கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அனுவுருத்திர நாடகம்: தென்மோடி நாட்டுக் கூத்து

Page 1
_。
University of Jaffna
894.8112 | ANU
 ി. '
.
 


Page 2

/ a
அணுவுருத்திர நாடகம் தென்மோடி நாட்டுக் கூத்து
イエミ
ܢܼܲܨܒܼܪ93ܬܹ = 570 تابعی --سمبر .
பதிப்பாசிரியர்
வித்துவான், பண்டித வி. சீ. கந்தையா, B.O.L.
81220 |WWI AI
-
--7=ހހފ>
வெளியீடு மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றம்
மட்டக்களப்பு 1969 81220 /

Page 3
மட்டக்களப்புப் பிரதேச கலாமன்ற வெளியீடு- 1
முதற் பதிப்பு - 1969
Published By
The Batticaloa Pradesha Kalamanram
BATTICALOA.
Edited
With Explanatory Notes By vidwan, Pandit,
V. S. KANDIAH, B. O. L.
(Principal, Kaluthavalai Maha Vidyalaya, Kaluwanchikudi)
FIRST EDITION 1969
Copy Rights Reserved.
உரிமை பதிவு
விலை: ரூபா 1.75 சதம்
கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
 
 

அனுவுருத்திர நாடகம் வெளியீட்டுரை திரு. தேவநேசன் நேசையா அவர்கள் (அரசாங்க அதிபர்) மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றத் தலைவர்
மட்டக்களப்பு
மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றத்தின் சார்பில், அதன் தலை வர் என்ற முறையில் அனுவுருத்திர நாடகம் என்னும் நூலை அச் சுருவில் வெளியிட்டு வைப்பதில் நான் மிக்க பெருமையும் மகிழ்ச்சி யும் அடைகின்றேன். -
மட்டக்க்ளப்பு, கலைவளம் நிறைந்த திருநாடு. நாட்டுக் கூத்து நாட்டுப் பாடல் முதலிய கலைச் செல்வம், ஈழத்தின் மற்றைய எல் லாப் பாகங்களிலும் பார்க்க இங்கேயே அதிகமாக உண்டு. மன்னர் மாவட்டத்தில் நான் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் அங் குள்ள கலை மன்றங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் முதலானவற்றின் தொடர்பினேடு அப்பகுதியிலுள்ள நாடகங்கள் பலவற்றை நேரில்ே பார்வையிடவும், மேடையேற்றவும், அச்சிட்டு வெளிப்படுத்தவும் சந்தர்ப்பங்கள் பல எனக்குக் கிடைத்தன. அங்கிருந்து நான் மட்டக் களப்புக்கு மாற்றம் பெற்று வர நேர்ந்த போது எனக்கு மிகுதியும் ஈடுபாடுள்ளதான க்லை வளர்க்கும் பணியினைத் தொடர்ந்து செய்யும் வாய்ப்பு மேலும் கிடைத்ததை எண்ணி அதிகம் மகிழ்வுற்றேன். '
பல ஆண்டுகட்கு முன்பு நிறுவப்பெற்றதான மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றம், காலச் சூழ்நிலையாற் செயற்பாடு குறைந்து காண்ப்பட்ட நிலையை நீக்கி, அதனைப் புதுக்கி அமைத்துப் புதுத் திட்டங்களை வகுத்துப் பயனூட்ட வேண்டிய வேலை காத்துக் கிடந் தது. இதனைச் செவ்வனே செய்து முடித்தற்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தமிழ்த்துறைத் துணைப்பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந் தன் அவர்களின் ஆலோசனைகளும் எனக்குக் கிடைத்தன. மன்னர் மாவட்டத்திலே எனது நாட்டுப் பணிகளுக்குத் துணையாயிருந்தவரும் நாட்டுக் கூத்து முதலியவற்றில் மிகவும் ஈடுபாடு கொண்ட்வருமான் அப்பெரியார் மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றத்தின் நாடகத் துறையிலான பணிகள் அனைத்துக்கும் ஒரு நிரந்தர ஆலோசகர்ாக்

Page 4
வும் அமைந்து விட்டமைக்காக அன்னருக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். 。ー
மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றத்தின் பெருவிழா ஒன் றைத் தேசீய அபிவிருத்திப் பொருட்காட்சியின் போது நடாத்துவ தென்ற முடிபு பின்ஞெரு கூட்டத்தில் எழுந்தபோது, புத்தக வெளி யீடு பற்றிய நற்கருத்தும் தோன்றலாயிற்று. உடனே வெளியிடக் கூடிய நூல்கள் சிலவற்றின் பெயர்களை அங்கத்தவர்கள் அப்போது குறிப்பிட்டனர். முறைய்ே தென்மோடி, வடமோடி, வகுப்புகளைச் சேர்ந்தவையான் அனுவுருத்திர நாடகம், இராம நாடகம் என்ற இரண்டையும் பழைய ஏட்டுப்பிரதிகளைச் சோதித்து அச்சிடக் கூடிய நி3லயிற் தாம் தயாராக வைத்திருப்பதாகவும், அவைகளை மட்டக் களப்புப் பிரதேச கலாமன்றம் வெளியிடலாமெனின் தான் அவற்றைத் தரலாமென்றும் புண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் அப்போது கறிஞர்கள். தனது அலுவலகத்திலே பழுதான நிலையில் இருக்கும் ஒரு நாடகப் பிரதியைப் பற்றி மட்டக்களப்புப் பட்டினப் பெரும்பாக இறைவரி உத்தியோகத்தர் திரு. எஸ். வல்லிபுரம் அவர்கள் குறிப் பிட்டனர். எனவே, அந்நூற் பிரதிகளைப் பரிசீலனை செய்து, சிறந்த இரண்டை அச்சிடுதற்காகத் தெரிவு செய்யுமாறு ஒரு உப குழு நிய மிக்கப்பட்டது அக்குழுவின் அங்கத்தவர்களான புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி. சீ. கந்தையா, வித்துவான் சா. இ. கமலநாதன் ஆகிய மூவரும், தமது பரிசீலனையின் பின்னர் அனுவுருத்திர நாடகம், இரசம நாடகம் ஆகிய இரண்டையும் வெளி யிடலாம் என்று செய்த சிபாரிசு மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றத்தினுல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த நாடகங்களின் பதிப்பாசிரியராக இருந்து அச்சுவேலை முதலிய யாவற்றையும் செய்து முடிக்கும் பொறுப்பு, பிரதிகளை அச் டெற் கேற்ற நிலைக்குக் கொண்டு வந்திருந்த, பண்டிதர் வி. சீ. கந் தையா அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. மட்டக்களப்புக் கத் தோலிக்க அச்சகத்தில் நூல்களை அச்சிடுவதென்று ம் தீர்மான மாயிற்று.
நூல்களுக்கு வேண்டிய அட்டைப் படங்களையும், பிரதேச கலா மன்றத்துக்கு வேண்டிய சின்னத்தின் படத்தையும் இந்நாட்டுச் சித் திரக் கலைஞர்களிடையே ஒரு சித்திரப் போட்டியினை ஏற்படுத்திப் பெற்றுக் கொள்வதென்றும், அப்படிச் செய்து, வெற்றிபெறுவோருக் குச் சன்மானம் கொடுப்பதன் மூலம் சித்திரக் கலைஞர்களை ஊக்கப்

படுத்தலாம் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி விளம் பரம் செய்தபோது அழகிய படங்கள் பல கிடைக்கப்பெற்ருேம். அவற்றைப் பரிசீலனை செய்து, அவற்றுட் சிறந்தவற்றைப் பெறுவதற் காக ஒரு உப குழுவும் நியமிக்கப்பட்டது. அக்குழுவில் பண்டிதர் வி. சீ கந்தையா (தலைவர்), புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, வித்துவான் க. செபரெத்தினம், கலைஞர் ம. கயிலாயபிள்ளை. திரு மதி, ஆர். சின்னையா ஆகிய ஐவரும் இடம் பெற்றனர், கிடைத்த படங்களுள் மட்டக்களப்புப் புதூரைச் சேர்ந்த திரு. இ. ஜெயபாலன் அவர்கள் வரைந்த அனுவுருத்திர நாடகத்துக்கான அட்டைப் படம், இராம நாடகத்துக்கான அட்டைப்படம் ஆகிய இருபடங்களும், மட்டக்களப்பு, திமிலைதீவைச் சேர்ந்த திரு. ஜி. என். வேலாயுத பிள்ளை அவர்கள் வரைந்த மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றத்துச் சின்னத்துக்கான படமுமே சிறந்தன என்று மேற்படி குழுவினர் சிபாரிசு செய்தார்கள். இப் படங்களை வரைந்தளித்த கலைஞர்களுக்கு நூல் வெளியீட்டு விழாவின் போது சன்மானம் அளிப்பதென்றும் தீர் மானமாயிற்று.
நாடகங்களுக்கான படங்கள் அவ்வந் நாடக நூற் கதைகளை யொட்டி வரையப்பட்டவை. மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றச் சின்னம் முத்தமிழ் வித்தகராகிய விபுலாநந்த அடிகளாரது அரிய யாழ் நூலினை நினைவு படுத்தும் முகமாக யாழ் ஏந்திய நீரர மகளிரின் தோற்றத்தையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப் பட்ட அபிப்பிராயத்தின்படி அமைந்ததாகும். இப்படங்களை அழ கும் பொருத்தமுமுற வரைந்து தந்த திரு. இ. ஜெயபாலன், திரு. ஜி என். வேலாயுதம் ஆகிய இளைஞர் இருவரையும் மனமாரப் பாராட்டு கின்றேன்.
மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றத்தின் முதல் வெளியீடாக பொது மக்கள் முன்னிலைக்கு இந்த அனுவுருத்திர நாடகம் வருகின்றது. முதன் முதலாக இந்நாடகததை அச்சேற்றி வெளியிடும் பெருமையும் இம் மன்றத்துக்கே உரியதாகும்.
- பழைய ஏடுகளிலும், இடத்துக்கிடம் மாறுபட்டுக் காணப் பெற்ற சில கை எழுத்துப் பிரதிகளிலும், அண்ணுவிமாரின் வாயிலும் மட்டும் இந்நாட்டுக் கூத்துப் பாடல்கள் கிடந்தவை. அவைகளை ஒப்பு நோக்கம் முதலியவற்ருல் தூய்மை செய்து, அச்சுக்கேற்றவகையில் நற்பிரதிகளைஆக்கிக் கொண்டா பண்டிதர் வி சீ. கந்தையா அவர்கள். மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள், நாட்டுப் பாடல்கள், கல் வெட்டு,

Page 5
முதலான பழைய சாதனங்கள், பழைய கலை நிகழ்ச்சிகள் என்பவற்றை வெளிக்கொணர்வதிலும், மட்டக்களப்புக் கலைகளை வளர்ப்பதிலும் இவர் பேரார்வம் கொண்டவர், மட்டக்களப்புத் தமிழகம் என்ற அரிய நூ%லப் படைத்துச் சிறிலங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவரும், பழைய ஏட்டுருவிலே கிடந்த கண்ணகி வழக்குரை என்ற நூலை அச்சிற் பதிப்பித்துப் புகழ் கொண்டவருமான அன்னர் அனுவுருத்திர நாடக நூலுக்குப் பதிப்பாசிரியராக வாய்த்தமை மிகப் பொருத்தமுடையதாகும். இவரது அருஞ்சேவையை மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றத்தின் சார்பில் நான் மிகுதியும் பாராட்டுவதோடு, மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மேலும், இந்நூல் சிறப்புற்று வெளிவருவதற்குத் துணை புரிந்த மற்றும் யாவருக்கும் மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றத்தின் நன்றி என்றும் உரியதாகும்.
பொது மக்கள் அனைவரும் இதனை இலகுவில் வாங்கிப் படித் துப் பயன் பெறுதல் வேண்டும் என்பதற்காகவே நூற் பிரதி ஒன்று ரூபா 1-75 சதம் ஆக, மிகக் குறைந்த விலையினை இதற்குக் குறிப்பிட் டுள்ளோம்.
மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகளின் வளர்ச்சிப் பணியில் இத்த கைய வெளியீடுகள் மிகுந்த பயனுடையனவாகும் என்பது எனது திட்டமான நம்பிக்கை. இதனைத் தொடர்ந்து, இராம நாடகம் என்ற வடமோடி நாட்டுக்கூத்து ஒன்றும் எம்மால் வெளிப்படுத்தப் படுகின் றது என்பதையும் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்.
இங்ங்ணம் தேவநேசன் நேசையா அரசாங்க அதிபர் கச்சேரி, தலைவர்.
மட்டக்களப்பு. மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றம் /
 

அனுவுருத்திர நாடகம்
மதிப்புரை
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்துறைத் துணைப்பேராசிரியர் கலாநிதி. சு. வித்தியானந்தன் அவர்கள்
அளித்தது.
ஈழம் சுதந்திரம் அடையுமுன் தமிழ்ப் பெரு மக்கள் பழை மையை ஒதுக்கினர் . புதுமையை நாடினர். பழைய நாடகங்களாகிய கூத்துக்களை கோமாளிக்கலை என வெறுத்தனர். புதிய நாடக முறைகளை நாடினர். சுதந்திரம் அடைந்த பின்பும் சில காலம் இதே நிலையிருந்து வந்தது. புதிதாக ஏற்பட்ட மோகங்கள் விட்டுப்போக வில்லை. ஆனற் கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்திலும் கலையிலும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டதின் பயணுகப் பழைமையில் நாட்டம் செல் கின்றது. பழைமையின் அடிப்படையில் புதுமையைக் கைக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை வலுப்பெறுகின்றது.
ஆனல் பழைமை பல இடங்களில் அழிந்து விட்டது; சில இடங் களிற் சேடம் இழுத்துக்கொண்டிருக்கின்றது. பழைய கூத்து முறை யினைப் பேணவேண்டுமென்ற அவா சிலரிடமிருந்தபோதும் இக்கூத்து முறை பல இடங்களில் மடிந்து விட்டது. சில இடங்களில் அரை உயி ருடன் உயிர்ப்பிச்சை கேட்டுத் தவிக்கின்றது. கூத்துக்குரிய ஆட்டம் சில பிரதேசங்களில் முற்ருகக் கைவிடப்பட்டுவிட்டது. ஆட்டங்களைப் பழக்கக்கூடிய அண்ணுவிமாரோ, அல்லது ஆட்டங்கள் தெரிந்த அண்ணுவிமாரோ சில இடங்களில் இப்போது இலர். இந்நிலை யாழ்ப் பாணத்தில் இன்று நிலவுகின்றது. இதிலும் மோசமானது முன்பு ஆடப்பட்ட கூத்துக்களின் பிரதிகள் கிடையாமையாகும். முன்பிருந்த கையேடுகள் பல இருந்த இடம் தெரியாது மறைந்துவிட்டன.
இச்சூழ்நிலையில் அனுவுருத்திர நாடகம் நூல்வடிவில் வெளிவரு வது வரவேற்கத் தக்கது. நாட்டுக்கூத்தினை, நலிவுற்ற நிலையிலிருந்து விடுவித்து வளர்ந்து வரும் சமுதாயத்தின் மக்கள் கலையாக ஆக்குவதில் நாம் கடந்ந சில ஆண்டுகளாக முயன்று வந்திருக்கின்ளுேம். அம் முயற்சியின் விளைவாக மட்டக்களப்பிற் பெரிதும் போற்றப்படும்
Rန\

Page 6
مت سے 6 ہے۔
அலங்காரரூபன் நாடகத்தை 1962ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட் டோம் அதனைத் தொடர்ந்து மன்னரிலே ஏட்டிலிருந்து வந்த எண்டி றிக்கு எம்பறதோர் நாடகம், மூவிராசாக்கள் நாடகம், ஞான செளவுந்தரி நாடகம் ஆகியவற்றை வெளியிட்டோம் கொழும்புப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்கம் சிலாபத்தில் ஏட்டிலிருந்த வாளபிமன் நாடகத்தையும் மார்க்கண்டன் நாடகத்தையும் 1963ம் ஆண்டு அச்சேற்றியது. புலவர் மரியாம்பிள்ளை பாடிய விசய மனே கரன் நாடகத்தை மு வி ஆசீர்வாதம் அவர்கள் 1988ம் ஆண்டு வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இந் நாடக மாகிய அனுவுருத் திர நாடகத்தினை மட்டக்களப்புப் பிரதேசக் கலாபன்றம் அச்சிட்டு வெளியிடுகின்றது.
(மன்னர்ப் பிரதேசக் கலா மன்றம், நாம் பதிப்பித்த மூன்று கூத்து நூல்களை மன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் வெளியீடாக அச் சிட்டபோது நாட்டுக்கூத்தின் வரலாற்றில் ஒரு புரட்சியைச் செய் தது. மக்கள் இலக்கியத்தைப் பேண, மக்களின் ஸ்தாபனமாகிய மன் னர் உள்ளூராட்சி மன்றங்கள் செய்த பணி மட்டக்களப்புப் பிர சேதக் கலா மன்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது. கிராமியக் கலைகளின் களஞ்சியமாக விளங்கும் மட்டக்களப்பில் நாட்டுக்கூத்து இன்றும் பல இடங்களில் ஆடப்பட்டு வருகின்றது. அங்குள்ள பொது மக்கள் இந் நிலையைத் தமது நல்வாழ்வுக்குதவும் கருவிகளில் ஒன்முகக் கருதுகின்றனர். இதனைத் தமது சமய வாழ்க்கையோ டு பின்னிப் பிணைத்து வளர்த்துவருகின்றனர். அவ்வாரு யினும் இதுவரை அங் குள்ள கூத்துப் பிரதிகளை அச்சிட உள்ளூராட்சி மன்றங்களோ பிர தேசக் கலா மன்றமோ முயற்சியாதது பெருங்குறையே.
பல ஆண்டுகளாக இயக்கமில்லாது சூம்பிக்கிடந்த மட்டக் களப்புப் பிரதேசக் கலா மன்றம் இப்போதுதான் மீண்டும் உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது. இதனை இயக்குவதற்குக் கடந்த பல ஆண்டுகளாக நாம் முயன்றும் முயற்சி கைகூடவில்லை. திரு தேவ நேசன் நேசையா அவர்கள் அரசாங்க அதிபராக இவ்வாண்டு பதவி ஏற்றதும், மட்டக்களப்புப் பிரதேசக் கலா மன்றத்தினைச் செயற் படுத்தவும் ஆக்கவேலைகளில் அதனை ஈடுபடுத்தவும் திட்டம் வகுத்துக் கொடுத்தோம். மன்னுரிற் கலைப்பணியில் அனுபவம் பெற்ற இப் பெரி யாரின் உழைப்பாலும் புதிய பிரதேசக் கலாமன்ற உறுப்பினரின் ஒத்துழைப்பாலும் மட்டக்களப்பு பிரதேசக் கலாமன்றம் இப்போது இனிது இயங்குகின்றது. அதன் முதற்பணியாக இந் நூற்பதிப்பு வெளிவருவது வரவேற்கத்தக்கது.
 

- 7
இந்நூலின் பதிப்பாசிரியராகப் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் பணியாற்றுவது இந்நூலுக்குத் தனிச் சிறப்பை அளிக்கின் றது. இத்தொண்டுக்கு மிகப் பொருத்தமானவர் அவரே. கலைத் தொண்டுக்கென வாழும் இப்பெரியாரின் சேவைகள் மட்டக்களப்பின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் உலகறியச் செய்திருக்கின்றன அவரது நூல்களாகிய மட்டக்களப்புத் தமிழகம், கண்ணகி வழக்குரை என்பன அவரின் தகைமைக்குச் சான்று பகருகின்றன. அன்னுரின் சேவைகள் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு என்றும் கிடைக்கவேண்டும்.
மட்டக்களப்பில் வழங்கும் தென்மோடிக்கூத்துக்களிற் பெரிதும் பயின்று வருவது அனுவுருத்திர நாடகம். தென்மோடிக் கூத்துக்களின் இலக்கணத்திற்கமைய இந்நாடகம் காதலை அடிப்படையாகக் கொண் டது. வசந்த சுந்தரி, அனுவுருத்திரன் ஆகிய இருவரின் காதல் இணைப்பு இனிது முடிவடைவதை எடுத்துக்கூறுவது. மக்களைப் பண்படுத்தும் நல்ல போதனைகள் நிறைந்த இந்நூலின் பதிப்பு ஒர் அரிய சாதனையே. இதனை நன்குணர்ந்த யாவரும் நிச்சயமாக பண்டிதர் கந்தையா அவர்களையும், மட்டக்களப்புப் பிதேச கலா மன்றத்தையும் பாராட்டு வார்கள்.
உலகியல் வாழ்வை உணர்ச்சியோடு உருவமாக்கி, நாட்டு மக்க ளின் பண்பாட்டின் சின்னமாகவும், பொதுமக்களின் சொத்தாகவும் விளங்கும் நாட்டுக்கூத்தினை வளர்ப்பதற்கு மட்டக்களப்புப் பிரதேசக் கலா மன்றம் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இன்னும் பல கூத்து நூல்களை வெளியிட வேண்டும். நாட்டுக்கூத்துக்கு நல்ல காலமுண்டு.
சு. வித்தியானந்தன் இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை.

Page 7
அனுவுருத்திர நாடகம்
முன்னுரை
நாடகம் என்பது கதை தழுவி வரும் கூத்தாகும். கூத்து இரு வகைத்து என்கிருர் இளங்கோவடிகள். அந்த இருவகையும் பல் வேறு பெயரால் அழைக்கப்பெற்றன. அவற்றை ஆராயப் புகுந்த அடியார்க்கு நல்லார், இருவகைக் கூத்துகளும், வசைக்கூத்து, புகழ்க்கூத்து என்றும், வேத்தியல், பொதுவியல் என்றும், வரிக்கூத்து, வரிச் சாந்திக் கூத்து, என்றும், சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என் றும், ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்றும், இயல்புக் கூத்து, தேசிக் கூத்து என்றும் வேறு வேறு பல பெயர்களைக் கொண்டு வழங்கின என்று கூறுகின்றனர். சிலப்பதிகாரம் அரங்கேற்று கதையின் 12ம் வரி உரையுள் இதனைக் காணலாம்.
இங்குக் கூறப்பட்ட ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்ற இரண் டுமே, முறையே வடமோடி, தென்மோடி என்ற வகுப்பைச் சேர்ந்த நாட்டுக் கூத்துகளாக இருக்கலாமென்று ஒருவாறு கொள்ளக்கிடக்கின் றது. மட்டக்களப்பில் ஆடப்பெறும் கூத்துகளின்கதை கதைப்போக்கு, முடிபு, அவற்ருற்பெறப்படுகின்ற பயன் கலாச்சாரம் முதலியவை கொண்டும் இந்த முடிபிற்கு நாம் வரக் கூடியதாக இருக்கின்றது. ஆரியக் கூத்து வடநாட்டிலிருந்துவந்த கூத்து; தமிழ்க் கூத்து தென் னுட்டிற்கே சொந்தமான கூத்து. ஆரிய மொழியினை வட மொழி என்றும், தமிழ் மொழியினைத் தென் மொழி என்றும் கூறுகின்ற வழக்காறும் நோக்கத் தக்கது. வடமோடி, தென்மோடி என்ற பெயர் களின் பொருட் பொருத்தத்தை இவை எல்லாம் நன்குகாட்டி நிற் LIGOT6)IT LD.
(பண்டைக்காலத்திலிருந்தே நாட்டுக் கூத்துகள் மட்டக்களப் பெங்கும் பெரு வரவிற்ருக ஆடப்பட்டு வந்திருக்கின்றன. இந்நாட் டுப் பொதுமக்களினுடைய இலக்கியம், இசை, நடனம், (இயல், இசை, நாடகம்) ஆகிய முத்தமிழ்க்கலை அறிவினையும் தூண்டி, உணர்ச்சியும் இன்பமும் ஊட்டி, அவர்களது பழம்பண்பை வளர்க் கும் கருவிகளாக இவை இருந்துள்ளன. இதனுல் நாட்டுக்கூத்துகள் மக்கட் சமுதாயத்திலே மிக முக்கிய பங்கு கொண்டிருந்திருக்கின்றன என்பதை நாம் உணரலாகும்)
 

- 9 -
மட்டக்களப்பு மக்கள் தங்கள் ஒய்வு காலங்களை வீணுக்காது, கூத்தாடிக் களித்து வந்தவர்கள். நாட்டுக் கூத்து ஆடும் காலம் ஒரூ ரின் மகிழ்வும் கலையின்பமும் பொங்கி வழியும் காலமாகக் கருதப் பெற்றது. அதனல், கூத்தாடுதல் மட்டக்களப்பு நாட்டின் ஒரு இன் பக் கலையாக நிலைபெறலாயிற்று. இளைஞரும் நடுத்தர வயதினரும் சுத்தாடுவதில் அதிகம் ஈடுபடுவதும், இளமையிற் கூத்தாடி மகிழ்ந் தோர் முதுமையிற் கூத்துப்பழக்கி இன்பம் காணுவதும் இங்கு இயல் பாகிவிட்டன.
மட்டக்களப்புக் கிராமக் கூத்துக்களரிகள் "நல்லமணமகன் இவன் என்று இளைஞர்களுக்குத் தகுதிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களாகவும் பணிசெய்து வந்திருத்தலை நாமறிவோம். நாட்டுக்கூத்து அரங்கேற்றம் ஒன்று ஒரூரில் நடந்து விட்டால், அத னைத் தொடர்ந்து பல திருமணங்கள் நடப்பதும் மட்டக்களப்பு நாட் டிலே குறிப்பிடத்தக்க ஒரு நன்னிகழ்ச்சியாகும். திறம்படக் கூத்தா டும் காளையர்க்கு, அப்புகழ் மேலதிகமான ஒரு திருமணத் தகுதி யாகப் பொதுமக்களிடைக் கணிக்கப் பெற்ற சிறப்பினை இதனல் அறியமுடிகின்றது.
மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகளின் இத்தகைய பெருஞ் சிறப் புக்களை 'மட்டக்களப்புத் தமிழகம்' என்ற எமது நூலின் "நாட் டுக் கூத்துகள்" என்ற அதிகாரத்திலே சற்று விரிவாகக் கூறியுள் ளோம். இவ்வாறு சிறப்புற்று விளங்கிய நாட்டுக் கூத்துகள் இடைக் காலத்தே பெருமக்களின் மதிப்பை மெல்ல மெல்ல இழந்து வந்தன. *நாட்டுக் கூத்து' என்ற தொடரை அருவருப்போடு உச்சரிக்கின்ற நிலை, கற்ருேர் மத்தியில் வளர்ந்தது. பொது மக்களிற் பலர் நாட்டுக் கூத்துக்குரிய மதிப்பைக் கொடாது, கூத்துக்களரிகளை நூர 'விட்ட காலமும் ஒன்று உண்டாயிற்று. எனினும், இன்று அந்நிலை முற்றி லும் மாறிவிட்ட தெனலாம். தேசசுதந்திரம் கிடைத்த பின்னர் ஏற்பட்ட புறத்தாக்கங்களும், விழிப்புணர்ச்சி முதலாயினவும், "மக் கள் கலை இது வென்று, கற்றேரும் மற்றேரும் நாட்டுக் கூத்துகளுக்கு மதிப்புக் கொடுக்கும் நிலைக்குச் சமூகத்தைத் திருப்பிவிட்டன. நாட்டுக் கூத்துகள், ஒரு தேசத்தின் கலை, இலக்கியம், பண்பாடு முதலான சிறப்புக்கள் பலவற்றையும் எடுத்துக் காட்டும் பழம் பெருங்கலைக் களஞ்சியங்களானவை என்ற உணர்ச்சியை மக்கள் யாவரும் இன்று பெற்றுவிட்டனர் எனலாம்.

Page 8
. - 10 -
இந்தப் பெருஞ்சிறப்பை ஆக்கி, நாட்டுக் கூத்துத் துறையிலே பாராட்டத்தக்கவொரு புதிய திருப்பத்தை ஈழநாட்டிலே ஏற்படுத்தி வைத்தவர்களுள், இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் துணைப் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களே முதன்மையான வர் என்பதை, நான் இங்கு மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவுக்கு அன்னர் தலைவ ராக இருந்த சுமார் பத்தாண்டு காலத்தையும், நாட்டுக் கூத் துத் துறையில், ஈழத்திலே ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்ட கால மென்றே கூறல் வேண்டும்.
அக்காலமுற்றும், இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழு வில் ஒரு உறுப்பினனுக இருந்து இத் துறையிற் பணிபுரியும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தது. அதனல், அப் பெரியாருடைய பேரூக் கம், அருமுயற்சி என்பவற்றையும், இத்துறையில் அவரது வெற்றி, நற்பயன் முதலியவற்றையும் நன்கு அறிய முடிந்தது. தூர்ந்து கிடந்த மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள் பலவற்றின் மேடை ஏற்றம், தாளக் கட்டுகளின் ஒலிப்பதிவு, நாட்டுக் கூத்துநூல் அச்சிடல் ஆகிய பணி கள் பல கலைக்கழகத்தின் மூலம் அப்பேராசிரியரால் நிறைவேறின. "அலங்காரரூப நாடகம்' என்ற தென்மோடி நாட்டுக் கூத்து அச்சில் வெளிவரப்பெற்றதும் அக்காலத்தேதான். மட்டக்களப்புத் தென் மோடி நாடகங்களுள் முதன் முதல் அச்சேறி வெளிவந்த நூல் அது வென்றே சொல்லலாம்.
அதன்பின், அச்சேறி வெளிவரும் மட்டக்களப்புத் தென் மோடி நாடகம், இந்த அனுவுருத்திர நாடகமேயாகும். மட்டக் களப்புப் பிரதேச கலா மன்றம் இப்பணியினை மகிழ்வோடு செய்து வைக்கின்றது. இப்பகுதியின் அரசாங்க அதிபராக, திரு. தேவநேசன் நேசையா அவர்கள் கடமை புரிய வந்ததிலிருந்து, மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றம் புதுமலர்ச்சியும், பொலிவும் கொண்டு இயங் குவதை அனைவரும் அறிவர். திரு. தேவநேசன் அவர்கள் மட்டக் களப்பு நாட்டின் ஒரு சீர்திருத்த இயக்கக் காரரைப் போன்று, கிரா மப்புனருத்தாரணம், விவசாய விருத்தி, மட்டக்களப்புக் கலைச் செல் வங்களை வளர்த்தல், அவற்றை வெளிக்கொணருதல் முதலான பல துறைப்பணிகளையும் செய்து வருகின்றனர். அன்னுருடைய தலைமை யிலான மட்டக்களப்புப் பிரதேச கலா மன்றத்தின் வருடாந்தப் பெரு விழாவின் போது, இந்நாட்டின் கலை சம்பந்தமான இரு நூல்
 

- ll -
களை அச்சிட்டு வெளியிடவும் வேண்டும் என்ற முடிபு பிறந்தபோது தான், இந்த அனுவுருத்திர நாடக வெளியீட்டுக்கு மிக இலகுவும் பொருத்தமுமான ஒரு சூழ் நிலை பிறந்தது எனலாம். தென்மோடி யிலான இந்த அனுவுருத்திர நாடகத்தையும், வடமோடியைச் சேர்ந்ததும், இதனேடு அதே விழாவில் வெளியிடப்பட இருப்பதுமான இராம நாடகத்தையும் தேர்ந்து, தமது வெளியீடுகளாக்கிச் சிறப் பிக்க முன்வந்த மட்டக்களப்புப்பிரதேசகலாமன்ற உறுப் பினர் அனைவருக்கும், சிறப்பாக அதன் தலைவர், திரு. தேவநேசன் நேசையா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
காரைதீவு, பனங்காடு, கிரான்குளம், தாளங்குடா, ஆரப் பற்றை, களுதாவளை, மண்டூர், ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஏட்டுப் பிரதிகளும், கை எழுத்துப் பிரதிகளும் இந்நூலை ஆக்கும் முயற்சி யின் போது எனக்குக் கிடைத்தன. எனினும் இவற்றுட்பல பூரண மான நிலையில் இருக்கவில்லை. இவைகளைப் பெறுவதில் காரைதீவு திரு. வே. தம்பிராசா ஆசிரியர், திரு. வ. கயிலாயபிள்ளைக் கப்புக னர், களுதாவளை திரு. க. சோமசுந்தரம் ஆசிரியர், மண்டூர் திரு. செ. காசிபதி அண்ணுவியார், திரு. மு. பூபாலபிள்ளை, களுவாஞ் சிக்குடி பண்டிதர் வி. விசுவலிங்கம் ஆசிரியர், திரு. ந. ஞானசூரி யம் ஆசிரியர் ஆகியோர் எனக்குப் பெரிதும் துணை செய்தனர். பூபாலபிள்ளை, விசுவலிங்கம் ஆகிய இருவரும் முப்பது ஆண்டுகளின் முன்னர், மண்டூரில் அனுவுருத்திர நாடகத்தை ஆடிப் புகழ்பெற்ற வர்கள். காசிபதி அவர்கள் , அதே நாடகத்தைப் பழக்கிக் கைதேர்ந்த அண்ணுவியார். ஆதலால், எனக்குக் கிடைத்த குறைப்பிரதிகளை நிறைவு செய்வதில் இம் மூவரது நினைவாற்றல்களும் நன்குப்யன் பட்டன எனலாம். மேலும், பிரதிகளின் ஒப்பு நோக்கத்தின் போதும், நற்பிரதிகளை எழுதி எடுப்பதிலும் முறையே பண்டிதர் விசுவலிங் கம், ஞானசூரியம் ஆகியோர் வேண்டிய உதவிகளையும் மனம் கோணுது செய்து தந்தார்கள்.
இப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

Page 9
- 2 -
அனுவுருத்திர நாடகத்தின் அச்சுக்கேற்ற நிறைவினைக்கண்டு, மகிழ்வோடு இதற்கு அரிய தொரு மதிப்புரையினை அளித்து இவ் வெளியீட்டைச் சிறப்பித்தவர் பேராசிரியர், கலாநிதி சு. வித்தியானந் தன் அவர்கள். அவரது உறுதுணை இத்துறையிலான எனதுபணிகள் பலவற்றுக்கும் மிகுந்த ஊக்கமளிப்பது. மட்டக்களப்புக் கலைப்பணி என்ருல், தனது வேலைகளுள் முதலிடம் கொடுத்து அவைகளை நிறை வேற்றி வைக்கும் இப்பெரியாருடைய அருஞ்சேவைகளுக்கு மட்டக் களப்பு மக்கள் என்றும் கடமைப்பட்டவர்களாவர். அன்னுரது நீங் காத பேரன்புச் சிறப்பு என்னல் என்றும் மறக்க முடியாத தொன் ருகும் என்பதை, மிக்க நன்றியறிதலுடன் இங்குக் குறிப்பிடுகின்றேன்.
இவ்வாறன அனுவுருத்திர நாடக ஆரணங்கை அழகும் பொலிவும் விளங்க மிகக் குறுகிய காலத்தில் அச்சிலே படிவித்தளித்த மட்டக்களப்புக் கத்தோலிக்க அச்சகத்தாருக்கும் எனது மனமார்ந்த
நன்றி.
இந்த வெளியீடு பொது மக்களுக்குச் சிறிதளவாயினும் பய னும் மகிழ்வும் ஊட்டி, எனது பணிகள் தொடர்ந்து வளர மேலும் ஊக்கமளித்து நிற்கும் என்று நம்புகின்றேன்.
வி. சீ. கந்தையா
* கூடல் ஆசிரியர். 15, மாடிவீதி,
மட்டக்களப்பு.

அணுவுருத்திர நாடகம்
ஆராய்ச்சிக் குறிப்புகள் (1) நூலைப் பற்றி
பண்டைய கூத்து நூல்களுட் சொல்லப்பெற்ற எல்லா இலக் கணங்களும் பொருத்தமுற அமைந்தது அநிருத்த நாடகம்’ என்று விபுலாநந்த அடிகளார் கூறுவர். அசுரரைக் கொல்லுதற்கு அமரராடின பதினெரு ஆடல்களுள் நான்கு அநிருத்த நாடகத்தினுள்ளே காணப் படுகின்றன என்று தமது நாடக நூலாகிய மதங்க சூளாமணியுள் அவர் குறிப்பிட்டுள்ளனர். அநிருத்தன் என்ற சொல் சிதைந்து அனு வுருத்திரன் என்று வழங்கும். இந் நூலில் அனுவுருத்திரன் என்ற பெயரே பல இடங்களிலும் பயின்று வரக் காணலாம். மேலும் ஆசிரியர், உருத்திர பூபன் (பக். 56) அனுருத்தன் (பக்கம் 63), உருத்திரன் (பக். 76), உருத்திரபாலன் (பக். 78), செயருத்திரன் (பக். 82), உருத்திர குமாரன் (பக். 121, 145) முதலான சொற் களாலும் இப்பெயரைக் குறிப்பிடுகின்ருர், உலக வழக்கில் இச்சொல் அனுபுத்திரன் என்றும் வழங்குகின்றது. அனுவுருத்திரன், துவாரகை வேந்தனன கிருஷ்ணனின் மகனுவன். இவனே "பிரத்தியும் நன்" என் றும் கூறப்படுபவன். எனினும், பிரத்தியும் நன் (பிறஸ்தூமன்) என் பானைத் தலைவனுகக் கொண்டு எழுந்த பிறஸ்தூமன் நாடகம் என்ப தொன்றும் வேருக வழங்கக் காண்கின்ருேம். அதுவும் தென்மோடி யைச் சேர்ந்ததே எனினும், கதையமைப்பு முதலியவற்ருல் அனுவுருத் திர நாடகத்திலும் வேறுபட்டதாக இருத்தல் நோக்கத் தக்கது.
அனுவுருத்திர நாடக நூலாசிரியரது பெயர் இன்னதென்று தெளிவாகப் புலப்படவில்லை. ஈழத்து நாடக நூல்கள் பற்றிய வேறு சில குறிப்புகளால், இதனை ஆக்கியவர் இணுவிற் சின்னத்தம்பி என் பவராயிருக்கலாம் என்று கொள்ள இடமுண்டு. இதனுசிரியர் கண பதி ஐயர் (1709 - 1784) என்பவரே என்கின்றனர் வேறு சிலர். இத் துறை மேலும் ஆராயப்பட வேண்டிய தொன்ருகும்.(செய்யுள் நடை, சொல்லமைப்பு, பழமொழிப்புணர்ப்பு, முதலியவற்றை க் கொண்டு, 16ம் நூற்றண்டுக்குப் பிறப்பட்டே இந்நூல் எழுந்திருக் கலாம் என்று நாம் ஒருவாறு துணியலாம். விஜய நகர மன்னர்களது ஆட்சிக்கால இலக்கியங்கள், மக்கள் வாழ்வோடு பிணைந்தவையாய்

Page 10
- la -
மக்கள் வாழ்வுக்குப் புத்துயிரளிக்கும் வகையில் குறவஞ்சி, பள்ளு, நாடகம் என்பனவாய் எழுந்திருக்கின்றன. இந்த எழுச்சி ஈழத்தி லும் பரவியபோது, இதுவும், மற்றைய நாடக நூல் பலவும் இங்கு அக்காலத்தில் ஆக்கப்பட்டன என்று கொள்ள இடமுண்டு.
அனுவுருத்திர நாடகச் செய்யுள்கள் மிகுந்த இலக்கிய நயம் வாய்ந்தவை. நீதிநூற் துணிபுகள் நிறைந்ததாய், மனித சமுதா யத்தை, வீரம், உண்மை, நேர்மை, பெரியோரைக் கனம்பண்ணல், கடவுட் பக்தி முதலான உயர்ந்த இலட்சியங்களை நோக்கி வழி நடத்துவதாய் அமைந்திருக்கின்றது இந்த நாடகம்.
* சாதி என்ருல் இரண்டுவகை சமயமுமொன்றையா
தற்பரனென்ருல் ஒருவன் கற்பனையோ கோடி " (பக். 48)
என்ற பாடற் பகுதி சாதிப்பூசல், சமயப் பூசல் என்பன நிறைந் துள்ள இன்றைய சமுதாயத்துக்கும் சிறந்த அறிவூட்டுவதாயிருக்கின் றது. அறம் கொழிக்கும் செல்வ நாடொன்றை இவ்வாறு (பக். 48-49) கவிஞர், கிருட்டினராசனது மந்திரி மூலம் இக்கால அரசியலாளருக் கும் காட்டும் சிறப்பு மிகுதியும் பாராட்டத்தக்க ஒன்று. வசந்த சுந் தரிக்கு அவளது தாய் சொல்லும் அறிவுரைப் பகுதி (பக். 36-38) வயது வந்த பெண்களை வளர்த்தற்கான புத்திமதிகள் நிறைந்ததாகும்.
சுந்தரி, தோழியருடன் மலர் பறித்து விளையாடுவதைக் குறிப் பிடும் பாடற்பகுதிகளிலே (பக். 39-41) உருவகம், உவமை என்ற இரு அணிகளும், நூலாசிரியரது புலமைச் சிறப்பினுற் கற்போர் உள்ளந் தோறும் புகுந்து விளையாடுகின்றன. கதாநாயகனுகிய அனுவுருத் திரன் தனது தந்தை பாற் காட்டும் பணிவு (பக். 51-52), தந்தை அவனுக்குரைக்கும் அறிவுரைகள் (பக். 53-54) என்பன மக்கட் சமு தாயத்துக்கு முக்காலமும் ஒளியூட்டவல்ல உண்மையும், பயனும் நிறைந்தவை. கவிஞரது சமுதாய நோக்கத்தின் பெருஞ் சிறப்புக்கு இப்பகுதி நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
* பரந்தாறு மாமுகமாய்ப் பாலில் வெண்ணெய் போலவும் நீ
இருந்தே விளையாடும் ஈசாமனத்தூடேகி கரந்தே இருந்தால் நான் காட்சி பெறும் காலமெப்போ”* (பக். 54) எனவும்*

- lis
"ஆணவத்தை நீக்கி அறிவாளர் போற்றுதிரி
கோணமுற்று வாழுங் குழகா குருபரனே நீணிலத்திலென்னையினி நீகாக்க வேணுமையா?*
(பக். 55) எனவும், வரும் அனுவுருத்திரனது பிரார்த்தனைப் பாடல்களும், வாணனது காவலாளர்களாற் கட்டியடிக்கப்படும் போது அனுவுருத்திரன் அழு தழுது முறையிடுகின்ற,
**காலாகி நீராகி வானமாகிக்
கனலாகி நிலமாகும் கடம்ப பாலா' (பக். 92) என்பது
முதலாகப் படிப்போரது நெஞ்சை உருக்கும் தன்மையிலமைந்திருக் கின்ற தோத்திரப் பாடல்களும், இந் நூலாசிரியரது இந்து சமய தத்துவ ஞானத்தின் உயர்வைக் காட்டுவனவாயுள்ளன.
**சங்கீன்ற முத்தொளிரும் தானேர் வயற்போதில்
செங்குவளை பூக்கும் திருத்துவரை நன்னடு’ (பக். 89)
முதலானவை சிறந்த இலக்கிய நயமும், உயர்ந்த பொருள் வளமும் கனிந்த நாட்டு வருணனைப் பாடல்களாகும். அனுவுருத்திரனுக்கும் வாணேசுரனுக்குமிடையில் நடந்த உரையாடற் பகுதியும் (பக். 82-85), தூதாக வந்த கிருட்டினனின் சேனபதிக்கு, வாணேசுரன் தன் மேம் பாடு தொனிக்க மறுமொழி பகரும் பகுதியும் (பக். 112-114) எத் தகையோருக்கும் உணர்ச்சியூட்டத்தக்க வீரச்சுவை நிறைந்த பாடல் களாலானவையாம்.(காதல் என்ற போர்வையில் நடைபெறும் இக் கால முறைகேடுகளுக்கெல்லாம் அடி கொடுப்பது போன்றும், அதே வேளையில் உண்மைக்காதலின் பேராற்றலை எடுத்துக்காட்டுவது போன் றும் அமைந்துள்ள குமாரத்திக்கும் அனுவுருத்திரனுக்குமிடையிலான முதலாவது உரையாடல் (பக். 66-69) சிறந்த உண்மைகளை உள் ளடக்கியது. தொடர்ந்து வரும் அவர்களது இரண்டாவது உரையாடற் செய்யுள்கள் (பக். 70-71), இந் நாடகத்துக்குயிரான காதற் சுவை யினுல் நிறைந்து, கற்போருள்ளத்தைக் கவருவனவாயுள்ளன. இவ் வாறு நூல் முழுவதும் செம்பொருள் நிறைந்து உயர்ந்த இலக்கிய நடையிலமைந்து விளங்குவதால் மற்றைய நாடகங்களுக் கெல்லாம் தலைமைத் தன்மை பூண்டதாய்ச், சிறந்ததோர் இயற்றமிழ் இலக்கி யம் போலவும் அனுவுருத்திர நாடகம் மிளிர்வதைக் கண்டு கற்றேர் உளம் களி கூருவர்.

Page 11
- 16 -
இந் நூலிலே பாண்டவர் கதைகள், கந்தப் புராணக் கதைகள், தேவாரகால நிகழ்ச்சிகள் என்பன அங்கங்கு எடுத்துக் காட்டப்படு கின்றன.(மட்டக்களப்பு நாட்டுப் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள் பல, நூலுள் மிகுதியும் பயின்று வரக் காணலாம்). "பிள்ளை' என்ற சொல் இந்தியாவில் ஆண்மக்களையே குறிக்க, ஈழத்திலே, பெரும் பாலாக மட்டக்களப்பிலே, பெண்மக்களையே அது குறிப்பதாகும். "'என் பிள்ளை தன்னை எத்தியெத்திக் கொண்டிருந்தாயோ' (பக். 82) என்று வாணன் அனுவுருத்திரனைக் கேட்கும்போது 'பிள்ளை' என்ற சொல்லாற் தன் மகள் வசந்த சுந்தரியைக் குறிப்பிடுகிருன். "கும்பா குடம் (பக். 31, நிறைகுடம்), "வள்ளல் (பக். 84, இழிவு) "பம் மாத்து (பக். 85; வெறும் வேடம்), கைபோடுதல்" (பக். 107, 111; சண்டைக்கு ஒருப்படுதல்), "ஒட்டு (பக். 113; ஒட்டுத்தாள்; கதிர்களை அறுத்தெடுத்தபின் மீந்திருக்கும் நெற்பயிரின் அடிப்பகுதி), "அவதாரம் பண்ணிப் போடுவேன்’ (பக். 114; வெட்டிக்கொன்று விடுவேன்), 'ஆப்பிட்ட பேய்க்கெல்லாம் (பக். 125; ஆப்பிட்ட - அகப்பட்ட), என்பனவாக மேலும் பல அத்தகைய சொற்கள் நூலுட் பயின்று வருகின்றன. 'கொச்சி நகராள் துரைமாரும்" (பக். 112) என்பதிலுள்ள "துரை என்ற சொல் 16ம் நூற்றண்டின் பின்னரே ஈழத்துத் தமிழிற் கலந்ததொன்று. 'கண்ணனுட மகனை" என்பதில் உள்ள 'உட' என்பது, ஆரும் வேற்றுமைச் சொல்லுருபாகிய 'உடைய' என்பதன் பேச்சு வழக்குத் திரிபாக மட்டக்களப்புத் தமிழிற் பயின்று வழங்குவது.
கிருட்டினனுடைய பதி துவாரகை; ஆனல் வாணனது தலைநக
ரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. வாணனுடைய பதி 'சோ' என் னும் நகரமாகும் என்று மதங்க சூளாமணி ஆசிரியர் கூறுகின்ருர், ஆயினும், சோ நகரம் எங்கிருந்த தென்பது தெளிவாக்கப்படவில்லை. ** மாவலியின் பேரால் வயங்கு மணிநதியும் ' என்ற யாழ் நூற் செய்யுளடி, ஈழத்திலேயே வாணனது தலை நகரம் இருந்திருக்கலா மென ஊகிக்க இடந்தருகிறது. துவாரகைக்குத் தெற்கே வெகு தொலை வில் "முப்புரம் போன்றிலங்கிய வாணனது கோட்டைகள் இருந்தன வென்பதை இந்நூலில் வரும் ஆதாரங்களால் அறிகின்ருேம். கிருட் டினனுடைய சேனபதி, காஞ்சி, திருத்தணிகை, சிதம்பரம் முதலான ஊர்களை முறையே கடந்து வாணனது பதியை அடைந்தானென்பது (பக். 109) இதனை வலியுறுத்துகின்றது. மக்கம் (அரேபியா), மிசி
 

- l7 -
ரம் (எகிப்து), காந்தாரம், மகதம், குகுதம், மலையாளம், கொழும்பு, மராட்டி நாடு, கண்டி, மதுரை, கொச்சி என்ற தேயங்களின் மன் னர்களும் தன் பெயர் கேட்டால் நடுங்குவர் என்று வாணன் கூறு கின்றன். மேனுட்டார் ஈழத்துக்கு வந்த (16ம் நூற்றண்டுக்குப்) பின் னரே, கொழும்பு, கண்டி, ஆகிய இரண்டும் முறையே மேல் நாட் டார், சிங்களவர் ஆகிய இருவேறு மன்னர்தம் ஆட்சியின்கீழ் இருந் தன என்பது வரலாறு. மேலும் கிருட்டினனது சேவகர்கள் வத்தாவி (பத்தேவியா), கொழும்பு, கண்டி, மாத்தறை, கொச்சி, வங்காளம், ஆகிய இடங்களில் (பக். 77) அனுவுருத்திரனத் தேடிச் சென்றதாக இந்நூல் குறிப்பிடுதலையும் நாம் கருதுதல் வேண்டும்.
நல்ல சொற்கோப்புக்கொண்டு, முறையே 3, 4, 5, அடிக ளால் ஆன பல்வேறு இனிய கொச்சகங்கள் நூலுக்கு நல்ல விறு விறுப்பை அளித்து நிற்கின்றன. மூன்றடிக் கொச்சகங்களைத் தொடர்ந்து, வீரச்சுவை செறிந்த பாடல்கள் (தருக்கள்) வருதல் மிக மிக அவசியமாகும். அதுவே கொச்சகத்தரு எனப்படுவது. வாணன் அனுவுருத்திரன் தர்க்கம் (பக். 83-85), குமாரனைத் தலையாரிமார் கட்டி அடித்தல் (பக். 88-91), கிருட்டினன் சேணுபதிக்கு வாணன் கூறுதல் (பக். 112-113), பலபத்திரனுடைய தன் மேம்பாட்டுரை (பக். 120-122), கிருட்டினனது வீரமுழக்கம் (பக். 131 - 133), ஆகிய பகுதிகள் அத்தகைய இனிய கொச்சகத்தருக்களால் ஆனவை யாகும். இந்நூலுள் வரும் 6, 7, சீர்களாலான விருத்தங்கள் முறையே கவி, ஆசிரிய விருத்தம் என்ற பெயர்களாற் குறிப்பிடப்படுதலைக் காணலாம். தூதுவர், சேனதிபதி என்பார் வழிநடையிற் பாடும் தருக்கள் நடைசாரியென்று பெயர் பெற்றுள்ளன.
புராணக் கதைகளின்படி கிருட்டினன் வாணனது ஆயிரம் கரங் களையும் அரிந்து அவனைக் கொன்றனென்று அறிகின்ருேம் கண்ண பிரான் பதினேராடலுள் ஒன்றன மல் ' என்ற வலிய ஆடலை நிகழ்த்தி, வாணனை அதனிடை வீழ்த்தி, அவனது கழுத்தை நிெரித் துக் கொன்ருன் என்று மதங்க சூளாமணி கூறுகின்றது. ஆனல் அனுவுருத்திர நாடகமோ, வாணுசுரன் போரின் போது கிருட்டின னைப் பணிந்து சமாதானம் செய்து கொள்வதாகவும், தன் மகள் வசந்த சுந்தரியைக் கிருட்டினனது மகனுகிய அனுவுருத்திரனுக்கு மணம் முடித்து வைப்பதாகவும் நிறைவுறுகின்றது. தென்மோடி நாட் டுக் கூத்துகளின் மரபுப்படியான மங்கல முடிபினை நோக்கியது இந்த அமைப்பு என்று நாம் கொள்ளலாம்:

Page 12
- l8 -
(2) தென்மோடி நாடகச் சிறப்பிலக்கணம் சில
"மட்டக்களப்புத் தமிழகம்’ என்ற நூலுள் வடமோடி, தென் மோடியாகிய நாட்டுக் கூத்துகளின் இலக்கணங்களை ஒரளவு காட்டி யிருக்கின்றேன். தமிழ் நாடகக் குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி, மட்டக்களப்புத் தமிழகப் பிரதியிலிருந்து நாட்டுக் கூத்துகளின் இலக் கணம் முதலியன பற்றிய சில பகுதிகள் மேற்கோட் குறிகளுடன், அலங்காரரூப நாடக முன்னுரையுள்ளும் வெளிவந்தன, எனினும், அனுவுருத்திர நாடகம் முதலான பழைய நாட்டுக் கூத்துகளை மென் மேலும் ஆராயும் பொழுது, இன்னும் பல தெளிவான நாடக இலக் கணக் குறிப்புகளை நாம் பெறக்கூடியதாய் இருத்தலைக் காண்போம்.
வடமோடி நாட்டுக் கூத்தில் "முத்திரைப் பல்லவி என்ற பாட்டு விசேடமான ஆட்டத்திற்குரிய ஒன்ருக வருகின்றது. "முத்திரைப் பல்லவம்’ என்று அந்த ஆடலும் பெயர் பெறும். அவ்வாடல் தென் மோடிக்கு இல்லை. எனினும், ஒரோவழி "முத்திரைப் பல்லவி தென் மோடியில் படிக்கப்படுவதுண்டு. "நன்ன நன்ன" என்பது போன்று ஏற்ற தருக்களைப் பாடல் தோறும் பிற்பாட்டுக்காரர் படிக்க வேண்டி யது தென்மோடியில் நியதியாயிருக்க, முத்திரைப் பல்லவியின் போது மட்டும், பாடலின் முதற் பகுதியாகிய பல்லவியையே திரும்பத் திரும் பப் படிப்பது தென்மோடியில் வழக்கமாயிருக்கின்றது. இந்நூலில் பக். 110-111, பக். 125 ஆகிய பகுதிகளில் முத்திரைப் பல்லவியின் இந்த அமைப்பைக் காணலாம். 'காலமேற்றுதல்", கூத்தர் ஒவ்வொரு வருக்குமான முடிபுத்தாளமாகும். இது வடமோடிக்கு மட்டுமே சொந்த மானது. எனினும், காலமேற்றுதலுக்கு ஒரளவு சமமான "தெய்தான" என்னும் ஆட்டம் ஒன்று தென்மோடியில் இருக்கக் காண்கின்ருேம். இது அரசகுமாரி, நாடக மங்கை முதலான இள நங்கையர்க்கு மட் டுமே உரியது. வசந்த சுந்தரியின் இறுதி ஆட்டத்தின்போது "தெய் தானு' பயிலுவதை பக். 35, 41ல் உள்ள பாடல்களில் நாம் காணலாகும். பொதுவாக, வடமோடியிலும், ஒரோவழி, தென்மோடியிலும் வரும் சேனபதி, தலையாரி முதலான வீரர்கள் குதிரை மீதிலமர்ந்து வருவது வழக்கம். ஆயினும், அனுவுருத்திர நாடகத்தில் வரும் அத்தகைய வீரவான்களுக்குக் குதிரை இல்லையென்பது நோக்கற்பாலது.

- l9 -
தென்மோடியில் வரும் உரையாடற் பகுதிகள் எல்லாம், "தர்க் கத்தரு’ என்ற பெயராலேயே குறிக்கப்படுதல் மாருத ஒரு வழக்க மாகும்.
வடமோடியில் "தித்தித்தா” என்ற தாளமும், தென்மோடி யில் "தெய்யத் தாகசந் தத்திமி என்ற தாளமும் மிக முக்கியமான வையாய் அடிக்கடி பயின்றுவருவன. மாலையினூடு செல்லும் நூல் போன்று, இவை அந்தந்த நாடகத்தினுாடு தவருது அடிக்கடி வரும் தாளங்களாகும். வடமோடிக்கான "தித்தித்தா' வின் போது பாதம் முழுவதும் நிலத்திற் படும்படியாக உரஞ்சி இழுத்தாடுதலும், தென் மோடிக்குரிய தெய்யத் தாகசந் தத்திமி" ஆட்டத்தில் பாதத்தின் முற்பகுதி, குதிப்பாகம் இரண்டும்மட்டும் நிலத்திற் படும்படி - உள்ளங் கால் நிலத்திற் படாதவாறு - குத்தி மிதித்தாடுதலும் இன்றியமை
யாதன.
நாடகம் தொடங்கும் போது முதலாவதாக மத்தள அண்ணு வியார் களரி அடி" என்ற தாளத் தொடரை மத்தளத்தில் முழக் கிய பின்னர், தென்மோடி நாடகத்திற் காப்பு முறையிலமைந்த பொதுப் பாடல்களாகிய "சபை கட்டுப் படிக்கப் பெறும். பின்னர், சபை விருத்தம் என்ற தலைப்பில் அமைந்த, குறித்த நாடகக் காப்பு, சிறப்புப் பாயிரம் முதலான பாடல்களைச் சபையோர் படிப்பர் Aஇவற் றின் பின்னரே முதல் வரவு (பெரும் பாலும் கட்டியகாரன் வரவு) ஆரம்பமாகும். இவைகளிலே , "சபை கட்டு” என்ற பாடற் பகுதி வட மோடி நாடகங்களுக்கில்லை. இது பற்றி,இந்நூல் "சபைகட்டுப் பாடல் களின் அடிக்குறிப்பிலும் (பக். 26) விபரமாகக் காட்டப்பெற்றுள்ளது. கூத்துக் கொப்பி பார்ப்பவர், மத்தள அண்ணுவியார், சல்லரி (தாளம்) போடும் அண்ணுவியார், பக்கப்பாட்டுக்காரர் (பெரும்பாலும் இரு வர்), கூத்து நிருவாகி ( 'மனேஜர் ) ஆகியோர் கூத்தின் போது மேடையில் இடம்பெறுவர். இவர்களே "சபையோர்’ எனப்படுவோர். இது இருவகைக் கூத்துகளுக்கும் பொதுவான ஒன்ருகும்.
வி. சீ. கந்தையா
(3) தென்மோடித் தாளக்கட்டுகள் (இப்பகுதியை நூலிறுதியில் - பக். 157ல் பார்க்கவும்)

Page 13
6
அனுவுருத்திர நாடகம்
பொருளடக்கம்
வெளியீட்டுரை O Luja Lib 1 மதிப்புரை 5 முன்னுரை o 8 ஆராய்ச்சிக் குறிப்புகள்
(1) நூலைப்பற்றி 五3 (2) தென்மோடி நாடகச் சிறப்பிலக்கணம் சில 18 (3) தென்மோடித் தாளக்கட்டுகள் ac O2 157 கதைச்சுருக்கம் 2. சபைகட்டு O 25 நூல்: காப்பு a 29 வாணனது கட்டியகாரன் வரவு 29 வாணன், மனைவி கொலு வரவு o 31 வசந்த சுந்தரி, தோழி வரவு 33 கிருட்டினனது கட்டியகாரன் வரவு . 42 கிருட்டினன், உருப்பிணி கொலு வரவு 45 கிருட்டினன் மந்திரி வரவு 46 அனுவுருத்திரன் வரவு 50 சுந்தரி கனவு - சேர்க்கைத் தரு 56 - 7 கிருட்டினனது சேவகர் வரவு 75 வாணன் தலையாரி வரவு 79 அனுவுருத்திரன் - வாணன் தர்க்கம் . & தலையாரி - அனுவுருத்திரன் தர்க்கம் (கட்டி அடித்தல்) 86 நாரதமுனி வரவு . 1 OO கிருட்டினன் சேனுபதி வரவு 1 Ο 5 தூதுவர்க்கு வாணன் மறுமொழி II 2 பலபத்திரன் வரவு II 8 வாணன் சேனபதி வரவு 127 வாணன் சேனுபதி - பலபத்திரன் தர்க்கம் (போர்) 卫3& வாணன் - கிருட்டினன் தர்க்கம் (போர்) - O 14) வள்ளுவர் வரவு 150 பிராமணர் வரவு . 154 ஆராய்ச்சிக் குறிப்புகள் தொடர்ச்சி:-
157
(3) தென்மோடித் தாளக்கட்டுகள் . o
 

அனுவுருத்திர நாடகம் கதைச் சுருக்கம்
வீரம்மிக்கவனும் , தவவலியால் தேவரும் அஞ்சத்தக்க புய வலியைப் பெற்றவனுமான வாணன் என்னும் அசுரேந்திரன், தேவ லோகத்தையும் வென்று, இணையற்ற பேரரசனுகத் தன்னட்டை ஆண்டுவந்தான். அவனது ஏக புத்திரியாகிய வசந்தசுந்தரி என்பாள் ஒருநாள், தன் தோழியருடன் சோலையுட் சென்று மலர் பறித்து விளையாடி வருவதற்கு அனுமதி தருமாறு தாயிடங் கேட்டனள். அதுகேட்ட தாய், உசத்திய முனிவன் மகள் விருத்தை என்பவளும், மைலாப்பூரில் வாழ்ந்த சிவநேச வணிகனின் மகள் பூம்பாவை என் பவளும் முன்பு சோலையுள் மலர்பறித்து விளையாடச்சென்று துன்பம் அடைந்த வரலாறு களை க் கூறி, அவளைப் போகவேண்டாமெனத் தடுத்தாள். பிடிவாதம் மிக்கவளாகிய வசந்தசுந்தரி, பேராற்றல்மிக்க தன் தந்தை உயிருடன் இருக்கும்வரை, தனக்கு எவ்வித துன்பமும் ஏற்படாதென எடுத்துக்காட்டத், தாயும் அதனை ஏற்று விடைகொடுத் தனுப்பிவைத்தாள். அதன்படி வசந்த சுந்தரி தோழியருடன் மலர் பறித்து விளையாடிவிட்டு, அரண்மனையையடைந்து மகிழ்வுடன் வாழ்ந்துவர லானுள்.
அதேகாலத்தில், துவாரகாபுரியிலிருந்து பூரீ கிருட்டினர் அரசு புரிந்து வந்தார். அவரது புதல்வனகிய அனுவுருத்திரன் என்பான் நல்லொழுக்கமும், நிறைந்த கடவுள் பக்தியும், சிறந்த வீரமும் உடையவனுய்த், தந்தை தாயரின் ஆசி பெற்றுத் தன் மாளிகை யில் வாழ்ந்துவந்தான். வாணுசுரனது மகளாகிய வசந்தசுந்தரி, ஒருநாள் இரவு தன் மஞ்சத்தில் நித்திரை செய்யும்போது அனுவு ருத்திரனுடன் இன்பக் கலவியிலீடுபடக் கனவு கண்டாள். துயிலுணர்ந் தெழுந்த வசந்த சுந்தரி, தனக்கு இன்ப சுகமளித்த அந்த அரசிளங் குமரன் யாரெனவு மறியாது, அவனை நினைந்து பல வாருகப் புலம்பித் தோழிமாரிடம் தான் கண்ட கனவை எடுத்துக்கூறினுள். அந்த அரசகுமாரனை, வசந்த சுந்தரி அறிவதற்காகப், பாங்கியர் பலதேசத்து மன்னர்களது உருவப்படங்களையும் வரைந்துகொண்டுவந்து முறையே அவளிடங் காட்டினர். அவற்றுள் அனுவுருத்திரனின் படத்தைக் காணப்பெற்றதும், அவனே கனவில் வந்து தன்னைக் கவர்ந்துகொண் டவன் என்று கூறி, அவனது ஊர், பெயர் முதலிய யாவற்றையும் தோழியரிடங் கேட்டறிந்து, எப்படியாவது அவனைத் தன்னிடம் கொணர்ந்து தரவேண்டுமென்று கெஞ்சினுள்.
தோழியரிருவரும் அவள் வேண்டுகோளின்படி துவாரகை சென்று, அனுவுருத்திரனுடைய மாளிகையுட் களவாகப் புகுந்து சென்று, அவன் உறங்குஞ் சமையத்தில் மாயப்பொடி ஒன்றைத் தூவி, அவனை மயக்கிக், கட்டிலுடன் அவனைத் தூக்கிச் சுமந்து வந்து வசந்த சுந்தரியிடம் கொடுத்தனர். வசந்த சுந்தரி, தன் மனக்

Page 14
22 -
கிடக்கையை, நித்திரை நீங்கி எழுந்த அனுவுருத்திரனிடங் கூறினுள் அவளது எண்ணத்துக்கிணங்காத குமாரன், அவளுக்குப் பல நீதி களையும் எடுத்துரைத்து மறுத்துக் கூறினன். ஈற்றில், உலக இயற் கைக்கு மாரு ய்த், தன் ஆராமை காரணமாக அவனைக் களவாக எடுப்பித்தமையை வசந்த சுந்தரி உரைத்துத் தன்னை மணந்துகொள்ள அவன் சம்மதியாவிடின் பெண்பழி போட்டு அவன் முன்னிலையிலே தான் இறந்துவிடுவதாக அச்சுறுத்தினுள். அதனல் உடன்பட்ட அனுவுருத்திரன், வசந்த சுந்தரியுடன் கூடிப் போகந்துய்த்து, அவள் விருப்பின்படி அரண்மனையை விட்டகலாது, கன்னிகா மாடத்திலேயே வாழ்ந்துவரலானன்.
இஃதிவ்வாருக, அனுவுருத்திரன் கட்டிலுடன் எடுத்துச் செல் லப்பட்ட காரணத்தாற் துவாரகாபுரி அரண்மனை மிகுந்த அல்லோல கல்லோலப்படலாயிற்று. கிருட்டினரின் மனைவியாகிய உ ரு ப் பி னி (ருக்மணி) அம்மை மிகுதியும் மனம் கலங்கி, தன் மகன் கடத்திச் செல்லப்பெற்றிருக்கும் இடத்தை நாடெங்கணும் தேடி அறிந்து வரு வதற்கு வேண்டிய வழிகளைச் செய்யுமாறு கணவனை வேண்டினுள். அதன்படி சகல இடங்களிலும் சென்று மகனைத் தேடி வருமாறு தன் சேவகர்களைக் கிருட்டினர் விடுத்தார். அவர்கள் எங்குத் தேடியும் தங் கள் அரச குமாரனைக் காணுது மனங்கலங்கியவராய் மீண்டு வந்து மன்னனிடம் அதனைத் தெரிவித்தனர். அதனுற் கிருட்டினரும் மனைவி யும் ஆழ்ந்த துயருடையவராயினர்.
இது நிற்க, வாணனது காவலாளர், ஒரு நாள், தமது அரண் மனைக் காவலின்போது, கிழக்குத் திசையிலே ஒரு பல்லி சொன்ன குறி யைக் கணித்து அவதானித்தனர். கன்னிமாடத்தில் களவு நிகழுந் தன்மையை அக்குறியாலுணர்ந்த அவர்களது கூர்த்த நோக்கத்திற்கு அனுவுருத்திரனும், வசந்தசுந்தரியும் சல்லாபம் புரிந்து வாழ்வது தென்படலாயிற்று.
அக்கணத்தே வாணமன்னவன்பால் அவர்கள் ஒடிச்சென்று, மதனும் இரதியும் போலவும், வள்ளியும் கந்தனும் போலவும், தங் கள் அரச குமாரியும் வேருெருவனும் சல்லாப விளையாட்டிற் கன்னி மாடத்துள் இருப்பதைத் தாம் கண்டனரென்று கூறினர். அதனுற் பெரிதும் ஆத்திரங்கொண்ட வாண மன்னன் உடனே கன்னிமாடஞ் சென்று, அனுவுருத்திரனை இன்னனென விசாரித்து அறிந்து, பிடித்துத் தண்டலாளரிடங் கொடுத்து அவனைக் கட்டி அடித்து விலங்கில் மாட்டி வைக்குமாறு கட்டளையிட்டான். சேவகர்களும், மன்னவன் கட்டளைப் படி அனுவுருத்திரனைக்கட்டி அடிக்கும்போது, அவன், தான் நிரபராதி என்றும், தன்னைத் தண்டிக்க வேண்டாமென்றும் இரந்து வேண்டி, நடந்த வரலாறனைத்தையும் எடுத்துரைத்துப் புலம்பினன். தண்டலா ளர்களோ கடுகளவும் ஈவிரக்கம் காட்டாது அவனைக் கட்டி அடித்து விலங்கிலிட்டுக் காவல் புரிந்து வருவாராயினர். அச்செயலுக்காற்ருத வசந்தசுந்தரி பூரீகிருட்டின பகவானை நினைத்துப் பிரார்த்தித்துத் தன் காதலனை அத்துன்பத்திலிருந்து மீட்டுக்காத்தருளுமாறு வேண்டினள்.
வசந்தசுந்தரி புலம்பிய சத்தங்கேட்டு அங்குவந்த நாரதமுனி வர் அவள் துயரைக்கேட்டறிந்து ஆறுதலும் அபயமும் அளித்தார்.

- 23 -
பின்பு அவர் பூரீகிருட்டினரிடம் சென்று அனுவுருத்திரன் சிக்கியிருக் கும் துன்ப நிலையை விளக்கிக் கூறினர். உடனே, கிருஷ்ணர் தன் மகனை விடுதலை செய்யுமாறு கேட்டு வாணனிடம் தூது போக்கினர். வாணன் அதற்கு உடன்படாது, பதிலாகக் கிருட்டினரைப் போருக்கு வரும்படி அறை கூவி விடுத்தான்.
செய்தியை அறிந்த பரந்தாமன் வெகுண்டெழுந்து, காலந் தாழ்த்தாது தமையனுகிய பலபத்திரனை அழைத்து நடந்தவற்றைக் கூறி அவரது ஆலோசனையை வேண்டினன். வாணனிடம் தூதுவிடுத் தது தவறு என்றும், தாமதிக்காது அவன் மீது படையெடுத்துச் சென்று, வாணனை வதைத்து மகனைச் சிறை மீட்டலே செய்திருக்க வேண்டியதென்றுங் கூறினர். அவரது ஆலோசனைப்படி இருவரும் வாணன் மேற் படை எடுத்துச் சென்ருர்கள். அதனை அறிந்த வாண னும், தனது சேனதிபதியை அழைத்துப் போருக்குச் சித்தம் செய் வித்தான். இரு பகுதியாருக்குமிடையிலே ப யங் க ர மான யுத்தம் நிகழ்ந்தது.
கிருட்டினர் வாணனுடனும், பல பத்திரன் வாணனது சேனைத் தலைவனுடனும் நேரே பொருதனர். கடியபோருக்குப்பின்னர் வாண னது சேனதிபதி பலபத்திரருடைய கதாயு தத்திற்கு இரையாஞன். கிருட்டினருக்கும் வாணனுக்குமிடையில் வெற்றிதோல்வியின்றி நீண்ட நேரமாகக் கொடிய யுத்தம் நடந்தது. ஆயினும் இருவரில் ஒருவரும் சளைத்தாரில்லை. வாணன் ஒன்ருலும் அழிவுரு?மையைக் கண்ட கிருட் டினர் தமது சக்கராயுதத்தை ஈற்றில் எடுத்தார். வாணன் சக்கரப் படையின் பேராற்றலை உணர்ந்தவனு தலால், பெரிதும் மனங் கலங் கித் தன் குற்றத்தைப் பொறுத்து அபயமளிக்குமாறு கிருட்டினரைப் பணிந்து வேண்டினன்.
கிருட்டினர் உடனே போரை நிறுத்தி, வாணனைநோக்கித் தன் சகோதரரான பலபத்திரரிடஞ் சென்று அவரை வணங்கி, அவர் சொல்வதை அறிந்து வருமாறு பணித்தார். அவ்வாறே பலபத்திரரை அவன் வணங்கித், தேவருக்கும் அவுனருக்குமுள்ள உறவு முறைகளைக் கிளர்ந்து கூறித் தன் மகளுக்கும், அனுவுருத்திரனுக்கும் திருமணஞ் செய்து வைக்க விருப்பம் கேட்டு நின்றன். பல தேவரும் அதற்குச் சம்மதந் தெரிவித்து, அனுவுருத்திரனைச் சிறையிலிருந்து விடுவித்து அழைத்து வருமாறு கூறினர்.
அழைத்து வரப்பட்ட அனுவுருத்திரன் தன் தந்தையாரைத துதித்து, தான் அங்கு கொண்டுவரப்பட்ட வரலாற்றையும், பட்ட இன்னல்களையும் விரிவாகக் கூறியதோடு, வாணன் மகள் மீது தனக் கேற்பட்டுள்ள காதலையும் தெரிவித்துநின்றன். அனுவுருத்திரனுக்கும் வசந்த சுந்தரிக்கும் திருமணம் செய்து வைக்க அனைவரும் ஒருப் படவே, வாணன் வள்ளுவர் மூலம் திருமணச் செய்தியை எங்கும் அறைவித்து, நாட்டை அலங்கரிப்பித்து வேதியர் மூலம் நல்ல நாளி லே, தன் மகள் வசந்தசுந்தரிக்கும், கிருட்டினரது மகன் அனுவுருத் திரனுக்கும் திருமணம் செய்து வைத்தான். பெற்ருே?ர்களாலும் பெரியோர்களாலும் ஆசீர்வதிக்கப் பெற்ற அனுவுருத்திரன் தன் மனைவியாகிய வசந்தசுந்தரியோடு இனிதூழி வாழ்ந்துவரலானன்.

Page 15
- 24 -
கூத்துக்காரர் (கூத்தின் உறுப்பினர்)
கட்டியகாரர் (இருவர்)
வாணன்
வாணன் மனைவி
வசந்தசுந்தரி சுேந்தரி, குமாரத்தி) சித்திர ரேகை அமிர்த ரேகை
மாகதர் (இருவர்)
ரீ கிருட்டினன்
உருப்பிணி ருேக்மணிதேவி)
உல்காச மந்திரி அணுவுருத்திரன்
(குமாரன்) முத்திரைச் சேவகர் தலையாரிமார் (இருவர்) நாரத முனிவர் கிருட்டினன் சேனுபதி
(இருவர்)
பலபத்திரன் வள்ளுவர் (இருவர்) வேதியர்
வாணன் வாசற் கட்டியம் கூறுவோர் அசுரர்குல மன்னன் டிெ மன்னனது பட்டத்தரசி
வாணராசனது ஒரே மகள்
வசந்தசுந்தரியின் தோழியர் இருவர்
பூரீ கிருட்டினராசன் வாசற் கட்டியம்
கூறுவோர்
துவாரகை வேந்தனன கண்ணபிரான்
பூரீ கிருட்டினராசனின் மனைவி
பூரீ கிருட்டினராசனது முதன் மந்திரி
பூரீ கிருட்டினராசனுடைய மகன்
(தலைமைக்கூத்தன்; கதாநாயகன்.)
பூரீ கிருட்டினராசனது ஒற்றர் வாணன் மாளிகைக் காவலர்
திரிலோக சஞ்சாரி, கலகப்பிரியர் பூரீ கிருட்டினரது படைத்தலைவர்
பூரீ கிருட்டினரது தமையன் வாணராசனது தண்டோராத் தலைவர்
திருமணச் சடங்கினை நடத்தும்
பிராமணர்.
மட்டக்களப்புத் தமிழ் வழக்கில், 'கூத்துக்காரர்' என்றே
நாடக உறுப்பினரைக் குறிப்பிடுவர்.
சிலப்பதிகார உரையிலும்,
சங்கநூல்களிலும் ஆளப்படும் ‘கூத்தர்’ என்ற சொல்லுடன் ஒத்து நடக் கும் 'கூத்துக்காரர்' என்ற இத் தொடரின் சிறப்பு நோக்கத்தக்கது.
பொதுவாக, கதாபாத்திரம், நாடக பாத்திரம், நாடக உறுப்பினர், நாடக அங்கத்தினர் முதலியனவாகத் தற்கால உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் இப்பொருள் இடம் பெற்றிருக்
கக் காணலாம்.

அணுவுருத்திர நாடகம் (தென்மோடி)
சபைகட்டு
தரு
தனணு தன தனனு தன
தானன்ன தனதானன்ன
தனணு தன தனணு தன
தானன்னு தன தானன்னு
1. ஒரு மாங்கனிக் காகவே - உல
கேழையும் வலமாகவே - வரு திருமால் மருமகனே - தெய்வக்
கொழுந்தே எச்சரிக்கை - தனனுதன
2. பானை போல வயிறும் உடல்
பருத்த துதிக்கையும் - கொண்ட * ஆனைமுகமானுய் - தேவர்க் (கு)
அரசே எச்சரிக்கை - தனணுதன
3. தம்பிதனக் காகவே - வனந்
தாவுதுணைப் பொருளே ஒரு கும்பமத முகத்தாய் - எங்கள்
கூத்துக் கெச்சரிக்கை - தனணுதன
பாடபேதம் :-
*ஆனை முகத்தோனே - கண
பதியே எச்சரிக்கை
சபைகட்டு :-
இவற்றினையடுத்துப் பின்வரும் அடிகளும் சில இடங்களில் வழங்கப் பெறுகின்றன.

Page 16
- 26 -
4. ஆறுமுகமானுய் - விண்ணில்
அசுரர்தமை அழித்தாய் கூறு மயிலேறி வரும் - கோழிக்
கொடியாய் எச்சரிக்கை - தனனு தன
5. மானுர் குறமாதினிடம்
மாயையாய்ச் சென்று - புனத்தில் தேனர் மொழி வள்ளியரைச்
சேர்ந்தாய் எச்சரிக்கை - தனணுதன
கூத்துக்களரியில் கூத்தாட்டம் தொடங்குமுன் * களரியடி’ என்று சொல்லப்படும் ஒருவிதத் தாள ஒலி மத்தளத்தில் இருந்து எழுப்பப்படும். மங்களமானதென்று கருதப்படும் அப்பேரொலி, கூத்துக்களரியை இனிய அதிர்வினல் நிறைத்துக் கேட்போரை உணர்ச்சி வசப்படுத்திநிற்கும்.
களரியடி முடிந்ததும் "சபைகட்டு’ எனப்படும் தருக்கள் படிக்கப்படுவ. பாட்டின் இசையமைப்புக்கே தரு’ என்று பெயராயி னும், தருவுக்கமையப் படிக்கப்பெறும் கூத்துப்பாட்டுக்களையும் தென் மோடிக்கூத்தில் தரு என்றே குறிப்பிடல் மரபு. நூல்களில் இடம் பெறும் காப்புச் செய்யுள்போன்று களரிக்குரிய காப்புச் செய்யுள் ‘சபைகட்டு. பெரும்பாலும் இது பிள்ளையார் (விநாயகர்) துதியாய், ‘எச்சரிக்கை' என்று முடிவுறும் அடிகளைக்கொண்டமைந்திருக்கும். சில இடங்களில், விநாயகரோடு, முருகனுக்குமான சபைகட்குத் தருக் களும் சேர்த்துப் படிக்கப்படுகின்றன.
இவ்வாறன்றி, விநாயகருக்கு மட்டுமே படிக்கப்பெறுவன வும், அன்றி, முருகனுக்கு மட்டுமே படிக்கப்பெறுவனவுமான சபை கட்டுத் தருக்களை, வேறுசில தென்மோடி நாடகங்களிற் காணலாம். பிறஸ்தூமன் (பிரத்தியும்நன்) நாடகம், மதனரூபன் நாடகம் ஆகிய இரண்டன் சபைகட்டுத் தருக்களையும் முறையே, உதாரணமாக இங் குக் காட்டுகின்றேன்:-
 

- 27 -
பிற ஸ்தூமன் நாடகம்
சபைகட்டு (வினுயகருக்கு மட்டும்)
மூல முதற் பொருளே பிற ஸ்தூமன் கதை பாட
முன்னே வந்தென் குறை தீர்த்தருள் முதல்வா
கணபதியே
கோலமுடன் அல்லி நெல்லி கொன்றை மலர் சூடி குவிந் தென் முன்னே வருவாய் கணபதியே எச்சரிக்கை
ஆனைமுகமாகி அழகான இரு செவியும் ஆத்தி மலர் சூடி வருவோனே கணபதியே பானை போலே வயிறுமுடல் பருத்த துதிக்கையும் பத்தர் தொழ வருவாய் கணபதியே எச்சரிக்கை.
முக்கணணுர் தவத்தால் வந்த முதலே
மூலப்பொருளே
முல்லை மலர் சூடி உறை வோனே கணபதியே தக்கன் *வலதழித்த சிவ சாம்ப சிவன்மைந்தா சத்தி கணபதியே அருள் தருவாய் எச்சரிக்கை.
உமையாள் தருமகனே பிற ஸ்தூமன் மாயாபதியை உற்றேமன மிடுநா டகமுரைக்கக் கணபதியே சமையமிது வருவாய் சம்பாத்தை மலர்சூடித் தந்திமுகமானுய் கணபதியே எச்சரிக்கை.
*வலது - வல்லமை.
81.220

Page 17
பிற்காலத்தன என்று கூறுவர். இவற்றின் சபைகட்டுத் தருக்க
மதனரூபன் நாடகம்
சபைகட்டு (முருகனுக்கு மட்டும்)
அரிமால் மருகோனே சிவனுர் அருள்மகனே கரிமாமுகன் துணையே கதிரேசா எச்சரிக்கை.
கதிரைமலைக்கரசே என்றும் கருணைப் பெருங்கடலே அதிரூப சிங்கார அறுமுகனே எச்சரிக்கை.
ஆறுமுக மாகியே
அசுரருயிர் வதைத்தாய்
தேறுமுகமான ய் தெய்வக்
கொழுந்தே எச்சரிக்கை.
சோதி நல் மணியு மெரி
சுடருஞ் சுடர் ஒளியும்
பாதிமதி அணிந் தோனருள்
பாலா எச்சரிக்கை.
பாலா வள்ளி தெய்வானையின் பங்கிலுறைவடிவே
வேலா கருஞ் சேவற் கொடிக்
குகனே எச்சரிக்கை.
பிறஸ்தூமன், மதனரூபன் ஆகிய இரு நாடகங்களும் :
அனுவுருத்திர நாடகத்தின் வேரு ய்த், தனித்தனி வெவ்வேறு சீர்களா லானவையாயிருத்தலையும் காணலாம்.
 

அனுவுருத்திர நாடகம் தென்மோடி
நூல்.
காப்பு - விருத்தம்
சீர்பூத்த உலகமெல்லாந் திறல் பூத்து
விளங்க ஒரு செங்கோ லோச்சி ஊர்பூத்த மதிக்குடையோன் பரந்தாமன் உதவுமனு வுருத்திரன் றன்மேல் வார்பூத்த முலை வசந்த சுந்தரி மா மயல் கொண்ட வளமை பாடக் கார்பூத்த மும் மதத்தா னங்கரன் புொற்
பாத மலர் என்னளும் காப்புத்தானே.
பொன்னக மின்னியருட் புனலாகப்
போந்துயிராம் பயிருண்டாகப் பன்னகம் வளர்ந்த முகில் மகனுகும் அனுவுருத்திரன் வளமை பாடப் புன்னகத் தாரோடும் பொறிநாகத்தினைப்
பூண்டோன் புனிதற்காயோர் கன்னுக முரித்தவனென் கருத்தாக
இருத்திய பொற் கழல் காப்பாமே.
வாணராசனது வாசற் கட்டியகாரன் வரவு.
சபை விருத்தம்
முண்டாசு சிரசணிந்து கவசம் பூட்டி
முறுக்கிய மேல்மீசை யொருகையாற் கோதி வண்டேறு மலர்மாலை மார்பிற் பூண்டு
வார் கழலைக் காலினிடை வயங்கப் பூட்டித் தண்டாமென் றிடப் பிரம்பு கையிலேந்திச்
சபையிலுள்ளோ ரதிசயிக்கத் தகைமைகூறிக் கண்டோர்கை தொழநடந்து வாணன் வாசற்
கட்டியகாரருஞ் சபையிற் கடிதுற்ருரே.

Page 18
- 30 -
சபை - தரு
தனதந்தன தனதந்தன தானின - தன தனதந்தன தனதந்தன தானிை தனதந்தன தனதந்தன தானின - தன தனதந்தன தனதந்தன தானின.
அணிபம்பிட நறை பொங்கிடு தாரினன் - பகைவர்
அஞ்சிப் பரிவுய்ந்திடு தேரினன்
வருமிஞ்சிடுவலி கொண்டிடும் வாணரா - சன்றன்
வாசற் கட்டியகாரர் தோற்றினுர்.
தேவர்கள் தினந் தொழுந் தாளினுன் . மறு
தேவர்மெய் நிணங் கொள்ளும் வாளினுன் காவல் கொண்டரசு செய் வாணன்வா - சலிற்
கட்டிய காரருந் தோற்றினர்.
கட்டியகாரர் - தரு
நன்ன நன்ன நான நன்ன நானநன்ன
நானநன்ன நானு - நன்ன
நானநன்ன நானநன்ன நானநன்ன
நான நன்ன நானு.
1. தேவர் புகழ்ந் தேவல் செய்யுந் செல்வனெங்கள்
வாணதுரை வாருர் - இந்தத் தேரோடும் வீதியெல்லாந்
தூரோடு வாழைநடு வீரே.
2. மந்தரநேர் திண்புயத்தான் வாணதுரை
கொலுவிலிதோ வாருர் - நீங்கள் பந்தலிட்டுத் தோரணங்கள்
பரிவாக நிரைக்க வகை பாரீர்.
 

- 3 l -
3. அரசர்குலந் திறை யளக்கும் அதிவீர
வான துரைவாருர் - நீங்கள் அணிகுலவுந் தெரு வீதிகளழகுடன்
*கும்பாகுடம் வைப்பீரே.
4. வாசவன் தன்முடி தேய்த்த வார்கழற்கால்
வாணதுரை வாருர் - உங்கள் வாசல்தொறுங் கோல மிட்டு
மங்கையரே இங்கி தஞ் செய்வீரே.
விருத்தம்
அத்தகிரி யுதயகிரி யொத்த புய வலி கொண்டு
அமரரையடர்த்த புகழான் அட்ட யானையு மவன் தோளான் முருக்கியும்
அடங்காத திமிர்தமுடையான் சித்தர்கந் தருவர் கருடர்கள் முதலான திறை தாங்கி நிறையு நிதியான் தேசம் முழு தாள்கின்ற வாணராசன் சமுகஞ்
சிங்காரம் வெகுபராக்கு.
வாணராசன், மனைவி - கொலு வரவு
சபை விருத்தம்
இந்திர நேர் முதல் வானேர் சுருக்கை விரித்
தெடுத்த குடையிருளை யோட்டுஞ் சந்திர ஞெத்தின் னிலவு தாம் மவுலி சூரியனிற்
றயங்கி மேவ விந்த கிரிதனைத் தழுவி இருளொழித்ததெனக்
கரிய மேனி யோடு மந்தரம் போற்றிரண்டபுய வாணராச
னுங் கொலுவில் வருகின்ருனே
* கும்பாகுடம் - நிறைகுடம். இது மட்டக்களப்புக் கிராமிய
வழக்குச் சொல்.

Page 19
- 32 -
சபை - தரு நன்னன்னு அ நன்ன நானின்ன னனின்ன நன்னின்ன அ நன்ன நாணின்ன ஞன நன்னின்ன அ நன்ன நாணின்னு னணு நானின நானின நானு.
1. பொன்னின் மாமணி சிரத்தினிற் துலங்க
பூவில் வாழயன் மனத்தினிற் கலங்க
மன்னர் யாவரும் வரிசை கொண்டிலங்க
வாணராசனுங் கொலுவில் வந்தனனே.
2. சேனை யானைகளிடையிடை நெருங்கத் தேவராசனுங் கரக்குடை சுருக்க மாரனுர் விழிகளுக்கிணை பருக்க
வாணராசனுங் கொலுவில் வந்தனனே.
3. சனக மாமதி யாம்பல்லியம் முழங்கச்
சத்துராதிகள் மனத்திடை துளங்க மங்குல்போலமெய் யழகுற விளங்க
வாணராசனுங் கொலுவில் வந்தனனே.
4. இந்திரன் றனக் குளம்பதை பதைப்ப
*இரதி கண்களை மதன் கரம் புதைப்ப மந்திர வாளொளி யிருட்டினைச் சிதைப்ப
வாணராசனுங் கொலுவில் வந்தனனே.
வாணராசன் - கவி
கட்டியகாரரே நான் கழறும் வாசகத்தைக் கேளும் மட்டில்லாத் தவஞ்செய்தீன்ற வசந்தசுந்தரியாம் மாதை திட்ட மாந் தோழிகூடச் சீக்கிரமழைத்துக்கொண்டு கிட்டியென் சமுகம் மிக்கக் கிடைத்திடப் புரிகுவீரே.
* வாணராசனது பேரழகினைக் கண்டால், தன் மனைவியாகிய இரதி அவன் மீது மயல் கொண்டுவிடுவாளோ என்று பயந்த மன்மதன், இரதியின் கண்களைப் பொத்தினன். வாணன் மன்மதனினும் மிக்க அழகன் என்பது இதனுற் பெறப்படுகின்றது.
 

- 33 -
வானராசன் வசனம் கேளும் கட்டிய கார ரே! எனது மகள் வசந்தசுந்தரியை, சித்திரலேகை, அமிர்தலேகை என்கிற தோழிமாருடனே அழைத்து வருவீராக.
வசந்தசுந்தரியும் தோழிமாரும் வரவு ஆசிரியம் வாளினையொத்த விழியிணை காதெனும்
வள்ளையை மெய்யுறழ மழலையெனத் தகு மிளமையில் மாய வண்டினம் வெளிறியிடக் காளமுகிற் குலமெனவிவள் குழலைக்
கண்டின மயிலாடக் *காமனு முன்பு புணர்ந்திடுமா தெனக்
கன்னி மின்னர் கூட நாணமலர்த் திருவோவென யாவரு
நவிலவோர் வாண னெனும் நாவலரேத்திய பூபதி தன் சபை நணுகிடுவோமெனவே சூழமலர்க் குழலோ டிசை பாடச் சோர்வில்
வசந்த மெய்யா ள் சுந்தரி சித்திரலேகையுடன் சபை
தோன்றிட வந்தனளே.
፵5®5 தனனத் தனதன தனனத் தனதன தனனத் தனதன தானின - தன தனனத் தனதன தனனத் தனதன தனனத் தனதன தானின.
1. கனகத் திருமலையென வொத்திரு முலை கனத்துக்
கனத்திடை வாடவே - சந்திர கதிரொத்திலங்கிய கமலத் திருமுக
மலரிற் களியரி பாடவே
* 'காமன் புணர்ந்திடுமாது' - இரதிதேவி.

Page 20
--س--- 34 ----
பனகத்தினிற் றுயிலு வணக் குருவினற்
* பாலொடு நற்சரம் போலவே - உயிர் பருக்குங்கண விழியடுக்கு முனையெனும் பாவை
சபைதனிற் தோற்றினுள்
2. கமலத் திருமலரென வொத்திடு முகங்
கவினத்தயங்கி மெய்கலங்கவே
மதனக் கருப்புச் சிலையினை நிகர்க்கும்
விழியிமை கண்டுளம் மயங்கவே
அமலச் சரசோதி மகாலெட்சுமி யிவள்
அழகுதனைக்கண்டு தியங்கவே - உயர்
அவுணஸ்திரிகளு மொடுங்க அவையிடை
.வசந்த சுந்தரி தோற்றினுள் ܨܠܐ
வசந்தசுந்தரி கொச்சகம் தாழக்கடல் சூழும் தரணியெல்லா மொரு குடைக்கீழ் ஆளக் கொலுவிருக்கும் அப்பரே செப்பிடக் கேள் நாளக் கமல மலர் நாணச் சிவந்த கழற் தாளைச் சுமந்தேன் துயராற்றிக் கொண்டருளே
சுந்தரி வசனம் அதோ கேளுமப்பரே! அடியாளைத் தோழிமார்கூட உங் கள் சமுகம் அழைத்த செய்தி இன்னதென்று சொல்லு (63) LL ULUfT .
வாணராசன் கலித்துறை
* மந்தரம் நாட்டிக் கடல் கடையாமல் வரும் வசந்த சுந்தரியேயொன்று சொல்லிடக் கேளுன் துணைவியரோடு அந்தர மின்றி யருங்கன்னிமாட மதிலிருமுன் சந்திர நேர்முகம் யான் பார்த்திட நற்தயவு கொண்டேன்.
/ உவணக்குரு - திருமால்.
* அலையிடைப் பிறவா அமிழ்து' என்ற சிலப்பதிகார அடியை நோக்குக. வசந்தசுந்தரி, இலக்குமியையும், அமிழ்தினையும் நிகர்த்தவள் என்பது இதன் பொருள்.
* பால் - வெண் சங்கு.

-35 -
வானராசன் வசனம் டுகளும் மகளே! உனது மாதாவையுங் கண்டு கன்னி மாடத்திலே எச்சரிக்கையாயிருப்பீராக.
சுந்தரி வசனம்
மிகுதியும் சந்தோஷமானேன் பிதாவே
தரு
தந்த ன்ன தந்தன்ன தந்தன்ன தந்தன்ன தந்த ன்னத் தானுணு - தன தந்தன்ன தந்த ன்ன தந்தன்ன தந்தன்ன தந்தன்னத் தானுன.
வங்கமெறிகடல் சூழ் புவியாள் தரும்
வாணன் சபையாலே - நடந்து மங்கை வசந்த மெய்ச் சுந்தரியென்றிடு
மாமயில் சென்ருளே. *-(தெய்தான, மாமயில் சென்ருளே)
ஆரணங் கண்டிடும் பூரணங்கொண்ட
அருந்தவர் கண்டாலும் - இதுவோர் காரணங் கண்டிடுவோமெனப்
பின்வரு காரிகை சென்ருளே. - (தெய்தானு, காரிகை சென்ருளே)
குமாரத்தி இன்னிசை பாலூட்டி நெஞ்சிற் படுக்கவைத்துப் பண்பினெடு தாலாட்டி யேவளர்த்த தாயேநீர் கேட்டருளும் நூலூட்டித் தேய்ந்த வெளி நுண்ணிடையார்
தம்முடனே மாலூட்டுங் காவில் மலர் பறிக்கச் செல்வேனே.
* வசந்தசுந்தரி, குமாரத்தி எனவும் குறிப்பிடப்பெறுவள்.
9 ‘தெய்தான' என்ற தாள ஆட்டம் தென்மோடிக்கு மட்டுமே உரியது. இது வடமோடியில் உள்ள "காலம் ஏற்றுதல்’ என் பதை நிகர்த்ததாய், அரச குமாரி முதலானுேர்க்கு மட்டுமே வருவதாகும்.

Page 21
- 36 -
குமாரத்தி வசனம் அதோ கேளுந்தாயே! தோழிமாருடனே பூங்காவிற்போய்ப் பூக் கொய்துவர விடை தந்தனுப்புவீராக
தாய் தரு நன்னன்ன நானனன்ன நனனன்ன நானன்ன நானனன்ன நன்னன்ன நானனன்ன நனனன்ன நானன்ன நானன.
1. வன்ன மடக்கொடியே யென்னேவிய
மாமயிலே கேளும் கன்னி மின்னருடனே மலர் கொப்யக்
காட்டினிற் போகாதே ஆயிழை மாருடனே மலர்கொய்ய ஆரணியந்தனக்கே போய்வர வேணுமென்ருய் ஒர் காதை
புகன்றிடுவேன் கேளும்.
2. முன்னுெரு கந்தனிலே உசத்ய முனிவன்
மகள் விருத்தை* தன்னுடை தோழியரும் அவளுமாய்த்
தாம்மலர் கொய்யவெண்ணிப்
பூமலர்ச் சோலையெங்குந் திரிந்து
புதுமலர் தானெடுத்துத் தாமவரெல்லோரும் வரும் வழி
தன்னிலோரான கண்டு.
3. வேகமுடன் துரத்த விருத்தைதன்
வேலை செய்தாதியர்கள் ஆகம் நடுநடுங்கியெல்லோரும் அடவியிலே அகன்ருர் மங்கை விருத்தையென்பாள் தனித்து
வனத்தினிற் போக அங்கே தங்கிய கூவலொன்று இருந்ததைத்
தார்குழல் காணுமல். * விருத்தையின் வரலாறு கந்தப் புராணத்தில் காணப்படுவது.
 
 
 
 
 
 
 
 

- 37 -
ஒடி நடந்திடவே அக்கூவலிலொண்டொடி
தான் விழுந்து வீடின ளென் மகளே யீதல்லாமல்
வேறுமோர் காதை சொல்வேன் பூவுல கந்தனிலே அழகும் புகழும் பொருந்திடுவோன் தேவர் சரண் மலரைப் பரவுஞ்
சிவநேசச் செட்டியென்பான்.
வாழுமயிலாப்பூர் தனிலே மதனப் பிரபை தன்னை வேளுமிரதியும்போல் மணந்து விரும்பியிருந்திடுநாள் மைந்தர்களில்லையென்று சிவனை வருந்தித்
தவசு பண்ணச் செந்திருவை நிகராம் ஓர் * கெற்பஞ்
செறிந்ததவள் வயிற்றில்.
பெற்றுவளர்த்தெடுத்து இருவரும்
பிள்ளையைத் தாலாட்டி உற்ற குறிநலத்தாற் ? பூம்பாவை யென்
ருேதும் நற்பேருமிட்டார் மாது வளர்ந்த பின்பு தன்சேடியர்
மாமருங்காய் வரவே சூதினைநேர் முலையாள் ஒர் காவினிற்
ருேன்றினள் அப்பொழுதில்.
மாதவிப்பந்தலிலே மலர்ந்த மலரைப் பறித்தெடுக்கச் சூதுடனங் கிருந்தபன்னகந் துரந்து கரத்தில் வெட்ட வேகமோரேழு மொன்ருய்க் கொடுத்து
விதனப்படுத்திடவே ஆகம் நடுநடுங்கி ஞமன்புர மாவலோடெய்தினளே.
* கெற்பம் - கருப்பம் என்ற சொல்லின் திரிபு.
9 பூம்பாவையின் வரலாறு திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர்
கதையில் வருவது.

Page 22
- 38 -
8. இப்படியே உலகில் வெகுகாதை இன்னமும் .
மெத்தவுண்டு அதை ச், செப்புவேன் என்மகளே மலர் கொய்யச்
சென்றிடவேண் டாங் காண் .
தாய் வசனம் அதோ கேளும் மகளே! பூமி, அந்தரம், சுவர்க்கம் மூன்று லோகத்திலும், இப்படி நடந்திருக்கிறபடியால் பூப்பறிக் கப் போகவேண்டாம். உனது தோழிமாரைவிட்டுப் பூ
வெடுப்பித்து விளையாடுவீராக.
குமாரத்தி கொச்சகம் அன்னே நீ கேளும் அரசன் மகளான வென்னை முன்னே யுகத்தில் முனி மகளென்றும் வணிகன் தன் மகளென்று மென்னைத் தடைபண்ணவேண்டாங்காண் கன்னி மின்னர் கூட மலர்க் காவினிற்போய் மீள்வேனே.
குமாரத்தி வசனம் ஆணுற் கேளுந்தாயே! பரமேசுவரன் முதலான தேவர்கள் சகலரும் வந்து எனது பிதாவினுடைய வாசலிலே காவல் புரிய, ராச்சியம் பண்ணிக்கொண்டிருக்கும் வாணேசுரன் மகளே, முனி மகளென்றுஞ் செட்டி மகளென்றும் நினைத் துப்பேசவேண்டாம். என்னுடைய பிதா சுகமே யிருக் க எனக்கொரு தீங்கும் வரப்போவதில்லை விடைதந்தனுப்புந் தாயே.
தாய் கொச்சகம்
அஸ்திரம் போற் கூர்த்தவிழி ஆயிழையே நான் பயந்த புத்திரியே நீயும் புகன்றிட க் கேளுங் *கமல வத்திர மாமங்கை மடக்கொடியாரோ டேகிப் பத்திரமாய்ப் பூப் பறித்துப் பண்பாய் வருவீரே
* *கமலவத்திர மாமங்கை மடக்கொடியார்' - தாமரை மலரில்
வீற்றிருக்கும் இலக்குமிதேவியை ஒத்த பெண்கள்.

- 39 =
தாய் வசனம் கேளும் மகளே! உனது விருப்பப்படி, தோழிமாருடனே போய்ப் பூப்பறித்து விளையாடி வருவீராக.
குமாரத்தி வசனம் அப்படியே ஆகட்டும் அம்மா.
குமாரத்தி கொச்சகம் பாலினினிய மொழிப் பைந்தொடியே மாரனெறி வேலினுங் கூரான விழி மெல்லியரே சொல்லிடக்கேள் மாலின் கிளர்ந்த மலர்ச் சோலை தன்னிலங்கே கோலிமலர் கொய்து குழற் கணிவோம் வருவீரே.
குமாரத்தி வசனம் கேளுந் தோழிகாள்! பூங்காவிலே போய்ப் பூக்கொய்து விளையாடி வருவோம் வருவீராக.
தோழிமார் வசனம்
அப்படியே வருகிருேம் அம்மா.
குமாரத்தி - தோழியர்
தரு நன்ன நன்ன நான நன்னன்னு-நான நன்ன நானநன்ன
நன்ன நன்ன நான நானன்ன நான நன்னன்ன
குமாரத்தி 1. தங்க வளைச் செங்கை மடவீர்
அங்கே நிற்கும் அங்கே நிற்கும் தாளை மலர் மீதி லெழு நாளின் மதியோ
என்தோழி நாளின் மதியோ .

Page 23
- 40 -
தோழி திங்களில் விளங்கு முகத்தாய் - உன்னுடைய* . சின்ன இடைக்கொத்துலவு மின்னல் லவோ
என் தோழி மின்னல்ல வோ
குமாரத்தி வாளியென்னக்கூரும் விழியே - பாருமிந்த. மானிலத்திற்றரகை தன் சீரிதென்னடி
என் தோழி சீரிதென்னடி,
தோழி மூளுமன்னம் போலு நடையாய் உன்னுடைய. முத்து நகைக் கொக்கு மிதுமுல்லைப் பூவம்மா
என்னம்மா முல்லைப் பூவம்மா.
குமாரத்தி பாதிமதி போல் மரத்தினிற் - கொப்பினிடை. பற்றிக் கொண்டிருக்குமிந்தப் பண்பிதென்னடி
என் தோழி பண்பிதென்னடி.
தோழி . காதில் விளையாடும் விழியாய் - உன்னுடைய. கட்புருவ நெற்றிக் கொத்த கொப்பாந் தேனடி
என்னம்மா கொப்பாந்தேனடி.
குமாரத்தி மருக்கொழுந்திருக்குங் குழலாய் - இங்குடாரும். வான் பகலிற் செக்கர் முகில் வண்ண மென்னடி
என் தோழி வண்ண மென்னடி. தோழி நெருக்குறவிருக்கும் முலையாய் - உன்னுடைய. நெஞ்சுருக்குமோக மலர்க் கிஞ்சுகமடி
என்னம்மா கிஞ்சுகமடி. s புள்ளிகள் இட்டுள்ள இடங்கள் தோறும்,
*உன்னுடைய" என்பது முதலான தனிச் சொற்களையே இரட் டிக்கவும்.

- 41 -
குமாரத்தி 9. நாந்தக மனையவிழியாய் - பாருமுங்கள். நாசியைப்போல் வாசமலர் பேசலென்னடி
என் தோழி பேசலென்ன டி.
தோழி 10. மாந்தரையுருக்கும் நகையே - செண்பகத்தில்.
வண்ண மலர் வண்டிசைக்கும் பண்ணிதல்லவோ
என்னம்மா பண்ணிதல்லவோ,
குமாரத்தி 11. தொத்துமலர் வைத்த குழலே - என்னுடைய. தோழியரே வாருமினி மீழுவோம் பெண் காள்
என் தோழி மீழுவோம் பெண்காள்.
தோழி
12. முத்துவடம் வைத்தமுலையே - நீ திரும்பி.
முன்னே நடவன்னம் போலுன்பின்னே வருவோம்
என்னம்மா பின்னே வருவோம்.
குமாரத்தி வசனம்
கேளும் தோழிமாரே! பூங்காவில் வந்து நெடுநேரமாகி விட்டது. எங்களுடைய மாளிகைக்குப் போவோம் வரு 6JTas.
தோழிமார் அப்படியே வருகின் ருேம் தாயே.
சபை தரு *நன்ன நன்ன நான நன்ன - நான நன்ன நான நானனன்ன நானனன்ன நானனன்ன நான
கன்னி மின்னருடனே பூங்காவின் மலர் கொய்து பொன்னின் மணி மாளிகைக்குப் பூவையுஞ் சென்றனளே.
赛 இத்தருவிற்குரிய ஆட்டமும் "தெய்தான" போன்றது.

Page 24
- 42 -
கிருட்டின ராசனது கட்டியன் வரவு
சபை விருத்தம்
சீரோங்கு மதுரை நகர் தனையகன்று கடற்றுவரை
சென்று செங் கோற் பேரோங்க வர சாளுங்கிருட்டினரா சன் பெருமை கூற
வாரோங்குப யோதரத்தார் மாரனிவனெனவே
மயங்க ப பை மயூண தாரோங்கு நெருங்கு புயமாகதர்கள்*
இருவர் சபைதனில் வந்தாரே .
தரு நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்ன நானநன்னு
1. மாரிமழை மேகவண்ணன் மாசில்லாக் கமலக்கண்ணன் காரியங்களைப் பரவும் கட்டியகாரர் தோற்றினரே. 2. வள்ளல் வாசுதேவன் பாலன் மாநிலம் அளந்த சீலன் தெள்ளிய புகழ்படிக்குஞ் சேவகருந் தோற்றினரே. 3. பொன்னின் பதக்கம்மின்னப் பூவையர்கள்
மாரனென்ன மன்னவனங் கண்ணன் வாசல் மாகதருந் தோற்றினரே.
கட்டியகாரன் கொச்சகத்தரு தாளத்தை வைத்துத் தர ளம் புனைந்து சக்கிர வாளத்தை யொத்த முலை மங்கை மின்னரே யரசர் சூழத்துவரை நகராள் துரை வn ருர் .
தரு நானன்ன நானனன்ன னணு - நன்ன நானனன்ன நானனன்ன ஞன. வேழத்தை யா டவர் நடுங்கோ - கையில்
வெற்றிலைச் சுருளெடுத்துக் கொடுங்கோ நீளத் தெருவைச் சிறப்பிடுங்கோ - கண்ணில்
நித்திரைத் தூக்கத்தை விட்டுவிடுங்கோ
* மாகதர் இருந்தேத்துவார் - சிலப்பதிகார உரை.
 

صححت 43 مسمعهد
கொக்சகம்
மந்தரத்தை யொத்த முலை மங்கைமின்னரே அரச ஒந்துரத்தின் கொம்பொடித்த சீதரனிங்கே வாருர் சுந்தரத்தேர் வீதிதொறுந் தோற்றமுடன் வந்துநின்றே.
(நானன்ன நானனன்ன ஞணு - நன்ன நானனன்ன நானனன்ன ஞன)
சந்தனக் குழம்பை யஸ்ளிப் பூசும் - எங்கள்
சாமிதன் மன மகிழப் பேசும் கந்தமலரள்ளி யஸ்ளி வீசும் - உங்கள்
கைச் செலவுண்டாமோ அரைக்காசும்
கொச்சகம் கூற்றைப் பழித்துக் கொலைத்தொழிலைத்தான் பழகிப் பாற்றுக்கிரையூட்டும் பாரவாட் காவலரோ (டு) ஏற்றைத் தழுவி இடைச்சியரை முன்புணர்ந்த,
(நானன்ன நானனன்ன ஞணு - நன்ன நானனன்ன நானனன்ன னணு )
ஆற்றலுறுமெங்கள் துரை வாருர் - இந்த ஆவணத்தினலே வரப் போரு?ர்
போற்றினவர்க் கின்னருளுந் தாருர் - இந்தப்
பூவுலகத்திலிங் கிவரில் வேரு ர்
கொச்சகம்
வள்ளக் கமல மலரிற்றுணையுடனே பிள்ளைப்பேடன்னம் பிரியாதினிதுறங்கும் பள்ளச் செயல் சூழ்து வரைப்
பார்த்திபன் இங்கே வாழுர்,

Page 25
- 44 -
தரு
(நானன்ன நானனன்ன ஞஞ - நன்ன நானனன்ன நானனன்ன ஞணு )
தெள்ளத் தெளிந்த மிர்த மொழியீர் - நல்ல
சேலைப் போலச்சிறந்த விழியீர்
வள்ளந்ற மோதரனைப் போற்றும் - இங்கே
வந்து நின்றவர் புகழைச் சாற்றும் .
கட்டியன் ஆசிரிய விருத்தம். கஞ்சனைச் சிசு பாலனெஞ்சினைப் பிளந்திட்ட
கதிராழியம் படையினன் கடலை வயிறுடையக் கடைந்த மரருக்குக்
கருணையோடளிக்கும் கொடையினன் தஞ்ச மென்றடிதொழுத பஞ்சவர்க்காகவே
தனித்தூது பயின்றேகினன் சலசலவென்றதிர்கின்ற கல்மழையை வெல்ல முன்
ருங்குசயிலக் குடையினன் அஞ்சலஞ்சலென்று செஞ்சிலம்பசைய விடும்
அம்புயப் பாதத் துணையினன் அண்டமாயோனியின்னுடன் மேல் நின்றுவந்
தம்புவியை நிலையிட்டுளான் தஞ்சமென்றவர்க் கருளு குஞ்சரக் கடவுளின்
தாய் மாம னென்று முள்ளான் தான வரை வென்று மருள் வான வரை யாளுமொரு
தாமோதரன் சமுகமே
கட்டியன் வசனம். இராசாதிராசன், ராசவுத்தண்டன், கிருட்டின மகா ராசன் கொலுவுக் கெழுந்தருளிய சமுகம்; எச்சரிக்கை! வெகுபராக்கு.
 

- 45 -
கிருட்டினன் - உருப்பிணி வரவு
விருத்தம் திருமணி மாலை மார்பிற் சிறந்திடக் கிரீடஞ்சூட்டி குருமணித் திகிரியேந்திக் குண்டலங்குழையிற்பூட்டி பொருமணி மன்னர் பாதம் போற்ற வேதங்கள் சாற்ற கருமணிக் கமலக்கண்ணன் களரியில் வருகின்ருரே
சபை தரு தனனத் தான தான தனதத் தான தான தனனத் தான தான தனதந்தின - தான
1. அமரர் புகழ் படிக்க அசுரர கந் துடிக்க - ஐயன்
கருணைமுகில் மெய்யன் வந்கனனே
(தனனத்)
2. தாமப்பறையடிக்கத் தரளக் குடை பிடிக்கத்
தாமன் பீதாம்பர வாமன் வந்தனனே
(தனனத்)
3. கையிற் சக்கரம் மின்னக் *கழல் கலீர் கலீரென்னக்
கமலக் கண்ணனுஞ் சபை காண வந்தனனே
(தனனத்)
4. துய்ய படையிலங்கத்துட்டர் மனங்கலங்கத்
துவரை நகர் புரக்குந் துரை யும் வந்தனனே
(தனனத்)
5. கன்னி உருப்பிணியாம் ? பன்னியருகில் நண்ணக் கண்ணன் காயா மலர் வண்ணன் வந்தனனே
(தனனத்) 6. கின்னரர் கிம்புரு நாரதர் பின் செல்லக்
கேசவனுங் கிருட்டின ராசன் வந்தனனே
(தனனத்)
9 பன்னி - பத்தினி, மனைவி.
பா-ம். " காலிற் கழல் விளங்க.

Page 26
سے سس۔ 46 حساس۔
கட்டியன் sh g5Sb
சரணமே சரணமையா
கிருட்டினன் கவி வந்து என்பாதம் போற்றி வணங்கு மாகதரே கேளுஞ் சுந்தர நிகர்க்கு மிந்தத் தொன்னகர் வளமை கேட்க தந் ர விர தனிச் சமு கவுல் காச னென்னும் மந்திரி தன்னையிங்கே வரவழைத் திடுகுவீரே
கிருட்டினன் வசனம்
அதோ கேளுங் கட்டிய கார ரே! எனது வாசற் சமு கவுல் காசனென்னும் மந்திரியை அழைத்துவருவீராக.
கட்டியர் வசனம்
இதோ வருகிருரையா சுவாமி
கிருட்டினரது மந்திரி வரவு கவி கட்டளை யெம்மரசரிட்டார் வருவீரென்னக்
கட்டியகாரர்களு முரைக்குங் காலை தன்னிற் சட்டையிட்டுத்தரிய மொன்று தோளிற் போட்டுத்
தலையில் விலை மதிக்கரிய தலைப்பாச்சூடிப் பட்டுடுத்துப் பணிபூட்டிக் கவசம் பூண்டு
பரிவோடு காமனெனப் பரந்து மேவ மட்டவிழுந் துளபத்தார் மார்பன் வாசல்
மந்திரியும் சபை மீதில் வருகின்றனே.
தரு
தானு தனத்தத் தான தானு தனத்தத்தான தான தனத்தத்தான தா னி ன - தன தான தனத்தத்தான தானு தனத்தத்தான தான தனத் தத்தான தா னி ன.

சேனடரசு புரிகோனே சிலை மதனன்
தானுேஇவ்வீதி வாற தாரண்ணே பேணுர்தனைவதைத்து வானுடருக்குதவும்
பேராளன் வாசல் மந்திரி காண் மின்னே. (தானுதனத்)
வீமனேசயந்த குமாரனே சொல்லுமிந்த
வீதிதனில் வாறFவராரண்ணே வாமன மெங்கள் பரந் தாமஞம் பச்சை வண்ணன்
வாசல் உல் காச மந்திரிகாண் மின்னே (தானுதனத்) மந்திரி கவி வங்களர் மாளுவர் கலிங்கர் மருடகேசர்
மாகதரொட்டியார் தெலுங்கர் வடுகர் சீனர் சிங்களர் கூபதர் குலிங்கர் தமிழராதி
செகதலத்தில் மன்னரெல்லாந் திறை தந்திட்டார் விங்களமில்லா மனுநீதியென்னும் விளக்கதனுல்
வழக்கதெல்லாம் விளங்கத் தீர்த்தே எங்களையாள் இறையவனே இந்தவேளை
யெனை யழைத்த காரியமேதியம்புவீரே.
மந்திரி வசனம் அரசிருப்பும், சிங்காசனமும், ஆஸ்தான கொலுவுஞ் , சரணமே சரணமையா அடியேன அழைத்த காரியம் இன்னதென்று சொல்லுவீராக
கிருட்டினன் கொச்சகம் நீதிநூல் கற்று நிருபர் மனம் மகிழ ஒதியுணருமெந்தன் உல் காச மந்திரியே சாதி ஒழுங்குஞ் சமயத்தினின் மருங்கும் ஆதியாம் நாட்டு அதிசயத்தைச் சொல்லுதியே.

Page 27
- 48 -
கிருட்டினன் வசனம் அதோ கேளும் மந்திரி! என்னுடைய நாட்டின் வளமை முழுதும் நானறியுமபடி சொல்வீராக.
மந்திரி வசனம் சொல்லுகிறேன் கேளுமையா சுவாமி.
தரு நன்ன நன்ன நானநன்ன நானநன்ன நான நான நன்ன நான நன்ன நானநன் நானு 1. சாதியென்ருல் இரண்டுவகை சமயமுமொன்றையா
தற்பரனென்ரு லொருவன் கற்பனையோ கோடி ஆதியென்ற மறையவர்கள் அரசர்கள் மூவசியர்
ஆலயமுஞ் சத்திரமுமளவிடக் கூடாதே 2. கோத்திரருஞ் சூத்திரரும் மாற்றி மணம் முடிப்பார்
*கோவசியரிருவசியர் குலத்தினுங் கைப்பிடிப்பார் சாத்திரத்திற் சொன்னபடி பார்த்திபர்கள் மணப்பார்
தங்கள் தங்கள் குறைவிளைத்தாற் சங்கை
கடத் 0 தணப்பார் கற்றவரும் நற்றவரும் காசினியில் வாழ்வார்
கண்டவரெல்லாம் அவர்கள் கழலடியைத்
தொழுவார் 3. மாதம் ஒரு மூன்று தின்ம் மாரி மழை பொழியும்
மாநிலத்தோர் தம்மை விட்டு வறுமையென்ற
தொழியும் மாதவர்கள் சாலை தொறும் வேதம்நின்று குனிக்கும் மலர் தோறும் வண்டிருந்து தேன்சுவையை இனிக்கும் 4. கழனியிலே விளைந்த நெல்லை உழவரரிந் தெடுப்பார் கருதியளந் தடை பிரித்துக் காவலர்க்குங் கொடுப்பார்
* வைசியர் - கோ வைசியர், தன வைசியர், பூவைசியர் என மூவ கைப்படுவர். அவருள் கோவைசியர் என்பார் மற்றைய இரு பகுதியாருள்ளும் மணம் செய்து கொள்ளுவர் என்பது இங்குக் கூறப்படுகின்றது.
9 தணப்பார் - விட்டு நீங்குவார்; அப்படிப்பட்டோரைக் கழித்து
(விலக்கி) வைப்பர் என்பது பொருள்.
அடை - பட்ட டை : நெற் களஞ்சியம்.

-ساحت= 49 - است:
குழலிசை மங்கையர்ந ைகயா லிளநிலவு கொளிக்குங் குளிர் தடத்துக் குவளையரும் பெழுந்து பகல் விளிக்கும்
ஏத்து பசுங் கன்றுபுலிப் போத்தின்முலை குடிக்கும் இளங் குரங்கு வளர்ந்த மரந் துளங்க நின்று நடிக்கும்
வார்த்தை சொல்லுங் கிளிமதன சாத்திரத்தைப்
படிக்கும் *வாழையைச்சாய்த் தூணுதவும் மதகளிறு பிடிக்கும்
6. பொன் நகரை யிந் நகர்க்குப் புகலிலிது சோடு பூவுலகத் துன்நகரை வெல்லவில்லை ஒரு நாடு
வன்ன மழுத்திகிரிதண்டு வசியேந்துங் கையாய் - அவ் வளமையை நானெடுத்துரைக்க வெளிதோ
Glau să &oTur மந்திரி கொச்சகம்
ஒன்னர் கலங்க ஒளி வேலெடுத்த கர மன்னவுன் நாட்டு வளமைகளெல்லாம் விரித்து பன்னுக வேந்தும் பகர மாட்டானிதனை என் லுைரைக்க வெளிதோ வறிவீரே
மந்திரி வசனம்
சேடனலும் முடியாது அடியேன் ஒரு நாவினுற் சொல்ல முடியுமோ சுவாமி.
கிருட்டினன் கவி
வருத்தமுற்றுக் கலையனைத்துந் திருத்தமுறப்படித்திடு
மந்திரியே கேளாய் கருத்தினுக்குச் சரியாக உரைத்தனையானுலும்
எந்தன் கவலை தீர மருத்தொடை தோய் குழல் மாதர் மனங்கலங்கி நின்று
மையல் கூர் அனு * மதகளிறு வாழையைச்சாய்த்துப் பிடிக்கு ஊண் உதவும்’ என்று
மாற்றிப் பொருள் கொள்க.

Page 28
- 50 -
உருத்திர மகிபால னென்னு முத்தமனேயழைத்து
என் முன் வருகுவாயே
கிருட்டினன் வசனம் கேளும் மந்திரி நாட்டு வளமை கேட்டு மிகுதியுஞ் சந் தோஷமானேன். எனது மகன் அனுவுருத்திர குமாரனை அழைத்து வருவீராக
மந்திரி வசனம் அப்படியே அழைத்துவருகிறேன் சுவாமி.
அனுவுருத்திரன் வரவு - தாழிசை நெற்றியிலொட்டிய பட்டமதி லொளி நிசியை
விலங்கிடவே நேரிழைமங்கையர் கூரிலை வேல்விழி நெஞ்சை
யுளக்கிடவே மற்றினியெட்டுத் திக்கினிலாருளர் மகிதலமுழுதாளும்
மகிபர்கள் கண்டடி தொழுதிட மேவலர்
வரிசைகளொடுபரவ பற்றினிலெட்டிப் பொட்டினில் நெற்றிப் பா வையர்
பார்வை தர
பைம்பொன் னி ைடபுரி தண்டைசில மடகள்
பண்டரவே புயமாம் பொற்றையிரத்தின மட்டவிழ் மாலை புடை புடையே
LI U GIT போர்வலி பெற்றனுவுருத்திரனுகிய பூபதி
வந்தனனே
வரவுத் தரு
தந்தன்ன தந்தன்னத் தானு - தன தந்தன்ன தந்தன்னத் தானு
 
 

--
- 5 -
தந்தன்ன தந்தன்னத் தான) - தன தந்த ன்ன தந்தன்னத் தான
சீய நிகராய தூல ன் நல்ல சித்திர மதனெத்தசிலன் ஆயனருள் தூய பாலன் அனுவுருத்திரன் தோற்றி
ணுனே (தந்தன்ன) தென்னர் புகழ் மன்னன்தீரன் செகமண்ட லம் புரக்
கும் வீரன் அன்ன நடைமின்னர் மாரன் அனுவுருத்திரன்
தோற்றினனே (தந்தன்ன) பொன்னின் மணிமுடி திகழப் பூவை வண்ணன் மன மது மகிழ அன்னமின்னர் முன்புகழஅனு வுருத்திரன் தோற்றி
னுனே கங்கை யணிவோன் மருகன் அருட் கண்ணனுதவிய
முருகன அங்கம் பசுந்தங்க ரூபன் அனு வுருத்திரன் தோற்றி
ணுனே
குமாரன் தரு
நன்ன நன்ன நான நன்ன நானு - நன்ன நானன நானன நானன நானன நான நன்ன நான நன்ன நான
ஆயிரம் பேர்தான் படைத்தாய் போற்றி - முன்னுள்
ஐயிருதலையுடைவெய்யவன் நகர் செல்ல ஆழ்கடல் தனையடைத்தாய் போற்றி போற்றி
பாயிர மறைபடித்தாய் போற்றி - முன்னுள்
பாருலகதனிடை காளியனெனுமொரு பாந்தளின் மிசை நடித்தாய் போற்றி போற்றி

Page 29
5
--سمص۔ 52 پتم۔۔۔
தாயினுமுயிர்க்கினியாய் போற்றி - முன்ன ந்
தற்பரணுகிய சிற்பரனே யென்னைத் தானே ரட்சித் தாண்டருள் வாய் போற்றி போற்றி
வேயிசைத்து ஆவழைத்தாய் போற்றி - முன்னர்
மேலவனேகரி மாலவனே தூணில் வெள்ளையரியாய் முளைத்தாய் போற்றி போற்றி
மத்த கயக் கொம் பொடித்தாய் போற்றி - முன்னம்
மாவலி தன்னிடம் மூவடி மண் ணென வாங்கவந்த உத்தமனே போற்றி போற்றி
சித்தக மலத்திருந்தாய் போற்றி - எங்கள்
தீவினை மாற்றியே மாதோ டெமைத்துயர் தீர்ப்பதற் கொருமருந்தே போற்றி போற்றி
மாதவ மறைக் கொழுந்தே போற்றி - திரு
வஞ்சகனுமொரு கஞ்ச னெனுந் திறல் மாமனை வதைத்தவனே போற்றி போற்றி
ஆதவன் குலத்தரசே போற்றி - எங்கள்
ஆரணனே பரி பூரணனே என்னை ஆண்டடிமை கொண்டருள் வாய் போற்றி போற்றி
அனுவுருத்திரன் கலித்துறை
பொன்னடு நேர்துவரா பதியாளும் புரவலனே மன்னு திருமகள்மா மகனுன் பெருவாருதியிற் பன்னுகணை மேற்துயில்பவனே உந்தன் பாதமலர் எந்நாளும் போற்றி என அழைத்ததியம்புவீரே
அனுவுருத்திரன் வசனம்
வணக்கம் தந்தையே,
தேவரீருடைய சமுகத்திற்கு அடியேன அழைத்த செய்தி சொல்லியருளுவீராக.
 

- 53
கிருட்டினன் வசனம்
அதோ சொல்லு கிறேன் கேளும் மகனே
35(5
தந்தன்னத் தான தனதனணு - தனதன தந்தன்னத் தான தனதனணு தந்தன்னத் தான தனதனணு - தனதன தந்தன்னத் தான தனதனன
அஞ்சன நேர் தரு மென் மகனே - பரமனின் அஞ்செழுத்தான பஞ்சாட்சரத்தை நெஞ்சி லனுதின முச் சரித்தால் - உறுபலன் கஞ்சனுக்கு மேலாய் வாழ்ந்திடலாம்
மாயை மகனெனும் சூரபத்மன் - சிவனிரு தூய மலர்ப்பாதம் போற்றிசெய்து ஆயிரத் தெட்டெனும் அண்டமெல்லாம் - அவனரு ளாலேதான் ஆண்டான் அறிசுதனே
அந்தர நாதன மிந்திரனும் - முனி சொல்லில் அங்கமெலாங் குறியாலுலைந்து சந்திரசேகரன் தன்னருளால் - உறுகுறி சாய்ந்தவனுய்ந்த தறிசுதனே
துங்கமுறும் புவி வந்த வருள் - முசு குந்தனருள் பெற்றுயர்ந்தனனே சங்கரனுருடை எட்டெழுத்தை இருதய செங்கமலத் திடைவைத்திடுநீ
முந்தவுகந்தனில் வந்த மன்னர் - சிவனடி வந்தனை செய்து திசையாண்டார் மந்தர நேர் புயமா மகனே - சிவன்பதம் வந்தனை செய்து பெறுகுவையே

Page 30
- ہستے ۔ 54:حیح۔
கிருட்டினன் இன்னிசை மைந்தனே கேளும் மலேமங்கை பங்கண்டி சிந்தனைசெய் தஞ்செழுத்தைச் சிரத்திருத்துவீராகிற் கந்தனை முன் தந்த வந்தக் கண்ணுதல் வந்துய்யவரந் தந்திடுவார் மூவுலகுந் தானரசை யாள்வாயே
கிருட்டினன் வசனம்
ஆணுற்கேளும் மகனே!
சர்வசீவ தயாபர மூர்த்தியாகிய பரமேசுவரனைத் தோத்திரம் பண்ணிக்கொண்டு மாளிகையிலே சுகமாயிரும் மகனே!
அனுவுருத்திரன் வசனம்
தேவரீருடைய கட்டளைப்படி நடக்கிறேன் ஐயா சுவாமி.
அனுவுருத்திரன் கொச்சகத் தரு
பரந்தாறு மாமுகமாய்ப் பாலில் வெண்ணெய்
போலவும் நீ இருந்தே விளையாடும் ஈசா மனத் துரடேகி கரந்தே இருந்தால் நான் காட்சி பெறுங்கால
GoLD u G3 LunT
தரு
தந்தன்னு தந்தன் ைதன தந்தன்னுணு - தன தான தானின தந்தன்னு தன தந்தன்னுை
1. அரந்தைக் கடல் கடத்தியாளுவாயே
எந்த நாளும் நீயே - சுவாமி ஆடுகாலா எவரும் நாடுகாலா
2. வரந்தான் எனக்கருள வாருமையா
என்னைக் காருமையா - சுவாமி அங்கியானே ஒருவர் பங்கிலானே
 

கொச்சகம்
மூலமாய் முச்சுடராய் முப்புரத்தின் மெய்ப்புலமாய் ஞாலமாய் விண்ணுகி நன்னீரின் நல்வளியின் கோலமாய் நின்ற குழகாகுருபரனே
தரு வேலோனை முன்னுதவும் கால காலா கயி லா சவாசா - சுவாமி வேத நாதா பஞ்சபூத நாதா 2 பாலாழி மீதெழுந்த ஆலபோசா
இரு நாலுவாசா - சதுர் போதநிதா நித்திய பாதநீதா
42 கொச்சகம்
ஆணவத்தை நீக்கி அறிவாளர் போற்று திரி
கோண முற்று வாழுங் குழகா குருபரனே நீணிலத்திலென்னையினி நீ காக்கவேணுமையா
தரு 1. தானுவே மெய்ஞ்ஞான வேணியானே
செய்ய வேணியானே - சுவாமி தற்பரனே சயிலவிற்பரனே 2. பானல் விழி மடந்தை பாகத்தானே
அன்பர் ஆகத்தானே - என்னைப் பார்க்கவேணும் நிதமுங் காக்கவேணும்
கொச்சகம் மண்டலத்தை ஊ டுருவி மாசிருளில்லாத பட்சக் குண்டலியின் மேவுங் குழ கா குருபரனே சண்டனுயிர் மாய்த்துத் தவம் புரிந்தே போற்றிய மார்க்
Ց5(Ա5 1 கண்டற் குயிருதவுங் கால காலா
திரிசூலவே லா - சுவாமி
கால கண்டா சகல லோக கண்டா

Page 31
- 56 -
2 மண்டன்றன வதைத்த வாலை பங்கா
சடாபாரதுங்கா - சுவாமி பார்த்துன்னடியை நிதம் ஏத்துவேனே
அனுவுருத்திரன் வசனம் சகல சீவ தயாபரமூர்த்தியே, அடியேனுக்கொரு தீங்கும் வாராமற் காக்க வேணுஞ் சுவாமி
சபை கவி உருத்திரபூபனுந் தனது மாளிகை சென்றிட அசுர
லோகந்தன்னில் விரித்திடு நற்பஞ்சணையில் மெல்லியருடன் கூடி
விழிதுயின்றே மருத்தொடைதோய் குழல்வசந்த சுந்தரியுங்
கனவிலிவன் வடிவைக் கண்டு கருத்தழிவாய் அழுகிருள் தானுமிரு கண்ணிரால்
முழுகின்ருளே
சுந்தரி தரு
தனன்ன நன்னத் தானனன்னு னன்னத்
தானனன்னத் தானனன்ன தனன்ன நன்னத் தான னன்னு னன்னத்
தான நன்னத் தானனன்ன
1 சந்திரனைப்போல் முகமும் - அவரென்னைத்
தாவியணைத்திடு சுகமும் சுந்தரஞ் சேரம்பகமுங் கண்டாற்
தொடராமல் விடுவாரோ
2. மேகமொத்த கறுப்பழகும் - அவரது
விழியிரண்டும் சிவப்பழகும்
 
 

ح۔ 57--۔
வாகை பெற்ற புயத்தழகுங் கண்டால்
மரப்பாவையுருகாதோ
3. குண்டலங்க ளணி காதும் - மத
குஞ்சரத்தைப் போல் நடையும் தண்டையணியும் பதமுங் - கண்டு
தரிக்கமனம் பொறுக்குதில்லை
4 நித்திரையி லென்னுடனே - கட்டி
நீயணைந்து போன பின்பு சித்திரம்போலறிவழிந்தேன் என்னைச்
சேர்ந்தணைய வாராயோ
சுந்தரி கொச்சகம்
மண்டல மெல்லாம் போற்றும் வாசற்றடைகடந்து
திண்டிறல் சேர் மெய்யுடைய செம்மலென்னெஞ்
சிற்புகுந்து
கொன் டென் மனங்களெல்லாங் கொள்ளையிட்டான்
காணுமல் ஒண்டொடிமாரே நீங்கள் உறங்கிக் கிடந்தீரோ
வசந்த சுந்தரி வசனம் கேளுந் தோழிமாரே! இன்றிரவு ஒரு ஆடவன் வந்து
எனக்குக் கலவியளித்துப் போனன். அவனை நீங்கள் கான வில்லையோ சொல்வீராக.
தோழி கொச்சகம் மண்ணுேர் புகழும் மடக்கொடியே மாமலரிற் * பெண்ணே கடலிற் பிறவாத பேரமுதே
கண்ணே துயின்று கனவு கண்ட காதலனை உன்னே சமாக உரைப்பீரினி யெமக்கே
பக் 34. அடிக்குறிப்பைப் பார்க்க.
s

Page 32
-58
தோழி வசனம்
கேளுமம்மா குமாரத்தி நித்திரையிலே எழும் பிப் பிதற்று கிருய்: கனவே துங் கண்டால் ஒளியாமற் சொல்லுமம்மா .
2
சுந்தரி வசனம்
அதோ சொல்லுகிறேன் பெண் காள்.
வசந்த சுந்தரி தரு நன்ன நன்ன நான நன்ன நானு - நன்ன நான நன்ன நான நன்ன நானு
பாங்கியரே நானுரைக்கக் கேளும் - இரவு தூங்கு மஞ்சம் மீது றங்கும் போது வாங்கு சிலை மத னனைப் போலொருவன் - எந்தன் வீங்கு தனம் பிடித்திடக் கண்டேனே
முகத்தோடே முகத்தை வைத்துக் கொஞ்சி - முல அகத்தோடே நகத்தை வைத்துக் கெஞ்சி - வெகு சு கத்தோடே அணைந்தா ர டி வஞ்சி - அந்தத் துரையை விட்டிங்கிருப்பதினிப் பஞ்சி
சோ றருந்தத் தானு மருவருப்பு - எந்தன் துய்ய கொங்கை இரண்டும் விருவிருப்பு கூறில் மதி தானெனக்கு நெருப்பு - அவரை க் கொடுத்தாலென் தோலுமக்குச் - செருப்பு
அன்னை தந்தையரறிந்தாற் கறுப்பு - இதற் கடுத்த புத்திபாருமுங்கள் பொறுப்பு அன்னி தங்கள் பண்ணும லவரை இப்போ ஆசையுடன் அணைந்திருக்கத்தருவீர்
முத்திரை மோதிரம் உமக்குத் தருவேன்-நல்ல மோகனக மாலைகளும் தருவேன் பத்திர மாய் நீரெ மக்கு அவரை - இப்போ பரிவுடனே அணைந்திருக்கத் தருவீர்
 

- 59
- . ༽གས་༢ ། །.་ཡོད ། . வசந்த சுந்தரி வசனம் டுகளுந் தோழிமாரே! நான் கண்ட கணுவிதுதான் அறி விரா க.
தோழி கொச்சகம் கனல் மதிபோலக் குலவு நுதலே சிவந்த பான ல் வாய்ப் பெண்ணே படம் நாமெழுதி வந்து வானுலகில் மண்ணுலகில் மன்னவரைக் காட்டுகிருேம் நீ நினைத்த ஆடவனை நிச்சயமாய்ச் சொல்வீரே
தோழி வசனம்
அதோ கேளுமம்மா! சகல தேசத்து இராசாக்களுடைய உருவங்களையும் படத்திலெழுதி வந்து காட்டுகிருேம்; நீ கனவிலே கண்ட ஆடவணை எமக்கு விளங்கச் சொல்வீராக.
சுந்தரி வசனம்
அப்படியே ஆகட்டும் தோழிமாரே .
நன்ன நன்ன நான நன்னு - நன்ன நா ன நன்ன நான நன் னு - நன்ன நான னன்ன நானன்ன நானன்ன நானுனே
தோழிமார் மடல் எழுதும்
தரு
1. மந்தர நேர் முலை மாதே - எந்தன்
வாள்விழி நேர் தோழியரே - நாங்கள் வான கத்தேகியவ் வாசவன்றன இப்போ
மடல் வரைந்திட வருவீரே
2. சுந்தரஞ்சேர் சித்திரலேகை யென்னும் - எந்தன்
தோகையரே கோகிலமே - வாரும் சுரருல கரியுல கயனுல கரசரைத்
தொகுத்து நல்மடல் வரைவோமே

Page 33
- 603. பொன்மலையாஞ் சிலை நுதலே - வன்னப்
பொற் கொடியே நற்றுணையே - நாங்கள் பூவுலகத்தினில் மேவிய மன்னவர்
பொற்பினை மடல் வரைவோமே
4. மின்னிகரு மிடைமாதே - சித்திர
மெல்லியலே துவரை நகராளும் விட்டுணுவின் மகன் அணுவுருத்ரனழகை
விரைவினில் வரைவோமே
தோழி வசனம்
கேளுந் தோழி! சகல தேசத்து ராசாக்களுடைய அழகும் மடலிலே எழுதியாச்சுது; அவைகளை எங்கள் குமாரத்திக் குக் காண்பிக்கப் போவோம் வருவீராக.
தோழி - குமாரத்தி தர்க்கத் தரு
நன்னன்ன நானன்ன நானன்ன நானன்ன
நானன்ன நானு ன - நன்னன்ன நானன்ன நான
தோழி இந்திர னிங்கிவர் அந்தர நாதன்
இவர் தானே சொல்லுவீர் - என்னம்மா இவர்தானே சொல்லுவீர்
குமாரத்தி வந்திரவிற்புணர் மன்னவ னல்லடி மாயம் பண்ணுதீர் பெண் காள் - என்தோழி மாயம் பண்ணுதீர் பெண் காள்
தோழி சந்திரனிங்கிவர் சூரியனங்கவர் தானிவரோ சொல்லுவீர்-என்னம்மா தானிவரோ தானிவரோ சொல்லுவீர்
 

- 6l - উজ্জ্ব৯
குமாரத்தி முந்திர விற்புணர் சுந்தரனல்லடி மோசம் பண்ணுதிர் பெண் காள் - என்தோழி மோசம்பண்ணுதிர் பெண் காள்
தோழி தாமம் புனைந்திடு வாமநுதலிற்
ஜலவர்களோ சொல்லுவீர் - என்னம்மா
தலைவர்களோ சொல்லுவீர்
குமாரத்தி சாமந்தனில் என்னைக் கூடியணைந்த தராபதியல்லவடி - என்தோழி தரா பதியல்ல வடி
----سسسسسس
தோழி வங்காள தேசமும் சிங்களதேசத்து மன்னர்களோ சொல்லுவீர் - என்னம்மா மன்னர்களோ சொல்லுவீர்
குமாரத்தி கங்குலில் வந்தெனக் கிங்கிர்தந் தந்திடு காவலனல்லவடி - என் தோழி காவலனல்லவடி
தோழி ஈழத்துடன் மலையாளத்தை யாளும் இறைவர்களோ இசைப்பீர் - என்னம்மா இறைவர்களோ இசைப்பீர்
குமாரத்தி தாளத்தை நேர்முலை யீர் இவால்லரென் சங்கை கெடாதேயடி - என்தோழி சங்கை கெடாதேயடி

Page 34
--62ء بماصبغہ
தோழி அச்சைக் கிறைமையின் கொச்சிக்கிறையில் அரசர்களோ சொல்லுவீர் என்னம்மா அரசர்களோ சொல்லுவீர்
குமாரத்தி
கச்சைப் பொருமுலை யீரிவரல்லக் களவு பண்ணுதே யடி - என் பெண்காள் களவு பண்ணுதேயடி
தோழி
துய்யது வரை நகரர சாளுந் துரை மகனே சொல்லுவீர் - என்னம்மா துரை மகனே சொல்லுவீர்
குமாரத்தி
மெய்யேயிவர் தன்னைத் தந்திடில் நானுங்கள் வீட்டுக்கடி ைமயடி - என்தோழி வீட்டுக்கடிமை படி
குமாரத்தி கொச்சகம் வள்ளற் கொடியை மருவிக்குமிழ் மறித்து துள்ளு கயற் கண்ணுயென் தோழியரே சொல்லிடக்கேள் உள்ளத்தில் வந்தென்னுணர் வெடுத்துப்போன இந்தக் கள்ள ணிவன் ஊர்பேர் கழறு வீரெந்தனுக்சே
குமாரத்தி வசனம் கேளுந் தோழிமாரே! இந்தப் படத்திற் காண்பித்த ஆட வன் தான் நான் கனவிலே கண்டது. இவர் ஊர்பேர் நானறியும்படி சொல்லுவீராக.
தோழி அதோ சொல்லுகிருேம் கேளுமம்மா.
 

தோழி தரு
தன்னனத் தான தன்னு - தன தான தன் னு தன தான தன்னு
வன்ன மடக் கொடியே - சின்ன மானனையாய் துயரேனினியே உன்னைக் கனவில் வந்து - புணர் உத்தமன்பேரனுருத்தனடி
சூர்ய குலவேந்தன் - துவ ராபதியாளும் நராபதிதன் பாரிவயிற்றுதித்த - துய்ய பாலனடி செய்ய வேலனடி
காளையவன் தகப்பன்- பெயர் கண்ணனடி முகில் வண்ணனடி வேனில் மதலையடி - புவி வேந்தரெல்லாஞ் தொழு மேந்தலடி
பெண்ணே வசுதேவ ன் - இவன் பேரனடி திறல் வீர னடி கண்ணே இவன்றுணைவன் - காமனடி சிவன் மாரனடி
தோழி கொச்சகம்
அஞ்சன நடைபயிலும் ஆயிழையே உன்னுடனே
மஞ்சத்திடை புணர மாப்பிளை கொண்டே வாருேம் பஞ்சிற் சிவந்த செந்தாட் பைந்தொடியே இவ்விரக நெஞ்சிற் கவலைவிட்டு நித் திரை கொள்வாயினியே
தோழி வசனம்
கேளும் குமாரத்தி! துவராபதிக்குப்போய், இந்தக் குமாரனைக் களவெடுத்து வந்து தருகிருேம்; துன்பப்படா மல் இருப்பீராக.
UY

Page 35
行
- 64 -
குமாரத்தி வசனம்
அதிக சந்தோஷமானேன் பெண் கா ள்.
தோழிகள் தரு
நன்னன்ன நானனன்ன நானனன்ன நானனன்ன நன்னன்ன நானனன்ன நானனன்ன நானனன்ன
ஆயன் பதியைத் தேடி மாயப்பொடியைத் தூவி அவரைக் களவெடுக்கத் துவரைக்குப் போவோம்வாடி
நீயென் பிறகேவாடி நாமிரு பேருங்கூடி நொடிக்குள் மருந்தைப்போட்டு அடிக்குள்
மயக்கிக் கொள்வோம்
ஒட்டிக்கொண்டே சுவரால் எட்டியே பார்த்துக்
கொள்வோம் உறங்குஞ் சமையங்கண்டு இறங்கி எடுத்துக்கொள்
வோம்
பட்டிக் காரரெம்மிற் கெட்டிக் காரருமுண்டோ பாங்கிக் குதவியாகத் தாங்கிக் கொண்டோடிப்
போவோம்
அங்கே உறங்கிருர் பார் மங்கைக் குரிய மன்னன் அரளா தெடுத்துக் கொள்வோம்
மருளப்பொடியைத் தூவி
சங்கையைப் பார்க்கலாமோ
தலைமேலே தாங்கிக் கொள்வோம் தாவித் தாவியே நாங்கள் காவிக்
கொண்டோடிப் போவோம்
 
 
 
 
 
 
 
 
 

- 65 --
பாப் பொடியைத் தூவி
7
மயக்கியவரை நாங்கள் வாகையாய்க் கட்டிலோடே
ஒகையாய்க் கொண்டு போவோம் 8 தர Tெ நகைமயிலே தாவித் தாவியே நாங்கள்
தற் பரன் தன்னருளால் இப்போ கொண்டோடிப்
போவோம் தோழி வசனம் ஆனற் கேளுந்தாயே! நீ கனவிலே கண்டு ஆசை கொண்ட ஆடவனைச் கட்டிலுடன் களவெடுத்துக் கொண்டுவந்தோம். அவரிடத்திலே வந்து சந்தோஷமாகப்பேசி உம்முடைய காமவிசாரத்தைத் தீர்த்துக் கொள்ளுமம் மா.
சுந்திரி வசனம் அப்டபடியே ஆகட்டும் தோழிகாள்
சபை கவி
வெடுத்த மன்னவனைக் காவலெல்லாங் கடந்து
மணிமாடத்தேகித்
தளவெடுத்த முறுவலினுள் வசந்த மெய்ச்சுந்தரி
தான் தாவிமேவ
*உழவெடுத்த திருத்தோளான் அனுவுருத்திர பூபதியும்
விழித்துப்பார்த்தான்
அழகெடுத்த முலையிரண்டும் புளகேறித்துயர் மீறி
யறை கின்ருளே
குமாரத்திக்கும் குமாரனுக்கும் தர்க்கத் தரு நன்னன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நானுணு - நனு நன் ன நானனன நாை
கலப்பையைப் படைக்கலமாக ஏந்தியவன் பலராமன். மகன் முறையினனை அனுவுரு த்திரன் மீது இங்கு அது ஏற்றிக் கூறப் படுகின்றது.
来

Page 36
குமாரத்தி
ஆரியனே இளந்தாரியனே என்னை அன்புடனே பாரும் - கண்ணுளா அன்புடனே பாரும்
அனுவுருத்திரன் அடி அடி, காரிகையே மடப்பாவை யரே உன்னைக் காணத்த காது பெண்ணே - கண்ணலே காணத்தகாது பெண்ணே
வசந்த சுந்தரி கண்ணுக்கினியது பெண்ணுருவல்லால் இக் காசினி தன்னிலுண்டோ - கண்ணுளா காசினிதன்னி லுண்டோ
அனுவுருத்திரன் பண்ணுக்கிசைந்திடும் வண்ணக்கிளியே நான் பார்த்திடிற் பாவமடி - கண்ணுலே பார்த்திடிற் பாவமடி
வசந்த சுந்தரி பாவையைத் தன்னிடம் மேவிடவை த் த பரனுக்குப் பாவமுண்டோ - கண்ணுளா பரனுக்குப் பாவமுண்டோ
அனுவுருத்திரன் நாவலரோ ரிரு மாதரைச் சேரில் நவையுறு மென்று சொல்வார் - முன்ைேர்கள் நவையுறு மென்று சொல்வார்
வசந்த சுந்தரி சொன்ன துனையல்ல மன்னவனே என்னைத் தூஷணம் பண்ணுதே - கண்ணுளா தூஷணம் பண்ணுதே
 

- 67 -
அனுவுருத்திரன் ஐ கன்னிகையே குலந்தன்னைக் கடந்திடிற்
கற்றவர்க் காகாது - சொன்னேன் கேள் கற்றவர்க்கா காது
வசந்த சுந்தரி
g கற்றவர்க்கும் வண்ணப் பொற் ருெடிக்குங்குலங்
காடடிஉரை யாதே - கண்ணுளா காட்டி உரையாதே
அனுவுருத்திரன் 10. சொன்ன மனுமுறை நிற்பதல்லாலுனைச்
சேரக்கொள்வேனே பெண்ணே - இனி உன்னைச் சேரக் கொள்வேனே பெண்ணே
வசந்த சுந்தரி கொச்சகம் அம்புவியில் மாந்தர் அரிவையரைத்தான் துரந்து வெம்பி விர க விதன மதைச் சொல்வதல்லாற் கொம்பனை யார் தாமாகக் கூரு ரென்னுசையினுல் நம்பி உரைத்தேன் நகைக்கிடமாய்ப் பண்ணதே
வசந்த சுந்தரி வசனம் இதோ கேளுங் குமாரனே! பூலோகத்தில் ஆடவர் பெண் களைத் துரந்து தங்கள் மோக விகாரத்தைச் சொல்லுகிற தல்லாது, பெண் பிறந்தவர் ஆடவரைத் துரந்து மோக விகாரஞ் சொல்வதில்லை. நான் உன்மேல் ஆசையினலே பேசினேனென்று என்னை லெட்சை பண்ணுதே யுங் குமாரனே.
குமாரன் கவி
மங்கையர்க ளாடவரை மையல்கூட்டி அதிவிரகமாயம்
பூட்டி

Page 37
- 68
கொங்கை தனி லணயுமென்ற கோகிலமே யோர்வசனங் கூறிடக்கேள் சங்கை தரு சூரியகுல வங்கிஷம் நான் அசுரர்
குலத் தையலேயுன் அங்கை தொட்டு உனையணையேன் உங்கள் குலத்
தவர்களைச் சேர்ந்தணைந்திடாயே
வசந்த சுந்தரி தரு நன்னன்ன நானன்ன நானநன்னு நான நன்ன நானன்ன நா னன்ன நானநன்ன நான நன்ன
வசந்த சுந்தரி 1. மன்னர் குமாரனே சொல்லக் கேளும்
சொல்லக்கேளும் மணஞ்செய்தென் னுடனிங்கேஇருந்து வாழும்
இருந்து வாழும்
குமாரன் 2 கன்னியே நானுன்னத் திரும்பிப்பாரேன்
திரும்பிப்பாரேன் கள்ளிநீ மறுபேரை விரும்பிச்சேரேன்
விரும்பிச்சேரேன்
வசந்த சுந்தரி 3 மறுபேரைக் கூடி நான் வாழமாட்டேன்
வாழமாட்டேன் மணவாளா உனைவிட்டுப் பிரிய மாட்டேன்
பிரிய மாட்டேன்
குமாரன் 4 உறுதியாயெனை மண வாளனென்ருய்
வாளனென்ருய் உப்போடே கற்பூரம் வருமோ ஒன்ருய் வருமோஒன்முய்
 

10
- 69 -
வசந்த சுந்தரி பேதகமாயென்னைப் பேசவேண்டாம் பேசவேண்டாம் பிழை வருமென்றுமெய் கூச வேண்டாம்
கூச வேண்டாம்
குமாரன்
மாதேநீ பாரடி தாசிதானே தாசிதானே மயக்கிட மருந் திடும் வேசிதானே வே சிதானே
வசந்த சுந்தரி வே சியென் றென்னை நீ ஏச வேண்டாம்
ஏ சவேண்டாம் வெறுத்துப்பின் மறுமொழி பேச வேண்டோம்
பேசவேண்டாம்
குமாரன் காசினியிலுன்னைப் போலே யாரும் போலே யாரும் கள வெடுப்பார்களோ கருதிப்பாரும் கருதிப்பாரும்
வசந்த சுந்தரி ஆண்பிள்ளைக்கிதுமுறை அல்லக்காணும்
அல்லக் காணும் ஆயிழை மாரோடே அணையவேணும்
அணையவேணும்
குமாரன் காண்கிலுன் தந்தை தாய் என்னைச்சீறும்
என்னைச்சீறும் காசினியோர்வசை பேசக்கூடும் பேசக்கூடும்
வசந்த சுந்தரி இன்னிசை
கண்ணே யென்னுருயிரே காதலனே கேளுமிந்த மண்ணுே ருனை நான் மருவிற் பழியுரையார் உன்னே ச மாகவெனக் குன்னருள் செய் யாதிருந்தால் விண்ணுே ர றிய விடுவேனு யிர்தனையே

Page 38
ー70ー
வசந்த சுந்தரி வசனம் கேளுங் குமாரனே! இனிமேலும் இப்படிச் சொல்லி மறுத் தாற் பெண் பழி தருவேன்; அதனைப் பார்க்கிலும் என்னை அணைந்து மோக விசாரத்தைத் தீரும் மணவாளனே.
குமாரன் வசனம்
ஆனுற் சொல்லுகிறேன் கேளும் பெண்ணே.
சுந்தரி குமாரன் தர்க்கத்தரு, சேர்க்கைத்தரு நன்னன் னுஅ நன்ன நானன்ன நானன்ன நானன்ன அ நன்ன நா னன்ன நானன்ன நனனன்னுஅ நன்ன நானன்ன நானன்ன நானன்ன நானுனே
அனுவுருத்திரன் 1. கன்னியே மடவன் ன மென் ன டையே -
காதலோ டுன்னை மேவியிங் கிருப்பேன் பன்னியே மலர்ப் பாயலில் நீயென்னைப்
பரிவு கொண்டணைப் பீரே
வசந்த சுந்தரி 2. மன்னனே மரு வார்களுக் கரியே
மாரனே புயவீரனே நீயுஞ் சொன்னநே ரத்திலணைந்திடு வேன் எந்த ன்
சு கத்தினை யறிவாயே
அனுவுருத்திரன் 3. கஞ்சமா மலர்க் கிஞ்சுகமயிலே
காமனேவியமாகிய குயிலே குஞ்சரப்பிடி நிகர ன்ன மேயுன்னைக்
கூடியிங்கிருப்பேனே
வசந்த சுந்தரி 4. அஞ்சன நிக ரிங்கித கோலா
அங்கசன் வடிவந்தருசீலா
 

سست ہے۔ [7 ہے۔
மஞ்சநேர்தரு பஞ்சணை தனிலென்னை
மருவியிங்கிருப்பீரே
அனுவுருத்திரன் பொன்னை நேர்தரு மின் னினுக்கரசே
பூவையே மலர்ப்பாவையே உந்தன் வன்ன மாமணிமார் பழுந்திட இன்பம்
மருவியிங் கிருப்பேனே
வசந்த சுந்தரி
6. பன்ன காதிபன் மீதறி துயில்வோன்
பாலனேயனு கூலனே நீயும்
என்னைவேள் மதலீலைகள் செய்திங்
கிருந்தென் சுகமறிவீரே
அனுவுருத்திரன் 7. வாலகோகுலம் போலியல் மொழியே
வள்ளைக்காத ள வோடிய விழியே சீலமா மதன் சாத்திரப்படியே
சேர்ந்தணைவேனினியே
வசந்த சுந்தரி 8. வேலனே மலர்க் கோலனே துவரை
வேந்தனே யுனைச் சேர்ந்திடப்படைத்த நாலு மாமுகத் தேவனுக்கினிமேல்
நான் செய்யுங் கடனேதோ
வசந்த சுந்தரி இன்னிசை கோணல் மதிமிலைந்த கோமானுதல் விழியிற் காணுமலிங்கு வந்த காமனே நீ கேளும் வாணேசுரனறிந்தால் மா பாவி கொன்றிடுவான் தோணுமலிங்கே சுகத்தோடிருப்பீரே
வசந்த சுந்தரி வசனம்
கேளும் நாயகரே! மதனலிலை பாராட்டிச் சந்தோஷமா னேன்; இனிமேல் எனது பிதாவாகிய வாணேசுரனறிந்

Page 39
- 72 -
தாற் பழி வரும்; தெருவீதியில் வெளிக்கிடாமல் சுன்னி மாடத்திற் சுகமாயிருப்பீராக
அனுவுருத்திரன் வசனம்
அப்படியே இருககிறேன் பெண்ணே
வசந்த சுந்தரி தோழியுடன் சொல் தரு
தந்தாஅ ன ன தான ன தா னன தந்தாஅ னன தா னன தா ன ன - தன தன னத் தன னத் தன தன னத் தனனத்தன தன ன தனன தன தா னன தான
1. சந்தாரிரு புயமுறு திறலிறை
சமர்த்தடி கதை அமர்த்தடி - தோழி இவர் , தன்னுல் என்னை வெகு சள்ளை பண்ணுவார்கள்
சமையமறிந் தெனக்குச் சாற்றடி தோழி
2. அந்தார் முடியரசனை மருவுதல்
அறிந்தவர் செப்பிடில் அவர் - என்னை அடுத்துக் கடுத்து வெடுவெடுத் துப் படுத்துவார்கள்
அடைத் துத் தடைக் கதவைப் பூட்டடி தோழி
3. பைந்தா ரொடு மிடை தொடியணியிது
பார்த்துக் கோ கையில் ஏற்றுக்கோ - தோழி பருக்கி இவரை மனம் உருக்கி நெருக்கி யென்று
மிருக்க ஒரு மருந்து பண்ணடி தோழி
4. இந்தா ஒரு விர லணி மோதிரம்
எடுத்துக்கோ அணி தொடுத்துக்கோ - தோழி இளகிப்பழகியென தழகிற் புள கமுற
இணக்கும் வசியமொன்றை இணக்கடி தோழி
 
 
 
 

- 73 -
வசந்த சுந்தரி வசனம்
கேளுந் தோழிகாள்! நானுங் கிருட்டின இராசாவுடைய மகனுங் கன்னிமாடத்திலிருக்கிற செய்தி யொருவருமறி
ாமல் நடத்தி வருவீராக
தோழி வனசம்
அப்படியே ஆகட்டுமம் மா.
உருப்பிணி புலம்பல் தரு
நன்ன நான நான நன்ன நன்னனு னு ன னன்ன ஞனு - நன நானன நானன நானன நா னன நன்னன்ன நானன்ன நானு
மன்மதனே யென்னுடைய
மகனே மாமயிலேறுங்குகனே - உன் மாளிகை விட்டெங்கே போனிர் என்
ஆருயிர்க் கண்மணியே எந்தன் மகனே
2. கன்னல் மொழி மின்னனையார்
காதலுற்றுப் போடுமருந்தாலே - என்னை க் கணும லெங்கொழித்துப் போனிர்
வீணுக எந்தன் மகனே
3. மங்கை குற வள்ளி தன்மேல்
மையல் கொண்டு வேலர் வனம் போக - அன்று மாது உமை சட்டி என்னும்
மாவிரதம் நோற்றதறி யாயோ
4. சங்கை தரு சூரிய குல
வங்கிஷனே எந்தனது மகனே - என்னைத் தனியே விட் டங்க கன்றீர்
தயவோ டென் முன்னே ஓடிவாராய்

Page 40
- 74 -
5 கடலமிர் த மொழி மடவார்
கை மயக் கஞ்செய்யு மருந்தூட்டி - இப்போ கள வாய்க் கொண்டே கினரோ
காணேனே யென்னுடைய மகனே
6. நடன மிடு தாசியர்கள்
நாட்டியங்கள் கேட்டிருந்தாய் மகனே -இந்த நள்ளிரவிற் பேய்க்குரலும்
நாய்க் குரலும் கேட்க நடந்தாயோ
7
புத்திர சோகத்தினலே
பத் ரதன் மா யந்ததறியீரோ - பசும் பொன்னிறஞ் சேரென் மகனே
பூ பாலா நீ யோ டிவாடா 8. சங்கை கெட எங்கொளித் தாய்
சற்புதல்வா நிச்சயமாய்வாராய் - எங்கள் சத்திரக்கை மன்னவனே
இத்தலத்தை யாண்டிருந்தாய் மகனே
உருப்பிணி தாழிசைக் கலிப்பா மருமலர்க் கள பதுளப தொங்கலனிமார்பனே
நெடிய ரூபனே வாசு தேவனருள் கண்ணனே புயல் வண்ணனே
உமை அண்ணனே தருமநீதி த வருமலே துவரை தன்னை யாளு மெனது
மன்னனே தனையணு மனுவுருத்திரனிரவு சயன மாயின பின் மாது யர் பருவ ர ற் றுயர் கணித்துநின் கிருபை பண்ணு வாய் புவியை யுண்ணுவாய் பாந்தளாகு மொரு காளியன்றனது படம்
நடித்த பாதஞ் சரணமே உருப்பிணி வசனம் இதோ கேளும் நாயகனே! எங்கள் குமாரன் இரவு பஞ் சணை மேற் சயனம் புரிந்தான் ; மஞ்சனக் கட்டிலுடனே அவனைக் காணவில்லை. ஏதென விசாரித் தறிவீராக.

- - 75 -
கிருட்டினன் இதோ விசாரித்தறிகிறேன்; மாளிகையிலே போயிரும் பெண்ணே.
கிருட்டினன் கவி
மதி வல்லோனே யெந்தன் மகனனுவுருத்திரன் முன் மேவு பஞ்சணையின் மீது மிக்கவே சயனஞ் செய்தான் தாய வள் பார்க்கும்போது தானங்கே காணுேம் கண்டாய்
டு வகர் தன்னையிங்கே சீக்கிரமழைத்திடாயே
கிருட்டினன் வசனம்
அதோ கேளும் மந்திரி! நமது வாசற் சேவகரை அதிவிரைவிலழைப்பீராக
மந்திரி வசனம்
அப்படியே - இதோ வருகிருர்களையா.
சேவகர் வரவு கவி
வரியுறு காலிற் கண்டை வயங்கவே பூட்டிக்கொண்டு பரிய கை வாளுமேந்திப்பம்பரஞ் சுழலு மாப்போல் அரிய யன் வாசல் தேடி அடையலர் வெருவியோ டக் கருமுகில் வண்ணன் வாசற் சேவகர் வருகின்ருரே
தரு
தனத்தன தான தன்னு - தனதன தனத்தன தனத் தன தானதன்னு
1. கச்சையு மிறுக்கிக் கட்டி - நன்ருய்க்
கையினில் வாளுஞ் சுழற்றிக் கொண்டு
மெச் சிமேல் மீசை கோதிக் கொண்டு வெகு
வீரத்துடன் சேவகர் வீதியில் வந்தார்

Page 41
2. அச்ச மலையாளரசர் சேவகர்
அஞ்சிடவே வெகுஆரம்பத்துடன் பச்சை வண்ணன் வாசல் தேடிச் சேவகர்
பண்பாகச் சபை தனிற் தோற்றினரே
சேவகர் கவி பச்சை ஆலிலையிற்றுயில் புரிபவனே பஞ்சவர்
சகா யனுனவனே அச்சமாயரசர் திறையிடுமர சே அமலதற் பரன்றன்
மைத்துணனே மச்சையாமெனவே வந்திடு மெங்கள் மகா விஷ்ணு
வென்னு மன்னவனே இச்சபை தன்னிலெங்களை யழைத்த தியம்புவீர்
நயம் பெறத் தானே
சேவகர் வசனம்
அரசிருப்பும் சிங்காசனமும் வீர பராக்குஞ் செங்கோல் முறைமையுஞ் சரணமே சரணமையா. எங்களை அழைத்த செய்தி கட்டளையிட்டருள வேண்டும் சுவாமி.
கிருட்டினன் கவி முத்திரைச் சேவகரே நானும் மொழிந் திடக்
கேளுமிப்போ நித்திரை தன்னிலுற்ற நிருபனமுருத்திர ன்றன்னைக் குத்திரமாக யாரோ கொண்டு போனர்கள் நீங்கள் சித்திர மாகத் தேடிச் சீக்கிரம் வருகு வீரே
கிருட்டினன் வசனம் கேளும் சேவகர்களே! எனது குமாரன் பஞ்சணையிலே விழிதுயின்றபோது காணவில்லை. அவனை எங்கும் விசா ரித்தறிந்து வருவீராக
சேவகர் வசனம்
அப்படியே விசாரித்து வருகிருேமையா.
 

- 77 -
சேவகர் தரு நன் ன நன்ன நான நன்ன நானநன்னணு - நன்ன நான நன்ன நான நன்ன நான நன்னணு
1. வத்தாவி கொழும்பு கண்டி மாத்தறை கொச் ஒ வங்காளம் வழிநடந்து போவோம் வாதோழா
சேவகர் மறு தரு
தான தனத்தந் தனத் தானின தானு தனத்தந் தானத் தான தனத்தந் தனத் தானின தானு தனத்தந் தனத் தான
வாடா இத்தெரு வழியே நாங்கள் போனுலங்கேதும் தெரியும் நடாள் மன்னவன் மகனை எங்கே
தானே கொண்டு சென்ருரோ 2. காடேறித் திரிவானேனடா
மூடா இப்படி வாடா வீடாரத் தெருவாலே இனி
வீருகச் செல்லுவோமே
* இதன் மீதிப்பாடல்கள் கிடைக்கவில்லை. பின்வருவன சில
இடங்களிற் காணப்படுகின்றன:
2. திருச் செந்தூர் மைலாப்பூர் தேடியே
பார்த்திடுவோம் திறமையுடன் நடந்துராமேச்சுரம் தேடியே
பார்ப்போம்
3. சேர்வோம் நாமித்தில் லையம்பலத்தினில்
சென்றங்கு பார்த்துநாம் தேடியே காண்போம்

Page 42
-- 78 -
3. தேடித் தெருவெங்கும் பார்ப்போம் மறு
தேவ ரெதிர்த்தி டிற் கேட்போம்
சாடித் தடிந்துடல் பார்ப்போம் எங்கள் சங்கை முழுதையுங் காப்போம்
4. மேகத்தை நேர் குழல் மின்னர் மதன்
மோகத்தினுல் மையலாகி அவர் சோகத்தைத்தீர்த் திடக் கண்ணன் மகன்
ஆகத்தைக் கொண்டு சென்ருரோ
5. ஆரோ கொண்டு சென்ருரோ துவரை
ஊராள் மன்னவன் மகனைப் பாரோர் கண்டறிவீரோ அவன் பேரோ திச் செல்லுவீரே
6. தாராடிய திண் புயனே யிந்த
ஊராரிறைமுன் னணுகிக் காரார் நிறத்தன் மகனை நாங்கள் காணுே மெனச்சொல் வோமே
சேவகர் கொச்சகம்
மருத்துள வ மாலையணி மாயவனே ஊரிருக்கும் தெருவெல்லாம் நாங்கள் தேடியிந்தத் தேசமெல்லாம் உருத்திர பால னென்னுமுத்த மனைக் காணுமல்
வருத தமுடன் வந்தோம் வகையேதும் பார்ப்பீரே
சேவகர் வசனம்
இதோ கேளும் சுவாமி! இந்தத் தேசமெல்லாம் பார்த்து வந்தோம். உமது குமாரனைக் காணவில்லையறிவீராக.
கிருட்டினன் வசனம்
ஆனற் சரி. நீங்களிருக்கும் ஆச்சிரமம்போவீராக.
 

- 79
வாணன் தலையாளி வரவு சபை கவி
Lகளிற்றையுகைத்த பிரான் குமாரனும வாணன்
மகளுங்கன் னிமாடத் இடைஇருந்திடவாணன் கட்டளை கூர் காவல்
புரிந்திருக்கும் வீரர் அடைத் தடை யார் குடல் சூடி நடப்பவர்
சாமத் திருளிலந்த வூரிற் தடைக்கையினில் வாளெடுத்துத் தலையாரி
மாரிருவர் தான் வந்தாரே
தலையாரி தரு
தனத்தான தானின தனத்தான தானினனு - தன தான தானின தான தானின தனத்தான தானின தனத்தான தானினன
1. திடத்துடனித் தெருவிடத்தினிலே வாழுஞ்
சனங்களே - உங்கள் மனங்களிலே பயம் சேராதேயும் வழி பாராதேயு
மினிநீர்
2. துடுக்குடன் இத்தெரு முடுக்கினிலே இருப்போம்
சோரர் வந்தால் வீரமதுடன் நாம் துரந்து சென்றவர் தலை அரிந்து கொன்றிடுவோமே
“சில பிரதிகளில் இப்பகுதியும் இவ்விடம் காணப்படுகின்றது
சபை கவி
சுந்தரஞ்சேர் மருசந்தன பாணி தங்கத்தூரி முதலான
குங்கு மங் கமழவே
விந்த மாமலை இரண்டுவந்த தென்னவாணன் நகர்மேவும் தலையா ரிமார் வந்தார்

Page 43
-- 80-سس--
3. அருக்கனிலே பல்லி இருக்கவுஞ் சொல்லுதடா - அடா ஆர்களோ எங்கள் ஊருள்ளே கள்வர்
அடுத்துக் கொண்டே கள வெடுத்துக்கொண்
டாரறிவீர்
4. செருக்குடனே யிங்கே இருக்கிறதார் காணும்-நீங்கள் தானும் திருடரோ ராசன் மகளோடு சேர்ந்து கொண்டீர் அங்கே பேர்ந்து கொண்
டறிவோமே தலையாரி கலி
ஒங் காணும் ஒரு மனுஷன் வந்து
குமா ரத்தியோ டு உறவு கூடி ஆங்காரத்துடனிருந்து சிரிக்கிருன் பார்
அப்படி யங் கவனிருக்க அலுவலேதோ நாங் காவல் புரிந்த செய்தி நன்றதாச்சோ
நல்ல திவன் மாளிகை விட்டகல முன்னம் போங்காணும் நானுமுந்தனருகில் வாறேன்
புரவலர்க் கிங்கிது கதையைப் புகலுவோமே
தலையாரி வசனம்
கேளுந்தோழா ! இதுசெய்தியை எங்கள் இராசாவுக்கு
அறிவிப்போம வருவீராக!
மறு தலையாரி வசனம்
அப்படியே வருகிறேன் தோழா.
தலையாரி கவி
மதியுறும் வானேர் சூழ வந்தரசாளும்நேச விதிமுறை தவரு எங்கள் வேந்தர்கள் வேந்தே கேளாய் பதியுறு கன்னிமாடம் பார்த்து நாம் வரும்போதங்கே அதிசயமான செய்திய றைகுவோ மறிகுவீரே
 

1.
4.
தலையாரி தரு நன்ன நன்ன நான நன்ன நான நன்ன ன - நன்ன நான நன்ன நான நன்ன நான நன்னு ன
மாவலியுதவு செய்ய வாணனே கேளும் - உந்தன்
மங்கை தந்தாளிங்குனக்கோர் சங்கைக் கேடையா காவலிலிருந்தோமொரு பல்லிசொன்னதால் உந்தன்
காரிகையிருக்குமனைச் சார்பிலே போனுேம் போகவொரு காளை கன்னிமாடம் மீதிலே - சிறு
புன்சிரிப்புடனே பூவணையிலிருந்தான் அவன், ஆகமு முன் மங்கை தன் தி ரே கமுமொன்ருய்
- இந்த அதிசயத்தை யுன்னுடனே அறையக் கூடாதே மன்மதனும் ரதியுமென வொப்பிடலாமோ - குற
வள்ளியுங் கந்தனு மென்னச் செப்பிடலாமோ பொன்னையு மரியையும் நிகருரைப்போமோ - இந்தப் பூவுலகத் திங்கிவரைப் போலே நாம் காணுேம் அங்கமும வன்றன்பிர சங்கமும் சொல்லில் - உயர்ந்
தாருளோரை ஒப்பிடவும் வந்திடாதையா துங்கமுறும் வீரனை நாம் கண்டு பயந்தோம் - அங்கே துன்னுமந்தக் கன்னிமாடம் நண்ணியறிவீர்.
தலையாரி வசனம்
இது செய்தி தான், உமது கன்னிமாடத்தில் நடந்திருக்கி றது. போய் அறியுமையா
வாணன் வசனம்
அப்படியிருக்கிறதைச் சென்று பார்ப்போம்; நீங்களு மென் கூடவே வருவீர்களாக
வாணன் ቓ5®5 தத்தனத்தந் தனத்தானின - தனத் தத்தான தத்தனத்தந் தனத்தானின தத்தனத்தந் தனத்தான தத்தனத் தந் தனத்தான தத்தனத்தந் தனத்தான தத்தனத்தந் தனத்தானினு
i

Page 44
- 82 -
1. அத்தனைக்குன் கெறுவென் னடா - என் வீட்டில் வர
அத்தனைக்குன் கெறுவென்னடா
மத் தருக்குள் வைத்த சடி லத்தருக்கு மேயரிது - இத்
தெருக்குள்ளே குதற்குப் பித்தருக்குமாகுமோ டா
2. வீரமனங்கொண்டு வந்தாயோ - உன மிருத்து
கார கன் பிடித்துக்கொண்டதோ - இந்தச் சூரருக்குள்ளே யதிக பேரிருக்குமிப்பதியி லாரிருட்குள்
ளேகிவந்த காரியத்தை யோத டா நீ
3. ஆருடையவன் பொசிப்பென்றே நீவந்த தெந்தன்
வீறுடைய நாய்பசிக்கன் ருே - எடாயிப்போ வேறு வேற தாயுடலைக் கீறு கீற தாய்அரிந்து
பாறுபருந்துக்கிடமுன்கூறடா நீ வந்த செய்தியை
4. புத்தி சொல்லித் தந்தவராரோ - என்பிள்ளை தனை
எத்தி யெத்திக் கொண்டிருந்தாயோ - எ டாவுன்னைக் குத்து குத் தென்றே யடிப்பேன் செத்திடப்போருய்
பயலே இத்தலத்தில் வந்த செய்தி சற்றெனக்குச்
சொல் லடாநீ
வாணன் வசனம்
அதோ கேள டா கள்ளப்பயலே கன்னிமாடத் தினுள் நீ
வந்து நின்ற செய்தியை நானறியும்படி சொல்லுமடா .
அனுவுருத்திரன்
கெட்டி கெட்டி மட்டி நீ போடஈ உனக்கு என்ன கேடுகாலம் தொட்டதோ மூடா துட்டர்கெறு மட்டடக்கும் உக்ர செயருத்திரனைக் கட்டியடித் திடவுந்தன் சித்த மதி லேநினைந்தாய் கசடாதுடியாதே, எனதுகெறு வதை நீ அறியா யோ
 

- 83 --
அனுவுருத்திரனுக்கும் வாண அணுக்கும் தர்க்கம் கொச்சகத் தரு
அனுவுருத்திரன் கொச்சகம்
நல்லில் முழைஞ்சில் காட்டினில் வாழ்
கள்வா உந்தன் குலத்துதித்தோர் டு கால்லைத் தொடையானிராமன் அம்பாற் கொலையுண்டார் முன்னறியாயோ வில்லுப்பிடித்து நான் பொருதால் விழுந்து
புவியில் அழுந்தாயோ
35(Ե
நன்னன்ன நானன்ன நானன்னு - நன்ன
நானன்ன நானன்ன நானன்ன
நன்னன்ன நானன்ன நானன்ன - நன்ன நானன்ன நானன்ன நானன்ன
அடா, நல்லத்துக்கோ இந்த நினைப்பேன் - பொர
நாடுகிருய் மனச்சினப்பேன் - உந்தன்
பல்லுத் தகர்ந்திட இடிப்பேன் - இந்தப் பாரெங்குமென் புகழ் படிப்பேன்
வாணன் கொச்சசும்
தத்திப்பாய்ந்து பகை முடிக்குந் தறுகட்சீயக்குருளையுடன் வற்றிச்செத்த புல்மேயும் மானென்றெதிர்த்து
வருவதுபோல் குத்திக் குத்தியுன் னிரத்தங் குடித்துக் குடித்துன்
புயத்தினையே GT L– fT கத்திக் கிரையுன்னைக் கொடுப்பேன் - டடு
கள்ளா உன்னிரலை எடுப்பேன் எடா, மொத்தித்தலைதனையுடைப்பேன் - முழு
மூடாவுன் வாய்க் கொழுப்பெடுப்பேன்

Page 45
- 84 -
அனுவுருத்திரன் கொச்சகம்
அரக்கர் செருக்கு முன் குலத்தில் அசுரர் செருக்கு
மடர்த்துலகம் புரக்கவரும் மாதவன் மகன்நான் போடாவா டா
மூடாகேள் நெருக்கிஉனை இப் போதடிப்பேன் நில்லாதேவீண்
சொல்லாதே
தரைக்குள்ளே மன்னவரிழப்போ - உங்கள்
சாதிக்குள்ளோர் வெகுதழைப்போ
நல்ல , திருக்கட்டுன் னேடமர் விளைப்பேன்
படை, ஏவியுன் நெஞ்சினைப் பிளப்பேன்
வாணன் கொச்சகம்
வள்ளத் தாமோதரன் மகனே வாணேசுரனென்றறியா மற் கள்ளப்பயலே பேசுகிருய் கட்டிக்கட்டி யுனையுதைத்து துள்ளுகளையுமடக்குகிறேன் துரை போல்நின்று உரை யாதே
கள்ளுக்குடித்தவர் வெறியோ - உந்தன்
காலிற்றுலங்கிடப் போறியோ
பிள்ளைத்தனத்துறும் பிறவோ - அடா
பின்னுமு ன்னுங்களுக் குறவோ
அனுவுருத்திரன் கொச்சகம் சும்மா வென்பாடா யிருக்கச் சுடத்தா ன் வந்து
மிகப்பேசி அம்மாவென்றே குழறுகிருய் ஆரடா நீபேய் பிடித்தாய் நம்மாலுனக்கு நட்டமென்ன நானே பொல்லாத
வனறிவாய்
அம்மானென்றிம் மட்டும் பொறுத்தேன் - நானும்
ஆண்பிள்ளைதான் மனம் கடுத்தேன்
செம்மாந்த தோளினை முறிப்பேன் - அடா
சீறியுனக்கிந்த வெறுப்பேன்

85
வாணன் கொச்சகம்
மமாயஞ் செய்தென் மகளை மருட்டிக்
களவாயெடுக்க வந்து அம்மானென்றும் பேசுகிருய் அவுணர் மனிதர்
ஒரு குலமோ செம்மான் தோலுக்கிடங் கேட்ட செய்திபோல
ஆச்சுதடா
அடா, பம்மாத்தெல்லாமிப்போ போக்கிறேன் - இந்தப்
பாரில் விழவுன்னைத் தாக்குறேன் விம்மாந்த தோளைப்பிடிக்கிறேன் - உந்தன்
மேனி தூளாக அடிக்கிறேன்
வாணன் விருத்தம்
வாருங்கோ தலையாரிமாரே இந்த வண்டலனைக்
கொண்டு சென்று மறியல் வீட்டிற் சேருங்கோ துலங்கிலிவன் காலை மாட்டித்
திறமாகப் பூட்டிச்சே வகர்க்குக்காட்டி கா ருங்கோ வென வுரை த்துமு ன் போ லுங்கள்
காவல் புரிந்திடப் போவீர் கய வன்றன்னை க் கூருங்கோல் விழியாளை அழைத்துக் கேட்டுக்
கொல்லுவேன் சாட்சி வந்து சொல்லுவீரே
வாணன் வசனம்
கேளும் தலையாரிமாரே! இந்தக் கள்வனுடைய காரியத் தை விளங்கியறியுமட்டும் இவனைத் துலங்கிலிட்டுக் காவ லில் எச்சரிக்கையாயிருப்பீராக.
தலையாரி வசனம்
அப்படியே, உமது கட்டளைப்படி நடக்கிருேமையா .

Page 46
ہے- 86 ۔
தலையாரி அனுவுருத்திரன் - கொச்சகம், தர்க்கத்தரு
தலையாரி கொச்சகம் அந்தரத்தில் வாழும் அமரர்களென்ருலு மிங்கே வந்து கிட்டமாட்டார்நீ வந்தாய் மனக் கெறுவாய் தந்தரமாய்க் கட்டியுன்னைத் தாக்கியுயிர் போக்கிடுவோம்
குமாரன் தரு தந்தன்னு தந்தன்ன தன தந்தன்னை - தன தானதானின தந்தன்னு தன தந்தன்னுணு கந்தவேளே உதவிசெய் இந்தவேளை - என்னைக்
காரும்வா ரும்உதவி தாரும் பாரும் செந்தில்வேலா சிவனுமை தந்த பாலா - தீவினை
தீர்த்திடாயோ என்னைக் காத்திடாயோ
தலையாரி கொச்சகம் தடிக்கப்பருத்த இளமுலையார் தன்னுசையினல்
மன்னர் பலர் துடிக்கப்பதைத்து முன்னுளிற் துயராலலைந்ததறியாயோ மடிக்க வதைத்துன் மனச்செருக்கை வாயாற்போக
வதைத்திடுவோம் குமாரன் தரு
அடிக்கிருரே அடிக்கடி துடிக்கிறேனே - உனது
அன்பு தாரும் எந்தன் முன்புவாரும் படிக்குநாதா வாயிலடி க்கும் நீதா - உன்னைப்
பாடுவேனே பதத்தைச் சூடுவேனே
தலையாரி கொச்சகம் கிரண மணிப்பொன் முடிசூடுங் கெடி மன்னவர்கள்
திரண்டு வந்து சரணமென எம்மரசன் மலர்த் தாளில் விழுவதறியாயோ அரனே அமலா வென்ருலும் அடித்துன்னிரத்தங்
குடித்திடுவோம்

- 87 -
குமாரன் தரு
இரத சூதா ஆன வரத நாதா - எந்தன்
எண்ணுள்ளானே அருள் கண்ணுள்ளானே விரத நாதா வேத பரத கீதா - இந்த
வேளைவாரும் நானெரு ஏழைபாரும்
தலையாரி கொச்சகம் துடித்துத் துடித்துப் பேசுகிருய் சோரா நீயின்
றிரவிலெங்கள் குடிக்குளரசன் வாணன் மகள் கொங்கை தழுவிக்
கொண்டாயோ
இடித்துப் பொடியாய் உனதுடலை இழுத்துக்
கழுகுக் கிரையிடுவோம்
குமாரன் தரு அடிக்கிருரே துடித்துப் பதைக்கிறேனே
வருத்துவ, தருமைதானே உமக்கிது பெருமைதானே இடிக்கிறீரே இடித்துப் பிடிக்கிறீரே - தனித்தனி
என்செய்வேனே பிறருக் கெதுசெய்தேனே
தலையாரி கொச்சகம் பெருக்கச் சடல மிருக்கு தென் ருே பேராயரசன் மகள்
மனத்தை உருக்கியவளோ டணைந்துதுயில் உள்ளாயிருந்த
கள்ளா கேள் செருக்கும் நெளிப்பும் அடக்குகிருேம் திருடா
இதயம் பதைபதைக்க
குமாரன் தரு ஒருத்தியாலே புரிந்திடு மருத்தினலே - இவர்
உதைக்கலாமோ உடம்பு பதைக் கலாமோ வருத்துறிரே துலங்கிலிருத்த வோதான் . இது ஒரு
மாயந்தானே உமக்கிது ஞாயந்தானே

Page 47
- 88 -
தலையாரி விருத்தம்
அட்டமா நா க முதல் மற்றுள்ள குல கிரிகள்
அதிர்ந்து மிக ஒன்று படினும் அளவற்ற அரசர்கள் ஒருகோடி பேரெதிர்த்
தடலாண்மை செய்யவரினும் கட்டுவிட்டுக் கடல்கள் ஏழு மொன்ருயினுங்
கதிரவன்றிசை மாறினும் கலங்கா மலரசுசெய் வாணனுட வாசலிற்
காவல்புரி வீரர் நாங்கள் திட்டமாயுந்தனைக் கட்டியே அடித்தினிச்
சீக்கிரங் கொடு போயுனைச் செப்பரிய பாரத் துலங்கினிடை யுன்பதஞ்
சேர்த்திட முன்பதாக வட்டமா மதிமுகப் பெண்ணுடன் நீ இங்கே
வருகின்ற கதைகளெல்லாம் வளமையாயெங்களுக் குரையடா துலங்கிடை
வதிவதென்றறிகுவாயே
தலையாரி வசனம்
கேள டா கள்ளப்பயலே! உன்னைக் கட்டியடித்துத் துலங்கிற் பூட்டமுன்பதாக நீயிங்கே வந்தவரன் முறையை நாங்களறியும்படி சொல் வீராக
குமாரன் வசனம்
இதோ கேளுமண்ணே! என்னை வருத்தவேண்டாம். நடந்த செய்தியெல்லாம் ஒழியாமற் சொல்லுகிறேன் கேட்பீராக.
குமாரன் கொச்சகம்
வென்றிபுனை யும் தனதன் நகரெனமே வும் துவரை முன்றிலொரு கோடி முடிவேந்தர் காத்திருக்க மன்றிலிருந்தரசாளும் மாயன்மகனன வென்னை
 

- 89 -
நன்னன்ன நானநன்ன நணுனன்ன நானன்ன நானன்னணு நானன்ன நானனன்னு நனனன்ன
நானன்ன நானு னு குன்றை நிகர் முலையாள் - இரவிற்
கொடுவந்திடு மருந்தால் இன்றளவாகவும் நான் - மயங்கி
இவளோடிருந்து விட்டேன்
குமாரன் கொச்சகம்
சங்கீன்ற முத்தொளிரும் தானேர் வயற்போதிற் செங்குவளை பூக்குந் திருத்துவரை நன்னட்டில் துங்கமுறு வாணன் மகள் சுந்தரி தன் தோழியராம்
தரு
மங்கையரோடிவந்து எனக்குமருட்பொடி போட்டதினற் கங்குல் பகலறியா தெனது கருத்து மயங்கிவிட்டேன்
குமாரன் கொச்சகம்
வாளை துவஞம் வயற்றுவரை மன்னனருள் காளை நான் பஞ்சணமேற் கண் துயிலும் நேரமதில் தோழியரை விட்டு அவள் சூதாகவே எடுத்து
தரு
காளமுகிற் குழலாள் அணைந்த கலவி மயக்காலே மீள நினையாமல் அவளுடன் வீனிலிருந்து விட்டேன்
குமாரன் கொச்சகம்
வாணேசுரன்றன் மகள்தோழி மாரை விட்டு காணுமலே படுத்த கட்டிலுடன் கொண்டுவர நாணுமலின்பம் நலியாத ஆசை கொண்டு

Page 48
-90 -
芝、@
அவள், பூணர் முலைமீது என்ன கம் பொருந்த அணைந்திருக்க
வீணுக நீங்களிப்போ அடித்து வித னப்படுத்துவதே ன்
குமாரன் கொச்சகம்
பஞ்சணையின் மீதே படுத்திருக்கும் வேளையதிற்
கஞ்சமுகமின்னர் களவினலே யெடுத்து மஞ்சநிகர் சங்கீத மண்டபத்தில் கொண்டுவர
தரு கொஞ்சியணைந்திருக்கும் பொழுதிற் குறுகியெனப்பிடித்து வஞ்சகமாயடித்து உதைத்து வருத்திட நீதியுண்டோ
குமாரன் கொச்சகம்
விண்ண வருஞ் செங்கமல வேதனுமாலைப்பரவ நண்ணு துவரைப்பதியில் நான் சயன மாயிருக்க ஒண்ணுதல் மெய்ச் சுந்தரிதன் ஒண்டொடி மாரோடிவந்து கண்ணுறக்கத்தோ டிரவிற் களவாயெடுத்து வந்து பண்ணியலிலை தன்னல் இப்பாடுபடுவேனே
அனுவுருத்திரன் கலித்துறை
காத ளவோடிக்குமிழ் மிசை மறிந்த கயல் விழியாம் மா தென்னைக் கட்டிலுடனெடுப்பித்து மணம் புணர்ந்த குதினை வாணன் அறியாமலே துலங்கேற்றச் சொன்ன காதையைப் பொய்யாக்கத் தமியேனென்னுரர் புகக்
காருமண்ணே
அனுவுருத்திரன் வசனம்
அதோ கேளுமண்ணமாரே! ஒருத்தியுடைய மருந்து மயக்
கத்தாலே வந்தவனைக் கள் வனென்று அடித்து வருத்து வது நீதியல்ல, நான் ஊர் போக விட்டு விடுவீராக.
 

- 91 -
தலையாரி கொச்சகம்
வீரத்தனமும் உளக்கெறுவுமெத்த மனதில் நினைந்து
- கொண்டு சேர இராசன் மகளுடனே சிரித்துக்கனைத்து இருந்தவுன்னை வாரைப்போட்டு இறுக்கியுயிர் வதைத்து உதைத்துச்
- சிதைத்திடுவோம்
தரு
தன தான தனதான தனதான தான
தனத்தந் தனத்தந் தன - தன தானதான தன
தனதான தனதான தனதான தானன தானணு
பாரோர் புகழவுன் ஈரலை நாங்கள்
பரிக்குங் கரிக்கு மரிக்கு மறுத்தெறி வோமடா
இந்தப் பாதகர் தன்னிடம் வந்தெய்து வாயென்று
பங்கய நான் முகன்றன் கையெழுத்திது வேயடா
தலையாரி கொச்சகம்
கார்சேர் துவரை நகரிருந்து கதித்த வாணன் மகளுடனே
சேர வென்றுன் மனம் நினைந்த திருடா வுனை நான்
பதைபதைக்க
பார் மீதுருட்டியரைத் துன்னுடலம்
பரிய வாளாலரிந் தெறிவோம்
தரு
நாரணன் ஆதியர் தான் முதலாக
நடுங்கியொடுங்கிப்பயங்கரங்கொண்டு செல்வா ரேடா இப்போ நாட்டி லெவரும் நகைத்திடவுன்னை நருக்கிக்
கருக்கி உருக்கித்துலங்கில் வருத்துவோமெடா

Page 49
- 92 -
தலையாரி கலித்துறை
ஆமடாவுனக்கு மெத்தக் கெறுதவதாச் சோவாசவனும்
வாணனுடை யாண்மை யென்றற் போமடா சோதிடருன்னுேலை பார்த்துப்
பொல்லாத வேளையென்று சொல்லிஞரோ நீ மாடா வெப்படித்தான் கூவென்ருலும்
நிமலாவென்றழுதாலும் நிருதர் சாதி நாமடா பொல்லாத பேர்கள் கண்டாய்
நருக்கியுன்னேப் புவியிவிட்டு அரைக்கிருேமே
தலையாரி வசனம்
அதோ கேளடா கள்ளப்பயலே! உன்னைப் பூமியிலே போட்டு அரைத்துக் கொல்லுமட்டாக ஆக்கினை பண்ணு கிருேம் பாரடா.
அனுவுருத்திரன் - உலாத் தரு
காலாகி நீராகி வானமாகிக்
கனலாகி நிலமாகுங் கடம்பபாலா
மூலாதாரப் பொருளாய் நின்ற முருகா அன்பர்க்
குருகாய் முடிவில்லாதாய்
5(Ա5
தான தனதன தானு தன தன தானின - தன தானு தனதன தானு தனு தன தானின
வேலா இவரென்னைக் காலா லடிக்கிரு
ரென்செய்வேன் - மறை மாலான வர்தரு பாலா உன் னருள் செய்கி லுய்குவேன் தோலாசையாலெந்தன் மேலிலடிக்கிருரென் செய்வேன் நீலாகாலா மயில்வாசா வந்திடில் நான் உய்குவேன்
 

- 93 -
926's
ஆதியாயருவாகி உருவுமாகி
*ஆணுகிப் பெண்ணுகி அலியுமாகி
சோதியாய் வெளியாகிச் சொல்லரிய சக்தியாய் நின்ற மூர்த்தி
தரு
பாதகரென்னைப் பதைக்கவுதைக் கிருரென்செய்வேன்
சுவாமி நானேது செய்குவேன் - உந்தன் பாதசரணத்தைக் காணத்தரிலடியேனுய்குவேன் வேதனை பண்ணி அடிக்கிருர் நாணினியென் செய்வேன்
மறை வேதனைத்தந்தருள் தாயுன் பதத்தைக் காணிலுய்குவேன்
96) T
பச்சவர்க்காக முன்னந் தூதனுகிப்
பற்குணன் தேர் செலுத்த நீ குதணுகிக்
கஞ்ச னென்னும் மாமனுயிர் குடித்த
காயம்பூ வண்ணனே கமலக்கண்ணு
፵5®
வஞ்சகர் கண்டென்னை அஞ்ச அடிக்கிரு
ரென்செய்வேன் - LD 65) 4p மஞ்சினை நேருமுன் னஞ்சன மேனியைக் காணி
லுய்குவேன் தஞ்சமென் றிப்பொழு தஞ்சலென் பாரில்லை
என் செய்வேன் - உந்தன் செஞ்சர ணத்தைஎன் நெஞ்சில்வைத் தருள் செய்தால்
உய்குவேன்
பா-ம்: * அருவாகி உருவாகி ஏகமாகி

Page 50
- 94 -
gols)
மாவலியை மூவடியில் மண்ணுக்காக வன் சிறையில்
வைத்தாய் முன் வானேர் மெய்க்க
தாவியெழுந்தமர் விளைத்தராவணன்றன்
தலையரிந்தாய் சர்ப்பநடம் புரிந்தாய்ராமா
தரு
ஆவி கலங்க அடித்து நெருக்கிரு ரென் செய்வேன்
- வந்தென் ஆதிபராபர சோதிவந் தருள் செய்தா லுய்குவேன் மேவலரென்னை அடிக்கடி போடுருரென் செய்வேன் அருள் வெய்யனே வைகுந்த மெய்யனே உனைக் காணிலுப்குவேன்
அனுவுருத்திரன் இன்னிசை
பெற்று வளர்த்த பிதாவை விட்டுப் பேருலகில் உற்ற சுற்றத்தாரையும் விட் டூரையும்விட் டென்ன
செய்வேன் சற்று மிரங்காமல் தலையோட்டிலே அடித்தீர் குற்றமென்ன செய்தேன்நான் கொன்றுபோ டாதீர்
அண்ணே
அனுவுருத்திரன் வசனம்
அதோ கேளு மண்ணமாரே! ஊரும் உறவும் விட்டு, ஒருத்தி யுடைய மருந்து மயக்கத்தினுல் இருந்த என்னை அடித்து வதைக்கிறது ஞாயமல்ல விட்டு விடுவீராக.
தலையாரி விருத்தம்
சித்தர் கந்தருவர் கின்னரர் கருடர்
சீருறு தேவராதியரும் எத்தரை மன்னரும் வந்த டி பணிந்திடும்
ஏந்தலாம் வாணராசன்

- 95 - '
உத்தம எழில் வல்லி வசந்த சுந்த ரி
ஒய்யார மெய்யாரு மின்பந்தன்னில் மெத்திடும் இத்துலங்கின்ப மூட்டும்
மெய்மையினை நீயிருந்தறி குவாயே
தலையாரி வசனம்
கேளடா கள்ளப்பயலே வாணராசாவின் மகளுடைய
போக சுகத்தினும் பார்க்க அதிக சுகமாயிருக்குந் துலங்
கைப் பூட்டுகிருேம் இருப்பாயாக.
அனுவுருத்திரன் வண்ணத் தரு
தனனத் தன தனணு - தணுதன தனனத் தன தனன - தன தனனத் தனதன தனனத் தனதன தனனத் தனதன தானு
அறிவுக்கறிவெனவே - வருதிரு
அமலசுதனே யென் - மனம் அலையக்கொலைபுரி புலையப்பயலென்னை
அடித்து வருத்தித் துலங்கிலிருத்திடலாமோ நெடியற் கருள் மருகா - சிவ சிவ
நிமலற் கொருமுருகா - இந்த நிருதப்புலையர்கள் வெகு தப்பிதமுடன்
நெருக்கியடித்துத் துலங்கிலிருத்திடலாமோ அடியார்க் கெளியவனே - சதுர்மறை முடிவுக்குரியவனே - உனதிரு அருளைப் பெறுமென்னை உருளப்புவியில்
அடித்து வருத்தித் துலங்கிலிருத்திடலாமோ அமலாவெனக் குன் அபயமே
அனுவுருத்திரன் கொச்சகம்
ஆதியாய் அற்புதமாய் ஆறு முக மாய மலச் சோதியாய் நின்ற சுடர் வேல் முருகோனே நீதியறியாத நிருதர் துலங்கேற்று மிந்த வேதனையை மாற்றி மிக்க அருள் செய்யினியே

Page 51
-96 -
கொச்சகம்
கந்தா கடம்பா கயிலாசவாசனருள் மைந்தா குமரா மயில் மேல் வரும் முருகா நிந்தனையாலென்னை நிருதர் துலங்கேற்ற இப்போ வந்து துயர் மாற்றி வரமெனக்குத்தந்தருளே
அனுவுருத்திரன் உலா
அகவல்
ஆதி பராபரனே அன்று மன்றுளாடுகின்ற சோதியே சோதிச் சுடரே சுடரொளியே வேதமுதலைந் தெழுத்தாய் நின்றவரும் பொருளே உன் பாத செஞ்சரணம் போற்றுஞ் சிறியேன் யான் மஞ்ச மதிற் கண் துயிலும் நேரமதிற் கைமயக்கம் செய் மருந்தைப் பெண்ணிருவர் சேர்ந்து பிறப்பித்தார் எண்ணரிய மாயப் பொடியால் மயக்கியவர் (த கப்பனெனும் மாயன் பதியை விட்ட கற்றினர்) வாணன் மகள் வசந்த சுந்தரியாம் மங்கையவள் காண வென்னைக் கட்டிலுடன் கொண்டு வந்து மருந்திட்டு நாணமுறுங்கோலகுமாம்நங்கை யென்னைக் கூடவிட்டார் மோகமுற்று நானும் முயங்கினேன் போகமுறும் வேளையதில் வாணனுடை மாளிகையைக் காவல்புரி பாளையத்தார் கண்டந்தப்பார்த்திபர்க்குச் சூளுரைக்க வேகமுற்று வாணன் மிகச் சினந்து மோகமருள் நாகபா சத்தால் நமைப்பிணித்துச் சோகமுற இருட்டுத் துலங்கில் இருதாள் துளைக்குள் வைத்துப் பூட்டினன் என் செய்வேன் புண்ணியனே வெள்ளை மாட்டின் மேலேறுஞ் சிவனே யிறையவனே இத்துயரம் மாறும் படிக்கு வரந் தருவாய் இந்தப் பிறவி யிலிடரகற்றி ஆள்பரதனே மார்க்கண்டற்காக மறலிதனைவதைத்த
 

-97 -
ாளகண்டா என்னுடைய காதையெல்லாந் தானறிந்து சூல்கொண்ட மேகவண்ணன் துண் ணன்றெழுந்துவந்து மேவலனும் வாணனுடை மேனி பிளப்பிப்பாய் நிரேகமதிற் கட்டி அடித்துத் துலங்கிலென்னை இட்டமறிய லெடுத்திடவுஞ் சட்டமுடன் பொன்னின் முடிசூட்டிப் புனையிழையாம் வாணன் மகள் மண்ணினிடைப் பெண்ணை மன்றலது செய்திடவும் நன்மை தந்து தேவர் மதிக்கத் தலத்துள்ளோர் காவலிறையாலுலகைக் காத்திடவுஞ் செய்விப்பாய் சேவல் மயிலேறுங் குகன் போலிருக்க என்றும் உன்னடியேன் கூறும் வரம் தாரும் குருபரனே
குமாரன் கொச்சகம்
வேலை புடைத்தெழுந்து விண்ணவரைக் கொல்ல வந்த ஆலத்தையுண்ட அரனே சிவபரனே சீலத்தை மாற்றிச் சிறையில் வைத்த காரணத்தை ஞாலத்தை யுண்டோன் அறிய வரமீந்தருளே
குமாரன் வசனம்
சர்வசீவ தயாபர மூர்த்தியே! அடியேனை வானே சுரன் மறியலில் வைத்த காரணத்தை எனது பிதாவா சிய சிறீகிருட்டிணமூர்த்தி அறிந்து, வாணேசுரனை வெல் லவும், அவனுடைய மகள் வசுந்த சுந்தரியை நான் கலி யாணம் முடிக்கவும், இந்தப் பூமி அந்தரஞ் சுவர்க்கம் மூன்றுலோகத்தையும், இராச்சியம் பண்ணவும் கிருபை புரிய வேணுஞ் சுவாமி.
வசந்தசுந்தரி புலம்பல் - கொச்சகத் தரு
ஈசா கயிலை வாசா இமயாசலத்தாளிள முலைக்கு நேசா புவிதந்திடு சூதா நிமலா அமலா நினைவழியும் தேசாரெனது நாயகனைத் தெருவூடிழுத்துப் போருரே

Page 52
-98 -
தரு
தனதான தனதான தனதான தனதான
தானினு - தன தானினு - தன தனதான தனதான தனதான தனதான
தானின
ஆசார வீனர்கள் பேசாமலிங்குவந் தடுத்தார்
கதை தொடுத்தார் - அதை அப்பருக்குச் சொல்லி ஒப்பனை போலிங்கே அழைத்தார்
வினை விளைத்தார் பாசமறுத்தெம்மையாளுஞ் சிவனே
கண்ணன் பாலன் காண் என் கண்ணுளன் காண் இருபாதந் துலங்கிடப் போகிருர் - இவர் துயர் பாருமே என்னைக் காருமே
கொச்சகம்
துரைமார் சபையிற் துரோபதையின் துயில் சோரா மற் கிருபை செய்தாய் திரை சேரும் பாலாழியிடை சேர்ந்து
சயனங்கொண்டா யோ வரைசேர் புயத்தை வரிந்திறுக்கி மணவாளனக்
கொண்டே போருர்
தரு
உரைபேச வொட்டாமல் அரசனைக் கட்டிக் கொண்
டோடுருர், இடிபோடுருர் - சுவாமி உத்தமனே கிருட்டின வித்தகனே உமக்கோலங்காண்
இந்தநேரங்காண் தரைஏழு சூழுமிப் புவியாளுமன்னனைத் தாருமே
துயர் தீருமே - கையிற் சக்கரம் விட்டிந்த வுக்கிர அவுணரைத்
தாக்கு வீர் - துயர் நீக்குவீர்
 

- 99
கொச்சகம்
பாரத்தனம் தழுவும் பங்கயப் பொற் செங்கையில் மான் வாரைப் போட்டிறுக்கி மணுளனைக் கொண்டேபோரு?ர் வீரத்தோடே மாயன் மேவி வந்தாலென்ன செய்வார்
தரு
சாரிப்படையோடு ஊரில் புகுந்துடல் சரிப்பான்
தலைநெரிப்பான்  ைகயிற் சங்கமெடுத் துங்களங்கம் பொடிபடச்சாடுவான் உம்மை வீடுவான் வாரிப்படையோடுஞ் சேரிப் பொருமிவன் - வாணனே
அவன் வீணனே எந்தன், மாமன் கையாலிப்போ மாழ அவனுடை
விதியோ - எந்தன் விதியோ
கொச்சகம்
விண்டாளியோங்கு மிருவெற்பனைய தோளிறுக்கித் தண்டாவிலங்கினிடைச் சண்டாளர் கொண்டு சென்ருர் கண்டாவிதன்னையின்னுங் காத்திருந்த தூத்தையுடல்
፵5®
பண்டாவிலை துயில் கொண் டாளும் மாயவன்
பார வான், வெகு வீர வான் - அவன் பால கனுரெந்தன் மேவலர்க் குரை பண்ணு வார்
ஆரே நண்ணு வார் அண்டா விலங்கிடில் வண்டாமரைப் பாத மாற்றுமோ
உயிர் மாற்றுமோ - சுவாமி ஆரணனே பரிபூரணனே என்னை ஆளுவீர் - அவரை
மீளுவீர்

Page 53
- l00 -
வசந்த சுந்தரி - வசனம்
சகலருக்கும் பரிபூரண கர்த்தாவாகிய ஆதிநாராயண
மூர்த்தியே! எனது நாயகனை இந்தவேளை காத்து இரட் சிக்கவேணும் சுவாமி.
நாரதமுனி வரவு - கவி
திருத்தமுறுமுலை வசந்த சுந்தரியும் புலம்பவரு சிறுவனன உருத்திரனுமுமை பாகன்றனை நினைந்து துயராற்ற
வானேரறிந்து வேதக் கருத்துடைய நாரத மாமுனி மகிழ்ந்து காதை
யெல்லாங் கரியமேனி மருத்துளபத் தொடையாற்கு உரைத்தி டென்ன
சபையதனில் வருகின்ருரே
தரு
தத்தா தனத்தம் தான தானின தத்தா தனத்தம் தானினு
சபை தரு
சித்தாசித்துடன் சிவனை நினைந்து சிவதவ யோகம்
புரிந்தவன் நத்தியே பெருந் தவம்புரிந்திடு நாரத மாமுனி தோற்றினர் சாமந் தோறும் வனத்திலிருந்து சடங்க யோகம்
பயின்றவன் வாமந் தேற மிடித்துப் பிடித்த மாமுனிநாரதர்
தோற்றினுர்
நாதரமுனி விருத்தம்
அத்திரம்போல் விழியிரண்டும் அருவியென
நீர் சொரிய அழுது வாடிக்
 

- lol -
குத்திவயிறது கொதிக்க நின்ற கோமளமே யார் மகள் நீ
குறிப்பாயிங்கே இத்துயரப்பட நடந்த கதைகளெல்லாமிப் பொழுது
எனக்குத்தானே தத்தையென வாய் திறந்து சாற்றுவீ ரித்துயரம்
மாற்றுவேனே
முனிவர் வசனம்
அதோ கேளும் பிள்ளாய்! நீ தனியே இருந்து அழுது புலம்புவதே து நானறியும்படி சொல்வீராக.
வசந்த சுந்தரி வசனம்
ஆனுற் சொல்லுகிறேன் கேளுங்களையா முனியே.
வசந்த சுந்தரி தரு நன்னனன்ன நானனன்ன நன்னனன்ன நானன்ன நானனன்ன நானன்ன நானன்ன நான
1. பாசமற்று ஈசனடி
நேசமுற்றுவன வாசம் பண்ணு நாரதமுனியே - அடியாள் பகருகிறேன் கேளும்
2. நேசமுற்றும் பேசிடநான்
ஆசையுற்றுக் களவெடுத்த - சீமானுந் துவரை நகர்க் கோமான் காண் முனியே
3. வாணன் ஒரு நாணமற்ற
வீணனெந்தன் காதலனை வலித்திழுத்து சென்றெனது குடித்தனத்தைக் கெடுத்தான்

Page 54
- 102
4. பேணுமெந்தன் காதலனுக் காணுதவி காணரிது
பெண்ணுெருத்தி என்னுயிருந் திண்ண மினி விடுவேன்
5. கண்ணன் முகில் வண்ணனென்னும்
மன்னனிது காரியத்தைக் கண்டிடுகில் வாணனுடல் துண்டு பண்ணி விடுவார்
6. மண்ணுலகில் நானுமொரு
பெண் பிறந்திப்பாடு பட்டவருத்தமுமென் மணவாளன் சரித்திரமு முரைப்பீர்
குமாரத்தி இன்னிசை
அஞ்சக்கரமோதியைம் புலனைத் தானடக்கி வஞ்சப் பகையறுக்கும் மாமுனியே வாணனிங்கே கஞ்சக் கண்ணுன் மகனைக்காவலில் வைத்தானதனை மஞ்சத் திருக்கும் நீல வண்ணனுக்குச் சொல்வீரே
குமாரத்தி வசனம்
அதோ கேளுமையா! துவரா பதியாளும் துரையவர்களுக்கு விளங்கப்பண்ணுவது, எனது பிதாவாகிய வாணேசுரன் அவருடைய மகனைத் துலங்கு பூட்டி மறியல் வைத்த செய் தியைச் சொல்வீராக.
முனிவர் வசனம்
அப்படியானுல் உன் மனத் துயரம், அவருக்கு அறியப் பண்ணுகிறேன்; துயராறி இருப்பீராக.
கிருட்டினன் கவி
காலூட்டிக்கன லெழுப்பிக்காமமுதற்பகையாறுங்
கடிது விட்ட வேலோட்டிக் கிரி துளைத்த விமலனடிதனை நிதமும்
விளங்கக்காட்டி

- lo3
பாலூட்டியருந்தவசு பண்ணிய நாரதமுனியே
பகரும் வேதம் நாலூட்டுத் திருவாயாய் நடந்துவந்த காரியத்தை
நவிலுவிரே
கிருட்டினன் - வசனம்
கேளுமையா நாரத மாமுனியே! நீரிங்கே வந்த காரியம் நான் அறியச் சொல்வீராக.
நாரதர்
சொல்லுகிறேன் கேளுமிராசனே.
முனிவர் தரு தானு தணுதந்த ஞணு - தன தானு தனுதந்த ஞ தந்த - னன
கண்ணு நானிங்கே நடந்து - வந்த
காரியங் கேட்டருள் காயாம்பூவண்ணு மண்ணுடர் போற்றுமுன் மகனை - அந்த
வாணேசுரன் சிறை வைத்திருந்தானும் அங்கவன் தன் மகளோடே - ஒன்றும்
அறியாமலவன் கூடிப் பிரியாமலிருந்தான் இங்கிவன் செய்ததை யறிந்தே - அவன்
இரு தாளும் பூட்டித் துலங்கிட்டு மறித்தான் இப்போ படையோடுஞ் சென்று - அவன்
எதிர்த்திடிற்போர் பண்ணியசுரனை வென்று மைப்படியுங் கண்ணினுளை - உந்தன்
மகனுக்கு மணஞ்செய்து கொடுத்திடு நாளை
முனிவர் வசனம்
கேளுமிராசனே! இதுவே செய்தியாகும்; வாணேசுரனையும் வென்று அவன் மகள் வசந்த சுந்தரியை உமது மகன் அனுவுருத்திர குமாரனுக்குக் கலியாணம் பண்ணி வைப் பீராக.

Page 55
- 104
கிருட்டினன் விருத்தம்
நெற்றியிற் புருவத்தினில் விழியோட்டி நிமலமாஞ்
சுடரொளி காட்டிக் கற்றையஞ் சடையான் றுணையெனக் காட்டிக்
கவலை கூர் மாயவாழ் வனத்தும் பற்றறத்துறந்து வனத்திலிருந்து பல பல
யுகமெலாங் கடந்து நற்றவம் புரியும் நாரத முனியே நடந்திடுன்
பதிதனக் கினியே
கிருட்டினன் வசனம் கேளும் நாரத மாமுனியே! கூடு மட்டும் பார்க்கிறேன், இனிமேல் உமது ஆச்சிரமத்துக்குச் சென்றருளுவீராக.
முனிவர் - வசனம்
ஆசீர்வாத மிராசனே.
கிருட்டினன் விருத்தம் மாதயவு பொருந்தினின்ற மந்திரியே என்னுடைய
மகனைப்பற்றி வாதை செய்து மறியலிட்ட வாணனிடத்தேகியொரு
மாற்றங்கேட்டுக் காதமொரு கணத்தேகிக் காரியமும் வீரியமும்
கருதிப்பேசும் ஒத நிகர் சேனை தனக்கதிபனன உள மகிழ் சேணுபதியை யழைத்திடாயே
கிருட்டினன் வசனம்
கேளும் மந்திரி நமது சேனதிபதியை அழைப்பிப்பீராக.
மந்திரி வசனம்
அப்படியே அழைக்கிறேனயா,

கிருட்டினன் சேனுமதிக வரவு அச்சபை விருத்தம்
வண்டுளக்கிப் பாடு மலர் மாலை சூட்டி
வரிசையுறு குண்டலங்கள் காதிற்பூட்டி தண்டரள மணிமார்பிற் களபம் பூசிச்
சட்டை யிட்டுல்லா சமுடன் சதங்கை கட்டித் திண்டிறல் வாணனிடஞ் சென்றேயிந்தச்
செய்தி எல்லாஞ் சீக்கிரத்திற்திடமாய்க் கேட்க மண்டலருந் திண் புயத்தான் சேனை சூழ
மதியுறுசேனபதியும் மகிழ்ந்துற்ருனே
சபை தரு
நன்னன்னுஅ நன்ன நானன்ன நானன்ன நானன்னுஅ நன்ன நானன்ன நானன்ன நன்னன்னுஅ நன்ன நானன்ன நானன்ன நானன்ன நானுனே
1. தும் பை சேர் பொன் னின் வங்கியம் துலங்கத்
துய்ய மாமணி பதக்கங்களிலங்க வம்புலாத் தொடைச் செருவலர் கலங்க
வந்தன னருள் வீரன் 2. சேனை காவலர் துவச முன் பிடிக்க
செய்யதாளங்கள் திமிதமென்றடிக்க மானை நேர்விழி மாதர்கள் நடிக்க
மன்னனுமதிவீரன் வந்தானே 3. திங்கள் வெண் குடை கவரிகள் துளங்கத்
திகழ் மணிச் சிலம் பொலிகழல் முழங்கக் குங்குமத் திலத நுத லது விளங்கக்
கொற்றவன் சேனபதியும் வந்தனனே 4. வாணன் செய்திடு கொடுமையைத் தீர்க்க
மன்னவனுடை படையினைச் செயிக்க ஆயன்றன்னுடைய கட்டளை கேட்டு
மாயன்றன் சபை மருவ வந்தனனே

Page 56
ختتے۔ 06{ خضت۔ --
கிருட்டின்ஸ் - சேனுமதி - க்வி
மந்தரத்திற் திரண்ட திருப்புயத்தாய் போற்றி மாவலியை வன் சிறையில் வைத்தாய் போற்றி கந்த டரவெழு முழக்கக் கயத்தாய் போற்றி கதிராழி படையெடுத்த வயத்தாய் போற்றி இந்திரற்கு முதவிபுரி நயத்தாய் போற்றி எங்கும் நிறைந்தருள் புரியு மனத்தாய் போற்றி எந்தனக் குளிருக்கு மிருதயத்தாய் போற்றி
எமையழைத்த காரியத்தை யியம்புவீரே
சேரூபதி - வசனம்
அரசிருப்புஞ் சிங்காசனமும் வீரபராக்குஞ் செங்கோல்
முறைமையுஞ் சரணமே சரணமையா. எம்மை அழைத்த
காரிய மின்ன தென்று சொல்லுமையா சுவாமி.
கிருட்டினன் வசனம்
அதோ சொல்கிறேன் கேளுஞ் சேனபதியே.
தரு
நன்னன்ன நானன்ன நானன்ன - நன்ன நானன்ன நானன்ன நானன்ன
1. வாதுசேர் படைக்குவல் லவரே நீர் - பொல்லா
வாணன் தன் இடத்தினி லேகியே தூதொன் றெனக்கு நீர் பேசியே - செய்தி சொல்லுவீ ரென்னுடை நேசரே
2. நீங்களிருபேருங் கூடியே - இப்போ
நெறியாமல் பிரியாம லோடியே வாணன் மதிதனைத் தேடியே - நீங்கள் அடிக்கடி யென் புகழ் பாடியே
 

- lo? -
2. ஆங்கவன் சபையிலே செல்லுங்கோ - வெகு
ஆக்கிரமத் தோடங்கே நில்லுங்கோ பாங்கு றப் பேசியே வெல்லுங்கோ - எந்தன் பாலனைச் சிறை விடச் சொல்லுங்கோ
4. சிறை வைத்த தென்னுடன் சருவியோ - அது
சிறப்பல்லக் குமாரனைத் தருவையோ - அல்லால் திறமுற்று நின்று நீ பொருவையோ அதி சீக்கிரம் படையுடன் வருவையோ
5. இப்படி வாணனைக் கேளுங்கோ - அவன் இதயத்தை யறிந்து பின் மீளுங்கோ செப்புவதுரைத்திங்கே தாளுங்கோ - வெகு சீருடன் என்றைக்கும் வாழுங்கோ
கிருட்டினன் கவி
கனகாசலத்தினிருதோள் படைத்தகதி மேவுவீரனே நீ மனமாயெனத்தன் நெறியே நடந்து வாணனின்
சபையிலே கிச் சினமாக வைத்த சிறைவிட்டு வாழ்தல் செயலென்று
சொல்லுமவுணன் வினவாதிருக்கில் அடுபோர் விளைக்க விரைவாய்
வரச் சொல்லினியே
கிருட்டினன் வசனம்
கேளுஞ் சேனுபதியே! வாணேசுரனிடத்தில் எனது மகன் அனுவுருத்திர குமாரனைச் சிறை விடச் சொல்லும் அல் லது போனுல் நாளையுத்த களத்திலே சண்டை பண்ணுப படிக்குக் கைபோடு வித்து வருவீராக.
சேனுபதி வசனம்
அப்படியே கேட்டு வருகிறேன் இராசனே.

Page 57
سيس- .108----
" சேரூபதி - தரு - .
நன்னனன்ன நானன ன்னு நன் ன
ܘܼܗ நானனன்ன நானனன்ன நன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன
நானன்ன நானு
மந்தரநேர் புயத்தரசரிங்கே வந்து திறை தானளக்கு மெங்கள் மன்னவன் மகன் றனக் கிவ்வினை புரிந்திட வாணன் தன் மகத்துவமோ
அன்னை தந்தை பேரறியாதவன் ஆண்பிள்ளையோ வீண் பிள்ளைதானவன் ஆகட்டும் அவனுாரே போகட்டும் அவன் கொழுப்படக்கிட அறிவேனே
போரினுக்கு மாண்மையில்லாதவன் புத்தி கெட்ட மாட்டரக்கன் அவன் பிடரியாயிரத்தையு மொருகையாலடக்கியே புயமெல்லா மரிந்திடுவேனே
அரசருக்குள் அரியேறென வந்தவன் அனுவுருத்திரன்றனக் கிவ்வினை செய்திட்டான் ஆகட்டும் அவனுாரே போகட்டு மாங்கவன் ஆணவம் அறிவேனே
இருசேனுபதி தரு
தனனம் தானதானின தனனம் - தன தனனம் தானதானின தனினை விந்தை மேவித் திரண்டுயர்ந்த தோளா - அதி
வீரனே யெந்தவழி யேகுவோம் தோழா

6
ہے۔ l09 حصے تحے۔
சிந்தை போலச் சிறந்து யர்ந்த தோளா - அதி
தீரனே இந்தவழி செல்லுவோம் தோழா
எந்த நாடோ வைகுந்த நாடோ - அன்றி
ஏதுநாடோ எனக் கதை ஒதுந் தோழா
அந்த மாம் போதில் அரன் மந்தர மோதும் - துய்ய
வாசல் புகழ் மேவுதிருத்தணிகையிதுவே
விஞ்சை நாடோ கமலன் கஞ்ச நாடோ - அருள் மேவும் நாடோவெனக்குக் கூறுந்தோழா
கஞ்சன் மாலம்பிகை தவஞ்செய் நாடு - சிவ
காரண மனந்த முள்ள காஞ்சியிதுதான்
கங்கை பாய இரைந்து திங்கள் தோயச்சிவந்து காட்சி கொண்டிலங்குமலை மாட்சியைச்
சொல்லும் செங்கைவேலன் சிவனது மங்கை பாலன் - வினை
தீர்த்து விளையாடும் திருத்தணியிதுவே
அந்தப்புரமோ அனந்தன் சொந்தப்புரமோ - அது எந்தப்புரமோ எனக்குச் சித்தித்தோதும்
சிந்திக்கில் அந்தப்பலன் தந்திட்டுதவுஞ் - சிவன்
சீர் நடம் புரிந்திடுஞ் சிதம்பரமீதே
இப்புரமதோ ஈ தென்ன முப்பரம தோயிந்த ஒப்பிலாதந் நகரைச் செப்புந்தோழா
துப்பு செஞ்சடையிலறு கப்பணி சூடும் - சிவன்
தோழனென்னும் வாணன் நகர் தோன்றுதிதுபார்
சேனூபதி வசனம்
கேளுந் தோழனே! வாணேசுரனுடைய கோட்டை கோபுர மிதுதான். அங்கவன் சமுகத்திற்குப் போவோம் வரு வீராக.

Page 58
-اے-110 ختصے سے ----۔
சேஞபதி தோழன்
அப்படியே போவோம் தோழா
சேனுபதி கவி மைவாய்த்தகருங் கூந்தல் மடந்தையர்களிருபுறமும்
மகிழ்ந்து போற்றச் சை வார்த்த நெறி பரவுந் தானவர்கள் வானவர்கள்
தற் சூழ்ந்தோங்கும் கைவாய்த்த கண்ணனுடை மகனை நீயுங் கருதியே
துலங்கிலிட்ட காதைபேச மைவார்த்த வாணனே தூதாகி வந்தனம் நீ
கேட்டு மறுமொழி சொல்வாயே
சேணுபதிவசனம் அதோ கேளும் வாணேசுரனே! தூது சொல்லவந்த காரி யத்தைக் கேட்டு மறுமொழி தருவாயாக.
வாணேசுரன் வசனம் அப்படிக்கு நீங்கள் வந்த காரியத்தை விபரமாய்ச் சொல் வீராக.
சேனுபதி தரு * முத்திரைப் பல்லவி தூது சொல்ல வந்ததைக் கேளும் - வானே சுரனே தூது சொல்ல வந்த தைக் கேளும் தூது சொல்ல வந்ததைக்கேள் துவ ரை நகர்க் கதிபன் ஆதவன் மகனநீயும் அருஞ்சிறையில் வைத்ததென்ன
(தூது) 1 மாதவன் மகனைப் பிடித்து - மிகச்சினந்து
வாதையுற மோ தியடித்து நீ துலங்கிலிட்ட தென்ன ஒதுமதி கெட்டதென்ன வீதிவரப் பட்டதென்ன நீகுதித்துக் கெட்டதென்ன
* தருவுக்குப்பதிலாக, பல்லவியையே பாடல் முடிவு தோறும் திருப்பிப்பாடுதல் முத்திரைப்பல்லவியாகும்.

حفحے 111 ح۔
2. 9 மாதவன் தன்னை அறிமாயோ - உன்ருதை தன்னை
வன் சிறை வைத்த தறியாயோ ஏனடா உனக்கு இது நீ சிறைவிடாட்டால் வாது பாரடாயிதற்குத் தூது நானெ டா எனக்கிங்கோது
3. மறியலை விட்டுத் தருவாயோ-அல்லாது போனல்
வந்தவனுடன் பொருவாயோ நெறியுடன் விடாட்டாற் கேட்டு நீ சிறை வைத்ததைச் சாட்டு அறி அறி அமரிலாட்டு ஆமென்ருல் தாடாகை போட்டு
4. பொன்னனை முன்னம் பிளந்திட்டான் அந்நாளிலிந்தப்
பூமியை யெல்லாம் அளந்திட்டான் என்ன நீ நினைந்தாயோடா ஏன் சிறை வைத்தாய் நீ மூடா மன்னவன் பொரக்கைதாடா வாதுக்கேன் வந்தாய் போடா
சேணுபதி கவி பையாட்டி விரிக்குமொரு பாந்தள் இறை
யேந்திடுமிப்பாரை யாளும் நெய்யாட்டிக்குளித் திடும் வேல் நிருபன் மகன்
சிறையை விடு நீ விடாயானல் மைதீட்டுந் திரை யெறிந்து வளை கடல்போற்
படை எடுத்துப் பொரு நீ என்று கைபோட்டுத் தந்திடுகிற் காலனு னக்
கோலை விடுங் காணுவாயே
சேனுபதி வசனம் அதோ கேளும் வாணேசுரனே! எங்கள் இராசகுமாரன் அனுவுருத்திரனைக் சிறை விடாதிருந்தால் நாளை யுத்த களத்தில் வந்து சண்டை பண்ணும்படிக்கு கைபோட்டுத் தருவாயாக
e வாணன்ருதை - மாவலிச்சக்கரவர்த்தி

Page 59
- 112 --
வாணன் கெர்ச்சகம்
மக்கம் * மிசிரம் காந்தாரம் மகதங் குகுதம் மலையாளம்
தொக்க அரசர் வாணனென்று சொன்னல்
நடுங்கி யொடுங்காரோ
தக்க இடையர் வீடு தொறுந்தயிருக்கழுத மதிதானே
வாணன் தரு
நன்னன்ன நன்னன்ன நானன்ன நானன்ன
நானன்ன நானன்ன நானன்ன நானனன்ன
நானன்ன - நன்ன
நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன் ை
வாணன் தரு மிக்கவனே பொரத்தக்கவணுேவமர் வெட்டிப்பொர என்னைக் கேட்டு வரச்சொல்லினனேடா - நல்ல திக்கணமேயினி யொக்கப் படைகளை
யீட்டிக்கொண்டே தும்பை சூட்டிக்கொள்ளச் சொல்லுவீரடா
கொச்சகம்
அச்சைக் கொழும்பு மராட்டிய நாடழ கார் கண்டி
மாமதுரை கொச்சி நகராள் துரைமாரும் என்பேர் கூறி
லொடுங்காரோ இச்சைப்பா டாய் இடைச் சிதுயில் எடுத்துக் காட்டி
லொளித்து வைத்து
தரு பச்சை இடைச்சியர் எச்சிலருந்திய பாங்கைச் சொன்னுேம் வாணன் ஏங்கிப்போனனென்று
சொல்லுங்கோ இப்போ
sk
மிசிரம் - எகிப் து தேசம்

--3ھلیl ہے۔ --۔
மிச்ச மதாய் மனம் அச்சப்பட்டும்மையு மெச்சிக் கொண்டானுயிர் 'வைச்சுக்கொண்டானென்று
சொல்லுங்கோ
கொச்சகம் எட்டுத்திக்கு மன்னர்களும் என்பேர்கடவார் உரலோடே கட்டுண்டடி பட்டழுதுழலுங் கள்ளப்பயலுந்
துள்ளுவனே * ஒட்டிற் புகுந்த பட்சியைப்போல் ஊரிற்
பொரவும் வருவானே
தரு கெட்டுப்போவான் சிறை விட்டுப் போடென்றென்னைக் * கிட்டிக்கதையில் வெருட்டிச் சொல்லச் சொல்லி
ணுளுேடா இந்தக் கிட்டுக்கெல்லாம் நானு மொட்டுக் கொடுப்பேனே தட்டி யொருகையாற்றுாக்கிப் பார்க்கச் சொல்லு
வேனே டா
கொச்சகம்
நண்டு கொழுத்தால் அறை தனிலே
நண்ணியிராது திண்ணமிது கண்டு கொள்ளுங்கோ அடுப்பங்
கரையிலிருக்கும் சுடு சோற்றை உண்டு திருப்பிப்பா ராமல் ஒடும் பூனைதனைப்போலே
தரு கண்டவுடன் கேலி கொண்டு பயந்தவன்
காடு வீடென்றிடந் தேடியோடித் திரியானுேடா
- * ஒட்டு - ஒட்டுத்தாள். நெல் வயலில் விளைந்தகதிர்களை அறுத் தெடுத்தபின் மீந்திருக்கும் அடித்தாள். இருவி என்று பழந்தமிழ் நூல்களில் இது வழங்கப்பெறும்
9 கிட்டுதல் - தனகுதல், சருவுதல்.

Page 60
-- 4 llحس۔
அவன் சண்டைக்கு வந்திட்டால்
மிண்டிப் பொருதவன் தாளையுந் தோளையும் வா ளா ற்றுணித் தெறியேைேடா
வாணன் - ஆசிரிய விருத்தம் வட்டமிட்டுக் கட்டு விட்ட கடல் அட்டதிசை
வடமேரு கோடு வளையினும் வங் களஞ் சிங்களங் கொங்களமோ டெங்குள்ள
மகிபால ரெதிர் பொருகினும் திட்டமிட்டுக் கட்டுவிட்டு விட்டேயென து
சேனைதனையணியாக்கியே செல்லுவேனமர் பொருது வெல்லுவேன் அவன் மகன்
சிறைவிடப் போகாதடா ஒட்டுமட்டுக்கட்டு விட்டுவிட்டே யண்ட
மொருகோடி நிலை புரளினும் உங்களிறை எங்களொடு யுத்தமது செய்திடில்
உயிர் கொண்டுமே கிடுவனே துட்டமட்டிக்கிட்ட கெட்ட விதி தொட்டதோ
துடி துடித்தெழுகிருனே சொல்லுங்கோவாணனெதிர் நில்லும்போமென்றுமது துரையையிங்குறச் செய்வீரே
வாணன் வசனம்
ஆனுற் கேளுஞ் சேன பதியே! நீ யென்னிடத்திற் தூது பேசி வந்தவனுகையால் உன்னைவிட்டு விட்டேன்; அல்லது உன் தலையை அவதாரம் பண்ணிப்போடுவேன். ஆணுல் உங்கள் இராசாவை அதி சீக்கிரத்திலேயே சண் டை க் கு வரச் சொல்லுவீராக
சேனுபதி வசனம்
மிகுதியும் சந்தோஷமரசனே.

خمیس۔--ll5حس۔
சேஞபதி -தரு
நன்னன்ன நானன்ன நானன்னு - நன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்னு - நன் ன நானன்ன நானன்ன நானன்ன
1. வாணனென்பவன் மெத்த வலியனே - அவன் மண்டையையுடைத்திட அறியனே - இந்தக் கான கந்தனை விட்டு நடக்கிறேன் - அந்தக் கள்ளப்பயலை மட்டடக்கிறேன்
2. இராமனம்பினைச் சற்றுமறியாமல் - மெத்த நகைத்துக் குதித்துரப்பிப் பேசினன் - அந்த வீணனுக்கே கெடு மதிவரச் - சிறை விடமாட்டேனென்றுரை பேசினன்
3. ஆகிலுமிவன் மெத்தச் சமர்த்தனே - எங்கள்
அரசனை வசை சொல்லி நகைக்கிருன் பாரினில் படைகொண்டு வந்து நான் அவன் பகட்டெல்லா மொடுங்கிட அடிக்கிறேன்
சேனுபதி வசனம்
சரணமே சரணம் ஐயா இராசனே
வாணன் வசனம்
வாருஞ் சேனபதியே! நீ தூதுபோன செய்தி விளங்கச்
சொல்லுவாயாக.
தரு
நன்ன நன்ன நானநன்ன நான நன்னுணு - நன்ன
நானனன்ன நானனன்ன நானனன்னணு

Page 61
- ll6
ச்ேஞபதி C"
சூரிய குலத்துதித்த தோன்றலே கேளும் - நீயுஞ் சொன்னதைப் போய் வாணனுக்குச் சொன்னேம்
s5 s760) LDU JfT காரியமும் உம்முடைய வீரியத்தையும் - அவன் காதில் விழவோ தினுேமப்போது சினந்தான் உம்மையும் வெகுவாய்ச் சள்ளை பேசினனையா அவன் உங்களையிடையனென்றும் பேசினனை யா அவன் ஈரலையெடுத்து மாலை போடுவோமையா ஆயர் மனை தோறும் நீர் தயிர் குடித்தீராம் - அந்த ஆய்ச்சியர்கள் சீலையைக் களவெடுத்தீராம் வாயிருக்குதோயினி நாம் பேசிடலாமோ - அந்த மட்டிப்பயலிப்படியும் டேர்சிடலாமோ காய் சினங்கொள் டே யு யிரும்பாலுமுண்டீராம் ஆவின், கன்றெறிந்துதிர்த்து விளாங்கனியு முண்டீராம் கூசுதேயெம் மரையினிற் சீலையுமுண்டோ - அவன் கூறியதுரைத்தெழுத வோலையுமுண்டோ
சேனுபதி வசனம்
அதோ கேளுமிராசனே! வாணன் உமது மகனைச் சிறை விடுவதில்லையாம். சண்டைபண்ண வரச் சொல்லியும் மிகுந்த வசை சொல்லியும் ஏ சினையா இனி உங்கள் சித்தப்படியா கட்டுமர சே.
கிருட்டினன் - தரு
தனத்தத் தத்தனத் தான, தனத்தத் தத்தனத்தா ன தனத்தத் தத்தனத் தா ன - தனதந்தன.தாை
காட்டிற்றிரியுமந்த மோட்டுப்பயலும் முடி
சூட்டி அரசு செய்யத்துரையாய்ப் போனுனே
நாட்டிற் புகுந்துழக்கி வீட்டைக் கொழுத்தியினிக்
காட்டிற் திரியச் சொல்லிக் கலக்கிப் போடேனே

- ll 7 -
துட்ட னென் பிள்ளையைத் துடிக்கவடித்திடவும்
கட்டித் துலங்கிடவும் கருத்திற் கொண்டானே
மட்டிப்பயல் கரத்தைக் கட்டிக்கட்டித்தலை
வெட்டித்துணித் தெறிய வித மறியேனே
அரக்கரசுரர்க்கினிச் செருக்குகளிருக்குமோ
அடித்தடித்தவன் பல்லை யுடைத்தெறியேனே
அரக்கர் கிரிக்கடுத்த முழைக்குட்பளித் தொளிக்கும் மகத்துவத்துடனென்ன வசையுரைத்தானே
செருக்கிச் செருக்கிக் கொண்டு தருக்கிற் திருக்கிக்கொண்டு பெருக்கத்துடனிருக்கப் பிரபாய்ப் போனுனே) அரிக்குங் கரிக்கும் முன் சிறு நரிக்குட்டியிருக்குமோ அண்ணன் பிடித்தடித்தால் மண்ணுய்ப் போகானே
கிருட்டினன் கவி
மண்ணினையலைத்து வானவர் தமக்கும் வலியதுயர்
விளைத்திடும் வாணன்
எண்ணலனகி யென்னுடன மருக்கெதிர்வதற்கிசைந்து
கொண்டானும்
திண்ணமிப் பொழுதில் அவனுடனமர்க்குச்
செல்லுவேனெல்லையிலெ மது
அண்ணம்ை பல பத்திரனை யிங்கழைப்பிப்பீராண்டகை
பூண்ட மந்திரியே
கிருட்டினன் வசனம்
இதோகேளும் சமுகவுல்லாச மந்திரியே! வாணனுடனே சண்டை பண்ணப் போவதற்கு ஆலோசனைகேட்க எனது தமையனுகிய பல பத் திர ராசனை இங்கே அழைத்து வருவீராக.
மந்திரி வசனம்
அப்படியே அழைத்துவருகிறேனயா.

Page 62
- 18 -
பலபத்திரன் வரவு கவி
வடமேரு நடுங்கிட வானவர் துயர மொடுங்கிட
மாமறலியேங்கப் படரு மர வுக்கிறைவன் மனம் பதைக்க வறங்கிளேக்க
மன்னர் பணிந்து போற்ற அகடநா கடனுகமிரு நாலும் நடுங்க அவுணர்கள்
பதறக் கைத் தண்டேந்தி அடலாண்மையுறு பல பத்திர தேவனுஞ்
சபையிலனுகினனே
SF6 ቓ5®
தந்தன்ன தந்தன்னத் தானு - த ன தான தனந் தன்னத் தான தந்த ன்ன தந்தன்னத் தானு - தன
தான தனந்த ன்னத் தானு 1. விண்டொத்த தண்டத்தை யெடுத்துக் கங்கை
வேலையைக் காலாலே தடுத்துப் பண்டுற்ற வண்டத்திற் புடைத்துப் பல
பத்திர தேவன் வந்தானே
2. மேருவைக் கையாலே மாற்றி - அந்த
விந்தைப் பொருப்பினைத் தாக்கி பாரிற்குள்ளே யதைப் போக்கிப் - பல
பத்திர தேவன் வந்தானே
பலபத்திரன் விருத்தம் அம்பினுலரக்கர் குலமெலா மறுத் தாய் அட்ட திக்குன்
புகழிறுத் தாய் கும்பமால் யானைக் கோட்டினையிறுத்தாய் கொலை புரி
மாமனை பொறுத்தா ய் வெம்பியிப்போதுன்மலர்முகம் வாடிவேர்த்தெந் கன்
முகத்தினைப் பார்த்து தம்பியே நடந்த குறையெது முளதோ சாற்றுவீர்
துயரை மாற்றுவனே
 

- 9 -
பலபத்திரர் வசனம்
கேளுந்தம்பி! நித்திய பூரணச்சந்திர ன் போலிருக்கும் உனது முகம் இன்று வாடியிருக்க வேண்டிய காரணம் நானறியும்படி சொல்வாயாக
கிருட்டினன் வசனம்
அப்படியே நடந்த செய்தியெல்லாம் சொல்லுகிறேன் கேளு மண்ணு.
கிருட்டினன் தரு
தந்தா னந்தனம் தான தானினு - தன
தான தானின தான தானின தந்தா னந்தனம் தான தானின
1. அண்ணு தர ள வண்ணு கேளண்னே
உனக்குத்தான் சொல்லி, உனக்குத்தான் சொல்லி ஆறுவேன் மனந் தேறுவேனண்ணே
2. மன்ணுண்டிடுமென் மகனை வாணன்தான்
பிடித் தங்கடித்து, பிடித்தங்கடித்து வருத்தித் துலங்கில் இருத்தினனண்ணே
3. பெண்ணு ளொருத்தி நண்ணுர் மகளெந்தன்
மகனைத் தழுவ, மகனேத்தழுவ பிடித்துப் போ பங்கே மறித் திட்டா ள ண்ணே
4. எண்ணுர் அதனைக் கண்ணுலுறக் கண்டே
இவனைப் பிடித்து, இவனைப் பிடித்து இட்டுத் துலங்கிற் பூட்டினு னண்ணே
5. ஊரிற் குமாரன் சேருமளவுக்கும்
எனது விழியும், எனது விழியும் உறங்கிடா தன்னம் இறங்கிடா தண்ணே

Page 63
- l20 -
6. சூரக்காளை நீரிங்கிருக்கவும்
உனேயெண்ணுமல், உனையெண்ணுமல் துருக்க வாணன் மறித்திட்டான் அண்ணே -
7. தூது மனுப்பிக் கேட்டு மறிந்திட்டேன்
என்னை வாணன், என்னை வாணன் தூஷித் தேசிப் பேசினனண்ணே
8. இதுதானிங்கே நடந்ததைச் சொன்னேன்
இனியும் மனதில், இனியும் மனதில் எண்ணிப்பார்புத்தி நண்ணிப்பாரன்னே
கிருட்டினன் வசனம்
இது காரியமிப்படி இருக்கிறபடியினல் இனிமேல் உனது
சித்தத்திற்கேற்றபடி எனக்கொரு புத்திசொல்லுமண்ணே.
பலபத்திரன் - கொச்சகம், தரு தனத்தத் தத்தனத் தான தனத்தத் தத்தனத் தான - தானின - தன தனத்தத் தத்தனத் தான தனத்தத் தத்தனத் தான தானின
கொச்சகம் வருத்திக் குமாரன் தனைச் சிறையில் வாணேசுரன் தான் இருத்திவைத்தால் உருத்துக் கறித்துள்ளுறச் சினந்து உடனே
தொடர்ந்து நடந்து சென்று மரத்தில் பருத்தியெனப் பறக்க வாணன்
றனையே வதை யாமல் தரு தம்பி, திருத்தித் திருத்திச் சொல்லிப் பொருத்தித்
தூதனுப்பிடலாமோடா - தம்பி செத்துப் போவேனென்று மெத்தப்பயந்து
விட்டாயோ டா
 
 
 
 
 
 

- i2 --
நெரித்துப் பிடித்தவனை யரைத்துக் கரைத்துப்
போடுவேனடா - தம்பி
நில்லா னன்ணன் போரில் வெல்லானென்றே
உரைத் தாயோடா
கொச்சகம்
சிறிய வயதிலான முன்னே சென்ரு ய் பேயைக் கொன் ருய்நல் அறிவு ன்னுண்மையை யெல்லாம் அயர்த்தாயோ
பிள்ளையைப் பிடித்து மறியல் புரிந்தான் வாணனென்ருல்
வா வென் றெனை க்கொண் டேகாமல்
தரு
உறவாய்க் கூடிக் கொள்ளத்
திறனுய்த் தூதனுப்பிடலாமோடா - சோறு உண்ணவில்லைக் கண்ணில்
உறக்கமுமில்லை யென்ரு யோடா சிறைபூட்டிஇனியந்த இறை நாட்டிற்
கொண்டடிப்பா னெடா - எந்தன் செங்கைத் தண்டைக் கண்டால்
அங்கைத் தொண்டாக வரானேடா
கொச்சகம்
குச்சிக் குழல் சேர் மங்கையராசை
கொள்ளும் உருத்திர குமாரனைத்தான் பிச்சிப்பிசிதர் குலவாணன் பிடித் தங்கடித்து
மறியல் வைத்தால் பச்சைப்புலத்து வண்ணு நீ
படைக்கு நடக்கத் தொடங்காமல்

Page 64
- l22 -
தரு
அச்சப்பட்டே புத்தி மிச்சப்பட்டேயிருந்தாயோடா
- அன்னை ஆண் பிள்ளையென்றுன்னை வீண் பிள்ளையாகப்
பெற்ருளோ டா கொச்சைப்பயலிடம் மெச்சித்துர தேவிவிட்டாயோ டா என்னைக்கூப்பிட்டொரு புத் தி கேட்டுப்
பார்த்தேவப்பொழுதோடா
கொச்சகம்
அஞ்சித்தானே முதல் வானேர் அடங்க நடுங்கி
ஒடுங்கிடுவார் கொஞ்சப்பேரோ பலதேவன் கோபித்தா
னென்றுரைத்திடுகில் வஞ்சப் பயலாம் வாணனுயிர் மடியப்போர் நாம்
புரிவதல்லால்
ቓ5® அஞ்சிப்பஞ்சப்பட்டுக்கெஞ்சித்தூதனுப்பிடலாமோ டா
இன்னும் அன்னம் தின்னே மென்று என் முன்னே நீ சொல்ல
லாமே டா நெஞ்சிற் கரத்தைப் போட்டால் எஞ்சிக்கொஞ்சித்
திரியானேடா - கண்ணில் நித்திரையில்லையென் றற்றவர் போலுரைத்தாயோடா
கிருட்டினன் கவி நிரைத்தலைச் சேடன் படத்தினிற்ருங்கு
நிலத்தினைத் திருத்தியாளிறைவா உரைத்திடு மனு சாஸ்திரப்படிக் கவன் பால்
ஓதி விட்டேன் ஒரு தூது
 
 

- l23 -
கரத்தினிற் படையை யெடுத்து நீ வாணன்
கதறி மெய் பதைத்திடவுதைத்து உருத்திரனைச் சிறை விடுத்திடச் சமருக்
குருத்து நீ நடத்திடுவீரே
கிருட்டினன் வசனம்
கேளுமண்ணே! மனு சாஸ்திரப்படி தூது விட்டேன். இனி மேல் உமது கருத்திலுற்றபடி பார்ப்பீராக. கேளும் நாதரமுனியே! சண்டைக்குப் போக நல்லதொரு முகூர்த்தஞ் சொல்லுவீராக.
நாதர முனி வசனம் ஆணுற் சொல்லுகிறேன் கேளுமிராசனே.
தரு தானத்தோம் தானின தந்தைத் தான - தணுதன தானத்தோம் தானின தந்தைத்தானின தான
காவலறிந்தாளு மிறையே - உன்னுடைய கைக் கயிற்றிலே கால சக்கரமுண்டு வாவு பரிதியாதியான - நாட்களில்
வாழ்க தி ரையாதி நவகோள்கள் நடக்கும் அந்தணன் நிற்குமோரைக் - கால் தன் னில்
ஆதவன் மதிய யருநாலை யொழிய இந்த முகூர்த்தத்தில் நடந்தால் - மாற்றலர்கள்
அஞ்சி மனங் கெஞ்சியுனக் கஞ்சலி செய்வார் புந்தி குரு வெள்ளியிவர்கள் - கேந்திரமும்
பொல்லார்களாறு பதினென்று மூன்றும் வந்திட அமர்க்கு நடந்தால் - மாற்றலர்கள்
வாள் விழியில் நித்திரையில்லாமல் மாழ்வார் ஆன புதன் வெள்ளி திதியும் - ஓரிரண்டில் ஆதவனுதிக்க மதி எழின் மேவ

Page 65
- 124 -
நீண்டொக்க மாற்றலரெல்லாம் - உன்னெதிரே நில்லாமலே காற்றில் புல்போற் பறப் பார் ஒரை தனில் வெள்ளி பகவான் - மே விவர
யோனியி லே மதியஞ்சேர நடந்தால் சேரலர் தரிக்க மாட்டார் - நெஞ்சடைத்துச்
செஞ்சடை தரித்திரக்கச் செல்லுவர் மன்ன நேரலனுக் கெட்டு தயமாய்ச் - சுக்கிரனும்
நிற்கவஞ்சில் மிக்க பொன்னருக்கனில் வரப் பேர் பெறு மிலாபமும் வரும்-வேலன் சென்று
பேறு பெற்ற சூரனுடல் கூறுசெய்திட்டான் இன்னமுமனேக முகூர்த்தம் - உன்டுனக்கு
எல்லாம் நல்லாய்த் தெரியுஞ் சொல்லவேண்டுமோ பண்ணுபடை நண்ணு புகழான்- உன்னண்ணன் பல பத்திரனைக் கொண்டு செல்லும் புத்தியுடனே
முனிவர் வசனம்
கேளுமிராசனே! நான் சொல்லும் முகூர்த் தத்தில் உமது தமையனுகிய பல பத்திரனையுங் கூட்டிக்கொண்டு போய்ச் சண்டைசெய்து சகல சத்துராதிகளையும் வென்று வாணன் மகளையும் உமது ம க லு க் கு க் கலியாணம் பண் ணிக் கொடுத்து வருவீராக.
கிருட்டினன் வசனம் உமது சொல்லுப்போல் நடத்துகிருேமையா. அதோ கேளு மண்ணே! இந்த மு கூர்த் தத்துடனே சண் டைக்குப்போவோம் வருவீராக அதோ வாரும் பிள்ளாய் சேனபதியே! நமது படைச் சேனைகளைக் கூட்டிக்கொண்டு வாணனுடன் சண்டை பண் னப் போவோம் அதிசீக்கிரம் வருவீராக.
சேனுபதி மிகுதியும் சந்தோஷம்; போய் வருகிறேன் இராசனே.
 
 

- 25
பலபத்திரன் சிந்து
தனத்தந் தந்தனத் தானின - தனன தந்தைத்
தனத் தந்தந் தனத்தானின
தனத்தந் தந்தனத் தான
தனத்தந் தந்தனத் தான
தனத்தந் தந்தனத் தான
முத்திரைப்பல்லவி படைக்குப் போவோம் வாடா - அடா தம்பி படைக்குப் போவோம் வாடா படைக்குப் போய் வாணனை - அடக்கச் செய்வேன் - தம்பி பார்த்துக்கோ பொருகிறேன் கூத்தைப் பின்னே நின்று
(படைக்) தண்டாலே அவுணர்கள் மண்டையையுடைக்கிறேன் சாரி யோட்டுந் தேரை வாரிப் போட்டடிக்கிறேன் அண் டரைக் களத்திலே துண்டாக வடுக்கிறேன் * ஆப்பிட்ட பேய்க்கெல்லாம் கூப்பிட்டுக்கொடுக்கிறேன் (படைக்)
கைத்தண்டி னுல் அவர் கண்டமு முரிக்கிறேன் கரியையும் பரியையும் காலாலே நெருக்கிறேன் நேர் நெஞ் சுக்குக் கூர்கொண் டடிக்கிறேன் நிலத்திலே கருவாடா ய்ப் புலர்த்தி விரிக்கிறேன் (படைக்)
பலபத்திரன் வசனம்
கேளுந் தம்பி! என் சமர்த்தைப் படைமுகத்திலே நின்று பார்ப்பீராக.
கிருட்டினன் வசனம்
மிகுதியும் சந்தோஷ மண்ணே.
* ஆப்பிட்டஎன்பது அகப்பட்ட என்ற சொல்லின் திரிபு.

Page 66
- 26 --
பலபத்திரன் கவி
வானகத்தினை நலிந்து துறை கொண்ட தொரு
வாணனு ற்ற நகர் கண்டதினி யண்டலர்கள் தான மர்க்கு வர வெண் டிசையுமண்ட மொடு
தாழ் திரைக் கடல்மொண்டு கொண்டெழுந்த முகில் ஆன திப்பொழுது என்று புவி வந்த வுணர்
ஆருமுக்கியுடல் நடுங்குற வெனப் பெரியவாம் பானிறப்பணில மங்கையிலெடுத்திடையர்
பால் குடித்தழுத பங்கய மடுத்திடுகவே
பலபத்திரன் வசனம்
கேளுந் தம்பி! நாங்கள் சம ருக்குப் படை கொண்டெழுந்த செய்தி வாணேசுரணறிய உன் கையிற் பாஞ்ச சன்னி யத்தை ஊதிவிடுவீராக.
கிருட்டினன் வசனம்
அப்படியே செய்கிறேன் அண்ணு.
வாணன் கவி
கொண்டல் முழக்கென எண் டிசையிற் கடல்
கொண்ட முழக்கெனவே அண்ட முழக்கிய முந்திடு மோதை
இதார் கொல் புரிந்ததெனிற் பண்டு வளர்த்த இடைச்சிகையாலடி
பட்டவ னென்னுடனே சண்டை வளர்க்கு மதிர்ச்சியி தென்படை
தன்னை அழைப்பீரே
sa tsartsit angsod
கேளுந் தலையாரிமாரே! நமது படைகளையும் படைகளுக் கதிபனகிய சேனபதியையும் சுறுக்காய் வரும்படி அழைப் பீராக.
 
 
 

- 27 -
தலையாரி வசனம்
அப்படியே அழைத்து வருகிறேன் இராசனே.
வாணன் - சேனுபதி வரவு கவி
சபை கவி
மங்கையர்கள் இருமுறமும் கவரிவீச
மற்றுமுள்ள மடந்தையர்கள் மயங்கி வாழ்த்தத்
துங்கமுறு வாணனது சேனை காக்குந்
துரை மக்களெங் கெங்குஞ் சூழ்ந்தேயோங்கப்
பங்கமிலா விஞ்சையர் கின்னர ரரக்கர்
பரிசைவாளிட்டி முதற் படைகளேந்திக்
சங்கை பெறுங் கொடி பறக்கச் சேனை சூழச்
சபைதனிற் சேபைதி தான் வருகின்ருனே
தந்தன்ன தந்தன்ன தந்தன்ன
தந்தன்ன
தரு
தந்தன்னத் தானு - தன தந்தன்னத் தான தந்தன்னத் தானு - த ன தந்தன்னத் தான
1. மந்தர சுந்தரத் தோளான் - மட
மங்கையரிங்கிர்த வேளான்
செங்கையிலீட்டி கொடாளான் படை ச்
சேபை தியும் வந்தானே
2. காவலர் கண்டு திடுக்கிடக் - கண்ணன்
காற் படை கண்டு பயப்பட த்
தேவர்கள் நின்று நடுங்கிட - வாணன்
சேனபதியும் வந்தானே

Page 67
--128 ہے۔
3 வச் சிரச் சட்டையு மிலங்க - வடி
வாளுமிடை தனிற்றுலங்கு செச்சை பல் வாத்திய முழங்க வாணன்
சேன பதியும் வந்தாடு
4 வாணன் பதிதனைத் தேடியே - மகிழ்
ஆயன் பதிதனை ச் یr_يae,"" **" "" நாடியே
வீரத்துடன் வந்திட்டாடு
வாணன் - சேனுபதி கவி மன்னவர் மன்னு பொன்முடி தரித்த
வாணனென்றடியிணை போற்ற இந்நில மெல்லா மொரு குடை நிழற் கீழ்
இருந்தரசாளு மிறையே என்னையுமுனது சேனைகள் தனையு மிங்கு நீ
அழைத்திடு கருமந்
தன்னை யிப்போது சாற்றிட வேணுந்
தாளிணை போற்றி போற்றியதே
சேனுபதி வசனம்
அரசிருப்பும் சிங்காசனமும் ஆஸ்தான கொலுவும் விர பராக்குஞ் சரணமே சரணம் இராசனே.
வாணன் - சேபைகி கவி
ணு
அந்தரத் திமை போர் நடுங்கக் கொடுங்கால ன்
அஞ்சித்தன் நெஞ்சுதடவ சுந்தரக் கிரணமுறு மந்தரவ சிகை கொண்ட
துரையே யழைத்த பணியாற் தந்திரத்தானை யோடும் வந்தடைந்தே னிங்கே
சண்டைகள் நடக்க வருமோ சிந்தையிற் கவலையற எந்தெனக் கிந்த நற் செய்தியைச்
செப்பிடீரே
 
 
 
 
 
 

- 129 --
வாணனும் - சேனுபதியும்
தரு நன்னன்ன நானன்ன நானு -நனனன்ன நானன்ன நானன்ன நான
சேனுபதி அசைவற்ற இசைபெற்ற தோன்றலே - என்னை அழைப்பித்த காரியம் தனைச் சொல்லும்
வாணன்
வசையற்ற இசை பெற்ற வாளனே - படைத் தலைவனே போருக்குப் போகவே
சேனுபதி
மறுநாட்டுக் கேகிட வேண்டுமோ - அன்றி மறு மன்னர் துரந்திங்கே வருவாரே
வாணன் நிறை நாட்டிலென்னுடன் பொருதிடக் - கண்ணன் சேனையைக் கொண்டிங்கே மேவினன்
சேனுபதி உமக்கு மங்கவனுக்கும் பகையென்ன - நீங்கள் யுத்தத்துக் கெழுந்திட்ட வகை யென்ன
வாணன்
சமர்க்கவன் வரவந்த காரியம் - அவன்
தனையனைச் சிறைவைத்த வினை யதால்
சேணுபதி
ஏனவன் மகனநீ சிறைவைத்தாய் - அதை இன்ன தென்றெனக்கிப்போ திசைத்திடாய்

Page 68
- l30 -
வாணன் 8. மானமற்றிட எந்தன் மகளிடம் - அவன்
வருவானேன் வசைதனைத் தருவானேன்
சேணுபதி 9. இப்படி நடந்ததோ புதினமும் - உம
தெண்ணத்தையினிச் சொல்லுந் திண்ணமாய்
வாணன் 10. செப்புவதே னினி அவனுடன் - பொரச் சேனையைக் கொண்டங்கே செல்லுவீர்
வாணன் கவி தூக்குறுமோர் தயிர் நோக்கி யருந்திய துவரை
நகர்க் கிறையாம் போக்கிலியென்னுடன் தாக்கிட வெஞ்சமர்
புரியப் போருளும் வீக்கியவன்றன யேக்கமுறும்படி வெஞ்சிறை
செய்திடுவேன் தாக்கியருஞ் சமர் ஆக்கிடநீயுமுன் முனையுமே குவீரே
வாணன் வசனம் கேளுஞ் சேனபதியே! கிருஷ்ணராசனுடனே சணடை பண்ணப் போக நீயும் நமது சதுரங்க சேனையுடனே வரு வீராக.
சேனுபதி வசனம் அதோ வருகிறேன் இராசனே.
வாணன் கவி மந்தரங்களிருபுறமாய் வளைந்திட்டாலும்
வட்ட வாருதியேழும் ஒன்ருய் மருவினலும் சந்திர சூரியர்கள் நிலை தவறினலுந்
தத்துவத்தாலரசு புரிவாணன் யானே
 
 
 
 

- ll -
இந்த இடைப் பயலுமொரு அரசன் போல
என்னுடனே எதிர்க்கவென எண்ணிக்கொண்டு
வந்தனணும் படையுடனே சமர்க் களத்தில்
மருவியவன் படையை வென்று வருகுவாயே
வாணன் வசனம்
கேளுஞ் சேனுபதியே! துவாரகாபதியிலிருக்குங் கிட்டின னென்கின்ற இடைப்பயலும் அவனுடன் கூடிப்பிறந்த இடையனும் என்னுடனே எதிர்த்துப் போர் புரிய வரு கிருர்கள். நீ அவர்களை எதிர்த்துச் சண்டை பண்ணி வென்று கிருட்டினனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வருவீராக.
சேனுபதி வசனம்
அப்படியே வென்று வருகிறேனயா.
கிருட்டினன்-கொச்சகத் தரு
கொச்சகம்
விண்ணுேர் நகரங் கமலமலர் மேலாசனத் தன் தன்னகரம் மண்ணுேர் நகரம் அடங்காமல் வாணன் படைமு ன்
வருகுதுபார் அண்ணு பால்போல் வண்ணுகேள் அவுணர் செருக்கை
அடக்கிவர
தரு நன்னன்ன நானன்ன நானன்ன - நன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ஞ - நன்ன si நானன்ன நானன்ன நானன்னு
கண்ணுேடு காதைப் பறிக்கிறேன் - இவர்
கையோடு காலை முறிக்கிறேன்

Page 69
- 2 -
புண்ணுக நெஞ்சைப் பிளக்கிறேன் - இந்தப்
போர் முற்றும் நான் சென்றுழக்கிறேன்
கொச்சகம் வங்கந்தெலுங்கங் கலிங்கமுடன் மக்கம் மகதம் மலையாளம் துங்கமுறு சிங்களஞ் சீன ஞ் சுற்று முவரிமுற்று மிக்க கங்குல் பரந்து வருவதுபோல் காலாட்படை முன்
வருகுது பார் தரு சங்கை முழக்கி விழுத்துறேன் - இத்
தரையிலவரை யழுத்துறேன் பங்கப்படுத்தி யுதைக்கிறேன் - வாணன்
பார்க்கப் படையைச் சிதைக்கிறேன்
கொச்சகம்
அட்டமலைகள் கிடுகிடென்ன அண்டம்
வெடித்துப் படபடென்னத் துட்ட அவுணன் வாணனுடை தூசிப்படை
முன் வருகுதுபார் திட்டமுடன் போய் நெருங்கியவர் செருக்கை
அடக்கக் கைவாளால் 505 வெட்டித் துணித்துடல் போடுறேன் அவர்
மேனிகள் தூள் மண லாக்கிறேன் தட்டிச் சமரையுழக்கிறேன் - கையிற் சக்கரம் விட்டுப் பிளக்கிறேன்
கொச்சகம் ஆதிசேடன் தலைசுருங்க வார்த்த பசும் பொன்மலை
நெருங்கச் சாதிக்கடலோடெழு கடலுந்தானேசுவறி யொன்ருக மோதிக்கொதித்துப்பல துரகம்முன்னே
நடந்துவருகுதுபார்
 
 
 
 
 
 

- l3 -
தரு
பாதிப் பிறைச் சரமே வுறேன் - இப்
பதாதிகள் பின்னிடத்தாவுறேன் காதிப்படையை ஒடுக்கிறேன் - இப்போ
காலன் நகர்க்கு விடுக்கிறேன்
கிருட்டினன் கொச்சகம்
விண்ணுடடங்காமல் வேதனுலகுங்கடந்து மண்ணுட்டிலும் பரந்து வாணேசுரன் படைகள் எள் நாட்டிடவும் வெளி இல்லாமல் வந்தது பார் அண்ணு சமரை அடக்க வினிச் செல்வேனே
கிருட்டினன் வசனம்
இதோ கேளுமண்ணே! வாணேசுரன் படைதிக்குத் தோறும் வந்து கொண்டது. நான் போய்ச் சங்காரம் பண்ணி வருகிறேன் விடை தருவீராக.
பலபத்திரன் வசனம் ஆணுற் சொல்லுகிறேன் கேளுந் தம்பி.
பலபத்திரன் தரு
நானன்ன நானு - நனநன்ன நானன்ன நாணு நன்னன்ன நானன்ன நானன்ன நானன்ன நானன்ன நான
கொல்லப்போறேனே படையெல்லாம்
வெல்லப் போறேனே
1. கொல்லப்போறேன் தம்பி தும்பிமுகப்பிள்ளை கோடொன்றிற்ை கெசமாமுகசூரனை வெல்லப்பிளந்தொரு வாகனமாக்கிய
மெய்க்கதை போ லெவன் கைக் கதையால் மோதி
(கொல்.)

Page 70
- l34 -
ஆனையைப்பற்றிப் பரியிலடிக்கிறேன்
அப்பரியைப் பற்றி - யாளியிலடிக்கிறேன்
தானவரைப்பற்றித் தேரிலடிக்கிறேன்
தாவுமித் தேரையிப்பாரிலடிக்கிறேன் (கொல்.)
வானவரைத் தண்டஞ் செய்திடுசூரன்
மகாசூரன் மற்றும் அவுணர்கள் மாய்ந்திட போன சங்காரப்படை தனில் வேலவன் - முன்னுளிலேதான் முடியச்செய்தாப்போலே
(கொல்.)
பார்த்தாப்போலே சிலபேரை வதைக்கிறேன்
பாய்ந்து பாய்ந்து பலபேரை யுதைக்கிறேன் எத்திப்புவியில் இவரை மிதிக்கிறேன்
எத்திசைக்கும் அள்ளிச் சிதற விதைக்கிறேன்
(கொல்.)
மாத்திரை தன்னிலே ராவணன் கும்பகன்
மைந்தர்கள் மாய்ந்திடக் கோர்த்தம்பு விட்டுயர்
இராமனவர்களைக் கொன்றது போலவே
சீக்கிரமாகவே சென்று உழக்கி நான் (கொல்.)
அஞ்சியிறக்கப்பலரை யுறுக்கிறேன்
அங்கையினலுஞ் சிலரை முறிக்கிறேன் உஞ்சிடலொட்டாமலோட மறிக்கிறேன்
ஒன்றுமே போகாமல் கொன்று குவிக்கிறேன்
- (கொல்.)
அஞ்சனை மைந்தன் முன் சென்றுஇலங்கை
அசோகவனத்தில் அரக்கர் செருக்கினை
துஞ்சிடக்கொண்டெரி மூட்டியே வந்த
சுறுக்கது போல உறுக்கியடித்து நான் (கொல்.)
 
 
 
 

- 135 -
பலபத்திரன் கொச்சகம் சேனபதியுடனே சென்று சமர்யான் பொருது கோனட ரெல்லாங்குலைய வுழக்கிடுவேன் வானுடரை மலைந்தவாணனுடன் நீயொருத்தன் தானுகி நின்று சமர்பொருது வெல்வீரே
பலபத்திரன் வசனம் கேளுந் தம்பி! வாணனுடைய சதுரங்க சேனையையும், சேனபதியையும் நான் மறித்துப் பொருது வெல்லுகி றேன். நீ வாணனுடனே பொருவீராக.
கிருட்டினன் வசனம் அதற்கொரு புத்தி சொல்லக் கேளுமண்ணே.
கிருட்டினனுக்கும் பலபத்திரனுக்கும் தர்க்கத்தரு தனத்தான தானின
தனத்தான தானினணு - தன தான தானின தான தானின
தனத்தான தானின தனத்தான தானினணு
கிருட்டினன்
சினத்துடன் வருவெகுசனத்துடன் நீ தனியே
எதிர்த்துநின்று எதிர்த்துநின்று செருத் தொழில் புரிவது வருத்தமதாமண்ணே
பலபத்திரன் மனத்தினில் நினைத்தனை யெனைத் தனியெனவோதான்
வாணனுேடே வாணனேடே மருத்துவர் படைத்திரள் தொலைத்திடுவேன் வாடா
கிருட்டினன் அண்டலர் வெகு படைகொண்டு தொடுப்பாரே
அதற்கு நீயொரு அதற்கு நீயொரு தண்டு கொடுத்தெதிர் நின்று தடுப்பீரோ

Page 71
- l86 -
பலபத்திரன்
சண்டை முகத்திலே கண்டு கொள்ளப் பொழுதே
நானெருத்தன் நானெருத்தன் தருக்குடனவுணரை நொருக்கிறவிதமெல்லாம்
கிருட்டினன் கந்தனெனுந் திருச்செந்தியில் வாழ்முருகன் - கணை
ஏவுவாரது ஏவுவாரது வந்தால் முறித்ததைச் சிந்திடலரிதண்ணே
பலபத்திரன்
சிந்தையிற் சர வணபவ மந்திரமாம்
தந்திரத்தை தந்திரத்தை வந்தனை செய்தவை மாற்றிடுவேன் வாடா
கிருட்டினன்
அங்குசமொடு கயிறங்கை தரித்தவனுர்
அருளினலே அருளினலே துங்கமுறும் படையிங்குறிலென் செய்வீர்
பலபத்திரன்
மங்கை சவுந்தரி மைந்தன் மகிழ்ந்திடவே
மோதகத்தை மோதகத்தை மலையெனவே குவித்தவனருள் பெறுவேனடா
வசனம் அப்படியடர்ந்து வெல்லுகிறேன்; சுறுக்கு நடந்து வா தம்பி.
வாணன் சேனுபதி - ஆசிரிய விருத்தம்
அண்ட பகிரண்டம் புரண்டிடப் பொன் மலை
அலுங்கிக் குலுங்க வாணன்
 

- 137 -
அரசு புரி நகரத்தில்: மருவலர்கள் போலவந் தடலாண்மை யொடு பேசியே தண்டமுடனே அலப்படைகொண்டு என்முனே
சாடுரு?ய் ஊரே தடா சாற்றடா வுன்னுயிரை மாற்றியே
யமனுரர் தனக் கேறவைப்பேனடா கண்டநவ கண்டமுள அண்டர்கள் திண்டிறற்
காவலன் கழல் பணிகுவார் கள்ள மனவெள்ளை நிறமுள்ளவர் என் கையிற்
கண்ணுதற் படைபாரடா பண்டநுதல் துண்டமுறு கண்டபூரணி பரசு
பாணி கரிமுகன் அறுமுகன் பரிவாக அனுதினம் வாசலிற் காவல்புரி
பண்புநீயறியாயோடா மண்டையை யுடைத்துன் கொழுப்பினை அடக்கியே ་་་་་་. வாட்டியுயிர் போக்கி விடுவேன்
வாணனுடையாண்மையுறு சேனையிற்றலைவன் நான்
வந்த உன் பேரே தடா
பலபத்திரன் - ஆசிரியம்
சிங்கம் சினத்துக் குதித்தெழுந்தால் நரித்
திரள்கள் எதிர் நிற்குமோடா சேனை காவலனென்று வாணனுடன் மேவுருய்
செம்பொன் மகமேரு நிகரோ துங்கமுறுமென் கரத்தண்டினுல் உன்னுயிர் துடிக்கப்
புடைக்க முன்னஞ் செல்லடா வெள்ளை நிறமல்லடா குருளையின்
சொரூபம் நீயறியாயோடா மங்கையுமை பங்கனெனு மெங்கோனெதிர்த்திடில்
மலைவதல்லாலேகிடேன் ܗ.

Page 72
- l8 -
வாணனுடனுன்னையும் சேனையுங் கொண்டு நான்
வாரியுட்புகவெறிகுவேன் அங்கமிரு பங்கமுறு மெங்கள் சிவனுணையிது
அறிந்து நீசமரைவிடடா அசுரனே கேள டா என் பெயர் அலப்படை
அனந்தனென்றறி வாயடா
வாணன் சேனுபதியும் - பலபத்திரனும் தர்க்கத் தரு
நன்னன்ன நானன்ன நானன்ன - நன்ன நானன்ன நானன்ன நானன்ஞ நன்னன்ன நானன்ன நானன்னு - நன்ன
நானன்ன நானன்ன நானன்ன
வாணன் சேனுபதி
தண்டொன்று கைகொண்டு மேவுருய் - வெகு தத்துவத்துடனே முன் தாவுருய் எண்டிசை மன்னன் நீ யல்லடா - நீ இறக்க முன்னுரர் பேரைச் சொல்லடா
பலபத்திரன்
பேருடனுரரென்னைக் கேள டா
பல பத்திரனென்பது நானெடா சாரும் படைமெத்தத்தானேடா
என்கைத் தண்டுக்கிரையிடுவேனடா
சேனுபதி கைத் தண்டிருக்கு தென் றெண்ணுருய் -விறல் காட்டிச் சமர்பொர நண்ணுரு ய் அத்திரம் உன்மேலே ஏவுறேன் - உந்தன் ஆவியழிந்திடப் போக்கிறேன்

/
- l39 -
பலபத்திரன்
மெத்தச் சினங்கொண்டு ஏசிருய் - உயிர்
வீக்கிருேம் என்று நீ பேசிருய் பித்தா உன் வாய் மதம் போக்கிறேன் - நீ
பிரண்டு உருண்டிடத்தாக்கிறேன்
சேணுபதி
பித்தாவென்றென்னை நீ வெருட்டியே - என்
பெலன் கண்டோ நீயும் மருட்டிருய் குத்தியுன்னிரலெடுக்கிறேன் - மாலை
கூளி கொண்டாடக் கொடுக்கிறேன்
பலபத்திரன்
குத்தப்படையை யெடுக்கிறேன் - உடல்
கூருக்கி நாய்க்குக் கொடுக்கிறேன் கைத்தலத் தண்டினைப் பாரடா - படைக்
காவலனே என்முன்னேரடா
சேனுபதி
மொந்தைத் தலையையுடைக்கிறேன் - உந்தன்
மூர்க்க மொழிக்கப் புடைக்கிறேன்
சொந்த வெள்ளை நிறம் போக்கிறேன் - உடல்
துண்டுபட உன்னைத் தாக்குறேன்
பலபத்திரன்
விந்தைமலை தன்னைத் தூக்கிறேன் - உந்தன்
மேனியிலே விழத் தாக்குறேன் உந்தன் உயிர்தனைப் போக்கிறேன் - படை
உள்ளதெல்லாம் பொடியாக்கிறேன்

Page 73
- l-40 -
- FAU ġe5GD5
தனனத் தானே - தனதன தனனத் தானே தனனத் தானன தனனத் தானன தனனத் தானன தனனத் தானன்னே - (தனனத் தானே)
நிலை கொண்டாரே கையிற் பெருஞ்
சிலைகொண்டாரே - படைக்கலம் நெருக்கிருர் கணைதொடுக்கிருர் - மெத்தக்
கறுக்கிருர் பேச்சிலுறுக்கிருர் - சமர் நொந்திட்டாரே அழுந்த முன் சோர்ந்திட்டாரே
கலை கண்டானே முன்னேன் வரு
- நிலை கொண்டானே மதத்திறற் காலினர்ப்பையுந் தோலினர்ப்பையும் வாசியார்ப்பையும் கலக்கினனே படையெல்லாம் விலக்கினனே
சுற்றினனே சேனபதி எற்றி னனே - எனக்கணை தூவினலம்பி லேவினன் கணை மேவினன் முன்பு தாவினன் கரந்
தூக்கினனே - புயத்தினிற்ருக்கினனே
எற்றினனே பல பத்திரன் ஒற்றினுனே
தலையினில் அடித்திட்டான் மண்டை உடைத்திட்டான் அடை
கிடத் திட்டான் சொல்லித் துடைத்திட்டான் (எற்றினுனே)

- lal -
சபை கவி
தண்டினுற் பலதேவன் அடித்த பொழுதினில் அசுரர்
தலைவன் சோர்ந்து மண்டை சிதறிடச் சாய்ந்தான் வாணனதைக்
கண்டு முன்னே எதிர்க்கச் சித்தம் கொண்டு பொருதிடவுமாய வனவ்வுலகமெலாங்
கொழித்து வாரி உண்டது போற்றனது கையிற் சங்கெடுத்து
வாயில் வைத்து ஊதினுனே
வாணன் - கிருட்டினன் தர்க்கத் தரு
தாந்த னந்தனந் தானு - தன தாந்த னந்தனந் தானு - தன தானத ஞதன தானத ஞதன தானத ஞதன தானத ஞனே
வாணன் சேர்ந்து கண்கள் சிவக்கவே - கையில் ஏந்து சங்கை முழக்கியே - எதிர் சென்று உழக்கியெனக்கு முன் நின்று செருக்கினையின்று இறக்க விதித்ததோ
கிருட்டினன் பாய்ந்து நெஞ்சிலுதைக்கிறேன் - உடல்
சாய்ந்துருண்டுபதைக்கவே - அடே பேந்துன்னூர் முகம் பாரடா - அல்லால்
வீழ்ந்துயிரிழப்பாயெடா மூடா
வாணன் நாந்தகத்தை யெடுக்கிறேன் - முன்னே
வீழ்ந்திடக் கை துணிக்கிறேன் நாவையும் வெட்டுவேன் முன்னம் மாட்டுவேனிது
திட்டமறிந்து திரும்ப நீ போட்ட்ா

Page 74
- la 2 -
கிருட்டினன்
வாய்ந்த செஞ்சடைக்குள்ளே - கலை
தேய்ந்த சந்திரன் நிற்குமோர் - முடிச் செக்கர் நிறத்தனெனக்கருளப் பெறு
சக்கரம் மேவியுனைக்கரம் வீசுவேன்
வாணன்
ஏந்து சக்கரமிக்கதோ என
மாய்ந்திடக் கை துணிக்குமோ - எடா ஏற்பன் நமனுக்கென் அப்பனிடத்திலிரக்க
வலக்கையிருக்குதோ சொல்லடா
கிருட்டினன்
கூர்ந்த சக்கரது மவினல் - இனிப்
பேர்ந்தும் இச் சொல் உரைப்பையோ கூற்றுவனுக்குன்னை யேற்றிடுவேன் - இது
மாற்றவும் ஆற்றலிருக்குதோ பாரடா
வாணன்
மாந்தரிப்போ மதிக்கவே - கலி
பெயர்ந்து லந்து பிறக்குதோ - எடா மிச்சமதாய் மன மச்ச முரு மலுன் உச்சிதம்
யாவுமுரைத்திடுகாரணம்
கிருட்டினன்
பேர்ந்திடத் தோள் துடிக்குதோ - பொறி காந்திடப்பல் கடிக்கிருய் - அடா
பின்னை யாரே நான் மன்னனலதுமுன்
மன்னன் ராவணனை மாய்த்தவர் கூறடா
 
 
 

- }43 -
சபை கவி
மிக்கவலி போர்புரிந்து மாயனுறச்சினந்து கையில்
வேலைமாற்ற தக்கதனஞ் செயன்பாசக் கயிறதனை உயிர்மாளக்
கடன் மேற்கொண்டு சக்கரத்தைக் கரத்தெடுத்தான் வாணன் மனம்
கலங்கிச் சுவாமி காலிற் புக்கபயமென்று சொல்லிப் போற்றி மாயன்
பொங்கிய கோபந்தணித்து மாற்றினனே
வாணன் தரு நன்ன நன்ன நான நன்னு - நன நானன நானன நானன நானன நான நன்ன நான நன்ன ஞணு
1. சீதரனே போற்றி போற்றி - நாளுஞ் சீதமலர்த் திரு மாது புணர்ந்திடு திருமாலே போற்றி போற்றி 2. அன்று மலரயனைச் சிறைமீட்க - நாளும்
கரிஅருள்தருமொரு திருமாயவனே மாலவனே போற்றி போற்றி 3. ஆயருடை சேரிதன்னில் - முன்னம்
ஆய்ச்சியர் காய்ச்சிய தோச்சிய தயிருக் கழுதவனே போற்றி போற்றி 4. மாலவனே போற்றி போற்றி - முன்னுள்
மாவலி தன்னிட மூவடி மண்ணன்று வாங்கினவா போற்றி போற்றி 5. வஞ்சகரை அறுத்தாய் போற்றி - இந்த
மகிதல முழுவதும் அருள் தர வருமொரு மாதவனே போற்றி போற்றி 6. செஞ்சரண பாதம் போற்றி - பல
சென்ம மதி ைடபுரி நின்தவ மிதுவே சேவடிக்கே போற்றி போற்றி

Page 75
一l44一
வாணன் வசனம் தேவரீருடைய சிறி கமல பாதாரவிந்தம் அடியேன் என் றென்றும் போற்றித் துதிசெய்யக் கிருபை புரிய வேணுஞ் சுவாமி.
கிருட்டினர் வசனம்
அதோ கேளும் வாணராசனே! சகல காரியத்திற்கும் எனது தமையனராகிய பல பத்திரராசா இதோ நிற் கிருர், அவரைத் தோத்திரம் பண்ணி, அவர் சொல்லு கிறதையறிந்து கொண்டு வருவீராக.
வாணராசன் வசனம்
அப்படியே செய்து வருகிறேனயா.
வாணன் பலபத்திரனுடன் - தரு
நன்னன நான னன்னு - நன
நான னன்ன நன நானனன்ன
1. பால்போல் நிறத்தானே - பல
பத்திரனே யுன்னை நான் தொழுது சீலத்துடன் நானும் - இங்கு
செப்பிடக்கேள் முற்பழமைகளை
2. அதிதி திதிதி யென்னு - மிரு
ஆயிழை மார்களில் ஆதிதன்னைக் கதிமேவுறத் தவஞ் செய் - அந்தக்
காசிபன் முன்பு மணம் புணர்ந்து
3. பெற்றமகள் மகனம் - எங்கள்
பேரனும் காசிபமாமுனிவன் முற்றும் படைக்கதிபன் - எந்தன்
முப்பாட்டனென்று மொழிவார்கள்

- 145 -
4. என்பேத்திமுன் பிறந்த - திதி
என்பாளைக் காசிபன்முன் புணர்ந்த பின் பாகத் தேவ ரெல்லாம் - எந்தன்
பேரனுக்குத்தான் பிறந்தவர்கள்
5. தேவருக்கோ நாங்கள் மணம் - என்றும்
செய்து கொடுத்திடச் சம்மதியோம்
காவு மரனுதவு - மந்தக்
காசிபன்தானும் சகோதரன் காண்
6. நீங்கள் மறையவர்கள் - நீங்கள்
நாடரசாளுமிறையவர்கள் தாங்கியரசு செய்யும் - மன்னர்
தாங்களும் நாங்களும் சாதியொன்று
7. உருத்திர குமாரனுக்கும் - எந்தன்
ஒவியமா மகளான வட்கும் பொருந்த மணம் முடிக்க - உந்தன்
புத்தியென்ன சொல்லுமுத்த மனே
வாணன் வசனம்
இதுதான் என்னுடைய வரலாறு. இனி மேலும்முடைய உதவி கிடைக்க வேணும் பலபத்திர இராசனே.
பலபத்திரன் கொச்சகம் மண்ணுேர் புகழவரும் வாணுவுன் மா மகட்கும் கண்ணன் மகனுக்குங் கலியாணஞ் செய்ய வெந்தன் எண்ண மதிலுற்ற தியம்பினேனிப் பொழுதில் வண்ண அனுவுருத்திரனை வரவழைக்கச் செய்வாயே
பலபத்திரன் வசனம் கேளும் வாணேசுரனே! நீ யெனக்கு முன்னுகச் சொன்ன பழ மொழியெல்லாங் கேட்டு மிகு சந்தோசமாச்சுது.

Page 76
- 146 -
இனிமேல் உன்னுடைய மகள் வசந்த சுந்தரிக்கும் கண் ணனுடைய மகன் அனுவுருத்திரனுக்கும் அக்கினி சாட் சியாகக் கலியாணம் செய்விக்க, சிறையால் எடுத்துவரச் சொல்வீராக.
வாணன் வசனம் அப்படியேனப்பிக்கிறேன் இராசனே.
வாணன் கொச்சகம் சேவகரே கேளுமெந்தன் சேயிழைக்கும் அனுவுருத்திர பூபனுக்கும் மன்றல் செய்து பொற்கரத்திலே கொடுக்க காவலிலே வைத்த மலர்க்கண்ணன் மகனைக் கொணர் வீர் சோபனமாயென்னுரரை ச் சோடிக்கச் சொல் வீரே
வாணன் வசனம் கேளும் தலையாரிமார்களே! கிருட்டினராசாவின் மகன் அனுவுருத்திரகுமாரனை மறியல் விட்டுக் கூட்டிவருவீராக.
தலையாரி வசனம் அப்படியே அழைத்து வருகிருே மரசே,
தலையாரி கவி மலங்கியழுதிடு மிறையே மாயனும் வாணனும்
உறவாய் மருவிக் கொண்டு துலங்காலே கழட்டி விடச் சொன்னருந்தன்
தந்தையைப்போ ப்த் தொழுது கொள்வாய் கலங்காதே நீயுமெங்கள் கன்னிதனைக் கலியாணஞ்
செய்துசேர்ந்து அலங்காரத்துடனிருந்து அணிபெறுமிச் செகமுழுது
மாழுவீரே
தலையாரி வசனம் இதோ கேளும் குமாரனே! கிருட்டினராசாவும், வாண ராசனும், பல பத்திரனும் சந்தோசமாயினர். வசந்த
 
 

- 147 -
சுந்தரிக்கும் உனக்கும் கலியாணம் முடிக்க உம்மை அந் தச் சமுகத்திற்கு அழைத்து வரச் சொன்னர்கள். வரு வீராக.
அனுவுருத்திரன் வசனம்
அப்படியே வருகிறேன் சேவகரே.
சபை கவி பொன்னின் முடிசூட்டி விறல் சாட்டி உலகோர்கள்
புகழ் சாற்றி யேற்ற வன்னவசி கரத்தெடுத்து மதனிவனென்றே மாதர்
மயங்கிச் சூழ்ந்து தென்ன தென வென்றென்று நடனராகம் பாடவரு
தேவர் கண்டுபயந்துஒட மன்னவன மனுவுருத்திரன்ருதைதனைப் போற்றி
செய்ய வருகின்ருனே
அனுவுருத்திரன் கொச்சகம்
பொன்னன்றனைப் பிளந்த பூபாலா கோபாலா மன்னனிராமனென வந்துதித்த மன்னவனே தன்னந் தனியே தயங்கினேன் இந்நிலத்தில் இன்னம் பிறவாதினியாண்டு கொண்டருளே
அனுவுருத்திரன் வசனம்
அதோ கேளுமையா! இந்தச் செனன மினிப் பிறவாத படிக்கு அடியேனை இரட்சித்துக் கொள்ளவேணுஞ் சுவாமி.
கிருட்டினர் - அனுவுருத்திரன் தர்க்கத் தரு நன்னன்ன நானனன்ன நானன்ன நானனன்ன நானன்ன நானனன்ன நானனன்ன நானனன்னு
கிருட்டினர்
வந்தென்னைப் போற்றி நின்ற மைந்தா விங்கே நடந்த வழமையை நானறியப் பழமையாய்ச் சொல்லுந்தம்பி

Page 77
- 148 -
அனுவுருத்திரன் கந்த மலரணையில் முந்திராவில் துயின்றேன் களவாயிவர்மகள் தன் மகளிரழைத்தாரையா
கிருட்டினர் மாரன் தனிலதிகவிர க மறியலிலே மயங்கிப் போனீரோ முகங்கசங்கிப் போனீரோ தம்பி
அனுவுருத்திரன்
சூரன் கதிரெழவும் பேராயென் காலையிவர் துலங்கில் வைத்தாரதனுல் கலங்கிப் போனேனே ஐயா
கிருட்டினர்
வாணன் மகளைக் கலியாணம் முடித்துக் கொள்ள
மனமாயிருக்குதோ உன் நினைவென்ன சொல்லுந் தம்பி
அனுவுருத்திரன் காணக் கருணை தருங் கண்ணு கரியவண்ணு கலியாணஞ் செய்தால் எங்கள் வலிமை தழைக்குமையா
கிருட்டினர் சொல்லும் பொருளும் போலே சுகமுமகமு மொன்ரு ய் துடியிடையாளை யினிக் கடிமணஞ் செய்யுந் தம்பி
அனுவுருத்திரன்
அல்லும் பகலுமுந்தன் அருளை நினைந்திருந்தால் அருமை தானென்ன வெகு பெருமை யுண்டாமே ஐயா
கிருட்டினர் வசனம்
கேளுங்குமாரனே! உமது பெரிய பிதாவாகிய பல பத்திர ராசா இதோ நிற்கிருர். அவரைக்கண்டு தோத்திரம் பண்ணிக்கொள்ளும் தம்பி.

- 149 -
அனுவுருத்திரன் அப்படியே அவர் கிருபை பெறுகிறேன் பிதாவே.
அனுவுருத்திரன் தரு
நன்ன நன்ன நான நன்ன நானு - நன்ன நான நன்ன நான நன்ன நான
1. தர ளநகை வண்ணக் கோவே போற்றி - பரந்
தாமனென வந்தவரே போற்றி போற்றி அரசர்க் கரசனுணுய் போற்றி - சுவாமி
அச்சுதன் முன்னவனே போற்றி போற்றி
2. பல பத்திர தேவ தேவா போற்றி - காம
பாலகன் நான் உன் சரணம் போற்றி போற்றி இலகுமோர் குண்டலதாத்ய் போற்றி - அட்ட
யானைதன் பெலமுடையாய் போற்றி போற்றி 3. நீல வேகம்பரனே போற்றி - ஐயா
நீண்ட மேனிக் கரனே போற்றி போற்றி பாலனுணதடி தொழுதேன் போற்றி - என்னைப்
பாக்கியம் வைத்தாள்வாய் போற்றி போற்றி
4. ஆயர்மனை தன்னில் வாழ்ந்தாய் போற்றி - எனது
அப்பர் முன்பு வந்தவரே போற்றி போற்றி தூய தண்டுக் கையானே போற்றி - எந்தன்
சொற்பெரிய ஐயாவே போற்றி போற்றி
பலபத்திரன் வசனம் கேளுங் குமாரனே! ஈசுபரன் கிருபையால் சகல சம்பத்தும் பெருகி, நீடூழி காலம் வாழ்ந்திருப்பீராக. (கிருட்டினரிடம்)
கேளுந் தம்பி! உன்னுடைய மகனுக்கும் வாணேசுரனு டைய மகளுக்கும் கலியாணமென்று சகலதேசத்து இரா

Page 78
- 150 -
சாக்களும் வரும்படி பறை முறை சாற்றுவித்து ஓமசாந்தி பண்ணிக் கலியாணம் முடித்துவைப்பீராக.
கிருட்டினர் வசனம்
அப்படியே உமது சொற்படி நடக்கிறேன் அண்ணு.
கிருட்டினர் கலித்துறை
தூணுய்ப்பருத்து மலைபோற்றிரண்டு துணைத்திடுதோள் வாணேசுரனெனப் பேர் பெற்றவாவுன் மகளுக்கு நீ சேணுர் மதிக்கத் திசையோர் துதிக்கவென் செம்மலுக்கு நாணுரு மங்கலப் பூணுரு மன்றல் நடத்துவையே
கிருட்டினர் வசனம் அதோ கேளும் வாணேசுரனே! உன் மகள் வசந்த சுந்த ரிக்கும், எனது மகன் அனுவுருத்திரனுக்கும் கலியாணம் முடிக்கச் சகலதேசத்து இராசாக்களுக்கும் ஒலை அனுப்பி, எங்கும் பறை சாற்றுவீராக.
வாணன் வசனம்
அப்படியே ஆகட்டும் இராசனே. (தலையாரியை நோக்கி) கேளுந் தலையாரிமாரே! எனது மகளுக்கும் அனுவுருத்திர குமாரனுக்கும் முறைப்படி கலியாணச் சடங்கு செய்வ தற்காகப் பறை சாற்றுவிக்க வள்ளுவரை அனுப்புவீராக.
தலையாரி வசனம்
அப்படியே கட்டளை தவருது அழைப்பிக்கிறேன் அரசனே.
வள்ளுவர் வரவு - கவி கள்ளினைக் குடித்து சுள்ளினைக் கடித்துக் காரணக்
கதைகளைப் படித்து
மெள்ளவும் சுறுக்கும் அடிக்கடி நடந்து மேளமும்
தோளிடை போட்டுத்

کر
- 151 -
துள்ளியே நடந்து சபையெல்லாமறியச் சுறுக்குடன்
போக வென்றெண்ணி வள்ளுவரிருவர் தஞ்சமாம் வாணன் வதிநகர் சபையில்
வந்தாரே
தரு நன்னன்ன நான நன்னன்ன னன்ன - நன நானனன்ன நாணு நனன்ன நான
1. கள்ளையும் நிறையக் குடித்துக்கொண்டு - கரு
வாட்டுத் துண்டையும் கடித்துக் கொண்டு துள்ளித் துள்ளி விளையாடிச் சாம்பார்
சுறுக்குடனே சபை தோற்றினரே 2. பல்லையுமிறுக்கிக் கடித்துக் கொண்டு - நல்ல
பறையையும் சுறுக்கிலே அடித்துக் கொண்டு தொல்லுலகரசாள் வாணன் முன்பு
சொகுசுடன் சாம்பார் தோற்றினரே
வள்ளுவர் வசனம் சரணமே சரணம் ஐயா. எம்மையழைத்த பணி விடை இன்னதென்று கற்பிக்க வேணுமையா.
வாணன் கவி
கறையடிக் கடாயானைக் கண்ணன் மாமகளென் மாதை மறையடிச் சடங்காய்ச் செய்யும் வதுவை
நாளைக்காமென்று
முறையடிப்படுத்தி நீங்கள் முதுநகர்ச் சனங்கள் கேட்கப் பறையடித்திடுங்கோ விந்தப்பணிக்குமை
யழைத்திட்டேனே
வாணன் வசனம்
கேளடா வள்ளுவரே! என்னுடைய மகளுக்கும் கிருட் டின இராசாவின் மகனுக்கும் நாளை கலியாணமென்று பறைமுறை சாற்றுவீராக.

Page 79
- 152 -
வள்ளுவர்
அப்படிக்கட்டளை பண்ணி வருகின்ருேம் சுவாமி.
வள்ளுவர் தரு 1. பறையடிக்கின்ருேம் ஊரவரே பார்த்திபன் கட்டளை ஊரவரே வெறிமயக்கிலே பேசுகிருனிவன்
மெய்சொல்லக் கேளுங்கள் ஊரவே
ளு תק الرو
2. நான்முகன்றனது மனையாட்டி
நல்ல ஞாலமெல்லாம் இங்கு நவைபோக்கி தாமரை மகளார் சிறிதேவி
தானுறை நகராய்த் துலக்கிடுவீர் 3. மன்னவர் மன்னவரே நீங்கள்
மானில மீதிலுள்ளவரே தென்னவன் தன்னுடை மகளார்க்கு திருக்கலியாணம் ஊரவரே வள்ளுவர் வசனம் எங்கள் வாணராசன் மகள் வசந்த சுந்தரிக்கும் கிருட்டின இராசாவின் மகன் அனுவுருத்திரனுக்கும் நாளை கலியா ணம் நடக்கும். சகல இராசாக்களும் மற்றும் சனங்களெல் லோரும்தடையில்லாது வருவீராக. 1. கானத்தைப்பாவாகப்பூட்டி
தானுக நெய்து தந்தாள் பாட்டி அந்திக்கடைக்கென்று வேண்டியங்கே போனேன் வந்தானென்ருே ராண்டி அந்திக்கு மரியவர் போலே
தூங்கிப்பாங்கிக் கென்றே பாசிச்சோ மனை
வாங்கி வாங்கி 2. சோமனையாண்டி மனையாட்டிக்குக் கொடுக்கவுமில்லை தாங்கிமண் கூடை சுமக்கும் தந்தலைக்குச் சும்மா டெண்டு
 

7
— 153 —
தான் வைத்துக்கொண்டான்
தட்டல் பண்ணியே தாவென்றல் அவன்றன் காலில் நித்தமும் பணிபணி யென்றன்
நட்டமோடா வென்று சொன்னுேம் அவன்
நானடுங் கூத்தின் நடங்கா ணவென்றன்
வித்தாரப்பச்சை வீடென்ருேம் அவன் மேலாக
வின்னமும் விளம்பிட நின்றன்
சொல்லக் கேளுங்கோ ஊரவரே
பேரான கட்டளை நானிங்கே
சொல்லப்பித்தனைப்போலே பிசத்துகிருன்
நாறுது கள்ளிவன் வாயினிலே
நாச்சிமார் வந்து மணந்திடுங்கோ
கோத்தைப் புருஷ ன் நடந்தது கூறுகிற் கோலரியும்
ஆத்தையை யிப்போ இழுத்ததற்கு
ஆருமறிந் திடுங்கோ
சாட்சியை வைப்பானுார வரே யிவன் தாயைப் பிடித்து இழுத்தேனே
ஆட்சியிறைமுன் வருவானே அப்போ
ஆண் பிள்ளை யென்றல்லோ தெரியும்
வாணன் மகளார்க்கும் அந்த
மாயவன் மகனென்னும் மன்னனுக்கும்
நாளைக்கலியாணம் நீங்கள்
நாட்டிலுள்ளோர்களே கேட்டருளும்
என்னவுங் கொண்டு வருவீர்கள் நல்ல
வேழத்தை யேற்கு மெம் ஊரவரே
வாழைக் குலைகள் தெரியக் கொண்டு
நீங்கள் வந்திடுவீரெங்கள் மன்னவன்முன்னே

Page 80
- 154 -
வள்ளுவர் சரணமேசரணமையா. பறைசாற்றியாச் சுது இராசனே.
வாணன் வசனம்
வள்ளுவரே! நீங்கள் உங்கள் ஆச்சிரமத்துக்குப் போவீராக, (சேவகரை நோக்கி) கேளுஞ் சேவகரே! பிரமாணரை அதிவிாைவில் அழைத்து வருவீராக.
சேவகர் வசனம்
அப்படியே அழைத்து வருகிருேம் ஐயா.
பிராமணர் வரவு - சபை கவி
முப்புரி மருவத்திலதந் துலங்கிட வேதம் முழங்கிட
மறைதெரிந் தோதிச் செப்பும் மந்திரங்கள் தொனிக்கப் பஞ்சாங்கம் செம்
புடன் தெர்ப்பையுங் கொண்டு மைப்படுகண்ணுளுக்கும் மால் மகற்கும் வதுவை நற்
சடங்குகளியற்ற விப்பிரர் தானும் வாணராசேந்திரன்
மேவியநகரில் வந்தனரே
சபை தரு
1. ஆதிபரா பரசோதி மகேசுர வாரணு நமோ வென்ன வேதபராயண மோதி யறிந்தருள் விப்பிரர் வந்தனரே
2. காசிமாயாபுரி வீறுடனேகியே கன்னியாதீர்த்தமுடன்
ஆதிநாராயணுவென்ன நினைத்து
அருந்தவர் வந்தனரே 3. ஆசீர்வாத சுலோக வசனம் அரி நமோசித்து மங்களம்
மகவிஷ்ணு மங்களம் ததாஸ்து அதி கிருஷ்ணந்தூ
ராமணர் வசனம் அதோ கேளும் இராசனே! எம்மையழைத்த பணிவிடை இன்ன தெனச் சொல்வீராக.

- 155 -
வாணன் வசனம்
அதோ கேளும் புரோகிரே! எனது குமாரத்தியைக் கிருட் டினராசாவின் மகனுக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டிய ஒம சாந்திக் கிரியைகளைச் செய்து முடிப்பீராக.
பிராமணர் வசனம்
அப்படியே முடிக்கிருேம் அரசனே
இதுவரை ஒமக்கிரியை பண்ணித் திருப்பூட்டு மங்களமும் செய்தாயிற்று. இனிஉமது சீதனங்களைக் கொடுப்பீராக.
வாணன் தரு
கம்பமதத்தும்பி முகப்பிள்ளை காவல் நிற்கும் வாசலிது அம்பிகை தன் மணவாளன் - நின்று
அருள் புரியும் வாசலிது குமரகுருபரன் அருள் கொண்டு நிற்கும் வாசலிது அமலனுடன் நடனமிடும் காளி யம்மன் நிற்கும் வாசலிது அரிகர புத் திரர் அருளாய் நின்று அருள்புரக்கும் வாசலிது கரிபரி தேர் காலாட்கள் நித்தங் காவல் செய்யும் வாசலிது வாசலிது வில்லி புத்தூர் நாதர் வாழ்ந்திருக்கும் வாசலிது தேசமரசாளும் மன்னர் வந்து தெண் டனிடும் வாசலிது மாமகளும் நாமகளும் நித்தம் வாழுகின்ற வாசலிது காமனையுங் கஞ்சனையுந் தந்த கண்ணனுடை வாசலிது ஆய்ச்சியர்கள் காய்ச்சியபால் களவாண்டவன்றன் வாசலிது பேய்ச்சிமுலைப்பாலுகந்த எங்கள் பேராளன் வாசலிது மூவசியர் குலம் வாழ மோட்ச முத்தி தரும் வாசலிது மாவசியர் மன்னர்வந்து திறை அளக்குமெந்தன் வாசலிது
வசனம் கேளும் மருமகனே! இந்தப் பூமி அந்தரஞ் சுவர்க்கம் மூன்று லோகமும் என்னுடைய வரப்பிரசாதம் போல என்றென்றும் ஆட்சிபண்ணி நீயுமென் மகளும், மதனும் ரதியும் போற் சுகமுற்று வாழ்ந்திருப்பீராக.

Page 81
- 156 -
அனுவுருத்திரன் வசனம்
மிகுதியும் சந்தோசமானேன் மாமனே.
சபை கவி
வண்ண அனுவுருத்திரனும் வசந்த மெய்ச்சுந்தரியும் மணம் முடித்து மாடம் நண்ணிய பின் கண்ணனும் பால் வண்ணனுந் தாமரசு புரி
நகரத்துற்ருர் எண்ணரிய கண்ணுதல் தன் பூசனையாய்ந்திடு
கண்ணராசன்ருனும் விண்ணவர் போற்றிடு கயிலை நாதனருளாற் தமது
நகர்க்கு மேவிஞனே
மங்களம்
ஐங்கர விநாயகர்க்கு மங்களம்
எங்கள் ஆதிபரமேசுரற்கு மங்களம் தெய்வ வள்ளி மணவாளனுக்கும் மங்களம் - சிறி வைகுந்த வாசருக்கும் மங்களம் மாமகட்கும் நாமகட்கும் மங்களம் வல்ல அனுருத்திரற்கும் மங்களம் இதைப் பாடினுேர்க்கும் கேட்டோர்க்கும் மங்களம் சிறி கமல நாராயண மூர்த்தியே செய மங்களம்
- நிறைவுறும் : -
 
 
 
 

- 157 -
ஆராய்ச்சிக் குறிப்புகள் தொடர்ச்சி:
(3) தெள் மோடித் தாளக்கட்டுகள்
முக்கியமான தென்மோடித் தாளக்கட்டுகள், மட்டக்களப்புத் தமிழகத்தில், முன்னரே வெளிவந்துள்ளன எனினும், அனுவுருத்திர நாடகத்துக்குரிய சில விசேட தாளங்களையும் சேர்த்துக்காட்டுதற் காக அனைத்தையும் தொகுத்து இங்குத் தருதல் அவசியமாகின்றது.
அரசர் கொலு வரவு, குமாரன் வரவு, குமாரத்தி, தோழி யர் வரவு, சேனதிபதி வரவு, தலையாரி வரவு, முனிவர் வரவு, முத லியனவாக வேறுபட்ட தாளங்களையும், ஆட்டங்களையும், குறிப்பிடும் தாளக்கட்டுகள் பல மட்டக்களப்பு நாடக வழக்கில் உள்ளன. ஆயி னும், தென்மோடி, வடமோடி இரண்டுக்கும் தனிப்பட்டவையாக உள்ள அடிப்படைத் தாள க்கட்டுகள் சிலவற்றிலேயே அவை ஒவ் வொன்றும் அமைந்து நடப்பதை நாம் காணலாம். கூத்துகள் தோறும் உள்ள அவ்வாறன அடிப்படைத் தாளக்கட்டுகளை ஒவ்வொரு மே 1 டி யிலும் உள்ள முதல்வர், அல்லது அரசர்க்கான கொலுவரவுத் தாளக் கட்டிலிருந்தே அமைத்துக் கொள்ளுதல் மரபு.
ஆதலால், தென்மோடிக் கூத்து ஒன்றின் அரசர் கொலுவுக் குரிய தாளக்கட்டினை முதலிற் காணுதல் பயன்தருவதாகும். அது:
'ததித்தளாதக ததெய்ய திமிதக
தாதிமிதத்தித் தெய்யே' என்ற முத்திரைத் தாளத்தை (பல்லவி போன்ற முதற் தாளத்தை)க் கொண்டு தொடங்கும். தாளக் கட்டின் இந்த முதற் பகுதி சுமார் 8-12 முறை திரும்பத் திரும் பப் படிக்கப்படும்போது, வரவுக் கூத்தர், களரி முகப்பில் நின்ற வாறே ஏற்றபடி ஆடுதல் நியதி.
அப்பால், பின்வருமாறு தாளக்கட்டு தொடர்ந்து செல்லும். அவ்வேளையிலேயே கூத்தர், அரங்கினுள் இறங்கி உரியபடி ஆடுவர்.

Page 82
- lis8 -
தொடர்ச்சி:-
'தச்சோந்திமி தந்தரிகிட திமிதக தாதெய்யதா தளங்கு ததிங்கிண தொங்க தீந்தா தீந்தாந்தா தாதெய்யதா தளங்கு ததிங்கிண தாதத்தோ தீந்தத் தீந்தத்தாம்-தளங்கு ததிங்கிண தாதத்தோ தீந்தத் தீந்தத்தாம் தாதத்தோ தீந்தத் தோதக தாதீந்தத் தோதீந்தத் தோதக தச்சோந்திமி தளங்கு ததிங்கிண தொங்கதீந்தா தீந்தாந்தா . ܫ̄ தனனம் தனதன தனனம் தனனம் தனதன தனனம் தந்ததனதான தனந்த தனதான ததிங்கிண தகதிக ததிங்கிண தகதிக தக தச்சோம் தகசோம் தளங்கு ததிங்கின தொங்க தீந்தா தீந்தாந்தா தனனம் தனதன தனனம் தனதன தனனம் தனதன தனனம் தந்ததனதான தனந்த தனதான ததிங்கிண தாதா ததிங்கிண தகதெய் தனன்ன தனன்ன தன தனன்ன தனன்னதன தக்கிட தரிகிட தரிகிட தகதிக தச்சோம் தகசோம் தா தெய்யதா தளங்கு ததிங்கின தொங்க தீந்தா தீந்தாந்தா தாந்தக தத்திமிதெய் தாந்தக தத்திமிதெய் தகதோம் தகதெய் தகதெய் தெய்யத் தெய்யத் தெய்யத் தெய்ய - (பின்னடை) தகதக தகதக தகதக தகதக - (முன்னடை) தாதெய்யதா தளங்குததிங்கிண"
இவ்வளவுடன் பொதுவான வரவுத் தாளக்கட்டும், அதற்கான ஆட்ட மும் முடிவுறும். உடனே சபை விருத்தமும், தொடர்ந்து சபைத் த ஷம் படிக்கப்படும்.
 

- l59 -
வரவுத் தாளக் கட்டுகளிலே, "தொங்க தீந்தா தீந்தாந்தா? என்பது நான்கு தனியிடங்களில் வரும். அப்போது கூத்தர் முறையே முதலாவதற்குக் களரிமுகப்பில் நின்ற நிலையில் அபிநயம் பிடித்த லும், மற்றைய ஒவ்வொன்றற்கும் இடம் பெயர்ந்து, இடப்பக்க மாக உள்ள ஒவ்வொரு வாட்டி முகத்திற்கும்(திசைப்பக்கத்திற்கும்)குதி நடை போட்டுச் செல்லுதலும் வழக்கம். ஒவ்வொரு "தொங்க தீந் தா'வை அடுத்துள்ள தாளக்கட்டுகளுக்குமேற்ப, அந்தந்த வாட்டியில் நின்று ஆடுதலும் வழக்கமாகும். "தொங்க தீந்தா" என்ற தாளம், வரவுத் தாளக்கட்டிலன்றி, வேறு ஆட்டங்களின் போது வரமாட் டாது. சில கூத்தர்களுக்குத் தொங்க தீந்தா தீந்தாந்தா' என்ற தாளத்தை நான்கிலிருந்து மூன்ருகக் குறைத்துக் கொள்வது முண்டு.
இப்பொதுத் தாளமே, சில சில மாற்றங்களோடு குமாரன், சேனபதி முதலியவர்களுக்கும் இடம்பெற்று நடக்கும். அத்தகை யோர்க்கு 'ததித்தளாதக” என்று தொடங்கும் இத்தாளக்கட்டு இறுதியில்,
* தக்கிட தரிகிட ததிங்கின தாதா தக்கிட தரிகிட ததிங்கின தாதா ததிந்த திந்தா தரிகிட தாதா ததிந்த திந்தா தரிகிட தாதா தாதக தோதக தரிகிட தச்சோம் தாதக தோதக தரிகிட தச்சோம் தா தெய்யதா தளங்கு ததிங்கிண’ என்று முடிவு பெறும்.
கட்டியகாரன், தலையாரி. சேவகன் முதலியோருடைய வரவின் போது கொலுத்தாளம் சற்றுக்கூடிய வீரந் தொனிக்கத் தக்கதாயிருத் தல் அவசியம். ஆதலால் 'ததித்தளாதக' என்பதற்குப் பதிலாக, “தாதாந் தெய் தெய்யதாதாந் தெய் தெய்ய” (8-12 முறை) என்று அது தொடங்கும். தொடர்ந்து:
தச்சோந்திமி தந்தரிகிட திமிதக தா தெய்யதா தளங்கு ததிங்கின தொங்கதீந்தா தீந்தாந்தா

Page 83
- 160 -
தனன்ன தனன்னதன கனன்ன தனன்னதன தக்கிட தரிகிட தரிகிட தகதிக தாதெய்யதா தளங்கு ததிங்கின’
என்று அது சென்று பொதுக் கொலுத்தாளத்தினிறுதி போல் முடி வுறும். அனுவுருத்திர நாடகத்தில், நாரத முனிவர்க்குரிய வர வுத்தாளம்:
*தத்தா தனத்தந் தனத் தானின
தத்தா தனத்தந் தனத்தானின’ (8-12 முறை) என்று தொடங்கும். இதன் தொடர்ச்சி:
"தெங்கதீந்தா விலிருந்து பெரும்பாலும் குத்தி மிதி ஆட் டங்கள் சிலவற்றைத் தவிரப் பொதுக் கொலுத்தாளத்திற் போல வே சென்று முடிவுறும்.
அரசகன்னியர் முதலான பெண்களுடைய வரவின் போது, “ததித்தளாதக’ என்ற பொதுத் தாளக்கட்டு, பெரும்பாலும் அப் படியே இடம் பெறுமாயினும், அதைேடு அன்னர் ஆடவேண்டிய நுணுக்கமான ஆடல்களுக்குரிய தாளக்கட்டுகளும் சில மேலதிகமாகச் சேர்க்கப்படுகின்றன. அவர்களுடைய மேலதிக ஆட்டத்திற்குரிய தாளக்கட்டுகள்:
தா தெய்யதா தளங்குததிங்கிண’ என்ற முடிபுத்தாளத்தைத் தொடர்ந்து:
"தாதத்தோ திந்தா திந்தா தெய் (4 முறை) தா தளங்கு ததிங்கிண தெய்யத் தெய்யத் தெய்யத் தெய்ய (பின்னடை) தகதக தகதக தகதக தகதக (முன்னடை) தா தெய்யதா தளங்கு ததிங்கிண தாதத்தி மித்தத் தெய்யோ
தாதாம் தாம் தெய்யோ (8 முறை) தா தெய்யதா தளங்கு ததிங்கிண தாதத் தாதத் தாதத்
தெய்யத் தெய்யத் தெய்ய (8 முறை)
 
 
 
 

- l6 -
தா தெய்யதா தளங்கு ததிங்கிண
தாகு தாகு தாதெய் - தக
தாகுதாகு தாதெய் (4முறை)
த கதெய் தகதெய் தகதெய் தகதெய் (முறையே
இடம் வலமாக)
தகதெய்யத் தெய்யத் தெய்யத் தெய்ய (பின்னடை) த 4 தக தகதக தகதக தகதக (முன்னடை) தக தாதெய்யதா தளங்கு ததிங்கின தத்ததிந்தக்க தாதாதெய் (4முறை)
தாதெய்யதா தளங்குததிங்கிண'
என்று முடிபு பெறும். தாதத்தி மித்தத் தெய்யோ' என்ற பகுதியைச் சபையிற் பாதிப்பேர் படிக்க, அதைத் தொடர்ந்து மற்றையோர் தாதாம் தாம் தெய்யோ’ என்று படிப்பது வழக்கம் இதுபோலவே, "தாதத் தாதத்தாத" என்ற பகுதியைப் பாதிப்பேரும், ‘தெய்யத் தெய்யத் தெய்ய" என்பதை மற்றையோரும் படிக்கவேண்டும். இப்பகுதிகள் படிக்கப்படும் போது, குந்து நிலை, சுழல் ஆட்டம் முதலிய நுணுக்க
மான சில ஆட்டங்கள் இடம் பெறக்காணலாம்.
கூத்தருக்குரிய தாளங்களை மாற்றும் போதெல்லாம் தென் மோடியில் தாதெய்ய தா தளங்கு ததிங்கிண என்ற தாளம் படிக் கப் படுதல் மிக முக்கியமான ஒன்ரு கும். 'தாகுதாகு தாதெய்' என் பதும் 'தத்ததிந் தக்க தாதா தெய்' என்பதும் பெண்களுக்கான மிகத்துரித ஆட்டங்களுக்குரிய தாளப்பகுதிகளாம்.
இவைமட்டுமன்றி, பெண்களுடைய ஆட்டங்களின்போது, இடைக்கிடை தக்கச் சந்தாதா தக்கச் சந்தரிகிடதெய்' (4முறை)
தந்தரிகிட திந்தரிகிட தக்கச்சோம் தாதளங்கு ததிங்கிண" என்ற தாளப் பகுதிகளுக்குரிய * குத்திமிதி" முதலான விசேட ஆட்டங்களும் பயின்று வரும்.
வீரர்களுக்குரிய இவைபோன்ற துரிதமான ஆட்டங்கள் * பிரட்டி மிதித்தல்", "துள்ளி மிதித்தல்’, ‘குத்தி மிதித்தல் முதலான வையாய்ப், பொதுத் தாளக்கட்டுக்குரிய ஆட்டங்களின் போதும்,

Page 84
- l62 -
கொச்சக முடிவிலும், தருக்கள் படிக்கும் போதும் பொருத்தம் நோக்கி இடம் பெறுகின்றன.
கொச்சகத் தருக்களின்போது, ஒவ்வொரு கொச்சக முடிவிலும், "பிரட்டி மிதித்த"லுக்குரியதாளம் இடம் பெறுதல் அவசியம். கொச்ச கத்துக்கான ஆட்டம் முடிந்ததும், முடியாததுமாக, குறிப்பிட்ட கொச்சகத்துக்குரிய தருவைக் கூத்தர் உடனே படித்தல் வேண்டும். உதாரணமாக: வாணுசுரன் கிருட்டினன் சேனபதிக்கு மறுமொழி கூறுகையில்:
"அச்சைக் கொழும்பு மராட்டிய நாடழகார் கண்டி மாமதுரை
கொச்சி நகராள் துரைமாரும்
என்பேர் கூறிலொடுங்காரோ
இசைப் பாடாய் இடைச்சிதுயில்
எடுத்துக் காட்டிலொளித்து வைத்து' (பக். 112)
என்ற கொச்சகத்தைப் படித்து முடித்ததும், பிரட்டி மிதித்தலுக் குரியதான:
“தாதத் தோதிந்தத் தோதக தாதிந்தத் தோதிந்தத் தோதக’ என்ற தாளத்துக்குரிய "வீருன" அந்த ஆட்டத்தை ஆடி முடித்து, உடனே:
'பச்சை இடைச்சியர் எச்சிலருந்திய பாங்கைச் சொன்னுேம் வாணன்
ஏங்கிப்போனன் என்று:சொல்லுங்கோ - இப்போ, மிச்சமதாய் மனம் அச்சப்பட்டும்மையும்
மெச்சிக்கொண்டானுயிர் வைச்சுக்கொண்டானென்று சொல்லுங்கோ " (Lu is. J 13),
என்ற அதற்குரிய தருவைத் தொடர்ந்து படிக்கின்றன். தன்னைப் பழிப்பதுபோற் கூறுமுகத்தால் எதிரியை இழிவு படுத்துதல், வீரச் சுவையை மிகுதிப்படுத்தும் ஒரு அணியாகும். அது இப் பாடலடிகளை ஒளியூட்டி நிற்பதை நன்கு காணலாம். இத்தகையகொச்சகத் தருக்க ளும் இவற்றுக்கான தாளக்கட்டுகள், ஆட்டங்கள் முதலியனவும்,
 
 
 
 
 
 
 

- l63 -
தென்மோடிக் கூத்துக்களரியை அதிரச் செய்து, பார்ப்போரை மிகுதி யும் உணர்ச்சியால் நிறைத்து அனைவரையும் மகிழ்வூட்டி நிற்பன வாம்.
இது போன்று, பலபத்திர தேவனது வரவுத் தருவின்போது இடம்பெறும் வீரத்தாளங்களும் வேறு சில உள்ளன.
"விண்டொத்ததண்டத்தை எடுத்து - கங்கை வேலையைக் காலாலே தடுத்துப் பண்டுற்ற வண்டத்திற் புடைத்துப் - பல
பத்திரதேவன் வந்தானே' என்ற பலபத்திரன் வருவுத்தருவைச் சபையோர் படித்து முடித்த தும், உடனே,
'தாகிர்தா தாதெய்யத்
தாகிர்தா தாதெய்யத் தந்தரிகிட திந்தரிகிட
தக்கச்சோம்" என்ற துரிதமான தாளத்துக்குப் பல பத்திரதேவன் ஆடி, மேடையை அதிரச் செய்கின்றன். இவ்வாறு பரந்து பட்டுக் கிடக்கும் தாளங்கள், தாளக்கட்டுகள், அவற்றுக் கான ஆட்டங்கள் ஆகிய யாவும் தமிழினத்தாரது பழம் பெருமை வாய்ந்த நாடகப் புலமையின் செம்மையையும் சிறப்பினையும் எடுத் துக்காட்டப் போதிய சான்ரு ய் மட்டக்களப்புத் தமிழகத்திலே விளங்குகின்றன.
வி. சீ. கந்தையா

Page 85
University of Jaffna
81220 IIIIIIIIIIIIIIIIII
ibrary
S 220
 
 


Page 86