கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவானுபூதித் தோத்திரப் பாடல்கள்

Page 1

த்தவர்: S)
மயில்வாகனன்
6 4. S N

Page 2
இ. சிவமயம்
'தொண்டர் நாள் தொறும் துதிசெய அருள்செய்
கேதீச்சர மதுதானே"
400 வருடங்களாக மறைந்திருந்த புராதன மகாலிங்கம்
ܠܐ ܬܐ.
ஈழநாட்டுப் பாடல்கள் பெற்ற தலங்களில் ன் ரு கிய
திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு தேர்த் திருவிழா செய்ய வேண்டு
மென்று பல அடியார்கள் விரும்புவதால் இத் தோத்திரப்பாட
லால் வரும் ஆதாயம் அத் தேர்த் திருப் பணிக் குச் செலவு செய்யப்படும்.
இத்திருப்பணி நிறைவேற அன்பர்கள் யாவரும் வேண்டிய பண உதவி செய்து திருக்கேதீஸ்வரநாதன் திருவருளைப் பெற்றுய்வார்களாக, ܘ ܬ
* திருக்கேதீஸ்வரநாதன் திருவடி வாழ்க.
* மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் ”
 
 

சிவமயம்
σε μια ΝΑΚΑ , به يې } ('' .
کلکتہائی '

Page 3
ன் 60) (LP 99) p T ARALA W.
சிவநேயச் செல்வர்களே!
பெறுதற்கரிய பேறுகள் யாவற்றுள்ளும் மக்கட் பேறு மிக மாண்புடையது. மக்களாய்ப் பிறந்தும் சைவ சமயத்தில் இருந்து பெறுதல் அரிதினும் அரிது. அப்பேறு பெற்றும்
தாய் மொழியாகப் பெற்ற தமிழர் களாகிய நாம் இப்பொழுது எந்நிலையில் இருக்கிருேம் என்பதை எள்ளளவும் சிந்திக்காது, சிந்தித்து வள்ளுவப் பெருந்தகை வகுத்த வழி ஒழுகி வையத்து வாழ்விாங்கு வாழ வழி கோலாது நம் வாழ் நாள் முழுவதையும் வீணுளாகக் கழிக்கின்ருேம்.
பழம் பெருமைகளை அப் பழம் பெருமைக தோன்றல்கள் நாம் என்று கூற நாம் எத்த தக்க குறிக்கோளுடன் வாழ்கின் ருேம்? ஒன்றுமில் கள் பட்சி சாதிகளைப் போன்று உண்டு உடுத்து உறங்கிக் கொண்
பெருமைப்படத்
டிருக்கிருேம். நமக்காவது பிறர்க்காவது நன்மை பய்க்கத்தக்க எம்
முயற்சியிலாவது ஈடுபடுகின்ருேமா என்ருல் அதுவும் இல்லை.
சமயங்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்து, எச்சமயத்திற்கும் தாயாக விளங்கும் நம் சைவ சமயத்துக்காவது ஏதாவது நற்பணி
புரிகின்ருேமா ? அதுவும் இல்லை. நாம் நம் ஈடேற்றத்தை எண் னியாவது இறைவனை மனம், மொழி, மெய்களால் வழிபடுகின்ருேமா என்ருல் அதுவும் மருந்துக்கும் கிடைக்காது.
றைவன் எங்கும் உள்ளவன். எல்லாம் வல்லவன். அவன் உருவமே கருணையின் உருவம். அவன் கருணையினுல் நாம் வாழ் கின்ருேம். உலகில் உள்ளன யாவும், யால் படைத்து நமக்கு அளித்துள்ளர் நாம் என்ன கைமாறு செய்கிருேம். புகழைப்பாடி, உள்ளன்போடு வணங்கு னல்கள் யாவும் சூரியனைக் கண்ட ப
அை வனை நினைந்து அவன் வாமானுல், எமது இன் போல் அகலும். தமிழர்களாகிய நாம் இப்பொழுது பல இன்னல்களுக்கும் ஆளாக இருக்கிருேம். அவ்வின்னல்கள் யாவையும் போக்க, நாமும் நம் சந்த
எடுத்துப் பேசுவதில் நமக்கு நிகர் நாம். த் தேடித்தந்த நம் முன்னேரின் வழித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியாரும் வீரபுருடர்களாகத் திகழ, இடையருது இறை வழிபாடாற்றல் வண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" என்று அப்பர் சுவாமிகள் நவின்றது இறைவழிபாட்டினுல் ஏற்பட்ட வலிமையாலன்ருே?இறை வழிபாட்டில் இன்பங்கண்டவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். என வே நாம் இப்பொழுதே இறைவழிபாட்டில் ஈடுபடுதல் வேண்டும். இறைவழிபாடு இலேசாகச் செய்வதற்கு, "வீடும் வேண்டா விறலினர் களாகிய நமது நாயன்மார்கள், திருமுறைகளை எமக்கு அளித்திருக்கி ருர்கள். அவை கடல்போல் பரந்து பன்னிரு திருமுறைகளாக வகு க்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலமலர்களை ஈண்டு பொறுக்கி எடுத்து சைவ மக்களுக்கு அளிக்க திருவருள் பாலித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ஒருசில நிமிடங்கள் சிவ சிந்தனையு டன் இப்பாடல்களை ஒதிவரின் பெரும்பயன் விளையும். நம்முடைய மனம் சாந்தியடையும், நமது இன்னல்கள் நம்மை விட்டகலும் நமக்கு வேண்டிய யாவும் கிட்டும், அன்பும் அறிவும் பெருகும்
எல்லோரும் இன்புற வாழலாம், வாழ வழி வகுக்கலாம்.
இத்தோத்திரப் பாடல்களைச் சிறு பிள்ளைகள் முதல் யாவரும் மனனம் செய்து, கூடியும் தனித்தும் தமது இல்லங்களிலும் கோயில் களிலும் பாடி இறைவனை வழுத்தி, துன்பங்கள் நீங்கி இன்பம் எய்த வேண்டும் கூட்டுவழிபாடு நம்முள் ஒற்றுமையையும், சகோ தர அன்பையும், பக்தியையும் வளர்க்கும் என்பதையே குறிக்கோ, ளாகக் கொண்டு இச் * சிவானுபூதித் தோத்திரப் பாடல்கள் " தொகுக்கப்பெற்றுள்ளன.
சைவ சமயத்தவர் யாவரும் இச் சிறிய நூலை வேண்டிப் பாரா யணம் பண்ணி, அம்மை அப்பரை ஆரா அன்புடன் துதித்து, மலரிட்டு ஏற்றியும் போற்றியும் பயனட்ைய வேண்டுமென்று எல் லாம் வல்ல சிவபெருமானை, அவர் மலரடியில் இச் சிறிய மலர் மாலையை, உள்ளன்போடு வைத்து, வணங்குகின்றேன்.
"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறென்றறியேன் பராபரமே.??
வணக்கம்
சங்கர உடையார் கோவிலடி, உடுவில், யாழ்ப்பாணம் வேல், மயில்வாகனன் 1964ம் வGல் ஆனிமீ" 10ந்வு.

Page 4
α.
பொரு ள டக் கம்
ܨܝ பாடில் 1. விநாயகக் கடவுள் புராணம் 2. திருஞானசம்பந்த நாயனுர் தேவாரம் 45
திருநாவுக்கரசு நாயனுர் தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா
திருப்பல்லாண்டு பொன்வண்ணத்தந்தாதி பெரிய புராணம் 10. பட்டினத்துப் பிள்ளையார் பாடல் 11. தாயுமான சுவாமிகள் பாடல் 12. திருமந்திரம்
13. திருப்புகழ் 14. திருமுருகாற்றுப்படை 15. கந்தரலங்காரம்
16 கந்தரனுபூதி 17. முருகர் அந்தாதி முதலியன 18. அபிராமியந்தாதி 19. சகலகலாவல்லிமாலை 20. இராமலிங்க சுவாமிகள் பாடல் 21. திருமால் வழிபாட்டுப் பாடல்
8
5
மொத்தம் 263
 
 
 

1 மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
6. சிவமயம்
சிவானுபூதித் தோத்திரப் பாடல்கள்
ஞாயிறு காலை ಊr
விநாயகக் கடவுள்
திருச்சிற்றம்பலம்
வெண்ணிய பொருளெலா மெ கண்ணுத லுடையதோர் களிற்று பண்ணவன் மலரடி பணிந்து ே
சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருப்பிரமபுரம் ܬܬܐ பண்-நட்டபாடை,
2 தோடுடைய செவி யன்விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ னேடுடைய மலரான்முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
്
3 அருநெறி யமறை வல்ல முனியகன் பொய்கை யலர்மேய
பெருநெறி யபிர மாபுரமேவிய பெம்மா னிவன் றன்னை
யொருநெறி யமனம் வைத்துணர் ஞானசம்பந்தன்னுரைசெய்த திருநெறி யதமிழ் வல்லவர் தொல்வினை தீர்த லெளிதாமே.
(திருநெறித் தேவாரங்களை மனம் ஒன்றி இடைவிடாது ஒதுவதால் பண்டைய வினை எளிதில் தீரும் என்பது ஞானசம்பந்தர் திரு. ஆணையாகும்)
பண்-நட்டபாடை
திருநெய்த்தானம்
4. 60( LDLLITIq-ש கண்டன் மகள் பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தான மெனிரே.

Page 5
( 2) திருநாவுக்கரசர் தேவாரம் திருவதிகைவிரட்டானம் பண்-கொல்லி, 5 கூற்ரு யினவா றுவிலக் ககிலீர்
கொடுமை பலசெய் தனநா னறியே னேற்ரு யடிக்கே யிரவும் பகலும்
பிரியா துவணங் குவனெப் பொழுதுந் தோற்ரு தென்வயிற் றினகம் படியே
குடரோடுதுடக் கிமுடக் கியிட வாற்றே 5॰ಟಿಲ னதிகைக்கெடில
வீரட் பிானத் துறுைம் LDM (3603.
6 நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன்
நினையா தொருபோ துமிருந் தறியேன் வஞ்சம் இதுவொப் பதுகண் டறியேன் ീ.
வயிற்ருே டுதுடக் கிமுடக் கியிட நஞ்சா கிவந்தென் னைநலி வதனை
நணுகா மற்றுரந்து கரந்துமிடீர் அஞ்சே னுமென்னி ரதிகைக் கெடில
ரட் டானத் துறையம் மானே.
சலம்பூ வொடு தூ பமறந் தறியேன்
தமிழோ டிசைபா டல்மறந் தறியேன் நலந்தீங்கினுமுன் னை மறந் தறியேன்
உன்னு மமென் னு வின்மறந் தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய் உடலுள் ளுறுசூ லைதவிர்த் தருளாய் அலந்தே னடியே னதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
மாசில் வீணையும் மாலை மதியமும் * வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே,
 
 
 
 
 

திரு 9
1.
12
14
3
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் V வெண்ணெய்நல்லூர் பண்-இந்தளம்.
பித்தாபிறை சூடி பெரு மானேயரு ளாளா வெத்தான் மற வாதேநினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் அத்தாவுனக் காளாயினி யல்லேனென் லாமே, (டுறையுள்
ஊனுயுயி ராணுயுட லானுயுல காணுய் வானுய்நில ஞணுய்கட லானுய்மலை யானுய் தேனுர்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட் ஆணுயுனக் காளாயினி யல்லேனென லாமே. [டுறையுள்
'
திருவாசகம்-திருச்ச தகம்
மெய்தான் அரும்பி விதிர்விதித்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர்ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றியென் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடி கெடினும் நள்ளேன் நினதடி யாரொடல்லால் நர கம்புகினும் எள்ளேன் திருவருளாலே யிருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.
ந் வாணுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோணுகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டும் வாணுகி நின்ருயை என்சொல்லி வாழ்த்துவனே.

Page 6
5
6
17
18
19
4
அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன் தரியேன் நான் ஆமாறென் சாவேன் நான் சாவேனே.
திருமாழிகைத்தேவர் திருவிசைப்பா
பண்-பஞ்சமம். ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆட்ரிங்கு s9ቌd5 வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
சேந்தனுர் திருப்பல்லாண்டு புரந்தரன் மாலயன் பூசலிட்டோலமிட்டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பவென் உட்யிராண்ட கோவினுக் கென்செய
(வல்ல மென்றும்
கரந்துங் கரவாத கற்பக ஞகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறு
(துமே
பெரியபுராணம்
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொது நடிம் போற்றி போற்றி
பட்டினத்துப்பிள்ளையார் பாடல் பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால் இறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ அறமார் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம் மறவா திருமண மேயது காண்நல் மருந்துனக்கே
 

20
21.
22
5
தாயுமான சுவாமிகள் பாடல்
பண்ணேன் உனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்ச வாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
பனிமலர் எடுக்க மனமும் , நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கவெனின்
நானும் என் னுளம் நிற்றி நீ நான்கும் பிடும்போ தரைக்கும் பிட்ாதலால் நான் பூசை செய்யன் முறையோ விண்ணேவிண் ஆதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே QUAN மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேய"வித்தின் முளையே கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே
கதிக்கான மோன வடிவே கருதரிய சிற் சபையில் ஆனந்த நிர்த்தமிடும்
கருணு கரக் கடவுளே.
திருமந்திரம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்ததடி போற்றுகின் றேனே.
திருப்புகழ் இறவாமற் பிறவாமல் எனையாள் சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனே சற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே

Page 7
23
24
25
26
27
28
- திருமுருகாற்றுப்படை உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிருகைக் கோலப்பாவானுேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தி வாழ்வே
கந்தரலங்காரம் குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த விப்பாச நெஞ்சனை யீடேற்றுவாயிரு நான்கு வெற்பும் அப்பாதி யாய்விழ மேருங் குலுங்கவிண் ணுருமுய்யச்
சப்பாணி கொட்டியகையாறிரண்டுடைச் சண்முகனே
Vi ്യ് .ܕ
ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியான சகோ தரனே.
முருகர் அந்தாதி அஞ்ச லென் றேயருளாய்முரு காவடியார்க் கருளும் சஞ்சலந் தீர்க்குந் தயாநிதி யேநின் தகைமை கண்டு கஞ்சனும் மாலுமுக் கண்ணனும் ஆயிரங் கண்ணனுமே கெஞ்சி நின்ருருன் மலரடிக்கேகிரு பாகரனே.
அபிராமியந்தாதி மனிதருந் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதருஞ் சேவடிக் கோமள மேகொன்றை வார்சடைமேல் பனிதருந் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரு நீயு மென் புந்தியெந் நாளும் பொருந்துகவே
சகலகலாவல்லி மாலை வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொலோ சகமேழு மளித் (து) உண்டானுறங்க வொழித்தான் பித்தாகவுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
 

29
30
7
இராமலிங்க சுவாமிகள் பாடல் ஒருமையுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பாய்மை பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண்ணுசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள்
வளர் தவமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ
மணி சண்முகத் தெய்வமணியே.
திருமால் வழிபாடு செடியாய வல்வினைகள் தீர்க்குந் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.
( பெருமாள் திருமொழி )
திருச்சிற்றம் பலம்

Page 8
2
8
திங்கள் காலே மாலை விநாயகக் கடவுள் திருச்சிற்றம்பலம்
உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனும் தறிநிறுவி
ീ', உறுதியாகத் தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப்படுத்தித்
தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு
。 கருணை யென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரும்
க டீர்ப்பாம்
சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருவாலவாய் பண்-காந்தாரம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் றிரு நீறே. முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவவினியது நீறு , சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே
ஆற்றல் லடல் விடை யேறு மாலவா யான் றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம் பந்தன் றேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருக்கோலக்கா, பண்தக்கராகம்
5
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளாய் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங் கீழ் உடையுங் கொண்ட உருவ மென்கொலோ
 

(9 |
o திருநாவுக்கரசர் தேவாரம் .. .. திருவொற்றியூர். பண்-கொல்லி
6 ஓம்பினேன் கூட்டைவாளா வுள்ளத் தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழைபோலக் கருதிற்றே முகக்கமாட்டேன் பாம்பின் வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேன யோம்பிநீ யுய்யக்கொள்ளா யொற்றியூ ருடைய்கோவே.
திருக்கொண்டீச்சுரம் 7 வரைகிலேன் புலன்களைந்தும் வரைகிலாப் றவிமாயப்
புரையிலே யடக்கிநின்று புறப்படும் வழியுங்காணேன் அரையிலே மிளிருநாகத் தண்ணலே யஞ்சலென்னுய் திரையுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே
திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தம் 8 கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலியூரானே. திருமறைக்காடு திருக்குறுந்தொகை 9 பண்ணி னேர்மொழி யாழுமை பங்கரோ
மண்ணி னுர்வலஞ் செய்மறைக் காடரோ கண்ணி னுலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. 10 விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினுல் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
சுந்தரமூர்த்திநாயனுர் தேவாரம்
திருமழபாடி பண்-நட்டராகம் 11 பொன்னுர் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து
மின்னுர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுண் மாணிக்கமே யன்னே யுன்னை யல்லா லினியாரை நினைக்கேனே.

Page 9
12
13
14
15
10
கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் ருளே வந்தடைந்தேன் றலைவாவென யேன்றுகொணி மாளா நாளருளும் மழபாடியுண் மாணிக்கமே யாளா நின்னையல்லா லினியாரை நினைக்கேனே.
திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்
கடையவனே னைக் கருணையி
ற் கலந் தாண்டு கொண்ட விடையவனேவிட் டிடுதிகண்
டாய்விறல் வேங்கையின்ருேல் உடையவனே மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே சடையவ ைே தளர்ந் தேன் எம்
பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே.
குதுகுதுப் பின்றிநின் றென்குறிப்
பேசெய்து நின் குறிப்பில் விது விதுப்பேனை விடுதிகண்
டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப்
பழத்தின் மனங்கணிவித் தெதிர்வ தெப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே.
திருச்சதகம்
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி.
 

18
19
11
சங்கரா போற்றி மற்ருேர்
சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி
மால்விடை யூர்தி போற்றி இங்கிவாழ் வாற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட்டேனே.
பாடவேண்டும் நான் போற்றி நின்னையே
பாடிநைந்துநைந் துருகி நெக்குநெக்கு ". ஆடவேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடுநின் கழற் போது நாயினேன் கூடவேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடுநீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளுபோற்றிநின் மெய்யர் மெய்யனே.
சேந்தனுர் திருவிசைப்பா ஏகநாயகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிரில் போகநாயகனைப் புயல்வணர்க் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா யூர்ந்த மேகநாயகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோவில் யோகநாயகனை அன்றிமற் ருென்றும்
உண்ட்ென உணர்கிலேன் நானே.
சேந்தனுர் திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க, அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கருள் புரிந்து,பின்னைப்பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. " .

Page 10
12
பெரிய புராணம் 20 கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம்செய் கின்றழங்கழல் போற்றி போற்றி
பட்டினத்துப் பிள்ளையார் பாடல் 21 நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்தி நிழலருகே
இருப்பார் திருவுளம் எப்படியோவின்னம் என்னை அன்னைக் கருப்பா சயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய திருப்பாத மேதருமோ தெரியாது சிவன் செயலே.
தாயுமானவர் பாடல் 22 எத்தனை விதங்கள்தான் கற்கினுங் கேட்கினுமென்
இதயமு மொடுங்க வில்லை யானெனு மகந்தைதான் எள்ளளவும் மாறவில்லை
யாதினும் அபிமானமென் சித்தமிசை குடிகொண்ட தீகையோ டிரக்கமென்
சென் மத்து நானறிகிலேன் சீலமொடு தவவிரதம் ஒருகனவில் ஆயினுந்
தெரிசனஞ் செய்து மறியேன் பொய்த்தமொழி அல்லால் மருந்துக்கும் மெய்மொழி
புகன்றிடேன் பிறர்கேட்கவே போதிப்பதல்லாது சும்மா இருந்தருள்
பொருந்திடாப் பேதை நானே அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா அவனிமிசை உண்டோ சொலாய் அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே,
திருமந்திரம் 28 அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்திலர் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே.

24
25
26
27
13
திருப்புகழ்
இருவினையின் மதி மயங்கித் திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள் நினைந்திட் டுனர்வாலே பரவுதரிசனையை என்றற் கருள்வாயே தெரிதமிழை உதவு சங்கப் ". புலவோனே சிவனருளும் முருக செம்பொற் கழலோனே கருணை நெறி புரியும் அன்பர்க் கெளியோனே கனகசபை மருவுகந்தப் பெருமாளே
திருமுருகாற்றுப்படை
குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய்-என்றும் இளையாய் அழகியாய் ஏறுTர்ந்தான் ஏறே
உளையாய் என் உள்ளத் துறை
கந்த ர ல ங் கா ரம் பொக்கக் குடிலிற் புகுதா வகைப்புண்ட ரீகத்தினுஞ் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட் டெறிபட்டுதிரங்குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே
கந்த ர னு பூதி
வளைபட் டகைமா தொடுமக் களெனும் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் துளைபட் டுருவத் தொடு வே லவனே
முருகர் அந்தாதி கரனே முதலிய ராவண னுர்குலங் கட்டறுத்துத் திரமே வியதிரு மான் மருகாநின் திருவடியென் சிரமேற் பதித்துச் சிவோகத்தி லேநின்று சிந்தை செய்ய வரமே அருள்முரு காமயிலேறிய மாணிக்கமே

Page 11
29
30
3.
32
14
அபிராமியந்தாதி
ததியுறு மத்திற் சுழலுமென் னுவி தளர்விலதோர் கதியுறு வண்ணங் கருதுகண் டாய்கம லா லயனும் மதியுறு வேணி மகிழ்நனும்மாலும் வணங்கியென்றும் துதியுறு சேவடி யாய்சிந்து ரானன சுந்தரியே
ச. கல கலா வல்லி மா லே
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித் தருள்வாய் பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே சகல கலா வல்லியே
இராமலிங்க சுவாமிகள் பாடல்
நான்படும் பாடுசிவனே உலகர் நவிலும் பஞ்சு தான்படுமோ சொல்லத் தான் படுமோ எண்ணத்தான் படுமோ கான்படு கண்ணியில் மான்படுமாறு கலங்கிநின்றேன் ஏன்படுகின்றனை யென்றிரங்கா யென்னிலென் செய்வனே
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தாற்
பணிகின்றேன் பதியே நின்னைக் கூட்டுவித்தாற் கூடுகின்றேன் குழைவித்தாற்
குழைகின்றேன் குறித்த வூனை ஊட்டுவித்தா லுண்கின்றே னுறக்குவித்தா
லுறங்கு கின்றே னுறங்காதென்றும் ஆட்டுவித்தா லாடுகின்றேன் அந்தோவிச்
சிறியேனுலாவ தென்னே

15
திருமால் வழிபாடு
33 தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாங் குழுமித்
திருப்புகழ்கள் பலவும் பாடி ஆராத மனக் கழிப்போடழுத கண்ணிர் மழை சோர
நினைந்துருகி ஏத்தி நாளும் சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்கத்து
அவரணையில் பள்ளி கொள்ளும் போராழி அம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தில்
என்று கொலோ புரளும் நாளே
(பெருமாள் திருமொழி)
34 ஊனின் மேய ஆவிநீ உறக்கமோ டுணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ வானினுேடும் மண்ணும் நீ வளங்கடற் பயனும் நீ யானும் நீய தன்றியெம் பிரானும் நீ இராமனே
(திருமழிசை ஆழ்வார்)
திருச் சிற்றம் பலம்

Page 12
16
செவ்வாய் காலே மாலை விநாயகக் கடவுள் திருச்சிற்றம்பலம்
1 தத்துவா தீதபோற்றி தத்துவப் பொருளே போற்றி
தத்துவ முதலே போற்றி தத்துவச் சொரூப போற்றி தத்துவத் தியன்ற தாத்து விகங்களு மானுய் போற்றி தத்துவ வறிவுக் கெட்டாத் தயங்கு பேரறிவே போற்றி
* சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம் வலஞ்சுழி பண்-நட்டராகம் 2 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னை நீபுரி நல்வினைப்பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னுகாவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடுமதனுலே
திருவாரூர் பண்-காந்தாரம் 8 தந்தையார் போயினுர் தாயாரும் போயினர்
தாமும் போவார் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்ருர்
கொண்டுபோவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா
லேழை நெஞ்சே அந்தணுரூர்தொழு துய்யலா மையல் கொண்
டஞ்ச நெஞ்சே
திருப்பழனம் பண்-தக்கேசி
4 வேதமோதி வெண்ணுரல்பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியின் உரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவம்தீர்ப்பார் பழனநகராரே
 
 
 

17
திருஆலவாய் - பண்-கெளசிகம் 5 குற்றம்நீ குணங்கள் நீ கூடலால வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்ப மென்றிவை முற்றும்நீ புகழ்ந்துமுன் உரைப்பதென்மு கம்மனே
திருவெண்காடு பண்-சீகாமரம் 6 கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே
திருநாவுக்கரசர் தேவாரம் நமச்சிவாயப்பதிகம் பண்-காந்தாரபஞ்சமம் 7 சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயவே
திருக்கடம்பூர் ༣༽། திருக்குறுந்தொகை 8 நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன் அடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே திருவதிகைவிரட்டானம் பண்-கொல்லி 9 சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என் நாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய் அலந்தேன் அடியேன் அதி கைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
2

Page 13
18
10 கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம் , ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதிறந்து விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண் அழித்திலே னயர்த்துப் போனேன் அதிகைவிரட்ட நீரே (டேன்
பொது தனித்திருத்தாண்டகம் 11 ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே
யடக்குவித்தா லாரொருவ ரடங்கா தாரே ஒட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே
யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே
பணிவித்தா லாரொருவர் பணியா தாரே காட்டுவித்தா லாரொருவர் காணு தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே
சுந்தர மூர்த்தி நாயனுர் தேவாரம் திருக்கூடலையாற்றுார் பண்-புறநீர்மை 12 வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூட்லை யாற்றுாரில் அடிகளில் வழிபோந்த அதிசயம் அறியேனே.
திருக்கோளிலி பண் . நட்டாராகம்
13 நீள நினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே - கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை யெம்பெருமானவை யட்டித்தரப்பணியே.
திருஆரூர் பண்-செந்துருத்தி
14 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத்தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

19
19
திருவாசகம் நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புணக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே.
உற்ருரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்ருரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
யான்ஏதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணுவான் மதித்துமிரேன் தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமானெம் மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே.
உடையாள் உன்தன் நடுவிருக்கும்உடையாள்நடுவுள்நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானுல் அடியேன்உன் அடியார்நடுவு விருக்கு மருளைப்புரி யாய்பொன் அம்பலத்தெம் முடியாமுதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே
பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன் அணியார் பாதம் கொடுத்தி அதுவும் அரிதென்ருல் திணியார் மூங்கிலனையேன் வினையைப் பொடியாக்கி தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா
இவ்வரும் பிறவிப் பெளவநிர் நீந்தும்
ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த ஐவரும் பகையே ஆர்துணை என்ருல்
அஞ்சலென் றருள் செய்வான் கோயில் கைவரும் பழனங் குழைந்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலஞ் செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே

Page 14
21.
22
23
24
25
20
சேந்தனுர் திருப்பல்லாண்டு சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
எங்குந் திசை திசையன் கூவிக்க வந்துநெருங்கிக்கு ழாங்குழா
மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்க முதையென் ஆர்வத் தனத்தி
அப்பனை யொப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
GUrfluu புராணம் உலகெலா முணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
பட்டினத்துப் பிள்ளையார் பாடல் வாளான் மகவரிந் தூட்டவல் லேனல்லன் மாது சொன்ன் சூளால் இளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து நாளாறிற் கண்ணிடந் தப்பவல் லேனல்லன் நானினிச்சென்று ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே
தாயுமான சுவாமிகள் பாடல் சிவன்செய லாலேயாதும் வருமெனத் தேறேன் நாளும் , அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளம் கவர்ந்து கொண்டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட்டையோ பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவியேனே
திருமந்திரம் - தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயினும் நல்லன் நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ் சடையோனே.
 
 

26
27
28
29
: 30
21
திருப்புகழ் சந்ததம் பந்தந் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டு கொண்டன்புற் றிடுவேனுே தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
திருமுருகாற்றுப்படை வீரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்புங் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.
கந்தரலங்காரம் இராப்பகலற்ற விடங்காட்டி யானிருந் தேதுதிக்க குராப்புனை தண்டையஞ் தாளருளாய்கரி கூப்பிட்டநாள் கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேலநிருத சங்கார பயங்கரனே
கந்தரனுபூதி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
திருப்போரூர் சந்நிதிமுறை
நோயுற்றடராமல் நொந்துமணம் வாடாமல்
கிடவாமற் பாவியேன் - காயத்தை ஓர் நெ
ாடிக்குள் நீக்கியெனை யொண்போரூர் ஐயாநின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து,

Page 15
31
32
33
34
35
22
அபிராமியந்தாதி
நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என்றும் வணங்குவ துன்மலர்த் தாளெழு தாமறையின் ஒன்று மரும்பொரு ளேயருளேயுமை யேயிமயத்(து) அன்றும் பிறந்தவ ளேயழி யாமுத்தி ஆனந்தமே.
சகல கலாவல்லி மாலே அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன்னருட் கடலில் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோவுளங்கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாபமயிலே சகலகலாவல்லியே.
இராமலிங்க சுவாமிகள்
LITTL6)
தடித்தவோர் மகனைத் தந்தையீண்டடித்தால்
தாயுடனணப்பள் தாயடித்தாற்
பிடித்தொரு தந்தையணைப்பன் இங்கெனக்குப்
பேசிய தந்தையுந் தாயும்
பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித
நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மையப்பா இனி ஆற்றேன்
திருமால் வழிபாடு அத்தணுகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்தொவ்வாத பல்பிறப்பொழிந்து நம்மை ஆட்கொள்வான் முத்தனர் முகுந்தனர் புகுந்து நம்முன் மேவினுர் எத்தினர் இடர்க்கடல் கிடத்தியேழை நெஞ்சமே
(திருமழிசை ஆழ்வார்) s
பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அர
திருச்சிற்றம் பலம்
ங்கமா நகருளானே
( திருப்பாளுழ்வார் )
 

23
புதன் காலை மாலே
விநாயகக் கடவுள் திருச்சிற்றம்பலம் 1 உடலினுக் குயிரேபோல வுயிர்க்குயி ராணுய் போற்றி யுடலுயிர்க் கறிவுநல்கி யுடலினைக் கழிப்பாய் போற்றி யுடலுயிரெனப்பி னிங்கா வொற்றுமைப் பொருளே போற்றி
யுடனுறை யுயிர்க்கு மெட்டா வொளிபெருஞ்சோதி போற்றி சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம் திருவலிவலம் பண்-வியாழக்குறிஞ்சி
2 பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகணபதி வர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
பொது பண்-கெளசிகம்
3 வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
திருஆலவாய் , . . பண்-கொல்லி
4 மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல் வாயொரு பாலனிங்கிவ னென்றுநீபரி வெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர் கட்கெளி யேனலேன் திருஆலவாயரன் நிற்கவே
கோயில் - - பண்-குறிஞ்சி
5 கற்ருங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்ருர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்ரு வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்ரு நின் ருரைப் பற்ரு பாவமே,

Page 16
திருமறைக்காடு
24
பண்-இத்தளம் திருக்கதவு மூடப் பாடியது.
}
சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா இதுநன் கிறைவந் தருள் செய்க வெனக்குன் கதவந் திறக் காப்புக்கொள்ளுங் கருத்தாமே
திருநாவுக்கரசர் தேவாரம்
திருஆரூர் திருத்தாண்டகம்
7
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்கு புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூராஎன்றென்றே அலரு நில்லே
கோயில் திருவிருத்தம்
8
குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
பால் வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
- காணப் பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த
மானிலத்தே
} தனித்திருநேரிசை காயமே கோயிலாகக் கடிமன மடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை ஈசனுர்க்குப் போற்றவிக் காட்டினுேமே
 

25.
திருவையாறு பண்காந்தாரம் 10 மாதர்ப்பிறைக் கண்ணியான
மலையான் மகளோடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவாரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது காதன் மடப் பிடி யோடும்
களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்.
தனித்திருத்தாண்டகம் 11 அத்தாவுன் டிையேனை யன்பாலார்த்தா
யருணுேக்கிற் றீர்த்த நீ ராட்டிக் கொண்டா யெத்தனையு மரிய நீ யெளியை யானு
யெனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயே ஞயேன்
பிழைத்தனைக ளெத்தனையும் பொறுத்தாயன்றே யித்தனையும் மெம்பரமோ வைய வையோ
வெம்பெருமான் றிருக் கருணை யிருந்த வாறே
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருப்பாண்டிக்கொடுமுடி பண்-பழம்பஞ்சுரம் 12 மற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப்
பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப் பிற
வாத தன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழுதேத்ததுஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடு முடி நற்றவா வுனை நான் மறக்கினும்
சொல்லு நாநமச்சி வாயவே.

Page 17
26
திருப்புகலூர் பண்-கொல்லி 18 தம்மையே புகழ்ந் திச்சை பேசினும் -
சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலும் ஆம் al அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்(கு)
யாதும் ஐயுற வில் லையே.
திருவாசகம் 14 யானே பொய்யென் நெஞ்சும் பொய்யென் அன்பும் பொய்
ஆணுல் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும். மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
-
15 மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறை யுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.
. கோயில் திருப்பதிகம் ή ܐ ܐ ܢ ܐ ܐ ܕ ܬ 16 இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத்(து) எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலாற் பிறிது மற்றின்மை சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்ரும்
திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றி ஒன்றில்லை
ஆர் உன்னை அறிய கிற்பாரே.
 
 

17
18
19
20
27 )
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதோர் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஆருற வெனக்கிங் காரயலுள்ளார்
ஆனந்தம் ஆக்குமென் சோதி
செத்திலாப் பத்து
புலையனேனையும் பொருளென நினைந்துன்
அருள் புரிந்தனை புரிதலுங் களித்துத் தலேயினுல் நடந்தேன் விடைப்பாகா
சங்கரா எண்ணில் வானவர்க் கெல்லாம் நிலையனே அலை நீர் விடமுண்ட
த்தனே அடையார் புரமெரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணியாய்
திருப்பெருந் துறை மேவிய சிவனே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா என்னை உன் பாதபங்கயம் பணிவித் (
என்பெலாம் உருக நீ வெளிவந்(து) உன்னை என்பால் வைத்(து) எங்கும் எஞ்ஞான்றும்
ழிவற நிறைந்த ஒண் சுடரே y, ; முன்னை என் பாசம் முழுவதும் அகல
முகத்தலை அகத்(து) அமர்ந்(து) எனக்கே கன்னலும் பாலும் தேனுமார் அமுதும்
கனியுமாய் இனிமை யாயினையே.
சேந்தனுர் திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற் கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள்

Page 18
21.
22
23
24
28
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம் தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மன்னவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்ருர் வீதிவிடங்கப் பெருமான்
பட்டினத்துப்பிள்ளையார் பாடல் முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினுல்
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடும்
அப்போது கண்கலக்கப்படவும் அமைத் தாயையனே எப்போது காணவல் லேன்திருக் காளத்தி யீச்சுரனே,
தாயுமான சுவாமிகள் பாடல்
உய்யும் படிக்குன் திருக்கருணை
ஒன்றைக் கொடுத்தால் உடையாய் பாழ்ம் பொய்யும் அவாவும் அழுக்காறும்
புடைபட் டோடும் நன்னெறியாம் மெய்யும் அறிவும் பெறும் பேறும்
விளங்கும் எனக்குன் அடியார்பால் செய்யும் பணியுங் கைகூடும்
சிந்தைத் துயரும் தீர்ந்திடுமே.
... ¶ அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினுல் அப்பரி சீசன் அருள்பெற லாமே.
 
 
 
 

25
26
27
28
29 மாணிக்கமொத்த மலர்த்தாள் தலைமிசை வைத்துநித்தம்
A 29
திருப்புகழ்
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் . , * துழலாதே உயர்கருணை புரியு மின்பக் ”、 கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் : தருவாயே மயில் தகர்த லிடையரந்தத் திணைகாவல் வனசகுற மகளை வந்தித் தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வுே கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.
திருமுருகாற்றுப்படை
இன்ன மொருகால் என திடும்பைக் குன்றுக்கும் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா.முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்.
கந்தரலங் காரம் நீயான ஞானவினுேதந் தனையென்று நீயருள்வாய் கேயான வேற்கந்தனே செந்திலாய்சித்ர மாதரல்குல். தோயாவுருகிப் பருகிப் பெருகித் துவஞமிந்த மாயா வினுேதமனே துக்கமானது மாய்வதற்கே,
- கந்தரனுபூதி கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனது ஸ் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
முருகர் அந்தாதி
பேணிப்பணிய வகைதெரிந்தாரும் பெயர்க்கரிய, வாணிப்பொன்னேயென தாவியு மியாக்கையு மாக்கமெலாம்
காணிக்கையாகத் தந்தேன் முருகாவெனக் கண்டுகொள்ளே,
I

Page 19
30
3.
32
33
34
30
அபிராமியந்தாதி கண்ணிய துன்புகழ் கற்பதுன்னுமங் கசிந்துபத்தி
பண்ணிய துன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவாய்
நண்ணியதுன்னை நயந்தோரவையத்து நான்முன்செய்த
புண்ணியமே தென்னமே புவி ஏழையும்பூத்தவளே.
சகலகலாவல்லி மாலே
தூங்கும் பனுவற்றுறை தோய்ந்த கல்வியுஞ்சொற்சுவைதோய் வாக்கும்பெருகப் பணித்தருள்வாய் வடநூற் கடலும்
தேக்குஞ்செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந்நாவில் காக்கும் கருணைக்கடலே சகலகலாவல்லியே. (நின்று
இராமலிங்கசுவாமிகள் பாடல் படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேனினிநான், பயப்படவும் மாட்டேனுன்பதத்துணையே பிடித்தேன், விடமாட்டேனேமாந்து விடமாட்டேன் கண்டீர் மெய்மையிது நும்மானைவிளம்பினனும் அடியேன், கெடமாட்டேன் கிளரொலியம்பலத்தாடல் வளரொ லிநும்மல்லால், நடமாட்டேனென்னுளத்தே நான்சாக மாட் டேன், நல்ல திருவருளாலே நான்ருனுனேனே.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே
காணுர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே وه
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 。
என்னரசே யான் புகழும் இசையுமனிந்தருளே.
திருமால் வழிபாடு
வாடினேன் வாடி வருந்தின்ேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோ
டவர்தரும் கலவியே கருதி
馨

31 See Re
ஒடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராயணு வென்னும் நாமம். Y.
(திருமங்கை ஆழ்வார் )
திருச்சிற்றம்பலம்.
வியா ழ ன் கா லே மா லே விநாயகக் கடவுள்
திருச்சிற்றம்பலம்.
1 வேண்டிய அடியார்க்கெல்லாம் விக்கினங்கெடுப்பாய் போற்றி '
வேண்டிவந்தனை செய்யார்க்கு விக்கினங்கொடுப்பாய் போற்றி வேண்டுவார் வேண்டிற்றெல்லாம் விளைத்தருள்விமலபோற்றி மாண்ட துட்டர்களைக் கொல்லு மறமிகுமன்ன போற்றி
சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம் s நமச்சிவாயப்பதிகம் பண்-கெளசிகம்
2 காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
துவார் தமை நன்நெறிக் குய்ப்பது ಕ್ಲಿಲ್ಲಿ: நான்கினு மெய்ப் பொருளாவது நாத நாம நமச்சி வாயவே.
3 கொல்வாரேனுங் குணம்பல தன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாம நமச்சி வாயவே.

Page 20
32
திருவண்ணுமலை பண்-நட்டபாடை
4 உண்ணுமுலை உமையாளொடு முடனுகிய வொருவன் பெண்ணுகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணுர்ந்தன_அருவித்திரள் மழலைமுழ வதிரும் அண்ணுமலை தொழுவார் வினை வழுவாவண்ண மறுமே
திருவண்ணுமலை பண்-தக்கேசி 5 பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் - புகழ்வார் வானுேர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள் செய்தார் தூமா மழைநின்றதிர வெருவித்
தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ் சாரல்
அண்ணுமலையாரே.
பொது பண்-காந்தாரபஞ்சமம்
6 துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடோறும் வஞ்சக மற்றடி வாழ்த்தவந்தகடற்(று) அஞ்சவு தைத்தன வஞ்செ முத்துமே.
... . திருநாவுக்கரசர் தேவாரம் திருஒற்றியூர் திருநேரிசை 7 மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஒடும் போது மதனெனும் பாறை தாக்கி
மறியும் போதறிய வொண்ணு(து) உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே.
 

33
திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தம்
8 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே
வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
மறுமாற்றத் திருத்தாண்டகம் 9 நாமார்க்குங் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற் சங்கவெண் குழை ஓர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச் சேவடிஇணையே குறுகினுேமே.
திருமறைக்காடு திருத்தாண்டகம் 10 தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் க்ண்டாய்
மறைக் காட்டுறையும் மணுளன் ருனே.
தனித் திருத்தாண்டகம் 11 திருநாமம் அஞ்செழுத்து ஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகாற்பேசா ராகில் ஒருகாலும் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன் முன் மலர்பறித்திட்டுண்ணு ராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியிா ராகில்
அளியற்ருர் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ருரே.

Page 21
34
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம்
திருக்கேதீச்சரம், பண்-நட்டபாடை
12 நத்தார்ப்படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானை உரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத்தானே.
18 சுடுவார் பொடி நீறுந் நல்ல துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி யணிந்த கறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
திடமாவுறை கின்ருன்றிருக் கேதீச்சரத்தானே. 14 அங்கம் மொழி யன்னுரவ ரமரர்தொழு தேத்த
வங்கமலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்து பிறைசூடினன் பாலாவியின் கரைமேற் செங்கண்ணர வசைத்தான் திருக் கேதீச்சரத்தானே.
15 கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணுன்
வரியசிறை வண்டி யாழ்செயு மாதோட்டநன் னகருள் பரியதிரை யெறியாவரு பாலாவியின் கரைமேல் தெரியும் மறை வல்லான்றிருக் கேதீச்சரத்தானே.
16 அங்கத்துறு நோய்கள் ளடி யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கம்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத் தானே.
17 வெய்யவினை யாயவடி யார்மேலொழித் தருளி
வையமலி கின்ற கடல் மாதோட்ட நன் னகரில் பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத்தானே.
18 ஊனத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடன் மாதோட்ட நன் னகரில் பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத்தானே.

19
20
21.
22
23.
35
அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து மட்டுண்டுவண் டாலும்பொழின் மாதோட்டநன் னகரில் பட்டவரி நுதலாளொடும் பாலாவியின் கரைமேல் சிட்டன்னமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரில் பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவனெனை யாள்வான் திருக்கேதீச்சரத் தானே
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்டொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத்தானை மறையார்புக மூரன்னடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகெடுவினையே.
திருவாசகம் செத் தி லாப் பத் து
மாயனேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே நாயி னேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சி வாயளன் றுன்னடி பணியாப் பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ சேயன் ஆகிநின் றலறுவ தழகோ
திருப் பெருந்துறை மேவிய சிவனே.
அடைக் கலப் பத்து
வெறுப்பன வேசெய்யும் என்சிறு மையை நின் பெருமையினுற் பொறுப்பவனே அராப் பூண் பவ னேபொங்கு கங்கைசடைச் செறுப்பவ னேநின் திருவருளால்என் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே.

Page 22
24
25
26
27
28
36
வழங்குகின் ருய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன்விக்கினேன்வினையேன் என்விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணிர் பருகத் தந்துய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
ஆ சைப் பத்து எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இல்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானுேர் அறியாமலர்ச்சே வடியானே முத்தா உன் தன் முகவொளி நோக்கிமுறுவல் நகைகான அத்தாசால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.
புணர்ச் சிப் பத் து தாதாய் மூவேழுலகுக்குந் தாயே நாயேன் தனையாண்ட பேதாய்பிறவிப்பிணிக்கோர்மருந்தேபெருந்தேன்பில்களப்போது ஏதாமணியே என்றென்றேத்தி இரவும்பகலும் எழிலார்பாதப்(ம் போதாய்ந்தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணி யைப் புணர்ந்தே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா செங்கணு போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற்றிருந்த
அங்கணு போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி தங்கள் நால் மறைநூல் சகலமுங் கற்ருேர்
சாட்டியக் குடியிருந்தருளும் எங்கள் நாயகனே போற்றியேழ இருக்கை
இறைவனே போற்றியே போற்றி.
சேந்தனுர் திருப்பல்லாண்டு மிண்டு மனத்தவர் போமின்கள் -
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடி குடி
ஈசற் காட் செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் அளவி
லாதோர் ஆனந்த வெள்ளப் பொருள்

29
30
31.
32
37
பண்டும் இன்றும் என்றும் உள்ள
பொரு ளென்றே பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குண மொரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல் A கையொன்று செய்ய விழியொன்று நாட கருத்தொன்றெண்ண பொய்யொன்று வஞ்சக நாவொன்றுபேசப் புலால் கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே.
தாயுமான சுவாமிகள் பாடல்
என்னுடை உயிரே என்னுளத் தறிவே
என்னுடை அன்பெனும் நெறியாய் கன்னல் முக்கனிதேன் கண்டமிர் தென்னக்
கலந்தெனை மேவிடக் கருணை மன்னிய உறவே உன்னைநான் பிரியா
வண்ணமென் மனமெனுங் கருவி தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத் தண்ணருள் வரமது வேண்டும்.
திருமந்திரம் யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

Page 23
33
34
35
36
37
(38
திருப்புகழ் வசன மிக வெற்றி மறவாதே மனது துயராற்றி லுழலாதே இசை பயில் சடாட்ச ரமதாலே இகபர செளபாக்கியம் அருள்வாயே பசு பதி சிவாக்கியம் உணர்வோனே பழனிமலை வீற்ற ருளும்வேலா அசுரர் கிளை மாழ மிகவாட்டி அமரர் சிறை மீட்ட / பெருமானே.
திருமுருகாற்றுப்படை
அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும் முருகா வென் ருேதுவார் முன்.
கந்தரலங்கா ரம் சிந்திக்கிலேனின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கி லேனென்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச் சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்கிலேன் புந்திக்கி லேசமுங்காயக்கி லேசமும் போக்குதற்கே.
கந்தரனுபூதி பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையேன் உழலத் தகுமோ வீரா முதுசூர் படவேல் எறியுஞ் சூரா சுரலோ கதுரந் தரனே,
அவ னு சிப்பத் து வற்ருத பொய்கை வளநாடு கண்டு மலைமேலிருந்த குமரா உற்ரு ரெனக்கு ஒருபேருமில்லை உமையாள்தன்க்கு மகனே முத்தாடை தந்துன் அடியேனை யாளு முருகேசவென்றனுயிரே வித்தாரமாக மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே.

38
39
40
41
42
39
அபிராமியந்தாதி வவ்வியபாகத் திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்குஞ் செவ்வியுமுங்கள் திருமணக் கோலமுஞ் சிந்தையுள்ளே அவ்வியந் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலனென் மேல்வரும் போது வெளிநிற்கவே.
சகலகலாவல்லி மாலே பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும்படி நின் கடைக் கணல்காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பாலமுதந் தெளிக்கும்வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலா வல்லியே.
இராமலிங்க சுவாமிகள் பாடல் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபினில் யானுெருவனன்ருே வகையறியேனிந்த ஏழைபடும் பா டுனக்குத் திருவுளச் சம்மதமோ
இது தகுமோ இது முறையோ இது தருமந்தானே மாழை மணிப்பொது நடஞ்செய் வள்ளால்நா
னுனக்கு மகனலணுே, நீயெனக்கு வாய்த்ததந்தையலையோ கோழை யுலகுயிர்த் துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின்னருளொளியைக் கொடுத்தருளிப்போதே
திருமால் வழிபாடு அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான். -
யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந் தமிழன் நல்லேன் பெரிது.
(பூதத்தாழ்வார்) திருச்சிற்றம்பலம்.
سكستسلسميدO سسسسسسصيد

Page 24
40
வெள் வரி க ம இல மா ஒல
விநாயகக் கடவுள்
திருச்சிற்றம்பலம். தோற்ருமே யுலகனைத்துந் தோற்றியளி யாதளித்துப் பாற்ருமே பாற்றியிடும் பண்ணவ நின் பதம் போற்றி தேற்ருமே யுயிரனைத்துந் தேற்றிமல மாயைகன்ம நீற்ருமே நீற்றியரு னின்மலநின் பதம் போற்றி.
சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருக்கேதீச்சரப் பதிகம் பண் - நட்டராகம்
விருது குன்றமா மேருவில் நாணர
வா அனல் எரியம்பாய் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலனி மாதோட்டம் கருத நின்ற கேதீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே.
பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தரு நட்டம் ஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர் ஈடமாவது இருங்கடற் கரையினி
லெழில் திகழ் மாதோட்டம் கேடிலாதகே தீச்சரம் தொழுதெழக்
கெடுமிடர் வினைதானே.
பெண்ணுேர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
அகந்தொறு மிடு பிச்சைக்

41
குண்ண லாவதோ ரிச்சையி னுழல்பவர்
உயர் தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சர மடைபவர்க்
கருவினை'யடையாவே.
பொடி கொள் மேனியர் புலியத ளரையினர்
விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே.
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
அடைந்தவர்க் கருளிய வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடன் மாதோட்டத் தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி அல்ல லாசறுத் தரனடியிணை தொழும்
அன்பரா மடியாரே.
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளியற் குடி வாழ்க்கை
வாழையம் பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீண் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே.
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினி லுயிர்வாழ்க்கை

Page 25
10
11
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ை
42
கண்ட நாதனுர் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
நடமிடு மாதோட்டம் தொண்டர் நாள்தொறுந் துதிசெய அருள்செய்கே
தீச்சர மதுதானே.
தென்னி லங்கையர் குலபதி மலைநவிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனுர் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமாமணிகளும்
பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு மடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே.
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி மேவி நாடிநின் னடியினை காண்கிலா
வித்தக மென்னுகும் மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தாட்டநன் னகர் மன்னித் தேவி தன்ணுெடுந்திருந்துகே தீச்சரத்
திருந்த எம் பெருமானே.
புத்தராய் சில புனை துகி லுடையவர்
புறனுரைச் சமண் ஆதர் " எத்தராகி நின்றுண்பவ ரியம்பிய
ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரமடைமின்னே.
 
 

43
12 மாடெலாம் மண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத்
தாடலேறுடை அண்ணல்கே தீச்சரத்
தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞான சம்பந்தன் சொல்
நாவின் றெழு பாமாலைப்
பாடலாயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே.
திரு நா வுக் க ர சர் தே வாரம் பூரீகயிலாயம். திருத்தாண்டகம் 13 வேற்ருகி விண்ணுகி நின்ருய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்ருகி யுள்ளே யொளித்தாய் போற்றி
ஒவாத சத்தத் தொலியே போற்றி ஆற்ருகி யங்கே யமர்ந்தாய் போற்றி
ஆறங்க நால்வேத மானுய் போற்றி காற்ருகி யெங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
14 பண்ணின் இசையாகி நின்ருய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்
எண்ணும் எழுத்துஞ் சொல்லானுய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணு நிலனுந் தீ யானுய் போற்றி
மேலவர்க்கு மேலாகி நின்ருய் போற்றி
கண்ணின் மணியாகி நின்ருய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
திருவாரூர் 15 மலையாள் மடந்தை மணுளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி நிலையாக என்நெஞ்சில் நின்ருய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி

Page 26
44
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானுய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
16 சங்கரனே நின் பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின் பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின் பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனுேடு மாலுங் காணு
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திரு மூலட் டானனே போற்றி போற்றி
பூரீ கயிலாயம்
17 மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கண் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானுய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
O சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருவொற்றியூர் 18 கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டியே பலர்க் குங்களை கண்ணே யங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
யத்தா வென்னிட ரார்க்கெடுத் துரைக்கேன் சங்கு மிப்பியுஞ் சலஞ்சல முரல
வயிரமுத்தொடு பொன்மணி வரன்றி ஓங்கு மாகட லோதம்வந் துலவு
மொற்றி யூரெனு மூருறை வான்ே.
பண்தக்கேசி
s

45
திருநள்ளாறு 19 தஞ்ச மென்றுதன் ருளது வடைந்த
பாலன் மேல் வந்த காலனை யுருள நெஞ்சி லோருதை கொண்டபி ரானை
னைப்பவர் மனம் நீங்ககில் லானை விஞ்ஞை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுண் மிக்கெழுந் தெரிய நஞ்ச முண்டநள் ளாறனை யமுதை
நாயி னேன் மறந் தென்னினைக் கேனே.
மாணிக்கவாசகர் திருவாசகம் வா ழ 1ா ப் பத் து 20 பாரொடு விண்ணுய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை ஆணுல் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என் றருள் புரியாயே.
பழுதில் தொல் புகழாள் பங்க நீ அல்லால்
பற்று நான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே தொழுவனுே பிறரைத் துதிப்பனுே எனக்கோர் துணையென நினைவனுே சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய்
வருக வென்றருள் புரியாயே.
அ டு ட ப த து சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணிற்ருய்
பங்கயத் தயனுமா லறியா

Page 27
23
24
25
26
46
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியகீர்
ஆதியே அடியேன் ஆதரித்(து) அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
முத்தனே முதல்வா முக்கண்ணு முனிவா
மொட்டரு மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத் தருள் செய்யும் சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசிர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
கு  ைழ த் த ப த் து
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மார்க் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே.
கண்டராதித்தர் - திருவிசைப்பா பாரோர் முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக் காட்டுகந்தான் வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச் சீரான் மல்குதில்லைச் செம்பொன் அம்பலத் தாடுகின்ற காரார் மிடற்றெங் கண்டனுரைக் காண்பது மென்று கொலோ
சேரமான் பெருமான் - பொன்வண்ணத்தந்தாதி முனியேன் முருகலர் கொன்றையினுயென்னை மூப்பொழித்த கனியே கழலடி யல்லாற் களைகள்மற் ருென்று மிலேன்
இனியே யிருந்தவஞ் செய்யேன் திருந்தவஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.
 

28
29
47
திருவிளையாடற் புராணம் யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந்துடைப்பாய் போற்றி
யாவையும் ஆணுய் போற்றி யாவையும் அல்லாய் போற்றி யாவையும் அறிந்தாய் போற்றி யாவையும் மறந்தாய் போற்றி
யாவையும் புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி
பட்டினத்துப்பிள்ளையார் பாடல் பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப் பேதங் குணமற்றுப் பேராசை தானற்றும் பின் முனற்றுக் காதங் கரணங்களுமற்ற ஆனந்தக் காட்சியிலே ஏதங் களைந்திருப் பேன் இறைவா கச்சியேகம்பனே.
தாயுமான சுவாமிகள் பாடல் எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ
எளியனேற் கிதுவரை அமைத்த(து) அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை
அறிவிலி அறிகிலேன் அந்தோ சித்தமும் வாக்குந் தேகமும் நினவே
சென்மமும் இனியெனுல் ஆற்ரு
வைத்திடிங் கென்னை நின் னடிக் குடியா
மறைமுடி இருந்த வான்பொருளே.
திருமந்திரம்
திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே,
திருப்புகழ் பத்தியால் யானுனைப் பலகாலம் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தணு மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே

Page 28
32
33
34
35
36
48
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் gliflourg T
வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே
திருமுருகாற்றுப்படை
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.
கந்தரலங்காரம்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்ரு
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செய் கோடன் மயூரமுமே.
கந்தரனுபூதி
இல்லே யெனுமா யையிலிட்டனை நீ பொல்லேன் அறியா மைபொறுத் திலையே மல்லே புரிபன் னிருவா குவிலென் சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே.
திருப்போரூர் சன்னிதி முறை
உள்ளத் தழுக்கினை யெல்லாமகற்றி யுனதுபத வள்ளக் கமலத் தெழுநற வானந்த வாரியிலே கள்ளச் சிறியனை வைத்தாள வேண்டுங் கழனிமடை அள்ளத் திறந்திடும் வாளைகள் போரி யயிலவனே.
அபிராமியந்தாதி
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த படியே மறையின் பரிமள மேபனி மாலிமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற வம்மே அடியேன் இறந்திங் கினிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.

37
38
39
40
49
சகலகலாவல்லி மாலே
சொல் விற்பனமு மவதானமுங் கல்விசொல்ல வல்ல நல் வித்தையுந் தந்தடிமை கொள்வாய் நளினுசனஞ் சேர் செல்விக் கரித்ென்ருெரு காலமுஞ் சிதையாமை நல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே சகல கலா வல்லியே.
இராமலிங்க சுவாமிகள் பாடல்
உன்னை மறந்திடுவனுே மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்னுணையிது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாயெனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தா அன்னையினுந் தயவுடையாய் நீ மறந்தாயெனினும் (ய்
அகிலமெலாமளித்திடும் நின்னருள் மறவாதென்றே இன்னுமிகக் களித்திங்கே யிருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி யெனக்கு விரைந்தருளே.
மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கை நிலையறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மன மடங்கும் திறத்தினி லோரிடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனுே இருந்த திசை சொலவறியேன் எங்ங்னநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்ன செய்வேன் ஏதுமறிந்திலனே.
திருமால் வழிபாடு
புண்ணுர் உடற்பிறவி போதுமெனக்கும் முனக்கும் எண்ணு திருந்த திணிப்போதும் - கண்ணு குழற்காளாய் தென்னரங்கக் கோயிலாய் நின்பொன் கழற் காளாய் நின்றேனைக்கா.
(திருவரங்கக்கலம்பகம்) திருச் சி ற் றம் பல ம்

Page 29
50
F5ðf - æsir?húð Idst?að விநாயகக் கடவுள் திருச்சிற்றம்பலம்
1 பாசு வறிவிற் பசு வறிவிற் பற்றற் கரிய பரன் யாவன்
பாச வறிவும் பசு வறிவும் பயிலப் பணிக்கு மரன் யாவன் பாச வறிவும் பசு வறிவும் பாற்றி மேலா மறிவான தேச னெவனக் கணபதியைத் திகழச் சரண மடைகின்ருேம்
சிவபெருமான் திருஞானசம்பந்தர் தேவாரம் திரு ஆலவாய். பண்-புறநீர்மை 2 மங்கையர்க் கரசி வளவர் கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணி செய்து நாள்தொறும் பரவப் பொங்க்ழ லுருவன் பூதநாயகனுல் வேதமும் பொருள்களு மருளி அங்கயற் கண்ணி தன்ணுெடு மமர்ந்த
ஆலவாயாவது மிதுவே
பொது பண்-பியந்தைக்காந்தாரம் 3 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கைமுடிமே லணிந் தென்
உளமே புகுந்த அதனுல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
திருக்கழுமலம் பண்-கொல்லி
4 மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

51
கண்ணினல் லஃதுறுங் கழுமலவள நகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே
பொது திருநீலகண்டம் பண்-கெளசிகம்
5
விண்ணுல காள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடையீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெரு திருநீலகண்டம்
இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் நின் கழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.
இதுவோ வெமை யாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல் அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை யரனே.
திருக்கோணேஸ்வரம் பண்-புறநீர்மை
7
நிரை கழலரவம் சிலம்பொலி யலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரை கெழு மகளோர் பாகமாய் புணர்ந்த வடிவினர் கொடி யணி விடையர் கரை கொழு சந்தும் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஒதம் நித்திலம் கொழிக்கும் கோணமா மலையமர்ந் தாரே
தாயினும் நல்ல தலைவர் என்றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண் பலர் வேடம்
நோயிலும் பிணியுந் தொழிலர் பால் நீக்கி
நுழை தரு நுலினர் ஞாலம்

Page 30
பொது திருவங்கமாலை பண்-சாதாரி
9
O
12
13
14
15
16
17
52 கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலை அமர்ந்தாரே
திருநாவுக்கரசர் தேவாரம்
தலையே நீ வணங்காய், தலை மாலை தலைக் கணிந்து தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ, கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை வெண்டோள் வீசிநின் ருடும்பிரான் றன்னைக், கண்காள் காண்
(மின்களோ,
செவிகாள் கேண்மின்களோ, சிவனெம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்றிற மெப்போதும் செவிகாள் கேண்மி
[ன்களோ,
மூக்கே நீ முரலாய், முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணுளனை மூக்கே நீ முரலாய்,
வாயே வாழ்த்து கண்டாய், மதயானை யுரிபோர்த்துப் (டாய்
பேய் வாழ்காட்டகத்தாடும் பிரான்றன்னை, வாயே வாழ்த்து கண்
நெஞ்சே நீ நினையாய், நிமிர்புன் சடைநின் மலனை மஞ்சாடும் மலை மங்கை மணுளனை, நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித்தொழிர், கடிமாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக், கைகாள் கூப்பித்தொழிர்
ஆக்கை யாற்பயனென், அரன் கோயில் வலம் வந்து |ன் பூக்கையாலாட்டிப் போற்றியென்னுத விவ், வாக்கையாற்பயனெ
கால்களாற் பயனென், கறைக்கண்ட னுறை கோயில் கோலக்கோபுரக் கோகரணஞ் சூழாக், கால்களாற் பயனென்
 
 

53
18 உற்ரு ராருளரோ, உயிர்கொண்டு போம்பொழுது
குற்ரு லத்துறை கூத்தனல் லானமக், குற்ருராருளரோ
19 இறுமாந்திருப்பன்கொலோ, வீசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமானேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங், கிறுமாந் திருப்பன் (கொலோ
20 தேடிக்கண்டு கொண்டேன், திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணுத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டு (கொண்டேன்
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருவொற்றியூர் பண்தக்கேசி 21 அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவு நான்படப் பாலதொன் ருணுல் பிழுக்கை வாரியும் பால் கொள்வ ரடிகேள்
பிழைப்ப ஞகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெயரல்லால்
மற்று நானறி யேன் மறு மாற்றம் ஒழிக்க வென்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனு மூருறை வானே
திருப்புன்கூர் பண் - தக்கேசி 22 நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்
நாவினுக் கரைய ஞளைப்போ வானுங் கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்கினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன் பொற்றி ரண்மணிக் கமலங்கண் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூருளானே.

Page 31
54 மாணிக்கவாசகர் திருவாசகம்
பிடித்தபத்து
28 உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே ,
செல்வமே சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
24 அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
25 பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
சென் னிப் பத்து
26 சித்தமேபுகுந் தெம்மை ஆட்கொண்டு
தீவினை கெடுத் துய்யலாம்
 

28
29
30
55
பத்தி தந்துதன் பொற் கழற்கனே
பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும்
அப்புறத் தெமை வைத்திடும் மத்தன் மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.
ஆன ங் த மாலை
தாயாய் முலையைத் தருவானே
தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனே
நம்பி இனித்தான் நல்குதியே தாயே என்றுன் தாளடைந்தேன்
தயா நீ என்பால் இல்லையே நாயேன் அடிமை உடனுக
ஆண்டாய் நான் தான் வேண்டாவோ,
திருவாலியமுதனுர் திருவிசைப்பா கூத்தானை வானவர்தங் கொழுந்தைக் கொழுந்தாயெழுந்த மூத்தனை மூவுருவின்முதலை முதலாகி நின்ற ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லையம்பலத்துள் ஏத்த நின்ருடுகின்ற வெம்பிரானடி சேர்வன்கொலோ,
சேரமான் பெருமான் பொன்வண்ணத்தந்தாதி பொய்யாம் நரகம்புகினும் துறக்கினும் போந்து புக்கிங்(கு) உய்யா வுடம் பிணுேடூர்வ நடப்ப பறப்ப வென்று நையா விளியினும் மாநிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்ருன் அடிமறவா வரம் வேண்டுவனே.
திருவிளையாடற் புராணம் சரண மங்கையோர் பங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கலமாகிய தனிமுதல் சரணஞ் சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
சரண மும்பர்கள் நாயக பசுபதி சரணம்.

Page 32
56
பட்டினத்துப்பிள்ளேயார் பாடல்
31 பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும்
பொருந்திய குணங்களோர் மூன்றும்
நாதமுங் கடந்த வெளியிலே நீயும்
நானுமாய் நிற்கும் நாளுளதோ
வாதமுஞ் சமய பேதமுங் கடந்த
மனுேலய வின்ப சாகரனே
ஏதுமொன் றறியேன் யாதுநின் செயலே
இறைவனே ஏக நாயகனே. ,、
தாயுமான சுவாமிகள் பாடல் -
32 கருணைமொழி சிறிதில்லேன் ஈதல் இல்லேன்
கண்ணிர் கம்பலையென்றன் கருத்துக் கேற்க ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை ஆளும்
ஒருவாவுன் அடிமைநான் ஒருத்தனுக்கோ இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும்
இடர் செய்யுமைம் புலனுங்கா மாதியாறும் வரவரவு மேழைக்கோ ரெட்டதான
மதத்தொடும் வந்தெதிர்ந்தநவ வடிவமன்றே.
திருமந்திரம்
33 எண்ணுயிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணுர் அமுதனைக் கண்டறி வாரில்லை உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற் கண்ணுடி போலக் கலந்து நின்ருனே. -
திருப்புகழ் 34 கருப்பத் தூறிப் பிறவாதே கணக்கப் பாடுற் 冕。 றுழலாதே திருப் பொற் பாதத் தநுபூதி
சிறக்கப் பாவித் தருள்வாயே
 

35
36
37
t 38
57
பரப் பற்ருருக் குரியோனே பரத்தப் பாலுக் 鼩 கணியோனே திருக்கைச் சேவற் கொடியோனே செகத்திற் சோதிப் பெருமாளே.
திருமுருகாற்றுப்படை
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி.
கந்தரலங்காரம்
காவிக் கமலக் கழலுடன் சேர்ந்தெனைக் காத்தருள் வாய் தூவிக்குலமயில் வாகனனே துணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொ ம்பிலாத தனிக் கொடிபோல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.
கந்தரனுபூதி கரவா கியகல் வியுளார் கடைசென்(று) இரவா வகைமெய்ப் பொருளிகுவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோ கதயா பரனே.
குறுங்கழி நெடில் விருத்தம் மகவினைத் தாதை யினிமைகள் காட்டி
மடித்தலத் திருத்துதல் போல அகமதி லின்பு காட்டிநின் தாட்கீழ்
அடியனை அசைவற விருத்தாய் ககனவா னுேர்களெனும் பயிர் தழைப்பக் கடிய சூர்க் களைகளைந் தருள்வோய் உகலரு வளங்கள் திகழ்திருப் போரூர்
உத்தமா சத்தி வேலவனே.

Page 33
39
40
41
42
43
58
அபிராமியந்தாதி நன்றே வருகினுந் தீதே விளைகினும் நானறிவ தொன்றேயு மில்லை யுனக்கே பரமெனக் குள்ளவெல்லாம் அன்றே உனதென் றளித்துவிட்டே னழியாதகுணக் குன்றே அருட்கடலேயிம வான்பெற்ற கோமளமே.
சகலகலாவல்லி மா?ல
மண் கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்ட ளவிற்பணியச்செய்வாய் படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல்கோடி யுண்டேனும் விளம்பினுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ சகலகலா வல்லியே.
இராமலிங்க சுவாமிகள் பாடல்
மாற்றறியாத செழும்பசும் பொன்னே
மாணிக்கமே சுடர்வண்ணக் கொழுந்தே கூற்றறியாத பெருந்தவ ருள்ளக்
கோயிலிருந்த குணப்பெருங் குன்றே வேற்றறியாத சிற்றம்பலக் கனியே
விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே சாற்றறி யாதவென் சாற்றுங் களித்தாய்
தனிநடராச வென் சற்குரு மணியே.
திருமால் வழிபாடு சுடர்மா மணிநிறத் தூயவனே தொடர் இன்பதுன்புக்கு இடமாம் சனனம் ஒழித்தெனை ஆள் இகலே விளைத்த தடமார் கராவிற் பயந்துள்ள ம் நைந்துனைத் தஞ்சமென்ற கடமா அளித்த திருவல்லிக் கேணிக் கருமுகிலே.
(திருவல்லிக்கேணி அந்தாதி)
வேதமும் வேதம் விளம்புமெய்ப் பொருளும்
அப்பொருள் விதங்களும் பஞ்ச
பூதமும் புலனும் புலன்களின் பயனும்
அப்பயன் பொலிவுற நுகரும்
I
 

59
ஞாதமும் உலகம் பட்ைத்தளித் தழித்து
ஞானமாய் அகிலமும் நிறைவுற்று ஆதியும் நடுவும் முடிவுமாய் நின்ற
ஆதியான் அடியிணை பணிவாம். -
(வில்லி-பாரதம்) திருச் சிற்றம்பலம் சிவனடி அணையும் அன்பர் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
சித்தர் நினைவு சைவ சமயம் காலத்துக்குக் காலம் தோன்றிய சித்தர்களாலே மேலும் வளர்ச்சியடைந்த தெனலாம். அவர்கள் பாடல்கள் ஆழ்ந்த கருத்துடையவை. சாதாரண மக்கள் அப்பாடல்களின் உள்ளுறையை உணர்வது கடினம். உதாரணமாக இப்பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.
“வெங்காயம் சுக்காணுல்வெந்தயத்தாலாவதென்ன? இங்கார் சும ந்திருப்பார் இச்சரக்கை? மங்காத, சீரகத்தைத் தந்திரேல் வேண்டேன் பெருங்காயம், ஏரகத்துச் செட்டியாரே! (வெம்மையான எம்உடம்பு உயிரினின்று உலர்ந்து சுக்குப்போல்பின மாகிவிட்டால் அயபஸ்மத்தை உண்டதஞல்ஆகும்பயன் என்ன? இத் தகைய பயனற்ற பாண்டத்தை இங்கே யார் சுமந்து கொண்டிருப் பார்கள்? என்றும் அழியாச்சிறப்புடைய இடமாகிய பேரின்பவிட்டை அளித்தீரானல் இந்தப் பெரிய உடம்பைநான் விரும்பேன். திருவே ரகத்திலுள்ள முருகப்பெருமானே.)
தென்னுடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச் சிற்றம்பலம் முற்றும்
06

Page 34
ALA WEST
ஸ்டான்காட் பிரிண்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு, கொழும்பு-11.
 
 
 
 
 

能

Page 35