கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2014.09

Page 1
囊
மாவோ சே துங்
மாபெரும் வரலாறு -கெகிறாவளசிலைஹா
 

மாசிகீரன் கேதங்கவடிவேல்
காற்றில் கலந்த a56BSDoftă, asTTSinfluíño ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம்
முத்திரை பதித்த இலக்கியவாதி சாரல் நாடன்
Be:53
முற்போக்கு இயக்கத்திற்காக உழைத்த எம்.எம்.சமீம்
臀

Page 2


Page 3
_\,
ஒரு கம்யூனிஸவாதிக்குள்ளிருந்து ஒலித்த BOttOTTTTTT LLtmmTtLLL mmG LLTT LLmLmmLLalT TOOmmm கெகிறாவ ஸளிலைஹா
ஐோசிகீரன் - கே.தங்கவடிவேல் தெணியான்
காற்றில் கலந்த கண்ணிக்காவியம் mmLYOLTTL LmmLLLLmmmLmTaLT OeLmLmaaC LLLLm கெகிறாவ ஸஹானா
LmtTm mTL TOT mmOmmmLmTmT OTTTTOT LMOkLmmLmTT sOOmmtmmmOTT மொழிரைதன்
liestory
8.
முற்போக்கு இயக்கத்திற்காக உழைத்த எம்.எம்.சமீம் 3pper 56
முத்திஐை பதித்த இலக்கியaதி அமரன் சாரல் சாடன் மு.சிவலிங்கம்
OtmSttmSLtmm mLmmmtmttOOOm mTmLmmTmmmTOOmLa TmTTTaO rí56ED GESKEN PIB pÉSðB68EB8Eri_ið லெனின் மதிவானம்
இசால்ல வேண்டிய கதைகள் - இதாடர் - 18 முருகபூபதி
ថៃ្ងកៀ្រម
យ៉ាងៃ00e0pflu gug66T
ரூரீ.ரீவாகீசன்
இ.இராஜேஸ்கண்ணன் கவிதைகள்
கேணிப்பித்தன்
மிகிந்தலை ஏ.பாரீஸ் யாத்ரிகன்
நூல் விமர்சனம்
as600T. p(3356roelge6 g) ui aiguillw IAħħir
கருணாகரன், நன்றி - இணையம்
 
 
 
 
 
 
 

ព្រថៃបា ថៃ ឲ្យ ခြုစ္ဆိဒ္ဓတ္ထိပြိးန္ဟန္းမ္ဟုန္း မႈန္းခ်ိဳ႕မ္ဟုမ္ဟင္တန္တီး
si um Krv uhlwanuh
::ဒွိုး‡:88:း‡ န္တိ

Page 4
ஜீவநதி
2014 புரட்டாதி இதழ் - 72
பிரதம ஆசிரியர் க.பரணிதரன்
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
கலாநிதி கு.கலாம60ரி
தொடர்புகளுக்கு : ආරාබහ ඌiආ|5 சமனந்தறை ஆலgப்பிள்ளையர் வீதி ඌiෆර්ඞ|fft|| ඛ{{{8|offෂ් ଔତ୍ତୀ
ෆිඛoiffණතඝ.
ஆலோசகள் குழு:
திரு.தெனரியான் ឆ្នាំ១,៩.p_]/g,
தைாலைபேசி 0775991949 0212262225
E-mail : jeevanathy(a yahoo.com
வாங்கித் தொடர்புகள் KBharaneetharan
Commercial Bank, Nelliady
/C - 810802 1808 - CCEYLKLY
క్రైకోడ్రోణిపణి piւնա
ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே
பொறுப்புடையவர்கள்.
அனர்ே குறித்த வரலா இவ்விதழில் ப சமூகத்தில் 1 உழைத்த முன
சமூக மக்களின் வ தீவிரமாக உ6 தமது வாழ்க்
நம்பிக்கைக்கு
வனெ வானொலி இ கொடுத்தவர். பல்வேறு வா
@6.
OT முஸ்லிம்களில் இயக்கங்களுட ஆவார். இந்த அரசியல் வகி வெளியிட்டு ை
t {ᎠᏋᎼXᎧxᎧ; மக்களின் குர இலக்கிய உல கொணர் டவர்
பெறுபவரும் இ
இந்த செலுத்துவே இளந்தலைமு
 
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. គ្រឿuួn 2.65 6giតែh.
- பாரதிதாசன்
ஞ்சலி செய்து அமைதி கொள்வோம்!
மையில் அமரத்துவம் எய்திய நான்கு ஆளுமைகள் ற்றுக்குறிப்புகளைக் கனத்த இதயத்துடன் "ஜீவநதி” திவு செய்துகொள்கிறது. இவர்கள் நால்வருமே தமிழ் மாற்றம் காண விழைந்தவர்கள். தாம் முன்நின்று றகளில், முத்திரை பதித்தவர்கள்.
விடுதலைக்காக, வீறுகொண்டெழுந்து, அடிநிலை ாழ்வாதார உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் ழைத்தவர் ஆசிரியர் க.தங்கவடிவேல் இவர் க்கைக் காலம் முழுவதும் கம்யூனிஸ்ட் டாகவே சமூக விடுதலைப் போராளி கேடானியல் அவர்களின் ரியவராக விளங்கினார்.
ாலி அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம் ரசிகர்களின் இதயங்களை மென்மையாகத் தடவிக் சுத்தமான தமிழில், இலக்கிய அறிவுப் பின்புலத்துடன், னொலி நிகழ்ச்சிகளை இரசிகர்களுக்கு வழங்கியவர்
ஸிய இயக்கம், முற்போக்கு இயக்கம் என்பன பற்றி டையே எழுந்த சந்தேகங்களைத் தீர்த்து, அந்த -ன் இணைந்து உழைத்தவர் எம்.எம்.சமீம் அவர்கள் நாட்டின் சிறுபாண்மைச் சமூகத்தினரின் வரலாறு, பாகம், கலை இலக்கியப்பங்களிப்பு என்பவற்றை தாம் வத்த நூல்களில் இவர் பதிவு செய்தார்.
பக இலக்கிய ஆளுமையான சாரல்நாடன் மலையக லாக ஒலித்தவர். பல்வேறு இலக்கியப் படைப்புகளை குக்கு வழங்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுக் இவர் மலையக இலக்கிய ஆய்வில் முதன்மை ភាវទ្រឹj.
ஆளுமைகளின் மறைவுக் காக அஞ சலரி தாடு, அவர்களினர் பாதையில் பயணிக்கவுள்ள றையினரை எண்ணி, ஜீவநதி அமைதிகொள்கிறது.
க.பரணிதரன்

Page 5
ஒரு கம்யூனிஸவாதிக்கு ஒலித்த கவிதைக்குரல்
மாவோ சே துங் மாபெரும் வரலாறு
மாவோ சே துங் அவர்கள் சுமந்திருந்த கனதி மிக்க வரலாற்றுப் பாத்திரம் இன அடக்குமுறைக்கும், சுரண்டல்களுக்கும் அப்பாற்பட்ட சமத்துவ தேசம்
ஒன்றுக்கான கனவைச் சுமந்திருக்கும் LITGI Big5 D @i @p1}}}}} }] ព្រោg
LO TTவோ சே துங் என்கிற மாமேதையின் மூன்று நூற்றாண்டுகள் (1893-2013) கடந்தும் நெஞ்சில்
சர்வதேச கம்யூனிஸப் பெட்டகத்தின் திறவுகோலாய் அமைந்த உயரிய ஆளுமை பற்றி ரொம்ப நாட்களாய் பேச அவாவியிருந்தேன் எண் தமிழ் வாசகர்களோடு. அப்படி அவர் குறித்துப் பேசுதற்கு மேமன்கவி அவர்கள் மூலமாக எனக்குக் கிடைத்திருந்த மக்கள் சீனக் (g) gul J. J. Foreign Languages Press, Peking 1976 GOG/Gifulfi TGOT “MAO TSETUNG POEMS” BAT GŮ GPC, காரணம் ஆகும். ஒரு போராட்ட வீரருக்குள் இருந்து ஒளிர்ந்த பெண்னம்பெரு கவிதைக் குரல் மாவோ சே துங்கிற்கு உரியது. சீனத் தொல் இலக்கியம், மரபுக் கவிதைகள், நாட்டுப் பாடல்கள், வரலாறு, தத்துவம், அவற்றிலிருந்து கோர்த்த குறிப்புகள், உவமைகள், குறியீடுகள், படிமங்கள் அனைத்தும் மாவோவின் கரங்களில் புத்துயிர் பெற்று புதிய பொருள் தருவதாய்க் காணுகிறார் 1981களிலே மாவோவின் கவிதைகளை அதிகம் மொழிபெயர்ப்புச் செய்து தமிழுக்குத் தந்திருந்தவர் உயர்திரு எஸ்.வி. ராஜதுரை அவர்கள்.
மாவோ சே துங் அவர்கள் சுமந்திருந்த கனதி மிக்க வரலாற்றுப் பாத்திரம் இன அடக்குமுறைக்கும், சுரணர்டல்களுக்கும் அப்பாற்பட்ட சமத்துவ தேசம் ஒன்றுக்கான கனவைச் சுமந்திருக்கும் யாவருக்கும் ஒப்பிடமுடியாத பாதைநெறி காட்டுவது. அவரது கவிதைகளையறிய வேண்டுமாயின் அவ்வரலாறு பற்றி அறிவதும் இன்றியமையாததாகிறது. அந்த வகையில், மேமன்கவி அவர்கள் தந்த மற்றுமொரு புத்தகம் சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் மற்றும் புதிய பூமி பதிப்பகம் மாவோ சே துங் நூற்றாண்டு நினைவாக 1994
 
 
 

கெகிறாவ ஸ்ைேலஹா
ள்ளிருந்து
இல் முதற்பதிப்புச் செய்திருந்த “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” மேலும் எண் கவனத்தை ஈர்க்கிறது. ஆங்கிலத்தில் Edgar Snow எட்ஹார் ஸ்னோ எழுதியிருந்த இந்நூலை திரு.எஸ் இந்திரனர் தமிழில மொழி பெயர்த்திருந்தார். எட்ஹார் ஸ்னோ என்கிற முப்பது வயதினரான அமெரிக்கப் பத்திரிகையாளர் ஏழு வருடங்கள் சீனாவிற் தங்கியிருந்து அந்தத் தேசம் பற்றி கற்றுள்ளார். 1937களில் மாவோ சே துங் மற்றும் அவர்தம் தோழர்களைச் சந்தித்து திரட்டிய தகவல்கள், சீனக் கம்யூனிஸ்டுகளை “சிவப்பு வழிப்பறிக் கொள்ளைக் காரர்கள்” என ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள் விமர்சித்துக் கொண்டிருந்த அண்றைய காலகட்டத்தில் சீனா பற்றிய நேர்மையான பல விடயங்களை அழகுற முன்வைத்திட உதவின.
மாவோவுடனான பன்னிரண்டு இரவுகள் நீடித்த ஸ்னோவின் நீண்ட பேட்டி சீனக் கம்யூனிஸவாதிகளின் உன்னத நோக்கங்கள், தியாகம், வீரம், அர்ப்பண சிந்தை என்பன பற்றி எடுத்துரைக்கிறது. மாவோ தனிப்பட்ட தன் அனுபவங்களைப் பற்றி பெரிதாக ஞாபகத்தில் கொண்டி ருக்கவில்லை. மிகுந்த தன்னடக்கம் உடையவர் அவர். ஒரு சுய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புக்கான விடயங்களை வழங்குதல் பற்றி அவர் பற்றுறுதி அற்றவராகக் காணப்பட்டார் எனக்கூறும் ஸ்னோ, அவர் எத்தகைய மனிதர் என்பது பற்றி மக்கள் அறிந்து:
3. 3. வநதி 2 புரட்டாதி 2014

Page 6
- கேம்
கொள்ள விரும்புகிறார்கள் என்பது பற்றியும், அவர் குறித்து நீடிக்கும் "அவர் ஒரு பைத்தியக்கார தீவிர வாதி”, “படிப்பறிவற்ற விவசாயி”, “ பயங்கரமான கச நோயாளி” போன்ற பல பிழையான வதந்திகளைத் தவிர்க்கலாம் என்று அபிப்பிராயப்பட்டதன் பேரிலும் அதிர்வுற்று பொதுவான பதிலாக சில குறிப்புகள் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.
சீன தென் பகுதி பேச்சு வழக்கில் மாவோ உரையாடுகிறார் ஸ்னோவோடு. மாவோ கூறுகிறார்:-
“சியாங்தான் மாவட்டத்திலுள்ள ஷான் ஷான் எனும் ஊரில் 1893 பிறந்தேன். தந்தை மாவோ ஷன் ஷெங். தாயார் வென் சி மெய், தந்தை ஒரு ஏழை விவசாயி. கடன் தொல்லை காரணமாக அவர் இராணு வத்தில் இணைந்தார். கவனம் மிகுந்த சேமிப்பால் ஓரளவு கடனடைத்து நிலங்களை மீட்டுக் கொண்டார். ஒரு ஹெக்டேயர் அளவான நம் நிலத்திலிருந்து 60 தொன் அரிசியை உற்பத்தி செய்தோம். ஐவர் கொண்டது எங்கள் குடும்பம். காலப் போக்கில் மேலும் காணிகள் வாங்கி அரிசி உற்பத்தி செய்து, நடுத்தர விவசாயக் குடும்பமாக மாறி பின்னரும் பல தொழில்களில் ஈடுபட்டு ஒரு பணக்கார விவசாயி என்கிற நிலைக்கு முன்னேறி ஒரு பண்ணையையும் விலைக்கு வாங்கிக்கொண்ட என் அப்பா அப் பண்ணையில் தன் மனைவி மக்களையும் வேலைகளில் ஈடுபடுத்தினார்.”
மாவோவிற்கு ஏழு வயதான போது அவர் கையை பிடித்து இழுத்து வந்து வயல்வேலைகளில் இறக்கிவிட்டார் அவர் தந்தை ஷன்செங் இப்படிக்கூறி.
- “மாவோஇனியும் நீ குழந்தை கிடையாது. உன் சொந்தக்காலில் நிற்க நீ பழகிக் கொள்ள வேண்டும். இது நம் பரம்பரை வயல் இதைக் கொண்டு தான் நான் செல்வந்தனானேன். மாடு போல் உழைக்கக் கற்றுக் கொள். உன் கால்களை சேற்றிலும் மணலிலும் முள்ளி லும் பதித்துப் பழகிக்கொள். இங்குள்ள விவசாயிகள் செய்யும் அத்தனை வேலைகளையும் பார்”
தன் கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார்மாவோ சேதுங். அதிகாலையிலும், அந்தி வேளை களிலும் பண்ணையில் வேலை செய்தார் அவர். நேரம் கிடைத்தபோது புராதன இலக்கியங்களைப் படித்தார். கடுமையான தன் வகுப்பாசிரியருக்குப் பயந்து பள்ளிக் கூடத்தை விட்டுப் பத்து வயதில் ஓடிப்போனாராம் அவர். அப்பாவும் அடிக்கடி அடிப்பார். வீட்டிலும் அடிபட நேரும் என்பதால் வீட்டுக்கு வரப் பயந்த மாவோவை மூன்று நாட்களின் பின்னர் குடும்பத்தினர் கண்டு பிடித்தனராம். எனினும், அதன் பிறகு அப்பாவும், ஆசிரி யரும் ஓரளவு புரிந்துணர்வோடு நடந்து கொண்டதாகக் குறிப்பிடும் அவர், அதை ஒரு "வெற்றிகரமான வேலைநிறுத்தம்” என நினைவு கூறுகிறார்.
மாவோவின் அப்பா அவருக்கு பணமே தருவ தில்லையாம். மாவோவுக்கும் அவர் சகோதரனுக்கும் குறைவான உணவே தருவாராம். தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15ம் திகதி அரிசியோடு சலுகையாக முட்டை வழங்குவதைக் குறிப்பிடும் மாவோ, அப்பா ஒருபோதும் இறைச்சி வழங்கியதில்லை எனக்
04
ஜீவநதி 72 புரட்டாதி 2014

குறிப்பிட்டு மேலும் சொல்கிறார் "எனக்கும் என் சகோதரனுக்கும் முட்டையும் கிடையாது இறைச்சியும் கிடையாது” என்று.
மாவோவின் தாய் கருணையானர். தாராள குணமும், இரக்க சிந்தையும் இருந்தது அவரிடத்தே, அப்பாவுக்குத் தெரியாமல் ஏழைகளுக்கு அம்மா உதவுவாராம். வீட்டில் இரண்டு குழுக்கள் இருந்தன ஒரு குழுவில் மாவோ, சகோதரன், அம்மா, இல்லப் பணியாள், மற்றக் குழுவில் அப்பா மட்டும்.
அப்பா அதிகம் பொருள் சேர்த்தார். கடன்பட் டோரின்காணிகளை அவரே கடனடைத்துதனதாக்கினார்.
மாவோ சொல்கிறார், “எனக்கும் அப்பாவுக்கு மிடையில் சொற் போராட்டங்கள் வலுத்தன. இல்லம் வந்திருந்த விருந்தினர் முன் என்னைச் “சோம்பேறி” என அப்பா திட், வீட்டை விட்டு நான் வெளியேறினேன். குளம் ஒன்றில் குதிக்கப்போவதாய் பயமுறுத்தினேன். மன்னிப்பு கேட்கப் பணித்த அப்பாவிடம் “என்னை இனி அடிக்க மாட்டேன் என வாக்குறுதி தந்தால் மன்னிப்பு கேட்க முடியும்” எனக் கூறினேன். அப்பாவுடனான என் யுத்தம் முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் கிளர்ச்சி மூலம் எதையாவது அவரிடம் சாதிக்கலாம் என்பதையும் பணிந்து கீழ்படிவுடன் நடந்து கொண்டால் அவர் என்னைக் கண்டிப்பதையும் எனக்கு விளக்கிற்று. அப்பாவின் கடுமை அவரைத் தோற்கடித்தது. அவர் மீது வெறுப்பே எஞ்சியது எனக்கு ஆயினும், நான் எனக்குரிய வேலைகளில் அவர் குறையே காணா வண்ணம் கவனமும், திறமையும் காட்டி செய்யலானேன்.
“அப்பா கொஞ்சம் படித்திருந்தார். அம்மா அறவே கற்றிருக்கவில்லை. இல்லத்தில் நானே கற்றவனாய் இருந்தேன். அதிகம் புராதன இலக்கியங்கள் வாசித் திருந்தேன். 1.பண்டைய சீன இலக்கியங்கள், கற்பனைக் கதைகள் மற்றும் ஆசிரியர் தீயவை என ஒதுக்கியவற்றை யெல்லாம் வாசித்தேன். ஷெங்சி வெய் யெங் எழுதிய 'எச்சரிக்கை வார்த்தைகள்' கல்வி பற்றிய ஆசையைத் தூண்டிவிட்டது. அவை என்னை ஆளுமைப் படுத்தின.”
மாவோவின் அம்மா கட வுள் நம்பிக்கை கொண்டிருந்தார். புத்தரை வழிபட்டார். அப்பாவோ அதுபற்றி அக்கறை செலுத்தவில்லை. ஒரு தடவை புலி ஒன்றின் தாக்குதலை எதிர்கொண்ட மாவோவின் அப்பா புலி பின் வாங்கியதில் வியந்து பின்னரெல்லாம் கடவுள்
வழிபாடு செய்திருக்கிறார்.
பண்ணை வேலைகளில் வெறுப்புற்று இல்லம் விட்டு மறுபடி ஓடினார் மாவோ.
சாங்சாவில் அப்போதுகடும்பஞ்சம்ஒன்றுஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் உணவின்றித் தவித்தனர். மக்கள் உதவி கேட்டு ஆளுநர் முன் போய் நின்றார்கள். இறுமாப்புடன் அவர் பேசியதில் கோபம் கொண்ட மக்கள் அவரைத்தாக்கி பணிமனையையும் உடைத்து நொறுக் கினார்கள். அவர் விரட்டியடிக்கப்பட்டார். புதிய ஆளுநர் வந்தார். கிளர்ச்சியாளர்களை கைது செய்தார். கொலை செய்யப்பட்டு, அவர்களில் பெரும்பாலரது தலைகள் கம்பங்களில் குத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. இது குறித்து ஆழ்ந்த துயருற்றதாகக் குறிப்பிடும் மாவோ

Page 7
“இந்நிகழ்ச்சியை என்னால் ஒருபோதுமே மறக்க முடியவில்லை” எனப் பதிவு செய்கிறார்.
கேலாவோ எனப்படும் இரகசியச் சங்கம் ஒன்றிலே அங்கம் வகித்தோருக்கும் நிலவுடைமைக் காரர்களுக்கு மிடையே முரண்பாடுகள், பிரச்சினைகள் ஏற்பட்டன. இதிலும் தோற்க வேணர்டி ஏற்பட்ட கிளர்ச்சியாளர்கள் லியுசான் மலைப்பகுதிக்கு ஒதுங்கி ஒரு கோட்டையை அங்கே அமைத்தனர். புரட்சியாளர் களையடக்க துருப்புகள் அனுப்பப்பட்டன. அவர்களது தலைவராக இருந்து வழிநடத்திய பாங் எண்பாரது தலை துணர்டிக்கப்பட்டது. மாணவர்கள் மனதில் அவர் மாவீரராக மிளிர்ந்தார்.
நெல் அறுவடை செய்யப்படாதிருந்ததில் பஞ்சம் தலை விரித்தாடியது. ஏழைகள், பணக்கார விவசாயிகளிடம் உதவி கேட்டார்கள். தராதபோது தட்டிப் பறித்தார்கள். மாவோவின் அப்பாவினதும் ஒரு தொகுதி நெல் ஏழைகளால் பறிக்கப்பட, அப்பா சினத்தில் கொதித்தார். இதுபற்றிப் பேசுகையில் “இதற் காக அப்பாவோடு அனுதாபம் காட்டவில்லை என்றா லும் அவர்களது நடைமுறையும் பிழையானது என எண் உள்ளம் சொல்லிற்று.” என்கிறார் மாவோ சே துங்.
இவையெல்லாவற்றோடும், கோயில்களை பாடசாலைகளாக மாற்றுமாறெல்லாம் புதுச் சிந்தனை களோடு வெளிப்பட்ட ஒரு முற்போக்கு தீவிரவாத ஆசிரியரது பள்ளிக்கூடக் கற்பித்தலால் தான் வெகு வாகக் கவரப்பட்டதாய் ஞாபகிக்கும் மாவோ கூடவே அரசியலின்பாலும் ஆர்வம் காட்டத் தலைப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் யப்பாண் ஆக்கிரமிப்பு செய்யத் தலைப் பட்டதையும், பர்மா, இந்தோனேஷியா போன்ற சீனாவின் ஆளுமைக்குட்பட்டிருந்த பிரதேசங்கள் இழக்கப்பட்டிருப்பதையும் அறிந்து மனம் கலங்க லானேன்.நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்ற தவிப்பு ஆட்டிப்படைத்தது.”
"பதினாறு வயதில் எமது இல்லத்தேயிருந்து 50 மைல்களுக்கப்பால் ஒரு பள்ளிக்கூடத்தில் உயர்தரம் பயிலச் சேர்ந்தேன். இயற்கை விஞ்ஞானம், மேற்கத் தேயக் கல்வி என்பனவும் அங்கு கற்பிக்கப்பட்டன. போலிக் குடுமிக் கொணர்டையணிந்து வரும் ஒரு யப்பானிய ஆசிரியர் இசையும், ஆங்கிலமும் கற்பித்தார். அவரை மாணவர்கள் “போலி வெளிநாட்டுப் பிசாசு” என அழைத்தனர். யப்பாண் பற்றி அவர் சொல்பவை எண் உள்ளம் கவர்ந்தன. யப்பானியப் பாடல் ஒன்றினை அவர் கற்பித்தார். வரிகள் இன்னும் ஞாபகம். யப்பானின் அழகு பற்றி அப்பாடல் பேசும். கூடவே, ரஷ்யாவுடனான போர் முடிவுற்ற பின்னர் ‘போஸ்ட் மவுத்’ ஒப்பந்தம் யப்பானில் ஏற்படுத்திய குதுரகலம் பற்றிய பாடல் அது. நிலவுடைமைக்காரர்களின் ஆணி மக்களே அங்கு அதிகம் கற்றனர். விலையுயர் ஆடைகளை அவர்கள் அணிந்தனர். விவசாயிகளின் பிள்ளைகள் அங்கு கற்பது இல்லை. எண் கந்தல் ஆடைகளின் காரணமாக அவர்கள் என்னை வெறுத்தனர். கூடவே, நான் சியாங் சியாங் பிரதேசத் தவன் இல்லையாதலாலும் அவர்கள்
 
 

என்னை வெறுத்தனர். பிரதேசவாதச் சண்டைகள் அடிக்கடி நடக்கும். நான் நடுநிலை வகித்தேன். எனினும், புராதன இலக்கியங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்னை நேசித்தனர். இலக்கிய நயம் நிறை கட்டுரைகள் எழுதினேன். காங்யு வெய்யின் சீர்திருத்த இயக்கம் பற்றிய ஒரு நூல் படித்தேன். 1911 இல் நடந்த முதலாம் அறிவியற் புரட்சியின் தந்தையர்களாகக் கருதப்பட்டவர் களில் ஒருவரான லியாங் சீஷாவ் எழுதிய “சின் மின் சுங் பாவோ - நவீன மக்களின் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பு” நூலும் கரம் கிட்டிற்று. அவற்றைப் பல தடவைகள் படித்தேன்.
“பண்டைய சீனாவின் ஆட்சியாளர்களின் சாதனை களால் வெகுவாகக் கவரப்பட்டேன். வெய் மஞ்சள் ஆற்றின் சமவெளிகளில் சீன சமுதாயத்தை உரு வாக்கியவர்கள் அவர்கள். வெளிநாட்டு வரலாறுகளை யும் வாசித்தேன். அமெரிக்கப் புரட்சி பற்றியும் தெரிந்து கொணர்டேன். எட்டு வருடப் போராட்டத்தின் பின்னர் அமெரிக்காவைக் கட்யெழுப்பிய வாஷிங்டன் பற்றி, நெப்போலியன் பற்றி, மற்றும் ரஷ்யாவின் கதரினாவை, மகா பீட்டரை, ரூசோவை, லிங்கனை கரைத்துக் குடித்தேன்.
“எனது ஊரிலிருந்து 120காதங்கள் அப்பாலிருந்த சாங்ஷாநகருக்குச் செல்லும் கனவு இருந்தது. அங்குள்ள பெரிய பாடசாலையில் பயில நாடினேன். நடந்தே போனேன் அங்கே விரும்பியபடியே பள்ளி அனுமதியும் கிடைத்தது. துரதிஷ்டம், ஆறு மாதங்கள் மட்டுமே அங்கு கற்க முடிந்தது. நாடு முதலாவது புரட்சிக் குத் தயாரானது. முதல் தடவையாக ஒரு அரசியல் கட்டுரை எழுதி பள்ளிச் சுவர்ப்பத்திரிகையிலே ஒட்டினேன்.
"அரசியல் சூழ்நிலை விரைந்து மாறிற்று. ஒருமுறை லீ யுவான் ஹங்கின் குழுவிலிருந்த ஒரு புரட்சி வாதி, பள்ளியதிபரின் அனுமதியோடு வந்து, ஒரு சொற் பொழிவு நிகழ்த்தினார். அவர்களது சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு அவர்களது இராணுவத்தில் சேர உறுதி பூண்டேன். புரட்சியோடு தொடர்பான சஞ்சிகைகள் பல படித்தேன். சோஷலிசம் பற்றிக் கற்றுக் கொண்டேன். பின் காவல்துறைப்பாடசாலை ஒன்றின் விளம்பரம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு, அதில் நுழைவதற்கான பதிவை மேற் கொண்டேன். ஒரு நண்பன் சட்டப் பள்ளியிலே சேர ஊக்கு வித்தான். இன்னொருவண் வர்த்தகப்பள்ளிபற்றிப்பேசினான். அப்பா பொருளியல் பற்றிநாண் கற்பதில் மகிழ்ந்தார்.
“சுய கல்வி என்னை ஈர்த்தது. தனியே படித்தேன். ஹகுனானி மாகாண நூல் நிலைய வாசிப்பில் எண் நேரம் கழிந்தது. அடம் ஸ்மித்தின் ‘வெல்த் ஒஃப் நேஷன்ஸ், டார்வினின் "ஒரிஜினி ஒஃப் ஸ்பைஸஸ்', ஜோனி ஸ்டுவார்ட்டின் ஒழுக்கநெறி பற்றிய நூல், ஸ்பென்சரின் “லொஜிக்', மொணர்டஸ்கியுவின் சட்ட நூல்கள், வீர காவியங்கள், பணி டைய கிரேக்க இலக்கியங்கள் அனைத்தையும் வாசித்தேன்.
"தங்கியிருந்த சியாங் சியாவ் மாவட்ட வாசி களுக்கான விடுதியில் மாணவர்களுக்கும், இராணுவத் தினருக்கும் சண்டை வெடித்தது. தப்பியோடினேன். பணம் இல்லை. குடும்பமும் கைவிரித்திருந்தது. தொழில் தேட வேண்டியதாயிற்று. ஆசிரியத் தொழில் நன்றெனட
O5
ஜீவநதி 72 புரட்டாதி 2011 Nர்
ugi pian. Am 29 P

Page 8
(எண்ணினேன். ஒரு முறைமைப் பள்ளி ஒன்றில் கற்று 1ெ918இல் பட்டம் பெற்றேன்.
“நண்பர்களுடன் இணைந்து சின்மின்சூ ஹுய் எனும் அமைப்பை உருவாக்கினேன். கம்யூனிஸ உலகில் பின்னாட்களில் மிக பேசப்படத்தக்க உறுப்பினர்கள் பலர் அதில் அங்கம் வகித்தனர்.”
ஸ்னோ தொடர்ந்து எழுதுகிறார். “மாவோவின் மனைவி கூட கேட்டிராத கதைகளாக இருந்தன மாவோ
கூறியவை.”
மாவோ கூறுகிறார், "தாயார் காலமானார். வீடு போகும் அவர் பின்னர் அறவே அற்றுப்போனது. முதலாம் உலக யுத்தத்தில் பங்கு கொள்ள பிரான்ஸ் அழைத்ததில் பல சீன இளைஞர்கள் அங்கு சென்றனர். நான் அதை விரும்பினேன் இல்லை. பயனுள்ள வகையில் வாழ்வை சீனாவில் கழிக்கலாம் என நான் வெகுவாக நம்பினேன். தலைநகர் திரும்பி வேலை தேடினேன். பல்கலைக்கழகமொன்றில் நூலகத் துணைப் பொறுப்பாளர் பதவி கிட்டிற்று. மறுமலர்ச்சி இயக்கங்களில் புகழ்பூத்த தலைவர்கள் பலர் அங்கு
வருகை தந்தார்கள். என் முன்னாள் நீதிசாஸ்திர ஆசிரியரின் மகளான யாங்காய் ஹுயை இங்கே சந்தித்துத்தான் காதல் கொண்டேன். அவர் பீக்கிங் பல்கலைக்கழக மாணவி. மகா புரட்சியின்போது ஒரு இளைஞர் குழுவின் தலைவியானார். தீவிர பெண் கம்யூனிஸ்டும் கூட. ஹுனான் தீவிரவாத இளைஞ் ரிடையே நமதானது ஒரு பெரும் கொள்கைத் திருமண மாக கருதப்பட்டது.” இப்படிக்கூறும் மாவோ பின்னர் அவர் கொல்லப்பட்டதைத் தவிர அவர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்கிறார் எட்ஹார்ஸ்னோ.
மாவோ தொடர்கிறார், "ருங்ரிங் ஏரியைச் சுற்றி, பாவோரிங் பூ சுற்று மதிலைச் சுற்றி, நாங்கின் மதிலைச் சுற்றியெல்லாம் நடந்தேன். பெய் ஹாய் விரிகுடாவின் பனிக்கட்டியில் நடைபயின்றேன். ராய்ஷான் மலைமீது
ஏறினேன்.கம்பூசியஸின் சமாதியைத் தரிசித்தேன். என் துணிகர நடைப்பயிற்சி சாதனைகளாக இவற்றைக் கருதினேன்.
“சாங்சா திரும்பி அரசியலில் கூடுதல் பங் கேற்றேன். வாழ்வு மாணவர் அரசியல் நடவடிக்கை யோடு கழிந்தபடியிருந்தது. சியாங் ரிவர் ரெவ்யூ
06
ஜீவநதி 72 புரட்டாதி 2014

சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்தேன். ஹுனானின் ருச்சுன் ஆகயிருந்த பயங்கரப் பேர்வழி சாங் சிவ்யாவ்வை எதிர்த்தோம். அவன் சஞ்சிகையை அடக்கினான். சிறிது நாட்களில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.
"1920 இல் நான் முதல் தடவையாக தொழி லாளர்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டினேன். 1925 இல் விவசாயிகள் இயக்கப் பயிற்சிக் கல்லூரிக்கு தலைவ ராக ஆனேன். 1937 இல் வயதில் மிக இளமையாகயிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனைகள் உலகில் ரஷ்யாவுக்கு அடுத்தபடிநிலை வைத்துப் பேசத் தக்கதாய் இருந்தன. அது தனக்கென தனி இராணுவத்தையும் கொண்டிருந்தது." என்றுரைத்த மாவோ இன்னும் மிக நீளமாக அது கண்ட வெற்றிகள், அதற்காக உழைத்தவர் கள் பற்றியெல்லாம் கலந்துரையாடுகிறார் ஸ்னோவோடு.
எட்ஹார் ஸ்னோ தனது பேட்டியை இப்படிக் குறிப்பிட்டு நிறைவுசெய்கிறார் இந்நூலிலே.
"வரலாற்று ஏடுகளிலே எழுதப்பட்டுள்ள சீன நாட்டின் 3000 வருஷப் பழைமை வரலாற்றில் ஏழ்மையில் புழுங்கிமாண்ட விவசாயிகளின் முதுகில் குதிரைச் சவாரி செய்து, பதவிக்கு வந்து பின்னர் அவர்களைக் கைகழுவிச் செல்கிற ஆட்சியாளர்கள் மத்தியிலே மாவோவின் தனித்துவம் ஒரு பெரும் சாதனை. சிந்தனா
சீனாவின் சுய கௌரவத்தை மீட்டெடுத்தவர் மாவோ சே துங். சீனாவுக்கு அவர் உலக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தார் அவர். மிக ஏழ்மையான ஒடுக்கப்பட்ட மக்களாகயிருந்த சீனர்களை சுயநம்பிக்கையின்பால் அவர் இட்டுச் சென்றார்.
வாதியாக, போர்வீரராக, அரசியல்வாதியாக, கோட் பாட்டாளராக, கவிஞராக, மாவோ அவர்களை நிரந்தர மாக தலை நிமிரச் செய்தவராக, ஒரு ராணுவமாகப் படைதிரட்டியவராக, நீண்டகாலமாக பிளவுற்றிருந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒரு இயக்கத்தின் தலைவராக மிளிர்கிறார். சீனாவின் அபிலாஷைகளை கருத்திற் கொண்ட சிந்தனைப் போக்கொன்றை உரு வாக்கி பல லட்சக்கணக்கானோருக்கு விஞ்ஞான தொழில் நுட்ப பயிற்சிகளை, எழுத்தறிவைப் புகட்டியவர் அவர். நவீன பொருளாதாரத்தின்பால் மக்களை ஈர்த்து, அணுச் சக்தியைக் கூட சீனர்களின் கைகளுக்குள் கொணர்ந்த பெருமை அவருக்குரியது. சீனாவின் சுய கௌரவத்தை மீட்டெடுத்தவர் மாவோ சேதுங் சீனாவுக்கு அவர் உலக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தார் அவர். மிக ஏழ்மையான ஒடுக்கப்பட்ட மக்களாகயிருந்த சீனர்களை சுயநம்பிக்கையின்பால் அவர் இட்டுச் சென்றார். இத்தனைக்குப் பிறகும் புரட்சியின் பெறுபேறுகள் பற்றி திருப்தியடைந்தவராக அவரைக்காண வில்லை நான்...”
1925 இல் அவர் எழுதிய “சாங்ஷா” கவிதை அங்குள்ள பள்ளியிலே கற்றுக் கொண்டிருக்கையில் எழுதியது. ஹூனான் மாநிலத் தலைநகரான சாங்ஷா ஸியாங் நதியோரத்தே அமைந்திருப்பது. பள்ளித் தோழர்களோடு அந்நதியிலுள்ள செம்மஞ்சள் தீவினிலே

Page 9
சுற்றித் திரிந்த அனுபவத்தை அவர் கவிதையாகப் படைக்கிறார். ஹஅனாண் மாநிலத் தலைமைத்துவங் களால் மக்களும், மானாக் கரும் வெகுவாய்த் துயருற்றனர். மாவோவும், நண்பர்களும் அவற்றைக் கண்டு அஞ்சவில்லை.
“செம்மஞ்சள் தீவின்முனையிலே இலையுதிர்காலக் குளிரிலே நான் நிற்கிறேன்.தன்னந்தனியே. வடதிசையில் வெகு வேகமாய்ப்பாய்கிறது லியாங் நதி: செர்ரியின் சிவப்பெனவர்ணம் குலைத்த தோப்புகளினூடாய் ஆயிரம்குன்றுகள்ஊடறுத்துநின்றுஜொலிப்பதை நான்கண்ணுறுகிறேன். கூடவே,
நீலப் பளிங்கென பாயும் நீர்ப்பரப்புகளிலே நூற்றுக்கணக்காய் ஒடங்கள் மிதக்கின்றன. காற்றைக் கிழித்துப் பயணிக்கின்றன ராஜாளிப் பறவைகள். கண்ணாடியெனத் தெரியும் தண்ணிரினுரடாய் வழுக்கி வழுக்கி நீந்துகின்றன மீன்கள்; பனியிலுறைந்த ஆகாயத்தின் கீழே ஒரு கோடி உயிர்கள்தத்தமது விடுதலையின்பொருட்டுமுட்டித்தவிக்கின்றன. நீண்டு பரந்த அளக்கவொண்ணாப் பெருவெளியில் மனம் அமிழ்ந்து கிடக்க நான் வினவுகிறேன், எல்லையற்ற இப்புவியில் யார் ஆள்கிறார் மனிதனின் தலைவிதியை..?
நண்பர்கள்திரளநான்இங்கிருந்தேன்முன்னம் கொந்தளிப்பு நிறைந்ததாயிருந்த அந்தக்காலம் நீட்சியாய் பசுமையாய் பதிந்து கிடக்கிறது மணவாழத்தே. மொட்டுகள் போலும் நிறை மலர்ச்சியாய் நம்பள்ளித்தோழர்களும், சகாக்களும் ஆங்கே பள்ளிக்கூட மாணவனின் உற்சாகம் பொங்கித் திளைத்திருந்தது நம்முள் தடைகள் அத்தனையையும் விரைந்தே
கடந்தோம் இலகுவாய். மலைகளையும், நம் நதிகளையும் சுட்டி வார்த்தைகளால் நம்மவர்க்கு தீக்கனலச் செய்தோம். நம்மையாண்டு ஆதிக்கம் செலுத்த வந்தோரைத் தூசெனத்துவம்சம் செய்தோம். நட்டநடு ஆற்றிலே நம் துடுப்புகள் நதிநீரைக் கிழித்ததுவும், அலைகள்தடுத்தும்நம்படகுகள்விரைந்ததுவும் இப்போதும் நினைவில் உள்ளதா..? 1923 ஆம் ஆண்டு. சீனா எங்கனும் நெருக்கடி கள் சூழ்கின்றன. புரட்சிக்காய் அணி திரள மக்களை அழைக்கிறார் மாவோ. மனைவியைப் பிரிய நேர்கிறது.
அதைக் கவிதையிலே இப்படிப்பதிவுசெய்கிறார்.
“கைகளை அசைக்கின்றோம்
 

பிரியாவிடைபகருவதற்காய். நின்துயரவதனம் திருப்பி உன் வலிகளை நீவிபரிக்கையில்
எனதுள்ளம் துவம்சமானதடி. நின்நயனங்களும், புருவங்களும் உன்துயரார்ந்த நிலை சொல்லின. இமையோரம் தொட்டு நின்ற சூடான விழி நீரைத் துடைத்து நிறுத்தினாய் நீ நம் இறுதி மடல்களினூடே ஊடறுத்ததவை நம் அறியாமைகள்தான் கண்ணே. முகில்களும், அவை மூடிய பனித்திரைகளும் துடைத்து நிறுத்தப்பட்டாயிற்று இப்போது. இக்கணத்தே நம்மைப்புரிந்து கொண்டது நாமிருவர் மட்டுமேயாம். விண்ணுலகென்ன அறியுமா நம் துயரங்களின் மூலம்.?
விடிகாலைப்பொழுதுதிரையெனமறைத்தமூடுபனி கீழே நம் பெருவாசலில் தொடங்கும் பாதை நெடுகிலும், அடிவானத்தே தேய்ந்து மறையும் நிலா தடாகத்துக்கு மின்னொளி பாய்ச்சியபடியிருக்கிறது. உள்ளே ஊடறுத்துக் கேட்கும் ஒலியில் தனிமையுணர்வில் பொங்கி என் இதயம் உடைகிறது. உலகின் விளிம்புக்கு நான் இனிப் பயணித்தாக வேண்டும் தனியனாய். குன்லுன்மலையின் குத்துப்பாறையொன்றைப் பிளப்பதுவே போலும்பேரண்டப்பெருவெளியில் சூறைக்காற்று சுழற்றிவீசுவதே போலும் துயரம் நிறைந்த இச்சிக்கல்களைப் பிரித்துப் பெயர்த்தாக வேண்டும் நாம். O7
வநதி 72 புரட்டாதி 2011 (y

Page 10
வான்தவழும் முகில்களைத் தொட்டிடலாம் மறுபடியும் அருகருகாய்ப்பறந்து சென்றே நாம், மாவோ ‘சிங்காங் மலை’ என்று ஒரு கவிதை
எழுதினார். மாவோவின் கவிதைகளில் மலைகள் அதிகம் இடம்பெற்றதை அவதானிக்க முடிகிறது.
“புத்த சமய இலக்கியங்களில் ஒரு காட்சி சித்தரிக்கப்படுகிறது. ஒரு மாபெரும் மலை, அடி வாரத்தே பல்லாயிரக்கணக்கான மக்கள் படை திரண்டு நிற்கிறார்கள். மலையுச்சியில் ஒரு மேதை நிற்கிறார். தொலை நோக்குடையவர் அவர், அதுபோல மலைகளிலே புரட்சித்தளங்களை நிறுவி, மலைகளிலே எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, மலைகளினூடே பல்லாயிரமாயிரம் வீரரைப் படைநடத்திச் சென்று, மனிதருள் தாமே ஒரு மலையாய் உயர்ந்து நின்ற மாவோவினர் கவிதைகள் பெரும்பாலானவற்றில் மலைகள் இடம் பெற்றதில் வியப்பில்லை. மாவோதமது உடன்காலத் தோழர்கள், தலைவர் அனைவருக்கும் மேலாக உயர்ந்து அவர்களது பார்வையின் வீச்சையும் தாண்டிய ஒரு "தரிசனத்தை"க் கொண்டிருந்தார்." என்று அதுபற்றிக் கூறுகிறார்திரு எஸ்.வி.ராஜதுரை அவர்கள்.
“மலைகளின் அடியில் பறக்கின்றன நமதான பதாதைகளோடு கொடிகளும், மலையுச்சிகளின் மீதில் சப்திக்கின்றன எங்கள் கொட்டுமேளங்களும் சங்கு முழக்கங்களும். வலியதுவான ஆயிரமாயிரம் சேனைகளுடன் வளைக்கின்றான்நமை நம் பகைவன். ஆயினும் உறுதி கொண்ட நெஞ்சினராய் பாதங்கள் பதித்து நின்றோம் யாம். இரும்புவார்ப்பாய் நின்றிருக்கிறது ஏலவே நமதானதற்காப்பு. கோட்டையென எழுச்சி கொள்ளும் எங்களதுவான மனோதிடம், பீரங்கிகள் கர்ச்சிக்கின்றன குவான்யாங் சீயே எங்கிலும். இரவோடிரவாய்தப்பியோடுகிறான் எதிரி என்பதுவாய் வருகிறது ஒரு சேதி." 1927இல் இம்மலை நோக்கிதம் செம்படையை வழிநடத்திய மாவோ அங்கே புரட்சிக்கான தளத்தை நிறுவினார்.
'இரட்டை ஒன்பது எனத் தலைப்பிடப்பட்ட மாவோவின் இன்னொரு கவிதை 1929 இல் படைக்கப் பட்டது. செப்டம்பர் திங்கள் ஒன்பதாம் நாள் சீனாவில் இப்படி அழைக்கப்படுகிறது. அந்நாள் அவர்களுக்கு விஷேடத்துவம்நிறைந்ததுவாம்.
"இலேசாய் மனிதன் மூப்படைகிறான் இயற்கையோ அவ்விதமன்று. வருஷம்தோறும் மறுபடி மறுபடி வருகிறது இரட்டை ஒன்பது நாள். மஞ்சளாய்ப் போர்க்களத்தே பூக்கிற பூக்களுக்கு நறுமணம் இன்னும் அதிகம்.
வசந்தத்தின் எழில் போலுமன்றி மூர்க்கமாய் வீசும் கொடுங்காற்று
 
 

இலையுதிர்காலத்தே வருஷம் தோறும். ஆயினும் வசந்தத்தையும் விட அழகாய் அது காட்சிகள் படைத்திடும். பனிமூடித்திரளும் வானும் நீருமாய் உருக்கொள்ளும் எல்லையற்றப் பெருவெளிகாண்.1!” ஃபூகியன் மாநிலம் நோக்கியபடைநடப்பின் போது மாவோ எழுதிய இன்னொரு கவிதை ‘புத்தாண்டுநாள்’.
நிங்குவா, சிங்லியு, குவென்ஹூவா எத்தனை எத்தனை குறுகலான வீதிகள், அடர் தோப்புகள், வழுக்கிச் செல்லும் படர்பாசிகள். இன்று நாம் எங்கே செல்கிறோம்? வூயி மலையடிவாரம் நோக்கி நேரே. மலைக்கு, மலையடிவாரத்துக்கு செங்கொடிகள்நீந்தியபடியிருக்கின்றனகாற்றில் பேரொளிப் புகழின் அடிப்புறத்தேயிருந்து.” 1930 இல் சியாங் புரட்சிப் படைகளினர் தளத்துக்குத் தாக்குதல் தொடுத்தான். மாவோவின் தொழிலாளர் படை அத்தாக்குதலை முறியடித்தது. அவ்வாறே இரண்டாம் சுற்றிவளைப்புப் படையெடுப் பொன்றும் நடந்தது. அதுபற்றிப் பேசுகிறது இக்கவிதை, இரண்டாம் "சுற்றிவளைப்பு”ப் படையெடுப்பை எதிர்த்து
"நுரை போல் வெண்முகில் மலை மேல் திரண்டபடி செல்கின்றன மேகங்கள், அம்மலையடிவாரத்தில் விரைந்தெழுகிறது போரின் கர்ச்சனை முழக்கம். காய்ந்த மரங்கள் மக்கிய மரக்குச்சிகள் சேர்ந்தே கலந்தன இப் போரில், முன்னோக்கி செல்கிறது துப்பாக்கிகளின் வனம் பறக்கும் படைத் தலைவன் வானவீதியிலிருந்து இறங்கி வருகையில்,
பதினைந்து நாட்களில் எழுநூறு மைல் படைநடப்பில் பனிப்படர்ந்த கான் நதி பச்சை பூசிய ஃபூக்கியென்மலைஅனைத்தும்கடந்துவந்தோம் எதிரிப்படைகளை பாயைப்போலச்சுருட்டி தூக்கித் தூர எறிந்தோம். முனகலாய் அழுகுரல்ஒன்றுகாதில்ஒலிக்கின்றது “ஒவ்வோர் அடிக்கும் எனக்கோர்கோட்டை” என்று ஆணவச்செருக்கில் பேசினான்பகைவன் கோட்டைகள் அனைத்தும் இற்றுச்சரிந்தன நம் முன்னே.” தபோதி மாவட்டத்திலே 1930 - 1933களில் இடம் பெற்ற தாக்குதல்களை முறியடித்து அவர் இப்படி ஒரு கவிதை எழுதுகிறார்.
"சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா இவ்வண்ணங்கள் தோய்ந்ததுகிலினை ஆகாய வீதியில் வீசியபடி நடமிடுவது யார்.? மழைத் தூறல் ஒய்ந்தான பின்னும் ஒருக்களித்துத் திரும்பினான்சூரியன்

Page 11
குன்றும் கணவாயும் நீலம் பூத்தன.
முன்னொருபோது இங்கொரு சமர் மூண்டது. துப்பாக்கி ரவைகள் துளைத்த கிராமத்துச் சுவர்கள் இப்போதோ அலங்கரிக்கின்றன மலையையும் கணவாயையும் அவற்றினது இயல்பழகை இருமடங்காக்கி" மாவோவின் கவிதைகள் அனைத்தும் வெளி வரவில்லை. பலதை அவரே புறக்கணித்திருக்கிறார். அவரது கவிதைகள் புகழ் பெறுவதற்கு அவர் வரலாற்றில் பெற்றிருந்த மாபெரும் வகிபாத்திரம் காரணமாக அமையலாம். "அவை சீன மரபின் சிறப்பு மிக்கத் தொடர்ச்சியாக இருப்பதைக் காணலாம்” என்கிறார் திருஎஸ்.வி. ராஜதுரை அவர்கள்.
“மூன்று குறுங்கவிதைகள்” என்று மாவோ எழுதிய கவிதைகள் இப்படிநீளும்.
“மலைகளே குதிரைச் சேணத்தின் மீதமர்ந்து விரைகிற என் குதிரையை சாட்டையால் சுழற்றுகிறேன். தலைநிமிர்த்தி மேலே பார்க்கிறேன். வியப்பு மேலிடுகிறது. எனக்கு மூன்றடிக்கு மேலே விசும்பு!
மலைகளே! தத்தளிக்கும்கடலில்புரள்கின்றபேரலைகள்போல, போர்க்களச்சூட்டின் முழுக்கனைப்போடும் துள்ளுகிற ஒராயிரம் அஸ்வங்களே போல,
மலைகளே! நீல விசும்பினைக்குத்தித் தொட்டும் மழுங்கவில்லை உங்கள்முனைகள். உங்கள் வலிமை மிக்க தாங்குகை இன்றேல் ஆகாயம் கீழே வீழ்ந்திருக்கும். இன்னொரு கவிதையிலே ‘குன்லுண்’ மலை யோடு பேசுகிறார் மாவோ. அதிலே ஒரு அடி இப்படியமையும்.
"வானம் தொடமுடியுமளவு என் கைவாள் உயருமாயின், உன்னை துண்டங்களாக்குவேன்மூன்றாய். ஐரோப்பாவுக்கு ஒரு துண்டம் அமெரிக்காவுக்கு இன்னொரு துண்டம், கீழ்த்திசைக்கு ஒரு துண்டம். புவிக்கோளம் எங்கனும் சூடும் குளிருமாய் சீராய் அமைதி நிலவும்.” இப்படியெல்லாம் அற்புததரிசனங்களாய்மாவோ வின் கவிதைகள் மனக்குளிர்ச்சி தந்தபடியிருக்க, தனது கவிதைகளைப் பற்றிமாவோ இப்படிச்சொல்கிறார்.
"இவற்றை எம் முறையிலும் வெளியிட வேண்டும் என்று நான் இதுவரை எண்ணியதில்லை. ஏனெனில் இவை பழைய பாணியில் அமைந்துள்ளன. இவை ஒரு தவறான போக்கை ஊக்குவிக்கக் கூடாதென
நான் அஞ்சுகிறேன். மேலும் கவிதை என்று சொல்ல அவற்றில் ஏதும் இல்லை. எந்தச் சிறப்பையும் அவை
签
 

கொண்டிருப்பதாய் நான் கருதவுமில்லை. இப்பழைய
வடிவங்கள் இளைஞர் களது சிந்தனைகளைக் s கட்டுப்படுத்தக் கூடாதென நினைக்கிறேன் நான். மேலும்" இவற்றைக் கற்றுத் தேர்வதும் கடினம்.”
இரு பறவைகள் : ஒரு உரையாடல் எண்றொரு மாவோவின் கவிதையைச் சொல்லி இக்கட்டுரையை நிறைவுசெய்ய விழைகிறேன். அந்த ராட்சதப்பட்சி தன் இறகுகளை விசிறியென விரித்து, தொண்ணுறாயிரம் மைல்கள் தொலைவு உயர்ந்து சீறும் சண்டமாருதத்தைக் கிளப்புகின்றது. அதன்முதுகுக்கு மேலே நீலவான் இருக்க ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய மனிதனின் உலகை அளவிட அது கீழே எட்டிப்பார்க்கிறது. துப்பாக்கிரவைகள் விண்ணை நக்க, பீரங்கிக் குண்டுகளோ பூமியைத் துளைக்கிறது. அச்சமேலிட்டால் “இதுவென்ன குழப்பங்கள் மிகைத்தவோர் பாழ்நிலம் நழுவிப்பறந்திடுவேன்இங்கிருந்துநான்" கூறியபடி விரையும்
ஒரு சிட்டுக்குருவிதன் புதருக்குள். "வினவலாமா எங்கேயென நானுன்னை.?”
ராட்சதப் பட்சியின் கேள்விக்கு விடை பகர்ந்தது சிட்டுக்குருவி "தேவதை தேசமலை மீது மாணிக்கங்கள் பதித்த மாளிகைக்கு. ஈராண்டுகள் முன்னம் இலையுதிர்கால பிரகாசநிலாவில் ஒப்பந்தம் கைச்சாத்தானது நீஅறியாததா? உண்ணநிறைய இருந்தன ஆங்கே, சூடாய் உருளைக் கிழங்கோடு மாட்டிறைச்சியிட்ட பண்டங்களோடு." "நிறுத்தேன் உன் அர்த்தமற்ற உளறல்களை. உன்னிப்பாய் அவதானி. உலகம்தலைகீழாய்ப்புரட்டிப்போடப்படுவதை” சீனப்பழங்கதைகளிலே அடிக்கடி வருகின்ற இந்த ராட்சதப் பட்சி மார்க்ஸிய லெனினியப் புரட்சியாளரின் குறியீடாய் அமைய, சிட்டுக்குருவி புரட்டலாளருக்கான அடையாளமாகிறது. புரட்டலாளருக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப்போராட்டத்தில் பேசப்படத்தக்க கவிதையாய் அமைந்த இக்கவிதை 1965 இல் எழுதப் பட்டாலும், 1976 சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப் பட்டது எண்கிறார் உயர்திரு எஸ்.வி.ராஜதுரை அவர்கள். og
ஜீவநதி 72 புரட்டாதி 2014
' ' ' ' '; ! ଟି ୱି. --} ылға арнап алға айба

Page 12
9]ந்த மோசமான செய்தி றிஷாதை வந்தடைந்தபோது வெயில் நெருப்பை கொழுத்திக் கொண்டிருந்தது. பகல் ஒரு மணி கோடை வெயிலின் எரிச்சலில் வாடைக்காற்றின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. இன்றைய நாளும் எதிர் பாராமலே நிலைகுலையச் செய்த இந்த சேதியும் றிஷாதின் டயறியில் நிச்சயம் பதிவுக்கு வரும்.
இன்னும் குறையவில்லை இதயத்தின் படபடப்பு. சற்றும் குறையாத இதயத் துடிப்புக்களை அதன் பாட்டுக்கு விட்டுவிட்டு சோர்வுற்ற வார்த்தை களை நாவின் நுனியால் சேகரித்துக்கொண்டு கையிலிருந்த சம்சுன் கலக்ஸியை மீண்டும் காது களுக்குள் பொருத்திக் கொண்டான். இரு கன்னத்திலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயற்பட்டுக்
LLIT GHGÕbLOTh hlIIIÍIIIblf fillÍII
- கிண்ணியா சபருள்ளா -
கொண்டிருந்த வியர்வைச் சுரப்பிகள் நாடி வரை நாடி வந்து கொண்டிருந்தது.
“என்ன நாநா ஆச்சு” மறுமுனையில் அவர் நாநா என்று அழைத்த அவனது மூத்த சகோதரன் சாதாத்.
“என்னான்னு தெரியல பள்ளிக்கு ஞஹர் தொழப் போனவர ஆட்டோவுல போட்டு ஆக்கள் கொண்டு வந்தாங்க, மூச்சுப் பேச்சில்லாம கெடந்தார். ஒடனடியா நம்ம ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம். அங்கிருந்து இப்ப ஜெனரல் ஹொஸ்பிட்டலுக்கு மாத்திட்டாங்க.."
“என்னதான் நட.ந்திச்சாம்” “தொழுதுக்கிட்டு இருந்தவர் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்திட்டாராம். ஹார்ட் அட்டக்னு நினைக்கிறேன்.”
"அப்படின்னா மூணாம் தடவை. என்ட அல்லாஹ் வாப்பாவக் காப்பாத்து.” போனில் றிஷாத் பதறினான்.
றிஷாதின் வாப்பா அதிபராகவிருந்து ஒய்வு பெற்று ரெண்டு வருசமாச்சு. ஐம்பத்தாறு வயசிருக்கும். கொஞ்சம் நேரகாலத்தோடு
na ஜீவநதி 72 புரட்டாதி 2014
 

பதவியிலிருந்து ஒய்வு பெற்விாதுெ மகன்கள். மூத்தவன் ரைஸாத், பல்கலைக்கழக விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். நுண்ணுயிர்கள் சம்பந்தமாக அன்றாடம் பேசிக் கொண்டிருக்கும் அவன் அடுத்த வருடம் மாஸ்டர் ஒப் மைக்ரோபயோலஜி. ரெண்டாவது றினாஸ், இதோ றிஷாதோடு அழுது கொண்டு பதற்றமாகப் பேசிக் கொண்டிருக்கும் அவன் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஜியோ மெட்ரிக்ஸுஜூம், அல்ஜிப்ராவும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற அரச சம்பளக்காரன்.
றிஷாத் கந்தளாய் நீர்ப்பாசனத் திணைக் களத்தில் உதவிப் பொறியியலாளராக இப்போதுதான் கடமையேற்றுக் கொண்டிருக்கின்றான். சாதாத் கிடைத்து அடுத்த வருஷமே இவன் தாய் வயிற்றில் உண்டாகிவிட்டான்.
கடைசிப் பையன்.
“யா அல்லாஹற் என்ட வாப்பாவைக் காப்பாத்து. அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது.

Page 13
நீதான் துணை. யா அல்லாஹ் எங்க வாப்பாவுக்கு சுகத்தக் கொடு...” செல்பேசி வழியாக வாப்பா பற்றிய அந்த இருண்ட சேதி கிடைத்த நேரத்திலிருந்து இவன் நேந்த கையும் துஆவுமாக.
"ஆக இப்ப என்ன கண்டிஷன்ல வாப்பா இருக்கிறாங்க நாநா...?” |
"ஐ ஸி யூல அட்மிட் பண்ணியிருக்காங்க. பத்து நிமிஷமாச்சு டொக்டர்ஸ் இன்னும் எதுவுமே சொல்லல. நாங்கள்ளாம் வெளில நிக்குறோம்...” சாதாத்தின் குரல் நொறுங்கிப் போயிருந்தது.
"நான் இந்தா வெளிக்கிட்டுட்டன்...” இ "Pஷாத் வாப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு கொஞ்ச நேரத்துல ஒனக்கு கோல் எடுத்தேன். ஆனால் எந்த ஆன்ஸரும் இல்ல. ஏன்டா ஒன்ட போனுக்கு என்னாச்சு...” சற்று கோபம் தெரிந்தது சாதாத்தின் வார்த்தைகளில்.
“சொரி நாநா மோர்னிங் ஒபீஸ்ல ஒரு மீட்டிங். அதான் ஃபோன் சுவிட்ச் ஓஃப்ல வெச்சிட்டேன். ஃபோன் ஒன் பண்ணிப் பார்த்ததும் ஒன்ட ஏழெட்டு மிஸ்கோல்ஸ் அதான் உடனே எடுத்தேன். கவலப் படாதீங்க நாநா. தைரியமாயிருங்க. வாப்பாவ அல்லாஹ் காப்பாத்துவான்.” முற்றிலும் துணிவை யும் தைரியத்தையும் ஏலவே இழந்திருந்த றிஷாத் சன்னமாக விசும்பிவிட்டு மோட்டார் சைக்கிளை உசுப்பினான்.
"உம்மா இருக்காங்களா நாநா..." என்ற கேள்வியோடு அடுத்த பக்கத்தில் நாநாவின் செல்லில் ஒவென்ற கதறலும் ஒப்பாரியும் டயலொக் டவரின் மின்னலைகள் மூலம் றிஷாதின் காதுகளை ரெளத்ரம் பண்ணியதில் இதயத்தில் கிழிஞ்சல்கள்.
"டேய் றிஸாது ஒடனே ஆஸ்பத்திரிக்கு வாடா.. வாப்பா மூச்சி பேச்சில்லாம கெடக்காங்கடா. என்னாச்சுன்னே தெரியல்ல. சுருக்கா வாடா. எனக்கு பயமாயிருக்கு...” உம்மாவின் இடைவிடாத அழுகை இதயத்தை அடைத்தாலும்
"அழாதீங்கம்மா. அல்லாஹ் வாப்பாவக் காப்பாத்திடுவான். பயப்படாதீங்க. அல்லாஹ்ட்ட துஆச் செய்யுங்க. இந்தா நான் வந்துர்ரன். ஃபோன நாநாக்கிட்ட குடுங்கம்மா...”
"என்ன றிஸாத்?”
"இந்தா நான் வந்திட்டு இருக்கன். உம்மாவப் பாத்துக்க. இன்னும் அரை மணித்தியாலத்துல வந்து சேந்துர்ரன்....."
"சரி றிஷாத்...”
எப்படியும் கந்தளாயிலிருந்து திருகோணமலை பெரியாஸ்பத்திரிக்குச் செல்ல ஒரு மணித்தியாலமாவது எடுக்கும். யா அல்லாஹ்
வாப்பாவுக்கு எதுவும் ஆகிடாம் காப்பாத்து. மீண்டும் மீண்டும் மனசுக்குள் நேர்ச்சைகள் தடைகள் ஏதுமற்ற பிரார்த்தணைகள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கடவுளின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுவது விதியாக்கப்பட்டிருக்கிறது என்பதனை றிஷாத் விளம்பல் செய்து கொண்டிருந்தான்.

கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பல காமம், பாலம்போட்டாறு, கப்பல்துறை, சர்தாபுர, நாலாம் கட்டை, அனுராதபுரச் சந்தி, உப்புவெளிச் சந்தி அப்புறம் நீதிமன்ற வீதியைக் கடந்து திருமலை பொது வைத்தியசாலை மொத்தமாக நாற்பத்திரண்டு கிலோ மீட்டர். மணிக்கு எழுபது எண்பது கிலோமீட்டரில் அவ்வப்போது ரேஷ் பண்ணினால் எப்படியும் முக்கால் மணித்தியாலம் ஆகக் குறைந்த நேரம்.
எப்படி...
யா அல்லாஹ் அன்பு வாப்பாவுக்கு ஆயுளைப் போட்டு வை...
ஏற்கனவே ரெண்டு தரம் மைல்ட் ஹார்ட் அட்டாக் வாப்பாவுக்கு வந்து போயிருக்கிறது. பை பாஸ் ஒபரேஷன் வேறு.
"இனிமே நீங்க ரொம்பக் கவனமா இருக்கனும். டயட் கொன்ட்ரோல் ரொம்ப முக்கியம். கண்டதையும் சாப்பிடக் கூடாது காலைல அரை மணித்தியாலம் வோக்கிங் போங்க...” என்ற டொக்டர்ஸின் வைத்திய உபதேசத்தில் சற்று கவனத்தை ஓவர் டோஸாக எடுக்க வேண்டியிருந்ததற்கான காரணம் வாப்பாவுக்கு ஹார்ட் பிரச்சினையோடு பெரிசாக சீனியும் இருக்கின்றது.
வாப்பா தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வதில் அவ்வளவு எக்ஸ்பர்ட். இதனால் உம்மாவுக்கு வாப்பாவை பராமரிப்பதென்பது சிக்கல் வாய்ந்த ஒரு விடயமாக எப்போதும் இருந்ததே கிடையாது. அளவுச் சாப்பாடு, காலை மாலை நேர வோக்கிங்... பத்தியம் தொடர்ந்து கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகள் என நன்றாகத்தானே போய்க் கொண்டிருந்தது. அப்புறம் திடீர்னு வாப்பாவுக்கு என்னாச்சு மூணாவது அட்டாக். இந்தா வேலை நிறுத்தம் செய்ய போகின்றேன் என அவ்வப்போது
அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வாப்பாவின் உள்ளங்கை சைஸ் இதயத்தின் உள்ளர்த்தம் என்னவென்று விபரிக்க....
"யா அல்லாஹ் என் அன்புத் தந்தையை நீதான் காப்பாத்தனும். மூன்று நோன்பு பிடிப்பேன்..." என நேர்ந்து கொண்டிருந்தவனின் மோட்டார் பைக் வேகம் காட்டும் மீட்டரில் மணிக்கு எண்பது என காட்டிக் கொண்டிருந்தது. றிஷாத் பைக்கை போ போ என நான்காம் கியரில் பாதத்தை அழுத்தி உள்ளங்கை ரேஷில் விரட்டிக் கொண்டிருந்தான்.
வாப்பாவுக்கு எதுவும் ஆகாது. என நிமிஷத்துக்கு நிமிஷம் நம்பிக்கையை வளர்ப்பதும் மீண்டும் அதனை இழப்பதுமாய் அடிக்கடி வாயில் யா
அல்லாஹ் என்பது மட்டும் காற்றின் பரப்பில் கரைந் துருகி இன்னுமின்னும் அவன் வேகம் காட்டினான்.
வாப்பா... அவன் தன் வானாளில் சந்தித்த கண்ட கண் கண்ட சாட்சியாக இருக்கின்ற ஒரு
அற்புதமான ஆளுமை அவனது ரோல் மொடல் றிஷாதை பிரமிக்க வைத்த பிரம்மாண்டம் செய்த ஆளுமைகளுள் வாப்பாவுக்குத்தான் எப்போதுமே முதலிடம். கடைசிப் பையன் என்பதால் வாப்பாவிடம் அவனுக்கு சற்று கூடுதல் சலுகை, புத்தி தெரியும் காலம்
ஜீவநதி 72 புரட்டாதி 2014 B

Page 14
மட்டும் வாப்பாவின் மடியிலேயே வளர்ந்த வாண்டுப் பையன் அவன்.
பத்தாம் ஆண்டில் படிக்கும் வரை ஒவ்வொரு நள்ளிரவும் வாப்பாவைக் கட்டிக் கொண்டுதான் அவன் தூங்குவான்.
“இவ்வளவு வயசாகியும் இன்னமும் வாப்பாவைக் கட்டிப் புடிச்சிக்கிட்டு படுக்குறான். இன்னமும் கொழந்தப் புள்ளன்னு நெனப்பு.” என சமயங்களில் உம்மா செல்லமா கேலி பண்ணும் போதெல்லாம்.
"ஏன் ராயிலா அவனப் போட்டுக் கிண்டுற. இப்ப மட்டுமில்ல எப்பவுமே அவன் எனக்கு கொழந்ததான் இல்லையாடா ராஜா."
வாப்பா அவனை எப்போதும் ராஜா ராஜா என்று சொல்லித்தான் அழைப்பார். றிஷாத் எனும் அவனது பதிவுப் பெயரை அவர் இதுவரை சொல்லி அழைத்ததாக அவனுக்கு ஞாபகமில்லை. எத்தனையோ தடவைகள் அவர் பற்றி யோசித்திருக் கின்றான். உண்மைதான் ஒருதரம் கூட நிஷாத் என்று அவர் இவனை அழைக்கவில்லை. ராஜா ராஜா என்று அவர் அவனை அழைக்கும் போதெல்லாம் அந்த "ராஜா" வில் இருக்கும் நேசமும் நெகிழ்ச்சியும் ததும்பி வழியும் அன்பும் உச்சபட்ச பாசத்தில் தன்னை உருக வைத்த அன்பு வாப்பா தனது பன்னிரெண்டு பிள்ளை களில் கடைசிப் பிள்ளையான யூசுப் நபி மீது கண் குருடான யாக்கூப் (அலை) அவர்களைத்தான் றிஷாத்துக்கு நினைவில் வியாபிக்கும். அப்பேர்ப்பட்ட பாசமிகு வாப்பா. எந்த மாரில் தன்னை போட்டு தாலாட்டி சீராட்டி வளர்த்தாரோ அந்த மார்புக் கூட்டில் மல்யுத்தம். இதோ நின்றுவிடப் போகின்றேன் என்று அடம்பிடிக்கின்ற இதயத்தோடு ஐசியூவில் அடை காத்துக் கிடக்கின்றார்.
“மூங்கில் காடுகளே. நெஞ்சில் முகரும் பாருங்களே" என ஹரிஹரன் ஹரிஸ் ஜெயராஜின் கம்போஸிங்கில் கிறங்கிய மெலடியில் வேகமாக பைக் ஒட்டிக் கொண்டிருந்த றிஷாதின் பொக்கெட்டி லிருந்த செல்லில் ரிங் டோனின் ரீங்காரத்தில் பைக்கை ஒரு ஒரமாக நிற்பாட்டிவிட்டு ஃபோன் டிஸ்ப்ளேயில் கண்களை ஈஸினான்.
மீண்டும் நாநா "என்ன நாநா” "இப்ப எந்த இடத்துல வந்திட்டு இருக்க. எனக்கு ரொம்ப பயமாயிருக்குறிஸாத் வாப்பாவைப் பத்தி இதுவரைக்கும் எந்தத் தகவலுமில்ல. இன்னமும் மயக்கத்திலேதான் இருக்காங்களாம். டொக்டர்ஸ் ட்ரை பண்ணிட்டு இருக்காங்களாம்.”
அடுக்கடுக்காய் இடைவிடாது சடசடவெனப் பெய்யும் நடுப்பகல் மழை போல, நாநாவுக்கு மூச்சிரைத்தது. நாநாவின் வார்த்தைகளில் திகிலின் தீவிரவாதம். பயம் கட்டிக்காத்த பயங்கரவாதம்.
"இந்தா வந்திட்டன் நாநா. உம்மாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்க இப்படி பயந்தா
ட எப்படி தைரியமாயிருங்க. இன்ஷா அல்லாஹ்
餐空
ஜீவநதி 72 புரட்டாதி 2014
 
 

வாப்பாவுக்கு எதுவுமே ஆகாது. இன்னமும் நீண்ட காலத்துக்கு வாழ்வாங்க. நம்மள அல்லாஹற் கைவிடமாட்டான். நீங்கள் பயப்படாம தைரியமா இருங்க, கொஞ்ச நேரத்துல வந்து சேர்ந்திடுவன்.”
"அதில்லறிஷாத். அரை மணித்தியாலத்துக்கு ஹொஸ்பிடல் வந்துடுவேன்னு சொல்லி அரை மணித்தியாலத்துக்கும் மேலாச்சு. அதான் ஒனக்கு கோல் எடுத்தேன். குயிக்கா வந்து சேருடா. எனக்கு என்னமோ இருப்புக் கொள்ளவில்லை. ரொம்ப பயமாயிருக்கு எனக்கு." “உம்மா எங்கே.” "பக்கத்துல கெடக்குற வாங்குல உக்காந்திட்டு இருக்காங்க. அப்ப அழ ஆரம்பிச்சவங்க இன்னமும் அழுது ஒயல."
"சரி சரி நீகொழம்பாம உம்மாட்டப் போய் உட்காரு. அவங்களும் ஒரு ஹார்ட் பேஷன்ட் அவங்களுக்கு ஏதாவது ஆயிடப் போவுது. நீ பயந்த மாதிரி காட்டிக்காதே. நீ பயந்து போயிருக்கிறதப் பார்த்தா உம்மாவும் ரொம்பப் பயந்து போய் ஏடா கூடமா ஏதாவது ஆயிரப் போவுது. ஒண்ணு கெடக்க இன்னொன்னு ஆயிருச்சுன்னா...அல்லாஹ் பாதுகாக் கோனும்.நான் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துர்ரன்.” என்று செல்லை அணைத்தவனின் நெஞ்சுக்குள் தகதிமிதா கேரளக் கதகளி அவனை கேலி பண்ணியது. இன்னமும் மயக்கம் தெளியல்லன்னா வாப்பாவுக்கு ஏதாவது . ச்சேச்சே. அப்படி ஏதும் ஆயிருக்காது. வாப்பா யாருக்கும் எந்த அநியாயமும் செய்யல. ஆனாலும் வாப்பா மயக்கமாவிருந்து இவ்வளவு நேரமாகியும் இன்னமும் பொஸிட்டிவா எந்த தகவலும் கிடையாதுன்னா அப்படின்னா சம்திங் ரோங். இல்ல இல்ல அப்படி ஏதும் இருக்காது.
சார்பாகவும் எதிராகவும் தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டவன் குழப்ப அலைகள் கொந்தளிக்கும் இரைச்சல் மிக கடலினை மனசுள் சுமந்து கொண்டு பைக்கை முறுக்கியதில் வேக மீட்டரில் மணிக்கு தொண்ணுாறு கிலோ மீட்டர் என சிகப்பு முன் சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஹை வே என்பதனால் போக்குவரத்துப் பொலிஸார் ஆங்காங்கு ஒரு ஒரமாய் பைக்கை நிறுத்தி வைத்து திடீரென விசில் ஊதி வாகனமோட்டி வருகின்றவர் களை நிறுத்தி,
“லைசன்ஸ் இருக்கா" "வருமானப்பத்திரம் இருக்கா" "இன்சுரன்ஸ் இருக்கா" என நோண்டி நோண்டி. தேவையான ஆவணங்கள் இருந்தாலும் வேகமாக ஒட்டினாய், வெள்ளைக் கோட்டைத் தாண்டி ஒட்டினாய், என்று செய்கின்ற ரோதனைகளும் சோதனைகளும் சொல்லி மாளா.வசூல் ராஜாக்கள். ஒரு வகையில் அவர்கள் பெரும் சித்திரவதை. என்றாலும் இவை எதுவும் இப்போது றிஷாதின் மனசுக்குள் காணாமற் போய் மூடிய விழிகளுடன் ஐ ஸி யூவின் கட்டிலில் அசை வற்றுக் கிடக்கும் வாப்பாவின் முகம் முழுசாக அவனுள்

Page 15
நிறைந்து போயிருந்தது.
வாப்பா எப்படிப்பட்ட மனுஷன் ஆசிரிய ராக இருந்து அதிபராக பதவி உயர்வு பெற்று. மாசச் சம்பளத்தில் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஒத வைத்து இன்று பிள்ளைகள் இந்தளவு உசரத்தில் இருப்பதற்கு ஏணி தந்து எப்பேர்ப்பட்ட தங்கம் அவர் கண்டிப்புக்கும் மேலாக அன்பைப் பொழியச் செய்து வாழ்வின் யதார்த்தங்களைக் காட்டிக்காட்டி வளர்த்தவர்.
குறிப்பாக றிஷாத் தனது வாப்பாவுடன் ஒரு நல்ல தோழனாகத்தான் இன்றுவரை இருந்திருக்கிறான். தகப்பன் தனயன் என்கிற உறவினைத் தாண்டி நல்ல நண்பர்களாக எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொண்டு. “ஏ லெவலுக்கு என்னப்பா பண்ணப் போற” ஒ லெவல் எக்ஸாம் முடிந்து ரிசல்ட் வந்த கையோடு வாப்பா றிஷாதிடம் கேட்டபோது
"நீங்க என்ன வாப்பா சொல்லுறீங்க." "இல்லறிஷாத் இந்த விஷயத்துல என்ட கருத்த விட ஒன்ட கருத்தும் முடிவும் முக்கியம்."
"இல்ல வாப்பா நான் என்ன சொல்றேன்னா.” "இல்ல ராஜா என்னவிட ஒன்னப்பத்தி ஒனக்குத்தான் நல்லாத் தெரியும், அதனால தான் கேக்குறன். நீ ஏ லெவலுக்கு என்ன செய்ய விருப்பப் படுற.அதச் சொல்லு.என் விருப்பத்த விட ஒன்ட விருப்பம் ரொம்பவும் இம்போர்ட்டன்ட்”
"வாப்பா மெத்ஸ் செய்யனும்னு ஆசைப் படுறன்." மெத்ஸ் என்றால் றிஷாதுக்கு அவ்வளவு விருப்பம்.
“ஒனக்கு அதுதான் விருப்பம்னா மெத்ஸே செய். நீதானே படிக்கப் போற. அதனால நீதான் அது சம்பந்தமா முடிவெடுக்கனும், ஆனா ஒன்னு. ஒன்ட முடிவுல கடைசி மட்டும் நீ உறுதியா இருக்கனும் ராஜா. விஷ் யூ ஒல் த பெஸ்ட்."
இப்படி எத்தனை தகப்பன்மார்கள் இங்கே இருக்கிறார்கள் பிள்ளைகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களையே முடிவெடுக்க வைத்து அவர்கள் விரும்புகின்ற துறைக்கு சுதந்திரமாக அனுப்ப அனுமதிக்கின்ற லெவலில், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி உண்ண வேண்டும், குடிக்க வேண்டும், தங்களுக்குப் பிடித்தவர்களோடுதான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும், தங்களது தெரிவில்தான் உடுத்த வேண்டும், தங்களது விருப்பப்படிதான் பயோவோ மெத்ஸோ படிக்க வேண்டும் என்கிற ஹிட்லரிஸ் தத்துவங்களுக்குள் அகப்படாமல் எனது விருப்பப் படி எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சுதந்திரத்தை தந்த பாசமிகு தகப்பனே.யூ ஆர் கிரேட்.ஐ ஆம் ப்ளெஸ்ட். என அவனது அன்புத் தந்தை அவனிட மிருந்து அப்ளவுஸ்களை அள்ளிக் கொண்டு போனார்.
ரொம்ப சிம்பிளாக அவன் ஆசைப்பட்டதை படிப்பதற்கு எந்தவித எதிர்ப்புமில்லாமல் பச்சைக் கொடி காட்டிய வாப்பாவின் மீது அவன் வைத்திருந்த பாசமும் மரியாதையும் இன்னும் பல மடங்கு அன்றையதினம் எவரெஸ்டில் ஏற ஆரம்பித்தது. இந்த விடயத்தில் மட்டுமில்லை. பிள்ளைகளின் எல்லா

விடயத்திலும் அவர்களது விருப்பத்துக்கு மாற்றமாக வாப்பா ஒரு போதும் இருந்ததே கிடையாது.
ஆனாலும் பிள்ளைகளின் எல்லா விடயத்திலும் அவர்களது விருப்பத்துக்கு மாற்றமாக செயற்படா விட்டாலும் அந்த விடயங்களில் வாப்பா கண்கொத்திப் பாம்பாக என்ன நடக்கின்றது என்பதில் மிகக் கவனமான அவதானம் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு மென்டர் மாதிரி, சூப்பர்வைசர் மாதிரி
"நீங்கள் விரும்புவதை நீங்கள் தாராளமாகச் செய்யலாம். அதுக்கு ஒங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் ஒரு மட்டுப்பாடும் கட்டுப்பாடும் இருக்கு, அந்த வரையறைய ஒருபோதும் எதுக்காகவும் நீங்கள் தாண்டிக்கக் கூடாது. நீங்கள் தாண்ட மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. ஏன்னா மத்த விஷயங்கள ஒங்களுக்கு ஊட்டும் போது அதோட சேத்து மார்க்கத்தையும் ஊட்டிருக்கேன். ஆனாலும் நீங்கள் இள வயசுக்காரங்க அறிவு இருக்குற அளவுக்கு அனுபவம் பத்தாது. நீங்கள் எதுக்காகவும் வழிதவறிடக் கூடாது. அதனால எப்படியும் ஒங்க மீது என் கண்காணிப்பு இருந்திட்டே இருக்கும்.”
3.
ஜீவநதி 72 புரட்டாதி 2014 y

Page 16
என்று அடிக்கடி தனது மூன்று பிள்ளைகளையும் ஒன்றாக அழைத்து வாப்பா குழந்தை களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல சொல்லுவார். அப்போது கூட அவர் சொல்லும் விதத்தில் ஹிட்லரிசம் இருக்காது. மாற்றமாக தெரேஸாயிசம்தான் திறந்த வெளிக் காற்றாய் எல்லாத் திசைகளிலும் நிறைந்து போயிருக்கும்.
ஏப்பேர்ப்பட்ட பக்குவம்... மனசுக்குள் மகோன்னத சிலிர்ப்புகளை ஏற்படுத்திச் செல்லுகின்ற அவனது தந்தையின் மெச்சுரிட்டி அவனைப் பொறுத்த வரை அன் பிலீபவில்...
ஆனாலும் வாப்பா ஒழுக்க விஷயத்தில் கண்டிப்புன்னா அப்படி ஒரு கண்டிப்பு. ஸ்ட்ரிக்ட்லி ஃபோர்டிஸிப்ளின் டைப். வேத்து அறிவ வெச்சுக்கிட்டு ஒன்னும் இங்கே கிழிக்க முடியாது. மனுஷன்னா ஒழுக்கம் இருக்கனும். ஒழுக்கமில்லாத
அறிவால புண்ணாக்குக்கும் பயனில்ல” என்பார்.
இஷாத் தொழுது கலைந்தவுடன் எல்லாப் பிள்ளைகளும் வீட்டில் எட்டரை மணிக்கு
ஆஜராகிவிட வேண்டும். பகலில் எங்கு சென்றாலும் இரவுகளில் பிள்ளைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். இல்லன்னா கெட்டுக் குட்டிச் சுவராகிப் போய் விடுவார்கள் என்று வீட்டில் அவரால் பாஸ் பண்ணப் பட்ட உப விதிகள்.
என்னதான் செய்தாலும் மூன்று பிள்ளைகளின் மீதும் வழிய வழிய அன்பைத் தந்து அவர்களின் நலனுக்காகவும் எதிர்காலத்துக்காகவும் இன்றைக்கும் அவர்களின் பின்னால் வந்து கொண்டிருப்பவர்.
கணிதத் துறையில் சிறந்த பெறுபேறு பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு ஈவன்னில் தெரிவான சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில்தான் வாப்பாறிஷாதிடம்.
"ராஜா இத்தின நாளா மறச்சி வச்ச விஷயம் ஒன்ன இப்ப நான் ஒங்கக்கிட்ட சொல்லப் போறன்” என்றதும் ஆச்சரியத்தினை உள்வாங்கிக் கொண்டான் றிஷாத்.
"என்ன வாப்பா சொல்றீங்க.. மறச்சி வெச்ச விஷயமா என்ன அப்படி ஒரு ரகசியம்....."
"அதொண்ணுமில்லடா... நீ ஓ லெவல் பாஸ் பண்ணியதும் ஒன்ன பயோ சயன்ஸ் படிக்க வெச்சி
எப்படியாவது எம்புள்ளங்கள்ள ஒருத்தனயாவது டொக்டராக்கிப் பார்க்கணும்னு ஆசப்பட்டேன். ஆனா நீ மெத்ஸ் படிக்கனும்னு ஆசையா சொன்ன தால ஒன்ட விருப்பத்துக்கு குறுக்கா என்னால நிக்க முடியல்ல. நீ மெத்ஸ் படிக்கப் போறேன்னு சொன்ன கனத்திலேர்ந்து என்ட ஆசைய ஒரு ஓரமா போட்டுட்டன். இப்ப கூட என்ட ராஜா இன்ஜினியர் ஆயிட்டான்ல... என்ட புள்ளட ஆசய நிறைவேத்தி வெச்ச அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.." என வாப்பா சொல்லி முடித்ததும் ஒரு சிறு மின்னல் றிஷாதை உரசிச் சென்று
"உண்மையாவா வாப்பா அப்படின்னா ஏன் நீங்க என்கிட்ட அப்ப இதச் சொல்லல்ல... அப்படி ப ஜீவநதி 72 புரட்டாதி 2014
14

சொல்லியிருந்தீங்கன்னா நிச்சயமா நான் நீங்க ஆசப்பட்டபடி பயோ சயன்ஸ் செஞ்சி எப்படியோ அல்லாஹ்ட ஒதவியால் கஷ்டப்பட்டு நல்ல ரிசல்ட் எடுத்திருப்பேன்பா. ஏன் நீங்க எனக்கிட்ட சொல்லல... ரியலி எனக்கு வருத்தமா இருக்கு வாப்பா...”
- “சேச்சே.. இப்ப கூட இத நான் ஒங்கிட்ட சொல்லியிருக்க மாட்டேன். ஏதோ சும்மாதான் சொல்லணும்னு தோணிச்சு. அதான் சொன்னேன். மத்தப்படி இதுல எனக்கு கவலையோ வருத்தமோ கெடயாது. என் மகன் அவன் ஆசப்பட்ட மாதிரி ஒரு இன்ஜினியர் ஆயிட்டான். அது போதும் எனக்கு. ஒன் ஆச நிறைவேறினதுல எவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கிற நீ .... ஒன் முகத்துல தெரியுற அந்தப் பூரிப்புதான் ராஜா என் மொத்த சந்தோஷம். எனக்குன்னு தனியே சந்தோஷம் துக்கம் மகிழ்ச்சின்னு எதுவுமே கெடையாது... எம் புள்ளங்கட சந்தோஷம்தான் என் சந்தோஷம்... எம் புள்ளங்கட துக்கம்தான் எந்துக்கம்....." என்ற வாப்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டு..
“ரொம்ப பெருமையா இருக்கு வாப்பா. இந்த மாதிரி ஒரு நல்ல வாப்பாவை தந்ததுக்கு அல்லாஹ்வுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போறன்னே தெரியல்ல...”
என்று அழுதவனின் கண்ணீரில் தனது அன்புத் தந்தைக்கான நன்றிகளை நிறைத்து வைத்திருந்தான் அவன். ஒரு நல்ல தந்தையாக, இணை பிரியாத் | தோழனாக, இணையற்றதோர் மனிதராக அற்புதங்களையும், அபூர்வமான கணங்களையும் பிரமிப்புகளையும் தனக்குள் உருவாக்கிய இத்தனை நாளும் அருகிலிருந்து பார்த்துப் பார்த்துப் பழகிய
பேசிய எல்லா விடயங்களிலும் ஆலோசனை தந்து வழி நடத்திய வாழ்வின் ஒட்டுமொத்த ரோல் மடலாக இருக்கின்ற தனது அன்புத் தந்தை இதோ உயிருக்காகப் போராடிக் கொண்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்.
"யா அல்லாஹ் என்னைக் கைவிட்டுறாதே.. என் வாப்பாட உசிரப் போட்டு வை.” இடைவெளி எதுவுமில்லாமல் பிரார்த்தனைகள் நீண்டு கொண்டிருந்த றிஷாதின் உடம்பு பூராவும் வியர்வை உற்பத்தி தலைக்கவசம் அணிந்திருந்ததால் தலைக்குள்ளே வியர்வை தேங்கி நின்றது.
இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம். யா அல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு போனவுடனே ஏதாவது நல்ல செய்தியை காதுக்குக் கொடுத்திடு ...... எங்க
குடும்பத்துக்கே ஆணிவேரா இருக்கிற ஆல மரத்த விழுந்திடாம காப்பாத்து யா அல்லாஹ்.
அவனது கண்களிரண்டிலும் கற்கறவென்று கண்ணீர். மோட்டார் சைக்கிளின் ஹேன்டிலைப் பிடித்திருந்த அவனது இரு கரங்களும் மைனஸ் டிகிரிக் குளிரில் அகப்பட்டதனைப் போல நடுங்கிக் கொண்டி ருந்தன. மொத்த உடலிலும் ஒரு மெல்லிய நடுக்கம்.
மூன்றாவது அட்டாக்.. வாப்பா பொழச்சிடுவாங்களா.... ஆயிரம் கேள்விகள் மனசுக்குள் அரூபங்களாகி நினைவுகளின் எல்லா நிலைகளிலும் வாப்பாவும், வாப்பாவின் ஞாபகங்

Page 17
களும், வாப்பாவின் அன்பும், வாப்பாவின் பாசமும் என றிஷாதை நெகிழச் செய்து கொண்டிருந்தது. முந்தானையைப் பிடித்துக் கொண்டு இன்னும் நிறைந்த கண்ணிரோடு தனது புருஷனுக்காக அல்லாஹ்விடம் அழுதழுது பிரார்த்திக் கொண்டிருக்கும் உம்மா. வாப்பாவுக்காகவே வாழ்ந்து பழக்கப்பட்ட ஜீவன். வாப்பாவைத் தவிர உம்மாவுக்கு வேறு உலகம் தெரியாது. வாப்பா மட்டும்தான் அவர்களது உச்சபட்ச உலகப் பொது அறிவு.
"உம்மா இத எப்படி தாங்கிக்கிட்டு இருக்காங் களோ. யா அல்லாஹற் நீதான் எங்களுக்கு தொணை”
"நாநா கூட கோல் எடுக்கலையே. ஏன் என்னாச்சோ ஏதாச்சோ..ஏதாவது விபரீதமாக. சேச்சே.அப்படி எதுவும் இருக்காது. நான் ஹொஸ் பிடல் போனதும் வாப்பா எங்கிட்ட சிரிச்சுப் பேசப் பொறாங்க.."எப்படிடா இருக்க என் ராஜா. வேலை யெல்லாம் எப்படிப் போவுதுண்னு கேக்கப் போறாங்க...”
என்றாலும் மனசுக்குள் இடை விட்டு இடை விட்டு சந்தேகத்தின் முற்றத்தில் சடுகுடு. படபட.
ll. Lt. . . .
“என்னாச்சு. நல்ல செய்தின்னா உடனே எடுத்திருப்பானே. வாப்பாவுக்கு நினைவு வந்ததும் உடனேயே கோல் எடுக்கச் சொல்லியிருந்தேனே. இதுவரைக்கும் எடுக்கல. அப்படின்னா அப்படின்னா வாப்பா இன்னமும் மூச்சுப் பேச்சில்லாம இருக்காங்க ஒரு மணித்தியாலத்துக்கும் மேலே.நாம நெனச்ச மாதிரி ஏதாவது ஏடாகூடமா.
நோ.நோ. நோ அவனால் அதற்கப்பால் யோசிக்க முடிய வில்லை. அதிகரித்த பயத்தோடும் திகிலோடும் மோட்டார் பைக்கின் வேகத்தை மணிக்கு தொண்ணுாற்றி இரண்டில். இதோ ஹொஸ்பிடல் இன்னும் சில நிமிஷங்களில் . அப்புறம் வாப்பாவப் போய்ப் பார்க்கலாம் எப்படியும் வாப்பா கண் முழிச்சு
"என்ன ராஜா வந்துட்டியா" "ஆமாப்பா...இந்தா ஒங்க ராஜா வந்துட்டான்.”
ஆன்றோர் விருது பெற்றார் கே. ஆர். டேவிட்
தென்மராட்சி இலக்கிய அணியினரால் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் நடத்தப்பட்ட கம்பன்விழாவில் 2014 ஆம் ஆண்டுக்குரிய ஆண்றோர் விருது &&#ಣೂt &ಿxàck @lategég ម៉ែផៃ គែប្រជុំ ឆ្នា8.6guyê 9656Hà ខ្សោះ...g.
 

"அல்லாஹ்தான் வாப்பா காப்பாத்தினான். நீங்க நீண்டகாலம் எங்களோட இருப்பீங்க.." என நான் வாப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரது தொழுது தொழுது கருத்துப் போன நெற்றி யில் மெல்லமாய் முத்தமிட்டு. இன்ஷா அல்லாஹற். அல்லாஹற் துணையிருப்பான். இப்போது இதயத் துடிப்பின் வேகமும் அவனது மோட்டார் பைக்கின் வேகமும் சரிசமனாக இருந்தது.
"வாப்பா பொழச்சிக்குவாங்களா"
என்று மீள மீள தனக்குள் ரீசைக்கிளிங்காக எழுந்து நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பருவ சுகங்கள் தருமே என்பது போல கேள்விகள் எழுவதும் விடையற்றுப் போவதுமாய். றிஷாத் பயணித்து சரியாக ஏழு மணித்தியாலங்கள் கழித்து. "என்ட அல்லாஹ்” என ஆரம்பித்து கோரஸாக ஒலிக்கும் கதறல்கள் அந்தத் தெருவையே அடைக்க றிஷாதின் உம்மா அழுது அழுது மயக்கமுற்று வீட்டு அறையொன்றில் கிடந்த கட்டிலில் படுக்க வைக்கப் பட்டிருந்தார். உம்மாவை அணைத்து உட்கார்ந்திருந்த பெண்கள் அவருக்கு விசிறிக் கொண்டு அவர்களும் முந்தானையை வாயில் வைத்து சப்தம் வாரதும் வராமலும் அழுது கொண்டிருந்தனர். முன் வறாந்தா வில் வாங்கில் வைக்கப்பட்டிருந்த அந்த உடலைச்சுற்றி இடம் கொள்ளாதளவு சனம். வாசல். அந்தத் தெரு. எங்கும் நெருக்குவாரங்களை தோற்றுவித்துக் கொண்டு எக்கச்சக்க சனம்,
மையத்து வீடு
“என்னங்க என்னதான் நடந்தது.”
"எல்லாமே அல்லாஹ்ட எழுத்து.
இன்னிக்குப் பகல் வாப்பாவ ஆஸ்பத்திரிக்குப் பாக்கப் போற வழியில உப்புவெளி சந்தில வெச்சு பெரிய எக்ஸிடென்ட்டாம்..இன்ஜினியர் ரிஷாத் மோட்டார்
சைக்கிள்ள ஃபாஸ்டா வந்தாப்பல.ஸ்பொட்டுலயே மெளத்தாயிட்டாரு."
தூரத்தில் ரிஷாதின் வாப்பா இன்னமும் அழுது கொண்டிருந்தார். es
சுவிஸ் சியன் நகரத்தில் எழுத்தாளர் விக்கி நவரட்னத்தின் கண்களில் ஏன் கங்கை நூல் அறிமுகவிழா நடைபெற்றது. நூல் அறிமுகத்தை நவா ஜோதி கல்லாறு சதீஸ் சண் தேவராஜா, கே.எஸ்.ஆனந்தன் நமசிவாயம் ஆகியோர் நிகழ்த்தினர் நூலாய்வுரையை பொலிகை விஜயா நிகழ்த்தினார்.
15
ஜீவநதி 2 புரட்டாதி 2014
݂ ݂ یہ کہ :" ان “چھپی۔ கழப்பானம்.

Page 18
அ ஞ் ச லி
மோசிகீரனார் என்ற திருநாமத்தை உடையவர் யாரென்று வினாவினால் சங்க இலக்கியப் பரிச்சய முள்ளவர்கள், தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் முரசுகட்டிலின் மீது வழிநடைக் களைப் பினால் படுத்துறங்கிய புலவனெனப் புறநானூற்றுச் செய்யுள் காட்சியை நினைவு கூருவார்கள். ஒரு புலவன் அல்லது ஓர் எழுத்தாளன் மீது கொண்ட பற்றினால், அந்தப் புலவன் அல்லது எழுத்தாளனின் பெயரோடு ஒட்டி தமக்கொரு புனைபெயரைச் சூடிக்கொள்ளும் ஒரு வழக்கம் இன்றும் தமிழ் இலக்கியப் பரப்பில் இருந்து வருகின்றது. அறுபதை ஒட்டிய காலப்பகுதியில் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்து கொண் டிருக்கும் 'தாமரை' இலக்கியச் சஞ்சிகையில் “ஒற்றைப்பனை” என்ற ஒரு சிறுகதையை நான் படித்தேன். அந்தச் சிறுகதையைப் படைத்த படைப்பாளி மோசிகீரன் என்னும் புனைபெயரிலேயே அதனை எழுதியிருந்தார். களம், உரைநடை, பாத்திரங்கள் என்பன யாவும் யாழ்ப் பாணத்து மண்வாசனை கமழும் ஒரு சிருஷ்டியாகவே அந்தப்படைப்பு உருவாக்கம் பெற்றிருந்தது. மோசிகீரன் என்னும் புனைபெயரில் எழுதிய அந்தப் படைப்பாளி யாரென்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. அந்தப் புனைபெயரில் தொடர்ந்து வேறு படைப்புக்களை நான் படிப்பதற்குக் கிடைக்கவில்லை. அக்காலம் நான் எழுது வதற்கு ஆரம்பித்த காலம். பின்னர் நான் எழுத்துத் துறைகட்குள் அடியெடுத்து வைத்து இலக்கியங்கள் படைக்க ஆரம்பித்த பிறகு, ஒரு தினம் பேச்சுவாக்கில் மோசிகீரன் க.தங்கவடிவேல் ஆசிரியர் என்பதனை அவர் வாயினால் கேட்டறிந்து கொண்டேன். ஆசிரியர் அவர்கள் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டு தொடர்ந்து எழுதிவராது ஏன் இருந்துவிட்டார் - என்பது அவரை அறிந்தவர்கள் பலரின் உள்ளங்களில் ப ஜீவந்தி 72 புரட்டாதி 2014
16

தெணியான்
மோசிகீரன்
கே.தங்கவடிவேல்
(01.05.1931 - 29.07.2014)
எழக்கூடிய நியாயமான ஒரு கேள்வி.
ஆசிரியர் அவர்கள் பல்துறை ஆற்றல்களுள் குறிப்பிட்டுக் கூறத்தகுந்த ஒருவர். இத்தகையவர்கள் பெரும்பாலானவர்களிடத்தில் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஓர் இயல்பு உண்டு. பல்துறை ஆற்றல்கள் படைத்தவர்களாக இருப்பதனால், எந்தவொரு துறையிலும் அதிக ஈடுபாடு காட்டி, அதனை வளர்த்துக் கொள்ளும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லாது போய் விடுகின்றது. இரண்டு பக்கமும் கூரான ஊசியை எதிலும் ஆழமாக ஏற்றுவதற்கு இயலாதென டாக்டர் மு.வ. குறிப்பிடுவது ஆசிரியர் தங்கவடிவேல் அவர்களுக்கும் பொருந்தி வரும் என்பதே பெரிய உண்மை. ஆசிரியர் அவர்கள் கவிதை ஆக்கமும் கைவரப் பெற்றவர். இவரது மறைவின் போது இவர் யாத்த கவிதைகள், இவரது கவிபாடும் வல்லமையை வெளிப் படுத்துகின்றன. ஆக்க இலக்கியங்களைப் படித்து ஆழமான விமர்சனக் கருத்துக்களை முன் வைக்கும் நுண்மை யான நோக்கு இவரிடத்தில் இருந்து வந்திருக்கின்றது. சிறந்த ஒரு மேடைப் பேச்சாளன். நிதானமாகவும், தெளிவாகவும் பிசிறின்றி எடுத்துச் சொல்லும் ஒருவராக விளங்கினார். ஓர் எழுத்தாளனிடம் அல்லது கவிஞனிடம் அல்லது விமர்சகனிடம் இருக்க வேண்டிய ஆளுமையும் ஆற்றலும் இருந்தும் அவற்றை உரிய முறையில் வெளிப்படுத்தாது வாழ்ந்தவர் ஆசிரியர் அவர்கள்.
பொதுவாக, சகலதுறைகளிலும் வல்லவராக ஆசிரியர் விளங்கினார். ஒவியம் தீற்றும் கலை கைவரப் பெற்றவர். இனிமையாகப்பாடவல்ல ஒரு பாடகர். இலங்கை வானொலி புகழ் க.குழந்தைவேல் அவர் களின் சகோதரன் என்பது இரத்த உறவினால் மாத்திரமன்றி இசைபுலமையினாலும் நிறுவிய பெருமைக்குரியவர். சிறந்த கரப்பந்தாட்ட வீரன் இவர்

Page 19
என்பதைப் பொதுவாக எல்லோரும் அறிவார்கள். இவரது மின்னலடியினால் எதிரணியினர் கலங்குவர். ஆசிரியர் பணியினை இவர் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்திருக்கின்றார். தமிழைக் கற்பிப்பதில் தனித்துவமான சிறப்புள்ள ஓர் ஆசிரியராக இவர் செயற்பட்டு வந்தார். அதேசமயம் ஆங்கிலமொழிப் புலமையாளனாகவும் இருந்தார்.
சமுதாயத்தின் அடிநிலைமக்களின் அடிமை விலங்குகளை அறுத்தெறியும் கொள்கைவாதியாக மிக இளைஞனாக இருந்த காலத்திலேயே சிந்தனைத் தெளிவுடன் செயற்பட்டார். அகில இலங்கைச் சிறு பாண்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து, அந்தச் சபையின் செயற்றிறன் மிக்க இளந்தளபதியாக நட வடிக்கைகளில் பங்கு கொண்டார். இவரது சமூகப் பணியையும் ஆர்வத்தையும் கவனத்திற் கொணர்டு அறுபதுகளில் மகாசபையினால் வெளியிடப்பெற்ற மலரில் இவரின் புகைப்படத்துடன் குறிப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப காலம் முதல் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த இவர், சர்வதேச ரீதியில் கம்யூனிஸ்ட் இயக்கம் இரணர் டாகப் பிளவுபட்டபோது, தீவிரவாதப் போக்குடைய சணர் முகதாசன் அணியுடன் இணைந்தார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்கொடி துரக்கிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப்போராளியாகச் செயற்பட்டு, தேநீர்க்கடைப் போராட்டம், ஆலயப் பிரவேசப் போராட்டம் என்பவற்றில் இணைந்த நின்று முக்கிய பங்கெடுத்துக்கொண்டார்.
இவர் தனது இறுதிக்காலம் வரை தான் பின் பற்றி வந்த கொள்கையில் குழப்பமில்லாது தெளிவு டனும் உறுதியுடனும் வாழ்ந்து வந்தவர். அதேசமயம் தான் பின்பற்றிய கொள்கையைத் தனக்குரிய மேன்மை யான ஒரு சின்னமாகச் சூடிக் கொண்டு, தன்னை ஒருபோதும் பிரத்தியேகப்படுத்தியதில்லை. தனது கிராமத்து மக்களில் ஒருவராக இணைந்து நின்றார். தான் வாழ்ந்த கம்பர்மலைக் கிராமத்தில் மக்கள் நிறுவனமான சனசமூகநிலையங்களின் உருவாக்கத் துக்கு காரணகர்த்தாவாகவும் செயற்பாடுகளுக்கு வேண்டிய ஆலோசகராகவும் விளங்கினார்.
பிரபலநாவலாசிரியர், சமூக விடுதலைப்போராளி கே.டானியல் அவர்களின் வெகுநெருக்கமான நண்பர் இவர். டானியல அவர்கள் யாழ்.குடாநாட்டுக் கிராமங்கள் தோறும் தமது நடவடிக்கைகளுக்குச் செல்லும் வேளைகளில் அவரது மோட்டார் சயிக்கிள் பின் ஆசனத்தில் அவருடைய பாதுகாவலராக (Body Guard) இவர் அமர்ந்திருப்பார். சில சந்தர்ப்பங்களில் தோழர் இக்பால் அந்தப் பணியினைச் செய்வார். ஒடுக்கப் பட்ட அடிநிலை மக்களினி விடுதலைக்காக தமது பேனாவைப் பயன்படுத்தி, செயற்பாடுகளை முனி னெடுத்த கே.டானியல் அவர்களைப் பாதுகாக்க வேண்டு மெனினும் உயரிய எணர்ணத்தினை உள்ளத்தில் கொண்டு செயற்பட்டார். டானியல் அவர்களின் மிக நெருக்கமான நண்பர்களுள் இவர் மிக முக்கியமான ஒருவர். கே.டானியல் அவர்கள் தமது "அடிமைகள்" நாவல் முன்னுரையில் இவர் பற்
 
 

பற்றியும்(என்னைப் பற்றியும்) பின்வருமாறு(14.4.83) குறிப்பிடுகின்றார்.
“இந்த நாவல் என்னால் பூர்த்தி செய்யப் படாதவிடத்து இன்றுள்ள நிலையில் இந்தப் பணியை செய்யக்கூடியவர்களாக நாண் இருவரைக் காணர்கிறேன். ஒருவர் கேதங்கவடிவேல்; மற்றவர் தெணியான்".
எனது "மரக்கொக்கு’, ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ ஆகிய இரண்டு நாவல்களும் வெளிவந்த வேளையில் அவற்றைப் படித்துப் பெருமைப்படுவதற்கு டானியல் அவர்கள் இல்லையே என்ற தனது மனக் குறையை இவர் எண்ணிடத்தில் ஒரு தினம் நேரில் எடுத்துக் கூறி கவலைப்பட்டுக் கொண்டார்.
நான் மாணவனாக இருந்த காலத்தில், விருந் தொன்றில் எனது பேச்சைக் கேட்டு, விருந்து முடிந்த பின்னர் எண்னை அழைத்து, எண்னைப் பாராட்டி எனது எதிர்காலம் சிறப்பாக அமையுமென அன்று வாழ்த்தி அனுப்பினார். அந்தத் தங்கவடிவேல் ஆசிரியருக்கு கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலையம் சென்ற ஆண்டு(2013) எடுத்த கெளரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக நானர் கலந்து கொணர் டமையை
அரங்கிலே எடுத்துக் கூறி உள்ளம் பூரித்துப் பெருமைப் பட்டுக் கொண்டார். இந்த சம்பவம் ஆசிரியரின் நல்ல இதயத்தின் வெளிப்பாடாகநாண் உணர்கின்றேன்.
ஆசிரியர், க.தங்கவடிவேல் அவர்கள் அடி நிலைப்பட்ட மக்களின் விடிவுக்காக, சமூகமயப்பட்ட ஒரு வாழ்வினை வாழ்ந்தார். இறுதிவரை தனது கொள்கை யில் தளப்பமின்றி பல போராட்டங்களில் கலந்து அதனால் வெற்றி பலவற்றின் பங்காளியானார். ஆசிரியர் அவர்களின் வாழ்வும் போராட்டமும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் அவர்களின் வரலாறு சமூக வரலாற்றின் ஒரு பகுதியாக அமையும். ஆசிரியர் க.தங்க வடிவேல் அவர்களதும் அவர் போன்றவர்களினதும் போராட்ட வாழ்வின் அறுவடையை இன்று அனுபவிக் கும் இளையதலைமுறை அவர்களது வரலாறுகளைத் தெளி வாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் முன்னெடுத்த சமூகப்பணியினைக் காலத்துக் கும் சமூகத்துக்கும் தகுந்த வண்ணம் மேலும் முன் னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு இளைய தலைமுறை யினருக்குண்டு. அதனைச் செய்வதே அண்மையில் எங்கள் மத்தியில் இருந்து மறைந்து விட்ட தங்க வடிவேல் ஆசிரியருக்கு இந்தச் சமூகம் செலுத்த வேண்டிய கண்ாரிக் கடனர் என்பேண். 17
72 ut nas 2014 hi

Page 20
G) Ժ5 Iலினின் சைக்கிள் பாஷையூர்
கடற்கரை வீதியைத் தாண்டிச் செல்கிறது. "பீம், பீம் என்ற சத்தத்தை அவன் கையில் இருந்த அந்த குழல் இடைவிடாது எழுப்புகிறது. அளவான வேகம்தான். முகத்தில் சற்றே ஏக்கத்துடன் கச்சேரி நல்லூர் றோட்டைத் தாண்டுகிறது அவனின் அழகான றலி
s
சைக்கிள். அதே “பீம், பீம்” சத்தத்தை இடைவிடாது எழுப்ப அவன் குழல் மறக்கவில்லை. வழமை போல வீதியில் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு அவசர
அவசரமாக போய்க்கொண்டிருக்கிறார்கள். காலை எட்டு மணியாகிறது. கொலினின்ர சைக்கிள் பின்
கரியலிலை ஒரு மூன்று, மூன்றரை அடி நீளமான பெட்டி முன் கான்டிலில ஒர்பையும் கொழுவியிருக்குது.
'தம்பி! தம்பி மீன்! மீன்."
ஒர் குரல் கேட்டு இடக்காலை நிலத்தில் ஊன்றி திரும்பிப் பார்க்கிறான். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓர் பொம்பிளை; லாபகரமா சைக்கிளை திருப்பிக்கொண்டு அந்த புண்ணியவதி நின்ற வீட்டை அடைகிறான். "என்ன மீன் தம்பி இருக்கு” என்றபடியே அந்த பெண்மணி அவனுக்கு முதல் அவன் வைச்சிருந்த பெட்டியினுள் பார்வையை வைக்கிறாள். கொலினும் அவன்ர உடம்பை வளைச்சு பெட்டியின்ர மேலிருந்த பலகையின் ஒருபகுதியை விலக்கி உள்ளிருந்த சில மீன்களை எடுத்து பெட்டியின் மேலே வைக்கிறான்.
அந்த பெண்மணி மீன்களில் தனது கைகளை வைச்சு 18 ஒரு பதம்பார்க்க ஆரம்பிக்கிறாள். "எல்லாம் நல்ல
ஜீவநதி 72 புரட்டாதி 2011
 

மீன்தான். இப்பத்தான் கடலில இருந்து பிடிச்சு வந்ததை அப்படியே வாங்கிவாறன்.” என்று மீனைப் பற்றி விபரிக்கிறான். "என்ன தம்பி கொழும்புத்துறை மீனா?” "இல்லை இது, பாஷையூர் மீன்" என்றவனின் குரலில் சற்றே ஒர் உரப்பு. அதற்கு மேல் அந்த பெண்மணி அவனிடமிருந்து எவ்வித விபரிப்புக்களை எதிர்பார்க்கவில்லை போலும்,
அதற்குள் இந்த அம்மணி பக்கத்து வீடு, முன் வீடு பெண்களையும் கூட்டுச் சேர்த்து விடுகிறாள். "இந்த பாரை மீன் என்ன விலை சொல்லுறா தம்பி?” என்கிறாள் ஒரு பெண்மணி, "வேற என்ன மீன் இருக்கு " என்கிறாள் இன்னொருத்தி சைக்கிளிலிருந்து இறங்கி மேலும் சில மீன்களை எடுத்து பெட்டியின் மேல் வைக்கிறான். "இந்த ஒரா மூன்றையும் எடுக்கிறன், எவ்வளவு போடுவா ?” என்றாள் ஒரு பெண். "மூன்றும் நானூறு ரூபா" என்றான். "என்ன நானூறா?" இருனுற்றைம்பது ரூபா என்றாதா இல்லையென்றா வேண்டாம். "என்ன அம்மா, உங்கிட்டதான் முதல் யாவாரம். சரி ஒரு ஐம்பதைக் குறைச்சுப்போட்டு முன்னூற்று ஐம்பதைக் கொடுங்க” என்கிறான் தயவாக, "உனக்கும் வேண்டாம்
மீன்பெட்டி
எனக்கும் வேண்டாம் முந்நூறு தாறம் என்ன சொல்லுறா தம்பி” என்கிறாள் அவளொருத்தி. சரிதாறதை தாங்க என்கிறான் கொலின் இன்னொருத்தி"இந்த பாரை
°-> 《《
மீனையும் தா, நூற்றைம்பது தாறன்” “என்ன நூற்றைம்பதா?, இந்த மீன் நானூறு ரூபா", "என்ன தம்பி நீ எல்லாத்துக்கும் நானூறு என்கிறாய்?" "ஒரே இடத்தில உன்னட்டையே வாங்கிறோம். நூற்றைம்பதென்றால் தா? இல்லாட்டி கொண்டு போ" “சரி அம்மா எடுத்துப் போட்டு காசைத் தாங்க” என்றான். மீன் கைமாறுகிறது. அன்று அந்த பகுதியில மீன்கறிதான். காசை வாங்கிக்கொண்டு பெட்டியை மூடியபடியே அங்கிருந்து நகர்கிறான். முதல் யாவாரத்தில நானூற்றைம்பது ரூபாதான் தேறுகிறது. அவனுக்கு நஷ்டமில்லைதான். ஆனாலும் அந்த மீனை ஒரு அறுநூறு ரூபாய்க்கு விற்றிருக்கலாம். வழமையாயே கடலில வீசிவாறவங்களிட்டை இருந்து கூறு போட்டுதான் மீன்வாங்கிவந்து விற்கிறவன். வாங்கிறதிலை சொத்தையும் வரும், நல்லதும் வரும், இண்டைக்கும் அப்படித்தான். கொஞ்சம் நேரம்பிந்திய தால பெரிய மீன்கள் சரியா தேறேல்லைதான்.
கிடைச்ச பெரிய மீன்களையும் லாபத்தோட

Page 21
இப்படி பஞ்சம் விசியை கட்டுதுகள்'
விக்கிறது பெரும்பாடுதான். ஆனாலும் கொஞ்சம் லாபமாய்த்தான் விற்றான். அதே வேகத்தோட சைக்கிள் முன்னேறுகிறது. காலையில் மீன்வாடிக்கு போகும்போது அவனின்ட மனைவியோட ஏற்பட்ட வாக்குவாதம் அவனை நிலைகுலைய வைச்சிருக்கு. மனசிலயும் அதே நினைப்புத்தான். "அவள் சொல்லுறதும் சரிதான்." "ஏன்தான் நான் இப்படி இருக்கிறேனோ?” என்று தன்னை தானே நொந்து கொள்கிறான். வாடிக்கு மீன்வாங்க போகும்போதே அந்த இரண்டாயிரம் ரூபாயை கையில தந்திட்டு சொன்னவள் "இண்டைக்கு வாற லாபத்தை நேற்று மாதிரி குடிச்சு அழிக்காமல் அப்படியே கொண்டு வந்து என்ர கையில தந்திட வேணும்.” என்று. அந்த இரண்டாயிரம் மூத்த இரண்டு பிள்ளைக்கும் பள்ளிக்கூடத்துக்கு கட்ட வைச்சிருந்த தவணைக் காசும் கடைக் குட்டிக்குமான சட்டைக் காசும் தான். காலாகாலமா அவள்
அதை சேர்த்திருப்பாள். “கல்வியங்காட்டு சந்தையிலே இண்டைக்கு எப்படித்தான் யாவாரம் நடக்குமோ” என்ற ஏக்கம்!
இப்படித்தான். பாஷையூர் வாடியில இருந்து மீன்களை வாங்கிக்கொண்டு போய் கல்வியங்காட்டு சந்தையில் விற்கிறதுதான் அவன்ர ஜீவனோபாயம். போகும் வழியிலே இப்படி பீம் பீம் என்று கோனடிக்கிறதால ஏதோ கொஞ்சம் விற்கலாம். ஆனாலும் போராட்டந்தான். பெற்சியை கட்டிவைச்சிட்டு தாய்தேப்பன் நிம்மதியா போய்ச்சேந்திட்டுதுகள். இப்ப மூன்று பிள்ளைகள். தன்ர பிள்ளைகளை தன்னை விட கொஞ்சமாவது படிப்பிச்சு போட வேண்டும் என்றுறதில பெற்சி கவனமாயிருக் கிறாள். அதுக்காக ஊர்ப் பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தையும் விட்டுட்டு சுண்டுக் கிளியில சேர்த்திருக்கிறாள். இரண்டு பொம்பிளைப் பிள்ளைகள். கடைக்குட்டி தான் பொடியன். இப்பத்தான் நாலரை வயசு. “அடுத்தடுத்த வருஷத்தில அவனையும் பள்ளிக்கூடத்தில சேர்க்க வேணும், இந்த மனுசன் குடிச்சு காசையழிக்கிறான். என்னதான் செய்யப் போறனோ!” என்ற ஏக்கம் அவளுக்கு.
கொலினின்ட சைக்கிள் கிட்டுப் பூங்கா சந்தியை அடைகிறது. அதுவரை நேரமும் இடைவிடாது பீம், பீம் என்று சத்தம் எழுப்பிவந்த அவனுடைய கோன்கள் ஓய்வெடுக்கின்றன. அவனும் பக்கியுடன் சைக்கிளிலிருந்து இறங்கி சைக்கிளை உருட்டிக்கொண்டு சீருடையினரின் சோதனைச் சாவடியில் சோதனைக்காக நிற்கும் வரிசையில் இணைகிறான். வரிசை சற்றே வேகமாக நகர்கின்றன. சீருடையில் நின்ற ஒருத்தன் "மாலு” என்றபடி கொலினை வரிசையிலிருந்து பிரித்தெடுத்து சற்றே முன் கொண்டுவருகிறான். ஆனால் அவனுடைய பெட்டி சோதனை போடப்படவில்லை.
நாளை

மாறாக இன்னும் இரு சீருடையினரும் அவன் பெட்டியருகே கூடுகின்றனர். அவனொருவன் அரைகுறைத் தமிழில் “மே மாலு என்ன விலை?" என்கிறான். சிறிது சைகைப்பாஷையும் தெரிந்து கொண்டவனைப்போல் கொலின் சைகையும் கலந்து "இருநூறு ரூபா" என்கிறான். ஆனால் கொலினுக்கு சிங்களம் தெரியாது. சீருடையினர் தங்களுக்கிடையில் ஏதோ கதைத்துவிட்டு "பாக்கில தா” என்றபடி காசைக் கொடுக்கின்றனர். "அப்பாடா இப்படியாவது யாவார மாகுதே!” என்ற பெருமூச்சுடன் கொடுத்துவிட்டு மீண்டும் சைக்கிளில் ஏறி மிதிச்சுக்கொண்டு கல்வியங் காட்டு சந்தையை நோக்கி முன்னிலும் சற்று வேகமாக முன்னேறுகிறான். "பார்க்கப் போனால் அந்த மீன்கள் ஒரு முன்னூறு ரூபா விற்கக்கூடியதுதான். ஆனா என்ன செய்ய? அடிக்கடி இந்தப் பக்கமாய்த்தான் போறவன்.
பாட்*** * * > |
பத்து இருபதை குறைச்சுக் கொடுத்தால்தான் நாளைக்கு வாற நேரத்தில ராஜ மரியாதையோட விடுவான் என்ற வரட்டு எண்ணம்”.
வேகம் சில நொடிகளில் அவனை சட்டநாதர் சிவன் கோவிலை தாண்ட வைக்கிறது. திடீரென்று “படீர்” என்ற ஒரு சத்தத்துடன் “அம்மா” என்ற சத்தமும் சேர்கின்றன. “டேய், டேய்” என்ற வேறு சில சொற்களும் தொடர்கின்றன. இருவர் மோட்டார் சைக்கிளில் கொலினை முத்தமிட்டு விட்டு முந்திச் செல்கின்றனர்.
பெட்டி நிலத்தில். அவனும் வீதியுடன்!
“ஆ... அம்மா” என்ற முனகலுடன் சைக்கிளின் இடையில் இருந்த உடம்பிலிருந்து அவன் தலை மட்டும் திரும்புகிறது. அப்படியே அவனது பார்வை அப் பெட்டியில் நிலைக்கின்றன. பெட்டி உடைய வில்லை. ஆனால் மீன்கள் மட்டும் சிதறியிருக்கின்றன.
• 19
ஜீவநதி 12 புரட்டாதி 2014 v

Page 22
இஞ் லி
காற்ற கண்ண
JIT920
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பல்வேறு கிளைகளாகப் பிரிந்து, தமிழின் புகழை ஓங்கச் செய்து, தமிழ் பேசும் மக்களை பேருவகையில் ஆழ்த்திய எழுபது, எணர் பதுகளை வானொலி ரசிகர்களால் மறக்க முடியாது. இனிய பாடல்கள், குரல் வளம் மிக்க, தமிழ் மணம் வீசும் அறிவிப்புகள், இலக்கியத் தரம் மிகுந்த நிகழ்ச்சிகள், காலையில் மக்களைத் துள்ளி எழ வைக்கும் "காலைக்கதிர்", இரவில் தாலாட்டித் துரங்கவைக்கும் “இரவின் மடியில்”, பேர் கேட்ட அனைவரையும் நீராட்டவரும் “பொங்கும் பூம்புனல்", இதயங்களைக் கொள்ளை கொண்ட "இதய ரஞ்சனி”, புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய "திரை விருந்து", பார்த்த படங்களா னாலும் அவற்றை அழகாகக் கத்தரித்து, நெறிப்படுத்தி ஒரு மணித்தியாலத்தில் உள்ளங்களில் நிறையச் செய்த “ஒலிச்சித்திரம்”, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த "ஏமாளிகள்” மற்றும் “கோமாளிகள்”, விடுமுறை நாட் களில் நாளெல்லாம் ஒலித்த அறிவுபூர்வமான, இதய நேசமான விளம்பர நிகழ்ச்சிகள், யாழ்ப்பாணம் பொது மருத்துவனையில் பணியாற்றிக்கொண்டே "சந்தியா காலத்து புஷ்பங்கள்” முதலிய நாடகங்களை எழுதிய டாக்டர் ஜே. ஜெயமோகனின் அருமையான தமிழ் வசனங்கள், அவற்றைக் கவித்துவமான தமிழில் ஒலிக்கவிட்ட அறிவிப்பாளர்கள், கணிரென்ற குரலால் மக்களை சிந்திக்க வைத்த "துப்பறியும் ரட்னம்”, உள்ளங்களை வருடிச்சென்ற "ஈழத்துப் பாடல்கள்", அறிவிப்பாளர்களின் விருப்பங்களை கலையழகு சொட்ட வெளிப்படுத்திய “என் விருப்பம்” மற்றும் "வானவில்” இவையெல்லாம் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பன போன்ற ஒரு பிரமையில் வாழ்வதால் அண்றைய வானொலி ரசிகர்கள் இன்றைய வானொலி நிகழ்ச்சிகளைத் தவறியாவது கேட்ப தில்லை என்பதை இளைய தலைமுறையினர் அறிந் திருக்க நியாயமில்லை. அத்தகைய ஒரு சிறந்த காலத்தை கற்பனை பண்ணக்கூட இன்றைய இளைய தலைமுறையினரால் முடியாது என்பது பரிதாபத்திற் குரியது.
அறிவிப்புகளில் பல ரகங்கள் அக்காலத்தில் இருந்தன. ஆனபோதிலும், அவற்றில் சுத்தமான தமிழ்,
2O
இர் ஜீவநதி 72 புரட்டாதி 2014
 

கெகிறாவ ஸஹானா
தில் கலந்த fiக் காவியம் தரு சேனாதிபதி கனகரட்னம்
இலக் கசிய அறிவு, தேர்ந்த ரசனை என பன மிகைத்திருந்தன. அவற்றைக் கேட்ட மாத்திரத்திலேயே சோர்ந்த உள்ளங்கள் துள்ளியெழுந்து புது ஆற்றலும் உற்சாகமும் பெறும்; தாமும் ஏதாவது எழுதிப் பார்க்கலாமா என்று துடிதுடிக்கும்; எழுத்தினால் வெற்றியும் பெறும். இன்றைய கேலியும் கிண்டலும் சிரிப்பும் நிறைந்த வானொலி சலசலப்புகளின் முன்னே இந்த எளிய உணர்மைகள் ந.பிச்சமுர்த்தியின் பூக் காரியைப் போல உணர்வோருக்காக ஏங்கிநிற்கின்றன.
அத்தகைய அறிவிப்புகளில் எல்லாம் தலையாய அறிவிப்பு என்று சொனினால் அவருடையதைச் சொல்லலாம். ஆயின், அதில் எந்தத் துள்ளலும் இருக்காது; பரபரப்பு இருக்காது. அலுத்துக் களைத்த உள்ளத்தை மயிலிறகால தடவிவிடும் மென்மை இருக்கும்; இனிமை இருக்கும்; பளிங்கு போன்ற தெளிவும் இருக்கும்.
அதுதான் ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம்! இந்த நீண்ட பெயருக்குச் சொந்தக்காரர் யார் என்று அறியாமலேயே அவரை இதயங்களில் உயரிடத்தில் வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் ஏராளம். அவர்களை காலத்தால்கூட மாற்ற முடியவில்லை. இன்று தனது

Page 23
எண்பத்தோராவது வயதில் அவர் காலமானார் என்ற செய்தியை அறிந்து தொய்ந்து நிற்கின்ற உள்ளங்கள் அவர்களுக்குச் சொந்தமானவை. இன்றைய உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற இந்தப் பரபரப்பான கணத்திலும் அவரைத் தெரிந்த உள்ளங்கள் அன்னாரது மறைவையெணர்ணி உள்ளம் நெகிழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
இறப்பதற்கு முன்னர் சுமார் ஒருவருடகாலமாக சுகவீனமுற்று எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்தார் என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும்.
1934.12.18இல் சிலாபம், காக்காப்பள்ளி எனும் நகரத்தில் மருதங்குளம் எனும் தமிழ்க் கிராமத்தில், (அன்னையா) முத்தையா-பொன்னம்மாள் தம்பதி களுக்கு மகனாகப் பிறந்து, தனது எண்பத்தோராவது வயதை எட்டிப்பிடிக்கும்போது கடந்த 29.07.2014 அன்று காலை ஒன்பது மணியளவில் ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம் சிலாபம் பொது மருத்துவமனையில் காலமானார்.
சிலாபம், சென் மேரிஸ் கல்லூரியில் ஆரம்பக் கலவியையும், பிறகு யாழ்ப்பாணத்தில உயர் கல்வியையும் கற்றார். இளம் வயதிலேயே தமிழை அதிகமதிகம் நேசித்து, மிக அழகான பேச்சுவழக்கில், சிறிது தென்னிந்தியச் சாயல் கலந்து பேசுவதை ஒரு பயிற்சிமுறையாகக் கொண்டு தொடர்ந்தும் அதைக் கடைப்பிடித்து வந்தார்.
1960.12.28ம் திகதி, மணித்தியாலத்திற்கு ரூபா 1.75 முதல் 12 வரை ஊதியம் பெறுகின்ற ஒரு நிவாரண அறிவிப்பாளராக (relief announcer) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் தமிழ் வர்த்தக சேவையில் இணைந்து கொண்டு பின்னர் படிப்படியாக இரண்டாம் தர, முதலாந்தர அறிவிப்பாளராகப் பதவியுயர்வுபெற்று, 1977 முதல் கட்டுப்பாட்டாளராகப் (controller) பணியாற்றி, 1987.08.07ஆம் திகதிவரை அப்பதவியில் இருந்தார்
கவிஞர் கண்ணதாசனைவிட சிறந்த கவிஞர் இல்லை என்ற கருத்து அவரிடம் இருந்தது. அவரது நினைவுதின நிகழ்ச்சிகளை ‘கற்பூரம்' என்ற பெயரில் மூன்று வருடங்கள் சிறப்பாகத் தயாரித்தளித்தார். ‘என் விருப்பம் நிகழ்ச்சியில் அவர் தொகுத்தளித்த சிறந்த பாடல்கள் பற்றி இன்றும் உரையாடல நிகழ்ச்சிகளில் நரினை வுகூர் கரின ற வானொலி நேயர் கள இருக்கிறார்கள். -
இரண்டு உள்நாட்டு ஒலிபரப்புகள், ஒரு ஆசிய ஒலிபரப்பு, ஒரு தென்னிந்திய ஒலிபரப்பு, ஒரு மத்திய கிழக்கு ஒலிபரப்பு, ஒரு இரவு ஒலிபரப்பு என்று பல கிளைகளாகப் பிரிந்து, இரவு பதினொரு மணிவரை நீடித்திருந்த தமிழ் ஒலிபரப்பு 1983 ஜூலை கலவரங் களின் பின்னர் படிப்படியாகத் தனது சிறப்பை இழந்தது என்றும், திருமதி பொன்மணி குலசிங்கம் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக வந்த மேலதிக இயக்குனர் நிகழ்ச்சிகளின் தரம் குறைவதற்குக் காரணமாக இருந்தார் என்றும் குறிப்பிடும் அவர், இதுபற்றி தனது "மனம் போன போக்கில ’ எனும் சிறுநூலிலி
பின்வருமாறு எழுதினார்.
 

"கலைவாணியே, உணர் கலையுலகை நீ ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கலை வளர வேண்டிய இடத்தில் அது வளரவில்லை, அங்கு காமமும் குரோதமும் அல்லவா தலை விரித்தாடுகிறது! கோயி லாய் இருக்கவேண்டிய இடங்கள் குப்பை மேடுகளாக இருக்கின்றன. கலையைக் கட்டிக்காக்க வேண்டியவர் கள் காமப் பேய்களாயிருக்கிறார்கள்.”
இந்நூலை எழுதியபின்னர் உடனே வெளி யிடாது நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்ததாக எண்ணிடம் கூறினார்.
தமிழை மிக ஆழமாக நேசித்ததன் காரண மாகவே அவர் திடீரெனிறு பதவியிறக்கப்பட்டு தண்டணைக்குரிய இடமாற்றமும் பெற்றது காலத்தின் சோகமாகும். "ஈழகேசரி” என்ற சொல்லை விளை யாட்டாக உச்சரித்ததன் காரணமாக, தமிழ்த் தேசியத் திற்குச் சார்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்டு பல விசாரணைகளை எதிர்கொண்டார். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோதும் வெற்றிபெற முடியாமல் போனது. அவரது கண்டிப்பு, நேர்மை, இதயபூர்வமான தமிழ்ப்பற்று என்பன அவரது ஒலிபரப்பு வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்தன. தான் "புலிப்பயங்கரவாதி” என்று குற்றம் சுமத்தப்பட்ட அந்த அதிர்ச்சியிலிருந்து இறக்கும்வரை அவர் மீளவே இல்லை. இது குறித்து தனது கவிதையொன்றில் இப்படி எழுதினார்: சிரித்து சிரித்து எண் பின்னே சிறுசிறுகுழியவர் செய்தார் அறியாதுநாணின்று வீழ்ந்தேன்-எண் குரல்வளை அதுவரை ஆழ்ந்தேன்
இனிக்க இனிக்க அவர் பேசி எண் இதயத்தை இன்று பிளந்தார்-கணி பனிக்க பனிக்கநாண் கெஞ்ச-அவர் குனிந்த தலையென நடந்தார்.
பிழைத்தோர்க்கு அறமிங்கு கூற்று-இது சிலம்பு செப்பியவன் கூற்று அறம் பிழைத்திருந்தால் இது கூற்று அதற்கு வேறு இல்லை இனிமாற்று மேலும் அதுகுறித்து ஒரு கட்டுரையில் விளக்குகிறார்.
"பாணர்டவரோடு பரந்தாமணி இருக்கும்போது வெற்றி நிச்சயம். ஆகையால் இப்போது வந்திருப்பது அஞ்ஞாதவாசமாக இருக்கட்டும். இது வனவாசமா யிருக்க வேண்டாம்."
திடீரென்று தன்னைத் தரம் இறக்கி 'மஹாவெலி சமூக வானொலிக்கு மாற்றியதை மறுத்த அவர், விடு முறையில் செல்வதாக அறிவித்து தென்னகம் சென்றார்.
மீண்டும் திரும்பி வந்து தனது ஓய்வூதியத்திற் காக விண்ணப்பித்தபோது அவரது முதல் நியமனக் கடிதம் கூட்டுத்தாபனத்தில் இல்லை என்றும், சேவை யிலிருந்து அவர் முறையாக விலகிக்கொள்ள வில்லை
என்றும் கூறி மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சு அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. அக்காலத்தில் இவரோடு பணியாற்றிய அதிபர்திரு.கபூர், எண்.சிவராஜா,
2 புரட்டாதி 2014
ուա գետ Տ Ի Կ

Page 24
உதவி நிர்வாக அதிபர் கமலா டீ சில்வா, தமிழ்ச்சேவை அதிபர் ருத்ரபதி, சக அறிவிப்பாளர் சர்வானந்தா ஆகியோர் அறிக்கை வழங்கியபோதும், கூட்டுத் தாபனத் தலைவர் ஹட்சனி சமரசிங்க விஷேட ஏற்பாடுகள் என்ற வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஓய்வூதியம் வழங்கும்படி சிபாரிசு செய்தபோதும், மற்றும் சமூக சேவைகள் அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் ஆணையம் என பன அவருக்குச் சார்பாக க் கடிதங் களர் வழங்கியபோதும்கூட அவரது ஓய்வூதியம் கிடைக்கப் பெறவில்லை என்பது மற்றுமொரு சோகமாகும். இந்த முயற்சிகளில் 2006வரை ஈடுபட்டு, பின்னர் மனம் உடைந்து, இலங்கை வானொலியின் பக்கமே திரும்பிப் பார்க்காமல் தனது சொந்த ஊரில், தென்னந்தோட்டத் தால் வருகின்ற வருமானத்தைக் கொண்டு தன்னந் தனியாகக் காலந்தள்ளினார்.
தமிழ் வானொலி அலைவரிசைகள் பற்றியும், ஒலிபரப்பாளர்கள் பற்றியும் கருத்துக் கூறுகின்ற ஆற்றலும், நிகழ்ச்சிகளின் தரம், மற்றும் விளம்பரங் களை அலுப்பூட்டாத முறையில் ஒலிபரப்பும் நுணுக்கங் கள் பற்றிய அறிவும் கடைசிவரை அவரிடம் நிலை கொண்டிருந்தன. தான் தமிழோடு கொண்ட அபிமானம் காரணமாக இலங்கை வானொலியைக் கேட்காமலே விட்டுவிட்டதாகவும், திருச்சி வானொலியை மட்டுமே கேட்டுவருவதாகவும் கூறுவார். அதில் செய்தி வாசிக்கும் ஒரு பெண் அறிவிப்பாளர் பற்றி (பெயர் ஞாபகம் வரவில்லை - சிறந்த செய்தி வாசிப்புக்காக ஜெயலலிதாவிடம் பாராட்டுப் பெற்றவர்) சிலாகித்துக் கூறுவார். எமது செய்தி வாசிப்பாளர்கள் அவ்வறிவிப் பாளரிடம் பயிற்சி பெறவேண்டும் என்ற கருத்தையும் சொல்வார். சில வருடங்களுக்கு முன்பு அவ்வறிவிப் பாளரின் பேட்டியும், புகைப்படமும் தென்னிந்தியப் பத்திரிகையொன்றில் வெளிவந்திருந்தது. அதைக் கத்தரித்து அந்த நறுக்கை அவருக்கு அனுப்பினேன். அந்தப் பெண் அறிவிப்பாளர் தனது சுகவீனமான குழந்தையைப் பற்றிக் கூறியிருந்ததைப் படித்து, "அந்தப் பொண்ணுக்கு இப்படி ஆயிடுச்சே." என்று மிகவும் கவலைப்பட்டார். திருச்சி வானொலிக்கு கடிதம் எழுதுகின்ற ரசிகராகவும் இருந்தார்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமைநன்று எனும் குறள் அவருக்கு மிகப் பிடித்தமானது. கடைசிவரை அவரோடு கூட வந்தது.
"கம்பரும் கவிஞரும்” எனும் நூலில் கம்பர், புகழேந்தி, ஒளவையார், பட்டினத்தார், பாரதியார் ஆகியோரது பாடல்களிலிருந்து கவிஞர் கண்ணதாசன் எடுத்தாணி ட இலக்கிய நயமிக்க பாடல்களை எடுத்துக்காட்டி எழுதியுள்ளார். உதாரணமாக, "நந்த வனத்திலோர் ஆண்டி” எனும் சித்தர் பாடலிலிருந்தே கவிஞர், “சட்டி சுட்டதடா கை விட்டதடா” எனும் பாடலை எடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார், “என் தமிழ்” எனும் நூலில், பாராளுமன்ற உறுப்பினர் சரத் முத்தட்டுவேகம மறைந்தபோது “விதுரண் மாண்டாண்” ஒஎனும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்.
ஜீவநதி 72 புரட்டாதி 2014

&
"துரியண் அவையிலே விதுரனர் இருந்தது போன்று இங்கும் ஒரு விதுரன் இருந்தான். சபையிலே எவன் அநீதியை எடுத்துச் சொன்னாலும் அது அநீதி என்று எடுத்துச் சொன்னவர் சரத் முத்தட்டுவேகம. மொழிப்பற்று, இனப்பற்று ஒவ்வொருவருக்கும் இருப்ப துண்டு. ஆனால், அவை வெறுப்பாக மாறி தர்மத்தின் அழிவுக்குக் காரணமாயிருக்கக் கூடாது. அநியாயமான மசோதாக்கள் கொண்டுவரப்பட்ட போதெல்லாம் தனி ஒருவராக நின்று எதிர்த்தார். சிப்பியிலே ஒரு நல்ல முத்து பிறந்தது. அதன் முழுப் பலனையும் பெறாமல் மூளையற்றோர் எங்கேயோ வீசி எறிந்துவிட்டார்கள்.”
முனர் னேஸ் வரம் கோயில் அறங் காவலர் சபையில இருந்துகொணர்டு சமயப் பணி ஆற்ற எண்ணியிருந்தபோது அங்கும் சோதனை வந்தது. அந்தப் பதவியும் கைவிட்டுப் போனது. கோயிலில் குடியிருக்க வந்தவர்கள் கோயில் சொத்துக்களையும், காணிகளையும் தமதாக்கிக் கொணர்டார்கள். இது குறித்து “மன்னருக்குக் கோபம் வந்தால்.” எனும் சிறு
நூலை எழுதினார். இதில் ஆரம்பமுதலாக அவர்கள் கோயிலினுள்ளே வந்த விபரம், அக் குடியிருப்பாளர்களுக் கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் விபரம், 1875இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரதி என்பனவற்றையும் இணைத் துள்ளார். தற்போதும் இப்பிரச்சினைக்கு முடிவு கிடைக் காமலே காலம் கழிந்து சென்று கொண்டிருக்கிறது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு இழுபறியிலேயே இருந்து வருகிறது. சமீபத்தில் மறுபரிசீலனை ஒன்று இருப்பதாகவும், அது குறித்துப் பேசுவதற்கு வந்து போகும்படியும் கொழும்பிலிருந்து வந்திருந்த கடிதத்தை தனது மூப்பு, இயலாமை என்பன காரணமாக அவரால் ஏற்கமுடியாது போனது.
தனிப்பட்ட வாழ்விலும் குடும்பப் பிரச்சினைகள், தனிமை, மூப்பு, உறவினர்களின் புரிந்துணர்வின்மை, தனது முழுக்கிராமமும் -தனது உறவுகளும்கூட -தமிழ்ப் பணிபாட்டையும், தமிழ்மொழியையும் புறக்கணித்து வாழ்ந்தமை குறித்தான விரக்தி என்பன அவரைச் சூழ்ந்து

Page 25
கொண்டிருந்தன. தென்னிந்தியாவின் அயோத்திக் குப்பம் எனும் ஊரிலிருந்து இலங்கை வந்த அவரது முன்னோர்கள் சேகரித்துவைத்த செல்வங்கள் யாவும் அவர்களது சந்ததிகளின் அலட்சியப் போக்கால் பெரும்பான்மைச் சமூகத்தோடு சங்கமமாவதையும் அவர் துயரத்தோடு அவதானித்து வந்தார். மருதங்குளம் முற்று முழுதாக சிங்களக் கிராமமாகவே மாறிவிட்டது. அருகிலுள் ள தாமரைக்குளம் தாமரக்குளம் எனவும், காக்காப்பள்ளி காக்கபள்ளிய எனவும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
இறுதிக்காலங்களில் தாம் மிகவும் நம்பிய "பிரம்மகுமாரிகள் சமாஜம்” தான் நோயுற்றுக் கிடந்த காலத்தில் தன்னைத் திரும்பியும் பார்க்கவில்லை என்ற ஆழ்ந்த வருத்தமும் அவர் உள்ளத்தில் தொக்கி நின்றது. இத்தகைய பல சிக்கல்களினால் அவர்
அடிக்கடி மனப்பிறழ்வுகளுக்கும் உள்ளானார்.
எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத, பிறருக்குத் தொல்லை கொடுக்காத நேரிய உள்ளம் கொண்ட அவர் தூய அன்பைத்தேடி அதிலே முற்றாகக் கரைந்து போகும் மென்மை கொண்டவராகவும் காணப்பட்டார். முன்னாள் அறிவிப்பாளர் கோகிலா சிவராஜா அவர் கடைசிவரை மிக அன்பு கொண்டு
மரியாதை செலுத்திய ஒரு பெண்மணியாவார்.
எந்நிலையிலும் குலையாத ஆன்மீக உறுதி அவரிடமிருந்தது. தனது வீட்டுக்கு “வேங்கடவன் ஆசிரமம்” என்று பெயரிட்டு, “இது அடையாத கதவிருக்கும் சந்நிதானம்” என்று பெருமையாகக் கூறிக்கொள்வார். இறுதிக் காலங்களில் கோபத்தை அடக்கி, யாவரையும் அன்போடு பார்க்கின்ற
பிரபா
பரந்த வான்வெளி பார்க்கும் இடமெல்லாம் பிரபஞ்சம் பிரபஞ்சம் பிரபஞ்சம் என்றார் இருக்கும் இடத்தில் இருந்தே இறைவனை உருளும் உலகில் உணருவார் யாருளர்?.
- கேணிப் விண்வெளி தடவி விரிந்த விந்தைகள் பலப்பல வி கண்களை மூடி கவனம் கருத்தைத் தொகுத்து கா
சிறுபுள்ளி ஒன்று தோன்றிய தாமென சிலபேர் சொன்னார்: சிறுபுள்ளி சுழன்று பெருபுள்ளி யாகி பெரிதாய் வளர்ந்து பூதா கரமாய் வீங்கி வெடித்ததாம்
பிரபஞ்சம் நிறைந்து கிட பரந்து கோள்களும் வினை விரைந்து பாயும் வானல் வேதியல் கூறும் அனை
சிதறிய துகள்கள் அதனதன் வழியே சேர்ந்து சுழன்று ஒன்றை யொன்றீர்த்து புதுவழி யமைத்துச் சுழன்று போகுதாம் புதுமை இதுதான் படைப்பின் சூட்சுமம்
பிரபஞ்சம் எங்கும் பால் பார்க்கும் இடமெலாம் 6 உரைந்து உலாவரும் கே எரியும் கற்கள் வான்வெ
பகலவன் நடுவில் பளிச்சிடும் சுடராய் பாய்ச்சும் ஒளியால் இயங்குதாம் கோள்கள் சகலதும் இயங்கும் இடந்தான் பிரபஞ்சம் சக்தியைச் சூரியன் வழங்கி வருகுதாம்.
மூன்று நிலைகளில் சட் திண்மம் திரவம் வாயு எ சான்று அப்பொருட் கல என்று தோன்றிய தென்று

உளப்பாங்கு அவரிடம் மிகைத்துக் காணப்பட்டது. கோபம்தான் மனிதனது மிகப்பெரிய எதிரி எனும் கருத்தைக் கொண்டிருந்தார். கோபம் வந்தால் ஏதும் பேசாமல் வாயிலே நாலு கற்களைப் போட்டுக்கொண்டு மெளனமாகிவிடவேண்டும் என்று அடிக்கடி எனக்கு அறிவுறுத்துவார். தனது வாழ்க்கையை ஒரு பற்றற்ற ஞானியின் பார்வையில் பார்க்குமளவிற்கு அவரிடம் முதிர்ச்சி குடிகொண்டிருந்தது. "பேசாம இருந்து இந்த ட்ராமாவப் பாப்போம்” என்று தனது வாழ்க்கை பற்றி அடிக்கடி நகைச்சுவையாகக் கூறிக்கொள்வார். நோயும் துன்பமும் வாட்டும்போது, "இந்த ட்ராமா ரொம்ப மோசம்” என்று அலுத்துக் கொள்வார். தனது மரணத்தை மிக எதிர்பார்த்து அதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ""உங்களைப் பற்றி நான் எழுதுவதானால் என்ன எழுத வேண்டும்?” என்று ஒருநாள் கேட்டேன். "மனிதன் பிறருக்கு நன்மையே செய்து வாழ வேண்டும் என்பதைப் பற்றி எழுதுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.
கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலெல்லாம் அவரது மரணத்திற்கான அஞ்சலி ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தபோது, அவரது மரணச் சடங்குகள் அவர் விரும்பியவித மாகவே மிக எளிமையாக, அமைதியாக, ஆரவாரமின்றி நடந்து
முடிந்தன, வெறும் இருபது முப்பது பேருடன், பாரதியின் இறுதி ஊர்வலத்தைப் போல.
அந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரும்பிய போது, நீண்ட காலமாக மருதங்குளத்தின் ஒற்றை அடையாளமாக நிலைத்திருந்த தமிழின் சின்னமொன்று அழிந்து மறைந்து போனதைப்போன்ற அவல உணர்வு என்னுள் ஏற்பட்டது.
ஞ்சம்
பித்தன் - த பரப்பினில்
ரைந்து நடக்குதாம் - ஒடுக்கினால்
ணலாம் காட்சி.
அழியும் எல்லாம் அவனியும் அழியும் அண்டம் சுழன்று அனைத்தும் மாறலாம் இழிகுணம் உடைய இந்த மானிடன் என்றும் மாறுவனோ? மானிடம் அழியுமா?
ப்பது சடப்பொருள் அமீன் கூட்டமும் ஒலக் கதிர்களும்
த்தும் அலையுமாம்.
சாதி சமயம் கோயில் நாடு மொழி யென சண்டை பிடிக்குமாம் மானிட விலங்கு ஓதியுணர உத்தமர் அறிவுரை கூறிட அனைத்தையும் மாற்றித் தலைகீழாக்கினான்
வெளி பால்வெளி
காளும் உடுக்களும் காளப் போலிகள் சளி மின்னொளி
அரசியல் நடத்தும் நடிப்புச் சுதேசிகள் அயலை அழிக்கும் அனைத்துக் குழுக்களும் புரண்டு நிலத்துப் புழுதியில் மிதப்பர் புதிய யுகமொன்று மாறிப் பிறக்குமாம்
ப் பொருளுண்டாம் ன்பன அவையாம் வையே பிரபஞ்சம் அ புரியாது யார்க்கும்.
பித்தன் கூற்றுப் பொய்யா வதில்லை புரட்சி வெடிக்கும் பொடியாய் போகும் அத்தன் ஆட்சி அங்குதான் உதயம் அனைவரும் சமமென அசரீரி பிறக்கும்.
- ஜீவநதி 72 புரட்டாதி 2014 v

Page 26
(86) Lib hadr LDU600TL b
வானை நோக்கி நிமிர்ந்த அந்த வேம்புக்குத் தனிமிருக்கு அகலக் கிளைபரப்பி, அடிபெருத்து தன்னை விசாலப்படுத்தியிருந்தது அது. வீட்டுக்கான வெளிக்காக இலக்கு வைக்கப்பட்ட போதும் சாவைப் பற்றி அலட்டாது
காற்றுடன் பேசியபடி.
முழுமையாய் சாய்ப்பதற்கும் தறித்து வீழ்த்துவதற்குமென தொடர்ந்தன வேம்பின் சாவுக்கான தெரிவுகள். எல்லாம் ஒருபடி முடிவாகி மண்கிளரப்பட்ட போதும் வேர்கள் வெட்டப்பட்டபோதும்
கம்பீரமாகவே நின்றது வேம்பு.
எளிதில் விழாது என்றும் சாவு சீக்கரம் எனவும் ஒலிகளில் பேதங்கள். அந்தப் பொழுதிலும் வேம்பின்மிடுக்கு சற்றேனும் குறையவில்லை. இழுவை, வெட்டுதல் இழுவை, வெட்டுதல் சருதியாய்
ஒரு பெரு வெடிப்பு
எல்லாம் ஒரு கணத்தில். அகலக்கிளை பரப்பி, அடிபெருத்த
வேம்பு தலைசாய்த்தபடி மண்ணில்
மூலவேர் உக்கத் தொடங்கி விட்டதென்றும் அடியில் கறையான் பிடித்துள்ளதென்றும் இன்னும் பலவாறாகவும் நீளுகின்றன. விழுகைக்குப் பின்னான மதிப்பீடுகள்.
எது எப்படியோ நிகழ்ந்து விட்டது வேம்பின் மரணம்.
இப்பொழுது வேம்பு நின்ற இடம் பெருவெளியாக. வீட்டுக்காக வீழ்த்தப்பட்டது வேம்பு ஆனால், நாளை மலரும் வீட்டில் நிலையாகி. யன்னலாகி கதவாகி, காவலாகி காற்றோரு பேசியபடி வீடிருக்கும் வரை கலந்தேயிருக்கப் போகிறது அந்த வேம்பு,
 

தேவையான போது தேடிவராக் காற்று
காற்று எங்கேதான் கழன்றுபோச்சு?
அனல்
ിഖää
ஊற்றித். தனிந்து. ஒரு இரவின் மடியில் வீழ்ந்து தோற்றணைந்து சூரியனார் தொலைய வந்த இருள் போர்த்தது காண் உலகை புழுக்கத்தில் எமை அவித்து ஊற்றுகிற
வேர்வையால்
உலர்ந்த அயல் சேறாகிக் கூட. ஒரு குளுமை கைகூடாத் தனியிரவில் தேருகிறேன் காற்றை. திசையின் மூலை முருக்கெங்கும்! காற்று எங்கேதான் போயிற்று? காதலியைக் கூட்டி ஊர் சுற்றக் கிளம்பிற்றா? வெள்ளைவானில்
ஏற்றி எவரேனும் விசாரணைக் கிளுத்தாரா? "விலைவாசி குறைக்க என உண்ணாநோன் பிருக்கிறதா? படகேறிக் கள்ளமாக நாட்டைவிட்டே போயிற்றா? எப்போது காற்று திரும்பிவரும்? உயிரோடு தேகமும் புறஅகத் தீயனலைப் போக்குதற்காய். தாகத்துடன் காத்துத் தவிக்கும் இவ்வேளை விட்டு
தேவையற்ற நேரத்தில் தேடிவரும் அரசியலைப் போலஇக் காற்றயலும் குளிர்ந்தபின்னா இங்குவரும்?
-த.ஜெயசீலன்

Page 27
தேவகுமாரர்களின் வருகை
தேவகுமாரர்களின் வருகையால் வீதிகள் அலங்காரம் பெற்றன ஒரு யுககாலத்தின் வாசனையோரு நெருங்கி வந்தார்கள் வண்ணங்கள் பூசப்பட்ட நாட்களை பரிசளிப்பதாக சொற்களால் குளிரவைத்தார்கள்
ஒரு தேவலோகத்துக் கனவில் மிதந்தபடியே உறங்கிப்போனோம் யாரும் சபிக்கமுடியாத வரமொன்றை பெற்றதாக நினைத்தோம் பாஞ்சாலிகள் துகிலுரியப்பட்டதையும் அபிமன்யுக்கள் அழிக்கப்பட்டதையும் நினைவுகூரப்படாமலேயே எங்கள் நாட்களை அவர்கள் வரைந்துகொண்டிருந்தார்கள் ஒரு மாபெரும் குருஷேத்திரத்தில் எல்லோருமே தோற்றுப்போனார்கள் சக்கரவியூகத்துக்குள் எல்லாமே சாம்பலாயின இன்று தேவலோகசபையில் ரம்பைகளும் ஊர்வசிகளும் ஆடத்தொடங்கியிருக்கிறார்கள் அவர்கள் நளினங்களில் நணைவதற்கென்றே நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறோம் அரியணைகளை அவர்களே அலங்கரிக்கிறார்கள்
6Triaso gaouais6ffai)
அவர்களே குந்தியிருக்கிறார்கள் தேவேந்திரர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட இளவரசர்களின் மஞ்சத்தில்
கண்ணகிகள்
கணிகையர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மீண்டும் கடல் புரண்டு பருக்கும்
ஆதிச்சொரூபத்தின் வடிவிலான சொற்களால்
இனி கவிதை புனையவேண்டும்.
2 மீண்டும் ஒலித்த பாஞ்சசன்னியம்
குருதியும் உலர்ந்த ஒரு கோடையில் எனது நிர்வாணங்களில் இருந்து வழிந்தோடுகிறது யுகமுடிவின் ஒலங்களும் வக்கிரங்களும்
சீழ்நிரம்பிய புண்களின் வலியில் ஊசிகள் நுழைகின்றன ஒவ்வொரு பேரானந்தத்தோடும்
விடிகிற காலையில்
 

உலர்ந்த வார்த்தைகளாலான கொரூரக்காட்சிகளின் புனைவு இன்னுமின்னும் பல நூற்றாண்டுகளுக்கு
யுத்தம் பற்றிய அதிர்வை
உண்டு பண்ணியே செல்லும்
பல மண்டலங்கள் கழித்து ஊதப்பட்ட பாஞ்சசன்னியத்தால்
மீண்டும் குருஷேத்திரம் குருதியால் நிறைந்தது
3 கற்களில் புனையப்பட்ட கதைகள்
முடிவேதும் இல்லாது நீண்டு செல்கிறது அந்தகாரத்தின் இருள் கனவுகளால் நிரம்பி வழிந்த மதுக்கிண்ணங்களில் இருந்து நிராகரிக்கப்பட்ட ஆசைகள் வெளிக்கிளம்பின மிகப்பெரிய புழுதிப்புயலில் சிக்கிய குழந்தையென ஆனது எம்வாழ்வு அலங்காரங்களுக்கு மத்தியில் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறோம் கற்களில் புனையப்பட்ட கதைகளில் இருந்து கிளம்பின திசைகளின் பாடல் அம்புகளாலும் ஈட்டிகளாலும் காவல் செய்யப்பட்டன பேரரசுகள் வாள்கொண்டு வசதி பெருக்கப்பட்டது இருந்தும் கட்டுடைந்தன அணைகள்
(385. T63)LaB606FT
வெளவால்களே ஆளத்தொடங்கின வீதியில் கிடந்து புரண்டன பழங்கதைகள் இன்னமும் பழங்கதைகளாகவே குப்பைகளோடும் கழிவுகளோரும் இருள்மண்டிக்கிடக்கிறது.
4 நெடிய பாலையின் வழியே
இன்னுமின்னும் நாவில் வந்து போகிறது வெற்றுவார்த்தைகள் நிராகரிக்க முடியாத நெடிய பாலையின் வழியே வெதும்பிக்கிடக்கின்றன கூழாங்கற்கள் எழுத்தோலை இன்றியே பாடித்தள்ளிய புலவனின் பரணியில் நிறைந்து கிடக்கின்றன கொலைகளும் கொள்ளைகளும் இன்னும் பாடமுடியாத பல பாலைகளில் புதைந்து கிடக்கிறது
ஆயிரமாயிரம் ஒலங்கள். 2s
ஜீவநதி 72 புரட்டாதி 2014

Page 28
எஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நிக ஒரு முன்னோட்டம்
எதிர்வரும் செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி. நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தில் விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக் யிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடு. செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில் குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்ற கொள் ளத் தக்கவையாகும். அவ் வாறு குறிப் பி பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழு இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெ அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப் மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் யாகும். இவற்றுள் சாரல் நாடனின் “சி.வி. சில சிந்தனை ஸி. வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத் இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இல் ஆளுமை பன் முகப் பாட்டை வெவ் வேறு விதங் கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.
ஸி.வி.யின் சமூக முக்கியத்துவத்தையும் மலையக அவரது ஆக்கங்கள் செலுத்தும் பாதிப்பினையும் கொம் போது ஸி.வி. பற்றிய தேடல் வளர் நிலையிலேயே உள்ளதா ஸி.வி. ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, இல பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டவர். அவரது நூ ஒழுங்கமைப்பதற்காக ஹட்டனிலே ஸி.வி. நூற்றாண் நியமிக்கப்பட்டு சில முன் னோடி செயற்பாடுகளை வருகின்றனர். இத்தருணத்தில் ஸி. வி. பொறுத்து செய்யக் சிலவற்றைகவனத்திலெடுத்தல் அவசியமானதாகும்.
ஸி.வி.யை நாம் புரிந்து கொள்வதற்கும் ஆராய எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தான் சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், குறிப்புக்கள், நு கட்டுரைகள், ஆக்கப் படைப்புக்கள், வரைந்த கேலிச் சித் முறையாகக் கிடைக்கவில்லை. சில ஆவணங்கள் திலகரிடமும் சுப்பையா இராஜசேகரிடமும் இருப்பல்
கூடியதாக இருந்ததில் மகிழ்ச்சி. அவர் “சாக்குக்காரன்” எழுதியிருப்பதாக "தாக்கம்” இதழில் R.எஸ்.காந்தி குறி வீரகேசரியில் வெளிவந்த அக்கதை திரு.அந்தனிஜீவா சே. 26
* ஜீவநதி 72 புரட்டாதி 2014

லெனின் மதிவானம்
னைவு
1 07.
வி வேலுப்பிள்ளை ன் தலைமகனாக -கின்ற இவ்வேளை கள், விவரணங்கள், மலையாயினும் சில ன என்பது மனங் -த்தக் கவற்றுள் தப்பட்டவையாகும். ளிவத்தை ஜோசப்,
வைத்திருப் பதாக என்னிடம் பையா இராஜசேகர், கூறியிருக்கின்றார். அவ்வகையில்
குறிப்பிடத்தக்கவை
அவரது அனைத்து படைப்பு Tகள்” என்ற நூலே
களையும் தொகுத்து அடக்கத் தை வழங்கியது.
தொகுப் பொன்று வெளிவர நப்பினும்ஸி.வி.யின்
வேண' டி ய து கா ல த த ன களில் வெளிக்
தேவையாகும். ஸி.வி.யின் சில
நூல்கள் அச்சுறுப்பெற்றுள்ளன. 5 இலக்கிய கதியில்
இவ் வாறு வெளிவந்த நூல் ண்டு நோக்குகின்ற
களையும் இப்போது பெற முடியா க தோன்றுகின்றது.
துள்ளது. மேலும் இது தொடர் க்கியகர்த்தா எனப்
பான தகவல் தெரிந்தவர்களைத் ற்றாண்டு நிகழ்வை
தேடியறிவதும் சிரமமாக உள்ளது. டு நினைவுக் குழு
அ வர் களில் சிலர் இன று ள மேற்கொண்டு
மறைந்து விட்டமை இன்னொரு க் கூடிய விடயங்கள்
துரதிஷ்டவசமான நிகழ்வாகும்.
இவ்விடத்தில் முக்கிய ப்ச்சிக்குட்படுத்தவும்
மானதொரு விடயம் குறித்து . அவர் ஆற்றிய
கவனம் செலுத்த வேண டி ரல்வடிவம் பெறாத
யுள்ளது. ஸி.வி. இறந்த பின்னரே திரங்கள் இதுவரை
அவரது ஆக்கங் களிற் சில மல்லியப்பு சந்தி
நூலுருவம் பெற்றன. அவர் தமது தை பார்வையிடக்
நூல்களை மீள்நோக்கி சீராக என்ற சிறுகதையை
வெளியிடும் வாய்ப்பு அவருக் இப்பிட்டிருக்கின்றார். கிருக்கவில்லை. அன்னார் கரித்து
வாழ்ந்த காலத்தில் மலையக

Page 29
படைப்புகளின் வெளியீட்டு வசதி மிகக் குறைவாகவே காணப்பட்டன. அத்துடன், ஸி. வி. ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட இடர்பாடுகள் - மயக்கங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. உதாரணமாக "In Ceylon Tea Garden” என்ற கவிதைத் தொகுப்பை சக்தி பால ஐயா இலங்கைத் "தேயிலைத் தோட்டத்திலே” என மொழிமாற்றம் செய்தாக கூறப்படுகின்றது. சக்தி பால ஐயாவின் நூலில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண் வாசனைப் பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. சக்தி பால ஐயாவின் கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்ப்பு என்று கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும் (இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த போது, சி.வி.யின் படைப்பின் தாக்கத்தினால் தனது ஆக்கம் வெளிப்பட்டதேயன்றி மொழிபெயர்ப்பென தாம் குறிப்பிடப்படவில்லை என்று சக்தி பால ஐயாவின் தனிப்பட்டவகையிலும் சில கூட்டங்களிலும் கூறியதை கேட்டிருக்கின்றேன்). சி.வி. அவர்கள் அரசியல்வாதி யாக, தொழிற்சங்கவாதியாக இருந்தவர். இலக்கியத் தளத்தில் மட்டுமே இயங்கியவரான சக்தி பால் ஐயா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதோர் வினாதான் (லெனின் மதிவானம் - 2010).
புதிதாய்க் கண்டெடுக்கப்படும் ஸி.வி.யின் படைப்புகள் தக்கபடி பரிசோதிக்கப்பட்டும், அவற்றின் நம்பகத் தன்மை ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். வரலாற்றுச் சுருக்கங்கள், குறிப்புரைகள், சில முக்கிய தகவல்கள் என்றவகையில், சில தகவல்கள், பயனுள்ள சங்கதி களையும், செய்திகளையும் தொகுத்தளித்தல் வேண்டப்படுவதாகும். இவ்விடத்தில் பிறிதொரு முக்கிய விடயம் பற்றிச் சற்று அழுத்திக் கூற வேண்டி யுள்ளது. "பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் முன் னோடி முயற்சிகள் மேற் கொள் ளப் பட்ட வேளையில் சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் முதலியோருக்கே பழந்தமிழ் நூல்கள் சிலவற்றின் பெயர்கள் சரிவரத் தெரியாத நிலையிலே, சில தமிழ் “ஆர்வலர்கள்” வினோதமான பெயர்களுடன் சிலபல "பழந்தமிழ்” நூற் பிரதிகளைப் பற்றிப் பேசலாயினர். உதாரணமாக த.மு. சொர்ணம்பிள்ளை என்பவர் "இன்னிலை”, “ஊசிமுறி" முதலிய நூல் களைத்தாமே இயற்றிப் பழந்தமிழ் நூல்கள் எனப் பறை சாற்றினார். பிற்பட்ட ஆராய்ச்சிகளினால் இப்பொய்மை ஐயத்திற்கிடமின்றி அம்பலப்படுத்தப்பட்டதெனினும், இலக்கிய உலகிலே சிலகாலம் குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியது என்பதில் ஐயமில்லை. (கைலாசபதி.க. 1974, இலக்கிய சிந்தனை). முந்திய பதிப்புகள் மாத்திரமன்றி கையெழுத்துப் பிரதிகள் வெளிவந்த பத்திரிகைகள், பிரதிகள், மேற்கோள்கள், எடுத்தாண்டோர் படங்கள் என்பனவற்றை நுணுகி ஆராய்ந்து கூட்டு முயற்சியால் வெளியிடத்

தக்கவையாகும்.“ஸி.வி. பதிப்புக் குழு” ஒன்றினை அமைத்தல் காலத்தின் தேவையாகும். தனியொருவரின் முயற்சியை விட கூட்டு முயற்சி பயன்மிக்கதாகவும் பணியை இலகுபடுத்துவதாகவும் அமையும். இத்துறைச் சார்ந்த அறிஞர்களையும் ஆர்வலர்களையும் கொண்டு இத் தகைய முயற்சிகளை மேற் கொள் வது பயன்மிக்கதாக அமையும்.
அன்னாரின் புனைப் பெயர்கள் பற்றிய பூரணமான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்க வில்லை. கைலாசபதி, செ.கணேசலிங்கம் முதலா னோரின் ஆக்கங்கள் வெளிவந்த பிரசுரங்கள், காலம், வெளியீட்டாளர்கள்- சில சமயங்களில் ஆக்கங்கள், நூல்கள் பற்றிய தகவல்களுடன் நூலகவியலாளர் என். செல்வராஜா தொகுத்துள்ளார். இவை சமூக ஆளுமை கள் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவியுள்ளன. R.வி உட்பட மலையக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இவ்வாறு பட்டியற் படுத்தப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து ஆக்கப் பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமானதாகும்.
இதுவரை ஸி.வி. பொறுத்து வெளிவந்த ஆய்வுகளை நோக்குகின்ற போது அவற்றில் பல வழிப்பாட்டு முறையாகவே காணப்படுகின்றன. மலையக சமூகத்திற்கு அவரது பங்களிப்பு வெளிக்கொணரப்பட வேண்டும் என்றவகையில் அவர் பற்றி மறுவாசிப்பு அவசியம். அரசியல் பண்பாட்டுத் தளத்தில் அவரது செயற்பாடுகள் வியப்பை அளித்த போதிலும் அவர் மீதான வழிபாட்டுணர்வுக்கு இடந்தராமல் விமர்சித்து விளக்குவதே சமூக பயன்மிக்க அம்சமாக காணப்படும். அதேசமயம் அன்னாரின் ஒவ்வொரு துறைசார்ந்த பங்களிப்புகளும் பன் முக நோக்கில் வெளிக் கொணரப்படல் அவசியமானதாகும். அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைகளில் இடம்பெற வேண்டும். முதலாவது, ஸி.வி.யை பல்துறை நோக்கில் அணுகி ஆராய்பவையாக இருத்தல் வேண்டும். சமூகவியல் நோக்கில் ஸி.வி.யின் சமூக முக்கியத்துவம் வரலாற்றுக் கதியில் அவரது சிந்தனைகளும், போதனைகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து ஆராய்தல் இதன் பாற்படும். இரண்டாவது, ஸி.வி.யை பின்பற்றி எழுந்த மரபு அவரை பின்பற்றியும் அவரை மீறியும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். மூன்றாவது, வரலாற்றுப் பின்னணியில் ஸி.வி.யை மதிப்பிடுதல் முக்கியமானவையாகும். நான்காவதாக ஸி.வி. குறித்து வெளிவந்த ஆய்வுகள், மதிப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றியதாக இருத்தல் வேண்டும்.
இந்தவகையில் ஸி.வி.யின் நூற்றாண்டு நிறைவு நினைவையொட்டிய செயற் பாடுகள் , கருத்தரங்குகள், வெளியீடுகள், கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஸி.வி. என்ற பெருமகனுக்காக நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
• 27 ஜீவநதி 72 புரட்டாதி 2014
டெ7துசன நூலகம்

Page 30
அ ஞ் ச லி
சாரல்
62(ყD [[]
1960 காலப்பகுதியிலிருந்து மலையக இலக்கியத் துறையில் சாரல்நாடண் என்று அறியப்பட்டிருந்த C. நல்லையா அவர்களின் எழுதுகோல் 31-07-2014 வியாழன் அன்று மெளனித்து விட்டது. சிறுகதை, குறுநாவல், நாவல், ஆய்வுக் கட்டுரைகள், கவிதை என்று பனி முக ஆளுமையை கொணர் டிருந்த சாரல்நாடன் கோ. நடேசைய்யர், பத்திரிகை யாளனி நடேசைய்யர் போன்ற நூல்களுக்கு சாகித்திய மணி டல பரிசைப் பெற்றுக் கொண்டதன் மூலம், மலையக இலக்கியங் களிலும் தேசிய, சர்வ தேசிய மட்டத்திலும் இலக்கிய உலகில் சிலாகித்து பேசப்பட்டவர் ஆவார்.
ஒரு தோட்டத்தொழிற்சாலை உத்தி யோத்தராக தனது தொழிலை மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலையில் அவர் இருந்தாலும், ஹைய்லேணர்ட்ஸ் முன்னாள் அதிபரும்
மலையக இளைய தளபதியுமான இர. சிவலிங்கம் அவர்களின் பாசறையில் புடம் மீண்டும் போடப்பட்ட ஒருவராவார். 19626
சாரலிநாடன் சுவடிகள் திணைக் சிறுகதை களத்தின் வளங்களை முறையாக பயணி | இரண்டா படுத்திக் கொணர் டவர்களுள் முதன்மை இலக்கிய யானவர் எனில் தவறிக்காது மலையகத்தின் எழுதிய க ஆய்வுத்துறையில் மலையகம், மலையக காலப்பகு இலக்கியம், நாட்டாரியல், வரலாறு, மலையக வெளிவர அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க செயற் முரசு, ம6 பாடுகள் போன்றன பற்றி பல தகவல்களை வற்றினை வெளிக்கொணர்ந்து தமிழாக்கி நூலாக்கி ரீதியில் ச யவர்களுள் பிரதானமானவர் எனலாம். ஆய்வு ( அந்தனிஜிவா அவர்கள் கூறுவது போல் அருணாக புனைவை கைவிட்டு ஆய்வுத்துறையில் தனது பற்றி பார கவனத்தை செலுத்திய ஒருவர் ஆவார். சர்ச்சைக (தினகரன் வார மஞ்சரி ஒகஸ்ட் 3ஆம் திகதி கட்டுரையில்) 09-05-1944 இல பிறந்த பொருளில் சாரல்நாடண் 31-07-2014 வெள்ளிக்கிழமை கூறிச் .ெ அன்று இறக்கும் வரை ஓயாது எழுதிய பெறமுடிய வண்ணமே இருந்துள்ளார். அவரது தொழில் ஒன்றல்ல காரணமாக சில காலம் ஒதுங்கி இருந்தாலும் அரிதில்
ஜீவநதி 72 புரட்டாத 204
 
 

மொழிவரதன்
நாடன் எனும் லையக ஆய்வாளன்
அந்தனிஜீவாவின் தூண்டுதலால் எழுதத் தொடங்கினார். வீரகேசரி நடத்திய மலையக எழுத்தாளர்களுக்கான
போட்டியில் இவருடைய "கால ஓட்டம்” என்ற சிறுகதை வது பரிசை பெற்றுக் கொண்டதன் மூலம் "சாரல்நாடன்” உலகுக்கு சிறப்பாக அறிமுகமானார். சாரல்நாடன் கவிதைகள், சிறுகதைகள் பல 1960களுக்கு பின்னரான நதில் தேசிய பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் த் தொடங்கின. சுதந்திரன், செய்தி, ராதா, மலர், மலை லைப் பொறி, தினகரன், வீரகேசரி, சிந்தாமணி போன்ற குறிப்பிடலாம். எவ்வாறுரெனினும் தேசிய, சர்தேச ாரல்நாடனுக்கு அங்கீகாரத்தினை வழங்கியது அவரது முயற்சிகளே எனினர் தவறில்லை பேராசிரியர் க. ஈலம் அவர்கள் மிகச் சிறப்பாக இவரது ஆய்வு முயற்சிகள் ாட்டியுள்ளார். (இவ்விடயம் நூலுருப் பெற்றப்போது சில ள் எழுந்தன எனலாம்) சாரல் நாடனின் வியத்தகு தேடுதல் முயற்சிகள் என்ற ல் பேராசிரியர் க. அருணாசலம் அவர்கள் பின்வருமாறு சல்கின்றார். "நம்பகரமான சான்றுகளை இலகுவாகப் பாத ஒருவிடயம் பற்றி ஆய்வு செய்தல் இலகு வான இந்நிலையில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு
முயன்றே நம்பகரமான சான்றாதரங்களைத் திரட்ட

Page 31
வேண்டும். திரட்டியவற்றை நுட்பமாக ஆராய்தல் வேண் டும் ” என் று கூறிச் செல்லும் அவர் சாரல் நாட ன ன ஆய வு முயற் சி க ளு ம் இத்தகையன வே" என்கிறார் (சாதனையாளர் சாரல் நாடன் பக்கம் - 13, 14) சாரல்நாடன் தேசிய சுவடி திணைக்களத்தில் சேகரித்த விபரங்களை கலாநிதி குமாரி ஜயவர்த்தனா போன்ற மேதைகளோடு கலந்துரையாடி சரிசெய்து கொண்டமை பற்றியும்
சாரல்நாடன் குறிப்பிடுகின்றார்.
மலையக மக்கள் வரலாறு பற்றிய தேடல் களில் ஈடுபட்ட சாரல்நாடன் உண்மையில் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்லன் எனினும். அவரது முயற்சியில் அவர் அதற்குரிய குறைந்த பட்ச தகைமையையாவது பெற்றுக் கொண்டார் எனலாம்.
பேராசிரியர் செ.யோகராசா அவர்களும் சாரல்நாடனின் ஆய்வு முயற்சி பற்றிக் கூறியுள்ளார். (சாதனையாளர் சாரல்நாடன் செ. யோகராசா பக்கம் 33, 34.) அவர் கூற்றிலிருந்து சாரல்நாடனின் ஆய்வு முயற்சிகளே அவரை இலக்கிய உலகில் வெளிச்சம் போட்டுள்ளது என்பதான கருத்து வெளிபடுகின்றது எனலாம். செ. யோகராசாவின் கூற்றுக்களில் ஒன்று அவரது கவனத்திற்குட்பட்டது பின்வரும் நூல்கள் என்கிறார்.
இவையாவும்சாரல்நாடனின் ஆய்வுநூல்களே சி.விசில சிந்தனைகள் (1986) தேசபக்தன் கோ.நடேசய்யர் (1988) மலையக வாய்மொழி இலக்கியம்(1993) மலையகம் வளர்த்ததமிழ் (1997) பத்திரிகையாளர் நடேசய்யர் (1998) இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999)
பேராசிரியர் செ. யோகராசா சாரல்நாடன் தொடர்பாக கொண் டிருந்த எண்ணத்தையே பேராசிரியர் அருணாசலம் அவர்களும் கொண்டி ருந்தார்கள் எனலாம் மலையக தமிழர் வரலாறு, சி.வி சில சிந்தனைகள், தேசபக்தன் கோ. நடேசய்யர், பத்திரிகையாளர் நடேசய்யர், மலையகத் தமிழர் வரலாறு போன்ற நூல்கள் பற்றி பேராசிரியர் க.அருணாசலம் சிலாகித்து எழுதியுள்ளார். மேலும் மொழி இலக்கிய ஆய்வாளனாகவும், ஓர் இலக்கிய கர்த்தாவாகவும் பேராசிரியர் க.அருணாசலம் சாரல் நாடனை காண்கிறார். மலையகத்தின் ஆய்வாளரும், எழுத்தாளருமான மு. நித்தியானந்தன் சாரல்நாடனின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாப செய்தியில் அவரது ஆய்வு பற்றியே சிறப்பாக கூறியுள்ளார்.
"மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாரல் நாடனின் மறைவு ஈழத்து இலக்கியப் பரப்பில் ஓர் உன்னத ஆளுமையின் இழப்பைக் குறித்து நிற்கின்றது. மலையக இலக்கியம் பற்றியும் அரசியல் ஆளுமைகள் குறித்தும் சாரல்நாடன் இறுதிவரை ஓயாது எழுதி வந்திருக்கின்றார். மலையக இலக்கிய வரலாற்றினை கட்டமைப்பதில் அவர் மேற்கொண்ட ஆய்வு முயற்சிகள் வரலாற்றில் அவரது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளன.” என்றுகூறிச் செல்கின்றார்.

பதுளையை பிறப்பிடமாகக் கொண்ட திரு.மு நித்தியானந்தன் மிக ஆரம்ப காலங்களில் இருந்து (1960க்கு பின்னர்) இற்றை வரை மலையக மானிட வரலாறு, மலையக இலக்கியம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவராவார். எனவே சாரல்நாடனின் ஆய்வு பற்றிய அவரது குறிப்புகள் கவனத்தில் கொள்ளத் தக்கன.
மலையக படைப்பாளியான சாரல்நாடன் தேசிய ரீதியாக அங்கீகாரத்தை பெற்றிருந்தார் என்பதற்கு சில ஆதாரங்களை கூறலாம். இதற்கு அவரது ஆய்வு ஆளுமையே அடிப்படையாகதிகழ்கிறது என்று துணிந்து கூறலாம். கொழும்பு தமிழ்ச்சங்கம் ஈழத்து ஆளுமைகள் வாழ்வும் வகிபாகமும் எனும் தொனிப்பொருளில் முக்கியத்துவம் பெற்ற சில அறிஞர்களினது நூல்களை வெளியிட்டு வந்தது இந்தத் தொடரில் மலையகத்தின் இளைய தளபதி இர. சிவலிங்கம் பற்றி சாரல்நாடன் எழுதிய நூலை வெளியிட முடிவு செய்தமை மலையக இலக்கிய உலகுக்கான ஓர் அங்கீகாரமாக நாம் கொள்ளலாம்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் 'இளைஞர் தளபதி இர. சிவலிங்கம்' எனும் சாரல்நாடனின் நூலுக்கு வழங்கவுள்ள அணிந்துரையில் பின்வருமாறு கூறிச் செல்கின்றார். “ஈழத்து ஆளுமை வாழ்வும் வகிபாகமும் என்ற தொனிப் பொருளில் தவில் மேதை தட்சணா மூர்த்தி, பண்டிதர் திரு ம.வே.சிவஞானசம்மந்தப் பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிபிள்ளை, நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், தசாவதானி கதிரைவேற்பிள்ளை ஆகியோர் பற்றி எழுதிய நூல்கள் ஏற்கனவே தமிழ் சங்கத்தினால் வெளியிடப்பட்டு தமிழ்கூறும் நல்லுலகை சென்றடைந்துள்ளன. இந்நூல் முயற்சிகள் காத்திர மானவை என தமிழ் பேசும் சமூகத்தினரின் பாராட்டுக்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவை வழங்கிய உற்சாகம் உந்துதல் காரண மாக தற் போது மலையகத்தில் வரலாறு படைத்த சொல்லின் செல்வர் இளைஞர் தளபதி எனப் பலவாறு பாராட்டப்பட்டு மலையக மக்களின் வாழ்வு மேம்பட பணிபுரிந்த அமரர் இர. சிவலிங்கம் அவர்கள் பற்றிய இந் நூலை வெளியிடுவதில் தமிழ்சங்கம் பெருமிதம் உறுகின்றது.
"அப்பெரியார் பற்றி அரும் பெரும் தகவல்களை பல சிரமங்களுடன் தேடி கண்டறிந்து படித்து உள்வாங்கி முறையாகத் தொகுத்து இலகு தமிழில் எழுதி பிரசுரத்திற் காக எம்மிடம் சமர்ப்பித்த எழுத்தாளர் சாரல்நாடன் எமது பாராட்டுக்குரியவர்” என்று கூறிச் செல்கின்றார் இதே போன்று குமரன் பதிப்பகம் இலங்கை தமிழ்ச்சுடர் மணிகள் எனும் தலைப்பில் வெளியிட்டுக் கொண்டிருந்த நூல் வரிசையில் மலையக நிர்மாணச் சிற்பி கோ. நடேசய்யர் அவர்கள் தொடர்பான சுருக்கமான ஒருநூலை வெளியிட முன்வந்து வெளியிட்டது. அவரது ஆய்வு நூலுக்கு கிடைத்த ஒரு வரவேற்பெனலாம். இலங்கை தமிழ்ச்சுடர் மணிகள் நூல் வரிசையில் பன்னி ரண்டாவது நூலாக சாரல்நாடனின் நூல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குமரன் பதிப்பகத்தின் இலங்கை தமிழ்சுடர்மணிகள் வரிசையில் பதினெட்டா
ஜீவநதி 72 புரட்டாதி 2014 ஆம்
29

Page 32
வது நூலாக சாரல்நாடன் எழுதிய சி.விவேலுப்பிள்ளை (சுருக்கநூல்) நூல் வெளியிடப்பட்டுள்ளது. மீளவும் இந்நூல்கள் வெளியிடப்பட்டமைக்கான காரணம் நூலின் முக்கியத்துவம் கருதி அல்லது சாரல்நாடனின் ஆளுமைக்கான ஓர் அங்கீகாரத்திற்காக என்று எடுத்துக்கொள்ளலாம்தானே..?
பேராசிரியர் கா. சிவத்தம்பி "ஈழத்து இலக்கிய வரலாற்றின் மூலநாயகர்களுள் ஒருவர் சாரல்நாடன் என்று” குறிப்பிடுவதாக அந்தனி ஜீவா “மலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல்நாடன்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். (தினகரன் வாரமஞ்சரி2014ஒகஸ்ட் 3ம் திகதிஞாயிறு)
மதுரை அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் எச். போத்திரெட்டி அவர்கள் சாரல் பற்றி ஒருமுறை குறிப்பிடுகையில்
"1930 களுக்கு பிற்பட்டகாலத்தை நடேசய்யர் யுகம் என்றும் 1950களின் பின்னர் சி.வி வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980 களுக்கு பின்னர் உள்ள காலப் பகுதியை சாரல்நாடன் யுகம்” என்றும் பிரித்து பார்க்க வேண்டி இருக்கும்” என்றார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள சாரல்நாடன் இறந்த வேளை கொழும்பு தமிழ்சங்கம் தனது அனுதாபச் செய்தியில் அவரது ஆய்வு பற்றியே விதந்து கூறி செல்வதைக் காணலாம். "ஆக்க இலக்கியத்துறையிலும் விசேடமாக மலையக ஆய்வு இலக்கியத்துறையிலும் அன்னாரின் பங்களிப்பு அளப்பரியது. பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தமது ஆற்றலை வெளிப் படுத்திய சாரல்நாடனின் நூல் ஒன்றினை கொழும்பு தமிழ்சங்கமும் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளமை மறக்க முடியாத நினைவுகளாகும். தமிழ்சங்கம் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கிய “மாநாடுகளிலும் இலக்கிய விழாக்களிலும் பங்கு பற்றி தமது இலக்கிய ஆளுமையை நிலை நிறுத்திய ஆய்வாளரை எப்படி மறப்போம்” (வீரசேகரி ஆகஸ்ட் 5-2014 பக்கம் 11)
மேற்குறிப்பிட்ட கூற்றுக்கள் சாரல்நாடனை கோ.நடேசய்யர் சி.வி.வேலுப்பிள்ளை போன்றோர் வரிசைக்குகொண்டு செல்லுகின்றது எனலாம்.
சாரல்நாடன்என்ற இந்தமலையக ஆய்வாளனின்
ঠু 毅
.
மு.ஆ.சமனின் முகாரி பாடும் முகங்கள் கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா 10.8.204 அன்று ச.விஸ்வரூபண் தலைமையில் நடைபெற்றது. வெளியீட்டுரையை கவிஞர் த.ஜெயசீலனும், மதிப்பீட்டுரையை கவிஞர் த அஜந்தகுமாரும் நிகழ்த்தினர்
ஜீவநதி 72 புரட்டாத 204
3O
 
 
 

இழப்பு ஈடுசெய்ய முடியாத ஓர் இடைவெளியே என ஜனாதி பதியின் இரங்கச்செய்தி குறிப்பிடுவதில் உண்மைகள் உள்ளன. மலையகம் தொடர்பான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் பெருமளவிலான தகவல்களை வெளிக்கொணர்ந்தவர் சாரல்நாடன் ஒருவரே எனலாம்.
இனி என ன? சாரலநாடனினர் இறுதிக் கிரியைகளிலும் இரங்கல் உரைகளிலும் அவர் யார்? என்பதை வெளிப்படுத்தியது. கொட்டும் மழையிலும் சாரலிலும் சாரல்நாடன் என்ற அந்த ஆய்வு மேதைக்கு பலர் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினர். கொட்டகலை தமிழ் சங்கமும் பின்வருமாறு ஒரு கவிதை மூலம் தனது அஞ்சலியை செலுத்தியிருந்தது.
ஓர் எழுது கோல் மெளனித்தது
சங்க இலக்கியத்தில் கொண்ட காதலால் நீ "சாரல்நாடன்” எனத்தனை அழைத்துக் கொண்டாய்! எங்கள் மலையகத்தின் சரித்திரத்தினை முறையாய் தேடி எல்லோருக்கும் தெளிவாய் புரிய வைத்தாய்! நடேசய்யரை நீஆய்ந்ததனால் இலங்கை நாடே உனை அறிந்து கொண்டது சி.வி எனும் மலையக சிற்பியின் சிறப்பினை அழகாய் எடுத்துரைத்தாய் தங்கத்தமிழில் மங்கா எழுத்துக்களால் தாராளமாய் தளராது நீ எழுதி வந்தாய் அசுரத்தனமான உன் தேடல்களால் தகவல்கள் பனுவல்களாய் பரிணமித்தன பல வடிவங்களில் பசுமரத்தாணியாய் பதிவுகள் பதிவாகிட பரிசுகள் விருதுகள் உனை அலங்கரித்தன 鲁 ஓ! இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த உனது கரங்கள் இன்று எப்படி ஐயா ஓய்ந்தது? சாரலில் பிறந்து சாரல்நாடனாகி சாரல் அகத்தில் வாழ்ந்தவனே! தூரலாய் விழும் மழைத் துளிகளும் கூட உன் துயரில் பங்கு கொண்டு அழுகின்றதோ..? கொட்டகலை தமிழிச் சங்கம் உன் பிரிவிற்காய் ஓர் கணம் மெளனித்து மெளனாஞ்சலி செலுத்துகின்றது. .
முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் நூல் வெளியீட்டுவிழா 23.8.2014 மெல்பனில் திரு.கந்தையா குமாரதாசன் தலைமையில் நடைபெற்றது. விமர்சன உரைகளை இநவரத்தினம் ஆவுரான் சந்திரன் ஜெயராம சர்மா டொக்டர் நடேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.

Page 33
குறும்படப் பயிலரங்கு
ஆடி மாதம் 10-14 வரை, யாழ்ப்பாணம் திருமறை நடைபெற்றது. அஜெண்டா - 14 என்னும் அமைப்பு இதனை ராஜகருண ஆவார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்க பதிவுசெய்திருந்தபோதும் 38 பேரே வந்து பங்குபற் பங்குபற்றியவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் பங்குபற்றியவர்களில் பலர் ஏற்கெனவே தன்னார்வ முய உதாரணமாக சிவராஜ் சமநிலை', ‘பை ஆகியவற்றையும்; மதிசுதா மிச்சக்காசு என்பதையும் ஆக்கியுள்ளனர்.
வளவாளர்களாக கலாநிதி தா.சனாதனன், நுணி நெறியாளர்களான பிரசன்ன விதானகே - அசோக ஹந்தகL முதலியோர் பணியாற்றினர். அவர்கள் முறையே “க திரைச்சுவடி எழுதுதல்’, ‘ஒளிப்பதிவு ஆகிய தலைப்பு பற்றியும் உரையாற்றியுள்ளார்.
6řibGU IT60frá 63.6i 6NaFTgufT (Stoning of Soraya), 6AU6öf(Te காட்டப்பட்டன; அத்துடன் பயிலுநர்களால் ஏற்கெனே கருத்துகள் பரிமாறப்பட்டன. -
தன்னார்வ முயற்சியாக குறும்பட ஆக்கத்தில் ஈடு பயிலரங்கு புதியது. துறைசார்ந்த அறிவையும் உரிய வழங்கியுள்ளது. அவர்களின் திறமை மேலும் செம்ை உதவியிருக்குமென நம்பலாம். உணர்மையில், உரிய துறைகளிலும் தேவையாயுள்ளமையை, யாரும் மறுக்க இத்தகைய பயிற்சிக்கான தேவை, நமது பகுதிகளி பயிலரங்குகள் ஒழுங்குசெய்யப்பட வேண்டும்; அவற்றா அதன் தொடர்ச்சியாக திரைப்பட முயற்சிகள் நடைபெறு அடையாளங்களும் வெளிப்படும் கலைப்படைப்புகள் உரு (பயிலுநராகக் கலந்துகொண்ட - குருநகரைச் ே இங்கு பயன்படுத்தியுள்ளேன்; அவருக்கு எண் நன்றி!)
 
 

க் கலாமன்றக் கலைக்கோட்டத்தில் குறும்படப் பயிலரங்கு ஒழுங்குசெய்து நடத்தியது; இதன் அமைப்பாளர் அனோமா
ளப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 பேர் றினர். யாழ்ப்பாணத்திலிருந்து 12பேர் பங்குபற்றினர். வழங்கப்பட்டதுடன் பயணப் படியும் வழங்கப்பட்டது. பற்சியாக, சில குறும்படங்களை உருவாக்கியுமுள்ளனர். கலீஸ் "குரும்பையையும்; தர்மலிங்கம் 'ஏன்?’ என்பதையும்,
கலை விரிவுரையாளர் பா.அகிலன், சிங்களத் திரைப்பட D; ஒளிப்பதிவாளர் எம்.டி. மகிந்தபால, அனோமா ராஜகருண காட்சிகளை விளங்கிக்கொள்ளல்’, 'யார் வில்லன்?’,
களில் உரையாற்றினர்; இன்னுமொருவர் படத்தொகுப்பு
n), ஒபத் எக்க, ஒப நத்துவ ஆகிய முழுநீளத் திரைப்படங்கள் வே ஆக்கப்பட்ட சில குறும்படங்களும் காட்டப்பட்டுக்
பட்டவர்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் இத்தகைய வழிகாட்டல்களையும் அவர்களுக்கு இப்பயிலரங்கு மயாக வெளிப்படுவதற்கு இங்கு வழங்கப்பட்ட பயிற்சி திறனாளர்கள்மூலம் வழங்கப்படும் பயிற்சி எல்லாத் முடியாது. அதிலும் திரைப்படத் துறை போன்றவற்றில் லி இன்றியமையாததாகவுள்ளது. இன்னும் மேலதிக ல் நமது இளைய தலைமுறையினர் பயன்பெறுவார்கள்; றும்போது, நமது வாழ்வும் சூழலும் பிரச்சினைகளும் தனி Ջ/TeԵԼԻ! சர்ந்த, கலீசுடன் கதைத்தபோது பெற்ற தகவல்களையே
ஜீவநதி 72 புரட்டாதி 2014

Page 34
உன்னுடனும், நீ இல்லாமலும்
ஒரு நாள் மாலை, பிரசன்ன விதானகேயின் ஒபத் எக்க, ஒபநத்துவ (உன்னுடனும்,நீஇல்லாமலும்) என்னும் சிங்களப் படம் பயிலுநருக்குக் காட்டப்பட்டது. அனோமா தகவல் தந்ததால், நானும் ஜி.ரி. கேதார நாதனும் அதைப் பார்க்கச் சென்றிருந்தோம்; வேறு சிலரும் அவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் இரணர் டு வருடங்களுக்கு முனனரே தயாரிப்பு வேலைகள் முடிவடைந்து, வெவ்வேறு நாடுகளில் திரைப்பட விழாக்களிலும், வெளித்திரையரங்குகளிலும் இப் படம் காட்டப் பட்டுப் பாராட்டுக் களைப் பெற்றுள்ளது. ஆயினும், இலங்கையில் ஏனோ இது இன்னும் திரையிடப்படவேயில்லை!
DBDD DD 缀※※※
with you, without you
gDSD
மலைநாட்டில் பொகவந்தலாவையில் கதை நிகழ்கிறது; கதைநிகழ் காலம் வன்னியில் இறுதிப் போருக்குப் பிந்திய ஆணர்டுகளாகும். முன்னாள் இராணுவத்தினனான சரத் சிறி அடகுக் கடை நடத்துகிறான். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வி, பாதுகாப்புக்காக அங்கே ஒரு தமிழ்க் குடும்பத்தினரிடம் பெற்றோரால் முன்னரே சேர்க்கப்பட்டிருந்தவள். போரில் பின்னர் பெற்றோருக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை; ஆனால், பாடசாலை மாணவர்களான அவளது இரணிடு தம்பிமாரும் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். பணக் கஷ்டத்தில் தன்னிட முள்ள சிறிய நகைகள் ஒவ்வொன்றையும் அவ்வப் போது சரத் சிறியினர் கடைக்குச் சென்று அடகு அவைக்கிறாள்; சரத் சிறி அவளை அனுதாபத்துடன்
ஜீவநதி 72 புரட்டாதி 2011
 

அவதானிக்கிறான். அவள் தங்கியிருந்த குடும்பத்தி லுள்ள இரண்டு பெண்கள், வயதுபோன ஒருவரைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றனர். தனது வீட்டில் வேலைசெய்யும் தமிழ்ப் பெண்ணின்மூலம் இதனை அறியும் சரத் சிறி, தானே செலவியைத் திருமணம் செய்யலாம் என்பதை அவளின் மூலம் செல்விக்குத் தெரியப்படுத்துகிறான். முதலில் அவள் மறுத்தபோதும், தனது கையறு நிலையினால ஒப்புக் கொணர்டு, அவனைப் பதிவுத் திருமணம் செய்கிறாள்.
அவனைப்பற்றி அறிய அவள் விரும்புகிறாள்; ஆனால் அவன் ஒன்றையும் சொல்வதில்லை. தனது ஆசைகள், தேவைகள், கடந்தகாலம் பற்றி அவனிடம் சொல்லவும் விரும்புகிறாள்; அவற்றை அறிவதிலும் அவன் ஆர்வம் காட்டுவதில்லை. ஆயினும், வாழ்க்கை எப்படியோ சின்னச்சின்ன மகிழ்வுடன் கழிகிறது. இடையில் ஒருநாள், இராணுவத்திலிருக்கும் சரத்சிறியின் நண பணி வந்து அவர்களுடனர் தங்குகிறானர்; அவனின்மூலமே, சரத்சிறி ஒரு முன்னாள் இராணுவத் தினண் என்பது செல்விக்குத் தெரியவருகிறது. தனது தம பரியைக் கொன ற வர் களர் , பென களை கி கற்பழித்தவர்கள், நம்மவரின் பொருள்களை அழித்த வர்கள் என்ற நினைவில் வெறுப்புகொண்டிருக்கும் செல்வியால், தனது கணவனும் இராணுவத்தில் இருந்த ஒருவன் என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை; மன நெருக்கடிக்குள்ளாகிறாள். தான் ஒருபோதும் கற் பழிப்பில் ஈடுபடவில்லை; தனது நண்பர்கள் திருகோண மலையில் ஈடுபட்ட அத்தகையதொரு சம்பவத்தில், அவர்களைக் காப்பாற்றப் பொய்மட்டுமே சொன்னதாக சரத்சிறி சொல்வதை, அவள் ஏற்பதில்லை. அந்த

Page 35
மனநெருக்கடி காரணமாகவே தனது மனதைச் சாந்தப் படுத்த அவளை மணந்ததாகவும், ஒருதடவை சரத்சிறி சொல்கிறான். அவனின் நல்ல குணத்தையும் தன் மீதுள்ள அக்கறையையும் அவள் உணர்கின்றபோதும், அவனைத் தன்னால் இனி முழுமையாக நேசிக்க முடியாதென்ற நினைவில் மனச் சிதைவுக்கு உள்ளாகும் செல்வி, ஒருநாள் கணவன் வெளியே சென்றிருந்த வேளை, தனது மாடிவீட்டின் யன்னலால் குதித்து தெருவில் வீழ்ந்து இறந்து போகிறாள்!
ரஷ்ய எழுத்தாளரான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய, Gentle creature எனினும் சிறுகதையை (அடக்கமான பெண் என்னும் தலைப்பில் நா. தர்மராஜனால் மொழியாக்கம் செய்யப்பட்ட இக்கதை, ராதுகா பதிப்பகம் - மொஸ்கோ 1973இல் வெளியிட்ட, ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.) அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். மணிகவுல் என்ற முக்கிய இந்திய நெறியாளரும், வேறு சில ஐரோப்பிய நெறியாளரும் இக்கதையை வைத்து ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியுள்ளனர். ஆயினும், அவர்களிலிருந்து மாறுபட்டமுறையில், இலங்கையின் நீண்டகால இன முரண்பாட்டுப் பிரச்சினை பற்றிய புரிதலை வெளிக்கொண்டுவரும் முறையில், பிரசன்ன விதானகே திரைக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கிய பாத்திரங்களான சரத்சிறியும் செல்வியும் சிங்கள - தமிழ் இனங்களின் பிரதிநிதிகள் போல் உள்ளனர். கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகள் இரணர்டு மானுட ஜூவிகளிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், உறவு நெருக்கத்தில் ஏற்படும் தடைகள், இறுதியில் செலவியினர் தற்கொலை என்பன, தாக்குவலுவுடன் - காட்சிப் பிம்பங்களாக திரைப்பட ஊடகத்தில பரிமாற்றப்படுகின்றன. சரி பிழை எதுவென்று சொல்ல நெறியாளர் முனையவில்லை; எந்த ஒரு பாத்திரத்தின்மீதும் அவர் கூடுதலான பரிவைக் காட்டவுமிலி லை. தனது நேர் காண லொன்றில், இரணர்டு பாத்திரங்களையும் புரிந்து கொள்ள முயலுமாறே அவர் பார்வையாளருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். என்றாலும், தமிழ்த் தேசிய இனத்துக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு; அவர்கள் பாதிப்புக்கு உள்ளானவர்கள்(Victin) போன்ற கருத்துகளைப் பரிவுடன் வெளியரங்குகளில் கூறிவரும் ஒருவராக, பிரசன்ன விதானகே இருக்கிறார். இந்தப் பின்னணியில் பார்க்கை யில், இறுதியில் சரத்சிறி கூறும் வரிகளான, "நீ என்னை ஏற்க மறுத்திருந்தால். வேறொருவரைத் தெரிவுசெய்திருந்தால், சந்தோஷமாக இருந்திருப்பாய்" என்பன, அரசியல்ரீதியில் இன்னொரு பரிமாணச் சிந்தனையைக் கிளர்த்துவதை யும் தவிர்க்க இயலாது.
கூர்மையானதும் வலுவானதுமான திரைக்
கதை, சரத்சிறி - செல்வி பாத்திரங்களின் சிறப்பான பாத்திரச் சித்திரிப்பு, மானுட நிலைமைகளையும் நிலக் காட்சிகளையும் பொருத்தமுற அழகியல்ரீதியில் காட்சிப் படுத்தும் பண்பு போன்றவற்றால், ஒரு திரைக் காவியமாக இது மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்! O
 

வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது .
புகழ்பெற்ற வங்காள மொழித் திரைப்பட நெறியாளரான ரித்விக் கட்டக் (1925 - 1976) தொடர்பான நூலொன்று வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது. என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது. ரித்விக் கட்டக் பற்றி திரைப்பட நெறியாளர் ஜோண் ஆபிரஹாம் எழுதிய
வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது என்னும்
தலைப்பில் ஐ.ஷண்முகதாஸ் எழுதிய நீண்ட கட்டுரை
என்பன முதல் பகுதியில் உள்ளன.
இரண்டாம் பகுதியான நதியோட்டம் என்பதில் -
கட்ட கி பேசுகிறார் எனினும் தலைப் பிலான நேர்காணலும்; இந்தியத் திரைப்படத்தின் பிரச்சினை என்ன?, திரைப்படத்திற்கான எண் வருகை, கலையும்
உண மையும் , தரைப் பட உருவாக கத தன வெளிப்பாடுகள், திரைப்படத்தில் சப்தமும் நிசப்தமும் என்னும் தலைப்புகளிலான கட்டக்கின் கட்டுரைகளும்; தோழர் என்னும் தலைப்பிலான அவரது சிறுகதையும் இடம்பெற்றுள்ளன.
மூன்றாம் பகுதியான வனவலம் என்பதில், கட்டக் என்னும் துயரம் - குமார் சாஹற்னி, கட்டக்கின் படைப்பிசை - பாஸ்கள் சந்த்ரவர்க்கர், நாகரிக் ஒரு குறிப்பு - சப்தர் ஹஷ்மி, பலியின் அடையாளங்கள் - கே.எம். மதுசூதனன் ஆகியோரின் கட்டுரைகளுடன், கசப்பின்
eeے ஜீவநதி 72 புரட்டாதி 2014

Page 36
34
கேமரா எனினும் தலைப்பிலான ஏ. ஐயப்பனின்
கவிதையும் இடம்பெற்றுள்ளன.
‘வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது.” என்னும் நீள் கட்டுரை மலையாளம் வாரிகா பத்திரிகை யில் பிரசுரமானது. மற்றவை, மறைந்த ஜோணி ஆபிரகாமின் ஒடேஸா திரைப்பட இயக்கம் வெளியிட்ட கட்டக் நினைவு மலர் நூலிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாக, பதிப்பகத்தாரின் குறிப்பு தெரிவிக் கின்றது. மொழியாக்கம் செய்தவர், நாவலாசிரியரும் கவிஞரும் ஓவியருமான யூமா வாசுகி ஆவார். இந்த நூலை சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் 2013 இல் வெளியிட்டுள்ளது.
‘மேக தாக்கெ தாரா', 'கோமல் காந்தார்’, ‘சுபர்ணரேகா’, ‘அஜாந்த்ரிக்’, ‘நாகரிக்’, ‘திதாஷ் ஏக்தி நதிர் நாம்’, ‘ஜூக்தி தக்கோ ஆர் கப்போ’ முதலியன ரித்விக் கட்டக்கினி முக்கிய திரைப்படங்களாகும். புனே திரைப்பட தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரை யாளராகவும், அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர் கட்டக்.
ஜோணி ஆபிரஹாமின் கவிதையில் உள்ள சில
வரிகள்:
‘ஒரு விற்பனையாளனின் முடிவு - மாரடைப்பு முற்றிலும் இயல்பானதுதான். கட்டக்கின் மரணம் இயல்பற்றது. இல்லை, ரித்விக்கட்டக் - என்னால் நினைவுகூரமுடிகிறது. ஒரு உயரமான மனிதன்என் தோளுக்கு வரும் நீளமானகரங்கள். ஒளியுறுத்துமொரு அண்மையால் சூழப்பட்ட நான். என்முன்னால் நிற்கும் அந்த மனிதன், என்திறனைக் கேள்விகேட்டபடி என்திறனை அங்கீகரித்தபடி ஒருவருக்கொருவர் அங்கீகரித்தவாறு, ஒரு கை என்கைகளுக்கு வருகிறது. என்னால் நினைவுகூரமுடிகிறது - ஒரு கால் என்பின்புறத்தில் உதைக்கிறது, என்னிடம் சொல்கிறார்: "எழுந்திரு - கண்களைத் திற - ஷூட்." ஜீவநதி 72 புரட்டாதி 2011 徽
 

உணர்ச்சிவசப்படாமல் நான்
இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் ஆனால், ஒளிரும் பெருமையுடன்,
ஷண்முகதாஸ் தனது நீளமான கட்டுரையில், கட்ட க கன வாழி க கைப் பரின னணியையும் திரைப்படங்களையும் விஸ்தாரமாக ஆராய்ந்து விபரிக்கிறார்.
"கட்டக் படங்களில் முகங்களின் அண்மைக் காட்சிகளுக்கும் இயற்கை கி கும் இசைக் கும் பாடல்களுக்குமுள்ள முக்கியத்துவம், கதையில் உள்ள விஷயங்களின் பொருத்தப்பாடு, வெளிப்படுத்தும் பாணிகள் ஆகியவை அதிகமும் இயக்குநரினர் பிரக்ஞைபூர்வமான தேர்ந்தெடுப்பு என்பது நிச்சயம். அதேநேரம் ஒரு திரைப்படம் உருவாகும் கட்டத்தில் உள்ளுணர் வின செயல பாட்டு கி குப் பெரிய முக்கியத்துவம் உணர்டென்று கட்டக் நம்பியிருந்தார். 6 அது, புலனாகா உணர்ச்சிமயமும், பேராவலும், புலனாகா உந்துதலும் ... (It is a blind emotion, a passion, a blind urge).” என்று சொல்கிறார்.
“ஒரு திரைப்படத்தின் தயாரிப்பு வேளையில் உள்ளுணர்வின் சில விஷயங்கள் செயற்படுகின்றன. அவற்றை புலனாகா உணர்ச்சிமயம், பேராவலி , புலனாகா உந்துதல் எனலாம். படத்தை எடுத்து முடித்ததும் அதை எப்படி வேணர் டுமென்றாலும் விளக்கலாம். ஆனால் திரைப்பட உருவாக்க வேளையில் நானிதைக் குறித்தொன்றும் யோசிப்பதில்லை. அவசியம் என்று நினைத்த, சிந்தித்த விஷயங்களை நான் செய்தேன். இது குறித்தெல்லாம் படைப்பாளியிடம் கேட்டுப் பயனில் லை. சரியாகச் சொனி னால் ஆத்மார்த்தமான, மகத்தான எந்தவொரு படைப்புக்குப் பின்னாலும், புலனாகா உள்ளுணர்வின் உத்வேகம் உணர்டு,
கலைஞனுக்குச் சுதந்திரம் இல்லை யென்றால், தன் மனதை இஷ்டப்படி இயங்கவைக்க முடியவில்லை என்றால், கலை செயற்கையானதாக ஆகிவிடும். அது கைவினைஞனின் செயற்படாகிவிடும். அவை நல்ல பயனர்களைத் தரக்கூடச் செய்யலாம். ஆனால் ஒரு கலைஞனின் ஆழமான உணர்ச்சிகளை
அங்கே பார்க்க முடியாது. உணர்ச்சிகள் நிறைந்து

Page 37
நிற்கும்போது சிந்தனைக்கு அதிக முக்கியத்துவ மில்லை. அது அப்படித்தானி " என அதனை
விபரமாகவே தனது நேர் காண லில கட்டக விபரிக்கிறார்!
‘கட்டக் என்னும் துயரம் என்னும் கட்டுரையில் குமார் சாஹற்ணி,
"கட்டக் மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். மாணவர்களுக்கும் அவருக்குமான குரு சிஷ்ய உறவு, சற்றும் சம்பிரதாயமற்றதாக இருந்தது. அக்காலத்தில் திரைப்படக் கல்லூரியில் என்னுடன் மணிகெளலும் மஹாஜனும் அஸ்ராணியும் இருந்தனர். பெரும்பாலும் கட்டக் ஒரு பைத்தியக்காரனைப் போன்றே இருந்தார் - அவரை அறியாதவர்களுக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால், அந்த ‘பைத்தியத் தன்மை படைப்பு ரீதியாகவும் எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது” எண்கிறார்.
“இயற்கையின் ஒலிகளிலிருந்து உயிர்த் துடிப்பான இசையை உருவாக்கவும் அவரால முடிந்திருக்கிறது. மேக தாக்கெதாராவின் ஒலிப்பதிவில் இதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன. நதிக்கரையில் தவளைகளின் ஒசை, ரயில் மற்றும் வாகனங்களின் சப்தம், வண்டுகளின் ஓசை, மழையின் தாளகதியான ஒலி, காற்றின் சப்தம், குழந்தைகளின் ஒலிகள், அவர்கள் வாய்ப்பாடு சொல்லும் லயம், அடுப்பில் அரிசி வேகும் சப்தம் - இவற்றுக்கெல்லாம் உச்சியில் நிற்கும் ஒரு Sound Effect - ம் இந்தப் படத்தில் உணர்டு - சாட்டைவாரின் ஒசை. இந்த ஒலியைக் கொண்டு இயக்குநர், இசையால்கூட முடியாத அளவு ஆழமான விளைவைப் பெற்றிருக்கிறார் (தன் காதலன் தனி தங்கையைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் என்று நீதா புரிந்து கொள்ளும் இடத்தில் தான் இந்த ஒலி பயன்படுத்தப்பட்டுள்ளது). சாட்டை சுழற்றும் அந்த ஒலி, உங்களுக்குள் ஒரு ரம்பம் போலவே ஆழ்ந்திறங்கும்.” எனத் தனது ‘கட்டக்கின் படைப்பிசை என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்,
பாஸ்கர் சந்த்ரவர்க்கர்.
 
 

பலியினர் அடையாளங்கள்’ என்ற தனது
பின்வருமாறு:
யும் வலிமையும் கொணர் ட காட்சிப் பிம்பங்களை வெளிப்படுத்தியது ரித்விக் கட்டக்காகத்தான் இருக்கும். தற் கால இந்தியச் சூழலினி துனர் பங்களையும் காத்திருப்புகளையும் தேடல களையும் கட்ட க், முழுமையான வாழ்க்கைத் தரிசனத்தினூடே திரைப்பட மொழியில் வெளிப்படுத்தினார். கட்டக்கின் திரைப்படம் - புரட்சிகர சமூக மாற்றத்தைக் குறித்தான ஆசைக் கனவுகள், துணர்டிக்கப்பட்ட உறுப்புகள் போன்று துடிக்கிற நம் நாட்டின் தேம்பல்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் கலாசார மிச்சங்கள் ஆகியவற்றினூடே வடிவம்கொள்ளும் கதையும் வாழ்க்கையுமாயிருந்தது.”
புத்தகத்தின் இறுதியிலுள்ள கசப்பின் கேமரா என்னும் கவிதையில், கவிஞர் ஏ. ஐயப்பனின் வரிகள் இவை:
”. ஒருநட்சத்திரமரத்தின் கீழிருந்து கறுப்பு
முகமும் சிவப்பு
முகமும் கொண்ட மிருகங்கள்
ஒடியோடி செல்லுலாயிடை
அடைகின்றன.
ஆன்மாவில் பொங்கிச் சிரித்து உயர்ந்த
ஒரு பார்வை;
லகரிபிடித்துதியுள்ள பாளத்தில்
தலை வைத்த வாழ்க்கை.
இதுரித்விக்கட்டக்.”
இந்திய நாட்டின் ஒரு முக்கிய திரைப்படக்
கலைஞனைப் பற்றிய சிறந்ததொரு நூலாகிய இதனை, திரை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை என்னும் பெயரில், சு. கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்தில், மாசி 1990 இல , இன னொரு நுால ஏறி கெனவே வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை ஃபிலிம்
சொசைட்டிக்காக, சென்னை புக்ஸ் நிறுவனம் அதனை வெளியிட்டிருந்தது.
O
-30.07.2014.
ஜீவநதி 72 புரட்டாதி 2014
ստn-pւսոտ ուք:
35

Page 38
அ ஞ் ச லி
முற்போக்கு இயக்கத்திற்காக உழைத்த
திருவாளர் 6ILfö.6ILfö. g-Lf5ʼLíö
அவர்களை நான் நீண்ட காலமாக அறிவேன்.
முற்போக்கு இயக்கத்துடன் என்னை தொடர்புபடுத்திக் கொண்ட நாட்கள் தொடக்கம் அவருடன் பழகி இருக்கிறேன். முற்போக்கு இயக்கத் திற்கு உழைத்த பெரியவர்களான பிரேம்ஜி, பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, இளங்கீரன், எச்.எம்.பி.மொஹதீன், சோமகாந்தண், மாணிக்கவாசகர், டொமினிக் ஜீவா நீர்வை பொன்னையன் இப்படியான பலருடன் அவர் நின்று நிதானித்து கருத்து பரிமாறல்கள் செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன்.
இந்த நாட்டின் தமிழ் கலை இலக கரியப் பரப் பரில பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய பணிகளில் சமீம் அவர்களின் பங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அச் சங்கத்தினர் மகாநாடுகள், போராட்டங்கள் போன்றவற்றில அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது அது மட்டு மல்லாமல் வாழும் காலம் வரை, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஸ்தம்பித்து போன நிலையில், ஆ இறுதி காலம் வரை அவரது உடல்
நலத்தை மீறிய இயங்கும் இலா செயற்பாடுகளு அவர்கள் இல தொடங்கிய கா விமர்சன பூர்வம சமூக விஞ்ஞா விமர்சகர்கள்
நிலையில் அக்கு எச்.எம்.பி.மொஹ எண்பதும் இங்கு பங்களிப்பு தன கல்வித்துறைே
விமர்சனத்துறை
யும் கொண்டவ இருந்த பரிச்சய தமிழ் கலை இ அமைந்தன என தில் ஈழத்தில் சரியாகவும் , வி ஈழத்தின் சகல 1 அனை வருமே மாறி, அவர்கள் 5FLIDULI fg5ou JT 356)!! பட்டவேளை த ஆற்றிசென்றுள்
ஏலவே இஸ்லாமிய இல வளர்ச்சியில் மு இருப்பினும், மு பற்றிய சந்தேக செய்வது என்ற செயற்பட்ட மு: லத்திப் அவர்க பணிகள் மூலமு அவர்கள் வா மேலாண்மைக் சமூகத்தினரது கருதப்பட்ட சக் அரசியலில் அ6 கலை இலக்கிய நூல் தொகுப்பு வழியாகவும் ஆ
இன்ை யான ஓர் ஆய் மேலாணர்மை ( முன் வைத்து ( ஆகிவற்றை உ6 யினருக்கு அவர் ஏற்படுத்தக் கூடி
 
 
 

மேமன்கவி பும் நீர்வை பொன்னையன் அவர்களின் தலைமையில் ங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் பிரதான க்கு பெரும் துணையாக செயற்பட்டு வந்தவர். சமீம் ங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இயங்கத் லத்தில், நவீன தமிழ் கலை இலக்கியப் பரப்பில் அதனை 0ான பார்வையுடனும், மார்க்ஸியஅழகியல் நோக்குடனும்,
ன கண்ணோட்டத்துடன் நோக்கும் ஆய்வாளர்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் குறைவாக இருந்த குறை ஒரளவுக்குநிவர்த்தி செய்யும் வகையில் இளங்கீரன், றதீன், போன்றவர்கள் செயற்பட்டு கொண்டிருந்ததார்கள் நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது.) சமீம் அவர்களின் ரித்துவமான ஒன்றாக அமைந்தது. இதற்கு காரணம், யாடு சார்ந்தவராக அவர் இருப்பினும் அவருக்கான றக்கான ஒரு பார்வையும், ஆய்வுரீதியான அணுகுமுறை
எம்.எம்.சமீம்
பராக இருந்தமையும் அவருக்கு வரலாற்றுத்துறையுடன் ம், ஈடுபாடும் மற்றும் மார்க்ஸிய இயக்க ஈடுபாடு, நவீன நிலக்கியம் சார்ந்த அறிதல் ஆகியவை காரணங்களாக எலாம். அவரது இந்த ஆற்றலின் காரணமாக, பிற்காலத் இனப்பிரச்சினை கூர்மை அடைந்த காலத்தில் இன்னும் ரிவாகவும் சொல்வது என்றால். தமிழ்பேசும் மக்கள் என்று பிரதேசம் சமயம் சார்ந்த தமிழைதாய்மொழியாக கொண்ட தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளப்படுத்தல் என்பது ர் தமிழ் பேசும் மக்களாக இருப்பினும், பிரதேசரீதியாகவும் ம் பிரிக்கப்பட்டு, இனங்கள் என்ற அடையாளத்துடன் பேசப் மிழ் மொழிக்கும், இந்த நாட்டுக்கும் முஸ்லிம்கள் பெரும் ர்ளார்கள் என்பதை எடுத்துக்காட்ட ஒரு தேவை எழுந்தது.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் முயற்சியினால் 0க்கியம் என்ற அடையாளத்துடன் கூடிய தமிழ் இலக்கிய ஸ்லிம்களின் பங்கு பற்றிய ஒரு பிரக்ஞை உருவாக்கப்பட்டு >ஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் மார்க்ஸிய இயக்கத்தை ம், புரிந்து கொள்ளாத் தன்மை ஆகியவற்றை இல்லாமல் ற ஒரு முக்கிய பணியும் முற்போக்கு இயக்கத்துடன் ஸ்லிம்களுக்கு முன் இருந்தது. (இவ்விடத்தில் இன்ஷான் ள் நினைவுக் கூரத் தக்கவர்) அதையிட்டு தனது களப் மம், தனது ஆய்வு, விமர்சன ஆக்கங்கள் மூலமும் சமீம் ழ்ந்த காலத்தில் மேலோங்கி இருந்த பேரினவாத கு எதிராக, சிறுபான்மையாக கருதப்பட்ட முஸ்லிம் மட்டுமல்ல, இந்தநாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் என கல சமூகத்தினரதும் வரலாறு, இந்த நாட்டின் சமூக வர்தம் வகித்த வகிபாகம், அச்சமூகங்கள் இந்த தேசத்து பத்திற்கு ஆற்றிய பங்கு ஆகிவற்றை அவர் வெளியிட்ட களின் வழியாகவும், தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் ராய்ந்து எடுத்துக் காட்டிச் சென்றுள்ளார். றய நிலையில் அவரது ಆ±ನ್ತು ஆக்கங்களையும் முழுமை வுக்கு உட்படுத்துவதன் மூலம், பல்வேறு கருத்தியல்கள் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், சமீம் அவர்கள் சென்றிருக்கும் கருத்துக்களின் பொருத்தப்பாடு, தேவை ணரக் கூடியதாக இருக்கும் என்பதோடு, புதிய தலைமுறை து பங்களிப்பை பற்றிய ப்ரவலான விரிவான ஒர் அறிதலை யதாக இருக்கும் என்பது எண் எதிர்ப்பார்ப்பு.

Page 39
LDலையக இலக்கிய உலகில் ஓர் ஆளுமை பு சாரல் நாடனின் மறைவு இன்று வரை பேரதிர்ச்சியாகவே நூற்றாண்டு காலமாக துயரப்பட்டு வாழ்ந்து வரும் ஒரு சமூ குரல் மெளனித்து விட்டது என்று முழு மலையக மக் படுகின்றனர். இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களின் சிந்தனையாளர் நடேச ஜயராகவும், அவருக்கு அடுத்த நி வது தோற்றமாக கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையும் அ மூன்றாவது கட்டத்தில் தோன்றியவர்களில் சாரல் ந மானவராவார். மலையக இலக்கியம், அரசியல் சமூக வரல மிக்க படைப்புக்களை சாரல்நாடன் எமக்கு அளித்துச் சென எழுத்தாளர்கள் மத்தியில் தனித்துவமான பாதையில், ஆய் படைத்தவர்களில் சாரல்நாடன் ஒருவரே தனித்து உயர்ந்து
இவரது படைப்புக்களில் முத்திரை பதித்த பe
ஐயரின் வாழ்க்கை வரலாறு” என்ற நூலே சாரல் நா இந்திய வாசகர் மத்தியிலும், சர்வதேசிய ரீதியிலும் அறிமு: "தொழிற்சங்கவாதி நடேச ஐயர்" என்ற நூலும் "பத்திரி ஐயர்" என்ற நூலும் இன்று நாடளாவிய ரீதியில் பல்கை
களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், சமூக ஆ
தகவல் களஞ்சியமாகத் துணை புரிந்து வருகின்றன.
அமரர் சாரல் நாடன் 15 க்கு மேற்பட்ட நூல்கை சி.வி.வேலுப்பிள்ளையைப் பற்றி "சி.வி.சில சிந்தனைகள்
44
கோ.நடேச ஜயர்”, “பத்திரிக்கையாளர் நடேச ஜயர்”, “ம “மலையக வாய் மொழி இலக்கியம்”, “மலைக் கொழு தொகுப்பு, "மலையகம் வளர்த்த தமிழ்”, “மலையகத் "பேரேட்டில் சில பக்கங்கள்”, “பிணந் திண்னும் சாத்திர இலக்கியமும், தோற்றமும், வளர்ச்சியும்”, “இளைஞ சிவலிங்கம்”, “இன்னொரு நூற்றாணர்டுக்காய்.”, மீ இரண்டாவது பதிப்பாக “சி.வி.வேலுப்பிள்ளை” என படைப்புக்களை எமக்கு வழங்கியுள்ளார்.
இவரது படைப்புகளுக்காக மூன்று முறை விருதுகளும், சென்ற ஆணர்டு மட்டக்களப்பு அமி ஓ.கே.குணநாதன் ஆண்டு தோறும் நடத்தி வரும் தமிழியல் மாகாண சபைகள் நடத்திய இலக்கிய விருதுகளும் ஏலே கலாபூஷணம் விருதும் பெற்றுள்ளார். மலையக இலக்க பங்களிப்பு வழங்கிய சாரல் நாடனின் மறைவு, மலை எடையை சிறிது குறைத்திருப்பதாகநாம் உணரவேண்டியுள் அமரர் சாரல் நாடன், எனது சமகால கல்லூரி ந புகழ்மிக்க மாணவராக அட்டன் ஹைலணர்ஸ் கல்லூரியி திருந்தவர். கல்லூரி தமிழ்ச் சங்க செயலாளராகவும் நடாத்திய "தமிழோசை" கையெழுத்துப் பத்திரிகையின் கல்லுரரி நூலகராகவும், பங்கெடுத்துச் செயல்பட் காலத்திலேயே தமிழ், ஆங்கில மொழிகளில் சிறந்த மேன சாரல்நாடன் பிரபல்யமடைந்திருந்தார்.
அட்டன் ஹைலணர்ஸ் கல்லூரியின் இனிய ந பார்க்கும் பொழுது, குடியியல் ஆசிரியர் டி.வி.மாரிமுத்து அ நாடகங்கள் நினைவில் வருகின்றன. ஒரு சரித்திர ந நாடனும், நானும் இரு தேசத்து மன்னர்களாக நடித்து நினைவுகள் மறக்க முடியாதவை.! சமூக எழுச்சிக்கா6 பாடசாலை வகுப்பறையிலே ஊட்டி வந்த ஆசிரியர்களான எஸ்.திருச்செந்தூரன் ஆகியோரின் அபிமானத்துக்குரிய ம நாடன் திகழ்ந்தார்.தேயிலைத் தொழிற்சாலையில் Tea M
 
 
 
 

விக்க படைப்பாளர் உள்ளது. இரண்டு மகத்தின் எழுச்சிக் களும் வேதனைப் ர் முதல் எழுத்துச் லையில் இரண்டா அவருக்கு அடுத்து நாடனும் முக்கிய Uாறு என பெறுமதி 1றுள்ளார். சிருஷ்டி 1வு இலக்கியங்கள்
நிற்கின்றார்.
டைப்பாக "நடேச
டனை இலங்கை, கப்படுத்தியுள்ளது.
கையாளர் நடேச
லக்கழக மாணவர் ஆர்வலர்களுக்கும்
ள எழுதியுள்ளார். ர்”, “தேச பக்தன் லையகத் தமிழர்”, ழந்தி” சிறுகதைத் தமிழர் வரலாறு", நீங்கள்”, “மலையக நர் தளபதி இரா ணர்டும் திருத்திய
பெறுமதி மிக்க
அரச சாகித்திய ர்தகழி டாக்டர் ல் விருதும், மற்றும் வே தேசிய ரீதியில் கியத்தில் பிரதான Uயக சமூகத்தின் ள்ளது.
ணர்பர். 1960 களில் ல் பிரபல்யமடைந் , தமிழ்ச் சங்கம் ஆசிரியராகவும்,
L - GT. E DATGðØT GJIT
டைப் பேச்சாளராக
நாட்களை மீட்டிப் அவர்கள் தயாரித்த ாடகத்தில் சாரல் ப் புகழ் வாங்கிய ன சிந்தனைகளை இரா.சிவலிங்கம், ாணவனாக சாரல் aker உத்தியோகத்
அ ஞ் ச லி
முத்திரை பதித்த இலக்கியவாதி
தராகப் பணி புரிந்த சாரல் நாடன், தோட்ட உத்தியோகத்தர் தொழிற் சங்கததினர் செயலாளராகவும் பொறுப்பேற்று செயற்பட்டார்.
மலையக மக்களின் அடி
நிலை வாழ்க்கையை உயர்த்துவதற்கு சாரல்நாடனின் படைப்புக்கள் பேருதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்த சாரல்நாடன்” என்று மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது பத்திரிகை இரங்கற் கட்டுரையில் எழுதியுள்ளார். ஒட்டு மொத்தமாக சாரலநாடனர் என்ற பக்கத்தைப் புரட்டாமல், தமிழ் இலக் கியத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது எண்பது உணர்மை நிலையாகும். சாமி மலை சிங்கார வத்தை தோட்டத்தில், கருப்பையா கணக்குப்பிள்ளை, வீரம்மா தம்பதி களுக்கு சார ல நாடன எனற நல்லையா 09.05.1944 ல் பிறந்தார். துணைவியார் திருமதி புஷ்பம், மகன் பூரீகுமார், மகள் ஜீவகுமாரி ஆகியோர் இவரது இனிய குடும்பமாகும்.
சர்வதேச தமிழ் இலக்கிய உலகம் பேசப்படும் ஒரு புகழ் பூத்த இலக் கியச் சிந்தனையாளனை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும் பத்தினருக்கு, தமிழ் கூறும் நல்லுலகம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை97 ஜீவநதி 72 புரட்டாதி 2014 இது

Page 40
38
க.சட்டநாதனின் கவிதைகள்
ஒற்றை மலர்
நான்
அடிமரத்தைத் தொட்ட போது,
உச்சாணிக் கெTம்பில்
&cb
பூ பூத்தது. பூவின் இதழ் ஒரம் இளஞ்சிவப்பு.
உள் மடலில்
அடர் மத்சள், புற மடலில் ஊதா கலந்த இளநீலம், இழைகளும் மகரந்த கேசரமும் மாற்றம் இல்லாத மத்சள் நிறத்தில், குறியும் ஸ்தம்பமும் மயக்கும் பொன்வண்ணம் குறியில், லேசாய்த் தீற்றிய சிவப்புடன் சிறிது பச்சை வருடல். குறியைத் தொட்ட படிக்குப் பட்டுப் போர்த்திய சிறு பூச்சி சிறகை விரித்த படி, அது என்ன இசைக்கிறது.? காதல் ரசம் மிகுந்த
காமப்பாடலா.
ஜீவநதி 72 புரட்டாதி 2014
öቻ†6Ö
2.tij 2 uji" i pëgj உயிர்ப் பொட்டழைந்
கனவா..?
கவிதைக்
&60&tb 9-60)ւա
வர்சிக்கும்
கனிவு மழையா..?
மென் காற்றின் அலைக் கழிப்பில் உடைந்து உள் உறையும் வாச தொட்டறிந்து
6888 DaoT
பரப்பும் மலரா..?
சொர்ணத் துகள்கள் துவுகையில் பட்டதிர்ந்து புடைத்தெழுந்த புது மலரின் விரிவா..?
|මූ606)ංඛ0,
ශ්‍රියාඛj
இகம் பரம்
திகம்பரம்
தரும் இன்பம்!
 
 

D6)
oup6)6OFTLD
நிழல்
ଗରjଟfiuffl
தனித்து விடப்பட்ட நான் கதியேதும் இல்லாது அலைந்து திரிகின்றேன்
அலைதல் எனது விதி போலும்
பொன் தாதுகளாய்க் கொட்டிக் கிடக்கும்
மணல் பரப்பு: நீள அகலம் கணக்கிட முடியாது பரந்து கிடக்கிறது
LJITG)60ujTu...
குருமணல் துகள்கள் தோறும் சூரியக் குஞ்சுகளின் தகிப்பு - நெருப்பின் ருசியாய்.
எனது கால்பட்ட
இடமெல்லாம்
சுட்டெரிக்கும்
சுவாலையின்
விரக வெம்மை,
பதைபதைப்புடன் நிழல் தேடி அலைகின்றேன்.
என்னுடன் எப்பொழுதும் எனது நிழல் மட்டும் தான் ஆறுதல் தருவதாய் இருக்கிறது.

Page 41
வெண்பனி மூடிய
எத்தனை எத் மலைச் சிகரங்களும்
வேற்றுமைகள் பட்டை தீட்டிய
பெத்தெடுத்த வைரக் கற்களால்
தத்தெடுத்த பி படர்ந்து விரிந்த
தாய் ஒருத்திப பனிப்பாறைகளும்
பாகுபாடு போ உருகி நகர்கின்றன.
நாட்டின் வேறு கடல் மட்டம் உயர்ந்து பேரலைகள் தரையை விழுங்க
ஒரு பக்கம் கரையில் மோதுகின்றன.
வறட்சி வெப் பூமித்தாய் மட்டும்
அவிந்தும் கரு தன் பச்சயங்களுக்குள்
தண்ணீர் தேம் மறைந்திருக்கும் எள் பரிணாமங்களைப் பாதுகாக்க
இன்னுமொரு தினம் தினம் தீய்க் குளிக்கின்றாள்.
கடும் குளிரா அக்கினிப்பிரளயம் மூண்டு
மண் சரிவாலு பூகோளத்தை
வெள்ளத்தில் வெப்பத்தால்
உலர்ந்த த ை சுட்டெரிக்கின்றது.
விரைந்து தே ஆனால்
போ பேராசை கொண்ட மனிதன்
ஒரு பகுதி சல உலகமயமாக்கலில்
இன்னொரு பணமூட்டை கட்ட
உணவே இல் பேயாய் அலைகிறான்.
உயிர் வாழும் வானம் முழுவதும் ஆயுதப் பறவைகள்
உபாயம் தோ தேசம் முழுவதும் கோடி கோடியாய் கனரக வாகனங்கள்
இரண்டு பகுதி கக்கிச் செல்லும்
இன்னும் பல காபன் வாயுக்கள்
மரணம் கொ இங்கே
அவலம் தொ பூகோள மயமாக்கல்
ஒன்றாகவே ! என்ற போர்வைக்குள் பூகோள எரியூட்டல் .
சில மனிதர்க நடக்கின்றதே...!
வஞ்சம் போன - வடஅல்வை க.சின்னராஜன்
9 8 2. ஆ ந 2
ல
வே

தனை ள் தாய்மண்ணில்? பிள்ளைகள் கள்ளைகளென்று பின் சலவே றுபாடுகளும்!
ஒற்றை முத்தத்திற்காக வார்த்தைகளால் கற்பழித்த போது பயங்கர வாத பட்டியலில்
சேர்த்தாய்....
முடி விசிறி சிலிர்க்கும் பூனைக் குட்டியாய் உன் காலடிகளுக்குள் நான் சிறைப்பட்டு போனபோது
நீ நிஜமாகவே சிறையானாய்...
பத்தில்
T
தகியும் ஒகண்ணீர் விடுகிறது!
ன்
பெக்கம்
லும்
ஒரு முத்தம் ஆயுள் கைதியானது.
காமத்தின் அடையாளமுமானது.
நா
பம்
மிதந்து ரதேடி டுகிறது!
னி நீ என்னை நிரந்தரமாகவே
விடுவித்து கொண்டாய் உன் மனச் சிறையிலிருந்து என்றைக்குமே புணர முடியாதபடி...
ன்
மைத்த உணவு தேட தொகுதி மலாமல்
ற முடி விசிறிச் சிலிர்க்கும்
பூனைக் குட்டியாய் நான்... போ நீயற்ற கால்களுக்குள்
சுற்றி சுற்றி வருகிறேன் என்னைத் தொலைத்த நினைவுகளுடன்....
தகிறது!
இகளும்
பகுதிகளும் நப்பதிலும் -டுப்பதிலும் இயங்குகிறது...! ளின் bவே வானமும்! மிஹிந்தலைஏ.பாரிஸ்
என்னை நானே கொன்று விழுங்கி வலிகளுடன் உலவுகிறேன். தோற்றுப்போன காதல் ஒன்றின் வலியடங்கா மனசாய்...
- யாத்ரிகன் ஜீவநதி 72 புரட்டாதி 2014

Page 42
நூல் மதிப்பீடு
சமரபாகு சீனா
“சித்திற/
இன்றைய காலகட்டத்தில் அநேக இளைஞர் கள் படைப்பிலக்கியத்தில் அதீத ஈடுபாட்டுடன் சாதிக்கிறார்கள்.
போர்ச்சூழலாலி ஏற்பட்ட தாக்கங்கள், அனுபவப் பகிர்வுகள் இத்தகைய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கலாம். கவனம் சிதையாத ஆழமான பார்வையும்கூட இவர்களைச் செப்பனிட்டு, சமூகத்தின் குறை நிறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் மனப் பாங் களினை வளர்த துளி ளது என்றாலும் மிகையாகாது.
அவ்வப்போது பத்திரிகை சஞ்சிகைகளில் பிரசுரமாகின்ற ஆக்கங்களைப் பார்வையிடுவதன் மூலம் கணிக்க முடிந்தாலும், ஒரு | தொகுப்பாக முன்வைக்கும் போது தான், அவர்களது அடையாளங்கள் துலக்கமாகத் தெரிய வரும்,
இந்த வகையில், சமரபாகு
சிறுகதைத்தொகுதி அதனை நிறுவ முன் வந்துள்ளது.
இவரது முதலாவது சிறு கதைத்தொகுதியைப் பார்வையிடக்
கிடைக் காவிடினும், கவிஞராக இவரை ஏற்கனவே இனங்கணர்டிருக் கிறேன். அவ்வப்போது இவரது சிறுகதை களை வாசித்து, இவர் கையாளும் உவமைகள் கண்டு பூரித்திருக்கிறேன்.
" சரித தரிரா ரீச சர் ” எனும் இத்தொகுதியை முழுமையாக வாசித்த போது எழுந்த அருட்டுணர்வால், எனது பார்வைக்குப் புலப்பட்டதை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பதினொரு சிறுகதைகளை மிக்க கலை நேர்த்தியுடன் படைத்திருக்கும் இந்த இளம் கதைஞர் கையாளும் மொழிநடையும், இலாவகமாக நகர்த்தி செல்லும் பாங்கும், சமூகத்தின் மீதான கரிசனையும், ஆழ்ந்த பார்வைப்புலத்தின் தரிசிப்பும், வர்ணனைகள், உவமைகள் என்றின்னோரன்ன காரணிகள், சிறுகதை எழுத தாளராக மட்டு மன றரி, பரின நாளில
40
ஜீவநதி 72 புரட்டாது 2014
 
 

aួp366បិតy
உதயகுமாரின்
C2 O \ ላ‹‹}-‹‹}-ላ
நம்பிக்கையூட்டும் நல்லதொரு நாவலாசிரியராகவும் மிளிர்வாரென கட்டியம் கூறுகிறது
இத்தொகுதியின் மகுடக் கதையான “சித்திரா ரிச்சர்”, ஓர் இளைஞனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறாரென்ற மெல்லுணர்வுகளைத் தொற்ற வைக்கும் ஆசிரியரின் பார்வை அலாதியானது. “ஞானம்” சஞ்சிகையில் வாசித்த போதே, இவர் கையாண்ட உவமை எனினனைப் பிரமிக்க வைத்தது; மிக  ையதார்த்தமானது. குமரன் என்ற அந்த இளைஞனின உள் ளக் குமுறலைக் காட்சிப் படுத்தும் அழகை இரசிக்கலாம்.
"எண் உள்ளம் படபடவென்று அடித்துக் கொணர்டிருந்தது. என் வெறுமை நெஞ்சுக்குள் தடித்த முட்கம்பி ஒன்றினை விட்டுஇழுப்பது போல் நெஞ்சு கரகரத்து வலித்தது.”
எண் மனதைக் கவர்ந்த வரிகள்
இவை.
துருப் பரிடித த முட க ம பரி இழுபட்டுக் கிழிந்தால், அதன் வலியை-ரணத்தை - சாதாரண ஒரு மனிதனும் உணர்நீதிருக்க கி கூடுமல்லவா?
இது தானி , சீனா உதய குமாரினர் கதை சொல்லும் நயத்தை எடுத்துக்காட்டும் ஒரு “பதச்சோறு"
இந்த இடத்தில், இதற்குப் பதிலாக - பிரதியீடாக "மார்பில் வேலி பாய்ந்தது
போல” என்று பழைய உவமையைக் கையாள்வதும், இன்றைய நவீன போர் அனுபவங்களால சொல லக் கூடிய "துப்பாக்கி ரவை துளைத்தாற்போல” என்றோ, “ஷெல்லின் சன்னங்கள் சிதறினாற் போல்” என்றோ சொன்னால் அழகாகவா இருக்கும்? அவை, பட்டுத் தெரிந்தவனுக்கு மட்டுமே தெரிந்த விடயமல்லவா?
மானசீகமாக தன்னுள் வரித்த கற்பனைகள் சிதைந்தபோது, குமரன் படும் அவஸ்தையை விபரிக்கும் இடமும் இங்கு கவனிக்கத்தக்கது.
"..என் நினைவுகள் யாவும் சுக்குநூறாயின.

Page 43
கூடவே குற்ற உணர்வு மேலெழுந்தது. என்னை நானே அருவருக்கும் ஒரு நிலைக்கு உள்ளாகினேன்...”
தனது பார்வையின் கோணலை உணர்ந்த போது அந்த இளைஞன் படும் மனவேதனை, மேற் கண்டவாறாக வார்த்தையில் தெறிக்கிறது.
இந்த இடத்தில், டாக்டர் மு.வரதராசன் “மலர்விழி" என்ற தனது நாவலில் விபரித்த சில வரிகள்
ஞாபகத்திற்கு வருகின்றன.
"... அந்தப் பார்வையில் இருந்தது என்ன? ஒரு நோக்கமும் இல்லாத பொதுத்தன்மையா, அல்லது அண்ணன் தம்பிமேல் காட்டும் அன்பா, அல்லது காதல்தானா? பார்வையை எப்படி அளந்து சொல்ல முடியும்? வாய்ப் பேச்சும், செயலும் கொண்டுதான் மத்தையளக்க வேண்டும்” |
உ இந்த வரிகள், இவரது இந்தக் கதைக்கு என்னமாய்ப் பொருந்தி வருகிறது. இவ்வண்ணமே இவரது பல கதைகளில், அவர் சமூகத்தை எப்படி ஆழ நோக்குகிறார் என்ற உண்மை புரியும்” உணர்வுகளும் புலப்படும்.
இதுபோலவே, "சொத்து” என்ற இறுதிக் கதையிலும் பார்வையின் தீட்சண்யமும், நயக்கத்தக்க உவமையும் இருப்பதைக் காணலாம்.
"ஓலைகளைக் கால்களுக்குள்ளே போட்டு, இடம் வலம்... இடம் வலம்... என்பது போல், அப்பா கால்களை மாறி மாறி எடுத்து வைத்து முன்னேறி மிதிப்பார்... முடிந்த பிறகு மிதித்த ஓலைகளின் வரிசையினைப் பார்த்தால், மலைப் பாம்பு ஒன்று வளைந்து நெளிந்து செல்வது போலத் தெரியும்”
இன, இவை பற்ற விபரிக்கவும் வேண்டுமா?
அதேவேளை. "ஒரு காதலி ஒரு நண்பன்” என்ற கதையில் கையாண்டிருக்கும் உவமை உவப் பானதன்று. இக்குறைபாட்டையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
“உச்சந்தலையிலே, சரி செங்குத்தாக ஆணி ஒன்றை வைத்து அடிப்பது போன்று...” என வருவது, எவ்வகையிலும் பொருத்தற்பால . தன்று.
ஆசிரியர், தனது பாணியில் வேறோர் உவமையைக்கையாண்டிருக்கலாம்.
பள்ளிப் பருவத்து நினைவுகளை மீட்பதால், அந்த வயதிற்கேயுரிய அதீத கற்பனையால், தன்னையறியாமலே அப்படி ஒரு உவமையைப் புகுத்தியிருக்கக்கூடுமோ?
சொல் லும் உவமைகள் நெஞ்சைத் தொடுவதுபோல் புதுமையாக இருக்க வேண்டும்.
ஒரு சிறுமியின் மானம், ரோசம் பற்றிப் பேசுவது, துளிர்மானம்” கதை.
“தீயில் விழுந்த சின்னப்பூவாக அவள் இதயம் கருகியது... அவள் உள்ளம்சப்பளிக்கப்பட்டிருந்தது"
சீனா. உதயகுமார் !
கனி ஒரு க

ஒரு சின்னஞ்சிறுமியின் மனசைக் காயப் படுத்தும் சாத்திரியார் வாமதேவன் போன்ற பலரை நம் நிஜவாழ்வில் தரிசிக்கலாம். வெளிவேடக்காரரின் தோலுரித்துக் காட்டப்படுகிறது.
அந்தக் குழந்தையின் மகிழ்ச்சி ஒரு நொடியில் சிதைந்துபோக, அந்த அழுக்கு மனத்தானின் நன்கொடையைத் தூக்கி வீசப் புறப்படும் ரோசக்காரி யாக அவளைச் சித்திரித்திருப்பது ஓர் இயல்பான காட்சிப்படிமம்.
"துளிர்மாணம்” கதை, சொல்லிய விதத்திலும் வார்ப்பிலும் முன்னிற்கிறது.
கொழுத்த சீதனத்துக்கு ஆசைப்பட்டுத் திருமணம் செய்த வேலையற்ற பட்டதாரியான கருணன், மனைவி வீட்டில் ஓர் அடிமையாக மோட்டார் சைக்கிள் சாவியைக் கூட, மனைவி கொடுத்தால்தான் சவாரி செய்யலாம்; அல்லது சைக்கிள்தான் தஞ்சமென வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் உழலும் கணவனாக "வெகுமானங்கள்” கதையின் நாயகனைத் தவிக்க விடுவதிலும் ஆசிரியர் கையாண்ட அணுகுமுறை அலாதியானது.
மாலைநேர ரியூசனுக்குப் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் போது மோட்டார் சைக்கிளும், திரும்ப ஏற்றி வரும்போது சைக்கிளுமாக... எப்படியிருக்கிறது, கருணனின் நிலை?
சோதிடர் சொல்வதையே முழுவதும் நம்பஜ, அப்பனுக்கு ஆகாதென்று ஒரு பெண் ணை நட்சத்திரப் பொருத்த மில்லை என்று ஒதுக்கி விட்டு,
எல் லாம் பொருந்திய தென று வேறொரு பெண்ணைச் செய்து வைத்த போது, தகப்பன் மட்டுமல்ல; கணவனையும் இழந்து தவிக்கும் அந்தப் பெண்ணின் சோகம் , முன் ன வளையே அதிர வைத்த சம் பவத் தனை சொல்கிறது, “நட்சத்திர பொருத்தம்”
போர்க்கால அவலங்களின் சித்திரிப்பும், இந்தக் கதையையும் தூக்கி நிறுத்துகிறது.
பட ஏனைய கதைகளைப்பற்றி சொல்வதைவிட, வாசித்தே அவற்றின் சு ைவ ைய உ ண ர வைம் பதை
நோக்காகக் கொண்டு. விரிவஞ்சித் ஒளிப்படம் - யாத்ரிகன்)
தவிர்த்துக் கொள்கிறேன். மண்ணின்மேற் கொண்ட காதலால், மண் வாசனையும், வடமராட்சிக்கே உரிய பிரத்தியேகமான சொல்லாட்சிகளும், சமூகத்தை ஆழத் தரிசித்து அழகாகக் காட்சிபடுத்தும் பாங்கும், கவிஞராகத் தன்னை அடையாளப்படுத்திய "சமரபாகு சீனா.உதய குமார்” என்ற இந்த இளைஞரை, இத்தொகுதி மூலம் ஒரு கதைஞராகவும், நல்ல ஒரு கதை சொல்லியாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ வைக்கிறது என்றால் மிகையில்லை.
ஜீவநதி 72 புரட்டாதி 2014 பொதுசன நூலகம்
யாழ்ட் 5 2%னம்.

Page 44
வாஞ்சை
இ.இராஜேஸ்கண்ணன்
“எனக்கென்ன இனி வாழ்க்கை?.எல்லாம் சரி. என்ரை பிள்ளையைப் பிரியனைப் பார்க்க முடியாத எனக்கு என்ன வாழ்க்கை?. அவர் படுகிற பாட்டைப் பார்க்க வேதனையாக்கிடக்கு. நான் அப்பவே செத்துப் போயிருக்கலாம். அவருக்கு என்னைப் பராமரிக்கிற சுமையாதல் குறைஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் எனக்கு நீதான் உதவியா இருக்கிறாய் கெஞ்சி மண்டாடிக் கேக்கிறன் எனக்குக் கொஞ்சம் அலரி விதை அரைச்சுத் தா!. உனக்குப் புண்ணியம் கிடைக்கும்"
வதனா அக்காவின் கண்களிலிருந்து கொட்டிய கண்ணிர் என் இதயத்தில் எரிதழலாய் வீழ்ந்தது. அவள் இதற்கு முன் ஒருபோதும் உயிருருகி கண்ணிர்விட்டதை நான் அறிந்திருக்கவில்லை. அவளது நாளாந்த வாழ்வின் துயரங்களுக்கு கண்ணிர் விட நேர்ந்திருந்தால் அவளின் வாழ்வே கண்ணிராய் அமைந்துவிடும் என்பதை நான் அறியாதவள் அல்ல. அவளது மனஉறுதியை எண்ணி வியந்திருந்தேன்.
நான் காணாது போயிருந்தால் அவள் இந்நேரம் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்திருப்பாள். அவளது உறுதியைக் குலைத்துவிட்ட கொடுமையை எப்படிச் சொல்வதென்றே புரியவில்லை. அவளது இலட்சிய வாழ்வின் வீழ்ச்சியில் அவளின் விரக்தி நியாயமானதா?. விரக்தி தவிர்க்க முடியாததென்றால் அவளின் முடிவு சரியானதா?. விரக்தி வரும் போதிலெல்லாம் முடிவு இதுதானா?. இவள் தன்னை மாய்த்துக்கொள்ள முனைவதால் என்ன தீர்வு?. தீர்வாக அமையாத முடிவை எடுப்பதால் என்ன கிடைக்கப்போகிறது?. விடைகானா வினாக்கள் என் மனதை அலைக்கழித்தன.
வதனா அக்காவின் வாழ்வு என் கண்களில் விரிந்தது.
صہ ہے 2
ஜீவநதி 2 புரட்டாத 204

சிறுவயது முதல் வதனா அக்காவை எனக்குத் தெரியும். அவளின் இன்ப துன்பங்கள் இலட்சியங்கள் எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துவந்திருக்கிறாள். என்னைவிட ஐந்து வயது மூத்தவள். நான் அவளின் வயதில் குறைந்த நண்பி.
பருவமறிந்த காலத்திலிருந்து வதனா அக்காவின் இரசிகை நான். அவளை அருகிருந்து இரசிப்பது அலாதியான அனுபவம். அயலில் இருந்த பெண் பிள்ளைகளில் வதனா அக்காவுக்கு அணித்தான வயதிலிருந்த ஒருத்தி நான்தான். கோயிலுக்குச் சென்றாலென்ன, இரவுத் திருவிழாவில் காத்தான் கூத்துப் பார்க்கப் போனாலென்ன, "ரவுணுக்கு” புடவைக் கடைக்குச் சென்றாலென்ன எல்லாவற்றிலும் நான் அவளோடு கூடியிருந்தேன். என் மீதான அவளின் அன்பும் அபரிமிதமானதுதான்.
வதனா அக்காவை ஊரவர்கள் “வதனா ரீச்சர்” என்றுதான் அழைத்துவந்தார்கள். "ரீச்சர்” என்று பின்னே ஒட்டிக்கொண்ட பதவிப் பெயருக்கு அவள் முன்பள்ளி ஆசிரியையாக இருந்ததுதான் காரணமென்று எண்ணிவிடக்கூடாது. முன்பள்ளிக்கு ஆசிரியராக வருவதற்கு முன்பே அவளோடு "ரீச்சர்" என்ற பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது.
வதனா அக்கா ஆறடி உயரத்தை

Page 45
அண்மித்தவள். எலுமிச்சம்பழ நிறத்தோடு கொஞ்சம் "ஓரேஞ்" நிறத்தைக் கலந்து பூசிய நிறம். வசீகரித்திளுக்கும் கண்கள்மீது அச்சடித்த வளைந்த கருகருவென்ற இமை. கன்னத்தில் எப்போதுமே காற்றில் கலையும் சரோஜாதேவிச் சுருள்முடி. பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்துப்பிடித்து அழுத்திக் கிள்ள எண்ணவைக்கும் கூர்மூக்கு. நீண்ட கழுத்து, இடுப்புவரை நீண்டு தொங்கும் "ஷம்போ" விளம்பர அழகி முடி. நீண்டு தொங்கும் அழகிய புடோலங்காய் கைகள். அடிக்கடி அணியும் கறுப்புப் பூப்போட்ட மஞ்சள் நிறச் சேலை. அதற்கிணையான “ஹண்ட் பாக்". எப்போதும் கண்களைவிட்டகலா கபிலநிற மெல்லிய "பிறேம்” போட்ட கண்ணாடி. எப்போதும் வலதுகை தாங்கிய வயலின் பெட்டி. இந்தத் தோற்றத்துக்குக் கிடைத்த பெயர்தான் “ரீச்சர்”.
இவளின் இந்தத் தோற்றப் பொலிவுக்கு மசியாதவர்கள் யாருமில்லை. அவள் வாரநாட்களில் பேரூந்து ஏறிப் பயணம் செய்வதில் அவளின் இலட்சியங்களில் இரண்டு மறைந்திருந்தன. தன் ஆத்ம விருப்பான வயலின் இசைப் பயிற்சி. முன்பள்ளி ஆசிரியப் பயிற்சி.
"நான் வயலின் படிக்கிறது சின்ன வயசிலையிருந்து வளர்ந்த இலட்சியம். என்ரை அப்பா எனக்கு விதைச்ச ஆசை. வயலினை எடுத்து வாசிக்கிற நேரத்திலையெல்லாம் மனம் லேசாகி வெள்ளையாகி விடுது. புதிசு புதிசாக பிறக்கிற மாதிரிக் கிடக்கு. எனக்கு மாத்திரமில்லை எனக்கெண்டு பிறக்கிற பிள்ளையளுக்கும் இந்தக் கலையைக் கட்டாயம் சொல்லிக்குடுப்பன். வயலின் இசை என்ரை சந்ததிக்கெல்லாம் தொடர்ந்து வரவேணும். நான் மேடையேறி அரங்கேற்றம் செய்யப்போறதில்லை. இந்தக் கலையை என்ரை சந்ததிக்குச் சொல்லிக்குடுக்கத்தான் படிக்கிறன். அதுகளிலை
ஆராவது ஒருதன் பேர் சொல்லக் கூடியவனா வந்தால் அதை நினைச்சு சந்தோசப்படுவன்” என்று தன்னை மறந்து வதனா அக்கா கூறியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். எந்தவித இலட்சியமும் இல்லாமல் வயலின் பெட்டியை தூக்கிக்கொண்டு திரிந்து “எலிகலைக்க" முயற்சிப்பவர்கள் மத்தியில் அவள் வித்தியாசமானவளாக இருந்தாள்.
வதனா அக்கா தன் வீட்டில் வயலின் பயிற்சி பெறும் தருணங்களில் நானும் கூட இருந்திருக்கின்றேன். இடது கையில் வயலினை ஏந்தி இடதுபுற மார்போடு ஒரு பிள்ளையை வளர்த்துவது போல சாய்த்து இடதுபுறக் கழுத்தோரம் கீழ்த் தாடையினால் அழுத்திப் பிடித்தவாறு இடதுகை விரல்களின் நளின அசைவினால் வார்களில் அழுத்தம் கொடுத்து வலது கையில் ஏந்தியிருக்கும் “வயலின் வில்லினை" பாவம் வெளிப்பட அசைத்து அவள் எழுப்பும் இசை மனதை வரித்துக் கொள்ளும். எங்கள் அயலில் இன்பத்தைப் பெருக்கும். "உன்ரை வதனா அக்கா பெரிய வித்துவான்கள் போலை சுத்தமா

வாசிக்கிறாள்" என்று என்னுடைய அப்பா விதந்து கூறுவார். அப்பாவுக்கு இசை பற்றிக் கொஞ்சம் தெரியும்.
அவள் வயலின் பயிற்சிக்குச் சென்று வரும் தருணங்களில்தான் அந்த "ரீச்சர்" பட்டம் கிடைத்தது. அவள் பேரூந்தில் ஏறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் "தம்பி... தங்கச்சி... ரீச்சருக்கு இருக்க ஒரு "சீற்”
குடுங்கோடா” என்று உண்மையிலேயே ரீச்சர்தான் என எண்ணிய பேரூந்து நடத்துனரின் அங்கீகாரம்தான்
அது. காலப் போக்கில் அந்த ரீச்சர் பட்டம் அவளோடு ஒட்டிக் கொள்ளவும் அவள் முன்பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்கவும் சரியாகவிருந்தது.
வதனா அக்கா முன்பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்ற பின்னர்தான் எமது ஊரிலே ஒரு முன்பள்ளி உருவாக்கப்பட்டது. அதற்காக அவள் பட்ட கஷ்டங்களை அருகிருந்து கண்டவள் நான். ஊரிலுள்ள உறவினர் ஒருவருடைய காணியில் பத்துத் தென்னை
மரங்கள் சூழ்ந்து நின்று தரும் நிழலில் கிடுகினால் வேயப்பட்ட கொட்டகையினுள்ளே வெள்ளை மணல் பரப்பி பாலர்களுக்கான மேசை வாங்குகள் போட்டு விளையாட்டுப் பொருள்கள் வாங்கிப் போட்டு அவள் தொடங்கிய முன்பள்ளிதான் இன்று மாடிக் கட்டடமாக மாறியுள்ளதென்பதை எங்கள் ஊரில் யாரும் சொல்ல மறுப்பதில்லை. அவ்வளவுக்கு அவளுக்குப் பெருமையுண்டு.
“பிள்ளையளின்ரை மனசு பூ மாதிரி அதுகள் வாடிவிடக் கூடிய மாதிரி நாங்கள் - பெரியாக்கள் நடக்கக்கூடாது. பாலர்களுக்குப் போதிக்கக் கூடாது. அவர்களின்ரை மனசுக்குள்ளை செயன்முறையாலை விசயங்களைப் பதிக்க வேணும். அவையளைக் கடிந்து பேசக்கூடாது. தண்டிக்கவும் கூடாது." என்றெல்லாம் அடிக்கடி பெற்றாருக்கு வதனா அக்கா போதிக்கத் தொடங்கி விடுவாள். முன்பள்ளிப் பிள்ளைகளுக்கே "ரியூஷன்” நடத்திய சமூகத்தில் இவள் அக்கா போதனை செய்து என்ன நடக்கப்போகிறது என்று எனக்குள் நான் எண்ணிக்கொண்டு சிரிப்பேன்.
“வதனா ரீச்சரெட்டை பிள்ளையளைப் படிக்கவிட்டால் எங்களுக்கு ஒரு கவலையுமில்லை. தாய்மார் பாக்கிறதைவிட பிள்ளையை கவனமாகப் பாக்கிறா. அவ ஒரு ரீச்சர் மட்டுமில்லை தாயும்தான். அவவுக்கு எங்கடை ஊராக்கள் கூடுதலா உதவ வேணும்" என்று ஒரு தருணம் முன்பள்ளிப் பிள்ளை ஒன்றின் தாய் கூட்டமொன்றில் பேசியது இன்றும் என் செவியில் ஒலிக்கின்றது.
வதனா அக்காவுடன் உதவிக்காக சில சமயங்களில் முன்பள்ளிக்குச் சென்றிருந்த வேளைகளில்
அவளின் தாய்மை, தியாகம், அரவணைப்பு எல்லாவற்றையும் நேரில் பார்த்திருக்கின்றேன். தாயை நினைத்து அழும் பிள்ளையை நெஞ்சோடு கட்டியணைத்து வாஞ்சையுடன் அரவணைப்பாள். பிள்ளைகளுடன் சேர்ந்து தன் இனிய குரலால் இசைபாடி மகிழ்வாள். தனது வயலினில் பாடல்
ஜீவநதி 72 புரட்டாதி 2014
43

Page 46
ஜீவநதி 72 புரட்டாதி 2014
இசைத்து பிள்ளைகளின் மனதை மகிழ்வித்து பிள்ளைகளோடு பிள்ளையாய் இசைந்திருந்து சுகானுபவம் கொடுப்பாள். அந்தத் தருணங்களில் அவளின் விரல்களும் கையும்
புரியும் அற்புதம் இசையாய் பிள்ளைகளின் ○ மனங்களை இசைவித்திருக்கும்.
இப்படி இலட்சியத்துடன் வாழ்ந்தவளின் மனதில் விரக்தி வருவது C இயல்பானதுதான்.
இயலுமை என்பது உளத்தளவதா?. உடலளவதா?. எனக்குப் புரியவில்லை!.
அவளின் வாழ்வு திசை மாறிப் போனதற்கு பொறுப்பாளியாக அவளா ζ இருந்தாள்?.
"அலரி விதை அரைச்சுத் தா!...” இந்த வார்த்தை என் மனதைச் சல்லடையாக்கியது.
C
"அக்கா வீணாக மனசைக் குழப்பாதையடி. உந்த எண்ணம் வரேக்கை உன்ரை பிள்ளையை நினை. அத்தானை நினை. அதுகளை அந்தரிக்க விட்டிட்டு போக \ நினைக்காதையடி.”
அறிவுரை கூறும் எனது நாவும் சீரற்றுக் குழறுகின்றுது.
வதனா அக்காவின் சிந்தனை முழுவதும் அவளின் கணவனின் கஷ்டங்களும் பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கனவுகளின் சிதைவுமே குடிகொண்டிருந்தன. அவளின் ஏக்கத்தைக் குறைக்க நான் பேசுவதற்கு எதுவுமில்லாமல் இருந்தது.
"உனக்குத் தெரியாத ஒண்டுமில்லை. என்ரை கனவுகள் எல்லாம் சரி. முடிஞ்சு போச்சு."
மூலையில் சரித்து வைத்திருந்த தன்னுடைய வயலின் பெட்டியை திரும்பிப் பார்த்தாள். கண்களில் மீண்டும் எரிதழல் சொட்டுகள்.
“எத்தினை பிள்ளையளோடை விளையாடின னான். என்ரை பிள்ளையோடை விளையாட?." மீண்டும் விக்கி விக்கி அழுதாள் அக்கா,
“என்ரை பிள்ளை "நேசரிக்கு" போகத் தொடங்கிவிட்டுது. பெத்தது மட்டும்தான் நான் அவர்தான் தாய் மாதிரிப் பார்க்கிறார். அவர் எனக்கோ என்ரை பிள்ளைக்கோ ஒரு குறையும் வைக்கயில்லை. கையில்லாமல் கிடந்து சீரழியிற என்னை ஒரு நாள் தன்னிலும் சீறிச்சினந்து கதைச்சது கிடையாது. பாவம் அவருக்கு என்னாலை கரைச்சல், அதுமட்டுமே என்ரை ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளையை ஆசைதிர கட்டிப்பிடிச்சுத் தூக்கிக் கொஞ்ச முடியேல்லை. கட்டிப்பிடிச்சு நெஞ்சோடை சேர்த்துப் படுக்க ஆசையா இருக்கு. இதைச் செய்ய முடியாத எனக்கு ஏன் வாழ்க்கை?. என்ரை பிள்ளை என்னை விட்டுத் தூரத் தூரப் போறது போல கிடக்கு. தாயாக அவளுக்கு இன்னும் எத்தினை தேவையளைச் செய்ய வேண்டி வரும். பிரியனுக்கு மட்டுமில்லை
44ھ۔
 

பிள்ளைக்கும் சுமையாகத்தான் இருக்கப்போறன்".
தோள்மூட்டுக்குச் சற்றுக் கீழாக வெட்டப்பட்டிருந்த வதனா அக்காவின் இரண்டு
கைகளின் துண்டங்களும் துடியாய் துடித்தன.
"அக்கா. நீ செய்த புண்ணியம் தான் உன்ரை உயிருக்கு ஒண்டும் நடக்கையில்லை. அத்தானையும் சுகமாக வைச்சிருக்குது. உண்ரை இரண்டு காலும் ஒரு குறையுமில்லாமல் இருக்கு, நடமாடித்திரியிறாய். கடவுள் இருக்கிறானக்கா. சண்டையுக்கை மாட்டுப்பட்டு எத்தினைபேர் செத்துப் போச்சுதுகள். எத்தினை குழந்தையள் அனாதையளா இருக்குதுகள். எத்தினைபேர் படுத்த படுக்கையிலை கிடக்குதுகள். நீ உன்ரை பிரியன் பிள்ளையை முழுசாப் பாத்துக் கொண்டிருக்கிறாய். அதை நினைச்சு சந்தோசப்படு. அதை விட்டிட்டு வீண் முடிவுகளுக்குப் போகாதை, நீ என்ன செத்துப் போவிட்டியே?. உன்ரை லட்சியம் உன்ரை உயிருக்கைதானே கிடக்கு. அதை உன்ரை பிள்ளையை வைச்சு நிறைவேற்றிக்காட்டு!. விசர் முடிவுகளுக்குப் போகாதை. உன்ரை உயிர் இருக்கும் வரைக்கும்தான் உன்ரை இலட்சியமும் இருக்கும். உண்ரை வயலினை உன்ரை பிள்ளை வாசிக்கிற நாள் வரும். முட்டாள் மாதிரி முடிவெடுக்காதை."
வதனா அக்கா வயலினைப் பார்த்தபடி இருக்கிறாள். கண்களில் வழிந்த கண்ணிர் காயத் தொடங்கியது.

Page 47
១ថ្ងៃ១៤មិថ្វាយព្រួu }} - 8
5Tலம் காலமாகவே எங்கள் தமிழ் சமூகத்தில் கலை, இலக்கிய மற்றும் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளில் குறிப்பாக விழாக்கள் கூட்டங்களில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறிவருகிறது.
இலக்கியப்பிரவேசம் செய்த காலம் முதலாய் தொடர்ச்சியாக இந்தத்துண்பியலை என்னைப் போன்று சகித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்,
குறிப்பாக தமிழர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் உரியநேரத்தில் தொடங்காது. ஆனால் - தமிழர் தங்கள் திருமண நிகழ்வுகளில் மாத்திரம் சுபமுகூர்த்தம் தப்பிவிடலாகாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். சோதிடர் சொல்லும் திருமண நாள் சுபமுகூர்த்தம் குறித்துவிட்டால் எப்பாடுபட்டாவது மணமகன் மன மகளை உரியநேரத்திற்கு முன்பாகவே அலங்கரித்து மணவறைக்கு அழைத்து வந்துவிடுவார்கள்.
இந்த வீடியோக்காரர்கள் இருக்கிறார்களே. அவர்களின் லூட்டி தாங்க முடியாது.
துணர்கு கொருக்கு
அதிகாலையே எழுந்து குளித்து தோய்ந்து
அலங்கரிக்கப்பட்ட மணமகளையும் மணமகனை
யும் பல்வேறு கோணங்களில் பதிவுசெய்வதிலும் தமது வித்துவங்களைக்காட்டுவதிலும் மணமக்களை களைத்துவிடச்செய்துவிடுவார்கள். அதனாலும் ஏற்படும் கால தாமதங்களினால் மணமக்கள் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்வதற்கு தாமதமாகிவிடும்.
அய்யர் தனது கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்து அவசரப்படுத்திக் கொண்டிருப்பார். அவருக்கு அந்த முகூர்த்தம் தப்பிவிட்டால் அந்தப் பாவமும் தம்மைச்சூழ்ந்துவிடுமே என்ற பயம்.
எம்மவர்கள் நல்ல புத்திசாலிகள் முகூர்த்த நேரம் ஒடுவதற்கு முன்னர் கூறைச்சேலையை மனமகள் கையில் கொடுத்து தாலி கட்டச் செய்துவிடுவார்கள். அதன் பிறகு மணமகளை உள்ளே அனுப்பி சாவகாசமாக கூறையுடுத்தி அழைத்து வந்து இதர சடங்குகளை தொடருவார் கள். அதற்குள் சாப்பாட்டுப்பந்தி ஆரம்பமாகிவிடும்.
உங்களில் பலர் இந்தக்கர்ைகொள்ளாக் காட்சியை கர்ைடு களித்திருப்பீர்கள்.
தமிழர் திருமணங்களில்தான் அப்படி யென்றால் தமிழர் சம்பந்தப்பட்ட இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடுகள், விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அந்தக்காட்சியை வேறு ஒரு கோணத்தில் பார்த்து ரசிப்பீர்கள். அல்லது சினம் கொள்வீர்கள். அல்லது சகித்துக்கொண்டு மனதிற்குள் நிகழ்ச்சி ஏற்பாட் த் திட்டுவீர்கள்.
 
 
 

முருகபூபதி
இங்கு நான் சொல்லவேண்டிய கதை இந்த துண்டு கொடுக்கும் துன்பியல் பற்றித்தான்.
உரியநேரத்திற்கு நிகழ்ச்சி ஆரம்பிக்காது. பின்னர் நேரத்தை மிச்சம் பிடிக்க ஒரு தந்தி
ரோபாயத்தை பின்பற்றுவார்கள்.
h ர்பியல் நாடகம்
ஏற்கனவே பேச்சாளருக்கு எத்தனை
நிமிடங்கள் பேச வேண்டும் எனச்சொல்லியிருப்பார்கள். அவரும் இராப்பகலாக யோசித்து குறிப்பிட்ட நேரத்துக்குள் பேசத்தக்கதாக குறிப்புகளுடன் வருவார். சபையைப் பார்த்ததும் அவருக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் அவரைத்திருப்திப்படுத்து வதற்கு மேலும் சில வார்த்தைகளை அந்தக்கணம் யோசித்து உதிர்ப்பார். தனக்குப்பிடிக்காதவர்கள் இருந்தால் அவரை சூடேற்றுவதற்காக இடக்கர் அடக்கராக அங்கதம் பேசுவார். அதனால் பேச்சு திசை மாறும் நேரமும் கடக்கும். இவ்வாறு ஒவ்வொரு பேச்சாளரும் நேரத்தை எடுத்துவிடும் பொழுது நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்பவரும் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களும் துண்டு எழுதிக்கொடுக்கும் காரியத்தில் இறங்குவார் கள். அப்படித்தான் துணர்டு எழுதி பேச்சாளரிடம்
செய்துவிட்டு தனது வித்துவத்தை தொடருவார்.
நிகழ்ச்சியை நடத்தும் தலைவரிடம் நேரக் கட்டுப்பாடுகளை கவனியுங்கள் எனச்சொன்னாலும் ஒம் என்று ஏற்றுக்கொண்டு தனது உரைகளை நீட்டி முழக்குவார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள் நெளியவேண்டியது தான்.
அவுஸ்திரேலியா மெல்பனில் சில வருடங் களுக்கு முன்னர் தமிழ் ஆய்வு ஆர்வலர் மருத்துவக் கலாநிதி பொண். சத்தியநாதன் அவர்கள் ஒரு தமிழ் மாநாடு நடத்தினார். தமிழ்நாடு, சிங்கப்பூர், ہے as
ஜீவநதி 72 புரட்டாதி 2014

Page 48
ஆபிரிக்கா, மலேசியா முதலான நாடுகளிலிருந் தெல்லாம் பேராளர்கள் வந்து பேசினார்கள். சிட்னி யிலிருந்தும் தமிழ் அன்பர்கள் வந்தனர். அவர்களில் கவிஞர் அம்பியும் வந்து மாநாட்டில் உரையாற்றினார்.
ஏற்கனவே மாநாட்டின் மாலை அமர்வு சற்று தாமதமாகத்தொடங்கியிருந்தது. நேரக்கட்டுப்பாடு தேவையாகவிருந்தது.
அம்பி தனது உரையை ஆரம்பித்து தொடரவும் அவருக்கு ஒரு துண்டு அனுப்பப்பட்டது. அதில் நேரம் போகிறது என்று எழுதப்பட்டிருந்தது.
அம்பி அதனைப்பார்த்துவிட்டு அமைதியாக நேரம் போகும்தானே. என்றார். சபையில் அட்டகாசமான சிரிப்பொலியும் கரவொலியும் எழுந்தது.
நான் 2001 இல் ஒழுங்கு செய்திருந்த எழுத்தாளர் விழாவில் சிட்னியிலிருந்து வருகை தந்து பேசிய பேராசிரியர் பொண். பூலோகசிங்கம் அவர்களுக்கும் அவ்வாறு துணர்டு வழங்கப்பட்ட பொழுது அது அவருக்கு கடுப்பேற்றிவிட்டது.
தான் பல நாட்களாக மினக்கெட்டு ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதிக்கொண்டு வருகின்றேன். அத்துடன் உரியநேரத்துக்கும் மண்டபத்திற்கு வந்து விட்டேன். நான் எனது பேச்சை முடிக்கும் முன்னர் துணர்டு அனுப்புவது என்னை அவமதிக்கும் செயல் என்றார்.
ஒருவகையில் அவரது வாதமும் சரிதான். சமீபத்தில் நான் சம்பந்தப்பட்ட விழா வொன்றிலும் உரியநேரத்தில் நிகழ்ச்சி தொடங்கவில்லை.
பலர் ஆடி அமாவாசை நாளில் நாம் நிகழ்ச்சி நடத்துவதாக குறைப்பட்டார்கள். முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு நோன்பு காலம்
என்றார்கள்.
ஆடி அமாவாசை விரதமிருப்பவர்கள் கோயி லுக்குச் சென்று பிரார்த்தனை முடித்துக் கொண்டு அங்கு தரப்படும் அன்னதானத்திலும் விரதப்பசி போக்கிய பின்னர் வரட்டும் என்று காத்திருந்து தாமதமாகவே நிகழ்ச்சிகளை தொடங்கினோம்.
எதிர்காலத்தில் நாம் ஆங்கிலக் கலண்டர் பார்த்து நிகழ்ச்சிக்கு நாள் குறிக்க முடியாது. பஞ்சாங்கம் பார்த்துத்தான் இலக்கியக்கூட்டத்துக் கும் நாள் தெரிவு செய்யவேண்டும் என்பதை புத்திக்கொள் முதலாக்கிக்கொணர்டோம்.
நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கப்பட்ட தனால் துணர்டு எழுதும் படலத்தில் ஈடுபட்டேன். மணர்டப வாசலில் நூல்களின் விற்பனைக்குப் பொறுப்பாக இருந்தமையினால் அந்த மேசையில் இருந்த காகிதங்களும் பேனையும் துணர்டுகளில் குறும்செய்தி அனுப்புவதற்கு பயன்பட்டது.
மேடைக்குச்சென்று பேச்சாளரிடமோ
நிகழ்ச்சிக்குத்தலைமை தாங்குபவரிடமோ துணர்டை எடுத்துச்சென்று கொடுப்பதற்கு ga}
%-.
ஜீவநதி 72 புரட்டாதி 2014
 
 
 
 
 

தயங்கினார்கள். சங்கடப்பட்டார்கள். எனினும் ஒரு அன்பர் அதற்கு முன்வந்தார்.
தொடர்ந்தும் அந்த அண்பரையே துண்டு கொடுப்பதற்கு நான் அனுப்பத்தொடங்கியதும் அவர் சிரிப்பு கலந்த எரிச்சலுடண் - என்ன. எனக்கு இந்த
3.
விழாவில் இந்தவேலையையே தந்துவிட்டீர்களே . என்றார்.
வருங்காலத்தில் நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது அந்த பொறுப்பான (?) வேலைக்கும் ஒருவரை உத்தியோகபூர்வமாக நாம் நியமிக்க வேண்டும் என்று செயற்குழுவிடம் சொன்னேன். தமிழர்களின் விழாக்களில் பொன்னாடை - சால்வைத்துணர்டு போர்த்தல் மரபாகிவிட்டமை போன்று மேடையிலிருக்கும் மேசைக்கு துண்டு கொடுத்தனுப்பும் துன்பியல் மரபும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
சரி. பிரச்சினையை சொல்லிவிட்டேன். அப்படியென்றால் தீர்வுதான் என்ன?
தீர்வு இருக்கிறது. நிகழ்ச்சிகளை உரியநேரத்தில் தொடங்க வேண்டும். தொடங்கும் முன்னர் பேசவிருப்பவர் களை மண்டபத்தின் ஒரு மூலைப்பகுதிக்கு அழைத்து நேரக்கட்டுப்பாடு பற்றிய தெளிவுகளை வலியுறுத்தல் வேண்டும். குறுகிய நேர பயிலரங்காக அந்த ஆலோசனைகள் பகிரப்படல் வேண்டும்.
அவ்வாறு நேரக்கட்டுப்பாட்டை உதாசீனம் செய்பவர்களை அடுத்த நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் தவிர்க்கவேண்டும்.
மற்றுமொரு முக்கியமான சிந்தனையும் எமது தமிழர்களுக்கு இருக்கவேண்டும்.
தங்களுக்குத் தரப்படும் அழைப்பிதழில் என்ன நேரத்தில் நிகழ்ச்சி தொடங்குகிறது எனக்குறிக்கப் பட்டிருக்கும். எனவே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே மண்டபத்திற்கு சென்றுவிடல் வேண்டும்.
அவ்வாறு அனைவரும் சென்றும் நிகழ்ச்சி உரியநேரத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் ஏற்பாட்டாளர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அவர்களிடம் தமது கண்டனங்களை அழுத்த மாகவே சொல்லவேண்டும்.
அது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.
நிகழ்ச்சிகளை உரியநேரத்தில் தொடங்கும் மரபை பின்பற்றுவோமேயானல் தாமதங்கள் தவிர்க்கப்படும், துண்டு கொடுக்கும் துன்பியல் நாடகங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் இதுவெல்லாம் சாத்தியமா? எங்கட ஆட்களின் நிகழ்ச்சிதானே
நிச்சயமாகத் தாமதமாகத்தானே தொடங்கும் என்ற அனுபவத்தில் பெற்றுக்கொண்ட பழக்கதோஷமும் எமது தமிழ் சமூகத்தில் மற்றுமொரு துன்பியல் தான். இதுபற்றியும்தான் சற்று யோசிப்போமே.

Page 49
ஜீவநதி ஒரு போதும் தனி மனிதத் தாக்குதல்களுக்கு இட ஆம் இதழில் வெளியான ஒரு பாராட்டுச் செய்தியில், அ த கருத்துக்களை ஒரு கடிதத்தில் “ஞானம்" இதழுக் பிரசுரிப்பதாக கூறினாள், பின்னர் பொருத்தமற்ற காரண 30.9.2014 அன்று இக்கடிதத்தை பிரசுரிக்க முடியாது என பிரசுரமாகின்றன. இலக்கிய வாசக
Wednesday, 9 Ju
ភា ឆ្នា {
ஆசிரியர் "T 20重4.7亨
“to bilo?Ti i fisija04. uisti 170 சிவன்னியகுலத்தின் பாராட்
"ஞானம்" சஞ்சிகையில் வெளிவந்த அநேக சிறுக கிடைத்திருப்பது கொணர் டாடப்படவேணர் டியதே. அ இறும்பூதெப்துவதும் வெற்றிக்களிப்பில் மிதப்பதும் மன சஞ்சிகைகளை விளிம்புநிலைக்குத் தள்ளுவதற்கு நீங்கள்
35(Ե6մ35/.
"தகவம் அமைப்பு "ஞானம்" சஞ்சிகையுடன் கெ செய்யும் நடுவர்குழு குறித்தோ உணர்மையான இலக்கி என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பரிசுபெற்றவர்கள் ஏனைய சஞ்சிகைகளிலும் எழுதிக் குெ அவர்களின் சிறுகதைகளுக்கு "தகவம்" பரிசு கிடைத்த போற்றுவதிலும் ஏனைய சஞ்சிகைகளை விளிம்புநிலை “பத்திரிகா தர்மம்" பற்றிப் பிரக்ஞையுள்ள ஒரு சஞ்சின அவசியமல்லவா? வாசகர் என்ன எழுதினாலும் அவர்களி சிவன்னியகுலம் "ஜீவநதி மீது கொண்ட காழ்பினால் தான் "ஞானம்" சஞ்சிகையை மைய நிலைக்குக் கொணர் முடியாமற்போய்விட்டதா? "ஜீவநதி"தன்னைக் "கணக்கி பொறாமைதியில் வெந்து, குடும்ப உறவுகளைக்கூடச் சின ஒரு சஞ்சிகை ஆசிரியரால் ஏன் விளங்கிக் கொள்ள மு ஒருவர் வன்னியகுலத்தினி சூட்சுமத்தை விளங்கிக்ெ கடிதத்திலுள்ள உள் விவகாரம் காரணமாக அக்க ஆலோசகர்களும் அறிவுறுத்திய வேளையிலும் - தம்ை பிரசுரித்தமையும் பின்பு அதற்காக மண்ணிப்புக்கோரியமை மயங்கி, வன்னிய குலத்தின் சூழ்ச்சிவலையில் விழுந்து வி பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்ப பிரசுரிப்பீர்களா? வன்னியகுலத்தின் கடிதத்தைப் பிர சஞ்சிகையின் புகழ் ஓங்குகின்றது என்ற வெற்றிக் விளிம்புநிலைக்குத்தள்ளப்படுகின்றன என்ற ஆத்ம திருப்
"ஜீவநதி சஞ்சிகையின் வருகையின் நோக்கம் ss39ਪT56i. G। 1767 ਪੰsਪ3 எழுத்தாளர்களினதும் வாசகர்களி: கொண்டிருக்கின்றது. அதன் வெளியீட்டில் எந்தவித குழுமோதல்களுக்கோ, கயலாபம் கருதிய துதி பாடல் வெளிக்கொணர முடிந்தமைக்கு ஆத்மபலத்தின் மீதும் "ஜீவநதி"யின் கொள்கைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடிய மாறியதனால் யாருக்கு லாபம் கிட்டினாலும்"ஜீவநதி அலட்டிக்கொணர்டதுமில்லை. ஆனால் இந்த அதி விளிம்புநிலைக்குத் தள்ளவும் பகிரதப்பிரயத்தனம் செய்
 
 

டமளிப்பதில்லை. ஆனாலும், “ஞானம்" சஞ்சிகையின் 170 நாவசியமாக "ஜீவநதி பற்றிக் குறிப்பிடப்பட்டதனால், அது கு அனுப்பி வைத்தபோதிலும், முதலில் ஞானம் ஆசிரியர் 3ணத்தை கூறி இக்கடிதத்தை தட்டி கழிக்கும் நோக்குடன் ா அறிவித்தார். இதன் காரணமாகவே இக்கடிதங்கள் இங்கு ர்களே பத்திரிகா தர்மம் இது தானா?
lly, 2014, 2:01 AM
பேசுகிறார்
}...!!! ...! }3, f3ð (M. tiOt iti
டுக்கடிகச் செய்கி (கறிக்க."
தைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் "தகவம்” பரிசு அதற்கான பாராட்டுகளில் ஒரு சஞ்சிகை ஆசிரியர் ரித இயல்பு. ஆனால், இவ்வெற்றிக்களிப்பில் “சகோதர” ர் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது தான் வேதனையைத்
ாண்டிருக்கும் சார்புநிலை குறித்தோ, பரிசுகளைத் தெரிவு கிய விசுவாசம் கொண்டோர் அலட்டிக் கொள்வதில்லை "ஞானம்" சஞ்சிகையில் இடம்பெற்ற சிறுகதைகளுக்காகப் காண்டிருப்பவர்களே. “ஞானம்" சஞ்சிகையில் இடம்பெற்ற தமைக்காக “ஞானம்"சஞ்சிகையை மையத்தில் வைத்துப் 0க்குத் தள்ளுவதிலும் என்ன தர்க்க நியாயம் உள்ளது? க ஆசிரியர் அறிவியல் ரீதியாகச் சிந்திக்க வேண்டியது ன் கடிதங்களைப் பிரசுரிப்பதுதான் பத்திரிகா தர்மமா?
"ஜீவநதி"யை விளிம்புநிலைக்குத் தள்ளும் முயற்சியினால் டு வந்துள்ளார் என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள ல்” எடுக்காததாலும் ஜீவநதியின் மீதுள்ள காழ்ப்பினாலும் தத்து, உலா வருபவரின் உள்நோக்கத்தை அனுபவம் மிக்க முடியாமற் போனது? ஏற்கெனவே, மூத்தசஞ்சிகையாளர் காள்ளாமல், வன்னியகுலம் எழுதிய கடிதமொன்றை கடிதத்தைப் பிரசுரிக்கவேணர் டாமென நணர் பர்களும் மப் புகழ்வதாக எண்ணிக்கொணர்டு தமது சஞ்சிகையில் யும் நீங்கள் அறியாததா? நீங்களும் இப்போது புகழ்ச்சியில் .2 irġ,G36r தற்காக வாசகர்கள் எழுதும் கடிதங்கள் அத்தனையையும் சுரிக்க நேர்ந்தமைக்கான காரணம் என்ன? “ஞானம்” களிப்பா அல்லது "ஜீவநதி”, “செங்கதிர்”, “சுடர்ஒளி” தியா? அதன் மகுடவாசகமாக அமையும் பாரதிதாசன் வரிகளில் நார பலம்" குறைவான நிலையிலும், இலக்கியத்தின் மீது னதும் ஆதரவுடன் "ஜீவநதி தொடர்ச்சியாக வெளிவந்து படாடோபமுமில்லை, ஆர்ப்பரிப்பும் இல்லை. எந்தவித ல்களுக்கோ இடம்கொடாமல் இதுவரை 70 இதழ்களை உழைப்பின் மீதும் கொண்ட நம்பிக்கை தான் காரணம். பாமற் போனவர்கள் “ஜீவநதி’யின் அதிருப்தியாளர்களாக க்கு நட்டமில்லை. இதனைப் பற்றி ஜீவநதி அதிகம் ருப்தியாளர்கள் ஜீவநதியை இருட்டடிப்புச்செய்யவும் ப்து வருகிறார்கள், ஜீவநதி இன்னமும் "தக்க வைத்துக்
ஜீவநதி 2 புரட்டாத 20

Page 50
கொள்ள வேணர்டிய நிலைக்குத் தள்ளப்படவில்6ை கொண்டிருக்கின்றது. உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலு கண்டுள்ளது. ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களும் இலக்கியப் பயணத்தில் இணைந்துள்ளார்கள். இவை எல் பொறுக்கவில்லையா? சகோதர சஞ்சிகைகளின் வளர் வன்னியகுலம் போன்ற சதிகாரர்களின் வலையில் ஏன் சிக்
நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விட்ட தவறினால் பிரசுரிக்க வேண்டியநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்க வேண்டாம் ஜீவநதி ஒரு போதும் அதனை விரும்ப தலைமுறையினர் உலகைப் பார்க்கவேண்டும்” என்ற சு. அதேவேளை, சகோதர சஞ்சிகையாளர் ஒருவரின் அப்பா என்ற கவலையும் எழாமலில்லை, மூத்த சஞ்சிகையா வன்னிகுலம் எடுத்துக்கொண்ட சதிமுயற்சிக்குத் து6ை தெரியவில்லை. "நீயுமா புரூட்டஸ்?" என்று சீஸர் கே அவ்வாறாக உங்களிடம் கேட்குமளவிற்கு உங்களின் ம எங்களுடைய கவலை எல்லாம் வன்னியகுலம் போன்ற நிந்தையே" என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டு
வன்னிகுலத்தின் "தகிடுதத்தம்” எல்லோரும்
விளிம்புநிலை, மையம் என்பன பற்றியே போதிய தெளிவி வேண்டுமானால், டெரிடாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை கு கூறுங்கள்.
க.பரணிதரன்
ஆசிரியர், "ஜீவநதி சஞ்சிகை
கலைஅகம், அல்வாய் (இந்த கடிதத்தை முழுமையாக பிரசுரிக்குமாறு கேட்டுக்ெ
Wednesday, 9 July, 2014, 11:50AM அன்புள்ள பரணிதரன்
தங்கள் வாசகர் கடிதம் பார்த்தேன்.ஒரு உணர்ை குலத்தின் கடிதத்தை நான் ஒரு பாராட்டுக்கடிதமாகவே இருந்தாலும் அதுதான் உணர்மை. உங்களது கடித பலவிடயங்கள் இருப்பதாக உங்கள் கடிதம் சொல்கிறது உண்டு. அதனை நாண் பல கொழும்பு மேடைகளில் செ பேட்டி ஒன்றிலும் கூறினேன்.
இன்றைய இலக்கியச் சூழலில் ஒரு சஞ்சிகையி காழ்ப்புணர்ச்சியுடனான விமர்சனங்களும் தீர்மானிப்பதில் தீர்மானிக்கும். உங்களது வாசகர்கடிதத்தை பிரசுரிப்பேன்.
தி. ஞானசேகரன் (ஞானம் பிரதம ஆசிரியர்)
Wednesday, 30 July, 2014, 4:55AM அன்புள்ள பரணிதரன்
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவ. கிடைத்துள்ளது. அதற்கான விழாக்கள், பத்திரிகைச் ெ ஞானத்தின் தலையங்கமும் அது பற்றியதுதான். த சிறுமைப்படுத்தக் கூடிய எந்த விடயத்தையும் நான் ஞா வெளிக் கொணர்ந்த ஜூவாவால் இனி இயங்க சஞ்சிகையாளர்களாகிய நாம் அவரைப் புணர்படுத்தக்கூ இதன்காரணமாக நான் முன்னர் கூறியபடி தங்கள் கடிதத பிரசுரிப்பதானால் முழுமையாகப் பிரசுரியுங்கள் இ குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கள் கடிதம் பிரசுரிக்கப்படாமைக் அன்புடன், தி. ஞானசேகரன் (ஞானம் பிரதம ஆசிரியர்)
ஜீவநதி 72 புரட்டாது 2014
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

), படிப்படியாக ஆழமாகக் காலூன்றி முன்னேறிக் ம் ஏழு ஆண்டுகளில் ஜீவநதி படிமுறையான மலர்ச்சி துடிப்பான இளையதலைமுறையினரும் ஜீவநதியினர் லாம் உங்களுக்கும் ஜீவநதியின் அதிருப்தியாளர்களுக்கும் ச்சியில் எப்போதும் மகிழ்ச்சியுறுவதாகக் கூறும் நீங்கள் கிக் கொண்டீர்கள்? அறியாமைதான் காரணமா? "அக்கினிப்பிரவேசம்” செய்யும் வகையில் இக்கடிதத்தைப் 1ள் என்பதை உணர்கிறீர்களா? எங்களுக்குள்நிழல் யுத்தம் ாது. "மூத்தோரின் தோள்களில் ஏறிநின்றே இளைய ற்றுப் பற்றிய புரிதலுடனேயே ஜீவநதி நடைபோடுகிறது. வித்தனம் சதிகாரர்களின் சூழ்ச்சிக்குத் துணைபோகிறதே ளர் ஒருவர், எங்கள் குடும்ப உறவுகளை சிதைப்பதற்கு ன போனமை கூட இப்போது எங்களுக்குப் பெரிதாகத் கட்டமை இந்நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தாலும் கூட, திப்புநிலை இன்னமும் எங்களிடம் தாழ்ந்துவிடவில்லை. சதிகாரர்கள் பாடும் துதிகள் யாவும் உங்களுக்கான"துதி ம் என்பதுதான்.
அறிவார்கள். பின்நவீனத்துச் சிந்தனைகள் பற்றியோ ல்லாமல் அவர் பதப்பிரயோகஞ்செய்ய எத்தனிக்கின்றார். றித்து ஆழமாக படிக்குமாறு வன்னியகுலத்துக்கு அறிவுரை
காள்கின்றேன். இல்லாதுபோயின் பிரசுரிக்க வேண்டாம்)
மயை உங்களுக்குச் சொல்லவேண்டும். திரு சி. வண்ணிய பார்த்தேன்.இதனை நம்புவது உங்களுக்கு கஷ்டமாக த்தை வாசித்தபோதுதான் அக்கடிதத்தின் பின்னால் 1. ஜீவநதி மீது எனக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் ால்லியிருக்கிறேன். சமீபத்தில் வசந்தம் தொலைக்காட்சி
ண் தரத்தை பரிசுகள் தீர்மானிப்பதில்லை. அதேபோன்று லை. இவையெல்லாம் வெறும் சலசலப்புகள்தான். காலம்
ர்களுக்கு கனடா சர்வதேச விருதான இயல்விருது Fய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அடுத்து வரும் தலையங்கம் அப்படி இருக்க, டொமினிக் ஜீவாவை னம் இதழில் பிரசுரிக்க முடியாதுள்ளது. 401 இதழ்களை முடியாது. அதற்கான களம் அவரிடம் இல்லை. டாது. அதனை இலக்கிய சமூகம் ஏற்றுக் கொள்ளாது. தைப் பிரசுரிக்க முடியாத சூழல் தற்போது எற்பட்டுள்ளது. ல்லையெனில் பிரசுரிக்க வேணர் டாம் எனத்தாங்கள் குவேறுகாரணம் எதுவுமில்லை.

Page 51


Page 52
|
ਰੂ?
4॥===
ਇਕ ਸਰਕਾਰੀ ॥
WEDDING CARD SI
15/2, Murugesar Lane, Nall
T.P: 021 2229285, 01772
இச் சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த, க

| உங்கள் இல்லங்களில் நடைபெற இருக்கும் மங்களகரமான
- நிகழ்வுகளுக்கு...
கலர்ஸ்
சருமண அழைப்பிதழ்
காட்சியறை
MIAT F-1 COLOURS
2hi
R
ur,Jaffna. 22259
கலாமணி அவர்களால் மதி கலர்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.