கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2014.04-06

Page 1
கலை இலக்கிய சமூக இதழ்
 
 


Page 2
பெற்றுக் கொ நாடவேண்
Ne ea, Mo, Keshuriye
■■e ○2 22 ] /3/3 F○ Engli: nevnothily
 

கநகைகளைப்
மின்னும் பொன்நகை மிஞ்சும் புன்னகை
காலத்தை வெல்லும் கலை நுட்பத்துடன் மின்னும் பொன் நகையால் மேலும் ஒளிரும் உங்கள் புன்னகை.
Rocc, Joffric K: O2 22 7877 OGPgncil.com

Page 3
’ə6e jo sueƏÁ ZT Oļ dn pỊųɔ uuoq/wəu unoÁ JOJ Įunoɔɔw euuel suļļ6uļS GNH ue uədo wou ueɔ no,
‘UOļļeɔnpƏ uļƏųļ us UuƏųļ dịou pỊnow uɔļų/w suƏųnduoɔ Ánq os sueo| 6upnļou! ‘S]]|6 6uņeusɔseg uļļw uəup||ųɔ uno əļe^ņou pue pue/wɔu Ə^^ əSneɔƏq euen suļļ6uļS GNH uļļw 6upue/wəu Á||enbə əqueɔ 6uļAes woN (õuņoxə pue 6uņe^ņou
遗
‘6uņsƏlƏļus s,\! uəųw 6upueswəu əqueɔ 6uļuueəT
Ấuinos dəə`s) – sumuupɔn dɔɔs 藏").靛麟
puur»T
 

L0 LL S0 LL LL LLL LLL LLL 00 LLL LLL L LLLLL LL LLLLLL LLLL YLLLL LLLL LL
|sou qu'uw (døM »I'quụ@də|6,94:lleu-3 c86.1992 || 0 || -1 ||0| otsuolo o 'wulu www qeẤes og L'6/* 'suewolɛINH 'ool Jo pues, uNH
(,), ww : Buluwu ŋɔŋlɔ, ミミミミミ ミ
印N=
Áįddo suos||puoɔ
+ ·
Aepos pliųɔɔnoÁJoy qunoɔɔw eueT jųų6ulsgn} ue uədo
suƏỊnduoɔ ƏSeųɔund Oų sueOT •
sų6 Ásə^OT • uos||suu / 'SH uļuOM Sd!ųSue|OųɔS •
ųjų, suo ə!!!! Ino/splene,osse euen susț6uļS
russow noÁ se 6uļAes dəə» pue-/OOG 'SH ļSnfuoj qunoɔɔe sỊųļ uədo ueɔ noÁ ’əuou sąeųNA

Page 4
ISSN 1391-0191
 
 
 

2nSpగి
கட்டுரைகள்
ந. மயூரரூபன் O5 சு. குணேஸ்வரன் 2O பி. எஸ். அல்பிரட் 25
LiSigléost 29 மேமன்கவி 3O
தபின் 33 பூ. சோதிநாதன் 48
கவிதைகள்
மு. யாழவன் 1Ο குருதத் 19 வே. ஐ. வரதராஜன் 24 ந. பாக்கியநாதன் 46 மு. பொ. 54 வேலணையூர் தாஸ் 57 இராகவன் 64 அலெக்ஸ் பரந்தாமன் 64
மொழிபெயர்ப்புக் கவிதை ஹிந்தி மூலம்: சரேஸ்வர் தயால் சக்ஸ்னா
தமிழில் கந்தையா ருரீகணேசன் 11
சிறுகதை தெளிவத்தை ஜோசப் 58
மொழிபெயர்ப்புச் சிறுகதை
ஆங்கில மூலம்: முஹம்மது நஸிஹ அலி தமிழில்: சோ. பத்மநாதன் 12
மொழிபெயர்ப்பு நேர்காணல் திரைப்பட நெறியாளர் பக்மன் ஹோபாடி தமிழில்: ஜி. ரி. கேதாரநாதன் O8
நூல் மதிப்பீடுகள்
ந. சத்தியபாலன் 37 இயல்வாணன் 38 தரிசனன் 39 வே. ஐ. வரதராஜன் 4O கே. எம். செல்வதாஸ் 41 சுரேஷ் 4-2 நேசன் 43 ஞா. கெனத் 44
மற்றும்
தலையங்கம் O2 வரப்பெற்றோம் 47 கடிதங்கள் 65
r sits *hday quT sa)46
யாழப்பாணம்.

Page 5
காலாண்டுச் சஞ்சிகை
O 矶而吋
கலை, இலக்கிய, சமூக இதழ்
5560)6O 25 முகம் O2
ஏப்பிரல் - ஜூன் 2014
பிரதம ஆசிரியர் நீ. மரியசேவியர் அழகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
முகப்போவியம்
இணையம்
அட்டைப்பட கணினிவடிவமைப்பு அ. ஜூட்ஸன்
இணையத்தளத்தில் இருந்து கவிதைகளுக்கான ஒளிப்படங்கள் பீ. சே. கலீஸ்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினி அச்சுக்கோர்ப்பும், பக்க அமைப்பும்.
ஜெயந்த் சென்ரர் 165, வேம்படி வீதி, யாழ்ப்பாணம்.
விளம்பரம் கி. எமில்
கொ.கரன்சன்
வெளியீடு திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. Tel. & Fax: 021-222 2393 E-Mail: cpajaffnasayahoo.co.uk
2
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
<
வணக்கம்!
பலரும் பா வளர்ச்சித் திட்டங்கை
வீதிகளின் வளர்ச்சி பெற்ற நாடெ பதிய வைக்கின்றன. முழுக்குடும்பங்களே நாளாந்தம் நடந்த வ
பல்லாண்டு ஏற்பாடுகள் கட்டம் கட் பயணிக்கும் வசதி 6 அதிவேக சொகுசு ெ என்பதில் ஐயமில்லை நடந்துள்ளன. இன்னு எங்கு நோ கண்ணைக் கவரும் நிலையங்கள், சிறை வைகளும், அரச ம போன்றவைகளும் ப வண்ணம் உள்ளன. அமைக்கப்பட்டும், ட போன்ற வியாபார நி அஞ்சும் அளவுக்கு ெ
உல்லாசப் அமைப்பை மாற்றிச் யாளர்களின் கண்ண புற்றீசல் போல் கிளம் விளைவிக்கும் வகை மயமாக்கல் நீரோட்ட தவிர்க்க முடியாதது 6 ஈர்த்து இழுக்கும் வன்
‘அந்நிய எண்ணிலடங்கா பன அழிக்கப்பட்டு இயற் முகாங்கள் எமது ‘பா அப்பால், அவை தூய் மறுப்பதற்கு இல்லை அமைதியின் அண் சோகக் கீறு இளைே இருக்கலாம். விளைய விழாக்கள் எனப் பல தொகையில், பொது கொள்கின்றனர். முட்
ஆக, பல்ட பூசுகின்றன என்பன இத்தனையும் இருந்:
 
 

ബubli
ாட்டுகிறார்கள்! எமது மண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ளப் போற்றுகிறார்கள்! புனரமைப்பு, அவைகளின் செம்மை, திண்மை, ஒழுங்கு என்பன ான்றின் சாலையில் பயணிக்கின்றோம் என்ற எண்ணத்தை மனதில் மறுபுறம், எத்தகைய வீதிக்கட்டுப்பாடுகள் இருப்பினும், விபத்துக்கள், பலியாகிய சோக நிகழ்ச்சிகள், நமது அகன்று நீண்ட பாதைகளில் ண்ணம் உள்ளன.
கள் கழிந்து, மீண்டும் நம்மவர்கள் தொடர்வண்டியில் பயணிக்கும் டமாக நிறைவு பெற்று, இவ்வாண்டின் பிற்பகுதியில் யாழ்நகர் மட்டும் மக்குக் கிடைக்கவுள்ளது. சொகுசு வாகனங்களைப் போலவே, தாடர்வண்டியும் இயங்குவது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . இதன் மறுபக்கம், ஏற்கெனவே இரு இடங்களில் கோர விபத்துக்கள் பும் பல நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கலாம். க்கினும் புதிய கட்டடங்கள்! தனி வீடுகளும், தொடர்மாடிகளும், வகையில் கட்டி எழுப்பப்படுகின்றன. நீதிமன்றங்கள், காவற்றுறை ச்சாலைகள், அஞ்சலகங்கள், அரச திணைக்களங்கள் போன்ற ருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் ]க்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய எழுப்பப்பட்ட கல்லூரிகள், கல்வி நிலையங்கள், கலைக்கூடங்கள் பெரும் செலவில் த்தாக்கம் செய்யப்பட்டும் வருகின்றன. கடைகள், பேரங்காடிகள் லையங்கள் தேவைக்கு அதிகமாகவே தோன்றிவிட்டனவோ என்று தாடக்கப்பட்டுவிட்டன. பயணிகளுக்கான அதிநவீன தங்கு விடுதிகள் எமது மண்ணின் சுய 5 கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில், நிலத்தின் உரிமை ரீருக்கு நடுவில், உல்லாச பயணிகளுக்கான சொகுசு இல்லங்கள் புகின்றன. ஒரு சில, எமது மண்ணின் ஒழுக்க நெறிகளுக்கு குந்தகம் பில் செயற்பட்டுள்ளன என்பது 316iorgoidu வரலாற்றுப் பதிவு. உலக த்தில் இத்தகைய குளறுபடிகளும், கேவலங்களும் உருவாகுவது ன்பது சிலரின் வாதம் மற்றும், சிறுவர்களையும் பெரியவர்களையும் ண்ணப் பூங்காக்கள் வரவேற்கத்தக்கவை. ஆதிக்கச் சின்னங்கள்’ என்று கடுமையாக விமர்சிக்கப்படும் ட முகாங்களும் இவ் வளர்ச்சியில் ஒரு பகுதி. காடு கரம்பைகள் கைச் சூழல் மாறிப்போகின்ற அளவுக்கு எமது மண்ணில் இம் துகாப்புக்காக எழுந்து நிமிர்ந்து நிற்கின்றன. நீதி, நியாயம் என்பதற்கு மையுடன் கூடிய அழகிய தோற்றப்பாடுடன் காட்சி அளிப்பதை யாரும் ). இம் முகாங்களுக்கு உறுதுணையாகவும், அக்கம் பக்கத்திலும் ணல் புத்தபிரான் காட்சியளிக்கின்றார். அவரின் வதனத்திலே ஒரு யாடுகிறது. போர் அரண்களைக் கண்டு கவலை கொள்கின்றாரா? ாட்டுப் போட்டிகள்,திருமண நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுகின்றன. இனி இல்லை என்ற மக்கள் குறிப்பாக இளைஞர்கள் களியாட்ட விழாக்களில் கலந்து பது ஆண்டுகளாக வடித்த கண்ணிரை மறந்து நிற்கின்றனர். ரிமாண வளர்ச்சிக் கோலங்கள் நமது மண்ணில் வண்ணத்தைப் த ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! ஆனால், அடிப்படையில், தும் என்ன.
நீ, மரியசேவியர் அடிகள்

Page 6
GLILG.
)ே கால்நூற்றாண்டைக் கடந்த அனுபவத்துடன் வேகமாக வளர்ந்து நுட்பத்திற்கேற்ப மாறிவரும் நாம் போட்டோ அல்பத் துறையில் அதி சாதனங்களை யாழ் மண்ணுக்கு அறிமுகப்படுத்திய பெருமையுட மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருச்
9 இலங்கையிலேயே முதன் முறையாக ஜப்பான் தயாரிப்பில் உருவ படப்பிரதியாக்கும் அதி நவீன இயந்திரத்தினை அறிமுகப்படுத்தி கால கிழியாத, நிறம் மாறாத, நீர் உட்புகாத, பாரம் குறைந்த, முழுக்க வடிவமைப்பிலான அல்பங்களை உத்தரவாதத்துடன் (life Warranty) றோம் என்பதை எமது வாடிகையாளர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியன்
havan Pho 167, Navalar Road, Jaffna / .
Tel: O21-222 1093, Emai
ർre?രe ീ
மொத்த கொள்வனவுக்கு வாகன வசதி உ
இ.ச.பே.நாகரத்தி
52.54, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். TP: O
 
 
 
 
 
 
 
 
 

LIT 856 of Glor
வரும் தொழில்
நவீன இயந்திர ன் உள்நாட்டில் கிறோம்.
ான இருபக்கமும் த்தால் அழியாத, முழுக்க கணினி செய்து கொடுக்கி 3)L85GDITb.
to oேlor Lab
362, Kasthuriyar Road, Jaffna : thavamphotoG)gmail.Com
submaalub âồaosojoulungsa
பெற்றுக்கொள்ளலாம்.
னம் சக நிறுவனம்
21 222 3O96, O21 222 7282, O21 221 7277
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 3
i v ří 55 நூலகம்
u or . , "o tro* * r.

Page 7
முதன்முறையாக
என்கின்ற உறு
திசைகாட்டி
செல்வம் கொழிக்கு
சுவிஸ், பிர ான்ஸ், நோர்
2 řLIL 26 நாடுகளிற்
திசைகாட்டி (பிறை 175, பருத்தித்துறை வீதி, ஆனை O21 221 9 O16, O21 5 WWW.thisai Visa.
4 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014
 
 
 
 
 

oo% விசா வெற்றி
வே, இத்தாலி, ஜெர்மனி *கு செங்கென் விசா
மாதம். விரைந்து வாரீர்
ப்பந்தி, யாழ்ப்பானம். N) \
68 9 O9 O
C Onn

Page 8
கவிதை என்றால் என்ன? நம்மைச் சூழ எழும் படைப்புத் தொடர்பான கேள்விகளில் அதிக விருப்புச் சுட்டிகளுடன் காணப்படும் கேள்வியிது. பொதுவாகவே நாம், ‘என்ன?’ என்பதற்கான விளக்கங்களை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கே பெரிதும் விருப்பப்படுகிறோம். அதற்கே பழக்கப்பட்டுமிருக்கிறோம். அந்த வகையிலேயே அனைத்துப் பொருளையும் அதன் கூறப்பட்ட பொருள் விளக்கங்களுடனேயே அணுக முற்படுகிறோம். அதனை “எமது பொருளாய்’/நாமுணரும்
பொருளாய்ப் பார்ப்பதற்கு முனைவதில்லை. எமது புலன்களின் உணருகைக்காய்க் காத்திருக்கும் பொருளை பொதுவெளிக் கருத்துருவங்களால் பார்க்கிறோம்/ தொடுகிறோம்/ சுவைக்கிறோம்/ மணக்கிறோம்/ கேட்கிறோம். எம்மைச் சூழ நிறைந்திருக்கும் பொதுக்கருத்துரு வமும் அதன் மீளுற்பத்தியுமே இதற்கான வாசல்களைத்
திறந்து விடுகிறது.
பொதுக்கருத்துருவம் ஒருவனுடைய தன்னிலையை மாற்றியமைத்துப் பெருந்தன்னி லைக்குள் உள்ளிழுத்து விடுவதாக இருந்தாலும் அவன் தனக்கான தன்னிலையை ஒரு பொழுதும் பூச்சியமாக்கமாட்டான். அதாவது அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்ற போது அவன் திரும்புகிறான். இங்கு அவன் தனது தன்னிலையைப் புரிந்து கொண்டுள்ளான். இங்கு தன்னிலை என்பதுவும் கருத்துருவத்தால் உருவாக்கப்பட்டது. இந்த உணர்தல் கருத்துருவத்தின் செயற்பாடு. அது அவனுக்குப் பிரக்ஞையைத் தருகிறது. மனிதன் இயற்கையாகவே கருத்துருவ மிருகமாய் இருப்பவன் என்கிறார் அல்துரஸர்.
தன்னைப் மைப்படுத்தத் தெர் தனக்கு முன் வருகி ஏன் பிரச்சினைக்கு கேள்வி எழுகிறது.
கருத்துருவ புறவயம், அகவயம் நிலைகளில் பார்க்க இவ்விருநிலைகளில் மனிதனின் இயங்கு அடையாளப்படுத் குறிப்பாக புறமனித மனிதனாகின்ற இய நாம் குறிப்பிட்டுக் புறவயம் என்பது அ உலகோடு தொடர் அறிவியலில் தோய் இங்கு அவன் கருத் வெளியில் நின்று உ
செயல்நிலையைப்
புறநிலையும் அகநி
சுயத்தைக் கட்டை
இவ்வாறான செய சமூகத்தின் புறநிை அதிக செல்வாக்சை உருவாக்கிவிடுகிறது போதே தனது சமூ குடும்பத்தின், இன வர்க்கத்தின், அரசி பாலினத்தின் கருத் அமிழ்ந்து விடுகிறா சமூகத்தால் உருவா பெருந்தன்னிலைக தன்னிலைகளைத் உள்வாங்கி விடுகின் கருத்துருவ அடிபை
ஒரு படை
 
 
 
 
 

பொருண் ந்த ஒருவன், ன்ற படைப்புடன் ளாகிறான் என்ற
ம் ஒருவனை
என்ற இரு வைக்கிறது. பிருந்தும்
நிலையினை த முடியும். தன் அக பக்கத்தினை இங்கு கூற முடியம். அவனைச் சூழ்ந்த புற்றது: ந்தது. எனவே துருவத்தின் உள்நுழையும்
பெறுகிறான். லையும் அவனது மக்கிறது.
லக் கருத்துவத்தின்
அவனுக்குள் 1. அவன் பிறக்கும் கத்தின் அல்லது த்தின், சாதியின், யலின், துருவத்துள் ன். இங்கு க்கப்பட்ட ள், சிறு சிறு தமக்குள்ளே ாறன. இதனை Eதல் எனலாம்.
ப்புக்கும்
கருத்துருவத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள உறவு சிக்கலானது. உண்மையில் ஒரு இயல்பான படைப்பென்பது வெறுமனே சமூகவியலோ, பொருளாதாரமோ அல்லது தத்துவங்களோ பொதிந்திருக்கும் எண்ணக்குவியலல்ல. ஒரு படைப்புக்குள் இவையும் அடர்ந்திருக்கும். ஆயினும் படைப்பு என்பது வேறுபட்ட ஒன்றே. பியர் LDITGgFffi (Pierre Macherey) g5657g)|GOLulu Theory of Literary production எனும் நூலில், ஒரு கலைப்படைப்பு எமக்கு யதார்த்தம் அல்லது உண்மை போன்ற ஒன்றைத் தருகிறது. அதனை நாம் காணும்படி
அல்லது உணரும்படி செய்கிறது. இங்கு நாம் அறிய வில்லை. (அறிவூட்டும் செயல்நிலை இங்கில்லை) வெறுமனே புலன்களால் மட்டும் தீண்டுகி றோம். ஒரு கலைபபடைபபு இவ்வாறு காணும்படி/உணரும்படி செய்கின்ற ஒன்றைக் கருத்துருவம் எனலாம். இது ஒரு காலத்தின்/குழுவின் பிரதிபலிப்பாய் அமையும். குறித்த கால/குழு சார் கருத்துருவத்திலிருந்து உருப்பெறும் படைப்பு; தன்னைத்
தூரப்படுத்திக் கொள்வதன் மூலம் யதார்த்தம் போன்ற ஒன்றாகிறது. அதாவது யதார்த்தத்திலிருந்தும் கருத்துருவத்திலிருந்தும் விலகி அது இன்னொன்றாகிறது.
- இத்தகைய ஒரு படைப்பின் இயல்புநிலையில் நின்றே நாம் கவிதையையும் பார்க்க முடியும். கவிதையினை உணர்வு/ அனுபவத்தின் விளைவு எனச் சொல்வார்கள். மொழியின் ரஸவாதமாகக் கவிதையைக் காண
ösGO)6u(pehlo O GJŮLSJ6) - gp6oT 2014 5

Page 9
முடியும் என பிரம்மராஜன் எண்ணுகிறார். வார்த்தைகளால் வார்த்தைகளைக் களைதல் என்ற கருத்தும் உண்டு.
எவ்வாறெனினும் கவிதையும் மொழியும் கொண்டுள்ள உறவு அதீதமானது.
கவிதை மொழி எப்போதும் புற உலகின் கருத்துருவங்களால் நிறைந்தது. சிறு சிறு மொழிப் பிரயோகங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த கலாசார இடைவெளிக்கான நிரப்பிகளாய் அமைந்து விடுகின்றன.
ஒரு கவிதைக்குள் இருக்கக் கூடியது எப்போதும் சொற்களால் கீறப்பட்ட ஒரு வரைபடமே.
துறைகளான சமூக தத்துவம், வரலாறு கோட்பாட்டு விட தனித்துவமான டெ அடைந்துள்ளது.
கவிதை க பேசும் என்பதை ந கிறோம்.
கவிதையின் (Existance of poetry புரிந்து கொள்ளவி பல காரணங்கள் உ ‘இது தான் கவிதை ஒரு சட்டகத்தைக் வைத்திருக்கிறோம் முனையும் குறித்த அச்சட்டகத்துள் ெ முனைகிறோம். வட
கவிதை என்பது வெறுமனே ஒரு கதை நினைவூபடுவதற்கோ, தகவல்களை, சொல்வதற்கோ பயன்படும் நிலையிலி துறைகளான சமூகவியல், அரசியல், !
விடயங்கள் போல ஒரு தனித்துவ
ஒரு கவிஞன் தன் மன நிகழ்வை வெளிப்படுத்த மொழியைப் பயன்படுத்துகிறான். ஆயினும் மொழியால் நிரம்பியவையெல்லாம் கவிதைகளல்ல. உருவ, அருவ அமைப்புகளாலானதே கவிதை. மொழியாலான அந்த உருவ அமைப்பையும் அருவ அமைப்பையும் வாசகன் தன் வாசிப்பில் கண்டு கொள்கிறான்.
கவிதை என்பது வெறுமனே ஒரு கதையைச் சொல்வதற்கோ ஒரு சம்பவத்தை நினைவூட்டு வதற்கோ, தகவல்களை, அறிவுரைகளை, ஒழுக்கக் கூறுகளைச் சொல்வதற்கோ பயன்படும் நிலையிலிருந்து இன்று மாறியுள்ளது. அறிவியல்
6 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014
கொண்ட / நெகிழ் சட்டகங்களை நாட விரும்புவதுமில்லை எதிர்பார்ப்பதுமில்6
ஒரு கவிை எழுதுகணமும் வா! எப்போதும் வேறா முடியும். இதனால் தன்னுடைய கவிை உருவாக்குகின்ற த என்பதுவும், ஒரு வ கவிதையை வாசிக் பிரக்ஞை என்பதுவ இயக்க நிலையைக் நிலை கவிதையின் அடையாளப்படுத் சூழலை ஏற்படுத்து கவிதையை ஒரு ெ என சொல்ல முடிய

வியல், அரசியல், போன்ற பங்கள் போல ஒரு
றுதியை
விதையைத்தான் Tம் உணரு
ண் இருத்தலை ) ஒரு வாசகன் ஸ்லை என்பதற்குப் ண்டு. நாங்கள் என மனதில் கொழுவி
வாசிக்க கவிதையை பாருத்திப் பார்க்க டவ வேறுபாடு
அந்த வகையில் கவிதை எனும் “பொருளை அடையாளப்படுத்தும் பண்புகள் கவிஞன்/வாசகனின் கைகளில் இருக்கச் சாத்தியமற்றதாகிறது. அது கவிஞனின்/வாசகனின் நோக்கங்களிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் சுதந்திரமானதாகவே அமைய முடியும்.
ஒரு வாசகன் ஒரு கவிதையை வாசிக்கும் போது, அது புற உலகிற்கான உசாத்துணையாக (Reference) உருப்பெறுகிறது. அல்லது புற உலக உசாத்துணை மூலம் கவிதையை வாசிக்கிறான். கவிதை ஒரு போதும் வெற்றிடத்திலிருந்து தோற்றம் பெற முடியாது என்பதை நாம் உணருகிறோம்.
யைச் சொல்வதற்கோ ஒரு சம்பவத்தை அறிவுரைகளை, ஒழுக்கக்கறுகளைச் ருந்து இன்று மாறியுள்ளது. அறிவியல் தத்துவம், வரலாறு போன்ற கோட்பாட்டு
Dான பெறுதியை அடைந்துள்ளது.
வுறும் b
و(
Ꮱ)Ꮆu).
தயின் சிப்பு கணமும் னதாகவே இருக்க கவிஞன்
560)u ளம் - கணம் ாசகன் அக் கின்ற வாசிப்பு - பும் தன்வயமற்ற
கொண்டது. இந் புறவயமான தலுக்கான கிறது. எனவே LufT (156řT (Material) |ம் என்கிறார்கள்.
ஒரு கவிதையுடன் ஒருவன் தொடர்பு கொள்கின்ற போது மூன்று வகையான வெளிகளை (Spaces) அடையாளங் கண்டு கொள்ள முடியும். 1. Felip, GMG Grif? (Social Space) 2. 3560flipGofa, Ga). Gif (Private inner
Space) 3. GJITGi) Gau6f) (Verbal Space)
ஒரு கவிஞனின் சொல் வெளிக்குள் நுழையும் வாசகன் தனது புலனறிவு (Perception) மூலம் கவிஞனின் சொல் வெளிக்கான வடிவங்களை இனங்காண முனைய வேண்டும். சொல் வெளியின் GILGI15/56it (Patterns of verbal Space) எப்போதும் ஒத்தமாதிரிகளைக் கொண்டமைந்தவைகளல்ல.

Page 10
கவிதை ஒரு தனிமனிதனுடைய மனவெழுச்சியாக 8  ః eleoluste
அதே நேரத்தில் ஒரு கவிதையை அணுக முனையும் ஒரு வாசகன்; கவிஞனின் மனோ நிலையைப் பின் தொடரும் நிலையை அடைய முனையலாம். கவிதை எழுதுதல் எனும் செயல்நிலை எப்போதும் ஒரு வித மன அழுத்தத்துடனான இயக்கத்தைக் கொண்டது. ஒரு மனதின் அதீத பிளவுகளையும், எதிரிடைகளையும் இங்கு காணலாம். இச் செயல்நிலையில் வெவ்வேறு நிலைகளிலமைந்த பிரக்ஞைகளில் கவிஞன் சஞ்சரிப்பதைக் கண்டு கொள்ள முடியும்.
கவிதைகளை அணுகுகின்ற போது கவிதையின் மொழியை சந்திக்க நேரிடும். இன்றைய சூழலில் இணைய, சமூக வலைத்தளங்களின் பெரும் பகுதி, தொலைக்காட்சி, வானொலி போன்றன மொழியை, மொழி பற்றிய புரிதலை அல்லது மொழியை அணுகும் அனுபவத்தை மிகவும் மேலோட்டமானதும் உடைவுபட்டதுமான வெளிக்குள் தள்ளியிருக்கின்றன. தற்போதுள்ள பெருவழக்கு மொழி பலமிழந்துள்ளது. அதன் வீச்சு பலவீனப்பட்டுள்ளது. இதனால் கவிஞன் தனக்கான பிரத்தியேகச் சொல்லை தேர்ந்தெடுக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறான்.
ஜேனட் வின்டர்சன் (Jeanette Wintersan) 565790/60)L ILI Art objects நூலில் குறிப்பிடும் ஒரு விடயம் கவனத்துக்குரியது. கவிதை மொழியும், கவிதையின் புனைவும் செயற்கையானவை அல்ல. மிக உச்சமான மொழி அது. நாம் அனைவரும் பயன்படுத்தும் மொழியாக இருந்த போதும் நாளாந்த மொழியின்
கொள்ளளவையும் அதன் உச்ச
ளப்படுத்துதல்
நிலை நுண்வெளிப்ட
கடந்தே கவிதையின்
நிற்கிறது.
உண்மையி
மொழி என்பது அத புனைவுகளால் செறி
நாம் கவி.ை இலகுவாக எதிர்கொ அதனை எம் நாளார் கொள்ளலவிலேயே முனைகிறோம். அத நுண்வெளிகளை காணத்தவறுகிறோட உண்மையில் கவிதை அறிவுத் துறைகளில் என்பதை ஏற்கத் அல்லது பிரக்ஞைய வெறும் பொழுது ே வடிவமாக அணுகும் மனப்பதிவு அநேகை ஆக்கிரமித்துள்ளது.
ஒரு கவிதை முடிவது அதன் அழ அனுபவத்தைக் கண் உள்ளது. இந்த அழகி என்பது இரண்டு நில் கொண்டது என ஜே விமர்சகர் ஹென்ஸ் கூறுகிறார்.
இந்தக் கண் இன்னொன்றும் குறி கூறக்கூடியது. கவிை கலைப்படைப்பின் ( gd (tb56)IITg56i) (proceSS) செயல்முறையைக் ெ இறுகிய கல்லாய்க் க போதும் மற்றவர்கை காத்திருக்காது. கால அழகியலை புதுப்பிக் இன்னொரு வகையி எல்லாக் காலங்களிலு எல்லா வாசிப்புக்களி தனக்கான அழகியன
ஒரு கவிதைக்கும் வாசிப்பவனுக்கும் இடையிலான தூர
கொண்டிருக்கும் உண்மையின் நலனுக்கும் அதa
 
 
 

oLossD GBurTgi வேறு தனிநபர்கள் அதற்குள் தங்களை
பிரச்சினையாகிறது.
பாட்டையும் ா குரல்
ல் கவிதையின்
T
ந்ெததே.
தயை மிகவும் ாள்கிறோம். ந்த மொழிக் சந்திக்க
ன்
D.
தயும் எமது
ஒன்று
தவறுகிறோம்
ற்றிக்கிறோம்.
பாக்கு
)
g
1யை இரசிக்க கியல் ாடடைதலிலே கியல் அனுபவம் லைகளைக்
ர்மனிய
றொபேட் ஜாஸ்
ாடடைதலில் ப்பிட்டுக்
த இயல்பில் ஒர்
காண்டது. விதை ஒரு )ள முட்டக் ம் படைப்பின் க்கவல்லது. ல் ஒரு கவிதை ம் அல்லது லும்
லப்
பொசிந்து கொண்டிருக்க மாட்டாதது. படைப்புக்கான எந்தவித நிரந்தர குணநலனும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். படைப்பின் செயலும் மதிப்புகளும் காலந்தோறும் மாறிவருகிறது.
கவிதை ஒரு தனிமனிதனுடைய மனவெழுச்சியாக அமைகிற போது வேறு தனிநபர்கள் அதற்குள் தங்களை ; அடையாளப்படுத்துதல் பிரச்சினையாகிறது. ஆனால் வேறொன்றின் பிரதிகளாய், நாளாந்த மொழிக் கொள்ளளவுக்குள் அகப்பட்ட, நுண்புலன்களுக்கான இடமற்ற கவிதைகளில் பிரச்சினைகள் தோன்றுவதில்லை. அது தனிமனிதனுடைய அகவெழுச்சியின் மொழியாக அமைவதுமில்லை. இங்கு வேறுபட்ட சுயங்கள் ஒரு பிரதியில் சந்திக்கின்றன. பிரதியை முழுமையாகக் கிரகித்தல் சாத்தியமில்லாததாகிறது. ஒருவருடைய அனுபவத்தை மற்றவர் முற்று முழுதாக உணர்தல் என்பது நிகழத்தக்கதா?
ஆகவே ஒரு கவிதைக்கும் வாசிப்பவனுக்கும் இடையிலான தூரம் என்பது புறவய அகவய வேறுபாடுகளிலும் கவிதை கொண்டிருக்கும் உண்மையின் நலனுக்கும் அதனை விளக்கங் கொள்வதிலும் தங்கியிருக்கிறது. இந்தத் தூரமே கவிதையை விளங்கப்படுத்தும் மரவைத் தக்க வைத்திருக்கிறது.
பொழிப்புரை வழங்கப்பட்ட வாசிப்பு மாதிரிகளாக்கப்பட்ட கவிதைகளே கவிதைகள் என்கிற புரிதலைப் பரப்புரை செய்கின்றன.
சரி கவிதை என்றால் என்ன?
ம் என்பது புறவய அகவய வேறுபாடுகளிலும் கவிதை
னை விளக்கங் கொள்வதிலும் தங்கியிருக்கிறது.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 7
பாதுசன நூலகம்
.ப்டrம் #2 ܕ ܕf ܬ݁ ܕ݁ܳ}

Page 11
பக்மன் ஹோபாடி பிறந்தார். மாணவனாக பின்னர் தொழில் முறை இணைந்து கொண்டு சி
ஆரம்பத்தில் குறுந்த டெஹ்ரான் சென்று பல்கலைக்கழகமொன்றில் திை இடைநடுவில் கைவிட்டுவிட்டார். 1995க்கும் 1990க் நெறியாள்கை செய்தார். இவற்றுட் பல தேசிய மற்று
1999-95 b 3660Tigeio Life in the fog ரீதியாக நன்கு அறியப்பட்ட பிரபல ஈரானியத் திரை என்ற திரைப்படத்திற்கு முதலாவது உதவியாளர்ாகவு பக்மன் ஹோபாடி பொதுவாக தனது திரைப்பை உரையாடியுள்ளார். s
கேள்வி: உங்களது முதலாவது திரைப்படமான A time for drunken horses என்ற திரைப்படம் ஏழைச்சிறுவர்களது அவலங்கள் பற்றியது. இரண்டாவது திரைப்படமான Songs ofmy mother சற்று வேறுபட்டுப் பெரியோர்களது உலகைச் சித்திரிக்கின்றது. உங்களது புதிய திரைப்படமான Turtles can fly என்ற திரைப்படத்தில் மீண்டும் சிறுவர்களின் உலகுக்கே வருகிறீர்கள். இத் தெரிவுக்கு விசேடமான காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா? பதில்: திட்டமிட்டு இவற்றை நான் செய்யவில்லை. உண்மையில் எனது கடந்த காலத்தைப் பற்றி எடுப்பதற்கே நான் எண்ணியிருந்தேன். ஆனால் யுத்தத்திற்குப் பின் (அமெரிக்க - ஈராக்கிய) இரு வாரங்கள் கழித்துப் பாக்தாத் சென்ற போது நான் அங்கு கண்ட யுத்த கோரங்கள், மனித அவலங்கள் என்னை உலுக்கின. குறிப்பாகச் சிறுவர்களின் நிலைமை என்னைப் பாதித்தது. சகல யுத்தங்களிலும் எப்போதும் சிறுவர்களே என்றும் பாதிக்கப்படுகின்றனர். முதலில் இலக்காவது அவர்களே. ஆனால் இதைப் பற்றி எவருக்கும் அக்கறையோ கவலையோ இல்லை. குறிப்பாக, குழந்தையொன்று முடமாக்கப்பட்ட சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. இதுவே யுத்த எதிர்ப்புத் திரைப்படம் ஒன்றை எடுக்க என்னைத் தூண்டியது.
8 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014
 
 
 
 

ᎼᏪ9s©ᎧbᏣ . ലേകൃഞ്ചങ്ങങ്കര, Juğ9. (NGO) UQQJ9-ġ9GODGO) ள் ஏற்படுத்ஆஇன்றன.”
தான் திரைப்பட நெறியாளர் பக்மன் வேறாபாடி த்திலிருந்து மொழியாக்கம் ஜிரிகேதாரநாதன்
மொழி பெயர்ப்பாளர் குறிப்பு:
1969 ஆம் ஆண்டு ஈரானிய குர்திஸ்தானில் பானக் என்னுமிடத்தில் இருக்கும் காலத்தில் ரேடியோ நிலையமொன்றில் வேலை செய்தார். யற்ற திரைப்பட நெறியாளர்கள் சிலரை உள்ளடக்கிய அமைப்பு ஒன்றில் றிது காலம் பணியாற்றினார். ৪
திரைப்படங்கள் சிலவற்றை அவர்களது உதவியுடன் எடுத்தார். பின்னர் ரப்பட தொழில் நுணுக்கங்கள் பற்றிப் பயின்றார். ஆனால் அதனையும் கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பத்து குறுந்திரைப்படங்கள் வரை இவர் |ம் சர்வதேச விருதுகளைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. என்ற இவரது திரைப்படத்திற்கு விசேட ஜூரர் விருது கிடைத்தது. சர்வதேச பட நெறியாளர் அப்பாஸ் கியரொஸ்மியின் The wind wit carry us ம் இவர் பணியாற்றினார். நெறியாளரும், திரைக்கதை எழுத்தாளருமான
ன்றவை குறித்து ܀" • ܀""ܗܝ ܀ܪܐܗܝ
டப்புகள், நோக்கங்கள் மற்றும் அனுபவங்கள்
கேள்வி: உங்களது திரைப்படத்தில் கண்ணிவெடிகளை அகற்றி விற்பதில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். குர்திஸ் தான் எவ்வளவு காலமாக கண்ணிவெடிகளின் பிராந்தி யமாக இருந்து வருகிறது. ஏன் இவ்வாறான நிலை? அக் கண்ணிவெடிகளை யார் அங்கு கொண்டு வந்தது? பதில்: எவ்வளவு காலம் எனத் தெரியாது. எனது தாயார், பாட்டி ஆகியோர் அவை பற்றிப் பல கதைகள் கூறியி ருந்தனர். கண்ணி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தி லிருந்தே குர்திஸ்தான் ஒரு கண்ணிவெடிகள் விதைப்புப் பிராந்தியமாக இருந்து வரு கின்றது என்று நினைக்கிறேன். இன்றும் இந்த
g|GJ GULD தொடர்கிறது.
அமெரிக்க ஐரோப்பிய ஆயுத உற்பத் தியாளர்கள் அவற்றைச் சர் வாதிகாரிகளாகிய

Page 12
சதாம் போன்றோருக்கு விற்றதன் விளைவே அவை. இவை அகற்றப்பட்ட பூமியாக குர்திஸ்தான் மாற நீண்ட காலம் எடுக்குமென நான் நினைக்கிறேன். ஒவ்வொரு | நாளும் ஒவ்வொரு மணித்தியாலமும் அப்பாவி ஏழைகள் இவற்றுக்கு இலக்காகி கொல்லப்பட்டோ முடமாக்கப் பட்டோ வருகிறார்கள். கேள்வி: திரைப்படத்தில் ஊடகங்கள் மூலமாக அச்சு றுத்தும் யுத்தம் பற்றிய செய்திகளை மக்கள் அறிகிறார்கள். அவற்றின் மொழியும் படிமங்களும் அவர்களுக்கும் புரிவதில்லை. அவர்களின் நம்பிக்கைகளுக்கு முரணான வையாக மறுதலிப்பானவையாகவே அவை உள்ளன. ஊனமுற்ற பையனே அவர்களுக்குச் சரியான செய்திகளை
உரியவாறு தருகிறான் அல்லவா? பதில் : தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவை தங்கள் நலன்களையே முன்னிறுத்தும் உள்நோக்கம் கொண்ட பிரிவினருக்கே சொந்தமானவை. உலகிலுள்ள மக்களைத் தாம் நினைத்தபடி ஆட்டிப்படைக்கலாம் என்ற எண்ணம் கொண்டவை இவை. அவர்களது போட்டா போட்டிகளையும், குரோதங்களையும் எம்மீது திணிக்கின்றன. அவர்களது ஒரே குறிக்கோள் தமது
வளங்களைப் பெருக்குவதே. இன்றைய நிலையைப் பார்க்கும் போது எனக்குத் தகவல் ஊடகங்கள் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விடுகிறது. அச்சு ஊடகங்கள்
கூட அதற்கு விதிவிலக்கல்ல என்றே நான் கருதுகிறேன். கேள்வி: குணே போன்றோரதும் மற்றும் இப் பிராந்தியத் தைச் சேர்ந்த ஏனையோரதும் திரைப்படைப்புக்களையும் அவதானத்திற் கொண்டு குர்திஸ் சினிமா தனக்கான தனித்துவ அடையாளம் ஒன்றை எய்திவிட்டதாகக் கருதமுடியுமா? பதில்: அதற்கான நிலையினை இன்னும் எய்திவிடவில்லை என்றே நான் கருதுகின்றேன். ஒவ்வொரு குர்திஸ்தான் நகரிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளும், ஆய்வு கூடங்கள் போன்றனவும் இருக்கும் பட்சத்தில் குர்திஸ் சினிமாவின் தனித்த அடையாளம் குறித்து எம்மால் பேசமுடியும் என நான் நினைக்கின்றேன். ஆனால் இன்றைய நிலையில் திரையரங்குகளே இல்லையென்றே நான்
கூறவேண்டியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஏதேனும் திரையரங்குகளை நாம் காண நேர்ந்தாலும் அங்கு மக்களைக் காண முடியாது. ஏனெனில் மக்களிடம் கையில் பணம் இல்லை. எல்லாவற்றையும் அவர்கள் சாப்பாட்டுக்கும் ஆயுதங்களுக்கும் தீர்த்து விட்டனர். கேள்வி: நீங்கள் அப்பாஸ் கியரொஸ்மியின் முதல் துணையாளர். எனினும் அவரது ஏனைய துணையாளர் களைப் போன்று அவரது பாணியினை நீங்கள் பின்பற்று வதில்லை. பதில் : எனது திரைப்படங்களை எனது முறையிலேயே, எனது பாணியிலேயே நான் அணுகுகின்றேன். இதற்கான படைப்பு உந்துதலையும், உத்வேகத்தையும் எனது நாட்டின் கலாசாரத்திலிருந்தே நான் பெற்றுக் கொள்கின்றேன். துன்பங்களும், வேதனைகளும்

க6ை
படைப்புக்கான பரவசத்தினை என்னுள் ஏற்படுத்துகின்றன. எங்களது சொந்த மக்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு அருகில் மிக நெருக்கமாக செல்வது எனக்கு அசாதாரணமான பலத்தினையும் தைரியத்தையும் கொடுக்கின்றது.
கேள்வி: சர்வதேச கவனிப்புப் பெற்று பாராட்டுதல்களுக்கு உள்ளான ஈரானியத் திரைப்படங்களில் நெறியாளர்கள் தொழில் தேர்ச்சியற்ற அதாவது முன்பின் திரைப்படங் களில் நடித்து எத்தகைய அனுபவத்தையும் பெற்றிராத நடிகர்களையே பயன்படுத்துகின்றனர். நீங்களும் இத னையே பின்பற்றுவது போல் தெரிகின்றது. காரணம் என்ன? பதில்: குர்திஸ்தானில் நடிகர்கள் கிடையாது. ஏனெனில் திரைப்படம் அங்கு ஒரு புதிய கலை வடிவம். நானும் தொழில் தேர்ச்சியற்றோரையே பயன்படுத்திக் கொண்டாலும் அவர்களைத் தொழில்சார் நடிகர்களைப் போன்று கருதியே நெறிப்படுத்துகின்றேன். கதாபாத்தி ரங்களுக்கு இயைந்த தன்மையை வெளிக்கொணர அவர்களுடன் இணைந்து பாடுபடுகின்றேன். கேள்வி: Turtles can fly திரைப்ப டத்தில் கதை இருவருடைய (இரு பாத்திரங் களது ) பார்வை யில் சொல்லப் படுகிறது. ஒன் று தற்கொலை மனப்பான்மை  ெக ா ண் ட சிறுமி, மற்றது 'காக் சற்ற
லைட்' (Kak Satellite) இத்தகைய தன்மை ஏற்கெனவே திரைக்கதையில் இருந்ததா? அல்லது திரைத் தொகுப்பின் (Editing) போது இந்த எண்ணம் உதித்ததா? பதில்: திரைக்கதையில் ஏற்கெனவே இருந்த ஒன்று தான் இது .கதையின் பல பகுதிகளை உள்ளிழுத்து இணைக்கக் கூடியதான முனைப்புக் கொண்ட வலுமிக்க மையப்பாத்திரமாக 'காக் சற்றலைட்' உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் கதைப்போக்கின் சீரான ஓட்டம் தடைப்படாது பேணப்படும் அதே வேளை கடந்த காலப் பாதிப்புக் கொண்ட சிறுமி மற்றும் எதிர்காலம் பற்றிக் கூறக்கூடிய அவளது சகோதரன் ஆகியோரது கதையும் அடுக்குகளில் இணையக் கூடியனவாக இருந்தது. இந்த வகையில் திரைப்படம் முடியும் தறுவாயில் எஞ்சுவது கசப்பே. கடந்த காலம் கசப்பு. நிகழ்காலம் கசப்பு. எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்க எங்களைத் தவிர வேறு இரட்சகர் எவரும் இல்லை. சர்வ வல்லமை படைத்த வெளிநாட்டவர்கள் ஒரு போதும் சொர்க்கத்தை எங்களுக்கு உருவாக்கித் தரப்போவதில்லை.
கலைமுகம் 0 ஏப்பிரல் - ஜூன் 2014 9

Page 13
தனக்கு நேரும் துயரை எண்ணி
தகிக்கிறது நிலம்
எத்தனை நெருப்புப் பிழம்புகளை இந்த நிலம் பார்த்திருக்கும் எத்தனை சுடுவார்த்தைகளை
இந்த நிலம் கேட்டிருக்கும்
நிலத்திற்காய் நடந்த யுத்தம் முடிந்தபின் எஞ்சியிருக்கிறது நிலம் அவமானங்களைச் சுமந்தபடி
நிலத்திற்காய் போரிட்டார்கள் ನೃ೨) நிலத்தைத் தவிரவும்
யாவுமே இடம்பெயர்ந்தன
12 பல்லாயிரம் எறிகணைகளையும் (SN சொல்லொணா துயரங்களையும் நிலம் தாங்கியது
நிலத்திற்காய் சண்டையிட்டோர் தாங்கியதை விடவும்
பதுங்குகழி சவக்குழி பதுக்கிவைக்க குழியென நிலத்தை தோண்டித் தோண்டி நிலத்தை விடுத்து எல்லாவற்றையும் புதைத்தோம். புதைந்தோம்
சடலங்களைப் புதைக்க தோண்டிய நிலத்தை மீண்டும் தோண்டினார்கள் எலும்புக் கூடுகளை அகற்ற.
10 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 

கண்ணிவெடிகளையும் மிதிவெடிகளையும் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனையிடப்படுகிறது நிலம்
தன்
பூர்வீகக் குடிகளை கலைத்தவர் மீதோ புதுக்குடியிருப்பை நிறுவியோர் மீதோ நிலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை
யார் யாரோவெல்லாம் வந்து
தன்னை சொந்தம் கொண்டாடுவதை விரும்பாமலே சகித்துக்கொள்ளும் நிலம் பொறுமைக்குத் தன்னை உதாரணப்படுத்திய தமிழனின் பழமொழியை எண்ணி சிரிக்கிறது
நிலத்திற்கு இனவிருத்தி செய்ய தெரியாததால் கடல்கள் அவற்றை காவுகொள்கின்றன
இப்படியாக W தனக்கு நேரும்
துயரை எண்ணி
தகிக்கிறது நிலம்

Page 14
86Ở ghÎU6O)6OI IO6O.
இனி சூரியனை நான் மறைய விடமாட்டேன். பார்! நான் என் தோள்களை அகல விரித்துள்ளேன். முஷ்டிகளை மேலும் இறுக்கமாக்கி உள்ளேன் சரிந்த மலைச் சாரல்களில் ஊன்றிய கால்களுடன் நிற்கப் பழகி உள்ளேன்.
பயப்படாதே! நான் தொடுவானத்தை நோக்கிச் செல்கின்றேன். சூரியன் மலைகளிலிருந்து உருளத் தொடங்கும் வேளை நான் எனது தோள்களை நிமிர்த்துவேன் நீ சூரியன் அங்கே நிற்பதைக் காண்பாய்! நான் சூரியனை மறைய விடமாட்டேன்
நீ தேரில் ஏறிவிட்டாய் என்று நான் கேள்விப்பட்டேன் நான் உன்னைக் கீழே இறக்க விரும்புகிறேன்! நீயேதான் சுதந்திரத்தின் உருவம்; நீயேதான் வீரத்தின் உருவம்; நீயேதான் பூமியின் மகிழ்ச்சி! நீயேதான் நித்திய அன்பு
நீயேதான் என் நரம்புகளில் ஒடும் இரத்தம் நீயேதான் என் விழிப்புணர்வின் நீட்சி நான் உன்னைத் தேரிலிருந்து இறக்க விரும்புகிறேன்! தேரின் குதிரைகள் தீயைக் கக்கலாம்
ஹிந்தி மூலம் : சரேஸ்வர்
ஆங்கிலத்தில் : சந்த்ர பிரட தமிழில் கந்தையா
 

Du ofiLIOTI (8Leô!
ஆனால் சக்கரங்கள் இப்போது அசையா நான் எனது தோள்களை அகல விரித்துள்ளேன்.
யார் உன்னை நிறுத்த முடியும்! நான் பூமியை விரித்துள்ளேன் நான் உனக்கு சோளத்தின் பொற்கதிர்களால் ஆடை அணிவேன் நான் எனது மார்பை மூடாது வைத்துள்ளேன் நான் உனக்காக காதல் பாடல்களைப் பாடுவேன் நான் எனது கண்களை மேலும் அகலத் திறந்துள்ளேன் எனது கண்களில் எனது கனவுகள் போல உன்னைப் பறக்க விடுவேன்.
சூரியன் எங்கே போகமுடியும்? அது இங்கேதான் இருக்கவேண்டும். இங்கே / எங்கள் மூச்சுக்களில் / எங்கள் நரம்புகளில் நாம் விழித்திருக்கும் இரவுகளில்
சோர்வடையாதே! இனி சூரியனை மறைய விடமாட்டேன்!
அந்தி மாலைகள் சப்பாத்தின் ஆணிகள் போல் உன்னைக் குத்த மாட்டா! நான் எனது பயணத்தை நீடித்துள்ளேன்! நான் எனது தோள்களை அகலித்துள்ளேன்!
தயால் சக்ஸ்னா (1927-1983) ா பாண்டே றுநீகணேசன்
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 11

Page 15
“தன்னை ஏற்றுக் கொள்வது போல கடினமான
காரியம் ஒருவனுக்கு வேறொன்றுமில்லை. கள்ளங் கபடம் இல்லாதவர்கள் மட்டுமே அதை வெற்றிகரமாகச் செய்கிறார்கள். நேரான அர்த்தத்தில் வஞ்சகமற்றோர் எனக் கருதக்கூடிய மிகச் சிலரையே நான் இதுவரை சந்தித்திருக்கிறேன்’ மக்ஸ் ஃப்றிஷ்
‘மாய் ரீ’ அல்லது தேநீர் வியாபாரி என்று தான் அவன் பிரபலமாயிருந்தான். ஜொங்கோ வீதியில் ஊர்த் தலைவரின் அவைகூடும் கொட்டகையிலிருந்து கல்லெறி யக் கூடிய தூரத்தில், ஊர் வம்பு பேசும் ‘மன்ஸா பி.பி.ஸி’யின் மளிகைக் கடைக்குப் பக்கத்தில், அவன்
s
கடை இருந்தது. முட்டைப் பொரியல், பட்டர்ப்பாண் ஆகியவற்றுடன், பிளெய்ன்ரீ, ஜப்பானிய பச்சைத் தேநீர், மைலோ, போர்ண்விற்றா, கொக்கோப் பானம், திடீர் கோப்பி ஆகிய பானங்களை அவன் விற்று வந்தான். ஆனால் ஜொங்கோ தெருவில் எல்லாப் பானங்களும் ‘ரீ என்றே குறிப்பிடப்பட்டன. "மல்லம் சைல், ஒரு மக் கொக்கோரீ போடு” என்றோ "சைல், எனக்கு ஒரு கப் கோப்பிரீர்” என்றோ மக்கள் கேட்பது வழமை.
&nஃ ೩®ಷ್ಠಿ
ش66A 3ை-ல்
தேநீர்க்கடைக்கு யன்னல் இல்லை. எளிதில் கறையான் பிடிக்கக்கூடிய உவாவா மரத்தால் ஆன அடைப்பு அது. சீமெந்து போடப்படாத நிலம், வாடிக்கையாளன் ஒருவன் உள்ளே நுழையும் போதெல்லாம் புழுதி கிளம்பும். தன் பண்டங்களில் புழுதி படியாதபடி, சைல் எல்லாவற்றையும் பிளாஸ்ரிக் பைகளில் இட்டு வைத்திருந்தான். கடையின் பெரும் பகுதியை ஒரு பாரிய பெட்டி பிடித்திருந்தது. அதன் மேற்புறம் விநியோக மேசையாகப் பயன்பட்டது. பெட்டியின் பின்னே சைலின் பயன்பாட்டுக்கென ஓர் உயர்ந்த கதிரை, அதில் அவன் இருப்பதில்லை. எந்நேரமும் நின்று கொண்டேயிருப்பான். அதைவிட மூன்று வாங்குகள், வாடிக்கையாளர்களுக்கு, ஆனால்
வம்பளப்பவர்கள் முழு நேரமும் அவற்றை ஆக்கிரமித்துக் கொள்வர்.
கிழவன் சைல்தன்னை மின்சாரம்தாக்கும் என்ற அர்த்தமில்லாத பயத்துக்குள்ளாகியிருந்தான். எனவே ஜொங்கோ வீதி வழக்கப்படி தன் கடைக்கு களவாக அவன் மின்சாரம் எடுக்கவில்லை. அவன் மூன்று மண்ணெண்ணெ
ய் லாந்தர்களை சீலிங்கிலிருந்து
12 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொங்கவிட்டிருந்தான். சைல் கடையில் ஒரு சின் வானொலி வைத்திருந்தான். வாடிக்கையாளர் இல்லா வேளைகளில் ஜி.பி.ஸி 2 இல் ஆங்கில நிகழ்ச்சிகை அமைதியாக நிஷ்டையில் இருந்து கேட்பான் - ஏதே சொல்வதையெல்லாம் விளங்கிக் கொள்பவன் போல
மல்லம் சைல் வடக்கத்தி சிஸால மொழி மட்டுே பேசுவான். ஜொங்கோ தெருவாசிகளின் மொழியாகி ஹெளஸாவை, தன் தொழிலுக்குத் தேவையான அளவு தட்டுத் தடுமாறியே பேசுவான்.
தெருவாசிகளில் பெரும்பான்மையோ
தேநீர்க் கடையில் காலை வேளை மந்தமாயிருக்கும் ஆனால் மாலை வேளை வந்தாலோ ‘லேற்றெஸ் நியூஸ் கதைக்கும் இளைஞர் யுவதிகளால் கடை கை
கட்டிவிடும். வியாபாரம் மும்முரமாக நடக்கும். இர எட்டு மணியிலிருந்து நள்ளிரவு வரை நிலவு இரைச்சலில் ஒருவர் பேசுவது அவருக்கே கேட்காது தமது அன்புக்குரியவர்களைச் சந்திக்கவென்றே அங்
போகிறவர்களும் உண்டு. ஆனால் எப்பொழுதாவது
உரையாடலில் கலந்து கொள்வதற்காக மல்லம் சை
ஆங்கில மூலம்: முவுறம்மது நளிவுற அலி
தமிழாக்கம் சோ.பத்மநாதன்
வாயைத்திறந்தால் “இதைப் பற்றி உனக்கு என் தெரியும்? வாயை மூடு சைல்!” என அவர்கள் அவை அடக்கி விடுவார்கள். இதனால் சைல் தன் சொற்கை
விழுங்கக் கற்றுக் கொண்டான். வாடிக்கையாளரோடு கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடும் போது மட்டுே பேசுவான். ஆனால் அவனுக்கு காது கூர்மை. கடையி பேசப்படும் அல்லது கிசுகிசுக்கப்படும் எதுவும் அவன் செவிக்குத் தப்புவதில்லை. 8
மல்லம் சைல் தனிக்கட்டை. தெருவிலே நகரத்திலோ அவனுக்கு உறவென்று சொல்ல யா மில்லை. வடக்கு எல்லையிலுள்ள நன்புகு நகரத்தி பிறந்தவன் அவன். பதினாறு வயதில் வீட்டை விட்டு
புறப்பட்ட அவன், பசுமாடு ஏற்றும் ட்றக்கில் 950 மை பயணம் செய்து, கானாவின் பொன் கொழிக்கும் தலைநகராகிய அஷாந்திக்கு வந்தான், வேலை தேடி.
நகரத்துக்கு வந்து சேர்ந்த ஒரு வாரத்துக்கு ஒரு வீட்டில் வேலையாளாகும் வாய்ப்புக் கிடைத்தது
சொற்ப ஊதியமே கிடைத்த போதும், வறட்சியினா பாதிக்கப்பட்ட சொந்த ஊரில் வாழ்ந்து வந்த, தன் நோயுற்ற பெற்றோருக்கு ஒரு சிறு தொகையை அனுப்ப அவன் தவறவில்லை. ஆனால் மரணத்தின் பிடியிலிருந்து
அவர்களைக் காப்பாற்ற அது போதுமானதாக இல்லா
ಜ್ಞ ধ্ৰুপ্ত
تھے!

Page 16
நீத்தனர். அவர்கள் ஒருவரையொருவர் இறுகப்பற்றிய படி கிடந்த கோலத்தைப் பார்க்கும் போது, ஒருவர் மற்றவர் இறக்கப்போவதை உணர்ந்து அவரோடு தானு கூடச் செல்வதற்கு முயல்வதைப் போலிருந்தது.
சாவுச் செய்தியை இளைஞன் சைல் துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வோடு எதிர்கொண்டான். நீண்ட காலம் படுக்கையிற் கிடந்த தன் பெற்றோர்க்கு இந்த ஆறுதல் அவசியம் என்று அவன் கருதினான். பிறகு அவர்களை அடக்கம் செய்வதற்குப் பணம் அனுப்பி அவன், சாவீட்டுக்குப் போவதில்லை என்ற அசாதாரண முடிவெடுத்தான். பெற்றோரின் மரணத்துக்குப் பி தன்னிடம் வழக்கத்துக்கு அதிகமாகப் பணம் இருப்பதை | சைல் உணர்ந்தான். வீட்டுப் பணியாள்
கைவிட்டு குமாஸி மத்திய சந்தையில் கெங்கே விற்கத்
தொடங்கினான். தான் உழைக்கும் ஒவ்வொரு
பெஸெவாவையும் சேமித்தான். இரண்டு ஆண்டு செல்ல தன் சேமிப்பைக் கொண்டு சொந்தத்தில் தேநீர்க்கடை
வைத்தான். ஜொங்கோ வீதியின் முதல் தேநீர்க்கடை அது; பல ஆண்டுகளாக அதுவே அவ்விடத்தில் ஒரே தேநீர்க்கடை
மல்லம் சைல்குள்ளம் ஆனவன். பலர் அவனை பிக்மி என்று கருதுமளவுக்கு உயரம் குறைந்தவன் சரியாகச் சொல்வதானால் அவன் உயரம் 5அ 1அங்குலம். பிக்மியர்களுக்கே உரிய சப்பை மூக்கோ விருத்தி அடையாத நாடியோ உருண்ட தலையோ
அவனுக்கு இல்லையாயினும், வாட்ட சாட்டமான உடலும் அதில் அதிகமாகக் காணப்பட்ட மயிருே பிக்மியரும் அவனும் சாயலில் ஒத்திருந்ததற்குக் காரணம் சிறுவயதில் ஏற்பட்ட நோய் அவன் பார்வையை பாதித்திருந்தது. ஆனால் அவன் மருத்துவமனைக்கு போக மறுத்தான். பாரம்பரிய, மேனாட்டு மருந்துகை வெறுத்தான். “கடவுளே நோயைத் தருகிறார். அவ ஒருவரே உண்மையான மருத்துவர்.” இதுதான் சைலி எளிய சித்தாந்தம். நோய் குடிகொண்ட மனித உடல் “மரண தேவதை அதை எட்டிப்பிடிக்க எவ்வளவு காலம் எடுத்தாலும், ஒரு நாள் விழும்” என அவன் நம்பினான்.
சைலின் சிறிய முகத்தை அடர்ந்த, நீண்ட தாடி மூடியிருந்தது. கறுத்த முகத்திலுள்ள சுருக்கமும், மென்மையான மாறு கண்ணின் ஈரலிப்பும் அவனுக்
வாழ்க்கையின் இறக்கங்களை வெற்றி கொண்ட ஒ துறவியின் தோற்றத்தை அளித்தன. சுருக்கம் விழுந் ஒரு கன்னத்திலிருந்து மறு கன்னம் வரை நீளும் அவன் புன்னகை கோலாக் கறைபடிந்த அவன் பற்களை 8 காட்டும்; அவன் வலிமைக்கும், அறிவுக்கும் தன்னம்பிக்கைக்கும் சான்று பகரும்.
சைல் ஒவ்வொரு நாளும் ஒரே விதமான உடையைத்தான் அணிவான்; வெள்ளைப் பொலியெஸ் ரர் ஜலாபியாவும் இடுப்பில் நூலால் இறுக்கி நிறுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாக்ஸஅம். அவனி
படும் தெ த இவ்வகை ஆடைகள் எட்டு உண்டு. வாரத்தின் ஒவ் வொரு நாளும் அவற்றில் ஒன்றை அணிவான். நிரந்த ரமாக மொட்டையடிக்கப்பட்ட சைலின் தலை அல்லாஹ்வைப் பணிந்தொழுகும் தீவிர விசுவாசிகளான முஸ்லிம்களின் அடையாளமாகிய பூவேலை செய்த மெக்காத் தொப்பியால் மூடப்பட்டிருக்கும். மற்றைய ஜொங்கோ வீதி வாசிகளைப் போலவே சைல் ஒரு சோடி செருப்பே வைத்திருந்தான். அதை மேற்கொண்டு திருத்துவது சாத்தியமல்ல என்று காணும்வரை வேறொன்று வாங்கமாட்டான். பிறப்பிலேயே சைலின் ஒவ்வொரு பாதத்திலும் மேலதிகமாக ஒரு விரல் வளர்ந்திருந்ததால் சைலுக்கேற்ற செருப்பைத் தேடுவது முடியாது. கைவிடப்பட்ட கார் ரயர்களைக் கொண்டு அடிப்பாகம் இட்டுச் செருப்புத் தைக்கும் செம்மான் அனைபா, அவனுக்கென்று விசேடமாக, செருப்புத் தைப்பான். தெருச்சண்டியன் சமாதுவின் தலைமை
தெருவாசிகளில் பெரும்பான்மையோர் 6атš68am gm romatom” eteboogi usofiumПš தோடு சோளக் கஞ்சியையே காலை உணவாக விரும்புவதால், தேநீர்க் கடையில் காலை Goicoer மந்தமாயிருக்கும் Өвот6No шоптаoөo வேளை வந்தாலோ லேற்றெஸ் நியூஸ் கதைக்கும் இளைஞர் யுவதிகளால் கடை രണr seg6ിbം ബിസ്ഥ ഗ്രDrb நடக்கும். தமது அன்புக்குரியவர்களைச் சந்திக்கவென்றே அங்கு போகிறவர்களும் 19-6ජ්rO.
யிலுள்ள போக்கிலிகள் சைலின் காலிலும் செருப்பிலும் குத்துவார்கள். சைலின் செருப்புக்கு அவர்கள் இட்ட
பெயர் கலபில்வாலா (அந்தச் சொல்லுக்குக் கருத்தி ருந்தால் தானே மொழி பெயர்க்க முடியும்?)
2
நாற்பத்தாறு வயதாகியும் மல்லம் சைல் பிரமச்சாரியாகவே இருந்தான். தன் கடைக்கு வரும் விவாகரத்துப் பெற்றவர்கள் மற்றும் விதவைகள் மீது அவன் கண்ணெறிந்த போதும், யாரும் அவன்மீ அக்கறை கொள்ளவில்லை. சைல் தங்கள்மீது கண்போ வதால் வெட்கும் பெண்கள் “குள்ளனோடு நமக்கென்ன சோலி?’ என்று கேட்பார்கள். இரண்டொருவர் மட்டும் சிறிது உற்சாகம் காட்டுவார்கள்; ஆனால் அவர்க 8 இலவசத் தேநீருக்காக சைலோடு பல்லிளிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 籍
காலப்போக்கில், பெண்கள் விஷயத்தில் தான்
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 13

Page 17
தோற்றுப் போனதை ஏற்றுக் கொண்ட சைல், தான் தனிக்கட்டையாகவே சாகநேரும் என்று நம்பினான். ஆயினும், வாடிக்கையாளர்கள், ஊர் வம்பு பேசுவோர், சோம்பேறிகள், வதந்திப் பிரியர்கள் எல்லோரும் தத்தம் குடிசைகளில் மூட்டைப் பூச்சி புழுத்த புல்மெத்தைகளில் அடைக்கலம் புகுந்த பின், சாமத்தில் சைல் காதல் பாட்டுக்கள் பாடுவான். எங்கிருந்தாவது ஒரு பெண்தன் வேட்கை முறையீடுகளுக்குச் செவி சாய்ப்பாள் என்று.
“அழகான பெண் ஆனை இறைச்சி போன்றவள் ប្រះ என்கிறார்கள்
கூரிய கத்தி வைத்திருக்கும் ஆண்மகனால் மட்டுமே
அதை வெட்ட முடியும் என்கிறார்கள்
இளம் பெண்ணே என்னிடம் கத்தியில்லை இறைச்சி நாடும் வேடுவனோ காட்டுமிராண்டியோ அல்ல நான் காதலை வேண்டிக் கரைபவன் நான் இது தான் நான் சொல்வது
நான் பிறந்த வடக்குச் சீமையின் இளமாதர் இவ்வூர்ப் பெண்கள் போன்றோர் அல்லர் கத்தியைக் கொண்டு மதிப்பிடமாட்டார் இதயத்தைக் கொண்டே உனை எடை
போடுவர்
உன்னை அறியேன் இளம் பெண்ணே உன்னை எங்குதேட இளம் பெண்ணே நீயாரென்றறியேன் இளம் பெண்ணே - என் இதயம் வலிப்பது மட்டும் அறிவேன்
ஒ ஓ ஒ இளம் பெண்ணே
உனக்காகவே என் இதயம் உருகுதடி!”
இப் பாடல்களைப் பாடும் போது சைலின் குரல் சோக உணர்வில் தோய்ந்து ஒலிக்கும். “சைல், உன்’ ரை தேடலை எப்படா அப்பா விடப்போறாய்? உன்னை ஒருத்தியும் கட்டமாட்டாள் எண்டு தெரியேல்லையே?’ வம்பர்கள் சீண்டுவார்கள். “நான் எப்பவோ அவள வையை விட்டிட்டன். ஆனால் நான் என்னை விடப் போறதில்லை!” என்பான் சைல்! “நீ உன்னையே ஏமாத்துறாய்!” அவர்கள் கேலி செய்வார்கள்.
வம்பர்களுடைய தொந்திரவு அத்துடன் நிற்பதில்லை. சைலின் கண்பார்வை குறைவு என்பதைத் தெரிந்து கொண்ட அவர்கள், இரவு வேளைகளில், தேநீர் குடித்துவிட்டு, போலிக் காசுத் தாள்களைக் கொடுப்பர். அவ்வாறு சேரும் தாள்களை, சுப அடையாளங்கள் போல, சைல் சுவரில் ஒட்டி விடுவான். குறும்பு செய்யும்
14 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோக்
கத்தில் அல்ல, பசிக் கொடுமையால்தான் அவர்கள் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று அவன் நம்பினான்.
பசியால் வாடுகிறவனுக்கு உணவு தரமறுப்பது மனிதத் தன்மையல்ல என்று சைல் கருதினான்.
சைல் சூடான தேநீரை ஆற்றிக் கொண்டிருக்கும் போது வம்பர்கள் தூக்கிய கையைத் தட்டி விடுவார்கள்.
தேநீர் சைலின் கைகளில் சிந்தும். இந்தச் சேட்டைகளால் அவன் கோபமடைவதில்லை. கோலாக்கறைபடிந்த 8 பற்கள் தெரிய சிரிப்பான். ஒரு வார்த்தையும் பேசாது கையைத் துடைத்துவிட்டு, வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தேநீர் பரிமாறுவான்.
வம்பர்கள் இதைவிட மோசமாக நடப்பதுண்டு
கடையில் எரியும் விளக்கை அணைத்து விட்டு, சைல் அதை மீளக் கொளுத்தும் முயற்சியில் ஈடுபடுகையில் பாணையோ மைலோவையோ களவெடுப்பர். இந்தக் குறும்புகளையெல்லாம் பொறுக்கும் சைலின் நெஞ்சில் ஒரு வன்மமும் இருக்காது. தன் கடையைத் தாண்டிப் போகிறர்களைப் பார்த்து, தன் சிறுகைகளை அசைத்து சைல் கேட்பான் “பொடியா, இன்று உன்பாடு எப்படி?
பெண்கள், வயதானவர்கள் எல்லோரையும் சைல் "பொடியா என்றே விளிப்பான்.
雛 தன் கடின உழைப்புக் குறித்து அவனுக்கு ஒே
பெருமை. கண்ணாடிக்குள் தன் குள்ள உருவத்தையும் பார்வை குறைந்த கண்களையும் பார்க்கும் போதெல் லாம் புன்னகை புரிவான். மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத மகிழ்ச்சியோடு இவ்விரு குறைபாடுகளையும் ஏற்றுக் கொள்ள அவன் பழகியிருந்தான். அல்லாஹ்
தன்னை வேறு விதமாகப் படைத்திருந்தால்தான் ஏற்றுக் கொள்ளும், மதிக்கும் ஒர் இதயம், ஆத்மா, உயிர் ஆகியவை கொண்ட மல்லம் சைல் ஆகியிருக்க முடியாது என்ற முடிவுக்கு அவன்தன் பெற்றோர் மறைவுக்குச் சில மாதங்களுக்கு முன்பே வந்திருந்தான். இந்த மனநிலை அகத்தில் ஏற்படுத்திய சாந்தியினால் தான் தெருப் போக்கிலிகள் செய்யும் குறும்புகளைப் பொறுக்கவும் அவர்களை மன்னிக்கவும் அவனால் முடிந்தது. ஆனால் அவர்களோ சைலை ஒரு கோமாளியாகவே கருதினர்.
3
கோடையில், ஒரு பிற்பகலில், சுத்தியல், வாள் குறடு முதலிய கருவிகளோடு சைல் தன் கொட்டிற் கூரைமேல் நிற்கக் காணப்பட்டான். நாள் முழுதும் பல்லி போல் அதில் ஊர்ந்து, ஊர்ந்து, மாலையில் தன் தொழிலுக்கும் தனக்கும் நிழல் தந்த அலுமினியம் கூரைத் 議 தகடுகளைக் கழற்றிவிட்டான். அடுத்த நாளும் தொடர்ந்து வேலை செய்து அஸர் தொழுகைக்கு முன் பிற்பகல் ஒன்றரை அளவில், வீடென்றோ கடை யென்றோ சொல்ல ஒன்றுமில்லாதபடி கொட்டிலை புழுதி நிலமாக மாற்றிவிட்டான்.

Page 18
சைல் தன் உடைமைகளையும் தேநீர் தயாரிக்கும் டுக்கணிகளையும் ஊர்த்தலைவர் வளவிலுள் வேலையாட்கள் இலத்துக்கு நகர்த்திவிட்டான். அந்
றை சைலின் மீது அனுதாபமுள்ள தலைவரின்
லக்கரமான வஜிரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அடுத்த இருநாளும் மல்லம் சைல் ஒட்டு
லகையும், பழைய கொட்டிலுக்குப் பயன்படுத்தி
உவாவா மரத்தை விடத் தரம்கூடிய ஒடம் பலகையு
வாங்கினான். சீமெந்தும், லொறிச் சுமையாக மண்ணு
கல்லும் இறக்கி, முந்தியதை விடப் பெரிதாக ஒரு
துக்கடை கட்டத் தொடங்கினான்.
சைலுடைய புதிய கட்டடத்தைக் கண் அதிர்ச்சியடைந்த தெருவாசிகள், அந்தப் பெரு முயற்சிக்கு அவனுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என, தம் தலையைப் பிய்த்துக் கொண்டனர். பலசரக்கு
கடைக்கார அல்ஹாஜி சைஃபாவுக்குப் போட்டியாக அவன் ஒரு மினி மார்க்கெற் கட்டுவதாக வதந்தி உலாவியது. சைல் அதை ஒரேயடியாக மறுத்த போதும்,
ாட்டுத் தீ போலப் பரவிய அவ் வதந்தியா
இருவருக்குமிடையே ஓர் கசப்புணர்வு உருவானது.
புதிய கடைக்கு அத்திபாரமிட சைலுக்கு மூன்று ாள் பிடித்தது. மரச்சுவர்களை எழுப்பவும் அலுமினிய கூரைத் தகடுகளைப் பொருத்தவும் மேலும் மூன்று ாரங்கள் ஆயின. சைல் தன் வேலையில் மூழ்கியிரு
கயில் வழிப்போக்கர் சற்றுத் தரித்துக் கேட்பார்கள் மளிகைக்கடை எப்படி வந்து கொண்டிருக்கு?’ அல்லது
மாய் ரீ, மாளிகையில் குடிபுகுதல் எப்போ?’ சைல் ளிமையாக விடையளிப்பான். “வேலை நல்லா
ধ্ৰু
ॐ
謝
டக்குது, பொடியா. சீக்கிரம் முடிந்துவிடும், இன்ஷா ல்லாஹ்!’ வழமை போல வாய் அகன்ற சிரிப்பு.
றுகிய, மயிர் அடர்ந்த கையசைப்பு. பிறகு வேை தொடரும். நாள்கள் வாரங்களாகவே, தெருவாசிகள் பொறுமை இழக்கத் தொடங்கினர். சைல் கடையை ட்டியது குறித்து கோபிக்கவும் செய்தனர். கிட்டி தநீர்க்கடை 300 மீற்றருக்கப்பால் ஜெரிக்கியி வீதியி
ருந்தது. அது மட்டுமல்ல, அதன் உரிமையாளன் பொங்கோவை தெருவாசிகளுக்கு அறவே பிடிக்காது தற்கு ஒரு காரணமும் இருந்தது. அபொங்கோவும் டக்கத்தியானாக இருந்த போதும் கண்ணியமான
ாடிக்கையாளரோடு கூட அவன் சுமுகமாக இருப்ப ல்லை. கடன் கொடுப்பதில்லை என்ற கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிக்கும் அவன், பரிமாறுவதற்கு ன்பே வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை அறவிட்டு விடுவான். யார் பசியால் வாடினாலும் இதற்கு விதிவிலக்கில்லை. சைலைப் போலன்றி
அபொங்கோ தன் கடையில் சோம்பேறிகளையோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்து, அதிலுள்ள பானத்தை ஒரு ப்ளாஸ்ரிக் பேசினுள் ஊற்றிவிட்டு, காசைத் திருப்பிக் கொடுத்து விடுவான். பிறகு, தன் சவுக்கைச் சுழற்றியபடி வாடிக்கையாள னைத்துரத்துவான். “கொப்பனும் கோத்தையும் உனக்கு நல்ல பழக்கம் பழக்காட்டி, நான் பழக்கிறன் வம்புப் பிறவியே, உன் வாயைத் தைக்கிறேனோ இல்லையோ,
பார்!’ என்று திட்டுவான்.
மேலும் மூன்று மாதம் கழிந்த பிறகே மல்லத்தின் கடை திறக்கப்பட்டது. கடைக்கட்டுமானம் முடிந்த கையுடன் சைல் தன் சொந்த ஊருக்குப் போய் ஒரு வெள்ளிக்கிழமை மாலை திரும்பினான். முப்பத் தாறு முப்பத்தேழு வயது மதிக்கத்தக்க, அவனைவிட மும்மடங்கு பருத்த, கண்டிப்பான பெண்ணொருத்தி, கூட வந்தாள். அவள் பெயர் அபீபா அவளே சைலின் மனைவி. அபீபாவுக்கு உயர்ந்த பாரிய ஆகிருதி, உறவினரைச் சாகக் கொடுத்த துக்கத்தில் இருப்பவளு
காலப்போக்கில், பெண்கள் விஷயத்தில் தான் தோற்றுப் போனதை ஏற்றுக் கொண்ட சைல் தான் தனிக்கமடையாகவே சாகநேரும் என்று நம்பினான். ஆயினும், வாடிக்கையாளர்கள் ஊர் வம்பு பேசுவோர், சோம்பேறிகள், வதந்திப் பிரியர்கள் எல்லோரும் தத்தம் குடிசைகளில் மூடைப் பூச்சி புழுத்த புல்மெத்தைகளில் அடைக்கலம் புகுந்த பின் சாமத்தில் சைல் காதல் பாடுக்கள் பாடுவான். எங்கிருந்தாவது ஒரு பெண் தன் வேகை முறையீடுகளுக்குச் செவி சாய்ப்பாள் என்று.
டைய முகபாவம். கணவனைப் போலவே அபீபாவும் வாடிக்கையாளருடன் அதிகம் பேசுவதில்லை. மக்களை
வரவேற்கும் போது அவளும் தன் பெரிய கைகளை அசைத்துப் புன்னகை புரிவாள். ஆனால் மல்லத்தைப் போலன்றி, அபீபாவின் புன்னகையில் ஒரு விஷமம் மறைந்திருப்பது போலத் தென்படும். ஒரு பெண் சிங்கத்தின் கம்பீரத்தோடும் தன்னம்பிக்கையோடும் அவள் நடப்பாள். ஜொங்கோ வீதியில் வாழும் பெரும்பான்மை மணமான பெண்கள் கைவிட்டிருந்த ஒரு வழக்கத்தை அவள் கைக்கொண்டிருந்தாள்: இஸ்லாமிய முறைப்படி முக்காடிட்டிருந்தாள்.
சந்தையில் சைலைச் சந்தித்த போக்கிலிகள் கேட்டார்கள்: “இந்த ஆனையை எங்கை பிடிச்சாய் அவளுக்குக் கோபம் வந்தால், உன் மீது உட்கார்ந்தாள் என்றால், நீ நிலத்துக்குள்ளே போய்விடுவாய்” இதற்கு சைல் ஒன்றும் சொல்லமாட்டான். அவனுக்குத் தெரியும்
சொன்னால், குத்தலாக ஏதும் சொல்வார்கள் என்று.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 15

Page 19
கிராமத்திலிருந்து மீண்டபின் ஒரு கிழமை "א கழிய, சைலும் மனைவியும் தமது புதிய கடையைத் திறந்தார்கள். அன்றிரவு, வைபவத்துக்கு வந்த எல்லோ ருமே வழவழப்பான கொங்கிறீற் தரையைப் பற்றியும் மூலைகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த காஸ் விளக்கு
களைப் பற்றியுமே பேசினர். பழைய கடையிலிருந்த கறையான் பிடித்த உவாவா’ பலகைக்குப் பதிலாக, வெள்ளையடித்த ‘ஒடம் பலகைகளால் அமைக்கப் பட்ட சுவர்கள் எல்லோரையும் கவர்ந்தன. கல்லாவின் பின், ஒரு மரப்பெட்டியில், கைலும் மனைவியும் கெட்ட ஆவிகளை ஒட்டுவதற்காக, துலறன் மாயு என்ற தூபத்தைப் புகைத்தார்கள். முதல் நாள் மாலை தேநீர்க்கடையில் ஒரே கூட்டம். மடிக்கக்கூடிய பன்னிரண்டு புதிய உலோகக் கதிரைகளில் சில வாடிக்கையாளர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மீற்பை, தவிட்டுப்பாண், கஸ்ரட், இறக்குமதி செய்யப் பட்ட தானியத்தாலான “ரொம் ப்றெளன்’ உள்ளிட்ட
உணவு வகைகளை எல்லோரும் வாயாரப் புகழ்ந்தனர். சில வாடிக்கையாளர் ஒரு படி மேலே போய், “தம்மை அபொங்கோவின் கொடுங்கோன்மை”யிலிருந்து விடுவித்தமைக்கு சைலுக்கும் அவன் மனைவிக்கும் நன்றி தெரிவித்தனர். ஆனால் தெருவாசிகளின் புறணிகளைத் தன் அங்கை நெல்லிக்கனி போல அறிந்திருந்த சைல் வெறுமனே தலையை அசைத்து தனது வழமையான கள்ளமில்லாச் சிரிப்பை உதிர்த்தான். தன்மீது பாராட் டுக்கள் சொரியப்பட்ட போதும், புன்ன்கைகள் உதிர்க் கப்பட்ட போதும், அக் கணத்திலேயே, சில வாடிக்கை யாளர்கள், தன்னை ஏமாற்றும் வழிவகைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பர் என்பது அவனுக்குத் தெரியும். சைலுக்கும் அவன் வருங்கால வைரிகளுக்கும் அப்போது தெரியாது, ஏமாற்றும் சேட்டைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்பது. இதற்குப் பொருள் சைல் திடீரென்று, ஒர் அற்பனாக அவதாரம் எடுத்துவிட்டான் என்பதல்ல. அபீபாவின் இறுக்கமான, அச்சுறுத்தும் முகமும், பாரிய பிரசன்னமும் சைலை ஏமாற்றும் நோக்கத்தோடு வந்தவர்களை மிரள வைத்தன.
தேநீரையும் பட்டியலிலுள்ள உணவுகளையும் சைல் தயாரிக்கையில், அவற்றைப் பரிமாறுவதையும் பணம் வசூலிப்பதையும் அபீபா செய்வாள். தாங்களும் அபொங்கோவின் ‘கடன்தராக் கொள்கையைப்
பின்பற்ற வேண்டும் என்றுதன் கணவனை ஏவிவந்தாள். அவ்வாறு நடப்பது மனிதாபிமானம் அல்ல என சைல் பிணங்குவான். சைல் கடன் கேட்பவர்கள் உண்மையில் சொல்வது போல் “பசித்த வறியவர்கள்” அல்லர் என்றும் அவனுடைய தாராள குணத்தைத் தமக்குச் சாதகமாக் கும் மோசடிப் பேர்வழிகள் என்றும் அவள் சுட்டிக்காட்
டினாள்.
இதுபற்றி
16 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்று நாள் வாதிட்ட பின் ஒர் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். விசேடமான சூழ்நிலையில் கடன் வழங்கலாம் ஆனால் கடனர்ளி உரிய காலத்தில் கடனை அடைப்பதாக குர்ஆன் மீது சத்தியம் செய்ய வேண்டும். கடனை அடைக்காதவருக்கு மேற்கொண்டு கடன் கொடுக்கப்படமாட்டாது. ஆனால் மல்லமும் மனைவி யும் கடன் வசதியை ஏற்படுத்தியது தான் தாமதம், சில வாடிக்கையாளர் கடன் செலுத்தாது நழுவும் தம் பழைய
வழக்கத்தை கைக்கொள்ளத் தொடங்கினர். ஆயினும் அபீபாவுக்கும் தவணை தப்பிய கடன்காரன் ஒருவனுக் கும் நடந்த மோதல் எல்லாவற்றையும் - தெருவில் சைல் நடத்தப்படும் விதம் உட்பட எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. நடந்தது இது தான்.
பெரும்பாலான நகரத்தின் அயற்பகுதிகளைப் போலவே, ஜொங்கோ வீதிக்கும் ஒரு சண்டியன்’ இருந்தான். அவனை ஒத்த இளவயதினரால் அவனே பலசாலியாகக் கருதப்பட்டான். பதினாறு வயது சமாதுவின் புகழ் ஜொங்கோ வீதியின் மூலை முடுக் கெல்லாம் பரவியிருந்தது. நடுத்தர உயரமும் கட்டுடலும் கொண்ட அவன் இயல்பாகவே விளையாட்டில் விண் ணன் மத்திய சந்தைக் கழிப்பறைக்குப் பக்கத்திலுள்ள மல்யுத்தக் களரியில் கடந்த ஒன்பது மாதமும் யாரும்
அவன் சித்திரவதை செய்து கொல்வதும் ஊரறிந்த விஷயம். கால்நடைகளோ செல்லப் பிராணிகளோ இல்லாதவர்களுடைய பிள்ளைகளை நாட்கணக்காக துன்புறுத்துவான் - பெற்றோர் பணமோ பொருளோ கொடுத்து, அவனை சாந்தப்படுத்தும் வரை. சில பெற்றோர்கள் அவ்வப்போது காசோ, உணவோ, உடையோ கையூட்டாகக் கொடுத்து சமாதுவின் நட்பைச் சம்பாதித்துக் கொள்வர்.
இந்தப் பின்னணியில், ஒரு செவ்வாய்க்கிழமை,
சமாதுவின் வீட்டு வாசலுக்கு மல்லம் சைலின் மனைவி
கடனை அறவிட வந்த போது, எவ்வளவு பரபரப்பு உண்டாகியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அதற்கு முன்பு அபீபா, சிநேகயூர்வமாக, அந்த எண்பது ஸெடி நிலுவையை அறவிட முயற்சி செய்திருந்தாள். மூன்று முறை முயற்சி செய்தும் பலன் இல்லாது போகவே, பலப்பிரயோகம் செய்யலாம் என்ற கருத்தை அபீபா முன்வைத்தாள். “அந்தப் பொடியன் வழியில் குறுக்கிடாதே. அவன் ஆபத்தான பேர்வழி. பணத்தைச்

Page 20
பல்லவா? நாம் யாரோடு தாராளமாக நடந்து கொண்
அவ்வளவு நல்லது!” அபீபா வாதிட்டாள். அந் விஷயத்தை அத்துடன் விடுமாறு தன் மனைவியை கெஞ்சினான் சைல். “விடு’றன், அதுக்கு முந்தி, இங்கை சில விஷயங்களை ஒழுங்காக்க வேணும்!” என்றா அபீபா அவள் உள்ளக்கிடக்கை என்னவென்று சைலுக்கு
விளங்காவிட்டாலும், அவன் அதன் பின் ஒரு சொல்லு பேசவில்லை.
அபீபா சமாதுவின் வீட்டை அடைந்த போது இலத்தரசிகள் பலர் முற்றத்தைச் சூழ கூட்டுவது தண்ணீர் அள்ளி வந்து தத்தம் அறைகளி முன்னேயுள்ள பீப்பாய்களில் நிரப்புவதுமாக வீட்டு
戀
சட்டிகளில் தீமூட்டி வெந்நீர் வைப்பதும் முந்திய இரவி எஞ்சிய உணவைச் சூடாக்குவதுமாக இருந்தனர். அபீபா" அப் பெண்களுக்கு வந்தனம் கூறிய பின், சமாதுவின் வீடு
சண்டியனைத் தான் தேடுவதாக அபீபா தெரிவிக்கா
எது என்று விசாரித்தாள். என்ன காரியமாக தெரு
தால், வீட்டைக் காட்டுவதற்குப் பெண்கள் முதலி தயங்கினர். ஆனால் அவள் கண்களில் கனன்ற ஆர்வ தைக் கண்டபின் பிரதான முற்றத்துக்கு வெளியே இருந்
சமாதுவின் வீட்டை அரை மனதுடன் காட்டினர்.
பெண்களோடு சண்டை ஏற்படும் போது தெருவின் விடலைப் பையன்கள் கையாளும் உத் ஒன்றுண்டு. அவர்களுடைய இடுப்பைச் சுற்றியிருக்கு சிற்றாடையை உருவிவிடுவது! அரை நிர்வாணமாக அவர்களால் சண்டையைத் தொடர முடியாதல்லவா
8
ஆனால் அபீபா அன்று சண்டைக்கு ஏற்ற கையில்லா
மேற்சட்டையும் இறுக்கமான காக்கிக் காற்சட்டையு அணிந்திருந்தாள். முதல் முறையாக தன் முக்காட்டை வீட்டில் விட்டு வந்திருந்தாள்.
"அயோக்கியனே, ஆண்பிள்ளையாய் இருந்தா வெளியே வந்து கடன் காசை வை!” என்று சொல்லியபடியே சமாதுவின் கதவை கைகளால் குத்தினாள்.
“ஆரெண்டு நினைக்கிறாய், அற்பமான எண்பது ஸெடி காசுக்கு என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு? உள்ளேயிருந்து சமாது கத்தினான்.
“காசு அற்பமாயிருக்கலாம். ஆனால் உன்னை:
விட அது பெறுமதி வாய்ந்தது. ஆனபடியால் தான் உன்னாலை கொடுக்கேலாமல் இருக்கு! குப்பை
பயலே!’ தன் கரகரத்த குரலில் மிரட்டினாள் அபீபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருடாந்த மல்யுத்தப் போட்டியில் மோதும் ஜூஜூ போராளிகளைப் போல் அவள் கழுத்து நரம்புகள் புடைத்து நின்றன. வலிப்பு நோய் வந்தவள் போல அவள் தலையை அசைக்கும் போது, அவள் கண்கள் வெறிகொண்ட விலங்கின் கண்கள் போல அச்சமூட்டின
பார்வையாளர்களுள் ஒருத்தி - பஞ்சத்தில் அடிபட்டவள் போன்ற தோற்றமுடையவள் - “வீட்டுக் குப்போ அவனோடை சண்டையிடாதே, எல்லார் முன்னிலையிலும் உன் மானத்தை வாங்கிவிடுவான்’ என்று அவளைக் கெஞ்சினாள். “அட, ஒர் ஆம்பிளை யோடை மோத நினைக்கிறவள் என்ன பொம்பிளை?” என்று ஒருத்தி பிற்பாட்டுப் பாடினாள். பெண்களுடைய இந்த எச்சரிக்கைகளை வெறும் பிதற்றல்கள் என அபீபா" ஒதுக்கினாள். இவற்றிடையே சமாது இன்னும் வெளியே வரவில்லை.
கதவின் குமிழியைப் பிடித்து அபீபா உலுப்பி
கிராமத்திலிருந்து மீண்டபின் ஒரு கிழமை கழிய, சைலும் மனைவியும் தமது புதிய கடையைத் திறந்தார்கள். அன்றிரவு வைபவத்துக்கு வந்த ണ്ട്ബേrgഥ ഖ്യാഖ്യ്രത്ത് കൈനികർ தரையைப் பற்றியும் மூலைகளில் ஏற்றி வைக்கப்படிருந்த காஸ் விளக்குகளைப் பற்றியுமே பேசினர். பழைய கடையிலிருந்த கறையான் பிடித்த உவாவா பலகைக்குப் 360ms. 66.6reoeg:35 *SLb Leoaoas a56mr6ð SÐlaodločasůLILL GIGAIffa56r 6T6ð086:Oraod
seer
னாள். உள்ளே பெருஞ் சத்தம் ஒன்று கேட்டது. சற்றுப் பின்வாங்கிய அபீபா சமாது வரட்டும் என்று காத்தி ருந்தாள்.
சில கணங்கள் கழிந்தன. கதவு திறந்தது. முகம் கோபத்தில் சிவக்க, புயலாய் வெளியே வந்தான் சமாது “என்னைப் பழித்தவர்கள் யாரும் தப்பேலாது; தப்பவே ஏலாது!’ என்று கூவினான். அவன் வலக்கன்னத்தில் எச்சில் காய்ந்திருந்தது. கண்களில் பீளை. “யானைப் பெண்ணே! இண்டைக்கு நான் செய்யுற வேலை
ללן
டைத்தான் படிக்கப் போறாய்
என்று கூவிய அபீபா அவன் மீது பாய்ந்தாள். क्षं
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 17

Page 21
ஆம்பிளையஸ் எங்கை? ஓடிவந்து விலக்குப் பிடி யுங்கோ’ என்று சத்தமிட்டனர். அப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து விழித்த பிள்ளைகள் ஏதோ ஒரு சடங்கைப் பார்ப்பவர்கள் போல பரபரப்பாகத் துள்ளினர்.
அபீபாவோடு மல்யுத்தம் செய்தால், தன் பருத்த உடலைப் பயன்படுத்தி அவள் தன்னை நிலத்தில் அமுக்கி விடுவாள் என்று சமாதுவுக்குத் தெரியும். எனவே பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி குத்துவதும் உதைப்பதுமான தந்திரோபாயத்தை அவன் கையாண் டான். சண்டையிடும்போது தான் தெரிந்தது, தன்னை விட அபீபா மிக வேகமாகச் செயற்படுகிறாள் என்பதும், ன் முதல் ஐந்து குத்துக்களையும் அவள் ‘டொட்ஜ்’ பண்ணிவிட்டாள் என்பதும், அவனுடைய ஆறாவது குத்து இலக்குத் தவறவே அவன் கால் தடுக்கியது. ஏழாவது குத்தை இணைக்க முடியாமல், அபீபாவுக்கு ஒரடி முன்னே விழுந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில், அவன் கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த போர்வையை இறுக்கமாகப் பிடித்த அபீபா அவனைக் குத்தத் தொடங்கினாள். சமாதுவுக்காக உற்சாகம் காட்டிய கூட்டம் எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் சோர்ந்து விட்டது. ஒரே நிசப்தம். அபீபா தொடர்ந்து குத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் சமாது சும்மாவா தெருச்சண்டியன் என்று பேரெடுத்திருந்தான்? அபீபாவின் வயிற்றில் ஒரு கூரிய குத்துவிட்டு அவள் பிடியிலிருந்து ஒருவாறு நழுவி, பார்வை முடிச்சிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். இப்பொழுது மேலாடையின்றி லங்கோடு
ட்டும் அணிந்த மேனியனாய் நின்றான் சமாது. ண்டை வீரர்கள் போல ஆடினான், கைகளை வீசினான்,
டலைப் பக்கவாட்டில் அசைத்தான். உற்சாகமடைந்த கூட்டம் “பிறி பிறின்பி, வெயின் சொன், பிறி பிறின்பி, வெயின் சொன்’ என்று பாடியது. சமாது அபீபாவை நெருங்காமல் துள்ளித்துள்ளி ஆடிக் கொண்டிருக்க, ஒரு லர் “அலி, அலி, அலி’ என்று சத்தமிட்டனர். பசித்த பெண் சிங்கம் போல அவன் அசைவுகளை நுணுக்கமாக வனித்துக் கொண்டிருந்த அபீபா, அவன் ஒரு முறை ழுக்கினானாயின் ஆளை மடக்கிவிடலாம் என ம்பினாள்.
கூட்டத்திலிருந்த பெண்கள் தங்கள் மார்புகளில் கை வைப்பதும் தொடைகளைத் தட்டுவதுமாயிருந் னர். அவர்கள் உடல்கள் பதற்றத்தோடு உச்சாட னத்துக்கேற்ப அசைந்தன. பொடியன்களோ அபீபாவை ாட்டு விலங்குகளுக்குச் சமமான பட்டப் பெயர்கள் இட்டு அழைத்துக் கேலி செய்தனர். “ஆனையைக் கொல்லு!’ எனக் கூச்சலிட்டனர்.
கூட்டம் சமாதுவுக்கு உற்சாகம் ஊட்ட ஊட்ட,
வன் பாதத் தொழிற்பாட்டின் நுட்பம் அதிகரித்தது.
18 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனுடைய அடுத்த குத்து அபீபாவின் தோளில் விழுந்த போதும் அவள் அதனால் கிறுங்காதவள் போல் பார்வையாளர்களால் உண்டாக்கப்பட்டிருந்த வட்டத் தைச் சுற்றி அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள். தன் பலன் முழுவதையும் திரட்டி சமாது ஓங்கி ஒரு குத்து விட்டான். இதை எதிர்பார்த்த அபீபா"டொட்ஜ்’ செய்து விட்டு, அவன் மணிக்கட்டை லாவகமாகப் பிடித்து பலங்கொண்டு கையை முறுக்கவே அவன் “உவய்யோர்
என்று உச்சஸ்தாயியில் கூக்குரலிட்டான். அவன்தன்னை
வலு அவனை விஞ்சி நின்றது.
கூட்டம் கேலி செய்தது: “வூ, அவலட்சணமான
காண்டா மிருகமே!’ கண்ணிமைக்கும் நேரத்தில்
துரிதமாகச் செயற்பட்ட அபீபா, சண்டியனைச் சமநிலை
இழக்கச் செய்தாள். அவனைத் தன் தலைக்கு மேலாக அரிசி மூட்டையைப் போலத் தூக்கி நிலத்தில்
பெண்கள் மிரண்ட மான்களைப் போல் செய்வதறியாது துள்ளினர். “ஆண்கள் எல்லாரும் எங்கே போய்விட்டார்கள்? வெளியே வாருங்கள்! சண்டை யல்லவா நடக்கிறது?’ எனச் சத்தமிட்டனர்.
அவளுடைய பிடி மிக இறுக்கமாக இருந்தது. சமாதுவை விட்டுவிடுமாறு ஆண்கள் கெஞ்சினர். “எங்கள் பணத்தை திருப்பித் தரும்வரை அவனை விடப்போவதில்லை, தராவிட்டால் ஜொங்கோ பொலிஸ் ஸ்டேஷன் வரை இவனை இழுத்துச் செல்வேன்!” என்று அவள் சத்தமிட்டாள்.
இதைக் கேட்ட, சமாதுவின் வளவில் வசிக்கும் முதியவர் ஒருவர் தன் வீட்டுக்குள் ஒடிச் சென்று சில நிமிஷங்களில் எண்பது ஸெடிகளுடன் வந்தார். பணத்தை அபீபாவின் உள்ளங்கையில் வைத்தார். ஒரு கை சமாதுவின் இடுப்பு வாரைப் பிடித்திருக்க, மறுகையின் விரல்களைப் பயன்படுத்தி வருமதியான

Page 22
ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறுநாவலை அடிப்பன
di.(5086оо6
அறிமுகம்
பொ.கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதி வருபவர். இவரின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘வாழ்வு வசப்படும்’ என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப் புக்களில் தாயகம், புகலிடம் என்ற இரட்டைச் சூழல் சார்ந்த படைப்புக்களை அவதானிக்க முடியும். அந்த வகை யில் பொ.கருணாகரமூர்த்தியும் தனது எழுத்துக்களைத் தந்திருக்கிறார். இங்கு புகலிட எழுத்துக்களின் முக்கிய போக்குகளில் ஒன்றாகிய பண்பாடு சார்ந்த விடயத்தை மட்டும் இப் பகுதியில் நோக்கலாம்.
கலாசாரம் - தமிழ்மணம் - தத்தளிப்பு
இலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் சமூகம், மொழி, வாழ்வியல் அம்சங்கள் சார்ந்து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக் கின்றது. தமிழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் பண்பாடு என்றும் கூறுவர். இவர்கள் முற்றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய பண்பாட்டுக்குள் கலந்து வாழ முற்படும் போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும் வேறுவேறானவை யாக அமைகின்றன.
இந்த வகையில் கருணாகரமூர்த்தியின் பல புனைவு களில் தமிழ்மணம் எதிர்கொள்ளும் கலாசாரத் தத்தளிப்பை அவதானிக்க முடியும். ‘வாழ்வு வசப்படும்’ என்ற குறுநாவ
2O கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 மா
 

குறித்த ‘வாழ்வு வசப்படும் DLU IT&bä5 6851T6OOTLg5
ஸ்வரன்
லிலும்; சிறுகதைகளான ‘பர்வதங்களும் பாதாளங்களும்’, “வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படுதல்’ ஆகியவற்றி லும் மிகத் தெளிவாக இந்தப் பண்பை அவதானிக்க முடியும். இக் கட்டுரையில் ‘வாழ்வு வசப்படும் குறுநாவல் கருத்திற் கொள்ளப்படுகிறது.
உண்மையில் தமிழ்மணம் என்பது தமிழ்வாழ்வைக் குறிப்பதாகவே அமைகிறது. அது தமிழ்ப்பண்பாட்டினால் கட்டமைக்கப்பட்ட சிந்தனையோட்டத்தையும் செயற் பாட்டையும் குறிப்பது. மிக நுண்மையாக நோக்கினால் அது தனது தமிழ் அடையாளத்தையே வெளிப்படுத்து கின்றது. இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற தேசமெங்கும் இன்னமும் சாதியையும், சமயத்தையும், துடக்கையும் தம் நினைவிலிருந்தும், வாழ்விலிருந்தும் அகற்ற முடியாது கட்டுண்டு கிடக்கின்றனர். இதற்குள் தான் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியலும் எழுதப்படாத விதியாக அமிழ்ந்திருக்கின்றது. இந்த நிலையில் முற்றிலும்; தமிழ், தமிழ்ப்பண்பாடு என்று வாழ்ந்தவர்கள் அந்நிய வாழ்வில் எதிர்கொள்ளும் தத்தளிப்புத்தான் இந்தக் குறுநாவலில் உள்ளது.
“ஏறத்தாழ எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத் தேசக் கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேசக் கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது. அத்வைதன் முதல் அலெக்ஸ் வரை பல்வேறு நிலைகளில் அதை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வெளிப்பாடு மூலம் தான் அவர்களுடைய குணச்சித்திரம் வெளிப்படுகிறது. கதாபாத்திரங்கள் மெல்லிய வேகமாக கோடுகள் மூலம் தீட்டப்படும் ஒவியங்களாக, சகஜமாகவும் வேகமாகவும் உருவாகும் விதம் இக் குறுநாவலின் மிக முக்கியமான குணம் என்று படுகிறது.”

Page 23
என்று எழுத்தாளர் ஜெயமோகன் இக் குறுநாவ லின் முக்கியத்துவம் குறித்து எழுதுகிறார்.
முத்துராசண்ணை, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன், சுருவில் ஆகிய இலங்கைத் தமிழர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த போது அவர்களை அந் நாட்டு அரசு அகதிகளாகக் கருதி அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து சமூக நல உதவிப்பணமும் கொடுத்து வாழ வழி செய்கிறது.
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த போது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இவர்கள் புலம்பெயர் கிறார்கள். ஒரு அறையில் இரண்டடுக்குக் கட்டில் அமைத்து 'ப' வடிவத்தில் ஆறுபேரை அங்கு தங்க ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களைப் போலவே ஏனைய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர், கானாக்காரரும் இதே போல அறைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இக் குறுநாவலில் அகதிகளை ஜேர்மனி நடத்துகிற விதம், தொழில் தேடுதலில் - தொழில் புரிதலில் உள்ள சிக்கல்கள், மேலைத்தேயக் கலாசாரத்தை எதிர்கொள்வதில் உள்ள தத்தளிப்புகள், தாயகக் குடும்பங்களின் நிலை, தனிப்பட்டவர்களின் பல்வேறு மனநிலைகள் ஆகியவை முதன்மையாகப் பேசப்படுகின்றன.
குறிப்பாக ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வாழ நேரிட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களின் சிந்தனை யோட்டங்களை அவர்களின் செயற்பாடுகளை இந் நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. இலங்கைத் தமிழரின் புலம் பெயர்வு 1980களில் இருந்தே முனைப்புக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஜேர்மனி போன்ற முற்றிலும் அந்நிய மொழி பேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் மணவோட்டங்களை இது எடுத்துக்காட்டுகின்றது. இதனை டி.சே.தமிழன் புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங் களை சொல்லும் ஆரம்பகால ஆவணம் என்று குறிப்பிடுவது முக்கியமான அவதானிப்பு.
“80களின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து ஜேர்மனிக்கு அகதிகளாய் அடைக்கலங்கேட்டு, ஒரே அறையில் தங்கியிருக்கும் ஐந்தாறு இளைஞர்களைப் பற்றிய கதை தான் இது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இந்தக் கதை எமது புலம்பெயர் வாழ்வின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணம் எனவும் சொல்லலாம். புலம்பெயர் வாழ்க்கை என்பது பொதுவான ஒன்றல்ல. நாம் புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப அவை வேறுபடுபவை. உதாரணமாய் கனடா, இங்கிலாந்து
இலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான சமூகம், மொழி, வாழ்வியல் அம்சங்கள் சார் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக்கின்றது. தப பண்பாடு என்றும் கூறுவர். இவர்கள் முற் பண்பாட்டுக்குள் கலந்து வாழ முற்படும் முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும்
 

போன்றவற்றுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கும், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர் களுக்கும், இடையிலான வாழ்க்கை என்பது வித்தியாச மானது. கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்த வர்களுக்கு, ஆகக் குறைந்தது, ஏற்கெனவே கற்றுக் கொண்ட, அடிப்படை ஆங்கிலத்தை வைத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முடிந்திருந்தது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவற்றுக்குப் போனவர்கள், மொழியிலிருந்து எல்லாவற்றையும் புதிதாகவே கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்களுடைய புலம்பெயர்வு எம்மைவிட வித்தியாசமானது மட்டுமன்றி, மிகவும் கஷ்டமானதும் கூட. எனவே ‘புலம்பெயர் வாழ்வு’ என்ற ஒற்றை வரிக்குள், எல்லோருடைய வாழ்வையும், பொதுவாகப் பார்க்கும் நிலையையும், நாம் மாற்றவும்
வேண்டியிருக்கிறது.”*
ஆசிரியர்; அத்வைதனை பிரதான பாத்திரமாக்கி கதையை நகர்த்தியுள்ளார். இதில் வரும் ஆறு பாத்திரங் களும் ஆறு வகையான மனவுணர்வு மற்றும் செயற்பாடு கொண்டவர்கள். ஒவ்வொரு காரணத்துடனும் புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
இவர்கள் வதியும் விடுதி நான்கு மாடிகளைக் கொண்டது. முதலாவதில் உலகின் ஆதித் தொழிலாகிய விபச்சாரம் மற்றும் மதுபாணச் சாலைகளும், மூன்றாவதில் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களும், நான்காவதில் நிரந்தர குடியிருப்பாளர்களாகிய ஜேர்மனியர்களும் வசிக்கின்றனர்.
இந் நாவலில் பல விடயங்கள் பேசப்பட்டாலும் கீழைத்தேய மரபில் வாழ்ந்தவர்கள் எதிர்கொள்ளும் கலாசார முரண்பாடு அதிகம் பேசப்படுவது நோக்கத்தக்கது. குறிப்பாக:
1. போதைப்பொருள் பாவனை 2. மதுப்பாவனை 3. போர்ணோ படங்களின் பாதிப்பு 4. பெண்களின் தொடர்பு
ஆகியவை இக் குறுநாவலின் பேசுபொருள்களில்
முக்கியமானவை.
“மொழிவழித்தனிமை, கலாசாரத் தனிமை, பாலியல் தனிமை என்று தனிமையின் வகைமைகளுக்குள்
சிக்கிச் சுழலும் அகதி வாழ்வு. அதிலும் அதீத பாலியல்
தனிமை காரணமாக பெரும்பாலான கதாபாத்திரங்கள்
பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் ழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், வேறுவேறானவையாக அமைகின்றன.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 21
*
مع يقع في " جمع قليلة
**

Page 24
பாலியல் குறித்த விடயங்களை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்தும் கதைப்போக்கு அகதிகளின் உளவியல் தாக்கத்தைக் காட்டுகிறது.”
நாவலில் வரும் ஈழத்தவர் ஆறுபேரின் கதையுடன் இணையாக பக்கத்து அறைகளில் வசிக்கும் பாக்கிஸ்தானி யர், கானாகாரர் ஆகியோருடன் கதையோட்டம் நகரு கின்றது.
இவர்களில் வயதில் மூத்தவரான முத்துராசண்ணை கடவுள் சிந்தனையும் அமைதியும் கொண்டவர். அடிதடி களுக்குப் போகாதவர். சமையல் வேலைகளுடன் அவர் பொழுது போய்விடும். அத்வைதன் கொஞ்சம் கோபக் காரன், அநீதிகளைக் கண்டு பொறுக்கமாட்டாதவன். காலையில் மாடிப்படிகளில் ஏறி பத்திரிகை போடும் வேலையை செய்பவன். இதனை திலகனும் செய்கிறான். ஆனால் அவன் ஒரு ஜாலிப்பேர்வழி. இக் குறுநாவலின் பேசுபொருள் திலகன் பாத்திரத்திற்கு ஊடாகவே அதிகம் சிலாகிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. மற்றவர்களில் சுருவில் ஒரு ஹோட்டலில் உறவினர் ஒருவர் ஊடாக கிடைத்த வேலையை செய்து வருபவர். மாதம் ஒரு தடவை சோசல் காசு பெறுவதற்காக இவர்களது அறையில் வந்து தங்குபவர். மற்றைய இருவரும் வயதில் இளையவர்கள், சகோதரர்கள்.
இந் நாவலில் மேலைத்தேய சமூகத்தில் வளர்ந்த இரண்டு இளம்பெண்களை அவதானிக்கலாம். அவர்களில் ஒருத்திக்கு பிள்ளையைப் பெற்று நல்ல விலைபேசி விற்றல் தொழிலாகிறது. மற்றவளுக்கு தனது கைச்செலவுகளுக்காக சோரம்போதல் உதவுகிறது. இவ்வாறன பெண்களின் தொடர்பு புலம்பெயர்ந்து அங்கு வாழ நேர்ந்த இளைஞர் களுக்கு கைகூடுகிறது. கறுப்பின ஆடவருடன் நட்புக் கொண்டு அவர்கள் மூலம் குழந்தை பெற்று விற்கும் ஒருத்தியாக சபீனா என்ற பெண் இக் குறுநாவலில் அறிமுகமாகிறாள். அவள் அத்வைதனுடன் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றை நோக்கலாம்.
“அத்வைதன் விளங்காமல் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்’
“நத்திங் ஆக்ஸ்டென்ரால். கர்ப்பம் தங்க வைத்துக் கொண்டு வந்தேன்’
“இந்தியக் குழந்தையில் அப்படி என்ன விசேஷம்?”
“சொக்கோ பிறவுண் குழந்தைகளுக்கு ஏக டிமாண்ட் தெரியுமோ? கண்ணடித்தாள்’
“இப்போ எங்கே குழந்தை?”
“போன கோடையில் Sylfக்குப் போயிருந்த போது ஒரு பணக்காரன் ஸ்வீகாரம் பண்ணிறேன் என்றான். கொடுத்திட்டேன். ஒன்றும் சும்மாவல்ல. அறுபதினாயிரம் டொய்ச் மார்க். இதைச் சம்பாதிக்க நான் பத்து வருஷம் மாடாய் உழைக்க வேணும். பார். இது ஒரு சிம்பிளான பிஸினஸ்.”*
இதே போல் இன்னொரு பெண் பற்றிய சம்பவமும்
22 கலைமுகம் 0 ஏப்பிரல் - ஜூன் 204

நாவலில் வருகிறது. பக்கத்து அறையில் வதியும் இலங்கைத் தமிழர் இரண்டு பேர் போதைவஸ்தும் போர்ணோவும் என அலைபவர்கள். பாடசாலை சென்று வரும் 14 வயதுடைய பள்ளி மாணவியை தம் அறைக்கு அழைத்து வந்து போதை ஊசியை அதிகமாகச் செலுத்தி அவளை பாலியல் தேவைக்கு உட்படுத்துகின்றனர். இறுதியில் அவள் இறக்கும் தறுவாயில் அவளைக் காப்பாற்றும் எண்ண மில்லாத அவர்களின் மனித மனமும், அதற்கு இடங் கொடாத சட்டங்களும் இந் நாவலில் காட்டப்படுகிறது.
இச் சம்பவத்தை அறிந்து அத்வைதன் கோபப்படு கிறான். அவர்களுடன் சண்டைபிடிக்க முற்படுகிறான். இறுதியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு பொலிஸில் அறிவித்தும் அவர்களின் சட்டம் அதற்கு இடங்கொடுக்காத நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசேட அம்புலன்ஸ் வண்டி வைத்தியர்களின் உதவியுடன் அவள் உணர்வற்ற ஆபத்தான நிலையில் மீட்கப்படுவதோடு நாவல் முற்றுப் பெறுகின்றது.
பாலியல் நடவடிக்கைகள் மேலைத்தேய வாழ்வில் திறந்து விடப்பட்ட கலாசார நிலையாக இருந்தாலும் இவர்களின் பார்வையில் அது ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்டதாகவே அமைகின்றது. இது சார்ந்த பல சிக்கல்களை அறை நண்பர்கள் எதிர்கொள்கின்றனர்.
கீழைத்தேய கறுப்பின ஆடவனை நண்பனாக்கிக் கொள்வதன் ஊடாக தான் சொக்கிளற் கலர் குழந்தை பெற்று அதனைநல்ல விலைக்கு விற்றுவிட விரும்பும் பெண் ஒருத்தி திலகனுடன் நெருங்கிப் பழகிய பின் தனது குழந்தைக்கு அப்பாவாக பதிவு செய்தால் போதும். தான் அந்தக் குழந்தையை பின்னர் நல்ல விலைக்கு விற்றுவிடுவேன் என்கிறாள். இது அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைகிறது. பத்திரிகை விநியோகிக்கப்போன இடத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் படுக்கைக்கு அழைக்கும் சந்தர்ப்பங்கள், முத்துராசன் ஒருமுறை ஜேர்மனியை சுற்றிப் பார்த்து போட்டோவுக்கு முகங் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு இளம் பெண் அவரை முத்தமிட்டுச் செல்லும் சந்தர்ப்பம், இன்னும் பல சம்பவங்கள். எல்லாம்; கீழைத்தேய ஒழுக்கவியலில் வாழ்ந்தவர்களை இரண்டக நிலைக்கு உட்படுத்துகின்றன.
“ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் வேற்று நாட்டவர்கள் அவர்கள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஒரு பகுதியையும் அவர்களின் சொந்தப் பண்பாட்டில் பெரும் பகுதியையும் இணைத்துக் கொண்டவர்களாய் உள்ளனர். இவ்வாறான வாழ்க்கை முறை அவர்கள் வாழும் நாட்டு மக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டதாக அமையும். அவர்களின் அவ்வகைப் பண்பாடு அந் நாட்டின் மொத்தப் பண்பாட்டில் ஒர் உட்பண்பாடாக அமையும்.”
என புலம்பெயர்ந்த தேசத்தின் உபபண்பாடு பற்றி கூறப்படுகிறது. இக் கூற்று ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இற்றைக்கு கால் நூற்றாண்டு கழிந்து விட்ட நிலையில் பொருத்தமாக இருக்கின்றது. ஆனால் இந் நாவல் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்ப நிலை குறித்தே

Page 25
பேசுவதனாலேயே மேற்குறித்த கலாசார தத்தளிப்பை இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்திருக் கின்றது.
மேலும் ஒரு சம்பவத்தையும் இங்கு எடுத்துக் காட்டலாம். அறை நண்பர்கள் ஒரு முறை கோவைத் தமிழர் ஒருவரை சந்திப்பதன் ஊடாக தமிழ்ப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவர் ஒரு சுரண்டல் பேர்வழியாக இந் நாவலில் காட்டப்படுகிறார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு அறை நண்பர்களுக்கு ஒரு டீவியும் டெக்கும் வாங்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றது. அது படிப்படியாக இவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து அறையினரும் தமிழ்ப்படம் பார்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப் பத்தை வழங்குகின்றது. காலநீட்சியில் ‘போர்ணோ' படம் பார்க்கும் நிலைக்கு இவர்களது பொழுது தள்ளப்படுகிறது.
இது போன்ற சம்பவங்களுக்கு நாவலில் இருந்து சில உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.
“படம் திடீரென முடிந்து “டீவி திரையிலிருந்து அறைக்குள் வெளிச்சம் பரவிய போது நிமலனும் முத்துராசா அண்ணையும் தத்தமது கட்டில்களில் தலையைச் சுற்றிப் போர்த்தபடி உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.”
“அறையின் மையமாகவிருந்த பதிவான மேசை யில் மூன்று பேர் காலடியில் பியர்க் குலையும், கையில் சிகரெட்டுமாக ‘ரம்மி ஆடிக்கொண்டிருந்தனர். கதவுக்கு எதிராக இருந்த கட்டிலில் ஒருவன் ஜேர்மன்காரி ஒருத்தியை போர்த்தி வைத்து முயங்கிக் கொண்டிருந்தான். அத்வைதன் 120,000 வோட்ஸ் மின்சாரத்தால் தாக்கப்பட்டு சுதாகரிப்பதற்குள் அவனையும் ரம்மியாட அழைத்தனர். அத்வைதன் வேறொரு சமயம் வருவதாகக் கூறிக்கொண்டு வெளியே பாய்ந்தான். அவனின் மனோஉணர்வுகளைத் துளியும் புரியாத சார்ளியின் அறையின்ர் ஒரு அரை மணிநேரமாவது ரம்மியாட வருமாறு கெஞ்சினர்.”
“இவங்கட செக்ஸ். ஒழுக்கம் பற்றிய பார்வையே வேறை. போய் பிரண்டோட ஒருத்தி ஒரு பார்ட்டிக்கு போறாள் என்று வையன். அவள் தாயே பில்லை (கருத்தடை)யும் எடுத்துக் கையில கொடுத்து விடறாளே?. இவங்களுடைய தியறிப்படி ஒழுக்கத்திற்கும் கன்னித்தன் மைக்கும் சம்பந்தமேயில்லை.”
தொகுப்பு
புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடியை முக்கியமாக இந் நாவல் எடுத்துக் காட்டு கின்றது. அத்துடன் இன்று புலம்பெயர் இலக்கியத்தில் அதிக அழுத்தம் கொடுத்துப் பார்க்க வேண்டிய விடயம் ‘தமிழ் அடையாளம்’. அது பண்பாடு சார்ந்து அவர்களின் வாழ்க்கை சார்ந்து எந்தவிதமான சரிவுகளை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இங்கு எடுத்துக்காட்டப் பட்டிருக்கின்றது. ஆனால் கால்நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் இங்கு குறிப்பிடப்பட்ட பலவற்றில் இன்று வாழ்ந்து வரும் புகலிடத் தமிழர்கள் புகலிடப்பண்பாட்டில்

தமக்குரிய உபபண்பாட்டைக் கொண்டு வாழந்து வருகின்றனர்.
மொழி, சமயம், திருமணம், பழக்கவழக்கம், பொழுது போக்கு, பாலியல் சார்ந்த பல விடயங்களில் எமது தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளுக்கு இருக்கக்கூடிய தனித்து வமான அம்சங்களோடு புலம்பெயர்ந்த நாட்டின் மொத்தப் பண்பாட்டில் உப பண்பாட்டுக் கூறு ஒன்றினையும் உருவாக்கி இன்று வாழ்ந்து வருகின்றனர். எவ்விதத்திலும் முற்றுமுழுதாக தமிழ்ப்பண்பாட்டு மனம் என்ற நிலை மாறி ஒத்துப்போகக்கூடிய அல்லது மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இன்று புகலிடத் தமிழர்கள் இருக்கின்றனர். அது உணர்வு பூர்வமான மொழி வழியான தமிழ் அடையாளமாக முற்று முழுதாக அல்லாமல் வெறும் தமிழ் அடையாளமாகவே மூன்றாம் தலைமுறை யினரிடத்தில் கையளிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய மொறிசியஸ் நல்ல உதாரணமாகும்.
எனவே கருணாகரமூர்த்தியின் இக் குறுநாவலா னது இலங்கைத் தமிழரின் ஆரம்பகால வாழ்க்கைச்சூழலை எடுத்துக் காட்டும் ஆவணமாக திகழ்கின்ற நேரத்தில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளக் கூடிய கலாசாரத் தத்தளிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கையில் அவர்களின் எழுத்துக்களில் தமிழ்ப்பண்பாடு அல்லது தமிழ் அடையாளம் என்பதுதான் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்பதும் இக் குறுநாவலூடாக வலியுறுத்தப்படு கின்றது.
அடிக்குறிப்புக்கள்
1. ஜெயமோகன். 1996, இவை என் முகங்கள்’ ஒரு அகதி
உருவாகும் நேரம். சென்னை, ஸ்நேகா ப, 07 2. டி.சே.தமிழன்: 'வாசிப்பும் சில குரல்களுக்கான
எதிர்வினையும்’ http//dithamilan.blogspot.com/2009/06/blog-post.html 3. வெற்றிச்செல்வன்.ப: 2009, ஈழத்தமிழர் புகலிட வாழ்வும்
படைப்பும், சென்னை சோழன் படைப்பகம், ப, 228 4. கருணாகரமூர்த்தி 1996, ஒரு அகதி உருவாகும் நேரம்,
ஸ்நேகா, சென்னை, ப, 59 5. பக்தவத்சலபாரதி: 1999 (விரிவாக்கி திருத்திய பதிப்பு), பண்பாட்டு மானிடவியல், சென்னை, மணிவாசகர் பதிப்பகம், ப. 169 6. மேலது 4: ப. 99 மேலது 4: ப, 75 8. மேலது 4: ப, 125
'கலைமுகம் சஞ்சிகைக்கு உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய முகவரி: ஆசிரியர், 'கலைமுகம் திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 23

Page 26
பறவையின் அழுகுரல்
உன் மென்னுடல் நீதிறந்: தடவுதற்காக அதிசய பறவையின் - காத்திரு இறகினைப் பிடுங்குகின்றேன்.
உன் பு குருதி வடியும் யாவும் . பறவையின் - என்னை அழுகுரல் செவியில் செல்கின் அனுங்கலாய்க் கேட்கின்றது.
என் கா உன் ஆனந்தச் சிரிப்பில் பறவை அழுகுரல் - - LDL'Gib
அமிழ்ந்து போகிறது. u6)LDTu
கனவுக
இவளின் கனவுகள் இருப்பின் சுவடுகளை பற்றி நிற்கின்றன.
கனவுகள் வேர்பரப்பி வாழ்வின் ஆழம்வரை ஊடுருவி நிலைக்கின்
இவளின் கனவுகளுக் அந்திப் பூக்கள் - நித
கட்டியம் கூறுகின்றன
இரவுக் கோட்டையின் கதவுகள் திறக்கும் ே வரவேற்கும் இராஜகு
புரவியின் கடிவாளம்,
இவள்கையின் அதிக பறைசாற்றி நிற்கும்.
24 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 பா
 
 

து காட்டும் த்திற்காய் நக்கின்றேன்.
லன்கள்
ாக் கடந்து ன்றன.
தில் இப்போது பின் அழுகுரல்
க் கேட்கிறது.
sளில் மட்டும் வாழும் வயண்
இவளின் இராஜயத்தில்
TÜ நகங்கள் பிடுங்கப்பட்ட கைகளுடன் ஆண்கள், அந்தரங்கத்தை கீறமுடியாதபடி உலா வருகின்றனர்.
இவள் சுட்டும் வழியிலே
ாறன. பணி செய்யக் காத்திருக்கும்
ஏவலாட்கள்:
காய்
மும் அகலிக்கும் கால்கள்கூட
; இவளின் அனுமதியோடுதான்.
சேவல்களின் கூவல்களில்
566 நட்சத்திரப் பூக்கள்
மாரன். உதிர்க்கின்ற பொழுதில்,
சூரியனின் முட்கதிர்களின் தகிப்புடன் -
ாரத்தைப் இவளின் கனவுகள் கலையும்.

Page 27
இதிகாச காலத்தில் தொடங்கி, புராண காலத்தைக் கடந்து, சரித்திர காலம் வரை உயிரைப் பணயம் வைத்து ஊர் ஊராக, நாடுவிட்டு நாடாக, ஒடிக் கொண்டிருந்த வர்கள் யூதர்கள். அத்தகைய ஒட்டத்தின் ஒரு கட்டம்தான், ஏன் ஆரம்பக் கட்டம் என்று கூடக்கூறலாம், யூதர்கள் மோசேசின் தலைமையில் எகிப்தில் இருந்து நைல்நதியைக் கடந்து பலஸ்தீனிய மண்ணில் கால் பதித்த அந்த வேதாகம வரலாறு. கானான் என்று அழைக்கப்பட்ட அந்த ஒரு சிறிய நிலப்பகுதியில் வாழ்ந்தவர்களே யூதர்கள். இஸ்ரேல் என்ற ஒரு தனிநாடு 1948இற்கு முன்னர் இருந்ததாகச் சரித்திரமே இல்லை. பலஸ்தீன் என்ற பரந்த பிரதேசத்தில் இருந்த ஒரு சிறிய நிலப்பரப்பே இஸ்ரேல். இங்கே தான் யூதர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் மதம் யூதம்; அவர்கள் கடவுள் பெயர் ஜெகோவா; அவர்கள் பேசிய மொழி ஹிப்ரு, யூதேயா இஸ்ரேலின் புராதனப் பெயர்.
பலஸ்தீன் அராபிய மண்ணில் அமைந்துவிட்ட ஒரு பரந்த பிரதேசம். அங்கே வாழ்ந்தவர்களே பலஸ்தீனிய அராபியர்கள். பலஸ்தீன் என்பது வடக்கே சீரியா, லெபனான் தொடங்கி, தெற்கே எகிப்தின் சில நிலப்பரப்பு வரை நீண்டதொரு பிரதேசம். அராபிய மண்ணின் ஆதிவாசிகளே இந்தப் பலஸ்தீனியர்கள். பலஸ்தீனிய
8gb 6olgays)6ğ
geyogy
மண்ணின் பழங்குடி இனத்தவர்களாக, கலை கலாசார வளர்ச்சியற்றவர்களாக வாழ்ந்து ரோமானியர்களாலும், கிரேக்கர்களாலும் ஆளப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்தப் பலஸ்தீனியர். இவர்களும் சிலை வழிபாட்டில் திளைத்து, பலவிதமான சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். பொதுவாக அந்தக் கால கட்டத்தில் அராபிய இனம் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போயிருந்தது.
சரித்திரத்தின் சுழற்சியில், கால ஓட்டத்தின் வேகத்தில் என்றும் எண்ணெய் சுரக்கும் இந்த வெண்ணிற மண், இன்று இரத்தம் சுரக்கும் சிவந்த மண்ணாக மாறிக் கொண்டிருக்கும் வரலாற்றுக் கதையே இன்றைய பலஸ்தீனிய - இஸ்ரேல் பிரச்சினை.
யூதர்களின் மத நூலான ‘தோரா' வினையும்; கிறிஸ்தவர்களின் மதநூலான ‘வேதாகமத்தையும்’ (Bible), முஸ்லிம்களின் மத நூலான ‘குறானை'யும் சற்றே புரட்டிப்பார்க்கின், அதன் பக்கங்களுக்குள் இந்த இஸ்ரேல் - பலஸ்தீன் பிரச்சினையின் மூல வேர் ஒரளவு புதைந்திருப்பதை நாம் காணமுடியும். ஆபிரகாமுக்கு எகிப்திய பெண்மணி ஆகார் பெற்றெடுத்த மகன் இஸ்மாயிலுக்கும், அதே ஆபிரகாமுக்கு யூதப் பெண் சாரா பெற்றெடுத்த மகன் ஈசாக்குக்கும் இடையில் ஏற்பட்ட
 

அன்றைய முரண்பாட்டின் தொடர்ச்சிதானோ இது என்று கூட நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒரு யூதனாகிய ஈசாக்கின் பிறப்பு, அன்று இஸ்மாயிலை வீட்டை விட்டுத் துரத்திய வரலாற்றின் தொடர்ச்சிதானோ இது என்று கூட நாம் சிந்திக்கலாம். இந்த இஸ்மாயிலின் சந்ததியினர் தான் அராபியர்கள், ஈசாக்கின் வழி வந்தவர்கள் தான் யூதர்கள்.
யூதர்களின் பிரதேசம் எனக்கூறப்படும் யூதே யாவை ஆண்ட மன்னர்களில் ஒருவன் தான் ஏரோது. அவன் காலத்தில் தான் யூத மதத்திற்கும், யூத குலத்திற்கும் முதலும், முக்கிய சவாலுமாகக் கருதப்பட்ட ஒருவரின் பிறப்பு யூத குலத்திற்குள்ளேயே இடம்பெற்றது. அவர் தான் நசரேத்தூர் இயேசு தீவிர யூத மதவாதிகளின் முதல் எதிரி, “தேவகுமாரன் நான்’ என்றார் இயேசு; “இல்லை இவன் தேவ தூஷணம் பேசுகிறான்” என்றனர் யூதர்கள். அன்றைய உரோமை ஆளுநன் பிலாத்து முன் சென்று நசரேத்தூர் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர். அவ்வாறே அவரை சிலுவையில் அறைந்து கொன்றனர். ஆனால் இறுதியில் வென்றதோ இயேசுவின் கொள்கைதான். தீவிர யூத மதவாதிகள் திகைத்தனர். யூதர்கள் எந்த ரோமானியரை தங்கள் முதல் எதிரியாகக் கருதினார்களோ, அந்த ரோமானிய உலகமே
பி.எஸ்.அல்பிரட் கிறிஸ்தவமாக மாறிய பொழுது, யூதர்களும், யூத மதமும் மாபெரும் எதிரலைகளை சந்திக்க வேண்டிய சரித்திரம் ஒன்று உருவாகியது.
ரோமானிய சக்கரவர்த்தி கொன்ஸ்ரன்ரைனின் கிறிஸ்தவ மதமாற்றம் முழு யூத இனத்தையுமே கலக்கியது. பழமைவாத யூதர்களையும், யூத மத குருக்களையும் நிலை குலைய வைத்தது. கிறிஸ்தவம் என்ற புதிய அலைக்கு முகம் கொடுக்க முடியாமல் யூதம் திண்டாட வேண்டியதாயிற்று. கி.பி 300ஆம் ஆண்டளவில் கிறீஸ், சைப்பிரஸ் வடக்கு, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வசித்த யூதர்களே கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். ஐரோப்பாவையே
ஆட்கொண்ட இத்தகைய கிறிஸ்தவப் புரட்சி யூதர்களை ஸ்பெயின், ரஷ்யா, போலந்து, ஜேர்மனி போன்ற தேசங்களுக்கு ஒட வைத்தது. யூதர்களின் இந்த நாடோடி வாழ்க்கை 1948ஆம் ஆண்டு மே 14இல் பிரித்தானியர் பலஸ்தீனத்தைக் கூறுபோட்டு அதன் ஒரு பகுதிக்கு இஸ்ரேல் என்று பெயரிடும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது.
இவ்வாறு யூத மண்ணில் சரித்திரம் மாறிக்கொண் டிருந்த ஆதி வரலாற்றின் அடுத்த கட்ட நகர்வு பலஸ்தீன் அராபிய மண்ணில் நிகழ்கின்றது. யூதர்கள் அறிவிலும்,
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 25
نقولة في بيتي قة في 1 الها" ஜப்பாஐழ், "

Page 28
ISRAEL with the WEST BANK, GAZASTRIP, AND GOLAN HEIGHTS
Nationas capitai tístifict (fetoz centre
łaternationa bordaty Bouexiary of former Palestine . ܫ Ršakiate خانم Affristice Parrarestion tine Netanyag 3äkärin
*stifictimskoz} bourdary (ENigÁt.)
Herziya:
‘’E:... Avivif : Tel Aviv-Yafo8
3at Yáno
i
Beersheba soul 筠
二傘 ః X
༽
K.
g
مجسمبر
ஆற்றலிலும், கலை, கலாசார பண்பாட்டிலும் வல்ல வர்களாகத் திகழ்ந்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில் பலஸ்தீன் பழங்குடி மக்களோ கல்வி கேள்வி யற்றவர்களாய், கலை கலாசாரப் பண்பாடற்றவர்களாய் உண்பதும், உறங்குவதுமாய் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவின் பிறப்பால் யூதேயாவில் ஏற்பட்ட மதப்புரட்சியின் 07 நூற்றாண்டுகளின் பின்னர் அராபிய மண் மக்காவில் முகம்மதுநபிஅவர்களின் உதயம் அராபிய சரித்திரத்தையே மாற்றியமைத்தது. இந்த மாற்றத்தில் பழமைவாத யூதரும், யூத மத குருக்களும், திண்டாடித் திணறிய வரலாற்று நிகழ்வும், பின்னர் அதில் இருந்து மீண்ட இன்றைய யூதர்களின் சாணக்கிய நகர்வும், மதம் - புரட்சி - போர் - அரசியல் - சாணக்கியம் என்பதனை காய்தல் உவத்தல் இன்றி கற்பதற்கோர் வரலாற்றுப் பாடமாக அமைகின்றது.
300இற்கு மேற்பட்ட கடவுளர்களை சிலையாக வணங்கி வந்த அராபிய இனத்தை “உருவமற்ற எல்லாம் வல்ல அல்லா ஒருவனே இறைவன்’ என்றும் அதுவே இஸ்லாம் என்றும் உணர வைத்து அராபியர்களின் சரித்திரத்தையே மாற்றியமைத்தவர் அண்ணல் முகம்மது நபி அன்று கிறிஸ்துவைதீவிர மதவாதிகள் எதிர்த்தது போல இங்கும் முகம்மதுநபிஅவர்களை ‘குறைகிகள்’ எனப்படும் வர்த்தக சமூகத்தினர் எதிர்த்தனர்.
குறைகிகளின் வன்முறைக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் மதம் மாறிய அராபியர்கள் கிறிஸ்தவ நாடாகிய அபிசீனியாவுக்கு இடம்பெயர்ந்தனர். அதன் இன்றைய பெயர் எத்தியோப்பியா. முஸ்லிம்களின் முதல் இடம்பெயர்வும் இதுவே தான்.
26 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 
 

முகம்மது நபியும் இதே எதிர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஓடினார். அவர் அங்கு ஒய்ந்து இருக்கவில்லை. கி.பி 622இல் தானே தலைமை வகித்து மக்கா மேல் படையெடுத்தார். வெற்றி கொண்டார். எனவேதான் முகம்மது நபி அவர்களை இறை தூதராக மட்டுமல்லாது இனத்தைக் காக்க வந்த போர் வீரராகவும், ஆட்சியாளராகவும் பார்த்தார்கள் அன்றைய அராபியர்கள்.
குறான் கூறுகின்றது; முகம்மதுநபிக்கு முதல் வந்த ஈசாநபியே இயேசு என்று. நசரேத்தூர்இயேசுவோதானே இறைமகன் என்றார். முகம்மது அவர்களோ தான் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி நபி' என்றார்.
மோசேக்கு இறைவனால் அருளப்பட்டது 10 கட்டளைகள்’.
முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்டது 'குறான்’.
இயேசுவின் போதனைகள் நற்செய்தி’ எனப் படுகின்றது.
முகம்மது நபிஅவர்களின் போதனைகள் ‘ஹதீஸ்’ என அழைக்கப்படுகின்றது.
எனவே யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இந்த மூன்று மதங்களும் இப்ராகீம் என்கின்ற ஆபிரகாம் பற்றி யும், மூசா என்கின்ற மோசேயைப் பற்றியும், ஈசா என்கின்ற இயேசுவைப் பற்றியும் பேசும் அதே வேளையில் புனித நகர் எனச் சரித்தரம் கூறும் ஜெருசலேம் பற்றியும் பேசுகின்றன. ஆம்! ஜெருசலேம்; பலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினையின் மையம். இந்தப் பாலைவன மண்ணில் தோன்றிய மூன்று மதங்களிற்கிடையிலான முறுவலுக்கும், முரண்பாட்டிற்கும் தளமாக இருப்பது இந்த ஜெருசலேம்தான்.
தொடக்கத்தில் யூதர்களாலும், ரோமானியர் களாலும், கிறிஸ்தவர்களாலும், எகிப்து நாட்டு பைசாந்தி யர்களாலும் ஆளப்பட்டுக் கொண்டிருந்த நகரமே ஜெருசலேம். கி.மு 950 இல் சாலமோன் மன்னனால் கட்டப்பட்ட மாபெரும் தேவாலயத்தை தன்னகத்தே கொண்டு சிறப்புடன் விளங்கிய புனிதத்தலம் ஜெருசலேம். காலகதியில் இடிபாடடைந்தாலும் மன்னன் ஹெரோத் என்பவனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இறை மகன் இயேசுவின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய இப் புனிதத் தலம், கி.பி 70இல் ரோமானியரின் தாக்குதலுக்குள்ளாகி, மீண்டும் இடித்து நொறுக்கப்பட்டது. ஏன் முகம்மது நபி அவர்கள் கூட "ஜிப்ரில்’ என்ற தேவதூதனின் வழி காட்டலில் மதீனாநகரின் மேலாகப் பறந்து ஜெருசலேத்தை சென்றடைந்ததாக இஸ்லாம் கூறுகின்றது.
இன்று இந்த ஜெருசலேம் யாருக்குச் சொந்தம், யூதர்களுக்கா?, இஸ்லாமியர்களுக்கா? அன்றேல் கிறிஸ்த வர்களுக்கா? இதற்கு விடை காணும் போட்டிப் பரீட்சையே - இஸ்ரேல் - பலஸ்தீன் பிரச்சினை.
தொடக்கத்தில் பலஸ்தீனிய அராபியர் ஜெருசலேம் பற்றிச் சிந்திக்கவேயில்லை. ஆனால் கி.பி 638இல்

Page 29
இஸ்லாமிய சக்கரவர்த்தி உமர் முதன் முதலாக அங்கே காலடி எடுத்து வைத்தார். அப்பொழுது பலஸ்தீனிய அராபிகள் மகிழ்ச்சி கொண்டனர்.
தொடக்கத்தில் இந்த உமர் மாற்று மதத்தினர் மீது மனிதாபிமானமாக நடந்து கொண்டார். இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மூவருமே இப்ரகாமின் - ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்பதால் சண்டை யின்றி சமாதானமாக வாழ வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். ஆனால் இத்தகைய பரந்த சிந்தனை பலகாலம் நீடிக்கவில்லை. அன்று யூதர்களோடு இவர்கள் ஒரளவு சமாதானமாக வாழ முயன்றாலும்; கிறிஸ்தவர் களுடன் மோதவே செய்தார்கள். பலஸ்தீனிய முஸ்லிம்கள் யூதர்களுடன் சமாதானமாக இருக்க விரும்பியும் கூட யூதர்கள் அவர்களுடன் நல்லுறவைப் பேண முயலவில்லை. யுத்தத்தில் வெற்றி கண்டு ஜெருசலேமை கைப்பற்றிய உமர் மாபெரும் ஜெருசலேம் தேவாலயத்தில் தொழுகை செய்ய மறுத்தார். அந்த அளவுக்கு அவர் மாற்று மதத்தினரை மதித்தார். ஆபிரகாமின் வழித்தோன்றல்களாகிய நாம் சண்டையின்றி வாழ வேண்டியது அவசியம் என்று எடுத்துக் காட்டினார். ஜெருசலேம் நகரில் இருந்து யூதர்கள் கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதும், கிறிஸ்தவர்களையும், யூதர்களையும், முஸ்லிம்கள் வெளியேற்றுவதும் தொடர் வரலாறாகவே இருந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கத்தைய நாடுகளில் யூதர்கள் ஒடுக்கப்பட்ட போது, இஸ்லாமிய கலீஃபாக்கள் அவர்களை கெளரவமாக நடத்தியதாகவும் சரித்திரம் சான்று பகர்கின்றது.
அராபியப் பாலைவனம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சிக்குள் உட்பட்டது எப்படியோ, அதே போன்றே ஐரோப்பிய நிலப்பிரப்பின் பெரும்பகுதி கிறிஸ்தவர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. யூத மதத்தின் சுத்திகரிக்கப்பட்ட வடிவமே கிறிஸ்தவம் என்ற கருத்தின் அடிப்படையிலேயே கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. மன்னரையும்; கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய நிலப்பரப்பில் ஒன்றே கடவுள், ஒருவனே தெய்வம் என்ற கிறிஸ்தவக் கோட்பாடு மக்கள் மனதைக் கொள்ளை கொண்டதனால் ஐரோப்பாக் கண்டமே கிறிஸ்தவத்திற்கு மாறி மாபெரும் சக்தியாக உருவெடுத்தது. ஆதிக் கிறிஸ்தவர்களின் தலை கொய்யப்பட்ட இடங்களி லெல்லாம் பின்னர் கிறிஸ்தவம் தலைநிமிர்ந்து நின்றது. 10ஆம்நூற்றாண்டளவில் ஐரோப்பாக் கண்டமே கிறிஸ்தவ அலையில் மூழ்கியது.
மன்னர்கள் ஒரு புறம், மதத் தலைவர்கள் மறு புறம், இவர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அதியுயர் பாப்பரசர் இன்னொரு புறம் என ஒரு கிறிஸ்தவப் பேரரசு உருவாகிக் கொண்டிருந்த பூதாகரமான நிலைமையைக் கண்டு யூத குலம் கலங்கியது; பலஸ்தீனம் பதை பதைத்தது; அராபிய முஸ்லிம்கள் அங்கலாய்த்தனர். இந்தச் சூழ்நிலையில் அந்தஸ்திலும், அறிவிலும், புத்தாக்கம் பெற்ற ஐரோப்பிய கிறிஸ்தவர் சிலர் ஒர் ஆன்மீகச் சுற்றுலாவுக்குப் புறப்பட்டனர். அதுவும் இஸ்லாமியர் வசம் உள்ள ஜெருசலேம் நகருக்கு. அங்கே யூதர்கள் மட்டுமல்ல,

தம் சகோதரக் கிறிஸ்தவர்களும் அடக்கி ஒடுக்கப் படுவதைக் கண்டு உள்ளம் கொதித்தனர். கருவறை தொட்டு கல்வாரி வரை கிறிஸ்து நடந்து, வாழ்ந்து, இறந்த பூமியில் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுவதா? என்ற கோஷம் ஐரோப்பிய உலகையே அதிர வைத்தது. அன்றைய திருச்சபையை உலுக்கியது. பாப்பரசர் 2ஆவது ஏர்பன் அவர்களின்; “புறப்படுங்கள் போருக்கு! அதற்குப் பரிகாரமாக உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும், மோட்சம் உங்களுக்கே, உடலை மண்ணுக்கும் உயிரை கிறிஸ்த வத்திற்கும் கொடுங்கள்’ என்ற உணர்ச்சி மிக்க சொற்பொழி வில் உருக் கொண்டதுதான் 11ஆம் நூற்றாண்டில் ஆரம் பமான “சிலுவை யுத்தம்’.
இவ்வாறு 1095 இல் ஆரம்பமான சிலுவை யுத்தம் 1250 வரையிலான 150 ஆண்டுகள் ஐரோப்பாவை இரத்தக் களரியில் ஆழ்த்தியது. அன்று சிலுவையைச் சுமந்த இயேசு ஒருவர் மட்டுமே இரத்தம் சிந்தினார்; ஆனால் பின்னரோ பல இலட்சம் பேர் தூக்கிய சிலுவையால்; பல்லாண்டுகள் தொடர்ச்சியாக அங்கே இரத்த ஆறே ஒடியது. அந்தச் சிவப்பு இரத்தம்; யூத, இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் கலப்பு இரத்தமாக ஒடியதே கவலைக்குரிய சரித்திரமாக மாறியது. ஜெருசலேம் நகரோ விழுவதும் எழுவதுமாக இருந்தது. ஜெருசலேம் யூதர்களுக்கோ, ஆபிரகாமின் பூர்வீகம்; கிறிஸ்தவர்களுக்கோ, அது இயேசுவின் தாயகம்; முஸ்லிம் களுக்கோ அது விண்ணுலகம் சென்ற அண்ணல் முகம்மது நபி வந்து இறங்கிய புனிதத் தலம். இந்த மும்முனைப் போராட்டத்தில் முழுதாகத் தாக்கப்பட்டவர்கள் யூதர்கள். ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவம் எழுந்து நிற்க, யூதம் விழுந்து கொண்டிருந்தது. சொந்த இடத்தில் இருந்து
eeYYYzLLLzYS yiyyyyiy
擂拿幽墅警德彦蕊慈组赛 A&3姆寮扮20影&
ဒိင္မ်ားႏွင့္ပင္အစ္ထိဒံအိဒံခိင္ငံမ္ဘိဒ္ဓိ
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 27

Page 30
விரட்டப்பட்ட யூதர்கள் வந்த இடத்திலும் தாக்கப் பட்டார்கள். அங்கிருந்தும் விரட்டப்பட்டார்கள். முழு யூத இனத்தின் நன்மைக்காக ஒருவன் இறப்பது மேல் என்ற யூத மத குருக்களின் கோரிக்கைக்காக அன்று கொல்லப் பட்டவர் தான் நசரேத்தூர் இயேசு, ஆனால் அந்த ஒரு இயேசுவின் கொலைக்காக முழு யூத இனமே அழிய வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்ததே பின்னைய சரித்திரம். - அதுவே சிலுவை யுத்தம்.
முதன் முதலில் யூதர்களை வெளியேற்றிய ஐரோப்பிய நாடு ஸ்பெயின். அதன் பின்னர் போாச்சுக்கல். இந்த நிலையில் எங்கே ஒடுவது, எப்படி வாழ்வது என்று திக்குத் தெரியாது திண்டாடிய யூதர்களுக்கு மீண்டும் கை கொடுத்தவர்கள் யூத மதகுருமார்களே தான். அவர்கள் இறை தூதர்களாக மட்டுமல்ல, இனத்தின் காவலர் களாகவும் இருந்தார்கள். அறிவிலும், ஆற்றலிலும், சாணக்கியத்திலும் யூத இனம் ஒரு தனித்துவம் மிக்க இனம் என்பதை அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன; தோல்வியிலும்
துவளாதவர்கள் யூதர்கள்.
பாப்பரசர்கள் தொடக்கம்; ஜேர்மனிய அரசன் பிரட்ரிக் பார்பறோசா, இங்கிலாந்து மன்னர் 1ஆம்றிச்சாட், பிரான்சியப் பேரரசன் பிலிப் அகஸ்தாஸ் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடியும், ஜெருசலேமைக் கைப்பற்ற முடியாமல் போனதே அவர்களின் துர் அதிர்ஷ்டம். சுல்தான் சலாவுதினின் எதிர்ப்பினை சமாளிக்க முடியாத ஐரோப்பிய படையணிகள் திருப்பிச் செல்லும் வழியில், தோல்வியின் விரக்தியில் யூதர்களையே கொன்று குவித்தார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான ஜெருசலேமை நோக்கிய இத்தனை படையெடுப்புக்களிலும், யூதர்கள் முஸ்லிம் களுடன் இணைந்து நின்றார்களா என்பதற்கு எத்தகைய சரித்திர சான்றுகளும் இல்லை. பலஸ்தீனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போராடிய வேளைகள் எல்லாம், அன்று பாராமுகமாக பதுங்கியிருந்தவர்கள் யூதர்கள் என்பதை இன்றும் பலஸ்தீனம் மறக்காதுதான்.
பலஸ்தீனத்தை விட்டு திக்குத்திக்காக ஓடிய யூதர்கள், ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் இருந்து அடிக்கடி துரத்தப்பட்டாலும் கூட, தம் இனத்தையும், தம் நிலத்தையும், அத்துடன் ஜெருசலேத்தையும் நெஞ்சில் சுமந்த வண்ணமே சென்றார்கள். இவ்வாறு சென்றவர்களை ஐரோப்பிய நாடுகள் சில மீண்டும் துரத்த பெரும் பாலானோர் மத்தியாசிய முஸ்லிம் நாடுகளுக்கு செல்வதே பாதுகாப்பு எனக்கருதி அங்கே சென்றனர். இவ்வாறு சென்றவர்களை துருக்கியின் அன்றைய கொன்ஸ்டான் டிநோபிள் நகரம்தான் அன்புடன் வரவேற்றது. அதாவது ஒட்டோமான் பேரரசின் கீழ் யூதர்கள் சற்றே பாதுகாப்பாக வாழ முடிந்தது. அதே காலகட்டத்தில், அதாவது 1512இல் பலஸ்தீன் முழுவதும் துருக்கிய சுல்தானின் ஆளுகையின் கீழ் வந்தது. அங்கே தான் யூதர்களும் சற்றே நிம்மதியாக வாழ முடிந்தது மட்டுமல்ல, பலஸ்தீனத்தை நோக்கிய
28. கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 மா

அவர்கள் வருகையும் காலகதியில் கணிசமான அளவில் பெருகிக் கொண்டே வந்தது. வந்த இடத்தை வளப்படுத் தாவிட்டாலும், தம்மையும் தம் இனத்தையும் அங்கே நிலைப்படுத்துவதில் நிபுணத்துவம் மிக்கவர்கள் யூதர்கள். யூதர்களை துரத்திக் கொண்டேயிருந்த அந்தப் 16ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கண்டத்தில் ஏற்பட்ட இன்னொரு மாபெரும் மதப்புரட்சி ஐரோப்பிய சரித்திரத் தையே ஒரளவுக்கு திசைதிருப்பியது. அது தான் கிறிஸ்தவ மதத்திற்குள் எழுந்த மாட்டின் லூதரின் தீவிர எதிர்ப் புரட்சி. வுட்டன் பேர்க் தேவாலய கதவுகளில் ஒட்டப் பட்ட மாட்டின் லூதரின் கேள்விக் கணைகளே அதன் ஆரம்பம். கிறிஸ்தவ மதத்திற்குள் இடம்பெற்ற இந்த மதப் புரட்சி, யூத இனத்தின் மீது இதுவரை ஐரோப்பிய கிறிஸ்தவ உலகம் காட்டிய எதிர்ப்புணர்ச்சியை திருப்பியது. கிறிஸ்த வர்களோ புதிய மதப்புரட்சியாளர்களாகிய புரட்டஸ் தாந்தர்களுடன் போராட, புரட்டஸ்தாந்தர்களோ யூதர்களை விரட்டியடிப்பதிலேயே மும்முரமாக நின்றார் கள். 1543இல் மாட்டின்லூதரால் வெளியிடப்பட்ட Of the Uews and Their Lies என்ற பகிரங்க கடிதம் புரட்டஸ் தாந்தர்களின் கண்களுக்கு யூதர்களை ஜென்ம விரோதி களாகக் காட்டியது. எனவே எந்த ஐரோப்பிய நாட்டிலும் தாங்கள் பாதுகாப்பாக வாழ முடியாது எனக் கண்ட யூதர்களுக்கு இறுதியில் பாதுகாப்பான ஒரு பூமியாகத் தெரிந்தது பலஸ்தீனமே. அது மட்டும் அல்லாது கொசாக் (Cossack) என அழைக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய புரட்சியாளர்களால் யூத இனம் சித்திரவதைக்குள்ளானது.
இந்த நிலையில் 16ஆம் நூற்றாண்டிலேயே கூட்டம் கூட்டமாக ஐரோப்பாவை விட்டு பலஸ்தீனத்தை நோக்கி யூத இனம் நகரத் தொடங்கியது. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டு வரை பலஸ்தீன் ஒட்டோமன் துருக்கியப் பேரரசின் ஆட்சியின் கீழேயே இருந்தது. துருக்கிய சுல்தான் ஒரளவு தாராளமனப்பான்மையுடையவராக இருந்த காரணத்தால் ஏராளமான யூதர்கள் பலஸ்தீனத்திற்குள் புகுந்தார்கள்.
எந்த யூதனும் அவன் எங்கு சென்றாலும், தான் ஒரு யூதன் என்பதையும், தனக்கென ஒரு சொந்த மண் உண்டு என்பதையும், மறக்கவும் மாட்டான். அதனை வெளிப் படுத்தத் தயங்கவும் மாட்டான். அவன் சிந்திய இரத்தமும், வியர்வையும், அவன் அனுபவித்த சித்திரவதையும், சிறைக்கூடமும், அவன் சுவாசித்த நச்சுக் காற்றும், நரக வேதனைகளும், தன் இனம் இன்றில்லா விட்டாலும் நாளை நிலையாக வாழ ஒரு நிலம் தேவை என்ற தேடலுக்கு அவனை உந்தித்தள்ளியது. அதனை அடைய அவன் வீரத்தைவிட விவேகத்தையும்; சாவைவிட சாணக்கியத்தையும், அராஜக மந்திரத்தைவிட இராஜதந் திரத்தையும் கையாண்டு அடுத்து வரும் நூற்றாண்டுகளில் அவன் முகம் கொடுத்த அரசியல் சதுரங்கத்தில் எவ்வாறு காய்களை நகர்த்தினான் என்பதுதான்.
(தொடரும்)

Page 31
ஒவியர் அ.மற்குவி ஒவியங்களின் abs
மிதுலா
திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலாமுற்ற யாழ்ப்பாணம்) அமைந்துள்ள ஒவியக்கூடம் கடந்த ஆண்டு திகதி முதல் செயற்படத் தொடங்கியதில் இருந்து அக் ச தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் - அங் தனிநபர் ஒவியக்காட்சியாக மறைந்த ஒவியர் அ.மாற்குவின் மார்ச் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்பிரல் மாதம் 3 காலமாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் நவீன ஒவியம் பற்றிய பார்வையை ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மதம் சார்ந்த ஒவியங்களை ஒவியங்களை வரைந்தார். குறிப்பாக, யுத்த நெருக்கடிகள் நி ஒடுக்கு முறைகளால் தமிழ் மக்கள் பட்ட அவலங்களை தை சார்ந்த ஒவிய முறையில் இருந்து விலகி, நவீன ஒவியத்துறைை ‘மார்க் மாஸ்டர்’ என அனைவராலும் அன்பாக அழைக்கப் இலவசமாக அதனைக் கற்பித்து, ஏராளமானவர்கள் ஒவியத்
1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெற்ற வ6 அதன் பின்னர் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிலும் 6 26.09.2000 ஆம் ஆண்டு தனது 67ஆவது வயதில் காலமானார்
ஒவியர் மாற் | இடங்களிலும் இடம் ஒவியங்களை மீளவு
| கலாமன்றம் ஏற்பா } காட்சிப்படுத்தப்பட படைப்பாளியும், வி நெருக்கமான உறவை தனிப்பட்ட பராமா வருகின்றமை குறிப்பு
ஒவியக்காட் மணியளவில் ஒவிய இயக்குநர் யோ, யோ ஆரம்ப நிகழ்வாக ம விமர்சகர் அ. யேசுர கலாமன்ற இயக்குநர், ஏற்றி வைத்தார்கள் தொடர்ந்து தலைை சிறப்புரையை ஒவியரு செயற்பாட்டியக்கம்’
தொடர்ந்து மணியம் (ரமணி) தி மைப்பதில் அயராது காட்சியை முன்னிட் அ. யேசுராசா மாலை மெளன வணக்கம் ஒவியங்களை பார்ன்
காட்சியை பல நூற்று
 
 
 

]த்தில் (இல 15, றக்கா வீதி, டிசெம்பர் மாதம் முதலாம் டிடத்தில் ஒவியக்காட்சிகள் Ø7ዘmmeሃሩ கு இடம்பெற்ற முதலாவது ஒவியங்களின் காட்சி கடந்த
0ஆம் திகதி வரை ஒரு மாத
290s is33.26092ngo
ad officia
பரவலாக்குவதில் ஒவியர் மாற்கு பெரும் பங்காற்றியிருந்தார். அதிகமாக வரைந்த இவர், பின்னர் பல்வேறு தளங்களிலும் றைந்த நாட்களில் - கடுமையான பொருளாதாரத் தடைகள், ாது ஒவியங்கள் ஊடாக சிறப்பாக வெளிப்படுத்தினார். மரபு யை வளர்த்தெடுத்தவர்களில் இவர் முக்கிய இடம் பெறுகிறார். பட்ட இவர், ஒவியம் கற்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு த் துறையில் காலூன்ற வழி சமைத்தவர். லிகாம இடப்பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இவர், வாழ்ந்து வந்தார். இறுதியாக மன்னாரில் வாழ்ந்த நிலையில்
r.
கு அவர்களின் ஒவியக்காட்சிகள் இதற்கு முன்னரும் பல்வேறு பெற்றிருந்தாலும், மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் அவரது ம் தரிசிக்கும் வாய்ப்பை இந்தக் காட்சிக்கூடாக திருமறைக் டு செய்திருந்தமை சிறப்பிற்குரியதாகும். இக் காட்சியில் ட்டிருந்த மாற்குவின் ஒவியங்களை ஈழத்தின் மூத்த மர்சகருமான அ. யேசுராசா வழங்கியிருந்தார். மாற்குவுடன் ப் பேணிய யேசுராசா அவர்கள், அவரின் ஒவியங்களைதனது ரிப்பில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பாதுகாத்து பிடத்தக்கது. சியின் ஆரம்ப நிகழ்வுகள் 30.03.2014 ஞாயிறு மு.ப 10:00 க்கூடத்தில் இடம்பெற்றன. திருமறைக் கலாமன்ற பிரதி ண்சன் ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கல விளக்குகளை ாசா, ஒவியர் ம.நிலாந்தன், ஒவியர் ரமணி, திருமறைக் நீ.மரியசேவியர் அடிகள், ஒவியர் ஆசை இராசையா ஆகியோர் இறைவணக்கப் பாடலை இ.ஜெயகாந்தன் பாடினார். மயுரையும், அதன் பின்னர் சிறப்புரையும் இடம்பெற்றன. ரும், ஆய்வாளருமான ம.நிலாந்தன் மாற்கு என்றொரு ஒவியச்
என்னும் தலைப்பில் வழங்கினார். ஒவியக் காட்சிக் கூடத்தை மூத்த ஒவியர் வை.சிவசுப்பிர றந்து வைத்தார். அதன் பின்னர்; ஒவியக்காட்சியை ஒழுங்க ழைத்த மூத்த ஒவியர் ஆசை இராசையாவால் இவ் ஒவியக் டு வரையப்பட்ட ஒவியர் மாற்குவின் திருவுருவப்படத்திற்கு அணிவிக்க, மாற்குவின் புதல்வர்தீபமேற்றினார். தொடர்ந்து செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பார்வையாளர்கள் வையிட்டார்கள். ஒரு மாத காலமாக இடம்பெற்ற இக் |க்கணக்கானோர் பார்வையிட்டிருந்தார்கள்.
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 29
ھیچrfoنز بنانا فقد لوگ برطان” 'கிப்பாrம்,

Page 32
இன்றைய கலை இலக்கியச் சூழலில் ஒரு
படைப்புடன் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான உறவைப் பற்றி பின் - அமைப்பியல் போன்ற கோட்பாடு களின் அறிதலுக்குப் பின், பரவலாகப் பேசப்படுகிறது. அதாவது ஒரு படைப்பு படைக்கப்பட்ட பின், அப் படைப்புக்கும் படைப்பாளிக்குமான உறவு முடிந்து விடுகிறது. அதற்குப் பின் அது வாசகன்/வாசகியின் பிரதியாக இருக்கிறது என்றும், அப்படைப்புப் பிரதியினை வாசகன்/வாசகி தமது பிரதியாக வாசிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இப்பொழுது எம் முன்னே இருக்கும் பிரச்சினை ஒரு படைப்பாளியைப் பற்றிய முழுமையான அறிதலுடன் அவர்தம் படைப்புக்கள் எதிர்கொள்ளப்படும் வாசக அனுபவமும், ஒரு படைப்பாளியை பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் அவர் தம் படைப்புக்கள் எதிர்கொள்ளும் வாசக அனுபவமும் எவ்வாறன நிலையில் வேறுபடுகிறது என்பது தான்.
பின் - அமைப்பியல் போன்ற கோட்பாடுகளின் பரவலான அறிதலுக்கு முன்னதாகவே படைப்புக்கும் படைப்பாளிக்குமான உறவைப் பற்றிய செயற்பாடு என்ற வகையில், படைப்புக்களை தரநிர்ணயம் செய்கின்ற பணிகளாக அடையாளப்படுத்தப்பட்ட போட்டிகளின் பொழுது, கையெழுத்துப் பிரதிகளிலிருந்து படைப்பாளி மறைக்கப்படுவதும், அவர் தம் பெயர் படைப்பு பிரதிகளிலிருந்து அழிக்கப்பட்டு, தரநிர்ணயம் செய்யப் போகும் நடுவர்கள் என்ற வாசகர்களுக்கு வழங்கும் ஒரு முறைமை நம் மத்தியில் இருப்பதும், படைப்பைப் பாருங்கள் படைப்பாளியைப் பார்க்காதீர்கள் போன்றது மான சொல்லாடலின் மூலம் படைப்பாளி யின் இருப்பு மறுதலிக்கப்படும் ஒரு போக்கும், அதற்கு மாறாக படைப்பாளி யார் என்று குறிப்பிடாத ஒரு பிரதியை வைத்து இன்னாரின் பிரதி என்று சொல்ல முனைந்த படைப்பாளியை பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு போக்கும் நம்மத்தியில் இருந்து வந்துள்ளது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பொதுவாக ஒரு வாசகனுக்கோ - வாசகிக்கோ ஒரு பிரதிக்கான வாசிப்பின் ஆரம்பத்திலேயே அப் பிரதிக்கான
30 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 பா
 
 

படைப்பாளியை பற்றிய பிரக்ஞை - தேடல் தொடங்கி விடுகிறது என்பதனால், படைப்பாளியை தவிர்த்த வாசிப்
புக்கான சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பின் அமைப்பியலை பொறுத்தவரை ஆசிரியன் இறந்து விட்டான், வாசகனோ வாசகியோ தனக்கான பிரதியை உருவாக்குதல் என்பதெலாம் ஆசிரியனை பற்றிய பிரக்ஞை சார்ந்தது அல்ல. மாறாக, அப் பிரதியில் வெளிப்படும் மொழி (நடை அல்ல) சார்ந்தது என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பாளியை பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் அவர் தம் படைப்பு வாசிக்கப்படும் பொழுது எதிர்கொள்ளப்படும் வாசக அனுபவத்திலிருந்து, அப் படைப்பாளியை பற்றி முழுமை யாக தெரிந்து கொண்டு ஒரு பிரதி வாசிக்கப்படும் பொழுது எதிர்கொள்ளப்படும் அனுபவம் வேறுபடுகின்றது என்பது
தான்.
இத்தகைய நிலை நின்று நந்தினி சேவியர் அவர் களின் கதை பிரதிகளுக்கான வாசக அனுபவத்தின் பகிர்வே இக் கட்டுரைக் குறிப்பாகும்.
நந்தினி சேவியரைப் பொறுத்தவரை, ஈழத்துதமிழ் கலை இலக்கியத் தளத்தின் ஒரு மூலையிலிருந்து எந்த விதமான ஆர்ப்பாட்டமுமின்றி, அதேவேளை தொகை அளவில் புனைவாக்க பிரதிகளை குறைவாகவும் ஒவ்வொரு படைப்புக்குமான இடைவெளி அதிகம் கொண்டவையாக இருப்பினும், அவற்றில் ஒவ்வொரு பிரதியையும் காத்தி ரமான, அவதானத்திற்கு உட்பட்ட பிரதிகளாக தந்திருக் கிறார். அவரது அப் பிரதிகளில் அயல் கிராமத்தைச் 菱 சேர்ந்தவர்கள், நெல்லிமரப் பள்ளிக் கூடம் ஆகிய இரு தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள 16 கதைகள் மட்டுமே இக் கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்டுள்
6YT6ԾT.
2
நந்தினியின் இப் பதினாறு கதைப் பிரதிகள் வெவ்வேறு வெளி யீட்டுக் களங்களில் வெளிவந்தவை என்ற வகையில் அவை வெளிவந்த காலகட்டத்தில் எல்லாப் பிரதிகளையும் வாசிக்கக் கிடைக்காது போனாலும்,
மேற்குறித்த இரு தொகுப்புகளின்

Page 33
வழியாக அப் பிரதிகளை ஒரு சேர மீள மீள வாசித்த பொழுது (இவ்விடத்தில் ஒரு படைப்பாளியின் படைப்புக் களிட்ட தீவிர வாசிப்பு என்பது அவரது எல்லா படைப்புக்களை வாசித்திருத்தல் என்று சொல்லப்பட் டாலும், அப் படைப்புக்களை மீள மீள வாசிப்பதையும் நான் தீவிர வாசிப்பாக பொருள் கொள்கிறேன்) அப் பிரதிகளின் சாரம்சத்தின் சாரமாக பின்வரும் இரண்டு விடயங்கள் 16 பிரதிகள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் அடிச்சரடாக இயங்குகின்றன என தெரிந்தது.
1. மரணங்கள் 2. மரங்கள் அல்லது விருட்சங்கள்
அதாவது யாரோ ஒருவரது மரணத்தை சுற்றி கதை நகரும். அத்தோடு இணைந்தோ, தனித்தோ ஏதோ வகையில் ஒரு மரத்தின் அதாவது விருட்சத்தின் சூழலில் கதை இயங்கும் அல்லது ஒரு மரமோ விருட்சமோ குறியீடாக பயன்பட்டு இருக்கும்.
மேற்குறித்த இரண்டு அம்சங்களை அடிச்சரடாக இயங்கும் இந்த 16 பிரதிகளை எந்தவிதமான ஆர்ப்பாட்ட முமின்றி, தெளிந்த நீரோடையானநடையில் நந்தினி பதிவு செய்திருப்பதே அவரது பிரதிகளை ஒரு வாசகன் அல்லது வாசகி நெருங்குவதற்கான முதன்மையான காரணமாக இருக்கிறது.
3
நந்தினியின் பெரும்பாலான எல்லா கதைப் பிரதிகளும் கடந்து போன காலத்தைப் பற்றிய ஏக்கம் கொண்டவையாகவே இருக்கும். இக் கூற்றினை நிரூபிப்பது போல், இவரது கணிசமான பிரதிகளில் கதை சொல்லி கதைகள் நகரும் போக்கில் இடைக்கிடையே கடந்த காலத்தை ஒரிரு வரிகளில் மீட்டி வாசகனையோ வாசகியினையோ கடந்த காலத்திற்கு அடிக்கடி அழைத்துச் சென்று கொண்டு இருப்பார். இந்தப் போக்கானது அங்கும் இங்குமாக அதாவது கடந்த காலத்திற்கும் கதை நடக்கும் காலத்திற்குமாக வாசகனையோ வாசகியையோ அலைய வைப்பது போல் இருப்பினும், இப் பாணியானது நந்தினிக்கு கடந்த கால ரம்மியங்கள் மீதான தணியாத ஏக்கத்தினை எடுத்துக் காட்டுகிறது. இதன் காரணமாக இப் பிரதிகள் எனது வாசிப்பின் பொழுது ஒலியலைகளுக்கான வரைப்படம் ஒன்றுக்குள் ஏறி இறங்கும் ஒரு மனோ நிலையே ஏற்படுத்தியது. இன்னும் சற்றுத் தெளிவாக சொல்வது என்றால் நந்தினியின் இந்த நடை யதார்த்த வாதப்போக்கு முதன்மைப்படுத்துகின்ற நேர்கோட்டு எழுத்து முறையும் அல்ல. பின் - நவீனத்துவம் கையாளு கின்ற அ - நேர்கோட்டு எழுத்து முறையும் அல்ல. நந்தினி நனவோடை உத்தி, ப்ளேஷ்பேக் என்பவற்றை கலந்தும், கடந்தும் தனக்காக ஒரு நடையை உருவாக்கி வந்துள்ளார். ஆனால் அந்த நடை இருண்மைத் தன்மையற்றதாக வெளிப்பட்டு இருப்பதன் காரணமாக, அவரது படைப்புகளுடன் பரவலாக ஒர் அந்நியோன்னியமான வாசிப்புக்கான சாத்தியத்தை உருவாக்கி இருக்கின்றன.
பொதுவாக ஒரு கலை இலக்கியப் பிரதி தீவிர

வாசகனின் அனுபவத்திற்கு ஆட்படும் பொழுது, சிற்சில நேரங்களில் அப் பிரதியில் பேசப்பட்டிருக்கும் விடயத்திற் காகவோ, அல்லது அப்பிரதி வெளிப்பட்டிருக்கும் மொழி நடையாகவோ குறித்த அப்பிரதியானது வேறுமொரு படைப்பாளியை ஞாபகப்படுத்துவதும் உண்டு.
நந்தினியின் படைப்புக்களை பொறுத்த வரையும் அவரது சில கதைகளின் உள்ளடங்கங்கள் வேறு சில படைப்பாளிகளை நினைவுபடுத்தினாலும், நந்தினியின் மொழி நடை, பிரதிகளின் உருவ கட்டமைப்பு ஆகியவைகளை பொறுத்தவரை வேறு எந்தவொரு படைப்பாளியையும் எனக்கு நினைவுபடுத்தவில்லை. இதுவே நந்தினியின் தனித்துவங்களில் சிறப்பான ஒன்று எனலாம்.
நந்தினியின் இப் பிரதிகள் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டாலும் முன் - பின்னதான வரிசைப்படுத்தப் பட்ட வாசிப்புக்கு உட்படுத்திப் பார்த்தால் ஒரு பிரதி
நந்தினி சேவியரைப் பொறுத்தவரை, ஈழத்து தமிழ் கலை இலக்கியத் தளத்தின் ஒரு மூலையிலிருந்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி, அதேவேளை தொகை அளவில் புனைவாக்க பிரதிகளை குறைவாகவும், ஒவ்வொரு படைப்புக்குமான இடைவெளி அதிகம் கொண்டவையாக இருப்பினும், அவற்றில் ஒவ்வொரு பிரதியையும் காத்திரமான, அவதானத்திற்கு உட்பட்ட பிரதிகளாக தந்திருக்கிறார்.
இன்னொரு பிரதியின் தொடர்ச்சியாக இருப்பது தெரிய வரும். உதாரணத்திற்கு:
O ஆண்டவருடைய சித்தம் + கடலோரத்து
குடிசைகள் O வேட்டை + மேய்ப்பன் + ஒற்றை தென்னை +
எதிர்வு O நெல்லிமரப் பள்ளிக்கூடம் + விருட்சங்கள் +
எதிர்வு
O நீண்ட இரவுக்குப் பின் + பயணத்தின் முடிவில்
இவ்வாறாக பிரதிகளை இணைத்துப் பார்த்தால் பல குறுநாவல்களில், பல நாவல்களில் சொல்ல வேண்டிய விடயங்களை ஒற்றைப் பிரதியில் சொல்லிவிட வேண்டும் என்றொரு எத்தனம் நந்தினிக்கு இருப்பது தெரியவரும். இந்த எத்தனத்திற்கு இணங்க இவரது நாவல், குறுநாவல் துறை பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த முடியா ஒரு நிலைமையை தவறிப்போன அவரது
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 31

Page 34
நாவல்கள் உருவாக்கி இருக்கின்றன.
4.
இவ்விடத்தில் இக் கட்டுரை குறிப்பின் ஆரம் பத்தில் குறிப்பிட்ட, ஒரு படைப்பாளியை முழுமையாக தெரிந்து கொண்டு, அவரது பிரதியை வாசிப்பதற்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் அவரது பிரதியை வாசிப்பதற்குமிடையிலான வித்தியாசம் என்பதை நினைவுப்படுத்திக் கொண்டும், அவ்வாறாக ஒரு படைப்பாளியை பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில், தனது புனைவுப் பிரதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தன்னைப் பற்றி ஒரளவுக்கோ, முழுமையாகவோ . வாசகனோ, வாசகியோ தெரிந்து கொள்ளும் வகையிலான திறனோடு, ஒரு படைப்பாளி தன் புனைவுப் பிரதிகளை முன் வைப்பதுண்டு. அத்தகைய ஒரு படைப்பாளியின் புனைவுப் பிரதிகளாக நந்தினி பிரதிகள் வெளிப்பட்டு இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நந்தினி சேவியரைப் பொறுத்த் வரை அவர் இடதுசாரி கருத்தியலை ஆழமாக நம்புகின்றவர். அத்தகைய ஒருவரின் பிரதிகள் வாசிப்புக்கு உட்படுத்தப்படும் பொழுது, இவர் எந்த அளவில் தான் சார்ந்த கருத்தியலை வெளிப்படுத்தி இருக்கிறார்? என்ற கேள்வி, வாசக - விமர்சனத்தளத்தில் தவிர்க்க முடியாத நிலையில் எழுகின்ற ஒன்றாக இருக்கிறது.
நந்தினி சேவியரின் பிரதிகளை நெருக்கமாக நோக்கும் பொழுது, இவர் சார்ந்த அல்லது இவர் பின்னிப் பிணைந்து வாழ்ந்த, யாழ்ப்பாண சூழலில் கடற்றொழிலை சார்ந்த, கிறிஸ்தவ தேவாலயத்தின் கண்காணிப்புக்கு உட் பட்ட, ஒரு சமூகத்தினதும், தன்னிலையினதும் வாழ்வி LJ G60). Gol) பகைப்புலமாகக் கொண்ட பிரதிகளாக அவை வெளிப்பட்டுள்ளன. அத்தோடு, இவர் விசுவாசிக்கின்ற இடதுசாரி இயக்கச் சிந்தனையுடன், அவர் சார்ந்த சமூக நிலையிலும், மேலே குறிப்பிட்ட யாழ்ப்பாண சூழலில் கடற்றொழில் புரியும், கிறிஸ்தவ தேவாலயத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட, சமூகத்தில் செயற்படும் மாந்தர்களையும், இடதுசாரி இயக்கம் எதிர்கொண்ட பிரச்சி னைகள், போராட்டங்கள், பின்னடைவுகள் என்பனவற் றையும், மேலும் எழுபதுகளுக்கு பின்னான வட - கிழக்கு தமிழ் சமூகச் சூழலில் தோற்றம் பெற்ற, இயக்கப் போராட்டம், அவையின் விளைவாக எதிர்கொள்ளப்பட்ட கலவர நிலை, போர்ச்சூழல், அகதி வாழ்வு, இடப்பெயர்வு, மற்றும் ஏலவே வட - கிழக்கில் முனைப்புப் பெற்றிருந்த சாதிய அரசியல் இயக்கம், தமிழ் தேசிய போராட்ட இயக்கங்களுடனான அதன் பங்கு, உரசல் என்பன வற்றையும் நந்தினி தன் புனைவுப் பிரதிகளில், யதார்த்த சூழலோடு, உண்மையான நிலைவரத்தோடு, வித்தியா சமான பாணியில் முன்வைக்கிறார்.
இங்கு நாம் குறிப்பிடும், யதார்த்த சூழலோடு உண்மை நிலைவரத்தை வித்தியாசமான பாணியில் சித்திரித்தல் என்பது,
* தான் சார்ந்த கருத்தியில் இயக்கத்தின் அன்றைய
32 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 மாம

நிலை.
* அவ்வியக்கம் எதிர்கொண்ட பின்னடைவு, அது மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தவறியமை. * தான் சார்ந்த கருத்தியல் இயக்கத்திற்கு
துதிபாடாமை. * தான் சார்ந்த கருத்தியல் இயக்கத்தின் மரபுவாதி களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பாணியில் படைப் புக்கள் முன் வைக்காமை. (உதாரணமாக, இவரது பிரதிகளில் இவர் சார்ந்த இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் வரும் பிரதிகளில், அவர்கள் பிறகு வரும் பாத்திரங்களாகவோ அல்லது கதையின் இறுதியில் வருபவர்களாகவோ இருப்ப தோடு அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலே கதை முடியும். அத்தோடு அப் பிரதிகள் இவருக்கு உடன்பாடு இல்லாதவர்களை கொண்டு ஆரம்பமாகும் பிரதிகளாகவே இருக்கும். இது மார்க்ஸிச மரபுவாதிகளுக்கு உடன்பாடு இல்லாத ஒன்று என நினைக்கிறேன்) இவ்வுத்தியே அவரது பிரதிகளை பிரசாரப் பாணி அற்ற பிரதிகளாக தக்க வைக்கின்றன. * சாதியப் போராட்டத்தை முதன்மைப்படுத்தாது வர்க்கப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத் தமை. * தான் சாராத இயக்கங்களை பற்றி தனிநபர் காழ்ப்புணர்ச்சியின்றி, அவை தம் பலவீனங் களையும், பலங்களையும் முன் வைத்தமை. * அவரது பிரதிகளில் மொழி நடை, உருவ
கட்டமைப்பு ஊடாக வெளிப்படும் கலைத்துவம்.
மேற்கூறிய அம்சங்களே அவரை தனித்துவமான படைப்பாளியாக அடையாளப்படுத்தி இருக்கின்றன. அதேவேளை, மேற்குறித்த அம்சங்களில் சிலவற்றின் காரணமாகவே பலரால் அவர் சிலாகிக்கப்படவில்லை என்பது குறிப்பாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.
5
இறுதியாக, இதுவரை கால நந்தினியின் புனைவுப் பிரதிகளில், அவர் அவதானித்த சமூகச் சூழலில் போருக்கு பின்னான மற்றும் உலகமயமாக்கல், திறந்த பொருளா தாரம், பரந்த அளவான புலம்பெயர்வு போன்றவையின் காரணமாக வர்க்க - சாதிய அமைப்புகளில் ஏற்பட்ட மாற் றங்கள் விரிவாக பதிவாகவில்லை. இதற்கு இவர் தனது ஒவ் வொரு படைப்பையும் தருவதற்கு நீண்ட காலவெளியை எடுத்துக் கொள்வதுதான் காரணமாகிறது எனத் தெரிகிறது.
அடுத்து தவறிப் போன ஒரு சில அவரது நாவல்கள் நமது வாசிப்புக்கு உட்படுத்த முடியாத நிலையில், நமக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் அவரது பிரதிகளில் வெளிப்படும் நாவல்களுக்கான பண்புகள், விடயங்கள் மிக விரைவாக வரும் காலத்தில் அவரிடமிருந்து ஒரு பாரிய நாவல் வரும் என்பது என் போன்ற வாசகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Page 35
நிகழ்கணத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களை திடீரென ஒரு கால இயந்திரம் அப்படியே வாரியெடுத்து, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இறந்த கால உலகத்துக்குள் அழைத்துச் சென்றால் எப்படியிருக்கும்? அக்கரைக்கு இக்கரை பச்சையென நினைக்கும் மனித இயல்பு இவ்வாறான காலம் மாறிப் பயணிப்பதையே அதிகம் விரும்பும். ஆனாலும் அத்தகைய தருணங்கள் முயற்கொம்பே. எதிர்காலத்துக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பயணிப்பதை வெறுமனே கற்பனை செய்துவிட்டோ, கனவில் கண்டுவிட்டோதிருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். தொலைந்து போன வாழ்வு, வாழிடங்கள், சம்பவங்கள், மனிதர்கள், ஏனைய உயிரிகள், பொருள்கள், உடுபுடைவைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு இப்படி நிறைய இறந்த கால விடயங்கள் பற்றி இரை மீட்டி பெருமூச்சு விட்டுக் கொள்பவர்கள் அநேகம். அதே போல எதிர்கால எண்ணங்களில் ஏறிப் பறந்து, கற்பனையின் அதீதங்களையெல்லாம் தொட்டு மீள்பவர் களுக்கும் குறைவில்லை. அந்த அனுபவம் அலாதியானது. வாழ்வின் இல்லாமைகளை இட்டு நிரப்பி ஒவ்வொரு வரையும் மகோன்னதத்தின் சிகரத்தில் இத்தகைய காலப்பயணங்கள் தூக்கி வைத்திருக்கும். கற்பனைப் பயணம் முடிவுற, வானவெளியில் இருந்து தொப்பென, சிறகொடிந்து வீழ்ந்தது போலிருக்கும்.
இப்படித்தான் ஒரு பயணிப்பு அன்றைக்கும் நிகழ்ந்தது. திருமறைக் கலாமன்றத்தின் முன்றலில் கூடியிருந்த பலரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரான இறந்த காலப்பொழுதில், ஜெருசலேமின் புழுதித் தரையில் தூக்கி வீசப்பட்டனர். அப்படிக் காலமாற்றப் பயணத்தைச் செய்த
கருவி “வேள்வித் திருமகன்’ என்ற திருப்பாடுகளின் காட்சி. இயேசுவின் இறுதி நாள்களைச் சொல்வதே இந்த ஆற்றுகையின் களம். எந்தவித ஊகித்தலுக்கும் இடம்
 

கொடாமல், அடுத்ததாக இது தான் நடக்கப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். சம்பவங்கள் மட்டுமல்லாது இந்தப் பாத்திரம் இந்த வசனத்தைத்தான் உச்சரிக்கப்போகிறது என்பது கூட பார்வையாளர்களில் பலருக்கும் மனப்பாடம். இதுவே திருப்பாடுகளின் காட்சியை ஆற்றுகை செய்யும் போது உள்ள பெரும் சவால். தெரிந்த கதை, அறிந்த பாத்திரங்கள், மனப்பாடமான வசனங்கள் என்று நாடகத்தின் அடிப்படையே ஆட்டம் காணும் விடயங்கள் இருந்த போதும் அதனை ஒவ்வொரு வருடமும் புதிது புதிதான உணர்வுத்தொற்றலை உண்டு பண்ணக்கூடிய வகையில் அளிக்கை செய்வதென்பது மிகச் சவாலான விடயமே. அத்தோடு கிறிஸ்தவர்களின் தவக் காலத்தை ஒட்டியதாக இந்த ஆற்றுகை அரங்கேறு வதாலும், ஒரு மதம் சார்ந்த கதைக்களத்தைக் கொண்டி ருப்பதாலும் நாடகத்தின் நகர்வை விரைவுபடுத்தல், திருப்புமுனைகளைப் புகுத்தி இரசனைப் புள்ளியை உயர்த்தல் என்பனவற்றுகாக இல்லாத எதனையும் புதிதாகச் சேர்க்கவும் முடியாது. சுருங்கச் சொன்னால் “பழைய மொந்தை, பழைய கள்; ஆனால் சுவை மட்டும் புதிதாக இருக்க வேண்டும்.” இது சாத்தியமேயில்லாத விடயம் போல தோன்றினாலும் “வேள்வித்திருமகனைப் பார்த்த வர்கள் மட்டும் சாத்தியம் தான் என்று சொல்வார்கள்.
திருமறைக் கலாமன்றத்தின் தயாரிப்பில் இந்த வருடம் ஏப்பிரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், பிரதான வீதியில் அமைந்துள்ள மன்றத்தின் அரங்கில் நெருக்கியடித்த சனத்திரளினிடையே அரங்கேறிய “வேள்வித் திருமகன் ஆற்றுகை தொடங்கிய தருணத்திலேயே எல்லோரையும் 2000 வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்க வைத்து, ஜெருசலேமில் அவர் களை நடமாடவைத்துவிட்டது. தங்களின் சுயநலனுக்காக மனிதர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு, அழிவுகளை
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS S TLTTTTT C TTTT STOT 0000 33
ாதுசன ஆலகக்
- ٤ ينتقنيتين في مع به مع في 18 قفا

Page 36
யும் பாவங்களையும் வகையின்றிச் செய்யத் தொடங்கிய பொழுதுகளில் இயேசுவின் ஜெருசலேம் வருகை நிகழ்கின்றது. அதன் பின் அவரின் அற்புதங்களாலும், மனிதர்கள் மீதான விசுவாசிப்பாலும், கருணையாலும், அன்பு ததும்பும் போதனைகளாலும் இயேசுவின் பின்னே மக்கள் திரளத் தொடங்குகின்றனர். மதத்தலங்களை வியாபாரத்தலங்களாக மாற்றுவதைக் கண்டு கொதிக்கிறார். அவர்களை விரட்டிவிட்டு கோயிலில் புனிதத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறார். இது கோயில் தலைமை மதகுருக் களுக்கு பிடிக்கவில்லை. தமக்கு இடையூறான இயேசுவை இல்லாதொழிக்க திட்டம் தீட்டுகின்றனர். ஜெருசலேமின் மன்னனாக முடி சூட இயேசு சதி செய்கிறார் என்ற குற்றச்சாட்டை உருவாக்குகிறார்கள். இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாஸ் விலைக்கு வாங்கப்படுகிறான். இயேசுவைக் காட்டிக் கொடுக்க அவன் சம்மதிக்கிறான். சொன்னபடியே இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்து, அவரைக் கைது செய்ய வைக்கிறான் யூதாஸ்.
விசாரணை நடக்கிறது. மன்னன் பிலாத்துவுக்கு இயேசு குற்றமற்றவர் என்று தெரிகிறது. ஆனாலும் மதகுருமாரின் அழுத்தம் இயேசுவுக்கு மரணதண்டனை வழங்க வைக்கிறது. சிலு பார்வையாளர்களை வையைச் சுமந்தபடி ஜெரு எடுத்த எடுப்பிலேயே சலேமின் வீதிகளில் பய னித்து, கடைசியில் கல்வா ரியில் சிலுவையில் அறை யப்பட்டு உயிர்துறக்கிறார் இயேசு. ஆயினும் மூன்றாம் இயேசுவின் பாடுகள் நாளே உயிர்த்தெழுந்து கொண்டிருப்பது தான் பலமுறை சொன்னது பெரும்பலம். ஒரு போல ‘உலகின் மீட்பர் ஆளுமையின் எழுச்சி, தானே’ என்ற செய்தியை
சொல்கிறார்.
உள்ளீர்க் கக்கூடிய வசீகரமான
கதையமைப்பை
வீழ்ச்சி, துயரேந்தல்,
அற்புதம், ஏக்கம் பார்வையாளர் என்பனவெல்லாம் !களை எடுத்த எடுப்பிலேயே உள்ளீர்க்கக்கூடிய வசீகர மான கதையமைப்பை இயேசுவின் பாடுகள் கொண்டிருப்பது பெரும்
சமவிகிதமாக இந்தக் கதையில் இயல்பாகவே அமைந்து விட்டது.
34 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 mmmmmmmmmmmmm
 

பலம். ஒரு ஆளுமையின் எழுச்சி, வீழ்ச்சி, துயரேந்தல், அற்புதம், ஏக்கம் என்பனவெல்லாம் சமவிகிதமாக இந்தக் கதையில் இயல்பாகவே அமைந்து விட்டது. அதனால் நெறியாளர் வலிந்து இவற்றை ஆற்றுகைக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமெதுவுமில்லை. ஆனாலும் பழகிப்போன சம்பவங்கள், பாத்திரங்கள் என்பதால் திரும்பத் திரும்பப் பார்ப்பதாலும், கேட்பதாலும் ஒருவித சலிப்பு மனோபாவம் பார்வையாளர்களுக்கு எழக்கூடும். எனவே அத்தகைய சலிப்பில்லாமல் ஒவ்வொருவரையும் ஈர்க்கும் வகையில் நெறியாளர் தன் திறன் முழுதையும் காட்ட வேண்டும். வேள்வித் திருமகனில் நெறியாளர் தன்னுடைய உச்ச பட்ச படைப்பாற்றலை வெளிப் படுத்தியிருந்தார். ஒரிரண்டு நடிகர்களை வைத்து நாடகம் செய்வதே சிரமமானதாக இருக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர் களையும் ஒன்றிணைத்து ஒரே அலைவரிசையில் தாளம் பிசகாது இயங்கச் செய்வதென்பது திருப்பாடுகளை விடவும் பெரும்பாடுதான். அதிலும் திருப்பாடுகளின் காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக வைதேகி செல்மர் எமில்
என்ற பெண் நெறியாளரே இம்முறை வேள்வித்திருமகனை நெறிப்படுத்தியிருந்தார்.
வார்த்தைகளில் மட்டும் பெண்ணுக்கு சம உரிமை வேண்டும் என்று சொல்லி விட்டு யதார்த்தத்தில் அதைப் பின்பற்றதயங்குகின்ற உலகில் இத்தகைய பேராற்றுகையை நெறிப்படுத்தும் பொறுப்பை முதன் முதலாக ஒரு பெண் இயக்குநருக்கு வழங்கிய திருமறைக் கலாமன்றத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. தனக்கு அளிக்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி வேள்வித் திருமகனை வெற்றித் திருமகனாக்கியுள்ளார் இயக்குநர்.
மிகச்சரியான நடிகர் தேர்வு, அளவான, பொருத் தமான பாடல்களும், இசையும், மிகையில்லாத நடிப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்வாங்கி வெளிப்படுத் திய பெருங்காட்சிப் பண்பு என்று நெறியாளர் ஆற்றுகை யின் கடிவாளத்தை மிகச் சீராகவே பயன்படுத்தியிருந்தார். அத்தோடு ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான இடைவெளியே தெரியாதபடி கண்ணிமைக்கும் நேரத்தில்

Page 37
அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தி, நாடகத்தில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாதபடி நெறியாளர் மிகக் கவனமாகச் செயற்பட்டிருந்தார். அதனால்தான் அரேபியக் குதிரை போல கடந்த காலங்களில் மேடையேற்றப்பட்ட திருப்பாடுகளின் ஆற்றுகைகளை விடவும் ஒருபடி கூடுதலான பாய்ச்சலை இம்முறை “வேள்வித் திருமகன்’ வெளிப்படுத்த முடிந்தது.
இயேசு, யூதாஸ், மதகுருக்கள், சீடர்கள், மரியாள், பிலாத்து மன்னன் என்று அனைத்துப் பாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தங்களுடைய பாத்திரங்களுக்கு உருவத்தால் மாத்திரமன்றி குரலாலும் இவர்கள் உயிரூட்டினார்கள்.
நாடகம் என்ற கலை நடிப்பையும், நடிகர்களை யுமே மையமாகக் கொண்டது. இசை, ஒப்பனை, காட்சி யமைப்பு என்பனவெல்லாம் ஆற்றுகையை மெருகூட்டு
வதற்கான துணைக் கருவிகள்தான். இவை இல்லாமல் கூட
ஒரு ஆற்றுகையை செய்து விட முடியும். ஆனால் நடிகன் இல்லாமல் நாடகம் இல்லை. நடிப்பே ஆற்றுகையின்
ஜீவனை உற்பத்தி செய்கிறது. வேள்வித் திருமகனில் பங்கேற்ற ஒவ்வொரு நடிகரும் அந்தந்தப் பாத்திரமாகவே மாறி நின்றார்கள். பிரதான பாத்திரங்களாக வேடமிட்ட வர்கள் மாத்திரமன்றி குடி மக்கள், படைவீரர்கள், சம்மன சுகள், நடனக்காரர்கள் என துணைப் பாத்திரங்களில் தோன்றியோரும் வெகு சிரத்தையெடுத்து அந்த பாத்தி ரங்களை கண்முன்னே கொண்டு வந்தார்கள். நூற்றி யம்பது அடி நீளமான மேடையில் துணைப் பாத்திரமான நம்மையா பார்க்கப் போகிறார்கள்?’ என்ற அலட்சியத்தை விட்டுவிட்டு, மேடையில் பாத்திரமாகவே வாழ்தல் என்ற பண்பை வெகு இயல்பாக நிகழ்த்தி விட்டுப் போயிருந் தார்கள். “வேள்வித் திருமகன்’ என்ற ஆற்றுகையின் பாடுகளை இயேசுவைப் போன்று ஒவ்வொரு கலைஞரும் தங்கள் முதுகில் சுமந்தார்கள். அர்ப்பணிப்புடன் கூடிய இந்த நடிப்பு முறையே பார்வையாளர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது.
ஒவ்வொரு நடிகரும் பாத்திரத்தின் குணாதி
 

சயத்திற்கு ஏற்ப தங்கள் குரலை ஏற்றியும் இறக்கி யும் பார்ப்போரை ஆற்று கையோடு ஒன்றிக்கச் செய்
ஒரிரண்டு நடிகர்களை வைத்து நாடகம் செய்வதே சிரமமானதாக
தனர். கண்ணை மூடிக் இருக்கையில் கொண்டு இருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆற்றுகையில் வெளிப்ப நடிகர்களையும், டுத்தப்படும் உணர்வு தொழில்நுட்பக் பார்ப் போரிடத் தே கலைஞர்களையும் பிதாற்றக்கடிய வகையில் ஒன்றிணைத்து ஒரே நடிகர்களின் குரல் வெளிப் அலைவரிசையில்
பாடும் அமைந்திருந்தது. எனினும் ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக
தாளம் பிசகாது இயங்கச் செய்வதென்பது
வேண்டும். பிலாத்து மன் திருப்பாடுகளை னனாக அரங்கில் தோன் I விடவும் றிய நடிகர் மனோரதிய பெரும்பாடுதான்.
நாடகப் பாங்கான வகை யில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவர் குரலும் அதற்கேற்றாற் போலவே கம்பீரத்தோடு வெளிப்பட்டு இருந்தது. பிலாத்து மன்னன் அரங்கில் வந்த உடனேயே பார்வையாளர்களிடத்தே ஒருவித உற்சாக நிலையான இரசனை தோன்றியிருந்தது. அந்தளவுக்கு பொதுப் பார்வையாளர்களிடத்தே அவருடைய நடிப்பு வரவேற் பைப் பெற்றிருந்தது. ஆனால் உண்மையில் ஒட்டு மொத்த ஆற்றுகையின் தன்மையில் இருந்து விலகி அவருடைய நடிப்பு மட்டும் வேறொரு பாணியானதாக துருத்திக் கொண்டு தெரிந்தது. மற்றைய நடிகர்களிடத்தே தெரிந்த இயக்குநரின் கைப்பக்குவம் பிலாத்துவிடம் தென்பட்டி ருக்கவில்லை. என்றாலும் பார்ப்போர் இயேசுவுக்கு அடுத்ததாக அதிகம் இரசித்தது பிலாத்து மன்னனின் நடிப்புத் தான்.
நாடக எழுத்துரு பற்றியும் குறிப்பிடாமல் விட முடியாது. அந்தளவுக்கு கனகச்சிதமாக கட்டிறுக் கத்தோடு எழுத்துரு அமைக்கப்பட்டிருந்தது. தேவையற்ற காட்சி களோ, அலட்டல்களோ, அலங்காரச் சொல்லாடல்களோ, வர்ணனைகளோ எதுவும் இருக்கவில்லை. எல்லாமே மிகக் கவனத்தோடும் தேர்ந்த திறத்தோடும் ஒத்திசைவாகக்
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 35

Page 38
கோர்க்கப்பட்டிருந்தன. ஏராளமான திருப்பாடுகளின் நாடகப் பிரதிகளை எழுதி வழங்கிய திருமறைக் கலாமன்றத்தின் இயக்குநர் நீ. மரியசேவியர் அடிகளாரே “வேள்வித் திருமகன்’ நாடகப் பிரதியையும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடல் கள் கூட அதிக நேரத்தை கோரவில்லை. பெரும்பாலான பாடல்கள் காட்சியோடு இசைந்ததாகவே அளிக்கையில் பயன்படுத் தப்பட்டிருந்தன.
ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தச் சூழலை அப்படியே கொண்டுவர வேண்டிய சவாலில் கூட “வேள்வித் திருமகன்’ வெற்றிக்கொடி நாட்டியிருந்தது. நூற்றியம்பது அடி
நீளமான மேடையில் தேவாலயம்,
கல்வாரிமலை, நகரவீதி, பிலாத்து மன்ன னின் அரண்மனை முகப்பு, மதகுருமாரின் வசிப்பிடம் என்று ஆற்றுகையில் வருகின்ற இடங்களை நேரடியாக தரிசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு காட்சி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கும் இடையிலான காலவெளியை அதிதுரிதமாக இட்டு நிரப்பி, காட்சியமைப்பு மாற்றங் களையும் அதே வேகத்தோடு செய்திருந்தார்கள். அதையும் பார்வையாளர்கள் கண்டு கொள்ளாத வகையில் ஒளிய
மைப்பின் உதவியோடு நிறைவேற்றி இருந்தார்கள்.
காட்சியமைப்பு, நடிப்பு என்பவற்றுக்கு பலம் சேர்த்த இன்னொரு விடயம் வேள்வித் திருமகனின் ஒளியமைப்புத்தான். ஒவ்வொரு காட்சியும் கொண்டிருந்த மைய மனோநிலையையும் பாத்திரங்களின் நடிப்பு வெளிப்படு தன்மையையும், நகர்வையும், காட்சியமைப் பின் பிரமாண்டத்தையும், சம்பவம் நடைபெறும் காலத்தை யும் (இரவு, பகல்) வேள்வித் திருமகனின் ஒளியமைப்பு பார்வையாளர்களுக்கு தெளிவாகவே விளக்கியது. அதிலும் சில சம்பவங்களின் உணர்வு நிலை வேகத்தை அதிகரிக்க வும் செய்தது. குறிப்பாக மதகுருமார் இயேசுவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகின்ற போதும், இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் வலிக்கும் கணங்களில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் அதி அற்புதமான முறையில் ஒளியமைப்பு செய்யப்பட்டு
பார்வையாளர்களின் இதயத் துடிப்பை உச்சநிலைக்கு கொண்டு சென்றது.
கலையும், நுகர்வோனும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொள்வ தன் மூலமே உணர்வுப் பரிமாற்றம் இடம்பெறும். கலைஞன் தான் சொல்ல வந்ததை நுகர்வோனுக்கு
8
36 5SDagp6 O SüSgs –gsi 2014 m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளிக்கும் அதே கணத்தில் நுகர்வோனின் எதிர்வினையை உள்வாங்கி தன் ஆற்று
றான். ஆயினும் அத்தகைய சந்தித்தல் புள்ளி நிகழ்தல் என்பது அபூர்வமான ஒன்று. இந்த அபூர்வ புள்ளியின் தோற்றம் வேள்வித் திருமகனிலும் ஏற்படவே செய்தது.
இந்த ஆற்றுகை இயேசுவின் பாடுகளை பேசினாலும் எல்லா கணங்களிலும் சம காலத்தை ஏதோ ஒரு விதத்தில் ஞாபகிக்க வைத்தது. மனிதர்களுக்கிடையேயான முரண்பாடு, அதனால் எழும் போர்,
அழிவுகள் என்ற உலகப் பொதுமையான சமகால விடயங்களை ஆற்றுகை உணர்த் திச் சென்றது. அதேவேளை தமிழர்களின் உரிமைப்போர், அதன் வீழ்ச்சி, இன்னொரு
மீட்பருக்கான காத்திருத்தல் என்பன போன்ற எங்களோடு மிக நுணுக்கமான சம்பவங்களையும் வேள்வித் திருமகன் மனக்கண் முன்னே கொண்டுவரத் தவறவில்லை.
“சமூக ஒன்றிணைத்தல்’ என்பது ஆற்றுகையொன் றின் முக்கிய பண்பு. அதையும் வேள்வித் திருமகன் செவ் வனே செய்திருந்தது.தூர இடங்களில் இருந்தெல்லாம் வந்த பார்வையாளர்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போன்ற உணர்வோடு ஆற்றுகையை கண்டுகளித்தார்கள். வெறு மனே பார்வையாளர்கள் என்ற எல்லையை உடைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜெருசலேம் வாசிகள் போன்றே ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். பெரியவர்கள் மாத்திரமல்லாமல் சிறு குழந்தைகள் கூட ஆற்றுகையின் வீச்சில் இருந்து தப்பவில்லை. குறிப்பாக இயேசு முட்கிரீடம் சூட்டப்பட்டு, சவுக்கால் அடிக்கப் பட்டு, சிலுவையைச் சுமந்து சென்றபோதும், பின்னர் சிலுவையில் அறையப்பட்ட போதும் வயது வேறுபாடின்றி எல்லோரும் கண்ணின் குழந்தைகளாகி நின்றார்கள். சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் “இயேசுவை அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ’, ‘அவரை (இயேசுவை) காப்பாத்துங்கோ’ என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்கள். மனிதத்தின் வித்து அந்தப் பிஞ்சு களிடத்தே ஊற்றெடுத்துப் பாயவும் வேள்வித் திருமகன்
வழி செய்திருந்தது
மானுட நேயம் அற்றுப் போகும் உலகில் அது மீண்டும் இத்தகைய ஆற்றுகைகள் மூலமே விதைக்கப்படுகின்றது. அந்த விதைப்பு என்றைக்கும் அழிவில் லாத கருணையின் பேராற்றை ஒடச்செய்யும். இருளின் துன்பங் களையெல்லாம் கழுவிவிடும்

Page 39
s
త్రకళ
e
ধ্ৰু
தரத்திலும் மொழியிலும் சிறந்து விளங்கும் படைப்புகள் வெளிவந்து கொண்டிருப்பது எவ்வளவு நல்ல விஷயமோ அவ்வளவு நல்லதும் அவசியமானதுமான விஷயம் அந்த நூல்கள் பற்றிய அறிமுகங்களும், ஆய்வுப்பகிர்வுகளும் உருவாகும் நிலையாகும்.
இலக்கியங்கள் படைக்கப்பட்டு பார்வையாளனி டம் வரும்போதுதான் - வாசகனின் பார்வைக்கு உட்படும் போது தான் அந்தப் படைப்புகள் உருவாக்கப்பட்டிருப் பதன் நோக்கம் நிறைவேறுவதற்கான அடித்தளம் உருவாகிறது. படைப்புகள் பற்றிய அறிமுகம், உள்ளடக்கம் பற்றிய பகிர்வு என்பனவே அந்த நூல் பற்றிய பரவலான அபிப்பிராயங்கள் தோன்றுவதற்கு வழிகோலுகின்றன. ஒரு தேர்ந்த வாசகன் ஆழ்ந்த இரசனையுள்ளவனாகவும் அமையும் பட்சத்தில் அவனது இரசனைப் பகிர்வு அவசி யமான ஒன்றாக அமைகிறது.
அலைவும் உலைவும், புனைவும் புதிதும் என்ற கட்டுரைத் தொகுதிகளை வழங்கிய துவாரகன் என்கின்ற சு.குணேஸ்வரன் தந்திருக்கின்ற மூன்றாவது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ‘உள்ளும் வெளியும்’. நூல் மற்றும் படைப்பாளி பற்றிய அறிமுகத்தோடு படைப்புகள் தொடர்பான தனது பார்வையை ஆய்வு நோக்குடன் இந்நூலில் முன்வைக்கிறார் குணேஸ்வரன்.
அவரது கட்டுரைகளின் அமைப்பொழுங்கு, அவர் குறிப்பிடும் நூல்களை இதுவரை வாசித்திராத ஒருவருக்கு சரியான அறிமுகத்தையும், நூலை வாசிக்க வேண்டு மென்னும் ஆர்வத்தையும் தருவதாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறியவோ, ஆய்வு செய்யவோ முற்படும் ஒருவருக்கு குணேஸ்வரனின் ‘ஈழத்து இலக்கியமும், இரசனையும் - நாவல்’ என்னும் கட்டுரை பல பயன்மிக்க தகவல்களைத் தேடித்தருகிறது. ஈழத்தின் முதல் நாவல் குறித்த சர்ச்சையை
 

நூல் மதிப்பீடுகள்
DGolublful)
ந. சத்தியபாலன்
முன்வைத்து, வரலாற்று ஆதாரங்களூடாக சரியான தகவல்களைத் தருகிறார் ஆசிரியர். ஆரம்ப கால இலக்கியப் பார்வை, படைப்பு நோக்கம் என்பன குறித்த தகவல்களும் மேற்படி கட்டுரையினுாடாக வாசகனுக்கு கிடைக்கின்றன. தமிழ்ப் படைப்புலகில் வித்தியாசமான முறையில் தனது படைப்புக்களை வழங்கி அதனுரடாக ஒரு கவனிப்பைத் தேடிக் கொண்டுள்ள அ.முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ பற்றிய கட்டுரை முத்துலிங்கத்தின் தனிப்பட்ட அளிப்பு முறை பற்றிய அறிமுகத்தைத் தருவதோடு அவரது படைப்புகளைத் தேடிப்படிக்கத் தூண்டுவதாக அமைகிறது.
புலம் பெயர்ந்த எழுத்தாளர் ஆதவனின் ‘மண் மணம் பற்றிய கட்டுரை படைப்பாளி மற்றும் படைப்பு பற்றிய பரந்த தகவல்களோடு படைப்புப் பற்றிய ஆழ்ந்த நோக்கினையும் முன்வைக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் படைப் பாளிகளுள் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி எனக் கருதப் படும் ஷோபாசக்தியின் நாவல்கள் பற்றிய கட்டுரை பலர தும் கவனத்தைக் கோருகின்ற படைப்புக்களாக ஷோபா சக்தியின் படைப்புக்களை இனம் காட்டுகிறது. சொல்லப் படும் முறை மற்றும் உள்ளடக்கக் கனதி என்பவற்றால் முக்கியத்துவம் பெறுகின்ற ஷோபாசக்தியின் படைப்பு களது தனித்துவம் இக்கட்டுரையில் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது. புனைவுகளினுாடாக போராட்டம், இன ஒடுக்கல் என்பன கையாளப்பட்ட முறைகளை ஷோபா சக்தி தனக்கே உரிய முறையில் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார் எனக் கட்டுரையாசிரியர் கூறுகின்றார்.
இவைதவிர எஸ்.ஏ.உதயனின் எழுத்துக்கள் பற்றிய கட்டுரை. உதயனின் எழுத்துக்கள் மன்னார் பிரதேச மக்களின் கடந்த கால யதார்த்த வாழ்வின் இயல்பான சித்திரிப்புகள் என்ற முறையில் தனித்துவம் பெறுவதாக ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
மேலும் “பெயரிடாத நட்சத்திரங்கள்’ என்னும் 26 பெண் கவிஞர்களின் தொகுப்பும், தீபச்செல்வனின் ‘கூடார நிழல்’ தொகுப்பும் ஆசிரியருக்கே உரியநுண்ணிய பார்வை யுடன் காலத்தின் பதிவுகளாக இனங்காட்டப்படுகின்றன.
‘ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி’ என்னும் கட்டுரை உட்பட அனைத்துக் கட்டுரை களும் காலத்தின் பதிவுகளாய் எதிர்கால மொழி ஆய்வாளர் களுக்கு உதவும் விதத்தில் இந்நூலில் காணப்படுகின்றன. சு.குணேஸ்வரன் ஆற்றிவரும் பணி, இலக்கியம் என்ற துறையினைத் தாண்டி கல்விப் புலத்திலும் பயன்தரத்தக்க சேவையாக விளங்குவதை ‘உள்ளும் வெளியும் காட்டி நிற்கிறது.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 37

Page 40
கே.எஸ்.சிவகுமாரன்
GISJIT
நூல்: திறனாய்வு ళ్ల (கட்டுரைத் தொகுதி)
ஆசிரியர்: கே. எஸ். சிவகுமாரன்
வெளியீடு: மீரா பதிப்பகம் - क्षे
29/6-53Aஎட்வேர்ட் அவெனியூ ஹவ்லொக் டவுண், கொழும்பு -06. பதிப்பு: 01.03.2013 ಜ್ನ விலை: 350.oo &
கே.எஸ்.சிவகுமாரன் ஈழத்து இலக்கியங்களை குறிப்பாக, புனைகதை இலக்கியங்களை நன்கு வாசித் தறிந்து, ஈழத்து இலக்கியத்தின் முகத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தியவர். வெளிப்படுத்தி வருபவர். அவர் ஒரு படைப்பாளியாக இருந்த போதும் ஏனைய படைப்புக்களையும், படைப்பாளிகளையும் அறிமுகம் செய்வதையே தனது முதன்மைப் பணியாகக் கொண்டிருப்பவர். அத்துடன் பிறமொழிச் சிறுகதைகளை யும் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஈழத்துச் சிறுகதைகளையும், நாவல்களையும், அவற்றை எழுதிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்து ஆவணப்படுத்தி யுள்ளமை முக்கியமானதாகும். அதேபோல நல்ல சினி மாவை அறிமுகம் செய்து வைத்து அவர் ஆற்றிய பணியும் சிறப்பானதாகும்.
பல்துறை ஆளுமை மிக்க கே.எஸ்.சிவகுமாரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் 33 நூல்களை எழுதி தமிழுக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவரது இந்த ஆர்வமும், அக்கறையும் ஈழத்து இலக்கியங்கள் தொடர் பிலும், பொதுவாக இலக்கியம் தொடர்பிலும் கருத்துரைக் கின்ற தகுதிப்பாட்டை அவருள் ஏற்படுத்தியிருந்தது.
அந்த வகையில் பல நூல்களுக்கும், படைப்புக் களுக்கும், திரைப்படங்களுக்கும் திறனாய்வுகளை எழுதிய கே.எஸ்.சிவகுமாரன் இந்த நூலுக்கு 'திறனாய்வு’ எனப் பெயரிட்டுள்ளார். இது மீரா பதிப்பகத்தின் நூறாவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் கே.எஸ்.சிவகுமாரன் தனது கவிதை, சிறுகதை மற்றும் நூல்கள், தனது அனுப வங்கள் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துவது ஒரு பகுதியாகவும், திறனாய்வு தொடர்பான தனது பார்வையினை முன்வைப்பது இன்னொரு பகுதியாகவும், ஏனைய படைப்பாளிகளை, படைப்புக்களை அறிமுகம்
38 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 
 
 
 

II6b
இயல்வாணன்
செய்வது மற்றொரு பகுதியாகவும் உள்ளது. அத்துடன் நாடகங்கள், திரைப்படம் சார்ந்த அறிமுகமும் விமர்சனமும் வேறொரு பகுதியாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது. எனவே, இந் நூல் மேற்சுட்டிய நால்வகைப் பரிமாணங் களையும் கொண்டமைந்துள்ள 51 கட்டுரைகளின் தொகுப்பாகும்.
நூலின் முதலாவது கட்டுரை பழமையை ஒதுக்கிய புதுமை எது?’ என்பதாகும். இந்தக் கட்டுரையில் தனது அனுபவங்களை முன்வைக்கும் கட்டுரையாளர் புதுக்கவிதை வீச்சாகக் கிளம்பிய போது அதை ஆதரித்தும், அறிமுகப்படுத்தியும் பல கட்டுரைகளை எழுதியதை நினைவு கூர்கிறார். ஒரு கட்டத்தில் வெளிவந்த பல புதுக்கவிதைகளில் வெற்றுச் சுலோகங்களும், வார்த்தை மயக்கங்களும், சொற்சிலம்பங்களுமே அதிகம் காணப்பட் டதைக் காண்கிறார். அதன் பின்னர் பழமை, புதுமை என்பதற்கப்பால் உள்ளார்ந்த பண்புகள் கொண்டவற்றைக் கவிதையாகப் பார்க்க முற்பட்டதை எடுத்துரைக்கிறார். அத்துடன் தான் எழுதிய கவிதைகள் தொடர்பாக வெளி யான விமர்சனங்களை மதிப்பதாகவும், நையாண்டிகளை யல்ல என்பதையும் கட்டுரையில் இடித்துரைக்கிறார்.
திறனாய்வுக்கு உதவக் கூடிய சில வழிமுறைகள் என்றொரு கட்டுரையும் இந்நூலில் உள்ளது. இது மிக எளிமையான மிகச் சிறிய கட்டுரை. பாத்திரங்களின் குணவியல்புகளைப் புரிந்து கொள்வது தொடர்பான 3 அடிப்படைகளைச் சொல்கிறது. ஆனால்தலைப்பிற்கு ஏற்ற கனதி கட்டுரையில் இல்லை. புனைகதைகளில் உருவமும் உள்ளடக்கமும், யதார்த்தவாதம் என்றால் என்ன?, அண்மைக் காலத் திறனாய்வின் முக்கியத்துவம் ஆகிய கட்டுரைகளும் எளிமையான அறிமுகத்தைத் தரும் கட்டுரைகளாகும்.
நாவல் தொடர்பில் கே.எஸ்.சிவகுமாரன் உதிரிக் கட்டுரைகளாகத் தந்துள்ள விடயங்கள் தொகுத்துப் பார்க்கையில் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. இதனை மூன்று வகையில் நோக்கலாம். நாவல் என்றால் என்ன?, நாவல் இலக்கியமும் கருப் பொருளும், நாவல்களின் வகைகள் (சரித்திர, சிருங்கார, துப்பறியும், பயங்கர மர்ம நாவல்கள்) என்ற வகையில் நாவல் சார்ந்த அறிமுகம் முதலாவது வகையாகும். சில்லையூர் செல்வராஜன், கலாநிதி நா.சுப்பிரமணியம் ஆகியோரின் ஈழத்து நாவல்கள் தொடர்பான இரு நூல்களை அறிமுகம் செய்து வைப்பதனுாடாக ஈழத்து நாவல்கள் குறித்த அறிமுகத்தைக் குவிமையப்படுத்துவது இரண்டாவது வகையாகும். மார்ட்டின் விக்கிரமசிங்கவை யும், கப்ரியேல் கார்ஸியா மாக்குவெஸ்சையும் அவர்களது

Page 41
நாவல்களைக் குறிப்பிட்டு அறிமுகம் செய்வது மூன்றாவது வகையாகும்.
சிறுகதைகள் தொடர்பில் சிறிய அறிமுகத்தைத் தரும் கட்டுரையொன்றுடன் கோகிலா மகேந்திரன், தி.ஞானசேகரன், ப.ஆப்தீன், சமந்தா சிறிமான ஆகியோரின் சிறுகதைகளையும் அறிமுகம் செய்வதனுாடாக சிறுகதை கள் தொடர்பான ஒரு உணர்வுத் தொற்றலை வாசக ரிடத்தில் ஏற்படுத்துகிறார். -
‘என்னைப் புரட்டிப்போட்ட புத்தகம்’ என்ற கட்டுரை வாசகர்களை வழிப்படுத்தும் ஒரு கட்டுரையாகும். கொலின் வில்சன் தொடர்பில், அவரது படைப்புக்கள் தொடர்பில் பெரும் பிரமிப்பை அக்கட்டுரையும்,
தமிழாக்கம் அருள்திரு இராசேந்திரம் ஸ்ரலின் வெளியீடு: ஆயர் Sösti, பிரதான வீதி, யாழ்ப்பாணம் பதிப்பு: வைகாசி 2014 &প্ত 651606): 18O.OO
மனித வாழ்வின் அடிப்படை நோக்கம் என்பது மனநிறைவை - பூரணத்துவத்தை அடைவதே. அதற்கென மனிதன் நாடும் வழிவகைகள் பலவாக இருக்கின்றன. மனிதன் ஒவ்வொருவனுள்ளும் அந்தப் பூரணத்துவம் தொடர்பான உள்ளுணர்வு உறைந்து கிடக்கிறது. நிறை வான அன்பை நாடும் அந்த உள்ளுணர்வானது தான் சார்ந்திருக்கும் உறவுகளிடம் அதைத் தேடி ஒரு கட்டத்தில் ஏமாற்ற உணர்வை எதிர்கொள்வதாக அமைகிறது. இந்த உண்மையை உணர்ந்து முடிவற்றதும் நிலையானதுமான அன்பு எதுவெனக் கண்டுணரும் மார்க்கத்தைக் கூறுகின்ற ஒரு அரிய சிந்தனைக் களஞ்சியமாக இந் நூல் விளங்கு கின்றது.
அருள்திரு. இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட Henri J. M. Nouwen gyGIrid, GTITG) 6TCupg5 LILL The Inner Voice of Love: A Journey Through Anguish to Freedom GT6in) DITGair தமிழாக்கம் ஆன்மீகத் தேடலுடைய இறையன்பு என்னும்
 

அதனைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையும் தருகின்றன.
தொகுத்து நோக்கின் இந்நூலில் கே. எஸ்.சிவ
துமாரன் பல விடயங்கள் தொடர்பில் தனது கவனக் குவிப்பை வாசகரிடத்தில் தொற்ற வைக்கிறார். எளிமை பான, சிறிய கட்டுரைகள் மூலம் இலகு வாசிப்பை ரற்படுத்துவதாக இக் கட்டுகரைகள் அமைந்துள்ளன. நூலின் கட்டுரைகளை தனித்தனிப் பகுதிகளாக (நாவல், Cறுகதை, விமர்சனம், திரைப்படம், எனது எழுத்துக்கள்) தொகுத்திருந்தால் ஆரம்ப வாசகர்கள் அதிகம் பயன டைந்திருப்பர். கே. எஸ். சிவகுமாரனுடைய தேர்ந்த, முதிர்ந்த கண்களால் கலை இலக்கியங்களை நாம் காண் பதற்கு இந்நூல் வழிவகை செய்கிறது.
6T6lTTijd (6): GÍGjGDGU) GibsTÖhöfuII gCb LILLIGIJIÏD
தரிசனன் பேரனுபவத்துக்கு ஆளாவதில் உள்ள மகிழ்ச்சியை - நிறைவை அருமையாய் எடுத்துரைக்கிறது.
வாழ்வின் அடிப்படை ஆதாரமாய் எல்லா ஜீவன் களையும் தாங்கி இயங்க வைக்கும் இறையன்பு எவ்வளவு நெருக்கமாய் உன்னின் உள் இருந்து ஒளியூட்டி வழிகாட்டு கிறது என்பதை எளிமையாய் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
சகல வல்லமையும் உடைய இறைவனின் பேரன்பு எப்படியெல்லாம் மனிதனைப் போஷிக்கிறது என்பதை ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். அந்த உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க மொழி நடையில் அழகாக மொழி பெயர்த்துள்ளார் அருட்தந்தையவர்கள்.
முழுமையான மனிதமயமாதல் என்னும் கருத்தி னுாடாக ஒரு மனிதன் எந்த நோக்கத்தோடு படைக்கப் பட்டானோ அந்த நோக்கத்துக்கு இசைவாக மாறுவதே இந்த வாழ்வின் பெருநோக்கு என்பது புரிய வைக்கப் படுகிறது.
நீ எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாக அன்பு செய்துள்ளாயோ எவ்வளவுக்கு எவ்வளவு உன் அன்புக்காக துன்பங்களை அனுபவிக்க உன்னை அனுமதிக்கிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உன் இதயத்தை ஆழமாகவும் அகலமாகவும் விசாலிக்கச் செய்ய முடியும் என்று கூறுகின்ற இந்த நூலின் படைப்பாளி அன்பின் சக்தியைப் பற்றி, அன்பு எவ்வளவு தூரம் சாதிக்கும் என்பது பற்றி மிகவும் எளிமையாகப் புரிய வைக்கிறார். ஆத்மீக வெளிச்சம் வழங்கும் ஒரு ஒளி விளக்காக இந்நூல் வாசகனை உன்னதமான வாழ்வு நோக்கி அன்புடன் இட்டுச் செல்கிறது. அனைவரும் இந் நூலை மனதாரப் பயின்று கொள்வாரெனில் வாழ்க்கை ஒரு ஒளிமிக்க அனுபவமாய் விரியும் என்பதில் ஐயமில்லை.
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 39

Page 42
நூல்: நினைவு நல்லது வேண்டும்
(சிறுகதைத் தொகுதி) ஆசிரியர்: ப. விஷ்ணுவர்த்தினி வெளியீடு: ஜீவநதி
৪ষ্ট கலைஅகம், அல்வாய்.
பதிப்பு: 3,616of 2013 விலை: 250.00
ஈழத்து இலக்கியத் தளத்தில் புனைகதையாக் கத்தில் பெண் படைப்பாளிகள் அரிதாகவே ஈடுபட்டு வருகின்றனர் என்பது பரவலான கருத்தாகும்.
எனினும், சமகாலத்தில் புலம்பெயர் பெண் படைப்பாளிகள் பலர் காத்திரமான ஆக்கங்களைச் செய்து வருகின்ற போதும், அவற்றில் சில மட்டும் எமது பார்வைக்கு கிடைக்கின்றன.
ஈழத்தில் இரு தசாப்த்த காலங்களில் முக்கியமான பெண் புனைகதையாளர்களாக இனங்காட்டிநிற்பவர்களில் ஒருவராக விஷ்ணுவர்த்தினியும் திகழ்கின்றார். விஷ்ணு வர்த்தினியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘மனதில் உறுதி வேண்டும் 2010 இல் வெளிவந்தது. இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மூலம் நம்பிக்கை தரும் எழுத்தாளராக விஷ்ணுவர்த்தினி தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரது இரண்டாவது தொகுதியான ‘நினைவு நல்லது வேண்டும்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் யதார்த்தக் கூறுகள் மலிந்த உருவ அமைதி பெற்ற நல்ல சிறுகதைகளையும் புனைந்தளித்துள்ளார். இத் தொகுப்பில் உள்ள பல கதைகள் போரின் போதும், போருக்குப் பின்னாலான கால கட்டத்தைச் சார்ந்ததாக மனிதர்கள் முகம் கொடுத்த அவலங்களையும், குறிப்பாகப் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும், சிறார்களின் வாழ்வில் தொக்கி நிற்கும் ஏக்கங்களையும் பிரதிபலிக்கின்றன.
சொந்தமில்லாத பந்தங்கள், கடவுளின் குழந்தை கள், நாதியில்லாப் பிறவியிலே என்பன யுத்தத்தின் கொடூரமான சிதைவுகளால் அல்லலுறும் குழந்தைகள் பற்றிய பதிவுகளாகும். இந்த நாட்டின் எதிர்காலத்தின் வசந்தத்திற்காக கனவு காணும் சின்ன ஜீவன்கள்
40 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 கா
 
 

பு நல்லது வேண்டும்
வே. ஐ. வரதராஜன்
மொட்டிலே தீக்கங்குகளால் கருக்கப்படும் நிலையினை உணர்வின் வழியே சித்திரித்திருப்பது அவரது மென்னு
ணர்வுகளைக் கோடிட்டுக் காட்டுவதாயமைந்துள்ளன.
*விழித்திரு’ என்னும் கதைவழியே பதின்ம வயதுச் சிறுமி தனது தாயாரின் இரண்டாவது கணவனால் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டு கர்ப்பமடைவதும் சிறுமியைப் பலவந்தமாகக் கர்ப்பச் சிதைவுக்குட்படுத்துவதும் அதனால் சிறுமி மரணிப்பதுவும் யதார்த்தமாய்ச் சித்திரமாவதுடன் இத்தகைய உடல் ரீதியான வன்முறையும், தகாத மருத்துவத்தினால் ஏற்படும் கோரவிளைவும் கதையில் பதிவாகி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றன.
விட்டில்கள், மறப்பேனோடி,திருப்பம் ஆகிய கதைகளும் பெண் விழிப்புணர்வைச் சுட்டி நிற்கும் கதைகளாகப் பரிணமித்துள்ளன. மேற்கூறியவற்றை விட, முதியவரின் துயரத்தைக் காட்டும் ஊமைக் காயம், சகோதரிகளின் நல்வாழ்விற்காகத் தம்மை ஆகுதியாக்கும் இளைஞர்களின் கதைகளாக மெழுகுவர்த்தி, விட்டுக் கொடுப்பு ஆகியன இடம்பெறுகின்றன.
புரிந்துணர்வு அற்ற காரணத்தால் ஏற்படும் முரண்களையும், அவை சீர் செய்யப்படுவதையும் ‘நினைவு நல்லது வேண்டும்’ என்ற தலைப்புச் சிறுகதை கூறுகின்றது.
இவரின் கதைகளில் வாழ்வைத் தொலைத்த மக்களின் மீளுருவாக்கம் பற்றிப் பேசப்படுவதுடன், யதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் நேர்கோட்டு முறையில் சொல்லப்படுகின்றன. பாத்திர உருவாக்கமும் தெளிவான நடையில் கதைகளை நகர்த்திச் செல்லும் முறைமையினால் ஒரு முதிர்ச்சியுடைய படைப்பாளியின் கதைகளை வாசிக்கும் அனுபவத்தை தருகின்றன. இருப்பினும், விஷ்ணுவர்த்தினி இனி உருவாக்கும் படைப்புக்களில் அக உணர்வின் பிரதிபலிப்புக்களை தேர்ந்த உரையாடல்கள் மூலம் பதிவு இடுவாராயின் செழுமையும், மெருகும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமிருக்கின்றன.
நூல் மதிப்பீடுகள் நூல் மதிப்பீடுகள்’ பகுதியில் தங்கள் நூல்களும், சஞ்சிகைகளும் தொடர்பான மதிப்பீடுகள் இடம் பெறுவதை விரும்பும் வெளியீட்டாளர்கள் தமது படைப்பு களின் இரண்டு பிரதிகளை அனுப்பிவைக்கவும். மூன்று வருடங்களுக்குள் வெளிவந்த நூல்கள் மதிப்பீட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ‘வரப்பெற்றோம் பகுதியில் சிறிய அறிமுகக் குறிப்பிற்கு
V ஒரு பிரதி மட்டும் அனுப்பலாம்.

Page 43
கலைஅகம், அல்வாய் சித்திரை 2014
“நவீனத்துவ இலக்கியம் உலகைப் புரிந்து கொள்ள உதவக்கூடிய கருத்துக்களை உருவாக்கியது. அதற்கேற்ற ஆக்கங்களையும் உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் அக் கருத்துக்களையும், படைப்புக்களையும் கூர்ந்து ஆராயும் கருத்துக்களையும், படைப்புக்களையும் உரு வாக்கி வருகிறது. நவீனத்துவம் உலகைப்பார்த்தது. பின் நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க் கிறது.”
ஜெயமோகன்
இலக்கியம் என்பது காலத்தின் உற்பத்தியாகவும், காலத்தை உற்பவிப்பதாகவும் அமையப் பெறும். தமிழ் இலக்கியப் பரப்பில் உரைநடை வளர்ச்சியின் பின்னதாக தோற்றம் பெற்ற நாவல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கியங்கள் காலத்திற்கு காலம் ஏற்பட்ட மாற்றங் களிற்கேற்ப தம் கருத்தியல் நிலையிலும், வடிவ நிலை யிலும் மாற்றங்களைப் பெற்ற வண்ணமே காணப்படு கின்றன. இலக்கிய வடிவங்கள் யாவும் பல்வேறு மாறுதல் முறைகளைக் கடந்து வந்துவிட்டன. பழைய நேரடி விபரிப்பு முறைகளைத் தவிர்த்துப் பழைய மையங்கள் தகர்ந்த புதிய மையத்தை எதிர்ப்பட்டு நிற்கும் கருத்துக் களை படைப்புக்கள் ஒவ்வொன்றும் வெளிக்கொணரு வதாய் அமையப் பெற்றுள்ளன. இவ்வாறானதொரு கருத்தியலில் புதிய திசை நோக்கிப் பயணிக்கும் படைப் புக்களாகவே இ.சு.முரளிதரனின் சிறுகதைகள் அமையப் பெற்றுள்ளன. இவரது சிறுகதைகளில் குறியீடுகளே கதை சொல்லிகளாக காணப்படுகின்றன. இதிகாச புராண கதை மாந்தர்களை இக்கால நடப்பியலோடு பொருத்தி இழக்கப்படும் வாழ்வியலிற்கு அர்த்தம் போதித்துள்ளன.
நேர்கோட்டுத்தனமான சிறுகதையின் வடிவ
 

ÖT GDöböldi 6l GT
கே. எம். செல்வதாஸ் நிலையினைத் தகர்த்து, கதைகள் நகரும் சூழலில் கதை களே வடிவங்களைத் தீர்மானிக்கும் தன்மையுடையதாய் சிறுகதைகளை மடைமாற்றி அமைப்பியலிலும், பின் நவீனத்துவ சிந்தனை மரபை உட்படுத்தியுள்ளார். கடவுளின் கைபேசி எண், பாடக்குறிப்பு, AB +குருதியும் நீல நரியும், சிறுத்தொண்டரின் சேவை நலன் பாராட்டு போன்ற சிறுகதைகள் அமைப்பியலில் புதுமை பெற்ற படைப்புக்களாகவும் சிந்தனைக் குவியத்தை தன்பால் ஈர்த்து புதிய கருத்தியல்களை உற்பவிக்கும் படைப்புக் களாகவும் காணப்படுகின்றன.
ஒரு படைப்பு எல்லையற்ற விவாதத்திற்கு வாசகனை இட்டுச் செல்லும்தன்மையுடையதாய் இருத்தல் வேண்டும். முடிவுறாத விவாதங்களை அவை திறக்கின்ற வேளையிலேயே படைப்பின் அனுபவத்தினையும், படைப் பாளியின் அனுபவத்தினையும் வாசகனால் முழுமையாக அனுபவிக்க முடியும். படைப்பாளியின் கையிலிருந்து படைப்பு வாசகனிடம் செல்கின்ற வேளை படைப்பின் உரிமை வாசகனிடம் சென்றடைகின்றது. மேலும் மீள் வாசிப்பு என்பது இன்றைய காலச் சூழலில் வேண்டப் படுகின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. கால இடை வெளியின் மாறுதலுக்கேற்ப மாற்றமுறும் சிந்தனைக் கிளரல்களுக்கேற்ப பல்வேறு விடயங்கள் மீள்வாசிப் பிற்குள் உட்படுத்த வேண்டிய தேவையை காலமே கட்டமைத்துள்ளது. அவ்வகையில் இ.சு.முரளிதரனின் “பகிர்வு’ எனும் சிறுகதை இந்து சமயத்தில் நிலவிவரும் மாம்பழம் பெறும் கருத்தியல் சார்ந்த கதையை சமகால நிகழ்வுகளோடு இணைத்து கட்டவிழ்ப்புச் செய்யப் படுவதாகவே அமையப்பெற்றுள்ளது.
“பூலோகத்தில் விழுந்த கனி இந்து சமுத்திரத்தில் தீவாக உருவாகியிருக்குமோ..? என்ற சிந்தனை எழுந்த போது எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். என்ன இருந்தாலும் ஒருவரே அனுபவிக்க நினைக்கிறது சகோதரத்துவமில்லை பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் ஏன் பரம் பொருளுக்கே வரவேயில்லை?”
பிரதியின் பெறுமானத்தை மேம்படுத்தி வாசிப்பு அனுபவத்தினை மற்றோர் தளத்திற்கு நகர்த்தக் கூடிய நுட்பமிகு சிறுகதைகளாக அமைந்துள்ளன. மரபுக் கதை யாடலை நிராகரித்து வடிவப்பரிசோதனைகளை நிகழ்த்தி, தனித்தனித் துண்டுகளாக அமைத்து, வாசகனின் ஆளுமை யால் இணைவு பெற்று பல்பரிமாணத்தை எய்துகின்றன. வாசகனையும் படைப்பிலே பங்காளியாக்கும் மாறுபட்ட கதை சொல்லியான இ.சு.முரளிதரனின் புனைவுவெளி ஈழத்துச் சிறுகதைகளின் வீச்செல்லையை அகலப்படுத்தும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 41

Page 44
6blil
நூல்: இவன் தான் மனிதன் (சிறுகதைத் தொகுதி) ஆசிரியர்: சூசை எட்வேட் வெளியீடு: இந்திரா 6G36)
i iоо4. அன்புவழிபுரம், 劃 திருகே 600 d606) பதிப்பு: 2013 sisoo; 25o.oo
இது கலைமலிந்து வரும் காலம். நினைத்தபடி யெல்லாம் செய்து முடிக்கக் கூடியளவுக்கு இன்றுள்ள தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கி விடுகி றது. புதிது புதிதாக நாளிதழ்களும், வார இதழ்களும் வெளி வரத் தொடங்கியுள்ளன. வார இதழ்களென்றால் சிறுகதை கள் இல்லாமல் பத்தியப்படுமா? பக்க நிரப்புகைக்காக ஏதாவதொன்றைப் பிரசுரித்தாக வேண்டுமே. இதற்காக சிறுகதையென்ற பேரில் வாரவாரம் ஏதாவதொன்று பிரசுர மாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு கலைத்துவமோ, புனைவு நுட்பமோ அவசியமில்லை. பிரசுரிப்பதற்கு ஏதாவது கிடைத்துவிட்டால் போதும். அதைச் சீர்தூக்கிப் பார்த்து மதிப்பீடு செய்து, பிரசுர முடிவு எடுப்பதற்கெல் லாம் கால அவகாசமில்லை. இதனால் கலைத்துவம் மலிவது மட்டுமன்றி நலிந்து கொண்டும் வருகிறது. இது தான் நமக்கு முன்னுள்ள யதார்த்தம். இதை எவரும் மறுத்துவிட முடியாது. இவ்வாறானதொரு நிலையில் வைத்துத்தான் சூசை எட்வேட்டின் ‘இவன் தான் மனிதன்’ சிறுகதைத் தொகுப்பை மதிப்பிட நேர்ந்துள்ளது. வார இதழ்களின் மீதுள்ள எனது வாசிப்பு அனுபவத்தில் சூசை எட்வேட் எனக்கு நன்கு பரிச்சயமானதொரு பெயர். அடிக்கடி சிறுகதை எழுதிவருமொருவரென்ற மனப்பதிவுடன் ‘இவன் தான் மனிதன்” பற்றிச் சில விடயங்களைக் கவனப்படுத்த எண்ணுகிறேன்.
இத் தொகுப்பில் ‘இவன் தான் மனிதன்’ தொடங்கி "சரித்திரத்தில் ஒரு பதிவு வரை பதினைந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. தன்னால் எதிர்கொள்ளப் படுமனைத்து நிகழ்வுகளுக்கும் இவர் ஒரு புனைவுத் தன்மையை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறார். இந்த முனைப்புத் தான் ஒரு கதை சொல்லிக்கு அவசிய மானது என்பதை மறுப்பதற்கில்லை எனினும், அதுவே இவருக்குரிய பலமாகவும், பலவீனமாகவும் அமைந்து
42 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 மா
 
 

jT6 Diji
சுரேஷ்
விடுகிறது. மரபு ரீதியான கதை சொல்லலில் பெரும்பாலும் கலைத்துவத்துடன் சமூக நோக்கும் கலந்திருக்க வேண்டு மென எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நோக்கானது கதை சொல்லலில் வெகு இயல்பாகக் கலந்திருக்க வேண்டும். இந்த இயல்புத்தன்மை கவனத்தில் கொள்ளப்படாத போது பிரச்சாரத்தொனி மேலோங்கி நிற்பது தவிர்க்க முடியாத தாகிவிடும். சூசை எட்வேட்டின் கதைகளுக்கும் நேர்ந் துள்ள விபத்து இதுதான். ஒவ்வொரு கதையிலும் ஒவ் வொரு புதுமையான கருத்தைச் சொல்லிவிட வேண்டு மென முனைப்புக்காட்டுகிறார். அந்த முனைப்பு அவரை நிதானமிழக்கச் செய்துவிடுகிறது. கருத்தைத் திணிக்க வேண்டிய இக்கட்டானநிலைக்குள்ளாகி அதற்காக வலிந்து உரையாடல்களைக் கட்டமைக்க வேண்டியேற்படுகிறது. இதைத் தவிர்த்திருந்தால் அநேகமான கதைகள் வெற்றி யடைந்திருக்கும். ஒரு வாசகன் ஒரு கதையில் மறைமுக மாகத் தன்னியல்பையே தேடுகிறான். இந் நிலையில் கருத்துத் திணிப்பையே ஒர் உத்தியாகப் பிரயோகிப்பது வாசகனைச் சலிப்பிற்குள்ளாக்கி விடும்.
இக் கதைத் தொகுப்பின் வழியே சூசை எட்வேட் வெவ்வேறு வகை மாதிரியான நபர்களை அறிமுகம் செய்வதில் வெற்றி பெறுகிறார். இன முரண்பாடு, போர்ச் சூழல், அகமுரண்பாடு, சமூக ஏற்றத் தாழ்வு, தனிநபர் வாழ்க்கை நிலையெனப் பல்வேறு தளங்களிலும் இவ் வகை மாதிரி நபர்களைக் கொண்டு புனைவை நகர்த்துகிறார். இதற்கானதன் முனைப்பினை பாராட்டத்தான் வேண்டும். இத் தொகுப்பில் குறிப்பிடக்கூடிய கதைகளெனப் பார்த்தால் ‘வரலாற்றுப் பயணம்.’, ‘சரித்திரத்தில் ஒரு பதிவு’, ‘பக்தர்கள் செய்த பாவம்.” எனும் மூன்றையும் எடுத்துக்காட்டலாம்.
'பக்தர்கள் செய்த பாவம். கதையில் கையாளப் படும் கருப்பொருள் வலுவானதொன்று. எனினும் இக் கதை யின் வழியே தம்மாலியன்றளவுக்கு கருத்து வெளிப் பாட்டை செய்து முடித்துவிட வேண்டுமென்ற முனைப்பி னால் அவர் மேற்கொள்ளும் கருத்தேற்றம் மோசமான திணிப்பாகி இக் கதை வாசகனிடத்தில் ஏற்படுத்த வேண்டிய அதிர்வினை ஏற்படுத்தாமல் வெறுங்கதை சொல்லலாக ஒய்ந்து போகிறது. கருத்தேற்றத்தினை மட்டுப்படுத்தி யிருந்தால் இது ஒரு கட்டிறுக்கமான புனைகதையாக வெற்றியடைந்திருக்கும்.
அடுத்து ‘வரலாற்றுப்பயணம். பகுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வினை யும், ‘சரித்திரத்தில் ஒரு பதிவு வன்னி இறுதிப் போரினையும்
மையமாகக் கொண்டியங்கும் கதைகளாக அமைந்துள்ளன.
s
1 9 95 g (TG) u
எடுத்துக் கொண்ட கருப்பொருள்கள் முக்கியமானவை

Page 45
தான். ஆனால் புனைவு நுட்பம் கைவராமையினாலும், எதிர்பார்க்கப்படும் நம்பகத்தன்மையைக் கொண்டிராமை யினாலும் இவ்விருகதைகளுமே கவனிப்பைப் பெறத்தவறி விடுகின்றன. இவ்விருகதைகளையும் சூசை எட்வேட் தொடர்ந்து சிறப்பாக மெருகேற்றியிருந்தால் சிறப்பான கதைகளாக மிளிர்ந்திருக்கக்கூடிய சாத்தியமுண்டு. இத் தொகுப்பிலுள்ள அநேகமான கதைகளுக்கும் நேர்ந்திருக் கும் விபத்து இதுதான்.
ஒரு விமர்சகனாக சூசை எட்வேட்டின் இக் கதைத் தொகுப்பை விதந்து கூறி உசுப்பேற்றி விட்டுப்போக
ஒரு நல்ல கவிஞராக, ஒரு பொறுப்புள்ள படைப் பாளியாக இனங்காணப்பட்டுள்ள த.அஜந்தகுமாரின் 26 கட்டுரைகள்; சிறுகதைகள் பற்றிய பார்வைகள், படைப்பு - படைப்பாளி - விமர்சனம், பொது என்ற மூன்று பகுதி களாக நூல் வடிவு பெற்று “படைப்பின் கதவுகள்’ என்ற பெயரோடு வெளிவந்திருக்கின்றன.
ஆர்வமும் தேடலும் கொண்ட வாசகராய் உள்மனக் கருத்துக்களை, அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்ள விழையும் ஒரு படைப்பாளியாய் இந்த நூலின் வழி நாம் அஜந்தகுமாரின் நிதானித்த நோக்கினை அடையாளம் காண்கிறோம்.
கல்விப்புலத்தில் தொழில் புரியும் ஒரு எழுத்தாள ராக உள்ள இவரது பணி இலக்கியத் தேடல் கொண்ட, வாசிப்பில் ஈடுபாடு கொண்ட, நூல்களின் பணியில் முழு நம்பிக்கை கொண்ட யாரோடும் இணக்கமாக உரையாடும் ஒரு மொழியில் படைக்கப்பட்டிருக்கிறது.
தமிழின் முதற் சிறுகதையான வ.வே.சு.ஐயரின்
“குளத்தங்கரை அரசமரம் தொடங்கி தேவமுகுந்தன், பவானி, குந்தவை, தமிழ்ப்பிரியா, ராணிசீதரன், பிரமிளா
 

மனமொப்பவில்லை. வலுவான கருப்பொருள்களைத் தெரிவு செய்யும் இவர், புனைவதிலும் வலுவடைய வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் சொல்கிறேன். கதை புனைவதிலுள்ள வேகம் வரவேற்கக் கூடியதுதான். ஆனால் நிதானமும் தேவை. தகுந்த முறையில் மெருகேற்றிக் கொள்ள வேண்டியது மேலும் அவசியமானதொன்று. கருத்தேற்றம் செய்யலாம் அதுவே திணிப்பாக மாறிவிடக் கூடாது. இதற்கும் மேலாக நம்பகத் தன்மையுடன் எழுது வது இன்னுமின்னும் அவசியமானது. இது சூசை எட்வேட் டுக்குப் புதிய திசையைக் காட்டுமென நம்புகிறேன்.
6 (fiblähõl
நேசன்
பிரதீபன், நெலோமி ஆகிய இன்றைய சிறுகதைப் படைப் பாளிகளின் படைப்புக்களைத் தனது பார்வையால் அளந்து அந்தப் படைப்புக்களின் தனித்துவங்களை எடுத்துரைக்கும் பகுதி ஒன்றின் கட்டுரைகளோடு ‘கதைஞர்கள் பார்வையில் கற்பு’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையும் இடம்பெறு கிறது. நுணுகியதனது பார்வையூடாகப் படைப்பாளிகளின் உலகத்தை, நோக்கினை படைப்பின் தனித்துவத்தை ஆராய்கிறார்.
“படைப்பு - படைப்பாளி - விமர்சனம்’ என்னும் 2ஆம் பகுதி மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள் கொண்டு அமையப் பெற்றிருக் கிறது. ஒரு படைப்பு படைப்பாளியிடம் உருவாகுவதற்கு உந்தலாய் அமையத்தக்க அடிப்படை பற்றியும் ஒரு படைப் பாளி ஏன், எவ்வாறு படைப்பாளியாகிறான் என்பது பற்றியும் இப் பகுதியின் இக் கட்டுரை எடுத்துரைக்கிறது.
சமகாலத்தின் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், வெளியாகும் எழுத்துக்கள், தனிநபர்களது எழுத்தும் உள்ளமும் பார்வைகளின் கோணங்கள், கோணல்கள் என்பன ஆசிரியரின் பார்வைக்குட்படுகின்றன. விமர்சனங் களின் நோக்கமும் அமைப்பும் விமர்சனத்தை எதிர் கொள்ளும் படைப்பாளியின் மனநிலையில் காணப்படும் தன்மைகள் பற்றியும் ஆசிரியர் தனது மனப்பதிவுகளை நேர்மையுடன் குறிப்பிடுகிறார்.
பலதரப்பட்ட பொது விடயங்களையும், படைப் பாளிகள் மற்றும் அறிவுஜீவிகள் பற்றிய நோக்கங்களையும் கொண்டதாக மூன்றாவது பகுதி அமைகிறது. மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான இலக்கியச் சூழலின் அமைவு குறித்த ஆசிரியரின் ஆதங்கம், ஆர்வம் போன்றவற்றைக் கொண்ட தாகவும், ஒரு பகிர்வாகவும் “படைப்பின் கதவுகள்’ அமைந் துள்ளமை பாராட்டுக்குரியது.
அஜந்தகுமாரின் குரல் இலக்கிய உலகின் எதிர் பார்ப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளமை வரவேற்க வேண்டியது.
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 43

Page 46
நானே தீயுள் சுடரும் காத்திருப்பு நானே வார்த்தையுள் நெருடும் மறுதலிப்பு நானே பூமியுள் உறங்கும் பெருவெடிப்பு
வாய்மையின் மீதான நெருக்குதல்கள் சுடலை வரை அரசனை கொண்டுவந்தது அரிச்சந்திர புராணத்தில், நிலம், மனைவி, மக்கள் அரச அடையாளம் யாவும் இழந்து புலையனாய் சுடுகாட்டு அனுபவம் அரிச்சந்திரனை வரலாற் றில் “வாய்மைக்கு அரிச்சந்திரன்’ என்னும் மேற்கோளை உருவாக்கிற்று. இது புராணத்தில்.
இங்கேயும் ‘மயான காண்டம்’ என்னும் கவிதைத் தொகுப்பு துயரங்கள், தோல்விகள், இழப்புக்கள் பற்றி பேசுகின்றது. எனினும் எந்த மீட்பர்களாலும் மீட்கப் படாமல் போன 30 வருட போராட்ட வாழ்வு இழப்பு நெஞ்சை விழி கொண்டு அழவைக்கிறது. நான்கு கவிஞர் கள், முப்பத்தொரு கவிதைகள், 53 பக்கங்கள், உள்ள டக்கத்தை பூடமாக வெளிப்படுத்தி நிற்கும் அட்டைப் படம், நேர்த்தியான பக்க வடிவமைப்பு, மொத்தத்தில் வாசிக்கத்தூண்டும் அளவு.
எதை எழுதுவது என்று எழுத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது இருந்த வேளையில் இக் கவிதைத் தொகுப்பு என்னை எழுதத் தூண்டியுள்ளது. காரணம், ஒரு சில கவிதைகளின் வசீகரிப்பும் மன அதிர்வும்தான். பாதிப்பு கள் இலக்கியத்தின் வடிவங்களுள் பெரும் இடத்தை பிடித்துக் கொண்டாலும் அது அமைகின்ற விதத்திலேயே வடிவங்கள் கருக்கொள்கின்றன. மக்கள் இலக்கியங்கள் கருக்கொள்கின்றன.
உணர்வுப் பிடிப்போடு வெடிப்புடன் எழும் சொற்கள் மிகச் சரியான அளவில் பொருந்திப் போகும் போது நல்ல கவிதைகள் பிறக்கின்றன. இங்கே ‘கவிதை
44 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 மா
 

CbITGÜTLD böUII LIGILL
ஞா. கெனத்
களாக பார்க்கப்படுவதற்கு பெரும்பாலான கவிதைகள் அந்தத் தகுதியை பெற்றிருக்கின்றன எனலாம்.
“உன் தந்தையின் வீடு இப்போது ஒரு நினைவாலயம் அது சந்தையாகும் வரை காத்திருக்காதே சீக்கிரம் அடைந்துவிடு.”
(கிரிஷாந், பக்கம் - 10) “முடிவடையாத தெருக்களில் நடக்க சபிக்கப்பட்டன நம் குழந்தைகள்’
(பிரியாந்தி, பக்கம் 36) “எப்போதோ எதற்காகவோ எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மட்டும் சிறைப்பட்டுக் கொண்டன எனக்கான சிரிப்பு”
(கிருபா, பக்கம் 44) “எங்களுடைய கடலும் அப்பாவையும் அண்ணாவையும் ஒதுக்கி விட்டு இருப்பிடம் விரைந்திற்று.”
(லிங்கேஸ், பக்கம் 51)
தமது இருப்பு, இருப்பிடம் பற்றிய தேடலும் அதனால் உருவாகும் வெளியும் பல கவிதைகளில் மேற் கிளம்புகின்றது. தமது இருப்பை கேள்விக்குட்படுத்தல் தமது இனத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தல் பொதுவாக படைப்பாளிகளுக்குள்ள மன அங்கலாய்ப்பாக உள்ளது. குறிப்பாக தமது வாழிடம், வீடு பற்றிய எண்ணங் கள் பெரும் வலியாய் கவிஞர்களை ஆட்கொள்கிறது. இக்கவிஞர்களுக்கும் இது பொருந்திப்போகிறது.
‘என் தந்தையின் வீடு' எனத் தொடங்கும் கவிதை மிக அற்புதமாக வந்திருக்கிறது. வீட்டுக்கூடாக இன்னு மொரு கதவு திறக்கிறது. நிலம், வீடு, பேறு, விடுதலை என்பன ஒரே நேர்கோட்டுக்கு வருகின்றன. வீடு விடுதலை யின் குறியீடாக மோட்சத்தில் படிமமாகின்றது. காட்சிப் பொருளாக மாற இருக்கும் தந்தையின் வீட்டின் இடத்தை நிரப்புதல் தேவையாகின்றது. அபகரிக்கப்பட்ட நில மீட்பு அவசியமாகின்றது. இக்கவிதையை வாசிக்கும்போது மு. பொவின் ‘சூத்திரர் வருகை’ கவிதை நூலில் இடம் பெறும் ‘பஸ் விழுந்துபோகிறது’ கவிதை ஞாபகம் வருகிறது.
‘பிரார்த்தனைகளற்ற வெளி’ என்னும் கவிதை கடவுள்களும் எல்லா மீட்பர்களும் கடந்து சென்ற 30 வருட போராட்ட வாழ்வின் வீழ்ச்சியை மிகத் துயரமாக

Page 47
பாடுகிறது. பொதுவாக கடவுளின் இருப்பை "இல்லாமை, இயலாமை” போன்றவற்றோடு தொடர்புபடுத்தி பார்க்கும் ஐதீகம் உண்டு. இங்கே கடவுளின் இருப்பு பேசப்படுகிறது. ஆனால் அவரும் இயலாதவராய் கடந்து போன கசப்பான வரலாற்றுத் துயரமாகி விட்ட நமது நிலையை இக் கவிதை உணர்வுப்பிடிப்போடு கூறுகின்றது.
“அந்தோ பிரார்த்தனைகள் அற்ற வெளியை இலகுவாக கடந்து கொண்டிருக்கிறார் கடவுள்.”
இந்தக் கடவுளர் இயேசுவோ, புத்தனோ, முருகனோ, யாரோஒருவர் என்பது மட்டும் உண்மை. எமது வாழிடங்கள் பிரார்த்தனைகளற்ற வெளிகளாக மாறிய அந்த துயரநாட்களிலேயே இவர்கள் நம்மை விட்டு கடந்து சென்றுவிட்டனர் என்பதுதான் உண்மை. இது ஈழத்தின் அவலத்துக்கு மட்டுமல்ல உலகளாவிய ஒடுக்கு முறைக ளின்போது ‘கடவுளர்களின் குடியிருப்புகள்’ என்று நம்மை அடையாளப்படுத்தும் "மத நிறுவனங்களும் இவ்வாறு தான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. உலக வரலாற் றில். -
இக் கவிதை புத்தகத்தின் தலைப்பில் இடம்பெற் றுள்ள ‘மயான காண்டம் - பிந்திய பதிப்பு’ உயிர்க்கப் படாமல் போன நம் லோகிதாஸ்கள் பற்றிய நினைவுகளை துயரமாய் பாடுகின்றது. சடலங்களையும், எலும்புக் கூடுகளையும், புதைகுழி அடையாளங்களையும் சாட்சி யங்களாக வைத்துக் கொண்டு சர்வதேசத்தின் முன்னால் நீதி கேட்க அழும் இலட்சக்கணக்கான அரிச்சந்திரன்கள் நம் முன் விரிகிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள், புனித நூல்கள், மதக்கோட்பாடுகள் எல்லாம் ‘புதையுண்டு போன எம் லோகிதாஸர்களை’ உயிர்ப்பிக்க போவதில்லை என்ற யதார்த்தத்தை இக் கவிதை உணர்த்தி நிற்பதாகப்படுகிறது.
உலக நீதி என்பது உண்மையின்பால் கட்டுப் பட்டதல்ல. வணிகம், இலாபம், வளப்பங்கீடு, பிரதேச அரசியல், மூலதனப் பெருக்கம், முதலீடு போன்றவற்றால் கூட்டிணைக்கப்பட்ட நச்சு மையங்கள்’ ஆகும். இவை எப்போதும் தமது நலன்களுக்காக நீதியையும், உண்மை யையும், சாட்சியங்களையும் “டொலர்களுக்கும், யூரோக் களுக்கும்’ விற்று வயிற்றை நிரப்புகின்றன. இதுதான் என்றைக்குமான உலக ஒழுங்கு.
"வானிலிருந்து இறங்கி வருகிறது உண்மையின் மெல்லிய இறகொன்று காற்றில் அந்தரித்தலைந்து
சிதையில் வீழ்ந்து பொசுங்கிற்று அதுவும் துரோகத்தின் பசிய நிழல் படர்கிறது.” என்று தொடர்ந்து ‘எந்த உண்மையும் உன்னை உயிர்ப்பிக்கவில்லை என்பதை’ என்று முடிகின்றது எங்களின் மயானகாண்டம்.
எங்களின் மயான காண்டம் தர்மம் தோற்றுப்

போன மயான காண்டமாக முடிந்து போனது துர் அதிர்ஷ்டமே. சொற்களால் நிரப்ப முடியாத துயர வெளியை தந்து சர்வதேசத்தின் தெருக்களில் கையேந்தும் அரிச்சந்திரன்களாக ஆகி இருக்கிறோம்.
மறைந்த சிவரமணியின் கவிதைகளைப் படிப்பது போன்ற ஈர உணர்வைத் தரும் ‘என் சாமீதான பாடல் என்னும் கவிதை,
“மாறாப் பெருந்துயரை
ஆறாக் காயங்களை
ரணம் சுமந்த கணங்களை நிராகரிப்பிற்கான நியாயங்களை எடுத்துச் செல்கிறேன் எனது கனவுகளை உங்களிடம் கையளித்துவிட்டு’
‘பெண்” பால் அடிப்படையில் சமூகத்தில் தோற்றுப் போகிற நிலை அல்லது ‘அசாதாரணமான பெண்ணாக அடையாளப்படுத்துகையில் ஏற்படும் கையறு நிலையை பெண்படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள் எதிர் கொள்ளும் போது இவ்வகை கவிதைகள் எழுதுவதற் கான சூழ்நிலை உருவாகின்றது. இந்த மண்ணிலே சுய அடையாளத்தோடு, கெளரவத்தோடு வாழ நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் நித்தமும் சாமீதான ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றாள்.
யுத்தம் பற்றிய பதிவுகள் வெகு நாசூக்காக சொல்லப்படுகின்றன இங்கே. போர், சண்டை, இழப்பு சொற்களை தவிர்த்து புதிய புனைவில் கவிதைகள் வடிக்கப் பட்டிருக்கின்றன.
“அதற்குள் முடிந்தது
அண்டமதில் நம்மவரின்
சுவடு.”
(லிங்கேஸ், பக். 48)
“புதர் புகுந்த தேசத்தில் பெரும் விதைகளாய் மண்டியது மனிதாபிமானமல்ல வெறும் மண்டையோடுகளும் தான்’
(லிங்கேஸ், பக். 47)
“எம்மோடு வந்த பலர் முடிவிடம் தொடாமலேயே வீழ்ந்தனர். அவர்களின் இடத்தையும் எம் கால்கள் நிரப்பின’
(லிங்கேஸ், பக். 49)
இறுதிப் போரும், அது முடிந்து நகரும் நாட்களின் அனுபவங்கள், கவிதைகளின் நுட்பமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நேரிடையற்று இருமைத் தன்மையாய் இருக்கும் சொல் அடுக்குகள். அதிகமான புதிர்தன்மையை தருகின்றன. இவை மீண்டும் மீண்டு கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன.
கவிதை தரும் உள்ளடக்கம்; அது தரும் புரிதல், மனப்பாதிப்பு என்பனவற்றை கவிதை ஒன்று வாசகனுக்கு
மா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 45

Page 48
வழங்குவது போன்று அதன் தலைப்புக்களும் கூட கவித்து மாக அமையும் பட்சத்தில் கவிதை தரும் உணர்வுத் தொற் றல் விரிந்து செல்கிறது. அனுபவமாகின்றது.
இங்கே: “பொய்களால் வனையப்பட்ட ஆசனம் ‘புன்னகைப்பதால் அணியப்பட்ட முகமூடி’ “வேரறுப்புச் செய்யும் கிளைகள்’ "சட்டகத்தினுள் சிறைப்பட்ட புன்னகை உருவங்கள், குறியீடுகள், படிமங்கள் கொண்ட இத் தலைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
போராடிய இனம் தோற்றுப் போகும் போது அதன் பின்னால் எழும் அடக்கு முறைகள், அடையாளச் சிதைவுகள், பிடிப்பற்ற வாழ்க்கை என்பவை இறப்பை விட கொடூரமானவை. நித்தம் நித்தம் பொய்யாய், போலியாய் வாழ்கின்ற வாழ்வின் வலி மிகக் கொடூரமானது. வாழ்வை அலட்சியப்படுத்தாமல் தனது இனத்தின் இருப்போடு அடையாளப்படுத்தி வாழும் போது ஏற்படுகின்ற அக, புற முரண்பாடுகள் தற்கொலை விளிம்புக்கு கூட இட்டுச் செல்லும் மன இறுக்கத்தை தந்து விடுகின்றன. இந்த உணர்வுநிலையை பல கவிதைகள் தருகின்றன.
“எனக்கான நினைவுகளை நீர் குமிழியாக்குகிறான் சல்லடையில் நீர் ஏந்தும் சிறுவன்’
(கிருபா, பக். 44) “உணர்கின்றேன் பாழடைந்த வீட்டில் நிறைகுடம் வைத்தாற் போல்”
(கிருபா, பக். 43)
“காலம் தளிர்களைச் செதுக்கியிருந்தது சருகுகளாக”
(கிருபா, பக். 42)
வனாந்தர இரவுகளில் நிலவு தூங்க உதிரும் மலர்களின் இதழ்களினால் நினைவுகள் கலைய நெருக்கமான நெருடல்களிடையே தென்றல் காற்று தொட்டுத் தொட்டு விலக மனவெளிகளிடையே பட்டாம் பூச்சி விட்டு விட்டு துடிக்க விடியும் பொழுதினில் நிழல் வாழ்வின் நிஜம் நோக்கி விரையும் போது இடைவெளிகளற்ற வெற்றிடம் என்றும் வெறுமையல்ல.
器
46 LLLLLTTT C TTTS uOT 000 S LSLSLSLSLS

“முகாரி போர்த்தி அலையும் கிழட்டு நாய் ஒன்றின் ஊளை’
(கிருபா, பக். 41)
“குற்றங்கள் ஆமோதிக்கப்படும் சபை நடுவே திணறித் துடிக்கின்றது வலையில் சிக்கிய சிறு முயல்”
(கிருபா, பக். 40)
முடிவாக, நீண்ட இடைவேளைக்கு பின்னர் நல்ல கவிதைகளை அதுவும் புதியவர்களின் கவிதைகள் மனதுக்கு நம்பிக்கையை தருகின்றது. வாழ்வை புரிதலோடு பார்க்க வைக்கிறது. காய்ந்த வேர்கள் ஈரலிப்பை நோக்கி பயணப்பட வைக்கிறது. எனினும்,
“வரலாற்றின் நீண்ட மெளனத்தை
முன் ஏகிக் கடக்கும் பின்னொரு நாளில்
அவர்கள் அறியட்டும்
எந்த உண்மையும் உன்னை உயிர்ப்பிக்கவில்லை
என்பதை”
(பிரியாந்தி, பக். 38)
அட்டையின் பின்பக்கத்தை அலங்கரிக்கும் இவ் வரிகள் விரக்தியின் விளிம்பில் நின்று எம் முகத்தில் ஓங்கி அறைகிறது வரிகளை, இந்த வரிகள் தாண்டிச் செல்ல முடியாதளவுக்கு பிண்டமாய் முன் நிற்கிறது. நம் லோகிதாஸ்களின் வரலாறுகள் புதையுண்டு போன அல்லது காணாமல் போன உலக வரலாறுகளில் ஒன்றாகிப் போய்விடக்கூடாது என்று சொல்வதற்கு எந்தப் பற்றுக் கோடும் நமக்கு இல்லை இப்போது என நினைக்கும் நெஞ்சு வீரிட்டு அழுகின்றது. இன்னுமொரு பிந்திய மயான காண்டத்தில் லோகிதாஸ் சகள் உயிர்ப்பார்களா..? புராணங்கள் மறுவாசிப்புக்குள்ளாகுமா..? சொற்களற்ற வெளியில் மெளனம் அலைகின்றது இங்கே.

Page 49
வரப்பெற்
நூல்: அடையாளமற்றிருத்தல் (கவிதைத் தொகுதி) ஆசிரியர்: சம்பூர் வதனரூபன், வெளியீடு. வடலி, 8A, அழகிரி நகர், 4ஆவது தெரு, லட்சுமிபுரம், வடபழனி, சென்னை 26, முதற்பதிப்பு: ஒக்ரோபர் 2013, விலை: 7O.OO இந்திய ரூபர்).
“வாழ்வியலின் நெருக்குவாரங்கள் எனது தொண்டையை இறுக்கியபோதெல்லாம்
அப்போதைய நொடிகளின் வலியையும், கோபத் தையும், உணர்ச்சிகளையும் குறித்துக் கொண்ட பதிவுகளின் தொகுப்புகளாகும்’ என தனது கவிதைகள் குறித்து குறிப்பிட்டுள்ள சம்பூர் வதனரூபனின் 41 கவிதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது ஆசிரியரின் இரண்டா வது கவிதைத் தொகுப்பாகும்.
நூல்: பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம் (பால் நிலை செயல்வாத ஆக்கங்கள்), தொகுப்பாளர்கள்: ஜோகருணேந்திராது.கெளரீஸ்வரன், சுநிர்மலவாசன், சி.ஜெயசங்கர், கமலாவாசுகி, வெளியீடு: மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடு களுக்கானநண்பர்கள் குழு,30, பழைய வாடிவீட்டுவீதி,
மட்டக்களப்பு. முதற்பதிப்பு: 16 மார்ச் 2014, விலை: குறிப்பிடப்படவில்லை)
“பால்நிலை சமத்துவத்துக்கான ஆண் களின் பயணம் ஒரு வாழ்க்கை நெறி, மூன்றாவது கண் நண்பர்களின் கடந்த 10 ஆண்டு கால வாழ்க்கை முறை சார்ந்த அனுபவங்கள், பால் நிலை சமத்துவத்துக்கான பயில்வுகள், பகிர்வு கள், முன்னெடுப்புக்களில் அவர்களது பதிவுகள், முன்னெடுப்புகளுக்கான அவர்களின் ஆக்கங்கள்’ என விடயங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளதாக முன்னுரையில் சி. ஜெயசங்கர்குறிப்பிட்டுள்ளார்.
நூல்: அவனும். அதுவும். (சிறுகதைத் தொகுதி), வெளியீடு: கலை கலாசார அபிவிருத்தி அமையம், இல 159A, கடல் முக வீதி, திருகோணமலை. முதற்பதிப்பு: 6hugerf 17, 2013. 6fe06): 2OO.OO
2012 ஜூலை மாதம் தொடக்கம் திரு கோணமலையில் இருந்து வெளிவரும் மலை
முரசு பத்திரிகையின் ஆசிரியரான மாயன் இளம் தலைமுறைப் படைப்பாளியாவர். இவரால் 19992012 வரை எழுதப்பட்ட எட்டு சிறுகதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. “சமூக அக் கறையுள்ள ஒரு படைப்பாளியின் பார்வையில் இச் சமூகமும் மனிதர்களும் எப்படி எப்படி யெல்லாம் அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை இக் கதைகளைப் படிக்கும் போது எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது’ என முன்னுரையில் தாமரைச்செல்வி குறிப்பிட் டுள்ளார்.
 
 
 

)றோம்
நூல். குமுறல் (கவிதைத் தொகுதி, ஆசிரியர்: சுபாஷினி ரணவன், வெளியீடு: தேஜஸ், யாழ்ப்பாணம். முதற் திப்பு:சித்திரை 2014, விலை:38O.OO.
ஏற்கெனவே “பகிர்வு’ என்ற கவிதைத் தொகுதி மூலம் கவிதை உலகில் அறிமுகமான பாஷினி பிரணவனின் இரண்டாவது தொகுதி பாகிய குமுறலில் 53 கவிதைகள் இடம்
பெற்றுள்ளன. “சமூகத்தை கூர்ந்து நோக்கிப் படம் பிடிக்கும் பாங்கினை இவரது கவிதை 5ளிலே காணலாம்” என பேராசிரியர் எஸ். வெலிங்கராசா இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: கண்ணிர்ப் பூக்கள் (உண்மைச் சம்பவத்தின் சிறு |ளிகள்), ஆசிரியர் நஸ்பியா அஜித், வெளியீடு: காதி >பூபக்கர் வீதி, யாழ்ப்பாணம். முதற்பதிப்பு:2014, விலை:
5O.OO
இத் தொகுதியில் ஆசிரியரால் எழுதப் பட்ட கண்ணிர்ப் பூக்கள் என்னும் சிறு நாவல், பெண்ணே, தாயும் குழந்தையும் என்ற இரண்டு விதைகள், ஒளிதந்த மெழுகுதிரி, கண்ணிர்ப்
பூக்களும் கரை சேரலாம் என்ற இரண்டு சிறு தைகள் என ஐந்து ஆக்கங்கள் இடம்பெற் லுள்ளன.
ால்: இதய தாகம் (கவிதைத் தொகுதி), ஆசிரியர் ாலினி (திருமதி மேரி மெக்டலீன் ஜெயக்கெனடி), |வளியீடு GH அச்சகம், முதற்பதிப்பு: 2013. விலை: தறிப்பிடப்படவில்லை).
“எனது கவிதைகள் எனது இதயச் மைகளை ஆற்றியுள்ளன. ஆத்மார்த்தமான
ருெப்தியை எனக்கு அளித்துள்ளன. பல சந்தர்ப் பங்களில் என்னை நெறிப்படுத்தியிருக்கின்றன. 2தனால் நான் அதனை உளப்பூர்வமாக நேசிக் ன்ெறேன்” எனக் குறிப்பிடும் ஆசிரியரின் 25 விதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ால் விசையுறு பந்தினைப் போல் (கட்டுரைகள்), ஆசிரியர் சி. விமலன், வெளியீடு: உயில், முதற்பதிப்பு:
Tsiö 2O14, 6f6o6o: 2OO.OO
“விளையாட்டுத்துறை சார்ந்த நூல்கள் மிழில் அரிதாகவே வெளிவருகின்ற நிலையில் னிநபர் ஒருவரினால் பத்திரிகைகளிலும், ஞ்சிகைகளிலும், இணையத்திலும் எழுதி வெளிவந்த விளையாட்டுத்துறை சார் பத்தி
ாழுத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. விசையறு பந்தைப் போல்’ என்னும் இந்நூல்” ான யாழ். பல்கலைக்கழக ஒய்வுநிலை பேராசி யர் மா. நடராஜசுந்தரம் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS S TLTTTTT C TTTS TT 000 47
321ty &g4 நூலகம் 14 ויי
*雯轟fà。

Page 50
பதிப்பாசிரியர் கா. நீலகண்டன் செ. சுதர்சன்
வெளியீடு புலவர் இல்லம் இமையாணன் - உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்.
ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப்
புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய "உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்’ என்னும் பெருந் தொகுதியின் வெளியீட்டு விழா 05.01.2014 இல் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நடைபெற்றபோது, அறிமுகவுரையினை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் பூ சோதிநாதன் நிகழ்த்தினார். அந்த உரையின் எழுத்துருவ வடிவம் இங்கு இடம்பெற்றுள்ளது. பிரபந்த பெருந்திரட்டு நூல் பற்றிய அறிமுகத்தை வாசகர்கள் பெற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும்.
48 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
01. (55 TibgpialsTL
எனக்கு அவர்கள் தமது த தமது ஆசி உரை திருமதி இதில்ை புலவரைப் பற்றி எடுத்துக் கூறியி
தேவை தானா எ
02. பதிப்பாசிரிய
பிரபந்த புலவரின் வழித் மற்றது, பேரா: செ. சுதர்சன் ஆ கட்டுரைகளைட அவர்கள் இருவ பிரபந்தப் பெருந் பத்தொன்பதாம் வகிபாகம் முதல கட்டுரைகளில் க அளவுக்கு எடுத்து
回回血
புலவர் புலவரின் மேல் காணலாம். உதா சிவசம்புப் புலவ சிவசம்புப் புல6 ஆறுமுகநாவல வித்தியாசாலைச் பரீட்சித்து வகு அவர் வருவார். அறிவிப்பதை வ நிகழ்ச்சிகளில் வ பின் பிரசங்கம் கொண்டிருந்தது புலவர் கவிதை கவிதையில் அன் மழை, சிவனார் கவிதையை அன தயாரித்து வருப தவறானது என் எழுந்து “நான் இ
புலவனைக் கண்
 
 
 
 
 
 
 
 
 
 

முன் உரையாற்றிய விழாத் தலைவர் வல்வை ந.அனந்தராஜ் 1லைமை உரையிலும், சிவப்பிரம பூரீச.வைத்தியநாதக்குருக்கள் யிலும், பேராசிரியர் கி.விசாகரூபன் தனது வாழ்த்துரையிலும், லயம்பலம் அவர்கள் தமது வெளியீட்டு உரையிலும், சிவசம்புப் யும், அவரது பிரபந்தப் பெருந்திரட்டுப் பற்றியும் மிக விரிவாக ருந்தார்கள். அவற்றுக்கு மேலாக அறிமுக உரை என ஒன்று ான்றே எண்ணத்தோன்றுகின்றது.
ர்களின் கட்டுரைகள்
த் திரட்டின் பதிப்பாசிரியர்கள் இருவர் ஆவர். ஒன்று, சிவசம்புப் தோன்றலான புலவர்மணி கா.நீலகண்டன் அவர்கள் ஆகும். தனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பூகும். இருவருமே ஆளுக்கு ஒரு கட்டுரையாக இரண்டு ப் பிரபந்தத் திரட்டின் முற்பகுதியில் எழுதி உள்ளார்கள். ரும் சிவசம்புப் புலவரின் வாழ்க்கையைப் பற்றியும், அவரது திரட்டின் தமிழ் இலக்கியத்தரம், பாடல்களின் முக்கியத்துவம், நூற்றாண்டின் ஈழத்தமிழ் இலக்கியத்தில் சிவசம்புப் புலவரின் ானவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அவர்கள் தமது கூறிய விடயங்களை விட மேலும் புதிதாக எவரும் கூற முடியாத து உரைத்திருக்கின்றார்கள்.
ட்டிச்சிவசம்புப்புலவரின்
தப்பெருந்திரட்
2-2- m em em 2=Y=V2
பூ. சோதிநாதன்
மணி கா.நீலகண்டன் அவர்களது கட்டுரையில் சிவசம்புப் தைமையை மிகக் கச்சிதமாக எடுத்துக் கூறியிருப்பதைக் ாரணமாக, ஒரு சாலை மாணாக்கர்களான ஆறுமுகநாவலரும், பரும் சந்திக்கின்ற ஒர் இடத்தை இங்கு எடுத்துக்காட்டலாம். வருக்கு புலவர்ப்பட்டம் நாவலராலேயே வழங்கப்பட்டது. ர் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் புலோலி நாவலர் கு வருகை தருவது வழக்கமாய் இருந்தது. மாணாக்கர்களைப் ப்பேற்றுவதற்கும், சைவப் பிரசங்கம் செய்வதற்கும் அவ்வாறு
அவர் தமது வருகையைப் பற்றிச் சிவசம்புப் புலவருக்கும் ழக்கமாகக் கொண்டிருந்தார். சிவசம்புப் புலவரும் தவறாது அந் ந்து கலந்து கொள்வார். ஒரு தடவை பரீட்சை நடந்து முடிந்த நடைபெற்றது. பிரசங்கம் ஆரம்பித்ததும் அன்று மழை பெய்து 1. பிரசங்க முடிவில், பிரசங்கத்தின் சாரம்சத்தைச் சிவசம்புப் பாகப் பாடி நாவலரையும் பாராட்டியிருந்தார்.புலவர் தனது பர் கண்ணிர் மழை, நாவலரின் பிரசங்க மா மழை, நீலப் புயலின் மெய் அருள்மழை, கொடை மழை என எல்லாம் மழை மயமாக மத்திருந்தார். சிவசம்புப் புலவர் முன்கூட்டியே கவிதைகளைத் வர் என்ற எண்ணம் கொண்டிருந்த நாவலருக்கு தனது எண்ணம் பதை அன்றைய மழை உணர்த்திவிட்டது. நாவலர் மீண்டும் இதுவரை காலமும் ஒரு தவறு செய்து வந்துள்ளேன். ஒரு சிறந்த டு கொள்ளாதிருந்ததே அத் தவறு. சிவசம்பு சிறந்த இலக்கண,

Page 51
இலக்கிய வித்துவான் என்பது எனக்குத் தெரியும். அவரைப் போல நானும் ஆகவில்லையே என்று இன்னும் அவாவு கின்றேன். விரைவாகச் சுவையான கவிதைகளை ஆகக் கூடிய ஆற்றலும் கை வந்தவர் என்பதை இன்றுதான் கண்டேன். இன்றைய மழை அவரது கவிதா சாமர்த்தி யத்தைக் காட்டித் தந்து விட்டது. கம்பனுக்குப் பிறகு ஒரு சம்பன். சிவசம்புப் புலவர் புகழ் வளர்க’ என்று கூறி முடித்தார்.
புலவர்மணி கா.நீலகண்டனின் கட்டுரை இவ்வாறு எளிமையான கவர்ச்சி மிக்க வசன நடையில் அமைந்தி ருக்கின்றது. அவரது கட்டுரையை முழுமையாக வாசிக் கின்ற எவரும் மன நிறைவை அடைவார்கள் என்பது திண்ணம்.
அடுத்து, விரிவுரையாளர் செ.சுதர்சனது ஆய்வுக் கட்டுரை இடம்பெறுகிறது. இக் கட்டுரை பத்தொன்பது பகுதிகளைக் கொண்ட மிக நீண்ட ஆய்வுக்கட்டுரை ஆகும். பெரும் பேராசிரியர்களான பேராசிரியர் வி.செல்வநாயகம், பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை என்போர் புலவர் பற்றிக் கூறிய தவறான கருத்துக்களை, ஆதாரங்களைக் காட்டி நிராகரித்து உண்மையினை நிலை நாட்டுவதையும் அதிலே காணலாம்.
பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்களின் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலில் வரும் “இவர் பிரபந்தங்களுட் சிலவே சமயச்சார்பு பற்றியன” என்ற வாக்கியம் பலரைப் புலவர் பிரபுக்களையே பெருமளவு பாடினார் என்னும் முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. புலவரது தனிச் செய்யுட்களையும், சாற்றுகவி, சரமகவி களையும் தவிர்த்துப் பார்த்தால் புலவர் இயற்றிய பிரபந்தங்களுள் எழுபது வீதத்திற்கு மேற்பட்டவை சமயச் சார்பானவையே எனக்கூறலாம். எனவே, முத்துக்குமார சாமிப்பிள்ளை அவர்கள் புலவரது செய்யுட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது “அவர் இயற்றிய நூல்களுட் பெரும்பாலானவை சமய சம்பந்தமானவை” எனக் கூறுவது மிகப் பொருத்தமானது எனலாம்.
இனி, பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை அவர்களும், மற்றும் சிலரும் சிவசம்புப் புலவரின் காலம் பற்றிக் கொள்ளும் மாறுபாடான கருத்துக்களை நிராகரித்துச் சான்றுகளைக் காட்டிப் புலவரின் பிறந்த ஆண்டு 1829 என்றும், இறந்த ஆண்டு 1910 என்றும் தனது ஆய்வின் மூலம் செ.சுதர்சன் நிலைநாட்டி அந்தப் பிரச்சினைக்குத் தனது ஆய்வுக்கட்டுரையில் முடிவு செய்திருக்கின்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியத்தை இனிவரும் காலங்களில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் செ.சுதர்சனது கட்டுரையை என்றும் குறிப்பிட்டுப் பேசுவார்கள் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. அந்தக் கட்டுரை சிவசம்புப் புலவர் பற்றிய பூரணத்துவமான மதிப்பீடு மட்டுமன்றிச் செ.சுதர்சனின் ஆளுமையையும் எடுத்து இயம்புகின்றது. அக் கட்டுரை முழுவதையும் வாசிக்கின்றவர்கள் சிவசம்புப் புலவரையும் அவரது ஆக்கங்களையும் பற்றிய மதிப்பீட்டோடு
3G
i

செ. சுதர்சனின் ஆராய்ச்சிச் சிறப்பினையும் உணர்ந்து கொள்வார்கள்.
எனவே, எனக்கு முன்பு இந்த மேடையில் உரை ாற்றியவர்களும், பதிப்பாசிரியர்களது கட்டுரைகளும் அறிமுகம் செய்யப் பணித்திருக்கும் எனது வேலையை றத்தாழ இல்லாமலே ஆக்கிவிட்டன என்றே கூறத் தான்றுகிறது.
3. படைப்பாற்றல் திறமை
LIGO) Lù un siðsp6v GONFLu6v (Aet of Creation) 6 TGötmp னது நூலில் ஆதர் கோஸ்லர் (Arthur kooster) என்பவர் உறும் கருத்துக்கள் பிரபந்தப் பெருந்திரட்டின் உப லைப்பான தேவ பாகமும், மானுட பாகமும் என்பதை நாக்கும் போது எண்ண வைக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புக்கள், கவிதை, நாடகம், றுகதை முதலான இலக்கியங்கள் என்பவற்றிலே தான் டைப்பாற்றல் திறமையைக் காணலாம் என்பது ட்டுமில்லை.ஒரு சிறிய பகிடியில் கூட ஒருவர் அதனைக் ாட்ட முடியும் என அவர் தனது நூலில் விளக்கம் புளிக்கின்றார். வழக்கமாக ஒரு சிந்தனை ஒரே தளத்தில் சன்று கொண்டு இருக்கும் போது அங்கு படைப் ாற்றலைக் காண முடியாது. ஆனால், அச் சிந்தனை அந்தத் ளத்தில் இருந்து மாறி வேறொரு தளத்திற்குத் திடீரென ாவும் போது அங்கே படைப்பாற்றல் சம்பவிப்பதை புவதானிக்க முடியும். மானிடர்களைப் பற்றியும், தய்வத்தைப் பற்றியும் பலர் இதுகாறும் எழுதி வந்திருக் றார்கள். ஆன்ால், அவர்கள் எல்லோருமே வழமையான ாணியிலேயே ஒரே தளத்தில் நின்று கொண்டே லையங்கம் தீட்டி வந்திருக்கின்றனர். புலவர் அவர்களின் ரபந்தப் பெருந்திரட்டின் உபதலைப்பான தேவ பாகமும், ானுடபாகமும் என்பது பதிப்பாசிரியர்களின் படைப் ாற்றல் திறமையை வெளிப்படுத்துவதை அவதானிக்க மடிகிறது. இப்படியே இன்னும் பல அம்சங்களில் படைப் ாற்றல் திறமை மிளிர்வதை அந் நூலை வாசிப்பவர்கள் ண்டு கொள்ள முடியும்.
4. பிரபந்த நோக்கு
சிவசம்புப் புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டை நாக்கும் போது இச் சமயத்தில் இந்திய தத்துவ ஞானியும் புரசியல் தலைவருமான சர்வ பள்ளி இராதா கிருஷ்ணன் ந்திய தத்துவம் தொடர்பாகக் கூறும் ஒரு கருத்து நாபகத்திற்கு வருகிறது. அதாவது, இந்திய தத்துவம் மடிந்த முடிபாக உள்ளது. அது காலத்துக்குக் காலம் ந்ழ்நிலைக்கு ஏற்ப விளக்கம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. வசம்புப் புலவர் தனது காலத்தின் தேவைக்கேற்பச் சில ஊர்களின் கோவில்களைப் பற்றியும், சில தனி னிதர்களைப் பற்றியும் மட்டுமே பாடியிருக்கின்றார் ன்றுமே மேலெழுந்த வாரியாகத் தோன்றக் கூடும். பூனால், அவற்றுக்கு ஊடாக எவற்றை எல்லாம் கூறுகின்றார் என்று ஆழமாகச் சிந்தித்தால் தத்துவ ஞானி }ராதாக்கிருஷ்ணன் கூறுவது போல மிகப் பரந்த ன்றைக்கும் முடிந்த முடிபான கருத்துக்களையே
SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS TTTTTTTT C TTT S TT 0000 49

Page 52
தெரிவிக்கின்றார் என்பது புரியவரும்.
எனவே, குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட சமயம் குறிப்பிட்ட கோயில், குறிப்பிட்ட மனிதர்கள் என்ற எல்லைகளுக்கு அப்பால் சிவசம்புப் புலவர் அவர்கள் கூறும் உலகம் தழுவிய பொதுவான கருத்துக்களில் சிலவற்றை இவ்விடத்தில் அறிமுகமாகக் கூறலாம் என்று எண்ணு கின்றேன்.
05. பிரவிருத்தியும் நிவிருத்தியும்
சிவசம்புப் புலவரின் ‘பிரபந்தப் பெருந்திரட்டு, தேவ பாகமும் மானுட பாகமும்’ என்றநூலின்தலையங்கம் ஒரு பெரிய உண்மையை உய்த்துணர வைக்கின்றது. அதாவது, இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டு அது நல்ல முறையில் இயங்க வேண்டும் என்று விரும்பினார் அதற்காக மரீசி முதலான பிரஜா பதிகளுக்கு வேதச் கருத்தாகிய செயல் செய்வதின் மர்மத்தை விளக்கிக் கூறினார். அது பிரவிருத்தி மார்க்கம் என்று அழைக்கட் படுகின்றது. அதன் அளவுக்கு மிஞ்சிய வளர்ச்சி போட்டி, பொறாமை, சண்டை, சச்ச ரவு முதலான அழிவுக ளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் அவர் உணர்ந் திருந்தார்.
எனவே சனந்தன், சனாதனன், சனந்தனன், சனற்குமாரன் முதலான வர்களுக்கு செயலின்மை யின் தத்துவத்தை உபதே சித்து அருளினார். அது நிவிருத்தி மார்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. பிரபஞ்சப் படைப்பின்
நோக்கமான ஆன்மா இறை வனை அடைவது பிரவி இருதய வைத்திய நிபுணர் ந. ருத்தி மார்க்கத்தினால் அன்றி நிவிருத்தி மார்க்கமான செயலின்மையினாலேயே சாத்தியமாகும். இதனை லலிதா சகஸ்ரநாமமான “பகிர்முகதுர்லபா’ என்ற நாமத்தினால் அறிய முடியும். ஆனால் உலகம் இயங்குவதற்குப் பிரவிருத்தி மார்க்கமும் தேவை என்பது மறுக்க முடியாத விடயமாகும் - செயலும், செயலின்மையும் அதாவது பிரவிருத்தி யும், நிவிருத்தியும் இந்து சமயத்துக்கு மட்டும் அன்றி எல்லாச் சமயங்களுக்குமே பொதுவான விடயம் என்றால் அதில் தவறு இருக்காது. அவை இரண்டும் உலகம் தழுவிய கருத்துக்கள் ஆகும். இவ்விடத்தில், தேவ பாகம் நிவிருத்தி மார்க்கத்தையும், மானுட பாகம் பிரவிருத்தி மார்க்கத் தையும் போதிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு மார்க்கங்களுமே வரலாறு முழுமையும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பெரியவர்களால் வெவ்வேறு நூல்களில் காலத்திற்கு ஏற்ப விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இதனைத்தான்
50 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 

இந்திய தத்துவம் முடிந்த முடிபான இறையுணர்வை அடைவதனைக் காலத்திற்குக் காலம் தேவைக்கு ஏற்ப விளக்கம் அளித்து வந்திருக்கிறது என்று கூறுகின்றார். இவ் வகையில் வந்த ஒருவராகத்தான் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரை நாம் இனம் காணமுடிகிறது. அதாவது, முன்னோர்களினால் பேணிப் பாதுகாத்து வரப்பட்ட இறைவன் அளித்த ஒளி விளக்கைத் தனது முன்னோரிடம் பெற்று அதனை அணைய விடாது காப்பாற்றி நம்மிடம் ஒப்படைக்கின்ற பணியை மிகத் திறமையாக நிறைவேற்றி
வைக்கின்றார் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்.
6.0. மானுடயாகம்
மானுடபாகம் என்னும் பகுதியில் சமுதாயத்தில் செயல்படுகின்ற பலதரப்பட்ட மனிதர்களையும் சிவசம்புப் புலவர் அவர்கள் பாடியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த மானுட பாகத்தில் புலவரும் புரவலரும் என்ற தலைப்பில் மூன்று உப பகுதிகளும், பாவலரும் நாவலரும், சாற்றுகவிகள், சிறப்புக் கவிகள், சரமகவிகள் என்பனவும்
இடம்பெற்றுள்ளன.
O O 6.1. புலவரின் அகன்ற சிந்தனை
சிவசம்புப் புலவர் மன்னரையும், பிரபுக்களை
பெற்றவர் அல்லர். வேறு புலவர்களையும், பெரியோர் களையும், சாதாரணமான ஆண்கள், பெண்களையும், சைவ சமயத்தவர்களையும், முஸ்லிம்களையும், கிறிஸ்த வரையும், பிராமணரையும் கண்டன் வழங்க, வைத்திய கலாநிதி பாடிப் பரிசுகள் பெற்றிருக் குகதாசன் பெற்றுக்கொண்டார் கின்றார். பலவிதமான பா வடிவங்களையும், பிரபந்த வகைகளையும் புலவர் அவர்கள் இதற்குப் பயன்படுத்தி உள்ளார். உதாரணமாக, விருத்தம், வெண்பா, அகவல், காரிகை, பதம், இரட்டை மணிமாலை, நான் மணிமாலை, கல்லாடக் கலித்துறை, விஞ்சதி, சித்திரக்கவி முதலான பல் பாக்களையும், பிரபந்தங் களையும் இதற்குப் பயன்படுத்தி உள்ளார்.
செய்நன்றி மறவாமை உலக இயக்கத்திற்கு முக்கியமான ஒரு பண்பாகும் “எந் நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற குறள் இங்கு நினைவு கூரத்தக்கது. சிவசம்புப் புலவர் அவர்கள் தனக்கும், மற்றவர்களுக்கும் பயன் கருதாது உதவுகின்ற மன்னரையும், பிரபுக்களையும் மற்றும் சமுதாயத்தின் பல நிலைகளிலும் உள்ள மனிதர்களையும் மறவாது நன்றி செலுத்துகின்றார். செய்நன்றி மறவாமை எந்த ஒரு சமூகத்திற்கோ காலத்திற்கோ மட்டும் உரிய தத்துவம் அன்று. அது உலகம் தழுவிய பொதுத் தத்து வமாகும்.

Page 53
6.2. புலவர் ஏழைகளின் பிரதிநிதி
தாம் பாடிப்பெற்ற பரிசில்கள் அனைத்தையும் அவர் தாமே பயன்படுத்தினார் அல்லர். ஏனைய ஏழைகளுக்கும் அவற்றைப் பகிர்ந்தளித்துள்ளார். தாம் மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பெரியோர்கள் ஒரு போதும் சொல்லிக் காட்டுவதில்லை. அதுவும் மற்றவர்களிடம் பாடிப் பெற்றதைப் புலவர் அவர்கள் எப்படித் தனதென்று உரிமை கொண்டாடுவார்? எனினும், புலவர் அவர்கள் தனது தன்னடக்கத்தினால் அதனைக் கூறாத போதும் அவரது அந்த நற்செயலை நாம் செவி வழியாக இன்றும் பலர் கூறுவதிலிருந்து அறிந்து கொள்கின்றோம். புலவருடைய இச் செயலை எண்ணும் போது சங்க காலப் புலவரான பெருச்சித்தனார் தான் குமணனிடம் பெற்று வந்த பரிசில்களைத் தனது மனைவியிடம் கொடுத்துக் கூறுவதாக அமைந்த புறநாற்றுப் பாடல் ஞாபகத்துக்கு வருகின்றது. அப் பாடல் மேல் வருமாறு:-
நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுதலோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமண னல்கிய வளனே.
தாம் பெற்ற பரிசிற் பொருள்களின்பால் சங்க காலம் முதல் தமிழ்ப் புலவர்கள் கொண்டிருக்கும் மனப் பான்மையைச் சிவசம்புப் புலவரிடம் நாம் காணும் போது அவரிடம் விளங்கிய உயர்ந்த பண்புகளை நாம் மெச்சுவது மட்டுமன்றி நாமும் பேணவேண்டிய உயர்ந்த தத்துவங்கள் என்பது போதரும்.
6.3. அன்பின் வழியது உயிர்நிலை
மானுட பாகத்திலுள்ள சரம கவிகளிலே சிவசம்புப் புலவர்தமது நட்பை ஞாபகப்படுத்தி உள்ளம் உருகுவதைக் காணலாம். “அன்பின் வழியது உயிர் நிலை” என்றும் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்’ என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. நாவலர் மீதான புகழ்க் கவிதைகளிலும் கூட இவ்வாறான அன்பு வெளியாவதை அவதானிக்க முடியும். உதாரணமாக, ஆறுமுகநாவலர் தேகவியோகம் அடைந்தபோது சிவசம்புப் புலவர் பாடிய நேரிசை வெண்பாவை இங்கே பார்க்கலாம்.
தேவரசு மெய்ந்நூற் றிறம்பலவு மாருயிருக் காவலினாற் போதித்த வாறுமுக - நாவலனார் சீர்முகத்தைக் கண்டவரட்க டெண்டிரைப் பூ
மண்டலத்தில் யார்முகத்தைக் காண்பதினி
ஆனால் இத்தகைய அன்பு பழகிய அன்பர்களோடு
7
தி

மட்டும் நின்றுவிடும் இயல்புடையது. சிவசம்புப் புலவரோ இவ்வகை அன்புக்கும் மேலாகப் பரந்த உறவைப் பேணி வந்த ஒரு பெருந்தகையாளர் ஆவார்.
5.4. பரந்த உறவு
உலக வாழ்வு ஒரு சில மனிதரோடு அன்பாக வாழ்வதோடு மட்டும் மட்டுப்படுத்தக் கூடியது அன்று. வாழ்க்கை என்பது ஒரு சில அறிந்த மனிதர்களுக்கு இடையே மட்டும் நிலவுகின்ற அன்பில் மட்டும் தங்கி பிருப்பதில்லை. ஒரு மனிதனுக்கும் ஏனைய மனிதர் 5ளுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், இயற்கைக் தம், மலைகளுக்கும், நதிகளுக்கும், மரங்களுக்கும், செடிகளுக்கும் என எல்லாவற்றுக்கும் இடையேயுள்ள பரந்த உறவு என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விபரிப்பார்கள். வாழ்க்கை என்பது உறவே (Lifels Relationhip) என்பது அவரது புகழ்மிக்க ஒரு பொன் மொழி ஆகும். சிவசம்புப் புலவரிடம் உள்ள இவ்வாறான பரந்த உறவை வல்வைக் கலித்துறை, பருத்தித்துறைக் கலித்துறை ான்பவற்றில் விரிவாகக் காணலாம். உதாரணமாக, பருத்தித்துறைக் கலித்துறையில் வரும் இரண்டாவது பாடலை இங்கே காணலாம்.
சங்க வளம்பிர சங்க வளங்கல்விச் சாலைவளந்
தங்க வளம்வண் கொடைவளந்தானதருமவளம்
வங்க வளம்பன் னிலவளம் பூந்திரு வாழுமனைத்
துங்க வளம்வள முற்றும் பருத்தித்
துறைக்கண்ணவே
சிவசம்புப் புலவர் தன்னை எல்லாவற்றிலும், ால்லாவற்றையும் தன்னிலும் காணுகின்ற உயர்நிலையில் பாழ்ந்து வந்திருக்கின்றார் என்பதை இப் பாடலால் ஒரளவு ஊகிக்கலாம்.
1.5. மேலோங்கிநிற்பதுநிவிருத்திமார்க்கமே
உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் சில மனிதர்களைப் பற்றியே அதிகம் பாடியிருந்தார் என்றும் தெய்வங்களைப் பற்றிக் குறைவாகவே பாடியிருந்தார் என்றும் நிலவி வந்த ருத்தை செ.சுதர்சன் அவர்கள் சான்றுகளைக் காட்டிச் மார் 70% ஆன பாடல்கள் தெய்வங்களைப் பற்றியே அவர் பாடியிருந்தார் என்பதை நிறுவியிருப்பதை முன்னர்க் நறிப்பிடப்பட்டது. அவ்வாறு முன்னர் நிலவி வந்ததற்கு ஒரு காரணம், அவர் பாடிய பாடல்கள் எல்லாம் ஒன்றாகத் ரெட்டி வெளியிடப்படாமல் இருந்தமை ஆகும். செ.சுதர்சன் அவர்களின் ஆய்வின் அடிப்படையில் புலவர் அவர்கள் பாடியவற்றுள் 70% ஆனவை சமயச் சார்பானவை. ஆதலால் அவர் பிரவிருத்தி மார்க்கத்தை விட நிவிருத்தி 0ார்க்கமே பிரதானமானது என்பதை உணர்ந்திருந்தார் ான்பதை எமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
.0. தேவபாகம்
சிவசம்புப் புலவர் அவர்களின் பிரபந்தப் பெருந் ரட்டிலுள்ள தேவபாகம் என்னும் பகுதியில் எட்டுப் பகுதிகளின் மேல் பாடிய பதிகங்கள், ஒன்பதுதலங்கள் மீது
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 5
:ற்ப்பு:ம்.

Page 54
பாடிய ஊஞ்சல் பாக்கள், மண்டூர் முத்துக்குமாரசுவாமி இரட்டை மணிமாலை, எட்டிகுடி மும்மணிக்கோவை, மூன்று தலங்களைப் பாடிய மூன்று நான்மணி மாலைகள், நல்லைக் கந்தசுவாமி விஞ்சதி (20 பாடல்கள்), சிவகுருக்கண்ணி, திருச்செந்தில் யமக அந்தாதி, கந்தவன சுப்பிரமணியசுவாமி மேற்பாடிய முப்பது கீர்த்தனைகள், சில தனிப்பாடல்கள் என்பவை இடம்பெற்றுள்ளன.
7.1. போதனையிலும் மிக்கது சாதனை
ஆன்மீகத்தில் சமய போதனைகள், தத்துவங்கள், கிரியைகள் என்பவற்றை விடச் சாதனையே மிக முக்கியமானது. காரைக்கால் அம்மையார் தனது அற்புதத் திருவந்தாதியின் முப்பத்து மூன்றாவது பாடலில் “நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக” என்றும், யாழ்ப்பாணத்து யோகசுவாமி அவர்கள்“சீக்கிரம் புத்தகத்தை முடி’ என்றும் கூறுவனவற்றில் இருந்து ஆன்மீக போதனையை விடச் சாதனையே மிகப் பிரதானமானது என்பது வெளிப்படை இதனைப் புலவர் அவர்களும் உணர்ந்திருந்தார்கள் என்பதை அவரது பாடல்களில் இருந்து அறியலாம். நூலறிவினால் சிந்தையும், மொழியும் செல்லா நிலை யிலுள்ள இறைவனை அடைய முடியாதென்பது முடிந்த முடிபாகும். சாதனைக்குப் பலவிதமான சாதனங்கள் உள்ளன. அவற்றுள் மிக எளிமையானதும், கலியுகத்தில் விரைவில் பயனளிக்கக் கூடியதும் ஜெபம் ஆகும். இந்து மதத்தில் மட்டும் அன்றி மற்றைய மதங்களிலும் ஜெபம் வற்புறுத்தப்பட்டுப் பின்பற்றப்படுகிறது. அதற்கு இறை வனுடைய நாமாக்களே பெருந்துணை புரியக்கூடியன.
சிவசம்புப் புலவர் தமது பாடல்களிலே இறை வனின் நாமாக்களை அமைத்திருப்பதில் ஒரு தனித் திறமையை அவதானிக்க முடிகிறது. அபிராமி அந்தாதி என்ற தோத்திர நூலில் லலிதா சகஸ்ர நாமாக்களில் சிலவற்றைக் காணலாம். அதுவும் ஒரு பாடலில் ஒன்று அல்லது இரண்டு நாமாக்கள் என்ற வகையிலேயே அபிராமிப் பட்டர் அமைத்துப் பாடியிருக்கின்றார். ஆனால் சிவசம்புப் புலவர் பல வடமொழி நாமாக்களை ஒரே தமிழ்ப் பாடலில் அடுத்தடுத்து அடுக்கி அமைத்திருக்கின்ற திறத்தை எவரும் அவதானிக்காமல் இருக்க முடியாது.
மகா கணபதி சகஸ்ர நாமத்தில் இருந்தும், சுப்பிரமணிய சகஸ்ரநாமத்தில் இருந்தும், விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்தும் முறையே கணபதி, முருகன், பெருமாள் ஆகிய தெய்வங்களைப் பாடிய பதிகங்களில் பல சமஸ்கிருத நாமாக்களைத் தொடர்ந்து அமைத்திருப்பதைப் பார்க்கும் போது தமிழ் யாப்பு சிவசம்புப் புலவர் அவர்களின் கவிதா சமார்த்தியத்திற்கு எவ்வித தடையா கவும் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
இதற்கு உதாரணமாகப் புலவர் அவர்களின் ஒரு பாடலை இங்கே அவதானிக்கலாம். அது மண்டூர் முத்துக்குமாரசுவாமி பதிகத்தில் வரும் நான்காவது பாடல் ஆகும்.
சக்திதர கந்தசிகி வாகன கஜாரூட
தாரகாந்தககுமார

சண்முக மலர்ப்பிரம சாத்தசுப் பிரமணிய
தக்கசுர சேனாபதீ மைத்தகுழல் வல்லிகல் யாணசுந் தரபால
மயவே தண்டபேத வாண்மை நில வுங்கார்த்தி கேயசர வணபவ
வயங்குசேனானியெனச் சித்தமு ருகித்தமிய னேனகோ ராத்திரந்
தேறிநினை யேத்தவருளாய் தேசோம யானந்த வருள்வடிவ மாம்பரம
சிவமே மெய்ஞ் ஞானகுருவே சித்தசன் மடந்தையொடு பூம்பொழில் வளந்தெரி
தினமுலவு மண்டூரில் வாழ் தீரனே முத்துக்கு மாரனே சுத்தநித்
தியவகண்டாகாரனே
7.2. தெய்வ அனுக்கிரகம் பெற்ற புலவர்
காரிகை பெற்றுக் கவிபாடியவர் சிவசம்புப் புலவர் அல்லர். அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே தலைமைக் கவிஞராகப் பலராலும் மதிக்கப்பட்டு வந்தவராவர். அவர் அநுபூதிமான் என்பதற்குத் தான் கண்ணொளி இழந்த போதும், பின் அதனை மீளப் பெற்ற போதும் கந்தவன் கடவை முருகன் மீது பாடிய பாடல்களில் இருந்து தெரியவருகின்றது.
அவர் கண்ணொளியை வேண்டிப் பாடிய படல்களும், கண்ணொளி பெற்ற பின் இறைவனை நினைந்து அவனது கருணைக்கு உருகும் பல பாடல்களையும் தேவ பாகத்தில் காணலாம். உதாரணமாக,
“கண்ணொளியை நாயேற்குந்தந்தாய் பராக்கு” என்றும், “சீல மில்லேன் கண்ணொளி திகழச் செய்தாய் போற்றி” என்றும் ஊஞ்சல் பாடலில் பாடியுள்ளதனை எடுத்துக் காட்டலாம். அவர்தாம் பாடிய கீர்த்தனைகளிலும் இச் சம்பவத்தைப் பாடியிருப்பதைக் கொண்டு அவர் ஒரு இறையனுபவம் பெற்ற கவிஞர் என்பது தெளிவாகின்றது.
7.3. தெய்வம் ஒன்றென்றிருந்த புலவர்
புலவர் அவர்கள் ஒரு சுப்பிரமணிய உபாசகர் என்பதனை அவர் பாடிய பாடல்களில் இருந்தும், செவி வழியாகக் கிடைக்கும் செய்திகளில் இருந்தும் அறிய முடிகிறது. எனினும், அவர் கணபதி, விஷ்ணு, அம்மை, வீரபத்திரர், சிவன் எனப் பல தெய்வங்களின் மீதும் பாடல்களைப் பொழிந்துள்ளார். இது அவரது பரந்த சமய மனப்பான்மையை மட்டுமன்றி ஆன்மீக நிலையில் உயர்ந்த நிலையிலுள்ள சாதகர் என்பதனையும் எடுத்து இயம்பு கின்றது.
7.4. காலன் வரும் போது கலங்காதிருப்பது
மனிதர்களுக்குள் உள்ள பயங்கள் எல்லாவற்றுள் ளும் தலையாயது மரண பயம் ஆகும். சைவ நாயன்மார் களும், வைஷ்ணவ ஆழ்வார்களும், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமான சுவாமிகள், அபிராமிப்பட்டர் முதலானோரும் தாம் உடலை விட்டு நீங்கும் சமயத்தில்

Page 55
இறைவனைத் தவறாது வந்து காட்சி கொடுத்துக் காலனால் வரும் மரண பயத்தைத் தீர்த்தருள வேண்டும் என்று பாடி இருக்கின்றார்கள்.
இந்து சமயத்தில் மட்டுமன்றிச் சமண, பெளத்த மதங்களிலும் மறுபிறப்பு, வினை அல்லது கன்மம், மரணம் என்பன முக்கிய விடயங்களாக இருக்கின்றன. பிறவித் துன்பத்தை நீக்குவதற்கு இவையே இடையூறாக உள்ளன என்பதை இந்திய மதங்கள் எல்லாமே ஒத்துக் கொள் கின்றன. மறுபிறப்புக் கோட்பாடு இந்திய மதங்கள் எல்லாவற்றுக்குமே பொதுவான அடிப்படைத் தத்துவமாக விளங்குகின்றது. பகவத் கீதை முதலான பல இந்து சமய நூல்களில் மரணிக்கும்போது ஒருவன் எண்ணுகின்ற எண்ணப்படியே அவனது அடுத்த பிறவி அமையும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இதனால் என்றும் இறை சிந்தனை யுடன் இருந்தால் மட்டுமே மரணத் தறுவாயிலும் இறைவனை நினைக்க முடியும் என்று கூறுகின்றார்கள்.
பெளத்தர்கள் ஒரு எண்ணம் எங்களுக்கு மிக விரைவாகத் தோன்றி மறைவது போலத் தோன்றினாலும் அதில் 17 படிகள் உண்டென்றும் இறக்கும்போது ஒரு எண்ணத்தின் சில படிகள் மட்டுமே நிறைவேறுகின்றன என்றும் மீதமானவை நிறைவேறாது அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றன என்றும் கூறுகின்றனர்.
மேலும், பெளத்தர்கள் ஒரு மனிதன் மரணிக்கும் வேளையில் ஐந்து வித்தியாசமான காட்சிகளைக் காண்கின் றான் என்றும் அவற்றுள் எந்தக் காட்சி இறுதியாகச் சம்பவிக்கின்றதோ அதற்கேற்ற மறுபிறப்பு அமையும் என்னும் கொள்கையை உடையவராவர். அந்த ஐந்து காட்சிகளாவன: (1) இறந்த பெற்றோர், உறவினரது காட்சி (2) பறவைகள், மிருகங்கள், காடு முதலானவற்றின் காட்சி (3) நெருப்புக் காட்சி (4) இருள், கறுப்புத் தோற்றம் என்பவற்றின் காட்சி (5) தேவர்கள் தேரில் வந்து நிற்கும் காட்சி என்பனவாம். முதலாவது காட்சி அடுத்த பிறப்பு மனிதப் பிறப்பு என்பதையும், இரண்டாவது காட்சி அடுத்த பிறப்பு விலங்குப் பிறப்பு என்பதையும், மூன்றாவது காட்சி அடுத்த பிறப்பு நரகப் பிறப்பு என்பதையும், நான்காவது காட்சி அடுத்த பிறப்பு பிதுரராகப் பிறப்பதற்கானது என்பதையும், ஐந்தாவது காட்சி மனிதரிலும் மேலான பிறப்பு அடுத்த பிறப்பு என்பதையும் குறிக்கும் என்று அவர்கள் கூறுவர். இதனை நஸ்திரபால மகாதேரர் என்பவர்
1958ஆம் ஆண்டில் இப்போது வங்காள தேசம் எனக் குறிக்கப்படும் நாட்டில் ஒர் ஊரில் பரிசோதனை செய்து மரணப்படுக்கையில் இருந்த ஒரு நல்லொழுக்கமுள்ள பெளத்த மனிதனிடம் கேட்டு அறிந்து கொண்டதை விளக்கிச் சுவாரஷிய சம்பவங்கள் நிறைந்த இறக்கும் தறுவாயில் உள்ள ஒரு மனிதனின் ஐந்து காட்சிகள்’ (Five Visions ofa duing man) என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.
மரண பயத்தை நீக்குவதற்கு முருகன் காட்சி தந்து அருளவேண்டும் என்று சிவசம்புப் புலவரும் பாடியி ருக்கின்றார். வேலும் மயிலும் எனத் தொடங்கும் கந்தவன நாதர் பதிகத்தின் பத்தாம் பாடலில் “காலன் வரு மந்திய தினத்திலுயிர் சற்றுங்கலங்காதிருக்க அருள்க’ என்று

வேண்டிக் கொள்வதிலிருந்து இதனை அறியக் கூடியதாக இருக்கிறது.
7.5. புலவரின் இசை ஞானம்
இறைவன் இசைப்பிரியன் என்பது இந்து சமயத்துக்கு மட்டும் உரித்தான ஒரு விடயம் அன்று. எல்லாச் சமயங்களிலுமே இசைப் பாடல்களால் இறைவனைப் போற்றுவதைக் காணலாம். இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு நெரிந்தபோது இறைவனைச் சாமகானம் பாடி உய்தியடைந்தான் என்பர். இறைவனே சுந்தரமூர்த்தி நாயனாரை “சொற்றமிழ் பாடு கென்றார் தாமறை பாடும் வாயார்” என்று கூறியதாகச் சேக்கிழார் சுவாமிகள் பாடியிருக்கின்றார்.
சிவசம்புப் புலவர் அவர்கள் பாடிய விருத் தங்களும், ஏனைய பாக்களும் இசையமைத்து வெவ்வேறு இராகங்களில் விஸ்தாரமாகப் பாடக்கூடியனவையே. எனினும் அவரது கீர்த்தனைகள் அவரிடம் இருந்த இசை ஞானத்தைத் தெளிவாக எமக்கு எடுத்து இயம்புகின்றன. - அவரது பாடல்களில், சில வும், கீர்த்தனைகளில் சிலவும் ஆவது இசைவல்லுனர்களி னால் பாடப்பட்டுக் குறுந் g5 5(6).J., Gigi (Compact disks) வெளியிடப்படவேண்டும். அவரது வாழ்நாளிலேயே பல இசைக்கலைஞர்கள் அவரது கீர்த்தனைகளைப் பாடி வந்ததை அறிய வருகின் றோம். தொழில்நுட்ப வசதி கள் நிறைந்த இன்றைய நவீன காலத்தில் அவற்றுள் சிலவேனும் குறுந்தகடுகளில் வெளியிடப்பட்டால் பலரை
யும் மகிழ்விக்கும் என்று கூறலாம்.
8. முழவுரை
சிவசம்புப்புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டின் தேவ பாகத்திலும், மானிடபாகத்திலும் உள்ள உலகம் தழுவிய பொதுவான கருத்துக்களுள் ஒரு சிலவற்றை மட்டுமே தொட்டுக்காட்ட முடிந்தது. நீங்கள் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்களது உரையையும், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களது உரையையும் கேட்க ஆவலாக உள்ளீர்கள் என்பதை அறிவேன். எனவே, எனது சிற்றுரையை முடிக்கு முன் விழாத் தலைவர் கூறியது போல சிவசம்புப் புலவருக்கு ஒரு சிலை வைப்பதன் மூலமும், அவரது பாடல்கள், கீர்த்தனைகளில் சிலவற்றை குறுந்தகடுகளாக வெளியிடுவதன் மூலமும் உடுப்பிட்டி மக்கள் சிவசம்புப் புலவரின் புகழைப் பரப்பித் தாமும் பெருமை அடைவார்கள் என்று வாழ்த்தி எனது சிற்றுரையை நிறைவு செய்கின்றேன்.
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 53

Page 56
நல்லவன் தோற்பதோ?
நரகன் வெல்வதோ?
இல்லையோ அறம்?
கம்பராமாயணம்
나 -
te-git Slash)
Jጋጣ@eግö
மு. பொ.
எங்கோ கேட்குது கூத்தின் உடுக்கொலி எங்கோ எங்கோ எங்கோ கேட்குது! உடுக்கொலி எழுந்தது செவிப்பறை அதிருது
உக்கிரக் கூத்தில் தலைப் பிறை நழுவி தெறித்தது எங்கோ! எங்கே? எங்கே? ஆடிப்பிறை அதைத்
தேடிப்பிடி
கூத்தன் எழுகிறான் இருவகைக் கூத்தை உடலெனக்கொண்டு! ஆனந்தக் கூத்து
ஊழிக் கூத்து லிங்கமும் யோனியும் இரண்டற்று நிற்கும் ஆதிப் புணர்வே அவனது கூத்து ஆனந்தக் கூத்து
ஊழிக் கூத்து ஆனந்தக் கூத்தெப்போ ஊழியாகுது? ஊழிக்கூத்தெப்போ ஆனந்தமாகுது? இருமை ஒருமையாகிய இணைவிலே கூத்தில் ஆனந்தம் ஒருமை இருமையாகிய பிரிவுத்தனிமையில் கூத்தில் ஊழியே!
இப்பிரபஞ்சம் என்பதே இவ்விரு கூத்தின் வெளிப்பாடே அண்டம் என்பது இக் கூத்தின் அளிக்கைதான் ஓர் மூலையில் ஊழியின் ஓங்காரம் மறு மூலையில் ஆனந்த ரீங்காரம் ஒன்றை யொன்று சமன் செய்யும் கூத்திவை ஒன்றை யொன்று இட்டுநிரப்பும் கூத்தின்
54 LTLLTTTT LLL TTTT STT 000 S SLSLSLSLSLSLSLS

களிப்பேருவகையே - அழிப்பேரூழியே! மத்தின் கடைதலாய் ஒன்றில் ஒன்று முட்டியும் விட்டும் கொட்டு மத்தின் உடுக்கொலி அண்டம் என்பது கூத்தின் அளிக்கையே! அணுவில் கூட இக்கூத்தின் உக்கிரம் வக்கிர நிலையிலும் இப்பிரபஞ்சக்கூத்தேந்தும்.
கூத்தின் அதிர்வு எங்கோ எங்கோ எங்கோ எங்கோ எங்கோ அதிரும்! இங்கே இங்கே என்னுள் அதிரும்! இங்கே அதிரும் இப்போ ததிரும் எவருளும் அதிரும் இக்கணம் அதிரும் என்றும் அதிரும் அணுவின் கூத்து அண்டத்தில் விரியும்
OOO கூத்தன் கால் உயர்வில் உடுக்கொலிக்குள்ளே உக்கிரக் கூத்து சூடிய பிறையோ தெறித்தது வெளியில் ஆடிப்பிறை அதைத் தேடிப்பிடி.
பேரண்ட வெளியிலோர்
பிரளயக் கீற்று பெருமாற்றச் சூறையின் தொடக்கப் புள்ளியாய் கொள்ளி சொருகும் திரிபுரப் பிறைநகை
உயர்ந்த கால் உராய்வில் உருண்டோடும் கோளங்கள் கோளங்கள் கபாலமாய் கோத்தாடும் நர்த்தனம்

Page 57
கூத்தன் கால் ஊழியாய் உதைத் தெழும் நர்த்தனம் கும்பக உள்வாங்கலில் பிரபஞ்சம் மத்தளம்
ஒவ்வொரு தீ மிதிப்பிலும் தெறித்தெழும் அணுநடம் கடை எது? நடு எது? நடனமே அனைத்துமாய் குதித்தெழும் உக்கிரம்
உக்கிரக் கூத்திலே ஒவ்வொன்றும் பொடிப் பொடி! பொடிப்பட பொடிப்பட எல்லாமே பொய்மையாய் இன்மையே இருப்பென.
காலம் அற்றது, கைகோத்து அதனோடு இடங்கள் ஒடுங்கின, பிரபஞ்சம் ஓர் பொட்டலமாய் குட்டித்திட்டாய் உள்ளங்கை உருட்டுமோர் கொட்டைப் பாக்காய் குறுக்கிக் குறுகி இருள்வாயுள் வீழ்ந்து இல்லாது போயிற்று.
அப்போதும் விநாயக தந்தம்போல் மாயப்பிறையின் மணிக்கீற்று, ஊழிக் கூத்தனின் கண்ணாய் ஒவ்வொர் அகத்திலும்!
மையம் எது? கடை எது? ஆதி எது? அந்தம் எது? இருப்பெது? இன்மை எது? உக்கிர நர்த்தனத்தில் அனைத்துமே இன்மையாய், எங்கவோர் தொன்மையுள் புகுந்தது
பொங்கும் அலைகளில், காலடி உதிரும் மணற் துணிக்கைகளில், பனி மூடிய மலைகளில், பாதாளக் குகை உலைகளில் எங்குமே பிசிறியெழும் பேர் நடனம்! எல்லாமே இன்மையாயிற்று இன்மையே இருப்பெனும் உண்மையில் ஆடிற்று
துரும்பில், தூசில், துமியில், உன்வாய் உதிர்க்கும் சொற்களில், அதன் தொனியில்,

கோடானு கோடியாய் சிலிர்த்தெழும் எண்ணத் துளிகளில் அதிரும் பேர் நடனம்!
எங்கே முடியுது? எங்கே தொடங்குது? கூத்தின் உச்சத்தில் கூத்தின் இன்மை உச்சமும் இன்மையும் புணர்வில் பேரமைதிப் பிரவகிப்பு கூத்தே தன்னை விழுங்கி கும்பகிக்க
பிரசவிக்கும் பேரமைதி ஊழியழிப்பும் ஆனந்தக்களிப்பும் இரண்டறக் கலந்த மெளனிப்பு அப்போதும் விநாயகர் தந்தம் போல் மாயப் பிறையின் ۔۔۔۔ மணிக்கீற்று, நெற்றிக்கண்ணாய் முற்றிற்று எழுதிற்று
2
முந்த நாள் உனக்குள்ளே மூண்டெழுந்த அப்பேரூழியை மறந்தாயோ?
அந்தப் பெண்ணைத் தள்ளி வைத்து புதிய தட்சணாய் கொக்கரித்தாய் அவளைத் தாழ்த்தினாய் அவளுக்குரிய சம மதிப்பை தூக்கி எறிந்தாய் அவளைக் கொன்றொழிக்கவே இத்தனை காலமாய் வியூகம்
வகுத்து வந்தாய், இல்லையா? ஆனால் அவளோ இத்தனைக்கும் உனக்கு முந்தியவள், உன் வழிகாட்டி, உன் மொழியின் உயிரூட்டி, உன் வீட்டின் கல்லடுக்கின் ஒவ்வொன்றிலும் அவள் கைவளையல் ஒலி கேட்கும் கேட்டுப்பார் உன் உள்ளத்தின் ஆழத்தில்
அவளுக்குப்பட்டகடன் மெல்ல நாப்புரட்டி நச்சரிக்கும் அவள் வாடையின்றி உன்னால் வாழமுடியாது. அவளை மெல்ல மெல்ல உறிஞ்சி உன்னை வளப்படுத்தி நீ
நிமிர்ந்த கர்வத்தில் g|ഖഞണ് அழிக்க யாகம் வளர்த்தாய். நீ வளர்த்த யாக குண்டத்தில் அவளே வீழ்ந்து பலியானாள். அது உன்னை சும்மா விடுமா? அவள் வீழ்ச்சியிலிருந்து ருத்திர எழுச்சி ஊழியாய் சுழன்றது அது எங்கே கவியும்? யார்மீது கவியும்?
OOO
புராணகால தட்சன் போல் நவயுகத்தில் நாஸிகள் தலைவன் வளர்த்த யாகத்தில்
மய கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 55

Page 58
யூத இனம் வீழ்ந்தது தெரியுமா? ஆனால் அவ்வீழ்ச்சியில் எழுந்த ஒமாக்கினியில் பஸ்பமாகி சாம்பரானது யார்? அச்சாம்பரைக் கரைத்து காடாற்றாது விட்டதோ இன்னும் சூடேற்றி புதுயுக தட்சன்களை உருவாக்கி நிற்குது?
அவர்களின் ஒருவனாக இன்று நீ! உன்னோடு ஒன்றிருந்து வாழத்தான் துடித்தாள் அவள்! ஆனால் நீயோ - வைப்பாட்டியாகவே பார்த்தாய் அவளை.
அவள் தனக்கான உரிமையை முன்வைத்தாள் நீயோ ‘நீ சிற்றணத்தாவள்’ எனச் சிறுமைப்படுத்தினாய் அவள் சீறினாள், காறியுமிழ்ந்து கலகம் செய்தாள் நீ அவள் கைகளைப் பற்றி மூக்கரிந்து முலைகளை
- அறுத்தாய் அவள் குமுறி யெழுந்து கூக்குரல் வைத்தாள். அண்ணாவோ! அண்ணாவோ! எனத்தன் உற்றார் உறவினர் உடன் பிறப்புக்கள் தன் உதிரத்தில் பிறந்த அத்தனைபேரையும் கூவியழைத்தாள்! காடதிர்ந்தது. அடுத்தவினாடி அணி திரண்டு அவள் உதவிக்கென அங்கே பெரும் படை ஒன்று பீடுபோட் டெழுந்தது மீண்டும் அவள் எழுந்தாள் மிடுக்குடன்! மூக்கரிந்த மூங்கையனான நீ அஞ்சி நடுங்கினாய். சமரசம் பேச தூதரை அனுப்பினாய் - அவளோ தனக்கெனவோர் சரியாசனம் அமைத்து ஆட்சி நடத்தினாள். நீ தலை குனிந்து அதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டாய் ஆயினும் உன்னுள் குரோதம் ஒன்றே காய்த்துக் குலுங்கி வெம்பிப்பழுத்து வீழ்ந்து சிதறின. ஆனால் அவளோ எட்டமுடியாத உயரத்தில் இருந்தாள் எவ்வாறிவளை வெட்டி வீழ்த்தலாம் என்று நீ கணக்குப் போட்டாய் ஆயினும் அவற்றை மறைத்து உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உத்தம
புருஷனாய்
தாம்பாளம் நிறைய தங்கமும் வெள்ளியும் கப்பமாய் வைத்து அவள் தாள் பணிந்து அவள் ஆசியை வேண்டினாய் அவள் கப்பத்தை ஏற்றாள்.
அவள் கப்பத்தை ஏற்றபோது அவள் உதட்டில் ஓர் இளநகை உலாவிச் சென்றது. அவ்வேளை
திடீர் என வானில் இடி முழங்கிற்று, எரிகற்கள் வீழ்ந்து கர கரத்தன. மின்னல் குதிர்த்து வாய் இதழ் அகட்டி
56 கலைமுகம் O bÚlflysi) — gu6úl 2014 m

வேட்டை பற்களால் எதிர் கால விளைவை எழுதிற்று
நாயொன்றின் ஊளை நள்ளிரவுப் பேயின் காதைக்
குடைந்தது.
அவள் அரசவளாக வெண்டிப் புறாக்கள் கலவரடைந்து
தமக்குள் குமுறின
கயவன் நீ வழங்கும் கப்பத்தை ஏற்றால் உன்னது கர்மம் அவள்மேல் கவியுமென்பதை அறியாதவளா
அவள்? இல்லை, அவள் அறிவாள், ஆனால் அவள் நீர்குணி அவள் நெஞ்சம் எவ்வினைப்பயனையும் படியவிடாதது அவ்வாறெனில் அவை படியப்போவது எங்கே? சிறிது காலம் அவை அந்தரத்தில் நிற்கும் பின்னர் மெல்ல மெல்ல அவள் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு மனிதரிலும் ஒட்டிக்கொள்ளலாம். இது அநியாயம் இல்லையா? இல்லை, அவளை முன்னிறுத்தி - அந்த விடுதலை
அம்மையை முன்னிறுத்தி இவர்கள் புரிந்த கொடுமைகள் கோடி நிரபராதிகளை நிசப்திக்க வைத்து அல்லல்ப்பட்டவர் மேலும் அழவைத்த கண்ணிர் அடை மழையாக இவர் மேல் பொழிந்ததே, அது சும்மா விடுமா?
கப்பம் அளித்து அவள் முன்னே கை கூப்பி நின்ற நீ அவள் அனுசரணையோடு உன்னக ஆட்சியை
உனக்காகிக்கொண்டாய்! வேந்தனானதும் உன் வேலையைத் தொடங்கினாய். மாபெரும் யாகம் வளர்க்கப்பட்டது. தேவர்களுக்கெல்லாம் அழைப்பு பறந்தது. அத்தனைபேரும் உன் யாகத்திற்கு வந்து தூபம் போட்டனர் தூபம் என்பது அவளையும் அவள் இனத்தையும் தொலைத்துக் கட்டும் ஆகம விதிகள் என்பதை அவள் அறிவாள் ஆயினும் அவள் தனித்தே நின்றாள். எப்பொழுதும் தனியள் தனித்து நின்றே உலகை ஆள்பவள் அழிப்பு யாகத்தை அவளே முடுக்கிவிட்டாள்.
OOO எழுந்தது எழுந்தது அழிப்பு நர்த்தனம் ஊழிக்கூத்தாய் ருத்திர நர்த்தனம் உடுக்கென அவன் கை ஒவ்வொரு உயிரையும் புரட்டி எடுக்கும்.
குண்டுப் பொழிவால் குளித்தன ஊர்கள் ஆண்கள் பெண்கள் எனப் பிரிவில்லை குழந்தைகள் முதியோர் வேறுபாடில்லை
இரத்தக் குளிப்பில் ஒவ்வொரு உயிரும்

Page 59
கைகால் தெறித்து இழுவுண்ட உயிர்கள் தலைகள் சிதறி தொங்கிய உடல்கள் தசைகள், செந்நீர் தாங்கிய மரங்கள் எங்கும் எதிலும் இரத்தக் குளியல்!
ஐம்புல வேட்கை அடங்கி ஒடுங்கிற்று பூதங்கள் ஐந்தும் தம் தொழில் பிறழ்ந்தன காற்று தான் வாழ மக்கள் மூச்சைக் கவர்ந்து யோயிற்று நீரோ இரத்தமாய் உறைந்து தடித்தது
ருத்திர நர்த்தனம் உக்கிரம் கொண்டது. ஒன்றுபட் டாண்மையை உள் வாங்கா மக்கள் முன்
சிறுமைப் பட்டே விடுதலை செத்ததோ?
கூத்தின் உச்சத்தில்
கூத்தின் இன்மை உச்ச நிலையில் எச்சங்கள் இல்லை இன்மையே இருப்பு.
அவள் ஆளுகைக்குட்பட்ட வனநெடும் நாடு வினை பிடுங்கப்பட்ட வெளியாய்
பழி தீர்ந்து கிடந்தது அவள் சிரித்தாள், சுதந்திரச் சிரிப்பு
OOO
யாகம் முடியுந்தறுவாய்! ஆயினும் தீ நாக்குகள் சுழன்றவாறிருந்தன வெற்றிக் களிப்பில் உன் நாடு மிதந்தது.
g
தென்றலாகிற தீயாகிறா & - சிலநேரம் பனியாகிறாய் அன்பே உன்
வார்த்தைகளில் நானாகிறாய்
(rosississio கா கணங்களை ழுதுகளால மற
இனித்த முத்தங்களின் மொத்த வரலாற்றை
 
 
 
 
 
 
 
 
 
 

பொங்கல் வழங்கி உன் மக்களை மகிழ்வூட்டினாய் அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள், தட்சாயினியாய் சற்றே சரிந்த பொன்முடி தரித்து! வந்தவள், உன்னதும் தன்னதுமான போரில் இறந்த மறவரை
மதித்து ஓர் கணம் வணங்கினாள் மறுகணம் தமது கர்மமே தம்மேல் படிய ஆளியாயப்போன தம் மக்களை இரட்சிக்க இறைவனை வேண்டி இறஞ்சினாள் அவள் விடுதலை அம்மை, எவ்வினைதானும் தீண்ட
முடியாத கடவுளே ஆனவள் ஓர் கண்ணகி, உன் கண் முன்னாலேயே பாக குண்டத்தில் வீழ்ந்து தன்னுயிர் விட்டாள். புது விதி எழுதினாள்! நீ ஆரவாரமிட்டு அவள் மறைவை பறையறைந்த போது 5ாற்றில் எழுந்து பெரும் பாவச் சுமை உன் தலைமீது
அலைந்தது. அவள் உடலைப்பலிகொண்ட தீ நாக்குகள் சுழன்றபோது அவள் தியாகிப்பில் எழுந்த அறத்தின் திரள் மறுபுறம்
நிமிர்ந்தது. ாந்த உணர்வுமற்ற ஈன நெஞ்சன் நீ இவை பற்றி அறியாய் ஒரு நாள் காற்றில் உன் தலைமீது அலையும் பாவச் சுமை ாங்கே கவியுதோ அப்போது இங்கே இவள் நிலத்தில் அறத்தின் திரள் விடுதலையாய் இறங்குமே!
அரக்கர் பாவமும் நல்லவர் இயற்றிய அறமும் துரக்க வந்தவள் இவள்.
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 57

Page 60
இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு.
எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளச்சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்க ளுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியா தான்.
இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக்கின்றது. நிற்க முடியவில்லை; வெடவெடக்கிறது. நடக்க முடியவில்லை; நடுங்குகிறது. உட்கார முடிய வில்லை; ஊசியாய் குத்துகிறது!.. இப்படியும் ஒரு குளிரா! இப்படியும் ஒரு ஊரா!
6VUA
தெளிவத்தை ஜோசப்
காற்றின் குளிர், மயிர்க்கால்கள் ஊடாகத் தோலுக்குள் நுழைந்து, தசைகளுக்குள் வியாபித்து, ஒவ்வொன்று ஒவ்வொன்றாய் எலும்புகளைத் தேடித் தேடி எண்ணிச் சுற்றிச் சுற்றி. உடல் ஜில்லிட்டு விரைத்துட் போகிறது.
இதே மாதத்தில் மூன்றாவது தடவை இது.
அம்மாவைப் பார்க்க போக வேண்டும் என்னும் பேச்செழுந்தபோதே லயத்துக்கு வரமாட்டோம் என்று மக்கர் பண்ணினார்கள் மனைவியும் மகளும். அவனுக்குப் நியாயமாகவேதான் பட்டது.
நுவரெலியாவிலிருந்து பதினெட்டு - இருபது மைல் தொலைவிலுள்ள அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு வாடகைக்கு ஒரு கார் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். பஸ்ஸிலும் போகலாம் தான். ஆனால்
58 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204
 

நுவரெலியா பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறுவதென்பது ஒரு சர்க்கஸ் விளையாட்டு மாதிரி. ஸ்டாண்டை நோக்கி ஓடி வரும்போதே பஸ்ஸில் ஏறும் சாகஸம் தெரிந்திருக்க வேண்டும். அடித்துப் பிடித்து முட்டிமோதிக் கொண்டு ஏறத் தைரியம் வேண்டும். விழாமல், கால் செருப்பை அறுத்துக் கொள்ளாமல் பாய்ந்து தொற்றிக் கொள்ளும் லாவகம் தெரிய வேண்டும். குடையைக் கண்டதும் மிரளும் பசுமாடுபோல் கூட்டத்தைக் கண்டாலே மிரளும் இதுகளுடன் எப்படி பஸ் ஏறுவான்?
ஆகவே அம்மாவைப் பார்க்கத்தானே என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு வாடகைக் கார்தான். இங்கிருந்து ஐம்பது ரூபாயில் முடியும் பயணம் இன்னொரு சைபரைச் சேர்த்துக் கொள்ளும்.
நுவரெலியா டவுனில் அவன் நண்பர்தாயுமானவர் லாயராக இருக்கிறார். அவருடைய வீட்டில் மனைவியை யும் மகளையும் நிறுத்திவிட்டு தான் மட்டும் தோட்டத் துக்குச் சென்று வருவதாக ஏற்பாடு.
இந்த முறை அம்மா ஏமாற்ற மாட்டார்கள் என்றே எண்ணிக் கொண்டான்.
“அங்கே இருந்து நீங்கள் மட்டும் தனியாக அம்மாவைப் பார்க்க போவதென்றால் இங்கிருந்தே தனியாகப் போய் வாருங்களேன்! நாங்கள் வீட்டில் இருக்கிறோம்’ என்றாள் மனைவி. அவன் தான் சம்மதிக்கவில்லை. ஒருவேளை அம்மா செத்துப்போய்
తిగషిణ
விட்டால் மறுபடி கொழும்பு வந்தல்லவா கூட்டிப் போகவேண்டும் என்று மனைவியைச் சமாதானம் செய்தான். அவள்தான் பிடிவாதமாகத் தோட்டத்துக்கே வருவதென்றாள் - இவ்வளவு தூரம் வந்துவிட்டு இங்கே என்ன தங்குவது என்று.
கார் பிடித்துக் கொண்டே போனாலும் மேலே கோவிலடியில் நிறுத்திவிட வேண்டும். கோவிலை ஒட்டிக் காடாய் மண்டிக் கிடக்கும் மல்லிகைப் புதர் கரும்பச்சை வானத்தில் நட்சத்திரங்களை வாரி இறைத்தாற்போல் புதர் நிறைய வெள்ளை வெள்ளையாய் வெடித்துச் சிரிக்கும் மலர்கள். கண் மட்டுமல்ல மனமும் கொள்ளாக் காட்சி தான்; இல்லை என்று கூறவில்லை!. மல்லிகைப் புதரை ஒட்டினாற்போல் கொழுந்து நிறுக்கும் மடுவம். மடுவத்தின் ஒரமாக வந்துநின்று கிணற்றுக்குள் எட்டிப் பார்ப்பதுபோல் கீழே பார்த்தால் மலையடிவாரத்தின் பள்ளத்துக்குள் தெரியும் ஏழெட்டுப் பத்து லயத்துக்கூரைகள் சிவப்புச் சிவப்பாய், கோடாகப் புகை விட்டுக் கொண்டு.
அதில் ஒன்றின் ஒரத்துக் காம்பிராதான் அம்மாவின் வாசஸ்தலம். அம்மாவும் தம்பியின் குடும்பமும் அதற்குள் தான்.
வெள்ளைக்காரன் தேயிலை பயிரிடத் தொடங் கிய காலத்தில் கட்டப்பட்டவை இந்த லயங்கள். நூற்றைம்பது - அறுபது ஆண்டு பழைமை வாய்ந்தவை. மாற்றமே இல்லாமல் அப்படியே தொடர்கின்றன. அரசுக்கு

Page 61
அரசு மலையகத் தலைவர்கள் மாறுகிறார்கள். ஆனாலும் இவைகள் மாறுவதில்லை.
கொழுந்து மடுவத்துக்கு இந்தப் பக்கமாக இரண்டு தேயிலைச் செடிகளின் இடைவெளிக்குள் ஒரு குறுக்குப்பாதை இறங்குகிறது. படிகள் கட்டப்பட்டுக் கல் பெயர்ந்து, பல் விழுந்த எகிறுபோல்.
அதன் வழியாகக் கீழே இறங்க வேண்டும். நின்று நெளிந்து ஒடிந்து திரும்பி இருநூற்றறுபது படிகள் இறங்கிவிட்டால் அம்மா இருக்கும் லயம் வந்துவிடும்.
அது எப்படி அவ்வளவு கரைக்டாக இரு நூற்றறுபது படி என்று கேட்கத் தோன்றுகிறதா? பள்ளி நாட்களில் தினசரி இரண்டு தடவை ஏறி இறங்கிய படிக்கட்டாயிற்றே! இறங்கி ஒடும்போது முதல் நாலைந்து படிகளை விட்டுவிட்டு எண்ணத் தொடங்கினாலோ அல்லது கடைசி நாலைந்து படிகள் வரும்போது எண்ணுவதை எதேச்சையாக விட்டுவிட்டாலோ, கல்லுக்கு கல் கால் வைத்து ஒடும் போது எண்ணி எண்ணி ஒடிய படிகள்தான். பழக்கம்தான். இருநூற்றறுபதுக்குக் கூடுமே தவிர குறையாது.
சப்பாத்தின் உயர்குதி கல்லிடையில் சிக்கிக் கால்புரண்டு சுளுக்கிக் கொண்ட அனுபவங்களால் கழற்றிக் கையில் தூக்கிக் கொண்டு மனைவியும் மகளும் அவன் பின்னால் இறங்குவார்கள்.
அவர்களின் முகத்தைப் பார்த்துக் கண்களைச் சந்திக்கும் தைரியம் அப்போது அவனிக்கிருப்பதில்லை.
கோவிலடியில் கார் நிற்கும்போதே கீழே லயத்தில் பக்கத்துக் காம்பிராக் காமாட்சி, “பெரியதம்பி வாறாப்பல இருக்கேம்மா?.’ என்று விசாரிக்கத் தொடங்கியிருக்கும்.
வாசல்வரை வந்து பூவரச மரத்தடியில் அம்மா நிற்பார்கள். தம்பியின் பிள்ளைகள் பின்னால் நிற்கும். தம்பி பட்டியில் இருப்பான். ஏதாவது மண்ணை நோண்டிக் கொண்டு.
“பாத்து, பாத்துப்பா!. பாத மாதிரியா இருக்கு?. அட மழயில மண்ணெல்லாம் அரிச்சுக்கிட்டுப் போயி றுச்சி. பொந்துக்குள்ளாற ஏதுங் கால விட்டுக்குறாம!...” என்று குரல் கொடுத்தபடி இரு கைகளையும் நீட்டிக் கொண்டு அவர்களை வரவேற்கும் அம்மா.
வயதால் பாதியும் குளிரால் மீதியுமாகச் சுருங்கித் தொங்கும் தோல்களுடன் அந்த முகம், அந்தக் கைகள்!.
அள்ளி அணைத்துக் கொள்ளும் அந்தக் கைகளின் சிலிர்ப்பு இவனுடலுடன் இழைய, அப்படியே அலாக்காக அம்மாவைத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றி உள்ளே நுழைந்துவிடுவான்.
பின்னால் நிற்கும் சின்னதுகள் பேந்தப் பேந்த முழிக்கும்.
“விடுப்பா விடு!.. நான் புள்ளையக் கொஞ்சனும்’ என்று தன்னை விடுவிடுத்துக்கொண்டு வெளியே திரும்புகையில் மருமகளும் கொழும்புப் பேத்தியும் லயத்துக்குள் நுழைவார்கள்.

மருமகளின் நெற்றியில் கையை வைத்துக் கன்னம் வழிதாவாய் வரை உருவி நெற்றிப் பொட்டில் விரல்களை நெரித்துப் படபடவென்று முறித்துக்கொண்டு, “பாத்தியா எவ்வளவு திருஷ்டி என் செல்லத்துக்கு!’ என்றபடி துணிகளை இழுத்துக் கொடியில் போட்டுவிட்டு நாற்காலியை இழுத்துப் போட்டு “இரும்மா’ என்பார்கள். கொழும்புப் பேத்தியின் ஆப்பிள் கன்னங்களைத் தனது கைக்குள் அடக்கி அப்படியே இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்வார்கள். பேத்தி, ‘ஹசய்ய்’ என்று கத்துவாள். “பாட்டி கை குளிருதாம்மா?’ என்பார்கள் சிரித்தபடி “குத்துது!’ என்பாள் பேத்தி,
அவனும் மகளும் கட்டிலில் அமர்ந்து கொள்வார்கள். அம்மா இருவருக்கும் நடுவில் படத்துக்கு அமர்வதுபோல் அமர்ந்து கொள்வார்கள்.
தம்பியின் மனைவி ஆவி பறக்கப் பறக்கத் தேநீர் கிளாஸ்களுடன் வந்து நிற்பாள்.
“தேத்தண்ணி குடிப்பியாம்மா?’ என்று தேநீர் கிளாஸை எடுத்து நீட்டுவார் அம்மா பேத்தியிடம்.
“ம்!” என்றபடி கிளாஸை வாங்கிக் கொள்வாள் பேத்தி. “காலையில் தேத்தண்ணி குடிக்க மாட்டோம். கோப்பிதான்” என்பது போன்ற பாட்டிக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் பேச்சுகள் கூடாது என்று சின்னவளுக்குச் சொல்லிக் கொடுத்து வைத்திருக்கிறான். எது எது என்பதெல்லாம் அந்தச் சிறிசுக்கு எப்படித் தெரியும்? ஆகவே எல்லாவற்றிற்கும் 'ம்' தான்!
“அம்மா, டீ!” என்றவாறு அம்மாவிடம் மகள் எழுந்து செல்வதன் அர்த்தம், “எனக்கு டீ வேணாம்!” என்பதுதான்! “ட்றிங் லிட்டில்; வெரி கோல்ட், நோ?” என்றபடி கிளாஸை வாங்கி மகளுக்குப் பருக்கத் தொடங்குவாள் தாய்.
“நீ குடிம்மா; நான் குடுக்கிறேன் பாப்பாவுக்கு!’ என்றவாறு அம்மா கட்டிலை விட்டிறங்குவார்கள்.
“எல்லாம் ஆயும் மகளும் பாத்துக்கிறுங்க, நீங்க இருங்க” என்று, தான் பாதி குடித்த கிளாஸை அம்மாவின் வாயில் வைத்து மெதுமெதுவாகச் சாய்ப்பான் அவன்.
“நீ குடிப்பா!’ என்றாலும் அம்மாவின் தொண்டைக்குள் அது ஜீவாம்ருதமாய் இறங்கும். கண்கள் படபடத்துக் கசியும் புருவத்துக்கும் தெரியாமல்.
வேரும் மண்ணுமாய் நாலைந்து நோக்கல் கிழங்குடன் வந்து நிற்பான் தம்பி.
தோட்டத்தில் அவனுக்கு சுப்பர்வைஸர் வேலை கொடுத்திருக்கின்றார் துரை! ஒரு வருஷம்போல் ஆகிறது அரைக்கால் சட்டை, சப்பாத்து, மேஸ் போட்டு, அதுவரை கையில் கத்தியும் தோளில் மண்வெட்டியும்தான். அவன் மனைவி தோட்டத்தில் வேலை. பழைய மலையோ மட்டக் கொழுந்தோ கொழுந்துதான்.
கட்டைவிரல் நுனியும் ஆள்காட்டி விரலோரங் களும் வரியாய்த் தேயிலைக் காட்டையுடன் கறுப்புக் கறுப்பாய்க் கோடு பாய்ந்து கிடப்பதெல்லாம் கொழுந்தாய்
LLLLSLLLLLS OLTTTT C TTT STuT 000 59

Page 62
வின் முத்திரைகள். பெரியண்ணன் சம்சாரம் வந்தால் அந்தப் பளிங்கு விரல்கள்தான் இவளை முதலில் கவர்வது அக்காவின் மோதிரம் கூட அந்த விரலால்தான் பெருடை அடைவதாக எண்ணிக்கொள்வாாள்!
நோக்கல் கிழங்கை வேருடன் பார்த்தே இரா மகளுக்கு ஒரே வியப்பு! கண் விரிய நிற்பாள்!
“வேர வெட்டி வீசுங்க! இல்லாட்டி மண்ண அலசிக்கிட்டு வாங்க!” என்று மனைவியும் “கோழிய தொறந்து உட்றாதப்பா கோணக்கொண்ட சேவல சுத்தட பண்ணிக் குடுத்துறு!’ என்று அம்மாவும் அவனுக்கு உத்தரவிடுவார்கள்.
இருவருக்குமே தலையை ஆட்டிவிட்டு அண்ணனைப் பார்ப்பான்தம்பி.
“ராத் தங்கிட்டு நாளைக்குப் போங்களேன்? ஆள் நெருங்கி என்னா ஆயிறப் போவுது? மனசிருந்தா எடம இருக்காது?. கார்காரன நாளைக்கு வான்னு அனுப்பிட்டு வரவா?.” அண்ணன் குடும்பத்தை ஒரு இரவு தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளும் ஆசை அவன்முகத்தில் நர்த்தனப் ஆடும்.
அம்மாவுடன் தங்கி இரவைக் கழிக்க அவனுக்குப் ஆசைதான். ஆனாலும் இருக்கும் அந்த ஒரே காம்பிராவில் படுக்க, எழுந்திருக்க, காலையில் வெளியே தெருவே போக எங்கே வசதி இருக்கிறது?
லயத்தின் முன் லைசன் கல்லில் நின்றுதான் பல் துலக்கி முகம் கழுவ வேண்டும். முழு லயமுமே நின்று வேடிக்கை பார்க்கும். இல்லாவிட்டால் பட்டிப் பக்கப் போய்விட வேண்டும்.
முழு லயத்துக்குமே இருப்பது இரண்டே மலசல் கூடங்கள். அதுவும் தேயிலைக்குள்ளே போக வேண்டும் கையில் செம்புடனோ கைவாளியுடனோ!
கொழும்பிலேயே பழகிவிட்ட மனைவி மக்களுடன் இதெல்லாம் பெரும் சிரமம். ஆகவேதான் மனதைக் கடித்துக்கொண்டு வந்த அன்றே கிளம்பிடுவான் தனியாக வந்தால் தங்கிவிட்டே செல்வான். அவன் புரண்டெழுந்த மண் அது!
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்குப் தம்பியைப் பார்த்து ஒருவகை ஏமாற்றத்துடன் கூறுவான் “இல்ல ராசு கார்க்காரனநாலு மணிபோல வான்னு சொல்லி அனுப்பீட்டுதான் வந்தேன்.” என்று.
"அம்மி அரைக்கிற சத்தங்கேக்குது. என்ன அரைபடுது?’ என்பான்.
“நீ சும்மா இரேன்; கொச்சிக்கா அரைக்கிறா உன் கொழுந்தியா’ என்று கூறியபடி அம்மா தேநீர் கிளாஸ்களை எடுத்துக்கொண்டு அடுப்படியை நோக்கி நடப்பார்கள்.
அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப் போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அம்மாவுக்கு ஒரு
60 L0LTLLTTT C LTLTTS uTT 000 S LSLSGSLSLSL

புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை; நடையிலே ஒரு துள்ளல்!
தம்பி மனைவியைக் கொழுந்தியாள் என்றழைக்கும் உறவு முறையின் உரிமை, குழம்பாக்கக் கொச்சிக்காய் அரைபடும் அம்மிச்சத்தம் - இத்தியாதிகளைக் கேட்க இங்கு வரவேண்டும்!
கொழும்பில் யார் அம்மியில் அரைக்கிறார்கள்? பொலித்தீன் பொட்டலங்கள் தானே!
“என்னப்பா, அப்படியே உட்காந்துட்டா எப்படி?...”
இன்னும் அம்மாவின் மடியிலிருந்து எழவில்லை!
என்று மனைவியைக் கிளப்புவான். அவன் மகள்
கூரையில் செருகியிருக்கும் தீட்டுக்கட்டையும் கத்தியுமாகத் தம்பி தோட்டத்துக்குள் சென்றுவிடுவான். கோழி கறேயுறே என்றுகூக்குரலிடும்.
மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு அவனும் தோட்டத்துக்குள் செல்வான். தம்பியின் சின்னது இரண்டும் அக்காவின் கைகளை பிடித்துக்கொண்டு உடன் நடக்கும்.
அம்மாவின் மடியில் அவனும் அவன் மடியில் அம்மாவுமாய் ஆனந்தமாக அந்தக் கொஞ்ச நேரப் பொழுதைப் போக்கி விடுவான் அவன்.
ஆனால் மனைவியும் மகளும் எத்தனை நேரம் அதற்குள்ளேயே அமர்ந்திருப்பார்கள்?
லயத்துக்கும் காய்கறித் தோட்டத்துக்கும் நடுவில் இருக்கும் வேலியிடம் நிற்கிறது ஒரு மாதுளை மரம். சின்னவனுக்கும் அதற்கும் ஒரு வயசு என்று இறக்கும்முன் அப்பா அடிக்கடி கூறுவதுண்டு.
கிளை நுனிகளில் சிவப்புச் சிவப்பாய் சின்னச் சின்னப் பூக்களும் குண்டு குண்டாய்க் காய்களுமாய்.
ஒரு காயைத் தொட்டு பார்க்கின்றாள் மகள். தனது மொட்டுக்கள் விரிய “மாதுளை’ என்பாள் தகப்பனைப் பார்த்து.
“புடுங்கித் திண்ணும்மா, குடற் பூச்சிக்கும் நெஞ்சுச் சளிக்கும் நல்லது’ என்று உள்ளிருந்து ஓடி வருகிறது அம்மாவின் குரல்.
தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.
அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக் கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று.
என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமைப்படும் நெஞ்சம் அது!
எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்பார்க்கும் நெஞ்சமல்ல. இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதும் தான் அவன் செய்வது!
இந்த வருகைதான் அந்தத் தாயுள்ளத்தை எப்படி

Page 63
ஆட்கொண்டுவிடுகிறது!
அம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் உறுத்தலில் ஒரு தடவை கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போனான் தன்னுடன் வைத்துக்கொள்ள!
இந்தக் குளிருக்கும் கொழும்பின் சூட்டிற்கும் அம்மா திண்டாடிப் போனார்கள். பட்டியில்லை, மாடில்லை, சுற்றிவரத் தோட்டமில்லை, பிடுங்கிச் சமைக்கக் காய்கறியில்லை! அம்மாவுக்கு ஒருநாள் போவது ஒரு மாதம் போல் தெரிகிறது.
மகன் வீட்டில் மாட்டிறைச்சி ஆக்குகின்றார்கள்! கொழும்பில் இதெல்லாம் சகஜம். சாதாரணம். ஆனால், அம்மாவுக்கு.
“எனக்குத். தனியா.’ என்றார்கள் மகனிடம் ஒரு நாள்.
“உங்களுக்கு அதெல்லாம் இல்லே தனியாத்தான்’ என்று தொடங்கிய மகனிடம் மெதுவாகக் கூறினார்கள் “தனியா ஒரு கோப்பயும் ஆப்பயும்பா. நீங்க பாவிக்கிற ஆப்ப, கரண்டி எல்லாம். வாணாம்.”
மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள். வாங்க, இருங்க” தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி என் மகனை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.
பல்லைக்கடித்துக் கொண்டு ஒரு பத்து நாள் இருப்பார்கள் அவ்வளவுதான்!
தான் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டும் என்பதைத் தவிர பிள்ளைகள் தனக்குச் செய்யவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இல்லாதவள் தாய்.
நம்மைச் சுற்றி ஆயிரம்பேர் இருக்கலாம். அன்பைச் சொரியலாம். ஆனால் யாருமே அம்மாவாக ஆகிவிட முடியாது!
அம்மா அம்மாதான்! மாதுளை மரத்தைத் தாண்டிப் பட்டியில் மாடுகளிடம் நின்று பயந்து பயந்து தொடும் மனைவி, மகளைக் கேலியாகப் பார்த்துப் பசுவின் மடியில் கை வைத்துக் காம்பை இழுத்துப் பாலைப் பீய்ச்சிக்காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டு கீழே நடப்பான், அவன்.
மடியில் கை பட்டதும் பசு சிலிர்த்துக் கொள்வதை வேடிக்கை பார்த்து நிற்கும் மகள், உடலைக் கூனி வாலை உயர்த்தி அது தடதடவென்று பெய்ய ஆரம்பித்ததும் - தெறிக்க ஆரம்பித்ததும் காலைத் துடைத்தபடி ஒடி வந்துவிடுவாள்!
பட்டிக்குக் கீழே ஒரு நீரோடை, தண்ணிர்க் கான் அருகே தம்பி ராசு கோழி வெட்டிக்கொண்டிருப்பான். அவன் தலைக்கு மேலாகப் பலாமரத்தில் முற்றாத காய்களின்மேல் தாவித்தாவிப் பாய்ந்து, பழுத்திருக்கிறதா என்று வாசனை பிடிக்கிறது அணிற் கூட்டம்.
“அணில் பழம் தேடுது, பாத்தியா’ என்று

மகளுக்குக் காட்டுவான்.
தம்பி கோழி வெட்டும் லாவகத்தை "சித்துக்கொண்டு நிற்பாள் மனைவி.
ஏதோ வாசம் மூக்கைத் துளைக்கிறது. நுனி மூக்கு விரிந்து வாசனைக் காற்றை மாற்றிக்கொள்கிறது.
“அன்னாசி ஒண்ணு பழுத்திரிச்சி. கொஞ்சம் இலை Fருகெல்லாம் போட்டு மூடித்தான் வச்சேன்! காக்கா Fணியனுக உடுமா! கொத்தியிருக்கும். அதுதான் கமகமக் தது!...” என்று கோழியை அப்படியே வைத்துவிட்டுத்தம்பி ாழுந்து போய் அன்னாசிப் பழத்தை ஒடித்து எடுத்து வந்து நீட்டுவான்.
மகள் வாங்கிக்கொள்வாள். கொண்டைக்குக் கீழே லேசாகக் கொத்தியிருக்கிறது காகம். வாசனை நாங்கமுடியவில்லை.
“வெட்டித் தர்றேன் பெறகு’ என்றபடி கோழி வெட்டுவதில் குந்திக்கொள்வான் தம்பி
நீரோடையின் இருமருங்கிலும் கரும்பு செழித்து நிற்கிறது. கரும்போலையின் அடிப்பக்கம் கறுப்புக் கறுப்பாய் ஆடியாடி அமர்ந்திருக்கும் அழகான சின்னச் சின்ன பூச்சிகள் இலை ஆடியதும் பறந்து மறுபடியும் அதேபோல் கூட்டமாக அமரும் காட்சி கண் கொள்ளாதது. மனைவிக்கும் மகளுக்கும் கரும்பை ஆட்டி ஆட்டிக் காட்டிக்கொண்டிருப்பான் அவன். பூச்சிகள் எழுந்து பறப்பதையும் மீண்டும் அமர்வதையும் கண்டு ரசிக்க.
இப்படி ஒவ்வொன்றையும் வியப்புறும் வண்ணம் காட்டி அவர்களின் ஆயாசத்தை, தனிமையை, இட வித்தியாசத்தை விரட்டிப் பொழுதைக் கழித்துவிடும் எண்ணம் அவனுடையது.
‘அண்ணிக்கும் மகளுக்கும் வேடிக்க காட்டுறியா, கோழி வேல நடக்குதா? அரக்கப் பறக்க அள்ளிப் போட்டுக்கிட்டு அனுப்பத்தான் வேண்டி வரும்! சுருக்காக் கொண்டாந்து குடு’ என்று இளைய மகனை எச்சரித்த அம்மாவின் குரல், “கரும்போலயத் தடவிப் பார்க்க வேணாம்ணு அம்மாகிட்ட சொல்லும்மா. வெட்டுறது தெரியாம வெட்டிப்புடும் வெரல.” என்று பேத்திக்கும் எச்சரிக்கை விடுக்கிறது.
கரும்பிடமிருந்து விலகி நின்றுகொள்வாள் மருமகள்!
“அதே பஞ்சு மாதிரி வெரல்! அறுத்தாலும் ஆழமாத்தான் அறுத்துப்புடும்’ என்று ஒத்தூதும் தம்பி மனைவியின் குரல்.
அம்மா நீரோடை அருகே வந்துவிடுவார்கள்
இதறுதி பாத்தது போதும், இனிப் பெறகு பாக்கலாம், வாங்க தேத்தண்ணி குடிக்க!.”
“இப்பத்தானே குடிச்சோம்!” “அது வெறுந் தேத்தண்ணிதானே, காலையாகாரம் ஏதுஞ் சாப்புடுறதில்லையா! சுடச்சுட உப்புமா
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 61
ጨu።gg56ሽ ኽ~ነጭቚሖ ஆறு:

Page 64
கெளறியிருக்கேன். ஆறிப்போயிறும், வாங்க” என்று மருமகளையும் பேத்தியையும் அழைப்பாள். பேத்தியிட மிருந்து வாங்கும் அன்னாசிப் பழத்தைக் கீழே வைப்பாள் “பச்சப் புள்ள கையில் இதத்தூக்கிக் குடுத்தா எம்மா நேரட வச்சிருக்கும்’ என்றபடி,
“நீ வல்லையா சாப்புட?” என்று தம்பியை கேட்பான் அவன்.
“இதோ முடிஞ்சிறிச்சி. நீங்க நடங்க நான் வந்துடுறேன்’ என்பான் தம்பி.
எட்டி நாலைந்து வாழை இலை நுணிகளை நறுக்கிக்கொள்வார்கள் அம்மா.
அவனால் நம்ப முடியவில்லை! அதற்குள் அம்ம என்னென்ன செய்கிறார்கள். அந்தக் கைகளுக்குள் என்ன மாயை இருக்கிறது!
தாயுடன் அறுசுவைபோம்! என்று அன்று சொன்ன வன் சும்மாவா சொல்லி வைத்திருப்பான்.?
இன்னும் காய்கறித் தோட்டம் காட்ட வேண்டும் கொண்டை நாரான் மரம், பனைபோல உயர்ந்து நிற்கும் கறி வேப்பிலை மரம், சேனையில் நிற்கும் கொய்யா மரங்கள்.
அத்தனையும் பார்த்து, பறித்து, மென்று, துப்பி முடிய நேரம் சரியாகிவிடும். பிறகு நடந்த களைப்பு நீங்கச் கொஞ்சம் உட்கார, பகல் சாப்பாட்டு நேரம் வந்துவிடும் பகல் சாப்பாடு விருந்துதான்.
சாப்பிட்டு முடித்துக் களைப்பாறி அவசர அவசரமாகத் தேநீர் தயாரித்து அதையும் குடித்து ரெடியாகியதும் மலை போல் நிற்கும் படியேறும் படலம் இருநூற்றறுபது படிகளை ஏறி முடிப்பதென்றால்.
சாப்பிட்ட விருந்துச் சாப்பாடு, குடித்த தேநீr அத்தனையும் எங்கே யென்று போய்விடும்! கார்க்காரன் வந்து ஹோர்ன் அடித்துக் கொண்டு நிற்பான்.
இதுதான் ஆண்டுக்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை நடக்கும் அம்மா தரிசனம்! பழைய கதை. அப்போதெல்லாம் அவ்வளவாகத் தோன்றுவது கிடையாது. முழுமுதற் காரணமே அம்மா! அம்மாவின் பராமரிப்பு! தங்களைச் சுற்றிச் சுற்றி வந்து நிற்குப் அம்மாவின் அன்புவட்டம்!
இப்போது அம்மா படுக்கையில், ஒரு பழந்துணி போல் கட்டிலின் ஒரு மூலையில் கிடக்கின்றார்கள்.
கையில் ஆட்ட ஒட்டமில்லை. கால்களில் ஒரு அசைவில்லை. உடலில் ஒன்றுமே இல்லை.
சீக்கிற்கோ தளர்ச்சிக்கோ இடம் கொடாத உழைத்து உரமேறிய உடல் என்று அவனே பெருமைட் பட்ட உடல்தான் இப்படிக் கசங்கி, நொடிந்து, நைந்து போய் நார் நாராய். கிடக்கிறது.
அவனையும் மருமகளையும் பேத்தியையுப் கண்டதும் அந்தக் கண்களிலே ஒரு ஒளி உதட்டிலே ஒரு
62 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 மா

சிரிப்பின் நெளிவு! அவ்வளவுதான். 'வந்துட்டியாப்பா!' என்னும் மனத்திருப்தி!
கைகள் போர்வைக்குள் நடுங்குவதுபோல் ஒரு துடிப்பு. கம்பளிக்குள் கையை விட்டு அம்மாவின் கைகளைப் பற்றிப் பிடித்தான். மனைவியினதும் மகளினதும் கைகளையும் உணர்வற்றுச் சோர்ந்து கிடக்கும் அந்தக் கைகளுடன் சேர்த்துப் பின் எடுத்து விட்டான்.
இந்த மாதத்திலேயே இது இரண்டாவது வருகை, இரண்டு தடவையும் தம்பிதான் தந்தி கொடுத்திருந்தான்.
'அம்மாவை நம்ப ஏலாதிருக்கிறது. உடனே வரவும்’ என்று.
அம்மாவைப் பார்த்த டாக்டர்கூட, “ஆஸ்பத்திரி அது இதெல்லாம் வேண்டாம்! மிஞ்சிமிஞ்சிப் போனால் ரெண்டு மூணு நாள் தாங்கும்! எதுக்கு ஆஸ்பத்திரியில சாக விடணும்? ஆண்டு அனுபவிச்ச வீட்டுலயே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டார்.
அம்மாவுக்கும் எழுபது பிந்திவிட்டதுதானே! அம்மா கண்களை மூடிக்கொண்டதும் வெளியே வந்து அவர்கள் நின்று கொண்டார்கள்.
அம்மா எழுந்து நடமாடாத அந்தச் சின்னக் காம்பிராவை அவனால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
அம்மா சுற்றுமுற்றும் பார்த்து விழித்தார்களாம். வாயே திறக்காத அவர்கள் “அண்ணண் வரலையா?.” என்று மெதுவாகக் கேட்டார்களாம் பயந்து போன தம்பி என்ன செய்வான்? தந்தி அடித்திருக்கின்றான்!
இருங்கம்மா’ என்று அம்மா இஸ்தோப்பில் இழுத்துப் போட்டு மகாராணி மருமகளை அமரச் சொல்லும் அந்த நாற்காலியில் ஒரு வெள்ளிக்குத்துவிளக்கு, பச்சைஅரிசி, உறைந்து கட்டியாகிவிட்ட ஒரு போத்தல் தேங்காயெண்ணை, ஊதுபத்தி, மஞ்சள், இத்தியாதிகள் ரெடியாக இருக்கின்றன. அறுபதாம் பச்சைக் கொப்புகள் லோட்டாத் தண்ணிரில் தலையாட்டிக் கொண்டிருக் கின்றன.
மகன்களால் என்ன செய்துவிட முடியும் இப்படித் தயாராய் வைத்துக்கொண்டு சோகம் காட்டும் முகங்க ளுடன் சுற்றிவந்து நிற்பதைத் தவிர?
மூத்தவன் பாடு தர்மசங்கடமாக இருகிறது. எவ்வளவு நேரம் என்று இருக்க முடியும்?
நான் போகட்டா என்று எப்படிக் கேட்க முடியும். ? மனைவி மாதுளை மரத்தடியில், மகள் பாட்டியின் கால்மாட்டில். சீக்கிரம் செத்துப்போம்மா என்று அம்மாவின் காதுக்குள் சொல்லவா முடியும்?
சென்ற முறையும் இப்படித்தான். இருந்திருந்து பார்த்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
ஏழெட்டு நாட்களுக்குள் இரண்டாவது முறை யாக வந்திருக்கின்றான் குடும்பத்துடன் கோச்சுக்காரனும்,

Page 65
பஸ்காரனும், கார்க்காரர்களும் இவனைக் கடனாளி
யாக்குகின்றனர்.
அண்ணண் தம்பியையும் தம்பி அண்ணணையும்
பார்ப்பதுவும் திரும்பிக் கொள்வதுவுமாக.
“இந்த முறை. அம்மா. ஏமாத்த மாட்டார்கள்.” என்று திக்கித் தடுமாறிக் கூறுகின்றான் தம்பி.
அண்ணண் குடும்பத்தை அனாவசியமாக அசெள கர்யத்துக்குள்ளாக்கி விடுகின்றோமோ என்னும் ஒரு குற்ற உணர்வு தம்பிக்கு.
தம்பியின் வாயைத் தனது விரலால் மூடுகின்றான் தமையன்.
“டாடி டாடி! பாட்டி எழும்புது!’ என்று கத்திக் கொண்டே வெளியே ஓடிவந்தாள் மகள்.
எல்லாரும் உள்ளே ஒடி வந்து சுற்றி நின்றார்கள். அசையாமல் கிடந்த அம்மாவின கை, ஒட்டை நகங்களுடன் கம்பளிக்கு வெளியே எழுந்து நிற்கிறது. வாயைக் குவித்துக் காட்டுகின்றார்கள் அம்மா.
“பாலூத்தச் சொல்லுங்க மூத்த மகந்தானே?” என்கிறது கூட்டத்துக்குள் இருந்து ஒரு கிழக் குரல்.
“.த. தண்ணி.’ என்ற சத்தம் வருகிறது அம்மாவின் குழிந்த வாயிலிருந்து!
வெதுவெதுப்பான சூட்டுடன் வெள்ளித் தம்ளரில் தண்ணிர் வருகிறது.
மூத்தவன் கட்டில் விளிம்பில் அமர்ந்து அம்மாவின் தலையை உயர்த்தித் தண்ணிரைப் பருக்குகின்றான். மடக் மடக் என்று குடித்துவிட்டு அம்மா படுத்துக்கொண் டார்கள்!
குனிந்து படுக்க வைக்கும்போது அவனிடம் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாப்போல் கூறினார்கள் “என்னயச் சுருக்கா செத்துப்போகச் சொல் றிங்களா?. பாலூத்தக் காத்திருக்கிங்களா?. கேட்டுதே ஒரு குரல்.’
கண்களை மூடிக்கொண்டார்கள். இமைக் கோடுகளில் ஈரம் கசிகிறது. அம்மா பேசினார்களா.. அல்லது அவன் மனம் பேசியதா? அவனுக்குப் புரியவில்லை.
தம்பியும் மனைவியும் அவனை சோகமாகப் பார்த்தார்கள்.
இந்த முறையும் ஏமாற்றம் தான். “.நெறய. செலவாகுமே பயணத்துக்கு?”
“பறவாயில்லை, வேற என்னதான் செய்யலாம்.” என்றபடி கிளம்பினார்கள்.
கைக்கும் வாய்குமான வாழ்க்கை வாழும் நடுத்தரக் குடும்பம் அவனுடையது. கொழும்பில் இவன் போன்றோரின் வாழ்வே வித்தியாசமானது. அபூர்வங்கள் நிறைந்தது.

திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு பாய்க்கு ஜஸ்கிரிம் வாங்கித் தின்பார்கள். நூறு ரூபாய்க் க் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டயுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றாட்டில் ஒடுவார்கள். அந்த வர்க்கத்தின் அச்சொட்டான ரதிநிதிதான் இவனும். இல்லாவிட்டால் முப்பது பாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐந்நூறு ரூபாய் சலவுசெய்து காரில் போவானா?
ஆண்டுக்கு இரண்டு தடவை என்றால் பறவா ல்லை.
இந்த பத்து பதினைந்து நாட்களுக்குள் இரண்டு டவை என்றால்.
“அடுத்து எப்பங்க?. என்னா செய்யப்போறிங்க?.” ன்றாள் மனைவி.
கேள்வியின் ரகசியம் அவனுக்கும் புரிகிறது. ற்கெனவே இருந்த நகைகளை பேங்கில் வைத்தாகி ரிட்டது. அடுத்த முறைக்கு என்ன செய்வது..?
அம்மாதானே என்ன செய்திருக்கோம் அவுங் ளுக்கு.? இதையாவது செய்வோம். சிலுவையாக னைத்துக் கொள்ளாமல்.
அம்மா அவனை கடன்காரனாக்கிவிட்டுப் பாகமாட்டார்கள்?. அம்மாவுக்குத் தெரியும்!
தன்னைத்தானே சமாதானமும் செய்து கொள் றான்.
அடுத்த நாள் ஆபீசில் சீ.சீயிடம் ஒரு கடன் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தான்நிலைமையை விளக்கி. லஞ்ச் டைமில் சீப் கிளாக் அவனை கூப்பிட்டு வன் கொடுத்த கடிதத்தை திருப்பிக் கொடுத்தார்.
அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. வட்டிக்குத் ான் வாங்க வேண்டுமோ? ஐய்யாயிரம் வாங்கினாலும் ாசத்துக்கு எழுநூற்றைம்பது வட்டி கேட்பானே சில்வா. Iட்டியைத்தான் கட்டலாம், முதல் அப்படியே இருக்குமே ன்று குழம்பி போனான் அவன்.
éé
இது தேவையில்லை’ என்ற சீ.சி தொடர்ந்தார். டெத் ஃபண்ட் ஸ்கீம்” பற்றி உங்களுக்குத் தெரியாதா. }ந்த ஸ்கீம் அறிமுமாகி ஆறேழு மாதங்கள் தான் பூகின்றன. நிரந்தர ஊழியர்களுக்கு இந்த ஃபண்ட் டைக்கும். அதுவும் ஒரே நாளில் கிடைக்கும். ஆனால் ]றந்தவர் ஊழியரின் அம்மாவாக அல்லது அப்பாவாக }ருக்க வேண்டும். டெத் சர்ட்டிபிகேட் தர வேண்டும். ங்கள் சம்பளம் என்ன இப்போது.?”
“ஈ.பி.எஃப் கழிக்காம பதினாறு சார்.”
”மூன்றுமாத சம்பளம் கிடைக்கும். யூவில் கட்டிட்”
“தாங்க் யூ சார்’ என்று எழுந்தான் அவன்.
“அம்மா ஏமாற்றமாட்டார்கள்.”
ா கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 2014 63

Page 66
விதியின் கனவு ஓர் அரிசிக் காகங் கூடப் பறக்காமல் இளந்தாரி வெயிலோடு தனிமையாய்க் கிடக்கிறது வீதி. இப்படித்தான் ஒவ்வொரு வீதியும் தனிமையை விரும்புகிறது. இளந்தாரி வெயில்தான் வீதிக்குத் தோதான காதலன் எப்போதும். எந்தவொரு வீதியும் மழையை ஒருபோதும் வரவேற்பதில்லை. ஏனெனில் எந்தவொரு வீதிக்கும் மழையால் தனிமையைப் பரிசளிக்க இயலாது. எந்தவொரு வீதிக்கும் மழையால் இளந்தாரி வெயிலைக் கூட்டிவரவுமியலாது. இளந்தாரி வெயில் காதலைத் தகிக்க தனிமையாய்க் கிடக்கும் வீதிக்கு வானவில்லை முன்னறிவிப்புச் செய்துகொண்டுதான் மழை வீதியில் இறங்குகிறது. எனக்கெதற்கு வானவில்? என்று வீதி கேட்டாலும் மழை அதைப் பொருட்படுத்துவதில்லை. இதற்காகத்தான் ஒவ்வொரு வீதியும் தனிமையை விரும்புகிறது. அது ஒரு பூனையின் கனவைப் போன்றதுதான். பூனையின் கனவில் எலி குதிக்கலாம் - அல்லது வேறேதும் குதிக்கலாம் - ஆனால் ஒவ்வொரு வீதியின் கனவிலும் இளந்தாரி வெயில்தான் காதலைத் தகித்துக்கொண்டிருக்கும்.
இராகவன்
64 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 SS
 
 

பின்புலப் பிழைப்பு
எதிர்காலக் கற்பனைகளை அரித்துச் செல்லும் நிகழ்காலத் துயர்களுக்குள் நீண்டு செல்கின்றன வருத்தப்படுவோரின் வாழ்வியல் பயணங்கள்.
வலுவற்ற தோற்றப்பாடுடைய மேனிகளுக்குள்ளிருந்து வதைபடும்; சிதைபடும் உணர்வுகள் அனைத்தும் செயலிழந்து நடைப்பிணமாக வருத்தப்படுவோர் இப்பொழுதும் அல்லல்களைத் தாங்கியபடி.
துளிர்க்கும் இயல்பான நம்பிக்கைகளை தூர்ந்து போகச்செய்யும் பக்கச் சூழ்நிலைகள் எப்பொழுதும் கனத்த இதயங்களைச் சுற்றி வலைகளாய் பின்னியபடி.
“பிழைக்கத் தெரியாத மனிசர்கள்.” எனவாய் அவர்களின் பிடரியின் பின்நின்று ஏளனத் தொனியாய் யொலிக்கும் சிலகுரல்கள் எப்பொழுதும்.
ஆம்! அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்! உழைப்புக்கும் பிழைப்புக்குமான வேற்றுமைகள் வேரோடியிருக்கும் இவ்வுலகத்தில் உடல் வருத்தி உழைக்கத் தெரிந்தவர்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை பின்புலமாய்!
எதிர்காலக் கற்பனைகளை அரித்துச் செல்லும் நிகழ்காலத் துயர்களுக்குள் 'பிழைப்பின் வளர்ச்சி’ அவர்களைப் பின்தள்ளுகிறது முன்னோக்கிச் சுழலும் இப் பூமிப் பந்தில்.
அலெக்ஸ் பரந்தாமன்
لر ܢܠ

Page 67
‘புதிய வானம் புதிய சிறகுகள்’ என்று சொல்லும் படியாக கலைமுகத்தின் 57 ஆவது இதழ் வந்திருக்கிறது. இது கலைமுகத்துக்கு வெள்ளி விழா ஆண்டு. கலைமுகத் தின் வாசகர்களாகிய எங்களுக்கும் இது வெள்ளிவிழாதான்.
இந்த வெள்ளி விழாவைச் சிறப்பிக்கிற மாதிரி கலைமுகத்தின் 57 ஆவது இதழ் ஏராளமான விடயங் களோடு வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று சிறுகதைகள், எட்டுக் கவிஞர்களின் கவிதைகள், நான்கு கட்டுரைகள், எட்டு நூல்களுக்கான மதிப்பீட்டுரைகள், பத்தி, கடிதங்கள் பகுதி என்று வெள்ளி விழாவைக் கொண்டாடுகிற மாதிரி ஏராளமான விடயங்கள். மேலதிகமாக சிறப்புப் பக்கம் என 'கலைத்தூது கலாமுற்றம் - ஒவியக் கூடம்’ என்றொரு பகுதி. இப்படி வெள்ளிவிழாக் கலைமுகத்தின் ஜனவரி - மார்ச் 2014 இதழ் வந்திருப்பது இந்த வரண்டு போன கோடைக்கு ஒரு குளிர்ச்சியே.
முதலில் அனாரின் கட்டுரை. அனார் தன்னுடைய படைப்புலக ஈடுபாட்டின் போது சந்திக்க வேண்டியிருந்த சவால்களையும் நெருக்கடிகளையும் சொல்கிறார். அப்ப டியே சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகள் குறித்த வெட்டுமுகத் தோற்றத்தையும் காண்பிக்கிறார். இன்றைய நாளிலும் பொது வெளியை நோக்கிவரும் பெண் எப்படி யான சவால்களுக்கு முகம் கொள்ள வேண்டியிருக்கிறது? என்பதைத் தன்னுடைய அனுபவங்களின் வழியாகப் பகிர்கிறார் அனார். கட்டுரை அனாரின் சுய விவரிப்பிலிருந்து ஒரு சாட்சியமாகப் பதியப்படுகிறது. இதைப் படிக்கையில் துக்கத்தினால் நம் இதயம் நசிகிறது. நம் தலைகள் நம்மையறியாமலே தாழ்கின்றன. ஆனால், தொடர்ந்து படிக்கும்போது அனாரை அபூர்வமானவளாக, வலிமை யானவளாக மாற்றியது கவிதைதான் என்று நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இலக்கியத்தின் வழியாக வாழ்க்கை யைக் கண்டடையும் வாய்ப்பை வழங்கும் படைப்பியக்கம் பெண்ணை மிக வலிமையும் ஆற்றலும் உள்ளவளாக மாற்றி விடும் நுட்பம் புலப்படுகிறது. உண்மையில் பெண் கவிதைகளைப் படிக்கும் போது ஏற்படுகின்ற உணர்வினை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக இந்தக் கட்டுரையை அனார் எழுதியிருக்கிறார். செறிவும் கவித்துவமும் கூடிய மொழியில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையும் மனோ கரியின் கவிதைத் தொகுதிக்கு அனார் எழுதிய முன்னுரை யும் அவர் விமர்சனத்தளத்தை நோக்கி விரிகிறார் என்பதற் கான அட்ையாளங்கள்.
அப்பால், அ. யேசுராசாவின் பத்தி, திரை உலா என்று குறும்படம், திரைப்பட நூல்களின் பட்டியல், அண்மையில் மறைந்த தமிழ்த் திரையுலக ஆளுமை பாலுமகேந்திரா பற்றிய பதிவு, ஜா.தீபாவின் மொழி பெயர்ப்பில் வந்திருக்கும் ‘மேதைகளின் குரல்கள்’ நூலில் இருந்து சத்யஜித் ரே, ஜாஃபர் பனாஹி, கிம் கிதுக், டேவிட்
 

ன், மார்ட்டின் ஸ்கோர்சிஸ் ஆகியோரின் நேர்காணல் ளில் இருந்து சிறு பகுதிகள் என இந்தப் பத்தியை எழுதி ருக்கிறார் யேசுராசா. அவருடைய வழமையான த்திகளைப் போல, இந்தப் பத்தியிலும் வாசகர்களுக்கான 1ண்டற் புள்ளிகள் அதிகமுண்டு.
கலைமுகத்தின் மூன்று சிறுகதைகளில் பின்நவீ த்துவப் பண்பு கொண்ட கதை திசேராவினுடையது. யாப்புனைவு வெளியை நம்முன் விரிக்கும் கதை. சேராவின் கதைகளின் உலகம் இதில் இன்னும் அகலித்து ரிகிறது. இதைத் தவிர்த்தால் கருணாகரனின் போர்பற்றிய றுகதை. போரினால் ஏற்படும் வாழ்க்கைச் சிதைவு ளையும் மன நெருக்கடிகளையும் சொல்ல முனைகிறது. மன்றாவது கதையை கீதா கணேஷ் எழுதியிருக்கிறார். தார்த்தக் கதை. இவற்றைத் தவிர்த்தால், பா.அகிலன், னோகரி கவிதைகளில் கிறிஸ்தவக் குறியீடுகள், கதை ளின் தாக்கம் என்பதைப் பற்றி கவனத்திற்குரிய ஒரு ரவுக்கட்டுரையை சி.விமலன் எழுதியிருக்கிறார். போரைப் ற்றிய பெரும்பாலான கவிதைகளில் எப்படியோ கிறிஸ்த பக் குறியீடுகள் வந்து விடுகின்றன. சு.வி, மு.பொ, சோ.ப, மருகையன் போன்ற மிகக் குறைவான கவிஞர்களைத் விர, ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் அதிகமான அளவில் கிறிஸ்தவக் குறியீடுகள் உண்டு. அதிலும் இளங் விஞர்களிடத்தில் இது இன்னும் அதிகம். எஸ்.போஸ், த்தாந்தன், நிலாந்தன் போன்றோருடைய கவிதைகளில் றிஸ்தவக் குறியீடுகள் அழகும் ஆழமுமாக பரிணமிக் ன்ெறன.
கலைமுகத்தின் கவிதைகளில் அதிகமானவை இளையோருடையவை. யாத்ரிகன், கிரிஷாந், சூரியநிலா, நெற்கொழுதாசன், சு.க.சிந்துதாசன் ஆகியோரே இந்த இளைய கவிகள். இவர்களுடன் ஜபார், ந.சத்தியபாலன், ாரைக்கவி ஆகியோரின் கவிதைகளும் உள்ளன. சத்திய ாலனின் கவிதை சொல்ல முனைந்தும் சொல்ல முடியா ருப்பதன் அந்தரிப்புப்பற்றிய தவிப்பில் தவிக்கிறது.
எட்டுப்பேரின் கவிதைகளைப் போல எட்டுப் |த்தகங்களைப் பற்றிய அபிப்பிராயக் குறிப்புகளும் ாழுதப்பட்டுள்ளன. புதிய புத்தகங்களைப் பற்றிய அறிமு த்துக்கும் அவற்றைப் பற்றிய மேலோட்டமான அபிப்பிரா பத்தை அறியவும் இந்தக் குறிப்புகள் உதவுகின்றன.
"கலைமுகம் திருமறைக் கலாமன்றத்தின் உத்தி யோக பூர்வமான இதழாக இருந்தாலும் இதனை 2தற்கப்பால் பொதுத்தன்மையுடன் வெளியிட்டு வருவது றப்பு. சுயாதீன இதழ்களும் பத்திரிகைகளும் சார்பு லையில் அல்லது உள்ளொடுங்கிய நிலையில் வந்து கொண்டிருக்கும்போது நோக்குடைய தரப்பொன்றி பிருந்து வெளியிடப்படும் இதழொன்றைப் பொதுத்தளத் ல் நிறுத்துவது சாதனை. இந்தப் பெறுமானப் பணியை ாமிலும், மரியசேவியர் அடிகளும் தொடர்ந்து செய்து
பருகின்றமை மகிழ்வு.
கருணாகரன்
ளிநொச்சி
SS கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 65

Page 68
அரங்கியற் கலைப்பணியில் அரைநூற்றாண்டை தொட்டுள்ள, திருமறைக் கலாமன்ற வெளியீடான இருபத்தைந்தாவது ஆண்டைக் கண்டுள்ள கலை, இலக்கிய சமூக இதழான ‘கலைமுகம்’ காலாண்டு சஞ்சிகையில் 57ஆவது இதழை வாசித்துப் பிரமித்தேன். நவீன இலக்கி வாசிப்பைப் பெய்யும் இவ்விதழின் ஆக்கப் பங்காளிகள் நாடாளாவிய ரீதியில் பிரபலமாகவுள்ள ஏடுகளை வாசி போருக்குப் புதியவர்களாகவே இருப்பர்! தமது படைப் களை ‘விற்பனைப் பண்டங்களாக்காத இந்த எழுத்தாள களது பக்குவ மனப்பான்மை பாராட்டத்தக்கதே.
துர்கதை, பரிசு, தொலைவு ஆகிய 3 சிறுகதைக இவ்விதழில் உள்ளன. கதைஞர் திசேரா எமது கதைஞ களிடமிருந்து பெரிதும் விலகியே நிற்பவர். வழக்கமா? எமது படைப்பாளிகள் நேர்கோட்டில் கதைகளைக் கூ திசேரா பூடகமாகவும் கதை சொல்லும் ஆற்றலையு கைவரப்பெற்றவர். மக்கள் இலக்கியவாதிகளுக் இவ்வகைப் படைப்புகள் சற்று நெருடலை ஏற்படுத்தலா இருந்தாலும், ஈழத்துச் சிறுகதைகள் நேர்கோட்டி செல்பவையென, ஈழத்துச் சிறுகதைகளுக்கு முத்திை பதிக்கும் தமிழகக் கதைஞர்களுக்கு; திசேராவின் கதைகள் இருண்மையான சிறுகதைகள் படைக்க எமக்கு முடியுமென்ற செய்திகளை வெளிப்படுத்துகின்றன. தக் பதிலடியாகவுமுள்ளன. இத்தகையவொரு சிறுகதைதா? திசேராவின் 'பூஜ்ஜியம்’. இதை 2012இல் ‘கலைமுகப் இதழொன்றில் வாசிக்க முடிந்தது. சாதாரண வாசகருக் இத்தகைய சிறுகதைகள் பொருந்தாதுதான்! ஆனா இப்படிப் படைப்பதற்கும் தனித்திறமை இருக்கவேண்டுட அத்தோடு மொழியை எழுத்தாளன் தன் வசப்படுத்து நுண்ணாற்றலும் வேண்டும். இத்தகைய சிறுகதைகளை திறனாய்வுக்கு உட்படுத்திப் பரம்பல் செய்திருக் வேண்டும். ஆனால் அது இங்கு நடப்பதில்லை! தர படுத்தும் அமைப்புகளும் - இவைகளின் இருண்மையை கடும் முயற்சியின் மூலம் - எமது சிறுகதையை அடுத் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் இலக்கோடு - வெளிச்ச படுத்தி, அவை சமூகத்துக்குக் கூறுவதைக் கொய்தெடு பதில்லை. சாதாரண வாசகர்களால் விளங்கிக் கொள் முடியாதென்ற காரணத்தால், ‘பூஜ்ஜியம்’ போன் சிறுகதைகளை ஒரங்கட்டி, மறைத்து விடுவது, ஈழத்து நவீ சிறுகதை இலக்கியத்துக்குச் செய்யும் பெருந் துரோ மாகும்! இவ்விதழில் வெளிவந்துள்ள திசேராவின் ‘து கதை’ பூடகமானதல்ல. இருப்பினும் ஆழந்து நிதானமாக தான் வாசிக்க வேண்டும். தலைப்பே படைப்பாளியி: துணிச்சலைக் காட்டுகிறது. துர்நாற்றம் என்றால் முகர தகாத வாசனை. இக்கதையின் நாயகன் சார்ல்ஸ் ஜக்ச தன்னுள் இசையை வளர்த்து மேன்மை கொள்ளாது படிப்பையும் குழப்பிப் பித்துநிலை கொள்கிறான். இவனா சமூகத்துக்குத்தான் என்ன பயன்? கேட்போரை இன வெள்ளத்தில் ஆழ்த்தும் இசைக் கலைஞர்கள் இப்ப ஜக்சன் போலாகக் கூடாதென்ற அறைகூவலை இக் கை தருகின்றதல்லவா?
கருணாகரன் எழுதிய ‘பரிசு’ சிறுகதை போர் வீர இருவர் பற்றிப் பேசுகின்றது. ஒருவன் ரஷ்யன் என்பை
66 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204

t
f
|-
கரமசோவ் என்ற பெயர் உணர்த்துகின்றது. இவனது கதையைப் படித்த சுந்தரி என்ற இந் நாட்டுப் போர்வீரன், அதுவும் தனது போன்றதாகவே உள்ளதை அறிகிறான். இருவரும் அவர்களது குடும்பங்களுக்குத் தூரவாகவே உள்ளனர். அது குறித்து வேதனையும் கொள்ளுகின்றனர். “கரமசோவ் என் தோழனே நாங்கள் தோற்றுவிட்டோம், முடிவில்லாத தோல்வி, மீள முடியாத சூழலில் அடித்துச் செல்லப்படும் துரும்புகளாக்கப்பட்டுவிட்டோம் நண்பனே. கடவுளே எனக்கு வேறு வழியில்லையா?’ எனச் சுந்தரி விம்மி, விம்மி அழுவதாகக் கதை முடிந்துள்ளது. போர் வீரர்கள் நல்ல தியாகிகள் என்ற ஊட்டம் ‘பரிசு’ சிறுகதைக்குள் உண்டு. அது உண்மை என்பதையும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். எனவேதான் போர் வீரருக்கு நினைவுதூபிகள், சிலைகள் நாட்டப் படுகின்றன. நினைவு கூரப்படுகிறார்கள். அவர்களது குடும்பங்கள் கெளரவிக்கப்படுகின்றன. ஆனால். மனிதனிதை மலினப் படுத்தி விட்டான்!. அதிகார மையங்கள் போர் வீரரைத் தமது கூலிப்படையாக்கி, பாசிக செயற்பாடுகளுக்கு பயன்படுத்திப் போர் வீரனின் மானுடம் மதிக்கத்தக்க ஆளுமையைக் கெடுத்துவிட்டன!
இவ்விதழில் வந்திருக்கும் சிறிதும் பெரிதுமான நூல்கள் பற்றிய குறிப்புகள் வியக்க வைக்கின்றன. எழுத்தாளர்களுக்குப் போர் நல்ல தீனியைக் கொடுத்துச் சென்றிருப்பது புரிகிறது. எழுதித்தள்ளியுள்ளனர். இதுவரை வெளிச்சத்துக்கு வராத நூல்களை அறிய முடிகின்றது.
பா.அகிலன், மனோகரி ஆகியோர்நூல்கள் குறித்து திறனாய்வாளர் சி.விமலன் எழுதியுள்ளார். கிறிஸ்தவக் குறியீடுகளையும் கதைகளின் தாக்கத்தையும் கட்டுரையில் தேடல் செய்துள்ளார். இது நல்லதொரு எத்தனிப்பாகும். கிறிஸ்தவத் தமிழிலக்கியத்துக்கு அருகதையான பல கிறிஸ்தவ நெறிகள் இவர்களது நூல்களில் உண்டென நிறுவப்பட்டுள்ளது. பிரபல சிறுகதையாசிரியர்களான கே. ஆர்.டேவிட், பெனடிக்ற்பாலன் ஆகியோர் தாம் சமுதாயத்துக்குச் சொல்லப் போபவைக்குப் பக்கபலமாக சுவிசேஷ நெறிகளை எடுத்தாண்டுமுள்ளதைத் தீவிர சிறு கதை வாசகர்கள் அறிவர். திறனாய்வாளர்கள் வெறுமனே இலக்கியவாதிகளைப் பற்றி மட்டும் எழுதிக் கொண்டி ருக்காது எழுத்தாளரின் எழுத்தின் தாக்கத்தையும் தேட லிட்டு வாசகர்களுக்குத் தருவது பயன்மிகு நற்பணியாகும். ‘புதிய வானம் புதிய சிறகுகள்’ என்ற அனாரின் ஆய்வுக் கட்டுரை எமது பெண்பால் கவிஞர்கள் பற்றிய நல்ல தகவல்களைப் பரத்தியுள்ளது. இக் கவிஞர்களின் கவிதைப் பாய்ச்சல் நுணுக்கமான ஆய்வினுரடாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. படித்துப் பாதுகாக்கத்தக்க கட்டுரை.
புது, வசன கவிதைகளாக இவ்விதழில் பத்துக் கவிதைகள் உள்ளன. போர் அவலங்கள் ஏற்படுத்திய விசாரம் மற்றும் தாயன்பு என்பவை பேசு பொருளாக உள்ளன.
வட மகாணத்தின் முதல் ‘ஒவியக் கூடம் பற்றிய தகவல் சந்தோஷத்தைத் தருகின்றது. இலங்கைத் தமிழர்கள் “பீனிக்ஸ் களென்பது நிரூபிக்கப்படுகிறது. மீண்டும்

Page 69
உயிர்த்தெழுவோம். வானத்தைக் காட்டுங்கள் சிறகு விரிக்க என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்றது.
திரை உலா அரிய சினிமாத் திரைப்படச் செய்தி களைத் தருகின்றது. ஜோசித்தன் தயாரிப்பு, நெறியாள்கை யில் உருவான ‘அப்பாவின் மிதிவண்டி’ குறுந்திரைப்படம் பற்றிய தனது இரசனையை அ. யேசுராசா வாசகரோடு பகிர்கிறார். அத்தோடு அமரர் பாலுமகேந்திராவை சந்தித்தவை பற்றியும் சுவைபடக் கூறியுள்ளார்.
ஆக, கலைமுகம் 57ஆவது இதழின் அனைத்து ஆக்கங்களும் போருக்குப் பின்னரான ஈழத்தமிழ் வாழ்வின் எழு கோலங்களை யதார்த்தமாகப் பரத்தி ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் செழுமைக்குக் கட்டியம் கூறுகின்றன.
இத்தகைய இதழ்கள் பரந்தளவில் வாசகரைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை இச் சஞ்சிகை யோடு சம்பந்தப்பட்டவர்கள் எடுத்தல் பயன்தரும்.
மா. பாலசிங்கம்
கொழும்பு - 13
கலைமுகத்தின் கடந்த இரண்டு மூன்று இதழ் களை பெறக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த வகையில் கடந்த 57ஆவது இதழும் கிடைக்கப்பெற்றது. முழுவதும் வாசித்து மகிழ்ந்தேன். அனைத்தும் சிறப்பாக அமைந்துள் ளன. ஈழத்தின் தற்போதைய பெண் நிலையினை ஆசிரியர் தலையங்கத்திலிருந்து சிறப்பாக உணரக் கூடியதாக உள்ளது. அத்துடன் அதற்கேற்ற அட்டை ஓவியம் சிறப்பாக பெண்ணிய வன்முறையை வெளிக்கொணர் வதாக உள்ளதுடன் முகப்பு வடிவமைப்பும் வாசகர்களை கவர்வதாக அமைந்துள்ளது.
உள்ளே இருக்கும் ஒவ்வொரு பக்கங்களும் வாசிப்புப் பிரியர்களுக்கு தீனி போடுவதாக அமைந்துள்ள துடன் பக்க வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக கவரக்கூடிய தாக உள்ளது. காரைக்கவி எழுதிய ‘அம்மா என்னும் ஆசியாவின் அதிசயம் கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது. அதன் ஒவ்வொரு வரிகளும் மறுபடியும் மறுபடியும் சுவைக்கக் கூடியதாகவுள்ளது. அவருக்கு எனது பாராட்டுக் கள். நூல் விமர்சனம் அந்த நூல்களை வாசித்த அனுப வத்தை என்னுள் ஏற்படுத்தியது.
'அஞ்சலிகள்’ பகுதியில் மறைந்த கலைஞர்களை நினைவுபடுத்தி அஞ்சலிக் குறிப்புக்கள் வெளியிட்டது சிறப்பு. இவ்வாறான பகுதி தொடர்ந்து வெளிவரவேண்டும். தொலைக்காட்சி ஆக்கிரமித்து வரும் இக் காலத் தில் வாசிப்பை மடியவிடாது துளிர்க்க வைக்கும் இவ்வா றான பல ஆக்கங்களுடன் தொடர்ந்தும் ‘கலைமுகம்’ வெற்றி நடைபோட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
காரை விமல் யாழ்ப்பாணம்.
கலைமுகத்தின் 57ஆவது முகம் பார்த்தேன், படித்தேன். வழமை போலவே இதழின் அட்டை வடிவமைப்பில் ஏதோ சிக்கல் இருக்கிறது. (சில இதழ்கள் தவிர) ஆயினும் உள்ளே அதன் அக முகம் அழகானதாகவும்,
G
ܝ݇
G

ழமானதாகவும் மிளிர்கின்றது. ஆசிரியர் தலையங்கத்தில் றிப்பிடப்பட்டுள்ள அறவோரை, வயதானவர்களை, பண்களை, சிறுவர்களை குறிவைக்கக்கூடாது என்பதும், புத்தகையோர் எத்தகைய சூழ்நிலையிலும் காக்கப்பட வண்டியவர்கள் என்பதும் அகிலம் முழுவதும் ஏற்றுக் காள்ளப்படும் காலம் எப்போதுதான் உருவாகும்? எனும் கள்விக்கு யார் தான் பதில் தருவாரோ என்று மேலும் ம்மை ஏங்க வைக்கின்றது.
அனாரின் ‘புதிய வானம் புதிய சிறகுகள்’ஈழத்து பண்ணிய கவிதைகள் மீதான ஆர்வத்தை மேலும் திகரிக்கச் செய்துள்ளது. போருக்குள்ளும் போராட்டத் தாடும் வாழ்ந்த எமது பெண் கவிஞர்கள் இன்றைய எமது சூனிய வாழ்வு பற்றியும் அதிகம் எழுதித்தர வேண்டிய ர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். நான் கவிதை எழுதத் தொடங்கிய நாட்கள் சமூகம் லவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப் ான காலமாகும்’ எனும் அனாரின் அன்றைய சூழ்நிலை பால் இல்லாவிடினும் இன்றைய சூழல் பெண்களை பொறுத்த மட்டில் வேறொரு அபாயகரமான சூழலை -ருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை ஏற்றுத்தான் ஆக வண்டும். போரும் இடப்பெயர்வும் இல்லாத இன்றைய ாலத்தில் கூட அறிவிக்கப்படாத போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் எங்கள் சகோதரிகளின் கதைகள் ண்ணினாலானது.
கவிதைகளில் ‘போதி மரங்கள் துளிர்க்கின்றன’ ானும் சூரியநிலாவின் கவிதை சூரியக்கதிர். நெற்கொழு ாசனின் ‘என் நதிக் கரையிலும் கவிதையும், கிரிஷாந்தின் ஆளில்லாக் காடுகளை காதலிக்கும் வனதேவதைக்கு’ ானும் கவிதையும் அருமை.
திரை உலா’ எனும் அ.யேசுராசா அவர்களின் பத்தி ாழுத்து பல நல்ல தகவல்களை குறிப்பாக குறும்படம், ரைப்படம் சம்பந்தமான தரவுகளைத் தருகிறது. அண்மையில் ஜோசித்தன் என்பவரின் நெறியாள்கையில் வெளிவந்த ‘அப்பாவின் மிதிவண்டி’ எனும் குறும் டத்தைப் பற்றிய குறை நிறைகளை அலசுகிறது. மேலும் 5 திரைப்பட நூல்களின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்களின் விபரங்களையும் தருகிறது. நிச்சயமாக இந்த ால் பட்டியல் குறும்பட படைப்பாளிகளுக்கும் திரைப்பட விமர்சகர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். பாலு கேந்திரா பற்றிய அறியாத பல செய்திகளை அறிய மடிந்தது. ‘கலைஞர்களைப் புரிந்துகொள்ளல்’ என்ற குதியில் ஜா.தீபாவின் மொழி பெயர்ப்பில் உலக ரைப்பட நெறியாளர்கள் 15 பேரின் நேர்காணல்களைக் கொண்ட மேதைகளின் குரல்கள்’ நூலில் இருந்து 5 நெறியாளர்களின் கருத்துக்களின் சில பகுதிகளை அவர் மக்காய் தந்திருக்கின்றார்.
சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் திசேராவின் துர்கதை’ மனதில் பதிய தாமதிக்கின்றது. ஒரு தடவை பாசித்தவுடன் மனதில் பதியும் எந்தவொரு படைப்பும் அதை இன்னொரு தடவை வாசிக்க வேண்டும் என்ற ாண்ணத்தைத் தூண்டவேண்டும். கருணாகரனின் சிறு
கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 67

Page 70
கதையான ‘பரிசு” அத்தகையதோர் விருப்பத்ை ஏற்படுத்துகிறது. இறந்தகாலத் துயரை, நிகழ்கா அதிர்வை, எதிர்கால நிகழ்வை எந்தப்படைப்பு எடுத் யம்புகிறதோ அந்தப் படைப்பு அழிவற்றது. கீத கணேஷின் சிறுகதையான ‘தொலைவு கனவுகளில் சிதைவு.
அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, நிஜத்தை மறைத் தன் எழுத்தாற்றலை மட்டும் வெளிப்படுத்தி எழுது எழுத்தாளனை, அவனது எழுத்துக்களை காலம் தன் வரவி வைத்துக் கொள்வதில்லை. எவ்வளவு எழுதுகிறோ என்பது முக்கியமில்லை. எதை எழுதுகிறோம், எதற்கா எழுதுகிறோம் என்பதுவே முக்கியம். தனது இனம், மொழி மதம், கலாசாரம், தனது மரபு, அவைகள் மீது ஏற்படு! இடர்கள், வன்முறைகள் கண்டு அவற்றை தனது பாடுபொருளாக வரிந்து கொண்டு எழுதுபவன் வாழு போதே வரலாறாகிறான். அவன் தன் இனத்தின் தை அடையாளமுமாவான். பா.அகிலன், மனோகரி கவி.ை களில் கிறிஸ்தவக் குறியீடுகள், கதைகளின் தாக்கம் எனு சி.விமலனின் கட்டுரையை வாசிக்கும் போது மே சொன்ன கூற்றுக்கள் மெய்யாவதை தவிர்க்க முடியவில்லை நூல் மதிப்பீட்டுக்கென அதிக பக்கங்க6ை ஒதுக்கியது எந்த விதத்திலும் நியாயமற்றது. ஏற்கென6ே படைத்த படைப்பைப் பற்றி விதந்துரைக்கும் தேவை பாடு தேவையற்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது எனினும் மதிப்பீட்டாளர்களின் எழுத்தாற்றலுக்கு ஒ(
gFL u ITGbih GBL u ITL 6a) ITL b.
திருமறைக் கலாமன்றத்தின் “கலைத்தூது கலாமு, றம்’ திறப்புவிழா பற்றி மதுரா எழுதிய கட்டுரையை படித் போது விழாவில் பங்கெடுத்தது போன்ற ஒரு திருப் ஏற்படுகின்றது. கவிஞர் சோ.பத்மநாதன் அவர்கள் கூறுவது போல் நாம் சேர்த்து வைத்திருந்த கலைச் சம்பாத்தியங்கள் போரால் அழிந்து போய்விட்டன. இந்தச் சூழ்நிலையில் திருமறைக் கலாமன்றம் நிறுவியுள்ள 'கலைத்தூது கல முற்றம்’ ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளி. ஈழ கலைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
தென்னிந்திய சினிமாவுக்குள்ளும், தொட நாடகங்களுக்குள்ளும் மூழ்கிப் போய் எமது பாரம்பரிய கலைகளை தொலைத்துவரும் இன்றைய சூழலில் தன்னா முடிந்தவரை அவற்றை மீட்டெடுக்கும் திருமறை கலாமன்றத்தின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான ‘நாட விழா' பற்றிய செந்தூரனின் கட்டுரை முக்கியமான பதிவாகும். நலிவடைந்து செல்வது அரங்கப் பண்பா( மட்டுமல்ல நமது எல்லாப் பண்பாடுகளும்தான். '
மு. யாழவன்
யாழ்ப்பாணம்.
சிற்றிதழ்களின் தொடர்ச்சியான வருகை அதன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது 'கலைமுகம் அதன் அரை நூறு இதழ்களைக் கடந்து தொடர்ந்து வெற்றியுடன் பயணிப்பதை எண்ணி அதன் வாசகர் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்.
68 கலைமுகம் O ஏப்பிரல் - ஜூன் 204 கா

5),
டு
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 10,000 நூல்களை யாவது வாசிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எனது தாத்தாநல்ல வாசிப்புமிக்கவர். அவர் வாசிப்பு மீது எப்படி ஆர்வத்தினை தூண்டுவது என்பது பற்றி ஒருவிதமான நுட்பத்தினை அறிந்து வைத்திருந்தார். சிறிய பத்திரிகைத் துண்டுகள், பழைய கிழிந்த புத்தகங்களின் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொள்வார். அவ்வப்போது வாசிப்ப தற்காக அதனை என்னிடம் தருவார். அவை சிறிய பகுதிகள் ஆதலால் விரைவாக வாசித்து முடித்து விடுவேன். விரை வாக வாசித்து விட்டதனால் ஒருவித திருப்தி ஏற்படும். அதிலுள்ள தகவல்கள், துணுக்குகள் என்பவற்றை நான் அறிந்து கொள்வேன். இவ்வாறே வாசிப்பு மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. வாசிப்பு என்பது மிகப்பெரிய
ஆளுமை.
கனதியான வாசிப்புக்கு 'கலைமுகம் தீனி போடுகிறது. திருமறைக் கலாமன்றம் எங்கள் இனத்தின் கலை பண்பாட்டுக் கோலங்களை தொடர்ந்து பேணுவதில் எவ்வாறு அளப்பரிய பணியாற்றுகிறதோ அதே பாதையில் எமது மொழியின் தனித்துவத்தினை இலக்கிய பேழைக்குள் வைத்துப் பாதுகாக்கும் என்பதிலும் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.
சிநிஷாகரன்
கைதடி,
கலைமுகத்தின் 57ஆவது இதழை முதன் முதலாக வாசித்ததில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். இனி வரும் ஒவ்வொரு இதழையும் நான் தவறாமல் வாசிக்க காத்திருக்கின்றேன். ஏனெனில் இவ்வாறான ஒரு இதழை நான் இதுவரை வாசித்ததில்லை. அந்த வகையில் நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.
முகப்பில் பிரசுரிக்கப்பட்ட ஒவியமானது கலை முகத்திற்கு பல மடங்கு கலை உணர்வையும் கலைக் கவர்ச்சியையும் கொடுத்துள்ளதுடன், மீண்டும் மீண்டும் வாசிக்கவும் தூண்டுகிறது. கலைமுகத்திலுள்ள எல்லா விடயங்களையும் நான் வாசித்தேன். இருப்பினும் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. அத்துடன் அதற்காக பிரசுரிக்கப்பட்ட படங்கள் கவிதையின் உணர்வு பூர்வமான இரசனையை இன்னும் அதிகரிக்கின்றது.
மற்றும் இதழமைப்பு மிகவும் நேர்த்தியாகவும் வடிவாகவும் உள்ளது. இருப்பினும் சிறுகதைகளுக்கும் படங்களை சேர்த்தால் இன்னும் கதையின் உணர்வையும், தெளிவையும் அதிகரிக்கும் என நான் நினைக்கின்றேன்.
கலைமுகம் இன்னும் பல ஆக்கங்களைத் தாங்கி வெளிவருவதுடன், மேலும் பல மடங்கு வளர்ச்சியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பதற்கிணங்க இவ் இதழை வாசிக்கும் ஒவவொருவரினதும் வாசிப்புத் திறன் அதிகரிக்
கின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சி.விவனியா
அரியாலை.

Page 71
O தவணை முறைக் கட்ட წჭ88888888 O வீதி ஒழுங்கு நூல் இலவசமாக
பத்திறfற்ெ
ப்பு அத்தாமசிப் பத்
இல, 127, பருத்தித்துறை விதி, காளிகோவில் விதி நெல்லியடி, கரவெட்டி சாவகச்சேரி. 021 492 3115 021 492 3114 077 1113.382 0777 611686
 

பயிற்சி
6, O777906 O64
தில் இருந்து ஆரம்பிக்கப்படும். க்க சாரதிகளால் சிறந்த முறையில் திரம் பெற்றுக் கொடுக்கப்படும். பிசேட வகுப்புக்கள்
யிற்சிகால
இல. 89, கண்டி வீதி, பஸ் நிலையம், I பிரதான விதி சுண்டிக்குளி, GöIGOTT. வல்வெட்டித்துறை. யாழ்ப்பாணம். 0777 150097 077 55737.11 021 222 4527 021 4923732 021 4923733 077 3581916