கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் அலிமா முலையூட்டு படலம்

Page 1

.
|,

Page 2
*#*ې
y
 
 
 
 

ш у у л болуу 10
விலாதத்துக் காண்டம்
భ A. شرک کی "'\,\
പ്പെ " ti971 இல் இருந்து
க. பொ. த. கலே - உயர்தரம் தமிழ்ப் பரீட்சைப் பாடநூல்)
* பிறையாளன்'

Page 3
முதற்பதிப்பு: ஆவணி 1971.
பதிப்புரிமை : விளக்க ஆசிரியர்க்கு
பதிப்பு ;
யூரீ லங்கா அச்சகம்,
யாழ்ப்பாணம்.
விலே ரூ. 2-00
 

".
بر می رسمی في المسار " نيته "كميم 一つ ༽ 《2 %
இவ்விளக்கம் பொன்னின் குடத் துக்கு ஒரு பொட்டு. அலிமாவின்
முலையமுதம் இலக்கியக் கலை அமுதம்
ஆக்கப்பட்டு விட்டது. தமிழ் மாணவர் கள் அதிட்டசாலிகள். நம்முடன் சேர்ந்து அவர்களும் 'பிறையாள' னுக்கு நன்றி கூறுவார்கள்.
வணக்கம்,
பதிப்பாளர்:
് ஆ" "་" ܕܪ݂ܵܐ
d

Page 4
சீருப் புராணம்
சீருப் புராணம் ஒரு சீரான
புராணல், நபிநாயகம் (ஸல்) அவர்
களின் வரலாற்றைக் கூறுவது, கி. பி. 17-ம் நூற்றண்டில் தமிழ் நாட்டிற் பிரகாசித்த உமறுப்புலவர்
என்னும் பாவேந்தரால் பாடப்பட்
டது.
புராணம் என்றல்தொல்கதை. சீரு என்ருல் வரலாறு (சீறத் என்ற அரபுச் சொல் சீரு என மருவியது.) எனவே வரலாருகிய தொல்கதை என விரியும்.
மதத்தலைவர்களைக் காவிய
நாயகர்களாகக் கொண்ட காவிய '
வரிசையில் சீறப்புராணம் ஒன்று. குறிப்பிடத்தக்க ஒன்று.இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சியில் அதிகம் பங்கு இதற்கு உண்டு.
தன்னிகரில்லாத் தலைவனே
உடைத்தாய இப்புராணம் பெருங் காப்பியமாகக் கொள்ளப்படலாம்.
தமிழ் இலக்கண இலக்கியத்தில்
ஆழ்ந்த பயிற்சியும் இயல்பான கவித்துவமும் வாய்க்கப்பெற்ற கவிஞர் உமறுவுக்கு இப்பெருமை உரியது. பின்பற்றல் காவியமா
யினும் காவியச்சுவை துளும்பு
கின்றது.
 

இக்காவியம் விலாதத்துக்
காண்டம், நபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜூறத்துக்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. விலா தத்துக்காண்டம் கபிகாயகத்தின் (ஸல்) இளமை வரலாற்றைக் கூறு கின்றது. "விலாதத்’ என்ற அரபுச் சொல்லின் கருத்து பிறப்பு என் பதாகும். இரண்டாவது காண்டம்
இஸ்லாம் நெறி நபி (ஸல்) க்கு
அருளப்பட்ட செய்தியைக் கூறு கின்றது. ‘நுபுவ்வத்" - தீர்க்கதரி சனம், இறுதிக்காண்டம் நபி பெரு மானுர் மக்கமா நகரைவிட்டு மதி ணுவுக்கு ஓடிய செய்தியைக் கூறு கின்றது. 'ஹிஜூறத் - இடம் விட் டுப் பெயர்தல்,

Page 5
விலாதத்துக் காண்டம்
கடவுள் வாழ்த்து!
திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்
மதித்திடாப் பேரொளி அனைத்தும் பொருவினும் பொருவா வடிவினும் வடிவதாய்ப்
பூதலத்து உறைந்த பல்லுயிரின் கருவினும் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனேப் பொருதுதல் கருத்தே.
இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப
எடுத்தகைக் கதையினுல் உறுக்கி வரும் அவர் எதிர்நின்று ஒருமொழி கேட்ப
மறுமொழி கொடுத்திட அறியேன் தருமமும் பொறையும் அறிவும் மற்றறிந்து தன்னையும் என்னையும் அறியப் பெருவரம் தருவாய் ஆதிகா யகனே
பேதியாச் சோதிமா முதலே,

அலிமா முலையமுதம்
(நாட்டுப் படலம் முதல் கஃபத் துல்லா வரலாற்றுப்படலம் முடிய வுடைய விலாதத்துக் காண்டத்தின் 25 படலங்களில் நான்காவது பட லம் அலிமா முலையூட்டு படலம் )
அந்தக் காலத்தில் மக்கமா பதியில் குறைஷிகுலக்குழந்தைகளை நாட்டுப்புற அரபிப் பெண்களிடம் ஒப்பு வித் துப் பாலூட்டுவிப்பது செல்வந்தரின் வழக்கம். செவிலித் தாய்மாரின் வளர்ப்பால் சகோதர பாசம் பெருகும் என்ற நம்பிக்கை,
கபி பெருமான் (ஸல்) அவ தரித்த காலத்தில் குனையின் காட் டில் பெரும் பஞ்சம் நிலவியது. பஞ்சத்துக் காற்ற த அவ்வூர்ப் பாவையர்கள் கூலிப்பால் கொடுக் கும் நோக்குட்ன் மக்கமா நகரத் துக்கு வந்தார்கள். அப்படிவந்தவர் களில் ஒருத்திதான் அலிமா, தவப் பயன் போலும், முகம்மதுவைப் பாலூட்டி வளர்க்கும் பாக்கியத்
தைப் பெற்ருள், பாலமு தங்,
கொடுத்து, முகம்மதுவைப் பார் வணங்கும் ஆளாக்கிவைத்த செய்தி களே, இனி, கவிதைகளிற் காண்க. இதற்கு முன்,

Page 6
பிறந்தவுடன் அ ன் இன ஆமினு பால் கொடுத்தாள். அடுத்து, கபிநாயகத்தின் (ஸல்) பெரிய தந்தைஅபூகிய அபூல ஹபின் அடிமைப் பெண்ணுகிய துவைபத் துல் அஸ்லமிய்யா பால் கொடுத் தாள் இன்னும், நபி அவர்களின் பாட்டனுர் அப்துல் முத்தலிபின் மனைவியாகிய ஹாலாவும் பாலமு தம் கொடுத்தாள்
- பீரம்பேணி பாரந்தாங்கும் -
 

Ge Y Prs, a TV "U" T 7 NV
(அ) நபியை வளர்த்திடும் நல்விருப்பு
கலிவிருத்தம்
விண்ணவர் வேட்கை
அறிவத பறமுறை பயிற்றி அன்புடன் கெறிவளர் தரவளர்த் திடுவம் நீயெமக்(கு) உறுதியாய் முகம்மதை அருளென்று உன்னியே இறையுடன் மொழிந்தனர் அமரர் யாருமே, (l)
(அதயு - (அரபுச்சொல்) - ஒழுக்கம்)
பதிவுரை : "அறிவு - அறிவையும், அறம் அதயு அறநெறி களையும், முறைபயிற்றி - முறைப்படி பயிலச் செய்து, அன்புடன் நெறிவளர்தர வளர்த்திடுவம் - உள்ளன்போடு சாந்திமார்க்கம் வளரும்படியாக வளர்த்து வைப்போம். நீ எமக்கு உறுதியாய் முகம்மதை அருள் - ஆண்டவனே ! நீ எங்களிடம் நிச்சயமான நம்பிக்கையுடன் முகம்மதை ஒப்படைத்து அருள்புரிவாயாக." என்று உன்னியே அமரர் யாரும் இறையுடன் மொழிந்தனர் - என்று மிகப் பிரயா சைப்பட்டுத் தேவர்கள் அனைவரும் ஆண்டவனுடன் பேசி வேண்டிக் கொண்டார்கள். விளக்கம்: சாந்திமார்க்கம் வளரவேண்டுமென்ற தேவர்களின் பெருவிருப்பு, முகம்மது (ஸல்) அவர்களை அதற்குத் தக்கதாக வளர்த்திட வேண்டுமென்ற ஆவலைத் தேவர்களிடம் தூண் டியது. தூண்டவே தம் பெருவேட்கையை இறைவனிடம் தெரிவித்து, பணிவன்புடன் இறைவனைக் கேட்டுக்கொள்கின்ருர்கள்,
هير சாந்திநெறி வளர்த்திட அவதரித்த நபி பெரு மானரை வளர்க்கும் வேட்கையைத் தெரி
కొద్ది L = 1
n a NS
ബ്

Page 7
ܚܘܿܩ 2 ܚܣܝܚܳܣ
வித்தார்கள் எனக் கூறுவதன் மூலம் கவிஞர் பின்வரும் சாந்திமார்க்கத்துக்கு முன்னரே மணியோசை எழுப்பியுள்ளது கவித்துவ தீர்க்க தரிசனத்திற்கு மதிப்பு அளித்துவிட்டது.
இலக்கண விளக்கம் : அறம் அதபு: பண்புத் தொடர் அன்றி மொழிமாற்றம் (அந்நுவயம்) செய்யா மல் அறிவும் அதயும் அறமும் எனக் கருத் துரைப்பின் எண்ணும்மைத்தொகை என்க. வளர்தர (வளர): துணைவினைபெற்ற செயவென் னெச்சம்; தர: சீரளவைச் சீராக்கும் துணை வினை. இறையுடன் : ஏழாம் வேற்றுமை-இடம் > இடன் > உடன். இறைவனும் பேசியிருந்தால் உடனிகழ்ச்சி உடன்" என்க. யாரும்: யாவரும் என்பதன் இடைக்குறை.
தேவமகளிர் திருவுள்ளம் ܢ
கம்பெரும் பேறென நபியைப் பொன்னுலகு அம்பொனீர் ஆட்டிகல் லமுத மூட்டியே எம்பதிக் கரசென இயற்று வோமென உம்பர்தம் மகளிர்கள் உவந்து கேட்டனர். (2)
ப. உ. "நபியை - எம்பெருமானுரை (ஸல்) , நம்பெரும்பேறெனநாம் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகமிகப் பெரிய பேருகக் கருதி, அப்பொன் னுலகு அம்பொனீர் ஆட்டி - இப்பொன் னுலகின் நன்னீராகிய புண்ணிய நீரில் குளிப்பாட்டி, நல்லமுதம் ஊட்டி - (மண்வாழ் மாந்தர்க்குக் கிடைப்பதற் கருமையான) நல்லமுதை அன்புடன் தீத்தி வளர்த்து, எம்பதிக்கு அரசு என இயற்றுவோம் - இப்பொன்னுலகப் புரந்தரர் என்று சொல்லும்படியாக ஆக்கிவைப்போம்"

ܚܒ݂ 8 -ܣܗ
என உம்பர்தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் - என்று தேவமகளிர்கள் மகிழ்ச்சியோடு அல்லாஹ்"வை வேண்டிக் கொண்டார்கள்,
உ, வி: இவ்விரு கவிதைகளிலுமிருந்து அறிவூபி
டித் தனையரை அறவழி வளர்ப்பது தந்தையர் கடன் என்பதும், அமுதூட்டி அ ன் புடன் வளர்ப்பது அன்னையர் கடன் என்பதும் குறிப் பாக உமறு அவர்களால் உணர்த்தப்படுகின் றது அல்லவா ? "தாயொடு அறுசுவைபோம், தந்தையொடு கல்விபோம்" என்ற தமிழ்ப் பாடல் இங்கு நினைவுக்கு வருகிறது.
இ. வி; நம்பெரும் பேறு (நம்முடைய பெரும்பேறு):
ஆரும் வேற்றுமைத் தொகை, "நம்பெறும் பேறு" என்பது பாடமாயின் நாம் பெறும் பேறு எனக் கருத்துக்கொண்டு எழுவாய்த் தொடர் என்க. நாம், நம் என முதற்குறை யாகியது எனக் கொள்ளுதல் வேண்டு ம். எதுகை நோக்கி இக்குறை ஏற்படுவது மரபு எனக் கூறுவோருக்கு, முதலடி தவிர்ந்த ஏனைய அடிகளில் இக்குறை ஏற்படுவதே இயல்பான தெனக் கூறி 'நம் பெறும் பேறு" என்ற பாடத்தை விலக்குக. இது தமிழ்நாட்டு ஒலிப் பால் அச்சாகியது போலும்,
விலங்கின விருப்பு நான்மறை கபியைணம் மிடத்தில் கல்கினுல் பான் முலை கொடுத்தியாம் பரிப்பம் தம்மென மான்மரை விலங்கினம் அனைத்தும் வாய்திறந்து ஈனமில் அவன்தனை இரந்து கேட்டவே. (3)
ஆர்

Page 8
سيجيب 4 كسيكيه
ப, உ : நான்மறை நபியை எம்மிடத்தில் நல்கினுல் - நான்கு வேதங்களையும் அறிந்த விற்பன்னராகிய நபிநாயகத்தை (ஸல்) எம்மிடம் விருப்போடு கையளித்தால், பால்முலை கொடுத்து யாம் பரிப்பம் - முலேயமுதம் ஊட்டிப் பரிவோடு வளர்ப்போம், தம் என - தருக என்று, மான் மரை விலங்கினம் அனைத்தும் வாய்திறந்து, ஈனம் இல் அவன் தனே இரந்துகேட்ட - இயல்பிலே குறை எதுவுமில்லாத நிறைவான பரம்பொருனைக் கெஞ்சிக் கேட்டன:
உ, வி; நபி அவதாரத்தால் மாக்களுக்குக்கூடி நல்லுணர்வு எழுகின்றது போலும், வாய் திறந்து கதறும் கனைக்கும் வனவிலங்குகள் வாய் திறந்துபேசுவது நற்சகுனமன்றி வேறென்னே? கண் திறத்தல் போல் வாய் திறத்தலைக் கொள்க, முதன்முதலாகப் பேசுகின்றன. அதுவும் நல்ல பேச்சு,
அபரானி மொழியிலுள்ள தொளராத், யூனுணி மொழியிலுள்ள ஸ்பூர், சுர்யாணி மொழியிலுள்ள இஞ்சீல், அறபி மொழியிலுள்ள குர்கான் என்பன இறைவனுல் அருளப்பட்ட நான்கு வேதங்களாகும்,
நன்மறையென்பதன் எதுகை நோக்கிய நீக் டம் நான்மறை எனக்கொண்டிால், சிறந்த திருமறையாகிய திருக்குர்ஆனை இவ்வுலகு க்கு 'இறக்க" இருக்கும் நபிகள் நாயகம் (ஸஸ்) எனப் பொருள் கொள்க.
息 வி: இல்லவன்: இல்லான் (> இல்லவன், வினை
யாலணையும் பெயர், கேட்ட அன் சாரியை பெருத அஃறிணைப் பன்மை இறந்தகால வினை முற்று.

سیس» را بر اساسیته
குருவிகளும் கேட்டன இரைத்துஎழும் புள்ளெலாம் எகன் தன்னிடத்(து) உரைத்திடும் எங்கள்பால் உதவின் நன்நபி வருத்தமொன்(று) இன்மையா மதுரத் தேன்கனி அருத்தியாம் வளர்ப்பதற்(கு) ஐய மில்லையே. (4)
t4, உ இரைத்து எழும் புள் எலாம் - ஒலியெழுப்பி மேலெழு கின்ற பட்சிக் கூட்டங்கள் அனைத்தும், ஏகன் தன்னிடத்துஏகணுகிம இறைவனிடத்து, நன்நபி எங்கள்பால் உதவின் ை மன்னுயிர்க்கு நன்மைதரும் நபி பெருமானுரை (ஸல்) எங்களிடம் தந்துதவினுல், வருத்தம் ஒன்று இன்மையாகஎவ்வித துன்பமும் தாக்கமும் இல்லாமலே, மதுரத் தேன்கனி அருத்தி = நாவிற்கு இதந்தரும் தேன்சிந்தும் கனிகள் பல வற்றையும் ஆசையுடன் உணவாகக் கொடுத்து, யாம் வனர்ப்பதற்கு ஐயம் இல்லே - யாம் வளர்த்துக்கொள்வதில் தேவரீர் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை, என்று f உரைத்திடும் என்று முறையிட்டுக் கொண்டன .
(உதவின் வளர்ப்பதற்கு ஐயமில்லையே என்று புள்ளெலாம் உரைத்திடும் என இயையும்.) மனிதன் ஆசைப்படும் குருவிகளும் மனிதனை ஆசைப்படுகின்றன போலும், வளர்ப்புப் பட்சி களுக்கு நாம் கொடுக்கும் உணவு மதுரத்தேன் கனிகள் அல்லவா? இ. வி: எழும் புள் வினைத்தொகை. இன்மையாக
இன்மையா எனக் கடிைக்குறைந்து நின்றது,
கலித்துறை (கலிநிலத்துறை)
இறைவன் திருவுளம் என்று கூறிய பலமொழி கேட்டபின் இறையோன் மன்ற லங்குழ லாள் அலி மாவெனும் மடந்தை வென்றி யாமுலே கொடுப்பதும் வளர்ப்பதும் விருப்பம் அன்றி யேதகு மோபிறர் தமக்கென அறைந்தான். (6)

Page 9
= 6 -
(மன்றல் - மணம், வென்றி வெற்றி, அலிமா ஹலிமா என்னும் பேரின் தமிழ்வடிவம்) உ என்று கூறிய பலமொழி கேட்டபின் - இவ்வாறெல்லாம் அமரரும் அரம்பையரும், பறவைகளும், விலங்கினக் கறவை களும் வேண்டிக் கொண்டவற்றைத் திருச்செவி மடுத்த பின்பு, இறையோன் - அல்லாஹ் ஆகிய ஆண்டவனுர், மன் றல் அம் குழலாள் அலிமாவெனும் மடந்தை - மணம் ஊட்டிய கூந்தற் சிறப்பினளாகிய அலிமா என்னும் குடும்பப்பெண், வென்றியாக முலே கொடுப்பதும் வளர்ப்ப தும் விருப்பம் அன்றி - வெற்றிப் பூரிப்புடன் முலேயமுதூட்டி நபியை (ஸல்) வளர்த்திடுவது நம் கருத்தன்றி, பிறர் தமக் குத் தகுமோ பிறர் வளர்த்திடுவது தகுதியன்று, என அறைந்தான் என்று அழுத்தமாகத் திருவாய் மலர்ந்தருளினர்.
உ. வி; மனிதமகன், மனிதப் பெண்ணுலேயே
வளர்க்கப்படுதல் வேண்டும் என்ற நியதியே இறைவன் திருவுளமானது. எனவே, அனை வர் கோரிக்கைகளும் ஆண்டவனுல் நிரா கரிக்கப்பட்டு விட்டன,
இ. வி: தகுமோ : ஒகாரம் எதிர்மறைப் பொரு
ளது, விருப்பம் அன்றியே விருப்பமே அன்றி எனப் பிரித்துக் கூட்டுக. பிறர் தமக்கு தம், அ - இரண்டும் சாரியைகள்,
எதிர்வார்த்தை இல்லை இறைவன் இம்மொழி கூறலும் அமரர்கள் யாரும் பிறமொ ழிந்திலர் மனத்திடை பயம்பெரி தானுர்
சிறைவி ரிந்திடும் பறவையும் விலங்கினத் திரளும் மறுமொ ழிக்கிடம் இல்லெனப் போற்றின மகிழ்ந்தே, (6)

7 حس۔
உரைநடை : இறைவன் திருவுளம் இவ்வாருகியதும், விண்ண வர்கள் எவரும் வேறு வார்த்தைகள் கூறிஞரில்லை; குறிப் பறியாது கூறிவிட்டோமே எனக் கருதினர் போலும், மனதில் பயம் மிகுத்து காணப்பட்டார்கள், வட்டமிடும் பறவைகளும், முட்டாமற் செல்லும் விலங்கினங்களும் இனி எதிர்வார்த்தை பேசுதற்கு இடமில்லையென்று மனப் பூரிப் புடன் இறைவன் முடிவை ஏற்று இறைவனை வழிபட்டுக் கொண்டன,
உ. வி; வட்டமிடும் பறவைகளாற்கூட இறை வளை வளைக்கமுடியவில்லை. "வட்டமிட்டு இறை வனை எவராலும் வளைக்க இயலாது.
இ. வி: மொழிந்திலர்: முற்றெச்சம், இல்(லை). ஐம்
பால் மூ விடக் குறிப்புவினைமுற்று, இறுதி எழுத்துக் கெட்டு, இல் என நின்றது.

Page 10
ille
(ஆ) ஹலிமாவின் வரலாறு
கவிக்கூற்று கனக டற்றிரை ஆடைசூழ் பாரினில் கவின் கொண் டனைய நாட்டினில் அறபெனும் வளமைகா டதனுள்
குனேயின் என்றெரு பதிஅலி மாகுடி இருந்தார் இைைய ஊரினில் நடந்தவா(று) எடுததிசைத் திடுவாம். (7)
(கனத்தல் - ஒலித்தல், அறபு - அரபுநாடு. குனையின்-அரபு நாட்டிலுள்ள ஊர்ப் பெயர், 1
உ : கனேகடல் திரை ஆடைதழ் பாரினில் - ஒலிக்கும் கடல் திரையாகிய ஆடை அணிந்த பூவுலகில், கவின்கொண்டனைய நாடு அறபு எனும் வளமைநாடு - அழகு குடிகொண்டால் ஒத்த நாடு அராபிய நாடு என்னும் வளங்கொழிக்கும் நாடாகும், அதனுள் குனேயின் என்றெரு பதி அலிமா குடியிருந்தார் . அவ் அராபிய நாட்டில் குனையின் என்ற ஊரில் அலிமா என்னும் பெண் வசித்துவந்தாள். இனைய ஊரில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் - தவமகளாகிய அலிமா வசித்த இந்த ஊரில் நிகழ்ந்தவற்றை இனிக் கூறுவோம். வி: கனகடல் வினைத்தொகை. திரை ஆடை: தொகை உருவகம், நாட்டினில்: 'இன்'னும், "இல்"லும் தவிர்வழிச் சாரியைகள்,
கலிவிருத்தம்
பஞ்சப்பாடு !
கருங்கடல் நீரையுண் டெழுந்து கரர்க்குலம் பெருந்தரை எங்கணும் பெய்தல் இல்லையால் இருந்தபைங் கூழெலாம் கருகி எங்கனும் ப்ரந்தது சிறுவிலைப் பஞ்ச மானதே. (8)
蟹

سے 9 سست۔
உ. ந; சமுத்திர நீரையுண்டு எழுகின்ற கருமுகிற் கூட்டங் கள் அப்பெருநிலப் பரப்பில் எங்காவது பெய்தது இல்ல; அதனுல் அந்நாட்டிலேற்றிய பயிர்களெல்லாம் கருகிவிட்டன. இக்கருகிய காட்சியைத்தான் அப்பெருநிலப் பரப்பில் எங் கும் காணக்கூடியதாக இருந்தது. குறைந்த விலைக்கு மக்கள் வாங்கி அனுபவிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லாத ஒரே பஞ்சம் நாட்டில் தலேயெடுத்தது,
உ. வி: சிறியவிலைக்கும் (குறைந்தவிலே, மலிவான விலை) பொருட்கள் இல்லையென்றபடி அந்நாட் டில் அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பொருட்களும் கருகியதால் இந்நிலை ஏற்பட்
• 99ئيسL
கொலை அரசின் கொடுங்கோன்மை
மலிபசி யானையாய் வறுமை சேனையாய்ப் பலபரி பவங்களாய்ப் பழிர தங்களாய்க் கலியமைச் சர்த்துறைக் கணக்கர் கோபமாய்க் கொலையர சன்கொடுங் கோல்ா டாத்தினுன், (9)
ப, உ : மலிபசி யானையாய் - அடங்காப் பசி, யானைப் படையாய், வறுமை சேனையாய் - பஞ்சம் காலாட் படையாய், பவம் பல பரிகளாய் - பாவங்கள் பலவான குதிரைப் படைகளாய், பழி ரதங்களாய் - பழிச்சொற்கள் தேர்ப்படைகளாய், கலி அமைச்சர் (ஆய்) - சனி, வஞ்சகம் மந்திரிகளாய், துறை (தொறும்) கோபம் கணக்கராய் வாழ்வின் ஒவ்வொரு துறைகளிலும் சினப்பு கணக்காளர்களாய் (கொண்டு) , கொலே அரசன் கொடுங்கோல் நடத்தினுன் - கொ?ல என்னும் அரசன் கொடுமையான ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தான்.
சாரம்: பசி பட்டினி காரணமாக, கணந்தேர றும் உயிர்கள் மாண்டு மடிகின்றன என்பது
33 վ. 2

Page 11
கருத்து, எங்கும் கொலை ! ஒரே கொல்
கோரக் கொலை 1
உ. வி பஞ்சப்பாட்டில் கற்பனை கண்விழிக்கும் கவிதை இது, உருவக அமைப்பு, பஞ்சப் பதைபதைப்பிற்கு அருமை தருகிறது. பஞ்சத் திற்கு இரங்கும் நெஞ்சம் பஞ்சப்பாட்டில் இனிக்கவும் செய்கிறது. அழகிய குனேயின் அருவருப்பான கொலைக் காடாகிவிட்டது.
பெண்மையரசுக்குப் படைவகுத்த புகழேந்தி போல், கொலையரசுக்கு இது இது நாற்படையென வகுத்த உமறுவின் கற்பனை பஞ்சத்திற்கு உயர் வளித்துவிட்டது.
பசியை யானையாக உருவகித்து, பசிக்குக் காரணமான வறுமையைக் காலாட்படை என் றதில் ஒருவித வறுமை காணல்கூடும். ஆனல், இங்குத்தான் புலவரின் திறன் சுடர்விடுகின்றது. வறுமை ஒரேயிடத்தில் இல்லை, சந்து பொந்து மூலை முடுக்கெல்லாம் ஒடித்திரிகின்றது. இராணுவ வீரரின் போக்கும் இப்படித்தான்,
ஒரு நாட்டில் பொருனாதாரவளம் இல்லை யானுல் அந்நாடு பசி, பாவம், பழி, வஞ்சனே, சினப்பு முதலான இழிகுணங்கள் எல்லாவற்றுக்குமே ஆதாரமாய்விடும். சகல துன்ப விளைவுகளுக்கும் காரணம் வறுமையே. கவிஞரின் நோக்கு ஒருவித சோசலிச நோக்கு,
சினப்பு எப்பொழுதும் தப்புக்கணக்குப் போடு வது. எனவே, குனையின் நாட்டில் தப்புக்கணக்கு மிஞ்சிவிட்டது எள்பதும் கருத்து.
鞑
 

ം !! -
இ. வி. தொறும், கொண்டு என்பன இரண்டும்
சொல்லெச்சம், ஆய்" என்பதனை அமைச்ச ருடனும் கூட்டுக.
இலம்என்னும் அரசு
குலமுறை மன்னர்ப்போய்க் கொடிய பாதகர் தலைநிலம் புரந்திடும் தகமை போலவே நலனுறு கொடையெனும் காம வேந்துகெட்டு) இலனெனும் அரசு வீற் றிருந்த காலமே, (10)
(வீற்றிருத்தல் - வருத்தமின்றி இனிதிருத்தல்)
ப உ : குலமுறை மன்னர்போய் - பரம்பரை அரசர்களின் பண் பான ஆட்சி மறைந்து, கொடிய பாதகர் தலைநிலம் புரந் திடும் தகமை போலவே - பழி பாவத்துக்கு அஞ்சாத எத்தர் களின் மூளை நிலமாளும் தன்மைபோல, நலன் உறு கொடை யெனும் நாம வேந்து கெட்டு = நன்மை தருகின்ற வள்ளன்மை என்னும் புகழ்தரும் ஆட்சி தொலைந்து, இலன் எனும் அரசு வீற்றிருந்த காலம் - இல்லேயென்னும் அரசு ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்த காலம் அக்காலமாகும்.
உ. வி: ஈவாரும் ஏற்பாருமில்லாத ஒரு நாட்டுக் குப் பதிலாக இரப்பாரின் நாடே ஆகிவிட் டது அரபுநாடு, பண்புகளைப் பாத்திரங்களாக் கும் உமறுவின் திறமை சிந்திக்க வேண்டியது. பரதேசியின் மோட்சப் பிரயாண ஆசிரியர் போலில்லாவிட்டாலும் உருவக அமைப்பு விவேகமாக உள்ளது.
இ வி. போல: செயவென்னெச்சம், நலன்: நலம் என்பதன் போலி, ಡಿಟಜ್ಜಿ இலம் என்பது இலன் என நின்றது. ல்லாமை என்பது கருத்து. “அம்” பகுதிப் பொருள் விகுதி. பாடு என்னும் தொழிற் பெயர் விகுதியுடன்

Page 12
-- 2 7 ܚ
சேர்ந்து இலம்பாடு எனவும் வரும். வீற்றிருத் தல் ஒரு சொல்.
செல்வம் படைத்தவர் தரித்திரம் படைத்திடல்
உருத்திரண் டெழுந்தபொய் யுடம்பை மெய்யெனத் திருத்துபுண் ணியம்புகழ் தேடி நாடொறும் வருத்தமின் றிப்பொருள் வழங்கு மேலவர் தரித்திரம் படைத்திடுஞ் சாம காலமே, (11)
(சாமம்-பஞ்சம். நாள் + தொறும் = நாடொறும்)
ப, உ; உருத்திரண்டு எழுந்த பொய் உடம்பை - பிள்ளைமைக் கரலத்திலிருந்து ஒவ்வொரு உறுப்பும் வளர்ந்து திரண்டு முழுமைபெற்ற பொய்யுட8ல, மெய்யெனத் திருத்தும் புண் ணியம் புகழ்தேடி - அவ்வுடல் பொய் என்பதை இல்லை, இல்ல மெய்யென்று திருத்தி வைத்திடுகின்ற புண்ணியத்தை யும் புகழையும் தேட்டமாக்குவதற்காக, நாள்தொறும் வருத்த மின்றிப் பொருள் வழங்கும் மேலவர் - பொருள் போகின் றதே அதஞல் நாம் பின்னுக்குத் துன்பப்பட வேண்டி வருமே என்கின்ற மனவருத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் இரப்போர்க்குப் பொருளே அள்ளிக்கொடுக்கும், மேலவர் தரித்திரம் படைத்திடும் சாம காலமே - பெரியோர்களும், தரித்திரத்தைத் தேடிக்கொள்ளும் பஞ்ச காலம் அதுவாகும். உ. வி: உடம்புக்கு "மெய்" என்றும் ஒரு பெய ருண்டு. நிலைத்திருக்காத உடல் பொய்அல்லவா? இது மெய்யானது. தமிழ் இலக்கண நூலோர் இவ்வாறு கூறுவதை மங்கல வழக்கு என்பர்.
ஆனல், இங்கே கவிஞர் உடல் பொய் அன்று, பொய் என்று கூறுவதை மெய் என்று திருத்திவிடி வேண்டும் என்ற ரீதியில் செல்கின்ருர், அதற்கு நல்லதொரு காரணம் தருகின்றர். அதுவே நுங்

yr
- d -
பம் பொய்யிலிருந்து புண்ணியம் பிறக்காது, புகழ் பிறக்காது என அழகுபடக் கூறுகின்ருர், மிக ஆழமான ஒரு தத்துவப் பரவையில் சுழியோடு கின்ருர் கவிஞர், புண்ணியம் நிலையானது; நிலை யான புண்ணியம் பொய்யிலிருந்து எப்படிப் பிறக்க இயலும் என்பது வாதம். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. பொய்யிலிருந்து பிறப்பது பாவமும், பழியும். ஆகவே, புண்ணியத்தையும், புகழையும் தேடுவதற்குக் காரணமாக உள்ள இவ்வுடலைப் பொய் என்ருல், அப்படிக் கூறுவது பொய் என்ற சிந்தனை ஓட்டத்தில் "மெய்யெனத்திருத்து புண் னியம்' என்ருர்,
இட்டார் பெரியோர் - மேலவர்.
இ. வி: தேடி செயவென்னெச்சத்திரிபு, பரிசுகெட்டு
வாழ்ந்தவன்' என்பதுபோல் நின்றது.
உற்பத்தி நாசம் நெடுநிலம் பாரறத் தொட்டு நீரிறைத்(து) இடும்பயிர் செய்துகாத் திருந்து கள்வரால் படுமுறைப் பாடெலாம் படப்ப லித்திடாக் கொடுமையா லகவிலை குறைந்த காலமே. (12)
ப, உ : நெடுநிலம் பார் அறத்தொட்டு நீர் இறைத்து இடும்பயிர் செய்து - நீண்ட நிலப்பரப்பில் அதிகம் ஆழமாகத் தோண்டி நீர்பாய்ச்சி, அந்நீர்ப் பாய்ச்சற்பயிர்களே ஏற்றி, காத்திருந்துகாவல் செய்திருந்து, கள்வரால் படுமுறைப்பாடெலாம்பட (வும்) - திருடர்களால் உண்டாகின்ற வில்லங்கங்கள் στουουπ வற்றிற்கும் ஈடுகொடுத்திருந்தும், பலித்திடாக் கொடுமை பால் பயிர்கள் பலிக்காமல் கருகிப்போன கொடுமையால்,

Page 13
- 4 -
அகவிலே குறைந்த காலமே - அடக்கவிலேப் பொருட்களெல் லாம் இல்லாமற் போனகாலம் அக்காலமாகும்.
வி: அத்தேசத்துப் பயிர்களெல்லாம் நீர்ப் பாய்ச்சற் பயிர்களாகும். அதுவும் ஆழமாகத் தோண்டி நீர் இறைத்தல் வேண்டும். அப்படி ஆழநீர் எடுத்துப் பாய்ச்சியும், பயிர்களைக் கண்கொட்டாமற் கண்காணித்தும். கள்வர் களின் தொல்லைகட்கு ஈடுகொடுத்தும் பயன் தருகாலத்தில் அவையெல்லாம் கருகிப் போய் விட்டன. அதனுல் எங்காவது தப்பியொட்டி, பயிர் பச்சை பலன் தந்தது என்ருல் அப்பயன் அடக்கமான விலயில் இருக்காது. பொருள் குறைவு; தேவை அதிகம். அதனுல் அதிகவிலை பொருட்களின் விலையாகி விட்டது. சாதர ரண மக்கள் அதிகவிலை கொடுத்து வாங்கக் கூடியவர்களல்லர். பட்டினியும் சாவும்தான் மிச்சம்,
அதிகவிலே அகவிலை ஆனது, அன்றி. வீட்டுப்
பாவனைப் பொருங்கள் விலைகூடிவிங்டன எனலு மாம். (அகப்பொருட்களின்) விலை அகவிலை, நுகர்ச் சிப் பொருட்களின் விலை மாத்திரமன்று. நாளாந்தப் பாவனைப் பொருட்களின் விலையும் கூடிவிட்டது. அகவிலையும், சிறுவிலையும் உற்பத்தியில்லையென்று சொல்லுகின்றன. அகவிலே குறைந்த காலமாத லால் கூடுதலான விலை கொடுத்து வாங்கவும் பொருளில்லையே.
3.
வி: படவும்: உம்மை தொ க் கது செய்யுள்
விகாரம்,
A,

எங்கும் பிரேதமயம்
காயிலை கிழங்கெலாம் கருவறுத் துக்கான் மேய்விலங் கினம்பல கொன்று மென்றுமே தீயவப் பசிப்பிணி தீண்ட லால்ஜனம் மாய்வுறும் சடம்பல மலிந்த காலமே (13)
ப. உ. : காப் இலை கிழங்கெலாம் கருவறுத்து = காயும் இலையும் கிழங்குகளும் ஆகிய தாவரப்பகுதியெல்லாம் முற் ரு க ஒழியுமட்டும் தின்று, (அதன்பின்) கான்மேய் விலங்கு இனம்பல கொன்று மென்றும் - காட்டு மேய்ச்சற் கால் நடைகள் பலவற்றையும் கொன்று உண்டும். (இன்னும் பசி போகாமையால் அவற்றின் எலும்புகளே உமிழ்ந்தும், தீய அப் பசிப்பிணி தீண்டலால் - (இதன் பிற்பாடும்) மிகக்கெரடிய பசிப்பிணியே கூடி வருதலால், சனம் மாய்வுறும் சனமெல் லாப் சாகும், சடம்பல மலிந்தகாலமே - (அதனுல்) பிரேதங் கள் எங்கும் மிகக் கூடுதலாகக் காணப்பட்ட காலம் அக்
காலமாகும்.
உ. வி: இனி, பயிர் பச்சை உண்டாக முடியாத அளவுக்கு அவற்றையெல்லாம் கருவறுத்தா யிற்று. மேய்ச்சல் மந்தைகளைத் தானும் கொல்வதிற்கில்லாமல் அவையும் ஒழிக்கப்பட்டு விட்டன. எலும்புகளை மென்று வாழுவதும் சாத்தியமில்லை. பஞ்சத்தை உமறுபோல் வேறெவரும் இவ்வளவு வளமாகச் சித்திரிக்க இயலாது. இது பஞ்சத்தின் கவிதை வளம், பயிர் பச்சை இல்லை, கால்நடைகளில்லை; மணி தன்தான் மிச்சமாக உள்ளவன். அவனும்தான் பிரேதமாகி விட்டிான், என்ன பஞ்சமோ இது !

Page 14
குலப்பிறழ்ச்சி
கலந்தருங் கற்பெனும் நாமங் கெட்டுடல் உலர்ந்தறப் பசியினுல் ஒடுங்கி யினர்தம் இலக்தொறும் புகுந்திரங் திடைந்து வாடிகற் குலந்தலை மயக்கிடும் கொடிய காலமே (14)
உ. ந: அனைவருக்கும் நன்மைதரும் கற்பென்னும் வார்த்தையே ஒழிந்தது; உடலம் உலர்ந்து சுருவாடாகியது; மிக்க பசியினுல் எலும்புக் கூடாகியது ஈனர்களின் இல்லந் தோறும் சென்றிரந்தும் கட்டுவிட்டது. கட்டுவிட்டு வாடியது. இது உயர்சாதி, இது இழிசாதி என்றறிய முடியா அளவுக்கு இருசாதிக் காரர்களும், ஒரு சாதியாய்க் கலந்த கொடிய காலம் இப்பஞ்சகாலமாகும்.
உ. வி. எல்லாரும் ஒரு குலமாயது பஞ்சத்தால்
ஏற்பட்ட காரியம்.
கற்பு - கலங்காத நிலை இதுதான் கலங்கிய நிலையாயிற்றே என்பார் "கற்பெனும் நாமங் கெட்டு என்ருர்,
பஞ்சப் புயல்
மதலைகள் பிறர்மனே வாயில் துங்கிங்ண்(று)
இதயகொங் திருகையேத் திரப்பக் கண்டுதாய்
விதிகொலென் றேங்கிட வேறு வேறதாய்ப்
பதிகுலேத் தெறிந்திடும் பஞ்ச காலமே.
(ஏந்தி + இரப்ப = ஏத்திரப்பர் (5) ப. உ; மதலைகள் பிறர்மனை வாயில் தூங்கி நின்று - சின்னஞ்
சிறு குழந்தைகள் பிறர் வீட்டு வாசலிலே நான்று கொண்டு
நின்று, இதயம் நொந்து இருகை ஏந்தியிரப்ப - மனம் வெதும்பி இருகைகளையும் தூக்கிப் பிச்சை இடுக 6 ன்
 

سٹینل- \\ 17 ھیئت
றிரந்து கொள்ள, (இதனை த்) தாய் கண்டு . இத்துன்பக் காட்சியைப் பெற்ற தாய்மார் பார்த்து, விதி கொல் என்று ஏங்கிட - இதுதான் நாம் செய்த தீவினைப் பயனே என்று ஏக்கமுற, வேறு வேறதாய்ப் பதிகுலைத்து எறிந்திடும் பஞ்சகாலம் - ஊரவர்களேப் பதிகுலையச்செய்து அடுத்தடுத்த ஊருக்கு வீசி எறிந்துவிடும் கொடிய பஞ்ச காலம் இக்காலமாகும்.
வி: பஞ்சம் புயலப்போல் மக்கள் வாழ்க்கை யைச் சின்னபின்னப்படுத்தி, வீடுவிட்டு ஊரை விட்டு, ஊர் ஊராக அலையச் செய்த காட்சி யைப் புலவர் மிகச் சாதுரியமாக வருணிக் கின்ருர், நமது மதிகுலைக்கும் அளவுக்கு பஞ்சம் பதிகுலைத்தல் உமறுவை அதிகம் தாக்கி விட்டது போலும், பேய்களைப் பாடுவதற்கு ஜெயங் கொண்டார் போல் பஞ்சத்தைப் பாடு தற்கு உமறுப் புலவரோ ?
வேறு வேறதாய்ப் பதிகுலைத்திடும் பஞ்ச
காலம் : தாயையும், பிள்ளையையும் பிரித்திடும் பஞ்சம்; கணவனையும் மனைவியையும் பிரித்திடும் பஞ்சம்; சகோதரரையும் சகோதரியையும் பிரித் திடும் பஞ்சம் என எல்லாப் பஞ்சமும் கொள்க.
@,
வி. கொல் ; வினுவிடைச் சொல்.
பஞ்சமென் ருெருகொடும் பாவி தோன்றிடத்
துஞ்சினர் சிலர்தனி துறந்த பேர்சிலர்
தஞ்சமற் றடிமையாய்ச் சார்ந்த பேர்சிலர்
அஞ்சியே புறநக ரடைந்த பேர்சிலர், (16)
சீ. பு, 3

Page 15
N
سیسے 18 سے
ப, உ; பஞ்சம் என்று ஒரு கொடும்பாவி தோன்றிட - பஞ்ச
மென்னும் மாபாவி தோன்றியதால், சிலர் துஞ்சினர் - சிலர் மாண்டு மடிந்தார்கள், தனி துறந்த பேர் சிலர் - தனியாகச் சுற்றத்தைவிட்டுப் பிரிந்தவர்கள் சிலர், தஞ்சமற்று அடிமை யூபாய்ச் சார்ந்தபேர் சிலர் ஒதுங்குதற்கு இடமில்லாதபடி யால் சுயமரியாதை இழந்து பிறருக்கு அடிமையாஞர்கள் சிலர், அஞ்சியே புறநகர் அடைந்த பேர் சிலர் சாப் பயத்தினுல் நகரைவிட்டு வெளியேறினர்கள் சிலர்.
இ. வி புறநகர்: முன்பின்னகத் தொக்க ஆரும்
வேற்றுமைத் தொகை. சொற்போலி எனக் கூறுவர், அற்று காரணப் பொருளில் வந்த செய்தென் எச்சம்.
குனையின் ஊரவர் ஆலோசனையும் அவதிநீக்கமும்
கருப்பினிற் சனமெலாம் ‘கலைந்து போதலால் உரைப்பரும் குெைனனும் ஊருள் ளோரெலாம் நிரைப்பெறக் கூடியே நினைத்து சாவிநின்(று) ஒருப்பட உய்யுமா ருெத்துப் பேசினுர், (17)
(கருப்பு - பஞ்சம். உசாவல் - விசாரித்தறிதல், ஒருப்பட - ஒருமனதாக,
ப, உ; கருப்பினில் சனமெலாம் கலந்து போதலால் - பஞ்சம்
a rootion as todia Gir எல்லோரும் ஊர் விட்டு ஊர் கலேந்து போவதால், உரைப்பரும் குனன் என்னும் ஊருள்ளோரெ
லாம் நிரைப்பெறக்கூடியே - மதிப்பு மிகுந்த குனேயினூர்
மக்களெல்லாம் ஒழுங்காக ஓரிடத்தில் கூடி, நி இனத்து உசாவி நின்று தங்கள் கதியற்ற நிலையை நினைத்து ஆளுக்காள் விசாரித்து, ஒருப்பட உய்யுமாறு ஒத்துப் பேசி ஞர் - தாமெல்லோரும் ஒருமுகமாக உய்யும் வழியைப்பற்றி ஒத்துப்பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

鲨
வ 19 வ
இ. வி. கருப்பினில்: "இல்" மூன்ரும் வேற்றுமை ஏதுப்பொருள், கல்வியிற் பெரியல் கம்பன் என்பதுபோல் நின்றது.
மக்கம் ஏகும் முடிபு மகிதலத் துயர்பதி மக்கம் என்னுமூர் புகுதலே கருமம்ாம் பூவை மாரணி நகிலமு தூட்டிட மதலே நல்குவார் இகல்புரி தெரித்திரம் இலையென் ருேதினர். (18)
(மகிதலம் - பூமி, நகில் - முலை. இகல் - பகைமை)
ப. உ3 மகிதலத்து உயர்பதி மக்கம் என்னும் ஊர் புகுதலே கருமம் - இப்பூமியில் உயர்வுக்குரிய இடமான மக்கமா நக ருக்குச் செல்லுதலே புத்தியான செயலாகும்; நம் பூவைமார் அணிநகில் அமுது ஊட்டிட மதலே நல்குவார் - நம்முடைய பெண்கள் அழகிய முலேயமுதுரட்டிட (அம்மக்கமாநகரத் தனவந்தர்கள்) தங்கள் குழந்தைகளைத் தருவார்கள்; இகல்புரி தெரித்திரம் இலேனன்று ஒதினுர் - நம்மனதில் போராட்டத்தை எழுப்பியுள்ள தரித்திரம் அதனுல் தீர்ந்துவிடும் என்று கூறிக் கொண்டார்கள் ,
இ. வி: கதி, "கெதி’யானதுபோல், தரித்திரம், *தெரித்திரம் ஆனது. புரி தெரித்திரம் : வினைத் தொகை, -
பயண ஒழுங்கு
மக்கமா நகரெனும் வரிசை யூரதில் புக்கியாம் பிழைப்பது பொருட்டென் றெண்ணியே மிக்கபே ரனவரும் விளம்பிக் காலமே தக்ககற் பயணமென் றெடுத்துச் சாற்றினர். (19)
(பொருட்டு - கருத்துள்ளது, செய்யக்கூடியது. J

Page 16
魯。
ܚ܂ 20 1 : ܚܕܝܗܝ
ந: சிறப்பு மிகுந்த மக்க மாநகருக்குச் சென்று அங்கே பாம் பிழைத்துக் கொள்வதே பொருத்தமான காரியமாகும் என்று நினைந்து, அங்கு கூடியுள்ள மக்களில் அதிகமான வர்கள் இம்முடிவை அனைவருக்கும் தெரியப்படுத்தி, நாளைக் காலேயிலே பயணம் ஆரம்பமாகும் என்று அழுத்தமாகப் பலர்களும் தெரிவித்தார்கள்.
வி: பொருட்டு (பொருள் + து); குறிப்புவினை
முற்று; பிழைப்பது என்னும் தொழிற்பெயர் எழுவாய்க்குப் பயனிலையாகும். காலமே தெரித் திரம் என்பதுபோல் மக்கள் வழக்குச் சொல் லாகும்.
அலிமாவின் அற்புதக் கனவு
ஆரிது ம%ன அலி மாகண் துஞ்சிட வேரிய மடிமிசை விருக்கம் ஒன்றதில் தூரிலே பணர்எலாம் கனிகள் தூங்கிடச் சீர்பெறு கறைக்கணி அமுதம் சிந்தவே (20)
(வேரி வாசனை, விருக்கம் - விருட்சம், மரம்; அட்சம் அக்கம் ஆனதுபோல், விருட்சம், விருக் கம் ஆனது. (அக்கம் - கண்)
ப. உ; ஆரிது மனை அலிமா கண் துஞ்சிட (குனேயின் ஊாவ
ரில் ஒருவராகிய) ஆரிது என்பவரின் மனையாள் ஆகிய அலிமா நித்திரை செய்ய, வேரியமடிமிசை விருக்கம் ஒன்று-அவளின் வாசனை மிகுந்த மடியிலே விருட்சமொன்று நிற்கவம், அதில் தூரிலே பணர் எலாம் கனிகள் தூங்கிட - அவ்விருட்சத்தில் இலேகள் மூடியுள்ள கிளேகளெல்லாம் கனிகள் தொங்கிக் கொள்ளவும், சீர்பெறு நறைக்கனி அமுதம் சிந்த சிறப்பான மணம் மிகுந்த கணிகளெல்லாம் தேனைச் சொரியவும்-,
 
 

was 21 -
மரகத நிறமரம் மடியில் தோன்றியே சொரி கதிர்க் கனியெலாம் துய்ப்பச் செங்கயல் வரிவிழி பயில் அலி மாக விைனைத் தெரிதரக் கண்டெழுந்(து) எவர்க்கும் செப்பினுள் (21) ப. உ. மரகத நிறமரம் மடியில் தோன்றியே சொரிகதிர்க் கனி யெலாம துய்ப்ப - பச்சை மணிவண்ணத்தில் அலிமாவின் மடிபில் தோன்றிய அம் மரம் சொரிகின்ற ஒளிக்கனிகளே எல்லாம் (மக்களெல்லோரும்) சுவைக்கவும், செம்கயல் வரி விழி மயில் அலிமா கணுவினைத் தெரிதரக் கண்டு - செங் கயல் விழியாளாகிய மயில்போன்ற அலிமா என்னும் மடந்தை கனவொன்றைத் தெளிவாகக் கண்டு, எழுந்து எவர்க்கும் செப்பினுள் - விழித்தெழுந்து எல்லோர்க்கும் (தான்கண்ட) கனவைக் கூறிள்ை.
அலிமா தன்மடியில் விருட்சமொன்று ஓங்க வும், அவ்விருட்சத்தில் கிளைகளெல்லாம் கனி கள் தூங்கவும், அவ்வாறு தூங்கும் கனிகள் அமுதஞ் சிந்தவும் அவ்வமுதத்தை அனைவரும் துய்க்கவும் கணுவொன்று கண்டாளென்க.
இவ்விரு பாடல்களும் உள்ளுறை உவமைகளேக் கொண்டதாய் அமைந்துள்ளது. விருட்சம், முகமது நபி பெருமான் (ஸல்). இலையும் கிளையும் அன்ன வர் வாழ்நாளின் - வரலாற்றின் பல சம்பவங்கள். கனிகள், கருத்துக்கள். அக்கருத்துக்களை மக்களன வரும் சுவைத்தார்கள். சுகம்பெற்ருர்கள்.
இ. வி. மடிமிசை ஏழாம் வேற்றுமை, வேரிய: (வேரி + அ) குறிப்பு வினைப் பெயரெச்சம், தூரிலே (தூர் + இலை): வினைத் தொகை, வரிவிழி இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன்தொக்க தொகை.

Page 17
s
恩·
سس 22 ساسات
கணுவைக்கேட்ட தந்தை அறிவுறு துவைபெனுந் தந்தை யாகிய மறையவன் கேட்டுத்தன் மகவை நோக்கிகன் நெறிதிகழ் மக்கமா நகரில் நீர்செலின் பெறுபல னுறுதியுண் டென்னப் பேசினுன் (22)
(மறையவன்-மறைவல்லவன். வேதம் வல்லவன்
ந : (அலிமாவின்) அறிவுமிக்க தந்தையாகிய துவைபு என் னும் வேதியன், மகள் கூறிய கனவுச் செய்தியைக்கேட்டு, 'சன்மார்க்கம் மிகுந்த மக்கமா நகருக்கு நீ சென்றல், நீ பெறுகின்ற பலன் நிச்சயமானது" என்று மகளை நோக்கிக் கூறினுன் ,
அலிமாவும் ஆரிதுவும் மக்கம் ஏகல்
அம்மொழி கேட்டலி மாவும் ஆரிதும் நமமையாள் பவனருள் நமக்குண் டென்னவே
தம்மின்த் தாருடன் கூண்டு தாழ்விலாச்
செம்மைசேர் பக்கமா நகரில செல்கின்றர். (23)
ந தந்தையாகிய து ைபபு கூறிய வாசகத்தைச் செவி
மடுத்து, ஆலிமாவும் அவள் கணவன் ஆரிதுவும், 'நம்மை யாளுகின்ற இறைவனது திருவருள் நமக்கு உண்டு எனக் கூறவே, தம்முடைய சுற்றத்தாருடன் சேர்ந்து தாழ்வற்ற செம்மைப்பாடு மிகுந்த மக்கமா நகருக்குச் செல்லுகின்றர்கள்.
வி : என்ன செயவென்னெச்சம், கூண்டு; செய்
தென்னெச்சம், நகரில் : நான்காம் வேற்றுமை (உருபு மயக்கம்).
பிரயாணம் இடுக்கிய குழந்தையும் ஏந்து பிள்ளேயும் வடுப்பிள வனையகண் மான ஞர்களும் கடுப்பினில் கணவன்மா ருடனும் கற்குவைத்(து) இடர்ப்படு சிறுநெறி செல்கின் ருரரோ, (24)
 

سسد 23 سسسس
(கடுப்பு விரைவு, பிளவு+அனய= பிளவனைய. மான் -- அ(ன்)ணுர் = மான(ன்)ணுர், குவை =
ப; உ இடுக்கிய குழந்தையும் - ஒக்கலேயில் இடுக்கிய குழந்தை களுடனும், ஏந்து பிள்ளேயும் கைகளில் ஏந்திய பிள்ளைக ளுடனும், வடுப்பிளவு அனையகண்மான் அ(ன்)ணுர்களும் . மாவடுவின் பிளவொத்த கண்களையுடைய மான் போன்ற மாதர்கள், கடுப்பினில் கணவன்மாருடனும் - விரைவாகச் செல்லும் தத்தம் கணவர்களுடன், கல்குவைத்து இடர்ப்படு சிறுநெறி செல்கின்ருர் - கற்கள் ரு விந்துள்ளதாய் பாதசாரி களுக்குத் துன்பத்தைத் தரும் ஒடுக்கமான வழிகளுக்கூடாகச் செல்லுகின்றர்கள்
உ. வி: சிலபெண்கள் குழந்தைகளை இடுக்கியபடி செல்கின்றர்கள்: சிலர் பிள்ளைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு செல்கின்ருர்கள். எல்லோ ரும் தத்தம் கணவன்மாருக்குப் பின்னே செல் கின்றர்கள். வடுப்பிளவு அனையகண் மான் அஞர்கள் என்ப தற்கு, குழந்தைகளில்லாமல் குழந்தைகளைப் பெற்ற தாய்மாருடன் கூடிச் செல்லும் பெண்கள் என் றும் பொருள் கொள்ளலாம்.
இ. வி; குழந்தையும், பிள்ளையும் ; உடன் என்னும் சொல் உருபு தொக்க 3-ம் வேற்றுமைத் தொடர்கள். அன்னர்களும்: 'உம்' அசை, அன்றி எச்சவும்மையுமாகலாம் (பிற்கூறப்பட்ட பொரு ளில்) கணவன்மாருடனும் ; 'உம்' எச்சவும்மை (கணவனற்றவர்களும் செல்லுகின் ருர்கள் என்ற கருத்து) படு படுத்தும் என்னும் பிற வினை பகுதியளவாய் நின்றது, அரோ: அசை,
N"

Page 18
سس أ24-سسسس //*
வரும்பரி வாகனத் துடனுந் தம்மனம் விரும்பிய மக்கமா நகரை மேவியே கரும்பெனு மொழியனுர் காளை மாருடன் பெருங்தெரு விடங்தொறும் பிரிந்து எய்தினுர், (25)
ப. உ; வரும்பரி வாகனத்துடனும் - அவர்களுடன் கூடி வரு கின்ற குதிரை வாகனங்களோடும், தம் மனம் விரும்பிய மக்கமா நகரை மேவியே - தாங்கள் விரும்பிக் கொண்ட மக்கமா நகரை அடைந்து, கரும்பு எனும் மொழி அ{ன்) ஞர் காளே மாருடன் - சரும்புபோல் இனிய வார்த்தைகள் பேசும் பெண்கள் கணவன்மாருடன், பெருந்தெரு இடந் தொறும் பிரிந்து எய்தினர் - பெருந் தெருக்கள் தோறும் பிரிந்து பிரிந்து சென்ருர்கள்.
குனையினூரிலிருந்து கூட்டமாகச் சென்ற மக் கள் மக்காவை அடைந்ததும், பெருந் தெருக்கள் தோறும் பிரிந்து பிரிந்து செல்கின்ருர்கள், !
பிரியத்து எய்தினர் என்பது பாடமாயின், பிரியத் துடன் (உவகையுடன்) எய்தினர்கள் எனப் பொருள் காண்க
கூலிப்பால் கொடுக்கும் விசாரிப்பு
பிறைநுதற் கருங்குழற் பெண்கள் யாவரும் குறையற மென்முலே கொடுத்துக் கூலிக்கா மறுவறப் போற்றியே வளர்ப்பம் யாமெனச் சிறுவர்கள் உளம%ன அனைத்தும் தேடினுர், (26)
ப, உ; பிறைநுதல் கருங்குழல் பெண்கள் யாவரும் - பிறை நுத வினையும் கரிய கூந்தலினையுமுடைய மாதர் அனைவரும், யாம் கூலிககா(க நாங்கள் கூலியின் பொருட்டாக, மென்முகில குறையறக் கொடுந்து மறுவறப் போற்றி வளர்ப்பம் என - மென்முகிலப் பாலே, பசிதீருமபடியாகக் கொடுத்து எவ்வித மாசு மறுவும் ஏற்படாமல் குழந்தைகளேப் பத்திரமாக வளர்ப்
*-
 

= 25 =
போம் என்று, சிறுவர்கள் உளமனே அனைத்தும் தேடினுள் குழந்தைகளுள்ள வீடுகளேயெல்லாம் தேடித் தேடி விசாரித் தார்கள்.
கூலியின் முலையமு தூட்டும் கோதையர் நாலொரு பதின்மர்வந் தவரும் நன்குறப் பாலகர் பெற்றுறு பலனும் பெற்றனர் சாலவெம் பசிப்பிணி தவிர்ந்திட் டாரரோ (27)
- - V. ந; கூலிக்காக முலேப்பாலமுதம் ஊட்டுகின்ற பெண்கள்
நாற்பதின்மர் வந்தார்கள். அலிமா தவிர்ந்த ஏனையவர்கள் எவ்வித வருத்தமுமின்றிக் குழந்தைகளே வாங்கி அவர்களுக் குப் பாலமுதும் கொடுத்து, அதனுல் பெரும்பயனையும் பெற் றுக்கொண்டார்கள்; மிகுதியான கொடும்பசிப் பிணியும் அவர்களுக்கு இல்லையானது.
(3) அலிமாவின் வாட்டமும் தேட்டமும் மதிமயக்கம்
ஆயிழை யெனும் அலி மாவும் ஆரிதும்
தூயகற் றெருவெலாங் திரிந்து சோர்ந்தொரு
சேய்கிடைத் திலேயெனத் திகைத்து வாடியே வாயுரை மறந்தற மதிம யங்கிஞர். (28) உ; ஆயிழை எனும் அலிமாவும் ஆரிதும் மென்மையுடலும், மென்மைப்பண்பும் கொண்ட அலிமா என்னும் பெண் ணும், அவள் கணவன் ஆரிதுவும், து நல்தெருவெலாம் திரிந்து சோர்ந்து சுத்தமான அந்நகரத் தெருக்களிலெல்லாம் அலேந்து திரிந்து சேர்வெய்தி, ஒரு சேய் கிடைத்திலே எனத்திகைத்து வாடியே இநமக்கு ஒரு குழந்தையும் கிடைக்க வில்லேயே’ என ஏங்கி வாட்டம் எய்தி, வாயுரை மறந்து அறமதிமயங்ணுர் (தந்தையாராகிய துவை பு கூறிய "பெறும் பலன் உறுதியுண்டு ' என்ற உறுதி மொழி களேயும் மறந்து, முற்ருகப் புத்திக்குழப்பம் எய்தினுர்கள்,
* ೬: 4
*

Page 19
مئی 269=...............
அப்துல் முத்தலிபு அருமனை வருதல்
உடல்பருத் திலதொரு முலையுஞ் சூகையிம் மடக்கொடிக் கெனமறுத் தாரென் றெண்ணியே தடப்புயத் தப்துல்முத் தலிபு தம்மனே யிடத்தினில் வந்துகின் றிசைத்திட் டார்களே, (29)
(சூகை - உள்ளீடற்றுச் சூம்பியது.1
பg உ; (அலிமா சென்ற இடமெல்லாம்) இம் மடக்கொடிக்கு உடல் பருத்திலது ஒரு முலேயும் சூகை - இப்பெண்ணுக்கு உடற் பருமனுமில்லை, ஒரு முலையும் சூம்பலாயுள்ளது, என மறுத்தார் என்று எண்ணியே - என்று மறுத்துவிட்டார்கள் என மனம் சிந்தித்து, தடப்புயத்து அப்துல்முத்தலிபு தம் மனே யிடத்தினில் வந்துநின்றிசைத்திட்டார்சுள் - வி சாலப் புயங்களை உடைய அப்துல் முத்தலிபு என்பவரின் வீட்டில் வந்து நின்று (தமக்குள் தாம்) பேசிக் கொண்டார்கள்,
இ. வி: இலது குறிப்பு வினைமுற்று.
கண்டனர் கண்களால்
தரைப்பெரும் புகழெலாம் தரித்து மாமணி நிரைத்தணி குங்கும மாலை நீங்கிலா வரைப்புய அப்துல்முத் தலிபு வந்துநின்(று) உரைத்தவ ரிருவரை உற்று நோக்கினுள் (30)
ப, உ தரைப்பெரும் புகழெலாம் தரித்து இப்பூமியுள்ள அனே வருக்குமுரிய புகழையெல்லாம் தனக்கே ஆக்கி, மாமணி நிரைத்து அணி குங்குமமாலே நீங்கில வரைப்புய அப்துல் முத்தலிபு-விலே உயர்ந்த மணிமாலைகளையும், குங்கும மலர் மாலேயினையும் நிரை நிரையாக அணிந்து, மாலேகள் எப் போதும் நீங்காத மலேபோன்ற தோள்களையுடைய அப்துல் முத்தலிபு என்பவர், வந்துநின்று உரைத்தவர் இருவரை உற்று நோக்கினுர் தம்மனேயிலே வந்து நின்று தமக்குத்தாம் பேசிக்கொண்டி இருவரையும் உன்னிப்பாகப் பார்த்தார்,
關 ܛ

ܚ- 27 ܡܗܝ
இ. வி. நீங்கீலா (நீங்கிலாத) ஈறுகெஃட எதிர் மறைப் பெயரெச்சம். இருவரை (இருவரையும்):
முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. உரைத்தவரீ இருவர் இரு பெயரொட்டுப் பண் புத்தொகை.
கடவுளின் பயன்
உடலுலர்ந் தொடுங்கியோர் முலையும் சூகைகொள் மடிமயில் கூலிப்பால் வழங்கு வோமெனத் திடமுற இசைத்தன ள் தெரியும் காரணம் கடவுளின் பயனெனக் கருத்தில் எண்ணினர். (31)
உ; ந; உடம்பும் செத்தலாய் ஒடுங்கி, ஒரு முலேயும் செத்தலாய் உள்ள மடமயிலாகிய அலிமர கூலிக்காக பால் கொடுப்போம் என்று அன்னவரைக் கண்டதும் கூறினுள். அப்பொழுது அவ்வாறு அவள் கூறியதன் காரணம் தெரிந்தது, அது
கடவுளின் பயணுகும் கடவுளே இடையருது சிந்தித்ததாலுண்
டாகும் பயணுகும் என்று சிந்தைக்குள் சிந்தித்தார்:
உ. வி ; கடவுளின் சோதனை எனக்கருதாமல் கடவு ளின் பயனெனக் குறிப்பிட்ட கவிஞர், அப்துல் முத்தலிபு அவர்களின் தெய்வ வைராக்கியத் தைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.
இ. வி: கொள் மடமயில் வினைத்தொகை, கூலிப் பால் :
நான்காம் வேற்றுமைத் தொகை,
பெயர் விஞதல்
கோதை நின்குலம் பெயரெது கூறென மாதவர் உரைத்தலும் மடந்தை பண்புறச் சாதெனும் குலத்தினென் தாயும் தந்தையும் ஒதுமென் பெயரலி மாவென் ருேதினர், (32)

Page 20
குலத்துடன் நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கெனப்
சி2லத்தடம் புயர்பல தெரிந்து கூறுவார். (33)
ந : 'பெண்ணே உன்குலமென்ன ? பெயரென்ன ? சொல்" என்று மாதவராகிய அப்துல் முத்தலிபு கூறுதலும், அலிமா மிக அடக்கமாகவும் பண்பாகவும், சாது என்பது என்
குலம்; என் தாயும் தந்தையும் எனக்கு அலிமா என் பெயரிட்
டுள்ளனர்" என்று கூறினுள்,
சிந்தித்துச் சொல்கிருர்
பெயரையும் கூறக் கொற்றவர்
பெலத்தது பொருளென எண்ணிப் பேதியாச்
உ : குலத்துடன் பெயரையும் கூற . அலிமாதன் குலப்
பெயரையும், தன் பெயரையும் கூற, நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என - இவள் குல நலனும், செல்வமும், பொறுமையும் நல்லது எனவும், பொருள் பெலத்தது எனல நாம் தேடவேண்டிய பொருள் பெலமடை ந்து விட்டது என வும், எண்ணி - சிந்தித்து, கொற்றவர் பேதியா(த) சிலைத் தடம்புயர் கொற்றவராகிய வஞ்சகமறியாத மகலபோன்ற அகலப் புயங்களே உடைய அப்துல் முத்தலிபு, பல தெரிந்து கூறுவார் - பலகாரியங்களையும் சிந்தித்துப் பின் 6) (U50s.) (56). CIGITIT.
வி: சாது குலத்துக்குரிய தன்மைகளை அவர் முன் கூட்டியே அறிந்தவர், அக்குலத்தின் தொடர்பு தமது பேரனின் வாழ்க்கைக்குப் பலமளிக்கும் என்ற நம்பிக்கையில் பொருள் பெலத்தது என்ருர்,
6 : நன்கென பொருளென: எண்ணும்  ைம : நின்றது. தடம்புயர்: குறிப்பு வினை முற்று (புயத்தை உடையவர்.)
 

சம்மதமோ ?
பெறுமொரு தந்தையு மில்லைப் பின்னிய வறுமையெத் தீம்தரு மதலை யுண்டுகொல் அறிவுற முலைகொடுத் தாக்கம் செய்வதற்கு) உறுவதோ நும்மன மென்ன வோதினுர் (34)
(எத்தீம் (அரபுச் சொல்) தந்தையற்ற தன்மை, !
பச உ பெறும் ஒரு தந்தையும் இல்லே - பிள்ளையைப் பெற்ற தந்தையும் இறந்து விட்டார், பின்னிய வறுமை - வாழ் வெல்லாம் இழையோடிய வறுமையில், எத்திம் தரும் மதலே உண்டு - தந்தை இறந்துவிட்டநிலையில் அவரால் தரப்பட்ட பிள்ளேயொன்றுண்டு, அறிவுற முலேகொடுத்து ஆக்கம் செய்வதற்கு உறுவதோ நும்மணம் - அக்குழந்தைக்கு அறிவு சேரும்படியாக முலையமுதம் கொடுத்து அப்பிள்ளையை உருப் படுத்துவதற்கு உங்கள் மனம் சம்மதிக்குமோ, என ஒதினர், என்று கேட்டார்;
உ வி: தந்தையற்ற தால் அறிவு வளர்ச்சியுமற்ற தாய் விட்டது. அதனுல் நீவிரே அறிவும் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்துப்பட "அறிவுற" என்ருர், உடல் வளர்ச்சியற்றதால் (பாலுணவில்லாதபடியால்) மனவளர்ச்சியுமற் றிருக்கிறது குழந்தை என்ற கருத்தில் அவ் வாறு கூறினுள் என்று கொள்ளுதலும் பொருந் தும். இக்கருத்தையே "ஆக்கம் செய்தல்" என்ற தொடரும் அழுத்தி அடிக்கோடிடு கின்றது.
ஒப்புதல்
மன்றலங் குழலியு மன்ன ராரிதும் ஒன்றிய மனத்தொடு முசாவச் செல்குவம் நன்றுபார்த் தறிகுவம் நாமென் றுன்னியே வென்றிவேற் செழுங்கர வேந்துக் கோதினுர், (851

Page 21
= 80 =
உ, ந: (அப்துல் முத்தலிபின் நெஞ்சங் கரையும் வார்த்தை களைக் கேட்ட) நறுவாசனை பொருந்திய கூந்தலினை யுடைய வளாகிய அலிமாவும், அவள் கணவராகிய ஆரிதும் ஒருப் பட்ட உள்ளத்துடன், "உண்மை நிலையை விசாரித்தறிய (அம் மனேக்கே) போவோம்; நன்ருக நிலைமையை அவதா னித்து எதையும் அறிவோம்" என்று தம் மனத்துள் நினைத்து அப்துல் முத்தலிபிற்குச் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்,
ஆமிஞ மனேக்கு அலிமாவும் ஆரிதுவும் ஏகல்
அவ்வயின் அப்துல்முத் தலிபும் ஆங்கொரு செவ்விய அறிவ&னக் கூட்டிச் செல்கென நன்விநோக் குறும் விழி யாமி னுவெனும்
மவ்வலங் குழலிமா மனைக்க ஒனுப்பினர். (36)
உ. ந அவ்விடத்து, அப்துல்முத்தலிபு அங்கேயுள்ள செம்மை யாக வழிதெரிந்த ஒருவனிடம், இவர்களைக் கூட்டிச் செல்க? என்று கூறி, மான்நோக்கிலும் பார்க்க மருண் நோக்குடைய - மல்லிகைக் கூந்தலுடைய ஆமினு என்பவள் மனேக்கு அவர் களே அனுப்பிவைத்தார்
இ வி: செல்க: வியங்கோவி வினைமுற்று. நவ்வி நோக்கு ஆறன் தொகை, விழிஆமினு: இரண் டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன் தொக்க தொகை,
கலித்துறை
அமுதுட்ட அருளுக
அரிவை ஆமினு அகத்தினில் அடைந்தலி மாவுன் உரிய மைந்தனுக்(கு) என்முலைப் பாலமு தூட்டத் தெரிய வந்தனன் அருளுக என்றலுஞ் சிறந்த மருமலர்க்குழல் இவர்க்கெதிர் மொழிவழங்குவரால், (37)
 
 
 

ப, உ : அலிமா அரிவை ஆமினு அகத்தினில் அடைந்து
(மடந்தை ஆகிய) அலிமா என்பவள் அரிவையாகிய ஆமிஞ இல்லத்தில் சென்று, உரியமைந்தனுக்கு என்முலேப்பாலூட் டத்தெரிய வந்தனன் - (ஆமினுவை நோக்கி) உன் வயிற்று தித்த புதல்வனுக்கு முலேப்பாலூட்டி வளர்ப்பதற்கான நிலைமை யைத் தெரிந்துகொள்ளும்படியாக இங்குவந்தேன் அருளுக என்றலும் - உன்விருப்பை மனமிரங்கிக் கூறுக என்று அலிமா கூறுதலும், சிறந்த மருமலர்க்குழல் இவர்க்கு எதிர் மொழி வழங்குவர் 'மங்களமும் Logoyapap60)Lu. Le Goff856ir செருகிய கூந்தலே உடையாளாகிய ஆமினு "அருளுக என் றவர்க்குப் பதில் கூறுவாள்
இ. வி: அருளுக வேண்டிக்கொள்ளும் வியங்கோள் வினைமுற்று. ற ரு மலர்க் குழல் : அன்மொழித் தொகை, ஆல் : அசை,
ஒருவேளை உணவுக்கும் .
உற்ற தந்தையு மிலையுறு பொருளிலை யெத்தீம் பெற்ற பிள்ளையோ ருதவிசெய் குவர்பிற ரிலேநீர் பற்று நற்பொருள் குறித்துவந் தவர்பசி யுடையீர் இற்றைக் குண்பதற் -് யென்னிடத் தென்ருர், (38)
ப; உ; உற்ற தந்தையும் இலே - என் மகவுக்குப் பெற்ற தந்தை யும் இல்லை. உறுபொருள் இல்லே - அம்மரத்திரமோ, எனக் கென்று பொருள் பண்டமும் இல்லே. எத்தீம் பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறரிலே தந்தை இறந்தபின் பிற நத இந்தக் குழந்தைக்கு உதவி செய்வாரும் இல்லது நீர்பற்று நற்பொருள் குறித்து வந்தவர் - நீரோ பொருள் விருப்பினுல் ஏதோ சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஊர் விட்டு ஊர் வந்தனிர். பசியுடையீர் - (பார்க்கவே) பசியுள்ள வர்களாகக் காணப்படுகின்றிர் என்னிடத்து இற்றைக்கு உண்பதற்கு இடம் இல்லை என்றர் - என்னிடத்திலே இன் றைக்கு ஒருவேளே உண்பதற்குக் கூட எதுவுமில்லேயே

Page 22
- S2 -----
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தந்த நற்ருய் மனம் வெதும்பிக் கூறினுர்,
(பசியை உடைமையாக உடைய) பசியுடை யீர் சோகச் சுவையின் உச்சவரம்பு கடந்து வாச கனச் சோகத்தில் ஆழ்த்துகின்றது. ஆமினு வாசகம் ஒவ்வொன்றும் ஒளிவு மறைவற்ற உண்மையைச் சொல்லி வாச கன நெகிழ்விக்கின்றது. ஆம், உண்மை உரைக்கும் "சிறப்பினுக்கு(ம்) உவமை யில்லாத செல்வி " ஆமினு நாயகிதான்.
இப்படியாயின் எப்படிப் பிழைப்போம்?
அந்த வாறலி மாதுனே யாரிதை நோக்கி இந்த நன்மனேக்குறு பொரு ளேதுமொன் றிலேயாம் தந்தையு மில்லை யாம்வறு மைக்குடி தானும் எந்த வாறியா முய்வதிக் குழந்தையா லென்ருர் (39)
உ. ந. அலிமா (தன் பின்னல் ஒதுங்கி நின்ற) தன்துணைவ ராகிய ஆரிதைப் பார்த்து - ஆமிஞ தனக்குச் சொல்லிய படியே - "இந்த நன்மனையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள் ஏதும் இல்லையாம்; குழந்தைக்குத் தந்தையும் இல்லையாம்; (தங்கள் குடியும்) வறுமைக் குடிதானும், இப்படியானுல் இந்தக் குழந்தையினுலே எப்படி நாம் வயிற்றுப் பிழைப்புச் செய்யமுடியும்' எனக் (காதோடு காதாகக்) கூறினுள்.
கவிதைகளில் நாடகபாணி கலந்து சோக
உணர்ச்சியை வழிநடத்துகின்றது. தன் கூற்றைப்
பிறர் கூற்று ஆக்குவதிலும் கவிஞர் வல்லவரே!
எந்த வாறு + யாம் = எந்தவாறியாம் - கவிஞரின் பிறர் கூற்றுக் களுக்கு (இலையாம்.
தானும்) குற்றியலுகரப் புணர்ச்சியும் ஒத்திசைத்து ஒலிநயம் செய்கின்றது.

.),
ஆரிதின் தத்துவம்
பலன்ப டைப்பதும் வறுமையைப் படைப்பதும் பாரில் நலம்ப டைப்பது முடையவன் விதிப்படி நடுக்குற்று) உலேந்து மின்மன முடைவதென் வெண்டிரை யுடுத்த தலம்பு ரப்பதின் னுரெனச் சாற்றவு மரிதே, (40)
உ3 ந: தனவந்தனுவதும், தரித்திரனுவதும், உலகில் பல்வேறு
நன்மைகளை உடையவனுவதும், பலப்பல தீமைகளை உடை யவனுவதும், இறைவன் விதித்த விதிப்படி நடக்குங் காரியங் கள் பெண்ணே ! அதனுல் ஏனுேநீ நடுங்கி, உள்ளம் ஒரு நிலப்படாது மனமுடைகின்ருய் ? ஆழிசூழ்ந்த இவ்வுலகை நாளே ஆளப்போவது எந்தக் குழந்தை என்று நிச்சயமாக இன்று யாராலும் சொல்ல முடியாது. (ஒருவேளை இந்த மகவுதான் நாளேக்கு நாடாளும் மன்னன் ஆகலாம். யார் கண்டது?)
எல்லாந் தலைவிதிவசம் ! படியி னிற்பெறும் பலனமக் குளவெனிற் பாதிக் கொடிம ருங்குலிக் குழந்தையா லாங்கொடி யவரேல் வடிவு றும்போரு ளடுக்கினு நம்வயின் வாராக் கடிதி னிற்புகுந் தறிவமென் ரூரிது கரைந்தார். (41)
உ, ந : பாதியாவின் கொடியிடையாளே! இப்பூமியில் பெற்றுக்
கொள்ள வேண்டிய நற்பலன்கள் நமக்கு உண்டு என்ருல் அவை இக் குழந்தையாலே நமக்கு ஆகும். நாம் புண்ணி யப் பிறவிகள் அல்லர், கொடியவரேல் வாழ்வுக்கு அழகுதரும் பொருள் பலவும் நம்மைக் கிட்டினுலும் நம்மை அவை எட்டா. ஆகவே விரைவாக இவ்வீட்டுக்குட் சென்று, குழந் தையை முதலிற் பார்த்து அறிவமேயென ஆரிது உள்ளங் கரைந்து கூறினர்,
விளக்கம்: ஆமினுவின் ஊர் பாதியா, அது கடைக்
குறைந்து நின்றது. பாதிநாட்டுக்கொடியே
சீ3 பு: 5

Page 23
سے 34 سے
என்பது 'கொங்குநாட்டுச் செங்கரும்பே" என்பது போன்றபிடி, இனி, ஒரு கொடியின் பாதியளவான இடை என்றுங் கொள்ளலாம், கொடியிடை என்று கூறிக்கொண்டு வருங் கவிதை மரபில் இது ஒரு மாற்றம். என்ரு லும், "இல்லையுண்டென்ன நின்ற இ.ை" யிலும் சற்றுப் புடைத்தே.
அண்ணலும் நோக்கிஞர் அவரும் நோக்கினும் !
இருவ ரும்மெழுந் தாமினு மனையிடத் தெய்தித் தெரிவை கிள் மகக் கொணர்கெனக் கேட்டலுஞ் சிறந்த பரிம வந்திகழ் மத&லயைக் கொணர்ந்தனர் பார்த்தார் வரிப் ரந்தசெவ் விழிதிறக் தனர்முகம் மதுவே. (42)
உ. ந: அலிமா ஆரிது இருவரும் தாங்கள் கதைத்துக் கொண் டிருந்த இடத்தினின்றும் எழுந்து ஆமினுவின் வீட்டுக்குள் சென்ருர்கள்; தெரிவையே 1 நின் குழந்தையைக் கொணருக என்ருர்கள், ஆமிகுவும் கத்தூரிவாசனை வீசும் குழந்தை யைக் கொண்டு வந்தார். இருவரும் (கண்குளிரப் பார்த் தார்கள்) முசும்மது ஆகிய குழந்தையும் செவ்வேரி பரந்த விழிகளேத் திறந்து பார்த்தது.
(மகா கொணர்க = மகக் கொண்கே, மகமகவு
நபிகள் பெருமானுருக்கு (ஸல்) அவர்கள் பாடல் டஞர் அப்துல் முத்தலிபு இட்டபெயர் முகம் மது என்பதாகும். முகம்மது-புகழப்பட்டவர்.
வடிவழகிற் சொக்கி .
கண்டி றந்தவப் போதினிற் கவினுெளி கதிர்விட்டு
எண்டி சையினும் பரந்திரு சுடரினும் இலங்கப்
பண்டுகண் டிலாப் புதுமைகொல் எனவுளம் பயந்து
விண்டு ரைத்திடாது இருவரும் மயங்கிடுமய்ம் மறந்தார். (43)

སོགས་ངག་ཞུས་
ka
2.
ls
- 85 -
ந: குழந்தை கண்விழித்த அப்பொழுதிலேயே, எல்லேயற்ற அழகின் ஒளிக் கதிர்பரப்பி எண்திசைகளிலுஞ் சிதறி, செங் கதிர், திங்கள் இருபெருஞ் சுடர்களிலும் பார்க்க விளக்கம் மிகுந்தது. அதுகண்ட ஆரிதும் அலிமாவும், இதுவரை நாம் பார்த்திராத அதிசயம் இது 1 என நினைந்து உளம்பய்ந்து மெய்விட்டு எதுவும் பேசாது தம்மை மறந்து நின்றர்கள் மெய்ம்மறந்து நின்றர்கள்.
வி; புதுமை கொல் : அசைச்சொல். சுடரினும்
ஐந்தாம் வேற்றுமை உறழ்புப் பொருள். விண்டு (விள் + து) செய்தென்னும் வாய்ப சட்டு வினையெச்சம்,
பார்த்த கட்கதிர் பரத்தலிற் பயந்தவர் தெளிந்து கூர்த்த தம்மனத்து அதிசயித்து அகமகிழ் கொண்டு கார்த்த டங்கடல் கீண்டெழு முழுமதிக் கதிரைச் சேர்த்த நேமியம் புள்ளென உவகையில் தி8ளத்தார். (44)
உ பார்த்த கண்கதிர் பரத்தலில் - அவ்வாறு பார்த்த கண் களின் ஒளி பரந்துகொண்டே இருந்தால், பயந்தவர் தெளிந்து - விழி ஒளிக்கதிர்ப்பரம்பலேக் கண்டதும் கலங்கிய வர் (அடுத்தகணம்) தெளிவடைந்து தம்மனத்து கூர்த்த அதிசயத்து அகம் மகிழ்கொண்டு தம்முள்ளத்தில் முன்ன ரிலும் பின்னர் நுண்ணிதாய் எழுகின்ற அப்புதுமையினல் மனம் மகிழ்ச்சி அடைந்து, கார் தடங்கடல் கீண்டு எழும் முழுமதிக்கரை - கரிய சமுத்திரத்தைக் கிழித்துக்கொண்டெழும் பூரண சந்திரப் பிரபையை, சேர்ந்த நேமியம் புள்ளன உவகையில் திளைத்தார் - இணைந்து அனுபவிக்கும் சக்கர வாளப் பட்சியைப் போல் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத் தார்கள்
குழந்தை முகம்மதுவுக்கு முழுமதி உவமை,
அலிாைவுக்கும் ஆரிதுக்கும் சக்கரவாளப் பக்சி

Page 24
- }് അ
உவமை, சக்கரவாளப்பறவை ஒருகாதற் பறவை. நிலவைச் சுவைத்து வாழ்வைக் கழிப்பது
இ. வி; கண்கதிர் ஆறன் தொகை, தம்மனத்து
ஏழன் தொகை. அதிசயித்து காரணப் பொரு ளில் செய்தென்னெச்சம். நேமியம்புள்: அம்-தவிர் வழிச்சாரியை. (நேமிப்புள்)
அலிமா அணைத்தல்
வேந்த ராரிது தம்மனே பாடமை விளித்துக் காந்தண் மெல்லிதழ்ப் பசுந்தொடிக் கரத்தினுல் விரைவி னேந்து மென்றன ரிலங்கிழை மடnயி லலிமா வாய்ந்த பேரொளி முகம்மதை யினிதெடுத் தனைத்தார். (45)
ப. உ. வேந்தர் ஆரிது தம்மனயாள்தமை விளித்து - மன்னவர் ஆரிது தம்மனைவியை அழைத்து, காந்தள் மெல்லிதழ் பசுந்தொடிக் கரத்தினுல் விரைவில் ஏந்தும் என்றனர் = காந்தட்பூவின் மெல்லிதழ்கள் போன்ற விரல்களேயும் பசுமை யான வளையல்களையும் உடைய கைகளினுல் விரைவாகக் குழந்தையை ஏந்தும் என்ருர், இலங்கிழை மடமயில் அலிமாஒளிகாலும் ஆபரணங்களை அணிந்த மடமயில் போன்ற அலிமா, பேரொளி வாய்ந்த முகம்மதை இனிது எடுத்து அணேத்தாள் - மிக்க ஒளிபொருந்திய முகம்மதைப் பத்திர மாகத் தூக்கிஎடுத்துத் (தன்னுடன்) அணைத்துக் கொண்டார்.
இ. வி ஏந்தும், முன்னிலை ஒருமை எதிர்கால வினை
முற்று.
சூகையும் சொரிந்தது
மலிந்த பேரொளி முகம்மதை யெடுத்தலும் வருந்தி மெலிந்த மெல்லிழை சடம்பருத் தோங்கின வீங்கிக் கலந்த மான்மத வாசமுங் கமழ்ந்தது கருகி * யுலர்ந்த சூகைமென் முலேதிரண் டழகொழுகியதே. (46)

- 87 -
ய. உ. பேரொளி மலிந்த முகம்மதை எடுத்தலும், பேரொளி
மிகுந்த முகம்மதைத் தூக்கி எடுத்ததும், வருந்தி மெலிந்த மெல்லிழை சடம்பருத்து வீங்கி ஓங்கின - (பசியால்) துன்புற்று மெலிவடைந்த, மென்னகை அணிந்த அலிமாவின் உடல் பருத்து உடலுறுப்புக்கள் GT 65)ITli வீங்கி உயர்ந்தன. கலந்த மான்மதவாசமும் கமழ்ந்தது உடலிற் கலந்த கத்தூ யும் வாசனை வீசியது. கருகி உலர்ந்த குகை மென்முலே திரண்டு அழகு ஒழுகியது - இரத்தப்பசுமையின் மையின் கருகிவாடிய சூகையான மென்முலேயும் திரட்சிஉற்று அழகு ஒழுகியது.
ச1 ம் மொத்தத்தில் உடலையும் உடல் உறுப்
புக்களையும் கருதிற்று. இரசவாதமோ என வியக் கும்படி அலிமா மெலிவு நீங்கி வலிவும் வனப்பும் பெற்ருள். இப்பொழுதுதான் அழகு ஒழுகுகின்றது ஆயிற்றே !
முலையும் ஒழுகியது வடந்த யங்குபூண் செப்பெனப் பணத்திறு மாந்து கடந்த மும்மதக் கரியி:ணக் கோட்டினுங் கதித்துக் குடந்த பங்குற விம்மிதங் கொண்டபொற் குவட்டை படர்ந்த மென்முலைக் கண்டிறந்த தொழுகின வமுதம். (47)
*び உ வடம் தயங்கு பூண் செப்பு எனப் பணத்து - வடம்
அசைகின்ற பூண் செப்பு எனப் பருத்து இறுமாந்து - அகங் காரங்கொண்டு, கடந்த மும்மதக் கரிஇணைக் கோட்டினும் கதித்து - எல்லேயற்று மும்மதம் யாயும் யானையின் இரு கொம்பர்களிலும் பார்க்கக்கூடி, குடம் தயங்குற விம்மிதங் கொண்டு - குடமும் தயங்கும்படியாக விம்முதல் கொண்டு, பொற்குவட்டை அடர்ந்த மென்முலே கண்திறந்து ஒழுகின அமுதம் - பொன் ம்லேயையும் தோல்விகாணச் செய்யும் மென் மூலைக்கண்கள் திறந்தன அமுதம் ஒழுகின.

Page 25
سے 7 8 9 سے
ஆரிதும் இளமை கண்டார் !
பாகி ருந்தமென் மொழியலி மாவலப் பாகச் சூகை மென்முலே திரண்டதும் பாறுளும் பியதும் தேக மெங்கணும் பருத்ததுங் கண்டெழில் சிறந்து வாகு றும்வடி வாயின ராரிது மகிழ்ந்தே (48)
ப, உ : பாகு இருந்த மென்மொழி அலிமா - பாகுபோன்ற மென் மொழிகளைப் பேசும் அலிமாவினுடைய, வலப்பாகச் சூகை மென்முகில திரண்டதும் பால் துளும்பியதும் வலப்பக்கத் துள்ள சூ  ைக மு 8ல திரட்சி உற்றதும் பால் திமிறி வெளிவந்ததும், தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு - உடலெங்கும் பருத்ததையுங் கண்டு, ஆரிது மகிழ்ந்து எழில் சிறந்து வாகு உறும் வடிவாயினர் - ஆரிது மகிழ்ச்சியடைந்து அழகு மிகுந்து இளமைப் பூரிப்புக் கொள்ளும் தன்மையை யும் பெற்ருர்,
அலிமா முலையமுதம் அருந்தல்
புதிய கல்வடி வாகிய பூங்கொடி யலிமா கதிர்வி ரித்திட மடிமிசை வைத்துக்கால் வருடிக் குதிகொள் பான்முலைக் குடித்திடக் கொடுத்திடக் குறையா மதுர வாய்திறந் தமுதமுண் டனர்முகம் மதுவே (49) உg ந: நல்லதோர் வடிவம் புதுக்க அடைந்த பூங்கொடி அலிமா தன் மடிகளிலே ஒளிவிரியும்படியாக முகம்மதுவை வைத்தாள்; கால்களை வருடினுள்; குதிகொண்டுவரும் பால்முலேயைக் குடிக் கக் கொடுத்தாள் இனிய வாய்திறந்து முகம்மதுவுங் குறை யாமல் அமுதத்தை உண்டு கொண்டார்.
இரு குழந்தைகளும் இனிதுறக் குடிக்கும்
கறைக மழ்ந்தொளி ததும்பிய முஹம்மது நபியு முறைமை யாகவுண் டனர்வலப் பாரிச மு?லப்பான் மறுவி லாததம் மதலையு மிடதுபான் மருங்கிற் குறைவிலாதுவந் தடிக்கடி குடித்துக் கொப்பளிக்கும். (50)
(நறை - வாசனை, பாரிசம் பக்கம்)
2

உ. ந: வாசனை வீசி ஒனி மிகுந்த முகம்மது நபியும் வலப்பக்க முல்ப்பாலே ஒழுங்க்ாக அருந்தினர். குற்றமற்ற அலிமாவின் சொந்தக் குழந்தையும் இடமுலேப்பக்கம் எவ்வித குறைபாடும் இன்றி அடிக்க்டி வந்து குடித்து பாலக் கொப்பளித்து விளையாடும்,
யானைக் கன்றெனும் லமுறத்து
வற்றித் தூங்கிய லமுறத்து வெனுமந்த மதலே
கற்ற வம்பெறு முகம்மது நபிபறக் கத்தா
லுற்ற பால்குடித் துடறழைத் துறுபிடி யாகி வெற்றி வெங்கயக் கன்றெனக் கவின் விளங்கியதே. (51)
(பறக்கத்து. (அரவுச் சொல்) மங்களம் நன்மை, கயம் - யானை.)
உ. ந; வற்றி உலர்ந்த "லமுறத்து' என்னும் அந்தச் சொந்தக் குழந்தை நற்றவத்து முகம்மதுவின் நன்மையிஞல் வேண் டிய பாலேக்குடித்து உடல் தழைத்து வலிமை அடைந்து வெற்றிதரும் விருப்புக்குரிய யானைக்கன்றென அழகு பூத்தது, (வெம்மை = விருப்பு)
Iலமுறத்து - அலிமாவின் சொந்தக் குழந்தை)

Page 26
(இ) அலிமாவின் சொந்தஊர்ப் பயணம்,
சொந்த ஊர் திகும்பும் சிந்தை
鷺
மாதவம் பெறுமுகம் மதுநபிக் குந்தம் மகற்கு மேத மின்றிய பால்கொடுத் திருந்துசின் னுட்பின் கோதி லாக்குணை யினிற்செலக் கருத்தினிற் குறித்துக் காத லித்துரைத் தார்துணைத தார்கண வருக்கே, (52) (ஏதம் - விக்கினம். சில + நாள் = சின்னுள்.)
உ. ந: மாதவத்து முகம்மது நபிக்கும் தன் குழந்தைக்கும் எதுவித விக்கினமும் இன்றிய பாலேக்கொடுத்து வந்தாள் , சிலநாள் கழிந்தபின் குற்றமற்ற தன் சொந்த ஊராகிய குஜன யினுக்குச் செல்லும் கருத்துக் கொண்டாள். தன் கருத் தைக் கணவர் ஆரிதுக்குக் காதலொடு கூறினுள்,
அப்துல் முத்தலிபிடம் அனுமதி வேண்டல்
இருவ ரும்மணச் சம்மதக் களிப்புட னேகி யரசர் நாயக ரப்துல்முத் தலிபைச்சென் றடுத்து வரிசை பெற்றனம் புகழ்பல பெற்றனம் மகிழ்ந்தெம் புரிசை சூழ்பதி புகுவமென் றுரைத்தனர் புகழ்ந்தே (58)
[வரிசை புகழ், புரிசை - மதில் 1
உ. ந? இருவரும் ஒருமனப்பட்டு மகிழ்ச்சியுடன் அரசரேறு அப்துல் முத்தலிப்பிடம் சென்றடைந்தார்கள். அவரிடம், சிறப்புற்ருேம், சீர்புகழுற்ருேம் (நமக்கு எவ்விதக் குறைபாடும் இல்&ல) "இப்பொழுது, மதில் சூழ்ந்த நமதுருக்குப் போவோமென எண்ணி உள்ளோம் எனப் புகழ்ந்து கூறினுர்கள்.
இ. வி பெற்றனம்; உளப்பாட்டுத் தன் மை ப் பன்மை வினைமுற்று. சூழ்பதி: வினைத்தொகை,

t
9ܬ݂ܐ.
0ܟܬܐ.
அனுமதி வழங்கல்
'ig');
கேட்ட போதினி லப்துல்முத் தலிபெனுங் கிழவோர்
வேட்ட லாயிரு வருக்குகன் மொழிபல விளம்பிக் கோட்டு மாங்குயி லாமினுக் கிவையெலாங் கூறி வாட்ட மில்லதோர் நும்பதிச் செல்கென வகுத்தார். (54)
உ ந: இவ்வாறு கூறக்கேட்ட அப்துல் முத்தலிபு என்னும்
இல்லறத் தலைவர் விருப்புடன் இருவருக்கும் நன் மொழி பல நவின்று ஆசீர்வதித்தார், மாங்கொம்பற் குயிலாகிய ஆமிஞ வுக்கு இவை எல்லாம் சொல்லி, "வருத்தமற்ற நும்பதிக்குச் சென்று வருக" என அனுமதி வழங்கினுள்.
[கோடு - கொம்பு (கோடு+மா = கோட்டுமா) 1
இ. வி: வேட்டல் தொழிற் பெயர் எச்சமாகி நின்
ற்து. வாட்டம் தொழிற் பெயர். நும்பதி ஆறன் தொகை. செல்க: வியங்கோள் வினைமுற்று,
ஆமினுவை வணங்கல் இந்த வாறுதேர்ந் தாரிது மெழிலலி மாவுங் கொந்து லாங்குழ லாமினு மனையி&னக் குறுகிச் சுந்த ரந்தவழ்ந் திலங்கிய கொடியினைத் துதித்துச் சிந்தையின்னுறுஞ் செய்திகளனைத்துஞ் செப்பினரே, (55)
(தேர்ந்து - தெளிந்து எழில் - அழகு கொத்துபூக்கொத்து - உலாம் - உலாவும்.)
உ ந : அப்துல் முத்தலிபு அனுமதி வழங்கியதால் ஆரிதுவும்
அழகி அலிமாவும் உள்ளம் தெளிவடைந்தனர், (திரும்ப) பூக்கொத்துப் பொலியும் கூந்தலே உடைய ஆமினுவீட்டுக்குச் சென்ருர்கள். அழகு தவழ்ந்து விளங்கும் கொடிபோன்ற ஆமினுவை வணங்கினுர்கள். தம்சிந்தையிலுற்ற செய்திகள் அனைத்தையும் ஆமினுவுக்குச் சொன்னர்கள்,

Page 27
ܒܩܵܡ- 42 ܓܣ
இ. வி: கொந்து கொத்து எதுகைத் தொsை நோக்கிக்கொந்து ஆனது செய்யுள் விகாரம், சிந்தையில்: ஏழாம் வேற்றுமை,
உவகையும் கலக்கமும்
தம்ப திச்செல விருவருஞ் சாற்றிய மாற்றஞ் செம்பொற் பூங்கொடி யாமினு கேட்டுளங் திடுக்கிட் டம்ப ரத்தெழு முழுமதி நிகரகு மதுவைக் கம்ப னிந்தசெங் கரத்தெடுத் துவகையிற் கலுழந்தார். (56)
(மாற்றம் - சொல், அம்பரம் - ஆகாயம், கம்பு - சங்கு, இங்கு சங்குவளையல்
உ ந: தங்கள் ஊர் செல்லும் விருப்பினை ஆமினுவுக்குத் தெரி வித்தார்கள். அச்சொற்களைக் கேட்ட சிவந்த அழகிய பூங் கொடி போன்ந ஆமிஞ உள்ளம் திடுக்கிட்டாள். வானில் வரும் பூரண சந்திரனுெத்த முகப்பொலிவுடைய அகமதுவை சங்குவளையல் அணிந்த செங்கரங்களால் தூக்கி உவகை Αν அடைந்தாள். கூடவே, கலக்கமும் எய்தினுள், *
முகம்மதுவுக்கு ஆமினுவைத்த பெயர் அஹமத் என்பதாகும். உவகையிற் கலுழ்தல் ஆனந்தக் கண் னிர் விடுதல் எனவுங் கொள்க. அன்றி. கண்ணி ரும் புன்னகையும் போலவுமாம்,
முத்தம் சொரிந்தாள்
தேன்கி டந்தசெங் கனியிதழ்ப் பவள வாய்திறந்து வான்கி டக்தொளிர் மதியினு மொளிர்முகம் மதுவைக் கான் கி டந்தமெய் யுறமுத்த மிட்டுடல் களிப்ப வூன்கி டந்தவேல் விழிமல ரிணையிலொத் தினரே. (57)
(ஒத்துதல் - ஒற்றுதல், கான் - வாசனே.
ஊன் = தசை)
 

உ ந: தேன் பொருந்தும் சிவந்த கனியிதழ்களே உடைய
பவளவாய் திறந்து, வானிலே பிரகாசிக்கும் சந்திரனிலும் பார்க்க ஒளிகாலும் முகம்மதுவை நறுமணம் பூசிய மெய்யுடன் அழுத்தி முத்தமிட்டாள். உடல் புல்லரிக்கும் படியாக (பகைவர்கள் உடலின்) தசை கிடக்கும் வேல்விழி மலர்கள் இரண்டுடனும் ஒற்றினுள்.
ஆமினு வணக்கம்
அமரர் நாயக மேபுவி யரசருக் கரசே தமரி னுக்கொரு திலகமே யார்க்குந்தா யகமே நமது யிர்க்குயி ராகிய முகம்மது கபியே கமைத ருங்கட லேயெனப் போற்றினர் கனிந்தே. (58) [தமர் - சுற்றம். திலகம் - பொட்டு. கமைபொறுமை, தாயகம் - தாய்மனை
உ. ந: தேவர்கள் தேவனே! புவியாளும் அரசருக் கரசனே!
சுற்றி இருப்பவர்க்கெல்லாம் புகழ்தரும் ஒப்பற்ற திலகமே! எவரும் வந்து ஆறுதல் அடையும் தாயகமே ! நம்முயிர்க் குயிரே ! அனைவருக்கும் பொறுமை கற்றுத்தரும் பேராழி போன்ற பேரறிவனே ! என்றெல்லாம் மன நெகிழ்ச்சியுடன் புகழ்ந்து வணங்கினர்:
போற்றுதல் புகழ்ந்து வணங்குதல், பொறு
மையைக் கற்றுத்தருவது கடலன்று, ஆழத்தாலும் அகலத்தாலும் கடல்போன்ற அறிவுடைய நபி (ஸல்) என்க.
(கமை - பொருளாகுபெயர்)
அலிமாவிடம் அகமதுவைக் கொடுத்தல் போற்றி முத்தமிட் டணியணிந் தருந்துகில் புனைந்து மாற்ற வர்க்கரி யேயென முகம்மதை வாழ்த்தித் தேற்று மென்மொழி பலவெடுத் தாமினு செப்பிக் கூற்ற டர்ந்தவேல் விழியலி மாகையிற் கொடுத்தார், (59)

Page 28
一 44一
துகில் - தூயஉடை மாற்ருர்" பகைவர், கூற்று - யமன்1
உ ந; இவ்வாறு வணங்கி முத்தமிட்டாள் ஆமின. ஆபரணங் கள் அணிந்தாள் தூய உடை உடுத்தினுள். பகைவர்க் கெல்லாம் சிங்கமே என அகமதை வாழ்த்தினுள், உள்ளம் தெளிவடையும் மென்மொழிபல எடுத்துக் கூறினுள் கால னையும் கலங்கவைக்கும் வேல்விழியுடைய அலிமாவின் கை யில் மைந்தனைக் கொடுத்தாள்.
இ. வி; விழிஅலிமா: உருபும் பொருளும் தொக்க இரண்டாம் வேற்றுமை, வேல்விழி: உவமைத் தொகை, மென்மொழி: பண்புத் தொகை,
என்மகன் அல்லன், உன்மகன் !
தன்னு டன்பிறக் தவளென விருகையாற் றழுவி யென்ம கன்னல னின் மக Eவனென வியம்பி மின்னு ணங்குவே லாரிதை வெற்றியால் வியத்திப் பொன்ன ருைட னுரினிற் புகுமெனப் புகன்ருர், (60) (உடன் பிறந்தவள் - சொந்தச் சகோதரி, நுணங்குதல் - மெலிதல், வியத்தி - துதித்து.
உ; ந: தன்னுடனே பிறந்தவளென ஆமினு அலிமாவை இரு கைகளாலும் தடவினுள்; அகமது என்மகன் அல்லன், உன்
மகனே என இயம்பினுள்; மின்னுெளியும் மெலிவடையும்
ஒளிமிக்க வேல்தரித்த ஆரிதை வெற்றிப் பூரிப்புடன் வணங் கிள்ை பொன்னுெத்த அலிமாவுடன் ஊர்சேருக, என விடை தந்தாள்.
இ. வி: அல்லன்: குறிப்புவினைமுற்று. புகும்; முன்
னிலை வினைமுற்று. நுணங்குவேல்; வினைத் தொகை,
 

= 4b سـ
எழுசீர் ஆசிரிய விருத்தம்
கஃபத்துல்லா யாத்திரை η Ι அருந்தவம் புரியும் பெருந்தலம் வணங்கி
யடைகுவம் பதிக்கென ஹலிமா
வருந்திடா தெழுந்து முகம்மதைக் கதிரின் மணிவளைக் கரத்தினி லேந்தித்
திருந்திட நடப்பக் கஃபத்துல் லாவிற் சிறந்திடுங் தென்கிழ மூலை
யிருந்திடும் ஹஜறுல் லசுவது எனுங்கல்
எதிர்கொடு நடந்தது வன்றே, (61)
ப. உ. அருந்தவம் புரியும் பெருந்தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என - செய்தற்கரிய தவமெலாம் செய்கின்ற பெருந் தலமாகிய கஃபத்துல்லாவைத் தொழுது நம்மூரைச் சேர் வோம் என்று, ஹலிமா வருந்திடாது எழுந்து = அலிமா மனத்தயக்கம் எதுவும் இன்றி எழுந்து, முகம்மதைக் கதிரின் மணிவளேக் கரத்தினில் ஏந்தித் திருந்திட நடப்ப - குழந்தை முகம்மதுவை ஒளிகாலும் ம்ணிவளையல்கள் அணிந்த ossGolf ல்ை ஏந்திக்கொண்டு (மனித இனத்தின் எதிர்கால வாழ்வு பாவச்சுழியிற் சிக்காமல்) செம்மைப் பாடுறும்படியாக (கஃபத் துல்லா எனும் கோயிலே நோக்கி) நடந்து செல்ல சிறந் திடும் கஃபத்துல்லா தென்கிழ்மூலே இருந்திடும் - மகத்துவத் திற்கிடமான கஃபத்துல்லா என்னும் ஆலயத்தின் தென்கீழ் மூஜலயிலுள்ள, ஹஜறுல் அசுவது எனுங்கல் எ தி ர் கொ டு நடந்தது - ஹஜறுல் அசுவது எனும் புனிதக்கல் அலிமா வையும் ஆரிதையும் எதிர்நோக்கி நடந்துவந்தது. ஹஜறுல் அசுவது: இந்தத் தெய்வக் கல்லின் வரலாறு மிகவும் பெரிதெனவும், இதை முத்தமிட்டு வணங்குவோர் களின் பாவத்தைத் தொ8லத்து அவர்களைப் புனிதப்படுத்தும் வல்லபம் உடையது இக்கல் எனவும் சொல்லப்படுகிறது:
இ. வி. தென்கிழக்குமூலை = தென்கிழமுலே, நடப்ப; நடந்தது என்பதனுடன் முடியும் செயவென னெச்சம்,

Page 29
一46 一
புத்துகள் சரிதல்
காரியுங் கருங்கற் றெட்டுமுத் தமிட்டு நடந்துகஃ பாவலஞ் செய்து சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே
சென்றுகின் றிறைஞ்சுமந் நேரம் * தாரணி திகழ்ந்த குபலெனும் புத்துத்
தலைகவிழ்க் தது.அதன் அடுப்ப கேர்பெற நிரையாய் இருந்தபுத் தனத்தும்
நிலமிசை சாய்ந்துருண் டனவே. (62)
(நாரி - பெண். புத்து (அரபுச்சொல்) - விக்கி ரகம், குபல் - தலைமை விக்கிரகத்தின் பெயர். அடுப்ப = சேரI ...)
உ; நாரியும் - அலிமாவும், கருங்கல் தொட்டு முத்தம் இட்டு நடந்து தன்னை எதிர்நோக்கிவந்த ஹஜறுல் அசுவது என்னும் கல்லைக் கைகளாற் தொட்டு முத்தம் இட்டு வணங்கி நடந்து சென்று, கஃபாவலஞ்செய்து - கஃபத்துல்லா என்னும் ஆலயத்தை வலமாக வந்து, சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அந்நேரம் - செம்மை யாக அமைந்த ஆலய வாசலை அடைந்து தொழுகின்ற அந்த நேரத்தில், தாரணி திகழ்ந்த குபல் எனும் புத்தும் தலைகவிழ்ந்தது - குபலென்னும் பெயரை உடைய தலைமை விக்கிரகம் நாணமுற்றுத் தலைகவிழ்ந்தது. அதன் அடுப்ப நேர்பெறு நிரையாய் இருந்த புத்தனைத்தும் நிலமிசை சாய்ந்து உருண்டன - அதனைச்சேர நேர்வரிசையாயிருந்த துணை விக்கிரகங்களெல்லாம் நிலத்தில் சரிந்து உருண்டு கொண்டன:
விளக்கம்: நபிகள் பெருமான் (ஸல்) மூடக்
கொள்கை எனச் சிலைவணக்கத்தைச்சாடி ஒழித்
தவர். அவர் ஒழித்தார் என்று கூறுவதிலும் பார்க்க, நபி அவர்களைக் கண்டதுமே (அலிமா

ܚ- 47 ܚܗ
" . வின் கரங்களில்) அவை தாமாகத் தடிம் புரண்டு விழுந்து தரைமிசை உருண்டிொழிந் தன என்று கூறும் கவிஞரின் கருத்தாளம் நயப்புடைத்து பின்னுற் செய்யப்போவதை முன்கூட்டியே செனல் லி வைத்துவிட்டிாரி கவிஞர்.
வாழ்வின் விடிவெள்ளி
புதுமைகள் அனைத்தும் கண்டுகண் குளிர்ந்து பொற்கொடி கஃபத்துல் லாவிட்டு) இதமுற நடந்து கணவரைக் குறுகி
எடுத்திவை அனைத்தையும் இயம்ப மதியினில் தெளிவற்(று) ஆரிதும் அலிமா மலர்முகம் நோக்கிஇம் மகவால் கதியுறும் நமக்குச் ச்ெல்வமும் பெருகும்
கவலையும் தீர்ந்தனம் என் ருர், (63)
(இவை அனேத்தையும் எடுத்து இயம்ப என tDITsöfy6, 1
உ ந: புத்துக்கள் சரிந்த புதுமைகள் அனைத்தையும் கண்டு கண்குளிர்ந்தாள் பொற்கொடியாகிய அலிம்ா கஃபத்துல்லா ஆலயத்தை விட்டு நீங்கி மனத்தில் இன்பம் பெகுக நடந்து சென்று கணவனைச் சேர்ந்தாள்; தான் கண்ட அதிசயம் அனத்தையும் ஒவ்வொன்ருக எடுத்துக் கணவனுக்குக் கூறினுள் இச் செய்திகளைக் கேட்ட ஆரிதுவேதியரின் புத்தி தெளிவுற்றது. முகத்தில் மகிழ்ச்சி மலரும் அலிமாவை நோக்கி, "இக்குழந்தையால் நற்கதிகள் நம்மைப் பொருந் தும்; பெரு நிதியம் சேரும்; நம்மைப் பீடித்த கவலைகள் முற்ருக நீங்கிவிட்டன என்று கூறினர் .
இ. வி. இதமுற: எழுவாய்த்தொடர். தீர்ந்தனம்; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று.

Page 30
ஒட்டையும் குதித்தது
நன்றெனப் புகழ்ந்து மனங்களி கூர்ந்து سمبر
காரியும் ஆரிது தாமும் வென்றிகொண் டனமென்று ஒட்டை மேற்கொண்டார்
மேனியில் சொறியுடன் வரடும் ஒன்றிய கிழடும் தூங்கிய குணமும் ஒழிந்தது திடபிடி ஆகிக் குன்றென உயர்ந்து பருத்துறக் கொழுத்துக்
குதிப்பொடு நடந்தது அன்றே. (64)
கொண்டினம் - கொண்டோம். ஒபீ  ைs = ஒட்டகம், வென்றி - வெற்றி. உ. ந: பஞ்ச யாத்திரையில் வெற்றிகொண்டோம் என்று அலிமா வும் ஆரிதுவும் மனமகிழ்ச்சி மிக்கார்கள்; (நம்விதி) நன்று நன்று எனப் புகழ்ந்து கொண்டார்கள், தாயகம் திரும்புவ தற்காக ஒட்டகத்தின்மேல் ஏறிக் கொண்டார்கள். அவ்வளவு தான், மேனியிற் சொறியும் சொடுகும் பிடித்து, தோலு லர்ந்து கிழடும் தட்டித் தூங்கிக்கொண்டிருந்த ஒட்டகம் (நல்லவர் ஏற்றத்தால்) சொறிதவிர்ந்தது, வரடு மறைந்தது, கிழடு நீங்கியது; உறுதியான உடல்முறுக்கு ஏற்பட்டது; மலேபோல் உயர்ந்தது; முற்ருகப் பருத்துக் கொழுத்துக் கொண்டது. (வரும்போது தள்ளாடிய ஒட்டகம்) போகும் போது குதித்துக் குதித்து நடந்தது.
(பிடி - உடல்முறுக்கு, அவனது ‘பிடி'யைப்யார் என்ற பிரயோகம் நோக்கி உணர்க. அன்றி, பெண் ஒட்டகம் எனவும் கொள்ளலாம்.
"ஓட்டை விழுந்த ஒட்டையின் மறுமலர்ச் சிக்கு அறவாளர் ஏற்றம் காரணம், குதிப்புக்கு சொந்தஊர் திரும்புதலும் காரணம், சொந்தவூர் திரும்புதலில் எ ந் த உயிருக்குத்தனன் குதி ப் பு
JADLinen g7.
.ே

༣,
எண் 49 வ
குனேயின் நகரயானைகள்
குனேயின் விட் டெழுந்த கொடியிடை மடவார்
கூடினர் ஒருமுக மாக
அனைவரும் திரண்டு மக்கமா நகர்விட்டு
அருவரைச் சிறுநெறி அணுகித்
தனேயரும் புதிய தனயரும் உயிர்போல்
தலைவரும் மடைந்தையர் தாமும்
கனகுரல் களிறும் பிடிகளும் கன்றும்
கலந்துடன் நடப்பதொத் தனரே. (65)
(அருவரை - அரியமலை. தனேயர் - சொந்தப் பிள்ளைகள், புதிய தனையர் - கூலிப்பால் ஊட்டு வ தற் காக வாங்கிக்கொண்ட பிள்ளைகள், களிறு ஆண்யானை, பிடி - பெண்யானை,
உ, ந, பிழைப்புக்காக குனேயின் ஊரிலிருந்து வந்த கொடி
யிடைக் கோதையர் அனைவரும் ஒன்ருகக் கூடினர். அனை வரும் கூடிச் சேர்ந்து மக்கமாநகரை நீங்கி, அரிய மலேப் பிரதேசத்தில் உள்ள ஒற்றையடிப் பாதைகளே அடைந்தனர்; தங்கள் சொந்தப் பிள்ளேகளுடனும், வளர்ப்புப் பிள்ளைக ளுடனும், தம்முயிர்க் கணவர்களுடனும் ஒன்ருகக் கலந்து விடுநோக்கி நடந்தார்கள். அவர்கள் நடந்த நடைக் கம் பீரம், மதப்பாற் பிளிறும் களிறும், பிடியும், கன்றும் கூட்ட மாகக் கூடி அசைநடை போடும் தன்மையை ஒத்தது,
பெலவீனராய், பதுங்கிப் பதுங்கிப் பூனைபோற்
சென்ற கூட்டம் மக்கமாவிலிருந்து ஆனபோல் திரும்பியது என்கிருர் கவிஞர். கணவன் களிறு போன்ருன், அவள் பெண் பிடி போன்ருள், பிள்ளைகள் ஆனைக் கன்றுகள் போன்றனர். த?னய ரும் புதிய தனேயரும் என்றதால் வளர்ப்புக்குழந்தை களையும் பெற்ற பிள்ளைகளைப் போல் பாசத்தால்
சீ. பு, 7

Page 31
ஏற்றுக்கொண்டினர் என்பது தெரிய வருகிறது. குனையின் ஊரவர் கூலிக்கு மார் கொடுப்பவராயி னும், கூலிக்கு மாாடிப்பவர் இல்லைப் போலும், பஞ்சத்திலும் பதிவிரதாதர்மம் காத்தவரென்பது உயிர்போல் தலைவர் என்பதால் அழுத்தப்படுகிறது.
இ. வி: கனகுரல் வினைத் தொ ைக. நடப்பது:
தொழிற் பெயர்.
இயற்கையின் வணக்கம்
மல்லுயர் திணிதோள் ஆடவர் பலரும்
வனமுலை மடக்கொடி யவரும்
செல்லுநன் னெறியால் வயின் வயின் செறிந்த
செடிகளும் மரந்தலை யவையும்
கல்லுங்கற் குவையும் யாவரும் கேட்பக்
கடிதினில் தெளியவாய் விண்டு
செல்லுயர் கவிதை முகம்மது கபிக்குத்
தெரிதரச் சலாம் உரைத் தனவே. (66)
تتن% (மல் - வலிமை, வயின் - இடம், வயின்வயின் . இsந்தோறும், சலாம் - வணக்கம், செல் - மேகம்)
ப, உ; மல்லுயர் திணிதோள் ஆடவர் பலரும் வலிமை மிக்க உரத்த புயங்களேயுடைய ஆண்களிற் சிறந்தார் பலரும்;
வன்முலே மடக்கொடியவரும் - அழகு முலேக%ள உடைய
மடக்கொடி மாதர்களும், செல்லும் நன்னெறியால் செல் கின்ற நல்ல வழிகளில், வயின் வயின் செறிந்த - இடங் கள் தோறும் நெருக்கமாகவுள்ள, மரந்தலேயவையும் கல்லும் கற்குவையும் செடிகளும், தலே சிறந்த மரங்களும், கல்லும் கற்குவியல் களும், யாவரும் கேட்ப - எவருக்கும்ே கேட்கக் கூடியதாக, (யாவரும்) தெரிதர எவருக்குமே தெரியக்
ܠ ܕ ܀

,
ܡܕܡ 51 ܚܩ
கூடியதாகவும், செல்லுயர் கவிகை முகம்மது நபிக்கு - வானளவு உயர்ந்த கவிகையை உடைய முகம்மது நயினருக்கு (ஸல்) கடிதினில் தெளியவாய் விண்டு சலாம் உரைத்தன. விரைவாகக் கூறினும் தெளிவாக வாய்திற்ந்து வணக்கம்
கூறின
இயற்கை முழுவதும் இதயங்குளிர்ந்து நபி நாயகனுரை வாழ்த்துகின்றன. நகர்ந்துவிடப்போ கின்ருரே என்ற அவசரத்தில் வாழ்த்தினும் எது வாழ்த்தியதென்பதும் என்ன வாழ்த்திய தென்ப தும் யாவருக்கும் தெரிகின்றதாம் க்ேஃகின்றதாம்.
படுமரக் காட்டிலே.
நடந்தவர் வெயிலால் உடல்தடு மாறி கலிதரத் தாகமும் பெரிதாய் விடந்தயங் கியகண் இணைமட வாரும் மெலிதரச் செல்லுமக் காலேக் கிடந்ததோர் கானம் இலையில வாகிக்
கிளேத்திடும் பணரெலாம் கருகி" இடக்தொறும் நிழலற்(று) இருந்தவ் விடத்தில்
இறங்கினர் அனேவரும் செறிந்தே, (67)
(நலிவு - வருத்தம். விடம் - விஷம். கானம் = காடு, பணர் - கிளே.
உ நி: வழிதடந்தவர்கள் அஜனவரும் உடல் சோர்ந்தனர்; துன் புற்றனர்; தண்ணீர் விடாய் மிக்கனர், விஷமும் சமமெனக் கூறத்தயங்கும் கருநிற இருவிழிகளே உடைய பெண்களும் நடைக்க2ளயால் மெலிந்தனர். இப்படி இவர்கள் செல்லும் நேரம் காடொன்று காணப்பட்டது. அக்காட்டின் மரங்களில் இலேயுங் கிடையாது; கிளேகளும் கருகிவிட்டன; எவ்விடத்தி

Page 32
லாவது நிழலில்லே, அப்படியான காட்டில் எல்லோரும் ஒன்ருகச் சேர்ந்தனர்;
இன்பத்தில் ஒன்முகக் கூடுதல் மாத்திர மன்று, துன்பத்திலும் ஒன்ருக இறங்குதல் வேண்டும், தயங்குதல் கூடாது என்பார் இறங்கினர் என்ருர், 。 இஸ்லாமிய ஒற்றுமைச் சித்தாந்தத்தை கவிஞர் " . மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
பாலே சோலே ஆனது
மான்மதஞ் செறிந்து கமழ்தர ஹலிமா
மடிமிசை முகம்மது விளங்கக் கானகக் தழைத்துப் பணர்கள் விட்டெழுந்து
கதிரவன் கன ற்கர மறைத்து நீனிறம் பசந்த விலைமிக நெருங்கி
நிரைமலர் சொரிதரக் காய்த்துத் தேனிருந் தொழுகுங் கணிபல சிதறித்
திசையெலா நிறைந்தன வன்றே. (68)
(கமழ்தர - கமழ - மணம்வீச, நீல் + நிறம் ெ
நீணிறம்)
உத ந: கத்தூரி வாசனே கமழும்படியாக அலிமா மடியில் அகமத் (ஸல்) விளங்கிஞர். (அன்னவர் வருகையால்) கான கம் தழைத்தது. இளைகள் கிளேத்தன; நீலநிறமாகப் பசந்த இலேகள் மிக நெருங்கியதால் செங்கதிரின் வெங்கதிர்கள் அக்கணத்தில் விழவில்லே. கானம் மணமலர்களைச் சொரிந் தது; நிறையக் காய்த்தது தேனெழுகும் கணிபலவும் வீழ்ந்து சிதறித் திசைகளெல்லாம் கனிகளே நிறைந்தன.
நபிநாயகத்தின் (ஸல்) பார்வையினல் பாலை சோலேயாயிற்று என்க.
 
 

- 58 -
எல்லாம் இதஞலே!
கண்டவர் மனமுங் கண்களுங் குளிர்ந்து
கணிபல பறித்தெடுத் தருந்தி
வண்டணி குழலார் வருத்தமுங் தீர்ந்து
is வழியினிற் பெரும்பலன் கிடைத்துக்
கொண்டதும் தாகங் தீர்ந்ததும் அலிமா
குழந்தையா லாம்எனச் சூழ்ந்து
முண்டக மலர்த்தா ளினில் விழி சேர்த்தி
முகம்மதைப் போற்றிவாழ்த் தினரே. (69)
(முண்டகம் - தாமரை, அருந்துதல் - உண்ணு
தல் 1
உ; ந: பாலே சோலையானதைக் கண்ட அப்பிராணிகளின் சிந்தை யும் விழிகளும் குளிர்ந்தன. கனிகள் பலவற்றையும் பறித் துக் களைதீர அருந்தினர்கள் வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையுடைய வனிதையர் வழிநடை வருத்தமும் தீர்ந் தது; வழியிலே பெரும்பலன் கிடைத்துக் கொண்டதும் விடாய் விடுபட்டதும் அலிமாவின் குழந்தையாலேதான் எனப் பெண்கள் அனைவருங்கூறி அவளே மொய்த்துக் கொண்டனர், தாமரை மலர்போன்ற அக்குழந்தையின் திருவடிகளிலே தங்கள் விழிமலர்களைச் சேர்த்து, முகம்மதைப் பாராட்டி வாழ்த்திக்கொண்டார்கள்
(குளிர்ந்து அருந்தி தீர்ந்து சூழ்ந்து சேர்த்தி
வாழ்த்தினர் என முடிக்க, 1
இ. வி; மலர்த்தாளினில் ஏழாம் வேற்றுமை விரி
சேர்த்தி; பிறவினை வினையெச்சம்.

Page 33
(ஈ) சொந்த மனையிலே சுகபோகம்.
محفظ
தாயகம் திரும்பினர்
இலைபல தளிர்த்துக் குளிர்வனச் சோலே
இருந்தவர் அனைவரும் எழுந்து مسجد குலவுவா கனத்திற் கொண்டுகுன் றுகளுங்
குழிதருங் கானியா றுகளும் நிலபெருஞ் சுரமுங் கடந்தவர் நடந்து
நீள்வரை யனையமா மதில்சூழ் பலபல மனையுந் தெரிதர நோக்கிப்
பதியெனுங் குனையினை யடைந்தார். (70)
[வனம் - பூங்காவனம். கான் + யாறு = காணி
யாறு, சுரம் - பாலை.)
உ; ந: இலைமயமான அப்பூங்காவனச் சோலேயில் இருந்தவர்
அனைவரும் எழுந்து கொண்டார்கள், சிறந்த வாகனங்களில் 4. ஏறிக் கொண்டார்கள். குன்றுகளேயும் நிலங்குழியப் பாயும் காட்டாறுகளையும் நிலையான பாலைநிலத்தையும் கடந்து விட்டார்கள். பின் வாகனங்களில் இருந்து இறங்கி, கால் நடையில் நீண்ட மலைபோன்ற மதில் சூழ்ந்த, பலப்பல வான மனைகளையும் தெளிவாகப் பார்த்து தங்கள் பதியாகிய குனேயினை அடைந்து விட்டார்கள்
இ. வி: குளிர்வனம்; வினைத்தொகை, குலவு(ம்) வாக
னம்: பெயரெச்சம்,
பதியினை அடுத்தார் அவர்மன புகுந்தார்
பாவையர் பலரும்வந் தடைந்து 海 மதியினுக் தெளிந்த வடிவெடுத் தனைய *T
முகம்மதங்(கு) இருப்பதைக் கண்டார் அதிசயம் இஃதென்று அணிமலர்த் தாளில் அயில்விழி வைத்துமுத் தமிட்டு நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா
நிகரிலே இவர்க்கினி என்பார், (71)

- (பதி - ஊர். மனை - வீடு, அயில் - கூர்மை,
வேல்நிகர் = ஒப்பு.
உ; ந; குனேயின் பதியை அடைந்தவர்கள் தத்தம் இல்லங்களேச்
சேர்ந்தார்கள். (அலிமாவும் தன்மனே புக்காள். புக்கதும்,)
பெண்கள் பலரும் அலிமாவின் மனையிற் கூடிஞர்கள், மதி யிலும் பார்க்க ஒளியுங் கவர்ச்சியும் குளுமையும் மிகுந்து
வடிவெடுத்தது போன்ற முகம்மது அங்கு இருப்பதைக் கண்டார்கள். இது ஒரு புதுமையேயென்று, முகம்மதுவின் அழகுமலர்த் திருவடிகளிலே தங்கள் கூர்விழிகளே வைத்து முத்தமிட்டார்கள் (அந்த அளவிலேயே) பல்வேறு செல்வங் களேயும் பெரும் பேறுகளையும் தமதாக்கிக் கொண்டார்கள்; அலிமாவுக்கு நிகர் அலிமாவேதான் என வாயார வாழ்த் தினுர்கள்
அலிமா குறிப்பறிவளோ?
கூண்டுவந்(து) எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார்
கொழுங்கனி முகம்மதை இவருக்(கு)
ஆண்டவன் கொடுத்தான் இந்தகற் பெறும்பேறு
அணியிழை படைத்தனள் என்பார்
தூண்டிடா விளக்கோ முழுமணி தானுே சுவர்க்கத்தில் இருந்துவங் ததுவோ
வேண்டிய பொருளும் உறுமொரு நாளோர்
வீட்டினிற் புகிலெனப் புகல்வார். (72)
(கூண்டு - கூடி, போற்றிடல் - வணங்கிடல் சுவர்க்கம் - மோட்சம். வேண்டுதல் விரும் பு
உ. ந: அலிமா இல்லத்தில் பெண்கள் எல்லோருங்கூடி முகம் மதை எடுக்கிக்கொள்வார்கள்; குழந்தையைப் புகழ்ந்து வணங்கிக் கொள்வார்கள், இப்பெரும் பேறை ஆண்டவன் அலிமாவுக்கு (அள்ளிக்) கொடுத்திருக்கின்ருன், இப்பெரும் பேறை அலிமா தமதாக்கிக் கொண்டாள் என்பார்கள்

Page 34
இம்மகவு தூண்டாமணி விளக்கோ? நிறைவான மாணிக் கமோ? சுவர்க்கத்திலிருத்து பூமிக்கு வந்ததுவோ என்பார் கள். இக் குழந்தை ஒருநாளைக்கு ஒருவீட்டுக்குப் புகுந்தால் . விரும்பிய பொருளெலாம் அங்கு வந்தடையும் என்பார்கள்.
விளக்கம் : மக்கமா நகரில் வீடுவீடாகச் சென்றும் குழந்தை கிடையாது அலமந்து வாடிய அலிமா இன்று ஒரே குதுகலத்தில் நீந்துகிருள், வரு வோர் போவோர் எல்லோரும் அவளை வாழ்த் துகிருர்கள். அவள் வீட்டில் வருகைதரும் பெண்கள் எல்லோரும், தங்கள் தங்கள் வீடு களுக்கும் இக்குழந்தை ஒருநாளைக்கொரு தடவை வந்தாலென்ன என்ற குறிப்பை குறிப் பாக வெளியிடும் எ ல் லைக்கு அலிமாவின் அதிட்டம் செயற்படுகின்றது! பூமியிலிருந்து சுவர்க்கத்துக்குப் போவது புதுமை அன்று. சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவது தா ன் புதுமை. இந்தப் புதுமைப்பேறு அலிமாவின் பெரும்பேருய் விட்டது.
இ. வி. புகில் (புகுந்தால்) : எதிர்கால வினையெச்சம். தூண்டிடாவிளக்கு: ஈறுகுறைந்த எதிர்மறைப் பெயரெச்சம்,
நல்லனசேரும்! அல்லனதிரும்
வறுமையுந் தீரும் கோயும் விட் டகலும் மனத்தினிற் கவலையும் நீங்கும் சிறுமையும் அகலும் புத்தியும் பெருகும்
தீவினை வந்தட ராது தெறுவகை சிதையும் செல்வமும் வளரும்
தேகமுஞ் சிறந்து பூரிக்கும் உறுபவம் தொலையும் முஹம்மதை யெவர்க்கும்
ஒருபகற் காண்கிலென்று உரைப்பார் (73)

ബ b'/ i
(தெறுபகை வருத்தும் பகை உறுபவம் =
பெரும்பாவம்.)
அடராது - நெருங்காது, சேராது.
உ.ந; முகம்மதை ஒருநாள் ஒரு பொழுது கண்டுவிட்டால்;
வறுமை தீரும்; நோய்தீரும்; மனக்கவலேதிரும்; சிறுமை தீரும்; சிந்தனை பெருகும்; தீவினை வந்துசேராது; வருத்தும் பகையில்லே; செல்வம் வளரும்; தேகம் அழகோடு பூரிக்கும்; பெரும்பாவம் தொலையும் என்றும் அப்பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
வி: தெறுபகை உறுபவம்: வினைத்தொகை காண் கில் செயின் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்,
அலிமாவின் பூரிப்பு!
தன் கிளை நியவரை விழித்தரு கிருத்திச்
சாற்றினர் செழும்புகழ் அலிமா என குலத் தவமோ யான செய்த பலனுே
இவர்தமைக் கிடைக்கவும் பெற்றேன் முன்பெருஞ் சூகை வடுவையுங் தவிர்ந்தேன்
முகமலர் தரவடி வானேன் பி, புறு கலியுங் காண்கிலேன் பலனும்
:ெற்றனன் எனவுரைத் தனரே. (74)
உ, ந: பெரும் புகழ்பூத்த அலிமா தன் சுற்றத்தவரை எல்லாம்
அழைத்து தன்னருகே இருத்தினுள் என் குலத்தவர் செய்த தவப்பயனே, யான் செய்த நல்வினைப் பயனுே இத் தவக் குழந்தையைக் கிடைக்கப்பெற்றேன்? முன்பு (எனக்குச் சிறுமை தந்துகொண்டிருந்த) முலேப்பெரும் சூம்பலாகிய வடுவையும் தீரப்பெற்றேன்; முகமவர்ச்சி சேரப் பெந்றேன்; உடலில் அழகு ஊரப்பெற்றேன்; இடையில் சேர்ந்த இலம் பாடும் தவிரப்பெற்றேன் முடிவாக) வேண்டிய பலனெலாம் பெற்றுவிட்டேன்; என்று அவர்களுக்குக் கூறினுள்,
கலி - வறுமையும் சிறுமையும், இலம்பாடு)
சீ. էվ: 8

Page 35
سے 58 سے
அன்று கண்ட கனவு!
பாரினில் சிறந்த மக்கமா நகர்க்குப் .
பயணமென் றிருக்குமென் றிரவில் நேருமென் மடியில் விருக்கமொன் றெழுந்து
நிலமிசை கனிகளைச் சிந்த வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்துடல் களிப்பொடும் மகிழக் கூருவோர் கனவு கண்டனன் எனவே
கோதையர்க்கு எடுத்துரைத் தனரே, (75)
உ. ந: "பாருக்குள்ளே சிறந்த மக்கமா பதிக்குப் பிரயாணஞ்செய்ய வேண்டுமென்று முடிவுசெய்த அன்றிரவு கணுவொன்று கண் டேன்: நேர்மையான என் மடியில் விருட்சம் ஒன்று எழக் கண்டேன். அது நிலமெல்லாம் கனிகளைச் சிந்தக் கண் டேன். அவற்றையெல்லாம் வாரிவாரி அருந்தக்கண்டேன். உடலம் பசியும் வறுமையும் மறந்து பேருவகை மிகக் கண் டேன்' என்றும் அந்தப் பெண்களுக்கு எடுத்துச் சொன்னுள்.
பாற்பரிசோதனை !
அரந்துடைத் தொளிருங் கதிரிலே வேற்கண்
ஆமினு திருமகன் அலிமா வரந்தரு குழந்தைக்(கு) ஒருமுலைப் பாலே
வழங்கின படியறி வதற்கே சுரந்திடுஞ் சூகை முலையமு தருந்தித் துயில்தருங் காலையி லெடுத்துக் கரந்து தம் இடது பான்முலை கொடுக்கிற்
கனியிதழ் வாய்திறந் தருந்தார். (76)
ய உ; அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலே வேற்கண் ஆமிஞ திருமகன் - அரத்தினுல் உரசி ஒளிமிகப்பெறும் கதிர்களே உடைய இலே வடிவான வேல்விழிகளைக் கொண்ட ஆமினு நாயகியாரின் தெய்வப்புதல்வனுகிய, அலிமா வரந்தரு குழந் சைக்கு, அலிமா வரமாகப்பெற்ற குழந்தைக்கு, ஒரு முலைப்
 

பாலே வழங்கினபடி அறிவதற்கு ஒரு முலேயின் பாலையே
கொடுத்து வந்த தன்மையை அறிவதற்கு, சுரந்திடும் சூகை முலையமுது அருந்தத் துயில்தருங்காலையில்-துகையாய்யிருந்த முலையிலிருந்து சுரந்து வருகின்ற அமுதத்தை உண்டு கண் ணுறங்கும் நேரத்தில் கரந்து தம் இடது பால்முலே எடுத் துக் கொடுக்கில் - மறைவாகத் தம் இடதுபால் முலையைத் தூக்கிக் கொடுத்தாள், கனி இதழ் வாய்திறந்து அருந்தார் - கனிபோன்ற இதழ்கள் உடையவாய்திறந்து அம்முலேயை அருந்தமாட்டார் அத்திருமகன் ,
விளக்கம் : அலிமாவின் குகையாயிருந்த முலை
சுரக்கும் பால் முறையே அருந்திக்கொண்டு வருபவர் முகம்மது இடதுபக்க முலைப்பாலை அவர் ஒருநாளும் அருந்துவதில்லை. சூகைமுலை இடையருது சுரக்கும் பாலே அவருக்குப்
போதியதாய் இருந்திருக்க வேண்டும். அதனு
லேதான் மறுமுலை அருந்துவது இல்லை என்று அலிமா எண்ணினுளோ என்னவோ பரிசோ தனை பார்க்க விரும்பினுள். சூகைமுலை உண்டு குழந்தை முகம்மது நித்திரைச் சுகங்காணும் நேரத்து மடியில் துயின்ற குழந்தையைத் தூக்கி மறுபாடாக வைத்து இடிப்பக்க முலை யைக் குடிக்கும்படிெேகாடுத்தாள். கொடுக் கும் பொழுது முகம்மது குழந்தை ஒருபோ தும் குடியாது.
எந்த முல குகையாயிருந்ததோ அந்தமுலை யைத் தா ன் குடிக்கவேண்டும் என்ற திரு வுள்ளமோ, சொந்த மகனுக்கு உரிய பாலேத் தான் குடித்துவிடிக்கூடாதே என்ற பெருங் கருணைத்திறனுே, "ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று அயிரா'ப் பேராண் கையோ நபிநாயகனுர் (ஸல் இடமுலே குடிக்க வில்லை. ஆம், குகைமுலையாயினும் நபி வாழ்

Page 36
வ 60 க |''ޝަރ |
வுக்கு வாகை சூடியது அதுவன்றே! வலமுலை. ܔܧܐ 1 ܕ யன்ருே முகம்மதுவுக்குப் பலகலையுந் தந்து *- வாழ்வுக்கு வலமும் தந்தது, " s
செம்மறியின் செந்தளிப்பு! ஆரிது மனையில் சிலதுருச் சொம்முண்டு அறக்கிழ டொடுசொறி மலடும் சோரியில் வரடும் வங்குமாய் இருந்த
துருவைகள் முதுகினில் திறமாய் வாரணிக்(து) இலங்கும் மணிமுலை 'அலிமா
முகம்மது திருமலர்க் கரத்தால் சீருறத் தடவ விக்கினம் சிதைந்து
செல்விபெற்(று) இலங்கின அன்றே. (77)
துரு செம்மறி ஆடு, வரடு - சொடுகு, வங்கு சந்தும் பொந்தும் விக்கினம்-வில்லங்கம், துன் பம், சொம் - சொத்து, உடைமை; முதுசெனம் என்பதன் முதற் குறையுமாம். உ. ந" ஆரிது மனையிலே அவரின் முதுசொமாக சில செம்மறி ஆடுகள் உண்டு, அவை அறக்கிழடுகள், சொறிபிடித்த மலடுகள் இரத்தம் சிந்தும் பொருக்கும் சொடுகும் உடை யன சந்தும்பெரந்துமான முதுகுகளையும் உடையன, அப்படியான துருவைகளின் முதுகிலே, கலாதியாகக் கச்ச ணிந்தும் துலாம்பரமாகத் தெரியும் மணிமுலேகளே உடைய அலிமா வளர்க்கும் முகம்மது தன் தெய்விக மலர்க்கரங் களினுல் செம்மையுறந் தடவ பழைய விக்கினம் எல்லாம் கெட்டொழிந்து புத்தழகு பெற்று அத்துருவகைகள் விளங்கின.
அத்துருவைகளைக் கண்டு முகம்மது அருவருக்க வில்லை, மாருக, அவை செம்மையுறத் தடவினர். விளையும்பயிர் முளையில் தெரியிது. உயிர்களிடத்தில்
 
 

* இs | 6l an
அன்புகொண்ட உத்தமருக்கு இது புதுவதன்றே, 蠶 இயல்பான பெருங்கருணைத்திறன் இதுவென்க.
அலிமா இல்லம் ஆடுமயம்
வாலசைத் திடாத கிழடுஇள உருவாய்
வரடுவங்கு அறமலடும் போய்ச் சாலவும் பருத்திட்டு) உடல்திரண்டு அழகாய்த் தளதளத்(து) அணிமயிர் ஒழுங்காய்ச் சூலுமாய்ச் சிறிது பாலுமாய் முலைக்கண்
சுரப் பெடுத்து அறச்சொரிந் திடலாய் ஏலவர் குழலார் மனேயிடங் கொள்ளாது
இருந்தன பறழ்களும் நிறைந்தே. (78) (சூல் - கருப்பம். வேறன் - ஆபீடுக்குட்டி உ. ந: மேலும், வாலசைக்கக்கூட வலியின்றியிருந்த கிழடுகள்
இளமை பூரித்தன. வாடுவங்கு எல்லாம் தொலைந்து மலடு நீங்கி மிகவும் பருத்திட்டன. உடல் திரண்டன. "அழகாய்த் தளதளத்தன. அழகு மயிர் ஒழுங்காய் முளைத்தன. கருப்ய முற்றன. சிறிதே பால்கசியும் முஆலக்கண்கள் சுரப்பு மிகுந்து முற்ருகப் பால் பொழிந்தன. நீண்ட நறுங்கூந்தலினளாய அலிமா இல்லத்தில் செம்மறி ஆடுகளும் குட்டிகளும் நிறைத்து காணப்பட்டன.
தீமையும் பிணியும் தீர்த்தல்
ஓங்கிய "குனேயின்’ எனும்பதி தன்னில் உறைபவர் எவர்மனக் கேனும்
நீங்கரும் பிணிவந்து அடுத்திடில் அவர்கள்
நிறைதகும் முகம்மதைக் காண்கில்
தீங்ககன் றிடுமச் செய்திகண் டறிந்து செறிதரும் பிறநகர் உளரும்
பாங்கினிற் புகுந்து முகம்மது மலர்த்தாள்
பணிந்துமெய் மகிழ்ச்சிபெற்றிருப்பார். (79)

Page 37
۶ی
6. mmmmm "'"#",
உ; ந: உயர்ந்த குனேயின் ஊரில் வசிப்பவர் எவர் மனேயி லென்றலும் மருத்துவரால் தீர்க்க முடியாத கன்ம வியாதி கண்டுவிட்டால், அவ்வியாதியாளர்கள் இயல்பிலேயே நிறைவு . மிகுந்த முகம்மதுவைத் தரிசித்துக் கொடும்பிணி நீங்கினர், இச்செய்தி அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவியது; பரவவே, வெளியூர் நோயினரும் பயபக்தியோடு அலிமாவின் மன யிற்சென்று முகம்மது மலர்த்தாள் பணிந்து அக்கணமே ή நோய்தீரப்பெற்று உடல் மகிழ்ச்சிதர இருப்பார்கள்.
''መው.
புனிதன் உடலும் புனிதம்
மறைதாாச் சோதி முகம்மது நயினர்
வடிவுறு மெய்யினில் துகளும் உறைதரா நீரிற் கழுவிலா திருந்தும்
உலவுறு சிக்குமொன் றணுகாக் குறைதரா வாசங் கமழ்வது மாறக்
குமிழ்நீர் சிறிதுமே அணுகாக் கறைதரா வரிச்செங் கண்துயின் றெழினுங்
கலந்துறு மாசுமொன் றணுகா. (80)
(மறைதரா - மறையாத, குறைதரா - குறை யாத, உரைதராக உறையா, கறைதரா - கறையற்ற.
உ. ந: மங்காத ஒளிபடைத்த முகம்மது நயினரின் அழகுடலில் தூசுகள் படியா; நீரில் குளிக்காவிட்டாலும் வழிந்துவரும் ஊத்தைச்சிக்கு எதுவும் சேராது; குறைவற்ற நறுமணம் வீசுவது மாருது, காதிலோ முக்கிலோ குமிழிவிடும் நீரும் சளியும் சிறிதுமே அணுகா, களங்கமற்ற செவ்வரிபடர்ந்த கண்கள் நித்திரை கொண்டு எழுந்தாலும் பீழையும் நீருமா திய மாசு எவையும் அணுகா
sa

- ôŠ a
சலமலா திகளில் காற்றமும் தோற்றத் தரையருத் திடுவதே யல்லால் நிலமிசை எவர்க்கும் கண்ணினில் தோன்ரு
நீடுறு நீழலுந் தோன்ற உலவிய எறும்பும் ஒண்சிறை ஈயும்
ஒருபொழு தாகிலுக் தீண்டாக் கலேயினில் மயிலைப் படர்தராப் பிள்ளைக்
கனியெனும் முஹம்மது நபிக்கே. (8)
(சலமலாதிகள் =சல + மல + ஆதிகள், மயில்
அழுக்கு, கலே - உடை.
உ. ந: பிள்ளைக் கனியாகிய முஹம்மதுநபி (ஸல்) அவர் களுக்கு சலம் மலம் ஆதியவற்றில் நாற்றம் தோன்றுத லில்8ல. அவற்றை நிலந்தின்று விடுவதன்றி, யார் கண்ணுக் கும் படும்படியாக வைத்திருப்பதில்லை. அவர் உடலுக்கு நிழல் இல்லே. அவ்வுடலில் ஈயும், எறும்பும் எப்பொழுதுமே மொய்ப்பது இல்லே அவர் உடையில் அழுக்குப் படிவது என்றும் இல்லே.
புனிதனின் உடலும் புனிதம் என்றபடி ஒன் பது வாசலும் இயற்கையிலேயே தூ யனவாய் உள்ளனவாம்.
இரவில் மதியின் இனிய பணிவிடை
மாமயில் அலிமா கண்துயில் கா8ல முகம்மது துயிலிடம் நோக்கித்
தாமதி யாது சந்திரன் இறங்கித்
தன்னுரு மாறிவேற் றுருவாய்க்
காமரு மலர்த்தாள் மெல்லெனவருடிக் கதிர்மணித் தொட்டிலே ஆட்டிப்
பூமண மனேக்குள் இருந்தபடி பணிந்து -
போவது தினக்தொறுங் தொழிலே, ! (82)

Page 38
جیسے س= 64 س=
காமம் + ருை = காமரு. வருடில் - தடிவ்ல்.
"வேறு + உரு = வேற்றுரு - தன்சுயவடிவம்
அல்லாத பிறவடிவம்,
உ, ந மாமயில் போன்ற அலிமா உறங்கும்பொழுது முகம்மது நித்திரை செய்யும் இடத்தைப் பார்த்து தன்வடிவம் மறைத்து வேறுவடிவம் தாங்கி கணப்பொழுதும் சுணக்கமின்றிச் சந்தி ரன் இறங்கி வந்துவிடுவான். கண்டார்க்கு விருப்பு 967 Tä கும் மலர் அடிகளைத் தடவிக்கொடுத்து ஒளிவீசும் மணித் தொட்டிலை ஆட்டிக் கொள்ளுவான். பூமணம் பொலியும் அலிமா மனேக்குள் இருந்து கொண்டு முகம்மது நயினுரின் திருவடி வணங்கி மீளுவது சந்திரனின் தினசரி வே8லயா கும்.
தினசரி இக்காட்சியைக் காணலாம் என்கிரும் கவிஞர். மதியின் தொழில் இப்படிப் போகிறது. சந்திரனும் ஒரு செவிலித்தாய் குழந்தையை நித்திரையாக்குந்தாய் அதன் குதிகளையும் உள்ளங் கால்களையும் தடவிக் கொடுத்து, தொட்டிலையும் ஆ&டுகின்ற கசட்சியை மறுஒளிப்பதிவு செய்கின் ருர் கவிஞர். பாலூட்டும் செவிலித்தாய் அலிமா, தொட்டில் ஆட்டும் செவிலி அம்புலி, இனித் தாலாட்டும் செவிலியாரோ?
ஆண்டவன் வளர்க்கிறன்
இந்துவந் துறைந்து மலரடி வருடி
இரவெலாம் காத்துஇனி திருந்து கொந்தலர் குழலார் மனையெலாம் நிறைந்த
கொழுங்கதிர் பரப்பிடக் கூடி வந்து வானவர்கள் இடமற நெருங்கி மனப்புறங் காப்பென விருப்பச் சுந்தர வதன முஹம்மது நபியைத்
துய்யவன் இனிதுற வளர்த்தான் (83)
| ৯৯২

:ി
ܠܵܐ}
-**
இ.
ܗܚܣ 65 ܚ
(இந்து - சந்திரன், கொத்து பூங்கொத்து, தொடை நோக்கி மெலிந்தது, கொழுமை - செழுமை, புறங்காப்பு - புறத் தே காவல் செய்தல்.)
ந: சந்திரன் ஆனவன் அலிமா மனேக்குவந்து, நீண்ட
நேரம் தங்கி, முஹம்மதுவின் மலரடிகளே வருடிக் கொண்டு இரவெல்லாம் கண் இமையாமல் முஹம்மதுவைக் காவல் செய் தாலும், எதுவித வருத்தமுமின்றியிருந்து, பூங்கொத்துப் பொலியும் கூந்தலினையுடைய அலிமாவின் மனை முழுவதும் பூரண சந்திரிகையைப் பரப்பிக் கொள்ளும்பொழுது, ஏனேய வானவர்கள் அத்தனை பேருங் கூடி அங்குவந்து, இருப்ப தற்கிடமில்லையாக நெருங்கி இருந்து வீட்டின் வெளிப்புறத் தைக் காவல் செய்து க்ொண்டிருக்கும்படியாக சுந்தரவதன முகம்மதுநபி அவர்களே ஆண்டவன் நேர்மையாக வளர்த்தான்.
வி: மனப்புறம்: ஆரும் வேற்றுமைத் தொகை, இனிது : வினைமுற்றுப் பண்புப்பெயர். காத்தும்: உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. காப்பு: தொழிற் பெயர்.
செல்வச் செழிப்பிலே ஆரிது!
வரையெனத் திரண்ட புயநபி நயினர்
முஹம்மதை வளர்த்திடு மனைக்குள் கரையிலாச் செல்வம் தனித்தனி பெருகிக்
காட்சிகள் பலவுமுண் டாகி நிரைநிரை மாடா டொட்டகம் பலவும்
நிறைந்துபால் தயிர்குறை விலதாய்த் தரையினிற் குடிக்குட் பெருங்குடியான தலைவரா ரிதென விருந்தார்.
மாடு + ஆடு = மாடோடு
o, L4 : 9
I (84)

Page 39
உ. ந: மலேபோல் திரண்ட புயங்களை உடைய நபிநயினராகிய முகம்மதுவை வளர்த்துவரும் அந்த மனேக்குள் எல்லேயற்ற செல்வம் வகை வகையாகப் பெருகியது. இதுவரை காணுத புதுமைக் காட்சிகள் அனைத்தும் உண்டாகின; மாடும் ஆடும் ஒட்டகமும் பலப்பலவாக வரிசையாய் நிறைந்தன. பாலுக்கும் தயிருக்கும் குறைவில்லை. பூமியில் உண்டான குடிகளுக்குள் பெருங்குடியாகிய "ஸஅது குடியின் பெருந் தலைவர் ஆரிது என்று சொல்லும்படியாக அலிமா கணவர் வாழ்ந்தார்.
"தனித்தனி பெருகல்' ஒவ்வொரு வகைப் பொரு ளும் பெருகுதல் என்றபடி,
குனேயினில் அலிமா மக்களும் தாமும்
குடிக்குயர் குடியென வாழும் மனையினில் ஒருநாள் தீபமிட் டதுமில்
முஹம்மது பேரொளி அல்லால் தனியவன் அருளால் துன்பநோய் வறுமை
தமையடுத் தவர்க்குமில் லாமல் சினவுவேற் கரத்தர் ஆரிது மகிழ்ந்து
செல்வமும் செருக்கும்பெற் றிருந்தார். (85)
(தீபம் = விளக்கு. அடுத்தவர் சேர்ந்தவர். தனி யவன் - இயல்பிலே தனித்தன்மை வாய்ந்த இறைவன்.)
உ; ந; குனையின் ஊரில் அலிமாவும், பிள்ளைகளும், தாமும் (ஆரிது) குடிகளுக்குள் உயர்ந்த குடியாக வாழுகின்ற இல் லத்தில் முஹம்மதுவின் பேரொளியல்லாமல் ஒருநாளாவது விளக்கேற்றியது இல்லை. தனித்தன்மை வாய்ந்த நபியின் அருளால் துன்பமும், நோயும் வறுமையும் தம்மைச் சேர்ந் தவர்களுக்கும் இல்லாமல் கொதிப்புறும் வேல்தாங்கிய கையி னராகிய ஆரிது மகிழ்ந்து செல்வத்தோடும் செருக்கோடும் வாழ்ந்தார்.

- 67 -
இ. வி. அல்லால்: குறிப்பு வினையெச்சம், கரத்தர். குறிப்பு வினைமுற்று. சினவும்: பெயரெச்சம் சினவு எனக் கொள்ளின் தொழிற் பெயர் 6,760785.
குறுகுறு நடந்து. எங்கிலம் அனைத்தும் தீன்கெறி நடப்ப
இயல்பெறு மனுகெறி நடப்பத் துன்னிய அறத்தின் துறைவழி நடப்பத்
துன்பமற் றின்பமே நடப்பப் பன்னருஞ் செங்கோல் உலகெலாம் நடப்பப்
பாரினில் குலமுறை நடப்ப மன்னியர் எவரும் சொற்படி நடப்ப
முஹம்மது நபிகடங் தனரே, (86) உ. ந: அனைத்துலகிலும் தீனுல் இஸ்லாம் என்னும் சாந்தி மார்க் கம் நடக்கும்படியாக, தகுதி மிக்க மனித நீதி நடக்கும்படி யாக, நெருங்கிய அறத்துறைகள் தொறும் நடக்கும்படியாக, துன்பம் ஒழிந்து இன்பமே நடக்கும்படியாக, இத்துணைச் சிறந்தது என இலகுவிற் சொல்ல முடியாத செம்மையான ஆட்சி உலகெங்கும் நடக்கும்படியாக, பாரினில் ஒன்றே குலம் என்னும் முறைமை நடக்கும்படியாக, மனிதர்கள் எவரும் பெருமக்களின் சொற்கடங்கி நடக்கும்படியாக,
நபிநாயகம் (ஸல்) அவர்கள் நடை பயின் ருர்கள் முகம்மநு நயிஞர் நடைபோடத் தொடங்கி யதும் இங்கு கூறிய அனைத்தும் நடைபோடும் என் பது கருத்து. நபிநாயகத்தின் (ஸல்) சாதனைகள் எல்லாம் கவிஞரால் அருமையுறக் கூறப்பட்டுள் ளன. கவிதையும் நடைபோடுகின்றது. பெருமா ஞரின் சாதனைகளைச் சாற்றும் நேரத்தில், துரங்

Page 40
سیسے 68..................
கிக்கொண்டுவந்த கவித்துவம் மீண்டும் முறுக் கடிைவது இயல்பு அல்லவா.
*எந்நிலம்" என்பதற்கு குறிஞ்சி முல்லை, மருதம் நெய்தல், பாலை என்ற நிலப்பகுதி எல்லாம் என வும் கருத்துக் கொள்க. எந்தச் சூழ்நிலைக்கும் தீனுல் இஸ்லாம் பொருந்தும் என்பது அதற்குக் கருத்து என்க.
இ. வி; நடப்ப' எல்லாம்; காரியப் பொருA டில் வந்த செயவென் எச்சங்கள். நடந்தனர். என்பதுடன் தனித்தனி முடியும். (நபியின் நடத்தல் காரணமாக இவை எல்லாம் காரி யங்கள்.) அறத்தீன்துறை: (அறத்துறை) ஆறன் தொகை.
மழலை மலர்ந்து. ܢ
நிலமிசை “ஹாஷிம்’ குலம்பெயர் விளங்க
நிகரிலா நேர்வழி விளங்கக் குலவிய நிறையும் பொறுமையும் விளங்கக்
கோதிலாப் பெரும்புகழ் விளங்க உலகுயர் புதுமைக் காரணம் விளங்க உயர்தரும் வேதமும் விளங்க மலர்தரும் சோதி முகம்மதி விளங்க
முகம்மது சொல் விளங்கினவே, (87) (ஹாஷிம்" (அரபுச்சொல்). கோது - குற்றம்.
நிகர் = ஒப்பு.1
உ3 ந: உலகில் 'ஹாஷிம்’ குலப்பெயர் விளக்கமுறும்படியாக,
ஒப்பற்ற நேர்மைவழி விளக்கமுறும்படியாக, அறிவின் நிறை *
 

H 69 -
வுக்கும் மனிதப் பொறுமைக்கும் நடப்பு ஏற்படும்படியாக, மாசற்ற பெரும்புகழ் விளங்கும்படியாக, உலகுக்கு உயர்வு தரும் பொதுமைச் செயல்களின் காரணங்கள் (அனைவருக் கும்) விளங்கும் படியாக வாழ்வுக்கு உயர்தரும் வேதக் கருத்துக்கள் விளங்கும்படியாக சுடர்விட்டுப் பிரகாசிக்கும் முகத்தில் மதிக்கூர்மை விளங்க முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மழலைச் சொற்கள் திருத்தமுற்று மலர்ச்சி உற்றன,
புத்திக் கூர்மையின் பிரகாசம் முகத்தில் தெரி யும் என்பாரி முகம்மதி விளங்க என்ருர், அகத் தின் அழகு முகத்தில் தெரியும், நபிபெருமான் வாழ்வில் நடக்க இருப்பவற்றை முன்கூடக்டியே இடமறிந்து இனிதுரைக்கின்ருர் கவிஞர்.
நல்லவை வளர நபி வளர்ந்தார்கள்!
விண்ணகத் தமரர் மனமகிழ் வளர வியனுறும் வரிசைகள் வளரக் கண்ணகத் துறைந்து கருணையும் வளரக்
கவினிறை பிறையென வளர எண்ணரும் புதுமைக் காரணம் வளர
இறையவன் திருவருள் வளர மண்ணகத் திருந்து கிளையெலாம் வளர
முகம்மது நபிவளர்ந் தனரே. (88) உ ந: தேவர்கள் மனத்தே மகிழ்ச்சி வளர, புதுமைக்குரிய தகுதிக்கான சிறப்புகள் வளர, விழிகளில் அருள் உறைந்து வளர, குணவழகு நிறைமதிபோல் வளர, அளப்பெரும் புது மைக்கான ஏதுக்கள் வளர ஆண்டவனுர் திருவருள்வளர பூமியி லிருந்து மனிதச் சுற்றமெல்லாம் வளர முகம்மதுநபி (ஸல்) வளர்ந்து கொண்டு வந்தார்கள்;
தகுதி நோக்கிச் செய்யும் சிறப்பு வரிசை ஆகும். முன்னேற்ற வளர்ச்சிக்கு வரிசை அறிதல் அவசியம் என்க,

Page 41
ஈராண்டு நிறைவு
பாரினிற் பரந்த குபிர்க்குலம் அறுத்துப் படர்தரு தீன்பயிர் விளக்கச்
சீருறுங் கனக மாமழை பொழியத்
திரண்டெழுஞ் செழுமுகிற் குலம்போல் . أرتيس
பேர்தருங் குறைவழிக் குலத்தினில் உதித்துப்
பிறங்கொளி முகம்மது நபிக்கு
வார்பொரு மு?லயார் மனங்களித் துவட்ப
வருடமும் இரண்டு சென்றனவே. (89)
[குபிர் - மனதில் இருள் அகலாத குலம்,
உ, ந; உலகிலே பரந்துகாணப்பட்ட குபிர்க்குலத்தை அறுத்து எங்கும் படரக்கூடிய தீனுல் இஸ்லாம் என்னும் பயிர் விளக்கமுறும்படியாக, சிறப்புத்தரும் பொன்மழை பொழியும் படியாக திரண்டு மேலெழுகின்ற கருமுகிற் கூட்டம் போல், கீர்த்திமிக்க குறைஷி குலத்தில் அவதரித்து விளங்கும் ஒளியை உடைய முகம்மது நயினருக்கு, கச்சில் அடங்கா முலையினை உடைய அலிமாவின் மனத்து மகிழ்ச்சிகூர வயதும் இரண்டாகியது.
'தீனெனும் பயிர்க்கோர் செழுமழை என வாய்' என நபி அவதாரப் படலத்திலும் கவிஞர் கூறியது காண்க. தீனுல் இஸ்லாம் முன்பே உண்டான பயிர், காரணம் எதுவோ பயிர் வளரவில்லை. நபி ஸல் எனும் மேகம் , சிந்தனைநீர் பொழிந்த பிற்பாடுதான் பயிர் செழித்தது, வளர்ந்தது, இலையுங்கிளையும் மல் கிப் பூத்துச் சொரிந்தது, மிகப்பெரும் விருங் சம் ஆனது

سد 72 أسس
இ. வி. அறுத்து விளக்க என்ற பிறவினைச் செய
வென் எச்சத்துடன் முடிந்த செய்தென் எச் சம், விளக்க: உதித்து என்ற வினையெச்சத் துடன் முடிந்த செயவெனெச்சம். பொழிய 'எழும்" என்பதனுடன் முடிந்த செயவெனெச்சம். உதித்து: "பிறங்கு' என்ற வினைப்பகுதியுடன் முடிந்த செய்தென் எச்சம், பிறங்குஒளி வினைத் தொகை, உவப்ப; "சென்றன என்ற முற்று டன் முடிந்த செயவென் எச்சம்,
முலே மறப்பித்தாள்
கதிருடன் கதியும் ஒருவடி வெடுத்த காட்சிபெற் றிருந்தணி சிறந்து மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு
வயதிரண் டான தன் பின்னர் குதிகொளும் அமுதம் அடிக்கடி சுரந்து
கொடுத்திடும் முலைமறப் பித்துப் பதியினில் இருந்து பொற்பதி புரக்கும்
பலன்படைத் துவந்தனள் அன்றே. (90)
(கதிர் - ஒளி, கதி - நற்கதி. பதி - பூமி. பொற் பதி - பொ ன் ஞ டு, படைத்துவந்தனள் க
படைத்து + உவந்தனள், படைத்து + வந்த ள்ை.)
ந: ஒளியும் நற்கதியும் சேர்ந்து ஒருவடிவு எடுத்தாலொத்த
காட்சிகொண்டு இனிதே வளர்ந்தார். சிறந்த மதியிலும் சுடர்விட்டுப் பிரகாசித்தார். இவ்வண்ணம் ஈராண்டு நிறைந் தார். இதன் பின், குபிரிடும் பாலமுதம் அடிக்கடி சுரந்து கொடுத்துவரும் முலையை மறப்பித்து விட்டாள் அலிமா, அலிமாவோ இவ்வுலகிலிருந்து பொன்குடாளும் பெரும் பயன் படைத்து மகிழ்ச்சி மிக்கவள் ஆணுள்.

Page 42
மக்கம் போவோம் மன்னவரே
நெறித்திருண் டடர்ந்த செழுமழைக் கூந்தல் ".
நேரிழை வனமுலே அலிமாக் குறித்தசெம் பவளம் விரிந்தெனத் தேன்பாய்
கொழுமடல் குமுதவாய் திறந்து . نسمة செறித்ததிண் மாட மக்கமா நகரில்
செல்குவம் தருணம் தென்னப் பொறித்தபொற் குவட்டைப் பனைத்தெழும் புயத்துப்
புரவலர் ஆரிதுக் குரைத்தார். (91)
இருண்டு + அ டீ ர் ந் த = இருண்டடர்ந்த, குவடு மலை, பணத்தல் = பருத்தல். பொற் குவடு - பொன்மலை - இமயம்,
D. p5 திரண்டு இருண்டு அடர்ந்து கருமுகில் போன்ற கூந்த
லினையும், நேரிய ஆபரணங்களையும், வனப்பு முலேகளையும் உடைய அலிமா, சிறப்பான பவளம் விரிந்தாற்போலத் தேன் ܕܠܐ சிந்தும் வளமான இலைகளை உடைய குமுதவாயைத் திறந்து, "செறிவான வலிவான மாடமாளிகைகள் மிக்க மக்கமா நகருக்குப் போவோம் இதுவே ஏற்ற தருணம்’ என்று: கயலும், மீனும், வில்லும் பொறித்த இமய மலேயிலும் பார்க்கத் திரண்டு பருத்த புயங்களை உடைய மன்னர்
ஆரிதுக்கு உரைத்தார்.

() ) மக்கா பிரயாணம்
ஆரிதும் அதனேக் கேட்டுறத் தெளிந்தங்கு
அழகுறு கருமமீ தென்னச் 臀
சீர்பெறு மனேயாள் தன்னையும் பயந்த
செல்வரி லொருசிறு வனையும்
பாரினில் விளங்கும் முஹம்மது தமையும்
பண்புடன் வாகனத் தேற்றி
ஏர்பெறும் வரிசை மக்கமா நகருக்(கு)
எழுந்தனர் செழும்புய மிலங்க. (92)
ந: அலிமா கூறியதைக்கேட்டு உள்ளம் தெளிவு அடைந்த
ஆரிது, "ஆம், இது நமக்கு அழகுதரும் கருமமே என்ருர்,
சிறப்புமிகுந்த மனைவியையும், தாம்பெற்ற சிறுவர்களில் ஒருவரையும், பாரிலே ஒளிவிளங்கும் முஹம்மதுவையும்
அமைதியாக வாகனத்தில் ஏற்றினர். பல சிறப்புக்களாலும்
முதனமைபெறும் மக்கமாநகர் பிரயாணத்துக்காகத் திரண்ட
புயங்கள் பிரகாசிக்கும்படியாகப் புறப்பட்டார்.
நற்றயிடம் நபியைக் கையளித்தல்
வானவர் சுவனப் பதிநிக ரனேய
மக்கமா நகரினிற் புகுந்து கானமர் குழலா ராமினு வென்னுங்
கனிமொழி பொற்றெடிக் கரத்தில் நானமுங் கவினும் வளர்ந்துமேல் நிவந்த
நபிமுகம் மதுரகயி னுரைத் தேனவிழ் பதும மென்மலர்ச் செழுந்தாள்
திருந்திழை களிப்பொடுங் கொடுத்தாள். (93)
கவனப்பதி - தேவருலகு, நிவந்த - உயர்ந்த பதுமம் - தாமரை,
9. վ. 10

Page 43
ܡܝ̈ܗܿ 74 ܩܡܡܝܗ
༽ ༣
உ, ந: தேவர்களின் பொன்னுலகொத்த மக்கமா நகரை அடைந்
தரர்கள். வாசனை வீசும் கூந்தலும் கனிமொழியும் உடைய ஆமின என்னும் பொற்றெடியாள் கரங்களில், தேன் சொட் டும் தாமரை மென்மலர் போன்ற பாதங்களை உடைய திருத்த மான ஆபரணங்களே அணிந்த அலிமா, கத்தூரி வாசனை யும் அழகும் வளர்ந்து மேலாக உயர்ந்த முகம்மது நயி ஞரைப் பெருமைப் பூரிப்போடும் கொடுத்தாள்.
வி: பொற்ருெடி, திருந்திழை: அன்மொழித் தொகை
&:56] ,
ஆமிஞ புளகாங்கிதம்!
மடந்தையிற் சிறந்த ஆமி னுவெனும்
மலர்க்கொடி முகம்மதை வாங்கி இடப் பெறப் பிறழ்ந்து சிவந்த வேலென்னும்
இணை விழி முகத்தொடுஞ் சேர்த்திக் குடங்கையி லேக்தி மார்புறத் தழுவிக்
குமுதவாய் முத்தமிட் டுவந்து கிடந்தன மனததிற் றுயரெலாம் அகற்றிக்
கிளர்தரும் உவகையிற் குளிர்ந்தார். (94)
(இணே விழி . இருகண், குடங்கை - உள்ளங்கை.1
ந: மங்கை நல்லாளாகிய ஆமினு என்னும் மலர்க்கொடி முகம்மதை வாங்கினுள், சிவந்த வேலென்று கூறும்படியாக இருவிழிகளாலும் பரக்கப் பரக்கப் பார்த்துக் குழந்தையை முகத்துடன் ஒற்றினுள் உள்ளங்கையால் ஏந்தி மார்புறத் தழுவினுள், குமுத வாயால் முத்தமிட்டுவந்தாள். மனத்திற் கிடந்தனவாய துயரெலாம் நீக்கி, பொங்கிவரும் உவகை பால் உள்ளம் குளிர்ந்தாள்.
வி: மலர்க்கொடி அன்மொழித்தொகை. கிடந்தன:
வினையால் அணையும் பெயர்,

سیست 75 ہے۔
வாழ்த்தும் வணக்கமும்
முலைச்சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகிலெனுங் குழலலி மாவை இலைத்தளிர் விரல்கண் முதுகுறப் பொருந்த
இன்னுயிர் பொருந்தல்போற் றழுவி நிலைத்தபொற் பாவை யெனவரு கிருத்தி கெறியுடன் பலமொழி புகழ்ந்து மலைத்தடம் புயத்தா ரீதையும் போற்றி
மகிழ்ந்தனர் ஆமினு அன்றே. (95)
உ. ந: முலைகள் பாரமான, சிற்றிடையையும், திரண்ட கருமுகி
லன்ன கூந்தலையும் கொண்ட அலிமாவை இலத்தளிர் விரல் களால் இன்னுயிரும் இன்னுயிரும் பொருந்துவதுபோல் முது குறத் தழுவினுள். நிலைத்துவிட்ட பொன்னணங்கு எனப் புகழ்ந்து தன்னருகே இருத்தினுள். பண்பாகப பலவார்த்தை கள் பேசிப் புகழ்ந்தாள். மலைக்கடம்புயத்து ஆரிது மன்ன ரையும் வணங்கினுள். வணங்கி மகிழ்ந்தாள், கெய்ங்கிணங் கமழ்ந்த செங்கதிர் வடிவேல் நிருபர்கோன் அப்துல் முத்தலிபு மைந்நிறப் பாவைக் கயல்விழி அலிமா வந்தது கேட்டுவந் தடுத்து மெய்ந்நிறக் கதிர்முச் சுடரையும் மழுக்கும்
விறன்முகம் மதுதமை யெடுத்துக் கைக்கிறை பொருட்போல் இருவிழி குளிரக்
கண்டகம் மகிழ்ந்துடல் களித்தார். (96) நிணம் - கொழுப்பு, மாமிசம், நிருபர்கோன் - அரசர் தலைவன், மாமன்னன், விறல் - வலிமை, கண்டு அகம் மகிழ்ந்து எனப் பிரிக்க,
உ; ந கொழுப்பு வடியும் மாமிச வாசனை அடிக்கும் செவ்வொளி
மிகுந்த வடிவேலேத் தாங்கிய மாமன்னராகிய அப்துல் முத் தலிபு. மாமேனியும் கயல்விழியும் கொண்ட பாவை போன்ற

Page 44
கம் 76 ம்
ளாகிய அலிமா ஆமிஞ மனேக்கு வந்ததைக் கேள்வியுற்றுதி தானும் அங்கு வந்தடைந்தார் தூய ஒளிக்கதிர்களைக் கொண்ட செங்கதிர், திங்கள், செந்தீ ஆகிய முப்பெரும் சுடர்களின் ஒளியையுமே மங்கவைத்து நிற்கும் ஒளிவலிமை மிக்க முகம்மதுவை, தன் கைகளால் எடுத்தார். கைநிறைந்த பொருள்போல் இருவிழி குளிரக் கண்டார் மகிழ்ந்தார்: அங்கமெல்லாம் பூரித்தார்.
கைநிறைந்த பொருள் தமதே என்ற நம்பிக் கையை உண்டாக்குவதால் உள்ளத்தைக் குளிர வைத்துவிட்டது. முன்பு கும்பி இருந்த குழந்தை இப்பொழுது கைகளில் தேங்கிக்கிடக்கின்றது. சூகைப்பால் தந்த சுகம்!
வேறேதும் யாம் வேண்டோம்
வடிவுறும் சுடர்வேல் அப்துல் முத்தலிபு
மரைமலர் மாமுகம் நோக்கிக் கொடியன வயங்கு நுண்ணிடை அலிமா
கொவ்வையங் கனியிதழ் திறந்து படியினில் எவர்க்கும் காணுெணுப் புதுமைப்
பாலகர் முகம்மது தம்மால் மிடிமையுந் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்ருேம்
வேண்டுவ பிறிதிலே என்ருர், (97) (மரை - தாமரை (முதற்குறை) ஒண்ணு
முடியா. கான--ஒண்ணு=காணுெணு வயங் கும் - விளங்கும்.1
உ. ந? கொடிபோல் விளங்கும் நுண்ணிடை அலிமா, அழகுறு சுடர்வேல் ஏந்திய அப்துல் முத்தலிபு என்பவரின் தாமரை மலர் போன்ற பெருமுகத்தை நோக்கி, கொவ்வைக்கனி போன்ற வாய் இதழ்களைத் திறந்து, பூமியில் எவர்க்குமே காணமுடியாத அதிசயப் பாலகராலே வறுமை தீர்ந்தோம்; வளம் சேர்ந்தோம். இனி நமக்கு வேண்டியது வேறில்லை" என்று கூறிஞர்
 
 

سنه 77 سياسي
岛。 வி ஒளு: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச் சம். வேண்டுவ: வினையாலணையும் பெயர்.
மனேதொறும் விருந்து
ஆடவர் திலகர் அப்துல்முத் தலிபும்
ஆமினு வெனுங்குலக் கொடியும் பீடுறும் அலிமா தம்மையுந் தலைமைப்
பெருமையா ரீதையும் போற்றி நாடுறு மனத்தால் இனத்தவர் மனக்கு நன்குற விருந்துக ளளித்துத் தேடிய பொருளேக் கிடைத்தவர் போலச்
செல்வமுற் றிருந்தனர் சிலநாள். (98) உ ந: ஆடவர் திலகமாகிய அப்துல் முத்தலிபும், குலக்கொடி யாகிய ஆமிஞவும். பெருமைக்குரிய அலிமாவையும், தலே மையும் பெருமையும் உடைய ஆரிதையும் வணங்கி மன நாட்டத்துடன் தம் இனத்தவர் மனைகளுக்கும் அழைத்துச் சென்று, நல்விருந்துகள் கொடுத்துத் தேடிய பொருளேக்
கிடைத்தவர்கள் போல சுகபோகத்தோடு சிலநாள் இருந்தார்
5 hr.
Qf6 68L suffso). LD56LOIT basis)
திங்கள்ாா விரண்டுசென் றதற்பின் எவ்வரம் பினுக்கும் மிகுவரம் பெனவாழ் இலங்கிழை ஆமினு தமையும் மவ்வலக் தொடையார் அப்துல்முத் தலிபு
மன்னேயும் பொருந்துறப் போற்றிக் கவ்வையங் கழனி குனையினிற் புகுதும்
கருத்தினக் கருதியே உரைப்பார், (99)
(மவ்வல் மல்லிகை, தொடை - மாலை. மல் -
அரசன், கவ்வை - ஆரவாரஒலி, கழனி - வயல், புகுதல் = போதல்,

Page 45
ܚܕ 78 ܡܫܝܩ
உ ந; பல வரிசைகளும் மிக்க மக்கமா நகரில் எட்டுத் திங் கள் கழிந்தபின்பு, ஒழுக்கங்கள் அனைத்துக்கும் உச்ச வரம் பாக வாழும் ஆமினு அம்மையாரையும். மல்லிகை மாலே அணிந்தவராய அப்துல் முத்தலிபு என்னும் அரசனுரையும் ஒருமையுற வணங்கி, ஆரவார ஒலிகள் உடைய அழகிய வயல்கள் நிறைந்த சொந்த ஊராகிய குனேயினுக்குப் போகும் மனக்கருத்தை நன்முகச் சிந்தித்துவிட்டுச் சொன்ஞர்கள்
(அப்பொழுது மக்கமா நகரில் கொடிய தொத்து நோய் ஒன்று பரவியிருந்த காரணத்தால் இன்னும் சிலநாள் ஹானன் எனும் ஊரிலேயே குழந்தை வள ரட்டும் என்று கருதி பாட்டனுர் அப்துல்முத்தலிபு அவர்களும் அன்னை ஹலீமா அவர்களிடமே குழந் தையைக் கொடுத்து அனுப்பி விடுகின்றனர் - உமறு தரும் சீரு. பக். 110)
நன்றி மறப்பது நன்றன்று
எண்ணரும் பெருமைப் புகழ்ஹ"சைன் நயினுர்
எடுத்தியற் றியபல வரிசைப் புண்ணியப் பொருளாய் வரும் அபுல் காசிம்
புந்தியின் நடுவுறப் பொருந்திக் கண்ணினும் இருக்கும் முஹம்மது நபியைக்
கடிதினில் வாகனத் தேற்றி கண்ணிய குனேயின் வழியினைக் கடந்து
கடந்துதம் மனேயினச் சார்ந்தார். ( 100
ஹ"சைன் நயினுர் - ஹஸன் நெய்ஞ மரைக் காயர், அபுல் காசிம் - அபுல் காசிம் மரைக்கா யர், நண்ணிய கிட்டிய,)
உ. ந. அளவிடற்கரிய பெருமையும் புகழும் வாய்ந்த ஹஸன் நெய்ஞ மரைக்காயர் சீர்தூக்கி இயற்றிய பல சிறந்த புண் ணியப் பயணுக (அன்னவர்க்கு மகனுய்) வந்த அபுல் காசிம் மரைக்காயரின் உள்ளத்தின் நடுவே உறப்பொருந்தி, அவர் கண்களிலும் நீக்கமற இருக்கும் முஹம்மது நபிநாயகம்
赢

------ 79,,ཤ་ཐང་
(ஸல்) அவர்களே விரைவாக வாகனத்தில் ஏற்றி குனேயின்
செல்வதற்கான குறுக்குவழிகனேக் கடந்து ஆரிதும் அலிமா
வும் தம்மனை சார்ந்தார்கள்,
(குறிப்பு: 99ஆம் பாடலுக்கும் 100ஆம் பாடி லுக்கும் இடையில் கதைப்புணர்ப்பில் பேரிsை. வெளி தெரிகின்றது. காரணம் தெரியவில்லை. கவிதைகள் இடையில் விடுபட்டனவா அல்லது கவிஞரின் பாய்ச்சலா என்பதும் தெரியவில்லை. இந்த இடைவெளியை அடைப்பதற்குப் பல ரும் பலவாறு உரைப்பர்.)
நபிநாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைப் பாடவேண்டும் என்ற கருத்தை முதன்முதல் உம றுப் புலவருக்குத் தெரிவித்தவர் வள்ளல் சீதக்காதி, புலவர், வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தையும் சேக ரித்துக் கொண்டு வரும்பொழுது வள்ளல் சீதக் காதி வானுலகு அடைந்துவிட்டார். கலவரம் எப் தினர் கவிஞர். அந்த நிலையில் புல வருக்குக் கைகொடுத்து, பொன்னும் பொருளும் தந்து, காவி யம் ஒப்பேறுவதற்குக் காரணமாயிருந்தவர் ஹஸன் நெய்னு மரைக்காயர் என்பவரின் புண்ணியப் புதல் வரும், வகுதை தந்த வள்ளலுமாகிய அபுல் காசிம் மரைக்காயர் ஆவர். மரைக்கணயரின் மகத்தான உத வியை நினைந்து, இங்கு நன்றிக்கடன் இறுக்கின் முர் கவிஞர் உமறு.
அலிமா பாலமுதுாட்டி உருவாக்கிய முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வரலாற்றை, பொருளமுதுரப& டிக் காவிய உருவமாக்கக் காரணமாய் இருந்தவரை இக்கட்டத்தில் நன்றி கூர்வதும் கூறுவதும் சாலப் பொருத்தமானதே!
புகழேந்தி சந்திரன் சுவர்க்கிக்கு நளவெண்பா
வில் நன்றி கூறியதும் இங்கு நினைவுக்கு வருகின்ற தல்லவா.
முற்றும்,

Page 46
océeぶ。
மாதிரி வினுக்கள்
(1) சீறப்புராணம் ஒரு பெருங் காப்பியம் - ஒட்டியும்"
வெட்டியும் ஆராய்க?
உமறுப் புலவரின் கற்பனை வளத்தை அல்லது வறட் சியை அலிமா முலையூட்டு படலக் கவிதைகளிலிருந்து விளக்குக?
இஸ்லாமிய மதசித்தாந்தங்களை இடமறிந்து எடுத் துக் காட்டுவதில் வல்லவர் உமறு - விளக்குக?
உமறுவின் கவிதைகளில் இறைவனைப்பற்றிப் பாடும் இடங்களில் காம்பீரியமும் வளமும், ஏனைய இடங் களில் ஒருவித வறட்சியும் காணப்படுவது உண் மையா? உண்மை எனில் கவிதைகளைச் சுட்டி உரைத் துக் காரணங்களும் தருக? பஞ்சத்தைப் பாடுவதில் கைதேர்ந்தவர் உமறு . விளக்குக? -
னவை உண்டெனில் உதாரணங்கள் தருக? உமறுப்புலவரின் கவிதைகள் செறிவு குறைந்தவை கூடியவை - ஆராய்க? பேச்சுவழக்கு மொழிகளையும் ஆங்காங்கு உமறு கலந்துள்ளார். உதாரணங்கள் தருக?
மதத் தலைவர்களை பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட காவிய வரிசையில் சீருப்புராணத்துக்குக் கணிசமான இடமுண்டு ஆராய்க?
ஓர் எறியில் இருமாங்காய் விழுத்தியவர் உமறு விளக்கம் தருக?
தும் குண இயல்புகளை ஆராய்க?
நன்றி கூரும் நலத்திலர் உமறு - உதாரண மூலம் விளக்குக? அதிசயச் சங்கதிகள் இஸ்லாமிய கோட்பாட்டிற்கு ஏற்றனவா ஆராய்க?
அலிமா முலையூட்டு படலத்தில் இயல்புக்கு முரணு
ஆமின, அலிமா ஆகிய பெண்மணிகள் இருவரின A.
 
 
 
 


Page 47
|- |-|-|-- | || . , -|- | –".
- . . . . . . sae||-
 
 
 
 
 

|-
|
|-
.|