கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சௌந்தர்ய பூஜை

Page 1
  

Page 2
, -
 
 

செளந்தர் ய பூ ை
விஜயேந்திரன்
(ஆகிரியர், ‘வைகறை இல இதழ்)
イ
பிரசுரித்தவர்: ஐ. குமாரசாமி அவர்கள்
பிரதிகள் கிடைக்குமிடங்கள்: ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி,
கொழும்பு - 3.
இருஷ்ணசாமி அன்பு புத்தகசாலை"
புத்தக விற்பனையாளர் 27/D பெரிய கடை
யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்,
பிரதி αίθου σ Φώ -90

Page 3
மானிடன் விஜயேந் தி ர ன்
பதிப்புரை
அவள் அண்ணு என்ருெரு
蟾
கவிதைகள்' ஆகிய நூல்களை எழுதி ஆயிரக் கணக்கான வாசகர்களைக் கொள்ளை கொண்ட **வைகறை’’
ஆசிரியர் திரு. விஜயேந்திரனின்
புதுமையும், அற்புதமான சொல்
லாட்சியும், எவரையும் ஈர்க்கக்
கூடிய தன்மைகளும் மிக்க சிறு கதைகள் சிலவற்றை 'செளந்தர்ய பூஜை' என்ற மகுடத்தில் வெளி
யிடுகிருேம். 淤
இச் சிறுகதை நூலானது எமது
ஈழத்து இ ல க் டு ய வளர்ச்சியின்
புதிய அறுவடையாகும்.
1ெ9து நாட்டிலும் மிகச் சிறந்த சொற் சிற்பிகள் உள்ளனர் என்ப தற்கு இந் நூல் அசைக்கமுடியாத சான்ருகும். *
இத் தொகுதியிலுள்ள கதை கள், இந் நூலாசிரியரின் "அழகுப் பற்றை அற்புதமாகப் புலப்படுத்து
கின்றன.
"அழகு' அவரை அடிமைப் படுத்தியது. அவருக்கே உரிய ‘மந் திரத் தமிழ் உங்களை அடிமைப் படுத்தும்.
- இ. மகேந்திரன்
முதற் பதிப்பு
1970 స్టు 9%
வெளியிட்டவர்
않3. குமாரசாமி
கல் வளை
சண்டிருப்பாய்.
உரிமை ஆசிரியருக்கு
ஆசிரியரின் பிற நூல்கள்
விஜயேந்திரன்
கவிதைகள்
அவள் (நாவல்)
மானிடன்
(அஞ்சலி நூல்)
அச்சுப் பதிவு:
சக்தி அச்சகம் ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம்.
...
அண்ணு என்றெரு * |
 
 
 

, A மு ன்னுரை
இலக்கியம் என்பது என் வாழ்வின் ஆனந்த வீணை; அந்த வீணையின் வாயிலாக எனது ஆத்மகனவுகளை கற் ப னே கலந்தும், கற்பனை கல வாது "உள்ளது உள்ளபடி யும் உலகுக்குக் காட்டவே நான் பிரியப்படுகிறேன்.
அத்தகைய மனுேரம்ய கனவுகளிற் சிலவே செளந் தர்ய பூஜையாப்ப் பிறந்தது.
g
இந்நூல் கலார சனையின் உருவகம்; சொல்லழகின் நிலைக்களம்; உணர்வுக் கன்னியின் வஸந்த கீதம்.
ஆதலின் வாசக அன்பர்களுக்கு அமிழ்தாய் அமையு
மெனக் கருதுகிறேன். O 90 G97 GOGO
மாசில்லாத தனது வாய்மைப் பண்பாலும், அடக் கத்தினுலும், வள்ளன்மையாலும் பெரிய ம னி த ஞ க இருப்பவர் ச ன் டி ரு ப் பா ய் ஐ. கு மா ர சா மி அவர் கள்; அந்த நல்ல மனிதர் மட்டும் தக்க சமயத்தில் நிதி உதவி புரிந்திருக்காவிட்டால், ஆயிரக்கணக்கான எனது கையெழுத்துப் பிரதிகளுடனேயே இந்த 'செளந்தர்ய பூஜை'யும் சேர்ந்திருக்கும்.
அவர் வாழ்க! அவர் பண்புகள் வாழிய,
இதே ஞான்று இன்னும் இருவருக்கு என் இதய நன்றி சொல்ல வேண்டும். ஒருவர் என்னரும் நண்பர் இ. மகேந் திரன்; அடுத்தவர் அவரது அன்னை யார் திருமதி பொன் னம்மா அவர்கள் . அப்பழுக்கற்ற அன்ர்ைதம் அன்புக்கும், உதவி செய்யும் மனப்பான்மைக்கும் இந்த ஏழைக் கலை 霞 ஞஞல் என்ன கைம்மாறுதான் செய்யமுடியும்?
O Ο O OO OO 9G. சரி, என் இனிய வாசகர்களே! எனது பூஜையில் நீங்கள் கலந்துகொள்ளுங்கள். அதன் தாரதம்யங்களை அவசியம் தீட்டுங்கள்.
மன விசாலத்தோடு எதிர்பார்க்கிறேன்.
"ರಾಖ ಹಿಜ್ಬು ೫g೧Nಹಯೋ' விஜயேந்திரன்
to6i) sl) II 4slio.

Page 4
அர்ப்பணம்
'ஆசுகவி’ வேலுப்பிள்ளை அவர்களின் ழக னும், "நமது தாயகம்" என்ற புரட்சி நூலே எழுதிய தன் மூலம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையே கிடு கிடுக்க வைத்தவரும், ஆங்கில - தமிழ் இலக்கியங் களிலே மிக ஆழமான புலமையும், படைப்பாற் றலும் பெற்றுத் தனது காலத்தின் தலைசிறந்த எழுத் தாளராக விளங்கியவரும், 'ஈழகேசரி’ 'தினகரன்’ V, II, I ‘தமிழன்’ ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், வேறு சில ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பிரதம ஆசிரிய பதவிகளே வகித்துச் செயலாற்றியவரும், எனது கெளரவத்துக்தரிய பெரிய தந்தையாந0ாகிய அமரர் க. வே. சாரங்கபாணி அவர்களின் மகத்துவஞ் செறிந்த நினைவுக்த இந் நூலே அர்ப பணிக்கிறேன்.
 
 
 
 

எல்லையற்ற வானம் தனது உஷை நகையை கிழக்கி லிருந்து வீச ஆரம்பிக்கின்ற சுபவேளை தொட்டு, மாலைப் பொழுதிலே வெய்யவனின் தங்கக் கதிர்கள் மேற்கின் மார்பகத்தே முகம் புதைக்கும் காலம்வரை இயற்கை அன்னையின் இன்ப விளையாட்டுகளிலே மனந் தோய்ந்து கிடப்பான் அந்தக் கலைஞன்.
அம்மட்டா? அழகுத் தேவதையின் முலைப்பாற் சுரப் பான நிலா மழையிலும் காலந்தெரியாது கிடப்பது அவ னுக்குப் பிரியமான சங்கதி.
இன்னமுஞ் சொல்லப்போனல் அழகு ராஜ்யத்தின் பெருமிதச் சின்னங்களான கோடி இனப் பூக்களிலே - சாயாத சத்யத்தைப் பாவாகப் பாடிச் செல்கின்ற நதிக் கவர்ச்சிகளிலே, சப்தித்தோடும் சமூத்திரங்களிலே இப் படியான இயற்கை லீலைகளிலேயே தன் பொழுதை - காலத்தை செலவிட்டுத் திரிந்தான் அக் கலைஞன்.
இத்தனைக்கும் மேலாக அவன் விரும்பியது இளமை யின் பூரிப்பிலே உருப்பெற்றுத் திரிகின்ற இனிய கேண் மைக் கனிகளை,
ஆம்! அவற்றைச் சுவைப்பதில் - சுகிப்பதில் அவன் வெகு சமர்த்தன்.
இவ்வாருன, கனவுகளே அவன் வாழ்க்கையாக இருந்த சந்தர்ப்பத்திலே கலையின் மதுரமறியாத - அதன் ஜீவனைப் புரிந்து கொள்ளும் திறனற்ற ஒரு சிவப்புச் சட்டை எழுத் துக்காரன் அந்தக் கலைப் பித்தனைச் சந்தித்தான்.
W

Page 5
s
"ஏ கலை ஞ னே! பாடுபடுகின்ற பாட்டாளிகளைப் பார். முதுகொடிய உழைக்கின்ற உழை ப் பா விரி க ளை ப்
பார். இந்தப் பரிதாபத்துக்குரியவர்களை அண்டிப் பிழைக்
கின்ற முதலாளி முதலைகளைப் பார். இவை கண்டு நீ பேசா மடந்தையாக இருக்கலாமா? உன் எழுத்துக்களை - உன் சிந்தனைகளை இவற்றுக்கல்லவா அர்ப்பணஞ் செய்ய வேண்டும்???
கலைஞன் சிந்தித்தான். சரி என் கனவுகளை எழுத் துக்களைச் சாமான்ய காரியங்களுக்குப் ப ய ன் படுத்திப்
Tri G3. Tub.
இந்த முடிவோடு கலைஞன் சிவப்புச் சட்டை எழுதி
துக்காரனைத் தொடர்ந்தான்.
அன்று தொட்டு அக் கலைஞன் பாட்டாளி வர்க்கப்
பிரதிநிதியானுன்.
தன் எழுத்தைச் சாதாரண பிரச்சனைகளிலே ஒட விட்டான். அவன் ஜீவிதம் இயந்திர மயமானது.
வெற்று ஆரவாரங்கள் - பாமரத் திருப்திகள் - எந் திர வாழ்க்கை முறை இவற்றிலே அக் கலைஞனல் வெகு காலம் ஆழ்ந்திருக்க முடியவில்லை.
கலைஞன் எழுந்தான். பழைய அழகுக் கனவுகள் அவன்
இ த ய த் தி ற் சிறகு விரித்தன. பரந்த வானைப் பார்த் தான். அங்கே செம்பரிதி.
**அட மூடனே! என் அழகை ஏனடா நீ மறந்தாய்?’’ என்றது.
விரிந்த கடலைப் பார்த்தான். அது பேய்க்குரலில்: 'நீ ஜடமேதான்’ என்று கத்தியது. அழகு இராஜ்யத்தின் பெருமிதச் சின்னங்களான பூக் களைப் பார்த்தான். அவை கலைஞனை 'வா! வா!' என வாஞ்சையோடு அழைத்தன.
 
 
 
 

7 کار می۱
ஃ நதிகள் யாவும் 'நீ ஏன் எம்மை மறந்தாய்? என்
அக் கலைஞனுக்கு மிகப் பிரியமான வனப்பாள் குமரர் கள் யாவரும் -
"எங்களுக்குப் ப ற் றுக் கோ டா க உள்ள கொழு கொம்பே நீ வருகிலாயோ?" எனத் தம் தீங்கனிக் குர லால், நிர்மலமான தமது விழிகளில் ஏக்கம் குடிகொள்ள கலைஞனை நோக்கிப் பேராவலோடு கை நீட்டினர்கள்.
கலேஞன் புத்தி தெளிந்தான். பூரண சக்தி எதுவெ னப் புரிந்தான். அழகுக் கலையே தன் உயிரென உணர்ந் தான்.
அழகெனும் பொன் மாளிகையிலே தன் இதய ஆவ லைத் தணிப்பான்வேண்டி நுழைந்தான்.
'ஏ கலைஞனே! ஏ கலைஞனே!"
சிவப்புச் சட்டைக்காரன் அவனைத் துரத்திக் கொண் டோடினன். அவன் கலைஞனைத் தொடர முடியாதவாறு திடீரென அழகு மாளிகையின் கபாடங்கள் மூடின.
ஒரு கம்பீரமான குரலொன்று,
**இது செளந்தர்ய தே வா ல ய ம். இங்கே பாமரர் களுக்கோ, பாமரப் பக்தர்களுக்கோ, கலையை உணரத் தெரியாத மதிகேடர்களுக்கோ இடமில்லை" எனச் சொல் லியது. -
அப்படிச் சொன்னது யார்?
கலையையும், அழகையும் எந்தக் கடவுள் படைத்தானே அவனே அப்படிச் சொன்னன்.
举责

Page 6
நீதி நின்று கொல்லும்
அந்த ஊரில் அவனே ராஜா, அவன் இட்டதே சட்
டம்; அராஜகமே அவன் ஆட்சி முறை.
ஏழை மக்கள் அவனுல் சொல்லி முடியாத கஷ்டம் உற்றர்கள். "எத்தனிவன் ஒழியும் நாளே எமக்கின்ப நாள்' என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.
அந்த ஊரிலே வசித்த அழகிய இளம் பெண்கள் ஆயி " ரம் தெய்வங்களிடம் அழுது புலம்பியும் முதல்தர லீலா விநோதஞன அவ்வூர் மன்னனின் பார்வையிலிருந்து தப்ப மூடியவில்லை.
பெண்களைப் பெற்றவர்கள் பேதலிக்க - ஏழைகள் ஏங் கிச் சாக - நல்லறிஞர் இதயம் மிகநோக அந்தக் கொடுமை மிக்க அரசன் தனது அறங்கோடிய ரா ஜா ங் க த் தை நடாத்திவந்தான்.
அதோ! அந்த அரக்க மனங்கொண்ட அரசனுக்குப் பின்னல் ஏதோ பயங்கரப் பி சா சி ன் வயிற்றிற் பிறந் தாற்போல ஒருவன் நிற்கிருனே, அவன்தான் அந்த அர சனின் முக்கிய ஆலோசகன் - அமைச்சன். அவனே நாச காலஞன வேந்தனின் காட்டுத் தர்பார் ஆட்சிக்குத் திட் 《་ டங்கள் தீட்டிக் கொடுப்பவன்,
2.
அது அமைதியான நதிக்கரை, அந்த நதிக்கரையிலே
'அவ்வூரிலேயே வனப்புமிக்கவன் இவனே’ எனச் சகலரும் சான்று பகர்ந்த பதினைந்து வயதான சிருன் குமாரநம்பி
 
 
 

δ. 9
^: கனவு காணும் - முரண்பாரைக் கனவு கானச் ', செய்யும் கண்கள் நதியை உற்றுப்பார்க்க உட்கார்ந்திருக் N கிமுன். அவனுக்குப் பக்கத்தே கூர்மையான கண்களோ டும், பரந்த நெற்றியோடும், தி ட காத் திர சரீரியாக அமர்ந்து, அச் சிருன் குமார நம்பியின் கேசத்தை நேசத் தோடு தடவியபடி உள்ளாரே அவர் பார் தெரியுமா? அவர்தான் அவ்வூர் ராஜசபையின் ஆஸ்தான கவிஞன்.
அரசன் தீயவனே ஆயினும் கொஞ்சம் தலா ரசனையும் மிக்கவன். ஆதலால் அவ்வப்பொழுது கவிஞர் பெருமா னை 'மதன பித்தனின் கவிதைகளைக் கேட்டானந்திக்கத் தவறுவதில்லை.
கவி அந்தப் பெரிய இராஜசபையிலே கம்பீரமாகத் தனது வெண்கலக் குரலிலே பண்ணுேடினேந்த பைந் தமிழ்ப் பாமாலைகளை இசைக்கின்றபோது மன்றெல்லாம் மகிழ்ச்சி லாகிரி லயிப்பிலே நர்த்தனம் புரியும்.
தனது மேதையால் ஊராரின் ஒருமித்த பாராட்டுத் ஆலப் பெற்றது மட்டுமின்றி கொடுங்கோன்மை அரசனுல் கூட கெளரவிக்கப்பட்டார் அக் கவிஞர் பெருந்தகை.
இது கண்டு அரசனின், நரித்தந்திர அமைச்சன் மனம் புழுங்கினன். பொருமை அவனைப் பிடித்தாட்டியது. கவி ஞர் முகத்திற் கரிபூச ஒரு சந்தர்ப்பத்தை வேண்டி நின் முன் அவன்.
3.
அரசனின் மிருக ஆட்சிக்கு மேன்மேலும் எண்ணெய் வார்த்தான் அமைச்சன். அரசனே முன்னையிலும் பார்க்க பெரிய மது பக்தனுகி - மாதுலோலணுகி ச ர் வா தி கா ர சண்டாளனுமாக மாறினன்.
ஒரு நாள் ஒரு சம்பவம் நடந்தது. அரசனுடைய உறி வுக்காரப் பெண்ணுெருத்தி சபையின் இளம் காவலாளி ஒரு வன்பால் நசையுற்ருள்.

Page 7
10 \
செய்தியை அரசனுக்கு உடனே எட்டச் செய்தது" மட்டுமல்லாது 'முறையான பாடம் படிப்பித்தாலொழிய மேற்கொண்டும் இவ்வாறன ச ம் ப வங் க ள் நடக்காது தடுக்கமுடியாது' எனக் கூறி அரசனை முடுக்கிவிட்டான் மந்திரி.
மிருகத்தனமான அரசன் அந்த இளம்பெண்ணையும், அழகிய காவலாளி இளைஞனையும் விசாரணைக்கு இழுத்து வரச் செய்தான். இருவரதும் ஆடைகளைப் பலவந்தமா கக் களையச் செய்து, முதலில் அந்தப் பெண்ணின் கோயிற் தூணன்ன தொடைப்புறங்களிலும், அவளின் பருவ விருந் துக்குச் "சலாம் போட்டு வரவேற்கின்ற தனங்கள் மேலும் சவுக்கினல் அடிபோட எழுந்தான்.
அந்த அழகிய இளைஞனுக்கும் கூறவே மனங் கூசக் கூடிய தண்டனைகள் வழங்க அரசன் சித்தமானன்.
அரசன் தண்டனையை நிறைவேற்ற முற்பட்ட அதே
* நிறுத்து! நீதிகெட்ட நீசனே நிறுத்து! நாதியற்ற வர்க்கு நலிவு செய்யும் நாசனே நிறுத்து!"
கம்பீரமான குரல் மேற்கண்டவாறு கனன்றுரைத் தது. அரசன் ஒருகணம் ஸ்தம்பித்தே போய்விட்டான்.
எதிரே ராஜ்ய கவி ரெளத்ரகாரமே உருவாக நிற்கக் :5 கண்டான். மறுகணம்
ஏ! புலவனே, நீ பேசுவது மாமன்னனிடம்! நான் நினைத்தால் ஒரு வினடியில் உன்னைச் சாக்காட்டுக்கு அனுப்பிவிட முடியும்'
* மன்ன! தர்ம விரோதத்துக்கும் ஒரு எல்லையுண்டு. பாவம் இளம் காதற் புருக்களை நீ ஹிம்சிப்பது தெய் வத்துக்கே அடுக்காது.'
 

I
*ஏ! மூடக் கவியே மூடு உன் வாயை. நீ ஒரு கவி என்றபடியால் இத்தோடு மன்னித்துவிடுகிறேன். இன்றி லிருந்து நீ இச் சபையின் ஆஸ்தான கவிஞனல்ல'
'அரசனே! அழிவு ப் பாதை உன்னை அண்மித்துக் கொண்டிருக்கிறது. "மனிதனை அழிக்கும் முன்பு கடவுள் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்கிருன்" என்பார் களே! அது முற்றிலும் உண்மையே. நீ எக்கேடும் கெட் டுப் போ! நல்ல வர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்'
கவிஞர் சபையைவிட்டு ஆவேசமாக வெளியேறினர்.
அரசன் தன் கொடும்பணியைத் தொடர்ந்தான்.
4.
கவிஞன் அரச நிந்தனைக்கு ஆளான சம்பவங்களை அசட்டை செய்து அமைதியான நதிக்கரையிலே அமர்ந்து கொண்டு அற்புதமான காவியங்களைச் செய்தார். ஒய்ந்த நேரத்திலே தனக்குதவி புரிந்து - தன் பால் உழுவலன்பு பூண்டொழுகும் கவின் கொழுந்தான குமாரநம்பியோடு சல்லா பித்து மகிழ்வார்.
* சிறுவனே! என் உள்ளத்தே பாடாது கிடந்த அமர 』 காவியமே உன் உருக்கொண்டதடா' எனச் சொல்லிக்
கொள்வதில் கவிஞருக்குச் சாந்தி கிடைத்தது.
ஒரு நாள் இரத்தவெறி வேந்தனின் குள்ளமதி அமைச்
முன் அமைதியான ஆற்றங்கரையிலே " சுந்தரச் சுவை' என்ற காவியம் செய்துகொண்டிருந்த கவி மதன பித்தனை ஏளனமாகப் பார்த்து,
"புலவனே! இன்னமும் நீ இற க் கா தி ரு க் கி ன் றனையே’’ என "குத்தல்மொழி பேசி நிற்க,
'தூ'வென அந்த நரிஅமைச்சரின் முகத்திலே காறித் துப்பினுன் இளங்கன்ருண குமாரநம்பி.

Page 8
2
'ஆ என் மானம் போனது; என் மானம் போனது' , இப்படிச் சொன்ன மந்திரி 'சந்தர்ப்பம் வரட்டும்' என சினந்து சென்ருன்.
5.
நாட்கள் கரைந்தன. அரசன் கட்டு மீறிக் கயமைகள் புரிந்தான். 'இம்' என்ருல் சிறைவாசம்’ ‘ஏனென்ருல்" * வனவாசம்’ என்ற நிலை இருந்திருப்பினும் பரவாயில் லேயே! 'இம்" என்றவுடனேயே இ ய ம லோ க வாசமே மக்களுக்குக் கிடைத்தது.
அரசனின் அட்டுழியந் தாங்க முடியாத இளம்பெண் கள் தற்கொலை புரிந்தார்கள். வாலிபர்கள் விக் கி த் து நின்றர்கள். தாயர், தந்தையர் இ த ய ம் வெடித்துச் செத்தார்கள்.
ஒரு வாலைக் கு ம ரி பிற ந் த மே ணி யோ டு தன் மானத்தை மறைக்க, அபயமளிக்க முடியாத கைகளாற் பகீதரப் பிரயத்தனம் புரிந்தபடி ஆற்றைநோக்கி ஓடி வந்தாள். அவள் பின்னல் காமப் பிசாசான அமைச்சன் 'விட்டாற் பார்' என்றபடி ஒடி வந்தான்.
கவிஞர் கனன்ருர்; எழுந்தார்; "ஏ! காமுகனே அந் தப் பெண்ணைத் தீண்டாதே!'
பதிலுக்குப் பயங்கரமாகச் சிரித்த அமைச்சன் " " கவிக் குரங்கே ஒழிந்து போ' என்றபடி வாளை உருவினன்.
ஒரே ஒரு கணம்.
'அம்மா' என்ற அலறலோடு நிலமிசை வீழ்ந்தான். அமைச்சன்.
சிருன் குமாரநம்பி அமைச்சனின் பின் மண்டையிலே கூர்க்கல்லாற் தாக்கிய பெருமிதத்தில் நின்றன் ,

13
கவிஞர் பூரிப்போடு அவனைப் பார்த்தார். பின் அந்
தப் பெண்ணிடம் 'பெண்ணே! இந்தா, இதனை அணிந்து
"கொள்' என்று தனது நீண்ட சால்வையை அவளுக்குக்
கொடுத்து விட்டு,
* 'இனிச் சகியேன், இந்தக் கொடிய அரசனை அறம் பாடியே அழிப்பேன்; நீதியை நிலை நிறுத்துவேன்" என திடசங்கற்பத்தோடு சொல்லிச் சென்ருர்.
கன்னியுஞ் சிறுவனும் அவரைத் தொடர்ந்தனர்.
6.
இரு நாட்கள் கழிந்தன. கொடுங்கோல் வேந்தன் குடைசாய்ந்தது. மன்னன் மாண்டே போனன். கன்னியர் களித்தார்கள். காளையர் புத்துணர்ச்சி பெற்ருர்கள். ஊரார் உத்சாகமுற்ருர்கள். அனைவரும் ஒருசேரத் திரண்டு,
“கவிஞர் பெருமானே! நீங்களே எம் இரட்சகர். எம்மை நீங்களே ஆளவேண்டும்' என்றனர்.
கவிஞர் புன்னகைத்தார். அவர் சொன்னுர்: *" குடிகளே குடிகளை ஆள்க! அதுவே நீதி! உங்களுக்கு இஷ்டமெனில் நான் நல்லாலோசனைகளை அவசியமான போதுகளில் வழங்கக்காத்திருக்கிறேன்.'
அந்த ஊரிலே மக்களால் மக்களுக்காக நடாத்தப் படும் குடியாட்சி பூத்தது. மக்கள் நல்லாலோசனைக்காக கவிஞர் பெருந்தகையைத் தேடிச் சென்ருர்கள்.
அதோ! அந்த அமைதியான ஆற்றங் கரை, அதன் மடியிலே கவிஞர் மதன பித்தன் வழமைபோற் காவியக் கனவுகளில் நீந்தித் திரிகிருர், அவருடைய ஆற்றல்மிக்க வலக் கரம் வனை மிக்க குமாரநம்பியின் கேசத்தை அன் பாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

Page 9
14
அந்த வேடன்
உலகக் காட்டிலே அந்த வேடன் வே ட் டை க் கு ப் புறப்பட்டான்.
*- சாதாரணமாக மனிதர்கள் யாவருமே வயிற்றைக்
கழுவுந் தொழிலைத்தானே தெரிவுசெய்வார்கள்? ஆனல் அந்த வேடன் அப்படிச் செய்யவில்லை.
அவன் தன் ஆத்மபசிக்கே இரைதேட விரும்பினன். அழகு மின்னுகிற, யெளவனம் ஜாடை காட்டுகின்ற பட்சிகளை நோக்கி அவன்தன் பயணத்தை ஆரம்பித்தான்"
தனது பயணத்தின் நடுவிலே பல வேடுவர்களை அவன் சந்தித்தான். அவர்களும் அவனைப்போலவே வேடர்கள் தான்.
ஆணுல், அவர்கள் விருப்புகளே தனி.
உலகத்துப் பொரு 3ள எல்லாம் தானே அடையத் துடித்த வேட்டைக்காரன்,
உலகமெங்கணும் என் அதிகார ஆட்சியே இருக்க வேண்டுமெனத் துடித்த அராஜகத் தன்மைமிக்க வேட் டைக்காரன்,
கடவுளின் மென்னியைத் தன் கால்களால் நசுக்கிக் கொண்டே கதிமோட்சம்’ கேட்கின்ற வேட்டைக்காரன்.
வலோத்காரத்தால் தன் இரத்த வெறிச் சித்தாந் தத்தைச் செயற்படுத்த விழையும் வேட்டைக்காரன்.
o

15
இப்படியான பல வேட்டைக்காரர்களை அவன் உலக கானகத்தே சந்தித்தான். இதில் என்ன அதிசயமென்ருல் அந்தக் காட்டுக்குள்ளே, அவர்களே வேடர்களாகவும் இருந்தார்கள். அவர்களிற் பலரே கர்ஜிக்கும் சிங்கமென . சீறும் புலியென இன்னமும் பல கொடிய விலங்குகளென வும் இருந்தார்கள்.
அந்த ஒரு வேடன் மட்டும் அழகிய ப ற  ைவ களை
நேசித்தான். அவற்றை அனபு வேட்டையாட விரும்பி
ஞன். அவற்றையே அவன் கனவாய், கருத்தாய், நினை வாய், நிம்மதியாய்க் கருதி வாழ்ந்தான்.
எத்தனையோ அ ழ கு தம் அருகிலேயே இருக்கவும், அதனை உணர்கின்ற பக்குவமற்று, அவற்றை அநுபவிக் கின்ற நினைவுகள் அற்றுத் திரிந்த அசட்டு வேடர்களுக்கு நடுவே அந்த ஒரு வேடன் மட்டும் அழகுகளை அணைத் தான். ஆனந்தித்தான்.
இவ்வாருண மகிழ்ச்சிகளிலே கலாரசிகனுன வேடன் உள்ளாழ்ந்து திரிகையிலே அந்த உலகக் காட்டிடைத் திரிந்த வேற்ருவல் வேடர்கள் உறுமினர்கள். மாற்றுக் கருத்து மிருகங்கள் அப்பாவி வேடனை நா லா புற மும் கொலைவெறியோடு துரத்தின. -
இவற்ருல் அந்த வேடனின் ஆசைக் கனவுகளை அழிக்க முடியவில்லை. அவனது சுந்தர வேட்கையைச் சுட்டெரிக்க முடியவில்லை.
ஒருநாள் -
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அவனுக்கு எதிர்ப் புகள் வலுத்தன.
அடிகள் - உதைகள் - கடிகள் தாராளமாக அக் கலை வேடனுக்குக் கிடைத்தன.

Page 10
I 6
தாக்குண்ட அவன் ஒடினன். எங்கென்று அவனுக்கே"
தெரியவில்லை.
அந்த வேடன் விழைந்த ப ற வை க ள் அவன் பக்க லிருந்து பிரிக்கப்பட்டன. தன்னந் தனியணுய்த் துரத்தப் பட்ட ஏகாங்கி வேடன் புல்லர்தம் அட்டகாசத்தால் ஆருத அல்லலுற்றன்.
ഥേയ്ക്കേ - வானத்தே - மோனத் தவத் தாழ்ந்திருந்த கடவுளின் மனச்சாட்சி அவரையே கிண்டியது. -
கீழே - பூமியிலே அந்த அழகு விரும்பிக் கலைஞன் படும்பாட்டை அது தீர்க்கமாக எடுத்தியம்பிற்று.
கடவுள் கண்ணைத் திறந்தார்.
சாந்தியின்றிப் புவனக் காட்டிடைத் தனியனுக்கப் பட்டு - விரட்டப்பட்டு - சித்திரவதைக் குள்ளாக்கப்பட்ட வேடன்பால் கொடிய சர்ப்பமாக உருக்கொண்டு வந்தார்
கடவுள்.
அந்த வேடனின் ஆத்மா வை, கருணை பெருகுந் தன் கரங்களிலே ஏந்தியபடி அவர் தன்னகம் விரைந்தார்.
உலகத்துப் பேய்கள் - உன்மத்த நாய்கள் அந்தக் கலை வேடனின் வெற்றுடலைச் சாப்பிட்டுத் தம் "சுய தேவையைப் பூர்த்தி செய்தன.
+《★

I 7
சிருஷ்டி கர்த்தனு ன பிரமனுக்கு வானலோகத்து அழ கரசனன் மதனனின் போக்கிலே வெறுப்பு விளைந்தது.
'ஏ ரதியே! என் அழகு எவருக்குமே இல்லையடி’
இப்படி மதனன் தன் மனைவியிடம் மட்டும் பெருமை அடித்துக்கொண்டிருப்பானேயாகில் நிச்சயமாகப் பிரம னுக்கு அவன் பால் வெறுப்பு ஏற்பட்டிருக்க முடியாது.
பெண்டாட்டியிடம் , தன் பிரதர்பங்களைப் பீற்றிக் கொள்ளாத ஒரு ஆண்மகனை, பிரமன் மூவுலகிலெங் கணுமே இன்னமும் படைக்கவில்லையே!
விஷயம் அதுவல்ல; **மதனன் தானே நிகரற்ற அழ கன்' என்ற த லை க் க ன த் தை ரதிதேவியிடம் மட்டும் காட்டவில்லை. மாருகக் காண்பார் எவரிடத்தும் அக்
கருத்தைக் கழறிஞன்.
அழகுக் கடவுள்கள் என அன்பர் கூட்டம் வழிபடு கின்ற கண்ணபரமாத்மாவைக் காட்டிலும், முருகவேளைக் காட்டிலும் தானே அழகுவாய்ந்தவன் என மதனன் தலே வீங்கித் தனமாக நடந்துகொள்ளலானன்.
கிருஷ்ணனது துணைவியரும், முருகனது மனைவியரும் 'இந்த மதனனுக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டது' என நகையாடினுர்கள்.

Page 11
8
2.
நாளுக்கு நாள் மதனனின் தலைக்கணம் எல்லைமீறிப்
போய்க்கொண்டிருந்தது. இதனைச் சகிக்கமாட்டாத நிலை யில், வானலோகத்தின் பேரழகு எனக் கவிகள் பெரு மிதப்படுகின்ற பாரிஜாத புஷ்பமானது,
"அடே மன்மதா! நீ கண்ண பெருமானைக் காட்டி லும், குறிஞ்சிக் குமரனை விடவும் மேலான அழகுள்ள வன் எனப் புலம்பித் திரி கிருயாமே! அவர்கள் இருக்கட் டும்; பெருங் கவிகளே வியந்துரைக்கின்ற என் அழகில் பாதியாவது உன்னிடத்து உண்டா?' என்று ரோஷத் தோடு கேட்டது.
மதனன் வெகுண்டான். அந்த அழகிய பாரிஜாத பூவின் மென்மேனியைக் கசக்கி எறிந்தான்.
இந்த அநியாயத்தைக் கண்ணுற்ற தென்றலானது அந்தக் கசங்கிய மலரைக் காவிச்சென்று பி ர ம னி ன் காலடியிற் போட்டது.
'அடடா! அழகிய பூவே! உன்னைச் சின்ன பின்ன மாக்கிய உன்மத்தன் யார்?'
ஜீவ மரணப் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த அந்தப் பாரிஜாதப் பூ சொன்னது:
** என்னைப் படைத்தவனே! த லைக் க ன மிகுதியால் தானே யாவரிலும், யாவையிலும் அழகுமிக்கவன் என்று சொல்லித் திரிகிருனே மன்மதன்? அவனே என்னை மாசு படுத்தினுன் , '
சொல்லி முடிந்ததும் பிரமனின் கைகளிலேயே தன் உயிரைவிட்டது அந்தப் பூ!
* அப்படியா சங்கதி? இனி ஒரு கணமுந் தாமதிக்கக் கூடாது. இந்த வானக வாசியான மதனனின் வீண் தம்
݂ ݂

I 9
பட்டங்களை அடக்க வேண்டுமானல் மண்ணகத்திலேயே . மானிடர் குலத்திலேயே நான் ஒரு அழகன உற்பவஞ் செய்ய வேண்டும். அந்த மானிடன் தேவரிலும், யாவரி லும் மேலான அழகோடு துலங்கவேண்டும்.
பிரமா இந்த முடிவோடு எழுந்து நடந்தார்.
3.
வானையே கூரையாகக் கொண்ட பூமியிலே - ஆசியா நிலப்பரப்பிலே - மரகதத் தீவு என வர்ணிக்கப்படுகின்ற மாங்கனி வடிவத் தீவிலே - சிறு கிராமம் ஒன்றிலே மூவுல கிலும் இணையில்லாத பேரழகனைச் சிருஷ்டி செய்தார் பிரமன்,
அந்த ஒப்பற்ற அழகுப் பொருளைச் சாதாரண ஜனங் கள் இனங்காணவே இல்லை. வெறும் ஜடத் தத்துவங் களிலே கண்மூடித்தனமாகத் திளைத்துக்கிடந்த சித்தாந்த வல்லுநர்களுக்கும், எழுத்துக்காரர்களுக்கும் அந்தக் கலைப்பொருள்பற்றி ஒன்றுமே புரியவில்லை.
4.
வானத்திலே, 'நானே அழகன்' என அரற்றித் * திரிந்த அநங்கன், பூமியின் சகல காட்சிகளையும், மர்மங்
களையும் காட்டுகின்ற விநோத ஸ்படிகத்தினூடாக மானிட அழகனைப் பார்த்துவிட்டு,
'அவன் யார்? சாதாரண ஒரு மானிடன்; என்னை விட உன்னதமான அழ கோ டு உலவித் திரிகிருனே; ஐயோ விதியே!' என்றலறியபடி தலை கவிழ்ந்தான்.
முதன்முதலாகத் தன் கொழு ந னை க் காட்டிலும் கோலம் மிக்க ஒருவனைப் பூமியிலே காண நேர்ந்தமை ரதியின் நெஞ்சிலே ஒரு இன்பமயமான சலனம் தோன்ற ஏதுவானது.

Page 12
20
ரிஷிகளாலும், காவியப் புலவர்களாலும் "ஒழுக் கத்தை விட்டகலா உத்தமி' எனப் புகழ்ந்துரைக்கப் பட்ட தேவியானவள், தன் சக்திக்குச் சவால்விடுகின்றி ஒப்பில்லாச் செளந்தர்ய அனலில் வீழ்ந்து புழுவென தெளிந்தாள். துடித்தாள்.
சேதி அறிந்த மன்மதன் வேதனைக்கடல் வீழ்ந்தான்.
5.
"அந்த அற்ப நரனை அழித்தேயாக வேண்டும். மன்மதன் கடுஞ் சீற்றத்துடன் காலக் கடவுளின் இடத் துக்குச் சென்ருன்.
அவன் பிரயத்தனம் பலிதமாகவில்லை. * தலைக் கொழுப்புப் பிடித்த உனக்காக - சிருஷ்டி கர்த்தனைப் பகைக்கின்ற சந்தர்ப்பத்தை நான் உண்டு பண்ணவிரும்பவில்லை."
இப்படிச் சொல்லிக் கை விரித்துவிட்டான் காலக்
கடவுள்.
6.
ரதி தேவி அல்லும் பகலும் மண் மீது வாழும் அழ குத் தெய்வத்தை நினைந்து நினைந்து நெக்குருகினுள்.
இப்பொழுது ரதி-மன்மத தா ம் பத் ய ம் அறவே அறுந்துவிட்டது.
*மதனன் தனது ஆற்ருமையால் உருகுகிருனே தவிர அவனது "த லேக் கனம்" இன்னமும் குறைந்தபாடில்லை"
இவ்வாருண முடிவோடு பிரமன் தன் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தான்.

21
ரதிதேவி மன்னவன் காதலாற் பித்தானுள் அல்லவா? தனது ஆ சை களை ஈடேற்றுதற்காக மூவரையும் நினைந்து கடுந் தவம் புரிந்தாள் அவள்.
ரதியின் பிரயாசைமிக்க தவத்தை உணர்ந்துகொண்ட பிரம்ம, விஷ்ணு, உருத்திரன் மூவரும் ஒருசேர வந்து,
**பெண்ணே உன் கோரிக்கை என்னையோ?" என்று ஆர்வத்தோடு கேட்டார்கள்.
ரதி சங்கோஜத்தோடு: 'நான் - நான் பூமியிலே வாழுகின்ற அழகிய மானி டனை - அழகுத் தெய்வத்தை முற்ருகப் பிரேமிக்கிறேன். அவன் என் துணைவன் மத னனைக் காட்டிலும் அழகான வன். தேவரீர் தயவாலேயே என் தவக் கனவு நினைவாக வேண்டும்' என்ருள்.
மூவரும் அர்த்த புஷ் டிமிக்க மென்னகையோடு அவளை ஆசீர்வதித்துச் சென்ருர்கள்.
7. ரதி பூமி சென்று மானிட வழிமுறைகளை அனுசரித்து அந்தப் பேரழகனின் சிநேகம்பெறச் செயல்புரிந்தாள்.
"தலைக் கொழுப்புக்கார மன்மதனின் மனைவி ஒரு மானிடனை விழைந்து பூமியேகிவிட்டாளடா’
எல்லாத் தேவர்களும் மேற்கண்டவாறு சொல்லிக் கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஐயோ பாவம் மதனனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது.
'நான் உண்மை நிலை அறிந்தேன். அ க ங் கார ம் தவிர்ந்தேன். கடவுளரே என்னை மன்னியுங்கள்’
மன்மதன் பிதற்றித் திரிந்தான்,

Page 13
22
8.
-
பிரமன் தன் கருணு நோக்கை மன்மதன்புறம் திருப்' . s
பூமியிலே மானிடன் காதல் விழைந்த ரதி, தன் காதல் வெற்றியடையாததால் மீண்டும் ம ன் மத ன் இடத்தே வந்து சேர்ந்தாள்.
மமதை நீங்கிய மன்மதன் தனது ஆசை மனையா ளோடு புதுவாழ்வை ஆரம்பித்தான்.
ஐயையோ' அந்தப் பாழாய்ப் போகிற காலக் கட வுள் ஏன்தான் பூமிமீதுலவும் மானிட அழகுவேந்தனின் * அழகை' விழுங்குவதற்காக வாயைப் பிளக்கிருனுே?
*女
 
 
 

ས་
23
ராஜகுமாரியின் -gᏏᏛᏈᎦ
உதய ராஜ்யத்தைச் சேர்ந்த ராஜகுமாரி தேவிக்கு நெஞ்சிலே ஒரு ஆ  ைச நிறைவேருது நெடுநாட்களாய் அனல்மூண்டு கிடந்தது.
அவளைப் போன்ற கன்னி ரோ ஜா க் க ள் எல்லாம் வதுவை புரிந்து மகிழ்ச்சி மிகமே வ நாயகரோடு, நன் மக்களோடு களித்திருக்கையிலே, பாவம் அந்த ராஜகுமாரி
மட்டும் காலத்துக்கே சவால் விட்டுநிற்கும் தனது திவ்ய
யெளவனத்தோடு பருவப்பற்றுக் கோடற்றுப் பதைத்துக் கிடந்தாள்.
"ஒரு நாட்டின் ராஜகுமாரி! அவளுக்குத் திருமணம் புரிய ஆள் கிடைக்கவில்லையா? '
இப்படி என் வாசகர்களே நீங்கள் அசட்டுத் தனமா கக் கேட்டுவிடக் கூடாது.
அந்த ராஜகுமாரி லாவண்யத்தின் பிரபை, செல்வத் தின் செல்வம். கலையின் ஜீவ வீணை.
அவள் -
*உலகிலேயே எவன் சிறந்த அழகணுே அவனையே மணப்பேன்’ எனச் சொல்லி ஒற்றைக் காலில் நின்ருள். ஆனபடியாலேதான் - இருபத்தெட்டு வயதாகியும் அந்த அரசகுமாரிக்குத் திருமணம் நடக்கவில்லை.
பெரிய ராஜாவின் மனக் கவலையோ கூறி ஒழியாது.
தனது மகள், தன் ஏனைய புத்திரர்களைப்போல் மண வாழ்வின் சுகங்களை அனுபவிக்கவில்லையே!

Page 14
24
“மணந்தால் அனைத்துலகிலும் ஆணழகனய் இருப்ப வனைத்தான் மணம் புரிவேன்'
என முட்டாள்தனமாகக் கனவு கண்டுகொண்டிருக் கிருளே என்று மனம் வெதும்பினர் மாமன்னர்.
உலகின் பல நாடுகளுக்கும் தனது தூது வ ர் க ளை அனுப்பிப் பல நாட்டு அழகு ராஜகுமாரர்களையும், மற் றும் பெருமையற்ற குடும்பத்திற் பிறந்திருந்தாலும் அழ கோடு விளங்கியவர்களையும் தன் நாட்டுக்கு வரச் செய் தார்,
என்னே துர்திஷ்டம்? ராஜகுமாரிக்கு ஒருவரையுமே பிடிக்கவில்லே.
‘இவன் வாணர மூஞ்சன்; இவன் கழுதை மூஞ்சன்; அதோ அவன் கரடிப் பரம்பரையின் நேரடி வாரிசு'
இப்படியாக, நல்ல அழகுமிக்க ஆண்களையே அந்த ராஜகுமாரி ஏளனித்து ஒதுக்கினுள்.
உலகின் அதிமேன்மையான அழகனுக்கல்லவா அவள் மாலையிடக் காத்திருக்கிருள்.
எத்தனையோ ஆடவர்கள்! அவர்களில் யாரையுமே ராஜகுமாரி மோஹிக்கவில்லை.
காலம் தன் வழியே விரைந்துகொண்டிருந்தது.
இப்போது ராஜகுமாரிக்கு முப்பத்துமூன்று வயதாகி விட்டது.
அரசன் மனம் தளர்ந்துவிட்டான்.
"ஐயோ! இந்த அழகரசி தன் செளந்தர்யத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிருளே?’ இவ்வண்ணம் நல்ல அழகர்கள் ஏங்கித் தவித்தார்கள்.
 

25
'ஈசா! இப் பிறப்பில் என் மகளுக்குக் கல்யாணம் நடக்கப்போவதில்லையா? நீயாவது நான் கண்மூடும் முன் என் மகளை மணக்கோலத்தில் காண்பிக்கமாட்டாயா?"
மன்னர் நெஞ்சுருகப் பிரார்த்தித்தது கண்டும் கட வுள் தன் பாட்டிலிருந்தார்.
r / ஒரு நாள்!
உதய ராஜ்யத்துக்கு இலங்கா புரியிலிருந்து, அந் நாட் டின் புதிய இளவரசனும், அவனது இளைய சகோதரன் குமாரோதயனும் வந்தார்கள்.
இளவரசனை அழைத்து வந்த தூதுவர்கள் "இனியா வது ராஜகுமாரி கல்யாணம் பண்ணிக்கொள்கிருளா? இல் லையா என்பதைப் பார்த்துவிடுவோம்!' என்று தங்களுக் குள் சொல்லிக்கொண்டார்கள்.
நாட்டின் அமைச்சர் - பொதுமக்கள் - அரசகுடும்பத் தைச் சேர்ந்தவர்கள் யாவருமே,
'மிகவும் அழகனன இலங்காபுரி இளவரசன், உதய ராஜ்ய குமாரிக்கு மாலை சூடப்போகிருன்' என்று பேசிக் கொண்டார்கள்.
உதய நாட்டு அழகர்கள் எரித்துவிடுவதுபோல் அவ னைப் பார்த்துக்கொண்டார்கள்.
உதய நாட்டுக் குமரிகள் எல்லாரும் "எதையோ எதுவோ பார்த்து வாய் பிளந்து நின்றது' என்பார்களே அப்படி இலங்கா புரி இளவரசனைப் பார்த்துப் பிளந்த வாய் பிளந்தபடி நின்ருர்கள்.
அதோ ராஜ்ய சபை, பெரும்பெரும் அழகர்கள் - பலநாட்டு முக்கியஸ்தர்கள் யாவரும் அமர்ந்திருக்கின் ரு?ர்கள்.

Page 15
26
மாமன்னன் வழக்கத்திற்கு மாருக அமைதியுடனும்,
ஒரு புதிய நம்பிக்கையின் சாயை கதிர்வீசும் முகத்தோ.
டும் அமர்ந்திருக்கிருன்,
அதோபாருங்கள்!
பட்டே பாதமாக மலர்களே கன்னங்களாக, மீன் களே விழிகளாக அன்ன நடைபோட்டு நடந்து வருகிருள் ராஜகுமாரி தேவி.
மண்டபத்தே தன் தரிசனத்திற்கு வந்திருப்பவர்களை நோக்குகிருள் அவள்.
அடடா! அவள் கூர்விழிகள் இலங்காபுரி இளவரசன் மேற்பாய்கின்றன.
அட சே! ஒரே ஒரு கணந்தான் அவள் பார்வை அவன்பாற் பாய்ந்தன.
மறுகணம் -
உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் ஆசன பக்கல் அணுகுகிருள் தேவி.
‘என்ன? இத்தனை அழகனன இலங்காபுரி இளவரச னேயே ராஜகுமாரி விரும்பவில்லையா?*
பரவலாகப் பலரும் ஆச்சர்யத்தோடு பேசிக்கொண் LTர்கள்.
பெரிய மகாராஜாவோ,
'என் கனவுகள் கனவுகளே' என மண்டையில் அடித்துக்கொண்டு கதறினர்.
மறுநாள் -
 

r
27
ராஜகுமாரிதேவி வழக்கம்போல் மாலை நேரத்தில்
அந்த ராஜ்யத்துக்கே புனிதஞ் சேர்ப்பதாக அமைந்திருக்
கும் குமரன் கோவிலுக்குத் தன் தோழிகளோடு "தரிசன
சாந்தி’க்காகச் சென்ருள்.
ராஜ ரதத்தைவிட்டுக் கோயில் வாசலில் இறங்கிய
தேவியின் வதனத்தே மந்தகாச மின்னல் நெளிந்தது.
கண்கள், ஆண்டாண்டு காலம் ஏங்கித் தவங்கிடந்த காட்சி கண்ட களிப்பிலே நீந்தின.
ஆ! அது. அது யார்? என் அழகுத் தெய்வமே! நான் உன்னையே காலங்காலமாகத் தேடினேன்."
தேவி தனக்குள் கூறிக்கொண்டாள். பின் தோழிக ளிடமும்,
"அதோ அந்தப் பேரழகனைக் காண்மின்கள்! அவ னுக்காகவே என் யெளவனத்தைக் காத்தல் செய்தேன். அவனே என் இதய ஜோதி!'
இப்படிச் சொன்ன தேவியையும், அவள் சுட்டியவனை யும் பார்த்த தோழிகள்,
**இதென்ன கொடுமை? அந்தக் கோயில் வாசற் புறத்தே இருந்து பகவானை நினைத்துக் கண்ணை மூடிய நிலையில் நிற்கின்ற அந்தச் சிறு பையனையா எம் தேவி காமுறுகிருள்? அவனுக்குப் பதினுறு வயதுதானே இருக் Œ Lኸ?” ”
தோழிகள் தமக்குள் மேற்கண்டவாறு கருதிக்கொண் _(Tf756r.
"என்னடி கல்லாகிவிட்டீர்கள்? அந்தத் தெய்வ தரி சனத்தில் சொக்கிவிட்டீர்களா'
ராஜகுமாரிக்குப் பதிலிறுக்கத் தெரியாது தோழிகள் மெளனமானர்கள்.

Page 16
28
அன்றைய பொழுதுகள் ராஜகுமாரியின் உள்ளத்து
இன்பக் கனல் மூட்டிச் சென்றுகொண்டிருந்தன.
பூரண நிலாப் பொழிந்த அன்றிரவு தேவி தன் தந்
தையிடம் சொன்னுள்:
* "என் தந்தையே! என் நீண்ட நாள் கனவு நிறை வேறப்போகிறது. ஆம் தந்தையே, நான் தேடிய அழக னைக் கண்டேன்! அவனையே நான் விழைகிறேன்."
மகாராஜாவின் மனம் இன்பசாந்தி பெற்றது.
"அப்படியா? என் அன்பான மகளே! இப்போதுதான் என் ஆத்மா குளிர்ந்தது. யாரம்மா அவன்? நாளை காலையே நான் இங்கவனை அழைக்கிறேன்; நாளையே உன் திரு
põõõrb!”
மன்னர் மகிழ்வோடு சென்ருர், தேவி ஆவிக்கினி யானை நினைத்தாள். அமைதி இழந்தாள்.
மறுநாள் -
தேவியால் மோஹிக்கப்பட்டவனைக் கண்ட அரசர் சிலையானுர்,
'அட இந்தச் சிறுவனையா இவள் காதலிக்கிருள்? ஐயோ! இதென்ன அவமான கார்யம்?"
அதோ! வழக்கம்போல் மண்டபத்தே நுழைந்த ராஜ குமாரி அவனைப் பார்க்கிருள்.
அந்த அழகன் இலங்காபுரி வேந்தனின் இளைய சகோ தரன் என்பதறிந்து குதூகலித்தாள்.
ஆனல்?
அரசன் இந்த முறைகோடிய ஆசையை ஏற்றுக் கொள்ளவில்லை.
.p.

29
- சேதியை அறிந்து, அரச மண்டபத்துக்கு அழைத்து 1 ,வரப்பட்ட இளவலைத் தேடி இலங்காபுரி இளவரசன்
ஓடோடி வந்தான்.
மன்னன் ஆக்ரோஷத்தோடு ராஜகுமாரியிடம்,
'மகளே உன் வயதில் பாதி வயதே எட்டியுள்ள இந்தப் பாலகனையா விரும்புகிருய்? சீ! இதைவிட மதி கெட்ட தனம் என்ன இருக்கிறது?
அரசன் மட்டுமல்ல அனைவருமே "இது விபரீத ஆசை, இதனை விட்டுவிடுங்கள்' என்று ஒருமித்துச் சொன்னர் கள், !
தன் பிரயாண சல்லா பிப்புக்காகத் தான் அழைத்து வந்த தன் இள வலை ராஜகுமாரி காமுற்றதறிந்த இலங்கா புரி இளவரசன் வெஞ்சினங்கொண்டான்.
தன்ன அவமதித்த இந்த அரசி என் இளவலை - சின் னஞ் சிறுவன விரும்புகிருளா? ஆத்திரம் மிகவுற்ற இள வரசன்,
'அரசனே உமது மகள் முறைகெட்ட ஆசைக்காரி' என்ருெரு நிரூபத்தை அரசனுக்கு அனுப்பிவிட்டுத் தன்
தம்பியையும் அழைத்துக் கொண்டு தன் தேசம் போய் விட்டான்,
சேதி தெரிந்த தேவி துடித்தாள்.
'என் அழகுத் தெய்வமே! நீ போய்விட்டாயா? நீயன் ருே என் சம்பத்து? எனக் கதறினுள் நிலை கெட் டாள். நிம்மதி இழந்தாள்; பாவையவள் பைத்தியமாகவே மாறிவிட்டாள்.
எத்தனையோ நாடுகளிலிருந்து எத்தனையோ வைத்தி யர்கள் வந்தும் ராஜகுமாரியின் நோயை மாற்றமுடிய

Page 17
3 O
சீச்சி! அந்த ராஜகுமாரியின் சேதிகளே சொல்லதுே
மிகுந்த லஜ்ஜையாக இருக்கிறது. ܬܹܬܐ ܡ
பித்து முற்றிப்போனமையால் அந்த ராஜகுமாரி ஆர்ப் பாட்டம் செய்தாள்.
தன் துகில் அ விழ் த் து எவருக்கும் கட்டுப்படாத நிலையில் நடந்துகொள்ளலானள்,
பிறந்த மேனியோடு தன் அறையின் பிரமாண்ட மான நிலைக் கண்ணுடியின் முன்நின்று தகாதன செய்தாள் அவள் ,
பாவம் உலகின் தலைசிறந்த அழகனை விழைந்த அந்த ராஜகுமாரி, வைத்திய வல்லுநர்களுக்கே இனங்காண முடியாத - நோயின் முதிர்ச்சியினல் சில காலத்துக்குப் பின் செத்தே போய்விட்டாள்!
单责
 

31
6ñ âg uI rT
சர்வ சாதாரண குடியானவர்களையே மிகுதியர்கக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக்கு, மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்த மகாநுபாவர்களே எ த் துணை பாராட்டினுலும் தகும்.
ஆனல் துரதிர்ஷ்டவசமாக அந்தத் கிராமத்து மருத் துவ மனைக்கு உண்மையான தொண்டு மிக்க ஒரு டாக் டரோ - ஒரு நல்ல தாதியோ வந்தமையவில்லை.
மிக நீண்ட காலமாக நிலவி வந்த இந்தக் குறையி னேத் தீர்ப்பதற்காக நேர்த்தியான ஒரு தாதி மட்டும், வரப்பிரசாதம்போல் அந்த அமைதியான குக்கிராமத்துக் குக் கிடைத்தாள்.
சுமார் ஐந்தரையடி உயரம் மிக்க அந்தத் தாதியின் பெயர் வத்சலா. அவள், இன்றைய இளைஞர்களின் மன மோஹன் கனவுகளிலே ஏகாதிபத்தியஞ் செலுத்தக் கூடிய 'அப்சரஸ்' என்பது உண்மை தான். என்ருலும், மிக இளம் வயதிலேயே ஏதோ ஒரு மாபெரும் பொருளை இழந்துவிட்ட சோகத்துடனேயே - ஏக்கத்துடனேயே அவளின் தோற்றமிருந்தது.
ஒருவரிடமும் அதிகமாகக் கதைகள் வைத்துக்கொள் ளாத அந்தத் தாதி, தான் உண்டு; தன் பணி உண்டு என்ற மனப்பான்மையோடு செயற்பட்டு வந்தாள்.
எவ்வளவுதான் ஒதுங்கிப் போனுலும் சில சந்தர்ப்
பங்களில் கடவுளாகப் பார்த்து ந ல் ல உள் ள ங் கி ஆள
இணைத்துவிடுகிருன் அல்லவா ?

Page 18
32
அத்தகைய ஒரு அன்புத் தொடர்பு தாதி வத்சலா ν வுக்கு ஏற்பட்டது. அப்படிக் கிடைத்தவளோ, இந்துமதி என்ற தோழி. அவள் மிக விரைவிலேயே வத்சலாவின் வாத்சல்யத்திற் குரியவளாணுள். to
- s இந்துமதி வத்சலா குடியிருந்த வீட்டுச் சொந்தக்கார ரின் உறவுப் பெண்.
2. |
جدا , ا ܢ 1 ܛܐܠ ܐ
அன்று போயா நாள் மாலை. ஒருசில காலங்களே வத்சலா
தன்னுேடு நெருங்கிப் பழகியபோதும் ஏதோ ஒரு துயரச்
செய்தியை வத்சலா தனக்குள்ளேயே புதைத்து வைத் திருப்பதன இந்துமதியால் புரிந்துகொள்ள முடிந்தது.
பல நாட் கேட்கவேண்டுமென நினைத்திருந்த வியை அந்த இனிய மாலையிலே கேட்டாள் இந்துமதி.
'அக்கா வத்சலா! உங்கள் வாழ்வில் நேர்ந்த LD G)/2),ğ5 தான துக்கச் செய்தியை என்னிடம் எவ்வளவு காலந்தான் மறைத்துவைக்க உத்தேசம்?'
66 இந்து? அப்படி என்ன செய்தியை?
| o.g55TT ! நான் உங்கள் உடன்பிற வாத் தங்கையை ஒத்தவள்; ந ண் பி யா ய் உள்ளவள். உங்களை ஆட் டிப் படைக்கின்ற அந்தத் துயரச் செய்தியை என்னிடத்தே சொல்லி ஆறுதல் பெறமுடியாதா?’
வத்சலா விரக்தியாகச் சிரித்தாள்.
'ஆறுதல் இந்த ஜென்மத்தில் நான் பெறமுடியாத ஒன்றின் ஞாபகத்தை ஏற்படுத்துகிருப்'
'ஏன் அக்கா அப்படிச் சொல்கிறீர்கள்? என்வரை யில் ஆறுதல் அடைய முடியாத துக்கமென ஒன்றுமே கிடையாதென நான் நம்புகிறேன்.'
 
 
 
 

33
'இந்து நீ நம்புவாய்! சாதாரண துயரச் செய்திகளி விருந்து எவருமே ஆறுதல் பெற முடியும். ஆனல்?'
*சொல்லுங்கள் அக்கா" ஆறுதலே பெறமுடியாத துயரம் என்னைப் புற்று நோய் போற் பற்றியுள்ளதே!
'அக்கா நீங்கள் புதிர் போடுகிறீர்கள். உங்கள் வாழ் வையே வெறிச்சோ டிப் போகச் செய்த சேதியை எனக் குச் சொல்லுங்கள்'
ரன் அன்பான இந்து சமாதானமே அடைய முடி யாத அந்தச் செய்தியை உன்னிடம் நான் சொல்கிறேன். அதுவே ஒரு சோகக் காவியமடி.'
இந்து ஆவலோடு வத்சலாவைப் பார்த்தாள்.
3.
'நான் பள்ளியிலே படிக்கின்ற காலத்திலே எத்த
னேயோ சிநேகிதிகளைப் பெற்றேன். ஆனல், "பள்ளிச்
சிநேகிதம் பள்ளிப் படலை வரை' என்ற கூற்றுக்குச் சான் முகவே அவை அமைந்தன.
ஆணுல்? அந்த ஒருத்தி! ஆ! என் இன்பமான விஜயாவே உன் கதையைத்
தானடி இதோ என் எதிரே இருக்கிற புதியதோழி இந்து
விடம் இன்று சொல்லப்போகிறேன்.
விஜயா அதுதான் அவள் GLui.
அவள் 67. მერ) . எஸ். 黎 வகுப்பிலே என்ைேடு ஒன்ருகப் படிக்க ஆரம்பித்தாள். I
"மேனு மினுக்கித் தன்மைகளே விருத்திசெய்யப் பிர யத்தனிக்கும் மன ஓட்டங்கள் - லேட்டஸ்ட் சினிமாக்காரி

Page 19
34
களாகத் தம்மைக் கற்பனை செய்து கொள்ளும் அசட்டுத் , ":R ) தனங்கள் - பாழாய்ப்போன பாடத்திட்டக் கல்வி சப்பல், W கள்’ இத்யாதி அம்சங்கள்தானே இந் நாள் மாணவிகளின் பொது லட்சியங்கள்; வாழ்க்கைக் கனவுகள்!
ஆனல், விஜயா இந்த அபத்தப் போக்குகளுக்கு
மாரு னவள்.
*அடி வத்சலா இந்த உலகையே அன்புக் கோயி லாக்க வேண்டுமடி. வீரத்துறவி விவேகானந்தரின் விரிந்த கனவுகள் ஈடேற வேண்டுமடி. எமது பெண்கள் அன்னை சாரதாதேவிபோல் தூய்மை பெற வேண்டுமடி. நிவேதி தாவின் பாகுபாடற்ற மனநோக்கை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டுமடி. கவியரசி சரோஜினிதேவியின் அஞ் சாமை எம் மாதர்க்கு முதற் தேவையடி!'
இப்படியெல்லாம் வி ஜ யா என்னிடம் ஆரம்பத்தி லேயே "அலட்டிய பொழுது
* சரி, சரி. இது அங்கொடைக் கேஸ்தான்' என்று எனக்குள்ளேயே நான் எண்ணிக்கொண்டேன்.
'நவில் தொறும் நூல் நயம்போலும் பயில் தொறும்
பண்புடையாளர் தொடர்பு' - 'போகப் போகத் தெரியும் - இந்தப் .ܠܵܐ ܬܐ
பூவின் வாசம் புரியும்' திடீரென வள்ளுவப் பெருந்த கையின் உயரிய குறள் ஒன் றும், கவிஞர் கண்ணதாஸ்னின் இனிய திரைப்பாடலின் d இரு வரிகளும் நினைவுக்கு வருகின்றன:
படிக்கப் படிக்க நன்னூல் நயம் தருவது போல் பழ கப் பழகவே விஜயாவின் நட்பின் நயம் தெரிந்தது.
அந்தச் சுகந்த மலரைப் போகப் போகத்தான் ιστούν னுற் புரிந்துகொள்ள முடிந்தது. நாளடைவில் நாம் நட் புக்கே உதாரணமானவர்களாக ஆகிவிட்டோம்.
 
 
 
 

35
"அடியே வத்சலா! நாம் நித்ய கன்னிகளாகவே நிலமிசை வாழ்வமடி'
"எல்லாப் பெண்களுமே தம்மீது ஆதிக்கம் செலுத்தி, தம் காத லேப் பெற வல்ல ஆண்களைச் சந்திக்கும் முன்பு வரை இப்படித்தான் கூறிக்கொள்கிருர்கள்.'
'போடி மண்டு! இந்த விஜயாவைப் பாரேன்; இவள் எப்போதுமே எண்ணித் துணிந்து கருமமாற்றும் திண் னிய நெஞ்சம் படைத்தவளடி.'
என் விஜயாவை எனக்குத் தெரியாதா? சாட்சாத் கடவுளானவரே வந்து,
'வத்சலா நீ வா என்னுேடு' என அழைத்தாலுங் கூட 'படைத்தவரே பொறுத்தருள்க என் விஜயாவைவிட்டு விட்டு உம்மோடு நான் வரவா??? இப்படியான ஒரு பதி லேச் சொல்லிக் கடவுள் முகத்திலேயே கரி பூசியிருப்பேன்.
பள்ளி நேரங்களில் எச் சமயத்திலும் நான் விஜயா வோடுதான் இருப்பேன்.
பள்ளி விடப்போவதனை அறிவிக்கும் ‘மணி' அடிக்கக் கல்லூரிப் பியூன் எட்வேட் விரை கையில்,
"கர்த்தரே! இந்தப் பாழாய்ப் போகிற எட்வே ட் டைச் சாத்தான் பக்கம் சாய்த்து விடுமய்யா' என்று வேண்டிக்கொள்வேன்.
ஒரு நாள் எம் கல்லூரி மாணவிகளும், மாணவர்களு V மாக ஒரு நீண்ட சுற்றுலா போக முடிவுசெய்தோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் என் வீட்டாரிடம் பண வசதி மிகக் குறைவாக இருந்தது. ஆனபடியால் இறுதிநேரம் வரைக்கும் எனக்கு சுற்றுலா"வில் கலந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.
ஆணுல் என் உயிர்த் தோழியான விஜயா இதனைச்
5F GG). LufT GIT IT?

Page 20
ਤੇ 6
. . . . தன் வீட்டாருக்குத் தெரியாமல் தன் மென் விரலிட
மிருந்து அழகு பெற்றுக்கொண்டிருந்த மோதிரத்தையிே
நாற்பத்தைந்து ரூபாவிற்கு அடைவு வைத்தாள் அவள், ".
ܓܠ
அல்ல. சிறுவகுப்புகளிலே படிக்கின்றபோது எமது உபாத் தியாயர்கள் ஏதோ சந்திர மண்டலப் பயணம்' என்பது போற் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுப் பணத்தையும்
மேல்மிச்சமாக வசூலித்து "யாழ்ப்பாண நூதனசாலை,
கோட்டை, யாழ். சோப் தொழிற்சாலை இவற்றைக் காண்பித்துக் கரடி விட்ட அநுபவங்களையே என்னுற் பிரயான அநுபவங்களாகப் பெறமுடிந்தது.
η நான் நீண்ட பயணங்கள் செய்து பழக்கப்பட்டவள்
அன்று காே ܕܠܐ எங்கள் நீண்ட சுற்றுலா ஆரம்பமானது. சவர்லே ി പ്രേ ஒன்றிலே நாம் எம் பயணத்தை ஆரம்பித்தோம்.
6.7 L) gil பாதுகாப்புக்கு TெL) து செலவிலேயே ஆசிரியைகள் இருவரும், ஆசிரியர்கள் இருவரும் வந்தார்கள்.
"தேவி பூரீ தேவி - உன்னைத்
தேடி அலைகின்றேன்'
ஆண் ஒருவர் மாறி ஒருவர் கழுதைக் குர
| ရုပ္ကဌ) கத்துகிருரர்கள் என்ருல் இந்தப் பெண்களுக்கு என்ன
வந்தது? ,
"அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே - இந்த வாழ்க்கை வாழ்வதற்கே' “
கூத்து ஆரம்பமாகிவிட்டது. வம்புக் கதைகள் கட்டு
மீறிய ஆர்ப்பாட்டங்கள் இவற்றை என்னுல் சகிக்கவே முடியவில்லை. விஜயாவைப் பார்த்தேன்; அவள் நயன
ਲ357
சுற்றுலா சென்று ஒருமாத காலம் ஆகியிருக்கும்.
 
 
 

37
4.
தற்செயலாக விஜயாவின் கட்டுரைக் கொப்பியைப் புரட்டிக்கொண்டிருந்த நான், அதன் இடையிற் கிடந்த க டி தம் ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.
'அன்புத் தெய்வமே!
என் வாழ்வில் நான் காதல் புரிய வேண்டிய சந்தர்ப் பம் ஒன்று வருமென நிச்சயமாக எச் சமயத்திலும் நினைத் தது கிடையாது. என் உயிர்த்தோழியான வத்சலாவிடம் கூட ஒரு சந்தர்ப்பத்தில்:
"கல்யாணமே எமது வாழ்வில் வேண்டாமடி நித்ய கன்னிகளாகவே நிலமிசை வாழ்வமடி?
எனப் புகன்றது என் நினைவில் மலர்கிறது. என் காதல் துரையே! உமது சந்திரிகா வதனம் - பிரேமக் கதைபேசும் கண்கள் - ராஜ கம்பீரம் மிக்க உமது நடை - இவைகள் தான ப்யா என்னைக் கொல்லாது கொல்பவை. .'
கடிதத்தைத் தொடர என்னுல் இயலவில்லை.
அடத் தெய்வமே! என் பிரிய சகியா இப்படி மாறி விட்டாள்? விஜயா இந்த விஷயம்பற்றி என்னிடம் மூச் சுக் கூட விடவில்லையே!
கடுஞ் சினத்துடன் அவளிடம் நான் கேட்டேன்.
'வத்சலா வாழ்க்கை என்பதே அநுபவப் பள்ளி தானே? ஒவ்வொரு அநுபவங்களும் புதுப்புது மாற்றங் களைப் பிறப்பிப்பதில் ஆச்சர்ய மொன்று மில்லையே."
இப்படிச் சொல்லி, தான் தேவிதாஸன் என்பவனைக்
காதலிப்பதாகவும், அவனது பிரமாத அழகு தன் ஆத் மாவைக் கைதியாக்கிவிட்டதாகவுஞ் சொன்னுள்,
காலம் கடுகிச் சென்றது,

Page 21
38
அன்று என் விஜயா சோக சித்திரமாக இருந்தாள் இடையருது அழுதமையாற்தான் போலும் வகுப்பில் வந் தும் விக்கித்துக்கொண்டிருந்தாள்.
பத்து மணி குறுகிய இடைவேளை வந்தது. இப்போது நானும் அவளுமே வகுப்பறையில் இருந்தோம். என் கண்மணி என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். ஆ! என் ணுற் தாங்கமுடியவில்லை. .
'அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்' எனப் பகன்ற வள்ளுவரின் குறளுக்கீடாக எந்தக் கொம்பனல் அநுபவ உண்மையைப் பெய்யமுடியும்?
"விஜயா நீ அழாதே! என் சர்வ தியாகங்களும் தனக்காகவே!"
சித டி. தேவிதாஸன் என்னை உதறிவிட்டாரடி'
ஐயோ! என் இதயம் கொதித்தது. "அட, மடக் கட வுளே! இன்னமும் நீ ஆண் வர்க்கத்தை அழிக்காமல் இருக்கிருயா?
* சாதாரண பெண்கள், சா தா ர ன ஆண்களிடம் ஏமாறுகிருர்கள். அடியே விஜயா! புத் தி சாதுர்யம் மிக்க இலட்சியவாதியான நீயுமா?’ என்னுற் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்தது. நான் அழுதேன்; அவளும் அழு தTள
5.
விஜயாவையும், தேவிதாஸ்னயும் இணைத் து வி ட முயன்ற என் முயற்சிகள் வீணுயின. அவன் பள்ளி க் கூடத்தைவிட்டே - ஊரைவிட்டே போ ய் வி ட் டா ன் கொழும்பிலே தன் சிற்றப்பா வீட்டிலே அவன் தங்கி யிருப்பதாக ஒரு இடைக் கேள்வி.
 
 
 
 

39
விஜயாவின் பழைய காந்தி - சுறுசுறுப்பு இவையெல் லாம் அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன.
எத்தனை கலகலப்போடு உலவித் திரிந்த என் இன் பக் கண்மணி விஜயா எப்படி மாறிவிட்டாள்.
அன்று மாலை வீடு திரும்பும்போது விஜயா சொன் ள்ை:
'அடியே வத்சலா! எனது அப்பாவித் தாயையும் வெளியே முரட்டுப் பேர் வழியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்தாலும் உள்ளே பரிசுத்தமான அன்பை என் மீது தேக்கிக் கிடக்கும் என் தந்தையையும், என் ஆருயிரே உன்னையும் நான் கலக்காமலேயே மின்னிய தைப் பொன்னென நம்பி ஏமாந்துவிட்டேன்டி.'
'தயங்காதே விஜி வாழ்க்கையைச் சோலையாக்குவ தும், பாலையாக்குவதும் இதயமே. நீ புது வாழ் வைத் தொடங்க வேண்டும். அந்தக் காமுகன் தேவிதாஸன் மட்டும் என் எதிரே இப்போது இருந்திருப்பானேயாகில்.
வத்சலா அவரை அப்படிச் சொல்லாதே!'
விஜி "சிறுமை கண்டு பொங்குவாய்' என நீ இரு தயத்தில் வைத்துப் பூஜிக்கிருயே கவி பா ர தி அவரே பாடியிருக்கிருர், உலுத்தர்களின் உன்மத்த செயல்களை எல்லாம் பொறுப்பதென்பது சத்யத்துக்குச் சமாதி எழுப் பும் முயற்சியடி. சரி; அது போகட்டும். என் பிரான தோழியே! உன் கடந்த கால அநுபவங்களை மறந்துவிடு. புதிய கனவுகளை நெஞ்சேற்றிப் போதெலாம் தளித்திரு.
விஜயா மெளனமாகச் சென்ருள்.
அடுத்த தினம் நான் பள்ளி போனபோது பேரி டி எனக்காகக் காத்துக்கிடந்தது.
அடி வத்சலா! உன் விஜயா 'என்றெக்ஸ்' அருந்தி
விட்டாளடி!'

Page 22
s/
40
ஐயோ! வானம் இடிந்தது. வையகம் இருண்டது. ஆழ்கடல் ஆர்த்தது. அகமே எரிந்தது. சாய்ந்தது. - உவகை பறந்தது. நிலவு வீழ்ந்தது. நிம்மதி அழிந்தது.
இனி என்ன வாழ்வு? இனி என்ன உலகம்? விஜயா தற்கொலை செய்துகொண்டாள்.
என்னுயிரோடு கலந்த வள் காலன்பாற் சென்ருள்.
அழுதேன்; அரற்றினேன். அதோ! என் ராஜாத் தி கிடத்தப்பட்டிருக்கிருள். சதா இலக்கியம்.இலக்கியம் எனப் பித்தாய்ப் பிதற் றிக்கொண்டிருக்கும் அவள் இதழ்கள் குவிந்து கிடந்தன. 'நானே பாரதி கண்ட புதுமைப் பெண்' என்ற ஞானச் செருக்கோடு உலவித் திரிந்த இலட்சியத் தாரகை யான விஜயாவே! நீ ஏனடி இறந்தாய்? பாலையில் விட் டென்னை ஏனடி பறந்தாய்?
முடிந்தது. எல்லாமே முடிந்தது. 塁 விழிப் பார்வை: புன்னகை வதனம்; காமனுங் கண்டு ஏங்கும் கச்சித வடிவம்; யாவுமே சாவில் நித்ய சாந் தியைக் கண்டது. -
6.
இதுதானடி இந்து, விஜயாவின் கதை. தூய்மைமிக்க அந்தக் காவியக் கன்னி நிச்சயமாகப் பு ன ர் ஜென் ம ம் எடுப்பாள் எனக் கருதுகிறேன். அந்த இன்ப மயமான கைங்கர்யத்தைச் சர்வ வல்லமை மிக்க கடவுள் விரைவா கவே புரியட்டும்"
தாதி வத்சலா தன் நீண்ட கதையை முடித்தாள். கவல்கின்ற நெஞ்சோடு கதை கேட்ட இந்து, * வத்சலா! உங்கள் தோழி விஜயா தெய்வ மங்கை
அக்கா. அவளின் இழப்பு ஆறுதலே பெற முடியாத இழப் புத்தான்' என்ருள் .
 
 

*

Page 23
ܝܼ.
.
-
s a
അ~ ༥་༢ང་མ་ཡིན་རུང་ངོ་།
܂-
இ ଶ' ଓଁ କିଛି ।l। --ପ୍ରୁଷ୍ଟ {}, {} ( ଗ ଅନ୍ତୁ
雪 எழுத்தாளர் என்று செ
கொண்டிருக்கிற எல்ல
திலும் அமைந்துவிடக்
ඝ හ්‍රි ඩූ ෆ්, ෆ්' , స్త్ర హాస్ 23, 2 :
疹。 。 זיק
-ജു ിg ി ഒ് ♔ ക്ല. ക, களில் ஒருவரே உண்பை εταρέ και το τίτσα
றல் இலக்கி காலத்தை வெ ன் று
**ー** 。
ഒ1 !!! ;
-” جے ٹیم ? ............................ "இரு விஜயேந் திர -- ○ _ __ -- - ܡ స్లా இலக்கிய , تم بين .
அவர் எழுத ஆரம் : 警 கள்தான் ஆகின்றது ܟܕ
|ஆ காலத்துக்குள்
ண்ேடப்புக்களேட் பார்க் இ பிர்மிப்பே ஏற்படுகிறது
DD SS SS SSMM 9 } (8 = {تنی ہتھیار í. #FF திரீத் அவர்கள் முப்பத் 丁、 திருக்கி மூர் நாம் ანა = చేప (* త(?f ఆ; } しgs) あ தி uSS SS S SS0 T ASY 0S பும், ஆயிரத்துக்கும் அ έγκερ έξι μήθεί σαφεί
ഴ്ച 1് : ) ജ് : (p3, ரூர் அவரது நினைவுத் லயே இலக்கியத்தான் துக்காக அர்பணித் து ! శ్రీ శ్రీ #1 సరే ! శోకి JT
憩、 *T、 டு εί
 
 
 
 
 

●=
' 颚。
, .
,
.
ܣ
Ls =
} ৫ম L29 = } η συςθεί,
ל
ಆ»೬೩ it!
L| | | A Hó。孚」亞* L =塾」
リ ? i) 37 g, ff (3 5J (3 kaj நிற்கக் கூடிய இலக்கி யங்
அவர்கள் அத்தகைய உண்மை எழுத்தாளர்
***、***●ー* 穹@@° 芋š马 –至季子 அவர் படைத்திருக்கும் கின்றபொழுது எமக்குப்
எல்லேக்குள் விஜயேந் தைந்து நீண்ட நாவல்களே துக் கதிகமான சிறுகதை சுமார் நாற்பது ந்ாடகங் 3:് ഖ് & LA ഭ: " ய ஆய்வுக் கட்டுரைகளே
بڑھ3 » . . . . . . . . . . . . . . . . . ܗܝ܂ திக F వీస్ పఫర్స్ స్ట్రాక్స్ డir u_L
3. It of it, 9) հն է ծ՝ Այ Ժ. 3: లో చె హనీ హార్రి 3 ఒలి భ73
శ్రీ 2యో 61/73)పMUL ప్రక్రిత్ర 2
عیs .2 ܕܢ இந்த இலக்கியப்
கு
ェー、 。 亭 ェ=-、 、 「き。チ 〜。 言 ST ee u sS S S S T S A A AA AA S S A