மறந்து விடுவதாக மட்டும் இவர்கள் இல்லை.
கணவனுடன் மனம் திறந்து பேசவும், சிரித்து மகிழவும், கொஞ்சி விளையாடவும் இவர்களால் முடியாது போகும். ஏனென்றால் அவர்களது பிடிவாதத்தினால்! நான் விரும்பாத திருமணமாப் போச்சே - என்ற அவர்களது பிடிவாத்தினால் 1
சரியான முறையில் கணவனைத் திருப்திப் படுத்த முடியாது. கணவன் அவர்களைத் தொடுவதையும், நெருங்கு வதையும் யாரோ மேனியில் ஊசியினால் குத்துவது போல் உணர்ந்துவிடுகிறார்கள்.
சிறு சிறு குற்றங்களையும், குறைகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்; பெரிது படுத்தி விடுகிறார்கள். கணவனை வார்த்தைகளால் தாக்கி விடுகிறார்கள். இதன் மூலமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படவும், இரண்டு மூன்று நாட்கள் முகம் பார்த்துப் பேசாது மெளனவிரதம் இருக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.
காலப் போக்கில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தவும், விவாகரத்தைப் பெற்றுக் கொடுக்கவும் காலம் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறது. திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

அதன் பின் தனிமரமாகி விடுவார்கள். அதன் பிறகு இவர்கள் இன்னொருத்தரை மணந்து கொண்டு சந்தோசமாக வாழ்க்கை நடத்த முடியுமா? இப்படி பிடிவாதக்காரியாகவும், ஒரு கொள்கை வாதியாவும் இருக்கின்ற அவர்களால் முடியாது போகும்.
சீதேவிமகளே! இவ்வாறான நிலைமைகளுக்கு நீங்கள் எக்காலத்திலும் தள்ளப்படக் கூடாது.
0 நான் விரும்பிய வாழ்க்கை எனக்கு அமைய
வில்லையே? - 0 நான் விரும்பியவருடன் சேர்ந்து வாழக் கொடுத்து
வைக்க வில்லையே?
என்று மனம் வருந்துவதிலும், கண்ணீர் சிந்துவதிலும் எந்தப் பயனையும் அடைந்து விட முடியாது - என்பதனை நீங்கள் ஏற்றுக்கொண்டால், பழைய காதலை துரும்பாக நினைத்து தட்டி விடுங்கள். அவைகளையெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மனதை திருப்பதிபடுத்திக் கொள்வதுதான் அறிவுள்ள உங்களுக்கு அழகு.
கிடைத்தவரை பொன்னை விடவும் மேலாக மதியுங்கள். "நான் விரும்பியவரை விடவும் கணவராகக்கிடைத்தவர். நல்லவர் போல இருப்பார் . அதனாலதான் கடவுள் இப் படி அமைத்திருக்கிறான்" என்று, மனதை திருப்திபடுத்தி கணவனின் பக்கம் திசைதிரும்புங்கள்.
0 சிறிதளவேனும் கள்ளமில்லாத தூய அன்பையும்,
அரவணைப்பையும் கணவன் மீது அள்ளி வீசுங்கள். 0 மனதில் ஒன்றும், வெளிப்படையில் இன்னொன்று மல்லாமல் மனம் திறந்து, மனமுவந்து பேசுங்கள்; சிரியுங்கள்.
(9) -
- கலையரசன்

Page 41
மணமகளே! உங்களுக்கு இன்னும் ஒரு பிரச்சினையும் வர நினைக்கிறது. திருமணத்திற்கு முன் காதலித்து கைவிடப்பட்ட உங்களைப்பற்றி கணவன் அறிந்திருப்பதும், அதனை உங்கள் முன்னிலையில் கேட்டுவிடாமல் மனதிற்குள் வைத்துக் கொள்வதும் உண்டு. ஆனால், சிலர் அப்படி இல்லை.
எனவேதான், உங்களுக்கு சிறந்ததொரு வழிமுறை இருக்கின்றது; கணவன் நல்ல நிலைமையில் இருக்கும் பட்சத்தில் மட்டும் நீங்களாகவே அணுகி, ஏற்கனவே உண்டான காதலைப்பற்றி விளையாட்டாகப் பேசிவிடுவதனால் என்ன குறை வந்துவிடப் போகின்றது.?
எனக்கும் அந்த காதலனுக்கும் இடையில் இப்போது எந்த தொடர்புகளும் இல்லை. என்ற உறுதி மொழியினை கணவன் நம்பக்கூடிய வகையில் முன்வைத்து, கணவனின் மனதை தெளிவு படுத்தி விடுவதனால் உங்களுக்கு என்ன கெடும்பு நேர்ந்துவிடப்போகிறது? سے ہر
இவைகளை மறைக்க எத்தணிக்கின்ற போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது. கணவன் உங்களை அணுகி, குற்றக் கூண்டில் நிற்க வைத்து கேள்விமேல் கேள்விகள் கேற்பதை பற்றியும், நீங்கள் அந்த நேரத்தில் சிந்துகின்ற கண்ணிரைப்பற்றியும் எழுதப்போனால் காலமும் நேரமும் போதாது.
கைவிடப்பட்ட காதலன் உங்கள் மீது கோபமாக இருப்பதும், காதல் ஜெயிக்கவில்லை என்ற வெறியில் இருப்பதும் உண்மையான கூற்று. இவ்வாறான சமயங்களில் கைவிடப்பட்ட காதலன் உங்களது வாழ்வில் குறுக்கிடவும், வாழ்வை சீரழித்து நடுத்தெருவில் கொண்டு நிறுத்தவும் முடியாத காரியம் அல்ல. திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

0 உங்களது கணவனை குழப்பிவிட நினைக்கலாம்.
0 நீங்கள் அனுப்பிய கடிதங்களையும், மடல்கலையும் காண்பித்து கணவனை அவமானப்படுத்துவதுடன் ஆத்திரத்தை உண்டுபண்ணவும் நினைக்கலாம். எனவேதான், முன்யோச னையுடன் தப்பித்துக் கொள்வதில் வெற்றி உங்கள் பக்கம்!
"ஆரம்பத்தில் நான் அவரை விரும்பினது உண்மைதான். ஆனால் அவர் கெட்ட சிந்தனையுள்ளவர், கெட்ட பழக்கமுள்ளவர் என்று தெரிஞ்சபோது அதே கணம் நான் அவரை விட்டும் விலகிட்டன்..!” இது போன்ற பேச்சுக்களால் கணவனின் மனதை நீங்களாகவே தெளிவுபடுத்தி விடுதல் வேண்டும். குறிப்பாக, கணவர் எப்படிப்பட்டவர் என்பதனை அறிந்து வைத்திருக்கின்ற நீங்கள் அதன் படி பேச்சுக்களை அமைத்துவிடுவது நல்லது. இதனால், காதலித்த விடயத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாளே! என்ற கணவனது குற்றப்பார்வையில் இருந்தும் தப்பித்துக் கொள்கிறீர்கள்.
சில சமயங்களில் வெறித்தனத்தில் இருக்கின்ற காதலன் உங்களது சொந்த விலாசத்திற்கு கடிதங்கள் அனுப்புவதும், சில பரிசுப்பொதிகளை அனுப்பிவைப்பதும் உண்டு. அதனை சில மனைவியர்கள் சொல்லாமல் மறைத்து விடுவதும் உண்மை. எத்தனை நாட்களுக்கு இதனை மறைக்க முடியும்? மூன்றவது கடிதமும், மூன்றாவது பரிசுப்பொதியும் கணவனின் கையில்தான் என்பதை மணமகள் மறந்துவிடுதல் கூடாது.
கைவிடப்பட்ட காதலன் இடைஞ்சலாக இருந்தால் இயன்ற அளவு தடுத்துப்பாருங்கள்; எச்சரிக்கை விடுத்துப்பாருங்கள். அதனையும் மீறினால் நீங்கள் கணவனை நெருங்குவதுதான் நல்லது. அனுப்பிவைத்த கடிதங்களையோ, மடல்களையோ, பரிசுப் பொதிகளையோ கணவன் முன்னிலையில் கொண்டு
கலையரசன்

Page 42
நிறுத்தி சம்பூரணமாக தெளிவு படுத்துங்கள். அதில்தான் வெற்றியும் தங்கியிருக்கின்றது.
ஒரு சகோதரியின் கதையை இப்படித் தொட்டு வைக்கின்றேன்.
திருமணத்திற்கு முன் காதலித்து கைவிடப்பட்ட ஒரு பெண்! காதலித்த விடயமாக தன் கணவனிடம் எதையும் கூறாமல் மறைத்து விட்டாள். திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே கைவிடப்பட்ட காதலன் அவளை பின் தொடர்ந்தான். இரண்டு கடிதங்கள் அவளைத் தேடி வீடு சென்றன. இது விடயமாக தனது கணவனிடம் தெரிவிப்பதைப் பற்றியும் சிந்தனை ஓடவில்லை.
முகத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஊசலாடத் தொடங்கியது. காரணம் கேட்ட கணவனையும் வேறு காரணங்களை முன்வைத்து சாமளித்து விட்டாள். மூன்றாவது கடிதம் கணவனது கையில்தான் கிடைத்தது. இது விடயமாக கணவன் தன் மணைவியை எதையும் கேட்கவில்லை. மாறாக, தாய்வீடு சென்று திரும்பிய மனைவியிடத்தில், "தாயைப் பார்த்திட்டு
99
வாறியா? இல். 6υ..... என்று பேச்சை முடிக்காமல் இழுத்திருந்தார்.
நான்காவது கடிதமும் கணவனது கையில்தான் கிடைத்தது. மனைவியை ஒரு கணம் ஏற இறங்க பார்த்தார் கணவர். அப்பார்வை ஒரு கன்னத்தில் “பளார்” என்று விட்டமாதிரி இருந்தது மனைவிக்கு.
ஐந்தாவது, கடிதமில்லை வாழ்த்து மடலாகவே கிடைத்தது. கணவன், மனைவியிடம் கூறிய ஒரு வார்த்தை இதுதான். “நமக்கு கிடைக்கப் போற குழந்தை என்னுடையதுதானா? ” அதன்பின் கணவனுக்கும், மனைவிக்கும்மிடையில் கருத்து திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

மோதல்கள்! அடுத்த கடிதம் விவாகரத்தாகவே கிடைத்தது
கணவனுக்கும் மனைவிக்குமிடையில்.
எனவேதான், சீதேவிமகளே! 0 வீணான பிரச்சினைகளும், 0 வீணான சிந்தனைகளும், 0 தேவையில்லாத பேச்சுக்களும், 0 சீர்குலைக்கும் பார்வைகளும் உங்களது மங்கள கரமான இல் வாழ்வில் என்றைக்குமே இடம் பெறுதல் கூடாது. அதற்கான சரியான வேலியை இப்போதிருந்தே போட்டு விடுங்கள் - உங்களது மணவாழ்வு மலர்வதற்கு!
0 என் மனைவி என்னோடு மட்டும்தான் குளிர் நிலவு;
0 என் மனைவி இன்னோர் ஆடவனிடம் நெருப்பு மாதிரி - என்ற பெருமையை, நீங்கள் கணவனிடம் இருந்து பெறுவதற்கு!
கணவன் இல்லம் புகுந்த மகாலட்சுமி நீங்கள். உங்களது அழகைப் பற்றியும் சற்று சிந்திக்கத்தான் வேண்டும். கணவர் என்போதுமே உங்களது அழகைத்தான் எதிர்பார்த்திருக்கிறார். உலகத்தில் மிகவும் அழகான பெண் யாரென்று உங்களது கணவனைக் கேட்டால், அது என்மனைவி மட்டும் தான் - என்று சொல்வார்கள் நிறையப்பேர்.
உங்களது அழகை வைத்து கணவனை இறுக பூட்டி விட்டால் என்ன? அதற்காகவேண்டி இருக்கின்ற அத்தனை நகைகளையும் அள்ளிப்போட்டு, கூறை பட்டுத்துணிகளால் தன்னை போர்த்திக் கொண்டு "ராணிநடை போட வேண்டும் என்பதல்ல கருத்து. பெண்களுக்கு இயல்பாகவே ஒரு தனி அழகு உண்டு. இது இயற்கை மாதா அள்ளி வழங்கிய வரம்! கணவன் ரசிக்கக்கூடிய அளவில் மட்டும் தன்னை அமைத்துக் கொண்டால் போதுமானது.
கலையரசன்

Page 43
என்மனைவி அலங்கரிக்காமலே இப்படி அழகு என்றால், அலங்கரித்தால் எப்படி கவர்ச்சியாக இருப்பாள் என்று கணவர் நினைப்பதுண்டு. அழகாக இருப்பவர் மீதுதான் மற்றவர்களும் மனமுவந்து பேசவும், சிரித்து மகிழவும், விருப்பம் வைக்கவும் நினைக்கிறார்கள்.
சில பெண்கள்; தரமான வைரநகைகளை இரும்புப் பெட்டிக்குள் இருகப் பூட்டி விட்டு, தெருவில் காண்கின்ற மணி மாலைக்கும், வளையலுக்கும் ஆசைப்படுவது போல் சில கணவர்கள்; தரமான மனைவியொருத்தியை வீட்டிற்குள் வைத் துவிட்டு தெருவில் காணி கன்றவள் மீது ஆசைப்படுவதற்கும், விருப்பம் கொள்வதற்கும் இந்த அழகு என்ற விடயம்தான் காரணம் என்பதை, நான்தான் சொல்ல வேண்டியதல்ல.
அந்த வகையில், மனைவி அழகு வடிவுடன் இருப்பதனால் கணவனுக்கு புது உணர்வுகளும், ஆசைகளும் இயல்பாகவே அரும்பெடுக்கின்றன. அப்போதுதான் தன் மனைவியோடு பேசிச்சிரிப்பதற்கு நேரத்தை ஒதுக்கவும் நினைக்கிறார்கள்.
தான் மட்டும் அழகாக இருந்தால் போதாது பிள்ளைகளும் அழகைப் பெறல்வேண்டும். தன்னையும், பிள்ளைகளையும் அழகுபடுத்தினால் மட்டும் போதாது. வீடும், வீட்டு முற்றங்களும், அதனோடு ஒட்டிய தோட்டங்களும் அழகைப்பெறல் வேண்டும். அழகைப்பெறல் வேண்டும் என்றால், அழகுபடுத்துதல் வேண்டும்.
சிலருடைய வீடுகளைச் சென்று பார்க்க முடியாது. ‘பேய் பிசாசு’ குடியிருக்கின்ற வீடு மாதிரித்தான் காட்சியளிக்கின்றது.
0 போட்ட சாமான் போட்ட இடத்தில்.
0 ஓரிடத்தில் இருக்க வேண்டிய பொருள் இன்னோர் இடத்தில். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

\ 0Բ-3
இப்படி, தலைகீழ் வடிவமாக காட்சியளிக்கின்றது. இரன்டு நாட்களுக்கு ஒரு தடவை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருதடவைதான் கூட்டித் துப்பரவு செய்வதாகவும் அந்த மனையாளுக்குள் ஒரு விதிமுறை.
சீதேவிமகளே! இல்லத்தின் ஒளிவிளக்கு என்ற பட்டத்தை பெற்ற மனைவி நீங்கள். இருளுக்கு நீங்கள் ஒளிவிளக்கு! உங்களளவிலேதான் இல்லம் ஒளிர வேண்டும். இருள் நீங்கவும் வேண்டும். எதிர் பாராத விதமாக உங்களது இல்லம் தேடி வேண்டப்பட்ட உறவினர்கள், கணவனது நண்பர்கள், வேலைத்தளத்தில் வேலை செய்கின்ற மதிப்புக்குரிவர்கள், கெளரவத்துக்குரியவர்கள் வந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. இச்சமயத்தில் உங்களது வீடு வாசல் அலங்கோலமாகவும், அருவருப்பாகவும் காட்சியளித்தால் அது உங்களது கணவருக்குத்தான் வெட்கமும், அவமானமும்.
அந்த நேரம் உங்களின் கைகால்கள் எதுவுமே ஓடாது. வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்பதற்கு பதிலாக, அலங்கோலமாகக் கிடக்கின்ற பொருட்களை ஒழுங்கு படுத்தும் பணியில்தான் தீவிரமாக செயற்படுவீர்கள். எனவேதான், எந்த நேரமும் முன்யோசனையாகவும், முன் ஏற்பாட்டாகவும் செய்து வைத்திருந்தால் அது மறைமுகமாக உங்களது கணவனுக்குத் தான் பெருமை.
அழகு என்பதற்குள் ‘தூய்மை’ என்ற பொருளும் அடங்கியிருக்கின்றது. மணமகளுக்கு தூய்மை என்ற விடயம் மிக மிக அவசியமான ஒன்றும், உங்களது கணவன் எதிர் பார்த்திருக்கின்ற ஒன்றும் கூட!
கலையரசன்

Page 44
இதில் இரண்டு விடயங்களை மணமகள் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஒன்று, மணமகள் தூய்மையாக இருக்கின்ற விடயம். இரண்டாவது, மணமகள் செய்யும் வேலைப்பாடுகள் தூய்மை அடைகின்ற அல்லது நிறைவு படுத்துகின்ற விடயம்.
கொள்வது குறைவு. சமையல் வேலைகளை முடித்துவிட்டு அல்லது ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து விட்டு, அதே தொடர்பில் கணவனின் பக்கத்தில் சென்று அமர்வதினால், மனைவியிடம் இருந்து வருகின்ற வேற்று வாசனை கணவன் மனமுவந்து பேசுவதற்கும், விருப்பம் கொள்வதற்கும் முள்வேலி போட்டு விடுகின்றது. இதனால் மனைவி தூய்மையற்றவள் என்ற வட்டத்திற்குள் சேர்க்கப்படுகின்றாள்.
எந்தநேரமும் தலைவிரி கோலத்தில் நடமாடுவதனால், ஓர் ஆடையை அணிந்து கொண்டு பல நாட்களைக் கடத் துவதனால் கணவனது ஆசைகளுக்கும் , உணர்வுகளுக்கும் சேறு பூசிவிடுகின்றீர்கள். இதனால் மனைவி தூய்மையானவள் என்ற வரம்பை விட்டும் வெளியேற்றப் படுகின்றாள்.
பெண்மகளைப் பார்த்து தாய்மார்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வது, ‘கண்கண்டால் கை செய்ய வேண்டும்’ என்று! உண்மையும் அதுதான். எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும் பூரணத்துவம் வேண்டும். நிறைவு படுத்தாது கொத்தும் குறையுமாக செய்து முடிப்பதனால், தூய்மை என்ற பெயரை அடைந்து விட முடியாது.
இன்றைய எல்லாக் கணவர்களும் எதிர்பார்த்திருப்பது, என் மனைவி சிறந்த விவேகமுள்ளவளாக அமைந்து விடுதல் வேண்டும் என்பதுதான். நாளாந்த வேலைகளில் மனைவி திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

எடுக்கின்ற அக்கறை, தூய்மை, உற்சாகம், பூரணத்துவம் இவைகள் தான் நீங்கள் விவேகமுள்ளவள் என்பதை வெளிப்படுத்துகின்றது. அல்லது நிரூபிக்கின்றது.
அழகு என்ற விடயத்தில் கணவன் அளவிலும் உங்களது கணவன் திசைதிரும்ப வேண்டும். வேலைத் தளத்திற்கோ அல்லது வெளிக் கள வேலைகளுக்கோ கணவன் செல்வதற்காக தயாராகின்ற போது, கணவன் அணிந்து கொள்கின்ற ஆடைகளில் நீங்கள்தான் கூடிய கவனமும் எடுக்க வேண்டும். ஆடைத்தெரிவு உங்கள் தெரிவாகவேதான் இருந்துவிடுதலும் வேண்டும்.
இந்த 'ரெஸ்" உங்களுக்கு ரொம்ப அழகு!’ என்று நீங்கள் எந்த ஆடையைத்தான் முன் நிறுத்தினாலும், அதனை அணிந்து கொள்ள கணவன் தயார்.
கணவன் “சேட் அணிகின்ற சமயத்தில் மனைவி தன்கையால் அணிவித்து விடுதலும், கணவனை சுற்றி வளைத்து சரிபார்ப்பதும் வரவேற்கத் தக்கதொரு விடயம்தான். சில நேரம் உங்களது கணவன் ‘நான் எந்த 'ரெஸ்சை அணிந்து கொள்வது? ’ என்ற கேள்வியை எழுப்புகின்ற போது, அதற்கு நீங்கள் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
சில மனைவியர்கள் அப்படி இல்லை. 'எதையாச்சும் அணிந்து கொள்ளுங்க” என்று அசட்டுத்தனமாக பேசிவிடுவது முண்டு. இதனால் கணவரது எதிர்பார்ப்புகள் முடங்கி விடுகின்றன. இவ்வாறு ஏமாற்றம் அடைந்த கணவர், மீண்டும் இன்னுமொரு சமயத்தில் இவ்வாறான கேள்விகளில் இருந்தும் தவிர்ந்து கொள்வார் என்பதை மணமகள் மறந்து விடுதல் கூடாது.
கலையரசன்

Page 45
வெளிக்கிளம்புகின்ற கணவன் மீது ஏதாவதோர் உரசலை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமானதொரு விடயம். அதற்கொரு வழிதான் தூசி துணிக்கைகளை தட்டிவிடுகின்ற செயற்பாடு!
கணவர் தனது முடியை சீவி விடுகின்றபோது ஓரிரு முடிகளும், அதனோடு ஒட்டிய சிறு சிறு தூசிதுணிக்கைகளும் தோள் மீது விழுந்து கிடக்க நேரிடுகின்றன. அதனை மனைவி தனது கரங்களினால் தட்டி விடுதல், பிரியாவிடைக்கு அடையாளமாக கணவனது நெற்றியில் முத்தமிடுதல் - என்பன இன்றைய எல்லாக் கணவர்களும் எதிர்பார்த்திருகின்ற அல்லது விரும்பக்கூடிய ஒன்றுதான்.
மணமகளே! கணவன் விரும்பக்கூடிய இன்னுமொன்று இருக்கின்றது தெய்வபக்தி. தன் மனைவி தெய்வபக்தியாக இருப்தை எந்தக் கணவனும் வெறுப்பதில்லை. கடவுள் மீது அதிக நம்பிக்கையுடனும், வணக்க வழிபாட்டுடனும் இருக்கின்ற மனைவிமீது கணவனது அதிகபடியான நம்பிக்கையும், விசுவாசமும் மிகைத்து விடுவது ஆத்மீக ரீதியான உண்மைகள்.
இஸ்லாமிய பெண்ணாக இருந்தால் - அல்லாஹற்வையும், (இறைவன்) இந்து பெண்ணாக இருந்தால் - சிவபெருமானையுமி, (கடவுள்கள்) பெளத்த பெண்ணாக இருந்தால் - புத்தரையும், கிறிஸ்தவ பெண்ணாக இருந்தால் - இயேசு நாதரையும்,
வணங்குவதற்கு மனைவி முன்வருகின்ற போது, சில வேளைகளில் தன் மனைவியினுடைய செயற்பாடுகளைக் கண்டு கணவனும் அதன் பால் திசை திரும்ப சாத்தியங்கள் நிறைந்திருக்கின்றன. தனது கெட்ட பழக்கங்களை கைவிட்டுவிட்டு சமுதாயம் விரும்பக்கூடிய அளவில் இன்று திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

அநேகமான கணவர்கள் மாறி இருக்கிறார்கள் என்றால், அதற்கு காணரம் மனைவியினுடைய தெய்வ பக்திகள்தான்.
நான், கடவுளை வழிப்படுவதற்கு மூல காரணம் என்மணைவிதான்.
நான், நல்ல சிந்தனையுள்ளவனாக மாறுவதற்கு காரணம்
என்மணைவிதான். என்று கூறும் அளவில் நிறைய கணவன்களை உலகில் காண்கின்றோம். எனவே, இல்லற வாழ்வில் தெய்வபக்தியும் இரண்டறக் கலந்திருக்கிறது எனலாம்.
மணமகளே! மனைவி - கணவனுக்களிக்கின்ற மிக மிக முக்கியமான விடயம்தான் சிமைத்துப்போடுகின்ற விடயமும், உண்ண வைக்கின்ற ஒரு விடயமும்.
சில கணவர்கள் தாய்தகப்பனின் கண்காணிப்பில் இருந்த போது, சாப்பாட்டு விடயத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருப்பது உண்மையும், அதனை மணமகள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயமும் கூட!
0 நாவுக்கு ருசியான உணவு கிடைப்பதில் உள்ள
சிக்கல். 0 வயிறு நிறைய உண்ணுவதல சிறு சிறு
மனச்சோர்வுகள்.
0 சமைத்துப் போடுகின்ற தாய் வயதில் முதிர்ந்தவளாக இருந்ததினால், எதிர்பார்க்கின்ற சமையல் கிடைக்காமல் போவது. 0 வீட்டுப் பிரச்சினைகள், சொந்தப் பிரச்சினைகள் இவைகளினால் சிக்குண்டதனால் உணவு உண்பதில் உள்ள மன வெறுப்பு.
கலையரசன்

Page 46
இது போன்ற இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்த கணவனது நா வறண்டு போய் இருந்ததையும், இதன் குறைகளை கிடைக்கவிருக்கின்றமனைவி நிவர்த்தி செய்வாள் - என்ற எதிர்பார்ப்புடன் தேதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறான நீண்டதோர் எதிர்பார்ப்புடன் உங்கள் காலடி சேர்ந்த கணவனுக்கு, வாய்க்குருசியாக சமைத்துப் போடுகின்ற விடயத்தில் எந்தளவு மும்முரமாக இருந்து விடுதல் வேண்டும் என்பதை, மணமகளே சிந்திக்க வேண்டும்.
உங்களது கணவர் எவைகளை எல்லாம் விரும்பிச் சாப்பிடுவார், எவைகளை எல்லாம் விலக்கிவிடுவார் என்ற பட்டியலை நீங்களாகவே ரகசியமாக எடுத்துக் கொள்ளுவதில் தான் உங்களுக்கு பெருமையும், பாராட்டும் கிடைக்கிறது. இவ்வாறு செயல்படுகின்ற போது.
சாப்பாட்டு விடயத்தில், எந்தளவு அக்கறையுடன் இருக்கிறாள் என்மனைவி. என்ற எண்ணம் கணவன் மத்தியில் உதிக்காமல் இருந்துவிடப் போவதில்லை.
சாப்பாட்டு விடயத்தில் குறைவு படுத்து வதற்கோ, குறை சொல்வதற்கோ உங்களது சமையல்வேலைகள் அமைந்து விடுதல் கூடது. ‘என் மனைவியின் கைபட்டால் சமையல் பிடிமானம்தான்' என்று கூறுகின்ற அளவில் உங்களது சமையல் வேலைப்பாடுகள் சரிசெய்யப்படுதல் வேண்டும்.
சில கணவர்கள் இருக்கிறார்கள்; மனைவியின் கைபட்ட சமையலைத்தான் அளவுக்கதிகமாக விரும்பி உண்பார்கள். அதில்தான் சுகத்தையும் அனுபவிக்கிறார்கள். மனைவிதான், திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

தன் கையால் அள்ளிவைத்து விடுதல் வேண்டும் இவர்களுக்கு அப்போதுதான் வயிறு நிறைய காத்திருக்கின்றது.
எனவேதான், கடமைக்காக மட்டும் சமைத்துப் போடுவதையும், கணவன் விலக்கி விடுகின்ற சமையலை சரிசெய்து வைப்பதையும் மணமகள் முற்று முழுதாகத் தவிர்ந்து விடுதல் அவசியம்.
உங்களது கணவர், இன்னதை சமைத்து வைத்தால் குறைவு படுத்தி விடுவார். அல்லது முகம் சுழித்து விடுவார். என்பதை நீங்கள் அறிந்திருந்தால், அந்த உணவை தவிர்த்துக் கொள்வதுதான் மனைவியின் முதல் கடமை. கணவன் விரும்பாத சமையலை சமைத்து வைத்து அதன் மூலம் எழும்புகின்ற கருத்து மோதல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் முதல் காரணம் என்பதை, ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கணவனுடன் பேசுகின்ற பழக்கங்களையும், ஏதாவது பிரச்சினைகளாக இருந்தால் அதற்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளையும், பலாத்காரப்படுத்தும் அளவில் கேள்விகள் கேட்கின்ற பழக்கங்களையும் - கணவன் சாப்பிடுகின்ற நேரத்தில் வைத்துக் கொள்வதை, இல்லத்தலைவி முற்றுமுழுதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். சில மனைவியர்கள் அப்படி இல்லை. எதிர்பார்த்திருந்தவர்கள் போல், சாப்பாட்டு நேரத்தில் எதையாவது பேசி விடுவதும், கேட்டுவிடுவதும் உண்டு.
சாப்பாட்டு விடயத்தில் இன்னுமொன்று இருக்கின்றது; உடலைக் கெடுத்து விடும் உணவு வகைகளைப் பற்றியும் மணமகள் நன்கு அறிந்திருத்தல் அவசியம். இதனை
கலையரசன்

Page 47
சாப்பிட்டால் உடலுக்கு ஆகாதே! ஒத்துப்போகாதே! என்று யோசிப்பதற்கோ, கவலைப்படுவதற்கோ நேரம் போதாது உங்களது கணவருக்கு. நீங்கள் எந்த உணவைத்தான் சமைத்துப் போட்டாலும் அதனை சாப்பிட்டு விட்டு எழுந்து செல்லக்கூடியவர்தான் கணவர்.
இன்று, அனேகமானவர்களுக்கு சாப்பாட்டு விடயத்தில் வருகின்ற கோளாறுகளும், நோய்களும்தான் அதிகம் - என்று வைத்திய ஆலோசனைகள் கூறுகின்றன. எனவேதான் இவைகளைப்பற்றி சிந்திப்பதையும், ஆராய்வதையும், கவனத்தில் கொள்வதையும் மனைவிதான் பொறுப்பாக எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
எந்த உணவு வகைகள் உடலுக் ஆகாது? எதைச்சாப்பிட வேண்டும்? என்ற பட்டியலும் மனைவியின் மறுகையில் இருந்திடவும் வேண்டும். இதன்ை மூலமாக சுகம் அடைவதும், நீண்ட காலங்கள் நோய்யில்லாமல் நலமுடன் வாழ்வதும் உங்களது கணவனும்,பிள்ளைகளும்தான். இவைகளைப்பற்றி மணமகள் தன் கவனத்தில் கொள்கின்றபோது கணவனுக்கு சந்தோசம்!
மனைவி என் விடயத்தில் எந்தளவு இரக்க முள்ளவளாகவும், அக்கறையுள்ளவளாகவும் இருக்கின்றாள். என்ற சந்தோசம்தான் அது!
சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும் என்பது பெண்மகள் அறிந்திருக்கின்ற உண்மை. எனவேதான், சமையலின் பக்கம் திசைதிரும்பி கணவனை தனது பக்கம் திசைதிருப்ப பழகிக்கொள்ளுங்கள். அதுதான் அந்த முறை!
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

தலைமகளே!
சிந்தனைச் சிற்பிகள் நீங்கள். திட்டமிடலில் திராணி உள்ளவர்கள் நீங்கள். ஆலோசனைகளில் ஆசான் நீங்கள்.
உங்களது கணவன் பல்வேறு பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருப்பதையும், திக்கு முக்காடிக் கொண்டிருப்பதையும் நீங்கள் அடிக்கடி காண்கின்றீர்கள். அறிந்திருந்தும் ஊமையாகி விடுகின்றீர்கள். சம்பாதித்துத் தருவதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் கணவனுக்குரியது. சமைத்துப் போடுவது மட்டும்தான் எனக்குரியது.
என்ற, தவறான அபிப்பிராயங்களை மனதில் வைத்துக் கொண்டு, மனைவி மட்டும் விலகிக் கொள்வது இல்லற வாழ்வுக்கு ஒரு போதும் ஒத்துப் போகாத ஒன்று. தனிமரம் தோப்பாகிவிடும் என்று நினைக்கிறீர்களா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள். குடும்பச்சக்கரம் சுழலவேண்டும் என்றால் இன்பத்திலும் துன்பத்திலும், இலாபத்திலும் நட்டத்திலும் கணவன் மனைவி இணைந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் முடியும்.
வீட்டுத்தலைவனுக்கு பல வழிகளிலும் பிரச்சினைகள். தொழில் வியாபாரத்தில் பல வேறு பிரச்சினைகள். விவசாயம் என்றால் அதில் பல்வேறு நோய்களும், அதற்கு தீர்வு காணலும். வருவாய்க்கு மேலாக வீட்டுச் செலவுகள்.
பொருளாதார நெருக்கடிகள். நோய்நொம்பலங்கள் என்றால் மனக்குழப்பங்கள். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற தேவைகள். கடன் பெற்றிருந்தால் கடன் பழுக்கள் அதிகரித்தல்.
கலையரசன்

Page 48
இப்படிக் கூறிக்கொண்டு போனால், எத்தனையோ பிரச்சினைகள் உங்ளது கணவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை மனைவியிடம் சொன்னால் சுமைகள் இன்னும் அதிகரித்து விடும். இதனை அவளிடம் சொல்லி என்ன பிரயோசனம் கிடைத்து விடும்? என்ற மனச் சோர்வினால் தள்ளாடுகின்ற கணவனை அன்போடு அணுக வேண்டாமா? பல ஆலோசனைகளையும், அதற்கான சில வழிகளையும் உங்களால் செய்து கொடுக்க முடியாதா?
கஷடத்தில் சிக்குண்ட மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் சிறு உதவிகளை செய்து கொடுத்தால் அல்லது அவனது சிக்கல்களை தீர்த்து வைத்தால், தீர்த்து வைத்தவனை எளிதில் மறந்து விடப் போவதில்லை. இது மனித இயல்பு. கஷடத்தில் உதவி செய்தவன் பகையாளியாக இருந்தாலும்கூட!
இதேமாதிரியேதான் நீங்கள் கணவனுக்கு செய்வதும். இதனால் கணவன் உங்களை மறந்துவிடப்போவதில்லை. மனதிற்குள் ஆயிரம் தடவைகள் நன்றிசொல் லிக் கொண்டிருக்கிறார் கணவர். என்பதை மணமகள் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
பிரச்சினைகளுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும், உதவி செய்து கொடுக்க வேண்டும் - என்ற ஒரு பக்க சிந்தனையை வைத்துக் கொண்டு அணுகும் முறைகளையும், இடங்களையும் கவனத்தில் கொள்ளாது விடுதல் கூடாது. சிக்கல்களுக்குள் அகப்பட்ட கணவன் சற்று கோபம் கொண்டிருப்பதும் உண்மை. அப்படி அமைந்திருந்தால், இன்னுமொரு புதியதொரு பிரச்சனைதான் உருவாக காத்திருக்கின்றது. அதற்கு சரியான நேரம் ஒன்று இருக்கின்றது.
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

0 கணவன் மனைவி தனித்திருக்கும் நேரம். 0 கணவன் மனைவி தூங்கும் நேரம். 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பார்கள். கணவனது உள்ளத்தையும், கோபத்தையும் கரைக்க முடியும்.
அந்தத் திறமை உங்களுக்கு உண்டு.
மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறுகின்றார்; பெண்களுக்கு கூரிய சக்தி ஒன்று இருக்கின்றது. அதனை அவர்கள் கண்டு கொள்வார்களேயானால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவார்கள். நினைத்ததைச் சாதித்து விடுவார்கள். என்ற கருத்துப்படக் கூறியதை நான் புத்தக வாயிலாக அறிந்த ஒரு விடயம்.
உண்மையும் அதுதான். யார் சொல்லியும் கேட்காத கணவனை, பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளாத கணவனை, படுக்கையறைக்குள் சென்று விடியற்காலை எழும்புகின்ற நேரத்திற்குள் மாற்றிவிட மனைவியால் முடியும். அந்த சக்தி அவர்களுக்கு உண்டு. சில கணவர்கள் இருக்கிறார்கள்...
தன் மனைவி சொன்னால் எதையும் செய்வார்கள். 0 மனைவி சொன்னால்தான் செய்வார்கள். 0 மனைவியையும் கேட்டுத்தான் செய்வார்கள்.
அந்தளவில்தான் மனைவியினுடைய செயற்பாடுகளும், கண்காணிப்புகளும் அமைந்திருக்கின்றன.
முத்தத்தைப் பற்றி அறிந்திருக்கின்றீர்களா? முத்தத்தி னுடைய கலை என்னவென்று தெரியுமா உங்களுக்கு? ஒரு முத்தத்தால் கணவனை வென்ற மனைவியின் கதைதான் இது...
85.
- கலையரசன்

Page 49
திருமணம் முடித்த சகோதரர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அது கணவன். மனைவியைப்பற்றிய சிறியதொரு கண்ணோட்டம். அவர் தன்னைப்பற்றி இவ்வாறு பேசினார்: "எனக்கு சில சமயங்களில் முன்கோபம் அதிகமாகி விடும். நான் ஏதாவது ஒரு கோபத்தில் மூழ்கியிருந்தால் அதனைப்பற்றி அறிந்திருப்பாள் என் மனைவி. སྐུ་
நான் கோபத்தில் இருக்கும் நிலைமையில் என் மனைவி என்னை விட்டும் தூரமானதேயில்லை. அவள் முகம் சுழித்ததும் இல்லை. மாறாக புன்னகைதான் அவளது உதட்டில் தவழ்ந்து கொண்டிருக்கும்.
தனியறையில் நான் இருக்கின்றபோது, என் மனைவி தேனீர்த்தட்டத்துடன் வருவாள். அறையை விட்டும் திரும்புகின்ற போது, வேணுமென்றே என்னை உரசிக்கொண்டு செல்வாள். இவ்வாறு அவள் செய்கின்றபோது எரிச்சல் வந்து விடும் எனக்கு.
நான் கதிரையில் அமர்ந்திருக்கின்ற போது கதிரையின் சட்டத்தில் வந்து அமர்ந்து விடுவாள். நான் எதையுமே பேசாது மறுபக்கமாக முகத்தைத் திருப்பிவிடுவேன். அப்போது என் கன்னத்தைப் பிடித்து - கோபத்திலும் கூட இந்த மூஞ்சு என்ன அழகு? என்று சொல்லிவிட்டு அவளது மெல்லிய உதடுகளால் என் கன்னத் தரில் முத்தமிட, நான் கோபங்களையெல்லாம் மறந்து சிரித்து விடுவேன்.”
சீதேவிமகளே! வாழ்வின் இரகசியங்களும், அணுகு முறைகளும் எங்கே இருக்கின்றது? நாம் எங்கு செல்கின்றோம்? கணவன் கோபமாக இருந்தால் அதனை அணைக்கின்ற தண்ணிராகத்தான் நீங்கள் இருந்துவிட வேண்டும். அதில்தான் திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

வெற்றியும் இருக்கின்றது. சில மனைவியர்கள் அப்படியில்லை. கணவன் கோபமாக இருந்தால் மனைவியும் சேர்ந்து எரிந்து விழுவாள். இதனால் எந்தப் பிரச்சினை தீர்வாகி இருக்கின்றது?
ஒரு திறந்த நிலா முற்றத்தில் நான் எனது நண்பர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டிலிருந்து, கணவன் - மனைவிக்கிடையில் கருத்து மோதல்கள் இடம் பெறுவதை எங்களது செவிகள் உணர்ந்தன. இரவு வேளையாக இருந்ததனால் அவர்கள் பேசுவது துல்லியமாகக் கேட்டது எங்களது செவிகளுக்குள்!
கணவனது குரல் மிஞ்சியிருந்தது. இடையிடையே மனைவியின் குரல்களும் ஒலித்துக்கொண்டிருக்க, "முதல்ல மனிசனுக்கிட்ட ஒழுங்கா கதைக்கப் பழகுங்க.” என்ற மனைவியின் குரலை இறுதியாகக் கேட்டிருப்போம். அதன் பிறகு பேச்சுக்கள் இடம் பெறவில்லை. கணவன், மனைவியின் கன்னத்தில் அறைந்திருக்கக் கூடும். "பளார்” என்ற சத்தத்தைக் கேட்டோம். கணவன் மனைவியைத் தொடர்ச்சியாகத் தாக்குவதையும், பெண்குரல் ஒன்று ஒலமிட்டு அழுவதையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.
ஆம்! அது, அந்த வீட்டு மனைவியின் அழுகைக் குரலாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தைப் பார்க்கின்றபோது, மனைவி இப்படிப் பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை. கணவன் கோபமாக இருக்கின்றபோது - மனைவி நல்ல கருத்துக்களைத்தான் முன்வைத்தாலும், அது அந்த இடத்தில் சினம் கொள்வதைத்தான் மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றிவிடுவது போல்!
கலையரசன்

Page 50
ஒன்று, அந்த இல்லத் தலைவி அமைதியாகப் பேசிப் பார்த்திருக்க வேண்டும். அதனைக் கணவன் கேட்காத அல்லது அமைதி பெறுவதற்கான சூழ் நிலைகள் இல்லாதிருக்கும்போது, மனைவி எதையுமே பேசாது வாய்மூடி மெளனமாக இருந்திருக்க வேண்டும்.
கோபம் அடங்கி ஓய்ந்ததன் பின்னர் மனைவி மீது தாறுமாறாகப் பேசியதையும், சுடு பேச்சுக்களால் முகத்தைக் கருக்கியதையும் கணவனால் உணரமுடிகிறது. அமைதியான சூழ்நிலைகள் உருவானதன் ԼՈ601 மனைவி பேசியிருந்திருக்கலாம். பலத்த குரலில் அல்ல. அமைதியான குரலில்!
மனைவி இந்த இடத்தில் பேசுகின்ற பேச்சுக்கள், மீண்டும் பிரச்சினைகளை உருவாக்க வல்லதாக அமைந்து விடுதல் கூடாது. கணவன் சிந்திக்கத்தக்க, கணவன் தனது தவறுகளை உணர்வதற்கு அமைவாக. இந்த நேரத்தில் தான் மனைவியின் குரல் எடுபடவும், கவனத்தில் கொள்ளவும் ஆரம்பிக்கின்றது.
0 அப்படியில்லை. உண்மை இதுதான்.
என்ற, அவளது மறுகருத்தை கணவன் முன்னிலையில் முன்வைத்து விடுவதனால் கணவன் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், இன்னுமொரு சமயத்தில் மனைவியுடன் அடக்கமாகப் பேசவும், மனைவியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் அது வழியமைக்கின்றது. சமாதானம் என்ற சொல்லுக்கும் அது பாலம் அமைத்து விடுகின்றது.
எனவேதான், மணமகளுக்கு அணுகும் முறைகளும், முறைகளுக்கான இரகசியங்களும் தேவை. இந்த முயற்சியின் திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

மூலமாகத்தான் கணவனது சுமைகள் சற்று குறையவும், நிம்மதி கிடைக்கவும், பெருமைப்படவும் காத்திருக்கின்றது.
0 என் மனைவியினால்தான் என் பிரச்சினைகள் இத்தோடு
இலகுவானது. 0 என் மனைவியினுடைய யோசனைகளினாலதான் எளிதில் தீர்வானது. என்ற பெருமைதான் அது!
மணமகளே! பொன்னான விளக்காகத்தான் இருந்தாலும் தூண்டுகோல் வேண்டுமாம் என்பார்கள் பலர். அந்த வகையில் உங்கள் கணவருக்கு நீங்கள்தான் தூண்டுகோல். திருமணம் முடிப்பதற்கு முன் கணவனது தாய், தகப்பன், உடன் பிறப்புகள்தான் பின்னணியாளர்கள். ஆனால், உங்களுக்குக் கணவனாகக் கிடைத்ததன் பிற்பாடு அந்தப்பொறுப்பும், கடமையும் உங்கள் கையிலேதான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஒரு பெண்தான் காரணமாம் என்றும் கூறுவார்கள். அந்தப் பட்டத்தை நீங்கள் பெறவேண்டும். அந்தப் பெருமை உங்களைத்தான் சேரவும்வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் திறமைகள் ஒளிந்திருப்பதும், முடங்கிக் கிடப்பதும் உண்மை. அந்த வகையில் கணவனின் திறமைகளை மனைவிதான் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.
உங்களது கணவன் தொழில் முயற்சியில் - வியாபார முயற்சியிலோ, விவசாய முயற்சியிலோ, ஏதாவதொரு முயற்சியில் பல ரூபாய்க்களையும், சிந்தனைகளையும், கால் நேரங்களையும் செலவு செய்து வெற்றிகாண முடியாமையினால் அல் லது நஷ் டங் களுக் குள்ளாகி இடைவிடப் பட்டு மனச்சோர்வுற்றிருக்கலாம். (89)
கலையரசன்

Page 51
தலைமகளே! மனைவியாகிய நீங்கள் எப்போதுமே பின்வாங்கி விடுதல் கூடாது. கணவனுக்கு உற்சாகத்தையும், தைரியத்தையும் உண்டு பண்ணி சிந்தனைகளை அதன் பால் திசை திருப்பி விடுதல் வேண்டும்.
இன்னும் ஒரு தடவை. ஒரே ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்.
கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்.’ என்ற ஆறுதல் வார்த்தைகளும், உங்களது தன்னம்பிக்கையும் தான் கணவனை மீண்டும் விழிக்க வைக்கின்றன. என்பதனை மணமகள் அறிந்திருக்க வேண்டும்.
கணவனது தொழில் முயற்சிகள் நாளடைவில் விருத்தி செய்யப்படவும், முன்னேற்றம் காணவும் வேண்டும். எனவே, இது விடயமாக உங்களது கணவனை அணுகி பல வழிகளையும், நல்ல கருத்துக்களையும் முன்னிறுத்துங்கள்.
0 இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். நிறைய
இலாபம் கிடைக்கும். 0 உங்களால் இன்னமும் முன்னுக்கு வரமுடியும். 0 இதனை இப்படிச்செய்தால் அதிக உற்பத்திகளைப்
பெறலாம் 0 நீங்கள் செக்கன்ட் ஒபிசர் பதவியைக் கைப்பற்றுவது
பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது? 0 லேபராக இருக்கிற நீங்கள் கொஞ்சம் கிளரிக்கலுக்கு
முயற்சி செய்து பாருங்கள்.
இவ்வாறு, அந்தந்தத் துறைகளில் இருக்கும் உங்களது கணவனுக்கு பல வழிகளிலும் பின்னணியாக இருந்து விடவும், திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

சிந்தனைகளை அதன் பால் கிள்ளி விடவும் மணமகளுக்கு யோசனைகள் கிளம்ப வேண்டும்.
0 என் மனைவியின் தெண்டிப்பினாலதான் நான்
இந்தளவுக்கு முன்னேறினேன். 0 என் முயற்சிக்கும், வெற்றிக்கும் காரணம் என்
மனைவிதான். 0 மனைவியின் ஆலோசனைகளினால்தான் எனக்கு இந்தப் பதவி கிடைத்தது. என்று கூறும் அளவிற்கு மணமகள் செயல்பட வேண்டும். இன்று சில மனைவியர்கள் அப்படியில்லை. தன் கணவன் ஏதாவதொரு முயற்சியில் இறங்குகின்ற போது, அதனைத் தட்டிப்பணிப்பது முதலில் மனைவிதான். அதில் குறுக்கிட்டு கணவனது ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகி விடுவதும் பழக்கமாகி விட்டது இவர்களுக்கு.
'இது உங்களுக்கு சரிப்படுகின்ற விடயமா? எல்லாம் செய்து முடிஞ்சி. இப்ப இதா?
என்ற அசட்டுத்தனமான கேள்விகளை கணவன் முன்னிலையில் கேட்டு விடுவதனால், இவர்கள் எதனைச் சாதிக்க நினைக்கிறார்கள்? கணவன் ஏதாவதொரு முயற்சியில் இறங்கினால், அது உங்களுக்கு விருப்பக்குறைவாக அல்லது அதிருப்தியைக் கொடுத்தால் அதற்கு பதிலாக வேறு நல்ல கருத்துக்களையும், வழிமுறைகளையும் தான் மனைவி காண்பிக்க வேண்டுமே தவிர, இவைகளைத் தவிர்த்து பேச்சுக்களால் மட்டும் முறியடித்து விடுகின்ற போது கணவன் உற்சாகத்தை இழந்து விடவும், மூலையில் முடங்கி விடவும் நினைக்கிறார். என்பதை மணமகள் தெரிந்து கொள்வது அவசியம்.
கலையரசன்

Page 52
மணமகளே! திருமண வாழ்வில் நிழல் கொடுக்கக் கூடியவர்கள் நீங்கள்தான். கணவனைத் தாண்டி ஓர் அடி எடுத்து வைப்பதோ, ஒரு சொல் பேசி விடுவதோ, கணவனை மிஞ்சி குரல் கொடுப்பதோ, கணவனைப்பற்றிக் குறை பேசித்திரிவதோ உங்களது நீண்ட கால வாழ்வில் என்றைக்குமே இடம்பெறுதல் கூடாது.
சில இடங்களில் அப்படியில்லை. கணவனுடன் விவாதிக்கச் செல்லவும், கணவனது முகச்சுழிப்பை ஏற்படுத்தும் படியான பேச்சுக்களை வளர்த்துக் கொள்ளவும், கணவனுக்கு மேலாக குரல் கொடுத்து கணவனை வீட்டுப்பூனை மாதிரி அடக்கி ஒடுக்கி விடவும் இவர்கள் நினைக்கிறார்கள். மனைவியின் சொல்லைத்தான் கணவன் கேட்டு நடக்க வேண்டும். மனைவி எடுப்பதுதான் தீர்மானம். என்ற தலைகீழ் வடிவமான உரிமைப்பாடுகள்தான் இவர்களிடத்தில் காணப்படுகின்றன.
தனது தாய் தகப்பனின் வழிகாட்டல்களையும், பேச்சுக் களையும் காதில் வாங்கிக்கொண்டு கணவனை எதிர்ப்பதும், தன் கணவனுக்கு பகையாளியாக அமர்க்களம் துறப்பதும் இவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. கணவன், தனது தாய் தகப்பன், உடன்பிறப்புக்களை கவனிக்கவும், சிறுசிறு பண உதவிகைளச் செய்து கொடுக்கவும் முடியாத அளவில்தான் இன்று இவர்களின் அடக்கு முறைகள் அமைந்திருக்கின்றன.
வெளியே சென்ற கணவன் வீடு சேர்கின்ற போது வீட்டில் யாருமே இல்லை. மனைவி சென்ற இடம் தெரியாது கணவனுக்கு. கணவனது விருப்பத்தைப் பெறாது தான் நினைத்த இடங்களுக்குச்சென்று திரும்புவது, கணவனால் தவிர்க்கப் பட்டவர்களுடன் பேச்சுத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது இவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

கணவனைக் கவனிக்கின்ற முறைகள், கணவனுக்கு செவிமடுக்கின்ற விதங்கள், கணவனுக்கு அன்பு செலுத்துகின்ற எண்ணங்கள், கணவனுடன் பேசுவதில் கையாழுகின்ற அணுகு முறைகள். இவைகளில் எல்லாம் மாறுதல்கள் இடம் பெறுகின்ற போதுதான், கணவனது உள்ளம் குன்ற நினைக்கின்றது.
0 முன்னைய போல இப்போது என் மனைவி இல்லை.
3 அவளுக்கு ஏதோ ஒரு நினைப்பு வந்து விட்டது. என்பன போன்ற எண்ணங்கள், உங்களது கணவனின் உள்ளத்தில் இரும்பு துருப்பிடிப்பது போல் உறைந்து விடுகின்றன.
கணவன், வீடு தேடி வந்தவர்களுடன் அல்லது உதவி தேடியவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தால் இடை நடுவே குறுக்கிடுவதும், பதில் கொடுப்பதும் மனைவியாகத்தான் இருந்து விடுகிறாள். சீதேவிமகளே! நீங்கள் இவ்வாறு நடந்து கொள்கின்ற போது மற்றயவர்கள் உங்களது கணவனைத்தான் குறை காண்கின்றார்கள்.
''இவர் மனைவியைக் கட்டுப்படுத்துவதில்லையா? மனைவிதானே பேசுகிறாள்? '' என்றெல்லாம் பக்கத்தவர்கள் அடிக்கடி பேசிக் கொள்வதை நீங்கள் கேட்க வில்லையா? இவ்வாறான பழக்கங்களை மணமகள் வேரோடு அறுத்துவிடுதல் வேண்டும். எப்போதும் எந்த இடத்திலும்.......
0 ஆண் - கணவனாகவும், 0 பெண் - மனைவியுமாகத்தான் இருந்திடல் வேண்டும். சில கணவர்கள் தாழ்வுச் சிக்கல்களையும் எதிர் நோக்குகின்றார்கள். கணவன் சாதாரணத் தொழில் புரிந்து குறைந்தளவு வருமானமும், மனைவி உயர்ந்த பதவியில் இருந்து கூடியளவு வருமானமும் பெற்றால், கணவர் சில சிக்கல்களை எதிர் நோக்குகின்றார். (93)
கலையரசன்

Page 53
நாளாந்த கூலித்தொழில் புரிவதிலும் உள்ளடக்கப்படுவதும் உண்மை. இவ்வாறான இடங்களில் வாழ்கின்ற மனைவிக்கு அவளை அறியாமலேயே கர்வம் உண்டாகத்தான் செய்கின்றது.
தான் உயர்ந்த பதவியில் இருப்பதனால், கூடிய வருமானம் பெறுவதனால, தனது உழைப்பில் கணவன் தங்கியிருப்பதனால் ஏற்படுகின்ற கர்வம்தான் அது!
கணவனுக்கு வாய் திறக்க முடியாத நிலை. அடிமைத்த னத்தில் ஒளிந்திருக்கிறார் கணவர். மனைவி எதைச் சொன்னாலும் அதற்குத் தலையசைக்கவும், வீட்டில் ஏதாவது தீர்மானங்கள் எடுப்பதாக இருந்தால் அதை விட்டும் பின்வாங்கி விடவும் உங்களது கணவன் தயார் என்பதை மணமகள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தொழில், பதவி, அதிகாரம், வருமானம் இவைகளை யெல்லாம் துரும்பாக நினைத்து கணவனுக்கு அளிக்க வேண்டிய கடமைகளையும், கணவனுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தையும் நீங்கள் அள்ளி வழங்குகின்ற போதுதான் கணவனது உள்ளம் பூரிப்படைகின்றது. பதவியை அடக்கி, கணவனுக்கு அடங்கி கணவனையும் பேச விடுகின்ற போதுதான் நீங்கள் வெற்றி பெற்று விடுகின்றீர்கள்.
என் மனைவிக்கு பதவி, அந்தஸ்த்துக்களை விடவும் நான்தான் பெரிது. நான்தான் அவளுக்கு தெய்வம். என்ற பெருமையும், தைரியமும் அப்போதுதான் பிறக்கின்றது உங்களது கணவனுக்கு
கணவனைப்பற்றி குறை கூறுகின்ற பழக்கங்களும், குறை காணுகின்ற பழக்கங்களும் இன்று சில மனைவியர்கள்
மத்தியில் தலைவிரித்தாடுகின்றன. உங்களது கணவருக் திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -194

சில குறைகள் இருக்கலாம். உங்களை வழி நடாத்துவதில் சில குறைகளை விட்டுவிடலாம். அதற்காக வேண்டி அவைகளை அம்பலப்படுத்தி விடுவதா? மனைவி கூறுவதை எல்லோரும் நம்பக் கூடியவர்கள். "அவர் மனைவி கூறுகின்றாளே பொய்யாக இருக்குமா? என்று எண்ணுபவர்கள் பலர்.
குறைகள் ஏதும் வைத்திருந்தால், உங்களுக்கு ஏதாவது வாங்கித்தருவதாக வாக்களித்து அதனை முடித்து வைக்காமல் விடுபட்டிருந்தால், அன்பான முறையில் அமைதியாக பேசிப்பாருங்கள். அதுதான் முறை. இவைகளை யெல்லாம் முழுமையாக வைத்து விட்டு.
0 அவர் அப்படித்தான். சொல்வாரு ஒன்ற, செய்வாரு
இன்னொன்ற. ...ik. எதைத்தான் ஒழுங்கா செய்திருக்காரு? B. வீட்டுக்கு என்னத்த வாங்கிக் கிழிச்சிருக்காரு. எந்த ஆதனத்த சேத்து வெச்சிரிக்காரு. வாயத்திறந்தா பொய்தான்.
:
என்ற குறைகளையெல்லாம் நீங்களாகவே கூறிக் கொள்கின்ற போது, கணவனது எதிர்ப்புகளைத்தான் சம்பாதிக்க நேரிடும். என்பதை மணமகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மணமகளே! கணவனது குடும்பத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வாரிசு நீங்கள்தான். IDIமியாருடைய சிந்தனையும், அதன்பால் திருப்பமும் உங்களுக்கு வேண்டப்பட்ட ஒன்றுதான்.
ஏனைய உறவினர்களைப் பற்றி யோசிக்காவிட்டாலும் மாமியாருடைய யோசனைகள் மிகமிக முக்கியமானது. மாமியார் அடிக்கடி முடக்கெடுப்பவர்; முகம் சுழிப்பவர். உங்கள்
கலையரசன்

Page 54
மீது குறை தேடுபவர்; குறை காண்பவர். அவர்களுக்கென்று நீங்கள் அளிக்க வேண்டிய கடமைகளும், பொறுப்புக்களும் நிறைந்து கிடக்கின்றன. அவைகளை நிறைவேற்றுவது மணமகளின் கடமைகளில் ஒன்றாகிவிட்டது.
மாமியாருக்கு சரியெனப்பட்டால் சரிதான். பிழையெனப் பட்டால் அது பிழை. எனவேதான், இவர்களுக் கேற்றாற்போல் தன்னையும் அமைத்துக் கொள்வது இல்லத் தலைவிக்கு சிறந்ததொரு பண்பு.
இன்று அனேகமான திருமணங்கள் சீரழிவுக்குக் காரணம்: மருமகள் - மாமியாருக்கிடையில் ஒருமைப்பாடில்லை. அடிக்கடி கருத்து மோதல்கள். இதன் விளைவாக மணமகன் மணமகளைத் தாக்குவதும், வஞ்சிப்பதும் சமுதாயத்தில் நடந்து .
வருகின்ற சம்பவங்கள்தான்.. - பொதுவாக பெண்களிடத்தில் வசை வம்புகள், கோள்மூட்டி பிணக்குகளை உண்டாக்கி விடுவது அவர்களுடன் கூடப்பிறந்த ஒன்று. சிறிய விடயங்களை பெரிது படுத்தி விடவும், கணவனிடத்தில் முறையிட்டு இரண்டு தரப்பினர்களையும் பகைவர்களாக்கி விடவும் இவர்கள் நினைக்கிறார்கள்.
AiP3ாபமாமியார் என்னைப்பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார். 0 உங்கள் மூத்த சகோதரியின் கொள்கைகள் அறவே
சுத்தமில்லை. வருஷங்கள் குடும்பத்துக்குள்ளவர்களில் யாருக்குத்தான்
ஒழுங்காக பேசத்தெரியுது?
என்ற படியெல்லாம் கணவனிடத்தில் கிசுகிசுத்து விடுகின்ற -th போது, கணவன் உங்களை எச்சரிக்கவும், நச்சரிக்கவும்
நினைக்கிறார். திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -
(96)

குடும்பங்களுக்கிடையில் பல்வகையிலும் பிணக்குகள் இடம்பெறுவது இயல்பு. அதனை மூடிமறைத்து, அதனைப் பற்றிக் கூறுகின்ற கணவனையும் சமாதானப்படுத்தி ஒரு சீரான இணக்கப்பாட்டினை உருவாக்கும் திறமைகள் உங்களுக்கு உண்டு. இத்தகைய திறமைகள் உங்கள் மத்தியில் நிறைந்து கிடக் கின்றன. அதனை கவனத் தரில் எடுப்பதுதான் அரிதாகிவிட்டது.
கணவனது தாய், தகப்பனுக்கு அளிக்கின்ற மதிப்பையும், மரியாதையையும் உங்களது மணவாழ்வில் பக்கவேர்களாக எடுத்துக்கொள்ளுங்கள். பக்க வேர்கள் பலமாக இருந்து விட்டால் எந்தப் புயலுக்கும் நின்றுபிடிக்கும் மரமாக, உங்களது மணவாழ்வு மங்களம் பெறும் என்பது உண்மை.
எனவேதான், திருமணவாழ்வில் எதையுமே கழித்து விடவும் முடியாது. கணவனது தாய் தகப்பன், உடன் பிறப்புகள் அளவிலும் கவனம் செலுத்துங்கள். அவர்கள் இருப்பிடம்சென்று மனமுவந்து பணிபுரியுங்கள். அடிக்கடி சென்று கவனிக்கும் படி கணவனையும் தூண்டி விடுங்கள். கணவர் பெறுகின்ற வருமானத்தில், சிறு தொகையையேனும் தொட்டு வைக்கும்படி கணவனைக் கட்டளையிடுங்கள்.
இவ்வாறான கட்டளைகளைகளும், ஏவல்களும் எல்லாக்" கணவர்களும் வரவேற்கின்ற ஒரு சொத்து. இவ்வாறு அமைகின்ற போதுதான் நீங்கள் ஒரு சிறந்த மருமகள் என்ற பட்டத்தையும், சிறந்த மனைவி என்ற நாமத்தையும் பெற்றுவிட (Մ)լգեւկլb.
சீதேவிமகளே! இத்தனை கடமைகளையும் நிறைவேற்றிய நீங்கள், இறுதியாக சமூகமளிப்பது 5ட்டிலறைக்கு. இல்லற வாழ்வுக்கு வெளிச்சத்தையும், மலர்ச்சியையும் கொடுப்பது
கலையரசன்

Page 55
நீங்கள் கணவனுடன் தனியறையில் களிக்கின்ற சுக இன்பங்கள்தான்! கணவன் மனைவி இரு உள்ளங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தங்கள்! மணவாழ்வு மங்களம் பெறுவதற்கு ஏற்ற பகுதி!
மணமகள் இந்த விடயத்தில் அவதானத்துடன் இருப்பதும், பூரணத்துவம் பெறுவதும் மிக மிக முக்கியமானது. மணமகள் எந்த வேலையில் இருந்தாலும் அவைகளையெல்லாம் அப்படியே போட்டு விட்டு கணவனது அழைப்புக்கு செவிமடுக்கவும், உடன்படவும் வேண்டும்.
கணவன் தனது ஆசைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்பதல்ல. கணவனது பார்வைகளும், கணவன் இருக்கும் நிலைமைகளும் உங்களுக்குப் போதுமானது.
அந்த நேரத்தில் கவனக்குறைவாக இருந்து விடுவதோ, அந்த இந்த வேலைகளைக் காரணங்களாகச் சொல்லி உதாசீனப்படுத்தி விடுவதோ மணமகள் தவிர்த்து நிற்க வேண்டியதொரு விடயம்தான்.
எனவேதான், உங்களது மணவாழ்வு நிறைவு பெறுவதற்கு, நீங்கள் கணவனுக்கு அளிக்கவேண்டிய அத்தனை கடமைகளையும், கண்ணித்தையும் முகம் சுழிக்காது நிறைவேற்றுவதன் மூலமாகத்தான் முடியும்.
கணவனுக்கு அளிக்கும் கண்ணியம் பற்றி இஸ்லாம் சமயம் என்ன கூறுகின்றது.?
0 அல்லாஹற்வைத்தவிர வேறு யாருக்காவது சிரம் பணிய வேண்டியிருந்தால், நான் மனைவியர்களை தன் கணவனுக்கே சிரம் பணியும் படி பணித்திருப்பேன். (நபிமொழி)
திருமண பந்தத்தில் - கணவன் மனைவி -

இந்து சமயம் என்ன கூறுகின்றது?
0 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்- பெய் எனப் பெய்யும் மழை.
பிற தெய்வம் தொழாது தன் கணவனையே தெய்வமாகத் தொழுது எழுவாள் - பெய்யென்றால் மழை பெய்யும்.
(திருவள்ளுவர்)
இந்த இரு துளிகள் போதும் உங்களுக்கு
வகுப்பு எண்
2- ப123)
வரலட்! ! )வ! -
எல;
1112)
(99)
கலையரசன்

Page 56


Page 57
ஆழ் சமுத்திரந்தா தெளிவான
L」「「○至う
65uprison JugoTLb குடைந்த Glasferöe AOL b கொந்தளிப்பிலும் அதன் சலனத்தை துன்றிவிட்டார்கள்
 

இது, 3FL Duu &FITřTLUDiOnID ஒரு பொதுவான நால்