கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருத்தணிகை விசாகப்பெருமாளையர் இயற்றிய யாப்பிலக்கணம்

Page 1
ଦି)_
திருத்தன 57 PITALIGI I
இயற்
 
 

ಗಿಣಾತ್ಮೆ:-
தமாளேயர்
} 

Page 2

.4 y مارک
6) திருத்தணிகை விசாகப்பெருமாளையரவர்கள்
இயற்றிய யாப்பிலக்கணம்
- Go F ..................جبرجہ 6 متحدہ قستفدیوہیے۔یہ ܟܘ-- می
༣༽ཅུ་ - ཡོད།
, ` ዯvሮ› ̆ \ N 3
༡༣ ༽ ', 'ஈழகேசரி' அதிர்ே 2 / திரு. நா. பொன்னையா அர்ைகுள்ால் வெளியிடப்பட்டது.
இரண்டாம் பதிப்பு
த ன ல க்கு மி புத் த க ச |ா ல்ே
சுன்னுகம் O இலங்கை
All Rights Reserved 1954 (விலை சதம் 60

Page 3
முதற் பதிப்பு - 1938 இரண்டாம் பதிப்பு - 1954
திருமகள் அழுத்தகம் சுன்னகம்
ിട്ടു .
 
 
 
 
 
 

η εν ζει f སྣ -一下へ、。
முதற் Mష్టి ಸ್ಥ, பதிப்புரை
/ “° – / این تر - ۹۹۴۴ |
யாப்பிலக்கணம் என்னும் இந்நூல், பஞ்சலக் கணத்துறை போகிய, விக் துவ்மணி-திருத்தணிகை விசாகப்பெருமாளையரவர்களால் இயற்றப்பட்டது. யாப்பிலக்கணங் கற்பார்க்கு முதனூலாயுள்ளது. இந்நூல் முன்னரே பலராலும் பலமுறை பதிக்கப் பட்டு வெளிவந்துள்ளது. இதனை, மாணவர் கற்ப தற்கு இலகுவான முறையில் அமைத்து வெளி யிடல் வேண்டுமென, எமது நண்பரும் தமிழாசிரி யருமான பூரீமான் மா. பீதாம்பரப்பிள்ளை யவர்கள் விரும்பிப் பல திருத்தங்களும் உதவினர். அன் னர்க்கு நாம் பெரிதும் கடப்பாடுடையேம்.
இந்நூலில் அமைந்துள்ள உதாரணச் செய்யுள்
களுக்கு உரைக்குறிப்புக்கள் எழுதிச் சேர்த்து வெளியிட்டால் நலமென எண்ணினேம். அவ்வெண்
ணம் முற்றுப் பெறுதற்குப் பல தடைகள் குறுக் 7
கிடலாயின. எனினும் அடுத்த பதிப்பிலாயினுர் அவ்வெண்ணத்தை முற்றுவிக்கத் திருவருள் முன் னிற்பதாக காலதாமதமின்றி வெளியிடல் வேண்டு மென்ற பலரது வேண்டுகோட்கிணங்க, இப்போது இப்பதிப்பை வெளியிடலானேம்.
மயிலிட்டி தெற்கு நா. பொன்னையா
* திருமகள் நிலையம்'
வெகுதானிய-ஐப்பசி,

Page 4
நூலாசிரியர் வரலாறு
-au--
சென்ஜன நகருக்குப் பக்கத்தேயுள்ள திருத்
தணிகையில், 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், !
கந்தப்பையர் என்னும் வீர சைவ சிகாமணியின்
சிரேட்ட புத்திரராக, இந்நூலாசிரியர் விசாகப் பெருமாளையரவர்கள் பிறந்தார்கள். உரிய காலத் தில் தந்தையாரிடம் கல்வி கற்றுச் சிறந்த
*?
|
வித்துவானக விளங்கினர்கள். நன்னூல், திருக்
குறள், நைடதம், பிரபுலிங்கலீலை முதலிய இலக்கண விலக்கிய நூல்கட்கெல்லாம் உரை எழுதி யுதவி னுர்கள்.
இலக்கணங் கற்கும் மாணுக்கரின் பொருட்டுப் பஞ்ச லக்கணங்களையும் தெளிவுபட விளக்கி, * இலக்கணச் சுருக்க வினவிடை என்னும் நூலொன்றைச் செய்தார்கள். இங்கு பதிக்கப்பட்ட * யாப்பிலக்கணம்' 'இவ் விலக்கணச் சுருக்க விணுவிடை 'ள்' யாப்பைப் பற்றிக் கூறும் பகுதியேயாம். ' பால போத விலக்கணம்" என்னும் பிறிதோரிலக்கண நூலையும் இவர்கள் செய்தார்கள். இவருடன் பிறந்தவராகிய சரவணப்பெருமா?ளயரவர்களும் சிறந்த வித்துவானவர். -

யாப்பிலக்கணம்
யாப்பு
1. யாப்பென்பது யாது? மேற் சொல்லிலக்கணத்திற் கூறிய பல சொற்க
ளாலும் பொருட்கு இடனுகக் கற்றுவல்ல
புலவரால் அணிபெறப் பாடப்படுவதாம்.
யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள்
என்பன ஒருபொருட் சொற்கள்.
2. அஃது எத்தனை வகைப்படும்?
பாவும், பாவினமு மென இருவகைப்படும்.
3. இவ்விரண்டிற்கும் உறுப்பாய் வருவன யாவை?
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறும் இவற்றிற்கு உறுப்பாம்.
1. எழுத்து
4. எழுத்துக்க ளென்பன யாவை ? - மேல் எழுத்திலக்கணத்திற் கூறிய முதல், சார்பு என்னும் இருவகை யெழுத்துக்களுமாம்.

Page 5
2 & A
யாப்பிலக்கணம்
O - செய்யுளடிக்கு எழுத்கெண்ணுங்கால் மெய்கள் எண்ணப்படாவாம்.
தளை சிதைய வருமிடத்துக் குற்றியலிகரமும்
குற்றியலுகரமும் அளபெடையும் தள்ளுண்டுபோம். 。
2 அசை
5. அசை யென்பது யாது?
எழுத்துக்களால் ஆக்கப்பட்டுச் சீர்க்கு உறுப் பாக வருவதாம். -
8. அவ்வசை எத்தனை வகைப்படும்?
நேரசையும், நிரையசையும் என இருவகைப் படும்.
i. நேரசை
7. நேரசைகள் என்பன யாவை? -
குறிலேனும் நெடிலேனும் தனித்து வரினும், அல்லது ஒற்றடுத்து வரினும் நேரசைகளாம். உதாரணம்:
ஆ - நெடிலாலாய நேரசை,
ழி - குறிலாலாய நேரசை, இம்மொழியில், நெடிலுங் குறிலும் கணித்து நேர்சையாயின.
சொல் - குறில் ஒற்றடுத்தாய நேரசை, வான் - நெடில் ஒற்றடுத்தாய மேசை,
இம்மொழியில், குறிலும் நெடிலும் ஒற்றடுத்து
நேரசையாயின.
 
 

யாப்பிலக்கணம் 3
* அ - அவன்” என்பதுபோல விட்டிசைத்த வழியல்லது தனிக்குறில் மொழிக்கு முதலில் நேரசை யாகாது.
ii. Añ5960DJtuu60) 3F 8. நிரையசைக ளென்பன யாவை? குறிலிணையேனுங் குறினெடிலேனுங் கனித்து
வரினும், அல்லது ஒற்றடுத்து வரினும் நிரையசை களாம்.
உதாரணம்:
அணி - குறிலிணையாலாய நிரையசை, அணில் - குறிலிஃண ஒற்றடுத்தாய நிரையசை, குரா - குறினெடிலாலாய கிரையசை. குரால் - குறினெடில் ஒற்றடுத்தாய நிரையசை.
3. Քի 9. சீரென்பது யாது? அவ்வசை சிறுபான்மை தனித்தும், பெரும் பாலும் இரண்டு முதலியவாகத் தொடர்ந்தும் வருவதாம.
10. அச் சீர் எத்தனை வகைப்படும்? ஒரசைச்சீரும், ஈரசைச்சீரும், மூவசைச்சீரும், நாலசைச்சீரும் என நான்கு வகைப்படும்.
i. ஓரசைச்சீர் 11. ஓரசைச்சீர்க ளென்பன யாவை ? தனித்து வரும் நேரசையும், நிரையசையுமாகிய இரண்டுமாம்.

Page 6
4 யாப்பிலக்கணம்
. "இவற்றிற்கு உதாரண வாய்பாடு:
நேர் - நாள்,
நிரை - மலர்.
இவை பெரும்பாலும் வெண்பாவின் ஈற்றி லும் சிறுபான்மை ஒழிந்தவற்றுள்ளும் வரும்.
உ-ம்: மலர்மிசை யேகினன் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.' (1)
* கற்றதன லாய பயனென்கொல் வாலறிவ
னற்ரு டொழாஅ ரெனின்." (2) . இக் குறள் வெண்பாக்களின் இறுதியில், வார் (நாள்), ரெனின் (மலர்) என ஒரசைச் சீரிரண்டும் வந்தன காண்க.
*i, ஈரசைச்சீர்
12. ஈரசைச்சீர்க ளென்பன யாவை ? நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என இரண்டசை கூடி வருதலா லாகிய சீர் நான்குமாம்.
இவற்றிற்கு உதாரண வாய்பாடு:
நேர்நேர் - தேமா.
நிரைகேர் - புளிமா,
நிரைநிரை - கருவிளம்
நேர்நிரை - கூவிளம்.
இவை அகவற்கே உரியவாய் இயற்சீர் எனவும், அகவற்சீர் எனவும் பெயர் பெறும்.

யாப்பிலக்கணம் 5
உ+ம் : "வேதப் பொருளாய் விளங்கிய சங்கரன்,
பாதத் துணை மனம் பற்றுவோர் போதத் தொளிர்நலம் பொருந்திவாழ் குவரே. வேதப் பொருளாய் விளங்கிய சங்கரன் தேமா புளிமா கருவிளம் கூவிளம் என இவ்வக வலுள், ஈரசைச்சீர் நான்கும் வந்தன
瀏
காண்க. பிறவும் அன்ன.
i. மூவசைச்சீர் 13. மூவசைச்சீர்க ளென்பன யாவை ? மேற் சொல்லப்பட்ட நேர்நேர் முதலிய நான்கின் இறுதியிலும் நேரசையும் நிரையசையுங் தனித்தனி கூடி வருதலாலாகிய எட்டுச் சீர்களுமாம்.
இவற்றிற்கு உதாரண வாய்பாடு:
1. நேர் நேர் நேர்-தே மாங் காய், நிரை நேர் நேர்-புளி மாங் காய்,
நிரை நிரை நேர்-கரு விளங் காய்,
நேர் நிரை நேர்-க விளங் காய்.
நேர் நேர் நிரை-தே மாங் கனி. நிரை நேர் நிரை-புளி மாங் கனி. நிரை நிரை நிரை-கரு விளங் கனி.
நேர் நிரை நிரை-க. விளங் கனி,
இவ்வெட்டும் உரிச்சீர் எனவும், - இவற்றுட் காய்ச்சீர் (1 - 4) நான்கும் வெண்பாவிற்கு உரியவாய்

Page 7
6 யாப்பிலக்கணம்
வெண்சீர் எனவும், கனிச்சீர் நான்கும் வஞ்சிப் பாவிற்கு உரியவாய் வஞ்சிச்சீரெனவும் பெயர் பெறும்,
உ-ம்: ' ஆனந்தக் கூத்த னடிக்கன்பு செய்மனனே
யீனங் தனையொழிவா யின்று." (4)
இக் குறள் வெண்பாவினுள், ஆநந்தக் - தேமாங்
காய், கூத்த - தேமா, னடிக்கன்பு - புளிமாங்காய், !
செய்மனனே - கூவிளங்காய், யீனங் - தேமா, தனை யொழிவா - கருவிளங்காய், யின்று - காசு எனக் காய்ச்சீர் நான்கும் வந்தன காண்க.
"மண்ணிரனல் வளிவானெடு வெண்ணிர்மதி வெங்கதிருயி ரெண்ணிடுரு வியைபசுபதி
நாளும் என்மன மிடங்கொண் டுறைதலால் வன்மனக் கொடியர்சொற் கிலைமயங் குதலே.' (5)
இவ்வஞ்சிப்பாவினுள், மண்ணிரனல் - தேமாங் கனி, வளிவானெடு - புளிமாங்கனி, வெண்ணிர்மதி - தேமாங்கனி, வெங்கதிருயி - கூவிளங்கனி, ரெண் னிடுரு - தேமாங்கனி, வியைபசுபதி - கருவிளங்கனி
எனக் கனிச்சீர் நான்கும் வந்தன காண்க.
siv. 5t6v 6op F f 6fi 14. நாலசைச்சீர்க ளென்பன யாவை?
அம் மூவசைச்சீர் எட்டின் இறுதியிலும் நேரசையும் நிரையசையுந் தனித்தனி யடுத்து வருதலாலாகிய சீர் பதினறுமாம்.
 

யாப்பிலக்கணம்
இவற்றிற்கு உதாரண வாய்பாடு :
தண்பூ
தேமாந்தண் பூ = நேர் நேர் நேர் நேர், புளிமாந்தண் பூ - கிரை நேர் நேர் தேர். கருவிளந்தண்பூ = நிரை நிரை நேர் நேர், கூவிளங்கண்பூ நேர் கிரை நேர் நேர்.
Bறும்பூ
- தேமா நறும்பூ = கேர் நேர் நிரை நேர்,
புளிமா நறும்பூ = நிரை நேர் நிரை நேர். கருவிள நறும்பூ = நிரை நிரை நிரை நேர். கூவிள குறும்பூ= கேர் நிரை நிரை கேர்.
தண்ணிழல்
தேமாங் தண்ணிழல் = நேர் நேர் நேர் நிரை, புளிமாங் தண்ணிழல்-நிரை நேர் கேர் நிரை, கருவிளங் தண்ணிழல் = நிரை நிரை நேர் கிரை.
கூவிளங் தண்ணிழல் = நேர் நிரை நேர் நிரை,
நறுநிழல் * ''; கேமா நறுநிழல் = கேர் நேர் கிரை நிரை,
புளிமா நறுநிழல் = கிரை நேர் சிரை நிரை, கருவிள நறுநிழல் = நிரை நிரை நிரை நிாை. விள நறுநிழல் = கேர் நிரை நிரை கிாை.
இவை வெண்பாவினுள் வருவனவல்ல.
கலியினுள்ளும் அகவலுள்ளும் பெரும்பாலுங் குற்றியலுகரம் வந்தவிடத்தன்றி வாரா.

Page 8
8 யாப்பிலக்கணம்
* வஞ்சிப்பாவினுட் பெரும்பாலும் வரவும், ஒரடி யுள் இரண்டு நாலசைச்சீர் கண்ணுற்று நிற்கவும் பெறும்.
உ-ம்: " அள்ளற்பள்ளத் தகன்சோணுட்டு
வேங்கைவாயின் வியங்குன்றுாரான்,' (6) இவ் வஞ்சியடியில் இரண்டு நாலசைச்சீர் வந்தன காண்க.
4. தளை 15. தளையென்பது யாது? நின்றசீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் (p;5 லசை ஒன்றியேனும் ஒன்றதேனுங் கூடிநிற்பதாம். நேர்முன் நேரும், நிரைமுன் நிரையும் வருதல் ஒன்றி வருதலாம். -
அவ்வாறன்றி, நேர்முன் நிரையும், நிரைமுன் நேரும் வருதல் ஒன்ருது வருதலாம்.
16. அத் தளை எத்தனை வகைப்படும்? நேரொன் ருசிரியத்தளை, நிரையொன் முசிரி யத்தளை, வெண்சீர் வெண்ட2ள, இயற்சிர் வெண் டளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்று வஞ்சித்தளை, கலித்களை என எழுவகைப்படும்.
17. அவை எவ்வாறு வருவனவாம்?
1. நேரொன் ருசிரியத்தளை மாமுன் நேர் வருவது. நாள் முன் நேர் வருவதும் அது. -

யாப்பிலக்கணம் 9
i. நிரையொன் முசிரியத்தளை ' விளமூன் நிரை வருவது. மலர் முன் நிரை வருவதும் அது. ".
i, வெண்சீர் வெண் டளை காய்முன் நேர் வருவது. பூ முன் நேர் வருவதும்
அஆதி. 路、
iv, இயற்சீர் வெண்டளை மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது. 5ாள் முன் நிரை வருவதும், மலர்முன் நேர்வருவதும்
அஆதி *
v. ஒன்றிய வஞ்சித்தளை
"கனிமூன் நிரை வருவது. நிழல்முன் நிரை
வருவதும் அது. '.' ". . .
wi. ஒன்ரு வஞ்சித்தளை கனிமுன் நேர் வருவது. நிழல் முன் நேர்
வருவதும் அது. ' : '
vii. 56šsēr
காய்முன் நிரை வருவது. பூமுன் நிரை வருவதும் அது.
அகவற்பா உ -ம்: ' தேனர் கஞ்சச் செம்ம லாதி
வானேர் மாதர் மங்கலங் களத்திடை வலியொடு நிலைபெற மலிபெருங் கருணையி னலைதரு மிருள்விட் மணிமிடற் றிருத்துக்

Page 9
10 யாப்பிலக்கணம்
y) தில்லையுட் சிவபிரான் றிருவடி
யொல்லையிற் பரசுநர்க் குயர்கதி யெளிதே' (?)
இவ்வகவலுள், தேனர் + கஞ், என மாமுன் நேர் வருதலால் இது நேரொன் முசிரியத்தளையாம். மங்கலங்+ களத், என விளமுன் நிரை வருதலால் இது கிரையொன் ருசிரியத்தளையாம்.
Gaou Grčar Luar * பெரியவர்தக் கோய்போற் பிறர்நோய்கண் டுள்ள
மெரியி னிழுதாவ ரென்க-தெரியிழாய் !
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.' (8) இந் நேரிசைவெண்பாவினுள், பெரியவர்தங் + நோய், எனக் காய் முன் நேர் வருதலால் இது வெண்சீர் வெண்ட2ளயாம். நோய்போற் + பிறர், என மாமுன் நிரை வருதலால் இது இயற்சீர் வெண் டளையாம். பிறவுமன்ன.
வஞ்சிப்பா * மண்ணிரனல் வளிவானுெடு வெண்ணீர்மதி வெங்கதிருயி ரெண்ணிடுரு வியைபசுபதி
5ாளும
என்மன மிடங்கொண் டுறைதலால்
வன்மனக் கொடியர்சொற் கிலைமயங்குதலே' (9) என்னும் வஞ்சிப்பாவினுள், மண்ணீரனல் + வளி, எனக் கனிமுன் நிரை வருதலால் இது ஒன்றிய வஞ்சித்தளையாம். வளிவானெடு+ வெண், எனக் கனிமுன் நேர் வருதலால் அது ஒன்ரு வஞ்சித் தளையாம். பிறவும் அன்ன.

யாப்பிலக்கணம் 11
மண்ணிானல் = கூவிளங்கனி
வளி வானெடு = புளிமாங்கனி
கொச்சகக் கலிப்பா
'அஞ்சம்போ னடையுமையா ளகங்களிப்பச் சுரர் பரவ கெஞ்சஞ்சேர் தருமன்பி னெறிமுனிவர் கரங்குவிப்ப விஞ்சுஞ்சீர்த் தனித்தில்லை வியன்பொதுவி னடமாடுங் கஞ்சந்தாழ் திருவடிகள் கருதிமட னெழிநெஞ்சே." (10) என்னும் இக் கொச்சகக் கலிப்பாவினுள், அஞ்சம்போ + னடை, எனக் காய்முன் நிரை வருதலால் இது கலித்தளையாம். பிறவும் அன்ன.
/ . ഫ്രt.
18 அடியென்பது யாது? ཚེ་
மேற் சொல்லப்பட்ட தளைகள் ஒன்றும் பலவும் அடுத்து வருவதாம்.
19. அவ்வடி எத்தனை வகைப்படும்?" குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடி
லடி என ஐந்து வகைப்படும்.
20. அவை எவ்வாறு வருவனவாம் ?
குறளடி இருசீரான் வருவது. 2. சிந்தடி முச்சிரான் வருவது.
3. அளவடி அல்லது நேரடி நாற்சீரான்
வருவது.
4. நெடிலடி ஐஞ்சிரான் வருவது.
ს ა - $ ყვკაგე ზის. ;250%*قوام

Page 10
12 யாப்பிலக்கணம்
* 5. கழிநெடிலடி ஐந்தின் மேற்பட்ட சீரான்
வருவன வெல்லாம். இவற்றிற்கு இலக்கியம், பின்னர் பாவும் இன மும் கூறும்வழிக் காண்க."
6. தொடை / 21. தொடை யென்பது யாது?
பல அடிகளிலேனும், பல சீர்களிலேனும் எழுத்துக்கள் ஒன்றி வருவகாம்,
22. அத்தொடை எத்தனை வகைப்படும் :
எதுகைத் தொடையும், மோனைத் தொடையும் என இருவகைப்படும்.
i. எதுகைத்தொடை
23. எதுகைத்தொடை யென்பது யாது? அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்ப, இரண்டா மெழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடையாம். உ-ம்: 'துகடிர் பெருஞ்செல்வக் தோன்றியக்காற் ருெட்டுப்
பகடு கடந்தகூழ் பல்லாரோ டுண்க
வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் சகடக்காற் போல வரும்.' (11)
இவ் வின்னிசை வெண்பாவினுள் இரண்டா மெழுத் தொன்றி வருதல் காண்க. அன்றியும்,
* «ಅ 68, 64, 59, 58, 50 (1 - 5)urisa
 

யாப்பிலக்கணம் 13
' சொற்போர் புரிவர் நான்மறையா
றங்க முணர்ந்த தொழுகுலத்தோர் விற்போர் புரிவர் நெடியசிலே
யிராம ன&னய விறல்வேந்தர் பொற்போர் புரிவர் பிறர்பொருளுந் தம்போற் பேணிப் புரிவணிகர் நெற்போர் புரிவ சந்நகரில்
வேளாண் குலத்து நெறியினரே? (12)
கொள்க. ஒரோவிடத்து ஒரடியுள்ளுஞ் சீர்களின் இரண்டாமெழுத்து ஒன்றி,
* பொன்னி னன்ன பொறி சுணங் கேந்தி." (18)
என வருதலும் உண்டு.
சிறுபான்மை வருக்கவெழுத்தும், நெட் டெழுத்தும், இனவெழுத்தும், பிறவும் எதுகை யாக வரப்பெறும். உ-ம்: 'வானின் றுல்கம் வழங்கி வருதலாற்
ருணமிழ்த மென்றுணரற் பாற்று.' (14)
இது வருக்கவெதுகை,
" ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டா ரொருசாரார்' (15)
இது நெடிலெதுகை,
" தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்.' (16)
இது வல்லினர்வெதுகை

Page 11
い。ぶ 。 í. 14 யாப்பிலக்கணம்
i. மோனைத்தொடை
24. மோனைத்தொடை என்பது யாது ? முதற்சீரின் முதலெழுத்தோடு பின்வருஞ் சீர்களில் ஒன்றனுள்ளேனும் பலவற்றினுள்ளே னும் முதலெழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடையாம். לו י கற்றுள கல்வியுங் திருவு மாற்றலுக் ' - ف - يع
தற்றெறு மறலியைத் தடுப்ப வல்லவா முற்ருெருங் குணர்பசு பதியை முன்னுரு துற்றகா ளொழித்திடு முணர்வி லிக்கரோ." (17) இச் செய்யுளின் முதலடியில் ககரமும், இரண்டாமடியில் தகரமும், மூன்ருமடியில் முகரமும், நாலாமடியில் உகரமும் மோனையாக வந்தன. அன்றியும்,
அ-ஆ-ஐ=ஒள என்னும் இந்நான்கும் ஒன்றற்கொன்று மோனை ulu Tlib.
இ-ஈ-எ.ஏ என்னும் இந்நான்கும் ஒன்றற்கொன்று மோனை u iTub.
p -- pat-бр- ф என்னும் இங்நான்கும் ஒன்றற்கொன்று மோனை u Jith.
ஞ-ந வும், சத வும், ம-வவும் ஒன்றற்கொன்று மோனையாம்.
 

யாப்பிலக்கணம் , 1ồ
உ-ம்: அடல்வேண்டு மைந்தின் புலத்தை விடல்வேண்டும் - *வேண்டிய வெல்லா மொருங்கு.' (18) இதன் முதலடியில் அகரத்திற்கு ஐகாரம்
மோனையாயிற்று, மோனை, அனு என்பன ஒரு பொருட் சொற்கள். 憩
鬣 · AY O 25. எதுகை மோனையின்றி வரும் பாட்டுக்களும்
o GIGalT ? அவ்வாறு வரும் பாட்டுக்களுஞ் சில உளவாம். உ -ம் ' பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாட னன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே. (19) ଗtତot வரும். -
。
26. பா என்பது யாது? இரண்டு முதலிய அடிகளால் ஆக்கப்பட்டு வெண்பா முதலிய பெயர்பெற்று வருவதாம்.
27, அப் பாவானது எத்தனை வகைப்படும் ?
வெண்பாவும், அகவற்பாவும், கலிப்பாவும், வஞ்சிப்பாவும் ஆகிய நான்கனேடு, மருட்பா, நூற்பா என்னும் இரண்டுங் கூடி அறுவகைப்படும். இவற்றுள் முன் நான்குமே சிறப்புடையவாம்.
JIT 696OTLib 28. அந் நான்கு பாவிற்கும் வரும் இனங்கள்
urg) 2 தாழிசை, துறை, விருத்தம் என ஒவ்வொன் றற்கும் மும்மூன்றம்.

Page 12
16 யாப்பிலக்கணம்
வெண்பா 1 ܐܸܠܵܐ ܠܵܐ ܠܵܐ 29. வெண்பாவிற்கு இலக்கண மென்னே?
ஈற்றடி முச்சீரடியாகவும், ஏனையடி நாற்சீரடி யாகவும் பெற்று, காய்ச்சீரும் அகவற்சீரும் வெண் சீர் வெண்ட2ளயும் இயற்சீர் வெண்டளையுங் கொண்டு, மற்றச் சீருந் தளையும் பெருது, காசுபிறப்பு-நாள்-மலர் என்னும் வாய்பாட்டான் முடிவது பொதுவிலக்கணமாம்.
30. அவ் வெண்பா எத்தனை வகைப்படும்?
குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன் னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வகைப்படும்.
1. குறள் வெண்பா 31. குறள் வெண்பா எவ்வாறு வரும் ? இரண்டடியாய், ஒரு விகற்பத்தாலேனும் இரு விகற்பத்தாலேனும் வரும்.
1. ஒருவிகற்பக் குறள் வெண்பா உ-ம்: 'உடையார்முன் னில்லார்போ லேக்கற்றுங் கற்ருர் கடையரே கல்லா தவர்.' (20) இது ஒரு விகற்பக் குறள் வெண்பா. மலரென முடிந்தது.
ா. இருவிகற்பக் குறள் வெண்பா உ. ம்: " கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை
வெல்கூற்றின் ருேற்றங் கொளல்.’ (21) இது இருவிகற்பக் குறள் வெண்பா,

யாப்பிலக்கணம் f?
2. நேரிசை வெண்பா
32. நேரிசை வெண்பா எவ்வாறு வரும் ? நான்கடியாய், இரண்டாம்டி யிறுதிச்சீர் தனிச் சொல்லாய் வர, அடி முழுதும் ஒரெதுகையாக வேனும், முன்னிரண்டும் ஒரெதுகையும் lଳ ଭଅଁ୮ னிரண்டும் மற்ருேரரெதுகையுமாகவேனும் வரும்.
1. ஒருவிகற்ப நேரிசை வெண்பா
. : Lib - نی- p
* கூற்றங் குமைத்த குரைகழற்காற் கும்பிட்டுத்
தோற்றக் துடைத்தேக் துடைத்தேமாற்-சீற்றஞ்செய் யேற்றினன் றில்லை யிடத்தின னென்னினியாம் போற்றின னல்கும் பொருள்.' (22)
இது ஒருவிகற்ப நேரிசை வெண்பா,
i இருவிகற்ப நேரிசை வெண்பா
' ஏற்ருன்புள் ளுர்ந்தா னெயிலெரித்தான் மார்பிடந்தா
னிற்ரு னிழன்மணி வண்ணத்தான்-கூற்ருெருபான் "
மங்கையான் பூமகளான் வார்சடையா னீண்முடியான்
கங்கையா னிள்கழலான் காப்பு." (23)
இது இருவிகற்ப நேரிசை வெண்பா. காசு என்னும் வாய்பாட்டான் முடிந்தது.
3. இன்னிசை வெண்பா 33. இன்னிசை வெண்பா எவ்வாறு வரும் ? ஒரு விகற்பத்தாலேனும் பல விகற்பத்தா லேனும் நான்கடியாய்த் தனிச்சொல்லின்றி வரும்.
2

Page 13
18
யாப்பிலக்கணம்
1. ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
‘துகடிர் பெருஞ்செல்வக் தோன்றியக்காற் ருெட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க வகடுற யார் மாட்டு கில்லாது செல்வஞ்ச் சகடக்கால் போல வரும்.' (24)
இது தனிச்சொல்லின்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.
tt, பல விகற்ப இன்னிசை வெண்பா
(க) " கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா வுடையா னுடைக்கிற்குக் தோமி W. றவக்குட்டக் தன்னுடையா னிந்து மவைக்குட்டங் கற்ருன் கடந்து விடும்.' (35)
இது தனிச்சொல்லின்றிப் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா அன்றியும்,
(உ) 'மழையின்றி மாநிலத்தார்க் கில்லை-மழையுங்
தவமிலா ரில்வழி யில்லைத்-தவமு மரசிய லில்வழி யில்லே-யரசனு மில்வாழ்வா ரில்வழி யில்." (26)
என அடிதோறும் தனிச்சொற் பெற்று வருவதும்,
ரு) " காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு - பேதுற்ருர் நெஞ்சும் பிழைத்தகன் ருர் நன்னெஞ்சும் போதம் படரும் புலியூரே-தாதுண்டு வண்டுறங்கு நீள்சடையோன் வைப்பு' (8ሯ )
என மூன்ருமடியிறுதி தனிச்சொற் பெற்று வருவ தும்,

யாப்பிலக்கணம் 19
(ச) " அங்கண் விசும்பி னகணிலாப் பாரிக்குக்
திங்களுஞ் சான்ருேரு மொப்பர் மற்-றிங்கண் மறுவாற்றுஞ் சான்ருே ரஃ தாற்ருர் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்." (28) என இரண்டாமடி யிறுதி கனிச்சொற் பெற்று மூன்று விகற்பத்கான் வருவதும், பிறவாறு நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு வருவன வும் இன்னிசை வெண்பாவாம்.
4. சிந்தியல் வெண்பா
34. சிந்தியல் வெண்பா எவ்வாறு வரும் ? மூன்றடியாய் நேரிசை வெண்பாவைப்போல வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பாவென்றும், இன்னிசை வெண்பாவைப்போல வருவது இன் னிசைச் சிந்தியல் வெண்பாவென்றும் பெயர்பெற்று வரும்.
1. நேரிசைச் சிந்தியல் வெண்பா உ -ம்: ' அறிந்தான யேத்தி யறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச்-சிறந்தார்
சிறந்தமை யாராய்ந்து கொண்டு." (39)
இது நேரிசைச் சிந்தியல் வெண்பா,
ii இன்னிசைச் சிந்தியல் வெண்பா
" போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்
கூற்றங் குமைக்க வருமுன் னமரங்கா
ளேற்றுகந்தான் பொற்ரு ளரிணை.' (30)
இஃது இன்னிசைச் சிந்தியல் வெண்பா,

Page 14
20 யாப்பிலக்கணம்
5. பஃருெடை வெண்பா
35. பஃருெடை வெண்பா எவ்வாறு வரும்?
நான்கடியின் மிக்க பலவடிகளைப் பெற்று வரும்.
உ- ம் : “ வையக மெல்லாங் கழனியா வையகத்துட்
செய்யகமே காற்றிசையின் றேயங்கள் செய்யகத்துள் வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின் சாறே யங்காட்டிற் றலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே
யானேற்ருன் கச்சி யகம்.' (31).
இது ஏழடிப் பலவிகற்பப் பஃருெடை வெண்பா
வெண்பாவினம்
36. குறள் வெண்பாவிற்கு இனம் யாவை? குறள்வெண்செந்துறையுங் குறட்டாழிசையும் இனமாம்.
i குறள்வெண்செந்துறை
37. குறள்வெண்செந்துறை எவ்வாறு வரும் ?
விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடைய காகி எனைத்துச் சீரானும் அளவொத்த இரண்டடியாய்
வரும.
உ -ம்: " ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லா
மோதலிற் சிறந்தன் ருெழுக்க முடைமை' (32)

யாப்பிலக்கணம் 21
i குறட்டாழிசை 38. குறட்டாழிசை எவ்வாறு வரும் ? நாற்சீரின் மிக்க பல சிரான் வரும் அடி இரண் டாய் ஈற்றடி குறைந்து வருவனவும், விழுமிய பொரு ளும் ஒழுகிய வோசையு மின்றிக் குறள்வெண் செந்துறையிற் சிதைந்து வருவனவும், வேற்றுத்
தளை விரவிய குறள் வெண்பாவுமென மூன்று வகைப்பட்டு வரும்.
உ -ம் : “ நண்ணுவார்வினை நையகாடொறு நற்றவர்க்கர
சாயஞான நற் கண்ணினனடியே யடைவார்கள் கற்றவரே.' (33)
எனவும்,
"அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினிபோல வையிரே." (34) எனவும்,
" வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய ளல்லள் படி, (35)
எனவும் வரும்.
1. வெண்டாழிசை 39. வெண்பாவினம் மூன்றனுள் வெண்டாழிசை
எவ்வாறு வரும் ?
மூன்றடியாய் முதலிரண்டடியும் காற்சீராயும் ஈற்றடியொன்றும் வெண்பாவைப்போல முச்சிரா யும் முடிபுபெற்று வேற்றுத்தளை விரவிவருவனவும்,
ܔ

Page 15
22
யாப்பிலக்கணம்
V
சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவனவுமென இருவகைப்பட்டு வரும். -
2 -
ம் : “ நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யா ரன்பு வேண்டு பவர்." (36)
இது மூன்றடியால் வந்த வெண்டாழிசை ;
" அம்பேருண் கண்ணுர்க் கழிந்த மடநெஞ்சே
கொம்பே மறுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வம்பே யிறந்து விடல்,
* வாணேருண் கண்ணுர்க் கழிந்த மடநெஞ்சே
நீணுகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வீணே யிறந்து விடல்,
* கோளாருண் கண்ணுர்க் கழிந்த மடநெஞ்சே
யாளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வாளா விறந்து விடல்.’ (87)
இது சிந்தியல்வெண்பா ஒரு பொருள்மேல்
மூன்றடுக்கி வந்த வெள்ளைத்தாழிசை.
2. வெண்டுறை
40. வெண்டுறை எவ்வாறு வரும் ?
மூன்றடி முதல் ஏழடி யீரகப் பின்பு நின்ற
சிலவடிகளிற் சிலசீர் குறைந்து வரும். இவற்றுள் எல்லா அடியும் ஒரோசையாய் வருவனவன்றியு முன்பிற் சில அடிக ளோரோசையாயும் பின்பிற் சிலவடிகள் மற்ருேரோசையாயும் வருதலுமுண்டு.

யாப்பிலக்கணம் 23
உ -ம்: 'படர்தருவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப்
பவுத்தொடர்பாற் படரா நிற்கும் விடலரும்வெவ் வினைத்தொடர்பள் வினைத்தொடர்புக் கழிவுண்டோ வினையேற் கம்மா (செய்கே விடர்பெரிது முடையேன் மற் றென் செய்கே னென் னடலரவ மரைக்கசைத்த வடிகேளோ வடிகேளோ,'
இது நான்கடியாய்ப் பின் இரண்டும் இருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.
' கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக்
கொழுந்தேன் பில்கி யூற்றிருக்குக் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்
தொருதா ளுன்றி (மன்றத்
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத் துண்டமா டப்புலித் தோலுமா டப்பதி ரண்டமா டக்குலைக் த கிலமா டக்கருங் கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக் கண்டனு டுந்திறங் காண்மினே காண்மினே.” (89)
இது ஏழடி வேற்றெலி வெண்டுறை. 3. வெளிவிருத்தம் 41. வெளிவிருத்தம் எவ்வாறு வரும்?
மூன்றடியினலேனும் 5ான்கடியினலேனும் முற் .ழலுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச் சொல்லாகக் கொண்டுவரும்.
உ -ம்: ' அங்கட் கமலத் தலர்கமல மேயீரு நீரேபோலும்
வெங்கட் சுடிகை விடவரவின் மேயிரு நீரேபோலுக் திங்கட்சடையீருந்தில்லைவனத்துள்ளிரேேேரபோலும்'
இது மூன்றடியால் வந்த வெளிவிருத்தம்.

Page 16
24 யாப்பிலக்கணம்
" ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டா ரொருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தா ரொருசாரார் ஏகீர் காகி ரென்செய்து மென்ரு ரொருசாரார்.' (41)
இது 5ான்கடியால் வந்த வெளிவிருத்தம்.
11 அகவற்பா 42. அகவற்பாவின் இலக்கணம் யாது?
நாற்சீரான் வரும் அளவடியதாகியும், இயற்சீர் பயின்றும், அயற்சீர் விரவியும், தன்தளை தழுவியும், பிறதளை மயங்கியும், கருவிளங்கனி கூவிளங்கனி யென்னும் இருசீருங் கலவாது மூன்று முதலிய பல அடிகளால் வருவது அகவற்பா அனைத்திற்கும்
பொதுவிலக்கணமாம்.
43. அகவற்பா எத்தனை வகைப்படும் ?
நேரிசை யாசிரியப்பாவும், இஃணக்குற ளாசிரி
யப்பாவும், நிலைமண்டில வாசிரியப்பாவும், அடிமறி ,
மண்டில வாசிரியப்பாவுமென நான்கு வகைப்படும். அகவல், ஆசிரியம் ஒரு பொருட் சொற்கள்.
1. நேரிசை யாசிரியப்பா
44. அந்நான்கனுள் நேரிசை யாசிரியப்பா எவ்வாறு
வரும்?
ஈற்றயலடி முச்சிரடியும், மற்றை அடிகளெல் லாம் நாற்சீ ரடிகளுமாகப் பெற்று வரும்.

யாப்பிலக்கணம் 25
உ - ம் : 'பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ள
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே வாசக மதற்கு வாச்சியக் தூசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே.” (42)
ᎧTᎧᏅᎢ வரும்.
2. இணைக்குற ளாசிரியப்பா 45. இணைக்குற ளாசிரியப்பா எவ்வாறு வரும்?
ஈற்றடியும் முதலடியும் ஒத்து நடுவடிகளில் ஒன் அறும் பலவும் ஒருசீரும் பல சீருங் குறைந்து வரும்,
உ - ம்: ' நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ்
சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார ணுடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே." (43) என வரும்.
3. நிலைமண்டில வாசிரியப்பா 48. நிலைமண்டில வாசிரியப்பா எவ்வாறு வரும்? எல்லா அடியும் அளவொக்க நாற்சீரடிகளாகப் பெற்று வரும்,
உ - ம்: ' வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னேரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' (44)
என வரும்,

Page 17
26 யாப்பிலக்கணம்
4. அடிமறிமண்டில வாசிரியப்பா
47. அடிமறிமண்டில வாசிரியப்பா எவ்வாறு வரும்?
எல்லா அடியும் அளவொத்து எவ்வடியை முதனடுவிறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது நிற்பக் கொண்டுவரும்.
உ - ம் : “ தீர்த்த மென்பது சிவகங் கையே
யேத்த ருந்தல மெழிற்புலி யூரே மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே ' (45)
என வரும்,
அகவற்பாவினம்
1. ஆசிரியத்தாழிசை
48. அகவற்பாவினம் மூன்றனுள், ஆசிரியத்தாழிசை
எவ்வாறு வரும் ? எனைத்துச்சீரானுந் தம்முள் அளவொத்த மூன்றடியதாய்த் தனித்தேனும் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியேனும் வரும்.
உ - ம் : “ சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறு
மத்தமு மாகலி னனந்தன் கண்களே யுத்தம னேந்தெழுத் துருவங் காண்பன.' (48)
இது தனித்து வந்த ஆசிரியத்தாழிசை.

"ണ്ണ്"
யாப்பிலக்கணம் 27
* கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ
னின்று நம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழி.
பாம்பு கயிருக் கடல்கடைந்த மாயவ னிங்குரும் மானுள் வருமே லவன் வாயி லாம்பலக் தீங்குழல் கேளாமோ தோழி.
கொல்லையஞ் சாரற் குருக்தொசித்த மாயவ னெல்லைகம் மானுள் வருமே லவன்வாயின் முல்லேயக் இங்குழல் கேளாமோ தோழீ.' (47)
இது ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவந்த ஆசி ரியத் தாழிசை.
Y
2. ஆசிரியத்துறை 49. ஆசிரியத்துறை எவ்வாறு வரும் ?
எனைத்துச்சீரானும் வருமடி நான்குடையதாய் ஈற்றயலடி குறைந்தேனும், முதலடியும் மூன்று மடி யுங் குறைக்கேனும் வரும். அவ்வாறு வருமிடத்து இடைமடங்கியும் மடங்காதும் வரும்.
- LD
' கரைபொரு கானி யாற்றங் கல்லதரெம் முள்ளி வருவிராயி
னரையிருள் யாமத் தடுபுலியே றஞ்சி யகன்று போக நரையுரு மேறு நுங் கைவே லஞ்சு நும்மை வரையர மங்கையர் வெளவுத லஞ்சுதும் வாரலையோ'
இது 5ான்கடியாய் ஈற்றயலடி குறைந்துவந்த ஆசிரியத்துறை.

Page 18
28 யாப்பிலக்கணம்
" இரங்கு குயின் முழவா வின்னிசையாழ் தேனு
வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி லரங்க மணிபொழிலா வாடுமாயின்
மரங்கொன் மணந்தகன் ருர் நெஞ்சமென் செய்த திளவேனில்.’ இது நான்கடியதாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை.
3. ஆசிரிய விருத்தம் 30. ஆசிரிய விருத்தம் எவ்வாறு வரும்? அளவொத்த கழிநெடிலடி நான்கினல் வரும்.
i அறுசீர் " விடஞ்கு ழரவி னிடைநுடங்க
மினல் வாள் வீசி விரை யார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன்
கதிர்வேல் பாடு மாதங்கி வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் ணில மலர்தாந்தாம் தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தா
மென்னுந் தன்கைத் தண்ணுமையே." (50)
இது அறுசீர்க் கழிநெடிலடியால் வந்த ஆசிரிய விருத்தம். VQ
i எழுசீர்
உ - ம்:
" கோமுனிவ ருக்குமரி தாய்முது மறைப்பனுவல்
கூரிய பரப்பி ரமமா மோமெனு மெழுத்தின்வடி வாய்நட நவிற்றுபுலி
யூரன்மகு டச்ச டிலமேன்
 

யாப்பிலக்கணம் 39
மாமதியி னத்தனது கோடெனவெ டுப்பமத
, மாமுகன் முகக்கை தொடவத்
தூமதிப ணப்பகையெ னவர நதிப்புகவொர்
தோணியென விட்ட கலுமே." (51)
இது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
i எண் சீர்
“அருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்
கானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட மருவருக்கன் மதிவளிவான் யமானன் றீநீர்
மண்ணெனுமெண் வகையுறுப்பின் வடிவு கொண்ட வொருவனுக்கு மொருத்திக்கு முருவொன் ருலவ்
வுருவையிஃ தொருத்தனென்கோ வொருத்தி யென்கோ
விருவருக்கு முரித்தாக வொருவ ரென்ருே
ரியற்சொலில தெனின்யான்மற் றென் சொல் கேனே.”
இது எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
iv ஒன்பதின் சீர்
* வளங்கு லாவரு மணங்க ணுர்விழி
மயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள்
களங்கு லாமுட லிறந்து போயிடு
காடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினே
துளங்கு நீள்கழ றழங்க வாடல்செய்
சோதி யானணி பூதி யானுமை பாதியான்
விளங்கு சேவடி யுளங்கொ விரெமன்
விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே.' (58)
இது ஒன்பதின் சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்,

Page 19
30 யாப்பிலக்கணம்
w ஒன்பதின் மிக்கசீர்
" கைத்த லத்த ழற்க ணச்சி வைத்தி டப்பு றத்தொருத்தி
கட்க டைப்ப டைக்கி ளைத்த திறலோரா முத்த லைப்ப டைக்க ரத்தெ மத்தர் சிற்ச பைக்கு னிற்கு
முக்க ணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ நித்தி லத்தி &னப்ப தித்த கச்ச றுத்த டி க்க னத்து
நிற்கு மற்பு தத்த னத்தி னிடையேவே ளத்தி ரத்தி னைத்தொ டுத்து விட்டு நெட்ட யிற்க ணத்தி லக்க ஆணுற்றி டச்செய் விக்கு மதுதானே.” (54)
இது ஒன்பதின் மிக்க சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
III. கலிப்பா
51. கலிப்பாவிற்கு இலக்கண மென்ன?
வெண்சீர் மிகப்பெற்று மாச்சீரும் விளங் கணிச்சீரும் பெரு து பிறகீர்களுஞ் சிறுபான்மை கலந்து கலித்தளையும் அயற்றளையுந் தழுவி, தரவுதாழிசை-அராகம் - அம்போதரங்கம் - தனிச்சொல் - சுரிதகம் என்னும் ஆறு உறுப்பினுள் ஏற்பன கொண்டு நாற்சீரடியால் வருவது கலிப்பா அனைத்திற்கும் பொதுவிலக்கணமாம்.
52. அக் கலிப்பா எத்தன வகைப்படும் ?
ஒத்தாழிசைக்கலிப்பாவும், வெண்கலிப்பாவும், கொச்சகக்கலிப்பாவுமென மூன்று வகைப்படும்.

யாப்பிலக்கணம் 31
1. ஒத்தாழிசைக் கலிப்பா 53 ஒத்தாழிசைக் கலிப்பா எத்தனை வகைப்படும் ?
அவை எவ்வாறு வரும்? வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா - அம்போ
தரங்க வொத்தாழிசைக் கலிப்பா - நேரிசை யொத் தாழிசைக் கலிப்பா என மூன்று வகைப்படும்.
* வண்ணக ஒத்தாழிசை அவற்றுள், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, ஒரு கரவு - மூன்று தாழிசை - அராகம் - அம்போத ரங்கம் - தனிச்சொல் - சுரிதகம் என்னும் இவ்வா நூறுறுப்பும் ஒன்றன்பின் ஒன்றுறக் கொண்டு வரும். அராகமெனினும் வண்ணகமெனினும் ஒக்கும். அசை யடியெனினும் அம்போதரங்க மெனினும் ஒக்கும்.
அராகவுறுப்பானது அளவடி முதல் எல்லா அடிகளாலும் நான்கடி முதல் எட்டடியளவாக வரும். அம்போதரங்க வுறுப்பானது நாற்சீரடியாகிய ஈரடியால் இரண்டும், ஒரடியால் நான்கும், முச்சீரடி யால் எட்டும், இருசிாடியாற் பதினறுமாக வரும்.
சிறுபான்மை முச்சீரடி நான்கும், இருசீரடி எட்டு
மீாகவும் வரும்.
உ - ம் : “ தொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும்
பல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய வந்தர துந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த விந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச் குடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப வாடகத் திருமன்றத் தனவரத நடஞ்செய்வோய்."
இஃது ஆறடித் தரவு.

Page 20
33
d d யாப்பிலக்கணம்
முன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த
வன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்ருேலும்
பொன்மலையின் வெண்முகிலும் கருமுகிலும் போர்த்தென்ன வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே.
கடநாக மெட்டும்விடங் காணுக மோரெட்டுக் தட5ாக மவையெட்டுந் தரித்துளயூக் துகிலொன்று முடனக வடல்புரியுங் கொடுவரியி னுடுப்பொன்று மடனுக வரவல்குற் கணிகலையா வசைத்தனேயே.
வருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையு மருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையுங் கருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனுக் திருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே.
இவை மூன்றும் நான்கடித் த்ாழிசை,
கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர் பிறையெயி ருெடுமிடல் பெறுபக டொடுமட லெறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை.
இலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம துலைவற நடவிடு மொருவனும் வெருவர வலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு சிலைமத னனையடல் செயுநுதல் விழியின.
உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரு மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய புலவரு மடிகளொர் புகலென முறையிட வலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை.

யாப்பிலக்கணம் 38
விசையிலெம் மிறைவியும் வெருவர விரசத வசலம தசைதர வடல்புரி தசமுக கிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென வசையில்பொன் மலரடி மணிவிர னிறுவின.
இவை நான்கும் அராகம். அருவமு முருவமு மாகி நின்றுமவ் வருவமு முருவமு மகன்று நின்றன.
சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச் சொல்லையும் பொருளையுந் துறந்து நின்றன.
இவை யிரண்டும் நாற்சீரீரடி யம்போதரங்கம் (பேரெண்).
அக்கலம் விழைந்தவர்க் கறமு மாயின. பொன்னலம் விழைந்தவர் பொருளு ம9 யின. இன்னலம் விழைந்தவர்க் கின்பு மாயின. மெய்க்கலம் விழைந்தவர் வீடு மாயின.
இவை நான்கும் நாற்சீர் ஒரடி யம்போதரங் கம் (அளவெண்).
முத்தொழிலின் வினைமுத னி. மூவர்க்கு முழுமுத னி. எத்தொழிலு மிறந்தோய் .ே
இறவாத தொழிலினை நீ. இருவிசும்பின் மேலோய் நீ.
எழின்மலரின் மிசையோய் .ே øypr auðkooruilib goJudaör G3(Opuli 18. ஆலின்கீ ழமர்ந்தோய் .ே
இவை எட்டும் முச்சீர் ஒரடி யம்போதரங்கம். (இடையெண்)
3

Page 21
34 யாப்பிலக்கண்ம்
பெரியை நீ. சிறியை ரீ. பெண்ணு நீ. ஆணு .ே அரியை நீ எளியை நீ அறமு நீ. மறமு நீ. விண்ணு .ே
வித்து .ே விளைவு நீ. பண்ணு .ே Luggy is. பகையு நீ. உறவு .ே
இவை பதினறும் இருசீர் ஓரடி யம்போதரங்கம், (சிற்றெண்).
என வாங்கு. இது தனிச்சொல்,
* கற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும்
வெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத் தண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற் செங்கா லன்னமும் வெண்மருப் பேனமுங் கீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய் நின்றாகின் றன்மையை யுணர்த்தும் பொன்றிகழ் புலியூர் மன்று கிழ வோனே.' (55)
இது ஏழடி நேரிசை யாசிரியச் சுரிதகம்.

யாப்பிலக்கணம் - 35
இவ்வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவினுள் தரவு முதலிய ஆறு உறுப்புங் குறைவின்றி வந்தன.
i அம்போதரங்க வொத்தாழிசை
அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா மேற்
சொல்லப்பட்ட தாழிசை முதலிய ஆறனுள் அராக
மொழிந்த ஐந்து உறுப்பையுங் கொண்டு வரும். இதற்குதாரணம் மேற்காட்டிய வண்ணகவொத்தா ழிசைக் கலிப்பாவினுள் அராகமொழித்துக் காண்க.
iii நேரிசை யொத்தாழிசை
நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா தரவு முத லிய ஆறனுள் அராகம் - அம்போதரங்க மொழிந்த நான்குறுப்பையுங் கொண்டுவரும். இதற்குதார ணம் மேற்காட்டிய வண்ணக வொத்தாழிசைக் கலிப் பாவினுள் அராகத்தையும் அம்போதரங்கத்தையு மொழித்துக் காண்க.
2. வெண்கலிப்பா
54. வெண்கலிப்பா எத்தன வகைப்படும்? எவ்
* வாறு வரும்?
வெண்கலிப்பாவும் - கலிப்பாவுமென இரு
வகைப்படும்.
வெண்கலிப்பா
அவற்றுள், வெண்கலிப்பா கலித்தளை விரவி ஈற்றடி முச்சீரான் முடியும்.

Page 22
36 யாப்பிலக்கணம்
உ-ம்: " சேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகைநூதன் மால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யுங் தருண விளம் பிறைக்கண்ணித் தாழ்சடையெம் பெருமானின் கருணைபொழி திருகோக்கிற் கணியாத கன்னெஞ்சம் வாமஞ்சான் மணிக்கொங்கைக் கொசிக்தொல்கு மருங்குலவர் காமஞ்சால் கடைகோக்கிற் கரைந்துருகா நிற்குமா லவ்வண்ண மாறிகிற்ப தகமென்ரு லகமகம்விட் டெவ்வண்ண மாறிவிற்ப தின்று. ' (56)
i கலிவெண்பா
கலிவெண்பா வெண்டளை தழுவி ஈற்றடி முச் சீரான் முடியும்.
உ-ம்: " சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில்யா மாடு
மணற்சிற்றிற் காலிற் சிதையா வடர்ச்சியபொற் கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்கா ளன்னையும் யானு மிருந்தேமா வில்லுளே யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னே யடர் பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழா யுண்ணுநீ ரூட்டிவா வென்ரு ளெனயானுக் தன்னை யறியாது சென்றேன் மற் றென்னை வளைமுன்கை பற்றி கவியத் தெருமந்திட் டன்னு யிவனெருவன் செய்ததுகா ணென்றேன வன்னை யலறிப் படர்தரத் தன்னையா னுண்ணுநீர் விக்கின னென்னே வன்னையுங் தன்னைப் புறம்பழித்து வேமற் றென்னேக் (டஞ் கடைக்கண்ணுற் கொல்வான்போ னேக்கி நகைக்கூட் செய்தானக் கள்வன் மகன்.' (57)

யாப்பிலக்கணம் 8ኧ
3 கொச்சகக்கலிப்பா
55. கொச்சகக்கலிப்பா எத்தனை வகைப்படும் ?
எவ்வாறு வரும் ? .
தரவு கொச்சகக்கலிப்பா, தாவிணேக் கொச்சகக் கலிப்பா, சிஃருரழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃரு ழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐந்து வகைப்படும்.
* தரவு கொச்சகம் அவற்றுள், தரவுகொச்சகக்கலிப்பா தரவு ஒன்று பெற்று வருவதாம்.
கொச்சகக்கலிப்பா உ-ம்:
'அஞ்சம்போ னடையுமையா ளகங்களிப்பச் சுரர்பரவ கெஞ்சஞ்சேர் தருமன்பி னெறிமுனிவர் கரங்குவிப்ப விஞ்சுஞ்சீர்த் தனித்தில்லை வியன் பொதுவி னடமாடுங் கஞ்சந்தாழ் திருவடிகள் கருதிமட னெழிநெஞ்சே." 58)
இது இவ்வாறு தனித்து வருதலன்றித் தனிச் சொல்லுஞ் சுரிதகமும் பெற்று வருதலுமுண்டு.
ii தரவினைக் கொச்சகம் தரவிஃணக்கொச்சகக்கலிப்பா இரண்டு தரவைக் கொண்டு வருவதாம்.
உ-ம்: ' வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு 5றம்பைந்தார்க் காவலர்க்குங் காவலனுய் கொடிபடு வரை மார்பிற் கூடலார் கோமானே."
(இது தரவு)

Page 23
38 யாப்பிலக்கணம்
என வாங்கு.
(இது தனிச்சொல்.)
துணைவளைத்தோ ளிவண்மெலியத் தொன்னலங் தொடர்புண் கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோ மாறென்று (டாங் துணைமலர்த் தடங்கண்ணுர் துணையாகக் கருதாரே.
(இது தரவு.)
அதனல்,
L (இது தனிச்சொல்.) "செவ்வாய்ப் பேதை யிவடிறத்
தெவ்வாருங்கொலிஃ தெண்ணிய வாறே,' (58)
(இது சுரிதகம்.)
இது இடையிடையே தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் முடிந்தது.
iii சிஃருழிசைக் கொச்சகம்
சிஃருரழிசைக் கொச்சகக்கலிப்பா சில தாழிசைக ளோடு பிறவுறுப்புக்களையுங் கொண்டு வரும்.
உ -ம் : * பரூஉத்தடக்கை மதயானைப் பணயெருத்தின் மிசைத்தோன் (றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழ படைப்பரிமான் றேரினேடும் பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே'
(இது கரவு.)

u Irl" | 7ová5GOTIb 39
ஆங்கொருசார்
உச்சியார்க் கிறைவணு யுலகமெலாங் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரஞப் பாவித்தார் வச்சிரங் காணுத காரணத்தான் மயங்கினரே,
ஆங்கொருசார் அக்கால மணிநிரைகாத் தருவரையாற் பணிதவிர்த்து வக்கிரனே வடிவழித்த மாயவணுப் பாவித்தார் சக்கிரங் காணுத காரணத்தாற் சமழ்த்தனரே,
ஆங்கொருசார் மால்கொண்ட பகைதனிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனுய்ப் பாவித்தார் வேல்கொண்ட திண்மையால் விம்மிதராய் நின்றனரே.
(இவை மூன்றுங் தாழிசை)
அஃதான்று (இது தனிச்சொல்.)
' கொடித்தேர்த் தோன்றல் கொற்கைக் கோமா
னின்புக ழொருவன் செம்பூட் சேஎ யென்றுகனி யறிந்தனர் பலரே தானு மைவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானே மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே."
(இது சுரிதகம்.)
இது கனிச்சொல் இடையிடை பெற்று ஒரு தரவும் மூன்று தாழிசையுஞ் சுரிதகமுங் கொண்டு நேரிசையொத்தாழிசைக்கலியிற் சிறிது வேறுபட்டு வந்தது.

Page 24
40 யாப்பிலக்கணம்
iv பஃருழிசைக் கொச்சகம் பஃருரழிசைக் கொச்சகக்கலிப்பா பல தாழிசைக ளோடு மற்ற உறுப்புக்களையுங் கொண்டு வரும்.
D - LD
" தண்மதியோர் முகத்தாளைத் தனியிடத்து கணிகண்டாங்
குண்மதியு முடனிறையு முடன்றளர முன்னட்கட் கண்மதியொப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ.
(இது தரவு.)
இளகல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவாயேல் தளகல முகைவெண்பற் ருழ்குழ றளர்வாளோ,
தகைநல மிவன் வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல் வகைநல மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ,
அணிகல மிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல் மணிகல மகிழ்மேனி மாசோடு மடிவாளோ,
நாம்பிரியே மினியென்று நறுநுதலைப் பிரிவாயேல் ஓம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ.
குன்றளித்த திரடோளாய் கொய்புனத்திற் கூடியநாள் அன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளாமோ.
சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சி றடிபரவிப் பல்பகலுந் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ.
(இவை ஆறுங் தாழிசை.)
என வாங்கு
(இது தனிச்சொல்.)

யாப்பிலக்கணம் 41
'அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும்
பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே. அதனல், விழுமிய தறிமதி வாழி கெழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே.'
(இது சுரிதகம்.)
இது நாலடித்தரவும், இரண்டடித் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், நான்கடிச் சுரிதகமும் பெற்றுவந்த பஃருழிசைக் கொச்சகக்கலிப்பா.
w மயங்கிசைக் கொச்சகம்
மயங்கிசைக்கொச்சகக் கலிப்பா தரவு,தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்பும் மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் பலவாறு மயங்கி வரும்.
உ- ம் : ' மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன்
றணிகிளர் நெடுங்கடலுங் கானலுங் தோன்றுமால் நுரைநிவந் தவையன்ன கொய்ப்பறைய சிறையன்னம் இரைநயந் திரைகூரு மேமஞ்சா றுறைவகேள்.
மலையென மழையென மஞ்செனத் திரை பொங்கிக் கனலெனக் காற்றெனக் கடிதுவக் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா தெழு முந்நீர் பரந்தொழுகு மேமஞ்சா றுறைவகேள்."
(இவை யிரண்டுக் கரவு.)
கொடிபுரையு நுழைநுசும்பி ற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழ்ந்த தோள்கண்டுக் துறவலனே யென்றியால், . கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைய சிறுபுறத்தோ
டெண்பனிநீ ருகக்கண்டுக் திரியலனே யென்றியால்,

Page 25
43 யாப்பிலக்கணம்
நீர்பூத்த நிரையிதழ்க்க ணன்ருெசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால், .
கனகுரல்யாற் றிருகரைபோற் கைங்ல்லா துண்ணெகிழ்ந்து கினையுமென் னிலைகண்டு நீங்கலனே யென்றியால்,
வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத் தாழுமென் னிலைகண்டுக் தாங்கலனே யென்றியால்
கலங்கவிழ்த்த நாயகன் போற் களை துணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்,
(இவை ஆறுங் தாழிசை.)
அதனல்,
(இது தனிச்சொல்.)
அடும்பயி லிறும்பி னெடும்பணை மிசைதொறுங் கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு,
செறிதரு செருவிடை யெறிதொழி லிளேயவர் நெறிதரு புரவியின் மறிதருங் திமில்,
அரசுடை கிரை படை விரை செறி முரசென நுரைவரு திரையொடு கரைபொருங் கடல்,
அலங்கொளி யவிர்சுட ரிலங்கொளி மலர்தொறுங் கலந்தெறி காலொடு புலம்பின பொழில்.
(இவை நான்கும் அராகம்.) விடாஅது கழலுமென் வெள்வளேயுந் தவிர்ப்பாய்மன் கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ. ஒல்லாது கழலுமென் னெளிவ&ளயுஞ் செறிப்பாய்மன் நில்லாது பெருகுமென் னெஞ்சமு கிறுப்பாயோ, தாங்காது கழலுமென் றகைவளை யுக் தவிர்ப்பாய்மன் நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ,

யாப்பிலக்கணம் 43
மறவாத வன்பினேன் மனனிற்கு மாறுரையாய் துறவாத தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.
காதலார் மார்பின்றிக் காமக்கு மருந்துரையாய் ஏதிலார் தலேசாய யானுய்யு மாறுரையாய்.
இணைபிரிந்தார் மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய் துணைபிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்,
(இவை ஆறுங் தாழிசை) எனவாங்கு
(இது தனிச்சொல்.)
பகைபோன் றதுதுறை பரிவா யினகுறி
நகையிழந் ததுமுகம் நனிநா னிற்றுளம் தகையிழந் தன தோள் தலைசிறந்ததுதுயர் புகைபரந்ததுமெய் பொறையாயிற் றென்னுயிர்.
இவை இருசீர் ஓரடி யெட்டம்போதரங்கம்.) அதனல் (இது தனிச்சொல்.) " இனையது நினையால் அனையது பொழுதால்
நினையல் வாழி தோழி தொலையாப் பனியொடு கழிக வுண்கண் என்னெடு கழிகவித் துன்னிய நோயே.
(இது சுரிதகம்.) இது தரவிரண்டும், தாழிசையாறும், தனிச் சொல்லும், அராகம் Bான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், இருசீரோ ரடி யெட்டம்போதரங்க வுறுப்பும் பெற்று, நான் கடி யாசிரியச் சுரிதகத்தாலிற்றுக், கலிக் கோதப்பட்ட ஆறுறுப்பும் மிக்கும் குறைந்தும்

Page 26
44 யாப்பிலக்கணம்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா Y 8
58. மேற்சொல்லப்பட்ட கலிப்பர்விற்கு உறுப்பாக
வருந் தரவு தாழிசைகளுக்கு அடிவரையறை யாமாறென்ன ?
வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா அம்போ தரங்க வொத்தாழிசைக் கலிப்பாக்களுக்குத் தரவு ஆறடியால் வரும். மற்றைக் கலிப்பாக்களுக்குத் தரவு மூன்றடி முதலிய பல அடிகளால் வரும்.
தாழிசை யொன்றற்கு அடி இரண்டேனும் மூன் றேனும் நான்கேனும் வரும்.
கலிப்பாவினம்
1. கலித்தாழிசை
57. கலிப்பாவினம் மூன்றனுட் கலித்தாழிசை எவ்
வாறு வரும்?
இரண்டுமுதலிய பல அடிகளால் ஈற்றடி மிக்கு ஏனையடி தம்முள் அளவொத்து நிற்பத் தனித்தே னும் ஒருபொருள்மேல் மூன்றடுக்கியேனும் வரும்.
உ -ம்: ' இருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை
யொருகூற்றின் கூத்தை யுணராய் மடகெஞ்சே ! ஒருகூற்றின் கூத்தை யுணராயெனின் மற்றப் பொருகூற்றந்தோற்றப்புலம்பேல்வாழிமடநெஞ்சே!”
இது ஈற்றடி மிகுந்து தனித்துவந்த நான்கடிக் கலித்தாழிசை,

யாப்பிலக்கணம் 45
* பூண்ட பறையறையப் பூத மருள
நீண்ட சடையா னடுமே நீண்ட சடையா ஞடு மென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே.'
எனச் சிறுபான்மை ஏனையடிகள் ஒவ்வாது வருதலு முண்டு.
"செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
பொல்லா மணியைப் புகழ்மினே வம்மின் புலவீர்காள் !
முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னன புத்தேளிர் போலப் புகழ்மினே வம்மின் புலவீர்காள் ! ஆங்கற் பகக்கன் றளித்தருளுக் தில்லை வனப் பூங்கற்பூகத்தைப் புகழ்மினே வம்மின் புலவீர்காள்!"
இது ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி ஈற்றடி மிக்கு வந்த கலித்தாழிசை,
2. கலித்துறை
58. கலித்துறை எவ்வாறு வரும்?
ஐஞ்சீரடி நான் கினைக் கொண்டு வரும்.
உ -ம்: " யானுந் தோழியு மாயமு மாடுந் துறைகண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் றேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே.”
3. கலிவிருத்தம்
59. கலிவிருத்தம் எவ்வாறு வரும் ?
நாற்சிரடி நான்கினைக் கொண்டு வரும்.

Page 27
46 யாப்பிலக்கணம்
உ- ம் : “ வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
ணுய்தலினெண்சுட ராழியி னன் றமர் ᏬᎠ வாய்தலி னின்றனர் வந்தென மன்னன் முன் னிதலை சென்றுரை நீள்கடை காப்போய் '
என வரும்,
80. மேற்சொல்லப்பட்ட கலிப்பாவினுங் கலித்துறை யினும் வேறுபட்டு வருங் கலிப்பாவுங் கலித் துறையுமுளவோ?
உளவாம். அவை கட்டளைக் கலிப்பாவுங் கட்டளைக் கலித்துறையுமெனப் பெயர் பெறும்.
4. கட்டளைக் கலிப்பா
இது முதற்கண் மாச்சீர் பெற்று நாற்சீரான் வருவது அரையடியாகவும், அஃது இரட்டி கொண். டது ஒரடியாகவும், அவ்வடி நான்கு கொண்டுவரும். அரையடிக் கெழுத்து முதலசை 5ேராயிற் பதினென் றும், நிரையாயிற் பன்னிரண்டுமாம்.
2 - LI).
* சொல்லி னிரிவ ராசைப்பட் டாரென்று
சொன்ன சொற்பொருள் வேறுகொண் டையையோ
புல்லு வாரெவ் விதத்தினு மென்றுளம்
பூரித் தேயிருந் தேன் மட மழகைமீர் 1
செல்லு லாம்பொழிற் கூவ நகருறை திருவிற் கோல ரினுமரு ளாமையா
லல்ல தேது திகம்பர ரென்பொரு
ளறையின் வன்கண்ண ராவரென் மட்டுமே.”

a யாப்பிலக்கணம் 4? 5. கட்டளைக் கலித்துறை இது முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாம
னிற்பக் கடையொருசீரும் விளங்காயாகி வரும் ஐஞ் சீரடி நான்கு கொண்டு வரும்.
அது விளங்கா யாய்லுருவதன்றிச் சிறுபான்மை வேறுபட்டும் வரும்.
ஒரடிக்கெழுத்து முதலசை 5ேராயிற் பதின அறும் நிரையாயிற் பதினேழுமாம்,
2 a
" சிலைமலி வாணுத லெங்கைய தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி லுதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை யுலைமலி வ்ேற்படை யூரனிற் கள்வரில் லென்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலும்ந்தனவே '
ଘTତ୪୮ வரும்,
IV. வஞ்சிப்பா
*/
81. வஞ்சிப்பாவின் இலக்கணம் யாது? பெரும்பாலுந் தன் தளையுஞ் சிறுபான்மை பிற தளையுந் தழுவி இருசிாடியாலேனும் முச்சீரடியாலே " னும் மூன்று முதலிய பல அடிகளைக்கொண்டு தனிச் சொற் பெற்று அகவற் சுரிதகத்தான் முடிவகாம்,
1. குறளடி வஞ்சிப்பா
உ - ம் : “ பூந்தாமரைப் போதமலரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ

Page 28
48 யாப்பிலக்கணம்
வினைக்கம்பலை மனேச்சிலம்பவு மனச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் மு - - 15ாளும் NA
மகிழ மகிழ்தூங் கூரன் புகழ்த லானுப் பெருவண் மையனே."
2. சிந்தடி வஞ்சிப்பா உ -ம்: ' எறிவெண்டிரைக் கடல்சூழ்புவி யெளிசெய்தினு
மிறவங் துடைப் பொழுதுய்ந்திட லுளதென்னினு மறிவின்றிறத் துயர்ந்தோர்படி றிசைகின்றிலர்
அதனல் முன்வரு மின்பினு முறைப்பட 15ாடிற் பின்வரு மிடர் மிகப் பெரிதா மெனவே.'
1. வஞ்சித்தாழிசை 62. வஞ்சியினம் மூன்றனுள் வஞ்சித்தாழிசை எவ் வாறு வரும் ? Y இருசீரடி நான்கு கொண்டது ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும்.
உ - ம் : ' பிணியென்று பெயராமே துணிநின்று தவஞ்செய்வீ ரணிமன்ற லுமைபாகன் மணிமன்று பணியீரே. என்னென்று பெயராமே கன்னின்று தவஞ்செய்வீர் நன்மன்ற லுமைபாகன் பொன் மன்று பணியிரே,
 
 

யாப்பிலக்கணம் 49
அரிதென்று பெயராமே வரை நின்று தவஞ்செய்வீ ருருமன்ற லுமைபாகன் றிருமன்று பணியிரே.'
2. வஞ்சித்துறை 63. வஞ்சித்துறை எவ்வாறு வரும் ? இருசீரடி நான்கு கொண்டு வரும். உ - ம் : “ பேரறி வன்னுன்
சார விருந்த வூரினு மில்லென் ருர விகழ்ந்தே."
3. வஞ்சி விருத்தம் 64. வஞ்சி விருத்தம் எவ்வாறு வரும்? முச்சீரடி நான்கு கொண்டு வரும். உ - ம் : “ சாந்த ஞேதிய தாழ்மொழி
காய்க்த வேலிரு காதிலும்
போக்த போன்று புகுந்திட மாந்த ராகுல மன்னினர்.”
V. • LDGtu5Lʻ. L1 (r 65. மருட்பா எவ்வாறு வரும் ? மருட்பா, புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறுTஉ வென்னும் நான்கு பொருள்மேலும் வெண்பா முதலாக ஆசிரியப்பா ஈருரக வருவனவாம். அவற்றுள் கைக்கிளை மருட் பாவி னிற்றில் வரும் ஆசிரியம் இரண்டேயடியின தாய் அவ்விரண்டடியுள்ளும் ஈற்றயலடி முச்சீரதாய் வரும்.
4.

Page 29
50 யாப்பிலக்கணம்
1. புறநிலை வாழ்த்து உ -ம்: ' தென்ற விடைபோழ்ந்த தேனர் நறுமுல்லை
முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர் குன்றமர்ந்த கொல்லேற்ரு னிற்காப்ப-வென்றுக் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே."
இது வழிபடுதெய்வ நிற்புறங்காப்பப் பழிதீர் செல்வமோடொருகாலைக் கொருகாற் சிறந்து பொலிக வென்றமையாற் புறநிலை வாழ்த்து மருட்பா,
2. கைக்கிளை உ -ம் : “ திருநுதல் வேர் வரும்புங் தேங்கோதை வாடும் இருகிலஞ் சேவடியுங் தோயு-மரிபரந்த - போகித முண்கணு மிமைக்கு மாகு மற்றிவ ளகளிடத் தணங்கே."
இது துணிதலை நுதலிய வொருதலைக் காம மாதலாற் கைக்கிளை மருட்பா. இதனுள் ஆசிரியவடி யிரண்டேயாய் அவற்றுள்ளும் ஈற்றயலடி முச் சீராய் வருவது காண்க.
3. வாயுறை வாழ்த்து உ -ம் : “ பலமுறை யோம்பப் படுவன கேண்மின்
சொலன் முறைக்கட்டோன்றிச்சுடர்மணித்தேரூர்ந்து நிலமுறையி னுண்ட நிகரிலார் மாட்டுஞ் சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா " விலங்கு மெறிபடையும் வீரமு மன்புங் கலந்ததங் கல்வியுங் தோற்றமு மேனைப் பொலன் செய் புனகலனே டிவ்வாற ஞலும் விலங்கி வருங்கூற்றை விலக்கலு மாகா தனத்தாத னியிருங் காண்டிர் நினைத்தக்க கூறிய வெம்மொழி பிழையாது தேறிமீ ரொழுகிற் சென்றுபயன் றருமே."
 

யாப்பிலக்கணம் 5雄
இது மெய்ப்பொருள் சொன்னமையால் வாயுறை வாழ்த்து, மருட்பா,
4. செவியறிவுறுTஉ
* பல்யானை மன்னர் முருங்க வமருழந்து
கொல்யானைத் தேரொடுங் கோட்டங்து நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் மருக வடுதிறல் ஆழி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்று மீர முடைமையா யென் வாய்ச்சொற் கேட்டி யுடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யல் மழவ ரிழைக்கும் வரைக்கா னிதியீட்டம் காட்டு மமைச்சரை யாற்றத் தெளியல் அமைத்த வரும்பொரு ளாறன்றி வெளவல் இனத்தைப் பெரும்பொரு ளாசையாற் சென்று மன்ற மறுக வகழாதி யென்றும் மறப்புற மாக மதுரையா ரோம்பும் அறப்புற மாசைப்பட் டேற்க வறத்தால் அவையார் கொடுகாத் திருத்தி 5வையாக கட்டார் குழிசி சிதையாதி யொட்டார் செவிபுதைக்குக் தீய கடுஞ்சொற் கவியுடைத்தாய்க், கற்ருர்க் கினணுகிக் கல்லார்க் கடிக்தொழுகிச் செற்ருர்ச் செறுத்துங்ற் சேர்ந்தாரை யாக்குதி அற்ற மறைக்கு மறிவனப் மற்றும் இவையிவை வீயா தொழுகி னிலையாப் பொருகட லாடை கிலமகள் ஒருகுடை நீழற் றுஞ்சுவண் மன்னே."
இது வியப்பின்றி உயர்ந்தோர்கண் வியக் தொழுகுதல் கடனென அரசர்க் குரைத்தமையாற் செவியறிவுறூஉ மருட்பா.

Page 30
53. யாப்பிலக்கணம்
VI. 15T ற் (T
86. நூற்பா எவ்வாறு வரும் ?
சில்வகை யெழுத்துக்களாகிய சொற்ருெரட ராய்ப் பல்வகைப் பொருள்களை விளக்கித் திட்ப மும் நுட்பமும் அமைந்து வரும்.
உ - ம் : எழுத்தெனப்படுவ
அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்து வரன் மரபின் மூன்றலங் கடையே." என வரும்.
கூன்
67. கூனென்ப தென்ன ? வெண்பா முதலிய செய்யுட்களின் முதலடியில் ஒரோவிடத்துப் பொருள்படத் தனித்து நிற்பது கூணும். அது வஞ்சிப்பாவின் முதற்கணன்றி இடையிலும் இறுதியிலும் வரும்.
C - If) ; " உதுக்காண்
சுரந்தான வண்கைச் சுவான மாப் பூதன் பரந்தானப் பல்புகழைப் பாடி'
" அவற்றுள், அ இ உ எ ஒக் குறிலைக்தே'
எனவும் வரும்.
யாப்பிலக்கணம் முற்றிற்று.
 

உதாரணச் செய்யுள் முதற்குறிப்பு
ب- سسسسسس مصصمميم سسسسس مس.
ஒரசைச்சீர்
y
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
9
நாலசைச்சீர்
9
எதுகைத்தொடை
மோனைத்தொடை
எதுகைமோனையின்றி
வரும்பாட்டு
குறள்வெண்பா
y
நேரிசைவெண்பா
மலர்மிசையேகி
கற்றதனுலாய வேதப்பொருளாய் ஆனந்தக்கூத்த மண்ணிரனல்
அள்ளற்பள்ளத்
தேஞர்கஞ்சச்
பெரியவர்தங்நோய்
மண்ணீரனல் அஞ்சம்போனடை
துகடீர்பெருஞ் சொற்போர்புரிவ
பொன்னினன்ன
வானின்றுலக ஆவாவென்றே தக்கார்தகவில கற்றுளகல்வியுங் அடல்வேண்டுமைங்
பூக்கவேங்கை
உடையார்முன் கண்ணுதல் காட்சி கூற்றங்குமைத்த
ஏற்முன்புள்ளூர்க்
பக்கம்
10
O ll.
12
3
3
13 13
13
14
15
15
6 6.
17 17

Page 31
s
அகவற்பா வினம்
s
யாப்பிலக்கணம்
இன்னிசைவெண்பா
9
சிந்தியல் வெண்பா
பஃருெட்ைவெண்பா
குறள்வெண்செந்துறை ஆர்கலியுலகத்து
குறட்டாழிசை
வெண்டாழிசை
வெண்டுறை
வெளிவிருத்தம்
நேரிசையாசிரியப்பா இணைக்குற ளாசிரியப்பா
நிலைமண்டில வாசிரியப்பா
அடிமறிமண்டில வாசிரியப்பா
ஆசிரியத்தாழிசை
அகமர்பெருஞ் கடற்குட்டம்ப்ோழ் மழையின்றிமாகி காதன் மகளிர் அங்கண்விசும்பி அறிந்தானபேத்தி போற்றுமின் போற்று
வையகமெல்லாங்
நண்ணு வார்வினை அறுவர்க்கறுவரை வண்டார்பூங்கோ நண் பிதென்றுதீய
அம்பேருண் கண்
படர்தருவெவ்வினை கூற்றிருக்குமடலாழி
அங்கட்க மலத்தவர்
ஆவாவென்றேயஞ்
பெருக்தறைபுகுந்து
சீரின்றண்மையும்
வேரல்வேலிவேர்
தீர்த்தமென்பது
சத்தமுமாகியச் கன்றுகுனிலாக்
பக்கம்
18
8. 18 19 19
19
20
21 21
22
22
23
23 . .
23 24
25
25
25
26
26
27
20
21

யாப்பிலக்கணம் 55
அகவற்பா ۔۔۔۔بر பக்கம் வினம், ஆசிரியத்துறை கரைபொருகானியா 27 2 e s இரங்குகுயின் முழ 28 ஆசிரியவிருத்தம் விடஞ்குழரவினிடை 28 , 9. கோமுனிவருக்கு 28 o அருவருக்குமுலக 29 வளங்குலாவரு 29 கைத்தலத்தழற்க 30 கலிப்பா வண்ணக
, ஒத்தாழிசை தொல்லுலகம்படு
சுடிகை 31 அம்போதரங்க வொத்தாழிசை மேற்கூறிய கலியில்
அராகமொழித்துக்
卤好动夺了芭
நேரிசையொத்தாழிசை மேற்கூறிய கலியில் அரா சத்தையும் அம்போ தரங்கத்தையு மொ
ழித்துக் காண்க
鹦分 வெண் கலிப்பா சேல்செய்தமதர்வேம் 36 கலிவெண்பா சுடர்த்தொடீஇ 36
தரவுகொச்சகக்
j65 L u r அஞ்சம்போனடை 37
s தரவிணைக்கொச்சகக் V
கலிப்பா வடிவுடைநெடுமுடி 37
ነ ፃ சிஃருழிசைக்
u கொச்சகக்கலிப்பா பரூஉத்தடக்கைமத 38
பஃருழிசைக் கொச்சகக்கலிப்பா தண்மதியேர்முக 40 மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா மணிகிளர்நெடுமுடி 4.
}

Page 32
r ,
அவற்றுள், அ இ உ எ
யாப்பிலக்கணம்
பக்கம் கலித்தாழிசை இருகூற்றுருவத்திருங் கிகி பூண்டபறையறையப் 45 செல்லார்பொழிற்றில்லை 45 கலித்துறை யானுக்தோழியுமாயமு 45 கலிவிருத்தம் வேய்தலைடிேய A 6 கட்டளைக்கலிப்பா சொல்லினிரிவு 46 கட்டளைக்கலித்துறை சிலைமலிவாணுத 47
குறளடிவஞ்சிப்ப்ா பூந்தாமரைப்போத 47 சிந்தடிவஞ்சிப்பா எறிவெண் டிரைக்கட் 48
வஞ்சித்தாழிசை பிணியென்றுபெயராமே 48 வஞ்சித்துறை பேரறிவன்ஞன் 49 வஞ்சிவிருத்தம் சாந்தனுேதியதாழ் 49 புறநிலைவாழ்த்து தென்றலிடைபோழ்ந்த 50 கைக்கிளை திருநுதல்வேர்வரும் 50 வாயுறைவாழ்த்து பலமுறையோம்பப் 50 செவியறிவுறு உ பல்யானேமன்னர் 51
s எழுத்தெனப்படுவ 52
份》 உதுக்காண்,
ச்ரர்தாஞ
52
 
 
 
 


Page 33