கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசிகள் அழுவதில்லை

Page 1


Page 2
.
'
 


Page 3

* முல்லைமணி '
வெளியீடு :
மலர் இலக்கியக்குழு
மட்டக்களப்பு

Page 4
“MALAR” PUBLICATIONS 3
Klzlupathila
(SHORT STOREs)
by
* Миllaumani ” И, Sиbraтатлат, Mithilai, Oddiuchuddlan.
First Edition: July 1977
Publishers : Malar Ilakikiya TA
Kmuzhu 21, Central Road, Batticaloa, Sri Lanka
Printers : Aseervatham Press 2.
50, Kandy Road, Jaffna, 。影 Sri Lanka. * 。
(பதிப்புரிமை ஆக்கியோனுக்கே)
(Copy-Right to the Author)
Price : 4-0)
 
 
 

•
്
..
எனது மாமனுர் - ஒட்டுசுட்டான் கிராம சபை முன்னைநாள் தலைவர் - காலஞ்சென்ற சிவசிதம்பர உடையார் சிவகுரு
அவர்களின் பாதங்களுக்கு
yo

Page 5

பதிப்புரை
1970-71ஆம் ஆண்டுகளில் தரமான இலக்கிய ஏடாக மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'மலர்’ மாசிகை ஈழம் முழுவதிலுமுள்ள இலக்கிய வட்டாரங்களில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. கோஷ்டி வட்டத்துக்குள் அகப் படாது, " மலர் நடுநிலையில் நின்று ஆத்மார்த்தமான இலக்கியப்பணி புரிந்துவந்தது பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை களால் அந்த ஏடு நின்று போயிற்று. ஆனலும் தன் இலக்கியப்பணிகளை நிறுத்திவிடாது, தரமான இலக்கிய நூல்களை வெளியிடவேண்டுமென்று அப்போது கங்கணம் கட்டிக்கொண்டது. அதற்கேற்ப, செ. யோகநாதனின் : ஒளி நமக்கு வேண்டும் " குறுநாவல் தொகுதியையும், சு அருள் சுப்பிரமணியத்தின் " அவர்களுக்கு வயது வந்து விட்டது” நாவலையும் வெளியிட்டது. அந்தவரிசையில் இப்போது முல்லைமணி அவர்களின் சிறுகதைத் தொகுதி ஒன்று மலர்' வெளியீடாக வெளிவருகிறது.
முல்லைமணி " நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், வானெலிப் பேச்சாளர், எண்ணற்ற இலக் கியக் கருத்தரங்குகளில் மூக்கிய இடம் பெற்றவர். தனது இலக்கியப்பணிக்காக, பாராட்டுக்களும், பரிசுகளும் பெற் றவர். இவருடைய ' பண்டாரவன்னியன் ' வரலாற்று நாடக நூலின் இரு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இருந்த போதிலும் அவருடைய சிறுகதை ஆற்றல் பற்றி ஈழத்து இலக்கிய உலகுக்கு முழுமையாகத் தெரியாமல் இருந்தது. விமர்சகர்களும் இவரைத் தொட்டதில்லை. அந்தக் குறையை இந்தச் சிறுகதைத் தொகுதி நீக்கும் என நம்புகிருேம்.
மணி மணியான பன்னிரண்டு சிறுகதைகள் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. வண்ணத்துக்கு ஒன்று வகைக்கு ஒன்ருக, நவரசங்களையும் தொட்டு நிற்கும் இச் சிறுகதைகள் வாசகர் மனதை நிச்சயம் புளதிக்கச் ெ யும்; அத்துடன் நின்றுவிடாது, சமூகப்பணிக்கான தன் பங்களிப்பினையும் செய்யவே செய்யும்,
இச் சிறுகதைகளின் சமூகப்பணி பற்றி நாம் பேசு முன்னர், இலக்கியத்தின் சமூகப்பணி பற்றிய நமது கருத் தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியது அவசியம் கிறது. ஏனெனில் அண்மைக்காலங்களில் வெவ்வேறு கோஷ்
iii

Page 6
டியைச் சேர்ந்த விமர்சகர்கள் தத்தம் விருப்புக்கேற்ப
இலக்கியப்படைப்புகளை மட்டம் தட்டி வந்திருக்கின்றனர். தமிழகத்தைவிட ஈழத்திலேயே இக்கைங்கரியம் அதிகமாக நடைபெறுகிறது.
ஆங்கில எழுத்தாள மேதைகள், வங்காள எழுத்துலகச் சிற்பிகள், ரஷ்ய எழுத்தாளர்கள் முதலியோரைச் சாட்சிக் கிழுக்காமலேயே, மிகச் சுருக்கமாக இலக்கியத்தின் பணி பற்றி பின்வருமாறு கூறிவிடலாம்
* இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது; வாழ்க் கையை விமர்சிப்பது; வாழ்க்கையைப் பண்படுத்துவது.' இதுவே இலக்கியத்தின் பண்பும் பயனும் ஆகும். வாசகர் கள் இக்கூற்றைத் தம் சிந்தனைத் தராசின் ஒரு தட்டிலும் தமக்குப் பரிச்சயமுள்ள இலக்கியங்களை, மறுதட்டிலும் வைத்து எடைபோட்டுத் தெளிவுபெற வேண்டுமென்பதே .
என் விருப்பம். அன்பர் முல்லைமணியின் சிறுகதைகளை
எடை போடுவதற்கும் வாசகர்களின் இந்தத் த ரா சே பொருத்தமானது.
இனிக் கதைகளுக்கு வருவோம்.
* அரசிகள் அழுவதில்லை ? ? மீனவக் குடும்பப் பெண் ஒருத்தியின் தாய்ப்பாசத்தை ஒரு பணக்காரத்தாயின் மலட் டுத் தன்மையுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது. ' பிணைப்பு ' ஒரு உனழப்பாளி தன் விவசாய நிலத்தின்மேல் கொண்டி ருக்கும் பாசத்தின் ஆழத்தைச் சித்தரிப்பது. ' துணை ' வாழ்வைத் தவறவிட்ட ஒரு 'படித்த மனிதரின் காலம் கடந்த கழிவிரக்கம் ,
‘வீட்டில் நடந்தது' ஒரு யாழ்ப்பாணக் கலியாணத் தரகரின் பூர்ஷ்வாக் கொள்கை சரிவதைச் சித்திரிப்பது. * ஐராங்கனி ' சிங்களக் கன்னி ஒருத்தியின் இன வேற் றுமை கடந்த மனிதாபிமானம். ' உறவுகள்’ தனிமையில் வாடும் ஆசிரியை ஒருத்தியின் இதய தாபத்தைக் கருவாகக்
கொண்ட கதை ' கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன ' தலைப்பே கதையைச் சொல்கிறது. " அவளும் தோற்று விட்டாள் யானை பிடிக்கும் பணிக்கர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஒரு கதை. ‘என்ன அநியாயம் சேர்’, ‘காத் திருக்க வேண்டும் " ஆகிய இரண்டும் அங்கதச் சுவை கலந்த நகைச்சுவைக் கதைகள், "நூலேணிகள் நிலப்
பிரபுத்துவ வாழ்க்கையின் தகர்வுகளுக்கு முட்டுக்கொடுக்கும் 1ν
.
 

GY
முயற்சியைச் சொல்வது. 'அமர காவியம்' ஒரு எழுத்தா ளனின் லட்சிய வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் துணை வியின் கதை. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இப் பன்னிரண்டு சிறுகதைளிலும் அடிநாதமாக, ஆதார சுருதியாக ஒலிப்பது மனித உணர்வுகள். அதே வேளையில் சமுதாயத்தில் நிலவும் சிறுமைகளைச் சாடி, முற்போக்குச் சிந் தனைகளைக் கோத்துச் செல்லும் சரடாகவும் அது அமைகிறது. இக் கதைகளில் உருவ அமைதி கச்சிதமான வார்ப்பாக்
அமைகிறது. நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள்
கதைகளில் இறுக்கத்திற்குத் துணைசெய்கின்றன.
கதையின் பகைப்புலத்தை யதார்த்தபூர்வமாகச் சித்தி ரிக்கும் சில சம்பவங்கள் உரையாடல்கள், கதையில் வரும் பாத்திரங்களின் வாழ்க்கைமுறைகளே ஆங்காங்கே கோடி காட்டிச் செல்கின்றன. முதற்கதையிலேயே இதற்கு
நிறைய உதாரணங்கள் உண்டு ஏனைய கதைகளும் அவ்வாறே.
சில கதைகளில் வரும் பாத்திரங்கள் நம் மனதில் சுல பமாக இடம்பிடித்துவிடுகின்றன, முதற் கதையில் வரும்
மாரியம்மா, 'பிணைப்பு" - சின்னப்பொடியர் ‘துணை' -
பண்டிதர் ஐயா, "வீட்டில் நடந்தது’ - தரகர் தம்பையா, ஐராங்கனி, ஆனை பிடிக்கும் அரியாத்தை, 'அமரகாவியம் - மகேஸ்வரி ஆகியோர் அவர்களிற் சிலர்.
பாத்திர வார்ப்புகள் கச்சிதமாக அமைவதற்கும் அவை உயிர்த்துடிப்புடன் இயங்குவதற்கும், ஆசிரியரின் கைவண்
ணமும், கலைஞானமுமே காரணமாக அமைகின்றன. பாத்
திரங்களின் ஆசாபாசங்கள், மன அவசங்கள், அங்கலாய்ப் புகள், முதலியவற்றைக் கதை படிக்கும் நாமும் அனுபவிக் கிருேம். ஆசிரியன் படைப்பாற்றலுக்கு இது ஒரு சான்று. இத்தொகுதியில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் உள்ளத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவதை வாசகர்கள் உணர்வார்கள். அந்தச் சலனத்தின் பரிணமிப் பாக ஏற்படும் சிந்தனை அலை நீண்டநேரம் நெஞ்சத்தில் விரிந்து, விரிந்து செல்வதையும் அவர்கள் அறிவார்கள். அதுவே இந்தக் கதைகளின் வெற்றிச் சின்னம்.
வாசகர்களைக் "கான்வஸ்" செய்ய நாம் முயலவில்லை. அவர்கள் வழியில் கிடந்த குப்பை கூளங்கள், முட்செடிகள், ! முரட்டுக்கற்கள் முதலிய தடைகளை அகற்றிவிட்டோம். அவ் வளவே! இனி அவர்கள் சுதந்திரம்.
இரா. நாகலிங்கம்
'மலர்' இலக்கியக்குழு, - (-96, LILD60sf) 21, மத்திய வீதி, மட்டக்களப்பு. 6-7-77
/ W

Page 7
இலங்கைப் பல்கலைக்கழக யாழ். வளாகத் தலைவர்
பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் அளித்த
அணிந்துரை
இலக்கியத்தின் ஏனைய துறைகளைப் போலவே சிறு கதைத் துறையும் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் உள்ள வர்களையும் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருப்போரையும் தன்பால் ஈர்க்கிறது. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகிற் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர், கல்விக்கூடங்களில் ஆசிரி ய ர |ா ய் இருப்பவர்கள். கனக-செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, வ. அ. இராசரத்தினம், தேவன்,
சொக்கன், சிற்பி, மருதூர்க்கனி, செம்பியன் செல்வன்
என்று உதாரணம் காட்டிக் கொண்டே போகலாம். இவர் களுள்ளும் தமிழாசிரியராய் இருப்போர் சிற்சில பொதுப் பண்புகளைப் பிரதிபலிக்கும் கதைகளே எழுதிவந்திருப்பதைக் கவனிக்கலாம்.
முல்லைமணி வே. சுப்பிரமணியத்தின் கதைக்ளைப் படித்த போது இவ்வெண்ணம் எனக்கு உறுதிப்பட்டது. ஆசிரியத்
தொழில் புரியும் பாத்திரங்கள் சில கதைகளில் வருவதை
மட்டும் மனங்கொண்டு நான் இவ்வாறு கூறவில்லை. (அதே வேளையில் இரண்டொரு பா த் தி ரங் களை த் தத்ரூபமாகப் படைத்துள்ளார் என்பதையும் நாம் மறந்துவிட முடிய வில்லை.) நான் கருதும் தமிழாசிரியர்கள் எழுதும் கதை களில் மொழி நடை, பொருள் கையாள்கை, உணர்ச்சிப் போக்கு என்பவற்றில் ஒரளவு நடுநிலைத்தன்மையும் நிதான மும் காணப்படும். அதீதமான நடைப் பரிசீலனைகளோ, உணர்ச்சிச் சுழிப்புக்களோ, தத்துவார்த்த அழுத்தமோ இவர்களது கதைகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை. தரா தரத் தமிழ்நடை, மென்னயமான உணர்வு, சராசரி வாச கனும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய பொருளமைதி என்பனவே இவர்களது படைப்புக்களிற் பெரும்பான்மை காணப்படும். எளிமையான புனைகதைகள் என்று இத்த கைய கதைகளை ஆங்கிலத் திறனய்வாளர்கள் விவரிப்பர். இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கும் கதைகள் மேற் கூறிய பண்புகளைப் பெற்றிருத்தல் வெளிப்படை.
W1

இன்னெரு விதமாகவும் இதனை விளக்கலாம். நமது சிறுகதை எழுத்தாளர்களை மூன்று பிரிவினராக வகுத்தல் கூடும். ஒரு பிரிவினர், பொருளைப் பிரதானமாகக் கருதுபவர். இவர்களது தற்கோள் அடிப்படையிற் சரியானதேயாயினும், நடைமுறையில் இவர்களிற் பலர் கருத்துக்களைக் கூறிவிடு வதே கதையின் தலையாய நோக்கம் என்னும் இடறுகுழிக் குள் அகப்பட்டு இடர்ப்படுவர். அருவமான-சூக்கும நிலை யிலுள்ள-கருத்துக்கள், வாழ்க்கை அநுபவத்தினூடாகவும் உணர்வு முதிர்ச்சி மூலமாகவும் கனிந்து சொற்களாலாய
க்லைப்படைப்புக்களாய்த் தூலவடிவம் பெறுதல் வேண்டும்
ன்ன்ற அடிப்படை உண்மையை இவர்கள் சரிவரத் தெரிந்
திருப்பதாய்த் தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்துள்ள சிறு
கதைகள், புதுக்கவிதைகள் சிலவற்றில் வளமற்ற வரண்ட இப்போக்கின் உச்சநிலையைக் காணக்கூடியதாய் இருக்கிறது.
மற்ருெரு பிரிவினர் அலங்காரத்தை, அதாவது சொல் லலங்காரம் உருவ விகற்பங்கள் என்பனவற்றைப் பிரதான மாகக் சருதி அதற்காக உயிரை விடுபவர்கள். நவீனத்துவம், தனித்துவம், பரிசீலனை முதலாய சில சொற்களை மீட்டும் மீட்டும் உச்சரித்துக் கொண்டு தமது எழுத்துக்களைத் தாமே ரசித்துக்கொள்ளும் தற்பூசனையாளர்கள் இவர்கள். பொருள் எதுவாகவும் இருக்கலாம் : கூறப்படும் முறையே முக்கியம்
என்று கூறும் அராஜகக் குழிக்குள் வீழ்ந்து அல்லற்படுப
வர்கள் இவர்கள் பொருளைப் புறக்கணிப்பதால், உருவச் சிறப்பு என்ற பெயரில் நச்சிலக்கியம் நாட்டிற்பெருகுவதை இவர்கள் பொருட்படுத்துவதாய்த் தெரியவில்&ல.
முற்கூறிய இரு பிரிவினருமே நமது 'இலக்கிய" உல கிற் பெரும்பான்மையினர். அவர்களது குரல்களே இன்று ஓங்கி ஒலிக்கின்றன. எனினும் மூன்றுவது ஒரு பிரிவினரும் உள்ளனர் என்பதனை இத்தொகுதியின் ஆசிரியரும் இவர் போன்ருேரும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். "இலக்கிய" வாதப் பிரதிவாதங்களுக்குள்ளும் “கொள்கை" யுத்தங்களுக் குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் கதை என்ருல் கதை சொல் லல் வேண்டும் என்ற ஆதார உண்மையை இவர்கள் கடைப் பிடிப்பவர்கள். பொருளைப் பிரதானப்படுத்துவேன் கதை யைக் கட்டுரையாகவும் பிரசங்கமாகவும, உருவத்தைப் பிர தானப்படுத்துவோன் க்தையைக் குறியீடாகவும் புதிராகவும் திசைதிருப்பிக் கடத்திச் செல்லும் நிலையில், கதையைக்
W1

Page 8
கதையாகச் சொல்லும் அவசியமான பணியை இவர்கள் செய்கின்றனர். இலக்கியப் போலிப் பகட்டு இன்றிக் கதை கூறும் கலேயைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
இத் தொகுதியிலுள்ள பன்னிரு சிறுகதைகளும் கதை என்னும் அடிப்படைக் கருத்துருவத்துக்குக் குந்தகஞ் செய் யாமல் பலரும் படித்து இன்புறத்தக்கனவாய் அமைந்துள் ளன. இக் கதைகளிற் காணப்படும் பொதுப்பண்புகள் சில வற்றைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.
ஏறத்தாழ எல்லாக்கதைகளுமே, கிராமப்புறஞ் சார்ந்த அல்லது நாட்டுப்புறத்து மாந்தரை அதிலும் நலிவுற்ற மாந்தரைக் கதாபாத்திரங்களாய்க் கொண்டுள்ளன. அந்த வகையில், நமது இலக்கிய உலகிலே வாய்பாடா கி விட்ட மண்வாசனை இவற்றில் குறிப்பிடத்தக்க விதத்தில் வியாபித் துள்ளது எனலாம். கடல் தாய் (பக். 4), நிலத்தாய் (பக்.10) பிறந்தமண் (பக். 50), தீர்த்தக்கரை (பக். 85) என்பன போன்ற சொற்ருெடர்கள் இதனைப் புலப்படுத்துவனவாயுள் ளன. பிரக்ஞை பூர்வமாக வரலாற்றியல் அடிப்படையிலும் சமுதாயவியல் நோக்கிலும் ஆசிரியர் கிராமங்களே அணுகா
விடினும், அவரையும் அறியாமல் கிராமப் பொருளாதாரத்
தின் சிற்சில இயக்கப்பாடுகளை இனங்கண்டு கொள்கிருர், பிணைப்பு, கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன, நூலேணிகள் ஆகிய கதைகளில் நமது கிராமங்களில் ஏற்படும் சமூகமாற் றங்களின் எதிரொலிகள் சிலவற்றைக் கேட்கிருேம், நூலே ணிகள் என்ற கதையிலே காணிச்சீர்திருத்தச் சட்டத்தின் போலித்தன்மையையும் பொய்ம்மையையும் சித்திரிக்கிருர் ஆசிரியர். நிலப்பிரச்சினையைக் கூர்மையாகவும் முனைப்பாக வும் அலசத் தவறிவிட்டார் ஆசிரியர் என்று குறைகூற இடமுண்டு. ஆயினும் கொள்கை ரீதியான அணுகுமுறை எதுவும் இன்றியும் நேர்மையாகக் கதை சொல்ல முற்படும் ஓர் ஆசிரியர் தவிர்க்க இயலாதபடி சில உண்மைகளுக்கு வாசகரை இட்டுச் செல்ல முடியும் என்பதற்கு இது பொருத் தமான உதாரணமாகும். கிராமத்தையும் கிராமவாழ்க் கையையும் இலட்சியமயப்படுத்தும் போக்கு ஆங்காங்குக் கதைகளில் தலைகாட்டுகிறதாயினும், மொத்தத்தில் இயற் கையை அளவுடன் வருணிக்கும் கட்டுப்பாடும், இயற்கைக் கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள உறவுகளை இயல்பாகச் சித்திரிக்கும் மனப்பக்குவமும் ஐயத்துக்கிடமின்றி ஆசிரியரி
1.
i.
ܨܬ݂ܳܐ

படத்துக் காணப்படுகின்றன. மண்ணுசையின் அம்சங்கள் சிலவற்றை நம்பகத்தன்மை குறையாமல் எடுத்துக்காட்டி யுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
பாத்திரங்களின் உளவியல்புகள் நுணுக்கமாக வெளிப் படுத்தப்படுதல் இக்கதைகளிற் காணப்படும் மற்ருெரு பண்பு ஆகும். துணை, ஐராங்கனி, உறவுகள், என்ன அநியாயம் சேர்! அமரகாவியம் ஆகிய கதைகளில் இப் பண்பினைத் தெளி வாகக் கண்டுகொள்ளலாம். மனுேதத்துவம் என்ற பெயரில் மன விகாரங்களையும், பிறழ்ச்சிகளையும் வரம்பிகந்து விவரிக் கும் தரக்குறைவான போக்கு இக் கதைகளில் எள்ளளவும்
இல்லை. மனிதருக்கும் மனிதருக்கும், இயற்கைக்கும் மனித
ருக்கும் ஏற்படும் உறவுகளின் அடிப்படையில் உண்டாகும் மனச் சலனங்களையும் முடிவுகளையும் இயற்பண்பு திரியாமற் சித்திரித்
துள்ளார் ஆசிரியர் நூலாசிரியரது எழுத்தாற்றல் இதிலேயே
முனைப்பாய்த் தெரிகிறது என்பேன்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள காத்திருக்க வேண்டும் என்ற கதை, அமெரிக்கச் சிறுகதையாசிரியர் ஒ ஹென்றி (1862-1910) எழுதியுள்ள கதையொன்றினைப் படித்த உற் சாகத்தில் அதனை மாதிரியாகக் கொண்டெழுதப்பட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது ஓ ஹென்றி எழுதிய அக்கதையிலே காதலி கதாநாயகனுக்குப் பரிசளிக்கத் தன் அழகிய கூந்தலை வெட்டி விற்றுவிடுகிருள். எதிர்பாராத முடிவுள்ள சிறுகதைக்கு எடுத்துக்காட்டாக அடிக்கடி பிரஸ் தாபிக்கப்படும் அக்கதை உலகப்பிரசித்தி பெற்றது. ஆயி னும், ஓ ஹென்றியின் கதையைப் படிக்கும் பொழுது நமக்கேற்படும் உணர்ச்சிக்கனிவும் பரிவுணர்ச்சியும் இக் கதையில் இல்லை.
இந் நூலுக்குத் தலைப்பாயமைந்த "அரசிகள் அழுவ தில்லை என்னும் சொற்றெடரைக் கண்டபொழுது, இலங் கையர்கோன் எழுதியுள்ள மச்சாள் என்ற சிறுகதை என் நினைவுக்கு வந்தது. “அரசகுமாரிகள் அழுவதில்லை.?? 'ஆனல் அரசிகள் அழுவதில்லையே’’ ஆகிய சொற்ருெடர்கள் (வெள்ளிப்பாதசரம், பக். 115, 120), அக்கதையில் வருகின் றன. இலங்கையர்கோன் கதையில் வரும் சொற்ருெடர்க ளால் சுப்பிரமணியம் கவரப்பட்டிருக்கிருர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அத்தொடரை வேறுபட்ட சந்தர்ப்பத்தி
1.

Page 9
லும் பொருளிலும் அவர் பயன்படுத்தியிருப்பினும், இரு கதைகளும் அடிப்படையில் உளவியல் ரீதியில் அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நூலாசிரியர் அத்தொடரைக் கூடுதலான சமூக நோக்கிற் கையாண்டிருத்தலும் கவனிக்கத் தக்கதே. இரு கதைகளையும் ஒப்புநோக்குதல் இலக்கிய மாணவருக்குச் சுவை பயப்பதாயமையும் ஓ ஹென்றி போன்ற மேனுட்டு ஆசிரியர் மட்டுமன்றி, இலங்கையர்கோன் போன்றவர் களும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு உந்து சக் தியாய் இருத்தல் மகிழ்ச்சிக் குரியதாகும் ஆக்க இலக் கியப் பரம்பரை ஒன்று இந்நாட்டிற் பரிணமித்து வருவதை இது குறிக்கிறது எனலாம். நவீன எழுத்தாளர்களது படைப்புக்களை மட்டுமன்றி, மரபு வழி க் கதைகளையும் கவிதைகளையும் தமக்கு மூலப்பொருள்களாய்க் கொண்டிருக் கிருர் ஆசிரியர், அவளும் தோற்று விட்டாள் என்ற கதை வன்னிநாட்டுப் பிரதேசத்தில் வழங்கும் நாட்டார் கதை யொன்றை ஆதாரமாய்க் கொண்டது. அதேவேளையில் சிறு கதை உருவத்திற்குப் பொருத்தமாயும் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாய்ப் பார்க்குமிடத்துப் பாத்திரங்களின் குணவியல்புகளைச் சித்திரிப்பதிலேயே - புற உலகிலும் பார்க்க அக உலகினை ஆழமாக நோக்குவதிலேயே - அதிக அக்கறை கொண்டுள்ள ஆசிரியது இக் கதைகளில் அவலச் சுவை இழையோடுதல் எதிர்பார்க்கக்கூடியதொன்றே. மிகை உணர்ச்சியை எழுப்பாமல் உள்ள நெகிழ்ச்சியை உண்டுபண் ணும் ஆற்றல் ஆசிரியருக்கு இருப்பதை மறுக்கவியலாது.
இலக்கிய அந்தஸ்தை எண்ணியோ அல்லது கொள்கை விளக்கத்தைக் கருத்திற்கொண்டோ அல்லது வேறு பாவனை களுடனே ஆசிரியர் இக் கதைகளை எழுதினர் என்று நான் நினைக்கவில்லை. கதை சொல்பவர் என்ற ஹோதாவிலேயே அவர் நம்மிடம் வருகிருர், அவ்வாறு பார்க்கும்பொழுது ஆசிரியர் பெருமளவு வெற்றி கண்டிருக்கிருர் என்பதில் ஐயமில்லை. -
- க. கைலாசபதி
ܛ

என்னுரை
UTir எழுத்துலகில் பிரவேசித்து ஏறக்குறைா இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. ஆரம்பத்தில் நாடகங் களையும் கவிதைகளையுமே எழுதினேன் கடந்த பத்து ஆண்டு களாகவே சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறு க  ைத எழுதத் தொடங்கிய காலத்தில் இப்ப்டியொரு சிறுகதைத் தொகுதி வெளியிடும் எண்ணம் இல்லாததாலோ என்னவோ நான் எழுதிய - அச்சில் வெளிவந்தனவும் வெளிவரா தனவுமான-சில கதைகளேப் பாதுகாத்து வைக்கத் தவறி விட்டேன். அவ்வப்போது வெளியானவற்றுள் பன்னி ரண்டு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன.
சிறுகதை ஒர் இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப் பட்டபின் பலவிதமான வரைவிலக்கணங்கள் தோன்றின.
பிராங் ஒ கோனர் என்னும் பிரபல திறனய்வாளர் 'சிறுகதை, அமுக்கப்பட்ட தனிமனிதனின் குரலேயாகும்" எனவரைவிலக்கணம் கூறியுள்ளார்.
'குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் மனிதமனம் படும் பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறையைச் சித்தரிப்பதுதான் சிறுகதை' என்பர் கலாநிதி கா. சிவத் தம்பி அவர்கள்.
இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் சிறு கதைகளை எழுதினேன் என்பதில்லை. மேலே குறிப்பிட்ட சிறுகதையின் பண்புகள் ஒரு சிறிய அளவிலேனும் எனது கதைகளில் இடம் பெற்றிருந்தால் அல்லது எனது கதை களில் வரும் கதை மாந்தர்கள் வாசகர் மனத்திலே ஒரு சிறு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினுல் - கதை மாந்தருக்காக வாசகர் இரக்கப்பட்டால், அவர்களை அளவுக்கு மிஞ்சி விரும்பினல் அல்லது வெறுத்தால்-அது எனது எழுத் துக்குக் கிடைக்கும் வெற்றியென்றே கருதுவேன்.
நான் சித்திரிக்க முயன்ற கதை மாந்தர்கள் எல்லாம் நாம் நேற்ருே, இன்ருே சில நாள்களுக்கு முன்போ சந்தித் துப் பழகியவர்கள்தான் . மட்டக்களப்பிலே யந்திரப்படகின்
Χ1

Page 10
மூலம் மீன்பிடித் தொழில் நடத்தும் முதலாளிகளையும் சிறிய தோணியிலே மீன்பிடிக்கச் சென்று கஷ்ட ஜீவனம் செய்யும் ஏழை மீனவர்களையும் பார்த்திருக்கிறேன். எனது பிறந்த கிராமமான முள்ளியவளையில் பல பிள்ளைகளையுடைய ஏழைத் தாய் ஒருத்தி வறுமையின் பிடியில் சிக்கிய நிலையிலும் தன் குழந்தைகளில் ஒன்றையேனும் தனது உறவினர்களுடன் கூட வளர்ப்பதற்காக் விடத்தயங்கும் நிலையைக் கண்டேன், கொழும்பிலே ஒரு செல்வக் குடும்பத்துப் பெண்மணியின் குழந்தை வேறுயாருடனே வளர்வதைக் காண நேர்ந்தது. இம் மூன்று நிகழ்ச்சிகளும் 'அரசிகள் அழுவதில்லை" என்னும் கதையை எழுதத் தூண்டின. எனது சொந்தக் கிராமத்தில் மின்கம்பங்களை நிறுத்துவதற்காக தெருவோரத்தில் கிராமத் திற்கு அழகையும் நிழலையும் தந்துகொண்டு நின்ற ஆலமரங் கள் தறிக்கப்பட்டபோது ‘கிராமங்கள் கற்பழிக்கப்படுகின் றன’ என்ற கதை பிறந்தது. கிராமத்தில் ஒரு தலைமுறை யினர் கஷ்டப்பட்டுத் தேடிய காணியை அடுத்த தலைமுறை யினர் விற்க முனையும்போது ஏற்படுகின்ற முரண்பாட்டைக் கண்டேன். நிலத்தைத் தேடிய பழைய தலைமுறையினர் நிலத்தின்மீது வைத்திருக்கும் ஆழ்ந்த பாசம் ' பிணைப்பு என்னும் கதை தோன்றக் காலாக அமைந்தது. முல்லைத் தீவுப் பகுதியில் வேலப்பணிக்கன் ஒப்பாரி' என்னும் நாட் டுப்பாடல் ஒன்று உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் நடை பெற்றதாகக் கூறப்படும் இக் கதைக்கு சிறுகதை வடிவம் கொடுக்க முனைந்ததன் பயன்தான் "அவளுந் தோற்றுவிட்
டாள்". "ஏழைகளின் நல்வாழ்வு கருதி இயற்றப்படும் சட் ,
டங்கள் பல அவர்களுக்கு நன்மை பயப்பதில்லை" என்ப தைக் கண்ட நான் நிலவுடமைக்காரனுக்கும் தொழிலாளிக்கு மிடையேயுள்ள முரண்பாட்டை நூலேணிகள்’ மூலம் கூறமுனைந்தேன். ஓர் எழுத்தாளன் நூலொன்றை வெளி யிடுவதிலுள்ள சிரமங்களை அநுபவ வாயிலாக உணர்ந்தவன் யான். இன்னுெரு எழுத்தாளனில் நூல் வெளியீட்டு விழா வில் பங்குகொண்ட அநுபவம் 'அமரகாவியம்" என்னும் சிறுகதையை எழுதத் தூண்டியது. இப்படி நான் கூறுவதால் இத்தொகுதியிலுள்ள சிறுகதை எல்லாம் உண்மைக்கதைகள் என்று கொள்வது தவறு நான் கண்டு அநுபவித்த சில சம் பவங்கள் கதைகளைப் புனையத் தூண்டின என்று கொள்வ துதான் பொருத்தம், இக்கதைகளில் வரும் பெயர்கள் நிகழ்ச்சிகள் யாவுங் கற்பனையே. X11

இத் தொகுதியை மட்டக்களப்பு "மலர் இலக்கியக் குழுவின் சார்பில் அதன் செயலாளர் 'அன்பு மணி இரா. நாகலிங்கம் அவர்கள் வெளியிடுகின்றர்கள். பல இலக்கிய அன்பர்க்ள் வெளியீட்டு நிதி வழங்கியுள்ளனர். இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகத் தலைவர் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மனமுவந்தளித்த அணிந்துரை இந் நூலை அலங்கரிக்கிறது. கோப்பாய் ஆசிரியர் க்லாசாலைக் கவின்கலை விரிவுரையாளர் பொ. சின்னத்துரை அவர்கள் அட்டைப்படத்தை வரைந்துதவியுள்ளார்கள். இதே கலா சாலைத் தமிழ் விரிவுரையாளரும் பிரபல எழுத்தாளருமான சொக்கன் இத்தொகுதியை வெளியிடப் பலவிதத்திலும் உதவியவர். யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சக உரிமையாளர் திரு. மு. வி. ஆசிர்வாதம் ஜே. பி. அவர்களும் அச்சக ஊழி யர்களும் இந்நூல் சிறந்த முறையில் உருவாக உதவியுள் ளனர். இப் பெரியார்கள் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள்.
முல்லைமணி ‘மிதிலை"
ஒட்டுசுட்டான்.
xiii

Page 11
擎

惠
அரசிகள் அழுவதில்லை
Gé Tupourriär கரையை நோக்கியவண்ணம் மாரியம்மா நிற்கிருள். கச்சான் காற்றின் உக்கிரத்தினுல் உவர் நீர், வாவியில் எழுகின்ற அலைகளையோ, வாவியை நோக்கிச்
சரிந்து வளர்ந்து சோலையாக நிற்கும் தென்னைகளின் குளு
குளுப்பையோ ரசிக்கும் நிலையில் அவள் இல்லை . வேலிக்கென நடப்பட்டுச் சடைத்து வளர்ந்திருக்கும் நச்சுமரங்களில் தொங்கும் அழகான காய்களே ஒரு கணம் பார்த்துவிட்டுக் கண்களே மீண்டும் வாவிப்பக்கம் செலுத்துகின்ருள்.
நீரைக் கிழித்துக்கொண்டு கரையைநோக்கி வந்த யந்திரப் படகுகளிலிருந்து மீன்கள் இறக்கப்படுகின்றன.
காத்தமுத்து இப்படியான ஒரு படகிலா போனுன் மீன் பிடிக்க? உடல் சக்தியை எரிபொருளாகக் கொண்ட சிறிய தோணி; அதுவும் பல ஆண்டுகள் உபயோக்த்தினல் உக்கி ஒட்டைவிழுந்த நிலையில் இருந்தது. அதில்தான் அவன் மீன்பிடிக்கச் சென்றன். தோணிகள் கரையை நோக்கி வருகின்றன.
'அம்மா பசிக்கி. ' கடைக்குட்டியின் அழுகை ஒலி அவள் இதயத்தை உருக்குகின்றது. அன்று முழுவ தும் பட்டினிதான்!

Page 12
காலையில் தோணியெடுத்துச் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. அவன் பிடித்துவரும் மீனை விற்ருல்தான் அரிசி வாங்கலாம். முன்பு பட்ட கடனையே கொடுக்கவில்லை. கடைக்காரன் மீண்டும் அரிசி கடனுக்குக் கொடுக்க மறுத்து விட்டான்.
தொலைவிலே தோணிகள் வருகின்றன; அதில் ஒன்று காத்தமுத்துவினுடையதாக இருக்கலாம்! வலக் கையை நெற் றியின் மேல் கவித்துப் பிடித்துத் தூரத்தே வரும் தோணி களைப் பார்க்கிருள். பசியால் பஞ்சடைந்த அவள் க்ண் களுக்கு தோணிகளை இனங்கண்டுகொள்ள முடியவில்லை.
o “gjub torr Lugoj; G)... ” ”
முதுகில் ஒங்கி அறைய வேண்டும் போலத் தோன்று கிறது. கோபத்தை அடக்கிக்கொண்டு, 'அப்பா வந்திடு வார்; அரிசி வாங்கிக் கஞ்சியெண்டாலும் காய்ச்சித்தாறன்."
வாவிக்கரையின் ஒரத்திலே அதை எதிர்நோக்கிய படியுள்ள குச்சுக் குடிசையில் இல்லறம் நடத்தியதற்கு அத் தாட்சியாக விளங்கும் ஆறு பிள்ளைகளுடன் வாழ்கின்றனர் காத்தமுத்துவும் மாரியம்மாவும்.
மூத்தவன் சிவலிங்கத்துக்கு வயது பத்துத்தான் ஆகி றது. இருல் பிடிக்கும் காலத்தில் அவனும் இரண்டு மூன்று ரூபாய் உழைப்பான். இப்பொழுதுதான் இருல் இல்லையே! * பக்கத்து வீட்டே போய் அரைக்கொத்து அரிசி வாங்கிவா மகன்; அப்பு வந்ததும் வாங்கித்தரலாம் எண்டு சொல்லு இப்படிக் கூறிக்கொண்டே அடுத்த வீட்டை நோட்டம் விடுகிருள்.
கெம்பீரமாகத் தன் அழகை எடுத்துக்காட்டும் பெரிய கல்வீட்டில் ஆறுமாதத்துக்கு முன்புதான் ஒரு குடும்பம் குடியேறியிருந்தது. அந்த அம்மாவின் இளமைத் தோற் றம் உண்மையானதா, அல்லது அழகு சாதனங்களின் அநு சரணையால் வந்ததா என்று சொல்லமுடியாது. ஐயாவும் அவருக்கேற்ற சோடிதான்.
அம்மாவின் அலங்காரத்தைப் பார்த்தால் எங்கோ வெளியில் போக ஆயத்தப்படுத்துவது போலத் தோன்றுகி
زی
o

3
றது. ஐயாவும் அப்படித்தான். புதுப்படம் வந்திருக்கிறது. ஒருவேளை அதற்குத்தான் போகிருர்களோ?
அடுத்த வீட்டுக்குப் போக ஆயத்தமாக நிற்கும் சிவ லிங்கத்தைக் கை சாடை காட்டி மறிக்கிருள். வெளியே போக ஆயத்தம் செய்யும் தம்பதிகளே மறித்துக் கடன்
கேட்பது சரியில்லையே.
*அரசி நேரமாகிறது றெடிதானே!" என்ற ஐயாவின் குரலுக்கு ‘வெயிட் ஏ மினிட்' என்று கூறிவிட்டு கண்ணுடி முன் சென்று "மேக்கப்" பில் இறுதி கட்டத்தைச் செய்து பல கோணங்களிலும் தன்னைப் பார்த்துக்கொள்கிருள்.
அழகான பேஜோ கார் உறுமும் சத்தம்; இருவரும் “புறப்பட்டுவிடுகின்றனர்.
மாரியம்மா அந்தக் குடும்பத்துடன் ஒரளவு பழக்கம் பிடித்திருந்தாள். மங்கையர்க்கரசி என்னும் அம்மாவின் பெய ரைச் சுருக்கி 'அரசி' என்றுதான் ஐயா அழைப்பார்.
மாரியம்மா அவர்களுக்கு மா இடித்தல், தூள் இடித் தல் போன்ற தொட்டாட்டு வேலைகளைச் செய்துகொடுப் பாள். அவர்களும் மாரியம்மா மீது அன்பாகத்தான் இருந் த்ார்கள். ஐயாவுக்கு ஏதோ பெரிய உத்தியோகமாம். ஆயி ரம் ரூபாவுக்கு மேல் சம்பளம். அம்மாவுக்கு முந்தினதாரத் துப் பிள்ளைகள் இரண்டு: யாரோ தூரத்து உறவினர் சுவீ காரம் எடுத்து வளர்க்கின்றனர். ஐயாவுக்குப் பிள்ளைகளென் முல் பிடிப்பதில்லையாம்! சிறுகச்சிறுக மாரியம்மா சேகரித்த தகவல்கள் இவை. *
தோணிகள் கரைக்கு வந்து விட்டன. காத்தமுத்து
வின் தோணியும் வந்துவிட்டது. மாரியம்மா ஆவலுடன்
செல்கிருள். தோணியை எட்டிப்பார்த்த மாரியம்மாவுக்கு ஏமாற்றம்தான். தோணிக்குள் சில சூடையும், காரலும்!
மீனை மூன்று ரூபாவுக்கேனும் விற்கவேண்டுமென்று காத்தமுத்து முயன்றும் முடியவில்லை. இரண்டு ரூபாய் தான் கிடைத்தது. இதைக்கொண்டு எட்டு ஜீவன் கள் ஒரு நாளைப் பொழுதைப் போக்க முடியுமா?

Page 13
துடுப்பு வலித்து வலித்து காத்தமுத்துவின் தோள்கள் வலிக்கின்றன. "ஒருபோத்தல் கள்ளெண்டாலும் குடிச்சாத் தான் அலுப்புத் தீரும்" என்று எண்ணியவன், தென்னை மரங்களையும், இரண்டு ரூபாவையும் மாறி மாறிப் பார்க்கி முன். இரண்டு ரூபாவுக்கு அரைக்கொத்து அரிசி வாங்கலாம்; பிள்ளைகளுக்குக் கஞ்சி கிடைக்கும். கடனுக்கு ஒரு போத்தல் கேட்கலாமா? மாரியம்மாவின் கைக்கு இரண்டு ரூபாய் மாறு கின்றது.
கொஞ்சநேரமென்ருலும் “கெளிஞ்சாத்தான் அவன் அலுப்புத் தீரும். கிளிஞ்சுபோன பாய்த்துண்டை விரித்துப் போட்டு சிறிதுநேரம் படுத்திருக்கிருன், மாரியம்மா சுடச்
சுட சாயத்தைக் கொண்டுபோய்க் கொடுக்கிருள். ஒரு
கையால் சாயக் கோப்பையை வாங்கிய காத்தமுத்து மற்றக் கையையும் நீட்டுகிருன்.
"கருப்பட்டி இல்லை; வெறும் சாயந்தான். கையை விரித்துவிடுகிருள் மாரியம்மா.
பிள்ளைகள் கஞ்சி குடிக்கின்றனர்!
விடிந்தால் மீண்டும் அதே பிரச்சினைதான். ஒரு
நாளா, இரண்டு நாளா? காத்தமுத்துவைப் பொறுத்த அள வில் கடல்தாய் அவனை வஞ்சித்து விட்டாள். அவனுடைய சிறியதோணியில் ஆழ்கடலுக்குப் போக முடியாது. வாவி யில் செல்வது கூட க்ஷ்டம்தான்!
தோணியிலுள்ள துவாரங்களை அடைக்க எத்தனை
முறை தார் உருக்கி ஊற்றுவது?
இனி வேறு ஏதாவது கூலி வேலைசெய்வதுதான் நல் லதுடு ஏன் கடலில் மீன் இல்லையா? நீர்கொழும்பு முதலாளி இயந்திரப்படகின் உதவி கொண்டு தினமும் அந்தர்க் கணக் இல் மீன் பிடிக்கிருர். பெரிய பெரிய உல்லன், சூரன், பாரை, சுரு- எத்தனை வகையான மீன்கள். ஐஸ்போட்டு தினமும் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றன. இயந் திரப்படகில் கூலியாளாகவேனும் வேலைசெய்யலாம். நீர் கொழும்பு முதலாளியைக் கேட்டுப் பார்க்கலாமா?

5
முதலாளி ஊரவரைக் கூலிக்குப் பிடிப்பதில்லை. வரும் பொழுதே தேவையான தொழிலாளர்க்ளை நீர்கொழும்பிலி ருந்து கொண்டுவந்துவிடுவார்.
காத்தமுத்துவுக்குத் தெரிந்த கொந்தராத்துக்காரர்சிங்களவாடிச் சின்னையர்-ரவுணில் கட்டிடவேலை செய்விக் கிருர், அவரிடம் கூலி வேலை கேட்டுப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் அயர்ந்து தூங்குகிருர்கள். கஞ்சிப் பானை யைப் பார்க்கிருள் மரியம்மா. ஒரு சிரட்டை கஞ்சிதான் இருக்கிறது. அதை கணவனுக்கு ஊற்றிக் கொடுக்கிருள்.
'எனக்குப் பசிக்கேல்லை, நீயே குடி மாரி.' 'நல்ல கதை சொல்ரு நாள் முழுக்க கடலிலை அலைஞ் சிட்டுவந்து இப்ப பசிக்கேல்லையாம்; உம் குடியிங்க."
'நான் குடிச்சா உனக்கு?" 'எனக்குப் பசிக்கேல்ல' 'ஏன் என்ன சாப்பிட்னி?"
மாரியம்மாவால் பொய்க்குக் கூட காரணம் சொல்ல முடியவில்லை. காத்தமுத்து கஞ்சிச் சிரட்டையை எடுத்து மாரியம்மாவுக்கு ஊட்டச்செல்ல. அதை அவள் பருகுவது போலப் பாசாங்கு செய்துவிட்டு, அவனுக்கு ஊட்ட கஞ்சி
காத்தமுத்துவுக்குப் புதிய தெம்புவந்ததுபோல் ஆகி விட்டது. மாரியம்மாவைக் க்டைக்கண்ணுல் நோக்கிக் கன் னத்திலே கிள்ள. அவள் விலகிச் சென்று நாணிக் கோணிப் பொய்க் கோபம் கொள்ள ஊடலுக்குப்பின் ஒருவரில் ஒரு வர் சங்கமமாகி உலகை மறந்த நிலையிலே அன்றைய இரவு கழிகிறது.
அடுத்தவீட்டுப் "பேஜோ கார் வந்து நின்றதோ அவர்கள் பார்த்த அடல்ற்ஸ் ஒன்லி ஆங்கிலப் படத்தைப் பற்றி "இங்கிலிவவில் சர்ச்சை செய்ததோ இவர்களுக்குத் தெரியாது.
எழுவான் கரையிலே காலைக் கதிரவன் வர்ணக் குழம்பைக் கரைத்துத் தெளித்துவிட்டு அக்கினிக் கோள

Page 14
6
மாக மேலே மேலே வந்து கொண்டிருக்கிருன், காத்துமுத்து *ரவுனை நோக்கி வேலை தேடிப் போகிருன்.
நம்பிக்கை என்னும் நூலேணியில்தானே மனித வாழ்க்கை தொங்குகிறது.
காத்தமுத்துவின் நம்பிக்கை வீண்போகவில்லை. கொந்தராத்துக்காரச் சின்னையர் அன்றைக்கு அவனுக்கு வேலே கொடுக்கிருர், பத்து ரூபா கிடைக்கிறது.
வீடுசெல்கின்ற பாதையிலே கள்ளுத்தவறண1 அலுப் பைப் போக்க் ஒரு போத்தல் பாவிக்கப் போனவன் இரண்டு போத்தல் போடவேண்டி ஏற்பட்டு “ரேஸ்ரும்' வாங்க மூன்று ரூபா செலவாகிறது.
உசார்நிலைப் படுத்திக் கொண்டு வீடு வந்துள்ள காத்த முத்துவைப்பார்த்தபோது மாரியம்மாவுக்கு விஷயம் விளங்கி விடுகிறது.
*" என்ன இண்டைக்கு உழைச்ச முழுக்கக் குடிச் சாச்சோ?* மாரியம்மா சீறிவிழ.
*எல்லோரையும் போலவே என்னையும் எண்ணலாகு
மோடி போடி.." என்ற ராக ஆலாபரணத்துடன் மிகுதிப் பணத்தை அவளின் கையில் திணிக்கிருன்.
அவள் வாயெல்லாம் பல்லாக் அதை வாங்குகிருள் * மாரி இஞ்சை வா.வா எண்டா வா. எப்படி யடி எண்ட உழைப்பு.'
"பெரிய உழைப்பாளிதான்'
"இஞ்சைவா நானெண்டு சொல்லுறன்; கவனமாய்க்.
கேட்டுக்கோ."
*சொல்லுங்களென்." “சிங்களவாடிச் சின்னையர் இக்கிருரெல்லுவா? அவர் என்னிட்ட ஒரு விசயம் கேட்டார்."
** என்ன விசயம்?? “நம்மட சின்னவன் இரிக்கானெல்லுவா? அவனை தன்னுேடை விடட்டாம். தான் படிப்பிச்சி உத்தியோக மாக்கிருராம். அவருக்குப் பிள்ளைகளில்லே; அதுதான் க்ேட் Gayri.”

'மறுகா நீங்கள் என்ன சொல்லுகிறிங்க?" 'நான் என்ன சொல்லுறது? ஒரு பிள்ளேயெண்டா லும் நல்லா இருந்தாக்கா நமக்கு நல்லதுதானே!"
"என்ன சாதியாளப்பா நீ"
"மாரி உனக்குத் தெரியுந்தானே எண்ட உளப்பு இந் தக் குடும்பத்துக்குக் கஞ்சிவார்க்கவும் போதாது. கடனும் தனியுமா இரிக்கி அதுதான் பார்க்கிறன்.”
“எனக்குத்தான் மனங்கேக்கல்ல'
"கடல் பெளெப்பெ நம்பியிருக்கேலா எனக்கு நிரந்தர மான வேலை தாறதெண்டு சொல்லியிருக்காரு. பக்கத்து வீட்டு அரசி அம்மாவைப் பாக்கிறியே அவவும் பிள்ளைய ளைப் பிரிஞ்சுதானே இரிக்கா. எவ்வளவு சந்தோஷமா இரிக்
காங்க் I*
காத்தமுத்துவின் வார்த்தைகளில் நியாயம் இருப்பது
போலத்தான் தென்பட்டது மாரியம்மாவுக்கு, வறுமையை
உத்தேசித்து சிங்களவாடிச்சின்னையாவுடன் சின்னவன் அனுப்பப்படுகிருன் .
... மாரியம்மா கண்ணிருடன் தான் விடை கொடுக்கி ருள். அவளுக்கு வேலை ஒடவில்லை. எதையோ பறிகொடுத்
தவள் போல இருக்கிருள். அழுகை அழுகையாய் வரு
கிறது.
காத்தமுத்துவுக்கு நிரந்தரமான வேலைகிடைக்கிறது
வீட்டில் உலை ஒழுங்காகக் கொதிக்கிறது. ஆனல் மாரியம்
மாவுக்குத்தான் பசியில்லை; தூக்கமில்லை. சின்னவனை நினைத்து அழுது கொண்டே யிருக்கிருள். ஒருநாள். இரண்டுநாள். மூன்றுநாள், நான்காம் நாள் அவளால் பொறுக்கவே முடியவில்லை. காத்துமுத்துவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருள். அவனைக் கண்டதும் ஒப்பாரி வைக்கிருள்.
'ஏன் மாரி என்ன நடந்திச்சி’
*சின்னவனை விட்டிட்டு என்னலே உசிர்வாழ ஏலா அவனைக் கொண்டுவாங்கோ."

Page 15
“ஏன் மாரி எந்தமுக்த்தைக் கொண்டு நான் ப்ோகி றது. நாம் மனமொத்துத்தானே அனுப்பினேம். வேணு மெண்டாப் போய்பார்த்துவிட்டு வருவம்.”
'எண்ட புள்ளெயெ இ ங் கே கொண்டு வந்து விடாட்டா நான் உசிரோடை இருக்க மாட்டன்.
அடுத்த வீட்டிலே அரசியும் கணவனும் ஏதோ
ஹாஸ்யத்தைப் பகிர்ந்துகொள்வது போலக் கலகலவென்று சிரிக்கின்றனர்.
"மாரி அரசி அம்மாவைப் பார் எவ்வளவு வசதி யிருந்தும் பிள்ளையளேத் தன்னுேடை வைச்சிருக்கேல்லை. அவ அழுதுகொண்டா இரிக்கா? நமக்கு வீட்டிலே ஐஞ்சு பிள்ளைகள் கிடக்காங்கள். அப்பிடியிருக்க நீ சின்னவனைப் பத்தியே கவலைப்படுகிறியே."
என்ன சொல்லியும் மாரியம்மா கேட்கவில்லை. காத்த முத்து சால்வையை உதறிப்போட்டுக் கொண்டு சின்னையர் வீட்டை நோக்கிப்போகிருன்.
வசதி ப்டைத்தவர்கள் பந்தங்கள் பாசங்களே விட்டு'
உள்ளத்தை மரமர்க்கிக் கொள்கின்றனர். ஏழைகளால் அது முடிவதில்லை.
அரசிகள் அழுவதில்லை.
 

f?,00I'll
சின்னப்பொடியர் வயல் வரம்பில் நிற்கிருர் . பரு வத்தின் பூரிப்பை எடுத்துக்காட்டும் உடையுடன் நாணிக் கோணி நிற்கும் அழகியின் விழியசைப்பை எதிர்நோக்கியி ருக்கும் வாலிபனின் முகக்களை அவரிடமிருக்கிறது. அவர் உள்ளத்துக்குக் கிளுகிளுப்பையும் இன்பத்தையும் கொடுத் துக்கொண்டு நிற்கிருள் நிலம் என்னும் நல்லாள். புதுப் பொலிவுடன் வளர்ந்து கதிர் வந்து பாலேறித் தலைகுனிந்து நிற்கும் நெற்கதிர்களேக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டு நிற்பதில் ஒரு காதலனுக்குள்ள இன்பம் அவருக்கு. நெடுங்கேணியென்னும் கிராமத்தில் உள்ள அந்த நில்ம் அவருக்குச் சொந்தம். அவர் அந்த நிலத்துக்குச் சொந்தம். பிரிக்கமுடியாத பிணைப்பு.
அன்ருெரு நாள் மணவறையிலே நாணிக் கோணி வந்து அருகே இருந்தாளே மீனுட்சி; அவளுக்கும் அவருக்கும் இடையில் உள்ள பிணைப்புக்கூட இதற்கு ஈடாகமாட்டாது என்றுதான் கூறவேண்டும்.
கல்யாணம் செய்த புதிதில் மீனுட்சி கூடச் சொல்லியி ருக்கிருள் 'உங்களுக்கு எங்களைவிட வயல் காணியில்தான் பட்சம் கூட. ஒரு நாளெண்டாலும் வீட்டிலை தங்கிறியள் இல்லையே'
பழைய நினைவுகளை மனம் அசைபோட வயல் வரம் பிலே நடக்கிருர்,
b

Page 16
O
ஐந்து வயதாயிருக்கும்போது தந்தையை இழந்தது. பத்து வயதில் தாயைப் பறிகொடுத்தது அநாதையானது. உடையாருக்கு அடிமையாகி ஓடாய் உழைத்தது-எல்லாம் அவர் மனத்திலே திரைப்படம் காட்டின.
சம்பளம் பெருத கூலியாளராய் உடையார் வீட்டுப்
பணிவிடைகளையெல்லாம் செய்து முடித்தது எல்லாம் பழங் கேதைகள்.
உடையாரின் மனைவி தங்கமான மனுஷி, அந்த அம்மையாரது சிபார்சின்பேரிலேதான் உடையாரின் மனம் இரங்கியது. பத்து வருஷ உழைப்பின் பின் வருஷத்துக்கு இருநூறு ரூபா சம்பளம் போட்டுக் கொடுத்தார் உடையார். இப்படிச் சேர்த்துக்கொண்ட ஆயிரம் ரூபா சின்னப்பொடி யரை இரண்டு ஏக்கர் காணிக்குச் சொந்தக்காரணுக்கியது.
நெற்கதிர்களை உற்றுப் பார்க்கிருர், இன்னும் ஒரு மாதத்திற்குள் அரிவி வெட்டலாம். 'இம்முறையெண்டா லும் ஒரு வாட்டர் பம்ப்' வாங்கிப்போடவேணும்'
முதல் வருஷம்தான் பூமித்தாய் அவரை வஞ்சித்து விட்டாள். வானம் பொய்த்துவிட்டதால் போட்ட முதலைக் கூட எடுக்க முடியாமல் போய் விட்டது.
ஒரளவென்ருலும் அவரிடம் பசையிருக்கிறதென்முல் அது அவரின் மேட்டுநிலம் - மிளகாய்த்தோட்டம்கொடுத்த பரிசுதான்!
அவரின் மூத்த மகள் தங்கத்துக்குப் பிள்ளை பேற்றுக் காலம் நெருங்கிவிட்டது. அவள் சின்னப்பெடியார் வீட் டிலே முகாம் போட்டுவிட்டாள்.
மகன் ஆனந்தன் யாழ்ப்பாணத்தில் படிக்கிருன். மூன்றுமுறை பரீட்சையெடுத்து நாலு ‘சி’யுடன் பாஸ் பண்ணிவிட்டான். அது அவருக்குப் பெரியபெருமை,
சின்னப்பொடியர் மழைக்குக் கூடப் பள்ளிக்கூடத் தாழ்வாரத்தில் ஒதுங்கும் பாக்கியம் பெறவில்லை. இவரு டைய அறியாமையை- க்ணக்கு வழக்குத் தெரியாத தன் மையை- பயன்படுத்திப் புகையிலே வியாபாரி அவரை ஏமாற்றிவிட்டபோது தான் அவருக்கு ரோஷம் பிறந்தது
11 ܛܳܐܢ
 

"எப்படியும் என் மகன் நாலெழுத்துப் படிக்க வேணும், கணக்கு வழக்குத் தெரியவேணும்' -இந்த எண்ணமே ஆனந்தனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பத் தூண்டியது.
இளையவன் இராசையா ஐந்தாம் வகுப்புடன் ஏடு கட்டி விட்டான். மூன்றடி ஒரு யாரா, மூன்று யார் ஒர் அடியா என்ற தகராறுதான் இராசையாவின் படிப்புக்கு முற்றுப் புள்ளிவைத்தது. ‘இராசையாவுக்கும் படிப்புக்கும் வெகு தூரம்" என வகுப்பாசிரியர் செய்த சிபார்சின் பேரில் படிப் புக்கு முழுக்குப்போட்டு விட்டான் இராசையா.
சின்னப்பொடியரைப் பார்ப்பவர்கள் அவருக்கு ஐம்பது வயதிருக்கும் என்று மதிக்க மாட்டார்கள். உழைத்து உழைத்து உரமேறிய உடம்பு இரும்பைப்போல் இருந்தது. அவருடைய சீவாத பரட்டைத்தலேயும் பல நாட்கள் நாவிதனின் சேவையைப் பெருது குத்திட்டு அடர்த்தியாக நிற்கும் உரோம்ங்களைக் கொண்ட முகமும் பழுப்பேறிய நாலு முழவேட்டிக் கட்டும் சின்னப்பொடியரை இனங் காணப் போதுமான இலட்சணங்கள்.
இராசையா சோறு கொண்டு வருகின்றன். **வாமேனை வா கொக்காவின்ரை பாடு எப்பிடி??? **அவ சுகமாய்த்தான் இருக்கிரு." **வா வா ரெண்டு பேருமாய்ச் சாப்பிடுவம்" **நான் சாப்பிட்டிட்டன் அப்பு; இது உங்களுக்குத் தான், சாப்பிடுங்கோ?
*சரிசாப்பிட்டிட்டு வேலிகட்டவேணும்; மான்கொடியை எடுத்து நனையப்போடு"
இராசையா மான் கொடிச் சுருளை எடுத்து நீருள் இடுகின்றன்.
“வேலி அடைச்சுப் போட்டு மிளகாய்க் கண்டுத் தறைக் குப் போகவேணும்; தையிலை வைச்ச கண்டுகள் பாத்தி கட்டியாச்சு, இண்டைக்கு இறைக்கவேணும். ' -மனதில் திட்டம் தீட்டுகிருர் சின்னப்பொடியர்.
இரண்டு ஏக்கர் தோட்டக் காணிதான் அவர் முதல் வாங்கியது. அதுதான் அவரை ஆளாக்கியது. பிறகு ‘கெட்டு நொந்து போன" உடையாரிடம் ஐந்து ஏக்கர் நெற்காணி யும் வாங்கிவிட்டார்.

Page 17
影
2.
* 1 தங்கத்தின் கிளறிக்கல் மாப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை கொழும்பில் உத்தியோகம். அதுவும் அவருக்குப் பெருமை யான விஷயந்தான்!
2
இரும்பாக இருந்த சின்னப்பொடியர் தும்பாக இளைத்துப் போய்விட்டார். அவருக்குத் தீராத வருத்தம்புற்று நோயாம். கொழும்புக்குக் கொண்டுபோய் வைத் தியம் செய்தும் பலன் கிடைக்கவில்லை.
சின்னப்பொடியர் நெடுங்கேணியில் பெரிய புள்ளியாக இல்லாவிட்டாலும், நாலுபேர் மதிக்கக்கூடிய முறையில் இருந்தார். அவருடைய கடைசிக்காலம் இப்படி வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. -
*யாழ்ப்பாணத்தில் படிக்கிற ஆனந்தனுக்கு சுண்டிக் குளிப் பெடிச்சியொன்றுடன் காதலாம். பொட்டை யின்ரை தாய் தேப்பனுக்குச் சம்மதமாம். ஆனல் பெடிச் சியை வன்னிக்கு விட அவர்களுக்கு விருப்பமில்லை. வன்னி ά யிலுள்ள காணி பூமியை விற்றுவிட்டு, யாழ்ப்பாணம் வரச் சம்மதித்தால் பெடிச்சியை ஆனந்தனுக்குக் கொடுக்கச் சம்மதமாம்.'
-யாழ்ப்பாணம் சென்றுவந்த அடுத்தவீட்டுக்காரத் தம் பையர் கொண்டுவந்த தகவல் இது.
“அவைக்குச் சம்மதமாமோ? பெத்து வளர்த்து காசு சிலவழிச்சுப் படிப்பிச்ச என்னைக் கேளாமல்.’’ பலவீனமான நிலையிலும் துள்ளியெழுகின்ருர், சின்னப்பொடியர்.
ஒரு தந்தியடித்து ஆனந்தனைக் கூப்பிடும்படி கட்டளை யிடுகிருர் அவர்.
கடைசிக் காலத்திலே தானும் கணவனும் தகப்பனுக் 魯 குப் பக்கத்திலிருக்க வேண்டும் என நினைத்துக் கிருஷ்ணபிள் ளையையும் வரவழைத்துவிட்டாள் தங்கம். தங்கத்தின் குடுமி யும் சும்மா ஆடவில்லை, கடைக்குட்டி இராசையாவின்மீது சின்னப்பொடியருக்குப் பாசம் அதிகம். அதனுல் காணி பூமியின் பெரும்பங்கை அவனுக்கு எழுதி விடுவாரோ என்ற பயம் அவளுக்கு.

ο Α.
3.
ஆனந்தனும் பன்னிரண்டு மணிக்கு வந்து சேர்ந்த 'பத்து மணி பஸ்வில்’ வந்துவிட்டான்.
என்னதான் கோபமிருந்தாலும் பெற்ற பிள்ளையைக் கண்ட சின்னப்பொடியர் துள்ளி விழவில்லை. மனதிற்குள் எரிந்து புகைந்த வேதனையையும் காட்டிக்கொள்ளாமல் மகனை அருகில் அழைக்கிருர்,
"மோனை! என்ரை நிலைவரம் உனக்குத் தெரியும். இண் டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கிறன்." - அவர் கண்ணில் நீர் பனிக்கின்றது.
பக்கத்தில் நின்ற ஆனந்தன் இராசையா, மீனட்சி, தங்கம்-எல்லோருமேகண்ணைத் துடைத்துக்கொள்கின்றனர். 'உங்களுக்குத் தெரியுந்தானே, நான் எவ்வளவு கஷ் டப்பட்டுக் காணி பூமியைச் சம்பாரிச்சதெண்டு. எனக்குப் பிறகு அதைப் பார்க்க மேய்க்க, தம்பிக்கு உதவியாக நீயி
ருக்க வேணும். இனிப் படிச்சது போதும்.'
பக்கத்தில் நின்றதங்கம் ஆனந்தனை முடுக்கி விடுகின்ருள். "அப்பு! நான் சொல்லுறனெண்டு குறை நினையாதை யுங்கோ , அத்தானும் எத்தினை நாளேக்குக் கடைச் சாப்பாடு சாப்பிடுறது கொழும்பில் ஒரு "அனெக்ஸ்" வாடகைக்கு எடுத்து அக்காவையும் கூட்டிக்கொண்டுபோக விரும்புகிருர், கொழும்பிலை வீடு எடுக்கிறதெண்டால் ஆயிரம் ரெண்டா
யிரம் சந்தோஷம் கொடுக்கவேணும்'
சின்னப்பொடியர் நெஞ்சை அமர்த்திப் பிடித்துக் கொண்டு 'லொக் லொக்' என இருமுகிருர், அவர் எழும்ப முயலும்போது தங்கமும் மீனுட்சியும் தாங்கிப் பிடிக்கின் றனர்.
“எனக்கும் நெடுங்கேணியிலை இருக்கிறது விருப்பமில்லை. இது நாகரிகம் இல்லாத இடம். என்ரை பிறண்ட்ஸ்" பகிடி பண்ணுகினம். நீங்க கண் மூட முந்தி காணி பூமியை வித்து நானும் அக்காவும் பிரிச்சுக் கொள்ளுறம். தம்பிக்கு வீடு வளவு கிடக்குத்தானே'
கிழவர் எப்படித் துள்ளியெழுந்தார் என்று சொல்ல முடியாது.
*டே இது நிலமில்லையடா என் இரத்தமடா. என் வியர்வையடா. ஏன் உங்கடை உடம்பு, இறைச்சி, இரத் தம் எல்லாம் இந்த நிலத்திலிருந்து பெற்றது தானடா

Page 18
4
உன்னை இப்படிப் பேச வைச்சதும் இந்த நிலம்தான். நிலத்தை விற்கச் சம்மதிக்க மாட்டேன். இது என் உயிர்.'
கிழவர் எழுந்து ஒடுகிருர், எல்லோரும் அவர் பின்னல்
ஒடுகின்றனர். ஆடியுழவு உழுத வயல் நிலம், இரண்டு கையா
லும் மண்ணை அள்ளுகிருர், இந்த மண்...! என்னை, உங்களை
எல்லோரையும் வளர்த்தது, இந்த மண்தான். மூண்டு வரியம் !
மழையில்லாமல் நெல் விளையாமல் பட்டினியாய்க் கிடந்த போதுகூட இந்த மண்ணை விற்கவில்லை. இதை விற்க விட மாட்டேன். விற்க விடமாட்டேன்." -ஆவேசம் வந்தவர்
போல் இரைகின்றர்.
*அப்பு நிலத்தை விற்கவில்லை. நிலத்தை ஒருபோதும்
விற்கமாட்டேன்' -ஆனந்தன் கூறுகிறன்,
**நான் செத்தபிறகு என்னை இந்த நிலத்தில்தான் எரிக்கவேணும். சாம்பலை இந் த வயலில்தான் தூவ வேணும்.'
மண்ணிலே விழுந்து உருளுகின்ருர், அவர் முகத்திலே ஒரு பிரகாசம், தாயின் மடியிலுள்ள குழந்தை போன்ற
தொரு நினைப்பு. கண்ணை மூடுகின்ருர் பிறகு கண் திறக்க
வேயில்லை!
 

5
துணை
இனியென்ன மினக்கேடு குளிப்பாட்டத் தண்ணிக் குப் போகோணும் சின்னன் எங்கே? மேலாப்பைப்பிடி. எங்கே செல்லன்? மேளம் அடிக்க நேரமாய்ப் போச்சு பொழுதுபடமுன்னம் சுடலைக்குப் போகவேணும்.
"சின்னக்குட்டி சும்மா பார்த்துக்கொண்டு நில்லாமல்
வெடியைக் கொழுத்து' ஊர்ப்பெரியவர் தம்பர் உத்தர
விடும் தொனியில் கூறுகிருர்,
சின்னனும் செ ல் ல னு ம் செத்தை மறைவிலிருந்து வாயைத் துடைத்துக் கொண்டு வருகிருர்கள்.
*பட பட் பட பட பட் வெடிசுடப்படுகிறது. செல்லன் புதிய உசாருடன் மேளத்தை ஊன்றி அடிக்கிருன். குளிப்பாட்டுவதற்குத் தண்ணீர் கொண்டு வருகிறர்கள். பிரேதம் உரலில் இருத்தி குளிப்பாட்டப்படுகிறது. விலை யுயர்ந்த பட்டுவேட்டி டெரிலின்சேட்" அணிந்து. மடித்த சருகைச் சால்வையால் உத்தரீயம் இடப்படுகிறது. திரு நீற்றுப்பூச்சு பொட்டு எல்லாம் வைக்கிருர்கள். பிரேதத் தைச் சுற்றிக் கற்பூரம் சாம்பிராணி .
"எங்கே ஒராள் தேவாரம் படி ‘வாழ்வாவது மாயம் இதுபண்ணுவது திண்ணம். தண்டிகைப் பாடையில் பிரேதத்தை வைக்கிறர்கள். பண்டிதர் பரமானந்தர் விசித்து விசித்து அழுகிருர், *"பண்டிதர் ஐயா இப்படி அழுதுகொண்டு நிண்டால் என்ன செய்யிறது? எல்லாருக்கும் வாறதுதான். எழுந்து
வாய்க்க்ரிசி போடுங்கோ.” *

Page 19
6
பண்டிதர் பாடைக்கருகில் செல்கிருர், மாணிக்கத்தின் உடலை உற்றுப் பார்க்கிருர், மாணிக்கம் நித்திரைபோல்வே கிடக்கிருன். கண்ணீர் ஆருகப் பெருக வாய்க்கரிசி இடுகி றர். பெண்கள் கண்ணீர் விடாமலே மாரடிக்கின்றனர். வெறும் சம்பிரதாயம். அவர்களுக்கென்ன கவலை ?
மாணிக்கத்தின் உடல் சுடலையில் எரிக்கப்படுகின்றது. பொங்கி எழும் அக்கினிச்சுவாலையை வைத்தகண்வாங்காமல் பார்க்கின்ருர் பண்டிதர்.
'இனிப் போவோம் ஐயா" "கொஞ்சம் பொறுங்க” حماس மாணிக்கம் இருபது ஆண்டுகளாக உழைத்தவன் அவன் உடல் எரியுமட்டும் இருபது நிமிடமேனும் நிற்கவேண்டாமா? 'அறிவுடைய மனிதன் எப்பிடியெண்டாலும் படிச்ச' ஆளெல்லே' இது தம்பரின் விமர்சனம்,
*இந்தக்காலத்திலே யார் நன்றியோட இருக்கினம் ஆரெண்டாலும் வேலைக்காரன் செத்ததுக்கு இப்பிடி அழுவி னமோ ஆடம்பரமாய்ச் சாவீடு செய்வினமோ?? சின்னக் குட்டி கூறுகின்றர்.
அவர் மாணிக்கத்தை பெத்தபிள்ளையைப் போல் பார்த் தவர். அவனும் சொந்த தகப்பனைப்போலத்தான் அன்பு வைச்சிருந்தான்.
'அறுகரிசி போடவேண்டிய கையால வாய்க்கரிசி போட்டன்; கொள்ளிவைத்தேன்' பரமானந்தர் மீண்டும் பச்சைக்குழந்தை போல் அழுகின்ருர்
வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. அவருக்கிந்த உலகில்
யார் இருக்கிருர்கள்? தணிக்கட்டை, புத்தக அலுமாரி களைப் பார்க்கின்றர். புத்தகங்கள் அங்குமிங்கும் தூசு பிடித்துக் கிடக்கின்றன. “மாணிக்கம் இருந்தால் இப் படியா இருக்கும்! சங்க இலக்கியங்கள் தொடக்கம் தற் காலக் கவிதைகள் வரை எத் த னை நூல்கள்? கம்பரும் காளிதாசரும், பாரதியும், புதுமைப் பித்தனும் ஷ்ேக்ஸ்பிய ரும், மில்டனும், பாணரும், ஹர்ஷரும் அவரை பரிதாபத் துடன் பார்ப்பதுபோல விருந்தது. கலைக்களஞ்சியத் தொகு திகள், தத்துவ நூல்கள் என்சைக்கொலப் பிடியாக்கள் இலியட், ஒடிசி இப்படி எத்தனை ரகமான நூல்களே ஆசை

7
யுடன் வாங்கிப்படித்தார். இப்பொழுது ஒன்றிலுமே மன மோடவில்லை. புத்தகங்களை வெறித்துப் பார்க்கின்ருர், இவைகள் தான் அவருக்குத் துணையா?
கல்லூரியிலே ஆசிரியப்பணி புரிந்தபோது அவர்தன் தனிமையை உணரவில்லை, ஒய்வுநேரத்தில் படிப்பு, எழுத்து, சொற்பொழிவு என்று நேரத்தைக் கழித்தவர். இளேப்பாறிய காலத்திலும் அவருக்கு துணையாக மாணிக்கம் இருந்தான், அவர் உள்ளமறிந்து எல்லாப் பணிவிடைகளையும் செய்து வந்தான். பேராசிரியர் தொடக்கம் சாதாரண பள்ளியா சிரியர்கள் வரை பாடங் கேட்க, சந்தேகந்தீர்க்க -அவரி டம் வருவர். 'தொல்காப்பியச் சூத்திரத்திற்கு விளக்கம் காளிதாசரின் 'சாகுந்தல வியாக்கியானம் 'இந்திய தத்துவ சாஸ்திர விரிவுரை "ஷெல்லியின் கவிதை நயம் இப்படிப் பலரும் வந்து பயன் பெற்றனர். இந்தியாவிலிருந்து வரும் தமிழறிஞர்கள், தத்துவ மேதைகள் பண்டிதரைத் தரிசிக் காமல் செல்வதில்லை. எழுதிய நூல்கள் பல, உரையெழு தியவை இன்னும் பல. அவர் மட்டும் மனம் வைத்திருந் தால் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்திருக்கலாம். அவரின் நோக்கம் பணமல்ல, பலர் அவரின் பெயரால் பணம் சம் பாதிக்கின்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கிருந்தோ வந் த்ான் மாணிக்கம், அவன் ஓர் அனுதை, அவனுக்கென உற வினர் எவரும் இருக்கவில்லை, மாணிக்கம் பரமானந்தரின் வீட்டிற்கு வந்தபின்னர் வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும்
அவனே செய்தான். சமையல் தொடக்கம் அச்சுப்படிகளை
புரூப் பார்ப்பது வரை எல்லாமே அவனுக்கு கைவந்தகலை. மாணிக்கம் வந்தபின்னர்தான் பண்டிதர் புகழேணியின் உச்ச நிலையை அடைந்தார். கெளரவ பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. பல மன்றங்கள் பாராட்டு விழா செய்தன. அவ ருக்கு எல்லாம் தெரியும். உயர்ந்த பணம் தரும் பரீட்சைக் குப் படிக்க மட்டும் தெரியாது. மாணிக்கம் ஊதியத்தை
எதிர்பாராமல் உழைத்தான்.
"மாணிக்கம் தன்னலமற்று உழைக்கிருய். சம்பளம் வாங்க் மறுக்கிருயே’
C

Page 20
'ஊதியத்தை எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை. அனதைக்கு ஆதரவு தந்தீர்கள், அதற்கு நான் கடமைப் பட்டவன்.”*
"உனது சம்பளத்தை வங்கியில் போட்டு வைக்கி றேன். உனது பிற்கால வாழ்க்கைக்கு உதவும். உனக்கில்லா விட்டாலும் உனது உறவினருக்காவது உதவாதா?
'இந்த உலகத்தில் உங்களைத்தவிர நெருங்கிய உற வினர் யாருமில்லை.”*
மாணிக்கம் இப்படித் திடீரென்று இறப்பான் என்று கண்டாரா? இந்த இருபது வருஷத்தில் சிறு தலையிடி அல் லது காய்ச்சல் என்று படுக்கவில்லை. உயிர் நீப்பதற்கு முதல்நாள்கூட வழக்கம்போலவே எல்லா வேலைகளையும் செய்தான். திடீர் மயக்கம் அவ்வளவுதான். மாரடைப்பால் மரணமென்று டாக்டர்கள் கூறினர்.
அவர் வாழ்க்கையை நோக்கிய விதம் வேறு. 'ஆணின் அளப்பரிய வல்லமையை மட்டுப்படுத்துவதற்கே ஆண்டவன் பெண் என்ற வஸ்துவைப் படைத்தான்.' இது அவரின் தத்துவம். 'இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மனித சக்தியை ஏன் பாழடிக்க வேண்டும்! இந்த முடிவிற்கு வருவதற்குச் சாதகமான சம்பவம் ஒன்று அவரின் வாழ்க்கையில் நடக் கத்தான் செய்தது.
இருபத்தைந்து வயது இளைஞனயிருக்கும்பொழுது அவ ருக்கு திருமணம் செய்துவைக்கப் பெரியோர்கள் நிச்சயித் தது உண்மை. திருமணப்பதிவுகூட நடைபெற்றது. இயற் கையான கூச்சத்தினுல் மணஞ்செய்யப்போகும் மங்கை நல் லாஜாக்கூட அவர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. திருமண முகூர்த்தநாளுக்குமுன்னர். வீட்டை விட்டு ஓடி விடுவாள் என்று கண்டாரா அவர்? அவள் ஏன் போனுள்? எங்கு போனுள்? என்று அவர் விசாரித்ததில்லை. மனதுக்கு கொஞ் சம் கவலைதான். காலம் அவரின் கவலையைக் கரைத்தது. அன்று செய்த தீர்மானப்படி இன்றுவரை அவர் கட்டை பிரமச்சாரி.

என்னதான் புகழ்பெற்ற போதிலும் அவர் தனது வாழ்க் யில் ஏதோ குறையிருப்பதைப் போலவே உணர்ந்தார். மாணிக்கம் இறந்தபின்னர் நான்கு மாதங்களும் நான்கு யுகங்களாகத் தோன்றின. அவர் படித்த, அவர் எழுதிய புத்தக்ங்கள் அவருக்குச் சாந்தியளிக்கவில்லை, பேச்சுத்துணைக் குக்கூட ஆளில்லை. ஆறுதலாகச் சம்பாஷித்துப் பொழுதைப் போக்கலாம் என்று சின்னக்குட்டி வீட்டிற்குச் சென்றர்.
*ஐயா உங்களோடு பேசக்கூட நேரமில்லை. என்ரை பேத்தி கொழும்பிலிருந்து தந்தியடித்திருக்கிருள் உடனே வரும்படி. நான் அவசரம் போயாகணும்' என்று கூறி விட்டுப் புறப்பட்டுவிட்டார் சின்னக்குட்டி,
பண்டிதர் பெருமூச்சு விட்டார். 'இப்படிச் சொல்லிக் கொண்டு போக எனக்கு யார் இருக்கிருர்கள்? வாழ்க்கை யில் எதையோ இழந்தது போல் இருக்கிறது. அறிவுப் பெண்ணை மணஞ்செய்து பெற்றெடுத்த அருமைக் குழந் தைகள் - அவர் எழுதிய புத்தகங்கள் - அலுமாரியில் உண்டு
தான். அவைகள் என்மீது அன்பு செலுத்துமா??
தொல்காப்பியத்தையும், ஷேக்ஸ்பியர் நாடகங்களையும், டிக்கின்சன் நாவல்களையும் பற்றி அவருடன் உரையாடுவார் கள் அவர் சாப்பிட்டாரோ, நித்திரை கொண்டாரா? தலையிடியா? காய்ச்சலா? ஏன் விசாரிக்கப்போகிருர்கள். பட்டினி கிடந்த நாட்கள்: நித்திரையின்றி கழிந்த இரவுகள் அநேகம். “மாணிக்கம் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பான" மனிதனுக்கு ஒரு துணை வேண்டும். அதற்காகத்தான் போலும் அவன் திருமணம் செய்கிருன். வாழ்க்கைப் பாதையின் தூரத்திலிருக்கும் போது, உண் மையை உணர்ந்து பயன் என்ன?
தலை வழுக்கையானபின்னர் சீப்பு கிடைத்ததைப் போலத்தான்.
துணை. மனிதனுக்கு அவசியம் தான். எனக்கு யார் துணை? மாணிக்கம் துணையற்ற அநாதை, அதஞல் எனக் குத் துணையானன். ஆனல் இப்போது.”

Page 21
20
திண்ணையில் இருந்த படியே பண்டிதர் உறங்கி விட் டார். ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டெழுந்தார். ஒரு பெண், நடுத்தர வயதைத் தாண்டியவள். பண்டிதரின் தூரத்து உறவு னின்று கூறிக்கொண்டு அவர் முன்நிற்கி ருள். பண்டிதர் எதுவும் கூறவில்லை. அவர் ஏதும் சொல்ல வேண்டுமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. பரமானந்தரின் வீடு மீண்டும் பிரகாசமாகியது. சமையல் வேலை தொடக் கம் புத்தகங்களை தூசிதட்டி அடுக்குவது வரை எல்லாவற் றையும் தானே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கிருள். அவள் ஏன் வந்தாள்? எத்தனை நாட்களுக்கு அவர் வீட்டில் தங்குவாள் என்று அவர் கேட்கவுமில்லை. அவள் கூறவு மில்லை. கூச்சத்தால் அவர் அவளுடன் கதைப்பதில்லை. ஏதோ புதுவாழ்வு பெற்றது போன்ற உணர்வு, ஒரு நிம்மதி. அவளே நிமிர்ந்து பார்க்கும் துணிவு அவருக்கில்லை.
என்ன நினைத்தாரோ ஒருநாள் அவளைப் பார்க்கிருர், இளமையில் அழகானவளாக இருந்த அறிகுறிகள் தென் Lu LurTDG376iv&sav.
'இப்படியொரு பெண்ணை அப்போதே கலியாணம் செய் திருந்தால்.
*சே என்ன நினைப்பு இப்படி நினைப்பதே பாவம்' இரண்டு கண்களையும் மூடுகிருர், காதுகளையும் கையால் மூடிக்கொண்டு இப்படியான எண்ணங்களே இந்த வயதிலே நினைத்ததே பாவம். எனது பிரமச்சாரியத்திற்கு இடையூ முன எண்ணம் இனிமேல் வரவே கூடாது' என்று ஆண்ட வன பிரார்த்திக்கிருர்,
米 兴 米
என்று ஒரு எண்ண அலை.
"எடி மீனுட்சி உனக்கு விஷயம் தெரியுமோடி!" * என்ன தெய்வானையக்கை” *பண்டிதர் ஐயா இப்படியான ஆளெண்டு கனவிலைகூட நினைக்கேல்லை, இந்த வயதில் கலியானமெல்லை செய்திருக் Gagri”
6 சும்மா பேய்க்கதை பறையாதே. மனிதன்ரை அறி வென்ன ஒழுக்கமென்ன அத்தாள் இப்படிச்செய்யுமே.”*

2
"நான் சொன்னல் நீ நம்பமாட்டாய். இது நடந்து ஒரு மாதம். தூரத்து உறவுப்பெண்ணும். கற்பகமாம் பேர். வாவன் காட்டுறன்.”
ஊர் வதந்திகள் பண்டிதர் காதிலும் எட்டின. பண்டி தர் திகைத்தார். மாணிக்கம் வகித்த ஸ்தானத்தையே கற் பகம் வகிக்கிருள். ஆனல் இப்பொழுது அவர் ஒழுக்கத்தை மாசுபடுத்தும் வதந்திகள்; இப்படியான துணை அவருக்கு வேண்டாம் என்றே தீர்மானித்தார்.
"கற்பகம்” பண்டிதர் கூப்பிட்டார். "ஐயா அடக்கமாக பதிலளித்தாள் அவள்,
*நீ என் வீட்டிற்கு வந்தபிறகு என்னுடைய ஒழுக்கத் தைக் களங்கப்படுத்தும் வதந்திக்ள் பல ஊரில் அடிபடுகின் றன. தயவு செய்து போய்விடு.”
**நான் யாரென்று தெரிந்தால் போகச் சொல்ல மாட்டீர்கள்." *, * யாராயிருந்தால் எனக்கென்ன? போய்விடு. உன்னைத் தவிர என் கெளரவத்தைத்தான் நான் கூட மதிக்கிறேன், போய்விடு" பண்டிதர் உரத்துக் கூறுகிருர்,
'போகிறேன். நான்செய்த தவறுக்குப் பிராயச் சித்தம் செய்யவே இங்கு வந்தேன். நான் சட்டப்படி உங்க்ள்.
கதையை முடிக்கும் முன்னரே கற்பகம் போய்விட் டாள். தேடிவந்த துணையும் போய்விட்டது. போகுமுன் அவள் கூறிய வார்த்தைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவரை இட்டுச் செல்கின்றன. ஆம் அவள் அவருக்கு மனை வியாக வரவிருந்தவள் தான்.
அவருக்குத் துணை அவரின் நூல்கள் தான். அவைகள் . இப்போது பொதுசன நூல்நிலையத்தை அடைகின்றன.
கதவை இழுத்துப் பூட்டுகின்ருர் வெளியே நடக்கின் ழுர், அவருக்கு இனி துணை தேவையில்லை. -
事

Page 22
22
வீட்டில் நடந்தது
திம்பையர் கறுப்புக் கரையிட்ட நாலு முழக் கதர் வேட்டியைக் கட்டிக்கொள்கிருர், குறியில்லாத ஆறுமுழச் சால்வை அவரது தோளே அலங்கரிக்கிறது. குடும்பியைத் தட்டி முடிந்துகொண்டு அனுபவத்தின் சாயல் படிந்த வெளு றிப்போன குடையைக் கமக்கட்டினுள் வைக்கிருர். அவர் மனைவி மாணிக்கம் அவசரம் அவசரமாக மாவிட்டபுரத்து வெற்றிலையில் பத்து, குருநாகல் கழிப்பாக்கு கொட்டைப் பாக்கு என்பவற்றில் வகைக்கு நாலு, தாவடியில் புகையிலை ஒன்று, ஏலம் கராம்புகாச்சுக்கட்டி-இந்தியாதி வஸ்துக்களை வல் லுவத்துள் வைக்கிருள். ‘சுண்ணும்பும் வைச்சிருக்கிறியோ?? என்று அவர் தனது ஞான திருஷ்டியால் அறிந்தவர்போல் ஒரு வினுவைத் தொடுக்கிறர். ஏதோ பெரியதொரு தவறைச் செய்துவிட்டவள் போலப் பதைபதைத்து வெங்கலத்தில் வார்த்தெடுத்த சுண்ணும்புக்கரண்டாகத்தையும் வல்லுவத்
துள்வைக்கிருள். சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து கிளம்பும்
சைரன்" ஒலி நேரம் காலை ஏழரைமணியென்று அவருக்கு நினைப்பூட்டுகின்றது. சாதக்க் கட்டுக்கள் போட்டோக்கள், பஞ்சாங்கம் போன்றவைகளைக் கைப்பையுள் இட்டுக்கொள் கிருர். இத்தனை ஆயத்தங்களும் நடைபெறுகிறதென்றல் தம்பையர் எங்கோ தொலையூருக்குத் தொழில் சம்பந்தமாகக் கிளம்புகிறர் என்பதுதான் அர்த்தம்.
"இஞ்சருங்கோ உங்களைத்தான். எங்கள் வீட்டிலும் ஒரு குமர் கரைசேராமல் இருக்குதெண்டதைக் கொஞ்சமும் யோசிக்கிறியள் இல்லையே' மாணிக்கம் முணுமுணுக்கிருள். 'எடியே மாணிக்கம் எனக்குத் தெரியும் என்ரை பிள் ளையின்ரை கலியான விஷயம்."
V,

23
"இப்பிடித்தானே இவ்வளவு காலமும்சொல்லிவாறியள்'
"என்னைச் சில்லறை ஆளெண்டு நினைக்காதே. இண் உைக்கு முற்றக்ப் போற கொடிகாமத்துச் சம்பந்தத்தாலே ஐந்நூறு கிளம்பும். அடுத்த வேலை தங்கச்சியின்ரை கலியா ணம் தான்’ என்று கூறிக்கொண்டுடே மதமத வென்று வளர்ந்து விட்ட வெற்றிலைக் கொடிகளைப் பார்க்கிருர்,
அடுத்த வீட்டுச் சின்னத்தம்பி வெற்றிலைக் கொடிகளை முருக்க்ம் க்தியாலில் பிடித்துக் கட்டிக்கொண்டு நிற்கிருன் , தானகப் பட ர முடி யா த கொடிக் கு ஆதாரம் தேடும் சின்னத்தம்பியைப் பார்க்கும்போது அவனது செயலைத் தனது தொழிலுடன் இணைத்துப் பார்க்கிருர், ஆம் அவரும் படரத் துடிக்கும் பருவக் கொடிகளுக்குக் கொழு கொம்பு தேடும் முயற்சியில் -தரகு வேலையில் -ஈடுபடுபவர்தானே! தம்பையரின் மகள் லதாவும் வாளிப்பாக வளர்ந்து நிற்கும் கொடியென்பதைத்தானே மாணிக்கமும் நினைவூட்டினுள். தந்தை கடமையில் தவறும்போது சொல்லவேண்டியதைத் தான் மாணிக்கம் கூறினுள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எத்தனையோ கலியாணத் தரகர்கள் இருக்கலாம். ஆனல் "கல்யாணத்தரகர்’ என்று கூறினல் அது தம்பையரைத்தான் குறிக்கும். அவ்வள
வுக்கு அவரின் பெயரும் தொழிலும் பிரசித்தமானவை.
- الأمير
ஓங்கி வளர்ந்த ஒல்லியான தோற்றம்; துலாக்கொடி
போல் நீண்ட கை; தந்த வைத்தியக் கலாநிதியின் உதவி யின்றியே கழன்றுபோன பற்களைத் தவிர எஞ்சி நின்று
நடனம் புரியும் வெற்றிலைக் காவியேறிய பற்கள்; அகன்ற நெற்றியும் வழுக்கையும் சங்கமமாகிய பாலை வனத்தைச் சுற்றி இடையிடையே புடலம் பூவைப்போல நரைத்துவிட்ட மயிர்களுடன் காணப்படும் ஐதான மயிரின் கூட்டம்; தர்ப்பை முடிந்துவிட்டது போன்ற குடுமி; அரை நூற் ருண்டைத் தாண்டிய அனுபவத்தின் ரேகை நிறைந்த நெற்றி: பன்னினல் இழைக்கப்பட்டுக் காக்கித் துணியினல் உறையிடப்பட்ட கைப்பை-இத்தனையும் சேர்ந்ததுதான் தம்பையரின் உருவம். அவரின் செவ்வாயிலிருந்து சிந்தும் மோகனப் புன்னகைக்கு எவ்ரையும் - சிறப்பாகப் பெண்ணைப்

Page 23
24
பெற்றவர்களை - மயக்கும் சக்தியுண்டு. தம்பையர் தலைப் போட்ட சம்பந்தம் நிறைவேருமல் போனதில்லை. அவரின் பெயரும் புகழும் கடல் கடந்த நாடுகளிலும் - தீவுப்பகுதி களிலும் ஆனையிறவுக் கடல் கடந்த வன்னிப் பகுதிகளிலும் - பரவியிருந்ததென்பது அணுவளவேனும் புனைந்துரையா காது. ஏன்? தரகு தொழில் புரிந்து கல் வீடு கட்டிய பெருமை அவரையே சாரும். -
தரகு தொழில் இவரது பரம்பரைத் தொழிலன்று. மாவிட்டபுரத்தில் வசிக் கும் மற்றவர்களைப் போலவே தம்பையரின் தந்தையும் வெற்றிலைச் செய்கையிலே ஈடுபடி டிருந்தார். தந்தையின் தொழிலை மைந்தனும் பின்பற்றி இரண்டு பரப்புக் காணியில் வெற்றிலை நட்டிருந்தார். லட்சுமிகரமான வெற்றிலைப் பயிர்ச்செய்கையால் வீட்டிலே யும் இலட்சுமி கடாட்சம் நிலவும் என்று தம்பையரும் நம்பி வந்தார். செம்மண்ணைக் கலக்கி வாய்க்காலில் ஒடி வரும் நீரை வெற்றிலைப் பாத்திகளுக்குப் பாய்ச்சும்போது செழித்து விரிந்த கரும்பச்சை நிறத்து வெற்றிலையின் அழ கிலே மனதைப் பறிகொடுத்து நின்ற நாட்கள்; பக்குவ மாகப் பிடுங்கிய வெற்றிலையை படைபடையாக அடுக்கித் தட்டுக்களாக்கி சுன்னுகச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்ற நினைவு இன்றும் அவர் மனதிலே பசுமையாக இருக் கின்றது. இப்பொழுது பெயரை யும் புகழையும் பணத்தை யும் கொடுக்கும் தரகு தொழில் தொடங்கியதும். அவர் . இல்லத்தரசி மாணிக்கத்தின் தாயைச் சந்தையில் கண்ட தும், மகளை வீட்டில் பாராமலே மணம் செய்து கொண்ட தும் -எல்லாமே சுன்ஞகச் ச ந்  ைத க் குச் சென்றதன் பலன் தான்.
கூட்டுறவு இயக்கமும் கொம்யூனிச தத்துவமும் என்ன தான் வளர்ந்தபோதும் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் தர கர்களுக்கு மெளசு குறையாது என்பதை அறிந்துதானே என்னவோ தம்பையர் இத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்
Trif.
சுன்னுகச் சந்தையில் காய்கறித் தரகை ஆரம்பித்த போது தரகர் வட்டாரத்திலேயிருந்து பலத்த எதிர்ப்புக் இளம்பியது. கத்தரிக்காய்த் தரகர் கந்தசாமியும் வாழைக்
༦
影

25
குலைத் தரகர் வடிவேலுவும் அவரை மிரட்டி உருட்டிப் பார்த்தனர். இளமை முறுக்கும் எதற்கும் அஞ்சா நெஞ்ச மும் கொண்ட தம்பையர் மசிந்துகொடுக்க மறுத்துவிட்ட பின்னர் தம்மினத்துடனே சேர்த்துக்கொண்டனர்.
உண்மையில் சொல்லப்போனுல் இந்தத் தொழிலி லுள்ள நெளிவு சுழிவுகளையெல்லாம் தம்பையர் கற்றுக் கொண்டது கந்தசாமியிடம்தான். காய்கறித்தரகர் புகை யிலத் தரகராக மாறி, ஆட்டுத்தரகர் மாட்டுத்தரகராக " உருவெடுத்து இன்று வாழ்க்கையில் மிக உன்னதமான ஸ்தா புரத்தில் கல்யாணத்தரகராகப் பவனி வரு கி ன் ரு ர்
தம்பையர்.
தம்பையர் இன்று கொடிகாமத்தில் பெண்ணுக்குப் பேசும் மாப்பிள்ளையும் தெல்லிப்பளையைச் சேர்ந்தவன்தான். சீமேந்துத் தொழிற்சாலையில் "கிளாக்" வேலை பார்க்கும் நாதன், நாலு பேர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அள வுக்கு மதிப்பு வாய்ந்த மாப்பிள்ளைதான்! தம்பையருக்குத் தூரத்து உறவுங்கூட. ஆனல், மூன்று தலைமுறைக்கு முன் னர் நாதனின் குடும்ப்த்தில் யாரோ ஒரு பெண் தாழ்ந்த சாதிக்காரன் ஒருவனுடன் ஒடிவிட்டாள் என்ற மாசு செவி வழிச் செய்தியாக வந்து இந்தத் தலைமுறையையும் பாதிக் கிறது. இந்தத் தோஷத்தினுல் தெல்லிப்பழைப் பகுதியில் பெண் கொள்வது கஷ்டம் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. தம்பையர் கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் இந்த மாப்பிள்ளையைத் தன் மகளுக்குச் செய்திருக்கலாம். தன் விஷயத்தில் தம்பையர் மிகவும் கண்டிப்பானவர்; அது வும் சாதி சமய விஷயத்தில் மிகவும் நுணுக்கம் பார்ப்ப வர். தம்பையரைப் பொறுத்தளவில் அவருக்குப் பிடிக்காத சில பண்பாடுகளும் நாதனிடம் உண்டு. கொஞ்சம் மொஸ்கோ வாடை, சமத்துவப்பேச்சு - இவைகள்தான் தம்பையருக்குப் பிடிக்காத அம்சங்க்ள். சோஷலிசம் பேசும் ஆசாமிகள் சிலர் கல்யாணம் செய்யும்போது மாத்திரம் உயர் சாதிப் பெண் ணையும் ஒரு லட்சம் ரூபாவையும் தேடுவதையும் அவர் அறி வார். நாதன் அப்படிப்பட்டவன்போலக் காணப்படவில்லை. மூன்று தலைமுறைக்கு முந்திய இழுக்கு நாதனின் குடும்பத் ®ಣ್ಣು ஒதுக்கிவைத்திருந்தது, தம்பையர் அறியக்கூடியதாக

Page 24
26
அந்தக் குடும்பத்தினரை சபை சந்தியில் சேர்ப்பதில்லை. இந்த நிலையில் சொந்த மக்ளுக்கு நாதனைத் திருமணம் செய்து கொடுப்பதென்பது நடவாத காரியம்.
இந்த ரகசியங்களையெல்லாம் கொடிகாமத்துப் பெண் வீட்டாருக்குச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அது "தரகர் தர்மமும் ஆகாது. தப்பித்தவறி அவர்கள் இக்கதையை ஏற்கனவே கேள்விப்பட்டுத் தம்பையரைக் கேட்டாலும் பொருமைக்காரனின் புரளி என்ற சொற் ருெடரால் விளக்கி விடலாம்.
பஸ் கொடிகாமம் "பஸ் ஸ்டாண்டில் நின்றபொழுது தான் தம்பையரின் சிந்தனை தடைப்பட்டது. அவசரம் அவ சரமாகக் கைப்பைபையும் குடையையும் தூக்கிக்கொண்டு இறங்கினர் நூறு யார் தூரத்தில் பெண் வீடு, பெண் பீ. ஏ. படித்த ஆசிரியை, தரகருக்கு தடயுடல் வரவேற்பு.
**பிள்ளை பொற்கொடி, தம்பையாண்னேக்கு அப்பிள் கிறஸ் கொண்டுவந்து கொடு” என்ற தந்தையின் கட்டளை யைத் தொடர்ந்து பொற்கொடியாள் வந்து தரகர் முன் தோன்றினுள். பெயரையும் உருவத்தையும் பொருத்திப் பார்க்கிருர், ஐம்பது வீதம் பொருத்தம் -பொன்னிறம்; ஆனல் கொடியென்று சொல்லிவிட முடியாது. மேலும் விமர்சனம் செய்ய அவர் விரும்பவில்லை. தம்பையர் தன் தொழிலைத் தொடங்குகிருர்,
*பொடியன் குணமெண்டால் தங்கக் கம்பி பீடி சிகரெட்
பழக்கமில்லை; சாதிவரவு உச்சம், அரசாங்க பாஷையிலே
எட்டாம்வகுப்புப் பாஸ். சம்பளம் அலவன்ஸ் எல்லாம் நாநூறுக்கு மேலே. இந்தச் சம்பந்தம் நிறைவேறினல் பெண்ணைப் பெற்ருேர் அதிர்ஷ்டசாலிகள்' தரகரின் ஆலாவர் ணத்தைக் கழித்துப் பார்த்தால் அவர் கூறியதன் சாராம் சம் இது :
வீடு வளவு; இருபதாயிரம் ரொக்கம், பத்தாயிரத் துக்கு நகை, இருபது பரப்பு வயற்காணி. இவ்வளவும் சீத னம் கொடுப்பதாகப் பெண்ணின் தந்தை கூறியதன் பேரில் கல்யாணம் முற்றுகி விட்டது.
*

27
'இந்தாருங்கோ இப்போதைச்கு இதை வைச்சுக்கொள் ளுங்கோ’ மூன்று நூறு ரூபா நோட்டுக்கள் கைமாறுகின் றன.
'இதெல்லாத்துக்கும் இப்ப என்ன அவசரம்' என்று கூறியபடியே அவசரமாக அவற்றைக் கொட்டைப்பெட்டியுள் வைக்கிருர் தரகர்,
தலே நிமிர்த்த முடியாத அளவுக்கு நடைபெற்ற உப சாரத்தால் தம்பையர் வீடுசெல்ல முடியவில்லை. பெண்ணைப் பெற்றவரின் வேண்டுகோளுக்கிணங்க தம்பையர் அன்றிரவு அங்கேயே தங்கிவிடுகிருர்;
வீடு திரும்பிய தம்பையரைப் பேரதிர்ச்சியொன்று எதிர் நோக்குகிறது. மாணிக்கம் தலையில் கை வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிருள். வளவு கொள்ளாத அளவு கூட்டம். அவரின் ஒரே மகள் லதா, நாதனுடன் வீட்டைவிட்டே ஒடிவிட்டாள் என்ற செய்தி அவரால் சீரணிக்க முடியாத துதான். அவள் எழுதி வைத்த கடிதம் :
to a சாதியைக் க்ாட்டிப் பேதத்தை வளர்க்கும் சமுதா யத்தின் அங்கமாகிய நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளமாட் டீர்கள் மாறிவரும் சமுதாயத்தின் பிரதிநிதிகள் நாங்கள், உங்களை விட்டுப் பிரிவது துன்பந்தான் . மன்னித்து ஆசீர்வதிக்க வேண்டுகிருேம்.
“மன்னிப்பு. ' கோபத்துடன் பல்லை நெருமுகிழுர் தம்பையர் 'எனக்குப் புத்தி சொல்லுகிருள் என்ரை GLOT6Too
"மாணிக்கம், வீட்டை கழுவிவிடு. எங்களின் மகள் செத்துப்போய்விட்டாள் என்று நினைத்துக்கொள்வோம்."
தம்பையர் வெறுப்பது காதல் கலியாணம்; விரும்புவது முதலாளித்துவ சமுதாயம். எது நடக்கக் கூடாது என்று கருதினரோ அது நடந்துவிட்டது அவர் வீட்டில்.

Page 25
28
ஐராங்கனி
6
சிம்பஸ் பஸ் விஜயவர்த்தன மண்டபத்தருகில்
நின்றது. அரியமும் அஹமத்தும் பெட்டி படுக்கை சகிதம்
இறங்கினர். பஸ்விலிருந்து இறங்கியது என்னவோ உண்மை தான்! அவர்களின் சிந்தனை பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கு அழகுச் சிலையொன்றைச் சுற்றி வட்டமிட்டது. இவ்வளவு நாளும் ராஜவத்தையில் குடியிருந்தவர்க்ள் விஜயவர்த்தணு மண்டபத்தில் இன்னும் ஒரு ஆண்டைக் கழிக்கவேண்டும். ஒரேயொரு வருஷந்தான். அத்துடன் யூனிவேர்சிட்டி வாழ்க் கைக்கு முற்றுப்புள்ளி. கடந்துபோன இரண்டு ஆண்டுகளின் நினைவுகள்தான் எத்தனை?
* நீங்கள்?? .
*' என் பெயர் ஐராங்கனி , '
“ஐராங்கனியா?"
**ஆம் ஏன் வியப்பாகவிருக்கிறதா?
**இது தமிழ் வகுப்பு.’ ‘தெரியும் சிங்களப் பெண் தமிழ் படிக்கக் கூடாதா?*
இரண்டு வருடங்களுக்கு முந்திய சம்பாஷணை, அரியம் தனது காதுகளையும், கண்களையும் நம்பவில்லை. சொற்க%ளத் திருத்தமாக உச்சரித்துப் பேசினள் அவள். தமிழ் ஐராங் கனியின் வாயிலிருந்து வந்தபோது இனிக்க்த்தான் செய்தது. அந்த வகுப்பிலே அவள் ஒரு காட்சிப் பொருள். எல்லாருந் தான் அவளேப்பார்த்தனர். அரியமும் பார்த்தான். இளம்
《ཅིག་

29
சிவப்புநிறச் சாறியை *கண்டியன் ஸ்டையிலில்’ உடுத்தி யிருந்தர்ள். அது அவளின் எலுமிச்சம்பழ மேனிக்குப் பொருத்தமானதாகத்தான் இருந்தது. க ரு கரு என்று வளர்ந்து சுருண்டகூந்தலைப்பின்னி விட்டிருந்தாள், சுருண்ட கேசத்தில் இரண்டொன்று அவள் ஒளிக்கீறுபோன்ற நெற் றியில் தவழ்ந்து விளையாடியது. துருதுரு என்று எதையோ தேடும் கூர்விழிகள், எடுப்பான மூக்கு. இனங்காண முடி யாத சோகத்தின் சாயல் அவள் முகத்தில் அப்பியிருந்தது.
அஹமத், அவளைப் பொருளாதார வகுப்பில் சந்தித் தான். சுயபாஷா யுகத்திலே ஆங்கிலம் மூலம் பொருளா தாரம் கற்கும் ஒருசிலருள் ஐராங்கனியும் ஒருத்தி. பொரு
ளாதாரம் அஹமத்திற்கு அறவே பிடிக் காத பாடம், ஐராங்
கனியைச் சந்தித்த பிறகு நிலைமை மாறிவிட்டது. இப் பொழுது எல்லாம் அவள் தான். அந்த அவளைச் சுமந்து $காண்டு சென்றது கம்பஸ் பஸ்.
ரஜவத்தை மூட்டைப்பூச்சிகளும் விஜயவர்த்தணு மூட் டைப்பூச்சிகளும் உறவாடின. "ஊ" என்று கூவிக்கொண்டு எழுந்த அரியம் தன் ரத்தத்தை உறிஞ்சிய சிறிய விலங்கி சீனத் தன்பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் பிடித்துக் கொண்டான்.
** என்னடா அரியம் பெரிய கூப்பாடு போடிறியே."
8 விஜயவத்தணு மூட்டைப்பூச்சி என் முதுகைப் பதம் பார்த்துவிட்டதடா.” என்று கலகலப்பாகப் பதில் கூறினன் அரியம். தன் சிந்தனை குலைந்ததையும் மறந்து.
பல்கலைக் கழகச் செனேட் கட்டிடத்தின் ஒய்யாரமான தோற்றத்திற்கு அழகூட்டுவன ஆயிரங்கால மண்டபத்தை நிஜனவூட்டும் அதன் தூண்கள். 'பில்லர் செக்சனில் உள்ள தூண்கள் பல ஆண்டுகளாகக் கேட்டு வைத்திருக்கும் கதை கள் ஆயிரம் நாவல்களுக்குக் கருவாக அமையும். பில்லர் செக்சனில் அரியமும் ஐராங்கனியும் தமிழ் பேசினர் என் ருல் அதற்குப் பல்கலைக்கழக அகராதியில் ஒரேயொரு அர்த் தம்தான் உண்டு. அதாவது அரியம் என்ற அரியரத்தினம் மிஸ் ஐராங்கினி வீரக்கோன் என்ற ஆரணங்கை லைன்? பண்ணத்தொடங்கி விட்டான் என்பதே. ஐராங்களி

Page 26
30
இந்தச் சொல்லுக்குச் சிங்கள மொழியில் என்ன அர்த் தமோ தெரியாது. அந்த அளவு பாஷாஞானம் அரியத் திற்கில்லை. அவனைப்பொறுத்த அளவில் அவள் க்னியே தான்! அந்தக் கனியைச் சுவைக்கப்போகும் பாக்கியம் தனக்கு மட்டும் கிட்டாதா என்று அவன் கனவுகாணுத நாட்களில்லை.
பல்க்லைக்கழக் நூல் நிலையத்தைப் பயனுள்ள முறை யில் உபயோகித்தாள் அவள். அஹமத்திற்கும் என்னவோ *லைபிரரிக்குப்போனுல்தான் படிப்புவரும் அஹமத்தின் பொருளியல் நோட்ஸ் ஐராங்கனியிடம் செல்லும். அவ ளின் நூல்கள் அவன் அறையில் தூங்கும். அவளிடம் நல்ல பெயர் வாங்க்வே அவன் படித்தான். நூல்நிலையத்திலுள்ள அத்தனை பொருளாதார நூல்களையும் படித்துக் குளிசை யாக தீரட்டுவதெல்லாம் ஐராங்கனிக்குப் பயன்பட வேண்டு மென்றுதான்!
அஹமத்-ஐராங்கனி தொடர்பு சாதாரண பழக்கம் என்பதற்குமேல் அரியம் சிந்திக்கவில்லை. ஆனல் கம்பஸ் வதந்திகள் வேறு விதமாகப் பரவின. சமீபத்தில் நடை பெற்ற சம்பவமொன்று இந்த வதந்தியை ஊர்ஜிதப்படுத் துவதுபோலிருந்தது.
கண்டி ஏரியும், தலாதா மாளிகையும், கண்டி எசலப் பெரகராவும் வெளிநாட்டு யாத்திரிகரையே கவரும்போது, பல்கலைக்கழக மாணவர்களைக் கவர்வதில் வியப்பில்லை! நாட்டுப்பற்றும் மதப்பற்றும் மிக்க சிங்கள மன்னன் ஒரு வணுல் தொடங்கப்பட்ட பெரகர இன்றுவரை பல லட்சக் க்ணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்த பெருவிழா. சாதா ரணமாகவே நெரிசல் மிகுந்த விழாவிலே 'வாசிற்றிக் கிற வுட்டும், சேர்ந்துவிட்டால் கேட்க வேண்டுமா? வரிசை வரிசையாகச் செல்லும் யானைக் கூட்டம்; கொப்பரப் பந் தம்பிடிக்கும் பணியாட்கள், கவர்ச்சிமிக்க கண்டிய நடனம், மானிய காலச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் உடையணிந்த பிரதானிகள் என்பன கண்கொள்ளாக் காட்சிகள் இந்த நெரிசலிலே யானையொன்றிற்கு மதம்பிடித்துப் பாகனின் கட்டளையை மீறித் தெறிகெட்டு ஓடத் தொடங்கியது.

3.
அகப்பட்ட நூற்றுக்கணக்கானேர் உயிரிழந்தனர். ‘வீல்" என்று அவலக் குரலெழுப்பிய ஐரா ங்கனியின் கையைப் பிடித்து அஹமத் இழுத்திராவிட்டால் அவளின் கதையே அத் துடன் முடிந்திருக்கும். அவள் நன்றிப் பெருக்குடன் அவ னைப் பார்த்தாள்.
பரீட்சை நெருங்கும்போதுதான். பழைய நோட்ஸ் களைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஞானம் பலருக்கு உதிங்பதுண்டு, மூன்று ஆண்டுகளாகத் தாங்கள் விட்ட பிழைகளையெல்லாம் எண்ணிக் கழிவிரக்கப்படும் மாண வர்கூட்டத்தில் அரியமும் அஹமத் தும் விதிவிலக்கானவர் அல்ல. பரீட்சை - 'இது தங்களையெல்லாம் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்ப்படும் பூதம்' என்றே அவர்கள் எண் ணினர். இதைவிட முக்கியமான பிரச்சினையொன்றுக்குத் தீர்வுக்ாண விழைந்தான் அரியம்! அதுதான் ஐராங்கனிஅஹமத் சோடிப் பிரச்சனை. இந்த வதந்தி எந்த அளவு தூரம் உண்மையானது? தனக்கேயுரியவள் இன்னெருவன் உடைமையாவதைச் சகிக்கமாட்டாத சினிமாக் கதாநாய கனைப் போலத்துடித்தான் அரியம்.
“பில்லர் செக்சனில் சந்திக்கும்போது கேட்டுவிட்டால் என்ன? இதில் என்ன தவறு? பருவ வாலிபன் ஒருவன் கன்னிப் பெண் ஒருத்தியைக் காதலிப்பது தவரு? இனம், மொழி என்ற சமூகக் கட்டுப்பாடுகள் குறுக்கிடலாம். காலத்துக்கொவ்வாத கொள்கைகள். அளவெட்டியில் தீவீர சைவக் குடும்பத்தில் பிறந்ததற்காகத் தன் ஜீவாதார உரி மையைக் கைவிடுவதா? 'ஐராங்கனி நீயில்லாமல் என்னுல் ஒரு கணமும் வாழ முடியாது. என்னைக் கல்யாணம் செய்து கொள்கிருயா?" என்று கேட்டுவிட வேண்டும். 'சே'. இப்படி நேரடியாக யாரும் கேட்பார்களா?' 'அத்தான் நீங் கள் என்தெய்வம் உங்களைத்தவிர வேறெவரையும் மனத் தாலும் நினைக்கமாட்டேன்' என அவள் கண்களே பேசு கின்றனவே அப்படியானல் ஐராங்கனி -அஹமத் வதந்தி. !
நேரே கேட்டுவிடுவதுதான் ஒரே வழி. உயிரில்லாத நோட்சும் நூல்களும் உள்ளத்து உறவைக் கூறுமா? இப்படி எண்ணிக்கொண்டு நடந்தான் அஹமத் - அல்காஜ் சரீபின் அருமைப் புதல்வன். காலிமாநகரில் செல்வச் செழிப்புள்ள

Page 27
32
குடும்பத்தில் பிறந்தவன் அவன். மத ஒழுக்கத்தினின்றும் மாருத ஜனுப்சரீப், மக்காவிற்கு மூன்று முறை யாத்திரை செய்ததால் அல்ஹாஜ் ஆனர். அஹமத் கூட ஒருமுறை மக் காவிற்குப் போயிருக்கிருன். நபிகள் நாயகம் காட்டிய வழியிலே செல்லவேண்டியவன் போதிமாதவரின் பாதங் களைப் பூஜிக்கும் ஐராங்கனியை காதலிக்க மத ஆசாரம் இடம் கொடுக்குமா? "வாப்பா அறிஞ்சாரெண்டா வாள் வீசிடுவார்' என்று யாரோ அவன் காதில் உரத்துப் பாடுவது போன்றிருந்தது. என்ன “நருேமைண்டெட்னெஸ்" சாதி, இனம், மதம் எல்லாம் மனிதனின் சிருஷ்டி, ஐராங்கனி
யிடம் முடிவாகக்கேட்டு விடுவேன் “டே இடியட்' உனக்கு
இன்னுமா புரியல்லை. உன்னுடன் பழகும் முறையைக் கொண்டு அவள் உள்ளத்தை இன்னுந்தான் அறியவில் லையா? எந்தப் பெண்ணும் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று முழுவசனத்தில் பதில் கூறுவாளா? வாசிற்றிக் கம்பஸ் வதந்திகளின் அர்த்தமென்ன? ஐராங்கனி தன் உள்ளக் கிளர்ச்சிகளை தன் சிநேகிதிக்ளுக்குச் சூசகமாக்த் தெரிவித்திருக்கவேண்டும். இக்கதை கம்பஸ்வலில் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது' வாதப்பிரதி வாதங்கள் அஹமத்தின் மூளையைக் குளப்பின.
இறுதிப் பரீட்சை நெருங்க நெருங்க மாணவிகள் நோட்ஸ்களை உருப்போடும் வேகமும் அதிகரித்தது. இராப் பகலாக படித்த களைப்பை நீக்கி மூளைக்குச் சற்று ஆறுதல் கொடுப்பதற்காக ஹில்டா மண்டப மாணவிகள் பேரா தனைப் பூங்காவிற்குப் போயிருந்தனர்; ஐராங்கனியும் போயிருந்தாள். மாணவிகள் மத்தியில் அவள் புரியாத புதிர். அவள் ஏன் தமிழ் படிக்கிருள்? அவள் முகத்திலே தீராத துன்பத்தின் சாயல் படிந்திருப்பதேன்? எவ்வளவு தான் நெருங்கிப் பழகிய சிநேகிதிகள்கூட அவளிட மிருந்து எதையும் அறிய முடியவில்லை. பிறந்த ஊராகிய ஹட்டனில் தமிழ் வாலிபன் ஒருவனைக் காதலிக்கிருள் என்ருெரு வதந்தி! இப்பொழுதுதான் காதல் பாடம் தொடங்கியிருக்கிருள் என்று இன்னெரு கதை. அரியம் தான் அவள் காதலன் என்று ஒரு சாராரும் அஹமத் தான் அவள் உள்ளங்கவர் கள்வன் என வேருெரு சாராரும் நம்பினர்.

33
பேராதனைப் புதிய நந்தவன மகவைப் பேணியமுதூட் டும் மகாவலி கங்கைக் கரையிலே குனிந்து வளைந்து நிற் கும் மூங்கில் கூட்டங்களைப் பார்த்துக்கொண்டு நிற்கிருள் ஐராங்கனி, துட்டகாமினிக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற போர் இனப்போரா மதப்போரா என அலசி யாராய்ந்துவிட்டுக் கொஞ்சம் ஆறுதல் எடுக்கவந்த அரியம் சற்றும் எதிர்பாராத வகையில் ஐராங்கனியை சந்திக்கின்றன். அவளிடம் சில விஷயங்கள் அந்தரங்கமாகப் பேசவேண்டும் என்று நினைத்துக் கதையைத் தொடங்குகிறன், கேட்க நினைத்தவற்றைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் பேசப்படு கின்றன. அவள் பிறந்தது ஹட்டனில். ஆனல் வளர்ந்தது யாழ்ப்பாணத்தில். அண்ணன் ஒருவன் இருந்தான்; தமிழ்க் குடும்பம் ஒன்றுடன் வாழ்ந்து வந்தவர்கள் தமிழ் வாழ்க்கை முறையிலே கலந்துவிட்டனர். அண்ணன் விபத்தொன்றில் அகப்பட்டு இறந்து விட்டான். இப்பொழுது ஒரே ஆதரவு தாய். இவைகள் அவள் பேச்சிலிருந்து சேகரித்த தகவல்கள்.
இறுதிப் பரீட்சை முடிவுற்றது. ஜிம்மிலே மயங்கி விழுந்தவர்களைத்தவிர ஏனையோர் வெள்ளேத் தாள்க்ளே கருப்பு மையால் நிரப்பிக் கொடுத்து விட்டனர். மூன்று வருஷ காலமாக ஒரு தனி ராச்சியத்திலே வாழ்ந்தவர்கள், நாட் டின் புத்திசாலித்தனத்தின் பிரதிநிதிக்ள், எத்தனையோ க்லாட்டாக்களேயும் தமாஷாக்களையும் நடத்திய ஒரு சமூகம் அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டையைப்போலத் தீவின் பலபாகங்களுக்கும் சிதறிச் செ ல் லு ம் நாள் நெருங்கி விட்டது.
'டே அரியம் வாடா முஸ்பாத்தியாகப் படம் பார்க்கப் Gural Lib'.
"சும்மா போடா எனக்கு தலையிடியாயிருக்கு, நீ போட் டுவா’ என்று அரியம் அலுத்துச் கொள்கிருன், ‘இன்று கடைசி நாள் ஐராங்கனியை-அவளின் வேண்டுகோளுக் கிணங்கச் - சந்திக்கும் சந்தர்ப்பத்தை எந்த முட்டாள் நழுவ விடுவான்’ இப்படி அரியம் எண்ணினன்.
'அவன் மறுத்ததும் நல்லதாகப் போய் வி ட் ட து' ஐராங்க்னி தன் இதயத்தை திறந்து காட்டுவதற்காகத்தான் என்னை அழைத்திருக்கிருள்" என்று நினைக்கிருன் அஹமத் .
е

Page 28
34
குறிப்பிட்டநேரத்தில் ஐராங்கனியை இருவரும் சந்திக் கின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்கின்றனர். அவள் பேசத் தொடங்குகிருள். “எமது ஈழத்திருநாட் டில் ஏற்பட்ட துன்பங்களுக்கெல்லாம் நம் நாட்டிலுள்ள பல்வேறு இனத்தவரும் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளாதது தான் க்ாரணம். இனக்கலவரத்தில் எனது தமையனைப் பறி கொடுத்தபின்னர்தான் எனக்கும் இந்தப் புத்திவந்தது. தமிழ்ப் பண்பாட்டிலே வளர்ந்தவன் தமிழன் எனத் தவருகத் இனங்காணப்பட்டுக் காடையரால் கொல் லப்பட்ட சம்பவம் என்மனதிலே ஆருத புண்ணை ஆக்கி யிருக்கிறது. இப்படியான நிகழ்ச்சிகள் இன்னும் நம்நாட் டில் நடைபெற வேண்டுமா? இதைத் தடுக்கக் கூடியவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகளல்ல. பல்வேறு சமூகத்தினரை யும் புரிந்து கொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சியின் அங்கம்தான் எனது தமிழ்ப்படிப்பும் உங்கள் நட்பும். இது பல்கலைக் கழகத்தில் பலவித வதந்திகளுக்கு இடமளித்தது உண்மை. நீங்கள் என் சகோதரர்கள் என்னை உங்கள் தங்கையாகவே கருதினிர்கள். ' அரியமும் அஹமத்தும் வாயடைத்து நிற்கின்றனர்.

3S
s
உறவுகள்
LDof அடிக்கிறது ; இடாப்பு அடையாளவேளை, கமலா வரவு இடாப்பை விரிக்கிருள். பெயர்க்ளே அழைக்
* செல்வராசா ?? “பிறசென்ட் ரீச்சர் ”. - ** வேலாயுதம், கந்தசாமி, சரோஜா!’ ‘அப்சென்ட் ரீச் geri **.
சரோஜா எப்போதுமே ஒழுங்கீனம்தான் ! குடும்பத் தில் பத்தாவது பிள்ளை. எப்போதுமே ஒரு சாட்டுச் சொல் வாள், தோய்த்த சட்டை காயவில்லை, அம்மாவுக்குச் சுக மில்லை. இப்படி எத்தனையோ சாட்டுக்கள்.
அடுத்த மணி : தமிழ்ப்பாட்டு. 46 அன்பை வளர்க்க வேண்டும் கிளியே அறிவைப் பெருக்க வேண்டும் .?' தனக்குத் தெரிந்த இராகத்தில் பாடுகிருள், பிள்ளைகள் அவளைப் பின் பற்றிப் பாடுகின்றனர்.
அன்பை வளர்க்க வேண்டுமாம் யார் மீது அன்பை வளர்ப்பது?
ஒரு காலத்தில் கமலாவிற்குத் தாய் இருந்தாள். இப்போது அவளும் இல்லை. சேகர். எல்லாம் கனவு போலாகி விட்டது.
காலையில்தான் கண்ணுடியில் பார்த்தாள் ; வயதுக்கு மேலான முதிர்ச்சி அவள் உடலில் ; கன்னத்தில் இரண் டொரு நரை மயிர்கள்.

Page 29
36
அவளுக்கென்ன வயது போய்விட்டதா ? முன்பெல்லாம் இவள் தாய் சொல்லுவாள், “ இன்னும் நீ சின்னப்பிள்ளை இல்லை. உனக்கு வயது வந்து விட்டது தனியாக வெளியே போக்க் கூடாது."
அம்மாவும் அவள்மீது கண்ணகத்தான் இருந்தாள். இப்போது வயது போய் விட்டது. அம்மாவும் இல்லை, அவளைக் கட்டிக் காவல்செய்ய,
முன்பெல்லாம் சக ஆசிரியைகள் அவளிடம் ஒரு கேள்வி கேட்பார்கள், அவளுக்கு நாணம் வரும் ; அது இருபத் தைந்து வயதுவரை. அதே வின அவளுக்கு எரிச்சலை ஊட் டியது. முப்பது வயதுவரை. இப்போது யாருமே அந்த வினுவைக் கேட்பதில்லை.
அது என்ன வின?
இப்பொழுது அவளின் வயது முப்பத்தெட்டு.
அவளிடம் அழகில்லையா ? இருந்தது. அப்படித்தான் சேசுர் கூறினன். அவன் பொய் சொல்லாதவன். அம்மாவும் அவளின் அழகைப்பற்றிப் பிரஸ்தாபித்தது உண்டு.
பள்ளியில் படிக்கும் நாளில் அவளைப்பார்த்து அவளின் தோழியர் பொருமைப்பட்டதுண்டு. அப்பொழுது அவளுக்கு வயது பதினறிருக்கும். வயதுக்கு மீறிய பூரிப்பு, மினுமி னுப்பு. துடிதுடிப்பு * விலாட்டுமாம்பழக் கன்னம். கருவள ஜலக் கூந்தல். ஒளிக்கீற்று நெற்றி, தயிர் வண்ணப் பல் வரிசை.” இப்படித்தான் சேகர் வர்ணிப்பான். அவன் பெரிய கவிஞனம். அவன் சொல்வது ஒன்றுமே அவளுக்கு விளங்காது. புதுக் கவிதையைப் போல, ஆணுல், ஒன்று மட்டும் . அதுதான் அவன் அவள் மீது அளவுக்கு மிஞ்சிய ஏதோ ஒன்று வைத்திருக்கிருன் என்பது மட்டும் அவளுக் குப் புரிந்தது. அவன் கவிதை பாடினன். அவளும் (பேசி ஞள். தந்தி வாக்கியத்தில்,
எல்லாம் பழைய கதை.
அவளுக்குத் தராதரப் பத்திரமற்ற ஆசிரியர் பதவி
திடைத்தது உலக அதிசயங்களில் ஒன்று. செல்வம், செல் வாக்கு, அறிமுகம் எதுவுமேயில்லாது ஆசிரியப் ப த வி இடைத்து விட்டது, அவளுக்கு மகிழ்ச்சிதான்.
(

37
ஆனல் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள சேகர் இல்லை. அவன் ஏமாற்றி விட்டான். அவளைத் தவிக்க விட்டு விட்டு மீளாத உலகத்துக்குச் சென்று விட்டான்.
அவளின் ஒரே பற்றுக்கோடு அன்னதான். உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து உருக்குலைந்து போயிருந்தாள் தாய் மகளுக்காகச் செய்த தியாகங்கள் எத்தனை ? பனியும் வெய்யிலும், மழையும் கமலாவின் தாய்க்கு ஒன்றுதான்.
* தாய்க்கு ஓய்வளித்து விட்டு, தான் உத்தியோகம் பார்த்து அவளைக்காப்பாற்ற வேண்டும் ' என்றுதான் எண்
"ணிஞள். தெய்வ சங்கற்பம் வேறு விதமாக இருந்தது.
அன்னை கண்ணை மூடியதும் அவள் அநாதையாக அழுது
துடித்ததும் இப்போதும் பசுமையாக இருக்கின்றன. கம
லாவுக்கு இந்த உலகில் இப்போது எவருமே இல்லை.
*ரிச்சர் தன்னை வணக்கவேண்டும் என்ருல் கருத்து
என்ன? கெட்டிக்காரச் சுகந்தி என்னும் மாணவி கேட்கிருள் எண்ணங்கள் கலைய, பாட்டிலே சிந்தையைச் செலுத்து
கின்ருள். கேட்ட மாணவிக்கு ஒரு பதில்.
காலை எட்டு மணி. பிற்பகல் இரண்டு மணி. மணி
யோசைகள் வகுப்பு மாற்றம், இயந்திரவாழ்க்கை எதிலும்
பற்றே பாசமோ அற்ற நிலை.
இரண்டு மணியிலிருந்து அடுத்தநாள் காலை எட்டு மணிவரையும் தனிமை, துன்பம், சிந்தனை நரகம்,
பாடசாலையில் அவளை ஒத்த தோழி வசந்தியிருந்தாள். அவளும் கல்யாணமாகிப் போய்விட்டாள், கணவன் உத்தி யோகம் பார்க்கும் ஊருக்கு. இப்பொழுது அவளுக்கு மூன்று பிள்ளைகளாம்.
சேகர் உயிருடன் இருந்து அவருக்கு வாழ்க்கைப்பட்
டிருந்தால், கமலாவுக்கும் எத்தனை பிள்ளைகளோ!
கமலா பள்ளியில் ஒரு தனிப்பிறவி. ஆசிரியர் குழாத் இல் இரண்டு பாட்டிமார். காமாட்சியும், தங்கமுத்து வும். இன்னும் மூன்று மாதத்தில் "பென்சன்’ எடுக்க இருக் கிருர்கள். பாடசாலை மணியோசை இவர்களை அசைக்காது வெற்றிலைப் பெட்டியின் பக்கத்தில் தஞ்சம். பிரேமலதாவும் ராசாவும் இளவட்டங்கள், புதிய நியமனங்கள், அவர்கள் கண்ணுல் பேசி வாயால் சிரித்துக்கொள்வார்கள்.

Page 30
38
கமலா சுயேச்சை தான்! மூத்த தலைமுறையும் இளைய தலைமுறையும் கமலாவை ஒரு நையாண்டிப் பார்வை பார்க் கும் நிலை.
米 兴 s
சிவள் தாய் உயிருடன் இருந்திருந்தால் அவளின் கில்யாணத்தைப் பற்றி க் கவலைப்பட்டிருப்பார்க்ளோ? பாவம் . அன்னைதான் என்ன சுகத்தைக் கண்டாள்? அப்பா அம்மாவைக் கல்யாணஞ் செய்த போது நல்லவரா
கத்தான் இருந்தாராம். பிறகு. கூட்டம். குடி. அம்.
மாவுக்கு அடி. நாயும் பூனையும்போல அன்பான வாழ்க்கை. அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வில்லை.
மணி அடிக்கிறது. அடுத்த பாடம் எண்கணிதம் க்ரும்பலகையில் கணக்கை எழுதுகிருள்.
“என்னிடமிருந்த இருபதாயிரம் ரூபாவில் அரைவா சியை மூத்த மகளுக்கும் மூன்றிலொன்றை மகனுக்கும் தந்தபின். '
அவளுக்கே சிரிப்பு வருகிறது, இருபதாயிரம் ரூபாஇதைக் கணக்குப் புத்தகத்திலும் கரும்பலகையிலும்தான் காண்கிருள். நிஜ வாழ்க்கையில் காணும் பாக்கியம் கிட்ட
இருபதாயிரம் இருந்தால் யாராயினும் அவளைத் திரு மணம் செய்ய முன் வந்திருக்கலாம். வாழ்க்கையே ஒரு வியாபாரம் தான்!
நேரம் பிற்பகல் இரண்டுமணி மணியடிக்கிறது.
※ 米 米 காலை ஏழு முப்பது மணி. மழை. மழை, பேய் மழை பெய்கிறது. அவளின் குடிசையில் ஒழுக்கு. சருவச்சட்டி, மண்சட்டி, குடம். இவற்றை ஒழுகும் இடங்களில் வைக் கிருள். க்வலைப்பட நேரமில்லை. பள்ளிக்குப் போக
வேண்டும்.

39
குடையை விரிக்கிருள். இந்தக் குடை பெருமழையைத் தாங்குமா? பஸ் தரிப்பில் நிற்கிருள். பஸ் தரிப்பைக் குறிக் கும் பலகையில் பஸ்வலின் அடையாளத்துடன் வியப்புக் குறியும் போட்டிருக்கிருர்கள். பஸ் வ ந் தாலும் அது நிற்பது வியப்புக்குரிய விஷயந்தான்! பாடசாலை பஸ் பூரண கர்ப்பிணியைப் போல முக்கி முனகி வந்தாலும் நிற்க வேண்டுமே.
ஒரு கார். பஸ் தரிப்பில் நிற்கிறது. ‘எங்கே போகவேண்டும்’ தலையை வெளியே நீட்டிக்
கேட்கிருர் அழகான ஆடவர் ஒருவர் . எடுப்பான தோற்றம்;
பெரிய ஆபீஸராக இருக்கலாம். *கனிஷ்ட வித்தியாலயம்." 'உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றல் கொண்டு
போய் விடுகிறேன்." கனிவுடன் வெளிவருகிறது அவர்
குரல.
இருபது வருஷத்துக்கு முன்பென்ருல் ஆட்சேபித்து
இருப்பாள். -
கார்க்கதவு திறக்கப்படுகிறது; உள்ளே ஏறுகிருள்.
யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? தனியோர் ஆடவனுடன் காரில் போவதைக் காமாட்சி ரீச்சர் கேள் விப்பட்டாலும் போதும். பத்திரிகையில் விளம்பரம் செய் தது போலத்தான்.
'படிப்பிக்கிறீர்களா??
““ ... Lb...””
"எங்கேயோ பார்த்திருக்கிறேன்."
"எங்கேயாயுமிருக்கலாம்.”
"சாயி பாவா பஜனைக்கு வந்தீர்களா?"
"ஒம் *உங்கள் பெயர் மிஸிஸ்.?? *மிவபிஸ் இல்லை. மிஸ் கமலா, நீங்கள்? **ஜெகதீசன். கச்சேரியில் வேலை.” “எத்தனை பிள்ளைகள்?"

Page 31
40
கலகலவென்று சிரிக்கின்ருன் ஜெகதீசன். சேகரும் இவரைப் போலத்தான் இருப்பார்.
'கல்யாணமாகவில்லை. உங்களைப்போலத்தான்!"
‘இவடத்தில் இறங்கப் போறன்." * 'வித்தியாலய கேற்றில் இறக்கி விடுகிறென்.” 'இதில் இறங்கினல் போதும்.”
د و [ffعون » ،
'நன்றி.' கமலா வித்தியாலயத்துள் நுழைகிருள் அவள் அகத்* திலும் முகத்திலும் என்றுமில்லாத குதூகலம் , -
காமாட்சியும் தங்கமுத்துவும் குசுகுசுக்கின்றனர். தலைமையாசிரியர் செங்கோலுடன் நின்று ஆணையிடு கிழுர், பிள்ளைகள் அவரின் கட்டளையை நிறைவேற்றுகின் றனர். லதாவும் ராசாவும் ஏதோ நகைச்சுவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
6என்ன கமலா இண்டைக்கு வலு சந்தோஷமாயிருக் கிருய்?" காமாட்சி ரீச்சரின் கேள்வி.
கமலாவுக்கு எரிச்சல் தான் வருகிறது. ‘வாழ்க்கை முழுவதும் துன்பப்பட்டால்தான் இதுகளுக்கு சந்தோஷ மக்கும் மனதுக்குள் நினைத்துக் கொண்டு “ஒன்றுமில்லை'
என்கிருள்.
米 米 米
இனிய நினைவு. பஸ்தரிப்பில் நிற்கிருள். மீண்டும் அதே கார்; அதே ஆடவர் ; அதே புன்னகை; கனிவான வேண்டுகோள். அவள் காரினுள் ஏறுகின்ருள். அவரின்

IP yn
.
4.
கண்கள் பேசுகின்றன. அவளின் கண்க்ள் விடை பகருகின் றன. முன்சீட்டில் அவள்; சுகப் பிரயாணம். ஒரு திருப்பம் ஸ்ரியறிங்கை வெட்டித் திருப்பும்பொழுது ஜெகதீசனின் இடது முழங்கை அவளின் தோளில் இடித்து விடுகிறது. கன்னஞ் சிவக்கிறது.
* மன்னிக்கவும் ”
* பரவாயில்லை '
தடாரென்ருெரு சத்தம். " ஆ. கார் லைட் போஸ்ற் உறில் மோதி விட்டதா ? ’ திடுக்கிட்டு விழிக்கிருள். சுவரி லிருந்த பூனை எலியைப் பிடிக்கக் குதிக்கிறது. எல்லாம் கனவு.
அடுத்தநாள் பஸ் தரிப்பில் நிற்கிருள். ஏதோ ஒர் ஏக்கம். அவர். மீண்டும் சந்திக்காமலா போகப் போகிருர்? அன்றைய கனிவு, பரிவு. எதைக்காட்டுகிறது? ஒருவேளை அவரும் அவள்மேல் ஏன் இருக்கக் கூடாது ? கார்கள் போகின்றன. அந்தக் கார். வரவில்லை. பஸ்தான் வருகிறது; ஏறிக் கொள்கிருள். இனி அந்தக் கார் இதே பாதையில் வரமாட்டாதா? ஏன் வரமாட்டாது? என்ருே ஒருநாள் அந்த ஆடவரைச் சந்திக்கத்தான் போகிருள் ! அவளின் உள்ளுணர்வு அப்படித்தான் கூறுகின்றது. பலநாளைய எதிர் பார்ப்பு. அவளின் நம்பிக்கை சிதைந்து கருகி விடுகிறது ஏமாற்றம் வேருெரு கார் வருகிறது, அழகான இளைஞன் அருகிலொரு யுவதி, என்ன குதூகலம்?. சினிமாக் காதற் சோடிகளைப் போலல்லவா போகிருர்கள். எண்ணங்கள் பொசுங்குகின்றன அவள் சிந்தனையில் ஒரு விசித்திரமான எண்ணம். சீ. இப்படியான ஒரெண்ணம் அவளுக்கு வந்ததையிட்டு அவளே அருவருத்துக் கொள்கிருள். ஊர் என்ன சொல்லும் ? காமாட்சி ரீச்சர்.
அவளுக்கு ஒரு பற்றுக்கோடு வேண் டும். அவளே நேசிக்க. அவளால் நேசிக்கப்பட. ஒரு.
f

Page 32
42
அடுத்த வீட்டிலே சோறு கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையை நையப்புடைக்கின்ருள் தாய். சட்டையில்லை என்றழுகிறது ஒன்று. புத்தகம் வேண்டித்தரும்படி அழு கிறது இன்னென் று. வீட்டுத்தலைவன் விழிக்கிருன். சண்டை. சச்சரவு. ஒலம். எல்லாமாகப் பத்துச் சீவன் கள் துடிக்கின்றன. என்ருலும் கமலா அடுத்த வீட்டுக் காரியைப் பார்த்துப் பொருமைப் படுகிருள்.
கமலா எதிர்பார்த்த சந்திப்பு நிகழத்தான் செய்கிறது. ஜெகதீசன் அவளை மீண்டுமொரு முறை காரிலே ஏற்றித் தான் செல்கிருன் , மறக்கமுடியாத சந்திப்பாக அது இடம் பெறுகிறது. அப்பொழுது அவள் எல்லாப் பெண்களையும் போல, ‘என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?* என்று கேட்கவில்லை. அப்படி ஒர் உறுதிமொழி பெற்று மீண்டும் ஏமாற்றமடைய அவள் விரும்ப வில்லைப் போலும், அவள் அவனைக் கேட்டுக் கொண்டதெல்லாம் ஒன்றுதான். "இனிமேல் என்னைச் சந்திக்கவே வேண்டாம்.’
அவள் வேண்டியது தன் அன்பைச் சொரிய ஒரு ஜீவன். அவள் மீது அன்பைச் செலுத்த ஒரு ஜீவன். அவள் விரும் பிய துணை இப்பொழுது கிடைத்து விட்டதா?
e

43
கிராமங்கள்
கற்பழிக்கப்படுகின்றன
(Pத்தையன் அதிர்ஷ்டசாலிதான். இல்லாவிட் டால் கொழும்பு கோட்டை புகைவண்டி நிலையத்திலே மெயில் வண்டியிலே "கோணர் சீட் கிடைத்திருக்குமா?
இந்தக் கோணர் சீட்டுக்கு எத்தனை கிளறிக்கல் சேர் வன்மாருடன் போட்டி போட்டான்! புகைவண்டி நிற் பதற்கு முன்னே வண்டியுடன் ஒடிச் சென்று ஜன்னலுக் கூடாக தன் பெட்டியைக் கோணர் சீட்டிலே குறி தப்
பாது எறிந்து அந்த இடத்தை எவ்வளவு லாகவமாகப் பிடித்துக் கொண்டான்!
பெரியதொரு சாதனையை நிலைநாட்டின பெருமிதத் துடன் அந்த ஆசனத்தில் அமர்ந்து கொள்கிருன், ஷேட் டுப் 'பொக்கற் றிலிருந்து சிகரெட் பைக்கட்டை அலட் சியமாக் எடுத்து அதிலிருந்து ஒரு பில்ரர் முனை சிக ரெட்டை எடுத்து அதரங்களின் நுனியில் வைக்கிருன், மீண்டும் அவனுடைய கைகள் பைக்கட்டைத் துழாவுகின் றன. அவன் கையில் அகப்பட்ட நெருப்புப் பெட்டியில் ஒரு குச்சை தட்டிப் பற்றவைத்துக் கொள்கிருன் இரண்டு இழுவை இழுத்து புகை மண்டலத்தை வாய்க் குகையி லிருந்து விடுதலையாக்கும் போது பெறும் இன்பமே அலா திதான்!

Page 33
44
விடியப் புறம் 3 மணி வ  ைர யி ல் மாங்குளத்தை அடைந்து விடலாம் தபால் எடுக்க வென்றே காத்து நிற் கும் பஸ்வில் மல்லிகை வனத்துக்கு-அதுதான் அவனின் ஊர். - பலபல வென்று விடியப்போய் விடலாம். பதினைந்து வருட இடைவெளிக்கும் பிறகு பிறந்த மண்ணை மிதிக்கப் போகிருன், அவன் போகும் போது அவன் தாய் மீனுட்சி தயிர் கடைந்து கொண்டிருப்பாள். அவன் தந்தை சின்னத் தம்பியர் எருமை மாட்டுப் பட்டியிலே ஒரு கலையத்திலை பாலை நிரப்பி விட்டு அடுத்த கலையத்திலை கறந்து கொண்டு நிற்பார்.
முத்தையன் ஊரைவிட்டுப் போகும் போது அவனு டைய மச்சாளுக்கு எட்டு வயது. அவள் இப்பொழுது வாளிப்பாக வளர்ந்து பெண்மையின் பொலிவுகள் எல்லாம் பூத்துக் குலுங்க நிற்பாள். ஒரு வேளை ஒரு கமக்காரக்
கட்டழகன கல்யாணம் செய்தும் இருக்கலாம். யார்
கண்டத?
முத்தையனுக்குப் பக்கத்தில் இருந்த தொந்தி வண் டியர் தூங்கி விழுந்து தன் எண்ணெய்த் தலையை முத்தை
யனின் புது சேட்டில் புரட்டுகின்ருர், அவரை நிமித்தி விடு
வதே பெரும் பாடாகப் போகிறது.
பத்து வயது வரை முத்தையன் என்ன நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தான் மல்லிகை வனத்தில்! எந்தக் கடும் கோடையிலும் குளு குளு என்றிருக்கும் பனை யோலைக் குடிசை. சாய்மனைக் கதிரையின் வடிவிலே க்ளி மண்ணுல் அமைத்து அழுத்தி முருக்கமிலேச் சாறு போட்ட திண்ணையிலே எந்த மத்தியானத்திலும் படுத்தால் சுகம் பேசும்.
கொழும்பிலேயுள்ள. எயர் கொண்டிசன் செய்த பங்களாக்கள்கூடத் தோற்றுவிடும். ' பனையோலைப் பாயில் படுத்தால் நாரிப் பிடிப்பு வராது" என்று அவன் தகப்பன் சின்னத்தம்பியர் அடிக்கடி சொல்வார். காலை எழுந்தவு டனே பழஞ் சோற்றினுள் ஆடையே 1டை த யி  ைரப் போட்டுத்திண்டால் அதன் ருசியே தனி; பச்சையரிச்ெ

45
சோற்றுக்கும் கொச்சிக்காய் பச்சடிக்கும் இணைந்த பொருத் தம் என்ன பொருத்தமோ? அதற்குள் கொஞ்சம் எருமை நெய்யையும் விட்டால் அதற்கு இணை அதுதான்.
**கார்த்திகை மாதத்தில் காட்டிலே பிடிக்கும் உடும்புக் குக் க்ழுத்தளவில் நெய் ' என்று சொல்வார்கள். உடும் பிறைச்சி தின்று எத்தனை வருஷமாகிறது. உடும்பு முட்டை
யின் நுனியிலே சிறிய துவாரம் செய்து அதனை அமத்த
அமத்த பீறிக் கொண்டு வரும் முட்டைக் கரு  ைவ ச் சுவைத்துச்சுவைத்துச் சாப்பிட்ட அந்த நாட்கள் எல்லாம் அவன் நினைவிலே மோதுகின்றன.
6 கோப்பி. கோப்பி. கோப்பி. பார்லி. பார்லி. :மகோ ஸ்ரேசன்' என ஜன்னலுக்கூடாகப் பார்த்துக் கூறுகின்ருர் காற்சட்டைக்காரர் ஒருவர். அவர் ஒரு 'கிளாஸ் ரூ கிளறிக்கல் சேவன்ற் மூன்று செட் இலவச செக்கன் கிளாஸ் வாறன்ரும் முடிந்து விட்டபடியால் ! தேட் கிளாசில் பிரயாணம் செய்கிருர் யாழ்ப்பாணத் துககு
இவருக்கு அங்கே தடல் புடல் வரவேற்பு காத்திருக் கும். ஆனல் முத்தையனுக்கு எத்தகைய வரவேற்புக் கிடைக் குமோ? அவன் ஊருக்கு வருகிருன் என்று எவருக்காவது தெரியுமா? தெரிந்தாலும் என்ன? அவன் என்ன காற் சட்டை போட்ட உத்தியோகத்தன? வெறும் கடைச் ஒப் பந்திதானே. 'பெற்ற மனம் பித்து, பிள்ளைமனம் கல்லு" என்பார்கள். அவன் தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தான் இருந்தான். இல்லாவிட்டால் கடந்துபோன பதினைந்து வருஷத்திலும் இரண்டொரு முறையாவது சொந்த ஊருக் குச் சென்று தாய் தகப்பனையேனும் பார்த்திருக்க ம டான?
மல்லிகை வனம் மிகவும் சிறியதொரு கிராமம். அதில் மாப்பாண முதலியார் என்று ஓர் பெரிய மனிதர் இருந் தார். அந்தக் கிராமத்து வயல் நிலங்கள் முன்னுெரு காலத் தில் அந்த ஊரவருக்குச் சொந்தமாகத்தான் இருந்தன.

Page 34
46
ஆனல் இப்போது எல்லாமே முதலியாருக்குத்தான் சொந் தம். அவர் வகித்த பதவி, அவரின் செல்வாக்கு இவற் றைக் கொண்டு அவர் தேடிய சொத்து அதிகம்.
முதலியாரின் வயலைக் குத்தக்ைக்கு எடுத்து விதைக்கும் விவசாயிகளுள் சின்னத்தம்பியரும் ஒருவர். அவருக்குச் சொந்தமாக நிலமில்லாவிட்டாலும் ஏராளமான எருமை மாடுகள் இருந்தன. அவரின் பெரிய செல்வம் எருமை
மாடுகள்தான். சின்னத்தம்பியரின் மூத்தமகன் முத்தையன்
கிராமப் பள்ளிக்கூடத்திலே படித்து வந்தான்.
அந்தப் பள்ளிக்கூட வாத்தியார் மிகவும் நல்லவர். * கிடா மாட்டுக்குப் பின்னலே போகிற உங்களுக்கு என்ன படிப்பு. நீங்கள் என்ன டொக்டராகவோ, எஞ்சினியராகவோ வரப்போறியளோ? ' என அடிக்கடி அர்ச்சனை செய்வார்.
என்ருலும் பிள்ளைகளுக்கு வாத்தியாரிலை நல்ல விருப்பம். வருஷப் பிறப்பென்ருல் தோடம்பழம் வா  ைழப் பழ ம் போன்ற அன்பளிப்புக்களை வாத்தியாருக்குக் கொடுப்பார்கள். **வருஷம் பிறந்து முன்னம் முன்னம் பெரியோரைச் சந்தி க்கப் போகும் போது வெறுங்கையோடு போகக் கூடாது' என்பது அவர் சொல்லிக் கொடுத்த பாடம். ** எருமைத் தயிர் தின்பதாலே அந்தக் கிராமத்துப் பிள்ளைகளுக்குக் குளிர்மையான மூளை என்பது அவரின் புதிய கண்டு பிடிப்பு
அந்தக் கிராமத்திலே ஒரு இங்கிலிஸ் பள்ளிக் கூடம் இருந்ததாம். இது முத்தையன் அறியாத காலத் துச் சங்கதி. பிற மதத்தினரால் கட்டப்பட்ட பள்ளிக் கூடத்திலே சைவப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று முதலியார் பிரசாரம் செய்தாராம். அந்தக் கிராமத்திலை பிரமாண்டமான இந்துக் கல்லூரியென்று கட்டுவதற்குப் பொது மக்களின் பணத்தில் காணிகூட வாங்கப் பட்ட தாம். 'அந்தக் காணியும் முதலியாரின் பெயரிலைதான் எழுதப்பட்டது' எனச் சிலர் பேசிக் கொள்கிறர்கள்.
முதலியாரின் மகன் கொழும்பிலே பெரிய கல்லூரியிலே படிக்கிருன். வரவு குறைவால் மல்லிகை வனத்து இங்கி

47
லிஷ் பள்ளிக்கூடம் மூடப்பட்டதாம். " ஊரிலையுள்ள எல்லாப் பிள்ளைகளும் இங்லிஷ் படிச்சிட்டால் தங்களுடைய பிள்ளையஞக்கு மதிப்பு வராது என்றுதான் முதலியார் இப் பிடிச் செய்தவர்' என்று பரவலாக அபிப்பிராயம் நிலவு கிறது.
விடுமுறையின் போது ஆனந்தக்குமரன் - இதுதான் மூத யாரின் மகன் - மல்லிகை வனத்துக்கு வந்தால் ஊரே திரண்டு அவனை வரவேற்கும். கொழும்பிலேயுள்ள பிரமாண்டமான கட்டடங்கள் நாகரிகம் எல்லாவற்றையும் பற்றி ஆனந்தக் குமரன் கதை கதையாகச் சொல்வான். கிராமத்துப் பிள் ளைகள் "திறந்த வாய் மூடாமல் கேட்பார்கள்.
முத்தையனுக்கும் கொழும்பில் படிக்க வேண்டுமென்றே ஆசை. வாத்தியார் சொல்வது போல "கிடா மாட்டுக்குப் பின்னலே போக ’ அவன் விரும்பவில்லை.
* முதலியாரின் மகன் கொழும்பில் படிக்கலாம் என் ருல் தான் ஏன் படிக்க்க் கூடாது ' என அந்தப் பிஞ்சு உள்ளம் ஏங்கியது. தனது அபிலாஷையைத் தந்தையிடம் கூறிப் பார்த்தான். 'கொழும்பெங்கே நாங்கள் எங்கே, சும்மா கனவு காணுறதை விட்டிட்டு போடா வயலுக்கு” என்று உறுமினர் சின்னத்தம்பியார்.
*"நான் வயலுக்குப் போக மாட்டேன்." பிடிவாதம் பிடித்தான் முத்தையன்.
சின்னத்தம்பியர் கோபத்தின் உச்ச நிலையிலே உழவன் கேட்டியை எடுத்து முத்தையனின் முதுகில் நாலு குறி வைத்தார்.
'நான் படிச்சாலும் படிக்காவிட்டாலும் வயலுக்குப் போகேலாது' என்று சொன்னவன்தான் வீட்டை விட்டே போய் விட்டான். போனவன் போனவன்தான். கொழும் பிலே சைவக்கடையிலே சிப்பந்தியாக நிக்கிருன் என்று சின்னத்தம்பியர் அறிந்தார். எத்தனை கடிதம் போட்டும் அவன் பதில் போடவில்லை.

Page 35
48
புகைவண்டி அநுராதபுரத்தை அடைந்து விட்டது. இட நெருக்கடி கொஞ்சம் குறைய நீட்டி நிமிர்ந்து படுத்துக் க்ண் ணயரச் சற்று ஆசைதான். ஆனல் நித்திரை கொண்டு விட்டால் மாங்குளத்தைத் தாண்டி ரயில் போய் விட்டால் என்ன செய்வது. அவன் படுக்கவில்லை.
இவ்வளவு காலமும் கொழும்பில் நாகரீக வாழ்க்கையும் நாகரீகச் சாப்பாடும் அலுத்து விட்டன. சைவக் கடைய்ே தஞ்சம் என்று எத்தினை ஆத்துமாக்கள் தங்கள் குடும்பத் தையெல்லாம் பிரிந்து வந்து கஞ்சி முறுக்கின காற்சட் டைப் பலத்தில் உத்தியோகம் பார்க்கிருர்கள், சைவக்கடை யிலே எப்படிச் சாப்பாடு தயாரிக்கப் படுகின்றது. என்ற இரகசியம் முத்தையன் போன்றேருக்குத்தான் தெரியும்.
பிழிந்த தேங்காய்ப்பூ சம்பராக மாறும் விந்தையும் அழுகிய கத்தரிக்காயும் வாடிப்போன வாழைக்காயும் கறி யாக மாறும் விதமும் அவர்கள் அறிவார்களா ? முத்தை யன் அவற்றையெல்லாம் அறிந்தும் அறியாதவனைப் போல அந்தச் சாப்பாட்டைச் சுவைத்துச் சாப்பிட்டான். .
ஒரு அறை - அதில் ஒருவர் படுக்கலாம். இருவர்
இருக்கலாம் மூவர் என்ருல் எழுந்துதான் நிற்க வேண்டும். கடை முதலாளி திறமையானவர் அதற்குள் தனது கேத்
திரகணித மூளையை உபயோகித்து மூன்று சாக்குக் கட்டில் களைப் போட்டு விட்டார். அதில் ஒன்றில் தான் தூக்கம்"
என்னும் தண்டனையை முத்தையன் அனுபவித்து வந்தான். இப்படியான அறைகளிலே வசிப்பவர்கள் வழக்கமாகக் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போவார்கள். முத்தைய னுக்கு அப்படியான வசதிகள் தானும் இல்லை. காற்று வாங்கப் போனல் நிரந்தரமாகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு காலத்தைப் போக்க வேண்டி ஏற்பட்டுவிடும். காற்றும் வெளிச்சமும் எட்டிப் பார்க்க முடியாத இந்த அறையிலே முடங்கிக் கிடக்கும் போதெல்லாம் தனது கிரா மத்திலே விட்டு விசாடியாகப் படுத்து நித்திரை செய்தது நினைவுக்கு வரும்.
வவுனியா வந்துவிட்டது. இனியென்ன? அடுத்தது புளியங்குளம். அடுத்தது மாங்குளம்தானே!

49
மெயில், பஸ்வில் ஏறினுல் ஒரு மணித்தியாலத்துள் மல்லிகைவனத்துக்குப் ப்ோய் விடலாம். ஆலமரங்கள்அவைகள்தான் மல்லிகை வனத்தில் முன்னுர்கு நின்று கட் டியிம் கூறுகின்றன. வீதியின் இரு மருங்குகளிலும் சடைத்து வளர்ந்து விழுதெறிந்து தோன்றும் காட்சியும் அவற்றிலே கிளை, கிளையாக வந்திருக்கும் தில்லம் புருக்களை கெற்றப் ப்ோலால் அடித்து விழுத்திய நினைவும் அவன் மனதிலே இன்றும் பசுமையாக இருக்கின்றன. *,
KM, A XI y II,
அடித்து விழுத் திய புருவை உப்பும் தூளும் போட்டுச் சுட்டு நீண்பர்களுடன் பகிர்ந்து உண்ட நாட்கள்! அந்த
" ஆலமரங்கள் இப்பொழுது இன்னும் பெரிதாகி, இன்னும் அழகாக, இன்னும் குளிர்மையாக இருக்கும். அவற்றின்
நிழலிலே போய்ப் படுத்துப் புரளவேண்டும் போலத் தோன்
றியது முத்தையனுக்கு.
தந்தை சின்னத்தம்பியர் நல்லாய் கிழவனகி விட்டி ருப்பார். தம்பி தர்மலிங்கம் என்ன செய்கிருனே? அவன் தான் எருமைச் செல்வங்களுக்குப் பொறுப்பாக இருப்
பான் 'இனியும் அப்புவால் பாடுபட முடியாது. பதி
னேஞ்சு வருஷமாய் நான் குடும்பத்துக்கு உதவாத ஆளா
கிப் போய்விட்டேன். ஆலமரம் முதிர்ந்து உக்கி வலு
விழந்து போகும் சமயத்தில் அதன்கிளைகளை விழுதுகள் --
'தானே தாங்குகின்றன.
மாங்குளத்தில் பரபரவென்று இறங்குகிருன் முத்தை யன். பேரீச்சம்பழப் பார்சலையும், சூட்கேசையும் அவ சரமாக எடுத்துக்கொண்டு மெயில் பஸ்ஸில் ஏறுகிருன். யாராவது தெரிந்த முகங்கள்? முதலியாரின் மகனக இருந் தால் ஸ்ரேசனுக்குக் காரே வந்திருக்கும். தெரிந்த முகங் கள் எதுவும் இல்லை.
'இனியென்ன இன்னும் ஒரு மணித்தியாலயத்தில் மல்லிகைவனம். ஆலமரங்கள். அவைதான் ஊர் வருகின்ற தென்பதற்கு அடையாளம் என்னைக் கண்டவுடனே எல் லாரும் திகைச்சுப் போடுவினம் '.
g

Page 36
50
ஆவலுடன் எட்டி எட்டிப் பார்க்கிருன், பிறந்த மண் ணிலே மிதிக்கப்போவதை நினைக்கும் போவது உடம்பெல் லாம் புல்லரிக்கின்றது. * மல்லிகை வனம் எல்லோரும் இறங்குங்கள்’ கண்டக்டர் கூவுகிருர்,
என்ன மல்லிகை வனமா ? எங்கே ஆலமரங்கள்? ரோட்டின் இரு மருங்கும் வெறிச்சோடிக் கிடக்கிறது. கொங்கீறீற் கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தப்பட்டி ருக்கின்றன. மல்லிகை வனம் மல்லிகை நகராக மாறுகின் றது. அந்த ஆலமரங்கள் உயிரிழந்து குறைந்தது ஐந்து
ஆண்டுக்ளாகி இருக்கலாம்.
வீட்டுக்குப் போகிருன். பழைய பனையோலை வீடில்லை. முருக்கம் இலைச்சாறு போட்ட திண்ணையில்லை. அமெரிக்கன் மாதிரியில், தாழ்ந்த "அஸ்பெஸ்ரேஸ் சீற்’ போட்ட வீடு. எருமை மாடுகளைக் காணவில்லை. மாட்டை விற்றுத்தான் வீட்டைக் கட்டினனம் தம்பி தர்மலிங்கம். பாலும் தயிரும் நெய்யும் அங்கே இல்லை.
கோப்பியும், தேநீரும் மல்லிகை வனத்தை ஆக்கிர மித்து விட்டன. ஆடையும் தயிரும் இல்லை இடியப்பமும், சொதியும்தான். வெயில் ஏற ஏற வீட்டு விருந்தை அன லாகக் கொதிக்கிறது. மாமரத்துக்குக் கீழே போகிருன் முத்தையன். இப்படியென்று அறிந்திருந்தால் கொழும் பிலேயே நின்றிருக்கலாம். அவன் இளமையிலே வாழ்ந்த மல்லிகை வனம் இனி என்றுமே திரும்பி வராது. அந்த ஆலமரங்களை அவன் இனி என்றுமே பார்க்க முடியாது.

Sl
அவளும் தோற்றுவிட்டாள்
இப்பிடி நடக்குமெண்டு நான் கனவிலெயும் நினைக் கேல்லே. இனி உயிர் வாழுறதிலே ஒரு கருத்துமில்லை வாழ்ந்தாலுஞ் சரி செத்தாலும் சரி. அநியாயமாக உயிரை மாய்க்கக்கூடாது எண்டுதான் நான் தற்சொலை செய்யவில்லை, மாமரக் கொப்பிலே மூண்டு வார்க் கயிறு தொங்குது. அதிலை ஒண்டு என்ரை பெண்சாதி அரியாத்தை தன்ரை வீட்டிலே யிருந்து கொண்டுவந்தவள். அவளின் ரை தேப்பன் நீலப் பணிக்கன் ஆண்ைபுடிச்ச கயிறு. நல்ல உறுதியான கயிறு நானும் ஆன பிடிக்கிறவன் தான். எனக்கு அப்பு ஆச்சி வைச்ச பெயர் வேலப்பன். ஆனை புடிக்கிறவையை பணிக் கன் எண்டு சொல்லுவினம். என்னை வேலப்பணிக்கன் எண்டு தான் எல்லாரும் கூப்பிடுறது. நானும் ரெண்டு வார்க்க்யிறு
திரிச்சு வைச்சிருக்கிறன் . மான் தோலைப் பதப்படுத்தி வசப்
படுத்தி எடுக்க எத்தினை நாள் செண்டுது. வார்க்கயிறு திரிக்கிற கலையை என்ரெ மாமா நீலப்பணிக்கன்தான் சொல் லித் தந்தவர். ஏன் யானையைப் பிடிக்கவும் அவரிட்டைத் தான் பழகினனன். என்ரை வீரத்தைப்பற்றி அவர் நல்லாய்ப் புழுகியிருக்கிருர், மலைபோல திரண்ட தோள்? எண்டு என்ரை தோளைப் பார்த்துச் சொல்லுவார்.
நீலப்பணிக்கற்றை ஒரேயொரு மகள்தான் அரியாத்தை அவள் நல்ல வடிவு இலந்தைப் பழத்துப் புழுப்போ8ல? யெண்டு சொல்லுவினம் அப்பிடி நல்ல வெள்ளை. கொஞ் சம் துடுக்குத்தனமும் உண்டு. அவவிலெ எத்தினையோ பேருக்குக் க்ண் உண்மையைச் சொன்னல் எனக்குந்தான்.

Page 37
്
52 "
Y
எனக்குச் சரியான பயம். விசயத்தை நீலப்பணிக்கரிடம்
சொன்னல் என்ன சொல்லுருரோ தெரியாது. சிலவேளை,
அவருக்குக் கோபம் வந்திட்டால் கிட்ட நிக்கேலாது. ஒருநாள் அவரே என்னைக் கூப்பிட்டு தன்ரை மோளேக் கலி யாணம் செய்து தாறதெண்டு சொன்னர். எனக்குச் சரியான சந்தோசம். ஆனல் எத்தனையோ பணிக்கர்மார் ஏமாந்துபோச்சினம். அவைக்கு என்னிலே சரியான பொருமை. இருபது வரியம் இருக்கும் நான் அவளே கலி யாணம் செய்து, "ஆல்போல் தழைச்சு அறுகுபோல் வேரூண்டி எண்டு குடிமக்கள் எங்களை வாழ்த்தியது நல்ல நினைவு! இப்போ அந்தச் சீமாட்டி அரியாத்தை . அவவை நினைக்கத்தான் வயிறு பத்தி எரியுது. 'போகவேண்டாம்,' எண்டு எத்தினை முறை தடுத்தன்; கேட்டால்தானே. சின்ன வன்னியன்ரை சபையிலே எனக்கு ஏற்பட்ட அவமானத்தை அவளால் பொறுக்க முடியவில்லை. சரியான ரோசக்காறி.
'நான் பிறந்து வளந்த தெல்லாம் செம்மலை எண்ட இந்த
ஒஊரிலேதான். பரம்பரையாக யானைபிடிக்கும் தொழில்
.
தான். எங்களை யானைமறிகாரர் எண்டும் சொல்லுவினம்,
எங்கடை ஊருக்கு ஒரு யோசனை தூரத்திலே இருக்குது சின்னவன்னியன்ரை அரண்மனை. சின்னவன்னியனுக்கு நான் ஐம்பது ஆனைவரையிலெ பிடிச்சுக் குடுத்திருப்பன்,
இஞ்சைத்தியில் ஆனைகளுக்கு இந்தியாவிலே நல்ல விலையாம் ஒவ்வொரு வரியமும் ஏராளமான ஆன அனுப்பிறவர்
இந்தியாவுக்கு. குமாரபுரம் பழைய பெருமை வாஞ்ச இராசதானி. நல்ல செழிப்பான வயலுள்ள இடம், இயற்
கையான நீரூற்று அங்கே இருக்குது. அங்கை இருக்கிற
கோயில் ஒண்டின் பேராலைதான் ஊருக்குப் பேர்வந்தது. சித்திரவேலாயுதர் கோயில் எண்டு பேர். குமரக்கடவுள் இருக்கிற இடம் குமரபுரம் எண்டு வந்திட்டுது. சின்ன வன்னியன் நல்ல கொடைவள்ளல். எத்தினையோ கோயில் களுக்கு காணியள் கொடுத்திருக்கிருர். அவற்றை ராணி புது நச்சியாரும் நல்லவ. என்ரை மனிசியிலெ நல்லபட்சம்.
S. குருந்தூர் எண்ட காட்டு *குள்ளே கொம்பன் யானை அது மதம் புடிச்ச யானை அதைப் பிடிக்கிறதுக்கு குமார

53,
புரத்துப் பணிக்கர்ழார் மறுத்திட்டினம். உயிரைப் பணயும்,
வைக்க அவையளுக்கு விருப்பமில்லை. இனிக் குருந்தூர் பெனல்லாத காடு, அந்தக் காட்டுக்குள்ளே எனக்கொருத்
φ
፳፮\m
கால் கரடி கடிக்கப்பட்டுது. சிறுத்தைப் புலியும்,
இருக்குது. காட்டுச் சீவியம் இப்பிடித்தான்,வல்லமையுள் ளவனுக்கு மற்றவை இரைதான். ஆர் முந்துகினம் எண்ட் தைப் பொறுத்தது. மனிசன் கொஞ்சம் பிராக்குப் பாத்தால் மிருகங்களுக்குத்தான் வெற்றி, இனி உலர்ந்தாக்காரர். (ஒல்லாந்தர்) கண்ணிலை பட்டாலும் தப்பேலாது; அவைய ளுக்குத் தெரியாமல்தான் சின்னவன்னியன் итая ஏத்திற தாம். "
குருந்துார்க் கொம்பனைப் பிடிக்க குமாரபுரத்து யானை மறிகாரர் மறுத்திட்டினம், சின்னவன்னியன் ஏழு ஊருப் பணிக்கன்மாரையும் ஒலை எழுதி அழைப்பிச்சான். அந்தப் பணிக்கன்மாற்றை சபையிலேதான் என்னை அவமானப்படுத் தினவன் செல்லப்பணிக்கன். அவனுக்குப் பழைய கறள். நான் கலியாணம் செய்த காலத்திலே என்ரை மனிசியின்ரை ஒழுக்கத்தைப்பற்றிக் கூடாமல் கதை கட்டி விட்டவன் அவன்தான். அநியாயம் சொல்லக்கூடாது என்ரை மனிசி சரியான நேர்மையானவள்; அவளிலை எவரும் எந்த விசயத்தி லேயும் குறை காண முடியாது. இல்ல்ாவிட்டால் நான் இந்த ஆனை பிடிக்கிற தொழிலைச் செய்ய முடியுமே. அவள் எனக்காக கடவுளை வேண்டினபடியால்தான் எத்தினையோ ஆபத்திலையிருந்து நான் தப்பினது. நல்ல கற்பாடிச்சி. வேலப்பணிக்கன்தான் இந்த யானையைப் பிடிப்பான்" என்று சபையிலே ஒருவர் கூற 'வேலப்பணிக்கன் பிடிக் கமாட்டான் வேலப்பணிக்கன் பெண்சாதிதான் பிடிப்பாள்? எண்டு கேலிசெய்தான் செல்லப்பணிக்கன். என்ரை வாழ்க்கையிலே இப்பிடி நான் அவமானப்படேல்லெ,
நான் சோந்துபோய் இருந்ததைக் க்ண்டிட்டு என்ரை மனிசி விசாரித்தாள். இராச சபையிலெ நடந்ததைச் சொன்னன். அவளுக்கும் ரோஷம் பிறந்திட்டுது 'நானே பிடிச்சுக் கொண்டு வாறன் அந்தக் கொம்பன் ஆண்மை" எண்டு சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். பற்றையில் பல்லி பலபலெண்டு சொல்லிச்சுது 'இண்டைக்குத்தங்கி

Page 38
54
நாளைக்குப் போ' எண்டு சொன்னன். அடுத்தநாளே வெளிக்கிட்டா. புதுப்பான எடுத்துக் காளிக்குப் பொங்கல் செய்தாள்; ஏழுசுருள் வெற்றிலேயும் எலுமிச்சங்க்ாயும் எடுத்தாள்; மான் வார்க் கயிறுகளை எடுத்துச் சீர்பார்த்து அடுக்கிக் கொண்டு புறப்பட்டாள்.
‘நாகதம்பிரானே என்ரை மணிசி அரியாத்தையின் முயற்சிக்கு வெற்றியைக் கொடு. அவளேக் காப்பாற்று' எண்டு வணங்கி விடைகுடுத்தன் ஆனபிடிக்கிற கூட் டத்திலே ஐஞ்சுபேர் போனவை. இரண்டு பொம்பிளே களும் மூண்டு ஆம்பிளையஞம். என்ரை பெண்சாதி அரியாத்தையோடை அவவின்ரை தங்கச்சியும் போனவ.
**ஆளான ஆக்களாலை முடியாததை இவையளோ சாதிக்கப் போகினம்' எண்டு கேலி செய்தினம். எனக்கும் நெஞ்சுக்கை 'பக் பக்' எண்டுது. அரியாத்தையின்ரை உயி ருக்கு ஏதும் நடந்திட்டால் நான் எப்பிடி. வாழுவன். அவ வுக்குப் படிப்பில்லை. கிட்டடியிலேதான் ஒரு கூத்துப் பாத் தவ; கோவலன் கூத்து; அதிலே கோவலனுக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கிறதுக்காகக் கண்ணகி பாண்டியன்ரை சபைக்குப் போய் நீதி கேட்கிருள். இந்தக்கட்டம் தனக்கு நல்லாய்ப் பிடிச்சுக் கொண்டு தெண்டு அடிக்கடி சொல் லுவா. நான் போகவேண்டாம் எண்டு மறிக்க இந்தக் கதையைத்தான் சொல்லிப் போட்டு ‘நான் கற்பாடிச்சி எண்டால் கொம்பன் ஆனை எனக்குத் தலைவணங்கும்' என்டு சொன்ன, நான் மந்திரக் கோலை எடுத்துக் குடுத் திட்டு இருந்திட்டன்.
ஆனையுடிக்கப் போய் வந்த கதை யெல்லாம் ஒண்டும் விடாமல் எனக்குக் கூறினவ. சரியான துணிஞ்ச கட்டை.
போகேக்கை கொஞ்சக் குரக்கன்மாவும் இறுங்கரிசியும் கொண்டுபோனவை. நாயளையும் கூட்டிக்கொண்டுபோனவை. வீரமரத்திலை ஏத்துப்போட்டு அதிலைதான் இராப்படுக்கை. முதல்நாள் கானந்தியும் குரக்கன் மாவும் கலந்து அவிச்ச புட்டுத்தான் சாப்பாடு. அண்டு பின்னேரம் ஒரு மானை
酥

55
வேட்டையாடிச்சினம். பிறகு சாப்பாட்டுக்குப் பிழையில்லை. தெருவிலை நாகபாம்பு வழிமறிச்சுது. அதை வணங்கி வரம் கேட்டாள். ‘நாகதம்பிரானே நான் கணவன்ரை மானத்தைக்
தாக்க காட்டுக்குப் போறன் என்னைக் காப்பாற்ற வேணும்"
நாகபாம்பு புற்றுக்குள் போய்விட்டது. மூண்டு நாளாய் கொம்பன் ஆனையைக் காணவில்லை; நாலாம் நாள் பின்னே ரந்தான் கிளையானைகளுடன் அந்தக் கொம்பனைக் கண்டினம். வெடிக்காரர் ரெண்டுபேர். ஒராள் துவக்கை பிடிக்க மற்ருள் துவக்கின்ரை நிப்பிளில் நெருப்பு வைக்க வேணும். குட்டி யானை யொண்டுக்கு வெடிவச்சினம். மற்ற யானையள் எல்லாம் ஓடிவிட்டன. கொம்பன் மாத்திரம் குட்டியானைக்குக் கிட்ட
நிண்டுகொண்டு அட்டகாசம் செய்தது. அரியாத்தை கண்
மூடி முளிக்கிற நேரத்துக்கை பின்னங்காலிலே சுருக்குப் போட்டிட்டா, சுருக்குப்போட்ட உடனே கொம்பன்யானை குளறின சத்தம் சின்னவன்னியன்ரை ராணி புதுநாச்சியா ருக்குக் கேட்டுதாம். அரியாத்தை பாலை மரத்துக்குப் பக் கத்திலை மறைந்து நிண்டிட்டா. குளறிப்போட்டு அம்பு போனதுபோலப் போச்சுது. யானைபோக அரியாத்தை வார்க் கயிற்றின்ரை தலைப்பிலை வேருெரு கயித் தை முடிஞ்சுவிட்டா, இடைக்கிடை வீரங்கண்டுகளிலே இளாவித்தடங்கல் செய்தா ஆனை எல்லாமரத்தையும் முறிச்சுக்கொண்டு காடெல்லாம் பயங்கரமான சத்தத்துடன் போச்சுது. ஆனை போகப்போக ஒன்பது கயிறு முடிஞ்சா அதுக்குப் பிறகுதான் ஆன ஒட் டத்தை நிறுத்திச்சுது. இப்ப அந்த ஆனைக்குக் கிட்ட ஆரும்
போகேலாது. காலுக்குச் சுருக்கு வைத்த ஆளைக் கவனமாக
பாத்துக்கொண்டு நிக்கும். மூண்டு நாளைக்கு ஆன இந்த
நிலையிலே நிண்டுது. கொண்டுபோன குரக்கன் மாவும்
முடிஞ்சுபோச்சுது. தனிய மான் இறைச்சியோடுதான் மூண்டு நாளும் காலங்கடத்திச்சினம்.
மூண்டாம் நாள் மந்திரக்கோலையும் கொண்டு அரி யாத்தை போனு, அரியாத்தையை நோக்கி ஆன அஞ்சு காத்தும் மழையும்போல வந்திது. அரியாத்தை 'ஐங்கரனே என்னைக் காப்பாற்று' எண்டு உரத்துக் குளறிவிட்டா. ஆனை அசையாமல் நிண்டுது. மந்திரக்கோலைப்போட்டா; ஆன அதை எடுத்து அரியாத்தையிடம் குடுத்தது. காலை மடித்து அவளை ஏறச்சொல்லிப் பாவனை செய்தது.

Page 39
............ { | ... ,ပြ., , , , , , ,ùj". " . يا أم لا يا له .. إلا أن اليا . التي يمنحة .
அரியாத்தை யானை பிடிச்சுக் கொண்டு வாற சேதி 12. Ahora igor : '','07" to .. '' ''' .. 蜗
சின்னவன்னியனுக்கு எட்டிச்சு, நிலபாவாடை போட்டு "மேலாப்புப் பிடிச்சு வரவேற்பு நடந்தது. கண்கொள்ளர்த
காட்சி குமாரபுரத்திலே திருவிழாவுக்கு வந்ததுபோலச் சனம் வந்தது. பகிடி பண்ணின. வன்னியன்மார் திகைச்சுப்போச்சி 3
SYSS S SS rS S SA S ;,总、 னம்; அவையின்ர முகத்திலை ஈ ஆடவில்லை. அத்தி மரத் திலே ஆனையைக் கட்டிவிட்டு அரியாத்தை அரண்மனைக்குச் சென்ரு. ஆனபோட்ட சத்தம் ஆகாசத்தையும் பூமியை யும் அதிரச் செய்தது. ஒருத்தரும் ஆனைக்குக் கிட்டப் போகத்துணியேல்லை. T
அரண்மனையிலே புதுநாச்சியார், அரியாத்தைக்கு எத்" தினையோ பரிசெல்லாம் குடுத்தா. கண்டியிலேயிருந்து வந்த கண்ணறையன் பட்டும், தொண்டை மண்டலத்திலிருந்து வந்த வாழைநார்ப்பட்டும், ஏராளமான நகைகளும் குடுத் தினம்; வெள்ளைத் தாம்பாளத்திலெ வெற்றிலைச் சுருளும்
- r அரியாத்தை வீட்டுக்குச் செல்லும் போதே க்ண்கள் து டி க் கத் துடங்கிவிட்ட்ன  ைக கா ல் க ள் ப த நி ன. நாக்கு வரளத்தொடங்கிவிட்டது. நடை தளர்ந்து விட் துே. ஒருமாதிரியாக அவளை நான் வீட்டை கொண்டு போய்ச் சேத்தன். அண்டு கிடந்தவள்தான் பேந்து எழும்ப * வில்லை. பொருமைக்காரர் பெல்லி விட்டினமோ, நஞ்சைக் குடுத்தினமோ தெரியாது. சின்னவன்னிய்ன்ரை அரண்மனை யில்ேதான் ஏதோ நடந்திட்டுது.
: 蔷, ی۔^
என்ரை மடியிலே கிடந்துதான் அரியாத்தை யம்னேடு போராடினுள். இரண்டு நாள் போராட்டம். ஆரும் பிடிக்க முடியாத ஆன பி டி த்த அரியாத்தை போராட்டத்தில் தோற்றுவிட்டாள். ஆம் அவளும் தோற்று விட்டாள். இனி Tடுய்னக்கு வாழ்வேது. எல்லாம் வெறுமையாய் போய்விட்
டது. இனியேன் வாழவேண்டும்!
V... 3.
༢ ཙཱ་ཧཱ། ཤཱ..”
 

57
|
Tெனது மனைவி மங்களம் சர்வாலங்கார பூஷிதை யாய் வெளியே புறப்பட ஆயத்தமாகி விட்டாள். நானும் அவளுடன் போகவேண்டும் என்று ஏற்பாடு. எத்தனையோ நாட்களாகத் திட்டம் போட்டுப் பின்போடப்பட்ட பிர யாணம். தீபாவளி ஷொப்பிங்" செய்ய வேண்டும். என்ன என்ன வாங்கவேண்டும் என்ற பட்டியல் ஒன்று மனையாளி டம் உண்டு.
"இந்த அநியாயத்தைக் கேட்டீங்க்ளா சேர்." இப் படிக் கூறிக்கொண்டே வருகிருர் ஆறுமுகம்.
'என்னத்தைச் சொல்லுகிறியள்?" "என்னத்தைச் சொல்வது சேர். நீங்க்ளே சொல் லுங்கள் என் மீது தவறு உண்டா என்று?*
'யார் சொன்னர்கள் தவறு என்று'?
"அவள்தான் சேர். அவள்தான் என்ரை கர்ம வினைப்பயன் போயும் போயும் அவளே இரண்டாந் தார மாகக் கட்டிக் கொண்டேனே!"
'விஷயத்தைச் சொல்லுங்களேன்’
மங்களம் என்னை சற்று முறைத்துப் பார்க்கிருள். இந்த உலகத்தில் நான் பயப்படுவதென்ருல் என் பிராண நாயகிக் குத்தான். மங்க்ளத்தின் பார்வை என்னை அச்சுறுத்தினுலும்
h

Page 40
58
இன்னுெருவர் முன்னிலையில் நான் மனையாளுக்குப் பயந்த தாகக் காட்டிக் கொள்ளலாமா? பார்க்காதவன் போல் ஆறுமுகத்தின் கதையைக் கேட்கிறேன்.
"நான் என்ன பாரபட்சமாகவா நடத்து கிற ன்; ரெண்டு பேரையும் ரெண்டு கண்களைப் போலல்லவா நடத் துகிறன். மூத்தவள் முத்தம்மாவுக்கு ஒரு சிாறி” வாங் கினல் இளையவளுக்கும் அதே விதமான 'சாறி". இவளுக்கு
நகை வாங்கினல் அவளுக்கும் நகை வாங்கிக் குடுப்பேன். ஒருத்திக்குச் சுகமில்லாவிட்டாலும் ரெண்டு பேருக்கும்.
மருந்துவாங்கிக் குடுப்பேன் சேர் . இப்படி இருக்க இளை
பவள் பத்மா என்னை எவ்வளவு கொடுமைப் படுத்துமுள்
சேர். அவள் நாக்கு அழுகும் சேர் அழுகும்.
“ஆறுமுகம் ஏன் இப்படிச் சபிக்கிருய். அப்பிடி என்ன நடந்தது?’
'நான் முத்தம்மா மீது கூடிய அன்பாம். அவளுக் குத்தான் எல்லாம் வாங்கிக் குடுக்கிறேனம். தன்மீது அன்
பில்லையாம். அவளைச் சொல்லிப் பயன் என்ன சேர். அவளின் தாயைச் சொல்லவேண்டும். அவள்தான் இப்பிடி ஒதிப் பத்மாவைக் கெடுத்துப்போட்டாள் சேர். எனக்கு வாற கோபத்துக்கு அவளின் கழுத்தைப் பிடிச்சு நெரிச்சுக் கொல்ல வேண்டும் போல இருக்கு சேர் ??
சே. சே அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது"
"நான் அப்பிடிச் செய்யப் போவதில்லை சேர்; வருகிற ஆத்திரம் அவ்வளவு’’
ஆறுமுகத்திற்கு என்மேல் அளவு கடந்த பிரியம். அதற்குக் காரணம் அவரின் முறைப்பாட்டை நான் பொறு மையுடன் கேட்டு அவருக்காக அநுதாபப் படுவதுதான்! இடைக்கிடை என் புத்திமதிகளைச் சொல்வேன். அவரும் என் சொல்லை வேதவாக்காகக் கொள்வார். அவர் பேசத் தொடங்கினல் முடிவே இராது. கீறல் விழுந்த இசைத் தட் டைப் போலச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல் வார் அவர் பேச்சைக் கேட்கத் தொடங்கி விட்டால்

59
பிறகு போகவே விடமாட்டார். அவரின் சுபாவத்தை அறிந் தவர்கள் பிலாக்கைப் பால் ஆறுமுகம் என்றே அவரை அழைப்பர். அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போபவர்கள் தான் அதிகம்
மற்றவர்களால் அலட்சியம் செய்யக் கூடிய அளவுக்கு ஆறுமுகம் சாதாரண மனிதரல்ல. அவரை ஒரு குட்டி முத லாளி என்றே கூறலாம். சிறுவயதிலே கஷ்டப்பட்டாலும்
. முயற்சியால் முன்னுக்கு வந்தவர், இருபத்தைந்து நெசவு * தறிகளுக்கு அதிபதியாகிவிட்ட ஆறுமுகத்திற்கு இருபது
ஏக்கர் சொந்த நெற்காணி, பத்து ஏக்கர் மேட்டு நிலம்,
கல்வீடு. இத்தியாதி. இத்தியாதி. மாதம் இரண்டாயிரம் மூவாயிரம் வருமானம்.
நடுத்தர வயதுடைய ஆறுமுகம் இயல்பாகவே நல்ல சுபாவம் உடையவர். அவருடைய போதாத காலமோ என் னவோ அவரின் சொத்தை ஆண்டு அனுபவிக்க ஒரு வாரிசு இல்லாமல் போய்விட்டது. முதல் மனைவி முத்தம்மா அவ ரின் சொந்த மச்சாள்தான்! மணஞ் செய்து பத்து வரு டங்களாகியும் அவருக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. அதற்காக அவர் தன் மனைவியை வெறுத்தார் என்பதில்லை. அவள் மீது அன்பைச் சொரிந்து வந்தார். பிள்ளையில்லாத கவலை அவரை வாட்டி வதைத்தது.
போகாத கோவிலில்லை, ஆடாத தீர்த்தமில்லை. ஏனே இறைவன் கூடக் கண் திறக்கவில்லை. எத்தனையோ வைத்திய நிபுணர்களையும் சந்தித்தாயிற்று. பலன் பூச்சியந்தான்!
ஒரு பிள்ளையைத் தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்று பலர் ஆலோசனை கூறினர். ஏனே அதை அவர் விரும் பவில்லை.
முத்தம்மா ஒரு ஆலோசனை கூறினள். கேட்டவுடனேயே அவர் திடுக்கிட்டுப் போனர். அதை அவர் ஏற்கவில்ஜல
'என்ன முத்து இப்பிடியெல்லாம் கூறுவது சரியா? உன்னை வைத்துப் பூசிக்கிற இந்த இதயத்தில் வேருெரு பெண்ணுக்கு இடங்கொடுக்க மாட்டேன்'

Page 41
60
'இப்படித்தான். சொல்லுவியள் ஒரு குழந்தை இல்லை யென்ற துக்கத்தாலே தேய்ஞ்சு போகிறியள். என் மூலம் கிடைக்காத குழந்தையொன்றை வேருெரு பெண் மூலிம் பெறலாம்தானே. பிடிவாதம் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் எனக்கும் சந்தோஷந்தானே' முத்தம்மாவின் ஆலோசனையை அவர் உடனே ஏற்க
வில்லை என்ருலும் காலப் போக்கில் அவர் மனம் மாறத் தான் செய்தது.
பதினறு வயதுப் பத்மாவை அவர் கைப்பிடித்துவிட்.
டார். பெண்ணின் பெற்றேர் விதித்த நிபந்தனைக்குப் பணிந்து போகவேண்டியேற்பட்டது. பெற்றேர் வீட்டிலேயே இளம் மனைவி வர்ழ்வதற்கு அவர் இசைந்துவிட்டார். -
புதும்னைவியின் மோகத்தில் அவர் முத்தம்மாவைப் புறக் கணிக்கவில்லை. மூத்தவளின் தியாகத்தை எண்ணி மனம் உருகிப் போவார். இயல்பாகவே அவள் மீதிருந்த பாசமும் அனுதாபமும் அவருக்கு அவள்மீது அளவுக்கு மிஞ்சிய அன் பைச் சொரிய வேண்டும்போலிருந்தது.
பத்மாவைப் பொறுத்த அளவில் அவளுக்குப் பெற்ருே
ரின் ஆதரவும் இருந்தது. ஆனல் முத்தம்மாவுக்கு அப்படி யில்லையே.
* 'இஞ்சருங்கோ உங்க்ளேத்தான் இப்படிக் கதைச்சுக் கொண்டு நிண்டால் இண்டைக்கு ஷொப்பிங்' செய்த மாதிரித்தான். இண்டைக்குச் சனிக்கிழமை ஒரு மணியோடு கடையைப் பூட்டி விடுவார்கள். பிலாக்காய்ப்பாலை விட் டிட்டுப் புறப்படுங்கோ’ காதுக்குள் கிசுகிசுக்கிருள் மங்களம். அவள் வார்த்தையில் கொஞ்சம் பணிவு இருந்தது எனக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
'கொஞ்சம் பொறு மங்களம்! பாவம் ஏதோ தன் தர்மசங்கடமான நிலையை என்னட்டைக் கூறி ஆறுதல் பெறத்தானே வந்திருக்கிருர், இன்னும் ஐஞ்சு நிமிசம். ஆளை ஒருமாதிரிச் சமாளிச்சுப் போட்டுப் புறப்படுவோம்' நான் சமாதானம் கூறுகிறேன்.
empa
Ka
༼།

6
*பத்மா நல்லவள்சேர். ஆனல் அவளின் தாய் இருக் கிருளே அந்த நீலியால் வந்த வினைதான் சேர் எல்லாம். எவ்வளவைக் கொண்டுபோய்ப் போட்டாலும் அந்தப் பட் டாளத்துக்குக் காணுது சேர். தாய் தகப்பன் பத்துப் பிள் ள்ைகள் அத்தனைக்கும் நான்தான் சேர். சிலவு கட்டுறன். நன்றி கெட்ட சென்மங்கள் சேர். நன்றி கெட்ட சென் மங்கள்.
*மூத்தவளும் பொறுத்துப் பார்த்தாள் சேர். எல்லா "வற்றையும் நான் பத்மா வீட்டுக்கு அனுப்புகிறேன் என்று
அவளும் முறுமுறுக்கிருள் சேர்."
“ஆறுமுகம், பத்மா பெற்றேர் வீட்டிலிருக்கும்வரை பிரச்சினைதான். பத்மாவைக் கூட்டிக்கொண்டுபோய் உன் வீட்டில் வைச்சிருந்தாலென்ன?"
*அப்பிடித்தான் சேர் நினைச்சன். பத்மாவையும் ஒரு மாதிரிச் சம்மதிக்க வைச்சேன்; ஆனல் அந்தப் பத்திர
காளி சேர். அதுதான் என்ரை மாமி விட்டால்தானே."
'இப்ப என்ன பிரச்சினை அதையாவது சொல்லேன்"
'முத்து தனிய சேர்; தனிய; அவளுக்கு ஒரு பொழுது போக்காக இருக்கட்டும் என்று வீட்டிலே ஒரு தறி போட் டுக்குடுத்தேன் சேர். அது இளையவளுக்குப் பொறுக்க வில்லை. என்மீது பொரிந்து தள்ளுருள் சேர். எவ்வளவோ சமா தானம் சொல்லிப் பார்த்தேன் கேட்கிருள் இல்லை சேர். நான் சொன்னல் நீங்கள் நம்பமாட்டியள் சேர் . நேற்று இரவு என்னை வெளியிலை விட்டு விட்டு கதவைச் சாத்திப் போட்டாள் சேர். வெளியிலே இந்தப் பணிக் குளிருக்கை சாக்குக் கட்டிலிலே படுத்திருந்தேன் சேர். இவ்வளவு செல்வமும் இருந்து என்ன சேர் பிரயோசனம்? ??
*நீ உன் வீட்டிற்குப் போயிருக்கலாமே.”*
‘எப்பிடிச்சேர் போறது. இளையவள் என்னை இப்பிடி நடத்துருள்என்று மூத்தவளுக்குத் தெரியக்கூடாது சேர்."
'இப்ப என்ன செய்வதாக உத்தேசம்..?"

Page 42
62
"நீங்கள் தான் சொல்லுங்கோ சேர். போன தீபா வளிக்கு ஐஞ்சு ருத்தல் இறைச்சி வாங்கி முத்தம்மாவிடம் கொடுத்துச் சமைக்கச் சொன்னேன் சேர். கவனமாய்க் கேளுங்க சேர். மூத்தவளுக்கு ஒரு வயிறுதானே சேர் அவ ளென்ன அவ்வளவையுமா சாப்பிடப் போரு கொஞ்சத்தை எடுத்தாள் சேர்; மிச்சத்தைப் பத்மாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தேன் சேர் அவள் என்ன சொன்னுள் தெரியுமா சேர்? உன்ரை மூத்தவ திண்ட எச்சிலையா நாங்கள் தின் னுறது எண்டு என்மேல் பாஞ்சிட்டாள் சேர். '
* அப்ப இளையவள் சாப்பிடவில்லையா' 'சாப்பிட்டிட்
டுத்தான் சேர் இப்பிடிப் பாய்ஞ்சவள். எனக்குக் கோப்ம்
வந்தது. உடனே கன்னத்தைப் பொத்தி நாலு குடுத்தேன்
○g庁...""
* பிறகு'
* பிறகென்ன சேர்; அவள் அழக்கூடஇல்லை சேர்; தாய்க் காறிதான் ஒலமிட்டு ஊரையே கூட்டிவிட்டாள் சேர்.?
'ஐயோ என்ரை பிள்ளையை அடிச்சுக்கொல்ருன் சண் டாளன் . கேக்க ஆளில்லையோ, மூத்த மணிசிக்காரிக்கு இப் பிடி அடிப்பானே' பொரிந்து தள்ளினுள் பத்திரகாளி.
'எனக்கு ஒரு மாதிரியாய்ப் போச்சுது சேர் - நான் ஒரு நாளும் முத்துவுக்கு அடிக்கேல்லைத்தான் சேர். பாரபட்சமாக நடத்தக் கூடாதெல்லோ சேர்.'
'நீ யென்ன செய்தாய்?
*உடனே வீட்டுக்குப் போனேன் சேர். முத்துவும் முகத்தை நீட்டிக் கொண்டிருந்தாள் சேர். முத்து என்று அன்பாய்க் கூப்பிட்டேன் சேர்’
‘ஏன் இஞ்சை வந்தியள். இளையவளோடை கொஞ்சிக் குலாவித் தீபாவளியைக் கொண்டாடுறதுதானே!"
“எனக்குக் கோபம் வந்துது சேர் . இவவுக்கும் நாலு விட்டேன் சேர். இப்பதான் எனக்கு நிம்மதி அடிக்கிற

郤
63
தெண்டாலும் ரெண்டு பேருக்கும் அடிக்கோணும் சேர். என்ன சேர் பேசாமல் நிக்கிறியள். நான் செய்தது சரி தானே சேர்.??
சிரிப்பை அடக்கிக் கொண்டு 'சரிதான்' என்கிறேன் 'இப்பவும் தீபாவளி வருகுது சேர்; அதுக்கிடையில் இளை யவள் துவங்கிவிட்டாள். தன்வீட்டில்தான் தீபாவளிக்கு நிற்கவேண்டுமாம் பத்மா, மூத்தவளோ தன்னுடன் தான் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமாம்.
'நீ என்ன செய்வதாய் தீர்மானம்???
'நான் தெருவில் நிற்கிறது என்றுதான் தீர்மானம். வேறென்ன சேர் செய்யிறது.'
"அதுதான் சரி'
** அப்பிடி நிண்டாலும் ரெண்டு பேரும் சண்டைக்கு வருவினம் சேர். மூத்தவளிடம் போய்விட்டதாக இளைய வள் குற்றம் சாட்டுவாள் சேர். இளேயவள் வீடே தஞ்ச மென்று இருபதாக மூத்தவள் குறைப்படுவாள் சேர்'
"சரி சரி தீபாவளிக்குத் துணிமணியெல்லாம் எடுத் தாச்சோ??
*ரெண்டு காஞ்சிபுரம் சாறி வாங்கி ரெண்டு பேருக் கும் காட்டிவிட்டுத்தான் சேர் தலைக் கொன்ருய் குடுத் தேன். இரண்டும் ஒரே நிறம், ஒரே விலை .'
“இஞ்சருங்கோ இனிப் போதும் கதைகேட்டது நீங்
கள் வெளிக்கிடப் போறியளோ இல்லாவிட்டால் ...?? மங்களம் கடைசி எச்சரிக்கையை விடுகிருள்.
"இளையவளுக்கும் குழந்தை குட்டி ஒன்றும் இல்லைப் (3 urrød). ” ’
'நான் சொல்ல மறந்திட்டன் சேர். இளையவ நாலு மாதம் சேர். ' -
'சந்தோஷமான செய்தி. ஏன் இன்னும் எனக்குச் சொல்லவில்லை ? ?

Page 43
64
*சொல்லத்தான் நினைச்சேன் சேர்; மறந்திட்டன், மூத் - தவவும் மூண்டுமாதம் முழுகாமல் இருக்கிரு; இதிலையும் .8ܬܐ பிரச்சினைதான் சேர்."
'என்ன பிரச்சினை"
'மூத்தவ முத்துவுக்கு குழந்தை பிறக்குமெண்டு தெரிஞ் சிருந்தால் இரண்டாம் தாரம் செய்யாமல் இருந்திருக்கலாம் (8g-ի " "
"பரவாயில்லை குழந்தைகள் பிறந்தால் எல்லாப்பிரச்சினை களும் சரியாய்ப் போய்விடும்?" * . . .
*அதில்லை சேர் இனி எனக்குக் கோபம் வந்தாலும் அடிக்க முடியாது சேர்'
சிரிப்பை அடக்கிக்கொண்டேன். என் மனையாள் முகத் தைத் திருப்பித் தோள் பட்டையில் இடித்து விட்டுப் புறப் பட்டு விட்டாள். நான் பின்னல் போகாமல் இருக்கமுடி །ལག་ யுமா? எனது குடும்பத்திலும் சமாதானம் நிலவ வேண்டுமே. M ஆறுமுகத்திடம் விடைபெற்றுக்கொண்டு மனைவியைப் பின் தொடர்ந்தேன்.

ܠܨ ܦ
65
காத்திருக்க வேண்டும்.
ஞ்ெசலின் - இதுதான் அவள் பெயர். இப்பெயரை அவன் பதிஞயிரத்தெட்டுமுறை உச்சரித்து உச்சரித்து உரு வேற்றியிருக்கிருன் சந்திர மெளலீஸ்வரன்! அவன் உள்
'ளத்திலே இன்பக் கிழுகிழுப்பை - இன்பக்கனவுகளை உண்டு பண்ணுவதும் வேதனையைத் தந்து வாட்டுவதும் இந்தப்
பெயருக்குரியவள்தான்!
冰 兴 米
வெங்கெடேஸ்வர சர்மா வேதத்தை உச்சாடனம் செய் வதிலே பிரசித்தி பெற்றவர். பஞ்சாட்சரத்தை ஒதி ஒதி உருவேற்றுபவர். அவரின் கெம்பீரமான தோற்றத்துக்குப் பொலிவையும் தெய்வத்தன்மையையும் திரிபுண்டரமாக அணிந்திருக்கும் விபூதிக் குறிகள் எடுத்துக்காட்டும் முற்பகுதி மழிக்கப்பட்டு பின்னுக்கு அழகான ஊசிக் குடுமி தாங்கிய அவர் சிரசும் மார்பிலே அணிந்திருக்கும் தூய வெண்ணிறப் பூணுாலும் தெய்வ ஒளி வீசும் வதனமும் நாஸ்திகர்களையும் ஆஸ்திகர்களாக்கும் சக்தி வாய்ந்தவை அவர் அருமை யுடன் பெற்றுப் பெருமையுடன் வளர்க்கும் புதல்வன்தான் சந்திரமௌலீஸ்வரன்.
நியமம் தவழுது சிவபூசை செய்ததன் பலனக பெற் றெடுத்த அரும்பெறற் புதல்வன, வைதிகளுக, வேதமோதும் பிராமணனுக,ஆஸ்திகத்தைக் கட்டிக் காக்கும் அருமைந்தனுக வளர்க்க ஆசைப்பட்டார். அவர் இளமையிலே அவனுக்கு வேதாகமங்களையும் மந்திரங்களையும் சொல்லிக்கொடுத்தார்.

Page 44
66
தோற்றத்திலும் அறிவிலும் தனது வாரிசாக வருவதற்குரிய எல்லா அறிகுறிகளும் அவனிடம் இருப்பதைக் கண்டு இறும்பூதெய்திஞர்.
"எடே வாழைப்பொத்தி. இங்க்ே வா. கொண்டை ஐயா பென்சிலைக்கொடு." இப்படியெல்லாம் பள்ளித் தோழர்கள் கேலி செய்வதை சந்திரமௌலீஸ்வரன் பொறுத் துக்கொள்ளவேண்டியிருந்தது
‘'நீ மட்டுந்தான் பிராமணஞ? எத்தனை பிராமணப்
பிள்ளைகள் இங்கு படிக்கின்றனர். அவர்கள் எல்லாம் கொண் , டையும் குறியுமா வைத்திருக்கிருர்கள், குடுமியை மட்டும்
வெட்டியிருந்தால் என்ன 'ஸ்ரையிலாக இருக்கும்” அறி வுரை கூறினர் அன்பு நண்பர்கள்.
கல்லூரியிலிருந்து வந்த தன் மகனின் புதிய தோற்றத் தைக் க்ண்ட வெங்கடேஸ்வர சர்மா உருத்திரமூர்த்தியாக மாறினர் ஆம் அவன் குடுமியைத் துறந்திருந்தான்!
'நீ என் மகனல்ல; வெளிக்கிடு வீட்டாலை. யாற்றை புத்திமதியைக் கேட்டு இப்படிச் செய்தாய்? உன்னுடைய குற்றமில்லை. உன்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய என் னைச் சொல், !
சர்மாவின் கோபாக்கினியை-கொடூரத்தை யெல்லாம்
பொறுத்துக் கொ ன் டா ன் சந்திரன் (மெளலியை -
முடியைத் - துறந்தபின்னர் இப்படித்தான் அழைக்கின்றனர்)
சமய அனுஷ்டானங்களிலும் பூசை களி லும் வேத மோதுவதிலும் சந்திரன் கொண்டிருந்த ஈடுபாடு சர்மா வுக்குச் சற்று ஆறுதலைத் தந்தது.
பன்னிரண்டு வயதில் குடுமியைத் துறந்த சந்திரன் பதினறு வயதில் தந்தையின் வற்புறுத்தல் எதுவுமின்றி முடிவளர்க்கத் தொடங்கினன். இன்னும் சில நாளில் குடுமி வைத்துக் கொள்வான் என்றே நம்பினுர் அவர்!
சிறுபிள்ளைத்தனத்திலே செய்த தவறை உணர்ந்து திருந்திவிட்டான் என்றே அவர் எண்ணினர்.

67
சந்திரனின் தெய்வ பாஷையறிவு அவன் முடியைப்
போலவே வளர்ச்சியடைந்து வந்தது காலத்துக்கு ஏற்றமுறை
யில் லெளகீக விடயங்களில் அறிவு பெறுவதில் சர்மாவுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. ஆங்கிலத்தில் 'பிறைவேற் ரியூ சன் பெறவேண்டும் என்ற சந்திரனின் விருப்பத்துக்கு அநுசரணையாகவே இருந்தார் சர்மா.
se 米 米
சந்திரன் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கலண் டரைப் பார்க்கிருன். இன்னும் சரியாகப் பதினைந்து நாள் அவளின் பிறந்தநாள்! அவள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியுமா? ஏ-ஞ்-ச-லி-ன் என்ற ஐந்தெழுத் தின் முழுத் தாற்பரியத்தையும் நெஞ்சில் இருத்தி உரு வேற்றி மகிழ்கின்றவன் அவன்!
‘ரியூசன் வகுப்பில் சந்தித்த முதல்நாளே அவளின் கலகலப்பான சுபாவம் அவனுக்குப் பிடித்துவிட்டது. கண் கள் அவனுக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியைப் பேசு கின்றனவே. சுண்டிவிட்ட பிரம்பு போல அவள் துள்ளிக் குதிக்கும் போது சந்திரனின் உள்ளமூம் ஏனே துள்ளு கின்றது.
'இன்றுமாலை அவளைச் சந்திக்கவேண்டும்' இன்றுமட்டு மென்ன தினமுந்தானே சந்திக்கிருன்!
'சந்திரன் ஆண்களுக்கும் நீண்ட கேசம் அழகைக் கொடுக்கும் என்பது உங்களைப் பார்த்தபிறகுதான் உணர் கிறேன்??
*சும்மா கேலிபண்ணுதே ஏஞ்சலின். என் ஹிப்பித்தலை உனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறதோ?
'இல்லைச் சந்திரன் அலையலையாகப் புரண்டு தோள் களைக் கொஞ்சுகின்ற தங்கள் கேசத்தின் அழகே தனிதான்!??
'ஏன் உனது கூந்தல் மட்டுமென்ன?”
இனந்தெரியாத சோகம் அவள் முகத்தில் படர்கிறது.

Page 45
68
“ஆம் நெருப்புக் காய்ச்சல் வந்து என் கூந்தல் உதி ரும்வரை நான் பொருமைப் பட்டதுண்டு. ஆனல் இப் பொழுது. ?”
சந்திரன் உரையாடலை மாற்றுகின்ருன், "ஆமாம் பிறந்த நாள் கொண்டாட்டம் பிரமாதமாக நடக்கும் போல இருக் கிறது?"
'அப்படியொன்றுமில்லை; சரி சரி. எனக்கு என்ன பரிசு தரப்போறியள்?"
'சொல்ல மாட்டேன் எனது பரிசு “சேப்பிறைஸ்" ஆக இருக்கவேண்டும்.”
பலநாட்களாக அவன் மனதிலே எழுந்த வின இது
தான். “ஏஞ்சலினின் பிறந்த நாள் பரிசு என்ன? ஏழை யான சந்திரனுல் என்ன பரிசு வாங்கிக் கொடுத்துவிட முடியும்? இவள் ஏன் இந்த ஏழைப் பிராமணனின் வாழ்க் கையில் குறுக்கிட்டாள்? அவள் குறுக்கிட்டாளா? அவன் தான் அவளின் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிட்டானு?
"சந்திரன் நீங்கள் கதிர்காமம் போவதாகக் கூறினீர் g;Ger’’
'ஓம் நாளைக்குப் போகிறேன்.” "எப்படியும் என் பிறந்த நாளுக்கு இங்கே நிற்க
வேண்டும்’
‘இதென்ன சந்தேகம் ஏஞ்சலின் உன் பிறந்தநாளுக்கு நீ வற்புறுத்தியா நான் வரவேண்டும்.'
கதிர்காமத்தை நினைவு படுத்தியவுடன்தான் அவன் எண்ணத்தில் ஒரு "ஐடியா" பளிச்சிடுகின்றது.
SK 米 米
பிறந்த நாள் கொண்டாட்டம் மிக எளிமையாக நடை பெற்றது. சந்திரனும் போயிருந்தான்! அவள் எதிர்பாராத ஆனல் அவளுக்குத் தேவையான பரிசைக் கொடுத்திருந் தான் சந்திரன்.
人 ( ,

69
சந்திரனை நிமிர்ந்து பார்க்கிருள். அவன் வழக்கத்துச்கு மாருகத் தொப்பி அணிந்திருக்கிருன். வித்தியாசமான தோற்றத்தைப் பற்றியெல்லாம் பலரின் மத்தியில் கேட்டு விடமுடியுமா? மாலைச் சந்திப்பில் கேட்டுவிடலாம் ‘என்ன கேட்பது? அவன்தான் கூறியிருந்தானே கதிர்க்ாமம் போவ தாக, முன்கூட்டியே கூறியிருக்கலாம். இது அவரின் சமயக் கடமையாக இருக்கலாம். இந்துக்களில் இப்படிப் பலரை அவள் பார்த்திருக்கிருள். காதலிக்கின்ற ஒரே காரணத்
துக்காக எல்லா விஷயத்திலும் தலையிட முடியுமா?
※ * 米
"ஏஞ்சலின் இந்த ஏழையின் பிறந்த நாட்பரிசு’ உனக்குப் பிடித்ததா.?" ܦ
-
'இதென்ன கேள்வி சந்திரன். நான் ஆசைப்பட்ட அதே பொருளைத் தானே நீங்கள் செலக்ட் பண்ணியுள் :ளிர்கள். என் உள்ளத்தை எப்படியோ அறிஞ்சிட்டியள். இப்படி உயர்ந்த பரிசை வாங்க உங்களுக்குப் பணம் இருந்ததா?”
*அப்படி என்ன பணத்தைக் கொட்டியாவிட்டேன்?"
சந்திரன் இதைப் போன்ற ஒரு உயர்ந்த முடிமயிரை வாங்கக் குறைந்தது ஐம்பது ரூபாயாவது வேண்டுமே பணத்துக்கு எங்கே போனீர்கள்? என் சிநேகிதிகளுக்கு ஒரே வியப்பு! இதுபோன்ற சவரி எங்கு தேடினலும் கிடைக்குதில்லையாமே! இப்பொழுது என்னைத்தான் நச்சரிக் கிருர்கள்'
"எதற்கு?
'எந்தக் கடையில் வாங்கியதென்று?"
"அதுவா. வந்து. வந்து.'
“என்னவந்து. வந்து. என்கிறீர்கள். வாங்கிய கடை கூட நினைவில்லையா உங்களுக்கு. இப்ப வரவர மறதி
அதிகம்"

Page 46
76
'இந்திரா சவுரி மாட்"
'நினைவு வந்ததா?"
'ஆனல் ஒன்று ஏஞ்சலின் இந்தரகத்தில் ஒரேயொரு முடிமயிர் தான் இருந்தது. இப்படியொன்று வாங்குவ தென்ருல் இன்னும் மூன்று வருஷமெண்டாலும் காத்திருக்க வேண்டும்.”
'கடைக்காரன் அப்படிச் சொன்னன?”
“இல்லை நான்தான் சொல்லுறன் ஏஞ்சலின்; இனியும் உண்மையை உன்னிடம் மறைக்க விரும்பவில்லை.”*
தொப்பியைக் கழற்றுகிருன் . 'இப்பொழுது விளங்கு கிறதா சவுரி எங்கிருந்து வந்ததென்று?"
‘என்ன உங்களது முடியையா எனக்காகத் தியாகம் செய்தீர்கள்? எவ்வளவு காலமாக அருமையாக வளர்த்த அழகு கேசத்தை எனக்காகவா துறந்தீர்கள். சந்திரன் நீங் கள் தியாகிதான்! தன் காதலிக்காக முடிதுறந்த வரை நான் கண்டதில்லை.”
'ஏன் இல்லை, ஆங்கில வரலாற்றிலே எட்வேட் மன் னன் என்ன செய்தார்? காதலுக்காகத் தானே அரச முடி யைத் துறந்தார். நான் வெறும் கேசத்தைத் தானே துறந்தேன்.'
கலகல வென்று சிரிக்கின்றனர் இருவரும்! பிரதிஷ்டா பூசணம் வேத சிரோமணி வெங்கடேஸ்வர சர்மாவுக்கு இரண்டாவது அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரும் இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமா?
X
ܝܬܐ ܐ

Vʻ. ,
7
நூலேணிகள்
பொழுது விடிந்ததுகூட எனக்குத் தெரியவில்லை; அப்படித் தூங்கிவிட்டேன். ஆச்சிக்குச் சுக்மில்லை; இரவு முழுவதும் காய்ச்சல்; இருமல் ஆச்சியின் முனகல் இப் பொழுதும் கேட்கிறது. கமலா - எனது தங்கை - தேநீர் கொண்டுபோய்க் கொடுக்கிருள். அவள் ந்ேரத்துடன் எழுந்
திருக்க வேண்டும்!
நான் எழும்பியதைக் கண்டதும் எனக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிருள். நேற்று முழுவதும் வயலில் நல்ல வேலை; ஐந்து ஏக்கருக்கு வரம்பு செருக்குவதென்ருல் சாமா னிய வேலையா? நானும் சிலம்பனும் தான் வேலை செய் தோம். உடம்பை அசைக்க முடியவில்லை; அவ்வளவு அலுப்பு.
'சின்னக் கமக்காரன், நாங்கள்தான் இப்படிப் பாடு படுறம்; உங்களுக்கும் இந்தக் கதி வந்திட்டுதே! இதை நினைக்கத்தான் துக்கமாய்க் கிடக்கு" சிலம்பன் எனக்காக அனுதாபப்படுகிருன். -
எனக்குச் சிரிப்புத்தான் வருகின்றது. எனது பழைய குடும்பப் பெருமையை நினைவூட்டுகிருன் அவன். சொந்த மாக குடியிருக்கக்கூட ஒரு துண்டுக் காணியில்லாத என் னைக் கமக்காரன் என்று அழைக்கிருன்!
**கதிர்காமக் கமக்காரன் எல்லோ மனிஷன் இருக் கும் வரைக்கும் வாரிவாரிக் குடுத்தார். குடுத்தாருக்குக்

Page 47
72
குறைவில்லை என்பார்கள்; அது பொய்யாய்ப் ப்ோ ச்சு: அவற்றை பிள்ளை இப்ப அடிமை வேலை செய்யுது.” பெரு மூச்செறிகிருன் சிலம்பன்.
Marso சிலம்பன் சொல்வதுபோல அப்பு பெரிய நிலச் சொந் , தக்காரராய் இருக்கவில்லை என்பது உண்மை. ஆனல் இருந்த ஐந்தோ பத்தோ ஏக்கர் நெற்காணியிலும் தாராள மனத்தாலும் கமக்காரப் பட்டம் பெற்றிருந்தார். தனக் கிருந்த காணி பூமி அனைத்தும் விற்று அழித்துவிட்டுத் . தான் கண்ணைமூடிஞர். -
அநாதையாகிவிட்ட எங்க்ள் குடும்பத்தைத் தான்ே
தாங்கி வருவதாக நாகமணிக் கமக்காரனின் நினைப்பு? அப்
படிப்பல சந்தர்ப்பங்களில் எனக்குக் கூறியிருக்கிருர்.
ஆச்சிக்குமட்டும் நாகமணிக் கமக்காரனில் பிடிப் பதில்லை, அப்புவை ஏமாற்றி எங்கள் வயற் காணியை
தந்த விளக்கம்
கமக்காரப் பட்டம் பெற்ற அப்புவைப் பற்றி சிலம்ப னும் எனக்குக் கூறியிருக்கிருன். ஏதோ கஷ்டத்தின் நிமித்தம்
ஐந்தேக்கர் காணியை நாகமணியரிடம் ஈடு வைத்தாரம் ,
ஐம்பது மரக்கால் நெல்தான் வாங்கிஞர். இரண்டு வரு டமாக நெல்விளையவில்லை; மூன்ருவது வருஷம் கடனைத் திருப்பிக் கொடுக்கப் போனுராம்.
** இப்ப என்ன அவசரம் கதிராமன், நீயும் புள்ளை குட்டிக்காரன் உனக்கிருக்கிற கஷ்டம் எனக்குத் தெரியாதே வாற வரியம் தாவன் ' என்று கூறவே அப்பு சந்தோஷத் துடன் வீடு திரும்பிவிட்டாராம்.
- அடுத்த ஆண்டும் கொடுக்க முடியாமற் போகவே காணியை நாகமணியருக்கு எழுதிக் கொடுக்கவேண்டி ஏற் பட்டு விட்டது.
இரண்டு வருஷ ம் நோய்வாய்ப்பட்டு படுக்கையில்
இருந்து மறைந்துவிட்ட அப்புவின் குடியிருப்பு நிலமும் கடனுக்கே போய்விட்டது. அதையும் நாகமணியரே வாங்கி
எழுதுவித்துப்போட்டார் நா க்மணியர்' என்பதுதான் ஆச்சி
لا يخعي . .
 

*屏
73
வி ட் டார். அப்புவுடன் வயல்வேலைத் தொழிலாளியாக இருந்த சிலம்பனும் நாகமணியருக்கு அடிமையாக வேண்டி ஏற்பட்டது.
சிறியtனைப் பெரிய மீன் விழுங்கி விட்டது ! அப்பு இறக்கும்போது எனக்கு எட்டுவயது இருக்கும். தங்கை கமலாவுக்கு வயது ஐந்து ; கடைக்குட்டி ராசன் க்ைகுப்பும் பருவம்.
ஆச்சி, அப்பம் சுட்டு விற்றுத்தான் எங்களை வளர்த்தா. நாகமணியர் வீட்டிலும் போய் தொட்டாட்டு வேலை செய்து வந்தா, அரிவி வெட்டுக் காலத்தில் உப்பட்டி கூட்
டுதல், கதிர் பொறுக்குதல் போன்ற வேலைகளிலும் ஈடு
படுவா.
நான் எட்டாம் வகுப்புவரை படி த் தே ன். அதன்
பின்பு கமக்காரன் வீட்டு நிரந்தரக் கூலியாளாகிப் பத்து வருஷங்களாக உழைக்கிறேன்.
எனக்குப் படிக் க் ஆசைதான் 1 ஆச்சியும் என்னைப் படிப்பிச்சு உத்தியோகமாக்க வேண்டுமென்றுதான் ஆசைப் பட்டா. ஆனல் ஆச்சி எங்களை வளர்க்கப் படுகின்ற கஷ் டத்தைப் பார்த்து என்னுல் பொறுக்கமுடியவில்லை. நானே படிப்பை நிறுத்திவிட்டேன்.
என்னுடன் ஐந்தாம் வகுப்புப் படித்த செல்வன் - நாக மணியரின் மகன் - இப்பொழுது டாக்குத்தருக்குப் படிக்கி முன். அப்பொழுதே அவன் கையெழுத்து மோசமான தாகத்தான் இருந்தது. நான் முதலாம் பிள்ளையாய் வரு வேன்; செவ்வன் எட்டாம்பிள்ளை !
தங்கையை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கவேணும் ராசனை எப்பிடியும் படிப்பிச்சு உத்தியோகமாக்க் வேணும்.
நேரமாகிவிட்டது : வயலுக்குப் போகவேனும் நெல் தலைவணங்கி விட்டது. மிச்ச வரம்பையும் செருக்கவேணும். வரம்பின் இரு பக்கத்திலும் கட்டை இடித்துக் கொடி கட்டினுல்தான் இரவில் சாமம் உலாவிப் பண்டிக்காவல் செய்யலாம்.
J

Page 48
74
ஆச்சி இருமுகிரு; ஒரு கிழமையாக வந்த காச்சலும் விடவில்லை. அரசாங்க ஆசுபத்திரியில் மருந்து வாங்கிக் கொடுத்தன் மாறவில்லை. "பிறைவேட் ஆசுப்பத்திரியில் காட்டுவதற்கு காசில்லை. சாப்பாட்டுக்கு நெல்லும் இல்லை. கம்க்காரனிடம் காசைக் கேட்பதா? நெல்லைக் கேட்பதா?
கமக்காரன் இண்டைக்கு நேரத்துக்கு வரச் சொன்ன வர். சிலம்பனும் வயலுக்கு வருவான்.
* அண்ணை பழஞ்சோறு கிடக்குது சாப்பிடுங்கோ' அன்புடன் அழைக்கிருள் கமலா, அவளை நிமிர்ந்து பார்க்'
கிறேன். அவள் யூரியாப் போட்ட எச்போர் நெல்போல்
வளர்ந்துவிட்டாள். வயதும் இருபதாகிறது. இப்ப கொஞ்ச்வி
நாளாக வாடிவிட்டாள். ஆச்சி பாயிலை படுத்தபிறகு இவள் பாடுதான் வீட்டுப் பொறுப்பெல்லாம். தையல்வேலை செய்து சிறிய பணமும் சேர்த்துவைத்திருக்கிருள். இவளை ஒரு மரி யாதையான இடத்திலே கரை சேர்க்க வேண்டும்.
கல்யாணம் என்று தொடங்கினல் காதிலை கழுத்திலை யென்ருலும் ஏதும் போட்டு விடத்தானே வேண்டும்!
எப்படித்தான் கஷ்டப்பட்டு வேலைசெய்தாலும் கிடைக் கிற ஊதியம் குடும்பத்தைக் காப்பாற்றப் போதவில்லையே! ஆச்சி ஊசாடித் திரிந்தபோது தோற்றவில்லை.
பழஞ்சோற்றையும் எருமைத் தயிரையும் பிசைந்து சாப்பிடுகிறேன். சால் வைத்துண்டையும் எடுத்துத் தோளிற் போட்டுக் கொண்டு வயலுக்குப் போகப் புறப்படுகிறேன்.
'தங்கச்சி ஆச்சிக்கு மருந்தை ஊத்திக் குடு; நாளைக்கு ஆசுப்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போடுவிக்கவேணும். கமக்காரனிடம் காசு கேட்டுப் பாப்பம்."
சிலம்பன் இன்னும் வயலுக்கு வரவில்லை. அவன் காலை யில் மூண்டு நாலு பனையிலை கள் இறக்கிவிட்டுத்தான் வய லுக்கு வருவான். என்னைவிட சிலம்பனின் நிலை பரவாயில்லை.
சிலம்பன் வருகிருன்.
** என்னதம்பி, வெள்ளன வந்திட்டியே?’
 
 

*
'இன்னும் கொஞ்ச இடந்தான் இருக்கு வரம்பைச் செருக்கிப் போட்டுக் கொடியைக் கட்டுவம். என்ன தம்பி Guntgar''' *
"இப்ப கொஞ்சம் முன்னந்தான் வந்தனன்"
*" வீட்டிலை ஆச்சிக்குச் சுகமில்லை; ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகக் காசில்லை; கமக்காரனிட்டை கேக்க லாமோ எண்டு யோசிக்கிறன்'
"வேலையை முடிச்சுப்போட்டுப் போய்க் கேட்டுப்பார்க் கிறதுதானே! அதுக்கேன் யோசிப்பான்?
* அப்பிடித்தான் செய்யப்போறன்.'
வயல்வேலைமுடிய ஆறு மணியாகிவிட்டது; நல்ல களைப்பு. கமக்காரன் வீட்டுக்குப் போகிறேன். அவர் சாய் மனைக் கதிரையில் படுத்திருக்கிருர், நான் போய் அவர் முன் கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறேன். நிமிர்ந்து பார்க்கிருர்; பார்வையில் கொஞ்சம் கடுகடுப்பு ஒரு அலட்சியம்!
‘என்ன இளையதம்பி? ஏன் நிற்கிருய்?’ அந்தநேரத் தில் அவர் முன்பு போனதே குற்றம் என்ற தோரணையில் இருக்கிறது அவர் பேச்சு.
*ஆச்சிக்குச் சுகமில்லை அதுதான்.”
'சுகமில்லாட்டால் ஆசுப்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போறது தானே!"
"கவுண்மேந்து ஆசுப்பத்திரியில் மருந்து வாங்கிக்குடுத் துப் பாத்தன்; சுகமில்லை; வந்த காச்சல் ஒரு கிழமையாய் விடுகுதில்லை; 'பிறைவெட் ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போற தெண்டால் பத்துப் பதினஞ்சு ரூபா எண்டாலும் வேணும்.'
“இளையதம்பி, காசெண்ட கதையைக் கதைக்காதை காசென்ன மரத்திலையா காய்க்குது?*

Page 49
76
'நான் வேறெ எங்கெ க்மக்காரன் போறது. வேறு வேலையேதும் செய்யிறேன? உங்களுக்குத் தானே வருஷம் முன்னுாற்றறுபத்தைஞ்சு நாளும் வேலை செய்யிறன்!"
*டேய், நீயும் இப்ப நியாயம் கதைக்கத் தொடங்கி விட்டாய் என்ன? நீயில்லாட்டால் என்ரை வேலையொண்
டும் நடக்காதோ ???
‘நான் அப்பிடிச் சொல்லேல்லை ; நீங்கள்தான் எங்கள்
குடும்பத்தைக் காப்பாத்தவேணும் எண்டு சொன்னன்’
*செய்யிற வேலைக்குத்தானேடா சம்பளம்; உங்கடை
தேவைக்கெல்லாம் நான் காசு தரமுடியுமோடா ?
'டா' எண்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்.” 'அப்பிடியோ பிரபு? அவருக்குக் கோபம் வருகுதாம்’
* ஒய். என்னைப்பாத்து மறுமொழி சொல்லும். நான் நாள் முழுக்க நெற்றியில் வியர்வை நிலத்திலை விழ உழைக் கிறபடியால்தான் நீ கதிரையிலை குசாலாக இருந்துகொண்டு சாப்பிடமுடியுது. நீயாவது உன் ரை பிள்ளையாவது மண் வெட்டி பிடிச்சு வேலை செய்தியளோ? உனக்கு இந்தச் செல்வமெல்லாம் எப்பிடிவந்தது எண்டு யோசிச்சுப் பாரும்'
‘ஓகோ விசயம் இந்த அளவுக்கு முத்திப் போச்சோ..?*
* விசயம் பழுக்கப் போகிறது, ஒய் நாகமணியரே காலம் மாறிக்கொண்டு வருகுது '
‘என்னடா சொல்லுருய்? இவ்வளவு நாளும் என்ரை உப்பைத் திண்டிட்டு இப்ப என்னேடை ஞாயம் பேசிருய் என்ன? ??
'நீர் புண்ணியத்துக்குத் தரவில்லை; என்ரை உழைப்புக் குத்தான் தந்தனிர் என்னைப்போன்ற ஏழைகளின் உழைப் பைச் சுரண்டித்தான் நீர் பணக்காரணுய் வந்தீர்.
நாகமணியர் சற்று சிந்திக்கிருர், அவரின் முகத்திலிருந்த
\ கடுமை படிப்படியாகச் சாந்தமாகிறது.
(
曇*
"ܓܠ ܐ

77
"என்ன செய்யிறது உனக்காக இல்லாட்டாலும் பாயிலை கிடக்கிற அந்த மனிசியின்ரை முக்த்துக்கெண்டாலும் உதவி செய்யவேண்டிக்கிடக்குது; இந்தா இதைக் கொண்டுபோ' பத்துரூபாத் தாளைத் தூக்கித் தருகிருர்,
நான் வெற்றிக் களிப்புடன் வீடு செல்கிறேன்; நாக மணியரும் காலத்தின் மாற்றத்திற்கு வளைந்து கொடுக்கிருரா? இரந்து கேட்டபோது ஏசித்துரத்திய நாகமணியர் நியாத் தைக் காட்டிப் பயமுறுத்தும்போது அடிபணிந்து போய்விடு கிருர்,
ஆச்சி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகச் சுகம
霄 டைந்து வருகிரு. நாகமணியர் என்மீது அளவுக்கு மிஞ்சிய
ஆதரவு காட்டுகிருர் பணம் கேட்காதபோதுகூட ஐந்தோ
பத்தோ தந்து உதவுகின்ருர், இனியென்ன எப்படியும் என்
அபிலாசை நிறைவேறத்தான் போகிறது என்ற நம்பிக்கை துளிர் விடுகின்றது.
நம்பிக்கை என்னும் நூலேணியைப் பற்றிக் கொண்டு தான் மனிதன் முன்னேற விளைகிருன் 1
கூப்பன் கடைக்குச் சென்று திரும்பிய எனக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது. நாகமணியரின் ஆட்கள் என் வீட்டிலுள்ள சாமான்களையெல்லாம் எடுத்து வெளியில் எறிந்து கொண்டிருந்தனர். ஆச்சி தலையில் கைவைத்து ஒப்பாரி வைக்கிரு கமலாவும் இராசனும் திகைப்புடன் நிற்கின்றனர்.
இந்த இடத்தில் நாகமணிக் கமக்காரன் கடை கட்டப் போருராம். உடனே காணியை விட்டு வெளியேற வேண் டுமாம் - இது நாகமணியரின் கட்டளையாம்.
நடுத்தெருவில் "ஆச்சியையும் சகோதரர்களையும் விட்டுக் கொண்டு செய்வதறியாது திகைக்கிறேன்.
சிலம்பன் வருகிருன்.
எங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செ ல் கி ரு ன்" சிலம்பனின் தயவிலே சீவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் !

Page 50
78
அப்பு கமக்காரணுக இருந்தபொழுது சொந்தம் பாராட்டிய ஒருவரும் கைகொடுக்கவில்லை. - * பொறுதம்பி, இப்ப புதிய சட்டம் இயற்றியிருக்கு தாம் அரசாங்கம். அதன்படிக்கு நாக்மணியற்றை காணி யெல்லாம் அரசாங்கம் எடுக்கப் போகுது ; அதிலை வேலை செய்தவர்களுக்குப் பிரிச்சுக் குடுக்கப் போகுது ”*
என் உள்ளத்திலே மீண்டும் ஒரு ஒளிக் கீறு! ** எனக்கும் காணி கிடைக்குமோ சிலம்பன் ?
* கிடைக்காம்லென்ன குறைஞ்சது மூண்டேக்கர் எண்.
டாலும் கிடைக்கும். சட்ட ப் ப டி நீங்கள் குடியிருந்த வீட்டை விட்டு உங்களை எழுப்பேலாது. வழக்குப் போட் டால் நாக்மணியர் வளத்திலை வருவார். '
*நாகமணியரின் காணி நூற்றிருபத்தைந்து ஏக்கரை யும் அரசாங்கம் எடுத்துவிட்டது; இனி அதைத் தொழி லாளருக்குப் பகிர்ந்து கொடுக்கப் போகிறது. ’ ஊரிலே இப்படியெல்லாம் பேசிக்கொள்கிறர்கள்.
‘இனி எனக்கும் காணி கிடைக்கப் போகிறது; என் கஷ்டமெல்லாம் நீங்கப் போகுது' எண்ண அலை என்னுள் எழுகிறது.
வானத்தைப் பார்க்கிறேன்; ஆதவன் ரத்தக் குழம்பை மேற்கு வானில் சிந்துகின்றன்!
யார்யாரோ எல்லாம் வந்தார்கள்; நாக்மனியரின் காணிகளை அளர்ந்தார்கள்; பங்கீடு செய்தார்கள்; எனக்கோ சிலம்பனுக்கோ ஒரு துண்டுக் காணியும் கிடைக்கவில்லை
கமக்காரன் சாதுரியமாக அலுவல் பார் த் து வி ட் டாராம். அவருடைய இன சனத்துக்கும் கையாட்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது. காணியில் ஒருபகுதி இப்பொழுதும் நாகமணியருக்குத்தான் சொந்தமாம். மிகு திக்கு அவர் இரகசியமாகப் பணம் பெற்று விட்டாராம். ஏழைத் தொழிலாளரின் நல்வாழ்வு கருதித்தான் சட் டங்கள் இயற்றப்படுகின்றன. வசதிபடைத்தவர்கள் அவற்றை எப்படியோ தமக்குச் சாதகமாக வளைத்து விடுகிருர்கள்.
மீண்டும் மேல்வானத்தைப் பார்க்கிறேன்; இருள் படர்கிறது.

79
அமர காவியம்
சிவிஞர் கந்தசாமியின் மனைவி - மகேஸ் என்று அழைக்கப்படும் மகேஸ்வரி - நிலைக்கண்ணுடியின்முன் நிற் கிருள். மிகப் பக்குவமாகத் தலையை வாரி வகிடெடுத்து கொண்டையலங்காரம் செய்து முடிக்கிருள். பக்கத்திற்கும் முன்னுக்கும் பின்னுக்கும் அசைந்து நெளிந்து சரிந்து கொண்டையைச் செப்பம் செய்கிருள். சுருளான கேசங்கள் இரண்டொன்று நெற்றியின் ஒரத்தில் அழகு நடனம் புரி கின்றன. இரண்டு முறை தோல்வி கண்டபின் நெற்றித் திலகம் இடுவதில் வெற்றி. அணிந்திருந்த தூரமொரு சரி கைப் பொட்டுடைய பச்சைப் புடவையும் பசுங்குருத்துச் 'சோளி"யும் மகேவலின் ருேஜா மேனிக்கு எடுப்பாகத் தானிருக்கின்றன. தன் அழகுக் கோலத்தை கண்ணுடியில் மீண்டும் பார் க் கி ரு ள். கண்ணுடியில் தோற்றமளிக்கும் கொள்ளையழகுக் காரிகை தான் தானு என்று அவளுக்கே சந்தேகம் வந்துவிடுகின்றது. குறுஞ்சிரிப்பு அவள் கன்னத் தில் சிறு குழியை விழுத்திவிடுகின்றது.
இந்த அழகில் கிறுங்கித்தான் கந்தசாமி அவளைக் காத லித்துக் கல்யாணம் செய்து கொண்டான்.
ஆசிரியஞன கந்தசாமிக்கு அவன் வைத்திருக்கும் பயிற் றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரத்தின் தரத்திற்கு ஏற்ற விதத்தில் சீதனத்துடன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கப் பெரியோர்கள் செய்த மு ய ம் சிக ஞ க் கு இடையூருக மகேவலின் கன்னத்தில் சிரிக்கும்போது விழுந்த குழியழகு இருந்துவிட்டது.

Page 51
80
“மடையன் கன்னத்துக் குழியழகுக்காக முழுப்பெண்
ணையுமல்லவா காதலித்துவிட்டான்' என்று அவன்மீது அக் கறையுடையவர்கள் கூறுவதோடு நிறுத்திவிட்டனர்.
கிளியபாட்ருவின் மூக்கு சற்று நீண்டு அல்லது குறுகி
யிருத்திருந்தால் வரலாறு மாறியிருக்குமாம்.
நாடறிந்த கவிஞனக, எழுத்தறிவிக்கும் இறைவனுக
இருக்கும் ஒருவரை கல்யாணம் செய்தது மகேசுக்கும்
பெருமையான சம்பவந்தான்! அவன் படைப்புக்களில் சில
செய்தித்தாளில் வெளியாகியபோது எவ்வளவு தூரம்:
துள்ளிக்குதித்தாள்! }
‘ம் . வண்டிக்குக் கொழுப்புப் போட்டாச்சோ? மாடு ...' ' கள் தவிடு திண்டிற்றுதுகளோ?. தண்ணியை வை. வண்" டில்லெ அரிசி சாமான் எல்லாம் வைச் சாச்சோ. ' கந்த .جیسر,{ر சாமி ஒடியாடி அலுவல் பார்க்கிருர்,
** சேர் இருநூறு புத்தகம் வைச்சால் போதுமோ? " ."
கந்தசாமியின் அபிமான மாணவன் கனகசிங்கம் கேட்கிருன்.
** இருநூறு போதாது ; ஐஞ்ஞாறு வை. இரண்டாயிரம் மூவாயிரம் சனம் கூடும் தீர்த்தக் கரையிலே ஐஞ்ஞாறு புத் தக்ம் விலைப்படாதே? "'
கவிஞர் மனதிற்குள் கணக்குப் பார்க்கிருர் , ' தீர்த் தக் கரையில் ஐஞ்ஞாறு புத்தகம் விற்றுவிட்டால் இரண் டாயிரத்தைஞ்நூறு ரூபா வரும். மகேவலின் சங்கிலி ஆயி ரம் ரூபா அடைவில். அதை எடுத்துக் கொடுத்துவிடலாம். புத்தகம் அச்சடித்ததிற்குக் கடனுகப் பெற்றுக் கொடுத்த ஐஞ்ஞாறையும் பிறகு கொடுக்கலாம். அச்சுக்கூடத்திற்கு
பிந்திய திகதி போட்டு ஆயிரம் ரூபாவிற்கு கொடுத்த
7ܓܬ“
செக் திரும்பி வருமுன்னர் வங்கியில் பணத்தை போட்டுவிட வேணும் ' ݂ ݂
மகேஸ்வரிக்கு உள்ளூர ம்கிழ்ச்சியென்றலும் ஒரு சின்னக் குறை : தன் கணவனின் காவிய வெளியீட்டு விழாவிற்கு கழுத்தில் சங்கிலி இல்லாமல் போவது கொஞ் சம் கூச்சமாகவே இருக்கிறது.
 
 
 

8
y
அவள் கழுத்தில் தங்கமாலை இருந்தால் காவியம் வெளி யாகியிருக்குமா என்பது சந்தேகந்தான் 1 ஏதோ ஒன்றை இழந்துதான் இன்னென்றைப் பெறவேண்டும் போலும் ! கந்தசாமிக்குப் பொன்னடை போர்த்தவும் ஏற்பாடு ; الم தமிழ்ச் சங்கத்தினர் இதற்கு ஒழுங்கு செய்திருந்தனர். கவிஞரைச் சரியான முறையில் கெளரவிப்பதன் மூலம் சங்கத்தின் பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என்பது அவர்களின் அவா.
வண்டி மூதூரிலிருந்து நகர்கிறது. மகேஸ், கந்தசாமியின் காதுக்குள் கிசு கிசுக்கின்ருள்
*
'வீட்டில் இருந்த அரிசியெல்லாம் ஏற்றியாச்சு நாளைக்கு
- சோற்றுக்கும். '
*பேசாமலிரு . பட்டினி கிடந்து சாகவாபோகிருேம்?
球( கனகசிங்கம் வண்டியை ஒட்டுகிருன், வண்டி மல்லி கைத்தீவால் திரும்புகிறது. பாதையின் ஏற்ற இறக்கத்திற்
கெல்லாம் ஈடுகொடுத்துக் கொண்டு வண்டி நகர்கின்றது.
ஒவ்வொரு பள்ளத்தில் விழும்போதும் ஒவ்வொரு குலுக்கு.
எலும்பு முறிந்துவிடுமோ என்ற அச்சம் மகேஸ்வரிக்கு.
*” | 3. Sy
வண்டி நீலாப்பொலவை அடைகிறது. 'இன்னும் ஒரு மைல்தான். மகாவலி கங்கைக் கரையில் இருக்கும் கரைசை யம்பதியை அடைந்துவிடலாம். கந்தசாமி கூறுகிருர்,
“ஒரு மைலா?' வ ண் டி யில் இருந்த மகேஸ்வரி கேட்கிருள்.
"அப்படித்தான் சொல்வது வழக்கம்; உண்மையில் மூன்று நான்கு மைல் இருக்கும்' கனகசிங்கம் கூறுகிறன்.
பாதையின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைப் பயிர்க்ளின் வனப்பான காட்சி. வாய்க் காலை உடைத்துவிடுமோ என்று அச்சம் தரும் வகையில் பிரவாகித்தோடும் நீர்! மகாவலித்தாய் தன் பசுமைக் குழந் தைக்குப் பால் சொரிகிருளா? மூதூர், கிளிவெட்டி கங்கு
k

Page 52
82
வேலி போன்ற கிராமங்கள் செழித்துக் கொழுத்து வளர் வதற்கு மாவலியின் வற்ருத வளமான நீர்தான் கார னமா?
"மக்கள் சோம்பேறியாக இருப்பதற்கும் மாவலித் தாய்தான் காரணம்' க்னகசிங்கம் கூறுகின்றன்.
கங்கையில் நீர் பெருகிவிட்டால் கிராமங்களை அழித்து
விடுமாம்! இதைத் தடுப்பதற்க்ாகப் பெரியதோர் அணைக் கட்டு,
அணைக்கட்டில் வண்டி ஏறுகிறது; மாடுகள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகின்றன. ஒலிபெருக்கிச் சத்தம் கேட்கிறது.
'இன்னும் கொஞ்சத் தூரந்தான்'
"அப்படியென்றல் இன்னும் ஒரு மைல் இருக்குமா?"
சிரித்துக்கொண்டே மகேஸ் கேட்கிருள். கந்தசாமியின் "கொஞ்சத்தூரம்" என்றதற்கு அவள் போட்ட மதிப்பு ஒரு மைல்.
"அப்படி இருக்காது அக்கா, இன்னும் கால்மைல்தான் இருக்கும்” கனகசிங்கம் கூறுகின்றன்.
வண்டி கட்டால் இறங்குகிறது ** ம். கவனமாகக் கயிற்றை இழுத்துப் பிடி **
* நீங்கள் ஒரு புத்தகம் எழுதினதும் போதும், நான் படுகிற பாடும் போதும், புத்தகத்தை எழுதினியள் சரி, வெளியீட்டு விழாவை மூதூரிலை யெண்டாலும் வைச்சி யளே " மகேஸ் புறுபுறுக்கிருள்.
* உனக்கு மூளை கீளை இருந்தாத்தானே ! இப்பவே மூவாயிரம் கடன். வெளியீட்டு விழாவை மூதூரில் ஒழுங்கு படுத்தி, விளம்பரம் அடித்து, ஒலிபெருக்கியில் ஊரெல்லாம் சொல்லி, மேடையமைத்து சோடாக் கொடுத்து, வெளி யீட்டு விழா வைக்கிற தென்ருல் இன்னும் ஐஞ்ஞாறு வேணும். இதொன்றும் இல்லாமலே தீர்த்தக் கரையில், கோயிலுக் குக் கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்ற ஒலிபெருக்கியில் வெளி பீட்டுவிழாவை நடத்த ஏற்பாடு செய்தேன். ஐஞ்ஞாறு புத்தக மென்ருலும் விலைங்படும் "

**
83
கந்தசாமியின் பக்கம் நியாயம் இருப்பதை உள்ளூர ஒத்துக்கொண்ட மக்ேஸ்வரி அதை வெளிக்காட்டாமல், * சும்மா போங்க உங்கடை புத்தகத்தை வாங்கத்தான் இங்கே தீத்தக் கரைக்கு வருகினமோ ?”
மகேஸ்வரியின் க்ழுத்தைப் பிடித்து நெரித்து மகாவலி கங்கையில் தள்ளிவிடவேண்டும் போலத் தோன்றுகிறது கந்தசாமிக்கு. தன்னைப் போன்ற உன்னதமான கவிஞனின் படைப்பை ஏளனம் செய்யும் விதத்திலல்லவா இவள் கதைக்கிருள். ஆடி அமாவாசையில் புனிதம்ான தீர்த்தக் கரையிலே கொடிய பாவம் ஒன்றைச் செய்ய விரும்பாத தால் உள்ளத்திலே எழுந்த கோபக் கனலையெல்வாம் கஷ் டப்பட்டு அடக்கிக் கொண்டு சாந்தமான குரலில், "நீயும் பாக்கத்தான் போகிருய் என்னுடைய பெருமையை என் னுடைய காவியம் மாவலியில் நீர் உள்ளளவும் நிலைத்திருக்
கத்தான் போகிறது.
உங்கள் காவியம் நிலைத்திருக்கப் போவதைப் பற்றி
_\,
కణ எனக்குக் கவலையில்லை. என்ர தங்கமாலை வங்கியிலிருந்து
வந்து என் கழுத்தில் நிலைக்க வேண்டும் *.
** நானு கேட்டேன் உன்ர மாலையை ? அது இல்லா விட்டால் என் காவியம் வெளிவரமாட்டாதா ? யாரென்று நினைக்கிருய் என்ன ? கையாலாகாத கவிஞன நான்? ' தீர்த்தக்கரை வந்துவிட்டது உங்கள் சண்டையைப் பிறகு பிடிச்சுக் கொள்ளுங்கோ" கனகசிங்கம் மாட்டை அவிழ்த்துக் கட்டுகிறன். மகேஸ், கந்தசாமியைப் பார்க் காமலே கூடார வண்டியை விட்டு இறங்குகிருள்.
அவளுக்குக் கந்தசாமி மீது எந்தவித மனத்தாங்கலும் இல்லை; ஏதோ பேச்சுக்கு பேச்சுக் கொடுத்ததால் இப்படி யொருமுரண்பாடு வந்ததை இட்டு அவளே வருந்திக் கொள் கிருள். வண்டியில் இருந்த அரிசி, காய்கறி, சட்டி, பானே, போன்றவற்றை கனகசிங்கத்தின் உதவியுடன் மகேஸ் இறக்குகிருள்.
ஆடி அமாவாசைத் தினத்திலே மாவலிகங்க்ை கரை யிலே அமைந்த திருக்கரசைப் பதித் தீர்த்தத்தில் நீராடு வது மட்டுமன்றி அங்கு வந்திருக்கும் ஒருசிலருக்காவது உணவு சமைத்துக் கொடுப்பது மகா புண்ணியம் என்று கருதிப் பலர் அப்படிச் செய்வதுண்டு.

Page 53
84 في
மாட்டுவண்டியைத் தவிர வேறுவாகனம் எதுவும் போக் முடியாத இடத்திலே இப்படியான தர்ம சிந்தையுடையவர் களின் ஆதரவு அங்கு செல்லும் தனிக்கட்டைகளுக்கு பெரிய ஆறுதலை அளிக்கிறது.
வெளியீட்டு விழா பிரமாதம்; பல்கலைக் கழகப் பேரா. ● சிரியர் ஒருவர் தலைமை வகிக்கிருர், பண்டிதர் பரந்தாமனர் காவியத்தின் சிறப்பை அலசி ஆராய்கிருர், கதையெழுதிக் கல்வீடு க்ட்டிய பிரபல எழுத்தாளர் ‘காண்டாமிருகம்" (இது அவர் புனைபெயர்; சொந்தப் பெயர் சாந்தலிங்கம்) நூலை விமர்சித்து அதன் சுவையை வெளிப்படுத்துகிருர், இன்னும் எத்தனையோ பேர் பாராட்டுரை வழங்குகின் .ع றனர். அவர்கள் பேசியதன் சாராம்சம்! கம்பனுக்குப் பிறகு - தமிழ் கூறு நல்லுலகில் இராமாயணத்துக்கு இணையான சில அம்சங்களில் மேலான - காவியத்தைப் படைத்தவன் கந்தசாமி என்பதுதான்! தேசிய அரசப் பேரவை உறுப் பினர் கவிஞருக்குப் பொன்னடை போர்த்தியபோது கடைக்கண்ணுல் தன் மனைவியைப் பார்க்கிருர் கந்தசாமி. 7
அவள் தன் உள்ளப் பூரிப்பை எப்படியெல்லாம் காட் * டிக் கொள்கிருள்! 'சந்தேகமில்லை, கந்தசாமி ஈடிணையற்ற கவிஞன் தான்; அவனுடைய படைப்பு அமரகாவியமாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கத் தான் போகிறது!
கவிஞன் என்றுமே தமிழ் மக்கள் உள்ளத்தில் வாழத்தான் போகிருன்.” ,
மகேஸ்வரி தனக்குள் நொந்து கொள்கிருன்! 'இப்ப டியான உத்தமக் கவிஞனின் மனத்தை ஒரு சிறு தங்கமாலைக் காகப் புண்படுத்திய என் பெண் புத்தியைச் செருப்பால் அடிக்கவேண்டும்!"
'காவியத்தின் விலை ரூபா ஐந்து ஒவ்வொருவரும் படித் துச் சுவைக்க வேண்டியது மட்டுமன்றி வீட்டில் வைத்துப் போற்றவேண்டிய பொக்கிஷம்" ஒலிபெருக்கியில் அறிவிப்பு. .
கந்தசாமியின் கற்பனை வேலை செய்யத் தொடங்குகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இரண்டாயிரத்தைஞ்ஞாறு ரூபா அவன் கையில் தவழப்போகின்றது.
ஆம். ஒருவர் பின் ஒருவராக ஒடி வந்து புத்தகங்களை வாங்குகின்றனர். ஒன்று. இரண்டு. மூன்று.
 

85
கவிஞர் துள்ளிக் குதிக்கிருர்,
வவுணவில்லிலுள்ள கரைசையம்பதியை அரவணைத் தோடும் மகாவலி கங்கையிலே சுவாமி தீர்த்தமாட, தொடர்ந்து பக்தர்சள் தீர்த்தமாடுகின்றனர். இத் தீர்த்தத் தின் மகிமையை 'திருக்கரைசைப் புராணம்" கூறுகின்றது. இதில் நீராடிய பாவிகள் தம்பாவம் நீங்கப் பெறுவார்கள். பெண்கள் நீராடினுல் அடுத்த பிறவியில் ஆணுகப் பிறப் பார்கள். வேடுவர் அழகு பெறுவர்; விலங்குகளும் பறவை களும் மனிதப் பிறவி எடுக்கும். " மர நிழலிலே கூடார வண்டியின் பக்கத்தில் அடுப்பு மூட்டிச் சமைக்கிருள் மகேஸ்வரி. தீர்த்தமாடிய பின்னர் அன்னதானம்!
முட்டுச் சாமான்கள்; தீர்த்தக் கரையில் வாங்கிய பெட்டி போய் கடகம். எஞ்சிய புத்தக்ங்கள் அடங்கிய பாசல்.
கனகசிங்கம் வண்டியை ஒட்டுகிறன், வண்டியில் தட்டு
* .ح۔۔۔ 菇、 கவிஞர் கணக்குப் பார்க்கிருர், எல்லாமாகப் பதின் மூன்று புத்தகங்கள்தான் விற்பனையாகியிருந்தன. அறுபத் 、 *“ தைந்து ரூபா அவரைப்பார்த்துச் சிரிக்கிறது. பொன்னடை யைப் பார்க்கிருர், ஐம்பது ரூபா பெறும். மனைவியை எந்த முகத்தைக்கொண்டு பார்ப்பது?
மகேவலின் முகத்தில் துக்கத்தை காணவில்லை. அவள் குதுரகலமாகவே இருக்கிருள்.
**சை. சை.” வாலை முறுக்கி மாடுகளை ஏவுகிருன் கனகலிங்கம். முக்கி முனகி அணைக்கட்டில் ஏறுகின்றன ୧୬Wଜ0) ଜ1. -
கவிஞர் பேயறைந்தவர்போல் காணப்படுகின்றர். இன் னும் இரண்டு மூன்று தினங்களில் அச்சுக்கூடத்துக்குக் கொடுத்த செக் திரும்பி வரப்போகிறது. இதுவரை அவர் கடைப்பிடித்த நேர்மைக்குப் பங்கம்! 3. கம்பருக்கு இந்தப் பிரச்சினை இருந்திருந்தால் பத்தா யிரம் பாடலில் காவியம் பாடியிருப்பாரா ? சடையப்ப வள்ளல் சாப்பாடு போட்டார். பனையோலையும் எழுத்தாணி யும்தான் அவரின் மூலதனமாக இருந்திருக்கும் ! தீர்த்தக் கரைக்குப் போவதற்கு முன்பு எவ்வளவு வீருப்புப் பேசினர். இப்பொழுது மகேஸ் அல்லவா தீர்க்கதரிசியாகி விட்டாள். எப்படி அவளின் தங்கமாலையை மீட்பது?

Page 54
86
t
வண்டி மூதூரை அடைகிறது; துள்ளிக்கொண்டு இறங் குகிருள் கவிஞரின் மனைவி. கவிஞருக்கு ஆத்திரம் ஆத்திர மாக வருகிறது. இப்படியும் ஒரு மனைவியா? தனது துன் பத்தில்கூடப் பங்குகொள்ளாமல் துள்ளிக் குதிக்கிருளே! அவனது தோல்வி அவளின் வெற்றியா?
* சே. சம்பளத்திற்குப் பின்னர் இந்த வெளியீட்டு விழாவை வைத்திருக்கலாம். போயும் போயும் ஆடி அமா வாசை ஏழாந்திகதியா வரவேண்டும். ”
கவிஞரின் மனைவி அடுத்த வீட்டுக்குச் செல்கிருள். வினயகமூர்த்தியின் மனைவி விசாலத்திடம், அரிசி தேங்காய் காய்கறி இத்தியாதிகளைக் கடன் பெறுகிருள். -
தாளிதப் புகையுடன் கலந்த வாசம் கவிஞரின் மூக் 懿 கைப் பிடுங்குகிறது; அடுக்களையை எட்டிப் பார்க்கிருர்,
"இஞ்சருங்கோ வாருங்க்ோவன் சாப்பிட" கிளியின் மொழியிலே அழைப்பு: கவிஞரின் கோபம் எப்படிப் பறந் ததோ? சுவைத்துச் சாப்பிடுகின்ருர், . 21 1 1
'நீங்கள் ஒரு கவிச்சக்கரவர்த்திதான்! எதற்கும் கவ லைப்படாதையுங்கோ. இந்தாருங்கோ இவைகளை விற்று கட % னைத் தீருங்க்ள்’ ஒரு பழைய சொக்கிலட் பெட்டியைக் கொடுக்கிருள். அன்ருெருநாள் அவன் தன் காதலிக்குப் பரிசளித்த வெளிநாட்டுச் சொக்கிலட் பெ ட் டி அது! திறந்து பார்க்கிருர் தாலிக்கொடி மோதிரம் காப்பு எல் * லாமாக இருபது தங்கப்பவுண். மகேஸின் கழுத்தைப் - பார்க்கிருர், மஞ்சள் கயிற்றிலே தாலியை மட்டும் கோர்த் துக் கட்டியிருக்கிருள்.
** என்ன மகேஸ் இது? உனக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது'
*இல்லை. என் பைத்தியம் - நகைப் பைத்தியம் - தெளிந்து விட்டது. கடனைத் தீராவிட்டால் உங்கள் மானம் போய் விடும். நகைகளை மீண்டும் சம்பாதிக்கலாம்! இதை நான் முழுமனதுடன்தான் செய்கிறேன் தயவு செய்து. p.9
'அடி கள்ளி' என்று அவள் கன்னத்தில் கிள்ளுகிருர் ” 'சும்மா போங்க" செல்லமாகக் கடிகிருள்.
அவளை உற்றுப் பார்க்கிருர்; உண்மையில் அவள்தான் அவருக்கு உயர்ந்த காவியமாக - அமரகாவியமாக - தோன் றுகின்ருள்.
 


Page 55


Page 56

2ز عA (لاره ۹ o/ ۹ 5 دیگر 2/(گ�y (2/* ہ/ /ጥ /O 2スgくイ

Page 57
&-
லாற்று நாடக நூல், Ձaug: பெற்றுத்தந்தது.
விபரங்குகளிே
蔷穹 35
லே கலந் ஆற்றலே வெளிப்படுத்தும் (Up. பாமாலை மூலம், தாம் சிற
: 3 ܐ ܨ Lഞെക്സ്!! நிரூபித்துள்ளார்.
LD LL க்களப் |
ராய்ப் பணிபுரிந்த இல் சினர் மகளிர் ஆசிரிய கலா
岱 霹T 函。 L. g it-1 55 FIFTIT *T (5ы
பண்டார னியன் ஆகியவற்றின் தல்ை
. ܒ ܐ
டு சிந்தனை
3
| ::Իմ 21:14,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாசிரியர்
ல்லைமணி-வ்ே, சுப்பிரமணியம் ர்கள் நாடறிந்த நல்ல எழுத் ார் சிறுகதை, நாடகம் கவிதை ய ஆக்க இலக்கியத்துறைகளில் டுமன்றி வரலாறு, சம்மது இலக் ம் சார்ந்த கட்டுரைகளை எழுதி ற்ற ல் இலக்கியத்துற்ைசிலும் த்திரமான பணிபுரிந்து வருகிறர்
பண்டார வன்னியல் நக்குக் கலைக்கழகத்தின் பரிசைப்
து கொண்டு தமது အမေမှူ - ○」 ல்லைமணி தான் தோன்றிஸ்வரர்
ந்த பத்திப் 7,
கலாசாலையில் விரிவுரையா இப்பொழுது காப் சாலையில் விரிவுரையாடுராபு
மானவர்க்கென வெளியிட் இவரின் நல்லாசிரியத் தை க்காட்டு
கழகம், வவுனியா இஸ்கிய வராயுள்ள முல்லைமணி நகைச் D இழைத்து உரைய ) இல்ல
நாலாவது நாலாகிய இந்தச் ருக்கு ஆத்தரும் ஒன்பது