கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்

Page 1
| 6)IIIյի օրհ கலாநிதி எம்
 
 

UIIf
品f
ஏ. எம் காக்

Page 2

நளிம் ஹாஜியார் வாழ்வும் பணியும்
கலாநிதி எம். ஏ. எம் சுக்ரி
ரஹ்மான் பதிப்பகம் 74, காலி வீதி, கொழும்பு 4,

Page 3
BIBILIOGRAPHICAL DATA
TITLE OF THE BOOK
AUTHOR SUBJECT LANGUAGE COPY RIGHT HOLDER DATE OF PUBLICATION NO..OF PAGES NO. OF COPIES TYPE SETTER
: NALEEM HAJIYAR -
VAALVUM PANIYUM : DR.M.A.M.SHUKRY : BIOGRAPHY : TAMIL : DR.M.A.M. SHUKRY © : 12.09.1993 : 212 : 2000 : NEW GREENS.
33.213.GALLE ROAD, COLOMBO 6 : M. L. MUHAMMAD RAZEEN : GLOBE PRINTING WORKS
COLOMBO 10 : RAHUMAN PUBLISHERS,
74. GALLE ROAD,
COLOMBO 4. : Sept. 1993 : 2000
ARTIST PRINTER
PUBLISHER
SECOND EDITION No. OF COPIES

உள்ளே
- 33
முன்னுரை. பிறப்பும் இளமையும்.
17 வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வணிகமும் வளர்ச்சியும்.
- 59 அந்த நாற்பத்தேழு நாட்கள்.
- 85 ஜாமிஆ நளீமியா - பாலைவனத்தில்
ஒரு பசும்புற்றரை. - 103 கல்வி மறுமலர்ச்சிக்குக் களம்
அமைத்தவர். - 123 வரலாற்று ஆய்வுக்கு வழிவகுத்தவர். - 148 சந்திப்பின் நினைவலைகள்.
- 160 நளீம்ஹாஜியார் ஆளுமை பற்றிய
ஒரு பொது நோக்கு. - 195

Page 4


Page 5

முன்னுரை
இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் வாழ்க்கைச் சரிதை (Biography) உண்மையில் வரலாற்றின் (History) பிரிக்க முடியாத ஒர் அம்சமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. வாழ்க்கைச் சரிதைக்கும், வரலாற்றுக்குமிடையேயுள்ள இந்த இறுக்கமான தொடர்பினை நவீன சமூகவியல் ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஜீ.ரைட் மில்ஸ் (GWright Mills) என்னும் சமூகவியலாளர் இக்கருத்தை பின்வரும் வகையில் மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றார்.
Every individual lives from one generation to the next in some society, that he lives out a biography and he lives it
9

Page 6
out within some historical sequence. By the fact of his living he contributes however, minutely to the shaping of the society, and to the course of it's history. The sociological imagination enables us to grasp history and biography, and the relation between two within Society.
"ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரையிலான தனது வாழ்வை ஒரு சமூக சூழ்நிலையிலே வாழ்கின்றான். இன்னொரு வகையில் கூறின், அவன் ஒரு வாழ்க்கைச் சரிதையையே வாழுகின்றான். அத்தோடு அதனை சில வரலாற்று நிகழ்வுகளின் தொடர்பு வரிசைக்கு ஏற்பவே வாழுகின்றான். இப்படி வாழுவதன் காரணமாக சமூக உருவாக்கத்திற்கும், அதன் வரலாற்றிற்கும், அது எவ்வளவு அற்பமாக இருந்தாலும் சரியே அவன் ஒரு பங்களிப்பைச் செய்கின்றான். சமூகவியல் கற்பனையானது வரலாற்றிற்கும், வாழ்க்கைச் சரிதைக்கும் இடையிலுள்ள தொடர்பை, இந்தச் சமூகப் பின்னணியில் புரிந்து கொள்ளத் g) GO 600TL if digit pgs." G. Wright Mills, The Sociological Imagination Oxford, 1959, p.20
இந்த சமூகவியல் உண்மையின் அடிப்படையிலே முஸ்லிம் அறிஞர்கள் வரலாற்றைப் போன்றே வாழ்க்கைச் சரிதைக்கும் முக்கியத்துவம் அளித்தனர். எனவே தான் இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியத்தில் அத் தபரியின் "தாரிகுர் ருஸனல் வல் முல்க்" அல்-மஸ9தியின் "முரு ஜூஸ் ஸஹப்” போன்ற பொதுவான வரலாற்று நூல்கள் போன்றே அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஆத்மஞானிகள், சமூக வாழ்வில் இடம்பெற்ற முக்கிய தனிமனிதர்கள் பற்றிய வாழ்க்கைச் சரிதை நூல்களும் தொகுக்கப்பட்டன. அல்-கிப்தியின் "தபகாதுல் அதிப்பா” மருத்துவர்களின் வரலாற்றையும், அல் - ஸஹபியின் "தஸ்கிரதுல் ஹரப்பஸ்” குர்ஆனை மனனம் செய்தவர்களின் வாழ்க்கையையும்,
10

இப்னு கவ்லிகானின் “வபியாதுல் அஃயான்” அறிஞர்கள். ஆட்சியாளர்கள், ஆத்மஞானிகள், சமூக வாழ்வில் இடம்பெற்றமுக்கியஸ்தர்களின் வாழ்க்கைச் சரிதைகளையும் தொகுத்துக்கூறும் நூல்களாக விளங்குகின்றன. இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியத்தில் வாழ்க்கைச் சரிதை நூல்கள் எத்துணை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன என்பதை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் அரபுப் பேராசிரிராகப் பணிபுரிந்த பேராசிரியர் பி.எஸ் மார்கோலியோத் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்.
Biographical literature of the Arabs was exceedingly rich. It would appear that in Baghdad, when an eminent man died, there was a market for biography of him, Somewhat as is the case in the capital of Europe our time, and when a personality had for some reason impressed itself on the public mind or his literary work has attained the rank of classics. numerous biographies would appear, and there was also biographies of not only of the dead but also of the living, and the literature which consists in collected biographies is abnormally large.
அரபு மக்களின் வாழ்க்கைச் சரிதை இலக்கியம் மிக வளமுள்ளது. பக்தாதில் யாராவது புகழ்பெற்ற மனிதர் மரணித்து விட்டால், அவரது வாழ்க்கைச் சரிதை நூல்களுக்கென்றே ஒரு சந்தை உருவாகும். இந்த நிலை எமது காலப்பிரிவில் ஐரோப்பிய தலைநகரங்களில் காணப்படுகின்றது. அதிலும் 'குறிப்பாக ஒருவனின் ஆளுமையானது, ஏதாவதொரு காரணம் பற்றி, பொது மக் களின் உள் ளத் தில் ஆழ்ந்த செல் வாக்கை ஏற்படுத்தியிருந்தால் அல்லது அவரது ஆக்கங்கள் சிறந்த. இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருந்தால், அவரைப் பற்றி பல வாழ்க்கைச் சரிதை நூல்கள் தோன்றிவிடும். மரணித்தவர்கள் பற்றிய வாழ்க்கைச் சரிதைகள் மட்டுமன்றி,
11

Page 7
உயிர் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சரிதைகளும் காணப்பட்டது. இவ்வாறு தொகுக்கப்பட்ட வாழ்க்கைச் சரிதை நூல்களில் காணப்படும் இலக்கிய வளம் மிக விசாலமானது.
Prof D.S Margolioth, Lectures on Arab Historians. London 1977 p8.
அந்தப் பாரம்பரியத்தின் வழி நின்றே எமது சமகாலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும், சன்மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நளிம் ஹாஜியாரின் வரலாறு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்துக்குக் காலம் சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் தனக்காக மட்டும் வாழ்ந்தவர்களன்று சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணமானவர்கள். தங்களது தனிப்பட்ட வாழ்வு என்ற நதியை சமூகம் என்ற சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தவர்கள். சமூக மேம்பாட்டையும், நல்வாழ்வையும் தங்களது இலட்சியமாக வரித்துக் கொண்டவர்கள். இத்தகையவர்களின் வாழ்வும், அதன் நிகழ்வுகளும் சமூக வரலாற்றோடு இரண்டறக்கலந்து அதன் பிரிக்கமுடியாத ஒர் அங்கமாக மாறிவிடுகின்றன. அத்தகையவர்களின் வாழ்க்கையினுாடே நாம் அவர்களது கால சமூகத்தைத் தரிசிக்கின்றோம். அதன் வளைவு நெளிவுகளை, ஏற்ற இறக்கங்களை இனங்கண்டு கொள்கின்றோம். தனி மனிதர்களின் வரலாறுகள், வாழ்க்கை
12
-

நிகழ்வுகள், அவர்கள் சமூக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் நிச்சயம் பாதுகாக்கப்பட்டு எதிர்காலச் சந்ததிகளுக்குப் பாத்தியதையாக வழங்கப்படல் வேண்டும்.
அத்தகைய ஒரு தனிமனிதனின் வரலாறே நளிம் ஹாஜியாரின் வரலாறு. அவரின் வரலாற்றை வாழ்க்கை நிகழ்வுகளை, சமூகப் பணியை, அது இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய மகத்தான தாக்கத்தை தொகுத்து நூலுருவில் படைத்தல் வேண்டும் என்ற ஆவல் எனது உள்ளத்தில் நீண்டகாலமாக கருக்கொண்டிருந்தது. பல தடவைகள் எனது இந்த விருப்பத்தை அவரிடம் வெளியிட்டப்போதும், புகழ், ஆரவாரம், இவற்றை விரும்பாத அவர் இதற்கு உடன்படவில்லை. "நான் அவரைப் பற்றி எழுதத் திட்டமிட்டுள்ள நூல் அவரைப் பற்றிய வெறும் புகழாகவும், அவரது சாதனைகள் பற்றி விசாரிப்புப் பேசுவதாகவும் அமையாது எனவும், அது பிறருக்கு படிப்பினையும், உணர்வு ஊட்டும் ஓர் ஆக்கமாகவே அமையும் எனவும் அவரிடம் விளக்கிக் கூறியபோதே இப்பணிக்கு அவரது உள்ளம் இணங்கியது.
இந்நூல் நளீம் ஹாஜியாரின் பெருமையைப் பேசும் நூலன்று. அவர் பற்றிய வீரவணக்கமுமன்று. அவரை அவர் வாழும் காலத்தின் முஸ்லிம் சமூகத்தின் பகைப்புலனில் நிறுத்தி அவரது வாழ்வின் நிகழ்வுகளை மையமாகவைத்து அந்நிகழ்வுகளையே பேசவைத்திருக்கின்றேன். ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த ஏழைச்சிறுவனாக, மண்சுமந்த உழைப்பாளியாக, மாணிக்கக்கல் பட்டை தீட்டுபவராக, மாணிக்கக்கல் வணிகராக, சர்வதேசியப் புகழ் பெற்ற வியாபாரியாக, சமூகப் பணியாளராக, சன்மார்க்க சேவையாளராக, கல்விக்கு உயிர்கொடுத்த உத்தமராக, அநியாயமாகச் சிறைவைக்கப்பட்ட ஒரு கைதியாக இப்படி
13

Page 8
வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் அவரை நாங்கள் இந்நூலில் சந்திக்கின்றோம்.
இந்நூலில் நளிம் ஹாஜியாரின் புகழ் பேசப்படவில்லை. அவனது ஓர் உயர்பணிக்காக அவரை வெறுமனே ஒரு gll 185D 600TLDITg5!' பயன்படுத்திய அல்லாஹ்வின் மாட்சிமையும், மகத்துவம்தான் பேசப்படுகின்றது. புகழுக்குரியவன் அவன் ஒருவனே. -
நளிம் ஹாஜியாரின் வாழ்வை ஆரம்பம் முதல் இறுதிவரை படி க்கும் எவரும் அவரின் வாழ்வின் பல்வேறு திருப்புமுனைகளை கலந்து அவதானிக்கும் எவரும், நிச்சயம் இறைவன் ஒரு பெரும் பணிக்காகவென்றே இந்த மனிதனை உருவாக்கினானோ என்ற உணர்வைப் பெறுவர். "எனது வாழ்வும் அதன் நிகழ்வுகளும் பிறருக்கு ஒரு படிப்பினையாக அமைதல் வேண்டும். குறிப்பாக நான் வறுமையில் அனுபவித்த காட்சிகளைப் படிக்கும் ஏழை மாணவர்கள் தங்களது வறுமை அவர்களது வளர்ச்சிக்கு ஒரு தடையாக அமையக்கூடாது என்ற உணர்வைப் பெறத்துணைபுரிதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் எனக்குப் புரிந்துள்ள அருளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவனைப் புகழ்வதாக நீங்கள் என்னைப்பற்றி எழுதப் போகும் நூல் அமைதல் வேண்டும். இது அவர் எனக்கு விடுத்த அன்பான வேண்டுகோள். தொடர்ந்து வரும் பக்கங்களில் அவரது அந்த அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என இந்நூலைப் படித்து முடித்த பின்னர் வாசகர்கள்
எண்ணுவார்களாயின் இந்நூல் அதன் நோக்கத்தைப் பூர்த்தி
செய்துள்ளது என்ற ஆத்மதிருப்தியைப் பெறுவேன்.
இந்நூலின் பிரசுரப் பணிகளில் எனக்குத் துணைபுரிந்த சகோதரர்கள், பலர் அச்சுப் பிரதிகளைச் சரிபார்த்தும்,
14

அட்டைப் படத்தினை மிகச் சிறப்பாக அமைத்தும் அவர்கள் ஆற்றிய பணிகளை நன்றியுடன் நினைவுகூறுகின்றேன். இந்நூலை மிகச் சிறப்பாக வெளியிட துணை நின்ற ரஹ்மான் பதிப்பகத்தாருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாலிப்பானாக.
அல்லாஹ்வுடைய அருளும் கிரு பையும் உங்கள்மீது இல்லாதிரு க்கும் பட்சத்தில் உங்களில் எவரு മേ எக்காலத்திலும் பரிசுத்தவானாகவே முடியாது. எனினும் அலி லாஹற் தான் நாடியவர் களைப் பரிசுத்தவனாக்குகின்றான். அல்லாஹ் செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாக உள்ளான்.
அந் நூர் , 21
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி
தாருல் புஷ்ரா, C0 ராகுல வீதி
மாத்தறை.
15

Page 9

- -
பிறப்பும் இளமையும்
----.
1932 ஆம் ஆண்டு ஒரு நாள் ஓர் ஆத்மஞானி பேருவலை சீனன்கோட்டைக்கு வருகை தருகின்றார். அவரைச் சூழ மக்கள் நிறைந்துள்ளனர். தமது உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்களது தேவைகளை நிறைவேற்றும்படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு ஒவ்வொருவரும் அப்பெரியாரிடம் வேண்டி நிற்கின்றனர். நல்லவர்கள் அல்லாஹ்வை நோக்கி உயர்த்திய கரங்கள் வெறுமையாகத் திரும்புவதில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை அவர்களில் பிரதிபலித்தது. எத்துணை வகையான ஆவல்கள், வேட்கைகள், தேடுதல் கள். ஒவ்வொரு மனிதனின்
17

Page 10
உள்ளத்திலும் புதைந்திருக்கும் ஆவல் களையும் , வேட்கைகள்ையும், அனைத்து அறிவையும் தன்னில் பொதித்துள்ள அல்லாஹற் ஒருவனே அறிவான். அந்தப் பெரியாரை புடை சூழ்ந்திருந்த மக்களிடையே ஒரு மனிதர் அவரை நெருங்கினார்.
“பெரியார் அவர்களே! எனக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. அதன் பிறகு இரண்டு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக இழந்து விட்டேன். ஐந்து வருடங்களாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருக்கிறேன். அல்லாஹ் எனக்கொரு ஆண் குழந்தையைத் தரப் பிரார்த்தியுங்கள்."
அந்தப் பெரியார் அந்த மனிதரின் கவலையும், சோகமும் கவிந்திருந்த வதனத்தை நோக்கி அமைதியான புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு “இன்சா அல்லாஹ்” அல்லாஹ் உங்களுக்கு நல்லொழுக்கமும், நற்குணமும், பக்தி சிரத்தையும் மரிக்க ஆண் குழந்தை ஒன்றைத் தந்தருள் வான் கவலைப்படாதீர்கள் என ஆறுதல் மொழி கூறினார்.சாதுவியா தாரிக்காவின் ஆத்மஞானி ஷெய்க் இப்ராஹிம் என்னும் அந்தப் பெரியாரின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தான் போலும். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ந் திகதி, அந்தப் பெரியாரை அண்டி தனக்கு குழந்தைப் பாக்கியத்திற்காகப் பிரார்த்திக்கும்படி வேண்டிய முகம்மது இஸ்மாயில் என்னும் அந்த மனிதரின் மனைவி ஷரீபா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
பயங்கரமான ஏழ்மை பேயாட்டமாடி, வறுமையின் கோரப்பிடியில் அந்தக் குடும்பம் சிக்கிப் பரிதவித்த சூழ்நிலையில் அக்குழந்தை பிறக்கின்றது. பிரசவ வேதனையை அனுபவித்திருந்த அந்தத் தாய், அக்குழந்தைப்பேற்றின் பின்னர் உடல் தளர்ந்த நிலையில் தெம்பேற்றிக் கொள்வதற்கு
18

உஷ்ணமாக ஏதும் கிடைக்காதோ என ஏங்கிய பரிதாபப்பார்வை முகத்தில் பிரதிபலித்தது. ஆனால் சூடாக ஒரு கிண்ணம் வெறும் தேனிரேனும் வாங்குவதற்கான சில்லறைக் காசு அவரது கணவனிடம் இருக்கவில்லை. வறுமையில் வாடிய அக்குடும்பத்திற்கு அக்காலப் பிரிவில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த குழந்தையின் நாற்பதாம் நாள் சடங்கை நிறைவேற்றுவது ஒரு பெரும் பிரச்சினையாகத் தோன்றியது. குழந்தையின் நாற்பதாம் நாள் நெருங்கியது. விருந்து படைத்து, மகிழ்ச்சியும், ஆரவாரமும் களிநடம் ւյmպւն நாளாக அமைய வேண்டிய அந்நாள். . பக்கத்துத் தோட்டத்தில் விழுந்திருந்த பலா மரத்தில் காணப்பட்ட பலாக்காயை அத்தந்தை சுமந்து வந்தார். அப்பலாக்காய் கறிசமைக்கப்பட்டு, விருந்து படைக்கப்பட்டது.
இத்தகைய கடும் வறுமையின் நிழலில் அக்குழந்தை வளர்கின்றது. பள்ளிக்கூடம் செல்லும் வயதை அடைந்ததும் அக்குழந்தையைப் பாடசாலைக்கு அனுப்புவது பற்றிய பிரச்சினை எழுந்தது. ஆனால் தான் எத்தகைய கஷ்டநிலையை அனுபவித்தாலும், எப்படியாவது தனது குழந்தையை, ஏனைய குழந்தைகள் போன்று பாடசாலைக்கு அனுப்புதல் வேண்டும் என்ற ஆசை அத்தாயின் உள்ளத்தில் தீவிரமாகச் செயல் பட்டது. தென்னந்தோப்புகள் நிறைந்த தெற்குக்கரையோரப் பகுதியில் கயிறு திரித்தல் ஒரு முக்கிய குடிசைக் கைத்தொழிலாகும். மிகவும் வசதியற்ற, வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் கயிறு திரித்தலையே தங்களது ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தனர். தனது தனயனுக்கு
எப்படியாவது கல்வியைப் புகட்ட வேண்டும் எனத் துடித்த
அத்தாய்க்கும் உரிய மட்டைக்குழி ஒன்று இருந்தது. இரவு முழுவதும் கண்விழித்து, ஊரே உறங்கும் அவ்வேளையில், களியில் ஊறிய மட்டைகளை தூர்நீக்கி, தும்பெடுத்து
19

Page 11
கயிறுதிரிக்கும் பணியில் ஈடுபட்ட அத்தாய், கடலிலிருந்து வீசும் குளிர்காற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் போர்வையால் தன்னை நன்கு மூடிப் படுத்துறங்கும் தனது மகனை அடிக்கடி நோக்குவாள். "இந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படித்தான் அமையுமோ” என்ற ஏக்கப்பெருமூச்சு அவளிவிருந்து வெளிவரும்.
காலையில் கண்விழித்ததும், அந்தத்தாய் இரவு முழுவதும் கண்விழித்து திரிக்கப்பட்ட அந்த ஒரு கயிற்று முடி அச்சிறுவனின் கைகளில் ஒப்படைக்கப்படும். அதனைச் சுமந்து கொண்டு அச்சிறுவன் கடை வீதிக்குச் செல்வான். அக்கயிற்று முடி ஒரு சதக் காசுக்கு விற்கப்படும். அந்த ஒரு சதக்காசுக்கு ஓர் அப்பத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவான். அதனைக் குடும்பத்தோடு பகிர்ந்து உண்ட பின்னர் அவன் பாடசாலைக்குச் செல்லும் காட்சியைக் கண்டு அத்தாய் மனநிறைவு பெறுவாள். சில நாட்களில் அத்தாய் காலையில் அப்பம் சுடுவாள். அச்சிறுவன் அந்த அப்பங்களைச் சுமந்துகொண்டு கடைத்தெருவிற்குச் செல்வான். அப்பங்களை விற்று சில சில்லறைக் காசுகளைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவான். சிலபோது அப்பங்கள் விலைபோகாது எஞ்சிவிடுவதுமுண்டு. அப்போது அவை குடும்பத்தின் பகல் ஆகாரமாக அமைந்துவிடும்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அக்குடும்பத்தில் அச்சிறுவனின் பாடசாலைக் கல்வியைத் தொடர்வது பெரும் பிரச்சினையாக மாறியது. "எனது கல்விக்காக எனது தாய் இரவெல்லாம் கண்விழித்து, பகலெல்லாம் ஓய்வின்றி உழைத்து ஒரு நோயாளியாக மாறவேண்டுமா?” என்ற வினா அவனது உள்ளத்தை உறுத்தியது. கல்வித் தாகத்திற்கும், தாய்ப்பாசத்திற்குமிடையில் ஒரு பெரும் மனப்போராட்டம். இறுதியில் தனது ஐந்தாம் வகுப்போடு பாடசாலைக் கல்விக்கு
20

முற்றுப்புள்ளி வைத்துவிட்டு குடும்பப் பொறுப்பைச் சுமப்பதில் தானும் பங்குகொள்ள அச்சிறுவன் முடிவு செய்தான்.
வறுமை நிலை காரணமாகப் பாடசாலைக் கல்விக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் ஒவ்வொரு முஸ்லிம் குழந்தையினதும் பாரம்பரியக் கல்வியின் முக்கிய அம்சமான "குர் ஆன் பள்ளிக்கூடக் கல்வி - எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. தனது புதல்வன் சன்மார்க்க நடத்தையும். ஒழுக்க சீலமும் உடையவனாக வளருதல் வேண்டும் என்ற விடயத்தில் மிகக் கரிசனை காட்டிய பெற்றோரின் மேற்பார்வையில் அச் சிறுவனின் குர்ஆன் மத்ரஸாக் கல்வி மிகச் சிறப்பாகத் தொடர்ந்தது. பள்ளிக்கூடத்தில் குர்ஆன் ஓதுவதை மட்டுமன்றி கிராமத்தில் நடைபெறும் சன்மார்க்கக் கிரியைகளான "ஹிஸ்பு மஜ்லிஸ்" போன்றவற்றில் தனது புதல்வர் கலந்துகொண்டு பயனடைதல் வேண்டுமென்பதில் அச்சிறுவனின் தந்தை மிகக் கண்டிப்பாக இருந்தார். அச்சிறுவனின் இறையச்சமும், நல்லொழுக்கமும் மிக்க ஆளுமை வளர்ச்சிக்கான அத்திவாரம் மிக ஆரம்பத்திலேயே இடப்பட்டது.
இவ்வாறு அன்றாட வாழ்வே ஒரு பெரும் போராட்டமாக விளங்கிய எளிமையும் வறுமையும் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து, பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்யும் பாக்கியத்தை இழந்து . ஆனால் இந்நிலையிலும் பெற்றோர் அளித்த சன்மார்க்கப் பண்பாட்டுப் பயிற்சியின் காரணமாக தன்னில் ஓர் இஸ்லாமிய ஆளுமையை உருவாக்கிக் கொண்ட - எண்ணற்ற ஏழை மாணவர்களின் அறிவுக்கண்களைத் திறந்துவிட்ட தனது சன்மார்க்கப் பணியில் எண்ணற்ற மஸ்ஜித்களையும், இன்று இந்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேசிய ரீதியாகவும் புகழும். கீர்த்தியும் பெற்று விளங்கும் ஓர் இஸ்லாமிய கல்வி நிலையத்தை இந்நாட்டில் கட்டியெழுப்பிய
21

Page 12
அச்சிறுவனே, இன்று இந்நாட்டு முஸ்லிம்கள் நன்றிப் பெருக்குடன் கண்ணியமும், மதிப்பும் வைத்து, வாய்திறந்து அன்புடன் "நளிம்ஹாஜியார்” என அழைக்கும் மனிதர் ஆவார். அவரின் வாழ்வு ஒரு தனிமனிதரின் வாழ்வன்று. அவரது வாழ்வும் பணியும் இந்நாட்டு முஸ்லிம்களின் அண்மைக்கால சமூக, கல்வி, கலாச்சார வரலாற்றோடு பிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்துள்ள ஒரு வாழ்வாகும்.
சன்மார்க்கப் பணி - சமூகப்பணி - கல்விப்பணி - வணிக முயற்சி என தேசிய வாழ்வினதும், சமூக வாழ்வினதும் பல்வேறு களங்களை அது தழுவி நிற்கின்றது. நளிம்ஹாஜியார் ஒரு தனிமனிதரன்று. எமது காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் ஒரு மகத்தான வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்த ஒரு வரலாற்று புருஷர். அவரது பரந்துபட்ட பல்வேறு துறைகள் சார்ந்த சன்மார்க்க சமூகப்பணிகளின் வரலாற்றுத் தாக்கத்தினை எடை போடுவது அவரது சமகாலத்தவரான எவராலும் சாத்தியமானதன்று. ஏனெனில் இத்தகைய பணிகளின் தாக்கம் வரலாற்றில் அதன் பூரண பாதிப்பைப் புலட்படுத்துவற்கு எதிர்காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக 1880 ஆம் ஆண்டளவில் சித்திலெப்பையும், அவரது முஸ்லிம் நேசனும் ஆற்றிய பணியின் தாக்கத்தினை ஒரு நூற்றாண்டு கழித்து இப்போதுதான் நாம் அவதானிக்கவும், உணரவும் முடிகின்றது. எனவேதான் தனது சிந்தனையின் தாக்கத்தினை, அவரது காலப்பிரிவிலன்றி, மிக நீண்ட நாள் கழித்தே சமூகம் உணரும் காலகட்டம் தோன்றும் என்பதனை தெளிவாக விளங்கிய அல்லாமா இக்பால் தன்னைப்பற்றி "நான் நாளைய கவிஞன்” என வர்ணித்தார். இதுபோன்றே நளிம் ஹாஜியார் இன்று எம்மிடையே வாழ்ந்தாலும் -
22

அவரது பணிகள் எமது சமகாலத்தில் நடைபெற்றாலும், அவர் நாளைய மனிதர். எனவே இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் செய்த பங்களிப்புகளின் தாக்கத்தினையும், செல்வாக்கையும், பாதிப்பினையும் மதிப்பீடு செய் யும் பொறுப்பினை எதிர்கால வரலாற்றிற்கு விட்டுவிடுவோம்.
ஏழ்மை காரணமாக கல்விக்கு முற்றுப் புள்ளிவைத்த அச்சிறுவன் நளீம், தனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, ஏதாவதொரு வகையில் உழைக்க முடிவு செய்தான். குடும்பப்பாரத்தில் தானும் பங்குகொள்ள எந்த ஒரு உழைப்பிலும் ஈடுபட தயங்கவில்லை. காலையில் வீட்டைவிட்டு வெளியேறுவான். அன்றாட உழைப்பிற்காக எதிர்ப்படும் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவான். பயங்கரமான வறுமைக்கும் கடுமையான உழைப்பிற்குமிடையில் பல ஆண்டுகளைக் கழித்த சிறுவன் நளீம் பாலியப்பருவத்தை அடைந்தான். இதற்கிடையில் எத்துணை சுமைகள், எத்துணை ஏக்கப் பெருமூச்சுக்கள்? அவனது வாலிபத்தின் முறுக்கேறிய உடல் மட்டுமன்றி, உள்ளமும் வறுமைப் போராட்டத்தின் அனுபவங்களினால் போஷிக்கப்பட்டு வளர்ந்தது.
ஒரு நாள் மிகுந்த ஆயாசத்தோடும், களைப்போடும் ஒரு இடத்தில் மண்வெட்டிச் சுமக்கும் வேலையில் நளீம் ஈடுபட்டிருந்தான். என்றுமில்லாதவாறு அன்று அவனது. உள்ளம் புதுவகையில் சிந்திக்க ஆரம்பித்தது. வீட்டின் வறுமை நிலை, துன்பத்திலும் துயரத்திலும் சிக்கிப் பரிதவிக்கும் பெற்றோரின் ஏக்கப்பெருமூச்சு, காலை முதல் மாலை வரை தான் கஷ்டப்பட்டு ஈடுபடும் அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் சில சில்லறைக்காசுகள் - அவனது கண்முன் நிழலாடின. "எவ்வளவு காலந்தான் இந்த இயந்திர வாழ்வு?” என்ற பெருமூச்சு அவனிலிருந்து வெளிவந்தன. அது
23

Page 13
எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற, விரக்தியின் பிரதிபலிப்பாக அமையவில்லை. அது அவனது உள்ளத்தை உறுத்தி, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. தனக்கும் ஒரு வாழ்வு உண்டு, அந்த வாழ்வைத் தான் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற ஆழமான உறுதி நளிமின் உள்ளத்தில் தோன்றியது. தலையில் மண்கூடையைச் சுமந்திருந்த அந்த இளைஞன் அதனை வீசி எறிந்தான். அது உழைப்பை உதாசீனம் செய்வதாக அமையவில்லை. அவனது உழைப்பை அர்த்தமுள்ளதாக, ஒரு நம்பிக்கையும், உறுதியும் நிறைந்த ஒளிமயமான எதிர்காலத்திற்குத் தன்னை இட்டுச் செல்வதாக அமைத்துக்கொள்ளும் மன உறுதியும் வைராக்கியமுமே அவனில் காணப்பட்டது.
அக்காலப்பிரிவில் சீனன்கோட்டையில் பாரம்பரியத் தொழிலாக, மாணிக்கக்கல் வெட்டி, பட்டை தீட்டுதல் விளங்கியது. அங்கு வாழ்ந்தோரில் பெரும்பாலோர் மாணிக்கக்கற்களை பட்டைதீட்டி விற்று ஜீவனோபாயம் நடாத்தினர். மாணிக்கக் கற்களை பட்டை தீட்டும் தொழில் மாணிக்கக்கற்கள் கிடைக்கும் பிரதேசங்களை மையமாக வைத்தே நடைபெற்றது. இவ்வகையில் இரத்தினபுரி, எஹலியகொடை, குருவிட்ட போன்ற இடங்கள் பிரசித்தி பெற்று விளங்கின. சீனன்கோட்டையைச் சேர்ந்த பெரும்பாலோர் இப்பிரதேசத்தை அண்டியே அவர்களது தொழிலில் ஈடுபட்டனர். எனவே வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும், புதுத்திருப்பத்தையும் விரும்பிய நளிமின் கவனமும், ஈடுபாடும் இயற்கையிலேயே இத்துறையில் கவனம் செலுத்தியதில் வியப் பில்லை. எனவே எஹலியகொடையில் தனது மாமனார் வாஹித் ஹாஜியாரின் தொழில் முயற்சிகளில் தானும் துணையாக இருக்க முடிவு செய்து எஹலியகொடை செல்ல இளைஞன் நளீம் முடிவு செய்தான். எஹலியகொடையில் மாமனாரின் கீழ் மாணிக்கக்கல்
24

ர் நளிம்
இளைஞ

Page 14

பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்ட நளிம் மிகக் குறுகிய காலத்தில் அதில் அபார வளர்ச்சியைக் கண்டான். ஆனால் இப்பணியும் கடுமையான உழைப்பை வேண்டியே நின்றது. தனது விரல்களிலிருந்து இரத்தம் கசியுமளவிற்கு மாணிக்கக்கல் தீட்டுவதில் மிகக் கடுமையாக ஈடுபட்டான். ஆனால் இந்த கடுமையான உழைப்பு அவனது வளர்ச்சிக்குவழியமைத்துக் கொடுத்தது. அது வெறுமனே தொழில் பயிற்சியை மட்டும் வழங்கவில்லை. பல்வேறு வகையான மாணிக்கக்கற்கள் பற்றிய பரிச்சயம், அவற்றைப் பரஸ்பரம் வேறுபடுத் திக்காட்டும் பண்புகள், அவற்றை இனங்காணும் தன்மை, அவற்றை மதிப்பீடு செய்யும் ஆற்றல் ஆகிய துறைகளில் விரிவான ஆழமான அனுபவத்தைப் பெறவும் அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. எனவே கால ஓட்டத்தில் நளிம் கரடுமுரடாகக் காட்சியளித்த மாணிக்கக்கற்களை தனது கைவண்ணத்தினால் ஒளிவீசிப் பிரகாசிக்கச் செய்யும் வகையில் பட்டை தீட்டும் ஆற்றலை மட்டுமன்றி, மாணிக்கக்கற்களை தரம்பிரித்து, இனங்கண்டு அவற்றின் பெறுமதியை மிக நுட்பமாகவும், நுணுக்கமாகவும் மதிப்பீடு செய்வதிலும் நிபுணத்துவம் பெற்றான். சமுத்திரத்தின் ஆழத்தில், கண்களுக்குப் புலப்படாது மறைந்துள்ள சிப்பியினுள் புதைந்திருக்கும் முத்தின் ஒளியும், பிரகாசமும் கால ஓட்டத்தில், சுழியோடி யின் உழைப் பரினாலும் , கலைஞனின் கைவண்ணத்தினாலும் வெளிப்படுவதைப் போல இளைஞன் நளிமின் உள்ளார்ந்து மறைந்திருந்த ஆற்றலும், திறமையும் வெளிப்பட ஆரம்பித்தன. சின்னஞ்சிறு ஆலவிதையில் மாபெரும் ஆல விருட்சத்தின் விழுதுகளும், விசாலமும் மறைந்திருந்து அதற்குரிய மண்ணும், சூழலும் சுவாத்தியமும் அமையும்போது தளிர்விட்டு வளர்ந்து மரமாகி மாபெரும் ஆலவிருட்சமாக வளர்ச்சியடைகின்றது. மனிதனின் மறைந்துள்ள ஆற்றல்களும், திறமைகளும் இத்தகையதேயாகும். அவற்றிற்குரிய பொருத்தமான ஒரு நிலை அமையும்போது,
27

Page 15
அந்த ஆற்றல்கள் வெளிப்பட்டு வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. இதுபோன்ற ஒரு சூழ்நிலை இளைஞன் நளீமுக்குக் கிடைத்தபோது அவனில், உள்ளார்ந்து மறைந்திருந்த ஒரு மகத்தான ஆற்றல் வெளிப்பட ஆரம்பித்தது.
மாணிக்கக்கல் வெட்டிப்பட்டை தீட்டுவதில் ஆழமான அனுபவமும் மாணிக்கக்கற்களை இனங்கண்டு மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட திறமையும் அவனை மாணிக்க வியாபாரத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. ஆரம்பத்தில் சிலரோடு பங்காளராக இணைந்து, சிறுசிறு மாணிக்கக் கற்களை விற்று சாதாரணமான சிறு வியாபார முயற்சியில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். இக்காலப் பிரிவு மிகவும் கடுமையான உழைப் பை வேண் டிநின் றது . மாணிக்கக்கற்களைத் தேடி மிகக் கஷ்டத்திற்கும், சிரமத்திற்கும் மத்தியில் அலைந்து திரிந்து, அக்கற்களை விற்றுப் பொருளீட்டினார். சில போது இவ்வியாபார முயற்சிகளில் பெரும் நஷ்டத்தையும், இழப்பையும் அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது. சில போது அது இலாபத்தையும் அவருக்கு ஈட்டிக்கொடுத்தது. இந்த சிறுதொழில் முயற்சியின் மூலம் கிடைக்கும் அன்றாட சொற்ப வருமானத்தின் மூலம்ே தனது முழுக் குடும்பப் பொறுப்பையும் தன்னந்தனியே சுமக்க வேண்டியிருந்தது, கடுமையான உழைப்பின் மூலம் தனது வறுமை நிலையைப் போக்குவதற்கான அவரது வாழ்க்கைப் போராட்டம் தொடர்ந்தது. தனது உழைப்பின் மூலம் தான் இழந்திருந்த வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். தான் உழைத்துச் சேமித்த பணத்தின் மூலம் ஒரு சிறுவீட்டை இப்போது அவரால் கட்ட முடிந்தது. சீனன்கோட்டை யூஸுப் அவெனியுவில் அமைந்துள்ள இந்தவீட்டிலேயே அவரது சகோதரி தற்போது வசித்துவருகிறார்.
28

தனது சகோதரியின் திருமணப் பிரச்சினை அவர்முன் இமாலயப் பிரச்சினையாகத் தோற்றமளித்தது. இந்நிலையில் தனது சகோதரிக்கு வாழ்வளிப்பதற்கான வழிவகைகளை பற்றிய சிந்தனை இரவு பகலாக அவரை வாட்டியது. மாணிக்கக் கற்கள் தேடி காடு மேடெல்லாம் அலையும் போதெல்லாம் சகோதரியின் திருமணம் பற்றிய பிரச்சினை அவரது நெஞ்சில் ஒரு பெரும்பாரமாக அழுத்தியது.
அக்காலப் பிரிவில் தங்களது குமரிப்பெண்களைத் திருமணம் முடித்துக் கொடுக்க வசதியற்றோர், சிற்றுண்டி வைபவங்களை நடாத்தி, அதற்கு தங்களது உறவினர்கள் நண்பர்களை அழைத்து, அவர்கள் அதில் கலந்துகொண்டு வழங்கும் அன்பளிப்புப் பணத்தின் மூலம் திருமணச் செலவுகளைச் சமாளிக்கும் ஒரு மரபு சமூகத்தில் வழக் கிலிருந்தது. இம் மரபு "அட் ஹோம் " என அழைக்கப்பட்டது.
தனது சகோதரியின் திருமணப்பொறுப்பை நிறைவேற்ற நளீம் இந்த வழியைக் கையாள முடிவு செய்தார் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்த அவருக்கு , திருமணச் செலவுக்குத் தேவைப்பட்ட மூவாயிரம் ரூபாவில், ஆயிரத்து நூறு ரூபாய் மட்டுமே இதன் மூலம் கிடைத்தது. மீதித் தொகையை ஒருவரிடம் கடனாகப் பெற்று, மிகக் கஷ்டமான சூழ்நிலையில் இத்திருமணக் கடமையை அவர் நிறைவேற்றினார். சகோதரியின் திருமணம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அவருக்கும் ஒரு திருமணம் முடித்து வைத்தல் வேண்டும் என்ற ஆவல் பெற்றோரின் உள்ளத்தில் தோன்றிது. இது பற்றி அவரிடம் அவர்கள் அடிக்கடி வற்புறுத்தினார்கள். இறுதியில் பெற்றோரின் இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய அவர் முடிவு செய்தார். 1958 ஆம் ஆண்டு சீனன் கோட்டையைச் சேர்ந்த
29

Page 16
அப்துல் வதுாத் அவர்களின் புதல்வி ஸித்தி ரபீகா என்னும் பெண்ணோடு திருமண வாழ்வில் அவர் இணைந்தார். அவரது மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணைவியாக அவரது மனைவி அமைந்தார். இது அவரது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் அளித்தது.
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக, உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் நிச்சயமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன.
- ளU"ரா அர் ரூம் 21
தனது மனநிலையைப் புரிந்து கொண்டு தனது வாழ்வில் வறுமையான, வசதியற்றநிலையில் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ள எந்நிலையிலும் ஆயத்தமாக இருந்த ஒரு வாழ்க்கைத் துணைவி அவருக்குக் கிடைத்தது ஒரு பெரும் பேறாக அமைந்தது. அன்றாடம் கிடைக்கும் சாதாரண வருவாயைக் கொண்டு மனநிறைவு பெறும், போதும் என்ற நிலை அவரில் அமைந்திருந்தது. ஒருவன் "உலகில் பெறக்கூடிய மிகப்பெரும் செல்வம் நற்பண்பு மிக்க ஒரு மனைவியே" என்ற நபி (ஸல்) அவர்களின் வாக்கு. நளிமைப் பொறுத்தளவில் நிதர்சன உண்மையாகியது.
பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் முழுவதையும் உள்ளடக்கி, ஆல்போல் கிளைவிட்டுப் பரவிய அவரது பரந்த பொதுப்பணி என்ற மரத்தின் ஆரம்பத் துளிர்கள் இக்காலகட்டத்திலேயே தோன்றின. பிறருக்கு ஈந்து வாழ்வதில் நிறைவும், மகிழ்ச்சியும் காணும் உள்ளத்தை, அல்லாஹற்
30

இயற்கையாகவே அவரோடு உடன்பிறந்த ஒரு பண்பாக அமைத்திருந்தான். சிறு சிறு வணிக முயற்சிகளில் ஈடுபட்ட ஆரம்பகிாலத்திலிருந்தே தான் உழைக்கும் பணத்தில் கொஞ்சத்தையாவது பிறருக்கு வழங்கும் ஒரு பண்பு அவரில் காணப்பட்டது. வாழ்வின் ஆரம்ப காலப் பிரிவிலிருந்தே கொடுமையான ஏழ்மையாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டு, சொல்லொணாத் துன்பங்கள், துயரங்களைச் சுமந்து விட்டு, இப்போதுதான் சிறு தொழில் முயற்சிகள் மூலம் ஒரளவு முன்னேறி வரும் இக்காலகட்டத்தில், மிகக் கஷ்டத்துக்கும், சிரமத்திற்கும் மத்தியில் தான் உழைக்கும் பணத்தை சேமிக்க முயற்சிக்காது, அதில் ஒரு பகுதியைப் பிறருக்கு வழங்கும் இப்பண்பினை அவரது உறவினர்கள் சிலர் விரும்பவில்லை. இப்போக்கினை அவர் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் என்றுமே அவர் முன்னேற முடியாது என உறவினர்கள் கவலையுற்றனர். அவரது தாய்ாரிடம் சென்று “உங்கள் மகன் செய்யும் வேலையைப் பாருங்கள். இப்போது தான் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமடைந்து கொண்டு வருகின்றான். இந்த நிலையிலும் ஏதோ பெரிய மனிதன் மாதிரி தான் சம்பாதிப்பதையெல்லாம் மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுகின்றானே. இப்படியிருந்தால் அவன் எப்படி முன்னுக்கு வரப்போகின்றான் உங்கள் மகனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்கள்” எனக் கூறினார்கள். ஆனால் அந்தத்தாய், மற்றவர்கள் எல்லோரையும் விட தனது மகனின் உள்ளத்தை நன்கு புரிந்திருந்தாள். இவ்வாறு பிறர் தன்னிடம் கூறியது பற்றி மகனிடம் கூறியபோது "உம்மா நான் பிறருக்கு இப்படியெல்லாம் கொடுக்கும் போது, அல்லாஹ் எனக்கு அதைவிடக் கூடுதலாகக் கொடுக்கின்றானேயன்றி அதைக் குறைக்கவில்லையே” எனக் கூறியபோது, அத்தாயின் முகம் "மகனே! நீ தேர்ந்தெடுத்துள்ள வழிதான் சரியானது" என்று மகனின் போக்கை ஆமோதித்து, அனுசரிப்பது போன்று ஒர் அமைதியான புன்சிரிப்பை உதிர்த்தது.
31

Page 17
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் பொருளுக்கு உதாரணம் ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றது. அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹற் தான் நாடுவோரு க்கு அவர்களுடைய நற்செயல்களின் பலன்களை பன்மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹற் கொடையில் மிக்கவிசாலமானவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான்.
- அல் பகறா 261
அல்குர்ஆனில் அவனது பாதையில் தூய்மையான சிந்தையுடன் செலவு செய்வோருக்கு அல்லாஹற் வழங்கும் இந்த வாக்குறுதி அவரைப் பொறுத்தளவில் மிக நிதர்சனமான அனுபவரீதியான உண்மையாகிறது. தனது சிறு உழைப்பின் மூலம் கிடைக்கும் பொருளினால் பிறருக்குப் புரியும் உதவிகளுக்கு அவரது மனைவியின் பூரண சம்மதமும் ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைத்தது. அவரது மனைவியின் மூலம் அவருக்குக் கிடைத்த அமைதியும், நிம்மதியும் நிறைந்த குடும்பவாழ்வே அல்லாஹற்வின் அனுக்கிரகத்திற்கும் அடுத்து, தொழில், முயற்சியின் வளர்ச்சிக்கும் பிற்காலத்தில் அவர் புரிந்த பொதுப் பணிகளுக்கும் உறுதுணையாக அமைந்தது.
32

2
வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை
ID னித வாழ்வும், அதன் ஓட்டமும் என்றும் ஒரே நிலையில் இருப்பதில்லை. அது ஆங்காங்கு வளைந்தும், நெளிந்தும் ஓடும் ஓர் ஆற்றைப் போன்றது. அது அதன் ஓட்டத்தின் பாதையில் பல திருப்புமுனைகளைச் சந்திக்கிறது. நளிமின் வாழ்வு அவர் தனது இருபத்தாறாவது வயதை எட்டிப்பிடித்த காலகட்டத்தில் அத்தகைய ஒரு திருப்பு முனையைச் சந்தித்தது. அவர் திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் தான் கழிந்திருந்தன. அது ஒரு சாதாரண திருப்புமுனையல்ல. அது அவரது வாழ்க்கையின் போக்கையே திசை திருப்பி விட்டது. அதிலிருந்துதான் நளிம் என்னும்
33

Page 18
தனிமனித வாழ்வின் நீரோட்டம் சமூகம் என்ற சமுத்திரத்தோடு சங்கமிக்க ஆரம்பிக்கின்றது. மனித வாழ்வில் இத்தகைய திருப்பங்கள் ஏற்பட சில நிகழ்ச்சிகள் காரணமாக அமைவதுண்டு. ஆனால் நளிமைப் பொறுத்தளவில் சில நினைவுகள் காரணமாக அமைந்தன.
மாணிக்க வியாபாரத்துறையில் மிகச் சாதாரண, சாமான்யராக தனது சிறு வியாபார முயற்சிகளை ஆரம்பித்த அவர் அத்துறையில் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டார். மாணிக்க வியாபாரத்தின் நுட்பங்கள், உத்திகள் பற்றிய அறிவும், அனுபவமும் அவரில் ஒன்றுசேர ஆரம்பிக்க வாழ்க்கையில் வசதிகள் படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. அவ்வப்போது கிடைக்கும் வருவாயிலிருந்து தர்மஞ் செய்யும் பணியும் அமைதியாக, ஆரவாரமின்றித் தொடர்ந்தது. சன்மார்க்கப் பற்றும், பக்தி சிரத்தையும் மிக்க ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தாலும், வாலிபத்தின் முறுக்கேறி, இளமைத் துடிப்புமிக்க இளவலாக இருந்த அவரில் சன்மார்க்க உணர்வும் செயல்பாடும் உறுதியாகச் செயல்படாமை ஒரு பெருங்குறையாகவே இருந்தது. இது பற்றிய குற்ற உணர்வு இடைக்கிடை அவரது உள்ளத்தை உறுத்த ஆரம்பித்தது. இந்நிலையில் ஒரு நாள் அவரது சிந்தனையின் ஒட்டம் ஒரு புதுவழியில் இயங்க ஆரம்பித்தது. இந்தத் திருப்புமுனை பற்றிய நினைவோட்டத்தை, இரண்டாவது ஆளாக இருந்து விளக்குவதைவிட அவர் வாயிலாகவே கேட்போம். -
"எனது மாணிக்க வியாபாரம் எஹலியகொடையை மையமாக வைத்துத் தொடர்ந்தது. ஒரு நாள், அங்குள்ள எனது மாமனார் வாஹித் ஹாஜியாரின் கடையில் அமர்ந்திருந்தேன். அமைதியான, சந்தடியற்ற அந்தச் சூழலில் திடீரென, என்னையே அறியாமல், ஏதோ ஒர் உணர்வினால் இயக்கப்பட்டு
34

என்னைப் பற்றிச் சிந்திக்கலானேன். நான் இப்படியே உழைக்கும் இயந்திரமாக இயங்கிக் கொணர்டிருப்பதா? எனது வாழ்வு இப்படியே இன் பங்களிலும், கேளிக்கைகளிலும் கழிந்து, பயனற்றதாக, பொருளற்றதாக அப்படியே மறைவதா? நான் பயனுள்ள ஒர் எதிர் காலததை அமைத்துக் கொள் வ14 ச. 1. п.д, п?
வாழ்க்கையில் நான் ஒர் உணர்மையான மனிதனாக
மாறக்கூடாதா? இப்படியாக பல எண்ணங்கள், வினாக்கள், ஒர் அர்த்தமுள்ள விடையை வேண்டி 65) து உள்ள தத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அலையாய் எழுந்தன. அப்போதே என் உள்ளத்தில் ஒரு நெஞ்சுரமும், வைராக்கியமும் பிறந்தது. 6 வது வாழ் விற்கு ஒரு பொருளையும் , கருத்தையும் வழங்கத் தீர்மானித்தேன். இதற்கு ஒரே வழி, இன்சா அல்லாஹ், புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற மக்கா சென்று ஒரு புது மனிதனாகத் திரும்புவதே என்ற உறுதியை மேற்கொண்டு புனித ஹஜ் பயணத்தினை மேற்கொள்ள ஆயத்தமானேன். அந்த ஹஜ் எனது வாழ்வில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது". இவை அனைத்தும் அவரது உணர்வுகள், உயிரோட்டமும் உணர்வும் மிக்க வார்த்தைகள்; அந்த வார்த்தைகளை இந்நூலை எழுதும்
நான் எழுத்தோவியமாகப் படைத்து உணர்ச்சிச் சித்திரங்களாக
ஆக்கியுள்ளேன். அவ்வளவுதான்.
"நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உள்ளங்கள் அல்லாஹ் வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” என சூரர் அல்ஹதீதின் 16 ஆம் திருவசனத்தில் அல்லாஹ், விடுக்கும் வினாவிற்கான விடையாக அவரது வாழ்வின் இத்திருப்புமுனை அமைந்தது. அவரது உள்ளம் அல்லாஹ்வின் நினைவினால் உருகியது. சத்தியத்தின் முன் அவர் பணியும் நேரம் வந்துவிட்டது.
35

Page 19
அவரது வாழ்வின் இந்த திருப்புமுனையை அவர் என்னிடம் ஒருநாள் விளக்கியபோது அவரது கண்களில் வழிந்தோடிய கண்ணிர் இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பூத்த ஆத்மஞானிகளுள் ஒருவரான புலைல் பின் இயாழ் (ரலி) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையை எனது மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. புலைல் பின் இயாழ் மிகப் பிரபல்யமான கொள்ளைக்காரனாக விளங்கினார். அடம்பிடிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்த விரும்பும் பெற்றோர் "அதோ பயங்கர கொள்ளைக்காரன் புலைல் வருகின்றார்" எனக் கூறிப் பயங்காட்டுவர். அந்த அளவிற்குப் பெயர் பெற்ற வழிப்பறித் திருடராக அவர் விளங்கினார். ஒரு நாள் இரவு வீட்டின் கூரையைப் பிரித்து, அந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்காக அவர் இறங்க ஆயத்தமாகும் வேளையில், அந்த வீட்டின் பெண்மணி, பக்தியும், உணர்ச்சியும் மிக்க அழகிய குரலில் குர்ஆனை ஒதுவதைச் செவியுற்றார்.
"நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹற்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?”
- அல் ஹதீத் - 16
அந்தப் பெண்மணி உணர்ச்சி ததும்ப ஒதிய குர்ஆனின் இத்திருவசனங்கள் புலைலை அப்படியே ஆட்டி அசைத்துவிட்டது. அவரது உள்ளத்தில் ஈட்டியாகப் பாய்ந்து துளைத்து அவரது மனச்சாட்சியைத் தொட்டது. ஒரு பேரொளிச் சுடராக இதயத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வியாபித்துப் பரவி பாவக் கறைபோக்கிப் பரிசுத்தப்படுத்தியது. அவ்வார்த்தைகள் அவருக்காகவே அருளப்பட்டது போன்ற உணர்வைப் புலைல் பெற்றார். உடனே அல்லாஹற்வின்
36

பால் பாவமன்னிப்புத்தேடி இறைபாதையில் பயணம் செய்து இறை நேசச் செல்வர்களுள் ஒருவராக - புகழ் பூத்த ஆத்மஞானி புலைல் பின் இயாழ் (ரலி) அவர்களாக மாற்றமடைகின்றார்.
அல்லாஹ் மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றான்?
புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி தான் ஒரு புதுமனிதனாக மாறுதல் வேண்டும். என்ற உறுதியை மேற்கொண்ட நளீமின் உள்ளம் பொறுமையிழந்தது. அவரது உள்ளத்தில் தோன்றிய இந்த ஆவலை மிக அவசரமாகப் பூர்த்திசெய்யும் பணியில் உடனே ஈடுபட அவரது உள்ளம் துடித்தது. இந்த நற்பணியில் ஒரு கணமேனும் தாமதிக்க அவர் விரும்வில்லை உடனே அவர் எஹலியகொடையிலிருந்து சீனன்கோட்டைக்கு திரும்பினார். அவரது முடிவைத் தாயிடம் தெரிவித்தார். இத்தகைய ஒரு மாற்றத்தைக் தனது மகனின் வாழ்வில் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாயின் உள்ளம் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைந்தது. ஆனால் தாயார் அவருக்கு ஒரு அன்புக் கட்டளை பிறப்பித்தார். அவரது மாமனாரின் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்த பின்னரே அவர் ஹஜ்ஜுக்குப் புறப்படல் வேண்டும் என்பதே அந்த அன்புக் கட்டளையாகும். அன்புத் தாயின் அந்தக் கட்டளையை நிறைவேற்றிய பின்னர், ஒரு கடமையை முடித்த களிப்பில்
அந்த இறைகடமைக்காகப் புறப்பட்டார்.
"ஹஜ்ஜுக்கு வரு மாறு நீர் மனிதர்களுக்கு அழைப்பு விடுப்பீராக அவர்கள் கால் நடையாகவும், இளைத்த ஒட்டகங்கள் மீதும், வெகு, தொலைதூரத்திலிருந்தும் வரு வார்கள்”.
அல்ஹஜ் – 27
37

Page 20
அந்த அழைப்பை ஏற்று அவரும் புறப்பட்டார். ஐயாயிரம் ஆண்டுகளாக சங்கிலித் தொடர்போன்று தொடர்ந்து வரும் அந்த ஆன்மீகப் பயணத்தில் அவரும் ஒரு பயணியானார். உலகில் இறைவணக் கத்திற்காக முதன் முதல் கட்டியெழுப்பப்பட்ட - தெளஹரீதின் பெருநெறியின் சங்கேதமாக விளங்கும் புனித கஃபதுல்லாவைச் சுற்றிச் சுழலும் அந்த சனசமுத்திரத்தோடு அவரும் சங்கமிக்கும் சந்தர்ப்பம் வந்துவிட்டது.
புனித ஹஜ் ஒவ்வொரு விசுவாசியைப் பொறுத்தளவிலும் மகத்தான அனுபவமாகும் . ஆனால் நளிமைப் பொறுத்தவரையில் அது ஒரு மகத்தான அனுபவமாக மட்டு மண் றி, அவரது வாழ் வரில் மாபெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. அவர் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய 1960ஆம் ஆண்டு காலநிலை, சுவாத்தியத்தைப் பொறுத்தளவில் அரபுத் தீபகற்பத்தில் மிக உஷ்ணமும், வெப்பமுமாக உள்ள ஜூலை மாதத்திலேயே ஹஜ் கடமை வந்தது. அன்று மக்காவில் இன்று காணப்படுவதுபோன்று குளிர்சாதன வசதிகளோ ஏனைய செளகரியங்களோ காணப்படவில்லை. மிகக் கடுமையான உஷ்ண காலமாக அது அமைந்தது. உஷ்ணத்தையும், தாங்க முடியாத வெப்பத்தையும் தணிப்பதற்கு மின்சார விசிறியை இயக்கினால் அதுவும் நெருப்புக் காற்றையே சுமந்துவந்தது. இந்தப் பாதகமான சுவாத்திய நிலை நளிமின் உடல் நிலையை மிகவும் பாதித்தது. அவர் மக்காவில் நோய்வாய்ப்பட்டார். ஹஜ்ஜில் தான் எதிர்கொண்ட இந்த சிரமங்கள், கடும் உஷ்ணத்தினால் உடலில் ஏற்பட்ட வெப்பம், அனைத்தும் தனது பாவங்களைச் சுட்டெரிப்பது போன்ற உணர்வு அவருக்கு எற்பட்டது. புனித அரபாத்தில் ஒவ்வொரு விசுவாசியும் பெறும் பாவக் கறைகள் நீக்கப்பட்டு உளப்பரிசுத்தமடையும் மகத்தான ஆத்மீக அனுபவத்தை
38

நிச்சயம் அவரும் பெற்றிருத்தல் வேண்டும். அந்த ஆண்டு அவர் நிறைவேற்றிய முதல் ஹஜ் பலவழிகளிலும் பயனுடைய அனுபவமாக அவருக்கு அமைந்தது. அவருடன் ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்ற குழுவில் அப்பொழுது கொழும்பிலிருந்த காயல்பட்டணத்தைச் சேர்ந்த அபுல்ஹஸன் ஆலிம் அவர்களும் இருந்தார். அபுல் ஹஸன் ஆலிமின் தொடர்பும், பரிச்சயமும் அவருக்கு எற்கனவே கிடைத்திருந்தது. ஆத்மிக உணர்வு மிக்க அந்த புனித சூழலில் அபுல்ஹஸன் ஆலிமின் சன்மார்க்க உரையாடல்கள் அவரது உள்ளத்தில் பெரும் தாக்கத்தை எற்படுத்தின. அதனால் அவர் அளப்பரிய பயனடைந்ததை நன்றியுடன் அடிக்கடி நினைவுகூர்வார்.
அவரது முதல் ஹஜ்ஜில் ஏற்பட்ட அனுபவம் அவரது ஆளுமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் புனித ஆலயத்தோடு அன்று அவருக்கு ஏற்பட்ட ஆழமான பற்றும், இறுக்கமான இணைப்பும், பாசமும், பற்றுதலுமே பிற்காலத்தில் ஆண்டுதோறும் புனித கஃபாவைத் தரிசித்து அமைதிபெறும் தூண்டுதலையும், வேட்கைன்யயும் அவரில் ஏற்படுத்தியது. புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி ஒரு புது மனிதனாக புதுப்பயணத்தை ஆரம்பிக்கும் மன உறுதியுடன், அவர் நாடு திரும்பினார்.
அன்று முதல் நளிம் ஹாஜியார் என்ற பெயருடன் பிரபல்யமாகிய அவரது வாழ்வில் உண்மையில் ஒரு திருப்புமுனை தோன்றியது. அவரது வியாபார முயற்சிகள் மிகத் தீவிரமான விருத்தியையும், வளர்ச்சியையும் கண்டன. இக் காலப் பிரிவில் இலங்கையில் மாணிக் சக் கல் வியாபாரத்துறையில் பேருவலை மிகச் சிறப்பிடம் பெற்றது. மாணிக்க வியாபாரத்துறையில் வரலாற்று பெருமைமிக்க இடமாக மிக ஆரம்பகாலந்தொட்டே கணிக்கப்பட்டு வந்துள்ள இவ்வூர் இக்காலப்பிரிவில் மாணிக்க வியாபாரத்தின் மத்திய
39

Page 21
தலமாக மாறியது. இலங்கையில் எந்த ஒரு பகுதியிலாவது பெறுமதியான ஒரு மாணிக்கக்கல் கிடைத்தால் அது பேருவலையை வந்தடைந்தது. அதுபோன்றே இலங்கையில் எந்த ஒரு பகுதியிலாவது ஒரு பெறுமதியான மாணிக்கக்கல் எவருக்காவது கிடைக்கப்பெற்றால் அவர் முதன் முதலில் நளிம் ஹாஜியாரைப் பற்றியே சிந்தித்தார் பேருவலை எனில் - மாணிக்கக்கல் எனில் - நளிம் ஹாஜியார் என்ற நிலை தோன்றியது. மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஒரு முடிசூடா மன்னனாக அக்காலப்பிரிவில் நளிம் ஹாஜியார் திகழ்ந்தார்.
இயற்கையிலேயே விரிந்த, விசாலமான உள்ளமும், பரந்த மனப்பான்மையும், எல்லோரும் வாழல் வேண்டும் என்ற தாராள மனப்பான்மையும் அவரில் காணப்பட்டது. இந்த உயர் பண்புகள், ஹஜ்ஜின் ஆத்மீக உணர்வுகளினால் புடம்போடப்பட்ட நிலையில் அவற்றின் வெளிப்பாட்டுக்கு, பேருவலையில் சமூகச் சூழல் அவருக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இக்காலப்பிரிவில் வேருவலையில் மாணிக்கக்கல் வியாபாரத்துறையில் அவர் ஒரு பெரும் சமூகப் புரட்சியை தோற்றுவித்தார். இக்கால கட்டத்தில் சீனன்கோட்டையைப் பொறுத்தளவில் ஏறக்குறைய எல்லோருமே மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டாலும், உண்மையில் மாணிக்க வியாபாரம் என்பது ஒரு சிலரின் ஏகபோக உரிமையாக இருந்தது. இவ்வணிகத்தின் முழுப் பயனும் ஒரு சிலரையே சென்றடைய இவ்வணிகத்தில் ஈடுபட்ட பெரும்பாலோர் மிக அற்பமான இலாபத்தையே பெற்றனர். இந்த சமூக அநீதியைக் கண்டு மன்ம் வெதும்பிய நளிம் ஹாஜியார் மாணிக்க வியாபாரத்தில், இந்த ஒரு சிலரின் ஏகபோக உரிமையை முறியடித்து அதன் பலனை அனைவரும் அனுபவிக்கும் வகையில் அவ்வணிகத்தைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இளமையும், துடிப்பும் மிக்க இளைஞர்களை மாணிக்க வியாபாரத்தில் ஈடு படும்படி உற்சாகமூட்டி
40

ஆர்வப்படுத்தியதுடன், அவர்களின் மாணிக்கக் கற்களுக்கு மிக நியாயமான விலை கொடுத்து வாங்கி அவர்கள் இத்துறையில் உற்சாகத்துடனும் முன்னேற ஒரு உந்துதல் சக்தியாக விளங்கினார். அவர்கள் மாணிக்க வியாபாரத்தில் நஷ்டத்தை எதிர்நோக்கும்போதெல்லாம், அவர்களுக்குக் கைகொடுத்துக் காப்பாற்றித் துணைநின்றார். அவரது இந்த காத்திரமான முயற்சிகள் காரணமாக மாணிக்கக்கல் வியாபாரத்தின் ஏகபோக உரிமை ஒழிக்கப்பட்டு, அது பேருவலை மக்கள் அனைவரும் பயனடையும் ஒரு வணிகமாக மாற்றமடைந்தது. தனது பிறந்தகத்தின் சகோதர முஸ்லிம்களுக்கு இத்துறையில் தான் செய்த் ஒரு பெரும் சேவையாகவும், பங்களிப்பாகவும் அவர் இதனைக் கருதுகின்றார்.
வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவரது உள்ளத்தின் ஓர் அடிப்படைப் பண்பு மாறாமல் என்றும் நிலையாக அவரது ஆளுமையின் பிரிக்க முடியாத ஒர் அங்கமாக இணைந்திருந்தது. அதாவது தனது செல்வத்தைப் பிறருக்கு ஈந்து வாழ்வதில் அவர் அடையும் மகிழ்வும், நிம்மதியும், நிறைவுமாகும். வாழ்கையின் வசதிகள் பெருகப் பெருக அவரின் ஆளுமையின் இந்தச் சிறப்பியல்பும் வளர்ச்சியைக் கண்டது. புனித ஹஜ்ஜின் பின்னர் அவரது வணிகம் சிறப்புற வளர்ச்சியடைந்து, வாழ்க்கையின் வசதிகள் பெருகிய நிலையில் அவரது கொடைத்தன்மையும், தாராள உணர்வும், பெருந்தன்மையும் மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
வறுமையின் கோரப்பிடியில் தான் கழித்த கடந்த கால வாழ்வின் அனுபவங்கள் அவரது உள்ளத்தில் ஆறாவடுவாக அப்படியே பதிந்திருந்தன. ஏழ்மையின் கொடுமை காரணமாகவும், வாழ்க்கையின் அடிப்படை வசதிகளற்ற
41

Page 22
நிலையிலும், தனது கல்வியைத் தொடரமுடியாது ஐந்தாம் வகுப்போடு தனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தமையும் அடிக்கடி மனத்திரையில் நிறுத்திப்பார்க்கும் மனப்பண்பு கொண்ட அவர், வறுமை காரணமாக கல்விப் பாக்கியத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தார். அவர்களது அறிவுக் கண்களைத் திறக்க ஏதாவதொரு வகையில் ஓர் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்தல் வேண்டும் என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தோன்றியது. தனது வறுமை நிலை காரணமாகத் தனது ஒரே சகோதரிக்கு வாழ்வளிக்கப் போராடிய அந்த கடந்த கால நினைவுகள் அவரது மனத்திரையில் அடிக்கடி தோன்றும். அப்போதெல்லாம் வறுமைமும், ஏழ்மையும் வசதியற்ற நிலையும் காரணமாக திருமணப் பாக்கியத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான பருவக்குமரிகளின் பரிதாபப் பார்வை அவரது உள்ளத்தில் தோன்றும். அத்தகைய பருவப் பெண்களுக்கு வாழ்வளிப்பதற்கு ஏதாவது வகைசெய்தல் வேண்டும் என்ற உணர்வு அவரது உள்ளத்தில்
அப்போது ஊற்றெடுக்கும்.
இந்த உணர்வுகளே அவரை இக்காலகட்டத்தில் சமூகப்பணியில் காலடி எடுத்துவைக்கத் தூண்டியது. தான் பெற்றிருக்கும் செல்வம் அல்லாஹ் தனக்களித்திருக்கும் அமானிதமென்றும் அதனை மக்களுக்குப் பயன்படச் செய்வதே அந்த இறைவனின் மகத்தான பேரருளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரே வழி என்றும் பிற்காலத்தில் பல மேடைகளில் L. கிரங்கமாக அவர் வலியுறுத்திய அவரது வாழ்க்கைத் தத்துவத்தின் ஆரம்பத் துளிகள் இப்போது தோன்ற ஆரம்பித்தன. தனது எதிர்காலப் பணியில் இனங்காணும் ஒரு முயற்சியில் அவர் இப்போது ஈடுபட்டார். வறுமை காரணமாக கல்வியைத் தொடர வசதியற் றிருக்கும் மாணவர்களை இனங்கண்டு, எவரும் அறியா வண்ணம்,
42

தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உதவிகள் புரிய ஆரம்பித்ததுடன், ஏழைக்குமாரிகளுக்கு வாழ்வளிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்தார். அல்லாஹ்வின் இல்லமான புனித மஸ்ஜித்களை நிறுவும் பணிக்கும் உதவிகள் நல்கும் முயற்சிகள் இக்காலப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டன.
நளிம்ஹாஜியார் அவர்களது இப்பணியினால் எண்ணற்ற மாணவர்க்ள் கல்விப் பாக்கியத்தைப் பெற்றனர். இக்காலப் பிரிவில் அவரது உதவியால் கல்வியைத் தொடர்ந்த பலர் இன்று உயர்நிலையில் உள்ளனர். அவர்களில் பலர்,எவருக்கும் தெரியாமல் தங்களுக்குப் புரியப்பட்ட அவரது உதவிகளை இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூர்கின்றனர். நூற்றுக்கணக்கான பருவக்குமரிகள் அவரது பெருந்தன்மை காரணமாக மணவாழ்வில் நுழைந்தனர். இலங்கையில் எந்த ஒரு மூலையிலாவது மஸ்ஜிதுக்கான அத்திவாரம் நாட்டப்பட்டாலும், அதன் நிர்வாகிகள் அம் மஸ்ஜிதை நிறுவும் பணியில் நளிம் ஹாஜியாரின் உதவியையே எதிர்பார்த்தனர். அவரது இந்தப் பணியினால் இலங்கையின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மஸ்ஜித்கள் - மத்ரஸாக்கள் நிறுவப்பட்டன. நளீம் ஹாஜியார் அவர்களின் இந்த ஆரவாரமற்ற, அமைதியான, சன்மார்க்க, சமூகப் பணிகள் முஸ்லிம் சமூகத்தில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.
தனது வாழ்வில் ஒரு புதுத் திருப்பத்தை ஏற்படுத்தி தன்னை ஒரு புதுமனிதனாக மாற்றிய அந்தப் புனித ஹஜ்ஜின் நினைவலைகள் அவரது உள்ளத்தில் நிரந்தரமாகப் பதிந்திருந்தன. கறுப்புப் புடவையால் போர்த்தப்பட்டுக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் - ஏகத்துவத்தின் சின்னமான அந்த கண்ணியம் மிக்க கஃபாவின் அன்புப் பிணைப்பினை அவரால் துண்டித்துக் கொள்ள முடியவில்லை.
43

Page 23
ஆண்டுதோறும் அந்தப் புனித ஆலயம் அவரை அழைத்தது. எந்த நிலையிலும் ஆண்டுக்கொரு முறை அந்தப் புனித ஆலயத்தைத் தரிசிக்க அவர் தவறவில்லை. புனித ஹஜ்ஜை ஆண்டுதோறும் நிறைவேற்றிய அவர் புனித ரம்ழானை, இறையில்லமான கஃபதுல்லாவின் ஆத்மீக உயிரோட்டம் நிறைந்த சூழலில் கழிக்கும் வழக்கத்தை மேற்கொண்டார். மனிதனின் பாவக்கறை போக்கும் புனித குர்ஆனின் நினைவுகளைச் சுமந்த அந்த மகத்துவம் மிக்க மாதத்தை மஸ்ஜிதுல் ஹராமின் சூழலில் கழிப்பதில் அவர் நிம்மதியும், நிறைவும் பெற்றார்.
புனித கஃபாவைத் தவாப் செய்த பின்னர் "பாபுல்கஃபா' என்னும் கஃபாவின் கதவிற்கும், ஹஜருல் அஸ்வதிற்கும் இடையிலான "மூல்தஸமை அணுகி, கஃபாவின் சுவர்களோடு தனது நெஞ்சை இணைத்து, அதன் கறுப்புத் திரைச் சீலையைப் பிடித்துக் கண்ணிர் உருகப் பின்வருமாறு பிரார்த்திப்பதை அவர் வழக்கமாகக் கொண்டார்.
'யா அல்லாஹ்" நீ அனுமதித்துள்ள உனக்குத் திருப்தியான வழிகளில் பொருள் தேடும் பாக்கியததை எனக்குத தந்தருள்வாயாக! அது போன்று நான் தேடிய பொருளை உனது திருப்தியைப் பெறும் வகையில் பயன்படுத்தும் வாய்ப்பையும் தந்தருள்ாவாயாக!' எத்துணை உயிரோட்டமான இலட்சியபூர்வமான பிரார்த்தனை?
பிற்காலத்தில் அவருடன் பல உம்ராக்களை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்த இந்நூலாசிரியர் அவர் நெஞ்சுருகக் கேட்கும் இப்பிரார்த்தனையைப் பலமுறை செவிமடுத்துள்ளார்.
 

இக்காலப்பிரிவில் நளீம்ஹாஜியாரின் பெயரும், புகழும் அவரது கொடை முயற்சிகள் காரணமாக நாடளாவிய 1fதியில் பிரபல்யம் பெற ஆரம்பித்தன. நாடெங்கிலும் அவரை நேரில் காணாத எண்ணற்றோர் காணப்பட்டனர். « ஆனார் அவரைப் பற்றிக் கேள்விப்படாத எவரும் இருக்கவில்லை. அந்த அளவிற்கு அவரின் பெயர் முஸ்லிம்கள் வாழும் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியிருந்தது. இத்தகைய காலகட்டத்திலேயே நளீம் ஹாஜியாருடன் எனது முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நானும் அவரது சேவைகள், பணிகள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவரை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
1963ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நான் அப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவனாகப் பயின்று கொண்டிருந்தேன். சனி, ஞாயிறு தினங்களில் மாலை நேரங்களில் கண்டிக்குச் சென்று போகம்பரவாவியைச் சுற்றி நடந்து பொழுது போக்கி விட்டு கண்டி முஸ்லிம் ஹோட்டலில் உள்ள புத்தகக் கடையில் இலக்கிய சஞ்சிகைகள் வாங்கி வருவது எங்களில் சிலரின் வழக்கமாக இருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் எனது மிக நெருங்கிய நண்பராக சகபட்டதாரி மாணவர் ராஜகோபால்செம்பியன் செல்வன்) விளங்கினார். இலக்கிய ஆர்வம் எங்கள் இருவரையும் பிணைத்தது. வழமை போன்று ஒரு சனிக்கிழமை நானும் ராஜகோபாலும் சில சஞ்சிகைகள் வாங்குவதற்காக முஸ்லிம் ஹோட்டல் புத்தகக் கடைக்குள் நுழைந்தோம். அப்போது புத்தகக் கடைக்குப் பொறுப்பாக இருந்த நண்பர் சிந்தா மதார் "மிஸ்டர் சுக்ரி நீங்கள் நளீம்ஹாஜியாரைக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது அவர் பக்கத்திலுள்ள குயின்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்" எனக் கூறினார்.
45

Page 24
"நளிம்ஹாஜியார் கேட்டுப் பரிச்சயமான ஒரு பெயர். முஸ்லிம்கள் மத்தியில் தனது கொடைச் சிறப்பினால் பிரபல்யமாகியுள்ள அந்த மனிதரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனது உள்ளத்தில் உதித்தது.
நண்பர் ராஜகோபாலுக்கும் நளிம்ஹாஜியார் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்கி விட்டு "நாம் சந்திக்க வேண்டிய ஒரு மனிதர்" எனக் கூறிக்கொண்டே குயின்ஸ் ஹோட்டலை நோக்கி இருவரும் சென்றோம். ஹோட்டல் விசாரணை பீடத்தில் அவர் இருக்கும் அறையின் எண்ணை அறிந்து கொண்டேன். தாழிடப்பட்ட அறைக்கதவை மிகத் தயக்கத்துடன் தட்டினேன். பிறருக்கு ஈந்து வாழும் தாராள gD 6ft 6fT Lfô படைத் தவ ராக அ வரை ப் ப ற் றரிக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பணம் படைத்தவர்களிடம் பொதுவாக வசதி படைத்தவர்களிடத்திலும் காணப்படும் இயற்கையான கர்வமும், பெருமையும் படாடோபமும் அவரில் ஒரளவேனும் இருக்கத்தான் வேண்டும் என்ற மனப்பதிவு எனக்கிருந்ததே இந்த உணர்விற்கான காரணமாக அமைந்தது.
அறைக்கதவு திறக்கப்பட்டது. வெண்ணிறப் போர்வை விரிக்கப்பட்ட கட்டிலில் புன்னகை பூத்த ஒருமுகம் என்னை வரவேற்றது. "ஹாஜியார்" எனது பெயர் சுக்ரி, பல்கலைக்கழகத்தில் அரபு மொழியைச் சிறப்புப் பாடமாக பயின்றுகொண்டிருக்கின்றேன். இது எனது நெருங்கிய நண்பர் ராஜகோபால், புவியியலைச் சிறப்புபாடமாகப் பயில்கின்றார். "செம்பியன் செல்வன்" என்ற பெயரில் பத்திரிகைகளில் எழுதும் வளர்ந்து வரும் சிறந்த எழுத்தாளர். நீங்கள் குயின்ஸ் ஹோட்டலில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டுள்ளேன். உங்களைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது" எனக் கூறியதும் தான் தாமதம் "உங்களைப் பற்றி நானும் ஓரளவு
46

கேள்விப்பட்டுள்ளேன் வந்தது மிக சந்தோஷம்" என்ற பதில் அவரின் வாயிலிருந்து வந்தது. என்னைப்பற்றி அவருக்கு எப்படி தெரியும்? என என்னுள் ஒரு கேள்வி பிறந்தது. பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவனாகப் பயிலுகின்ற காலப்பிரிவிலேயே எனது கட்டுரைகள், மேடைப் பேச்சுக்கள் மூலம் முஸ் லிம் சமூகத் தில் நான் ତୁମ୍ୱା ୬ ଟା ୩ ର! அறிமுகமாகியிருந்தேன். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் இமாமிடம் அரபுமொழியைச் சிறப்புப்பாடமாக பயிலும் ஒரே மாணவன் என்ற வகையிலும் சமூகத்தில் ஓரளவு என்னைப் பற்றிய அறிமுகம் இருந்தது. இந்த வகையில் தான் நளிம் ஹாஜியார் என்னைப் பற்றி அறிந்திருத்தல் வேண்டும் என மனதுள் எண்ணிக் கொண்டேன். புன்னகை சிந்திய முகம் கனிவான உரையாடல் வெள்ளை நிற உள்ளத்தை - சலனமும், சபலமும் அற்ற மனதைப் படம் பிடித்துக்காட்டும் அமைதியான வார்த்தைகள், முதல் சந்திப்பிலேயே அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்டேன். சம்பிரதாயரீதியாக ஓரிருவார்த்தைகள் பேசி என்னை வழியனுப்பி வைப்பார் என எதிர்பார்த்த எனது நம்பிக்கைக்கு முற்றிலும் முரணாக என்னுடன் ஒரு நீண்ட உரையாடலில் அவர் ஈடுபட்டார். முஸ்லிம் சமூகத்தின் கல்வியில் பிற்போக்கான நிலை - ஒற்றுமையின்மை - வசதிபடைத்தோரின் சமூக உணர்வின்மை - இந்த அவல நிலையைப் போக்க பல்வேறு துறைகளில் சமூகப்பணிக்கான அவசியம் இவை பற்றி மூச்சுவிடாமல் பேசிய அவர் தனது உரையாடலை முடித்த அந்த வார்த்தைகள் என்றுமே மறக்கமுடியாதவாறு எனது உள்ளத்தில் பதிந்துவிட்டன.
"அல்லாஹற் எனக்கு நிறைய செல்வத்தைத் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ், ஆனால் கல்விப்பாக்கியத்தைத் தரவில்லை. நான் படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆனால் உங்களுக்கு அல்லாஹ் அறிவைக் கொடுத்துள்ளான்.
47

Page 25
நாங் கள் எங் களது செல்வத்தை இறைவனுக்குப் பொருத்தமான வழியில் பயன்படுத்த உங்களைப் போன்ற) படித்தவர்களின் உதவியும், ஆலோசனை1ம் அவசியம். அப்படி யில்லாத நிலையில், மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் நீங்கள் தான் பதில் சொல்லியாக, வேண்டும். எனவே சமூகப்பணியில், நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்க, வேண்டும்.”
ஐந்தாம் வகுப்புடன் தனது பாடசாலைக் கல்வியை முடித்த அந்த மனிதர் அறிவும், செல்வமும், இணைந்து அரும்பணியாற்றிய இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு மாபெரும் தத்துவத்தை இந்த வார்த்தைகள் மூலம் எனது மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். இஸ்லாமிய வரலாற்றில், வசதிபடைத்த ஆட்சியாளர்கள், செல்வந்தர்களினதும் அறிஞர்களினதும் பரஸ்பர கூட்டிணைப்பினால் சாதிக்கப்பட்ட மகத்தான சாதனைகள் எனது மனக்கண்முன் உதித்தன. கஸ்னவி ஆட்சியாளர் மஹ்மூது கஸ்னவிக்கும், அல்பெருனிக்குமிடையில் ஏற்பட்ட பிணைப்பு, சுல்தான் நூஹ் இப்னு மன்ஸுருக்கும் இப்னு ஸினாவுக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பு. இமாம் கஸ்ஸாலிக்கும் நிஸாமுல் முல்கிற்குமிடையில் ஏற்பட்ட பரிச்சயம், இவற்றினடியாக இஸ்லாமிய பாரம்பரியம் பெற்ற மகத்தான செல்வங்கள், விலை மதிக்கமுடியா கலாசார. பண்பாட்டுப் பங்களிப்புகள் அத்தனையும் என்முன் காட்சியளித்தன. என்முன் வீற்றிருக்கும் இந்த சாதாரண மனிதர் இந்த வரலாறுகளைப் படித்தவரல்லர். ஆனால் இந்த பெருமைக்குரிய வரலாற்றின் வாரிசாக என்முன் தோற்றமளித்தார். அறிவும், செல்வமும் இணைந்து பணியாற்றிய அந்த மறைந்த பாரம்பரியத்திற்குப் புத்துயிரளிக்க வந்த ஒரு புரட்சிவாதியாக அவர் எனக்குக் காட் சியளித்தார். நானும் , ரா ஜ கோபாலும் ஒரு வ ரை ஒரு வர்
48

பார்த்துக்கொண்டோம். பணமும், வசதியும், செல்வாக்கும் படைத்த ஒருவர், அறிவைப் பெற்றோரின் ஒத்துழைப்பை வேண்டி நின்ற அக்காட்சி அவரிலும் ஓர் ஆச்சரியக்குறியைத் தோற்றுவித்ததை அவதானித்தேன்.
நளீம்ஹாஜியாரின் அந்த வார்த்தைகளில் ஒரு தெளிவும், உறுதியும் தென்பட்டது. தான் பயணம் செய்யப்போகும் பாதை பற்றிய ஒரு மனத்தெளிவு அவரில் காணப்பட்டது. இறைவன் தனக்கு வழங்கிய செல்வத்தைச் சமூகத்தின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். அதுவும் அவசியமாக, அவசரமாக இந்தப் பணி நடைபெறல் வேண்டும் என்ற ஒரு வேட்கையும் உணர்ச்சிவேகமும்
அவரில் காணப்பட்டன.
“இன்சா அல்லாஹ்” “ஹாஜியார் என்னால் இயன்ற முழு ஒத்தழைப்பையும் உங்களுக்கு அளிப்பேன்”. என நான் அவரது வேண்டுதலுக்குப் பதிலாகக் கூறியபோது, ஏதோ ஒரு ஆத்மீகப் பிணைப்பு அக்கணப்பொழுது முதல் அவருடன் ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். வாழ்க்கையில் சந்திப்பதற்கு மிக அரிதான ஓர் ஆச்சரியமான மனிதரைச் சந்தித்த உணர்வில் நானும் ராஜகோபாலும் ஹோட்டலைவிட்டு வெளியேறினோம்.
அந்த முதல் சந்திப்பின் பின்னர் பட்டப் பரீட்சைக்கான ஆயத்தங்கள், வேறு பணிகள் எனது கவனத்தை ஈர்த்தன. ஆனால் ஹாஜியாரைச் சந்தித்த அந்த உணர்வுகள் எனது அடிமனதில் அவற்றின் வெளிப்பாட்டிற்கான, காலம் வரை புதைந்திருந்தன. மண்ணில் புதைந்த விதை அதன் வளர்ச்சிக்கு அனுகூலமான சாதகமான நிலையை எதிர்பார்த்திருப்பதுபோல நல்ல வார்த்தைகள், உணர்வுகள், சிந்தனைகள், விதையாகப் புதையுண்டு கிளை பரப்பும்
49

Page 26
பெருவிருட்சமாக வளர்ச்சியுறும் தத்துவத்தைக் குர்ஆன் விளக்கவில்லையா? கலிமா தய்யிபா என்னும் நல்ல வார்த்தைக்கு குர்ஆன் கூறும் உயிரோட்டமுள்ள உவமை இந்த உண்மையைத்தானே உணர்த்துகின்றது.
நல்லவார்த்தைக்கு (கலிமா தய்யிபா) அல்லாஹற் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்திருக்கிறது. அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்ப கனிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் படிப்பினை பெறல் வேண்டும் என்பதற்காக அல்லாஹற் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான்.
குரா இப்ராஹிம் 24
சமூகத்தில் நளிம்ஹாஜியாரின் பணிகள் கிளை பரப்ப ஆரம்பிக்கும் இந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரின் சன்மார்க்கப் பணிகளில் நிழல் போன்று நின்று அருந்துணை நல்கி அவரை நெறிப்படுத்திய ஒரு நல்ல மனிதரின் - சமூகத்தால் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு சன்மார்க்க அறிஞரின் - தொடர்பு அவருக்குக் கிடைத்தது. முஸ்லிம் சமூகத்தில் மிகப் புகழ்பெற்று விளங்கி - இஸ்லாமிய தஃவாப் பணியில் அரும்பணிபுரிந்து அண்ைைமயில் மறைந்த அல்ஹாஜ் ஏ. ஏ. எம் மளUத் ஆலிமுக்கும் நளிம் ஹாஜியாருக்குமிடையில் இக்காலப் பிரிவில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மஸீத் ஆலிம் அவர்களை வெள்ளவத்தையில் சர்வதேச பெளத்த LD55u Baopau 65uigi Digitat (International Buddhist Center Road) நளீம் ஹாஜியாரின் கொழும்பு இல்லத்தில் தங்க அவர் ஏற்பாடு செய்தார். இத்தகைய ஒரு மார்க்க அறிஞரின் தொடர்பு தனக்கு இருத்தல் வேண்டுமென்பதே
50

இதன் நோக்கமாகும். மஸீத் ஆலிமின் அறிவு, இறைபக்தி, உயர் பண்புகள், நளிம் ஹாஜியாரை மிகவும் கவர்ந்திருந்தன. அவர் மீது ஹாஜியார் மிக அன்பும், மதிப்பும் வைத்திருந்தார். மளUத் ஆலிமின் இந்தத் தொடர்பும் நட்புறவும் அவருக்குப் பலவழிகளிலும் பயனுள்ளதாக அமைந்தது. சன்மார்க்கம் தொடர்பான பல விடயங்களை அவர்மூலம் கற்று மிகப் பயனடைந்ததுடன், அவரது சமூகப் பணிகள் சம்பந்தமாகப் பல பயனுள்ள ஆலோசனைகளையும் அவர் பெற்றுக் கொண்டார். தான் ஆண்டுதோறும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்லும்போதெல்லாம் அவரையும் அழைத்துச் சென்றார். மஸீத் ஆலிம் உலமாக்களுள் புத்திஜீவிகள் வரிசையில் வைத்துக் கணிக்கப்படத்தக்க ஒருவராவர். மதரஸாக் கல்வியோடு தனது அறிவுதேடும் பணிக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. பல நூல்களை வாசித்து தனது அறிவைப் பெருக்கிக் கொள்வதில் அவர் மிக ஆர்வத்துடன் செயல்பட்டார். நளிம் ஹாஜியாருடன் புனித மக்கா சென்று திரும்பும் போதெல்லாம் தனக்குப் பயனளிக்கும் நூல்களைச் சுமந்து வந்து தனக்கென ஒரு நூலகமொன்றையே உருவாக்கிக் கொண்டார். மளUத் ஆலிமின் இந்தப் பண்புகள் நளிம் ஹாஜியாரை மிகவும் கவர்ந்தன. மளUTCத் ஆலிமின் தொடர்பினால் தான் அடைந்த பயன்களை இன்றும் மிக நன்றியுணர்வுடன் நினைவு கூரும் நளீம் ஹாஜியார், அவரைப் போன்ற ஒரு நல்ல சன்மார்க்க அறிஞரின் வழிகாட்டுதல் தனக்குக் கிடைத்தமையை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகின்றார்.
1968ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக முஸ்லிம்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு நளிம்ஹாஜியாருக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட இரண்டாவது சந்திப்பிற்குக் களம் அமைத்துக் கொடுத்தது

Page 27
இஸ்லாத்தின் ஆரம்ப கிப்லாவாகவும், மூன்றாவது
புனிதத் தலமாகவும் விளங்கும் மஸ்ஜிதுல் அக்ஸா 1968ம்
ஆண்டு ஸியோனிஸ வெறியர்களால் எரிக்கப்பட்ட நிகழ்வானது முஸ்லிம் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் இந்த அநியாயத்திற்கெதிராக கொதித்தெழுந்தனர். முஸ்லிம் உலகை விழித்தெழச் செய்த இந்த எதிர்ப்பலைகள் முஸ்லிம்கள் சிறுபான்மையோராக வாழும் நாடுகளில் கூட ஆர்த்தெழுந்தன. இலங்கையில் முஸ்லிம் இயக்கங்கள், மன்றங்கள், அமைப்புகள் அனைத்தும் அரசியல் வேற்றுமையை மறந்து கொழும்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கும், மருதானைப் பள்ளி முற்றவெளியில் ஒரு மாபெரும் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தனர். இலங்கையில் எல்லாப் பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த முஸ்லிம் பெருமக்களைக் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு அல்லாஹு அக்பர் என்ற தக்பீரை விண்ணதிர முழங்கிய வண்ணம் மருதானைப் பள்ளி முற்றவெளியைச் சென்றடைந்தது. அச்சன சமுத்திரத்தில் இருந்த ஒவ்வொரு தனிமனிதனிலும் எத்துணை எதிர்பார்ப்புகள், முஸ்லிம் தலைவர்கள் அரசியல் வேற்றுமைகளை மறந்து புனித மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாக்கும் உணர்ச்சித் துடிப் போடு மேடையில் அமர்ந்திருப்பது முஸ்லிம் சமூகத்தின் எதிர் கால ஒருமைபாட்டுக்கான ஆரம்பமோ இது என சில நல்ல உள்ளங்களை சிந்திக்க வைத்தது.
அல் - அக்ஸா எரிக்கப்பட்டதன் எதிரொலியாகத் தோன்றிய இந்தக் கூட்டம் நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. அங்கு ஒரு காலப்பிரிவில் என்னுடன் அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பேருவலையைச்
52

சர்ந்த சகோதரர்கள் எம். எச். எம் ஹிபதுல்லாஹற், ஏ. ஆர். ம். ஸ"லைமான், ஏ. பி. எம். பாயிஸ் ஆகியோரைச் ந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினோம். இலங்கை pஸ்லிம்கள் அரசியலில் வேற்றுமைகள், தனிப்பட்ட பிரிவினைகளை மறந்து இதில் கலந்தகொண்டமை பற்றி பருமையோடு பேசிக் கொண்டோம். முஸ்லிம் சமூகத்தின் ல் ல எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கனவுகள் இளைஞர்களாகிய எங்களது உள்ளத்தில் துளிர்த்தன. இந்தக் கூட்டம் அரசியல் கலப்பற்றது என்பதை உணர்த்தும் பகையில் பரவலாக முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றிருந்த மஸ் உத் ஆலிம் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்க ஏற்பாடாகியிருந்தது. கூட்டம் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது. ஆனால் சில நேரங்களின் பின்னர் அந்த மேடையைக் கூட அரசியல் லாபம் கருதிப் பயன்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். தனக்கு ரற்பட்ட அவமானச் சின்னத்தை முஸ்லிம் உம்மத்தின் இதயக் குமுறலும், உள்ளங்களில் புண்ணாக மாறி, கண்களில் வருஷிக்கும் கண்ணிருமாவது கரைக்காதா என இரந்து நின்ற புனித அல் அக்ஸா மறக்கப்பட்டு அரசியல் லாபமே முன்னுரிமை பெற்றது. சில சுயநல அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கம் காரணமாக கூட்டம் அல்லோல கல்லோலப்பட்டு குழப்பத்தில் முடிவடைந்தது. தங்களது முதல் கிப்லாவான அல் - அக்ஸா எரிக்கப்பட்ட வேதனைக் குமுறலை நெஞ்சில் சுமந்து கொண்ட - எத்தகைய சுயநல நோக்கமுமின்றி - பரிசுத்தமான எண்ணத்துடள் அங்கு வருகை தந்திருந்த தூய்மையான சிந்தைகள் - நல்ல உள்ளங்கள் வேதனைக் கண்ணிர் வடித்தன. இயற்கைகூட இந்த அவல நிலை கண்டு தனது ஆறாத்துயரைப் புலப்படுத்தியது போன்று வானம் பெருமழையைப் பொழிய ஆரம்பித்தது. மழைக்காக நானும் நண்பர்கள்
53

Page 28
ஹிபதுல்லாஹற், ஸுலைமான், பாயிஸ் ஆகியோருட மருதானைப் பள்ளியில் ஒதுங்கினோம். அல் - அக்ஸ நிகழ்வு முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்த உணர்ச்சி துடிப்பு அதன் பயனாக ஏற்பட்ட சமூக ஒருமைப்பாட்டிற்கான அருமையான வாய்ப்பு - ஆனால் அதனைக்கூட சமூகத்திற்குட் பயனளிக்கச் செய்யும் வகையில் நெறிப்படுத்தாமல் அதற்கு சாவுமனி அடித்த சுயநல அரசியல் சக்திகள் பற்ற நாங்கள் பேசிக் கொண்டோம். இளமைத் துடிப்பு மிக்க எங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இந்த அவலி நிலை கவலையையும், வேதனையையும் தோற்றுவித்தது இதற்கான பரிகாரம் என்ன என்பது பற்றிச் சிந்திக்கலானோம் வெளியே பேரிரைச்சலோடு மழை பொழிந்து கொண்டி ருந்தது சமூக மறுமலர்ச்சிப் பணியில் சித்திலெவ்வையின் சிந்தனை வெளிப்பாட்டுக் களமாக அமைந்த மருதானைப் பள்ளியில் எங்களில் ஒரு சிந்தனை கருக்கொண்டது. சமூகத்தின் நன்மைக்காக எங்களால் இயன்ற ஏதாவதொரு பணியைச் செய்தல் வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது சமூகத்தின் இளம் தலைமுறையினரைச் சரியான இஸ்லாமிய வழியில் நெறிப்படுத்தி அவர்களுக்கு ஒரு சிந்தனைத் தெளிவை வழங்கி ஒரு புதிய இஸ்லாமிய புத்திஜீவிகள் பரம்பரை ஒன்றை உருவாக்கும் வகையில், இளைஞர்களது சிந்தனையைத் தூண்டத்தக்க அறிவுநூல்களை வெளியிடுப் ஓர் அமைதியான முயற்சியில் ஈடுபட நாங்கள் முடிவு செய்தோம். அப்போது சகோதரர் ஹரிபதுல்லாஹி அவர்கள் "நூல்களை பிரசுரிப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அத்தகைய நல்ல பணிகளுக்கு உதவி புரிய நளிம்ஹாஜியார் அவர்கள் எப்போதும் ஆயத்தமாக உள்ளார்கள். இளைஞர்களை நற்பணிகளில் தூண்டி அதற்கு உற்சாகமும், உதவியும் வழங்கும் பெருந்தன்மை கொண்டவர் நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்களா?" என என்னை நோக்கி ஒரு வினாவை எழுப்பினார். ஏறக்குறைய இரண்டு
54

ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த குயீன்ஸ் ஹோட்டல் சந்திப்பில் நளீம் ஹாஜியாரின் இறுதி வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டேன். ஏதோ எங்களையே அறியாத ஓர் இறைசித்தம் எங்களையெல்லாம் ஏதோ ஒர் இலட்சியத்தை நோக்கி இயக்குவிப்பது போன்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. இது பற்றி விரிவாக ஆராய நாங்கள் ஐவரும் மறுநாள் அதே இடத்தில் மருதானைப் பள்ளியில் கூடுவதாக முடிவு செய்தோம். மறுநாள் அஸர் தொழுகையின் பின்னர் மருதானைப் பள்ளியில் கூடினோம். முதலில் எந்த நூலை வெளியிடுவது என்ற கேள்வி பிறந்தது.
அப்போது நான் மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வியின் அர் - ரித்தா லா அபாயக்கர் லஹா என்ற UIT65೧೧) வாசித்துக் கொண்டிருந்தேன். அந்நூல் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சிந்தனை ரீதியான சிக்கலையும், முஸ்லிம் சமூகம் - குறிப்பாக இளைஞர்கள் எதிர்நோக்கும் இலட்சியவாதப் படையெடுப்புகள், இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களின் ஊடுருவல்கள் பற்றியும் அதற்கான தீர்வுகள், பரிகாரங்களையும் மிகத் தெளிவாக விளக்கி, அதற்கான ஒரு செயல்திட்டத்தையும் முன்வைக்கின்றது. நாம் அமைத்துக்கொண்ட இலட்சியத்தை அடையும் ஆரம்பப்படியாக இந்நூலை மொழிபெயர்த்து வெளியிடுவது மிகப் பொருத்தமானது என எமது மருதானைப் பள்ளி வாசலில் அடுத்த சந்திப்பில் நான் குறிப்பிட்டேன். 9) Ibg|Tai g fiba,607(36), "The New Menace and its Answer" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. சகோதரர் ஹிபதுல்லாஹ் அதனை வாசித்திருந்ததால் எனது கருத்தை அவர் மேலும் உறுதிப்படுத்த எங்களது முதற்பணியாக அந்நூலை மொழிபெயர்த்து வெளியிடுவது எனவும், அதனைப் பிரசுரிப்பதற்கு நளிம்ஹாஜியாரின் உதவியைப் பெறுவது எனவும் எமது குழு முடிவு செய்தது.
55

Page 29
"காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்கள் பணியும்” என்ற நூல் என்னால் மொழிபெயர்க்கப்பட்டு, நளிம்ஹாஜியாரின் நிதி உதவியுடன் பிரசுரிக்கப்பட்டது. அச்சிடப்பட்ட நூல் பிரதிகளை பிரசுராலயத்திலிருந்து பெற்றுக் கொண்ட நாங்கள் அவற்றை நளிம்ஹாஜியாரின் வெள்ளவத்தை இல்லத்திற்கு எடுத்துச் சென்றோம். அங்கு கண்ணியத்திற்குரிய மர்ஹாம் மஸ்ஊத் ஆலிம் அவர்கள் புன்முறுவலோடு எங்களை எதிர்கொண்டார்கள். இந்நூலிற்கான வெளியீட்டு விழாவை எவ்வகையில் நடாத்துவது என்ற நாங்கள் அங்கு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மஸ்ஊத் ஆலிம் அவர்கள் குறுக்கிட்டு ஒரு கருத்தை வெளியிட்டார்கள். "இதற்கு எந்த ஒரு வெளியீட்டு விழாவும் அவசியமில்லை நீங்கள் எல்லோரும் "வுளு" செய்து கொண்டு வாருங்கள். நாங்கள் எல்லோரும் இரண்டு ரக்அத்கள் தொழுது அல்லாஹ் விடம் எங்களது இந்த முயற்சியை அங்கீகரித்து அருள்புரியும்படி பிராத்திப்போம். இதுவே எங்களது வெளியிட்டுவிழாவாக அமையட்டும்" என்றார்கள். அவர்களது இந்தக் கருத்து மிகப் பொருத்தமானதாக எங்களுக்குத் தென்பட்டது. ஆராவாரமான வெ6ரிப்பகட்டான விழாவைவிட, அமைதியாக அல்லாஹற்வைத் தொழுது பிரார்த்தித்து இந்நூலை வெளியிட்டு வைப்பது மிகச் சிறந்தது என்ற முடிவோடு நாங்கள் தொழுகைக்காக ஆயத்தமானோம். மஸ்ஊத் ஆலிம் அவர்கள் தொழுகையின் பின்னர் நீண்ட, ஒரு துஆவை ஒதினார்கள். இதனை அல்லாஹற்வின் அருள்பெற்ற ஒரு முயற்சியாகவும், பயனுள்ள ஒரு பணியாகவும் ஆக்கும்படி மனமுருகப் பிராத்தித்தார்கள்.
உங்களிறைவன் கூறுகின்றான் நான் உங்களுடைய
பிராத்தனைக்குப் பதிலளிப்பேன்.
அல் - முஃமின் 60
56

உம்மிடம் எனது அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் அதற்கு நீர் கூறும், நான் மிகச் சமீபமாகவே இருக்கின்றேன் எவரும் என்னை அழைத்தால் அவ்வழைப்போனின் அழைப்பிற்கு நான் விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிமே பிராத்தனை செய்யவும்.
9/6) - Lf35UIT 186
சமுதாயத்தின் அ வ )ெ நிலை பற் றிய கவலையுணர்வோடும், இதய சுத்தியோடும் அமைந்த, அப்பிரார்த்தனையின் பின்னணியில் இந்நூலின் முதல் பிரதி நளிம்ஹாஜியாரிடம் அளிக்கப்பட்டது. இது அல்லாஹ்வின் அங்கீகரிப்பையும் அருளையும் பெற்றிருந்ததை அதனைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போன்று நிகழ்ந்த நிகழ்வுகள் எமக்கு உறுதியாக உணர்த்தின. முஸ்லிம் சமூகமானது இஸ்லாமிய கொள்கை நெறியினதும், கோட்பாட்டினதும் அடிப்படையில் சிந்திக்கும் ஆற்றல் படைத்த சன்மார்க்கக் கல்வியையும் நவீன கல்வியையும் ஒரே நேரத்தில் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பரம்பரை ஒன்றில் வழிகாட்டலையும், தலைமைத்துவத்தையும் வேண்டி நிற்கின்றது எனவும், இத்தகைய இஸ்லாமிய புத்திஜீவிகளை உருவாக்கும் வகையில் கலாநிலையங்கள் அமைக்கப்படல் வேண்டும் என்ற கருத்தையும், மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்திலிருந்து முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு இஸ்லாமிய கருத்துக்களின் மாண்பினை எடுத்துரைக்கும் வகையில் நூல்கள் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கருத்தையும் மெளலானா நத்வி அவர்கள் இந்நூலில் வலியுறுத்துகின்றார்கள்.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் எதுவும் திடீரென, சந்தர்ப்பவசத்தால் நிகழ்வதில்லை.
57

Page 30
அனைத்தும், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலித்து, அதனை இயக்குவித்து நெறிப்படுத்தும் அல்லாஹ்வின் திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இந்தக் கருத்தை அல் - அக்ஸா மஸ்ஜித் எரிக்கப்பட்ட நிகழ்வும் நளிம் ஹாஜியார் அவர்களின் உதவியால் நடைபெற்ற நூல் வெளியீடும் எங்களுக்கு என்றும் உணர்த்தி நிற்கின்றன.
வானத்திலிருந்து பூமிவரையு ள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான்.அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இரு எளில் (புதைந்து கிடக்கும் (கடுகுபோன்று சிறிய) வித்தும் பசுமையானதும் உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான பதிவுப் புத்தகத்தில் இல்லாமலில்லை.
அஸ் - ஸ்ஜதா 5
58

ணிகமும் வளர்ச்சியும்
அல்லாஹ்வின் பேரருளாலும், தனது கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை, தளரா முயற்சியினாலும் இலங்கையில் மாணிக்கக்கல் வணிகத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொண்ட நளீம் ஹாஜியாரின் வணிக முயற்சிகள் நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு நாடுகளைத் தழுவி சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றன. நம்பிக்கையும், நாணயமும் மிக்க ஒரு மாணிக்க வியாபாரி என்ற வகையில் அவரது பெயர் பல நாடுகளிலும் மாணிக்கக்கல் வியாபாரத்தோடு தொடர்புடைய வணிக வட்டங்களில் பிரபல்யமாகியது. இலங்கையில் எந்த ஒரு
59

Page 31
பகுதியிலாவது பெறுமதியான மாணிக்கக்கல் கிடைத்தால், அதற்கு ஒரு நியாயமான விலையைப் பெறுவதற்காக மாணிக்க வியாபாரிகள் பேருவலைக்கு நளிம் ஹாஜியாரைச் சந்திக்க வந்தது போன்று, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, யப்பான், ஹொங்கொங் ஆகிய சர்வதேசப் புகழ்பெற்ற மாணிக்கக்கல் வர்த்தகர்கள் - தலைசிறந்த - பெறுமதியான, விலை மதிப்பு மிக்க மாணிக்கக்கற்களைப் பெறுவற்காக நளிம் ஹாஜியாரை நாடி இலங்கைக்கு வர ஆரம்பித்தனர். இக்காலப் பிரிவிலேயே நளிம் ஹாஜியாரின் புகழ் ஒரு மாணிக்கக்கல் வர்த்தகர் என்ற வகையில் பல நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது.
இஸ்லாமிய பண்பாட்டில் "பயணம்" ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. அல் - குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பூமியில் பயணம் செய்து, அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவதானித்து உணர்ச்சி பெறும்படி விசுவாசிகளைப் பணிக்கின்றது. புனித ஹஜ்ஜுக்கடமை முஸ்லிம்களின் பயணங்களுக்கு ஒர் உந்துதல் சக்தியாக அமைந்தது. இதன் காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரும் பயணப் பாரம்பரியமே உருவாகியது. அரபிலக்கிய வரலாற்றில் பயண இலக்கியம் ஒரு தனிப்பட்ட துறையாக வளர்ச்சியடைந்தது. அல் - மஸ்ஸாதி, இப்னுபதுரத்தா, இப்னு ஜுபைர், ஆகியோரின் பயணநூல்கள் வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும், இலக்கிய ஆக்கங்களாகவும் கணிக்கப்படுகின்றன.
நளிம் ஹாஜியார் இந்த பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிப் படித்தவரல்லர். ஆனால் இந்தப் பண்பாட்டை பாத்தியதையாகப் பெற்ற முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கம். 1970 ஆம் ஆண்டு நளிம் ஹாஜியார் உலகச் சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பாடசாலையில் பூகோளப்
60

பாடத்தில் உலகப் படத்தின் பல நாடுகளைப் பார்த்து அறிவைப் பெறும் பாக்கியத்தை இழந்த அவர், அல்லாஹ்வின் அருளால் உலகில் பல நாடுகளைத் தரிசித்துப் பார்வையிட்டு அனுபவ அறிவைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றதால், இந்த உலகச் சுற்றுலா அவரது பார்வையையும், நோக்கையும் விசாலமடையச் செய்து, சிந்தனையை விரிவாக்கி பல புது அனுபவங்களை அவருக்கு நிச்சயம் அளித்திருத்தல் வேண்டும்.
வணிக வளர்ச்சியில் ஒரு சர்வதேசப் பரிமாணத்தை அவர் எட்டிக் கொண்டிருந்த இக்கால கட்டத்தில்கூட, தான் பிறந்த மண்ணிலும், நாட்டிலும் அவர் காலூன்றி நின்றார். வணிக வளர்ச்சியோடு, இணைந்து, அவரது வாழ்வோடு பரின் னிப் பரிணைந்து அவரது சமூகப் பணியும் வளர்ச்சியடைந்தது. வணிக முயற்சிகளைத் தாண்டிக்கூட அவரது சமூகப்பணி நிகழ்ந்தது. எத்தகைய முக்கியமான வியாபார முயற்சியாக இருந்தாலும், அது எத்துணை இலட்சம் ரூபாய்களை தனக்கு ஈட்டித் தந்தாலும் சமூகப் பணியின் முன் அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனப்பண்பு அவரில் மிக உறுதியாகச் செயல்பட ஆரம்பித்தது.
ஒரு நாள் பேருவலை முஸ்லிம் வித்தியாலத்தின் எதிர் கால வளர்ச் சி தொடர்பான முயற் சிகளை மேற்கொள்வதற்காக ஒர் ஆலோசனைக்கூட்டம் பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு நளிம் ஹாஜியார் தலைமை வகித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் மாணிக்கக்கற்களை வாங்குவதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்த சர்வதேசப் புகழ்பெற்ற வியாபாரி ஒருவர், அவரை சந்திப்பதற்காகவே ஒரு தனிப்பட்ட ஹெலிகொப்டர் விமானம் மூலம் பேருவலையிலுள்ள நளிம் ஹாஜியார் விளையாட்டரங்கில் வந்திறங்கினார். தனது ஹெலிகொப்டர் இறங்கும் அந்த விளையாட்டரங்கு, இன்று புகழ்பெற்ற
61

Page 32
மாணிக்க வியாபாரியாக விளங்கும் நளீம் ஹாஜியார், சாதாரண நளிமாக, அன்றாட உணவிற்காக வசதியற்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த காலகட்டத்தில் அவரது ஏழைத்தாய் கயிறு திரிப்பதற்காக மட்டைகளை ஊறவைக்கும் மட்டைக் குழியாக இருந்ததை அந்த வியாபாரி எங்கே அறியப்போகின்றார்? பிரான்சிலிருந்து வந்த அந்த வியாபாரி நளிம் ஹாஜியாரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் பாடசாலைக் கூட்டத்திற்கு தலைமை வகித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அந்த வியாபாரியின் வருகை பற்றியும், அவர் கொழும்பிலிருந்து அதற்கென்றே ஒரு ஹெலிகொப்டர் விமானத்தில் வந்திருப்பது பற்றியும் ஹாஜியாருக்கு அறிவிக்கப்பட்டது. " நான் தற்போது எனது சமூகத்தின் கல்வி சம்பந்தமான ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கின்றேன். என்னால் அவரை தற்போது சந்திக்கமுடியாது எனவும், முடியுமானால் கொழும்பில் சந்திப்போம் எனவும் அவரிடம் கூறுங்கள்" என்பதே அந்த வியாபாரியின் வருகையை அறிவித்தோருக்கு அவரின் பதிலாக அமைந்தது.
அவர் தனது மார்க்க அனுட்டானங்கள் - சன்மார்க்க சமூகப் பணிகளுக்கு வியாபார முயற்சிகள் ஒரு தடையாக அமைய என்றுமே அனுமதிப்பதில்லை. நளீம் ஹாஜியார், புனித உம்ராக் கடமைக்காக மக்கா சென்று திரும்பும் சந்தர்ப்பங்களில் "நீங்கள் நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் ஒரு பெறுமதியான மாணிக்கக் கல் கிடைத்தது. அதனை குறிப்பிட்ட நபர் ஒருவர் வாங்கி விட்டார். ஆனால் நீங்கள் அச்சந்தர்ப்பத்தில் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயம் அது உங்களுக்குத் தான் கிடைத்திருக்கும்” எனச் சிலர் கூறக்கேட்டால் "அல்லாஹ் எனக்கென்று எதை வைத்திருக்கின்றானோ அது நிச்சயம் எனது கைக்கு வந்து சேரும். எதனை அல்லாஹ் எனக்கன்றி பிறருக்காக என வைத்துள்ளானோ
AO
 

அது அவரவர்க்குச் சென்றடையும். அவ்வளவுதான்” என்று அந்த இழப்பு பற்றி எத்தகைய உணர்வும், பதட்டமும் இல்லாமல் அவர் மொழியும் வார்த்தைகளை பல முறை செவியுற்றுள்ளேன். அப்போதெல்லாம் குர்ஆன் கூறும் பின்வரும் தத்துவம் எனது உள்ளத்தில் நிழலாடும்.
"இறுதித் தீர்ப்புக்குரிய) அந்த வேளை பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். தாய்மார்களின் கர்ப்பங்களில் வளர்ந்து கொண்டிருப்பவை என்ன என்பதையும் அவசனே அறிவான் எந்த ஒரு மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான். என்பதை அறிவதில்லை தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மணி2தருக்கும் தெரியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் யாவற்றையும் அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் உள்ளன7/7ண்.
ஸ"ரா லுக்மான் 34
தனது விழுமிய பண்புகளாலும், தாராளத் தன்மையாலும், கொடைச் சிறப்பாலும் சமூகத்தில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக் கொள்ளும் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த அவரை அவர் பிறந்த மண் முதலில் அங்கீகரித்தது. 1970 ஆம் ஆண்டு அவர் பேருவலை, சீனன் கோட்டை பள்ளிப்பரிபாலன சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் பல காரணங்களைக் கூறி மறுத்த நிலையிலும் மக்கள் அப்பொறுப்பை அவர்மீது சுமத்தினர். இதனை வெறுமனே ஒரு பதவியாகவும், கெளரவமாகவும் அவர் கருதவில்லை. ஏனெனில் அவரது வியாபாரத்தைப் பொறுத்தளவிலோ அல்லது சமூக, சன்மார்க்கப் பணிகளைப் பொறுத்தளவிலோ தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை ஏதாவது ஆக்க பூர்வமான ஒரு
63

Page 33
பணிக்காகப் பயன்படுத்திக் கொள்வது அவரில் காணப்பட்ட சிறப்பான பண்புகளுள் ஒன்றாக அமைந்தது. எனவே தனக்குக் கிடைத்த இந்தப் பதவியை பிறந்த ஊரைப் பொறுத்தளவில் ஒரு பெரும் சமூகப் புரட்சியைத் தோற்றுவிக்க அல்லாஹ் தனக்கு வழங்கிய ஒரு வாய்ப்பாக அவர் கருதினார். அவர் பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை ஏற்று நிகழ்த்திய உரை பின்வரும் வகையில் அமைந்தது.
"அன்புச் சகோதரர்களே, எங்கள் ஊரைப் பொறுத்தளவில் நடைமுறையிலுள்ள இஸ்லாத்தின் முரணான விடயங்களைத் தடுத்து நிறுத்துவற்கு நான் சில நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு நீங்கள் அனைவரும் உங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கச் சம்மதிப்பதாயின் நான் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வேன்."
அவரது இந்த அன்பு வேண்டுகோளை மக்கள் அனைவரும் ஏகோபித்து ஒருமனதுடன் அங்கீகரித்த நிலையில் அவர் இப்பதவியையும், பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அவரின் உள்ளம் அவர் சுமந்திருந்த பெரும் பொறுப்பை அவருக்கு உணர்த்தியது. இறைவன் தன்மீது சுமத்தியுள்ள ஓர் அமானிதமாகவே அவர் அதனைக் கருதினார்.
செல்வமும், அதனடியாக வாழ்க்கையின் வசதிகளும் ஒரு சமூகத்தில் பெருகும் போது செல்வம் சார்ந்த சில சமூகத் தீமைகளும் , தவறான செயல் முறைகளும் தோற்றமெடுப்பதுண்டு. ஷாஹ்வ6லியுல்லாஹ் அவர்கள் தங்களது ஹுஜ்ஜதுல் ஸாஹ் அல் - பாலிகா என்னும் பெருநூலிலும், வரலாற்றுப் பேரறிஞர் இப்னு கல்தூன்
64

தனது முகத்திமாலவிலும் ஒரு சமூகத்தின் செல்வமும் வசதியும் பெருகும்போது அதனடியாக சில சமூகத்தீமைகள் தோன்றி, இறுதியில் அச்சமூகத்தின் அழிவிற்கே காரணமாக அமைவதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளனர். அனைத்துக்கும் மேலாக அல் - குர்ஆன், செல்வமும், வாழ்க்கை வசதிகளும் பெருகிய நிலையில் உள்ளத்தின் கீழான உணர்வுகளுக்கு அடிமையாகி, தார்மீக, ஒழுக்க வரம்புகளை மீறி வாழ்ந்த சமூகங்களின் நிலையையும், அவை அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகி அழிக்கப்பட்டதையும் பல இடங்களில் மிக உயிரோட்டத்துடன் விளக்குகின்றது.
மேலும், அல்லாஹ் ஒர் ஊரை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். அவ்வூர் மக்கள் அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எல்லாத் திசைகள7லிருந்தும் வாழ்க் கைச் சாதனங்கள் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அவர்கள் அல்லாஹ்வின் அரு ட்கொடைகளுக்கு நன்றிமறக்கலாயினர். அப்போது அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினையின் விளைவை சுவைக்கச் செய்தான். - பசி, அச்சம் என்னும் துன்பங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன.”
- அந் - நஹ்ல் - 112
மாணிக்கக்கல் வியாபாரத்தின் வளர்ச்சி காரணமாக செல்வமும், வாழ்க்கையின் வசதிகளும் வந்து குவிந்த நிலையில் பண்டையப் பெருமைமிக்க பேருவலைச் சமூகம் படிப்படியாக அதன் பாரம்பரிய இஸ்லாமிய நெறி முறைகளையும், மரபுகளையும் மீறிச் செயல்படுவதை நளிம் ஹாஜியாரினால் அவதானிக்க முடிந்தது. பேருவலை மக்கள் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தின் வாரிசுகளாக விளங்கினர். சன்மார்க்க உணர்வும், பக்திநிறை வாழ்வும், சமூகப்பணிக்கு
65

Page 34
தங்களது செல்வத்தை வாரிவழங்கும் உயர்பண்புகளும் அவர்கள்பால் காணப்பட்டன. பெருகிவரும் செல்வவளம் காரணமாக இந்த விழுமிய உயர்ந்த பாரம்பரியங்கள் நலிந்துவிடக்கூடாது என்ற கவலையும், கரிசனையும் நளிம் ஹாஜியார் பால் காணப்பட்டது.
பேருவலையில் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடைபெற்றன. இஸ்லாத்திற்கு முரணான பல நடைமுறைகள் இத்திருமண வைபவங்களில் இடம் பெறலாயின. திருமணங்களில் மஹர் தொகை நூறு களஞ்சி பொன் அளிக்கப்படும் என சபையில் அறிவிக்கப்படும். வசதி படைத்தோர் வசதியற்றோர் அனைவரும் நூறு களஞ்சி பொன் கொடுப்பதாக அறிவிப் பர் அன்றைய கணிப்பீட்டின்படி அதன் பெறுமதி ஒன்றரை இலட்சமாக இருந்தது. இவ்வளவு பெருமளவு தொகையைக் கொண்ட மஹர் பற்றி திருமண வைபவத்தின்மீது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாலும் அது கொடுக்கப்படுவதில்லை. நளிம் ஹாஜியார் பள்ளிவாசல் சபையின் தலைவராகப் பதவியேற்றதும் மஹர் பற்றியும், அது தொடர்பான விதிகள் பற்றியும் பள்ளிவாசலில் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தார், மஹர் என்பது உரிய முறையில் இஸ் லாமிய சட்டவிதிகளுக்கேற்ப வழங்கப்படல் வேண்டும் என்ற அவர்களது விளக்கத்தை அனைவரும் ஏகோபித்து ஏற்றுக் கொண்டனர். பேருவலையில் திருமணவைபவங்களில் சில நடைமுறைகள் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணான வகையிலும், திருமணங்களின் புனிதத்துவத்தை மாசுபடுத்தும் வகையிலும் அமைந்ததைக் கண்ட அவரது உள்ளம் கவலையடைந்தது. திருமண விழாக்களில் மேற்கத்திய பாணியில் அமைந்த பாண்டு வாத்தியக் கச்சேரி, அழகு நங்கையர்களின் ஆபாச நடனங்கள் இடம் பெறலாயின. சில திருமண விழாக்களின்போது திருமண வீடுகளில் தமிழ்
66

சினிமாப்படங்களையும் திரையிட ஆரம்பித்தனர். இஸ்லாத்திற்கு முரணான இந்தத் தீய செயல்களைத் தடுத்து நிறுத்துவது பள்ளிவாசல் நிர்வாகசபையின் தலைவர் என்ற வகையில் தனது புனித கடமை என்பதை உணர்ந்த அவர் இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது இந்த முயற்சிக்குப் பலத்த எதிர்ப்புத் தோன்றியது. இந்த முயற்சியின் தூய்மையான நோக்கத்தை சில உள்ளங்கள் புரிந்து கொள்ளவில்லை. திருமண விழாக்களில் இத்தகைய மகிழ்ச்சியும், கேளிக்கையும் இடம்பெறுவதில் எத்தகைய தவறும் இல்லை என்ற உணர்வுடன் செயல்பட்ட இவர்கள், அவர்களது கொள்கையில் மிகப் பிடிவாதமாக இருந்தனர். அவர்களது கருத்துக்குச் JFIIs IIT 35 மார்க்கத்தீர்ப்புகளைப் பெறுவதற்காக இந்தியா வரை சென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இறைதிருப்தி ஒன்றையே நாடி இச்சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்ட நளிம் ஹாஜியார் மலைபோன்ற உறுதி குலையாது நின்று இப்போராட்டத்திற்கு முகம்கொடுத்தார். இறுதியில் அவரது இலட்சியப் போராட்டம் வெற்றிபெற்றது. திருமண வைபவங்களில் இடம் பெற்ற இஸ்லாத்திற்கு முரணான இச்செயல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. சமூகச் சீர்கேட்டிற்கான வாயில் மூடப்பட்டது.
பள்ளிவாசல்களில் கந்தூரி வைபவங்கள் நடாத்துதல் இலங்கை முஸ்லிம் சமூக அமைப்பில் ஓர் அம்சமாக பாரம்பரியமாக இருந்து வந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில் சீனன் கோட்டைப் பள்ளிவாசலில் ஒவ்வொரு ஆண்டும் பல கந்தூரி வைபவங்கள் நடைபெறுவது மரபாக இருந்து வந்துள்ளது. இவ்வைபவங்கள் அனைத்தும் பள்ளிவாசலின் பணத்தைப்பயன்படுத்தியே நடத்தப்பட்டன.
67

Page 35
பள்ளிவாசல் பணத்தை பயன்தரும் பணியில் முதலீடு செய்தல் வேண்டும் என்ற எண்ணம் நளீம் ஹாஜியாரின் உள்ளத்தில் உதித்தது. பள்ளிவாசலின் பணத்தை கந்தூரி வைபவங்களுக்குப் பயன்படுத்தாது, அதனை வேறு பயன்தரும் பணிகளில் முதலீடு செய்தல் வேண்டும் என பள்ளிவாசல் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் அவர் பகிரங்கமாக அறிவித்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாரம்பரியமாக இருந்துவரும் இந்த மரபிற்கு முரணாக ஏன் இவர் செயல்படுகின்றார் எனச் சிலர் ஆத்திரமும், கோபமும் அடைந்தனர். பள்ளிவாசலின் பணத்தை அவர் எதற்குப் பயன்படுத்தப்போகின்றார்? என்ற கேள்வி சபையிலிருந்து எழுந்தது. கந்தூரிக்காகச் செலவிடப்படும் பள்ளிவாசலின் பணத்தைச் சேமித்து சீனன்கோட்டையிலுள்ள பள்ளி வாசல்கள் அனைத்தினது பராமரிப்புச் செலவிற்காக நிரந்தர வருமானம் ஒன்றைப் பெறக்கூடிய வகையில் கொழும்பில் ஒரு கட்டடத்தை வாங்கும் தனது திட்டத்தை அவர் வெளியிட்டதும் அவரது தூரநோக்கை எண்ணி, இந்நன் முயற்சியைப் பாராட்டி சபையோர் மகிழ்ச்சியடைந்தனர். அக்காலப் பிரிவில் மக்களிடம் அறவிடப்பட்ட நன்கொடைப் பணத்தைக் கொண்டே சீனன்கோட்டையிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் பராமரிக்கப்பட்டன. ஆனால் நளீம் ஹாஜியார் அவர்கள் மேற்கொண்ட இப்பணி காரணமாக கொழும்பில் ஒரு கட்டடம் வாங் கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் வருமானத்திலிருந்தே இன்று சீனன்கோட்டையிலுள்ள பதினொரு பள்ளிவாசல்களும், பத்து - மத்ரஸாக்களும் பரிபாலனம் செய்யப்படுகின்றன.
நளீம் ஹாஜியாளர் மாணிக்க வியாபாரத்தில் தேசிய ரீதியாகவும், சர்வதேச மட்டத்திலும் அடைந்திருந்த புகழும், கீர்த்தியும், பிரபல்யமும் அவரது சமூக, சன்மார்க்கப் பணிகளும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அவருக்கு
68

கண்ணியமும், சிறப்பும்மிக்க ஓர் இடத்தைப் பெற்றுக் கொடுத்தன. அனைத்து மக்களாலும் அன்பு பாராட்டப்படுபவ ராகவும் நேசிக்கப்படுபவராகவும், மதிக்கப்படுபவராகவும் அவர் விளங்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் சமூகப்பணியில் மிக ஆர்வமும், கரிசனையும், ஈடுபாடும் காட்டிய அவர் அரசியலில் எத்தகைய ஈடுபாடும் காட்டவில்லை. சமூகத்தில் அவருக்கிருந்த மதிப்பும், கீர்த்தியும் காரணமாக பல சந்தர்ப்பங்களில் அரசியலில் பிரவேசிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் அவர் அரசியலிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ஒதுங்கியிருப்பதே சிறந்தது என்ற வகையில் செயல்பட்டார். குறிப்பாக 1969 ஆம் ஆண்டு அப்போது நாட்டின் பிரதமராக இருந்த திரு. டட்லி சேனநாயகா, நளீம் ஹாஜியாரை அவரது "வுட்லன்ட்ஸ்" இல்லத்திற்கு அழைத்து பேருவலைத் தொகுதிக்கு தாம் அவரை ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராக நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். அப்போது திரு. டட்லி சேனநாயகாவை நோக்கி அவர் கூறிய வார்த்தைகள் இவை தான் : "நீங் கள் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்திற் கும் நான் நன்றிபாராட்டுகின்றேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒர்' அமைச்சர் பதவியைத்தான் அளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள எனது உள்ளம் உடன்படாது. ஆனால் நான் இது தொடர்பாக உங்களுக்கு ஒரு மாற்று ஆலோசனை கூற விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் இந்த வாய்ப்பினை தற்போதைய உறுப்பினர் ஜனாப் பாக்கீர் மர்க்கார் அவர்களுகே கொடுங்கள். நான் அவருக்கு எனது ஆதரவினை அளிப்பேன்” எனக்கூறினார். நளீம் ஹாஜியாரின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் திரு . டட்லி சேனநாயக்கா பேருவலைத் தொகுதி வேட்பாளராக ஜனாப் பாக்கீர் மாக்காரை நியமனம் செய்தார். இவ்வாறு நாட்டின் நடைமுறை அரசியலிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்த நளீம் ஹாஜியார்
69

Page 36
1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக மும்முரமாகச் செயல்பட்டார். அவரது மனமாற்றத்திற்கான காரணம் யாது? அவரது எதிர்பாராத இந்த அரசியல் பிரவேசம் பலரைத் திகைக்க வைத்தது. நளீம் ஹாஜியாரைப் போன்ற ஓர் நல்ல உள்ளம் படைத்தவர். சமூக வாழ்வில் பொது நலன்கருதிப் பணிபுரியும் ஒரு நேர்மையாளர் ஏன் கட்சி அரசியலில் ஈடுபடல் வேண்டும்? ஆட்சியாளரை அணுகி பட்டம் பதவிகளைப் பெறும் எண்ணம் தோன்றி அவரது நல்ல உள்ளம் மாசு பட்டுவிட்டதா? என அவரின் சமூகப் பணிகளை, தன்னலமற்ற சேவைகளை, தியாகத் தொண்டுகளை தூர நின்று அவதானித்த அவர்பால் நல்லெண்ணம் பூண்ட நல்ல உள்ளங்கள் கவலையுற்றன. ஆனால் தான் கடைப்பிடித்து வந்த கொள்கையிலிருந்து விடுபட்டு அவர்கள் மேற்கொண்ட இந்த அரசியல் பிரவேசம்கூட தான் பிறந்த ஊரினதும், சமூகத்தினதும் நலனில் கொண்ட அக்கறை, கரிசனை, கவலை காரணமாகவே நிகழ்ந்தது. சமூகத்தைப் பற்றிய அவரது கவலையே 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கச் செய் தது என்ற உண்மையைப் பெரும் பாலோர் அறிந்திருக்கவில்லை.
சீனன்கோட்டை முஸ்லிம்களின் பொருளாதாரம் மாணிக்கக் கல் வியாபாரத்தை மையமாக வைத்தே அமைந் திருந் தது. பொது வா க நோக் குமிட த் து சீனன்கோட்டையில் மட்டுமன்றி, ஏனைய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களில் பலரும் மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மாணிக்க வியாபாரம் மும்முரமாக வளர்ச்சியைக் கண்டுகொண்டிருந்த இக்கால கட்டத்தில் அந்த வியாபாரத்திற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து, அதனை அரசாங்க மயமாக்குதல் வேண்டும் என
10

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர். எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மாணிக்கக் கல் வியாபாரத்திற்குச் சில கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலை நாடு எதிர்நோக்கியது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டு பேருவலை முஸ்லிம்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்பதனை நளீம் ஹாஜியார் மானசீகமாக உணர்ந்தார். இந்த நிலையைத் தவிர்ப்பதற்கான சில முயற்சிகளை மேற்கொள்ள அவர் உறுதி பூண்டார். அவர் சீனன்கோட்டை முஸ்லிம்கள் அனைவரையும் அழைத்து நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டினார். எதிர்கட்சியினர் பதவிக்கு வரும் பட்சத்தில் மாணிக்க வியாபாரிகள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் பிரச்சினைகளை விளக்கி, இந்நிலையைத் தவிர்ப்பதற்கு சமூகநலன்கருதி, அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதே அன்றைய சூழ்நிலையில் விவேகமானது என்ற கருத்தை அக்கூட்டத்தில் அவர் மிகத் தெளிவாக விளக்கினார். இக்கருத்து கூட்டத்தின் பொதுவான அங்கீகாரத்தைப் பெற்றது. இதுவே 1970 ஆம் ஆண்டு நளீம் ஹாஜியார் கட்சி அரசியலில் பிரவேசித்ததற்கான காரணமும் வரலாறும் பகைப்புலனுமாகும். பட்டத்தையும் பதவியையும் அவர் நோக்கமாகக் கொண்டிருப்பின் பேருவலைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை பிரதமர் டட்லி சேனநாயக்கா தாமாகவே அழைத்து அவருக்கு வழங்கிய போது அதனை ஏற்றுக்கொண்டிருப்பார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபட அவரது மனம் , ஒருபோதும் விரும்பியதில்லை. அமைதியான, ஆரவாரமற்ற சமூகப் பணியே அவரது முழுநோக்கமாகவும், இலட்சியமாகவும்
71

Page 37
அமைந்தது. ஆனால் ஏற்கனவே விளக்கப்பட்டவாறு அன்றைய காலகட்டத்தில் சில தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகள், சமூக நலன் கருதி அவரை அரசியல் களத்தில் பிரவேசிக்க வைத்தன.
எனவே 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நளீம் ஹாஜியார் ஐக்கிய தேசியக் கட்சியைப் பகிரங்கமாகவே ஆதரித்தார். ஆனால் அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரமான தோல்வியைக் கண்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டின் அரசியல் வன்செயல்கள் தலைதுாக்கின. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தோர் பல பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்நிலையில் தான் பாதுகாப்பாக மறைந்து இருப்பதற்காகவே, கொழும்பில் அவர் தற்போது வசிக்கும் வெள்ளவத்தை அலெக்ஸாண்டரா வீதியிலுள்ள அவரது வீடு வாங்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மாதங்கள், எவரும் அறியாமல் இந்த வீட்டில் தலைமறைவாக அவர் வாழ்ந்தார்.
தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மையும் கொந்தளிப்பும் குழப்ப நிலையும் அடங்கியது. பூரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இடதுசாரிக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டரசாங்கம் பதவியேற்று செயல்பட ஆரம்பித்தது. இந்தக் கூட்டரசாங்கத்தில் நிதி அமைச்சராக கலாநிதி என் . எம். பெரேரா நியமிக்கப்பட்டார். அவர் நிதி அமைச்சர் பதவியேற்று சில மாதங்களின் பின்னர் பொரளையில் கொட்டா ரோட்டிலுள்ள தனது இல்லத்தில் வந்து சந்திக்கும்படி அவரிடமிருந்து நளிம் ஹாஜியாருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு அவருக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும், ஏன் அன்றைய சூழலில் அதிர்ச்சியையும் கூட அளித்தது எனலாம். அவரது உள்ளத்தில் அலை அலையாக [ !Ꭷu' கேள்விக்குறிகள் தோன்றி மறைந்தன. தன்னை ஏன்
72

கலாநிதி என் . எம். பெரேரா போன்ற ஒருவர் அழைக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடை காண முனையும் மனப்போராட்டத்தோடு அவரைச் சந்திக்க சென்ற நளிம் ஹாஜியாரின் கார் என். எம். பெரேராவின் வீட்டு வாசலில் நின்றதும், புன்முறுவல் பூத்த முகத்துடன் அவரை வரவேற்ற கலாநிதி என் . எம் . பெரேரா நளிம் ஹாஜியாரை உள்ளே அழைத்துச் சென்று அமரச் செய்தார். "ஹாஜியார் நான் மாணிக்கக் கல் கூட்டுத்தாபனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு இத்துறையில் நீண்ட கால அனுபவமுள்ள உங்களது ஆலோசனைகள் எனக்குத் தேவைப்படுகின்றன” நிதியமைச்சர் கலாநிதி என் எம் . பெரேராவின் இவ்வார்த்தைகள் நளீம் ஹாஜியாரின் உள்ளத்தில்
அலை அலையாக எழுந்து அவரை அலைக்கழித்த
வினாக்களுக்கு விடையாக அமைந்தன.
லண்டன் பல்கலைக் கழகத்தில் பொருளியல் கலாநிதிப்பட்டம் பெற்ற ஒரு பொருளாதார நிபுணர், இலங்கைத் தீவின் ஐந்தாம் வகுப்போடு தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட ஒரு மனிதனிடம் ஆலோசனை வேண்டி நின்றார். கலாநிதி என் எம் . பெரேராவின் உயர் பண்புகளையும், பணிவையும், பிறரது திறமையை மதிக்கும் பெருந்தன்மையும் நளீம் ஹாஜியார் புகழ்ந்துரைப்பதை நான் கேட்டுள்ளேன்.
"உங்கள் அழைப்பிற்கும், வேண்டுகோளுக்கும் நீங்கள்
என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. இது தொடர்பாக நீங்கள் எனது ஆலோசனையை வேண்டி
நிற்பதால் நான் உங்களுடன் மனம் திறந்து பேசப்
போகின்றேன். நான் தெரிவிக்கப்போகும் கருத்துக்களில் எள்ளளவும் சுயநலமோ, தவறான நோக்கமோ இருக்காது. எங்கள் நாட்டின் நலனும் முன்னேற்றமுமே அதன்
73
*
ቆ﷽እ

Page 38
அடிப் படையாக இருக்கும் என்பதை முதலில் கூறவிரும்புகின்றேன். எனது கருத்துக்களை நீங்கள் சரியானதாக கண்டால், அவை பொருத்தமானவையாக உங்களுக்குத் தென்பட்டால் அவற்றைச் செயல்படுத்தலாம்" எனக்கூறிய ஹாஜியார் கலாநிதி என் (எம் . (o)_GJ JII a îl to மாணிக்கக்கல் கூட்டுத்தாபனம் அமைப்பது தொடர்பான அவரது பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.
1. நீங்கள் அமைக்கத
கம்பனி போன்று இயங்குதல் வேண்டும். அது மாரிைக்க வியாபாரி களுக்கு அவர்களது வர்த்தா, எத்தகைய இடையூறும் ஏற்படுத்தாது அவர்களுக்கு
எத்தகைய தடையுமின்றி, சுதந்திரமாகத தாள்களது தொழிலைப் புரிய ஒரு துண்ைடுதலாக விளங்குதல் வேண்டும்.
so Ug ত)28
2. மாணிக்கக் கற்களை ஏற்றுமதி செய்வதால் பெறப்படும் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு மாணிக்கக்கல் ஏற்றுமதியில் ஈடுபடுவோர், தாம் விரும்பியதை இறக்குமதி செய்யவும், அவர்களது வெளிநாட்டுப் Iuj 6yy tij செலவுகளுக்கு அந்த வருமானத்
திலிருந்து 25 % பயன்படுத்த அனுமதிக்கப்படல் வேண்டும்.
3
o
TTTlTTTTT TTttLLTt ttT TTttTTuSTTStttttS S ttttttLLL L mttttS உத்தியோக பூர்வமான கணக்குகள் காட்டப்படாத மானிக்கக் கற்களை வைத்துள்ளனர். இவர்வாறு உத்தியோக பூர்வமற்ற நிலையில் உள்ள இக்கற்கள் களவாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலைகாரன மாக எங்கள் நாடு பெரும் இழப்பையும், நஷடத்தையும் எதிர்நோக்குக்கும் நிலை உருவாகும். எனவே இத்தகைய உத்தியோகபூர்வமற்ற நிலையில் உள்ள இந்த மானிக்கக் கற்களிலிருந்து பூரண பயனை நாம் பெறவேண்டுமெனில்
74

இக்கற்கள் உத்தியோக ,ii 61 to II 5b 6noiul III,II (GEM AMNESTY) பிரகடனம் ரெய்யப் படல் வேண்ைடும். அப்போது எத்தகைய அச்சமுமின்றி இக்கற்களை வைத்திருப்போர் அவற்றைப் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பைப் பெறுவர். இதன் மூலம் எங்கள் நாடு நிறையநன்மைகளைப் பெறும்.
ஹாஜியாரின் இக்கருத்துக்களை தனக்கே உரிய புன்சிரிப்போடு அமைதியாகச் செவிமடுத்த கலாநிதி என். எம். பெரேரா "உங்கள் ஆலோசனைகள் பற்றி நிச்சயம் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவேன்" எனக்சு றி அவரை வழியனுப்பிவைத்தார். ஒரு நல்ல மனம்படைத்த அரசியல் வாதியைச் சந்தித்த மனநிறைவோடு அவர் திரும்பினார். இதற்கு இரண்டு மாதங்கள் கழித்து கலாநிதி பெரேரா, நளீம் ஹாஜியாரை மீண்டும் ஒரு சந்திப்பிற்காக அழைத்தார். இந்த சந்திப்பின்போதும், அவர் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களையே மீண்டும் உறுதியோடும், ஆணித்தரமாகவும் குறிப்பிட்டார். சந்திப்பின் இறுதியில் நளீம் ஹாஜியாருடன் கைகுலுக்கிய நிதியமைச்சர் கலாநிதி என் எம் . பெரேரா "உங்களது ஆலோசனைகள் மிகச் சிறந்தவையாகவும், பயனுள்ளவையாகவும் எனக்குத் தென்படுகின்றன. நான் நிச்சயம் இவற்றை செயல்படுத்தும் வகையில் திட்டமிட்டு மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தை அமைப்பேன்" எனக்கூற "நீங்கள் இவற்றைச் செயல்படுத் தினால் எங்கள் நாடு நிச்சயம் அளப்பரிய நன்மைகளைப் பெறும்” எனக்கூறி அவரிடம் விடைபெற்றுக் கொண்டார்.
இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனம் 1972 ஆம் ஆண்டு ஜூலை 11ந் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக் கப் பட்டது . கூட்டுத் தாபனத் தின் மூலம்
75

Page 39
வெளிநாட்டுக்கனுப்பப் படவேண்டிய முதலாவது கல்லை நளிம் ஹாஜியார் வழங்கினார். கூட்டுத்தாபனம் நளிம் ஹாஜியார் தெரிவித்த ஆலோசனைகளையும் செயல்படுத்தியது. மிகக் குறுகிய கால இடைவெளியில் கூட்டுத்தாபனம் மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் பெருமளவு இலாபத்தைச் சம்பாதித்தது. கலாநிதி என். எம். பெரேராவிடம் தான் முன்வைத்த ஆலோசனைகளையும், அதன் வெற்றிகரமான செயல்பாட்டினால் நாடு அடைந்த நன்மைகளையும் தான் பிறந்த நாட்டிற்குச் செய்த ஒரு பெரும் பங்களிப்பாக அவர் கருதுகின்றார்.
பூரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் இலங்கை மிகப்பாரதூரமான வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினையை எதிர்நோக்கியது. அரசாங்கத்திற்கு வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினை ஒரு பூதாகாரப் பிரச்சினையாக உருவெடுத்தது. இச்சந்தர்ப்பத்தில் நளீம் ஹாஜியார் அவர்கள் மிக
உறுதியான தேசப்பற்றுடன் ஆற்றிய ஒரு பணி தனிப்பட்ட
முறையில் அவருக்கு மட்டுமன்றி இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கே பெருமையும் கெளரவத்தையும் தேடிக் கொடுத்தது. இந்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மண்ணின் மைந்தர்களாகக் காலூன்றி வாழும் முஸ்லிம்கள் ஒரு பெருமைக்குரிய வரலாற்றின் வாரிசுகள் என்பதையும் எந்த நிலையிலும் நாட்டுக்கு விசுவாசமாக, தியாக உணர்வுடன் செயல்பட அவர்கள் சித்தமாக உள்ளார்கள் என்பதையும் தனது செயலால் உறுதிப்படுத்தும் ஒரு தேசிய பணியை இக்கால கட்டத்தில் அவர் புரிந்தார். நாட்டில் போதிய வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், கஷ்ட நிலையையும் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு பதினைந்து இலட்ச ரூபா பெறுமதியான தனது வெளிநாட்டுச் செலாவணியை அன்பளிப்புச் செய்தார். பரிரதமரின் உத தியோ கபூர்வ வாசஸ் தலமான
76

அலரிமாளிகையில், அப்போது கல்வி அமைச்சராக இருந்த அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்முத், நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா தேசிய பேரவை உப சபாநாயகர் ஜனாப் ஐ . g。 காதர் அப்போதைய பேருவலை விசேஷ கமிஷனர் நெளபல் ஜாபிர் ஆகியோரின் சமூகத்தில் பிரதமர் கெள. பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களிடம் நளீம் ஹாஜியார். இத்தொகையைக் கையளித்தார். இதனை தேசீயப் பத்திரிகைகள் அனைத்தும் முன்னுரிமையளித்துப் பிரசுரித்தன.
நளீம்"ஹாஜிi"அன்றைய பிரதமர் கெளரவ நுமாவோ பண்டாரநாயக்காவிடம் நாட்டுக்கு ரூபா 1500.000/- அந்நியச் செலாவணியை அன்பளிப்பு செய்கின்றார். நிதி அமைச்சர் கலாநிதி என். எம். பெரேரா, கல்வி அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத், உபசபாநாயகர் அல்ஹாஜ் ஐ. ஏ. காதர், பேருவலை விசேட கமிஷனர் நவ் பல், எஸ். ஜாபிர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் திகதி வியாழக்கிழமை தினகரன் பத்திரிகை பின்வரும் வகையில் இச் செய்தியை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
"இலங்கைக்குப் போதிய வெளிநாட்டுச் செலாவணி
77

Page 40
இல்லாமையால் ஏற்பட்டுள்ள கவர் ட நிலைமையையும் நெருக்கடியையும் சமாளிப்பதற்கு உதவியளிக்குமுகமாக பேருவலை சீனன் கோட்டையைச் சேர்ந்த பிரபல இரத்தினக்கல் வர்த்தகரான அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளிம் ஜே பி அவர்கள் அரசாங்கத்துங்கு பதினைந்து ரெலாவணியைக் கொடுத்துள்ளார். இந்தப் பனம் பிரதம மந்திரி திருமதி பனர் டாரநாயக்கா Jo shi i J., Shf I Lib நேற்றுக் காலை ஒப்படைக்கப்பட்டது.
இந்நாட்டில் வாழும் எல்லா இனத்தவர்களினதும் மதம், கலாசாரம், பாரம்பரியங்களைப் பேரிை, அவர்களுக்குப் LI, U 5: T பாதுகாப்பளித்து விசேஷமாக சிறுபான்மையோரின் உரிமைகளை முற்றாகப்பேனி உண்மையான ஜனநாயகப் பாதையில் செல்லும் இந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் நாட்டின் நன்மையைக் கருதி ஆற்றிவரும் பல முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவற்காக வெளிநாட்டுச் செலாவணி ஒரு பிரச்சினையாக இருந்து வருவதை இன்று யாரும் நன்கறிவர். இதனாலேயே இந்நாட்டு மக்களினதும் எனது சமூகத்தினதும் நன்மையை மனதிற் கொண்டே சுமார் பதினைந்து லட்சம் estift வெளிநாட்டுச் செலாவணியை அரசாங்கத்துக்குக் கொடுத்தேன்' என்று ஜனாப் எம் . ஐ. எம். நளிம் ஹாஜியார் கூறினார்.
அலரி மாளியையில் நடைபெற்ற ஒரு விசேஷ வைபவத்தின்போது (உள்நாட்டுப் பெறுமதி நாற்பது லட்சம் ரூபா) வெளிநாட்டுச் செலாவணிக கான பததிரங்கனை அவர் கையளித்தார்.
இலங்கைச் சரித்திலேயே முதன் முதலாக ஒரு சாதாரண பிரஜை அரசாங்கத்துக்கு வெளிநாட்டுச் செலாவணி வழங்கிய இவர் விஷேர வைபவத்தில் நிதிஅமைச்சர் டாக்டர் என்.எம். பெரேரா, கல்வி அமைச்சர் அல்ஹாஜ் டாக்டர் பதியுத்தீன் மஹ்முத, உபசபாநாயகர் ஜனாப் ஐ.ஏ. காதர், பேருவலை விசேஷ கமிஷனர் ஜனாப் நெளபல் எஸ். ஜாபிள் ஆகியோர் சமூகமளித்திருந்தனர். நளிம் ஹாஜியாரின் இச்செய்கையினால் மகிழ்ச்சியுற்ற பிரதமர்
78
 

ளிம் ஹாஜியாரைப் பாராட்டினார். நிதி அமைச்சர் சபாநாயகர்
கியோரும் அவரைப் பாராட்டினர்.
,
தினகரன் 1974 ஆகஸ்ட் 15
நாடு வெளிநாட்டுச் செலாவணியில் பெரும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய அன்றைய சூழ்நிலையில் நளிம் ஹாஜியாரின் இந்தப் பங்களிப்பு எந்த அளவு ஒரு பெரும் தேசியப் பணியாகக் கருதப்பட்டது எனில் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ந் திகதி ரைம்ஸ் ஒவ் சிலோன் பத்திரிகை இதனைப் பாராட்டி "தேசியப்பற்று இலாபமன்று” என்ற தலைப்பில் ஆசிரிய தலையங்கமே வரைந்திருந்தது.
“The presentation by Al-haj M. I. M Naleein, the Beruwela gem merchant of one-and-a-half-million rupees from the convertible Rupee Account to the government for it to utilize for the purchase of foreign exchange is a great gesture.
It is none-the- less valuable for the fact that the donor has been modest enough to describe his gift as a "humble gesture" to assist the government in its current production programme.
Mr. Naleem's decision to place his country's welfare so patently above private profit stands in brilliant contrast to the cases brought to light of hoarding of foreign exchange abroad. It is an act of sell -abrrgation reminiscent of what Mr. Stanley (later Lord) Badwin did shortly after world war I when while being Financial secretary to the Treasury, he donated 20 per cent of his whole fortune to the nation. He did so by presenting to the Exchequer for cancellation of
79

Page 41
15O.OOO of securities in the war loan.
His purpose was not only to help his country but to set an example of personal secrifice. he thought that Britain was in danger of being submerged in a wave of luxury and materialism and believed that "a fool's paradise is only the anti-room to a fool's hell."
We hope that the Prime Minister, Mrs Srimavo Bandaranayake's wish. which she expressed when accepting the gift on behalf of the government, that others would follow Mr. Naleem's example will not be unfulfilled. It is true that Sri Lanka is a free, sovereign and an independent country as stated in the Constitution, but freedom and indepedence require to be guaranteed by acts of self-sacrifice and patriotism.
It was said of his own country by a patriotic Briton, Who dies if England lives? Who stands if England falls?
It is a similar feeling of patriotism towards Sri Lanka by her own sons and daughters that is required to build our nation and we hope that Mr. Naleem's act of sterling patriotism will be emulated in whatever degree which is within their means by all his sellow countrymen who are inspired by his example.
Editorial, Times of Ceylon, 19th. August 1974.
"பேருவலையைச் சேர்ந்த மாணிக்க வியாபாரி அல்ஹாஜ் எம். ஐ. எம் நளிம் அவர்கள் அரசாங்கத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபா வெளிநாட்டுச் செலாவணியை வழங்கியதானது பாராட்டத்தக்க ஒரு செயலாகும். அனைத்துக்கும் மேலாக,
80

அரசாங்கத்தின் உற்பத்தித் திட்டத்திற்கு உதவும் வகையில் இந்த"பணிவான அன்பளிப்பை வழங்குகின்றேன்" என தனது மிகப் பெறுமதிவாய்ந்த அன்பளிப்ப்ை "பணிவான அன்பளிப்பு" என அவர் குறிப்பிட்டது மிக உயர்ந்த ஒரு பண்பாகும். தனது சொந்த இலாபத்தைவிட நாட்டின் நன்மையைப் பெரிதாக மதித்த ஜனாப் நளிமின் இச்செயலானது வெளிநாடுகளில் தங்களது
செலாவணியைத் தேக்கிவைக்கும் சிலரின் நடத்தைக்கு முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. அவரது இந்த தன்னலமற்ற, தியாகரீலம்
படைத்த செயலானது பிரிட்டனில் முதலாவது உலகப்போரின் பின்னர் போல்ட்வின் பிரபு தனது நாட்டின் நலன் கருதிப் புரிந்த தியாகத்தை எமக்கு நினைவு படுத்துகின்றது. முதலாம் உலகப் போரின் சற்றுப் பின்னர் அவர் திறைசேரியின் செயலாளராக, பணியாற்றிய போது அவரது முழுச் சொத்திலும் 20\ வீதத்தை தனது நாட்டிற்காக அவர் அன்பளிப்புச் செய்தார். போர்க்காலக் கடனில் 150, 000 பவுணர்களை ரதது செய்வதற்காகவே இத்தொகையை திறைசேரிக்கு வழங்கி இம்மகத்தான செயலை அவர் புரிந்தார்.
அவரது நோக்கம் நாட்டுக்கு உதவுவது மட்டுமன்று
தன்னலமற்ற தியாகத்திற்கு உதாரணமாக விளங்குவதாகும். பிரிட்டன் தேசமானது ஆடம்பரம் கேளிக்கைகள் நிறைந்த ஒரு
சமூகமாக மாறிவிடும் ஆபத்தை உணர்த்த அவர் நாடு இருக்கும் சூழலில் பிறரும் தன்னைப் பின்பற்றி வாழுதல் வேண்டும் என்ற உணர்வோடு அவர் செயல்பட்டார்.
இந்த அன்பளிப்பை நளிம் ஹாஜியாரிடமிருந்து அரசாங்கத்தின் சார்பில் பெற்றுக்கொண்ட போது "நளிம் ஹாஜியாரின் இந்த முன் மாதிரியை ஏனையோரும் பின்பற்றுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்” எனப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் தெரிவித்த நம்பிக்கை வீண்போகாது என நாங்கள் நம்புகின்றோம். அரசியல் யாப்பில் குறிப்பிட்டுள்ளபடி இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் மிக்க ஒரு நாடு என்பது உண்மையே. ஆனால் இந்த சுதந்திரமும், தன்னாதிக்கமும் தன்னலமற்ற தியாகம்,
81

Page 42
தேரப்பற்று ஆகியவற்றின் மூலம் மேலும் வலுவூட்டப் பெறல் வேண்டும்.
பிரிட்டனின் தேரப்பற்றுமிக்க ஒருவன் அவனது நாட்டைப்
η Ι (Τς ή பற்றி பின்வருமாறு பாடினான்.
" இங்கிலாந்து நிலைத்திருந்தால் யார் இறப்பார்? இங்கிலாந்து வீழ்ச்சியடைந்தால் யார் 55o15' t'i I i I i ii ?
இலார் கையைப் புதல்வர்களின் இத்தகைய தேசப் பற்றுமிக்க உணர்வுகளை TtTtttt T TttTtt S Tt ttTtSGLL SKtTTTTTTttS yttmTT நளிமின் உதாரனத்தால் துண்ைடப்பட்ட அவரது சக பிரஜைகள், அவர்களது சக்திக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டவரை அவரது இந்த மகத்தான தேசப்பற்றைப் பின்பற்றுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
ஆசிரிய தலையங்கம், டைம்ஸ் ஒப் ஸிலோன் ஆகஸ்ட் 19, 1974
இவ்வாறு டைம்ஸ் பத்திரிகை நளிம் ஹாஜியாரின் தேசப் பற்றைப் பிரதிபலிக்கும் இந்த மகத்தான செயலைப் பாராட்டி ஆசிரிய தலையங்கமே வரைந்திருந்தது. அவரது இச்செயல் மூலம் நளீம் ஹாஜியார் இந்நாட்டின் தேசிய நீரோட்டத்தோடு இரண்டறக்கலந்தார். முஸ்லிம்கள் குறுகிய சிந்தனையும், உணர்வும் படைத்தவர்கள் அல்லர் என்பதையும் அவர்கள் தேசிய விடயங்களில் மிகப்பரந்த உள்ளத்துடனும், பரந்த நோக்குடனும் செயல்படும் தன்மை படைத்தவர்கள் என்பதனையும் அவர் இந்நாட்டின் ஆட்சியாளருக்கும், பொது மக்களுக்கும் உணர்த்தினார். அவரது இச்செயல் தேசீய ரீதியாக அவருக்கு மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்திற்கே கெளரத்தையும், நன்மதிப்பையும் ஈட்டிக் கொடுத்தது.
82

"இஸ்லாத்தைப் பொறுத்த விஷயங்களில் நான் முதலாவதாக ஒரு முஸ்லிம், இரண்டாவதாகவும் ஒரு முஸ்லிம், மூன்றாவதாகவும் ஒரு முஸ்லிம். ஆனால் எனது தேசத்தின் நன்மையைப் பொறுத்தளவில் நான் முதலில் ஓர் இந்தியன். இரண்டாவதும் ஒர் இந்தியன் மூன்றாவதாகவும் ஒர் இந்தியன் என முழங்கி, இஸ்லாமிய பற்றுக்கும், தேசப்பற்றுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்திய மெளலானா முஹம்மது அலி ஜவாஹரின் வரலாற்றை நளீம் ஹாஜியார் அறிந்திருந்தாரோ இல்லையோ, அவர் மெளலானா முஹம்மத் அலியின் வழிநின்றே இவ்விடயத்தில் G),9ruu GiblJLLITÍŤ.
இதனை இக்காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய ஒரு மாபெரும் பணி உறுதிப்படுத்துகின்றது. நாடு எதிர்நோக்கிய செலாவணிப் பிரச்சினை காரணமாக முஸ்லிம்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமற்போகும் ஒரு நிலை தோன்றியது. ஏனெனில் அரசாங்கத்திடம் ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு வழங்குவதற்குப் போதிய வெளிநாட்டுச் செலாவணி இருக்கவில்லை. இந்நிலையில் நளிம் ஹாஜியார் அவர்கள் அப்போது அமைச்சராக இருந்த கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்முத் அவர்களை அணுகி ஹஜ்ஜுக்குச் செல்வதாகத் தான் நூறுபேருக்கு தனது சொந்த வெளிநாட்டுச் செலாவணியை வழங்க ஆயத்தமாக இருப்பதாக கெள. பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களிடம் அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது விருப்பத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால் நூறு பேருக்கன்றி, ஐம்பது பேருக்கு அவரது வெளிநாட்டுச் செலாவணியை வழங்க அனுமதியளித்தது. 1972, 1973,1974 ஆம் ஆண்டுகளில் அல்லாஹ்வின் அருளால் நளிம் ஹாஜியார் இந்த செலாவணியை வழங்கியிருக்காவிட்டால், இக்கால
83

Page 43
இடைவெளியில் இலங்கை முஸ்லிம்கள் பலர் ஹஜ்ஜு செய்யும் வாய்ப்பை இழந்திருப்பர்.
இவ்வகையில், இஸ்லாமியப் பற்றும், சமூகப் பற்றும், தேசப்பற்றும் ஒன்றாக இணைந்த ஒரு மகத்தான ஆளுமையை நளிம் ஹாஜியார் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

4 அந்த நாற்பத்தேழு நாட்கள்
விசுவாசிகளே, பயத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றில் நஷ்டங்கள் ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களைச் சோதிப்போம். இந்நிலையில் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக. அவர்கள் தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் எனக் கூறுவார்கள்.
- அல் - பகரா 155
85

Page 44
சோதனைகள், துன்பங்கள், இழப்புக்கள் என்பன மனித வாழ்வின் மாறாப் பெருநியதி என்பதனையும், அத்தகைய சோதனைகளின்போது ஒரு விசுவாசி எவ்வாறு நடந்துகொள்ளல் வேண்டும் என்பதனையும் மேற்குறிப்பிட்ட அல் - குர்ஆனின் திருவசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. மனிதவாழ்வு ஆரவாரமின்றி, அமைதியாக ஓடும் சிற்றாற்றைப் போன்றதன்று. அது அமைதியும், சிலபோது பேரிரைச்சலோடு பொங்கியெழும் பயங்கரமான அலைகளையும் கொண்ட ஒரு சமுத்திரத்தைப் போன்றது. அமைதியான இருந்த நளிம் ஹாஜியாரின் வாழ்வு என்ற சமுத்திரத்தில் ஒரு பெரும் பேரலை திடீரென ஆர்த்தெழுந்தது. பேரிரைச்சலோடு தோன்றிப் பேயாட்டமாடிய அந்தப் பேரலை பற்றி அவரே விளக்கக் கேட்போம்.
"ஒய்வின்றி வியாபார முயற்சிகளிலும், ஏனைய பணிகளிலும் இரவுபகலாக முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த நான் அ  ைமதியை யும் ஒய வையும் [75 TT 19. ஹம்பாந்தோட்டையிலுள்ள எனது வாசஸ்தலத்தில் இடைக்கிடை சென்று சில நாட்களைக் கழிப்பது வழக்கம். 1974 ஆம் ஆண்டு ஒரு நாள் நான் சில சகோதரர்களுடன் ஹம்பாந்தோட்டையில் எனது வீட்டில் தங்கியிருந்தேன். பட்ஜட் நாளாக இருந்ததால் அது பற்றிய விவரங்களை அறிவதற்காக வானொலியைத் திருப்பிய எங்களுக்கு பயங்கரமான ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வரவு செலவுத் திட்டம் பற்றிய விபரங்களை அறிவிப்பதற்கு முன்னர் ஒரு முக்கிய அறிவித்தல் இருப்பதாகக் குறிப்பிட்ட வானொலிச் செய்தி அறிவிப்பாளர் அந்த முக்கிய செய்தியை வாசித்தார்.
"பேருவலையைச் சேர்ந்த மாணிக்க வியாபாரி நளிம் ஹாஜியார் அவர்கள் வெளிநாட்டுச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். எனவே
86

இத்தால் அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படுவதோடு, அவரது கடந்த பத்துவருட கால் வியாபாரக் கணக்குகளைச் சமர்ப்பிக்கும்படியும் அவர் கோரப்படுகின்றார். எனவே அவர் எங்கிருந்தாலும் விசாரணைக்காக அவரைக் கைது செய் யும் படி இலங் கையில் உள் ள எ ல் லாப் பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது”
இந்த வானொலி அறிவித்தலைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். வியாபாரத்தில் அல்லாஹ்வை அஞ்சியவனாக எனது சக்திக்கு உட்பட்டவரை நேர்மையைக் கடைப்பிடித்துள்ள எனக்கா இத்தகைய சோதனை என எனக்குள் ஏக்கப் பெருமூச்சோடு ஒரு வினா எழும்பியது.
அப்போதைய அரசாங்கம் வெளிநாட்டுச் செலாவணி சம்பந்தமாக நடைபெற்ற ஊழல்கள் பற்றி விசாரணை நடாத்த ஒரு கமிஷனை நியமித்திருந்தது. அங்கு நடைபெற்ற விசாைைண ஒன்றின்போது சாட்சியம் கூறிய ஒருவர் எனது பெயரையும் தொடர்புபடுத்தி ஒரு வாக்கு மூலத்தை அளித்திருந்ததே என்னைத் தேடுவதற்கான காரணம் என்பது பிறகு எனக்குத் தெரியவந்தது. இந்த வானொலி அறிவித்தலைக் கேட்டதும் நானும் உடனிருந்த நண்பர்களும் அசைவற்று நின்றோம். "எந்தச் சந்தர்ப்பத்திலும் குற்றவிசாரணைப்பிரிவினர் (சிஐடி) என்னைத் தேடி இங்கு வரலாம். எனவே இங்கிருந்து நான் உடனடியாகப் புறப்பட்டாகுதல் வேண்டும் என நான் கூறினேன். அவசரமாக உடனே ஹம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்டு இரவோடிரவாகப் பயணம் செய்து கொழும்பை வந்தடைந்தேன். கொழும்பில் ஒரு நண்பரின் வீட்டில் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்தேன். இதற்கிடையில் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்னைத் தேடிப்பல தடவைகள் பேருவலையில் எனது இல்லத்திற்குச் சென்றதாகவும், சில பள்ளிவாசல்களில் கூடத் தேடுதல்
87

Page 45
நடத்தியதாகவும் எனக்குச் செய்திகள் கிடைத்தன. இச்சூழ்நிலையில் நான் சுயமாகவே சென்று பொலிஸில் சரணடைவதே ஒரே வழியாக எனக்குத் தோன்றியது எனவே அந்த நோக்கோடு குற்ற விசாரணைப் பிரிவின் நான்காம் மாடிக்குச் சென்றேன்.
கர
"நான் தான் நளீம் ஹாஜியார் என்னை நீங்கள் தேடுவதாக அறிந்தேன் பொலிசிடம் சரணடைவதற்காக வந்துள்ளேன்.” என நான் அறிமுகப்படுத்திய போது அங் கிருந்த அனைவரும் அதிர்ச்சியும், பதட்டமும், அடைந்தனர். சிலர் அங்குமிங்கும் ஓடினர். அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டதை அவதானித்தேன். அல்லாஹ் என்னை ஒரு பெரும் சோதனைக்கு உட்படுத்துகின்றான் என்ற உணர்வு என்னில் மேலோங்கி நின்றது. அவனின் பாதையில், அவனின் திருப்தி ஒன்றையே நாடி அமைதியாகப் பயணம் செய்யும் அவனின் இந்த அடிமையை நிச்சயம் பாதுகாப்பான் என்ற உறுதியான நம்பிக்கை என்னுள் ஆழமாகப் பதிந்திருந்தது. நான் எத்தகைய பதட்டமும் இன்றி அமைதியாக இருந்தேன். அப்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் கதிர்காமர் என்னிடம் வந்தார். “ஹாஜியார் உங்களை சில விஷயங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டி உள்ளது. எங்களோடு நீங்கள் இவ்விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும்” எனக்கூறி விசாரணையை ஆரம்பித்தார். மிகவும் கனிவாகவும், பண்பாடாகவும், கண்ணியத்துடனும் அவர் என்னை விசாரித்தார். விசாரணை இரவுவரை தொடர்ந்தது. விசாரணை முடிந்ததும் "நான் வீட்டுக்குச் செல்லலாமா? என திரு. கதிர்காமரிடம் கேட்டேன். நீங்கள் விசாரணைக்காக ஓரிரு நாட்கள் இங்கு தங்கவேண்டியுள்ளது. ஆகவே உங்கள் வீட்டுக்கு டெலிபோன் செய்து உங்களுக்கு அவசியப்படுபவற்றை வரவழைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறினார் அவர்.
88

நான் எனது வெள்ளவத்தை இல்லத்திற்கு டெலிபோன் செய்து நான் தொழுகைக்காகப் பயன்படுத்தும் எனது முஸல்லாவையும் குர் ஆனையும் பல்துலக்கும் பிரஷ்சினையும் கொண்டு வரும்படி கூறினேன். வெள்ளை விரிப்பொன்று விரிக்கப்பட்ட ஒரு கட்டிலைக் கொண்ட ஒரு அறையில் என்னைத் தங்கச் செய்தார்கள். அன்றிரவு காலை ஸப்ஹ' நேரம் வரை மிக அமைதியாகவும், நிம்மதியாகவும் உறங்கினேன்.
"விசுவாசிகளே, உங்கள் மனம் சாந்தியடைவற்காக கண்ணுறக்கம் உங்களைப் பொதிந்து கொள்ளும்படி இறைவன் தன் புறத்திலிருந்து செய்ததை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள7.”
- அல்-அன்பால் 11
நான் பொலிஸில் சரணடைந்தது பற்றிய செய்தியை மறுநாள் காலை தினசரிப் பத்திரிகைகள் அனைத்தும் மிக முக்கிய இடமளித்து வெளியிட்டிருந்தன. இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ஹிந்து பத்திரிகை கூட அதன் 13 ந் திகதி டிசெம்பர் 1974 ஆம் இதழில் இச்செய்தியைப் பிரசுரித்திருந்ததெனில் நான் சரணடைந்த விடயம் நாட்டில் எத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.
அடுத்த நாள் காலையிலும் விசாரணை தொடர்ந்தது. விசாரணையின் பின்னர் என்னை பஜெட் ரோட்டிலுள்ள குற்றவாளிகள் தடுப்பு நிலையத்திற்கு அனுப்புவதாக அறிவித்தார்கள். வெளிநாட்டுச் செலாவணி மோசடி போன்ற விடயங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் பஜெட் ரோட்டில் தான் தடுத்து வைக்கப்பட்டனர். என்னை பஜெட் ரோட்டிலுள்ள தடுப்பு நிலையத்திற்கு அழைத்துச்
89

Page 46
சென்றார்கள். என்னை ஏறக்குறைய ஏழடி நீளமும், ஐந்தடி அகலமும் கொண்ட அறையில் தங்க வைத்தார்கள். இந்தக் குறுகிய, ஒடுக்கமான அறையில் நான் எத்தனை நாள்தான் அடைபட்டிருக்க வேண்டுமோ? என்ற ஏக்கப்பெருமூச்சு என்னிலிருந்து வெளிப்பட்டது. நிச்சயமாக அல்லாஹ்வின் அருளும், உதவியும் அவனது நல்லடியார்களுக்கு உண்டு என்ற குர்ஆனின் திருவசனங்களை நினைவுபடுத்திக் கொண்டேன். அல்லாஹ் ஒருபோதும் என்னைக் கைவிட மாட்டான் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது. அந்த அறையில் ஒடுங்கிக் கிடந்த என்னை சந்திப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு நான் கழித்த நாட்களில், ஒரு நாள் இரவு ஓர் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. அது கடுமையான குளிர்காலம். இரவு இஷாத் தொழுகையை எனது அறையில் நிறைவேற்றிய பின்னர், அந்தப் பயங்கரமாக குளிரை நினைத்து, "யா அல்லாஹ், எனக்கு குளிப்பதைக் கட்டாயமாக விதியாக்கும் ஒரு நிலையை இன்று ஏற்படுத்திவிடாதே" எனப் பிரார்த்தித்தேன். அன்றைய கடுமையான குளிரும், எனது உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஒரு தூண்டுதலும் என்னை இவ்வாறு பிராத்திக்கத் தூண்டியது. ஆனால் எனது பிரார்த்தனைக்கு முற்றிலும் மாறாக, நான் எது நேரக்கூடாது எனப் பிரார்த்தித்தேனோ அது நேர்ந்துவிட்டது. அன்று இரவு எனக்கு குளித்தல் விதியாகும் நிலை உருவாகிவிட்டது. அதிகாலையில் தூக்கத்திலிருந்து கண்விழித்தேன். இந்த கடுமையான குளிரில் குளித்து, சுத்தமடைந்து ஸ"பஹத் தொழுகையை நிறைவேற்றுவதா? அல்லது அதனை "களா" செய்வதா என்ற மனப்போராட்டம் எனக்கு ஏற்பட்டது. அல்லாஹ் இதன் மூலம் என்னை ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறான் என்ற உணர்வு என்னில் தோன்றியது. இந்த சோதனையில் நான் வெற்றிபெறல் வேண்டும் என்ற மன உறுதி எனக்கு ஏற்பட்டது. அந்தக் கடும் குளிரையும் பொருட்படுத்தாது
90

குளித்துவிட்டு ஸ"பஹரத் தொழுகையை நிறைவேற்ற முடிவு செய்தேன். குளிப்பதற்காக குளியலறைக்குச் செல்வதற்கு எனது அறைக்கதவுகளைத் திறந்து வெளியே செல்ல ஆயத்தமாகிய போது, கடுங்குளிர் காரணமாக தலையிலிருந்து கால்வரை தன்ன்ைப் போர்த்திக் கொண்டிருந்த காவலாளி என்னை நோக்கி எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டான். நான் குளிக்கச் செல்கின்றேன் எனப் பதிலளித்தேன். ஒரு விசித்திரமான பிறவியைப் பார்ப்பது போன்று அவன் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவனது பார்வையின் பின்னால் மறைந்துள்ள வியப்புக்குறிக்கான காரணம் எனக்கு விளங்கியது. நான் குளித்தவிட்டு அதிகாலை ஸ"பஹத் தொழுகையை நிறைவேற்றினேன். எனது உள்ளத்தில் என்னையே அறியாத நிம்மதியும், நிறைவும் தோன்றியது.
"நான் தான் அல்லாஹ், எண்ணைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபணிவராக எண்ணை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக."
- தாஷா 14
நிச்சயமாக அல்லாஹ்வை நினைவுகூர்வதில் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன".
- அர் - ர ஃத் 25
என்னை இந்த ஒடுக்கமான, குறுகிய அறையில் நாற்பத்தேழு நாட்கள் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் என்னை பஜெட் ரோட்டிலிருந்து குற்ற விசாரனைப் பிரிவின் நான்காம் மாடிக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்வார்கள். விசாரணை பல மணித்தியாலங்கள் நீடிக்கும். உலகின் பல பகுதிகளிலுமுள்ள, நான் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தவர்களை நான் வெளிநாட்டுச் செலாவணி
9.

Page 47
மோசடியில் ஈடுபட்டிருந்தேனா என்பதனை அறிய விசாரணை செய்தார்கள். அது பற்றி அறிவதற்காக பல நாடுகளிலுள்ள வியாபாரிகளுக்கு குற்ற விசாரணைப் பிரிவு கடிதங்களை அனுப்பி வைத்தது.
இக்கடிதங்கள் பற்றி ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் முன் பிற்காலத்தில் வழக்கறிஞர் திரு. நடேசன் கியூ ஸி. பிரஸ்தாபித்தார். 16ந் திகதி டிசம்பர் 1974 ஆம் ஆண்டு ஹொங்கொங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு கடிதத்தை சமர்ப்பித்த அவர், நளீம் ஹாஜியாரின் சர்வதேசிய வியாபாரத் தொடர்பு சம்பந்தமாக விவரம் கோரும் இத்தகைய கடிதங்கள் அதே திகதியில் நியூயோக், லண்டன், கனடா, போன்ற நாடுகளிலுள்ள மாணிக்கக் கல் வர்த்தகர்களுக்கும் அனுப்பப்பட்டதாகவும், எல்லாமாக ஐம்பத்தாறு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார். ஆனால் இத்தகைய பல முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால், என்மீது குற்றம் சுமத்தக்கூடிய எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை."
நளிம் ஹாஜியாரின் வாயிலாக அவரது சிறைவாழ்வின் அனுபவங்களைக் கேட்ட நாம், அவர்மீது அன்பும், அபிமானமும் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைகண்டு எத்தகைய கவலையும், ஆத்திரமும் கொண்டனர் என்பதனை நோக்குவோம். நளிம் ஹாஜியார் இவ்வாறு அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டு பஜெட் ரோட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்தச் செயலானது இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஒரு பெரும் LJULIULI60LI ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பையும், பதட்ட நிலையையும் ஏற்படுத்தியது. நளீம் ஹாஜியார் இவ்வாறு அநியாயமாகக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக
92
 

அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு.ஜே.ஆர். ஜெயவர்தனா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு அவருக்கு நியாயம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை "ஹன்ஸ்ாட்டில்" இவ்வாறு பதிவாகியுள்ளது.
I am not holding a brief to anybody who is detained regard to whatever offence he has committed, but I know of one person who is now under detention, Mr. Naleem Hajiar who has the affection of the entire Muslim world. Why should that man be not allowed to see his lawyers, not allowed to see his relations? Even a murderer, a person convicted of the murder of a Prime Minister of the country was allowed to see his lawyers, was allowed to see his relations, was allowed in the custody, but like a human being.
Mr. J. R. Jeyawardene in the Parliament
Hansard. December 11, Vol. 13 - No. 10 - P 2 160
"எந்த ஒரு குற்றச் செயலையும் புரிந்ததற்காக தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் எந்த ஒருவருக்காகவும் நான் பரிந்து பேசவில்லை. ஆனால் தற்போது தடுப் புககாவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரைப்பற்றி ன்னக்கு நன்கு தெரியும் அவர் தான் நளிம் ஹாஜியார். அவர் முழுமுஸ்லிம் உலகத்தினதும் அன்பிற்குப் பாத்திரமானவர். அத்தகைய ஒரு மனிதருக்கு ஏன் அவரது சட்டத தரணிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை? அவரது உற்றார் உறவினர்களை சந்திக்க ஏன் அவர் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு கொலைகாரன் கூட , நாட்டின் ஒரு பிரதமரைக் கொலை செய்ததாகக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவன்கூட அவனது சட்டத்தரணிகளைச் சந்திக்கவும், உறவினர்களைப் பார்க்கவும் அனுமதிக்கவும், தடுப் புககாவலில் ஒரு மனிதன் போன்று வாழவும் அனுமதிக்கப்பட்டான்."
ஹணர்சார்ட் டிசெம்பர் 11, பாகம் 13, இதழ் 10 பக்கம் 2160
93

Page 48
நளீம் ஹாஜியாார் பால் திரு. ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், நம்பிக்கையும் அவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இந்த உரை தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. ஒரு கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவனுக்கு வழங்கப்படும் உரிமைகள்கூட, முஸ்லிம் உலகின் அன்பையும், அபிமானத்தையும் பெற்ற நளீம் ஹாஜியாருக்கு வழங்கப் படவில்லை என்பதனையும், ஒரு மனிதன் போன்று வாழ்வதற்கான வசதிகள் கூட வழங்கப்படவில்லை. என்பதையும் ஜே. ஆர். ஜெயவர்தன அவர்கள் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் குறிப்பிட்டதே, தடுப்புக் காவலில் நளிம் ஹாஜியார் அனுபவித்த வேதனைகள், துன்பங்களை விளக்கப் போதுமானதாகும்.
நளிம் ஹாஜியார் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்ப தானது இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியது. அவர்மீது அன்பும், நேசமும், நம்பிக்கையும் கொண்ட உள்ளங்கள் வேதனையுற்றன. நாட்டின் எல்லா பாகங்களிலும் முஸ்லிம்கள் அவரது விடுதலைக்காகப் பள்ளிவாசல்களில் தொழுகையின் பின்னர் துஆ பிராத்தனை நடத்தினர். பல பெண்கள், இளங்குமர்கள் கூட அவரின் விடுதலை வேண்டி நோன்பு நோற்றனர். முஸ்லிம் இயக்கங்கள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் அனைத்தும் எத்தகைய வித்தியாசமுமின்றி ஒன்றுபட்டு இச் செயலை வன்மையாகக் கண்டித்து ஆட்சேபக் குரல் எழுப்பின. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நளீம் ஹாஜியாருக்கு இருந்த மதிப்பையும், கெளரவத்தையும் திரு நடேசன் கியூஸி ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் அமர்வின் போது திரு. டி ரொன் குணசேகராவை விசாரணை செய்யும்போது பிற்காலத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
94.
 

திரு. நடேசன் நளிம் ஹாஜியாார் அவர்கள் முஸ்லிம்
சமூகத்தினால் மிகவும் மதிக்கப் படுபவர் என்பதை நீர் அறிவீராP
திரு.குணசேகரா: ஆம்
திரு. நடேசன்; அவருக்கு முஸ்லிம் உலகில் மிகக்
கணிசமான செல்வாக்கு உள்ளது.
நளிம் ஹாஜியார் அநியாயமாகத தடுதது வைக்கப்பட்டுள்ளாரென்றும், அவரை விடுதலை செய்தல் வேண்டுமெனவும் பரவலாக நாடாளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்வாறு நாட்டில் அவரது விடுதலைக்காக பரவலான கோரிக்கை காணப்பட்டதாக திரு. நடேசன் ஜனாதிபதி விசாரணைக் கமிஷனில் திரு. நிஹால் ஜயவிக்கிரமாவை குறுக்கு விசாரணை செய்யும்போது குறிப்பிட்டார்.
டெய்லி நியூஸ் (19.2.79)
நளிம் ஹாஜியார் தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எதிராக நாடு முழுவதிலும் தெரிவிக்கப்பட்ட கண்டனமும், அவர் சிறையில் நடாத்தப்படும் மனிதாபிமானமற்ற முறை பற்றி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தன பாராளுமன்றத்தில் தொட்த்த எதிர்ப்பும், இவ்விடயத்தில் அரசாங்கம் ஒரளவு கரிசைனயோடு செயல்படும் நிலையை உருவாக்கியது. இதற்கிடையில் இலங்கை முஸ்லிம் சமுகத்தில் நளிம் ஹாஜியாரைத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் பலமடைந்தது. மக்களின் ஆத்திரம் உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்க ஆரம்பித்தது. முஸ்லிம்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாகச் சென்று, சிறையிலிருந்து நளீம் ஹாஜியாரை விடுதலை செய்யப்போவதாக ஒரு பலத்த வதந்தி பரவ ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அரசாங்கம் நளீம் ஹாஜியாரின் பாதுகாவலில் மேலும் கூடிய கவனம் செலுத்த ஆரம்பித்தது. அப்போது நளிம்
95

Page 49
ஹாஜியாரின் பாதுகாப்பு நலன்களுக்குப் பொறுப்பாக இருந்த குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறை இயக்குநரும், முன்னாள் பொலிஸ் புலனாய்வுத்துறை இயக்குனருமான திரு.டிரல் குணதிலக விசேட ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் முன் சாட்சியம் பகரும்போது கூறிய சில உண்மைகள் இதனை உணர்த்துகின்றன. ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் முன் திரு. டிரல் குணதிலக அளித்த சாட்சியை 19.2.79 வீரகேசரி பத்திரிகை பின்வருமாறு பிரசுரித்திருந்தது.
“அந்நிய செலவாணி தொடர்பாக கைது செய்யப்பட்டு நளீம் ஹாஜியார் தடுப்புக்காவலில் வைக் கப் பட் டிருந்தபோது, அப்போதைய பிரதமர் திருமதி மாவோ பண்டாரநாயக்கா அவரின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தினார் எனத் தெரிவித்த அவர், பிரதமர் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நளீம் ஹாஜியாருக்குத் தக்க பாதுகாவல் அளிக்க வேண்டுமெனக் கூறினார். அவருக்கு உணவு வழங்கப்பட முன்னர் அது நன்கு பரிசோதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். எனது பொலிஸ் அதிகாரி ஒருவரை உணவைப் பரிசோதனை செய் ய நியமிக்குமாறும், நம்பத்தகுந்த அதிகாரிகளை நளீம் ஹாஜியார் சிறை வைக்கப் பட்டிருந்த பகுதியை மேற் பார்வை செய்யப்பணிக்குமாறும் பிரதமர் மாவோ பண்டாரநாயக்கா என்னிடம் கூறினார். இக்கட்டளைக்கு இணங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.''
வீரகேசரி 19. 2. 79
"நளீம் ஹாஜியார் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப் பதானது மாணிக்க வியாபாரத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏறக்குறைய மாணிக்க வியாபாரம் ஸ்தம்பிதம் அடைந்தது. மாணிக்க விற்பனை கணிசமான அளவு குறைந்தது” என திரு. நடேசன் இது பற்றி ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் அமர்வில் பிரஸ்தாபித்தார். தான் இவ்வாறு அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்
96

காவலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் வேதனையின் தழும்புகள் நாட் செல்லச் செல்ல அவரது உள்ளத்தில் ஆழமான வடுவாக மாறி, ஒரு பேரிடியாக ஒரு நாள் வெடித்தது.
"விசுவாசிகளே உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டமான நிலை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாமென நினைத்துக் கொண்டீர்களா? தூதரையும், அவரையும் அவருடன் விசுவாசங்கொண்ட அவர்களையும் கஷ்டங்களும், துன்பங்களும் பிடித்து அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் எனக் கேட்டதற்கு அல்லாஹ்வுடைய உதவி இதோ சமீபத்திலிருக்கிறது என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.
- அல் - பகரா 12
நளீம் ஹாஜியாரின் சிறை வாசம் நாட்பது நாட்களைக் கடந்து விட்டது. அவரைப் பிடித்த சோதனையும், கஷ்டமும், துன்பமும், துயரும் அதன் எல்லையை அடைந்தது. அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என நபித்தோழர்கள் கேட்குமளவிற்கு அவர்களது கஷ்டங்கள் எல்லை மீறியதை மேற்குறிப்பிட்ட அல்- குர்ஆனின் திருவசனம் சித்தரிப்பது போன்று தாங்கமுடியாக சோதனைக்கு ஆளான அவரது உள்ளமும் இறைவனின் உதவிக்காகவும், அருளுக்காகவும் தாகித்துத் தவித்தது. இந்த மன நிலையில் அவர் இருந்தபோது ஒரு நாள் நிகழ்ந்த சம்பவத்தை அவரே கூறுகின்றார்.
"ஒரு நாள் வழமை போன்று எனது விசாரணை தொடர்ந்தது. வெளியில் பலத்த மழை பொழிந்து கொண்டிருந்தது. பயங்கரமான இடியும், மின்னலும் மாறி மாறித் தோன்றின. பலத்த காற்று சூறாவளிபோன்று வீசியது. இந்நிலையில் எனது விசாரணை தொடர்ந்தது.
97

Page 50
எனது உள்ளமோ வேதனையினதும், விரத்தியினதும், எல்லையை அடைந்திருந்தது. நாற்பது நாட்களுக்கு மேலாக நான் தனிமையில் அனுபவிக்கும் இந்தவேதனை எனது சக்தியை அப்படியே பிழிந்தெடுத்து, இப்போது எனது மனோ உறுதிைையயும் தளரச் செய்ய ஆரம்பித்தது. விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வெளியே காதைத் துளைக்கும் பயங்கரமான ஒரு இடிமுழக்கம், கேட்டது. "அந்த இடி நான் இருக்கும் இந்த இடத்தில் விழக்கூடாதா? அப்போதாவது எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை கிடைக்குமே" என நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன். வெளியே எங்கோ விழுந்த அந்தப் பேரிடியின் அதிர்ச்சியில் எனது விசாரணை நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்த பொருட்கள் எல்லாம் ஆட்டங் கண்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடம் இருள்மயமாகியது. அந்த இடத்திலிருந்த கல்லச்சு யந்திரம் சேதமாகியது. உடனே எனது விசாரணை நிறுத்தப்பட்டு, நான் எனது சிறைக்கூடத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டேன்.
நளிம் ஹாஜியாருக்கு ஏற்பட்ட இந்த சோதனையை நீக்கும் படி அல்லாஹ்விடம் கையேந்தி ஆயிரமாயிரம் உள்ளங்கள் நெஞ்சுருகப் பிரார்த்தித்தன. நளிம் ஹாஜியார் தடுப்புக்காவலில் சிறைவைக்கப்பட்ட சில மாதங்களுக்கு முன்னர் மர்ஹம் மஸ்ஊத் ஆலிம் அவர்களுடன் புனித மக்காவில் ரம்ழான் மாதம் முழுவதையும் அவர் கழித்தார். மக்காவிற்கு அடிக்கடி செல்லும் வழக்கத்தைக் கொண்ட நளீம் ஹாஜியார் மக்காவில் வாழ்ந்த அஹ்லுல் பைத் என்னும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஸெய்யித் அல் - பார் அவர்கள் மூலம் மக்காவிலும், மதீனாவிலும் வாழ்ந்த, சன்மார்க்கப் பெரியார்கள் அஹ்லுல் பைத்தளைச் சார்ந்த சான்றோர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அவர் மக்கா, மதினாவைத்
98

தரிசிக்கும் போதெல்லாம் இப்பெரியார்களைச் சந்தித்து தமது ஆத்மீக நலனுக்காக அவர்களிடம் துஆச் செய்யும்படி கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் சந்திக்கும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பெரியார்களுள் ஒருவரே மக்காவின் புகழ் பூத்த மார்க்க அறிஞரும், ஆத்மஞானியுமான அஸ் - ஸெய்யித் அமீன் குத்பி ஆவார். தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சில மாதங்களுக்கு முன்னர் மஸ்ஊத் ஆலிம் அவர்களுடன் மக்காவுக்குச் சென்ற நளீம் ஹாஜியார் புனித ரம்ழான் முழுவதையும் மக்காவில் கழித்தார். ரம்ழான் முடிந்ததும், இன்சா அல்லா, தான் ஓரிருமாதம் கழித்து மீண்டும் ஹஜ்ஜுக்காக மக்கா வரும்வரை, மஸ்ஊத் ஆலிமை மக்காவில் தங்கும்படி கூறிவிட்டு நாடு திரும்பினார். ஹாஜியார் ஹஜ்ஜுக்காக வரும் வரை மக்காவில் மஸ்ஊத் ஆலிம் தங்க முடிவு செய்தார். இதற்கிடையில் மக்காவிலிருந்து நாடு திரும்பிய நளிம் ஹாஜியார் விசாரணைக்காகத் தடுப்புக்காவலில் சிறை வைக்கப்பட்டார். அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டதையும், நளீம் ஹாஜியார் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடயத்தையும் 10க்காவிலிந்த மஸ்ஊத் ஆலிம் அவர்கள் கேள்வியுற்றதும் அவரது உள்ளம் மிக வேதனையடைந்தது. புனித மக்காவில் உள்ள நளிம் ஹாஜியாருக்கு நன்கு அறிமுகமாகிய சன்மார்க்கப் பெரியார்கள் அஹ்துல்பைத்களை சந்தித்து, நிலைமையை விளக்கி, ஹாஜியாரின் விடுதலைக்காக துஆ செய்யும்படி வேண்டினார்.
ஒரு நாள் தினம் பெரியார் ஸெய்யித் அமீன் குத்பி அவர்கள் புனித கஃபாவை நோக்கி நடந்த கொண்டிருந்தார்கள். அவரை மிக மரியாதையுடன் நெருங்கிய மஸ்ஊத் ஆலிம் அவர்கள் "ஸெய்யித் அவர்களே சகோதரர் நளிம் ஹாஜியை, அநியாயமாகக் குற்றம் சுமத்தி தடுப்புக்காவலில் சிறை வைத்துள்ளார்கள். அவருக்காக துஆ செய்யுங்கள்"
99

Page 51
எனக்சு றினார். ஸெய்யித் அமீன் எத்தகைய அதிர்ச்சியும், பதட்டமும் அடையாமல் தனது கைத்தடியை நிலத்தில் ஊன்றி சிறிது நேரம் அமைதியாக கீழே நோக்கிய வண்ணம் நின்றார். அடுத்த கணம் அந்த பெரியாரின் பார்வை
அல்லாஹ்வின் புனித ஆலயமான கஃபதுல்லாவை நோக்கித்
திரும்பியது. "மஸ்ஊத் அப்ஷிர் லி ஹாஜி நளீம்" நீங்கள் ஹாஜி நளீமிக்கு விடுதலை கிடைக்கும் என்ற நற்செய்தியை அறிவியுங்கள் என்றார்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்காக கை உயர்த்திப் பிரார்த்தித்த ஆயிரமாயிரம் தூய்மையான
உள்ளங்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தான்.
அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு நாற்பத் தேழாவது நாளன்று, விசாரணை முடிவில் அவர்மீது எந்த விதக் குற்றச்சாட்டும் இல்லையென்னும், அவர் நிரபராதி எனவும் கூறி நளிம் ஹாஜியார் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைச் செய்தியை தினகரன் பின்வருமாறு வெளியிட்டது.
"நளிம் ஹாஜியார் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார், ஒரு சிறு குற்றச்சாட்டுகூட குற்றஞ்சாட்ட அவர் மீது இருக்கவில்லை."
தினகரன் 31, 1 1979
அவர் விடுதலை செய்யப்பட்ட தினம் புனித அரபாத் தினமாக அமைந்தது. "நான் பிறந்ததும் அரபாத் நாளில் தான். நான் விடுதலை செய்யப்பட்டதும் அந்தப் புனித அரபாத் தினத்தில் தான்" என அவர் இச்சம்பவத்தைக் குறிப்பிடும்போது அடிக்கடி கூறக் கேட்டுள்ளேன். அரபாவிற்கும், இந்த மனிதருக்குமிடையேயுள்ள நெருங்கிய பந்தம்தான் என்னே!
100

நாற்பத்தொரு நாள் தன்னந்தனியே தான்கழித்த சிறைவாசத்தின் பின்னர் அவரது மனோநிலையை அவரே விளக்குகின்றார்.
“பஜட் ரோட் தடுப்புக் காவலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் எனது பிறந்தகமான பேருவலை நோக்கிப் பயணமானேன். எனது உள்ளம் நிராசையும் விரக்தியும் அடைந்திருந்தது எல்லாவற்றிலும் ஒரு வெறுப்பும், பிடிப்பின்மையும் எனது உள்ளத்தில் தோன்றியது. வாழ்க்கையே அலுப்புத்தட்டிவிட்டது போன்ற மனப்பிரமை எனக்கு ஏற்பட்டது. எனது எஞ்சிய நாட்களை எதிலும் ஈடுபாடுகாட்டாமல், எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி அமைதியாகக் கழித்தல் வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வாழ்க்கையில் அலுப்புத்தட்டிய நிலை எதிலும் பற்றின்மை, ஒரு பிடிப்பின்மை, விரக்தியும், ஆயாசமும் கலந்த மனநிலையில் நான் பயணம் செய்த கார் சீனன்கோட்டைப் பள்ளிவாசலைச் சென்றடைந்தது. அங்கு ஆண்கள், பெண்கள், முதியோர், சிறியோர் என ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக நின்று எனக்காகக் காத்திருந்தனர். அத்தனையும் அல்லாஹ்விடம் எனக்காக கண்ணீர் வடித்துப் பிராத்தித்த உள்ளங்கள் என்ற உணர்வும் அத்துணை கைகளும் எனக்காக வானை நோக்கி உயர்த்தப்பட்ட கைகள் என்ற உணர்வும் என்னில் தோன்றியது. இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் எனது சகோதர முஸ்லிம்கள் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எனக்காகவடித்த கண்ணீர்-உணர்ச்சிக் குமுறலாக நீதி நியாயம் கோரி உதிர்த்த வார்த்தைகள் - இறைஞ்சிய துஆக்கள் நோற்ற நோன்புகள் அத்தனை பற்றியும் அங்கு திரண்டிருந்த மக்கள் என்னிடம் விவரித்தார்கள். எனது உள்ளத்தில் தோன்றியிருந்த விரக்தி, நிராசை, நம்பிக்கையின்மை, அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்தன. என்னில் என்னையே அறியாத ஓர்
101

Page 52
உத்வேகமும், உணர்ச்சியும், உயிர்த்துடிப்பும் மனோஉறுதியும் தோன்றி மக்களை விட்டு ஒதுங்கி வாழுதல் வேண்டும் என்ற எனது மனப்பிரமை தகர்ந்தது.
என்மீது இத்தகைய அன்பும், நேசமும், நம்பிக்கையும் வாஞ்சையும் கொண்டுள்ள எனது சகோதர முஸ்லிம்களுக்கான சமூக, சன்மார்க்கப் பணியின் பாதையில், அவர்களுள் ஒருவனாக இணைந்து கொண்டு எனது பயணத்தைத் தொடர முடிவு செய்தேன்.”
102

- - -
தி
வடு
பி
கன்
ஜாமிஆ நளீமியா பாலைவனத்தில் ஒரு பசும்புற்றரை
"முஸ்லிம்கள் சிறுபான்மையோராய் வாழுகின்ற, முஸ்லிம்களைச் சூழ "குப்ர்” ஆதிக்கம் செலுத்தும் இப்பாலைவனத்தில் ஜாமிஆ நளீமியாவை தௌஹிதின் பசும்புற்றரையாக நான் காண்கின்றேன்."
ஜாமியா நளியாவின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை ஆற்றிய சமகால இஸ்லாமிய உலகின் பேரறிஞர்களுள் ஒருவரான மெளலானா ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் ஆழமான அர்த்தம் பொதிந்தவை. உலகின் பல்வேறு நாடுகளில் பல கலாநிலையங்களைத்
103

Page 53
தரிசித்த ஒரு பேரறிஞரின் பல கலைக்கழகங்கள் ஆலோசனை மன்றங்களிலும், ஆய்வு நிறுவனங்களின் பரிபாலனக் குழுக்களிலும் அங்கத்துவம் வகிக்கும் ஒரு மாமனிதரின் உணர்வின் வெளிப்பாடாக அமைந்த, உண்மை நிலையை அப்படியே தத்ரூபமாக சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள வார்த்தைகள் இவை.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு தான் செய்த முக்கிய பங்களிப்பாகவும், தனது வாழ்வில் தான் புரிந்த மாபெரும் பணியாகவும் ஜாமிஆ நளீமியாவை நிறுவியதை நளீம் ஹாஜியார் அவர் கள் மிகப் பெருமிதத்துடனும், மனநிறைவுடனும் குறிப்பிடுவார்கள். உண்மையில் இந்த நாட்டிலும் இஸ்லாமிய உலகிலும் நளீம் ஹாஜியார் என்ற நாமத்துடன் இணைத்துப் பேசப்படும் நிறுவனம் ஜாமிஆ நளீமியாவாகும்.
அல்லாஹ் தனக்கு வழங்கிய செல்வத்தை அவனது திருப்தியைப் பெறும்வகையில் பயன்படுத்துதல் வேண்டும் என்ற கொள்கையை தனது வாழ்க்கையின் தத்துவமாக வரித்துக் கொண்ட நளீம் ஹாஜியார் அவர்கள் மஸ்ஜித்களை நிறுவுதல், ஏழைக்குமர்களுக்கு வாழ்வளித்தல், கல்வியைத் தொடர முடியாதவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கல், போன்ற பணிகளில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டு வந்தாலும், அவரது உள்ளத்தில் அவரது சமூக, சன்மார்க்கப் பணிகளுக்கு சிகரம் அமைக்கும் ஒரு மகத்தான எண்ணம் கருக்கொண்டது. அதுவே இஸ்லாமிய சன்மார்க்கக் கல்விக்கான ஒரு கல்வி நிலையம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும் என்ற எண்ணமாகும். அந்தக் கல்வி நிலையம் ஏனைய பாரம்பரிய மத்ரஸாக்கள் போன்று அமையாமல் அறிவும், ஆராய்ச்சியும், சிந்தனையும் வளர்ச்சியடைந்து வரும் நவீன காலத்திற்குப் பொருத்தமான மார்க்க அறிஞர்களை
104

உருவாக்கும் கல்வி நிலையமாக அமைதல் வேண்டும் என்ற உணர்வும் அவருக்கிருந்தது. தனது எண்ணக்கருவைச் செயல்படுத்தவும், இலட்சியக்கனவை நிறைவேற்றவும் கல்வித்துறையிலும், ஏனைய துறைகளிலும் அறிவும், அனுபவமும் உடையவர்களின் ஆலோசனையைப் பெறுவதன் அவசியத்தை அவர் உணர்ந்தார். இந்த நிலையிலேயே நளிம் ஹாஜியார் முஸ்லிம் சமூகத்தின் சிறந்த கல்விமான்களுள் ஒருவராக விளங்கிய மர்ஹும் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்களைச் சந்திக்கின்றார். இக்கருத்தை நளீம் ஹாஜியார் அவர்கள் (முஸ்லிம் சமுகத்தில் மிகப் பரந்த மனப்பான்மையும், விரிந்த சிந்தனைப் போக்கும் கொண்ட ஒரு மார்க்க அறிஞராகவும், நளிம் ஹாஜியாரின் மிக நெருங்கியவராகவும் இருந்த மஸ்ஊத் ஆலிம் அவர்களிடம் வெளியிட்ட போது அவர் இதை மிகவும் வரவேற்று அதற்கு மேலும் உற்சாகமூட்டி தூண்டுதல் அளித்தார். அதனைத் தொடர்ந்தே அறிஞர் அஸிஸின் சந்திப்பு நிகழ்கின்றது.
நளிம் ஹாஜியார் அஸ்ரீஸ் அவர்களிடம் தான் ஒரு இஸ்லாமிய கல்வி நிலையம் ஒன்றை நிறுவ விரும்புவதாகவும், ஆனால் இக்கல்வி நிலையம் தற்போது நடைமுறையிலுள்ள மத்ரஸாக் களிலிருந்து வித்தியாசமாக அமைதல் வேண்டுமென்றும், அங்கிருந்து வெளியேறுபவர்கள் தற்கால சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பரந்த அறிவை பெற்றவர்களாக அவர்கள் விளங்கல் வேண்டுமென்றும், தெரிவித்தபோது அறிஞர் அஸிஸ் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தார். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இத்தகைய ஒரு கல்வி நிலையம் ஒன்று அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி "எங்களுக்கோர் ஜாமிஆ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஏற்கனவே அவர் எழுதியிருந்தார். எனவே அவர் கொண்டிருந்த ஓர் இலட்சியக்கனவு நிறைவேறப் போகின்றது என்ற உணர்வு அவருக்கு
105

Page 54
ஏற்பட்டது. இதற்கிடையில் நளிம் ஹாஜியார் சமூகத்தில் கல்வித்துறையிலும் சமூகப்பணியிலும் ஈடுபாடுகொண்ட கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள் பலரையும் இது சம்பந்தமாகத் தொடர்பு கொண்டார். சமூக அறிவுப்பணிகளில் இவ்விடயத்தில் நளீம் ஹாஜியாருக்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கிய துடிப்பும், உற்சாகமும், மிக்கபலரும் சீனன் கோட்டையில் இருந்தனர்.
நளீம் ஹாஜியார் அமைக்கத் திட்டமிட்டுள்ள இஸ்லாமிய கல்வி நிலையம் சம்பந்தமாக பூர்வாங்க ஆலோசனைகளை நடாத்துவதற்காக ஒரு கூட்டம் அவரது வெள்ளவத்தை இல்லத்தில் கூட்டப்பட்டது. நீதிபதி மர்ஹும் ஏ. எம்.அமீன், அல்ஹாஜ் மஸ்ஊத் ஆலிம், ஏ. எம். ஏ அஸிஸ், மெளலவி ஏ. எல். எம் இப்ராஹிம், மெளலவி யூ. எம். தாளியின், மெளலவி ஷாஹுல்ஹமீத் பஹ்ஜி, அல்ஹாஜ் ஏ.ஸி.ஏ.வதுரத் உட்படப் பலர் இக்கூட்டத்திற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரபு விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் எதிர்காலத்தில் ஓர் அறிவுரீதியான இஸ்லாமிய தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய, இஸ்லாமிய கல்வியும், நவீன கலைகளைப் பற்றிய அறிவும் ஒன்றிணைந்த கல்வியைப் பெற்ற, இஸ்லாமிய கல்விமான்களை உருவாக்கக்கூடிய வகையில் இக்கல்வி நிலையம் அமைதல் வேண்டும் என்பதையும், இது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அறிவுவளத்தைப் பொறுத்தளவில் மிகக் கஷ்டமான ஒரு பணியாகக் காணப்பட்டாலும், இதுவே இன்றைய காலத்தின் தேவை என்பதனையும் வலியுறுத்தினார். மெளலானா அபுல் ஹசன் அலி நத்வி அவர்கள் இது தொடர்பாக வெளியிடும் கருத்து இதுவே என்பதனையும், அது நாம் ஏற்கனவே நளீம்
106

ஹாஜியாரின் உதவியினால் வெளியிட்ட, "காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்கள் பணியும்" என்ற கட்டுரையில் வலியுறுத்தப் பட்டுள்ளதையும் அல்ஹாஜ் ஹிபதுல்லாஹ் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஒரு கல்வி நிலையத்தையே தானும் அமைக்க விரும்புவதாகவும், பாரம்பரிய மத்ராஸாக்கள் இன்றைய காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதனை தான் சீனன்கோட்டையில் ஆரம்பித்த "அல் மத்ரஸ்துல் மபாகிரியா" வின் அனுபவம் தனக்கு உணர்த்தியது எனவும் குறிப்பிட்ட நளீம் ஹாஜியார் தற்போது திட்டமிடப்பட்டுள்ள கல்வி நிலையம் மிகச் சிறப்பான நவீன வசதிகளுடன் அமைந்த ஒரு கலாநிலையமாக அமைதல் வேண்டுமெனவும், சன்மார்க்க கல்விக்கு கண்ணியமும், சிறப்பும் அளிக்கப்படல் வேண்டுமெனவும் அல்லாஹ்வின் மகத்தான திருப்தியையும், அருளையும் பெற்றுத்தரும் இப்பணிக்காகத் தாம் தனது செல்வத்தின் எவ்வளவையும் செலவழிக்கத் தயாராய் இருப்பதாகவும், எனவே இதற்கான செலவைப் பற்றி கவலைப்படாமல் எவ்வளவு உயர்ந்த தரத்தில் இக்கல்வி நிலையம் அமையும் வகையில் திட்டமிட
முடியுமோ அவ்வகையில் அதனைத் திட்டமிடும்படியும்
கூறியபோது அனைவரும் மகிழ்ச்சியும், நிறைவும் அடைந்தனர்.
இமாம் கஸ்ஸாலியினதும், ஸெல்ஜுக்கிய மன்னர் நிஸாமுல்
முல்கினதும் இணைப்பினால் வளர்ச்சியடைந்த நிஸாமியா பல்கலைக்கழகத்தை அப்போது நான் உள்ளத்தில் கற்பனை பண்ணிக் கொண்டேன். தான் கல்வியைப் பெறும் பாக்கியத்தை இழந்தும், கல்வியையும், அறிவையும் நேசிக்கும் கல்விமான்களையும், அறிஞர்களையும் மதிக்கும் ஓர் அற்புத
மனிதராக மகத்தான, இஸ்லாமிய பாரம்பரியத்தின்
பிரதிநிதியாக நளீம் ஹாஜியார் எனக்குக் காட்சியளித்தார்.
அந்த முதல் கூட்டத்தின் பின்னர் பல கூட்டங்கள் வாரம் தவறாமல் பல மாதங்கள் நளீம் ஹாஜியாரின்
O7

Page 55
ல
கொழும்பு இல்லத்தில் நடைபெற் றன. இக் கல்வி நிலையத்திற்காண வளாகத்தின் அமைப்பு கட்டடங்கள் பற்றி மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. வளாகத்தின் அமைப்பும், கட்டடங்களும் இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு இணைந்ததாக அமைதல் வேண்டுமென்பதில் அறிஞர் அஸீஸ் மிகக் கரிசனை கொண்டார். புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் திரு. அல்பிரட் கலுபோவில அவர்களின் ஆலோசனை பெறப்பட்டு வளாகத்திட்டமிடல், கட்டட நிர்மானம் ஆகிய பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள கலாநிலையம் இலங்கையில் இஸ்லாமிய கல்வித் துறையில் ஒரு புதிய மரபைத் தோற்றுவிக்கும் வகையில் அமையப்போவதாலும், அது பாரம்பரிய மத்ரஸா அமைப்பாகவோ, அல்லது லோகாயதக் கல்வியை மட்டும் புகட்டுகின்ற ஒரு பல்கலைக்கழகமாகவோ அமையாமல் இவ்விரண்டு நிறுவகங்களினதும் பண்புகளை இணைக்கும் வகையில் தோற்றுவிக்கப்பட இருப்பதால் இக்கல்வி நிலையத்தை எவ்வாறு பெயரிட்டு அழைப்பது என்ற பிரச்சினை தோன்றியது . அது ஒரு இஸ் லாமிய பல்கழைக்கழகத்தின் அமைப்பைப் பெறும் உயர்கல்வி நிலையமாக விளங்கவிருப்பதால் அதனை "ஜாமிஆ” என அழைப்பதே பொருத்தமான தாகும் என முடிவு செய்யப்பட்டது.
"ஜாமிஆ இஸ்லாமிய என அதற்குப் பெயரிடுவதா?” என்ற கேள்வி எழும்பியது. ' பாகிஸ்தானில் மௌலானா பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி அவர்களால் நிறுவப்பட்ட உயர் கல்வி நிலையம், புகழ்பெற்ற இஸ் லாமிய அழைப்பாளரும், பேரறிஞருமான மௌலாளா அபுல்அலிம் ஸித்தீக் அவர்களது நினைவாக அலிமியா இஸ்லாமிய கலாநிலையம் என அழைக்கப்படுவது போன்று, நளீம் ஹாஜியாரின் பெருமுயற்சினாலும் பெருந்தன்மையினாலும் 108

நளீம் ஹாஜியார் அவர்களால் ஜாமிஆ நளீமியாவிற்கான
அத்திவாரக்கல் நடப்படுகின்றது.

Page 56
மெளலானா கலாநிதி பஸ்லூர்ரஹ்மான் அன்ஸாரி அவர்கள் ஜாமிஆ நளீமியா வின் மகாநாட்டு மண்டபத் திற்கான மாதிரிப்படத்தை பார்வையிடுகின்றார்கள். நளீம் ஹாஜியாரும் ஜாமிஆவின் முதல் அதிபர் மெளலவி யூ. எம். தாஸின் நத்வி - அல் அஸ்ஹரி அவர்களும் காணப்படுகின்றனர்.

நளீம் ஹாஜியாருடன் ஜாமிஆவின் பரிபாலன சபை உறுப்பினர்களான அறிஞர் அல்ஹாஜ் ஏ. எம். ஏ அஸீஸ் ஓய்வு பெற்ற நீதிபதி அல்ஹாஜ் ஏ. எம். அமீன் எகிப்திய தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா ஆகியோர்.

Page 57

தோற்றம்.
கலை வனப்புடன் LD60õr Lib.
Z
காட்சியளிக்கும் ஜாமிஆ நளிமியா மகாநாட்டு

Page 58

நிறுவப்படும் இக்கலாநிலையம் நளீமியா இஸ்லாமியகலா நிலையம் என அழைக்கப்படுவதே மிகப் பொருத்தமானதாகும் என இலங்கை இஸ்லாமிய பிரசாரச் சபைச் செயலாளர் ஜனாப். ஏ.ஸி.ஏ வதூத் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனால் அதனை மறுத்துப்பேசிய நளீம் ஹாஜியார் தான் அல்லாஹ் ஒருவனின் திருப்தியை மட்டுமே பெறுவதை நோக்கமாகக் கொண்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே எவ்வகையிலும் தனது பெயர் இக்கலாநிலையத்தோடு இணைக்கப்படுவதைத் தாம் விரும்பவில்லையெனவும் கூறினார். ஆனால் உண்மையில் இது நளீமியா இஸ்லாமிய கலாநிலையம் என அழைக்கப்படுவதே எல்லா வகையிலும் பொருத்தமானது எனவும், அதற்கு நளீம் ஹாஜியார் அவர்கள் மறுக்காது இணக்கம் தெரிவித்தல் வேண்டுமெனவும் கூட்டத்தில் ஏகமனதாக அனைவரும் கருத்துத் தெரிவித்தனர். ஒரு கல்வி நிலையத்தை நிறுவுவியருடைய பெயருடன் இணைத்து அக்கல்வி நிலையம் அழைக்கப்படும் மரபு இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது. நிஸாமுல் முல்கினால் நிறுவப்பட்ட நிஸாமியா, முஸ்தன்ஸர் பில்லாஹ்வினால் நிறுவப்பட்ட முஸ்தன்ஸரியா ஆகிய நிறுவனங்கள் இதற்கு உதாரணங்களக உள்ளன. நளீமியாவின் குறிக்கோளைக் குறிக்கும் வார்த்தைகளாக (MOTTO) எது அமைதல் வேண்டும் என்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. விரிந்த அறிவும், விழுமிய இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாடும் ஒருங்கே அமையப்பெற்ற ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவதே ஜாமிஆ நளீமியாவின் அடிப்படை இலட்சியமாக அமையப் போவதால் “வத்தகுல்லாஹ் வயு அல்லிமுகுமுல்லாஹ்” என்ற குர் ஆனின் கருத்தை ஜாமிஆவின் குறிக்கோளை விளக்கும் சொற்றொடராக. அமைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
113

Page 59
நளிமரியா கலாநிலையம் பொதுவான ஒரு கல்விநிலையமாக மட்டும் அமையாமல் சமூகத்தின் பல்வேறு வகையாக அறிவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு பூரண நிறுவனமாக அமைதல் வேண்டும் என்ற கருத்துப் பலராலும் தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில் நளீமியா இஸ்லாமிய கலாநிலையம் மூன்று முக்கிய பகுதிகளை உள் ளடக் கியதாக அமைதல் வேண் டு மெனவும் தீர்மானிக்கப்பட்டது.
1. இஸ்லாமிய கல்வியையும் உயர்கல்வியையும் ஒருங்கிணைந்த கல்வியைப் போதிக்கும் கலாநிலையமான ஜாமிஆ நளீமியா.
2. அரபு, ஆங்கிலம், உருது, ஆகிய மொழிகளில் இஸ்லாமிய நூல்கள், பிறகலைகள் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய மத்திய நூல் நிலையம்.
3. முஸ்லிம் சமூகத்தின் அறிவுத்தரத்தை உயர்வடையச் செய்யும் வகையில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய சஞ்சிகைகள்ை, நூல்களை வெளியிடும் பணியில் ஈடுபடும் நளிமியா ஜிஸ்லாமிய வெளியீட்டுப் L J GoofluLU 5Lino
ஜாமிஆவை நிறுவுவதில் அதன் ஆரம்பகாலப் பிரிவில் எதிர்நோக்கப்பட்ட மிக அடிப்படையான, பிரச்சினையாக அமைந்தது அதன் பாடத்திட்டத்தை அமைத்தல் தொடர்பான பிரச்சினையாகும். மதக்கல்வியையும், உலகக் கல்வியையும் இணைக்கும் வகையில் அமையப்போகும் இக்கல்வி நிலையம் பின்பற்றக்கூடய பாடத்திட்ட அமைப்பு இலங்கையில் காணப்படவில்லை. எனவே இது இலங்கையில் இஸ்லாமிய கல்வித்துறையில் ஒரு புதுப் பரிசோதனையாக அமைந்தது. இஸ்லாமிய உலகின் பல்வேறு கல்ா நிலையங்களோடு
114
 

தொடர்பு கொண்டு அவற்றின் பாடத்திட்டங்களைப் பெற்று அவற்றில் எமது கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் அம்சங்களை தேர்ந்தெடுத்து ஜாமிஆவின் பாடத்திட்டத்தை அமைத்தல் வேண்டும் என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே, முஸ்லிம் உலகிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்களின் பாடத்திட்டங்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஜாமிஆவின் கல்விக் கொள்கையை வகுப்பதும், அதன் பாடத்திட்டத்தை அமைப்பதும் பெரும் பிரச்சினையாக தொடர்ந்து விளங்கியது. நாம் இத்துறையில் மேற்கொள்ளவுள்ள அறிவுப் பயணத்தின் பாதையை நாம் தெளிவாக இனங்கண்டு கொண்டபோதிலுங் கூட பாதை ஆங்காங்கு தெளிவற்றும், மயக்கமாகவும் உள்ள நிலையை இப்பணியில் பங்குகொண்ட அனைவரும் உணர்ந்தனர்.
இந்நிலையில் ஜாமிஆவின் பாடத்திட்டம் அமைத்தல் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு ஒருநாள் கூடியது. இலங்கையில் நாம் அமைக்கவுள்ள கல்வி நிலையத்திற்கான மாதிரியும், பாடத்திட்ட அமைப்பும் இல்லாததால் பாகிஸ்தான் போன்ற ஒரு முஸ்லிம் நாட்டைத் தரிசித்து அங்குள்ள இஸ்லாமிய கலாநிலையங்களுக்குச் சென்று அவற்றின் செயல்பாட்டை அவதானித்து, அங்குள்ள புகழ்பெற்ற முஸ்லிம் கல்விமான்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்களைச் சந்தித்து அவர்களது ஆலோசனைகளை பெற்று எமது கல்விக் கொள்கையையும் பாடத்திட்டத்தையும் வகுப்பதே மிகப் பொருத்தமானதாக அமையும் என அறிஞர் அஸிஸ் கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்தையும், ஆலோசனை களையும் வரவேற்றுப் பேசிய நளிம் ஹாஜியார், இதற்கான முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் உடனே செய்யும்படி கூறினார். அதனை எங்களுள் அடங்கிய ஒரு குழு பாக்கிஸ்தானுக்கு இப்பயணத்தை மேற்கொண்டு இப்பணியில் ஈடுபடுவதற்காக நியமிக்கப்பட்டது.
115

Page 60
இந்நூலாசிரியர், மெளலவி யூ. எம். தாஸின் (நத்வி - அல்அஸ்ஹரி) அல்ஹாஜ் எம். எச். எம் ஹிபதுல்லஹா ஜனாப். ஏ. ஆர். எம் ஸுலைமான், பாயிஸ் ஆகியோர்களைக் கொண்ட இத்தூதுக்குழு 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணமாகியது. பாகிஸ்தானில் கராச்சி முதல் மேற்கு எல்லையிலுள்ள பெஷாவர் வரை நாங்கள் பயணம் செய்தோம். கராச்சியில் நாங்கள் முதன் முதலில் சந்தித்த உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கலாநிதி இனாமுல்லாகான் அவர்கள், அங்குள்ள கலாநிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மத்ரஸாக்களைத் தரிசிக்கவும் கல்விமான், அறிஞர்கள், சிந்தனையாளர்களைத் தரிசிக்கவும் ஏற்பாடு செய்தார். கராச்சியில் தாருல் உலும் மத்ரஸாவைத் தரிசித்து மெளலானா யூஸுப் பின்னூரி அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
மரபு சார்ந்த, பாரம்பரிய மத்ரஸாக்கல்வி அளிக்கப்படும் ஒரு நிறுவனத்திற்குச் சிறந்த உதாரணமாக இம்மதரஸா விளங்கியது. கராச்சி அலீமியா இஸ்லாமிய கலாநிலையத்தைத் தரிசித்து பேரறிஞர், மெளலானா பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி அவர்களைச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்தோம். இஸ்லாமிய கல்வியையும், நவீன கல்வியையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சி அங்கு நடைபெறுவதையும் அது கணிசமான வெற்றியை அளித்துள்ளதையும் எங்களால் அவதானிக் முடிந்தது. கராச்சி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் மஹ்முத் ஹுசைன், பாகிஸ்தானில் முன்னைநாள் கல்வி அமைச்சரும், கராச்சி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான கலாநிதி இஷ்தியாக் ஹசைன் குறைஷி, கராச்சி பல்கலைக்கழக அரபு, இஸ்லாமியத் துறைத் தலைவர் கலாநிதி எஸ். எம். யூஸுப் ஆகியோரை சந்தித்து அளவளாவினோம். அங்கிருந்து லாகூருக்குச் சென்று பேரறிஞர் ஸெய்யித் அபுல் அஃலா மவ்துரதி
116

அவர்களைச் சந்தித்தோம் அங்கு பஞ்சாப் பல்கலைக்கழகத்தை தரிசித்து துணைவேந்தர் உட்பட பேராசிரியர்களையும் சந்தித்து உரையாடினோம். லாகூரில் மரபுரீதியான மத் ரஸ்ா க் கள் பல வற் றையும் பார் வை யிட் டு , போதனாசிரியர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்தோம். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்று அங்கு இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் உட்படப் பலரை கண்டு உரையாடினோம். ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் பல பிரிவுகளில் நடைபெறும் பணிகள் பற்றியும் அறிந்த கொண்டோம். அங் கிருந் து பெஷாவர் சென்று அங் குள் ள பல்கலைக்கழகத்தையும், மரபு சார்ந்த பல இஸ்லாமிய கலாநிலையங்களையும் தரிசித்தோம்.
பாகிஸ்தானில் நாங்கள் பாரம்பரிய கல்வி முறையில் கற்று, ஹதீஸ் கலைத்துறையில் நிபுணத்துவம் பெற்று பாரம்பரிய கல்விமுறையில் அமைந்த மத்ரஸாவிற்கு அதிபராக இருக்கும் பேரறிஞர் மெளலானா யூஸுப் பின்னுரி முதல், பாரம்பரியக் கல்வியையும், நவீன கல்வியையும் தனது ஆளுமையில் இணைத்து இந்த இரண்டு கல்வி முறைகளின் இணைப்பைக் கண்ட ஒரு கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் ஒரு கலாநிலையத்தின் அதிபரான கலாநிதி மெளலானா பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி, பேராசிரியர் இஷ்தியாக் ஹ"சைன் குறைஷி போன்ற ஆய்வாளர்கள் உட்பட, நவீன இஸ்லாமிய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவராக விளங்கிய மெளலானா அபுல் அஃலா மெளது.ாதி ஈறாக இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தைப் பல்வேறு துறைகளில் பிரதிநிதித் துவப்படுத்திய பாகிஸ்தானின் கல்விமான்கள் அறிஞர்கள், சிந்தனையாளர்களைச் சந்தித்து உரையாடிய பின்னர் நாங்கள் பயணம் செய்ய இருந்த பாதை எவ்வளவு கஷ்டமானது
117

Page 61
என்பதை உணர்ந்தோம். நாங்கள் சந்தித்த அனைவரும் இத்தகைய ஒரு பணி இன்றைய காலகட்டத்தில் மிக அவசிய, அவசரத் தேவை என குறிப்பிட்டதோடு இஸ்லாமிய பாரம்பரியக் கல்வியையும் நவீன கல்வியையும் இணைக்கும் இம்முயற்சி முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு நாட்டில் மேற்கொள்ளப் பட இருப்பது குறித்து ஆச்சரியப்பட்டதோடு இம் முயற்சி குறித்து பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி உற்சாகமும், தூண்டுதலும் அளித்தனர். பாகிஸ்தானில் கூட இத்தகைய ஒரு கலாநிலையம் (அலிமியாவில் மட்டும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது) காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர்கள் இப்பணியில் எதிர் காலத்தில் நாங்கள் எதிர் நோக் கவிருக்கும் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினர். பாகிஸ்தானில் ஒரு திசையிலிருந்து மறுதிசை வரை நாங்கள் பயணம் செய்தும் நளிம் ஹாஜியார் அமைக்கத் திட்டமிட்டுள்ள ஜாமிஆவிற்கான ஒரு முன்மாதிரியை காணமுடியவில்லை. ஆனால் சன்மார்க்க கல்வியும், உலகக் கல்வியும் இணைந்த ஒரு கல்வி அமைப்பின் மூலமே இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் அறைகூவல்களுக்குப் பதில் அளிக்கத்தக்க புத்திஜீவிகள் உருவாக முடியும் என்ற கருத்து பரவலாக அனைவராலும் வலியுறுத்தப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மையோராக வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் இத்தகைய ஒரு காத்திரமான பணியில் ஈடுபட முன் வந்திருக்கும் நளிம் ஹாஜியாரின் இம்மகத்தான பங்களிப்பினை அனைவரும் பாராட்டிப் பேசினர். செல்வந்தர்களினதும் அறிஞர்களினதும் ஒத்துழைப்பினால் சாதிக்கப்பட்ட பல அறிவுப் பணிகளை எங்களுக்கு நினைவூட்டினர்.
இலங்கை திரும்பியதும் இக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் திட்டமிட்டு இஸ்லாமிய
118

உலகிலுள்ள பல வேறு கலாநிலையங் ளரின் பாடத் திட்டங்களிலுள்ள பயனுள் ள அம் சங்கள் இணைக்கப்பட்டு ஜாமிஆவின் பாடத்திட்டம் மிக ஆழமான திட்டமிடுதல், கடுமையான உழைப்பு கருத்துப் பரிமாற்றத்தின் பின்னர் உருவாகியது.
1972ஆம் ஆண்டு 28ஆம் திகதி நளிம் ஹாஜியார் அவர்கள் ஜாமிஆ நளிமியாவிற்கான அடிக்கல்லை நாட்டினர்கள். அவர்களது தூய்மையான சிந்தனையைக் கருத்திற்கொண்ட அல்லாஹ் அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் நாட்டப்பட்ட அந்தக் கல் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையப்போகின்றது என்பதனை அங்கு கூடியிருந்த பலர் அன்று நிச்சயம் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அந்தக் கல்லை நாட்டிவிட்டு, தன்னையே மறந்த நிலையில் உருக்கமான ஓர் உரையை நிகழ்த்திய நளீம் ஹாஜியார் தனது உள்ளத்தில் துளிர்த்த ஒரு விதை நான்கு பக்கமும் கிளைபரப்பி எதிர்காலத்தில் இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கு அறிவு நிழல் வழங்கும் விருட்சமாக வளரப் போகின்றது என்பதனை நிச்சயம் மானசீகமாக உணர்ந்திருந்தார் என்பதனை அவர் உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தும்போது உதிர்த்த கண்ணீர் உணர்த்தியது. அங்கிருந்த அனைவரும் அவரது உரையினால் உணர்ச் சிமேலிட வடித்த நன்றிக் கண்ணிரினால் போஷிக்கப்பட்ட ஜாமிஆ என்ற விதை மண்ணிலிருந்து துளிர்விட்டு வளர ஆரம்பித்தது.
"நல்ல வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றது. அதன்வேர் பூமியின் ஆழத்தில் பதிந்திருக்கின்றது. அதன் கிளைகள் வானளாவி உயர்ந்திருக்கின்றன எந்நேரமும் அம்மரம் தன்
119

Page 62
இறைவனின் ஆணைக்கேற்ப கணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் படிப்பினை பெற வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான்."
இப்ராஹிம் 24, 25
1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ந் திகதி ஜாமிஆ நளீமியாவின் அங்குரார்ப்பண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த அல்ஹாஜ் பதியுத்தீன் மஹற்மூத் அவர்கள் இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்கள். அதன் முதல் அதிபராக மர்ஹ"ம் யூ.எம். தாஸிம் அல் - அஸ்ஹரி அவர்கள் பதவியேற்றார்கள். போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தைந்து மாணவர்களுக்கான வகுப்பை அப்போது இலங்கைக்கு வருகை தந்திருந்த தப்லீக் இயக்க ஹஸ்ரத்ஜி ஆரம்பித்து வைத்தார்.
அன்று முதல் ஜாமிஆ இந்நாட்டு முஸ்லிங்களின் பார்வையின் மையமாக மாறியது. பலர் நளிம் ஹாஜியாரின் இக்கல்விப் பணியை வாழ்த்தி வரவேற்றனர். பரந்த மனப்பான்மையும், தூர நோக்கமும் படைத்தோர் இப்பணி காலத்தின் தேவை எனக் கருதி கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ஆங்காங்கு சில விமர்சனக் குரல்களும் ஒலித்தன. உலகக்கல்வியையும், சன்மார்க்கக் கல்வியையும், இணைத்த ஒரு கல்வித்திட்டத்திற்கான இம்முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும், இறுதியில் உலக கல்வியையும், சன்மார்க்கக் கல்வியையும் ஒழுங்கே கற்காத, மார்க்கக் கல்வி பற்றிய விளக்கமும் அற்ற இரண்டுங்கெட்ட ஒரு பிரிவினரையே இது உருவாக்கும் எனச் சிலர் கண்டனக் குரல் எழுப்பினர். இத்தகைய ஒரு பயனற்ற முயற்சியில் ஈடுபடாது தொழில் வாய்ப்பு அற்றவர்களுக்கு உதவும் வகையில் தனது பணத்தை முதலீடு செய்து நளிம் ஹாஜியார்
120
 

ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்திருந்தால் இதைவிடப் பயனுடையதாக அமைந்திருக்கும் என்பது இன்னொரு சாராரின் விமர்சனப் பார்வை. ஆனால் இந்தக் கண்டனங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில், இப்பணியை இன்றைய காலகட்டத்தில் ஒர் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யும் காத்திரமான ஒரு பணி எனக் கண்டு, அதற்கு ஆதரவுக்கரம் நீட்டி, இம்மகத்தான அறிவுப் பணியில் ஈடுபடும் நளிம் ஹாஜியாருக்காகக் பிரார்த்தித்தன தூய்மையான மாசு மறுவுமற்ற உள்ளங்கள். 1973 ஆம் ஆண்டு ஜாமிஆ நளிமியா நிறுவப்பட்டதானது இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கி வைத்தது. இஸ்லாமிய கலைகளையும் நவீன கலைகளையும் ஏககாலத்தில் கற்று அறிவின் களம் விசாலமடைந்து ஒழுக்க ஆத்மீகப் பண்பாட்டுப் பயிற்சியினால் இஸ்லாமிய ஆளுமையின் ஒளிபெற்ற புத்திஜீவிகளின் பரம்பரையொன்றை உருவாக்குவதே ஜாமிஆவின் இலட்சியமாக அமைந்தது.
அது நிறுவப்பட்டு மிக்ககுறுகிய காலப்பிரிவில் ஜாமிஆ அதன் கல்வித்துறையில் மிகத்தீவிர வளர்ச்சி கண்டது. அதன் நூலகம், வெளியீட்டுப் பணியகம், ஆராய்ச்சி நிறுவனம், ஆகிய துறைகள் காத்திரமான பணிகளில் ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளன.அது நிறுவப்பட்டு மிகக் குறுகிய காலப்பிரிவல் இத்தகைய சிறப்பான வளர்ச்சியைக் காண்பதற்கு அடிப்படைக் காரணம் அதனை நிறுவிய நளிம் ஹாஜியாரின் தூய்மையான சிந்தனையும், அல்லாஹ்வின் திருப்தி ஒன்றையே நாடி அவர் மேற்கொண்ட அயரா உழைப்பும், தியாகமுமாகும்.
ஜாமிஆவை அவ்வப்போது தரிசித்த கல்விமான்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் ஜாமிஆவின் பணியையும், அதனை நிறுவிய நளீம் ஹாஜியாரின் தியாக உணர்வையும்
121

Page 63
பாராட்டி ஜாமிஆவின் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பதித்துள்ள வார்த்தைகள், இஸ்லாமிய கல்விக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் நளீம் ஹாஜியாரின் பங்களிப்பின் சின்னமாக ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்ற உணர்வை வெளியிட்டுள்ளன.
நளிம் ஹாஜியார் அவரின் உள்ளத்தில் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஒரு ஆவலை - வேட்கையை எங்களில் சிலருக்கு ஒரு தடவை தெரியப்படுத்தினார். "அல்லாஹ்வின் நல்லடியார்களில் ஒருவனாக நான் ஆக வேண்டும். எனது பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். அதற்காக துஆ செய்யுங்கள்" என அடிக்கடி அவர் புலரிடமும் கூறுவதுண்டு. ஆனால் அவரது உள்ளத்தின் வேட்கையாக ஆழத்தில் மறைந்துள்ள அந்த ஆவல்தான் என்ன? என அறிந்து கொள்ள உள்ளம் துடித்தபோது அவர் பேசினார்.
"எனக்கு ஒரே ஒரு ஆவல்: நாம் எல்லோரும் என்றாவது ஒரு நாள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்துதானே ஆக வேண்டும். அப்படி நான் உலகைவிட்டுப் பிரிந்தால், இன்சா அல்லாஹற் ஜாமிஆ நளீமியாவின் பூமியில் நான் அடக்கம் செய்யப்படுவதையே விரும்புகின்றேன். நான் அதனை நிறுவியவன் என்பதற்காக அல்ல. அல்லாஹ்வினதும் ரஸ"லினதும் பெயர் அடிக்கடி மொழியப்படும் அந்தப் புனிதமான சூழலின் பாக்கியத்தையும், என்னைக் கடந்து செல்லும் மாணவர்களின் பிரார்த்தனையையும் நான் பெறல் வேண்டும் என்பதே இதற்கான காரணமாகும்."
ஜாமிஆ நளீமியா நளிம் ஹாஜியாரின் உள்ளத்தோடும்,
உணர்வுகளோடும், எந்த அளவு பின்னிப்பிணைந்து உள்ளது என்பதற்கு இதைவிட என்ன சான்று தான் வேண்டும்?
122

6 கல்வி மறுமலர்ச்சிக்குக் களம் அமைத்தவர்
5ளிம் ஹாஜியார் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றார்கள். சன்மார்க்கக் கல்விக்காக ஜாமிஆ நளீமியா, முஸ்லிம்களின் பல்கலைக்கழக உயர் கல்விக்குத் துணைபுரிய இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம், தொழில் நுட்பக் கல்வியில் பின்தங்கிய முஸ்லிம் சமூகத்திற்கு அத்துறையில் ஓர் உந்துதல் சக்தியாக அமைய இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரி, இவ்வாறு இலங்கை முஸ்லிம்களின் கல்வியில் பல்வேறு துறைகளைப் பின்னிப் பிணைந்துள்ளது 916) JD gif கல்விப்பணி.
123

Page 64
நளிம் ஹாஜியார் அவர்களின் பணிகள், அவை எத்துறை சார்ந்த பணிகளாக இருப்பினும் சரியே, அவற்றின் ஆரம்பம் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வரலாறு உள்ளது. இவற்றுள் ஒரு சுவையான வரலாறே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்பம் பற்றிய வரலாறாகும்.
1980 ஆம் ஆண்டு - நளிம் ஹாஜியாரும் நானும் புனித உம்ராவிற்குச் சென்றுவிட்டு, ஜித்தாவிலிருந்து விமானம் மூலம் கராச்சியை வந்தடைந்தோம். அப்போது நள்ளிரவு 12 மணி ஆகியிருந்தது. விமான நிலையத்திலிருந்து கராச்சி இன்டர்கோன்டினென்டல் ஹோட்டலை வந்தடைந்த நாங்கள் இரவு படுக்கைக்குச் செல்லும்போது நள்ளிரவு இரண்டு மணியாகி விட்டது பிரயாணக் களைப்பினாலும், நீண்ட பயணத்தின் அலுப்பினாலும் உடல் அசதியாக இருந்ததால் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. டாக்டர் நீங்கள் உறங்கி விட்டீர்களா? பக்கத்திலுள்ள கட்டிலில் படுத்திருந்த நளிம் ஹாஜியார் என்னை நோக்கிக் கேட்டார். இரவில் இருளில், பிரயாணக் களைப்பில் அளவுக்கு மீறிய அசதியினால் நானும் தூக்கமின்றி கட்டிலில் புரளுவதை அவர் உணர்ந்திருத்தில் வேண்டும் "எனக்கு தூக்கம் வரவில்லை எனப் பதிலளித்தேன்.
"டாக்டர் எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது. அதனை நான் கூறப்போகின்றேன். அதனை நீங்கள் மறக்காது மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள் காலையில் நாங்கள் அது பற்றி விவரமாகக் கதைக்கலாம்” என்றார்.
இந்த நடுநிசியில் அவருக்கு திடீரெனத் தோன்றிய இந்த யோசனை தான் என்ன? மனதில் மறக்காமல் பதியவைக்கும்படி அவர் வலியுறுத்தும் அளவிற்கு முக்கியம் எனக்கருதும் அவரது உள்ளத்தில் தோன்றிய அந்த சிந்தனை
124
 

தான் என்ன? அந்தச் சில கணங்களுள் அலை அலையாய் பல வினாக்கள் எனது உள்ளத்தில் தோன்றின. விளக்கெல்லாம் அணைக்கப்பட்டிருந்த அந்த அறையின் இருளில் அவரது குரல் ஒலிக்க ஆரம்பித்தது. "டாக்டர், இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வியில் குறிப்பாக பல்கலைக்கழக உயர்கல்வியில் மிகப் பிற்போக்காக இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. முஸ்லிம் பாடசாலைகளில் இந்த உயர்கல்விக்கான வசதியரின் ற பல மாணவர் கள் எவ்வளவோ கஷ்டப்படுகின்றார்கள். பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்கள் கல்வியைத் தொடர வசதியின்றி அவர்களது கல்வியை இடைவழியில் நிறுத்தி விடுகின்றார்கள்? இந்த நிலை தொடர்ந்தால் எங்களது சமூகத்தின் எதிர்காலம் எப்படி அமையுமோ என எனக்குக் கவலையாக உள்ளது. எனவே இதற்கு நாங்கள் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தல் வேண்டும்? இன்ஷா அல்லாஹ் இப்போது நீங்கள் படுத்துத் தூங்குங்கள், காலையில் இதைப் பற்றி பேசுவோம்" என்றார்.
அவரது பேச்சில், ஒரு தெளிவையும், உறுதியையும் என்னால் உணர முடிந்தது. சமூகத்தைப் பற்றிய ஆழமான கவலையையும், கரிசனையையும் என்னால் அவதானிக்க முடிந்தது. பாடசாலைக் கல்வியை ஐந்தாம் வகுப்புடன் தனது வறுமை காரணமாக முடித்துக் கொண்ட இந்த மனிதர் தனது சமூகத்தின் பல்கலைக்கழக கல்வி பற்றி கவலை கொள்கின்றார். சொகுசும், வசதியும் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படுக்கையில் நடுநிசியில் அமைதியாகத் துயில்கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தும், அவரது சகோதர முஸ்லிம்களின், ஏழைச் சிறார்களின் கல்வி நிலை பற்றிய கவலை அவரது அமைதியைக் குலைக்கின்றது. எத்தகைய அற்புதமான மனிதர்? எனக்குள் இந்த மனிதரைப் பற்றிய பல உணர்வுகள்
125

Page 65
தோன்றின. ஏதோ ஒரு புனித பணிக்காக இறைவன் இந்த மனிதரை வழி நடத்துவது போன்ற உணர்வு எனக்குத் தோன்றியது. புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு வந்த தூய்மையான உணர்வுகள் உள்ளத்தில் பசுமையாக உள்ள நிலையில் அவரது உள்ளத்தில் தோன்றிய இந்த சிந்தனை இறையருளினால் சமூகத்தில் ஒரு பெரும் பயனாக அமையப் போகின்றது என்ற உறுதியான, ஆழமான, பலமான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
காலையில் எழுந்து சுபஹ" தொழுகையை முடித்தபின்னர் இருவரும் ஹோட்டல் அறை யில், அவரது உள்ளத்தில் இரவு தோன்றிய கருத்து பற்றி விரிவாக உரையாடினோம். இலங்கை முஸ்லிம் சமூகத்தினை உயர்கல்வித் துறையில் முன்னேற்றமடையச் செய்வதற்கு திட்டமிட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இப்பணி நன்கு ஒழுங்கு படுத்தப்பட்டு முழு நாட்டையும் தழுவி, தேசியரீதியில் நடைபெறல் வேண்டும் என்ற கருத்தையும் அவர் மிக அழுத்தமாகக் குறிப்பிட்டார். நாங்கள் இலங்கை திரும்பியதும், கல்வித்துறையில் அனுபவமும், ஈடுபாடும் கொண்ட சிலரை அழைத்து இது பற்றி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்துவது சிறந்தது எனக் கூறினேன். நாடு திரும்பியதும் இத்தகையோரைத் தொடர்பு கொண்டு, அவர் திட்டமிட்டுள்ள கல்விப்பணி சம்பந்தமான
ஒரு பூர்வாங்கக் கூட்டத்தைக் கூடும் பொறுப்பை என்னிடம்
ஒப்படைத்தார். இக்கூட்டம் காலந்தாழ்த்தாது மிக அவசரமாகக் கூட்டப்படல் வேண்டும் என்பதில் அவர் மிகக் கரிசனை கொண்டிருந்தார்.
நாடு திரும்பியதும் கல்வித்துறையிலும், பொதுப் பணியிலும் ஆர்வமும், அனுபவமும், ஈடுபாடும் உள்ள கல்விமான்கள், சமூக ஆர்வங்களில் சிலரை நளீம் ஹாஜியாரின்
126

இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்காக அழைப்தற்குத் தொடர்பு கொண்டேன். நான் அவர்களிடம் நளிம் ஹாஜியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டு அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்தபோது அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டனர். 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தொன்பதாம் திகதி இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளவத்தையுள்ள அலெக்சாந்ரா வீதியிலுள்ள நளிம் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்றது.
அந்த ஆரம்ப கூட்டத்தில் உரையாற்றிய நளீம் ஹாஜியார் அவர்கள் இலங்கையில் முஸ்லிம் சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான அடிப்படைக் காரணம், முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் - குறிப்பாக உயர்கல்வித்துறையில் பின்தங்கியிருப்பதேயாகும் ଗTଶ୪T& குறிப்பிட்டு, இந்நிலையை மாற்றியமைப்பதற்கு ஒரு குறுகியகால திட்டத்தை வகுத்துச் செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அங்கு வருகை தந்திருந்த அனைவரும் நளீம் ஹாஜியாரின் இக்கருத்தை வரவேற்று, அது இன்றைய காலகட்டத்தின் மிக அவசி யமான ஒரு பணி எனக் கூறி, அவர்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்க உறுதியளித்தனர். ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு, கருத்துப்பரிமாறல்கள், திட்டமிடல் இயக்க அமைப்பு முறைகள் பற்றிய பணிகளில் கழிந்து இறுதியாக இம்முயற்சியின் முற்றுப்பேறாக இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் 1981ம் ஆண்டு தோற்றமெடுத்தது. கல்வியின் மூலம் முஸ்லிம் சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்று விப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை அடிப்படை இலட்சியமாகக் கொண்டதாக இந்த இயக்கம் விளங்கப்போவதால் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் என இந்த அமைப்பு அழைக்கப்படல் வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வி, சமூக,
127

Page 66
அரசியல், பொருளாதார, கலாச்சார, பண்பாட்டுத் துறை களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். இதை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த எல்லாப்பிரச்சினைகளையும் ஏககாலத்தில் அணுக முற்பட்டு எதையும் சாதிக்க முடியாமல் தோல்வியடைந்த பல அமைப்புக்கள், ஸ்தாபனங்கள் நிறுவனங்களின் கசப்பான வரலாறு இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ஒரு பாடமாக அமைந்தது. எனவே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் ஆராய்ந்து, இப்பிரச்சினைகளுக் கெல்லாம் அடிப்படைக் காரணங்களை இனங்காணும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியில், நளிம் ஹாஜியாரின் சிந்தனையில் உருவாகிய அந்த உண்மையை உறுதிப்படுத்தும் வகையில், முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினையாக கல்விப்பிரச்சினையை இனங்கண்டு இப்பிரச்சினையைத் தீர்ப்பதை தனது முக்கிய குறிக்கோளாக இஸ்லாமிய மறு மலர்ச்சி இயக்கம் வரித்துக் கொண்டது.
முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் குறிப்பாக உயர்கல்வித்துறையில் மிகப் பின்தங்கியிருப் பதற்கான காரணம் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் ஆராய்வதன் அவசியத்தை நளிம் ஹாஜியார் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் மத்திய சபை பல ஆலோசனைக் கூட்டத் தொடர்களை நடாத்தியது. இறுதியாக முஸ்லிம் கள் உயர் கல் வித் துறையில் பின்தங்கியிருப்பதற்கான காரணம் பின்வரும் குறைபாடுகள் என இனங்காணப்பட்டன.
l. முஸ்லிம் பாடசாலைகளில் உயர் கல்விக்கான,
குறிப்பாக விஞ்ஞான கல்விக்கான வசதிகள் GESIT GOOTILULU LIT60) D.
128

2. விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையும், ஆய்வுகூட
வசதியின்மையும்
3. வசதியற்ற நிலை காரணமாக பெரும்பான்மையான
முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாதிருத்தல்.
எனவே முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வித் துறையில் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணும் வகையில் பின் வரும் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
l. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பல்வேறு
பாடசாலைகளில் பரந்து, சிதறி உள்ள விஞ்ஞான ஆசிரியர்களின் வளங்களை அம்மாவட்டத்தின் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தத் துணைசெய்யும். வகையில், மாவட்டங்கள் தோறும், போக்குவரத்து வசதியுள்ள ஒரு மத்திய இடத்தில் அந்த விஞ்ஞான ஆசிரியர்களைக் கொண்டு வர இறுதி வகுப்புக்கள் நடாத்துதல்.
2. பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான, மருத்துவ,
பொறியியல் பாடங்களுக்கு அனுமதி பெற்றும் வசதியின்மை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாதிருக்கின்ற மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கல்.
3. இயக்கத்தின் நீண்ட காலத் திட்டங்களுள் ஒன்றாக
முஸ்லிம்களுக்கான தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடல்.
129

Page 67
இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் 1981 ஆம் ஆண்டு ஜனவரி பதினான்காம் திகதி உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயக்கத்தையும், அதன் நோக்கம், செயல்பாடுகள், வேலைத்திட்டங்களையும் தேசிய ரீதியில் பரவலாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆரம்பப்படியாக இலங்கை முழுவதும் இயக்கத்தைப் பற்றிய அறிமுகக்கூட்டங்கள் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் கல்விப்பணிகள், நாடளாவிய ரீதியில், ஒவ்வொரு குக்கிராமத்தையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும் என்பதில் நளிம் ஹாஜியார் மிக அக்கறை காட்டினார்.
"ஒவ்வொரு மாவட்டத்திலும் இயக்கத்தின் அறிமுகக்கூட்டங்களை நடத்தி, மக்களுக்கு கல்வித்துறையில் எமது சமூகத்தின் பிற்போக்கான நிலையை எடுத்து விளக்கி, இந்த நிலையை மாற்றியமைத்து, எமது சமூகத்தைக் கல்வித்துறையில் மேம்பாடடையச் செய்வதற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டங்கள் பற்றி அவர்களுக்கு விளக்குதல் வேண்டும். இதுவும் ஒரு வகையில் ஒரு தஃவாப் பணிதான் நான் எந்த முக்கிய வேலைகள் இருந்தாலு இந்த ஒவ்வொரு கூட்டத்திற்கும், இன்சா அல்லாஹ் நிச்சயம் வருவேன்" என அவர்கள் வாராந்த நிர்வாகக்குழு கூட்டமொன்றில் குறிப்பிட்டார்கள்.
இயக்கத்தின் அறிமுகக் கூட்டத்தொடரில் முதலாவது கூட்டம் 26.6.1981 இல் கம்பளை ஸாஹிராக் கல்லூரியில்
நெைபற்றது. அக் கூட்டம் பற்றிக் கேள்வியுற்று
கல்ஹின்னையைச் சேர்ந்த சில முஸ்லிம் மாணவிகள், நளிம் ஹாஜியாரைச் சந்தித்து அவர்கள் கல்வித்துறையில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் பற்றிக் கலந்து பேசுவதற்கு
130

og Loïlogo@III, 1,9 Los qIIẾgioē (apie Quo so se çõigoko Iç-io) Iingosgos ĝifiņasĞơi 19$$Inổri sgìloof “sụTI $9.9 If sog) ‘qoạ9;s qils quo qiis s-ig II-I lønnsopitsasgos qiong sĩ f) 19@sofi, Qi Qo asofi) og sự sẽ sẽsiog søsnơigoas dos pirmssona, qųoos Is In@1959 Ifiliyo @$posĩ Q) \ge Isố loĝiĝossins to spasqısīgi inginasays @

Page 68
3
பேராசிரியர் குர்ஷித் அஹ்மத்துடன் நளீம் ஹாஜியார் ᏰᏏᎫ6Ꮌ) 6ᏈᏈᎱ அதிபர் மெளலவி ஏ, எம். ஸி. எம். புகாரியும் உடன் காணப்படுகின்றார்.
பேரறிஞரும், இஸ்லாமிய சிந்தனையாளருமான ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி ஜாமிஆ, மகாநாட்டு மண்டபத்தில் உரை நிகழ்த்துகின்றார். அருகில் அமர்ந்திருப்பவர் ஜாமிஆவின் முன்னைநாள் அதிபர் மெளலானா யூஸுப் த லால் அலி (டி.வோரேஸ்ரோ)
 
 
 
 
 
 

இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியின் அழகிய தோற்றம். இயக்கச் செயலாளர் ஜனாப் எஸ். எச். எம். யாஸின் கல்லூரி அதிபருடன் காணப்படுகிறார்.

Page 69
UAA TECHNICAL TRAINING INSTITUTE
SHRI LANKA
இக்ரஃ தொழில்நுட்பக்கல்லூரி திறப்புவிழாவின் போது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களுடன் நளீம் ஹாஜியார் உரையாடுகிறார். அருகிலிருப்பவர் இக்ரஃ நிறுவனத் தலைவர் கலாநிதி முஹம்மத் அப்துயமானி அவர்கள்.

வந்திருந்தார்கள். இது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அன்றைய அறிமுகக் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய அவர், அம்மாணவிகள் கல்ஹின்னையிலிருந்து கம்பளைக்கு தங்கள் கல்விப் பிரச்சினை பற்றி எடுத்துக்கூற வந்திருப்பதானது சமூகத்தில் கல்விக்கான தாகம் எவ்வளவு தூரம் காணப்படுகின்றதென்றும், அத்தகைய கல்வித்தாகம் உடையோரின் அபிலாஷைகளையும் தேவைகளையுமம் பூர்த்தி செய்யும் முயற்சியே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் பணியாக அமையப் போகின்றது எனவும் குறிப்பிட்டார். கம்பளைக் கூட்டத்தைத் தொடர்ந்து பின்வரும் வரிசையில் அறிமுகக் கூட்டங்கள் நடைபெற்றன.
கேகாலை மாவட்டம்
26.6.1981
மாவனல்லை பத்ரியா மகாவித்தியாலயம்
அநுராதபுர மாவட்டம்
27.9.1981
அநுராதபுரம் ஸாஹிரா மகாவித்தியாலயம்
மன்னார் மாவட்டம்
28. 9.1981 மன்னார் அல் அஸ்ஹர் மாகாவித்தியாலயம்
கல்முனை
31.10.1981
கல்முனை ஸாஹிரா மகாவித்தியாலயம்
ஏறாவூர்
1.11.1981
அலிகார் வித்தியாலயம்
குருநாகலை
21.11.1981
குருநாகலை ஜும்ஆ மஸ்ஜித்
135

Page 70
அந்த அறிமுகக் கூட்டங்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் மிகச் சிறப்பாக நடந்தன. இதற்கிடையில் 22, 2. 1982 ஆம் ஆண்டு இயக்கத்தின் முதலாவது வருடாந்த விழா கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இலங்கையின் LUGU பகுதிகளிலிருந்தும் பேராளர்களும், அழைப்பாளர்களும், கல்வித்துறையிலும், சமூகப்பணியிலும் ஆர்வங்கொண்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். சமூகத்தின் மூத்த தலைவர்களான மர்ஹ0ம் ஸேர்ராஸிக்பரீத், டாக்டர் எம். ஸி. எம். கலீல் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்முத், அப்போது வெளிநாட்டமைச்சராக இருந்த ஜனாப் ஏ. ஸி. எஸ் ஹமீத் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு இயக்கத்தின் பணிகளைப் பாராட்டிப் பேசினர். இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் அது நிறுவப்பட்டு குறுகிய ஒராண்டுக் காலப்பிரிவில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் அதன் செல்வாக்கையும் மதிப்பீடு செய்ய இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து அறிமுகக் கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பமாயிற்று. இவை பின்வரும் வரிசையில் நடைபெற்றன.
பொலன்னறுவை LDT 6. u Lilo 6. 3. 82 கதுருவெல ஜும்ஆ மஸ்ஜித்
திருகோணமலை மாவட்டம் 7, 3. 82 மூதூர்
மகாவித்தியாலயம்
புத்தளம் DfTad LLio 29. 1. 83 புத்தளம் பாதிமா
மகளிர் கல்லூரி
36

காலி மாவட்டம் 5. 5. 84 மள்ஹருஸ்ஸுல்ஹறியா
மகாவித்தியாலயம்
மாத்தறை மாவட்டம் 6. 5. 84 மாத்தறை ஜும்ஆ
மஸ்ஜித்
கம்பஹா மாவட்டம் 16. 12. 84 திஹாரிய முஸ்லிம்
வித்தியாலயம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் 21, 10, 84 அம்பாந்தோட்டை
ஸாஹிரா வித்தியாலயம்
இந்த அறிமுகக்கூட்டங்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் நடைபெற்ற திகதிகளை நோக்கும்போது, இவை எவ்வளவு நுட்பமாகத் திட்டமிடப்பட்டு, கிரமமாக நடை பெற்றுள்ளன என்பதை அவதானிக்கலாம். நளிம் ஹாஜியார் அவர்கள் தங்களது வியாபார அலுவல்கள், பல்வேறு சிரமங்கள் மத்தியில் இயக்க உறுப்பினர்களோடு இக் கூட்டங்கள் அனைத்துக்கும் வருகை தந்து அக்கூட்டங்களுக்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்கள். முஸ்லிம்களின் கல்வியில் பின்தங்கிய நிலை உயர்கல்விக்கான அவசியம், முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் வகுத்துள்ள திட்டங்கள் பற்றி அவரது உரையில் மிக ஆழமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் விளக்கினார்கள். அவரது இளமைக் காலத்தில் வறுமை காரணமாக கல்விப் பாக்கியத்தை இ ழந்ததையும், அந்நிலை ஏனைய மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் அவர்களுக்கு கைகொடுத்து உதவுவதே தமது நோக்கம் எனவும் இக்கூட்டங்களில் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த அறிமுகக் கூட்டங்களினடியாக மறுமலர்ச்சி இயக்கம் ஒரு தேசிய பரிமாணத்தைப் பெற்றது. முஸ்லிம்கள் வாழும்
137

Page 71
முக்கிய பிரதேசங்கள் அனைத்தையும் தழுவியதாக அதன் பணி அமைந்தது.
1942 - 1965 ஆண்டுவரையிலான பல்கலைக்கழக மாணவர் அனுமதிப்பட்டியல் இலங்கை முஸ்லிம்கள் உயர் கல்வித்துறையில் மிகப் பின் தங்கிய நிலையில் உள்ளனர். என்பதனை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 1942 ஆண்டு முதல் 1965 வரையிலான காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கையும், முஸ்லிம் மாணவர் எண்ணிக்கை விகிதமும்
பின்வருமாறு:
வருடம் மொத்த மாணவர் முஸ்லிம் மாணவர் 1942 904 25 2.7% 1943 904 21 2.3% 1944 996 29 2.9% 1945 365 28 2.6% 1946 1302 37 2.87ሄ 1947 1554. 45 2.9% 1948 1589 40 2.5% 1949 1844 40 2.37ሄ 1950 2030 46 2.3% 1951 2210 46 2.1% 1952 22O2 39 1.8% 1953 2392 41 1.7% 1954 2434 42 1.7% 1955 2431 54 2.8% 1956 2534 57 2.3% 1957 2728 54 2.0% 1958 2950 72 2.6% 1959 3177 66 2.1% 1960 3684 87 1.8% 1961 1465 84 1.8% 1962 5137 39 1.7% 1963 57O6 51 I.5% 1965 10723 218 2.0%
138
 

1970 - 80 ஆம் ஆண்டு பல் கலைக் கழக அனுமதிப்பட்டியலை நோக்கும் போது இதே நிலை நீடிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த 40 வருட காலப் புள்ளி விபரங்கள் முஸ்லிம்கள் உயர்கல்வித் துறையில் பின்தங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இந்நிலைய்ை மாற்றியமைத்து முஸ்லிம்களை உயர்கல்வித் துறையில் ஊக்குவிக்க ஓர் உந்துதல் சக்தியாக மிளிருவதே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் அடிப்படைப் பணியாக அமைந்தது.
முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பாக விஞ்ஞானம் போதிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக் குறை, முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பிட்ட பாடசாலையில் கணித பாடத்திற்கான ஆசிரியர் காணப்பட, அங்கு விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர் இல்லா நிலை, இன்னொரு பாட சாலையில் விஞ்ஞான ஆசிரியர் இருக்க, கணித ஆசிரியர் காணப்படா நிலை, என்பவை முஸ்லிம் மாணவர்களின் கல்வியை மிகப் பாதிக்கும் அம்சங்களாகக் காணப்படுவதை முஸ்லிம் உயர்கல்வி தொடர்பாக இயக்கம் நடாத்திய ஆய்வுகளிலிருந்து புலனாகியது.
அல்லாஹ்வின் பேரருளால் இப்பிரச்சினைக்கான தீர்வை நளிம் ஹாஜியாரின் தலைமையில் கூடிய மத்திய குழு பல் வேறு 95 GosisT G3 GooT IT LI L - 95 677f) Gó ஆராய் ந் தது . இப்பிரச்சினையைத் தீர்க்க, ஒரு குறுகிய காலத் திட்டத்தை வகுத்துச் செயல்படுவதன் அவசியத்தை இம்மத்திய குழுக்கூட்டத்தில் நளிம் ஹாஜியார் வலியுறுத்தினார். இம்மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்கள் அனைவரினதும் சேவையை மாணவர்கள் பெறக்கூடிய வகையில் மாவட்டத்தின் மத்திய இடங்களில் வார இறுதி விஞ்ஞான வகுப்புகளை நடாத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வகுப்பில் போதிக்கும்
139

Page 72
ஆசிரியர்களுக்கான சம்பளம், ஏனைய செலவுகள் அனைத்தையும் தான் பொறுப்பேற்பதாக நளிம் ஹாஜியார் முன்வந்தார். 1981 ஆம் ஆண்டு இத்தகைய வார இறுதி வகுப்புக்கள் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) வகுப்பு மாணவர்களுக்காக 46 மத்திய நிலையங்களில் நடாத்தப்பட்டன. 1983 இல் க. பொ.த (சாதாரண) வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டு இத்தகைய 12 வகுப்புகள் ஒன்பது மாவட்டங் களில் நடைபெற்றன. இவ்வகுப்புகளில் ஏறக்குறைய 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர். வார இறுதி மறுமலர்ச்சி இயக்க வகுப்புக்கள் மிகவும் பிரபல்யமடைந்தன. தங்களது பாடசாலையில் சில முக்கிய பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் காணப்படாத பிரச்சினையை எதிர்நோக்கிய மாணவர்கள் பலர் இவ் வகுப்புக்களினால் பயனடைந்தனர். இயக்கத்தினால் நடாத்தப்பட்ட இவ்வகுப்புக்கள் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வியில் கணிசமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இவ்வகுப்புக்களைத் தொடர்ந்து நிகழ்ந்த முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழகப் பிரவேசத்தின் எண்ணிக்கையின் அதிகரிப்பு உணர்த்தியது. 1983 ஆம் ஆண்டு இயக்கத்தின் மூலம் கல்விப் பொதுத்தராதர (சாதாரண) தர வகுப்புக்கள் 46 ம் உயர்தர வகுப்புக்கள் 12 ம் நடைபெற்றன. 1984 ஆம் ஆண்டு சாதாரண தர வகுப்புகள் 94 ம் உயர்தர வகுப்புக்கள் 24ம் நடைபெற்றன. 1983 ஆம் ஆண்டுவரை பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 3.7% ஆக இருந்தது. 1984 ஆம் ஆண்டு அது 5.5% ஆக அதிகரித்தது. பல்கலைக் கழகத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் அனுமதியில் ஏற்பட்ட இந்த அதிகரிப்பிற்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் வாராந்த வகுப்புக்கள் கணிசமான பங்களிப்பைச் செய்தன. 1983 ஆம் ஆண்டு அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி, கேகாலை, மன்னார், மாத்தளை, புத்தளம், திருகோணமலை, ஆகிய
140

மாவட்டங்களில் நடைபெற்ற மறுமலர்ச்சி இயக்க வாராந்த வகுப்புக்கள் 1984 ஆம் ஆண்டு மாத்தறை, குருநாகலை, களுத்துறை, காலி, கம்பஹா, கொழும்பு, பதுளை, அநுராதபுரம் ஆகிய இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. இவ்வகுப்புக்கள் 1987 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தன. 1987 - 88 ஆம் ஆண்டில் 514 முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கைநெறிகளுக்குப் பிரவேசம் பெற்றது மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அவர்களுக்குரிய இன விகிதாசாரத்திற்கு அதிகமாக அமைந்தது. முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் 7.14 % இருக்க, 8.17% விகிதாசார அடிப்படையில் அவர் களது அனுமதி அமைந்தது. இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் 7.5 % இருந்தும் 1975 - 85 க்கும் இடைப்பட்ட காலப்பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவரின் எண்ணிக்கை 3.5 % க்கு அதிகமாக இருக்கவில்லை. 1981 ஆம் ஆண்டு முதல் (ஆரம்பகாலம்) இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் நடத்திய வாராந்த வகுப்புக்கள், இயக்கத்தினால் நடாத்தப்பட்ட கல்விக் கருத்தரங்குகள் ஆகியன முஸ்லிம் மாணவர்களின் பிரவேசத்தின் எண்ணிக்கையின் அதிகரிப்பில் கணிசமான பங்கை வகித்தது.
இந்த வார இறுதி வகுப்புகள் மட்டுமன்றி க.பொ.த (சாதாரண) தர மாணவர்களின் நன்மை கருதி, கல்விக்கருத்தரங்குகளும் இயக்கத்தினால் நடத்தப்பட்டன. முஸ்லிம் பாடசாகைளில் விஞ்ஞானம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாப் பற்றாக்குறையை நீக்குவதற்கு இயக்கம் இன்னொரு குறுகிய காலத்திட்டத்தையும் செயல்படுத்தயது பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர்களும், கல்வி பொதுத் தராதர (உயர்தர) ப் பரீட்சையில் விஞ்ஞானத்தில் தகமை பெற்ற மாணவர்களும்
141

Page 73
தங்களது பீ. எஸ். ஸி வெளிவாரப் பட்டப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்குத் துணைபுரியும் வகையில் 24, 8, 84ம் ஆண்டு கண்டியில் ஜி. எஸ்.கியூ வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1984ஆம் ஆண்டு இயக்கம் "இஸ்லாமிய மறுமலர்ச்சி" என்ற பெயரில் ஒரு செய்தித்தாளை ஆரம்பித்தது. மாதம் ஒரு முறை பிரசுரிக்கப்பட்ட இச் செய்தித்தாள் இயக்கத்தின் பணிகள் பற்றிய செய்திகளை உள்ளடக்கியதோடு, விஞ்ஞானம், கணிதம் தொடர்பான பாடங்களின் மாதிரி வினாக்களையும், வரிடை களையும் பொதிந்ததாக விளங் கியது. இச்செய்தித்தாளினால் மாணவர்கள் கணிசமான பயனைப் பெற்றனர்.
பல்கலைக்கழகப் பிரவேசம் பெறும் முஸ்லிம் மாணவர்கள் அவர்களது கல்வியைத் தொடர முடியாமைக்கு பொருளாதார வசதியின்மை ஒரு முக்கிய காரணமாக இருந்ததோடு, இதன் காரணமாக பலர் தங்களது கல்வியைப் பூரணப்படுத்த முடியாது) உயர்கல்வியைத் தொடராது நிறுத்திக் கொள்வதையும் இயக்கம் அவதானித்தது. எனவே இம் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர உதவிபுரியும் வகையில் புலமைப்பரிசில்கள் வழங்க நளிம் ஹாஜியர் அவர்கள் முன்வந்தார்கள். அவரது பொதுப் பணியின் மிக ஆரம்பகாலத்திலிருந்தே பல வறிய மாணவர்களின் கல்விக்காக தனிப்பட்ட முறையில் அவர் உதவமுன்வந்தார். இலங்கை மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலும் அவரது இந்த தனிப்பட்ட உதவிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இயக்கத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் நளீம் ஹாஜியாரின் இந்தத் தனிப்பட்ட உதவிகள் ஓர் அமைப் பையும, ஒழுங்கையும, கட்டுக்கோப்பையும் பெற்றன. ஒவ்வொரு மாணவனின் பொருளாதார நிலை, உதவிபெறுவதற்கான தகைமை ஆகியன
42

பரிசீலிக்கபட்டு உறுதிப்படுத்த பின்னப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. 1981 ஆம் ஆண்டு இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை இயக்கத்தின் தேசியத் தலைவர் நளீம் ஹாஜியர் ஆரம்பித்து வைத்தார்.
1981 - 1982 ஆம் ஆண்டு இயக்கத்திலிருந்து நிதி உதவி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பின்வரும் வகையில்
அமைந்திருந்தது.
கற்கை நெறிகள்
பொறியியல் மருத்துவம் விஞ்ஞானம் பல் வைத்தியம் G) flag fuld இரசாயனம் உதவி மருத்துவப் பயிற்சி புள்ளியியல் வர்த்தகம் முகாமைத்துவம் df. "Lib சட்டத்தரணி பயிற்சி டிப்ளோமா
49560)6) 67 GöTLg_rfì (NDT) மொத்தம்
1981
14
O9
19
O1
Ol
04
O4.
16
O
O1
O3
73
1982
19
12
19
O2
O2
19
O9
O5
O2
25
10
124
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்போடு புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மறுமலர்ச்சி இயக்கத்தின்
143

Page 74
வார இறுதி வகுப்புகளாலும், இப்புலமைப் பரிசில் திட்டத்தாலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றனர்.
இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கமும் செல்வாக்கும் முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள், பட்டினங்கள் தோன்றும் பரவியது. சனி, ஞாயிறு நாட்களில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் மறுமலர்ச்சி இயக்க வகுப்புகளில் கலந்து கொள்ள சாரி சாரியாகச் செல்வது சமூகத்தின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையூட்டும் காட்சியாக அமைந்தது. இவ்வாறு இந்த வகுப்புக்களால் பயனடைந்து பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்ற வசதியற்ற மாணவர்களுக்கு இயக்கத்தின் புலமைப்பரிசில் திட்டம் துணை நின்றது. இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இடைக்கிடை தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட மறுமலர்ச்சி இயக்கத்தின் அறிமுகக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், முஸ்லிம் சமூகத்தின் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் கூட்டங்களாக அமைந்தன. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முதன் முதலாக நாடெங்கும் திரிந்து, கல்விக்காகப் பிரச்சாரம் செய்து, முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு புதிய தலைமைத்துவத்தை நளிம் ஹாஜியார் வழங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமூகத்தில் ஒலித்த சித்திலெப்பையின் குரலின் தொடர்ச்சியாக அவரது குரல் ஒலித்தது. கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் அரசியல்வாதியான கேட் முதலியார் காரியப்பர் கல்முனையில் நடைபெற்ற இஸ்லாமிய மறுமலர்ச்சிக் கூட்டத்தில் உரையாற்றும்போது நளிம் ஹாஜியாரை இலங்கையின் ஸேர் ஸெய்யித் அஹமத்கான் எனப் புகழாரம் குட்டினார். புகழுக்குரியவர் அல்லாஹ் ஒருவனே என்ற வகையில் அங்கு திரண்டிருந்த முஸ்லிம் பெருமக்கள் அல்லாஹ் அக்பர் என முழங்கினர்.
நளீம் ஹாஜியார் தோற்றுவித்த இஸ்லாமிய மறுமலர்ச்சி
144
 

இயக்கத்தின் கல்விப்பணி, இலங்கை முஸ்லிம்களுக்கான இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரி அமைக்கப்பட்டதோடு அதன் உச்ச நிலையை அடைந்தது. நளீம் ஹாஜியாரின் கல்விப்பணியின் ஒரு சிகரமாக ஜாமிஆ நளிமியா விளங்குவது போன்று அவரது கல்விப் பணியின் இன்னொரு கொடுமுடியாக இக்ரஃ தொழில்நுட்பக்கல்லூரி விளங்குகிறது. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்த மகாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தொழில்நுட்பக் கல்வியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் இலங்கை முஸ்லிம் களுக்கான ஒரு தொழில் நுட்பக் கல்லூரியை அமைப்பது இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் எதிர்கால வேலைத் திட்டங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெறப்போவதாக நளீம் ஹாஜியார் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டில் இதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
- முஸ்லிம்களின் நன்மை கருதி ஒரு தொழில் நுட்பக் கல்லூரியை அமைப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக பல ஆலோசனைக்கூட்டங்கள் நடாத்தப்பட்டு அதற்கான திட்டங்களைத் தீட்டும் முயற்சியில் இயக்கம் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இப்பணியில் நளீம் ஹாஜியார் அவர்களுக்கு ஜித்தாவிலுள்ள இக்ரஃ நிறுவனத்தின் தொடர்பு ஏற்பட்டது. இக்ரஃ நிறுவனத்தின் ஸ்தாபகரமான ஸவுதி அரேபியாவின் பிரபல தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஷெயக் ஸாலிஹ் காமில் அவர்களுக்கும் நளீம் ஹாஜியார் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட தன்மை ஏற்கனவே விளக்கப்பட்டது. நளீம் ஹாஜியாரின் இந்த முயற்சியில் அவருக்கு ஒத்துழைப்பு நல்கமுன்வந்த இக்ரஃ, நிறுவனம் இது தொடர்பாக பேச்சுவாத்தைகளை நடாத்துவதற்கு 1983 ஆம் ஆண்டு ஒரு தூதூக்குழுவை அனுப்பி வைத்தது. இக்கலந்துரையாடல்கள் நளீம்
145

Page 75
ஹாஜியாரின் வெள்ளவத்தை இல்லத்தில் நடைபெற்றன. இக்கல்லூரியின் அமைப்பு, கற்கை நெறிகள் தொடர்பான கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதனடியாக இலங்கையில் இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவுவதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் 15, 4. 1984 ஆம் ஆண்டு ஜித்தாவில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பில் நளிம் ஹாஜியார் அவர்களும், இக்ரஃ நிறுவனத்தின் சார்பில் கலாநிதி முஹம்மத் யமானி அவர்களும் கைச்சாத்திட்டனர். 1985 ஆம் ஆண்டு ஜூலை ஏழாந்திகதி நளிம் ஹாஜியார் பேருவலையில் ஜாமிஆ நளீமியாவிற்கு அணித்தாயுள்ள காணியில் இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். இலங்கையில் இந்த தொழில் நுட்பக்கல்லூரியை அமைக்கும் முயற்சி மிகக் கடுமையான உழைப்பையும், அவதானத்தையும் வேண்டி நின்றது. நளிம் ஹாஜியார் அவர்கள் தங்களது ஏனைய பொறுப்புக்கள், பணிகள், வணிக முயற்சிகளுக்கு மத்தியில் இதற்கான கட்டடங்களைச் சிறப்பாகக் கட்டி முடித்தல், பயிற்சிக் கூடங்களுக்கான உபகரணங்கள், இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்தல் போன்ற பணிகளில் மிக ஆர்வத்துடனும் கரிசனையுடனும் ஈடுபட்டார். வாழ்க்கையில் அவர் வரித்துக்கொண்ட இன்னொரு அபிலாசையை, இலட்சியக் கனவை நிறைவேற்றத் துடிக்கும் மனோபாவம் அவரில் காணப்பட்டது.
முஸ்லிம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கும் நோக்கத்தோடு நிறுவப்பட்ட நவீன வசதிளைக் கொண்ட இக்ரஃ நிறுவனத்தினதும், இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தினதும் இணைப்பில் உருவான இ க்ரஃ தொழில்நுட்பக் கல்லூரி, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ந் திகதி காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு
146

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றிலும், நளிம் ஹாஜியாரின் கல்வி, கலாச்சாரப் பண்பாட்டுப் பணியிலும்
ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தனது சமூகத்தின்.
Fன்மார்க்கக் கல்விக்காக ஜாமிஆ நளிமியாவையும், தொழில்நுட்பக் கல்விக்காக இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியையும் கட்டியெழுப்பியதால் ஏற்பட்ட மனநிறைவை நளிம் ஹாஜியாரின் புன்னகை பூத்த வதனத்தில் அவ்விழாவில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களால் அவதானிக்க முடிந்தது.
147

Page 76
7 வரலாற்று ஆய்வுக்கு
வழிவகுத்தவர்
"தனிமனிதர்களின் தனித்துவமும், ஆளுமையும் அவர்களின் தனிப்பட்ட நினைவாற்றலின் துணைகொண்டு பாதுகாக்கப்படுகின்றது. சமூகங்கள் அவற்றின் வரலாற்றின் துணைகொண்டு இந்த நோக்கைப் பூர்த்தி செய்கின்றன. தனிமனிதனுக்கு நினைவாற்றல் போன்றதே சமூகங்களுக்கு வரலாறாகும்." "அல்லாமா இக்பால் வரலாறு பற்றிக் குறிப்பிடும் இக்கருத்து ஒரு சமூகத்தின் நிலைபேற்றிற்கும், அதன் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் பாரம்பரியத்தைச் சங்கிலித் தொடர்போன்று தொடர்ந்து வரும் சந்ததியினருக்குப் பாத்தியதையாக வழங்குவதற்கும்
148
 

அச்சமூகத்தின் வரலாறு எத்துணை அவசியமானது என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் கல்வியை புறக்கணித்து வந்துள்ளது போன்றே அதன் வரலாற்றையும் புறக்கணித்து வந்துள்ளது. இந்நாட்டின் முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில், முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சியின் முன்னோடியாக விளங்கிய எம்.ஸி. சித்திலெப்பை அவர்களே, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் துறையிலும், அது பற்றிய ஆய்விலும் முதலில் கவனஞ் செலுத்தியவராக விளங்குகின்றார்.
அவர் 1885 ஆம் ஆண்டு தனது "முஸ்லிம் நேசன்" பத்திரிகையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி சில தொடர் கட்டுரைகளை எழுதினார். அவரைத் தொடர்ந்து ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ் அவர்கள் 1889 ஆம் ஆண்டு "டைம்ஸ் ஒப் ஸிலோன்" செப்டம்பர் 8 ந் திகதி இதழில் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி ஓர் ஆசிரியர் கடிதத்தை எழுதினார். அதனைத் தொடர்ந்து 96) is (Ethnology of the Moors of Ceylon) 6T6örp -glia) நூலை வெளியிட்டார். 1907 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார். I have decided to leave it to the future the writing of comprehensive
history of my race explaining its manner, customs, habits and trade.
"எனது இனத்தின் பழக்க வழக்கங்கள், பாரம்பரியம், வரலாறு பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்ட வரலாற்றை எழுதும் பணியினை நான் எதிர்காலத்திற்கு விட்டுவிடத் தீர்மானித்துள்ளேன். .
1907 ஆம் ஆண்டு அப்துல் அஸிஸ் அவர்கள் 149

Page 77
எதிர்கால சமூகத்திற்காக விட்டுச் சென்ற பணி அவருக்கு எழுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பூர்த்தியாயிற்று. இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பணியில் சித்திலெப்பையி னதும் அப்துல் அஸிஸினதும் பாதையில் பயணம் செய்த அல்ஹாஜ் நளீம் அவர்களை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொகுப்பைப் பொறுத்தளவிலும், அவர்களது எதிர்பார்ப்பைநிறைவேற்றத் துணை நின்றார்.
1982 ஆம் ஆண்டு ஒர் நாள் காலையில் ஸ"பஹத் தொழுகையின் பின்னர் வழமைபோன்று நளிம் ஹாஜியாருடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அமைதியான அந்த காலைப் பொழுதில் எனது உள்ளத்தில் ஒரு சிந்தனை தோன்றுகிறது. "ஹாஜியார்! இன்றைய கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் அதன் வரலாற்றுப் பாரம்பரியத்தை ஆய்வு ரீதியாக நிறுவுவது அவசியமான, அவசரமான ஒரு பணி என எனக்குத் தோன்றுகின்றது இதுவரை எங்களது வரலாறு ஆராய்ச்சி ரீதியாக, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதாக விரிவாகத் தொடுக்கப்படவில்லை. இப்பணியில் ஜாமிஆ நளிமியா ஈடுபட்டால் என்ன? எங்களிடம் தான் ஒர் ஆராய்ச்சி நிறுவனமும் ஏற்கனவே உள்ளதே" என்றேன். சமூகத்தின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் நல்ல பணிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பு எங்கே கிடைக்கின்றதோ என்று எதிர்பார்த்திருக்கும் நல்ல உள்ளம் கொண்ட ஒருவரின் முன் உதிர்க்கப்பட்ட இவ்வார்த்தைகள் எப்படி வீண்போக முடியும்? "மிகவும் நல்ல யோசனை கட்டாயம் இம்முயற்சியில் ஈடுபடுங்கள், இதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்யுங்கள்" இதுதான் அவரது பதிலாக அமைந்தது.
ஆனால் இப்பணியை நாங்கள் சிறப்பாகச் செய்வதாயின் நிறைய பணம் செலவாகும் என்றேன். அல்லாஹ்வின்
150
 

பாதையில் - சமூகப்பணியில் தன் செல்வத்தைச் செலவிடுவதில் நிறைவு காணும் அவரது பதில் பின்வருமாறு அமைந்தது.
"நான் எந்த ஒரு பணியையும், வெறுமனே மேலோட்டமாகச் செய்வதில் நம்பிக்கை கொண்டவனல்ல எந்த ஒரு வேலையும் சிறப்பாகச் செய்யப்படல் வேண்டும். அதுவும் எங்களது சமூகத்தின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சி மிக நன்றாக, பூரணமானதாக இருத்தல் வேண்டும் எனவே இப்பணிக்காக எவ்வளவுதான் செலவிடவும் நான் ஆயத்தமாயுள்ளேன். இதைப்பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம். வேலையை ஆரம்பியுங்கள்" என்றார் நளிம் ஹாஜியார். அன்று முதல் இப்பணியில் அவர் மிக ஆர்வத்துடன் செயல்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்ந்து நூலுருவில் வெளியிடும் முயற்சியில் ஜாமிஆ நளீமியா ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இலங்கை மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது வருடாந்த மகாநாடு 1983 ஆம் ஆண்டு நவம்பர் 7ந் திகதி கொழும்பில் நடைபெற்றபோது, நளிம் ஹாஜியார் பகிரங்கமாக அறிவித்தார். அங்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய அறிஞர் சித்திலெவ்வை, ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ் ஆகியோரது இம்முயற்சிகளைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றோடு தொடர்புடையகட்டுரைகள் காலத்திற்குக் காலம் வெளியாயின். திரு. எம். பீ. ராகவன், திரு. போல்பீரிஸ், பேராசிரியர் அரசரட்னம், பேராசிரியர் கே. டபிள்யூ. குணவர்த்தனா, கலாநிதி எஸ்.எம். யூஸுப், பேராசிரியர் எஸ். ஏ. இமாம் ஆகியோரால் இத்தகைய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இத்துறையில் சோனக இஸ்லாமிய
151

Page 78
கலாசார நிலையம் பல பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் இலங்கை முஸ்லிங்களின் பூர்வீகம் முதல் அண்மைக்காலம் வரையிலான வரலாற்றை ஆராய்ச்சி ரீதியாக, ஆதாரபூர்வமாக ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட மிக விரிவாகவும், விளக்கமாகவும் தொகுத்துக் கூறும் வரலாற்று நூல் காணப்படவில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்புவதே எமது நோக்கமாக அமைந்தது. இந்த நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்கு பலரை நான் தொடர்புகொண்டேன். அவர்களுள் ஒருவரே சகோதரர் ஏ.ஜே. எம். ஸ்னீர் ஆவர். அவர் வரலாற்றுத் துறையில் மிக ஈடுபாடு கொண்டவர். இவ்விடயத்தில் அவரது பரிபூரண ஒத்துழைப்பை வழங்க அவர் முன்வந்தார். நளிமியா இஸ்லாமிய ஆய்வு நிலையத்துடன் இணைந்து, முழு நேரமும் ஈடுபட்டு உழைத்து இப்பணியில் எமக்கு அவர் துணை நின்றார்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுக்கும் இம்முயற்சியின் ஆரம்பப் படியாக இது தொடர்பான ஆய்வுக்கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் எனவும், அதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிப் பல்வேறு கண்ணோட்டங்களில் அணுகி ஆராயும் ஆய்வுக்கட்டுரைகள் இவ்வரலாற்றிற்கு தொடர்புடைய பல்வேறு காலப்பிரிவுகள் சம்பந்தமான நிபுணத்துவம் உடையவர்களால் சமர்ப்பிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் நாங்கள் முடிவு செய்தோம். இத்திட்டத்தைச் படுத்தும் வகையில் பேராதனைப் பல்பலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கே. எம். டி. சில்வா அவர்களை அணுகி அவரது ஆலோசனைகளைப் பெற முடிவு செய்யப்பட்டது. இப்பொறுப்பு சகோதரர் ஸனிடம்
152
 

ஒப்படைக்ப்பட்டது. எமது திட்டத்தை மிகவும் வரவேற்ற பேராசிரியர் சில்வா, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, தென், கிழக்காசிய முஸ்லிம்களின் வரலாற்றின் பின்னணியில் ஆராயப்படுவதே பொருத்தமெனவும் எனவே நாம் திட்டமிடும் கருத்தரங்கு "இலங்கையிலும், இதன்கிழக்காசியாவிலும் முளப் லிம் சிறுபான்மையோர்” என்ற தலைமையில் நடைபெறுதலே பொருத்தம் எனவும், இக்கருத்தரங்கை நளீமியா இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனமும் இனங்களின் ஆய்வுக்கான சர்வதேசிய மத்திய நிறுவனமும் (International Center for ethnic Studies) gaogoolig (pig, Galilu முடியும் எனவும் கருத்துத் தெரிவித்தார். இப்போது எங்களது திட்டம் ஒரு சர்வதேசிய பரிமாணத்தைப் பெற்றது. இவ் வரிடயம் நளிம் ஹாஜூ யார் அவர் களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் அதனைப் பூரணமாக ஆதரித்தார். இக்கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் வெளிநாட்டு அறிஞர்களின் பிரயாணச் செலவுகள், அவர்கள் தங்குவதற்களான ஹோட்டல் செலவுகள் பற்றிய எத்தகைய கவலையும் கொள்ளத் தேவையில்லை யென்றும், இதனை தான் பொறுப்பேற்பதாகவும் கூறி மேலும் உற்சாகமும், தூண்டுதலும் அளித்தார். இதனைத் தொடர்ந்து இச் சர்வதேசிய கருத்தரங் கிற்கான ஆய்வுக்கட்டுரைகளைப் பெறுவதற்கான வரலாற்றறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றோரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது ஆய்வுக் கட்டுரைகள் மிகத் தரம்ாகவும், சிறப்பாகவும் அமைவதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனையும் நளீம் ஹாஜியார் அவர்கள் பொறுப்பேற்றார்கள் ஆய்வாளர்களுக்கு கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்குப் போதிய அவகாசம் வழங்கப்பட்டதுடன், சன்மானமும் வழங்கப்பட்டது.
153

Page 79
1983ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதியன்று பம்பலப்பிட்டியிலுள்ள இஸ்லாமிய செயலகத்தில் நடைபெற்ற இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது வருடாந்த மகாநாட்டிற்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்திய நளிம் ஹாஜியார் அவர்கள், இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்ந்து நூலுருவில் வெளியிடும் பணியினை நளிமியா இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளாக உள்ளோர் இம்முயற்சியை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி முதல் 9 அம் திகதிவரை ஜாமியா நளிமியா மகாநாட்டு மண்டபத்தில் இலங்கை, தென், தென்கிழக்காசிய முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான பதினெட்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்ப்பட்டன. மூன்று நாட்கள் ஜாமியா நளிமிய வளாகத்தில் அமைதியும், பசுமையும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கருத்தரங்கு சர்வதேசிய தரத்தில் அமைந்திருந்ததாக அங்கு வருகை தந்திருந்த அனைவரும் குறிப்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்
மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை நூலுருவில் வெளியிடும் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்பட்டது. இக்கட்டுரைகள் நூலுருவில் வெளியிடப்படுட் அவசியத்தையும் அவற்றைத் தொகுத்து, ஆய்வுரீதியான ஒரு முன்னுரையுடன் அதனை வெளியிடுதல் பற்றிய எனது திட்டத்தையும் நான் நளிம் ஹாஜியார் அவர்களிடம் வெளியிட்டப்போது, அவர் அதனை வரவேற்று, அந்நூலின் அமைப்பு தரம் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைதல் வேண்டுமெனக் கூறி, அதனை வெளியிடும் முயற்சிக்கான முழுச்செலவையும் தான் பொறுப்பேற்பதாகக் கூற
154

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஆய்வு நூல் (MUSLIMS OF SRI LANKA) ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவிடம் நளீம்
ஹாஜியாரினால் கையளிக்கப்படுகின்றது.
நூல் வெளியீட்டு விழாவில் நூலைப்பற்றி ஆய்வுரை நிகழ்த்திய புகழ்பெற்ற சட்ட நிபுணரும், வரலாற்றாய்வாளருமான கலாநிதி இக Iால் வின் ஆர்.டீ. சில் வா வுடன் நளீம் ஹாஜியார் அளவளாவுகின்றார்.

Page 80
கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கலாநிதி கே. எம். டீ. சில்வா அவர்கள் உரையாற்றுகிறார்.
இலங்கை முஸ்லி ம்களின வரலாறு பற்றி நளிமியா இஸ்லாமிய ஆய்வு நிலையம் ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கின் ஒர் அமர்வு
 
 
 
 
 
 
 

இந்நற்பணிக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். கருத்தரங்கின் பின்னர், இந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தர்க்க ரீதியாக வகைப்படுத்தி, பல கண்ணோட்டங்களில் அவற்றை அணுகி அக்கட்டுரைகளுக் கிடையே ஒரு இணைப்பையும் , ஒருமைப்பாட்டையும் தோற்றுவிக்கும் விமர்சன ரீதியான ஒரு முன்னுரையுடன் பதிப்பிக்கும் பணிக்கு இரண்டு ஆண்டுகள் எடுத்தன.
இதன் முற்றுப்பேறாக 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ந் திகதி கொழும்பில் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இலங்கை முஸ்லிம்கள் - பூர்வீகப் பாரம்பரியத்திற்கான பாதைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தன அவர்கள் அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்கள். இவ்விழாவில் இந்த வரலாற்றுத் தொகுப்பிற்கு வழியமைத்து துணைநின்ற நளிம் ஹாஜியார் அவர்கள் இந்நூலின் முதற்பிரதியை ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்களுக்குக் கையளித்ததுடன் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நம்பகத்தன்மையும் உறுதியும் பெற்றது. இவ்விழாவில் இந்நூலைப் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும், இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களுள் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா ஆய்வுரை நிகழ்த்தினார். இம்முயற்சியினை மிகச் சிலாகித்து விதந்துரைத்த கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய இந்த ஆய்வு நடைபெற ஏன் இவ்வளவு காலம் கழிந்தது? என்ற வினாவை எழுப்பியதுடன் இலங்கை முஸ்லிம்களின் முதுகில் வரலாறு ஒரு பெரும் பொறுப்பைச் சுமத்துகின்ற ஒரு காலகட்டத்தில் இந்நூல் வெளியிடப்படுகின்றது என்றார்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராயும் இப்பணி
157

Page 81
என்றோ நடந்திருக்க வேண்டிய ஒரு முயற்சியென்றும், அது மிகத் தாமதித்து நடந்தாலும் தமக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் இவ்விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள், கல்விமான்கள் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் அனைவரும் எமக்கும் இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு என்ற உண்மையை ஆதாரபூர்வமாக நிறுவும் ஒரு வரலாற்று நூல் உருவாகிவிட்டது என்ற மனநிறைவோடு இவ் மண்டபத்தை விட்டு வெளியேறினர். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுக்கும் இப்பணியை ஆரம்பித்து, அதற்கு உற்சாகமும் தூண்டுதலும் அளித்து, தனது பொருளுதவியாலும், வழி நடத்தலாலும் அது நூலுருப் பெறத் துணை நின்றமை நளீம் ஹாஜியார் இலங்கை முஸ் லிம் சமூகத்திற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பாகும். இத்தகைய ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணிக்குத் துணை நின்ற அவரது பெயர் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும். முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி நிஸ்ஸங்க விஜயரத்ன இந்நூல்பற்றி டெயிலிநியூஸ் பத்திரிகையில் எழுதிய நூல் விமர்சனத்தில் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
நளீம் ஹஜியாரின் சன்மார்க்க, சமூகப் பணி இந்நூலின். பிரவேசத்தோடு கலாசாரப் பண்பாட்டுப் பரிமாணத்தைப் பெற்றது. இந்நாட்டில் இறைவணக்கத்திற்காக பல மஸ்ஜித்கள் கட்டப்பட துணை நின்ற அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்துவிட கல்விப்பணி புரிந்த அவர், இந்நூல் தொகுப்பிற்கு துணைநின்றதன் மூலம், இந்நாட்டில் முஸ்லிம்களின் வரலாற்று, கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியம் அணைந்துவிடாது பேணிப்
| 158

பாதுகாக்கும் ஒரு பேரொளிச்சுடரை ஏற்றி வைத்தவராக வரலாற்றில் பிரவேசிக்கின்றார். சரித்திரம் சமைக்க வழிகாட்டிய அவர் சரித்திரத்தின் பக்கங்களில் ஒரு மகத்தான இடத்தைப் பெறுகின்றார். இப்பணியின் தாக்கம் பற்றி சரியான முறையில் எடைபோடும் பொறுப்பை எதிர்கால சரித்திரத்திற்கு விட்டுவிடுவோம்.
159

Page 82
8 சந்திப்பின் நினைவலைகள்
Dனிதன் அவனது வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகள் பலரைச் சந்திக்கின்றான். சிலரது சந்திப்பு வெறும் அறிமுகத்தோடு முற்றுப்பெற்று விடுகின்றது. சிலரின் தொடர்பு வெறும் பரிச்சயத்தோடு நின்றுவிடுகின்றது. சிலர் நண்பர்களாகி அந்நட்பு நீடித்து நிலைக்கின்றது. சில சந்திப்புகள் வாழ்வின் பாதையின் சந்திகளாக அமைந்து ஒருவனின் வாழ்க்கைப் பயணத்தையே திசை மாற்றி விடுவதுண்டு.
நீரீழ் ஹாஜியாரின் வாழ்க்கைப் பயதைதில் தனிப்பட்ட
160
 

வாழ்விலும், பொது வாழ்விலும் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் அவருக்குக் கிடைத்தன. சன்மார்க்கப் பெரியார்கள், ஆத்மஞானிகள், முஸ்லிம் உலகின் புகழ்பூத்த பேரறிஞர்கள், நாட்டுத்தலைவர்கள், அரசியல் வாதிகள் என பல்துறைச் சார்ந்தோரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அவர் பெற்றார். சில சந்திப்புக்கள் வெறும் பரிச்சயங்கள், இன்னும் சில சந்திப்புக்கள் அவரது சமூகப்பணிக்கு களம் அமைத்துக் கொடுத்த நல்லுறவுகள், இன்னும் சில அவரது ஆளுமையில் மகத்தான பாதிப்பையும், செல்வாக்கையும் செலுத்திய விழுமிய தொடர்புகள், ஆனால் இச் சந்திப்புககளில் எல்லாம் தனது இஸ்லாமிய ஆளுமையிலும், சன்மார்க்க வாழ்விலும் பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்திய சன்மார்க்க அறிஞர்களைச் சந்தித்ததையும், பக்தி சிரத்தை மிக்க சில நல்லடியார்களைச் சந்தித்து அவர்களது துஆப் பிராத்தனையைப் பெற்றதையுமே வாழ்வின் மிகப் பெறுமதியான சந்திப்புகளாக அவர் பல தடவைகள் என்னிடம் குறிப்பிட்டதுண்டு.
அவரது வாழ்க்கையின் ஆரம்ப காலப்பிரிவிலேயே அவர் சந்தித்த மகான்களுள் ஒருவராக அக்காலப் பிரிவில் மக்காவில் வாழ்ந்த ஷாதுலியா தரிகாவின் ஷெய்காக விளங்கிய அஷ்ஷெய்கு இப்ராஹிம் பாஸி அவர்களைக் கருதுகின்றார். நளிம் ஹாஜியாரின் தந்தை அக்காலப் பிரிவில் சீனன் கோட்டையைத் தரிசித்த இப்பெரியாரை அணுகி தமக்கு ஆண் குழந்தை ஒன்று கிடைக்கப் பிராத்திக்கும் படி வேண்டியமை பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த தடவை அப்பெரியார் சீனன் கோட்டைக்கு வருகை தந்தபோது ஒரு இளைஞனாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது சீனன் கோட்டை மக்கள் மிகவும் வறுமையிலும், கஷ்ட நிலையிலும் வாழ்ந்தனர். அவர்களது பொருளாதார நிலை மிகவும்
161

Page 83
பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே ஷெய்கு இப்ராஹிம் அல்பாஸி அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களை அணுகி தாங்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றிக் கூறினர். இக் காலப்பிரிவில் பேருவலை மக்களில் கணிசமான தொகையினர் அவர்களது தோட்டத்திலுள்ள தென்னை மரங்களை தென்னையிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்காகப் பிறருக்கு குத்தகைக்குக் கொடுக்கும் வழக்கம் பற்றி அவர்களிடம் பிரஸ்தாபிக்கப்பட்டபோது, அவர்களது முகத்தில் கடுமையான கோபக்குறி தோன்றி, உடல் நடுங்கி, உணர்ச்சி பொங்க உரத்த குரலில் அதனை வன்மையாகக் கண்டித்து உரை நிகழ்த்தியமையையும் அப்போது அவர்களது பக்கத்திலிருந்து ஓர் ஆலிம் குர்ஆனின் திருவசனம் ஒன்றை ஒத, அவர்களது கோபம் தணிந்து சாந்தியடைந்ததையும் தனது நினைவில் நிற்கும் ஒரு நிகழ்ச்சியாக நளிம் ஹாஜியார் குறிப்பிடுகின்றார். 1960 ஆம் ஆண்டு அவர் முதல் தடவையாக ஹஜ்கடமையை நிறைவேற்றச் சென்றிருந்தபோது மக்காவில் உள்ள பைத்துல் பாஸி என அழைக்கப்படும் அவர்களது இல்லத்தில் ஷேய்க் இப்ஹிராம் அல் - பாஸியை அவர் மீண்டும் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஷேய்க் பாஸி அவர்கள் தம்மீது மிக அன்பும், நேசமும் பாராட்டியதை அவர் மானசீகமாக உணரமுடிந்தது. 1972ஆம் ஆண்டு ஹஜ்ஜுக்காக மக்கா சென்றிருந்தபோது ஷேய்க் இப்ஹிராம் பாஸியின் புதல்வராக டாக்டர் ஷேய்க் முஹம்மத் அல்பாஸியை அவர் சந்தித்தார். அவரோடு ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்றிருந்த சுமார் இருபந்தைந்துக்கு மேற்பட்டவர்களுடன் ஷேய்க் பாஸியை அவர் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவத்தை அவர்விளக்கக் கேட்போம். "நான் சீனன்கோட்டையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருந்த சகோதரர்கள் சிலருடன் டாக்டர் பாஸியைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றேன். எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள் ஒரு தஸ்பீஹை எடுத்து அது அவரின் தந்தையுடையது
162

ான்றும், அதுதான் அவர்கள் வாரிசாக விட்டுச் சென்ற ஒரே சொத்தென்றும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அவர்களது கனவில் தோன்றி நளீம் ஹாஜியாருக்கு மாலையாக அணிவிக்கும்படி தன்னைப் பணித்ததாகவும் கூறி அதனை மாலையாக எனது கழுத்தில் அணிவித்தார்கள்".
நளிம் ஹாஜியார் ஹஜ்ஜுக்கடமையை நிறைவேற்ற புனித மக்காவை நோக்கி மேற்கொண்ட பயணங்களை மிகப் பயனுள்ள வழியில் பயன்படுத்தினார். மக்காவிலும் மதீனாவிலும் வாழ்ந்த பெரியார்கள், நபி (ஸல்) அவர்களில் வழித்தோன்றல்களான அஹ்லு பைத்துகளை சந்தித்து அவர்களின் துஆப் பிராத்தனையைப் பெறுவது அவரது இப்பயணத்தின் முக்கிய அம்சமாக விளங்கியது. மக்காவில் வாழ்ந்த பெரியார்களில் ஒருவரான அஸ் - ஸெய்யித் அல்பார் அவர்கள் நளீழ் ஹாஜியாரை இப்பெரியார்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்வாறு அவர் சந்தித்த பெரியார்களுள் அவரது உள்ளத்தில் நீங்கள் நினைவாக நிலை பெற்றிருப்பவர், மக்காவில் வாழ்ந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பெரியார் அஸ் - ஸெய்யித் முஹம்மத் அமீன் குத்பி ஆவர். மக்காவில் அனைவராலும் மதித்துப் போற்றப்பட்ட இப்பெரியாரை பல சந்தர்ப்பங்களில் சந்திக்கும் வாய்ப்பு நளிம் ஹாஜியாருக்குக் கிடைத்தது. அமீன் குத்பி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பேரரான ஹூசைன் (ரலி) அவர்களின் வழித்தோன்றலாக மட்டுமன்றி, ஹதிஸ் கலையில் துறைபோகிய ஓர் அறிஞராகவும் விளங்கினார். அக்காலப் பிரிவில் மஸ்ஜிதுல் ஹராமில் விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு மிகத் தகுதிவாய்ந்த சிலருக்கே அரசாங்கம் அனுமதி வழங்கியது. ஸெய்யித் அமீன் குத்பி புனித ஹரம் ஷரிபில் நிகழ்த்தும் விரிவுரைகளை கேட்க மக்கள் திரளாகக் குழுமியிருப்பர். அனைவராலும் மதிக்கப்பட்ட அமீன் குத்பி நபி (ஸல்) அவர்கள் மீது மிகுந்த நேசமும்,
163

Page 84
அன்பும் பூண்டவர்கள். நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து அவர் இயற்றியுள்ள கவிதைகள் நபஹுத்திப் பீ மத்ஹில் ஹபீப் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு அண்மையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமீன் குத்பி அவர்கள் தங்களது அந்திம காலப்பிரிவில் எவரையும் சந்திக்காது, ஒதுங்கி வாழ்ந்தார்கள். அக்கால கட்டத்தில் கூட நளீம் ஹாஜியார் தன்னைச் சந்திக்க அனுமதியளித்தார்கள். அது ஸெய்யித் அமீன் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களுக்கு மிக ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஸெய்யித் அமீன் நளீம் ஹாஜியாரை நேசித்தார். நளீம் ஹாஜியார் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அப்போது மக்காவிலிருந்த மஸ்ஊத் ஆலிம் அவர்கள் ஸெய்யித் அமீனை அணுகி. இது பற்றிக்கூற.நளீம் ஹாஜியாரின் விடுதலை பற்றி அவர்கள் நன்மாராயம் கூறியதை ஏற்கனவே நோக்கினோம்.
இது போன்று, அஸ் - ஸெய்யித் அத்தாஸ் ஹிப், அஸ் - ஸெய்யத் அலவி மாலிகி, அஸ்- ஸெய்யித் மீர்கானி, ஆகிய பெரியோர்களையும் மக்காவில் சந்திக்க நளீம் ஹாஜியார் தவறுவதில்லை. இவர்கள் அனைவரும் சன்மார்க்க அறிஞர்களாகவும், ஆத்ம ஞானிகளாகவும் விளங்கியவர் களாவர். அறிவும், இறையச்சமும் அமையப்பெற்ற இப்பெரியார்களின் சந்திப்பு நளீம் ஹாஜியாரின் ஆளுமையில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. அப்பெரியார்களுடன் தனக்குக் கழிக்கக் கிடைத்த அந்தக் கணப்பொழுது களை வாழக்கையில் தனக்கு கிடைத்த ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவது மட்டுமன்றி, அச்சந்திப்புகளின் ஆத்மீகத் தாக்கத்தை தான் இன்றும் மானசிகமாக உணர்வதாகக் கூறுவார். ஜாமிஆ நளிமியாவின் பணிக ரின்போது சமகால முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நளீம் ஹாஜியாருக்குக் கிடைத்தது. இந்த வகையில் ராபித்துல்
164"

ஆலமுல் இஸ்லாமியரின் முன்னை நாள் செயலாளர்களான ஷெய்கு ஸாலிஹ் கஸ்ஸாஸ், அஷ் - ஷேய்க் முஹம்மட் அலி ஹரகான், ராபிதாவின் தற்போதைய செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லா ஓமர் நஸீப், இமாம் ஸுஉத் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி அப்துல் முஹ்ஸின் துர்கி, மன்னர் உத் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி மன்ஸுர் துர்கி, மன்னர் பைஸல் நிறுவனப் பணிப்பாளர். ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். இந்த சந்திப்புகளின் போது மிகப் பண்பாடாக ஆனால் துணிச்சலுடனும், தைரியத்துடனும், அவரது கருத்துக்களை முன்வைப்பதை நான் அவதானித்துள்ளேன். பாடசாலைக் கல்வியின் வாய்ப்பை இழந்த அவர், சர்வதேசிய பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞர்களிடம் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் தனது கருத்துக்களை வெளியிடுவதைக் கண்டு பல முறை வியந்துள்ளேன். ராபிதாவின் தலைமையகத்தில் அப்போதைய செயலாளர் நாயகம் அஷ் - ஷேய்கு முஹம்மட் அலி அல் ஹரகானைச் சந்தித்த போது நிகழ்ந்த சம்பவம் இன்னும் எனது உள்ளத்தில் பசுமையாக உள்ளது .
அப்போது ஜாமிஆ நளீமியாவின் ஆரம்ப காலம். அது அரபுலகிலோ, இஸ்லாமிய உலகிலோ அவ்வளவு அறிமுகமாகியிருக்கவில்லை. எனவே அரபு நாடுகளுக்கும் பயணம் செய்து ஜாமிஆ நோக்கங்கள், இலட்சியங்கள், செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தி, சர்வதேசிய இஸ்லாமிய நிறுவனங்களுடன் ஜாமி-ஆவிற்கு தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியான மிகக் கஷ்டமான பணியில் நாங் கள் ஈடுபட்டிருந்தோம். இதற்காக நளீம் ஹாஜியாரும், நானும், நளிமியா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் முன்னை நாள் செயலாளர் சகோதரர் எம்.எச்.எம் ஹிபதுல்லாஹ்
165

Page 85
அவர் களும் பல வெளிநாட்டுப் பய ணங் களை மேற்கொண்டோம். மக்காவிலுள்ள ராபித்துல் ஆலமுல் இஸ்லாமியுடன் நாங்கள் பல தடவை தொடர்பு கொண்டும் உரிய பயன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ராபிதாவின் செயலாளர் ஷேய்க் முஹம்மட் அலி ஹரகானைச் சந்திக்க ராபிதாவிற்குச் சென்றோம். அங்கு செல்ல முன்னர் ஹாஜியார் என்னை நோக்கிப் பின்வருமாறு கூறினார். "நான் இந்தத் தடவை சில விடயங்களை மனம்திறந்து மிக உறுதியாகக் கூறுவேன். நான் தமிழில் கூறும் அந்த வார்த்தைகளை, எத்தகைய தயக்கமுமின்றி அப்படியே அரபியில் நீங்கள் ஷேய்கு ஹரகானிடம் கூறுதல் வேண்டும்.? அவரது பேச்சில் பரிபூரண உறுதியும், தைரியமும் தொனித்தது. அப்படி எதைத்தான் ஹாஜியார் கூறப்போகிறாரோ என்ற வியப்புணர்வுடன் ஷேய்க் ஹரகானின் அலுவலகத்துள் நுழைந்தோம். அங்கு ஷேய்க் ஹரகானிடம் நளீம் ஹாஜியார் ஜாமிஆவின் எதிர்காலத்திட்டங்கள் பற்றியும், அதனைச் செயல்படுத்த ராபிதா போன்ற சர்வதேசிய இஸ்லாமிய நிறுவனங் களின் ஒத்துழைப்பின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டபோது, ஷேய்க் ஹரகான் இத்துறையில் ராபிதா எந்த வகையில் உதவமுடியும் என்பது பற்றி எதனையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை, இந்நிலையில் நளீம் ஹாஜியார் அவரை நோக்கி, "நான் இந்த ஜாமி ஆவினை உங்களை நம்பியோ, அல்லது பிறரில் நம்பிக்கை வைத்தோ ஆரம்பிக்கவில்லை. முற்றிலும் அல்லாஹ் ஒருவனை நம்பியே ஆரம்பித்துள்ளேன். உங்களது ஒரு சகோதர முஸ்லிம் என்ற வகையில் எனது பணிக்கு உங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கும்படி உங்களைக் கேட்பது எனது கடமை என்ற வகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்தேன். நீங்கள் இந்தப் பணியில் உதவினாலோ, உதவாவிட்டாலோ, அல்லாஹ் உதவுவான் என்ற நம்பிக்கை எனக்கு மிக உறுதியாக உள்ளது" என ஹாஜியார் கூறிய
166

வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து ஷேய்க் ஹரகானிடம் கூறியபோது, அவர் அப்படி அசைந்து , மலைத்து, ஓர் ஆச்சரியமான மனிதரைப் பார்ப்பது போன்ற உணர்வோடு ஹாஜியாரை வியப்பு மேலிட பார்த்துக் கொண்டே இருந்தார். நானும் ஹாஜியாரும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினோம். தனது உள்ளத்தின் உணர்வுகளை, ஒளிவு மறைவின்றி, துணிச்சலுடனும்,
தைரியத்துடனும் எவர் முன்னிலையிலும் எடுத்துரைக்கும் . பண்பு அவரது உடன்பிறந்த ஒரு பண்பாகும்.
நாங்கள் ஷேய்க் ஹரகானை ராபிதா அலுவலகத்தில் சந்தித்து ஆறுமாத காலங்களின் பின்னர் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ந் திகதி, அஷ் ஷேய்க் முஹம்மத் அலி ஹரகான் தனது இலங்கை விஜயத்தின் போது ஜாமிஆவைத் தரிசித்தார். நளீம் ஹாஜியார் என்னும் தனிமனிதர் ஆற்றும் மகத்தான இஸ்லாமிய கல்விப் பணியை நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பு அப்போது அவருக்கு கிடைத்தது. ஜாமிஆவின் கல்வித் திட்டம், அதன் அமைப்பு, குறுகிய காலப்பிரிவில் அதன் சாதனைகள் அவரை எந்த அளவு கவர்ந்துள்ளது என்பதனை ஜாமிஆ மாநாட்டு மண்டபத்தில் அவர் ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரை உணர்த்தியது. நளீம் ஹாஜியார் இலங்கை நாட்டில் இஸ்லாமிய பணிக்காக உழைக்கும் "முஜாஹித்” என்றும் இலங்கையில் இத்தகைய மகத்தான தஃவாப்பணிக்காக அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளான் எனவும் ஹரகான் ஹாஜியாரின் பணிகளைப் பாராட்டினார். மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அன்று இரவு நளீம் ஹாஜியாரின் இல்லத்தில், ஷேய்க் ஹரகானையும், ராபிதாவின் தூதுக்குழுவையும் கெளரவிக்கு முகமாக நடைபெற்ற விருந்துபசாரத்தின் இறுதியில் அவர் உரையாற்றும் போது, ராபிதா எதிர்காலத்தில் ஜாமிஆவுடன் மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் எனக்
167

Page 86
குறிப்பிட்டதோடு அதன் ஆரம்பமாக ஜாமிஆவில் சில விரிவுரைத் தொடர்களை நிகழ்த்த முஸ்லிம் உலகின் புகழ்பூத்த அறிஞர்களான வுேய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி அவர்களையும் மெளலானா அபுல்ஹசன் நத்வி அவர்களையும் ராபிதா அனுப்பி வைக்குமென வாக்களித்தார்.
மெளலானா அபுல்ஹசன் அலி நத்வியில் மிக ஆழமான பற்றும், கண்ணியமும் நளிம் ஹாஜியாருக்கு இருந்தது. ஜாமிஆவின் இலட்சியம், கல்விக் கொள்கைகளை உருவாக்குவதில் மெளலானாவின் கருத்துக்களும் , சிந்தனைகளும் பெருமளவு துணைபுரிந்ததை அவர் அறிந்திருந்ததே அதற்குக் காரணமாகும். நளீம் ஹாஜியாரும் நானும் ஒரு தடவை உம்ராவிற்காக மக்கா சென்றிருந்தபோது ராபிதா தலைமையகத்தில் மெளலானா நத்வியை முதன் முதலாகச் சந்தித்தோம். அச்சந்திப்பின்போது அவர்களை ஜாமிஆவைத் தரிசிக்க வரும் படி ஹாஜியார் அழைப்பு விடுத்தார். இன்சா அல்லாஹ் கூடிய விரைவில் வர முயற்சிக்கின்றேன் என அவர்கள் பதிலளித்தார்கள். மெளலானா நதவி போன்ற ஓர் அறிஞரை ஜாமிஆவிற்கு வரவழைப்பதில் நளிம ஹாஜியார் மிகவும் கரிசனை கொண்டிருந்தார். இஸ்லாமிய அறிஞர்களையும், இறைபக்தி மிக்க நல்லடியார்களையும் மதிக்கும் உயர்பண்பு அவரோடு உடன்பிறந்த ஒரு பண்பாக விளங்கியது. மெளலானா நத்வியை ஜாமிஆவிற்கு வருகை தரும்படி மீண்டும் அழைப்பு விடுக்க என்னையும், நளீமியா இஸ்லாமிய கலாநிலையத்தின் செயலாளர் நண்பர், எம். எச். எம் ஹிபதுல்லாஹ் அவர்களையும் லக்னோவுக்குச் செல்லும்படி வேண்ட நாங்கள் இருவரும் மெளலாளா நத்வியைச் சந்திக்க லக்னோவுக்குச் சென்றோம். அப்போது மெளலானா நத்வி அவர்கள் வெளிநாடு சென்றிருந்ததால் அவர்களை எங்களால் சந்திக்க முடியவில்லை. இதற்கிடையில் ஷேய்க் ஹரகானின்
168
 

வாக்குறுதிக்கு ஏற்ப ராபிதா மெளலானா நத்வியை ஜாமிஆவிற்கு அனுப்பிவைத்தது. 1982 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாந் திகதி நடைபெற்ற ஜாமிஆவின் முதல் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தவும், கொழும்பில் நளிம ஹாஜியாரின் வெள்ளவத்தை வாசஸ்தலத்தில் உலமாக்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜாமிஆவில் மெளலானா நத்வி ஒரு வாரகாலத்தைக் கழித்தார். இந்நாட்களில் காலை ஸ"பஹற் தொழுகையின் பின்னர் ஒரு நாள் தவறாது மெளலானா நத்வியைச் சந்திப்பதற்காக ஜாமிஆவிற்கு வருகை தரும் நளிம் ஹாஜூ யார் , அ வருடன் 2 60) J U (T 9- பயனுள் ள கருத்துப்பரிமாறல்களை நடாத்தினார். நளிம் ஹாஜியாரின் தூய்மையான சிந்தனையும், அர்ப்பணமும் மெளலானா நத்வியை மிகவும் கவர்ந்தது.
"இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் நளிம் ஹாஜியார் போன்ற ஒரு மனிதர் காணப்படுவதும், ஜாமிஆ நளீமியா போன்ற ஒரு கல்விநிலையம் அமையப் பெற்றிருப்பதுடன், இலங்கையில் இஸ்லாம் உயிரோட்டமுள்ள ஒரு சக்தியாக விளங்குகின்றது என்பதனை உணர்த்துகிறது. அல்லாஹ் அருள் புரிவானாக" மெளலானா நத்வி இவ்வாறு தனது மனப்பதிவுகளை ஜாமிஆவின் விருந்தினர் குறிப்பேட்டில் 15. 5. 1962 இல் பதித்தார்.
நளிம் ஹாஜியார் சந்தித்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்க அடுத்த இரு பேரறிஞர்கள், ஷேய் க் முஹம்மத் அல்-கஸ்ஸாலியும், கலாநிதி யூஸுப் அல்கர்ளாவியும் ஆவர். அப்போது உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த ஷெய்க் கஸ்ஸாலியை, ஜாமிஆவில் விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு ராபிதா அனுப்பிவைத்தது. இஸ்லாமிய உலகின் புகழ்பூத்த சிந்தனையாளர்களுள் ஒருவரும், சுமார்
169

Page 87
நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதிய பேரறிஞருமான ஷேய்க் கஸ்ஸாலி அவர்கள் ஜாமிஆவில் தங்கிய காலப் பிரிவில் நளிம் ஹாஜியார் அவர்கள் பல தடவைகள் அப்பேரறிஞரை சந்தித்து உரையாடினார்கள். ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் ஜாமிஆ பற்றிய நளிம் ஹாஜியாரின் அறிவுப் பணிபற்றிய தனது உணர்வுகளை ஜாமிஆவின் பதிவேட்டில் பின்வருமாறு குறித்துள்ளார்.
"இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், அவர்களது சமூக, கலாச்சார, பண்பாட்டு நிலைபற்றி அறிவதற்காகவும், அனைத்துக்கும் மேலாக அல்ஹாஜ் நளிம் அவர்களின் பெருமுயற்சியால் நிறுவப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற ஜாமிஆ நளிமியாவைத் தரிசிப்பதற்காகவும் இலங்கைக்கு வந்தேன். இந்த ஜாமிஆவில் நடைபெறும் அறிவுப் பணிகளைக் கண்டதும் இந்நாட்டில் இஸ்லாத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற மன அமைதி எனக்கு ஏற்பட்டது."
ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள கதர் நாட்டின் பல்கலைக்கழகம் அதன் ஷரிஆத் துறையில் தலைவரும், இஸ்லாமிய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவருமான கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்களை ஜாமிஆவில் விரிவுரை நிகழ்த்த அனுப்பி வைத்தது. ஏறக்குறைய ஐந்து நாட்களை ஜாமிஆவில் கழித்த கலாநிதி யூஸுப் அல்கர்ளாவியைப் பல தடவைகள் சந்தித்து நளிம் ஹாஜியார் உரையாடினார். கலாநிதி யூஸுப் கள்ளாவி ஜாமிஆவைப் பற்றிய தனது உரைகளை ஜாமிஆவின் விருந்தினர் பதிவேட்டில் பின்வருமாறு பொறித்துள்ளார்.
"ஜாமிஆ நளீமியாவின் சூழலில் ஐந்து நாட்களைக் கழிக்கும் வாய்ப்பை அல்லாஹ் எனக்களித்தான். ஆழமான
170

乳
s計

Page 88
இஸ்லாமிய கலைகள், ஆய்வுக்கான மன்னர் பைஸல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஸெய்யத் அப்துல் முஹ்ஸின் அல் ஹுஸைனுடன் நளீம் ஹாஜியாரின் சந்திப்பு.
ஜாமிஆவின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேரறிஞர் மெளலானா ஸெய்யித் அபுல்ஹஸன் அலி நத்வி அவர்கள் சான்றிதழ் வழங்குகிறார்கள். நளீம்
ஹாஜியாரும் உடன் காணப்படுகிறார்.

நளீம் ஹாஜியார். கராச்சியிலுள்ள அலீமியா இஸ்லாமிய நிலையத்தின் தலைவரும் இஸ்லாமிய பிரசாரகருமான மெளலானா கலாநிதி பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி அவர்களுடன்.

Page 89
இஸ் லாமாபாத்தில் நடைபெற்ற சர்வதேச இஸ் லாமிய மகாநாட்டின்போது நளிம் ஹாஜியார் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கை சந்திக்கின்றார். படத்தில் நூலாசிரியர் கலாநிதி எம். ஏ. எம். கக்ரி, ஜாமிஆ நளிமியா நம்பிக்கை சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. எம். எம். ரவுப் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
災
மோத மார் அல் - இஸ்லாமின் செயலாளர் நாயகம்
இனாமுல்லாக்கானுடன் நளீம் ஹாஜியார் இடது புறத்திலிருப்பவர் அல்ஹாஜ் எம். எச். முஹம்மத் அவர்கள்.
 
 

அறிவும் , துTர நோக்கும் படைத்த இஸ் லா மரிய அழைப்பாளிகளை உருவாக்கும் ஒரு பாசறையாக இந்த ஜாமிஆவை ஆக்கிய அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். இந்த ஜாமிஆவை நிறுவிய அல்ஹாஜ் நளிம் அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அவனது தராசில் ஒரு நிறையாக இதனை ஆக்கியருள்வானாக.
ராபித்துல் ஆலமுல் இஸ்லாமியின் தற்போதைய செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லாஹ் உமர் நஸிப் அவர்களை பல சந்தர்ப் பங்களில் ராபரிதாவின் தலைமையகத்தில் சந்தித்து ஜாமிஆவிற்கும், ராபிதாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நாடாத்தும் வாய்ப்பு நளீம் ஹாஜியாருக்குக் கிடைத்தது. கலாநிதி நஸிப் ஜாமிஆவைத் தரிசித்தபோது நளீம் ஹாஜியாரின் இந்த மகத்தான அறிவுப் பணியை மனதாரப் பாராட்டினார். ஆண்டு தோறும் அல்லாஹ்வின் பேரருளால் புனித மக்காவிற்குச் செல்லும் போதெல்லாம் கலாநிதி அப்துல்லாஹ் நஸிபை அவரது அலுவலகத்தில் சந்திக்க நளிம் ஹாஜியார் தவறுவதில்லை.
பாகிஸ்தானைப் பொறுத்தளவில் அந்நாட்டின் புகழ்பூத்த அறிஞர்களான மெளலானா பஸ்லூர் ரஹ்மான் அன்ஸாரி, ஏ.கே.புரோஹி பேராசிரியர் குர்ஷித் அஹற்மத் ஆகியோர் நளிம் ஹாஜியாரை சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற முக்கியத்தர்களுள் குறிப்பிடத்தக்கோராவர். இஸ்லாமியக் கல்விப் பாரம்பரியமும், நவீன கல்வியும் ஒன்றிணைந்த கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த முன்னோடிகளுள் ஒருவராக மெளலானா பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி அவர்கள் விளங்குகின்றார்கள். அவரது இந்த இலட்சியத்தைச் செயல்படுத்தும் வகையிலேயே காராச்சியில் அலிமியா
175

Page 90
இஸ்லாமிய கலாநிலையத்தை அவர் உருவாக்கினார். கராச்சியில் மெளலானா அன்ஸாரியைச் சந்திக்கும் வாய்ப்பு நளிம் ஹாஜியாருக்குக் கிடைத்தது.
மெளலானா அன்ஸாரி ஜாமிஆவிற்கு 14.12.1973 ஆம் ஆண்டு வருகை தந்தபோது அவரது இரண்டாவது சந்திப்பு நிகழ்கின்றது. மெளலானா பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி ஜாமிஆ மாநாட்டு மண்டபத்தில் ஆற்றிய சொற்பொழிவுக்கு நளிம் ஹாஜியார் தலைமை தாங்கினார். ஜனாப்.ஏ.கே புரோஹி பாகிஸ்தான் உருவாக்கிய மிகப் பிரபல்யமான சட்ட அறிஞரும் அண்மைக்காலப் பிரிவில் முஸ்லிம் உலகில் தோன்றிய ஆற்றல் மிக்க சிந்தனை யாளர்களுள் ஒருவருமாவார். ஜனாப் புரோஹி அவர்கள் 1976ம் ஆண்டு ஜாமிஆ நளிமியாவிற்கு வருகை தந்தபோது நளிம் ஹாஜியார் அவர்கள் புரோஹரீயைச் சந்தித்தார்கள் நளிம் ஹாஜியாரின் அர்ப்பணிப்பான சமூகப் பணியையும், அறிவுப் பணியையும் பாராட்டி ஜனாப் புரேஹி அவர்கள் குறித்துள்ள வார்த்தைகள், அவர்மீது புரோஹி அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை நல்லெண்ணம் எதிர்பார்ப்புகளை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. பாக்கிஸ்தானின் சிறந்த கல்விமான்களுள் ஒருவரும், இஸ்லாமிய ஆய்வாளரும் லண்டன் இஸ்லாமிய நிறுவனத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் அவர்களைப் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கும் வாய்ப்பு நளிம ஹாஜியாருக்குக் கிடைத்தது. பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் அவர்கள் நளிம் ஹாஜியாரின் மேல் வைத்துள்ள பெருமதிப்பை பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளேன். பல்வேறு இஸ்லாமிய சர்வதேசிய மாநாடுகளில் சகோதரர் குர்ஷித் அஹ்மதை நான் சந்தித்தால் முதன் முதலாக அவரது கேள்வி நளிம் ஹாஜியார் பற்றியதாகவே அமைவதைக் கண்டுள்ளேன். இதனை மிகச்சிறப்பாக உணர்த்தும் ஒரு சம்பவம் இந்நூலில்
176

பொருத்தமான ஓர் சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்படும். முஃதமருல் ஆலமும் இஸ்லாமி என அழைக்கப்படும் உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கலாநிதி இனாமுல்லாகான் கராச்சியிலுள்ள முஃதமரின் தலைமைச் செயலகத்திலும் இலங்கைக்கு அவர் வருகை தந்தபோதும், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் ஆயிரமாம் ஆண்டு, ராபிதாவின் வெள்ளி விழா போன்ற சர்வதேசிய இஸ்லாமிய நிகழ்வுகள், மாநாடுகளின்போதும் நளிம் ஹாஜியாாரை சந்தித்துள்ளார். கலாநிதி இனாமுல்லாகான், ஜாமிஆவின் வளர்ச்சியின் ஆரம்பகால கட்டத்திலிருந்தே நளிம் ஹாஜியாருக்குத் தனது மனப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கியவராவர். ஜாமிஆ ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், பாக்கிஸ்தானிற்குச் சென்று, அங்குள்ள இஸ்லாமிய கலாநிலையங்களைத் தரிசித்தும் அறிஞர்கள், கல்விமான்கள், சிந்தனையாளர்களைச் சந்தித்தும் கருத்துப்பரிமாற்றம் செய்து, அமைக்கத் திட்டமிட்டுள்ள ஜாமிஆவின் கல்வித் திட்டம் தொடர்பாக அவர்களது ஆலோசனைகளைப் பெறும்பொருட்டு நளிம் ஹாஜியார் எங்களில் ஒரு சிலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அங்கு அனுப்பி வைத்தார். இக்குழுவினர் பாக்கிஸ்தானில் கலாநிதி இனாமுல்லா கானையே முதலில் சந்தித்தனர். அவரே பாக்கிஸ்தானில் அறிஞர்கள் கல்விமான்களை நாங்கள் சந்திக்கவும், கலாநிலையங்களைத் தரிசிக்கவும் ஏற்பாடு செய்தார்.
ஜாமிஆ நளீமியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வே ஜித்தாவிலுள்ள இஸ்லாமிய அபிவிருத்தி வங்கிக்கும், ஜாமிஆ நளீமியாவுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பாகும். இந்தத் தொடர்பும், உறவும் ஆரம்பமாகிய முறையே ஒரு சுவையான வரலாறாகும். இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, ஜாமிஆவின் நிரந்தர வருமானத்திற்காக கொழும்பில் கட்டத் தீர்மானித்திருந்த பதினொரு மாடிக்கட்டடத்திற்கு நிதி உதவி
177

Page 91
அளிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட நளிம் ஹாஜியாரும், நானும் ஜித்தாவிற்குச் சென்றோம். அதுதான் இஸ்லாமிய அபிவிருத்தியின் தலைவர் கலாநிதி அஹ்மத் முஹம்மத் அலி அவர்கட்கும், நளிம் ஹாஜியாருக்குமிடையில் ஏற்பட்ட முதல் சந்திப்பாகும். கலாநிதி அஹ்மத் முஹம்மத் அலி இன்றைய இஸ்லாமிய உலகில் மிகப்பெரும் பதவி ஒன்றை வகிப்பவராக இருந்தாலும், அவரின் எளிய பண்பும் விழுமிய குணங்களும் நளிம் ஹாஜியாரை மிகவும் கவர்ந்து விட்டதை நான் அக்கணமே உணர்ந்தேன். கலாநிதி முஹம்மத் அலியும் நளிம் ஹாஜியார் பால் மிக அன்போடும், கரிசனையோடும், கண்ணியத்தோடும் நடந்து கொண்டார். ஒன்றுபட்ட பண்புகளால் பிணைக்கப்பட்ட இரு உள்ளங்கள் என என்னுள் எண்ணிக் கொண்டேன். கலாநிதி அஹமத் முஹம்மத் அலியும் நளீம் ஹாஜியாரும், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கிக்கும் , நளிமியா இஸ்லாமிய கலாநிலையத்திற்குமிடையிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் ஒப்பந்தத்தின் பிரதியை நளிம் ஹாஜியாரிடம் கையளித்த கலாநிதி முஹம்மத் அலி "உங்களைப் போன்ற நல்ல எண்ணமும் இஸ்லாமியப் பற்றுமிக்க ஒரு நல்ல மனிதருடன் இத்தகைய ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடக் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்" என்றார். "அதுபோன்ற உணர்வே எனக்கும் ஏற்படுகின்றது உங்களைப் போன்ற உயர்பண்புகள் படைத்த ஒருவருடன் எனக்கும் இத்தகைய இஸ்லாமிய பணிக்கான இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடக் கிடைத்தமையும் ஒரு பெரும் பேறாகக் கருதுகின்றேன்." என நளிம் ஹாஜியார் பதிலளித்தார் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு நாங்கள் வெளியே வந்ததும் நளீம் ஹாஜியார் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகள் இன்னும் எனது உள்ளத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. டாக்டர் முஹம்மத் அலி அவர்கள் நான்
178

எனது வாழ்க்கையில் சந்தித்த நல்ல உயர்ந்த குணங்களைக் கொண்ட மனிதர்களுள் ஒருவர் இந்த சந்திப்பு தொடர்ந்து பல சந்ததிப்புகளின் சங்கிலித் தொடரின் ஆரம்பமாக அமைந்தது. புனித மக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உம்ராவிற்காகச் செல்லும்போது இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் ஜித்தாவிலுள்ள தலைமையத்தில் கலாநிதி முஹம்மத் அலியை சந்திப்பது அவரது பிரயாணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இன்றுவரை உள்ளது. கலாநிதி முஹம்மத் அலி அவர்கள் நளிம் ஹாஜியார்மீது வைத்துள்ள நம்பிக்கை பெரும் மதிப்பை தன்னிடம் பல தடவைகள் தன்னிடம் புலப்படுத்தியுள்ளதாக சவுதி அரேபியாவில் முன்னைநாள் இலங்கைத் தூதுவர் மர்ஹும் எம். ஆர். தாஸிம் அவர்கள் என்னிடம் ஒரு தடவை குறிப்பிட்டதுண்டு.
"இலங்கையின் எல்லா மூலை முடுக்குகளிலும் இஸ்லாத்தின் ஒளியைப் பரப்பும் ஒரு கலாச்சார மத்தியதலமாக ஜாமிஆ நளீமியா அமைவதற்காக அதன் விதையை நாட்டி அதனை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து அதற்கே அர்ப்பணமாகி உழைத்துவரும் அல்ஹாஜ் முஹம்மத் நளிமின் நல்வாழ்விற்காக அல்லாஹ்வை பிராத்திக்கிறேன்." 5. 1. 85 இல் ஜாமிஆவைத் தரிசித்த கலாநிதி முஹம்மத் அலி அவர்கள் விருந்தினர் பதிவேட்டில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் இவை.
கலாநிதி முஹம்மத் அலியினதும், நளிம் ஹாஜியாரினதும் இந்த சந்திப்பும், தொடர்பும் இன்றைய உலகின் இன்னும் இரு இஸ்லாமிய பணியாளர்களின் மகத்தான சந்திப்பிற்கு வழியமைத்துக் கொடுத்தது.
ஷேய்க் ஸாலிஹ் காமில் அவர்கள் ஸவுதி அரேபியாவின் ஒரு பெரும் தொழிலதிபர். டல்லா நிறுவனத்தின் ஸ்தாபகர்.
179

Page 92
அல்-பரகா இஸ்லாமிய வங்கியின் தலைவர். அனைத்துக்கும் மேலாக முஸ்லிம் சமூகத்தின் வளர்ச் சரியிலும் , முன்னேற்றத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட சமூக ஆர்வலர். அவர் உலகில் முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையோராக வாழும் நாடுகளில், முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு தொழில்களில் பயிற்சி பெறுவதற்குத் துணைபுரியும் வகையில் தொழில்நுட்பக்கல்லூரிகளை அமைப்பதற்கு நோக்கமாகக் கொண்டு இக்ர நிறுவனம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். இலங்கையிலும் முஸ்லிம் சிறுபான்மையோரின் நன்மை கருதி இக்ர தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றை அமைக்கும் எண்ணங்கொண்ட வுேய்க் ஸாலிஹ் காமில் அவர்கள் அதனைப் பொறுப்பேற்று நடத்துவதற்குப் பொருத்தமாக நம்பிக்கையும் நாணயமும் மிக்க ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே இஸ்லாமிய அபிவிருத்தியின் தலைவர் கலாநிதி முஹம்மத் அலியும் நளிம் ஹாஜியாரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் காட்சி சவுதி அரேபிய தொலைக்காட்சியில் செய்தி அறிக்கையின் போது காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியை பார்க்க நேரிட்ட ஷேய்க் ஸாலிஹ் காமில் அவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கான தொழில் நுட்பக் கல்லூரியை அமைக்க தம்முடன் ஒத்துழைக்கப் பொருத்தமான ஒரு மனிதர் கிடைத்துவிட்டார் என்ற மன நிறைவைப் பெற்றார். நளிம் ஹாஜியார் தங்கியுள்ள ஹோட்டலைப் பற்றி விசாரித்து இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் தொடர்பு கொண்டார். ஆனால் இதற்கிடையில் நாங்கள் ஸவுதியிலிருந்து புறப்பட்டு வந்து விட்டோம். இதனைத் தொடர்ந்து நளீம் ஹாஜியாருடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த ஒரு குழுவை ஷேய்க் ஸாலிஹ் காமில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பல சந்திப்புகள் பரஸ்பர கருத்துப்பரிமாறல்களின் பின்னர்
180

இக்ரஃ நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் கலாநிதி முஹம்மத் யெமானி அவர்களுக்கும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் நளிம் ஹாஜியாருக்கும் இடையில், இலங்கையில் இக்ராஃ தொழில் நுட்பக் கல்லூரி நிறுவுவது சம்பந்தமான ஒப்பந்தம் ஸவுதி அரேபியா இ க்ரஃ நிறுவனத்தின் தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இக்ரஃ தொழில் நுட்பக்கல்லூரி அமைத்தல் தொடர்பாக விடயங்களுக்காக அதனைத் தொடர்ந்து நளீம் ஹாஜியாரும் நானும் பல தடவைகள் ஸவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்தோம். இச்சந்தர்ப்பங்களின்போது கலாநிதி முஹம்மத் அப்துல் யெமானி நளிம் ஹாஜியாரில் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் புலப்படுத்தினார். ஒரு சந்தர்ப்பத்தில் நளிம் ஹாஜியாரை கெளரவிக்கும் முகமாக அவரது இல்லத்தில் ஒரு விசேட விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த அவர், அவ்விருந்துக்கு சவுதி அரேபியாவின் வணிகப் பிரமுகர்கள் கல்விமான்கள், இலக்கிய அறிஞர்கள், இவ்வாறு பல்வேறு துறைசார்ந்தவர்களை அழைத்திருந்தார். அவர்கள் மத்தியில் நளிம் ஹாஜியாரையும் அவரது சன்மார்க்க கல்விப் பணிகளையும் புகழ்ந்து பேசிய கலாநிதி யெமானி சடவாதமும், லோகாயத உணர்வும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய கால கட்டத்தில் நளிம். ஹாஜியார் போன்றவர்களைக் காண்பது மிக அரிது எனவும், அதுவும் முஸ்லிம்கள் சிறுபான்மை யோராக வாழும் இலங்கை நாட்டில் இத்தகைய ஒருவர் காணப்படுவது இறைவனின் பேரருள் எனவும் குறிப்பிட்டார். அங்கு வந்திருந்த அனைவருக்கும் நளிம் ஹாஜியாரை அவர் அறிமுகம் செய்தார். அக்கூட்டத்தில் இன்றைய அரபுலகின் புகழ்பூத்த அரபுக் கவிஞர்களுள் ஒருவரான உமர் பஹா அமீரி அவர்களும் இருந்தார். கலாநிதி யெமானி ஒரு பெரும் கல்விமான் ஸவுதி அரேபியாவின் முன்னாள் தகவல்துறை அமைச்சர். மன்னர் அப்துல் அஸிஸ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் துணை வேந்தர் பல பயனுள்ள நூல்களை
181

Page 93
ஆக்கிய பன்னூலாசிரிரியர். இன்றைய இஸ்லாமிய உலகம் மதித்துப் போற்றும் ஓர் இஸ்லாமிய அழைப்பாளர்.
நளிம் ஹாஜியார் ஒரு பட்டதாரியல்ல பாடசாலைக் கல்வியை ஐந்தாம் வகுப்புடன் முடித்துக் கொண்டவர். ஆனால் சர்வதேசப் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகங்கள், இஸ்லாமிய நிறுவனங்களின் மாநாடுகள், கருத்தரங்குகளுக்கு அவர் அழைக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் அதன் ஆயிரம் ஆண்டுப் பூர்த்தி விழாவையொட்டி ஒரு சர்வதேசிய மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அந்த மகா நாட்டில் கலந்து கொல்வதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் இஸ் லாமிய அறிஞர்கள் , சிந்தனையாளர்கள், கல்விமான்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
நளிம் ஹாஜியாரும் இம் மகாநாட் டி ற் காக அழைக்கப்பட்டார். நானும் இம்மகாநாட்டில் கலந்து கொண்டேன் மகாநாட்டின்போது ஷெய்குல் அஸ்ஹர் கலாநிதி ஜாதுல் ஹக் அவர்களையும் எகிப்தின் தலைசிறந்த அறிஞர்கள் குழுவைச் சேர்ந்த கலாநிதி அஹ்மத் ஷலபீ கலாநிதி ஸ சைனி ஹாஷீம் போன்றோரையும் பிறநாட்டு அறிஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. குர்ஆனின் அறிவியல் ரீதியான கருத்துக்களால் கவரப்பட்டு 3) GivaunTģşGODg5ģ5 g5(ipada) (THE BIBLE, THE QUR'AN AND SCIENCE) பைபிளும், குர்ஆனும் அறிவியலும் என்னும் நூலை எழுதிய கலாநிதி மொரிஸ் புகைலையும் (MAURCEBUCALLE) நளிம் ஹாஜியார் சந்தித்தார்.
லண்டனிலுள்ள ஐரோப்பிய இஸ்லாமிய கவுன்ஸில் (EUROPLAN ISLAMIC COUNCIL)1985-gün gGö7G) UTâGiug/TGöfgöT தலைநகரான இஸ்லாமாபாத்தில் “இன்று இஸ்லாம்"
182

(SLAM Tம்DAY) என்ற தொனிப்பொருளில் ஒரு சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கிற்காக நளிம் ஹாஜியாரும் அழைக்கப்பட்டார். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த பிரதிநிதிகளுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் அவர்கள் ஓர் இராப்போசன் விருந்தளித்து கெளரவித்தார். அந்த விருந்தில் நானும் நளிம் ஹாஜியாரின் மிக நெருங்கிய நண்பரான ՄՁլւն ஹாஜியாரும், நளிம் ஹாஜியாரும் கலந்து கொண்டோம். அந்த வைபவம் முடிந்து விருந்தினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் அவர்கள் நளிம் ஹாஜியாரை நோக்கி விரைந்து வந்தார். "ஹாஜி நீங்கள் இப்போதே அவசரமாகச் சென்றுவிட வேண்டாம். சற்றுத் தாமதியுங்கள் உங்களை நான் ஜனாதிபதி வியாஉல் ஹக் அவர்களுக்கு அறிமுகப்படுத்தல் வேண்டும். முஸ்லிம்கள் சிறுபான்மையோராத வாழும் இலங்கை நாட்டில் இஸ் லாத்திற்காகவும், முஸ்லிம்களுக்காகவும் ஒரு தனிமனிதராக நின்று நிறைய பணிகளைப் புரிகின்றீர்கள் இவற்றை ஜனாதிபதி ஸியாஉல் ஹக் அறிதல் வேண்டும் எனக் கூறினார். ஹாஜியாரும் நானும் சற்றுத் தாமதித்து நின்றோம். சற்று நேரத்தின் பின்னர் பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் ஹாஜியாரையும், என்னையும் மிக விசாலமான, அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜனாதிபதி ஸியாஉல் ஹக் புன்னகை பூத்த முகத்துடன் எங்களை வரவேற்றார். பேராசிரியர குர்ஷித் நளிம் ஹாஜியாரைப் பற்றியும், -9|6ւ/Մ5] பணிகள் பற்றியும் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தார். ஜனாதிபதி ஸியாஉல் ஹக் ஹாஜியாரின் இப்பணியைப் பாராட்டி இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமூக, கலாசார நிலைகள் பற்றி மிக நீண்ட நேரம் எங்களுடன் உரையாடினார். "முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களுள் மிக நல்ல மனிதர்" என நளீம் ஹாஜியார் ஸியாஉல் ஹக்கை அடிக்கடி பாராட்டுவார். நாங்கள் உம்ராவுக்குச் செல்லும்போதெல்லாம்
183

Page 94
பெரும்பாலும் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்குக்கும் உம்ராவுக்காக வந்துள்ளார் என்ற செய்தியை சவுதி அரேபியாவின் தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் அறிவோம். புனித பூமியை உயிராக நேசிக்கும் நளிம் ஹாஜியாரின் உள்ளத்தையே ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கும் பெற்றுள்ளார் என்ற உணர்வு அப்போதெல்லாம் எனது உள்ளத்தில் தோன்றுவதுண்டு. அதுதான் இந்த சந்திப்பின் பின்னால் உள்ள இறை சித்தமோ?
நளிம் ஹாஜியார் அவர்கள் சர்வதேசிய மட்டத்தில் புகழ்பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்விமான்கள், இஸ்லாமிய அழைப்பாளிகள், ஆட்சியாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும், அவர்களில் சிலரோடு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தையும், வேறு சிலரோடு முக்கிய பணிகளில் ஒன்றாக ஈடுபட்டு உழைக்கும் வாய்ப்பையும் பெற்றது போன்றே, தேசிய வாழ்விலும் பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களையும், பெற்றார். இத்தொடர்புகள் அவர் குறுகிய அரசியல் லாபம் பெறக்கருதி ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளாக அன்றி, அவரது பொது வாழ்வோடும், சமூகப் பணியோடும் தொடர்புடைய உறவுகளாகவும், சம்பந்தங்களாகவுமே விளங்கின. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நளிம் ஹாஜியாரின் பிரவேசத்திற்கான காரணமும், பின்னணியும் ஏற்கனவே மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. அன்றைய சூழலில் முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக பேருவலை சீனன்கோட்டை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்கள் பற்றி அவர் கொண்டிருந்த கரிசனையே அன்றைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்தியது என்ற உண்மை ஏற்கனவே தெளிவு படுத்தப்பட்டது. அவரது இந்த அரசியல் பிரவேசத்திற்கு முன்னரேயே அவருக்கும் அப்போதைய பிரதமர் திரு. டட்லி சேனநாயகா
184

அவர்கட்குமிடையில் தனிப்பட்ட முறையில் நீண்டகாலத் தொடர்பிருந்தது. சமூகத்தில் பொதுப்பணியில் ஈடுபட்டிருந்த அவர் பல்வேறு சந்தர் ப் பங் களில் திரு. டட்லி சேனாநாயக்காவுடன் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. திரு. டட்லி சேனநாயக்கா நளீம் ஹாஜியாரில் மிக அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். 1970ஆம் ஆண்டு சீனன்கோட்டையில் நளிம் ஹாஜியாரினால் நிர்மாணிக்கப்பட்ட நளிம் ஹாஜியார் விளையாட்டரங்கை அப்போது பிரதமராக இருந்த திரு. டட்லி சேனநாயக்கா திறந்து வைத்தார். இத்தகைய பொது வைபவங்கள் விழாக்களின் போதும், தனிப்பட்ட வகைகளிலும் நளிம் ஹாஜியாரைச் சந்தித்த திரு. டட்லி சேனநாயக்கா, நளிம் ஹாஜியாரின் பண்புகள், குணநலன்கள், தன்மைகள் பற்றி மிக நுணுக்மாக அறிந்திருந்தார். 1970ஆம் ஆண்டு திரு.டட்லி சேனநாயக்காவின் தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி மிகப் பயங்கரமான தோல்வியைக் கண்டது.
1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமது கட்சியின் வெற்றியில் பெரும் நம்பிக்கை வைத்து செயல்பட்ட திரு. டட்லி சேனநாயக்கா அவர்கட்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. தேர்தலின் தோல்வியின் பின்னர் மிகவும் மனந்தளர்ந்த நிலையில் இருந்த திரு.டட்லி சேனநாயக்காவைச் சந்திப்பதற்காக நளிம் ஹாஜியார் பொரளையிலுள்ள அவரது இல்லமான "வுட்லன்ஸ்"க்குச் சென்றார்.
"நான் பொரளையிலுள்ள திரு. டட்லி சேனாநாயக்காவின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். மேல் மாடியில் இருந்த திரு. டட்லியைச் சந்திக்க அவருக்கு நெருக்கமான வேலையாளர்களன்றி வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. நான் திரு. டட்லியைச் சந்திக்க மேல்மாடிக்குச் சென்றேன். அவர் அங்கு
185

Page 95
தன்னந்தனியே உட்காந்திருந்தார். தேர்தலில் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய விரக்தியின் பிரதிபலிப்பு அவரது முகத்தில் பிரதிபலித்தது. நான் அவரது எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தேன். இருவரும் நிண்ட நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தோம். அந்த நீண்ட அமைதியைக் கலைக்கும் வகையில் அவர் பேசினார் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக அப்படியே பதிந்துள்ளன. என்னை நோக்கி அவர் கூறினார். "நளீம்”! அப்படித்தான் பொதுவாக என்னை விளிப்பார். எனது வாழ்க்கையில் நான் பலரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் உன்னைப் போல் நல்ல உள்ளம் படைத்த ஒருவரைச் சந்தித்ததேயில்லை. டட்லியின் இந்தவார்த்தைகள் என்னை உணர்ச்சிவசமடையச் செய்தன. எனது கண்கள் கலங்கின. அவரது கண்களும் கலங்கியதை அவதானித்தேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதிகாரம் இருக்கும் நிலையிலும், அது இல்லாத நிலையிலும் நன்றியுணர்வு படைத்த அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள் என்ற உண்மையை அப்போதுதான் நான் உணர்ந்தேன்."
முன்னாள் ஜனாதிபதி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தனாவுக்கும் நளீம் ஹாஜியாருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு நிலவியது. அவர் நளீம் ஹாஜியார் பற்றிக் கொண்டிருந்த நல்லெண்ணமும், அவர்பால் வைத்திருந்த நன்மதிப்பும், நளீம் ஹாஜியார் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, சிறையில் அவர் மனிதபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதைப் பற்றிக் கண்டித்து, கவலை தெரிவித்து அவருக்கு உதவி வழங்கப்படல் வேண்டும் எனக்கோரி பாராளுமன்றத்தில் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜே. ஆர். நிகழ்த்திய உரையில்' மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. "நான் தடுப்புக்காவலில் குற்றஞ்சாற்றப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் எவருக்காகவும்
186

இங்கு பரிந்துபேசவரவில்லை. ஆனால் ஒருவரை நான் நன்கு அறிவேன் அவர்தான் நளீம் ஹாஜியார். முழு முஸ்லிம் உலகும் மதிக்கும் ஒரு மனிதர் அவர்"......
திரு. ஜே. ஆர் ஜயவர்த்தனா அவர்கள் நளீம் ஹாஜியார்மீது வைத்திருந்த இந்த நல்லெண்ணமும், நம்பிக்கையும் காரணமாகவே, அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் பாரிய கொழும்பு பொருளாதார கமிஷன் அங்கவத்தவர்களுள் ஒருவராக நளீம் ஹாஜியாரை நியமிக்க முடிவுசெய்தார். இந் நியமனம் பற்றி நளீம் ஹாஜியரிடம் அறிவிப்பதற்காக அவரை தனது இல்லத்திற்கு வரும்படிஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனா அழைத்தார். அங்கு சென்ற நளீம் ஹாஜியாரிடம் தான் அவரை பாரிய கொழும்பு பொருளாதார கமிஷனின் அங்கத்தவர்களுள் ஒருவராக நியமிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்த போது, நளீம் ஹாஜியார் தனது உள்ளம் அதனை ஏற்றுக்கொள்ள உடன்படவில்லை எனக்கூறி, ஜனாதிபதியின் நல் லெண்ணத்திற்கு நன்றி தெரிவித்தார். அப்படியாயின் அப்பதவிக்கு வேறு ஒரு முஸ்லிமை சிபார்சு செய்யும்படிஅவர் நளீம் ஹாஜியாரைக் கேட்க, > “எவரிலும் பூரண - நம்பிக்கை வைத்து என்னால் சிபார்சு செய்யமுடியாது” என தனது கருத்தை அவர் மிக வெளிப்படையாக தெரிவித்தார். இந்நாட்டின் ஜனாதிபதி ஒருவரே பெரும் பொறுப்புள்ள பதவியை, அவரது இல்லத்திற்கே அழைத்து அவருக்கு வழங்கியபோதுகூட அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய நளீம் ஹாஜியாரின் பண்பு அவரது ஆளுமையின் சிறப்பம்சமாகும்.
காலஞ்சென்ற ஜனாதிபதி திரு . ரண சிங் ஹ பிரேமதாசவிற்கும், நளீம் ஹாஜியாருக்கும் இடையிலுள்ள அறிமுகமும், தொடர்பும் மிகப் பழமையானது. திரு.
187

Page 96
பிரேமதாசா அரசியலில் சாதாரண ஒருவராக இருந்த காலத்திலிருந்தே இத்தொடர்பு இருந்தது. திரு. பிரேமதாசா ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் கீழ் உள்ளூராட்சி அமைச்சராகப் பணிபுரிந்த காலப்பிரிவில் ஒருநாள் அவரைச் சந்திப்பதற்கு அவரது சுச்சரித்த நிலையத்திற்கு நளிம் ஹாஜியார் சென்றார். அங்கு அவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது நளிம் ஹாஜியார் அக்கட்டடம் மிகப் பழைய கட்டடமாகக் காணப்படுவதையும், அப்பிரதேசத்தில் வாழும் பல இன மக்களும் பயனடையும்வகையில் பல பணிகளும் சேவைகளும் அங்கு நடைபெறுவதையும் அவதானித்தார். "நான் இந்தக் கட்டடத்தை எனது செலவில் புதிதாகக் கட்டித்தருகிறேன்" என நளிம் ஹாஜியார் சற்றும் எதிர்பாராத அவரது இந்த அன்பளிப்பை கூறியதும் அமைச்சர் பிரேமதாசாவின் முகத்தில் வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த ஒர் உணர்வு தோன்றியது. எதையும் கேட்காமல் தானாகவே தேவைகளை உய்த்துணர்ந்து பணிபுரியும் நளிம் ஹாஜியார் உள்ளம் நிச்சயம் அவரை ஆகர்ஷித்திருத்தல் வேண்டும்.
அதன் பயனாக பழைய சுச்சரித்த கட்டடம் இருந்த இடத்தில் ஒரு நவீன கட்டடம் எழும்பியது. அதன் திறப்புவிழாவை, வெறும் ஒரு திறப்பு விழாவாக மட்டுமன்றி, நளீம் ஹாஜியாருக்கு தான் அளிக்கும் பாராட்டு விழாவாகவும் அமைச்சர் பிரேமதாஸா மிக கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார் நளிம் ஹாஜியாரைத் திறந்த ஜிப் வண்டியொன்றில் ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்தார். சுச்சரித்த மண்டப வாயிலில் அப்போதைய ஜனாதிபதி, திரு. சிரிசேன குரே ஆகியோர் நளிம் ஹாஜியாரை வரவேற்றனர். இன. மத பேதமின்றி கொழும்பு மத்திய தொகுதியில் வாழும் அனைத்து மக்களினதும் நன்மையை கருதி இத்தகைய ஒரு பெரும்பங்களிப்பினைச் செய்த நளீம் ஹாஜியாரின் இப்பணியை ஒரு தேசியப்பணி என அங்கு
188

நிகழ்த்திய உரையில் திரு. ஜே.ஆர். ஜயவர்தன குறிப்பிட்டார். 1981ல் ஜாமிஆ நளிமியாவின் பரிபாலனக் கட்டிடத்தை, நளிம் ஹாஜியாரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஆர். பிரேமதாசா திறந்துவைத்து, அவ்விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டதும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். திரு. ஆர் பிரேமதாச அவர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் கெளரவவிருதை நளிம் ஹாஜியாரின் சமூக தேசியப் பணிகளை அங்கீகரித்து அவரை கெளரவிக்கும் வகையில் வழங்க இருப்பதாக நளிம் ஹாஜியாருக்கு அறிவித்தபோதுதான் எத்தகைய கெளரவப்பட்டத்தையும் பெற்றுக் கொள்ள விரும்புவதில்லையென்றும், தன்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்துக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பட்டம் பதவி அந்தஸ்துகள் என்பன தன்னைத்தேடி வந்தபோதுங்கூட, அவற்றை ஒரு பொருட்டாக மதிக்காத பக்குவமடைந்த மனநிலையை அவரில் நாம் அவதானிக்க முடிகின்றது.
"அல்லாஹ்வின் நல்லடியார்களில் ஒரவராக நான் ஆகிவிட்டால் அது ஒன்றே எனக்குப் போதும்" என அவர் அடிக்கடி கூறுவார்.
நளிம் ஹாஜியாரின் சந்திட்டரின் நினைலைகளில் அவர் நெஞ்சில் நிறைந்த ஒரு சந்திப்பாக விளங்கும் ஒரு சந்திப்பை அவர் அடிக்கடி நினைவு கூருவார். அதுவே ஜனாதிபதி மாளிகையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த எலிஸபெத் மகாராணியைச் சந்தித்ததாகும். ஏன் அவர் இந்த சந்திப்பின் நினைவை உள்ளத்தில் மறக்காது பாதுகாத்துவைத்து அடிக்கடி நினைவு படுத்திக் கொள்கின்றார்? அது ஒரு பிரிட்டிஷ் மகாராணியின் சந்திப்பு என்ற பெருமையும், பூரிப்பும் காரணமாகவா? இல்லவே
189

Page 97
இல்லை. அந்த சந்திப்பில் தனது வாழ்வின் அல்லாஹ்வின் அருளின் அசைவைக் காண்கின்றார். வாழ்க்கையின் மிக அடிமட்டத்தில் இருந்த தன்னை அறிஞர்களை, அல்லாஹ்வின் நல்லடியார்களை, கல்விமான்களை, ஆட்சியாளர்களைச் சந்திக்குமளவிற்கு உயர்த்திய, என்றும் அழிவற்ற வானங்கள், பூமியின் ஆட்சியைப் பொதிந்த, அரசர்களுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வின் வல்லமையையும், அவன் தன்மீது வருவித்துள்ள அருள்மழையையும் அவர் இந்த நினைவுகள் மூலம் உணர்கின்றார்.
"அவன் தான் தனது பிரதி நிதியாக உங்களை ஆக்கியுள்ளான். அன்றி உங்களில் சிலரே மற்றோரைவிட பதவிகளில் உயர்த்தியுள்ளான். (அதன்முலம் உங்களுக்கு கொடுத்தவற்றில் நீங் கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று உங்களைச் சோதிக்கின்றான்.”
அல் - அன்ஆம் 165.
"பிரிட்டிஷ் மகாராணி எலிஸெபத் இலங்கைக்கு விஜயஞ் செய்கின்றார்” இந்தச் செய்தி இலங்கையின் தேசிய பத்திரிகையில் முற்பக்கத்தில் முன்னுரிமை அளித்து பிரசுரிக்கப்படுகின்றது. அது 1954 ஆம் ஆண்டு அப்போது எஹெலியகொடையில் மிகக் கஷ்டமான நிலையில், கடுமையான ஏழ்மையிலும், வறுமையிலும் சிக்கி, சிறு சிறு மாணிக்கக் கற்களை ஒப்பமிட்டும் விற்றும் தனது அன்றாட வாழ்க்கையைக் கழிக்கும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் நளீமின் கண்களுக்கு இப்பத்திரிகைச் செய்தி பெரும் விருந்தாக அமைகின்றது. எப்படியாவது கொழும்புக்குச் சென்று மகாராணியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். அவரது உள்ளத்தில் உதிக்கின்றது. ஆனால் வழிச்செலவுக்குப் பணத்திற்கு என்ன செய்வது? ஆனால் எப்படியோ கொழும்புக்குச் சென்று மகாராணியைப் பார்த்தல் வேண்டும்
190

என்ற மன உறுதியோடு, வழிச்செலவுக்கு மிகக் கஷ்டத்துடன் கொஞ்சம் பணத்தைத்தேடி , இளைஞன் நளீம் கொழும்புக்கு பயணமாகின்றான். கொழும்பில் மகாராணியைப் பார்ப்பதற்காக இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வந்த சன சமுத்திரம் திரண்டிருந்தது. அந்த ஆயிரக்கணக்காக சாதாரண மனிதர்களுள் ஒருவனாக, எஹெலியகொடையி லிருந்து ஏழ்மை நிலையில் சில சில்லறைக் காசுகளுடன் கொழும்புக்கு வந்திருந்த நளீமும், அச்சனத்திரளுடன் சங்கமித்து, முட்டி மோதி நெரிசலில் சிக்குண்டு மிகப் பெரும் போராட்டத்துடன் எலிபெத் மகாராணியைப் பார்த்துவிட்டான். உள்ளத்தில் எவ்வளவு மகிழ்ச்சி? ஒரு பெரும் சாதனையை சாதித்துவிட்ட மன நிறைவு? பிற்காலத்தில் உயர்ந்த புனிதமான இலட்சியங்களை சுமக்கவிருக்கும் உள்ளம் அது. ஆனால் எவ்வளவு சொற்ப ஆசையை அது அப்போது சுமந்திருந்தது. மகாராணியைக் கண்ட மகிழ்ச்சியானது நளீமின் உள்ளத்தில் பெரும் மனநிறைவை ஏற்படுத்தியது.
ஆனால் உடலோ மிகவும் களைத்திருந்தது.
இரவு நடுநிசி ஒரு மணி ஆகிவிட்டது. கொழும்பிலிருந்து எஹெலியகொடைக்கு நடுநிசியில் களனிப்பள்ளத்தாக்குப் புகையிரதம் புறப்படும் அதில் எஹெலியகொடைக்குச் செல்வதற்கு டிக்கட்டை வாங்கி அவர் ஆசனத்தில் அமர்ந்தார். சனனெருக்கலில் சிக்கியதால் ஏற்பட்ட உடலின் களைப்பும், ஆயாசமும் மகாராணியைப்பார்த்த மனப்பூரிப்பும் ஒன்றசேர இளைஞன் நளீமை தூக்கம் ஆட்கொண்டது. நடுவில் புகையிரதம் ஒரு புகையிரத நிலையத்தில் தரிக்கும்போது அவர் கண்விழித்தார். தூக்கம் தெளிந்து விழித்த நளிம் திகைத்து நின்றான். காரணம்? புகையிரதம் அவர் இறங்க வேண்டிய புகையிரத நிலையமான எஹெலியகொடையையும் தாண்டி வந்து, பரகடுவ புகையிரத நிலையத்தில் தரித்திருந்தது புகையிரதத்தை விட்டு இறங்கிய நளீம் சில
191

Page 98
கணங்கள் செய்வதறியாது திகைத்து நின்றான். அந்த நடுநிசியில் காரிருளில் எங்கு தான் செல்வது? மெதுவாக புகையிரத நிலைய அதிகாரியை அணுகி தன்னிடம் எஹெலியகொடை செல்வதற்கான டிக்கட் இருப்பதாகவும், ஆனால் தான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்ததால் புகையிரதம் எஹெலியகொடையில் நின்றதை தான் உணரவில்லை எனவும் கண்விழித்தப்போது அது எஹெலியகொடையைத் தாண்டி வந்து பரகுடுவ தரிப்பு நிலையத்தை அடைந்திருப்பதாகவும் அந்த நடுநிசியில் எங்கும் செல்ல முடியாது எனவும், புகையிரத நிலையத்தில் உள்ள வாங்கில் இரவு படுத்துறங்கி விடியற்காலை செல்ல தனக்கு அனுமதி வழங்கும்படி கேட்டான். அவரை அனுதாபத்துடன் நோக்கிய புகையிரத நிலைய அதிகாரி அனுமதியளிக்க பரகடுவ புகையிரத நிலையத்தின் வராந்தாவில் போடப்பட்டுள்ள வாங்கில் இரவு படுத்துறங்கிய பின்னர், காலையில் எஹெலிகொடை சென்றடைந்தார். இதுவே அவர் 1954ஆம் ஆண்டு எலிஸெபத் மகாராணியைப் பார்த்த வரலாறு. ஆண்டுகள் பல கழிகின்றன. நளிமின் வாழ்க்கைச் சக்கரமும் சுழலுகின்றது. அல்லாஹ்வின் பேரருளால் வாழ்க்கையில் வசதிகள் பெருகி, ஒரு வணிகப் பெருமகனாக பிரபல்யம் பெற்ற மாணிக்க வியாபாரியாகி ஒரு தேசிய பிரமுகராக அவர் வாழ்க்கையில் உயர்வடைகின்றார்.
நபியே! நீர் கூறுவீராக, அல்லாஹ்வே ஆட்சியாளர்க்கு அனைத்திற்கும் அதிபதியே/நீநாடுவோரு க்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய் மேலும் நீ நாடுகின்றவர்களிலிருந்து ஆட்சியை பறிக்கின்றாய். ந" நாடியவர்களுக்கு எண்ணியதை வழங்குகின்றாய். நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உண்கைவசமே உள்ளன. நிச்சயம் நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
- ஆல இம்ரான்; 26:
192

அந்தப் பேராற்றலும் மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் ஏறக்குறைய இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் 1980 ஆம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் எலிஸபெத் மகாராணியார் வருகை தந்தபோது முற்றிலும் வித்தியாசமான நிலையிலும், சூழலிலும் நளிம் ஹாஜியாரை அவரைக் காண்பதற்கு மட்டுமன்றி சந்திக்கவே வைத்து விடுகின்றான். புகையிரத பயணம் சனநெருக்கத்தில் முண்டியடித்தல் புகையிரத பிளட்போமில் உறக்கம் என்ற நிலைமாறி இலங்கை ஜனாதிபதி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தனா அவர்களிடமிருந்து நளிம் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வருகின்றது. மகாராணி எலிஸபெத்தும், எடின்பரோ கோமகனும் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தர இருப்பதால் அவர்களுக்கு ஹாஜியாரை அறிமுகப்படுத்தவும், அவர்களுடனான ஒரு சந்திப்பிற்காகவும் அங்கு வருகை தர வேண்டும் என ஜனாதிபதி ஜயவர்த்தன அழைப்பு விடுத்தபோது நளீம் ஹாஜியாரின் உள்ளம் இருபத்தேழு வருடங்களைத் தாண்டிப் பறந்தது. "அல்ஹம்துலில்ஹற்” என்ற வார்த்தைகள் அவரின் வாயிலிருந்து வெளிவந்தன. அது பிரிட்டிஷ் மகாராணியைச் சந்திக்கப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியாலும், பூரிப்பாலும் அன்று ஆட்சிப்பீடங்களை அலங்கரித்த ஆட்சியாளர்களை மட்டுமல்ல, ஆன்மீகராச்சியத்தின் அரசர்களையும் சந்திக்கும் மகதி தான பாக்கியத் ன்த அல் லாஹற் அவருக்கு வழங்கியிருந்தான். அந்த இறையடியார்களின் சந்திப்பின் முன் நிலையற்ற ஆட்சியின் தலைவர்களின் சந்திப்பு எம்மாத்திரம்? அவரது வாயிலிருந்து வெளிவந்த "அல்ஹம்துலிலஹ்” என்ற வார்த்தை, அல்லாஹ் தனது வாழ்வில் ஏற்படுத்தியமாபெரும் மாற்றத்தை நினைத்து அவனுக்கு நன்றி தெரிவிக்கும் உணர்வு வெளிப்படையாகவே அமைந்தது.
193

Page 99
"நான் ஜனாதிபதி மாளிகைக்கு வருவதாயின் என்னை அறியாத வாயில் காவலர்கள் அங்கு இருப்பார்கள்" என நளிம் ஹாஜியார் டெலிபோனில் குறிப்பிட்டப்போது, "இல்லை, நீங்கள் அது பற்றி யோசிக்கவேண்டாம். உங்களை அங்கு அழைத்துவர சில பாதுகாப்பு உத்தியோகத்தர்களையே நான் அனுப்புகின்றேன்" என ஜனாதிபதி பதிலளித்தார். ஜனாதிபதி அனுப்பிய பாதுகாப்புத் துறை வாகனங்கள் முன் செல்ல நளிம் ஹாஜியார் கண்ணியத்தடன் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தார். அங்கு அவரை வரவேற்ற ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தன அவர்கள் அவரை எலிஸபெத் மகாராணிக்கும், எடின்பரோ கோமகனுக்கும் அறிமுகப்படுத்தினார். இச்சந்திப்பின் நினைவாக நளிம் ஹாஜியார் சில மாணிக்கக்கற்களை அன்பளிப்பாக மகாராணிக்கு வழங்கினார். 1954 ஆம் ஆண்டு இளைஞன் நளீம் ஏழ்மையின் நிழலில் சனசமுத்திரத்தின் ஒரு துளியாக தானும் நின்று குதிரைப்பந்தயத் திடலில் மகாராணியைச் சந்தித்ததிற்கும் 1970 இல் ஜனாதிபதியின் கண்ணியமான அழைப்பின்பேரில் ஜனாதிபதி மாளிகையில் மகாராணியைச் சந்தித்தற்கும் இடையில் எத்துணை வித்தியாசம்? இத்தகைய மாற்றங்களை மனித வாழ்வில் ஏற்படுத்தும் அந்த மகத்தான இரட்சகனின் மாட்சிமையும், வல்லமையும் தான் என்ன?
"இத்தகைய காலம் மனிதர்களுக்கிடையில் மாறி மாறி
வரும்படி நாங்கள்தான் செய்கின்றோம்.
ஆல . இம்ரான் 140.
194
 

9 நளிம் ஹாஜியார் - ஆளு.ை பற்றிய ஒரு பொது நோக்கு
ஆளுமை என்னும் பதம் ஒரு தனிப்பட்ட நபருக்கே சிறப்பாக அமைந்த சிந்தனைப் பாங்கு நடத்தை, உணர்வுகள் ஆகிய அம்சங்களைக் குறித்து நிற்கின்றது.
Personality can be difined as an individual's characterestic pattern of thought, behaviour and emotions.
James Hasset, Psychology in Perspective,
New york 1984 PP 303. இந்த வகையில் நளீம் ஹாஜியாரின் பொதுவான ஆளுமையின் சில சிறப்பம்சங்கள்ை இனங்கண்டு விளங்கும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவரின் ஆளுமையை உருவாக்குவதில் அவரது ஆரம்பகாலச்சூழல், குடும்பப்
195

Page 100
பாரம்பரியம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இது உளவியல் அறிஞர்களின் கருத்துமட்டுமன்றி, இஸ்லாத்தின் கோட்பாடுமாகும்.
இந்த வகையில் நோக்கும்போது நளீம் ஹாஜியாரின் ஆளுமை வளர்ச்சியில், மதப்பற்றுமிக்க அவரது பெற்றோரின் செல்வாக்கும், சமூகச் சூழலின் ஆதிக்கமும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. பிற்காலத்தில் அவரது ஆளுமையின் சிறப்பம்சமாக வளர்ச்சியடைந்த சன்மார்க்கப்பற்று, ஆர்வம் என்பன ஆரம்பகாலத்தில் அவர்பிறந்து, வளர்ச்சியடைந்த இச் சன்மார்க்கச் சூழ்நிலையின் செல்வாக்கின் பூரண வெளிப்பாடாகும். குடும்பத்தின் மிகச் கஷ்டமான வறுமை நிலை காரணமாக அவர் கல்வியை இழந்தாலும், ஒழுக்கப் பண்பாட்டுப் பயிற்சியை இழக்கவில்லை. பாடசாலைக் கல்வியை இழந்தாலும், குர்ஆனைச் சிறப்பாக ஓதி முடித்தல் ஹிஸ்பு மஜ்லிஸில் கலந்து கொள்ளல் போன்ற இடங்களில் அவரது பெற்றோர் மிகக் கண்டிப்பாக இருந்தனர். நளீம் ஹாஜியாரின் தந்தை முஹம்மத் இஸ்மாயில் பக்தி சிரத்தை மிக்க ஒருவர். அவரது இளம் வயதில் கிரமமாக குர்ஆன் பள்ளிக் கூடத்துக்கு அவரை அனுப்புதல், ஒழுக்க வளர்ச்சி ஆகியவற்றில் அவர் மிகக் கண்டிப்பாக இருந்தார். தாயார் சரீபாஉம்மா அவரது ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகித்தார். வறுமையின் நிழலில் வாடி வதங்கிய நிலையிலும் தமது புதல்வனின் வளர்ச்சியில் அவர் பூரண கரிசனை செலுத்தினார். பிற்காலத்தில் அவர் ஒரளவு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தது முதல் சிறுசிறு தர்மகாரியங்களில் ஈடுபடுவது பற்றிப் பிறர் தாயிடம் கூறியபோது அவர் அதனைப் பொருட்படுத்தாது தனது புதல்வன் நளீமின் போக்கை, ஆதரித்ததும் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றும் விருப்பத்தை அவர் தெரிவித்த போது அவரது மாமனின் மகளின் திருமணத்தை முடித்த பின்னர் அப்பயணத்தை
196

மேற்கொள்ளும்படி பணித்ததிலும் அவரது ஆளுமையை நெறிப்படுத்திய தாயின் மனப்பாங்கை காணமுடிகின்றது. அவரது உடன்பிறந்த ஒரே சகோதரி ஜவாஹிரா உம்மா அவரில் மாறாத அன்பு கொண்டவராகத் திகழ்ந்தார். அவரது மனைவி ரபீக்காவின் விரிந்த உள்ளமும், புரிந்துணர்வும் அவரது பொதுப்பணிக்கு ஓர் அனுகூலமாக அமைந்தன. அவர்களது குடும்பம் இல்யாஸ், காமில், முபாரக், யாக்கூத் ஆகிய நான்கு ஆண்பிள்ளைகளையும், ஸில்மியா என்ற பெண் பிள்ளையையும் உள்ளடக்கியது.
இந்தக் குடும்பச் சூழல் காரணமாக இஸ்லாமிய பண்பாட்டுப் பயிற்சியினால் போஷிக்கப்பட்ட ஓர் உள்ளத்தை அவர் பெற்றிருந்தார் எனவேதான் அவர் மிக இளைமைக் காலத்திலேயே தனது வாழ்க்கையை அர்த்தமும் பொருளும் உள்ளதாக ஆக்கிக் கொள்ளமுனைந்தார். வறுமை நிலைகாரணமாக மண் சுமந்து தனது நாளாந்த வாழ்வின் ஜீவனோபாயத்தைத் தேடுவதில் ஈடுபட்டிருந்த அவர், இப்படியே எனது வாழ்வு, கழிவதா? எனக்கென்று ஒரு எதிர்காலம் இல்லையா? என்ற வினாவை எழுப்பி, அந்த மண் கூடையை எறிந்து விட்டுத் தான் வாழ்வின் மேலும் உயர்ச்சியடைந்து ஒரு "மனிதனாகுதல்” வேண்டும் என்ற வைராக்கியத்தை மேற்கொண்டமை அவரது ஆளுமையின் வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டமாகும். இங்கு வாழ்க்கையின் வசதிகளைப்பெற்ற ஒரு பொருளாதார மனிதனாகவே அவர் விரும்பினார். மிகக் குறுகிய, உலகம் சார்ந்த இளமைக் கனவாக இந்த இலட்சியம் அவரில் ஆரம்பிக்கின்றது. எஹலியகொடையில் சிறு சிறு மாணிக்கக் கற்களை விற்றுப் பெற்ற சிறு இலாபங்களில் ஒரு பகுதியைப் பிறருக்கு வழங்கும் பண்பு அவரில் படிப்படியாகத் தோன்றி வளர ஆரம்பிக்கின்றது. அவரது ஆளுமையில் மிக சிறு பிராயத்தில் பெற்றோர்களால் ஆழமாகப் பதிக்கப்பட்ட சன்மார்க்கப்
197

Page 101
பயிற்சியின் விதைகள் இங்கு படிப்படியாக முளைவிட ஆரம்பிப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையிலேயே அவர் ஒருநாள் எஹெலியகொடையில் அவரது மாமனாரின் கடையில் அமர்ந்திருக்கும்போது அவரது சிந்தனை ஒரு புதியபாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றது. திடீரென அவரது உள்ளத்தில் ஒரு கேள்விப்பிறக்கின்றது. இப்படியே எனது வாழ்க்கை கழிவதா? நானும் ஒரு மனிதனாக வேண்டாமா? எனது வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? இந்தக் கேள்விக்குவிடை காணும் முயற்சியாகவும், வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளும் பயணத்தின் முதல் மைல்கல்லாகவுமே அவரது ஹஜ் பயணம் அமைகின்றது.
இளமையில் தான் சுமந்த மண்கூடையை வீசிவிட்டு, பணம் சம்பாதித்து பொருளாதார மனிதனாக மாற விரும்பிய அவர் இப்போது தனது பாவக் கறைபோக்கி - மாசகற்றிப் புனிதப்படுத்தும் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்டு இஸ்லாம் கூறும் "ஆத்மீக மனிதனாக மாற முடிவு செய்கின்றார். அவரது ஆளுமையின் வளர்ச்சி இங்கு ஒரு புதுப் பரிமாணத்தைப் பெறுகின்றது. அவரது ஹஜ்ஜுப் பயணம் அவரது வாழ்க்கை பயணத்தை திசைதிருப்பிவிடுகின்றது. இப்போது அவர் தனக்கென ஒரு தெளிவான குறிக்கோளை வகுத்துக் கொண்டு அந்த இலட்சியப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றார். அவரது ஆளுமையில் உள்ளார்ந்து மறைந்திருந்த உயர்பண்புகள் படிப்படியாக, ஆலமரமானது கிளைவிரிப்பதுபோல கிளை விரிக்க ஆரம்பித்தன.
நளீம் ஹாஜியாரின் ஆளுமையில் காணப்படும் ஒரு சிறப்பம்சம் அவரது தெளிவான சிந்தனையாகும். எந்த ஒரு விடயம் பற்றியும் ஆழமாகச் சிந்தித்து தனக்கென ஒரு கருத்துத் தெளிவைப் பெற்றுக் கொள்ளும் பண்பு அவரில்
198.
 

கானப் படுகின்றது. எனவே தான் "எண்ணத்தில் தெளிவுண்டாயின் வாக்கினில் தெளிவுண்டாம்" என மகாகவி பாரதி கூறியதுபோல அவரது பேச்சிலும், செயலிலும் தெளிவு உள்ளது. எனவேதான் அன்றாட வாழ்வின் தனிப்பட்ட நிகழ்வுகளாயினும், தேசியவாழ்வில் நிகழும் ਡੀau பாரதூரமான நிகழ்வுகளாயினும் சர்வதேசிய வணிகத்துறையில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களாயினும் அவரது மனோ உறுதியைக் குலைப்பதில்லை. அவர் மலை குலைந்தாலும் நிலைகுலையா நெஞ்சுறுதியை பெற்றிருக்கக் காரணம் அவரது சிந்தனைத் தெளிவும், வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள் பற்றிய அவரது மயக்கமற்ற உறுதியான நிலைப்பாடுமாகும். வெளிநாட்டுச் செலாவணி மோசடி காரணமாக தான் குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணைக்காகத் தேடப்படுவது பற்றிய வானொலிச் செய்தியைக் கேட்டதும், தடுமாற்றம் பதட்டம் எதுவும் இன்றி துணிவோடும், தைரியத்தோடும் தானாகவே சென்று பொலிஸில் சரணடைந்த அவரது செயல் இந்த நெஞ்சுறுதியைக் காட்டுகின்றது. "உலகில் அல்லாஹ் எனக்கு எதனை விதித்திருக்கின்றானோ அது நடந்தே தீரும் அதனைத் தடுக்க எவராலும் முடியாது. அது போன்று அல்லாஹ் எனக்கு நாடினால் அதனையும் எவராலும் தடுக்க முடியாது. இவை அவரது நாவிலிருந்து அடிக்கடி புறப்படும் வார்த்தைகள்.
ஒரு தினம் அவர் தனது வெள்ளவத்தை வாசஸ்தலத்தில் அமைதியாக உட்கார்ந்து, சிலருடன் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருக்கின்றார். அப்போது சிலர் அவரிடம் பதட்டத்தோடும், கவலையோடும் ஓடோடி வருகின்றனர். கொள்ளுப்பிட்டியில் அவருக்கு சொந்தமாக இருந்த கட்டடம் தீப்பிடித்து எரிகின்றது எனக் கூறுகின்றனர். இதனைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் தடுமாற்றமும், பதட்டமும் அடைகின்றனர்.
199

Page 102
அங்குமிங்குமாக சிதறி ஓடுகின்றனர். ஆனால் நளிம் ஹாஜியாரோ ஆடாமல், அசையாமல் நிலை குலையாது தான் அமர்ந்திருந்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றார். சில நேரம் கழித்து சிலர் வந்து "ஹாஜியார் அப்படி பாரதுTரமாக சேதம் எதுவுமில்லை. கொஞ்சம் தீப்பற்றியுள்ளது" என்கின்றனர். "அல்ஹம்துல்லாஹ்" எனக் கூறிய அவர், நான் ஏன் இதற்காக பதட்டமடைதல் வேண்டும். அது முற்றிலும் பற்றி எரிந்து சாம்பலாகுதல் வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வுடைய முடிவு என்றால் எங்களால் எதைத்தான் செய்ய முடியும்? அவனது தீர்ப்பை ஏற்றுக் கொள்வதுதானே.
(ஆகவே நபியே) அவர்களை நோக்கி, அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இரட்சகன். என்றுநீர் கூறுவீராக விசுவாசிகள் யாவரும்
அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.
(அத்தொலிபா 15)
இந்த மனோ உறுதியும், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எதனையும் தாங்கும் இதய பலமும் அவர் பெற்றுள்ளதற்கு அடிப்படைக் காரணம் அல்லாஹற்வின்மீது அவர் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவரது வாழ்வின் அனைத்து முயற்சிகளையும் நெறிப்படுத்தும் தன்மை அவரில் காணப்படுகின்றது. இந்த நம்பிக்கையையே அவருக்கு எந்நிலையிலும் மனநிறைவோடும், திருப்தியோடும் வாழும் மனப்பக்குவத்தை வழங்கியுள்ளது. மனிதனின் ஆசைகள், வேட்கைகள், கனவுகள் எல்லையற்றவை. உள்ளத்தின் வேட்கைகள், ஆசைகளினால் இயக்கப்பட்டு வாழ்க்கையின் வசதிகளையும், தனது சமுக அந்தஸ்தையும் பெருக்கும்
200

· Į Ilgisgogo@riņ1999 Los gif@qiqi@Ēfi) solo q119 £ I(UĞą9ło sf sgïoso L L LLL L LLLL LSLLLSLLLL LL LLLL LLLL LLLLSYY LLLL LL LL LLL LLLL LLL LLLLLL 0 LLLLL LL LL LLL LL LLL LLLLL LLLLL LLLL LL LLLLL LLLLLLLLS L L LSY LLL LLLL L LLLLL LLLL LLLLL LYLLL Y LLLLLL LL LLL
:
密

Page 103
= = = == ----.
HA JA R S T A D
கார்-?
* -- -- -
பேருவலை சீனன் கோட்டையில் நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கை அன்றைய பிரதமர் திரு. டட்லி சேனநாயகா திறந்து வைத்தபோது. படத்தில் அன்றைய அமைச்சரவை உறுப்பினர்களாயிருந்த திரு. ஜே. ஆர் ஜெயவர்தன, திரு. ஆர். பிரேமதாஸ் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த அல்ஹாஜ் பாக்கிர் மாக்காரும் மற்றும் பலரும் காணப்படுகின்றனர்.

Iார்.
245-50
-1:55 பா 2' " - 2
ஜாமிஆ நளீமியாவிற்கு இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி வழங்கிய நன்கொடை தொடர்பான ஒப்பந்தம் ஜித்தாவில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கித் தலைமையத்தில் நளீம் ஹாஜியார், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அஹ்மத் முஹம்மத் அலி ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்டது. சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனாப் எம். ஆர். தாஸிம், ஜாமிஆ நளீமியா பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி ஆகியோரும் உடன் காணப்படுகின்றனர்.

Page 104
ன்
ராபிததுல் ஆலமுல் இஸ்லாமியா செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லாஹ் உமர் நஸீபும், ஜித்தாவிலுள்ள இக்ராஃ நிறுவனத்தின் தலைவர் கலாநிதி முஹம்மத் இப்னு யெமானீ அவர்களும் ஜாமிஆவிற்கு வருகை தந்தபோது.
E :
நளீமியாவின் முதல் பட்டதாரிகளுடன், அவர்களின் அறிவுத் தந்தை நளீம் ஹாஜியார்.

முயற்சியில் ஈடுபட்டு வாழ்க்கையையே பொருள் திரட்டும் போராட்டமாக மாற்றிக்கொண்டு, அப்போராட்டத்தில் சிக்கி " தமது நிம்மதியையும் நிறைவையும் இழந்த பலரைப் பார்க்கின்றோம். ஓடிக்களைத்த முகம், ஆயாசமும், அசதியும், நிறைந்த உள்ளம், அலுப்புத்தட்டிய வாழ்வு, இவைதான் இப்போராட்டத்தில் அவர்கள் ஈட்டிய லாபங்கள். ஆனால் நளீம் ஹாஜியாரோ இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர். அவர் தனது சிந்தனைகளையும், முயற்சிகளையும் பல்வேறு துறைகளில் சிதறடிக்காது. தனக்கென ஒரு வணிகத் துறையையும், சமூகப் பணியையும் தேர்ந்தெடுத்து அதில் நிறைவு கண்டவர். எனவே அவரின் முகத்தில் வாழ்க்கையில் அலுப்புத்தட்டிய ஆயாசமில்லை. இந்த இடத்தை பூரணமான வாழ்வு ஒன்றை வாழ்கின்றோம். என்ற அறிகுறியாக புன்னகை எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டள்ளது. அவரது உள்ளத்தில் விரக்தியினதும், தீவிர வேட்கையினதும் பாதிப்போ ஆதிக்கமோ இல்லை. எனவே நிம்மதியும், நிறைவும் அதில் நிறைந்துள்ளது. ஒரு தடவை இலங்கைக்கு வந்திருந்த பங்களாதேஷைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் நளீம் ஹாஜியாரையும், அவரது பணிகளையும் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க விரும்பினார். அங்கு சென்றபோது ஹாஜியார் நிம்மதியாக உறங் கிக் கொண்டிருந்தார். அவர் விழிக்கும் வரை காத்திருந்து அவரை சந்தித்த பத்திரிகையாளர், “ஹாஜியார், நீங்கள் இவ்வளவு வசதிபடைத்த ஒரு பணக்காரராக உள்ளீர்கள் உங்கள்மீதோ பல முக்கிய பொறுப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்களது உள்ளத்தை அலைக்கழிக்கும் நிலையில் நீங்கள் எப்படி நிம்மதியாக உறங்குகின்றீர்கள் எனக் கேட்டார்.
நீங்களோ ஒரு பத்திரிகையாளர், நானோ அவ்வளவு' படித்தவனல்ல. நான் கூறுவது சரியாயின் ஏற்றுக்
205

Page 105
கொள்ளுங்கள் எனக்கூரிய அவர் பின்வருமாறு அவரது வினாவிற்கு விடையளித்தார்,"எவன் இம்மையை அளவுக்கதிகம் நேசிக்கின்றானோ அவன் நிம்மதியை இழப்பான். எவன் மறுமையை தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுவானோ அவன் நிம்மதியான வாழ்க்கை வாழ்வான்." ஹாஜியாரின் இந்தப் பதிலில் வாழ்க்கையின் தத்துவம் அடங்கியிருந்ததைக் கண்ட அந்த பத்திரிகையாளர் ஆச்சரியமும், வியப்பும் அடைந்தார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அறிஞர் அஸிஸ் அவர்கள் நளிம் ஹாஜியாரைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது பகல் பொழுதில் அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதாக அறிந்ததும் "இப்போது தான் ஒரு பணக்காரன் நிம்மதியாக உறங்குவதைப் பார்க்கின்றேன். என ஆச்சரியத்துடன் கூறினார். பணம் படைத்திருந்தும் "பற்றற்ற மன நிலையுடன் வாழும் உயர்பண்பை அவர் பெற்றுள்ளதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இறைவன் அவருக்குச் செல்வத்தை வாரி வழங்கியுள்ளதை அவர் இறைவனின் அருளாகக் கருதுவதில்லை. "செல்வம் இறைவனின் அருளன்று. அது மனிதனை சோதனைக்குட்படுத்துவதற்காக அவனுக்கு இறைவன் வழங்கியுள்ள சோதனைப் பொருள். அதனை மனிதன்தான் இறைவனின் அருளைப் பெறும் வகையில் பயன்படுத்தல் வேண்டும் என்ற கருத்தை ஒரு தடவை ஜாமிஆவின் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தும் போது அவர் குறிப்பிட்டார். தனக்குச் செல்வத்தை வழங்கியிருப் பதைவிட அல்லாஹற்வின் திருப்தியைப் பெறும்வகையில் அவனது பாதையில் செலவிடும் உள்ளத்தை வழங்கி யுள்ளதையே அவன் அவருக்கு வழங்கிய பெருஞ்செல்வமாக அவர் கருதுகின்றார்.
நளிம்ஹாஜியாரில் காணப்படும் இன்னொரு சிறப்பம்சம் அறிவையும், அறிஞர்களையும் மதிக்கும் உயர் பண்பாகும்.
206

சமூகத்தின் கல்வி வளர்ச்சி, அறிவுத் துறையில் அதன் மேம்பாடு கருதி உழைத்தல் அவரது முக்கிய பணிகளுள் ஒன்றாக விளங்குகின்றது. ஜாமிஆ நளீமியாவும், இலங்கை மறுமலர்ச்சி இயக்கமும், இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியும் சமூகத்தின் கல்வியில் அவர் காட்டிய கரிசனையினதும், ஆர்வத்தினதும் வெளிப்பாடுகளேயாகும். அறிவோடு தொடர்புடைய அனைத்தையும் நேசிக்கும் பண்பு அவரில் உள்ளார்ந்து அமைந்துள்ளது. இந்த வகையிலேயே அறிவு நூல்களை மதிக்கும் உயர்பண்பு அவரில் காணப்படுகின்றது. இன்று இலங்கையிலேயே தலைசிறந்த இஸ்லாமிய நூல் நிலையமாக உள்ள ஜாமியாநளிமியா நூலகத்தை வளர்ப்பதிலும், அதற்கான நூல்களைச் சேகரிப்பதிலும் அவர் காட்டிய ஆர்வமும், அக்கறையும் ஆச்சரியப்படத்தக்கதாகும். நளிமியாவின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டங்களில் அதன் பணிகளில் நளிம் ஹாஜியாரும் நானும் நளிமியா இஸ்லாமிய கலாநிலைய சங்கத்தின் செயலாளரும் எனது நெருங்கிய நண்பருமான சகோதரர் அல்ஹாஜ் எம்.எச்.எம் ஹிப்துல்லாவும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டோம். இதில் முக்கிய பயணங்களாக அமைந்தது இஸ்லாமிய நளிமியா நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கென்று மேற்கொள்ளப்பட்ட பயணங்களாகும். ஒரு தடவை நாங்கள் கெய்ரோவில் அல்-அஸ்ஹரில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஜாமிஆ மாணவர்களைச் சந்திக்கக் கெய்ரோ சென்றிருந்தோம். அப்போது அங்கு இஸ்லாமிய புத்தகக் கண்காட்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைப் பார்வையிடச் சென்ற போது அங்கு ஆயிரமாயிரமாக, இஸ்லாத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியுமடைந்த நளீம் ஹாஜியார் நாங்கள் ஜாமிஆ நூல் நிலையத்திற்கான நூல்கள் அனைத்தையும் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் வாங்குதல் வேண்டும் என்றார். அதுபோன்றே நிறைய நூல்களை வாங்கினோம்.
207

Page 106
அவற்றை எங்களோடு சேர்ந்து அவரும் சுமந்து வந்தார். அறிவுக்கு அர்ப்பணமான அந்த அற்புத மனிதரைக் கண்டு எனக்கும் சகோதரர் ஹிபதுல்லாஹ்வுக்கும் வியப்பேற்பட்டது. “இத்தகைய இஸ்லாமிய புத்தகக் கண்காட்சிகள் இஸ்லாமிய உலகில் காலத்திற்குக் காலம் நடைபெறுவதுண்டு. அது பற்றி அரபுப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படும்" என நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது குறிப்பிட்டது தான் தாமதம் அப்படியா! அத்தகைய விளம்பரங்களைக் கண்டதும் எனக்குத் தெரிவியுங்கள். ஜாமிஆவின் நூல் நிலையத்திற்கு நூல்களைச் சேகரிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பல்லவர்? எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து குவைத்திலும், ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள துபாயிலும் நடந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளுக்கு ஜாமிஆ நூல் நிலையத்திற்கு நூல்கள் வழங்குவதற்கென்றே நீண்ட பயணங்களை மேற்கொண்டோம். பணத்தை தெய்வமாகப் பூஜிக்கும் ஆதிக்கம் நிறைந்த நவீன உலகிலும், தான் வாசிக்காத - ஆனால் பிறர் வாசித்துப் பயனடைய துணைபுரியும் நூல்களுக்காக தனது செல்வத்தை வாரி வழங்கும் ஒர் மனிதரா? என்ற வினா என்னில் தோன்றி மறைந்ததுண்டு. ஒரு தடவை அவர் லண்டனுக்குப் பயணமாகவிருந்தார் அவரது புதல்வர்கள் இலியாஸ், முபாரக், யாகூத் மருமகன் றியாழ் ஆகியோர் அப்போது லண்டனில் கல்விகற்றுக் கொண்டிருந்தனர்.
ஜாமிஆ நூல் நிலையத்தில் ENCYCLOPEDIA OF ISLAM என்னும் ஆங்கில கலைக்களஞ்சியம் இல்லையென்றும், அது மிக அவசியமென்றும், லண்டனில் அது கிடைப்பதால் அதனை வாங்கிவந்தால் பயனுடையதாக இருக்கும் எனவும் நான் அவரிடம் கூறினேன். உடனே அதன் பெயரை எழுதி பத்திரமாக தன்னிடம் வைத்துக் கொண்டார். இன்சா அல்லாஹ் என்ற பதில் வந்தது. அவர்லண்டன் சென்றதும்
208

பல்வேறு அலுவல்கள் மத்தியில் அதனை மறந்திருப்பார்என நினைத்தோம். ஆனால் லண்டனில் இருந்து திரும்பிய அவர் தனக்கென எந்த ஒரு பொருளையும் கொண்டு வரவில்லை. ஒரு பெரும் பெட்டியில் அளவில் பெரியதும் பாரமும் கொண்ட அக்கலைக்களஞ்சியத்தில் ஆறு பாகங்களை அவர் சுமந்து வந்தார். இன்னொரு தடவை அவருடன் நான் லண்டன் சென்றிருந்தேன் அங்கு ஒரு நாள் அவருடன் உரையாடி க் கொண்டிருக்கும் போது லண்டனுக்கு அண்மையில் உள்ள லெஸ்டரில் உள்ள இஸ்லாமிய நிறுவனத்தில் (SLAMIC FOUNDATION) நிறைய இஸ்லாமிய நூல்கள் வெளியிடப்படுவதாகவும், அங்கு (MUSLIM BOOK REVIEW) என ஒரு சஞ்சிகை வெளியிடப்படுவதாகவும், எனவே நாங்கள் அங்கிருக்கும் சந்தர்ப்பத்தில் எங்களுக்கு அறிமுகமான எவரிடமாவது அவற்றை வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்தால் நல்லது என அவரிடம் கூறினேன். அது அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. நான் லண்டனிலிருந்து லெஸ்டருக்கு அதற்கென்றே பயணம் செய்து அப்புத்தகங்களை வாங்கி நாங்கள் எங்களுடன் எடுத்துச் செல்வதே சிறந்தது என அவர் வற்புறுத்தினார். மறுநாள் நான் லெஸ்டருக்குச் சென்று அப்புத்தகங்களுடன் திரும்பியபோதுதான் அவரின் உள்ளம் நிறைவு பெற்றது. ஜாமிஆவில் அனைத்தையும் விட அதன் நூல் நிலையத்தை அவர் மிகவும் நேசிக்கின்றார். "இந்த நூல்களைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும். இதற்காக எவ்வளவு பயணங்களை மேற்கொண்டுள்ளோம், எவ்வளவு சிரமப்பட்டுள்ளோம். என அடிக்கடி அவர் கூறுவார். அறிவு நூல்களைக் கற்றிராத இந்த மனிதர் அறிவு நூல்களை மதிக்கும் இந்த மனப்பண்பு உண்மையில் இறைவன் அவருக்கு வழங்கிய பேரருளாகும் என நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. இஸ்லாமிய வரலாற்றில் பக்தாத், கொர்டோவா, புகாரா, ஸ்மர்கந்த், கெய்ரோ "பான்ற இடங்களில் மாபெரும் நூல்நிலையங்களைக் கட்டி
209

Page 107
எழுப்பிய ஆட்சியாளர்கள், புரவலர்களின் வாரிசாக அப்போது அவர் எனக்குக் காட்சியளிப்பார்.
நளீம் ஹாஜியார் விசாலமனமும், விரிந்த உள்ளமும் படைத்தவர் மட்டுமன்று. தூரநோக்குடையவர். அவரது சிந்தனையும், நோக்கும் குறுகிய காலவரம்பிற்கு உட்பட்டதன்று. அது பல தசாப்தங்களை ஏன்? நூற்றாண்டுகளைக் கூடத் தழுவி நிற்கும் தன்மை படைத்தது. ஜாமிஆ நளிமியா நிறுவப்பட்ட ஆரம்ப காலப்பிரிவில் இன்று மிகக் குறுகிய காலப்பிரிவில் அது இன்றைய வளர்ச்சி நிலையை அடையும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சாதாரண கல்வி நிலையமாகவே இது தொடர்ந்து விளங்கும் என எண்ணினர். இந்த மனநிலையிலேயே பெரும்பாலான பரிபாலனசபை அங்கத்தவர்கள் இருந்தனர். ஆனால் நளிம் ஹாஜியார் அவரது தூய்மையான சிந்தனையில் கருக்கொண்ட, அல்லாஹற்வின் திருப்தி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, அவர் நிறுவிய இந்த கலாநிலையத்தின் எதிர்கால வளர்ச்சிபற்றி தூர நோக்குடன் செயல்பட்டார். ஜாமிஆ வளாகத்தில் பொதுக் கூட்டங்களை நடத்தவதற்கு ஒரு கட்டடம் எழுப்பப்படுவது பற்றி பரிபாலனக் கூட்டமொன்றில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பலர் பாடசாலைகளில் காணப்படுவது போன்ற ஒரு சாதாரண பொது வைபவங்களுக்கான மண்டபம் ஒன்று அமைத்தால் போதுமானது என்றும், அதற்காக நிறைய பணத்தை மூலதனம் செய்ய அவசியமில்லையென்றும் கூறினர். ஆனால் அவரோ இவ்விடயத்தில் தூரநோக்குடன் செயல்பட்டார். "ஜாமிஆ நீங்கள் நினைப்பது போன்று இன்றைய சாதாரண
நிலையில் இருக்கப்போவதில்லை அது எதிர்காலத்தில்
மிகப்பெரும் வளர்ச்சியைக் காணும். எந்த அளவுக்கெனில் இலங்கையை தரிசிக்க வெளிநாட்டிலிருந்து வரும் எந்த முக்கிய இஸ்லாமிய பிரமுகரும் ஜாமிஆவைத் தரிசிக்காமல்
210

செல்லமாட்டார் என்ற நிலைக்கு அது உயரும். எனவே அந்த தூரநோக்கை அடிப்படையாக வைத்து நாம் மிக விசாலமும் அழகும் பொருந்திய ஒரு மகாநாட்டு மண்டபத்தை அமைத்தல் வேண்டும்." எனக்கூறி அவரது கருத்தில் உறுதியாக நின்றார். அவரது தூரநோக்கின் அடிப்படையில் எழுப்பப்பட்டதே ஜாமிஆவின் வளாகத்தில் கம்பீரமாகக் காட்சியளித்து அணிசேர்க்கும் மகாநாட்டு மண்டபமாகும். அவரது தூரநோக்கு போன்றே மிகக்குறுகிய காலப்பிரிவில் சமகால இஸ்லாமிய உலகின் புகழ்பூத்த அறிஞர்கள் பலர் தரிசிக்கும் கலாநிலையமாக ஜாமிஆ வளர்ச்சியடைந்து அந்த அறிஞர்களின் குரல்களும் ஜாமிஆ மகாநாட்டு மண்டபத்தில் எதிரொலித்தது.
நளிம் ஹாஜியார் என்ற நாமம் இந்த நாட்டில் மட்டுமன்று, இஸ்லாமிய உலகெங்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தோடு இணைத்துப் பேசப்படும் பெயராக மாறிவிட்டது. மதிப்பும், புகழும், கீர்த்தியும் அவருக்கு நிறையக் கிடைத்துள்ளது. ஆனால் அந்தப் புகழும், கீர்த்தியும் அவரது உள்ளத்தைத் தொடவில்லை. தாமரை இலைமேல் தண்ணீராக தன்னலமற்ற - பற்றற்ற அவரது சாதாரண வாழ்வை அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆட்சியாளர்கள், செல்வந்தர்கள், செல்வாக்குடையோர், சர்வதேசப் பிரமுகர்கள் அனைவருடனும் தொடர்புள்ள அவர் தனது சக சகோதர மக்களோடு சாதாரண நிலையில் இருப்பதாலேயே அமைதியும், நிறைவும் காண்கின்றார். அரசாங்கம் அவருக்கு கெளரவப்பட்டம் வழங்க ஆலோசித்திருப்பதாக பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க கண்ணியத்துடன் அவர் மறுத்துவிட்டார்.
"வாழ்க்கையில் எனது நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அல்லாஹ்வின் நல்லடியார்கள் ஒருவனாக அவன் என்னை
211

Page 108
அங்கீகரிக்க வேண்டுமென்பதே அதுவாகும். அந்த ஒன்றுமட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால் மறுகணமே இவ்வுலகைவிட்டு நான் பிரிந்துவிட ஆயத்தமாயுள்ளேன்." என அவர் அடிக்கடி கூறுவார். அப்போதெல்லாம் அல்லாஹ் தனது நல்லடி யார்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் எனது நினைவுத் திரையில் தோன்றும்.
நன்மையான காரியங்களில் எவைகளை நீங்கள் உங்களுக்காக உங்கள் மரணத்திற்கு முன்னராகவே செய்து அனுப்புகின்றீர்களோ, அவைகளை நீங்கள் அல்லாஹற்விடத்தில் காண்பீர்கள். அதுவே உங்களுக்கு மேலானதும் மகத்தானதுமான கூலியுமாகும்.
- அல் - முஸ்ளUம்டபில்; 20
212


Page 109

GLOBE PRINTING WORKS, COLOMBO - 10. TEL : 329739

Page 110