கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2013.09

Page 1

ISSN 2012 6700
இதழ் - 14
fSIIríð
ப சமூக சஞ்சிகை

Page 2
With Best Compliments From:-
*
FIVESTARTEXTICLESCENTRIE
E. WHOLESALE & RETAILTEXTILE DEALERS
No. 95, 2nd Cross Street, Colombo - 11, Sri Lanka. Tel:-011 2441810, 2345280, 2441809 Fax:-94 - 1 - 2345184 / 2582453 E-mail:- shafeeka(asltnet.lk
With Best Compliments From:-
MSM MASIOOREADSAR
Address : No. 16, Ediriveera Avenue, Dehiwala, Sri Lanka.
Mobile : 077 3235543
šr65ří6
தி
 
 
 
 
 

శూ ar ESIČST6) JEOTID தோற்றம் - 2010 மே 30 இதழ் 14 - 2013 செப்டம்பர் ISSN 2012 - 6700
பிரதம ஆசிரியர்
ரிம்ஸா முஹம்மத்
துணை ஆசிரியர்கள்
எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வஸிர்
ஆலோசகர்
ஏ.சீ. ஐரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank, Mount Lavinia Branch, M.F. Rimza, A/C No :- 893.0020287.
என்ற இலக் கதி தரிற்கு காசை வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டை அனுப்ப வேணி டும் . ᏭᏂ fᎢ Ꮷi 85 35 L60) 6Tui Tu f6i (M.F. Rimza - Dehiwala Post Office) 6T60 g குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டையும் அனுப்ப வேண்டும். காசோலையாயின் குறுக் குக் கோடு இடப்படாத காசோலையை M.R. Rimza எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
தனிப்பிரதி - 100/- தபால் மூலம் - 140/س= வருட சந்தா - 600/=
தொடர்புகளுக்கு
“Poongavanam” 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia,
Sri Lanka.
Email:- poongavanam100G)gmail.com
Website:- www.poongavanam 100.blogspot.com
Phone:- 0094 (0) 775009222 0094 (0) 719200580
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு உரிமையுண்டு.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 3
பூங்காவனம்
உலகில் வாழ்கின்ற எல்லா ஜீவராசிகளும் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்றன. இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமானவையே. ஆனால் அவ்வுயிர்கள் தங்களுக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டு சமாதானமிழந்து பிரிவினைப்பட்டு தவிக்கின்றன.
சமாதானம் என்றால் அமைதி என்பது பொருளாகும். ஒரு சில வருடங்களுக்கு முன்னால் இந்த சொற்கள் எமக்கு அந்நியமாகிக் கிடந்தன. தற்போதும் கூட ஆழமாக நோக்குமிடத்து அமைதி என்பதன் அடிப்படையானது தளம்பல் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நடைமுறையில் நடக்கின்ற விடயங்கள் தெளிவுறுத்துகின்றன. அதேபோல உலக வரலாறுகள் தோறும் யுத்தங்கள் தோன்றி மனித உணர்வுகளில் பீதியை உருவாக்கியுள்ளன. உலக மகா யுத்தங்கள் எத்தனைக் கோடி உயிர்களை, உடமைகளை இல்லாமல் செய்தன என்பது இங்கு சிந்திக்கத்தக்கது.
பொறாமை, குரோதம், விட்டுக்கொடுப்பின்மை போன்ற தீய குணங்கள், வரலாற்றின் சில பக்கங்களை இரத்தத்தால் கறைபடுத்தியிருக்கின்றன. இன, மத, கலாசார, நாடு என்ற வேறுபாடுகளின்றி இன்றும்கூட சமாதானம் தன்னை தொலைத்திருக்கின்றது. எனவே சமாதானத்தை வலியுறுத்தும் நோக்கமாகவே செப்டம்பர் 21 ஆம் திகதி உலக அமைதி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
விரல் நுனியில் உலகத்தையே கண்காணிக்கும் காலமிது. அப்படி இருந்தபோதும் சமாதானத்தை அனைவரிடத்திலும் வலியுறுத்தி அதை சாத்தியப்பட வைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை. அவ்வாறானதொரு சமாதான மாற்றம் ஏற்படுமாயின் அது புரட்சிகரமான சாதனை வளர்ச்சி என்றும் குறிப்பிடலாம். வெகுசன ஊடகங்கள் தம்மாலான சமாதான முயற்சிகளை மேற்கொண்டபோதும் வக்கிரம் பிடித்த சில உள்ளங்கள் ஏனோ யுத்தத்தையே வரவேற்கின்றமை வேதனைக்குரியது. அவ்வாறான குணங்கள் ஒரு சமுதாயத்தில் மாத்திரமின்றி, ஒரு நாட்டின் அமைதிக்கே பங்கம் விளைவிப்பதுடன், உலக அமைதிக்கும் அவை அச்சுறுத்தலாக மாறிவிடும் சந்தர்ப்பங்களும் உருவாகின்றன.
எனவே பழிவாங்கல்கள், காட்டிக் கொடுப்புகள் போன்ற உணர்வுகளை விட்டும் விலகி, ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதினாலும், ஒழுக்கத்திலிருந்து வழுவாமலும் நியாயமாக நடப்பதால் சமாதானம் சீக்கிரம் சிம்மாசனம் ஏறிவிடும்.
*மாதானம் என்ற அரசன் உலகை ஆட்சி புரிந்தால். யுத்தம் என்ற அரக்கன் அழிந்து விடுவான்!!! - ஆசிரியர்
ഞ്ഞ இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

நேர்காணல்
கவிதைகள்
வவுனியா சுகந்தினி இராமசாமி ரமேஷ் ஏ. பாரிஸ் 616t). LITuhonor 965 பி.ரி. அஸிஸ் என். சந்திரசேகரன் எம்.எம். அலி அக்பர் கா. தவபாலன் திவித்துறை தர்ஷி ஷெல்லிதாசன் பதுளை பாஹிரா
சிறுகதைகள்
சூசை எட்வேட் எஸ்.ஆர். பாலசந்திரன் றாபி எஸ். மட்றாஸ்
திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹிம்
உருவகக்கதை
மருதூர் ஜமால்தீன்
கட்டுரைகள்
கவிஞர் ஏ. இக்பால் கா. விசயரத்தினம்
நூல் மதிப்புரை
டாக்டர் தாஸிம் அகமது நிலாக்குயில்
வாசகர் கடிதம்
நூலகப்பூங்கா
cos இலக்கி Fogar, சஞ்சிகை

Page 4
சந்திப்பு :- ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா
01. உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும்
குறிப்பிடுங்கள்?
கொழும்பைச் சேர்ந்த துவான் தர்மா கிச்சிலான் என்பவருக்கும், கம்பளையைச் சேர்ந்த ஸ்ரோதி டிவங்சொ அஜ்மஈன் அப்பாஸ் ரெழியா பீபிக்கும் சிரேஷ்ட புதல்வியாவேன். எனக்கு மூன்று தம்பிகளும், மூன்று தங்கைகளும் இருக்கின்றனர்.
நாங்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை ஒரு ‘காரியாகவும் (குர்ஆன் ஒதுபவர்), மார்க்க உபன்னியாசங்கள் செய்யக் கூடியவராகவும் இருந்ததால் ஊர்ப் பள்ளி வாசலுக்கு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். கபூரியா அரபுக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த எனது தம்பிக்கு அரபியில்தான் கடிதங்களை எழுதுவார். அந்தக் காலத்தில் மார்க்கக் கல்வியையும், அரபையும் கற்றுக்கொள்ள சிரமப்பட்டிருக்கிறார். அச்சுத் தொழில்தான் தந்தையின் பிரதான தொழிலாக இருந்தது.
தந்தை மலாயரான போதும் இஸ்லாமியக் கோட்பாட்டில் உறுதியாக இருந்தார். மலாய் மொழியைப் பேசினாலும் இஸ்லாமியக் கலாசாரம் பண்பாடு பழக்க வழக்கங்களைத் தான் மேற் கொள்ள வேண்டும் என தன் குடும்பத்தினருக்கிடையே பிரசாரம் செய்தார். அநேகமாக மறுப்புத்தான் வந்தது. பழக்கத்தை விடுவது கஷ்டம் என்றனர் சிலர். மார்க்கம் சொல்வது சரிதான் என்ற போதும் சிலர் அதனைப் பின்பற்ற முயற்சிக்கவில்லை. இன்னும் சிலர் தாங்கள்தான் நாகரீகமானவர்கள் என்றனர். தந்தையின் முயற்சி தொடர்ந்தாலும் தனது குடும்பத்தை அழைத்து வந்து சோனக முஸ்லிம் மக்களோடு நீர்கொழும்பு பெரிய முல்லையில் குடியமர்த்தினார்.
1950களில் எனது தாயைக் கொண்டு அயலில் உள்ள பெண் பிள்ளைகளுக்கான ஒரு கழகம் அமைத்து ஓதல், சந்தர்ப்ப துஆக்கள், ! தொழுகை, ஹதீஸ்கள், பேச்சு, இஸ்லாமிய கீதங்கள் இவற்றில் பயிற்சியளித்தல், போட்டிகள் நடத்தல் முதலானவைகளை நடத்தினார். ஆக்கங்களையும் தந்தையே நிர்மாணிப்பார். காலப்போக்கில் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்காக ஆங்கில, சிங்கள மொழி டியூஷன் வகுப்பையும் தாய்
 
 

徽
நடத்தி வந்தார். மேலும் அயலவர்களுக்கு இலவசமாக முதலுதவிச் சேவைகளையும் என் பெற்றோர் செய்து வந்தனர். இவ்வாறான குடும்பப் பின்னணியிலிருந்து உருவாகியவள்தான் நான். இத்தகைய பெற்றோர் கிடைக்கப் பெற்றதும் எனது பாக்கியம்தான். எங்கள் இனத்தவர்கள், எங்கள் உடைகளையும் பண்பாடுகளையும் பார்த்து பழித்தனர். ஓரக் கண்ணால் ஏளனத்துடன் பார்த்து ஒதுங்கியும் கொண்டனர். ஆனால் மாஷா அல்லாஹற் இன்று மலாய் சமூகத்தை அல்லாஹற் ஆன்மீக ரீதியில் விழிப்புரச் செய்துகொண்டு வருகிறான். அல்ஹம்துலில்லாஹற். இந்த நிலையைக் கண்டு களிக்க என் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை.
02. உங்களது இலக்கியப் பணியின் ஆரம்ப காலம் பற்றியும், அதற்கு
உறுதுணையாக இருந்தவர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
இங்கும் எனது பெற்றோரே முதன் முதலாக உறுதுணையாக இருந்தவர்கள். பாடசாலையில் இலக்கிய மன்றப் பொறுப்புகள் வாய்க்க முதல், தந்தையின் வழிகாட்டலில் தாயார் நடத்தி வந்த கழகத்தில் களம் அமைத்துத் தரப்பட்டமையே எனது இலக்கியப் பணியின் ஆரம்பமாகும். அடுத்த களம் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி ஆகும். இக் கல்லூரியில் முதல் சிரேஷ்ட மாணவர் தலைவியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இளம் வயதிலிருந்தே இலக்கிய ஆர்வமும், கலையுணர்வும், விளையாட்டுத் திறனும் இயல்பாகக் காணப்பட்டதால் அவற்றை இனங்கண்டு கொண்ட ஆசான்கள் என்னை சரிவர நெறிப்படுத்தினர். இந்த இடத்தில் முக்கியமாக திருமதி பியற்றிஸ் லூக்கஸ் பெர்னாண்டோ ஆசிரியருக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் பாடசாலை நிர்வாகப் பொறுப்பு, 6 - 11 வரையுள்ள வகுப்புக்களுக்கு மொழி, இலக்கிய, கணித பாடங்களைக் கற்பிக்கும் பொறுப்பு விழாக்களின் போதும், இலக்கிய மன்ற நிகழ்ச்சிகளை முன்வைக்கும் போதும் ஹார்மோனியத்தின் உதவியுடன் மெலடி போட்டு இசைப்பார். இசைக்கேற்ப பயிற்சிகளையும் வழங்குவார். இறுதியில் அழகிய பாடலாகவோ, நடனமாகவோ, நாடகமாகவோ, கிராமியப் பாடலாகவோ அரங்கேறும். பெற்றோருக்கடுத்த முன்மாதிரி இவரே. இவ்வாறு பாடசாலை கலை இலக்கிய மன்ற செயலாளராகவும் 1955 - 1960 வரை மாறி மாறி பத்திராதிபராகவும் இருந்த பொறுப்பு பாடசாலைப் படிப்பு முடியும் வரை நீடித்தது.
இதே காலத்தில் கலை இலக்கிய இரச ஞானத்தை வளர்க்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டுக்கு முன்னால் அக்கால பிஷொப் கார்டினால் குரேயின் பெற்றோரின் வீட்டு வளவில் நீர்கொழும்பு கலைஞர்கள் முதல், சினிமாக் கலைஞர்களும், டொக்டர் ஹியூகோ பெர்ணாந்துவின் தலைமையில் நாடகப் பயிற்சி, இசையமைப்பு முதலானவை இடம்பெறுவது வழக்கம். இந்த சந்தர்ப்பங்களை இரவு எத்தனை மணியானாலும் நானும், என் தம்பியும் தவறவிட்டதில்லை. இதற்கு முந்திய எங்கள் குடியிருப்பு எலோ ஜயமான்னவின் சொந்தக்காரர் வீடு. நடிகை ருக்மணி தேவியின் வீடும் பக்கத்தில்தான். இங்கும் சினிமா நடிகைகள் வருகை, நடனப் பயிற்சி என்பன இடம்பெறும். சிலவேளைகளில் ருக்மணி தேவி என்னை மேசை மீது தூக்கி வைத்து

Page 5
பூங்காவனம் இதழ் 14
விளையாடுவார். நான்கு வயதில் ஐந்தாம் ஜ"ஸ்உ ஓதி முடித்ததைக் கண்டு 'இந்தக் குழந்தை அரபு மொழியை அல்லாவா இப்படி கடகடவென வாசிக்கிறது என்று புதுமைப்படுவார். மேலும் நான் ஏழு வயது முடியும் முன்னே அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தந்தையிடம் ஓதி முடித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படியோ விதவிதமான மொழி, கலை, கலாசார, பண்பாட்டுக் கோளங்கள் சூழ்ந்திருந்ததாலோ என்னவோ கலை உணர்வு, இயல், இசை, நாடகத் துறை முதலான சகல துறைகளிலும் கல்லூரி வாழ்க்கை, ஆசிரியப் பணி, ஆலோசகர் சேவை யாவற்றிலும் சிறந்து விளங்கினேன். தவிர சுகயினமுற்ற பின்னும் என் பணி மெதுவாகவேனும் தொடர்கிறது.
03. நீங்கள் வானொலியிலும், ரூபவாஹினியிலும் அதிகமாகப் பங்களிப்புச் செய்துள்ளிர்கள். அது பற்றிக் குறிப்பிடுவீர்களா?
நான் ரூபவாஹினி, வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் சில முஸ்லிம் நிகழ்ச்சி நாடகங்களாகவும், சில சிங்கள மொழி நிகழ்ச்சி நாடகங்களாகவும் இருக்கும். இன்னும் சில இளைஞர் இதய நிகழ்ச்சி நாடகங்களாகவும் இருக்கும். பொதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படுகின்ற வானொலி நாடகக் கலைஞர் தேர்வுப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஒடிஷன் ஆர் டிஸ் ட் ஆவேன். கடைசியாக நாடகத்தில் பங்கெடுக்க ஒப்பந்தப் பத்திரம் வந் திருந்தது. பங்கு பற்றக் கிடைக்கவில்லை. அந்நேரம் படுத்த படுக்கையிலேயே உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் கண் டு முழுமையாக செயல் இழந்துவிட்டேன். அதிலிருந்து இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திலிருந்து தொடர்ந்து என்னுடைய முறை வரும் போது வழமையாக அனுப்புகின்ற ஒப்பந்தப் பத்திரம் அனுப்பப் படவில் லை. பொறுப்புதாரிகளும், சக கலைஞர்களும் பத்து வருடங்களாக என்னை மறந்து விட்டிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஊனமான நிலையிலும் வானொலி நாடகத்தில் பங்கேற்று நிறைவு செய்யக் கூடிய தகுதி இன்னும் எனக்கு இருக்கிறது. அதனாலன்றோ சர்வதேச அங்கவீனர் தினத்தில் புனருத்தாபன ஆஸ்பத்திரியில் நடந்த ஓரங்க நாடகத்தில் முதலிடம் பெற்றேன். அத்தோடு சிங்களப் பாடலில் இரண்டாம் இடமும் பெற்றேன்.
மேலும் 1986 இல் வானொலி முஸ்லிம் சேவையில் இளைஞர் இதய
கலை இலக்கிய சமூக சஞ்
 
 
 
 
 
 
 
 
 
 

பூங்காவனம்
நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பாத்திரங்கள் கொண்ட பத்து நிமிட நாடகத்தினை நானே தனி ஒருவராக நின்று 'மிமிக்ரி' முறையில் அந்த ஒன்பது பாத்திரங்களுக்கும் குரல் கொடுத்தேன். இந்நிகழ்ச்சி பற்றி முஸ்லிம் சேவை பணிப்பாளர் இரண்டு முறை வானொலியில் பாராட்டிப் பேசியுள்ளார். இதனைக் கேட்டு ரசித்தவர்களின் பாராட்டுக்களும் நிறையக் கிடைத்தன. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளின் பின் கொழும்புத் துறையில் நடந்த ஆசிரிய ஆலோசகர் பயிற்சிப் பாசறையில் இருவர் இந்த நிகழ்ச்சியை பிரஸ்தாபித்து பாராட்டிக் கொண்டிருந்தனர். அந்தப் பாசறையில் திருமதி. நவாஸ் ஆக இருந்த நான்தான் அந்த மிமிக்ரி கிச்சிலான் என்பது யாருக்கும் தெரியாது. நான் அளவில்ா மகிழ்ச்சியோடு காது கொடுத்துக்கொண்டிருந்தேன்.
இது தவிர வானொலிக்காக சிறுகதை, கவிதை, கட்டுரை, உரையாடல்கள், நாடகங்கள் முதலியவற்றுக்கான பிரதிகள் எழுதுவதுடன் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும் இவற்றின் பங்களிப்புக்கள் இடம்பெறும். இச்சமயம் பிரதியமைத்தல், குரல் கொடுத்தல் என பங்களிப்பு நடைபெறும். அவ்வாறே மாணவர் மன்றம், இல்முல் இஸ்லாம், பெருநாள் விசேட நிகழ்ச்சிகள்
ஆகியவற்றுக்கு பிரதி அமைத்து, பயிற்சியுமளித்து ஏனையவர்களையும் "
பங்கு பெற வைத்ததுடன் நானும் பங்கு பற்றியுள்ளேன். அத்துடன் புதுக் கலைஞர்களை தோற்றுவிப்பதான சிங்கள, தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளேன். மேலும் வானொலி வர்த்தக சேவையில் (விசித்ராங்க கீ) சிங்கள நிகழ்ச்சியிலும், குருகெதர நிகழ்ச்சியிலும் விசேட நிகழ்சசிகளின் போதும் மெல்லிசை, கிராமிய சஞ்சிகை இளைஞர் இதயத்திலும் பாடியுள்ளேன்.
04. சிங்கள் மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள நீங்கள் அந்த மொழி மூலம் எத்தகைய பங்களிப்பினை செய்து வருகின்றீர்கள்?
எனது சிங்கள மொழித் தேர்வை விசேட தகைமையாகக் கொண்டே ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்றேன். அல் ஹிலால் மத்திய கல்லூரியின் சிங்கள மொழிப் பிரிவு பாடசாலையிலும் கற்பித்துள்ளேன். இந்தப் பிரிவில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமிய விசேட தின விழாக்களின் போதும் சிங்கள மொழி மூலம் நிகழ்ச்சிகளை அமைத்து, பயிற்றுவித்து வழிப்படுத்தல் இடம்பெறும்.
ஒரு காலத்தில் அமைச்சுக்கோ, காரியாலயத்துக்கோ கடிதப் பரிமாற்றங்கள் சிங்களத்திலேயே இடம்பெற வேண்டிய நிலை இருந்தது. இக்காலத்தில் சம்பளப் படிவங்கள் முதற்கொண்டு அவ்வப்போது தேவையான சகல காரியாலயக் கடிதங்களை எழுதும் பொறுப்புக்களை அதிபர், என்னிடமே ஒப்படைத்திருந்தார். சில வேளைகளில் கல்விக் காரியாலயங்களினால் தமிழ், முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள், அறிவித்தல்கள் கொடுக்கும்போது மொழிபெயர்ப்புக்காக என்னையே அழைப்பார்கள்.
19991 இல் 'சஹன' என்ற சிங்களப் பத்திரிகையில் எனது முதல் சிங்களக் கட்டுரை வெளியானது. அதாவது 'வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்வோருக்கு பயிற்சிகள் அவசியப்படுவது ஏன்? என்ற தலைப்பில்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 6
அக்கட்டுரை சிங்களத்தில் எழுதப்பட்டது. பொதுவாக என் வாழ்க்கையோடு, தொழிலோடு சம்பந்தப்பட்ட எந்த இடத்திலானாலும் அந்நிய சமூகத்தினர், எம் சமூகத்தைப் பற்றியோ, கலாச்சார பண்பாடுகள் பற்றியோ தவறான கருத்துக்களை வெளியிடும்போது அதை தெளிவுபடுத்த சிங்கள மொழியே எனக்கு உதவியது. மேலும் நான் 'மீப்புர சிங்கள பத்திரிகையின் எழுத்தாளருமாவேன். அதுபோல இலங்கை ரூபவாஹினியில் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் நடைபெற்றுவந்த ‘சிதி ஜய' என்ற சிங்கள நிகழ்ச்சியினுடாக அநேகமான முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளை சிங்கள மொழி மூலம் முன்வைத்துள்ளேன்.
05. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் சிங்கள மொழியிலும் ஆயிரக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ள உங்களது நூல் வெளியீட்டு முயற்சிகள் எதிர்காலங்களில் எப்படி இருக்கும்?
அல்லாஹற் தான் அறிவான். எனது பெருளாதார தகுதிகளுக்கு மிஞ்சின ஒன்றாகவே இன்று நடக்கின்ற நூல் வெளியீட்டு விழா சம்பிரதாயங்களை எண்ணுகின்றேன். உடல் நல்மற்ற, ஆள் வளமற்ற, தனித்த எனக்கு பண பலத்தை வலிந்து தேடினாலும், அது எட்டாக்கனி போலத் தோன்றுகின்றது. ஆதலால் அதற்காக கொட்டாவி விட்டுக் கொண் டிராம ல எனது ஆ ய ர க க ண க கா ன எழுத்தாக்கங்களை எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். கையெழுத்துப் பிரதிகளாக அவை தூங்கிக் கிடக்கின்றன. புத்தக வெளியீடு அரங்கேறும் நாள் பற்றி அல்லாஹற்வே அறிவான்.
இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இலங்கையில் முன்னணியிலுள்ள சுதேச வைத்திய நிபுணர்களால் நடத்தப்பட்டு வருகின்ற ஊனமுற்றோர் சங்கம், விசேட தினங்களில் ஊனமுற்றோரை வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று காட்சிப்படுத்துவதில் உள்ள அக்கறை, ஊனமுற்றோரின் வளம் குறைந்த நிலையிலும், வலுவிழந்த கைகளைப் பயன்படுத்தி ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்து அவர்களது ஆன்ம பலத்தை மேம்படுத்துவதில் இல்லை.
பாரிசவாதம், புற்று நோய், மாரடைப்பு ஆகிய நோய்களோடு இன்னும் சில நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக என்னைப் பீடித்துக் கொண்டன. இறுதியாக நடந்த சத்திர சிகிச்சைக்கு முன்பு என்னைப் பிழைக்க வைக்க முடியாத சாத்தியக் கூறுகள் இருப்பதால் வைத்தியர்களால் உபதேசிக்கப்பட்டேன். என் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வாங்கினர். குடும்பத்தில் பொறுப்பு
 
 
 
 
 
 
 

தாரியிடமும் கடிதம் வாங்கினர். எனது சிக்கலான நிலையை ஒரு பெண் டாக்டர் நாசூக்காக விளக்க முற்பட்டார். நான் அவரிடம் டாக்டர் எனது நிலைமை எனக்குத் தெரியும். நான் விரும்பித்தான் இந்த சத்திர சிகிச்சை பெற்றுக்கொள்ள முனைந்திருக்கிறேன். வைத்திய விஞ்ஞானப்படி உங்களால் முடிந்த மேல்மட்ட முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ளுங்கள். எது நடந்தாலும் சரியே. உங்கள் அனைவராலும் எனது உயிரைப் பிடித்து நிறுத்த முடியாது. அது இறைவன் கைவசம் உள்ளது என்றேன். டாக்டர் அவரது பெருவிரலை உயர்த்திக் காட்டியமை சரியாகச் சொன்னீர்கள்’ என்றவாறு இருந்தது. அதிசயமாக நீண்ட நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் ஆப்ரேஷன் முடிந்ததும் மாரடைப்பால் துடிதுடித்து உயிருக்காகப் போராடியிருக்கிறேன். எனக்கு நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆகின. இறைவன் அருளால் மீண்டுவிட்டேன். பாரிசவாதத்தால் 11 வருடங்களாக நடக்க முடியாமல் வலது பக்கங்கள் முற்றாக செயலிழந்த நிலை. இடது பக்க கை, கால்கள் சிறிதளவு இயக்கம் கொண்டுள்ளன. எப்படியோ இறைவனின் சோதனையோ, வேதனையோ என்னை அணுகிவிட்டது. இந்த " சந்தர்ப்பத்தை பாவமன்னிப்பு தேடிக்கொள்ளும் சந்தர்ப்பமாக பொறுமையுடன் ஏற்கிறேன். இப்படியான நிலையில் நான் இருக்கும் போது எனது புத்தகம் வெளியிட வேண்டும் என்ற கனவை எப்படி தனியாக நிறைவேற்றிக்கொள்வது? இறைவன்தான் உதவி செய்ய வேண்டும்.
06. தற்போது இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆமாம் நினைக்காதிருக்க முடியுமா? மழை பெய்தால்தான் காளான்கள் முளைத்து, மாலையாகும்போது அதன் நிலைமை கெட்டு விடுவதை பார்க்கிறோமல்லவா? இலக்கிய அமைப்புக்களின் நிலையும் அப்படித்தான். விழா என்றால், வெளியீடு என்றால், மாநாடு என்றால் இந்த அமைப்புக்கள் உஷாரடையும். தலையெடுத்தது போக இன்னும் ஒரு காத்திரமான அமைப்பு வீராப்புடன் எட்ட நின்று பார்த்திருக்கும். எல்லாப் பகுதிகளிலும் அமைப்புக்களின் தோற்றப்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். எல்லா அமைப்புகளுக்குள்ளும் ஒற்றுமையான கூட்டமைப்பு உருவாக வேண்டும். இலங்கையில் தேசிய ரீதியாக நடக்கும் கலை இலக்கியப் போட்டிகள், முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைபெறுகின்ற கலை, கலாசார இலக்கியப் போட்டிகள் பற்றி இந்த எல்லா அமைப்புக்களும் தெரிந்திருத்தல் வேண்டும். விருதுகளும், அவ்விருதுகளை அடைவதற்கான தகைமைகள் பற்றிய
தெளிவையும் பெற்றிருக்க வேண்டும்.
நவீன முஸ்லிம் இலக்கியப் படைப்புகள் தோன்றக் கூடியதான கேள்விகளை பிறக்கச் செய்தல், சுய ஆக்கங்களையும் வரவேற்று மதிப்பீடு செய்தல், சிரேஷ்ட கலைஞர்களையும், கல்விமான்களையும் கொண்டு தலைநகரில் மாத்திரமல்ல நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பயிற்சிப் பாசறை இந்த அமைப்புக்களினுடாக நடத்தப்பட வேண்டும். கலை இலக்கியவாதிகளை பதிவுசெய்து அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட முயற்சிகள்
கலை இலக்கி

Page 7
இதழ் 14
எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் சகோதர சமூகத்தில் காணப்படுவது போல கலைஞர்கள் (சினிமாக் கலைஞர்கள் மாத்திரமல்லர்) மதிக்கப்பட வேண்டும். அவர்களில் வயோதிபக் கலைஞர்கள், குருட்டு, செவிட்டு, முடக் கலைஞர்கள் போன்ற இயலாதவர் களின் ஆக்கங்களை வெளியிட்டுக்கொள்ளவும், நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் கூடியதான கூட்டுறவு நிதியமைப்பின் தேவை தேசிய ரீதியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். தேசிய ரீதியாகவோ, சர்வதேச ரீதியாகவோ விழாக்களை ஆடம்பரமாக்குவதைக் கட்டுப்படுத்தி ஆக்கபூர்வமான செயல்களுக்கு மூலதனம் இட வேண்டியது புத்திசாலித்தனமானதும், காலத்தின் தேவையுமாகும். எந்த விதத்திலும் இவ்வமைப்புக்கள் அரசியலை சார்ந்திருக்கக் கூடாது. இதுவே என் கருத்தாகும்.
07. உங்களுக்குப்பிடித்த எழுத்தாளர்கள் யார்? ஏன்?
சிரேஷ், கனிஷ்ட, புதிய, சிறிய சகல எழுத்தாளர்களையும் மதிக்கின்றேன். அவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். ஏனென்ல் எல்லோராலும் எழுத்தாளராக முடியாது. எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பலதரப்பட்டவை. அதன் ரகங்கள், ரசங்கள் பல வகை. கனிகள் பலதரப் பட்டவையானாலும் அனைத்தும் நாவுக்கு ருசியானவையே. அதுபோலவே எழுத்துக்களும். எழுத்துக்களை ஆழ்ந்து படித்தால்தான் அதன் ஆழமும், ரசமும் புரியும். படைப்புக்களைத் தரும் எழுத்தாளர்கள் யாவரும் மதிக்கத்தக்கவர்களே.
08. தற்போதைய இளம் பரம்பரையினர் கலை கலாசார இலக்கிய அம்சங்களில் ஈடுபாடு காட்டுவது மிகக் குறைவு. இந்த நிலை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இளம் பரம்பரையினரின் கலை கலாசார இலக்கிய அம்சங்களின் ஈடுபாடு குறைவதற்கு நான் அவதானித்த வகையில் மொழி வளமின்மை, பெற்றோர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பு இன்மை என்பனவும் காரணமாகும். இவர்கள் இலக்கிய அறிவில் இருந்து தூரமாகிக் கொண்டிருக்கின்றனர். மொழியோடு சம்பந்தப்பட்ட பாடப் புத்தகங்களில் கூட இலக்கிய ரசனை ஊட்டக்கூடிய விடயங்கள் தாராளமாக உண்டு. அவற்றை பிரயோகத்தில் கொண்டு வர சங்டப்படுவது ஏனோ? பாடசாலைச் சூழல் ஒரு இலக்கிய சூன்ய ஸ்தானமாகிவிட்டால் மாணவர் உள்ளங்களில் சுய நிர்மாணங்கள் உதயமாவது எப்படி? "வாழ்க்கையில் இருந்து தூரமாகிய இலக்கியம் ஒன்றில்லை. இலக்கியம் என்பது ஆகாயத்தில் தொங்குகின்ற எதுவுமில்லை' என யாரோ சொன்னதை நானும் சொல்கின்றேன்.
09. நலன்புரி நிலையத்தில் தாங்கள் புரிந்த சேவைகள் பற்றி குறிப்பிடுங்கள்?
நான் பாத்திமா வெல்பெயார் சென்டர்’ என்ற நலன்புரி நிலையத்தில் சேவையாற்றினேன். இது அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் ஒன்றாகும். ஆசிரிய உலகத்திலும், வெளியிலும் பெற்ற அனுபவங்களை எல்லாம் திரட்டிப் பிரயோகித்து பாத்திமா
 
 
 
 
 

நலன் புரி நிலையத் தினை வளர்த்துச் செல்ல என்னை நான் திருப்தியோடு அர்ப்பணித்துக் கொண்டேன். இறையச்சத்தில் உறுதியற்ற, இறை கட்டளைகளை மீறி நடக்கும் ஒரு சிலரால் பல வேறு சோதனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அவற்றுக்கு எல்லாம் சளைக்காது இறைவனிடமே முறையிடுவேன்.
இங்கு எனது கடமைகள் பலவாயின. யாரும் என்னை வற்புறுத்தி வேலைகளை செய்யும்படி சொல்லவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நானாகவே அவசியத் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நிறைவு செய்வேன்.
எனது பெண் ஊழியர்களை சம்பளத்துக்கான சிரமம் போக, மேலதிக பணிகளைச் செய்ய அவர்களுக்கு மனத் திருப்தி, இறை திருப்தி பற்றி சொன்னமை உதவியாயிற்று. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நானும் இவர்கள் கூடவே இயங்கி வருவதால் யாரும் அலுத்துக் கொள்வதில்லை. இல்லத்தின் உள்ளகப் பொறுப்புக்கள் இவ்வாறு நிறைவேற்றுவதைக் கண்ட உயர்மட்ட நிர்வாக சபை என் சேவைகளைப் பாராட்டியது.
10. இதுவரை நீங்கள் பெற்றுள்ள பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?
நான் ஒன்பது வயதிலிருந்து இதுவரை பெற்றுள்ள பரிசுகள் ஏராளம். பல துறைகளிலும் நான் பெற்ற பரிசுகளுக்குரிய சான்றிதழ்கள் என்னால் சுமக்க முடியாதளவு உள்ளன. இவற்றில் நான் நடக்க முடியாதபடி, எழுத முடியாதபடி ஊனமானதன் பின்னால் மெல்ல மெல்ல பலமில்லாத இடது கையின் சிறிய அசைவாட்டத்தின் இசைவில் கிறுக்கியவற்றுக்கு பெற்ற இலக்கியப் பரிசுகளையே மிகச் சிறப்பானவையாகக் கருதுகிறேன்.
தற்போதைய கலாசார அமைச்சினால் நடத்தப்படுகின்ற இலக்கிய கலைப் போட்டிகளிலே திறந்த பிரிவில் 2007 இலிருந்து வருடாந்தம் வெற்றிக்குரிய இடங்களைப் பெற்றுள்ளேன்.
* 2009 கலாபூஷண விருது கிடைத்தமை * 2012 ஞானம் சஞ்சிகை சர்வதே ரீதியில் நடத்திய போட்டியில் 7 ஆம்
இடம் பெற்று ஆறுதல் பரிசு கிடைத்தமை * அல்ஹஸனாத் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு * ஓசையில் ஆக்கக் கவிதை போட்டியில் சிறப்புச் சான்றிதழ்
இது தவிர பட்டியல் படுத்தி சொல்ல முடியாதளவு இன்னும் பல பரிசுகள், சான்றிதழ்கள் கிடைத்திருக்கின்றன!!!

Page 8
இ வவுனியா சுகந்தினி
ஓடும் பேருந்தில் ஒற்றைப்பெண் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் வன்புணர்வு.
பாடசாலை மாணவன் விபத்தில் பலி. போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது. மது அருந்திய கணவரால் மனைவி கொலை.
மதுவினால் விளையும் மனதை உருக்கும் சம்பவங்கள் பல!
நாக்கு சுவை கண்டுவிட்டதற்காய் மதிகெட்டுப்போய் மது அருந்துகின்றனர் யாரும் கேட்டால் கவலையை மறக்க குடிக்கிறேனென்று கதை கூறுகின்றனர்
மது அருந்திகளுக்கு மது வழங்கி மரண தண்டனை தீர்ப்பளிக்கும் மாண்புமிகு நீதிமன்றங்கள்!
ஆனால்
மதுக்கடைகள் என்றுணராது அனுதினமங்கே அடைக்கலம் புகுகின்றனர் இந்த புத்திகெட்ட மனிதர்கள்!
பாதி ஆயுளில் உயிரைப் பறிக்க இயமன் வீசும் பாசக் கயிறு
போத்தலில் அடைக்கப்பட்ட மது இதுவறியாது பணங்கொடுத்து குடித்து விரைவில் பிணமாகின்றனர்
ஈரலை இம்சைக்கு அன்பளிப்பு செய்து இன்பம் வாங்கும் இவர்களைத் தண்டிக்க இயமனைத் தவிர யாரால் முடியும்???
 
 

பூங்காவனம் இதழ் 14
நான் எனது நண்பன் விக்கினேஸ்வரனைத்தேடி அவன் இல்லிடம் போனேன். கன்னியாவில்தான் அவன் இல்லம் இருக்கிறது. பிரசித்தி பெற்ற வெந்நீர் ஊற்றுக் கிணறு இருக்கும் இடத்துக்கு கொஞ்சம் தள்ளித்தான் வாசம்
செய்கிறான். வெந்நீர் கிணற்றைத்தேடி உள்ளுர் அயலூர் வெளியூர் மக்கள் "
எல்லாம் தினசரி சாரசாரியாக வந்த வண்ணம் இருப்பர். வாகனங்களும்
இரைந்தபடி வந்து குவிந்து இருக்கும். எப்போதும் ஆரவாரமாக இருக்கும். ஏன் களியாட்டமாகவும் இருக்கும்.
இவன் கொஞ்சம் தள்ளியிருப்பதால் அமைதிச் சூழல்தான் அங்கிருக்கும். பிரயோசனமான மரங்கள் எல்லாம் சாமரம் வீசி காற்றையும் நிழலையும் பரப்பி மன அமைதியை ஏற்படுத்தும்.
அவன் என்னோடு படிப்பவன். உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு கொஞ்சம் ஒய்வாக இருக்கிறோம். நல்ல பசுமை, இனிமை, தனிமைச் சூழ்நிலை அங்கு இருப்பதால் நான் அவன் இல்லத்துக்குப் போவேன்.
என்னைக் கண்டதும் வழமைபோல பின் வளவுச் சோலைப் பக்கமாக அழைத்துச் சென்றான். மா, பலா, கொய்யா, வாழை என்று பல மரங்களும் பயன் தரும் வேறு மரங்களும் எம்மை வரவேற்றன. கூடுதலாக தென்னை மரங்களே நிரையில் கொலுவீற்றிருந்தன.
இவற்றை எல்லாம் வளர்த்தெடுப்பதில் இவன் பங்குதான் அதிகம். அப்பன் இதையெல்லாம் கவனிக்காது. அது ஒரு போக்கு.
வாங்குபோல ஒரு பரன் நிலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. விக்கினேஸ்வரன் பெரும்பாலும் வாசிப்பது படிப்பது என்று இங்குதான் தன் பொழுதைப் போக்குவான். வீட்டிலே தொலைக்காட்சி தொல்லை தரும் அவனுக்கு. நண்பர்களையும் இங்கே வரவழைத்துத்தான் பொழுதைப் போக்குவான்.
மரத்தில் ஏறி இரண்டு செவ்விளநீரை அறுத்துக்கொண்டு வந்தான். அவனே சீவி வழுவையும் வழித்து கலக்கி குடிக்கத் தந்தான். வெய்யிலில் களைத்து வந்த எனக்கு அமிர்தமாகவே இருந்தது. யாருக்கு நன்றி சொல்வது? விக்கினேஸ்வரனுக்கா, இயற்கைக்கா, இறைவனுக்கா?
| area இலக்கிய சமூக சஞ்சிகை

Page 9
இதழ் 14
தூரத்து மரங்களில் மந்திகள் கொஞ்சம் குந்தியிருந்து பாய்ந்துகொண்டிருந்தன. நான் அவற்றை வேடிக்கையாகப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். இன்னும் கண்குளிரக் கண்டு மகிழ நெருங்கி வராதா என்றிருந்தது. அப்போது என்னை நோட்டமிட்ட விக்கி சொன்னான்.
‘என்னடா குரங்கப் போய் இரசிக்கிறியோ? இந்தக் குரங்குகள் தான்டா எங்கட எதிரி. வந்துதுகள் எண்டால் மச்சான் பழம் காய் பூ பிஞ்சு எண்டு ஒண்டையும் விட்டு வைக்காது. குருத்திலையக்கூட விட்டு வைக்காது உருவித் தின்னும். இப்பிடியெண்டால் மச்சான் எப்பிடி மரங்கள் உருப்படும்? பிரயோசனம் தரும்? பூவையே உலுக்கிக்கொட்டினால் என்னெண்டு காய்க்கும்? சொல்லு LITiIIILIlb?”
"அப்ப என்னெண்டு இவ்வளவு மரங்களையும் பாதுகாக்கிறாய்? பிரயோசனம் எடுக்கிறாய்?
"கொஞ்ச நேரம் இருந்து பார். என்ன நடக்குதெண்டு. இவன் வேடிக்கை காட்டும் சுபாவத்தினன். இப்போ என்ன விளையாட்டுக் காட்டப் போகிறானோ என்று நானும் அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் மீண்டும் மரத்தில் ஏறி ஒரு முட்டுக் காயாகப் பிடுங்கிக்கொண்டு வந்தான். சிறு துவாரமிட்டு இளநீரைப் பருகினான். எனக்கும் தந்தான். மெல்லிய கத்தியை உள்செலுத்தி வழுக்களை கொஞ்சம் விறாண்டி விட்டான். பிறகு அதைக் கொண்டு போய் தொங்கலில் இருக்கும் தென்னை அருகில் வைத்து விட்டு வந்தான்.
நான் வியப்போடு பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ நடக்கப் போகிறது. கிட்ட வந்து சொன்னான்.
"கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இரு மச்சான். ஒரு நல்ல. விளையாட்டொன்று நடக்கப் போகுது பார்த்துக்கொண்டே இரு.
நானும் அவனோடு பார்த்துக் கொண்டே இருந்தேன். குரங்குகள் ஒவ்வொன்றாய் இவர்கள் மரங்களுக்குத் தாவிக்கொண்டிருந்தன. இலைகளை உதிர்த்து, கிளைகளை முறித்து, காய் பிஞ்சுகளை பறித்து அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தன. விக்கியும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். முன்னரென்றால் அவைகளை கல் எறிந்து கலைத்திருப்பான்.
ஒரு குரங்கு இவன் வைத்த தெங்கில் கண் வைத்துவிட்டது. இறங்கி பையப் பைய நடை பயின்று வந்தது. இவன் வைத்த இளநீரை தூக்கி மடியில் வைத்து கண்ணை விட்டுப் பார்த்தது. விரல்களை நீட்டி ஒரு கையை துவாரத்தின் வழியாக உள்ளே செலுத்தியது. உள்ளிருப்பதை கைக்கு அடங்கக் கூடியதாக விறாண்டி எடுத்து விரல்களை மடக்கி முங்கியாக்கி வெளியே கையை எடுக்க முற்பட்டது. முட்டுக் காயும் கையோடு சேர்ந்து தொங்கிக் கொண்டது. மேலே ஏறமுடியாமல் அந்தச்சுற்று வட்டத்தில் வட்டமடித்து சுழன்றாடியது. முஷ்டியாக்கி பாரத்தோடு ஆட்டம் போட்டுக்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

பூங்காவனம் இதழ் 14
களைத்து சோர்ந்து போய் பரிதாபமாக வானத்தையும் பூமியையும் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த வேடிக்கையைப் பார்த்து எனக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.
"பார்த்தியா மச்சான் குரங்குப்பிடிய? குரங்கு பிடிக்கிறதும் இப்படித்தான். கொஞ்சம் பொறு வாறன் இன்னும் விளையாட்டு இருக்கு' என்று சொல்லிக் கொண்டே எழுந்து போனான் விக்கி.
ஐந்தோ, ஆறோ உருண்டைத் தடிகளை ஒரு முழு நீளமாக வெட்டிக் கொண்டு வந்து மாட்டுப்பட்டிருக்கும் அந்த குரங்கருகில் போட்டு விட்டான். இருவரும் இருக்கையில் அமர்ந்து அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தோம். மற்றக் குரங்குகள் மெல்ல மெல்ல இறங்கி இந்தக் குரங்கு மீது இரங்கி அதைச் சூழ்ந்து கொண்டன. அனுதாபத்தோடு பார்ப்பது போலிருந்த அம் மந்திகள் மெல்ல அதை விறாண்டின.
இது சீறிச் சினந்து எதிர்த்து விறாண்டி தன் எதிர்ப்பைக் காட்டியது. பதிலுக்கு அவை சினந்து சீறி எகிறிப் பாய்ந்து, பிராண்டி எதிர்த் தாக்குதலை கோரமாகத். தொடுத்தன. கோபாவேசத் தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்தி ஆயுதம் தேடிய அவைகளுக்கு கண்ணில் பட்டது விக்கி போட்ட தடிகள். அவற்றை எடுத்தது தான் தாமதம். இந்தப் பிடியை விடமுடியாது மாட்டுப்பட்டிருக்கும் இந்த குரங்காருக்கு நல்ல அடிபோடத் தொடங்கின. சாவாரைப் போல குற்றுயிராகும் வண்ணம் நன்றாக அடிபோட்டன. எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தடுமாற்றமாகவே இருந்தது.
இந்தக் காட்சி முடிந்தும் முடிவடையாத நேரம். தெருப் படலைப் பக்கமாக ஆரவாரமாக இருந்தது. அனுதாப அலைகளும், வசைமாரிகளும் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தன.
நாங்களிருவரும் மனம் குழம்பிப் போய் பரபரப்போடு அங்கே சென்றோம். அங்கே முச்சக்கரத்தில் இருந்து இரண்டு பேர் பாடு கேடாகக் கிடக்கும் ஒருவரைக் காவிக்கொண்டு உள்ளிட்டனர். சட்டையில் இரத்தக் கறைகள் பட்டிருந்தன. வீட்டுப் பெண்கள் ஒப்பாரி பாடி அழுது குழறினர்.
"இந்த மனுசனுக்கு இதுதானே நித்திய கண்டமாயிருக்கு. குடிக்கிறதால தானே இப்படியெல்லாம் காயப்பட்டு இரத்தம் சிந்த வேண்டியிருக்கு. எத்தின. நாள் இப்படி நடக்குது? எத்தின சனம் பார்த்துச் சிரிக்குது? குடும்ப மானமே போகுது. வீட்டில ஒரு பொருள் பண்டமும் இல்ல. வாழ வேண்டிய வயதில குமர் பிள்ளைகளும் இருக்கு. இந்தக் கோதாரி குடிய விடு எண்டால் விடுகுதில்ல மனுசன். குரங்குப் பிடியாப் பிடிச்சுக்கொண்டிருக்கு மனுசன். தானும் அழிஞ்சி எங்களையும் சீர்கெடுத்தி கொண்டிருக்குதே இந்த மனுசன்'
விக்கியின் அம்மாதான் பிரலாபித்துக் கொண்டிருந்தாள். அவனது அப்பாவைத்தான் இப்படி இரத்த கீறல் காயங்களுடன் தூக்கி வந்து வளர்த்தியிருந்தனர். விக்கி சோக முகத்தோடு என்னருகே வந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
லக்கிய சமூக சடு

Page 10
பூங்காவனம்
மச்சான் எங்கட குடும்ப நிலவரத்தப் பர்த்தியா? அப்பா குடிக்கு அடிமையாகிப் போய் எங்க அடிவாங்கினாலும் குடும்பமே அழிந்தாலும் அதவிட ஏலாம அது இல்லாம ஒரு அடிகூட எடுத்து வைக்க ஏலாத ஆளாக குடிய குரங்குப் பிடியாப் பிடிச்சு அடிவாங்கிக்கொண்டு இருக்கிறார்.
"இப்ப என்ன நடந்தது அதச் சொல்லு?
'இப்ப என்ன நடந்ததோ? வழக்கமாக எத்தனையோ நாளாக நடந்தது தான் இண்டைக்கும் நடந்திருக்கு. தவறனைக்குப் போய் மூக்கு முட்டக் குடிச்சுப் போட்டு கொழுவுப்பட்டிருக்கிறார். அவங்கள் எல்லாரும் சேர்ந்து அடிச்சி விறாண்டி காயப்படுத்தி இருக்கிறாங்கள். விழுந்து கிடந்த இவர தெரிஞ்சவங்கள் இங்க கொண்டு வந்து போட்டிருக்கிறாங்கள். சில நாளையில வேல செய்யிற ஆயுதங்களையே களவு கொடுத்துப் போட்டு வேலையில்லாம வீட்டில இருப்பார். வீடு சிவ பட்டினி தான். போனமாதம் நல்லவெறியில அலம்பிக்கொண்டு விழுந்தெழும்பி வரக்குள்ள பொலீஸ்காரன் கண்டு வழக்காக்கிப் போட்டான். குடிச்சுப் போட்டு குழப்பம் உண்டாக்கினதெண்டு. அவனுக்கொரு ஐந்நூறு ரூபாயாவது குடுத்தால் இவரை விட்டிருப்பான். இவள்ர பொக்கற் காலி. பிறகென்ன? கோட்டில பத்தாயிரம் கட்டி விடுவிச்சது. வெறியில்லாத நேரம் இனி நான் குடிக்கமாட்டன் எண்டுவார். குடிச்சுப் போட்டு வந்து 'ஆர்ர குடி அழிந்தாலும் நான் குடிக்கிறது குடிக்கிறதுதான் எண்டுவார் என்று கூறி நிறுத்தியவன் மிக்க நிதானமாகச் சொன்னான்.
"சோதினையில பாஸோ பெயிலோ நான் இனி படிக்க வரமாட்டன். என்னவெண்டாலும் ஒரு வேலையைத் தேடி உழைக்கிற வழியத்தான் பார்க்கப் போறன்’ என்று அறுதியும் உறுதியுமாகச் சொன்னவனைப் பார்க்க எனக் அதிர்ச்சியாகவும் பரிதாபமாகவும் இருந்தது!!! -
வாசகர் கவனத்திற்கு
சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள். அது பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதையும், கிடைப்பதையும் உறுதி செய்யும். சந்தாதாரராக இணைந்து கொள்பவர்கள் ஆகக் குறைந்தது 600/= ரூபாவை சந்தாவாக செலுத்தவும். பக்கச்சார்பற்ற முறையில் எழுதப்பட்ட, தெளிவான கையெழுத்தில் அமைந்த, இதுவரை பிரசுரமாகாத (சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் A4 தாளில் 03 பக்கங்களுக்குள்) ஆக்கங்களையே பூங்காவனம் எதிர்பார்க்கிறது. பூங்காவனம் இதழில் விளம்பரங்களைப் பிரசுரிக்க மற்றும் கொடுப்பனவுகள், சந்தா, விற்பனை முகவர்களின் தொடர்புகள் ஆகியவற்றுக்கு 077 5009 222 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- ஆசிரியர்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

பூங்காவனம்
ஸ்டிமுழகிறதோ
நல்ல இதயங்கள் நிறைய என்னால் இழக்கப்பட்டிருக்கின்றன எண்ணிய இலக்கினை அடையும் இலட்சியப் பயணத்தில் ..!
கொண்ட கொள்கையில் பற்றுதலோடு பயணித்தவனின் பாதைக்கு பாசத்தை விதைத்து பங்களிப்பு பண்ணியவர்களுக்கும் நடுவில் வேசமாய் நடித்து வியர்வையை பிழிந்துவிட்டு தூரம் கடந்தவனை தூசித்து இகழ்ந்திருக்கும் இனிய மனிதர்களும் மறுப்பதற்கு இல்லாமல் .
பாசமெனும் பாணத்தில்
விசம் தடவி என்னை நோக்கி
எறியத் தயாராய்
எத்தனையோ
இராம வேடமிட்டவர்களின்
தயார்ப்படுத்தல்கள்
ஒன்றுக்குள் இன்னொன்றை மறைத்து இதயத்தைப் பிளக்குமளவு இழிகதை கூறி அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காண எப்படி முடிகிறதோ நாளை - உலகம் முன்னே வேடம் கலையப்போகும் இவர்களினால் ?
() இராமசாமி ரமேஷ் அளம்பில்
கலை இலக்கிய
UGS65)6)
கருத்தடை என்பது மனிதன் நிகழ்த்தும் படுகொலை!
வறுமையை வழிமொழிந்து இது நியாயப்படுத்தப்படுகின்றது!
வறுமை என்பது
இறையச்சம்.
அடுத்தவன் பசி. உழைப்பின் கட்டாயம். அத்தனையையும் அடிக்கடி ஞாபகப்படுத்துவதற்காக இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஞாபக ஏடு!
மனிதன் கூறும் எல்லா காரணங்களுக்கும் நியாயம் உண்டா இறைவனிடம்?
இறைவனின் படைப்பில் காரணம் காட்டி காரணமில்லாமல் நிகழ்த்தும் மனங்களின் பயங்கர படுகொலைதான் கருத்தடை!
கர்ப்பச் சிப்பிக்குள் மனித மாமிசத்தை முத்தாய் புகுத்துவதற்கு பலகோடி வருடங்களுக்கு முன் அவனுக்குரியவற்றை இறைவன் பூமியில் விதைத்துவிட்டான்!!!
() ஏ. பாரிஸ் - மிகிந்தலை
சமூக சஞ்சிகை

Page 11
பூங்காவனம் C18)
துே அறிவுதருவல் ஊஞ்சீறி
გეოეზ Inქნtifე
கலாபூஷணம் தாஸிம் அகமது (உப தலைவர் - கொம்பனித்தெரு முஸ்லிம் நூலகம்)
பொது அறிவுப் போட்டிகளில் கலந்து கொள்வோரினதுப் புலமைப்பரிசில் பரீட்டைக்கும் சில புகுமுகப்பரீட்சைகளுக்கும் உசாத்துணை நூலாக பொது அறிவுத் தகவல்கள் அடங்கிய நூல்கள் அடிக்கடி தமிழில் வெளிவருவதுண்டு. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நடக்கும் மகா லட்சாதிபதி போட்டி, அறிவுக் களஞ்சியப்போட்டி, அரசகரும பதவி நிலைக்கான போட்டிப் பரீட்சைகள், புலமைபரிசில் போட்டிப் பரீட்சைகள், உயர்கல்வி புகுமுக போட்டிப் பரீட்சைகள் போன்றவற்றுக்கு அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்களாக இவை விளங்குகின்றன. இவ்வகை நூல்கள் தேவைகளுக்காகவே தேடப்படுகின்றன, விற்பனையாகின்றன.
பொது அறிவுத் தகவல் களஞ்சியம் எனும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய நூலொன்று வெளிவந்திருக்கிறது. மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, தருமமே கண்ணாயிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட களஞ்சியமாக அந்நூல் வெளிவந்திருக்கிறது. அந்தச் சிரமமான காரியத்தைச் செய்திருக்கிறார். கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரித்.
ஸக்கியா சித்தீக் பரீத் மாவனல்லை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டவர். பயிற்றப்பட்ட ஆசிரியர். பேராதனைப் பல்கலைகழகத்தில் வெளிவாரிக் கலைமாணிப் பட்டம் பெற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை முடித்தவர். இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தின் (YW.M.A) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவர். பிரபல்யமான பாடசாலைகளில் பணியாற்றியவர். நல்லாசிரியர் விருது, அரச கலாபூஷண விருது, சாமசிறி தேசமான்ய விருது போன்ற கெளரவ பட்டங்களுடன் இலங்கை அதிபர் சேவை இரண்டாந் தரத்தையும் தனது அயராத முயற்சியினால் பெற்றுக் கொண்டவர்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

பூங்காவனம் இதழ் 14
எழுத்து வண்மையுடன் சமூக சேவையாற்றி வரும் இவரது அன்றாட உழைப்பு பெண் சமூகத்தினரால் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். அன்புக் கணவரை இழந்த பின்னும் இரு புதல்வர்களுடன் குடும்ப பராமரிப்பு, மார்க்கத்தில் தீவிர பற்றுடன் கூடிய வழி நடத்தல் இனிய எளிய பண்புகள் முஸ்லிம் மாதருக்கான அடக்கம் அறிவுடமை, மனிதநேயம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சகோதரியாக நம் சமூகத்தினரிடையே நடமாடி சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் ஸக்கியா சித்தீக் பரீத் அவர்கள் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.
பொது அறிவுத் தகவல் களஞ்சியம் எனும் தொகுப்பு நூலின் அட்டைப் படம் அலாதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 305 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அகால மரணமடைந்த தனது மாணவரான நூராணியா ஹஸன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 27.04.2013 அன்று மாவனல்லையில் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்நூல் வெளியீட்டு வைபவம் நாடறிந்த மார்க்க அறிஞர் ஏ.எல்.எம். இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. அன்றைய நிகழ்வில் மண்டபம் நிறைந்த அழைப்பாளர்கள் மத்தியில் இரு முக்கிய அம்சங்கள் நடந்தேறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. அவையாவன, பிறவியிலேயே பார்வை இழந்த ஒரு பெண் மாணவியின் பல்கலைக்கழகப் படிப்புக்காகவும், பின்தங்கிய கிராமம் ஒன்றின் குடிநீர் தேவைக்கான கிணறு ஒன்றை அமைப்பதற்காகவும் அன்றைய தினம் நூல் விற்பனையின் மூலம் கிடைத்த பணம் ஒன்றரை இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அன்றையத் தினம் தனது மாணவனான மறைந்த நூராணியா ஹஸனுக்கான நினைவுகூரல் நிகழ்வும் நடைபெற்றது. தனது மாணவனில் இந்நூலாசிரியர் கொண்ட நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்வு அமைந்தது.
பொது அறிவுத் தகவல் களஞ்சியம் ஒரு வருட கால அயராத உழைப்பினால் நூலுருப் பெற்றுள்ளது. கடின உழைப்பின் மூலம் சேரும் நிதியினைத் தர்மம் செய்யும் மனோநிலை வியப்புக்குரியது மட்டுமல்ல பாராட்டிப் பின்பற்றக் கூடியதுமாகும். இவ்வாறான சமூக சிந்தனையுள்ள பெண்மணியின் இந்நூல் எல்லோர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியதொன்றாகும்.
பொது அறிவுத் தகவல் களஞ்சியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் பயனுள்ள தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. 25 பொதுத் தலைப்புகளுள் இலங்கையைப் பற்றிய தகவல் கள் 14 தலைப் புக் களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேடற்கரிய அன்றாடப் பாவனையில் இருந்து நமக்கே தெரியாத பல தகவல்கள் இந்நூலில் உண்டு. உதாரணமாக கையடக்கத் தொலைபேசியின் இதயம் சிம் கார்ட் (பக். 95) விளையாட்டுகளும் அளவுப் பிரமாணங்களும் (பக் 131) கண்டுபிடிப்புகள் (பக் 46) தமிழ், தமிழ் இலக்கியம், கணினி, பறவைகள், மிருகங்கள், மலைகள், நதிகள், உலக அதிசயங்கள் போன்ற பயன்மிக்க தகவல்கள் எழுத்துப் பிழைகளின்றி கவனமாகச் சரிபார்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.
CB6061 இலக்கிய சமூக சஞ்சிகை

Page 12
பூங்காவனம்
ஒருவர் கணினியில் மற்றொருவர் செய்யக்கூடிய குற்றங்கள் (பக் 94) போன்ற அரிதான தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குழுக்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் செய்யவேண்டிய பணி இது. தனிநபர் ஒருவரால் செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கும்போது பாராட்டாமல் இருக்க முடியாது. ஸக்கியா சித்தீக் பரீதின் ஐந்தாவது நூல் இதுவாகும். ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் எனும் இவரது முதலாவது நூல் வாசகர்களின் மத்தியிலும் ஆய்வு நிலை மாணவர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றதொன்றாகும். அடுத்தடுத்து வெளியிடப்பட்ட விடியலின் விழுதுகள் (சிறுகதை) இதயத்தின் ஒசைகள் (கவிதைகள்) முதிசம் (பொன் மொழித் தொகுப்பு) ஆகிய மூன்று நூல்கள் ஒரே நாளில் ஒரே மேடையில் மண்டபம்
நிறைந்த அழைப்பாளர்கள் மத்தியில் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டன. நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்தி வைக்கும் திறமை
கொண்டவராகவும் ஸ்க்கியா சித்தீக் பரித் திகழ்கிறார்.
கல்வித்துறை, கலை இலக்கியதுறை, சமூக சேவைகளில் ஈடுபாடு ஆகிய பல்பரிமாணங்களை தன்னகத்தே கொண்ட ஒரு பெண்மணி நம்மிடையே இருப்பது கண்டு பெருமிதம் கொள்வதோடு மட்டும் நின்றுவிடாது அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது சமூகத்தினதும், வாசகர்களதும் கல்வியியலாளர்களதும் கடமையாகும். பொது அறிவுத் தகவல் களஞ்சியம் நாடு முழுவதும் உள்ள பொது நூல் நிலையங்களிலும், பாடசாலை நூல் நிலையங்களிலும் உசாத்துணை நூலாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்!!!
நூல் - பொது அறிவு தகவல் களஞ்சியம் ஆசிரியர் - கலாபூஷணம் ஸக்கியா சித்திக் பரித் தொலைபேசி - 0718432006
விலை - ரூபாய் 450 முகவரி - 4/4, நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
பூங்காவனம்” கிடைக்குமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 06 பூங்காவனம் பதிப்பகம் - கல்கிசை
வழங்குவதன் மூலம் க்கு உதவுங்கள்!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம்
இதழ் 14
பிழையான
இனங்காaல்
பிழையான அவதானங்களும் பிழையான கருதுகோளுமாய் நிகழ்ந்தேறிய சோதனை முடிவது gbjLD600TLDITU குடுவை தனைச் சுற்றிச் சுழன்றதில் ஆய்வறை தாண்டியே அடுத்தடுத்த அறைகளுமே மூச்சுத் திணறுகையில்தான் மெல்லப் புரிதலுறுகிறேன்.
இன்றளவும் மிகச் சரியென இறுமாந்திருந்த என் பிழையான இனங்காணல்தனை.
சொற்பந்துகளுக்குள் அதிர்ந்து நசுங்கி மூச்சுத் திணறுகிற மைதானமாய் அன்னையர்!!!
மனஸ்ய
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
GDI கவிதைகள்
உதைத்தலின் போதே நிகழ்ந்துவிடுகிறது உதைபடுதலும்
வலிமையின் தீவிரங்களில்தானே வலியின் உச்சங்கள்
ஒரு குண்டுமுனைக் காந்தம்போலே வளரிளம் பருவத்தர் பார்வைதனை வெகு இயல்பாய் ஈர்த்துவிடுகின்றன
விளையாடல்கள்
ஆனாலும்
வெறும் பாடநூலுக்காய் எப்போதுமே அப்புலந்தனைச் சிதைப்பதிலேயே குறியாயிருப்பர் தந்தையர் காலங்காலமாய் களைக்காமலேயே ஓடி உதைத்து விளையாடுமிவர்!!!

Page 13
பூங்காவனம்
() எஸ்.ஆர். பாலசந்திரன்
சமையலறையில் பால் தம்ளர் விழுந்த சத்தம் கேட்டது. ஒடிப்போய் பார்த்த குமுதினி வேலைக்காரிக்கு பளாரென அறை விட்டாள். 'மோட்டுக் கழுதை. எதிலும் கவனம் கிடையாது. போ. போய் துண்டை எடுத்து வந்து துடை எனச் சீறினாள். பதினான்கே வயதுடைய வேலைக்காரி மீனா அழுதுகொண்டு போனாள். முன் அறையில் இருந்த ராஜசேகரன் செய்வதறியாது இருந்தார். வேலைக்காரிக்காக பரிதாபப்பட்டாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. குமுதினி இப்படியாக மாறி விட்டாள் என்பதை நினைக்க அவருக்கு வியப்பாய் இருந்தது.
ராஜசேகரன் ஒரு காரியாலயத்தில் மெனேஜராக இருந்தவர். சம்பளம் குறைவு. ராஜசேகரனுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் ராமு, பின்பு சுமதி, ராஹினி, சுகந்தினி எல்லோரும் வாடகை வீட்டில் குடியிருந்தார்கள். ராஜசேகரனுக்கு வயது ஐம்பதானபோது மூத்த மகன் ஒரு முடிவு சொன்னான்.
"அப்பா. இந்த ஊரில் எனக்கு நல்ல வேலை கிடைக்காது. சவூதி அரேபியாவிற்கு ஒப்பீஸ் மெனேஜர் வேலைக்கு ஆள் எடுக்கினமாம். எனக்குத் தெரிந்த ஏஜென்சிக்காரன் செலவில்லாமல் அனுப்புகிறானாம். நான் போகப் போறன்’
ராஜசேகரனுக்கு விருப்பமில்லை. என்றாலும் தானும் ஓய்வு எடுக்கப் போகும் காலத்தில் மூன்று பெண் பிள்ளைகளுக்கு வழி செய்ய வேண்டும் என்று மனதை கல்லாக்கிக் கொண்டு மகனை அனுப்பி வைத்தார். வருடங்கள் ஐந்து கழிந்தன. சவூதியிலிருந்து மாதாமாதம் பெரும் தொகைப் பணம் வரும். பிறகென்ன? வாடகை வீடு சொந்த வீடாக மாறியது. பஸ்ஸில் திரிந்த குடும்பத்துக்கு கார் தேவைப்பட்டது. வீட்டு வேலை செய்ய மனைவியும், பெண் பிள்ளைகளும் மறுத்துவிடவே வேலைக்காரி மீனா வந்து சேர்ந்தாள். மீனாமாடு மாதிரி உழைத்தும் நல்ல பெயர் இல்லை. குமுதினி சாப்பாட்டு விடயத்தில் வஞ்சகம் காட்டாவிடினும், வேலை விடயத்தில் கடுமையாக இருந்தாள். பெண் பிள்ளைகள் அதைவிட மோசம். உணவைக் கூட அவர்களது அறைக்கு கொண்டு போயே கொடுக்க வேண்டும். டீ.வி பார்த்துக்கொண்டு சாப்பிடுவர். மீனாவைத் திட்டுவதில், அடிப்பதில் தாய்க்கு குறைந்தவர்கள் இல்லை. "சே மோட்டுக் கழுதை, முழிக்கிற முழியைப் பார் ஆந்தை மாதிரி' என்று பலவிதமான நையாண்டிகள்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

பூங்காவனம் இதழ் 14
ஐந்து வருடத்தில் ஒப்பந்தம் முடிந்து மகன் வருவதாக தகவல் வந்திருந்தது. வீடு ஒரே அல்லோகல்லோலப்பட்டது. விருந்தும் சாப்பாடும் தடல்புடல். வேலைக்காரிக்குக் கூட புதிய உடைகள் கிடைத்தன. மகன் வந்ததும் எல்லோரும் ஒன்றாக இருந்து உணவு உண்ண ஆரம்பித்தனர். அப்போது மகன் இடது கையை உபயோகிப்பதை ராஜசேகரன் அவதானித்தார்.
'ஏனப்பா. வலது கைக்கு என்ன நடந்தது? என்று கேட்டார்.
ராமுவின் கண்களில் கண்ணிர். அப்பா இதைப் பாருங்கள்' என்று ஷேர்ட்டின் வலது கையை விலக்கிக் காண்பித்தான். முழுக் குடும்பமே திகைத்துவிட்டது. காரணம் அவனது வலது கை முழங்கையோடு வெட்டப்பட்டிருந்தது. மகனே என்று குமுதினி அலறினாள்.
'அம்மா. அம்மா சவூதியில சட்டதிட்டங்கள் அதிகம். எனக்கு கீழே வேலை செய்தவனின் விளையாட்டு இது. எனது முதலாளியின் பணப் பை காணாமல். போய்விட்டது. பரிசோதித்து பார்த்தபோது அது எனது பையில் இருந்தது. நான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடியவில்லை.
அதற்கு ராஜசேகரன் வேறு நாட்டவர்களுக்கு ஏன் இப்படி செய்தார்கள்? என்று தளுதளுக்க கேட்டதற்கு,
'இல்லை அப்பா. எவனாக இருந்தாலும் சட்டதிட்டங்களில் சலுகை கிடையாது. ஒழுங்காக விசாரணை வைத்தார்கள்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை எனக்கு பாதகமாயிருந்தது. ஐந்து வருட ஒப்பந்தம் முடியும்போது பணத்தைக் களவாடிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக என் மீது குற்றச்சாட்டு. எனது துரதிஷ்டம் பணமும் பெரும் தொகைதான். நான் இனி எங்கேயும் வேலைக்கு போக மாட்டேனப்பா. நான் அனுப்பிய பணத்தில் இங்கேயே தொழில் செய்யப் போகிறேன்' என்றான் ராமு. .
பணத்தை ஆடம்பரத்துக்காக அனுபவித்த அவனது சகோதரிகளுக்கு அது பிடிக்கவில்லை என்பது அவர்களது முக பாவனையில் தெரிந்தது. குமுதினி கூட இதை எதிர்பார்க்கவில்லை. மகன் மீண்டும் திரும்பிப் போய் இன்னும் ஐந்து வருடங்கள் உழைப்பான், மூன்று பெண்களுக்கு நல்ல சீதனம் கொடுத்து கல்யாணம் கட்டி வைக்கலாம் என்ற கனவு செத்துவிட்டது. ராஜசேகரனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.
இது தெய்வ தண்டனை. எத்தனைத் தரம் குமுதினியும், பெண் பிள்ளைகளும் வேலைக்காரி மீனாவை அடித்து கொடுமை செய்தனர்? நாம் எதை செய்தாலும் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தக்க சமயத்தில் தண்டனை கொடுப்பான் என்பது உண்மையாகிவிட்டது.
இது தெய்வ தண்டனைதான்!!!
கலை இலக்கிய சமூக சஞ்சி3ை

Page 14
பூங்காவனம்
நாணயத்தாள் நாணம் கொண்டது அந்த நாணயத்தில் காதல் கிறக்கல்கள்
வெளிச்சம் தரும் ஜன்னல்
வெறிச்சோடிக் கிடக்கி, அவள் மணமுடித்துவிட் 1ள்
த விக் கொடுத்தேன் சொர்க்கத்து சகம் நெஞ்சில் தாயின் பாதங்கள்
தனக்கிருந்த மதிப்பைபெண்ணி கலங்கி நிற்கிறது கசங்கிய காகிதம்
வெடி விழுந்த ஒசையில் பதுங்கி நின்றேன் அரவம் காலடியில்
O பிரி அஸிஸ் - கிண்ணி1
இதழ் 14
மூன்று கால்கள் நான் பிடித்த முயலுக்கு கணனி வடிவமைப்பில்
கருங்கூந்தல் காலமானது இப்போதெல்லாம்
நிறக் கூந்தல் காலம்
மாத்திரை இருந்தும் நோய்வாய்ப்படுகிறது. நம் தமிழ்
களங்கப்பட்டது பூரணையின் பூரணத்துவம் கிரகணம்
வேண்டும் என்றே நிராகரிக்கிறோம் வாக்கு
மறந்திட வேண்டும் என எண்ணுகின்றன நினைவுகள்
O என். சந்திரசேகரன் இறத்தோட்டை
கலை இலக்கிய சமூக சஞ்சி0
|
 

பூங்காவனம் இதழ் 14
இலஜீறஇனுறவஜலீல் = 09 (கவிஞர். 6. இக்பாலு
இலக்கியம் என்பது சமூக அமைப்பையும், பிரதேச வாழ்க்கை முறைகளையும், சிந்தனைப் போக்குகளையும் அடக்கியதாகவே காணப்படும். இலங்கை இலக்கியம் இருவேறுபட்ட மொழிகளில் பிறந்தபோதும் வரலாற்று ரீதியில் மனிதத்துவ பண்பாட்டைப் பிரதிபலிக்கும். அவ்விதம் பிரதிபலித்தே வந்துள்ளமை கண்கூடு. பண்பாட்டின் ஏற்றத்தாழ்வை மதிப்பீடு செய்து உணர்த்த முடியும். பண்பாடு மாறுமே ஒழிய அழிந்து விடாது. இலங்கை இலக்கியங்கள் இலங்கைப் பண்பாட்டை வரலாற்று ரீதியில் எடுத்துக்காட்டும்.
இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின், முற்பகுதியிலும் தோன்றிய இலக்கியங்கள் வர்த்தக நோக்கில் முதலாளித்துவ சிந்தனையுடன் பிரிடிஷ்ஷாரின் கல்வி முறையோடு ஒத்ததாக அமைந்துள்ளன. இச்சிந்தனை வேறுபாட்டைத் தீர்க்கக்கூடிய தேசிய கல்வி 1956 இற்குப் பின்தான் ஏற்பட்டதெனலாம். வடக்கு, கிழக்கு, மேற்கு, மலைநாடு ஆகிய பிராந்தியங்களில் சிங்களத்திலும், தமிழிலும் இலக்கியத் தோன்றல் வரலாறு பெரும் வித்தியாசமாகவில்லை. பாளி, பிராக்கிருதம், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளின் ஊடாட்டம் இலங்கை தேசிய இலக்கியத்தை கட்டியெழுப்பியதெனலாம். இலக்கியத்தின் சாதனை தேசியத்தை பின்னணியாகக் காட்டுவதுதான்.
தேசியவாதத்தின் முன்னும் பின்னும் எழுந்த சிங்கள தமிழ் இலக்கியங்களின் பொருளை ஆய்ந்து நோக்கும்போது, இலங்கைப் பண்பாடு எவ்விதம் வளர்ந்துள்ளது என்பதை அறிய முடியும். ஒருநாட்டின் பாரம்பரிய பண்பாட்டு முறைகள் உயிரிலும் மேலாக பாதுகாக்கப்பட வேண்டியவைகள். இவை இலக்கியத்தில் பொதிந்துள்ளமையால் தேசிய இலக்கிய பரிணாமம், பரிமாணம் எவ்விதம் விரிந்துள்ளன என்பதைக் காணலாம்.
இலங்கையில் எழுந்த சிங்கள தமிழ் இலக்கியங்கள் காலவேறுபாடில்லாமல் அடுத்தடுத்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதனால் தேசிய இலக்கியப் பண்பாட்டின் இடைவெளியை நெருக்கிச் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இந்நாட்டின் மூன்று இனங்கள் இருமொழி பேசுவதினால் இருமொழிகளின் இறுக்க பலம், மூவினத்தையும் ஒன்றாக்கிச் சமாதானத்தை ஏற்படுத்தும். இந்த வழியை இனவாதிகள் எங்களுக்குக் காட்டித் தரவில்லை. இனிமேலும் இவ்விடயத்தில் நாம் இடர்பட முடியாது.
ஒருமுறை இலங்கையில் கடுமையான யுத்த சூழல் காலத்தில் கலைஞர் ரோஹன பத்த அவர்கள் களுத்துறைக் கல்வித் திணைக்களத்தில் சந்தித்தபோது 'இலங்கையின் சிங்கள தமிழ் முஸ்லிம் கலை
1லை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 15
பூங்காவனம் இதழ் 14
இலக்கியவாதிகளை ஒன்று கூட்டி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டார். "இந்தக் கடுமையான யுத்த காலச் சூழலிலா? என நான் பதில் கேள்வியைத் தொடுத்த போது, 'கலை இலக்கியவாதிகளுக்கும், யுத்தம், எதிர்ப்புகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை' என மனந்திறந்து கூறினார். உண்மையில் இந்நாட்டின் இலக்கியத்தாலும், கலை இலக்கியவாதிகளாலும் மட்டுமே ஒரு சமாதான சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர முடிகிறதல்லவா?
1940களில் டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்தபோது அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உண்டாக்க முயற்சி எடுத்தவர் மலைநாட்டைச் சேர்ந்த கே. கணேஷ் அவர்கள்தான். சிங்கள தமிழ் எழுத்தாளர்களை முதன் முதல் இணைத்து உருவாக்கிய சங்கம் இதுதான். கொம்பனித் தெருவில் உள்ள பொல்ஸ்கி ஹோட்டல் (தற்போது இது நிஸ்போன் ஹோட்டல்) இங்கேதான் இச்சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் சுவாமி விபுலானந்தர், உப தலைவர் மார்டின் விக்கிரமசிங்க, இணைச் செயலாளர்கள் டாக்டர் சரத் சந்திர, கே.கணேஷ், பொருளாளர் பி.கந்தையா. இச்சங்கம் நினைத்திருந்தால் நிச்சயம் இந்நாட்டில் இன்றைய குழப்ப நிலை ஏற்பட்டிராது. இலக்கியத்திற்கு இத்தனை உந்து சக்தி உண்டு. நாம் இனிமேலாவது இச்சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
மனித மதிப்பீடுகளை மிக உன்னதமாகத் தருவது இலக்கியம்தான். மனித மதிப்பீடுகளைப் பற்றிய குறிக்கோளுடன் தேசியக் கல்வி அமையும் போதுதான் ஜனநாயகமும், இலக்கியமும் முன்னேற்றமடையும். இலக்கியத் தத்துவம், வரலாறு ஆகிய சலாசாரப் பாடங்களுக்கு, கற்கும் இடங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கலாசாரப் பிரக்ஞை ஆழமாக நடைமுறைப்படும். இந்நடைமுறை நம் தேசியக் கல்வியில் இருந்த போதும் கற்பிப்பவர்கள் இதை ஆழமாக நோக்குவதில்லை. அதனால்தான் கலாசாரப் பிரக்ஞை கற்பவருக்கு இல்லை. இந்த உணர்ச்சியை நம்நாடு உன்னிப்பாக கற்பவர்களிடத்தில் ஊன்றுதல் வேண்டும். அப்போதுதான் கற்பவர்களிடையே ஒழுக்க விழுமியம் மிக இறுகி நிற்கும். இலக்கியத்தை தீவிரமாகக் கற்கும் மாணவனால்தான் மனித அனுபவங்களின் தாற்பரியத்தை உணர முடியும். மனிதத்துவத்தை உணராதவிடத்து பண்பாட்டு விருத்தி ஏற்படாது. பண்பாட்டு விருத்திதான் இலக்கியத்தில் ஊன்றி நிற்கும் மிக உன்னத பொருளாகத் தொனிக்கும்.
மனித குலத்தின் வளர்ச்சியை இலக்கிய வரலாறே எடுத்துக் காட்டும். வரலாற்றுப் பாரம்பரியம் இலக்கியத்துள் நுழைந்திருப்பதால் கடந்த காலத்தையும் தற்காலத்தையும் புரிந்து கொள்ளலாம். சிந்தனையை வளர்க்கக் கூடிய இலக்கியங்கள் ஆய்வுகள் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றன. ஆகையால் இலங்கையன் ஒருவன் இருமொழி இலக்கியப் பயிற்சியுடன் உலக இலக்கியத்தை நோக்க வேண்டும். அப்போதுதான் தேசிய இலக்கியம் உலக இலக்கியத்துள் சென்றடையும்.
உலக இலக்கியம், தேசிய இலக்கியம் யாவும் விரிவடைதலுக்கு வெகுசனத் தொடர்பு சாதனங்கள் செல்வாக்குச் செலுத்தும். இச் செல்வாக்கு சில
å
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

பூங்காவனம் இதழ் 14
வேலைகளில் சிந்திக்கும் பழக்கத்தையே மறதியிலாக்கும். இச் செயற்பாட்டைச் செய்வதற்குரிய அபாயத்திலிருந்தும் இலக்கியத்தைக் காப்பாற்றுதல் மிக முக்கியம். ஊடகவியலாளர்கள் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் அல்லர். அதே வேளை இலக்கிய கர்த்தாக்கள் ஊடகவியலாளர்களாக முடியும். இலக்கிய கர்த்தாக்கள் அவ்வாறு இருப்பதனால்தான் பண்பாட்டு ஒழுக்க சீலம் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்பதை இலக்கியமே உணர்த்தும்.
கடந்த காலங்களில் உன்னத மதிப்பீடுகளைக் காத்து நின்ற சமயம், தத்துவம், கலைகளின் கலாசாரக் கேந்திரங்கள் இன்று கரைந்துவிட்டனவா? என எண்ணத் தோன்றுகின்றது. அவ்விதம் நடந்து விடாமல் இத்தொடர்பைத் தீவிரப்படுத்தல் அத்தியாவசியம்.
நமது கலாசாரத்தைப் பேணும் இலக்கியங்களை விமர்சனம் செய்யும் சிந்தனைப் பலம் நம்மிடையே இருக்க வேண்டும். அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையை முழுமையாகத் தரிசிக்கும் சீரிய இலக்கியத்தை வாசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மனித குலத்தை இலக்கியமே உய்விக்கும் எனும் உன்னதக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்குரிய இலக்கியத்தை நமது தேசியம் ஆக்கித் தர வேண்டியது அவசியமே.
இன்றைய இலக்கிய உலகில் உயிரோடுள்ள இலக்கியப் படைப்பாளிகளை ஒன்று சேர்த்தல் வேண்டும். இலக்கிய சிந்தனை விரிந்த இக்காலத்தே அறிவுத் தேர்ச்சி பெற்ற உலக வல்லுனர்களைக் கொண்டே ஆராய்ச்சி நடத்தி உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியை ஊக்குவிக்க வேண்டும்.
ஐ.நா வின் யுனெஸ்கோ, கலாசார முறையில் புதிய நடைமுறையாக அரபு மொழி, பர்மிய மொழி, சீன மொழி, கொரிய மொழி, இந்தோனேசிய மொழி, ஹிப்ரு மொழி, ஜப்பானிய மொழி, உருது மொழி, தாய்லாந்து மொழி, வியட்னாமிய மொழிகளிலெல்லாம் இருந்தும், இந்திய மொழிகளான வட மொழி, ஹிந்தி, வங்காளி, தமிழ் மொழிகளில் இருந்தும் சிறந்த புனைக் கதைகளையும், கவிதைகளையும் பிரென்சு, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக இலக்கியத் துறை நோக்கி ஓர் அணியை உருவாக்கி உள்ளது. இம் முயற்றி 1971களில் தொடங்கியது. இக்காலம் அதன் வளர்ச்சியின் எல்லை என்ன? எனக் கணக்கிட்டு, இலங்கை இலக்கியத்தின் உலகளாவிய நிலையைக் கண்டு இன்னும் நமது இலக்கியத்தை உயர்த்தி வளர்த்தல் மிக முக்கியம்.
தேசிய ரீதியில் சிங்கள தமிழ் இலக்கியங்களின் பண்பாட்டுக் கலாசார வழி இரு மொழி பேசும் சிங்கள, தமிழ், முஸ்லிம்களான மூவின மக்களையும் இணைக்கும். இந்த வழியை இலக்கியம் மூலம் நாம் வழிநடத்தும்போது தேசியப் பண்பாடும் மனிதத்துவ சமாதான நிலைப்பாடும் ஒன்றித்து மனித குலத்தை மேன்மைப்படுத்தும். இந்த உன்னத வழியை மேன்மைப்படுத்த இலக்கியமே முன்னின்று உழைக்கும் வல்லமை உடையது. மனித குலத்தைச் சமாதானப்படுத்தும் முக்கிய சாதனம் இலக்கியம்தான்.
(இன்னும் வரும்)
கலை இலக்கிய சமூக சஞ்சிை

Page 16
பூங்காவனம்
நீங்கள் மனித பரம்பரையின் உன்னதமான வித்துக்கள். சாவோலைகளாக இருந்தும் ஒவ்வொரு இல்லத்தினதும் உயர்வான சொத்துக்கள்! நீங்கள் முதிர்ந்திருப்பது வயதில் மட்டுமல்ல. வாழ்க்கை அனுபவங்களிலும்தான்!
இந்த நவீன யுகங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள். இவற்றுக்கு காரணம் உங்கள் பங்களிப்புக்கள்! அன்று கடின உழைப்புடன் நீங்கள் சிந்தியிருக்காவிட்டால் வியர்வை. நாங்கள் இன்று கண்டிருக்கவே மாட்டோம் உயர்வை!
இப்போதுதான் உங்களுக்கு
இதழ் 14
எங்கள் முன்னேற்றத்திற்கெல்லாம் பக்கபலமாயிருந்தது நீங்கள். ஒவ்வொன்றிலும் உங்களுக்கு நாங்கள் கடனாளிகள் - அதனால் நீங்கள் என்றென்றும் எங்களுக்கெல்லாம் விருந்தாளிகள்!
மரங்களில் காய்கள் பழுத்தால்தானே அவை மதிக்கப்படுகின்றன? நீங்கள் பழுத்து சாவோலையானாலும் குருத்தோலையான நாங்கள் உங்களை மதித்தே தீருவோம்! மூலிகைகளாக இருந்து எங்களின் வளர்ச்சிக்கு உந்துதலான உங்களை கறிவேப்பிலையாக கணிக்கமாட்டோம்!
அன்றைய நீங்கள் தானே இன்றைய நாங்களெல்லாம். இன்றைய நீங்கள் தானே இனிமேல் நாளைய நாங்களெல்லாம். ஆமாம் மனித சாவோலைகளாக!!!
சாவோலையாக காட்டுகிறது முதிர்ச்சியை.
இந்தச் சமூகமெல்லாம் உங்களால்
எப்போவோ கண்டுவிட்டது நல் வளர்ச்சியை! உயர்ந்து வளர்ந்த தென்னைகளுக்கெல்லாம்
தண்ணிர் கொடுத்தது நீங்கள். இப்போது இளநீர் குடித்து ஆறுதல் அடைவது நாங்கள்!
9ே எம்.எம். அலி அக்பர் - கிண்ணியா 04
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம்
() மருதூர் ஜமால்தீன்
உருவகக் கதை
ஆற்றங்கரையின் ஓரமாக தாவிச் சென்று கொண்டிருந்தது அந்தத் தவளை. சிறிது ஓய்வெடுத்தும், அங்குமிங்கும் பார்த்தும் சென்று கொண்டிருந்தது அந்தத் தவளை. அக்கரையின் ஓரமாக தனது கூட்டத்தாருடன் சுகமாக நீந்திக் கொண்டிருந்த மீன் கூட்டத்தின் தலைவனுக்கு தெத்திச் சென்று கொண்டிருந்த தவளையின் மீது ஒருவித வெறுப்பு தோன்றியது. அது தவளையின் கோலத்தை கேலி செய்யும் நோக்கத்துடன் பேசுவதற்கு ஆரம்பித்தது.
அடேய் முண்டக் கண்ணா. உன்னுடைய சப்பைக் காலும், சொரசொரப்பான உடம்பும். பெரிய அழகன் என்ற நினைப்பில் ஆடி ஆடிப் போகிறாயே. ஹஹற்.ஹஹற் ஹா. என்று கெக்களம் கொட்டிச் சிரித்ததைப் பார்த்து மீன் கூட்டமும் சிரித்து தவளையை கேலி செய்தது.
மீன் கூட்டத்தின் கேலியை பொருட்படுத்தாது தன்பாட்டில் சென்று கொண்டிருந்த தன்னை, மேலும் சீண்டி கும்மாளமிட்டுக் கொண்டிருந்த மீன் கூட்டத்தினருக்கு
இனியும் பதில் கூறாமல் பொறுமையுடன் இருந்தால் அவர்களின் தொல்லை
தொடரும் என எண்ணிய தவளை, மீன் இனத்தில் அழகுடனும், கம்பீரத்துடனும் இருந்த தலைவனிடம் கூறியது.
'தம்பி. இவ்வளவு நேரமாக நீயும் உன் தோழர்களும், நையாண்டியும் கிண்டலுமாக தீய சொற்களால் என்னைத் தாக்குகின்றீரே. என்னால் உங்களுக்கு ஒரு தொல்லையும் இல்லையே' என்றது.
"ஹேய் முண்டக் கண்ணா. மொக்கைத் தலையா. நீயும் உன்ட அழகும்! எங்களுக்கு உபதேசம் செய்ய வந்துவிட்டாய். போடா போ.’ என்றது மீன்.
'தம்பி ஒருவரிடத்திலுள்ள அழகைப் பாராதே. அவரின் அறிவாற்றலைப் பார். அழகு இன்றிருக்கும். நாளை அழிந்துவிடும். ஆனால் ஒருவரின் ஆற்றல் உலகம் உள்ளவரை வாழ்ந்துகொண்டிருக்கும். வேண்டாம் தம்பி. பிறரை வம்பு பண்ணுவதை விட்டுவிடு' என்றது தவளை.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 17
பூங்காவனம்
'ஏய் போக்கிரிப் பயலே எனது அழகைக் கண்டு உனக்குப் பொறாமை. அதனால்தான் இப்படிக் கதைக்கிறாய். எங்களிடத்தில் இல்லாத ஆற்றலா உன்னிடமிருக்கிறது? இதோ பார் நாங்கள் இந்த நீரில் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு நீந்திச் சென்று வருவோம். உன்னால் இது முடியுமா? இயலுமானால் வா. இந்த நீரில் கீழே மூழ்கிச் சென்று மேலே வா, பார்ப்போம் என்றது மீன்.
தனது ஆற்றலை இவ்விடத்தில் நிகழ்த்தாவிட்டால் தனக்கும், தனது இனத்துக்கும் அவமானம் ஏற்படும் என எண்ணிய தவளை உடனே நீரில் பாய்ந்து நீந்திச் சென்று, ஆழத்திலும் நீண்ட நேரம் நீந்தி மேலே கரைக்கு வந்து மீனைப் பார்த்து, ל
தம்பி எனது ஆற்றலை இப்போது நிரூபித்துவிட்டேன். என்னைவிட நீ ஆற்றல் உள்ளவனாக இருந்தால் இந்தக் கரைக்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டுச் செல் பார்ப்போம்' என்றது தவளை.
தவளையின் இந்தப் பேச்சால் அவமானமும், வெட்கமும் ஏற்பட்டு தலைகுனிந்தது மீன். மீனைப் பார்த்து,
தம்பி. மீன் சகோதரா ஒருவனின் உடல் அழகையும், வெளிக் கோலத்தையும் கண்டு அவனை ஆற்றல் மிக்கவனாகக் கணித்துவிடாதே. ஆற்றல் என்பது ஒருவனுக்கு இறைவன் விரும்பிக் கொடுக்கும் அருட்கொடை அழகிருக்கும் எல்லோரிடத்திலும் ஆற்றல் இருக்கும் என்று ஒருபோதும் எண்ணி வாழக் கூடாது. இறைவன் படைப்பில் சில உயிர்களுக்கு எம்மைவிட பல ஆற்றலையும் கொடுத்திருக்கின்றான். அழகிருந்தால் ஆபத்தும் தேடி வரும். இதோ பார் உன்னையும், உன் இனத்தினரையும் பிடித்து உணவாக்கிட ஒரு மனிதன் வலையுடன் வந்துகொண்டிருக்கிறான். எனக்கிருக்கும் சிறிய சுதந்திரம்கூட உனக்கு இல்லையே' என்றது தவளை.
தவளை அண்ணா உங்களின் உருவ அமைப்பை வைத்து உங்களின் ஆற்றலை அளவிட நான் தவறிவிட்டேன். அழகின் கர்வமும், பெருமையும் என்னை இப்படிப் பேச வைத்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். அந்த மனிதன் வருவதற்குள் நாங்கள் சென்றுவிடுகிறோம்' என்று கூறி தனது மீன் கூட்டத்தாருடன் வேறிடம் நோக்கி நீந்தி மறைந்தது!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

பூங்காவனம் C310 இதழ் 14
வலியாரும் ஹலிாருறி
() கா. தவபாலன் - பேராதனை இருபத்தொரு நாட்களாக இடைவிடாது
அடைகாத்தது கோழி. கோழிக்கு வந்ததே கோபம்.
அதன் இறகுகள் குத்திட்டு நின்றன!
இருபத்தோராம் நாள் பருந்தைப் பார்த்து அது
முட்டைக்கோதுகளை கோபமாய் கத்தியது உடைத்துக்கொண்டு வெளியே வந்த பருந்தோ அதைச்
ஆறு குஞ்சுகளின் மீதும் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
அன்பைச் சொரிந்தது அது! யுத்த விமானம் போல் திடீரென .
குத்திட்டு கீழே இறங்கியது குஞ்சோன்றை அள்ளிக்கொண்டு பறந்து போயிற்று. இவ்வாறே அடுத்தடுத்து ஆறு குஞ்சுகளையும் தின்று தீர்த்தது பருந்து!
குஞ்சுகளை அல்லும் பகலும் பாதுகாத்தது. பூச்சி புழுக்களை உண்ணக் கொடுத்தது!
ஒருநாள்
ಇಂದ್ಲಿ ೧ಠಿಣ' மெலியாரை துன்புறுத்த
"ேசுேகளை வலியார் கற்றுக்கொண்டது
v o
இலக்கு வைத்து இந்தப் பருந்திடம்தானோ?
ףף*( வட்டமடித்துப் பறந்தது! u IITU &B5600TL-ğj5I Y4 !
() தரிவித் துறை தர் ஷி
வாழ்க்கை ஒரு எதை இழந்தோம் போராட்டுக்களம். என்பது அநாவசியம்.
எதனால் இழந்தோம் என கடந்த கால அனுபவங்கள் காரணம் கண்டறிதல் அவசியம்! எதிர்கால நுழைவாயிலின் சாவிகள்! விட்டுத் தொலைத்திடுவோம்
விட்ட பிழைகளை. பத்திரமாகவே மீண்டும் முளைவிடாமல் பயன்படுத்திடுவோம் நிதானமாய் யோசித்து
நிகழ்கால நிமிடங்களை!
வருங்காலத்தை நமதாக்கிடுவோம்!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 18
இ நுணாவிலூர் கா.விசயரத்தினம்
மனிதன் பூமிப் பந்தில் தோன்றுவதற்கு முன் தோன்றிய ஐயறிவுள்ள எல்லா உயிரினங்களும் சமாதானத்தை விரும்பி வாழ்ந்தன. ஆனால் சில நாட்களின் பின் அவைகள் மத்தியில் நிலைத்திருந்த சமாதானம் குலையத் தொடங்கியது. அவைகளிற் கடைசியாகத் தோன்றிய விலங்கினம் வந்ததும் சமாதான நிலை மேலும் நலிவுறத் தொடங்கியது. வலுவுள்ள உயிரினம் வலுவற்ற உயிரினங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. வன விலங்கான பலம் பெற்ற யானை, சிங்கம், புலி ஆகியவை காட்டு இராசாக்கள் ஆகியதும் மற்றைய வன விலங்குகளின் சமாதானம் சரியத் தொடங்கின. இவ்வாறே ஊர்வனவற்றில் பாம்பும், பறப்பனவற்றில் கழுகும், நீர் வாழ்வனவற்றில் திமிங்கிலமும் மற்றைய தத்தமது உயிரினங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் அவற்றின் சமாதானமும் வலுவிழக்கத் தொடங்கியது.
இந்நிலையில் இருபது (20) இலட்சம் ஆண்டளவில் தோன்றினான் மனிதன். அவன் தோன்றிய காலப்பகுதியில் மனிதர் மத்தியில் சில காலம் சமாதானம் நிலைத்திருந்தது. அதன்பின் மனிதன் மிருகங்களிடமிருந்து பாடம் கற்றான்; பண்டிதன் ஆனான். அவன் மூளை வளரத் தொடங்கியது. அவனுக்கு ஆசை பெருக்கெடுத்தது. பெண்ணையும், பொன்னையும், மண்ணையும் நேசித்தான். பெண்ணை வரித்துக் கொண்டான், பொன்னைச் சேகரித்தான்; மண்ணை நேசித்துப் போர் தொடுத்து, வெற்றி வாகை சூடி, மண்ணைக் கவர்ந்தான்.
இந்நிலையில் அவன் அறநெறி தவறி, மறநெறியில் நுழைந்தான். அதே நேரம் நிலைத்திருந்த சொற்பச் சமாதானமும் சங்கடப்பட்டது. இதைக் கருத்திலெடுக்காத மனிதன் விஞ்ஞானத்தில் முன்னேறி மனித வர்க்கத்தை அழித்தொழிக்கும் போர்க் கருவிகள், எறி குண்டுகள், அணு குண்டுகள், ஏவுகணைகள், இரசாயன யுத்த ஆயுதங்கள் ஆகியவற்றைக் கண்டு பிடித்து, உலகை யுத்த மயமாக்கி, சமாதானத்தைக் குலைத்து விட்ட அவப் பெயரெடுத்தும் விட்டான்.
“உலக அமைதி காப்போர் அருள் பெற்றோராவர்” என்பது வில்லியம் சேக்ஸ்பியர் வாக்காகும்.
to6 இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

பூங்காவனம்
இனி, உலக சமாதானத்தை நாடித் தேடி ஓடிய ஒரு சில மேதைகளைச் சிந்தைக்கு எடுப்பது உசிதமாகும். 1) யேசுநாதர், 2) மகாத்மா காந்தி, 3) அன்னை திரேசா, 4) நெல்சன் மண்டலா, 5) தலை லாமா, 6) மார்ரின் லூதர் கிங், 7) றொனால்ட் றீகன், 8) ஜிம்மி கார்ரர் 9) ஏ. சி. பிரபுபாத, 10) தலைமைக்குரு டெஸ்மொன்ட் ரிரு ஆகிய பதின்மரும் சமாதானத்தை மேம்படுத்த முன்னின்று செயற்பட்டவர்களாவர்.
வாழ்வியல்:- இற்றைக்கு மூவாயிரம் (3000) ஆண்டுகளுக்கு முன் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் பண்டைத் தமிழர் தொன்மை, நாகரிகச் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் தொல்காப்பியம் என்ற ஓர் அரிய பழம்பெருநூலை யாத்துத் தந்துள்ளார். அதில் மக்கள் வாழ்வியலை வளம்படுத்த விரும்பி, தமிழ் மண்ணைக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐவகை நிலங்களாக வகுத்துத் தலைவன், தலைவியரை அவற்றில் பவனிவரச் செய்து, புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் ஆகியவை நிகழ்த்தி, களவியல், கற்பியல் காட்டி, சடங்கு முறையான கரணம் சொல்லி, உலகச் சமாதானத்தின் நீள் படியில் முதலடி வைத்த
பெருமை தொல்காப்பிரைச் சாரும்.
பொதுமறை:- இற்றைக்கு 2044 ஆம் ஆண்டில் வாழ்ந்த தெய்வப்புலவரான திருவள்ளுவர், உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடைய திருக்குறள் நூலை யாத்துத் தந்துள்ளார். அதில் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய துறைகளை அறத்துப்பாலில் அடக்கி, அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய பகுதிகளைப் பொருட்பாலில் பொதித்து, களவியல், கற்பியல் ஆகிய கூறுகளை இன்பத்துப்பாலில் கலந்து, அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலை மக்கள் பருகுவதற்குக் கொடுத்து, அதனால் மக்கள் மத்தியில் நிறைந்த சமாதானம் ஏற்படுமென்ற அசையாச் சிந்தையுடன் வாழ்ந்த பொய்யாமொழித் திருவள்ளுவரை நாம் என்றும் போற்றித் துதிப்போமாக.
மகாபாரதம்- மகாபாரதம் ஓர் இதிகாசம். 'தருமம் வெற்றி பெறும்!’ என்பதே மகாபாரதம் உலகுக்கு உணர்த்தும் ஒப்பற்ற நீதியாகும். இந்தத் தருமத்தின் வெற்றி சுலபமானதன்று. இந்த உண்மையை உலக மக்களுக்கு உணர்த்த ஆன்றோரும் சான்றோரும் பல துன்பங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்; மேலும் பல தியாகங்களையும் செய்ய வேண்டியிருக்கும். என்று பாரதம் கூறும். பாரதத்தில் தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டுள்ளது. தருமர் ஒருவர்; விதுரர் மற்றவர். விதுரர் அறவுரையோடு நின்று விட்டார். ஆனால் அறத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போரிட்டார் தருமர். சில சமயங்களில் தருமத்தை நிலைநாட்டத் தரும நெறி பாராது போர் புரிய வேண்டியுள்ளதென்பதைப் பாரதம் எடுத்தியம்புகின்றது. எந்த நாட்டில் தருமம் தழைத்தோங்கி நிற்கின்றதோ அந்த நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.
கம்ப இராமாயணம்:- இதிகாசங்களில் ஒன்றானது இராமாயணம். சகோதர பாசம், தாய் தந்தை வாக்கைத் தெய்வ வாக்காகப் போற்றல், சாதி மத
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 19
பூங்காவனம்
குடும்பத்தை ஒன்று சேர்த்தல், சகிப்புத் தன்மை காட்டல், பெரியோரை மதித்தல், விதி வலிதாயினும் மனவலிமை கொள்ளல், பத்தினித் தன்மையை மதித்தல், இராம நாமத்தை உச்சரித்தல் ஆகிய எத்தனையோ வாழ்வியல் நுட்பங்களைக் கம்ப இராமாயணம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவையனைத்தும் மக்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தி நிலைத்து நிற்பதற்கு ஏதுவாயமைந்துள்ளன.
பகவத்கீதை:- மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது பகவத்கீதையாகும். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் என்றும் சமாதானம் உண்டாகவில்லை. பாண்டவர்கள் தருமம் காத்து நின்றனர். கெளரவர்கள் அதர்மத்தின் உச்சியில் உலாவி வந்தனர். இதைக் கண்ணுற்ற கிருஷ்ண பகவான் அதர்மத்தை அழிக்கத் திடங்கொண்டார். கெளரவர்களுடன் சமாதானம் பேசினார். அது நிலைக்கவில்லை. கெளரவர்கள் போர் தொடுத்தனர். , கிருஷ்ண பகவான் பாண்டவர்களுடன் நின்று அருச்சுனனுக்கு உபதேசம் பண்ணிப் போரில் கெளரவர்களையும் அதர்மத்தையும் அழித்து, தருமத்தைக் காத்து, சமாதானத்தை நிலை நாட்டினார்.
திருமந்திரம்:- திருமந்திரத்தை அருளிப் பாடியவர் திருமூலர் ஆவார். திருமந்திரம் ஒரு வேத நூல், ஞான நூல், உயிர் நூல், என்றும் சாகா நூல். திருமூலர் ஒரு சித்தனாய், முனிவராய், யோகியாய், தத்துவ ஞானியாய், ஒழுக்கச் சீலராய், வைத்திய நிபுணராய், சைவ சித்தாந்தியாய், சிவநெறியாளராய், மந்திர தந்திரவாதியாய், இன்னும் பல்துறைகளிற் பிரசித்தி பெற்ற வல்லுனர் 96). TIT.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன், பிறந்த சமயத்தில் நிலைமின், பூசைக்குப் பூவுண்டு, நீருண்டு, இலையுண்டு; யாவர் மாட்டும் இன்னுரை பேசுமின், என்றும் நன்றே நினைமின், யாவர்க்கும் இடுமின், அடியாரைப் பார்த்திருந்து உண்மின், உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான், ஆசையும் அன்பும் அறுமின், அறம் கெட நில்லன்மின், கணவன் மனைவியாக இணைந்து இல்லறத்தில் ஈடுபடுமின், ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விவிட ஆனந்தம் ஆமே’ என்று அவர் கூறிய அறநெறிகள் மக்களை ஆற்றுப்படுத்தி உலக சமாதானம் நிலைத்து நிற்க ஊன்றுகோலாய் அமைந்துள்ளன.
சிலப்பதிகாரம்:- சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் யாத்தனர். 1) அறநெறி தவறிய அரசனை அறக்கடவுளே இயமனாக நின்று அழிக்கும், 2) கற்புடைய மகளிரை இவ்வுலகத்தாரும், வானோரும் போற்றுவர், 3) ஊழ்வினை எவரையும் விடாது உருத்துவந்து ஊட்டும் என்னும் முப்பெரும் நீதிகளைச் சிலப்பதிகாரம் தெளிவுற எடுத்துக்காட்டுகின்றது.
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின், தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின், பொய்யுரை அஞ்சுமின், புறஞ்சொல் போற்றுமின்; ஊணுான் துறமின், உயிர்க்கொலை நீங்குமின் தானம் செய்ம்மின், தவம்பல தாங்குமின்,
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

C35) இதழ் 14
செய்ந்நன்றி கொல்லல்மின், தீ நட்பு இகழ்மின; பொய்க்கரி போகல்மின், அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின், பிறர்மனை அஞ்சுமின், பிழையுயிர் ஒம்புமின், அறமனை காமின்; அல்லவை கடிமின், கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின், இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா, உளநாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது; செல்லும் தேஎயத்துக்கு உறுதுணை தேடுமின் மல்லல் மாஞாலத்து வாழ்வீர், ஈங்கு, என்.’ என்ற இளங்கோவின் அறிவுரைகள் உலகம் முழுவதும் பொதுவாயமைந்து சமாதானத்தை நாடி நிற்கின்றன.
திருவாசகம்:- மாணிக்கவாசகரின் திருப்பாடல்களைத் திருவாசகம் என்றழைப்பர். திருவாசகம் ஐம்பத்தொரு (51) திருப்பதிகங்களுடன் திகழ்கிறது. அவைகளில் அறுநூற்று ஐம்பத்தாறு (656) பாடல்கள் உள்ளன. 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது யாவரும் அறிந்த மெய். அவர் திருப்பெருந்துறையில் பாடி அருளிய சிவபுராணத்தில் 'நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க!” என்று சிவனின் அனாதி முறைமையான பழமை பேசப்பட்டு, மக்களால் மந்திரமாக ஒதப்பட்டு, சிவபக்தர்களாய் உலக சமாதானத்தோடு அணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
நாலடியார்:- திருக்குறளைப்போல் நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய முப்பாலில் அறம் கூறி மக்களை ஈர்த்து நிற்கின்றார். அதில் ‘செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, அறன் வலியுறுத்தல், தூய்தன்மை, துறவு, சினம் இன்மை, பிறர்மனை நயவாமை, பொறையுடைமை, ஈகை, தீவினையச்சம், கல்வி, குடிப் பிறப்பு, மேன்மக்கள், பெரியாரைப் பிழையாமை, நல்லினம் சேர்தல், கூடா நட்பு, சுற்றம் தழால், மானம், ஈயாமை, அவையறிதல், பேதைமை, கயமை, பொது மகளிர், கற்புடை மகளிர் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன. இவை மக்களை நல்வழிப்படுத்தி, நல் வாழ்க்கையில் ஈடுபடச் செய்து, சமாதானப் பாதையில் பயணிக்க உதவுகின்றன.
நீதிநெறி நூல்கள்:- நீதிநெறி நூல்களாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நன்நெறி, உலக நீதி, வெற்றி வேற்கை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை ஆகியவற்றை மனித உள்ளங்களில் பதித்தால் அது நிலையான பலனைத் தரும் என்ற நோக்கில்தான் ஆன்றோர் நீதி நூல்களை உருவாக்கினர். அவற்றில் அமைந்துள்ள பொன்னான சிறு சிறு அறநெறி வார்த்தைகள் ஒரு சிலவற்றைக் காண்போம்.
'அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஒதுவது ஒழியேல், ஒளவியம் பேசேல், அ.கம் சுருக்கேல், சனி நீராடு, தந்தை தாய்ப் பேண், நன்றி மறவேல், வஞ்சகம் பேசேல், இளமையிற் கல், கடிவது மற, காப்பது விரதம், சூது விரும்பேல், செய்வன திருந்தச் செய், தீவினை அகற்று, தொன்மை மறவேல், நூல் பல கல், நெல் பயிர் விளை, பூமி திருத்தி
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 20
பூங்காவனம்
இதழ் 14
உண், உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழுகு, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை, சீரைத் தேடின் ஏரைத் தேடு, வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.’ என்பன ஒளவைப் பிராட்டியின் பொன் மொழிகள். இவை மக்களை அறநெறியாளர்களாக்கி அவர் தம் வாழ்வியலை மேம்படுத்திக் குதூகலிக்க வைக்கும் பாங்கினைக் காண்கின்றோம்.
முடிவுரை:- மேற்காட்டிய தொல்காப்பியம், திருக்குறள், மகாபாரதம், கம்ப இராமாயணம், பகவத்கீதை, திருமந்திரம், சிலப்பதிகாரம், திருவாசகம், நாலடியார், நீதிநெறி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நன்நெறி, உலக நீதி, வெற்றி வேற்கை ஆகிய நூல்கள் அனைத்தும் அறவழி நின்று சமாதானப் பாதையை நோக்கிச் செல்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகின்றது. இவற்றோடு நாமும் சேர்ந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் கருமம் செயலாகும்; சமாதானம் ஏற்படும்; மக்கள் வாழ்வியல் ஓங்கும்; நாட்டு வளம் பெருகும்; உலகம் ஒன்றாகும். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்.’ (புறநானூறு) என்பது கடைச் சங்ககால வாக்காகும். எவ்வூராயினும் அஃது எம் ஊரே! யாவராயினும் அவர் எம். உறவினரே! என்பது நிலைத்திருக்க நாம் அனைவரும் ஒன்று திரள்வோம்; நீடுழி வாழ்வோம்!!!
6(8.
() ஷெல்லிதாசன்
ஆயிரம் அழகுகள் அவனியில் இருந்தும் பிள்ளைக்கு அன்னையே பேரழகு. பாடல்கள் எத்தனை காதில் ஒலித்தும் - அவள் தாலாட்டு ஒன்றே தேனமுது!
கண்ணை இமைபோல காத்து வளர்த்திடும் எண்ணமும் இங்கே யார்க்கு வரும்.
கலை இலக்கிய Jepan, சஞ்சிகை
உண்ண உதிரத்தை பாலாக ஊட்டிடும் உரிமையும் பிள்ளைக்கு யாரால் வரும்?
சொர்க்கத்து இன்பங்கள் சூழ்ந்து கிடந்தாலும் தாய்மடி போல இதம் தருமா? - எந்தச் சொந்தங்கள் வந்தாலும் சுகங்களைத் தந்தாலும் அன்னையின் அன்புக்கு நிகர் வருமா?
 
 
 
 

பூங்காவனம்
() றாபி எஸ் மட்றாஸ் - மருதமுனை
வானில் நிலா உலா வர, விண்மீன்கள் கண் சிமிட்ட, இதமான தென்றல் காற்று உடலுக்கு சுகமாக வீசிக் கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதிலும், வல்லோனின் கட்டளைக்கு அடிபணிந்து முழு கிராமமும் நோன்பு நோற்க மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தது.
தஹஜ்ஜத் தொழுகையை முடித்து விட்டு முஸல்லாவிலேயே அமர்ந்தபடி இரு கரமேந்திய ஆயிஷாவின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணிர் வடிந்தோடியது. ஆயிஷா தன் மனக் கவலைகளை அல்லாஹற்விடம் பாரம் சாட்டினாள், இம்மை மறுமை வெற்றியையும், மேலான சுவனத்தையும் வேண்டி நின்றாள், மரணித்த தன் பெற்றோருக்காகவும், இந்நேரத்தில் குறட்டை விட்டுத் துங்கும் தன் கணவனுக்காகவும், தன்னுள் வளரும் சிசுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்தித்தாள்.
நேரம் நான்கு மணியைக் காட்ட, அவசரமாக எழுந்து ஸஹர் உணவை உட்கொண்டாள். தன் கணவன் நசீரோடு சேர்ந்து ஸஹர் செய்யும் நாள் எப்போது வருமோ? என்ற வழமையான ஏக்கம் இன்றும் அவளை தொற்றிக் கொண்டது.
நசீர் ஆயிஷாவைக் கரம் பிடித்து நான்கு வருடங்கள் கடந்து விட்டன. நன்றாகப் படித்தவன், நல்ல தொழிலில் இருக்கிறான் என்பதைப் பார்த்து அவளது பெற்றோர் அவளை நசீருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால் இற்றை வரைக்கும் நசீர் ஒரு நோன்பு நோற்றதையோ, ஒரு வேளை பள்ளிக்குச் சென்றதையோ அவள் கண்டதில்லை. எப்போதாவது ஜும்ஆவுக்கு மட்டும் மணக்க மணக்க மணம் பூசி புது மாப்பிள்ளை போல் பள்ளிக்குச் செல்வான். போதாக் குறைக்கு தொழுகை, நோன்பு, ஈமான், இஸ்லாம் இவை பற்றி பேசினால் எரிந்து விழுவான். ஆயிஷா பலமுறை இப்படி வாங்கிக் கட்டியிருக்கிறாள்.
சுபஹற் தொழுது முடித்தவுடன் காலைச் சாப்பாட்டைத் தயார் செய்யும் பணிகளில் இறங்கினாள். ஏனெனில் நசீர் கண் விழிக்கும்போது சாப்பாடு தயாரில்லையென்றால் ஆயிஷாவின் கதி அதோ கதிதான்.
பொழுது புலர்ந்தது. நசீர் ஒபீஸஸுக்குப் போக தயாரானவாறே சாப்பாட்டு
மேசையில் அமர்ந்தான். காரம், மணம், மசாலா போட்டு சமைத்த சுவையான உணவுகள் சுடச் சுட மேசையில் அவனுக்காகக் காத்திருந்தன. ஆயிஷா
s ல இலக்கிய agpa, சஞ்சிகை

Page 21
பரிமாற நசீர் சுவைத்துச் சுவைத்து உண்டான். ஆயிஷா an பார்த்து மெல்ல பேசத் தொடங்கினாள்.
‘என்னங்க நாளைக்கு நோன்பு இருபதாகுதுங்க
ஓ அதுக்கு என்ன? ஆ
"இன்னும் உடுப்பு எடுக்கல்லையே'
‘ஓ சொறிம்மா மறந்துற்று, நாளைக்குப் போய் எடுப்பம் சரியா’ அன்பாகச் சொன்னான் நசீர்.
'அதில்லங்க”
"அப்ப வேற என்ன?
நாளைக்கிருந்து கடைசிப் பத்து ஸ்டார்ட் ஆகுது. அந்த பத்து நோன்பை மட்டுமாவது படியுங்களேன்’
நசீரின் முகம் சட்டென மாறிப் போனது. ‘எங்க உம்மா கூட என்னை நோம்பு புடிக்கச் சொன்னதில்ல. நீ என்னடி என்னை சொல்ற சீறினான் நசீர். ஆயிஷா கலங்கிப்போனாள்.
"இஞ்சப் பாரு ஆயிஷா, நோன்பு பிடிச்சிக்கிட்டு அதற்குப் பிறகு கேஸ்டிக், அல்சர் என்று என்னால அலைய ஏலாது. நான் எப்பவும் ஹெல்த்தியா வாழனும், ஒனக்குத் தேவையென்டா நீ பிடிச்சிட்டு தொலைஞ்சி போ. என்னை விட்டுடு. ஒகே' என சொல்லம்புகளால் ஆயிஷாவைக் குத்திய படியே கைகளைக் கழுவி, காரை எடுத்துக்கொண்டு ஒபிஸ்"க்கு புறப்பட்டான் நசீர்.
ஒபிஸுக்குப் போன நசீருக்கு அன்றைய நாள் ஆரோக்கியமாக இருக்கவில்லை. இலேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது. உடனே நசீரின் கார் பளில் டொக்டரின் டிஸ்பென்சரியின் முன்னால் போய் நின்றது.
பளில் டொக்டர் பல பரிசோதனைகளைச் செய்தார். அறிக்கைகளைப் பார்க்கப் பார்க்க அவரது புருவங்களும் மேலே மேலே உயர்ந்துகொண்டே சென்றன. நசீருக்கும் இப்போது வயிற்றைக் கலக்க ஆரம்பித்துவிட்டது. பளில் டொக்டர் பேச ஆரம்பித்தார்.
"மிஸ்டர் நசீர் ஒன்டும் பயப்படத் தேவையில்ல. ஆனா ஒங்கட உடம்பில கொலஸ்ரோல் மிச்சம் அதிகமா இருக்கு
'கொலஸ் ரோலா?. நான் இறைச்சி, கொழுப்பு எல்லாத்திலயும் கொன்ரோலாத்தானே இருக்கன் டொக்டர்’
மே பி இருக்கலாம். ஆனா ஒங்கட இரத்த நாளங்களில கொழுப்பு படிஞ்சிருக்கிறதாகத்தான் றிப்போட் சொல்லுது. அது மட்டுமில்ல நசீர் நம்மட
 
 
 
 

உறுப்புக்கள் எல்லாம் ஒரு மெசின் மாதிரி. அது தொடர்ந்து வேர்க் பண்ணிக்கிட்டே இருந்தா சில புரொப்ளம்ஸ் வரத்தான் செய்யும்'
"இதுக்கு என்னவாவது மெடிசின் இருக்கா டொக்டர்?
யெஸ், இருக்கு
‘என்ன மெடிசின் டொக்டர், எவ்வளவென்டாலும் பிரச்சினையில்ல'
"நோ, சாப்பிடாம இருக்கிறதுதான் இதுக்கு சரியான மெடிசின்'
'சாப்பிடாமலா? சாப்பிடாம இருந்தா அல்சர் வருமே அதுக்குத்தான் நசீர், நம்மட மார்க்கத்தில பெஸ்ட் மெடிசின் நோன்பு இருக்குதே
"நோன்பா? ஆச்சரியக் குறிகளும், வினாக் குறிகளும் மாறி மாறி அவனைச் சுற்றி வட்டமிட்டன.
யெஸ் நசீர். நாம காலையில ஸஹர் செய்யிறத்தால அல்சர் வராம பார்த்துக் கொள்ளலாம். பிறகு நாம பசித்திருக்கிற டைம்ல நம்மட நாளங்களில இருக்கிற கொழுப்புக்கள் அப்படியே இரத்தத்தோட இரத்தமா கரைந்து போகுது
"அப்ப இப்தாருக்குப் பிறகு சாப்பிடுறதெல்லாம்?
அதுக்குத்தான் நாம இரவு நேரங்களில தராவீஹ் தொழுறமே. இப்படி ஒரு வருஷத்தில ஒரு மாசம் செய்யிறத்தால நம்மட உடம்பிற்கு ஒரு றீ பிறவிழ் கிடைக்குது
இவ்வளவு ஸ்பெஷல் இந்த நோன்பில இருக்குதா?
அது மட்டுமில்ல நசீர். இது எல்லாத்துக்கும் மேல நம்மளப் படைச்சி, பரிபாலிக்கிற அல்லாஹற்ட கட்டளைய நிறைவேத்திறது நம்ம ஒவ்வொருத்தர கடமையும் கூட, படைச்ச அந்த ரப்புக்குத் தெரியும் நமக்கு எது நலவு? எது கெடுதி? என்டு. என்ன சொல்றீங்க நசீர்? நசீர் எதுவும் புரியாதவனாய் தலையாட்டியவாறு எழுந்தான்.
'ஆ நசீர், உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். இல்லையென்டா ஸம்டைம் ஒங்கட உயிருக்கும் பாதிப்பாய் அமையலாம் பளில் டொக்டரின் அந்த இறுதி வார்த்தைகள் நசீரின் செவிகளில் அம்புகளாய் விழுந்தன. நசீர் மெதுவாக வீட்டுக்குப் புறப்பட்டான்.
கார் ஹோர்ன் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் ஆயிஷா. நசீர் பேயறைந்தவன் போல் அறைக்குள் நுழைந்தான். ஆயிஷாவுக்கு எதுவுமே புரியவில்லை.
566) @ດຂຶກົມ FUpತಿ சஞ்சிகை
ሦ →

Page 22
ஆயிஷா நோன்பு பிடிக்க எத்தன மணிக்கு எழும்புவாய்? எத்தனை மணிக்கு சாப்பிடுவாய்? நோன்பு பிடிச்சா எப்படி இருக்கும்? என நசீர் வந்ததிலிருந்து பல தடவைகள் மாறி மாறி நோன்பைப் பற்றியே வினவிக்கொண்டிருந்தான். ஆயிஷாவும் சலிக்காமல் நோன்பின் மாண்புகளையும், நோன்பின் சிறப்புக்களையும் சேர்த்தே விடையளித்தாள்.
ஆயிஷா நாளைக்கு என்னையும் நோன்பு பிடிக்க எழுப்பு. ரெண்டு பேரும் சேர்ந்து பிடிப்பம் நசீர் தூங்கச் செல்லும் முன் ஆயிஷாவிடம் சொன்ன வார்த்தைகள் இவை. ஆயிஷாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் பிரார்த்தனைகள் நிஜமாகிவிட்டதை எண்ணி மகிழ்ந்தாள். உடனே இரண்டு ரக்அத்துக்கள் இறையோனுக்காக தொழுதாள். அன்றிரவே அவனுக்கென பல வகையான உணவுகளையும் சமைத்தாள். அதிகாலை ஸஹர் உணவை இருவரும் சேர்ந்தே புசித்தனர். ஆயிஷாவுக்கு மனதும், வயிறும் ஒன்றாகவே நிரம்பின.
கதிரவன் உச்சியை அடைய நசீருக்கு பசி வாட்டமெடுக்கத் தொடங்கிற்று. அவன் வாழ்நாளில் முதல் நோன்பல்லவா? அதுதான் வெகு சிரமப்படுகிறான். பகல் பொழுதுகளிலேயே ஒபிஸிலிருந்து வந்துவிட்டான். வரும் வழியில் "சோமாலியாவில் பசியின் கொடுமையால் 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணித்துப் போயுள்ளார்கள், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்நிலை தொடர்கிறது என ஒலிபரப்பான செய்தி அவன் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
‘ஒரு நாள் பசியையே எனக்குத் தாங்க முடியவில்லையே. அந்தப் பச்சிளங் குழந்தைகள் வருடம் பூராகவும் பசியில் வாடுகின்றதே என நினைக்கும் போது அவனுக்கு தொண்டை அடைத்தது.
வீட்டுக்கு வந்தவன் ஆயிஷாவிடம் விடயத்தைக்கூறி 'நான் சோமாலியா மக்களுக்கு எப்படியாவது உதவி செய்யனும் என்ற தன் ஆசையையும் தெரிவித்தான். ஆயிஷாவின் உள்ளத்தில் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடியது. முன்பெல்லாம் வடிந்த சோகக் கண்ணி இப்போது ஆனந்த கண்ணிராய் அவள் கண்களில்.
"சோமாலியா மக்களுக்கு உதவி செய்யுறத்துக்கு நம்மட ஊர்ல இஸ்லாமிய இயக்கங்கள் நிதி சேகரித்து வருகுது. அவங்கக்கிட்ட நீங்க குடுத்தா எல்லாம் சரியா போய் சேர்ந்திடும். அது மட்டுமில்லங்க. நம்மட ஊர்லயும் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாம திண்டாடுது. நாம அவங்களுக்கும் கொடுக்கனும்
'ஒகே. நான் நாளைக்கு அந்த வேலையைப் பார்க்கிறன் நசீர் மன உறுதியோடு சொன்னான்.
நோய்க்கு நிவாரணியாக நோன்பை நோற்ற நசீர், அந்த ரமழான் காலப் பகுதியிலிருந்தே மெல்ல மெல்ல இஸ்லாத்தையும் கற்கலானான். ஏழைகளின் பசியையும் உணரலானான். காலப்போக்கில் அவன் நோயும் குணமானது. அவன் உள்ளத்தில் ஈமானும் உறுதியானது. அந்த மார்க்கப்பற்றுள்ள தாய்க்கும் தந்தைக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது!!!
 
 
 
 
 

பங்காவனம் - - - -
GË Eறி =சிறு
நூல் மதிப்பீடு
நிலாக்குயில்
வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஒரு ஆசிரியராக, அதிபராக இருந்தவர். முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான 'முஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்' என்ற கட்டுரை 1961 இல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.
1968 இல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், 1985 இல் எம்.எம்.எம். யூசுப் நினைவுகள் (தொகுப்பு நூல்), 2003 இல் சிந்தனைப் பார்வைகள் ஆகிய 03 நூல்கள் இவரால் எழுதி வெயிடப்பட்டுள்ளன. 2013 இல் இவர் எழுதிய பூவும் கனியும் என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது.
முதலில் புத்தகத்தை பிரித்தால் அதனுள்ளிருக்கும் வசீகரத்தன்மை மனதை ஈர்த்து விடுகிறது. வர்ணத் தாள்களில் அச்சாக்கப்பட்டிருக்கும் பாடல்களை வாசிப்பதற்கு அது உறுதுணை புரிகிறது என்பது உண்மை.
சிறுவர்களிடம் இறை அச்சத்தை, இறை பக்தியை வளர்க்க வேண்டியது பெற்றோர்கள் மாத்திரமல்ல. எழுத்தாளர்களுக்கும் அது கடமையான விடயம். விசேடமாக சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தனது முதல் பாடலாக அல்லாஹற் என்ற தலைப்பிட்டு அத்தாஸ் அவர்கள் எழுதியிருப்பது, அல் லாஹவே முதன்மையானவன் என்பதை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உணர்த்தி நிற்கின்றது.
இணையில்லா ஒருவனே அல்லாஹற் இகம் தனைப் படைத்தவன் அல்லாஹற்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 23
பூங்காவனம் இதழ் 14
இறைவன் அவனே அல்லாஹ் இனிதே வணங்குவோம் அல்லாஹ்
என அந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லாஹற்வுக்கு அடுத்தாக அவனது தூதர் நபி ஸல்லல்லாஹ? அலைஹி வஸல்லம் அவர்களையே நாம் நேசிக்கின்றோம். உத்தம நபி என்ற பெயரில் அமைந்திருக்கும் இரண்டாவது பாடல் அத்தாஸ் அவர்கள், குழந்தைகளின் மனதை இஸ்லாத்தின் பால் திசை திருப்புவது பற்றி உணர்ந்தவர் என்பதை எமக்கு காட்டி நிற்கின்றது. அந்தப் பாடலின் சில வரிகள் இதோ.
அல்லாஹற் அருளிய வேதம் தனை அகிலத்தாருக்கு சொன்ன நபி அல்குர்ஆனில் மொழிந்தபடி வாழ்வில் செயலில் காட்டும் நபி
அகிலத்தை படைத்த அல்லாஹ் அதில் எமக்கு உற்ற துணையாக, பாதுகாப்பு அரணாக படைத்திருப்பது நமது தாயைத்தான். அதனால்தான் தாயின் பாதத்தின் கீழ் சுவனம் உள்ளது என்ற மேன்மையை எமக்கு அல்லாஹற் அறிவித்திருக்கின்றான். தூய நேசம் கொண்ட தாயின் புகழை மூன்றாவது பாடலில் பதிய வைத்திருக்கிறார் நூலாசிரியர்.
தந்தையின் நிழலில் வளரும் குழந்தைகள் தரணியில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறின்றி தான்தோன்றித்தனமாக வளர்ந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆனால் தாயும், தந்தையும் முதுமைப் பருவத்தை அடைந்ததும் எத்தனைப் பேர் அன்பாக, ஆதரவாக அவர்களைக் கவனிக்கின்றார்கள்? இன்றைய சமுதாயம் பணம், பட்டம், பதவி என்பவற்றில்தான் அதிக அக்கறை காட்டுகின்றதே தவிர பாசத்தில் அல்ல. தந்தையின் பாசம் என்றால் என்ன என்பதை எனது அப்பா என்ற பாடலில் நூலாசிரியர் பின்வருமாறு சொல்லியிருக்கின்றார்.
எங்கள் அப்பா நல்லவர் எல்லாம் சொல்லித் தருபவர் எங்கும் கூட்டிச் செல்பவர் எவரும் விரும்பும் உயர்ந்தவர்
சின்ன வயதிலிருந்து இன்றுவரை ராஜா ராணி கதைகள் கேட்பது சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை எமக்கு குழந்தைப் பருவத்திலே ஊட்டியவர்கள் எமது பாட்டி, பாட்டன். எனவே பாட்டி பற்றிய பாடலையும் எழுத மறக்கவில்லை நூலாசிரியர்.
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பாடல்களுக்கு அப்பால் மிருகங்கள், இயற்கைக் காட்சிகள், மாம்பழம், வெள்ளைக் கொக்கு என்று சிறுவர்கள் விரும்பும் விடயங்கள் பற்றி எழுதியிருக்கும் அத்தாஸ் அவர்கள் பாடல்களுக்குரிய
 
 
 
 

| Lilla:Ioi30Illib இதழ் 14
சிறிய படங்களையும் தந்திருப்பது சிறப்பம்சம் என கருதுகிறேன். எழுத்துக்களைவிட படங்கள் மனதில் பதிவதால் பாடலை சிறுவர்கள் வாசித்துணர அது வழிகோலும்.
காகம் என்ற பாடலில் அமைந்துள்ள சில வரிகள் பின்வருமாறு:-
நாடு நகர் எங்கும் நீ கூடி வாழ்தல் காண்கின்றோம் குடும்ப நன்மை அதுவன்றோ கூட மாந்தர் அறிவாரோ
இந்த வரிகளில் ஒரு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பொதிந்திருக்கின்றது. இதை காகத்தின் மூலம் கவிஞர் உணர்த்தியிருக்கின்றார். ஆறறிவு பெற்ற மனிதர்களிடம் இல்லாத பண்புகள் காகத்திடம் காணப்படுகின்றது. இயற்கை நமக்கு பல பாடங்களை கற்பித்து தருகின்றது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும். நவமணி, தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் சிறுவர் பகுதியில் வெளிவந்த பாடல களே இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது கவிஞரின் சிறுவர் இலக்கியப் புலமைக்கு சான்று பகர்வதாக அமைகின்றது.
சிறுவர் இலக்கியத்தில் ஈடுபவர்கள் வெகு சிலரே. ஏனெனில் சிறுவர்களின் மனதைக்கவரும் படியாக, சிறுவர்களுக்கு புரியும் படியாக எழுதுவது சவாலான விடயம். எனினும் தன்னாலான இலக்கியத் தொண்டுகளை புரிவதற்கு ஏற்ற மனமுடையவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தர முடிகிறது. அந்த வகையில் சிறுவர் இலக்கியம் படைக்க முற்பட்டிருக்கும் வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்!!!
நூலின் பெயர் - பூவும் கனியும் நூலின் வகை - சிறுவர் பாடல் நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ் (p356)lf - 41A, Muslim Road, Wellippenna. வெளியீடு - மொடன் ஸ்டடி சென்டர் விலை - 150 ரூபாய்
வாசகர் கவனத்திற்கு
தாங்கள் அனுப்பும் படைப்புக்களை தட்டச்சு செய்து மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைப்பின், பூங்காவனம் விரைவாக வெளிவர அது பேருதவியாயிருக்கும். ஆதலால் தயவுசெய்து மின்னஞ்சல் செய்ய
முடியுமானவர்கள் இதை கருத்தில் கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 24
இ) பதுளை பாஹிரா
தசாப்தங்களை விழுங்கிக்கொண்டு தாங்கும் மண்ணுக்கு உசத்தியாக காய்களை தூசியாக உதிர்த்துக்கொண்டிருக்கிறது தாசில்தார் வீட்டு புளிய மரம்! ஆசிர்வதிக்கப்பட்ட உயிர் வேரிலே பாட்டன் நட்டுச் சென்ற கைராசி எனவே திமிராக மதர்த்து நிற்கிறது
கங்குல் படியும் பொழுதில் சாத்தான்களின் சரித்திரத்தை தத்ருபமாக எழுதிக்கொண்டிருக்கும் இருள் குளிக்கும் மரக்கொப்புகளின் நிழல் அசைவுகள் அண்மிய அருவியின் ஆழத்திலே மயான காண்டத்தின்
9) 38 d585 LLDITEB.
கொடுர கிளைக் கைகளைப் பரப்பி இருக்கும் ஆகிரதியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்கியிருக்கும் கழுகுகளின் கோரப் பார்வைகள்! சவக்குழிகள் தோண்டப்படுவதான பிரமையை கொத்தித் திண்ணும் குருவிக் குஞ்சுகளின் ஈரக்குரல் இரத்தம் சிந்த உணர்த்தும்!
நட்ட நடுநிசியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நரிக்கூட்டம் புளிய மரத்து வேரிலே ஒதுங்கியிருக்கும் முயலினங்களை வேட்டையாடி தலையுயர்த்தி நன்றி சொல்லும்!
இரைந்திடும் காற்றலைகளினூடே Lip60)LDu T60I LDJls) அமானுஷ்ய சக்திகளின் சத்தங்களை சாற்றிக் கொண்டிருக்கும்!!!
 
 

பூங்காவனம்
மூங்காUனறி நற்றி
பூவையர் அமைத்த பூங்காவனம் பூத்துக் குலுங்கும் பூங்காவனம்
பூவையர் மணம் பரப்பும் உத்தி பூங்காவனத்துக்கே உரிய புத்தி
பூங்காக்கள் எத்தனை தோன்றினாலும் பூங்காவனத்தின் மணம் தூக்கலே பூக்கின்ற புத்தகப் பூக்கள் பூவில் காயாய் கனியாகுமே
திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம்
பூங்காவனம் இதழ் உரிய காலத்தில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றமை " ஆச்சரியமான விடயம். அதைவிட ஆச்சரியம் பூங்காவனத்தை நடத்துபவர் ஒரு பெண் என்பது. இன்றைய காலத்தில் சஞ்சிகைகளை வெளியிடுவது கடினமான வேலையாகும்.
எனது நண்பனின் வீட்டுக்கு சென்றிருந்தபோது உங்கள் சஞ்சிகையை வாசித்தேன். அமைப்பும், நேரத்தியும் கண்களைக் கவர்ந்தன. உள்ளே சென்றால் நந்தவனத்து மலர்களாய் பல இலக்கியப் பூக்கள் பூத்துக் கிடந்தன.
அறியப்பட்ட எழுத்தாளர்களினதும், புதிய தலைமுறை எழுத்தாளர்களினதும் படைப்புக்கள் ஒரவஞ்சனையின்றி இதில் உள்வாங்கப்பட்டிருப்பதானது சஞ்சிகையின் வளர்ச்சிக்கு மூலதனம் எனலாம். குறிப்பிட்ட வாசகர் வட்டத்துக்கு மாத்திரம் களம் அமைக்காமல் எல்லோரையும் அணைத்துச் செல்லும் உங்களது சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. இன்னுமின்னும் சிறப்பாக பூங்காவனம் தொடர்ந்து வெளிவர எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!
எம்.ரி.எம். சிபான் - புத்தளம்
யாராலும் அறியப்படாத பல எழுத்தாளர்களை, அதுவும் வயதில் மூத்த எழுத்தாளர்களை பூங்காவனம் இணங்கண்டு, அவர்களுக்கு களம் கொடுத்து வருகின்றமை பாராட்டுக்குரியது.
எத்தனைப் பேர் இலை மறை காய்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை சமுதாயத்துக்கு இனங்காட்டி அவர்கள் பற்றி அறியத்தருவது ஆசிரியர்களின் விசால மனதை காட்டி நிற்கிறது. வாழ்த்துக்கள் சகோதரிகளே!
எம்.ஐ.எப். பஸ்னா - கண்டி
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 25
நூலின் பெயர் - மல்லியப்பு சந்தி நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - திலகர் Ló66.607(6586) - thilagar(a)malliyappusanthi.com வெளியீடு - பாக்யா பதிப்பகம் விலை - 200 ரூபாய்
நூலின் பெயர் - நாளெந்த நாளோ நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - மு. துரைசாமி வெளியீடு - குறிஞ்சிப் பேரவை விலை - 200 ரூபாய்
நூலின் பெயர் - ஊற்றுக்களும் ஓட்டங்களும் நூலின் வகை - விமர்சனங்கள் நூலாசிரியர் - லெனின் மதிவானம் வெளியீடு - பாக்யா பதிப்பகம் விலை - 450 ரூபாய்
தெளிவத்தை ஜோசப்
நூலின் பெயர் - குடை நிழல் நூலின் வகை - நாவல் நூலாசிரியர் - தெளிவத்தை ஜோசப் வெளியீடு - எஸ். கொடகே சகோதரர்கள் விலை - 300 ரூபாய்
 
 
 
 
 
 
 

நூலின் பெயர் - காணிக்கை நூலின் வகை - சிறுகதை நூலாசிரியர் - யூ.எல். ஆதம்பாவா வெளியீடு - இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் விலை - 80 ரூபாய்
நூலின் பெயர் - பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - யூ.எல். ஆதம்பாவா, றியாத் ஏ. மஜீத் வெளியீடு - மெஸ்றோ அமையம் விலை - 99 ரூபாய்
நூலின் பெயர் - சாணையோடு வந்தது நூலின் வகை - சிறுகதை நூலாசிரியர் - யூ.எல். ஆதம்பாவா வெளியீடு - முகாமைத்துவ தொழில்நுட்ப கல்லூரி விலை - 240 ரூபாய்
நூலின் பெயர் - குருதி தோய்ந்த காலம் நூலின் வகை - கவிதை நூலாசிரியர் - யூ.எல். ஆதம்பாவா வெளியீடு - மெற்றோ பொலிற்றன் கல்லூரி விலை - 200 ரூபாய்

Page 26
iš iššifa
நூலின் பெயர் - முஸ்லிம் தேசிய இலக்கியம் நூலின் வகை - ஆய்வு நூலாசிரியர் - நவாஸ் செளயி தொலைபேசி - 0672224420 வெளியீடு - முஸ்லிம் தேசிய இலக்கிய ஆய்வகம் விலை - 100 ரூபாய்
நூலின் பெயர் - எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு நூலின் வகை - குறுங்காவியம் நூலாசிரியர் - பாலமுனை பாறுக் வெளியீடு - பர்ஹத் பப்ளிகேஷன் விலை - 200 ரூபாய்
நூலின் பெயர் - செல்லமே நூலின் வகை - சிறுவர் பாடல் நூலாசிரியர் - எம்.ரீ. சஜாத் தொலைபேசி - 0779787002 வெளியீடு - பேனா பப்ளிகேஷன் விலை - 150 ரூபாய்
நூலின் பெயர் - சூழ ஒடும் நதி நூலின் வகை - ஆய்வு நூலாசிரியர் - கெக்கிறாவ ஸஹானா விலை - 400 ரூபாய்
 
 
 
 
 
 

பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழாவின் சில புகைப்படங்கள்.
தொடர்புகளுக்கு - 0775009222, 0719200580 Ló660T(6586) - poetrimza(agmail.com வெளியீடு - கொடகே பதிப்பகம் விலை - 500 ரூபாய்

Page 27
With Compliments Fron