கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நித்தியபாராயண சைவத் திருமுறைத் தொகுப்பு

Page 1
ܝܪܡ  ܼ
。 ܘܢ
引ö山山
நித்திய பார் சைவத்திருமுை
த குமாரசுவாமிப்பி
Թւյոլիւնւթ)յսրt
سرخی ہے۔
- (്
இந்துசமய 9ܢj,)
வெளியிடப்
 

புலவர்
ள்ளே அவர்களால்
݂ ݂ этцръ1әшфрзы.
p
o
豎 35η) και σε αυτό σο), IIIII και του
On 翡

Page 2

விருத்இN ? -- ... - 霹” HDU
| ᎦᎷ Ꮤ;
下”、RE-Gloussociery 。
6. á sTELLPPALA *儿
Tسسسسسسسسبح சிவமயம் తిపువును நித்தியபாராயண
சைவத்திருமுறைத் தொகுப்பு
6) it 1. Vir -Y - to شہ} ' ' ('
Z سر (8 محرک
Գr /47 E \ FR| ALA
CHUINNAK /A
. ܕ ܐ சைவப்புலவர் S
த. குமாரசுவாமிப்பிள்ளை அவர்களால்
தொகுக்கப்பெற்று
பொழிப்புரையும் எழுதப்பெற்றது.
இலங்கை
இந்துசமய விவகார ஆலோசனைச் சபையாரால்
வெளியிடப்பெற்றது.

Page 3
முதலாம் பதிப்பு 1960.
பதிப்புரிமை ஆசிரியர்க்கே
LqLAYAeAAYASYAASAASAA AAAJSAJAJMAJJAYAAYAAYSAYAYSAYSASSMS SYAAA AAAAAAAAqA AAAqAAAAAAAAqASA AqAMA AqAqAqAqAAAqAAAAAAAqAAAAAAAAqAqAqAqSqAAAqAAAAAAAAq AAA
பிரசுரம்: பூரீ லங்கா அச்சகம், காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாண்ம்.
 
 
 
 

T_T
அச்சுவேலி சிவபூநீ. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்
ஆசியுரை
பரமபதியாகிய சிவபிரானது திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்த் சுவாமிகள் முதலிய உண்மை நாயன்மாரால் திருவாய்மலர்ந்தருளப் பெற் றனவும், வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறனைத் தெரிவிப்பனவு மாகிய தேவாரம் முதல் பெரியபுராண மிறுதியாயுள்ள திருப்பாக்களே திருமுறை யெனப்படும்.
திருமுறைப் பாடல்கள் முத் தொழிலையுஞ் செய்வன. தம்ம்ை யோகி னர்க்கு நோய்நீக்கம், செல்வப்பெருக்கம், ஞானம் முதலியவற்றை அளிப்பன. மேலும், சைவத்தினுயர்வையும், விபூதி, உருத்திராக்ஷம், பஞ்சாட்சரங்களின் மகிமையையும் தெளிவுற விளக்கிச் சிவபெருமான் திருவடியே நமக்குத் தாரகமென விசுவசித்து வழிபட்டு உய்யும் வண்ணம் செய்வனவும் இத்திருமுறைகள்ேயாம்.
இத்துணைமகிமை வாய்ந்த திருமுறைப் பாக்களைத் தினமும் ஒகி யாவரும் பயனடையவேண்டி நித்திய பா ராய ண சைவத் திருமுறைத் தொகுப்பு என்னும் பெயருடன் திரட்டி யுதவியவர், அன்பு அருள் அடக் கம் முதலிய நற்குணங்களெல்லாம் நிரம்பியவரும், சைவப்புலவரும், சைவப் பிரசாரகரும், ஆகிய கொக்குவில் த. குமாரசுவாமிப்பிள்ளை அவர்களாவர். இவர்கள் தாம் தொகுத்த பாடல்களுக்கு எழுதிய பொழிப்புரை, அவற் றைப் பாராயணம் செய்வார்க்குப் பெரிதும் உபகாரமாய் அமைந்துள்ளது.
இதனைத் தொகுப்பித்தவர் இந்துசமய விவகார ஆலோசனைச் சபை யார் ஆவார். அவர்கள் மேற்கொண்ட இச்சற்கருமம் என்றும் பாராட்டத் தக்கது. அவர்கட்கு இலங்கைச் சைவ மக்கள் என்றும் கடமைப்பட் டுள்ளார்கள்.
தொகுப்பாசிரியராகிய பிள்ளை அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந் திருந்து இதுபோன்ற சைவபரிபாலன விஷயங்களைச் செய்துவருமாறு பெருங் கருணைத் தடங் கடலாகிய சிவபெருமானது திருவடிகளை மனமொழி மெய்களில்ை சிந்தித்து வாழ்த்தி வந்திக்கின்றேன்.

Page 4
da. Gradutin Iuh
முன்னுரை
கன்னேஞ்சே உனயிரந்தேன் கம்பெருமான் திருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும் பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே,
- திருஞானசம்பந்தர் உல்க முதல்வராகிய சிவபெருமான், உயிர்களாகிய நாமெல்லாம் உய்யவேண்டுமென்னும் கருணேயிஞல், உடம்பு, கரணங்கள், உலகம், போகப் பொருள் எல்லாவற்றையும் தந்தருளினர். இந்தப் பேருபகாரத்தை நிஜனந்து அவரை வழிபடுவது நமது கடமையாகும். உலகில் பல துன்பங்களுக்கிடையே வாழும் நாம் செய்யும் கடமையாவதுமன்றி, துன்பங்களினின்றும் நீங்கி உய்வதற்குத் துணைசெய்வதுமாகும்.
பல சமயக் கொள்கைகளையும் தன்னிடம் கொண்டு அவைகளில் இல் லாத பல மேலான உண் ைம க ளே யும் விளக்கிக்காட்டும் சைவ நூல்கள், இறைவனே வழிபடுதற்கு, சிவதீட்சை பெற்று நித்திய அனுட்டானம், பஞ்சாட் சரசெபம், தியானம், சிவபூசை, திருமுறைப் பாராயணம், திருக்கோயில் வழிபாடு, சிவனடியார் வழிபாடு முதலான பல வழிகளைச் சொல்கின்றன. இக்காலத்தில் எல்லோரும் இலேசாகச் செய்யத்தக்கது திருமுறைப் பாடல்களால் தோத்திரம் செய்வதே. இறைவனைப் பாடுதல் சிவனைப் பூசிப் பது போலாகும். "அர்ச்ச?ன பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக", எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட போது இறைவன் அருளியதாக பெரியபுராணம் கூறுவது காண்க. பண் ண்மைதி பொருந்த இசையோடும், பொருள் உணர்ச்சியோடும் பாராயணம் செய்வது சாலச்சிறந்ததாகும். ,
இராவணன் திருக்கைலாயத்தைப் பெயர்த்து இறைவன் திருவடிப் பெருவிரலால் ஊன்ற அதனுள் அகப்பட்டு வருந்தி இசைபாடி இறைவனே மகிழ்வித்து உய்ந்தமை யாவருமறிந்தே பண்ணுென்ற இசைபாடும்
குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்’ “கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப், பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி" எனத் திருஞானசம்பந்தரும், 'அளப்பில கீதம் சொன்னுர்க்கடிகள் தாம் அருளுமாறே" *பண்ணிற் பாடல்கள் பத்தி செய்வித்தகர்க் கண்ணித்தாகும் அமுது" எனத் திருநாவுக்கரசுகாயனரும், *நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை,
GF råd ubal GF rådi Guijoksilrår"
 
 

EELTTLLLL LLLLLT LTLLLL SLLL LLLLLLLESSS TTT TTTT SLTTTTT
சுவாமிகளும்,
'பாடவேண்டும் நான் போற்றிநின்னேயே பாடிதைந்து நைந்துருகி நெக்குநெக்,
* T. 5 TIL GIGðir (GM) Jisrir GIris”
S0LL LLT LLTTSS LLLTTLLT S LLLLLLTLLLLS tLtttLL S TL
னுள்ளார் சிவனடிக்கீழ்ப், பல்லோருமேத்தப்பணிந்து" என மாணிக்கவாசகசுவாமிகளும் அருளிய அமுத வாக்குகள் காண் ச.
இசையோடு பாடும் வாய்ப்பு இல்லாதவரும் உள்ளம்கனிந்து அன் போடு பாடினல் அதனையும் ஏற்று சிவபெருமான் கருணை செய்வார்.
"கோழைமிடமுக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவை சொன சொன் மகிழும் சனிடமாம்”
எனத் திருஞானசம்பந்தசுவாமிகளும் அருளியதால் அறிக.
இவற்றையெல்லாம் நன்குணர்ந்த இந்துசமய விவகார ஆலோசனைச் சபையார் யாவரும் தினமும் பாராயணம் செய்யத்தக்க தாகத்திருமுறைப் பாடல்கள் தொகுத்துச் சுருக்க மான பொழிப்புரை எழுதித்தரவேண்டு மென்று பணித்தார்கள். சைவத்திருமுறையைத் தினமும் படித்துவருகின்றவன் என்ற காரணத்தால் இப்பணி கிடைத்ததாகும் என நினைந்து ஏற்றுக்கொண்ட தமியேன் இலங்கை ப் பெரியாராகிய சேர். பொன். இராமநாதன் அவர்கள் இராமநாதன் கல்லூரியில் பயில்வோர் பொருட்டு நித்தியபாராய்ணமுறை ஒன்று அமைத்திருப்பதையும் கருத்திற்கொண்டு தினமும் காலை, மாலைகளில் பாராயணம் செய்யப் பாலர்களுக்கு கன்னன்கு பாடல்களும், வாலிபர்களுக்கும் முதியோர்களுக்கும் ஆருறு பாடல்களாகவும் தொகுத்துச் சுருக்கமான பொழிப்புரையும் எழுதியுள்ளேன். கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என மூன்று வகைப்படுத்திய இதற்கு நித்தியபாராயண சைவத்திருமுறைத் தொகுப்பு என்பது பெயராம்.
சைவமக்கள் யாவரும் தினமும் சிவபெருமானே நினேந்து அன்போடு
பாராயணம் செய்து சைவவாழ்க்கை உடையவர்களாய் வாழவேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்தப் புண்ணியமான கொண்டு செய்ய முன்வந்த இந்துசமய விவகார ஆலோச8னச் சபையாருக்குச் சைவ மக்களாகிய நாம் எல்லோரும் கடமைப்பட்டவர்களாவோம். யாவரும் இதனைப் பாராயணம் செய்து சிவபெருமான் திருவருள் நலம் பெற்று வாழ்வார்களாக,
இங்கினம், 5. (Dr Jeho rifů sir?Ir,

Page 5
SRattujih
நித்தியபாராயண சைவத்திருமுறைத் தொகுப்பு கீழ்ப்பிரிவு
ஞாயிறு காலே திருஞானசம்பந்தசுவாமிகள் ஞானப்பால் உண்டபொழுது பாடியருளிய பதிகம் II9ór – 51, LLITG). திருச்சிற்றம்பலம்
தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிதடிக் காடுடை யசுட லைப்பொடி பூசிஎன் உள்ளம் கவர்கள்வன் ஏடுடை யமல ரான்முனை நாட்பணிங் தேத்த அருள்செய்த பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மான் இவனன்றே.
அருநெறி யமறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய பெருநெறி யபிர மாபுரமேவிய பெம்மான் இவன்றன்னை ஒருநெறி யமனம் வைத்துணர் ஞானசம் பந்தன் உரைசெய்த திருநெறி யதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.
திருவாசகம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன் விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன் உடை யாய்என்னேக் கண்டுகொள்ளே.
பெரியபுராணம்
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
திருச்சிற்றம்பலம்
 

பொழிப்புரை
تا ۳۷ خانه REuteli cities o هي مر الخسا PPA أساحات " حجر
தெல்லிப்பழிை
தோடு அணிந்த காதை உடையவன், இடபவாகனன், ஒரு சுத்தமான வெண்ணிறமுள்ள சந்திரனைத் தரித்தவன், சுட%லயின் கண்ணுள்ள 3F1 thu லைப் பூசியிருப்பவன், எனது மனதைக்கவர்ந்த கள்வன், முற்காலத்தில் பிரமதேவன் வழிபாடு செய்ய அருள் செய்தவன், பிரமபுரத்தில் எழுந்தருளி யிருக்கும் இவன்தான் அம்மையாருடன் எழுந்தருளி ஞானப்பால் ஊட்டி அருளினன்.
அரிய தருமநெறிகளை உடைய வேதங்களில் வல்ல பிரமதேவன் பெயரால் வழங்கும் தீர்த்தத்தை உடைய, பிரமபுரத்தில் எழுந்தருளி இருக் கும் பெருமானை, ஒருவழிப்பட்ட மனத்தில் வைத்துணருகின்ற ஞானசம் பந்தன் பாடிய திருநெறித் தமிழாகிய இப்பதிகத்தைப்படிக்க வல்லவர் பழைய வினைகளினின்றும் நீங்குதல் எளிதாகும்.
என்னை அடிமையாக உடையவனே, உனது கருணைத் திறத்தை கினைந்து உடம்பில் வியர்வை தோன்றி, நடுநடுங்கி, உனது திருவடிக்கமலங் களே வணங்க கைகளைச் சிரசில் வைத்து கண்ணிர்ததும்பி, மனம்வெதும்பி,
பொய்நீங்கி உன்னைப்போற்றி சயசயபோற்றி என்னும் ஒழுக்கத்தை நழுவ
விடேன் என்னைக் கண்பார்த்தருள்வாய்,
உலகம் எல்லாம் உணர்தற்கும் சொல்லுதற்கும் அரியவன், சந்திரன் விளங்குகின்ற கங்கையை அணிந்த சடையை உடையவன், எண்ணில்லாத
ஒளி வடிவானவன், அம்பலத்தில் ஆடியருள்பவன் ஆகிய நடேசப்பெரு மானது எங்கும்பிறைந்த சிலம்பணிந்த திருவடிகளே வாழ்த்தி வணங்குவாம்,

Page 6
ஞாயிறு மாலை
திருஞானசம்பந்தர். பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்காமம் கேளாய்கம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
திருநாவுக்கரசுநாயனுர், பண் - காந்தாரபஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே.
திருவாசகம்
பரந்துபல் லாய்மல ரிட்டுமுட் டாதடி யேயிறைஞ்சி இரந்தவெல் லாமெமக் கேபெற லாமென்னும் அன்பருள்ளம் கரந்துகில் லாக்கள் வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கு கிரந்தர மாயரு ளாய்நின்னை யேத்த முழுவதுமே,
பெரியபுராணம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்
 
 

பொழிப்புரை
நாட்கள் வீணே போகாமல், நஞ்சை அணிந்த கண்டராகிய சிவ பெருமானுக்கே ஆட்பட்டு அன்பு செய்வோம், அறியாமை பொருந்திய மனமே! சிவன் திருநாமம் கேட்பாய் நம் கிளை முழுதும் உய்யும், கேடு வாரா வண்ணம் அருள்செய்து குற்றங்களேயெல்லாம் நீக்கி அருள்பவன் திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் கோளிலிநாதன்.
p
சொல்லப்படும் துணைவனுகிய அந்தணன், ஒளிவடிவாகிய தேவன், உயிர்கள் திருந்துதற்கு இடமாகிய அவனது பொன்போலும் இரண்டு திருவடிகளையும் வணங்க, கல்லோடு கட்டிக் கடலில் விட்டாலும் நல்ல துணையாய் இருப்பது திருஐந்தெழுத்தே, (சமணர் கல்லோடு கட்டிக் கடலில் விட்டபொழுது பாடியருளியது)
ஆராய்ந்து எடுத்த பல மலர்களேத்தூவி, மனத்தடையின்றி, திருவடி களே வணங்கி, இரந்து வேண்டுவனவெல்லாம் நாம் பெறலாம் என்று எண்ணும் அன்பரது உள்ளத்திலே, மறைந்து நில்லாத கள்வனே! உனது திருவடிகளுக்கு அன்புசெய்து, எங்காளும் இடைவிடாமல் உன்னைத் துதிப்ப தற்கு எனக்கு அருளுவாய்.
முதலாய், கடுவாய், அளவைகளுக்கெல்லாம் பேரெல்லேயாய், ஒளியாய், உணர்வாய், காணப்பட்ட பொருள்களாய், வேறுபட ாத ஒரே பொருளாய் பெண் ஆண் வடிவாய், உலகுக்கு உண்மையை உணர்த்தி நிற்கும் தில்லைப் பதியில் கனகசபையில் நிகழும் திருநடனத்துக்கு வணக்கம்; வணக்கம்,
YA"
ܓܪفہ

Page 7
திங்கள் காலே
பாண்டியன் வெப்புநோய் நீங்கப் பாடியருளியது திருஞானசம்பந்தர்-பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன்திரு ஆலவாயான் திருங்றே.
ஆற்றல், அடல்விடை ஏறும் ஆலவா யான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருவாசகம்
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புணக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருளெம் உடையானே.
பெரியபுராணம்
கற்பனை கடந்த சோதி கருனேயே உருவ மாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் மடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி,
;"م
 
 

11.
பொழிப்புரை
பவளம்போலும் வாயையுடைய உமையொரு பாகாாகிய திருவால வாயில் எழுந்தருளியிருக்கும் சொக்கலிங்கப் பெருமானது திருமீறு, மங் திரமாயுள்ளது, தேவர்க்கும் மேலானது, அழகுடையது, துதிக்கப்படுவது, சிவாகமமாயுள்ளது, சமய சாத்திரங்களில் புகழ்ந்து போற்றப்படுவது.
வலிமைமிக்க இடபவாகனத்தில் செல்லுகின்ற திருவால்வாய்ப் பெரு மர்னது திருநீற்றைத் துதித்து, சீர்காழியில் வாழும் அந்தணன் ஞான சம்பந்தன் எல்லோரும் தெளிந்துகொள்ளும்படி பாண்டியாாசனது வெப்பு நோய் மீங்கப் பாடியருளிய இப்பாடல்கள் பத்தும் படிக்கும் வல்லவர் நல்லவர்
ஆவர்.
எம்மை அடிமையாக உடையவனே உன் அடியார்போலச் சிறந்த அன்பில்லாதிருந்தும், அன்புடையவன்போல் வேஷம் போட்டு நடித்து, அவர்களுக்கு நடுவே வீட்டின்பத்தைப்பெற யானும் விரைகின்றேன். சிறந்த பொன்னின் தன்மை வாய்ந்த மாணிக்கமலை போன்றவனே! உன்?ன
நினைந்து உருகுகின்ற இடையரு அன்பை எனக்குத் தந்தருள்வாய்,
* மனம் முதலியவற்றுக்கெட்டாத சோதியாகிய கடவுள் கருணேயே உருவமாகக்கொண்டு அற்புதமான போழகோடு அரிய வேத சிரசின் மேலாகிய ஞானமயமாய்ப் பராசத்தி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத் துள் நின்று ஆனந்த நடனம் செய்கின்ற பொலிவார்ந்த திருவடிகளுக்கு
வணக்கம் வணக்கம்,
குறிப்பு: * கற்பனை கடந்தசோதி - மனம் முதலிய கரணங்களையும் வேதம் முதலிய கலைகள் எல்லாவற்றையும் கடந்தபொருள்.

Page 8
திங்கள் மாலே
கிருவோத்தூரில் ஆண்பனேசுள் பெண்ப?னகளாகப் பாடியருளியது
திருஞானசம்பந்தர். பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை எண்ணுங்கால் ஒத்தூர் மேய ஒளிமழு வாளங்கைக் கூத்தீர் உம்ம குணங்களே
குரும்பை ஆண்பனை ஈன்குலை ஒத்தூர் அரும்பு கொன்றை அடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன் சொல் விரும்பு வார்வினை வீடே.
திருவாசகம்
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணுள்வான் மதித்துமிரேன் தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம் மானேயுன் னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே.
பெரியபுராணம்
மாதொரு பாக ஞர்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடைய னருக் கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால் தீதகன் றுலகம் உய்யத் திருவவதாரம் செய்தார்.
திருச்சிற்றம்பலம்
 

13
பொழிப்புரை
திருவோக்காரில் எழுந்தருளியிருக்கும், ஒளிபொருந்திய மழுவைக் கரத்தில் தாங்கிய, திருருடம் செய்யும் வேதாதயே! உமது குணங்களை நினைக்குமிடத்து உரியனவாகிய பூக்களே ஆராய்ந்து எடுத்துக்கொண்டு உமது பொன்போலும் திருவடிகளைத் துதியாதவர்கள் இல்லை.
திருவோத்தூரில் ஆண்பனேகள் எல்லாம் குரும்பைக்குலைகளை ஈனும்படி அருள்செய்த, கொன்றைமாலையை அணிந்த வேதநாதரை, பெருமையுடைய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிப்பதிகத்தை விரும்புவாரது வினைகள் நீங்கும்.
யான் எவ்விதமான பிறப்புக்கும் அஞ்சேன், இறப்பதற்கு என் செய வல்லேன், வானுலகத்தைப் பெறவும் விரும்பேன், மண்ணுலகை ஆள்வ தையும் பெரிதாக நினைத்துமிரேன், தேன் பொருந்திய கொன்றைமாலையை அணிந்த சிவனே! எம் தலைவனே! எம்பெருமானே! உன் அருள்பெறும்
நாள் எப்போது என எண்ணி வருந்துகின்றேன்.
உமையொரு பாகாாகிய சிவபெருமானுக்குப் பூசை செய்யும் ஆகி சைவ அந்தணர் குலத்தில் சடையணுருக்கும் அவரது கற்பிற் சிறந்த ம?னவி யாகிய இசைஞானியாருக்கும் புதல்வராய் உலகம் தீமையில் நின்றும் மீங்கி உய்யும்வண்ணம் நம்பியாரூரர் திருவவதாரம் செய்தார்.
குறிப்பு: * கம்பியாரூரர் - சுந்தரமூர்த்திசுவாமிகளுக்குப் பெற்ற ரால்
இடப்பட்ட பிள்ளைத்திருநாமம்.

Page 9
14
Gy 556). Yr un ger 2)
திருநாவுக்கரசுநாயனுர், திருக்குறுந்தொகை,
திருச்சிற்றம்பலம்
ப?னக்கை மும்மத வேழம் உரித்தவன் I?னப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்
அ?னத்தும் வேடமாம் அம்பலக் கூத்தீனத்
தினைத்த இனப்பொழு தும்மறந் துய்வனுே.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன் நெடுங் காலமே,
திருவாசகம்
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணுதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் it.
அனைத்தெலும் புண்னெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றுாதாய் கோத்தும்பி
பெரியபுராணம்
ஆலமே -91(Lpgb LOTO உண்டு வானவர்க் களித்துக்
காலனே மார்க்கண் டர்க்காய்க் காய்ந்தனே யடியேற் கின்று
ஞாலமின் புகழே யாக வேண்டும்கான் மறைகள் எத்தும் சீலமே ஆல வாயில் சிவபெரு மானே என்றர்.
திருச்சிற்றம்பலம்
恕
 

15
பொழிப்புரை
ப&னபோலும் துதிக்கையை உடைய மும் மதம்பொழியும் யா8னயை உரித்தவன், மினேப்பவரது மனத்தைக் கோயிலாகக்கொண்டவன், எல்லா வற்றையும் தமது திருவேடமாகக்கொண்டு பொன்னம்பலத்தில் ஆடியருளும் கடத்தப்பெருமா8ணத் தினையளவு நேரமும் மறந்து உய்வனே,
வாழ்த்துதற்கு வாயும், நினைப்பதற்கு மனமும், வணங்குதற்குத் தலை யும் தந்தருளிய முதல்வனே தேன் நிறைந்த மலர்களேத் தூவி வழிபடாமல் வினே யுடையேன் நெடுங்காலத்தை வீணுகக் கழித்துவிட்டேனே.
அரசவண்டே கினையளவு அற்பமாயுள்ள பூக்களின் தேனை உண்ண அலையாமல், நினைக்குந்தோறும், காணுந்தோறும், பேசுந்தோறும், எப் பொழுதும் எலும்புகள் முழுதும் உள்ளே நெகிழ்ந்து உருகும்படி சிவானந்தத் தேனைச் சொரிகின்ற திருநடனம் செய்தருளும் தில்லைப்பெருமானது திருவடி மலர்களிலே சென்று ஊதுவாய், குறைவில்லாத பேரானந்தத் தே&னப் பெறுவாய்,
நான்கு வேதங்களும் துதிக்கும் ஒழுக்கமே உருவான வனே, திருவால வாயில் இருக்கின்ற சொக்கலிங்கப் பெருமானே! முன்னுெருகால் நஞ்சை அமுதாக உண்டு தேவர்களேக் காத்தருளின, யம&ன கண்டேயரைக் காத்தருளின, இப்பொழுது
a 0025i 35 Lor i diš அடியேன்பொருட்டு உனது புகழ் கிறைந்த சைவநெறி உலகிலே த0ழக்க அருள் செய்வாய்,

Page 10
16
செவ்வாய் மாலே திருஞானசம்பந்தர், பண்-கொல்லி
திருச்சிற்றம்பலம்
மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல் லகதிக் கியாதுமோர் குறைவிலைக் கண்ணினல் லஃதுறும் கழுமல வளாககர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனே யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளாகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை இருந்ததே.
திருவாசகம்
கடையவ னேனைக் கருணையி னுற்கலங் தாண்டுகொண்ட விடையவ னே விட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னே மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னே தளர்ந் தேன் எம்பி ரான் என்னேத் தாங்கிக்கொள்ளே
பெரியபுராணம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
திருச்சிற்றம்பலம்

17
பொழிப்புரை
பூமியில் நன்மையாக என்றும் வாழலாம். கினேத்தால் நல்ல கதியைப் பெறுவதற்கு யாதொரு குறைவும் இல்லை. கண்ணுக்கு எல்லாம் நல்லன வாகத் தோன்றுகின்ற வளம் சிறந்த திருக்கழுமல நகரில் பெரிய நாயகியா ரோடு தோணியப்பர் சுகமாக எழுந்தருளியிருக்கின்றனரா?
பொற் கிண்ணத்திலே சிவஞானம் கலந்த திருமுலைப்பாலை உண்டதை, அறியாது பிறர் தந்த பாலை உண்டதாகக் கருதி தந்தையார் கோபிக்க, தான் என்னை ஆட்கொண்டருளிய, தோடு அணிந்த காதை உட்ைய தோணியப்பர் பெரிய நாயகியாரோடு வளம் சிறந்த திருக்கழுமல நகரில் சுகமாக எழுந்தருளி இருக்கின்றனரா?
தாழ்ந்தவனுகிய என்ன கருணையினுலே கலந்து ஆட்கொண்டருளிய இடபவாகனனே! புலித்தோலை உடையவனே உத்தரகோசமங்கைக்கு அர சனே! சடையை உடையவனே! எம்பெருமானே! தளர்ந்துபோனேன். கை
விட்டுவிடாதே, என்னேத் தாங்கிக்கொள்வாய்,
வேதங்கள் சொல்லும் தருமமெறிகள் தழைத்து ஓங்கவும், சிவாகமங்கள் சொல்லும் சைவத்துறைகள் விளக்கம் பெறவும், ஆன்மபரம்பரை பொலிய வும், திருவாய் மலர்ந்து அழுதருளிய சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தப் பெருமானது மலர்போலும் பாதங்களச் சிரமேற்கொண்டு அவர் செய்த திருத்தொண்டினைத் துதிப்பாம்.

Page 11
18
புதன் காலே
திருஞானசம்பந்தர், பண்-கெளசிகம்
திருச்சிற்றம்பலம் ”。 7. .. .. .ܕ ÷”
. . . t .
கோலமாய நீண்மதில் கூடலால வாயிலாய் பாலனுய தொண்டுசெய்து பண்டுமின்று முன்னேயே நீலமாய கண்டனே நின்னேயன்றி நித்தலும் சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.
திருநாவுக்கரசர்-திருக்குறுந்தொகை நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே.
திருவாசகம்
ஏழைத் தொழும்பனேன் எத்தலையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனேப் பணியாதே ஊழிமுதற் சிந்தாத கன்மணிவங் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணுேக்கம் ஆடாமோ.
பெரியபுராணம்
நன்மைபெரு கருனெறியே வந்தனேந்து நல்லூரின் மன்னுதிருத் தொண்டனூர் வணங்கிமகிழ்க் தெழும்பொழுதில் உன்னுடைய நினைப்பதனே முடிக்கின்ருே மென்றவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினுன் சிவபெருமான்
திருச்சிற்றம்பலம்

19
பொழிப்புரை
அழகிய மீண்ட மகில உடைய கடல் என்னும் திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! நீலகண்டனே! பாலணுகிய யான் முன் னும் இன்றும் உனக்கே தொண்டுசெய்கின்றேன். நித்தலும் ஒழுக்கமான என் மனத்தில் உன்னேயன்றிப் பரம்பொருளாக வேறு எக்கடவுளையும் தெளிந்துகொள்வதில்?ல.
கடப்பமாலை அணிந்த எங்கள் முருகக்கடவுளைப் பெற்றருளிய உமை யம்மையை ஒருபக்கத்தில் வைத்திருக்கின்றவராகிய, இனிய கடம்பூரில், திருக்கரம் என்னும் கோவிலில் இருக்கும் அமிர்தகடேஸ்வரரது கடமை அடியே8னத் தாங்கிக்கொள்ளுதல். எனது கடமை தொண்டு செய்து கிடத்தல்,
ஏழைத் தொண்டனுகிய யான் பரம்பொருளைப் பணியாமல் எவ்வளவோ காலத்தை வீணுகக் கழித்துவிட்டேன். ஊழி முதல்வராய் அழிவில்லாத இரத்தினம்போல்பவராகிய சிவபெருமான் என்பிறவித் *தாழைநீக்கிய தன் மையைப் புகழ்ந்து தோணுேக்கம் ஆடுவோமாக.
நன்மை பெருகுகின்ற திருவருள்வழியில் வந்து திருநல்லூரில் திருநாவுக் கரசுநாயனுர் வணங்கி மகிழ்ந்து எழும்பொழுதில், உன்னுடைய மன எண் ணத்தை நிறைவேற்றுகின்றுேம் என்று அருள்செய்து, அவரது சிரசிலே சிவபெருமான் திருவடிகளே வைத்துத் தீட்சைசெய்தருளினன். (திருச்சத்தி முற்றம் என்னும் தலத்திலே விண்ணப்பித்துத் திருநல்லூரிலே இத்திருவடி தீட்சையைப் பெற்றர் கிருநாவுக்கரசர்) ,
* பிறவிக்குக் காரணமான மூலவினைகள்
தாழ் கதவில் பூட்டுள் இருந்து புறத்தே வந்து அடைத்துக்கொள் ளும் கோல்-இந்நாட்டில்-நாக்கு என்றும் சொல்வர்.

Page 12
20
புதன் மாலே
திருஞானசம்பந்தர், பண்-இந்தளம் திருச்சிற்றம்பலம்
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே.
திருநாவுக்கரசர்-திருக்குறுந்தொகை
பெருக லாந்தவம் பேதமை தீரலாம் திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோர் ஆனந்தம் மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
திருவாசகம்
ஆடு கின்றிலை கூத்துடை யான் கழற் கன்பிலே என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலே பணிகிலே பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பினநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலே செய்வதொன் றறியேனே.
பெரியபுராணம்
மன்றுளே திருக்கூத் தாடி அடியவர் மனைகள் தோறும் சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனுன் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால் என்றுமிவ் விளமை நீங்கா தென்றெழுந் தருளி னுரே.
திருச்சிற்றம்பலம்
 

பொழிப்புரை
திருமருகலில் விடத்தால் இறந்த வணிகன் உயிர்பெற்றெழப் பாடியருளியது.
சடையை உடையவனே! தான் அடைக்கலம் புகுமிடம் நீயே என் கின் ருள், கருமவடிவான இடபத்தை உடையவனே என்கின்ருள். அஞ்சி விழுகின்றுள் வரம்புகளில் குவளைகள் மலருகின்ற திருமருகலில் எழுந்தருளி இருக்கும் மாணிக்கவண்ணனே! இறந்த வணிகனின் பெண் இவ்வாறு வருந்துவது முறையாகுமா?
திருமருகலில் எழுந்தருளியிருக்கும் மாணிக்கவண்ணர் திருவடிகளே வாழ்த்தி வணங்கினுல், தவம் பெருகப்பெறலாம், அறியாமை நீங்கப்பெற லாம், உலக ஆசைகளில் சிக்கி முறுகலாய் இருக்கும் சிங்தையைத் திருத்த லாம். மேலான சிவானந்தத்தைப் பருகலாம்.
துணையில்லாத பிணம்போன்ற மனமே! ஆடுகின்றயில்லை, கூத்தப் பெருமான் திருவடிகளுக்கு அன்பில்லை, எலும்பும் உருகிப் பாடுகின் ரூயில்லை, பதைக்கின்ருயில்லை, பணிகின்ருயில்லை, பாதமலர்களைச் சிரசிற் சூடுகின்ரு யில்லை, அப்பெருமான் திருவடிகளுக்கு மலர்கள் குட்டுகின்றதுமில்லை, தேடு கின்ருயில்லை, தெருவுதோறும் அலறுகின் முயில்லே, இன்னது செய்வது என்று ஒன்றும் அறியேன்.
கனகசபையிலே ஆனந்த நடனம் செய்து, அடியவர் மனேகள் தோறும் சென்று, அவர் நிலைமையை உலகோர் அறியக்காட்டி அருளும் மகாதேவ ராகிய சிவபெருமானும், திருநீலகண்ட நாயனுரையும் மனைவியாரையும் பார்த்து ஐம்புலன்களை வென்றதில் மேன்மையுடையீர்! எந்நாளும் இவ் விளமைப்பருவம் நீங்காமல் விருப்புடன் நம்மிடத்தில் இருப்பீராக என்று வரங்கொடுத்து எழுந்தருளினர்.

Page 13
வியாழன் காலே திருஞானசம்பந்தர், பண்-குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
செல்வ நெடுமாடம் சென்று சேண்ஓங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே,
திருநாவுக்கரசர், பண்-காந்தாரபஞ்சமம்
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல் கோவினுக் கருங்கலம் கோட்டம் இல்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. ܐ
திருவாசகம்
காலமுண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய ஞாலமுண், டானெடு நான்முகன் வானவர் நண்ணரிய, ကိန္နမ္ပိ , , , ஆலமுண் 2ானெங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் றன்வந்து முந்துமினே.
பெரியபுராணம்
ஊன டைந்த உடம்பின் பிறவியே தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மாாக டம்செய் வரதர்பொற் றள்தொழ.
திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை :
செல்வம் நிறைந்த மீண்ட மாடங்கள், ஆகாயத்தில் உயர்ந்து, சந்திர மண்டலத்தைப் பொருந்த, அவ்வளவு செல்வம் உயர்கின்ற செல்வர்கள் வாழும் தில்லச் சிற்றம்பலத்தில், அருட்செல்வஞகிய நடேசப்பெருமானது திருவடிகளேத் துதிக்கும் செல்வமே, மேலான செல்வம் ஆகும்.
பூவுக்கு ஆபரணமாக விளங்குவது தாமரை, பசுவுக்கு ஆபரணம் பஞ்சகெளவியங்களில் சிவன் முழுகுதல், அரசனுக்கு ஆபரணம் வளேயாத செங்கோலுடைமை, நாவுக்கு ஆபரணம், திருவைந்தெழுத்தைச் செபஞ் செய்தல்,
காலம் கிடைத்திருக்கும்போதே, அன்புசெய்து உய்யுங்கள். நினைத்தற் கரிய விஷ்ணு, பிரமன், தேவர்கள் அணுகமுடியாத ஆலகால நஞ்சை உண்டருளிய, எங்கள் சொக்கலிங்கப் பெருமான், தன் அடியவர்க்கு *மூலநிதியாகிய பேரின்பத்தை அள்ளிக்கொடுக்கின்ருன், பெறுதற்கு வந்து முந்துங்கள்.
தேன் பொருந்திய மலர்ச்சோல்ை சூழ்ந்த தில்லைப்பதியில், பெரிய நட னம் செய்யும் அநுக்கிரக மூர்த்தியாகிய நடேசப்பெருமானது பொன் போலும் திருவடிகளைத் தொழுதால், தசைபொருந்திய இம்மனித உடம்பின் பிறப்பே, தான் வந்ததால் அடையவேண்டிய உறுதிப்பொருளே -96Փւ-պth,
s
பண்டாரம்-பொக்கிஷம் = நிதிக்குவை,

Page 14
24
வியாழன் மாலே
திருஞானசம்பந்தர்-பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
கின்னடியே வழிபடுவான் |Ê|D60 || |fiö0|Ở đ{I}} என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் கின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
திருநாவுக்கரசர், பண்-காந்தாரபஞ்சமம்
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
திருவாசகம்
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணுேக்கம் ஆடாமோ
பெரியபுராணம்
மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன் துதிசெயும் நாயன்மார் தூய சொன்மலர்ப் பொதிநலம் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே,
திருச்சிற்றம்பலம்

25
பொழிப்புரை
திருநெடுங்களத்தில் எழுந்தருளி இருப்பவரே மலமற்ற நித்திய சுந்தரரே! உமது திருவடிகளேயே பூசைசெய்யும் lnit Ilhbodor(3-LJi g) u96ord dau T யமன் வந்தபோது உம்மைத்தியானம் செய்ய, என்னடியவன் உயிரைக் கவராதே என்று யமன உதைத்தருளிய பொன்போலும் திருவடிகளைத் துதித்து நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கின்ற உமது அடியவர் துன்பங் களை நீக்கியருள் வீர்.
வீட்டின் கண் உள்ள விளக்கு புறவிருளேப் போக்கும். சொற்களால் ஆகிய நூல்களின் அறிவாகிய விளக்கு அகவிருளே நீக்கும் சோதியாய் உள்ளது. பல இடத்தும் காணப்படும் விளக்குகள் பலரும் காணும் சுடர்க ளாகிய சூரிய சந்திரர். எல்லாவற்றிலும் சிறந்த மனதிற்கு நல்ல விளக்கா வது திருவைந்தெழுத்தேயாம்.
ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு தினமும் சிவபூசை செய்த விஷ்ணு, ஒரு நாள் ஒரு பூக்குறைய அதற்குப் பதிலாக, தமது கண்ணைப்பிடுங்கிச் சிவன் திருவடியில் சாத்தலும், அப்பெருமான் சக்கராயுதம் அவருக்குக் கொடுத்தருளியதை எங்கும் துதித்து நாம் தோணுேக்கம் ஆடுவோமாக,
சந்திரன் வளர்கின்ற சடைமுடியை உடைய சபாநாதரை முன்துதி செய்யும் நாயன்மாரது தூய சொற்களாகிய மலர்களில் நிறைந்த பொருளா கிய தேனை அனுபவிக்கின்ற அடியார்களது பெரியசபைகள் விதிமுறைப்படி உலகத்தில் விளக்கம் பெற்று வெற்றி அடைக,
4.

Page 15
சுந்தரமூர்த்திநாயனுர், பண்-நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
நத்தார்படை ஞானன்பசு வேறிக்கனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமழு வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தார்எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்பொழில் வண்டியாழ்செயும் கேதீச்சரத் தானை மறையார்புகழ் ஊரன் னடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்தும்சொலக் கூடாகொடு வினையே.
திருவாசகம்
ஆமாறுன் திருவடிக்கே அகம்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமானின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.
பெரியபுராணம்
பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படும் மேதினிக்
காதல் மங்கை இதய கமலமா மாதொர் பாகனூர் ஆரூர் மலர்ந்ததால்
திருச்சிற்றம்பலம்
 

27
பொழிப்புரை
சங்கைப் பக்கத்திலே படையாக வைத்திருக்கின்ற விஷ்ணுவாகிய இடபத்தை வாகனமாக உடையவன், மதநீரால் நனே கி ன் ற தொங்கும் வாயை உடைய யானேயின் தோலைப்போர்த்த மழுவாயுதத்தை உடையவன், இறந்த பிரம விஷ்ணுக்களின் எலும்பை மாலேயாக அணிபவன் , * பத்து இலக்கணங்களும் பொருந்திய தொண்டர் வணங்கும் பாலாவித் தீர்த்தக் கரையில் உள்ள திருக்கேதீச்சரத்து இறைவன்.
கரிய கடல் சூழ்ந்த கழிநிலம் சேர்ந்த நல்ல மாதோட்ட நகருள் பக் கத்துள்ள சோலையுள் வண்டுகள் இசைபாடுகின்ற திருக்கேதீச்சரத்திறைவனை, அந்தணர் புகழுகின்ற நம்பியாரூரன் பாடிய குறைவில்லாத தமிழ்ப் பாக் கள் பத்தும் படிக்கக் கொடிய தீவினைகள் சேரமாட்டா,
சர்வ வல்லமை உடையவனே தேவர்கள் தலைவனே உய்யும் வண்ணம் உன் திருவடிகளை நினைந்து மனம் இளகேன், அன்பினுல் உருகேன், பூமாலை கட்டிச் சாத்தித்துதியேன், புகழ்ந்துபாடேன், உன் திருக்கோயிலைக் கூட்டுகின்றிலேன், மெழுகுகின்றிலேன், ஆனந்தம்கொண்டு கடத்தாடேன், சாவதற்கே விரைகின்றேன்.
வேதங்களுக்கு மூலகாரணராகிய சிவபெருமான் வெளிப்படுகின்ற உயிர்களின் இதயதாமரை போல, பூமியாகிய பெண்ணின் இதயகமலமாக, உமையொருபாகராகிய வன்மீகநாதர் எழுந்தருளியிருக்கும் திரு வாரூர் மலர்ந்து விளங்குகின்றது.
* பற்று என்பது எதுகைநோக்கி பத்து என வந்தது என்றும் கொள்வர்.
பற்று-அன்பு.

Page 16
28
Ganusir Grf. dr&o
திருஞானசம்பந்தர், பண்-தக்கேசி.
திருச்சிற்றம்பலம்
வேதமோதி வெண்ணுரல்பூண்டு வெள்ளே எருதேறிப் பூதம்குழப் பொலியவருவார் புலியின் உரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா என நின்று பாதம்தொழுவார் பாவம்தீர்ப்பார் பழன நகராரே
பண்-சீகாமரம்
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளுரே.
திருவாசகம்
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன் புக்குக் கருனையினுல் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானத் தித்திக்கும் சிவபதத்தை அருத்தியில்ை நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே.
பெரியபுராணம்
மன்பெ ருந்திரு மாமறை வண்டுதழ்ந் தன்பர் சிங்தை அலர்ந்தசெந் தாமரை நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்தும் அளித்தெதிர் நின்றன.
திருச்சிற்றம்பலம்
 

29.
பொழிப்புரை
வேதத்தை அருளிச்செய்து, வெண்மையான முப்புரி நூல் தரித்து, வெள்ளே இடபத்தில் ஏறி, பூதங்கள் சூழப்பொலிவாக வருவார், புலித்தோல் உடையினர், நாதா என்றும், நக்கா என்றும், கம்பா என்றும், பாதங்களேத் தொழுவாரது பாவங்களைத் தீர்ப்பார், திருப்பழனத்தில் எழுந்தருளியிருக் கும் ஆபத்சகாய ஈசுவரர்.
இனிமையான இசையை மிகுதியாகப் பாடும் அடியார்கள் சென்று குடி யாய் இருக்க விரும்பி, பாதங்களைத் தொழ, நிலைபெற்ற மேலான சோதி யாகிய வைத்திய நாதன் எழுந்தருளி இருக்கும் இடம் எது என்ருல், வேதமந்திரத்தால் வெண்மையான மணலையே சிவலிங்கமாக ஞானத்தால்
வழிபட்ட *சம்பாதி என்பவன் பெயர் அமைந்த திருப்புள்ளிருக்கு வேளுர்,
உருவம் தெரியாக்காலத்திலே உள்ளே புகுந்து, என்மனதிலே இருந்து, கருவைத்திருத்தி, உடலில் கலந்து, கருணையினல் ஆட்கொண்டருளிய திருத் துருத்தியில் இருப்பவனே, இனிமையான சிவபதத்தை, விருப்பத்தோடு நாய டியேன் அழகுபொருந்திய தில்லைப்பதியில் கண்டேன்.
வேதமாகிய வண்டு சூழ்ந்து அன்பர்களுடைய சிங்தையிலே அலர்ந்த செந்தாமரைப் பாதங்களானவை சொரியும் நல்லபெரிய பரமானந்தமாகிய தேனே, தகுதியில்லாத எனக்கும் தந்து எதிரே நின்றன.
* கழுகுத்தலையும் சிறகும் உடைய கழுகுராசன்-சம்பாதி, பட்சி -இருக்குவேதம்-முருகன். இவர்களால் பூசிக்கப் பெற்றதால் புள் இருக்கு வேள்ளூர்-எனப் பெயர் பெற்றது.

Page 17
30
திருஞானசம்பந்தர், பண்-சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
நன்னேஞ்சே உனையிரந்தேன் கம்பெருமான் திருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும் பன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே,
சுந்தரமூர்த்தி, பண்-கட்டராகம்
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஒடுகன் கலகை உண்பலிக் குழல்வானே காடுகின் இடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
திருவாசகம்
ஞானவாள் ஏந்தும்ஐயர் காதப் பறைஅறைமின் மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிIன் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.
பெரியபுராணம்
ஞால முய்ய கடம்மன்றுள் ஆடின காலன் ஆருயிர் மாளக் கறுத்தன
மாலை தாழ்குழல் மாமலை யாள்செங்கை சீல மாக வருடச் சிவந்தன.
திருச்சிற்றம்பலம்
 

31
பொழிப்புரை
நல்லமனமே! உன்னே இரந்து வேண்டுகின்றேன், உய்வதை விரும்புவா யானுல் நம்பெருமான் திருவடிகளையே நினைத்துக்கொண்டிருப்பாய். வாயே! அன்னப்பறவைகள் தங்கியிருக்கும் பிரம புரத்து நிறைந்த அமுதம் போலும் தோணியப்பரை எப்போதும் துதிப்பாய். கண்ணே! அப்பெருமானை அன் போடு தினமும் தரிசிப்பாய்,
பிரமகபாலத்தைப் பாத்திரமாகக்கொண்டு உண்ணும் பிச்சைக்கு உழன்று திரிபவனே, சுடுகாட்டை நின் இடமாகக்கொண்டு மிகுந்த இருளில் நடனமாடும் வேடத்தை உடையவனே, திருக்குருகாவூரில் எழுந்தருளி இருக் கும் வெள்ளடைநாதனே மீயல்லவா உன்னைப் பாடுகின்றவர் பசியைத் தீர்ப்பாய், துதிக்கின்றவர் நோய்களை நீக்குவாய்,
ஞானமாகிய வாளை ஏந்துங்கள். தலைவரது நாதமாகிய பறையை அடி யுங்கள். பெருமைபொருந்திய எருதுவாகனத்தில் வரும் ஐயருடைய சந்திர ஞகிய வெள்ளைக்குடையைப்பிடியுங்கள். திருவெண்ணிருகிய சட்டையுள் எல்லோரும் புகுந்து கொள்ளுங்கள். மாயப்படைவந்து தாக்கமுன் நாம் இன்ப உலகத்தைக் கைப்பற்றுவோம்,
எம்பெருமானே உமது திரு வடிகள், உலகம் உய்ய, சிற்சபையில் |b Leottb ஆடின. யமன் உயிர்மாளக் கோபித்தன, மாலை அணிந்த கடந்தலே உடைய மலைமகள் செம்மையான கரங்களால் ஒழுக்கமுறைப்படி வருடச் சிவந்தன.

Page 18
32
சனி மாலை
திருஞானசம்பந்தர், பண்-சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலும் கண்புகார் பிணியறியார் கற்ருரும் கேட்டாரும் விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன்தாள் சார்ந்தாரே.
சுந்தரமூர்த்தி, பண்-கொல்லி
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வினுங் தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள் இம்மை யேதரும் சோறும் கூறையும் ஏத்த லாமிடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாது மையுற வில்லையே.
திருவாசகம்
ஏர்தருமே ழுலகேத்த எவ்வுருவும் தன்னுருவாய் ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர்வண் டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரானேச் சீரியவா யாற்குயிலே தென்பாண்டி நாடனைக்கூவாய்,
பெரியபுராணம்
தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்முன் வீதிவிடங் கப்பெருமான்,
திருச்சிற்றம்பலம்

。”、,郡 ܬܸܓ݂ ܟ݂ܬ
பொழிப்புரை
வெண்மையான மாடங்கள் பொருங் கி ய நீண்டவீதியை உடைய குளிர்ந்த புகார் நகரிலுள்ள திருச்சாய்க்காட்டில் வீற்றிருக்கும் எம் தலைவ... ராகிய சாயாவனேசுவரது திருவடிகளை அடைந்தவரும், கற்றவர்களும், கேட்டவர்களும், மீட்டும் இம் மண்ணில் பிறவார். வீட்டுலகத்தை அடைவார். மனம் இளேக்கமாட்டார் பசியாலும் கண் புகையார், நோயால் வருந்துதலை அறியார் பதவி இன்பங்களப் பொருளாக மகியார். ஆதலால் சுவர்க்கம் புகார் என்பது சொல்லவே வேண்டாம்.
3.
தம்மைப் புகழ்ந்து விரும்பியதைப் பே சினும், சார்ந்து நின்றலும் கொடுக்காத பொய்யராகிய மனிதரைப்பாடாமல், எம்பெருமானது திருப் புகலூரைப் பாடுங்கள், புலவர்களே! இம்மையில் உணவும் உடையும் தரும் துன்பம் நீங்கப் பெறலாம், மறு  ைம யில் சிவலோகத்தையும் ஆளலாம் கொஞ்சமும் சந்தேகமில்லை.
ஆரவாரிக்கின்ற கடல் சூழ்ந்த தென் இலங்கையில் உள்ள அழகார்ந்த வண்டோதரிக்குப் பேரருளினுல் இன்ப உலகம் கொடுத்தருளியவன். ஏழுல கும் துகிக்க எ வ் வுரு வும் தன்னுருவாய் விளங்குபவன். திருப்பெருங் துறையில் எழுந்தருளியிருப்பவனகிய தென்பாண்டிநாடனைக் குயிலே உன் சிறந்தவாயால் அழைப்பாய்,
குளிர்ந்த அன்பு நிழலைச் செய்யும் வெண்கொற்றக் குடையை உடைய அரசனது செய்கையைக் கண்டு தாங்கமாட்டாமல், பூமியில் உள்ளவர்கள், கண்ணிரை மழைபோலப் பொழிந்தார். தேவர்கள், பூக்களை மழைபோலச் சொரிந்தார். பெருமை யிற் சிறந்த மநுநீதிகண்ட சோழன் முன்னே, திருவாரூர்த்திருவீதியிலே விதிவிடங்கத் தியாகராசப் பெருமான், தேவர் வணங்க இடபவாகனத்தில் காட்சிகொடுத்தருளினர்.
கீழ்ப்பிரிவுக்குரியன முற்றுப்பெற்றன.

Page 19


Page 20