கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பகவான் ஶ்ரீ சத்தியசாயி பாபாவின் அருளுரைகள்

Page 1
56). ரீ சத்தியசா ജീബ്ര
1990
பிருந்தாவனத்தில்
வினா
 

ரைகள்
°|
- ஆண்டு
கோடை மழை
- იმ ფეt |

Page 2
|-
 
 
 
 
 
 
 


Page 3

பகவான்
றி சத்தியசாயி பாபாவின் அருளுரைகள்
- 1990 ம் ஆண்டு பிருந்தாவனத்தில் கோடை மழை
வினா - விடை

Page 4

முதல் பதிப்பு: நவம்பர் 1996
வெளியீடு:
தமிழாக்கம்:
அச்சிட்டோர்:
2000 பிரதிகள்
மறீ சத்திய சாயி அமைப்புக் குழு நீலங்கா (பிரதேசம் XV) 22, பார்ண்ஸ் பிளேஸ், கொழும்பு 7,
மறீலங்கா.
மறீமதி குமாரசாமி
பிறிண்ட் கிறாபிக்ஸ், இல. 4, நெல்சன் பிளேஸ், கொழும்பு 6. தொலைபேசி: 596312

Page 5
2
3.
 

உள்ளடக்கம்
இந்து கலாசாரத்தின் மகிமை
உடம்பினைத் தூய்மைப் படுத்திக் கொள்
அசையும் கோயில்
புலன்களை அடக்குதல்
தெய்வீகத்திற்கு வழி
கடிவாள வாரைப் பிடித்துக் கொள்ளவும்
சிந்தையின் சலனங்கள்
தேரோட்டியாகிய புத்தி
ஆணவமும் பற்றும்
மூன்று குணங்கள்
உன்னை நீ அறிவாய்
தன்னைப் பற்றிய அறிவு
சுதந்திரம் என்றால் என்ன?
அனுட்டித்தலும் விதிகளும்
மனிதனின் ஏற்ற வழி
வேத அறிவு
பின்னிணைப்பு ஒன்று
பின்னிணைப்பு இரண்டு
பின்னிணைப்பு மூன்று
18
32
41
53
66
82
93
101
114
126
137
148
158
168
176
186
199

Page 6
--
•ቁኳ.
“ሳ
ه:" و ...
* 'r
- as a
|- . . .
· || |-
----- |- |-|- |-|- |-| | ---- |-|-
|- |-- .|- |-
|· - |- |-|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( བོད་༽
1297
K. K. Kayilainatha F.
TEACESER. . YANAYIR NVT * ; Y. MALLAKAM
முகவுரை
பகவான் றிசத்திய சாயிபாபாவின் அருளுரைகளை அடியார்கள் கற்று, உணர்ந்து, நடைமுறைப் படுத்ததற்குச் சாத்தியமாக இருப்பதே இந்நாலின் நோக்கமாகும்.
பகவான் பாபாவின் தெய்வீக அருளுரைகள் இன்றைய யுகம்கலி யுகத்தின் சுருதிகளாகும்.
கோடை பயிற்சி நெறி மாணவருக்கு அருளுரை வழங்கும்போது பாகவான் பாபா கூறியதாவது "மாணவர்களே! இப்பதினைந்து நாட்களும் உங்களுக்கு கற்பிக்கப்பட்டத புனிதமான வேதாந்தத்தின் சாராம்சமாகும். உங்களுக்குத் தரப்பட்டத சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசம் ஆகியவற்றைக் கடைந்த எடுத்த அமிர்தமாகும்.”
பகவான் மேலும் கூறியதாவது "மாணவர்களே! நீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள். இவ்வுலகில் பல கோடி மக்கள் இருந்த போதிலும், நீங்கள் மட்டும், ஒரு சில நூற்றுக்கணக்கானோர் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தின் பயனைப் பெறக்கூடியதாக இருப்பத உங்களது அதி உன்னத அதிஷ்ட மல்லவா?”
ஆகவே, பகவானின் தெய்வீக அருளுரைகளை அனுசரிப்பதன் மூலம் ஆத்மீகப்பாதையிலே முன்னேறிச் செல்வது பகவானின் அடியார்களாகிய
எமது பெரும் கடமையாகும்.
வாசிப்பதற்கு வசதி கருதி இந்நூல் கல்யாணி, சண்முகப்பிரியா ஆகிய எழுத்துகளில் 12p t.அளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதிப்பாளர்.

Page 7

பகவான்
றி சத்தியசாயி பாபாவின்
தாமரை மலர்ப் பாதங்களுக்கு தாழ்மையான அர்ப்பணங்கள்.

Page 8
-
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 9

முதலாம் அத்தியாயம்
sigu GTFgit LDDID
I. உண்மை (சத்தியம்) என்றால் என்ன? அது மனிதனுக்கு மிக
அவசியமாக விளங்குவதை விளக்கவும்?
சத்தியமே ஞானம் (அறிவு) அது எல்லையற்றது. என்று முளது. அதுவே பிரம்மம். இந்த முழுப்பிரபஞ்சமுமே சத்தியத்திலிருந்து தோன்றியது. மீண்டும் அது அதனுள்ளேயே ஒடுங்கிவிடும். இப்பூமியிலிருக்கும் ஒவ்வொருவனுக்கும் சத்தியம் தான் உண்மையில் காணக்கூடிய இறைவன்.
வேதாந்த தத்துவத்தின்படி சத்தியமும், உண்மையான என்றுமுள்ள பிரம்மமும் ஒன்றாகும். சத்தியம், ஞானம், அனந்தம், பிரம்மம் என்பதையே வேதாந்தம் பிரகடனப்படுத்தி நிற்கிறத.
2. இளம் வயதினராய இருபாலாரும் சத்தியத்தையும் நேர்மையையும் அணுகி அவற்றைச் சாதகம் பண்ணுதல் (நடைமுறைப் பருத்தல்) ஏன் அவசியமா கின்றது?
சத்தியத்திற்கும் நேர்மைக்கும் முன்பாக, பெளதிக, அரசியல், பணவலு, படைப்பலம் ஆகிய சகல விதமான சக்திகள் அனைத்தம் தலைகுனியும். ஆகவே இளையவராகிய இருபாலாரும் சத்தியப்பாதையை அணுகி அதனைப் பின்பற்றுதல் வேண்டும். அவர்கள் உலக நன்மைக்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் சத்தியத்தையும் நேர்மையையும் பெற்றுக்கொள்ளும் வாரிசு ஆகின்றான். (உரிமையாளன்) சத்தியம், நேர்மை, நீதி, ஆகியவற்றை நாம் ஒவ்வொருவரும் போற்றுதல் வேண்டும்.
3. ஒரு மனிதனுடைய வாழ்வில் பிரதானமாகத் தேவைப்பருவது
எது? அதனைப் பெற்றுக்கொள்ளத் தடையாயிருப்பவை எவை?
மனிதனது வாழ்வில் மிகவும் பிரதானமாகத் தேவைப்படுவது

Page 10
இந்த கலாசாரத்தின் மகிமை 2
மனிதத்தன்மையாகும்.மனிதன் எத்தகைய பதவியையோ, அதிகாரத்தையோ பெற்றிருந்தாலும் மனித விழுமியங்களை ஒரு போதும் அலட்சியம் செய்யக்கூடாது.
விஞ்ஞானமும் தொழில் நட்பமும் இன்று மனிதத்தன்மையை மதிப்பிறக்கம் செய்துவிட்டன. இதனால் இளைய பரம்பரையினைச் சார்ந்த இளம் ஆண்களும் பெண்களும் தமது உண்மையான தெய்வீக இயல்பினைக் கண்டுகொள்ள முடியாதிருக்கின்றத.
இன்றைய பரம்பரையினரான எமது இளம் ஆண் பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் இலட்சியம் தன்வயமாக்கப்பட்டுள்ளது.
சுயநலமின்மை, தெய்வீகம், மனித மேம்பாடு ஆகிய ஆத்மீக விழுமியங்கள், உலகியல் விருத்தியினாலே அரிக்கப்பட்டுவிட்டன. மிக விரைவாக விருத்தியடைந்துவரும் விஞ்ஞான தொழில் நுட்பச் சூறாவழியானது எமத சமுதாயத்திலே தேவையற்ற மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அவனுக்கு மிகவும் தேவைப்படுவனவாகிய ஒழுக்க, நீதி, விழுமியங்கள் அனைத்தும் வேருடன் கிளர்ந்துவிடப்பட்டுள்ளத. ஆடம்பரம், ஆணவம், மிதமிஞ்சிய பயனற்ற பேச்சுக்கள் ஆகிய பைசாசத் தன்மைகள் இன்று சமுதாயத்தில் பேய்க் கூத்த ஆடுகின்றன. முழு மனித இனத்திற்குமே ஒரு ஆத்மீக ஆசிரியனாக இருந்த இந்த நாடு, இன்று அநீதி, ஒழுங்கீனம், உண்மைக்குக் கீழ்ப்படியாமை ஆகிய தீய சக்திகளது விளையாட்டு மைதான மாகிவிட்டத. சத்தியத்தையும் நேர்மையையும் மக்கள் முற்றாகவே அலட்சியம் பண்ணுகிறார்கள். லெளகீக, சுய முன்னேற்றம் தான் வாழ்வின் அரிய இலட்சியம் என எண்ணுகிறார்கள். சத்தியத்தையும் நேர்மையையும் கற்றறிந் தோரே கை விட்டுவிட்டுத் தாம் சமுதாயத்தைப் பாதுகாக்கின்றோமெனக் கூறி அதனைச் சீர்கெட வைக்கின்றனர்.
இன்று மாணவர் சத்தியத்தையும், நேர்மையையும் பாதுகாத்தல் வேண்டும். இவை முறையே நாட்டு மக்களைப் பாதுகாக்கும்.
4. மாணவர்களுக்கு முறையான கல்வியாக அமைய வேண்டியது
шпć95І?
மாணவர்களுக்கு ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை அளிக்கும் அதேவேளை, அவர்களுக்கு அவர்களுள்ளே மறைந்திருக்கும் தெய்வீகத்தையும் வெளிக்கொணரக்கூடிய இயல்புகளும் உள்ளதாய் அமைந்திருப்பதே முறையான கல்வியாகும்.

முதலாம் அத்தியாயம் 3
சாதாரண கல்வியினால் மட்டும் மாணவர் அறிவுடையராய் விளங்க முடியாது. கல்வியானது வாழ்க்கைக்கு வருவாயினைத் தேடிக் கொள்வதிலும் நல்ல வாழ்வு முறைகளை ஊட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
புலமைத் திறனிலும் பார்க்க நன் நடத்தையே மிகவும் தேவைப்படுவதும் பெறுமதியானதுமாகும். நிலைபேறான சத்தியத்தை அடைவதற்கு தேவைப்படும் சீரிய பண்பைப் பெற்றுக்கொள்வதற்கு யாரும் அக்கறை கொள்வதில்லை. தோன்றி மறையும் முகிற்கடட்டத்தை ஒத்த செல்வம், அதிகாரம், பேரும் புகழும் இவற்றையே ஈட்டிக்கொள்ள மக்கள் பெரிதும் முயல்கின்றனர். செல்வத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதிலும் பார்க்க, சீரிய பண்பின் உயர்வாளராக வருவதற்கே மாணவர்கள் பெரிதும் முயற்சித்தல் வேண்டும்.
5. இளையவர்களது சிந்தையின் சீரழிவிற்குக் காரணமாக இருப்பது
6Tg5, 2
இந்தியக் கலாசாரத்தை நம்பி அனுசரித்த, அதனைப் பிரபல்யப்படுத்தும் இலட்சியத் தலைவர்கள் போதாமையே இன்று இளையவர்களது சிந்தையின் சீரழிவிற்குக் காரணமாகும்.
இளைஞர்கள் மிக்க ஆர்வத்துடன் பின்பற்றக்கூடிய முறையில் இலட்சிய புருஷர்களாக மூத்தோரும், தலைவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் இருந்து வழிகாட்டுகிறார்களில்லை. மூத்தவர்களால் கைக் கொள்ளப்படும் தீயனவற்றையே ஒரு எடுத்துக் காட்டாகக் கொண்டு இளைய சமுதாயத்தினர் பின்பற்றி வாழ்கின்றனர்.
ஐம்பத ஆண்டுகளுக்கு முன்னர், தேசியத் தலைவர்களும் ஆசிரியர்களும், கற்றறிந்தவர்களும் மிகவும் சிறந்த இலட்சியங்களைக் கைக் கொண்டிருந்தனர். அவர்களத எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் யாவற்றிலும் இசைவு காணப்பட்டத. எவ்வாறாகினும், இலட்சியவாதிகளான ஆசிரியர்கள், தலைவர்கள், இன்று இல்லாமை மிகவும் வருந்தத்தக்க தொரு விடயமாகின்றது. இவர்கள் ஒன்று சொல்வார்கள் வேறொன்றைச் செய்வார்கள். இதனால் இளைஞர்களது நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்.
தமது உயிர்மூச்சாக விளங்கும் பழமைவாய்ந்த கலாசாரத்தை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. ஏனைய நாடுகளைப் பார்த்து அவர்களைப்போல் தாமும் பாவனை செய்து கொள்ளலான வியாதியானது எமது நாட்டிற்கு மிகவும் பாரதாரமான சீர் கேடுகளை ஏற்படுத்துகிறது.
பாவனை செய்தல் மனித இயல்பு ~ சிருஷ்டித்தல் தெய்வீகம்.

Page 11
இந்து கலாசாரத்தின் மகிமை 4
6. நான்கு புருடார்த்தங்கள் எவை? அவற்றை அனுசரிப்பதனால்
பெறக்கூடிய நன்மைகள் யாவை ?
நான்கு புருடார்த்தங்களும் வாழ்வின் நான்கு குறிக்கோள்கள் ஆகும். அவையாவன தர்மம், அர்த்தம், காமம், மோட்சம். தர்மம் என்பது சரியான ஒழுக்கம். அர்த்தம் என்பது செல்வம். காமம் என்பது ஆசைகள். மோட்சம் வீடுபேறாகும்.
சமூகத்தில் ஒழுக்கத்தைப் பேணிக்காத்தவர்கள் எனப் பேரும் புகழும் ஈட்டிக்கொண்டு எமது மூதாதையர்கள் வாழ்ந்ததற்குக் காரணம்தான் என்ன? அவர்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் நற்பண்புகளைக் கடைப்பிடித்த தனாலேயே இத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்றார்கள். அவர்கள் நான்கு புருடார்த்தங்களையும் கடைப்பிடித்தார்கள். அத்துடன் அவற்றினால் பெறப்பட்ட நன்மைகளையும், இன்பங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்த கொண்டார்கள்.
இன்று மக்கள் தர்மத்தையும் (நன்நடத்தை) மோட்சத்தையும் (வீடு பேறு) கடைப்பிடிக்க மறந்து அர்த்தம் (செல்வத்தையும்) காமம் (ஆசைகளையும்)என்பவற்றைப் பெற மிக்க ஆவல் கொண்டுள்ளனர். இத சமூகத்தில், பொதுவாக இனத்திலும் ஒழுங்கீனத்தையும் பாதகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளது. இன்று நாட்டில் காணப்படுகின்ற அமைதியின்மைக்கும், பாதகாப்பின்மைக்கும் மூல காரணம் மக்கள் சத்தியத்தையும், நேர்மையையும் புறக்கணித்தமையேயாகும்.
தர்மம் செய்வதற்காகவே மக்கள் செல்வத்தைப் பெற முயல வேண்டும். அவர்கள் ஆசைப்படவேண்டியது மோட்சத்தை அடைதலையே யாகும்.
7 "சம்ஸ்கிருதி” என்ற பதத்தின் பொருள் என்ன?
மனித உபயோகத்திற்கு ஏற்றதாக ஆவதற்கு முன்னம் எல்லாப் பொருள்களும் தாய்மையடைந்து வரும் பல்வேறு நிலைகளைக் குறிக்கின்றது. உதாரணமாக;~
(1) மனித உபயோகத்திற்கு ஏற்றதாக ஆவதற்குமுன்னம்
நெல்லானது பல்வேறுபட்ட செயற்பாடுகளினூடாக செல்கிறது.
(அ) நெல்மணிகள் கதிரிலிருந்து வேறாக்கப்படுகிறது.
(ஆ) நெல்லை நன்மணி வேறு சப்பி வேறாகப் பிரித்தெடுக்க
புடைக்கப்படுகிறத.
(இ) உமியைப் போக்கிக் கொள்ள குற்றுதல் நடைபெறும்.

முதலாம் அத்தியாயம் 5
(ஈ) கல் அல்லத புல்லுக் கொட்டை இராதவாறு தரப்புரவு
செய்யப்படுகிறத. (உ) அரிசியை நீரில் கழுவி உண்பதற்கு உகந்ததாக அடுப்பில்
வைத்து அவிக்கப்படுகிறத. இத்தகைய சம்ஸ்கிருதி-தாய்மையாக்கல் ஆனது பொருள்களின் பெறுமானத்தையும் அதிகரிக்கின்றத. நாறுருபாய் பெறுமதிவாய்ந்த ஒரு முடைநெல், உமி நீக்கித்தப்புரவு செய்த மனித உணவிற்கு உகந்ததாகுமிடத்த அதன் பெறுமதி ரூபா 600/- ஆக அதிகரிக்கிறத.
இது போலவே பருத்தி மரத்திலிருந்து பெறப்பட்ட பஞ்சு தணியாவதற்கு முன்னர் பலவகையான மாற்றங்களுக்குட்படுகின்றத.
இவ்வாறாகவே மனிதனும் தான் பிறந்த நிலையிலேயே இருந்து விடாது தன்னுள் இருக்கும் தெய்வீகத்தை வெளிக்கொணர வேண்டும். இதற்குத் தொடர்ச்சியாக அவன் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
8. இளம் மாணவனுக்கு சம்ஸ்கிருதியின் முக்கியத்துவம் என்ன?
கலாசாலைக் கல்வியுடன் மாணவர்கள் அடக்கமுடைமை, பிரித்தறிதல், ஆகிய இயல்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும். இவை அவர்களை ஒரு முழுமைமிக்க ஆளுமையுடையவராக வர உதவும்.
ஒரு விதை, காய்த்தக்குலுங்கும் மரமாகியிருத்தலில் நிறைவு பெறுவதுபோல், ஒரு மாணவனும் இந்த சம்ஸ்காரங்களினூடாக முழுமை நிலையை அடையமுடியும். திருப்தியைப்பெறமுடியும். இந்த சம்ஸ்காரங்கள் - மாற்றங்கள்-அமைதி, பாதுகாப்பு, அன்பு எனும் பயன்களை ஈனும்,
மனிதனிலுள்ள தெய்வீக இயல்புதான் அண்பு. அதனை ஏனைய மனித ஜீவன்கள் மீது மட்டுமல்ல, பறவைகள் மற்றும் வாழும் பிராணிகள் மேலும் செலுத்த வேண்டும்.
குறுகிய மனப் பாண்மையை நீக்கிப் பரந்த மனப் பாண்மையை விருத்தி செய்யுமிடத்தில்தான் மனிதனில் உண்மையான சம்ஸ்கிருதி அமைந்திருக்கிறது. இத ஒருவரிடத்த தனிமகிழ்ச்சியையும், சமூகத்திற்கும் அத்தகைய விளைவினை அளிக்கின்றது.
இவ்விதம் மனித இயல்பானது தெய்வீகமாக சுத்தப்படுத் தப்படுகின்றது.

Page 12
இந்து கலாசாரத்தின் மகிமை (s
9. இந்திய கலாசாரத்தின் களஞ்சியமாக விளங்குபவை எவை?
அவை எமக்கு உபதேசிப்பது எதனை?
இந்திய கலாசாரத்தின் களஞ்சியமாக விளங்குபவை வேதங்கள் ஆகும். எந்த ஒரு ஜீவன்மீதும் வெறுப்போ அன்றித் தீமையையோ கொள்ளலாகாது என்று அவை பிரகடனப்படுத்துகின்றன.
வேதங்கள் எமக்கு உபதேசிப்பது யாதெனில்
உண்மை பேசு, நேர்மையைக் கடைப்பிடி என்பதாகும்.
10. வேதங்கள் உபதேசித்தனவற்றை மக்கள் கைக்கொள்ளு
கின்றார்களா?
தர்ரதிஷ்டவசமாக, இன்று, மக்கள் உண்மை பேசுவதில்லை. அவர்கள் நேர்மைபற்றிப் பேசுவார்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வதில்லை.
இன்றைய உலகில் மனிதன் ஒவ்வொரு சொல்லிலும் உண்மையைத் தியாகம் செய்கிறான். ஒவ்வொரு செயலிலும் நேர்மையை கைவிடுகிறான்.
அன்பு வீழ்ச்சியடைந்த போகின்றது. சாதி சமயம் இவற்றின் மீதான வெறுப்பு வளர்ச்சியடைகின்றது. குறுகியமனப்பான்மையும் சுயநலமும் உச்சநிலையில் தாண்டவமாடுகின்றன. பாவத்திற்கு அஞ்சுவதையும், இறைவன் மீது அன்பையும், சமூகத்தில் ஒழுக்கத்தையும், மக்கள் மறந்துவிட்டனர்.
மக்களிடம் மானுடஉடம்பு இருக்கின்றது. ஆனால் அவை தன்னளவில் இனங்காணமுடியாத நிலையிலும் (பிரித்தறியும் இயல்பு) கட்டுப்பாடற்றதமாகவும் இருக்கின்றன. ஆகவே இத்தகைய புரிந்துணர்வு இல்லாதோரால் உலகிற்கு எதுவித நன்மையுமில்லை. இனங்காணலும் கட்டுப்பாடும் தான் மனிதனின் உண்மையான குண இயல்புகள்.
தாம் உரித்தாகியுள்ள நாட்டு இனத்தின் மீது மாணவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்கள் உலக நன்மையைப் பேணிக்காக்க வேண்டும். அவர்கள் எல்லோரதும் சந்தோஷத்திற்காகவும் இறைவனை வேண்டுதல் வேண்டும்.
11. தர்மம் என்றால் என்ன? அதன் பிரதான தன்மையை விளக்குக?
தர்மம் அல்லது நேர்மை என்பது, எண்ணம், சொல்

முதலாம் அத்தியாயம் 7
செயல், மூன்றினிடையேயான இசைவு ஆகும். இது மனிதனினுடைய சகல துறையினையும் தாய்மைப்படுத்த வல்லது.
இசைவிண் மையாலும் , திரிகரணங்களின் (மூன்று செயற்பாட்டுக் கரணங்கள்) தாய்மையற்ற நிலையாலும் இன்று தர்மம் வீழ்ச்சி நிலையை அடைகின்றது.
எச்சந்தர்ப்பத்திலும் சத்தியத்தையும் தர்மத்தையும் மனிதன் கைவிட லாகாது என உபநிடதங்கள் பகருகின்றன. சத்தியம் நேர்மை இவை இரண்டினையும் கைக்கொண்ட உயர்ந்த எடுத்துக்காட்டாக அரிச்சந்திர மகாராஜன் விளங்குகின்றான்.
தர்மத்தை அநுசரிப்பதன் மூலம் அதனை நாம் பாதகாத்துக் கொள்வோமேயானால், தர்மம் முறையே எங்களைப் பாதுகாக்கும்.
12 சத்தியத்தையும் தர்மத்தையும் கைக்கொள்வதன் பிரதான
நோக்கத்தை விபரிக்கவும்?
வெற்றி பெற முயல்பவன் சத்தியத்தையும் தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும். சத்தியம் மட்டும்தான் வெல்லக்கூடியத. சத்தியத்தைவிட மேலான தர்மமோ சமயமோ இல்லை. சத்தியத்தை நம்பி உள்ளது தர்மம். சத்தியமும் தர்மமும் ஒன்றையொன்று நம்பியிருப்பவை. அவை பிரிக்கமுடியாதவை.
ஒருவர் தான் சொன்ன சொல்லிலிருந்தும் பிறழ்வதைப் போன்ற மகாபாவம் வேறொன்றுமில்லை என பகவந்தம் விளக்குகிறது. சத்தியத்தின் பாதை மிகமுக்கியம்வாய்ந்தது. சத்தியமே தெய்வீகக் கோட்பாடு என்பதை முற்றாக நம்பி நாம் அனைவரும் அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
சத்தியம் நேர்மைபற்றிய கல்வியே உண்மையான கல்வி. இக்கல்வியானது மனிதனுக்கு இறவாமையை நல்குகிறது.
நேர்மையுள்ள உயர்குணங்களைப் பெற்றவர்களிடமிருந்து சத்தியத்தையும் தர்மத்தையும் பிரிக்கமுடியாதது.
முடிவில்லாத சத்தியத்தினை ஆத்மா என்றும் கூறப்படுகிறது. எல்லா ஜீவிகளினதும் உட்கிடக்கையாக இருப்பது ஆத்மாவே. அது மட்டுமே மாற்றமடையாது இருப்பதாகும்.
13. மாணவர்கள் தமது கல்வியைத் தொடருமிடத்து சிந்தையில்
வைத்திருக்க வேண்டிய நோக்கங்கள் யாவை ?

Page 13
இந்து கலாசாரத்தின் மகிமை 8
மனிதனுக்கு இறவாவாழ்வினைக் கொருப்பதே உண்மையான கல்வி என்பதை மாணவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். உயர் கல்வியினால் பெறப்படுகின்ற தராதரங்கள் தோன்றி மறையும் தன்மையையும், கவர்ச்சியையும் கொண்டவை. எமது உடம்பே நிரந்தரமற்றது. ஆனால் சிந்தையில் பதிந்த சுவடுகள், எமது சம்ஸ்காரங்கள் எம்முடன் நிரந்தரமாக இருப்பவையாகும்.
மாணவர்கள் அன்னத்திற்காக (உணவுக்காக) மட்டும் வாழுக்கூடாது. அவர்கள் இலட்சியங்களுக்காக வாழ வேண்டும். இலட்சியங்கள் மேலானதும் என்று முளதானவையுமாகும். இலட்சியங் களையுடைய ஒருவன் பலரையும் மேம்படுத்தக் கூடியவனாவான்.
ஒரு இலட்சிய வாழ்வு வாழ்வதற்கு மாணவரிடம்நாட்டுப்பற்று, ஆத்மாமீதானபற்று இருப்பதுடன் அவர்களது பெற்றோர்மீதும் அன்பும் மதிப்பும் இருக்கவேண்டும்.
மாணவர்கள் தமது தாய்நாட்டைச் சிறுமையாக எண்ணி அத பிரயோசனமற்றதெனக் கொண்டு வேற்று நாடுகளுக்குப் போகக்கூடாது. கர்மத்திற்கும், யோகத்திற்கும், தியாகத்திற்கும், உரிய நாடு இந்தியா, மாணவர்கள் தமது தாய் நாட்டினது கலாசாரப் பாரம்பரியத்தை உணர்ந்து அதனைப் பேணிக்காத்தல் அவசியம். -
மாணவர்கள் அவர்தம் பண்டைய கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் இன்றைய உலகின் தேவைகளுக்கு ஏற்ப இசைவுபடுத்திக் கொள்ள அறிந்திருக்க வேண்டும். சத்தியம், நேர்மைவழி ஆகியவற்றால் ஆளப்படும் வாழ்க்கைநெறியில் வாழவேண்டும். உயர் நிலையும் ஆதிக்கமும் முக்கியமானவையல்ல. அவை தோன்றி மறையும் முகிற்கூட்டம் போன்றவை.
பிரம்மம், ஆத்மா இவற்றின் இயல்புகளை மாணவர் அறிந்திருக்க வேண்டும்.
மனித வாழ்வை நிறைவுறச் செய்வதற்கு இதுவே இராஜரீதியான வழியாகும்.
மாணவர்கள் ஆத்மா ("தான்") என்பதில் நம்பிக்கை கொண்டு அதனை வளர்த்தல் வேண்டும்.அய்போது எதனையும் பெற்றுக் கொள்ளலாம்.தெய்வ அருள் இன்றி ஒருவர் எதையுமே ஈட்டிக்கொள்ள இயலாது என்பதை மாணவர் நினைவில் வைத்திருக்க வேண்டும். தெய்வ அருளைப் பெறுவதற்கு பக்தியே அத்தியாவசியம் தேவைப்பரு வதாகும்.

இரண்டாம் அத்தியாயம்
உடம்பினைத் தூய்மைப் படுத்திக் கொள்.
1. மனிதனால் அணியப்பட்டிருக்கும் ஆடைகள் யாவை?
1. உடம்பு, 2. புலன்கள், 3. சிந்தை, 4. அறிவு
இந்த ஆடைகளை முறையாக உபயோகிப்பதற்கு அவை ஒவ்வொன்றினதும் இயல்பினையும் பிரதான தன்மையையும் பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியம்.
2. உடம்பிற்குக் கொருக்கப்பட்டுள்ள பல்வேறு பெயர்கள் யாவை?
ஏன் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உடம்பானது நாங்கள் அணியும் ஒரு ஆடை அதனை எவ்விதம் அணிந்து கொள்வது, முறையாக எவ்வாறு உபயோகித்து நல்ல பலனைப்பெற்றுக் கொள்ளலாம் என்று அறிந்திருந்தால் தான் நாம் அதனிடம்மிருந்து பெறக்கூடிய உச்ச நன்மைகளை அடையலாம்.
உடம்பிற்குக் கொடுக்கப்படும் பெயர்கள் அதன் பலவகைப்பட்ட தொழிற்பாடுகளை விளக்குகின்றன. அத்துடன் நாம் அவற்றின் உச்சப் பயனை அடைய அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றத.
தேகத்திற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களாவன:- 1. தேகம் - எரிக்கப்படுவத எதவோ அதனைத் தேகம் என்பர். "தஹியதி இதி தேகா" இறந்த பின்பு தேகம் எரிக்கப்படுகின்றது. அதனால் அப்பெயர் வந்தத.
உயிருடன் இருக்கும் பொழுதும் கூட உடம்பானது பல்வகைப்பட்ட தொந்தரவுகள், கஷ்டங்களினால் எரிகின்ற உணர்வினைப் பெறுகின்றது. உடம்பானது ஜடம். தனித்து இயங்க முடியாதது. அது ஐந்து ஆதாரப்பொருட்களால் (நிலம், நீர், தீ, வளி, ஆகாயம்) உருவாக்கப்பட்டது. உடம்பை எவ்வாறு மதிநுட்பத்துடன்

Page 14
உடம்பினைத் தாய்மைப் படுத்திக் கொள். 10
உபயோகித்து அதனின்றும் இன்பத்தையடையவேண்டும் என்று நாம் அறிந்திருக்கவேண்டும். உடம்பினை அணிந்துள்ள மனிதன், உண்மையில்,முடிவில்லாதமாற்றமடையாதமேலான இறைவனாகும். 2. சரீரம்:~ அழியும் தன்மை வாய்ந்தது எதுவோ அது சரீரம். "ஸிர்யதே இதி ஸ்ரீரஹா" பிறந்ததிலிருந்து முதிர்வுவரை இந்த உடம்பு பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. காலப்போக்கில் அது அழுகி அழிந்துபோகிறது. 3. மண்டிர்;~ உடம்பைக் கோயில் என்பர். ஏனெனில் அது தன்னகத்தே ஜீவனை உள்ளடக்கியுள்ளது. ஜீவன்-தனித்த ஆத்மா. இந்தத் தனித்த ஆத்மா வேறொன்றுமல்ல. அதவே முடிவில்லாத இறைவன் - மேலான ஆத்மா ~ பரமாத்மா. இந்த உடம்பானது இறைவனின் புனிதமான இல்லிடமாகும் (வீடு). ஆகவே இதனை நல்ல சிந்தனைகள் நிலைத்திருப்பதற்கும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதற்கும், நல்ல செயல்களை ஆற்றுவதற்குமே உபயோகிக்கவேண்டும். நல்லபடியாக அதனை உபயோகப்படுத்துவதற்காக அதனை சுகமாய் நிலைக்கவைத்தப் பேணிக் கொள்ளுதல் அவசியம்.
உடம்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அதன் பயன்பாட்டை அடைவதற்கு அதனைப் புரிந்து, உணர்ந்து, பிரயோசனப் படுத்திக் கொள்ளவேண்டும். சரியான வழியில் உடம்பைப் பிரயோகிப்பதற்கு நீங்கள் ஒரு கருமத்தைச் செய்ய ஆரம்பிக்கு முன் உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் "தனித்த ஆத்மாவாக இந்த உடம்பிலே வீற்றிருக்கின்ற பிரம்மம் நான். அவ்வாறாக இருக்கும் போது இந்தச்செயலை ஆற்றுவது முறையாகுமா இல்லையா?" என்பதே. இறைவனது கோயிலாக இருப்பதால் இந்த உடம்பானது புனிதமான தேவைகளுக்கு மட்டுமே உபயோகப்பருத்தப்படவேண்டும்.
4.ஷேத்திரம்:- (புனிதத்தலம்) தெய்வீகத்துடன் சம்பந்தப்படுத்தி தெய்வீக அதிர்வுகள் நிறைந்த புனிதமான இடத்தை ஷேத்திரம் என்பர். யாத்திரைக்குரிய இடங்கள் ஷேத்திரங்கள், இச்சேத்திரங்கள் வழிபாட்டிற்கும் ஏனைய புனிதமான சேவைகளுக்குமே உபயோகப்ப டுத்தப்படுகின்றன.
ஷேத்திரமாகிய உடம்பில் நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும். இந்த ஷேத்திரத்தை அறிந்தவன் ஷேத்திரஞ்ஞ ராகிறான்.
5. கேஷத்திர(பூமிகளம்) கேஷத்திரத்திற்கு மற்றுமோர் கருத்து களம் ஆகும். களமாகிய இந்த உடம்பில், நாம் விதைக்கும் விதைகளைப்

இரண்டாம் அத்தியாயம் 11
பொறுத்தே அதன் பயனையும் பெறுகிறோம். நாம் நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். தீய எண்ணங்கள் தீய விளைவுகளையே ஏற்படுத்தும். புண்ணியம் பாவம் என்கின்ற விதைகள் விதைக்கப்படும் வயல் இந்தத் தேகம் ஆகும்.
விவசாயம் செய்யும் சாதாரண வயலிலும்பார்க்க உடம்பாகிய வயல் சில நன்மைகளைக் கொண்டுள்ளத. ஒரு வயலில் விவசாயம் செய்வதற்கு நாம் சரியான காலநேரம், சரியான அமைவுகள் பலவற்றையும் பொறுத்திருந்து பார்த்தே விதையை விதைக்க வேண்டும். ஆனால் இந்த உடம்பாகிய வயலில் எல்லாவிதமான சமயத்திலும் காலத்திலும் பயிர் செய்து கொள்ளலாம். நாம் விதைகளாக விதைக்கும் நல்லதீய எண்ணங்கள் செயல்களையே பலனாகப் பெற்றுக் கொள்ளக் கடப்பாடுடையோம்.
நீ விதைத்ததையே அறுப்பாய். இது மாற்ற முடியாத ஒரு நீதியாகும். ஆகவே நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களையே விதைக்க வேண்டும் என்பதை நீ உறுதிசெய்துகொள்.
உடம்பை நீ எண்ணியவாறு தஷபிரயோகம் செய்யக்கூடாது.
3. இந்த உடம்பை முறையாக உபயோகிக்க வேண்ருமானால் நாம்
என்ன செய்தல் வேண்கும்?
உடம்பை முறையாக உபயோகிக்க வேண்டுமானால் மிகவும் கவனமாகவே இரு கோட்பாடுகளை நாம் அனுசரித்தல் வேண்டும்.
1) உணவை மட்டுப்பருத்தல். 2) எமது வாழ்வின் பழக்க வழக்கங்களையும்
மட்டுப்பருத்தல், நாம் சாத்துவீக உணவையே உட்கொள்ள வேண்டும். எமது எண்ணங்களெல்லாம் நாம் உட்கொள்ளும் உணவினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. சத்தியத்தின் வழியில் செல்ல வேண்டுமானால் நாம்
சத்தியத்திற்கு ஏற்றதான உணவையே உட்கொள்ள வேண்டும்.
4. சாத்துவீக உணவு என்றால் என்ன ?
சாத்வீக உணவு என்பது வாயினால் உட்கொள்ளப்படுவதை மட்டும் உள்ளடக்கி நிற்பதொன்றல்ல. அது ஐம்புலன்களாலும் உட்கொள்ளப்படும் உணவைக் குறிக்கின்றது. கண்கள், காதகள், நாசி, கைகள், வாய் ஆகியவற்றால் உட்கொள்ளப்படுவதேயாகும். நாம் சாத்துவீக உணவை

Page 15
உடம்பினைத் தாய்மைப் படுத்திக் கொள். 12
உட்கொள்கின்றோம் எனக் கூறுவதனால், ஐந்து புலன்களாலும் உட்கொள்ளப்படும் உணவு சாத்வீக இயல்பு படைத்ததாக இருக்கவேண்டும். இவ்வாறாக நாம் ஐந்து புலனுறுப்புகளாலேயும் சாத்துவீக உணவையே உட்கொள்ளவேண்டும்.
ஐம் பொறிகளால் ஏற்படுத்தப்படும் மாசிலிருந்து (அழுக்கு) (பேச்சு, பார்வை, கேட்டல், எண்ணம், செயல்) விலகிச் செல்வோமானால் நாம் எமது தெய்வீகத்தன்மையை உணரக்கூடியதாய் இருப்பதடண் பரமாத்மாவாகவும் வர இடமுண்டு.
உடம்பு ஒரு ஷேத்திரம் - கோவில் ~ உடம்பாகிய இக் கோயிலுக்கு ஐந்து வாயில்களுண்டு - ஐம்புலன்கள் ~ இந்தப் புனிதமான உடம்பிலே இருக்கும் ஜம்புலன்களது கதவுகளும் தூய்மையானதும், தெய்வீகமானவையுமே உட்புகுதற்குத் திறந்து இருக்கவேண்டும். இந்த ஐம்புல வாயில்களினூடாக எதவித அசுத்தத் தன்மைகளையும் உட்புகுதற்கு இடமளிக்கக் கூடாது.
5. நல்லவர்கள். நல்ல இடங்கள், நல்ல பொருள்களுடனான
சம்பந்தமானது எத்தகைய முக்கியம் வாய்ந்த தென்பதை விளக்கவும்.?
நல்லவர்களுடனும், நல்ல இடங்களோரும், நல்ல பொருள்களுடனும் ஏற்படும் தொடர்பானது எமக்கு மேலான சிறப்பை உருவாக்குகின்றது. நாம் எத்தகைய இடங்களுக்குப் போகவேண்டும், எத்தகைய சூழலில் வாழவேண்டும், எத்தகையோருடன் தொடர்பு வைத்திருக்கவேண்டும் என்று கவனத்துடன் சிந்தித்துச் செயல்படவேண்டும்.
தீயோர் சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நாம் தொடர்பு கொள்பவர்களால் எமது எண்ணங்கள் தாக்கமடைகின்றன. இன்றைய இளைஞர்கள் மிக விரைவில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுகின்றார்கள். இத மனித உடம்பை சிறுமைப்படுத்தி மதிப்பற்றதாக்கி விடுகின்றது. சிருஷ்டிக்கப்பட்ட சகல ஜீவராசிகளிலும் மானிடப் பிறவியே மிகவும் மதிப்பானதும் அரியதானதுமாம் என அறநூல்கள் பகருகின்றன.
நாம் தெய்வ சங்கற்பத்திற்கு மாறாக எவ்வகையிலும் செல்ல இயலாது என்பதை உணர்ந்திருத்தல் வேண்டும். புலன்களை அடக்கிக் கொள்வதற்கு உடம்பின் நட்பமான செயற்பாடுகளையெல்லாம்
நாம் அறிந்திருத்தல் அவசியமாகின்றது.

இரண்டாம் அத்தியாயம் 13
6. உடம்பு ஜடப்பொருளாக இருந்தும் அதனை இயங்கவைப்பது
бTф5І?
உடம்பு ஜடப்பொருள், என்றாலும் உண்ணுதல்,உரையாடுதல், நடத்தல், வளருதல் ஆகிய செயற்பாடுகளை ஆற்றுகின்றத. காரணம் அதனுள் இருக்கும் (சைதன்ய) உணர்வினாலாகும்.
உடம்பை ஒரு வாகனத்திற்கு ஒப்பிடலாம். அதனுள் இருக்கும் மின்கலமே (பற்றறி) அதன் எஞ்சினையும், கார்ணையும், (horn) அதன் முன்புறத்து மின் வெளிச்சத்தையும் இயக்குகின்றது. அது போலவே, உடம்பினுள் இருக்கும் ஆத்மீகசக்திஇந்தஜடப்பொருளாக விளங்கும் உடம்பின் பலதரப்பட்ட உறுப்புக்களையும் இயங்கவைத்து உடம்பில் உயிர்த்தன்மையை ஏற்படுத்துகிறது.நிலை பேறானதம், உண்மையானதம், அழியாததுமான தான்' என்ற ஆத்மாவை மறந்து, மனிதன், அழியக்கூடியதம், ஜடமாக இருப்பதுமான இந்த உடம்பை அழகுபடுத்தவதற்கு நேரத்தையும், பிரையாசையையும், பணத்தையும் அதிக அளவில் செலவு பண்ணுவத வருந்தத்தக்க ஒரு விடயமாகும்.
7, இந்த உடம்புடன் மனிதன் கொண்ருள்ள மூன்று தவறான
எண்ணங்கள் யாவை ?
1. மனிதன் இந்த உடம்புடன் கொண்டுள்ள மூன்று தவறான எண்ணங்கள் அவனது உண்மையான 'தான் என்பதற்குப் பதிலாக மனிதன் வேறு எதனையோ தான் என எண்ணிக் கொள்கிறான். மனிதன் தனது உடம்பையே தனது உண்மையான 'தான்’ என எண்ணுகிறான். இது அவ்வாறு இருக்கமுடியாது. ஏனென்றால் "இது எனது கைக்குட்டை" என்று ஒருவன் கூறும்போது, அவன் வேறு, கைக்குட்டை வேறு என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுபோலவே இது எனது உடம்பு என்று கூறும் போது மனிதன் தன்னையும் தனத உடம்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறான்.
2. வீடு, நிலம், வாகனம் போன்ற பலவற்றையெல்லாம் உரிமை கொண்டவன் தான் என மனிதன் எண்ணுகிறான். நீங்கள் ஒரு வீடு கட்டும் போது உங்களுடையது எனக் கூறுகிறீர்கள். அதனை நீங்கள் விற்கும் போது அது உங்களுடையது அல்லாமற் போய்விடுகிறது. ஒரு பொருள் ஒரு வனிடமிருந்து, அதனை அவன் பயன்படுத்தும் வரைதான் அவனுடையதாக இருக்கின்றது. எல்லா உடமைப் பொருள்களும் தோன்றி மறையும் முகிற் கூட்டத்தினைப்போல் தற்காலிகமானவை. ஆனால் மனிதன்

Page 16
உடம்பினைத் தாய்மைப் படுத்திக் கொள், 14
தேவையற்ற பாசத்தை அதன்பால் வைக்கின்றான் என்பது இதனால் தெளிவுற விளங்குகிறது.
உண்மையில் எதுவுமே மனிதனுக்குச் சொந்தமானதல்ல. இந்தத் தப்பிதமான எண்ணங்களெல்லாம் மாயையினாலே ஏற்பட்டதொன்று. உடமை உணர்வினையும், மனித சிந்தையின் பலவிதமான அழிவினையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக விளங்குவது இந்த மாயையேயாகும்.
3, மறையத் தக்கனவற்றை நிலையானது என மனிதன் நம்புகிறான். தாய், தந்தை, மகன், மகள், புருஷன், மனைவி என்ற சொந்தங்கள் எல்லாம்கடட தான் தனது உடம்பு என்கின்ற தப்பான ஒருமைப்பாடு கொள்வதினாலே ஏற்பட்ட தொன்றாகும்.
எவருமே பிறக்கும்போத ஒரு சிறு தண்டு தணிகஉடக் கொண்டு வருவதில்லை. எவருமே இறக்கும் போது தனது இருப்பிட விலாசத்தைக் கூறிச் செல்வதுமில்லை. இந்த மாய உலகின்கண்ணே மனிதன் நிலையற்றதை நிலையான தெனத்தப்பாகப் புரிந்துகொண்டு தனக்கே பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கிறான். மனிதன் தனது உண்மை நிலையை மறந்த இத்தகைய பிழைகளைச் செய்கின்றான்.
உண்மை என்னவென்றால் மனிதன் எவருக்குமே உரியவனல்லன். எவருமே அவனுக்கு உரியவருமல்லர் என்பதாகும். இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் தொடர்ந்தும் பண்மை நிலையே உண்ைைம என்று பிழையாக நம்பிக் கொள்வதாகும். உண்மை ஒன்று. அதனைய் பெரியோர் பல பெயர் கொண்டு அழைப்பர்.என அறநூல்கள் சந்தேகமின்றிக் கூறுகின்றன. அந்த ஒன்றே பலவாக ஆகிவிட்டது. ஆகவே பன்மையில் ஒருமை நிலையானது அடங்கியுள்ளது. ஒன்றே ஒன்று உண்டு. அதவே கடவுள.
8. எமது உலகியல் வாழ்விற்கும் ஆத்மீக வாழ்விற்கு முள்ள
தொடர்பு எவ்வாறிருத்தல் வேண்ரும் ?
எமது உலகியல் வாழ்வானது ஆத்மீக வாழ்வுடன் இசைவு பெற்றதாக இருக்க வேண்டும். நாம் எமது குடும்பத்தார் இனத்தவர் ஆகியோருக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்தல் வேண்டும். செய்யும் பொழுது நாம் எமது ஆத்மீகப் பாதையினின் றும் விலகிச் செல்லக்கூடாது.

இரண்டாம் அத்தியாயம் 15
நாம் இந்த உலகில் இருக்கும் வரை உலகியல் சம்பிரதாயங்களை இயக்கிச் செல்லும் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அவற்றிற்கு அமைய நடந்துகொள்ள வேண்டும். ஆனால், நாம் எதனை ஆற்றிய போதும் எமது வாழ்வின் ஆத்மீக இலட்சியமாக இருக்கின்ற தலைவனை எமது பார்வைக்குள் இருத்திவிட வேண்டும். அதனின்றம் அகன்று விடக்கூடாது.
மேலும் தாய், தந்தை, சகோதரன், சகோதரி இனத்தார், செல்வம், வீடு, மற்றும் ஏனையவெல்லாம் எமக்கு உரிமையானதல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் அவசியம். இவையெல்லாம் நிலையற்றவை. மாறிவரும் உடம்போடு தொடர்புடையவை.
எமது சிந்தையின் சிதைவிற்கு அடித்தளமாக விளங்குவது நாம் இந்த மாறுதலடையும் உடம்பையே எமது உண்மையான தான்' என எண்ணுவதாகும்.
9. ஜடமாகவும், நிலையற்றதாகவும், இருக்கின்ற இந்த உடம்பை
நாம் எவ்வாறு கணித்துக்கொள்வது ?
ஆத்மீகப் பாதையிலே பயணம் செல்வதற்கு நல்ல நிலையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு கருவி இந்த உடம்பு என்ற அளவில் மட்டுமே நாம் உடம்பைக் கணித்துக்கொள்ள வேண்டும்.
நாம் உணவு உட்கொள்வதாலும், எமது ஏனைய வாழ்க்கைப் பழக்க வழக்கங்களாலும் உடம்பு பலவிதமான மாறுதல்களுக்கு இடமாகின்றது. உடம்பு எத்தகைய மாற்றத்தை அடைந்தபோதும் தனித்துவமானது மாற்றமடையாமலே இருக்கும். குழந்தைப் பருவம், இளைஞர், நடுத்தர வயதினர், முதிர்நிலை என்பனவெல்லாம் உடம்பிற்கே ஒழிய தனிப்பட்ட தன்மைக்கு இல்லை. எனவே இத்தகைய மாற்றங்கள் ஒரு மாயையாகும்.
நாம் இந்த உடம்பை உண்மையானது நிலைபேறுடையது என்று எண்ணிவிடக்கூடாது. எனினும் உலகியல் கடமைகளை ஆற்றுவதற்கும் ஆத்மீகப் பாதையில் செல்வதற்கு உதவியாக இருப்பதற்குமாக இந்த உடம்பை நல்ல ஆரோக்கியமான கருவியாக நாம் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகின்றத.
வாழ்க்கை எனும் ஆற்றிலே மிகவும் பக்குவமாகப் பாய் விரித்துச் செல்லும் கப்பலாகவும் இந்த உடம்பை நாம் எண்ணலாம். கப்பலாகிய இந்த உடம்பில் எவ்வித துளைகளோ கசிவுகளோ

Page 17
உடம்பினைத் தாய்மைப் படுத்திக் கொள் 16
இருக்கக்கூடாது. கப்பல் நீருக்குள் இருக்கலாம். ஆனால் நீர் கப்பலுக்குள் வந்தடையவிடக் கூடாத,
ஆகவே நாம் இந்த உலகிலே இருந்து எமது கடமைகளைக் கவனிக்கவேண்டும். ஆனால் சச்சரவுகள் எமது சிந்தையை அடைய விடக்கூடாத, கவலைகள், தண்பங்கள் வந்த அடையுமேயானால் அவை உடம்பில் பல் வகையான நோய்கள் தோன்றுவதற்கு இடமளிக்கும். நாம் எமது உடம்பை ஒருகருவியாக மட்டும் எண்ணிக் கொள்ள வேண்டும்.
10. நாம் எமது உடம்பை ஒழுங்கான முறையில் எவ்விதம்
வைத்திருக்கலாம்?
கருவியாகிய உடம்பை ஒழுங்கான முறையில் வைத்திருக்க நாம் (1) எமது உணவைக் கட்டுப்பருத்த வேண்டும். (2) எமதுபழக்க வழக்கங்களையும் கட்டுப்பருத்தல் அவசியம். உடுபுடவைகள் தப்பரவாக இருப்பதற்கு நாம் அவற்றைக் கழுவிக்கொள்கிறோம். எமது உடம்பையும் ஒரு ஆடையாக எண்ணி காலத்திற்குக் காலம் அதனைக் கழுவித்தப்பரவாக வைத்திருக்க வேண்டும். உடம்பின் இயற்கை இயல்பு தாய்மையாயிருத்தலாகும், ஆனால் தஷ்பிரயோகத்தினால் அது அழுக்கடைகிறது. எனவே இறைவனையே சலவையாளனாகக் கொண்டு சில அனுட்டானங்களை ஏற்று அதனைத் தாய்மைப்படுத்த வேண்டும். அனுட்டானங்களாவன
(1) வழிபாடு (2) ஜபம் (3) தியானம் (4) இறைவன் மீது பக்தி என்பனவாம்.
எமது உள்ளத்திலுள்ள அழுக்கினை இறைவனால் மட்டுமே தாய்மைப் படுத்த முடியும். இந்த உடம்பானது நாம் அணியும் ஒரு ஆடை என்பதை நாம் மறந்த விடக்கூடாத,
அறியாமை காரணமாகவே நாம் உடம்பை எமது உண்மையான 'தான்' என எண்ணிக் கொள்கிறோம். இந்த அறியாமையை நாம் அகற்றி விடவேண்டும். அப்பொழுதுதான் ஞான உதயத்தின் ஒளி போலத் துலங்க முடியும்.
11. எமது தோற்றத்தை உருவாக்குவனவற்றுடன் தொடர்பாக இந்த உடம்பிற்குள் இருக்கும் வேறு தன்மைகள் யாவை ?
எமது தோற்றத்தடன் தொடர்பான வேறு தன்மைகளாவன

இரண்டாம் அத்தியாயம் 17
(1) ஐந்து புலன்கள் (2) சிந்தை
(3) அறிவு
நாம் புலன்களினதும், சிந்தை, அறிவு ஆகியவற்றின் பங்கினையும் அதன் முக்கிய நிலையைப்பற்றியும் உணர்ந்த அவற்றினை நல்ல நிலையில் வைத்திருக்கவேண்டும்.
நாம் எமது சிந்தைக்குள் தீயளண்ணங்களைப் புகவிடின் அது தீய எண்ணச் சுவடுகளாலே அழுக்கேற்றப்பட்டுவிரும். எமது ஆளுமையின் தன்மைகளாய இவற்றின் ஒவ்வொன்றினதும் இயல்பினையும், செயற்பாட்டினையும் அறிந்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் பூரணமானதும், பிரயோசனமானதுமான மனித வாழ்வை வாழலாம்.
சத்தியத்தை உணர்தலே உண்மையான சாதனையாகும்.
12. மனித தோற்றத்தின் நான்கு தன்மைகளுக்கும் தலைமை
தாங்கி நிற்கும் மேலான சாட்சிப் பொருள் யாது?
மனித தோற்றத்தின் நான்கு தன்மைகளுக்கும் தலைமை தாங்கி நிற்கும் மேலான சாட்சிப் பொருள் ஆத்மா. இறைவன்.
கடவுளே யாவற்றிற்கும் அடித்தளமாக இருக்கின்ற படியால் மாணவர்கள் இறைவன்மீது பக்தியை வளர்த்தல் வேண்டும். அப்பொழுதுதான் பஞ்சபூதங்களாய நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்பனவற்றால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மர்மத்தை மாணவர்கள் நன்கு விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Page 18
மூன்றாம் அத்தியாயம்
அசையும் கோயில்
1. கடவுள் எங்கே இருக்கிறார்?
கடவுள் எமது உடம்பிலேயே இருக்கிறார்.அவர் எங்கோ தொலைவில் இல்லை. மதிப்பில்லாத ஒரு இரும்புப் பெட்டியினுள்ளே விலைமதிப்புடைய ஆபரணங்களை வைப்பதுபோல இந்த உடம்பினுள் தெய்வீக ஆத்மா குடியிருக்கிறது. இதனை உணர்தலே சத்தியத்தின் வழியாகும் (மெய்யியல் உணர்வு).
2. பாவம் எங்கே இருக்கிறது?
பாவம் வெகுதார தேசத்திலெங்கோ இருப்பதில்லை. அது நாம் செய்யும் கருமங்களிலேயே இருக்கின்றது.
3. உடம்பை ஏன் மிகவும் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்?
உடம்பை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஏன் எனில், அது தெய்வீக ஆத்மாவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பாதுகாக்க வேண்டியது மனிதனின் முதற்கடமையாகும். இந்த உடம்பு தான் மனிதவாழ்வின் அத்திவாரமாகும். பலமுள்ள ஆரோக்கியமான உடம்பு இல்லாவிட்டால் மனிதன் பலவிதமான நோய்களுக்கு இருப்பிடமாகி விடுவான்.
4. பலமுள்ள ஆரோக்கியமான உடம்பினால் வரும் நன்மைகள்
6ΤόOO6)I 2
பலமுள்ள ஆரோக்கியமான உடம்பில் தான் தாய்மையான உயர்ந்த பயபக்தியை ஊட்டக் கூடிய எண்ணங்கள் தோன்றும்.
உடம்பு தன்னளவில் ஒரு உலகம் போன்றது. அது பல கருவிகளும், அவயவங்களும் ஒன்றாகக் கூட்டப்பட்ட ஒரு கூட்டுப்

மூன்றாம் அத்தியாயம் 19
பொருள். ஒவ்வொரு கருவியும் பாதுகாக்கப்பட வேண்டிய, அதற்கெனத் தனித்தாய அழகு உண்டு. பலவீனமான ஆரோக்கியமற்ற உடம்பினால் எவ்வித தீர்க்கமான செயலையும் ஆற்ற முடியாது.
தெய்வீக ஆத்மாவிற்கு இல்லிடமாக இந்த உடம்பு விளங்குவதால் அதனை முறைப்படி விசேடமாகப் பேணிக்காத்தக் கொள்ள வேண்டும்.
உடம்பு தன்னகத்தே தசை, குருதி, மற்றும் அசுத்தமான பொருட்களைக் கொண்டுள்ள போதிலும் தெய்வீக சக்தியானது அதனை ஒளியூட்டுகிறத. ஆத்மா என்றும் தாயத, மதிப்புற்றது, மாற்றமில்லாதது. அது வளர்ச்சிக்கும் அழிவிற்கும் உட்பட்டத அல்ல.
உடம்பை அலட்சியப் பருத்தாது அதனை மிக்க அவதானிப்புடன் முறையாகப் பாதுகாத்துவருதலேமனிதனின் பிரதான கடமையாகும். ஒருவண் தனத கடமைகளையும் வாழ்க்கையின் கடப்பாடுகளையும் ஆற்றுவதற்கு உடம்பை உபயோகித்தல் வேண்டும்.
5 உடம்பைப் பல வகைப்பட்ட கருமையான சோதனைக்குட் பருத்துவதனால் ஆத்மீகப் பாதையில் நாம் முன்னேறமுடியுமா?
உடம்பைப் பல வகைப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக்கு வதனால் நாம் ஆத்மீகப் பாதையில் முன்னேற முடியாது. வழிபாடு, விரதம், தவம் என்பவற்றால் இந்த உடம்பிற்குப் பல கடும் சோதனைகளைக் கொடுத்து கஷ்டப்படுத்தக் கூடாது. நாம் இவ்வாறு செய்தால் நிலையான ஆத்மீகக் கோட்பாட்டை உணர்தலாகிய இலட்சியத்தைத் தவற விட்டுவிடலாம்.
உடம்பைப் பல வகைப்பட்ட சோதனைக்குட்பருத்தலால் நம் ஆத்மாவை அறிய முடியாது. உணவையும் நீராகாரத்தையும் கைவிடுவதால் நாம் வீடுபேற்றை அடைய முடியாது.
நாம் எமது உண்மையான இயல்பினை அறிதலினா லேயே தன்னை அறிய முடியும்.
6. தன்னை அறிதலின் முயற்சியில் முதற்படி யாது ?
தன்னை அறிதல் முயற்சியின் முதற்படி மனிதன் தனது இயல்பினை அறிதலாகும். எண்ணம், சொல், செயல், இம்மூன்றிலும் இசைவைக் காணமுடிந்தவனே ஒரு மனிதன் ஆகிறான்.
உண்மையை அறிதற்குரிய ஆராய்விற்கு இட்டுச் செல்வதற்கு மனிதன் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தை முதற் கண் கண்டறிதல்

Page 19
喀 *。
".*
அசையும் கோயில் "( *۔،خهمههrg 20
' ' ' . . . Ay
அவசியம். "தான்" என்பதை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் தான், ஒருவன், உண்மையான "தான்" என்பதைக் காணமுடிகிறது. அப்பொழுது அவன் 'த்ருஷ்ட கண்டறிந்தவன் ஆகிறான். பக்தியின் முக்கிய நோக்கம் ஒரு தீர்க்கதரிசியாகி இந்த உலகத்தை ஆத்மீகப் பின்னணியில் காண்பதாகும்.
தனது உண்மையான 'தானெனும் தன்மையை உணராத விடத்த மனிதன் மனித உருவில் மட்டும் திகழ்பவனாகிறான்.
7. உடம்பு நீர்க்குமிழி போன்றது. இந்த நீர்க்குமிழியை நாம்
எவ்விதம் நடத்திக் கொள்ள வேண்ரும் ?
நீரிலேயே தோன்றி, நீரிலேயே ஒரு சிறு பொழுது நிலைத்து நின்று, பின்னர் நீரினுள்ளேயே கலந்து விடுகின்ற நீர்க் குமிழிபோன்றது இந்த உடம்பு. இந்த நீர்க்குமிழி போல், மனிதன் "நர" நீராகிய கடவுள் (நாராயணன்) இடமிருந்து தோன்றிப் பின் அவனுள்ளேயே சென்று அடங்கி விடுகின்றான்.
மனித ஜீவியினுடைய தெய்வீகத் தன்மை வாய்ந்த உற்பத்தி நிலையினை மதித்து இந்த உடம்பையும் பொருத்தமான முறையில் பிரயோகித்துக் கொள்ள வேண்டும்.
இந்த உடம்பை நாம் எண்ணியவாறு பயன்படுத்திக் கொள்ள இயலாது. வகுக்கப்பட்ட திட்டங்கள், எல்லைகளின் படியே நாம் உடம்பை மட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும். நாம் இக்கட்டுப்பாட்டு விதிகளை அனுசரித்தாலன்றி எதுவிதமுன்னேற்றத்தினையோ, வெற்றியையோ பெறமுடியாதது.
நாம் எமது எண்ணங்கள், உணர்வுகள், தோற்றம்,செயல் அனைத்திலும் தூய்மையை விருத்தி பண்ணிக்கொள்ள வேண்டும். எமது புலன்களையும், அவயவங்களையும் தாய்மை அற்றமுறையில் உபயோகித்தோமேயானால், எமது இயல்பான மானிட நிலையிலிருந்து இழிந்து பைசாச நிலைக்கு தள்ளுப்பட்டு விடுவோம்.
எமது வாழ்க்கையின் பழக்க வழக்கங்களிலெல்லாம், அதாவது நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், பேசும் வார்த்தைகள், கேட்கும் சொற்கள் எல்லாவற்றிலுமேயே மட்டுப்படுத்தல் முக்கிய நோக்காக இருக்க வேண்டும்.
வரம்பினை மீறுதல் உடம்பிற்கு ஆபத்தைக் கொண்டுவரும்.
8. மனித அறிவை வகுத்துக் கொள்ளக்கூடிய ஜவகைப் பிரிவுகளை
ஆராய்க?

: - R r K 拳 K O Krey - w
FEA ----
به ¬ܕܘ மூன்றாம் அத்தியாயம் Y. مK21 اہلدحم
மனித அறிவை ஐந்த பிரிவுகளில் வகுக்கலாம். (1) நூல் அறிவு. புத்தகங்கள் மூலம் பெறப்படும் அறிவு. இது மேலெழுந்தவாரியானதாகும். புத்தக அறிவினைமட்டும் பெற்றுக் கொள்வதில் நாம் எமத கவனத்தைச் செலுத்தவோமானால் நாம் எமத வாழ்நாளை வீணாகக் கழித்ததாக முடியும். -
(2) பொதுஅறிவு :- பொது அறிவைப்புத்தகங்களிலிருந்து பெற முடியாது. அத நாளாந்த வாழ்வில் பெறப்படும் பலவிதமான அனுபவ வாயிலாக, சிறப்பாக சமூக சேவையினால் கிடைப்பதொன்றாகும்.
(3) சாதாரண அறிவு :- பொத அறிவைப் போல் இதுவும் சமூக சேவையினாலும், நாளாந்த வாழ்விலும் கிடைக்கும் அறிவு.
இன்று பொது அறிவும் சாதாரண அறிவும் இல்லாமை விசேடமாக காணத்தக்க விடயமாக இருக்கின்றது.
(4) பிரித்தறியும் அறிவு :- இளைஞர்களுக்குச் சரியான பிரித்தறியுமறிவு இருக்க வேண்டும். அவர்கள் தமது பிரித்தறி உணர் சக்தியை சுயநல தேவைக்காக உபயோகிக்கக் கூடாத, பிரித்தறி அறிவினை சமூகப் பரப்பிற்கு உபயோகிக்க வேண்டுமே யொழிய தனது சுயநலனுக்கு அல்ல. சமூகத்தின் கூட்டு நன்மையையே குறிக்கோளாகக் கொண்டு இருத்தல் வேண்டும். இன்னார் இனியார் என்ற நாட்டு பேதமின்றி யாவருக்கும் பொருத்தமானதாக விளங்குகின்ற அடிப்படைப் பிரித்தறி அறிவு எனக் கூறப்படும் அறிவினை இளைஞர் பயிற்சித்துக் கொள்ள வேண்டும்.
ஆத்மீகக் கணிதப்படி 3-1 = 1 3 என்றது கடவுள், மாயை, பிரபஞ்சம் ஆகிய மூன்றினைச் சுட்டி நின்றது. கடவுள்தான் பொருள். மாயையானது கண்ணாடி பிரபஞ்சமானது கண்ணாடியில் தோற்றும் இறைவன். கண்ணாடியை அகற்றினால் மாயையோ பிரபஞ்சமோ இருக்காது.நிலைத்து இருப்பது கடவுள் மட்டுமேயாம். இதனால் 3~1 - 1
இதனை அறிந்து கொள்வதற்கு எமக்கு ஐந்தாவது அறிவு வேண்டும். இதுவே செயல் முறை அறிவு.
(5) செயல்முறை அறிவு:- தன்னைமட்டும் கவனித்துக் கொண்டால் போதுமானது என ஒவ்வொரு நபரும் எண்ணுகிறான். அவன் தான் சமூகத்தில் ஒரு பங்கு என்பதை உணரவேண்டும். அத்துடன் அவன் சமூகத்தை ஒரு முழுமையாகவே கொண்டு அதன் நலன்களிலும் சமமான எண்ணங் கொண்டவனாக இருத்தல் வேண்டும். இதுவே செயல்முறை அறிவு. இது மனிதனுக்கு மிகவும் வேண்டற்பாலதொன்று.

Page 20
Ak siya
அசையும் கோயில் 22
சூரியனுக்கும் அதன் கதிர்களுக்கும், அன்றிக் கடலுக்கும் அதன் அலைகளுக்கும் இடையே எதவித வேற்றுமையும் இல்லாததுபோல, கடவுளுக்கும் அன்பிற்குமிடையே எதுவித வேற்றுமையும் இல்லை. ஏனென்றால் அன்பின் ஊற்றுகடவுளாகும். உடம்பும் ஆத்மாவும் ஒன்றை ஒன்று நம்பி இருப்பது. அத்துடன் இரண்டும் மிக நெருக்கமாகவே ஒன்றோடொன்று தொடர்புற்றும் இருக்கின்றது.
9. உடலாரோக்கியம் மனிதனுக்கு ஏன் பிரதானமானதாகிறது ?
ஆத்மாவை'உணரும்வரைஒருவனுக்கு உடல்ஆரோக்கி யமாக இருத்தல் அவசியம். உடம்பு நிலையில்லாததான போதிலும், அதனை நன்கு பராமரித்தல் வேண்டும். ஏனெனில் தெய்வீக ஆத்மாவை அத தன்னகத்தே கொண்டிருக்கின்றத.
உடம்பிற்கும் ஆத்மாவிற்குமுள்ள தொடர்பு ஒன்றையொன்று நம்பியிருக்கும் நிலையிலானது. அவை அந்நியோன்யமாக ஒன்றுக்கொன்று இணைந்து இருக்கின்றன. ஆகவே எல்லா வேளைகளிலும் உடம்பின் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்வத அவசியமாகிறது.
கெட்ட உணவை உண்பதினால் ஏற்படும் தாக்கத்திலும் மேலாக அதிகப்படியான வியாதியைக் கொருக்கக்கூடிய கவலை களினால் பெரிதும் தாக்கப்படும் நிலையில் இன்று மனிதன் இருக்கிறான். சிந்தையில் ஏற்படும் கவலைகளெல்லாம், சிந்தையால் உருவாக்கப்பட்ட பயப்பாடேயாகும். வரப்போவதொண்றைக் குறித்து முன் கூட்டியறியச் செய்யும் தீவிர சிந்தனையும் முடிவும், மன விசாரம், கவலைகள் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கவேண்டும்.
எத்தகைய செயற்பாட்டிலும் தீவிரமாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதை மாணவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது அவர்களது உடம்பில் பாரதாரமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
10. ஆசைகளை மட்டுப்பருத்தல் பற்றி சுவாமிகளது திட்டத்தை
விளக்கிக் காட்டுக.
ஆசைகளை மட்டுப்படுத்தல் பற்றிய சுவாமிகளது திட்டம் நான்கு பிரிவுகளைக் கொண்டத.
(1) உணவை வீணாக்காதே - ஏன்? ஏனெனில் உணவு

மூன்றாம் அத்தியாயம் 事 23
தெய்வம். உணவு மனித வாழ்விற்கு இன்றியமையாதது. காரணம் உணவின்றி உடம்பு நிலைகொள்ளாது.
(2) பணத்தை வீணாக்காதே. பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வது கேடானது. பணத்தைத் தஷ்பிரயோகம் செய்தால் சிந்தையின் அமைதியின்மையையும் வாழ்வில் சீர்கேட்டினையும் உருவாக்கிவிடும். சமூக நலனின் நன்மைக்காக தனது சுயநலத்திற்குப் பாகுபாடின்றி பணத்தைச் செலவு செய்யும் நோக்கம் தவிர்க்கப்படவேண்டும். ஒத்துழைக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
(3) சக்தியை விரயப்படுத்தாதே ~ வாழ்வின் அனைத்தும் முறையான சமநிலைப்பாட்டை மேற்கொள்வதிலேயே தங்கியுள்ளது. மிதமிஞ்சிய அறிவினாலும், அதனைத் துஷ்பிரயோகம் செய்வதனாலும் இன்று இந்த சமநிலைப்பாடு இல்லாத போய் விட்டது. அறிவைத் திறனாக மாற்றி விடவேண்டும். இளைஞர்கள் அறிவை அழிக்கின்றார்கள். பிழையானதும், அளவிற்கு மீறிய முறையிலும் பார்த்தல், கேட்டல், பேசுதல், எண்ணுதல், செயல்படல் ஆகியவற்றில் தமது அறிவை இளைஞர்கள் விரயப்படுத்து கிறார்கள்.
β) ΦΠ Π 6OOTID π35 இரவுபகலாகத் தொடர்ந்து உரையாடுதலால் அதிகப்படியான சக்தி விரையமாக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் சக்தியின் உபயோகம் வேண்டப்படுகிறது. உடம்பிலுள்ள சக்தியை முறையாகப் பிரயோசனப்படுத்தினால் உடம்பில் சமநிலைப்பாடு நிலைநாட்டப்படும். அத்துடன் உடம்பும் நன்நிலையில் இருக்கும்.
(4) நேரத்தை விரையப்படுத்தாதே - நடந்தனவற்றை எண்ணி இருப்பதாலும், எதிர்காலத்தையிட்டுக் கவலைப்படுதலாலும் மனிதனது வாழ்நாள் வீணே கழிகிறது. மனிதனது விசனங்கள், நோய்களுக்கு எல்லாம் மூல காரணமென்ன? தனக்கு இருப்பதில் திருப்திப்படாமையும், தன்னிடம் இல்லாததற்கு ஆசைப்பட்டு அதனைப் பெற விரைவதிலும் மனிதன் தனது சிந்தையின் அமைதியை இழக்கின்றான்.
மாற்றமுடியாத இறந்தகாலத்தைப்பற்றியும், நிதான மில்லாத எதிர்காலத்தைப்பற்றியும் எண்ணுதலால் யாது பயன்? இது நேரத்தை வீணாக விரையப்படுத்துவதாகும்.
மிகவும் முக்கியமானது நிகழ்காலம் தான். அதவே எங்கும் காணப்படுவது. கடந்த காலத்தின் பெறுபேறும் எதிர்காலத்தின் பெறுபேறும் நிகழ்காலத்திலேயே இருக்கின்றது. நாம் முன்பு விதைத்ததன் பயனை

Page 21
அசையும் கோயில் 24
இப்போது அறுவடைசெய்கிறோம். நாம் இப்பொழுது விதைப்பதை எதிர்காலத்தில் அறுவடைசெய்வோம்.
இவ்வாறாக இறந்த காலமும் எதிர்காலமும் நிகழ் காலத்திலேயே இருக்கின்றது. ஆகவே நாம் நிகழ்காலத்தை கூடிய அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் கவலை கொள்வதை விட்டு விடவும், நேரத்தை விரையப்படுத்தாதும் இருக்கச் சித்தம் கொண்டு. இறவாமை நிலையினைத் தரக்கூடிய இலட்சியவாழ்வு வாழ்ந்து, மனித வாழ்வின் பயன்பாடாகிய நிறைவைப் பெறவேண்டும்.
11. இந்த உடம்பின் மேல் அதிக கவனம் ஏன் எருக்க வேண்ரும் ?
இந்த உடம்பில் கவனஞ் செலுத்தவேண்டிய காரணம் அது கடவுளின் அசையும் கோயிலாக விளங்குவதனால் ஆகும்.
இவ்வுலகிலுள்ள அனைத்தும் நிலையற்றவை. ஆனால் அதற்காக நாம் எமது கடமைகளை அலட்சியம் செய்யக் கூடாத,
12. தன்னம்பிக்கையை வளர்த்தலின் அவசியத்தை விளக்குக.
வாழ்க்கை எனும் மாளிகையின் அத்திவாரம் போன்றது தன்னம் பிக்கை. எமக்குத்தன்னம்பிக்கை அவசியம். அதாவது எம்மில்நம்பிக்கை. உலகின் மேல் வைக்கும் நம்பிக்கையிலும் பார்க்க எம்மில் நம்பிக்கை வேண்டும். சுய திருப்தியை சுவர்களுக்கு ஒப்பிடலாம். தன்னைத் தியாகம் செய்தல் முகட்டிற்கும், தன்னை அறிதலை இந்த உடம்போடு அந்த மாளிகையில் வசிக்கும் வேளை பெறக்கூடிய மகிழ்ச்சிக்கும் ஒப்பிடலாம்.
சுய நம்பிக்கையினால் நாம் வாழ்க்கையில் எதிர்நோக்கும் கஷ்டங்களை எதிர்கொள்ளவும் அவற்றைச்சமாளித்தக்கொள்ளவும் இயலுமாகின்றத. சுயநம்பிக்கையால் நாம் எதனையும் சாதித்து, மகிழ்ச்சியையும் ஈட்டிக் கொள்ளலாம்.
13. நான்" என்ற சொல்லின் கருத்தை விளக்கவும்?
எம் எல்லோரிலும் பிரசன்னமாக இருக்கும் ஆத்மா வையே "நான்" என்ற பதம் விளக்குகின்றது. நான்' என்றது எல்லோரிலும் சமநிலையில் நிலைத்துள்ளது. அவன் போகியாக (போகத்தை விரும்புபவன்)

மூன்றாம் அத்தியாயம் 25
இருந்தாலென்ன, றோகி (நோயுற்றவன்) யாக இருந்தாலென்ன, யோகி (தன்னை உணர்ந்தவன்) யாக இருந்தாலென்ன, விராகி (தறவி) யாக இருந்தாலென்ன, பிராகி (ஆண்டி) யானாலென்ன எதுவித பாரபட்சமுமின்றி இருக்கின்றத.
எமது நாமமும், உருவமும் வேறுபட்டதாக இருந்த போதிலும், எம்மிலுள்ள "நான்" என்றது ஒன்றேயாகும். இதனால்தான் வேதங்கள் சத்தியம் (நிலையானது) ஒன்று, ஞானிகள் அதைப் பல பெயர் கொண்டு அழைக்கின்றனர் என்று பிரகடனப்படுத்துகின்றன. "ஏகம்சத் விப்ராபகுதா வதந்தி"
14. பிரபஞ்சத்தில் காணப்பரும் பலவற்றின் அடித்தளமாய அந்த
ஒருமைப்பாட்டை அனுபவிக்க முயலுங்கள் என்று சுவாமி கூறுவதை விளக்கவும்?
எல்லா மனிதனிடையேயும், நாமத்திலும், உருவிலும் ஆத்மா சமநிலையில் சஞ்சரிக்கிறது. ஆகவே எல்லாரிடையேயும் காணப்படுகின்ற பலவாய தன்மையைக் கைவிட்டு, எல்லோரிடமும் பிரசன்னமாகியிருக்கின்ற ஆத்மாவின் ஒருமைப்பாட்டை ஐக்கி யத்தைக் காணுதல் வேண்டும்.
நாம் பலவாய தன்மையைக் கண்டு,ஐக்கியத்தை மறந்து விடுதலாலேயே இந்த உலகில் நிம்மதிக் குறைவையும்,பெரும்பாலான அமைதி யின்மையையும் காண்கிறோம்.
இனங்கள் பல. ஆனால் உலகு ஒன்று. ஜீவன்கள் பல. ஆனால் மூச்சு ஒன்று. நட்சத்திரங்கள் பல. ஆனால் ஆகாயம் ஒன்று. இந்தப் பலவாய தன்மையிலுள்ள ஒருமைப்பட்டை நாம் ஞாபகத்தில் வைத் தோமேயானால் வேற்றுமைக்கு இடமில்லை. உலகில் சச்சரவுகள், போர்களுக்கும் இடமில்லை
மாணவர்கள் தமத எண்ணங்கள், சொல், செயல் ஆகியவற்றில் எதுவித வேற்றுமைக்கோ, பாரபட்சத்திற்கோ இடமளிக்கக்கூடாது.
I5,
நாம் உடம்பில் முக்கிய கவனம் எருப்பது ஏன் பிரதானமாகிறது ?
இந்த உடம்பில் இருக்கும் மிக மதிப்புள்ள ஆத்மாவின் பொருட்டு நாம் அதனைக் கவனித்தல் வேண்டும். எமக்குள்ளே எழும்

Page 22
அசையும் கோயில் 26
எண்ணங்களது தன்மையைக் கொண்டு நாம் பலமும் ஆரோக்கியமும் கொண்டுள்ளோமா அன்றிப்பலவீனமும் ஆரோக்கியமின்மையுற்றுள்ளோமா என்பதை நாமே மதிப்பீடு செய்த கொள்ளலாம். அதனால் தான் "நீ எண்ணுவது போல ஆகிறாய்" என்றனர். "யத்பவம் தத் பவதி". ஆரோக்கியமில்லாத உடம்பில் தான் ஆரோக்கியமற்ற எண்ணங்கள் எழுகின்றன.
விலைமதிப்பிடமுடியாத அருமையான மனிதப் பிறவியைப் பெற்றதனால், நாம் உணவைத் தேடி அலைவதற்குப் பதிலாக ஆத்மாவைத் தேடவேண்டும். நாம் உணவுக்காக அலையக்கூடாது. எம்மிடம் தன்னம்பிக்கை இருக்குமேயானால் உணவு எம்மைத் தேடிவரும். நாம் வாழுவதற்காகவே உண்ணவேண்டுமேயன்றி உண்பதற்காக வாழக்கூடாது.
16. நாம் அனுசரிக்க வேண்டிய 4 குறிக்கோள்கள் எவை?
(1) தலைவனைப் பின்பற்றுதல்தலைவன் . மனச்சாட்சி) (2) பைசாசை எதிர்கொள்ளல் (பைசாசு - தீயதன்மைகள்) (3) இறுதிவரை போராருதல். (4) விளையாட்டை நிறைவேற்று (வாழ்க்கையெணும்
விளையாட்டில் சித்தியடையப்பெறு)
17 ஆங்கில எழுத்து முதல் மூன்றின் உட்பொருள் என்ன ?
ஆங்கில முதல் மூன்று எழுத்தம் AB C ஆகும்.
அவை விளக்குவத ~ "என்றும் அவதானமாக இரு."
இத உபநிடதத்தில் கூறப்பட்ட வாக்கினை ஒத்திருக்கின்றத. அதாவது "எழுந்திரு.விழித்திரு, இலட்சியத்தை அடையும் வரை தரித்து நிற்காதே." என்பதாகும்.
18. எமது நாளாந்த வாழ்வில், வாழ்க்கை பற்றிய நோக்கம்
எவ்வாறாக இருத்தல் வேண்ரும்.
நாம் எமது கடமைகளையும் கடப்பாடுகளையும் ஆற்றிய வண்ணம் இருக்கவேண்டும். அதுவும் முறையாக, ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆற்றவேண்டும். அதுவே எமக்கு ஆனந்தத்தை நல்க வல்லது. நாம் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படவோ, இறந்த காலத்தைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டோ இருக்கக் கூடாது. இவையெல்லாம் தோன்றிமறையும் முகில்களைப் போன்றவை.

மூன்றாம் அத்தியாயம் 27
என்றோ ஒரு நாள் நாம் சத்தியத்தைப்பற்றி அறியத்தான் போகிறோம். இப்பொழுதே அதனைப்பற்றி அறிய ஆரம்பித்தல் நன்று.
நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் இறைவனது கருணை, அன்பு, அருள் எவ்வேளை எமக்குக் கிடைக்குமென நாம் அறியோம். எவ்விடத்து, எச்சந்தர்ப்பத்தில் என்பதையும் நாம் அறியோம். இறைவனது சித்தம் எத்தகையது என்பதனையும் நாம் அறியோம்.
இவ்வுலகில் எதவுமே நிரந்தரமானதன்று என அறிந்தபின் நாம் எதற்கும் கவலைகொள்ளக்கூடாதது. எத்தகைய கவலைக்கும் நாம் இடங் கொருக்கக்கூடாது. அப்பொழுதுதான் நாம் தெய்வீகத்தை அடையக் கூடியவராவோம்.
19 ஆத்மீக வாழ்வில் உணவு உண்ணும் முறை பற்றிய வழக்கின்
பிரதானத்தை விளக்குக?
பூமியிலே உயிர் வாழும் 8,400,000 வகையினங்களில் 8399,999 இனங்களாய பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் எல்லாம் இறைவனால் இயற்கையிலே வழங்கப்பட்டனவற்றை உண்டு வாழ்கின்றன. ஆகையால் அவை பொதுவாக நோயுற்று அவதிப்படுவதில்லை.
மனிதன், ஒரு புறம் போக்கானவன். அவன் சுவை உணர்விற்கு அடிமையாகி சமைத்த, வாசமூட்டப்பட்ட உணவையே விரும்பிஉண்கின்றான். ஆனால் அத்தகைய உணவு அவனது வாழ்நாளைக் குறைக்கின்றதென்று எண்ணாது அவற்றைச் சுவைத்து உண்கின்றான்.
சைவ உணவு உண்பவர்கள் அதிக நோய்வாய்ப்படுவத குறைவு என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விடயமாகும். ஆனால் அசைவ உணவு உட்கொள்பவர்கள் அதிகமாக நோய்வாய்ப்படு பவர்கள். இதற்குக் காரணம் என்னவெனில் மிருகஉணவு மனிதஉடம்பிற்குத் தேவையான தன்மைகளின்றி, ஒவ்வாதனவாக இருத்தலாகும்.
காய்கறி, தானியம், பால், தயிர், ஆகியனவற்றில் மிருக புரதத்திலும் மேலான நல்ல தரமான புரதம் இருக்கின்றது. அசைவ உணவு மனிதனின் உடம்பைத் தாக்குவதோடல்லாது அவனது சிந்தையையும் நாசகரமான தாக்குதலுக்கு உட்படுத்தும்.
20 மிருக உணவை உட்கொள்வதனால் ஏற்பரும் விளைவுகள்
LIIITóODó)I?

Page 23
அசையும் கோயில் 28
மிருக உணவை உட்கொள்வதனால் மிருக இயல்புகள் தாண்டப் படுகின்றன. உனது உணவு எவ்விதமோ அவ்விதமே உனது சிந்தனைகளுமாம்.
உணவு,தலை, கடவுள் இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை.
காட்டில் வாழும் மிருகங்களிலும் கேவலமான முறையில் மனிதர் இன்று நடந்து கொள்கிறார்கள். அவர்கள் கொடுமை மிக்கவர்களாக, இரக்க மற்றவர்களாக, இறுகிய நெஞ்சுடையவர்களாக ஆகிவிட்டனர். மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலேயும் பரிவு உணர்வோ அன்றிப் புரிந்துணர்வோ இல்லை. இதற்கு மிகவும் முக்கிய காரணம் அவன் உட்கொள்ளும் உணவின் தன்மையாகும்.
மாணவர்கள் தாம் உண்ணும் உணவின் வகையில் கவனமாக
இருத்தல் வேண்டும். உணவானது அவர்களது ஆரோக்கியத்திற்கும் சந்தோஷத்திற்கும் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.
21. ஒவ்வொரு நாளும் எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்ரும்?
எமது மூதைதையர்கள் ஒரு நாளைக்கு இருவேளை உணவு தான் உட்கொண்டார்கள். பழமைவாய்ந்த எமது சாதுக்கள் ஒரு பொழுதுதான் உண்டனர். ஒரு நாளைக்கு ஒரு பொழுது உண்பவன் யோகி என்றும் இருபொழுது உண்பவன் போகி(இன்பமறுைபவிப்பவன்) மூன்று வேளை உண்பவன் றோகி (நோயாளி) என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு கலோரிவிதம் சக்தியை உருவாக்கக்கூடிய அளவினையே மனித தேவை கொண்டுள்ளது. நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு ஒருவனுக்கு ஒருநாளைக்கு 1,500 கலோரிஉணவுமட்டுமே தேவையாகிறது.இளைஞருக்கு ஒருநாளைக்கு2000 கலோரி உணவு திருய்தியைக் கொருக்கக்கூடியது.
இந்த வரையறையினைத் தாண்டிய நிலையில் இன்றைய உணவு உட்கொள்ளுதல் இருப்பதால் மக்கள் பலவகைப்பட்ட நோய்களினால் அவதியுறுகிறார்கள்.
நித்திரையைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள். எதுவித மனக் கிலேசமுமின்றி நீங்கள் பருக்கைக்குச் சென்றால் நித்திரைதானகவே உங்களை வந்து அணுகும்.
 

E. E. E. 를
மூன்றாம் அத்தியாயம் 29
22 இலட்சிய வாழ்வு வாழ்வதற்கு வேண்டப்பரும் தேவைகள்
LIIIT6O6?
இலட்சிய வாழ்வு வாழத் தேவைப்படுபவை (1)நீங்கள் உட்கொள்ளும் உணவை மட்டுப்படுத்திக்கொள்ளல் (2) உங்கள் உடம்பை நன்னிலையில் வைத்திருத்தல் (3) உங்கள் கடமைகளை முறையே ஆற்றுதல். (4) உங்கள் உடம்பின் மேல் தேவையற்ற பற்றுதலை
வையாதிருத்தல். (5) நான் எனது என்ற உணர்வினை உங்களது எண்ணங் களிலும், சொல்லிலும், செயலிலும் அகற்றிவிடுதல். நான், எனது, என்ற இரு உணர்வுகளும் சமுதாயத்தில் நிலவும் பிரிச்சனைகளுக்கும் தீமைகளுக்கும் முழுக்காரணியாக விளங்குகின்றன.
(6) செய்வான்(நான் செய்தேன்) அனுபவிப்பான் (நான் அனுபவிக்கின்றேன்) என்ற உணர்வுகளை அறவே அகற்றிவிட முடியாதிருப்பினும் குறைத்துக் கொள்ளல்.
23. ஆரோக்கியமின்மையால் நாம் ஏன் அவஸ்தையடைகிறோம் ?
உளரீதியான காரணங்களினாலேயே நாம் அவஸ்தைப்படுகிறோம். எமது ஆரோக்கியம்திருய்திகரமானது என்று நாம் நேர் எண்ணத்துடன், தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
முன்னைய காலங்களில் 80, 90, ஏன் 100 வயதிலும் கூட மக்கள் இளமைவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்டார்கள். குருஷேத்திரப் போர் வேளையிலே கிருஷ்ணனும் அருச்சுனனும் முறையே 86,84 வயதினராக இருந்தனர். ஆனால் அவர்கள் இளமை வாய்ந்தவர்களாகவே விளங்கினார்கள். பீஷ்மருக்கு வயத 116. அவர் கெளரவ அணியில் படைத்தலைவராக இருந்தார். அவர் ஒன்பது நாட்கள் மிக உக்கிரமமாகப் போர் புரிந்தார். அவர்களது சிந்தையின் நிலைப்பாட்டிலும், சத்தணவிலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆத்மாவிலுள்ள 'தான்' என்ற உண்மையான ஆத்மாவிற் கொண்ட தன்னம்பிக்கையினாலுமே அவ்வாறு இளமைவாய்ந்தவர்களாகக் காணப்பட்டனர்.
ஆகவே எமக்குத் தன்னம்பிக்கையும் ஆத்மீக பலமும் இருக்க வேண்டும்.
24. வாழ்க்கையில் நாம் உறுதிப்பாட்டையும், நிலைப்பாட்டையும்
எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் ?
வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை, சுக துக்கங்களை

Page 24
அசையும் கோயில் 30
நயநட்டங்களை சமநிலைப்பாட்டில் எதிர் கொள்ளக்கூடியதான தைரியத்தை விருத்திசெய்வோமேயானால், வாழ்வில் உறுதிப்பாடும் நிலைப்பாடும் எமக்குக் கிடைக்கும். நாம் ஒரு படத்தைக் கடவுளாக எண்ணி வழிபடலாம். ஆனால் கடவுளை ஒரு படமாகக் கொள்ள லாகாது. சிந்தையானது நொடிக்கு நொடி நிலை தழம்பக் கூடாது.
25 ஒரு பக்தனின் குணாம்சங்கள் யாவை ?
மாசற்ற பக்தி கொண்டவனே உண்மையான பக்தன். அவனுக்கு வரும் எத்தகைய நிலையும் "அது இறைவனால் கொருக்கப்பட்டது' என எண்ணி அதைத் தயக்கமில்லாது சந்தோஷ த்துடன் ஏற்றுக் கொள்ளும் பண்பு இருக்க வேண்டும்.
ஒருவனுக்கு எதிர்வரும் கஷ்டங்கள், தொந்தரவுகள், இடையூறுகள், தன்பங்கள் அனைத்தையும் அவன் தாங்கி நின்று ஈடுகொடுத்து வரும் போதுதான் அவனது உண்மையான பலமும் பெறுமதியும் பிரகாசிக்கும்.
பலர் தாம் அடியார்கள் என்று கூறிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் தம்மை முறையாகக் கொண்டு நடத்தவதில்லை.உண்மையான பக்தி என்பது உறுதியான நம்பிக்கையால் ஊன்று கோலிடப்பட்டது. அத்துடன் ஸ்திரமானது எவ்வித சந்தர்ப்பங்களிலும் மாற்றமுறாதது. இவ்வித மிருந்தால்தான் பக்தியின் உண்மையான பலனை பக்தன் பெறத் தகுதி வாய்ந்தவனாகின்றான்.
26. எமது குறிப்பிடத்தக்க தோற்றத்திண்முக்கிய ஐந்து தன்மைகள்
(சேர்க்கைகள்) எவை ?
அவையாவன
(1) உடம்பு
(2) புலன்கள்
(3) சிந்தை
(4) புத்தி
(5) ஆத்மா.
இவை ஒவ்வொன்றினதும் இரகசியத்தையும், நுட்பத்தையும் அறிந்ததன் பின் எமக்கு மேலதிக ஆத்மீக கட்டுப்பாடுகள் எதவும் தேவையில்லை.

மூன்றாம் அத்தியாயம் 31
சத்தியமே எல்லாமாகின்றது. இதனை உணராத நாம் பலவிதமான சாதனைகளால் எம்மை வருத்தவதில் பிரயோசனமில்லை. எமது வாழ்க்கையானது ஆத்மீக விழிப்புணர்வால் வழிநடத்தப்பட வேண்டு மேயன்றி உடல் உணர்வினால் அல்ல.
சிந்தையைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் சிந்தையின் இயல்பை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். மேலும் புலன்களைப்பற்றியும் ஐயப்பாடில்லாத அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
உடம்பு, புலன்கள், சிந்தை, அறிவு, ஆத்மா, இவற்றின் இயல்பையும் அவற்றின் பங்களிப்பையும் நாம் நன்கு உணர்ந்த கொண்டால் நாம் தாய்மையும், வேறுபாடில்லாத மனநிலையையும் அருளப் பெற்றவர்களாக மலரலாம்.

Page 25
நான்காம் அத்தியாயம்
புலன்களை அடக்குதல்.
உடம்பிற்கும் புலன்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கவும்?
உடம்பும் புலன்களும் பிரிக்கமுடியாதவை. அவை ஒன்றை ஒன்று நம்பி இருப்பவை. புலன்களின்றி உடம்பு இருக்கமுடியாது. உடம்பின்றி புலன்கள் இருக்கவும் முடியாது. புலனில்லாத உடம்பும் உடம்பில்லாத புலன்களும் இயங்கமாட்டா.
புலன்கள் மீது உடம்பு சிறிதளவு தாக்கத்தை உண்டுபண்ணிய போதம் புலன்களே பெரும்பங்கு தாக்கத்தை உடம்பில் ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொருவரும் உடம்பின்மீது முறையான கவனிப்புக் கொள்ளவேண்டியது அவசியம். அப்போதுதான் புலன்களையும் சரியான கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இயலும்.
2. புலனுறுப்புகளுக்கும் புலக்காட்சிக்கு முள்ள தொடர்பைக்
Эғы ДldБ?
புலனுறுப்புக்களாவன கண்கள், காதுகள், நாசி, நாக்கு, கைகள், ஆகியன. புலன்களாவன பார்வை, ஒலி, மணம், சுவை, ஸ்பரிசம் ஆகியன.
எமது சூழலிற்காணப்படுகின்ற பொருட்களே புலக்காட்சியாகும். புலக்காட்சி இன்றி புலனுறுப்புகள் ஒரு வினாடியேனும் தொழில் புரியமாட்டா.
இன்பம், தன்பம், வெப்பம், தட்பம், சந்தோஷம், கவலை, இவையெல்லாம் புலனுறுப்புகள் புலக்காட்சியுடன் தொடர்புறும் வேளையில் நிகழ்வனவாகும்.
உடம்பிலும் பார்க்க மிகவும் நுண்ணிதான புலன்கள் உடம்பைக் கட்டுப்படுத்தி வைக்கின்றன. உடம்பிலே பேச்சு, ஸ்பரிசம், பார்வை, கேட்டல், சுவை ஆகியனவும் வாயு, பித்தம், சளி, போன்ற பகுதிகளும் இருந்தபோதிலும் அவை அனைத்தையும் சமமாகவே கட்டுப்பாட்டினுள் வைத்த புலன்கள் அதிகாரம் பண்ணுகின்றன.
 

நான்காம் அத்தியாயம் 33
3. புலன்களை "மாத்திரா" என்றும் வழங்குவர். இப்பதத்தின்
இருவித பொருளைத் தருக?
"மாத்திரா என்ற பதம் இரு பொருளைக் கொண்டத. (1) முதலாவது பொருள்:- அத ஒரு அளவு கோலாகும். (மாத்திரை) புலன்கள் அளவிடும் முறை இவ்வாறாகும். உதாரணத்திற்கு நாவை எடுத்துக் கொள்வோம். ஒரு பழுத்தின் சுவையை அத அளவிடுகிறத. அல்லது தீர்மானிக்கின்றது. அது இனிப்பா அன்றிப் புளிப்பா; நல்லதா அல்லது கெட்டதா, என்று ஆகும். கண்ணானது ஒரு படத்தை அத அழகானதா அல்லது அவலட்சணமானதா எனத் தீர்மானிக்கும். இக்காரியத்திற்கு அது ஒரு அளவு கோலாக அமைகின்றது. நாம் கேட்கும் இசையானது நன்றாக உளதா இல்லையா என்பதைக் காதகள் தீர்மானிக்கும். ஒரு வாசனை நறுமணமா அன்றித் தர்நாற்றமா என்பதை நாசி தீர்மானிக்கும்.
ஆகவே புலனுறுப்புகள் பலவகையான பொருட்களையும் அளந்து அவற்றின் தன்மைகள், குணாதிசயங்களைப் பற்றி வெளிப்பருத்தும் ஆற்றல் பெற்றவை.
(2) ஒவ்வொரு புலனுறுப்புகளினாலும் நுகர்ந்த கொள்ளக்கூடிய எல்லையையும் "மாத்திரா குறிக்கின்றது. இத இறைவனால் அநுமானிக் கப்பட்டதாகும். அதன்படி கண்ணுக்குப் பார்க்கத்தான் முடியும். கேட்க முடியாது. நாவானது பேசவோ சுவைக்கவோ தான் முடியும். பார்க்க முடியாத, ஒவ்வொரு உறுப்பும் (நாவைத் தவிர) ஒரே ஒரு பிரத்தியேகமான திறனை வெளிப்பருத்தும் சக்தியை இறைவன் வழங்கியுள்ளார்.
தெய்வீகத்தினால் குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளுக்கு அமையவே தமது புலன்களை உபயோகிப்பவர்கள் மட்டும் தெய்வ சங்கற்பத்தின்படி ஒழுகுபவராகின்றனர். குறிப்பிட்ட எல்லைகளைக் கடைப்பிடியாதோர் தண்டனைக்குரியவராகின்றார்.
ஆகவே நாம் இறைவனால் அததனுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கிற்கு அமையவே புலனுறுப்புக்களை மதிப்புடன் உபயோகித்தல் வேண்டும்.
இவ்வாறாக நாம் எமது நாசியை எம்மை ஆரோக்கியமாக வைத்தக் கொள்வதற்காக உட்சுவாசித்தல் வெளிச்சுவாசித்தலுக்காகவும், நறுமணம் தர்நாற்றம் இரண்டையும் வேறுபடுத்தி அறிந்து, தர்நாற்றத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் உபயோகப்படுத்த வேண்டும். அதவன்றி நாசியை அதற்கென வழங்கப்பட்ட செயற்பாட்டினின்றும் விலத்தி, பொடி போடுவதற்கும், தர்நாற்றத்தைச் சுவாசிப்பதற்கும் உபயோகித்தால், நாம் விதியை மீறி நடப்பவர்கள் ஆவோம்.

Page 26
புலன்களை அடக்குதல் 34
அப்பெழுது நாம் இரு வகையில் குற்றமிழைக்கின்றோம்
(1) தெய்வசங்கற்பத்தை மீறுதல்
(2) எமது உடம்பிற்குத் தீமையை விளைவித்தல்
இவ்விதமாகவே, நல்ல போஷாக்கான உணவை உண்டும் மற்றவர்களை மகிழ்விக்கக் கூடியதாக இனிமையாகவும் மென்மையாகவும் பேசுவதற்காகவுமே எமக்கு வாயும் நாவும் இறைவனால் வழங்கப்பட்டிருக் கின்றத. ஆனால் தர்அதிஷ்டவசமாக, நாவானது போதைப்பொருள், மாமிச உணவு, புகைப்பிடித்தல், ஏனையோரைப் புறங்கடறல், கதை காவுதல், மற்றவர்கள் மனம் நோகும்படி பேசுதல், பொய் சொல்லுதல் என்பவற்றிற்காகப் பிரயோசனப்படுத்தப்படுகின்றது.
இத்தகைய தஷ்பிரயோகத்தின் காரணமாக மனிதன் எல்லையற்ற பிரச்சினைகளை அனுபவிக்கின்றான்.
4. "புலன்கள், உடம்பாகிய தேரிலே பூட்டப்பட்ட குதிரைகள்"
என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆராய்க.
அஸ்வ' என்ற சமஸ்கிருதச் சொல் குதிரையைக் குறிக்கும். இச்சொல்லுக்கு 'அமைதியற்ற' என்ற பொருளும் உண்டு. எல்லா வேளைகளிலும், தயிலும் போதும்கூட குதிரையின் உடம்பின் ஏதாவது ஒரு பகுதி அசைந்த வண்ணம் இருக்கும். குதிரையின் இந்த அமைதியற்ற நிலைகாரணமாகவே அத "அஸ்வ' என்ற பெயரைப் பெற்றுள்ளது.
புராதன காலத்தில் மன்னர்கள் அஸ்வமேதயாகம் செய்தார்கள். அஸ்வ அமைதியற்ற "மேத புத்தி என்பத பொருள். ஆகவே "அஸ்வமேத என்றது "அமைதியற்ற சிந்தை" என்று ஆகும். எனவே யாகத்தில் உபயோகிக்கப்பட்ட குதிரை அமைதியற்ற சிந்தையைக் குறிக்கின்றது. அந்தக் குதிரையைப் பிடித்து அடக்குபவன் எவனோ அவன் "தீமந்தா" எனப்பட்டான். தலைமைத்தவமான புத்தியைக் கொண்ட மனிதன்.
குதிரைத்தனமான புலன்களை அடக்குமுறைக்குக் கொண்டு வர வேண்டியது, இன்று, ஒவ்வொருவரதும் கடமையாகும். அத்தகை யோனே உண்மையில் நாயகமாவான்
புலன்கள் மீத ஒருவனுக்குக்கட்டுப்பாடு இல்லையானால் ஏனைய வேறு திறமைகளெல்லாம் பிரயோசனமற்றவையாகும்.
5. எவ்வாறு மனிதன் தன்னைத் தெய்வீக நிலைக்கு உயர்த்திக்
கொள்ளலாம்?
கடவுள் தந்த புலன்களை, அவை எத எதற்காக வழங்

நான்காம் அத்தியாயம் 35
கப்பட்டதோ அவ்வாறே அதனை முறையாக உபயோகிப்பதன் மூலம் மனிதன் தெய்வீக உயர்வை அடையலாம்.
நாம் விரும்பியபடி புலன் உறுப்புகளை உபயோகிக்கக் கூடாது. தேராகிய உடம்பிலே பூட்டப்பட்ட குதிரைகள் புலன்கள் என்று கடோபநிடதத்தில் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளத.
உடம்பாகிய தேர் தங்கு தடையின்றிப் பக்குவமாக, சரியான பாதையிலே சென்று ஈற்றில் வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு, நாம் புலனுறுப்புகளை எவ்வாறு கொண்டு நடத்துதல் வேண்டுமென அறிந்திருத்தல் அவசியம். குதிரைகள் தேரின் முன்புறம் இருக்க வேண்டுமே ஒழிய பின்னாலும் இருக்கக்கூடாது அதற்குள்ளும் இருக்கக்கூடாது.
புலன்களை எமத கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் அவற்றிற்கு ஆதரவு கொடுப்போமேயானால் அத குதிரைக்குப் போதியளவு வேலை கொடுக்காமல் மேலதிகமாக உணவு கொடுத்தலைப் போன்றிருக்கும். இன்று மனிதன் புலன்களுக்குப் போதியளவு வேலை கொடுக்காது அதற்கு ஆதரவு கொடுத்தவண்ணம் இருக்கிறான். கடவுள் நிர்ணயித்தபடி புலன்களைச் சரியானபடி உபயோகித்தல் வேண்டும். இல்லாவிடில் அவை தன் எண்ணங்கொண்டு அடங்காது திரியும். இதனால் மனிதன் அமைதிக் குறைவால் கஷ்டப்பட நேரும்.
புலன்களை முறையாக அடக்கி வைத்திருந்தால் தான் மனிதன் சந்தோஷமாக இருக்கலாம்.தனது மகிழ்ச்சியையும்தன்னைச் சுற்றியுள்ள வர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
б. புலன்களுடைய தேவைகள் எவ்வாறு ஒருமைப்பருத்தப்பட்ரு
இசைவாக்கப்பட்டு, கட்டுப்பாட்டின் கீழ் கொண்ருவர முடியும்?
நன்மைதீமைகளைச் சமநிலைப் பருத்திக் கொண்டால் புலன்களுடையதேவைகளை ஒருமைப்படுத்திஇசைவாக்கப்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு நல்லதோர் உதாரணமாக தர்க்காராம் விளங்குகிறார். கடவுளின் சிறந்த அடியார் தர்க்காராம். அவர் இயல்பாகவே சாந்த குணம் படைத்தவர். அமைதியும் சகிப்புத்தன்மையும் கொண்டிருந்தபடியால் அவர் அவரது கடினகுணம் கொண்ட மனைவியுடன் காலங்கழிக்கக் கூடியதாக இருந்தது. ஒருவருக்கு எதிர்த்துப் போராடும் தன்மை இருந்தால் தான் அதிருப்திகளையும், பிரச்சனைகளையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.

Page 27
புலன்களை அடக்குதல் 36
ஆனால் தர்க்காராமோ பொறுமைக்கும் தாராள மனப்பாண்மைக்கும் உறைவிடமாகவே விளங்கினார். இத்தகைய குண இயல்பு ஆத்மீக உயர்வு பெற்ற ஒரு சிலரிடம் தான் காணப்படும்.
பொறுமை, தாராள மனப்பான்மை ஆகிய நல்லியல்புகள் பக்தியினாலும், இறை நம்பிக்கையினாலும் தான் பெற்றுக்கொள்ளலாம்.
எம்மால் புலன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்ற பயத்தினால் நாம் மனமுடைந்து விடக்கூடாது. ஒரு நோக்கு உடைய பக்தியை வளர்த்தலாலும், இறைவனிடம் சரணாகதி அடைதலாலும் புலன்களை நிச்சயம் அடக்கிக் கொள்ளலாம்.
7. புலன்களை அடக்குவதில் புறச்சூழலுக்குப் பங்குண்டா ?
புலனடக்கத்திற்குப் புறச்சூழல் தாக்கமளிக்காது. தர்க்காராம் விடயத்தில் அவரது ஆத்மீக அனுட்டானங்களுக்குச் சூழ்நிலை உகந்ததாக இருக்கவில்லை. ஏனெனில் அவரது மனைவி அவருக்கு ஒத்தழைப்பைக் கொடுக்கவில்லை. ஆனால் அவரது சகிப்புத்தன்மையும், பரந்த மனப்பான்மையும் அவருக்குச் சகல கஷ்டங்களையும் தாண்டிக் கொள்ள உதவின.
இவ்விடயத்தில் ஒரு சிறிதளவேனும் நன்மை பயக்காத சூழலிலும் பார்க்க ஒவ்வொருவரது உத்வேகத்தின், தூய்மை, தெய்வீகப்பாதையில் செல்வதற்கான காரணம், திடசித்தத்தின் நேர்மைத்தனம் ஆகியன காரணியாயுள்ள தென்பது வெளிப்படை.
8. புலன்களை எவ்வாறு நன்னெறிப்பருத்தலாம் ?
நாம் சந்தர்ப்பம் கொடுக்குமிடத்துத் தான் புலன்கள் தீய பழக்கங்களை வளர்க்க முடிகின்றன. புலன்களது தீய பழக்கங்களைக் களைந்துவிடுவ்து எமது கடமையாகும்.நல்ல பழக்கங்களைக் கையாள அவற்றிற்குப் பயிற்சி யளித்தல் வேண்டும்.
தீய அல்லது எதிர்மாறான விடயங்களால் ஒரு புலனுறுபின் கவனம் கலைக்கப்பட்டு விட்டால் அதனை வேறொரு விரும்பத்தக்க விடயத்திற்கு, அதற்கும் மேலான பலமான கவர்ச்சி, தாண்டுதல் சக்தி கொண்டவற்றால் ஈர்க்க வழிவகுக்கவேண்டும். அப்பொழுது அத அத்தீயபழக்கத்தை விட்டுப் புதிய நல்ல பழக்கத்தை மேற்கொள்ள பயிற்சிக்கப் பட்டு விடும். முற்காலத்தில் தவம் ஆற்றியோர் புலனடக்கத்தை ஒரு விரதம் - தவமாகக் கொண்டனர்
" ", , ,
". . . . . v . . ܕ ܗ
ܗܝ
تروي إم تي يمكة القمة جثة
.t ''' * ' + ܐ .

நான்காம் அத்தியாயம் 37
9. பசுபதி என்ற பதம் எதனை உணர்த்துகிறது?
பசு என்றால் மிருகம், புலன்களை மிருகங்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. பசு என்றால் புறநோக்குக் கொண்டது என்பதாகும். உள்நோக்கு அல்லது அகநோக்கு உடையவரை பசுபதி' என்பர். அதாவது மிருகங்களுக்கு அதிபதி அல்லது எம்பிரான் சிவன் ஆகும்.
மனிதன் பசுபதியாக, புலன்களை வென்றவனாக, வருவதற்கு முயற்சிக்க வேண்டும். பசுவாக - புலன்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.
புலன்களை வெல்ல வேண்டுமானால் அவற்றிற்கு ஆதரவு கொடுக்கக் கூடாது. இத முக்கியமானதாகும்.
10. "ஒவ்வொரு புலனின்பமும் அதனுடன் துன்ப ரேகையினையும்
கொண்டுள்ளது.” விளக்கவும்?
புலனின்பங்களது தோற்றப்(ஆரம்பப்) பகுதியினை நாம் ஆராய்ந்து பார்த்தால் அனைத்தம் தன்பியலில் தான் ஆரம்பமாகிறது என்பது தெளிவாகும். புலன்களிலிருந்து பெறப்படும் இன்பம் நிலைத்த இருக்காது. சொற்ப வேளைக்குரியது. இறுதியில் தண்பத்தையே விளைவிக்கின்றது.
ஆசைகள் ஒரு நொடிப் பொழுது தோன்றி அடுத்த நொடிப் பொழுதில் அடங்கிவிடும். புலனின்பங்களது தோன்றிமறையும் நிலையில்லாத தன்மைபற்றியும், போலியான இயல்புபற்றியும் ஊன்றிச் சிந்தித்தால் நாம் பிரித்தறிதலை வளர்க்கலாம். பற்றற்ற நிலையையும் வளர்க்கலாம். இதனால் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் நிறுத்தலாம்.
மேலும் எமது புலன்களை சுறுசுறுப்பான நிலையில் வைத்து சரியான வழியில் செல்ல வகுத்தோமேயானால் அவற்றினால் எமக்கு எதுவித தீமையும் நேராது. அல்லாவிடில் எமது புலன்களுக்கு நாம் அடிமையாவோம்
I. சிசுபாலன் இறந்ததும் அவனது ஆத்மா கிருஷ்ணபகவானுடன்
இணைந்து கொண்டது ஏன்?
சிசுபாலன் கிருஷ்ணபகவானை எப்பொழுதும் காரமான சொற்களால் வைத விடுவான். யுதிஷ்டிர மகாராஜாவினது *## »0
K. K. Kayilaiħathar TEACtitle'. ryANAR K^V"' ': * MALLAKAY

Page 28
புலன்களை அடக்குதல் 38
பகவானுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டதை பெரிதும் கண்டித்தான். அத்தடன் பகவானையும் பெருமளவு திட்டிவிட்டான். அவனத வசை மொழிகள் எல்லை மீறிச் செல்வதைக் கண்டதும் கிருஷ்ண பகவான் தனக்கு யுதிஷ்டிரனால் வழங்கப்பட்ட பாக்கு, வெற்றிலை அடங்கிய தட்டத்தை சிசுபாலன் மீது வீசி எறிந்தார். தஷ்டனாகிய சிசுபாலன் கிருஷ்ண பரமாத்மாவினால் கொலையுண்டான். அவனது உடம்பிலிருந்து வெளிக்கிளம்பிய ஆன்மசுடர் கிருஷ்ண பகவானுடன் இணைந்த கொண்டது.
அப்பொழுது ஆச்சரியமுற்று நின்ற யுதிஷ்டிரனுக்கு நாரதர் விளக்கிக்கூறினார். இடையறாது இறை சிந்தனையில் இருப்பவரது குருதி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிவேதனமாகிறத. பகவான் கிருஷ்ணரிடம் கொண்ட எல்லையற்ற வெறுப்பினாலே சிசுபாலன் பக்தர்களைவிடக் கூடிய அளவு இறைசிந்தையில் இருந்துள்ளான். இடையறாத நினைத்தல் அன்புக்காகவும் இருக்கலாம், வெறுப்புக்காகவும் இருக்கலாம், பொறாமை, ஆணவம் அல்லது சரணாகதியாக எப்படியும் இருக்கலாம். எதவானாலும் சரி எண்ணுதல் ஒருதன்மையதே.
சிசுபாலன் ஓய்வில்லாது தொடர்ச்சியாகவே கிருஷ்ண பகவானை எண்ணியதன் பலனாலேயே அவனது ஆத்மா கிருஷ்ணபகவானுடன் இணைந்து கொண்டத.
12 தமது குறைபாடுகளுக்கெல்லாம் இறைவனையும், சுற்றாட
லையும், அல்லது வேறொரு நபரையும் கண்டித்துப் பேசு கிறார்கள் சிலர். இது எவ்வாறு நடைபெறுகிறது? இதனை எவ்விதம் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை விளக்குக.
தமது குறைபாடுகளுக்கு எல்லாம் சிலர் கடவுளை நொந்த கொள்ளுகிறார்கள். கடவுள் வெறுப்பு, பொறாமை, விருப்பு, விருப்பின்மை, இவற்றிற்கு அப்பாற்பட்டவர். இவற்றை நாம் இறைவன் மீது ஏற்றிப் பேசினால் அவை அனைத்தும் எமது சுய உணர்வுகளின் பிரதி பிம்பங்களேயாகும்.
தூய்மையான கண்ணாடி போன்றவர் கடவுள். அவர் எவரையும் தண்டிப்பது மில்லை. வெகுமதி வழங்குவது மில்லை. நாம் எமது செயல்களினாலேயே தண்டிக்கப்படுகிறோம். அல்லது வெகுமதி வழங்கப்படுகின்றோம். இறைவனது கண்கள் தாய்மையையோ அழுக்கையோ காண்பதில்லை. அவை அனைத்தம் எமது பார்வையில் மட்டும் தான் உள்ளது.
மனிதன் எண்ணுவது போலாகின்றான்.

நான்காம் அத்தியாயம் 39
நாம் இந்த உலகை எமத வர்ணக் கண்ணாடி கொண்டு பார்க்கிறோம். அதனால் உலகம் அந்த வர்ணமுடையது என உலகிற்கு அவ்வர்ணத்தைப் பிழையாகவே நாம் ஊட்டுகிறோம். எமது பிழையான பார்வையே இத்தகைய குறைபாடுகளைக் காண வைக்கிறது. ஆனால் அவை உண்மையில் சிருஷ்டியில் இருக்கவில்லை.
நாம் எமது புலன்களைச் சரியான முறையில் உபயோகித்தால் அவை எமக்கு சரியான எண்ணப் பதிவுகளையே தரும். எமத சுய எண்ண ஓட்டங்கள், உணர்வுகளிலுள்ள பிழைகளை நாம் தப்பிதமாக எமது புலன்களுக்குச் சாட்டி விடுகிறோம். தர்க்காராமைப் பொறுத்தவரை அவர் மரியாதையில்லாத, எதிர்மாறான நடத்தையைக் கொண்ட அவரது மனைவிக்குங்கடட நல்ல பொருத்தமான விளக்கத்தைக் கொடுத்தார். குடும்ப வாழ்வில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும்கூட அவரது ஆத்மீக முன்னேற்றத்திற்கும் தாராள மனப்பான்மைக்கும், புலன்கள் எவ்விதத்திலும் தடையாக அவரத பாதையில் குறுக்கிடவில்லை. o
எனவே, நாம் செய்ய வேண்டியத எமது எண்ணங்களையும் உணர்வுகளையும் சரியான ஆத்மீக அநுட்டானத்தின் மூலம் இசைவு பருத்திக் கொள்ளுதலாகும். இறைவனை நொந்தோ வேறு நபர்களையேனும் சுற்றாடலையேனும் எமத குறைபாடுகளுக்காகக் குறை கூறவோ கூடாதது.
13. மனிதன் தனக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தையும், பிரித்தறியும்
திறனையும் எவ்விதம் பயன்பருத்த வேண்ரும்?
பிரித்தறியும் திறனைக் கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அவன் இத்திறனை புலனடக்கத்திற்கும், புலன்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கும் உபயோகித்தல் வேண்டும். பிரித்தறியும் திறனை மனிதன் பிழையாக உபயோகித்த, புலன்களுக்கு அடிமையாகி தவறான பாதையினை மேற்கொள்வானாகில், அவன் ஒரு மனிதப் பிறவிக்குப் பயனான முறையில் ஒழுகவில்லை என்றாகும்.
மனிதன் தனக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் புலனடக்கத்திற்கும், தன்னையும் அடக்கிக்கொள்ள உபயோகித்தல் வேண்டும். அவன் புலன்களது சுதந்திரத்திற்கல்ல, புலன்களினின்றும் சுதந்திரம் பெறவே முயல வேண்டும்.
உண்மையான சுதந்திரம் என்பது புலன்களையும் தன்னையும் கட்டுப்படுத்தி, தன் உணர்வு பெறச் செய்த எல்லையில்லா ஆத்மானந்தத்தை அனுபவித்தல் ஆகும்.

Page 29
புலன்களை அடக்குதல் 40
14. கல்வியுடனேயே குண இயல்புகளையும், மனித விழுமியங்
களையும் விருத்தியாக்குவதன் பிரதான தன்மையை விபரித்துக் காட்ருக.?
இன்று கல்வியானது புலமை விருத்தியையும் கெட்டித் தனத்தையும் மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளது. அது ஒருவனத குண இயல்புகளையும் மனித விழுமியங்களையும் முற்றாகப் புறக்கணிக்கிறது.
கல்வி அறிவுடன் குண இயல்புகளைக் கொண்டிருத்தல் மிகவும் முக்கியமானதாகும். அப்பொழுதுதான் வாழ்வின் முழுமையான சமநிலைப்பாட்டை நாம் அனுபவிக்கலாம். எவ்வளவு அறிவைப் பெற்றுக் கொண்டாலும் குண இயல்புகளை விருத்திசெய்யாவிடில் அவ்வறிவினால் ஒரு பயனுமில்லை. நாம் ஒருபுறம் புலனை அடக்க வேண்டும், மறுபுறம் நற்பண்புடைய வாழ்க்கையையும் விருத்தி செய்தல் வேண்டும்.
15. புலன்களை அடக்குவதோரு அவற்றை இசைவு பருத்த
வேண்ரும், விளக்குக?
நல்லனவற்றைப்பற்றி உற்று நோக்குவதால் புலன்களை இசைவுபடுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்யுமிடத்த முறையே தீமையினின்றும் எம்மை விலத்திக் கொள்கிறோம். அலைந்து திரியும் சிந்தையை அடக்கவல்லது யோகம் என்று பதஞ்சலி கூறியுள்ள போதிலும் அத மிகவும் கடினமானதாகும். அந்நிலையை அடைவத முடியாதகாரியம். இலகுவான வழி சிந்தையின் இசைவாக்கம் அல்லது சமநிலைப்பாட்டைப் பெறுவதாகும்.
எமது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணியாக இருப்பது எமத சிந்தையின் பலவீனமாகும்.
பலர் கஷ்டப்படுவத அவர்களது சிந்தையினாலல்ல. ஆனால், பலவிதமான தப்பான கற்பனைகளினாலாகும். மனிதன் தப்பான கற்பனைகளையும் அடித்தளமில்லாத பயப்பாட்டையும் கைவிட்டு சிந்தையின் இசைவாக்கத்தையும் சமநிலைப்பாட்டையும் பெறுதல் வேண்டும்.

ஐந்தாம் அத்தியாயம்
தெய்வீகத்திற்கு வழி
1. கோபமும் பொறாமையும் எத்தகையோரது உள்ளத்தில்
குடியிருக்கும்?
கோபம், பொறாமை, ஆகிய சாபக்கேடுகள் மதிப்பில்லாதவரது உள்ளத்தில் தான் இருக்கும்.
2. புலன்கள், புலனுறுப்புக்கள், புலப்பொருட்கள், புலநுகர்வு
இவற்றினிடையேயான வேறுபாருகள் என்ன?
புலன்கள், புலனுறுப்புக்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கருத்துடையவை. புலனுறுப்புகள் ஐந்து. அவை கண், காத, நாசி, நாக்கு, கைகள். புலனுகர்வு என்றால் பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், தொடுதல் ஆகும்.
புலப் பொருட்கள் என்பது சுற்றாடலிலுள்ள பொருட்கள். இவற்றிடையே எமத ஐம்புலன்களும் புலனுறுப்புக்கள் மூலம் புலணுணர்வைப் பெறுகின்றன. புலருகர்வே புலனுறுப்புக்களிலும் கூடிய சக்தி வாய்ந்தவையாகும்.
ஈற்றில் முடிவில்லாததன்பத்தை விளைவிக்கக் கூடிய, தோன்றி மறையும் இயல்புள்ள இன்பத்தைத் தரும் புலனுறுப்புகளால் வழங்கப்படுகின்ற பகட்டான பந்தத்தின் மீது கொள்ளும் பற்றை அல்லாத, புலன்களைக் கட்டுப்பருத்துதலையே எமது பிரதான குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
3. புலனுறுப்புகளில் மிகவும் பிரதானமானது எது?
அதனைக் கட்டுப் பருத்துவதால் வரும் பயன் யாது?
புலனுறுப்புகளில் பிரதானமானது நாவாகும். நாவை அடக் கினால் எல்லா உறுப்புக்களையும் அடக்கியதற்குச் சமமாகும்.

Page 30
தெய்வீகத்திற்கு வழி 42
நாவிற்கு இரு முக்கிய கருமங்கள் உண்டு. உணவு உண்ணுதல், பேசுதல். நாவின் இவ்விரு இயல்புகளையும் அடக்கமுடியுமாயின் நாம் தெய்வீகத் தானுடன் இணைய முடியும்
நாவானது பேசுவதை நிறுத்தினால், சிந்தை கலகலக்கத் தொடங்கி விடும். சிந்தையைத் தடுப்பதற்கு அறிவைத் தட்டி எழுப்பவேண்டும். எழுப்பி மெதுவாக ஆத்மாவிடம் செல்லத் தூண்ட வேண்டும்.
உண்மையான அனுட்டானம் என்பது வாக்கைச் சிந்தையுடன் இணைவித்து சிந்தையைப் புத்தியில் இணைத்துப் புத்தியை ஆத்மாவுடன் இணைத்தலாகும்.
இந்த அனுட்டானத்தை செய்யாத விடுத்த, மனிதன், ஆழ்ந்த துன்பத்தில் அமிழ்த்தக்கூடிய புலனின்பத்தில் ஈடுபடுகிறான்.
4. புலன்களால் பெறப்பரும் எல்லா இன்பத்தையும் உண்மையில்
அனுபவிப்பது யார்?
புலன்களால் பெறப்படும் எல்லா இன்பங்களும் உண்மையில் ஆத்மாவால் தான் அனுபவிக்கப்படுகின்றத. நிலைபெற்றிருக்கும் எல்லா வற்றிற்கும் காரணமாக இருப்பது காரணமற்ற ஆத்மாவாகும்.
இப் பிரபஞ்சத்திலேயுள்ள எல்லாப் பொருள்களையும் பாதுகாத்து, நிலை பேறடையச் செய்து, தலைமை தாங்கி ஆதிக்கம் செலுத்துவது இந்த ஆத்மாவாகும்.
புறத்தே காணப்படும் உலகிற்கும் எமக்குள் இருக்கும்
அகஉலகிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிருஷ்டிக்கப்பட்ட புற உலகின் அடித்தளம் ஆத்மா. அக உலகின் இயக்கத்திற்கு தோற்றுவாயாக விளங்குவதும் அததான்.
எல்லாவற்றினதும் மூல காரணியாக விளங்குவது ஆத்மா. ஆத்மாவின் மிகப்பிரதானமான இந்தப் பங்களிப்பை நாம் உணர்ந்து கொண்டால் தான் புலனுறுப்புகள் எம்மீது ஆட்சிபுரிவதை நிறுத்திக் கொள்ளும்.
5. நாக்கும் வாயுமே ஜம்புலன்களில் முக்கியம் வாய்ந்தவை.
ஆராய்க?
நாவையும் வாயையும் அடக்க முடிந்தால் ஏனைய புலனுறுப்புகளையும் மிக இலகுவாக அடக்குவதற்கு சாத்தியமாக இருக்கும். கடோபநிடதத்தில் புலன்கள் குதிரைக்கு ஒப்பிடப்பட்டுள்ளன. குதிரைக்குக் கடிவாளத்தைப் போட்டுவிட்டால் அதன் அசைவுகளைக்

ஐந்தாம் அத்தியாயம் 43
கட்டுப்படுத்தலாம். அவ்வாறே மனிதனுக்கு. ஐம்புலன்களில் முக்கியமானத நாவாகும். நாவை அடக்கி விட்டால் ஒருவன் இந்த உலகத்தையே அடக்கக் கூடிய சக்தியைப் பெறலாம். பேச்சு வன்மையானது நல்ல புனிதமான காரணங்களுக்கே உபயோகிக்க வேண்டும். அல்லாவிடில் அதனைப் பிழையாக உபயோகிக்க நேரிடும். "கால் வழுக்கினால் பாரதாரமான விளைவு ஏற்படமாட்டாத, ஆனால் நா பிழைத்தால் அத உன்னை நரகத்திற்குத்தள்ளி விடும்" என்று ஒரு பழமொழியுண்டு. அசட்டுத்தனமாக நாவைப் பிரயோகிக்கும் வேளை அத மற்றவரை மிகவும் தண்புறுத்தலாம். கரும் சொல்லினால் சுடப்பட்டு உண்டாகிய புண்ணை இவ்வுலகில் எந்த வைத்தியனாலும் மாற்றிவிட முடியாது.
б. வில்வமங்கலம் (ஜயதேவன்) தனது நாவை எவ்வாறு
அழைத்தார்?
"அன்பான நாவே! நல்ல சுவையையும் அல்லாததையும் பிரித்தறியும் தன்மை உனக்குண்டு.நீவீண்வார்த்தைகளில் ஈடுபடாதே.இனிமையான புகழ்மிக்க இறை நாமங்களாய கோவிந்தா தாமோதரா மாதவா! என்று பாடி உன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்'
7. புலன்கள் புலப்பொருள்களுடன் சம்பந்தப்பரும் போது என்ன
நடக்கிறது?
புலன்கள் புலப்பொருளுடன் சம்பந்தப்படும் போது அத அதிகப்படியான இன்பத்தையும் வழங்கலாம். முடிவிலாத்துன்பத்தையும் வழங்கலாம்.
யாரோ ஒருவர் எம்மை வைகின்றார். அத எமக்குக் கேட்கவில்லை. அதனால் நாம் எவ்வகையிலும் எவ்வித தாக்கத்தையும் அடையவில்லை. ஆனால் அவர் வைக்கின்றவேளை அச்சொற்கள் எமது காதுகளை அடைந்தால் நாம் நிலைதடுமாறுகிறோம். கோபமும் அடைகிறோம்.
இதற்குக் காரணம் என்ன? கேட்கும் புலனுக்கும் புலப்பொருளாய தீய வார்த்தைகளுக்கும் ஏற்பட்ட தொடர்பேயாகும். அதுபோலவே ஒருவர் எம்மைப் புகழ்ந்து பேசுகிறார். அது எமக்குக் கேட்கவில்லை. இதனால் எமக்கு எதுவித சந்தோஷ உணர்வோ, அல்லது பேசியவர் மீது பாசமோ ஏற்படவில்லை. ஆனால், அவ்வார்த்தைகளை நாம் கேட்டிருந்தால், புகழ்ச்சியுரையால் சந்தோசப்படுவோம். பேசியவர் மீது ஒருவித பாசமும் எமக்கு உண்டாகும்.

Page 31
தெய்வீகத்திற்கு வழி 44
எனவே, புலன்கள் புலப்பொருள்களைச் சந்திக்காத இடத்துத்தான் அமைதியை அனுபவிக்கமுடியும் என்பது தெளிவாகிறது.
8. புலன்கள் புலப்பொருள்களுடன் தொடர்புறுவதால் ஏற்பரும் இன்ப துன்பங்களைத் தவிர்த்து, மானிட வரையறைகளாய இவற்றிற்கு அப்பால் நாம் செல்வது எவ்வாறாகும்?
புலன்களையும் புலப்பொருள்களையும் ஒன்றோடொன்று சம்பந்தப்படுவதை தவிர்த்துக்கொள்ள இயலாத,
இன்பம் தன்பமாகிய உணர்வுகளைத் தவிர்த்து அமைதியை நாம் அனுபவிப்பதற்கு, சமநிலைப்பாடான உணர்வை நாம் பேணிக்கொள்ள வேண்டும். அதாவது உயர்விற்கும் தாழ்விற்கும் எழும் உணர்வுகளுக்கு இடமளிக்கக் கூடாது. நாம் சிறிது முயற்சித்தால் இந்த சமநிலைப்பாட்டை எம்முள் விருத்தி செய்து கொள்ளலாம்.
இத்தகைய நோக்கத்தைப் பேணிக்கொள்வதற்கு நாம் ஆத்ம விசாரணை வழி சென்று உறுதியான கோட்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது "நான் உடம்புமல்ல புலன் உறுப்புக்களுமல்ல. நான் பேரானந்தமாய் நிற்கும் ஆத்மா" என உறுதி கொள்ள வேண்டும்.
நாம் நிலைதடுமாறாது இந்தக் கோட்பாட்டில் எம்மை நிலைப்படுத்திக் கொண்டால் தான் புலனுறுப்புகள் எம்மைத் தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ளும்.
ஆத்ம விசாரணையில் இறங்கி, நாம் வேறொன்றுமல்ல ஆத்மாவே என்ற இடையறாத எண்ணத்தில் நிலைத்த நின்று இக்கோட்பாட்டை அனுசரித்த வந்தால்தான் மானிட எல்லைப்பாடுகளை கடந்த அதற்கு அப்பால் செல்ல முடியும்.
அப்பொழுதுதான் மனித எல்லைப்பாடுகளைக் கடந்து எல்லா வேளைகளிலும் தெய்வீக ஆத்ம நிலையை அனுபவிக்கலாம்.
9. பெரிய தத்துவ ஞானியாகிய பிலிப் சிட்னி தனது தந்தை
யாரிடமிருந்து பெற்ற அறிவுரைகள் என்ன?
பெரிய தத்தவ ஞானியாகிய பிலிப் சிட்னி தத்தையாரிடமிருந்த பெற்றுக் கொண்ட அறிவுரை பின்வருமாறு.
(1) தினமும் உனது உளம் நிறைந்த பிரார்த்தனையை இறை
வனுக்கு அர்ப்பணித்துக்கொள்.

ஐந்தாம் அத்தியாயம் 45
10.
(2) என்றும் உனது சிந்தனையை இறைவன்பால் செலுத்த
முயன்று கொள். (3) உனத ஆசிரியர்கள், சக மாணவர்கள் பால் நீ மிகுந்த
மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொள். (4) கோபத்திற்கோ, ஏமாற்றத்திற்கோ, அதிருப்திக்கோ இடம்
கொருக்காதே. (5) மற்றவர்கள் உண்னை விமரிசித்தாலோ அன்றி வைதாலோ மனக்
கவலை கொள்ளாதே. (b) மற்றவர்கள் உன்னை உயர்வாகக் கூறுமிடத்து நீ உயர்வு
உணர்வைப் பெறாதே. (7) மற்றவர்களை நீ ஒருபோதும் விமரிசிக்காதே. (8) நீ ஒரு சத்தியம் செய்யவேண்டுமானால் அதனை இறைவனுக்கே
உரித்தாக்கிவிடு. (9) வாக்கு இறைவனின் கொடையாகும். சொற்கள் இறைவனுக்கே
அர்ப்பணிக்கப்படவேண்டியவை. (10) எப்பொழுதும் உன் நாவை அடக்கிக் கொள். மேலும் அவரது தந்தையார் கூறியதாவது "மேற்குறிப்பிட்ட விதிகளை நீ பின்பற்றி வருவாயேயானால் நீ அறிவிலே வளர்ந்த உனது பெருமையும் பிரகாசிக்கும்." பிலிப் சிட்னி தந்தையாரது அறிவுரைகளைத் தவறாது கைக்கொண்டு சிறந்த தத்துவ ஞானி எனும் பேரும் புகழும் எய்தினார்.
நாவைப் பிரயோகிக்கும் வகையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் யாவை?
அதிகமாகப் பேசுவது அவரது சிந்தைக்குக் கெருதி
விளைவிக்குமென்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள்
தமது கற்றல் சம்பந்தமானவற்றிலன்றி வேறு எதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாதது.
மாணவர்கள் அறிவைத் தேடுபவர்களே யொழிய வேறு
பொருள்களைத் தேடுபவர்கள் அல்லர் என்பதை மறந்து விடக்கூடாது மாணவர்கள் கற்று முடிந்த பின்னரே வேறு கருமங்களில் ஈடுபடவேண்டும். அப்பொழுதம்கூட, அவரது வாழ்க்கை சம்பந்தமான விடயங்களில் மட்டுப்படுத்தல் விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

Page 32
தெய்வீகத்திற்கு வழி 46
11. நாவானது ஆற்றக்கூடிய நால்வகைக் குற்றங்கள் எவை?
நால்வகைக் குற்றங்களாவன:- (1) பொய் சொல்லுதல். (2) மற்றவர்களுக்கெதிராகக் கதை காவுதல். (3) மற்றவர்களை விமரிசிப்பது அல்லது தூற்றுதலி. (4) அளவுக்கு மிஞ்சிக் கதைத்தல். ஒருவன் உண்மையே பேசவேண்டும். உண்மையைக் கூறுதல் ஆபத்தான விடயமாக இருந்தால் அவன் உண்மையையோ பொய்யையோ கூறுவதைத் தவிர்த்தக் கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும்.
12. "மனிதனது இன்பதுன்பங்களுக்கு எல்லாம் மூல காரணமாக
விளங்குவது புலன்களாகும்" ஆராய்க?
புலன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதனால், அவற்றைத் தஷ்பிரயோகம் செய்வது மனிதனுக்குச் சகல விதமான இன்பதுன்பங்களையும் வழங்கக் காரணமாக விளங்கும்.
ஆகவே, புலன்களது இயல்பையும், பங்கையும் பற்றி நாம் நன்கு அறிந்து, எமக்கு நல்ல பலனைத் தரக்கூடியதாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எய்பொழுதும் சத்தியம்,நேர்மை தவறாதநீதிவழியில் நடத்தல் வேண்டும்.
தரதிஷ்டவசமாக, மனிதன், ஐம்புலன்களது தாக்கத்திற்கு இலக்காகிறான். அவை அவனை வழிபிறழச் செய்து எல்லை யில்லாப் பிரச்சனைகளுக்கு ஆளாக்குகின்றன.
ஒரு புலனின் பலவீனம் காரணமாக பல் வகைப்பட்ட மிருகங்கள் வலையுட் சிக்கி தமத உயிரை இழக்கின்றன. இவ்விதம், மானுக்கு ஒசையின் பெலவீனம், யானைக்கு ஸ்பரிசத்தின் பலவீனம், அந்துப் பூச்சிக்குப் பார்வையின் பலவீனம், தேனிக்கு முகத்தலின் பலவீனமும் உண்டு. ஆனால் தர்ரதிஷ்டம் மனிதனோ ஐம்புலனுக்கும் இலக்காகிறான். ஏதாவது ஒன்றினாலும் சிக்குப்படக்கூடியவன். இது அவனுக்கு எல்லையற்ற தன்பத்தை விளைவிக்கும்.
13. தன்புலன்களை அடக்கிய தலைவனான குழந்தை
பிரகலாதனின் எருத்துக்காட்டை ஆராய்க?
பிரகலாதன் இளமையான தெய்வ பக்தன். அரசனான அவன்

ஐந்தாம் அத்தியாயம் 47
தந்தை கடவுளின் எதிரி பிரகலாதனிடமிருந்த பக்தியைக் களைந்து எறிவதற்கு எவ்வளவோ முயற்சித்தான்.
பிரகலாதன் உலகியல் நியதிகளுக்கு ஆளாகாமல் எவ்வேளையும் இறைநாமமே உதட்டில் தவழ வாழ்ந்து வந்தான்.
எல்லா வேளைகளிலும் இறைவன் அவனைக் காப்பாற்றி அவன் உயிரைப் பாதகாத்தார்.
14. மனிதனால் அணியப்பட்ட பல்வேறு ஆடைகளை அடக்கிக் கொள்ள மேற்கொள்ளப்பரும் விதி ஒழுங்குகள் யாவை?
ஆத்மாவாகிய மனிதன் தனக்கு மேல் நான்கு ஆடை களைப் போர்த்தியுள்ளான். அதாவது உடம்பு, புலன்கள், சிந்தை அறிவு என்பனவாம். இந்த ஆடைகள் அதன் மென்மை இயல்பில் ஒன்றை விட ஒன்று சற்றுக் கூடிய மென்மை நிலையில் உளது.
அதாவத, அறிவு சிந்தையை அடக்க வேண்டும், சிந்தை புலன்களை அடக்கவேண்டும், ஏலவே அறிவினாலும் சிந்தையினாலும் கட்டுண்ட புலன்கள் உடம்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நடைபெறாது, புலன்களாவன சிந்தையையோ அறிவையோ கட்டுப்படுத்தினால் மனிதன் துன்பத்திற்கும் தயரத்திற்கும் இலக்காவான்.
ஆத்மாவே எல்லாவற்றிலும் பார்க்க மிக நுண்ணிதானது. அதுவே ஏனைய நான்கு போர்வைகளையும் . உடம்பு, புலன், சிந்தை, அறிவு என்பவற்றைக் கட்டுப்பருத்த வேண்டும்.
15. இன்றைய இளைஞர்களது முதன்மை வாய்ந்த முதற்கடமை
шпć95І?
இன்றைய இளைஞர்களது முதன்மை வாய்ந்த முதற்கடமை அவர்கள் தமதுபுலனுறுப்புக்களை தம் கட்டுப்பாட்டிற்குள் நிறுத்தி வைத்தல் ஆகும். புலனுறுப்புக்கள் மிகவும் சக்திவாய்ந்தவை.
இன்றைய இளைஞர்கள் தமது புலன்களின் மீது கட்டுப்பாட்டை இழந்து விட்ட காரணத்தால் தான் அவரது செயல்கள், நடத்தை யாவும் விலகிக் காணப்படுகின்றன. அவர்களுக்கு வகுப்பறையில் முறையாக இருக்கத் தெரியாது. எவ்விதம் நடக்கவேண்டும், தயிலவேண்டும், தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மூத்தோர், நண்பர்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறியாதிருக்கின்றனர்.

Page 33
தெய்வீகத்திற்கு வழி 48
வீதியில் நடக்கும்போது மாணவர்கள் தமது பாதங்களிலேயே கண்களைப் பதித்த வைத்திருக்கவேண்டும். நித்திரை செய்யும் போது தமத உடம்பை நேராக நீட்டி கொள்ளல் வேண்டும்.
சரியான முறையில் நடந்து கொள்ளும் பழக்கத்தை இடைவிடாது சாதனைப்படுத்திவந்தால்,இளைஞர்கள் நல்ல பழக்க வழக்கங்களைய்பெறுவதுடன் புலனடக்கத்தையும் பெற்றுக்கொள்வர்.
16. மாணவர்கள் கட்டுப்பாட்டை அநுசரித்தல் ஏன் மிகவும் முக்கிய
шDп6отфі?
மாணவர்கள் தம் செயற்பாடுகள் அனைத்திலும் கட்டுப்பாட்டை மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் மற்றவர்களால் வேண்டப் படாதவர்களாகியும் பிரபல்யம் அற்றவர்களாகியும் போய்விடுவார்கள்.
மாணவர்கள் தமக்கு நேரடியாகத் தொடர்பல்லாத விடயங்களில் தேவையற்ற கரிசனை கொள்வதைத் தடுத்தக்கொள்ள வேண்டும். அவர்கள் அளவிற்குமீறிக் கதைத்தல் கூடாது. மற்றவர்களது கருமங்களில் தலையிடக்கூடாது.
எவ்வாறு முறையாக இருக்க வேண்டுமென்பதை மாணவர்கள் அறிந்திருக்கவேண்டும். நடக்கும் போதோ இருக்கும் போதோ ஒரு கோல் போல் நேராக முள்ளந்தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் முள்ளந்தண்டின் அடிப்பாகத்திலிருக்கும் மூலாதாரச் சக்கரத்திருந்த எழும் ஷ*ஷ* ம்ன நாடி தலையின் உச்சிக்கு சகஸ்ராரத்திற்குச் செல்லும் போது வளையக்கூடாத,
மனிதனுக்கு ஷ*ஷஃம்ன நாடியின் முக்கியத்தைப் பற்றி குண்டலினி யோகம் பயிற்சி செய்பவர்களுக்குத்தான் விளங்கும்.
17. கிருஷ்ண பகவான் ஒரு பெண்ணின் காலணியைக் கொண்டு
சென்ற சம்பவத்தைக் கூறுக?
குருஷேத்திர யுத்தத்தின் ஒன்பதாவது நாள், பீஷ்மர், தான் மறுநாள் பாண்டவ சகோதரர்களைக் கொன்று விடுவதாக ஒரு சபதம் செய்தார். பாண்டவருடை மனைவி திரெளபதி இதனைக் கேள்வியுற்றதம் கிருஷ்ணபகவானிடம் ஓடிச் சென்று அவர் காலடியில் வீழ்ந்த அழுதாள். தனத புருஷர்களுடைய உயிரைக் காப்பாற்றி அருளும்படி அவரை வேண்டினாள். அப்பொழுது இரவு பத்து மணி

ஐந்தாம் அத்தியாயம் 49
திரெளபதியைத் தலையில் முக்காடு இட்டுக் கொண்டு பீஷ்மரத மாடிக்குச் சென்று அவர் காலடியில் வீழ்ந்து வணங்கும் படியும் அவ்வாறு செய்கையில் அவளத கரங்களிலிருக்கும் வளையல்கள் ஒசையெழுப்புமாறு வீழும்படியும் கிருஷ்ணபகவான் பணித்தார். மேலும் அவளது பாத அணிகளைத் தன்னிடம் விட்டு விட்டு ஏகும்படியும் கூறினார்.
திரெளபதி அவ்வாறே சென்று தனத கைவளையல்கள் ஓசையெழுப்ப வீஷ்மரத காலடியில் வீழ்ந்து வணங்கினாள். மத கலாசார முறையினைப் பின்பற்றி வீஷ்மரும் "தீர்க்க சுமங்கலி பவ" அதாவது "நெடுங்காலம் சுமங்கலியாக நீவாழ்க" என அவளை ஆசீர்வதித்தார். அவள் யார் என்று தெரியாமலேயே அவர் அவளை ஆசீர்வதித்தார்.
திரெளபதி தனது முக்காட்டை நீக்கித் தான்.அதே வரத்தையே பெற்றுக் கொள்வதற்காக அங்கு அந்த அகால வேளையில் வந்ததாக பீஷ்மருக்குச் சொன்னாள். இதன்பின்னர் கிருஷ்ண பகவான் பீஷ்மருக்கும் திரெளபதிக்கும் முன்பாக தனது நாடகத்தை ஆரம்பித்தார். இத்தகைய யுத்த தந்திர செயல்களை இந்தப் பிரபஞ்சத்திலே ஆற்ற வல்லவர் கிருஷ்ணபகவானேயாகும். இவரே இந்தக் குற்றமற்ற காரியத்தை இயக்கியவர் என்பதை அப்போது தான் பீஷ்மர் உணர்ந்தார்.
பீஷ்மர் அவ்வேளை மிகவும் பசித்திருந்த படியால் கிருஷ்ண பகவான் வந்தபோது அவர் கக்கட்டில் இருந்த பொதி என்னவாக இருக்கலாம் என அவரை வினாவினார். இவ்வேளை கிருஷ்ணபகவான் தான் வைத்திருந்த பொதியை நழுவ விட்டு அது நிலத்தில் விழும்படி செய்தார். கிருஷ்ண பகவான் திரெளபதியின் பாதணிகளையே சுமந்து வந்துள்ளார் என்பதைத் திரெளபதியும் பீஷ்மரும் அறிந்த கொண்டார்கள். அவர்கள் இருவரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த கிருஷ்ணபகவானின் செயலை வியந்தனர்.
"உனது பாததாமரைகளில் தம்மை அர்ப்பணித்த பக்தர்களைப் பாதுகாப்பதற்காக நீஅனுபவிக்கின்றதுன்பத்திற்கோ ஒரு எல்லைஇல்லை. நீ எத்தனை கருணையுள்ள தெய்வம்" பீஷ்மர் பரவசப்பட்டுக் கூறினார்.
18. கிருஷ்ணபகவான் திரெளபதியின் காலணிகளைச் சுமந்த
கதையிலிருந்து மாணவர்கள் பெறக்கூடிய பயன் என்ன?
நேர்மையான பாதையினின்றும் தவறாது தேவை வேண்டிய வர்களுக்கு உதவி செய்யும் காரியமாக இருக்கும் வரை மாணவர்கள்தாம்
செய்யும் காரியமானது இழிவானது.தமதுஅந்தஸ்திற்குக் குறைவானது என ஒரு போதும் எண்ணக்கூடாது.

Page 34
தெய்வீகத்திற்கு வழி 50
வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய அறநால்களில், சேவை செய்து மகத்தான புனித இலட்சிய வாழ்வு வாழ்ந் தோர்களது எடுத்தக்காட்டுகள் பல உள.
தரதிஷ்ட வசமாக இன்றைய மாணவருக்கு தம்முடைய பெருமைமிக்க கலாசாரப் பாரம்பரியத்தின் சிறப்பைப்பற்றி தெரியாதிருக்கிறது. அவர்களுக்கு சாஸ்திரங்கள் என்றால் என்ன, இராமயணம், (வேத) பாராயணம் என்றால் என்ன என்று கூடத் தெரியாதிருக்கிறத.
நியாயமான முறையிலும் இசைவாக்க அமைவிலும் இணைந்த விஞ்ஞான ஆத்மீக அறிவைப் பெறுவதற்கு மாணவர்கள் ஆரம்ப ஆய்வாளராகத் திகழ வேண்டும்.
19. உலக கலாசாரத்தின் வேற்றுமையின் பின்னணியிலிருக்கும் ஏகதன்மையினை அறிய அவாவுறுதல், கண்கு பிடித்தலிலுமே உண்மையான அறிவு இருக்கின்றது. விளக்கவும்?
ஆத்மீகத்திலிருந்து பிழிந்து எடுத்த சாறு தான் கலாசாரம் வேறுபட்ட தோற்றங்களையுடைய இனிப்புப் பண்டங்களுக்கெல்லாம் சீனி அடிப்படைக் காரணியாக விளங்குவத போல எல்லாத் தேசங்களிலும், நாடுகளிலும், வேறுபட்டதாகக் காணப்படும் கலாசாரங்களுக்கெல்லாம் ஆத்மீகமே பொதுத்தன்மையாகக் காணப்படுகிறது.
முழுமையான ஆத்மீகத்தின் ஒரு பகுதிதான் கலாசாரம் என்ற தனித்துவமான நோக்கை நாம்பண்படுத்திவிருத்திசெய்தல் அவசியம். விஸ்வம் - பிரபஞ்சம் என்றது விஷ்ணு ~ கடவுள் என்றதிலிருந்து வேறானது அல்ல. பிரிக்கமுடியாத உண்மை அல்லது சத்தியத்தின் இரு பக்கமும்தான் "உலகியலும்" "ஆத்மீகமும்" என்பதை நாம் கண்டு கொள்ள வேண்டும்.
ஒரு பயற்றம் விதையில் இரு பாதிப்பருப்பு இருக்கின்றது. அது முளைகட்டும் போத் இளம்தண்டு இரு பருப்பின் இடையில் இரண்டினது போஷாக்கையும் பெற்று வளருகிறது. அதுபோலவே, குருத்தாகிய மானிடப் பிறவிகட்கும் அவை வளர்ச்சியுற்று முழுமை அடைவதற்கு லெளக்க (உலகியல்) தன்மைகளும், ஆத்மீகத்தன்மைகளும் தேவைப்படுகின்றன. வாழ்க்கையின் இவ்விரு இயல்புகளும் ஒன்றையொன்று பிரிந்து இருக்கவும் மாட்டாது, தனித்து வளர்ச்சியடையவும் மாட்டாது. இந்த இரு இயல்புகளதும் ஒருங்கிணைப்பையே கலாசாரம்' என்றனர். பரந்த மனப்பான்மையுடன் ஒருமைப்பாடானதுமான காட்சியைப் பெறாதவர்கள் இரு தேசங்களுக்கிடையே
நிலவும் கலாசாரத்தில் நிலையற்ற, கற்பனை வேறுபாடுகளைக் காண்கின்றனர்.

ஐந்தாம் அத்தியாயம் 51
உலக கலாசாரங்களிலே மேலெழுந்த வாரியாகக் காணப்படும் வேற்றுமைகளுக்கு அப்பால் இருக்கும் அடிப்படை ஒருமைத்தன் மையைக் காண விளைந்து அதனைக் கண்டு கொள்வதே உண்மையான ஞானம் ஆகும்.
20. சமயம் என்ற பதத்தின் கருத்தைக் கூறவும்?
"சமயம்' என்றால் தெளிவுற உற்று உணர்தல் என்பதாகும். எத்தகைய சமயத்தைப் பின்பற்றிய போதும், எல்லாமதங்களுக்கும் உற்று உணர்தல் என்பது பொதுநியதியாக இருப்பதனால் எல்லாமதங்களும் அடிப்படையில் ஒன்றேயாம். இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், ஒரு மதம்தான் இருப்பது. ஏனெனில் உற்று உணர்தல் பொதுத் தன்மையாக -ஒருமையாக இருப்பதால் ஆகும் என அறிய முடிகின்றத.
இந்த மதம், பெளத்தம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் இவை அனைத்தம் வேறுவேறு மதங்களெனக் கூறுவத ஒருவரத குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறத. அத்தடன் சமயம் என்ற சொல்லின் பொருள் விளக்கம் அவருக்கு தெளிவில்லாத இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறத.
21. கிருஷ்ண பகவானிடம் அவர் ஏன் பாண்டவர் பக்கம் சார்பு
டையராய் இருக்கிறார் என்று திருதராஷ்டிரண் கேட்ட போது கிருஷ்ண பகவான்கூறியதில் என்ன? அவரது பதில் எதனை உணர்த்திநிற்கின்றது?
கிருஷ்ணபகவான் திருதராஷ்டிரனைப் பார்த்தக் கூறியதாவது "மன்னவா! நீ புறக்குருடாக இருப்பத மட்டு மன்றி அகக்குருடாக, ஆத்மீகக் குருடாகவும் இருக்கின்றாயே என்று கூறுவதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். தமக்கென எதுவும் பேணிக்கொள்ளாது என்னிடமே அடைக்கலம் பூணுகின்றவர்களுக்கு நான் உதவி செய்யாமல் இருக்க முடியாது. என்பதை நீ விளங்கியிருக்க வேண்டும்.
பாண்டவர்களுக்கும் எனக்கும் இருக்கின்ற தொடர்பை நான் உனக்கு விளக்கிக் காட்டுகிறேன். யுதிஷ்டிரன் எனது தலை, அருச்சுனன் எனது புயங்கள், வீமன் என் வயிறு, நகுலனும் சகாதேவனும் எனது கால்கள். நானே இருதயம். ஆகவே நாம் எல்லோரும் ஒரே உடம்பில் பிரிக்கமுடியாத பாகங்களாவோம்".

Page 35
தெய்வீகத்திற்கு வழி ”ல் . *52 ” جب کہو
உடம்பு, புலன்கள், சிந்தை, அறிவு, ஆத்மா அனைத்தும் உள்ளடங்கியதே மனிதனின் பிரதான தோற்றம் என்பதை மேற்காட்டிய விடை எடுத்தியம்புகின்றது.
இது வேதப்பிரகடனத்தின் உண்மையை விளக்குகிறது. நிலைத்திருப்பது ஒன்று - ஏகம் சத். உடம்பிற்குப் பல பகுதிகள் இருப்பதுபோல ஒருவனாய இறைவனுக்கும் பல பெயர்களுண்டு.
22. நாரதர்நாராயணனிடம் அவரது இருப்பிடத்தைக் கேட்டபோது
அவர் எவ்வாறு தனது சரியான இருப்பிடத்தை விவரித்தார்?
நாரத முனிவர் ஒருமுறை நாராயண மூர்த்தியைச் சந்தித்தபோது அவருக்குப் பல செயலகங்கள் இருப்பதால் அவரது சரியான இருப்பிடத்தைத் தனக்குக் கூறும்படி கேட்டார்.
அதற்கு நாராயணமூர்த்தி, மேலான பக்தியும் அன்பும் கொண்டு
தன்னை இடையறாது சிந்தித்து இருக்கும் பக்தர்களது உள்ளமே தான் என்றும் நிரந்தரமாக இருக்கும் தலைமையகம், எனப் பகர்ந்தார்.
 

ஆறாம் அத்தியாயம்
கடிவாள வாரைப் பிழத்துக்கொள்ளவும்.
1. சிந்தையின் உபயோகத்தினதும் துஷ்பிரயோகத்தினதும் பெறு
பேறுகள் என்ன?
சிந்தையின் உபயோகம் தஷ்பிரயோகத்தின் விளைவுகள் (1) மனிதனின் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள். (2) மனிதனது கட்டுண்ட நிலை அல்லது வீடு பேறு. (3) மனிதன் தனது சுயமான உண்மை நிலையை மறந்து
தண்பத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்ளுதல்.
2. மனிதனும் அவனது தோற்றமும் மூன்று காரணிகளின்
ஒருமைப்பாடாகும். அவை யாவை?
உடம்பு, சிந்தை, ஆத்மா இவற்றின் ஒன்றிணைவே மனி தன்.இம் மூன்றும் மனிதனது தெய்வீக உயர்விற்குப் படிகளாக அமைகின்றன.
உடம்பு செயற்பாடுகளுக்குரிய கருவி(செய்வினை) சிந்தை அறிதல் சம்பந்தமானதோடு தொடர்புடையது (அறிவு), ஆத்மா மாற்றமில்லாதது. நிலைத்திருக்கும் உண்மை~ஆத்மா மனிதனது தெய்வீகத் தன் மையாகும்(நிலைத்திருத்தல்).செய்தல், அறிதல், நிலைத்திருத்தல் என்ற மூன்றுமே மனித தோற்றத்தின் பிரதி பிம்பங்களாகும். உடம்பு, சிந்தை, ஆத்மா ஆகியவற்றின் ஒன்றிணைப்பும் இசை வாக்கமும் மனிதனை மனித நிலையிலிருந்தும் தெய்வீக நிலைக்கு உயர்த்திக்கொள்ள உதவும். உடம்பு, சிந்தை, ஆத்மாவின் ஒற்றுமையின்மை மனிதனை மிருகத்தின் நிலைக்கு இறக்கி விட்டு விரும்
3. அந்தக் கரணங்கள் என்ற பதத்தின் பொருள் என்ன?
அவற்றின் நான்கு தன்மைகளைப்பற்றி விபரிக்கவும்?
அந்தக்கரணங்கள் என்றால் மனிதனத அகக்கருவிகளாகும். மனிதனின் அகக்கருவி சிந்தையாகும். சிந்தையே அந்தக்கரணங்களது

Page 36
கடிவாள வரைப் பிடித்ததுக்கொள்ளவும் 54
நுண்ணிய உருவினைப் பெறுகின்றது. அந்தக் கரணம் நான்கு தன்மைகளை கொண்டத.
(1) மனஸ் - சிந்தை (மனம், உள்ளம்)
(2) புத்தி ~ அறிவு (ஞானம்)
(3) சித்தம் - ஞாபகசக்தி
(4) அகங்காரம் - ஆணவம்
சிந்தையின் மிக நுண்ணிய தன்மைகளே புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. சிந்தையின் செயற்பாட்டின் அடிப்படையிலேயே இம்மூன்றும் உள்ளது.
ஒரு பிராமணன் கோயிற் கிரியை செய்யும் போது பூசாரி என்றும், சமயல் செய்யும் போது மடைப்பள்ளி ஐயர் என்றும், மாணவர்களைக் கற்பிக்கும்போது ஆசிரியர் என்றும் பஞ்சாங்க விளக்கம் தரும்போது பஞ்சாங்கப் பிராமணன் என்றும் நாம் கூறுவதுபோல ஒரு சிந்தைக்கே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் பெயர்களுண்டு. இவை அதன் தொழிலுக்கு ஏற்ப பெயர் பெறுகின்றன.
4. மனம், சித்தம், புத்தி அகங்காரம் இவற்றிற்கிடையேயான
வித்தியாசங்களை விளக்கவும்?
நிலையற்ற எண்ண அலைகளைக் கொண்டிருக்கும் போத சிந்தை அல்லத மனம் ஆகிறது. சரியா பிழையா என்ற பிரித்தறி ஆய்வில் முற்பட்டிருக்கும் போது அத புத்தி அல்லத புலமைச் சிறப்பு ஆகிறத.
சிந்தையானது ஞாபகங்களின் களஞ்சியமாகும் போது சித்தம் எனப்படுகின்றது. சித்தமானத இவ்வாழ்வின் ஞாபகங்களை மட்டுமல்லாமல் முன்னைய வாழ்க்கையினதையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சிந்தையானது தன்னைப் பெளதீக உடம்புடன் ஒருமைப்பாடு கொண்டு சகல கருமங்களதும் கர்த்தா தான் என ஏற்கும் போது அதற்கு அகங்காரம் எனப்படுகிறது.
சிந்தையானது அடிப்படையில் ஒன்றாக இருந்தபோதிலும்
இவ்விதமாக நான்கு வேறுபட்ட நிலையினைப் பிரதிபலிக்கின்றது. இதற்குக் காரணம் அதன் தொழிற்பாடேயாகும்.
சிந்தையின் செயற்பாட்டை தனி நடிப்பிற்கு ஒப்பிடலாம். (ஒருவரே பல பாத்திரங்களாக நடித்துக்காட்டுதல்).
பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப சிந்தையானது பல்வேறு உருவங்களைத் தாங்கி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
 
 
 
 

ஆறாம் அத்தியாயம் 55
S. சிந்தை மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணியாக விளங்கு
கின்றது ஆராய்க?
"மனோமூலம் இதம் ஜகத்” எனவேதம் கூறுகிறது.இந்த முழுப் பிரபஞ்சமும் ஒருவரது சிந்தையின் பிரதிபலிப்பேயல்லாது வேறொன்றுமில்லை என்பதாகும்.
மனிதனுக்கு மனம் என்றது ஒன்று இருப்பதன் காரணமாகத்தான் அவன் மனிதன் என்ற பெயரைப் பெறுகிறான்.
மனிதன் எதனைச் சிந்திக்கின்றானோ அதுவே யாகின்றான். இது ஒரு அடிப்படை நியதியாகும்.
சிந்தை என்பது எண்ணங்களது தொகுப்பேயாம். எமக்கு எண்ணங்கள் இல்லையானால் எமக்கு சிந்தை என்பது இல்லை
என்று ஆகிவிடும்.
6. மனிதனுக்கு எண்ணங்கள் முக்கியமானவை என்பதை
ofonidisassib?
மனிதனுக்கு எண்ணங்கள் முக்கியமானவை. ஏனென்றால் அவையே செயற்பாடுகளுக்குத் தாண்டியாக அமைகின்றன. இந்த உலகிலே நாம் மகிழ்வதும் தண்புறுவதும் எல்லாம் நாம் ஆற்றிய வினைகளின் பயனேயாகும்.
எனவே நாம் நல்ல செயல்களைச் செய்யின் எமது வாழ்க்கை நல்லதாக அமையும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
எண்ணங்கள், மிகுந்த சக்திவாய்ந்தவை.அவை மனிதனின் மரணத்தையும் கடந்து அப்பால் வேறொரு வாழ்க்கைக்கும் கடத்திச் செல்லப்படுவன.இதனால்நாம் தீய எண்ணங்களையெல்லாம் எமது சிந்தையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்றது முக்கியமாகின்றது.
7. எமது சிந்தையிலிருந்து தீய எண்ணங்களை அப்பால் அகற்ற
வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?
தீய எண்ணங்கள் மனிதனைப் பிரித்து வைத்து மனிதனில் உள்ள பொதுவான தெய்வீகத் தன்மையை மறக்கவைக்கின்றன. மனிதன் தனது சிந்தையில் எழும் தீய எண்ணங்களைக் கடிந்து, வென்று, அத்தகைய தீய எண்ணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள்,

Page 37
கடிவாள வாரைப் பிடித்தக்கொள்ளவும் 56
ஆபத்துகளினின்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இன்று மனிதன் தனது பிழையான எண்ணங்களினாலேயே தனக்குத் தானே பலவகைப்பட்ட பிரச்சனைகளையும் உருவாக்கிக் கொள்கிறான்.
8. உலக சமாதானத்திற்கு மனிதன் எவ்விதம் பங்களிக்கலாம்?
மனிதன், தனிப்பட்ட தனது நிலையிலிருந்து தன் தொடர்புகளைப் படிப்படியாக குடும்ப நிலைக்கு விரிவடையச் செய்த, குடும்ப நிலையிலிருந்த சமூகத்திற்கு விரிவாக்கி, சமூக நிலையிருந்து நாடளாவிய ரீதியில் தன் தொடர்புகளைக் பரப்பியும், மேலும் அப்பால் அதனை உலகளாவிய நிலையில் பரப்புவதன் மூலம் உலக சமாதானத்திற்குத் தனத பங்கை வழங்கலாம்.
தனி மனிதனது நிம்மதியும் உலகின் சமாதானமும் மனிதனின் சிந்தையிலேயே தங்கியுள்ளது.ஆகவேதான் சிந்தையைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியமாகின்றது.
எல்லோரிடமும் காணப்படும் ஆத்மாவானது ஒன்றேயாகும், என்பதை மனிதன் உணரும்போத, மனிதனுக்கு மனிதன் எத்தகைய வேறுபாடுகளையும் காண்பதற்கு இடமில்லை.
9. சம்சார எனும் மரத்தை நாம் எவ்வாறு அழிக்கலாம்?
சம்சார (எல்லையற்ற பிறப்பு, இறப்புச் சுற்று வட்டம்) என்கின்ற மரத்தை அழிப்பதற்கு முதற்கண் நாம் இச் சம்சார எனும் மரத்தின் வேர் எதுவாக இருக்கலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சம்சார என்ற மரத்தின் அடி வேரானது சிந்தையாகும். எனவே இம்மரத்தை அழிப்பதற்கு முதலில் அதன் வேரை அழித்து விடவேண்டும்.
இன்னொரு வகையில் கூறுவதானால் சிந்தையையே முற்றாக அழிக்கவேண்டும். சிந்தையை எவ்வாறு அழிக்கலாம்? நாங்கள் எமது எண்ணங்களை ஆத்ம விசாரணையில், அதாவது உண்மையான நான்' என்பது எது என ஆராய்தலில் ஈடுபடுத்தல் வேண்டும். இவ்வாறான விசாரணையில் இறங்குவதால் சிந்தையை அழிக்கமுடியும்.
10. மனிதனின் இயல்புகளோரு தொடர்பு பருத்தப்பரும் நிறங்கள்
6T66?
மனிதனது பல்வேறு இயல்புகளுக்கு ஏற்ப அவ்வியல்புகளுடன் தொடர்பு படுத்தப்பட்ட நிறங்களாவன

ஆறாம் அத்தியாயம் 57
1. கோபத்தால் நிறைந்த சிந்தை - சிவப்பு நிறம். 2. சுய நலத்தால் நிறைந்த சிந்தை ~ கோதமை - மண்ணிறம். 3. ஆணவமுற்ற சிந்தை - செவ்விளநீர் நிறம். 4. இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிந்தை ~ வெள்ளை.
11. மனிதனுக்கு பயம் ஏற்பருவதற்கான மூல காரணியாது?
மனிதனிடத்தில் தோன்றும் வியாபகமான பயப்பாட்டிற்குக் காரணம் அவனது சிந்தையில் தூய, புனிதமான எண்ணங்கள் இல்லாமையாகும்.
இன்று உலகம் முழுவதுமே பயத்தினால் திகைத்தப்போய் இருக்கின்றது. வீட்டிலும் சரி வீதியிலும் சரி அன்றிப் புகைவண்டி, ஊர்தி, ஆகாய விமானம் ஆகியவற்றில் பயணம் செய்யும் போது மக்கள் பயத்தினால் பீதியுற்றிருக்கின்றார்கள். இந்த முழு உலகமுமே, எல்லாத் திருப்பு முனைகளிலும் கூட பயத்தினால் நிரம்பியிருக்கும் நிலை காணப்படுகின்றத.
மகாபாரதப் போரின் கதாநாயகனும், அருச்சுனனின் மகனுமாகிய அபிமன்யுவின் தக்ககரமான முடிவுக்குக் காரணம் என்னவென்றால் அவனுக்கு பத்மவியூகம் என்ற பிரமைக்குள் பிரவேசிக்கத் தெரிந்ததேயொழிய அதனினின்றும் வெளியேறும் முறையை அவன் அறியாதிருந்தமையேயாகும்.
நாம் எமது எண்ணங்களை அறிவு - புத்தியின் நுண்பார் வைக்கு அர்ப்பணித்துக்கொண்டால்தான் உலகியல் இன்பங்களிலிருந்தும் விடுபட்டுக் கொள்ளும்முறையை அறிவோம்.
12. உடம்பு புலன்கள், சிந்தை, புத்தி ஆகியன கடோபநிடதத்தில்
எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளன?
கடோபநிடதத்தில்
(1) உடம்பை ஒரு தேருக்கும்,
(2) புலன்கள் - குதிரைக்கும்,
(3) சிந்தை ~ கடிவாள வாருக்கும்,
(4) புத்தி - தேரோட்டிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது.
சிந்தையானது புலன்களுக்கும் புத்திக்கும் இடையிலுள்ளது என்பத இதனால் விளங்குகிறது. ஆகவே சிந்தை, புலன்களது விருப்பத்திற்கிணங்க அதன் வழிசெல்லுமானால் அதயுலன்களுக்கு அடிமையாகிவிடும். அத்தடன் முடிவற்ற தயரம், தன்பங்களுக்கும் ஆளாகிவிடும்.

Page 38
கடிவாள வாரைப் பிடித்ததுக்கொள்ளவும் 58
13. பிரவிருத்திமார்க்கத்திற்கும் நிவிருத்திக்கு முள்ள வேறுபாரு
என்ன?
பிரவிருத்தி மார்க்கம் என்பத புலன்களுக்குச் சுதந்திரம் வழங்குதல். பிரவிருத்தி மார்க்கம் புறப்பாதையாகும். நிவ்விருத்தி மார்க்கம் புலன்களை அடக்குதல். இத அக வழியாகும். பெரும்பான்மையினர் புறவழியைப் பின்பற்றுவதில் திருப்தியடைகின்றனர். நிவிருத்திமார்க்கமாகிய அகவழியில் செல்வதற்கு ஒரு சிலருக்கே தைரியமுண்டு.
14. கெளரவர்களதும் பாண்டவர்களதும் குணவியல்புகளிலிருந்து
நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் என்ன?
தரியோதனனாலும், தச்சாதனனாலும் வழிநடத்தப்பட்ட தட்டர்களாகிய கெளரவர்கள், நற்பண்புகளைக் கொண்ட பாண்டவர்களைச் சொல்லொணாத் தண்பத்துள் ஆழ்த்தினர். ஈற்றில் இவற்றினால் ஏற்பட்ட பலாபலன் என்ன? பாண்டவர்கள் தற்காலிகமாகக் கஷ்டப்பட்டார்களேயானாலும், இறுதியில் கெளரவர்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர்.
இன்று பெரும்பான்மை மக்கள் தமது எண்ணங்களையும் முயற்சிகளையும் மற்றவர்களைத் தன்புறுத்தவதற்காகவே உபயோகிக் கின்றார்கள். பிறருக்குச் செய்யும் தீமையானது சுற்றிச்சுழன்று தமக்கே வந்துவிடும் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்ந்தார்களில்லை. கெளரவர்களுக்கு ஏற்பட்ட நிலைப்பாட்டை மாணவர்கள் என்றும் நினைவில் வைத்திருக்கவேண்டும். அத்துடன் மற்றவர்களுக்குத் தண்பம் விளைவிக்க ஒருபோதும் எண்ணக்கூடாது. மற்றவர்களை விமரிசனம் செய்யவோ குறை கூறவோ கூடாது. இதனை மாணவர்கள் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும். "ஒரு போதும் துன்புறுத்தாதே - எப்போதும் உதவிசெய்" என்பதே அவர்களது கருத கோளாக என்றும் விளங்கவேண்டும்.
15. "ஒரு போதும் துன்புறுத்தாதே, எப்போதும் உதவி செய்' என்ற கருதுகோளை ஏன் மாணவர்கள் கவனமாகப் பின்பற்ற வேண்ரும்?
மாணவர்கள் ஒருபோதும் பிறரைத் துன்புறுத்த எண்ணக் கூடாது. மற்றவர்களை விமரிசிக்கவோ குறைகூறவோ மாணவர்கள் எத்தனிக்கக் கூடாது.

彗
飘
彗
ஆறாம் அத்தியாயம் 59
மாணவர்கள் தமத நண்பர்களை ஏமாற்றினால் அவரது நண்பர்கள் அவர்களை ஏமாற்றவோ வஞ்சிக்கவோ முடியும். மாணவர்கள் தமது பெற்றோருக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவர்களது பிள்ளைகளே அவர்களுக்குக் கீழ்படியாது விடுவர். இவ்வாறே மாணவர்கள் பிறரைத் தன்புறுத்தினால் பிறர் இவர்களைத் தண்புறுத்தவர்.
இவ்விதமான எதிர்த்தாக்கல்களும் எதிர்ப்பாடும் மனிதனின் சிந்தனையில் ஊன்றி இருக்கின்றன.
16. மனித வர்க்கத்தில் மிகவும் கீழ்த்தரநிலையில் உள்ளவர்கள்
என வகுக்கப்பட்டிருப்போர் யார்?
எவ்விதமான சீண்டுதலும் இல்லாமலேயே மற்றவர்களைத் தன்பத்தள் ஆழ்த்தம் முயற்சியில் ஈடுபட்டிருப்போர்களே மக்களில் கீழ்த்தர நிலையில் வைக்கப்பட்டவராவார்.
இவர்களை நாம் அந்தப் பூச்சிகளுக்கு ஒப்பிடலாம். அப்
பூச்சிகளது இயல்பானது எல்லா ஆடைகளையும் வேறுபாடு இன்றி நோக்கி, அழித்து வைப்பதாகும். அதனால், பெறுமான முள்ள சேலை அல்லத பெறுமான மற்றது என்பது அவற்றிற்கு இல்லை. கீழ்த்தர நிலையில் இருப்போர் தீவிரமான இகழத்தக்க தன்மையை கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களது மனதில் தோன்றும் தீய எண்ணங்களேயாகும்.
தீய எண்ணங்கள் மனிதனை ஒரு மிருக நிலைக்குத் தள்ளிவிரும்.
7. எம்மிலே எழும் தீய எண்ணங்களை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
தர்நாற்றத்தை நாம் சந்தணக்குச்சி, மற்றும் வாசனைத் திரவங்களை உபயோகித்த நீக்குவதபோல, தீய எண்ணங்களுக்குப்பதிலாக நல்லனவற்றை எண்ணி நீக்க வேண்டும்.
நல்ல எண்ணங்கள் எமது வாழ்வில் நிறைவை ஏற்படுத்தும். ஆனால் தீயவை எம்மை மிருகங்களது நிலைக்குத் தள்ளிவிடும். தீய எண்ணங்களுக்குப் பதிலாக நல்லனவற்றை நிறுத்துவதற்கு உண்மையான உறுதியான முயற்சி வேண்டப்படுகிறது.
இதற்கு காரணம் சிந்தையானது என்றும் நிலையற்று இருப்பதாகும். அருச்சுனன் கிருஷ்ண பகவானுக்கு முறையிட்டான். தனத சிந்தையானது (1) நிலையற்றத ~ சஞ்சலமடைவத (2) குழப்பம் மிக்கத - பிரமாதி. (3) வலுவானது ~ பலவத் (4) பிடிவாதமிக்கத ~ டிறித்கம்.

Page 39
கடிவாள வாரைப் பிடித்தக்கொள்ளவும் 60
18. சமாதானத்தை (நிம்மதி அமைதிநாம் எவ்வாறு அனுபவிக்கலாம்?
நிம்மதியை அனுபவிக்க வேண்டுமானால் முதலில் நாம் அமைதி சமாதானம் ஆனது புறத்தே இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அமைதி எமக்குள்ளேயே இருக்கின்றது.
நாம் அமைதியை அனுபவிக்க வேண்டுமானால் அப்பியாசம், சாதகம் பண்ண வேண்டும். எத்தகைய அப்பியாசத்தை பின்பற்ற வேண்டும்?
முதலாவதாக நாம் சுயநலமான எண்ணங்களை விட்டு விட வேண்டும். பின்னர் நாம் யார்' என்ன ஆத்ம விசாரணையில் இடையறாது எம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மீண்டும் மீண்டும் "நான் ஒரு மிருகம் அல்ல" என்ற கருத்தைக்
கூறவேண்டும்.
இன்று மனிதர் தாம் மக்கள்' என்று கூறிக் கொள்கிறார்கள் ஆனால் மாக்கள் (மிருகங்கள்) போல் நடந்து கொள்கிறார்கள். எம்மை 'மனிதர் என்று அழைப்பதற்குக் காரணம் எம்மிடம் மனம்' என்பத இருப்பதனாலாகும்.
மனிதன் என்ற பெயருக்கு உரித்துடையவனாக இருப்பதற்கு நாம் மனிதனுக்குரிய முறையில் எமது மனதை உருப்படுத்திக்கொள்ள வேண்டுமே யொழிய மிருகத்தனமானதாக அல்ல. அப்பொழுது தான் நாம் நிம்மதியை அனுபவிக்கமுடியும்.
19. மனிதனின் கட்ருண்ட நிலைக்கும் விருதலை நிலைக்கும்
அவனது சிந்தையே பொறுப்பாக இருக்கின்றது, விளக்கவும்?
மனிதனது கட்டுண்ட நிலைக்கும் விருதலை நிலைக்கும் அவனது
சிந்தையே பொறுப்பாகும் என வேத நூல் கூறுகின்றது.
மனிதனுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட அரிய பரிசு சிந்தையாகும். அதுவே மனிதனத விலை மதிப்பிட முடியாத உடமை. சிந்தையானது எம்மை வீடு பேறு எனும் மேலான குறிக்கோளை அடைய வைக்கின்றது. இதனால் சிந்தையைக் கெட்டது என்று நாம் எவ்வாறு கூறலாம்?
எவ்வாறாகினும், ஒரு கூரிய கத்தியைத் தஷ்பிரயோகம் செய்வதுபோலச் சிந்தையையும் துஷ்பிரயோகம் செய்யலாம். ஆகையால் நாம் சிந்தையைக் குறை கூறமுடியாது.
எமது உயர்விற்கும் தாழ்விற்கும் சிந்தை எத்தகைய பங்களிப்பை நல்குகிறது என்பது அதனை நாம் உபயோகிக்கும் முறையில் தங்கியுள்ளது.

氢 獸
ஆறாம் அத்தியாயம் 61
20. சிந்தையைப் பெரும்பாலும் பூனைக்கு ஒப்பிடப்படுகிறது. ஏன்?
சிந்தையை ஒரு பூனைக்கு ஒப்பிடுவதற்குக் காரணம் பூனை தனது சிறிய குட்டிகளை மிகவும் மெதுவாகத் தன் வாயினால் கெளவி அவற்றை நல்ல பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பிக்கின்றது. அதே வேளை உணவையும் கொடுக்கின்றது.
இதற்கு மாறாகப் பூனை அதே வாயை உபயோகித்த ஒரு எலியைப் பாய்ந்து பிடித்து அதனைத் தண்டு தண்டாகக் கிழித்தக் கொன்று விடுகின்றத.
அத போலவே, சிந்தையை நாம் இறைத் தியானத்திற்கு உபயோகித்தோமானால், நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள் பேசவும், நல்ல செயல்களை ஆற்றவும் உபயோகித்தால் அதுவே எமக்கு மேலான அருளாளனாக ஆகின்றது.
அதேவேளை நாம் நேர்மையற்ற வழியைப் பின் பற்றினால் அல்லத தட்டத் தனத்தை மேற் கொண்டால் அதே சிந்தை எமக்கு பேராபத்தையும் அழிவையும் தரும்.
21. ஒன்றானது எவ்விதம் பலவானது?
ஆரம்பமறியா ஆதியில் இறைவன் ஒருவனே. "நான்" ஒன்று, பலவாக ஆவேனாக என எண்ணினார். இவ்விதம் ஒன்று பலவாயிற்று . எவ்வாறாயினும், பலவாயதிலும் அந்த ஒன்றானது இன்றும் நிலைத்திருக்கிறது. அத பலவாய தன்மையால் சிறிதேனும் தாக்க மடையவில்லை.
பலவாயதில் ஒன்றாய தன்மையைக் காணவும், அதனை அனுபவிக்கவும், அல்லாவிடில் அந்த ஒன்றில் பலவாய தன்மையைக் காணவும் எமத எண்ணங்களே பொறுப்பாக உள்ளன.
நாம் எமதுஎண்ணங்களைநல்லமுறையில்மட்டுப்படுத்தி எப்பொழுதும் பலவாயதில் ஒன்றாய தன்மையினையே கண்டு அனுபவித்தல் வேண்டும்.
22. நாம் எமது எண்ணங்களை எவ்வாறு மட்டுப்பருத்தலாம்?
நாம் எமது எண்ணங்களை (சங்கற்பங்களை) சரியான முறையில் மட்டுப்படுத்த வேண்டும். எமது எண்ணங்கள் எழுந்ததமே நாம் செயலில்
|
t

Page 40
கடிவாள வாரைப் பிடித்துக்கொள்ளவும் 62
இறங்கிவிடக்கூடாது. அந்த எண்ணங்களைப் புத்தி (அறிவு)யிடம் மீளாய்வு செய்வதற்காக விட்டுவிட வேண்டும். அதன் பின்னரே அதன் சரியான தீர்மானத்தை ஏற்றல் வேண்டும். இதற்குப் பின்புதான் எண்ணத்தைச் செயல்படுத்த முயல வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் மக்கள் தமது எண்ணங்களை மீளாய்விற்காகப் புத்தியிடம் சமர்ப்பிப்பதை கைவிட்டு மிகவும் அவசரமாகவே எண்ணங்களை செயற்படுத்தகிறார்கள்.
நல்ல தீர்மானத்தின் பின் எருக்கப்படும் செயல்தான் நிம்மதியைத் தரவல்லது. இதனால் தான் "அவசரம் அழிவைத் தரும். அழிவு அல்லலைத்தரும். ஆகவே எதற்கும் அவசரப்படாதீர்கள்" என்ற வாக்கு எழுந்தத.
23. நாம் உலகில் சமாதானத்தை எவ்வாறு நிலைநாட்டலாம்?
மேற்கூறப்படும் சூத்திரத்தை உபயோகித்தோமாகில் உலகில் அமைதியை நிலைநாட்டலாம்.
(1) உள்ளத்தில் நேர்மை இருப்பின் குணத்தில் அழகு இருக்கும். (2) குணத்தில் அழகு இருப்பின் வீட்டில் இசைவாக்கம்
இருக்கும். (3) வீட்டில் இசைவாக்கமிருப்பின் நாட்டில் ஒழுங்கு இருக்கும். (4) நாட்டில் ஒழுங்கு இருப்பின் உலகில் சமாதானம் நிலவும். உலக சமாதானத்திற்கு வழியாகும் சங்கிலியின் முதற் கோர்வை நேர்மை அல்லது தர்மம் ஆகும்.
சரியான செயற்பாட்டிற்கு மறுபெயர் தர்மம். ஆனால் சரியான செயற்பாட்டிற்கு முதலில் தேவைப்படுவது சரியான எண்ணமாகும்.
உலகின் சமாதானம் தனிப்பட்டவரது சரியான எண்ணத்தில் ஆரம்பித்துப் படிப்படியாக அகன்று பரந்து குடும்பத்திலிருந்து கிராமத்திற்கும், அங்கிருந்து நாடு மற்றும் உலகம் அனைத்திற்கும் விரிவடைகிறது என்பதே இதன் பொருள்.
24. ஜெபம், பஜன், அல்லது தியான முடிவில் மும்முறை சாந்தி
சாந்தி - சாந்தி என மந்திரிப்பதன் தாற்பரியம் யாது?
மும்முறை மந்திரிப்பதன் நோக்கம், மனிதன் மூன்று விதமான நிம்மதியை ~ அமைதியை - வேண்டிநிற்கிறான் என்பதைத் தெரிவிக்கின்றது.
- fg
 

ஆறாம் அத்தியாயம் 63
(1) அதிபெளதிக் - வேறு ஜீவிகளால் பாதிக்கப்படாத அமைதி. (2) அதியாத்மிக் - உடலாலும் சிந்தையாலும் குழப்ப
முறாதிருக்கும் அமைதி.
(3) அதிதைவிக் - மனிதகட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள சக்திகளால் குழப்பமுறாதிருக்கும் அமைதி, இவற்றுள் அதிதைவிக் என்பது இறையருளை வேண்டிநிற்பது. இது இறைவனிடம் பூரண சரணா கதியடைவதன் மூலம் மட்டும் பெறலாம். எனவே மும்முறை சாந்தி, சாந்தி, சாந்தி என நாவினால் கூறுவதன் மூலம் அமைதியைப் பெற்றுவிட முடியாது. இறைவனிடம் பூரண சரணாகதிஅடைவதன் மூலமே நாம் அமைதியைய் பெற்றுக்கொள்ள முடியும்.
25. இறைவனிடம் சரணாகதி அடைதலாகிய கொள்கையை
ஆராய்க?
நாம் எமத அனைத்து உடமைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டதால் இறைவன் எமக்கு வேண்டியனவற்றை எல்லாம் செய்வார் என்று மூடத்தனமாக எண்ணிக்கொண்டு சகல செயற்பாடுகளையும் கைவிட்டு இருப்பது இறைவனிடம் சரணாகதி அடைதல் ஆகாது. இது வெறும் சோம்பல் தனமேயாகும்.
கடவுள் எமக்கு வழங்கியுள்ள பலவகைப்பட்ட ஆற்றல்கள் எமக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட சக்தி, இவற்றினை உபயோகித்தலே சரணாகதியின் சரியான முறையாகும். இதே வேளை,
(1) எமது செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே
அர்ப்பணித்தல். (2) அவற்றை நானே செய்தேன் என எண்ணாதிருத்தல். (3) எமது செயல்களுக்குப் பலனை எதிர்பார்த்து நில்லாது
இருப்பது தான் சரணாகதி
26. நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கு யாது செய்தல்
வேண்ரும்.?
நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கு நாம் ஆத்மீக வழியைப் பின்பற்றல் வேண்டும்.

Page 41
கடிவாள வாரைப் பிடித்துக்கொள்ளவும் 64
27 ஆத்மீகப் பாதையின் ஆரம்ப நிலையம் எங்குளது?
ஆத்மீகப் பாதையின் ஆரம்பநிலையம் சற்சங்கமாகும்.
பக்தர்களின் கூட்டம்.
நாம் தீய அல்லத கெட்ட கூட்டத்தை மிகவும் கவனத்துடன் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணங்கள் தொற்றத் தண்ைையுடையன. இதனால் தான் "உனது கூட்டத்தைக் கூறு, நீ எப்படிப்பட்டவன் என நான் கூறுவேன்" என்ற பேச்சு மொழி வந்துள்ளது. (நீ சங்கரர் பின்வருமாறு கூறுகிறார்.
"அறிவுடையோரதுசேர்க்கை பற்றற்ற நிலையைத்தரும். பற்றற்ற நிலையானது மாயையினது அழிவிற்கு இட்டுச் செல்லும். மாயையின் அழிவு, நிலைதளம்பாத ஞானத்தைப் பெற்றத்தரும். நிலை தளம்பா ஞானம் ஜீவமுக்தியைத் தரும். அதாவது உயிருள்ள போதே வீடு பேற்றைப் பெறுதல் ஆகும்."
28. நாம் எமது வாழ்க்கையை எவ்வாறு பரிசுத்தப் பருத்தலாம்?
எமது சிந்தையிலேயுனிதமான எண்ணங்களைவிதைத்து அவற்றைப் பயிராக்கி விருத்தி செய்வதனால் எமது வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தலாம்.நாம் எமது வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தி இலட்சிய புருஷர்களாக இருந்த காட்டினால், மற்றவர்களும் எம்மை எடுத்துக் காட்டாக ஏற்றுப், பின்பற்றி, எம்மிடமிருந்த பயனைப் பெறக் கூடியதாக இருக்கும்
*
 

ஆறாம் அத்தியாயம் 65
29. நாம் விதைத்ததையே அறுக்கின்றோம்" விளக்கவும்.
நாம் பிறக்கும் போது எமது கழுத்தில் மலர் மாலையோ பொன்னாலான ஆபரணமோ, முத்த, வைர ஆபரணங்களோ அலங்காரமாக இருக்கவில்லை.
இதற்கு மாறாக சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மனால் வழங்கப்பட்ட, கண்களுக்குப் புலப்படாத, பாரங்கொண்ட மாலையையே கழுத்த அணிந்திருக்கின்றது. நாம் முற்பிறப்பில் ஆற்றியநல்வினைதீவினைகளது பெறுபேறுகளாலான மாலையே இதுவாகும்.
ஆகவே, கெட்ட சகவாசம், தீய எண்ணங்கள், புலன்கள் வாய்ப்பட்ட வாழ்க்கை நெறி, இவையனைத்தும் சொல்லொணாத் தயரத்தையும் வீணான அழிவையும் தந்து மூழ்கடிக்கும் என்பதை நாம் என்றும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
30. நன்றியறிதல் பண்பானது மனிதனுக்கு ஏன் முக்கியமானதாகும்?
ஒருவர் எமக்குச் செய்த நன்றிக்கு நாம் நன்றியுணர்வு பெறாவிடில், எம்மை நாம் மிருகத்தினும் கீழான நிலைக்கு இட்டுச் செல்கிறோம் என்பதாகும்.
கடவுள் மனிதனுக்கு மிக்க காருண்யமாகவே வழங்கிய அதிமதிப்பு வாய்ந்த பொருள்களுக்கெல்லாம் மனிதன் கடவுளுக்கு நன்றி கூற ஒருபோதம் எண்ணுவதில்லை.
கடவுள் மனிதனை இப்பரந்த அதிசயமான பிரபஞ்சத்தில் நிறுத்தி, சுவாசிக்கச் சுத்தமான காற்று, குடிப்பதற்குத் தாய்மையான நீர், வாழ்வதற்கு அன்னை பூமியையும் வழங்கியுள்ளார்.
இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஐம்பூதங்களாய பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம் இல்லாத மனிதன் ஒரு வினாடி கூட வாழ இயலாது.
ஆகவே இத்தகைய கருணை மிக்க கடவுளுக்கு எமது நன்றியை வழங்க மறப்பதிலும் மேலான பாவம் வேறு என்ன உண்டு? உலகிற்கு ஒளியைப் பரப்பும் சூரியன், எம்மைக் களை தீர்க்கும் காற்று, பூமியைக் குளிர் வித்து, வாழ்வை நிலைக்கச் செய்யும் மழை இத்தகைய வசதிகளையெல்லாம் எமக்கு நல்கிய இறைவனை, அவர் செயலுக்காக நாம் எதவுமே கொடுப்பதில்லை. இறைவனுக்கு நன்றியையும், நன்றியுணர்வையும் வழங்காத விடுவது தாமோ குண இயல்பாகும். இது சிந்தையை மாசுபடுத்தும் சோம்பேறித்தனம்.
s:

Page 42
ஏழாம் அத்தியாயம்
சிந்தையின் சலனம்
1. விடுதலை பெற மனிதன் உபயோகிக்க வேண்டிய துறையாது?
விடுதலை பெறுவதற்கு மனிதன் சிந்தையாகிய துறையை உபயோகிக்க வேண்டும்.நாம் எங்கிருந்தாலும் சிந்தையே மிக முக்கிய மானதாகும். வீடோ அன்றிக் காடோ எமக்கு விடுதலையைத் தராது.
2. இப்பிரபஞ்சம் எதைப் போன்றிருக்கும்?
ஒரு கண்ணாடியில் தோன்றும் நகரின் பிம்பம் போன்றிருக்கும். எனவே இப்பிரபஞ்சம் உண்மையின் பிரதி பிம்பம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
3. இந்த முழு உலகமும் சஞ்சரிப்பது எங்கு?
இன்பம், தண்பம், நேர்மை, அட்டூழியம், உண்மை, பொய், நீதி, அநீதி அனைத்து மடங்கிய இந்த உலகம் முழுமையாக சஞ்சரிக்குமிடம் சிந்தையாகும்.
4. மனிதன் ஈட்டிக்கொள்ளவேண்டியமுக்கியமான விடயம் யாது?
மனிதன்ஈட்டிக்கொள்ள வேண்டியது அந்தக்கரணங்களின் (1) தூய நிலை (2) இறுதியில் அழிவு.
5. அந்தக்கரணங்கள் எதனை உள்ளடக்கியுள்ளன?
அந்தக்கரணங்கள் 1) மனஸ் - சிந்தை (2) சித்தம் - ஞாபகம் (3) புத்தி - ஞானம் (அறிவு) (4) அகங்காரம் - ஆணவம். ஆகியவற்றை உள்ளடக்கி யுள்ளன

ஏழாம் அத்தியாயம் 67
6. மனிதன் விருதலை பெறுவதற்குப் புருடார்த்தங்கள் முக்கிய
DN6OT60D6)LUIT?
புருடார்த்தங்களாவன தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பன. விடுதலைக்கு அந்தக்கரணங்களின் தாய்மையும் ஈற்றில் அழிவும் வேண்டப்படும் அளவிற்கு, புருடார்த்தங்கள் முக்கியமானவை அல்ல.
7. சிந்தை எவ்வாறு மாசடைகிறது?
சிந்தை ஒரு தூய கண்ணாடி போன்றது. புற உலகின் கண் இருக்கும் புலப் பொருட்களை புலனுறுப்புக்கள் வாயிலாகவே அது அனுபவிக்கமுடியும். புலப்பொருள்களைத் தானாக அனுபவிப்பதற்கு அதற்கு சக்தி இல்லை. உதாரணமாக கட்புல செவிப்புல உறுப்புக்களின்றி அது தானாகப் பார்க்கவோ கேட்கவோ மாட்டாது.
அலைந்த திரியும் புலன்களுடன் சிந்தை தொடர்பு கொள்ளும் போததான் அத மாசடைகிறது. புலன்களினால் ஆற்றப்படுகின்ற குற்றங்கள் எல்லாம் சிந்தையின் கண்ணாடியில் பிரதிபலிக்கப்படுகின்றன. இவ்வாறு தான் சிந்தையானது மாசடைகிறத.
8. சிந்தை மூவித அழுக்கினால் தாக்கப்படக்கூடியது. அவை
LIII6D6?
சமய நால்களின்படி சிந்தை, (1) மலம் (2) விக்ஷேப
(3) அவறன என்பவற்றால் தாக்கம் பெறக்கூடியத.
9. மலம் என்றால் என்ன?
ஒரு கண்ணாடியில் நாளுக்கு நாள் தாசிபடிவது போல மனிதனின் சிந்தையாகிய கண்ணாடியிலும் அழுக்குப்படிகிறது. மனிதன் தெரிந்தும் தெரியாமலும், இப்பிறவியிலும் முன்னைய பிறவிகளிலும் ஆற்றிய குற்றங்கள் அடங்கியதே இந்த அழுக்கு. இத்தகைய குற்றங்களின் சுவடுகள் சித்தத்தினாலே (நான்கு அந்தக் கரணங்களில் ஒன்று) கடத்தப்படுகின்றது.
மனிதனின் இவ்வாழ்வினது மட்டுமல்ல, முன்னைய வாழ்வினதும்
முழுமையான் எண்ணங்களைக் கொண்டுள்ளது சித்தம்.

Page 43
--منہ ، ...............' '^。°*寶 *** *్య
சிந்தையின் சலனம் *** ふふふAr/? 68
சித்தமானது கடத்திச்செல்லும் இந்த அழுக்கை மலம்' என்பர். இம்மலத்தின் காரணமாக மனிதன் தனது சிந்தையின் கண்ணாடியில் தனது உண்மையான 'தாண்’ எனும் தன்னையே தெளிவாகக் காண முடியாது இருக்கிறான்.
உண்மையான தான்' என்ற தன்னைக் காண்பதற்கு சிந்தையின் கண்ணாடியை மூடியிருக்கும் அழுக்கைத் துடைத்துவிட வேண்டும். கண்ணாடியிலுள்ள அழுக்கு நீக்கப்பட வேண்டும். எமது தான்' என்றதன் உருவை தெளிவாகவும் சரியாகவும் நாம் கண்டு கொள்வதற்கு இந்த மலம் தடையாக இருக்கின்றது.
10. மலத்தை நீக்கி எவ்வாறு சிந்தையின் கண்ணாடியை,
தூய்மையாக்கலாம்?
மலத்தை நீக்கி சிந்தையின் கண்ணாடியைத் தாய்மைப்படுத்த நாம்
(1) எமது உணவை மட்டுப்பருத்தல் வேண்டும்.
(2) எமது பொழுதுபோக்கு உட்பட எமது வாழ்க்கையின்
பழக்க வழக்கத்தை கட்டுப்பருத்தல் வேண்டும்.
11. நாம் எவ்வாறு உணவை மட்ருப்பருத்தலாம்?
தூய உணவை உண்பதாலும், அசுத்த உணவை மிக்க கவனத்துடன் தவிர்த்துக் கொள்வதாலும் மட்டுப்பருத்தலாம்.
உணவின் தாய தன்மையானவன:-
1. பாத்திர சுத்தி-உணவைச் சமைக்க உபயோகிக்கும் பாத்திரங்களது சுத்தம்.
2. பதார்த்தசுத்தி ~ சமைக்க எடுத்துக்கொண்ட உணவுப் பொருளின் சுத்தம்.
3. பாகசுத்தி. சமைக்கும் முறையில் சுத்தம் ஆகியவற்றினால் கணிக்கப்படும்.
12. மக்களை வருத்தும் பல வகைப்பட்ட நோய்களுக்குக் காரணம்
6тбоївот?
மக்களை வருத்தம் நோய்களுக்குக் காரணம் 1. நேர்மையற்ற முறையில் பெற்ற உணவை உண்பது.
 

長.K.**** TEA É - IYAጓ..A፻ ፺'ዮ`Vገ" , · · Y ஏழாம் அத்தியாயம் MALLArs AM 69
2. சந்தேகத்திற்குரிய நடத்தையைக் கொண்டசமையற் காரரின் கெட்ட அதிர்வுகளால் ஏற்பட்ட அசுத்தம்.
13 நாம் உண்பதற்குத் தூய உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய
நடைமுறை வசதியீனங்கள் யாவற்றையும் எவ்வாறு நீக்கிக் கொள்ளலாம்?
இன்றைய உலகிலே, எல்லா வேளையும் எமக்குத் தாய உணவு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
இதனால் இக்கஷ்டத்தை நீக்க சமயநூல்கள் சில கைங் கரியங்களைக் கூறியுள்ளன. நாம் உணவை உண்பதற்கு முன்னம் அதனை இறைவனது கொடை எனக் கொண்டு, இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்தல் வேண்டும்.
இறைவனுக்கு முதலில் சமர்ப்பணம் செய்யாது அதனை உண் போமாயின், அவ்வுணவில் இருக்கக்கூடிய குறைபாடு அழுக்கு ஆகியவற்றால் நாம் தாக்கப்படுவோம். நாம் "பிரம்மணார்ப்பணம்’ (கீதை iv - 24) என மந்திரித்துஉணவை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோமானால் அவ்வுணவு பிரசாதம் - இறைவனது அன்பளிப்பு. ஆகின்றது. 'பிரம்மணார்ப்பணம்' என்று மந்திரிப்பதால் அவ்வுணவில் காணப்படும் குற்றங்கள் யாவும் நிவர்த்தியாகின்றன.
14. "பிரம்மணார்ப்பணம்" என்று கூறுவதால் கிடைக்கக்கூடிய
வேறு நன்மை யாது?
பிரம்மணார்ப்பணம் என்று கூறுவதால் சிந்தையிலுள்ள மலம் சிறிது சிறிதாக அற்றுப்போகின்றது. சிந்தை தூய்மையாகிறது.
15. "கடவுள் எங்கே இருக்கிறார்?" என்ற வினாவிற்கு பகவத்
கீதை தரும் விடையென்ன?
கடவுள் எங்கேயுள்ளார் என்ற வினாவிற்கு பகவத் கீதை 15ஆம் பாடம் 14ஆம் சுலோகம் விடை கூறுகிறது. அகம் வைஷ்வாணறோ பூத்வா பிராணினாம் தேகம் ஆஷ்றித்தகா

Page 44
சிந்தையின் சலனம் 70
பிரானா அபானாசமா யுக்தா
பசாமி அன்னம் சதுர்விதம்.
இறைவன் வைஷ்வானரா, உதிராக்கினி(செமிபாடடையும் தீயாக) எல்லோரிலும் இருந்து நாம் உண்ணும் பல வகைப்பட்ட உணவையும் ஜீரணித்து விடுகிறார் என்பது இச் சுலோகத்தின் விளக்கம்.
16. சிந்தையிலிருந்து மலத்தை முற்றாக நீக்குவதற்கு எவ்வளவு
காலம் செல்லக்கூரும்?
இடைவிடாது சாதகம் பண்ணினால் தான் மலத்தை முற்றாக நீக்க முடியும்.
ஒரு நாளிலோ அன்றி ஒரு மாதத்திலோ மலத்தை நீக்கிவிட Фрц ШПфЈ.
தங்கத்திலுள்ள தாசியை நீக்குவதற்குப் புடமிடுவது போல மலத்தை நீக்க ஒரு கால எல்லையளவு இடைவிடாத நீடித்த சாதகம் (அநுட்டானம்) வேண்டியுள்ளது.
17. விக்ஷேப என்றால் என்ன?
சிந்தையை அழுக்கேற்றும் இரண்டாவது காரணி இது. விக்ஷேப என்பது அடிக்கடி ஊசலாடும் சிந்தையின் தன்மையை விளக்குகிறது. ஒரு கண்ணாடியை அசையும் வண்ணம் வைத்தால் அல்லத அடிக்கடி அதற்கு அசைவு கொடுத்தால், கண்ணாடியிலுள்ள பிம்பமும் அசையும் அல்லது ஆடும். விக்ஷேப இத போலத்தான். அத சிந்தையின் நிலையற்ற இயல்பைக் காட்டுகிறத.
18. விக்ஷேபவை எவ்வாறு ஒருவர் கட்டுப்படுத்தலாம்?
பல்வேறு ஆத்மீக சாதனைகள் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்
(1)தியானம் (2)வழிபாடு(3)ஒன்பதுவகைபக்திவழிகளைப் பின்பற்றுதல்
 
 

ஏழாம் அத்தியாயம் 71
19. ஒன்பது வகைப் பக்தி வழிமுறைகள் யாவை?
96.O6 UT66
(1) சிரவணம்:- இறைவனது கதைகள் லீலைகள் மகிமைகளைக்
கேட்டல் (2) கீர்த்தனம் :- இறை நாமத்தின் பெருமைகளைப் பாடுதல் (3) ஸ்மரணம் :- இறை நாமத்தைச் சிந்தித்தல். (4) பாதசேவனம் :- இறைவனது தாமரைப் பாதங்களுக்குக்
சேவை செய்தல் (5) அர்ச்சனை :- இறைவனை அர்ச்சித்தல் (பூசை) (வ) வந்தனம் :- இறைவனை வணங்குதல் (7) தாஸ்யம் ;~ ஆண்டான் அடிமை முறையில் வணக்கம்
(நீராமன் அனுமான் உறவு முறையில்) (8) சாக்கியம் :- இறைவனோடு தோழமை புரிதல் (9) ஆத்ம நிவேதனம் ;~ தன்னை இறைவனுக்கு அர்ப்பணஞ்
செய்தல்
20. கல்வியின் நோக்கம் யாது?
கல்வியின் நோக்கம் ஒரு மாணவனை வாழ்க்கைக்குத் தயாரித்த லேயன்றி ஜீவனோபாயத்திற்கல்ல.
மாணவர்கள் சிந்தையின் (விக்ஷேபத்தினை)நிலையற்ற நிலையை அடக்கிக் கொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். சிந்தையின் அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அல்லாவிடில் இந்நாட்டின் எதிர்கால நிர்வாகம், அரசியல் அசுத்த முடையதாகவும் சீர் கெட்டதாகவும் இருக்கும்.
21. சிந்தையின் உறுதியான நிலையை மாணவர்கள் எவ்வாறு
பெற்றுக்கொள்ளலாம்?
சிந்தையின் உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள மாணவர்கள் (1) உடம்பை வசைக்க வேண்டும். (2) புலன்களை ஒழுங்கில் இருத்த வேண்டும் (3) சிந்தையை அழிக்க வேண்டும். இது தான் இறவாநிலையை அடைவதற்கு வழியாகும். ஆழ்ந்த சிந்தனைக்கு

Page 45
சிந்தையின் சலனம் 72
அத்தியாவசியமாகத் தேவைப்படுவது உறுதியான சிந்தையாகும். மாணவர்கள் தமது உடல், புலன்கள், சிந்தை ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
22. இன்று நாடு சச்சரவு, கட்டுப்பாடின்மை, சண்டை, பிரச்சனை
களால் சின்னாபின்னமாக்கப்பட்டிருத்தலுக்குக் காரணம் என்ன?
சச்சரவு, கட்டுப்பாடின்மை, சண்டை, பிரச்சனைகளால் நாடு உருக்குலைந்து இருப்பதற்குக் காரணம், இளைஞர்களும் வயது வந்தவர்களும் கூட ஆத்மீக வாழ்வை முற்றாகக் கைவிட்டு புற உலகியல் பொருட்களிலேயே பெரும்பாலும் ஈடுபட்டிருப்பதாகும்.
23. இன்றைய கல்வி முறையிலும், கற்றறிந்தோர்களிலும்
காணப்பரும் குறைபாரு என்ன?
கல்விஅமைப்பானது சுயநலத்தால் புதிர் போன்று இருக்கின்றது. மிக விரைவாகவே, நல்ல வழியானாலும் சரி, தீய வழியானாலும் சரி செல்வத்தைச் சேகரித்துவிட வேண்டுமென்று கற்றறிந்தோரும் விரும்புகிறார்கள். அநேகமான மாணவர்கள் வெளிநாடு சென்று சுய நல வேட்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு விரும்பி தமது பெற்றோர் தாம் பிறந்த மண் இவற்றையும் மதியாது பணம் சம்பாதிக்கச் செல்கின்றனர். சுய அவேட்சையே இதற்குக் காரணியாகத் தாண்டுகிறது.
இத்தகைய சுயநல மனப்பாங்கு உடைய படித்தவர்கள் என்றும் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய வேதவாக்கு யாதெனில்
"பெற்றதாயும் பிறந்த நன் நாடும், நற்றவ வானினும் நனி சிறந்ததுவே" என்பதாகும்.
24. மாணவரது முக்கிய கடமை யாது?
தமது உணவு, இரத்தம், தலை (அறிவு) அனைத்திற்கும் முற்றாகத் தாம் கடமைப்பட்டிருக்கும் அவர் தம் பெற்றோருக்குத் தமது நன்றியுணர்வை வெளிப்படுத்துதலே அவரது முக்கிய கடமையாகும். மாணவர்கள் அவர்தம் பெற்றோரைச், சிறப்பாக அவர்களது வயோதிப காலத்தில் நன்கு கவனித்த வரவேண்டும்.

ஏழாம் அத்தியாயம் 73
பணம் சம்பாதிக்கும் பேராசையை மாணவர்கள் கைவிட்டுவிட்டு அன்பும், தாம் பிறந்த நாட்டிற்குச் சேவை செய்தலையும் இணைத்த நேர்மையான வாழ்வே உண்மையான செல்வம் என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
25. மணவர்கள் தமது கடமைகளைச் செவ்வனேயாற்றிவரின்
அதனால் அவர்களுக்கு முடிவில் என்ன பயனுண்ரு?
மாணவர்கள் தமத கடமையைச் செவ்வனே ஆற்றி வருவதுடன் அன்பும், தாய் நாட்டிற்குச் சேவையும் செய்யும் மனப்பாங்குடன் நேர்மையான வாழ்வும் வாழ்ந்துவரின்:-
(1) அவர்களது சிந்தையும் உள்ளமும் விரிவடைந்து
தூய்மை பெறும். (2) அவர்களுடைய சிந்தை முறையே விக்வேஷப
விலிருந்து விருபரும். (3) அவர்கள் சிந்தையின் அசைவற்ற திடநிலையையும்
ஆழ்ந்த சிந்தனைச் சிறப்பையும் பெறுவர். அவர்கள் இத்தகைய ஆத்மீக நன்மைகளை, வேறு ஆத்மீக கட்டுப்பாடுகள் இன்றியே பெற்றுக் கொள்வர்.
26. அவறன என்றால் என்ன?
சிந்தையைப் பாதிக்கும் மூன்றாவது காரணி அவறன. சிந்தையின் கண்ணாடியை மூடி மறைக்கும் தடித்த போர்வை. "தான்" என்றதன் தோற்றத்தின் பிரதி பிம்பத்தைக்கூட வெளிப்படுத்த இடங் கொடாது இருக்கும் இந்த அவறன.
உண்மையாம் தன்மையாகிய ஆத்மீக றிதான் ஸி என்றதை முற்றாகவே மறைத்துவிடுகின்றது இந்த அவறன. அத்துடன் ஒருவண் தன்னை தனத உடம்புடன் தவறாக ஒன்றுபடுத்தி உணர்ந்துகொள்ளவும் உதவுகின்றது.
27. உண்மையான உலகு' என எண்ணி நாம் எதனை அனுப
விக்கிறோம்?
உண்மையான உலகு என எண்ணி நாம் அனுபவிப்பதெல்லாம் எமது உண்மையான தான் என்பதன் எதிர்த்தாக்கம், எதிரொலி அல்லது பிரதி பிம்பமாகும்.

Page 46
சிந்தையின் சலனம் 74
28. அவறன எதனால் உண்டாக்கப்பட்டுள்ளது?
அரிஷ்டவர்க்கத்தால். மனிதனின் உள்ளாந்தரமான ஆறு பகைவரின் கூட்டு உருவால் அவறன உருவாக்கப்பட்டது.
(1) æIIID — 9b50d
(2) குரோத - கோபம்
(3) லோப ~ பேரவா
(4) மோக ~ பற்றுதல்
(5) மத-பெருமை
(6) மற்சார ~ பொறாமை.
29. மனிதனின் உள்ளார்ந்த ஆறுபகைவருள்மிகவும் கெருதியானது
6Tgr?
உள்ளார்ந்த ஆறு பகைவருள் மிகவும் கெடுதியானத பெருமை.
பெருமை எட்டு வகைப்படும்.
(1) பணத்தால் வரும் பெருமை (2) கல்வியால் வரும் பெருமை (3) சாதியால் வரும் பெருமை (4) ஐஸ்வரியத்தால் வரும் பெருமை (5) அழகினால் வரும் பெருமை (6) இளமையால் வரும் பெருமை (7) பதவி அதிகாரத்தால் வரும் பெருமை (8) தவம், ஆத்மீகத்தால் வரும் பெருமை
30. பெருமையை நாம் எவ்வாறு வெற்றி கொள்ளலாம்?
எம்மைச் சுற்றிப் பார்த்தால் ஓரளவு பெருமையை நாம் முறியடிக்கலாம். எம்மைச் சுற்றிப் பார்க்கும் போது எம்மிலும் பார்க்க மேலான நிலையில், இந்த எண்வகையிலும், எமக்குப் பெருமையைத் தருகின்ற ஒவ்வொன்றிலும், எம்மைவிட மேலோங்கி நிற்பவர் பலரைக் காணலாம்.
எமக்குப் பெருமையை உருவாக்கும் இந்த எண்வகைத் தன்மைகளெல்லாம் தோன்றி மறையும் இயல்பினதாகும், என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இவ்விரு விளக்கத்தையும் நாம் உணர்ந்து கொண்டால் நாம் எம்மில் தோன்றும் பெருமையை இலகுவாகக் களைந்து விடலாம்.

ஏழாம் அத்தியாயம் 75
31. சிந்தையின் கண்ணாடியை மறைக்கும் தடித்த போர்வையை
அகற்றுவதற்கு மிகச் சிறந்த வழியாது?
சிந்தையின் கண்ணாடியை மறைக்கும் தடித்த போர்வையை அகற்றுவதற்குச் சிறந்த வழி தெய்வ பக்தியை விருத்தி செய்தல்.
அன்பே தெய்வம் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். நாம் அன்பிலேயே வாழவேண்டும்.
32. பன்மையாகக் காணப்பருவதற்கு அப்பால் இருக்கும் அந்த
ஒருமை உண்மையை எவ்வாறு உணரலாம்?
அன்பிலேவாழ்ந்தால்பன்மையாகக் காணப்படுவதற்கு அய்பால் இருக்கும் ஒருமை உண்மையை உணரலாம். எல்லோரையும் பிணைக்கும் பந்தம் அன்பு ஆகும்.
33. உண்மையான தான்' என்ற ஒளியை அதாவது ஆத்ம
ஜோதியை எவ்வாறு காணலாம்?
ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடம்பினாலே எம்முள் இருக்கும் ஆத்மா மூடப்பட்டிருக்கிறது. ஒன்பது தவாரங்களாவன, இருகண்கள், இரு செவிகள், நாசியின் இடது வலது புறங்கள், வாய், மலவாசல், சலவாசல் என்பன. உலகின் பலவாய தன்மையையும் வேறுபாட்டினையும் இந்த ஒன்பது வாயில் உடம்பினூடாகவே காண்கிறோம்
இந்த ஒன்பது வாயில் உடம்பை, “நான்"எனத" என்ற குறுக்கு நெடுக்கு இழையோடிய தடித்த போர்வையால் நாம் முடியிருக்கிறோம். நான்' என்பது அகங்காரம். 'எனது என்பதுமமகாரம், "நான்"எனது”என்பவற்றால் ஆக்கப்பட்ட இந்தத் தடித்த போர்வையை நீக்கி, அத்துடன் உடம்புடன் நாம் கொண்டுள்ள தப்பான ஒருமைப்பாட்டையும் நீக்கி விட்டால் சிந்தையின் அவறன மறைந்தவிடும். அப்போது நாம் அந்த 'தான்' என்ற உண்மை ஒளியை 'ஆத்ம ஜோதியை, அந்த ஏக ஜோதியை, காணலாம். பலவாகத் தோற்றமளிக்கும் அந்த இருண்ட மாயையினை நீக்கக்கூடிய ஒரே ஒரு ஒளி இதவாகும்.
34. அந்தக்கரணங்களுள் அடங்கியிருப்பவை யாவை? புற
உலகினை இந்த அந்தக்கரணங்கள்எவ்விதம் நோக்குகின்றன?
அந்தக் கரணங்கள் புற உலகினை ஐந்த புலனுறுப்புகளாலும் நோக்குகின்றன.

Page 47
a X _ به:
.臀远tDA飘 Y - ATVOX EA » Y* fiogîi goob"* - * * 76
மனிதனுடைய அகக்கருவியே அந்தக்கரணம். அவை (1) சிந்தை - மனஸ்
(2) ஞாபகம் - சித்தம்
(3) அறிவு ~ புத்தி
(4) ஆணவம் - அகங்காரம் அந்தக் கரணங்கள் உருவமற்றவை.
35. அந்தக்கரணங்களின் குறைபாடுகள் எவை?
அந்தக் கரணங்கள் நான்குவிதமான குறைபாடுகளினால் தாக்கம் பெறக் கூடியதாக உளத.
(1) பிராந்தி - மாயை - மயக்கம் (2) பிரமாதம் - ஆபத்து (3) கரண அபாத்தவம் ~ கருவிகளது பலவீனம் (4) விய்ரலிப்ச பொறாமை அல்லது எரிச்சல் மனிதனது அகக் கருவிகளை அதாவது அந்தக்கரணங்களை இந்த நான்கும் தாக்குவதால் அவை முறை தவறி இயங்குகின்றன.
36. பிராந்தி என்றால் என்ன?
பிராந்தி என்பது மயக்கம். சிந்தையின் மயக்கநிலையாகும். அப்போது சிந்தையானது திரிபுபடுகிறது. உதாரணமாக ஒரு கயிற்றுத்தண்டை பாம்பாகவும், பாம்பைக் கயிற்றுத் துண்டாகவும் தப்பாக எண்ணுதல்.
வேறொருவகையில் விளக்குவதானால் சிந்தையானது உண்மையானதைபிழைஎன்றும், பிழையானதைஉண்மையென்றும் எண்ணிக் கொள்கிறது. தற்காலிகமானதை நிரந்தரம் என்றும் நிரந்தரமானதை தற்காலிகம் என்றும் எண்ணுகிறது.
37. பிராந்தி எம்மை எங்கு இட்டுச் செல்லும்?
பிராந்தி அல்லத மயக்கம் எம்மை விபத்துகளுக்கும் அல்லது ஆபத்தான நிலைப்பாட்டிற்கும் இட்டுச்செல்லும்.(பிரமாதம்)
38. பிரமாதத்தின் விளைவு என்ன?
எவ்விடத்திலும் எவ்வேளையிலும் நிச்சயம் வெடித்தே யாகும் நீர்க்குமிழி போன்று நிலையற்றது இந்த உடம்பு என்பதை உணராத,

K. K. Kayilainathar
TACHER, IYANAJR KOVTilABY ஏழாம் அத்தியாயம் MALAKANM 77
உடம்பு உண்மையான தொன்று என்று எண்ண வைத்த விடுகின்றதுதான் பிரமாதத்தின் விளைவு.
39. மனிதனிலுள்ள புலனுறுப்புக்களை இயக்குகின்ற சக்தியாது?
மனிதனிலுள்ள புலனுறுப்புக்களை இயக்குகின்ற சக்தி தெய்வ சக்தியாகும்.
எமது உடம்பிலிருக்கும் இரத்த அணுக்கள் தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளன. அவை ஒரு "டோச்" (Torch) கருவியிலுள்ள "பற்றறி" போன்றவை. இரத்த அணுக்களில் தெய்வீக சக்தியானது விலகிவிட்டால், அவை புலன்களை இயங்க வைக்க இயலாது.
தெய்வீகசக்தி இல்லாவிடத்து, உடம்பு செயலற்ற நிலைக்கு வருவதுமன்றி அத உருக்குலைந்து அழுகிவிடும்.
40. மற்றவரை திருத்த முயற்சிப்பதன் முன்னர் மாணவர் செய்து
கொள்ள வேண்டியது யாது?
மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்னர் மாணவர் தம்மைத் தாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள் தம் அறியாமையை நீக்கிவிட்டுத் தமது உண்மையான இயல்பினை அறிந்து கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் தமது சுயமான உண்மை நிலைபற்றியது மட்டும் தவிர்ந்த ஏனையவற்றை யெல்லாம் படித்து அறிய வேண்டு மென்று இருக்கிறார்கள். மாணவர்கள் அவர் தம் சுய உண்மை நிலையைப் பற்றிக் கற்றறிய வில்லையானால் (அவரது மயக்கநிலை) பிராந்தியானது அவர்களை பிரமாதம் - அதாவது ஆபத்த நிலைக்கு தள்ளிவிடும்.
41. அந்தக்கரணங்களது மூன்றாவது குறைபாரு யாது?
அந்தக்கரணங்களது மூன்றாவது குறை கரண அபாத்தவம். மனிதனின் கருவிகளின் இயலாமை அல்லது பலவீனத்தை இது குறிக்கின்றது.
இந்தப் பலவீனம் அகக்கருவிகளாய அந்தக் கரணங்களையும், புறக்கருவிகளாய புலனுறுப்புகளையும் தாக்க வல்லத.

Page 48
சிந்தையின் சலனம் 78
42. அந்தக் கரணத்தின் பலவீனத்தை ஒரு சிறுகதை மூலம்
விளக்கிக் காட்ருக?
ஒரு கிராமத்தில் பணக்கார விவசாயி ஒருவன் இருந்தான். அவன் அக்கிராமத்துத் தலைவனாகவும் விளங்கினான். அதே கிராமத்தில் நடுத்தர வகுப்பு விவசாயியும் இருந்தான்.
ஒரு நாள் பணக்காரனுடைய எருதம் மற்ற விவசாயியின் எருதும் எதிர்பாராத விதமாக மிகவும் உக்கிரமமாக சண்டை இட்டன. அதனால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பணக்காரணத எருத இறந்துவிட்டது. நடுத்தர வகுப்பு விவசாயி நடுநடுங்கிக் கொண்டு பணக்கார விவசாயியிடம் ஓடினான். தடுமாறிய நிலையில் அவன் பணக்கார விவசாயிக்கு நடந்ததற்கு எதிர்மாறாகச் சொன்னார். அதாவது பணக்கார விவசாயின் எருது தனது எருதைக் கொன்று விட்டது என்று கூறிவிட்டான்.
பணக்கார விவசாயி மற்றவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறினான். இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவது சகஜம் என்றும் தான் அவனுக்கு எந்த வகையிலும் ஏதும் உதவி செய்வதற்கும் இல்லை எனக் கூறினான்.
இப்பொழுதுதான் நடுத்தரவகுப்பு விவசாயி தனது தவறை உணர்ந்தான். அவன் நடந்ததற்கு எதிர்மாறாகவே கூறியுள்ளான் என அறிந்தான். அவன் பின்னர் மன்னிப்புக் கோரியதடண் பணக்கார விவசாயிக்கு நடந்த உண்மையை வெளிப்படுத்தினான்.
இதனைக் கேட்ட பணக்கார விவசாயிக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது. அவன் நடுத்தர விவசாயியை வாய்க்கு வந்தபடி ஏசினான், திட்டினான். கடுமையான வார்த்தைகளினாலே தனத இறந்த எருதுக்கு ஈடாக ஐந்நூறு ரூபா அபராதமும் தரவேண்டுமென்று அவனை வற்புறுத்தினான். பணக்கார விவசாயியினுடைய அந்தக்கரணங்களின் கரண அபாத்தவமானது, அவனது நிலையில்லாதநடத்தை பலவீனமுற்றதன் தன்மையை இக்கதை எடுத்துக் காட்கிறது. அவனது சீரற்ற நடத்தையானது நான்' 'எனது' எனும் உணர்வுகளின் அடிப்படையில் அமைந்திருந்தமை, நடுத்தர விவசாயியினுடைய நிலையை ஒப்பிடும் போது தெரிகின்றத.
43. புலனுறுப்புகளுடன் சம்பந்தப்பட்ட கரண அபாத்தவத்திற்கு
சில உதாரங்கள் தருக?
மனிதனின் புறக்கருவிகளே புலன் உறுப்புகளாகும். ஒருவன் மலேரியாக் காய்ச்சலினால் நோயுற்ற வேளை மிக இனிப்பாக இருக்கும் லட்டுக் கூட அவனுக்குக் கசக்கும். இதற்குக் காரணம் அவனத நாவானது நோய் கொண்டிருப்பதே யொழிய லட்டின் பிழையன்று.

ஏழாம் அத்தியாயம் 79
இதுபோலவே மஞ்சள் காமாலை நோய் கொண்டவன் கண்கள் எல்லாவற்றையும் மஞ்சள் நிறமாகக்காணும். அதன் வர்ணம் உண்மையில் வெள்ளையாகவோ சிவப்பாகவோ அன்றிக் கறுப்பாகவும் இருக்கலாம். புறஉறுப்புக்களின் வருத்தம் அகஉறுப்புக்களையும் பெருமளவில் தாக்குகின்றது. இதற்குக் காரணம் அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதாகும்.
கரண அபாத்தவத்தின் முழுமையான தாக்கம் மனித இயல்பினை அழிப்பதேயாகும். R
44. அந்தக்கரணத்தின் நான்காவது குறைபாரு என்ன?
அந்தக்கரணத்தின் நான்காவது குறைபாடு 'விப்ரலிப்ச ஆகும். 'விப்ரலிப்ச' என்றால் எரிச்சல்-பொறாமை ஆகும்.அதுவே மனிதனிடமுள்ள மிகக் கொடிய குணஇயல்பு. இதனால் கஷ்டப்படுகின்ற ஒருவன் ஒரு போதும் பிறரது செல்வம், சந்தோஷம், இவற்றைக்கண்டு சகித்துத் தாங்கிக் கொள்ள மாட்டான்.
இதனால் மாணவர்கள் ஒருபோதும் பொறாமைக்கு இடமளிக்கக் கூடாது. அவர்கள் தமத சகமாணவர்களுடன் சகோதரத்தவ மனப்பான்மையை வளர்த்தக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தமது சக மாணவர்களது வெற்றிகளைக் கண்டுபொறாமைப்படாதுதாமும் சந்தோஷப்படவேண்டும். அப்பொழுது தான் அவர்கள் பொறாமை எரிச்சல் ஆகிய குணங்களிலிருந்த விடுபடலாம். அந்தக் கரணங்களின் நாலாவது விரோதியாகிய விப்ரலிப்சவிலிருந்த சுதந்திரம் அடையலாம்.
45. விப்ரலிப்சவை வெளிப்பருத்தும் மாணவர்களின் ஒரு
உதாரணம் தருக?
இயல்பு மிக்க உடம்பையுடைய மாணவர்கள் விரைந்து சென்று ஊர்திகளின் முன்வரிசை ஆசனங்களைப் பிடித்தக்கொள்வர். மிக நீளமாக நின்ற நிரைவரிசையில் தமக்கு முன்னால் நிற்கும் வயத வந்தவர்களையும், பெண்கள் குழந்தைகளையும் கூடமுண்டியடித்துக்கொண்டு சென்று முன்னிடம் தேடிக்கொள்வர்.
உண்மையில் அவர்கள் மேற்கூறிய பலவீனமானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். வயத வந்தவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடம் கொடுப்பதனால் தமக்கு இடம் இல்லாது போனாலும் கூட அவர்கள் ஓரிரண்டு மைல் தாரம் நடப்பதில் ஏதம் குறை இருக்காது.

Page 49
சிந்தையின் சலனம் 8O
இதனால் மாணவர் இருதுறையில் நன்மை பெறுவர். அவர்களுக்கு ஊர்திச் செலவுப்பணமும் மிச்சமாகின்றது. அவர்களது உடம்பிற்குத் தேவையான தேக அப்பியாசத்தையும் அவர்கள் பெறுகின்றனர்.
46. தூய்மையான எண்ணம், சொல், செயல் இவற்றைப் பெற்றுக்
கொள்ள நாம் என்ன செய்யவேண்ரும்?
தாய்மையான எண்ணம், சொல், செயலைப் பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் ஐந்து கட்டளைகளை எமது உயிர் மூச்சுப்போலக் கருதி அவற்றை நடைமுறைப்படுத்தி சாதகம் பண்ணல் வேண்டும்.
(1) தீயவற்றை எண்ணாதே. நல்லனவற்றையே எண்ணிக்கொள். (2) தீயவற்றை பாராதே - நல்லனவற்றையே பார்த்துக்கொள். (3) தீயவற்றை கேட்காதே. நல்லனவற்றையே கேட்பாயாக. (4) தீயவற்றை பேசாதே - நல்லனவற்றையே பேசுவாயாக. (5) தீயவற்றை செய்யாதே - நல்லனவற்றையே செய்வாயாக.
47. இந்த ஐந்து கட்டளைகளையும் பின்பற்றுவதால் நாம்
அடையும் பயன் யாது?
எமது உயிர் மூச்சுப் போன்ற இந்த ஐந்து கட்டளைகளையும் பின்பற்றுவோமாகில் நாம் எமது அந்தக்கரணங்களது நான்கு குறைபாடுகளையும் நிவர்த்திக்கக்கூடியவர்களாவோம்.
நாம் சிந்தையின் தாய நிலையைப் பெறுவோம். அந்தக் கரணங்களின் ஏனையமூன்று சேர்க்கைகளின் தாய்மையையும், அதாவது சித்தம், புத்தி அகங்காரத்தின் தூய நிலையையும் பெறுவோம்.
இது, நாம் விபரித்துக்கொள்ள இயலாத ஆனந்தத்தை அனுபவிக்க இடம்ளிக்கின்றது.
48 கடவுளின் அருளைப் பெறுவதற்கு நேர்த்தியான காலம் எது?
கடவுளின் அருளைப் பெறுவதற்கு மிகவும் நேர்த்தியான காலம் எம்மிடம் மனோபலம், இளமையின் உற்சாகம் இருக்கும் காலமேயாம். நாம் இளமையாக இருக்கும் போது

胃
ஏழாம் அத்தியாயம் 81
(1) உடம்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் (2) புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் (3) அந்தக்கரணங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் ஆகியவற்றை விருத்தி செய்ய வேண்டும். இளமைக்காலமே இறையருளைப் பெற உகந்தகாலம். இக்காலத்திலேயே மாணவர்கள் இறையருளை நிறையப் பெற்றுக் கொண்டால் அவர்களது எதிர்காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஆவார்கள். அவர்களது எதிர்காலம் பாதுகாப்புள்ளதாகவும் ஒளிமயமானதாகவும் செழிப்புற்றதாயும் விளங்கும்.
மழைக்காலத்தில் தாங்கிகளில் நீரைத்தேக்கிவைத்தப் பின்னர் கோடையில் பயிர்ச்செய்கை நிலையங்களுக்கு நீர் பாய்ச்சுவதுபோல இளமையாக இருக்கும் போதே உடம்பையும் புலன்களையும், அந்தக்கரணங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத்தம்மைப் பண்படுத்திக் கெள்ள வேண்டும். பிற்காலத்தில் இந்த நற்பண்புகள் அவர்களுக்கு நல்ல நிலையைக் கொடுக்கும்.
49. இறைவன் எப்பொழுதாவது அடியார்களை மறந்ததுண்டா?
அல்லது கைவிட்டதுண்டா?
இறைவன் தன் அடியார்களை ஒருபோதும் மறப்பதில்லை. அடியார்கள் தான் இறைவனை மறப்பதண்டு. இறைவன் ஒருபோதும் அடியார்களைக் கைவிட்டதில்லை. அடியார்கள் தான் இறைவனைக் கைவிடுவதண்டு.
50. மனிதனால் அணியப்பட்ட மிக முக்கியமான ஆடை எது?
மனிதனால் அணியப்பட்ட நான்கு ஆடைகளுள் அதாவது உடம்பு, புலன்கள், சிந்தை, அறிவு என்பவற்றுள் முக்கியமானது அறிவு.
அறிவானது நீர்த்தாங்கி போன்றது. உடம்பும் புலன்களும், சிந்தையும் தாங்கியில் பொருத்தியுள்ள கழிவாய் (TAP) போன்றது தாங்கியிலுள்ள நீரளவாகவே இக்கழிவாயிலும் நீர் இறங்கும்.
ஆகவே, அறிவு-புத்திதான் மனிதனால் அணியப்பட்ட ஆடைகளில் மிகப் பிரதானமானதாகும்.

Page 50
எட்டாம் அத்தியாயம்
தேரோட்டியாகிய புத்தி
1. ஆத்மீக விருத்திக்கு வழியாது?
ஆத்மீக விருத்திக்கு வழி சிந்தையின் தாய் நிலையாகும்.
2. மூன்று குரங்குகளின் படம் எதனை எமக்கு ஞாபகப்பருத்
துகிறது?
மூன்று குரங்களின் படம் எமக்கு ஞாபகப்படுத்தபவை
(1) தீயதைப் பாராதே
(2) தீயதைப் பேசாதே
(3) தீயதைக் கேளாதே
முதலாவது படத்தில் குரங்கு தனது கைகளால் கண்களைப் பொத்திக்கொள்கிறது. இரண்டாவது படத்தில் குரங்கு தனது கரங்களால் வாயை முடியிருக்கிறத. மூன்றாவத படத்தில் தனத கரங்களால் இரு காதகளையும் பொத்தியிருக்கிறது.
3. உடம்பு, புலன்கள், சிந்தை அறிவு (புத்தி) இவற்றை எத
னோரு ஒப்பிட்ரு உபநிடதங்கள் கூறுகின்றன?
உபநிடதங்கள் உடம்பைத் தேருக்கும், ஜம்புலன்களைக் குதிரைக்கும், சிந்தையைக் கடிவாள வாருக்கும், புத்தியைத் தேர்ப்பா கனுக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றன.தேர்ப்பாகன் இன்றித் தேர் செயற்படாது.
4. புத்தி மனிதனுக்கு எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை
விளக்கிக் காட்டவும்.?
புத்திக்குத் தீர்மானம் எருக்கும் சக்திஇருக்கிறது.புத்தியின் இடையீடு இன்றி எமது வாழ்வில் எழும் பிரச்சனைகளை எம்மால் விருவித்துக்கொள்ள இயலாது.புலன்கள் நுகரக்கூடியதற்கும் அய்பால்

எட்டாம் அத்தியாயம் 83
உள்ளவற்றைப் புத்தி நுகரக்கூடியதாக இருக்கின்றதென பகவத் கீதை கூறுகின்றது. ஆகவே மனிதனுக்கு புத்தி அத்தியாவசியமாகிறத.
புத்திகிரகயம் அதீந்திரியம்.
5. இரு மந்திரங்களுக்கு நருவே வாழ்க்கை யெனும் ஆறு இழிந்
தோடவேண்ருமென பகவத்கீதை கூறுகிறது. அவை யாவை?
இரு மந்திரங்களுக்கு நடுவே வாழ்க்கையெனும் ஆறு இழிந்தோட வேண்டு மென பகவத்கீதையில் குறிப்பிட்டுள்ள மந்திரங்கள்
(1) "சிரத்தவான் லபதே ஞானம்" ~ நம்பிக்கையுடையவன் மேலான ஞானத்தைப் பெறுவான்.
(2) "ஸம்ஸ்யாத்மா வினஸ்யதி" ~ ஜயங்கள் நிறைந்த மனிதன் அழிந்துபடுவான்.
இவ்விரு கரைகள் இல்லையானால் வாழ்க்கையெனும் ஆறு பல விதமான பிரச்சனைகள், கஷ்டங்கள், தன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். இவ்விரு கரைகளுக்கும் நடுவே வாழ்க்கையெனும் ஆறு இழிந்து ஓடுமானால், நிம்மதி, சந்தோஷம், கிடைக்கப்பெற்றதாய் ஈற்றில் அதன் இலட்சிய எல்லையாக விளங்கும் திருவருளைச் சென்று சேரும்.
б. "அந்தர்வாணி" எனும் சொல்லின் பொருளை விளக்குக.?
"அந்தர்வாணி" என்றால் அகக்குரல் அல்லது"மனச்சாட்சி" அறிவு அல்லது புத்திக்கு இதர மறு பெயராகும்.
'எனது செயலை என் மனச்சாட்சி அங்கீகரிக்கவில்லை' என ஒருவன் கூறுவானானால், அவன், அவனது அந்தர்வாணியின் (அகக் குரலின்) மனச்சாட்சியின் ஆணைப்படி நடந்துகொள்ளவில்லை என்பதாகும். ஒரு பிரச்சனை எழும்பொழுது, எம்மை நெறிப்படுத்துவதற்காக நாம் எமது அகக்குரலை எதிர்ப்பார்த்து இருக்கிறோம். அகக்குரலிடமிருந்து திருப்தியானபதில் கிடைக்காவிட்டால்மனிதனுக்கு வாழ்வில் எத்தகைய திருப்தியும் ஏற்படாது.
"தலைவனைத் தொடர்வாய்" எனும் வாக்கியத்தில் தலைவன் எனக் குறிக்கப்பட்டது அந்தர்வாணியை - அகக்குரலை - ஆகும். அகக்குரலின் மனச்சாட்சியின் ஆணையை நாம் பின்பற்றினால்தான் எமது வாழ்வின் சரியான சேர்விடத்தைச் சென்றடைவோம்.

Page 51
தேரோட்டியாகிய புத்தி 84
7. புத்தி. விஞ்ஞானம் இரண்டின் வேறுபாட்டை விளக்கவும்.?
புத்தி. அக உலகின்நூட்பமான பகுதியுடன் தொடர்புடையது. விஞ்ஞானம் - உலகியல் அறிவுடன் சம்பந்தப்பட்டது. இது சாதாரண, புற உலகிலுள்ள பொருள்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதற்கு மனிதனுக்கு உதவியளிக்கிறத.
8. "தான்" என்ற அல்லது . ஆத்மாவின் ஆனந்தத்தை மனிதன் அனுபவிக்க முடியாமைக்கு ஏதுவாய காரணம் என்ன?
"தான்" அல்லத ஆத்மாவின் ஆனந்தத்தை மனிதன் அனுபவிக்க முடியாமைக்குக் காரணம், அவனால் அகங்காரத்தைக் கடந்த அப்பால் செய்ய இயலாமையாகும்.
அகங்காரமானது புத்தியிலும் மென்மையானது. அகங்காரம் எங்கும் நிறைந்தது. அது எமது செய்ல்களிலெல்லாம் பரிணமித்து இருக்கின்றது. அவனது புத்தியையும் தன்னுள் அடக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக அகங்காரம் இருப்பதால் தான் அதனைக் கடந்து செல்வதற்கு மனிதனால் இயலாமல் இருக்கிறது. -
9. விருதலை அல்லது வீடு பேற்றினை எவ்வாறு அடையலாம்?
வீடுபேற்றினை அடைய அல்லது ஆத்மாவை உணர்ந்து கொள்வதற்கு நான்' என்கின்ற ஆணவம் அல்லது அகங்காரத்தை அகற்றிவிட வேண்டும்.
மனிதனது அகங்காரம் புத்தியை மறைக்கின்றத. மறைத்த தான்
என்றதை ~ அல்லது ஆத்மாவை-உடம்புடன் பூரணமாக ஒருமைப்பாடுகொள்ள வைக்கிறது. (இனங்காணுதல்)
எனவே, நான்' அல்லது அகங்காரம் விலகி விட்டால் தன்னை உடம்புடன் பூரணமாக ஒருமைப்பாடு கொள்ளுதல் விலகிவிடும். அப்போது வீடு பேற்றை அடையலாம்.
10. ஆத்மாவிலிருந்து உடம்பிற்கு எவ்வாறு சக்தி சென்றடைகிறது?
ஆத்மாவிலிருந்த உடம்பிற்குச் சக்தி படிப்படியாகச் சென்றடைகிறது. ஆத்மாவிற்கு மிக நெருங்கிய நிலையில் இருக்கும்

எட்டாம் அத்தியாயம் 85
புத்தி 90% ஆத்மீக சக்தியையும் ஒளியையும் வாங்கிக் கொள்கிறது. புத்தியிடமிருந்த சிந்தை பெற்றுக்கொள்கிறது. சிந்தையிடமிருந்து புலனும், புலனிடமிருந்து உடம்பும் சக்தியைப் பெற்றுக்கொள்ளும்.
ஆத்மாவிடமிருந்து உடம்பை வந்தடையும் சக்திப் பிரவாகத்தில், நிறைசம்பந்தப்பட்ட, தரம் சம்பந்தப்பட்ட இறக்கங்கள் காணப்படுகின்றது. புத்தி, சிந்தை, புலன்கள், இறுதியில் உடம்பை வந்தடையும் ஆத்மாவானது இவற்றினூடாக வரும் வேளை சிறிது சிறிதாக மாசடைகிறது.
11. புத்தி சிந்தை, புலன்கள், உடம்பு இவற்றினூடாக வரும்
வேளை ஏற்படுகின்ற ஆத்மீக சக்தியின் இறக்கத்தை எவ்வாறு குறைத்துக் கொள்ளலாம்?
ஆத்மீக சக்தியின் நிறை சம்பந்தப்பட்ட, தரம் சம்பந்தப்பட்ட இறக்கத்தை ஓரளவு குறைக்கலாம். எவ்வாறு எனில் புத்தியைப் பரிசுத்தமாக்கியும் அதற்குப் புனிதத்தன்மை ஊட்டுவதாலும் குறைத்தக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதால் புத்திக்கும் உடம்பிற்கும் நேரடித்தொடர்பு ஏற்படுவதை இலகுவாக்குகிறோம்.
12. தைத்திரிய உபநிடதத்தில் "புத்தி” எவ்வாறு வருணிக்
கப்பட்டுள்ளது?
தைத்திரிய உபநிடதத்தில் புத்தியை ஒரு பறவைக்கு உவமிக் கப்பட்டுள்ளது. புத்திப் பறவையின் பல்வேறு பகுதிகளாவன:-
தலை - சிரத்தை ~ (ஆர்வம் - நம்பிக்கை) வலது சிறகு ~ றிதம் (பிரபஞ்ச ஒழுங்கு) இடது சிறகு ~ சத்தியம் (உண்மை) பிரதான உடல் - மகாதத்துவம் (பெரிய கோட்பாடு) வால் ~ யோகம் (சிந்தை, புலன்களது கட்டுப்பாடு) இவ்வாறு புத்தியானது ஐந்து உள்ளடக்கங்களைக் கொண்டமையால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.
13. மேதையானது (ஆற்றல், கெட்டித்தனம்) வாழ்க்கையில் அரிய
பெரிய சாதனைகளை ஆற்றுவதற்கு மனிதனுக்குப் போது
шDпотрБП?
வாழ்க்கையில் அரிய பெரிய சாதனைகளை ஆற்றுவதற்கு மேதை போதுமானதல்ல.

Page 52
தேரோட்டியாகிய புத்தி 86
வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும், வாழ்வில் அரிய
சாதனைகளை ஆற்றவும் மனிதனுக்கு சிரத்தை (ஆர்வம் - நம்பிக்கை)
ஸ்திரத்வா (உறுதிதீர்மானிக்கும்வலிமை)ஆகிய இரண்டும் வேண்டும்.
சிரத்தை mur ஆர்வ ம்-கம்பிக்கை இல்லாது மனிதன் எதையுமே சாதித்துக் கொள்ள இயலாது.
14. விஞ்ஞானத்திற்கும் ஆத்மீகத்திற்கும் உள்ள வேற்றுமையாது?
விஞ்ஞானத்திற்கும் ஆத்மீகத்திற்குமுள்ள வேற்றுமையை இரு சாதாரண சமன்பாட்டினால் நண்கு விளங்கவைக்கலாம்.
அன்பின் உற்சாகம் - ஆத்மீகம்
அன்பின் தெறிப்பு - விஞ்ஞானம்
விஞ்ஞானம், தொழில் நட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி மனிதனை சொகுசு விரும்பியாக்கிவிட்டதால் அவன் கடின உழைப்பில் அக்கறையற்ற வனாகிறான்.
அன்பிற்கும் ஆத்மீக முன்னேற்றத்திற்கும் அவன் எத்தகைய கவனிப்பும் கொருப்பதில்லை.
விஞ்ஞானத்தைத் தவறாக உபயோகித்தலே மனிதனை
(č,éidirí
15. நிரந்தரமான மகிழ்ச்சி வேண்ருமானால் யாது செய்தல்
அவசியம்?
நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டுமானால், நாம், அந்தக் கரணங்களைச் சுத்தி செய்து ஆத்மீக வழியைய் பின்பற்றி, உலகளாவிய அன்பைப் பெருக்க வேண்டும்.
விஞ்ஞானமும் தொழில்நட்பமும் எமக்குத்தரும் பலவாறான வசதிகளால் நாம் நிரந்தரமான சந்தோஷத்தை எதிர்பார்க்க முடியாதது. ஏனெனில், இன்பத்தை உணரும் உடம்பும் இன்பத்தை ஊட்டவல்ல பொருள்களும் இரண்டுமே தோன்றி மறைகின்ற நிரந்தரமற்ற வையாகும்.
16. மனிததோற்றத்தின் உருவாக்கத்திற்கும்விருத்திக்கும் உணவும்
நீரும் எந்த அளவிற்கு ஆத்தியாவசியமானவை?
| சிந்தையின் உருவாக்கம், நிலைபேறு, விருத்தி ஆகியவற்றிற்கு
| மனிதன் உட்கொள்ளும் உணவே மூலசக்தியாக அமைகிறத.
 
 
 
 
 

எட்டாம் அத்தியாயம் 87
செமிபாடடைந்தபின் சத்த அல்லாத பெரும்பங்கு மலமாக வெளியேற்றப்பட்டு விடும். உணவின் நுண்ணிய பங்கு இரத்தமாகவும் சதையாகவும் உருப்பெறுகிறது.
உணவின் மிக நுண்ணிய பாகம் சிந்தையாக உருப் பெறுகிறது. இவ்வாறு எமது சிந்தையின் இயல்புநாம் உட்கொள்ளும் உணவின் அளவுப்பிரமாணம், தரத்திலும் தங்கியுள்ளது.
அன்னமயகோச.உடம்பு அல்லது உணவு உறையானது பிரதானமாக உணவிலிருந்து பெறப்பட்டது. பிராணமய கோச. உயிர் உறையானது நாம் அருந்தும் நீரிலுள்ள மிகநுட்பமான பகுதி யிலிருந்தும் பெறப்பட்டது. மேலதிக நீர் சலமாக வெளியேறிவிடும்.
அன்னமய் கோசமும் பிராணமயகோசமும் மனிதனின் ஏனைய மூன்று உறைகளும் உருவாவதற்கு அடித்தளமாக அமைகின்றன. ஏனைய மூன்று உறைகளும்.
(1) மனோமயகோசம் . சிந்தை (2) விஞ்ஞான மய கோசம் - அறிவு (3) ஆனந்தமய கோசம் . ஆனந்தம் மனித தோற்றத்தை உருவாக்கி, விரிவடையச் செய்வதில் உணவும் நீரும் எத்தகைய முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பதை இத உணர்த்தி நிற்கின்றது.
17 அகங்காரம் என்ற சொல்லின் பொருள்யாது? அதனை ஆணவத்
தினின்றும் எவ்வாறு வேறுபருத்திக்கொள்ளலாம்?
அகங்காரத்தின் சரியான விளக்கம் தவறாகத் தன்னைப் பூரணமாக உடம்புடன் ஒருமைப்பாடு கொள்ளுதல் ஆகும். சமஸ்கிருதச் சொல்லாகிய அகங்காரம் "ஆணவம்' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆணவம் என்ற சொல் தன்னைப்பற்றிப் பெரிதாக எண்ணுதல், எண்வகை பெருமை காரணமாக எழுந்த மயக்கத்தால் உருவான தற்பெருமையைக் குறிக்கும். எல்லோருமே இந்தப் பெருமை ~ தற்பெருமையின் பால் வசப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் தன்னை உடம்பெனக் கொள்ளும் எண்ணத்தில் யாவருமே வசப்பட்டுள்ளனர்.
இந்த அகங்காரம் தான் புத்தியை மறைத்து எம்மைப் பிழையான பாதையில் இட்டுச் செல்கின்றது. எனவே புத்தியானது சிரத்தையை விருத்தி செய்ய வேண்டுமானால் நாம் முதலாவதாக இந்த அகங்காரத்தை நீக்க வேண்டும்.

Page 53
தேரோட்டியாகிய புத்தி 88
18. சத்தியத்திற்கும் றிதத்திற்குமுள்ள வித்தியாசம் என்ன?
சத்தியம் பெரும்பாலும் புற உலகத்துடன் சம்பந்தப்பட்டது. ற்றிதம் அகஉலகாகிய சிந்தையும் அதன் மாற்றங்களோடும் தொடர் புடையது.
சத்தியமானது, சொல், செயல் இவற்றின் ஒற்றுமை, இசை வாக்கத்தடன் சம்பந்தப்பட்டது. றிதத்திற்கு மிக அகன்ற தாற்பரியம் (கருத்து) உளது. அது திரிகரணங்களது எண்ணம், சொல், செயல் . ஆகியவற்றின் தூய்மை இசைவாக்கம், ஒற்றுமை இவற்றில் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறது. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய கால எல்லைக்கு அப்பாற்பட்டது சத்தியம். றிதம் காலத்திற்கும் வெளிக்கும் அப்பாற்பட்டத.
வேதாந்தத்தில் றிதம், சத்தியம் இரண்டும் ஒரே கருத்துப்பட உபயோகிக்கப்பட்டுள்ளது.
19 புத்திப்பறவையின் உடம்பாகிய மகாதத்துவம் எதனை
விளக்குகின்றது?
மகாதத்தவமானது, உயர்ந்த உபநிடதப் பிரகடனமாகிய 'தத்துவம் அசி அது நீ ஆகிறாய் என்ற மகா வாக்கியத்தை உணர்த்துகிறது.
அது நீ ஆகிறாய் என்றால் ஆத்மாவானது 'சத்சித் ஆனந்தத்தை அனுபவித்தல் ஆகும். சத் சித் ஆனந்தம் என்றால் நிலைத்திருப்பது ~ உணர்வு ~ ஆனந்தம் எனக் கூறப்படும்.
20. புத்திக்கும் மேதை சக்திக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மேதை சக்தியானது மாயா சக்திக்கு ~ மயக்கத்திற்குரிய தெய்வீக சக்தி அல்லது உலகியல் அறிவின் சக்திக்கு ஒப்பானது. சிரத்தா, றிதம், சத்தியம், மகாதத்துவம், யோகம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய புத்தி ஆத்மாவினுடைய எதிரொலி பிம்பம், எதிர்ப்பாரு எனலாம்.
21. அவதாரம் எருத்தோர் எவ்வாறு புத்தி புகட்ருவர்?
அவதாரம் எடுத்தவர்கள் பெரும்பாலும் நேரடியாகப் புத்தி புகட்டுவதில்லை. அவர்கள், தொடர்பு கொள்ளவேண்டும் என எண்ணினால்,

எட்டாம் அத்தியாயம் 89
அப்பொழுது மறைமுகமான குறிப்புக்களாலேயே தமது தொடர்பாடலை நடத்துவர். மிகவும் அரிய சந்தர்ப்பங்களில் தான் அவர்கள் நேரடியான பணிப்புக்களை செயற்படுத்துவர். காரணம், மனிதனிடத்து தெய்வீகத்தன்மை இயல்பாகவே செறிந்து இருக்கிறது. அச்சக்தியின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் வழங்குமிடத்த அதர் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதனாலேயாம்.
காலத்திற்குக் காலம், அவனுக்கு வழங்கப்படும் குறிப்புகளின் மூலம், மனிதன், தன்னைத் தானே திருத்திக் கொள்ளக் கூடியதாக்கி விடவேண்டும்.
ஆத்மீகத்துறையில் ஒருவருக்கு உதவவேண்டுமானால், அல்லது உலகியல் ரீதியிலும்சரி, மிகச்சிறந்தவழி, அவர்கள் தமக்குத் தாமே உதவிக் கொள்ள கூடியதாக அதாவத முயன்று கொள்ளக் கூடியதாக உதவுதல் ஆகும். சுய முயற்சியே சிறந்த முயற்சி ஆகும். அதையே தாண்டி விடவேண்டும்.
22. பதினான்கு வருட வனவாசத்தை முடித்துக் கொண்ரு
அயோத்திக்கு மீண்ட இராமர், கைகேயிக்குக் கொருத்த உபதேசம் யாது?
சரயு ஆற்றிற்கு அருகாமையில் செம்மறி ஆடுகள் போடும் சத்தத்தைக் கேட்கும்படி நீ இராமர் கைகேயிக்குச் சொன்னார். செம்மறி ஆடுகள் "மாஆ மாஆ” என்று கத்தியதைக் கைகேயி அறிந்து கொண்டாள். மாஆ மா ஆ என்றால் நான் யார்? நான் யார்? என்று பொருள்படும் என்று மறீஇராமர் விளக்கம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது "செம்மறி ஆடுகளே நான் யார் என்ற விசாரணையில் கருத்து ஊன்றி நிற்கும் போது இவ்விடயத்தில் எவ்வளவு, அதிகப்படியாக மனிதன் சிந்திக்கவேண்டும், அல்லாவிடில் மனிதன் செம்மறியைவிடக் கீழ்த்தரமானவனாகி விடுவான்.'
23. நாம் முதலாவதாக விடைகண்ரு கொள்ள வேண்டிய மிகமுக்
கியமான வினா எது?
நாம் முதற்கண் விடைகண்டு கொள்ள வேண்டிய வினாவானது "நான் யார்?" என்றதாகும். நான் யார் என அறியாது, மற்றவர்களது விடயங்களை எல்லாம் அறிய முற்பவடுவதில் எத்தகைய பிரயோசனமுமில்லை.

Page 54
தேரோட்டியாகிய புத்தி 90
24 நாம் பிறக்கும் போது யாது கேட்டோம்? நாம் இறக்கும்
போது எதனை நிலைநாட்டிக் கொள்ள வேண்ரும்?
நாம் பிறக்கும்போது"சோகம்"நான் யார்?' என்று கேட்டு அழுதோம்.
இறக்கும் பொழுது, வாயில் அதே வினாவுடன் இறக்கக்கூடாது. மிகவும் மகிழ்ச்சிகரமாகவே 'சோகம் நான் 'அது' அல்லது "அவன்' என்பதை உணர்த்திவிட வேண்டும்.
25. மானிட வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ள
ஒருவனின் இலட்சணம் எவ்வாறிருக்கும்?
சோகம் என்ற மந்திரத்தை-அதாவதுநான்"அது' அல்லது அவன் என்பதை உணர்ந்த விடத்து மனிதன் மானிட வாழ்வின் நோக்கத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்கிறான்.
26. அகங்காரத்தை நீக்கிக் கொள்ளும் ஒரேயொரு வழியாது?
அகங்காரத்தைநீக்கிக்கொள்ளும் ஒரே ஒருவழிதெய்வீக வாழ்வு வாழ்தலாகும். -
27. நானே உடம்பு' என்ற ஆணவ உணர்வை நாம் எவ்விதம்
அகற்றலாம்?
நான் தான் உடம்பு என்ற உணர்வு எம்மில் எழும்போது நாம் அமைதியாக இருந்து, எமது மூச்சு எமக்குஉணர்த்துவதை அவதானிக்க வேண்ரும்.
எமது மூச்சு எமக்கு உணர்த்துவது, சுவாசம் உட்செல்லும் போது "சோ" என்றும், சுவாசம் வெளிவரும் போது 'ஹம்' என்று மிருப்பதையாகும்.
"சோ" "ஹம்" என்ற இருசொற்களும் "நான் பிரம்மன்' என்ற பொருளை உணர்த்துகின்றன.
இந்த மந்திரத்தை நாம் இடையறாது உச்சரித்தால் நானே உடம்பு எனக் கொண்ட ஆணவ உணர்வின் எண்ணக் கரு எமக்கு எவ்வித தொந்தரவையும் ஆற்றாது.
 
 

எட்டாம் அத்தியாயம் 91
இந்த 'சோ ஹம்' எனும் மந்திரம் எமது மூச்சுடன் ஒரு நாளைக்கு 21,600 முறை மீட்டப்படுகிறது. நான் பிரம்மன் என்றத எமத அகக்குரல் எவ்வேளையிலும் கூறு வதன் அர்த்தமாகும். (விளக்கமாகும்).
28. நாம் நெருநாட்களாக ஆத்மீக சாதனைகளை நடைமுறைப் பருத்தி வந்த போதிலும் ஏன் ஆத்மீக விருத்தியை எம்மால் எய்திக் கொள்ள முடியவில்லை?
ஆத்மீக விருத்தியைப்பெறமுடியாமைக்குக் காரணம் இதுவாகும். இராமையா, கிருஷ்ணையா எனத் தற்காலிகமாகவே எமது உடம்பிற்கு வழங்கப்பட்ட பொய்யான பெயர்களுடன், தொடர்ந்தும் நாம் எம்மை, உடம்புடன் ஒருமைப் பருத்திக்கொள்கிறோம். எமது உடம்பிற்குக் கொடுக்கப்பட்ட பெயரளவிலேயே நாம் தொடர்ந்தும் இருந்து, எத்தனையோ ஆத்மீக சாதனைகளுக்குப் பின்னும் எம்மை எமத உடம்புடன் நாம் பூரணமாக ஒருமைப்பாடு கொள்கிறோம். இதனால் தான் நாம் எவ்வித ஆத்மீக விருத்தியையும் பெற்றுக்கொள்ள இயலாமல் இருக்கிறது.
நாம் எம்மை உடம்புடன் பூரணமாக ஒருமைப்பாடு கொள்ளுதலைக்கைவிட்டு,"சோகம்'நான் பிரம்மன் என்றதே எனது இயற்கையானதும் நிரந்தரமானதுமான பெயர் என்றதை உணர்ந்த பின்புதான் ஆத்மீக விருத்தியைப் பெறலாம்.
29. சோகம் தான் எமது நிரந்தரமானதும் உண்மையானதுமான பெயர் என நாம் உணர்ந்து கொண்டவிடத்து நாம் எதனை அனுபவிக்க முடியும்?
'சோகம் தான் எமது நிரந்தரமான உண்மைப் பெயர் என்பதை உணர்ந்து கொண்ட விடத்து நாம் சத்சித் ஆனந்தத்தை . நிலைபேறான உணர்விலுள்ள ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
30. கிருஷ்ண பகவான் எவ்வாறு அழைக்கப்பருகின்றார்?
கிருஷ்ண பகவான் பார்த்தசாரதி, பார்த்தனின் சாரதி என்று அழைக்கப்படுகிறார்.
பார்த்தன் என்ற பெயர்"அருச்சுனனுக்கு மட்டுமல்ல பிருதிவி அதாவது- பூமியில் பிறந்த எல்லாப்பிள்ளைகளையும் அது உள்ளடக்கும்.

Page 55
தேரோட்டியாகிய புத்தி 92
அதாவது எம் எல்லோரையும் அடக்கும். ஆகவே நாம் எமது ஆத்மாவை உணர எடுக்கும் பயணத்தில் கிருஷ்ண பகவானை எமது சாரதியாகக் கொள்ளவேண்டும். புத்தியானது தெய்வீக ஆத்மாவின் பிரதிபிம்பமாக இருப்பதால் ஆத்மாவை உணர்வதற்கு மேற்கொள்ளும் பயணத்தில் புத்தியையே சாரதியாக நாம் பிரயோகித்துக் கொள்ள வேண்டும்.
31. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற
மிக முக்கியமாகத் தேவைப்பருவது எது?
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியீட்டுவதற்கு 'பிரேமை' உலகளாவிய அன்பு அத்தியாவசியமானது. இறைவனே அன்பின் உரு, சத்தியத்தின் ஒளிஞாயிறு)ஆகவே,உண்மையான அன்பின் மூலமாகவே நாம் எமது உண்மையான 'தான்' என்பதைப் புத்தியின் துணைகொண்டு அறிய முற்பட்டு எமது சிந்தனையைத் தூய்மைப்படுத்த வேண்டும். இதையே சுவாமிகள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
ہے سرا 炎烧

ஒன்பதாம் அத்தியாயம்
ஆணவமும் பற்றும்
1. எல்லோருக்கும் பொருத்தமான மந்திரம் எது?
எல்லோருக்கும் பொருத்தமான மந்திரம். நான் சத்தியம், சிவம், சுந்தரம். உண்மை, நன்மை, அழகு. சற்சித் ஆனந்தத்தின் உரு. நிலைபேறு ~ உணர்வு - ஆனந்தம்.
2. இரவும் பகலும் ஓய்வின்றி மனிதன் பெற முயல்வது எதனை?
இரவும் பகலும் ஓய்வின்றி மனிதன் பெற முயல்வது (1) சந்தோஷம். (2) துன்பத்தை நீக்கிக்கொள்ள.
3. மனிதன் சந்தோஷத்தைப் பெற ஓயாதுஅலைவதன் உட்கருத்து
என்ன?
மனிதன் சந்தோஷத்தைப் பெற ஓயாது அலைவதன் உட்கருத்து மனிதனது உண்மையான இயல்பு ஆனந்தமயமானது. அவன் சந்தோஷத்தின் பூரண உருவாக விளங்குகிறான்.
ஒருவன் சந்தோஷமாக இருந்தால் அத அவன் இயற்கையான நிலையாகும். அந்த இயற்கை நிலையில் இருப்பதற்குத் தான் அவன் முயலுகிறான்.
4. மனிதன் அவனது இயல்பான ஆனந்த நிலையை உணர் வதற்கு, இறைவனால் அவனுக்கு வழங்கப்பட்ட துறைகள்
6T6D6?
மனிதன் அவனது இயல்பான ஆனந்த நிலையை உணர்வதற்கு வழங்கப்பட்ட தறைகள், உடம்பு, புலன்கள், சிந்தை, புத்தி ஆகியவை.

Page 56
ஆணவமும் பற்றும் 94
5. மனிதன் ஏன் துன்பத்தில் மூழ்கி இருக்கிறான்?
மனிதன் தன்பத்தில் மூழ்கி இருப்பதற்குக் காரணம், அவனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பரிசாகிய உடம்பு, புலன்கள், சிந்தை, புத்தி ஆகியன மாசடையப்பட்டு அவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதனாலாகும்.
б. மனிதனுக்கு வழங்கப்பட்ட துறைகள் எவ்வாறு துஷ்பிரயோகிக்
கப்பட்ரு மாசடையப் பெற்றுள்ளன?
மனிதனுடைய உடம்பு"ராக" என்னும் அழுக்காகிய பற்றினாலும், தவேஷ வெறுப்பினாலும், அழுக்கேற்றப்பட்டுள்ளது. புலன்களாவன ஆசைகள், புலனின்பங்கள் ஆகிய அழுக்கேறிய துணியால் மூடப்பட்டிருக்கிறது.
7. கடவுளால் வழங்கப்பட்ட துறைகளை மனிதன் ஏன் துஷ்
பிரயோகம் செய்கிறான், மாசுபருத்துகிறான்?
கடவுளால் தரப்பட்ட தறைகளை மனிதன் தஷ்பிரயோகம் செய்வதம், மாசு படுத்துவதும் அவனது தப்பபிப்பிராயத்தினாலாகும். உலகியல் இன்பங்கள் நம்பகமானவை. தனக்கு இயல்பானவை என்று வெகுவாக நம்பி அதன் வழி நிற்கிறான். -
உலகியல் இன்பங்கள் நிலையற்றவை, தோன்றிமறையும் முகிற் கூட்டம் போன்றவை, என்பதை அவன் ஒருபோதும் உணருவதில்லை.
8. கடவுள் தந்த இத்துறைகளை மனிதன் மாசுபருத்துவதால்
வரும் விளைவுகள் யாது?
கடவுள் தந்த தறைகளை மனிதன் மாசுபடுத்தவதால் ஏற்படும் விளைவு அவன் தனது சுயமான, உண்மையான, தெய்வீக இயல்பை அறிய முடியாதிருப்பதாகும்.
9. நாம் எமது உணவை உண்பதற்கு முன்னம், அதைத் தூய்
மைப்பருத்தக் கூடிய சுலபமான, புனிதமானமுறை யாது?
நாம் எமது உணவை உண்பதற்கு முன்னம் அதைத்தாய் மைப்படுத்தக்கூடிய சுலபமான வழிமுறையானது, அவ்வுணவின் மேல்
 

ஒன்பதாம் அத்தியாயம் 95
சிறிதளவு நீரைத் தெளித்து மேற்கானும் மந்திரத்தைச் சொல்லுதல் ஆகும்.
"அன்னம் பிரம்மா, றசோ விஷ்ணு போக்தா மகேஸ்வரஹா" இதன் பொருள், உணவின் திண்மையான பகுதி பிரம்மன், நீரான பகுதி விஷ்ணு , அதனை அனுபவிப்பவர் மகேஸ்வரன் என்பதாம்.
10. நாம் உணவை உண்பதற்கு முன்னம் மும்மூர்த்திகளுக்கு
வழிபாரு ஆற்றுவதன் தாற்பரியம் என்ன?
உணவை உண்பவன் திரிமூர்த்திகளைப் பிரார்த்திப்பது தனக்கு சத்தியம், ரிதம் ஆகியவற்றின் பாதுகாப்பை அளிக்கும்படியும் திரிகரண சுத்தியை - அதாவது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் சக்தியை வழங்கும் படியும் வேண்டுதல் ஆகும்.
11. உணவை உண்பதன் முன்னர் இந்த மந்திர உச்சாடனத்தால்
வரும் பயன் யாது?
உணவை உண்பதன் முன் இம்மந்திரத்தைச் சொல்வதால் ஏற்படும் பலன் யாதெனில் அந்த உணவு மந்திர உச்சாடனத்தால் பிரசாதம் ஆகின்றது. -
12. மந்தன மிஷ்ரவுடன் சங்கராச்சாரியார் நிகழ்த்திய
விவாதத்தின் பொருள் யாது?
அறிவுத் திறன்மிக்க மந்தன மிஷ்றவுடன் சங்கராச்சாரியார் நிகழ்த்திய விவாதத்தின் பொருள் மேதசக்தி' என்பதாம். அதாவது அறிவின் அதிதீவிர சக்தி என்பதாகும்.
13. இவ்விவாதத்திற்கு நருவர் யார்? அவரது கல்வித் தகைமை
என்ன?
இவ்விவாதத்திற்கு நடுவராக இருந்தவர் மந்தன மிஷ்ரவின் மனைவி உபயபாரதி.
உபய பாரதி சாதாரண கல்விமான் அல்ல. அவளிடம் தாய்மையான இதயம், சத்தியநெறி றிதம், சிரத்தாஸ்திரத்வா ஆகியனவும்,

Page 57
ஆணவமும் பற்றும் 96
நிதானம் பிரபஞ்சக்கட்டுப்பாடு, நம்பிக்கை, ஆர்வம், ஆகிய தெய்வீக இயல்புகளும் இருந்தன. பிரித்துணரும் சக்தி, விளக்கத்தெளிவு ஆகியன செறிந்திருந்த இவளது புத்தி சாதாரணமாகவே "மேதா அதாவது அறிவின் ஆற்றல் ~ அதற்கு மேலான நிலையிலேயே இருந்தத.
14. மந்தன மிஷ்ரவுக்கும் சங்கராச்சாரியருக்கும் இடையே
நிகழ்ந்த விவாதத்தின் பெறுபேறு யாது?
சங்கராச்சாரியார் விவாதத்தில் வெற்றிபெற்றார், என உபயபாரதி பிரகடனப்படுத்தினார்.
விவாதத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி மந்தன மிஷ்ரர் சன்னியாச நிலை பூண்டு சங்கராச்சாரியாரின் சிஷ்யரானார்.
புருஷனுடைய இன்ப தன்பங்களின் நிலைமைக்கு அமைய மனைவியும் அவனைப்போல் நடந்தகொள்ள வேண்டும் எனும் பெண்மை நிலையின் சம்பிரதாய கொள்கைகளுக்கு அமைய உபயபாரதியும் சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டாள்.
15. மேதையிலும் பார்க்கப் புத்தி ஏன் மேலதிக சக்தியைக்
கொண்ருள்ளது?
பொதுவாக மக்கள் எண்ணுவதுபோல புத்தியானது சாதாரண அறிவுத் திறன் அல்ல. சிரத்தை, ஆர்வம் அல்லது நம்பிக்கை, சிரத்வா - நிதானம் அல்லது உறுதிப்பாடு இவற்றால் நிரம்பிய, அமைதியான ஒரு நிலைப்பாட்டைக் கொண்ட அறிவுத் திறன் தான் அதுவாகும்.
ரிதம், சத்தியம், யோகம், மகாதத்துவம், ஆகியவற்றால் உருவேற்றப்பட்ட அறிவுத்திறன் தான் புத்தி. இந்தப் புத்திக்கு நிதானித்து ஆழ்ந்த சிந்தித்தல், பிரித்தறிதல் ஆகியவற்றிற்கு மட்டும் சக்தியுண்டு என்பதல்ல, ஆனால் ஆழச்சிந்தித்தல், விசாரணை, பாரபட்சமற்ற தீர்ப்பை வழங்கவும் சக்தியுண்டு.
16. வெற்று நீர்க்குவளையை வைத்திருந்த துறவிக்கும் உபயயார
திக்கும் நிகழ்ந்த சம்பவத்தை விளக்கவும்?
ஒரு நாள் உபயபாரதி தனது சீடப் பெண்களுடன் ஆற்றில் நீராடு வதற்குச் சென்றபோது, காய்ந்த சுரைக்காய் ஒட்டில் செய்யப்பட்ட ஒரு வெற்று நீர்க்குவளையை வைத்தக்கொண்டு ஒரு துறவி துயில் கொள்வதைக்
 

ஒன்பதாம் அத்தியாயம் 97
கண்டார்கள். அந்நீர்க் குவளை களவு போகாதிருக்க விரும்பியே அத்துறவி அதைத் தனது தலையின் கீழ் வைத்திருந்தார்.
"இந்தப் பெறுமதியில்லாத நீர்க்குவளை மீது இருந்த பற்றை விட்டு விடவில்லை இந்தத்துறவி" என்று உபயபாரதி தன்சீடப்பெண்களுக்குச் சொன்னாள். உபயபாரதி நீராடிவிட்டு மீண்டும் திரும்பி வருகையில் அந்தத் தறவி தான் பற்றுக்களையெல்லாம் நீக்கிவிட்டதற்கு அடையாளமாக அந்நீர்க் குவளையை அவளது காலடியில் வீசி எறிந்தார்.
உடனே உபயபாரதி இந்தத்தறவிக்கு அபிமானம் (பற்று) மட்டும் நிறைந்திருக்கவில்லை. அகங்காரமும் (ஆணவம்) நிறைந்துள்ளது என விளம்பினாள்.
அவளது சொற் பிரயோகத்தின் உண்மையை உணர்ந்த தறவி அவளது பாதத்தில் வீழ்ந்த தனது குற்றங்களை மன்னிக்குமாறு வேண்டினார்.
17. மனிதனது பந்தத்திற்கு மூலகாரணமாக விளங்குபவை எவை?
மனிதனது பந்தத்திற்கு மூலகாரணமாக விளங்குபவை அபிமான அல்லது மமகாரம், எனது என்ற உணர்வைக் கொண்ட உடமையின் பாற்பட்ட பற்றும், அகங்காரம் - ஆணவமுமாகும்.
18 அகங்காரம் (ஆணவம்) மமகாரம் (பற்று) இவற்றிற்குக்
காரணம் யாது?
அகங்காரமும் மமகாரமும் முறையற்ற உணவை உட்கொள்வதால் வரும் விளைவாகும். முறையற்ற உணவு எனும் போத அது கெட்ட வகையான உணவாகவும் இருக்கலாம், அல்லது தீயவழியில் பெற்றுக்கொண்ட உணவு வகைகளாகவும் இருக்கலாம்.
19. முறையற்ற உணவை உட்கொள்வதால் ஏற்பரும் விளைவு
штф!?
முறையற்ற உணவு (தீய வகையான உணவை அல்லது தீய வழிகளில் பெறப்பட்ட உணவு) உண்பதால் மனிதன் பலவழிகளில் அறியாமையின்பால் தள்ளப்படுகிறான். இதனால் அவனிடையே தாய எண்ணங்கள் உதிப்பதை, அது தடுத்துவிடுகின்றது.

Page 58
ஆணவமும் பற்றும் 98
இவ்விதமானவன் எதைப் பேசவேண்டும், யாருடன் பேசவேண்டும், எங்கு, எப்பொழுது, எவ்வாறு பேசவேண்டும் என்பதை மறந்து விடுகிறான்.
20. பீஷ்மாச்சாரியாரை உதாரணமாகக்கொண்ரு, ஒருவரது
எண்ணங்கள், சொல், செயல் ஆகியவற்றை நிதானிப்பதில் உணவு எத்தகையமுக்கிய பங்களிப்பைவழங்குகிறதுஎன்பதை விபரிக்கவும்.?
குருஷேத்திர யுத்தத்தின் ஒன்பதாவது நாள் அருச்சுனனால் பெரிதும் தாக்கப்பட்டு பீஷ்மர் தனது பயங்கரமான தீர்மானத்திற்கு அமையவே அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.
அவர் பாண்டவர்களுக்கு தர்மத்தின் தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிக்கொள்ள முற்பட்டார்.திடீரென திரெளபதி பெரிதாகச் சிரித்தாள். பீஷ்மர் தர்ம உபதேசத்தை நேர்மைத் தனமும் நற்குணமும் வாய்ந்த தனத கணவருக்குப் புகட்டுவதிலும், தீயவர்களான, கெட்ட சிந்தையுடைய கெளரவர்களுக்குப் போதித்திருக்க வேண்டும் என்று சொன்னாள்.
அப்பொழுது பீஷ்மர் தான் அதுவரை கெளரவருக்குச் சேவையாற்றி அவர்களது உணவிலே சீவித்தார் என்றும், அத்தகைய தீயகுணமுள்ள நச்சுத் தன்மை வாய்ந்தவர்களது உணவை உண்டதால் தனது இரத்தம் மாசு படுத்தப்பட்டதென்றும், அதன் விளைவால் எல்லாத் தாய எண்ணங்களும் அடக்கப்பட்டுவிட்டது என்றும் கூறினார்.
- இப்பொழுது அருச்சுனனது அம்புகளால் அவரது உடலிலுள்ள
தீய அழுக்கேறிய இரத்தம் வெளியேறிவிட்டத. மிக ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த தர்மம் இப்பொழுது பீறிட்டுக் கொண்டு மேலே வருகிறத.
இச்சிறு விளக்கத்திலிருந்து நாம் அறிந்துகொள்வது ஒருவரது சிந்தனைகள்,சொல்,செயல் அனைத்திற்கும் உண்ணும் உணவு முக்கிய பங்கை வகுக்கின்றது என்பதாகும்.
21. திரெளபதி தனது ஐந்து கணவருடனும் இசைவான வாழ்வு
நடத்தினாள் என்பதன் உட்பொருள் யாது?
இதன் அடிப்படை உட்கருத்து என்னவென்றால் அவள் பஞ்ச பிராணன்கள் அதாவது ஐந்து உயிர்நாடிகளுடனும் இசைவான சமநிலைப்பாட்டைக் கொண்டு வாழ்ந்தாள் என்பதாகும்.
சமநிலைப்பாடான வாழ்வு வாழ்வதற்கு பஞ்சபிராணன் களது சமநிலைப்பேணல் மிகவும் அத்தியாவசியமாகின்றது.

ஒன்பதாம் அத்தியாயம் 99
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டபிராணன்கள் நிலைதடு மாற்றத்தின் காரணமாக உச்சஎல்லைக்கோட்டைத் தாண்ட நேரிட்டால். வாழ்க்கையிலே பெருமளவு சமநிலையின்மை ஏற்பட்டு விடும்.
22. பஞ்ச பிரானண்கள் என்பவை எவை?
பஞ்ச பிராணன்களாவன:~ (1) பிராண (2) 6960
(3) வியான (4) 3560T
(5) சமண ஆகும்.
23. திரெளபதியை எருத்துக் காட்டாகக் கொண்ரு நாம் அவளிட மிருந்து அறிந்துகொள்ளக்கூடிய நல்ல பாடம் என்ன?
திருப்தி நிறைந்ததும், இசைவு பெற்றதுமான வாழ்வை
வாழ்வதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நாம் சாதாரணதாய உணவுடன் திருப்தி கொள்ளவேண்டும்.
24. மனிதனிடத்து அசுத்த உணவு ஏற்பருத்தக் கூடிய தீய
இயல்புகள் எவை?
இராக-பற்றுதல், துவேஷ-வெறுப்பு உணர்வுகள் எம்மிடையே உருவாவதற்கு முக்கியகாரணியாக உணவு இருப்பதுடன் அகங்கார . நான் என்னும் உணர்வு, மமகார-எனது எனும் உணர்வும் எழுவதற்குக் காரணியாக அது இருக்கின்றது.
ஆதலால் எமது சிந்தை, புத்தி நல்ல நிலையில் தொழிற்படுவதற்கு எமது உணவை மட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானதாகும்.
25. புலன்கள், சிந்தை, அல்லது புத்தி ஆத்மா இவற்றின் சொல் வழி நிற்பவன் நிலையைப்பற்றி சமய நூல்களின் தீர்க்கமான விளக்கம் யாது?
சமய நூல்கள் கூறுவதாவது (1) ஒருவன் தனது புலன்வழி நிற்பானேயானால் அவன் ஒரு
மிருகமாகிறான்.

Page 59
ஆணவமும் பற்றும் 1 OO
(2) ஒருவன் அவனது சிந்தை வழி நிற்பானேயானால் அவன் மனிதனாகி அவனது மனித நிலையைப் பேணிக்கொள்வான்.
(3) ஒருவன் அவனது புத்தியின் வழி நிற்பானாகில் மனிதருள் மிகப்பெரியனாக விளங்குவான்.
(4) ஒருவன் தனது ஆத்மாவினால் வழிநடத்தப்படு வானாகில் அவன் பிரம்மத்துடன் ஒன்றாகிறான்.
26. சிந்தையானது சலனமற்று அதன் பிரதான தூய நிலையைப்
பேணி வைத்திருக்கிறது என்பதை நாம் எவ்வாறு நிரூபிக்கலாம்?
சிந்தையானது தன்னளவில் தாய்மையானது. அது பாரபட்ச மில்லா முறையில் புலன்களது எண்ணத்திற்கு அடிபணிவதனாலேயே தாய்மை நிலை கெட்டு அழுக்கு அடைந்த விடுகிறது. சிந்தையானது புலன்வாயிலாகப் பெறுகின்ற அனைத்தையும் பார பட்சமின்றி ஏற்றுக்கொள்வதை தவிர்த்த, அவற்றைப் பரிசீலனை செய்து கொள்ளும்பொருட்டு புத்தியிடம் விடுத்து, புத்தியின் தீர்வுகளையே ஏற்று அதன்படி செயற்பரு மாயின், சிந்தை சலனமற்று, அதன் இயல்பான தூயநிலையைப் பேணி நிற்கக் கூடியதாக இருக்கும்.
27. ஷேத்திர' என்ற பதத்தை விளக்கவும்.
ஷேத்திர என்றால் களம் (வயல்) உடம்பு, புலன்கள், சிந்தை, புத்தி அனைத்துமே உணரும் தன்மை அற்றவை. அவை அனைத்தும் கூடி "ஷேத்திர' ஆகின்றது. ஷேத்திராவும் அதனளவில் உணரமுடியாத தொன்றாம். அது ஷேத்திரஞ்ஞ ஷேத்திரத்தை அறிந்தவனாலேயே உணர்வு உண்டாக்கப்படுகிறத.
28. ஷேத்திரத்தையும், பூரண சிருஷ்டி உற்பத்தியையும்
ஆள்வது எது?
ஷேத்திரத்தையும், முழுமை பெற்றதுமான சிருஷ்டியையும்
அதாவது உற்பத்திகளையும் ஆளுவது சாத்வீக இராஜஸ், தாமஸ் குணங்களாகும்.

பத்தாம் அத்தியாயம்
மூன்று தனங்கள்
1. பிரபஞ்சத்தை உணர்த்திநிற்கும் கோட்பாடுகள் யாவை?
பிரபஞ்சத்தை உணர்த்தி நிற்கும் கோட்பாடுகளாவன. (1) பிரபஞ்சமானது இறந்தகால, நிகழ்கால, எதிர்காலமெனும் முக்கால இயல்பில் அமைந்துள்ளது.
(2) பிரபஞ்சமானது பிரம்மா,விஷ்ணு, மகேஸ்வரனாகிய மும்மூர்த்திகளால் நிலைபேறுபெற்று விளங்குகிறது.
(3) பிரபஞ்சமானது முக்குணங்களாய சாத்வீக, ராஜஸ், தாமஸஎனும் தெய்வீக உருவினால்நிறைந்துவிளங்குகிறது.
(4) பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் பிரம்மனே.
"சர்வம் கால்விதம் பிரம்மன்"
2. இயற்கை அல்லது பிரக்கிருதி எதனால் உருவாக்கப்பட்டது?
இயற்கை அல்லது பிரக்கிருதி அனைத்தும் சாத்விக, ராஜஸ், தாமஸ் எனும் முக்குணங்களினால் உருவாக்கப்பட்டது.
3. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரா எனும் மும்மூர்த்திகள் எதனைப்
பிரதிபலிக்கின்றார்கள்.?
மும்மூர்த்திகளும் மூன்று குணங்களைப் பிரதிபலிப்பர்.
4. முக்குணங்களும் எதனை உணர்த்துகின்றன?
முக்குணங்களும் பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது சிருஷ்டி, ஸ்திதி லய என்பவற்றை உணர்த்தும்.
5. மனிதன் முடிவில் அடைய விரும்பும் விழுமியம் யாது?
ஈற்றில் மனிதன் அடைய விரும்பும் விழுமியம் தெய்வீக
வாழ்வு ஆகும். மனிதன் முக்குணங்களுக்கும் அப்பால் சென்று
தெய்வீகத்தை அடைய வழிதேடிக்கொள்ள வேண்டும்.

Page 60
* " , " , : :v :: 4. "
. Ā3S+ʻ)AgrT * * *... I rr roża *A真·* يجية، ، ، ، " * * * * மூன்று குணங்கள் 102
б. சிருஷ்டியின் இயல்பு எத்தகையது?
சிருஷ்டியின் உண்மையான இயல்பு, இடையறாத மாற்றம் ஆகும். சிருஷ்டி நிரந்தரமானது அல்ல. அன்றி மாற்ற மில்லாததும் அல்ல.
சிருஷ்டி கர்த்தா மட்டுமே மாற்றமடையாத உண்மைப் பொருள்.
7. ஆத்மீகப் பாதையின் நோக்கம் என்ன?
ஆத்மீகப் பாதையின் நோக்கம் சிருஷ்டிகர்த்தாவின் இயல்பை ஆராய்ந்தறிதலும் ஈற்றில் அவனுடன் ஒன்றாக ஒன்றி விருதலுமாகும்.
8. கடவுளுக்கு வேறு சொற்பிரயோகம் யாது?
சத்தியம், ஞானம், அனந்தம், பிரம்மன், ஆத்மா, பகவான்
9. பஞ்ச பூதங்கள் எவை?
பஞ்ச பூதங்கள் ஐந்து ~ அவையாவன (1) வெளி-ஆகாயம் (2) காற்று ~ வாயு (3) தி~அக்கினி (4) நீர்-ஜலம் (5) பூமி-பிருதுவி
10. பஞ்ச பூதங்கள் எங்கிருந்து வெளியாயின?
பஞ்ச பூதங்கள் ஆத்மாவிலிருந்து வெளியாயின.
11. பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும் எதனால் உருவாக்கப்பட்டது?
ஒவ்வொரு பஞ்சபூதமும் அல்லது மிகநுண்ணிய ஆதாரப் பொருளும், சாத்விகம், இராஜசம், தாமஸம் எனும் முக்குணங்களால் உருவாக்கப்பட்டது.

K. K. Kayillainathar TEACHER, ANARKOVTILLAPY
MALLAKAM
பத்தாம் அத்தியாயம் 103
12. ஐந்து முழுமையான ஆதாரப் பொருள்களும் எவ்வாறு
உருப்பெற்றன?
ஐந்து நுண்ணிய ஆதாரப் பொருள்களும் ஐந்து முழுமையான பொருளாக வெளிப்பட்டு பிரபஞ்சத்தினுள்கலந்து விட்டது. இத பஞ்சீ கிருதம் அதாவது மாற்றியமைத்தலாலும், சேர்க்கப்படும் தன்மையாலும் ஒருங்கிணைதலால் ஏற்பட்டத.
13. அந்தக் கரணம் என்பது எதனை எருத்துக் காட்டுகின்றது ?
அந்தக்கரணங்கள் என்பது மனிதனின் அகக்கரு விகளாகும். அவை ஐந்து அடிப்படை ஆதாரப்பொருளாகிய ஆகாயம் காற்று, தீ, நீர், பூமி என்பவற்றின் முழுமையான சாத்வீக இயல்பைப் பிரதிபலித்துக் காட்டுகின்றது.
14. சாத்துவீக குணத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்ட தன்மையை
விளக்குக?
சாத்வீக குணத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டதன் தன்மை பின் வருமாறு :~ ஐந்து நுண்ணிய பொருள்களுள் முதலாவதாக விளங்குகிற ஆகாசத்தினின்றும் சுத்த சாத்வம் என்பது வெளியாகியத. சுத்த சாத்வம் என்பது மனித உருவைக் குறிக்கும்.
நுண்ணிய ஆதாரப் பொருளாய ஆகாசத்திலிருந்தும் வெளியான சாத்துவிகத் தன்மையிலிருந்து "காத" கேட்கும் கருவியும் வெளியானத.
15 ஏனைய உறுப்புகள் உருவாகிய முறையை விளக்கவும்?
ஏனைய உறுப்புகள் மேல்வருமாறு உருவாகின
(1) காற்றின் பிரத்தியேகப்படுத்தப்பட்ட நுண்ணிய சாத்வீக அம்சத்திலிருந்து தோல் உருவானது.
(2) தீயினது பிரத்தியேகப்படுத்தப்பட்ட நுண்ணிய சாத்வீக அம்சத்திலிருந்து கண்கள் தோன்றின.
(3) நீரின் பிரத்தியேகப் படுத்தப்பட் சாத்வீக அம்சத்திலிருந்து நாக்குத் தோன்றியத.

Page 61
மூன்று குணங்கள் 104
(4) பூமியின் பிரத்தியேகப்படுத்தப்பட்ட சாத்வீக அம்சத்திலிருந்து நாசி தோன்றியத.
ஐந்துஆதாரப் பொருட்கள் ஒவ்வொன்றினதும் சாத்வீக அம்சத்தில் ஐந்து தொகுதிகளைக் காணலாம்.
சப்த்த ~ சத்தம்(ஒலி).காது . ஆகாயம் எல்பரிச ~ உணர்ச்சி(தொடுதல்).தோல்.வாயு (காற்று) ரூபம் - பார்வை .கண் . அக்கினி (தீ) ரச ~ சுவை . நாக்கு .நீர் (தண்ணீர்) கஞ்தம் - வாசனை . . நாசி . பிருதிவி (பூமி) இந்த ஐந்து தறைகளும் ஒரு தனிப்பட்ட ஆதாரப் பொருளிலிருந்த வெளிப்பட்டதால் ஒன்றுடன் ஒன்று கலந்துகொள்ளாது பலவிதமான செயல்களைச் செய்கின்றன.
ஒவ்வொரு உறுப்பும், அத உருப்பெற்ற அந்தத் தனி ஆதாரப் பொருளைப் பிரதிநிதித்தவம் பண்ணி நிற்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு புலனுறுப்பும் அதன் அதன் தனிப்பட்ட பங்கை ஆற்றுவதில் வரையறுக்கப்பட்ட கடமையைச் செய்து கொள்ளுகின்றது.
16. அந்தக் கரணங்கள் எவற்றிலிருந்து உற்பத்தியாகின்றன?
ஐந்து அடிப்படைப் பொருளின் ஒருமித்த சாத்து வித தன்மையின் பிறப்பே அந்தக் கரணங்கள். இது இவ்வாறு ஐந்து புலனுறுப்புக்களின் தொழிற்பாடுகளை இணைத்துக் கொள்கிறது. ஐந்து புலன்களது அல்லது ஐந்து ஞானேந்திரியங்களது எல்லாவிதமான நோக்குகளையும், அனுபவிக்கும் திறன் இந்த அந்தக் கரணங்களுக்கு மட்டும் உண்டு.
ஐந்து அடிப்படை ஆதாரப் பொருளின் சாத்தவிக தன்மையின் கூட்டு நடவடிக்கையானத இந்த அந்தக் கரணங்களிலே புலப்படுகின்றத.
17. புலனுறுப்புகளில் செயற்பாரு அகத்திலா அன்றிப் புறத்திலா
நடைபெறுகிறது?
புலனுறுப்புகளின் செயற்பாடு அகத்திலும் புறத்திலும் நடைபெறுகின்றது. புலனுறுப்புகளத இருவகைச் செயற்பாடு ~ நுகர்வின் புறஉறுப்புக்களதும் அதோடு சம்பந்தப்பட்ட மூளையின் அகப்புலன் மையங்களும் இணைந்து உறுப்புக்களைத் தொழிற்பட வைக்கின்றன. இதனாலேயே மனித தோற்றமும் உருவாகிறது.

பத்தாம் அத்தியாயம் . 105
18. ஐந்து ஆதாரப்பொருள்களின் ராஜசதன்மையானது எவ்வாறு
தன்னை வெளிப்பருத்துகிறது?
ஜந்து ஆதாரப் பொருட்களின் ராஜச தன்மையின் கூட்டுத்தன்மை உயிர்ச்சக்தியாக - பிராணனாக வெளிப்படுகின்றது.
19. ஐந்து ஆதாரப் பொருட்களின் ராஜச தன்மையின் தனிப்பட்ட
வெளிப்பாருகள் எத்தகையது?
ஐந்து ஆதாரப் பொருட்களின் ராஜச தன்மையின் தனிப்பட்ட வெளிப்பாடு பின்வருமாறு.
1. ஆகாச (வெளி) வாக்கு ~ ஒலி உருவில் வெளிப்படுத்தப்படும்
வாயு (காற்று) கைகளாக - வெளிப்படுத்தப்படும் . அக்கினி (தீ) கால்களாக - வெளிப்படுத்தப்படும்
ஜலம் (நீர்) கழிவு உறுப்பு ஒன்றாக - வெளிப்படுத்தப்படும் பிருதிவி (பூமி) கழிவு உறுப்பு இரண்டாவதாக வெளிப்படுத்தப்படும்
20. ஆகாசம், வாயு ஆகியவற்றின் சாத்துவிக ராஜசதன்மைகளது
சிறப்பியல்களையும் விளக்குக?
ஆகாச அதன் சாத்தவிக தன்மையில் காதாக விளங்குகிறத. ராஜச தன்மையில் வாக்காக விளங்குகிறது அதாவத பேச்சுத் தறை.
இவ்வகையில் ஆகாசத்திற்கு இரு பிள்ளைகள் உண்டு எனக் கொள்ளலாம். சாத்தவிக நிலையை எடுத்தியம்பக் காதம், ராஜச நிலையைப் எடுத்தியம்ப ஒலியும் ஆகும்.
ஆகாசத்தின் முதற் பிள்ளையாகிய காத புறத்தேயிருந்து ஒலியை
வாங்கிக் கொள்கிறது. இரண்டாவது பிள்ளையாகிய வாக்கு அல்லது ஒலி, உள்ளிருந்து செயற்பாட்டைப் புறத்தே சொல் உருவமாக வெளிப்படுத்துகிறது.
இதுபோலவே சருமம் வாயுவின் முதற்பிள்ளை. சாத்துவீக நிலையில் இரண்டாவது பிள்ளை கை. ராஜச நிலையில் இவ்விதம் தோலானது உடம்பின் மீது ஊருகின்ற எறும்பை உணர்ந்து கொள்கிறது. கையானது அதனை அப்புறப்படுத்த விளைகின்றத.
21. ஐந்துஆதாரப்பொருட்களது சாத்துவீக ராஜசத்தன்மைகளின்
வேறுபாடுகள் என்ன?
சாத்தவீகத்தன்மையானது புறத்தேயிருந்த அபிப்பிராயங்களை

Page 62
மூன்று குணங்கள் 106
~ செய்திகளை அகத்தே செலுத்துவதாகும். ராஜச இயல்பானது அகத்திலிருந்து எதிர்பாடுகளை புறத்தே அறிவிப்பதாகும்.
ஐந்து ஆதாரப் பொருட்களிலிருந்து உருவாகிய ஞானேந் திரியங்கள் சாத்துவீகத்தன்மையில் தாண்டிகளை ஏற்கின்றன.
ஐந்த ஆதாரப் பொருட்களிலிருந்த ராஜச தன்மையில் உருவாகிய கர்மேந்திரியேங்கள் தாண்டிகளுக்குத் தலங்கி நிற்கின்றன.
22. ஐந்துஆதாரப்பொருட்களது சாத்துவிகராஜசதன்மைகளுக்கு
இன்றைய உலகில் என்ன நடக்கிறது?
உலகில், இன்று, ஐந்து ஆதாரப் பொருட்களது ராஜச தன்மைகள் உள்ளே ஏற்கப்பட்டு ஐந்து ஆதாரப் பொருட்களது சாத்வீக இயல்புகள் வெளியேற்றப்படுகின்றன. உற்பத்தியின் இயல்பான திட்டத்திலே உள்ளே ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை, சாத்வீகமாக இருப்ப வையாகும். வெளியே விடப்பட வேண்டியவை ராஜச தன்மையாம்.
23. இயற்கை அல்லது பிரக்கிருதியின் பிரதான இயல்பு யாது?
இயற்கை அல்லது பிரக்கிருதியின் பிரதான இயல்பு சாத்வீகம்.
24. இயற்கை அல்லது பிரக்கிருதி வேறு எவ்வாறு அறிமுகப்படுத் தப்பருகிறது? அதன் பிரதான தன்மையை விளக்கவும்.?
இயற்கை அல்லது பிரக்கிருதியை "ஸ்றி" என்றும் கூறுவர். "ஸ்றி" என்றது மூன்று எழுத்துக்களால் ஆனது. ஸ-ர-றி "ஸ்றி என்பதன் விசேட விளக்கம்:-
1. முதலாவதாக நீங்கள் சாத்வீகத்தையே ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. தாமத குணங்களாய அடக்கம், பணிவு, தன்னொடுக்கம் ஆகியவற்றை விருத்தி செய்தல் வேண்டும்.
3. 'ற' என்றது ரஜோ குணத்தைக் குறிக்கிறத. வாழ்க்கையில் திடமான தீர்மானங்களையும் கடுமையான செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்றதைக் எடுத்தியம்புகிறது.
ராஜச இயல்பு இறுதியாகக் கூறப்படுவதால் அது, அதாவது ராஜச செயற்பாடுகள், இறுதிக் கட்டங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். அதாவது தவிர்க்கமுடியாத வேளையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை உண்ர்த்தி நிற்கின்றது.

பத்தாம் அத்தியாயம் 107
25. பிரபஞ்ச விருத்தியில் முதலாவதாக வருகின்ற குணம் எது?
பிரபஞ்ச விருத்தியில் முதலாவதாக வருவத சாத்துவீகம், 'சா என்ற எழுத்தே முன்னிற்கும்.
ஆகவே சிந்தனை, நோக்குகள், சொல், செயல் என்பவற்றில் சாத்வீக இயல்பினை வளர்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
26. ஐந்து ஆதாரப் பொருட்களும் முழுமையாக எவ்விதம்
தோன்றின?
ஐந்து ஆதாரப் பொருட்களும் பஞ்சீக்கிருத்திய முறையிலே தம்முள் தாமே மாறுதலடைதல் மூலமும் கலப்பு மூலமும் ஒன்றாகி முழுமையாகின்றன.
27. பஞ்சீகிருத்தம் - செயற்பாட்டை ஒரு எருத்துக்காட்ரு
மூலம் விளக்கிக்காட்ருக?
ஐந்த முழுமையான ஆதாரப் பொருள்களும் ஐந்து நபர்களாக ஆளுக்கு ஒரு ரூபா வைத்துக்கொள்கிறார்கள் என கருதிக் கொள்வோம். ஒவ்வொருவரும் இப்போது அந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு அரைருபா நாணயமாகவும், நான்கு இரண்டு அணா நாணயங்களாகவும் மாற்றிக் கொள்கின்றனர். பதினாறு அணாக்கள் ஒரு ரூபாய் ஆகின்றபடியால் ஒவ்வொரு இரண்டு அணாக்குத்தியும் எட்டில் ஒரு பங்கு ரூபாய் ஆகின்றது.
இப்போத ஆகாச, அக்காசில் ஒரு அரை ரூபா குத்தியை தான் வைத்தக்கொண்டு, ஏனைய நான்கு ஆதாரப்பொருட்களுக்கும் எட்டில் ஒரு பங்கு ரூபாவை, அதாவது இரண்டு அணாக் குத்தியை ஏனையவர்களுக்கு பகிர்ந்தகொடுக்கிறது.
வாயுவும் ஒரு அரை ரூபா குத்தியைத் தான் வைத்துக்கொண்டு ஏனைய நான்கு ஆதாரப் பொருட்களுக்கும் எட்டில் ஒரு பங்கு ரூபாய் (இரண்டு அணாவை) பகிர்ந்து கொடுக்கிறது. தீ, நீர், பூமி ஆகியனவும் இவ்வாறே செய்கின்றன. இத்தகைய பகிர்ந்து கொடுக்கும் நடவடிக்கையால் ஒவ்வொரு ஐந்து ஆதாரப் பொருட்களிடமும் அதன் அதன் அரை ரூபா குத்தியும் நான்கு ஏனைய ஆதாரப் பொருட்களின், நான்கு இரண்டு அணாக்குத்திகளும் கொண்டுள்ளதாக இருக்கிறத.

Page 63
மூன்று குணங்கள் 108
இவ்விதம் ஆகாச தனது அரைப்பங்கும், வாயுவின் எட்டிலொரு பங்கும், தீயின் எட்டிலொருபங்கும், நீரின் எட்டிலொருபங்கும், பூமியின் எட்டிலொருபங்கும் உடைத்தாய் இருக்கும்.
இவ்வாறே ஏனைய ஆதாரப் பொருட்கள் ஒவ்வொன்றும் தனது அரைப்பங்கும் ஏனைய நான்கினதும் எட்டிலொரு பங்குமாக, நான்கு எட்டிலொரு பங்கும் கொண்டிருக்கும். உதாரணமாக பூமி ஆதாரப்பொருள் தனது 1/2, ஆகாச 1/8, வாயு 1/8, தீ 1/8, நீர் 1/8.
மானிடனைப் பொறுத்தமட்டில் பஞ்ச்கிருத்திய முறையானது அவனை ஐந்து ஆதாரப் பொருட்களின் சேர்க்கையாக்குகின்றத.
ஆகவே பஞ்சீகிருத்த நடவடிக்கையானது ஒருமை யிலிருந்து பன்மை நிலையை உருவாக்குகின்றது.
28. வேடிாடச கலைகள் என்பன எவை?
ஷோடச கலைகள் என்பன மனிதனிடத்தே காணப்படும் பதினாறு உட்பொருள்கள் ஆகும்.
9f6006) JJ JJ6) j60J:-
(1) ஐந்து ஞானேந்திரியங்கள் - அறியும் கருவிகள்
(2) ஐந்து கர்மேந்திரியங்கள் . செயற்படுத்தும் கருவிகள்
(3) ஐந்து ஆதாரப் பொருள்கள்
(4) சிந்தை
பதினாறு கலைகளும் தெய்வீகத்திற்கு மட்டும் உரித்தானவை. மனிதன் தனது தெய்வீக நிலையை உணருதல் வேண்டும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
29. இன்று மனிதனின் பிரச்சனைகள் என்ன?
இன்று மனிதனின் முக்கியமான பிரச்சனைகள்
(1) அவனது உலகியல் ஆசைகள் எல்லை கடந்துவிட்டன. (2) அவனது எல்லையற்ற ஆசைகள் யாவும் மிக விரைவிலேயே பூர்த்தியாக வேண்டும்.
30. தனது எல்லையற்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மனிதன் எத்தகைய வழிவகைகளை மேற்கொள்கிறான்?
தனது எல்லையற்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மனிதன் குறுக்கு வழிகளை மேற்கொள்கிறான்.

TEAC JYA NA R K ( * V * : h பத்தாம் அத்தியாயம் MA L- { ArKa, v) 109
குறுக்கு வழியானது எப்பொழுதும் கல்லும் முள்ளும் நிறைந்த தென்பதை மனிதன் ஒருபோதும் உணர்வதில்லை.
உலகியல் இன்பத்தை, செல்வத்தைப் பெற்றுக் கொள்ள மனிதன் எத்தகைய இடர்களையும் ஏற்றுக்கொள்கிறான். ஆனால் தெய்வீகத்தை உணர்ந்து கொள்ள எதவித அக்கறையும் கொள்வதில்லை.
31. செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லகழ்மியிடமிருந்து
வரம்பெறுவதற்கு பக்தன் ஒருவன் மேற்கொண்ட தவம் பற்றிய கதை யாது? இக்கதை தரும் படிப்பனை என்ன?
லகஷ்மியிடமிருந்து வரம் பெற்றுக் கொள்வதற்குக் கடுமையான தவம் மேற்கொண்ட பக்தன் முன்னால் லகஷ்மி தோன்றி அவனுக்கு என்ன வேண்டுமென வினவினாள். அவன் தனக்கு லகழ்மியையே வேண்டும். என்று பதிலளித்தான். தான் எல்லா ஆபரணங்களும் அணிந்தவாறே அவன் பின்னால் அவன் இல்லத்திற்கு வந்து தனது ஆபரணங்கள் அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு போவதாக அவள் கூறினாள். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தாள். அவனது இல்லம் நோக்கிப் போகும் வழியில் அவன் எக்காரணங் கொண்டும் தன்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனை.
அவனது இல்லம் நோக்கிச் செல்லும் வழியில் அவனைப் பின் தொடர்ந்து வந்த லகஷ்மியினது ஆபரணங்கள் பலவகையான ஒலிகளை எழுப்பின. இதனால் லகழ்மி எத்தகைய ஆபரணங்களையெல்லாம் அணிந் தள்ளாள் என அறிய அவன் ஆசைப்பட்டான். அவன் நடந்த செல்லச் செல்ல அவனது ஆவலும் அதிகரித்தத. தனத ஆவலை மேலும் அடக்கிக் கொள்ள இயலாத பட்சத்தில் அவன் லகழ்மியைப் பார்க்கத் திரும்பினான்.
அவன் திரும்பிய அக்கணமே லகழ்மி நின்று விட்டாள். மேற்கொண்டு போகவில்லை. செல்வத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அவன் ஆற்றிய கடும் தவத்தின் நற்பேற்றை அவன் இழந்து விட்டான். ஒருவன் ஆசையை அடக்க முடியாவிடில் இக்கதிதான் நேரும்.
32. தெய்வீக ஆசியைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இறை அருளால் ஆசீர்வதிக்கப்பெற்று அதனால் வரும் நன்மைகளை அடைவதற்கு நாம் இறைவனது கட்டளைகளை மிக முழுமையாக முழுமனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். இறையருள்

Page 64
மூன்று குணங்கள் 110
எம்மீது வழங்கப்படும் வேளை அதன் பயனை அனுபவித்துக் கொள்ளக்கூடியதாக நாம் அதை ஏற்றுக்கொள்ளும் தகுதி பெற்றவர்களாக, திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
33. உலகைப்பற்றிய நமது பார்வை, முக்குணங்களால் எந்த
அளவிற்குத் தாக்கம் பெறுகிறது?
நாம் எமது கண்களை ஆராய்ந்து பார்த்தால் எமது கண்களின் வெளி விளிம்பு சிவப்பு நிறமாக இருப்பதைக் காணலாம். இது ராஜச குணத்தை எடுத்துக்காட்டுகின்றது. அதனை அடுத்து இருக்கும் வெண்படலம் சாத்துவ குணத்தைப் பிரதிபலித்து நிற்கின்றது. கண்ணின் மையத்தில் கறுப்புவட்டம் இருக்கின்றது. இது தாமத குணத்தைக் குறிக்கின்றது. அவ்வாறாக எமது பார்வை மூன்று வர்ணங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. சிவப்பு, வெள்ளை, கறுப்பு இவை முக்குணங்களை விளக்குகின்றன. ஆகவே எமது பார்வை முக்குணங்களாலும் தாக்க முற்றதாகவே இருக்கின்றது.
34. "கடவுள் எங்கே'இருக்கிறார் என்ற வினாவிற்குப்பதில் யாது?
"கடவுள் எங்கே” இருக்கின்றார் என்பதற்கு விடையை இயற்கையே அளிக்கின்றது. ஒரு மணித்தியாலத்திற்கு 1,000 மைல்கள் வீதம் பூமி தன்னைத் தானே தனது அச்சில் இருந்த சுழலுவதால், இரவு பகல் என வினோதம் ஏற்படுகிறது. ஒரு மணித்தியாலயத்தில் 6,600 மைல் வீதம் பூமி சூரியனைச்சுற்றிவரும் போது பலவகையான காலபோகங்களும், மழைவீழ்ச்சியும் அதன் விளைவால் உணவுப்பயிர்ச் செய்கையும் நடைபெறுகிறது. உணவுப் பயிரின்றி மனிதன் பூமியில் வாழ இயலாது.
இத ஒன்றே இறைவன் இருக்கிறார் என்பதற்குக் கண்கூடான அத்தாட்சியாகும்.
35 இயற்கையை அவதானிப்பதிலிருந்து நாம் பெறக்கூடிய
шцашовог штфI?
இயற்கையே இறைவனது ஆடை, இயற்கையை அவதானிப்பதன் மூலம் நாம் பெறக் கூடிய படிப்பனை "கிரியசீலதா" அதாவது ஒருவர் தனது கடமையில் ஊக்கமுள்ளவராக இருக்க வேண்டும் என்பதாம்.
 

பத்தாம் அத்தியாயம் 111
இயற்கையானது இடைவிடாது தொடர்ந்து தனது கடமையை ஆற்றிவருவதனால்தான் உலகம் இத்தனை பலன்களையும் பெறக் கூடியதாக இருக்கின்றது.
36. சிருஷ்டியின் இரகசியமும் அற்புதமும் எதுவாகும்?
சிருஷ்டியின் இரகசியமும் அற்புதமும் ஒருவர் தன் கடமையை உற்சாகத்துடனும் நேர்மையுடனும் ஆற்றுவதிலேயே தங்கியிருக் கிறது.
37. உண்மையான சந்தோஷத்தை எவ்வாறு அடையலாம்?
பொதுமக்களுக்குச் சேவை செய்வதன் மூலமே உண்மையான சந்தோஷத்தை அடையலாம். வறியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவிசெய்யப் போங்கள். அப்போது நீங்கள் பலமும், அச்சேவையிலிருந்து அமைதியையும் பெறுவீர்கள். உங்கள் மனச்சாட்சியும் திருப்தியடையும். சமூகத்திலுள்ள பணம் படைத்தவரோ அதிகார பீடத்திலுள்ளவர்களோ இத்தகைய சேவையை ஆற்றுவதற்கு நாட்டங் கொண்டவர்களாக இருக்காதது மிகவும் வருந்தத்தக்கத ஒன்றாகும்.
38. மாணவர்கள் தம்பால் வைத்திருக்க வேண்டிய இலட்சியம்
штабы?
மாணவர்கள் சில இலட்சியங்களைத் தமக்குள் வைத்திருக்கவேண்டியது அவசியம்.அத்துடன் அவர்கள் சுயநலமின்றி சமூகத்திற்குத் தொண்டு புரிவதை விருப்புடன் எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.சமூகத்தின் ஒரு பகுதியினர் மாணவர்கள். முழுமையான சமூகத்தின் நலத்தினால் அவர்களது சேமநலம் வரியப்பட்டிருக்கிறது.
சமூகத்தின் நன்மைக்காக மாணவர்கள் தமத அறிவையும் திறனையும் பிரயோகித்தல் வேண்டும். செயற்பாடு இன்றி அறிவு பிரயோசன மற்றது. அறிவு இன்றி செயற்பாடு மூடத்தனமானதாகும் என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.
39. மாணவரது பிரதான ஆரம்ப நோக்கம் எதுவாக இருக்க
வேண்ரும்?
மாணவரது பிரதான நோக்கம் இறைவன் மீது அன்பை
வளர்த்தலாக இருக்கவேண்டும். மாணவர்கள் அத்தாய்மையான அன்பை

Page 65
மூன்று குணங்கள் 112
விருத்தியாக்கும் போது அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
40. விபீஷணனுக்கு அனுமான் வழங்கிய அறிவுரை என்ன?
இராமபிரானது பெயரை நெடுநாட்களாக விபீஷணன் தான் உச்சாடனம் பண்ணியும் இராம தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லை என அவன் அனுமானக்குக் கவலையுடன் கூறினான். அதற்கு அனுமான் விபீஷணனை நோக்கி 'இராமநாமம் உச்சாடனம் பண்ணுவது மட்டும் போதாது. அவர் இராமருக்குச் சேவையும் செய்தல் அவசியமாகும்' என்று கூறினார்.
இராமரத நாமத்தைத் தியானித்திருந்த அதே வேளை தான் இடையறாது இராம சேவையையும் மேற்கொண்டிருந்தமை பற்றி அனுமன் விளக்கிக் கூறினான்.
இவ்விதம் தான் இராமரத அருளையும் பெற்று அவருக்கு அண்மித்தும், அன்புடையவராகவும் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான் என்று விளக்கிக் காட்டினான்.
41. விபீஷணன் அனுமனுக்கு விளம்பிய முறைப்பாரு யாது?
தான் கொடுமை மிக்க இராட்சதர்கள் மத்தியில் இருப்பதால் இராமரைச் சிந்தையில் நிறுத்தித் தியானம் செய்வதற்கு இயலாமல் இருப்பதை யிட்டு முறைப்பாடு செய்தான்.
இதற்கு அனுமன் இராட்சதர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள் என்றும் அவன் பாதுகாப்பாக இருப்பான் என்றும், தொடர்ந்து இராம தியானத்தில் ஈடுபட்டு இருக்கும் படியும் கூறினான்.
42. விபீஷணன் அனுமனை எவ்விதம் புகழ்ந்தான்?
விபீஷ்ணன் அனுமனை இவ்விதம் புகழாரம் சூட்டினான் 1. குணவந்தண் - மிகுந்த நற்குணமுடையவன். 2. பலவந்தன்- அதிக பலம் பொருந்தியவன். 3. சாந்தண்- அமைதியை மேற்கொண்டவன்.
43. அனுமனைப் போல் பலமும் சாந்தமும் நாம் பெறுவதெப்படி?
புலனடக்கம், அன்பு, சேவை இவற்றால் நாம் அனு மனைப்போல் பலமும், சாந்தமும் பெறலாம்.

பத்தாம் அத்தியாயம் 113
44. பிரகலாதன் தனது தந்தை இரணிய கசிப்புக்கு யாது
கூறினான்?
"நீயே உனது புலன்களால் ஆளப்பட்டிருக்கையில் நீ ஒரு ஆளுனர் என எவ்வாறு கூறிக்கொள்ள முடியும்?" என்பதாம்.
45. மாணவர்கள் எதனைச் செயற்பட முயற்சிக்க வேண்ரும்?
மாணவர்கள் தமது புலன்களை அடக்கிக் கொள்ள முயற்சிப்பதுடன்,
(1) இறைவன் மீது அன்பு,
(2) பாவத்திற்கு அஞ்சுதல்,
(3) சமூகத்தில் நன்நடத்தை ஆகியவற்றையும் விருத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.

Page 66
பதினோராம் அத்தியாயம்
உண்னை நீ அறிவாய்
I. ஆத்மா பற்றிக் கிருஷ்ண பகவான் அருச்சுனனுக்குக்
கூறியது என்ன?
கிருஷ்ணபகவான் அருச்சுனனுக்குக் கூறியதாவது, ஓ குடகேசனே! நித்திரையை வென்றவனே! அருச்சுனா எல்லா ஜீவராசிகளது இதயத்திலும் குடிகொண்டிருக்கும் ஆத்மா நானே. ஜீவராசிகளது ஆரம்பமும் நானே. நடுவும் நானே. முடிவும் நானேயாய் இருக்கிறேன்.
(கீதை அத். 10-20)
2. அருச்சனனுக்கு கிருஷ்ண பகவான் விருத்த வாக்கியத்தின்
பொருள் என்ன?
கிருஷ்ண பகவானது வாக்கியம் கூறுவதாவது, "தான்" அல்லது ஆத்மா அல்லாது வேறெதுவும் நிலைத்திருக்க மாட்டாது. மேலும் பிரபஞ்சம் முழுவதும் அதாவது அசைவுள்ள அசைவற்ற பொருள்கள் நிறைந்த இப்பிரபஞ்சம் ஆத்மாவேயாகும் என்றும் பொருள்படும்.
3. இன்றைய மனிதன் ஆற்ற வேண்டியது யாது?
இன்றைய மனிதன் ஆற்ற வேண்டியது
1. "தான்" என்றதில் இடையறாது சிந்தித்து இருத்தல் 2. "தான்" என்பதை உணர்தல். 3. "தான்" என்பதில் நிலையாகத் தன்னை நிறுத்திக்
கொள்ளுதல் . 4. "தான்" என்றதன் ஆனந்தத்தை அனுபவித்தல்.
4. ஆத்மாவை வேறெவ்வாறு அறிமுகப்பருத்துவர்?
ஆத்மாவை "அறிவுடைநிலை' என்றும் கூறப்படுகிறது.

பதினோராம் அத்தியாயம் 115
5. இந்த அறிவுடைநிலை எதற்குப் பொறுப்பாக இருக்கிறது?
இது சகல ஜீவராசிகளிடையேயும் இருக்கும் நான்' என்ற நினைவிற்குப் பொறுப்பாக இருக்கின்றது. இதுவே 'அகம்' என்பதாகும். இத்துடன் உண்மையான நான் என்பதும் இதுவாகும்.
б. தன்னை உடம்புடன் பூரணமாக ஒருமைப்பருத்துவதால் இந்த
அகம் என்னவாகின்றது?
தன்னை உடம்புடன் ஒருமைப்பருத்துவதால் அகமானது அகங்காரமாகி விடுகின்றது. அகங்காரமானது பிழையான நான்' ஆகும். உண்மையான நான் அல்ல. உண்மையான நான் என்றது ‘அகம்' அல்லது தான் அல்லத 'ஆத்மா
7. ஆத்மாவானது எதனால் என்றும் மறைக்கப்பட்டுள்ளது?
ஆத்மாவானது என்றும் சிந்தையினாலே மறைக்கப் பட்டுள்ளது.
சூரிய வெப்பத்தால் உருவாகிய முகில்கள் சூரியனை மறைப்பது போல ஆத்மா வின் குழந்தையாகிய சிந்தை ஆத்மாவை மறைக்கின்றது.
8 சிந்தை என்றதொன்று இருக்கும்வரை மனிதன் எதனை
எதிர்பார்த்துக் கொள்ள முடியும்?
சிந்தை என்பதொன்று இருக்கும் வரை மனிதன் தான்' என்ற தன்மை பற்றி எதுவுமே அறிந்துகொள்ள, எதிர்பார்க்க முடியாது. சிந்தை இருக்கும் வரை மனிதன் தான்' என்றதன் ஆனந்தத்தை உணரவோ நுகரவோ வண்ண இயலாது.
9. சகல ஜீவராசிகளிடையே அமைந்த நான்' என்ற நினைவு
எங்ங்ணம் கூறப்பருகிறது?
சகல ஜீவராசிகளிடையேயும் அமைந்த நான் என்றதை அகம்
.என்பர்.

Page 67
உன்னை நீ அறிவாய் 116
10. ஒருவர் எல்லாவேளையிலும், எல்லாச் சந்தர்ப்பத்திலும் தான்'
என்பதில் தன்னை நிலைநாட்டிக் கொள்வாரேயானால் அத்தகைய நிலையை எவ்வாறு அழைக்கலாம்?
எல்லா வேளையும், எல்லாச் சந்தர்ப்பத்திலும் தான்' என்பதில் தன்னை நிலை நாட்டியவரது நிலையை தன்னை உணர்ந்த நிலை' அல்லது 'ஷக்ஷத்கார நிலை' என்பர்.
11. நான்' என்ற பதம் எதனோரு ஒற்றுமைப்படுகிறது?
நான் என்ற பதம் பிரம்மனுடன் ஒற்றுமைப்படுகிறது. அதவே
தான்' 'ஆத்மா' 'அகம்' ஆகிறது.
12. தான் என்றதிலிருந்து வெளிக்கிளம்பிய முதலாவது ஒலியாது? தான் என்றதிலிருந்து வெளியாகிய முதல் ஒலி நான் என்பதாகும்.
13. சிருஷ்டி எப்போது ஆரம்பமானது?
நான்' என்பது வெளியாகிய பின்பே சிருஷ்டி ஆரம்பமானது. நான்' என்றது இல்லையேல் சிருஷ்டியும் இல்லை.
14. சிந்தையில்லாத நான் எதுவாகிறது?
சிந்தையில்லாத நான் ஆத்மா அல்லது தான்' ஆகும். அத அதன் புராதனமான தாய நிலையில் இருப்பதாகும். ஒரே ஒரு ஆத்மா அல்லது தான்' தானுண்டு. அதுவே அந்த நான்' ஆகும்.
15. சிந்தையோரு கூடிய நான்' என்னவாகிறது?
சிந்தையுடன் கூடிய நான் பிழையான தான் அதனை
மித்தியாத்மா என்பர்.
16. தன்னை உணர்வதற்காக பலவிதமான சாதனைகளையும்
அனுட்டித்து வரும் ஒருவனின் பெறபேறு யாது?
மனிதன் தானாகவே இருக்கும் தனது உண்மையான நிலையை அனுபவித்துக் கொள்வதற்குப் பலவிதமான சாதனைகளை அல்லது ஆத்மீக
 

பதினோராம் அத்தியாயம் 117
அனுட்டானங்களை மேற்கொள்கிறான். சிந்தனையின் திருப்திக்காக மேற்கொள்ளும் சாதனைகள், சிந்தையை அழிப்பதை விடுத்த அதனை மேலும் வலுப்படுத்தவே உதவியளிக்கின்றன. தன்னை அறிதலுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய சாதனைகள் எல்லாம் அறியாமையால், அஞ்ஞானத்தினால் மேற்கொள்ளப்படுபவையாகும்.
சாதனைக்குச் சரியான அணுகுமுறையாவத அனாத்ம பாவத்தை அழிப்பதாகும். ஆத்மா இல்லை என்ற எண்ணத்தை அழித்தல். இததான் வேதாந்தம் போதிப்பது.
விடுதலை அடைதலுக்கும், தன்னை அறிவதற்காகவும் எண்ணற்ற தெய்வங்களை வழிபடுதல், பலவகையான சாதனைகளை மேற்கொள்ளுதல் ஆகியன ஒருவரது சிந்தையின் சிதைபாட்டையும் , மனத் தோற்றத்தையும், மயக்கத்தையுமே எடுத்துக்காட்டுகின்றன.
17 தன்னை அறிதல். ஆத்ம ஞானத்தைப் பெற உள்ள ஒரே
வழியாது?
தன்னை அறிதல் அல்லதுஆத்ம ஞானம்பெறுதல் அல்லது ஆத்மானந்தம் அடைவதற்கு ஒரே வழி சிந்தையை அழிப்பதாகும். அதனை நிர் மூலமாக்குதல் ஆகும்.
18. ஒருவன் சிந்தையை அழிக்காவிடில் அல்லது நிர்மூல
மாக்காவிடில் நேரக் கூடிய விளைவு யாது?
ஒருவர் தனது சிந்தையை அழிக்காவிடில் அல்லத நிர்மூலமாக்காவிடில் நேரக்ககூடிய விளைவு,
(1) சிந்தை என்பது இருக்கும் வரை ஆசையானது ஒருபோதும் ஒருவரை விட்டு அகலாது.
(2) ஆசைகள் இருக்கும் வரை நான், எனது எனும் பிழையான எண்ணம் அவரை விட்டு அகலாது.
(3) நான்,எனது என்ற உணர்வுகள் இருக்கும் வரை ஒருவர் தன்னைத் தனது உடம்போரு பூரணமாக ஒருமைப் பருத்திக் கொள்ளும் பிழையான செயலால் ஏற்படும் அகங்காரம் அவரைவிட்டு அகலாது.
(4) அகங்காரம் ஒருவரைவிட்டு அகலாதவரை அஞ்ஞானம் அறியாமை அவரைவிட்டு அகலாது.

Page 68
. . . . ... **.نه -
w M, * * ,مه و "ر .أ " ,*·;穹 * Ꮞ 4 ᎪᏉ ; உன்னை நீ அறிவாய். , , , , , 118
எனவே சிந்தனையை அழிக்காவிடில் அல்லது முற்றாக நிர்மூலப்பருத்தாவிடில் ஒருவர் அஞ்ஞான நிலையிலேயே இருப்பர் என்பது தெளிவாகிறது. அகங்காரத்தின் பிடியில் இருப்பர். அதாவது நான் எனது என்ற பிழையான எண்ணத்தில் இருப்பர். மேலும் எல்லையில்லாத விருப்புக்களின் பிடியில் இருப்பர்.
19. எமது உற்பத்திக்கு, அன்றிஇன்னார்எனஇனங்காண்பதற்குரிய
தோற்றுவாய், அல்லது அடித்தளம் யாது?
உற்பத்திக்கு அடித்தளமாக இருப்பத, அல்லத எமது தோற்றத்தின் தோற்றுவாய், அன்றி இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருப்பது, பிரம்மன் ஆத்மா அல்லது 'தான்' என்பதாகும்.
20. பிரம்மனிலிருந்து அல்லது ஆத்மனிலிருந்து அல்லது தான்'
என்ற மூலத்திலிருந்து தோன்றியது எது?
(சிந்தை, சித்தம், புத்தி , அகங்காரம் அனைத்துமடங்கிய) அந்தக் கரணங்களே அடித்தளமாகிய பிரம்மன், ஆத்மா அல்லது தான்' என்பதிலிருந்து தோன்றியதாகும்.
21. தான்' என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்ருமானால்
அந்தக் கரணங்கள் என்னவாகும்?
அந்தக் கரணங்கள் மீண்டும் அடித்தளமாய் அமைந்த பிரம்மன் அல்லத தான் என்பதுள் கலந்து விட வேண்டும். நாம் எமத தோற்றத்தின் மூலத்தையும் எமத சுயமான நிலைப்பாட்டையும் உணர்ந்து கொள்ள வேண்டுமே ஒழிய, வேறு வழிகளினால் சென்று அதனை அடைய முயற்சிக்க வேண்டியதில்லை.
22. ஆற்றைக் கடந்து போன பத்துப்பேரில் ஒருவனைக்
காணவில்லைஎன எண்ணிக்கொண்டவர்களதுகதையிலிருந்து புலனாகும் தத்துவம் என்ன?
பத்தப் பேர் ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தனர். இதில் ஒருவன் தாம் எல்லோரும் பாதுகாப்பாக ஆற்றைக்கடந்த வந்தள்ளனரா

K. K. Ka yilaira“ har
тEAC, r ITY ANA, yr Y { '''V''' } பதினோராம் அத்தியாயம் MALLAhK Aiv 119
என அறிதற்குக் கணக்கெடுத்தான். அவன் ஏனையோரைக் கணக்கெடுத்தானே ஒழியத் தன்னைக் கணக்கிட வில்லை. தம்முள் ஒருவன் ஆற்றில் காணாமல் போய்விட்டான் என்று கருதினான். இதனால் கூச்சலிட்டு அழுத்தொடங்கினான்.
ஒரு வழிப்போக்கன் இதைக் கண்டு அறிந்து, அவர்கள் அனைவரையும் ஒரு நிரையில் நிற்குமாறு பணித்தான். அவர்கள் பத்தப் பேரையும் கணக்கிட்டு எவருமே காணாமற் போகவில்லை என்பதை நிரூபித்தான். இக்கதையிலிருந்து நாம் பெறக் கூடிய படிப்பினை, தன்னை மறந்த ஒருவனால் சரியான உண்மையைக் கண்டு கொள்ள இயலாதென்பதாகும். நீயே ஆத்மாவாக இருக்கும் போது, வேறெருவரை வணங்குவதோ அன்றி வேறு சாதனைகளைப் புரிவதனாலோ ஆத்மாவை எவ்விதம் அறிய முடியும்?
23. எமக்கு உரித்தான எமது ஆத்மாவையே நாம் உணர்ந்து
கொள்ள இயலாமைக்குக் காரணம் என்ன?
பலவாக இருப்பதில் உள்ள ஒருமையை மறந்து விட்டோம். நாம் பலவாயதற்குப் பின்னாலேயே விரைந்த கொண்டிருக்கிறோம். நாம் பலவாயதன்மையிலேயே பெரு விருப்புக் கொண்டுள்ளோம்.
ஒன்றுதான் பலவாக ஆயத என்பதை நாம் உணர்வதில்லை. 'ஏக்கோ ஹம் பகுஸ்யம்'
நாம் புறத்தே காணும் அனைத்தம் எமது சுயமான பிரதிபலிப்புகளே. ஒரு கண்ணாடியில் பார்ப்பது போலாகும். நாம் பிரதிபலித்துக் காட்டப்பட்ட உருவிற்குப் பின்னால் ஓடுகின்றோமே யொழிய உண்மையான உருவை விட்டு விடுகிறோம்.
24. தன்னை அனுபவிப்பதற்காக மேற்கொள்ளப்பரும் பலவித
சாதனைகள் ஏன் வெற்றியளிப்பதில்லை?
தன்னை அனுபவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பலவித சாதனைகள் எல்லாம் சிந்தையை அமைதியுற வைப்பதற்கு மட்டும் தணைபுரி கின்றது. அமைதியுற்ற சிந்தையானது மீண்டும் அமைதியின்மையை அடையலாம். அப்பொழுது எமது சாதனைகள் அனைத்தும் பயனற்றதாகிவிடுகின்றன.
இப்பொழுது எமது சாதனை ஒரு பிரம்மையாகி விடும். இதனால் நாம் கட்டுண்ட நிலையையே அடைகிறோம். பிரமையினால் கட்டுண்ட ஒருவன் பிரமம்மத்தை அடையமாட்டான். நாம் செய்ய வேண்டியது யாதெனில் சிந்தையை அமைதியுற வைப்பதிலும் பார்க்க அதனை முற்றாகவே நிர்மூலமாக்கி விட வேண்டியதுதான்.

Page 69
உன்னை நீ அறிவாய் 12O
சிந்தையினுடைய உண்மையான இயல்பை அறிந்து கொள்வதன் மூலம் நான் சிந்தையை அழித்த விடலாம்
25 சாதனைகளில் சரியானவற்றிற்கும் பிழையானவற்றிற்கு
மிடையே உள்ள வேற்றுமையை விளக்கவும்?
தன்னை அறிதல் அல்லது ஆத்மாவை அறிதல் பொருட்டு ஆற்றப்படுகின்ற சரியான சாதனைகள் சிந்தையை நிர்மூலமாக்குவதற்காக மேற்கொள்ளப்படுபவை.
வெற்றியோ தோல்வியோ சாதனையில் அல்லது எமத முயற்சியில் தங்கி இருக்கவில்லை என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் .
மனிதன் தன்னை உடம்புடன் ஒருமைப் பருத்துவதால் அவன் அவனது ஆணவத்தினாலேயே இங்கும் அங்குமாக எத்துப்படுகிறான். நான் தான் செய்பவன்' என மனிதன் நினைக்கிறான். நான் இதனைச் செய்கிறேன்' அல்லது நான் இதனை அனுபவிக்கிறேன்' என அவன் எண்ணுகிறான். இவ்வாறு அவன் எண்ணுவதன் மூலம் அவன் இரவும் பகலுமாகவே தான் செய்பவன் என்ற உணர்விற்கு வலுக் கொடுக்கிறான். "கர்த்திரித்வபாவ".
தனது சொந்த முயற்சியினாலேயே பலவற்றையும் ஈட்டிக் கொள்ள முடிகிறது என அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதால், மனிதன் அவனது அகங்காரத்தை, ஆணவத்தை மேலும் விரிவடையச் செய்கிறான். மனிதன் தன்னை உடம்புடன் தவறாக ஒருமைப் படுத்துவதால் அவனது மிகவும் விசேடத்துவம் பெற்ற முயற்சிகள் கூட வெற்றிக்கிபீடத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.
26. எமது சாதனையின் வெற்றிக்கு இடையூறாக இருப்பது என்ன? எமது சாதனையின் வெற்றிக்கு தடையாக இருப்பது நான்', 'எனது' எனும் உணர்வாகும். அகங்காரம். மமகாரம் நான்', 'எனது' எனும் உணர்வுகள், நானே செய்பவன் என்ற பிழையான உணர்வாலும், நானே அனுபவிப்பவன் என்ற பிழையான உணர் வாலுமே அவசியமில்லாது வளர்க்கப்படுகின்றன.கர்திரித்வ-போக்திரித்வ. நாங்கள் இத்தகைய பிரமை அல்லது பிராந்தி எனும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறோம், இதனை நீக்கிக் கொண்டால் அன்றி நாம் பிரம்மனை அடையலாம் என எதிர்பார்க்க முடியாதது.

பதினோராம் அத்தியாயம் 121
27. நாம் ஏன் இந்த மாயையில் மூழ்கிக் கிடக்கிறோம்?
நாம் இந்த மாயையில் மூழ்கிக் கிடப்பதற்கு காரணம் எமது சிந்தை தான்.
நாம் எமது சிந்தையின் திருப்திக்காக பல்வேறு காரியங்களில் எமது கவனத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் இந்தச் சிந்தைக்கு நாம் எதனைத் தான் செய்தாலும், எவ்வளவு காலம் தான் செய்தாலும் திருப்தியை ஒருபோதும் அடைய மாட்டாது.
சிந்தை மட்டுமே மாயை சிந்தை மட்டுமே ஆசை சிந்தை மட்டுமே அறியாமை - அவித்ய சிந்தை மட்டுமே இயற்கை - பிரக்கிருதி சிந்தை மட்டுமே மயக்கம் - பிராந்தி - பிரமை இந்தப் பிரமையில் மூழ்கிக் கிடக்கும் மனிதன் அதைக் களைந்து விடாது பிரம்மத்தை அடையலாம் என எவ்விதம் எதிர்பார்க்கமுடியும்?
மனிதன் தனத சுய உணர்வுகளுக்கும், போராட்டங்களுக்கும் பயப்படுகிறான்.
எவ்வாறாயினும் உண்மை ஒன்று' என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ஏகம் சத்~ உண்மையானது ஆத்மாவாகும். இறைவன் சத்துப் பொருளாய் இருப்பவன் அவர் சித்துப் பொருள் ஆவார். அவர் ஆனந்தம். அவை இறைவனின்றும் வேறுபட்டதுமல்ல பிரிக்கப்பட்டதுமல்ல.
28. அப்படியானால் நாம் தன்னை அறிதலை அடைவதற்கு என்ன
செய்ய வேண்ரும். ?
நாம் எமது சுயமுயற்சியில் நம்பிக்கை கொண்டிருந்தமையால் எமக்கு வெற்றிக்கிரீடம் கிடைக்கவில்லை என மனம் தளர்ந்த விடக் கூடாது. தன்னை அறிதலைச் சிறிதளவு முயற்சியுடன் அல்லது அதுவுமின்றியே அடைந்து விடலாம். அதற்கு
(1) நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்தல்.
(2) அவற்றை இறைவனது காரியம் என்று எண்ணுதல்

Page 70
உன்னை நீ அறிவாய் 122
(3) கடவுள்மேல் அசைவற்ற நம்பிக்கையுடன் அதனைச் செயற் பருத்த முன்வருதல்.
எமது சுய முயற்சியால் எதுவுமே நடைபெறுவதில்லை என்ற கோட்பாட்டை உறுதியாகப் பேணிக்கொள்ள வேண்டும்
29. மனித முயற்சியால் எதுவுமே நடப்பதில்லை என்ற
கோட்பாட்டிற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
இந்தக் கோட்பாட்டிற்கு தகுந்த அத்தாட்சி எமது உடம்பிலேயே இருக்கிறது.
எமத இதயம் இடைநிறுத்தாது அடித்தக் கொள்வதற்கு நாம் என்ன முயற்சி எடுக்கிறோம்? அன்றியும் எமது சுவாசப்பைகள் ஓய்வின்றி மூச்சு விடுவதற்கு என்ன முயற்சி எடுக்கிறோம்? நாம் எண்ணுவத போலவா நாம் உட்கொள்ளும் உணவு செமிபாடடைகிறத?
நாம் வாழவேண்டுமென்று விரும்புவதாலா நாம் வாழ முடிகிறத? அன்றி இறக்க வேண்டு மென்பதற்காகவா இறக்கின்றோம்?
எங்கு, எப்போது நாம் பிறக்க வேண்டுமென நாம் எண்ணிக் கொண்டவாறா எமது பிறப்பு ஏற்படுகின்றது? இத்தகைய சிந்தனைகளை நாம் எண்ணிப் பார்ப்போமானால் மனித முயற்சியால் எதுவுமே நடப்பதில்லை என அறிந்து கொள்வோம்.
நானே செய்பவன், நானே அனுபவிப்பவன் என்ற எமது பிழையான உணர்வுதான் (கர்த்திரிற்வா - போக்கிறிற்வா) நான் எமது எனும் உளப்பாங்கை தேவையில்லாது வளர்த்து விடுகிறது. மேலும் அனைத்தம் எமத சுய முயற்சியால் நடைபெறுகிறது என்று எம்மை எண்ணவும் வைக்கிறத.
30. 6тшDф5І மனோபிராந்தி அல்லதுசிந்தைமயக்கத்தின் விளைவுகள்
иппg1?
மனோ பிராந்தியின் விளைவு எம்மை நாமே தான் உடம்பு என எண்ண வைக்கின்றது. பெய்யான நான்' என்றதில் கொண்ட நம்பிக்கையாலும் உண்மையான நான்' என்பதை மறந்து விடுதலாலும் நாம் தான் உடம்பு எனத்தொடர்ந்து எண்ணிக்கொள்வதாலும் நாம் எமது அகங்காரத்தை வீணாகப் பெருக்கிக் கொள்கிறோம்.

பதினோராம் அத்தியாயம் 123
எம்மினின்றும் வேறுபட்டது வேறு உண்டு என நாம் எண்ணிக் கொள்ளும் வரை நாம் அறியாமையில் மூழ்கிக்கிடப்போம். எம்மினின்றும் வேறுபட்டதும் எமக்குத் தெரியாததம் நாம் பெற வேண்டியதமான, பெரியசக்தி ஒன்றுமில்லை. இரகசியமானதும், புனிதத்தன்மை வாய்ந்ததுமான தெய்வீக சக்தியென்று எம்மிலிருந்து வேறுபட்டது ஒன்றுமில்லை. இத்தகைய எண்ணங்களெல்லாம் அறியாமையினால் ஏற்பட்டதாகும். இத ஒரு கனவு போன்றது. இப்பிரபஞ்சத்தில்தான்' என்பதைத்தவிரவேறு எதுவும் இல்லை, என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் தான்' என்பதற்கு மேலானதும் ஒன்றுமில்லை. இந்த நுண்ணிய சிறிய உண்மையை நாம் அறிந்து கொண்டால் எமது எண்ணங்கள் உணர்வுகள் ஆகியனவற்றின் எல்லையை வேண்டிய அளவிற்கு விரிவாக்கிக் கொள்ளலாம்.
31. தான் என்ற கோட்பாடாகிய ஆன்ம தத்துவம் என்றால் என்ன
என்பதை விபரிக்க ?
தான் என்ற கோட்பாடாகிய ஆத்ம தத்துவம் எங்கும் சைதன்ய-நனவு(உணர்வு)நிலையில்பரிணமித்துள்ளது.நனவு அல்லது உணர்வு நிலையானது இல்லாத இடமில்லை.
மனிதன் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு இந்த ஆத்மதத்துவம் சத்-சித் ஆனந்தம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. வேதாந்தத்தில் இதனை அஸ்தி - பத்தி~ பிரியம் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தம் ஆத்ம தத்தவம் என்ற ஒன்றினையே குறிக்கும். அவை ஒன்றை ஒன்று ஒத்த பிரதிபிம்பங்களாக விளங்குகின்றன.
இந்த வினோத உலகில் நாம் காண்பதெல்லாம் தான் என்ற அந்த ஒன்றின் பிரதி பிம்பங்களேயாம். தான் அல்லது ஆத்மா சம்பந்தப்பட்ட ஆத்மிக விவகாரங்களில் எழுவாய் மட்டும் உண்டு புறம்பான பயனிலையோ செயற் படுபொருளோ இல்லை. உலகியல் விவகாரங்களில் தான் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் உண்டு.
32 சத் சித் ஆனந்தம்' என்றதன் ஒருமை நிலையை
எருத்துக்காட்ரு மூலம் விபரிக்க.?
ஒரு பேணியை (கோளை) உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இது இருக்கிறது. அதனால் அது சத்து. நாம் அதனைப் பார்க்கும் போது

Page 71
உன்னை நீ அறிவாய் 124
அது ஒரு பேணி என்ற விளக்கத்தை எமக்கு அளிக்கிறது. எனவே அது சித்தாகிறது. நாம் அந்தப் பேணியை உபயோகின்றோம். எனவே அது ஆனந்தமாகிறது.
அந்தப் பேணியானது மூன்றாக மாறவில்லை. மூன்றும் இணைந்து நின்ற அது ஒன்றேயாகும்.
தான் என்பதுடன் சம்பந்தப்பட்ட பன்மையில் ஒருமை நிலையையும் இது விளக்கிக்காட்டுகிறது.தான் என்பது உருவமற்றது. ஆனால் பல் வகைப்பட்ட உருவங்களில் தோற்றமளிக்கின்றது.
காற்றை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால் அத உருவமற்றது. ஆனால் அத எத்தகைய கொள்கலன் உபயோகிக்கப்படுகிறதோ அதன் உருவை ஏற்கின்றது. உதாரணமாக ஒரு பலூன், ஒரு காற்பந்து, ஒரு காற்றுத் தலை அணை.
இதபோலவே 'தான்' என்பதற்கும் உருவமில்லை யானாலும் அது சைதன்யத்தின் இயல்பினை நனவு நிலையை ஏற்று நிற்கின்றது.
33. நனவு நிலை என்பதை விளக்கவும்?
அறிவு நிலை~ நனவு நிலை~ என்பதற்கு மூன்று தன்மைகள் உண்டு.
அறிவுநிலைபுலனுடன் சம்பந்தப்படும்போதுநாம் உணர்வு என்ற பதத்தை உபயோகிக்கின்றோம். சிந்தைனையுடன் சம்பந்தப்படும் போது நனவு நிலை அல்லது மனச்சாட்சி என்கிறோம்.
தாண்’ என்பதுடன் சம்பந்தப்படும் போது அது தூய்மையான அறிவுநிலையாகின்றது.
இம்மூன்று சொற்பதங்களும் நாளாந்தம் இலகுவாகப் பயன்படுத்தப் படுகின்றன.
34. தான்' என்பதன் ஒருமைநிலையை அனுபவிப்பதில் ஏன் கஷ்டம்
ஏற்படுகிறது?
எமக்கு உடம்பு, புலன்கள், சிந்தை, புத்தி என்பன இருக்கும் வரை ‘தான்' என்பதன் ஒருமைநிலையை அனுபவிப்பதில் கஷ்டம் ஏற்படும்.
அத கஷ்டம் என எண்ணி, தானி என்பதை அனுபவிக்க எடுத்துக் கொண்ட முயற்சியை நாம் தளர்த்திவிடவோ விட்டு விடவோ

பதினோராம் அத்தியாயம் 125
கூடாது. ஏனெனில் தான்' என்பதை அனுபவிக்க நாம் எடுக்கும் முயற்சியிலும் பார்க்கத் தான்' என்பதை அனுபவித்தல் பன்மடங்கு பெறுமதியானது.
35. உடம்பு புலன்கள், சிந்தை, புத்தி ஆகியன யாருக்குச் சேவை
செய்தல் வேண்ரும்?
உடம்பு, புலன்கள்,சிந்தை, புத்தி ஆகியன தலைவனுக்கே சேவையாற்றுதல் வேண்டும். தலைவன் ஆனது 'ஆத்மா' அல்லது தான்' ஆகும்.
36. ஆழ்துயில் நிலைக்கும் விழித்தெழு நிலைக்கும் இடைப்பட்ட
மாறுதல் நிலையானது எதனைப் பிரதிபலிக்கின்றது?
ஆழ்துயில் நிலைக்கும் விழித்தெழு நிலைக்கும் இடைப்பட்ட மாறுதல் நிலையானது சாத்வீக குணத்தை அதாவது தான்' என்பதன் இயல்பாய சமநிலை அல்லது சமநிலைப் படுத்தும் தன்மையை எடுத்தியம்புகிறது.
தன்னை அறிதல் பற்றி நன்கு விளங்கிக்கொண்டால்தான் தான்' என்பதன் இயல்பு பற்றி அறியலாம்.
ஆழ்துயில் நிலையானது தமோகுணத்தைப் பிரதிபலிக்கின்றது. அதாவது மந்த நிலையாகும். தயில் எழு நிலையானது ராஜஸ குணத்தைப் பிரதிபலிக்கின்றது. அதாவது செயல்படு நிலை.
些不垒 蜘旅

Page 72
பன்னிரண்டாம் அத்தியாயம்.
தண்னைப் பற்றிய அறிவு
1. ஷேத்திர,ஷேத்திரஞ்ஞ ஆகிய இருபதங்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் கிருஷ்ணபகவான் அருச்சுனனுக்கு எவ்வாறு விளக்கினார்?
கிருஷ்ண பகவான் அருச்சுனனுக்கு ஷேத்திர, ஷேத்திரஞ்ஞ இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை மேற்கண்டவாறு விளக்கிக் காட்டினார்.
இந்த உடம்பு ஷேத்திர எனப்படுகிறது. களம்.
ஷேத்திரத்தை அறிந்த வன் ஷேத்திரஞ்ஞ - களத்தை அறிந்தவன் என்றாகிறான்.
எல்லா ஷேத்திரங்களையும் (களங்களையும்) உணர்ந்தவன் என, என்னை ஒரு ஷேத்திரஞ்ஞனாக அறிந்து கொள்வாய். எனது நோக்கின் படி ஷேத்திரத்தைப் பற்றிய ஞானமும், ஷேத்திரஞ்ஞனைப் பற்றியதமே உண்மையான ஞானமாகும்.
Φ50),Φ-ΧΙΙΙ-2
2. எல்லையற்ற ஆத்மா அல்லது தெய்வீகக் கோட்பாட்டை நாம்
எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
உபாதிகளின் இயல்பு அல்லது மனிதனின் ஆடைகள், உடம்பு, புலன்கள், புத்தி ஆகியவற்றை நாம் முற்றாக அறிந்து கொண்டால் மட்டுமே புனிதமானதும், தாய, எல்லையற்றதுமான ஆத்மா அல்லது தெய்வீகக் கோட்பாட்டை அறிந்து கொள்ளலாம்.
3. இந்த முழு உலகையும் எத்தகையது என வர்ணிக்கலாம்?
இந்த முழு உலகமுமே ஷேத்திர, ஷேத்திரஞ்ஞ, களங்களும் அவற்றை அறிந்தவனும் ஆனவற்றின் இணைப்பு என வர்ணிக்கலாம்.
4. ஷேத்திர என்றால் என்ன?
மனித உடம்பே ஷேத்திரமாகும்.

பன்னிரண்டாம் அத்தியாயம். 127
5. மனித உடம்பு எதன் பிரதிபிம்பம் ஆகும்?
பிரக்கிருதி அல்லது இயற்கையின் பிரதி பிம்பமே மனித உடம்பு.
б. இந்த முழுப் பிரபஞ்சமும் எதனுடைய பிரதிபலிப்பு ஆகும்?
மனிதனின் உள்ளகத்தின் பிரதி பிம்பமே முழுப் பிரபஞ்சமும்
ஆகும். பிரபஞ்சத்திலே உள்ள புலனறிவுள்ள, புலனறிவற்ற தன்மைகள்
அனைத்தும் மனித உடம்பிலுண்டு.
7. மனிதனின் ஆடைகளாய உபாதைகள் பற்றி அறிந்து விளங்கி
கொள்வது மட்ரும் போதுமானதா?
மனிதனின் ஆடைகள், உபாதைகள் ஆகியவற்றைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ளுதல் போதாது.
8. உபாதைகளை விட, அதற்கு மேலால் நாம் தெரிந்து அறிந்து
கொள்ள வேண்டியவை எவை?
ஷேத்திரங்களை எல்லாம் உயிருட்டுபவராகிய ஷேத் திரஞ்ஞ பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஷேத்திரஞ்ஞவை நாம் அறிந்து கொண்டால் ஷேத்திரத்தைப் பற்றி அறிய வேண்டிய தேவை இல்லை. எனினும் அதுவரை நாம் ஷேத்திரவைப் பற்றிக் கவனமெடுக்க வேண்டும்.
9. ஷேத்திரஞ்ஞவை அறிவதற்கு எத்தகைய ஞானம் வேண்டி
இருக்கிறது?
ஷேத்திரஞ்ஞ அல்லது தான்' என்பதை அறிவதற்கு எமக்குப் பிரத்தியேகமான அறிவு தேவைப்படுகிறது. ஆத்மாவை அறிவதற்கு பொருளைப் பற்றிய அறிவோ அன்றி உலகியல் அறிவோ எவ்விதத்திலும் தணைபுரியாது. தான்' அல்லத ஆத்மாவை அனுபவிப்பதற்கு எமக்குத் தேவைப்படுவது தன்னைப் பற்றிய அறிவு அல்லது ஆத்ம ஞானம்.
10. அஞ்ஞானம் என்றால் என்ன?
இப்பெளதிக உலகிலே நாம் அறிவு எனக் கொள்வது அறியாமையன்றி வேறொன்றுமில்லை~ இதுவே அஞ்ஞானம்.

Page 73
தன்னைப் பற்றிய அறிவு 128
11. உண்மையான அறிவு என்றது எதனை?
உண்மையான அறிவு தன்னைப்பற்றிய அறிவு அல்லது ஆத்ம ஞானம் ஆகும். உண்மையான உணர்வும் ஆத்ம ஞானமாம்.
12. எழுவாய், செயற்பருபொருள், பயனிலை என்ற பகுப்பு எந்த
நிலைப்பாட்டிற்குரியது?
எழுவாய், செயற்படுபொருள், பயனிலை என்ற பாகுபாடு அதாவது அறிபவன், அறியப்பட்டது, அறிதல்- ஞானம், ஞேயம் ஞான இவை சிந்தையில் நிலைப்பாட்டிற்குரியது,(சிந்தையைப் பொறுத்தது).
13. தன்னைப்பற்றிய அறிவு எப்பொழுதுதன்னை வெளிபருத்துகிறது?
சிந்தையின் முழுஅழிவின் பின்னரே தன்னைப் பற்றிய அறிவு. ஆத்ம ஞானம் தன்னை வெளிக்காட்டும்.
சிந்தையின் அழிவின் பின் நிலைத்திருக்கும் சலனமற்ற அமைதியே உண்மையான அறிவு ஆகிறது.
14. உண்மையான அறிவு நாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய
தொன்றா?
உண்மையான அறிவு எமது சுய இயல்பாகும். அத புதிதாகச் சம்பாதிக்க வேண்டிய தொன்றல்ல.
15. உண்மையான அறிவு எமக்கு ஏன் கிடைக்கக் கூடியதாக
இல்லை?
உண்மையான அறிவு எமக்குக் கிடைக்கக்கூடியதாக இல்லாததற்குக் காரணம், அது சிந்தையாலும் அதன் நெறி தவறிய தன்மையாலுமாகும். ஒரு கொள்ளிக் கட்டை தானே உருவாக்கிய சாம்பலால் மூடப்பட்டிருப்பது போலவும் நீரினால் உண்டாகிய நீர்ப்பாசி நீரை மறைப்பது போலவும் சூரியனாலே உருவாகிய வெப்ப அலைகளால் தோன்றிய முகிற் கூட்டம் சூரியனையே மறைப்பத போலவும், கண்ணினாலேயே உருப்பெற்ற கண்பூ கண்ணை மறைப்பது போலவும் ஆகும்.
 

பன்னிரண்டாம் அத்தியாயம், 129
கண்பூவை உரித்ததும் மீண்டும் கண்பார்வையைப் பெறுவதுபோல, சிந்தையை அகற்றி விட்டால் தன்னைப் பற்றிய ஞானம் - ஆத்ம ஞானம் - தானாகவே வெளிப்படும்.
16. ஆத்ம ஞானத்தை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாமா?
ஆத்ம ஞானம் வெளியிலிருந்து பெற்றுக்கொள்ள கூடியதன்று. ஆத்மஞானத்தை நூல்களிலிருந்த பெறவும் முடியாது, குருவிடமிருந்தும் பெற முடியாது, பரமாத்மா மேலமான ஆத்மாவிடமிருந்து கூடப் பெற்றுக் கொள்ள முடியாதது.
மனிதனே பரமாத்மா - ஆத்மா - ஞானம்.
17. சிருஷ்டிக்கப்பட்ட உலகில் உள்ள சகல பொருள்களும்
எதற்கு உட்பட்டவை?
சிருஷ்டிக்கப்பட்ட இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களின் சேர்க்கையும், பிரிவடைதலாலும் ஏற்படும் நடைமுறைகளால் அடிக்கடி மாற்றத்திற்குட்பட்டதாகும். இத முடிவில்லாத நிகழ்வதாகும்.
18. நினைவு நிலைகளின் மாற்றங்களால் மனிதன் எவ்வாறு
தாக்கப்படுகிறான்?
ஒரு மனிதனின் வயத மாற்றங்கள், அல்லத தயிலுதல், கனவு காணுதல், விழித்தெழுதல் ஆகிய நினைவு நிலைகளின் மாற்றங்கள், முழுமையான, நுண்ணிதான மனித உடம்பை மட்டும் தாக்குகின்றது.
19 ஆத்மாவிற்குள் எமது ஆய்வை எவ்விதம் திருப்ப வேண்ரும்?
தனிமையான இடத்தில் இருந்து, ஆத்மா அல்லத ஞானம் எவ்விதம் எல்லோரிடையேயும் பரிணமித்தள்ளது என்று அமைதியான முறையில் ஆராய வேண்டும்.
அப்பொழுது, நாம், எமக்குள் இருந்த வரும் மாற்றமடையாத என்றுமுள்ள, இயற்கையான தெய்வீகக் குரலைக் கேட்க முடியும். உள்ளிருந்து எழும் இந்தத் தெய்வீகக் குரல் என்றுமுள்ளது, அழிவில்லாதத மட்டுமல்ல எதனாலும் மாற்றமடையாத இருப்பதவும் ஆகும்.

Page 74
தன்னைப் பற்றிய அறிவு 130
20. மாற்றமடையாத தெய்வீக அகக் குரல் என்பது என்ன?
இந்த தெய்வீக அகக்குரல் நான்', 'நான்', 'நான் அகம், அகம், அகம், என ஆத்மாவிலிருந்த வெளியாவது.
21. இந்த அகம் எவற்றின் மூலப்பொருளாய், ஆரம்பமாய்
இருக்கிறது?
இந்த அகமானது, நாமெல்லோரும் மூச்சுவிடும் வேளையிலே எதுவித நனவு முயற்சியுமில்லாமலேயே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கும் மந்திரமாகிய "சோஹாம்" எனும் மந்திரம் உற்பத்தியாகும் இடமாக இருக்கின்றத.
22. அகம். அகங்காரம் இரண்டினதும் வித்தியாசம் என்ன?
அகமானது தன்னை உடம்புடன் தொடர்பு படுத்திக் கொள்ளும்
போது அகங்காரமாகின்றது.
அகம் தெய்வீகமானது. அகங்காரம் மனித இயல்பானது.
23. அகத்தை எவ்வாறு நாம் உணர்ந்து கொள்ளலாம்?
எமது உள்ளத்தைத் தாய்மைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இயற்கையான தெய்வீகஉள்ஒலியாகிய அகத்தை அறியலாம். அன்றிப் பல நூல்களைக் கற்பதனாலோ, பண்டிதனாக ஆவதனாலோ அல்ல.
24. சிந்தையைக் கடந்து அப்பாற் சென்றபின் நாம் அனுபவிப்பது
блъбовот?
சிந்தைக்கு அப்பாற் சென்றதும் நாம் 'அகம்' அல்லதுதான் என்பதை அன்றி வேறொன்றையும் அனுபவிக்க மாட்டோம். ஆறு கடலை அடைந்ததும் அதன் தனித்துவத்தை இழக்கின்றது. அது அதன் பெயர், உருவம், அனைத்தையுமே இழந்து கடலுடன் ஒன்றாகி விடுகிறது.
அதுபோலவே , நாம் சிந்தைக்கு அப்பாற் சென்றவுடன்தான் தண்ணறிவு தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இது சிந்தையின் அழிவின் பின்பே நிகழும்.

பன்னிரண்டாம் அத்தியாயம். 131
25. பிரம்மனை அறிந்தவன் என்ன ஆகிறான்?
பிரம்மனை அறிந்தவன் முறையே பிரம்மன் ஆகிறான்.
26. சூரியனும் ஒரு முட்டி தண்ணிரும் என்ற உதாரணத்தை எருத்து மனிதனில் ஆத்மாவின் நிலைத்த தன்மையை விளக்கவும்.
முட்டியில் நீர் நிறைந்திருக்கும் போது நாம் சூரியனின் பிம்பத்தைக் காண முடிகிறத. முட்டி, நீர், நீரில் சூரியனது விம்பம் எல்லாமே இல்லாத போதுங் கூட சூரியன் என்றும் நிலைத்ததொன்றாகவே இருக்கின்றது.
அதபோலவே ஒருவன் 'தாண்’ என்றதையோ அதன் பிம்பத்தையோ அனுபவிக்க முடியாது இருக்கும் வேளையிலும் கூட தான்' என்றது என்றும் இருக்கும்.
27. உடம்பின் மூலமும் சிந்தையினூடகவும் நாம் காணும்
ஆத்மாவின் பிம்பம் மூல ஆத்மாவின் உண்மையான தோற்றமா? உடம்பு, சிந்தையூடாக நாம் காணும் ஆத்மாவின் தோற்றம் மூல ஆத்மாவின் உண்மையான பிம்பம் அல்ல. அத்தோற்றமானது நாம் எமது முகத்தை நீரில் பார்க்கும் போது தெரியும் பிம்பத்தை ஒத்தது. இங்கு இடதுகண் வலது கண்ணாகத் தோற்றமளிக்கும்.
அதுபோலவே, நாம் ஒரு புகை வண்டியில் பிரயாணம் செய்யும்போது மரங்கள், மலைகள் எல்லாம் அசைகின்றன போன்ற தோற்றத்தை எமத பார்வை எமக்கு ஏற்படுத்தி ஏமாற்றுகிறது.
இந்த மாய உலகிலே நாம் காணும் வித்தியாசங்கள் எல்லம் எமது சிந்தனையின் திரிபினால் ஏற்படுவதாகும். உடம்பு சிந்தையூடாக நாம் ஆத்மாவை உணர முடியாது.
28. என்றுமுள்ள உண்மையை உணருவதற்கு நாம் என்ன
செய்யவேண்ரும்?
என்றுமுள்ள உண்மையை உணருவதற்கு நாம் சிந்தைக்கு அப்பால் செல்லவேண்டும்.

Page 75
. . ملی ؟ کولو wQR p * *"*, 3. j +"v «, *
s' ھ مفrT
o f 队。^ نه' if v ، لاړ ؤ தன்னைப் பற்றிய !برہمن རྒྱ་ལྔ།
:。 ܖ ;ور . : ”rܝ ܗ
132
29. சாதனையில் வெற்றி பெறுவதற்கு மனிதன் தனது தன்னிஷ்ட
த்தைப் பிரயோகிக்கலாமா?
மனிதனுக்குச் தன்னிஷ்டம் இருக்கின்றத என நம்புவது முற்று முழுதான பிழையாகும். தனது சாதனைகளை யெல்லாம் தன்னிஷ்டத்தாலும், மன உறுதியாலும் வென்றுவிடலாம் என்று மனிதன் நம்புகிறான். அகங்காரத்தினால் ஏற்பட்ட சித்தப்பிரமையாலும், கர்திறிற்வா~ செய்பவன் தானே என்ற பிழையான எண்ணத்தின் பிரதிபலிப்பாலும் ஏற்பட்ட விளைவு இது.
மனிதன் தனது சாதனைகளில் வெற்றி பெறுவதற்கு தெய்வீகஅருள், உதவி, துணையும் வேண்டும்.
30. மனிதன் தனது சுய பிரயத்தனங்களில் வெற்றியீட்டுவதற்கு அவனது தன்னிஷ்டப் பிரயோகம் மட்டும் போதுமானதல்ல என்பதை கர்ணனுடைய (மாகபாரதப் போரில் கதாநாயகனாக இருந்தவன்) எருத்துக்காட்ரு மூலம் விளக்கவும்.?
வெற்றிபெறுவதற்கு கர்ணனிடம் சகல சாதனங்களும் இருந்தன. அவனிடம் உயர்ரக ஆயுதம், பெளதிக, அறிவு சம்பந்தமான பலம், தணிவு எல்லாம் இருந்தன.
எனினும் இத்தகைய சலுகைகள் எல்லாம் இருந்த போதும் அவன் தோற்கடிக்கப்பட்டான். காரணம் அவனிடம் ஒன்று இருக்கவில்லை. அதாவது தெய்வீக அருள், உதவி தணை.
31. கர்ணனின் எருத்துக்காட்ரு எமக்கு எதனை உணர்த்துகிறது.?
தன்னை அறிதலுக்கு பெளதீக, சிந்தை, அறிவு சம்பந்தமான
திறன்கள், வளங்கள் ஆகியவற்றில் நம்பிக்கையிருத்தல் மூடத்தனமானது
என்பதை கர்ணனின் எடுத்துக்காட்டு போதிக்கிறது.
32. தன்னை அறிதலைப் பெறுவதற்கு எமக்கு தேவைப்பருவது
ШПć5І?
தன்னை அறிதலைப் பெறுவதற்கு நிலைபேறாக உள்ள அனைத்திலும் ஒருமையாய் உள்ள சக்தியைக் கண்டு அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

К. К. K. yilainathaf
TEACHTER * كامل اxOV مم يجمnv பன்னிரண்டாம் அத்தியாயம். NMALAKAM 133
33. இன்றைய உலகிலே காணப்பருகின்ற எல்லா வித
செளகரியங்களினாலும் பயன் பெறுவது யார்?
இதற்கு விடை மனிதனேயாகும். ஒவ்வொருவனும் தன்னை நான்' என்றே வருணிக்கின்றான். நான்' என்றது இல்லாத போனால் உற்பத்தியாளனோ, நுகர்வோனோ இல்லாது போய்விடும், அதனால் உற்பத்தியும் தேவையில்லாததாகி விடும்.
ஆகவே எல்லாம் இந்த நான்' என்றதை மையமாகக் கொண் டுள்ளது என்றதனால் இந்த உலகில் உள்ள எல்லாச் செல்வங்களிலும் பெறுமதி வாய்ந்தத மனிதனேயாகும்.
34. மனிதனில் நாம் காண வேண்டிய முக்கியமான விடயம் எது? மனிதன் அடிப்படையிலே தெய்வீகமானவன் என்பதையே நாம் முக்கியமாக கண்டுகொள்ளவேண்டியது.
நான்' என்றது . தெய்வீகத்தன்மையான தான் அகம் என்று இருக்கவேண்டுமே யொழிய அகங்காரம்-பொய்யான 'தான்' ஆக இருக்கக் கூடாது.
35. தெய்வீகத்தை எவ்வாறு அனுபவிக்கலாம்?
தன்னை அறிதல் அல்லத ஆத்மஞானத்தின் மூலம் தெய்வீகத்தை அனுபவித்துக் கொள்ளலாம்.
36. ஆத்ம ஞானத்தை அனுபவிப்பதற்குச் சிறந்த வழியாது?
ஆத்ம ஞானத்தை உணர்வதற்கும், ஆத்மானந்தம்'தான்' என்றதன் பேரானந்த நிலையை அனுபவிப்பதற்கும் பக்தியே சிறந்த வழியாகும்.
37. பக்தி என்றால் என்ன?
தான்' என்றதை இடையறாது சிந்தித்திருப்பதே பக்தி
38. பக்தி ஞானத்தினின்றும் வேறுபட்டதா?
பத்தியும் ஞானமும் வேறுபட்டவையல்ல.பக்தியேஞானம்.

Page 76
. . . . . १ * ':
6;تہ عر۔ :t f. If y " 27 و A يجي ء من à. لخم : " م ہمممم ..*****
தன்னைப் பற்றிய அறிவு' 134
熹
ܓ݁ܶ+
ஞானமே பக்தி அவைமிக நெருங்கிய தொடர்பு உடையவை. ஒன்றையொன்று நம்பியிருப்பவை.
39. பக்தியையும் ஞானத்தையும் பிணைக்கும் சக்தியாது?
பக்தியையும் ஞானத்தையும் பிணைக்கும் ஒரேயொரு பந்தம் பிரேமையாகும்.
40. பிரேமை எத்தகைய சக்திவாய்ந்தது?
பிரேமை எனும் புனிதமான கயிற்றினாலே நாம் இறைவனைக் கூட கட்டிவிடலாம்.
41. ஆண் பிள்ளைகளைப் பெறுவதனால் மரணத்தின் பின்
மோட்சத்தை நாம் அடைய முடியுமா?
ஆண் பிள்ளைகளைப் பெற்றால், தமது மரணத்தின் பின் அவர்கள் செய்யும் சிரார்த்த சடங்கின் மூலம் தாம் மோட்சத்தை அடைய அவர்களின் உதவி கிடைக்கும் என்ற பிழையான எண்ணத்தில் பலர் சங்கோசப்படுகிறார்கள்.
ஆண் பிள்ளைகளை உடையவர்கள் மோட்சத்தையும் ஆண்பிள்ளைகள் அற்றவர்கள் நரகத்தையும் அடைவார்கள் என எண்ணுவதம், அதேபோல மடைமைத்தனமாகும்.
42. இதனோரு தொடர்பாக பகவத்கீதை மனிதனுக்கு எவ்விதம்
புத்தி புகட்டுகிறது?
பகவத்கீதை மனிதனுக்கு உபதேசிப்பது. உனது முயற்சியா லேயே உண்னை உயர்த்திக்கொள். (உடரேத் ஆத்மானா ஆத்மனம்) (dog, VI-5)
43. சிரார்த்தம் என்றால் என்ன?
சிரத்தையுடன் அதாவது நம்பிக்கையுடன் இறைவனின் மலர்ப்பாதங்களுக்கு பிண்டத்தைச் சமர்ப்பித்தல் என்பதே 'சிரார்த்தம்' என்பதன் உண்மையான கருத்த.

ሥ... (” ”藏
K. K. K. ५-1?:'''
臀 "TEAس! ANARK
பன்னிரண்டாம் அத்தியாயம். Y N AuluAKAM 135
44. பிண்ட தானம் என்றால் என்ன?
சாதாரணமாக எண்ணிக் கொள்வதுபோன்று பிண்டம் என்றால் அரிசிமாவினால் ஆன உருண்டை அல்ல. அத மனித உடம்பைச் சுட்டி நிற்கின்றத.
எமது உடல் பெளதீக, சிந்தனைத் துறைகள், இறைவனுக்குச் சேவைசெய்யும் திறன்கள், அனைத்தையும், இப்பிரபஞ்சமாகப் பரிணமித்து நிற்கும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்பதுதான் உண்மையான பிண்டதானம்.
45. வேதாந்தத்தில் தூங்கபத்திரா என்றது எதனைக் குறிக்கிறது?
வேதாந்தத்தில மனித உடம்பையே தங்கபத்திரா எனக் கூறப்பட்டுள்ளது. தங்க என்றால் உயர்ந்த, பத்திரா என்றால் நல்ல, புனிதமான, சுபத்தன்மை பெற்ற எனலாம்.
மனித உடம்பை 'தங்கபத்திரா என்று அழைப்பதற்குக் காரணம், உடம்பானது சமூகத்திற்கு நன்மையைப் பெற்றுக் கொருக்கக் கூடியதான சுப காரியங்களில் ஈடுபடுவதெற்கென்றே உருவாக் கப்பட்டது என உணர்த்துவதற்காகும்.
46. துங்கபத்திரா என்ற நாமத்திற்குப் பெறுமதியாக இருப்பதற்கு
நாம் என்ன செய்ய வேண்ரும்?
தங்கபத்திரா என்ற நாமத்திற்கு பெறுமதியானவர்களாக இருப்பதற்கு நாம் சகல ஜீவராசிகளுக்கும் அன்பாகச் சேவை செய்வதற்கு எமது உடம்பு, சிந்தை என்பவற்றை அர்ப்பணித்தல் வேண்டும்.
47. தியாகராஜ சுவாமிகள், தமது நாமத்திற்குப் பெறுமதிமிக்கவர்
என்பதை எவ்வாறு நிரூபித்தார்?
தியாகராஜன் என்றால் தியாகத்தின் மன்னன்'. தஞ்சாவூர் மன்னன், அவருக்கு பெறுமதிமிக்க ஆபரணங்களும் குடும்பம் நடத்துவதற்குப் போதுமான பண்டங்களும் அனுப்பி வைத்தபோது தியாகராஜ சுவாமிகள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர் தனது சிந்தைக்கு இவ்வாறு கூறினார். 'எனதருமைச் சிந்தையே! உண்மையான சந்தோஷத்தைக்

Page 77
தன்னைப் பற்றிய அறிவு 136
கொருக்கவல்லது எது? செல்வமாஅல்லது இறைவனின் மலர்ப்பாதங்களா? தயவு செய்து எனக்கு உண்மையைக் கூறுவாய்'
அவர் தன்னிச்சையாகவே இறைவனுக்கு ஒரு பாடலும் பாடினார். எனது அன்பார்ந்த பிரியமான இராமா! இந்தச் செல்வங்களால் நீ என்னை ஆசையூட்டப் பார்க்கிறாயா? அதனை ஒரு காரணமாக வைத்த என்னைப் பிரிந்துபோகப் பார்க்கிறாயா? நான் எனது இரு கரங்களாலும் உணத தாமரைப் பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டேன். இந்தக் கரங்கள் இப்போ எவ்வாறு உணத புனிதமான பாதங்களை விட்டுவிட முடியும்? உனது பாதங்கள் எனது நிரந்தரமான பொக்கிஷமல்லவா?
இந்த மறைந்துபோகும், மதிப்பற்ற, ஆசையை ஊட்டும், செல்வத்திற்காக எனத கைகள் உனது பாதத்தை விட்டு விலகுவதா?
48. தியாகராஜ சுவாமிகளது எருத்துக்காட்டால் நாம் எத்தகைய
பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம்?
தியாகராஜ சுவாமிகளது எடுத்தக்காட்டால் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் என்னவெனில் அவர் தம் பெயருக்கு மதிப்பாகவே வாழ்ந்த காட்டியவர், அதபோல நாமும் அறநூல்கள் எமது உடம்பிற்கு வழங்கிய தங்கபத்திரா என்ற பெயருக்கு ஏற்கவே வாழவேண்டும் என்பதாகும்.
49 எமக்குள்ளே ஆத்மீகத்தன்மை மாற்றத்தை எவ்வாறுநிறைவு
6FulirunsuTub?
சுவாமிகளது தெய்வீக சொற்பொழிவுகளிலே நாம் செவிமடுத்த பல விடயங்களுள் ஒருசிலவற்றையாவது முறையாகச் செயற்படுத்தி வந்தால் தான் எமக்குள் ஆத்மீகத்தன்மை மாற்றத்தை நிறைவு செய்யலாம்.
恐

பதின்மூன்றாம் அத்தியாயம்
சுதந்திரம் என்றால் என்ன?
1. எமது சிந்தைக்கு நாம் சொல்லவேண்டியது யாது?
எமத சிந்தைக்கு நாம் சொல்ல வேண்டியத
மடமை மிக்க சிந்தையே! கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என இறைநாமத்தில் அடைக்கலம் புகுவாய்'
2. எமது சிந்தைக்கு ஏன் இதைச் சொல்லவேண்ரும்?
தயரமும் தன்பமும் இந்த உலகில் ஆட்சி செய்த கொண்டு இருக்கின்றபடியால் இதை எமது சிந்தைக்குச் சொல்ல வேண்டும். வாழ்க் கையானது கஷ்டம், நோய், மயக்கம் என்பவற்றால் மிதமிஞ்சிப் போய் இருக்கிறத.
நிலையில்லாத உலகிலே மனிதனின் வாழ்வானது தாமரை இலையில் மினுங்கித் துடித்துக் கொண்டிருக்கும் நீர்க்குமிழி போன்றது.
3. உண்மையான தெய்வீகத்தன்மையென்பது என்ன?
எல்லா மக்களது உள்ளத்திலும் அன்பெனும் விதையை விதைத்து மனித குழாத்திலே சமாதானமும் தெய்வீக அன்பும் மலர வசதியளிப்பதே உண்மையான தெய்வீகத் தன்மை அல்லது அத்தியாத்மிகம் ஆகும்.
4. சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று எப்பொழுது நாம்
உரிமை கோரலாம்?
ஒருமைப்பாட்டை நாம் பெற்ற பின்புதான் நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோமென உரிமை கோரலாம். நாம் சுதந்திரம் பெற்று விட்டதாக உரிமை கொண்டாடினால், அது சாதாரணமான பேச்சு சுதந்திரமே யொழிய, தனிமனிதனின் சுதந்திரமல்ல.

Page 78
- "... - . ". ,"" ؟ ::: 3: " :۔ وسمہ : ہو۔ • *۔- ,4- , ,
* Air
, . . . . A 4 - '' சுதந்திரம் என்ற்ால் என்ன?" 138
மற்றவர்களது சுதந்திரத்தில் தலையிடாதிருத்தல் தான் உண்மையான சுதந்திரம் என்பதல்ல, இதயமட்டத்திலே ஊற்றெடுத்து வருவதே உண்மையான சுதந்திரம் ஆகும்.
o. தெய்வீக நோக்கில் சுதந்திரம் என்பதென்ன என்று
தெளிவுபருத்துக.?
என்றுமுள்ள, நிலையான, மாற்றமில்லாத தெய்வீகக் கோட்பாட்டை அல்லது இதயத்தை உணர்தலில் தான் சுதந்திரம் இருக்கின்றது. இதனை அறிந்தால் நாம் சகலதும் அறிந்தவர்கள் ஆகின்றோம். இடம், காலம், நேரம், மனிதன், பொருள் என்ற பாகுபாடு இன்றி இதயத்திலிருந்து வெளியாகுவதே உண்மையான சுதந்திரமாகும். உண்மையான சுதந்திரம் இதய மட்டத்தில் இருந்து ஊற்றெடுக்கின்றது. இந்த இதயத்திற்கு உருவம் இல்லை. இது பெளதீக இதயம் அல்ல. தெய்வீக இதயமானது என்றுமுள்ளது, மாற்றமில்லாதத.
எமத உண்மையான இயல்பு தான்' அல்லது 'ஆத்மா' என்றதை நாம் என்றும் எண்ணி இருந்தால் உண்மையான சுதந்திரத்தை நாம் அனுபவிக்கலாம்.
தெய்வீகத் தன்மை மட்டுமே உண்மையான சுதந்திரம், சுவதந்திரியம். சுதந்திரம் தான் தெய்வீகம். தெய்வீகத்தன்மையும் சுதந்திரமும் பிரிந்து இருக்க முடியாது.
இப்பிரபஞ்சத்திலே முழுமையான சுதந்திரம் எவருக்கும் இல்லை. சுதந்திரம் உடையவர்கள் இவ்வுலகில் பிறப்பதில்லை.
6. "அணு எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே பிரபஞ்சமுமாம்'
இதனை விளக்கவும்.
அணு என இங்கு குறிப்பிடப்படுவது தனிமனிதனையாகும். பிரபஞ்சம் என்றது முழுமையான நியையைக் குறிக்கும்.
யதா அந்தந்தே ததா பிரக்மந்தே
7, உத்தாலகர் தமது மகன் சுவேதகேதுவிற்கு விருத்த வினா
ШП95І?
தனது மகன் சுவேதகேதுவை வேறொரு குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் சிட்சைபெற அனுப்பி வைத்தார் உத்தாலகர். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தனது பாண்டியத்தினால் பெருமையும் அதனால்

n; karم ج۳ دسم (نہ y ہم سمK. K. k bA ( ' + e IYANA JR K ( ` V ! i Y
MALL Ar AW1 139
பதின்மூன்றாம் அத்தியாயம்
பெருமிதமும் கொண்டு தந்தையாரிடம் வந்தான். எல்லாப் பெருமைகளிலும் கற்றதனால் ஏற்பட்ட பெருமையே மிக மோசமானது.
"மகனே! அதனை அறிந்தால் யாவற்றையும் அறியலாம் என்ற அதனை அறிந்தாயா'? என்று கேட்டார். எவ்விதம் பதிலளிக்கலாமென அவனுக்கு விளங்காத இந்தக் கேள்வி அவனுக்கு மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணியத. இது அவன் கொண்டிருந்த பெருமையையும் தகர்த்த விட்டத.
"லோகஞானம்' - உலகியல் அறிவிற்கு எதிராக நிற்கும் ஆத்மஞானம்- தன்னைப் பற்றிய அறிவின் உயர்வை சுவேத கேதவுக்கு நன்கு உணர வைத்தது இந்த வினா.
8. இதயம் என்ற பதத்தின் தெய்வீக விளக்கத்தைத் தருக?
தெய்வீகக் கருத்துப்பாட்டில் இதயம்' என்ற பதம் வேறொறுமல்ல. "ஆத்மா'~ நான்'- தான்' என்பதே யாகும். இருதயம் பிரம்மம் அல்லது மேலான உண்மை. அத எங்கும் நிறைந்தத. எங்கும் உள்ளத. ஒருவனுக்கு கொடுக்கப்படும் பெயரானது அவன் உடம்பிற்கே ஆகும். நான்' அல்லத அகம் என்றது உண்மையான தான். அது, உடம்பிற்கு கொடுக்கப்பட்டி பெயரினின்றம் வேறுபட்டத.
9 தெய்வீகக் கருத்துப் படியான இதயத்தினின்றும் இந்த
மாய உலகு எவ்வாறு வேற்றுமைப்பருகிறது?
இந்த மாய உலகிலே நாம் பல வித்தியாசங்களைக் காணுகின்றோம். நல்லத கெட்டத, பாவம் நேர்மை, உண்மை பொய், இன்பம் தன்பம்.
இந்தவேறுபாடுகள் எல்லாம் சிந்தையால் உருவாக்கப்பட்டவை என்றதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
இருதய மட்டத்தில் நாம் இத்தகைய எதிர்ச்சொல் வேறுபாடுகளைக் காண முடியாது. இதயத்திற்கு உரு இல்லை ஆனால் அது எல்லா உருவங்களது தளமாக இருக்கின்றது.
10 வெள்ளிக்கிண்ணியை உதாரணங்காட்டி ஏன் இந்த மாய உலகை பொய்த்தோற்றமுடையது என்று கருத வேண்ரும் என்பதை விளக்கவும்
ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு பெயரும் உருவமும் உண்டு. பெயரையும் உருவையும் நீக்கிவிட்டால் மீதிஇருப்பது என்ன? வெள்ளிமட்டுமே. அது ஒரு கிண்ணியாவதற்கு முன்பும் வெள்ளியாகத்தான் இருந்தது. கிண்ணியாக

Page 79
சுதந்திரம் என்றால் என்ன? 140
உருவெடுத்த போதும் வெள்ளியாகத்தான் இருந்தது. இந்தக் கிண்ணியை உருக்கினால் ஒரு உருண்டைக் கட்டியாக வரும்.அப்பொழுதும் அத வெள்ளியாகவே இருக்கும்.
ஆகவே இந்த வெள்ளிக்கிண்ணியானது, ஆரம்பத்திலும், இடையிலும் முடிவிலும் வெள்ளிதான். ஆரம்பத்திலும் முடிவிலும் நிலைத்திராததொன்று, இடையில் நிலைத்திருக்கும்போது, அத இடையிலும் நிலைபேறு இல்லாததாகவே கருதப்படுகிறது. அது இடையில் இருப்பது ஒரு மாயை, அல்லது ஒரு தோற்றமாகும். அதனால் தான் புலன்களால் கிரகிக்கக்கூடிய உலகை ‘மித்திய ஜகத்’ மாயையினாலான பிரபஞ்சம் என்றனர்.
11. புலன்களால் கிரகிக்கக்கூடிய இந்த உலகிலே நாம்
இருமையைக் காண்பதன் காரணம் என்ன?
இந்த மாயை உலகிலே நாம் காணும் இருமை நிலைக்கு காரணம் அவை எமது சிந்தனையின் சிருஷ்டியாலாகும். சிந்தை இருப்பதனால் தான் நாம் இத்தகைய வேற்றுமைகள் இருமைத்தன்மைகளைக் காண்கிறோம்.
நாம் சிந்தையை வாஞ்சையுடன் வளர்க்கிறோம். அதற்கு அதிக கவனமெடுக்கிறோம். அதனை ஆத்மவிசாரணையில் ஈடுபடுத்தாது இவ்வாறு வளர்க்கிறோம்.
நாம் எம்மைப் பற்றிய ஆய்வில் எம்மை ஈடுபடுத்திக் கொண்டால்நிலைபேறான அந்த ஒன்றை. ஏகம் சத்தைக் காணலாம்.
12. எப்போது ஒருவனுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது?
சிந்தை அழிக்கப்பட்ட விடத்துத் தான் ஒருவனுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது
எவ்வாறாயினும், நிலைபெற்றிருப்பது ஒன்றேயாம். அதனால் சுதந்திரம் எனும் சொற் பிரயோகம் இவ்விடத்த பொருத்தமற்றதாகும்.
13. இறைவனிடம் உண்மையான சரணாகதி யடைதல் என்றால்
என்ன?
உண்மையான சரணாகதியடைதலானது துயரம் இருக்கிறதோ இல்லையோ துன்பம் கஷ்டம்இப்படியானவற்றை யெல்லாம், கருத்தில் கொள்ளாது.

பதின்மூன்றாம் அத்தியாயம் 141
நான் என்னை முழுமையாகவே சுவாமிக்கு அர்ப்பணித்து விட்டேன். ஆனால் எனது பிரச்சனைகளுக்கோ, தயருக்கோ, ஒரு முடிவுமில்லை. என ஒருவன் முறையிடுவாராயின் இது சரணாகதியாகாது. உண்மையான சரணாகதி என்றால் என்ன என்று விளங்கிக்கொள்ளாமையையே இது சுட்டிக்
காட்டுகிறது.
14. சமாதி என்றால் என்ன?
சிந்தையை ஆத்மாவுள் ஒன்றிணையச் செய்தலே சமாதியாகும். சமாதி நிலையில் இருமையை எவரும் அநுப விப்பதில்லை.
சமாதி - சமா+ தி ~சமமான சிந்தனை
சமாதி நிலையில் இன்பம் தன்பம், நயம் நட்டம், பாவம் புண்ணியம், பிரக்கிருதி பரமாத்மா ஆகியவற்றின் சிறிதளவு அடையாள மேனும் இருக்கமாட்டாது. இதுவே சமமான சிந்தனை என்பதன் சாராம்சம் ஆகும்.
சமாதி தான் சுவபாவ ~ தான்' என்றதன் இயல்பு நிலை.
15. நாம் அனுசரிக்கக்கூடிய மிகச் சிறந்த சாதனை எது?
எல்லாமே எம்மிடம் தான் உண்டு. ஏலவே எம்மில் பிரசன்னமாக இருக்கும் தெய்வீகத்தின் பிரதி பிம்பத்தை நாம் அறிவதற்குத் தடையாக உள்ள அறியாமையாகிய முட்டுக்கட்டையை அகற்றி விடுவதற்குப் பயிற்சி எடுத்தலே சிறந்த சாதனையாகும்.
எம்மில் இராததொன்றை எந்த ஆசிரியனோ, குருவோ வெளிக்கொணர முடியாதது.
நாறு அடி ஆழத்தில் நிறைந்த நீர் ஊற்றையுடைய ஒரு கிணறை வெட்டியுள்ளோம் என வைத்தக்கொள்வோம். நாங்கள் என்ன செய்ததுள்ளோம்? நாறு அடி ஆழத்திற்கு படையாகக் கிடந்த மண்ணை மட்டும் நாம் அகற்றியுள்ளோம். நீரை அந்த மண் மறைத்திருந்தது. நாம் நீரை உற்பத்திசெய்வுமில்லை. அன்றி வேறெங்கோ இருந்து கொண்டு வரவுமில்லை. நீர் அங்கு இருந்திருக்கிறத.
எனவே, எம்மில் ஏலவே இருக்கும் தெய்வீகத்தைத் தோற்றுவிக்க முடியாது மறைத்து நிற்கும் சிந்தையை அகற்றும் முயற்சியில் தான் எமது சாதனை உளது.

Page 80
சுதந்திரம் என்றால் என்ன? 142
16. சிந்தைக்கும் எண்ணத்திற்கு மிடையேயுள்ள தொடர்பு ug
சிந்தையும் எண்ணமும் ஒன்றை ஒன்று நம்பி இ ஒப்பது. சிந்தை இருக்கும் வரை நாம் பல வகைப்பட்ட எண்ணங்க ருந்து தப்பிவிட முடியாது.
சிந்தை இல்லாவிடில் எண்ணமும் இருக்காது. அதேபோல எண்ணங்கள் இல்லாவிடில் சிந்தையுமிராது.
எண்ணங்களின் தொகுப்பே சிந்தை எனக் கூறலாம். ஒன்று போய்விருமானால், தானாகவே மற்றதும் மறைந்து விரும்.
17. எமது தெய்வீகத்தன்மையை நாம் ஏன் மறந்தோம்?
தெய்வீகம் எம்முள் என்றுமுளது. நாம் தான் அதை மறந்து விட்டோம். நாம் ஏன் மறந்தோம்? பிழையாக எமது உடம்புடன் நாம் எம்மை பூரணமாக ஒருமைப்பாடு கொண்டதனால் தெய்வீகத்தை நாம் மறந்துவிட்டோம்.
18. மனிதனின் மூவித கடமைகள் எவை?
மனிதனுக்கு மூன்று கடமைகள் உண்டு சம்பந்தம்- இனத்தொடர்பு நிர்ப்பந்தம்- கட்டாய சேவை கர்த்தவ்யம் - கடமைப்பாடு
19 சம்பந்தம் என்றால் என்ன?
தன்னிச்சையானதும் விருப்பத்திற்குரியதுமான தொடர்பே சம்பந்தம் ஆகும். உதாரணமாக, ஞாயிறு மாலை நீர் உமத நண்பர்களுக்கு ஒரு தேநீர் விருந்த வழங்க இருந்தீர்.அன்று மாலை நான்கு மணியளவில் கடும் சுரம் உமக்கு ஏற்பட்டது. நீர் எல்லா நண்பர்களுக்கும் விருந்து பிற்போடப்பட்டது என்று அறிவித்தீர். இதுவே சம்பந்தம் என்றது ஆகும்.
20. நிர்ப்பந்தம் என்றால் என்ன?
நிர்ப்பந்தம் என்றால் கட்டாயப்படுத்தல் . உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நாள் உமத தலைவர் உமது காரியாலயத்தைப் பார்வையிட

143
வருகிறார். திடீரென உமக்குச் சுரம் பிடித்துவிட்டது. நீர் என்ன செய்வீர்? நீர் வைத்தியரிடம் விரைந்த, குளிசைகள் பெற்றுக் கொண்டு காரியாலயம் செல்வீர். உமக்குக் காய்ச்சல் ஆனது உபத்திரவத்தைக் கொடுத்தாலும் காரியாலயம் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறீர். இதுவே நிர்ப்பந்தம் ஆகும்.
21. கர்த்தவ்யம். கடமைப்பாரு என்றால் என்ன?
கர்த்தவ்யம் - கடமைப்பாடு. சமூக மரியாதைக்காகவும், பழுக்க வழக்கங்களுக்கமைய நடந்து கொள்வதற்காகவும், சில சந்தர்ப்பங்களில் சில மனிதருக்கு ஏற்புடையதாக இருக்கவும், நீர் உமது நடத்தையைச் சிறிதளவு மாற்றிக் கொள்ள வேண்டிய கடப்பாடுடைய வராக இருக்கிறீர்.
இதவே கடப்பாடு ~கர்த்தவ்யம் ஆகும்.
22. இறைவனை உணரும் பாண்மையில் நான்கு முன்னேற்றப்படி
களாய் இருப்பவை எவை?
இறைவனை உணரும் பான்மையில் நான்கு முன்னேற்றப் படிகளாய் விளங்குவன.
(1) சாலோக்கியம் :- என்றும் இறைவனையே எண்ணிய வாறு ஆத்மிக உலகில் வாழ்தல். அதாவது லெளகீகத்திற்கு மாறாக,
(2) சாமீபம் - இறைவனுக்குச் சமீபத்தில் இருக்கும் நிலை. (3) சாரூபம்-சுவாமியைய்போன்று அவர் உருவில் இருத்தல் (4) சாயுச்சியம் :- இறுதிக் கட்டம். இறைவனேயாதல், அதாவது பூரணமாக எதுவித இருமை நிலையின்றி ஒன்றாகக் கலந்து விடுதல் ஆகும்.
23. உலகில் காணும் வேறுபாடுகளிலிருந்து எம்மை எவ்வாறு
உயர்த்திக் கொள்ளலாம்?
உலகில் காணும் வேறுபாடுகளெல்லாம் சிந்தையின் பிரதி பிம்பங்களே.நாம் இந்த எதிர்ச் செயற்பாடு எதிரொலி, பிரதிபலிப்பு அனைத்தையும் கைவிட்டு விட்டு உண்மையாக இருக்கின்ற இதயத்தைப் பற்றிக்கொண்டால், எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் ஆகியவற்றில் தென்படும் வேறுபாடுகள் மறைந்து போகும்.
எல்லையற்ற ஆத்மாவின் இயல்புபற்றி அறிந்துகொள்வதற்கு பரந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Page 81
சுதந்திரம் என்றால் என்ன? 144
24. கடவுளுக்கு எண்ணங்களும் உணர்வுகளும் உண்டா?
கடவுளுக்கு எதுவித எண்ணங்களும் உணர்வுகளும் இல்லை. அவருக்கு விருப்பு வெறுப்பு இல்லை.
பக்தனுடைய எண்ணங்கள், உணர்வுகள், போக்குகள், செயல்களாய வழிபாடு பிரார்த்தனை என்பவற்றிற்கமைய ஏற்றவாறு அனுசரித்தக் கொள்வதபோலத் தோற்றமளிக்கின்றார். கடவுள் ஒருவர் மேல் கோபமும் இன்னோருவர் மேல் மகிழ்ச்சியும் கொண்டிருப்பதில்லை. நாம் எண்ணிக் கொள்வது போல வேளைக்கு வேளை மாறும் மனோநிலை அவருக்கு இல்லை.
பால், வயது, சாதி, இனம் என்ற பாகுபாட்டில் அவர் ஒருவரை மற்றொருவரிலிருந்த வேறுபடுத்தவதில்லை. இவை அனைத்தம் பிரத்தியட்சமாகத் தோன்றும் உலகத்திற்குரிய பல்வேறுபட்ட வேற்றுமைகள், தெய்வீகத்துடன் இதற்குத் தொடர்பு இல்லை.
25. புலன்களால் நுகரப்பரும் இந்த உலகிலே அவதாரம் செய்தோருக்கு எதிர்ச்செயப்பாரு, எதிரொலி, பிரதிபலிப்பு என்பன உண்டா?
உடம்பை ஏற்றுக்கொண்டு வந்த காரணத்தால் அவதாரம் எடுத்தோருக்கு எதிர்ச் செயற்பாடு, எதிரொலி, பிரதிபலிப்பு ஆகியன இருப்பத போன்று தோற்றும். ஆனால் இவையெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதற்கும், அவர்களைத்திருத்திக் கொள்ள உதவுவதற்குமாகும்.
26. எல்லையற்ற ஆத்மாவின் இயல்பினை அறிவதற்கு நாம்
என்ன செய்ய வேண்ரும்?
எல்லையற்ற ஆத்மாவின் இயல்பினை அறிந்துகொள்ள நாம் பரந்தஎண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்க்க வேண்டும்.
உலகியல் வேற்றுமைகளான ஆண் பெண், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, ஒரு நாட்டு மக்கள் வேற்று நாட்டு மக்கள் என்ற வேறுபாடுகளை கைவிட்டு விட வேண்டும்.
இத்தகைய உலகியல் மாற்றங்களெல்லாம் புலன்களால் நுகரப்படக்கூடிய பொய்யான உலகிற்கு உரிய தன்மை. அவை குறுகிய மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டவை. தெய்வீகத்தடன் எதவித தொடர்பும் அற்றவை .

iறாம் அத்தியாயம் 145
ஆத்மா அல்லது தெய்வீகக் கோட்பாட்டை நாம் சரியாக
கைவிட வேண்டும்.
27. குறுகிய நிலைப்பாட்டிலிருந்து ஆத்மீகத்தை அணுகுவதால்
ஏற்படும் விளைவு யாது?
குறுகிய நிலைப்பாட்டிலிருந்து ஆத்மீகத்தை அணுகினால் வணங்குதல், பஜனைகள் அல்லது பக்திப்பாடல்கள் பாடுவத தியானம் இவைபோன்றவை ஆத்மீகத்திற்குரிய அடையாளங்கள் என நாம் எண்ணுவோம்.
ஆத்மா அல்லது தெய்வீகக் கோட்பாட்டை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் இவையெல்லாம் சித்தக் கோளாறுகள் ஒரு மன நிறைவை மட்டும் கொருக்கக் கூடியவை என்பது விளங்கும்.
28. நாம் அனுசரிக்க வேண்டிய சாதனையின் இயல்பு
எவ்வாறானது?
இறைவா! நீயே என் தாய், தந்தை, தோழன் என்று இறைவனைப் புகழுவதெல்லாம் ஒரு வழுவழுப்புற்ற பேச்சு. கடவுளை நாம் உலகியல், பெளதீக உறவு முறைகளால் எண்ணக் கூடாது.
நான் தான் நீ, நீ தான் நான், நாம் இரண்டல்ல ஒன்று என்று சொல்லிக் கொள்ள வேண்டும். நாமும் நாமும் ஒன்று என்றால் அதில் இருமை காணப்படுகிறது. ஏனெனில் நாம்' என்றது பெளதீக உடம்பினையும் தெய்வீக ஆத்மாவையும் உள்ளடக்கியுள்ளது.
29 என்றும் நாம் ஆற்றவேண்டிய சாதனை யாது?
"நீயே கடவுள், கடவுளே நீ" என்ற உண்மையை உணர்ந்து நீ உன்னை உறுதிப்படுத்திக் கொண்டால் வேறு விதமான ஆத்மீக நடைமுறைகளை அனுசரிக்க வேண்டியதில்லை. நானும் நீயும் ஒன்று என்ற வாக்கிற்கு அமையநீவாழ்ந்துகொள்ளவேண்டும் தலைவனாகிய இறைவனின் ஒருமைப்பாட்டு நிலையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு 'நானே நீ, நீயே நான், நாம் இரண்டல்ல ஒன்று என்பதை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.
இதுவே என்றும் ஆற்றவேண்டிய சாதனை.

Page 82
சுதந்திரம் என்றால் என்ன? 146
30. பகவத் கீதை I - 35 ல் பிரயோகப்பட்டிருக்கும் "சுவதர்"
"பரதர்ம" என்ற பதங்களின் சரியான கருத்து என்ன?
'சுவதர்மம்' என்றால் ஆத்மதர்மம் ஆகும். இத பல வேறுபட்ட சாதியினரால் அனுபவிக்கப்படும் வர்ண தர்மங்கள் கடமைகள் அல்ல. அதபோலவே பரதர்ம என்பது தேக தர்மம் ~ அதாவது உடம்புடன் சம்பந்தப்பட்ட கடமைகள். இக்கருத்தில் தான் நாம் கீதை குறிப்பிட்ட பதங்களைக் கொள்ளல் வேண்டும். 'பரதர்மோபயவஹா' நாம் தேக தர் மத்தைப் பின்பற்றினால் எமது வாழ்வில் பயமே இருக்கும். நாம் ஆத்ம தர்மத்தைப் பின்பற்றினால் எமக்கு எவ்வித பயமும் இருக்காது.
கீதையில் கூறப்பட்ட வாசகங்களின் பொருளை நன்கு உணர்ந்து எமத வாழ்வையும் அவ்விதமே அமைத்தக் கொள்ள வேண்டும்.
31. நாம் எவ்வேளையும் உண்மையில் எம்மை நிலைநிறுத்திக்
கொள்ள வேண்டியது ஏன்?
எவ்வேளையும் உண்மையில் எம்மை நிலைநிறுத்திக் கொண்டால், துயரம் என்பது என்ன என்று எமக்குத் தெரியாமல் இருக்கும். நாம் புகழ்ச்சியாலோ, ஏளனத்தாலோ தண்பத்தாலோ தாக்குப்பட மாட்டோம்.
உண்மையில் தன்னை நிலைநாட்டிக் கொண்ட ஒருவனுக்கு எச்சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியானது ஒரே தன்மையதாய் இருக்கும். ஏனெனில் மகிழ்ச்சியானது ஆத்ம தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எல்லாமே ஆத்மா என்பதை உணர்த்தி நிற்கின்றது.
உண்மையில் எம்மை நிலைநிறுத்திக் கொண்டால், கவலைக்கோ, வியாகடலத்திற்கோ இடமில்லை.
32. நாம் எமதுவார்த்தைகளுக்கு ஏன் மதிப்புக் கொருக்க வேண்ரும்.
"முதற்கண் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். ஒரு சொல்லின் உயிர் நாடிதான் உண்மை என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்" என்று சுவாமி எமக்கு ஆணையிட்டிருக்கின்றார்.
33. சுவாமிகள் யார்?
தெய்வீகத்தின் உருவே சுவாமிகள். சுவாமிகளின் தெய்வீகத்தை நாம் அறிய முயற்சிக்கவேண்டும்.

W
\
பதின்மூன்றாம் அத்தியாயம் 147
ஆதேய - மாற்றமடைவதுஅனைத்தினதம் மாற்ற மில்லாத ஆதாரம் ~ தணையாக விளங்கி நிற்பவர் சுவாமிகள்.
34. நாம் எவ்வாறு சுவாமிகளது கருணையைப் பெறலாம்.?
சுவாமிகளது கட்டளைகளை முழுமனதுடன் மேற்
கொண்டால் அவரது கருணையை நாம் பெறலாம். சுவாமிகளது கட்டளைகள் பூரணமனத்துடன் அனுசரிக்கப்பட்டால் அவரது கருணை தானாகவே எம்மீது பொழியப்படும்.
நாம் அவரது கருணைக்காக விசேடவழிபாடு செய்ய வேண்டிய தில்லை.
எமக்குச் சுவாமிகளது கருணை கிடைக்காவிட்டால் நாம் சுவாமிகளைக் குறைகூறக்கூடாது.சுவாமிகளது உத்தரவுகளை நாம் ஏற்று முறையே நடைமுறைப் படுத்த வில்லையே என்று எம்மையே நாம் கடிந்துகொள்ள வேண்டும்.
炎条

Page 83
பதினான்காம் அத்தியாயம்
அனுட்டித்தலும் விதிகளும். \
1. வெளிப்படையாகத் தோன்றும் இவ்வுலகம் பற்றி அறநூல்கள்
கூறுவன என்ன?
நாம் இருக்கும் இந்த உலகமானது நிலையில்லாதது. பார்க்கும் கண்களும், பார்க்கப்படும் உலகும் இரண்டுமே நிலையற்றன. பார்க்கக்கூடியது, எதுவோ அது அழியக்கூடியது.
"யத் திருஷ்யம் தத் நாஸ்யம்"
சிருஷ்டிக்கப்பட்ட இந்த முழு உலகமுமே காலம் எனும் ஆற்றினாலே அழிக்கப்பட்டு விரும்.
2. செல்வம், பெண்டிர் பிள்ளைகள், சுற்றத்தார் இவர்கள் பற்றி
அற நூல்கள் எமக்குக் கூறுவது யாது?
அற நால்கள் கூறுவதாவன:- 1. இளமை இடையில் தோன்றி இடையில் மறையும். 2. செல்வமானது மின்னல்போன்று நொடிப்பொழுதாயத. 3. வாழ்க்கை எனும் ஆற்றிலே, மனைவி பிள்ளைகள், சுற்றத்தார் எல்லாம் இடையில் வந்து சேர்ந்து இடையிலேயே விலகிவிடுபவர்.
பிறப்பிற்கு முன்னதாக யார் தாய் யார் பிள்ளை? திருமணத்திற்கு முன்னதாக யார் மனைவி? யார் புருஷன்? மனைவி பிள்ளைகள் சுற்றத்தவர்கள் எல்லாம் பொது உணவுச்சாலைக்கு வந்து சேரும் பிரயாணிகள் போன்று கூடுவர். இரவு கழிந்ததும் பிரிந்து போய் விடுவார்கள் - என்று அறநூல்கள் கூறுகின்றன. ஆகவே, இளமை, மனைவி பிள்ளைகள் எல்லாம் தோன்றி மறையும் தன்மை பெற்றவை என்று நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
3. பெளதீகக் கண்களின் எல்லை யாது?
பெளதீகக் கண்களினால் உலகின் புற அமைப்புகளையே காண முடிகின்றது. உள்ளகமாகவுள்ள தெய்வீகத்தைப் பார்க்க முடியாது. "சர்ம
 

பதினான்காம் அத்தியாயம் 149
சக்ஷ” (பெளதிகக் கண்) மட்டுமுள்ள மனிதன் மிருகங்கள் பறவைகளிலும் பார்க்க எவ்விதத்திலும் மேலானவன் அல்லன்.
உடம்பை முழுமையாகவே காணமுடியாத பெளதீகக் கண்கள் நுண்ணிதான சிந்தையைப் பார்க்கமுடியாத, நுண்ணிதான சிந்தையைக் காணமுடியாதவிடத்த, அதனினும் நுண்ணிதான ஆத்மாவை அதனால் எவ்வாறு காணமுடியும்?
பெளதீகக் கண்கள் பிரத்தியட்சமாகக் காணக்கூடிய
உலகின், உலகியல் செயற்பாடுகளையே ஆற்றமுடிகின்றன.
4. மனிதன் ஞானக் கண்களை "ஞானசக்ஷ' வை ஏன் விருத்தி
செய்ய வேண்ரும்?
பெறுமதி வாய்ந்ததும் புனிதமானதுமான மனித வாழ்வின் நிறைவிற்கு ஞானக்கண் - ஞானசக்ஷ ~ ஞான நேத்திரம் மிகவும் அவசியமாகின்றது. ஆத்மஞானம் - தன்னை அறிதலுக்கு மனிதனுக்கு ஞானக்கண் வேண்டும்.
மனிதனாகப் பிறவி எடுப்பது அரிது என அறநூல்கள் கூறியுள்ளன. ஆத்ம ஞானம் இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமமானவன், என்றும் அறநூல்கள் பிரகடனப்படுத்தியுள்ளன.
5. எமது பார்வையை ஞானத்தால் நிரப்பும்படி அறநூல்கள் ஏன்
உற்சாகப்பருத்துகின்றன?
அறநால்கள் எமது கண்களை ஞானத்தால் நிரப்பும்படி உற் சாகப்படுத்து கின்றன. அப்பொழுதுதான் நாம் - சிருஷ்டி ~ அதாவது படைக் கப்பட்டது, மேலான முழுமையாகிய பிரம்மத்தால் நிரப்பட்டிருப்பதைக் 35s,6006) JD.
எல்லாம் பிரம்மன் மயம் . சர்வம் பிரம்மன் என்பதில் அசையாத நம்பிக்கையை நாம் வைத்திருந்தால் தான் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் பிரம்மனாகக் காணமுடியும்.
6. நாம் காணக்கூடியதாய் இருக்கும் இவ்வுலகிலுள்ள
பொருள்களின் குணாதிசயம் யாது? -
நாம் காணக்கூடியதாயுள்ள உலகின் பொருள்களது குணாதிசயம் யாதெனில் அவை அனைத்தும் மாற்றத்திற்குட்டவையாம்.

Page 84
அனுட்டித்தலும் விதிகளும். 150
7. மாறிக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் அடித்தளம் யாது?
மாறிக்கொண்டிருக்கும் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் அடித் தளமாக விளங்குவது மாற்றமில்லாத தெய்வீகக் கோட்பாடு - அதாவது பிரம்மம்.
8. பிரபஞ்சம் அனைத்தினதும் இரகசியத்தை நாம் எவ்வாறு
அறிவது?
பிரம்மனின் இயல்புகளை அறிந்தால் தான் நாம் பிரபஞ்சத்தின் இரகசியத்தை அறியலாம்.
9. பிரபஞ்சத்தின் உண்மையான நிலையை எம்மால் அறிந்து
கொள்ள இயலாமைக்குக் காரணம் என்ன?
பிரபஞ்சத்தின் உண்மையான நிலையை எம்மால் அறிந்துகொள்ள முடியாமைக்கு காரணம் சிந்தையாகும். சிந்தையின் குண இயல்பு பிரவிருத்தி அதாவது புறவயத்தன்மையாகும்.
10. மனிதன் எக்காரியத்திற்காகப் பிறந்தவன்?
மனிதன் கடவுளை உணருவதற்கென்றே பிறவிஎடுத்தவன். கடவுளை உணருதலே சமயமாகும்.
11. மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அவமாக்குகிறான்?
புறப்பொருள்களாய வீடு, நிலம், வாகனம், செல்வம் மற்றும் உடமைகளைச் சேர்த்துக் கொள்வதற்காக மனிதன் இரவு பகலாக உழைத்து தன் வாழ்நாளை அழிக் கிறான். மனிதனுக்கு இவையல்ல உண்மையான பந்தம்.
இத்தகைய பயனற்றவற்றினைப் பெறுதற்கா மனிதன் பிறந்தான்? இல்லை. இல்லை. இல்லை. அவனது வாழ்வில் மிக முக்கியமான கடமை கடவுளை உணர்தலாகும். மனிதன் கடவுளை அறிய வேண்டும் உணர வேண்டும், பார்க்க வேண்டும் அவருடன் பேசவேண்டும்.
அறிந்து கொள்ளல் என்பது இதுதான். இதுதான் சமயம் ,
ஒருவனுக்கு எல்லாம் தெரிந்தும் கடவுளைத் தெரியாவிடில் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை.

பதினான்காம் அத்தியாயம் 151
12. சகல ஜீவராசிகளுக்கும் இறைவனே வித்தாக உள்ளான்
என்று பகவத்கீதை (பt பாடம் 10 ) கூறும் வாக்கியத்தை விபரிக்க ?
கீதையின் விளக்கப்படி இந்தப் பெரிய பிரபஞ்சமாகியது உருவாகக் காரணமாக இருந்த விதை கடவுளாகும். ஒவ்வொரு நாடும் இம்மரத்தின் கிளையாகும்.ஒவ்வொரு கிளையிலும் ஏராளம் பழங்கள் அதாவது பல்விதமான வாழும் பிராணிகள் உண்டு . ஒவ்வொன்றும் தன்னுள் தெய்வீகமெனும் விதையைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா என்ற உருவிலே கடவுள் இருக்கிறார் என்பதே இதன் பொருள்.
முழுமையான பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் இந்த நுண்ணிதான
உண்மையை கண்டு உணர்வதற்கு இன்றைய மாணவர்கள் எதுவித முயற்சியும் எடுக்கிறார்களில்லை.
13. மாணவர்களுக்கு வாழ்க்கையின் இலட்சியம் எதுவாக இருக்க
வேண்ரும்?
முழுமையான பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் நுண்ணிதான உண்மையைக் கண்டு உணர்தலே மாணவரது இலட்சியமாக இருக்க வேண்டும். வாழ்வு நடத்த சம்பாதிப்பதிலும் பார்க்க இந்த இலட்சியம் மிகவும் பிரதானமானது. இந்த இலட்சியத்தையே மாணவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
14. வேதங்களின்படி இறவாமையை எப்படி ஈட்டிக்கொள்ளலாம்?
வேதத்தின் படி (கைவல் யோப நிடதம்) அது கூறும் மிக முக்கியமான மந்திரத்தைப் பார்த்தால் இறவாமையை தியாகத்தின் மூலமே பெறலாம் என்பதாகும்.
செல்வத்தாலோ, பிள்ளைகளினாலோ நல்ல செயல்களினாலோ இறவாமையைப் பெற்றுக்கொள்ள முடியாது.
15. தியாகம்' எனும் பதம் உணர்த்துவது எதனை?
மனைவி மக்கள், வீடு,பொருள், பண்டம், என்பவற்றை விலத்திவிடுவது தியாகமாகாது.
நீதான் உன் உடம்பு என்ற தப்பான எண்ணத்தைக் கைவிட்டு நீதான் ஆத்மா என்ற உண்மை உணர்தலே தியாகமாகும்.
அப்பொழுதான் நீ சுதந்திரத்தைப் பெறுவாய் - (விடுதலை) மோட்சம்.

Page 85
அனுட்டித்தலும் விதிகளும். 152
16. பந்தம் என்னும் சொல் எதனைக் குறிக்கிறது?
எம்மை எம் உடம்புடன் பூரணமாக ஒருமைப் பாடு கொண்டி ருக்கும் மாய உணர்வு பந்தம் ஆகும். உடம்பின் உணர்விலிருந்து விடுபடுதல்தேகவிரக்தி - பந்த பாச தயரங்களிலிருந்தும் எம்மை விடு விக்கிறது
17 தேக பிராந்தி (உடம்பு நினைவிலிருந்து) யிலிருந்து எவ்வாறு
விருபடலாம்?
தேக பிராந்தியிலிருந்து விடுதலை பெற நாம் நம்பிக்கையுடன் வற்புறுத்த வேண்டியது யாதெனில் நான் உடம்பு அல்ல. உடம்பு, புலன்கள், அறிவு ஆகியவை எல்லாம் உபாதிகள்' என்பதாகும்.
நாம் அழுக்கு உடையை களைந்து எறிவது போல் உடம்பு உணர்வையும் களைந்து விடவேண்டும்.
18. மோட்சத்தின் ஆனந்த நிலையை நல்குவது எது?
கடவுள் மேல் பற்று வைத்தல், தெய்வஜியூ சக்தி - மோட்ச இன்பத்தை நல்குகிறது. வீடுபேறு - இறைவனுடன் ஒன்றாதலையும் நல்கும் .
19. உடம்பு அல்லது சிந்தையால் ஆனந்தத்தைப் பெறலாமா?
இல்லை. உடம்பாலும் சிந்தையாலும் பெறும் ஆனந்தம் கணப் பொழுது நிலைத்திருப்பது. இத்தகைய தோன்றிமறையும் அற்பத்தனமான இன்பங்களைப் பெறுவதற்காக நாம் பிறக்கவில்லை.
நாம் இந்த மானுட உடம்பை எடுத்தது என்றும் நிலைபேறுடைய வீடுபேற்றைப் பெற்று ஆத்மானந்தத்தை அனுபவிப்பதற்கேயாகும்.
20. எமது உண்மையான இயல்பை நாம் எவ்வாறு கண்டறியலாம்?
றாக பற்றினையும், துவேச வெறுப்பையும் நாம் களைந்து விட்டால் எமது உண்மையான இயல்பை நாம் கண்டு கொள்ளலாம்.
பற்றும் வெறுப்பும் எம்மிடமுள்ள ஆனந்தத்தை மறைக்கும் தடித்த ஆடைகளாகும்.

பதினான்காம் அத்தியாயம் 153
21. எமது உண்மை இயல்பாக இருக்கும் ஆனந்தத்தை எம்மால் அனுபவிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
எமது உண்மையியல்பாய ஆனந்தத்தை எம்மால் அனுபவிக்க முடியாமைக்குக் காரணம் எமத விருப்பு வெறுப்புக்கள், நான் எனது எனும் உணர்வுகள்,தயக்கம், ஜயப்பாடு, இன்பம், துன்பம் ஆகியன ஆனந்தத்தைத் திரையிட்டு மறைப்பதாலாகும்.
அகங்காரத்தினால் தான் நாம் நாமே செய்பவன்- கர்த்திரித்வா என்றும், நாமே அனுபவிப்பவன் - போக்ரித்வா~ என்றும் தவறாக எண்ணுகிறோம். எம்முள் இருக்கும் ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும். காரணம் எம்மால் இவற்றை கைவிடமுடி மையாகும்
(1) எமது அகங்காரம். உடம்புடன் நாம் ஏற்படுத்திய ц, Ј601
ஒருமைப்பாட்டுணர்வு, (2) செய்பவன், அனுபவிப்பவன் எனும் எமது உணர்வு
(கர்த்திறித்வா - போக்கிருத்வா) (3) நான் எனது என்ற தவறான எண்ணம் (4) எமது விருப்பு வெறுப்புக்கள். றாக, துவேஷ.
நாமே ஆனந்தத்தின் உருவாக விளங்கியும் நாம் புறத்தே அதனைத் தேடி அலைகிறோம்.ஆனந்தத்திற்கு நாமே உற்பத்தியிடம் என்ற மேலான உண்மையைப் பற்றிய அறியாமையே எம்மைப் பல சிறு சிறு ஆசைகயையும் பிரயோசன மில்லாத புலனின்பங்களையும் இவ்வுலகில் தேட வைக்கின்றது.
22. எமக்குரித்தாய தெய்வீகத்தினதும் ஆனந்தத்தினதும்
உண்மைத்தன்மையை நாம் எவ்வாறு அனுபவிக்கலாம்.?
எமதாகிய தெய்வீகத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்கு, வேண்டிய முயற்சி எடுக்க வேண்டும்.
23. மனிதனின் இயல்பும் உருவும் எவ்வாறானது?
மனிதனின் இயல்பும் உருவும் (1) நித்தியானந்தம்- என்றுமுள ஆனந்தம் (2) பிரம்மானந்தம் -எல்லையற்ற ஆனந்தம் (3) அத்வைதானந்தம்- இருமை இல்லா ஆனந்தம்

Page 86
அனுட்டித்தலும் விதிகளும், 154
24. மேலான, எல்லையற்ற தெய்வீக ஆனந்தத்தைத் தேடி,
உணர்ந்து அனுபவிக்க மனிதனால் ஏன் முடியவில்லை?
மேலான, எல்லையற்ற தெய்வீக ஆனந்தத்தை உணர்ந்து அனுபவிக்க மனிதனுக்கு முடியாமல் இருப்பது அவன் நொடிப் பொழுது நிலைக்கும் புலனுகர்வு, உலகியல் இன்பங்களால் கவரப்பட்டு இருப்ப தேயாகும்.
உலகியற் பொருட்களால் பெறப்படும் ஆனந்தம் தன்பியல் ரேகை படர்ந்துள்ளதாகும். ஆத்மானந்தமானது தன்பத்தால் எவ்விதத்திலும் தாக்குப்படாதத.
25. முனிவர்கள் ஆத்மாவை எவ்வாறு விபரித்துள்ளார்கள்?
ஆனந்தம் நிலைபேறான இன்பம், மோலான இன்பம், முழுமையான இன்பம், அறிவியல் இன்பம், இருமை வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட இன்பம், தாய இன்பம், சிந்ததைக்கும் அப்பாற்பட்ட இன்பம், முக்குணங் களையும் கடந்த இன்பம், என்று முனிவர்கள் ஆத்மாவை வருணித்தள்ளார்கள்.
26. மனிதன் தனது வாழ்வில் ஆற்ற வேண்டியமிக முக்கிய
ШDПбоTфI 6Т95/?
தண்பங்கள், கஷ்டங்கள், சோதனைகள், கிலேசங்கள் ஆகியவற்றைக் கொண்டுவரும் உலகியல் இன்பங்களுக்குப் பின்னால் மடைத்தனமாக ஓடுவதிலும் பார்க்க இலகுவாக தன்னுள்ளே கிடைக்கப்பெறும் பெறுமானமிக்க பொக்கிஷமாகிய இன்பத்தைத் தேடிக்கொள்வதே மனிதன் தனது வாழ்வில் ஆற்ற வேண்டிய முக்கியமான செயலாகும்.
27. ஆத்ம ஆனந்தம் எதனால் பாதுகாக்கப்பட்டுள்ளது?
அகங்காரம் எனும் நச்சுப்பாம்பினால் ஆத்மஆனந்தம் பாத காக்கப்பட்டிருக்கிறத.
28. அகங்காரத்தின் மூலகாரணம் என்ன?
தன்னை உடம்புடன் தவறுதலாகப் பூரண ஒருமைப்பாடு
கொள்ளுதல் ஆகும். தேக பிராந்தி . இதுவே அகங்காரத்தின் மூல காரணமாயுள்ளது.

பதினான்காம் அத்தியாயம் 155
29. எம்முடன் இருகாரு வரைகூட வரமாட்டாத எமது விருப்பி
ற்குரியவை யாவை?
செல்வம், நிலைப்பாடு, அதிகாரம் ஆகியவை. இவை தோன்றி மறையும் தன்மை கொண்டவை. இவை எம்முடன் இடுகாடு வரை கூட வர முடியாதவை.
30. மரணத்தின் பின்பும் எம்முடன் தொடர்வது எது?
எமது வாழ்நாளில் நாம் செய்த நன்மை தீமைகளே எம்முடன் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வருபவை.
31. மீறமுடியாத கண்மக் கோட்பாரு என்பது எது?
நீ விதைத்ததை நீ அறுப்பாய் இதுவே மீற முடியாத கன்மக் கோட்பாடு.
32. நாம் செயற்பருவதற்கு முன் யாது செய்தல் வேண்ரும்?
நாம் செயற்படுவதற்குமுன் எம்மை வினாவிக்கொள்ள வேண்டும். நான் தெய்வீக ஆத்மாவின் உரு. இத்தகைய கீழ்தரமான வெறுத்தற்குரிய செயலில் நான் ஈடுபடலாமா?
33. இவ்விதமான வினாவை வினாவுவதனால் வரும் பேறு யாது?
இவ்வாறான வினாவை எம்மிடம் நாம் வினாவினால் தன்னடக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவற்றை நடைமுறைப் படுத்தலாம். தீமையிலிருந்து நாம் எம்மை விலத்திக் கொள்ளலாம். ஆத்மாவிற்கு அருகே சிறிது சிறிதாக அண்மிக்கலாம்.
34. எமது திறன்களையும் வளங்களையும் நாம் எவ்வாறு
பிரயோகிக்க வேண்ரும்?
நாம் எமது திறன்களையும் வளங்களையும் சுய விருப்பினை அடைவதற்கு, வஞ்சகமாகவும், தீய வழியிலும் இலகுவாகப் பணம் சம்பாதிக்கும் காரியங்களில் ஈடுபடுத்தாது, உலக நன்மைக் காகவே பயன்படுத்துதல் வேண்டும்.

Page 87
அனுட்டித்தலும் விதிகளும். 156
35. சுபாஸ் சந்திரபோஸினுடைய உதாரணத்தை எவ்வாறு
மாணவர்கள் பின்பற்றவேண்ரும்?
மற்றவர்களுடைய நன்மைக்காக தமது சுய அபிலாசை களை தியாகம் செய்வதன் மூலம், சுபாஸ் சந்திரபோஸின் உதாரணத்தை மேற்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் பரமார்த்த ~ வாழ்வின் மேலான இலட்சியத்தை அடைவார்கள்.
36. அறநூல்கள் எதற்காக எழுந்தன?
பகவத் கீதை, பைபிள், குரான், கிராந்சாகிப் ஆகிய அறநால்கள் பாராயணத்திற்காக - (உரத்துப் படிப் பதற்காக) மட்டும் எழுந்தவை அல்ல. அவை ஆசரண" அதாவது ஒழுகுவதற்கு நடைமுறைப்படுத்த என்றே எழுந்தவையாகும்.
பகவத்கீதையிலுள்ள 700 பாடல்களையும் மனனஞ் செய்து கொள்வதம், மிகவும் கற்றறிந்த விளக்கத்தைக் கொடுப்பதவும் பக்தியின் சின்னமாகாது. அது இடாம்பீகம் அத்தாட்சியேயாம்.
37. உலகிற்கு இன்று தேவைப்படுவது என்ன?
இன்று உலகத்திற்குத் தேவைப்படுவது ஆச்சார மாணவாளில் ~ செயல் படக்கூடியவர்களையாகும். அத அன்றி "ஆகாரமானவாஸ் மனித உருவெடுத்த சொல்லாட்சியாளரை அல்ல.
38. மாணவர்கள் பெற முயல வேண்டிய மிக உயர்ந்த பட்டம் யாது?
மாணவர்கள் பெற முயலவேண்டிய மிக உயர்ந்த பட்டம் 'அமிர்த புத்திர ~ இறவாமை பெற்ற பிள்ளைகள் என்பதாம்.
இதைவிட மேலான பட்டம் வேறு இல்லை.
39. மாணவர்கள் விருத்தியாக்கிக் கொள்ளவேண்டியநற்பண்புகள்
UITT6006).?
மாணவர்கள் விருத்திசெய்ய வேண்டிய நற்பண்புகள்; (1) தேசாபிமானம் ;~ நாட்டுப் பற்று (2) தெய்வாபிமானம் :- கடவுள் மேல் அன்பு (3) தர்மாபிமானம் ;~ தர்மத்தின் மேல் அன்பு
 

பதினான்காம் அத்தியாயம் 157
40. சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
சத்தியமும் தர்மமும் பிரிக்கமுடியாதவை. சத்தியத்திற்கு மேலான தர்மமுமில்லை. தர்மத்திற்கு மேலான சத்தியமுமில்லை. மாணவர்கள் ஒரு சிறிதளவாவது அவற்றை அனுசரித்துக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும். அவ்வாறு அனுசரித்த, சத்தியத்தினதம் தர்மத்தினதம் நயப்பாட்டை சமூக ரீதியாகப் பரப்பவேண்டும்.
41. நாம் மேற்கொள்ளும் எதுவித செயற்பாட்டினதும் இலட்சியம்
எதுவாக இருக்க வேண்ரும்.?
உலகியல் ரீதியினாலென்ன, ஆத்மீக ரீதியினாலென்ன மேற்கொள்ளும் எந்தச் செயற்பாட்டின் இலட்சிய எல்லையும் ஆனந்தமேயாக இருக்கவேண்டும்.எல்லா மதங்களது இலட்சிய எல்லையும் ஆனந்தமேயாகும்.
42. மாணவர்கள் தமது கல்வியுடன் எதனை விருத்தி செய்ய
வேண்ரும்?
மாணவர்கள் கல்வியுடன் சமசிந்தனைப்பாட்டையும் பிரபஞ்ச ரீதியான பரந்த அன்பையும் விருத்திசெய்ய வேண்டும்.
43. மாணவர்கள் ஏன் சம சிந்தனையும் பிரபஞ் சரீதியான பரந்த
அன்பையும் வளர்க்க வேண்ரும்?
சம சிந்தனையும் பிரபஞ்சரீதியான அன்பையும் விருத்தி செய்தால்மாணவர்கள் தாம் பலவாகக் காணப்படுவதன் அடிப்படை ஒரு மையை அனுபவிக்கலாம்.
<صN
警

Page 88
பதினைந்தாம் அத்தியாயம்
மனிதனின் ஏற்றவழி
1. பிரபஞ்சத்திலே நாம் காணும் அழகுப் பொருள்களெல்லாம்
எமக்கு எதனை ஞாபகப்பருத்துகின்றன?
பிரபஞ்சத்தில் நாம் காணும் அழகுப் பொருள்களெல்லாம், எல்லா அழகிற்கும் ஊற்றாக இருக்கும் தெய்வீகத் தலைவனை ஞாபகப்படுத்து கின்றன.
இறைவனின் பெருமை, பேரொளி, மாட்சிமை அனைத்தையும் வானளாவி நிற்கும் மலையின் உச்சியில் காணலாம்.
இறைவனின் பெருந்தன்மை மிக்க அமைதி, மேலான நிம்மதியை தொலைவிலிருக்கும் காடுகளிலும், பரந்த பாலையிலும் காணலாம்.
இறைவனது பெருமைமிக்க காந்தியையும் அழகிய பிரகாசத்தையும் வானத்த சூரியன், சந்திரன் எண்ணற்ற நட்சத்திர மண்டலத்தில் காணலாம்.
பூமியை அழகாக்கும் நகரிலும், பட்டினத்திலும் கிராமத்திலும் வாழ்கின்ற மக்களிடையே அவனது அன்பை, சிருஷ்டியைக் காணலாம்.
2. உபநிடதங்கள் கடவுளை எவ்வாறு வருணிக்கின்றன. ?
உபநிடதங்கள் கடவுளை - சத்தியம் - சிவம் - சுந்தரம் . உண்மை . நன்மை - அழகு என வருணிக்கின்றன.
3. மனித இனத்திற்கு அணிகலம் யாது?
மனித இனத்திற்கு அணிகலம் மாணவத்வம் (மனித இயல்புகள், தன்மைகள்) மனித சமுதாயத்திற்கு மாணவத்வமீ அத்தியாவசியமானதாகும். வாழ்வில் ஒருவன் எத்தகையோனாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமாகத் தேவைப்படுவது, மனித குணங்களை நேயங்களை. விருத்தியாக்குதலாகும்.
சமூக விருத்தி, தேச விருத்தி, இனவிருத்தி எல்லாமே மனிதவிருத்தி (அதாவது மாணவத்வம்) -க்கு சமமாகவே யுள்ளது. மனிதப் பண்புகள் இழந்து போனால் சமூகத்தின், நாட்டின், இனத்தின் கெளரவமும் இல்லாமற் போய் விடும்.

பதினைந்தாம் அத்தியாயம் 159
4. மனித இனத்தின் கெளரவம் எதில் தங்கியுள்ளது?
மனித இனத்தின் கெளரவம் அதன் நற்குண நல்லொழுக்கத்தில் தங்கியுள்ளது.
5. இன்றைய மாணவர்கள் விருத்தி செய்ய வேண்டிய குண
இயல்புகள் எவை?
மனித மேம்பாடுகளைப் பேணிக்காப்பது இன்றைய மாணவருக்கு முக்கிய கடமையாகும்.
б. எத்தகைய சூழலிலே மனித மேம்பாருகள் விருத்தியாகும்?
மனித மேம்பாடுகளாகிய நற்குண நல்லொழுக்கப் பண்பாடுகள் ஆத்மீகச் சூழ்நிலையில் மட்டும்தான் விருத்தியடையும்.
7. மனிதனுக்கு நற்குண நல்லொழுக்கப் பண்பாட்டின்
அவசியத்தைக் கூறுக?
நல்லொழுக்கப் பண்பாடென்பது குண இயல்பினதும் நடத்தையினதும் நிறைவாகும் ~ நல்லொழுக்கம் மனிதனை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்திவிடுகிறத.
நல்லொழுக்கமும் நேர்மையுமே இறைவனது உண்மையான நிலையான கோயில்களாகும். இன்று நாட்டிற்கும் உலகிற்கும் மிகவும் அவசியமாக வேண்டப்படுவது நல்லொழுக்கமே. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் நல்லொழுக்கத்தை அனுசரிப்பது மிகவும் வேண்டற்பால தொன்றாகும்.
8. நல்லொழுக்கம் எவ்வாறு பெறப்பருகின்றது?
புலன்களைக் கட்டுப்பருத்துவதன் மூலம் நல்லொழுக் கத்தைப் பெறலாம். ஒருவனது சொல்லுக்கும் செயலுக்குமிடையே இசைவு இருந்தால் தான் வாழ்வில் பெரும் பெரும் காரியங்களில் வெற்றியடைய முடியும்.
இன்றைய சமுதாயத்தில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே எவ்வித இசைபாடும் இல்லை.

Page 89
மனிதனின் ஏற்றவழி 160
9. தான் போதிப்பதை அனுஷ்டிப்பவனை எவ்வாறு
அழைக்கலாம்?
ஒருவன் தான் போதிப்பதை அனுசரித்தானானால் அவன் சாதாரண மனிதன் அல்ல. அவன் மகாத்மா. பெரிய மனிதன்.
10. ஒன்றைச் சொல்லி வேறொன்றைச் செய்பனை எவ்வாறு
அழைக்கலாம்?
சொல்வதொன்று செய்வதொன்றாக இருப்பானானால் அவன் ஒரு மிருகம் மட்டுமே ~ மனிதன் அல்லன்.
11. சத்தியம் என்றால் என்ன?
சொல்லுக்கும்செயலுக்கும்இடையே இருக்கும்இசைவு சத்தியம்.
12. ரிதம்' என்றால் என்ன?
ஒருவனத சிந்தை, சொல், செயல் இவற்றிடையே இருக்கும் இசைவு ரிதம் ஆகும்.
13. சம்யாமா' என்றால் என்ன?
புலனடக்கம் தன்னடக்கம் இதுவே சம்யாமா ஆகும். மனிதனுக்கு மட்டுமே சம்யாமா இயலுமாக இருக்கிறது.
A o J O 14. 5шошо втотшgи бтотбот?
புலனடக்கத்தை தமம்' எண்பர்.
15. தமமைப் பெற்று விட்ட ஒருவனை எவ்வாறு அழைக்கலாம்?
தமமைப் பெற்றவனை தான்தா' என்பர்.
16. இவ்வுலகிலே ஆனந்தம் அல்லது இன்பம் கிடைப்பதரிதாய்
இருப்பது ஏன்?
தன்னடக்கத்தை சம்யாமா'வை மக்கள் கடைப்பிடிக்காமையால் இவ்வுலகில் ஆனந்தம், இன்பம் கிடைப்பதரிதாயுளத.

பதினைந்தாம் அத்தியாயம் 161
வேதாந்தத்தை கடைப்பிடிப்பதம் இழிநிலையில் உள்ளது. இன்று பேச்சு அளவிலும் பகட்டாகவுமே வேதாந்தம் பதக்கப்பட்டு இருக்கிறது.
17. ஒவ்வொரு மாணவனும் எவ்வாறாக வேண்ரும்?
ஒவ்வொரு மாணவனும் ஒரு தான்தா' ஆகவேண்டும். அதாவது புலனடக்கத்தை - தமனைப் பெற்றவனாக இருக்கவேண்டும்.
18. இன்றைய மாணவரின் குறைபாடுகள் யாவை?
இன்றைய மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கு முன்னமே ஆணவத்தாலும் பெருமையாலும் ஆடம்பரத்தாலும் நிறைவுற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடு, கீழ்ப்படிதல் என்பன வற்றின் தேவையைப் பற்றி அறியாது இருக்கிறார்கள். மூத்தோருடன் எவ்வாறு பேசவேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் மாணவர்களுக்குத் தெரியாது. இன்றைய இளைஞர்கள் பயனற்ற கதை கதைக்கப் பிரியமாயுள்ளனர். நல்ல, மென்மையான சொற்கள் அவர்களுக்கு ஒத்தவராதிருக்கின்றத.
ஆத்மீகம் என்றால் அவர்களுக்கு கேலிக்கிடமாயுளது. கல்வியின் நோக்கத்தைக்கூட அவர்களால் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறத.
கல்வியானது வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவதற்கு உதவி செய்வதேயாம் என்ற கருத்தை அவர்கள் மறந்தவிடக் கூடாது.
19. இன்றைய மாணவர்களில் குறைபாருகள் ஏற்படக் காரணம்
UII5?
பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்து, அவர்களுக்குக் காட்டாமையே இன்றைய மாணவர்கள் பிறழ்வதற்குக் காரணமாகும்.
20. மாணவர்கள் கண்டிப்பாக நடைமுறைப்பருத்த வேண்டியது
ШПć5І?
மாணவர் தமது கடமையைச் செய்யும் போது நல்லொழுக்கம், நேர்மை, ஆகிய நற்பண்புகளை மிகவும் கண்டிப்பாக

Page 90
மனிதனின் ஏற்றவழி 162
நடைமுறைப்படுத்த வேண்டும். தீயபழக்கங்களான ஊழல், லஞ்சம்,
ஏமாற்றுதல் ஆகியதில் ஈடுபடக்கூடாது.
நன்மையும் தீமையும் பணத்தைப் பிரயோகிக்கும் முறையில்
தங்கியுள்ளதென்பதை மாணவர் ஞாபகத்தில் வைத்திருத்தல் வேண்டும்.
21. நாம் கற்கும் அறிவையும் ஈட்ரும் செல்வத்தையும் எவ்வாறு
பயன் பருத்த வேண்ரும்?
நாம் பெறும் அறிவும் பணமும் சமூக நலனுக்குச் செலவு செய்ய வேண்டும். அல்லாவிடில் அது எமது காலடியில் இருக்கும் தாசிபோல் பெறுமதியற்றதாகிவிடும்.
எமது கல்விக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் சமூகம் எமக்கு ஆற்றிய பங்கிற்குப்பிரதியுபகாரமாக சமூகத்திற்கு நாம் நன்றிசெலுத்த வேண்டும். இதுதான் உண்மையான சேவை ஆகும்.
22. வாழ்க்கையின் இலட்சியமாக இன்று தோற்றப்பருவது எது?
இன்றைய இலட்சிய வாழ்வில் சம்பாதிப்பதும் திரட்டி வைப்பதுமே குறிக்கோளாக காணப்படுகிறது.
இக்காலத்த மாணவர்களிடையே தியாக உணர்வு இல்லாமை மிக வெளிப்படையாகத் தெரிகிறத.
23. நாம் எதனைத்தியாகம் பண்ண வேண்ரும்?
நாம் பணத்தை மட்டுமல்ல தீய பழக்கங்களையும் தியாகம் செய்து விட வேண்டும்.
தீய பழக்கங்களைத் தியாகம் செய்து விடல்தான் உண்மையான தியாகம், அல்லது துறவு ஆகும். தீய மனோபாவத்தை விட்டு விடுதல் மட்டுமே எமது மனித தோற்றத்தை முற்றாக மலரச் செய்வதற்கு வழி வகுக்கும்.
24. மனிதனின் மிகப் பெரிய கைங்கரியம் யாது?
உண்மையான மனித ஜீவியாக வாழ்தலே மனிதனின் மிகப் பெரிய கைங்கரியமாகும்.

பதினைந்தாம் அத்தியாயம் 163
25. மனிதனினுள்ள மனிதத்தன்மைகள் எவ்வாறு நசுக்கப்பரு
கிறன?
மனிதனிடத்தே இருக்கும் மனிதத்தன்மையை அரிஷ்டவர்க - ஆறு உள்ளார்ந்த விரோதிகள் :-
காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்ய அதாவது அவா, கோபம், பேராசை, மயக்கம், பெருமை, பொறாமை ஆகியவை முற்றாக நசுக்கி ஒழிக்கின்றன.
26. மனிதன் தனது பிரகாசத்தை சமூகத்திற்கு எவ்வறு காட்டிக்
கொள்ளலாம்?
மனிதன் தனது தீய பதினாறு குணங்களையும் விட்டு ஒழிந்த பின்புதான் சமுதாயத்திற்குத் தன் பிரகாசத்தைக் காட்டலாம்.
27 மனிதனின் பதினாறு தீய குணங்கள் எவை?
மனிதனின் பதினாறு தீய குணங்கள். 1. அரிஷடவர்க ஆகிய ஆறு உள்ளார்ந்த விரோதிகள் 2. எட்டுவகை பெருமைகள். 3. இராஜச தாமச குணங்கள். அத்துடன் மனிதன் தான் செய்பவன், தானே அனுப விப்பவன் கர்திரித்வ போக்திரித்வ என்பதைக் கைவிட வேண்டும்.
28. எப்போது நாம் இறைவனின் அருளும், எமக்குத் தேவைப்பரும்
உதவியும் கிடைக்கப் பெறுவோம்?
1. நல்ல காரியங்களில் ஈடுபடுதல்
2. செய்காரியங்களை இறைவனுக்கே அர்ப்பணித் துவிடுதல். இவ்வாறு இருப்பின் இறையருளும் தேவைப்படும் உதவியும் கிடைக்கும்.
29. புலவரும், இறைஅடியாருமாகிய பொத்தன்னா தான் தெலுங்கு
மொழியில் எழுதிய பகவந்தத்தை யாருக்கு சமர்ப்பித்தார்?
"பகவான் இராமரே இதனை எழுதியவர். தான் இராமபிரானுடைய கரங்களில் ஒருசாதாரண கருவியே" எனக் கூறி அதனை அவருக்கே அர்ப்பணஞ் செய்தார்.

Page 91
மனிதனின் ஏற்றவழி 164
30. பொத்தன்னாவின் சமர்ப்பணச் செய்யுளின் ஆத்மீக தத்துவம்
என்ன?
பொத்தன்னாவின் சமர்ப்பணச் செய்யுளின் ஆத்மீக தத்துவமானத யாதெனில், அது மகாவாக்கியத்தை மீண்டும் ஞாபகப்படுத்துவதாய் இருப்பத.
தத்துவம் அசி ~ அத நீ ஆகிறாய்.
தத் அல்லது அத தெய்வீகமான நீ ராமபிரானைக் குறிக்கும் தவம் அல்லது நீ புலவரும் அடியானுமாகிய பொத்தன்னாவாகும். அசி அல்லது ஆகிறாய், அவர் இயற்றிய பகவந்தம். இன்னொரு வழியில் கூறப்போனால், பகவான், பக்தன், பகவந்தம் - (கடவுள், அடியான், நால்) எல்லாம் ஒன்று என்பதாகும்
31. பகவந்தம்' என்பதன் ஆத்மீக அர்த்தம் என்ன?
பகவந்தம் என்றால் ப~க-வ-த-மு; ப-பக்தி; க~ஞானம் வ-வைராக்கியம் - தறவு; த-தத்துவம், மு~முக்தி~ வீடுபேறு. ஐந்த எழுத்துக்களும் இப்படியும் கருத்தப்படும்.
(1) ஐந்து ஆதாரப் பொருட்கள் (2) ஐந்து புலன்கள் (3) ஐந்து கோசங்கள் ~ பஞ்சகோச (4) ஐந்து பிராணன்கள் - உயிர் மூச்சுகள்
32. அமைதி அல்லது இன்பம் ஆனந்தத்தைமனிதனால்அனுபவிக்க
இயலாமைக்குக் காரணம் என்ன?
மனிதன் இன்பத்தை(பேரின்பத்தை) அனுபவிக்க முடியாமைக்குக் காரணம் அவனது அகவயப்பட்ட சுயசிந்தனை (தன்னை மையமாகக் கொண்ட) ஆகும். இன்று மனிதன் தன்னைப் பற்றி தனது குடும்பம் பற்றி மட்டும் சிந்திக்கின்றான். சமூகத்தை புறக்கணிக்கின்றான்.
33. அடியார்களில் பெரும்பாலும் இருப்பதென்ன?
தாம் அடியார்கள் எனக் கூறிக்கொண்டிருப்பவர்களில் குறுகிய சுயநலத்தன்மை இருக்கிறது. அடியார் தன்னையும் தனத வேலையையும் பற்றியே முதலில் எண்ணுவர். இறைவனும் அவரது வேலையையும் பற்றி அதன் பின்பே எண்ணுவர்.

பதினைந்தாம் அத்தியாயம் 165
34. மாணவர் விருத்தியாக்க வேண்டியது எதனை?
இன்றைய மாணவர்கள் நல்ல குணங்களை விருத்தி செய்தல்
வேண்டும். இத இல்லாவிடில் அவர்களுக்கும் அமைதி கிடைக்கமாட்டாது, சமூகத்திற்கும் கிடைக்காதது.
35. பிரம்மச்சாரியார், இல்லறத்தார், வானப்பிரஸ்தர் இவர்களை
எதனுடன் ஒப்பிடலாம்?
பிரம்மச்சாரிய நிலையை வாழ்க்கையெனும் கட்டிடத்தின் அத்திவாரத்திற்கும், இல்லறத்தாரை சுவர்களுக்கும், வானப்பிரஸ்தர்களை இல்லத்தின் முகட்டிற்கு ஒப்பிடலாம்.
அத்திவாரம் திடமானதாக இருக்காவிடில் கட்டிடம் விழுந்துபோகும். ஆகவே மாணவர்கள் நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்கும் அமைதி இருக்காது. சமூகத்திற்கும் அமைதி இருக்காது
36. கெளரவர்களது சூத்திரத்திற்கும்பாண்டவர்களதுசூத்திரத்திற்கு
முள்ள வேற்றுமை யாது?
கெளரவரது சூத்திரம் "முதலில் நான், பின் உலகு இறுதியில் கடவுள்' என்பதாகும். பாண்டவர்களத சூத்திரம் -"முதலில் கடவுள் அடுத்த உலகு பின்னர் நான்" என்பதாகும். இதனால் பாண்டவர்கள் வெற்றியீட்டினார்கள்.
37. மனிதனின் பிரதான தேவை என்ன?
மனிதனின் பிரதான தேவை ஆணவத்தை அழித்தலாகும்.
38. உண்மையான கல்வி எத்தகைய பயனை அளிக்க வேண்ரும்?
உண்மையான கல்வி அடக்கத்தை விளைவிக்க வேண்டும்.
39. மாணவர்கள் எதனைய புனிதப் பருத்த வேண்ரும்?
மாணவர்கள் தமது வாழ்க்கையை, உடம்பை, இளமையை, நேரத்தை, அவர்தம் செயற்பாடுகளைப் புனிதப் படுத்த வேண்டும்?
40. பெருமைக்கும் ஆத்மீகத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
பெருமையும் ஆத்மீகமும் ஏற்றப்பலகையின் இரு எதிர்ப் பக்கங்கள்.

Page 92
К. К. К ذ : مه ۳: ما بهt * * * TEA("、「" Y
Iy a Nar KY
۷۸۹شر மனிதனின் ஏற்றவழி NAA166 ا^سم^لمحفلم سا
பெருமை மேலெழுந்தால் ஆத்மீகம் கீழே வரும். ஆத்மீகம்
41. மனிதன் தனது தெய்வீகத்தை ஏன் மறந்து விருகிறான் ?
மனிதன் தனது தெய்வீகத் தன்மையை அகங்காரத்தால் அதாவது தவறாக தன்னை உடம்புடன் பூரணமாக ஒருமைப் படுத்தலால் ஏற்பட்டத. தனது சுயமான உண்மை நிலையினைக் கண்டுணர்தலே உண்மையான சாக்ஷாற்கார ஆகும் அல்லது தன்னை யறிதல்.
42. மனிதன் எவ்வாறு தன்னை முன்னேற்றலாம்?
மனிதன் தனது குணத்தை மாற்றி முன்னேற வேண்டும். ஒருவனதுமனப்பாங்கில்எதுவிதமாற்றமும் இல்லையானால் அவனது ஆத்மீகப் பயிற்சிகளாகிய ஜபம், தியானம், யோகம்கள்மம், சேவை அனைத்தும் எவ்வித பிரயோசனமுமற்றதாகிவிரும்.
மாற்றமடைய வேண்டியது மனிதனல்ல, சிந்தையாகும். உடைமாற்றத்திலும் பார்க்க மிகமுக்கியமானத நடத்தையில் மாற்றமாகும்.
43. மாணவர்கள் மறக்கக்கூடாத மூன்று விடயங்கள் எவை?
மர்ணவர்கள் மறக்கக்கூடாத மூன்றும் சத்தியம், தர்மம்,நியாயம், ~ உண்மை, நேர்மை, நீதி , , ,
மாணவர்க்ள் இந்த கோடைகால நெறியில் கற்றவற்றை நடை முறைப்படுத்தி, இந்த மேம்பாடுகளை மீள வலியுறுத்திக் கொள்ள வேண்டும்.
44. மாணவர்கள் வளர்க்க வேண்டியது எதை, மறக்க வேண்டியது
6 т6opgБ?
வளர்க்க வேண்டியது மறக்கவேண்டியது (1) நாட்டுப்பற்று (1) பிறநாட்டு விமர்சனை. அல்லது
அவற்றின் மீதான வெறுப்பு (2) தமது கலாசாரப்பற்று (2) பிறநாட்டுக் கலாசாரத்தை விமர்சித்தல்
அல்லது வெறுத்தல் (3) தமது சமயப்பற்று (3) பிறசமய, மக்களை விமர்சித்தல்
அல்லது வெறுத்தல் (4) பரந்த மனப்பான்மை (4) குறுகிய மனப்பாங்கை.

பதினைந்தாம் அத்தியாயம் 167
45. மாணவர்கள் என்றும் எதற்காகப் பிரார்த்திக்க வேண்ரும்?
மாணவர்கள் உலக நன்மைக்காக என்றும் பிரார்த்திக்க வேண்டும்?
லோகாஸ்மஸ்தா சுகினோபவந்த
46. மாணவர்கள் எதனை விருத்தி செய்ய வேண்ரும்?
மாணவர்கள் இறைவன்பால் அன்பை விருத்தி செய்ய வேண்டும். அவர்கள் இறைவன்பால் பக்தி செலுத்துவதை தவிர்த்து விடக் கூடாது. அவர்கள் கஷ்டப்படுகின்ற போதிலும்கூட இறை நம்பிக்கையை இழக்கக் கூடாது.
வேதனையும், மகிழ்ச்சியும், நயமும் நட்டமும், இன்பமும் துன்பமும் எல்லாம் கடவுளின் பிரசாதம் என்றுமாணவர் நினைக்கவேண்டும்.
47 மாணவர் மறக்கக்கூடாதது எதனை?
எச்சந்தர்ப்பத்திலும் இறை நாமத்தை செபிக்க மறந்துவிடக்
கூடாத, வாழ்க்கை எனும் ஆற்றைக் கடப்பதற்கு இறைநாமமே நம்பகமான தோணி
K. K. : y : :6 ܕܐ} - ܝܕ
EA . " - TYaNA R K { \ʼ°ʻ . k MALAK Aivil

Page 93
பதினாறாம் அத்தியாயம்
Bougj 5HTjal
1. நோய்களில் கொடியதுஎது? விரோதிகளுள்அதிமோசமானவன்
யார்? அதிகரித்த துன்பம் எது? மட்டற்ற மகிழ்ச்சியாது?
பேராசைக்கு இணையாக கொடிய நோய் இல்லை. கோபத்திற்கு மேலான விரோதி இல்லை. ஏழ்மைக்கு மேலான துன்பமில்லை. ஞானத்திற்கு ஈடான மகிழ்ச்சி இல்லை.
摯 2. நான் ஒளியில் இருக்கிறேன் ஒளி என்னுள் இருக்கிறதுநான்
ஒளியேயாம் என்பதை உணர்ந்த ஞானியாது ஆகிறான்?
அவ்வாறு உணர்ந்துள்ள ஒரு ஞானி பிரம்மத்ணுள் ஒன்றாகிறான்.
3. வேத" என்ற பதத்தை விளக்கவும்?
'வித்' என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது வேதம்இது அறிவு அல்லத ஞானத்தை உணர்த்தி நிற்கும். வேதம் என்றால்
(1) ஈஸ்வரஞானம்;~ இறைவன் பற்றிய அறிவு (2) ஆத்ம ஞானம்;~ ஆத்மா பற்றிய அறிவு (3) பிரம்ம ஞானம்;~ மேலான முழுமை பற்றிய அறிவு(பூரணம்) (4) அத்துவித ஞானம்;~ இரண்டல்ல என்ற அறிவு (5) விஞ்ஞானம்;~ மேலான அறிவு வேதம் ஞானக் களஞ்சியம். கல்வியின் எல்லாத் தறைகளுக்கும் வேதமே மூலமாகும். சகல விதமான தர்மங்கள், சீலங்கள் யாவும் வேதத்திலிருந்து ஊற்றெடுத்தவையாகும். வேதம் எல்லையற்றத, ஆழமறிய முடியாதது, வரையறுக்க முடியாதத. பேரானந்தமானது.
4. வேதங்களின் பிரிவுகள் யாவை?
வியாச முனிவர் வேதங்களை நான்காக வகுத்தார். றிக் வேத, யஜூர் வேத, சாம வேத, அதர்வண வேத.

பதினாறாம் அத்தியாயம் 169
5. வேதங்களின் மூன்று காண்டங்கள் எவை?
ஒவ்வொரு வேதமும் மூன்று காண்டங்களாக அமைக்கப்பட்டத. (1) கர்ம காண்டம்- கிரியைகள் மற்றும் கருமங்களைப்
பற்றியத.
(2) உபாசன காண்டம்- வழிபாட்டைப் பற்றியத.
(3) ஞானகாண்டம்- அறிவைப் பற்றியத.
இம்மூன்று பகுதிகளும் மனிதனின் பரிணாமத்தில் மூன்று முன்னேற்றப் படிகளை உணர்த்துகின்றன. கர்ம யோகம் பக்தி யோகத்திற்கு இட்டுச் செல்லுகின்றது. பக்தியோகம் ஞான யோகத்திற்கு இட்டுச் செல்லு கின்றத.
б. வேதாந்தம் என்றால் என்ன?
வேதங்களின் முடிவு உபநிடதம். உபநிடதங்களை வேதாந்தம் என்று அழைத்தனர். கர்ம, உபாசன, ஞான என்பனவற்றை உபநிடதங்கள் யோகங்கள் என்று வர்ணிக்கின்றனர்.
7. கர்மயோக, உபாசன யோக, ஞான யோக, இவற்றின் சாரம்சம்
ишпТры?
சகல கருமங்களையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விருதல். அன்றிநாம் ஆற்றும் செயற்பாடுகள் எல்லாவற்றையும் அவரது மகிழ்விற்கென அர்ப்பணித்தல் கர்ம யோகத்தின் சாராம்சம்.
திரிகரிண சுத்தியுடன் அதாவது சிந்தனையின் இசைவு, சொல், செயல் ஆகியவற்றின் இசைவுடன் மனப்பூர்வமாக இறைவனை வணங்குதல் உபாசன யோகத்தின் சாராம்சம். உலகியல் இன்பங்களைப் பெறுவதன் நோக்கமாக இறைவனை உபாசிப்பது உண்மையான உபாசனை அல்ல. அன்பிற்காகவே அன்பு செய்தல் என்று இருக்க வேண்டும். முழு உலகையும் இறைவனது பிரதி பலிப்பாகவே காண்பது ஞானயோகத்தின் விளக்கம். இறைவன் எல்லா ஜீவராசிகளிலும் ஆத்மாவாக விளங்குகிறார் என நம்புவத ஞானம்' எனக் கொள்ளப்பட்டது.
8. எத்தனையோ பெயர்களும் உருவங்களும் இருக்கும்போது
ஒருமை என்று பேசுவது எவ்வாறு ?
ஒருமை என்பதை விளங்கிக் கொள்வதற்கு சமுத்திரத்தின் உதராணத்தை எடுத்தக் கொள்ளலாம். சமுத்திரத்திலே எண்ணற்ற அலைகள்

Page 94
வேத அறிவு 170
இருக்கின்றன. ஒவ்வொன்றும் அதன் அளவு, உருவம் ஆகியவற்றில் வேறு பட்டிருக்கிறத. ஒரு அலைக்கும் மற்றதற்கும் எதவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால்,சிறிதுசிந்தித்தால் வேறுபட்ட அலைகள் அனைத்தும் அந்த ஒரே சமுத்திர நீரின் பல்வேறு வகையான பிரதிபலிப்புகள் என்ற உண்மை புலனாகும்.
அத போலவே பிரபஞ்சத்திலுள்ள எல்லா உருவங்களும் நாமங்களும் ஒன்றே ஒன்றான சத் -சித்- ஆனந்தத்தின் நிலையானது அறிவுமயமானது, ஆனந்தமானதன் பிரதிபலிப்பின் அலைகளாம் என்பதையும் அறியலாம்.
எனவே பிரதிபலிக்கப் பட்டிருக்கும் எல்லா ஜீவராசிகளினதும் சாராம்சமாக இருப்பத சச்சிதானந்தமே. அத எத்தகைய பெயரையோ, நாமத்தையோ நடத்தையையோ கொண்டிருந்தாலென்ன.
9. பகவத்கீதை என்றது என்ன?
உபநிடத சாரமே பகவத்கீதை. உபநிடதங்களின் பின் எழுந்தது பகவதக்தை. அது மூன்று பாதைகளாய கர்மம், உபாசனை, ஞானம் ஆகியவற்றை மூன்று பகுதிகளாக விளக்கு கின்றது, ஒவ்வொரு பிரிவிலும் 6 அத்தியாயங்கள் உண்டு. எல்லாமாகப் பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது பகவத்கீதை. வேதங்களிலிருந்து உபநிடதங்களும் அதனின்றும் பகவத் கீதையும் உருவானது எனலாம்.
பகவத்கீதை மானிடரது நண் நடத்தைக்கு நல்ல செயல்முறை வழிகாட்டியாக அமைகிறது. அது இறைவனின் வாசகம். ஆகவே, உலகளாவிய சமயநூலாகும். எல்லோருக்கும் இருப்பது ஒரே ஒரு கடவுள்தான்.
10. வேதங்கள் இன்று வரை எவ்வாறு நிலைத்திருக்க
கூடியதாய் உள்ளது?
சாதாரணமாக நால்கள் எனக் கருதவது போன்ற புத்தகங்கள் அல்ல வேதம். அவற்றை சுருதிகள் அல்லது செவிப்புலனால் பெற்ற அறிவு என்பர். நினைவிற்கு எட்டாத பண்டைய காலம் தொட்டு அத குருசிஷ்ய பரம்பரை வழிமூலமாக செவிவாயிலாகக் கேட்டு மனனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. குருவானவர் மந்திரங்களை அவற்றிற்குரிய முறையில் உச்சாடனம் செய்து காட்ட மாணவர்கள் அவற்றினை அப்படியே தவறாது மனதில் பதித்து வைத்தனர்.

பதினாறாம் அத்தியாயம் 171
11. மாணவர்கள் செய்யத் தகாததென விலத்தப்பட்ட குற்றங்கள்
UIT6O6?
(1) அலட்சியம்- கவலையீனமாக இருத்தல் (2) அவிநயம்- கீழ்படியாமை (3) அகங்காரம்- ஆணவம் கொள்ளுதல் (4) அகசை~ பொறாமை (5) அஸ்ப்யத- சமூக மரியாதையின்மை எவராவது இக்கட்டுப்பாடுகளை மீறி நடப்பாரேயாயின் அவர் உடனடியாகவே வகுப்பிலிருந்து நீக்கப்பட்டுவிடுவர்.
12. வியாச முனிவரது சிறந்த மாணவர் யார்?
வியாச முனிவரது அபிமான மாணவர் வைசம்பாயனர்.
13. வைசம்பாயனர் கற்று முடிந்ததும் யாது செய்தார்?
கற்று முடிந்ததம் வைசம்பாயனர் ஒரு குரு குலத்தைத் தனது இல்லத்திலேயே மாணவர்கள் கற்கக் கூடியதாக அமைத்தார். இவரது குருகுலத்திற்கு யாக்ஞவல்கியர் எனும் மாணவர் வந்த சேர்ந்தார். யாக்ஞவல் கியருக்கு ஆற்றல் இருந்தது. பாடங்களை மிக விரைவாகக் கிரகிக்கும் தன்மையும் இருந்தும் அவருக்கு அகங்காரம், அலட்சியம், அசபரியதசிய குணங்கள் அதிகரித்தன.
14. யாக்ஞவல்கியருக்கு என்ன நடந்தது?
குரு வைசம்பாயனர் அவரை உடனடியாகவே குருகுலத்தை விட்டு நீங்கும்படியும், நீங்குவதற்கு முன்னால் அவர் கற்ற அனைத்தையும் கையளிக்க வேண்டும் என்றும் பணித்தார்.
தனது குற்றத்தை உணர்ந்த யாக்ஞவல்கியர், குருவிடமிருந்து தான் கற்ற அனைத்தையும் வெளியே கக்கிவிட்டார். இவர் வெளியேற்றியவற்றை அங்கிருந்ததிக்கிரிப் பறவைகள் உட்கொண்டன. இப்பறவைகள் உபநிடதங்களை மந்திரிக்கத்தொடங்கின. இவற்றையே பின்னர் தைத்திரிய உபநிடதம் என்றனர்.
15. குருவினுடைய ஆச்சிரமத்தைவிட்ருவிலகிய யாக்ஞவல்கியரது
வாழ்க்கை வரலாறு பின் என்னவானது?
தனது குற்றச் செயல்களை எண்ணி அவர் மன வேதனைப்பட்டார்.

Page 95
வேத அறிவு 172
அவர் அன்ன ஆகாரமின்றி சூரிய உபாசன அதாவது சூரிய நமஸ்காரத்தைக் கடைப்பிடித்தார்.
பலவிதமான கடும் தவத்தை மேற்கொண்டு தனத குற்றத்திற்குப் பிராயச்சித்தம் தேடினார்.
சூரிய பகவான் அவருக்கு மீண்டும் வேதத்தைப் போதித்தார். யக்ஞவல்கியருக்கு சூரிய பகவான் போதித்த வேதம் சுக்கில யசுர் வேதம் அல்லது ஆதித்ய காண்டம் என வழங்கலாயிற்று.
16. யக்ஞவல்கியரது போதனைகள் யாவை?
யாக்ஞவல்கியரது மூதாதையர்கள் அன்னதானம் செய்தவர்கள். அதன் பயனை உணர்ந்த அவர் தமத உபதேசத்திலே முக்கியமான பிரதான இடத்தை அன்னதானத்திற்குக் கொடுக்கிறார். அவரது உபதேசங்களுள் இவையும் அடங்குவதாகும்.
1. உணவு வழங்குதலிலும் மேலான கொடை ஒன்றில்லை. 2. பெற்றோரைவிட மேலான கடவுள் இல்லை. 3. ஜபம், தவம், இவற்றைவிட மேலான உண்மை இல்லை.
அதாவது புனிதமான நாமத்தைச் சொல்லித் தவம் இருத்தல். 4. இரக்கத்தை விட மேலான தர்மம் ஒன்றில்லை. 5. நல்லோர் கூட்டத்தில் இருப்பதைவிட மேலான நயம்
இல்லை. 6. கோபத்தை விட பொல்லாத ஆபத்தைத் தரவல்ல பகைவன்
வேறில்லை. - 7. கடனிலும் கொடிய நோய் வேறொன்றுமில்லை. 8. அவமானத்திலும் கொடிய சாவு வேறில்லை. 9. நன் மதிப்பை விட மேலான செல்வம் வேறில்லை. 10. சமரணத்தை ~இறைநாமத்தைச் சதா நினைவு கூரு
வதைவிடக் கூடிய அழகு வாய்ந்த ஆபரணம் வேறில்லை. யாக்ஞவல்கியர் தனத மாணவர்களுக்குப் புகட்டிய அறவுரைகளிலே பெற்றோருக்கும் குருவுக்கும் பணிவிடை செய்வதற்கும் அன்னதானம் செய்யவதற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்.
17. மணவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய ஐந்து விடயங்கள்
66062
மாணவர்கள் மேற்கூறும் விடயங்களைத் தவிர்க்கவேண்டும் 1. குரு, பெற்றோர், மூத்தோர் கற்பிப்பதை அலட்சியப்படுத்தல்

பதினாறாம் அத்தியாயம் 173
2. குரு, பெற்றோர், முத்தோருக்குக் கீழ்ப்படியாமை 3. அகங்காரம் - ஆணவம் 4. தன்னிலும் நன்நிலையில் இருப்பவர்மேல் பொறாமையுறுதல் 5. சமூக மரியாதைப் பண்புகளை மீறுதல்.
18. கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்ற கோடைக்கால
பயிற்சி நெறியில் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டது யாது?
வேதாந்தத்தின் சராம்சம் பற்றியே கடந்த பதினைந்த நாட்களும் நடைபெற்ற கோடைகால பயிற்சி நெறியில் போதிக்கப்பட்டத. சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய புனிதநால்களைக் கடைந்தெடுத்த தேன் அவர்களுக்கு வழங்கப்பட்டத.
19. மாணவர்கள் கற்கை நெறிமுடிவடைந்ததும் எத்தகைய
பாதையிலே பிரவேசிக்க வேண்ரும்?
சத்தியம்-தர்மம், உண்மை, நேர்மை எனும் பாதையிலே கால்வைத்து ஆரம்பித்துதாய வாழ்வு வாழ வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட அவர்கள் இந்த இலட்சியப் பாதையிலிருந்தும் விலகிச் செல்லக் கூடாத, அவர்களது உலகியற் கல்வியானது ஆத்மீகக் கல்வியுடன் சமமாக இணைந்து போக வேண்டும்.
20. இக் கோடைகாலப் பயிற்சியில் பங்கு பற்றிய மாணவர்கள்
ஏன் அதிஷ்டமானவர்கள்?
எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் (மாணவர்) இந்த உலகில் இருந்த போதிலும் ஒரு சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தின் நலனைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதால் இவர்கள் அதிஷ்டசாலிகள்.
21. இன்றைய காலத்துப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம்
шлgг?
நியாயமற்ற விரோதமான செயல், நீதி தவறுதல், இழப்புகள் தோல்விகள், தயரம், தன்பம் ஆகிய இக்காலத்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் இருப்பது தன்னம்பிக்கை இன்மையாகும்.

Page 96
வேத அறிவு 174
22. தன்னம்பிக்கையை விருத்தி செய்வதால் வரும் பயன் என்ன?
தன்னம்பிக்கையை வளர்த்தால் அது எங்களுக்கு சுய திருப்தியைத் தரும். சுயதிருப்தி இல்லாது மனநிறைவு ஏற்படாது. பூரண திருப்தியை அடைந்த விட்டால், நாம் சுய தியாகத்திற்கு ஆயத்தமானவர்களாவோம். எங்கு சுய தியாகம் காணப்படுகிறதோ அங்கு தானாகவே தன்னை உணரும் தன்மையும் ஏற்படும்.
23. ஒவ்வொரு மாணவனும் செய்ய வேண்டியது எதனை?
ஒவ்வொரு மாணவனும் சித்த சுத்தியை - தூய சிந்தனைக்கு வழிவகுக்க கூடிய சத்கள்மாஸ். நல்ல கருமங்களைச் செய்ய முற்பட வேண்டும். தாய சிந்தை எங்கு இருக்கிறதோ அங்கு ஞான சித்தி ~ ஞானோதயம் இருக்கும். இவை அனைத்தும் எமக்குள்ளேயே இருக்கிறத. புறத்தே எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. சுவர் மணிக்கஉட்டை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதன் நொடிக்கம்பியை சத்கள்மங்களுக்கு ஒப்பிடலாம். அதாவது நாம் செய்யும் நற் காரியங்கள் நிமிடம் காட்டும் கம்பி சித்த சுத்தியை ~சிந்தையின் தாய்மையைக் குறிக்கும். சித்த சுத்தி உபாசன நிலையைக் குறிக்கின்றது. நாம் கடவுளை நேசிப்பதையும் பலகாலங்களுக்குப் பலவகையாக வழிபாடாற்றுவதையும் உபாசன நிலை குறிக்கும். இத ஆத்ம விஸ்வாஸ~ தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கும். மணித்தியாலக் கம்பி தன்னம்பிக்கையை குறித்த நிற்கும்.
வினாடிகாட்டியினதம், நிமிடக்காட்டியினதும் பார்க்கக்கூடிய வேகமான அசைவுகள், கண்ணுக்குப் புலனாகாத மந்தகதியில் செல்லும் மணித்தியாலக் கம்பியின் அசைவுக்குக் காரணமாக உள்ளது.
அதபோலவே, எமது நல்ல செயல்கள், இறைவனை நேசித்தல் வணங்குதல் ஆகியன ஆத்ம விஸ்வாசத்தக்கு அல்லத தன்னம்பிக்கைக்கு வழி வகுக்கும்.
24 எத்தகைய குண இயல்புகளைக் கடவுள் ஏற்றுக்கொள்வார்?
சித்தத்தினதும், இதயத்தினதும் நேர்மைத் தனத்தையும் தாய்மையையுமே இறைவன் கருத்திற் கொள்வார். அத்துடன் தன்பாலுள்ள எமத அன்பு எவ்வளவு முழுமையானது, உண்மையானது என்பதமாகும். நாம் எத்தகைய செல்வந்தர் என்றோ, கல்விமான்கள் என்றோ அவர் கருதவதில்லை.
 

பதினாறாம் அத்தியாயம் 175
25. எமக்க நேரம் கிடைத்த போதெல்லாம் நாம் யாது செய்ய
வேண்ரும்?
எமக்கு நேரம் கிடைத்த போதெல்லாம், முன்பு நாம் கற்றுக்கொண்ட ஒன்பது வித பக்திக் கோட்பாடுகளில் ஒன்றையேனும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
26. எமது வாழ்வை நாம் எவ்வாறு கழிக்க வேண்ரும்?
மேற்கடறியவர்களை எடுத்துக்காட்டாக வைத்தக் கொண்டு எமத வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும்.
. வேடுவனாக இருந்த வால்மீகி முனிவர்
தீண்டாச் சாதியாகிய நந்தனார் . ஐந்து வயதப் பாலகர்களாகிய தருவன், பிரகலாதன்
வறுமையில் உழன்ற குசேலர் 5. நாகரிகமற்ற, படிப்பறிவு இல்லாத நாடோடிப்பெண் சபரி இவர்கள் அனைவருமே முழுமனதோடுகடடிய பக்தி, அன்பு, அர்ப்பணம் ஆகியவற்றை இறைவனுக்குச் செலுத்தியதன் காரணமாக இறைவனது அருட்கடாட்சத்தை நிறையப் பெற்றார்கள்.சபரியை ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ள வேண்டும். அவள் என்றும் மரீஇராமரையும் அவரது சந்தோஷத்தையும் எண்ணியவாறு இருப்பாள். தனது சிந்தனை சொல்,செயல் அனைத்தையும் அவருக்கே அர்ப்பணித்தாள். அதனால் அவளது ஒவ்வொரு செயலும் மாற்றமடைந்த மேலான தவமாகியத.
சபரியின் எடுத்தக்காட்டிலிருந்த நாம் எமது வாழ்வு முழுவதிலும் எங்கிருந்தாலென்ன எதைச் செய்தாலென்ன தொடர்ச்சியாகத் தியானிக்க வேண்டும் என்பதை அறிந்த கொள்ள வேண்டும்.
நாம் எதைப் பருகினாலென்ன, உண்டாலென்ன இறைவனுக்கு அதை நைவேத்தியம் பண்ண வேண்டும். இவ்விதமாக நாம் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்தால் தீய செயலிலிருந்தும் தீயவழி வாழ்தலில் இருந்தும் பாதுகாக்கப்படுவோம்.
மாணவர்கள் தாம் காதால் மடுத்ததைக் கைகளால் ஆற்ற வேண்டும். அவ்விதம் வாழ்க்கையைத் தாய்மைப்படுத்த வேண்டும். அத்துடன் நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமானதாகவும் செழிப்பானதாகவும் ஆக்குவதற்கு அவர்கள் தமது பங்கை வழங்க வேண்டும்.
:
炎条

Page 97
பின் இணைப்பு ஒன்று
7.7.1990ல் தரு பூர்ணிமா தினத்தன்று அருளிய தெய்வீக அருளுரை
1. தன்னை அறிந்தவனுக்கும்,தன்னை அறியாதவனுக்கும் இந்தப்
புலன்களால் நுகரப்பரும் உலகு எவ்வாறு தோற்றமளிக்கும்?
தன்னையறியாதவனுக்கு உலகு உண்மைப் பொருளாகத் தோன்றும். தன்னை அறிந்தவனுக்கு அறிந்த பின் அத ஒரு கனவு போலத் தோன்றும்.
2. மனித உருவம் எவ்வாறு ஆக்கப்பட்டது? 1. முழுமையான உடம்பு 2. நுண்ணிதான உடம்பு
3. காரண சரீரம்
3. ஆத்மாவை மறைத்திருக்கும் ஐந்து கோசங்கள் (கவசங்கள்)
6T66?
ஆத்மாவை மறைத்திருக்கம் ஐந்த கோசங்களாவன
. அன்னமய கோசம்- முழுமையான உடம்பு
பிராணமயகோசம்- நுண்ணிய உடம்பு மனோமய கோசம்- நுண்ணிய உடம்பு விஞ்ஞானமய கோசம்- நுண்ணிய உடம்பு ஆனந்தமய கோசம்- காரண சரீரம்
4. Сурдур баршришпат, நுண்ணிதான காரண சரீரம் (த்தகைய
கோசங்களால் மூடப்பட்டிருக்கின்றன?
முழுமையான உடம்பு- அன்னமயகோசத்தால் மூடப்பட்டுள்ளத.
நண்ணிதான உடம்பு ~ (1) பிராணமய கோசம்- பஞ்ச பிராணன்களால் 39b6016.

பின்இணைப்பு ஒன்று 177
(2) மனோமய கோசம் (3) விஞ்ஞானமய கோசம் | கார்ண ர்ேரி *~ ஆனந்தமயகோசத்தால் ஆக்கப்பட்டது.
5. நுண்ணிதான உடம்பு எப்போது தன்னை வெளிக்காட்ரும்?
கனவு நிலையில்தான் நண்ணிதான உடம்பு தன்னை வெளிப்படுத்தும். கனவு நிலையின் அனுபவங்களாவன தனிப்பட்ட ஒருவருக்கே உணரக்கூடியதம் ஏனையோரால் காணமுடியாததுமான ஒரு புதிய உலகமாகத் தோன்றும்.
ஒரு அறையில் தயிலும் பத்தப் பேர்கள் பத்து விதமான கனவுகளைக் காண்பர். சிந்தையானத ஒரு கற்பனை உலகை உருவாக்கி அதில் கனவை அனுபவிக்க வைக்கின்றத.
б. கனவு நிலைக்கும் நனவுநிலைக்குமுள்ள அடிப்படை ய்ாது?
சிந்தையே கனவு நிலைக்கும் நனவு நிலைக்கும் அடிப்படையாக
உள்ளது.
7. சிந்தையின் பல்வேறு தன்மைகள் எவை? அவை எவ்வாறு
அழைக்கப்பரும்?
சிந்தையின் பல்வேறு தன்மைகள் பல் வேறு பெயரால் அழைக்கப்படும் 1. எண்ணங்கள் உணர்வுகளை ஏற்படுத்தம் போது~ சிந்தை
அல்லது மனஸ் 2. கடந்தகால அனுபவங்களை ஞாபகப்படுததம் போது
சித்தம் என்றாகிறத. 3. பிரித்துணர்தல், தீர்மானித்தல் செய்யும் போது- புத்தி
அறிவு 4. தன்னை உடம்புடன் தவறாக அடையாளப் படுத்தம் போத
அகங்காரம். இவை நான்கும் வேறுவேறு வஸ்தக்களல்ல. சிந்தை பல்வேறு தொழிற்பாடுகளை ஆற்றும் போது பெறும் வேறு வேறு பெயர்களாகும்.
8. மனிதனின் நிலைப்பாட்டிலுள்ள மூன்று நிலைகள் யாவை?
மனிதனின் நிலைப்பாட்டிலுள்ள மூன்று நிலைகளாவன1. ஜெக்ரத் அல்லது நனவு நிலை

Page 98
7.7.1990ல் குரு பூர்ணிமா தினத்தன்று அருளிய தெய்வீக அருளுரை 178
2. சுவப்ன அல்லது கனவு நிலை 3. சுசுப்தி அல்லத ஆழ்ந்த நித்திரை நிலை நனவு நிலையிலும் கனவு நிலையிலும் சிந்தனை தொழிற்படுகிறது. ஆழ்ந்த நித்திரையில் சிந்தை இல்லை, ஆனபடியால் இன்பம் தன்பம் என்ற உணர்வுகள் அவ்வுலகில் இல்லை.
நனவு, கனவு, ஆழ்துயில் நிலைகளில் மனிதன் இவற்றிலே தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் அவற்றினை எல்லாம் அனுபவிப்பதற்கு ஆதாரமாக விளங்கும் தான்' என்றதை மறந்த விடுகிறான். உடம்பு , சிந்தை, அறிவு இம்மூன்றினுள் மனிதன் ஊறிக்கிடப்பதால் தான் என்பத காணமுடியாத போய்விடுகிறத.
9. நாம் காணும் எண்ணற்ற மனித உருவங்களுக்கு
அடிப்படையாக இருப்பது எது?
நாம் காணும் எண்ணற்ற மனித உருவங்களிலெல்லாம் சற். சித். ஆனந்த அல்லது உண்மை. நிலைபேறு. பேரின்பம் என்ற சமுத்திரத்தில் எழும் அலைகளாகும்.
கடலின் அலைகள் அனந்தம். ஆனால் அவற்றின் அடிப்படை ஒன்று அதாவது நீர். அதுபோலவே, மனித உருவங்கள் பல. ஆனால் அவற்றின் அடிப்படை ஒன்று -சச்சிதானந்தமாகிய சமுத்திரம்.
10. ஆனந்தமய கோசம் என்றால் என்ன?
ஆனந்தமய கோசம் என்பது பேரானந்தமாகிய போர்வை. அதவே காரணrரம் அத தான்' என்றதன் பேரின்ப நிலையின் பிரதிபலிப்பாகும்.
11. மனிதனிலுள்ள தான்' என்றதன் முக்கியத்துவத்தை
விளக்கவும்?
தான்' என்பதனாலேயே மனிதனது உடம்பு, சிந்தை, அறிவு ஆகியன தொழிற்படுகின்றன. 'தான் என்ற ஒன்றினாலேயே இப்பரந்த பிரபஞ்சமும் இயக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் மனிதனின் உடம்பு, சிந்தை, அறிவு ஆகியனயவற்றால் நடத்தப் படுகின்ற தொழிற்பாடு தான்' என்பதை எவ்விதத்திலும் தாக்குவதில்லை.
 

பின்இணைப்பு ஒன்ற 179
நல்ல காரியங்களை ஆற்றுவதற்குச் சிலராலும் கெடுதியான காரியங்களை ஆற்றுவதற்கு ஏனையோராலும் சூரிய ஒளி பயன்படுத்தப்படு கின்றது. இருந்த போதிலும் இச்செயல்களால் எவ்விதத்திலும் சூரியன் தாக்குப்படுவதில்லை. மனிதன் ஆற்றும் செயல்கள் அன்னத்திற்கும் சூரியன் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
12. மனிதனின் பந்தங்களுக்கு அவன் சிந்தை எவ்வாறு
பொறுப்பாக இருக்கிறது?
மனிதன் தன்னைத் தனது உடம்புடன் பிழையாக கொள் வதால்அவனது பந்தங்களுக்குச் சிந்தையே பொறுப்பாக இருக்கிறது.
இதன் விளைவாகவே மனிதன் ஒருமையில் பன்மையைக் காண்கிறான்.
சிந்தை அழிக்கப்பட்டுவிட்டால், மனிதன் பண்மையில் ஒருமையைக் காண்கிறான். அத்துடன் தான்' என்றதும் பிரகாசிக்கிறது.
13. பிறப்பு, இறப்பு எனும் வட்டத்திலிருந்து மனிதன் எவ்வாறு
தப்பித்துக் கொள்ளலாம்?
"ஆத்மா' அல்லது தான் மனிதனிலுள்ள உண்மையான நான்' என்பதை முடியிருக்கும் ஐந்து கோசங்களையும் கடந்து அப்பால் செல்வானாகில் அவன் பிறப்பு இறப்பு எனும் வட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சிரவன (கேள்வி) மனன (சிந்தித்தல்) நித்தியசாதனை (நேரடியாக அவற்றை நடைமுறைப்படுத்தல்) என்பவற்றால்அந்த ஐந்து கோசங்களையும் தாண்டிச் செல்லலாம். இக்காரியங்கள் மூலம் ஐந்து போர்வைகளையும் நீக்கிச் செல்லலாம்.
அரிசியை மூடியிருக்கும் நெல்லுமி போன்றது இந்த ஐந்து கோசங்களும், உமியிருந்தால் தான் முளைகட்டும். நெல்லைக் குறறுவதனால் உமி போக்கப்பட்டால் அரிசி ஒருபோதம் முளை கட்டாது.
14. மனிதனது பந்தங்களுக்கெல்லாம் பொறுப்பாக விளங்கும்
துறைகள் எவை?
மனிதனத பந்தங்களுக்குப் பொறுப்பாயுள்ள தறைகள் உடம்பு, புலன்கள், சிந்தை, அறிவு ஆகியன.

Page 99
7.7.1990ல் குரு பூர்ணிமா தினத்தன்று அருளிய தெய்வீக அருளுரை 18O
15. எமது அனுபவங்களுக்கெல்லாம் அடித்தளமாயிருப்பது எது?
எமத அனுபவங்களுக்கெல்லாம் அடித்தளமாயிருப்பத தான்' என்பதாகும். தான் என்பது உலகளாவியத. இந்தத் தான்' என்பதை மறந்து நாம் இந்த உலகமே எமக்கு எல்லாவித அனுபவங்கள் இன்பம், தன்பம் நயம், நட்டம், புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றை தருகின்றதென எண்ணிக்கொள்கிறோம்.
16. நாம் எவ்வாறு இந்த தான்' என்றதன் தோற்றத்தைக்
காணலாம்?
தான் என்றத சுய ஒளியைக் கொண்டது. அத தானாகவே பிரகாசிக்கின்றது. ஏலவே பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒளியைக் காண்பதற்கு வேறுவெளிச்சம் தேவையில்லை.
ஆகவே தான்' என்பதைக் கண்டுகொள்ள எத்தகைய விஷேட சாதனையையும் ஆற்ற வேண்டியதில்லை.
மனிதனில் இருக்கும் உடம்பு பற்றிய எண்ணம் தான்' என்பதைமறைக்கின்றது.சூரியனாலே தோற்றப்பட்ட முகில்கள் சூரியனையே மறைப்பத போலவாகும்.
நாம் எமக்குள் இருக்கும் நான்' என்பதைக் காண வேண்டும். எம்முள் இருக்கும் 'நான்' என்பதே ஆத்மா,தான், பிரம்மா, அகம், இருதயம் என்பதெல்லாம்.
17. நாம் எவ்வாறு ஒரு ஸ்தித பிரஞ்ன' ஆகலாம்? (கீதை 154.72)
உலகுடன் இருக்கும் எமது தொடர்புகள் அனைத்தும் மாயை
என்றதை நாம் முதற்கண் ஞாபக்தில் வைத்தக் கொள்ள வேண்டும். அவை கடந்து செல்லும் முகிற் கூட்டங்கள் போன்றவை.
நாம் தான்' அல்லது கடவுள் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டு அந்தத் தான்' எமதுஉடமை என உறுதியாகநம்பவேண்டும். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் எமத தகப்பன், தாய், பிள்ளைகள் அவர்கள் எமது என்று கொள்வதனால் அவர்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அதபோலவே இதிலும் நாம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் ஸ்தித பிரஞ்ன (உறுதியான அறிவுள்ள மனிதன்) ஆகலாம். எல்லையில்லாப் பேரின்பத்தை அனுபவிக்கலாம்.
 

பின்இணைப்பு ஒன்று 181
எல்லோரிலும் தெய்வீகம் இருப்பதை நாம் நிச்சயம் நம்ப வேண்டும். விருப்பு வெறுப்புக்களிலிருந்தம் விடுதலை பெற வேண்டும்.
நாம் எமத காரியங்கள் அனைத்தையும் தெய்வீக உணர்வுடன் ஆத்மா அல்லத பிரம்மம் அல்லத கடவுளுடன் தொடர்பு படுத்தி எமத வாழ்வைப் புனிதமாக்க வேண்டும்.
உலகில் காணும் பலவாய தன்மையில் ஒருமையைக் காணுதல் என்பதுதான் ஆத்மாவின் அடிப்படைக் கொள்கை. நாம் சிந்தையை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். எமது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
18. ஏன் இந்த உலகு பிரிவினைகளாலும் சச்சரவுகளினாலும்
நிறைந்து இருக்கின்றது?
இன்றைய உலகிலே மனிதத் தன்மைகள் வீழ்ச்சியுற்றுச் செல்வதால் பிரிவினைகளும் சச்சரவுகளும் நிறைந்த காணப்படுகின்றன. தன்னிலும், மற்றையோரிலும் இருக்கும் தெய்வீகத்தை மறந்து விட்டான் மனிதன்.
உடம்பு உணர்வுகளால் எழும் சுயநலம், சுய சிரத்தையாலுமே இத்தகைய விருப்பு வெறுப்பு ஏற்படுகின்றத.
எம்மை எம் உடம்புடன் இனங்காணுதல் அதாவது பூரண ஒருமைப்பாடு கொள்ளுதலுக்கு சிந்தையே காரணியாக இருக்கிறது (பொறுப்பாகும்).
நான் அல்லது அகம் சிந்தையுடன் இணைந்து விட்டால் அது அகங்காரம், ஆணவம் எனப்படும். நான் சிந்தையிலிருந்த விடுபட்டால் இன்ப நிலையாகும். இது நிலைத்துள்ள அனைத்திலும் ஒருமையைக் காண இலகுவாக இருக்கும்.
19. இன்று மக்கள் கடைப்பிடிக்கும் சாதனைகளில் என்ன
குறைபாடுகள் இருக்கின்றன?
நாம் ஆற்றுகிற சாதனைகள் சிந்தையின் மட்டத்திலேயே அதன் திருப்திக்காக ஆற்றுகிறோம். இவை சிந்தையின் மாயை ஆகும். தான் அல்லாததை நீக்குவதால் தான் ஐ அறியலாம். அனாத்மாவை (ஆத்மா அல்லாததை) மறந்து ஒருவன் தானுடன், ஆத்மாவுடன் இணைந்து இருத்தலை முயற்சிப்பதே உண்மையான சாதனையாகும்.
ஏனைய செய்முறைகள் எல்லாம் சிந்தையின் மாயையேயாகும்.

Page 100
7.7.1990ல் குரு பூர்ணிமா தினத்தன்று அருளிய தெய்வீக அருளுரை 182
20. சிந்தை என்பது என்ன?
அவாக்களின் ஒன்றிணைப்பே சிந்தையாகும். இன்றைய ஆத்மீக ஆவலர்கள், பக்தர்கள் தமது ஆசைகளைப் பெருக்குகிறார்க ளேயொழிய அவற்றைக் குறைக்கவோ அழிக்கவோ முயற்சிக் கின்றார்களில்லை.
எமது ஆசைகளை நீக்கினால் ஒழிய நாம்தன்னை அறிதல் என்றதை அறிய மாட்டோம், அடையமாட்டோம்.
21. இந்த உலகை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம்?
நாம் எம்மை தனித்தனியே மாற்றிக் கொண்டால்தான் உலகை மாற்றலாம். உலகம் வேறொன்றுமல்ல. தனிப்பட்டோரது இணைப்பேயாம். தனியொருவனை மாற்றுதலே உலக மாற்றத்திற்கு அடிப்படையாயுள்ளத.
ஆகவே, மனிதன் முதலில் தன்னுள் இருக்கும் தீயதை நீக்க வேண்டும். தன்னுள் புனிதமான குணங்களை வளர்க்க வேண்டும்.
22. தான்' என்றது முழுமையாகப் பிரகாசிப்பதற்கு நாம்
என்ன செய்ய வேண்டும்.
மனிதன் பூரணமானவனானதும் 'தான் தனத பூரண ஒளியுடன் பிரகாசிக்கும்.
சிந்தையின் பதினாறு இயல்புகளும் நீக்கப்பட்டால் மனிதன் பூரணமானவனாகிறான்.
1. அரிஷ்டவர்க~ ஆறு அகவிரோதிகள்- காம, குரோத, லோப மோக, மதம், மாத்சர்யம், ~ ஆசை, கோபம், பேராசை, பற்று, பெருமை, பொறாமை, அல்லத எரிச்சல்.
2. எட்டு விதப் பெருமைகள்- பணத்தால் பெருமை கல்வி சாதி, ஐஸ்வரியம், அழகு, இளமை,பதவி ஆத்மீகம்
3. ராஜஸ தாமஸ குண இயல்புகள் இரண்டும். சிந்தையின் இப்பதினாறு குண இயல்புகளும் இல்லா விடத்து தான் தனது பூரண பிரகாசத்தடன் தலங்கும்.
23. உண்மையான குரு யார்?
மூன்று குணங்களையும் கடந்து, ஒரு குணாதீதராகி,

பின்இணைப்பு ஒன்று 183
பெயருமல்லாத உருவும் அல்லாத-ரூபறகித-ஆக இருப்பவரே உண்மையான குரு ஆகும்.
உண்மையான குரு தனத சீடனுக்கு முழுமையான நிலையை வழங்கக்கூடியவர்.
கடவுளே உண்மையான குரு. கடவுள் ஒருவரே ஞான ஒளியை வழங்கி அஞ்ஞானத்தின் இருளைக் களையக் கூடியவர். கடவுள் மட்டுமே முக்குணங்களையும் உருவத்தையும் கடந்தவர்.
24. உண்மையான மந்திரம் என்பது என்ன?
தன்னை அறிதலே உண்மையான மந்திரம். நாம் விரும் மூச்சே சோஹம் எனும் மந்திரம். அதாவது நான் அதுவேயாம்'
எமத உடம்புதான் யந்திரம், இருதயம், தந்திரம்.
25. உண்மையான சாதனை என்பது என்ன?
தன்னம்பிக்கையை விருத்தி செய்வதே உண்மையான சாதனை.
ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கையுடன் பெரு முயற்சிசெய்தல் வேண்டும். நாம் பெருமுயற்சியுடன் எமதுவாழ்க்கையை இறைவனுக்கு நிவேதனமாக அர்ப்பணித்தால் அவர் எமக்கு வழிகாட்டலையும் நிறைவையும் அளிப்பார்.
26. உடம்பு, சிந்தை ஆகியவற்றுடனான பூரணமானஒருமைப்பாரு
கொள்ளுதலை (இனம் காணுதலை) எவ்வாறு தவிர்த்து of LouTub?
நாம் என்றும் 'அகம் பிரம்மாஸ்மி நானே கடவுள், அன்பே உண்மை எனச் சிந்தித்தல் வேண்டும்.
அன்பு இன்றி எதுவுமே சாதித்த விட முடியாது. நீ தெய்வீக மானவன் என்ற உண்மையை அறிந்த கொள். 2ட்டம்பு உணத கருவி உனத வாழ்க்கையில் சகல விதமான செயற்பாடுகளையும் இந்த உணர்வுடனேயே பங்கு கொள்.
27. மறுபிறவிக்கு ஏதுவாக இருப்பது எது?
உடம்பு உணர்வுடன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் மறுபிறவிக்கும் பந்தத்திற்கும் இட்டுச் செல்லும்.

Page 101
7.7.1990ல் குரு பூர்ணிமா தினத்தன்று அருளிய தெய்வீக அருளுரை 184
28. வீடு பேற்றிற்கு வழிவகுப்பது யாது?
தெய்வீக எண்ணத்துடன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் உன்னை பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும். நீ ஒரு மனிதன் ஆகவே குற்றங்களை ஆற்றி விடலாம் என எண்ணுவது ஒரு பெலவீனமாகும். மனிதன் உள்நோக்கிப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். மனிதன் ஒரு குற்றமும் செய்யக் கூடாது
அனைத்தும் செயற்பாட்டினால்தான் உருவாகும். நம்பிக்கையை விருத்தி செய்து உற்சாகத்துடனும், தைரியத்துடனும், செயற்பாட்டில் (மீண்டும் மீண்டும் சாதனை செய்தல்) ஈடுபடவேண்டும். உன்னால் எதையும் அடைய முடியும் என்று நம்பிக்கையுடன் இரு.நீ எதையும் எல்லாவற்றையுமே அடைவாய். நீ உன்னை மறுத்து நிற்காதே.
29. உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்த பெண்துறவியின் வரலாறு என்ன?
உத்தரப் பிரதேசத்தில், மிகுந்த தானம் தருமம் செய்த பெண்தறவி இருந்தார். அவர் எப்போதும் தலைகுனிந்தவாறே நடந்து கொள்வார்.யாராவத நீங்கள் ஏன் தலைகுனிந்தவாறு நடக்கின்றீர்கள்? நீங்கள் எவ்வளவு தானம் செய்கிறீர்கள். நீங்கள் உங்களையிட்டுப்பெருமை பட வேண்டுமல்லவா, என்று
கேட்டால் 'கடவுள் எனக்கு எத்தனையோ கரங்களால் செல்வத்தைத்
தந்துள்ளார். ஆனால் நானோ ஒரு கையினால்தானே ஈகின்றேன். இது எனக்கு ஒரு வெட்கமான செயல் இல்லையா? என்று கூறுவார்.
30. நாம் பின்பற்ற வேண்டிய சுவாமிகளின் கட்டளைகள் அல்லது
உத்தரவுகள் யாவை?
நாம் பின்பற்ற வேண்டிய சுவாமிகளது கட்டளைகள் அல்லது உத்தரவுகளாவன பின்வருமாறு
1. உனது நாவை துஷ்பிரயோகம் செய்யாதே. 2. மற்றவர்களை விமரிசிக்கவோ நையாண்டி
பண்ணவோ வேண்டாம். 3. இறை நாமத்தை ஒதிக் கொள். 4. எல்லோரிலும் இறைவன் இருக்கிறார் என்பதை நம்பு. 5. எவரிடத்திலும் குற்றங் காணாதே.

பின்இணைப்பு ஒன்று 185
10.
11.
12.
13.
14.
எல்லோருக்கும் சேவை செய்து, இவ்வுலகமானது இறைவனின் உருவேயன்றி வேறொன்றுமில்லை என்று உணர்ந்து கொள். செய்யும்கருமங்களை அன்புடன் கடவுளுக்கு அர்ப்பணமாக எண்ணிச் செய்து கொள். தான தருமம் செய்வதிலும் மனித சமூகத்திற்குச் சேவை செய்வதிலும் உன்னை ஈடுபடுத்திக் கொள். தியாகம் செய்யப் பழகு. உடம்பை சேவைக்கும் சிந்தயை இறைவனைப்பற்றி எண்ணுவதற்கும் உபயோகித்துக்கொள். உனது செல்வத்தை தான தருமங்களுக்குப் பிரயோகித்துக்கொள். தனிப்பட்ட நலனுக்காகத் தவம் செய்வது மடைமைத்தனம். உனது ஆத்மீகச் செயற்பாடுகள்கூட மற்றவர்களுக்கு பிரயோசனப்படக்கூடிய்தாக இருக்க வேண்டும். எல்லேரது நலனுக்காகவும் பிரார்தனை செய். சேவை செய். இந்தகைய பரந்த உள்ளம் உனக்கு இருக்கு மானால் தெய்வீகம் உன் மீது இயல்பாகவே வந்து உன்னில் பரிணமிக்கும்.
كيجيا
蜘影

Page 102
IO.
பின் இணைப்பு இரண்டு
1990 ஆம் ஆண்டில் பிருந்தா வனத்தில் நிகழ்ந்த கோடைக்கால அருளுரைகளில் தெரிவு செய்த சில பகுதிகள்
இந்த முழுப்பிரபஞ்சமுமே உண்மையிலிருந்து தோன்றியது. மீண்டும் அத உண்மைக்குள்ளே அடங்கிவிடும். உண்மையின் ஆட்சிக்கு அப்பால் எங்கு இடம் இருக்கிறது?
மனிதனது வாழ்வில் மிகவும் தேவைப்படுவது மனிதவியல். எமத புலமை, நிலை, அதிகாரம் எவ்வளவாக இருந்தபோதிலும் நாம் மனித விழுமியங்களை மறக்கக் கூடாது.
கல்வியால் மட்டும் மக்கள் அறிவுள்ளவராக ஆவதில்லை.
அமைதி, பாதுகாப்பு இல்லாமைக்கு மூலகாரணம் உண்மை நேர்மைத்தனத்தை உதாசீனம் செய்வதேயாகும்.
அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தைப் பிரதிபலிக்கச்செய்வதே மாணவருக்குரிய சரியான கல்வி முறையாகும்.
எந்த உயிர்வாழும் சீவன் மேலும் ஒருவர் வெறுப்பையோ தீய விளைவையோ ஏற்படுத்தக் கஉடாத,
பாவத்திற்கு அஞ்சுவதையும், கடவுள் மீது அன்பையும் சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் மக்கள் மறந்து விட்டனர்.
உண்ம்ை பேசு. நேர்மையைக் கடைப்பிடி. நாம் தர்மத்தை அனுசரித்து அதனைப் பேணுவோமானால், தர்மம் எம்மைக் காப்பாற்றும். தர்மம் என்பது எண்ணத்தின், சொல்லின், செயலின் இசைவாகும். இது சிந்தையின் தறைகளைத் தாய்மைப்படுத்தம்.
நாம் உண்ணும் உணவின் தன்மையின் விளைவே எமது எண்ணங்கள்.
உங்கள் கடமைகளை ஆற்றும் அதேவேளை ஆன்மீகப்பாதையினின்றும் விலகாதீர்.

பின்இணைப்பு இரண்டு 187
II.
I2.
I3.
I4.
I5.
16.
I7.
I8.
I9.
20.
2I.
22.
23.
கடவுளே அனைத்திற்கும் அடித்தளமாக விளங்குவதால் அவர்மீது நம்பிக்கையை விருத்தி செய்.
ஆத்மாவை உணருமட்டும் உடம்பைக் கவனமாகப் பேணிக்கொள்.
ஆசைகளை மட்டுப்படுத்தலில் நான்கு முக்கிய பகுதிகள் அமை கின்றன.
1. உணவை வீணாக்காதே,
2. பணத்தை விரயப்படுத்தாதே,
3. சக்தியை வீணாக்காதே,
4. நேரத்தை வீணாக்காதே,
இறந்த காலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தில்தான் தங்கியுள்ளது. ஆகவே நிகழ்காலத்தை நன்கு பிரயோகித்துக் கொள்ளுங்கள்.
உலகில் நம்பிக்கை வைப்பதைவிட தன்னம்பிக்கையை விருத்தி செய்யுங்கள்.
பிரபஞ்சத்திலே காணும் பன்மை நிலைப்பாட்டின் அடித்தளமாய் விளங்கும் ஒருமை நிலையை அனுபவியுங்கள்.
நீ எவ்வாறு எண்ணுகிறாயோ அத ஆகிறாய் 'யத்பவம் தத்பவதி.
அசைவ உணவு மனிதனின் உடம்பைத் தாக்குவது மட்டுமன்றி அவனது சிந்தையையும் பைத்திய நிலைக்கு ஆக்கிவிடும்.
நல்ல சுக வாழ்விற்கு மனிதனுக்கு 1,500 கலோரி உணவு தினமும் போதும். இளைஞர்கள் 2000 கலோரி உணவுடன் திருப்தியடைய வேண்டும்.
சமூகத்தில் நிலவும் தீய பிரச்சனைகளுக்குக் கெல்லாம்'நான் எனது என்ற உணர்வுகளே பொறுப்பாகும்.
நன்மையையும் தீமையையும் சமநிலைப்பாட்டில் ஏற்றுக்கொள்.
ஒருமுனைபபாடான பக்தியை வளாதது இறைவனிடம் சரணடை அப்போது புலன்களை நிச்சயமாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரலாம்.
அறிவோடு நல்லொழுக்கமும் மிகவும் முக்கியமானதாகும்.

Page 103
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுரைகளில் சில பகுதிகள் 188
24.
25.
26.
27.
28.
29.
30.
3I.
32.
எல்லா புலக்கருவிகளிலும் நாவிற்குத்தான் கூடிய முக்கியத்துவமும், தாக்கத்தை ஏற்படுத்தம் சக்தியும் உண்டு. இந்த ஒரு புலனுறுப்பைக் கட்டுப்படுத்தினால் ஏனைய புலனுறுப்புக்களை இலகுவாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.
ஆத்ம விசாரணை வழி செல்லுங்கள். நான் உடம்பும் அல்ல புலனுறுப்புகளும் அல்ல. நான் என்றும் பேரானந்தநிலையில் உள்ள ஆத்மா' என்ற கொள்கையில் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். ஆத்ம விசாரணை வழி மூலமாகவும், நீ வெறொன்றுமல்ல. ஆத்மாவே என்ற எண்ணத்தின் மூலமாகவுமே நீ மனித எல்லைகளைக் கடந்து, எல்லா வேளைகளிலும் உனது தெய்வீகதான்' என்பதை அனுபவிக்க முடியும்.
அதிகமாகப் பேசுதல், சிந்தனைக்கு தீங்கு விளைவிக்கும்.
நாக்கு நான்கு வித குற்றங்களை ஆற்றவல்லது
(1) பொய் சொல்லுதல். (2) மற்றவர்களைப் பற்றி கதைகாவுதல். (3) மற்றவர்களை விமரிசித்தல், தாஷித்தல். (4) அளவுக்கு மிஞ்சிக் கதைத்தல்.
உண்மை, நேர்மை, நீதிவழியே செல்லுதல் மனிதனுக்கு பாதுகாப்பை யளிக்கக் கூடியத.
மேலான அன்பும் பக்தியுடனும் தன்னைச் சதா எண்ணிக் கொண்டிருக்கும் பக்தர்களுடைய இருதயமே தான் என்றும் நிரந்தரமாக குடியிருக்கும் பிரதான காரியாலயம், வதிவிடம் என்று நாராயணமூர்த்தி தேவ முனிவராகிய நாரதருக்குக் கூறினார்.
உடம்பு, சிந்தை, ஆத்மா ஆகியவற்றின் ஒன்றிணைப்பே மனிதன்.
அனைத்திற்கும் மூலகாரணமாக விளங்குவத சிந்தையாகும். இந்த முழுப்பிரபஞ்சமுமே சிந்தையினுடைய பிரதிபலிப்பாகும். "மனோமூலம் இதம் ஜகத்”
எண்ணங்களின் தொகுப்பே சிந்தையாகும். எண்ணங்கள் செயற்பாடுகளை உருவாக்கும். இச்செயல்களின் விளைவுகளை, இன்பமோ துன்பமோ, நாம் அனுபவிக்கிறோம்.

பின்இணைப்பு இரண்டு 189
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4I.
42.
எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தன. மனிதன் இறந்தபின்பும் நீடித்திருப்பவை. ஆகையால் சிந்தையில் தீய எண்ணங்களை வரவிடாத இருப்பது முக்கியமாகும். தீய எண்ணங்கள்தான் மனிதனை மனிதனி னின்றும் பிரிப்பது, பொதுவாக அவர்களிடையே இருக்கும் தெய்வீகத் தையும் மறக்கச் செய்வத.
பிறப்பு இறப்பு வட்டம்-சம்சாரம் என்ற மரத்தின் மூலவேர் சிந்தையாகும்.
அவசரம் அழிவைத் தரும் ~ அழிவு மனக்கிலேசத்தைத் தரும். ஆகவே எதற்கும் அவசரப்பட வேண்டாம்.
நெஞ்சில் நேர்மைத்தனம் இருந்தால் குணத்தில் அழகு இருக்கும்.
இறைவனிடம் சரணாகதி என்பதன் சரியான விளக்கம் -
1. உனது செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு
அர்ப்பணித்தல் 2. அவற்றிற்கு தானே கர்த்தா என்ற தப்பான எண்ணங்
கொள்ளாத 3. அச்செயல்களுக்குப் பலனை எதிர்பாராத இருத்தல்.
ஆத்மீகப் பாதையின் ஆரம்பம் சங்சங்கம்- அடியார் கூட்டம் அறிவு டையாரது திருக்கூட்டம், பற்றற்ற நிலையை உருவாக்கி ஜீவமுக்திக்கு இட்டுச் செல்லும்- அதாவது வாழும் போதே விடுதலை. ~வீடுபேறு
நீ பிறந்தபோது உனது கழுத்து பிரம்மனால் உனக்கு வழங்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத பாரமான மாலையைக் கொண்டிருந்தத. அதாவது நீ முன்னைய பிறவிகளில் செய்த நல்ல தீய விளைவுகளினால் ஆக்கப் பட்ட மாலை.
அகக் கருவியாக விளங்கும் அந்தக் கரணங்களைத் தாய்மையாக்கி ஈற்றில் இல்லாமற் செய்வதே மனிதன் முதற்கண் முயற்சிக்க வேண்டியது.
இன்று மனிதன் அனுபவிக்கும் பல விதமான நோய்களுக்கு காரணம் தீய வழியில் பெற்ற உணவை உண்பதாலும், சந்தேகத்திற்குரிய தீய நடத்தையையுடைய சமையற்காரர்களது தீய அதிர்வுகள் பரந்த குற்றப்பட்ட உணவை உட்கொள்ளுதலாலும் ஏற்பட்டதாகும்.
முதலில் இறைவனுக்கு உங்கள் உணவை நிவேதித்து விடாது உண்பீர்களானால், அதில் அடங்கியிருக்கும் குறைபாடுகள் அழுக்குகள்

Page 104
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுரைகளில் சில பகுதிகள் 190
43.
44.
45.
46.
47.
48.
ஆகியவற்றால் நீங்கள் தாக்கப்படுவீர்கள். நீங்கள் உண்பதற்கு முன் உணவை இறைவனுக்கு நிவேதித் தீர்களானால், கீதை4 அத்தியாயம்24 செய்யுளிலுள்ள படி 'பிரம்மார்ப்பணம்' என்று கொள்ளின் அத பிரசாதமாகின்றது. இறைவன் தந்தது. அதில் உள்ள குற்றங்கள் எல்லாம் இல்லாமற் போய்விடும்.
உடம்பை வளை, புலன்களை அடக்கு, சிந்தையை அழி. இதுவே (மரணமற்ற நிலை) இறவாமைக்கு வழிவகுக்கும்.
மனிதனின் அக விரோதிகள் கூட்டத்தினர். காம, குரோத, லோப, மோக, மதம், மத்சர்ய - ஆசை, கோபம், அவா, பற்று, பெருமை, பொறாமை.
இந்த ஆறு அக விரோதிகளுள் பெருமையே மிக மோசமானது பெருமை எட்டு வகைப்படும். பணத்திமிர், கல்வி சாதி, ஐஸ்வரியம், அழகு, இளமை, பதவி ~ அதிகாரம், ஆத்மீகம்.
சிந்தை, சொல், செயல், இவற்றின் தாய்மையைப் பெற வேண்டினால் மேற்காணும் ஐந்து கோட்பாடுகளைப் பின்பற்றுக.
தீயதை எண்ணாதே - நல்லதையே எண்ணு வாய் தீயதை பாராதே - நல்லதையே பார் தீயதை கேளாதே- நல்லதையே கேள் தீயதை பேசாதே- நல்லதையே பேசு தீயதை செய்யாதே - நல்லதையே செய் இந்த ஐந்து கோட்பாட்டையும் உங்கள் மூச்சுப் போல பேணிக் கொள்வீர்களானால் நீங்கள் அந்தக்கரணங்களது நான்கு குற்றங்களையும் வென்று சிந்தையின் தாய்மை நிலையையைப் பெற்று அந்தக்கரணங்களின் ஏனைய மூன்றினதும் தாய்மை நிலையையும் பெற்று எல்லையில்லா பேரின்பத்தை அனுபவிக்கலாம்.
கடவுள் தனது பக்தர்களை மறப்பதில்லை. பக்தர்களே இறைவனை மறக்கின்றனர். கடவுள் தனது பக்தர்களை ஒருபோதம் கைவிடுவதில்லை. பக்தர்களே கடவுளைக் கைவிடுகிறார்கள்.
நம்பிக்கை உடையவன் மேலான அறிவைப்பெறுவான்.
சிரத்தாவான் லபதே ஞானம்
ஐயப்பாடு உடையவன் அழிவான்
சம்ஸயாத்மாவினாசியத ~ (கீதை IV 39-40)

பின்இணைப்பு இரண்டு 191
49. சிந்தையின் இயல்பு உண்ணும் உணவின் தரத்திலும் அளவிலும்
தங்கியுள்ளது.
50. அகங்கார (ஆணவம்) என்பதன் சரியான கருத்து தன்னை உடம்புடன் தவறாக பூரணமாக ஒருமைப்படுத்திக் கொள்ளல் ஆகும். ( இனங் காணுதல்) எல்லோருமே தமத செல்வத்தைப் பற்றியோ அறிவைப்பற்றியோ பெருமிதம் கொள்ள மாட்டார். ஆனால் எல்லோருமே தான் தனது உடம்பு என தவறாக பூரண ஒருமைப்பாடு கொள்வதால் அகங்காரத்தின் பிடியில் சிக்கிக் கொள்வர்.
நீ பிறக்கும் போது 'சோகம் நான் யார்?' என்று கத்திக் கொண்டுவந்தாய். உனது இதழ்களில் அதே வினாவுடன் நீ இறக்கக் கூடாது. நீ சாகும் போது மிக மகிழ்ச்சிகரமாகவே "சோகம்' நான் அவனே' என்று உறுதியோடு கூறக்கூடியதாக இருக்க வேண்டும். 'சோகம்' என்ற சொல்லு நான் பிரம்மம்' என்ற கருத்தை வெளியிடுகிறது. இந்த எண்ணத்தில் நீ சிந்தித்திருப்பாயே யாகில் நான் தான் உடம்பு என்ற ஆணவ உணர்வு உண்னை எதவித தொந்தரவும் தராது அற்றுப்போய்விடும்.
அகங்காரத்திலிருந்து விடுவித்துக் கொள்ள ஒரே ஒரு வழி தெய்வீக வாழ்வு வாழ்தல் ஆகும்.
வாழ்வின் எல்லாக் கோணத்திலும் மனிதன் ஓயாத இரு காரியத்தில் முயற்சித்த நிற்கிறான். ஒன்று சந்தோஷத்தை அடைதல். இரண்டாவது தண்பத்தை நீக்குதல்
மனிதனின் பந்தம் ~ (பற்று) இதற்கு மூலகாரணமாய் அமைவன மமகாரம்- பற்று அல்லது எனது என்ற உரிமை உணர்வும், அகங்காரம்ஆணவம்~ ஆகும். அகங்காரம் மமகாரம் இரண்டும் ( ஆணவமும் பற்றும்) முறையற்ற உணவை உண்பதால் உண்டாவதாகும். கெட்டவகை உணவு, அல்லது தீயவழியில் பெறப்பட்ட உணவு மனிதனைப் பல வழிகளில் அறியாமையிற் சிக்கவைக்கும். அவனுள் தாய எண்ணங்கள் வரவிடாத தடுத்த நிற்கும். ஒருவரது சிந்தனை, சொல், செயல்,இவற்றைத் தீர்மானிப்பதில் உணவின்
பங்கு எத்தகைய பிரதானம் வாய்ந்தது என்பதை மாணவர்கள் கண்டு கொள்ள வேண்டும். உங்களுடைய சிந்தை, அறிவு ஆகியன

Page 105
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுரைகளில் சில பகுதிகள் 192
Տ6.
57.
58.
59.
60,
61
62.
ஆரோக்கியமுள்ளதாக செயல்படுவதற்கு உங்கள் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறத.
அண்டவெளியில் அனைத்தம் பிரம்பம் ஆகும். சர்வம் கல்விதம் பிரம்மம்.
இயற்கையே இறைவனின் ஆடை
பொதுமக்களுக்குச் சேவை செய்வதனாலேயே உண்மையான சந்தோஷம் கிடைக்கிறத. ஏழைகள் இயலாதவர்களுக்கு உதவி செய்யச் செல்லுங்கள் அத்தகைய சேவையிலிருந்து நிம்மதியும்பலமும் பெறுவீர்கள். உங்கள் மனச்சாட்சியும் நிறைவை உணரும்.
நீங்கள் எத்தகைய சாதனையைச் செய்தாலென்ன செய்யாது விட்டாலென்ன உங்களது பிரதான நோக்கம் இறைவன் பால் அன்பு கொள்வதை விருத்திசெய்வதாகும். அந்தப்புனிதமான அன்பை விருத்தி செய்தால் நீங்கள் எதையும் பெற்றுவிடலாம்.
சிந்தை என்பது இருக்கும் வரையிலும் ஆசை உங்களைவிட்டு நீங்காது. ஆசை இருக்கும் வரை பிழையான எண்ணமாகிய நான் எனது உங்களை விட்டு நீங்காத, நான்', 'எனது' என்ற எண்ணம் இருக்கும் வரை அகங்காரம்உங்களை விட்டுப் போக மாட்டாத, ஆத்ம ஞானம்தான் என்ற அறிவை அடைவதற்கு சிந்தையை முற்றாக அழித்த விடலன்றி வேறு வழி இல்லை.
சிந்தையை அழிக்கக் கூடிய வழிகளைக் காட்டும் சாதனைகளே சரியானவையாகும். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
1. உங்கள் செயல்களை எல்லாம் இறைவனுக்கு
அர்ப்பணித்தல் 2. அவற்றை இறைவன் செயல்களாக எண்ணுதல் 3. சலனமற்ற நம்பிக்கை இறைவன் மீது கொண்டு
செயல்களைச் செய்தல், மனித முயற்சியால் எதவுமே நடப்பதில்லை என்று திடமான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்.
சிந்தை முற்றாக அழிந்தபின் ஆத்மஞானம் தன்னை வெளிக்காட்டும்

பின்இணைப்பு இரண்டு - 193
63.
64.
65.
65.
67.
68.
69.
70.
Τ1.
72.
நான் நான் நான் (அகம், அகம், அகம்) என்றுஉள்ளிருந்துவரும்
ஆத்மாவின் தெய்வீகக் குரல், 'சோகம்' மந்திரத்தின் உற்பத்தியிடம் அகம் உடம்புடன் பூரண ஒருமைப்பாட்டைக் கொள்ளுமிடத்த அகங்காரம் ஆகிறது. அகம் தெய்வீகமானத. உள்ளத்தைத் தாய்மைப் படுத்தவதனால் மட்டுமே அகத்தை உணரலாம். இது அன்றி நால்களைக் கற்றலாலோ பண்டிதனாக ஆவதாலோ அறிய முடியாது.
தோற்றமளிக்கும் அனைத்திலும் ஒருமையைக் காணக்கூடியதான தன்மையை உணர்ந்த விருத்தி செய்தலே எமக்குத் தேவைப்படுவதாகும்.
ஆத்ம ஞானத்தை அனுபவித்த ஆத்மானந்தத்தில் ~ தான் என்ற பேரின்ப நிலையில் திளைத்து இருப்பதற்கு பக்திதான் சிறந்தவழி, தான் என்பதில் இடையறாது சிந்தித்தல் பக்தியாகும்.பக்தியும் ஞானமும் இருவேறு தன்மைகள் அல்ல. பக்திதான் ஞானம். ஞானமே பக்தி
பக்தியையும் ஞானத்தையும் பிணைக்கும் பந்தம் பிரேமை - தெய்வீக அன்பாகும். பிரேமை என்ற புனித கயிற்றினால் இறைவனையே கட்டி விடலாம்.
உணத சுய முயற்சியாலே உன்னை உயர்த்திக் கொள் "உடறத் ஆத்மானார் ஆத்மானம்' (கீதைwi- 5)
உனது உடல் சிந்தை இரண்டையும் எல்லா ஜீவன் மீதும் அன்பார்ந்த சேவையை ஆற்றுவதற்கே அர்ப்பணிப்பாய்.
மக்கள் எல்லோரதும் உள்ளத்தில் அன்பெனும் வித்தை விதைத்த மனித சமுதாயத்தில் அமைதியும் தெய்வீக அன்பும் மலர்வதற்கு வசதியளிப்பதே உண்மையான தெய்வீகம்.
தன்பம் இருக்கிறதா இல்லையா, கஷ்டம், சஞ்சலம் இது போன்றவை உண்மையான சரணாகதி நிலையில் கவனத்தில் இருக்கமாட்டா.
சமாதி = சமா+தி என்றால் சமசிந்தனையாகும்.
எல்லாமே உன்னில்தான் உண்டு. நீ செய்ய வேண்டிய சாதனை என்ன வென்றால் தடையாக இருப்பதை நீக்கிவிடுதல் ஆகும். அதாவது உன்னில் ஏலவே இருக்கும் தெய்வீகத்தின் பிரதிபலிப்பை தடைசெய்யும் அறியாமையாகிய தடையை நீக்குவதாகும்.

Page 106
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுரைகளில் சில பகுதிகள் 194
73
74.
75,
76.
.ךך
78.
79.
80.
தெய்வீகம் உன்னில் என்றுமுண்டு, ஆனால் நீ அதை மறந்து விட்டாய். நீ ஏன் மறந்தாய். நீ உன்னை உடம்புடன் பூரணமாக ஒருமைப்பாடு கொண்டதனால் ( இனங்காணல்) ஆகும்.
சிந்தை உள்ளவரை பல்வகைப்பட்ட எண்ணங்களிலிருந்து மனிதன் தப்பிவிட முடியாதது.
உண்மை சத்தியம் என்பதில் நீ உன்னை நிலைநாட்டிவிட்டால் நீ புகழ்ச்சியாலோ இகழ்ச்சியாலோ, இன்பம் தன்பம் ஆகியவற்றாலோ தாக்குப் பட மாட்டாய்.
சுவாமிகளத கட்டளைகளை முழுமனதடன் ஏற்று கீழ்படிந்த நடப் பாயானால், அவரது கருணை உன்மேல்பொழியும். அவரது கருணையைப் பெற நீ விஷேட ஆராதனை செய்ய வேண்டியதில்லை.
உங்கள் வார்த்தைகளுக்கு முதற்கண் மதிப்புக் கொடுங்கள். ஒரு சொல்லின் உயிராய் இருப்பது உண்மை. உண்மையில் உங்களை நீங்கள் நிலை நிறுத்திக் கொண்டால். விசனத்திற்கோ சஞ்சலத்திற்கோ இடம் இருக்காது.
தெய்வீத்தின் இயல்பினை எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியாது. ஆதேய மாற்றமடையும் அனைத்திற்கும் ஆதாரம் ஆதாரப் பொருளாய்மாற்றமடையாது நிற்கும் பொருளாய் விளங்கும் சுவாமிகளது தெய்வீகத்தை அறிய முயற்சி செய்யுங்கள். *
புறப்பொருள்களாய வீடு, காணி, வாகனம்,செல்வம் மற்றும் உடைமைகள் எனப்படுவனவற்றைப் பெற்றுக் கொள்ள மனிதன் இரவுபகலாக முயற்சித்துத் தன் வாழ்நாளை வீணாக்குகின்றான். மனிதன் பிறந்தத இந்த அற்பப் பொருளைப் பெறுவதற்காகவா? இல்லை. இல்லை. இல்லை. வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கடமை இறைவனை உணர்தல் ஆகும். மனிதன் கடவுளை அறிய வேண்டும்.உணர வேண்டும். பார்க்க வேண்டும். கடவுளுடன் கதைக்க வேண்டும். இதுதான் உண்மை உணர்தலாகும்.
தியாகத்தினாலொழிய நற்செயல்களாலோ, பிள்ளைகளாலோ செல் வத்தாலோ இறவாமை' நிலையை அடையமுடியாது.

பின்இணைப்பு இரண்டு 195
81.
82,
83.
84.
85.
தியாகம் என்றால் என்ன? மனைவி மக்கள், வீடு, உடைமைகள்
இவற்றைக் கைவிடுதல் தான் தியாகம்' என்பதல்ல. உங்களுடைய 'பந்தம்' என்பத எத நீதான் உடம்பு எனப்பூரணமாக ஒருமைப்படுத்திக்கொள்ளல். நீதான் உடம்பு என்ற தப்பான எண்ணத்தைக் கைவிட்டு, நீ ஆத்மா என்ற உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அப்படியென்றால்தான் வீடுபேற்றை - மோட்சத்தை அடையலாம். உடம்பு நினைவிலிருந்த பற்றை நீக்கினால் (தேக விரக்தி) நீபந்தத்திலிருந்து,தன்பத்திலிருந்து விடுபடுகிறாய். தெய்வத்தின் மீது பற்றை வைத்தால் (தெய்வ ஆசக்தி) உனக்குப் பேரின்பத்தை மோட்சத்தை அளிக்கும், இறைவனோடு ஒன்றாகி விடுவாய்.
தேகப்பிராந்தி - உடம்பு நினைவு இதிலிருந்து எப்படி விடுபடலாம். உணவு, நீராகரத்தைக் குறைத்த, உடல் நலிந்த, மரணத்தைத் தழுவும் நிலையால் அல்ல. ஆனால் நம்பிக்கையுடன் நான் உடம்பல்ல. உடம்பு, புலன்கள், சிந்தை அறிவு எல்லாம் எனது கருவிகள் - உபாதிகள், என்று உறுதி பூணுதலால்தான் தேகபிராந்தியை விடுவித்தக் கொள்ளலாம். அழுக்கு ஆடையை களைந்த விடுவதபோல, உடம்பு உணர்வையும் கைவிட்டு விடவேண்டும்.
பேரின்பத்தின் உருவே நீ. அதுவே உனது இயல்பு. ஆனால் அதனை உணர்ந்து அதை அனுபவிக்க உன்னால் இயலாத இருப்பது கவலைக்குரிய விடயமாகும். விருப்புக்கள், வெறுப்புக்கள் நான் எனத எனும் திரையினால் இப்பேரானந்தம் மறைக்கப்பட்டுள்ளது. (றாக-துவேஷ) பற்றும் வெறுப்பும் உன்னில் உள்ள பேரானந்தத்தை மறைக்கும் தடித்த ஆடைகள். பற்று வெறுப்பு இரண்டையும் நீக்கிவிட்டால் உனது உண்மையான இயல்பை உன்னால் காணமுடியும் நீயே பேரானந்தத்தின் பிரதிபலிப்பாய் இருந்தும் நீஅதனை எங்கெல்லாமோ தேடி அலைகின்றாய்.
நீ வேண்டிய அளவு முயற்சி செய்தாயேயானால் உன்னுள் இருக்கும் உனது தெய்வீகத்தினதம் பேரானந்தத்தினதும் உண்மையை நிச்சயம் அனுபவிக்க முடியும்.
விலை மதிப்பிட முடியாத பொக்கிஷமாக விளங்கும் இந்தப் பேரானந்தத் தினை, கொடிய நச்சுப் பாம்பாகிய அகங்காரம் காவல் செய்த கொண்டிருக்கின்றது. அகங்காரத்தின் மூல காரணம் தேகபிராந்தி- நீ உன் உடம்புடன் ஒருமைப்பாடு கொள்ளுதல் (இனங்கண்டு கொள்ளல்)

Page 107
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுரைகளில் சில பகுதிகள் 196
86.
87.
88
89.
90.
9I.
92.
93.
94.
95.
உனது வாழ்நாளிலே நீ ஆற்றிய நன்மை தீமைகளே உனது மரணத்தின் பின் உன்னோடு தொடர்ந்து வருவன.
விதைத்ததையே அறுப்பாய் என்றதை மறந்து விடாதே. இதவே மீற முடியாத கண்ம விதியாகும்.
சுய நோக்கிற்காக கள்ளங் கபடமான முறையில் மிகு விரைவில் பணம் சம்பாதிக்க முயற்சியாத உனது திறமைகளையும் வளங்களையும் உலக நன்மைக்காக செலவிடுவாயாக.
புனித அற நூல்கள் சாதாரணமாக பாராயணம் பண்ணுவதற்காக அல்ல. அவை அனுசரிப்பதற்கேயாம் - ஆசாரண
இன்று உலகிற்குத் தேவைப்படுவது. செயல்படக்கூடிய மக்கள். ஆச்சாரமானவாஸ், ஆகார மாணவாஸ் அல்ல~ மனித உருவில் வாய் சம்பிரதாயம் மிக்கவர்களை அல்ல.
சத்தியத்திற்கு மேலான தர்மம் இல்லை. தர்மத்திற்கு மேலான சத்தியமும் இல்லை. தர்மமும் சத்தியமும் பிரிக்க முடியாதவை ஒன்றை ஒன்று நம்பி இருப்பவை.
சமநிலைப்பட்ட சிந்தையையும் உலகளாவிய அன்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பன்மை நிலையிலுள்ள அனைத்தினதம் ஒருமை நிலையை அனுபவிக்க முடியும்.
நல்லொழுக்கமும் நேர்மையும் இறைவன் நிலைத்த நிற்கும் கோயில்கள்.
ஒருவன் தான் போதிப்பதை அனுசரிப்பானானால் அவன் சாதாரண மனிதனல்ல. அவன் மாகாத்மா. பெரிய மனிதன். ஒருவன் ஒன்றைச் சொல்லி வேறொன்று செய்வானானால் அவன் மனிதன் அல்ல மிருகம்.
தீயகுணங்களை தவிர்த்தலே உண்மையான தியாகம். மனைவி மக்கள், செல்வம், உடைமை இவற்றைக் கைவிடுவது பெரிய தியாகமாகாது . அது உங்களது தீய இயற்கைக் குணங்களைக் கைவிடுவதிலும் மிகவும் இலகுவானது. பின் கூறப்பட்டதைத் தவிர்த்தலே உங்களை ஒரு நிறைந்த மனித ஆளுமை மிக்கவனாக மலரச் செய்ய வழிவகுப்பத.

பின்இணைப்பு இரண்டு 197
96.
97
Գ8.
99.
IOO.
I OI.
II 02
I03.
IO4.
IO5.
ஒரு உண்மையான மனித ஜீவியாக வாழ்தலே மனிதனது பெரிய பிரதான கடமையாகும். மிருகத்தைப் போல் வாழ்வது மனித சமுதாயத்தில் கரும் புள்ளி போன்றத.
மனிதனிலுள்ள மனித இயல்புகளை அவனுள் இருக்கும் ஆறு விரோதிகள் அழித்து விடுகின்றன. காமம், குரோதம்,லோபம், மோகம், மதம், மத்சர்யம் - ஆசை, கோபம், அவா, மயக்கம், பெருமை.பொறாமை
மனிதன் பதினாறு தீய குணங்களை விலத்ததல் வேண்டும்.
1) ஆறு உள்ளக விரோதிகள்.
2) எட்டுவித பெருமைகள்.
3) ராஜச, தாமஸ் இயல்புகள் அத்தடன் மனிதன் செய்பவன்- அனுபவிப்பவன் நான் என்ற தன்மைமையும் விட்டுவிட வேண்டும்.
ஒருவன் நல்ல கருமங்களில் ஈடுபட்டு அவற்றினை நம்பிக்கையுடன் தெய்வீகத்திற்கு அர்ப்பணிப்பானானால் அத்தனையும் பிரம்மன் அவனுக்கு- இறைவனின் கருணையையும் அனுக்கிரகமும் கிடைக்கும்.
உண்மையான கல்வி அடக்கமுடைமையை விளைவிக்கும்.
மனிதன் மறக்கக் கூடாத மூன்று ~சத்தியம், தர்மம், நியாயம், உண்மை,~நேர்மை~ நீதி
முழு உலகத்தின் நன்மைக்காக என்றும் வழிபாடு செய்.
இறைவன் மீது அன்பை விருத்தி பண்ணு, நீ கஷ்டங்கள் மத்தியில் இருக்கும் போதும் நம்பிக்கையை தளரவிடாதே.இன்பம் தண்பம். நயம், நட்டம்.சந்தோஷம், தக்கம் இவையெல்லாம் ஆண்டவனின் பிரசாதம்அவன் சித்தம்-கருணை என்று எண்ணிக் கொள். எச்சந்தர்ப்பத்திலும் அவன் நாமத்தை உச்சரிக்க மறந்து விடாதே. இறைநாமமே வாழ்க்கை எனும் ஆற்றைக் கடந்த செல்வதற்கு நம்பகமான தோணியாகும்.
பேராசைக்கு நிகரான நோய் இல்லை. கோபத்திற்கு மேலான பகைவனும் இல்லை.
இறைவனது மகிழ்விற்காக, நாங்கள் செய்யும் கருமங்கள் அனைத்தையும் அவருக்கே அர்ப்பணிதத விட வேண்டும் என்பதே கர்ம யோகத்தின் சாராம்சம். உலகியல் ஆசைகளைப் பெற்றுவிடுவதற்காக இறைவன்

Page 108
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுரைகளில் சில பகுதிகள் 198
மீது கொள்ளும் அன்பு உண்மையான வழிபடாகாது. அன்பிற்காக அன்பு என்ற முறையில் அமைந்திருக்க வேண்டும்.
106. பகவத்கீதை இறைவனின் வார்த்தை. ஆகவே அத ஒரு பிரபஞ்சரீதியான
அறநால்.
107. ஒவ்வொரு மாணவனும் சத்கள்ம~ நல்ல செயல்களை ஆற்றவேண்டும்.அத சித்த சுத்தியை உண்டாக்கும் . சித்த சுத்தி~ தாய்மையான சிந்தை எங்கு உள்ளதோ அங்கு ஞான சித்தி~ ஞானோதயம் ஏற்படும். இவை அனைத்தும் உனக்கு உள்ளேயே இருக்கின்றது. இவற்றைப் புறத்தே வேறெங்கும் தேடவேண்டிய அவசியமில்லை.
108. நீங்கள் எதனை உண்டாலும், பருகினாலும், அதனை இறைவனுக்கு
நைவேத்தியமாக அர்ப்பணிக்க வேண்டும்.
مجھے سا 纵餐饶

பின் இணைப்பு . மூன்று
1990ஆம் ஆண்டு பிருந்தாவனத்தில் பகவாண் பூரி சத்தியசாயி அவர்களால் கோடை அருளுரையில் குறிப்பிட்ட சாதனைகள்.
‘சுவாமிகளத கட்டளைகளை முழுமனதடன் கடைப்பிடித்து வந்தால் அவரது கருணை தானாகவே உங்கள் மேல் பொழியப்படும். அவரது கருணையைப் பெற பிரத்தியேகமான வழிபாடு ஏதும் தேவையில்லை' என்று சுவாமிகள் கூறியுள்ளார்கள்.
1. உண்மை பேசு. நேர்மையை கடைபிடி.
2. திரிகரண சுத்தியை விருத்திசெய். அதாவத சிந்தை,சொல்
செயல் மூன்றினதும் தாய்மையும் இசைவும் ஆகும். உனது வார்ததை களுக்கு மதிப்புக் கொடு. உண்மையே வார்த்தையின் உயிர்.
3. தீயது எண்ணாதே நன்மையை எண்ணு வாய்.
தீயதைப் பாராதே நல்லதையே காண்பாய். தீமையைக் கேளாதே நன்மையை செவிமடுப்பாய். தீயது பேசாதே நல்லதையே பேசு. தீமை செய்யாதே நன்மையே செய்.
4. "எவரையும் தன்புறுத்தாதே. எவருக்கும் உதவி செய் என்ற
பொன்மொழியைப் பேணுவாய்.
5. மனிதனிலுள்ள தீய குணங்களை நீக்கு -
1. மனிதனின் உள்ளக விரோதிகள் காம, குரோத, லோப மோக, மத,
மத்சர்ய~ ஆசை, கோபம், அவா, பற்று, பெருமை, ~ பொறாமை .
2. எட்டுவகை பெருமை~ பணத்தால், கல்வியால் சாதி, செல்வாக்கு
அழகு, இளமை, பதவி ~ அதிகாரம், தபஸ் - ஆத்மிகம் 3. ராஜஸ தாமச குணஇயல்புகள் இரண்டு

Page 109
1990 ல் பிருந்தாவன கோடைக்கால அருளுயில் சாதனைகள் 200
6. பற்று வெறுப்பு( றாக, தவேஷ) இரண்டையும் அகற்றிவிடு. 7. வறுமைப்பட்டோருக்கும் உதவி வேண்டியயோருக்கும் உதவிசெய்.
8. இறைவனிடம் அடைக்கலம் புகு~ இதற்கு
உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணி அவை இறைவனது செயல்கள் என நினை. கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஏற்றுச் செய். நானே செய்பவன் என எண்ணாதே. அவற்றிற்குப் பலனை எதிர்பாராதே. மனித முயற்சியால் எதவும் நடக்காத என்று திடநம்பிக்கை கொள்.
9. எச்சந்தர்ப்பத்திலும் இறைநாமத்தைச் சொல்ல மறந்து விடாதே.
10. முழு உலகின் நன்மைக்காக என்றும் இறைவனை பிராத்திப்பாய்.
'லோகா ஸ்மஸ்த்தா சுகினோ பவந்து
 


Page 110
s
\,
-
-
-
-
-
ܥ
-
-
-
-
-
..
f
 
 


Page 111
- 羁
= ی = *** A
。
TYPESET AND PRINTED NO. 4, NELSON PLACE, CO
 
 
 
 

AT PRINT GRAPHICS LOMBO -6, T. P 596312.