கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2013.02 (சிவராத்திரி சிறப்பு மலர்)

Page 1
அருள்
மஹா சிவராத்
வெ6 ஸ்ரீ துர்க்காதே
தெல்லிப்பை
- 20

"உளி
திரி சிறப்பு மலர் ரியீடு : வி தேவஸ்தானம் ழ, இலங்கை
D13

Page 2
அன்னை சிவத்தமிழ் தங்கம்மா அப்பாக் பிறந்தநாள் அறக்eெ
 

ழ்ச் செல்வி கலாநிதி
5.TGOL 6igs - 2013

Page 3
வெளியீடு : முநீ துர்க்காதேவி தேவஸ்தானப்
வதல்லிப்பழை, இலங்கை,
சேர். பொன் இராமரு
சைவத் தமிழர்களினி ஒப்பற் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள். இ என்றும் நன்றிக்குரியது. பிறவியிலேயே அ ஆத்மீக ஞானகுருமார்களை நாடி அவ. வாழ்வைத் தெய்வீகமாக்கியவர். சுவாமி செல்லப்பா சுவாமிகள் வரை இ6 இப்பெருமக்களினி ஆற்றுப்படுத்தலி தர்மகாரியங்களுக்குப் பயன்படுத்துவதென நாவலர் பெருமானின் தொடர்பும் கல்விப்பு
1910ஆம் ஆண்டு மருதனார்மடம் ச பெரிய காணியில் மிகப்பெரிய பாடசாலைை போல பாடசாலை கட்டுவாய் என்ற சித் பாடசாலையை உருவாக்குவதற்கு இந்தி கொண்டுவந்து கூடாரம் அமைத்து, அவு அறிந்த பாடசாலை அமைப்பில் பிரப 20-02-1913ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட் அமைக்கப்பட்டு ஆலயத்தில் சிவகாமி அ கோவிலும் அமைக்கப்பட்டது. பல நூறு பெ இக் கல்லூரி வளாகத்தில் ஆசிரிய கல. மனையியல் பாடசாலை என தொழிற்பய 1917ஆம் ஆண்டு ஆணிகளுக்காக திருநெல் நிறுவும் முயற்சியை ஆரம்பித்தார்.
 

ருள் ஒளி தாந்த சஞ்சிகை)
ஆசிரியர் ஆறு திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் திரு. கா. சிவபாலன் அவர்கள்
வருட சிவராத்திரி சிறப்பு மலர்
2013
D D
ug56660. : QD / 74/NEWS/2006Y
ாதனின் உருவச்சிலை
ற தலைவராக விளங்கியவர் சேர். இப்பெருந்தகை ஆற்றிய கல்வித்தொண்டு ஆன்மீக நாட்டம் கொண்ட இப் பெரியார் ர்கள் திருப்பாதங்களைப் பணிந்து தன் அருட்பரானந்தர் முதல் நல்லூர் தேரடிச் வரது ஞானகுருவாக விளங்கினர்.
ல தானி தேடிய சொத்துக்களை ாதிடசங்கற்பங்கொண்டார்.நல்லைநகர் பணிபற்றிய எண்ணத்தை விரிவாக்கியது.
சந்தியில் 26 ஏக்கர் நிரப்பரப்பைக் கொண்ட யை நிறுவும் பணியை ஆரம்பித்தார். கப்பல் தர் வாக்குக்கு அமைய பிரமாணடமான யக் கட்டடக் கலைஞர்களை கப்பலில் ஸ்திரேலியாவிலுள்ள லேடி இராமநாதன் )ாணர் டமான பாடசாலை கட்டப்பட்டு டது. பெண்களுக்காக விடுதிச்சாலையோடு ம்பாள் சமேத நடராசப் பெருமானுக்குரிய ண் பிள்ளைகள் இக்கல்லூரியைநாடினர். ாசாலை, தையல் பயிற்சிப் பாடசாலை, பிற்சிக் கூடங்களும் உருவாக்கப்பட்டன. ல்வேலியில் பரமேஸ்வராக்கல்லூரியையும்

Page 4
இலங்கையில் மிகப்பெரிய இந்துப் கல்லூரி சாதனை படைத்தது. பல பெண் - உருவாக்கியது. தான் தேடிய சொத்துக்கள் சாட்சியாக தர்ம சாதனமாக ஒப்படைக்கிே சைவத்தமிழர்கள் என்றும் நன்றிக்கடன் ப
ஒப்பற்ற உன்னத பெருமகனாரின் தி அவரால் உருவாக்கப்பட்ட இராமந அமைக்கவேண்டும் என இராமநாத வள்ள மேடைகளில் கூறி வந்தனர். ஆனால் ெ ஆண்டு கல்லூரி அதிபர் திருமதி. ஆ6 முயற்சியால் இராமநாத வள்ளலுக்கு சிை இச் சபையில் அன்னை சிவத்தமிழ்ச்செல் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு.இர அங்கம் வகித்து ஆற்றுப்படுத்தினர். சபை சி சிவத்தமிழ்ச்செல்வி அன்னை, அதிபர், அ சேகரிப்பதற்காக காரில் சென்று மாலை திரும்பினர். டிசம்பர் மாதம் 30ஆம் நாள் 2 பலரும் ஆனந்தக் கண்ணீர் விட்டு இ
ஆசிரியர்கள் ரூபா ஆயிரம் வீதம் இப்பணிக் பணத்தை நிரந்தர வைப்பிலிட்டனர். காலத் இராமநாதன் நினைவுப் பேச்சுப் போட்டிக் வட்டிப்பணம் பயன்படுத்த வேண்டுமென !
2013ஆம் அண்டு கல்லூரியின் நூற் நடைபெறும்வேளை பத்திரிகைகளில் அதிர் இராமநாதனின் உருவச்சிலை அவ்விடத் உடைந்த நிலையில் பிறிதொரு இடத்துக்கு ஒருகுழு முயற்சி செய்வதும், பலர் அவ்வ தெரிவிப்பதும் தொடர்ந்தது. இந்நிலை கடுமையான எதிர்ப்பையும் வேதனையை பழைய உருவச்சிலை உள்ள இடத்தில் தருகிறது. அறியாமை காரணமாக அவசரம். முற்பட்டவர்கள் இனிமேலாவது சிந்தித்து கட்டாயமாகும்.
அருள் ஒளி

- பெண்கள் கல்லூரியாக இராமநாதன் கல்விமான்களை இக் கல்லூரி வளாகம் அனைத்தையம் பார்வதி பரமேஸ்வரன் றன் என எழுதிய இராமநாதவள்ளலுக்கு
ட்டவர்கள்.
"ருத்தொண்டை கெளரவிக்கும் முகமாக எதன் கல்லூரியில் உருவச்சிலை எல் சிவபதமடைந்த நாள் முதல் பலரும் சயல் வடிவம் பெறவில்லை. 1993ஆம் னந்தி சிவஞானசுந்தரம் அவர்களது ல அமைக்க ஒரு சபை கூட்டப்பட்டது. வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, பா.சுந்தரலிங்கம் போன்ற பெரியவர்கள் சிறப்பாக இயங்கியது. நவராத்திரி நாளில் ஆறு.திருமுருகன், திரு.இராஜதுரை நிதி ல சுமார் அறுபதாயிரம் பணத்துடன் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. ப்பணியை வாழ்த்தினர். பாடசாலை -கு நிதி வழங்கினர். சிலைக்குழு மிகுதிப் துக்குக் காலம் சிலை புனரமைப்புக்கும் கான தங்கப்பதக்கம் வழங்குதலுக்கும் நிபந்தனை பிறப்பிக்கப்பட்டது.
றாண்டு விழா கொண்டாட ஏற்பாடுகள் ர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளிவந்தது. த்திலிருந்து அகற்றப்பட்டு, கால்கள் மாற்றப்பட்டமையும் வேறு சிலை நிறுவ டெயம் தொடர்பாக தமது எதிர்ப்பைத் யில் எமது தேவஸ்தானமும் தமது பும் தெரிவித்தது. தற்போது மீண்டும் பொருத்தப்பட்டுள்ளமை ஆறுதல் க உருவச்சிலையை உடைத்து அகற்ற ச் செயலாற்றவேண்டியது காலத்தின்
- ஆசிரியர்
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 5
மகாமகத்தை, கும்பகோணத்தின் "கும்பமேளா” என்று சொல்லுவார்கள். கும்பமேளா என்பது வடநாட்டிலே ஒரு தீர்த்தஸ்நான விழா. அது போல் இங்கே தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கிரக ராசிகளை வைத்து மாசி மாதத்தில் வரக்கூடியது.
மகாமகக் குளத்தில் அன்று எல்லா வித தீர்த்தங்களும் வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக நம்முடைய வீட்டிலேயயே குளிக்கும் தண்ணிரில் எல்லா தீர்த்தங்களையும் பாவனை செய்து கொள்ளும்போது எல்லா தீர்த்தங்களுடைய ஸ்நான பலன் கிடைக்கும் என்பார்கள். மகாமகக் குளத்தில் அன்றைய தினம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுமே வருவதாகச் சொல்லுவது புராண வரலாறுகள்.
கும்பகோணம் என்பது சிருஷ்டி காலத்திலிருந்தே மாபெரும் ஷேத்திரம். அங்குதான் பிரும்ம தேவர் சிருஷ்டியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள். அதனால் கும்பம், கலசம் அதில்தான் எல்லா ஜீவராசிகளும் அடங்கியிருந்தன. அங்கிருந்துதான் வெளிவந்தன. அந்தக் கும்பத்தின் மேல் ஒரு பாணத்தை எடுத்து விட, கட்டை வழியாக வெளியே வந்தன. அதை வைத்துத்தான் கும் பேஸ் வர ஸ்வாமி, கோணேஸ்வர ஸ்வாமி என்றும் பக்கத்திலுள்ள ஷேத்திரங்களும் விளங்கு கின்றன.
அருள் ஒளி

கும்ப கோணத்தில் பலவிதமான கோயில்கள் நிறைய இருக்கின்றன. சிவ கோயில்களும் விஷ்ணு கோயில்களும் இருக்கின்றன. காஞ்சி காமகோடி பீடத்தினுடைய கிளை மடமும் இங்கே இருக்கிறது. அனேகமாக எல்லா மதங் களுடைய மடங்களும் இருக்கின்றன. புண்ணிய தீர்த்தங்களில் விசேஷமான மகாமகக் குளமும் அங்கே இருக்கிறது. ஆகவே காசியைக் காட்டிலும் ஒரு விசேஷமான ஷேத்திரமாக கும்பகோண மகாமகத்தைப் பற்றிக் கூறுகிறார்கள்.
அந்ய ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய ஷேத்ரே விநச்யதி -
மற்ற சாமான்ய ஷேத்திரத்தில்செய்யும் பாவங்கள் எல்லாம் புண்ணிய ஷேத்திரங் களுக்குச் செல்லும்போது விலகுகின்றன.
புணிய ஷேத்ரே க்ருதம்பாபம் வாரணஸ்யாம் விநச்யதி -
புண்ணிய ஷேத்திரத்தில் செய்த பாவம் எல்லாம் காசிக்குச் சென்று கங்கா ஸ்நானம் செய்து விசுவநாத்தை தரிசனம் செய்தால் விலகுகிறது.
வாரணஸ்யம் க்ருதம்பாபம் கும்ப கோண விநச்யதி -
காசியில் செய்த பாவமல்லாம் கும்ப கோணத்துககுச் சென்று மகாமகஸ்நானம் செய்வதால் எல்லா பாவமும் போய்விடும் என்று கும்பகோணம் மகாத்மியத்தில் கூறப்பட்டிருக்கிறது.
3 - சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 6
பெரிய ஒரு புண்ணிய ஷேத்திரம் கும்பகோணம். அதைச் சுற்றியும் சிவ ஷேத்திரங்களும், விஷ்ணு ஷேத்திரங்களும் நிறைய இருக்கின்றன. இதைச் சுற்றிப் பாடல் பெற்ற ஷேத்திரங்களும் நிறைய இருக்கின்றன.
வைஷ்ணவ ஆழ்வார்களாலும், சைவ ! நாயன்மார்களாலும் பாடப்பட்ட ஷேத்தி ! ரங்களும் நிறைய இருக்கின்றன. இப்படி ( சமயத்துறையின் களஞ்சியமாக விளங்கு | வது கும்பகோணம், நெல் களஞ்சியம் - எனப்படும் தஞ்சை, சமயக் களஞ்சிய ; மாகவும் விளங்குவது.
தஞ்சை ஜில்லா என்றவுடன் பிருகதீச்வரர் 4 கோயில் ஞாபகம் வரும். அப்படி ராஜராஜசோழனால் நிர்மாணிக்கப்பட்ட தஞ்சை ஜில்லாவில் கும்பகோணம் : திருவையாறு, திருவாரூர் என்றும் மிகப் 4 பவித்ரமான ஷேத்திரங்களைக் கொண்டது. 8 திருவிடை மருதுதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, நந்திபுரம் இப்படி கும்பகோணத்தை மையமாகக் கொண்டு பல புண்ணிய ஷேத்திரங்கள் இருக்கின்றன.
8
நம்முடைய இந்து சமயத்துக்குத் தலைவர்கள் எல்லாம் மிகக் குறைவு, நதிகள், புண்ணிய ஷேத்திரங்கள், பகவான் இவர்கள்தாம் தலைவர்களாயிருந்து எல்லா மக்களையும் அழைத்துச் செல்லுகிறார்கள். திருப்பதி வேங்கடாசலபதி ஆயிரக் 6 கணக்கான, லட்சக்கணக்கான மக்களை தம் த
வசம் இழுத்து பக்தி மார்க்கத்தை வளர்த்துக் கொள்கிறார்.
400
கும்பமேளா போன்ற புண்ணிய தீர்த்த காலங்களில் புண்ணிய தீர்த்தமே லட்சக்
அருள் ஒளி
- 4 -

கணக்கான ஜனங்களையும் இழுத்து ஹிந்து மதத்தை மறுமலர்ச்சியுடன் வளர்த்துக் கொண்டு வருகிறது. இந்து மத்துக்குத் தலைவர்களைக் காட்டிலும், தெய்வீகமாக உள்ள புண்ணிய தீர்த்தங் களும், பகவானுமேதான், பெரிய தலை வர்களாயிருந்து எல்லா மக்களையும் நல்வழிப்படுத்துவது கண்கூடாக உள்ளது. அப்படிப் பட்ட மகாமகப் புண்ணிய ஷேத்திரம் கும்பகோணம். அனைவரும் புண்ணிய ஸ்நானம் செய்து தங்கள் உடல் அழுக்கைப் போக்குவதோடு உள்ளத்தில் தூய்மையையும், புனிதத்தையும் பெற வேண்டும். உள்ளத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளுவதுதான் ஸ்நானத்தி னுடைய முக்கிய விசேஷம்.
அந்த வகையில் மகாமக புண்ணிய காலத்தில் ஸ்நானம் செய்வதால் எல்லா விதமான பாவங்களையும் நீக்கும். தேசம், காலம், சத்பாத்திரம் எல்லாம் எங்கே ஒன்றாக கூடுகிறதோ அங்கே தானம் ஸ்நானம் எல்லாம் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தேசம் - கும்பகோண பிரதேசம் பவித்ர ஷேத்திரம்
காலம் - மகாமகப் புண்ணிய காலம். பாத்திரம் - எல்லா பண்டிதர்களும், த்பாத்திரங்களும் இத்தனையும் அமைவது அபூர்வம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை எல்லாரும் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் எல்லா நலங்களையும் அடைவதற்கு மகாமகத் நீர்த்தத்தில் ஸ்நானம் செய்தும் பகவானு டைய அனுக்ரஹத்தை அடைய வேண்டு மென்று ஆசீர்வதிக்கின்றோம்.
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 7
மகா சில
தமிழர் சமயமான சைவ சமயம், இறைவன் உருவம், அருவுருவம், அருவம் என்ற நிலைகளில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகிறான் என்று குறிப்பிடுகிறது. உருவம் அற்ற இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம் தாங்கி வருகின்றான். அதுவும் தானே வருகின்றான் என்பதை, "கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாகி, அறபுதக் கோலம் நீடி" என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பரம்பொருளான சிவம் சிவலிங்க வடிவமாகத் தோன்றிக் காட்சியளித்த நிகழ்வே சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. எனவே சிவராத்திரி என்பது இறைவன் சிவமாகிய இரவு என்று பொருள்படுகின்றது.
சிவராத்திரி
இறைவன் சிவமாகி அருளியதை எண்ணி வழிபடும் சிறந்த வழிபாடாக மகா சிவராத்திரி இருப்பினும் சிவனை எப் பொழுதும் வழிபடுவதற்கென நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி என்ற இதர சிவராத்திரிகளும் உண்டு. நித்திய சிவராத்திரிஎன்பது அமா வாசை அல்லது பெளர்ணமியிலிருந்து பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி நாட்கள் 24 நாட்களில் கொண்டாடப்படுகிறது. பட்ச சிவராத்திரி என்பது தை மாதத்தில் பெளர்ணமியை அடுத்த முதல் நாளிலிருந்து, தொடர்ந்து 13 நாட்கள் சிவபூசை செய்து வழிபடுவது. மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசி யில் கொண்டாடப்படுகிறது. யோக சிவ
அருள் ஒளி ത്തു

ராத்திரி
ராத்திரி என்பது திங்கட்கிழமைகளில் சூரிய உதயம் முதல் காலை மணி பத்துவரை சதுர்த்தசி இருக்குமானால் அன்று வழிபடப் படுகிறது. சூரிய உதயம் முதல், இரவு வரை 60 நாழிகையும் அமாவாச ைஇருப்பின் அதுவும் யோக சிவராத்திரி என்று வழி பாடுகள் செய்யப்டுகின்றன. மாசிமாதத் தேய்பிறையில் 14ஆம் நாளான சதுர்த்தசி யின் நள்ளிரவு 12.00 முதல் 100 மணி வரை வரும் வேளையே சிவபெருமான் சிவலிங்கத் திருமேனி கொண்டருளிய புண்ணியகாலம் என்றும் அதுவே மகா சிவராத்திரி காலம் என்றும் வழிபடப்படுகிறது.
புராணம்
பரம்பொருளான சிவத்தின் ஆணையை ஏற்றுப் படைத்தல் தொழிலைச் செய்கின்ற பிரமனுக்கும் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலுக்கும் ஒருமுறை தர்க்கம் ஏற்பட்ட தாம். அதாவது தம்மில் யார் உயர்ந்தவர் என்பதாகும். பிரமனும் திருமாலும் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண இயலாது பரம் பொருளான சிவத்திடம் முறையிட்டனர். இறைவரும் தம் கருணையினால் தங்களில் ஒருவர் என் திருமுடியையும், ஒருவர் என் திருவடியையும் தொட்டுவந்தால் உங்களில் சிறந்தவர் யார் என்பதைக் கூற இயலும் என திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி அன்னப்பறவை வடிவில் பிரமன் இறைவன் திருமுடியைத் தொட்டுவர முயன்று சோர்ந்து திரும்பினான். திரு மாலோ பன்றி வடிவில் பூமியைக் குடைந்து உட்சென்று இறைவன் திருவடியைக் காண இயலாது சோர்ந்து திரும்பினான். ஆதியும்
5 - சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 8
இறைத் தமது கிப்பிடு
அந்தமும் இல்லா அப்பரம்பொருளின் அடியையும் முடியையும் காண இயலாது வந்த செய்தியைத் தம் தமிழால் பாடி இறைவனை அடைந்த திருஞானசம்பந்தர் சுவாமிகள் தமது ஒவ்வொரு பதிகத்திலும் 10ஆவது பாடலில் குறிப்பிடுவதைக் காண லாம். திருவங்கமாலையில் திருநாவுக்கரசர் "தேடிக் கண்டு கொண்டேன், திருமாலொடு நான்முகனும் தேடி தேடொணா தேவனை என்னுள்ளே, தேடிக் கண்டுகொண்டேன்” என்பார். திருமாலும் பிரமனும் தங்கள் அறியாமையை உணர்ந்து, சிறுமையை உணர்ந்து இறைவனை வணங்கித் தங்க
ளுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றனர். | பிரமனுக்கும் திருமாலுக்கும் அருள்புரி' ! கின்ற மாதேவனாகிய சிவப்பரம்பொருள் அவர்கள் அறியாமை நீங்க முதலில் பெரும் சோதிப் பிழம்பாய்க் காட்சி கொடுத்து ; நின்றார். "அரிய பெரிய பரஞ்சோதி, செய்வது ? ஒன்றும் அறியேனே” என்பார் மணிவாசகர். 8 இறைவனின் இப்பெருஞ்சோதி வடிவினைக் 8 காண இயலாது பிரமனும் திருமாலும் 8 கலங்கி நின்றனர். அவர்கள் காணும்படியான
வடிவினைக் காட்டியருளு மாறு வேண்டினர். 8 இறைவன் சோதிப் பிழம்பாய் நிற்பதை விட்டு தணிந்தார். அப்பிழம்பே திருவண்ணாமலை யாகக் குளிர்ந்தது என்பர். பிறகு நீண்ட நாள் த திருமாலும் பிரமனும் தவம் இயற்ற அவர் 2 களின் அறியாமை நீங்க வேண்டி இறைவன் ச நள்ளிரவில் சிவலிங்கமாகத் தோன்றி
அவர்கள் காணும்படியாக அருள் புரிந்தார். 8 இதுவே இலிங்கோத்பவர் என்றும் அன்றைய தினமே சிவராத்திரியாகவும் கொண்டாடப் 6 பெறுகிறது என்றும் குறிப் பிடுவர்.
8
கூ =
சிவராத்திரி கொண்டாடும் முறை
சிவராத்திரி அன்று சைவர் குறைந்த ச அளவு உணவு உட்கொண்டு, உறக்கத்தை த
அருள் ஒளி
- 6 -

நீக்கி, நற்சிந்தனை, நற்சொற்கள், நற் செயல்கள் போன்றவற்றைக் கடைப் பிடித்துச் சிவ வழிபாடும் சிவாலயத் திற்குச் சென்று வழிபடுதலும் இன்றியமை யாததாகும். சிவராத்திரி விரதம் என்பது அன்று முழுவதும் இறைவனை இடை விடாது மனம் வாக்குக் காயத்தினால் எண்ணி வழிபடுவதாகும். இதற்காகவே ஆலயங்களில் இறைவனை நினை வூட்டும் பூசனைகள், நீராட்டு, சொற் பொழிவுகள், நடனங்கள், திருமுறைப் பாடல்களை ஓதுதல் போன்றவை இடம்பெறுகின்றன. சைவ சமய முறைப் படி தீக்கைப் பெற்றிருக்கின்றவர்கள் சிவராத்திரியன்று இரவு நான்கு காலங் களிலும் தம் உயிர் ஈடேற்றத்தின் பொருட்டு ஆன்மார்த்த பூசனைகள் செய்வர். கோயி லுக்குச் செல்லும் அன்பர்கள் பொருட்டும் உலக மக்களின் நன்மை பொருட்டும் சிவாலயங்களில் பரார்த்த பூசனைகள் 6 காலங்களுக்கு நடத்தப்படும். அன்பர்கள் இயன்ற அளவு இலிங்கோற்பவக் காட்சி வேளையின் போதாவது பூசனைகளில் கலந்துகொள்ள வேண்டியது முதன்மை பானது. சிவராத்திரியன்று ஆலயத்திற்குச் செல்லும் அன்பர்களுக்குச் சிவசிந்தனை தடைப்படாது இருக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கித் தருவது அனைவரின் கடமையாகும்.
சிவராத்திரி உணர்த்தும் உண்மை
ஆணவம் ஏற்படுத்தும் அறியாமை என்கின்ற செருக்கு உள்ளவரை உயிர்கள் இறைவனின் திருவருளைப் பெறமுடி பாது என்றும், இறைவனின் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாது என்றும் வராத்திரி நமக்கு உணர்த்துகின்றது. ருமாலும் பிரமனும் ஆணவச் செருக்கி
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 9
னால் தர்க்கித்து இறைவன் திருவடியை யும் இறைவன் திருமுடியையும் காண முயன்று சோர்ந்தனர் என்பது இதனையே உணர்த்துகின்றது. அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து அன்பினால் உருகி இறைவன் திருவருளை வேண்டித் தவமிருந்தபோது இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்றனர் என்பதும் கூறப் பட்டது. எனவே “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று அடியார் பெருமக்கள் குறிப்பிடுவது போல அன்பினால் இறைவனை அடையலாம் என்று சிவராத்திரி உணர்த்துகின்றது. அன்றாட வாழ்வில் பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்று பல்வேறு அறியாமை யால் தர்க்கித்துத் திரியும் நாம் சிவ ராத்திரியன்று இதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்பதெல்லாம் கருணையினால் இறைவன் அளித்தது என்றும் அதனைக் கொண்டு இறை வனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டி உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அவன் திருவருளை எண்ண வேண்டும் என்பதை அன்றைய தினம் எண்ணி எண்ணிப் பார்க்க வேண்டும். இறைவன் நமக்கு அளித்தி ருக்கின்ற குறுகிய வாழும் காலத்தைத் தற்காலிக உலக போகங்களை எண்ணிப் பார்த்து நம் ஆணவத்தை நீக்கி வாழ
அருள் ஒளி

வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கணவன், மனைவி, மருமகள், மாமனார், மாமியார், முதலாளி, தொழி லாளி, தலைவன், தொண்டன் போன்ற செருக்குகளையெல்லாம் விட்டு இறை வன் திருவடிக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்ற எண்ணத்தில் அன்பு பாராட்டும் இயல்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்க வேண்டிய நாள் அது. இதனையே “ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பெருமான் வேண்டினார். எனவே சிவ ராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறி யாமைச் செருக்கினை எண்ணிப்பார்க் கின்ற நாளாய் அமைகின்றது. ஆண வத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தை களையும் எண்ணங்களையும் எண்ணிப் பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குரிய வழி வகைகளை ஆராயும் நாளாய் அமைகிறது. இறைவனை வழிபட்டு, அவன் திருவருளை வேண்டி நின்று கண் விழிப்பதோடு மட்டு மல்லாமல் நம் உயிரினை விழிப் படையச் செய்யும் நாளாகவும் விளக்கு கின்றது. இவ்வளவு சிறப்புக்களையும் உண்மை களையும் உணர்த்தும் உயரிய சிவ ராத்திரியை உரிய முறையில் உள்ள வாறு உய்த்து உணர்ந்து கொண்டாடு வோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 10
சிவராத்திரி வி
சிவராத்திரி அன்று விரதம் மேற்கொள் பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜை யைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணிறு அணிந்து, கையில் உருத்திராட்சமாலையுடன் சிவ பூஜையைத் தொடங்க வேண்டும்
ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூசை செய்யலாம்.
சிவபெருமானின் வெவ்வேறு பெயர் களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
பின்னர் நைவேத்யம் படைத்து வழி படவேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,
அருள் ஒளி - 8

ரத முறைகள்
பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஐாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
சிவனுக்குச் செய்யப்படும் அபிஷே கங்களுக்கான பொருட்களை வாங்கிக் கொடுத்துபூஜையில் கலந்துகொள்ளலாம்.
இரவில் சிவனுக்குச் செய்யப்படும் பூஜைகள் குறித்த முழு விபரமும் இங்கு தரப்பட்டுள்ளது. அதற்கேற்றபொருட்களை நீங்கள் வாங்கி அளிக்கலாம்.
முதல்சாமம்:பஞ்சகவ்ய அபிஷேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை - பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக் வேத பாராயணம்.
பாயாசம் நிவேதனம் - யசுர் வேத UTUITu600TLö.
இரண்டாம் சாமம் : சர்க்கரை,பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை.
சிவராத்திரிசிறப்பு மலர் - 2013

Page 11
மூன்றாம் சாமம் : தேன் அபிஷேகம் - பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.
நான்காம் சாமம் : கரும்புச்சாறு - அபிஷேகம் - நந்தியாவட்டை மலர் சாத்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியா வர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.
அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களையும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்குத் தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும்
சில முக்கிய ஆ
கோயில் இல்லாத ஊரில் குடியிரு தனது இடது கையினால் ஆசனம் ( கையினால் எண்ணெய் தேய்த்து கையால் சாப்பாடு போட்டுக் கொ கையால் படுக்கை போட்டால் இ ஜோதிடர், குரு, நோயாளி, ! முதலியவர்களுக்கு ஆபத்துக் கா
அருள் ஒளி

விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமம் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும். அவை நம்மைவிட்டு நீங்கிப் போகும்.
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம், இவர் இருக்கக்கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
பூமிதானம், தங்க தானம், கோடிக் கணக்கான பசுக்ககள் தானம், புராணங் களில் சொல்லப்பட்ட மற்றைய பல விர தங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதற்கு
ஈடாகாது.
சார முறைகள்
நக்க வேண்டாம். போட்டால் ஆயுள் குறைவு. தனது இடது புக் கொண்டார் புத்திரர் அழிவு. இடது கண்டால் செல்வம் அழியும். தனது இடது
நப்பிடம் சேதமாகும். கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி லத்தில் உதவ வேண்டும்.
வி - நன்றி : ஆசாரமுறை நூல்கள்
9 -
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 12
சக்தியும் சர்
- கலாநிதி கு
சக்தி வழிபாடு மிகத் தொன்மையான காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாம் வாழ்ந்து கொண்டி ருக்கின்ற யுகம், சக்தி யுகம் என்று அழைக்கப்படுமளவிற்குச் சக்தி வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது. உலகின் முதல் மனித நாகரிகம் எனக் குறிப்பிட்டுக் காட்டப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம், தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு முக்கி யத்துவம் அளித்திருந்தமைக்கான சான்றா தாரங்கள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
சகல வகையான இயக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும், சக்தியே ஆதாரமாக உள்ளது. சிவம், இருப்பு நிலை என்றும் சக்தி, இயங்கு நிலை என்றும் நூல்கள் கூறுகின்றன. சக்தி, அருட் பேராற்றல் ஆக உள்ளது. சிவம், சக்தி ஆகிய இரண்டின் இணைப்பிலேயே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நடைபெறுகின்றன என்பது சைவ சாத்திர நூல்களின் முடிபு.
*தன்னிலைமை மண் உயிர்கள் சாரத் தரும் சக்தி
பின்னமிலான் எங்கள் பிரான்”
- திருவருட்Uயண்
உயிர்கள், சிவமாந்தன்மையை அடைய உதவுகின்ற சக்தியினின்றும் வேறாகாது, அதனுடன் ஒன்றாய் இணைந்தே உள்ளவன், சிவபிரான் என்பது இப்பாடல் தரும் கருத்து. அர்த்தநாரீஸ்வரமூர்த்தம், சிவமும் சக்தியும் இணைந்த சிவமூர்த்தமாகும். ஆண் பெண்
அருள் ஒளி - 10

வசித்தியும்
மாரசாமி சோமசுந்தரம் அவர்கள்
சமத்துவம் என்னும் எண்ணக்கருவின் தோற்றத்தை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.
சிவம், சக்தி என்பவற்றை ஒன்றாகவும் தனித்தனியாகவும் வழிபாடு செய்யும் மரபு தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆயினும் சிவனை வழிபாடு செய்யும் போது சக்தியையும்; சக்தியை வழிபடும் போது சிவனையும் சேர்த்தே வழிபடு கின்றோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
"அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே',
என்று மாணிக்கவாசக சுவாமிகள்
அருளாளர்கள் யாவருமே அம்மையையும் அப்பனையும் ஒருங்கே காண்கின்ற பெற்றியர் ஆகத் திகழ்கின்றனர். "தோடு டைய செவியன்", ஆகவே திருஞான சம்பந்தபிள்ளை, சிவபெருமானைக் கண்டு தமது மூன்று வயதில் தேவாரப் பதிகம் பாடத் தொடங்கினார். மாதொரு பாகன், அம்பிகைபாகன், அம்மையப்பன் என்றெல்லாம் இறைவியோடு இணைத்தே இறைவன் அழைக்கப்படுகின்றான்.
உலகம் மற்றும் அண்டங்கள், அங்குள்ள Fராசரங்கள், பஞ்சபூதங்கள் அனைத்தும் எஞ்ஞான்றும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை இயக்குவதற்கு மாபெருஞ் சக்தி வேண்டும். அது நிறை வாகவும், என்றும் உள்ளதாகவும்,
சிவராத்திற் சிறப்பு மலர் - 2013

Page 13
பேராற்றல் படைத்ததாகவும், எங்கும் நிறைந்ததாகவும், வற்றா இருப்பாகவும் இருக்கவேண்டும். அந்த அருட் பேராற்றலை ஆதிபராசக்தி என்று குறிப்பிட்டனர். எமது. மூதாதையர்கள், திருவருட்சக்தி என்று சைவர்கள் இறைவனோடு இணைத்துக் கூறினர்.
சங்க காலத்தில், தமிழ் மக்கள் மத்தியில் தாய்த் தெய்வ வழிபாடு இருந்துள்ளமை பற்றி, அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் குறிப்புக்கள் உள்ளன. கொற்றவை என்று தாய்த் தெய்வம் அழைக்கப்படுகின்றாள். வெற்றி யைத் தருபவள் கொற்றவை, வீரத்தை வழங்குபவள் கொற்றவை என்ற வகையில் வெற்றித் தெய் வமாகக் கொற்றவை கொண்டாடப்படுகிறாள். முருகன், குறிஞ்சி நிலக் கடவுளாகவும், தமிழ்த் தெய்வமாகவும் கொள்ளப்படுகிறான். முருகன் தமிழ் இலக்கிய நூல்களில், கொற்றவையின் மைந்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். முருகனுக்கு வேலையும் வழங்கியவள் சக்தியே என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதிபராசக்தியே இந்த அண்டங்கள் அனைத்தையும் பூத்தவள்; அவளே இந்த உலகின் ஜெகன்மாதா ஆவாள். உலக அன்னையாக விளங்குகிறாள். இவ்வுல கில் தாய்மையே மிகச் சிறந்தது; உயர் வானது; போற்றி வழிபடுவதற்குரியது;
“பால் நினைந்தூட்டும் தாய்", அல்லவா அன்னை. “செம்மை நலம் இல்லாத சிதடரொடுந் திரிவேனை
மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
அருள் ஒளி

*ெ க -
நம்மையும் ஓர் பொருளாக்கி நாய்விசிகை ஏற்றுவித்த அம்மை எனக்கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே”.
என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்.
நாய் சிவிகை ஏற்றுவிக்கும் பெரும் உள்ளம் தாய்மைக்கே உண்டு. அடித்தாலும் கூட, மறுகணம் அணைத்துக்கொள்பவள் அன்னையே. நாம் குற்றம் செய்தாலும் கூட, சிறிது கடிந்துவிட்டு, மறுகணம், தண்டிக்காது மன்னிப்பவள் தாய்.
"பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதியோ புகலிடம் பிறிது முண்டோ”.
எனத் தாயுமானவர் கேள்வி எழுப்பு) கிறார். தாயைத்தான் உரிமையுடன் .
இப்படிக் கேட்க முடியும்.
யார் புறந்தள்ளினாலும், எவர் கைவிட்டாலும் தாய் கைவிடமாட்டாள். கருணை அன்னையின் சுயகுணம். இரங்காமல் இருக்கமாட்டாமை அவளின் இயல்பு. அறக்கருணையாக இருக்கலாம்; மறக்கருணையாக இருக்கலாம், அன்னை யின் கருணை கருணைதான்; யாவும் எமது நன்மைக்கே என்பது தெளிவாக உணரப்படவேண்டியது.
தாய் சொல்லைக் கேட்டு நடந்தால் ஒரு பொல்லாப்புமில்லை. தாய், தந்தையர் சொல்லைக் கேட்டு நடக்காதவர்களா லேயே உலகம் ஒழுங்கு கெட்டுப் பழுதுபட்டு இன்று துன்பங்களால் தவிக்கிறது. "தாய் சொல்லைத் தட்டாதே”, என்றும்” தந்தை சொல்மிக்க மந்திர மில்லை”, என்றும், தமிழ் மூதாட்டி ஔவை
11 -
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 14
யார் அருள் வாக்குகளை நமக்கு ஈந்துள்ளார். யார் இன்று அன்னையின் சொற் கேட்டு நடக்கிறார்கள்?” சொற் கேளாப் பிள்ளைகளால் குலத்திற்கீனம்”, என்பது முதுமொழி.இன்று பிறந்த குலம், குடும்பத்திற்கு மட்டுமல்ல; முழு மனித குலத்திற்குமே அத்தகையவர்கள் நாசத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
பொல்லாத சேய் என்றாலும்; தனது சொற்களுக்கு மதிப்புக் கொடாது அலட்சியம் செய்யும் மகவு என்றாலும்; தம் தவறுகளை உணர்ந்து பெற்ற தாயைச் சரணடைந்தால், அவள் - நிச்சயம் மன்னித்து, அணைத்துக் கொள்வாள்; ஆறுதல் அளிப்பாள். கடைசிப் புகலிடம் தாய் தான் என்பது சர்வ உண்மை.
முழுமையான அன்பு; நிறைவான கருணை; பூரணமான பொறுமை; வற்றாத இரக்கம், தயை, பரிவு, பாசம்; ஈடு இணையற்ற தியாகம், தன்னலமறுப்பு; மன்னிக்கும் இயல்பு; அணைத்து ஆறுதல் தரும் பாங்கு என்பனவற்றைத் தாய்மை யிலேயே முழுமையாகவும் பரிபூரண மாகவும் காணமுடிகிறது.
“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை", என்பது முழுதும் உண்மை.
நமது சமயவழிபாட்டு முறைகளுள்; சமய பக்தி நெறிகளுள் - மிக நெருக்க
அருள் ஒளி
-12

மாக உறவு கொண்டாடி, எமது குறைகளை எடுத்துக் கூறி, நிவாரணம் பெற்றுக் கொள்ள; எமது நியாயமான வேண்டுதல் களைச் சமர்ப்பித்து நிறைவாகப் பெற்றுக் கொள்ள; எமது உள்ளங்களின் உணர்வு களை வெளிப்படுத்தி மனச் சுமைகளைத் தணித்துக்கொள்ள; உரிமையோடு பேசிப் பிதற்றி, பாடி, ஆடி மகிழ; அன்பு செய்ய பக்தி கொள்ள எமக்கு வாய்த்த நெறி, தாய்த் தெய்வ வழிபாட்டு நெறியாகும். சக்தி ஒன்றுதான்; ஆனால் சக்தியின் திருநாமங்களோ அநந்தம்.
தெல்லிப் பழை, துர்க்காபுரம் ஸ்ரீ துர்க்காதேவி அம்பாளின் அருளாட்சி யில், அன்னையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது சர்வ நிச்சயம். அன்னையை மனம், மொழி, மெய் யினால் தூய்மையாக வழிபாடு செய் து; அன்னையின் சொற்கேட்டு வாழ்க்கையை நடத்தி வருபவர்களுக்கு இம்மையில் இன்பமும், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்; நீண்ட ஆயுளும்; நிறைவான கல்வியும்; திறன் விருத்தி யும்; உயர் புகழும்; மறுமையில் பிறவிப் பயனாகிய முத்தி இன்பமும் கிட்டும் என்பது உறுதியாகும், யாவும் சித்திக்கும்.
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 15
ஆர்க்கும் அரிய அடிகளாருக்கு
திருவாதவூரடிகளார் ஒரு சந்தர்ப்பத்தில் சிவபெருமானை மும்மூர்த்திகளாலே அறிவது அரிது என்றால் மற்று யாவர் அறியவல்லார் என்று திருப்பள்ளி எழுச்சியில் எடுத்துப் பாடுகின்றார். முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற்றறிவார்."
ஆராலும் அறிவதற்கு அரிய சிவபெரு மான் மாணிக்க வாசக சுவாமிகளுக்கு மிக எளியவராகத் தமது திருப்பெருந்துறை உறை கோயிலையும் காட்டித் திருமேனி யையும் அம் மேனியின் வண்ணத்தையும் வடிவினையும் காட்டி ஆண்டு கொண்டத னோடு அமையாது ஆண்டுகொண்ட அருட்செயலையும் அல்லவா அத்திருவாச கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார். "செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி அந்தன னாவதும் காட்டிவந்து ஆண்டாய் ஆரமுதே.
வாதவூரடிகளார் செய்த வளமான தவத்தை வேறுயார் தான் செய்ய வல்லார்கள்?
அதனால் அன்றோ ஆளுடைய அரசும் அந்த உண்மையை மறைமுகமாகக் கொண்டு ஆளுடைய திருவருள் வெளிப் பாட்டைத் திருத்தாண்டகத்தில் பின்வரு மாறு சேவிக்கின்றார். 1. மணியார்வைகைத்
க்கோட்டில் நின்றதோர்நிறமுந்தோன்றும்"
- திருப்பூவணம்
அருள் ஒளி - 1

சிவபெருமான் எளியரானார்
சிவ. சண்முகவடிவேல் அவர்கள்
"குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொனர்ட7ர் குடமுழநற்திசனைவாசகனாக் கொண்டார்
தனித்திருத்தாண்டகம்.
திருநாவுக்கரசு நாயனார், சிவபெரு மான் வைகையாற்றங்கரையில் நின்ற ருளிய நிகழ்ச்சியைத் தொட்டுக் காட்டி யமையைத் திருவாதபூரடிகள் சிவபெரு மான் எதற்காக நின்றார்? என்ன செய்தார்? பெற்ற பயன் யாது? என்ற சம்பவங்களை எல்லாம் புட்டுக் காட்டித் திருவாசகம் பாடும் திறன் தான் என்னே! என்னே!
"கனசுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மனர்சுமந்து கூலிகொணர்டு அக்கோவால் மொத்துணர்டு புணர்சுமந்த பொன்மேனி பாடுதுங்காணர் அம்மானாuப்.
- திருஅம்மானை
அடியவர்க்கு எளியவன் அல்லாமல் அரிஅயன் முதல் அனைவருக்கும் அரியவன் அம்பலத்து ஆடும் பிரான் என்பதனை எடுத்த எடுப்பிலேயே அரியானை என்று திருத் தாண்டகத்தை ஆரம்பிக்கின்றார் கருவில் திருவமைந்த திருநாவுக்கரசு நாயனார்.
அரியவன் என்றால் அது இலகுவான தல்ல. அரி அயனுக்கு அரியவர். சிந்தைக்கு அரியவர். வந்தனைக்கு அரியவர். கல்வி
3 - சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 16
யினால் காண்டற்கு அரியவர். செல்வத்தி னால் தேடுவதற்கு அரியவர். வீரத்தினால் வெல்லர்க்கு அரியவர். அரியதிர்அரியதில் அரியவர். அன்பினர்க்கும் அரியவர். நெஞ்சினுள் நீக்கமற நிறைந்து நிற்பவர். அறிதற்கு அரியவர். உள்ளும் புறமுமாக எங்குமாகி நிற்பவர். ஒன்று ஆனவர் அல்லர். ஆயினும் அவர் அன்றி ஒன்று இல்லை. அதனால் தான் மணிவாசகப் பெருமானும், "ஒன்று நீ அல்லை அன்றி மற்றொன்று இல்லை" என்றார்.
அவ்வாறான அணுவிற்கு அணுவான மிக நுண்பொருள் தானாக உள்ளத்தில் புகுவதனை ஆரறிந்து உரைக்க வல்லார்?
கருவுபூர்த்தேவர் கங்கைகொண்ட சோளேச்சரத் திருவிசைப் பாவில் எடுத்தியம்புகின்றார்.
"பிரமதேவர் அன்னத்தின் உருவமாகி வானில் பறந்து தேடப்பெரும் பொருளாய் இருந்த நீ சிறிய பொருளாகி என்னை ஆள விரும்பி என் மனத்தில் புகுந்த எளிமையை எக்காலத்தும் நான் மறக்க மாட்டேன்.
அன்னமாய் விசும்பு பறந்தயன் றேட வங்கனே பெரியநிசிறிய வென்னையாள்விரும்பியென்மனம் புகுந்த வெளிமையை யென்றுநான்மறக்கேன்-"
- கருவுர்த்தேவர் திருவிசைப்பா கங்கை கொண்ட சோளேச்சரம்.
அவ்வாறான பெரிய அரிய பரம் பொருள் திருவாதவூரடிகளாரை ஆட் கொண்ட எளிமையைத் திருவாசகத்தில் தெளிவுறத் தெளிவுபடுத்துவார்.
அருள் ஒளி - 14

"விண்ணுலகில் வாழ்வாரும் ஏனை யோருமாகிய தவத்தினர் எல்லோரும் தவமியற்றும் நிலையில் தம் மேல் புற்றுவளரப் பெற்றுப் புற்றுமாகியும் மரம் வளரப் பெற்று மரவடிவமாகியும் நீரையும் காற்றையும் உண்ணப் பெற்றும் உடல் உலர்ந்து போயும் நினது திருவடியைக் காணப் பெறாது நிற்கும் தன்மைத்தான மன்ன! அடியேனை ஒரு வார்த்தையில் அகப்படுத்தி ஆட்கொண்டாய்! "புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உணர்டி2யாய் அண்ட வானரும் பிறரும் வற்றி யாரும்நின் மலரடி கானா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்."
- செத்திலாப்பத்து 2
இவ்வாறான பரம்பொருளின் எளிமை திருவாதவூர் அடிகளுக்கே அல்லாமல் வேறு யாவருக்கு வந்து வாய்க்கப் பெறும்?
திருவாசகம் அற்புதப்பத்து என்னும் பதிகத்தில் வாதவூரடிகளார் தம்முடைய ஏழ்மையையும் பெருமானுடைய எளிமை யையும் எடுத்துப் பேசும் திருவாசகம் சிந்தனைக்கு நல்விருந்தாகும்.
"மண்ணுலகத்தில் தக்கவன் போல நடித்துப் பொய்யான பல காரியங்களைச் செய்வானாகி, யான் எனது என்னும் செருக்கில் விளைந்த மயக்கமாகிய பாம்பு கடித்த இடத்தில் முன்வினையாகிய விடம் தங்கி மிகுதிபடப் புலம்பி அலையும் இயல்புடையவனைத் தானே பிடித்து எதிரே எழுந்தருளி நின்று அந்தப் பெரிய வேதங்கள் தேடி அடைதற்கரிய பரம் பொருள் அடியேனை எளிதாகத் தண்டித்துப் பேரின்பமான சர்க்கரையை முற்பட
சிவராத்திற் சிறப்பு மலர் - 2013

Page 17
உண்பித்த அருஞ்செயலை அற்புதத்தை
நான் சொல்ல அறியேன்.
நடித்து மணர்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானெனது எனும்மாய கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனை பிடித்து முன்னின்றுஅப் பெருமறை தேடி2ய அரும்பொருள் அடி2யேனை அடித்த 2த்துஅக் காரமுன் திற்றிய அற்புதம் அறியேனே --3
இவ்வாறு அடைதற்கரிய அரும்பொருள் மணிவாசகப் பெருமானை அளிமையாக வந்து ஆண்டு கொண்டு சம்பவங்கள் எல்லாம் திருவாசகம் என்னும் தேனில் குழைத்துத் தருகின்றார். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துச் சிந்தனைக்கு விருந்தாகத் தருகின்றோம். உற்றவாறு உணர்ந்து ஒர்க
O விளக்கு
* வெங்கல விளக்கு - பாபம் போ
* இரும்பு விளக்கு - சனிக்கிழை
சனீஸ்வர பகவானுக்கு பிரீதியா
9 மண் விளக்கு - வீரிய விருத்தின
6 வெள்ளி அல்லது பஞ்சாேக (தங்க
விளக்குகள் இவை பூஜைக்கு உக விளக்கு பூஜைக்கு உகந்தது அல்
அருள் ஒளி -

ஈறு இலாதநிஎளியை யாகிவந்து ஒளிசெய் மானுட மாக நோக்கியும்" "மைஇலங்குநற் கண்ணி பங்கனே வந்து எனைப்பணி கொண்ட பின்
"கல்லை மென்கனிஆக்கும் விச்சைகொண்டு என்னை நின்கழற்கு அன்பன் ஆக்கினாய்
"வான நாடரும் அறியொனாதரீ மறையில் ஈறும்முன் தொடரொனாதரீ ஏனைநாடரும் தெரிவொனாதரீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா"
“பாரார் விசும் புள்ளார் பாதாளத் தார் புறத்தார் ஆராலுங் காண்டற்கு அரியான் எமக்கெளிய பேராளன்."
மணிவாசகனார் செய்தவத்தால் அரியவர் எளியவரானார். அவ்வழி நமக்கு அரிதாயினும் திருவாசகம் கற்பதில் எளிமை காண்போம்.
வகைகள்
கும். வேண்டாம்.
)ம இரும்பு அகலில் தீபம் ஏற்றுவது கும்.
ய அளிக்கும்.
ம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு)
ந்தவை, சிறப்புத் தரும். (எவர் சில்வர் ல)
15 - - சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 18
கவியோகி சுத்தா
"ஓம் சுத்த சக்தி” என்ற அவர்தம் கணிர் முழக்கம் என் செவிகளில் இப்போதும் ஒலிக்கிறது. சிறுவனாய் வியந்தும், பயந்தும் பார்த்த சுத்தானந்தர், எனக்கு வயது ஏற, ஏற இன்னும் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். படிக்கப் பிடிக்க முடியாத அந்த உயர்ந்த சிந்தனை
நமக்குக் கைக்கெட்டும் தூரம் இருந்தும் கண்மூடி இருந்தோமே என எண்ணி வருந்திய நாட்கள் அதிகம். இனியும் தாமதித்தால் வாழ்நாட்கடன் தீராப் பெருஞ்சுமையாக நெஞ்சை வருத்தும். எனவே, என்னால் முடிந்ததை மறு தட்டச்சுச் செய்து தருகிறேன். வியாக்கியானமோ, பொழிப்புரையோ தர நான் எத்தகுதியு மற்றவன். நான் ஒரு கருவி; அவன் இயக்குகிறான் அவ்வளவே.
எங்கள் வாழ்வுகளில் எத்தனை ஒளி
வீசச் செய்துள்ளார் என்பனவற்றைக் கூற இந்த மின்மடல் போதாது. எனவே, முதலில்
அருள் ஒளி - 16
 

னந்த பாரதியார்
அவர்தம் படத்துடன் கண்ட ஆங்கில வாழ்க்கைக் குறிப்பை விட தம.அ முதுசொம் பகுதியில் அவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால், முதலில் அவரது வாழ்க்கைக் குறிப்பைத் தருகிறேன். இதை அவருடைய சீடர் சுத்தானந்த தாசன், கம்பரசம்போட்டை அமரர் முரீபாகோபாலகிருஷ்ணன் முதலில் எங்கள் சமாஜம் நடத்தும் பள்ளியின் மாணவர் கூட்டு வழிபாட்டின் கையேட்டுக்
காக எழுதினார். சிற்சில மாற்றங்களுடன்
நான் அதையே மறுபதிவு செய்கிறேன்.
கவியோகி மஹரிஷி டாக்டர் சுத்தா னந்த பாரதியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
"சிவகங்கை என் ஜீவகங்கை" என்று சுத்தானந்தர் பாராட்டும் சிவகங்கை மண்ணில் காமாகூஜி அம்மையாருக்கும், சிவிகுல ஜடாதர அய்யர்க்கும் தெலுகு பிராம்மண குலத்தில் ஹேவிளம்பி ஆண்டு சித்திரைத் திங்கள் 31-ஆம் நாள் (1-5- 1897) உத்திர நக்ஷத்திரத்தில் சுத்தானந்தர் அவதரித்தார். தாயார் ராமாயண, மகா பாரதக் கதைகளை சுயமாகவே பாடல் களாய்ப் பாடி உணவு ஊட்டுபவர்.
தந்தை வேத வித்தகர். உடன் பிறந் தோர்களில் மூத்த தமையனார் ஜெ.வேங் கடராமய்யர். இவர் போராட்ட வீரர்களுக்கு மட்டும் கோர்ட்டில் ஆஜராகும், தானே நெய்த கதராடை அணியும் தேச பக்த வக்கீல் இரண்டாவது தமையனார் ரங்க சாமி அய்யரோ பின்னாளில் குடும்பம்
- சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 19
முழுவதும் பார்த்துக்கொண்ட ஸ்திதப் ரக்ஞர். அண்ணன் தேசீயவாதி, தம்பி சுதந்திரப் போராட்டக்காரன் மட்டுமன்றி, ஒரு துறவியும் கூட! இவர்களது ஒரே தமக்கை ரங்கநாயகி..
சுத்தானந்தரின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் பிறப்பதற்கு முன்பு நடந்த செவி வழிச் செய்தி ஒன்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசக் கேட்டதுண்டு. இவர்தம் அன்னையார் கர்ப்பம் தரித்ததும், மீண்டும் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதா என்று எரியும் கர்ப்பூரத்தை அப்படியே வாயால் விழுங்கி வயிற்றில் செலுத்திக் கொண்டார். அதே இரவில் இறைவன் அவர்தம் கனவில் தோன்றி, "கர்ப்பூர நெருப்பால் இந்த உலகிற்குக் குருவாகும் பேரொளியை அணைக்க இயலுமா? அவன் என் மகன்; உலகில் பெரும் யோகியாய்ச் சுடர்விடுவான்”, என்று சொன்னதாகச் சொல்லுவார்கள்.
எட்டாம் வயதில், அன்னை பராசக்தி மதுரை மீனாக்ஷியம்மனின் பேரருளால்,
அருள் ஒளி

குண்டலினிக் கனல் தூண்டப்பெற்று கவிதா சக்தி பெற்றார்; அன்றே அவருக்கு ஆன்மீக மலர்ச்சியும் ஏற்பட்டது. தாய்வழிச் சிறிய பாட்டனார் பூர்ணாநந்தர் இவருக்கு யோகம் பயிற்றுவித்தார். இமாலய மகான் ஞானசித்தர் 'சுத்தானந்தம்' என்று தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். அவரே இதய (தஹர) வித்தையையும், ஸஹஸ்ரார ஸித்தியையும், ஆதார ரகசியங்களையும் உணர்த்திச் சென்றார்.
புலவர் தெய்வசிகாமணி அய்யர், இவரது தமிழ் அறிவை வளர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்யர் ஸ்ரீ நரசிம்மபாரதி ஸ்வாமிகள் 'கவியோகி', 'பாரதி' என்றும், இமயஜோதி ஸ்வாமி சிவானந்தர் 'மஹரிஷி' என்றும்சிறப்புப் பட்டம் அளித்தனர். ஷிர்டி சாய்பாபா இவர்தம்செவியில் 'ஓம்' ஒலியை ஓதி, என்றும் சித்தததில் அது நிலைத்திருக்கத் தலைமேல் காதைச் சுற்றி ஒரு காவித் துணியைக் கட்டிவிட்டார். பகவான் ரமணர் 'தன்னறிவு' பெறச் செய்தார்.
சேஷாத்ரி ஸ்வாமிகள், சித்தாரூடர், மேஹர் பாபா, அரவிந்தர், அன்னை போன்றோர் இவர்தம் ஆன்மீக உயர்வுக்கு வழிவகை செய்தனர். மஹரிஷி வ.வே.சு ஐயரின் உறவால் கவியோகியின் வாழ்வில் தேசீயமும் புகுந்தது. மகான் அரவிந்தர் தொடர்பால் சுத்தானந்தரின் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அன்னாரின் புதுவை ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் மோனத் தவம் புரிந்து சாதனை செய்தார். ஏற்கனவே இமயமலைக் குகைகளிலும், விரூபாட்சி குகைகளிலும் ஐந்து ஆண்டுகள் தவமியற்றி இருந்தார்.
17 - 1)
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 20
மோனத்தவம் புரிந்த இவ்விருபத்தைந்து ஆண்டுகளில் சுவாமிகள் பல ஸித்திகளை யும், சக்திகளையும் பெற்று ஒரு விஜயதசமி நன்னாளில் மஹாதுரீய ஸமாதி அனுபூதி அடைந்தார்கள்.
மனமாறச் சமய ஒற்றுமை போற்றிய தூயவர் சுத்தானந்தர். கிறிஸ்தவம் இஸ்லாம், சமணம், பெளத்தம், சீக்கியம், ஐரதுஷ்ட்ரம் ஆகிய சமயங்களில் அவர்களாகவே வாழ்ந்து, அவர்தம் நூல்களைக் கற்றார். அவை காட்டிய நெறிகளையும் பழகி வந்தார். சமயங்கள் போதிக்கும் உண்மை ஒன்றே என்று கண்டார். "ஒரே கடவுள், உலகம் ஒரே ஆன்ம நேயர் நாம்", என்பதை உலகுக்கு அறிவுறுத்தினார், வேற்றுமையில் ஒற்றுமை கண்ட சுத்தானந்தர்.
மோனத்தவம் புரிந்த காலங்களில் பல ஆயிரம் நூல்களை இயற்றினார்.
பெரும்பாலானவை தமிழ் நூல்களே. வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ் மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார்.
கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாட்டியப் பாடல்கள், நாடகம், திறனாய்வு, நவீனம், சிறுகதை, அறிவியல் வாழ்க்கை வரலாறு போன்ற பல துறைகளிலும் நூல்களை எழுதிக் குவித்தார்; எனினும் சுத்தானந்தர் தமது படைப்புகளில் பெரிதும் போற்றியவை பாரத சக்தி மஹாகாவியம் என்னும் நூலும், யோகசித்தி என்னும் குறட்பாக்களாலான நூலுமாகும். பாரத சக்தி ஐம்பதாயிரம்
வரிகள் கொண்ட ஒரு படைப்பிலக்கியம்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முதல்
அருள் ஒளி - 18 -

ராஜராஜன் விருதை இந்த நூலுக்கே அளித்தது. யோகசித்தியின் ஆங்கில வடிவத்தையும் சுததானந்தரே“THE GOPEL OF PERFECT LIFE” GT6órgio Guufao இயற்றியுள்ளார். "யோகசித்தி" பிரெஞ்சு, ஸம்ஸ்க்ருத மொழிகளிலும் வெளிவந் துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ய அறிஞர் அண்ணா அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர் சுத்தானந்தர்.
காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டை பிலும் ஆசிரியராகவும், சாரண ஆசிரிய ராகவும் பணியாற்றிய காலங்களில், தேசீயச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இசையொடு இயற்றி அவற்றை மாணவரிடையே பரப்பினார்.
திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு. ஐயர், சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஈப்ரமணிய பாரதியார், செண்பகராமன், ாஜா மகேந்திர ப்ரதாப் போன்ற பெருந் தலைவர்களுடன் நெருக்கம் கொண்டி ருந்தார் யோகியார். காந்தியடிகளின் அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப்பணி, மதுவிலக்கு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, உயிர் பலி தடுத்தல், பெண்கள் மறுவாழ்வு போன்ற சீர்திருத்த இயக்கங்களையும் மேற்கொண்டு நாட்டுப் பணியும் ஆற்றி புள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் இப்பணியில் சுவாமிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
1947ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் ாம் மேற்கொண்டிருந்த மெளனத்தைக் லைத்து முதன் முதலில் ரிஷி கேசத்தில், ஸ்வாமி சிவானந்தர் முன்னிலையில், தந்திரச் சொற்பொழிவு செய்து அன்றி
சிவராத்திற் சிறப்பு மலர் - 2013

Page 21
லிருந்து ஆன்மீகத் தேடற் பயணங்களை விரிவுபடுத்தினார். பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். ஜெனிவா, பெர்லின் நகரங்களில் நடந்த உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டார். சோவியத் யூனியன், பிரான்ஸ், சுவிட் சர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், ஹொலன்ட் போன்ற ஐரோப்பிய நாடு களிலும், சீனம், ஜப்பான், கொரியா, தாய் லாந்து, இந்தோனேஷியா, பிஜி, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய ஆசிய நாடு களிலும் அமெரிக்க ஆபிரிக்க நாடுகளிலும், ஆஸ்திரியாவிலும் சுற்றுப் பயணங்கள், சொற்பொழிவுகள் தொடர்ந்தன.
சுத்தானந்தர் உலகிற்கு அளித்த செய்தி சமயோகம், அகவாழ்வு சிறந்திட யோகம், புறவாழ்வு சிறந்திட அறிவியல், யோகமும் அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் அமர நிலையை அடையும் மண்ணில் விண்ணரசு தோன்றும் இச்சமயோக வேள்விக்கென்றே யோக சமாஜம் தோன்றியது. வடலூரிலும், சென்னை அடையாற்றிலும், யோக சமாஜம் சுமார் முப்பது ஆண்டுகள் நடந்தது.
1977ஆம் ஆண்டு சிவகங்கையில், சுத்தானந்த யோக சமாஜம் என்னும் அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். தமது ஆன்மீக குரு ஞானசித்தர் உபதேசம் அருளிய சோழபுரம் கிராமத்திலேயே சமாஜப் பணிகளுக்கென நிலமும் நன் கொடையாக வந்தது!
1979-ல் சுத்தானந்த தேசிய
வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை அங்கு கவியோகி நிறுவினார். அருகிலேயே தமது
அருள் ஒளி

தவக்குடிலை அமைத்துக்கொண்டு, சமாஜம், பள்ளி ஆகியவற்றின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி வழிநடத்தினார். பிணியின்றி எளிமையாய் வாழ்ந்து பேனா முனையில் தானாயுழைத்து ஈட்டியதனைத்தையும் சமாஜப் பணிக்கே அர்ப்பணித்தார்.
குழந்தைச் சிரிப்பும், நகைச்சுவைப் பேச்சும், கணிர் குரலில் பாடலும், சுறு சுறுப்பும் இறுதிவரை மாறவேயில்லை. முதிர்ந்த வயதிலும் இமயம் வரைப் பயணம் மேற்கொள்ளும் திண்மை ஒரு யோகியிடம் மட்டுமே இருக்கமுடியும்.
அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்த கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார் 7-3-1990 அன்று மஹா சமாதி அடைந்தார். ஆண்டுதோறும் மாசி மாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று சுத்தானந்த ஆராதனை சோழபுரத்திலுள்ள சுத்தானந்தர் நினை வாலயத்தில் நடத்தப்படுகிறது.
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
19 - சிவராத்திற் சிறப்பு மலர் - 2013

Page 22
கவியோகியார் எ
கவியோகியார் எழுதிய பாடல்கள் அனைத்துமே அருட்கவிகள். வார்த்தைப் பிரயோகமாகட்டும், நடையாகட்டும், சாமானியன் பேனா எடுத்து தீட்டும் வரிகள் அல்ல அவை.அருள் சித்தம் ஒளிர, வார்த்தைகள் வந்து விழ, அவை பாடலாய், அவர் வாயாலேயே கணீர் குரலில் கேட்பது ஒரு ஆனந்தம். நான் கண்ட பல ! பெரியோர்கள், அவர் பாடலை அப்படியே ! மேடைகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ ! உடனுக்குடன் வடித்து, பாடி குடுத்த கதைகள் ! பல கூறக் கேட்டுள்ளேன்.
கீர்த்தனாஞ்சலி அவர் பாடல்களைத் தொகுத்து எழுதப்பட்டது. ராகம், தாளம் ! போன்றவை பாடலின் முகப்பில் போட்டு எழுதியுள்ளார். அவற்றுள் பல பாடல்கள் பலரால் பாடப்பெற்று பாட்டால் பாடகரும், அந்தப் பாடகரால் பாட்டும் - 1 உயர்வுற்றன.
பாடல் 1 - எப்படிப் பாடினாரோ
எப்படிப் பாடினரோ என்று அருளாளர் திறம் வியந்து கவியோகியார் பாடிய இன்னொரு பாடல் இங்கே படிக்கிறவர் ச களுக்கும், பாடுகிறவர்களுக்கும் கவியோகி' ச யின் ஆசி துணை இருக்கட்டும்! அன்புடன் கிருஷ்ணமூர்த்தி
பல்லவி
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
அருள் ஒளி
- 20 .

முதிய பாடல்கள்
அனுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் அருள்மணி வாசகரும் வாருளுணர்ந்து உன்னையே
சரணம்
தருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும் அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும் கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி நனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
எப்படிப் பாடினாரோ!)
- தமிழ்த்தேனீயார் தட்டச்சு செய்து மின்தமிழில் வெளிவந்த கவியோகியார் பாடல்கள்
பாடல்:2சகல கலா வாணியே
Tகம் : கேதாரம் தாளம் : ஆதிதாளம்
பல்லவி
கல கலா வாணியே- சரணம் தாயே ங்கீத வீணா பாணியே - சகலகலாவாணியே
அனுபல்லவி
தகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி ங்களுக் கருள்வாய் - மங்களச் செல்வியே -சகல கலாவாணியே
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 23
சரணம் :
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும் ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய் தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய் --சகல கலாவாணியே
முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய முப்பெரும் அறிவுடன் இப்போது விளங்கிடும் புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய் --சகல கலாவாணியே
பாடல் 3 - "கருணை செய்வாய்?”
- 4:11 til.
ராகம் : ஹம்ஸத்வனி தாளம் : ஆதிதாளம்
பல்லவி : கருணை செய்வாய் - கஜவதனா கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே -- கருணை செய்வாய்
அனுபல்லவி
அருளோங்கும் சுத்த சக்தி சிவகாமி அம்பிகை சுதனே நம்பினேன் உனையே -- கருணை செய்வாய்
சரணம்
தீங்கனி பாகு தேன்சே ரமுதம் திருமுன் படைத்து சரணம் புகுந்தேன் ஓங்கார விநாயக விக்ன ராஜா... உயர்வான வெற்றி அருளும் கணேசா! -- கருணை செய்வாய்
அருள் ஒளி

பாடல் 4- அருள்புரிவாய்
ராகம் : ஹம்ஸத்வனி
தாளம் : ஆதி
அருள்புரிவாய் கருணைக் கடலே ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே -- அருள்புரிவாய்
பரிபூர்ண ஸதானந்த வாரியே பக்த ரக்ஷகனே பரமாத்மனே அருள் புரிவாய்
11 ( 14:11
அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும் அறிவுண்மை யின்பம் திருவுந் தருவாய் தருமப் பயிர் வாழுந் தருணமா மழையே தங்குல கெங்கிலும் மங்களம் பொங்கவே -- அருள்புரிவாய்
பாடல் 5 - "ஜங்கார ஸ்ருதி செய்குவாய்”
ராகம் : பூர்வகல்யாணி தாளம் : ஆதி
பல்லவி
ஜங்கார ஸ்ருதி செய்குவாய் - ஜீவ வீணையில் சங்கீதா மிருதம் பெய்குவாய் - ஜகதீஸ்வரனே -- ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
அனுபல்லவி
சங்கர சாம்ப சதாசிவ ஓம்ஹர சம்புவெனச் சொல்லியன் ஜென்மங் கடைத்தேற
--- ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
21 -
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 24
சரணம் பலபல வெனுங் காலைபாடும் புள்ளோசை போலும் அ பாற்கடல் உளம் விம்மி ஆர்க்கும் கர்ஜனை போலும் அ மலர்களைக் கொஞ்சி வரும் மந்தமாருதம் போலும் மதுவுண்ட வண்டினம் வளர்க்கும் ரீங்காரம் போலும்
-- ஜங்கார ஸ்ருதி செய்குவாய் அ
தடதட வெனப்பொழி சப்த மேகங்கள் போலும் மடமட வெனவரும் மலையருவியைப் போலும் கடகட வெனச் செல்லும் ககன லோகங்கள் போலும் நடமிடும் சிலம்புடன் நர்த்தனம் செய்ய நானும்
-- ஜங்கார ஸ்ருதி செய்குவாய் ப
பாடல் 6 - "அருவியைப் போலும்
ராகம் : அசாவேரி தாளம் : சாபு
பல்லவி
5 & 1
ஈ
அருவியைப் போலும் காலைக் குருவியைப் போலும் அருளை நான் பாடுகின்றேன்
-- அருவியைப் போலும்
அனுபல்லவி
2 2
தெருவில் இருந்து ஜெப பேரிகை முழங்கவில்லை திசையெல்லாம் புகழ்பெறும் நசையும் எனக்கில்லை
-- அருவியைப் போலும்
--
சரணம்
வி
6)
காற்றிலும் கதிரிலும் கடலிலும் உன்கலைக் காட்சிகள் காட்டுகின்றாய் ஊற்றியென் உள்ளத்தில் உன்னிசை யமுதினை உயிரின்பம் ஊட்டுகின்றாய்
போற்றினும் உலகென்னைத் தூற்றினும் உன்புகழ்
அருள் ஒளி
- 22 -

பாற்றா திருக்க வியலேன் நற்றுவ தெல்லாமுன் ஆராதனையின்றி நடம்பரமும் அறியேன்
-- அருவியைப் போலும்
ன்பு மலர்களெல்லாம் உன்பாதம் வைத்திட்டேன் பரனே - என் குரு ரனே - உனது சரண்
-- அருவியைப் போலும்.
பாடல் 7 - ஆசை கொண்டேன்
நகம் : கோபிகா திலகம் / கேதார கௌளம் ாளம் : சாய்ப்பு
பல்லவி
தசை கொண்டேன் வண்டே - உன்னுடனே நான் சன் புகழ் பாடவே - ஆசை கொண்டேன்
அனுபல்லவி
பாச மலரடித் தேன் வாரி வாரி யுண்டு
லம் வந்து வலம் வந்து லம் பெறவே தினம் - - ஆசை கொண்டேன்
சரணம்
எனச் சுடர் மணியே ஞானக் கண்மணியே சந்த மலரழகே வன்னக் குயிலிசையே மான மலையருவி கானம் செய்யும் வேதமே த்தொழில் புரிந்திடும் சித்தனே யென்றோத
-- ஆசை கொண்டேன்
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 25
நம்பினோர்
அன்பான பிள்ளைகளே!
அன்பு வணக்கம்! நலமாக இருக்கி றிர்களா? எல்லோரும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
தினசரி புதிதுபுதிதான ஆபத்துக்களும், இன்னல்களும் இந்தப் பூமியையும், மனித குலத்தையும் அச்சுறுத்துகின்றன. என்றா லும், கருணை வடிவான இறையருளால் நாம் நல்லபடி வாழ்ந்து கொண்டிருக்கி றோம். அதற்காக எப்போதும் நன்றியுடன் கடவுளை நாம் துதிக்க வேண்டுமல்லவா?
கடவுள் நம்பிக்கையினால் மிக நல்ல வாழ்வு பெற்ற ஒரு ஏழைச் சிறுவனின் கதையை இப்போது கூறுகிறேன். அறுபது வருடங்களுக்கு முன் ஒரு பாட்டி சொன்ன இந்தக் கதையை உங்களுக்குச் சொல்வதில் மிக மகிழ்வாய் இருக்கிறது.
ஒரு ஊரிலே பழநியப்பன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனது தாயும் தகப்பனும் இறந்துபோனதால் அவன் தனிமைப்பட்டுப் போனான். ஊரார் சிலர் சில நேரம் சிறிது உணவு கொடுப்பார்கள். முற்றுமுழுதாக அவனைப் பொறுப் பெடுத்து வளர்க்க உறவினர் யாரும் முன்வரவில்லை. ஏழு வயதான அந்தச் சிறுவன் மிகவும் துன்பப்பட்டான். ஒருநாள் அந்த ஊரிலே இருந்த சிவன் கோயில் வாசலில் போயிருந்து துன்பம் தாங்காமல் விக்கி விக்கி அழுதான். அழுது அழுது சோர்ந்து படுத்தேவிட்டான்.
அருள் ஒளி -
 

ଗଅ5@ରୀମୁଣ୍ଡିରିଠରାଠ
- சகோதரி யதீஸ்வரி அவர்கள்
கோயிலிலே பூஜை செய்யும் ஐயர் இவனைக் கண்டார், எழுப்பினார். அவன் எழுந்து மீண்டும் அழத் தொடங்கினான். ஐயர் இரக்கமுள்ளவர். அவனைத் தேற்றி, குளத்திலே கை கால் கழுவிவரச் சொன்னார். “கும்பிடு!" என்று சொல்லி விட்டு கோயில் பிரசாதம் கொண்டுவந்து கொடுத்தார். "சாப்பிடு" என்றார். சிறுவன் சாப்பிட்டான். அவனைப் பற்றிய விபரம் கேட்டு அறிந்துகொண்ட ஐயர், "அழாதேடா நீ கோயிலிலேயே இரு உன்னைச் சுவாமி காப்பாத்துவார்!" என்றார். சிறுவன் விழித்தான்.
கோயிலுக்குக் கிட்டேயே ஐயாவின் வீடு இருந்தது. ஐயா சிறுவனை வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். "அம்மா! இவன் பாவம். ஒருவரும் இல்லை. நாம் வளர்ப்போம்" என்றார். அந்த அம்மாவும் “ஆகட்டும்" என்றார். சிறுவனுக்கு உணவும், உடையும், வீட்டுத் திண்ணையிலே இருக்க இடமும் கிடைத்தது. சின்னவன் உற்சாகமடைந் தான். காலையில் கோயில் பசுக்களைக் கூட்டிச் சென்று மேய்த்து வருவான். மாலையில் கோயில் தொண்டு செய்வான். ஐயா சில பிள்ளைகளுக்குப் பாடம் படிப்பித்தார். இவனையும் படிக்கச் சொன் னார். அவனோ அலுப்பில் நித்திரை ujntuoti G3Lurt6)JT6ör.
கந்தசஷ்டி காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாடும் கந்தசஷ்டி கவசம் அவனுக்குப் பிடித்துப் போயிற்று. முழு
23 - சிவநாத்திரி சிறப்பு மலர் = 2O3

Page 26
வதும் பாடம் வரவில்லை என்றாலும் ( “குத்துக் குத்துக் கூர்வடிவேலால்” என்ற ப வரி அவன் மனதிலே பதிந்துவிட்டது. எந்த 6 நேரமும் அவனது மனம் இந்த வரி ( களையே நினைத்தது. வாய் அதையே 8 சதா கூறியது.
கூ
ஒருநாள் மதியம் மாடுகள் நன்றாக மேய்ந்தபின் அங்கிருந்த ஓடைக்கரைக்குக் கூட்டிச் சென்று தண்ணீர் குடிக்கப் பண்ணினான் பழநி.மாடுகள் தண்ணீர்
குடித்துவிட்டு கரையிலிருந்து ஒரு க மரத்தின் நிழலில் படுத்து அசைபோடத் 6 தொடங்கின. பழநியும் அங்கு ஒரு சிறு ! கல்மேல் உட்கார்ந்தான். அவனது வாய் "குத்துக் குத்துக் கூர்வடிவேலால்” என்று செபித்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த 6 குச்சி அநிச்சையாக மண்ணைக் குத்திக் ப கிளறிக் கொண்டிருந்தது. மண் தெறித்து விழுவதைக் கண்கள் வேடிக்கை பார்த்தன. இடையில் மண்ணுடன் ஏதோ ஒரு வட்டமான பொருள் தெறித்து விழுந்தது. ஒன்று, இரண்டு மூன்று... ஒரே மாதிரி ! வட்டப் பொருள். இது என்ன என்று அவன் த எடுத்துப் பார்த்தான். தகடு போன்ற அந்தப் பொருள் தங்கம்போல மின்னியது. தன் வேட்டி நுனியால் அதைத் துடைத்துப் 6 பார்த்தான் பழநி. குதிரை மேலிருக்கும். ே
வீரன் உருவம் பொறித்த தங்கப் பவுண் அது! அவனுக்கு வியப்பாக இருந்தது. ச எடுத்த இடத்திலே கொஞ்சம் ஆழமாகத் தோண்டிப் பார்த்தான். ஒரு பித்தளைக்
குடம் இருந்தது. அதன் மூடி சிறிது திறந்தி அ ருந்தது. உள்ளே நிறையத் தங்கப் பவுண் 6 மின்னியது. பழநி தோண்டிய மண்ணைப் 8 போட்டு அது இருந்தபடியே மூடினான். முதலில் கிடைத்த மூன்று பவுணையும் ப எடுத்துக் கொண்டு, மாடுகளையும் ஓட்டிக் 1
15
Et
அருள் ஒளி
- 24 -

கொண்டு கோயிலுக்குத் திரும்பினான். மாடுகளை அதனதன் இடத்தில் விட்டு விட்டு, கைகால் கழுவிக்கொண்டு ஐயாவிடம் போனான். சந்திப் பூஜை நேரம். ஐயா மணி அடித்துக் கொண்டிருந்தார். இவன் போய் பக்கத்திலே நின்றான். மணியை அடித்து விட்டு வந்த ஐயாவிடம் பயபக்தியுடன் கையில் இருந்ததை நீட்டினான்.
“என்னடா இது?” என்று கேட்டபடி வாங்கிப் பார்த்த ஐயா, வியப்பினால் கண்களை விரித்தார். “எங்கேடா இதை ாடுத்தாய்?” என்று கேட்டார். பழநி நடந்ததைச் சொன்னான்.
அடுத்தநாள் ஐயாவும் அவனுடன் வந்தார். மாடுகளை மேயவிட்டு விட்டு மரத்தடிக்குப் போனார்கள். பழநி காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்தபோது பானை அப்படியே இருந்தது. வெளியே எடுத்தனர்.
"டேய் பழநி! இது புதையலடா!” என்று சொல்லி அதனைக் கோயிலுக்குத் தூக்கிக் கொண்டு போனார் ஐயர்.
பழநியை மாடு மேய்க்க விடாது விடாப்பிடியாக இருத்தி வைத்துக் கல்வி போதித்தார் அந்த ஐயா. நல்ல உணவு, நல்ல உடைகள், நல்ல பராமரிப்பு. பழநி கண்ணியமான இளைஞனாக வளர்ந்தான். நல்ல இடத்தில் வயல், தென்னந் தோட்டம் அவன் பெயரில் வாங்கி எழுதி வைத்தார் ஐயா. சிறிய கடையும் வைத்துக் கொடுத்தார். படிப்படியாக பழநி ஊரில் அறிந்த மனிதன் ஆகிவிட்டான். ஆனால் குத்துக் குத்துக் கூர்வடிவேலால்” என்ற மந்திரமும் ஜெபமும் அவனை சதா பற்றிப் பிடித்திருந்தன. இந்நிலையில் ஊரில் பலர்
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 27
அவனுடன் உறவு கொண்டாட வந்தனர். அவனைத் தங்கள் மருமகனாக்கிக் கொள்ளப் படாதபாடுபட்டனர். ஆனால், அவனோ யாருக்கும் மசியவில்லை. ஐயர் தேர்ந்தெடுத்த ஒரு குணவதியான ஏழைப் பெண்ணை மணந்தான். அழகான் பெரிய வீடு, வசதி என நன்கு வாழ்ந்த அவனைக் கண்டு சிலர் மிகப் பொறாமை கொண்டனர். அவர்களில் சிலர் கூடி அவனை ஒழித்துக் கட்டவிரும்பி ஒரு அபிசாரவேள்வி செய்தனர். பலநாள் செய்த வேள்வி அக்கினியிலிரந்து ஒருநாள் ஒரு பயங்கரப் பெண் பூதம் தோன்றியது. கையில் பிடித்த சூலத்துடன் எழுந்த அதனைப் பழநியைக் கொன்றுவருமாறு ஏவினர். அதுவும் ஆவேசத்துடன் பழநியைத் தேடி விரைந்தது.
வீட்டிலே பூஜை அறையில் வைத்திருந்த ஒரு பெரிய முருகன் படத்தின் முன்
சிவபூமிகை
தானங்களில் சிறந்ததான வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங் இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்
தொடர்பு
கலாநிதி ஆறு. திருமுருகன் 021 - 222 6550
அருள் ஒளி

உட்கார்ந்திருந்தான் பழநி, வழக்கம்போல அவனது வாயும் மனமும் ஜெபித்துக் கொண்டிருந்தன. "குத்துக் குத்துக் கூர் வடிவேலால்" கண்மூடி அமர்ந்திருந்த அவனத முதுகுக்குப் பின் மிகக் கோபத்துடன் குத்துவதற்கு சூலத்தை ஓங்கிய பூதத்தின் மார்பில் படத்துக்குள் இருந்த முருகப் பெருமான் கைவேல் பாய்ந்து போய் குத்தித் துளைத்தது மின்னல் போல் நடந்ததைப் பார்த்த பழநியின் மனைவியும் பிள்ளை களும் "அரோகரா அரோகரா! முருகா! முருகா" என்று கூறினார்கள்.
மார்பில் பாய்ந்த வேலுடன் பயங்கர ஒலத்துடன் திரும்பிச் சென்ற பூதம் தன்னை ஏவியவர்களையே மாய்த்து வேள்வித்தீயில் வீழ்ந்து மறைந்தது.
நடந்ததை அறிந்த பழநி அழுது தொழுது ஆடிப் பாடினான்.
ண்தான சபை
மாக கண் தானத்தைச் செய்ய முன் குப் பின் பார்வையற்றிருக்கும் பகள் உதவுங்கள். வாழும் போதே புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr. ச. குகதாசன்
25 - சிவராத்திற் சிறப்பு மலர் - 2O3

Page 28
ëນະng
மனிதர்களாகப் பிறந்தவர்கள் பேச்சு என்னும் பெருவரத்தைப் பெற்றிருக்கி றார்கள். பெற்ற அதைத் தக்க வண்ணம் பயன்படுத்தவேண்டும். அறிவுடையவன் என்று பெருமை கொள்ளும் மனிதன் தனக்கு அகப்பட்ட எல்லாவற்றையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதுதான் முறை. வேறு பிராணிகளுக்குக் கிடைக்காத வாக்கை நன்முறையிலே பயன்படுத்திய தால் அவர்கள் மனிதர்களாக வாழ்ந் தார்கள் என்று சொல்லலாம். காலுடை யவன் நடந்தால் தான் காலுடையவன் என்பதற்கு உரியவன் ஆவான்.அப்படியே வாயுடையவன் பேசினால்தான் அவன் ! வாயுடைய மனிதன் என்று சொல்வதற்குத் ( தகுதியுடையவன் ஆவான். வாயுடையவன் ( மனிதன், மற்றப் பிராணிகள் எல்லாவற்றை யும் வாய் இல்லாத பிராணிகள் என்று சொல்கிறோம்.
பேசுகிறவன் தான் மனிதன். நல்லதைப் : பேசுவதுதான் பேச்சு. ஆகையால் நல்லதைப் பேசுபவன் தான் மனிதன் என்று சொல்லவேண்டும்.
*சொல்லுக, சொல்லிற் பயனுடைய? என்று குறள் சொல்லுகிறது.
நல்லதைப் பேசுகிற நாளை, மனிதப்
L
பிறவியை நன்கு பயன்படுத்திய நாள் என்று சொல்லலாம். அப்படிப் பேசாத நாளைப் பயன்பெறாத நாள் எனலாம்.
அதையே இன்னும் அழுத்தமாகச் சொன் னால் பிறவா நாள் என்று சொல்லி ( விடலாம். அப்பர் சுவாமிகள் அப்படித்தான் & சொல்கிறார். e
அருள் ஒளி - 26

நாள்
வாகிச கலாநிதி கி.வ. ஜகந்நாதன்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்கிறார்.
முன்னால் ஒன்றும் சொல்லாமல், பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று சொல்லியிருந்தால் எப்போதும் வழவழ வென்று பயனில்லாத வார்த்தைகளைப் பேசுகிறவர்களையெல்லாம் அப்படிச் சொல்லுவாரா? இன்னவாறு பேசவேண்டும் என்று தெரிந்து கொண்டவர் அவர்.
எதை எதையோ பற்றிப் பேசுகிறோமோ, அந்தப் பேச்சினால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. ஆனால் இறைவனைப் பற்றிப் பேசும் பேச்சு நல்ல பயனைத் தரும் விருப்பு, வெறுப்பு இல்லாத இன்ப நிலையைத் தரும் அதைச் சொல்ல வருகிறார்.
சிதம்பரமாகிய பெரும்பற்றப் புலி பூருக்குப் போய் நடராசப் பெருமானைத் தரிசித்து இன்புற்றார் நாவுக்கரசர். அப்போது அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது. ‘என்ன என்னவோ பேசிப் பொழுது போக்குகிறார்களே மனிதர்கள் பேசப் பெரிதும் இனிய பெருமானாகிய இறைவனுடைய புகழைப் பற்றிப் பேசத் தெரியவில்லையே. பேசப் பேசக் குறைவு படாமல் எல்லையின்றிப் பெருகும் புகழ் அல்லவா அவன் புகழ்? அவனைப் பேசாத பேச்சும் ஒரு பேச்சா? அவனைப் பேசாத நாளும் ஒரு நாளா? என்று எண்ணினார். இறைவனுடைய இயல்பு களைச் சற்றே சிந்திக்கப் புகுந்தார். அவன் அறிதற்கரிய நுண்ணிய பொருளாக
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 29
இருப்பதை எண்ணிப் பார்த்தார். அவ்வாறு இருந்தாலும் அன்புடையார்க்கு இன்பம் தரும். அனுபவப் பொருளாக இருப்பது நினைவுக்கு வந்தது. பலவகைத் தேவர் களாக இருக்கும் இயல்பையும் நினைவுக்குக் கொண்டுவந்தார். உலகில் உள்ள ஐம் பெரும் பூதங்களாக இருப்பதைச் சிந்தனை செய்தார். இப்படி எண்ண விரியும் இயல்புகளையெல்லாம் அவர் உள்ளம் உகந்து உணர்ந்து மகிழ்ந்தது. அவற்றைப் பாடத் தொடங்கினார். இறைவன் அரிய பொருள். நுட்பமான பொருள். இந்த இயல்பை ஐந்து வகையாகச் சொன்னார். அவன் புலன்களால் அறிதற்கு அரியவன். அந்தணருடைய சிந்தையிலே கருத்துப் பொருளாக நிற்பவன். பொருள் அறி வதற்கரிய வேதத்தினுள்ளே இரகசியப் பொருளாக நிற்பவன். நுட்பப் பொரு ளாகிய அணுவாக இருப்பவன். யாருக்கும் தெரியாத இயல்பை உடையவன். இவ்வாறு பாடியார் - அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனை
இறைவன் அரிய பொருளாக இருந்தால் நமக்குப் பயன் என்ன? அவன் அரிய பொருளேயன்றி இல்லாத பொருள் அன்று. தன்னைத் தொழுது அன்பு செய்வார் நுகரும் இன்பப் பொருளாகவும் அவன் இருக்கின்றான். எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் பொருள் ஒரு வனுக்கு கிடைத்ததனால் அது பெரிது அன்று. மிக மிக அரிய பொருள் சிலருக்குக் கிடைக்கும் பொருளாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதைப் பெறவேண்டும் என்ற ஆவல் உண்டாகும். யார்க்கும் தெரியாத தத்துவனாகிய அவன் அன்புடையார்க்குத் தேனாக
அருள் ஒளி - 2

இனிக்கின்றான். பாலாக இனிக்கின்றான். அவனுடைய அருள் பெற்ற உலகத்துப் பொருள்களின் உண்மை புலனாகிறது. சூரியனது ஒளியினால் இருள் சிறிதும் தெரியாமல் இருந்த பொருள்களெல்லாம் தெளிவாகத் தெரிவதைப் போல, இறைவனுடைய திருவருள் பெற்ற பிறகு காணும் காட்சியே வேறாக இருக்கிறது.
தேனைப் பாலைத் திகழ் ஒளியை கடவுள் அரியவனாகவும், இனியவனாகவும் இருப்பதோடு பல மூர்த்திகளாகவும் இருந்து உலகைக் காப்பாற்றுகிறான். அரசனாகிய இந்திரனாகவும் கரிய திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கிறான். -
தேவர் தம் கோனை மற்றைக்
asifu Trapar BrTarypE66MDØPT
தெரிவதற்கு அரிய பொருளாக இருத்தல்,அன்புடையாருக்குத் தேனும் பாலுமாக ஒளியாக இருத்தல் மூர்த்திகளாக இருத்தல் என்ற மூன்று நிலையும் யாவராலும் எளிதில் காணமுடியாதவை. அவ்வாறன்றி எல்லோருமே கடவுளின் இருப்பை உணர வகை உண்டு. உலக வாழ்க்கையில் மனிதனுக்கு இன்றியமையாத கலனாகவும், காற்றாகவும் இருப்பவன் அவனே. கடலாகவும், மலையாகவும் இருப்பவன் அவனே. ஐம்பெரும் பூதங்களாக நிற்பவன் அவன் கனல்தேயு, காற்று- வாயு, கடல் அப்பு மலை - பிருதிவி பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரமோ இறைவன் வெளியாகி விளங்கு வதைக் காட்டும் தலம் இந்த ஐந்து பூதங்களும் இயற்கையின் மூலப் பொருள்களாகும்
கனலைக் காற்றைக்
கனை கடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றைப் புலியூரானை
7 - சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 30
அரிய பொருளாகவும், அனுபவப் பொருளாகவும், மூர்த்திகளாகவும், இயற்கையாயும் எழுந்தருளியிருக்கும் இறைவன்ைப பேசும் பேச்சே பேச்சு. அந்தப் பேச்சைப் பேசும் நாளே வாழும் நாள் அல்லாத நாள் வாழாத நாள்; பிறவாத நாள் அரியானை, அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழ் ஒளியை தேவர்கள் தம் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற வரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
(உணர்வதற்கு அருமையானவனை, அந்தணருடைய சிந்தனையில் தியானப் பொருளாய் இருப்பவனை, அரிய
சிவராத்திரியிலும் நான்கு சா
GFITLDb மலர்
முதலாவது தாமரை, அல்லி இரண்டாவது சண்பகம், தாமரை மூன்றாவது செங்கழுநீர், அத்தி, பி நான்காவது நந்தியாவர்த்தம்
GFITLDb பழம் @
முதலாவது வில்வம் T இரண்டாவது LIGOT சந்: மூன்றாவது மாதுளம் குங் நான்காவது நானாவித பழங்கள்
அருள் ஒளி - 28 .

வேதத்தின் உட்பொருளாய் உள்ளவனை, எத்தகைய வன்மை உடையவர்க்கும் தெரியாத இயல்புடையவனை, தன்னை அடைந்தவர்களுக்கு தேனைப் போலவும், பாலைப் போலவும் இனிய பொருளாய் இருப்பவனை, விளங்குகின்ற சோதியை, தேவர்களுக்கு அரசனாக உள்ளவனை, கரிய நிறமுள்ள திருமாலாக இருப்ப வனை, நான்முகனாக விளங்குபவனை கனலாகவும் காற்றாகவும், ஒலிக்கின்ற 5LGOT856)||b; GU(1560)LD60)u Ju 460LLU LD60)GD பாகவும், எங்கும் கலந்து நிற்கும் பெரிய பெருமானை, பெரும்பற்றப் புலியூராகிய தில்லையில் உள்ளவனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே ஆகும்)
இப் பாடல் ஆறாம் திருமுறையின்
முதல் பக்கத்தில் உள்ள முதல் திருத் தாண்டகம்,
மப் பூசை விதிமுறைகள்
பத்திரம்
வில்வம்
துளசி, வில்வம் ဂျီးပုjá] - அறுகு, முட்கிளுவை, வில்வம்
66ITIT
пшцѣ ஒதும் வேதம்
ம்பிராணி இருக்கு தனக்கட்டை List
குலியம் FITIDD
பூரம் அதர்வம்
சிவராத்திற் சிறப்பு மலர் - 2013

Page 31
நகுலேஸ்வரர் ஆ
தீர்த்த 11
66 இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது
நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்”
- நாவலர் இரண்டாம் பாலபாடம் என்பது நாவலர் தருவதொரு உண்மை. கடவுளை வணங்குவதற்கு வழிகாட்டுவது சமயம். இந்த வழிபாட்டு மரபு பாரிய வளர்ச்சிக்குரியதாகிச் சைவ சித்தாந்த வழிபாட்டு நெறிக்கு இட்டுச் சென்றி ருக்கின்றது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆய்வுகள் தந்து நிற்கின்றன. சைவசித்தாந்தம் அதாவது சிவ வழிபாடு தமிழ்நாட்டின் தர்க்க வகையிலான வளர்ச்சி (யாக மாறிச் சிவன்தான் முழுமுதற் கடவுள் என்ற கொள்கையில் உரைத்து நிற்கின்றது. தேவநம்பியதீசன் காலத்திலேதான் பௌத்தம் இலங்கையில் ஒரு மதமாகியது என்பது வரலாறு. அதற்கு முன்பும் ஒரு வழிபாட்டு முறைமை ஈழத்தில் இருந்தி ருக்கின்றது என்பது எங்கள் உணர்விற் படுவது. அது சிவ வழிபாட்டு மரபுதான் என்பதைச் சான்றுகள் அறிவுறுத்துகின்றன. சிவனை முழுமுதலாகக் கொண்ட திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முனீஸ்வரம், தொண் டேஸ்வரம் என்னுந் தலங்களிற் பௌத்த மதம் வருகைக்கு முன் வழிபாடு நடந்த தென்ற செய்திகள் உண்டு.
இராம இராவண யுத்த காலத்தில் இலங்கைக்கு படையுடன் வந்த இராமன் முனீஸ்வரத்தில் வழிபாடு செய்தமை அருள் ஒளி

லயத் தொன்மையும் மகிமையும்
இராஜராஜஸ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள்
கீரிமலை
பற்றியும், இராணவன் சிவ வழிபாடு உடையவன் என்பது பற்றியும் கம்பரா மாயணம் குறிப்பிடுகின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த சமய குரவர்களும் இராவணன் சிவபக்தி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். மகாபாரதக் காவிய நாயகர்கள் ஒருவனாகிய அருச்சுனன் நகுலேஸ்வரத்தில் வழிபட்ட செய்தியும் நமக்குக் கிடைக்கின்றது.
விஜயன் இலங்கைக்கு வந்த கி.மு. ஏழாம் நூற்றாண்டுக் காலகட்டத்திற் பழுதடைந்திருந்த பல சிவாலயங்களைப் புதுப்பித்தான் என்ற வரலாறு உண்டு. சிங்கள இனத்தவராகிய Dr. போல், E.பீரிஸ் என்ற வரலாற்று ஆசிரியர் இலங்கையின் மிகப்பழமை வாய்ந்த சிவ வழிபாட்டுத் தலங்கள் ஐந்தினுள் நகு லேஸ்வரம் ஒன்று என்றும், இலங்கை யைப் பொறுத்தவரை அது தொன்மை யான இரண்டாவது தலமென்றும் குறிப்பிடு கின்றார்கள்.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத் தொன்மை, தலவிசேடம், தீர்த்த மகிமை என்பவற்றை எமக்குக் கிடைக்கக் கூடியனவாயுள்ள பல நூல்கள் தந்து கொண்டிருக்கின்றன. சூதசங்கிதை, மச்ச புராணம், ஸ்கந்தபுராணம், நகுலகிரிப் புராணம், நகுலாசல புராணம், நகுல மலைக் குறவஞ்சி, நகுலேசர் மகாத்மியம், கைலாசமான்மியம், ஈழமண்டல சதகம்
29 -
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 32
என்பன சைவ உலகு அறிந்த நகுலேஸ்வரர் பற்றிய பெருமை கூறும் நூல்கள் என நகுலேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய ஆதீன முதல்வர் சிவருீ. கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் இலண்டனிலிருந்து வெளியாகும் கலசம் 1998 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி இதழில் எழுதி
யுள்ளார்.
திரோதா யுகத்தில் பரமேஸ்வர மூர்த்தி பார்வதி தேவியுடன் இம்மலைச் சாரலில் எழுந்தருளி இருந்தபோது பார்வதிதேவி நீராடுவதற்காக் கண்டகி தீர்த்தத்தை அப்பரமேஸ்வரமூர்த்தி இவ்விடத்தில் அழைத்து வைத்தார். அத்தீர்த்தத்திலே தேவர்களும், இருடி களும் பிறரும் வந்து தீர்த்தமாடிப் புண்ணியவான்களாய்ப் போனதால் அம்முதலாம் யுகத்திலே இந்நாடு புண்ணிய புரம் எனப் பெயர் பெற்றது. இந்த காலத்திலே முசுகுந்தச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்தபொழுது அவருடன் கூடி வந்து இம்மலைச் சாரலிலுள்ள கண்டகி தீர்த்தத்திலாடிச் சிவாலய தரிசனமுஞ் செய்து வருகையில் நகுல முனிவருக் கிருந்த கீரிமுகம் மாறிச் சுபாவ முகம் கிடைத்தது. அதுமுதல் நகுலகிரி என்றும் இங்குள்ள ஈசுவரனை நகுலேசுவரரென்றும் ஈசுவரியை நகுலாம்பிகை என்றும் பெய ரிட்டு அழைத்து வந்தார்கள் என்னுஞ் செய்தி திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை பதிப்பிலுள்ளது. முதலியார் குலசபாநாதன் பதிப்பில் அடிக்குறிப்பாகக் காணப்படு கின்றது. கீரிமலைச் சிவாலயம் பழமை வாய்ந்ததாக முதலாம் யுத்தத்திலேயே இருந்திருக்கின்றது என்பது இறை வனாலே தருவிக்கப்பட்ட புண்ணிய தீர்த்தம் அங்கே இருந்ததென்பதும்
ଜୋ
E
அருள் ஒளி - 30 -

மேலேயுள்ள செய்தி மூலம் பெறப்படு கின்றது.
நகுலகிரிப் புராணம் என்னும் நூலில் இச்செய்தி சிறிதளவு திரிவுபட்டதாகக் காணப்படுகின்ற சுதாமா என்னும் பெய ருடைய ஒரு முனிவரின் கோபத்திற் காளான வேடனொருவரின் முகம் கீரி முகமானதென்றும், அவன் இந்தத் தலத்து நீரிலே நீராடிக் கீரிமுகம் மாறியதென்றும், அவன்தான் நகுலமுனிவர் என்றும் அந்த முனிவர் காரணமாக அப் பெயர்கள் வந்தனவென்றும் காண்போம்.
இராவணன் தானொருவனேயன்றி வேறொருவரும் இராவண வீணையைத் தொடவும் படாதென்று உறுதியான 5ட்டளை பண்ணியிருந்த பொழுது சித்திராங்கதன் என்னுமொரு கந்தருவன் நானும் அந்த வீணையை வாசிக்க நெடுங் 5ாலம் பேராசை கொண்டிருந்தவன் தசரத இராமனால் அவ்விராவணனது இருபது கைகளும் அறுந்து விழுந்த மயத்தில் இவ் வீணையைக் கவர்ந்து கீரிமலையில் வந்திறங்கி அவ்வீணை யைப் பிரபலப்படுத்தினான். இதனால் இவ்விடம் காந்தருவநகர் என்றும் வீணாகானபுரம் என்றும் வழங்கப்பட்டது.
இச்செய்தியும் யாழ்ப்பாண வைபவ மாலையிலிருந்து பெறப்பட்டது. கைலை மகாத்மியம் என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு நகுலகிரிப் புராணம் இச்செய்தி பற்றி பேசுகின்றது.
கலியினால் தொடரப்பட்ட நிடத ாட்டரசனான நளன் தன் துன்பந் தீர்க்க கோணேசப் பெருமானிடம் வந்தானென்றும்
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 33
அங்கிருந்த ஒரு பெரியவரின் வழிகாட்ட லினால் கீரிமலை சென்று கண்டகி தீர்த்தத்தில் ஆடி நகுலேசரரைத் தொழுது கலி நீக்கம் பெறவேண்டினான்ெறும் இறைவன் பணிப்பின் பேரில் அவன் சென்று கொண்டிருந்த வேளை பாம்பு ஒன்று அவனைத் தீண்டியதென்றும், அதனால் அவன் உருவம் மாறிக் கரந்து வாழக்கூடிய நிலை ஏற்பட்டதென்றும் வேண்டியபொழுது உரிய வடிவைப் பெற வல்லமை அளிக்கப்பட்டதென்றும் இறுதியில் நல்ல முடிவு கிடைத்ததென்றும் வரலாறு உண்டு.
விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நான்கு சிவாலயங்களை அமைத்தானென்றும், வடக்கில் கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை கோவில்களையும், அவற்றுக்குச் சமீபமாகக் கதிரையாண்டவர் கோவிலையும் கட்டு வித்து, அவ்வாலயங்களுக்குப் பூசை செய்யும்படி நீலகண்டாசிரியர் மூன்றாவது குமாரன் வாமதேவாசிரியன் என்னும் காசியின் பிராமணனையும் அவன் துணைவி விசாலாட்சியம்மாளையும் அழைத்து இருத்தி வைத்தான் என்றும் கோயில்கள் தோன்றிய காரணத்தாற் கோவிற்கடவை என்று அப்பகுதி பெயர் பெற்றது என்றும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடு கின்றது.
திசையுக்கிரம சோழன் மனைவி கனகாங்கி, குதிரை முகமுடைய கின்னரப் பெண் ஒருத்தியின் கோபத்திற்குள்ளாகிச்
அருள் ஒளி
3

சாபம் பெற்றாளென்றும், அது காரணமாகக் குதிரை முகமுடைய குழந்தையைப் பெற்றாள் என்றும் அக்குழந்தை குன்ம நோய் உடையதென்றும், வெட்கம் காரண மாக அக்குழந்தை வளைந்த தோற்றத்தை உடையதாகியதென்றும், அந்தத் துன்பத்தி னின்றும், விடுபடுவதற்காக தீர்த்த யாத்திரை தொடர்ந்ததென்றும், மாருதப்புரவீகவல்லி என்னும் பெயருடைய அப்பெண் குழந்தை கீரிமலைத் தீர்த்தத்திலாடி நாளுஞ் சிவனை வழிபட்டமையாற் குதிரை முகம் மாறிச் சுயமான நல்ல வடிவு கிடைத்தது என்றும் வரலாறு உண்டு. இந்த வரலாற்றுக்காலம் மிகப் பிற்பட்டதென்னும் கருத்தும் உண்டு.
இங்கே கண்ட செய்திகள் கொண்டு, கீரிமலை நகுலேஸ்வரர் வழிபாடு, காலம் அறியப்பட முடியாதொரு காலத்தே ஆரம்பமாகியது என்பது உணர்விற்குரிய தாகின்றது. நகுலேஸ்வரத் தீர்த்த மகத்துவம் நகுல முனிவர் மாருதப்புர வீகவல்லி, நளன் முதலியோர் வரலாறுகள் கொண்டு அறிய முடிகின்றது.
புராதன காலத்தில் திருத்தம்பலேசு வரம் என்ற பெயருடன் இருந்த கீரிமலை நகுலமுனிவரின் வருகைக்குப் பின்னே கீரிமலை என்றாயிற்று. அதுவே நகுலேஸ் வரன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. திருத் தம்பலேஸ்வர காலத்தில் இறைவன் திருத் தம்பலேஸ்வரர் இறைவி திருத்தம்பலேஸ்வரி அத்திருப் பெயர்களே இன்று நகுலேஸ்வரர் நகுலாம்பிகை என்றாகியுள்ளன.
1
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 34
நீரிழிவு/சலரோ
துர்க்கா
மனிதனின் இரத்தத்தில் குறிப்பிட்ட அளவு சீனியின் தன்மை காணப்படும். இச் சீனியின் அளவானது இரத்தத்தில் அதிகரிக்கும் போது இதனை நீரிழிவு என கூறப்படும் இதனைக் கட்டுப்பாட்டில் வைத்தி ருப்பது கணையத்தினால் சுரக்கும் இன்சுலின் (Insulin) எனப்படும் ஒருவகை சுரப்பு ஆகும்.
இரைப்பை குடல் என்பவற்றின் தொழிற் பாட்டினால் உணவிலிருந்து குளுக்கோசாக இரத்தத்தினுள் செலுத்தப்படும் அவ்வேளை யில் கணையத்திலிருந்து Insulin உற்பத்தி யாகி இரத்தத்தில் கலக்கிறது. இவ்வின்சுலி னானது உடலில் உள்ள சர்க்கரை / சீனித் தன்மையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற அவசியமாகிறது.
தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தியான இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன் படுத்த முடியாத நிலைமை நீரிழி வினை உருவாக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையானது சிறுநீர் மூலம் வெளி யேற்றப்படும். இதனாலேயே சலரோக நோயாளியின் சலத்திலும் சீனித்தன்மை காணப்படுகிறது.
சலரோகமானது ஒரு தொற்றுநோயல்ல. இதனைப் பூரணமாகக் குணப் படுத்தமுடி யாதுவிடினும் தமது பழக்க வழக்கங்கள், உணவுமுறை, தியானம், யோகாசனம் மூலம் வாழ்நாள் பூராகவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
அருள் ஒளி - 32

T851 b (Diabetes)
Dr. S. டிசியந்தி அவர்கள் தேவி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை
ஏற்படுவதற்கான காரணங்கள் 1) பரம்பரை. 2) அகச் சுரப்பிகளின் தாபிதம் (GH -
அதிகமாகச் சுரத்தல்) 3) கணையத்தின் தாபிதங்கள் (Pancreatic
diseases) 4) கிருமித்தாக்கம் (Infection - cytomegalovines, coxsackievines) 5) தொடர்ச்சியாக / அளவுக்கதிகமாக சில மருந்துகளைப் பயன்படுத்தல்
D-Liib : Glucocorticoids. 6) புகைத்தல், மதுபானப் பழக்கங்கள். 7) உடல் பருத்தவர்கள். 8) உடற்பயிற்சி குறைவு. அறிகுறிகள்
நீரிழிவு உள்ளவர்களில் பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டாலும், சில சமயங் களில் அறிகுறிகள் எவையும் தென்படுவதில்லை. 1) அடிக்கடி சிறுநீர் கழிதல். 2) அதிக தாகம். 3) அதிக பசி, 4) மிக வேகமாக நிறை குறைதல், 5) அதிக சோர்வு. 6) புண் /காயம் ஏற்படின் இலகுவில்
LDITDIT60L.D. 7) திரும்பத்திரும்ப தொற்று நோய்கள்
ஏற்படல். 8) கண்பார்வை மங்குதல். 9) பாதங்களில் உணர்ச்சி குறைவு/ எரிச்சல் வகைகள் 1ம் வகை (Type 1) இன்சுலினானது சுரக்கும் தன்மையை இழக்கின்றது. இதற்கு
சிவராத்திரி சிறப்பு மலர் = 2O3

Page 35
Insulin ஏற்றுவதன் மூலம் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இது குழந்தை, சிறுவர்கள், இளம்பரா யத்தினருக்கு பொதுவாக ஏற்படுகிறது. அத்துடன் இவர்கள் உணவுக் கட்டுப் பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். 2ம் வகை (Type II) போதியளவு இன்சுலின்
சுரக்கப்படாமை அல்லது சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்விளைவு ஏற்படல் என்பவற்றால் இது ஏற்படுகிறது. இதனை நிறைகுறைத்தல், உணவுக் கட்டுப்பாடு, மருந்து, உடற்பயிற்சி, யோகா என்பவற்றின் மூலம் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியும். இதுவே பொதுவாக 90 வீதமானவர்களுக்கு
ஏற்படுகிறது. வகை 3 Gestational Diabetes - இது
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படுகிறது. பிரசவத்தின் பின்னர் இது மறைந்து விடும். எனினும் எதிர்காலத்தில் குழந்தை, தாய்க்கு நீரிழிவு உருவாகும்
வாய்ப்பு அதிகம். இரத்தத்தில் சீனியின் அளவு (சாதாரண ஒருவரில்) 1.
FBS - Fasting blood sugar - அதாவது இரவுச் சாப்பாட்டிற்கு பின்னர் 10 மணித்தியாலத்தின் பின் எடுக்கப்படும் இரத்தத்தில் சீனியின் அளவு 6.1 mmol/ 1 இலும் குறைவாக இருத்தல்
வேண்டும். (110mg/dl) 2) மதிய உணவு எடுத்து 2 மணித்தியா
லத்தின் பின்னர் எடுக்கப்படும் இரத் தத்தில் (PPBS) 7.8 mmol/1 இலும் குறைவாக இருத்தல் வேண்டும். (140
mg/dl) 3) எழுமாற்றாக எடுக்கப்படும் இரத்தத்தில்
11.1 mmol/ 1 இலும் குறைவாக இருத்தல் (RBS) 200 mg / d1)
அருள் ஒளி

இவற்றின் மூலம் சலப்பரிசோதனை மூலமும் நீரிழிவு நோயினைக் கண்டறிய முடியும்.
(இங்கு mmol/1 இல் காணப்படுவதை 18இனால் பெருக்கும் போது mg/dl இற்கு மாற்றமுடியும். eg : 6.1 x 18 = 109.8 mg/ d1) தற்பொழுது அனேக வீடுகளில் குளுக்கோ மீற்றர் காணப்படுவதால் இப்பரிசோதனையை வீடுகளில் மேற் கொள்வோர் இக்கணிப்பீட்டின் மூலம் தமது இரத்தத்தில் சீனியின் அளவை அறிந்து கொள்ள முடியும்.
எனினும் நீரிழிவு நோயாளிகள் அதாவது மருந்து பயன்படுத்திக் கொண்டி ருப்பவர்கள் மேற்கூறிய அளவிலும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் மருந்தே கட்டுப் பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளின் உணவு
காலை அல்லது இரவு வேளையில் கடலை, கெளப்பி, பயறு, உழுந்து போன்ற வற்றில் ஒன்றினை உட்கொள்ளலாம்.
மதியம் - சோறு (தவிட்டுடன் கூடிய அரிசியினை அளவான நீர் விட்டு சமைத்தல் - கஞ்சி வடித்தலை தவிர்த்தல்) 70g. பருப்பு / சோயா / சிறிய மீன் கொழுப்பற்ற இறைச்சி, ஏதாவது ஒருவகை இலைக்கறி மற்றும் காய்கறிகள் அடங்கலான ஒரு உணவு.
இரவு - பிட்டு (2 சில்லு), இடியப்பம் - 3/4, தோசை 3/4, இட்டலி 3/4 போன்றவற்றுடன் காய்கறிகள் அதிகம் அடங்கலான உணவு.
காலை 10 மணி, மாலை 4 மணிக்கு | 1/2 கிறீம் கிரக்கர் பிஸ்கட் ஆடை நீக்கிய
-3 -
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 36
பால் 1 கப், தினமும் பழம் ஒன்றினை எடுத்தல் (வாழைப்பழம் -1, விளாம்பழம்) கிழங்கு வகைகள் தவிர்த்தல் அல்லது கிழங்கு எடுக்கும் சந்தர்ப்பத்தில் கிழங்கிற்கு சம அளவான சோறு அல்லது மா உணவு களைக் குறைத்து சாப்பிட வேண்டும்.
இனிப்பு, கொழுப்பு (எண்ணெய்) பண்டங்கள் உண்பதைத் தவிர்த்தல். எனவே சலரோக நோயாளிகள் மேற்கூறிய அறி குறிகள் ஒன்றோ பலவோ காணப்படு மிடத்து வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் நோயாளிகள் ஏதாவது ஒரு வைத்தியசாலையிலோ அல்லது வைத்தியரிடமோ கிளினிக்கினை கடைப்பிடிப்பது நோயினை அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதற்கும், அதனால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்கவும் முடியும். இதன் விளைவுகளாக :
உயர் குருதி அமுக்கம்
மாரடைப்பு
பார்வை இழத்தல்
சிறுநீரகக் கோளாறு
பக்க வாதம்
கால்களை இழத்தல்
(85 TLDT
இறப்பு
இவற்றைவிட பின்வரும் நடைமுறை களை கைக்கொள்வதனால் நீரிழிவு நோயினை எமது கட்டுப்பாட்டில் வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க முடியும். 1. சிறுகுறிஞ்சா இலைகள் 3-4 தினமும் உட்கொள்ளல் அல்லது சிறுகுறிஞ்சா இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து தினமும் 1/2 தே.க.
அருள் ஒளி - 34

காலை, மாலை உட்கொள்ளல். அல்லது சிறுகுறிஞ்சா இலையினை வேறு இலைகளுடன் சேர்த்து சமைத்து உண்ணல்,
ஆவாரைப்பூவை துவரம் பருப்புடன்
சேர்த்து கூட்டு வைத்து உண்ணல், ஆவாரைச் செடியின் இலை, பூ, பழம், பட்டை, வேர் என்பவற்றை உலர்த்தி பொடி செய்து அதனை காலை மாலை தேனிருக்குப் பதிலாகக் குடித்தல். கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளல். மாந்துளிரினை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் 1/2 தே.க. பாலில் கலந்து குடித்தல். பப்பாசிக் காயை (இளம்) தோல் சீவி வெட்டி கறி சமைத்து உண்ணல், கொவ்வை இலை, காய் என்பவற்றினை உணவு சமைத்து உண்ணல் நாவற் கொட்டை, நன்னாரிவேர், கொத்தமல்லி, சுக்கு என்பவற்றினைச் சேர்த்து பொடி செய்து தேனீருக்குப் பதிலாகப் பயன்படுத்தல். குருவித்தலை பாகற்காயை காய வைத்து பொடி செய்து 2-3 g தினமும் உட்கொள்ளல்.
புகைத்தல், மதுபானம் அருந்துவதைத்
தவிர்த்தல். குறைந்தளவு உணவு சத்துள்ளதாக உண்ணப் பழகவேண்டும்.
. யோகாசனம் மூச்சுப் பயிற்சி போன்றன
வும் உடற்பயிற்சி என்பவற்றையும் தினமும் முறையாக மேற்கொள்ளல்.
மேற்கூறியவற்றைக் கடைப்பிடித்து
"உணவே மருந்து" என்பதற்கிணங்க
உண்டு சுகமாக வாழ்வோமாக.
சிவராத்திற் சிறப்பு மலர் - 2O3

Page 37
அருள் ஒளி தக
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன தினம் இலங்கையில் பல மாவட்டங்களிலும் மிகவும்கிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கொழும்பு விவேகானந்த சபை, இலங்கை இந்து சேவா சங்கம், கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் ஏற்பாட்டிலும் ஏனைய இந்து நிறுவனங்களின் ஏற்பாட்டி லும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தெல் லிப் பழை அருள் மிகு பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மாசிமக இலட்சார்ச்சனை - 2013
நிகழும் சர்வமங்கள நந்தன வருடம் மாசித்திங்கள் 3ஆம்நாள் (15-02-2013) வெள்ளிக்கிழமை முதல் மாசித்திங்கள் 12ஆம் நாள் (24-02-2013) ஞாயிற்றுக் கிழமை வரையுள்ள பத்துத் தினங்களும் இலட்சார்ச்சனை நடைபெற்றது.
மாசித்திங்கள் 13ஆம்நாள் (25-022013) திங்கட்கிழமை எண்பத்தொரு கலச அபிஷேகம் ஸ்வர்ணபத்ம புஸ்பார்ச்சனை உள்வீதியுலா ஆகியன இடம்பெற்றன.
வேதபாராயணப் பாடசாலை
அதிபர் சிவருீ தா. மகாதேவாக் குருக்களின் குருகுல சேவைப் பொன்விழா இணுவிலில் உள்ள அவரது குருகுலத்தில் சிறப்பாக நடைபெற்றது. அவரிடம் கற்றுப் பல்வேறு ஆலயங்களிலும் சிவாச்சாரியர் களாகப் பணியாற்றும் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். மாவிட்ட புரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவருீ மகாதேவாக் குருக்கள் பலநூறு ஆலயங் களில் நடைபெற்ற மகாகும்பாபி
அருள் ஒளி - 35

வல் களஞ்சியம்
ஷேகங்களை நெறிப்படுத்திய பெருமைக் குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு சிறி பாலசுப்பிரமணிய ஆலயத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் புனரமைப்பு
கொழும்பு இந்து வித்தியா விருத்திச் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் சரஸ்வதி மண்டபம் இவ்வாண்டு நவீன மயப்படுத்தப்பட்டு எதிர்வரும் 2-032013 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பு மாநகரில் சைவத்தமிழர்களின் முக்கிய விழாக்கள் இம் மண்டபத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்க சைவ ஆகமங்கள், வேத இதிகாச புராண ஏடுகள்
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்ட சைவ ஆகமங்கள், வேத இதிகாச புராண ஏடுகளை அமெரிக்க ஹவாய் சைவ ஆதீனம் பல லட்சம் ரூபா செலவு செய்து காப்பாற்றி வருகிறது. நவீன கருவிகளைப் பயன்படுத்தி மென் தகட்டில் பதிவு செய்து அவ் ஏடுகள் அழியாமல் மேற்படி ஆதீனம் பாதுகாத்துள்ளமை பாராட்டுக்குரியது. அவ்வேடுகள் தொடர்பான பிரதிகளை ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஈழத்து இந்து சமய ஆய்வாள
2013 - சிவராத்திரி சிறப்பு மலர் ܚ ܪ

Page 38
ருக்கு உதவும் பொருட்டு இலங்கைக்கு எடுத்து வந்துள்ளார். எதிர்வரும் 03-032013 அன்று கொழும்பு கொம்பனித்தெரு முருகன் ஏட்டில் பிரதிகள் பூசையில் வைக்கப்பட்டுப் பின் ஊர்வலமாக வந்து 8 அகில இலங்கை இந்துமா மன்றத்திடம் ; கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்து ஆராய்ச்சியாளர் இந்து மாமன்றத்தில் பாதுகாக்கப்படும் ஏடுகளை ஆய்வு செய்ய (
வசதியேற்படுத்தப்படவுள்ளது.
குப்பிளானில் சிவபூமி ஞான ஆச்சிரமம் 1 திறக்கப்பட்டது.
குப்பிளான் கிராமத்தில் ஆன்மீகப் பணிகளை ஆற்றுவதற்காக சிவபூமி 1
அறக்கட்டளை நிறுவனத்தால் சிவபூமி ஞான ஆச்சிரமம் 28-01-2013 அன்று ! ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதசுவாமி களால் திறந்து வைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகறிது. நூற்றுக்கு மேற்பட்ட சித்தர்கள், யோகிகள், 1 மகான்களின் புகைப்படங்கள் தியான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
-.
அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலில் மஹா சத சண்டி யாகம்
13-02-1013 -- 25-02-2013 வரை - மிகப்பெரிய யாகம் இத்திருக்கோவிலில் | நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வேத 8 விற்பன்னர்கள் அழைக்கப்பட்டு இரவும் 8
அருள் ஒளி - 36 அருள் ஒளி
- 36

பகலும் யாகம் நடைபெற்றது. பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீரிமலை காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி ஆரம்பம்
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக் தரித்தான கீரிமலை காசி விஸ்வநாதர் கோவில் போரில் அழிந்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காட்சியளித்தது. இத்திருக்கோவிலை புனர்நிர்மானம் செய்து மீளவும் கட்டியெழுப்பும் முயற்சி ஆரம்பிக் கப்பட்டுள்ளது.
.08 சிவலிங்கம்
கீரிமலை காசி விஸ்வநாதர் கோவிலில் நர்மதா ஆற்றில் பெறப்பட்ட 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. தற்போது 08 லிங்கங்களும் மாவை கந்த கோவிலில் பூசைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மாவைக் கந்தர் புதிய தேர் அச்சு ஏற்றும் வைபவம்
மாவிட்டபுரம் கந்தப் பெருமானின் பெருந்தேர் கடந்தகாலப் போரில் அழிந்துபோய்விட்டது. தற்போது 61 அடி உயரமான புதிய தேர் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது. புதிய தேருக்கான அச்சு ஏற்றும் நிகழ்ச்சியில் ஆன்மீகச்சுடர் சிS தொண்டுநாதன் சுவாமிகள், கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிவராத்திரி சிறப்பு மலர் - 2013

Page 39
துர்க்கா!
வாழ்த்து
எங்கள் தேவஸ்தான பிரபல்யமான தொழிலதிப
மனித நே லயன் ச. ஆ
அவர்க 'தேசமான்ய லங்கா
என்ற கௌரவப் WHOLE CEYLON NEN. அமைப்பால் வழங்கப்பட்டுப்
இதயபூர்வமாக வ
| L :..

தவி துணை
கின்றோம்
த்தின் உப தலைவரும்
ரும் சமூக சேவையாளரும் யருமாகிய றுமுகநாதன்
ளுக்கு புத்திர விஸ்வகீர்த்தி பட்டம் இலங்கை A GUNA FOUNDATION பாராட்டப்பட்டதை முன்னிட்டு ாழ்த்துகின்றோம்.
நிர்வாக சபை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.

Page 40
அன்னை சிவத்தமிழ்
தங்கம்மா அப்பாக் பிறந்தநாள் அறக்கெ
துர்க்காதேவி தேவஸ்த எகனாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி BP) அ
07ாமம்
துர்க்காதேவி தேவஸ்தா சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி (1)
0702
ANDRÀDIGITAL PRINTERS PAZnce

ச் செல்வி கலாநிதி தட்டி அவர்களின் ாடை விழா - 2013
ானம் தெல்லிப்பளை பர்களின் 83வது பிறந்தநாள் அறக்கொடை விழா
நிக்கொன் ஸ்ருடியோ துர்க்காபுரம்
ஏம் தெல்லிப்பளை P) அவர்களின் 88வது பிறந்தநாள் அறக்கொடை விழா
013
சவைமிகம்
பாழ்நிக்கொன் ஸ்ருடியே துர்க்கா