கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துறவு

Page 1


Page 2

0
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான
சம்பந்தனின் பதினாறு சிறுகதைகளின் தொகுதி
(1930-959)

Page 3


Page 4
கிளிகளிடமும் கண்டு நீ பரமானந்தம் அடைகின்றாயோ, அவளை நீயும் அவ்வளவிற்கு ஆகர்ஷிக்கின்றாய்
மரத்தடியில் இறந்துபோன பிச்சைக்காரப் பெண் ஒருத்தியின் கதையோடு பணக்கார வீட்டு விவாக ஊர்வலத்தைச் சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கும் ஊர்வலங்கள் என்ற கதை கட்டுக்கோப்பிலும் அம்சத்திலும் சிறந்து விளங்கு கின்றது. இந்தியாவில் வகுப்புக்கலவரம் உச்சநிலை அடைந்திருந்தபோதும்அதன் பின்பும் அந்நிகழ்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு எத்தனையோ அற்புத சிருஷ்டிகள் வெளிவந்தன. ஆனால் அந்தச் சம்பவத்தை வைத்துச் சிரஞ்சீவிக் கதை எழுத தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் முயலவில்லை. அந்த மனக்கிளர்ச்சியால் துன்பப்பட்ட ஒரே ஒரு எழுத்தாளர் சம்பந்தன்தான். அவர் எழுதிய கதை மதம் என்பதாகும். அவரது எல்லா சிருஷ்டிகளிலும் சிறந்ததாக எனக்குப் பிடித்தது இந்தக் கதையே. முஸ்லீம் பெண்ணாகிய சலீமாவைக் காப்பாற்றிச் சந்திரநாத் என்ற ஹிந்து இளைஞன் அவளின் பெற்றோர் வசம் சேர்க்கப்போன இடத்தில் அவனே படுகாயப்படுகிறான். "நான் ஹிந்துவாகப் பிறந்து விட்டேன் நீங்கள் முஸல்மான்களாகப் பிறந்து விட்டீர்கள். ஆயினும் என்ன? நாமெல்லோரும் இந்த நாடு பெற்ற குழந்தைகள் தாமே" என்று அருமையான சம்பாஷணையும் நல்ல குறிக்கோளும் இந்தக் கதையை உயர்த்துகின்றன.
இந்த அவசர யுகத்திலே ஒரு நல்லநாவலை எழுதக்கூடிய பொறுமையும் - கற்பனையுமுள்ள எழுத்தாளர்கள் மிகக் குறைவு. சிறுகதை வளர்ந்த அளவிற்கு நாவலில் நாம் முன்னேறவில்லை என்றே கூறல் வேண்டும். சம்பந்தன் முப்பதுஅத்தியாயங்கள் கொண்டபாசம் என்றநல்ல ஒருநாவலை ஈழகேசரியில் எழுதியுள்ளார்.
சம்பந்தனின் சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளிவராததாலும்நாற்புறமும் சிதறிக் கிடப்பதாலும் சம்பந்தனைச் சரியான முறையில் நம்மால் உணர முடியாது போய்விடுகின்றது. மேலும் இளந்தலைமுறைகளும் விமர்சனக் காரர்களும் ஒரு காலகட்டத்தில் ஈழத்து எழுத்தைச் சரியான முறையில் எடைபோட முடியாதவாறுள்ளது.
- இரசிகமணி கனக. செந்திநாதன் -

முன்னுரை
'சிறுகதை உலகம் எல்லை சொல்ல முடியாதளவிற்கு வளர்ந்துவிட்டதுவளர்ந்துகொண்டிருக்கின்றது எனக்கூறும் க.திசம்பந்தன் அவர்கள் ஈழத்துச் சிறுகதை மூவர்களில் முக்கியமானவர். ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும், உள்ளடக்கமும் அழகாகவும், ஆழமாகவும் அமைவதற்குச் சம்பந்தன் அவர்களின் ஆரம்பகாலச் சிறுகதைகள் வழிகோலின எனலாம். இவரின் கதைகளில் எக்காலத்திற்கும் பொருந்துவதான மனிதனின் அடிப்படைப் பண்புகள் அழகிய உருவில் விழுந்திருப்பதால், இவரின் இலக்கியப் பாதை செம்மையானதாகவும், தனித்துவமானதாகவும் அக்காலத்திலேயே விளங்கி யமை குறிப்பிடத்தக்கது. இதனாற்றான் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர் களான சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் போன்றவர்களிலிருந்து இவரைப் பிரித்து ஆராயவேண்டியுள்ளது. மனித உணர்வுகளையும், மன அசைவுகளையும் மனோதத்துவ அறிவியற்றுறையில் அணுகி, அவற்றின் சிறப்புக்களைக் கலையாக்கிய பெருமை இவருக்குண்டு. அத்துடன் இவரைப் போல அக்கால எழுத்தாளர்கள் மனவலைகளிடையே தமது இலக்கிய யாத்திரைகளை ஒரு பலமாகக் கொண்டு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவ்வளவு தனித்துவம்மிக்க சம்பந்தன் அவர்கள், தற்போது சிறுகதை உலகை விட்டு விலகி - ஏன் கதை உலகினின்றும் விலகி - கவிதை உலகில் பிரவேசித்திருந்ததால், தற்போதைய வாசகர்கள் இவரை நன்கறிந்திலர். அத்துடன் இவரின் சிறுகதைகள் ஒரு கோவையாகவேனும் தொகுக்கப்பட்டு வெளிவராமையால், இவரைப் பற்றிய இலக்கிய எடைபோடுதலில் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் பெரிதும் இடர்ப்படுகின்றனர். இந்த அவலநிலையை உணர்ந்து. செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் ஆகியோர் மிக முனைந்து இவரின் சிறுகதைகள் ஐந்தினைத் தேடிப் பெற்று, 1966ஆம் ஆண்டு'விவேகிசம்பந்தர் சிறுகதை மலர் ஒன்றினை வெளியிட்டனராயினும், அம்முயற்சி பூரணமாகச் சம்பந்தரைப் புரிந்துகொள்ளப் போதுமானதன்று: அறிந்து கொள்ள மட்டுமே பயன்பட்டிருக்கும்.
5

Page 5
இக்காலத்தில் இவர் தொடர்ந்து எழுதாமையால், இவரின் எழுத்தையோ, அதன் வளர்ச்சிப் போக்கையோ நம்மால் அளவிடமுடியாதவாறு உளது. இதுபற்றிச் சம்பந்தன் கூறுவது வியப்பாகவும், அதேவேளையில் சிந்திக்க வைப்பதாகவும் உளது.
“எழுத்துலகு நானறிந்த வரையில் மிக ஆழமானது. எல்லை யற்ற உயரமும், விசாலமுமுடையது. என்னால் அதன்தன்மை களைக் கட்டுப்படுத்திநிதானிக்க முடியவில்லை”
சம்பந்தன் அவர்களுக்கு இலக்கியம் பற்றி அன்றும், இன்றும் ஒரே கொள்கையே உறுதியாக நிலவி வருவதை அன்றைய எழுத்துக்களாலும், இன்றைய கவிதை, கட்டுரை முயற்சிகளாலும் நன்கு தெரிய வருகின்றது. இலக்கியத்தின் பண்பும் பயனும் பற்றி மிக உயர்வாகக் கருதி வருகின்றா ராதலின் இலக்கியத்தின்பண்பினைப்பற்றிநன்கு தெரியாமல் எழுதுகின்றவர் மேல் அவர் மனம் கசப்படைகின்றது.
‘சமுதாயத்தின் உயிர்நிலையைக் காப்பாற்றி வளர்த்த-வளர்க்கின்ற, வளர்க்கும் கலையே இலக்கியம். வாழ வேண்டும் என்பது சமுதாயத்திற்கு எவ்வளவுஅவசியமோஅவ்வளவிற்குசமுதாயத்தைவாழ்விக்கும் இலக்கியமும் அவசியமாகும்’ எனக் கருதும் இவர், இத்தகைய பொறுப்பு வாய்ந்த இலக்கியத்தைப் படைப்பவர்கள் மிகவும் தெளிந்த மனமுடையோராகவும், சான்றோர்களாவும், அறிவுமிக்கவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதனை வலியுறுத்திக் கூறுகிறார். "சமுதாயத்தின் காப்பாளர்களான சான்றோர்களே இலக்கியஞ் செய்தவர்கள். மதிப்பற்ற அவர்கள் பணி கேவலம் பொழுது போக்காக அமைவதில்லை என்ற இவரின் கருத்து-கலை கலைக்காகவா (art for artis sake) 946örgÓ6JFTpi6OossissTaf56IT? - 6T6örgpigës:6oo6OTěš5 6f6Tä5LDmas அமைவதுடன், இவரின் கதைகளை எத்தகைய நோக்கில் அணுக வேண்டும் என்பதற்கு ஒரு விளக்கவுரையாகவும் அமைகின்றது.
இவரின் முதற்படைப்பான தாராபாய்’ 1938 ஆம் ஆண்டில் கலைமகள் பத்திரிகையில் வெளியாகியது. இக்கதை பாரதநாட்டின் இந்து-முஸ்லீம் இனக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு, இரு இள உள்ளங்களின் மனப் போராட்டத்தைச் சித்தரிப்பது. இந்த எழுத்தைத் தொடர்ந்து வெளியான கதை களில் காலதேசவர்த்தமானங்களைக் கடந்த சர்வதேசியச்சூழலில், வாழ்விற்கு அத்தியாவசியமான பொதுமானிடப்பண்புகள் அழகிய உருவங்களாக வெளி வருதலைக் காணலாம். இது இவரின் கதைகளில் குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.
வாழ்க்கைத்தாக்கங்களின்தூண்டுதல்களாலோ, அன்றிசமூக முன்னேற்ற விளைவு கருதியோ இவர் பேனாவை எடுக்கவில்லை. இளமையிலேயே
6

தமிழிலக்கியங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் இவருக்கிருந்தஈடுபாடு இவரை ஒரு இரசனைமிக்கவாசகனாக்கியது. அந்த வாசக இரசனைநிலையே தாமும் வாசித்தவை போன்ற நயமிக்க படைப்புக்களை எழுதவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டிவிட்டனவாயினும் அதனைச் சுடர் விட்டெரியச் செய்த சம்பவம் ஈழத்து இலக்கியப் பிரியர்களுக்கு மிக்க மகிழ்வூட்டுவனவாகும். ஆனந்தவிகடன் பத்திரிகை அக்காலத்தில்தன்பத்திரிகையில் 'ஆனந்தமடம் என்ற நாவலுக்கான விமர்சனப் போட்டி ஒன்றை நடத்தியது. அப்போட்டியில் பங்குபற்றி முதற் பரிசைப் பெற்று ஈழத்தின் இலக்கிய உணர்வைத் தமிழகத் திற்கும் கொடிபரப்பினார் பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை அவர்கள். இவர் பெற்ற இப்பரிசு நேரடியான இலக்கியத் தாக்கத்தை ஈழத்து எழுத்தாளர் களிடையே எழுப்பிவிட்டது. பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை பெற்ற பரிசால் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அடைந்த சம்பந்தன் எழுதுவதில் தனி அக்கறை காட்டலாயினர். அத்துடன் இவரின் சிறந்த நண்பர்களாக காலஞ் சென்ற இலங்கையர்கோன்,திரு. சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் அமையவே, இவரின் எழுத்து இலக்கியச் சிறப்புக்களையும் மேன்மையையும் அடையலாயிற்று.
ஆயினும், இவரால் தன் எழுத்துப் பிறக்கும் விதம்பற்றி எதுவும் கூற முடியவில்லை. கதை எழுத என்னைத் தூண்டியது எதுவென்று என்னால் கூறமுடியவில்லை. ஆனால் கற்பனை வரும்போது எழுத ஆசை வரும் என்கிறார். இவரது கற்பனையைச் சாதாரண மூன்றாந்தர எழுத்தாளனின் கற்பனையுடன் ஒப்பிடமுடியாது. ஏனெனில் இவரின் கதைகளைப் படிக்கும் போது சுத்த மனத்துடன் கூடிய ஆத்ம பலத்தின் தவமே அது எனக் கண்டு 6516iremeomb.
ஆயினும், இவரின் கதைகளில் சூழல் உலகப் பொதுமையை உணர்த்த கதாபாத்திரங்களின் பெயர்களோ பாரதப் பண்பினை உணர்த்துகின்றன. இதற்கு எந்தவிதவிசேட அர்த்தமும் கூறமுடியாது. இக்கதைகள் பெரும்பாலன 'கலைமகள்’, ‘கிராம ஊழியன்’ என்ற தென்னிந்தியப் பத்திரிகைகளின் பிரசுரங்களுக்கென எழுதியதாயிருக்கலாம்.
1938 ஆம் ஆண்டளவில் எழுதவாரம்பித்த இவர், இன்றுவரைஏறக்குறைய இருபது கதைகள் வரையே எழுதியுள்ளார். இவரின் கதைகள் "கலைமகள், கிராமஊழியன், ஈழகேசரி, 'மறுமலர்ச்சி ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி ഉ_ണ്ണങ്ങ.
தாராபாய், விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகாலஷ்மி, மனிதவாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு - ஆகிய கதைகள் கலைமகளிலும் அவள், இரண்டுஊர்வலங்கள் ஆகிய கதைகள்'மறுமலர்ச்சி

Page 6
இதழ்களிலும் அவன் ‘கிராம ஊழியனிலும், கலாக்ஷேத்திரம் "ஈழகேசரி’ ஆண்டுமலரிலும் வெளியாகியுள்ளன.
'கலைமகளில் வெளியான விதி என்ற கதை அல்லையன்ஸ் கம்பனியர் வெளியிட்ட"கதைக்கோவையில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இவரின்கதைகள் பெரும்பாலும் சமூகக்கதைகளே. புத்தரின்கண்கள் ஒன்று மட்டும் ஈழவரலாற்றை அடிப்படையாகக் கொண்ட முநி சங்கபோதி மன்னன் கண்ணிழந்த கதையைக் கூறுவது. தாராபாய் இந்து முஸ்லீம் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்ட வகையில் அதுவும் வரலாற்றுக் கதையாகக் கொண்டாடப்பட வேண்டியதுதான். இத்தகைய வரலாற்றுக் கதைகளை எழுதுவது, 1938 ஆம் ஆண்டளவுகளில் ஈழத்து எழுத்தாளர்களிடையே பெருவழக்காக இருந்தது. ஆயினும் இவர் ஒரே கதையுடன் தனது ஈழ வரலாற்றுச் சிறுகதை முயற்சிகளை நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய கதைகள் அனைத்திலும் மனித மனங்களின் சலனங்கள், சபலங்கள், எண்ணஉணர்வுகள், ஏக்கச்சுழிப்புகள் என்பனவட்டமிடுகின்றன. நீர்க்குமிழிகளாக பெருகிப்பெருகிஉடைந்து வழிகின்றன. அவற்றில் அழிவின், அநித்தியத்தின், உயிரின், உண்மைப் பொருளின் உயிரிப் பொருட்கள் குமிழ்த்து எழுகின்றன. உண்மையின் உயிர்நாடிகள் நாற்சுவையும் பயப்புக் காவியமாக மலர்கின்றன. சிறுகதைகளிலே காவியச் சுவையையும், கனத்தையும் கொண்டுவந்த பெருமை இவருக்குரியது. சிறுகதைதானே எனப் பொழுதுபோக்காகவோ, படித்துவிட்டு விட்டெறியவோ முடியாத கதைகள் - இவருடையவை.
இவரின்கதைகள் பல-பல்வகையானஏக்கங்களைச்சித்தரிப்பவை. ஆனால் இவ் ஏக்கங்களுக்கு இவர் தீர்வுகாணும் முறையே இவரை உயர்ந்த இடத்தில் வைத்தெண்ணச் செய்கின்றது. மனித மனத்தின் ஏக்கங்கள், நிறைவேறாத ஆசைகள் யாவும் தத்துவ நெறியில், சத்திய வழியில் சென்று அமைதி காண்கின்றன. மனித உணர்ச்சிகளைப் புனிதமாகப் போற்றி புனிதமான இடத்தைக் கொடுப்பவை இவரின் கதைகள். மானிட வாழ்வில் பலவீன உணர்ச்சிகள் தாமே அதிகம். ஆதலால் பலவீனத்தின் பரிதாப முடிவுகளைக் காட்டுதலே உண்மையான இலக்கியத்தின்பண்பு எனக் கருதுபவர்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றார். என்னதான் பலவீனமாக இருந்தாலும்அறிவுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏற்படும் போராட்டத்தில் அறிவே வெற்றி பெறும்-பெறவேண்டும் என்ற அவாவினை இவரது கதைகளில் காணமுடியும். மேலும், மனத்தின் மேற்தளத்தில் நிகழும் உணர்ச்சிகளை மட்டுமல்லாமல், அடிமனதில் ஆழ்ந்து உறங்கிக்கிடந்து, அவ்வப்போது ஏற்படும் அதிர்ச்சிகளால்
8

உள்ளோட்டமாகத் தொழிற்படும் மனவலைகளின் பாதிப்புக்களையும் இவரது கதைகள் சித்தரிக்கின்றன. இவரின் காலகட்ட எழுத்தாளர்களில் இத்தகைய படைப்புக்களை வெளியிட்டவர் இவர் ஒருவரே என்பதும் அவதானிக்கத்தக்கது. இவரின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவார்த்த உருவகங்களாகவே பிரதிபலிக்கின்றன. மானிட வாழ்வும், பிரபஞ்ச பூத இயக்கங்களும், அவற்றிடையே நிகழும் தொடர்புகளும், தொடர்பின்மை போன்ற மயக்கங்களும் இவரின் கதைகளிலே கதாபாத்திரங்கள் மூலம் அலசப்படும். இவ்வலசலில் எழும் மனவோட்டங்களிலே தத்துவ விசாரம் ஒரு நெறியாக வகுக்கப்பட்டிருக்கும். அந்த நெறியினூடே தனி மனிதனின் செயலற்ற தன்மையும், பிரபஞ்சம் எனும் போலி மயக்க நீக்கவுணர்வும் அழகுறச் சித்தரிக்கப்பட்டிருக்கும். பொதுவில் எல்லாக் கதைகளும் கூறும் பொருள் இதுதான்.
பூரணத்துவம் தான் வாழ்க்கை. பூரணத்துவம் அற்ற எதுவும் வாழ்க்கை அல்ல. பூரணத்துவத்தைப் பெற முயலுகின்ற போராட்டமே யதார்த்தம். ஆனால், அந்த யதார்த்தம்தான் வாழ்க்கையல்ல. போராட்டத்தின் பயனுள்ள முடிவே வாழ்க்கை.
இவரின் சிறுகதைகள் யாவும், ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டிற்குள் வரையறை செய்யப்பட்டது போன்றுஅழகாகவும், ஆழமாகவும் அமைந்துள் ளன. இந்த எல்லைப்பண்பு இவரின் கதைகளில் மிகச் சிறப்பாக விளங்கி, சிறுகதையின் அளவிற்கும், உருவிற்கும் ஒரு அர்த்தமானபடிமத்தன்மையை அளிக்கின்றது. சமூகக் கதைகளிலாயினும், வரலாற்றுக் கதைகளிலாயினும் இவர் இந்த முறையைக் கையாளத்தவறவில்லை.
பல சம்பவங்களையோ, பல உணர்ச்சிகளையோ, பல பாத்திரங்களையோ மோதவிட்டு, சிறுகதையின்செட்யான, இறுக்கமான உருவங்களை இவர்சிதைக் காமை குறிப்பிடக்கூடியதொன்று. ஒரு உணர்ச்சியையோ, சம்பவத்தையோ சித்தரிக்கும்முறையில்-பணித்துளியில் தென்படும் வானம் போன்றகனத்தை யும் உருவத்தையும் வெளிப்படுத்திவிடுகின்றார். சிறுகதையின் உருவம்பற்றிய இலக்கணம் இன்னும் வரையறை செய்யப்படாதபோதிலும், இருகாலத்திலும் முடியாதவொன்று படித்து முடித்ததும் சிறுகதையின் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மனவுணர்வினை இவரின் சிறுகதை உருவங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. ஆயினும் இவர் உருவத்தைத் திட்டமிட்டு எழுதுவ தில்லை. எழுதிவரும்போதே அதன் உருவமும் வளர்ந்து விடுகிறது.
இலக்கியத்தில் சூழல் முக்கியத்துவத்தைவிட, உரிப்பொருள்முக்கியத்துவமே இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இவர்எழுதியிருக்கிறார்.உரிப்பொருள் என்று சொல்லப்படுகின்ற நற்பண்பு, ஒழுக்கம் என்பனவே இலக்கியத்தில்

Page 7
சித்தரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் பண்பாடு, வாய்மை முதலிய நல்லொழுக்கங்களை வாசகர் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவலின் துடிப்பினையே இவரின் எழுத்துக்கள் வெளியிடுகின்றன.
இவரின் இலக்கியநண்பர்களான இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம் போன்றோர் யதார்த்தரீதியாகக் கதைகளை எழுதியிருக்க இவர் அப்படி எழுதாததுடன், அது பற்றிய தனது கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். யதார்த்தச் சித்தரிப்பால் நமது மனம் தூய்மையடைவதற்குப் பதிலாக, மேலும் மோசமடைகின்றது. யதார்த்தம் என்பது பைத்தியக்காரத்தனம் - இத்தகைய யதார்த்தம் பண்பில் வரும் தேசிய இலக்கியங்கள் - சர்வதேசிய இலக்கியங்கட்கு ஒவ்வாதது - தேவையில்லாதது என்று கருத்துத் தெரிவித் திருக்கிறார்.
இவர் பண்டைய, குருசீட முறையைப் போன்று கல்வி கற்றதினாலும், பண்டைய, தமிழ், வடமொழி இலக்கியங்களை ஆழ்ந்து படித்து வந்தமை யினாலும், மரபுரீதியாக இலக்கியம் எழுதுவதையே விரும்புகிறார். மரபுவழி எழும் இலக்கியங்களே நீடித்து மக்கட்குப் பயன்தரும் என்ற நம்பிக்கையை இவரின் எழுத்துக்களில் காணமுடிகிறது. எந்தவொரு கதையிலும் மரபுக் கொள்கையை, உருவத்திலாயினும் உள்ளடக்கத்திலாயினும் இவர் மீறவில்லை என்பதனை ஒவ்வொரு கதைகளும் உணர்த்தி நிற்கின்றன. மரபு என்பது ஒழுக்க நெறி, சான்றோர் வகுத்தபாதைஎன்று கூறும்போது இலக்கியம் என்பது சான்றோர் வகுத்ததோட்டத்தில் முகிழ்க்கும் புத்தம்புதிய பூசனைக்குரிய மலர் எனப் போற்றுகிறார் என்பது புலனாகின்றது.
உரைநடையிலும் இவரது புனிதக்கொள்கையைக் காணமுடிகிறது. இவரது உரைநடை எளிமையும், அழகும் நிறைந்தது. காவியச் சுவை கொண்டது. கற்பனைவளமிக்கவை. ஒவ்வொருசொற்களும் தேவைகருதிபொருத்தமான இடங்களில் அழகாகக் கோவை செய்யப்பட்டுள்ளன. இவரின் உரைநடையே மனதில் என்னவென்று புரியாத, ஒருவித மனக்கிளர்ச்சியை எழுப்பி விடுகின் றன. எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கணவழுவற்றவை என்பது குறிப்பிடத் தக்கது. காரணம் இவர் முறையாகத் தமிழ் கற்ற தமிழ் ஆசிரியர் என்பதால் இருக்கலாம்.
"சிரமமின்றி வசனமெழுதுகின்ற ஆற்றல் - நாவலர் பெருமானுடைய நூல்களாலும், பழைய உரையாசிரியர்களின் வசனங்களில் பழகி இருந்த தாலும் எனக்கு ஒருவாறு வந்துள்ளது. வசனங்கள் பிரயோகிக்கும் சொற்கள் சம்பந்தமாக என்னை நானே திருப்திப்படுத்துவது என்னளவில் எப்போதும் பெரிய பிரச்சனையாக இருந்தது - இருக்கிறது. எழுதி முடித்ததைப் பிறகு பலதடவை திருப்பித் திருப்பி எழுதுவேன்’ என்பதிலிருந்து இவரின் உரை நடைக்குரிய சிறப்பின் காரணத்தை நன்கறியலாம்.
O

அத்துடன், இவரின் உரைநடையிலே அதிகமாக இல்லாவிடினும், வடமொழிப் பிரயோகத்தையும் காணமுடிகின்றது. இதற்கு இவரின் வடமொழிப் பயிற்சி காரணமாயினும், அக்கால ஏனைய எழுத்தாளரை விட, இவரின் எழுத்துக் ல் வடமொழிச் சொற்கள் ஓரளவு குறைவாகவே காணப்படுகின்றன. எழுத்தில் புனிதமான கொள்கையைக் கடைப்பிடிக்கும் இவர் இதற்குப்பதில் வைத்திருக் கிறார். வடமொழியோ, தென்மொழியோ உணர்ச்சிகளைப் புலப்படுத்தும்போது ஒதுங்கி நிற்கக்கூடாது.
சிலர், இவரின் கதைகள் சிலவற்றைப் படித்துவிட்டு, லா. ச. ராமாமிர்தம், மெளனி போன்றோரின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர். அதனாற்றான், அவர்களைப் போல எழுதுகின்றார் என்ற தவறான கருத்துக்கு வந்துவிடுகின் றார்கள். இது முற்றிலும் தவறானது என்பதுடன், உண்மைக்கும் மாறானது என்பதனைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மணிக்கொடிப் பத்திரிகையில் மெளனியின் எழுத்துக்கள் பிரசுரமாவதற்கு முன்னரே, ஏன் லா. ச. ராமாமிர்தம் எழுத ஆரம்பிக்கு முன்னரே, ஈழநாட்டுச் சம்பந்தன்தமதுமுறையிலே கதைகளை எழுதஅபூரம்பித்துவிட்டார்என்பதுடன், அதிகமான கதைகளை அப்போதுதான் எழுதினார் என்பதனை நன்கு கவனிக்க வேண்டும். அதாவது, லா.ச.ரா., மெளனி - ஆகியோருக்குக் காலத்தால் முற்பட்டவர் சம்பந்தன் என்பதிலிருந்து இவரின் தனித்துவப் பெருமையும், சிறப்பும் வெளியாகின்றது. இவர் எழுத ஆரம்பித்த காலத்தி லேயே - உயர்ந்த, சிறந்த இலக்கியப் படைப்புகள் எத்தகையதாக இருக்கும், இருக்க வேண்டும் என்பதனை நன்கு புரிந்திருந்தார் என்றே கருதவேண்டி உள்ளது.
இவர் சிறுகதை உலகிலிருந்து விலகியிருந்தாலும், இவரின் இலக்கியப்பணி ஈழத்துச் சிறுகதை உலகிற்கு நம்பிக்கையுட்டும் - நம்பிக்கையுட்டிய தொன்றாகவே இருந்து வருகின்றது. மக்கள் மனதில் நல்லெண்ணத்தை வளர்ப்பதே இலக்கியத்தின் பணி எனக் கூறும் இவர் - பிரசார நோக்கில் எழும் இலக்கியங்களையும், இலக்கியத்தில் புரட்சி என்றெழும் முயற்சிகளையும் மனமார வெறுக்கின்றார்.
"இலக்கியத்திலும் புரட்சியாம். அஃதாவது சத்தியத்தில் புரட்சி. இலக்கியம் சத்திய நெறிப்படுத்துவது, சத்தியமாகிய பண்புகள் பிரதிட்டை செய்யப்பட்ட கோயில். இதில் புரட்சி முடியாது. முடிந்தால் அது இலக்கியமல்ல. வேறு ஏதோ ஒன்று.” இதன் மூலமே சம்பந்தன் அவர்களின் எழுத்துக்களின் தன்மையை எளிதில் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

Page 8
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சம்பந்தன் அவர்களின் படைப்புக்கள் 1960ஆம் ஆண்டுகளிலிருந்து நூலுருப் பெற பல முயற்சிகள் பலரால் எடுக்கப்பட்டுவந்துள்ளன. கலைமகள் பத்திரிகையில் இவரது பல படைப்புகள் வந்திருந்தமையாலும் இலங்கைக்கு பலமுறை அதிதியாக வந்துநீர்வேலியில் தங்கியிருந்த காலங்களில் ஏற்பட்டநட்பு இறுக்கத்தாலும் சம்பந்தன் படைப்புக் களைதனது அமுதநிலையம் பிரைவேட்நிறுவனத்தால் வெளியிடதிரு. கி.வா. ஜகந்நாதன் முயற்சிகள் எடுத்தார். சம்பந்தர் அவசரம் அவசரமாக இவரது இனிய மாணவன் திரு. சு. இராஜநாயகம் துணையுடன் தனது கையிலிருந்த பத்திரிகை வெட்டுப் பிரதிகளை ஒழுங்காக்கி அவரிடம் கையளித்திருந்தார். துர்ப்பாக்கியவசமாக அவை கி.வா.ஜ.விடம் இருந்துதவறிவிடமற்றொருமுறை கி. வா. ஜ. கலைமகள் வெளியீடாக வெளியிட முனைந்து சம்பந்தரிடம் கதை களைக் கேட்டுப்பெற்றார். அப்போதும் தவறிவிட்டனவா, கலைமகள் முயற்சி ஏன் வெற்றிபெறவில்லை என்பதும் சம்பந்தருக்கே தெளிவாகவில்லை.
பின்னர், 1980ஆம் ஆண்டுகளிலிருந்து திரு. ச. இராஜநாயகம் அவர்கள் இம்முயற்சியிலீடுபட்டும் இதுவரை வெற்றியளிக்கவில்லை
ஆனால், 1966இல் செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் முயற்சி களால் விவேகி ஆகஸ்ட் மாத இதழ் முற்றுமுழுதாக சம்பந்தரின் ஐந்து கதைகளையும் அதற்கேற்ற ஒரு ஆய்வுக்கட்டுரையையும், (அதுவே இங்கு முன்னுரையாகின்றது) இணைத்து வெளியிட்டது.
மீண்டும், இங்கு அதே இருவரினால் சம்பந்தர் சிறுகதைகள்நூலாகியுள்ளது.
- செம்பியன் செல்வன்
அதிபர் செங்குந்தா இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்

விதந்துரை
6ழுத்துலகிற் சம்பந்தன் ஒருவர், எழுந்தமானத்துக்கு எழுதாத ஒருவர். எழுச்சிகள் எழும்போதெல்லாம் அவைசத்தியம், ஞானம்,தர்மம் என்பவற்றுக்கு ஒவ்வுமா ஒவ்வாதா எனப் பலகாலுஞ் சிந்தித்து - தர்மம் வழுவாமல் சத்தியந் தவறாமல்-மேலோர் தொகுத்தவற்றுக்குப்புறமாகாமல்-அறத்ததுசார்பாய்நியாயமாய் நீதியாய் நிலைநிற்பதாய் - சொல்லொடர்த்தும் வேறாகாதல் இல்லதாய் - எடுத்துக்கொண்ட உயிரான உரிப்பொருள், பார்ப்போர் கண் களுக்குத் தெள்ளிதின் விளங்கத்தக்கதாய்ப் பலகாலும் பழகிய எளிமையான ஆனால் மரபுகடவாத இயற் சொற்களாய்த் தெரிந்தெடுத்த சிறு சிறு சொற் களாய்-மூன்றுநான்கு அல்லது ஐந்து சொற்களுக்குள் அமைந்த வாக்கியங் களாய் இருக்கும் அவர் எழுத்துக்கள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளுக்கமைந்த சைவப் பாரம்பரியம் மிக்க அடித்தளத்தோடு இளமையில் வறுமையும் காந்தியக் கோட்பாட்டின் இறுக்க விருப்பப்பிடிப்பும், கற்றல், கேட்டல், தெளிதல், வாய்த்தற்கு வாய்த்தபெரியோர் நட்பும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவராய் இருந்தமையால் இவர், கற்றார் - கற்றபடி நின்றார் - உயர்ந்தோர் மேற்றதாகிய ஒழுங்குநெறியில் நடந்தார். கற்றலால் மட்டுமன்றிக் கற்பித்தலாலுஞ் சிறந்தார். கற்பித்த காலங்களிற் கற்போர்க்கு இன்றியமையாதகருவிநூல்களையாத்தார். அவைகற்போர்க்குப் பேருபகாரமாயமைந்தநூல்களாகும். பாஷையும் வசனப் பயிற்சியும் போன்ற இலக்கண வழிகாட்டல் நூல்களோடு மட்டுமன்றி, மகாபாரத, இராமாயண காப்பியங்களிற் செறிந்து கிடக்கும் சிற்சில கதைகளை மணிவாசகம் உபபாட நூல்களான - இராமர் கதை, கண்ணன் கதை, பாரதக் கதை, கண்ணகி கதை என்பன போன்ற சிறு சிறுகதைகளாக ஆயினும் பெரிய கதைகளின் முற்று முழுதான சாராம்சங்கள் குறைவின்றியனவாகக் கொண்ட இலக்கிய நூல் களையும் எழுதினார். அவை பள்ளிப்பருவ மாணவர்கள் மட்டுமன்றி ஏனை யோரும் வாசித்துப் பயன்பெற உதவின.
பண்டிதமணி சி.க.வின் "இலக்கியத்தின் உயிரும் உடலும்” என்ற கட்டுரையின்படி இலக்கியத்துக்காயினும் தனிக் கவிதைக்காயினும் அது
13

Page 9
முகந்துகொண்ட பொருளே அதன் உயிர். தாதுக்களாலான உடல், உயிருக்கு இடமாயிருப்பது போலச் சொற்களாலான செய்யுள் பொருளுக்கு இடமாய் இருத்தல் வேண்டுமென்கிறது இலக்கணம்.
உயிருள்ள உடலே இயங்கும், நிலைக்கும். அவ்வாறே பொருளுள்ள இலக்கியங்களே, கவிதைகளே வழங்கும், நிலைக்கும். பொருளற்றவைகள் பிணங்கள். அவைகள் காலவெள்ளத்துட் கரந்து இருந்த இடமுந் தெரியாமற் பெயரும் வழங்காமல் மறைந்துபோகும்.
உயிருள்ளவையே தலைகாட்டுகின்றன, வெள்ளத்தால் அழியாமல், வெந்தழலால் வேகாமல் காலத்தை வென்றுநின்றுநிலவுகின்றன. இலக்கியங் களுக்கும் கவிதைகளுக்கும் உரிப் பொருளே உயிரான பொருள், சிறந்த பொருள். இந்த உரிப்பொருளை எடுத்து வளர்க்கின்றபொருள் கருப்பொருள். உரிக்குக் கரு செவிலித்தாய். முதற் பொருள் உரிக்குத் தந்தையும் தாயும் இருக்கும்.
முதற்பொருள் காலமும் இடமுமென இருவகைப்படும். ஒரு விசேட காலத்திலே பொருத்தமான ஓர் இடத்திலே மாசு நீங்கிய புலமை உள்ளத்திலே ஒரு நல்ல இனிய உணர்ச்சி உண்டாகலாம். அந்த மறுவற்ற உணர்ச்சியே உரிப்பொருள். இந்த உரிப்பொருளே பேணற்பாலது. உருவம் இல்லாதது. புலவன், உருவமற்றதும் நல்லதும் இனியதுமான அந்த உணர்ச்சியைக் கருக்கட்டிக் கருப் பொருள்கள் மூலம் புலப்படுத்த முயல்கிறான் எனக்கூறும் பண்டிதமணியின் கருத்துக்களுக்கு அமைந்து, அவர் தமிழ்ப் பேராசிரியரா யிருந்ததிருநெல்வேலிசைவாசிரிய கலாசாலை முதல் மாணவராயிருந்தமை யாற் போலும் சம்பந்தன், மரபுவழி இலக்கியவழி தவறாமல் மகா காப்பியக் கதைகளைச் சுருக்கிச் சிறிய சிறிய கதைகளாக எழுதி எழுதி வெளியிட்டு அவற்றால் வந்த அநுபவங்கள் வாயிலாகச்சிறுகதைகள் என்னும் கதைகளை அதாவதுதற்போதுவெளிவரும் கதைகளை எழுதியிருக்கலாம் எனத்தோன்று கிறது.
இவர், ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் மூவருள் ஒருவராகத் திகழ்ந்தார். இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்பந்தன் என்போர், அம்மூவர்'கலை மகள், ‘கிராம ஊழியன், 'மறுமலர்ச்சி, 'விவேகி', 'ஈழகேசரி முதலிய சஞ்சிகை களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. வெளிவந்த காலங்களில் அவை பற்றிய கருத்துக் கணிப்புக்களால் அவற்றின் சிறப்புக்கள் தெரியவந்தன.
இவர் எழுதிய சிறுகதைகள் இருபத்தைந்து என்பர். அவற்றுள் ஐந்தைத் தொகுத்துச் செம்பியன் செல்வன் - செங்கை ஆழியான் போன்றோரது நல்ல முயற்சியால்'விவேகி சஞ்சிகை வெளியீடு செய்தது. பின்னர், பத்துச்சிறுகதை களைத் தொகுத்துச்செங்கை ஆழியானும் செம்பியன் செல்வனும் "சம்பந்தன்
14

சிறுகதைகள்’ என்னும் பெயரில் வெளியீடு செய்துள்ளனர். தற்போது அவர்கள் பெருமுயற்சியாலும், சம்பந்தன் மகள் பிரபாகஜன் எடுக்கும் ஊக்கத் தாலும், முறிலங்கா புத்தகசாலையினாலும் சுமார் பதினாறு சிறுகதைகள் வெளிவருகின்றன.
சம்பந்தன் சிலகாலஞ் செல்லச் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். சிறிதுகாலம் ஒன்றும் எழுதாமல் மெளனம். பிற்பாடுதான்மகாகவி காளிதாசர் இயற்றிய சாகுந்தல காவியத்தைத்தமிழில் விருத்தப் பாக்களாகச் செய்யத் தொடங்கினார். சிருங்கார ரசம் நிறைந்த சாகுந்தல காவியத்தை அழகும் அற்புதமும் மிளிரும் அரிய தத்துவக் கருவுலங்கள் நிறைந்த ஞானநூலாக்கிவிட்டார். அக்காவியநூல் பிரசுரிக்கப்பட்டு வெளியீட்டுவிழாவும் நடந்தேறியது. இதன் சிறப்புப்பற்றிப் பண்டிதமணி முதல் பெரியோர்கள் பலர் புகழ்ந்துரைத்துள்ளனர். இதனை இலங்கைச்சாகித்திய அக்கடமி சிறந்ததொரு காவியக் கவிதை நூலெனத் தெரிவு செய்து அதற்குரிய சிறப்புப் பரிசில்களை யும் வழங்கியுள்ளது.
ஈற்றில் இவர் இலண்டனில் இருந்த சமயம் ஒருவன் என்ற ஒருவனையே அதாவது இறைவனையே ஓரகமாய்ப் பற்றிநின்ற உத்தமிகளாகிய பஞ்ச கன்னிகைகள், சப்த கன்னிகைகள் என்பவர்கள் பற்றிய அதி உன்னதக் கோட்பாடுகள் மிளிரும் வகையில் சித்த சுத்தியாய்ச் சிந்தித்துத் "தர்மவதிகள்” என்னும் பெயர் பூண்டதொரு நூலுஞ் செய்துள்ளார்.
அவரது ஆக்கங்கள் கதைவடிவானவையாயும், செய்யுனடைவடிவானவை யாயும்-வெளிவந்தனவும் வெளிவராதனவுமாய்-இருக்கின்றன. அவைகளும் காலப்போக்கில் வெளிவரும் என நம்புதற்கிடமுண்டு. கதைகளின் தோற்றக் காலம், அக்காலத்து நாட்டுநடப்பு, புறச்சூழல், அகச்சூழல், கதாபாத்திரங்கள் சந்திக்கும்போது ஏற்படும் மனத்தெழுச்சி நாட்டங்களும் தூய்மையும் ஒரு நிலையிலும்-பின்னர் அப்பாத்திரங்கள் சந்திக்கும்போது அவரவர்களில் எழும் மனவுளைச்சல்கள் என்பன பிம்பிக்கும்பிரதிபிம்பிக்கும்நிகழ்வுகள் பின்னொரு நிலையிலும் அவ்வக்கதைகளிற் காட்டப்படுதலும், சாதிமதங் கடந்ததத்துவங் களும் கோட்பாடுகளும் அவற்றின் முன்னடைவு, பின்னடைவுகளும், அழகு, லாவண்யம், சிருங்காரம் எனப் பலப்பல அவரின் எழுத்துக்களிற் காணக் கிடக்கின்றன.
சம்பந்தன்சிறுகதைகள்என்றென்றும்நின்றுஅகிம்சாதர்மத்தை, அகத்தமிழ் ஞானத்தை, திருவருளின் பெருந்துணையை எண்ணி எண்ணி இன்புறச் செய்வதாக!
மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம். வாழ்க அவர் திருநாமம்:வளர்க அவர்தமிழ்த்திருத்தொண்டுகள்.
- மாணவன் ச. தங்கமாமயிலோன்
15

Page 10

பொருளடக்கம்.ை
விதி .
giftudG855l ........................................
இரண்டு ஊர்வலங்கள் .
அவள் .
g5D6 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..............
σL6υιb . .
. பிரயாணி .
மனிதன் .
. தாராபாய் .
13
. புத்தரின் கண்கள் .
கூண்டுக்கிளி .
கலாக்ஷேத்திரம் . . 6ոփ6)։ ........................................
17
25
37
5O
6O
7O
78
85
92
1ΟΟ
1O8
12O
135
142
151
159
168

Page 11

artiya:Idil asic Lir
வானத்தை முட்டி நின்ற மரங்கள் எங்கும்
மரகதமும் கிளிச்சிறையும் கலந்து தெய்வக் கானத்தைப் பிழிந்தமுதக் கடலி னாழ்த்திக்
கற்பகத்தின் அற்புதத்தைக் காலங் காணா ஞானத்தின் சுவையென்னும் நறவைச் சேர்த்து
நல்லோர்தம் மனமனைய நயனைக் கூட்டி ஈனத்தையறியாதவியல்பினார்க்காய்
இறையனாரியற்றியதோரின்பச்சோலை
பட்டங்கள் தீர்ந்தமணிக் குவைகள் கொண்டு
பழமை யெனும் பண்பாட்டி னொழுக்கஞ் செய்து வட்டங்கள் வளைவுகளாய் மாண்பினுய்ந்து
வனத்தின் நடுவாகவொரு வழியுஞ் செய்து சட்டங்கள் காணாத்தனிமை தன்னில்
சலசலென ஓடிவரு மருவி யொன்று மட்டிட்ட சுருதிலயம் யுகங்க ளயும்
மாறாதே யாடிவரும் வண்ணங் கண்டேன்.
சந்தனத்தைச் சவ்வாதைப் புனுகைச் சேர்ந்தே
தமிழ்பிழிந்த சாற்றினிலே கலவை செய்து
அந்தரத்திலோரணங்கு அசைந்தசைந்து
ஆருமறியாதவகை அயலாய் வந்து
சுந்தரமா மலரையந்தக் குழம்பில் தோய்த்துத்
தூய்மையுறுதுறையறுநற் சுகத்தை நல்கும்
19

Page 12
மந்தமா ருதமென்னும் மாண்ட செவ்வி
மருந்தென்னை வருடியதும் மனஞ்சி லிர்த்தேன்
பார்க்கின்ற திசையெங்கும் பசுமை வெள்ளம்
பச்சைநிறத் துடுபல வர்ண ஜாலம் ஈர்க்கின்ற இனிமையதே இயல்பின் மேவ
இன்பமே பொருளாக இமைக்குஞ் சூழல் பார்க்கின்றதுரத்தே பக்கத் தேதான்
பதுமையென அவளிருந்த பாங்கு கண்டு ஆர்க்கின்ற முரசாகி அகந்து டிக்க
அஞ்சியவ ளிருந்தவிடத்தணுக லானேன்.
தேடரிய தெய்விகமோதிருவினோங்கித்
தெழிவரிய அற்புதத்தின் திகழ்வோ வேதன் ஏடவிழா மலர்கோடி கோடியாக
எடுத்தழகினமரசுக மினிக்கச் சேர்த்து ஆடகத்தை யமுதினோ டமையக் கூட்டி
ஐம்புலனுங் காணரிய வமைதி தன்னுள் ஏடறியாக் கற்பனைக்கும் எட்டா வாற்றில்
இயற்றியதோர் இங்கிதமாயிருந்தாளங்கே.
திசைபரந்த இடமெல்லா மவளே யின்பத்
தீங்கரும்பாய்க் கற்கண்டாயத் தேனாய் நின்றாள் வசையென்றுங் குலமென்றும் வழக்க மென்றும்
வகைசெய்யும் வழியெல்லா மழிந்து தேங்க இசை யென்ற படுகுழிக்கா யிடறி வீழ்ந்தார்
இதயம்போல் மயக்கிருளே மனத்தைக் கவ்வ அசைவின்றியவளிருந்த அமரங் கண்டே
ஆவியுடனங்கமெலா மயர நின்றேன்
20

பார்ப்பதே பெரிய பாக்கிய மிவள்தன்
பகரொணாப் பண்பினை உயர்வின் சீர்த்தன வாய்ந்து தெளிவுற எடுத்து
சேர்ந்தாற் செவ்வியுந் தேரேன ஆர்த்திடு நெஞ்சமவலத்துட் புகுந்த
அயர்வினில் நானலந்திருக்க வார்த்ததோர்தங்கச் சிலையென விளங்கு
வடிவினள் விழைவொடும் பார்த்தாள்.
ஆழ்ந்தபே ரறிவுக் கண்களோ லவளும்
அன்புடனென்விழி நோக்கச் சூழ்ந்தெழு ஞானச் சுடர்படச் சுரந்த
சுகமெனுங் கனியுதிர்ந் தெள்கை வீழ்ந்ததா மென்ன விழியுள விரண்டும்
வியப்பினிலவள்விழி நோக்கி ஆழ்ந்து நான்புரியளப்பருந்தவப்பயன்
அவ்வழி யருளியதறிந்தேன்.
என்னுடைய யுயிருமிதயமுமந்த
இரு விழி யணைப்பிலே யியங்கப் பொன்னினைப் பழிந்த பூங்கொடி யனையாள்
புருவத்தை யசைத்தினிப் புறத்தே என்நினைந்திருந்தாய் எழுந்திவணெய்தாய்
என்பதே போலெனைப் பார்த்தாள் பன்னெடுங் காலம் பழகிய தொடர்பைப் பாசத்தை விழிவழிக் கண்டேன்.
தேடுதற் கமையாச் சீருறு தெய்வத்
திகழ வினைத் தெரிவருந்திருவை
21

Page 13
நாடுதற் கரியநாயக மணியே
b6floorLDIT LD6060J BIT60T60)Lu
ஒடுதற் கெண்ணி யுவகையி னொடுங்கி
ஓரடி பெயர்த்தலு மின்றி
ஆடுதலசைத லற்றவாறனைத்தும்
அழிந்திடச் செயலற நின்றேன்.
பொன்னினாற் செய்து புதுமையே மிழந்து
பேரியாழ் வாய்திறந் தென்ன மன்ன நீ வருக வருகவென் பக்கல்
மானிட யாக்கையின் வந்தாய் முன்னையெத்தனையோ யுகங்களே முடிய
முடிவிலாய் முன்னிறுமுள்ளாய் என்னை நீ யறிய யானுனையணுக
ஏற்றதிச் சமயமென் றிசைத்தாள்
அன்னவாசகங்க லாமுதினு முயிரை
அளித்திட நானுமங் கவளை என்னவா நடைந்தே னென்பதே யறியேன்
இவளெவள் யானெவ னென்னும் முன்னைநாள் தொடர்பை முழுமையு முணர்வாள்
முயன்றன னரிருந்திடு மெல்லை என்னை நீ கண்டாய் என்னிடமியம்பாய்
ஏனினி மெளனமென்றுரைத்தாள்.
ஆழ்ந்தசிரனைத்தும் அவர்ந்தழ கொளிரும்
அங்கங்கள் அலர்விழி, யறிவு
சூழ்ந்தநற்றவத்தின் சுகத்தினில் விளைந்த
சூக்கும் வியாபக நலன்கள்
22

தாழ்ந்திழி வனைந்தும் தரவரு சன்மச் சழக்கினை யகற்றுமாறமைந்த
ஏந்தெழிலமுதாய் இருமையும் பயக்கும்
இனிமையை எதிரெதிர் நோக்கி
உன்னுடைய முகத்தி னொளியினி லுயிரின்
ஊற்றினை உயிர்க்குமின் னொழிலில் கன்னலினமுதக் கதைகளை மிழற்றும் கனியெனும் வாயினில் கழுத்தில் மின்னலை நிகர்த்த சிரிப்பினில் மீட்சி விளைத்திழும் விழிகளிலெங்கும் மன்னுயிர் நிலைக்கும் வழியையும் மேலாம்
மறைகளின் முடிவையுங் கண்டேன்.
என்று நானுரைக்க விருந்தவளெழுந்து
இனியுனக் கெனக்கென வில்லை நன்று நீ யென்னை நாடினை யுன்னை
நானுமே நாடியிங் கிருந்தேன் ஒன்றுநாமிங்கே யொழிந்தன வெல்லாம்
உணருக வென்றெனையணுகி இன்றுணக் கெல்லாச் சுகங்களுங் கடந்த இன்பத்தைக் காட்டுது மென்றாள்.
அவ்விடத்திருந்த அருவியும் பொழிலு அனைத்துமே யழிந்தன அங்கோர் தெய்வீகப் பொய்கை தெரிந்தது மீண்டுந்
திரும்பிநீயேதையும் நோக்காய் இவ்விடத்திருந்தே யியங்குதல் வேண்டும்
என்றனள் என்கரம் பற்றி எவ்விதஞ் சென்றாள் என்பதையறியேன்
இருவரும் மறுகரை அடைந்தோம்.
23

Page 14
அங்கு நான் கண்ட ஆநந்த வெளியில் அளப்பரும் மெளன சாகரத்தில் எங்குமாய் நின்று புவனங்களெல்லா
பிறந்துபின் னிறந்திடும் வண்ணம் கங்குலாய்ப் பகலாய்க் கடந்திடுந் காலக்
கணக்கினுன் ககப்படா வொன்றை இங்குமாயெங்கு மீறிலா வகையி
லியங்கு மோர் சூக்குமப் பொருளை
திருந்திய ஞானச் செல்வமும் தெய்வத் திருநிறை மாணெலாங் கடந்த பெருந்தவத் தோர்கள் பெற்றநற் பேற்றைப்
பேச்சறப் பிறங்கிய வொன்றை மருந்தினை மனத்தை மழித்தவர் பொருந்து
மாட்சியை மலர்ந்துல தாகிப் பொருந்திய “சத் சித்"தானந்த சொரூபப்
பூரணப் பொருளதைக் கண்டேன்
-சம்பந்தன்
24

Disrupt
grup உள்ளே நுழைந்ததும் ஸ்தம்பித்து நின்றான். முதலில் அது யாரென்று கூட அவனால் முடிவு செய்து கொள்ள இயலவில்லை. அப்படி அவனைப் பிரமிக்கச் செய்த அந்த யுவதி எல்லோருக்கும் மத்தியிலே இருந்த பீடமொன்றில் கவிகளின் லக்ஷயப்பொருள் போல மெளனமாக இருந்தாள்.
எழுதுகோல் வர்ணங்களைத் தொடுவதால் ஏற்படும் மெல்லிய ஒசையையும் எடுத்துக்காட்டக்கூடிய நிசப்தம் அங்கே குடிகொண் டிருந்தது. எல்லோரும் புலன்கள் ஒடுங்கினவர்களாய்த்தங்கள் தங்கள் சித்திரங்களிலேயே லயித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கண்கள் மட்டும் அடிக்கடி அந்தப் பெண் இருந்த திசையை நோக்கித் திரும்பின. அந்தப் பார்வைகளிலே ஒரு சமயம்-கலுை, ஒரு சமயம் காமவெறி என்று இப்படியான அநேக உண்ர்ச்சிக்ள் பிரதி பிம்பித் தன. ஆனால் அவள்? நிலத்தை நோக்கியபடியே சோகத்தில் ஆழ்ந்தி ருந்தாள். அதுவும் பூமி தேவியைப் பார்த்து, "தாயே. இந்தப் பாவ உடலைச் சுமப்பதிலும் உன்க்குத் திருப்தி ஏற்படுகிறதா? என்று கேட்பது போலவே இருந்தது. அவள் தன்னுடைய உடம்பை அழுக்கடைந்த ஒரு கந்தையால் மூடியிருந்தாள். மானம் என்ற ஜீவ ரகசியத்தைக் காப்பாற்றினாலே போதும் என்ற திருப்தியே அவளை வெளியே கொண்டுவந்திருக்கவேண்டும். . &
ராமு மெல்ல மெல்ல நடந்து போய் தன்னுடைய இடத்திலே இருந்தான். இதைக் கவனித்த ஒரு ரசிகன், “இன்றைக்கு உன் கைக்கு ஒரு நல்ல விருந்து கிடைத்திருக்கிறதல்லவா? என்று கேட்டான். உடனே எல்லோரும் திரும்பி அவனையே பார்த்தார்கள். அவனோ தலை குனிந்தபடி சிந்தனையில் ஆழந்திருந்தான். ராமுவின் உற்சாக மற்ற முகத்தைக் கண்ட மற்றொருவன், “வீட்டில் ஏதோ தகராறு போலும்’ என்று சொன்னான். இதைத் தொடர்ந்து எத்தனையோ யூகங்களும் கேலிகளும் கிளம்பின. ஆயினும் வெகு சீக்கிரத்திலே மறுபடியும் அங்கே நிசப்தம் குடிகொண்டது.
25

Page 15


Page 16
"அப்படிச் சொல்லாதே. உன்னுடைய தூய்மையான மனம் உன்னை எப்போதும் மகாலசுஷ்மியாகவே வைத்திருக்கும்’ என்றாள் கல்யாணி.
மகாலக்ஷமிக்கு இந்த ஆசிர்வாதம் பெரிய ஆறுதலாக இருந்தது. எழுந்து கல்யாணியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். கல்யாணியின் குழந்தை இருதயம் இதைக் கண்டு மேலும் உருகியது. அவள் மகாலசுஷ்மியைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, "உனக்கு உற்றார் ஒருவரும் இல்லையென்றாயே, என்னோடு இருந்து விடுகிறாயா?” என்று கேட்டாள்.
மகாலசுஷ்மியிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அவள் மெளனமாகவே இருந்தாள். அவ்வளவில் கல்யாணி எழுந்து தன் புருஷனிடம் போனாள். அவளை ராமு கண்டதும், “அந்தப் பெண் போய்விட்டாளா?’ என்று கேட்டான். “இல்லை” என்று சொல்லி விட்டு நின்றாள் கல்யாணி
"அப்படியானால் அவளை அனுப்பிவிடப் போகிறாயா?” என்று அவன் மறுபடியும் கேட்டான். அதற்கும் “இல்லை” என்ற பதிலே வந்தது. “அவளும் உன்னுடைய நிழலில் கொஞ்சக் காலத்துக்காவது ஆறி இருக்கட்டும்” என்று அவன் சொல்லிவிட்டு எழுந்து வெளியே போனான்.
திடீரென்று தன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று மகாலசுஷ்மி கனவிலும் எண்ணியிருந்ததில்லை. அவளுடைய நைந்து போன உள்ளம் வெகுநாட்களுக்கு முன்பே நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்து சோர்வடைந்துவிட்டது. தன்னுடைய ஷேமத்தை, கேவலம் உயிரைக்கூட ஒரு துரும்பாக மதிக்க இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை என்பதை அவள் எப்பொழுதோ கண்டு முடிவு செய்துகொண்டிருந்தாள். ஆனாலும் மரணத்தை அணுக அவளுக்கு மனமில்லை. அதை நினைக்கும்போதுதான் உள்ள படியே பயந்தாள். எப்படியோ விதியின் ஒருகை அவளைப் பிடித்து வைத்திருந்து இங்கே கொண்டுவந்து தள்ளிவிட்டது. மனித இலட்சியங்கள் போன்ற அந்த இருவரும் அவளை இனிய கண்களால் பார்த்தார்கள். கொடிய பாலையிலே சோர்வடைந்து குற்றுயிராகக் கிடக்கின்ற மனிதருக்குச் சுனையும் நிழலும் கிடைத்தது போல அவளுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது.
இத்தனை நாளும் ஏழை, பிச்சைக்காரி என்று எல்லோராலும் ஒதுக்கப்பட்டவள் இப்பொழுது கந்தர்வகுமாரியாக விளங்கினாள். மானத்தைக் காப்பாற்ற கந்தையும் கிடைக்கப் பெறாதவளுக்கு எத்தனை எத்தனை வர்ணப் புடவைகள் ஆபரணங்கள். உண்மையில் அவளை அடையாளமே கண்டுகொள்ளமுடியாது. கல்யாணி
28

கேட்கிறவர்களிடமும் “அவள் என்னுடைய தங்கை’ என்று சொல்லிக் கொண்டாள். அப்படியிருந்தும் மகாலசுஷ்மி தன்னை மறந்து விடவில்லை. கல்யாணியோடு சமதையாகவோ, நேருக்கு நேராகவோ நிற்பதில்லை. வேலைக்காரிபோல பணிவோடு நடந்து கொண்டாள்.
இதைக் கவனித்து வந்த கல்யாணி, ஒருநாள் அவளை அழைத்துத் தன் பக்கத்தில் இருத்திக்கொண்டு “மகாலசுஷ்மி இனியும் நீ சம்பந்தம் இல்லாதவள் போலத் தூரத்தில் ஒதுங்கி நில்லாதே. ஏதோ பாவ வினையினால் என்னுடைய தாயின் வயிற்றிலே பிறக்கிற உரிமை உனக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் விதி நம்மைச் சேர்த்து வைத்து விட்டது. நீயே என்னுடைய தங்கை அன்பினால் உரிமையானவள்” என்று சொன்னாள். அப்போது மகாலசுஷ்மியின் கண்களில் நீர் நிறைந்தது. மயிர் சிலிர்த்த அவள் தன் புதிய அக்காளின் கைகளைப் பிடித்துக் கண்களில் பல தடவை ஒற்றிக்கொண்டாள்.
ஒரு நாள் ராமு தன் அறையிலேயே யார் யாருக்கோ எழுதுகிற வேலையிலே முழுகி இருந்தான். வெகுநேரமாகியும் கல்யாணி அந்தப் பக்கத்திற்கே வரவில்லை. ஒருமுறை கூப்பிட்டும் பார்த்தான். அந்தச் சப்தத்தைக் காதிலே வாங்கக்கூடிய நிலையில் உள்ளே ஒருவரும் இல்லை. அதனால் பதிலும் கிடைக்கவில்லை. உற்றுக் கவனித்தான். இடையிடையே சிரிப்பின் மெல்லிய இன்பவோசை வந்து விழுந்து கொண்டிருந்தது. மெல்ல எழுந்து போய்ப் பார்த்தான். கல்யாணி தன் தோழியை ஜோடிக்கிற வேலையிலே எல்லாவற்றை யும் மறந்து ஈடுபட்டிருந்தாள். இத்தனை காலமும் பெட்டிகளிலே கிடந்து தூங்கிக் கொண்டிருந்த ஆபரணங்களெல்லாம் மகாலக்ஷமியின் அழகான மேனியிலே ஏறியிருந்து பிரகாசித்தன. அவள் நாணத்தால் தலை குனிந்தபடி கல்யாணியைக் கூட பார்க்காமல் இருந்தாள். அவன் மறுபடியும் சப்தம் செய்யாமல் தன் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டிருந்தான். தன் கைத் திறமையைக் காட்டுவதற்கென்றே செய்தவள் போலப் பிறகும் வெகுநேரம் வரைக்கும் கல்யாணி வைத்துக் கஷ்டப்படுத்தி விட்டு அழைத்துக் கொண்டு வந்தாள். கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டதும், “ஐயையோ அவரைக் காணவில்லையே” என்று ஏங்கிப் போய் நின்றாள். "அக்கா இன்றைக்கு ஒருவருக்கும் சொல்லாமலே போய்விட்டாரே” என்று மகாலசஷ்மியும் சொன்னாள். திடீரென கதவு திறக்கப்பட்டது. ராமு உள்ளே சிரித்துக்கொண்டு நின்றான். மகாலசுஷ்மி நாணத்தாற் குன்றிப் போய்க் கண்களை மூடிக்கொண்டு சுவரோடு ஒதுங்கினாள். “திருட்டுப் புத்தியைப் பார்த்தாயாடி’ என்று சொல்லிக் கல்யாணியும் சிரித்தாள்.
29

Page 17
பிறகு மகாலக்ஷமியைத் தனக்கு முன்பாக இழுத்துவிட்டு, “ஒரு நிமிஷம் தான் பார்க்க வேண்டும். திருஷ்டி பட்டுவிடப்போகிறது’ என்று தன் புருஷனுக்கு எச்சரிக்கை செய்தாள். புதுமணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் செளந்தரியத்தை ராமு ஆவல் நிறைந்த கண்களால் பார்த்துவிட்டு, 'இவளுடைய மன வாளன் யாரோ?” என்று கேட்டான்.
“ஏன்? பூரீமந் நாராயணன் தானே இவனுடைய புருஷன்!’ என்றாள் கல்யாணி
"அப்படியானால், ராமனும் பூரீமந் நாராயணனுடைய அம்சந் தானே! எனக்கே இவளைக் கொடுத்து விடுகிறாயா?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான்.
உடனே அவள் மகாலசுஷ்மியின் கையைப் பிடித்து, "இந்தாருங்கள் வேண்டுமானால் இப்பொழுதே ஏற்றுக்கொள்ளலாம்.’’ என்று சொன்னாள். மகாலசுஷ்மி எப்படியோ தன்னை விடுவித்துக்கொண்டு உள்ளே ஒடி விட்டாள்.
கல்யாணி அங்கே வந்ததும், "அக்கா உனக்கு இனியும் இந்தக் குழந்தைப் புத்தி மாற மாட்டேன் என்கிறதே" என்று சொல்லித் தன் வேஷத்தைக் கலைக்கத் தொடங்கினாள்.
வரவர ராமு மகாலசுஷ்மியோடு அந்நியமின்றிப் பழகினான். அவளு டைய தெய்வீக அழகு அவனை இழுக்கத் தொடங்கி விட்டது. அதனால் கல்யாணியையும் அவளையும் ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்தி அடையத் தொடங்கினான். உண்மையில் அந்த இரண்டு பேருக்கும் தோற்றத்தில் அவ்வளவு வித்தியாசம் இல்லை. கல்யாணி கொஞ்சம் உயர்ந்திருந்தாள். வயசிலும் இரண்டொரு வருஷம் வித்தி யாசம் இருக்கலாம். ஆனால் அவளுடைய செளந்தரியம் சாசுவத மானது. சுனைக்கரையில் மதர்த்து வளர்ந்த பசுங்கொடிபோலப் பூரித்து விளங்கினாள். இடையீடின்றி அவளுடைய அமைதியான அழகிலேயிருந்து ஒரு கந்தர்வகானம் எழுந்து எல்லோரையும் களிக்கச் செய்து கொண்டு தான் இருந்தது. ஆனால் மகாலக்ஷமியோ நீண்ட முதுவேனிலின் கொதிப்பிலே சுருண்டு கிடந்த மலர்க்கொடி, கார்தந்த பெருமழையின் இனிமையினால் தளிர்த்துப் புதிய சோபை பெற்றுப் பிரகாசிப்பதுபோல இருந்தாள். அன்றியும் பருவத்தின் மறுமலர்ச்சி இப்பொழுதுதான் அவளிடம் நிறைந்து இந்திரஜாலம் பண்ணிக் கொண்டிருந்தது.
கல்யாணி மலர்ந்த மணமுள்ள புஷ்பம். அழகுள்ளது. மகாலசுஷ்மியோ மலர்ந்து கொண்டிருக்கும்போது அதில் உதய காலத்துப் புதுமணம் நிறைந்திருந்தது. வைத்த கண்களை மீட்க
30

முடியாது ஒரு வசீகர சக்தியும் பெற்று மற்றவர்களை வலிந்து இழுத்துக்கொண்டிருந்தது.
ராமுவின் இதயத்தின் ஒரு மூலையிலேயிருந்து இந்தக் காமவெறி வளரத்தொடங்கி விட்டது. மகாலசுஷ்மியோ தூரத்தில் இருந்து கொண்டே அவனுக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்து வந்தாள். நெருங்க அவளுக்குப் பயமாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு உள்ளங்களும் மனிதனால் உணரமுடியாத ஒரு மெளன பாஷை யிலே பேசித் திருப்தி அடைந்தன. கல்யாணியின் கபடமற்ற உருவமே அவர்களுக்கு இடையில் மலை போல வளர்ந்து நின்று தடை செய்து கொண்டிருந்தது. இதற்குள் அவன் எத்தனையோ தடவை மகாலசுஷ்மியோடு பேசுவதற்கென்று வாயெடுத்து விட்டுத் தன்னை அடக்கிக் கொண்டிருந்து விட்டான். அவளும் இதை நன்றாக அறிந்து கொண்டே மெளனமாக இருந்தாள். சில சமயங்களில் அவளுடைய உள்ளமும் புயலில் அடிபட்ட படகு போலத் தடுமாறும். உடனே தைரியமான மாலுமி போலத் தன் உள்ளத்தின் வெறியை நோக்கிச் செலுத்தி அந்த நிலைமையைச் சமாளித்துக் கொள்வாள்.
அன்றைக்குக் கல்யாணிக்கு உடம்பு சரியாக இல்லை. வெளியே வராமற் படுத்திருந்தாள். மகாலசுஷ்மி வேலைகளை முடித்துக் கொண்டு வந்து அவளுக்குப் பக்கத்திலே இருந்தாள். அப்பொழுது ராமு உள்ளே வந்து “இன்றைக்குச் சாப்பாடு கூடக் கிடைக்காது போலிருக்கிறதே" என்றான்.
அதைக்கேட்ட கல்யாணி மகாலசுஷ்மியைப் பார்த்து “நீ போய் பரிமாறிவிட்டு வா. அரைவாசியோடு எழுந்து போகவிடாமல் மட்டும் பார்த்துக்கொள்” என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அவள் எழுந்து சமையல் அறைக்குள்ளே போனாள். அவனும் பின்னாலே நுழைந்தான். மகாலசுஷ்மி பரிமாறிக்கொண்டு நிற்கும்போது ராமு அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சாப்பிடுவதிலும் அவன் மனம் செல்லவில்லை. எத்தனையோ காலமாக வெளியே ஒடி விடுவதற்கு அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் கைதிக்குக் காவலும் நீங்கிவிட்டால் எப்படிக் காற்றாகப் பறப்பானோ அதுபோலவே அவனுடைய உணர்ச்சிகளும் அறுத்துக் கொண்டு ஓடின. எல்லாம் பரிமாறப்பட்ட பிறகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். மகாலக்ஷமியின் உடம்பு முழுவதும் வியர்வையினால் நனைந்து விட்டது. வெட்கம் கண்களை மறைக்க, நிலத்தைப் பார்த்தபடியே சிலைபோல நின்றாள். அதைக் கவனித்த ராமு, "சீ எதற்காக அத்தனை கஷ்டப்படுகிறாய்?’ என்று சொல்லிக்கொண்டே எட்டி அவளுடைய கையைப் பிடித்தான். இந்தத் தடுமாற்றத்தில் அவளுடைய கையிலிருந்த பாத்திரம் நழுவிக் “கணிர்” என்று கீழே
31

Page 18
விழுந்து உருண்டோடியது. அவனும் திகைத்துப் போனான். அதனால் எழுந்து வெளியே போய்விடுவதற்குப் பிரயத்தனப் பட்டான்! மகாலசுஷ்மி திடீரென்று அவன் முன் வந்து நின்று “சாப்பிடாமல் போகக்கூடாது’ என்று தடுத்தாள். அவன் திரும்பவும் உட்கார்ந்து சாப்பிடத்தொடங்கினான். ஆனால் வழக்கத்திலும் குறைவாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எழுந்து போய் விட்டான்.
மகாலகஷ்மி அவனை நினைத்து ஏங்கும் உள்ளத்தால் அன்று இரவைக் கழிக்க வேண்டியவளாக இருந்தாள். படுக்கைக்குப் போயும் வெகு நேரமாகி விட்டது. நித்திரை வரவில்லை. அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். கடல் போலக் கொந்தளிக்கின்ற உள்ளத்தில் சாந்தி பிறக்கவில்லை. அன்று பகல் அவன் கைபட்ட இடத்திலிருந்து ஏதோ ஒரு காந்த சக்தி எழுந்து உடம்பில் அலை அலையாய் பரவிக்கொண்டிருந்தது. பருவத்தின் பேயுணர்ச்சிகள் அவளை மதயானை போல இழுத்துக்கொண்டு ஓடின. மூலைக்கு மூலை யாரையோ தேடுவது போல அடிக்கடி திரும்பிப் பார்த்தாள். எங்கும் நிறைந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு, “மகாலக்ஷமி!” என்று யாரோ கூப்பிடுவது போலக் கேட்டது. உற்றுக் கவனித்தாள். தூரத்திலிருந்து ஒரு கோழி அழைத்த குரல். அவளுக்குத் தேவையற்ற குரல்தான் கேட்டது. உடனே வேறு வேறு திசைகளிலிருந்து பல கோழிகள், முறை முறையாகக் கூவுகிற சப்தங்கள் காற்றிலே மிதந்து வந்து மறைந்து கொண்டிருந்தன. வேதனையால் எழுந்து படுக்கையிலேயே இருந்தாள். பக்கத்திலே தணிந்து எரிந்து கொண்டிருந்த விளக்கும் அவளைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருந்தது. அதனருகில் போவதற் குள்ளாக அவளது நீண்ட பெருமூச்சே அதை அவித்து விட்டது. ஆனால் கூடிணத்துள் எங்கும் அந்தகாரம் நிறைந்து பயங்கரமாக இருந்தது. அதையும் அவளாற் சகிக்க முடியவில்லை. ஜன்னல் ஒன்றைத் திறந்து வெளியே பார்த்தாள். வானத்தின் ஒரு கோடியிலே மட்டும் இரண்டொரு நகூடித்திரம் மின்னின. முகில் மந்தை மந்தையாக ஏதோ ஒரு திசையை நோக்கி ஒடிக்கொண்டிருந்தன. எல்லையின்றி நீண்டிருந்த அந்த வானவெளியை விட்டுத் தோட்டப் பக்கத்தைப் பார்த்தாள். அவ்வளவில் அவளுடைய உடம்பு நடுங்கி யது. ரத்தம் உறைந்துவிட்டது போல அடிபெயர்க்கவும் முடியாமல் நின்றாள். “ஜன்னலை அடைத்துவிட்டுப் போய்ப் படு, நில்லாதே’ என்று அவளுடைய அந்தரங்கத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.
ஆனால் அதற்குச் செவிகொடுக்க முடியாமல் நின்று அவள் தயங்கினாள். அதற்குள் ராமு ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்து
32

நின்றான். உடனே “மகாலசஷ்மீ!” என்ற அவனது குரல் ஆழத்திலிருந்து கேட்பது போல அடக்கமாக வெளிவந்தது. அவள் பேசவில்லை. தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். மறுபடியும் அதே தாகம் நிறைந்து குரல் எழுந்தது. "ஐயோ எதற்காக வந்தீர்கள் தயைசெய்து போய்விடுங்கள்.”
அவ்வளவில் அவன் குருடன் போல கைகளை நீட்டி ஜன்னலில் கம்பிகளைத் தடவினான். மகாலசுஷ்மிக்கு மேலே வார்த்தைகள் வரவில்லை. சுவரைப் பிடித்தபடியே களைப்படைந்து நின்றாள். "ஐயோ நீ எங்கே நிற்கிறாய்? மகாலக்ஷமி! நித்திரையற்ற என் கண் களை உன் கைகளினாலே தொட்டு மூடிவிடு. நான் ஒடி விடுகிறேன்’ என்று அவன் வெளியே நின்று யாசித்தான். உத்தரவை எதிர்பாரா மலே அவளுடைய கைகள் கதவைத் திறந்தன. ராமு உள்ளே பறந்தான். அவனுடைய கண்கள் மெல்ல மெல்ல மூடிக்கொண்டன. கல்யாணி மெய்மறந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். திறந்து கிடந்த கதவின் வழியாக குளிர் காற்று உள்ளே புகுந்து அவளுடைய நித்திரையைக் கலைத்துவிட்டது. போர்வையைத் தேடிக்கொண்டு எழுந்தவள் விளக்கும் அணைந்திருப்பதைக் கண்டு அதை ஏற்றினாள். அப்பொழுதுதான் திறந்தபடி கிடந்த கதவையும் பக்கத்திலே வெறிச்சென இருந்த படுக்கையையும் கண்டாள். ஆயினும் உடனே அவளுக்குச் சந்தேகம் ஏற்படவில்லை. அதனால், “நீங்கள் எழுந் திருக்க வேண்டுமானால் என் நித்திரையையும் குழப்பியே போக வேண்டும் என்பது போலக் கதவையும் திறந்து காற்றிடமும் சொல்லி வைத்துவிட்டுப் போய்விட்டீர்களே! இது நீதிதானா?” என்று கேட்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டே காத்திருந்தாள். ஆனால் அவன் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல அவளுடைய மனதில் ஒரு விதமான சந்தேகம் தோன்றியது. அறையை விட்டு வெளியே வந்தாள். கால்கள், அவளை மகாலக்ஷமியின் அறைப் பக்கமாக இழுத்துச் சென்றன. அந்த அறைக்குள்ளும் மையிருளே பரந்திருந்தது. ஆனால் மெல்ல அவர்கள் பேசுகிற சப்தம் ஓடி வந்து அவளுடைய காதுகளிலே நாராசம் போல விழுந்தது. திடீரென்று கல்யாணிக்கு வழி திசை ஒன்றும் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்த படி மெளனமாக இருந்தாள். நம்பிக்கையை இழந்து அவளுடைய இருதயம் ஊளையிடத் தொடங்கியது. தன் ஜீவனையே அர்ப்பணம் செய்து ஒரேயொரு மாணிக்கத்தைப் பூட்டிவைத்து, “என்னுடையது” என்று அவள் இதுவரை இறுமாந்திருந்தாள். மரணத் துன்பம் நெருங்கி வருகிற போதும் ராமுவினுடைய களங்கமற்ற அன்பின் அமிர்த சுகத்திலே அதை மறந்துவிடலாமென்று அவள் கட்டியிருந்த கோட்டையில் இடிவிழுந்துவிட்டது. இனி எங்கே போக வேண்டும்
33

Page 19
என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. ஒருவாறு எழுந்து தடவிக் கொண்டே தன் அறைக்கு வந்தாள். உடனே நெஞ்சை அமுக்கிக் கொண்டு படுக்கையில் விழுந்துவிட்டாள். கண்களிலிருந்து மட்டும் நீர் ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அடக்கி அடக்கி எழும்புகிற மூச்சுக்கள் அடிக்கடி திணறிக்கொண்டு வெளிக்கிளம்பின.
வெகு நேரத்திற்குப் பிறகே வெளியிலே காலோசை கேட்டது. கல்யாணி மறுபக்கம் திரும்பிக் கிடந்தாள். ராமு பூனை போல் உள்ளே நுழைந்து படுத்துக்கொண்டான். தான் போகும் பொழுது அணைத்துவிட்ட விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதே என்ற எண்ணம் பிறகு தான் அவனுடைய மனதிலேபட்டது. உடனே திடுக்கிட்டுப் போனான். பிறகு அவன் கண்கள் மெல்லக் கல்யாணியைப் பார்த் தன. அவள் அழுதுகொண்டே கிடக்கிறாள் என்பதைக் கண்டதும் அவனால் அசையமுடியவில்லை. படுக்கையே நனைந்து விடும் படியாக வியர்வை ஒழுகியது. அசையாமல் அப்படியே கிடந்து விட்டான்.
ராமு வெளியே வந்தபிறகு மகாலசுஷ்மி எழுந்து கதவைத் தாழிடப் போனாள். அப்பொழுது அவளுடைய கழுத்திலே கிடந்த வைர மாலை நழுவிக் கீழே விழுந்தது. ஒருநாள் கல்யாணி அந்த மாலையை எடுத்து, "இது உனக்குத்தான் பொருத்தமாக இருக்கிறது. நீ இதைப் பார்க்கிற சமயங்களிலாவது என்னை நினைத்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லி அவளுடைய கழுத்தில் அணிந்துவிட்ட ஆபரணந்தான் அது. கீழே விழுந்து கிடந்த அந்த மாலையை எடுப்பதற்கு மகாலசுஷ்மி குனிந்தாள். தீடீரென்று கல்யாணியின் முகம் முன்னுக்கு வந்து நின்றது. அவ்வளவில் சோர்வடைந்து படுக்கையிலே வந்து சரிந்தாள். பழைய ஞாபகங்கள் மாலை மாலை யாக வந்து விழுந்தன. தேவி இந்தப் பிச்சைக்காரியை வரவேற்று “எல்லாம் உன்னுடையவை. நீயே என் தங்கை” என்று ஒரு நாளில் இந்த மேலான வாழ்வினைத் தந்தாய். மறுபடியும் என்னை மகிழச் செய்வதற்காக உன் அந்தஸ்த்துக்கு ஏற்காத தொண்டுகளையும் செய்தாய். எனது கீழ்மைக் குணத்தை அறிந்தவள் போல உன் தாய் சந்தேகித்த போதும், "அம்மா மகாலசுஷ்மி நல்லவள். என்னை விட நீ அவளையே நம்பலாம்.’’ என்று அவளுக்கும் என்னிடம் நம்பிக்கையை உண்டுபண்ணி வைத்தாய். இன்றைக்கும், "நீயே போய் அவருக்குச் சாப்பாடு போட்டு விட்டு வா’ என்று நம்பி என்னை அனுப்பினாயே! உனது ஒப்பிலாச் செய்கைகளுக்கெல்லாம் நான் செய்த இந்தப் பிரதியுபகாரத்தை நீ அறிந்தால்? அப்பால் அவளுடைய சிந்தனைகள் சுழன்றன. வெகு நேரத்திற்குப் பிறகே ஒரு மூச்சு வந்தது. சுவாதீனமற்ற நிலையிலேயே மகாலசுஷ்மி அந்த இரவைக் கழித்தாள்.
34

பொழுது புலர்வதற்கிடையில் ராமு எழுந்து வெளியே போய் விட்டான். ஆனால் கல்யாணி அன்று படுக்கையை விட்டு எழுந்திருக் கவில்லை. மகாலசுஷ்மியும் வெளியே வர விரும்பாமல் அறையைப் பூட்டிக் கொண்டு கிடந்து விட்டாள். கதவு, சுவர், ஜன்னல்கள் என்ற ஜடப்பொருள்களையே அவளாற் பார்க்க முடியவில்லை. யாராவது வெளியே போகிற வருகிற ஒசையைக் கேட்டாலும் கண்களை மூடிக்கொண்டு அவதிப்பட்டாள். நடுப்பகலான பிறகு சமையற்காரி வந்து கதவைத்தட்டி 'அம்மா! எழுந்து சாப்பிடுங்களேன்.” என்று கேட்டபோது, “ இப்பொழுது எனக்கு உடம்பு சரியாக இல்லை. வேண்டும் போது நானே வந்து சாப்பிடுகிறேன். மறுபடியும் வந்து தொந்தரவு செய்யாதே’ என்று சொல்லி அவளையும் அனுப்பிவிட்டு உள்ளேயே கிடந்தாள்.
பயங்கரமான இந்த அமைதியைக் கண்ட வேலைக்காரரும் மறைவாகத் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தார்கள்.
மெல்ல மெல்ல அந்தப் பகற்பொழுதும் கழிந்து விட்டது. மகாலசுஷ்மி நாழிகைகளை எண்ணிக்கொண்டே நள்ளிரவை எதிர் பார்த்திருந்தாள். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்தார்கள். சமையற்காரி ஒருத்தி விடுகிற குறட்டைச் சப்தம், எங்கும் நிறைந்து கிடந்த அந்த நிசப்த சித்திரத்தைக் கீறுவது போல அடிக்கடி கேட்டிக்கொண்டிருந்தது. "இந்த சப்தத்தை நான் மறுபடி யும் கேட்கக்கூடியதாக ஒரு நாள் வரப் போவதில்லை’ என்று எண்ணும்போது அவள் கண்களில் நீர் நிறைந்தது. எப்படியோ தன்னைத் தயார் செய்து கொண்டு வெளியிலே காலை எடுத்து வைத் தாள். பிரிவென்னும் சகிக்க முடியாத பெரிய துன்பம் அவளுடைய இதயத்தில் அடித்து நெகிழச் செய்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். கல்யாணியின் அறையில் வெளிச்சம் தெரிந்தது. மெல்ல நடந்து போய் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். கல்யாணி நித்திரையில் ஆழ்ந்து கிடந்தாள். அவளுடைய முகத்தின் ஒரு பகுதிதான் தெரிந்தது. அதிலும் பாதியைச் சேலை மூடியிருந்தது. கருணை ஒழுகுகிற அந்த முகத்தின் பூரண செளந்தரியத்தைக் கடைசி யாக ஒருமுறையாவது பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று அந்த ஏழையின் இருதயம் அவலப்பட்டது. அவளை அறியாமல், "அக்கா!” என்று கூப்பிடுவதற்கு இதழ்கள் குவிந்து நடுங்கின. மறுபடியும் கண்களிலிருந்து நீர் ஒழுகியது. அப்பொழுது தான் வேறொரு படுக்கையிலே ஆழ்ந்த துயிலில் மூழ்கிக் கிடந்த ராமுவின் தோற்றமும் மங்கலாகத் தெரிந்தது. சிறிதுநேரம் வரையும் அப்படியே நின்று விட்டாள். “போதும் இனிக் கிளம்பு’ என்று அவளுடைய
35

Page 20
அந்தராத்மா ஞாபகப்படுத்தி உயிரினும் இனிய அவர்களைப் பார்ப்பதற்குக்கூட விடாமல் வெளியே இழுத்தெறிந்து விட்டது.
உடனே அவள் ஏதோ ஒரு திசையில் வேகமாக ஒடிமறைந்து விட்டாள். ஒரு வேளை காரிருள் தான் அவளை விழுங்கி மகிழ்ந்ததோ?.
-கலைமகள்
36

மதம்
சலீம t
அவள் அசையவில்லை. சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே நின்றான். நிமிஷங்கள் ஒவ்வொன்றாகக் கழிந்துகொண்டே இருந்தன. அவள் தலையில் முக்காடு விலகி ஒரு புறத்திலே கிடந்தது. முதல் நாள் வாரிவிட்ட கூந்தல் கலைந்து பறந்து கொண்டிருந்தது. முகத்தை மேசையோடு சேர்த்தபடி கவிழ்ந்திருந்தாள். ஆயினும் அவள் விம்மி விம்மி அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிய வந்தது. சந்திரநாத் மறுபடியும் “சலீமா!” என்று கூப்பிட்டான். அப்பொழுது அவனுடைய குரலிலும் ஒரு வித கரகரப்பு தட்டியது. சில நிமிஷங்கள் கழிந்தன. அவள் அசையாமல் அப்படியேதான் இருந்தாள். மூன்றாம் முறையாகவும் கூப்பிட்டுக்கொண்டு அவன் மெல்ல மெல்ல நடந்து அவளுக்கருகில் வந்தான். அப்பொழுதுதான் அவள் தலையைத் தூக்கினாள். கண்ணிர் அவளது பொன் போன்ற கன்னங்களில் கோடு கிழித்து ஒடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவனும் பேசமுடியாமல் அழுபவன் போலவே நின் றான். சிறிது நேரம் சென்றது. பிறகு அவள் அவனைப் பார்த்து ஒருவித ஏளனம், ஆவேசம் எல்லாம் கலந்த குரலில் இதைக் கேட்டாள்.
“உங்கள் ஹிந்து சமூகத்திற்கு மேலும் மேலும் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கிறது. இல்லையா?”
சந்திரநாத் ஒன்றுமே பேசவில்லை. அவள் அதே தொனியில் மறுபடியும் பேசினாள். ஆனால் விஷயம் வேறொன்றாக இருந்தது.
“என்னை எதற்காக இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள்?”
இப்படியாக ஒரு கேள்வி கிளம்பும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதனால் சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றுவிட்டு பிறகு சொன்னான்.
"உன் தந்தையும் இதையே விரும்பியிருந்தார். என் கடமையும் இது தானே.”
37

Page 21
அவள் மேலும் பேச விரும்பாதவள் போலவே மெளனமாக இருந்தாள். சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் சென்றதும் அவள் மீண்டும் ஆரம்பித்தாள். அதற்குள்ளாக மறுபடியும் அவளுடைய கண்கள் கலங்கி விட்டன.
“அந்தப் பக்கத்தில் வசிக்கும் நம் ஜனங்கள் எல்லோருமே கொல்லப்பட்டு விட்டார்களா?
“எனக்கு நிச்சயமாக ஒன்றுமே தெரியாது, சலீமா. நான் இங்கே வருவதற்கு முன்பே எல்லாம் நடந்து விட்டது. உன் தந்தையார் உன் விஷயமாக அறிவித்திருந்தாராம். அதைக் கேட்டதுமே புறப்பட்டு உன்னிடம் வந்தேன்.”
அவள் மறுபடியும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அதைப் பார்த்ததும் அவன் கிட்டச் சென்று, “சலீமா, எப்படியோ எல்லாம் நடந்து விட்டது. வீணாக அழாதே. அழுதுதான் வரப்போவது என்ன? நீ ஒரு குழந்தையா?” என்று ஆறுதல் சொன்னான்.
அவளுடைய கண்களும் முகமும் சிவந்து பொங்கி இருந்தன. அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது வேலைக்காரி ஒருத்தி ஒரு தட்டில் ஏதோ உண்ணுவ தற்கும் குடிப்பதற்கும் கொண்டு வந்து அவள் முன்னிலையில் வைத்து விட்டுச் சென்றாள். அவளை இடைமறித்து, “இது யாருக்காக?* என்று சலீமா கேட்டாள். அந்த வேலைக்காரி ஒன்றுமே பேசாது சந்திரநாத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்போது அவன் பதில் சொன்னான். "வீணாக உன்னையே வெறுத்துக் கொள்ளுகிறாய். நீ படித்தவள். அதிலும் அறிவுள்ளவள். வாழ்க்கையிலே எல்லோருக்குமே துன்பங்கள் எதிர்பாராத நிலை யில் மலைபோல வந்து விழுகின்றன. அதற்காக எல்லோருமே இறந்து விடுகிறார்களா?
அவள் ஆவேசத்துடன் எழுந்து நின்று சொன்னாள். “இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றா, மறந்து விட? பழிக்குப்பழி வாங்க முடிந்தால் ஒரு சமயம் நான் மறக்கக்கூடும். என் ஆசையும் அதுவே.”
"பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணமே இன்று தேசம் முழுவதும் நடக்கும் எல்லாக் கொடுமைக்கும் காரணம் என்பதை நீ உணரவில்லையா சலீமா?”
38

“எங்கோ எவனோ யாரையோ கொன்றதற்கு வேறு ஒரு மூலையிலே வாடும் ஒன்றுமறியாத மக்களைக் கொண்டு சூறையாட நான் விரும்பவில்லை. என் பெற்றோர்களை, உறவினர்களை, காரணம், நீதி, நியாயம் ஒன்றுமே இன்றி யார் கொன்றார்களோ அவர்களையே தண்டிக்க வேண்டும் என்று உயிர் துடிக்கிறது. இதில் நியாயம் இல்லை என்று சொல்ல யாராலும் முடியாது.”
“சலீமா, நீ சொல்வது சரியாகவே இருக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. பதிலுக்கு இன்னும் அனேகருடைய கண்ணிரால் நமது நாட்டு மண் நனைக்கப்படும் என்பது மட்டும் நிச்சயமாகும்.”
இந்த வார்த்தைகள் அவளிடத்தில் ஒரு மாறுதலையும் உண்டு பண்ணி விடவில்லை. அவள் முன்போன்ற உணர்ச்சிகளுடனேயே காணப்பட்டாள். பேச்சை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தபடியே சந்திரநாத் மெளனமாக இருந்தான். சிறிது நேரத்திற்குள் அவள் மறுபடியும் எழுந்து நின்று, “இவ்வளவிற்குப் பிறகும் என்னை எதற்காக இங்கே பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் போக வேண்டும். இதைத் தவிர என்னால் இப்போது வேறு ஒன்றும் சொல்ல முடியாது” என்று சொன்னாள்.
“எங்கே போக வேண்டும் என்கிறாய்? “எங்கேயா? என்னுடைய இடத்திற்குத்தான். முஸ்லிம்கள் என்று பிறந்த ஒரு குற்றத்திற்காக அநியாயமாக யார் யார் கொல்லப் பட்டார்களோ அவர்கள் செத்து கிடக்கும் இடத்திற்குத்தான் நான் போக வேண்டும்."
சந்திரநாத் இதற்கு ஒரு பதிலும் சொல்ல விரும்பவில்லை. நிலத்தைப் பார்த்தபடி எதையோ சிந்தித்துக்கொண்டு சும்மா இருந்தான்.
அவள் தொடர்ந்து பேசினாள். வரவர அவளுடைய வார்த்தை களில், தோற்றத்தில் ஒருவித வேகமும் வர்மமும் கலந்து காணப் பட்டன.
‘இனி எனக்கு யாருமே உரிமையானவர்களல்ல. என்னுடைய துன்பத்திற்கு, மரணத்திற்கு கண்ணிர் விடத் தக்கவர்கள் எல்லோ ருமே பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டார்கள். இனி எனக்கு மரணம்தான் சுகம் தரும். நானும் அதையே விரும்புகிறேன்.”
மேலே அவளால் பேச முடியவில்லை. திரும்பவும் மேசை மீது முகத்தை வைத்துக்கொண்டு விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
39

Page 22
அதைப் பார்த்தவுடன் சந்திரநாத் அவளருகில் போய் நின்று, “சலீமா!’ என்று உருக்கமாகக் கூப்பிட்டான். அந்தக் குரலுக்குச் செவிமடுக்காமலிருக்க அவளால் முடியவில்லை. அதனால் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவன் அவளது கையைப் பிடித்துக் கொண்டே இதைச் சொன்னான்:
'நீ மறுபடியும் குழந்தையைப் போலவே பேசுகிறாய். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்பது உண்மைதான். இந்த நிலையிலும் நிதானமான பாதையில் நியாயத்தோடு நடக்கக்கூடிய ஆற்றலைச் சம்பாதித்துக் கொள்வதுதான் மனித தன்மை. அதை இழந்துவிடுவது மிகவும் இலேசு. ஆனால் அதைக் காப்பாற்றுவது எல்லோருக்கும் இயலாத காரியமாகும். ஒருவேளை நீ என்னிடத்திலே சந்தேகப் படுகிறாயா?
சிறிது நேரம் வரையில் மெளனமாக இருந்துவிட்டு மறுபடியும் தொடங்கினாள்.
“இதோ பார், நீ யாருக்காக இவ்வளவு கவலைப்பட்டு அழுகிறாயோ அவர்களையும் காப்பாற்றி உன்னையும் அழாமல் செய்திருப்பேன். துரதிஷ்டமாக நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. கடைசியில் உன்னை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இனி உன்னைப் பாதுகாத்து வைப்பதும் உன் மனத்திற்கு ஆறுதலைத் தேடித் தருவதும் என் கடமை.”
அவன் பேச்சை நிறுத்தினதும் அவள் தொடங்கினாள். “தயவு செய்து பெரிய மனசு வைத்து என்னைச் சாகவிட்டு விடுங்கள். இதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய ஆறுதல்.”
சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே சிலைபோல இருந்தான். அவளுடைய உள்ளம் எந்தவிதமான சமாதானத்தாலும் ஆறுகிற நிலையில் இல்லை என்பது நன்றாக விளங்கியது. சிறிது நேரம் வரையில் அவனாலும் ஒன்றும் பேசமுடியவில்லை.பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “சலீமா, என்னை ஒரு கெட்டவன், மனிதத் தன்மை இல்லாதவன் என்று சொல்லும்படி செய்துவிடாதே. எனக்காகக் கொஞ்சம் பொறுத்திரு” என்று வேண்டினான்.
அவள் மேலே ஒன்றுமே பேசவில்லை. வேதனைகளை அடக்கிக் கொண்டு ஒருவாறு மெளனமாக இருக்க முயன்றாள்.
அப்போது வெளியே கொஞ்ச தூரத்துக்கப்பால் வெறி கொண்ட ஜனங்களின் குமுறல் கடலின் அலைபோலக் கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் காதில் விழுந்ததும் அவன் எழுந்து நின்று, “சலீமா இன்றும் தொடங்கி விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. நான்
40

போக வேண்டும். ஐயோ! மனிதர்கள் தர்மத்தையும், கடமையையும் மறந்து எப்படி மிருகங்களாக மாறுகிறார்களோ, தெரியவில்லை. நான் போய்ச் சீக்கிரமாகத் திரும்பிவிடுகிறேன், சலீமா!” என்று சொன்னான்.
“வேண்டாம் நீங்கள் அந்த இடத்திற்குப் போகவே கூடாது. ஒரு வேளை உங்களையும் நான் இழந்துவிடநீேரிடும்.”
'திடீரென்று இப்படி ஏன் சொன்னேன்? என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவளுடைய மிருதுவான பெண் உள்ளம் இதையேதான் விரும்பியது. சந்திரநாத் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஏனோ மிகுந்த ஆறுதலடைந்தான். பிறகு, “சலீமா, நீ ஒன்றுக்கும் பயப்படாதே. எனக்கு ஒரு தீங்குமே வந்து விடாது. நான் இந்த சமயத்தில் வீட்டினுள்ளே இருப்பது பெரிய துரோகமாகும்.” என்று சொல்லிக்கொண்டே வெளியேறினான். போகும்போது வாசலிலே நின்ற வேலையாளைப் பார்த்து, "ஜாக்கிரதை' என்று எச்சரித்துவிட்டுச் சென்றான்.
தெருவில் இறங்கினதும் கூக்குரல்கள் வருகிற திக்கை நோக்கி வேகமாக நடந்தான். சிறிது நேரத்திற்குள் ஜனங்களின் வெறி கொண்ட பேய்க்கூத்து அவன் கண்ணுக்கு நன்றாகத் தெரிந்தது. மேலே அவன் ஒடியே சென்றான்.வேங்கையின் கோரமான இயல் புடைய அந்த ஜனக்கூட்டமும் அவனைக் கண்டதும் மெல்ல விலகியது. சிலர் உண்மையாகவே பயந்து ஒதுங்கினார்கள். இன்னும் சிலருக்கு அவனுடைய இரக்கம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களும் மெல்ல ஒதுங்கி அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
அதற்கிடையில் அந்தப் பகுதியில் வசித்த முஸ்லீம்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற எல்லோருமே அவனைச் சூழந்து கொண்டார்கள். பரிதாபகரமான அவர்களது முகத்தைப் பார்த்ததும் சந்திரநாத் அழுதுவிட்டான். பிறகு அவர்களுக்கு வேண்டிய ஆறுதல் சொல்லித் தன் ஆட்களின் உண்மையான சிலரை அவர்களுடைய பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்து அவர்களுக்கு நம்பிக்கை தந்த பிறகே வீட்டை நினைத்தான்.
சலீமா சாளரத்தின் வழியாகத் தெருவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஜனங்கள் பிரேதக் களையுடன் அங்குமிங்குமாகப் போய்கொண்டிருந்தார்கள். “இது ஏன்?’ என்று சிந்திக்கவும் அவளால் அப்பொழுது முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கூட்டத் தவர்கள் அந்தப் பக்கத்தில் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததுமே
41

Page 23
இன்ன இடத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது.
அவர்களில் பலர் இளைஞர்கள். சிலர் நடுத்தர வயதினர். இரண்டொரு கிழவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஒரு வெற்றிக்குப்பின் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிற யுத்த வீரர்களைப்போல அவர்களும் உல்லாசமாகவே வந்தார்கள். அதைப்பார்த்ததும் அவளுக்கு உடம்பெல்லாம் பற்றிக் கொண்டது. எழுந்து சாளரத்துக்குப் பக்கத்திலே வந்துநின்று கையைக் காட்டி ஒருவனைக் கூப்பிட்டாள். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
"நீங்கள் மனித ஜன்மங்கள் தானே? அல்லது பிசாசுக் கூட்டமா?
இந்த வார்த்தைகளைப் பேசும்போது அவளிடம் அலாதியான ஒரு கம்பீரம் காணப்பட்டது. வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் அதில் நின்றபடியே தடுமாறினார்கள். மறுபடியும் அவள் பேசத் தொடங்கினாள்.
“ஒன்றுமே அறியாத ஏழைகளை வதை செய்தீர்கள். கொள்ளை யடித்தீர்கள். எல்லாம் மறுபடியும் வட்டியோடு சேர்த்து அனுபவிக் கும் நாள் தூரத்தில் இருக்கவில்லை. அடே! நான் யார் தெரியுமா? உங்களால் கொல்லப்பட்ட, கொள்ளையிடப்பட்ட அந்த நிரபராதி களான முஸ்லிம்களின் கூட்டத்தில் தவறியிருக்கும் ஒருத்திதான். பதிலுக்கு வஞ்சம் தீர்க்கும் வரையில் உயிரோடு இருக்கிறேன் என்பதை மறந்து விடவேண்டாம்.”
அவள் துர்க்கை போலவே அப்போது விளங்கினாள். அதற்குள் சிலர் நிமிர்ந்து பார்த்துவிட்டு “இது சந்திரநாத் அவர்களின் வீடு” என்றார்கள். உடனே எல்லோருமே மேலே பார்த்துவிட்டு யோசித்துக்கொண்டு நின்றார்கள். ஒருவனுக்கு மட்டும் அவளு டைய வார்த்தைகள் பொறுக்கவில்லை. அவன் வாசல் பக்கமாக ஓடினான். அதற்குள் வாயிலிலே நின்று வேலையாள் அவனை வெளியே தள்ளிக் கதவைத் தாளிட்டு விட்டான்.
அப்பொழுதுதான் சந்திரநாத் அங்கே வந்து சேர்ந்தான். வீட்டின் அருகே நின்ற ஜனங்களைப் பார்த்ததும், “என்ன?” என்று கேட்டான். அவனைக் கண்டதும் அந்த ஜனங்கள் நழுவ ஆரம்பித்தார்கள். அவன் எல்லோரையும் மறித்து நிறுத்திக்கொண்டு இரண்டொரு வார்த்தை மட்டும் பேசினான்.
"நீங்கள்தானா உண்மையான ஹிந்துக்கள்? ஐயோ! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மதத்தின் பழம் பெருமைக்கு, தர்மத்திற்கு அழிவு தேடி விட்டீர்கள். பரம்பரையாக வந்த சகிப்புத் தன்மை
42

எப்படி உங்களிடம் இருந்து மறைந்தது? பதிலுக்கு இராட்சசர்களாகி விட்டீர்களே? உங்களைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன.”
கடைசியில் அவன் தொண்டை குழறியது. அவ்வளவில் பேச்சை நிறுத்திவிட்டு படிமீது ஏறி நின்று அந்த ஜனங்களை ஒருமுறை பார்த்தான். எல்லோரும் கணத்தில் அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டார்கள்.
சந்திரநாத் மேலும் சிறிது நேரம் வரையில் அதிலேயே நின்றுவிட்டு உள்ளே நுழைந்தான். எதிரில் சலீமா நின்றாள். அப்போது அவளிடம் நிரந்தரமாக உறைந்து கிடந்த சோகத்தின் திரை முழுவதும் விலகி இருக்க ஒருவித ரெளத்திரமே காணப்பட்டது. அவன் அவளை ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு மெல்லச் சிரித்துக்கொண்டே, “சலீமா, உள்ளே போ. இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று ஒரு மாதிரி யாகச் சொன்னான். அவளோ அதை அலட்சியமாகக் கேட்டுக் கொண்டு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுதுதான் அந்தத் தந்தி வந்தது. சந்திரநாத் அதை வாங்கிக் படித்ததும், “சலீமா, எல்லோரும் செளக்கியமாக டாக்காவிலே இருக்கிறார்களாமே" என்று தந்தியை நீட்டினான். உடனே, “உண்மையாகவா?’ என்று கூச்சலிட்டுகொண்டே அவள் ஓடி வந்தாள். பிறகு கொஞ்ச நேரமாக அங்குமிங்குமாகச் சிறு குழந்தை யைப் போலவே குதித்துக் குதித்து ஒடித்திரிந்தாள்.
பிறகு அவனுக்கருகில் வந்து உட்கார்ந்து கொண்டு “என்னை எப்போது டாக்காவிற்கு அனுப்பப் போகிறீர்கள்?’ என்று கேட்டாள்.
"நீ எப்போது போக விரும்புகிறாய்?” “எவ்வளவு சீக்கிரமாகப் போக முடியுமோ, அது உங்களையே பொறுத்தது.”
சந்திரநாத் சிறிது வரையில் யோசித்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னான்.
“சலீமா, எதிர்பாராமல் திடீர் திடீரென்று எங்குமே கலகங்கள் முளைத்துவிடுகின்றன. அதனால் தான் யோசிக்கின்றேன். அல்லது.” அதற்குள் அவள் இடைமறித்து, “நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னை வண்டியிலே ஏற்றிவிட்டாலே போதும். எப்படியாவது நான் போய்விடுகிறேன்” என்றாள்.
இதைக் கேட்டதும் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சலீமா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சந்திரநாத் இதையே சொன்னான். “ஒன்றுக்கும் அவசரப்படாதே சலீமா! எப்படியாவது உன்னை அங்கே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன். நினைத்த
43

Page 24
உடனே எதையும் செய்துவிடக்கூடிய நேரம் இதுவல்ல என்பதை நீயே நன்றாக உணருவாய்.”
அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மெளனமாக இருந்தாள். பிறகு எழுந்து சென்று அங்கே கிடந்த பட்சணத் தட்டை எடுத்துக்கொண்டு வந்து அவனுக்கு முன்பாக வைத்திருந்தாள்.
“விருந்தாளி சாப்பிடுமுன் வீட்டுக்குடையவனான ஒரு ஹிந்து சாப்பிடுகிற வழக்கம் இல்லையே?
“அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிடுமுன் நான் எதையும் தொடமாட்டேன் என சத்தியஞ் செய்து விட்டேன் என்று வைத்துக்கொண்டால்.”
அவள் பேச்சைநிறுத்திவிட்டுத் தட்டை எடுத்து நீட்டினாள். அவன் அந்தத் தட்டை வாங்கித் தனக்கு முன்னால் வைத்துவிட்டு அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மறுபடியும் அவள் தொடங்கினாள். “ஒரு முஸ்லிம் பெண் கொடுக்க, உயர்ந்த ஹிந்து குடும்பத்திலே பிறந்த நீங்கள் உண்ணக்கூடாது என்று இருக்கிறீர்களா?.
அவ்வளவில் அவன் சாப்பிடத் தொடங்கினான். அப்பால் இரண்டு பேருமாகவே பட்சணங்களைக் காலி செய்தார்கள்.
பிறகு அவள் சந்திரநாத்தைப் பார்த்து, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன், ஒளிக்காமலே சொல்லுகிறீர்களா?” என்று கேட்டாள். அவன் வெறுமனே தலையை மட்டும் அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
“சில மணி நேரத்திற்கு முன் நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நீங்கள் என்மீது வெறுப்புக் கொள்ளவில்லையா? மறைக் காமல் சொல்லுங்கள்.”
அவன் சாந்தமான குரலிலே “சலீமா, எதற்காகவும் நான் கோபிக்கிறதில்லையே” என்றான்.
"ஆனாலும் என் அறிவில்லாத வார்த்தைகளை நீங்கள் மறந்து விடவேண்டும்."
"நீ அப்படி எதையும் சொல்லிவிடவில்லை.” “என்னுடைய மனம் சாந்தியடையவில்லை.” “அதற்கு என்ன செய்ய வேண்டும்?”
“உங்களுக்கு எது இஷ்டமோ அதன்படி என்னைத் தண்டித்து விடுங்கள்."
44

“சரி, தண்டிக்கிறேன். அதற்குரிய நேரம் வரட்டும்.” ஏனோ, இரண்டு பேருமாகவே சிரித்தார்கள். மறுநாள் அதிகாலையிலேயே அந்த வீட்டு வாசலிலே ஒரு வண்டி வந்து நின்றது. சந்திரநாத் அது யார் என்று பார்க்க ஆளை அனுப்பினான். அதற்குள் அந்தக் கிழவர் உள்ளே வந்து விட்டார். முதிர்ந்த நிலையிலும் அவருடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இளமையைத் தொட்டுக் காட்டின.
“சந்திரநாத்!” என்று முதலில் ஆத்திரத்தோடு கத்தினார். அவன் ஒன்றும் புரியாமலே ஒடி வந்து, "நமஸ்காரம் தாத்தா” என்று வணங்கினான். அவர் அவனுடைய வணக்கத்தை ஏற்கவில்லை. மேலும் ஆத்திரம் கொண்டவராய், “நீ அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒர் இளம்பெண்ணை இங்கே வைத்திருக்கிறாயாமே?’ என்று உறுமினார்.
அவன் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய கோபம் மேலும் உச்ச நிலையைக் கிட்டியது.
“எதற்காக அவளை நீ இங்கே வைத்திருக்க வேண்டும்? எங்கள் ஹிந்து தர்மத்துக்குச் சாவுமனி அடித்துவிட்டாயே.”
அப்பொழுதுதான் அவன் வாயைத் திறந்து மெல்லப் பதில் சொன்னான்.
"தாத்தா, இதனால் நான் ஹிந்து தர்மத்துக்குச் சாவுமனி அடிக்க வில்லை. உண்மையில் ஹிந்து தர்மத்தைச் சாகவிடாமல் காப்பாற்றி விட்டேன்.”
கிழவர் தம் வாயில் வந்தபடியெல்லாம் திட்டிக்கொண்டே வெளியே சென்று வண்டியில் ஏறிவிட்டார். அவன் அவர் பின்னோடு போய் நமஸ்கரித்துவிட்டுத் திரும்பி வந்தான். அதுவரைக்கும் உள்ளே நின்ற சலீமா அப்பொழுதுதான் முன் ஹாலுக்கு வந்து சேர்ந்தாள். அவளுடைய முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைப் பார்த்ததும், "இந்த மனிதர்களுடைய எந்த விதமான வார்த்தைகளை யும் நீ பொருட்படுத்தக்கூடாது. அவர்கள் “பாட்டன் சொன்னான்”, "அப்பன் செய்தான்” என்று தர்மம் பேசுபவர்கள். சலீமா, இது என் வீடு, ஆதலால் உனக்கும் உரிமை உண்டு. எனவே நீ சிந்திக்க நியாயமே இல்லை” என்று ஆறுதல் சொன்னான். அவள் சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசாமல் இருந்துவிட்டு, “எப்படியானாலும் என்னைச் சீக்கிரம் அனுப்பி விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதைக் கேட்டதும் அவனும் “சரி” என்று தலையை அசைத்தான்.
45

Page 25
அன்றைக்கே புறப்படுவதற்குரிய எல்லா ஆயத்தங்களையும் செய்து முடித்தார்கள். அவனுடைய மோட்டார் வண்டியைச் சாரதி வாயிலிலே கொண்டு வந்து நிறுத்திவிட்டு வெளியே வந்து நின்றான். சந்திரநாத் தன் அறையிலிருந்து புறப்பட்டு நேரே அவள் இருந்த அறையை நோக்கி நடந்தான். அவன் வருவதைக் கண்டதும் சலீமா எழுந்து நின்று “புறப்பட ஆயத்தமா” என்று கேட்டாள்.
“ஆம் இதை உன் கைப்பெட்டியினுள்ளே வை”. “எதற்காக இதை நான் வைத்துக் கொள்ள வேண்டும்?” "அவர்களும் எல்லாவற்றையும் இழந்தே போயிருக்கிறார்கள். அது அவசியம் உங்களுக்குத் தேவைப்படும்.”
"ஆனாலும் இவ்வளவும் எதற்கு?” "பரவாயில்லை” "ஐயோ ! இதில் எத்தனை ஆயிரம் தந்திருக்கிறீர்கள்?” "பாரமாக இருக்கிறதா?” அவள் பேசாமல் நின்றாள். அதை வாங்கி அவளது கைப் பெட்டியைத் திறந்து அவனே வைத்து விட்டான்.
மோட்டார் வண்டி பாதையிலே போய்க்கொண்டிருந்தது. சந்திர நாத்தே வண்டியை ஒட்டிக் கொண்டு போனான். சலீமா பின்புறத்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாள். இடையில் “எதற்காக மோட்டார் ஒட்டியை நிறுத்திவிட்டு வருகிறீர்கள்?’ என்று அவள் கேட்டாள். “நான் இப்பொழுது உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழுகிற இடத்துக்கு வருகிறேன். அவர்களோ இன்று ஜாதி, மத வெறியில் நமக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அபாயம் வந்தாலும் நான் அமைதியாகவும் சந்தோஷமாகவும் ஏற்பேன். எனக்காக மற்றவர்கள் ஏன் அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? என்று எண்ணியதால் .” என்று இழுத்தான்.
அவள் உடனே “வண்டியை நிறுத்துங்கள்’ என்று கூச்சலிடத் தொடங்கி விட்டாள். கடைசியில் வண்டியை நிறுத்தியே அவளைச் சமாதானம் செய்ய முடிந்தது. பிறகு அவளும் முன்பக்க ஆசனத்துக்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்.
வண்டியும் மறுபடியும் போய்க் கொண்டிருந்தது. இடையில், “சலீமா நீ ஒரு முஸ்லிம் பெண். உங்கள் ஜாதிப் பெண்கள், ஆசாரப் படி வெளியே தலையைக்கூட நீட்டுவதில்லை. அப்படியிருக்க அந்நிய மதத்தவனாகிய ஒருவனுக்குப் பக்கத்தில் நீ உட்கார்ந்திருக் கிறாயே..” என்று அவன் பேசி முடிப்பதற்குள்ளாகவே அவள் தொடங்கி விட்டாள்.
46

“எல்லா மதத்திலும் இப்படியான உளுத்துப்போன கட்டுப்பாடுகள் இருக்கத்தான் இருக்கின்றன. அது உண்மையில் நியாயமென்றே வைத்துக் கொண்டாலும் நீங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் என்னை யாரும் தடுக்க முடியாது.”
அவன் திரும்பி அவளைப் பார்த்துக்கொண்டே “ஏன் அப்படி’ என்று கேட்டான்.
"அது என் இஷ்டம்” மறுபடியும் சந்திரநாத் திரும்பி அவளைப் பார்த்தான். இரண்டு பேருடைய உள்ளத்திலும் உண்டான மலர்ச்சி அவர்கள் முகங்களில் வெளியாகி மறைந்தது. வண்டி மேலே போய்க் கொண்டிருந்தது.
"இன்னும் எத்தனை மைல் போக வேண்டும்?” என்று இடையில் சலீமா கேட்டாள்.
"பாதிதூரத்துக்கு மேலே வந்துவிட்டோம். இனி ஹிந்துக்களினால் எந்த அபாயமும் வராது. நீ பயமின்றி இருக்கலாம்.”
அவள் இதைக் கேட்டதும், "ஆனால் இனித்தான் நான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் அல்லவா? என் உயிர் போன பிறகே உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு வரலாம்.” என்று சொல்லி விட்டு மெல்லச் சிரித்தாள்.
“சலீமா, நீயோ ஒரு பெண். எப்பொழுதும் பெண்களைக் காப்பாற்ற ஆண்கள் தங்களைத் தியாகம் செய்வதுதான் தர்மம். நீ நினைப்பது தப்பு.”
“இந்தத் தர்மங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும் நான் அப்படித்தான் செய்வேன். அதை யாரும் தடுக்க முடியாது.”
சந்திரநாத் மெளனமாகவே வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றான். “போகவேண்டிய தூரத்தில் பெரும்பகுதி கழிந்து விட்ட தல்லவா?’ என்று இடையில் அவள் கேட்டாள். அவனும் "ஆம்" என்று தலையை அசைத்தான்.
ஒரு சந்திப்பில் திரும்பியவுடனே திடீரென்று ஒரு ஜனக்கூட்டம் எதிரே காட்சி கொடுத்தது. அவர்களது நிலையைக் கண்டதும் சந்திர நாத் திகைத்து வண்டியை நிறுத்தினான். அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் வேகமாக அவர்களது வண்டியை நோக்கி ஓடி வந்தார்கள். அதற்குள் ஒருவன் தூரத்திலிருந்தே கல் ஒன்றை வீசி எறிந்தான். அது வண்டியின் முன்புறத்திலே பட்டுத் தெறித்துக் கண்ணாடியை
47

Page 26
உடைத்து விட்டது. ஒரு கண்ணாடித் துண்டு சந்திரநாத்தின் நெற்றியில் பறந்து ரத்தத்தைப் பெருகச் செய்தது.
கணத்துள் சலீமா அந்த ஜனக்கூட்டத்தின் முன்பாக நின்றாள். அவளைப் பார்த்ததும், இவள் ஒர் உயர்ந்த ஜாதி முஸ்லிம் பெண்’ என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டார்கள். உடனே சிலர் பின்வாங்கி ஒதுங்கினார்கள். மற்றவர்கள் வெறிகொண்டு தான் நின்றார்கள். அதற்குள் ஒருவன் சொன்னான். "அடே இவன் ஒரு ஹிந்துவாகவே இருக்கவேண்டும்.”
எல்லோரும் சந்திரநாத்தையே பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தின் ராட்சத எதிர்ப்பை அடக்கிச் சலிமாவின் குரல் எழுந்து கேட்டது.
“எல்லோரும் விலகுங்கள். உங்கள் ஜாதியை உங்கள் மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாத்த இந்த மகான் யாராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் என்ன? நீங்களும் உங்கள் மதத்தாரும் அவர் காலடியில் மண்டியிட்டு வணங்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்.”
"நான் யார் என்று இன்னும் நீங்கள் உணரவில்லையா? என்னையும் என்னைப் போன்ற உங்கள் மனிதர்களையும் காப்பாற்றிய உங்கள் ஆண்டவனின் அன்பரது புனித உள்ளத்தைப் புண்படுத்தி விட்டீர்களே."
பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். அத்தனை பேரும் அசையாமல் அப்படியே நின்றார்கள். பிறகு அவள் தன் புடவையின் ஒரு தலைப்பைக் கிழித்து அவனது நெற்றியில் வழிந்து ரத்தத்தைத் துடைத்துக் கட்டுப் போட்டாள்.
சந்திரநாத் அசையாமல் அப்படியே இருந்தான். முன்புறத்தில் நின்றவர்களில் சிலர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் கள்.
உள்ளே அவன் வண்டியை விட்டு இறங்கி நின்று இதையே சொன்னான்: “நான் ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். நீங்கள் முஸல்ம்மான்களாகப் பிறந்து விட்டீர்கள். ஆயினும் என்ன? நாமெல்லோரும் இந்த நாடு பெற்ற குழந்தைகள் தாமே!”
அவ்வளவோடு நிறுத்திவிட்டு அந்தக் கூட்டத்தை நோக்கி நமஸ்கரித்தான். அதைப் பார்த்துக்கொண்டு நின்ற ஒரு வயோதிபர் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக் கொண்டார்.
வண்டி புறப்படும்பொழுது கூட்டத்தினர் எல்லோருமே அமைதி யாக நின்று தங்கள் வணக்கத்தைத் தெரியப்படுத்தினார்கள்.
48

வண்டி போய்க்கொண்டிருந்தது. “சலீமா!” என்றான் சந்திரநாத்.
அவள் தன் கையினால் அவனது நெற்றியைத் தடவிக் கொண்டே, “வலிக்கிறதா’ என்று கேட்டாள்.
சந்திரநாத் சொன்னான். “வலி எப்பொழுதோ மறைந்து விட்டது. அதற்கு மாறாக உடம்பு முழுவதும் குளிர, உள்ளம் இனிக்கிறது,
FGS DIT!”
உடனே அவள் அவனது கையைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். அந்தக் கையில் இரண்டு துளி நீர் ஒட்டிக் கொண் டிருந்தது.
- கலைமகள், மாசி 1948
49

Page 27
Fors
எனக்கு நான் எப்படி ஒரு புதிராக இருந்தேனோ அப்படியே அவளும் தனக்குத்தானே விளங்காத ஒரு பொருளாக இருந்தாள்.
அவளை நான் ஒரு நாளும் ஒரு சிறு அளவேனும் அறிந்திருந்த தில்லை. அவளுக்கும் நான் முழுதும் புதியவனே. அவளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தேவையோ வேறு எதுவோ அப்போது ஏற்படவில்லை. சலனமற்ற அவளுடைய மனநிலை, “விலகி நட” என்று எனக்கு வழிகாட்டுவது போல இருந்தது. ஆனால், கால வெள்ளத்தைக் கடந்து நின்ற ஏதோ ஒரு தொடர்பு அறுந்துபோக விடாமல் எனக்குள்ளிருந்து அவளை முற்றும் மறந்துவிட முடியாத படி செய்துகொண்டிருந்தது. அதன் இரகசியம் இதுதான் என்று நிதானிக்க எனக்கு எப்போதுமே சக்தி உண்டானதில்லை.
அது நகரம் அல்ல; நகர் கழிந்த எல்லை. பக்கத்திலிருந்து நகரத்தை வேறு ஏதேதோ ஊர்களோடு தொட்டு வைப்பது போன்ற ஒரு நீண்ட சாலை. மாமரங்களும் புளியமரங்களும் எனக்குத் தெரியாத வேறு பல சாதி மரங்களும் அந்தச் சாலையில் ஓங்கி வளர்ந்து நின்றன. தூரத்திற்கு ஒன்றாகச் சில வீடுகள் மட்டும் அதிலே காணப்பட்டன.
ஒரு வீட்டில் அவள் இருந்தாள். அந்த வீட்டுக்கு அரை மைல் தூரத் திற்கு அப்பால் என்னுடைய சிறிய வீடு. ஆயினும் நான் அடிக்கடி அவளைச் சந்தித்தேன்; பார்த்தேன். அவளும் அப்படியே சந்திக்கும் போது என்னைப் பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் எந்த அர்த்தத்தில் நான் அவளைப் பார்த்திருக்கிறேனோ அதே கருத்தில் அவளும் என்னைப் பார்த்திருக்கக்கூடும். ஆனால் நான் அவளிடமும் அவள் என்னிடமும் பேச ஒரு தேவையும் இருக்கவில்லை. எப்போ தாவது அவள் தன்னை அலங்காரம் செய்து கொண்டு வந்ததாக - நின்றதாக என்னால் சொல்லமுடியாது. ஆயினும் வைகறையின் கழிவுக்கும் புலருவதற்கு முன்னும் உள்ள அந்த இன்பப் பொழுதின் அமைதியான பொன்னொளி அவளிடம் நிரந்தரமாக உறைந்தி ருந்தது. அதே சமயம் அவள் என்னிடம் எதைக் கண்டாளோ, எதைத் தேடினாளோ, நான் அறிந்திருக்கவில்லை.
50

நாங்கள் எப்படியோ இடையிடையே சந்தித்தோம். ஒரு நாளைக்கு இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு எதிரெதிராக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்திருக்கிறோம். அப்போதெல்லாம், "எங்கே போகி றாள்? யார் இவள்?’ என்று ஆராய விரும்பினதில்லை. அவள் எங்கே போனாலும் யாராக இருந்தாலும் எனக்கு அக்கறை இல்லை என்றே எண்ணியிருந்தேன்.
அவளுடைய பார்வையிலும் எந்தத் தேவையையும் நான் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் வேறு ஏதேதோ கருத்துக்கள் இருந்தன. நிதானம் இருந்தது. ஆனால் அமைதி? அதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
மொத்தத்தில் அவளைப் பார்ப்பதில் மனத்துக்கு ஒருவிதத் திருப்தி, ஆறுதல் இருந்தது. எத்தனையோ அதிர்ச்சிகள் - சலனங்கள் - தாகங் கள் என்ற இவற்றுக்கு நடுவிலும் என்னால் புரிந்துகொள்ள முடியாத, என்னைப் புரிந்து கொள்ள விரும்பாத அவளைப் பார்ப்பதில் ஒரு வித ஆறுதல் எனக்கு உண்டானதை மறுக்க முடியாது.
எனக்கு முன்பு அவள் அங்கே குடி வந்தாளோ, அவளுக்கு முன்பு நான் தான் வந்தேனோ அதுவும் எனக்குத் தெரியாது. ஒருவேளை அவளுக்கு அது தெரிந்திருக்கலாம். நான்கு ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் நான் அதை அறிய விரும்பவில்லை.
அன்று வழக்கம் போலவே சாலையின் ஒரத்தில் நடந்து கொண்டி ருந்தேன். தெளிவற்ற நினைவுகளில் சிக்கி நடந்து கால்கள் ஒய்ந்து விட்டன. கடைசியில் அவளுடைய வீட்டின் எதிரே நின்ற ஒரு மரத்தினடியில் வந்து உட்கார்ந்தேன். மேலே குருவிகள் பாடிக் கொண்டிருந்தன. அணில்கள் விளையாடின. காற்று விசிறுவதுபோல ஒய்ந்து ஒய்ந்து வீசியது. எதையுமே சிந்திக்காத, சிந்திக்க முடியாத அந்த நிலையிலும் அவை மனத்தைத் தடவிக் கொடுத்து ஆறுதல் செய்தன. உட்கார்ந்து குழந்தைபோல மேலே பார்த்தபடி இருந் தேன். வெகுநேரம் அப்படி நான் இருந்திருக்கக்கூடும். அந்தச் சமயத்தில் என் பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் கேட்டது. “நீங்கள் unti?”
நான் திரும்பிப் பார்த்ததும் எழுந்தேன். அவள் எதிரே நின்றாள். ஒப்பிட முடியாத ஒரு தனிப் பண்பு அவளிடம் ஊடுருவி ஒளி செய்தது. அந்தப் போதையில் மயங்கி ஏன் இப்படிக் கேட்டாள்? எதை அறிய விரும்பினாள்? என்ற ஒன்றையுமே சிந்திக்காமல் மெளனமாகிக் கொஞ்ச நேரம் நின்ற பிறகே இப்படிச் சொன்னேன். "அது எனக்கே புரியாத விஷயம்.”
5

Page 28


Page 29
நான் பேசவில்லை. சிந்திக்கவும் விரும்பவில்லை. அவள் முகத் தையே பார்த்தபடி சிலையாகி நின்றேன். சிறிது நேரத்தில் மறுபடி யும் அவளே பேசினாள். "நிற்கிறீர்களே உள்ளே வரலாமே".
நேராகவே படிகளில் ஏறிச் சென்று ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தேன். அவளும் வந்து எதிரில் அமர்ந்தாள். பேச எனக்கோ அவளுக்கோ ஏதாவது விஷயம் இருந்ததாகச் சொல்ல முடியவில்லை.
அவள் மெல்லச் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். "குழந்தை போல வந்து விட்டீர்கள்.”
நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை” என்றேன் நான். அவள் பேச விரும்பாதவள் போல மெளனமாக இருந்தாள். கொஞ்சம் பொறுத்து, “ஒன்றுமே பேசாமல் இருக்கிறீர்களே’ என்று நான் ஆரம்பித்தேன். w
"பேசுவதைவிட மெளனத்தில் நிறையத் தெரிந்து கொள்ள முடிகிற தல்லவா?*
அவளுடைய வார்த்தைகள் என்னையும் மெளனத்தில் ஆழ்த்தி அவளைக் கூர்ந்து பார்க்கும்படி செய்து விட்டன.
அப்பொழுது அவள் கேட்டாள்: "என்ன ஆழ்ந்து சிந்திக்கின் நீர்கள்?
“இல்லை உங்களுக்கு என்னிடம் பார்க்கத்தக்கதாக ஒன்றும் இல்லையே!”
"நீங்களே அதைச் சொல்லிவிட முடியாது. தவத்தின் கனல் போல ஏதோ ஒரு தெய்வ ஒளி அல்லது தெய்வத்தின் மறைக்கமுடியாத சோபை உங்கள் முகத்தில் தெரிகிறது.”
இருக்கமுடியாத நிலையில் எழுந்து நின்று அவள் பேசினாள். அவளுடைய குரல் சுருதி கலைந்த யாழினின்றும் எழுந்த கீதம் போல் இருந்தது. "எதைச் சொல்லக்கூடாதோ, அதையே சொல்லுவதற்கு நீங்கள் விரும்பிவிட்டீர்கள்."
“உங்களிடம் எதைக் கண்டேனோ அதையே சொன்னேன். வேறு விதமாகப் பேசியிருந்தால் நிச்சயமாக நான் பொய் பேசினவனாகி யிருப்பேன்’ என்றேன் நான்.
அவளுடைய முகத்தில் இலேசான வேதனையின் சாயல் படர்ந்தது.
54

அதை எப்படித்தான் தெரிந்து கொண்டாளோ “வேண்டாம், இருங்கள்’ என்று தடுத்தாள். அந்தச் சமயம் எதிர்பாராவிதமாக அவளுடைய கை என்னைத்தீண்டிவிட்டது. திடீரென்று என் உடம்பு நடுங்கியது.
பிறகு நான் எழுந்திருக்கவில்லை. அப்படியே சக்தியற்றவனாக உட்கார்ந்திருந்தேன். எதிரில் அவள் நின்றாள். நன்றாக மனத்தை அகல விரித்து அதனுாடே அவளை உற்றுப் பார்த்தேன். உண்மையில் இத்தனை காலமும் எந்த ஒரு பெண்ணிடமும் காணாத - கண்டுவிட முடியாத - தூய ஒளி அவளிடமிருந்து எனக்கு வழி காட்டுவதுபோல இருந்தது.
அவள் உள்ளே சென்றாள். அந்த வழியையே பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருந்தேன். திரும்பி வரும்பொழுது கையில் எதையோ எடுத்துக்கொண்டு வந்து என் முன்னால் வைத்துவிட்டு "அன்போடு எதை யார் கொடுத்தாலும் தெய்வம் அதை நிராகரிப்ப தில்லை. இந்த அனுபவம் எனக்குச் சமீபத்திலேதான் உண்டானது” என்றாள்.
உண்மையில் நான் தடுமாறிக்கொண்டே எழுந்து நின்று அதை எடுத்து அருந்தினேன். அது இனித்ததோ, கசந்ததோ எனக்குத் தெரியாது. சிறிது பொறுத்து அவளைப் பார்த்து “போ என்று இனிச் சொல்லுவீர்களா?” என்று கேட்டேன். அவள் சிரித்தாள். நானோ தலை கவிழ்ந்தபடி அவள் பாதங்களையே பார்த்துக் கொண்டிருந் தேன். அப்பொழுது அவள் குரல் கேட்டது: "நீங்கள் போகத்தான் போகிறீர்கள். நானும் தடுக்க விரும்பமாட்டேன்.”
நான் எழுந்து நின்று வணங்கினேன். அவளும் தலை சாய்த்து தன் வணக்கத்தைத் தெரிவித்து வழியனுப்பினாள்.
இத்தனை காலமும் எந்த திசையில் என் வாழ்வு நடத்தப்பட்டதோ, அந்தத் திசை மெல்ல மெல்ல மாறிவிட்டது. அதை நிறுத்திப் பழைய பாதையிலே செலுத்த நான் விரும்பியிருந்தாலும் அது முடிந்திராது. அப்படி என்னை நானோ அன்றி எதுவோ கொண்டு செல்லவிட்டு மெளனமாக இருந்தேன்.
பிறர் சரியாகவோ தப்பாகவோ எழுதி வைத்தவற்றை நெட்டுருப் பண்ணுவதையே இலட்சியமாகக் கொண்ட கல்விக்காக எத்தனையோ முழு வருடங்களை முதலில் செலவழித்து விட்டேன். இந்த நிலை கசந்துபோக மற்றொரு பயங்கரமான சாதனைக் காலம். அப்பால் என்னை நானே சோதித்து சோதித்து கழித்த பல வருஷங் கள். பிறகு இது. இதை அந்தக் கல்வி என்றோ சொல்ல முடியாது. வேதனைகளைச் சகிப்பதில் சிலருக்கு இன்பம் இருக்கிறதல்லவா? அப்படி எனக்கும் இதில் ஒரு சுகம் இருந்தது.
55

Page 30
எனக்குள் புகுந்து மறைந்து எப்போதுமே அவள் தூரத்தில் இருந்தாள். அவளுக்கு அருகில் போக எனக்கோ எனக்கருகில் வர அவளுக்கோ நினைவு வந்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. காணும் நேரங்களில் அவள் என்னை உபசரித்தாள். அந்த உபசரிப்பில் தூய்மையே எப்போதும் பிரகாசித்தது. அப்போ தெல்லாம் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பதே பாவமாக இருந்தது.
நான் அவள் முன்னிலையில் நின்று சிரித்திருக்கின்றேன். அவளும் சிரித்திருக்கின்றாள். என் சிரிப்பில் அவள் எதையாவது கண்டு இருக்கக்கூடும். ஆனால் அவளுடைய சிரிப்பிலோ நான் ஒன்றை யுமே புரிந்து கொண்டதில்லை. நீ யார்? என்று கேட்பதை இப்போது நான் நிறுத்தி விட்டேன். எனக்குள்ளும் ஆராய்கிற விருப்பம் அழிந்து விட்டது. அவள் அவளாகவும் நான் நானாகவும் எப்படியோ இருந்து விட்டோம்.
ஜனங்கள் எங்களைச் சருகுக் கண்களால் பார்க்கிறார்கள். பேசுகி றார்கள். அதில் எனக்கோ அவளுக்கோ அக்கறை கிடையாது.
ஒரு நாள்; அதுவும் மாலைநேரம் என்று நினைக்கிறேன். குடிசை யின் முன்புறத்தில் மரத்தின் கீழே பரந்து கிடந்த மணல் மீது படுத்துக் கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்த்தபோது என் பக்கத்தில் இருந்து ஒரு விசிறியால் அவள் விசிறிக் கொண்டிருந்தாள்.
படுத்தபடியே கேட்டேன். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? அவள் சொன்னாள்: "சுகமாகத் தூங்குங்கள்.”
நான் எழுந்து உட்கார்ந்தேன். அவள் விலகவில்லை. அதில் இருந்த படியே விடாமல் விசிறிக் கொண்டிருந்தாள்.
“விசிறியை இனி என் கையில் கொடுங்கள்’ என்று நான் கேட்டேன்.
“முடியாது. நீங்கள் மறுபடியும் படுத்துத் தூங்குங்கள். நான் விசிறப் போகிறேன்."
அவள் கொஞ்சமும் எதிர்பாராத நிலையில் எட்டி விசிறியைப் பிடித்தேன். அவள் கையே என் கைக்குள் அகப்பட்டது. விசிறி கீழே மணலில் விழுந்து கிடந்தது.
அவள் எழுந்தாள். ஆனால் நான் மட்டும் அவள் கையை விட நினைக்கவில்லை. அவளும் பறித்தெடுக்க விரும்பாதவள் போலவே சற்றே குனிந்தபடி நின்றாள். நான் உற்றுப் பார்த்தேன். என் கை தானாகவே நெகிழ வாயிலிருந்து பக்தியின் துடிப்போடு “பராசக்தி” என்று குரல் எழுந்தது.
56

அவள் நன்றாக நிமிர்ந்து நின்று என்னை ஒரு முறை பார்த்துவிட்டுச் சாலையை நோக்கி நடந்தாள். அப்படி நடக்கும்போது இடையில் ஒரு முறையாவது திரும்பிக் கூடப் பார்க்காமலே சென்று மறைந்து விட்டாள். நான் மட்டும் இருந்தபடியே அங்கேயே உட்கார்ந்திருந் தேன். நேரம் கழிந்து கொண்டிருந்தது. உலகத்தை இருள் மூடிய பிறகும் அப்படியே உட்கார்ந்திருந்தேன். வீட்டில் விளக்குக்கூட ஏற்றவில்லை. அப்பொழுது அவள் எங்கிருந்தோ வந்து என்முன் நின்றாள்.
“ஏன் வந்து மெளனமாக நிற்கின்றீர்கள்?’ என்று நான் கேட்டேன். “உங்களை என்னோடு அழைத்துப் போக வந்திருக்கிறேன்” என்ற பதில் அவளிடமிருந்து கிடைத்தது.
“எதற்காக?” என்னுடைய கேள்விக்கு ஒன்றும் சொல்ல விரும்பாதவள் போலவே அவள் மெளனம் சாதித்தாள்.
மறுபடியும் நானே கேட்டேன் : "உங்களை யாரென்று எனக்குப் புரியும்படி அறிவிக்க மாட்டீர்களா?”
“அதை ஒரு நாளைக்குச் சொல்லத்தான் எண்ணியிருக்கிறேன். ஆனால் .”
“நிறுத்திவிட்டீர்களே, சொல்லுங்களேன்." அவள் எனக்குப் பதில் தராமல், “இன்றைக்கு நான் இங்கேயே தங்கப் போகின்றேன்” என்றாள்.
நான் மெளனமாகி நின்று அவளைப் பார்த்தேன். என்னிடமிருந்து எதையுமே எதிர்பாராதவளாய் அவள் உள்ளே சென்றாள். இருட்டில் எதையோ இழுத்துத் தரையில் போட்டுக்கொண்டு படுத்து விட்டாள். கொஞ்ச நேரத்தில் நானும் எழுந்து சென்று விளக்கை ஏற்றினேன். அதற்குள் அவள் நன்றாகத்தூங்கிவிட்டாள். சிறிது நேரம் வரையில் அப்படியே நின்று அவளைப் பார்த்தேன். பிறகு மெல்ல வெளியேறி அதே மரத்தடியில் மணல் மீது உட்கார்ந்தேன்.
அந்த இடத்திலிருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் அயர்ந்து தூங்கினாள். விளக்கொளியில் அந்தத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது கூட அவளுடைய தோற்றம் மயக்கம் தருவதாக இருந்தது.
மறுபடியும் எழுந்து அவளுக்கருகில் போய் விளக்கை நன்றாகத் தூண்டிவிட்டு உற்றுப் பார்த்தேன். சராசரங்களை ஊடுருவி எங்கும்
57

Page 31
நிறைந்து பரிமளிக்கும் ஜீவ சக்தியாகிக் கலைகள் காணாத அமிர்த சுரமாகி, அவள் விளங்கினாள்.
என் உடம்பு சிலிர்த்தது. எழுந்து நின்று என் வணக்கத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்து உட்கார்ந்தேன். மெல்ல மெல்ல தூக்கம் கண்களை வந்து மருவியது.
அதிகாலையில் எழுந்து பார்க்கும்போது என் எதிரே இருந்த மண்ணை ஒழுங்காக்கி அதில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண். உற்றுக் கவனித்தேன். ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் “என்ன எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
உடனே அவள் அதனை அழித்துவிட்டுத் தன் கைக்கு எட்டிய மணலை அழுத்தி அழகு செய்தாள். பிறகு அதைக் காட்டி, "இதிலே என்னை யாரென்று கண்டுகொள்ளுங்கள்” என்றாள்.
நான் எழுந்து உட்கார்ந்தபடி அவளைப் பார்த்து இதையே சொன் னேன்: "உங்களை - உங்கள் வார்த்தைகளை செயல்களை உங்க ளோடு சம்பந்தப்பட்ட மற்ற எதையுமே புரிந்து கொள்கின்ற சக்தி என்னிடம் இல்லை.”
அவள் என்னை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித் தாள். நான் அவளைத் தடுக்கவில்லை. ஆனால் எழுந்து பின்னால் நடந்தேன். சிறிது தூரம் சென்றதும் திரும்பி நின்று “ஏன் வருகிறீர்கள்?’ என்று கேட்டாள்.
"எப்படியாவது உங்களைத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்.” என்றேன் நான்.
“உங்களுக்கு அது வேண்டாம்.” இப்படிச் சொல்லிவிட்டு அவள் அங்கேயே நின்றாள். நான் மேலும் நடந்தேன். அதைப் பார்த்ததும், "நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று என்னைக் கேட்டாள்.
உடனே பதில் கொடுத்தேன். "உங்களை மறந்து விடக்கூடிய ஒர் எல்லையை அடைவதற்காக”
அவள் ஒரு மாதிரிச் சிரித்துக்கொண்டே “சொல்லுகிறேன். வாருங்கள்” என்று கூப்பிட்டாள். அவ்வளவில் திரும்பி அவளுக்குப் பின்னால் நடந்தேன். அவள் நேராகவே என் வீட்டைநோக்கி நடந்து சிறிது நேரத்திற்கு முன்தான் அழுத்தி அழகு செய்த அந்த மணல் மீது உட்கார்ந்துகொண்டு, "இதோ பாருங்கள் என்னை நானே எரித்துச் சாம்பராக்க முடியுமானால் நான் யாரென்பதை உங்களுக்குச் சுலபமாக காட்ட முடியும்” என்றாள். நான் திகைப்பினால் மெளன
மாகி நின்றேன்.
58

அவள் தொடர்ந்து பேசினாள்: "உங்களை நானும், என்னை நீங்களும் இனிச் சந்திக்க வேண்டாம். நீங்கள் நான் என்ற பேதம் - உறவு அழிந்து மறைந்து போகட்டும். உங்களை மறக்கவோ நினைக் கவோ நான் முயல மாட்டேன்.”
நான் ஸ்தம்பித்துக் கல்லாகி நின்றேன். அவளோ எழுந்து கன வேகமாக ஏாதோ ஒரு திசையில் நடந்து மறைந்தாள்.
59

Page 32
விதி
உள்ளே களியாட்டங்களும் கேளிக்கைகளும் நடந்து கொண்டி ருந்தன. ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதிலே கலந்து சந்தோஷ மாகக் காலத்தைக் கழித்தார்கள். அங்கிருந்து வரும் ஆரவாரமும் சிரிப்பும் தெருவுக்கு அப்பாலும் வெகு தூரம் வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தெருவில் .? ஏழைப் பிச்சைக்காரர்களின் கூட்டம். பொலிசாரால் துரத்தப்பட்டு ஒடுவதும் ஒளிந்துகொண்டு திரும்புவதுமாக அந்தக் கூட்டம் நிலை தடுமாறி அடிக்கடி கலைந்து கூடிக்கொண்டிருந்தது. அதிலே பெண்களும் கிழடுகளும் குழந்தை களும் கலந்திருந்தார்கள். அவர்களைக் கூர்ந்து பார்ப்பதற்கு அங்கே ஒருவருமில்லை. யாராவது வெளியே புறப்படும்போது மட்டும் "ஐயா! ஏழைக்கு ஒரு செப்புக்காசு கொடுங்கள், கோடி புண்ணியம் கிடைக்கும்’ என்ற சோகம் நிறைந்த ஒலிகளே தெரு நெடுகக் கேட்டுக் கொண்டிருந்தன.
ஜனங்களிற் சிலர் வெளியே வந்தார்கள். சில பிச்சைக்காரர்களும் அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். “அம்மா! ஏதாவது கொடுங்கள், பசிக்கிறது” என்று ஒரு குரல் எழுந்தது. "சீநாயே! தூரப் போ” என்ற பதிலே அதற்குக் கிடைத்தது. மறுபடியும் "அம்மா’, "ஐயோ” என்ற குரல்கள். அதற்கு "ஐயையோ சகிக்க முடிகிறதில்லை. இந்த அரசாங்கமாவது இவர்களைக் கொன்றுவிட்டாலென்ன தெருவிலே கிளம்ப முடிகிறதில்லை. தொலைந்து போங்களேன்’ என்ற இனிமையான வரவேற்பு மட்டும் கேட்டது. ஒருவர் பின் ஒருவ ராகப் போன அத்தனை பேரும் திரும்பி விட்டார்கள். இப்படியே பல ஆயிரம் பேரிடம் கேட்டுக்கேட்டு அவர்களுக்கு ரோஷமும் மானமும் போய்விட்டன. “கேட்டால் இல்லை போ” என்றால் நாங்கள் போய்விடுகிறோம். எதற்காக இத்தனை வசவுகள்? ஆமாம். ஒருவரிடத்திலும் பிசகில்லை. எங்கள் விதி செய்விக்கிறது” என்ற ஒரு பெண் குழந்தையின் கீச்சுக்குரல் மட்டும் தனிமையிலே கேட்டது. அதற்குள்ளே பிச்சைக்காரர்கள் தெருக்கோடியிலே மறைந்து
60

கொண்டிருந்தார்கள். அவள் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. இதுவரை எவ்வளவோ நேரமாக அங்கே சுற்றிச்சுற்றி அலுத்துப் போனாள். அற்பப் புழுவைப் போல ஜனங்கள் அவளைத் தூரத் தள்ளினார்கள். சிலர் மட்டும், “உன் ஆட்கள் எங்கே ஒளிந்து நிற்கிறார்கள். நோவாமற் சாப்பிட இப்போதே கற்றுக் கொண் டாயே, போடி நாயே!” என்று சுடும்படி பேசினார்கள். இந்தப் பேச்சுகள் ஏழைக் குழந்தையின் இருதயத்தைக் கசக்கிவிட்டன. வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோரையும் பார்க்கப் பார்க்க அவளுக்கு எரிச்சலும் அழுகையுமாகவே வந்தது. யாரையும் பிச்சை கொடுங்கள் என்று கேட்கவும் மனம் வரவில்லை. ஒன்றும் கிடைக்கா விட்டாலும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. 'அம்மா வீட்டிலே என்ன செய்கிறாளோ? சுரம் எப்படி அடிக்கிறதோ? என்ற எண்ணமும் அவளது ஸ்படிகம் போன்ற உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்தன.
பேசாமல் நின்றவள், தனக்கெதிரே வந்த மனிதரைப் பார்த்தாள். அவரும் அவளையே கவனித்துக்கொண்டு வருவதாகத் தெரிந்தது. துணிவாக இரண்டு கைகளையும் நீட்டினாள். ஆனால் தலை நிமிரவில்லை. அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சிறிய அந்தக் கைகளைப் பிடித்துக்கொண்டு, "அம்மா, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் பெரிய மனிதர். எவரும் இப்படிப் பேசினதை அவள் கேட்டதில்லை. ஆவல் நிறைந்த கண்களால் அவரைப் பார்த்தாள். ஏனோ குழந்தையின் கண்கள் கலங்க வாயிலும் பேச்சு வராமல் துடித்தது. "அம்மா! உனக்கு என்ன வேண்டும் என்னிடம் பயப்படாமல் சொல்லு’ என்று அவர் மறுபடியும் கேட்டார். அப்போதுதான் அவள் பேச்சு வெளியே கேட்டது.
“யாரைக் கெஞ்சினாலும் உதைக்க வருகிறார்கள். ஏதாவது பிச்சை கொடுங்கள் ஐயா’
"நீ யாரம்மா? உன் பெயர், ஊர் என்ன?”
"ஐயோ நானொரு பிச்சைக்காரப்பெண் என்று தெரியவில்லையா? என் பெயர் சாந்தி. எங்களுக்கு அந்த ஆற்றோரக் கிராமம்’
"அப்படியானால் உனக்கு அம்மா இல்லையா?”
"அம்மா காயலாகக் கிடக்கிறாள். நான் போகலாமா என்று கேட்ட போது விடமாட்டேனென்று தடுத்தாள். சொல்லாமல் மற்றவர்க ளோடு ஒடிவந்துவிட்டேன். இனி எல்லோரும் போய்விடுவார்கள். ஏதாவது கொடுங்கள் நானும் போக வேண்டும்”
"அம்மா சாந்தி உன்னைத் துணையோடு அனுப்பி வைக்கிறேன். என் வீட்டுக்கு வருகிறாயா?"
61

Page 33


Page 34
ஆனால் எல்லாவற்றிலும் ஒரு உற்சாகம் பிறந்ததேயன்றிச் சலனம் ஏற்படவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன.
பிரபாவதிக்குப் பதினாறு வயதுதான் இருக்கும். ஹரிஹரனின் தந்தை கல்கத்தாவிலே இறந்துவிட்டாரென்று செய்தி வந்தது. அங்கே அவருடைய சொத்துக்களின் மேல் வியாஜ்யங்களும் நடந்து கொண் டிருந்தன. எல்லாவற்றிற்கும் ஹரிஹரனே கல்கத்தாவுக்குப் போக வேண்டியிருந்தது. இந்தப் பொருளுக்காக இவளைப் பிரிந்து போக வேண்டியிருக்கிறதே என்று அவன் முதலில் வருத்தப்பட்டான். மற்றவர்களும் போ போ என்று தொந்தரவு செய்தார்கள். எப்படியும் சீக்கிரம் வந்து விடுவோம் என்று முடிவு செய்து கொண்டு புறப் பட்டான். போகும்போது, “பிரபா ! நான் போக வேண்டியிருக் கிறதே. உடனே வந்து விடுகின்றேன். நீ சந்தோஷமாகப் போகச் சொல்லு’ என்று அவளைக் கேட்டான். அவள் தலையை அசைத் தாள். அந்த அசைப்பு நீ போக வேண்டாம் என்று சொல்லுவது போலவே அவனுக்குப் பட்டது. உயிரைப் பறித்துச் செல்லும் யமனது குரல் போலக் கல்கத்தா வண்டி கூவிய சத்தம் பிரபாவதியின் காதிலே வந்து விழுந்தது.
ஹரிஹரன் கல்கத்தாவுக்குப் போய் ஒரு மாதகாலமாகி விட்டது. அப்பொழுதுதான் பிரிவின் பயங்கரம் அவளுக்குத் தெரியவந்தது. தனது சரித்திரம் வசையாக எழுதப்படப் போகிறதேயென்று கவலை யோடு பார்த்திருந்தாள். ஒவ்வொன்றாக மாதங்களும் ஐந்து கழிந்து விட்டன. "இனிக் கைகொடுத்து எனக்கு முன்பு நின்று பேச அவர் வரவேண்டும். இல்லாவிட்டால் நம் குலமே மானக்கேட்டால் அழிந்துவிடும். இதை அம்மா அறிந்தால்.’’ என்றெல்லாம் நினைக்கும்போது, தான் செத்து விட்டதாகவே எண்ணிக் கொண் டாள். எல்லாவற்றையும் எழுதி உடனே வரும்படியும் ஹரிஹரனை வேண்டிக்கொண்டாள். பிறகும் ஒரு மாதம் கழிந்து விட்டது. அவனிடமிருந்து பதில் கூட வரவில்லை. கல்கத்தாவில் அவன் இருந்தால்தானே. விதி அவனை எங்கோ மறைவிலே ஒளித்து வைத்து விட்டது. ‘வாழ்வின் கடைசிக் கோட்டிலே உலகம் சொல்லும் வசை என்னும் சுழற்காற்றின் நடுவிலே நிற்கிறோம்" என்பதை மட்டும் அவள் பிரத்தியட்சமாகக் கண்டாள். வரவர மனதிலும் உறுதி பிறந்தது. அம்மாவை விட்டுப் போவதை நினைக்க முடியவில்லையே. ஆனாலும் அவர்களுக்குக் கெட்ட பெயர் வராத படி காக்க வேண்டும். என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள் நடுநிசி, வானம் மழை முகில்களால் போர்த்தப்பட் டிருந்தது. மரங்களும், கட்டிடங்களும், பாதைகளும், வெறும் வெளியும் ஒன்றாக மயங்கிக் கிடந்தன. கண்களை இறுக மூடிக்
64

கொண்டு பார்த்தாலும் மலர விழித்துப் பார்த்தாலும் உலகம் ஒரு மாதிரியாகவே தெரிந்தது. அடி வானத்தின் வட கோடியில் மட்டும் ஒரு நட்சத்திரம் மங்கலாகத் தெரிந்தது. தூரத்திலே சில நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. மெளனமான இரவிலே அந்தச் சத்தம் பேய்களின் நினைவுளைக் கொண்டு வந்தது. மரணத்தைத் தேடிக்கொண்டு அவள் போனபோதிலும் ஏங்கிக் கலங்கினாள். ‘எப்படியானாலும் சாவு வரட்டும். ஆனால் என் தேகத்தைக் கூட இந்த உலகம் கண்டுவிடக்கூடாது' என்று நினைத்துக் கொண்டு இருளோடு ஐக்கியப்பட்டு நடந்தாள்.
மனத்தின் வேகம் போல நாழிகைகளும் கழிந்து கொண்டிருந்தன. நதிக்கரைக்கு வந்துவிட்டாள். மனமோ வரவர திடமற்றுத் தடுமாறி யது. மறுபடியும் திடப்படுத்திக்கொண்டு தண்ணிருக்குள்ளே காலை வைத்தாள். முன்னால் ஏதோ ஒன்று மங்கலாகத் தெரிந்தது. உற்றுப் பார்த்தாள். அது ஒரு சிறிய படகு. எல்லா நினைவுகளும் ஒரு முறை சுழன்று தடுமாறின. 'தன்னைத்தான் கொன்று கொல்வது மகா பாபம். இதிலே சிசுஹத்தியும் ஏற்படுகிறது. எப்படியோ என் உடம்பு கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாம் தெரிந்துவிடும். கடவுளே தடுத்துத் தடுத்துப் புதுவழியைக் காட்டுகிறார்” என்று நினைத்துப் படகை எப்படியோ அவிழ்த்து அதிலே ஏறிக்கொண்டாள். படகு தன் இஷ்டப்படியே வேகமாகவும் மெதுவாகவும் காற்றோடு சென்றது. அப்பொழுதுதான் தனது வாழ்க்கைப் படகும் ஏதோ ஒரு திசையில் ஒடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பிரபாவதி உணர்ந்தாள். தான் இருக்கும் படகும், நீண்டு சலசலத்தோடும் நதியும், இருண்ட மரத் தோப்புகளும் தனிமையிலே அவளைக் கலங்கச் செய்தன. மனம் நடுங்க உடம்பும் சேர்ந்து நனைந்துவிட்டது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். படகு நீரைக் கிழித்துக் கொண்டு ஒடும் சத்தம் ஒன்றே அப்போது கேட்டுக்கொண்டு இருந்தது.
மெல்ல மெல்ல வானத்தில் முகில்கள் கலைந்தன. அங்குமிங்குமா கச் சில நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் தொடங்கின. அந்த நட்சத்திரங்களில் மங்கிய ஒளியிலும் அவளுடைய தேகம் பிரகாசித் தது. அப்போது நீரர மங்கை போல நதியின் நடுவிலே அவள் சென்று கொண்டிருந்தாள். படகும் தடுமாறிக்கொண்டே ஒரு கரையை அடைந்து நின்றது. பக்கத்திலே மணல் பரந்த நெடிய கரையைக் கண்டாள். நெருப்புப் போல ஒரு மூச்சு வந்தது. அதைத்தொடர்ந்து வந்த கண்ணிர்த் துளிகள் நதியின் பிரவாகத்தில் விழுந்து கலந்து விட்டன. கரையிலே வந்து பார்த்தபோது வழி துறை ஒன்றும் தெரியவில்லை. சிறிதுநேரம் வரை மணலில் இருந்தாள். ‘வாழ்வு என்ற குரூரமான பாதையிலே முள்ளால் குத்தப்பட்ட புஷ்பம்
65

Page 35
போலாகிவிட்டாய். விதியோ கோரப்பற்களைக் காட்டிக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தாலும் உன் மானம் அழிந்துவிடப் போவ தில்லை" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். அப்பொழுது வைகறையும் வந்து கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தபோது மனிதர் நடமாடிய ஒரு சிறிய பாதை மட்டும் தெரிந்தது. அது போன வழியே தானும் யோசிக்காமல் நடந்தாள்.
பிரபாவதி முழுதும் வேறான ஒர் உலகத்தை இப்போது கண்டாள். ஆழத்தில் மறைத்து வைத்திருந்த இரகசியங்களைக் கூடச் சொல்லக் கூடிய மனிதர்கள் அங்கே அகப்பட்டார்கள். ஆனால் தன் பதி, தங்களது உயர்ந்த அந்தஸ்து என்பவற்றைப்பற்றி மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. அறிந்தவற்றையும் பூடகமாக வைத்துக் கொள்ளும் படி அவர்களை வேண்டிக்கொண்டாள். அவளுடைய பரிதாபமான நிலைமைக்காக எல்லோரும் கண்ணிர் வடித்தார்கள். தாயின் அன்பும், தோழிகளின் உருக்கமும் அங்கும் காணக்கூடியனவாக இருந்தன. அலட்சியமும் அதிகாரமும் யாரிடமும் இல்லை. "எல்லோரும் ஒரே குலத்தவர்கள், சமதைகளானவர்கள்’ என்று வாழ்ந்தார்கள். ஒருகால் சச்சரவுகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிஷம் அவர்களிடம் அன்பு பெருகி ஓடுவதைக் காணலாம். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பிச்சைக்குப் போய்விடுவார்கள். பிரபாவதி நேற்று வாழ்ந்த வீட்டிற்கும் அவளுக்கு இன்று கிடைத் திருக்கின்ற குடிசைக்கும் எவ்வளவு வித்தியாசமோ அதைவிட மேலாகவே அந்தச் சுற்றத்திற்கிடையிலும் வித்தியாசம் இருந்தது.
வரவர அவள் உடம்பில் நோவும் இளைப்பும் ஏற்பட்டன. படிப்பில்லாதவர்களானாலும் அன்போடு அணையும் தாதியர்கள் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் காட்டிய உரிமையே பிரபாவின் வருத்தத்தை எல்லாம் பறந்துவிடச் செய்தது. ஒருநாள்தன் துன்பத்திற் கெல்லாம் எல்லை போன்ற ஒரு செல்வக் குழந்தையைப் பெற் றெடுத்தாள். பட்டின் மேல் டாக்டர்களின் மத்தியிலே பிறக்கா விட்டாலும் அழகின் ஜீவன் அந்தச் சிசுவிடம் பரிமளித்தது. குழந்தை யைப் பார்த்தபோது தாயின் மனதில் பெரிய சாந்தி பிறந்தது. அதற்கா கவே தன் பெண்ணை, "சாந்தி’ என்று கூப்பிடச் சொன்னாள். நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. இரண்டு வருஷத்திற்கு மேல் இந்த புதிய வாழ்வினை அவளது தேகம் பழகிவிட்டது. சாந்தியும் தட்டுத் தடுமாறி நடக்கத் தெரிந்த குழந்தையாகி விட்டாள்.
நதியில் ஜலம் நிறைந்து ஸ்படிகம் போல ஒடிக்கொண்டிருந்தது. மரம், செடிகள் தளிர்த்துப் பிரகிருதியின் யெளவனம் போலப் பொலிந்து விளங்கின. இளங்காற்று அவற்றிலே பட்டுச் சலசலப்பது
66

மாயா ரூபிணிகளான தேவமங்கையர்கள் லதாக் கிருகத்தின் மறை விலே நர்த்தனம் செய்வதுபோலக் கேட்டது. பிரபா வரண்டுதான் போய்விட்டாள். அவளிடம் இளமையின் மோகன நாதத்தை எழுப்புகிற நரம்புகள் இன்னும் அறுந்துவிடவில்லை. தேவகானத்தை இசைக்கக்கூடிய பொன் யாழொன்று மீட்டுகின்ற வைணிகன் இல்லாமையினால் துருப்பிடித்துக் கிடப்பதுபோலவே அவள் இருந்தாள். எத்தனையோ வருஷங்களுக்கு முன் அந்த யாழிலிருந்து இன்னிசையை ஒருவன் எழுப்பினான். அது உலகத்தின் மறைவிலே தான் நடந்தது. பிறகு நீண்ட தனிமையிலே அவள் அயர்ந்து போனாள். அன்று பிரகிருதியின் மாதுர்யம் அவளை அணைப்பது போல இழுத்து மிதித்து கசக்கியது. எல்லாப் பக்கத்தையும் திரும்பிப் பார்த்தாள். அங்கங்கள் ஒருமுறை பொங்கி மெலிவடைந்தன. “ஒருவருக்கும் தெரியாமலே தொடச் சொல்லி ஜாடை செய்தேன்; அவர் தொட்டார்.” பகவான் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடையது என்று இறுமாப்படைந்து கொண்டிருந்த திரவியத் திற்கு முன் ஒரு மலை வளர்ந்து விட்டது. கூப்பிட்டேன். அழுதேன்; அவருக்குக் கேட்கவில்லை என்று வாய் விட்டுச் சொல்லிப் புலம்பினாள். பழைய சம்பவங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்து வேதனை செய்தன. உடம்பு சோர மணலிலே சாய்ந்து விட்டாள். அப்பொழுது நதியைக் கிழித்துக் கொண்டு ஒரு படகு போய்க்கொண்டிருந்தது. அதிலே அனேகர் இருந்தார்கள். ஹரிஹர னும் இருந்தான். கரையிலே சோர்ந்து விழுந்தவள் தனது ஜீவனைப் பிணைத்து உலகை வெறுக்கச் செய்த பிரபா தான் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகாவது அது அவனுக்குத் தெரியலாகாதா? விதி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால் காரணம் இல்லாமலே அவளைப் பற்றி நினைக்கத் தொடங்கினான். கண்கள் கலங்கின. உலகமும் மங்கலா கத் தெரிந்தது. இருந்த இடத்திலே மெல்லச் சரிந்து விட்டான். ஆத்ம சம்பந்தமான இந்த நிகழ்ச்சிகளை ஒருவராலும் கண்டு கொள்ள முடியவில்லை. படகின் வேகத்தால் ஏற்பட்ட மயக்கம் என்றே மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் கண்களில் நீர்த்துளிப்பதன் காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை. இதற்குள் படகும் ஓடி மறைந்து கொண்டிருந்தது.
பிறகும் எத்தனையோ வருஷங்கள் கழிந்துவிட்டன. ஹரிகரன் இளமையும் அழிந்து கொண்டிருந்தது. அவனுக்கு மணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டவர்கள், "பாவம்! அவனுடைய ஜீவன் துன்பப்படுகிறது. நாம் ஏன் இந்தக் கதைகளை எடுக்க வேண்டும்?’ என்று மெளனமாக இருந்துவிட்டார்கள்.
67

Page 36


Page 37
தூமகேது
சம்பகம் சுகானந்தரது ஆசிரமத்துக்கு வெகு தூரத்திலேயுள்ள ஒரு கிராமத்திலே பிறந்தவள். தான் சுமந்து பெற்ற செல்வத்தை பார்க்காமலே அவள் தாயென்ற அருள் தெய்வம் கண்ணை மூடி விட்டது. சில காலத்துள் தந்தையும் அதே வழியைப் பின்பற்றி நடந்துவிட்டார். நிராதரவான அந்தக் குழந்தையை அதன் அத்தை முறையான ஒருத்தியே எடுத்து வளர்த்தாள். அது வளர்ந்து உருவாவ தற்குள்ளேயே, "பாவி! நீ பிறந்த உடனேயே மலைபோல இருந்தவர் களைப் புதைத்து விட்டாய். எப்பொழுது உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தேனோ அன்று முதல் இந்த வீடும் விடிந்தது போலத் தான். என் குழந்தைகளிலும் இரண்டைத்தின்றுவிட்டாய். தூமகேது தோன்றியது போல வந்து பிறந்தாயே’ என்று அவள் அத்தை வாழ்த்தத் தொடங்கி விட்டாள். எல்லோராலும் வெறுக்கப்பட்ட ஒரு ஜந்துவாகவே அந்தக் குழந்தை வளர்ந்தது. அவள் பெரியவளான பின்பும் இரும்பு மனம் படைத்த மனிதர்களின் நடுவிலேயே இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிஷத்தையும் கழிக்க வேண்டியதாயிற்று. இப்பொழுதோ அவள் அத்தை முன்னைவிடக் கடினமாகவே நடந்து கொள்வாள்.
ஒரு முறை ஆதரவு அற்ற அந்த அபலையின் மனத்திலும் தைரியம் பிறந்து விட்டது. 'அத்தை 1 எவ்வளவோ பிரயாசை எடுத்துப் பார்க் கின்றேன். சாவு கூட என்னிடம் வரப் பயப்படுகிறது!’ என்று சொன்னாள். இராட்ஷச உள்ளம் படைத்த அவள் அத்தைக்கு இந்த வார்த்தைகள் மேலும் மேலும் ஆவேசத்தைக் கிளப்பி விட்டன. “ஒஹோ! உனக்குச் சாவு வந்துவிட்டால் உலகமே அஸ்தமித்துவிடும் என்று நினைக்கிறாயா?அப்படி நிகழ்ந்து விட்டால் அது இந்தக் கிராமமே செய்த பாக்கியம் ஆகாதா?’ என்று குத்திச் சொன்னாள். சம்பகம் எதிர் வார்த்தை ஒன்றும் பேசவில்லை. ஆனால் அன்று முழுவதும் அழுதுகொண்டேயிருந்தாள்.
70

அன்றைக்குத்தான் சுகானந்தரது ஞாபகம் அவளுக்கு வந்தது. அவ்வளவில் மனம் அங்கேயே லயித்து விட்டது. "ஆசிரமத்துக்குச் செல்லுகின்ற நீண்ட வழியைக் கடக்கமுடியாமல் மரணம் சம்பவித் தாலும், பவித்திரமான அந்த வழியிலே இறப்பதுமேல்” என்று உறுதி கொண்டு விட்டாள். அன்று இரவே உதயக்காலக் கோழியின் சத்தம் கேட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கினாள். உச்சிக்காலத்துக்கு முன்பே ஆசிரமத்துக்குக் கிட்டப் போய் விட்டாள். ஆனால் மிருதுவான அவள் கால்களால் மிகுதி வழியைக் கடக்கமுடியாமல் இருந்தது. வெயிலும் கடுமையாக வாட்டியது. பாதையோ செங்குத் தாகவே அப்பாற் சென்று கொண்டிருந்தது. அதனால் அடிபெயர்க்க முடியாமல் பாறையொன்றிலே சாய்ந்து விட்டாள்.
அந்த நிலைமையிலேதான் நரேந்திரன் அவளை முதன்முதலாகக் கண்டான். அவள் அணிந்திருந்த உடையிலிருந்து ஒரு சிறுவனே களைத்து விழுந்துவிட்டான் என்று அவன் நினைத்தான். உடனே அவளை ஒரு துரும்புபோல எடுத்துக்கொண்டு செங்குத்தான அந்த மலைப் பாதையைக் கடந்து விட்டான். குளிர்ந்த சுனை நீரை அவள் முகத்திலே தெளித்ததும் மெல்லக் கண்களைத் திறந்தாள். அரும்பு கின்ற ரோமமும் உச்சியிலே முடியும் காவியுடையும் அணிந்து ஒரு பால்ய சந்நியாசி தன் முன்னால் நிற்பதைக் கண்டதும் “ஏழைகள் சகிக்கமுடியாத துன்பத்தை அடையும்போது பகவான் நேராகவே வந்து காப்பாற்றுவார் என்ற உண்மை என்னளவில் மெய்யாகி விட்டது” என்று பரவசமானாள். "சுவாமீ" அடியாள் கிருபை செய்த உலகத்தின் பதியே” என்று கண்ணிர் சோர அவன் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கப் போனாள். நரேந்திரன் அவள் கைகளைப் பிடித்துத் தடுத்து விட்டான். ஆனால் பிரமச்சாரியாகிய நான் இவளைத் தீண்டிவிட்டேனே என்று உள்ளம் கலங்கினான். உடனே அவளைச் சுவாமிகளிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்து விட்டான். இரண்டு ஆண்டுகள் ஆயின.
"அம்மா! நீயோ சிறு பெண். ஆசைகளை அடக்கி இந்திரிய ஜயம் பெறுவது சாமான்யமல்ல. சில சமயங்களில் நானுமே தடுமாறினேன். ஏதோ அச்சந்தர்ப்பங்களினால் உன்னுடைய மனத்திலே வைராக்கியம் ஏறிவிட்டது. உலகத்தோடு கலந்து வாழ்வதென்பது கஷ்டமான காரியம்தான். ஆனால் வாழ்வை வெறுப்பது அதை விடக் கடினமல்லவா? எத்தனையோ வருஷங்களாக விரதம் முதலிய வற்றால் பக்குவமடைந்த மனமும் பருவத்தின் நினைப்புக்களான சுழல் வந்து மோதும்போது கணத்துக்குள் அள்ளுண்டு போய் விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்.”
71

Page 38
“சுவாமீ! தாங்கள் சொல்வது வாஸ்தவமேயானாலும் உலக விஷயங்களில் இருந்து நீங்கி இருப்பதே லேசாக எனக்குத் தெரிகிறது. இந்த அற்ப காலத்துக்குள்ளேயே உலகத்தின் கோரமான இயல்பு களையெல்லாம் கண்டு கழித்துவிட்டேன். எத்தனையோ தடவை மரணத்தையும் தேடி ஓடினேன். விதி ஏனோ விட மறுத்துவிட்டது. இந்த அகன்ற உலகத்தில் கருணையோடு பார்க்கின்ற ஒருவரையும் நான் காணவில்லை. ஏதோ ஐன்மாந்தரங்களிலே செய்த புண்ணியத் தினால் தங்களை அடைந்து விட்டேன். தங்களை விட்டு என்னாற் போக முடியாது.”
"சம்பகம்! மறுபடியும் பிடிவாதமாகவே பேசுகிறாய். உண்மையில் உலக அநுபவம் உனக்குப் போதாது. நீ போகலாம் என்று நினைக் கின்ற பாதை முள்ளாலானது. திடசித்தமும் வைராக்கிய புத்தியு முள்ள சிலரே அதில் போகலாம் என்று நினைக்கவே முடியும். அவர் களிலும் தவறி விழுந்தவர்கள் அநேகர். பிரம்மசாரிகளே வாழுகின்ற இந்த இடத்திலே உனது வருகை பெரும் புயலையே கிளப்பிவிடும். அதனால் உன்னை வெளியே தள்ளிவிட நினைக்கின்றேனென்று கருதாதே. உன்னைப்போன்ற ஆதரவற்ற கோடிக்கணக்கான அபலைகளுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டு மென்றே ஈசுவரனை வேண்டுகின்றேன்.”
“சுவாமீ! நான் வளர்ந்த இடத்தில் அடைந்த துன்பங்களுக்கும் சிறுமைகளுக்கும் ஒர் எல்லை தேடியே இங்கு வந்து சேர்ந்தேன். மறுபடியும் எங்கே போகச் சொல்லுகிறீர்கள்? இதை விட்டுக் கிளம்பினால் யமபுரத்தைவிட எனக்கு வேறு புகலிடம் இல்லை.”
"அம்மா! உனக்கு இவ்வளவு வைராக்கியம் ஏற்பட்டுவிட்டதா? உன் வார்த்தைகளைக் கேட்டு ஒரு வகையில் நான் சந்தோஷப் படுகிறேன். இனி நீ கலக்கப்படாமலே இரு. ஆனால் உனது வருகை யினால் ஆசிரமத்துக்கு அழிவு வந்துவிடப்படாது.”
“சுவாமீ! இந்தப் புனிதமான ஷேத்திரத்திற்கு எந்த விதத்தில் என்னால் அழிவு ஏற்பட்டுவிடக்கூடும்?”
வெகு காலத்துக்குப் பிறகும் நேற்று நிகழ்ந்தது போலவே இந்தச் சம்பாஷணை முழுவதும் அவள் நினைவிலே தெரிந்து கொண்டி ருந்தன. கடைசியாகச் சுவாமிகளுடைய வாயிலிருந்து, “உனது வருகையினால் ஆசிரமத்துக்கு அழிவு வந்துவிடக் கூடாது" என்ற வார்த்தைகள் பிறந்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகள் இன்றும் வந்து மறைந்தன. இருட்டிலே கலந்து மறைந்து கிடந்த மலைச்சாரல் களைப் பார்ப்பவள்போல ஏதோ வெளியிலே பார்வையைச்
செலுத்திக் கொண்டிருந்தாள். அபர பட்சத்துப் பிரதோஷ சந்திரனும்
72

மரங்களுக்கூடாகக் கிழக்கே ஒரு கோடுபோலக் கிளம்பிக் கொண்டி ருந்தான். நிலை கலங்கிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாளே தவிர இத்தனை நேரங் கழிந்ததும் அவள் நினைப்பிலே தெரியவில்லை. கிழக்கு வானத்தின் எல்லையிலே மங்கிக் கொண்டு நின்ற பிறைக் கோட்டை மறுபடியும் ஒரு முறை பார்த்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். அப்போது தான் உதய காலத்தைக் கண்டு மகிழ்கின்ற பட்சிகளின் இனிய கீதம் தூரத்திலிருந்து வருவதுபோலச் சிறிது சிறிதாக அவள் காதிலே வந்து விழுந்தது. சமுத்திரம் போலக் குமுறிக் கொண்டிருந்த உள்ளத்திலும் ஒர் அமைதி நிலைகொள்ளத் தொடங் கியது. நித்திரையும் மெல்ல வந்து கண்களை மருவப் படுக்கையிலே சரிந்து கிடந்தாள்.
நிர்மலமான ஆகாயம். சந்திர பிம்பம் அம்ருதப் பிரவாகம் போல நிலவை எங்கும் சொரிந்து கொண்டு இருந்தது. விருட்சங்களின் முகடுகளிலே இருந்த வெள்ளை மலர்கள் பிரகாசித்தன. உலகத்தைக் காமதேவனின் சிருங்கார மாளிகை போல இயற்கைத் தேவி ஜோடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். அதன் நடுவிலே நரேந்திர னோடு சம்பகமும் நின்றாள். நரேந்திரன் மெதுவாக வாய் திறந்து பேசத் தொடங்கினான். "சம்பகம்! கொடிய மிருகங்கள் சூழ்ந்த வனத்தினிடையிலே பொழிகின்ற சந்திரிகையின் லாவண்யம் போலவும், பயங்கரமான சமுத்திரத்தின் நடுவிலே தனிமையிலே எழும்புகின்ற நாதசெளந்தர்யம் போலவும் உன்னுடைய அழகை அனுபவிக்க முடியாமல் வெகுகாலம் கஷ்டப்பட்டேன். உன்னைப் பார்க்கும்போதும், உனது இருதயத்தின் குழைவை உணரும் போதும் பீறிக்கொண்டு எழும்புகின்ற என் உணர்ச்சிகளை இஷ்டம் போல உடைந்து ஒடவிடாமல் அடக்கி அடக்கி உயிரழிந்து போனேன். அந்தக் காலம் பழங்காலமாகி மறைந்து வருகிறது. சுவாமிகளுக்கு முன்பு இருக்கும்போது கூட உன் கண்கள் சொல்லும் இரகசியங்களை நான் உணர்ந்து கொள்ளாமலா இருந்து விடுகிறேன்? நீ ஸ்நானத்திற்கு சுனைக்கு வரும்போது வனவிலங்குகளால் உனக்கு யாதொரு துன்பமும் நேர்ந்துவிடாமல் நான் காத்து வருவதை நீ அறிந்திருக்கவில்லையா? எனது தவ விரதத்திற்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்று நீ பயப்படுகிறாய். ஆனாலும் மணம் செய்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது என்று யார்தான் சொல்ல முடியும்?, ‘என்னால் யாருக்குமே தீமை ஏற்படாதபடி காத்துக் கொள்கிறேன்’ என்று சுவாமிகளுக்குச் சொன்ன வார்த்தைகளை நினைத்துத்தானே கதிகலங்குகிறாய்? ஆண்களுக்கும், பெண் களுக்கும் இடையிலே ஏற்படுகின்ற சம்பந்தம் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது. அதுவே பிரகிருதியின் உண்மையான தத்துவமாக வும் இருக்கிறது. பெரிய மகரிஷிகளும் மணம் செய்து கொண்டு
73

Page 39
இயற்கை அன்னையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கொண்டு வாழவில்லையா? வேதாகமங்களிலும், ஸ்மிருதிகளிலும் மணம் செய்துகொள்வது பாவம் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? உண்மை யானதும் இயற்கைக்குக் கட்டுப்பட்டதுமான ஒரு வழியிலே செல்லுவதைச் சத்தியத்திற்கு மாறு என்று எதற்காகக் கருதுகிறாய்? சுவாமிகள் கோபிக்கமாட்டார். நீயோ அவருடைய குழந்தைக்குச் சமானம். சம்பகம்! ஏன் பேசாமல் நிற்கிறாய்? உன்னை மறந்துவிட வேண்டுமென்று கடினமான விரதங்களையும் அனுஷ்டித்துப் பார்த்து விட்டேன். உயிரோடு சம்பந்தப்பட்டிருக்கின்ற தொடர்பு, கேவலம் இந்த வெறும் சடலத்தை மட்டும் வாட்டுவதனால் அழிந்து விடுமா? முடியாது. முடியவேமுடியாது. இதோ பேசுகின்ற என் இருதயத்தைத் தொட்டுப் பார்” என்று சொல்லிக் கொண்டே அவளைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டான்.
அவள் இன்னும் மெளனமாகவே நின்றாள். ஆனால் உள்ளத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன. திடீரென்று அவள் கண்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்தன. உடம்பு நடுங்க எண்ணங்கள் சுழல, “அதோ அந்த வானத்தில்” என்று சுட்டிக்காட்டியபடியே நின்றாள். நரேந்திரனும் உற்று நோக்கினான். அடிவானத்தைப் பூமி தொடுகின்ற மேற்கு மூலையிலே ஒரு பிரபையான நட்சத்திரம் தெரிந்தது. அதன் சோதியும் வளர்ந்து கொண்டே போக மேலே மேலே அது நகர்ந்தது. கணத்துள் உச்சி வானத்துக்கு வந்து விட்டது. ஆனால் அதன் வால் இன்னும் அடிவானத்திலே தொட்டுக் கொண்டு நின்றது.
அவள் அப்படியே கண்களை இறுக மூடிக்கொண்டு, “பிராணபதே” என்று சொல்ல வாயெடுத்தாள். அவ்வளவோடு ஆழ்ந்த அந்தக் கனவு நிலையிலிருந்தும் விழித்துக் கொண்டாள். நரேந்திரனை அங்கே காணவில்லை. காலைச் சூரியன் பொன்வட்டில் போல மலையின் கீழ்க் கோடியில் இருந்து எழுந்து கொண்டு இருந்தான். உலகம் பழையபடியே சப்தமயமாக விளங்கியது. வெளி ஞாபகங்களின் ஒரு துளி கூடக் கலக்கவிடாதபடி உதய காலத்திற் கண்ட அந்தக் கனவே அவளது உள்ளத்தில் நிறைந்திருந்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒர் இன்பமும் பயமும் அதிலே கலந்து இருப்பதாக உணர்ந்தாள். படுக்கையை விட்டு எழுந்தவள் அந்த இடத்தை விட்டு சிறிதும் நகராமலே உட்கார்ந்திருந்தாள். ‘சம்பகம்! இத்தனை நேரமாகியும் தூக்கம் கலையவில்லையா? சுனைக்கரையில் வருவாய் வருவாய் என்றிருந்தேன்’ என்ற நரேந்திரனின் வார்த்தைகள் அவளுடைய காதுகளிலே வந்து விழுந்தன. மெல்ல எழுந்து வெளியே வந்தாள். நெடுநேரம் மட்டும் நித்திரையின்றி சிவந்து வீங்கியிருந்த
74

அவள் கண்களைக் கண்டதும், "உனது உடம்புக்கு என்ன?” என்று கேட்டான். அதற்கு, “ஒன்றுமில்லை’ என்றாளே தவிர உள்ளத்தின் அதிர்ச்சிகளை மறைக்க முடியாமலே நடந்து கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் சுவாமிகளும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவராய் அப்பக்கத்திலே சென்று கொண்டிருந்தார்.
அன்றைக்கு நடுப்பகலாகிவிட்டது. சூரியன் தீப்பொறியை அள்ளி வீசிக் கொண்டு நின்றான். மலைப்பாறைகளும் பொரிந்து துள்ளி எழுந்து பறந்தன. பெரிய விருட்சங்களும் வாடிப் போய் நின்றன. எங்கும் நிலவிய நிசப்தத்தின் நடுவிலே அருவியொன்று சலசலத்து ஒடிக் கொண்டிருந்தது. நரேந்திரனும் அவளும் சுனைக் கருகிலே சரிந்து நின்ற ஒரு வேங்கை மரத்தின் கீழ் இருந்தார்கள். வார்த்தைகள் ஒன்று இரண்டாகவே ஒவ்வொருவர் வாயிலிருந்தும் கிளம்பிக் கொண்டிருந்தன. தான் அன்று கண்ட கனவைச் சொல்ல வேண்டு மென்ற ஆசை அவளைத் தூண்டியது. ஒரு முறை வாயெடுத்துவிட்டு ஏதோ பயந்தவள் போல மெளனமாக இருந்து விட்டாள். நரேந்திரன் அவளது முகத்திலே தோன்றிய மாறுபாட்டைக் கண்ட பிறகும் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான். “சுவாமிகள் அவசரமாகக் கிராமத்துக்கு போய்விட்டார். ஆனால் என்னிடமும் ஒன்றுமே சொல்லிக் கொள்ளவில்லை. என்னுடைய மனத்திலும் வாழ்விலும் ஏற்படுகின்ற மாறுபாட்டைக் கண்டு அவர் மனத்தில் வேதனை பிறந்துவிட்டதோ என்று பயமாக இருக்கிது. ஆனாலும் இதில் என்ன பிசகு? இதோ பார்! என் உள்ளத்தில் . “ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான். அப்போது அந்த வேங்கை மரத்தின் உச்சியிலே இருந்த ஒரு பட்சி பயங்கரமாக அலறிக்கொண்டு பறந்து சென்றது.
அவ்வளவில் அவன் வாயும் அடைத்துவிட்டது. ஏதோ சிந்தித்த படியே பல நாழிகை வரையிலும் அவர்கள் மெளனமாகவே இருந்து விட்டார்கள். அதன்பிறகே அவன் தன் எண்ணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவளும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே மலையடிவாரத்தை நோக்கிச் செல்லும் பாதையைப் பார்த்தாள். சுவாமிகள் வேகமாக வந்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. தலையை நிமிர்த்தினாள். அவனோ தூரத்திலே வானத்தைத் தொட்டுக்கொண்டு நின்ற மலையின் கொடுமுடியைப் பார்த்த படியே பேசிக்கொண்டிருந்தான். "சுவாமிகள் வந்து கொண்டிருக் கிறார்.” என்று அவள் சொன்னதும் பேச்சை நிறுத்தி விட்டான். “புறப்படு, ஆச்சிரமத்துக்குப் போவோம். இரவு பதினைந்து நாழிகைக்குச் சந்திக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு விரைவாக எழுந்து நடந்தான். அவளும் அச்சத்தோடு அவன் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்றாள்.
75

Page 40
பொழுது மேற்கே சாய்ந்து கொண்டிருந்தது. “நரேன்!” என்று கூப்பிட்டுவிட்டுச் சுவாமிகள் நடந்தார். அவன் சுவாமிகளைப் பின் தொடர்ந்தான். நாழிகைகள் கழிந்து கொண்டிருந்தன. ரவியும் மறைந்து விட்டான். இதுவரையிலும் சுவாமிகள் ஒன்றுமே பேசவில்லை. அவனோ வாய் திறக்காமலே அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய இருதயத்தின் அடியிலே என்றைக்கும் கேட்டிராத ஒரு பறையொலி கேட்டுக் கொண்டிருந் தது. அடிக்கடி எழுந்த பெருமூச்சுக்களை அடக்கி அடக்கி மெல்ல விட்டுக்கொண்டே நடந்தான். பிறகும் வெகு நேரம் சென்று விட்டது. ஒருவருடைய உருவம் மற்றவருக்கு ஒரு நிழல் போலத் தெரிகிற அளவிற்கு உலகம் இருண்டு விட்டது. சுவாமிகள் திடீரென்று திரும்பி ஆச்சிரமத்தை நோக்கி நடந்தார். இப்பொழுது அந்த நடையிலே ஒரு வேகமும் கடினமும் கலந்திருந்தன.
“நரேன்! எனக்குப் பிறகு ஆச்சிரமப் பொறுப்புக்களை உன்னிடமே ஒப்படைக்கலாம் என்று எண்ணியிருந்து விட்டேன்” என்று சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார். அடுத்த கணம் அவருடைய சிரிப்பு மறைந்து விட்டது. ஆனால் அவர் முகத்தில் படர்ந்திருந்த கோரமான சாயையை அவனுக்குத் தெரியவிடாமல் இருள் மறைத்துவிட்டது. நரேந்திரன் கலங்கிப் போய் அவர் பின்னாலே ஒடிக் கொண்டிருந் தான். அவரோடு பேச வேண்டுமென்ற எண்ணம் லவலேசமும் அவனுக்கு இல்லை. அதற்குள் அவர் தமது இருக்கைக்குச் சென்று விட்டார்.
நரேந்திரன் தனியாகவே நின்றான். அந்த இருளிலே வெகு நேரம் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தான். பிறகு உடம்பிலே சோர்வு பிறந்துவிட்டது. போய்ப் படுத்தான். நித்திரையே வரவில்லை. சுவாமிகள் கோபத்தை அந்தச் சில வார்த்தைகளே வெளிப்படுத்திவிட்டன என்பதை அவன் மறந்து விடவில்லை. கோபத்தின் வேகத்தாற் பொலிகின்ற ரெளத்திராகாரமான சுவாமி களது ரூபத்தை அவன் மனம் கற்பனை செய்து பார்த்தது. உடனே உலகமே இடிந்து போவதுபோல் கலங்கினான். இதற்கிடையில் “வருகின்றேன்’ என்று அவளிடம் சொன்ன வார்த்தைகளையும் அவனால் நினைக்க முடியவில்லை. உள்ளத்திலேயே ஏங்கிக் கொண்டிருந்த புலமையின் ஜீவநாடி அறும்போது கவி எப்படி நினைப்பின்றி இருப்பானோ அப்படியே நரேந்திரனும் இருந்து விட்டான்.
வெகுநாட்களுக்குப் பிறகே அவளுடைய கண்களை ஆழ்ந்த ஒரு சுகநித்திரை அணைத்து மகிழச் செய்தது. "மற்றவர்களது அழிவுக்குக் காரணமாகவே என்னைக் கடவுள் படைத்திருக்கிறார்” என்று அவள்
76

மனத்தில் அழியாமல் இருந்த எண்ணமும் அந்த மெளன சுகத்திலே மறைந்து விட்டது. நடுநிசிவரையும் அப்படியே துயில் கொண்டிருப் பாள். அதற்குள் நரேந்திரன் உள்ளே நுழைந்தான். அவனுடைய கால் ஒசையைக் கேட்டு எழுந்தவள் “எதற்காக இங்கே வந்தாய்?" என்றே கேட்டாள். அவன் வாய் திறவாமலே நின்றான். "சம்பகம் ஆச்சிரமத் தைக் கெடுத்து அழித்துவிடப் போகிறாய்” என்று சுவாமிகளின் கோபக் குரல் வெளியிலிருந்து கேட்பது போல உணர்ந்தாள். உள்ளே மங்கி எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கும் அணைந்து விட்டது. சிறிது நேரத்திற்குள் வேங்கை ஒன்று அந்தப் பக்கத்தால் உறுமிக் கொண்டு ஒடுகிற பயங்கர ஓசை கேட்டது. எங்கும் நிறைந்த அந்தகாரத்துக்குள்ளே நரேந்திரன் குருடன் போல அவளைத் தேடித் தேடி அலைந்துகொண்டிருந்தான்.
கலைமகள்
77

Page 41
இரண்டு ஊர்வலங்கள்
மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த சமயத்திலும் விதி அவளுடைய படுக்கையை அந்த அரச மரத்தடியில் இருந்து மாற்றி வைக்க விரும்பவில்லை என்றே சொல்லவேண்டும். அவளுக்குப் பக்கத்தில் ஸ்வாமி மட்டும் உட்கார்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் ஒரு கிழவன் விழுந்து கிடந்தான். மற்றவர்களை அங்கே காண வில்லை. ஒருவேளை பிரக்ஞையற்றுக் கிடக்கும் அந்தப் பெண் திடீரென்று எழுந்து பேசுவாள் என்று எண்ணினான் போலும்!
இப்படியாகிவிடும் என்று அவன் கனவிலும் எண்ணியிருக்க வில்லை. சாயந்தரம் எல்லாம் படுத்தபடியே கிடந்தாளேனும் நன்றாகப் பேசினாள். அப்படி வெகுநேரமாக அவளுடன் பேசிக் கொண்டு இருந்துவிட்டு இன்றைக்குக் கொஞ்சம் கஞ்சி வைத்து கொடுக்கட்டுமா என்று கேட்டுக்கொண்டே எங்கோ ஒடிப்போய், கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்தான். அப்பொழுதும் அயர்ந்து கிடப்பதுபோலவே அவள் காணப்பட்டாள். ஆனால் கஞ்சியை வைத்துக் கொண்டு எழுப்பிப் பார்த்தபொழுதோ ..!
வழக்கம் போல அங்கே வந்து விழுந்து கிடக்கும் மற்றப் பிச்சைக் காரர்கள் எல்லோரும் அன்று அந்நகரத்துப் பிரபு ஒருவருடைய பெண்ணின் கல்யாண வைபவத்தைப் பார்க்கப் போய்விட்டார்கள். எல்லா ஜனங்களுக்குமே அது ஒரு ஆனந்தமான சம்பவமாக இருக்கும்பொழுது, சாதாரணமான அந்த ஏழைகளுடைய நிலை யைச் சொல்ல வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து கொட்டகைகள் போட்டு அலங்காரங்கள் செய்திருந் தார்கள். வாத்தியக்காரரும் மற்றும் வித்துவான்களும் பல தேசங்களி லிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார்கள். நண்பர்கள் என்றும், பந்துக்கள் என்றும் வந்து குவிந்த கும்பலே பார்ப்பதற்கு அதிசயமாக இருந்தது. இந்தக் காட்சிகளைப் பார்ப்பதைவிட்டு, இருள் சூழ்ந்த அந்த மரத்தடியிலே விழுந்து கிடக்க யார்தான் விரும்புவார்கள்? அல்லாமலும், அவள் சுகமாகக் கிடந்ததை நேராகப் பார்த்துவிட்டே
78

அவர்கள் மாலையில் அங்கே ஒடிச் சென்றார்கள். ஆனால், ஸ்வாமி யும் அந்தக் கிழவனும் அவளை விட்டுப் போக விரும்பவில்லை.
ஸ்வாமி கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இந்தக் கூட்டத்தார் களோடு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பெல்லாம் உணவுக்காகத் தேசாந்தரஞ் செல்லும் பறவைகள் போல எங்கெங்கோ சுற்றி அலைந்து கொண்டிருந்தான். அப்பொழுது நிரந்தரமாகச் சில மாதங் களுக்கேனும் அவன் ஒரு இடத்தில் நிலைத்து இருந்ததில்லை. இங்கு வந்த பிறகே இயல்பான அவனுடைய பழக்கம் மாறியது. உயர்ந்த அந்தஸ்துக்களில் இருந்து கொண்டு வாழுகிற மனிதர்களை விட இந்தக் கூட்டத்தவர்களிடம் அமைந்திருந்த அற்புதமான இயல்பு களே அப்படி அவனை ஓட விடாமல் தடுத்து வைத்திருந்ததென்று சொல்ல வேண்டும்.
காலையிலே அவர்கள் இந்த இடத்தை விட்டுத் தனித்தனியாக ஒவ்வொரு திசையால் போவார்கள். மாலைக் காலமானதும் திரும்பி வந்து கூடுவார்கள். எல்லோரும் வந்து சேர்ந்ததும், இன்றைக்கு யாராவது வயிற்றுக்கு கிடைக்காமல் வந்தீர்களா என்று விசாரித்து, வைத்திருக்கிறவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவார்கள். பிறகு எல்லோருமே சேர்ந்து கொண்டு தங்கள் துன்பங்களை மறந்து சிறு குழந்தைகள் போல விளையாடுவார்கள், பாடுவார்கள். இந்தச் சமயங்களிலெல்லாம் அவள் எல்லோருடைய கண்களின் முன்பும் நிற்பாள். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் மற்றவர்களை வசீகரித்து ஒரு புதுமையின் சுகத்தில் ஆழ்த்திவிடும். அவளுக்கு யாரிடமும் வித்தியாசம் பாராட்டி நடக்கவும் தெரியாது. எல்லை யற்ற இருட்கடலிலே தோன்றிய லட்சிய தீபம் போலவும், பரந்த பாலைவனத்தின் நடுவிலே கிடந்த அமிர்தமயமான தடாகம் போலவும் அவர்களது ஆழ்ந்த துயரநிலையில் அவள் ஒரு தன்னம்பிக்கையை உண்டுபண்ணிக் கொண்டிருந்தாள். அதாவது, வாழ்விலே சிரித்துப் பழக்கமில்லாத அந்த ஏழைகளை அவளுடைய ஒவ்வொரு செய்கையும் தங்களை மறந்து ஆரவாரம் செய்யும்படி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தது. சில சமயங்களில் அவள் ஒரு 'தர்பார்” நடத்துவதுண்டு. ஸ்வாமி முதன்முதலில் அங்கே வந்த அன்றைக்கும் அது நடந்தது. எல்லோரும் அவளைச் சுற்றி உட்கார்ந்தார்கள். அவளுடைய கண்கள் நாலா பக்கமும் ஒருமுறை சுற்றி வந்தன. புதிதாக அன்றைக்கே வந்து சேர்ந்த ஸ்வாமியைக் கண்டதும், “ஒகோ! நமது கூட்டத்துக்குள் உத்தரவில்லாமலே யாரோ ஒரு புதியவன் வந்து நுழைந்து விட்டதாகத் தெரிகிறதே! உடனே அந்த மனிதனைப் பிடித்து வந்து என் முன்னால் நிறுத்துங்கள்” என்ற கட்டளை பிறந்தது. ஸ்வாமி சிரிப்பை அடக்கிக்
79

Page 42
கொண்டு, “நானே வந்து விடுகிறேன்’ என்று சொல்லியபடி அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.
“வேண்டுமானால் உத்தரவில்லாமல் வந்து புகுந்த குற்றத்தை மன்னிக்கிறோம். ஆனால், மன்னிக்க முடியாத வேறொரு குற்றம் உண்டு!”
“புதியவனானாலும் கட்டளைப்படி நடக்க உத்தரவை எதிர்பார்க்கிறேன்.”
“நமது கூட்டத்துள் நுழைகிற எந்த ஆசாமியும் குறைந்த பட்சம் இரண்டு மூன்று கிழிசல் இல்லாத உடையை உடுத்திருக்கலாகாது. நீ அதற்கு மாறாக நடந்து விட்டாய் அல்லவா? ஏன் நீங்கள் சொல்லுங்கள். தண்டிக்காமல் விடலாமா?”
“விடமுடியாது, விடமுடியாது!’ என்று ஏக காலத்தில் பல குரல்கள் எழுந்து கேட்டன. அவ்வளவில் அவன், “உங்களுடைய சட்டம் தெரியாமல் இந்த அபராதத்தைச் செய்து விட்டேன். இதோ நானா கவே கிழித்து விடுகிறேனே" என்று சொல்லியபடி கிழிப்பதற்குத் துணியைப் பிடித்தான். உடனே, “மன்னித்துக் கொண்டோம், இனிமேல் இவ்விதமான பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்” என்ற தீர்ப்புக் கூறப்பட்டது.
அதோடு அன்றைய நியாய சபை கலைந்து விட்டது. பிறகும் வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஒவ்வொருவராக ஆங்கங்கே விழுந்து தூங்கி விட்டார்கள். ஸ்வாமி மட்டும் ஒரு புறத்தில் கிடந்து யோசித்துக் கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் என்றைக்குமே கண்டிராத ஒரு இன்பவெள்ளம் கரை புரண்டோடிக் கொண்டிருந்தது. அதனால் அன்று வெகுநேரத்தின் பிறகே அவனுக்கு நித்திரையும் வந்தது. தினமும் அவர்களுடைய வாழ்வு இப்படியே இருந்ததால், நாளைக்கு என்ற விசாரம் யாரிடமும் இருந்ததில்லை. உணவு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் ஒரே மாதிரியே சலனமற்ற நிலையில் காணப் பட்டார்கள். எந்த நிலையிலும் தங்களைத் தேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு வீரம், அவர்களது பிறப்புரிமையானது என்று கூடச் சொல்லலாம். எல்லோராலும் ஒதுக்கித் தள்ளப்பட்டபோதிலும், அவர்களிடம் தன்னம்பிக்கை இருந்தது. மானமற்ற ஈனப் பிச்சைத் தொழிலையே செய்தாலும், அவர்களே அந்த மானத்தின் உயர் நிலையாக இருந்தார்கள் எனலாம். வாழ்க்கையின் சுகங்களைக் கனவிலும் காணாமல் துன்பச் சுழல்களில் அடியுண்டும், நிமிர்ந்தும் நிற்கும் அவர்களைப் போன்ற மனிதரது மூச்சிலிருந்தே புது யுகத்தின் உயிர் தோன்றப் போகிறதல்லவா?
80

இந்த இடத்தில் ஏற்பட்ட கூட்டுறவை ஸ்வாமி தனக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகவே கருதினான். மற்றவர்களை விட அவனுக்கு உயர்ந்த ஒரு அந்தஸ்து கிடைத்தது. அதுவும் அவளுடைய கடாட்சத்தினாலேயே கிடைத்தது என்று சொல்ல வேண்டும். வாழ்க்கை என்னும் முள் நிறைந்த பாதையிலே காலமெல்லாம் நடந்ததில் சலிப்படைந்த அவனுக்கு அவள் ஒரு மருந்தாகவே விளங்கினாள். ஒரு நாள் அவர்களது சம்பாஷணைக்குள் இந்த பிச்சை எடுக்கிற தொழிலைப் பற்றிய பேச்சும் வந்தது. அப்போது அவள் தன் மனத்தில் வெகுகாலமாக வேரூன்றி இருந்த இந்த அபிப்பிராயத்தையும் சொன்னாள்.
“வெட்கமின்றி எல்லோரிடமும் யாசிக்கின்றோம். வயிற்றுக் கொடுமையினாலேயே கேட்கிறார்கள் என்று எண்ணாமல் ஜனங்கள் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். கடவுள் தந்த உடம்பு இருக்கும்போதாவது வேலை செய்து இந்த வயிற்றை நிரப்பக் கூடாதா என்று அடிக்கடி தோன்றுகிறது.”
சிறிது நேரம் வரை சும்மா இருந்துவிட்டே அவன் பதில் சொன்னான்.
"நீ சொன்னதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அது நல்லது தான். ஆனால். எல்லோருக்கும் வேலை கிடைப்பது, பிறகு வேலைக்குக் கூலி கிடைப்பது - இவையெல்லாம் எனக்குப் பெரிய பிரச்சனைகளாகவே தோன்றுகின்றன.”
அவள் இதைக் கேட்டதும் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு “நீங்களும் ஒரு பெரிய கோழை என்றே சொல்வேன், ஆனால் உங்களைப் பார்க்கும்போது அப்படிச் சொல்ல முடியவில்லை” என்றாள்.
"அநுபவம் இல்லாத ஒரு பெண் சொல்லக்கூடியதைத்தான் நீயும் சொல்கிறாய்."
“சரி, நான் இன்றையிலிருந்து அப்படியே செய்கின்றேன். ஆனால் fË.....”
“நானும் அப்படித்தான் செய்வேன்.” “அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” "அப்படியானால் நான் நெடுகிலுமே பிச்சைதான் எடுக்க வேண்டு மாக்கும்?
“எனக்குக் கிடைப்பதில் ஒரு பகுதியைக் கொடுக்கிறேனே!” அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் இதைக் கேட்டவுடன் கொஞ்சம் யோசித்துவிட்டே, “என்ன?’ என்று கேட்டாள்.
81

Page 43
"நான் வெகுகாலமாக கூலி வேலை செய்து சீவித்த ஒருவன் என்பதை நீ ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். முதலாளிகள் என்று இருக்கிறவர்கள், ஓயாமல் வேலை வாங்கிக் கொண்டும், அதற்குரிய சம்பளத்தை கொடுப்பார்களா? மனிதனிடம் நியாயப் படி கொடுக்கிற மனம் இருந்தால் ஒருவனும் கோடீஸ்வரனாய் வந்திருக்க முடியாது. பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டிய ஒரு வேலையை, பத்துப் பணத்தோடு செய்கின்ற ஒருவனையே ஒவ்வொரு மனிதனும் தேடிக் கொண்டிருக்கிறான் என்பதை நீ அறிவாயா? அந்தக் காலத்தில் வேலை செய்து செய்து எலும்பாகி சாகிற நிலைக்கு வந்துவிட்டேன். பிறகு, வேலை செய்யவும் முடியாது போய்விடவே இந்தப் பிச்சை எடுக்கிற தொழிலில் இறங்கினேன். என்னுடைய இந்த அநுபவத்தைக் கொண்டே நீ செய்ய வேண்டாம் என்று தடுத்தேன். உன்னாலும் அப்படிப் பாடு LJL-(LDL9-L117gis.”
“எப்படியிருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றுக்கு தாங்கள் தானே பாடுபட்டுத் தீர வேண்டும்?
"உண்மைதான். ஆனால், ஒரு குழந்தை தன் சாப்பாட்டிற்கு சம்பாதித்தேயாகவேண்டும் என்று அதன் தாய் எவ்வளவு ஏழை யானாலும் - விரும்புவாளா?”
அவளுக்கு இந்த வார்த்தைகள் ஒரு வித இன்பம் கலந்த மயக்கத்தையே உண்டுபண்ணின. ஆயினும் சாதுரியமாக பதில் சொன்னாள்.
"தானே பாடுபட்டுக் கொடுக்கும் பருவம் வந்தபிறகும், வாழ்க்கை யிலே அடிபட்டுச் சோர்ந்து போன ஒரு தாயிடம் எதிர்பார்ப்பது எந்தப் பிள்ளைக்கும் ஏற்றதல்ல. அல்லாமலும், தன் குழந்தைக்கு சம்பாதிக்கத்தக்க பருவம் வந்தபிறகும், அடைத்து வைக்கிற ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கே பெரிய தீமை செய்தவளா கிறாள்."
“நியாயம் வேறு, தாயினுடைய உள்ளம் வேறு. அது சட்டங் களுக்குள் கட்டுப்படக்கூடியதுமல்ல.”
மேலே அவளால் ஒன்றுமே பேச முடியவில்லை. உண்மையான அன்பு கனிந்த அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதிலே கூட அவள் ஆனந்தமடைந்தாள். இதுவரை காணாத ஒன்றைக் கண்டதுபோல அவளுடைய உள்ளம் உள்ளே குமுறிக் கொண்டிருந்தது. பாவம் அவளுக்குத் தன் தாயின் அன்புகூட இப்படித்தான் இருக்கும் என்று தெரியாது. அதனாலேதான் புதிதாகக் கிடைத்த அந்த இனிமை அவளுக்கு அமிர்தமாகவே தெரிந்தது.
82

அவனும் உள்ளபடி ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்துகொண்டே தன் உள்ளத்தைக் காட்டினான். ஆயினும் அது இன்ன பாதையிலேதான் ஒடிவருகிறதென்று அவளால் நிதானிக்க முடியவில்லை.
இயற்கையிலே துள்ளி விளையாடும் சிறுவர்கள் போன்ற அவளுடைய சுபாவம் நாளடைவில் அடங்கிவிட, ஒருவித அமைதி யான நிலை தானாகவே தோன்றி நிலைத்துவிட்டது. அவளிடத்துத் தோன்றிய இந்த மாறுதல் மற்றவர்க்குக் கூட ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அந்தக் கிழவன் மட்டும் "அம்மா நீ அவனோடு சுகமாக வாழ்வதைப் பார்த்துவிட்டுத்தான் நான் சாகவேண்டும்’ என்று அடிக்கடி வெளியாகத் திறந்து சொல்லுவான். முதலில் "தாத்தா! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?’ என்று கேட்டவள் வரவரச் சிரித்து மெளனமானாள். நியாயமின்றி மற்றவர்கள் இப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிந்திருந்தும், அதை வரவேற்பதற்குத் தயாராகவே அவளுடைய நெஞ்சு திருந்திவிட்டது. ஆனால் ..? காலக்காற்று திடீரென்று வேறு திசைநோக்கி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது. ஒரு காரணமுமின்றி அவளுக்கு ஏதோ ஒன்று சொல்ல முடியாதபடி வந்து விட்டது. இத்தனை நாளும் வெயிலென் றும், மழையென்றும் பாராமல் அலைந்தபோது கூட வராத அந்த வருத்தம் ஒருவன் பக்குவஞ் செய்ய வந்த பிறகே எங்கிருந்தோ ஒடி வந்து பிடித்துக் கொண்டது. அன்று, சாயந்திரம் அவன் அரிசிக்காகப் போகும் வரைக்கும் செளக்கியமாகத்தானே இருந்தாள் படுத்தபடி கிடந்த போதிலும் வேடிக்கையாகப் பேசினாள். சிரித்தாள். "கஞ்சி வைத்துத் தரட்டுமா” என்று கேட்டபோது, "இந்த நேரத்தில் எங்கே அரிசி கிடைக்கப் போகிறது’ என்று அவனுக்காகத் தன் அனுதாபத்தைக்கூடத் தெரிவித்தாளே! இப்போதா.
பிரக்ஞையற்றுக் கிடக்கும் அந்தப் பேதையின் தலையைத் தன் மடியில் வைத்தபடியே அவனும் உணர்ச்சியற்ற நிலையிலேயே உட்கார்ந்திருந்தான். அப்பொழுதுதான் ஒவ்வொருவராக அவர் களது கூட்டத்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். வெளியில் நிறைந்திருந்த இருளின் எதிரொலி போல எல்லோருடைய இதயங் களும் பயங்கரமாக இருண்டு கிடந்தன. ஆனால், அந்த இருளின் கோரமான சிரிப்புப் போலவே தூரத்தில் வந்து கொண்டிருந்த கல்யாண ஊர்வலத்தில் தீபங்கள் பிரகாசித்தன. வாத்தியங்களின் ஒசையும் சனங்களின் ஆரவாரமும் ஒன்றாகி, விதி தூரத்தில் நின்று கொண்டு தன் வாயைத் திறந்து ஊளையிடுவது போலவே கேட்டது. மூச்சு நின்ற பிறகும் அவளுடைய உடலைத் தன் மடியிலிருந்து இறக்கி வைக்க விரும்பாதவன் போலவே ஸ்வாமி விறைத்துப்
83

Page 44
போயிருந்தான். அவனுடைய கண்களிலிருந்து ஆறாக ஒடிய நீர் உயிரற்ற அவள் முகத்தின் வழியாக ஓடிக் கொண்டிருந்தது.
கல்யாண ஊர்வலம் அந்த மரத்தடிக்குச் சற்றுத் தொலைவில் வந்ததும், திடீரென்று ஒரு பரபரப்பு உண்டாகிவிட்டது. எல்லோரும் நின்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒரே யொரு மனிதன் மட்டும் அந்த இடத்தை நோக்கி வந்தான். அவனுடைய உடம்பு ஆத்திரத்தினால் ஆடிக் கொண்டிருந்தது. அந்த மங்கிய மர நிழலிலே கூடத் தெரிந்தது. வார்த்தைகளும் துடித்துக் கொண்டே வெளிவந்தன. ஆனால் எட்டி நின்று பேசினான்.
“யாரெடா அங்கே! ஊர்வலம் வருவது தெரியவில்லையா? எப்படித் தெரியும்! எந்த நாயின் பிணத்தை வைத்துக் கொண்டு வழியிலே அபசகுனம் மாதிரி நிற்கிறீர்கள்? எல்லோருக்கும் அந்தக் கதி வருமுன் ஒடிப் போகிறீர்களா? அல்லது .”
ஸ்வாமி அப்படி இரைந்துகொண்டு நின்ற அந்த மிருகத்தின் பக்கமாக ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் உயிரினுமினிய அவளது உடலைத் தூக்கித் தோள் மீது வைத்துக் கொண்டு ஏதோ ஒரு திசையை நோக்கி நடந்தான். அவனைச் சேர்ந்த மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக அவனைத் தொடர்ந்து நடந்தார்கள்.
அந்த உயர்வான மனித ஜாதியின் ஆடம்பரமான கல்யாண ஊர்வலம் நகரத் தொடங்கியபோது, அவர்களால் ஒதுக்கித் தள்ளப் பட்ட அந்த ஏழை மனிதர்களின் அபசகுனமான மரண ஊர்வலமும் இருளோடு ஐக்கியப்பட்டு மறைந்து விட்டது.
ஒருவேளை நவயுகத்தை சிருஷ்டிக்க எண்ணிய விதியின் ஆரம்ப ஊர்வலங்களாகவும் இவை இருக்கலாமல்லவா?
மறுமலர்ச்சி, 1948
84

96 of
எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்?
"நானா? "இல்லை, எப்போது உன்னை வெளியே தள்ளி விட்டார்கள்? “நேற்று” “இது தான் உனக்கு முதல் பிரசவமா?”
"ஆமாம், இதுவே முதலும் கடைசியுமென்று எண்ணுகிறேன்’ பெரியவள் சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிறாய்?
“இதுவே முதலும் கடைசியுமாக இருக்கலாமென்றாயே, அதை எப்படி உன்னால் சொல்லிவிட முடியும்?”
“ஏன் முடியாது?”
அவ்வளவோடு நிறுத்தி விட்டு அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். மற்றவள் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்தாள்.
“உனக்கு இப்பொழுது என்ன வயசு?”
“பதினெட்டு”
“புருஷன் உன்னை விட்டுவிட்டானா?”
“செத்துப்போனானா?”
《莎 ல்லை’
அவளுடைய தொண்டை கரகரத்தது.
"அப்படியானால்?”
85

Page 45
அவள் ஒன்றுமே பேசாமல் மெளனமாக இருந்தாள். மற்றவள் அவ்வளவில் நிறுத்திவிட விரும்பவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தாள்.
“ஏன் பேசுகிறாயில்லை? ஒருவேளை அவனையுனக்குத் தெரியா தாக்கும்!”
“என்னை அப்படிப் பிசகாக நீ எண்ணக்கூடாது” அவளுடைய வார்த்தைகளில் ஒருவித ரோசமும் ஆத்திரமும் கலந்து காணப்பட்டது.
மற்றவள்தான் இப்பொழுது பேச்சுற்றிருந்தாள். அவளே தொடர்ந்து பேசினாள்.
“அவரை எனக்கு நன்றாகத் தெரியும். பல வருஷங்களாகத் தெரியும். வருஷக்கணக்காக அந்த வீட்டிலேயே சீவித்திருக்கிறேன்.”
"அப்படியா?” அவள் பிறகு மெளனமாகி இரண்டொரு பெருமூச்சு மட்டும் விட்டாள்.
"உனது வாழ்வைக் கெடுத்தவன் எவனானாலும், அவனை அவர் என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லை?”
“பழக்கத்தினாலே சொல்லிவிட்டேன். உண்மையில் மரியாதை செய்ய வேண்டும் என்று நான் கனவிலும் எண்ணுவதேயில்லை”
“அவன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று நீ அறிவாயா?” "ஆமாம், நன்றாகத் தெரியும். ஆனால் நீ அதைக் கேட்காதே!” “ஏன் அதை மறைக்க வேண்டுமென்று விரும்புகிறாய்?” “அதனால் யாருக்குமே பிரயோசனம் கிடைக்காது? "நீ உனக்கு எப்படிப் பிரயோஜனம் அற்றவளோ, அப்படியே தான் எனக்கும் பிரயோஜனப்பட மாட்டாய் என்பதை நான் தெரிந்து கொண்டேன்."
“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நீ யார் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை."
'நீ புத்திசாலியானால் இதற்குள்ளாகத் தெரிந்திருக்க முடியும். இல்லாவிட்டாலும் என்னை நன்றாகக் கவனித்துப்பார்!”
அப்பொழுது அவள் மடியில் கிடந்த அந்தச் சிசு வீரிட்டழுதது. அதைப் பார்த்துக் கொண்டே பெரியவள் மீண்டும் சொன்னாள்.
“இதையாவது ஆஸ்பத்திரியில் விட்டுவரவேண்டும் என்று உனக்குப் படவில்லையே!”
86

“என்னுடையது என்று இது ஒன்று தானே இருக்கிறது. இதையும் இழந்துவிட்ட பிறகு நான் எதற்காக வாழவேண்டும்?”
"நான், அல்லது என்னைப் போன்ற எவளும் உன் மாதிரி எண்ணு வதில்லை."
அவள் இந்தப் புதுமாதிரியானவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வெயில் மரக்கிளைகளைக் கடந்து அவர்களைச் சுடத் தொடங்கியது. இரண்டு பேருமாகவே எழுந்து மரத்தடியிலே போய் உட்கார்ந்தார்கள். குழந்தை அந்த ஏழைத் தாயின் அணைப்பிலே பாலைக் குடித்தபடி அயர்ந்து கிடந்தது. அவர்களுடைய பேச்சு மேலும் தொடர்ந்து சென்றது. பெரியவளே பிறகும் ஆரம்பித்தாள்.
"உனக்கு வேறு யாரும் இல்லையா? இனி என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய்?”
“எங்கேயாவது வேலை செய்துதானே வயிற்றை வளர்க்க வேண்டும்."
“இந்தக் குழந்தையையும் வைத்துக்கொண்டு அப்படிச் செய்ய (ւpւգ-պւՈfr?”
பெரியவள் மிகுந்த பரிவுடனேயே இதைக் கேட்டாள். சிறிது நேரம்வரை அங்கே மெளனமே நிலைத்திருந்தது.
"உனக்குக் குழந்தைகள் இல்லையா?” இதற்கு ஒரு மாதிரியான தொனியிலே அந்தப் பெரியவள் பதில் சொன்னாள். பதிலும் மிகவும் சுருக்கமாகவே இருந்தது.
"இருக்கலாம்." இந்தப் பதில் அவளுக்குத் திகைப்பையே உண்டுபண்ணியது. அதனால் மறுபடியும் அவளே, “இருக்கலாம் என்றால் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே?’ என்று நிறுத்தினாள்.
"ஆமாம். அவைகள் எங்கோ இருக்கின்றன. ஒருவேளை இல்லைத் தானோ என்றும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது.”
"நீ சொல்லுவது வேறு உலகங்களுக்குப் பொருத்தமாக இருக்க லாம். ஆனால் நம்முடைய இந்த உலகம் இருக்கிறதே. இதற்கு முற்றிலும் பொருந்தாது. நானும் முதலில் உன் மாதிரியே தயங்கி னேன். கொஞ்சக் காலத்தின் பிறகே கேவலமான இந்த உலகத்தைப் பழிவாங்க வேண்டுமென்று முடிவு செய்துகொண்டு எல்லாவற்றை யும் உதறித் தள்ளினேன். என் ஆசை உண்மையில் நிறைவேறி விட்டது. பணம் படைத்த, மிருக இச்சை கொண்ட மனிதப்
87

Page 46
பிசாசுகள் தங்கள் இச்சைக்கு ஏழைகளாகிய எங்களைப் பலி எடுக்கிறார்கள். பிறகு பாவப் பெயரையும் சூட்டி உதைத்துத் தள்ளி விடுகிறார்கள். அந்த நிலையில் தாசி என்ற அவப்பெயரோடு அலைவதைத் தவிர வேறு வழியுண்டா? நீயே யோசித்துப்பார்! தாசியாக இருக்காமலே தாசி என்ற பெயர் கேட்ட ஒருத்தி ஏன் அந்தத் தொழிலில் இறங்கக்கூடாது? உண்மையில் உன்னுடைய கதையோடு சேர்த்து இதை யோசித்துப்பார். நான் சொல்வதில் எவ்வளவு சரி இருக்குமென்பதை உணர்வாய்!”
அவள் மெளனமாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். பெரியவள் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.
“மனிச உள்ளமே இல்லாத உலகத்தில் நீ மட்டும் எதற்காக அந்த உள்ளத்தை வைத்துக் கொண்டு அழவேண்டும்?”
குழந்தை திடீரென்று வீறிட்டு அழுதது. அதை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு மறுபடியும் பாலை ஊட்டினாள் அந்தத் தாய். அப்பொழுது எதைத்தான் கண்டாளோ, மற்றவளுடைய கண்ணும் கலங்கியது. ஒரு வேளை தன் குழந்தைகளினுடைய நினைப்புக்கள் தோன்ற அவள் உள்ளமும் அலறியிருக்கக்கூடும். சிறிது நேரம் வரை ஒருத்தரும் பேசவில்லை. வெயில் காய்ந்து கொண்டேயிருந்தது. முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு "சாப்பிட்டாயா?” என்று அந்தப் பெரியவளே மற்றவளைப் பார்த்துக் கேட்டாள்.
"நேற்றிரவுக்குப் பிறகு இல்லை.” “காலையிலிருந்து ஒன்றும் அகப்படவில்லையா?” ஒரு பதிலுமே கிடைக்கவில்லை. "நான் இன்று உனக்கு ஒரு விருந்து போடப் போகிறேன்” என்று மறுபடியும் அவள் தொடங்கினாள்.
உடனே, "எதற்காக அப்படி விரும்பினாய்?’ என்று கேட்டாள் அந்தப் புதிய தாய்.
“உன்னைப் போலவே ஒரு காலத்தில் நானும் தெருத்தெருவாக அலைந்திருக்கிறேன். இதைத்தான் காரணமாகச் சொல்ல முடியும். ஆனால் என்னோடு வந்து என்னைப் போலவே வாழ்க்கையை நடத்து என்று சொல்ல நான் விரும்பவில்லை. நீ மட்டும் விரும்பினால் தாராளமாக வரலாம். என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வழிகாட்டுவேன்."
பேச்சு முடிந்ததும் அவள் மெளனமாக இருந்தாள். மற்றவளும் சும்மா இருந்தாள்.
88

பேசினவளே மறுபடியும் தொடங்கினாள்:
"நேற்று வழக்கத்திற்கு மாறாக ஒருவன் நிறையப் பணம் தந்தான். அவனும் எங்கோ சூதில் அடித்துக் கொண்டு வந்ததுதானே..! அவ்வளவும் இங்கேதான் இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடப் போகிறேன்.”
அவள் பணத்தை எடுத்தாள். அதற்குள், “எனக்கு ஒரு ரூபா மட்டும் கொடுத்தாள் போதும்” என்றாள் மற்றவள்.
“எப்படி உனக்கு அதுபோதுமென்று எண்ணினாய்? “ஒரு தடவை நிறையச் சாப்பிட ஒரு ரூபா போதுமல்லவா? அவ்வளவுதான் இனி எனக்குத் தேவை என்று முடிவு செய்து விட்டேன்."
“நல்லது: உன்னுடைய எந்த முடிவுக்கும் குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை” என்று சொல்லிக்கொண்டே ஒரு ரூபாவை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு, “நான் போய் வரட்டுமா?’ என்று எழுந்தாள் அந்த பரோபகாரி.
குழந்தையை மடியிலே அணைத்து வைத்தபடியே நமஸ்கரித்து விட்டு, “கடவுளுடைய கணக்குப் புத்தகத்தில் உன்னைப்பற்றி நிச்சயமாக நன்றாகவே எழுதப்படும்” என்றாள் அந்த அபலை.
“அந்த கடவுள் செத்துப் போனான் என்ற கதை நீ இதுவரை கேட்டதில்லையாக்கும்!” என்று ஒரு மாதிரிச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவள் நடந்து மறைந்தாள்.
எங்கோ சாப்பாட்டை முடித்துக்கொண்டு மறுபடியும் அந்த மரத்தடிக்கே வந்து அவள் உட்கார்ந்தாள். அவளுடைய கண்கள் அடிக்கடி மேற்கே சரிந்து செல்லும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தன. அஸ்தமித்ததும் குழந்தையையும் ஏந்திக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். இளைத்து வலுவற்ற அந்த நடையிலும் அவளால் வேகமாக நடக்க முடிந்தது. நடுச்சாமம் ஆவதற்குள் தான் போக வேண்டிய - வெகுகாலம் பழகிய அந்த இடத்திற்குப் போய் விட்டாள். ஒரு நாள் எந்தத் தோட்டப் பக்கத்தால் எந்த நேரத்தில் வெளியேறினாளோ, அதே பாதையால் அதே நேரத்தில் உள்ளே நுழைந்தாள். வீட்டிலிருந்த எல்லோரும் நன்றாகத் தூங்கி விட்டார் கள். அங்கே படுத்துக்கிடந்த அவள் வளர்த்த நாய் மட்டும் ஒரு முறை உறுமிவிட்டு அடையாளம் கண்டு கொண்டு ஓடிவந்து வாலை ஆட்டிற்று. அதைத் தடவிக் கொடுத்துவிட்டு நடந்தாள். நாயும் பின்னாலே நடந்தது.
89

Page 47
அந்தப் பக்கத்தில் உள்ளே நுழைய ஒரு கதவு மட்டும் இருந்தது. சில சமயங்களில் அதையும் பூட்டி விடுவார்கள். அந்த நினைவு வந்ததும் மெல்ல அதில் கையை வைத்தாள். அது தானாகவே திறந்து வழிவிட்டது. நேராக உள்ளே சென்றாள். அவள் கால்கள் மாடி அறையை நோக்கி நடந்தன. அங்கே தான் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்த அந்த உத்தம பிரமச்சாரி தூங்குவது வழக்கம்.
ஒருமுறை அறையின் வாயிலுக்கு வந்ததும் அவள் உள்ளம் - உயிர் எல்லாம் கலங்கி நிலைக்கு வந்தன. பிறகு குழந்தையைத் தன் அணைப்பில் இருந்து எடுத்து முத்தமிட்டாள். அது மெல்ல முனகியது. அவள் கண்களிலிருந்து தாய்மையின் உதிரம் போல் கண்ணீர் பீறிக் கொண்டு வந்தது. ஆயினும் அவள் தைரியத்தை இழந்து விடவில்லை. தான் கிழித்து வைத்திருந்த பாதிப் புடவையை விரித்து குழந்தையைக் கீழே படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
திடீரென்று கதவு திறக்கப்பட்டது. “யாரது?” என்று கேட்க வாய் எடுத்தவன், அவளைக் கண்டதும் திகைப்படைந்து நிறுத்திக் கொண்டான்.
அதற்குள் அவள் திரும்பினாள். அவனோ அப்பொழுதும் பேச விரும்பாதவன் போலவே வாயடைத்து நின்றான். ஆனால் அவள் பேசினாள்.
"உனது மானத்தைக் காப்பாற்றவே ஒரு நாள் வெளியேறினேன். உன்னுடையது அதோ இருக்கிறது. உன் வீட்டிலிருந்த அடிமை ஒருத்தி பெற்றதானாலும் அது உனது சொத்து. ஏன் மறுக்கிறாயா?” அவன் அப்பொழுதும் மரமாகவே நின்றான். அவள் தலையை ஒருமுறைதூக்கி அவனைப் பார்த்துவிட்டு கீழே கிடந்த குழந்தையை யும் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவனை நடுங்கச் செய்யும் ஏதோ ஒரு சக்தி இருந்தது.
அவள் திரும்பி இரண்டு படி இறங்கிய பிறகே அவனால் பேச முடிந்தது. வந்த இரண்டொரு வார்த்தைகளும் கிணற்றினுள்ளே யிருந்து கேட்பது போலவே ஒலித்தன.
"நீயும் இங்கேயே இருக்கலாம்.” "நான் அதற்காக இந்த நேரத்தில் வரவில்லையே!” நிதானமாகவும் உறுதியாகவும் அவள் இதைச் சொல்லிவிட்டு நடந்தாள். அவளுடைய நடையிலும் ஒரு கம்பீரம் இருந்தது.
தோட்டத்தின் எல்லையைக் கடந்து தெருவுக்கு வரும்வரை அந்த நாயும் அவளுடன் சென்று திரும்பியது.
90

தெருவில் நின்று அந்த வீட்டை ஒரு முறை பார்த்தாள். குழந்தை யின் மிருதுவான கீச்சுக்குரல் மட்டும் கேட்டது. உடனே கைகளி னால் காதுகளை அடைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். அந்த நடை தனக்கே தெரியாத ஏதோ ஒரு உலகத்தை நோக்கி
நடக்கிறாள்’ என்பதையே காட்டிற்று.
மறுமலர்ச்சி, 1947.
91

Page 48
துரவு
நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்றஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த் திசையில் படுத்துக்கிடந்தன.
இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.
எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.
வாழுகிற மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசி யில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் செய்கிற இடம் அது. வேறு வகையில், அளவில், நிலையில், இன்பதுன்பங்களை மாறி மாறி அநுபவித்த தசை, நரம்பு, எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக்கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகி விட்டன.
ஒரு காலத்தில் யாரோ இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடொன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஒடுகிற, கனைக்கிற, சத்தங்கள், யானைகள் பிளிறுகிற பேரொலிகள் வெட்டு, குத்து, கொல்லு என்ற
92

இரக்கமற்ற குரல்கள், வேதனை தோய்ந்த மரண தாகத்தில் எழுகின்ற சோக மயமான ஒலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லு கிறார்கள்.
அது மயானம், இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானுஷ்யத்தின் சுவடுகள் தெரிந்தன.
பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுருண்டு வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீக் கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.
திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக் குரல்கள் எழுந்தன. கூகை ஒன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக்கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த் திராத அந்த ஏழைப் பறவைகள் செயலற்று ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், வெகுநேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக் குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.
நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி. சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.
பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறவியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புருஷனின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.
"குழந்தாய்!” என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார். இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார். “இங்கே எதைக் காண்கிறாய்.”
சிறிது தாமதித்தே பதில் வந்தது. “கால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன், சுவாமி.”
கேட்டவர் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, “இனிப் புறப்படுவோம்” என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதோ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழி விட்டது.
93

Page 49
கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று, "அப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.
"இப்பொழுது இல்லை, சுவாமி.”
՞լյցի ?99
“அதுவுமில்லை’
மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையில் ஒரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளும் தெரிந்தன.
அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். “இது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்?” என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகை தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன் புறத்திலே மரமொன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.
புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வைகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஒர் அணங்கு நிற்பதுபோல இருந்தது. பிரபஞ்சத் தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தேயே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.
அந்தச் சமயத்திலே தான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் தூண்டியது. சிறிது நேரம் வரை அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர், "அப்பனே, இவள் யார்?” என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள்
94

திரும்பி நின்று பேசினாள். "சுவாமி, தங்கள் வரம் பெற்றதனால் பெரும் பாக்கியசாலி ஆனவள் இவள்.”
அவர் மெளனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினாள்: "சுவாமி, ஏதோ புண்ணியவசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கி விட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?”
அவள் நிலத்தில் விழுந்து வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசிர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்பொழுது அவள் கண்கள் இருவரையும் மாறி மாறி மன்றாடின.
அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்துவிட்டு "உட்காருங்கள்” என்று வணங்கி நின்றாள். இருந்தவர் மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒரு முறை பார்த்தார். திடீரென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒரு வித வெறுப்பின் நிழல் படிந்தது.
அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பண்புடன் பேச ஆரம்பித்தாள்: "சுவாமி பாவிகளுக்கு ஒரு நாளும் விமோசனம் கிடைக்காதா?”
இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து "நீயும் உட்கார்” என்று ஒர் ஆசனத் தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒரு புறமாக ஒதுங்கி நின்றாள்.
பெரியவர் பேசினார். “தவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாதாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்”
“சுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந் துமா?”
இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது: “குழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனம் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளி விடுகிறது. குழந்தை நடக்கப் பழகும்போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறான் என்பதை நீ அறியாயா?”
“மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துவிட்டால்?” பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.
95

Page 50
அவர் ஒரு மாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார்: “குழந்தையின் மானிடத் தாய் அல்லவே லோகநாயகி.”
அவள் ஓடிவந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்தபடியே பின்னால் உட்கார்ந்திருந்தார்.
பிறகு அவள் பெரியவரையே பார்த்து, “சுவாமி, ஒரு பொழுதுக் காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்” என்று வேண்டிக் கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார்: "அப்பனே, எழுந்திரு; போகவேண்டும்”
ஒருவர் பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள். அவள் ஓடிவந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்து விட்டார்கள்.
எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும ஏன் இது? என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.
"அங்கே நுழைந்தாயே, அதனால்தான்’ இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல். "பாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள் அப்படி ஓர் ஆகாத பண்டமா? உள்ளே இருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பின்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன்போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன் னும் சில சமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்குரிய காரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.
அவர் முகத்தில் இலேசாக வியர்வை அரும்பியது. தமக்குள் பேசிக் கொண்டே நடந்தார். இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் எத்தனையோ வருஷங்கள் கழிந்து விட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினார். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றிலும் சித்தி இலேசாகக் கிட்டியது. இன்றோ இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடிமனத்தில் - எங்கோ ஒரு மூலையில் - என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.' ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம் போலவே பிரகாசத்துடன் விளங்கியது.
96

"குழந்தாய்!” அந்தக் குரலில் அன்பு அமுதாகி கடலாகிப் பொங்கி வழிந்தது. "சுவாமி!” என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர். “களைப்படைந்தாயோ என்று பார்த்தேன். அவ்வளவுதான்” மறுபடியும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். அவர் களுக்கு நடுவில் மெளனம் நிலைத்திருந்தது. கொஞ்சதூரம் சென்ற தும் தெருவின் ஒரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.
பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார்: “குழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?*
"ஆம்" என்று தலையசைத்தார் இளையவர். “இதுவும் ஒருவகையில் நம்மைப் பாதிக்கக்கூடிய பந்தம் தானே? இதை நீ உணரவில்லையா?”
மற்றவர் பதில் இன்றி மெளனத்தில் மூழ்கியிருந்தார். "உனக்குப் பக்குவ நிலை கைவந்துவிட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.”
இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவரே பேசினார்.
"அப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும். அல்லது இரண்டு பேருமே பெரிய நஷ்டத்தை அடைவோம்.”
இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.
"குழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசிர்வதிப்பானாக!” அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டு பல முறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.
தெருவில் இறங்கிய இளையவர் ஒரு முறை கூடத் திரும்பிப் பாரா மலே நடந்து கொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லா விட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.
97

Page 51
அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக் கொண்டு நின்ற பெரியவர் தாய் போல் மாறி, ஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே! என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனோ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.
இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதோ அருமையான பொக்கிஷங்கள் போல அவருக்கு இருந்தன. வெகுநேரம் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ ஆறுதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், இனி ஒரு போதும் சந்திக்க மாட்டேனா? என்ற கேள்வி எழுந்ததும் தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த் தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல் லாம் அந்த அடையாளங்கள் அழிந்து விடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோற்றியது.
இந்தப் பாசம் இவ்வளவுதூரம் என்னைப் பாதித்துவிட்டதே' என்ற ஏக்கமும் அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.
அன்றைக்கே, அவன் வந்தபோது இது வேண்டாம் மறுபடியும் கட்டுப்படாதே’ என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கெளரவிக்கவில்லை. "சுவாமி, எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ள முடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலை யிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?
அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்க வில்லை. தகித்துக் கொண்டிருந்த வெயில் கூட அவரை அவசரப் படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றார். பாரம் ஏறிய மன நிலையை அவரது முகம் எடுத்துக் காட்டியது.
வழியில் ஜனங்கள் போனார்கள். வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. இனி வேண்டாம் என்று சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டும் நடந்தார்.
வரவர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலே, காலையிலே தாம் எந்த வீட்டில் இருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்து விட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த
98

மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், 'சுவாமி, வாருங்கள்’ என்று வேண்டியவாறே அவள் ஓடிவந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.
மற்றவரைப் பிரிந்ததினால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்ல தணிவதுபோல அவருக்குப் பட்டது. அப்பொழுது அவள் பேசினாள். சுவாமி, எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவேயில்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.
அவர் உள்ளே புகுந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார். சுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே? அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள். ‘போ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்."
காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கி விட்டார். பிறகு அவர் கண் களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள்.
அம்மா, இது என்ன கோலம்? அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார். அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள். ‘சுவாமி, இவையெல்லாம் இனித் தங்களைச் சேர்ந்தவையே. விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்."
அவர் அதிர்ந்து போய் சோர்வடைந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.
அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.
கலைமகள், வைகாசி 1943.
99

Page 52
øVON
நெஞ்சில் இழுத்து அடக்கி வைத்திருந்த புகையைக் கக்கியபடியே கடை வாசலில் நின்றவன் அவனைப் பார்த்தான். அந்த மனிதனது கையில் கிடந்த சிகரெட்டிலிருந்து புகை கொடியாகக் கிளம்பி வளைந்து மறைந்துகொண்டிருந்தது. அவன் இவனைப் பார்த்த படியே சும்மா நின்றான். கடைக்காரனுடைய கண்கள் எதிரில் நின்ற இருவரையும் ஆராய்ந்தன.
அப்பொழுது இவன் அவனைக் கேட்டான். “என்ன, உனக்குச் சிகரெற்றா வேண்டும்?" அவன் பேசவில்லை.
கடைக்காரன் முழுக் கவனத்தையும் திருப்பி விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏன் பேசமாட்டேன் என்கிறாய்? சிகரெற் பற்றி உள்ளே குடை கிறது. இல்லையா?”
அப்போதும் அவன் மெளனம் கலையவில்லை. "தடிக்கழுதை” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு அந்த மனிதன் இரக்கமற்ற காரமான தன் பார்வையை அவன் மீது ஏற விட்டுக் கொண்டே அவ்விடத்தைவிட்டு நடக்க ஆரம்பித்தான். அதுவரைக் கும் சலனமின்றி நின்ற அவன் தன் கால்களையும் மெல்ல நகர்த்தி நடக்க முயன்றான்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக அந்தக் கடைக்காரன் அவனைப் பார்த்து, “ஒரு சிகரெற் தானே? நான் தருகிறேன்” என்றான்.
கடைக்காரன் கையில் சிகரெற்றுடன் எழுந்து நின்றான். அந்த சிகரெற்றையும் அதை வைத்திருந்தவனையும் ஒரு முறை பார்த்து விட்டு அவன் சொன்னான்.
“மன்னிக்க வேண்டும். எனக்கு இப்பொழுது வேண்டாம்”
100

கடைக்காரன் பிறகு மரியாதை விளங்கும்படி பேசினான். “கொஞ்சம் முன்புதானே கேட்டீர்கள். ஏன் மறுக்கிறீர்கள்? “எப்படியோ மனம் மாறிவிட்டது.” "அப்படியானால் பீடி கொடுக்கின்றேன்.” "அதுகூட வேண்டியதில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.” அவன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி நடந்தான். கடைக் காரனோ அவனை ஆச்சரியம் நிறைந்த கண்களால் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான்.
அந்தக் கடைக்குச் சற்றுத் தொலைவில் தெருவுக்கு மற்றப் பக்கத்தில் ஒரு பெரிய அரசமரம் நின்றது. அதைச் சுற்றி யாரோ மேடை கட்டி விட்டிருந்தார்கள். வெளியே கொளுத்திய வெயிலில் கொதிப்பைத் தாங்க முடியாமலோ, உள்ளே அடங்கி எரிந்து கொண் டிருந்த நெருப்பை அணைக்க விரும்பினதாலோ அவன் நேராகவே சென்று அந்த மரத்தடியில் இருந்த மேடையில் ஏறி உட்கார்ந்தான். காக்கை, குருவிகள் அதன் பழங்களைத் தின்றுவிட்டு அங்கும் இங்கு மாக எச்சம் இட்டிருந்தன. அவன் அதனைக் கவனிக்கவில்லை. புனித மான இடத்தில் மனத்திருப்தியோடு உட்கார்ந்திருப்பவன் போலவே கைகளை ஊன்றியபடி இருந்தான். அப்பொழுது தெருவின் மற்றத் திசையில் இருந்து ஒருவன் வந்து பக்கத்தில் அவனைப் பார்த்தபடி உட்கார்ந்தான். வந்தவனுக்கு அவனை நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவனை மற்றவனாற் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதனால் அவன் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்த அரசமரத்தின் இலைகளையும் கிளைகளையும் பார்த்துப் பார்த்து நேரத்தைக் கடத்தினான்.
சிறிது நேரம் கழிந்திருக்கும். அதற்குள் வந்த அந்த மனிதன் ஒரு மாதிரிக் கனைத்து அவனைத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டு, "நீ இப்பொழுது என்ன செய்கிறாய்?" என்று கேட்டான்.
அவனுக்கு இந்தக் கேள்வி ஏனோ எரிச்சலாக இருந்தது. அதனால் பேச்சை நிறுத்த விரும்பியவன் போல, “இதோ பார் உனக்கு முன்னால் இந்த அரசமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறேன்” என்று முடித்தான்.
மற்றவன் கோபிக்கிறதற்குப் பதிலாக மெல்லச் சிரித்துவிட்டு, "கடையிலிருந்து விலகி விட்டாயா?” என்று விஷயத்தில் இறங்கி னான்.
பிறகு அவன் பதில் சொன்னான். “நானாக விலகவில்லை, முதலாளியே போ’ என்று தள்ளிவிட்டான்.”
101

Page 53
"என்ன அப்படி நடந்தது?” "அவனுக்கு - அவன் தொழிலுக்கு நான் உதவாதவன்.” "அப்படி என்றால்?” “வியாபார பாத்திரத்தில் உண்மை பேசுவது பெரிய தப்பாகும். எனக்கு அந்த சாஸ்திரம் ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு என்னை அவனுக்கு எப்படி ஒத்துக் கொள்ளும்?”
"நானும் அதைத்தான் யோசிக்கிறேன்” சிறிது நேரம் வரை இரண்டு பேருமே பேசுவதை நிறுத்திவிட்டுச் சும்மா இருந்தார்கள். பிறகு மற்றவனே தொடங்கினான்.
"உண்மை பேசக்கூடாது என்ற அந்த சாஸ்திரத்தை இன்றைக்கு ஒத்துக் கொள்ள முடிகிறதா?
கொஞ்சம் தாமதித்து அவனிடமிருந்து பதில் கிடைத்தது. “ஒத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருந் தது.”
“இவ்வளவிலாவது தெரிந்து கொண்டாயே. இனி நீ தப்பி விட்டாய்.”
இரண்டு பேருடைய முகங்களிலுமே ஒருவித திருப்தி காணப் பட்டது. பிறகும் அவர்கள் சிறிது நேரம் வரை எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் மெல்ல அந்த மேடையின் மீது சரிந்து கண்ணயர்ந்து விட்டான்.
அவன் கண்விழித்த சமயம் பொழுது சாய்ந்து விட்டது. எங்கே போகலாம் என்ற எந்தவித நிதான நினைவுகளுமின்றி அவன் அதிலேயே எழுந்து உட்கார்ந்திருந்தான். அப்பொழுது எதிர்ப் பக்கத்தில் இருந்த அதே கடைக்காரன் கையைத் தட்டிக் கூப்பிட் டான். அலுப்பாக இருந்தபோதும் அந்த மனிதன் கூப்பிடுகிறானே என்று எண்ணிக்கொண்டு அவன் எழுந்து கிட்ட வந்தான்.
“பசியில்லையா?” என்று கேட்டான் அந்தக் கடைக்காரன். “சாப்பிடத்தான் வேண்டும். அதற்காகப் பசிக்குத் தனி மதிப்புக் கொடுக்க நான் விரும்பவில்லை.”
அவன் இப்படிச் சொல்லிவிட்டு அமைதியாகவே மெல்ல விலக ஆரம்பித்தான். அதற்குள் அந்தக் கடைக்காரன் (ட்றாயரை) இழுத்து ஒரு ரூபாயைக் கையில் எடுத்து நீட்டியபடி, “ஏனோ, கொடுக்க வேண்டுமென்று மனம் சொல்கிறது” என்றான்.
102

“சரி, நானும் வாங்கத்தான் போகிறேன். ஆனால் ஒரு நாளைக்குத் திருப்பிக் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்று சொல்லிவிட்டு அதை வாங்கிக் கொண்டு அவன் புறப்பட்டான்.
கடைக்காரன், அவன் சென்று திருப்பத்தில் மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டே நின்றுவிட்டு உள்ளே வந்தான்.
அவன் நடந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய மனம் தடுமாறி சிந்தனைகளில் கலங்கி மயக்கமடைந்தது.
“பொய்யா? என்னால் முடியாது. அதற்காக இந்த வயிற்று வளர்ப்பை உதறித்தள்ள நான் தயார்” என்று சொல்லிக் கொண்டே அன்றொரு நாள் படியை விட்டு தெருவில் இறங்கி கம்பீரமாக நடந்தேன். அப்பொழுது நாளைக்கு வேறொரு வழி பிறக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. வெளியேறியது வெளியேறியது தான். ஆனால் "மற்றொரு வழி என்றது கனவாகவே முடிந்தது. சே, பிசகாக நடந்து விட்டேன்’ என்பதை உணர வெகு நாட்கள் வேண்டியிருக்க வில்லை. அழக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்து போய் விட்டன. ஆனால் அப்போதெல்லாம் நான் அழுதுவிடவில்லை. அடக்கிக் கொண்டு இருக்க எப்படியோ பழகி விட்டேன். இடையில் வந்த இந்த மனிதன் அடடா! எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள்!
சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவன் எதிரிலே கண்ணில் பட்ட ஒரு ஹோட்டலுக்குள் புகுந்தான். பணத்தை நாளைக்கும் வைத்துக் கொண்டே செலவு செய்தான்.
இன்னும் ஒரு நாளைப் போக்கிவிடலாம் என்று திருப்தியோடு ஹோட்டலை விட்டு வெளியே வந்தான். மறுபடியும் அவன் நடக்க ஆரம்பித்தான். அப்பொழுது வெளியூரிலிருந்த ஒரு நண்பனுடைய ஞாபகம் அவனை ஆறுதல் செய்தது. உடனே, "இங்கே தான் நமக்கு என்ன உறவு? அவனிடம் போய்ப் பார்க்கலாமே” என்ற எண்ணம் உண்டானதும் ஸ்ரேசன் பக்கமாகத் திரும்பி நடந்தான். கையிலிருந்த பணம் பாதியளவிற்குக் கூடப் போதாது என்பது நன்றாகத் தெரிந்த பிறகும் அவன் நிற்காமலே சென்று கொண்டிருந்தான்.
"தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் டிக்கற் இல்லாமலே பிரயாணம் செய்கிறார்கள். நான் மட்டும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது? இதற்குள் எத்தனையோ கண்டாயிற்று. இதையும் பார்த்து விடலாம்."
ஸ்ரேசனுக்கு கிட்ட வந்ததும் தலையைத் தூக்கிப் பார்த்தான். நிறையக் கூட்டம் இருந்தது. “நல்லது” என்று மனத்தோடு சொல்லிக்
103

Page 54
கொண்டே ஆளோடு ஆளாக உள்ளே நுழைந்து விட்டான். ஏனோ வண்டிக்குள்ளேயும் பெரிய கூட்டம். மனிதர்கள் உயிரற்ற பொருள் கள் போல அடைந்து கிடந்தார்கள். ஆனாலும் அவன் வண்டி யினுள்ளே நுழைந்து தன்னைச் சுருட்டி மடக்கிக்கொண்டு ஒரு புறமாக நின்று மூச்சு விட்டான். இந்த அவதிக்கு நடுவில் டிக்கற் இல்லாமல் ஏறி விட்டேனே என்ற நினைவு கூட அவனுக்கு உண்டாகவில்லை.
வண்டி புறப்படப் போகிற சமயம் யாரோ ஒரு நல்ல ஜீவன் - எப்படியோ அடித்து நெருக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து இருக்க வேண்டும். நின்றவர்கள் கசங்கி அசைந்து நின்றார்கள். பக்கத்தில் நின்ற ஒருவன் அந்த உதைப்பில் தனது காலைப் பிடுங்கி மறுபடியும் ஊன்றினான். செருப்புக்கால் இவனுடைய காலில் இருந்தது. இவன் அழுவதற்குப் பதிலாக, "ஐயோ’ என்று இழுத்தான். தேய்ந்து ஆணிகள் தலை தூக்கிய அந்தச் செருப்புக் கால் அவனுடைய காலை எலும்போடு கசக்கிப் பிடுங்குவதுபோல அழுத்தியது. உடனே அவன் நுழைந்து குனிந்து தன் பலம் முழுவதையும் சேர்த்து அந்தச் செருப்புக் காலைப் பிடுங்கி அப்புறப்படுத்தினான். அப்போதுதான் அநேக கால்களுக்கு நடுவில் அவனுடைய கண்களுக்கு அகப்பட்டுக் கைக்குள் அது புகுந்து கொண்டது. மனத்தின் எல்லா எதிர்ப்புக்களை யும் உதறி எறிந்துவிட்டு அவன் அதை எடுத்து மடியில் புதைத்து வைத்துக் கொண்டான்.
“செருப்பைக் கையிலே எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாதா” என்று யாரோ அவனுக்காகப் பேசினார்கள். இத்தனை மிதி மிதித்த அந்த மனிதனைக் கடிந்து கொள்ள அவன் மட்டும் விரும்பவில்லை. மிதிபட்ட நினைவு கூட அவன் மனத்திலிருந்து மறைந்து விட்டது. பதிலுக்கு மற்றொரு வேதனை - கலக்கம் அவனைச் சோர்ந்து போகும் படி செய்து கொண்டிருந்தது. நிற்கமுடியாமல் எப்படியோ அவன் அதற்குள்ளே - அதிலேயே நின்று கொண்டிருந்தான். அவனுடைய மனம் கடைசியில் சமாதானம் சொல்லியது. "திருடவில்லை, கிடந்ததை எடுப்பதில் என்ன தவறு?” இவ்வளவில் சமாதானம் உண்டாகின்றபோதும் சமாதானத்தை உண்டுபண்ண அவன் மனத்தோடு போராடிக் கொண்டே நின்றான். அதற்குள் வண்டி இரண்டு மூன்று ஸ்ரேசன்களைக் கடந்து விட்டது. "இனி வண்டி நின்றதும் இறங்கிவிடவேண்டும்” என்று முடிவுக்கு திடீரென்று வந்து சேர்ந்தான். அதற்குள் அகப்படாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எதிர்பாராமலே அவனை ஆடச் செய்து விட்டது.
104

அடுத்த ஸ்ரேசனில் வண்டி நின்றதும் நினைத்தபடி இறங்கி வெளியே வந்து சேர்ந்தான். அவன் எதிர்பார்த்ததுபோல வண்டி யிலோ இறங்கிவரும்போதோ யாரும் அவனைச் சந்தேகிக்கவில்லை. ஆயினும் அவன் மடியிலே மறைந்து கிடந்த அவனுக்குச் சொந்த மில்லாத அந்தப் பணம் அவனை ஏதோ செய்து கொண்டிருந்தது. அது எவ்வளவு என்று கூட அவன் இன்னும் பார்க்கத் துணியவில்லை. மடியோடு ஒட்டி பரம இரகசியமாக அது கிடந்தது. இடையிடையே கையினால் மட்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
இடம் அவனுக்கு ஏதோ ஓர் அளவுக்கு தெரிந்ததாகவே இருந்தது. கடை விஷயமாக முன் இரண்டொரு தடவை வந்த ஞாபகம் மட்டும் இருந்தது. அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு தெருவில் வேகமாக நடந்தான். நேரம் அதிகமாகவில்லை. ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். கடைகளில் நிறையக் கூட்டம் இருந்தது.
அவன் எந்த இடத்திலும் நிற்கவில்லை. நடந்துகொண்டேயிருந் தான். வழியில் வந்த ஒரு பஸ் அவனுக்குக் கிட்ட வந்ததும் நின்றது. திரும்பிப் பார்த்துவிட்டு அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான். பஸ் புறப்பட்டு சிறிது நேரத்திற்குள் கண்டக்டர் வந்து “எதுவரைக்கும் டிக்கற்?” என்று கேட்டான்.
“ரேமினல்’
அவ்வளவோடு அவன் நிறுத்திக் கொண்டான். ஆனால் அந்த பஸ் எங்கே போகிறது - வழியில் எந்த இடங்கள் இருக்கின்றன என்ற ஒன்றுமே தெரியாத தன் நிலையை அவன் காட்டாமல் சமாளித்து விட்டான். பிறகு டிக்கற்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே புற்றினுள் கையை விடுவதுபோல மடியிலே இருந்து ஒரு நோட்டை இழுத்துப் பார்த்தான். இது ஒரு பத்து ரூபா நோட்டு. அதை வேதனை யோடு தான் கண்டக்டரிடம் நீட்டினான். கண்டக்டர் கொடுத்த சில்லறையை எண்ணிப் பாராமலே மறுபடியும் மடியிலே வைத்துக் கட்டிக் கொண்டான்.
பஸ் இரண்டு மூன்று ஊர்களைத் தாண்டி விட்டது. பிறகும் அதில் உட்கார்ந்து கொள்ள அவனால் முடியவில்லை. இனி எங்கே நின்றா லும் இறங்கி விடுவதே என எண்ணிக் கொண்டே உட்கார்ந்து இருந் தான். பஸ் அடுத்த ஊரில் நின்றது. உடனே அவனும் இறங்கினான்.
அதைப் பார்த்த கண்டக்டர் கேட்டான், “ஏனைய்யா பணத்தை வீணாக்கினாய்?” “இங்கே அவசிய வேலை இருக்கிறதை அப்போது மறந்து விட்டேன்."
105

Page 55
அவனுடைய பதில் கண்டக்டரைத் திருப்திப்படுத்தியது. ஆனால் உள்ளுக்குள்ளே கருக்கிக்கரைத்துக் கொண்டிருந்த அந்த இரகசியம் முகத்திலே தெரியாதபடி மறைக்க முடியாத நிலையிலே அவன் நடக்க ஆரம்பித்தான். தெருவில் நடமாட்டம் குறைந்து கொண்டி ருந்தது. “எங்கே போகிறேன்” என்ற நினைவு இல்லாமலே நடந்தவன் எதிரே ஒரு கோயிலைக் கண்டதும் அதன் வெளி மண்டபத்திலே போய் உட்கார்ந்தான். அதன் பிறகு வெகுநேரம் வரை சரிந்து படுக்க வேண்டும் என்ற தேவை அவனுக்கு வரவில்லை. ஆனாலும் கடைசி யில் ஒரு முறை படுத்தும் பார்த்தான். வேதனையாகத்தான் இருந்தது. உடனே எழுந்து உட்கார்ந்தான். அதுவும் முடியவில்லை. எழுந்து அங்கும் இங்குமாக உலாவினான். மனம் அடித்துக் கொண்டிருந்தது. “எதற்காக இதை எடுத்தேன்?” என்று தன்னைத்தானே கேட்டபடி நிழலான ஒரு மூலையிலே போய் உட்கார்ந்தான். நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. எழுந்து சென்று எதிரேயுள்ள திருக்குளத்தில் கால் முகங்களைக் கழுவிக் கொண்டு மறுபடியும் திரும்பி வந்து படுத்துப் பார்த்தான். கண்களை மூடிக் கொள்வதை விட திறந்து வைத்திருப் பதே ஆறுதலாகத் தெரிந்தது. ஆனாலும் கண்களை இறுக மூடிப் பார்த்தான். உலகமே இடிந்து தகர்ந்து விடுவது போல பயங்கரமான பல தோற்றங்கள் மாறி மாறி எழுந்து மறைந்தன.
பிறகு நன்றாக விழித்தபடியே எழுந்து உட்கார்ந்து கொண்டு தன்னையே கேட்டான்.
"ஐயோ, இழந்தவனுக்கு எப்படியிருக்கும்?” பதிலாக நீண்ட ஒரு பெருமூச்சே அவனுடைய நெஞ்சின் ஆழத்தி லிருந்து வெளிக் கிளம்பியது. நேரம் செல்லச் செல்ல வாய் விட்டு அழவேண்டும் போலவே அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் அப்படி அழவில்லை. கண்களிலிருந்து கண்ணிர் மட்டும் வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு யோசித்தான். பிறகு எங்கேயாவது ஒடலாமா என்று கூட ஆசைப்பட்டான்.
வேதனை உள்ளேயிருந்து கிழித்தது. பயம் மற்றொரு கோணத்தி லிருந்து குத்தியது. கடைசியில் மனத்தை எப்படியாவது திடப்படுத்த முயன்றான். நிகழ்ச்சிகளெல்லாம் குழம்பித் தடுமாற்றத்தை மயக்கத்தை வருவித்தன. “ஒரு வேளை நான் கனவு காண்கிறனோ?” என்று கூடச் சந்தேகப்பட்டான். கடைசியில் எழுந்து சென்று சந்நிதானத்திற்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு, “கடவுளே, என்னை சோதிக்காதே’ என்று வேண்டினான். அப்பொழுது மணி இரண்டு அடித்தது.
106

உட்கார்ந்திருந்தவன் திடீரென்று எழுந்து நின்றான். அடி மடியிலே மூடி மறைத்துக் கட்டி வைத்திருந்த - அவனை வதை செய்து கொண்டிருந்த - ஊர், பேர் தெரியாத யாரோ ஒருவனுக்குச் சொந்தமான அவ்வளவையும் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போய் உண்டியலுக்குள் திணித்தான். சில்லறையும் நோட்டுமாக இருந்த அவ்வளவும் அவனை விட்டு அகன்று விட்டன. சற்று விலகி நின்று வேஷ்டியை உதறி உடுத்துக் கொண்டான்.
“எப்பொழுது நித்திரையானேன்” என்பது அவனுக்கே தெரியாது. காலையில் அவனை யாரோ எழுப்பினார்கள். கண்களைத் திறந்து பார்த்தான்.
“எப்பொழுது இங்கே வந்தாய்?’ என்று கேட்டான் அவனைத் தட்டி எழுப்பியவன்.
அவன் பதிலுக்கு இப்படிக் கேட்டான்.
"நீ இங்கேதான் இருக்கிறாயா?” நின்றவன் குனிந்து அவன் கையைப் பிடித்துக்கொண்டு, “வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கொள்ளலாம். எழுந்திரு” என்று அழைத்தான்.
சந்நிதானத்தைக் கடக்கும் போது அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு நடந்தான்.
கலைச்செல்வி, 1959
107

Page 56
óyWrawf
மைதிலி வெகு நேரம் பேசிவிட்டாள். ஜனங்களோ அவளை வார்த்தைக்கு வார்த்தை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவளுடைய குரலும் வெண்கலம் போற் கணிர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது.
"யார் என்ன சொன்னாலும் மனச்சாட்சிக்கு விலை கொடுங்கள். மனச்சாட்சியை மறைக்க எண்ணும்போதுதான் மனிதன் தருமப் போர்வைக்குள் நுழையப் பார்க்கிறான். மகாபாதகங்களைச் செய் கிறவன்கூட தன் ஈனத்தனமான செய்கைகளுக்கெல்லாம் தருமம் பேசுகிறதை நீங்கள் கேட்கவில்லையா? இனி, சுயமாகச் சிந்திக்க விடாத எந்தத் தரும நூலையும் எரித்து விடுங்கள். நியாயத்துக்குப் புறம்பான அற்புத சாஸ்திரங்கள் நமக்கு வேண்டாம்.”
ஜனங்கள் கரகோஷஞ் செய்தார்கள். தன் நெற்றியில் அரும்பி வடிந்துகொண்டிருந்த வியர்வையைக் கைக்குட்டை ஒன்றினால் ஒற்றிக்கொண்டே அவள் திரும்பினாள். அவளுக்கு முன்னால் ஏதோ புரியாத தத்துவங்களைப்போல் உட்கார்ந்திருந்த அந்த இளைஞ னுடைய முகத்தில் இலேசாக ஒரு சிரிப்புத் தோன்றி மறைந்தது. அதை அவதானித்ததும் அவள் ஏனோ மருண்டு போனாள். ஆயினும் தன்னைச் சமாளித்துக் கொண்டு இப்படி ஆரம்பித்தாள்.
“மடமைகள் நிறைந்த பழமை என்ற கட்டுப்பாடுகளுக்குள் ஊறிப் போனவர்கள் - அவர்கள் எத்தனைநூல்கள் நெட்டுருப் பண்ணினவர் களானாலும் - எத்தனை பட்டங்களைச் சுமந்து கொண்டவர்கள் என்றாலும் - அவர்களுடைய வார்த்தைகளுக்கு விலை வைக்க முடியாது. பிற்போக்கான அந்த மனிதர்களுடைய போதனைகள் நம்மை வெகுநேரம் ஆழத்தில் தள்ளிவிடக்கூடும். இதை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.”
ஜனங்கள் உணர்ச்சியோடு கை கொட்டினார்கள். பேச்சுத் தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது.
108

“நமது வாழ்க்கை ஏமாற்றங்களுக்கு நடுவில் அகப்பட்டுக்கிடந்து இழுபடக்கூடாது. அது தன்னம்பிக்கையின் அணைப்பிலே எல்லாக் கட்டுப்பாடுகளையும் கடந்து கொண்டு சுதந்திரத்துடன் கம்பீரமாக நிமிர்ந்து நடக்க வேண்டும்.”
சபையோர் கைகொட்டக் கொஞ்சம் “லிவு” விட்டு அவள் முடிவுரையை ஆரம்பித்தாள்.
“கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். எதிர்கால உலகத்திற்கு இளைஞர்களே அஸ்திவாரமானவர்கள். புது யுகத்தின் மறுமலர்ச்சி அவர்களது உள்ளங்களிலேதான் ஊற்றெடுக்க வேண்டும். நைந்து போன பழமை என்னும் பிற்போக்குச் சக்தி எந்த ரூபத்தில் வந்தா லும் அதைத் தகர்த்துக்கொண்டு முன்னேறுவது அவர்களுடைய கடமையாகும். எதிர்கால உலகம் இளைஞர்களிடம் கேட்பதும் இதையேதான்.”
கரகோஷம் வானை முட்டி மெல்ல ஒய்ந்தது. மைதிலி நமஸ்காரம் சொல்லிவிட்டு உட்கார்ந்தாள். அவளது உள்ளம் வெற்றிப் பெரு மிதத்தில் மலர்ந்து குமுறியது. ஆயினும் அவள் கண்கள் பக்கத்தில் ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் அந்த இளைஞனை ஆராயத் தொடங் கின. அவனோ சிந்தனையிலாழ்ந்து நிலத்தையே பார்த்தபடி இருந் தான். எல்லோரும் கைகொட்டி முடிகிற சமயம் அவன் கைகளும் இரண்டொரு தரம் ஒன்றையொன்று முட்டி விலகின.
அவன் அப்படி அசட்டை செய்வதுபோல இருந்தது அவளுக்குப் பொறுக்கமுடியாத வேதனையைத் தந்தது. அதற்குள் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ஏதேதோ பேசிவிட்டு மைதிலி யைப் பற்றி ஒரு அத்தியாயம் புகழ்ந்து கொட்டினார். அதுகூட அந்த நிலையில் அவளுக்கு இனிக்கவில்லை. ஒரக் கண்ணால் அந்த இளைஞனைக் கவனித்தபடியே ஒரு புறத்தில் உட்கார்ந்திருந்தாள். தலைவர் உட்கார்ந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். அதற்குள் யாரோ ஒருவர் ஓடிவந்து அந்தத் தலைவருடைய காதோடு குனிந்து “சிவராமனைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே” என்று வருத்தப்பட்டார்.
"அவர் தன்னைப் பற்றி ஒன்றுமே பேசக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார்.” தலைவருடைய இந்தப் பதில் மைதிலியின் காதுக்கும் எட்டியது. உடனே அவள் மிகுந்த ஆச்சரியத்தோடு திரும்பினாள். அதற்குள் அவன் கூட்டத்துக்குள் கலந்து மறைந்து விட்டான்.
நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. பிரசங்கங்களைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகும்போதெல்லாம் மைதிலிக்கு சிவராமனைப் பற்றிய நினைவு வரத்தான் செய்தது. அவனை ஒரு முறையாவது
109

Page 57
சந்திக்க வேண்டும் என அவளுடைய மனம் ஆசைப்பட்டது. ஆயினும் அது கைகூடாமலே காலம் ஒடிக்கொண்டிருந்தது.
அன்று, அவள் சமுத்திரக் கரைக்குத் தனியாகவே வந்தாள். அவளுடைய மனமோ சமீபத்தில் பேசவேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. மாலையின் தங்க ஒளி, பரந்து கிடந்த வெள்ளி மணலையும் நீர்ப்பரப்பையும் முத்தமிட்டு ஸ்வர்க்கத்தை ஞாபகப்படுத்துவது போல் இருந்தது. ஜனங்கள் கூட்டங் கூட்டமாக அங்கும் இங்கும் இருந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
மைதிலி, அலைகள் கழுவிவிட்ட புது மணல்மீது நடந்தாள். குளிர்ந்த காற்றும் ஈரமணலும் அவளை இன்னும் நட என்று தூண்டிக் கொண்டிருந்தன. அதனால் ஜன நடமாட்டம் குறைவான எல்லை வந்த பின்னும் அவள் திரும்பாமல் நடந்து கொண்டே யிருந்தாள்.
அந்த ஒதுக்கிலேதான் சிவராமன் தன்னை மறந்த நிலையில் உட்கார்ந்திருந்தான். நீலக்கடலையும் பரந்து கிடந்து பொன் வானத்தையுங் கூட அவன் கண்கள் பார்க்க விரும்பாதவை போல நிலத்தையே நோக்கியபடியிருந்தன.
அவனிருந்த அந்த நிலை அவளுக்கு வேதனையே உண்டுபண்ணி யது. ‘வாழ்வில் மனமுடைந்து சாந்தியைத் தேடுகிறாரோ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு மெல்ல மெல்ல நடந்துசென்று அவன் எதிரே போய் நின்றாள். திடீரென்று ஒரு பெண் தன் முன்னே வந்து நின்றதும் அவன் தடுமாறி எழுந்துவிட்டான்.
மைதிலி மெல்லச் சிரித்துக் கொண்டே, “என்னை ஞாபகமிருக் கிறதா?” என்று கேட்டாள்.
அவன் மெளனமாகவே நின்று ஆம்’ என்று தலையை அசைத்தான். சிறிது நேரம் வரை இரண்டு பேருமே பேச முடியாதவர்களாகி நின்றார்கள். பிறகு அவள் எப்படியோ ஆரம்பித்தாள்.
“உங்களுடைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு இடையூறு பண்ணி விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்.”
அவன் ஒரு மாதிரித் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு "அப்படி ஒன்றையுமே நீங்கள் செய்துவிடவில்லை” என்றான்.
அவளுக்கு மேலும் பேசவேண்டிய தேவையிருந்தது. ஆனாலும் பேச்சு வரவில்லை. சபையிற் பிரசங்கஞ் செய்வது போல இது அவ்வளவு சுலபமாகவும் தெரியவில்லை. அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டே சும்மா நின்றாள்.

அப்போது அவன் பேசினான்.
தனியாக இங்கே வந்து நிற்கிறீர்களே?” கேட்டபிறகுதான் எதற்காக இப்படிச் செய்தேன் என்று அவன் தன்னைத்தான் நொந்து கொண்டான். அதற்குள் அவள் “நீங்களுந் தான் தனியாக வந்து நிற்கிறீர்கள். நான் மட்டும் ஏன் அப்படிச் செய்யக்கூடாது?’ என்று கேட்டாள்.
சிவராமன் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளுக்குப் பழைய நினைவு களைக் கிளறிவிட்டது. உடனே அவள் வேதனை கலந்த குரலில் “நீங்கள் பெண்ணுலகத்தையே கேலி செய்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் இப்படி நடந்துகொள்வது உண்மையில் வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.” என்று சொல்லி நிறுத்தினாள்.
அவன் சாந்தமாகவும் நிதானமாகவும் பேசினான். "நான் இதுவரை யாரையுமே கேலி செய்ய எண்ணியதுமில்லை. ஆயினும் என்னை யறியாமலே தவறு நேர்ந்திருக்கலாம். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.”
மைதிலி பேச்சற்று நின்றாள். பந்தங்களினின்றும் மெல்ல மெல்ல விடுபடுவது போன்ற ஓர் இன்ப உணர்ச்சி அவளைப் பரவசப் படுத்திக் கொண்டிருந்தது. சிறிது பொறுத்து “என்னை மன்னிக்க வேண்டும்” என்று தாழ்மையோடு கேட்டாள்.
"நீங்கள் ஏதாவது பிழை செய்தீர்களா? அப்படியானால் நான் உங்கள் மீது சுமத்திய பழி நியாயமானது என்றாகிவிடும். இல்லையா?”
அவளோடு சேர்ந்து சிவராமனுமே சிரித்தான். பிறகு “உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என இருந்தேன் கேட்கலாமா?’ என்று மைதிலி நிறுத்தினாள்.
‘நன்றாகக் கேளுங்கள்” என்றான் சிவராமன். “உபயோகமான உங்கள் சக்திகளையெல்லாம் அடக்கி வைத்துக் கொண்டு ஏன் ஒதுங்கி வாழுகிறீர்கள்? எனக்கு உண்மை சொல்ல வேண்டும்.”
“என்னிடம் அப்படி என்ன சக்தியைக் கண்டீர்கள். உண்மையில் நான் எதையும் அடக்கி வைத்திருக்கவுமில்லை. ஒதுங்கி வாழவு மில்லை.”
“பெரிய மனிதர்களும் பொய் சொல்லத் தெரிந்து கொண்டுதானி ருக்கிறார்கள். இல்லையா?”

Page 58
ஆச்சரியமான அந்தப் பெண்ணை அவன் ஒருமுறை உற்றுக் கவனித்துவிட்டு “நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை’ என்றான்.
“பார்த்தீர்களா, மறுபடியும் என்னைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களே’ என்று சொன்னவள் அவனைப் பேச விடாமலே பிறகும் ஆரம்பித்தாள்.
"அறிவில்லாதவர்கள் ஆயிரம் பிழைகளைச் செய்தாலும் பெரியோர்கள் தாமாகவே மன்னித்துவிடுகிறார்கள். அழிவற்ற இந்த நம்பிக்கையோடு உங்களிடம் விடைபெறுகிறேன்."
அவன் நமஸ்கரித்தான். அவளும் அவ்வாறே செய்து கொண்டு
"தனியாக வந்து நிற்கிறாயே என்று அப்பொழுதே சொன்னீர்கள். இருள் மேலும் படர்ந்து விட்டது. நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டாள்.
ஒருவரோடொருவர் ஒன்றும் பேசாமலே சிறிதுநேரம் நடந்தார் கள். அதற்குள் அவள் திரும்பி நின்று, "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"சும்மாதான் இருக்கிறேன்.”
"அப்படியானால் பைத்தியம் பிடித்துவிட்டதா?”
"படிக்கிறேன்’
"அது என்ன படிப்போ?”
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். "நீங்களே எனக்கு ஒரு புதிய பாடமாகத்தான் தோன்றுகிறீர்கள்.”
அவளும் கலகல" வென்று சிரித்தாள். பிறகு, “பாக்கியவசத்தால் உங்களை இன்று சந்தித்தேன்” என்று சொல்லிப் பிரிந்து சென்றாள்.
மற்றநாள் : அஸ்தமனத்துக்கு வெகுநேரத்துக்கு முன்பே மைதிலி சமுத்திரக் கரைக்குக் கிளம்பிவிட்டாள். அவனைக் காணவேண்டும் என்ற ஆசை அப்படி அவளைத் தூண்டிக் கொண்டிருந்தது. அவர் அங்கேதான் இருப்பார்’ என எண்ணியவளாய் நேராகவே முதல் நாள் அவனைச் சந்தித்த இடத்துக்குச் சென்றாள். ஆனால் அவனை அங்கே காணவில்லை. ஆயினும் வருவார் என்று அடிக்கடி தன்னைத் தான் ஆறுதல் செய்துகொண்டே அங்கே உட்கார்ந்திருந்தாள்.
பொழுது போய்க் கொண்டிருந்தது. எத்தனையோ பேர் வந்தார்கள். போனார்கள். அவன் மட்டும் வரவில்லை. கடைசியில் இருள் பரவுகிற நேரமாகிவிட்டது. இனி எங்கே வரப் போகிறார்? என்ற வேதனையோடு எழுந்து நடந்தாள். தெருவுக்கு ஏறும்போது
12

எங்கிருந்தோ அவள் இதயத்தைத் தொட்ட அந்தக் குரல் காற்றில் மிதந்து வந்து அவளது காதிலே விழுந்தது. நடப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தொலைவில் யாரோ இருவர் உட்கார்ந் திருப்பது நன்றாகத் தெரிந்தது. மறுபடியும் காதைக் கொடுத்துக் கேட்டாள். சந்தேகமில்லை. சிவராமனுடைய குரல்தான் அது.
அவள் மெல்ல நடந்து அவர்களுக்குப் பின்புறமாக உட்கார்ந்தாள். அப்பொழுது சிவராமனுக்குப் பக்கத்திலிருந்த பையனே பேசினான். “ஆறேழு வருஷங்களுக்கு முன்னாடியே செத்திட்டாங்களாம்.” "அம்மா இருக்கிறாளா? இது சிவராமனுடைய குரல். "ஆமாம், இருக்குது.” “எங்கே?*
“பட்டணத்திலேதான்.” “பட்டணத்திலேதான் என்றால் எங்கே?” “தெரியாது. எங்குந் திரியும்.” "அப்படியானால் நீ உன் அம்மாவைக் காணுகிறதில்லையா?” “அதிக நாளாச்சு.” "உனக்குத் தம்பி தங்கை இல்லையா?” தங்கை இருக்குது. அதுக்கு ஒரு வயசு கூட இருக்காது.” சிவராமன் பேச்சை நிறுத்திவிட்டுச் சும்மா இருந்தான். “சாமி! பசிக்குது. ஏதாவது குடுங்கோ” என்றான் சிறுவன். சிவராமனுடைய கைகள் சட்டைப் பைகளைத் துழாவின. பையனோ அந்தக் கைகளையே பார்த்தபடியிருந்தான். பைகளுக் குள் நுழைந்த கைகள் வெளியே வர மறுப்பவைபோல அப்படியே கிடந்தன. அப்போதுதான் பின்புறத்திலிருந்து மைதிலியின் குரல் கேட்டது.
“இங்கே இருக்கிறது கொடுங்கள்.” சிவராமன் திரும்பினான். பையனோ அவளிடம் ஒடினான். அவள் அந்தப் பையனை அனுப்பிவிட்டு கிட்ட வந்தாள். வந்து கொண்டி ருந்த மைதிலியைப் பார்த்துக்கொண்டே “பணம் இங்கே இருக்கிறதே" என்றான் சிவராமன்.
"அப்படியானால் என்ன யோசித்துக் கொண்டிருந்தீர்கள்?’ என்று அவள் கேட்டாள்.
"நன்றாக ஆராய்ந்து பார்த்தால் யோசிக்காமல் இருக்கவும் முடிய வில்லை. யோசித்தும் ஒரு பயனும் ஏற்படுவதில்லை."
13

Page 59
"என்ன புதிர் போடுகிறீர்களே? "இந்த உலகமே அவிழ்க்க முடியாத ஒரு புதிர்தானே!" சிறிதுநேரம் வரை ஒருவரை ஒருவர் பார்த்தபடி சும்மா இருந்தார் கள். பிறகு அவள் எதையோ ஒன்றை வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள்.
“ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்கப்போகிறேன்.” "நன்றாகக் கேளுங்கள். முடியுமானால் சொல்லுகிறேன்.” "சிலர் மிகச் சாதாரணமான நோக்கங்களை உடையவர்களாவும் வேறு சிலர் அசாதாரண நோக்கங்களை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய நோக்கங்களும் கைகூடும் போது உண்டாகிற திருப்தியோ இன்பமோ அளவில் வித்தியாசமாக இருக்கிறதா?”
சிவராமன் நிதானித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். மைதிலி அதையே வேறொரு விதமாக ஆரம்பித்தாள். “எனக்குப் பசிக்கிறது. நான் அதற்காக முயற்சிக்கிறேன். என் பசி ஆறினதும் நான் திருப்தியடைகிறேன். நீங்களோ உலகத்தின் பசியைப் போக்க முயலுகிறீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது. அப்படிப் பாடுபட்டு அதுவும் சித்தியாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்களும் திருப்தியடைகிறீர்கள். இந்த இரண்டுபேருடைய மனமும் திருப்தியடைவதால் உண்டாகிற இன்பத்தின் அளவில் வித்தியாசம் இருக்கிறதா?”
இதுவரை மெளனமாக இருந்தவன் பேச ஆரம்பித்தான். “சாதாரண இச்சைகளையும், உயர்ந்த லட்சியங்களையும் எப்படி ஒன்றாக மதிக்க முடியும்? இச்சைகள் உடம்பின் பசி, லட்சியங்கள் உயிரின் தாகம். அப்படியே இச்சைகள் கைகூடும்போது ஏற்படுகிற திருப்திக்கும் லட்சியங்கள் சித்திக்கும்போது கிடைக்கிற ஆனந்தத் துக்கும் சம்பந்தமே கூறமுடியாது.”
அவள் மெளனமாகி உட்கார்ந்திருந்தாள். அவனோ அவளோடு பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நடக்க ஆயத்தமானான். பிறகு அவளும் எழுந்து அவனைத் தொடர்ந்து நடந்தாள். வழியில் வந்து கொண்டிருக்கும்போது அவள் வேண்டுமென்றே இதைச் சொன் оотгтоїт.
"ஆழ்ந்த தத்துவங்களில் மூழ்கி அவிழ்க்க முடியாத பெரிய சிக்கல்களைத் தூக்கிக்கொண்டு சங்கடப்படுவதைவிட, செய்யத்தக்க
1 14

சாதாரணமானவைகளையே தொடங்கி முடிப்பது மேல் என்றே நான் கருதுகிறேன்.”
“ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். நாமேன் இதிற் சங்கடப்பட வேண்டும்.”
சிவராமனுடைய வார்த்தைகள் அவளைப் பேச்சின்றி நடக்கச் செய்தன. பிறகு அவரவர் வழியாற் பிரிந்து சென்றார்கள்.
இப்பொழுதெல்லாம் அவர்கள் நெருங்கிப் பழகினார்கள். மனம் விட்டு எந்த விஷயத்தையும் பேசுவதற்குரிய தெம்பு அவளுக்கு உண்டாகிவிட்டது. சிலசமயங்களில் 'வாருங்கள்’ என்று அவனை இழுத்துக் கொண்டு வீட்டுக்கே வந்துவிடுவாள். அவனைக் காணாமல் இருப்பதென்பதும் அவளுக்கு முடியாத காரியமாகி வந்துவிட்டது.
அன்று வீட்டின் முன்புறத்தில் இரண்டு பேருமே உட்கார்ந்திருந் தார்கள். எப்படியாவது அவனைத் தோற்கடித்து அகப்படுத்திவிட வேண்டும் என அவள் ஆசைப்பட்டாள். அன்றைய மனநிலையும் தனிமையும் தொடங்கு" என்று அவளைத் தூண்டின.
“ஒரு விஷயம்” என்று மைதிலி ஆரம்பித்தாள். “என்ன? சொல்லுங்கள்” என்றான் சிவராமன். ஆனால் அவளால் உடனே ஆரம்பிக்க முடியவில்லை. தயங்கினாள். அவனோ அவளது முகத்தைப் பார்த்தபடியே விஷயத்தை எதிர்பார்த்தான்.
கொஞ்சம் பொறுத்தே மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டு “கல்யாணம் என்பதைப் பற்றித்தான் கேட்கிறேன்’ என்று மொட்டையாக நிறுத்தினாள்.
“யாருடைய கல்யாணத்தைப் பற்றியோ?” என்று கேட்டுவிட்டு அவன் சிரித்தான். அது அவளை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கி விட்டது. ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு துணிந்து பேசத் தொடங்கினாள்.
“பொதுவாகத்தான் கேட்டேன். ஒவ்வொருவரும் அதைச் செய்து கொள்ளத்தான் வேண்டுமா என்பது தான் பிரச்சினை”
"அது அவரவரைப் பொறுத்த விஷயம்.” "நான் அதைக் கேட்கவில்லை. கல்யாணம் செய்து கொள்கிறார் களே, அவர்கள் தவறு செய்கிறார்களா? அல்லது செய்யாது
விடுபவர்கள்தான் தவறு செய்கிறார்களா?”
அவள் இப்பொழுது ஒரு மாதிரி விஷயத்தில் இறங்கினாள்.
115

Page 60
"இயற்கையைப் பிசகானது என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படியானால் இயற்கையின் கட்டளைக்கு அமைகிறவர்கள் எவ்வாறு பிழை என்று சொல்லலாம். அவ்விதமே இயற்கையைப் புறக்கணித்து வாழ்பவர்களை நியாயமானவர்கள் என்று சொல்லு வதும் தவறே.”
“எடுத்ததற்கெல்லாம் இது இயற்கையின் கட்டளை என்று நாம் சொல்லமுடியாது. அது பெரிய பிசகாகும்.”
இந்தப் பதில் அவளைக் கொஞ்சம் தடுமாறும்படி செய்தது. ஆயினும் சமாளித்துக்கொண்டு வேறொரு பக்கத்தால் நுழையப் பார்த்தாள்.
“நல்லது. இன்னுமொன்று உங்களைக் கேட்கப் போகிறேன். அதற்கும் பதில் சொல்லி விடுங்கள்.”
அவள் பேசுவதை நிறுத்திவிட்டு அவனது முகத்தைப் பார்த்தாள். “சரி சொல்லி விடுங்களேன்” என்றான் சிவராமன். “என்னையோ, உங்களையோ அல்லது வேறொருவரையோ எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் இந்த உலகுக்கு வர ஒரு தாயுந் தந்தையும் இன்றியமையாதிருந்தனர். அப்படியே அந்தத் தாய்க்குந் தந்தைக்கும் ஒவ்வொரு தாய் தந்தையர் இருக்கவே செய் தனர். இவ்வாறு ஒரு நூறு சந்ததியைக் கணக்கிடுங்கள். எத்தனையோ கோடானுகோடி தாய் தந்தையர்கள் சம்பந்தப்பட்டே இந்தத் தொடர் நீண்டிருக்கிறது. இடையில் ஒரு தாயோ தந்தையோ இல்லையென்றால் நம்மில் யாரும் பிறந்திருக்கமுடியாதல்லவா? இப்படியாகத் தொடர்ந்து வந்த இந்த அற்புதமான சங்கிலியை நடுவில் நிறுத்திவிட யாருக்கும் அதிகாரமில்லையென்றே நான் கருதுகிறேன்.”
மைதிலி பேச்சை முடித்துவிட்டுச் சும்மா இருந்தாள். அவன் உடனே பதிலுக்குப் புதிர் போடுகிறவனைப் போல ஆரம்பித்தான். "இந்த உலகத்திற் காலத்துக்குக் காலம் எண்ணற்ற ஜீவ வர்க்கங்கள் தோன்றின. அவற்றுற் பல முற்றாக அழிந்து மறைந்து போயின. அதனால் இந்த உலகத்திற்கு ஏதாவது குறை ஏற்பட்டதா? அது போல மனித ஜாதியும் பூண்டோடு அழியினும் அழிந்து போகட்டும். அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?”
இந்தப் பேச்சு அவளது உள்ளத்தைத் தாக்கி வேதனையை உண்டு பண்ணியது. அவள் அதை வெளிக்குக் காட்டாமலே மறைக்கப் பிரயத்தனப்பட்டாள். ஆயினும் அவளால் எதைப்பற்றியும் பேச முடியவில்லை. சும்மா இருக்கவும் இயலாத ஒரு நிலை அவளைச்
16

சூழ்ந்து கொண்டது. அப்பொழுதுதான் அவளுடைய தாயார் வேலைகளை முடித்துவிட்டு அங்கே வந்து சேர்ந்தாள். அந்த அம்மாள் வந்து உட்கார்ந்ததுமே சிவராமனைப் பார்த்து "அப்பனே ஒரு தொழிலுமே செய்வதில்லை என்று இருக்கிறாயாமே ஏன்?” என்று கேட்டாள்.
"அம்மா! எத்தனை நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுவிட்டார்கள். ஒன்றுமே செய்யமுடியாது என மறுத்துவிட்டார்” என்றாள் மைதிலி.
"ஆமாம், எனக்கு அந்த வேலைகள் பிடிக்கவில்லை.” சிவராமன் சொல்லி முடிப்பதற்குள் மைதிலி வேண்டுமென்றெ இப்படிக் கேட்டாள்.
"அப்படியானால் உங்களுக்குப் பிடித்தமான வேலை எதுவோ?” “மண் சுமப்பது அல்லது அதுபோல வேறொன்று.” எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள். பிறகு அந்த அம்மாள், அவனு டைய முகத்தைப் பார்த்துக் கொண்டே “வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே. அதை எப்படியாவது இழுக்கவேண்டுமல்லவா?* என்றாள்.
சிவராமன் சொன்னான். "அம்மா வாழவேண்டுமென்பதும் அவசியந்தான். அதற்காக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. கேவலமாக வாழ்வதை விடச் சும்மா இருந்து சாவது எவ்வளவோ மேல்.’
மைதிலி மெளனத்திலாழ்ந்திருந்தாள். அவளுடைய தாயாரும் பேச விரும்பாதவளாகிச் சும்மா இருந்தாள். சிறிது நேரத்திற்குள் அவனும் எழுந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே சென்றான்.
கடந்த இரண்டு நாட்களாக அவன் அங்கே வரவில்லை. மைதிலி தானாகவே பார்க்கப் போனாள்.
அவனுடைய அறைக் கதவு மூடிக்கிடந்தது. கதவோடு காத்து நின்ற வாடகைப்பணம் வாங்கிற மனிதன் அவளைக் கண்டதும் "அம்மா, இந்த மாசம் தன்னிடமே பணத்துக்கு வரவேண்டுமென்றார்” எனத் தயங்கினான்.
“எத்தனை தடவை உன்னிடம் சொல்லிவிட்டேன். இனிமேல் நீ ஒரு போதும் பணத்துக்கு இங்கே வரக்கூடாது’ என்று அவள் கண்டிப்பாகச் சொல்லி அவனை அனுப்பிவிட்டு யன்னல் வழியாக உள்ளே பார்த்தாள்.
வெறுந் தரையிலே துணியை விரித்து அதன் மேற் கையே தலையணையாக அவன் தூங்கிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு புஸ்தகம் பக்கத்திலே கிடந்தது.
17

Page 61


Page 62
Dafgår
ாய்! என்னால் நம்பவே முடியாது. வெறும் அழகுக்கு ஒரு நாளும் அவர் விலை வைப்பதே இல்லை. ஒரு வேளை என்னிடம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று எண்ணி விட்டாரோ? அப்படி அவர் கனவு காணுகிறவரும் அல்லவே?
“பெரிய அறிஞர்களாலும் புரிந்துகொள்ள முடியாத தத்துவங்களை யும் இலேசாக விளங்க வைக்கும் ஆற்றலுடைய இந்த மனிதருக்கு ஒரு பெண்ணை உணர முடியவில்லை என்றால்? உண்மையில் இது பெரிய ஆச்சரியமாகவே இருக்கிறது."
என்னைத் தேர்ந்தெடுத்தாராம். பொய்! இது முற்றும்
"சிறிய அளவில் பிறர் துன்பப்படுகிறதைக் கண்டாலும் துடிக்கிறார். பின் எதற்காக அன்பில்லாதவர் போல என்னோடு நடந்துகொள்ள வேண்டும்? ஒரு வேளை புகழுக்காக வாழுகிறார் போலும்!"
'காலம் ஒடுகிறது. உணர்ச்சிகள் உடைந்து சிதறிப் போகின்றன. வாழ்வு உயிரற்றதாகி இழுபடுகிறது. இப்படியே இது நீண்டு செல்லு மானால்...??
அவள் நிதானமாகவே நிமிர்ந்திருந்து பெருமூச்சு விட்டாள். ஆனால், அவளது மனம் நில்லாமல் ஓடியது.
அவர் பெரிய மனிதர்தாம். அதனால் எனக்கென்ன? அந்த நிழலில் இடம்பெற்றுவிட்டேன் என்று உலகம் புகழுகிறது. இதைவிடத் திக்கற்ற பாலையிலே எல்லையற்ற மணல்வெளியைப் பார்த்தபடி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையோடு கிடந்து சாகலாம். அதில் இனிமை இருக்கிறது.”
பெண் எப்பொழுதும் பெண்ணாகவே இருக்க விரும்புகிறாள். அதில் என்ன பிசகு? ஆனால்...? ஆரம்பத்தில் கிடைக்காதது இனி யாவது கிடைக்கலாம் என்ற அறிவுக்குப் பொருத்தாத ஆசை எந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு இன்னும் எனக்கு இருக்கிறது. ஐயோ, இதுவும் பெரிய ஏமாற்றமாகவே முடியப் போகிறதோ! ஏமாற்றத்தைவிட இருண்ட ஆழமான துயர் வேறு உண்டா?
20

இந்த நிலையில் 'ஏமாந்துவிட்டேன்’ என்றாலும் உலகம் ஒப்புக் கொள்ளாது. 'உபயோகமில்லாதவள், மிருக இச்சை கொண்டவள்’ என்றுதான் என்னைத் தூரத் தள்ளும். நானா மிருக இச்சை கொண்டவள்? காதலின் நிழல்கூடப் படியாத இடத்தில் ஒவ்வாரு பெண்ணும் வைதஷ்யத்தைத் தவிர வேறு எதைக் காணுவாள்?
மகாகவி அசுவகோஷர் போன்ற துறவு மனப்பான்மையுள்ள ஓர் அறிஞரை என்னால் விரும்ப முடியாது. அடிவானத்துக்கு அப்பா லுள்ள, உருவமும் தெளிவுமற்ற கனவுக்காக, கண்ணுக்கு முன்னால் பிரத்தியட்சப்பட்டு நிற்கும் வாழ்வை, சுகங்களை உருக்குலைந்து போகும்படி விட என்னால் முடியாது. அப்படித்தான் நானும் பயிற்று விக்கப்பட்டவள். அடியோடு உணவு கிடைக்காவிட்டால் பசுமை யான சோலையாக இருந்தாலும் பறவைகள் அங்கு தங்குவது இல்லையே!”
அவளுக்கு என்னவோ? என்று தான் நினைத்திருக்கிறார். அவர் நானாக இருந்தால் அந்த நினைவு சரியாகவும் இருக்கலாம். ஒருவருக் கொருவர் சம்பந்தமே இல்லாத நம்மைப் போன்றவர்களை யெல்லாம் விதி ஏனோ பிணைத்து வைத்து விளையாடுகிறது.”
பிரபா மறுபடியும் நிமிர்ந்து பெருமூச்சு விட்டாள். அவளுடைய கண்கள் எல்லையற்றுப் பரந்து கிடந்த வாணவெளியை ஊடுருவிக் கொண்டு எதையோ துருவித்துருவி ஆராயந்தன. மாலைக் காலமாதலால் பறவைகள் பாடிக்கொண்டே ஜோடி ஜோடியாகப் பறந்து சென்றன.
“தேவையில்லை என்ற பிறகும் மனிதன் பெண்ணை விடுதலை செய்யாமல் சங்கிலி போட்டுக் கட்டி வைத்துக்கொண்டே இருக்கி றான். ஒரு வேளை மறுபடியும் பசிக்கலாம் என்ற ஈனத்தனமான ஆசைக்குப் பலியிடவே இப்படிச் செய்கிறான் போலும்!”
அவளுடைய முகம் ஆத்திரத்தினால் சுருங்கி நிழல் படிந்தது போலிருந்தது. வேலைக்காரி ஒருத்தி அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே விளக்குகளைத் துடைத்து ஏற்றுவதற்குரிய ஆயத்தங் களைச் செய்துகொண்டிருந்தாள்.
இரவு வந்தும் வெகு நேரமாகிவிட்டது. அவள் சபேசனுக்காகக் காத்துக்கொண்டே இருந்தாள். பெண்மையின் கடமையுணர்ச்சி, நீ இருக்கத்தான் வேண்டும்’ என்று அவளுக்குக் கட்டளையிட்டது. சமையற்காரியின் குறட்டைச் சத்தம் அந்த இரவாகிய நிசப்த சித்திரத்தைக் கண்டபடி கீறிக்கிழிப்பது போலவே இடைவிடாமற் கேட்டது. எண்ணெய் வற்றிப்போன இரண்டொரு விளக்குகள் துர்ப்பாக்கியம் படைத்த யுவதிகளின் முகங்கள் போல மெல்ல மெல்ல ஒளியை இழந்து கொண்டிருந்தன.
121

Page 63
சபேசன் பாதி ராத்திரிக்குச் சற்று முன்பாகவே வந்தான். பிரபா எழுந்து சென்று கதவைத் திறந்து வழிவிட்டாள். பிறகும் அவனுக்கு அவசியமான சில வேலைகள் இருந்தன. படுக்கைக்கு வரும்போது தூங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன் போலவே சரிந்தான். காலையிலிருந்து ஏற்பட்ட புதிய அனுபவங்கள் உண்மையாகவே, நீ எப்படித் தூங்க முடியும்? என்று சொல்வது போல அவனுடைய மனக்கண்களின் முன்பு மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன.
ஒரு பிச்சைக்கார ஏழைச் சிறுவன்! பசியின் பயங்கரமான பாவ இருள் அவனை மூடியிருந்தது. தெருவின் ஓர் ஒரமாக அவன் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தான். திடீரென்று அவன் முன்னால் ஒரு பெரிய மனிதன் தெருக்கதவைத் திறந்து கொண்டு வந்தான்.
"சாமி, வயிற்றைப் பசிக்கிறது” என்று தன் கைகளையும் நீட்டியபடி சிறுவன் மன்றாடினான். "சீ நாயே! விலகடா’ என்றான், அந்தப் பெரிய மனிதன். பையன் விலகவில்லை! மறுபடியும் கெஞ்சினான்.
“பொழுது விடியவில்லை. அதற்குள் என்னடா உனக்குக் கொள்ளை வந்து விட்டது? சனியன் போலக் குறுக்கே நிற்கிறாயே’ என்று அந்த மனிதன் கத்தினான். சிறுவன் பிறகும் ஓடவில்லை. அப்படியே கையை நீட்டிக் கொண்டு நின்றான்.
துரும்பாக இளைத்த அந்த உருவத்தின் கன்னத்திலே 'பளிர் என்று ஓர் அறை விழுந்தது. சிறுவன் ஓர் ஒரமாகப் போய் விழுந்தான். யுத்தத்தில் வெற்றி பெற்று மீண்டுவரும் தளபதிபோல் அந்த மனிதன் கம்பீரமாக நடந்தான்.
இந்த நிகழ்ச்சிக்கும் மனித சுபாவத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சபேசன் தன்னையே பலமுறை கேட்டுப் பார்த்தான். அதற்குள் மற்றது நினைவுக்கு வந்தது.
அவனும் யாரோ ஒர் ஏழைதான். காலில் நகம் முளைத்த நாளி லிருந்து அடிமைத் தொழிலில் ஊறிப்போன பயம், பக்தி - எல்லாம் நிறைந்த உருவம் அது. எஜமானுடைய தயவுதான் அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்வு என்பதை அவனுடைய நிலை நன்றாகக் காட்டிக் கொண்டிருந்தது.
எஜமான் ராஜநடை நடந்து முன்னே சென்றான். “தாங்கள் கருணை வைத்தால்தான் அவளுடை உயிரைப் பிடிக்கலாம்” என்று மன்றாடியபடி தன்னை ஒடுக்கிக்கொண்டு பின்னால் வந்தான் அந்த ஏழை. அவன் ஓ’ வென்று அழாதது தான் ஒரு குறை.
எஜமானன் திரும்பி நின்று அதிகாரத் தொனியில் சொன்னான்.
122

“டேய், இன்னும் எத்தனை ஆட்டம் ஆடுவாய் என்பது எனக்குத் தெரியாதா? பல முறை சொல்லியாற்று. திரும்பிப் போகிறாயா, அல்லது உதை வேண்டுமா?”
அந்த ஏழை மனிதன் அப்படியே நின்று ஆகாயத்தைப் பார்த்தான். அவனுடைய கண்களில் நீர் ததும்பியது.
சபேசன் வேதனையோடு எழுந்து காற்று வரும்படி யன்னல் ஒன்றைத் திறந்து வைத்துவிட்டு மறுபடியும் வந்து படுத்தான். வேறு ஒரு சம்பவம் முன்னுக்கு நின்றது.
பொழுது சாய்ந்துகொண்டிருந்த நேரம் அது. அவள் ஓர் இளம் பெண். அவளைப் பற்றி ஆராய நமக்கு அதிகாரமோ உரிமையோ இல்லை. அந்தப் பெண் வீதியிலே தனியாக வந்துகொண்டிருந்தாள். இங்கே மனிதர்கள் நடமாடுகிறதே இல்லை’ என்று ஒரு போதும் அவள் எண்ணியிருக்கமாட்டாள். வழியில் யாரோ சிலர் நின்று வம்புக்குப் பேச்சுக் கொடுத்தார்கள். அவள் பயந்து ஒதுங்கவும், அவர்கள் விடவில்லை. பிறகு தெருவில், மனிதர்களின் மத்தியில், அவர்கள் அந்தப் பெண்ணோடு நடந்து கொண்ட முறை மனத்தா லும் எண்ணிப் பார்க்க முடியாது. கண்களால் பார்த்துக்கொண்டு நின்றவர்களோ, தமக்கு எட்டியவரை கற்பனை செய்து, அவளும் கெட்டவளாகவே இருக்க வேண்டும்’ என்று பேசிச் சிரித்தார்கள். அவமானத்தால் அழுது கொண்டு ஓடிவந்த அந்தப் பெண்ணுக்கு அனுதாபங்காட்டியது கூட இழிவாக மதிக்கப்பட்டது.
சபேசன் திரும்பிப் படுத்தான். அலங்கோலப்பட்டு அழுதுகொண்டு நின்ற அந்தப் பெண்ணின் துன்பச் சித்திரம் இவன் மனக்கண்களின் முன்பு மறையாமல் நின்றது.
மனிதர்களுக்கு இருதயம் இல்லாமல் போய்விட்டது. ‘மனிதன் தோன்றிய நாள் முதல் எத்தனையோ தீர்க்கதரிசிகளும் மகான்களும் பிறந்து, இந்த உலகத்தைத் திருத்திவிட வேண்டும் என்று பாடுபட்டுப் பார்த்து விட்டார்கள். நாயின் வாலை நிமிர்த்த நினைத்தது போல எல்லாம் வியர்த்தமாகவே முடிந்தன என்று ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை சொன்னார்கள். வாஸ்தவமாகவே அவர் சொன்னது முற்றும் சரி. அன்பு செய்யுங்கள்’ என்று பறையடிக்கிறோம். எவன் காதுகளிலாவது விழுகிறதா? தருமம், நீதி என்று தொண்டை கிழியக் கத்துகிறோம் இது பைத்தியத்தின் கூக்குரலடா! என்று சேர்ந்து சிரிக்கிறார்கள். இந்த அவகேடான நிலைக்கு இனியாவது வழி பிறக்குமா? அவன் அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டே புரண்டு புரண்டு கிடந்தான். பிரபாவும் தன் நினைவில் வெகுநேரம் வரை அப்படியேதான் கிடந்தாள்.
123

Page 64
பிரபா காலையில் வழக்கம் போலவே எழுந்து வெளியே வந்தாள். அவளுடைய கண்களின் எதிரிலே, இரண்டொரு நாட்களுக்கு முன் ஏதோ ஒரு பிரசங்க மேடையில் தன் கணவனை கெளரவிக்க அணிவிக்கப்பட்ட ரோஜா மாலை வாடி உதிர்ந்து கிடந்தது. அவள் குனிந்து அதைக் கையில் எடுத்தாள். மனம் பேசியது.
"இந்த மலர்கள் அவரைக் கெளரவித்து அழகு செய்யவே பிறந்தன. ஆனால் அவளுக்கு வந்த கதி? இதை அவருடைய உள்ளம் எப்போ தாவது உணருமா?”
பிரபா திரும்பினாள். சபேசன் உள்ளே படுத்துக் கிடந்தபடியே, “பிரபா, வாடிப் போன அந்த மாலையில் என்ன அற்புதத்தைக் கண்டு மலைக்கிறாய்?’ என்று கேட்டான்.
'உங்களை அடைந்த மலர்களுக்கு என்ன கதி கிடைத்ததோ அதையே நானும் அடைந்துகொண்டிருக்கிறேன்’ என்று சொல்ல வேண்டுமென்று அவளுடைய வாய் துடித்தது. ஆனால், அவள் அதை அடக்கிக் கொண்டு, “மற்றவர்களின் லாபத்துக்காகத் தம்மை இழந்த மலர்களல்லவா இவை? அதைப் பற்றியே யோசித்தேன்” என்றாள். அதற்குள் அவனும் படுக்கையை விட்டு எழுந்து அங்கே வந்தான். வருகிறபோதே, “அதனால்தான் மலர்களை மக்கள் போற்றுகிறார் கள்” என்று சொன்னான்.
அவள் இந்த முறையும் வேறு விதமாகவே பதில் சொல்ல முயன்றாள். மனம் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் இதழ்களைத் தொட்டுத் தள்ளியது.
"சுயநலம் நிறைந்த அயோக்கியமான மனநிலையே அதைப் போற்றும்படி மக்களைத் தூண்டுகிறது.”
"ஏன் இப்படிச் சொல்கிறாய் பிரபா?’ என்று கேட்டுக் கொண்டே சபேசன் அவள் முகத்தைப் பார்த்தான்.
“உயிரை இழந்தாவது பிறர் நமக்கு இன்பத்தைத் தரவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தை வேறுவிதமாகச் சொல்ல எனக்குத் தெரியாது.”
“யார் உயிரை விடச் சொல்லிக் கேட்கிறார்கள்? தாமாகவே வந்து அப்படிச் செய்கிறபோதுதான் கொண்டாடுகிறார்கள்.” “எப்படியானாலும் அது சுயநலமல்லாமல் வேறல்ல.” அவளை சபேசன் நன்றாக அறிந்திருந்தான். அதனால் பேச்சை வேறொரு திசையை நோக்கித் திருப்பிவிட எண்ணி, “அது போகட்டும் பிரபா! உனக்கு உடம்பு சுகம் இல்லையா? இரவு வெகு நேரம் வரை தூங்காமல் கிடந்தாயே" என்று கேட்டான்.
124

"ஏன் சுகமாகவே இருக்கிறேன். தெரியவில்லையா?” என்று அவள் ஒரு மாதிரித் திரும்பிக் கேட்டாள்.
“எனக்குத் தெரியும்! நீ மறைக்கிறாய்.” "அப்படித் தெரிந்து கொண்டும் எதற்காகக் கேட்கிறீர்கள்?” பிரபாவின் இந்த வார்த்தைகளும், "பேச்சை வேறு பக்கமாகத் திரும்பு’ என்று அவனைத் தூண்டின. ஆனாலும் அவன் சாந்த மாகவே, "எனக்கும் வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை. நீயும் அப்படியே தான் கிடந்தது போலத் தெரிந்தது. அதனாலேதான் கேட்டேன்” என்று சொன்னான்.
அவள் சிறிது நேரம் பொறுத்துக் குத்தலாகக் கேட்டாள். "உங்களுக் குத் தூக்கம் வராதது எதற்காக என்று நானும் அறியலாமோ?”
அவன் முன்போலவே அமைதியாகப் பேசினான். “பிரபா, இந்த ஐனங்களுக்காக எவ்வளவோ செய்து பார்க்கிறேன். ஒரு பிரயோசனத்தையும் காண முடியவில்லை. அந்த வேதனைதான் என் தூக்கத்தை கெடுத்தது.”
"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அலையப் போகிறீர்கள். நிறுத்த மாட்டீர்களா?”
ஒருவித ஆத்திரம் கலந்த குரலில் பிரபா இப்படிக் கேட்டாள். அவனோ ஆச்சரியத்தோடு பதிலின்றி அவளைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.
“ஏன் பேச மாட்டேனென்றீர்கள்?’ என்று மறுபடியும் அவளே ஆரம்பித்தாள்.
"நீ இப்படிக் கேட்கும்போது எனக்குப் பேசவே தெரியவில்லை. அதனாலே தான் சும்மா இருக்கிறேன்.”
“கேட்கக்கூடாத எதையாவது கேட்டுவிட்டேனா? ஏன் இப்படிச் சொன்னீர்கள்?
அவளுடைய கேள்வியில் ஆவேசமும் கலந்திருந்தது. அவன் மறுபடியும் சாந்தமாகவே, "மற்றவர்களுக்குப் பாடுபட வேண்டும் என்ற தர்மம் உனக்கு ஏன் பிடிக்கவில்லை?” என்று கேட்டான்.
“நியாயம் சொல்ல எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குப் பிடிக்க வில்லை.”
"உண்மையாகவே சொல்லுகிறாயா, பிரபா?”
அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் கதவை யாரோ தட்டினார்கள். சபேசன் வாயிலை நோக்கி நடந்தான்.
125

Page 65
“உலகத்துக்காக இராப்பகலா உழைக்க வேண்டும் என்ற தியாகி கல்யாணம் பண்ணிக்கொண்டே இருக்கக்கூடாது. அந்தப் பிசகை எதற்காகச் செய்தீர்கள்?’ என்று கேட்டுவிடவே அவள் இன்று ஆயத்தஞ் செய்து கொண்டிருந்தாள் எதிர்பாராத இந்தத் தடை அவளுக்குப் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தது. சபேசன் போன பிறகு திரும்பினாள். எதிரிலுள்ள சுவரில் அனேக இடங்களில் அவனுக்கு வாசித்துக் கொடுக்கப்பட்ட உபசாரப் பத்திரங்கள் அவன் புகழைப் பாடிக் கொண்டிருந்தவைகள் போல வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. முன்பெல்லாம் அவைகளைப் பார்க்கும் போது அவள் பெருமையடைந்தாள். இன்றோ அவற்றைக் கண்ணெ டுத்துப் பார்க்கவும் அஞ்சினாள். அதனால் தலையைத் தொங்கப் போட்டபடியே அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
வெளியூர்களிலிருந்து சபேசனுக்கு அழைப்புக்கள் வந்த வண்ண மாகவே இருந்தன. அவற்றுள் ஒன்றையேனும் நிராகரிக்க அவனால் முடியவில்லை. செய்ய வேண்டியவைகளை முடியாது என்று தட்டிக் கழிப்பது நீசத்தனம் என்று எண்ணி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு புறப்படத் தயாரானான். இதற்கிடையில் பிரபாவின் சோர்வடைந்த நிலை அவன் மனத்துக்கு வேதனையை உண்டு பண்ணியது. அதனால், “பிரபா, நீயும் வருகிறாயா?" என்று கேட்டான். அவளுக்கு அந்தக் கேள்வி கேலிசெய்வது போலவே பட்டது. ஆனாலும், ஆத்திரத்தை வெளிக்காட்டாமல், “என்னால் முடியாது” என்று கண்டிப்பாக மறுத்துவிட்டாள்.
சபேசன் தனியாகவே புறப்பட்டான். போகும்போது மனைவி யைப் பற்றிய கவலை இலேசாக அவன் மனத்தை அழுத்தித் கொண்டி ருந்தது. என்னுடைய வாழ்க்கைக்கு அவள் துணையாக இருப்பாள் என்ற எண்ணம் வெகுநாட்களுக்கு முன்பே இல்லாமற் போன போது, இன்று பலவீனப்பட்டுப் போனாள் என்ற நினைவு அடிக்கடி வந்து அவனை ஞாபகப்படுத்தியது. சில நாட்களுக்குள் தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடம், அவளுடைய உடம்பு நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று எழுதினான்.
அன்று பிரபா ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள். வேலைக்காரி ஓடிவந்து, “யாரோ வந்திருக்கிறார்கள். உங்களைத் தான் பார்க்க” வேண்டுமாம்.” என்று சொன்னாள். பிரபா விரைந்து வந்தாள். அவளைக் கண்டதும் அங்கே வந்திருந்த இளைஞன் எழுந்து, “உங்களைப் பார்க்கும்படி சபேசன் எனக்கு எழுதியிருந்தார்” என்று மரியாதையாகச் சொன்னான்.
126

அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதனால் சிறிது நேரம் கழித்து “விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டாள். அவன் மறுபடியும் மரியாதையோடு ஆரம்பித்தான்.
"நான் ஒரு டாக்டர்! உங்கள் உடம்பு நிலையைக் கவனித்துக் கொள்ளும்படி எனக்கு எழுதியிருந்தார்.”
பிரபா உடனே கேட்டாள். “எனக்கு என்னவாம்?” அந்த இளம் டாக்டர் மெல்லச் சிரித்துக்கொண்டே இதற்குப் பதில் சொன்னான்.
"அவர் டாக்டரல்லவே! அதனால் தான் எனக்கு எழுதியிருந்தார்.” “நல்லது டாக்டர். எனக்கு அப்படி ஒன்றும் வந்துவிடவில்லை என்று பதில் எழுதிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விடவே அவள் எண்ணினாள். ஆனால் அது முடியவில்லை. அதனால் அவனை ஒரு மாதிரிப் பார்த்தபடியே சும்மா நின்றாள். டாக்டர் தொடர்ந்து பேசினான்.
“நோயாளி போலவே இருக்கிறீர்கள். ஒரு முறை பரீட்சித்துப் பார்த்து விட்டால் என்ன?”
அவள் மறுக்கவில்லை. மெளனமாக எதையோ சிந்தித்துக் கொண்டே அருகில் உட்கார்ந்தாள்.
டாக்டர் சோதித்தான். ஏதேதோ கேட்டான். தடுமாற்றத்தில் அவனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நிகழ்ச்சி பார்ப்பவர் களுக்கு ஆபாசமாக இருந்திருக்கலாம். ஆனால், அவள் அதை விரும்பினவள் போலவே காணப்பட்டாள்.
கடைசியில் “போய் வருகிறேன்” என்று டாக்டர் எழுந்தான். அவள் ஆம்’ என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு அப்படியே உட்கார்ந் திருந்தாள். டாக்டர் போனபிறகு, அதற்குள்ளாக இந்த மனிதன் ஏன் ஒடிவிட்டான்? என்பதுபோல அவள் மனம் வேதனைப்பட்டது.
ஒரு வாரத்துக்குள் மறுபடியும் அந்த டாக்டர் வந்தான். பிரபா அன்று உற்சாகத்தோடு நின்று அவனை வரவேற்றாள். “இந்தத் தடவையும் போய்ப் பாருங்கள் என்று எழுதியிருந்தாரோ?” என்று கேட்டாள். டாக்டர் இதற்குப் பதில் சொல்லத் தயங்கினான். பிறகு, "நானாகத்தான் பார்க்கவேண்டுமென்று வந்தேன்’ என்று மெல்லச் சிரித்தான்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பிரபா ஒருமுறை தடுமாறி நிலைக்கு வந்தாள். "எதற்காக உதறித் தள்ளிவிடவேண்டும்? நிழலைத் தேடுகிறவருக்கு நிழல் தானே வேண்டும்? அவள் தனக்குத் தானே இப்படிச் சொல்லிக் கொண்டு மெளனமாக நின்றாள்.
127

Page 66
இடையிடையே மனத்தை அடக்கமுடியாததன் நிலைமையைக் காட்டுகிற பேச்சோடு டாக்டர் சோதனைகளைச் செய்தான். பிரபா உணர்ச்சிகைள மடக்கி நிறுத்திக் கொண்டு சும்மா இருந்தாள். சில சமயங்களில் டாக்டரும் நன்றாக உணரக்கூடிய அளவில் அவளை ஒருவிதக் கலக்கம் சூழந்திருந்தது.
“டாக்டர், எனக்காக நீங்கள் படும் சிரமங்களுக்கு என் வந்தனம்” என்று எழுந்து நின்று நன்றி செலுத்தினாள்.
"ஐயோ! என் கடமையைச் செய்தேன். இதற்காகவா நன்றி” என்று அங்கலாய்த்தான் அந்த டாக்டர்.
அவளுடைய தோற்றம் வரவர உணர்ச்சிகளைக் கிளறிவிடுவது போலப் பிரகாசிக்கத் தொடங்கியது.
டாக்டரோ கூண்டினுள் அடைபட்டுக் கிடக்கும் பசிகொண்ட புலிபோல அவளைப் பார்ப்பதும் பெருமூச்சு விடுவதுமாகத் தவித்தான். அப்பொழுதும் அவள் மனம் முழுவதும் மயக்க நிலையிலிருந்து விடுபடவில்லை. அதனால் “டாக்டர், மறுபடியும் என் நன்றி. இனி எப்போது வருவீர்கள்?’ என்று ஆரம்பித்தாள்.
அந்த இளைஞன் முன்னைவிடத் தடுமாறிக் கொண்டே தாழ்ந்து தன் வணக்கத்தைத் தெரிவித்து, “சீக்கிரமாக வருவேன்’ என்று சொல்லிக்கொண்டு வெளியேறினான்.
அவன் போன உடனே பிரபா தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். "சீ ஏன் இப்படி நடந்து கொண்டேன்? என்ற கேள்வி அடிக்கடி அவள் மனத்தில் எழுந்தது. அடி பைத்தியமே? என்ன பிழையைத்தான் செய்துவிட்டாய்? என்பது போல நரம்புகள் மறுபடியும் அந்த வெறியைக் கிளப்பிக் கொண்டேயிருந்தன.
இந்த நினைவுகள் எதையும் செய்யவிடாமல் அவளை மடக்கி வைத்திருந்தன. அதனால் வெகுநேரம் வரை அந்த இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மனம் சாவின் பயங்கரமான இருளிலே எழுந்து வாழ்வு’ என்ற குரலைக் கேட்டுத் தடுமாறி மயங்கிச் சோர்ந்து கிடந்தது.
“அவளுக்கு இது எதிர்பாராத புதிய பாதைதான். எதிர்காலத்தில் நம்பிக்கையை விட மயக்கமே மேலாக நின்றது. அந்த டாக்டரோ உணவைத் தேடிக் கண்டு பிடித்த பிறகு சுற்றிச் சுற்றி வட்டமிடும் கழுகு போல அடிக்கடி வந்துகொண்டிருந்தான். அவனுடைய சந்திப்பு, நியாயம், தருமம் என்பவற்றுக்கு முற்றும் புறம்பானதா யிருந்தும், வேண்டாம் என்று தள்ளிவிட அவளால் முடியவில்லை. பதிலுக்கு முகம் கூறி “வாருங்கள்” என்று தான் அழைத்தாள்.
128

அந்த இளைஞனான டாக்டரும் நிலைமைகளை நன்றாக உணர்ந்து கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான். ஒருநாள் பேச்சுக்கு நடுவில் எப்படியோ விஷயத்தை ஆரம்பித்துவிட்டான்.
“பிரபா அன்னியர்கள் போல உயிரற்ற மரியாதை வார்த்தைகளை இனி நான் உபயோகிக்க விரும்பவில்லை. அன்பை மரியாதைச் சொற்கள் இழிவுபடுத்துகின்றன.”
பிரபா ஏதோ ஒரு அபாயத்துக்குள் அகப்பட்டவள் போலவே விழித்தாள். அவன் தொடர்ந்து சொன்னான், “எப்படியும் நான் பெரிய பாக்கியவான் என்றே எண்ணுகிறேன்.”
பிறகும் அவள் வார்த்தையின்றியே தடுமாறிக்கொண்டு தவித்தாள். டாக்டர் அதையும் உணர்ந்து கொண்டு மறுபடியும் ஆரம்பித்தாள். “மற்றவர்களுக்காக நம் சுகங்களையெல்லாம் இழந்துவிட வேண்டும் என்று எண்ணுவது பெரிய பிசகு, அதைவிட மேலான அறிவீனமும் இல்லை. இதை நீ உணரவில்லையா?”
அவள் கஷ்டப்பட்டு வாயைத் திறந்தாள். “டாக்டர், எனக்கு கலக்கமாக இருக்கிறது. மரணத்தின் பயங்கர வேதனை சூழ்வது போன்ற நடுக்கம் உண்டாகிறது. இந்தப் பாரத்தைச் சுமக்கக்கூடிய சக்தி என்னிடம் இல்லை.”
அவன் இப்போது வேறோர் ஆயுதத்தைப் பிரயோகித்தான். “பிரபா, உன்னுடைய சுகத்துக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன். என் உயிர்கூட உன் தேவைகளுக்காகவே பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறதென்பதை நீ அறியாதவள் போல கலங்குகிறாயே!”
அவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். சிறிது நேரம் வரை மெளனமாக இருந்தவள் பிறகு, “என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?” என்று ஒரு மாதிரிக் கேட்டாள்.
ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவனிடமிருந்து பதில் வந்தது. “புறப்படு, ஒடிவிடுவோம்.” “மனிதர் இல்லாத ஊர் எங்கேயாவது இருந்தால் அங்கே அழைத்துச் செல்லுங்கள்."
“பிரபா, மனிதர்களின் மத்தியிலே தான் வாழ்வு ஒளியைப் பெறுகிறது.”
பிறகும் அவளைச் சோர்வு சூழ்ந்து விட்டது.
“பிரபா, ஏன் பேசவில்லை?” என்று அவன் தூண்டினான்.
129

Page 67


Page 68
டாக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. காட்டிலே எரிந்துகொண்டு வருகிற பெரு நெருப்பைக் கண்டு பயந்து நிற்கும் வேடுவன் போலவே அவன் தடுமாறினான்.
அவள் எழுந்து உள்ளே சென்றாள். அந்த வீடு எப்படி டாம்பீகத்தின் சின்னமாக வெளிப்பார்வைக்கு விளங்கியதோ அதைவிட உட்புறம் பிரமாதமாக இருந்தது. மிருதுவான பட்டு மெத்தைகள் போடப் பட்ட ஆசனங்கள், மஞ்சனங்கள், நிலைக் கண்ணாடி வைத்த தந்த பிரோக்கள், மெல்லிய பட்டுப் படுதாக்கள், லீலா விநோதினிகளான சுந்தரிகளின் அரை - முழு நிர்வாணப் படங்கள். பிரபா ஒரே இடத்தில் நின்று எல்லாப் பக்கங்களையும் பார்த்தாள். காமக் கடலில் மூழ்கிக் கிடந்த டில்லி பாதுஷாக்களின் வாழ்வே அவள் மனத்திரையில் வந்து விழுந்தது. வேகமாக வெளியே தள்ளப் பட்டவள் போலவே பிரபா திரும்பி வந்தாள். வழியில் அவன் நின்று கொண்டு “ஏன் இப்படி வருகிறாய்” என்று கேட்டான்.
“இங்கே என்னால் ஒரு நிமிஷமும் இருக்க முடியாது. முடிவாகத் தான் இதைச் சொல்லுகிறேன்” என்று அவன் நம்பிக்கையை உடைத் தெறியும் குரலிலே அவள் சொன்னாள்.
"அப்படியானால் உன் இஷ்டப்பட்டி வேறு எங்கே வேண்டுமா னாலும் வர நான் தயாராகவே இருக்கிறேன்” என்றான் டாக்டர்.
“என்னால் எங்குமே வரமுடியாது’ என்று சுருக்கமாகவே சொன்னாள்.
டாக்டர் பரிதாபமான குரலில், “என்னை இனியும் சோதிக்கலாமா பிரபா’ என்று கேட்டான்.
“வாழ வேண்டும் என்ற தேவை இருக்கும்போதுதான் சோதிக்கிற பிரச்சனை உண்டாகிறது. டாக்டர், எனக்கு அந்த ஆசையும் இல்லை. உங்களைச் சோதிக்க வேண்டுமென்ற தேவையும் இல்லை.”
இவ்வளவையும் சொல்லிவிட்டு அவள் பக்கத்துக்கு வந்தாள். அவன் மறுபடியும் கெஞ்சிக்கொண்டே அவளைத் தொடர்ந்து வந்தான்.
“பெண்ணே, நீ சொல்லுவதைப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தியை இப்போது நான் இழந்துவிட்டேன். உலகத்தையே அழித்துவிட வல்ல ஏதோ ஒரு கருவியால் எனது இருதயத்தில் ஓங்கியடிக்கிறாய். அதை எவ்வளவு நேரம் தாங்கிக் கொண்டு இருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.”
132

அவள் நிலத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். டாக்டர் எழுந்து தெருவை நோக்கி நடந்தான். அவன் மறுபடியும் திரும்பி வரும் போது முற்றும் வேறொரு மனிதனாகவே காணப்பட்டான். அவனுடைய வாயிலிருந்து சீமைச் சாராயத்தின் நெடி வீசிக் கொண்டிருந்தது. சோர்வின் அடையாளமே காணமுடியாத படி ஒரு வித உற்சாகத்துடன் வந்தான். “பெண்ணே, இந்தச் செய்கைக்காக முதலில் என்னை மன்னித்துவிடு. அமிர்தமயமான உனது ஸ்பரிசத்தை வேண்டியே சுழலுகிறேன் என்பதையும் நீ மறந்து விடாதே’ என்று நிறுத்தினான்.
அவளுக்கு அழுகைதான் வந்தது. ஆயினும் மனத்தை அடக்கிக் கொண்டு எழுந்து, “என்ன காரணத்திற்காகவும் இனி என் முன்னால் நீ வரக்கூடாது” என்று சீறினாள். வரவர அவளுடைய முகம் சிவந்து பயங்கரமாக மாறிக்கொண்டு இருந்தது. டாக்டர் அசையாமல் அவளைப் பார்த்தபடியே வெகுநேரம் வரை நின்றான். பிறகு அவளுடைய கைகளை எட்டிப் பிடித்துக்கொண்டு, “என்னை இந்தக் கைகளாலேயே கொன்றுவிடு, பிரபா உண்மையாகவே நான் சாக விரும்புகிறேன்” என்று மன்றாடினான்.
பிரபாதிகைத்துப் போனாள். எதையும் செய்ய முடியாத ஒரு நிலை அவளுக்கு உண்டாயிற்று. அவனே மறுபடியும் ஒரு வித ஆவேச மடைந்தவன் போல ஓடிவந்து அவளை வாரி அணைத்துக் கொண்டு, “என் உயிரினும் இனிமையானவளே! என்னைக் கொன்று விடாதே" என்று சொல்லிச் சொல்லி விம்மி அழுதான்.
பிரபா அவன் பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தூர விலகினாள். அவளுடைய கண்களிலிருந்தும் நீர் வடியத் தொடங் கியது. டாக்டர் சிறிது நேரம் வரை நின்றபடியே எதையோ சிந்தித்தான். பிறகு திரும்பி வெளியே சென்று தாமதித்தே வந்தான். அப்பொழுதும் அவனுடைய கையில் அந்தச் சீமைப்புட்டி ஒன்று இருந்தது.
பிரபா அவனைப் பார்க்க விரும்பாமலே வேறொரு பக்கமாகத் திரும்பியிருந்தாள். அவன் மெல்ல மெல்ல அவளுக்குக் கிட்ட வந்து, “பிரபா, என்னை நீ இகழ்ந்து தள்ளுகிறாய் என்பதை அறிகிறேன். ஆனாலும் இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.” என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த புட்டியையும் காலியாக்கினான். அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டே பிரபா எழுந்து தூர விலகினாள். அவன் பிறகும் சும்மா இருக்கவில்லை. தள்ளாடிக்கொண்டே அவளை நோக்கி நடந்தான்.
வேதனை நிறைந்த அவலமான இந்த இடத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்ற நினைவோடே இருந்தாள்.
133

Page 69


Page 70
சிவாஜி மகாராஜா சந்தாராவிடமிருந்து சுவாதீனப்படுத்திக்கொண்ட காலத்திலேயே பிரதாப் அவரது சேனையிற் சேர்ந்து தொண்டு புரியத் தொடங்கினான். அதன் பிறகு இப்பொழுது தான் அவனை வீட்டுக்குப் போகும்படி மகாராஜா நிர்ப்பந்தம் செய்தார். இதற்கிடையில் எப்படியோ பத்து வருடங்கள் கழிந்தோடின. இந்த அவலங்களில் போர் வீரர்களோடு சேர்ந்து கொண்டு பல யுத்தங்களில் புலிபோலப் பகைவர்களின் சேனைகளுக்குள்ளே புகுந்து புகழ் பெற்றான். எப்படியோ யுத்தங்களைக் கண்டு கழித்து விட்டான். சிவாஜியின் அன்பும், வீரமும், தேசப் பற்றுமே அவனை இழுத்துக் கட்டி வைத்துக் கொண்டிருந்தன. ஆகையினால்தான் மகாராஜா ஒய்வெடுத்துக் கொள், போ!' என்று இரண்டாம் முறை வற்புறுத்தும் வரைக்கும் பேசாதிருந்தான்.
ஜாவல்லியை நோக்கி மலைப்பாதையிலே அவன்தன் குதிரையைத் தட்டி விட்டான். மனித சஞ்சாரமற்ற பாதைகளில் குதிரை போய்க் கொண்டிருந்தது. கடந்த யுத்தங்களின் நினைவுகளே அவன் மத்தியில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்து கொண்டிருந்தன. எத்தனை வீரர் களின் உடம்புகளைக் துண்டு துண்டாக அவன் வெட்டி மகிழ்ந்திருக் கிறான். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த பகைவர்களின் கூக்குரல் இப்பொழுதும் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டிருந் தது. இப்படியே பிணக் குவியல்கள் கலந்த நாட்கள் எல்லாம் அவன் மனக்கண்முன் வந்து நினைவுத் திரையாக விழுந்து கொண்டிருந்தன. தன் புயங்களையும், வடுக்களையும் தொட்டுப் பார்த்துக்கொண்டே அந்த வழியைக் கடந்து சென்றான். வெகுதூரத்துக்கப்பால் தெரியும் தான் பிறந்து வளர்ந்த மலைப்பிரதேசம் அவனுக்கு ஒர் உற்சாகத்தைக் கிளப்பிவிட்டது. யுத்தவெறி குடிகொண்டிருந்த இரும்பு போல வைரம் பாய்ந்திருந்த அவனது மனத்தில் இப்பொழுது இயற்கையின் இனிமை புக ஆரம்பித்தது.
தாரா வெளி மகவில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். குதிரையின் காலடிச் சத்தம் கேட்டதும் திரும்பினாள். யுத்த உடையணிந்து பிரதாப் கம்பீரமாக நின்றான். ஒருவரை ஒருவர் திடீரென்று அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. தாரா இப்பொழுது குழந்தையாக இல்லை. வனம் அவளை சந்து எழில் செய்து கொண்டி ருந்தது. அவள் அங்கங்கள் இளமையின் எழில் நாதத்தை வீசின. கண்களில் இத்தகையதென்று சொல்லமுடியாத ஒரு ஜோதி வழிந்தது. அவளைக் கண்டதும் முதலில் திகைத்து நின்றான் பிரதாப். விரைந்து உள்ளே போய்த் தன் வாளை எடுத்து அவளிடம் கொடுத் தான். தாரா இரு கரங்களையும் நீட்டி அதை வாங்கிக் கொண்டு நமஸ்கரித்தாள். அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு உள்ளே
136

சென்றான் பிரதாப். யுத்தங்களில் அடிபட்டதால் ஏற்பட்டிருந்த களைப்பு அவனை விட்டுப் பறந்து போய்விட்டது. யுத்தங்களின் சின்னங்கள் மட்டும் முகத்திலும், மார்பிலும் புயங்களிலும் கொஞ்சங் கூட அழியவில்லை. ஆனால் மனத்தில் மட்டும் அவற்றின் அடையா ளமே இல்லாமல் மறைந்து விட்டது. அதற்கு மாறாகக் கருணையும், அன்பும் குமுறிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நிமிஷமும் அவளைத் தன்னுடன் வைத்துக்கொண்டு பிரியாதிருந்தான். இந்த நாட்களிற் பிரதாப் கந்தர்வர்களது உலகத்தில் வாழ்ந்து கொண்டி ருந்தான். மலைச்சாரல்களிலும் நதிக்கரைகளிலும் அவளுடன் கூடிக் குழந்தை போல விளையாடித் திரிந்தான். இவ்வளவு காலமும் மரமும் செடியும் நிறைந்து கிடந்த மலைப்பிரதேசம் புதிய ஒளி பெற்றுப் பிரகாசித்தது. செங்குத்தான மலைப்பாறைகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் அவளைத் தன் கைகளில் ஏந்திச் செல்வான். அந்தச் சமயங்களில் அவள் நாணத்தால் ஒடுங்கிச் சிவந்து பொலிவுற்று விளங்குவாள். அவன் அதைக் கண்டு இன்பவெறி கொள்வான்.தன் மனதில் கோயில் கொண்டிருந்த சிவாஜி மகாராஜா வையும், யுத்த களங்களையும் மறந்து போய்த் தாராபாயுடன் பல மாதங்களை நிமிஷங்களாகக் கழித்தான்.
தகூFணத்தில் சிவாஜியின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டேயிருந்தது. பீஜபூர் ராஜ்யத்தின் பல கோட்டைகளைச் சிவாஜி வென்று அடிமைப்படுத்திக் கொண்டார். பீஜபூர் சுல்தானான அலி அதில் இவற்றைக் கண்டு கொதிப்படைந்தான். சிவாஜியை எப்படியேனும் கொன்று ஒழித்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வரவர மேலேங்கி வளர்ந்து வந்தது. சுல்தான் படைத் தலைவர்களையும் உபேதார்களையும் அழைத்து ஒரு சபை கூட்டினான். சபையிலுள்ள எல்லோர் கண்களிலிருந்தும் நெருப்புப் பொறி பறந்தது. சுல்தான் கட்டிடமே தகர்ந்து விழுந்துவிடும்படி கர்ஜித்துக் கொண்டு இருந்தான். ஒவ்வொருவரும் சுல்தானைச் சமாதானஞ் செய்ய எண்ணித் தத்தமக்குப் '? சொன்னார்கள். சிவாஜியிடம் அவர்களுக்கு உள்ளூரப் பயம் நிறைந்திருந்தது. சபையில் அமைதி நிலை கொள்ளவிடாமல் சுல்தான் அடிக்கடி குழப்பிக் கொண்டிருந் தான்.
அப்பொழுது, சமஸ்தானத் தலைமைக் காரியஸ்தன் அப்ஸில்லா கான் எழுந்து, "பாதுஷா குகைக்குக் குகை புகுந்து வெளிப்படும் அந்த மலை எலி (சிவாஜி) யை நானே சென்று பிடித்துக் குதிரையோடு கட்டி ஊரார் பிடிக்கும்படி கொண்டு வருகிறேன் என்று கூறினான். கான் நல்ல கட்டு வாய்ந்த உடலமைப்புள்ளவன். போர்த் தொழிலில் மிகவும் ஈன உறவாடிக் கொள்ளும் அதிபாதகன் பிஜபூர் சுல்தானின்
137

Page 71
பேகத்திற்கும் நெருங்கிய உறவினன் சுல்தான் மனம் குளிர்ந்தது. கானுக்குத் துணையாக 12,000 குதிரை வீரரைத் தயார் செய்தான். வலிமை கொண்டு திரண்ட குதிரைப் படையோடு கான் புறப் பட்டான். வழியிலுள்ள சில கோட்டைகளை வென்று சுவாதீனப் படுத்தினான். பல ஊர்களையும், கோவில்களையும் சூறையாடிக் கொண்டு வயா நகரில் வந்து தங்கினான்.
அப்பொழுது சிவாஜி மகாராஜா பெருமை பொருந்திய பிரதாப்கட் துர்க்கம் வந்து தங்கியிருந்தார். ஒரு தூதுவனை அனுப்பி சிவாஜியை வஞ்சனையால் வரச் செய்து லேசாகச் சிறைசெய்து விடலாமென்று கான் நினைத்திருந்தான். ஆனால் சிவாஜி அதை அறிந்து கொண்டார். அதனால் கானே பிரதாப்கட்டுக்கு வர நேர்ந்தது. கானைக் கொன்று அவன் படையையும் அழிக்க வேண்டிய ஏற்பாடுகளை மகாராஜா துரிதமாகச் செய்தார். ஒய்வெடுத்துக் கொள்ளும்படி விடப்பட்ட வீரர்களிடம் தூதுவரை அனுப்பினார்.
ஒரு நாள் மாலை நேரம் சூரியன் மலைச் சிகரங்களில் மறைந்து கொண்டிருந்தான். மலைச்சாரல் ரம்மியமாகப் பொலிவு பெற்று விளங்கியது. பறவைகள் ஆரவாரஞ் செய்தன. தூரத்திலிருந்து வரும் அருவிகளின் சலசலப்பு மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பிரதாப்ராவ் தாராவையுங் கூட்டிக் கொண்டு காயத்திரியின் கரையில் வந்து சேர்ந்தான். அங்குள்ள இயற்கையின் செளந்தர்யத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். பிரதாப் தாராவைத் தன்னருகில் அணைத்துக் கொண்டு விளையாடினான். தங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையின் பொழிலை ஒவ்வொன்றாக அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் யுத்த பூமியில் வாளும் கையு மாகத் திரிந்து உயிர்க் கொலை புரிந்து மகிழ்ந்த அந்த மராட்டிய வீரனது உள்ளத்திலே கவித்துவமும், அமைதியும் ததும்பி வழிந்தன. அவர்கள் வெளியுலகத்தை மறந்து இன்பத்தில் லயித்திருந்தார்கள்.
மலையில் அடியிலிருக்கும் ரஸ்தா மலைமேல் இருப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இதனால் ரஸ்தாவின் குதிரையில் வந்து கொண்டிருந்த ஒருவனை அவர்கள் கண்டார்கள். சிவாஜி மகாராஜா வின் கட்டளைப்படி தன்னை அழைத்துச் செல்வதற்காகவே அவன் வந்திருக்கின்றான் என்பதைப் பிரதாப் தெரிந்து கொண்டான். திடீர் என்று அவன் முகத்தில் இருள் கவிந்து கொண்டது. சடுதியில் ஏற்பட்ட இம்மாற்றத்தைத் தாரா நன்கு கவனித்துக் கொண்டாள். பிரதாப் அவளை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப் பட்டான். போகும் பொழுது அவன் உள்ளத்தின் வேட்கை தானா கவே வெளிக்கிளம்பிவிட்டது.
138

"தாரா! மகாராஜாவே அவனை என்னிடம் அனுப்பியிருக்கிறார். இனி மகாராஜாவிடம் போக எனக்குப் பிரியமில்லை.”
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்” "ஐயோ! இனி எனக்கு யுத்தஞ் செய்ய இஷ்டமில்லையே!” தாய்நாட்டின் கெளரவத்தைக் காப்பது கடமையல்லவா?” “அதற்கு நான் என்ன செய்வது? “உடனே மகாராஜாவிடம் புறப்பட்டுச் சென்று அவர் இஷ்டத் தைப் பூர்த்தி செய்ய வேண்டியதுதான்”
"தாரா! உன்னைப் பிரிந்தால் எனக்குச் சோர்வு ஏற்பட்டுவிடும் எப்படி யுத்த பூமியில் நினைத்துப் போர் செய்ய என்னால் இயலும்?”
“தாங்களுடன் கூட நானும் வருகிறேன்.” "நீ அங்கே வந்து என்ன செய்வாய்” தங்களுடன் கோட்டை வரையிலும் வருகிறேன். யுத்தம் முடிந்த தும் உடனே சந்திக்கலாம். கடமையைச் செய்யத் தவறினால் நமக்குச் சுகம் ஏது? தாய் நாட்டின் சாபத்துக்கு இலக்காக வேண்டு மல்லவா?
இதற்குள் வீட்டை அடைந்து விட்டார்கள். தாராவின் வார்த்தை ܫ களைத் தட்ட அவனுக்குச் சக்தி வரவில்லை. அதனால் அவள் பேச்சுக்குக் கட்டுப்பட்டான். தூதன் சிவாஜி மகாராஜாவின் முத்திரையிட்ட ஒலையைப் பிரதாப்ராவின் கையில் கொடுத்தான். மூவரும் குதிரைகளிற் புறப்பட்டார்கள். வழியெல்லாம் தாரா அவனுடைய மனத்தில் உற்சாகம் உண்டாகும்படியான பேச்சுக் களைப் பேசிக் கொண்டே போனாள். அவனுடைய மனத்தில் அடிக்கடி சபலம் தட்டிக் கொண்டிருந்தது. வரவர அமைதியற்ற வனாகவே காணப்பட்டான். பிரதாப்கட் நெருங்கி விட்டது. தாராவை ஒரு பந்தோபஸ்தான இடத்திற்கு கொண்டு போய் விட்டு அவன் மகாராஜாவிடம் புறப்படத் தயாரானான். தாரா அவனது உடைவாளை எடுத்து “பவானி தேவி! எங்களுக்கு வெற்றியும் இன்பமும் தந்தருள்” என்று வணங்கிப் பிரதாப்ராவின் கையில் அதைக் கொடுத்து உற்சாகமாக வழி அனுப்பினாள்.
அடுத்த நாளே அப்ஸில்லா கான் பிரதாப்கட்டுக்கு வருவதாக இருந்தான். இதற்குரிய ஏற்பாடுகள் மகாராஜாவின் கட்டளைப்படி நடந்துகொண்டிருந்தன. மகாராஜா படைத் தலைவர்களை அழைத்து, கானின் படைகளை எதிர்க்க வேண்டிய வசதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். மகாராஜாவைக் கண்டதும் பிரதாப்
139

Page 72
வணங்கி நின்றான். அவர் அவனை அன்போடு வரவேற்று ஒரு பெரும் படையை நடத்தும் பொறுப்பை அளித்ததைப் பெருமை யாக ஏற்றுக் கொண்டான்.
மறுநாள் கான் தன் பெரிய படையுடன் வந்து கொண்டிருந்தான். முன் பேசிக் கொண்டிருந்தபடி அப்படை துர்க்கத்துக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. கான் கள்ள நெஞ்சுடனே சில மெய்க் காப்பாளர்களோடு உள்ளே புகுந்தான். ஆனால் அவன் மறுபடியும் அதனின்று வெளியேறி சிவாஜியுடைய படையை எதிர்க்க வேண்டியதற்கான குறிப்பொன்று துர்க்கத்திலிருந்து எழுந்தது. இந்த எதிர்பாராத நிலைமையைச் சமாளிக்க முடியாமல் கானினுடைய சைனியம் புறங்காட்டியது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டார்கள். அநேகர் சிவாஜியின் வீரர்களுக்குத் தலை வணங்கி நின்றார்கள்.
பிணங்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. மராட்டியர்களுடைய உடைகளும் வாள்களும் ரத்தந்தோய்ந்து பிரகாசித்தன. வெற்றியின் அறிகுறியாக முழங்கும் முரசுகளின் ஒசை வெகுதூரம் வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது. பிரதாப் வெற்றி கொண்டு நின்ற தனது படையைக் கோட்டையை நோக்கி நடத்திக் கொண்டு வந்தான். வீரர்கள் வெற்றியின் சந்தோஷத்தால் வெறிகொண்டு ஆரவாரஞ் செய்து குதிரைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். பிரதாப்ராவின் குதிரை எல்லோருக்கும் முன்பு கம்பீரமாக நடந்து சென்றது. சிறிது தூரத்தில் ஒரு மராட்டிய இளைஞன் வந்துகொண்டிருந்தான். கையில் வாளும், வீரக்கழலும் கச்சையும் வழிந்து கொண்டிருக்கும் ரத்தமுடைய அவன் தோற்றமும் அந்த யுத்த பூமியை அழகு செய்தது. யுத்தத்திற்பட்ட அடியினாற் தளர்ந்து தடுமாறிக் கொண்டே வந்து விழுந்து விட்டான். பிரதாப் குதிரையை விட்டு இறங்கிச் சென்று அவனை எடுத்து நிறுத்தினான். சிறிது நேரம் வரை பிரதாப் அசையா திருந்தான். அவன் சரீரம் நடுங்கியது. கண்களில் நீர் நிறைந்து வழிந்தோடியது. சடுதியில் எங்கும் அமைதி நிலவியது.
பிரதாப் யுத்த வீரன் வேஷத்தில் விளங்கிய தன் காதலியைக் கை களில் ஏந்திக் கொண்டு துர்க்கத்தை நோக்கி நடந்தான். தாராவின் கையிலுள்ள வாள் இன்னும் நழுவிவிடவில்லை. அவள் கண்களி னின்றும் நீர் ரத்தத்தோடு வழிந்தோடிக் கொண்டிருந்தது. சிவாஜி தூரத்தில் வந்து கொண்டிருந்த பிரதாப்ராவின் தோற்றத்தைக் கண்டு எல்லோரையும் விலக்கிக்கொண்டு அவனுக்கு அருகில் வந்து நின்றார். அவன் மகாராஜாவை வணங்கித் தன் காதலியை மடியில் வைத்துக் கொண்டு விம்மினான். தாரா சிறிது கண்ணை விழித்துப் பார்த்தாள். தன் கையிலிருந்த வாளைச் சிவாஜியின் பாதங்களில்
40

வைத்து “மகாராஜா! தங்களுக்குப் பவானி வெற்றியைக் கொடுப் பாள்” என்றாள். கணவன் பக்கம் திரும்பி "நான் என் கடமையைச் செய்து விட்டேன். தாங்களும் தவறிவிடலாகாது. நாம் மராட்டியர்* என்று சொல்லித் தன் பதியை அணைத்துக்கொண்டு கண்ணை மூடினாள். சிவாஜி மன்னர் கண்களும் கலங்கின.
அவள் ஞாபகத்துக்காகத் தான் சிவாஜி அங்கே பவானிக்கு ஓர் ஆலயம் கட்டுவித்தார்.
கலைமகள், 1938
141

Page 73
புத்தரின் கண்கள்
அது சலவைக் கற்கள் பதித்த ரத்ன கசிதமான மண்டபம். சாளரங் களும், சுவர்களும் பொன் பூசப்பட்டு விளங்கின. சுற்றும் பல வர்ணப் புஷ்பச் செடிகள் மலர்ந்து தலைசாய்ந்து நின்று அன்றிப் பொன் வெயிலும் சந்திர விம்பமும் சாளரங்களுக்கூடாக உள்ளே நுழையும் படி அது அமைந்திருந்தது. அங்கே பொற் கிண்ணங்களில் வர்ணங் கள் கலந்து வைக்கப்பட்டிருந்தன. குருராவ் மன்னன் அக்ரபோதி யுடன் உள்ளே நுழைந்தான். தனக்கு அவ்வரசன் கொடுத்த மண்டபத்தைக் கண்டு அவன் பூரித்துப் போனான். “அரசே இயற்கை யின் அற்புதங்கள் சூழ்ந்து அமைய ஒப்பில்லாமல் விளங்கும் இந்த மண்டபத்தை எனக்கு ஏன் கொடுத்தீர்கள்?’ என்று கேட்டான்.
குருராவ் "உன்னுடைய சித்திரங்களைப் பார்த்தவுடன் இந்த மண்டபம் உனக்குத்தான் உரியது என்று கருதினேன். இதில் என்ன பிசகு, உனக்கு உன்னை மதிக்கத் தெரியவில்லை” என்று சொல்லும் போதே அக்கிரபோதியின் உதடுகள் மலர்ந்தன. சித்திரக்காரன் இதற்கு ஒரு பதிலும் தரவில்லை. ஆனால் அவனுடைய உள்ளத்தின் மலர்ச்சியை மட்டும் முகம் காட்டியது. அரசனும், கலைஞனும் உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்த்தார்கள்.
குருராவ் மகாராஷ்டிர தேசத்து ஒவியன். இயற்கையில் அவனுக் குத் தீராத மோகமிருந்தது. அதனால் ஒரிடத்திலும் நிலையாகத் தங்காமல் மேற்கு மலைச் சாரலிலுள்ள இடங்களிலெல்லாம் சென்று அலைந்தான். அப்பொழுதே ரத்நத்வீபமான ஈழத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். 'முகில்கள் தவழும் மலை முகடுகளும் ரமணியமான ரஷ்தாக்களும் வனங்களும் வன விலங்குகளும், பல வர்ணப்பட்சி சாலங்களும் நிறைந்து செளந்தர்ய தேவதை நடனமாடும் சுவர்க்கத்து நந்தவனமது' என்று அவனுடைய மனத்தில் ஒர் அழியாத எண்ணம் பதிந்து விட்டது. சூரிய விம்பம் ஈழத்தின் மாணிக்கமலை பாறைகளிற் பட்டுச்சிதறி மரங்களின் மரகதக் கிளைகளும் கூடாகப் பிரகாசிக்க அருவிகள் அந்தப் பாறைகளில்
142

விழுந்து சலசலத்துக் கொண்டு தவழ அருகிலிருந்து பறவைகளும் இன்னிசை பாடுவது போல அவன் மனக்கண்களில் அடிக்கடி தெரிந்தது. ஆனாலும் அந்த ஸ்வப்னத் தீவுக்கு போக அவனுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. "உன் ஜன்ம பூமியில் உனக்கு ஒரு சுகமும் கிடையாது. உன் மனத்திரையில் தெரிகிற தீவுக்குப் போ’ என்று அவன் உள்ளம் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த உணர்ச்சிக்கு வழிவிட அவனுக்குச் சக்தியில்லை. எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு மயங்கியிருந்தான்.
அப்பொழுதுதான் சிற்பிகளையும் ஓவியப் புலவர்களையும் அழைத்துவர ஈழதேசத்து தூதுவர்கள் மகாராஷ்டிரத்தில் அலைந்து திரிந்தார்கள். ஈழத்து அரசனான அக்கிரபோதியே தன் காலத்தில் அழியாத கலைச் செல்வத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்று ஒற்றர் களை அனுப்பி வைத்தான். குருராவ் தானே சென்று அவர்களிடம் தன்னை அறிவித்துக் கொண்டான். அவனுடன் இன்னும் பலர் அழைத்து வரப்பட்டார்கள். வரும்பொழுதே அவனுடய உற்சாகத் திற்கு ஒர் அளவில்லை. அரசனை அடைந்ததும் தன் எல்லையில்லாத கற்பனையுலகத்திற்கு ஒரு வாயில் போன்ற சித்திர மண்டபத்தைக் கண்டான்.
சில நாட்களுக்குள்ளேயே அவன் கைபட எழுதிய சில படங்கள் அந்த மண்டபத்திலே தொங்கவிடப்பட்டன. அவற்றிலெல்லாம் உள்ளத்தின் சூக்ஷம எண்ணங்களை வெளிப்படுத்தும் உயிர்க் களை ததும்பிக் கொண்டிருந்தது. அதைக் காணக்காண அரசனுக்கு உவகை பொங்கிக் கொண்டு வந்தது. அதனால் ஒழிந்த நேரங்களிலெல்லாம் குருராவ் உடனேயே தன் காலத்தைப் போக்கி வந்தான்.
ஒரு நாள் மாலை நேரம் சூரியன் மேற்குக் கடலில் மறையும் சமயம் மாலையின் மோகனப் புன்முறுவல் உயர்ந்த விருகூடிங்களுக் கூடாக வந்து அவர்கள் உடம்பில் விழுந்து ஒளி செய்தது. அரசன் குருராவையும் அழைத்துக்கொண்டு மாளிகையின் முன் புறத்துள்ள விகாரைக்குள் நுழைந்தான். நுழைந்தவன் மேல் அடி எடுக்காது தடுமாறினான். அங்கே சந்திரலேகாவும் அவள் தோழிகளும் பகவானை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அரசனுடன் அந்நிய னொருவன் வந்திருப்பதை தோழிகள் கண்டுவிட்டனர். ஆனால் ராஜகுமாரி மெய்மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பகவானின் பால் வடியும் முகத்தைப் பார்த்துக் கொண்டு தன் மலர்க் கரங்களால் புஷ்பங்களை அள்ளிப் பாதங்களில் தூவிக் கொண்டிருந்தாள். குருராவ் அசையாமல் நின்று அவற்றைக் கவனித்தான். "ஆஹா, இவள்தான் ஒவியக் கலையின் ரகசியம் புனிதமான சந்நிதியில் பொன் விளக்கு ஏற்றப்பட்டிருக்கின்றது.’ என்று அவனுடைய
143

Page 74
உள்ளம் சொன்னது. மற்றவர்களின் சந்தடி குறைந்ததும் ராஜகுமாரி திரும்பிப் பார்த்தாள். அரசனும் அந்நியனொருவனும் வாயிலிலே நின்றார்கள். மெல்ல எழுந்து தானும் ஒதுங்கினாள். எல்லோருமாக வேறு வாயிலின் வழியே வெளியே போய் விட்டார்கள். அவள் நிமிர்ந்து பார்த்தபொழுது ஒவியனுக்கு மெய் சிலிர்த்தது. அதில் அவனுடைய கற்பனையிலே பட்டுக்கொண்டிருந்த அநேக உண்மை கள் பிரத்தியகூஷமானவை போலவே இருந்தன.
அவர்கள் போனவுடன் இருவரும் உள்ளே சென்றார்கள். இங்கே அவள் நின்றதை அறியாமல் வந்து விட்டோமே என்று அரசனுடைய உள்ளத்தில் ஒர் அதிர்ச்சி உண்டாகியிருந்தது. அதை வெளிக் காட்டாது சிற்பங்களையும் ஒவியங்களையும் அவனுக்குக் காட்டிக் கொண்டு போனான். குருராவும் ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்தே பார்த்தான். உண்மையில் ஒன்றுமே விளங்கவில்லை. ஆனாலும் அரசனுக்காக கருத்தின்றித் தலையை மட்டும் அசைத்துக் கொண்டே பின்னால் நடந்தான். திடீரென்று ஒவியனின் நிலைமை யில் ஏற்பட்ட மாறுதலை அரசனும் உணர்ந்து விட்டான். உடனே பேச்சை மாற்றி “குருராவ் பகவானின் படமொன்று எழுதவேண்டும். அது எப்போது முடியும்” என்று கேட்டார். "மகாராஜா நாளைக்கே முடித்து விடலாம்’ என்று பதில் சொன்னான். அவ்வளவுடன் இருவரும் பிரிந்து சென்று விட்டார்கள்.
அன்று இரவு குருராவ் தன் படுக்கையிலே வெகுநேரம் புரண்டு கிடந்து பார்த்தான். நித்திரை வரவில்லை. வெளியிலே சந்திரிகை பொழிந்து கொண்டிருந்தது. அவனுடைய உள்ளம் தூரத்திலுள்ள புத்த விகாரைக்குள்ளே சென்று தடுமாறிக் கொண்டு அலைந்தது. "சே! அவள் பெண்ணை அப்படிச் சொன்னால் எனது வாய் எரிந்து விடும் கண்களின் சூசுஷ்ம ஜீவன்தான் அவள். ஈழம் பெற்ற அந்த மாணிக்க விளக்கை நான் மறுபடியும் காணுவேனா? அது முடியா விட்டால் எனது உயிர்களைத்து விடும். பிறகு என் கைகளும் மனமும் சோர்ந்து விடும். அவளை மறுபடியும் காணவேண்டுமென்று நினைப் பதற்கு நான் யார்? நானே அரசனின் அடிமை.
'இவள் அரசனின் உலகத்தின் தவச் செல்வம். அது எனக்குக் கிடைக்காது. ஐயோ இது என்ன நினைவு? எனக்கு ஆறுதலளித்த தேவன் அரசனல்லவா? அவனை ஏமாற்ற நினைப்பதுதானா அதற்குச் செய்யும் பிரதியுபகாரம்? நான் நன்றிகெட்டவன். என்று நினைத்த வுடன் அவனுடைய உடம்பு நடுங்கியது. இதற்குள் வைகறைக் கோழியும் கூவிவிட்டது. அயர்ந்து நித்திரையாகி விட்டான். பிறகு எழும்போது பொழுது புலர்ந்து சில நாழிகையாகி விட்டன.
144

ராஜகுமாரியும் அன்றைக்கு ஏனோ அப்படி விரும்பினாள். அரசனுடன் சித்திரங்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் அவளுக்கு வந்து விட்டது. அன்றைக்கே தோழி ஒருத்தியிடம் தன் விருப்பத்தைச் சொல்லி அரசனிடம் அனுப்பினாள். அதைக் கேட்டதும் அரசனுக்கு ஒர் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் உயிர் போல வளர்த்த மகளது விருப்பத்தை உடைத்து எறிந்து விட மனம் வரவில்லை. அதனால், “நாளைக்குக் காலையில் அழைத்துச் செல்கி றேன்” என்று சொல்லியனுப்பி விட்டான். அடுத்த நாள் பொழுது புலருமுன் அவள் எழுந்து விட்டாள். அப்பொழுதுதான் சூரியன் கீழ்க் கோடியில் உதயமாகிக் கொண்டிருந்தான். அவர்கள் சித்திர மண்டபத்தை அடைந்த பொழுதும் குருராவ் நித்திரையினின்றும் எழவில்லை. அங்கிருந்த சித்திரம் ஒவ்வொன்றையும் அரசன் அவளுக்குக் காட்டிக்கொண்டு நின்றான். அப்பொழுதே அவன் நித்திரை விட்டெழுந்து மண்டபத்துள் வந்தான். ஆனால் இதை அவன் எதிர்பார்த்திருப்பது எப்படி கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அரசனை நமஸ்கரித்தான். சித்திரங்களைப் பார்த்துக் கொண்டு நின்ற ஆவலில் பேரலை அறியாத அவள் கண்கள் அப்படியே ஒவியக் கலைஞன் மீது பாய்ந்தன. குருராவும் அரசனை விட்டு அவளைப் பார்த்தான். இருவரும் தலை குனிந்தார்கள். அரசன் மட்டும் மெளனமாகவே நின்றான். கண்களின் பேச்சுக்களும் முடிந்து சில விநாடிகள் கழிந்து விட்டன. பிறகு “இந்தச் சித்திரங்கள் பொருத்தமாய் அமைந்திருக்கின்றனவா?’ என்று வெறும் வெளி யைப் பார்த்துக்கொண்டே குருராவ் கேட்டான். அதற்கு “வாஸ்தவ மாகவே உயிருள்ளவை’ என்றாள் ராஜகுமாரி. தன்னுடைய சித்திரங்கள் உண்மையில் உயிருள்ளவைகள்தான் என்றாலும் அவள் சொல்லக் கேட்டவுடன் அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. அரசனின் கீழிருந்து சேவகம் செய்யும் ஒவியன் என்றும், அவனுக்குக் கண் போன்றவளென்றும் இருந்த பாகுபாடு அவர்களிடத்திலே தெரிய வில்லை. ஆனால் அக்கிரபோதிக்கு இவைகளில் ஒன்றும் அவ்வள வாக விளங்கவில்லை. ராஜ்யத்தைச் சுமந்து கொண்டு புகழ் மயக்கத் தில் ஈடுபட்டிருந்த அவனுக்குத் தூரத்தில் இருந்தபடியே வேகமாகப் பாய்ந்த, காவியங்களையும் எழுதிக் காட்டுகிற பருவ உள்ளங்களின் சமத்துவக் கலப்பு விளங்காததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத் தானே? பிறகு ராஜகுமாரியும் அரசனும் மாளிகைக்குப் போய் விட்டார்கள்.
“புத்தபகவானின் படமொன்று நாளைக்கு எழுதித் தருகிறேன்” என்று அரசனுக்குச் சொன்னதை நினைக்கும்போது அவனுக்குச் சோர்வாக இருந்தது. மனத்தில் அமைதி நிலைகொண்டிருக்கும் போதுதான் சித்திரங்கள் எழுதமுடியும். அதிலும் பகவானின்
145

Page 75


Page 76
உன்னைப் போன்ற அற்புத வஸ்துக்கள் கிடைத்துவிட்டாலும் அவற்றை போற்றிப் பாதுகாக்கும் சக்தி எனக்கு இல்லை. தூரத்தில் உன்னைக் கண்டு உள்ளம் கலங்காமலே மகிழ்ச்சி அடைந்தேன். நீ அருகில் வர எனக்கு வழி தெரியவில்லை.”
தாங்கள் அப்படிச் சொன்னால் என் கதி என்னவாகும்?”
“அரசரை ஏமாற்றுகிற பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன். பகவானின் படத்தை அன்று எழுதினேன் அதற்குள்ளும் உன் கண்கள் அப்படியே அமைந்துவிட்டன. அவரும் அதைக் கண்டுவிட்டார். அவருடைய பெரிய மனசு என்னை மன்னித்து விட்டது சந்திரா! நீ கிட்ட வராதே! நரம்புகள் சோர்கின்றன. என் மார்பைத் தொட்டுப்
If Tsjf. ”
"நீங்கள் என்ன தீமையைச் செய்து விட்டீர்கள்? நான் எந்த வழியிலேனும் சந்தோஷமடைந்தால் அரசர் அதனால் மிகவும் மகிழ்வார். தாங்கள் கலைச் செல்வத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ராஜ கன்னிகைகள் கலைஞர்களை மணந்து கொள்ளுகிறதில்லையா? அதுதானே மிகவும் மேலானது.”
“இருக்கலாம். ஆனால் நன்றி மறந்தவன் சத்திரியருக்குள்ளே நுழைந்திருக்கலாம் அல்லவே? சந்திரா! அப்படி இது பேசி என்னைக் கலங்க வைக்காதே! ஆசை தீரும்வரை இன்றைக்கு உன்னைப் பார்க்கப் போகிறேன்.”
இருவரும் இருந்தார்கள். கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே மெளனமாக வெகுநேரம் வரை இருந்து விட்டார்கள். "நீ என் மீது இத்தனை ஆசையை ஏனோ வைத்தாய்? சந்திரா பொழுதும் புலரப் போகிறது. இனி நில்லாதே! நாளைக்குப் பேசுவோம்’ என்று குருராவ் சொன்னான். அவளும் எழுந்து வெளியே சென்றாள். தூரத்தில் ஒரு மங்கலான உருவம் இவளோடு மறைந்து செல்வது மெய்மறந்து செல்லும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை. அவனுக்குத்தான் அது எப்படித் தெரியும்.
இதைக் கண்ட அக்ரபோதிக்கு செய்வது என்னவென்று தெரிய வில்லை. நான் கலையை வளர்க்க வேண்டுமென்று நினைத்து இதைச் செய்தேன். எதிர்பாராத ஒரு பலனைக் கொண்டு வருகிறதே! அவளோ ராஜாதி ராஜர்களுக்கும் கிடைக்காத அற்புத வஸ்து. கேவலம் ஒரு சித்திரக்காரனுடைய மாயவலைக்குள் விழுந்து விட்டாள். குருராவும் கெட்டவனல்லன். நன்றியுள்ளவன். அவனு டைய உயர்ந்த நோக்கங்களைப் பார்க்கும்போது எனக்கே உடம்பு சிலிர்க்கிறது. எப்படி இருந்தால் என்ன? அவளுக்கு சிறிதும் தகுதி இல்லாதவன்தானே? ஒளி செய்ய வைத்த தீபம் வீட்டையே
148

எரித்துவிட கோரமான இருள் சடுதியில் வந்து மூளுவது போல எனக்கு நிகழப்போகிறது. அதற்காக அவனைத் தண்டிக்கலாமோ? அவனிடம் ஒரு பிழையும் இல்லை. அவன் வாவென்று அவளைச் சொல்லவில்லை. ஆனால் அவனுடைய இளமையும் ரூபசெளந்தர் யமும் அவளை அழுத்திவிட்டன.
அவனுக்கு ஒரு துன்பம் வந்தாலும் சந்திரா நீ பொறுக்கமாட்டாய் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நிலைமைக்கு நான் யாது செய்வேன்’ என்று நினைத்து அரசன் வாடிப்போய் இருந்தான்.
அடுத்தநாள் பொழுதும் சாய்ந்துவிட இருள் கவிந்துகொண்டே வந்தது. அரசன் சித்திரசாலைக்கு வரவேண்டிய நேரமும் கழிந்து விட்டது. குருராவும் எல்லாவற்றையும் நினைத்து வாடிப்போனான். "சந்திரா நீ வந்ததை எப்படியோ அரசர் அறிந்து விட்டார். என்னை நன்றி கெட்ட பாதகனென்றே கருதியிருப்பார். இந்தியர்கள், அதிலும் மகாராஷ்டிரத்தவர்கள் ஒருநாளும் நன்றி கொல்ல மாட்டார்கள் சந்திரா! உன் அன்பையும், காதலையும் புறத்தே தள்ளிவிட நான் விரும்பவில்லை. உண்மையில் உன்னைக் கண்டால் நான் சுவர்க்கத்தை அனுபவிக்கின்றேன். உன்னிடம் சல்லாபம் செய்வதை விட மேலானது எனக்கு ஒன்றுமில்லை. உன்னை, உன் வாழ்வை மலரச் செய்வேன் என்று நீநினைப்பதற்கே நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கவேண்டும்! என்னைவிடச் சந்தோஷமடையக் கூடியவர் யாருமில்லை. ஆனால் என்னை விடப் பாவியும் ஒருவருமில்லை. நாழிகைகள் கழிந்து கொண்டே போகின்றன. இன்னும் வெகுநேரம் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அதைக் கண்டு அரசருடைய ஆத்மா வெறுக்கப் போகிறது. நீ சிறுபெண். உனது உள்ளம் இளமை யின் இயல்பான இன்ப சமுத்திரத்தில் முழுகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நானோ கடமையென்னும் இரும்புச் சுவர்களுக்குள்ளே தூரத்தில் நின்று கரிந்து போகிறேன். உன்னை, உன்னிடம் மறைந்து பிரதி விம்பிக்கும் கலையின் உயிரை, உன் வார்த்தைகளின் அம்ருத சுகத்தை நான் விரும்பாமற் தள்ளவில்லை. ரசிகன் அல்லாதவன் என என்னைக் கருதிவிடாதே. எனக்கும் நன்றாக ரசிக்கத் தெரியும். ஆனால் பிறருடைய சொத்தை அபகரித்து என் பசியை ஆற்றிக் கொள்ள மாட்டேன். அரசர்க்கு கட்டளை செய்யும் அதிகாரம் உன்னிடம் இருக்கலாம். அரசரும் உன் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். அதனாலெல்லாம் ஆதரித்த தெய்வத்திற்கு பழி செய்த மகாபாதகம் என்னை விட்டு நீங்குமா? ஒரு போதும் இல்லை. ஆனால் உன்னை அடையாதிருக்கவும் என்னால் முடியாது. இந்த ஜன்மத்தில் நீயும் அதை விரும்பாதே. எனக்கும் உண்மையில் உன்னைவிட வேறொரு நினைவும் இல்லை. அடுத்த ஜன்மத்திலாவது
149

Page 77
உன்னை அடைவேன். இப்பொழுது இருக்கிற மோக மயக்கத்தை நீ பெரிதாக எண்ணாதே. இதுவும் ஜன்மங்கள் செல்லச் செல்ல விழை யும். நேரில் கண்ட பிறகும் உன்னை அணைத்துக் கொள்ளாமல் இருக்க என்னால் முடியாது. அப்போது கட்டாயம் பிசகி விடுவேன். கண்மணி சந்திரா சத்திரியப் பெண்தானே. கடமை செய்தவனை மெச்சுவாய் என்றே எண்ணுகிறேன். கடைசியில் உன்னுடைய மன்னிப்பு எனக்குச் சாந்தியாக்கும்’ என்று ஒரு கடிதமெழுதி அவளுக்குத் தெரியும்படி வெளியில் வைத்து விட்டான். பிறகு பகவானின் படத்தின் முன்பு நின்று வணங்கிவிட்டு கையிலிருந்த ஈட்டியைத் தன் மார்பிலே புகுத்திக்கொண்டு கண்களை மூடினான்.
அன்று பூர்வ பசுடித்து நவமி. திடீரென்று கரிய மழை முகில்கள் வானத்தை மறைத்து விட்டன. பெரும் புயலின் அறிகுறிகளும் தோன்றிக் கொண்டிருந்தன. காரிருளைக் கிழித்துக் கொண்டு மின்ன லின் கோடுகள் அடிவானத்துக்கப்பாலும் சென்று மறைந்தன. சந்திர லேகா அப்பொழுதுதான் தன் மாளிகையினின்றும் புறப்பட்டாள். தூரத்திலிருந்து ஒர் ஆந்தை அலறுவது பேய்க் காற்றின் குமுறலுக் கிடையே கேட்டுக் கொண்டிருந்தது. இயற்கையின் கோரக் கூத்தை கண்டு சற்றே கலங்கினாள். ஆனாலும் குருராவின் மண்டபத்தை அடைந்து விட்டாள். உள்ளே நுழையும்போது ஒரு பயங்கரமான நிசப்தம் குடிகொண்டிருந்தது. விரைவாக நடந்தாள். நடுவில் அவன் வைத்த வெள்ளைத்தாள் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டதும் அவளுக்கு வெறி பிடித்து விட்டது. போர்க்களத்தில் நிற்கும் வீரன் போல அவன் மார்பிலறைந்திருந்த ஈட்டியைப் பிடுங்கித் தன் மார்பி னுள்ளே மறைத்துக்கொண்டு தானும் தலையைச் சாய்ந்தாள்.
பொழுது புலர்ந்து இயற்கையிலும் ஒரமைதி நிலவியது. மாளிகைப் புறத்திலுள்ள செடிகளும், மரங்களும் சரிந்து நிலத்திற் கிடந்தன. அக்கிரபோதி சித்திர மண்டபத்தினுள்ளே துடிப்போடு நுழைந்தான். அவன் கண்கள் கலங்க மெய் நடுங்கியது. அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான். முன்னால் இருந்த பகவானின் கண்களிலும் ரத்தத் துளிகள் தெறித்து இருள் கவிந்து விட்டது.
கலைமகள்

கூண்டுக்கிளி
சித்தோரின் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை வானளாவி நின்றது. வசந்தன் அதன் வாயிலில் யோசனையில் ஆழ்ந்திருந்தான். அப்போது ஒரு வானம்பாடி கூவிக் கொண்டிருந்ததும் திரும்பிப் பார்த்தான். அதன் ஜோடியும் கூவிக்கொண்டே பறந்து வந்தது. உடனே இரண்டும் சேர்ந்து வானவெளியிற் பறந்து மறைந்தன. இதைக் கண்கொட்டாமற் பார்த்திருந்த அவனது உள்ளத்திலிருந்து ஆழ்ந்த ஒரு பெருமூச்சு வந்தது. மெல்ல எழுந்து கோட்டையின் உயரத்தையும் இரும்பு வாயில்களையும் பார்த்துக் கொண்டே அதைச் சுற்றி நடந்தான். பலமணி நேரம் சென்றுவிட்டது. மீண்டும் அவ்விடத்தை நோக்கித் திரும்பி வந்தான். அப்பொழுதும் அந்த வானம்பாடிகள் கூவிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றன. அதைக் கண்டதும் உள்ளே உறைந்து கிடந்த சோக ஊற்று உடைந்து அவன் கண்களால் வழிந்தோடியது. அவன் இப்பொழுது திடகாத்திர மாகவே இருந்தான். அஞ்சாத அவனுடைய இயல்பை அந்த சோகக் கண்களே காட்டிக் கொண்டிருந்தன.
பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது. அங்கும் இங்கும் பறவைகள் கத்தும் ஓசையும் அருவிகளின் சலசலப்பும் கலந்து ஒலித்தன. ஆனால் அவன் காதுகளில் இந்த ஒசைகள் விழவில்லை. அந்த இடத்தை விட்டு அசைந்து கொண்டே வீட்டை நோக்கிச் சென்றான். இரு புறமும் மரங்களடர்ந்து விளங்கிய அம்மலர்ச்சிப் பாதை ரம்மியமாக இருந்தது. அதைக் கவனிக்கும்போது உடைந்துபோன அவன் மனத்தில் ஒர் உற்சாகமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக ஒரு வெறுப்பும் எரிச்சலும் ஏற்படவே விரைவாக நடந்தான். அந்த ரஸ்தாவிலே தான் வாஸ்வதத்தையின் வீடும் இருந்தது. எப்போதும் குதுரகலம் நிறைந்து விளங்குகின்ற அந்த வீடு வெறித்துப் போய் பயங்கரமாகக் கிடந்தது. வசந்தன் அதற்கப்பால் ஒர் அடியும் எடுத்து வைக்கவில்லை. சிலை போல பல நாழிகை வரையும் பார்த்தபடியே நின்றான். பிறகு வெறி கொண்டவன் போல் உள்ளே சென்றான்.
15

Page 78
உள்ளே பேய்கள் நடமாடியது போல பயங்கரமாக இருந்தது. பொருள்களும் அலங்கோலமாகச் சிதறி அங்கொன்றும் இங்கொன்று மாகக் கிடந்தன. உடனே ஒரு வாளுடன் கிளம்பிக் கோட்டையை நோக்கி நடந்தான்.
வாஸவதத்தை பிரசித்தி பெற்ற ஒரு தாசியின் மகள். அவளுடைய தாய் பெரிய ஐசுவர்யத்தைச் சம்பாதித்து வைத்திருந்தாள். அதனால் சிறுமியாக இருக்கும்போதே இராஜகுமாரி போல் வளர்க்கப் பட்டாள். அப்போதே அவள் அழகு சித்தோர் முழுவதும் பரவிப் பிரசித்தி பெற்றிருந்தது. அவளுடைய பருவத்தை எதிர்பார்த்துக் கொண்டு எத்தனையோ செல்வர்கள் காத்திருந்தார்கள். அவளும் வாழைக்குருத்துப் போல மதமதவென்று வளர்ந்து விட்டாள். ஆயிரக்கணக்கான கண்கள் அவளைப் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தன. ஆனால் அவள் கண்கள் யாரையும் எதிர்பார்க்க வில்லை. வசந்தனே பிரதான காரணமாக இருந்தான்.
வசந்தன் ராஜபுத்திர வீரர்களிலே சிறந்தவன். சின்ன வயதிலிருந்தே சித்தோர் ராணாவின் சேனையிலே சேவை செய்துகொண்டிருந் தான். அதனால் மகாராணா உதயசிம்மனுக்கு அவனிடம் பெரிய மதிப்பிருந்தது. அவனும் உதயசிம்மனைத்தான் தெய்வமென்றே கருதியிருந்தான். வாஸவதத்தையில் வீடு இருந்த ரஸ்தாவின் வழியே அவன் எத்தனையோ தடவை போயிருக்கிறான். அவன் அந்த ரஸ்தாவின் ஒரு கோடியிலே அவன் வீடும் இருந்தது. தாசிப் பெண் களுடைய ஆடம்பரமான வாழ்வைப் போர் செய்து பழகின அவன் உள்ளம் வெறுத்திருந்தது. அதனால் எப்பொழுதும் அவர்களது வீட்டுப் பக்கமே பாராமல் குதிரையைத் தட்டிவிடுவான். ஒருநாள் வாஸ்வதத்தையின் வீட்டு வெளி மதிலில் அவளைத் தற்செயலாகப் பார்த்துவிட்டான். அங்கிருந்து இரு விழிகள் நோக்கின. அந்த ஒரு பார்வையிலே எத்தனையோ யுகங்களின் பழக்கம் கலந்திருப்பது போல அவனுக்குப் பட்டது. ஒரு நிமிஷம் மையலினால் கலங்கி னான். கணமும் தாமதியாமல் குதிரையைத் தட்டி விட்டான். பிறகு அந்தப் பக்கம் பார்க்காமற் போவதற்கு அவனால் முடியவில்லை. அப்பொழுதெல்லாம் உள்ளத்தின் அந்தரங்கக் கதைகளையும் ஒவ்வொருவர் கண்களும் சொல்லிக் கொண்டு இருந்தன. இதில் ஜன்மாந்தரங்களின் தொடர்பும் பற்றியிருந்தது.
பிறகு சில நாட்கள் கூடச் செல்லவில்லை. தூரத்தில் இருந்தபடி மெளனக் கதைகளோடு காலங்கழிக்க அவர்களால் முடியாதிருந்தது. வசந்தனே அவள் வீட்டிற்குச் சென்று விட்டான். அன்று தன்னை வரவேற்ற தத்தையின் இனிய தோற்றத்தை அவன் இன்றும் மறக்க வில்லை. முதலில் அவர்கள் சந்தித்த போது வெகுநேரம் வரைக்கும்
52

மெளனமும் ஒர் இளஞ்சிரிப்புமே மாறி மாறி இருவரிடத்தும் பிறந்து கொண்டிருந்தன. அவனே முதலில் வாயைத் திறந்தான்.
"உன் கண்கள் வானைவிடப் பெரியவை. வாளைவிடப் பொல்லா தவை. இரத்தத்தைக் கண்டு மகிழும் என் இருதயத்தைக் கீறி இப்படியென்று சொல்லமுடியாத ஒரு நினைவை எழுப்பி விட்டன. எப்படியோ என்னை சரணடையச் செய்து விட்டாயே”
“எததனையோ காலமாக இவ்வழியே போயிருக்கிறீர்கள். இந்தப் பக்கமே உங்கள் கண்கள் திரும்பினது இல்லை. நாங்கள் தாசிகளா யிற்றே."
“ஏன் கேலி பண்ணுகிறாய்? நான் அடிமையாகிவிட்டேன். அதைக் குத்திக்காட்டுவதில் உனக்கு அவ்வளவு சந்தோசம் என்ன?”
“இல்லை விளையாட்டுக்குச் சொன்னேன்” என்று அவன் பாதங் களைத் தொட்டுத் தன் கண்களிலே தத்தை ஒற்றிக் கொண்டாள். வசந்தனுக்கு உடம்பு சிலிர்த்தது. அவன் விளையாட்டாகவே சொன்னான். அவளுக்கு இப்படி உணர்ச்சி வருமென்று அவன் கருதவில்லை. உடனே அவள் கைகளைப் பற்றிப் பிடித்து முன்னாலே உட்கார வைத்தான்.
விரைவில் அவர்களது காதல் மலர்ந்து கனிந்துவிட்டது. அதன் கட்டு எல்லை இன்றிப் பாய்ந்து ஓடி ஓர் இன்ப அலையை எழுப்பிக் கொண்டிருந்தது. அவளுடைய இனிய இயல்பு அந்த வீரனது உள்ளத்தையே குழைத்துவிட்டதெனலாம். அவள் தம் இரண்டு உயிர்களையும் இணைத்தும் பிரமையென்னும் மெளன நரம்பாற் கட்டிவிட்டாள். அதை மீட்டிக்கொண்டு காதல் என்னும் பண்ணைப் பாடி அவனையும் கந்தர்வனாக்கி மகிழ்ந்தாள். W
இவர்களுடைய ஸ்நேகம் சித்தோர் முழுவதும் தெரிந்தது. அனேகர் தவம் இருந்து கிடைக்காத அமிர்தத்தை வசந்தன் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனோ கற்பாரே தலை வணங்கும் ராஜபுத்திர வீரன் அதனாலே பலர் பொறாமையால் எரிந்து கொண்டிருந்தும் இதில் தலையிட விரும்பவில்லை. ஆனால் தத்தையும் அவனும் இவற்றை அறியாமலே மகிழ்ந்திருந்தார்கள்.
ஒரு நாள் உதயசிம்மன் சில வீரருடன் ரஸ்தா வழியே வந்து கொண்டிருந்தான். அதில் வசந்தனும் வருகிறான் என்பதைத் தத்தை அறிந்து விட்டாள். தன்னை திருத்திக் கொண்டு அவன் வருகிற அழகைப் பார்ப்பதற்கு வெளியே வந்து நின்றாள் தத்தை. வெளிமகலில் வந்து நிற்பதை தூரத்தில் வரும்போதே வசந்தன் கண்டு கொண்டான். உடனே ஒர் உவகையும், துடிப்பும் அவன் உள்ளத்தில் ஒன்றாக எழுந்து மறைந்தன. அதற்குள் மகாராணாவும்
153

Page 79
அவளைக் கண்டு விட்டான். உற்றுக் கவனித்தபடி வந்தவன் அருகில் வந்ததும் குதிரையை விட்டு இறங்கினான். இப்படியும் ஒருத்தி இருப்பாளென்று அவனால் கற்பனைகூடப் பண்ண முடியாதிருந்தது. அதனால் வெகுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றான். பிறகு மெல்ல அவளை நோக்கி நடந்து சென்று ஒர் ஆசனத்தில் இருந்தான். இதைக் கண்டதும் வசந்தனுக்கு உள்ளே புகைந்து கொண்டிருந்தது. இன்னது செய்யலாம் என்று தெரியாது தானும் குதிரையை விட்டு இறங்கி உள்ளே போய் ஒருபுறம் நின்றான். அரசன் வருவதைக் கண்டு வாஸ்வதத்தை மிரண்டு போனாள். தடுமாறிக் கொண்டே “மகாராஜ்’ என்று வணங்கிவிட்டு நின்றாள். ராணா தலையில் இருந்து கால்வரைக்கும் அவளை உற்றுப்பார்த்துப் பார்த்து பெருமித மடைந்தான். எனினும் அதிகாரத்துடனேயே பேசத் தொடங் கினான்.
"வாஸ்வத்தையென்பது நீதானே’
“ஆம் மகாராஜ்’
“வெகுகாலமாக பார்க்க வேண்டுமென்று இருந்தேன். எதிர்பாராத படி இன்றுதான் சந்தர்ப்பம் நேர்ந்தது. உன்னை அரண்மனைக்குகூட அழைக்கவேண்டுமென்று இருந்தேன். ஆட்களை அனுப்பி வைக்கும் போது வந்துவிடு.”
தாங்கள் சொல்வது விளங்கவில்லையே!”
"உன்னுடைய பேச்சுத்தான் எனக்கு விளங்கவில்லை. நீ ஒரு தாசி தானே?
"நான் அந்தத் தொழில் செய்யவில்லை. என்னையும் நெறிதவறாத தங்கள் பிரஜைகளுள் ஒருத்தியாக எண்ண வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.”
“பேதைப் பெண்ணே, நான்தான் மகாராணாவென்பதை நீ அறிந்து கொள்ள வில்லையோ? உன் ஜாலங்களை என்னிடம் காட்டுவது பெரிய பிசகு, வீண் வார்த்தைகளைப் பேசாதே’ என்று ராணா அதட்டிப் பேசினான்.
அவள் கண்ணிர் சோர நின்றாள். “மகாராஜா நான்தங்கள் அடிமை, தாங்களே எங்களுடைய தெய்வம். ஆதலால் எங்களையும் காப்பது உங்கள் கடமை." என்று மன்றாடினாள். அதற்கு ராணா கோபம் பொங்க அலட்சியமாக இருந்தான். வசந்தனுக்கு கண்கள் சிவந்து உதடுகள் துடித்தன. சிறிது நேரம் ஒருவரும் பேசவில்லை. அவளுடைய விம்மலொலியே நிசப்பதத்திலே மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது.
154

“மகாராணா, பாவம்! அவள் ஏழை. கொஞ்சம் தயை செய்ய வேண்டும்!” என்று வசந்தன் பணிந்து வேண்டினான். ராணாவின் கண்கள் நெருப்பைக் கக்கின. திரும்பி அவனைப் பார்த்தான். அவனோ கூண்டிற் கிடந்த வேங்கை போல அடங்கி நின்றான். வெளியில் நின்றவர்களை அழைத்து “இவளைக் கொண்டு செல்லுங் கள்” என்று கட்டளை பிறப்பித்தான்.
வசந்தன் அவர்களைத் தடுக்க “மகாராஜா! இவள் என் மனைவி எனக்காகத் தயை செய்யுங்கள்” என்று வணங்கி வேண்டினான்.
அதற்குப் பதிலாக ஒரு பேய்ச் சிரிப்பு ராணாவிடமிருந்து பிறந்தது. அதனால் அந்த வீடே குலுங்கியது. “மகாராணா அனுபவிக்க நினைத்த பின்னும் என்னுடையது என்று சொல்ல உனக்கு துணிவு வந்துவிட்டதா? இப்படி வேறொருவன் சொல்லியிருந்தால் இதற்குள் அவனது தலை உருண்டிருக்கும். நீயோ எனக்குச் சேவை செய்தவன். மன்னித்துவிட்டேன். ஆனால் என் கண்முன் நீ வரப்படாது. போ!” என்று கூறி மற்றவர்களைப் பார்த்தான். தத்தை பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டாள்.
வசந்தனுடைய உள்ளம் வெம்பிச் சோர்ந்து விட்டது. அப்பொழு தும் ராணாவைத் தாழ்ந்து வணங்கி விட்டுச் சென்றான். இவ்வளவை யும் தத்தை பார்த்துக் கொண்டே நின்றாள். உயிரைப் பிரிப்பது போல அவளை இழுத்துச் செல்கிறார்கள்.
அந்த மலைக்கோட்டையின் முடியிலுள்ள அந்தப்புரத்திலே தத்தையைக் காவலோடு வைத்தார்கள். ஆனால் அவளைப் பார்த்துக் கொள்வதற்காக எத்தனையோ பெண்கள் நியமிக்கப்பட்டிருந் தார்கள். ஊட்டுவதற்கும், அலங்கரிப்பதற்கும், மகிழ்விப்பதற்கும் தனித்தனி ஆட்கள் இருந்தார்கள். ஆனால் அவள் சரியாக உண்ணு வதில்லை. தான் அணிந்திருந்த ஆபரணங்களையே கழற்றி எறிந்து விட்டாள். உள்ளத்தில் மலர்ச்சியின்றி வாடிப்போனாள். வசந்தன் ஏங்கி ஏங்கி ராணாவிடம் இரந்து நிற்பதுபோல அவளுடைய கண்களுக்குத் தெரிந்தது. அப்பொழுதெல்லாம் மயங்கி விழுந்து விடுவாள். இனி ஒரு முறையேனும் பழமைபோல அவரோடு தானும் கூடிவாழலாம்’ என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் மரணத்துக்குமுன் ஒரு நாளைக்காவது அவரைக் காணலாம். என்று மட்டும் திட்டாக நம்பியிருந்தாள். அந்த ஒரு நம்பிக்கையே அவளை உயிரோடிருக்கும்படி செய்தது.
வசந்தனோ அவள் பிரியும்போது உயிரிழந்து நின்றான். அவனு டைய கண்களுக்கு உலகம் மங்கிப்போய்த் தெரிந்தது. அதற்குள்ளும் ராணாவை மறக்கமுடியாது அஞ்சி நின்றான். ராணா கோட்டையை
155

Page 80
நோக்கி குதிரையைத் தட்டினான். ஆனால் வசந்தன் மறுபக்கமாகத் தனது குதிரையைத் தட்டிவிட்டான். வெகு தூரம் சென்றபின் திரும்பிக் கோட்டையை நோக்கி வேகமாக வந்தான். கோட்டை யின் வாயிலில் எல்லோரும் நுழைந்து கொண்டிருப்பது தூரத்திலே அவன் கண்களில் விழுந்தது. உடனே குதிரையை விட்டு இறங்கி கால் போனபடி நடந்துசென்றான். பிறகு அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. மலைகளிலும் காடுகளி லும் ஏகாந்தரமாகத் திரிந்தான். தானும் அவளும் விளையாடுவதும், அவளது குறும்பும் நகைப்பும் எல்லாம் அவனது மனத்திரையில் விழுந்து கொண்டிருந்தன். அந்த நேரங்களிற் தனியே கிடந்து புலம்பினான். அதை மலையும், வனமும், பட்சிகளும் கேட்டு எதிரொலித்தன. மலர்களுக்குள்ளும், செடிகளுக்குள்ளும் அவள் தோன்றினாள். இதை ராணா நேரிலே கண்டிருந்தால் அழுதிருப் பான். அப்படி வசந்தன் மனமிழந்து நிலைதடுமாறி விட்டான்.
வாஸ்வத்தைக்கு வேண்டியதைச் செய்ய எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். நாகம் போல் சீறிக் கொண்டிருக்கும் அவள் முன்பு ஒருவராலும் நிற்க முடியவில்லை. ராணாவும் அடிக்கடி அங்கே வந்துகொண்டிருந்தான். ஆயினும் அவளுடைய பயங்கர மான முகத்தைக் கண்டவுடன் திரும்பி விடுவான். இப்படியே சில காலம் திருப்தி அடைந்து வந்தான். பிறகு அவனால் பொறுக்க முடிய வில்லை. ஒரு நாள் தன் அந்தரங்கத்திலிருந்து எரிந்து கொண்டிருந்த கருத்தை வெளியிட்டான். அவளோ பேச்சின்றி பாராமுகமாகவே இருந்தாள். மறுபடியும் ராணாவே பேச்சை எடுத்தான்.
"உன்னுடைய எண்ணங்களை இனியாவது மாத்திக்கொள். ஒரு சுகமும் இன்றி இப்படியே இருந்துவிடுவதால் ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. ராணாவோ நினைத்ததை முடித்து விடுவான்.”
“மகாராஜா தாங்கள் சித்தோரின் மகாராணாதானே. தங்களின் அடிமை கோடிக்கணக்கான பிரஜைகளுக்குத் தாங்கள் பதி. நான் தாசி வயிற்றிற் பிறந்தவள் தான். அதற்காக நானும் நிலைகெட்டுப் போகவேண்டுமென்று நினைப்பது தர்மமல்லவே?”
"இதை நீ எத்தனை முறை சொல்லி விட்டாய். எனக்கும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது.”
"தங்கள் சரீரத்தில் சத்திரிய ரத்தம் ஒடிக்கொண்டுதானே இருக்கின் றது? சித்தோர் மன்னர்கள் நீதிதவறாதவர்கள். அவர்கள் இப்படியும் ஒரு பெண்ணிடம் நடந்து கொள்வார்களென்று நான் சரித்திரங் களிலும் கண்டதில்லை. ஸ்வாமி என்னைப் பாருங்கள். இப்படியே
156

இருந்தால் நீங்கள் தீண்டாமலே என் உயிர் போய்விடும். என் பதியைக்காண ஆவலாக இருக்கிறது. என்னை இரட்சிப்பது தங்கள் கடமை” என்று சொல்லி நமஸ்கரித்தாள். ராணா வெறுப் போடுங் கோபத்தோடும் அலட்சியமாகப் பார்த்தான். உடனே வெளியே சென்றுவிட்டான். அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதனால் பெரிதும் சஞ்சலப் பட்டான். அவளை விட்டுவிடலாமோ எனின் அந்த லாவண்யம் சுட்டுக் கொண்டிருக்கிறது. அணுகலாம் என்றாலோ அவளது பரிதாபமான முகமும் பேச்சும் ஒடுங்கச் செய்கின்றன என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் தத்தையிடம் வந்தான். அவளோ முன் போலவே பேசினாள். சீறிக் கொண்டிருந்தாள்.
"நீ என் கருத்துக்கு இசைய வேண்டும். மகாராணாவின் சக்தியை அறியாமல் உளறித் தள்ளுகிறாய். பயங்கரமான முடிவை வருந்தி அழைக்காதே’ என்று அவன் உறுமினான்.
“மகாராஜா நானும் இந்தச் சித்தூரிலேதான் பிறந்தவள். ராஜபுத்திர ரத்தம் தான் என் சரீரத்திலும் ஒடிக் கொண்டிருக்கிறது. ராஜபுத்திரப் பெண்கள் உயிருக்காக மானத்தை ஒரு போதும் விலைக்கு விற்க மாட்டார்கள்” என்று உதாசீனமாக பதில் சொன்னாள்.
இந்த வார்த்தைகள் அவன் காதுகளை ஊடுருவிச் சென்று இருத யத்தை தாக்கின. அப்படியிருந்தும் மன்னித்து விட்டான். அவளிடம் அத்தனை ஆசையை வைத்திருந்தான்.
இப்பொழுது வசந்தன் பொறுமையை இழந்து விட்டான். "ராணா விரும்பிய பின்னும் என்னுடையவள்’ என்று சொன்னவன் நீயாகி விட்டாய். அதனால் தப்பினாய் ஒடிப்போ” என்ற அரசன் வார்த்தை யிடம் அச்சம் நீங்கி விட்டது. ஆனால் அவன் இதுவரை ராணாவின் முன்னோ, கோட்டை வாயிலுக்கோ போக விரும்பவில்லை. உயிர் மட்டும் கோட்டைக்குள்ளே சஞ்சரிக்க வெளியே பிணம் போல அலைந்து திரிந்தான். இன்று அவளைப் பார்த்து விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
மலைமுட்டியிலிருந்த அந்தப்புறத்திலிருந்து கோட்டைக்கு வெளியே வர ஒரு குகைப் பாதை இருந்தது அதனுாடே பல தடவை கள் போயிருக்கிறான். மையிருட்டிலும் தடுமாறாமல் செல்வதற் குரிய தைரியம் அவனிடம் இப்போது இருக்கிறது. "என்னை எதிர்க்க வல்லவர்கள் ராணாவிடம் இரண்டொருவர் இருக்கிறார்கள். அவர்கள் கண்டாலும் நெருங்க மாட்டார்கள். அன்றி எதிர்த்தா லுமோ ஆயிரம் வசந்தனுடைய சக்தி இப்பொழுது எனக்கு இருக் கிறது.” என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.
157

Page 81
அவன் வாஸ்வதத்தை வீட்டிலிருந்து கிளம்பிக் கோட்டையை அணுகும்போது அந்தி மயங்கி எங்கும் இருள் பரந்து கொண்டி ருந்தது. துணிகரமாகவே குகை வாயிலைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். கோட்டையின் உச்சியை அடையும் போது நடுநிசியும் கழிந்து விட்டது. அங்கேயுள்ள ஒவ்வோர் அறையையும் தேடித்தேடி வரும் போது ஒர் அறையில் தீபமொன்று மங்கி எரிந்து கொண்டி ருந்தது. அதற்குள்ளே வாஸ்வதத்தை சோர்ந்து நித்திரையிற் கிடந்தாள். கணப் பொழுதில் கதவைத் திறந்துகொண்டு போய் தன்னிரு கைகளாலும் அவளை வாரி எடுத்தான். அவள் ராணாவோ என்று துடிதுடித்துப் போனாள். ஆனால் “நான் எப்படியும் உன்னை மறுபடியும் சந்தித்து விட்டேன்” என்ற தன் பதியின் குரல் அவளை மலரச் செய்து விட்டன. இருவர் கண்களும் ஆனந்தத்தால் அருவி யைச் சொரிந்தன. எல்லாவற்றையும் மறந்து சில நாழிகை இருந்தார்கள்.
கோட்டை வாயிலிருந்து காலையிலே கொட்டுகிற முரசொலி விரைந்து கேட்டதும் இரண்டுள்ளமும் துடித்தன. 'புறப்படுவோம்’ என்பதற்குள் மகாராணா எப்படியோ உள்ளே வந்து நின்றான். அந்த மங்கள ஒலியிலும் அவன் கோபக் கண்கள் ஜ்வலித்தன. வசந்தன் தலை சாய்ந்து மன்னனை வணங்கினான். ஆனால் ராணாவின் கைவாள் அவனது தலையைத் துணித்து உருளச் செய்தது. ரத்த வாளுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இத்தனை நாளும் கூண்டில் அடைத்து வைத்திருந்த தத்தை பின் வாயிலால் செங்குத்தான மலைப்பள்ளத்தை நோக்கிச் சுதந்திரமாகப் பறந்து அப்பொழுதுதான் விழுந்து கொண்டிருந்தாள்.
கலைமகள், தை 1940

கலாக்ஷேத்திரம்
에z குருகுலத்தின் புகழ் எங்கும் பரவியிருந்தது. கலைகளாகிய அற்புதக் கண்களைக் கொண்டு உலகத்தைப் பார்த்த ஒரு கூட்டத்தவர்களே அங்கே வசித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஒரு ஒப்பில்லாத ஒரு தலைவர் இருந்தார். அவரை எல்லோரும் குருதேவ ரென்று அழைத்து வந்தார்கள். கோபம், பொறாமை, உயர்வு, தாழ்வு என்ற மயக்கங்களிலிருந்து விடுபட்ட அவர்களுக்குள்ளே கோகுல சந்திரன் என்றொரு பண்டிதனுமிருந்தான். அவன் குருதேவருடன் நீண்ட காலம் வசித்தான். வித்தைகளிலே அவனடைந்துள்ள சிரேஷ்டமே அந்த கூேடித்திரத்தின் அழிவுக்கும் காரணமாயிற்று. சந்திரனுடைய சூசுஷ்ம ஞானத்தைக் கண்ட குருதேவர் தன் பெண்ணான ரஜனிக்கு அவனை ஆசிரியனாக நியமித்தார். அவள் பருவமடைவதற்கு முன்பே பல கலைகளிலும் சந்திரனைவிட மேலான ஞானத்தைப் பெற்று விளங்கினாள். ஆனால் கவிதையில் அவளுக்குத் தீராத மோகம் வளரத் தொடங்கியது. அவளது ஆசையைப் பூர்த்தி செய்வதற்கும் அங்கே யாரும் தயாராக இல்லை. அந்தக் காலத்திலேயே சுதர்சனனென்ற பிரசித்தமான கவி வந்து சேர்ந்தான்.
காளிதாசனையும், கம்பனையும் போன்ற புலமை நிறைந்த அவனது கவிதைகளைக் கண்டதும் குருதேவர் ஆச்சர்யப்பட்டார். அதனால் "சுதர்சனா! உனக்கும் உன் கவிதைகளுக்கும் இனி சாவு வராது.” என்று மகிழ்ந்து ஆசிர்வதித்தார். பிறகு தன் பெண்ணை அழைத்து “அம்மா நீ எந்த சம்பத்தை அடைய வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தாயோ, அது நிறைந்துள்ள பொக்கிஷந்தான் இவன். உனக்கு வேண்டியவற்றை இவனிடமே பெற்றுக்கொள். உனது பாக்கிய வசத்தாலேயே இதுவும் கைகூடிற்று” என்று அவளுக்கும் சுதர்சனனை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த புதிய நிலைமையைக் கண்டு சந்திரன் கலக்கமடைந்தான். அதனால் மெளனமாக இருந்துகொண்டே எல்லோரையும் மாறி
59

Page 82
மாறிப் பார்த்தான். பொறாமையும், ஏமாற்றமும் கலந்த அவனுடைய பார்வையின் ரகசியத்தை மற்றவர்கள் கவனிக்கவில்லை. குரோதம் நிறைந்து குமுறும் உள்ளத்தோடு அன்றைய பொழுதை அவன் ஒரு வாறு கழித்து விட்டான். மறுநாள் உதயத்தோடு எழுந்து ரஜனியிடம் போனான். ஆழத்தில் மறைந்து கிடந்த காமாக்கினி வெளிக்கிளம்பி விடுமோவென்று அவன் மனமே அடித்துக் கொண்டி ருந்தது. அதனால் நெஞ்சையடக்கிக் கொண்டு அவளோடு பேசினான். அப்பொழுதும் அந்த வேகக் கொதிப்பு நரம்புகளையும் மீறிக்கொண்டு வெளியே வீசியது.
“ரஜனி! உனக்கு அவனைப் பிடிக்கிறதா?’ என்ற அவனது கேள்வியை விட தொனியே விகாரமாயிருந்தது. அசந்தர்ப்பமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் ஸ்தம்பித்து நின்றாள். பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் அவளுக்குக் கிடையாது. சிறிது நேரத்தின் பிறகும் சந்திரன் அவ்வார்த்தைகளையே கேட்டான்.
இப்பொழுது அவளுக்குக் கோபமாக இருந்தது. அதனால் தைரியத் தோடு "ஆம்" "ஆம்" என்று பதில் சொன்னாள். இதைக் கேட்டதும் தன்னை மறந்தவனாகி "சாதாரணமாக உன்னிடத்தில் எதை எதிர் பார்த்தேனோ அதையே பெற்றேன். இதற்காக நான் ஆச்சரியப் படவில்லை,” என்று சொல்லிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தான். அவள் அதிலேயே நின்றாள். அடிகூடப் பெயர்க்கவில்லை. ஆனால் சந்திரனுடைய கேவலமான மனப் பான்மையை நினைத்து உள்ளுக்குள்ளே சிரித்தாள். அவனுடைய ஸ்வரூபத்தை இப்பொழுது காட்டித் தந்த ஈஸ்வரனைக் கூட வாழ்த்தினாள்.
அவள் கவிதை கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் சுதர்சனிடம் சென்றாள். ஆனால் உலகத்தை மயக்கும் அந்தக் கவியிடம் தன்னுயிரை மயக்கும் ஒரு மந்திர சக்தியிருக்கக் கண்டு அவன் வசமாகிவிட்டாள். பிரகிருதியின் இனிமைகளைத் தெரிந்து பாடுவ தற்கென்று தயார் செய்து வைத்த உள்ளத்தால், தன்னிருதயத்தைப் பிளந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளைப் பாடுகின்ற ஆர்வமே அவளுக்கு மேலாக நின்றது. “ஹே கவி என்று உன்னுடைய உறவு ஏற்பட்டதோ அன்றிலிருந்து நாளுக்கு நாள் என் நரம்புகளிலேதோ ஒரு விஷம் ஏறிக்கொண்டே வருகிறது. அதனால் உன்னைத் தவிர வேறெந்த உலகப் பொருள்களும் என் கண்களிலே படவில்லை. உன் ஆக்ஞைக்குக் கட்டுப்பட கவிதைகளை எழுதுவதற்கும் என்னுள்ளம் மறுக்கிறது. ஒப்பில்லாத உன்னழகைப் பார்ப்பதைவிட, உயிரை மாய்த்து விடச் செய்யும் உன் வார்த்தைகளைக் கேட்பதை விட, அநுராக சம்பந்தத்தால் உண்டாகும் உன் ஸ்பரிஸத்தை உணருவதை
160

விட கவிதைகளைப் புனைந்து கொண்டிருப்பதில் எனக்கு இச்சை பிறக்கவில்லை. தனிமையிலிருந்து எழுதிக் கொண்டுவா’ வென்று இனி ஒருபோதும் கட்டளை செய்யாதே. உன்னோடு சும்மா இருப்பதிலும் சுகமடைகிறேன்” என்று அவள் சொல்லியிருப்பாள். பெண்மையின் இயல்பான நாணம் முன்னுக்கு நின்று பேசவிடாமல் தடுத்து விட்டதென்றே சொல்லவேண்டும்.
ஜடப்பொருள்களுக்கும் உணர்ச்சிகளைச் சிருஷ்டித்து ஜீவ களையை உண்டுபண்ணும் அந்தக் கவிக்கு அவளுடைய அந்தரங்க நிலையைத் தெரியாமலா இருந்து விடும். சோலைக் குயில்களுக்கும், கிளிகளுக்கும், மயில்களுக்கும் சொல்லுவது போல அவளோடு பேசினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அவளும் தன்னை மறந்து கிட்ட வந்தாள். தானாகவே தொட்டுவிடக்கூடிய அத்தனை சமீபத்தில் வந்த பிறகும் சுதர்சனன் உணர்ச்சிகளைக் கட்டி வைத்திருந்தான். குருதேவரின் ஆணை எப்படியிருக்கிறதோ என்ற பயமே நடுவில் தடைசெய்து கொண்டு நின்றது. ஆயினும் அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பெரும் புயல் கிளம்பிக் கலங்கச் செய்த காலமது. வாழ்வில் இதைவிட அடையக்கூடிய பேரின்பம் இல்லை யென்று.
அவளுடைய நடையின் ஒயிலையும், இயற்கையின் காந்த சக்தியையும் தன் உள்ளம் கொண்ட மட்டும் வர்ணித்துப் பார்த்தான். மற்றொரு கதாநாயகியின் நலன்களைப் புகழ்வதை விடத் தனக்குக் கிடைத்த செல்வத்தைப் போற்றிப் புகழ்வதில் அவனுக்கு மிகுந்த உற்சாகமும் இருந்தது. அவனால் சில நிமிஷங்களுக்கும் ரஜனியைப் பிரிந்து இருப்பதற்கு முடியவில்லை. அப்படியான சமயங்களில் அன்றிலைப் போலத் துடித்தான் நித்திரையிலும் அவளது ரூபகுண செளந்தர்யங்களைப் பற்றியே பேசினான். உண்மையில் அவளும் சுதர்சனனது ஆன்மாவிற்கு அமைதி தரும் கோயிலாய், உள்ளத்திலே புதுமை எனும் தேனை ஊறச் செய்யும் அமுத சுரபியாக, கற்பனை யுங் கடந்து நிற்கும் பிரேமை நகரத்து மாணிக்க விளக்காய் இருந்தாள்.
புஷ்பகரணியில் ஜலம் நிறைந்து ஸ்படிகம் போலத் தேங்கிக் கொண்டிருந்தது. சுதர்சனனது உள்ளத்திலும் இன்ப வெள்ளம் கரை புரண்டோடியது. படிக்கட்டிலே அவனுக்கு பக்கத்தில் ரஜனியு மிருந்தாள். வெகுநாட்களுக்கு முன்பு நான் மணஞ்செய்து கொள்ள மாட்டேன்’ என்ற குருதேவருடன் தான் வாதாடிய கதை அவளுடைய நினைப்பிற்கு வந்தது. பிறகு சுதர்சனனனைக் கண்டதும், மறுமலர்ச்சியைக் கண்டு மோகிக்கும் ரசிகன் போலவும், வசந்தத்தைக் கண்டு ஒயாமற் பறந்து பறந்து பாடித் திரியும் குயில்
161

Page 83
போலவும் தான் மாறிப்போன நிலைமையை உணர்ந்து வெட்கப் பட்டாள். மெல்ல மெல்ல அவளுக்குச் சிரிப்பும் வந்தது.
அவளுடைய முகத்திலே தெரிந்த மாறுபாடுகளை அவதானித்துக் கொண்டிருந்த சுதர்சனன் “எதற்காகச் சிரிக்கிறாய்? என்று கேட்டான். சிறிது நேரம் மெளனமாய் பிறகு நாணப்பட்டுக் கொண்டே சொன்னாள்.
“ஒருநாள் மாலை ஆராதனை முடிந்த பிறகு மண்டபத்திலே பேசிக் கொண்டிருந்தோம். ஏதோ சந்தர்ப்பத்தில் “பெண்கள் தங்கள் கணவனின் பாததுரளியின் மகிமையினாலேதான்'ஈஸ்வரப் பிரீதியை யும் அடையமுடியும். ஒப்பில்லாத பெண்மைக் குணமோ பதியின் நிழலிலேயே அமைகிறது என்று சொல்லுபவர்கள் போலவே பெண்களை வைத்துக் கொண்டு மனிதர்கள் சுகமனுபவிக்க விரும்பு கிறார்கள். அப்படியான ஒருவனை மணஞ்செய்து கொண்டு வழி திசை தெரியாமல் அவலப்படுவதை நான் விரும்பவில்லை. பேரறிவும், அனுபவமும் முதிர்ந்த தங்களுக்கும் இதையுணரும் சக்தி வராததேனோ? ஒரு வேளை உலக வாழ்விற் புகுந்துதான் அந்தச் சபலம் நீங்கவேண்டுமென்று கருதுகிறீர்களா? திடபுத்தியும் கட்டுப்பாடும் உள்ளவர்களுக்கு அனுபவிப்பதும் சும்மா இருப்பதும் ஒன்று போலத்தான்."
“வளர்ந்து பிரகாசமடைந்து உலகத்துக்கு வழிகாட்ட வேண்டும். லோகமாதாவான ஜானகி தேவியும் பூரீராமச்சந்திரனையடைந்து தான் உலகத்திற்குத் தாயானாள். இனி பிரமசரியமென்னும் இருள் வழியில் நடக்க மிருதுவான பெண் குலத்திற்குச் சத்தியமில்லை. ரஜனி! நீயும் மணஞ்செய்து கொண்டுதான் வாழவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று குருதேவர் சொன்னார். இதைக் கேட்டு நான் சிரித்தேன்.
“பிறகு, மணஞ்செய்து வாழுவதென்பது விருத்தியை உத்தேசித்துப் புகுந்து கொண்ட ஒரு வழக்கந்தானே. இதில் ஒருவருக்கொருவர் வழிகாட்டியாவது எப்படி? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பிறப்புரிமையான சக்தியில் சிறிதும் வித்தியாசம் இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.”
"அப்படியிருக்க ஒரு மனிதன் நிழலிலிருந்துதான் அவள் ஈஸ்வரனை யடையலாமென்று தாங்கள் சொல்லுவது பிசகு, அன்றியும், உலகத் திலே சுவை தெரியாத மனிதர்களோடுதான் சேர்ந்து வாழவேண்டி யிருக்கிறது. இதிலும் ஒரு லாபமும் கிடையாது. மேலான அறிவும், சீலமும் அழிந்து போன அடியிலிருந்து ஜனித்த மனிதர்களிடையே தேவவாழ்வின் முளைத்தெழுவதெப்படி? புஷ்பத்தைப் பறித்து
162

மணந்து விட்டு மோகமழிந்ததும் அதைக் கசக்கி எங்கேயாயினும் எறிந்துவிட்டுச் செல்லுபவர்கள் போலவே, பெண்களை வைத்துக் கொண்டு மனிதர்கள் சுகமனுபவிக்க விரும்புகிறார்கள்.”
“ஆதலின் என் விஷயத்தில் நீங்கள் பயப்படவேண்டியதில்லை. துணையின்றியே வழி நடக்கும் சக்தி எனக்கிருக்கிறது என்று சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அம்மா நீ சொல்லுவதிலும் சில உண்மைகள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் தனியாகவேயிருந்து பிறவியின் பயனையடைந்து விடலா மென்பது மிகவும் கடினம். கணவனுடைய நிழலிலே நின்றால் கலக்கம் இன்றிப் போய்விடலாம். குழந்தையாகிய உனக்கு இது தெரியாது என்று சொன்னார். அப்பொழுது நான் பேசவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளில் நம்பிக்கையின்றியே இருந்தேன். இன்றைக்கு அதை நினைத்தே சிரித்தேன்." என்றாள். உடனே சுதர்சனன் எழுந்து வினயமாக நின்று "ஐயையோ சந்நியாசினியாகி தங்களுடைய தவ விரதத்திற்குப் பங்கஞ் செய்து விட்டேன் தாயே! ஷமிக்க வேண்டும்” என்று சிரிப்பையடக்கிக் கொண்டான். “எங்கே நகருங்கள் பார்க்கலாம்” என்று அவன் கால்களைப் பற்றிக் கொண்டு அவளும் சிரித்தாள். பிறகும் வெகுநேரம் அதிலிருந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நேரம் கழிந்ததும் தெரியவில்லை. "ஐயோ! இன்னும் பூஜைக்கு மாலை தொடுக்கவில்லை’ என்று ரஜனி எழுந்தாள். “நானும் மலைக்குப் போய் வருகிறேன்” என்று அவனும் பிரிந்து சென்றான்.
சுதர்சனனுக்குப் பின்னால் எரிந்து சாம்பலான உள்ளத்தோடு கோகுல சந்திரனும் சென்றுகொண்டிருந்தான். சுதர்சனன் அதை உணராமலே முன்னுக்கு நடந்தான். சந்திரனோ அடிக்கடி வாயைத் திறந்து விட்டுப் பயத்தினால் வாயை மூடிக் கொண்டான். கடைசி யில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.
"சுதர்சனா! எதனுடைய வடிவத்தினழகைக் கொடிகளிடமும், பார்வையின் சலனத்தைப் பெண் மானிடமும், புருவங்களின் விசாலத்தை நதிகளிடமும், வார்த்தைகளின் சாதுர்யத்தை கிளி களிடமும் கண்டு பிரமானந்தமடைகிறாயோ அவளை நீயும் அவ்வளவிற்கு ஆகர்ஷிக்கிறாய்.”
"அது லோகசம்பந்தத்திற்கு அவஸ்யமேயானாலும் உன் விஷயத் தில் தவிர்க்கப்பட வேண்டியதே. இதைக் கேட்கும் போது உன் இதயத்தில் என்றைக்குமே இல்லாத ஒரு புயல் கிளம்புகிறதென்பதை நானும் அறிகின்றேன். யாருடைய துன்பத்தைக் காணும்போது உனது உயிர் கலங்கி அழிந்து விடுமென்று நினைக்கின்றாயோ,
163

Page 84
யாருக்காக உனது சுகபோகங்களையும், சக்திகளையும் இழக்கச் சித்தமாய் இருக்கிறாயோ, அவளுடைய வாழ்வில் நாளைக்கு வரப் போகிற அவலத்தை, சகிக்க முடியாத கோபத்தைத் தடுக்க வேண்டு மென்று ஆவல் கொள்ளவில்லையா? நிமிஷங்கள்தோறும் கோடானு கோடி உயிர்கள் துன்பச் சுழலில் பட்டுத் துடித்துக் கொண்டிருக் கின்றனவேயானாலும், உனது ஆத்மாவிற்கு நீங்காத அவலத்தைத் தரக்கூடிய இந்த விஷயத்தை அறிந்து கொண்டும் நான் மெளனமாய் இருப்பது துரோகமல்லவா? எதைச் சொல்ல வேண்டுமென்று கருதி இங்கே வந்தேனோ அதைச் சொல்வதற்கு என் மனந் தடுமாறுகிறது. மரணத்தின் பாப தூதுவானகி இப்போது கலக்கமடைகிறேன். ஆயினும் சஞ்சல புத்தியினால் நண்பனுக்கு மீளாத் துயரத்தை தரவிட்ட நீசன் என்ற வசையை நான் பெறவிரும்ப வில்லை.”
"ஆதலால் நீ மட்டும் தைரியமாய் இருந்து விடுவதால் பலன் வராது. இன்றையிலிருந்து அவளுக்கிருக்கிற பிரமையை ஒழித்துவிடப் பிரயத்தனப்படு. பிறகு விதி எப்படி விடுகிறதோ அப்படியே நடக்கலாம்” என்று சொல்லி முடித்தான்.
சுதர்சனன் மரம்போல மெளனமாக இருந்தான். மெளனத்திலே ஒரு பயங்கரமான நடுக்கமும் கலந்திருந்தது. அவனுடைய புத்தியின் நிலை கலங்கிவிட்டது. சிறிது நேரத்தால் தலையை உயர்த்திக் கொண்டு பார்த்தான். எதிரிலே கோகுல சந்திரனும் பிரகாசமிழந்த முகத்தோடு விசனித்திருந்தான்.
மயக்கத்தால் வழி தவறி நடப்பவன் போலவே சுதர்சனன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். தனக்குப் பின்னால் சந்திரன் வருகிறான் என்பது கூட அவனுக்குத் தெரியாது. அப்பொழுதுதான் ரவியும் அஸ்தமன எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தான். ஆகாயமெயங்கும் ஸ்வர்ணகாந்தியை அள்ளி வீசியது போல் மோகன வெளிச்சம் பரந்திருந்தது. கவிதா சக்தி நிறைந்த அவனுடைய உள்ளத்திலே அந்த அற்புதக் காட்சியும் மயக்கத்தையே உண்டு பண்ணியது. தலையைத் தொங்கப் போட்டபடி அவன் செல்லும்போதே மாலையாராதனைக்கு அடிக்கப்படும் மணி யோசை காற்றில் மிதந்து வந்து கேட்டது. உடனே மண்டபத்தை நோக்கித் திரும்பினான். எதிரிலே ரஜனி பூஜைத் திரவியங்களோடு வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் அவனது தடுமாற்றம் இன்னும் அதிகரித்தது. எதிர்பாராத இந்த நிலையைக் கண்டு அவளும் சந்தேகித்தாள் அதனால் "கலக்கமடைந்தவர் போல் காணப் படுகிறீர்களே என்று கேட்டாள். சுதர்சனன் பதிலுக்கு தலையை மட்டும் அசைத்தான். ஒருவர் பின் ஒருவராக மண்டபத்தை நோக்கி நடந்தார்கள். வழக்கம் போல் பூஜைகள் நடந்தன. ரஜனி
164

பூஜைக்குரிய காரியங்களிலீடுபட்டிருந்தாள். சுதர்சனனோ ஒரு மூலையில் நின்று தனிமையாகக் கண்ணிர் விட்டழுதான். "ஸ்வாமீ! மரணத்தைப் பற்றி நான் கலங்கவில்லை. அது சாஸ்வதமான தென்பதையும் நன்றாக அறிவேன். ஆனால் அந்த மரணத்தை அகாலத்திலே என்னிடம் அனுப்ப எண்ணிய நீ, அவளோடு பிரிக்க முடியாத பந்தத்தையும் எதற்காக உண்டுபண்ணி வைத்தாய்? திடபுத்தியுள்ள என்னையே கலங்கச் செய்யும் பிரிவுத் துன்பம் அவளை அரிந்தரிந்து கொன்று விடுமல்லவா? ஸ்வாமீ! எல்லா வற்றிற்கும் காரணமான என்னை வேண்டிய மட்டும் வதைத்து வருத்தும். ஒரு பாவமும் அறியாத அந்த அபலைக்கு சாந்தியைக் கொடுத்து ரட்சி. உனது திருவடிகளுக்கே சதா சேவை செய்யும் அவள் உனக்கே அடைக்கலம்’ என்று வேண்டியபடி கண்களைத் திறந்தான். கற்பூர ஜோதியிலே அவள் முகம் பிரகாசித்தது. அதைப் பார்க்க முடியாதவனாய் மறுபடியும் கண்களை மூடினான். ஆனந்தம் தேஜஸுடைய அவளது தோற்றம் மனக்கண்களின் முன்பு ஸ்படிமாகத் தெரிந்தது. உடனே எழுந்து வெளியே நடந்தான்.
ரஜனியோ தன் ஜீவ மாணிக்கத்தையிழந்த குலநாகம் போல் மனமுடைந்து விழுந்து கிடந்தாள். மது நிறைந்து மலர்ச்சி மதங் கொண்ட ஸ்தல பத்மம் போன்ற அவள் ஒரே நாளில் கலங்கிப் போனாள். அந்த மலரின் ஸ்வர்ண காந்தியும் மங்கி உருமாறிக் கொண்டு வந்தது. ஆயினும் சலனமற்ற சமுத்திரம் போல நிதானமான ஒர் அமைதி அவளிடம் நிலவியது. யாரிடமும் அவள் பேச விரும்பாதவிடத்தும் வார்த்தைகளிலே தளர்ச்சியில்லை. நீண்ட உலக எல்லைக்கு அப்பால் எதையோ அர்த்தமின்றிப் பார்த்தாளே னும் அந்தப் பார்வையிலும் அவலமில்லை. ஆனால் அவளுடைய சிரிப்பில் நிறைந்த அமிர்தம் சுகமிழந்து, கொலைக் கடவுளின் நர்த்தனத்தின் பயங்கரமான அதிர்ச்சியோ அலறலோ கேட்டது. இதுவரையும் அவளது அங்கங்களிலிருந்து எழுந்து கொண்டிருந்த சிருங்கார நாதமும் திடீரென்று அவிந்து விட்டது. “அம்மா கலங்காதே! உன்னைப் பிரிந்து அவனாலும் இருக்க முடியாது. வந்து விடுவான்” என்று குருதேவர் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கும் அவள் மூச்சு விடவில்லை. இந்த நிலையிலும் சந்திரன் அவளிடம் வந்தான். தைரியமாகவும் பேசினான்.
“ரஜனி! எதற்காக கலக்கமடைகிறாய்? ஸ்திரி ஜாதி என்பதையே இதனால் நிரூபித்து விட்டாய். படகு நதியிலே செல்லும் போது எத்தனையோ துறைகளைச் சந்திக்கிறது. அது போல் உன் வாழ்வுப் பிரயாணத்தில் சந்தித்தவர்களுள் அவனும் ஒருவன். அவனை இழந்து விட்டதனால் உனது பிரயாணம் தடைப்படவேண்டுமா?
165

Page 85
இப்படியான அநேக கனவுகள் சேர்ந்த கதையைத் தான் ஒரு ஜென்மம் என்று சொல்லுகிறார்கள். இனி, அவனை நினைத்து வருந்துவதிலேயும் பிசகிருக்கிறது. அசைக்க முடியாத இத்தனை பேரன்பு கொண்ட உன்னை விட்டுப் பிரிகின்றோமே என்ற கவலை இருந்தால், இப்படி ஒரு வார்த்தையுமே சொல்லாமல் போயிருப் பானா? உனது அன்புக்குப் பிரதி செய்யாதவனை இன்னும் மனதில் கொள்ளாதே?
“சில நாட்களுக்கு முன் இங்கே ஒரு பண்டிதர் வந்து போனதை இதற்குள் நீயும் மறந்திருக்க மாட்டாய். அன்று நீ அவரிடம் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது எதனாலோ உன் கையை உற்று நோக்கினார். அதுவரை மலர்ந்து விளங்கிய அவரது முகத்தில் திடீரென்று இருள் கவிந்துவிட்டது. இவ்வளவையும் தூரத்திலே நின்று விட்டு நான் தனிமையாக அவரிடஞ் சென்று “ஸ்வாமி! சுதர்சனன் கையைப் பார்த்ததும் தங்கள் முகம் வாடியதேனோ” என்று வேண்டினேன். அவர் வெகுநேரம் வரைக்கும் மெளனமாக இருந்துவிட்டு அப்பா! அவனுடைய வாழ்வு இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான்’ என்று சொல்லி விசனப்பட்டார். மனோதிடமும் தவ ஒழுக்கமும் உள்ள நீ, உனக்கு வரும் மரணத்தைக் கேட்டுக் கலங்கிவிட மாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். மானிடன் எவ்விதம் பஞ்சுபட்ட வஸ்திரங்களை விட்டு வேறு புதிய வஸ்திரங்களைத் தரிக்கிறானோ, அவ்விதமே தேஹிரி, பலகீன சரீரங் களை விட்டு வேறு புதிய சரீரங்களைப் பெறுகின்றான் என்ற சாங்கிய ஞானம் வரம்பெற்ற உனக்கு மரண பயந்தான் எப்படி வரும்? ஆனால் ரஜனியை அவ்விதம் நினைத்து விடமுடியாது. இன்றைக்கு இருக்கின்ற நிலைமையிலேயே உனக்கொரு ஆபத்து வந்துவிட்டால் அவளும் பிராணத்தியாகஞ் செய்து விடுவாளென்றே நினைக்கிறேன். இத்தனை வாஞ்சையுள்ள மற்றொரு ஆத்மாவின் சம்பந்தம் உனக்கு மறு ஜன்ம பயத்தையே உண்டுபண்ணுவதோடு ஆத்ம பலத்தையும் குலைத்துவிடுமல்லவா?”
சந்திரனது இருண்ட உள்ளத்தில் முளைத்தெழுந்த அந்தக் கதை, புயலில் அகப்பட்ட பஞ்சைப் போல சுதர்சனனை இடந்தெரியாமல் அள்ளிக்கொண்டு போய்விட்டது. எல்லோரும் பிரமித்துப் போனார்கள். காரணத்தைக்கூட அறிந்துவிட யாராலும் முடிய வில்லை. மறைவில் இன்பம் பொங்குகிற உள்ளத்தோடு சந்திரனும் மற்றவர்களோடு சேர்ந்து அவனைத் தேடினான்.
சில நாட்களுக்குள் அந்தப் பொன் விளக்கு அவிந்து விட்டது. பயங்கரமான அந்தகாரம் எல்லோர் மனதிலும் சூழ்ந்து கொண்டது. குருதேவரும் ஒரு நாள் திடீரென்று மறைந்து விட்டார்.
166

பல வருஷங்கள் கழிந்து விட்டன. கவிதை எனும் அமிர்தமூறிய உள்ளம் உடைந்து உடைந்து போன அந்தக் கவி, தூரத்தில் இருந்து கொண்டே கலாக்ஷேத்திரமிருந்த திசையைப் பார்த்தான். அவனது கால்கள் மெல்ல மெல்ல அந்தப் பாதையை நோக்கித் தாமதமாகவே நகர்ந்தன. பழமையான அகன்ற வழிகள் இருந்த இடமே தெரிய வில்லை. எங்கும் மரஞ்செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. மலையின் ஒரு சாரலில் எந்நேரமும் சலசலத்துக் கொண்டிருக்கும் நீரருவி, வரண்டு போய் அவனைக் கண்டு அழுவதைப் போல் ஒழுகிக் கொண்டிருந்தது. நேராக மண்டபமிருந்த இடத்துக்குப் போனான். அதிலே ஒரு மண்திடர் மட்டுமிருந்தது. சில செங்கற்கள் சிதறிக்கிடந்தன. ஆராதனை நேரங்களில் அடிக்கப்பட்ட மணி ஒரு மரத்தடியிலே விழுந்து பாதி மறைந்திருந்தது. நீண்ட ஒரு பெருமூச்சு டன் தலையைத் தூக்கினான். ஓங்கிவளர்ந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அந்த பிரமாண்டமான விருட்சம் இடியேறுண்டது போல் நிற்க அதைச் சுற்றி மலை போலப் புற்று வளர்ந்திருந்தது. அந்த விருட்சத்தின் கீழ் இருந்து எத்தனை நாள் இன்பப் பாடல்களைப் பாடினான். கண்களைத் துடைத்துக் கொண்டு புஷ்பகரணியை நோக்கி நடந்தான். அந்தப் படிக்கட்டுக்களும் பாழாய்ப்போயின. பழமையின் ஞாபகங்கள் ஒரு முறை வந்து மோதினதும், அந்த வேகக் கனவில் அவனுடைய இருதயம் நினைப்பற்று சூன்யமாக, அப்படியே அதில் உட்கார்ந்து விட்டான்.
s Ripc3sFif 15.11.1942
167

Page 86
Ary
எதிர் எதிராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உள்ளங்கள் வேறுவேறு பாதையில் சென்றுகொண்டிருந்தன. அவர்களைச் சூழ்ந்து ஒருவித அமைதி நிலவியது.
அவள் தன்னைப்பற்றிச் சிந்திக்கவில்லை என்றுஞ் சொல்ல முடியாது. அவன் சம்பந்தமான நினைவுகளில் தானும் சம்பந்தப் பட்டுக் கொண்டேயிருப்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். அவனுக்கு அப்படியொரு நம்பிக்கை உண்டாகும்படி அவள் ஒரு நாளும் நடந்ததேயில்லை. ஆனாலும் அவன் நம்பியிருந்தான். அந்த நம்பிக்கை எந்த ஆதாரத்தைக் கொண்டெழுந்ததோ அதைப்பற்றி அவள் கவலைப்படவேயில்லை.
முதலில் பரிசுத்தமானவன் என்று மட்டும் எண்ணியவள் பிறகு? . தானும் அந்த நினைவுகளுக்கு அடிமையாகியிருக்கிறாள். அப்பொழுது அதிலொரு அபாயமும் தெரியவில்லை. இன்றோ? . மேலே அவள் சிந்திப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள். அவளையறியாமலே ஒரு நீண்ட மெல்லிய மூச்சு வந்தது.
அதே சமயம் அவனும் பெருமூச்சு விட்டான். உடனே அவள் கேட்டாள். "என்ன யோசிக்கிறீர்கள்? அவனும் திருப்பிக் கேட்டான்.
“முதலில் நீ சொல்லு, எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாய்?" அவள் ஒரு மாதிரிச் சிரித்தாளே தவிரப் பதில் ஒன்றும் சொல்ல வில்லை. மறுபடியும் இருவரும் மெளனமாக இருந்தார்கள். இப்பொழுது அவள் சிந்தனைகள் நிதானமாக எந்தப் பாதையிலும் செல்லவில்லை. சுழன்று சுழன்றுதடுமாறி அலைந்தது. அவன் மட்டும் நினைவற்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு வித வேதனை கலந்த உணர்ச்சியோடு இதைச் சொன்னான்.
“சாவித்திரி மனிதனாகப் பிறப்பது மிகவும் மேலானதுதான். ஆனால் அதிலும் சில கஷ்டங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படி யான சில கஷ்டங்கள் வரும்போதுதான் எதற்காக மனிதனாகப்
168

பிறந்தோம் என்ற வேதனை உண்டாகிறது. இதை நீயும் ஒப்புக் கொள்வாய் என்றே எண்ணுகின்றேன்.”
உடனே அவள் சொன்னாள். அவளுடைய பதில் சாதகமாக இருந்தது. “மனிதனாகப் பிறப்பது மேலானதோ தாழ்ந்ததோ என்று நான் ஆராய விரும்பவில்லை. ஒவ்வொரு மனிதனும் கஷ்டங்களைத் தானாகவே தேடிக்கொள்கிறான். என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதைக் காலங் கடந்த உண்மை என்று கூடச் சொல்லாம்.” “எல்லாவற்றையும் அவனவனே தேடிக் கொள்கின்றான் என்று சொல்வதற்கில்லை. சாவை ஒருவன் தானாகவே தேடிக் கொள் கிறான் என்று சொல்லிவிடலாம். பசியை அப்படிச் சொல்லி விட முடிகிறதா? சிலவற்றை நாமே வரவழைத்துக் கொள்ளுகிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் அப்படிச் சொல்லுவது தப்பு.”
அவள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை அவன் பிறகும் தொடர்ந்து சொன்னான்.
"உண்மையிற் சிலர் பாக்கியசாலிகள் தான். பெரும்பாலானவர் களுக்கு பாக்கியம்-அதிஷ்டம் என்பவற்றின் அர்த்தமே தெரிவ தில்லை. இந்தப் பாக்கியங்களையோ, அதிஷ்டங்களையோ பற்றி அவர்கள் நினைக்கிறதுமில்லை. இவர்களுக்கு இடையிற் சிலர் இருக்கிறார்கள், இந்தச் சிலருக்கு அதிஷ்டமே கிட்டுவதில்லை. அது கிடைக்கவில்லை என்ற துக்கமும் விட்டு நீங்குவதில்லை. மனிதனைப் படைத்த தெய்வம் அவனுக்கு மூளை, புத்தி, மனம் என்ற இவை களை ஏன் வைத்தது என்றுதான் அடிக்கடி எண்ணுகின்றேன்.” கடைசியில் அவன் பேச்சில் துயரத்தின் பிரதிபிம்பம் மெல்ல முகங் காட்டியது. அவளுடைய உள்ளத்திலும் அதன் சாயை படிந்து விட்டது. ஆனால் அதை வெளியில் காட்டாமலே பதில் சொன்னாள். “நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் ஒரு வித மயக்கமே யாகும். முடிவில்லாமல் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருப்பதில் ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை.”
இந்த வேதாந்தம் அவனுக்குச் சிரிப்பையே உண்டாக்கியது. பிறகு சொன்னான்: "நீ என்னை ஜனக மகாராஜா என்று எண்ணுகிறாயோ? எல்லாம் வெறும் மயக்கம், வாழ்வு, அநித்தியம் என்ற இவை யெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள். அதற்காக என் கண் முன்னே உட்கார்ந்திருக்கும் உன்னைப் பார்த்து, இவளும் அநித்திய மான ஒன்றுதான் என என்னால் எண்ண முடியவில்லை.”
பேச்சை அவ்வளவில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனுடைய பார்வையிலே சொல்ல வேண்டியதை எப்படியோ சொல்லி விட்டேன் என்ற திருப்தி காணப்பட்டது.
169

Page 87
அவளோ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந் தாள். தடைகள், ஆசைகள், நியாயங்கள் என்று எத்தனையோ விஷயங்களை அவளுடைய மனம் தொட்டுக் கொண்டு ஓடியது. கடைசியில் குறுக்கே இறங்கி “என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர் கள்” என்று கேட்டாள்.
எதிர்பாராத இந்தக் கேள்வி அவனைத்திடுக்கிடச் செய்து விட்டது. ஆனாலும் கொஞ்சம் பொறுத்துப் பதில் சொன்னான். "இதில் நீயோ நானோ தனித்து ஒன்றும் செய்ய முடியாது. நானும் கொஞ்சம் தெண்டிக்கிறேன், நீயும் கொஞ்சம் சம்பிரயதனப்படு. எப்படியும் இந்த நினைப்புக்களை அழித்து விடலாம். நீ சுகமாக வாழுகிறாய் என்று எனக்குத் தெரிந்தாலே போதும். இப்பொழுது நீ என்னை மன்னிக்க வேண்டும். இவ்வளவையுமே நீ செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.”
பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. அவளும் பதில் சொல்லாமலே நின்றாள். அவனும் பல முறை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வெளியே சென்றான்.
நீண்டநாட்களாக வளர்த்த ஆசைத் தீயின் ஒரு பகுதி அந்தச் சமயத் தில் பலவந்தமாக அவிக்கப்பட்டதேயன்றி, முற்றாக அணைய வில்லை. அது மூலைக்கு மூலை பதுங்கியிருந்து பற்றி எரிந்தது. ஆனாலும் அவன் தடுமாறவில்லை.
அவளுடைய நன்மையை உத்தேசித்தாவது நான் மறக்கவேண்டும். அல்லது அவளையும் படுகுழியில் விழுத்துகிற பாவம் என்னையே சாரும்."
உண்மையில் அவள் தந்தை எண்ணுவதில் நியாயம் இருக்கிறது. அவளுக்காக வர இருக்கிற கணவன், என்னை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவன். குணம், பணம், பதவி எல்லாவற்றிலும் அவனுக்கு நானா இணையாவது? அவள் நன்றாக வாழவேண்டும். உயர்ந்த அன்புக்கு இப்படி நினைப்பது தான் சாக்ஷ
அவன் தன்னை ஒருவாறு சமாதானஞ் செய்து கொண்டு அமைதியடைய விரும்பினான். கழிந்த வாழ்க்கை ஒரு கனவு போல மங்கவைத்துக் கொண்டே காலமும் ஒடிச் சென்றது.
இந்நிலையில் எல்லா நினைப்புகளுக்கும் ஒரு முடிவு தேடித்தர வந்தது போல அவனுக்கு ஒரு புது வேலை கிடைத்தது. யாரோ ஒரு பெரிய மனிதர் அதைத் தொடங்கினார். உடுக்கத் துணியும், குடிக்கக் கஞ்சியும் இல்லாத ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு குருகுலம் தொடங்கப்பட்டது. அதில் அவனுடைய பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து விட்டது. வேண்டும் என்றே அவன் அதை வளர்த்தான்
170

என்று கூடச் சொல்லலாம். அவனுடைய தொண்டை எல்லோரும் பாராட்டினார்கள்.
அந்த ஏழைக் குழந்தைகளுடைய வளர்ச்சியை நாளுக்கு நாள் பார்க்கும் போதெல்லாம் பூரித்தான். அந்த இன்பம் அவனை விடாமல் அங்கேயே அடைத்து வைத்து விட்டது.
வெகுகாலத்திற்குப் பிறகு அவன் வெளிக் கிளம்பினான். வழியில் வரும்போது அவளுடைய வீடு தூரத்தில் தெரிந்தது. பழைய ஞாபகங்கள் ஒருமுறை வந்து மோதின. மெல்லச் சிரித்துக் கொண்டான். மனம் உள்ளே சொல்லியது: “மனிதன் எப்போதும் தடுமாற்றம் உடையவன்தான். இயற்கையான உணர்ச்சிகளை அடக்கி அழிப்பதென்பது இலேசில் முடிகிற விஷயமல்ல."
வாசலிலே திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்று திடமாக முடிவு செய்து கொண்டு வேகமாக நடந்தான். ஆனால்? வீட்டுக்கு முன்னாலே போனதும் தன்னை அறியாமலே திரும்பினான். அவள் வாசலிலே - சற்று உள்ளே நின்றாள். அவளைக் கண்டதும் அவனால் தன்னை சமாளித்து வழிநடத்த முடியவில்லை. அதற்குள் அவள் "ஏது, வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம்?” என்று தொடங்கினாள். "ஆமாம்” என்றது அவனது வாய். கால்கள் அசையாமல் நின்று விட்டான்.
“உள்ளே வரலாமே” என்று அவள் மறுபடியும் ஆரம்பித்தாள். “வேண்டுமானால் வருகிறேன் ஏதாவது அவசியம் உண்டா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
“அவசியம் என்ன! பார்த்தேன், அதனாலே தான் கேட்கிறேன். பிழை என்றால் மன்னித்துக் கொள்ளலாம்தானே.”
அவன் உள்ளே சென்று உட்கார்ந்தான். எதுவிதப் பேச்சுமின்றி அவள் சமீபத்தில் நின்றபடியே கேட்டாள்.
“உண்மையைச் சொல்லுங்கள் உங்களுக்கு என்னைப் பார்க்க வெறுப்பாக இருக்கிறதல்லவா?”
“எப்படிச் சொன்னால் நீ ஆறுதல் அடைவாய் என்று எனக்குத் தெரியவில்லை.”
“என்னிடம் புதிர் போடுகிறீர்கள். இது ஏன்? "மறுபடியும் எதற்காக ஒரு நம்பிக்கையை வளர்க்க இச்சைப் படுகிறாய்? இப்பொழுது நான் சுதந்திரமடைந்து விட்டேன்.”
“நான் அடிமையாகி விட்டேனே. என்னை வருத்த வேண்டு மென்றே பொய் சொல்லுகிறீர்கள்’.
171

Page 88
“நான் ஒரு நாளும் பொய் சொன்னதில்லை. சத்தியமே பேசுகிறேன்". அவள் மெளனியாக நின்றாள்.
"நான் போகலாமா?’ என்று முடிப்பதற்குள்ளாக, “உங்கள் ஆச்சிரமப் பக்கம் நானும் வரலாமா? அவள் கேட்டாள்.
“எப்பொழுது வேண்டுமானலும் நீ தாராளமாக வரலாம். வரவேற்க எத்தனையோ மலர்க்கரங்கள் நீட்டப்படும்.” அவள் பிறகு ஒன்றும் கேட்கவில்லை. வெறுமனே பார்த்தபடி நின்றாள். அவன் எழுந்து வெளியே சென்று மறைந்தான்.
தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என்று ஆரம்பித்துப் பல நூறு குழந்தைகள் வந்து சேர்ந்து அங்கே வாழ்ந்தார்கள். ஜனங்களும் நான் நீ என்று தாராளமாக உதவினார்கள். எல்லாமாக அவனை இடையீடற்ற வேலையில் ஆழ்த்திவிட்டது.
ஒரு சமயத்தில் சாயந்தரம், குழந்தைகள் தோட்டத்தில் விளை யாடிக் கொண்டு நின்றார்கள். அவன் அவர்களைக் கவனித்தபடியே ஏதோ செய்து கொண்டு நின்றான். அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள். எதிர்பாராத அவளது வரவு அவனுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. பிறகு கிட்டப் போய், “ஏன் இந்த நேரத்தில் வந்தாய்?” என்று கேட்டான்.
“இந்த நேரத்தில் வரக்கூடாதா?’ என்று அவள் திருப்பிக் கேட்டாள்.
“எப்பொழுதும் யாரும் வரலாம். காலையில் வந்தால் எல்லாவற் றையும் பார்ப்பது செளகர்யமாக இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்” என்று அவன் நிறுத்தினான்.
"நாளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம்.” “நல்லது அப்படியானால் நாளைக் காலை வந்துவிடேன்” "நான் போக இங்கே வரவில்லை”
"அப்படியானால்?” “இந்தக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய 'பாபுவுக்கும் தொண்டு செய்ய வந்து விட்டேன்’
அவனால் அசைய முடியவில்லை. அவளைப் பார்த்தபடியே நின்றான்.
Rigp(35atrf 03.07.1949
72


Page 89
இக்கதாசிரியர் ‘சம்பந்தன் ப
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், திருநெல்வே
பிறந்த நாள் : 20.10. 1913
பெயர் திருஞானசம்பந்தன் எழுத்துலகில் சம்பந்தன்
தந்தை சின்னத்தம்பி கந்தையா தாய் : இராசமணி
பிறப்பினாலும், பண்டிதமணி அவர்களிடம் ப நாவலர் பரம்பரை. சின்ன வயசிலேயே தாய்நாட்டறிஞர்களோடு தத்துவ விசாரங்களும் காந்தீயப் பாதிப்பும் ஏற் ஆசிரியப்பணி தந்த ஊட்டம், சிந்தனா சேவை இலக்கியத்தினூடாகத் தம் சிந்தனைக்கு - உரு சிறுகதை மூலவர் மூவருள் ஒருவராய்த் திகழ்ட "ஈழத்துப் பேனா மன்னர் வரிசையில், முதல் 6 மரபுவழி பேணுதல், 'சம்பந்தன் அவர்களின் ட முதற்காரணமாக - அவர்களது ஆக்கங்களில் 6 உச்சரிக்க உச்சரிக்கப் பொருள் விரிந்துகொண்
அன்னாரின் அபிமான மாணவன் சு. இராஜநாயகம்
 

ற்றிச் சில வார்த்தைகள் .
65)
ாடம் கேட்டமையாலும், கல்வியாலும்,
நெருங்கிய தொடர்புகளும் இலக்கிய - படுவதற்கான சந்தர்ப்பங்கள். ப் பணிக்குப் போதவில்லை. சிறுகதை நவங் கொடுக்க முனைந்தமையால் : ஈழத்துச் பவர். 'கரவைக் கவி' - கந்தப்பனாரின் வரிசையிலிட்டு மதிக்கப்பட்டவர்.
பண்பு. அதுவும் சிந்தனைத் தெளிவும் வரும் பல சொற்கள் மந்திரம் போல்வன. டே போகும். இஃது அநுபவம்.
ISBN 955-1013-07-7
9" 7895.51"O 13073
விலை : ரூபா 200.00