கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்துச்சரம்

Page 1
|-. - -- |-|-|- -|-
- |- | _-- -- .- -| _ | - .|-.|- -- - - -
 


Page 2

முத்துச்சரம்

Page 3

மு.ச. அபுல்ஹஸன்
முத்துச்சரம்
@
ിത്രഞ്ഞഞ്ഞ 207/1, பிஸ்கால் வீதி, அக்கரைப்பற்று - 02 தொலைபேசி : 067 2278794, 071 8225269

Page 4
* முத்துச்சரம் • கவிதை ஆசிரியர் : மு.ச. அபுல்ஹஸனி? * முதற்பதிப்பு: ஜனவரி 2012* எழுத்து வடிவமைப்பு: எப்கே. கொம். அக்கரைப்பற்று * அழுத்தகம் : நியூ செலக்ஷணர், அக்கரைப்பற்று
வெளியீடு : 'பிறைப்பணர்ணை’, பதிப்பகம் 207/1, பிஸ்கால வீதி, அக்கரைப்பற்று - 02, 3 தொலைபேசி : 071 8225269, 067 2278794
* பக்கம் xiv + 124
• Muththuchcharam • Poem • Author: MS. Abulhassen 0 First Edition : January 2012 Designed by : Effke.com. Akkaraipattu. (0673672625) • Printed: New Selection. Akkaraipattu o Publishers : 'Praippannai', 2071 Fiscal Road, Akkaraipattu - O2 Phone : 071 8225269, 067 2278794 • Pages : xiv + 124
ISBN: 978-955-53856-0-2

9jůuayů
கான் பிரக்கு பொழுதிற்
பெரிதுலக்கு
எனது குக்குை அ.லெ. முகம்மது சரிபு அலர்களுக்கும் எனது குனல் ඒ.තු ෙෆර්ස්‍රාර්ග(r ඊ(ඉංග්‍රීඝෂඹීෂර් அவர்களின் கினைவுக் கறிகுறி0ாக இந்நூலை அஞ்ப்பணஞ் செல்கிரேன்.
மு.ச அயல்மூன்ை

Page 5
யாரஹற்மான்
யா
9
புதது னித்து
g
த்து ள் பு
6TD U6D D60
எம் பிழை பொ
இ
6T60)LDS 85T
ரிவாயாக
னனரு
.ச. அபுல்ஜநலன்
 
 
 
 

முன்னிடு
ஓர் ஒலைமறை காயினி அரங்கேற்றம்
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய இக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் எம்.எஸ் அபுல் ஹஸன் அதிபர் அவர்கள், முத்துச்சரத் திற்கான ஒரு முன்னிடு தருமாறு என்னைக் கோரியபோது, நான் முற்றிலுமாக அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில், ஒரு புறம் இத்தகையதோர் உயர் பணிக்குத் தகைமை சான்ற ஒருத்தனாக என்னை நானே கருதாததும், பிறிதொரு பார்வையில் ஒரு படைப்பிலக்கிய காரனாக நான் இல்லாதிருந்ததுமே இதற்கான காரணங்களாகலாம்.
இருப்பினும், இம்முன்னிடு என்னால்எழுதப்படவேண்டும் என்ற நிலையில், அதனை எழுத நான் உன்னிய போது, கருங்கொடித் தீவின் - அக்கரைப்பற்றின்-சமூக வாழ்வியல் எனக்கருதும் அதன் - சமூகம் - பண்பாடு - கருத்து நிலை என்பன எனது கவனத்தை
ஈர்த்தன. இவை கூறும் வரலாறு-கலாசாரம்-நாட்டாரியல்- கலை, அவை சார்ந்த இலக்கியங்கள் - பாரம்பரிய வாழ்வு முறைச் தை சாங்கங்கள் - இரசனை முயற்சிகள் என்பன, அதன் உந்நதத்
மு.ச. அபுல்ஆ90ஓர்

Page 6
தருணங்களை எனக்கு நினைவூட்டின. மட்டுமன்றி, எழுவான் வங்கக் கடலும், படுவான் தொடப் பரந்து நிற்கும் நிலப்பரப்பும், பள்ளவெளி - கருங்கொடி ஆறு - பள்ளிக்குளம் - என்பன பறைசாற்றும் அதன் தொன்மங்களும் நமது ஆற்றங்கரை நாகரிகத்தின் குறியீடுகளாகவும் என் முன் நின்றன.
இவ்வாறான சுகானுபவத் தளத்தில் தோய்ந்து சிந்தித்த வேளை, அக்கரைப்பற்றின் கலை இலக்கிய முயற்சிகள் கொண்டுள்ள மரபு, ஆழவேரூன்றிய ஒன்றாக இருக்கக்கண்டேன். இம்மண்ணில் அத்தகைய தொடக்கம், வரகவி ஷெய்கு மதார்ப் புலவரோடு தோன்றுவதாகவும், அது தோராயமாக பத்துத் தலை முறையினரை உள்ளடக்குவதாகவும் அறிய வந்தேன். மட்டுமன்றி, நாட்டுக் கவிகளின் தொட்டிலாக இம் மணி விளங்குவதாகவும் கலிங்கர் பாத்தும்மா அதன் முன்னோடி எனவும் விளக்கங் கொண்டேன்.
அக்கரைப்பற்றின் சமூகவியல் சார்ந்த சரித்திரமானது, தொடக்க கால காவியங்கள் - தனிப்பாடல்கள் - என்பனவற்றின் சொந்தக்காரர்கள், நாட்டார் கவிகள் மற்றும் வாகடங்களின் உபயகாரர்கள் ஆகியோர் தத்தமது பங்குக்குத் தெரிவித்திருந்த கருத்துக்களின் சேர்க்கைகளைக் கொண்டே உருவாகியுள்ளதென இது பற்றிய ஆய்வாளர் சிலர் கூறுவர். இது மேலும் ஆய்வை வேண்டி நிற்கிறது.
இப் பின்னணியில் சிந்திக்கும் போது, 1960 முதல் இன்று வரையான காலப்பகுதிகள் தோறும் சிறுகதை - நாவல் - கவிதை - கட்டுரை ஆகிய துறைகளில், அக்கரைப்பற்று ஆக்க இலக்கிய காரர்கள் கணிசமான அளவு பங்களிப்புச் செய்துள்ளனர் எனக்
கூறலாம். இருப்பினும், ஓர் ஆழமான தேக்க நிலை இங்கு நிலவி தை வருவதையும் நாம்மனதிற்கொள்ளவேண்டும். எங்ங்ணமாயினும், தேசிய ரீதியில் நமதுார் எழுத்தாளர்கள் தமக்கான ஓரிடத்தைப்
n - மு.ச. அபுல்ஆன்ை ۔

பெற்றுள்ளனர் என்பதும்கூட மிகையான ஒன்றன்று. இத்துறையோடு ஆழவேரூன்றியவர்கள், இத்தகையோரின் வரன் முறையான நாமவரிசைகள் - மற்றும் சாதனைகள் என்பனவற்றையும் தற்போதுள்ள தேக்க நிலைக்கான காரணிகளையும் நன்கு ஆய்ந்து, இதனைத் தமக்கு வாய்த்துள்ள ஒரு முக்கிய பணியாகக் கொண்டு அதுபற்றிஎழுதவேண்டும்; அது அவர்களது கடமையாகும்.
இத் தருணத்தில், பத்துத் தலை முறைகளுள் தம்மை எந் நிலையிலும் இனங்காட்டிக் கொள்ளாத - இனங்காட்ட விரும்பாத - இலைமறை காயாக இருந்த - ஒரு வகுதியினரைப்பற்றி இங்கு குறிப்பதே இம் முன்னிடு எழுதப்படுவதன் நோக்கமாகும். எனவே, அத்தகையோரை மறவாது, அவர்தம்மேல் அவதானஞ் செலுத்தி இங்கு குறிப்பதும் கூட, அக்கரைப்பற்றின் இலக்கியச் செழுமைக்கு மேலும் அது வலுக் கூட்டுவதாக அமையும் என்பது எனது துணிபு. தவிரவும், அதனை ஒரு சமூகக் கடமையாகவும் நாம் கருத வேண்டும்.
பழந்தமிழ் இலக்கண இலக்கியப் புலமை - நுண்ணறிவோடு கூடிய இரசனை ஒழுங்கு - எதிலும் நவமான கருத்துக்களைத் தெரிவிக்கும் தனித்துவம் - சமகால இலக்கியப் போக்குகள் குறித்த ஒரு பிரக்ஞை - நாடகவியலில் ஈடுபாடு ஆகிய இவற்றில், தம்மை முழுவதுமாய் இணைத்துக் கொண்டிருந்த - இணைத்துக் கொண்டிருக்கின்ற-நமது மூத்த ஆசிரியர்கள் சிலரை நான் நன்கு அறிவேன். அவர்களுள், ஓய்வு அதிபர் மர்ஹம் ஏ. ஆதம்லெப்பை (பண்டிதர் முஸ்தபா மாஸ்டர்), ஒய்வு அதிபர் எம்.ஐ. அகமது லெவ்வை, ஓய்வு அதிபர் மர்ஹம் பி.எஸ். மீரா, ஒய்வு அதிபரும் இந்நூலாசிரியருமான எம்.எஸ். அபுல்ஹஸன் - ஓய்வு ஆசிரியர் மர்ஹம்ே எம்.எம்.ஏ மொஹிதீன், ஓய்வு ஆசிரியர் எம்.ஏ.றஸாக்,
னவர்கள்.
மு.ச. அபுல்ஆன்ை

Page 7
இவர்களுள் மர்ஹம் ஏ. ஆதம்லெப்பை - பண்டிதர் முஸ்தபா மாஸ்டர் - எனும் இலக்கியப் புலமைமிக்க ஆளுமை, அக்கரைப்பற்றில் தனக்கெனப் பரந்துபட்ட ஒரு மாணவர் பரம்பரையைக் கொண்டது. இவ் ஆளுமையின் மாணவர்களா யிருந்த ஓய்வு அதிபர் எம்.எஸ் அபுல்ஹஸன், ஓய்வு ஆசிரியர் மர்ஹம் எம்.எம்.ஏ.மொஹிதீன், ஓய்வு ஆசிரியர் எம்.ஏ. றஸ்ஸாக் ஆகியோருக்கும் பட்சமுள்ள ஒரு பரந்த மாணவர் கூட்டம் உண்டு. அக்கரைப்பற்று சிரேஷ்ட பாடசாலைகளில் தமிழ் இலக்கண இலக்கிய முகிழ்ப்புக்கும், அதன் வளமான செழிப்புக்கும் இவர்களது பங்கும் பணியும் அதி உந்நதமாகப் பங்களிப்புச் செய்துள்ளன எனப்பலரும் விதந்துரைப்பர்.
குறிப்பாக, மர்ஹம் ஏ. ஆதம்லெப்பை பண்டிதர் அவர்களாலும் அவரது மாணவர் எம்.எம்.ஏ. மொஹிதீன் அவர்களாலும் எழுதப் பெற்ற சிறுகதை - கவிதை - நாடகம் - கட்டுரை ஆகிய ஆக்க இலக்கியப்படைப்புக்கள் பல அவர்கள் வசம் இருந்துள்ளதை நான் நன்கு அறிவேன். இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடிய தகுமான -தரம் வாய்ந்த அவை அனைத்துமே, தற்போதுநம் வசம் இல்லை என்பதுதான் மனதை அருட்டுகின்ற சோகமான செய்தி. ஆழ்ந்து அடங்கிய பரவைக்கடல் போன்ற அவர்தம் குணாம்சங்களால் வெளித் தெரியாமல் அவை மறைந்தே போயின. இது அக்கரைப்பற்றுக்கு நேர்ந்த ஓர் இலக்கியப் பேரிழப்பு என்பதே எனது கருத்து.
“கவிதை மொழியிற் காணும் ஜீவ சுருதியானது, உளம் மெய்ம்மறந்து உணர்வுகொள்வதற்கும் அதனூடு, ஓர் ஆனந்த நிலையைத் துய்ப்பதற்கும் வழிவிடவேண்டும். அது வார்த்தை ஜாலங்களற்று கருத்துக்குவியலின் ஊற்றுக் கணிணாகவும் வேண்டும். அது கூறும் மொழி தளைகளைத் துறந்து - விட்டு தை விடுதலையாகிச் சுதந்திரமாய் நிற்றலே சிறப்பு: அதுவே அதன்
எளிமைக்கு வழி.”
al
மு.ச. அபுல்ஆன்ை
 

"இலாவகமான மொழிச் சிந்துகையுடாக, அது தெளிந்த ஸ்படிகம் போன்று அரிய வார்ப்பாக வேண்டும். அவ்வார்ப்பின் உள்ளொளிமூலம், ஆன்மாவின்சிலிர்ப்பும்-விகச்சிப்பும் பட்டெனத் தெறிக்க வேண்டும்.”
பண்டிதர் அவர்கள், ஒரோர் சமயம் கவிதைபற்றிய அவரது கருத்துக்களை என்னிடம் விளக்கிய முறைமையே இவை.
அத்தகைய அடிமுடிகாணும் கலாரசிகன் - புலமையாளன் - பண்டிதரது மாணவர் எம்.எஸ். அபுல் ஹஸன் அவர்கள் காலங் கடந்தாயினும், தனது ஜீவித காலத்திலேயே தனது கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவது மனநிறைவையும், மனமகிழ்ச்சியையும் தருவதாய் உள்ளது.
இயல்பாகவே இவர் தமிழ் இலக்கண இலக்கிய மற்றும் ஆக்க இலக்கியத்துறை நூல்களின் பாலி பேரார்வம் கொண்டவர். தன்னகத்தேயுள்ள நூலகத்தின் நூற்றுக்கணக்கான நூல்களுக்கு மத்தியில், பழைய காப்பியங்களையும், யாப்பிலக்கணம் அணியிலக்கணம் போன்றவற்றையும் துருவி ஆய்வு செய்வதே இவரது இன்றையநாளாந்தப்பணியாகியுள்ளது. பழையனவற்றில் காலூன்றி, புதியன படைப்பது இவருக்குள்ள மிக உவப்பான
நடைமுறை.
தான் யாத்த மரபுக்கவிதைகளையும், வெண்பாக்களையும் பிறவற்றையும் தரம் அறிந்து - தெரிந்து பதிப்பித்துள்ள இவ்வெளியீடு, அவர்தம் கவிதா ஞானத்தின் இலகுமயப்படுத்திய தன்மையை வெளிக்காட்டி நிற்கிறது. பரந்துபட்ட வாசிப்புத்தளம் இவருக்குரியது; அதனாற் பெறப்பட்ட பன்னுற் புலமையும் அனுபவங்களும் கலந்துருவானவைதான் அவரது பாடல்வரிகள் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் பல்வேறு
તy.5. ૭uછઠ્ઠof

Page 8
காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும். ஒவ்வொரு வேளையிலும் தன்னை நெருக்கி அழுத்துகின்ற-தள்ளிவைக்க முடியாத மனோ நிலைகளின் உந்துதலால் எழுந்தவையே அவை. எப்போதும் கவிதைகள் சாசுவதமான மனித உணர்வுகளைப் பேசுவனவாகும். அதனால், இவரது கவிதைகளில் எடுத்தாளப்பட்டுள்ள எண்ணக்கருவுக்கும் அதன் உண்மைத்துவத்துக்கும் அவை விசுவாசமாய் இருந்துள்ளன என்பதே யதார்த்தம்.
அந்த வகையில் ஸ்தூலமான மனித உணர்வுகளின் வடிகாலாய் விளங்குகின்ற இவரது ஆக்கங்கள் சகலவற்றிலும், மானுவீகம் மெல்லியதோர்ஒளிக்கீற்றாய்க்கசிந்துசெல்வதைநாம் என்றைக்குமாய் அனுபவிக்க முடியும்.
"வண்ணத்துக்கொன்று, வகைக்கொன்று என்னுமாப்போல, பல்வகை ரசங்களையும் ஒன்றாய்ப் பெய்து - ஒரு மஞ்சரிபோல - விளங்குவது இத்தொகுப்பு, இதில் வரும் உம்மா மான்மியம் பற்றி பல்வேறு நிலைகளில் ஆசிரியரோடு நான் சம்வாதம் செய்துள்ளேன். காவிய இலக்கணம் பொருந்தியதாக அவ்வாக்கம் இல்லை என்பது அவர்தம் வாக்குமூலம். எவ்வாறெனினும், உம்மா மான்மியம் காவிய நலன்கள் கனிய மேலும் விஸ்தாரமாக எழுதப்படவேண்டும் என்பதே என் தரப்பு நியாயம்.
இந்த வகையில், முத்துச் சரத்தின் சாவகாசமான எழுத்துலக வருகை, தென்கிழக்கின் புதியதொரு விடியலுக்குக் கட்டியங் கூறி நிற்கிறது.
கே.எம். நஜுமுதீன்
ஓய்வு ஆசிரியர்
05.01.2012
மு.ச. அபுல்ஆலன்

முன்னுரை
நான் ஓர் ஆசிரியனேயன்றி.
ஒரு கவிஞன் அல்லன். இலக்கியங்களைச் சுவைத்து இன்புறும் ஒரு சுவைஞன். தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் கற்பித்த ஓர் ஆசிரியன். பன்னூறு பாடல்களைப் படித்து நான் இன்புற்றது போல, என்னிடம் கற்ற மாணவர்கள் அவ்வின் பத்தை நுகர்ந்து மகிழ்வதற்கு நான் வழிவகுத்தேன். இதனால் அவர்கள் நல்ல தமிழை எழுதவும். பேசவும் திறன் பெற்று சமூகத்தில் மதிக்கப்படுகிறார்கள். அவர்கள் கவிதைகள் ஆக்கு கிறார்கள்; கதைகள் எழுதுகிறார்கள் கட்டுரைகள் வரைகிறார்கள்; நல்லதமிழ்ப் பேசுகிறார்கள். அவர்களால் சமூகம் நன்மையடை கிறது. அவர்களைக் குறித்து நானும் மகிழ்ச்சியடை கிறேன்.
“எறும்பூரக் கற்குழியும்” என்பது பழமொழி. அவ்வாறே நான் கவிதைகளைப் படிக்கப் படிக்க என் சிந்தனையில் ஒரு கவிதைத் தடம் உண்டானது. இதனை நான் ஆழமாக்கவோ, அகலமாக் கவோ முயற்சிக்கவில்லை. இதற்கான ஆர்வமும், அவசியமும் என்னிடத்தில் ஏற்படவில்லை. ஏனெனில், நான் ஒரு முழுநேர ஆசிரியன்; கற்பிப்பதே எனது தொழிலாகும்.
மு.ச. அபுல்லுதலன் Vi -

Page 9
இந்நூலில் இடம்பெறும் கவிதைகள் ஒருகாலக் கட்டத்தில் பிரசவித்தவை அல்ல. காலத்திற்கு காலம் எனது தொழிலையும், வெவ்வேறு தேவைகளையும் கருதி இயற்றப்பட்டவை. இக்கவிதை களின் தேவை முடிந்ததும் அவற்றை ஒரு கோவையில் சேர்த்து வைத்தேன்.
சென்ற பல மாதங்களாக எனது "உம்மாவின் மீது ஒரு கவிதை எழுத வேண்டும்” என்ற ஓர் எண்ணம் என்னுள்ளத்தில் துளிர்விட்டது. துளிர் விட்ட எண்ணம் அம்மட்டோடு நிற்காமல், நாளொரு வணிணம் வளர்ந்து வளர்ந்து என்னுள்ளத்தை நெருடிக் கொண்டே இருந்தது. இதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. தொடர்ந்தும் இந்நிலை நீடித்ததால் "உம்மாவின் மீது ஒரு கவிதை எழுதத்தான் வேண்டு”மென்ற முடிவுக்கு வந்தேன். உம்மா நவரசங்கள் நிரம்பிய ஒரு நவீனம். அவருடைய வாழ்வில் அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், சாந்தம், வெகுளி என்ற நவரசங்கள் மிகைத்து நிற்கின்றன. அவருடைய வாழ்வைச் சுற்றிப் பின்னிப்படர்ந்த நிகழ்வுகள் எத்தனையோ உண்டு. "எதை வைத்து நாம் கவிதை எழுதுவது?" என்று சிந்திக்கலானேன். இவ்வேளை எனது சிந்தனையில் ஒரு பொறி தட்டியது. உம்மா உபயோகிக்கின்ற பொருள்களுள் ஒரு பழைய ட்ரங்குப்பெட்டி (தகரப்பெட்டி) என்னைப் பெரிதும் கவரும். நான் உம்மாவைக் காணச் செல்கின்ற பொழுதெல்லாம். அவருடைய கட்டிலின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் அந்த ட்ரங்குப் பெட்டியில்’ என் பார்வை படாத நாளே இல்லை. அதனால் அதை வைத்து "ட்ரங்குப் பெட்டி’ என்ற கவிதையை எழுதினேன். அதற்குப் பக்கத் துணையாக "ஊட்டி வளர்த்த உத்தமிக்கு ஈட்டி வைத்ததென்ன?” என்ற ஒரு கவிதை யையும் எழுதினேன்.
அடுத்து, எனது உடன்பிறப்புகளுள் எங்களை முந்திக் கொண்டு இறையடி சேர்ந்த எனது கடைசித் தம்பியான ஜிஃப்ரி அவர்களின் வாழ்க்கையில் நடந்த அவலமான துயரச் சம்பவம்: எங்கள் மனம் நைந்து உருகிய ஒரு கொடுமையை வைத்து
மு.ச. அபுல்ஜநலன்
 

“செட்டைக்குள் வளர்த்த சின்னக் குஞ்சு” என்ற கவிதையை எழுதினேன். இம்மூன்று கவிதைகளும் உம்மாவைச் சுற்றி வருவதனால் இதற்கு “உம்மா மான்மியம்” எனப் பெயரிட்டு இந்நூலில் சேர்த்துள்ளேன். “எந்தையே நீங்கள் இல்லையென ஏங்குகிறேன்.” என்ற ஒரு கவிதையால், எனது தந்தையும் இவர்களை அரவணைத்து நிற்கிறார்.
ஒரு நூலை ஆக்குவதற்கு இக்கவிதைகள் போதாது என்பதால் நான் காலத்திற்கு காலம் எழுதிய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கடந்த கவிதைகள் என்பதனால் அவை எழுதப்பட்ட காலத்தையும் குறிப்பிட்டுள்ளேன்.
"இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பர். ஓர் இலக்கியம் தான் படைக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, சூழலி, பணிபாடு, பழக்க வழக்கங்கள் போன்ற எத்தனையோ விடயங்களை பளிங்குபோல் தெற்றென எமக்கு எடுத்துக் காட்டும். மேலும், இலக்கியம், தொல்பொருள், கலைவடிவங்கள் போன்றவை இல்லாவிட்டால் நமது முன்னோர்களின் வாழ்வை நாம் படிக்கமுடியாது. காலங்கள் மாறினாலும் அவ்வக்காலங்களில் தோன்றிய இலக்கியங்கள் மாறா. இற்றைக்கு முப்பத்தொரு வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு - தமிழ் நாட்டிற்கு சுற்றுலாச் சென்றேன். சென்னை மத்திய பேருந்து நிலையத்தில் நான் இயல்பாகப் பேசிய தமிழால் கவரப்பட்ட ஓர் இளைஞன் "சார், நீங்க சினிமா வசனம் பேசுறிங்க. எந்த நாடு சார்?" என்று கேட்டார். அன்றிலிருந்து அவரோடு ஏற்பட்ட நட்பு பலவருடங்கள் நீடித்தது. நான் ஊர் வந்ததும் அவருக்கு இந்தியப் பயணம்’ என்ற தலைப்பில் கடித வடிவில் ஒருகவிதை எழுதினேன். அக்கவிதையில் வரும் சில நிகழ்வுகள் தற்போதுள்ள மாணவர்களுக்குக்கூட முக்கியத்துவம் அற்றவைகளாக இருக்கும். எனினும், அன்று அவை எனக்கு வியப்பை
மு.ச. அபுல்ஆலன்

Page 10
அளித்தன என்றால், அது மிகையாகா. முப்பத்தொரு வருடங்களுக்கு முன்பு நான் பிரயாணஞ் செய்த கப்பல் சேவை இடைநிறைத்தப்பட்டு சென்ற வருடந்தான் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதுதான் காலத்தின் கோலம். கப்பல் சேவையை அறியாதவர்கள் எனது கவிதையால் அறிந்து கொள்வர். ஆகவே, இலக்கியம் காலத்தின் கண்ணாடி,
எம்மத்தியில் தன்னை இனங்காட்டிக் கொள்ளாது மற்றவர்களுடைய சிறப்புக்குத் தமது திறமையைப் பகிர்ந்து கொண்டிருப்பவர் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். கே.எம்.நஜுமுதீன் அவர்கள். இளமைக் கால முதல் எங்கள் குடும்பத்தோடு இணைந்து, இயைந்து பழகுபவர். அவர் எனது வாழ்வோடு நெருக்கமானவர், என்று கூறினால் வெறும் புகழ்ச்சி யன்று. எனது இந்த எளிய நூலுக்கு அந்த இனிய சகோதரனை, அணிந்துரை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டேன். முதலில் தயங்கினார். தகைமை உள்ளேர் பலரிருக்க நான் எழுதுவதா? என்றார். "உள்ளார்த்தமான ஓர் அணிந்துரையை எனக்கு எழுதித்தர உங்களால்தான் முடியும்" என்றேன். அதனை ஏற்றார்; எழுதித்தந்தார். அன்னாருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மொழி ஆசிரியனாகவிருந்து, பின் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ்மொழிக்கான உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி, வலய மாணவர்களின் மொழி அறிவுக்கும் விருத்திக்கும் தம்மாலான முழுப்பங்கினை அளித்த ஓய்வுபெற்ற, எனது மாணவன், என்னை என்றும் ஈர்த்தவர் திரு. சுந்தரம் தெட்சணாமூர்த்தி அவர்கள் ஒரு தகவுரை தந்துள்ளார். அவ்வுரையால் இந்நூல் சிறப்புப்பெறுகிறது. ஆதலாலி அன்னாருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
X மு.ச. அபுல்ஆன்ை
 

எனக்குத் தமிழ்மொழியைக் கசடறக் கற்றுத்தந்தவர் மூவர்.
ஏழாம் வகுப்பில் அரிச்சந்திர புராண மயான காண்டத்தின் தமிழ்த் தேனை நான் மெய்ம்மறக்கும் அளவுக்கு அள்ளித் தந்தவர், மரியாதைக்குரிய எங்கள் தலைமை ஆசிரியர் மறைந்த திரு எண். தம்பிராஜா அவர்கள். (மெய்ம்மறந்த சம்பவம் ஒன்றுண்டு. அதை அடியில் தந்துள்ளேன்)
ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் தமிழ்மொழியை முட்டறுத்து ஆற்றொழுக்குப் போல அழகுறக் கற்றுத்தந்தவர் மரியாதைக் குரிய மர்ஹ°ம் பண்டிதர் முஸ்தபா மாஸ்டர் (ஆதம்லெப்பை ஆசிரியர்) அவர்கள்.
அதே வகுப்புகளில் கம்பராமாயண அயோத்தியா காண்டத்தின் இன்பச் சுவையை அள்ளி அள்ளி பருகச் செய்தவர் மரியாதைக்குரிய எங்கள் தலைமை ஆசிரியர் திரு. க.மு. ஞானப்பிரகாசம் அவர்கள்.
இம்மூவரையும் நன்றிப் பெருக்குடன் இவ்விடத்தில் நினைவு கூருகின்றேன்.
யாப்பிலக்கணத்துள் வெண்பா யாப்பு மிகமிகக் கடினமானது. என்று தமிழறிஞர்கள் கூறுவர். அத்தகைய கடினமான முயற்சியில் நான் இறங்கி இருபத்தொரு வெண்பாக்களை இயற்றியுள்ளேன்.
என்னைப் பின்னிப் படர்ந்த சம்பவங்கள் பாதித்தவைகள் என்பவற்றை எடுத்துரைப்பதற்கு கவிதை வழியை நான் பயன்படுத்தியது தவறில்லை என்றே நினைக்கிறேன்.
மேலும், எனது நெஞ்சார்ந்த நன்றியை எனது வாழ்வின் ஜீவநதியான எனது மனைவி றிஸ் வியா, மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு நிலை; எம்.ஏ ஜஃபர் மாஸ்டர், எம்.எம்.எம் நிஸார் கிராம உத்தியோகத்தர், எம்.ஐ அஹமட்லெவ்வை அதிபர், மற்றும் சகோதரர் எம்.எல்.எம் அன்வர் ஆகியோர்களுக்கும்
டி. அபுல்ஆன்ை
s
sö
园 卯
毓 @

Page 11
இந்நூலைக் கணினி மயப்படுத்திய 'எப்கே.கொம் நிறுவனத்தி னருக்கும், அச்சிட்டுத்தந்த நியூ செலக்ஸன் அச்சகத்தாருக்கும் உரித்தாக்குகிறேன்.
இத்தனை பீடிகைகளோடும் வெளியிடப்படும் எனது 'முத்துச்சரம்” என்ற இக்கவிதை நூலை எல்லோரும் படிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அன்பளிப்பாகத் தந்துள்ளேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். நீங்கள் படித்து, திருப்தி அடைந்தால், அதுவே எனக்குப் பேரின்பம்.
அண்புடனர் மு.ச. அபுல்ஹஸன் 17.01.2012
நான் மெய்ம்மறந்த நிகழ்வு 1951ஆம் ஆண்டு. எமதுர் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள்; இலக்கிய பாடம் ஆரம்பிப்பதற்கான மணியொலித்தது. எமது பாடஆசிரியர் திரு. என். தம்பிராஜா அவர்கள் வகுப்புக்குள் நுழைந்தார். வழக்கம் போல நாங்கள் செய்தவேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்து நின்றோம். நாங்கள் எங்கள் பாடப்புத்தகமான அரிச்சந்திர புராண மயானகாணர்டத்தைக் கையிலெடுத்தோம்; அன்று படிக்க வேண்டிய பிராமணன் வீட்டில் சத்திரமதி படுந்துயர் என்ற பகுதியை விரித்துக் கொண்டோம். ஆசிரியர் கற்பிக்கத் தொடங்கினார். அன்று சந்திரமதி நெல்குற்றும் கொடுமையை விளக்குகின்ற "கையினிலுலக்கை பற்றிக் காந்தளினுதிரம் பாய.” என்ற பாடலை இசையோடு படித்தார். இருமுறை தனித்துப் பாடிவிட்டு; அடுத்த முறை, சேர்ந்து பாடும்படி கூறினார். நாங்களும் பாடினோம். இது இலக்கிய பாடத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாதலால் சூழலை மறந்து, கூச்சப்படாமற் பாடினோம்; குதுகலத்தோடு பாடினோம்.
பாடலை ஒன்றித்துப் பாடிய பின், ஆசிரியர் பாடலின் பொருளை விளக்கினார்; காட்சிகள் கண் முன் தோன்றின. என்னையே நான்
மு.ச. அபுல்ஆலன்
 

மறந்தேன். அவருடன் எங்கேயோ சென்றேன். நாங்கள் இருவரும் பிராமணனுடைய வீட்டை அடைந்தோம். அங்கே பிராமணன் திணிணையில் பிரம்பொன்றைக் கையில் வைத்துக் கொண்டு, சந்திரமதியை அதட்டி உரப்பிக் கொண்டிருந்தான். அவன் ஈவிரக்கமற்ற அரக்கன் என்பதை அவனது முகம் காட்டியது. மறுபக்கம் திரும்பினேன். வாசலில் அச்சம் நிறைந்தவளாகி, சந்திரமதி உலக்கையைக் கையால் பிடித்து, நெல்லைக் குற்றிக் கொண்டிருக்கிறாள். ஒரு நாட்டின் மகாராணி செய்யும் வேலையா இது? அங்கே பாருங்கள்! அவளுடைய இரண்டு உள்ளங்கைகளும் வெடித்து உதிரம் பாய்கிறது. கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக வழிகிறது. உடலைத் தொப்பென நனைத்த வியர்வை நிலத்தில் வழிந்தோடுகிறது. இக்கொடுமையைத் தேவர்கள் விண்ணி லிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தாங்கொணாத அவர்கள், ஒரு போதும் இல்லாதவாறு கண்ணிமைக்கிறார்கள். மறுகிச் சோர்கிறார்கள்; எனது கண்களும் குளமாகின்றன.
அடுத்து, பாடமுடிவில் மணி ஒலிக்கிறது. பிராமணனின் வீட்டருகே நின்ற என்னை யாரோ வகுப்பறைக்குள் வீசியது போல் உணர்ந்தேன். இயல்பு நிலைக்கு வருவதற்குச் சில கணங்கள் சென்றன; ஆசிரியர் வகுப்பறையை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார்.
இலக்கிய இன்பத்தை நுகர்ந்த மனத்துடன் எழுதுவதற்கு மேசையில் வைத்த எனது பேனையை நான் தேடுகிறேன்; பேனை இல்லை. அங்குமிங்கும் பார்க்கிறேன்; எங்குங் காணவில்லை. கீழே குனிந்து பார்க்கிறேன்; பேனையில் ஊற்றிய மை நிலத்தில் சிந்திக் கிடக்கிறது. எனது ‘சுவாண்பேனை சுக்கு நூறாய் உடைந்து மையினுள் ஆழ்ந்து கிடக்கிறது. எனது ஒரு காற்பாதம் மையில் தோய்ந்திருப்பதைக் கண்டேன். (அந்நாளில் ஊற்றுப்பேனை (FOUNTAIN PEN) தான் உண்டு. குமிழ் முனைப்பேனை (BALL POINT) இல்லை)
நடந்தது என்ன? நான் மெய்ம்மறந்த நிலையில், எனது காலால் பேனையை உருட்டி உருட்டிச் சிதைத்திருக்கிறேன். அக்குவேறு ஆணிவேராய்க் கிடந்த பேனையின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் ைேகயிலெடுத்துப் பார்க்கிறேன்; சிரிப்புத்தான் வந்தது. இந்த அமுதத்தை கனக்கு ஊட்டிய ஆசிரியரை எண்ணிப்பார்க்கிறேன்; அவர் மீது வைத்த மரியாதை மேலும் அதிகரிக்கிறது; அவரை நான் மறக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்!
டி அபுல்ஆலன்

Page 12
பொருளடக்கம்
Ο1.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
1Ο.
11.
இறை துதி
perfeiffB
pീബ്
அகிலத்தின் அருட்கொடை மூத்தமொழியாள் முத்தமிழன்னைக்கு. O9 அக்கரைப்பற்றெனினும் பத்தரை மாற்றுத் தங்கமீ . 14 SlåDM lomersus ÜÉlobû6Uûle... 2O இளட்டி வளர்த்த உத்தமிக்கு ஈட்டி வைத்ததென்ன? . 4O செட்டைக்குள் வளர்த்த சிண்னக் குஞ்சு . 43 எநீதையே நீங்கள் இலீலையென ஏங்குகிறேன். . 61 ථෙර්‍රී6) ......τα 7Ο இளவலிகள் உவக்கும் இசும் . 72 மானுடம் மாட்சிபெற . 79 கனிந்தகாதலி விடுத்த தூது . 83 மனிதா சீக்கிரமாய்ப் பயணத்தை நீ தொடங்கு. 87 புத்தி மயக்கிய புதிர்ப்புன்னகை. 90 காவியத் தலைவனாய்க் காரீைகின்ற திவ்வூரே . 91 ΘαυτιΘή6ΙΙ (ΟΠαDI6)Ι6)ΙβΦ ............................................................... புதியதோர் உலகஞ் செய்வோம் . அல்லாஹீவின் நூறிலி விளைந்த ஆணிைமுத்து
வித்தியாரம்பமீ
༦ཀྱིJf5b6...
Φπ6υπί06 -
ආ6ffollé 6.ඝffසීෆ ·... 111 நல்லதை மட்டுஞ் செய்தாலி . 112 காற்செருப்பாலி செமத்தனும். 113 ෆිI5ඪ ෆිශ්‍රීතිග60 ............. 115 Θιβάδιμύ UlμάΣτιδί ............................................................................ 117
மு.ச. அயல்ஆலன்
 
 
 
 

9|acusé6d 9GCGangou
அகிலத்தின் அருட்கொடையாய், அனைத்துலகின் உட்பொருளாய், கோலத்தின் திருவுருவாய், குவலயத்தின் நற்பேறாய், ஞாலத்தின் மூலமதாய், நற்றுாதின் முதற்கருவாய், உம்மி நபியாய், என்னுயிரி னுயிராய், செம்மைக்குணத்தின் திருவுற்றாய், மண்ணும் விண்ணும் மகிழ்ந்தேற்றும் வெளிப்பாடாய், கண்ணின் மணியன்ன காத்தமுன் நபியே! மண்ணில்பிறந்த மரகதமே! சொல்லுதற்கரிதான சுவனமே! அன்பின் ஊற்றே! அறிவுப் பெட்டகமே!
எங்கள் றஸ்லே!
ஏந்தலே
நூறுல் முபீனென்றும் சிறாஜுல் முனிரென்றும்
அuல்ஆலண்

Page 13
வல்லோனின் வாயால் வாழ்த்துரை பெற்றவரே! அதர்வ வேதமும் பவிஷய புராணமும் பார்ணபாஷின் சுவிசேஷமும் பார்ஸிகளின் தாசாத்தரென்ற வேத நூலும் முன்னறிவுப்புச் செய்த முத்து நபியே: 'அருட்கொடை என்று பொருள்படும் மைத்ரயா’ எனும்பெயரால் புத்தபிரான் புகழ்ந்துரைத்த புண்ணிய சீலரே!
இந்தப் பேறு இவ்வுலகில் யாருக்குளது?
இதயக் கனியே!
இறைவனைக் காண தூர்சினா மலைசென்ற மூஸா (அலை) அவர்களை நோக்கி “மூஸாவே! உமது காலணிகளைக் கழற்றிவிட்டு வாருமெனக்”
கட்டளையிட்ட அல்லாஹற்:
மி&றாஜுடைய இரவில்
தாங்கள் அல்லாஹற்வின்அர்ஷை அண்மித்து காலணியைக் கழற்றியபோது, "காலணியைக் கழற்றாதீர் உடற் காலணியால் இந்தஅர்ஷ் தூய்மைபெறட்டும்”
c2.8. ởuệỷo36'oạ
 

என்று கூறினானே 615g,60600TLDIT600TL460Luj6)ij தங்கள் மகத்துவத்தை எவராலும் எழுத்தில் வடிக்கமுடியுமா? எடுத்துத்தான் பேசமுடியுமா? இவ் வுலகில் இதற்குத் திரானிபெற்ற மொழியு மில்லை உரிய நாவுமில்லை.
யாரஸலேல்லாஹற்!
வழுத்திடும் வல்லவன் தங்களைப் படைக்க நாடா திருந்தால்: ககனபுவனங்கள் எதையும் படைத்திருக்க மாட்டானாம். அவனுடையநூரில் நின்றும்பிறந்த "நூரே முஹம்மதியாவே இத்துணை மாண்புடையதாங்கள்; பிறப்பதற்கு முன் தந்தையின் ஸ்பரிஸத்தையும் பிறந்த பின் தாயின் அரவணைப்பையுமிழந்து அலிமாவின் அமுதுபருகிய ஓர் அநாதை.
யா ஹபீபல்லாஹற்
ஊரார் துரத்தத்துரத்த
660LD56D6T உறவுகளை
, ' it : '*}} | | }}; w)?f

Page 14
விட்டு விட்டு; பிறந்த மண்ணாம் மக்காவைத் துறந்து: பிறிதொரு மண்ணாம் மதினாவிற் புகுந்த ஓர் அகதி.
எம்பெருமானே!
வறுமையின் கொடுமை வாட்டி வதைக்க: ஒட்டுப்போட்ட சட்டையுடன் ஒட்டியுலர்ந்த வயிற்றில், முதுகு வளையாமல் மூன்று கல்லை முட்டுக் கொடுத்துப் பணி செய்த
ஓர் ஏழை.
அருட்கொடையே
தங்கள் திருமகளார் மங்கையர் திலகம் பாத்திமா ஸ"ஹரா, தன்வேலைப் பழுவைக்குறைக்க "(36600 (BGLDIT, 3)-1960)LD தாருங்கள் தந்தையே” எனத் தலைகவிழ்ந்து கேட்டபோது: "தகாது மகளே தகாது” என்று அச்ச மூட்டி
மு.ச. அயல்ஆலன்
 

எச்சரிக்கை செய்த
ஒரு தந்தை.
ஞானச் சுரங்கமே!
இதனை என்னவென்றியம்புவது இதன் அந்தரங்கம் அல்லாஹற்தான் அறிவான்.
தாஹா ரஸஸ்லே
இளமை முதல் இறைதூது எட்டும்வரை மக்காநகர மக்கள், வாய்மைக்கோர் முஹம்மத், வள்ளண்மைக்கோர் முஹம்மத், கள்ளங் கபடமற்ற
கனிவான உள்ளங்கொண்ட
'அல்-அமீன் எங்கள்
அழகர் முஹம்மதென: புகழ்ந்து புகழ்ந்து பூரித்த காலை: இறை தூதுவத்தை எத்தி வைக்கநாடி:
"அன்பான மக்களே’
அழகாக்கி வைத்தோரே அல்லாஹற்வின் பாலழைக்கிறேன். அணிதிரண்டு வாருங்கள்.
"லாஇலாஹ இல்லல்லாஹற் முஹம்மதுர் ரஸலுல்லாஹ:
g.8, 9uആജ്

Page 15
அமுதூறும் கலிமாவினை இதயசுத்தியாய் மொழிந்து FELDIT6of 685, T600TCB இஸ்லாத்தில் நுழையுங்கள். இகபர மிரண்டிலும் ஈடேற்றம் பெறுவீர்களென திருவாய் மலர்ந்தபோது, அம்மக்கள் கூட்டம், செந்தழல்கக்கும் எரிமலையாய் வெஞ்சினங்கொண்ட வேங்கைகளாய் நாறுஞ் சொற்களால் நலினப் படவைத்து வாய் ஓயாது. வசைமாரி பொழிந்து திட்டித் தீர்த்து தீராக் கோபத்துடன் தங்கள் புனிதமேனிபுண்பட பூதுளி மண்ணை வாரி இறைத்து வஞ்சந்தீர்த்த நஞ்சர்களை நினைந்து நினைந்து என் நெஞ்சு நெக் குருகுதே.
பேரின்ப ரசமே!
உஹது யுத்தத்திலே உங்க ளொருபல் உடைந்த செய்திகேட்ட, உத்தம மெய்ஞ்ஞானி
மு.ச. அuல்ஆலன்
 

ഉ_ങ്ങഖണ്ഡൺ കjങ്ങി, எந்தப் பல்லென்று இனங் காணாது சொந்தப்பல் லனைத்தையும் பிடுங்கி எறிந்தாரே இந்தக் காதலுக்கு என்ன ஈடாகும்? ஆதிபிதா ஆதம் (அலை) பாவ விமோசனம்பெற்றது தங்கள் பொருட்டாலன்றோ! தங்கள் ஷபாஅத்தில்லாமல் அருட்பார்வை யில்லாமல்
எவர்தான் கடைத்தேறமுடியும்.
யா இமாமுல் முத்தகின்
ஆட்சியும் அதிகாரமும் அறிவுந் திருவும்
Ēģ5pLib UTFopLib வீரமும் விவேகமும் செல்லாக் காசாக, செல்லரித்த பொருள்களாக, நலன்கெட்டுப் போகும்நாள். திக்குத்தெரியாது திகைத்துநின்று பித்துப்பிடித்தவராய்ப் பேதலித்து பக்கத்திலுள்ளவரைப் பார்க்க முடியாது பரிதவிக்கும் நாள். காதற் கணவனையோ கனிமொழிபேசிய மனைவியையோ
டி. ச. அபுல்ஆலஓர்

Page 16
உயிருக்குயிராய் ஊட்டிவளர்த்த மக்களையோ உற்றாரையோ பெற்றாரையோ எண்ணிப் பார்க்கவோ ஏறெடுத்து நோக்கவோ
ஏலாது தன்னைத்தானே நினைந்து தலைகால் புரியாது தவித்தோடும் நாள்!
அந்த மஹற்ஷறுடைய நாளில் பெருகிய கோடி சந்திரப் பிரகாசமாய் வருமொரு பெருங்கதிர் மதியம் போல கருணை வீற்றிருந்த செங்கமலக் கண்ணெனக் கவிஞரேறு உமறுப்புலவர் களித்துப் பாடிய கருணைக் கடலே எங்களுக் கருள்புரிந்து ஈடேற்றந்தர வேண்டுமென மனங்கனிந்து தங்களை மன்றாடி வேண்டுகிறேன்.
●エミ多家や
மு.ச. அபுல்ஆலன்
 

(pää 6)(oიყბსUnGM முத்தமிழன்னைக்கு
வnழ்த்oக்கள் பல8nைடி.
நறுவிரை தேனாம் நற்றமிழ் தன்னை, குறுமுனி அகத்தியன் குவலயந் தழைக்க, உவந்து தந்தனன் உலகம் புரந்தது.
ஆரிய மொழியும் அழகு தமிழும் கூடிப் பிறந்த குலக் கொழுந்துகளாம். ஆடியும் பாடியும் அழகுற கைகோத்தும் நேரிய பாட்டையில் நிமிர்ந்து சென்றன.
ஆயினு மாரியம் அடி சாய்ந்தது. அழகு தமிழோ வீறுநடை போட்டது.
மு.ச. அuல்ஆலவர்

Page 17
மண்ணை அளந்த மலயமுனி அகத்தியன் தேன்சுவை பிலிற்றும் செந்தமிழ்ச் செல்விக்கு எழில் கூட்டநாடி, அகத்திய மெனுநூலை ஆக்கி அளித்தனன்.
மண்ணுக்குத் தந்த மாண்புடை அகத்தியம், காலங் கடந்து கடல்கோள் வயப்பட்டால், ஞாலம் பதைக்காமல் நல்லதொரு வழிநூலை தொல்காப்பிய னென்னுந் தூய மாணாக்கன் தன்பெயர் விளங்கவும் தகவுடையோர் போற்றவும் பல்பொருள் பொதியப் பாடி அளித்திட்டான். ஐயந் திரிபற அருள்ஞானம் போதித்த, ஐந்தவித்தான் சற்குருவின் அரிய பாதங்களில், குரு தட்சணையாய்க் குவலயம் வாழ்த்திநிற்க, 'தொல்காப்பிய மென்னும் தொண்மை நிறைநூலினை
அர்ச்சனை மலர்களாக்கி
උp.බී. ඊ(|ගිණු%Efff
 

அறத்தினை வழுத்திநின்றான். தொல்காப்பியன் வளர்த்த துடியிடைத் தமிழரசி, அரியணை ஏறி அரசோச்சும் வேளை, கன்னிப் பருவம்
கட்டவிழ்ந்து மணத்தது.
பார்த்தவர்கள் கிறங்கிநிற்கும் பளிங்குச் சிலையான,
கன்னித் தமிழின் கட்டழகில் நிலைகுலைந்த, காலமெனுங் காளை, அவள்
காலடியில் வீழ்ந்திட்டான்.
காதலுக் கோங்கி காலடியில் மண்டியிட்ட, காலத்தின் மீது கழிவிரக்கப் பட்டஅவள், காதலை ஏற்றிட்டாள்; கைத்தலம் பற்றிட்டாள்.
மண்ணும் விண்ணும் மாண்புறப் போற்றுகின்ற, இல்லற வாழ்வை நல்லற மாக்கி, தங்குலந் தழைக்கத் தாய்மை அடைந்து, நானில மோங்க
மு.ச. அபுல்ஆலன்

Page 18
நான்குமொழிக் குழந்தைகளை ஈன்று தந்து இறும்பூ தெய்தினள்.
தாய்மை அடைந்தாலும், தண்டமிழின் பேரழகு குன்றாப் பேரொளியாய்க் குவலயத்தில் அரங்கேறி, நின்று நிலவி நிலையான பயன்தருதற்கு, ஆற்றுப் படுத்தும் அரும்பெரும் புலவரும் அள்ளி வழங்கும் அளவிலாப் புரவலரும் அணிவன அணிந்து, புனைவன புனைந்து, செந்தமிழ்ச் செல்விக்குச் சீர்செய்து பார்த்தனர்.
சங்கப் பலகையில் சால்புநிறை புலவர்முன் ஆரோகணித் தமர்ந்திருந்தாள் அற்புதத் தமிழரசி,
மூவேந்தர் தாலாட்ட மூதறிஞர் பாராட்ட JbTGÈ6)ipÈ5ğ5Ü jbu_JLíbUITLநடைபயின்றாள் நல்லரசி. அவ்வையும் இளங்கோவும்
மு.ச. அuல்ஆலன்
 

ஆளுடைப் பிள்ளையும் செவ்விய வள்ளுவனும் செந்தமிழ்க் கம்பனும் வாழும் பாரதியும் வளமுடைக் கவிஞர்களும் பாராளும் தமிழரசிக்கு பாமாலை சூட்டினர்காண்.
இத்துணைச் சிறப்புக்கள் இயல்பாய் விளங்குகின்ற, மூத்த மொழியாள் முத்தமிழன்னைக்கு, வாழ்த்துக்கள் பலகோடி
வையம் நிலைக்கும்வரை.
வாழ்க! தமிழ்மொழி வாழிய வாழியவே!
உரிமுத்து - செங்கதிரேடின்
இருளைப் போக்கும் கதிரோனே, எங்கும் ஒளியைப் பரப்புகிறாய்; அருளும் உள்ளம் உனக்குண்டு; அதனால் நிலவும் ஒளிர்கிறது. உருளும் உலகம் உன்னொளியால் உண்டு உயிர்த்து வாழ்கிறது: உருகி உன்னில் ஒரு பகுதி உலகாய் மாறி வந்ததென்பர்.
மு.ச. அயல்ஆலன்
ہH3ں

Page 19
அக்கறைப்பற்றென்ன்னும் Uத்தறை மnற்றுத் தங்கம் ജ്ഞഖn)
* வங்கக்கடல் தன்
வாகான அலைக்கரத்தால் இன்பக் கலசமன்ன
இனியவளின் இடைவளைத்து:
அங்கமெலாம் நெருக்கி அரவணைத்து முகம்புதைக்க, இன்பசுகந் துய்க்கும் ஏந்திழையா ளெழிலரசி.
வந்தாரை வரவேற்று வகைசெய்து வாழவைத்து: பந்தமென்றுஞ் சொந்தமென்றும் பண்புடனே கொண்டாடி
முத்திநிலை பெற்றோரை முழுமனதாய் வாழ்த்திநிற்பாள்; அக்கரைப்பற் றென்னும் பத்தரை மாற்றுத்தங்கம்.
மு.ச. அuல்ஆலன்
 

* அக்கரைப்பற் றென்னும்
பத்தரை மாற்றுத் தங்கம். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் நேயமாய் உணர்ந்த நீள்விழி மெல்லியலாள்.
மூவகை நிலங்களும் முத்தமிழ் வளங்களும் துஞ்சியவர் துயர்துடைக்கும் தூயமனம் படைத்தோரும் விஞ்சியஅறிவாற் பிறரை வென்றிடும் கற்றோரும் மாமறைக் கல்வியும் மாநபி வழியும் அற்றை நாள்முதல் இற்றை நாள்வரை ஈட்டி வளர்க்கும் ஈடில்லா எழிலரசி. அக்கரைப்பற் றென்னும் பத்தரை மாற்றுத்தங்கம்
* கடல்படு திரவியம்
காரேறு பண்ணை; மடல்விரிந்த தென்னை மாந்தோப்புச் சோலை; அடலே றன்ன ஆண்மைமிகு காளையர்; உடல்வருந்தி உழைக்கும் உழவர்கள் வாழுமூரே!
'ல் ஆலஓர்

Page 20
4 W
செந்நெற் பழனம் செவ்வாழைத் தோட்டம்: அன்ன நடையொக்கும் ஆரணங்குக் கூட்டம்: பனிமலர் பூத்த பன்னிறப் பூம்பொழில் நனிமிகுந் தோங்கும் நாவலர் பாவலர்; முனிவகன்று விளங்கும் மூதூராம் அக்கரையுநர்.
செந்தேன் விளைவனமும் சேதாம்பற் பொய்கையும் செங்கழுநீர்த் தடாகமும் செந்தாமரைக் கயமும் தண்ணென்று பாயும் சலசலக்கு மாறுகளும் பண்ணாகப் பாடும் பைங்கிளியும் பூங்குயிலும் அணிகலனாய்க் கொண்ட அழகுபதி அக்கரையுர்.
பூவையர்கள் மகிழ்ந்தாடும் பூம்புன லோடைகள், ஈகையர்கள் வாரிறைக்கும் இல்லங்களுஞ் சின்னப் பாவையர்கள் பந்தாடும் பைம்பொழிலும் அழகுத் தோகையர்கள் விருந்தோம்பித் துயர்துடைக்கு மக்கரையுநர்.
மு.ச. அயல்ஆலன்
 

வண்ணப் பறவைகள் வலசைவந்து தங்கவரும் சின்னக் குழந்தைகள் சிறுசோறு படைத்துண்ணும். கன்னல் மொழிபேசும் கன்னியரைக் காளையர்கள், காதல் வயப்படுத்தும் கழனிகழ் அக்கரையூர்.
தென்ற லசைந்து தெம்மாங்கு பாடிவர, முன்றாயின் தாலாட்டு முழுநிலவிற் றவழ்ந்துவர: பண்பாய் விரித்திட்டு பால்நிலவிற் றம்பதியர் அன்றிற் பறவைபோல் அரவணைக்கு மக்கரையுர்.
முன்றாய் - முன்தாய் - பாட்டி)
ஆதியாய் அனாதியாகி;
அனைத்து மெப்பொருளுமாகி;
சோதியாய் நின்றிலங்கும் தூயவனருள்நிறையுநர்.
வாடியபயிரில் குளிர் வான்மழை பெய்வதுபோல வறியோர் பெருநெருப்பில் வள்ளண்மை பொழியுமூரே
வினைதிறன் மிக்க விற்பன்னர் பந்நூறு,
.ஈ அல்ஜலன்

Page 21
ح
A.
?ର୍ବ
பல்தொழி லாற்றிப் பார்செழிக்க உழைக்குமூரே,
சுடர்த் தேரேறிவருஞ் சூரியனின் வரவுகண்டு கண்மலர்ந்த செங்கமலம் களிப்படையும் நல்லூரே!
மெய்ப்புலவர் வாழ - உயர் மெய்யடியார் காக்க பொய்ப்பொருளைப் போக்கும் - நற் புண்ணியர்கள் வாழும் அக்கரைப்பற்று - எனும் அழகுமிகு திருப்பதியில்; காலை மலர்ந்ததும் - ஒரு கண் கொள்ளாக்காட்சி வீதி நெடுகிலும் - தூய வெண்புறாக் கூட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் - உறு கல்வி பெறுதற்கு பாடசாலை செல்லும் - நற் பாங்கினை என்சொல்வேன்.
எல்லாநலனு மியைபுடனே வயங்கு மிங்கு, நல்லார் மிகவியந்து நாடி வருகின்ற, "கல்லாதா ரெவரையுங் காணமுடியாத, கலை வல்லார் மிகவிளங்கி, வாழுகின்ற அக்கரையுர்.
○エミ傘エ○
மு.ச. அuல்ஆலன்
 
 

ώδιυώ
9-OOA Of\60
* * *
p
༼།༽
தெர்ை)ை
o
o
O
5G5 CIGLg 6D6D3535
தீதமி
தீத 8
වූ ඛ6T
i o
છેot

Page 22
ட்gங்குப் Uெட்டி
ட்ரங்குப் பெட்டி:
அது
ஒரு தகரப் பெட்டி, பொருள்களைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம், தூக்கிச் செல்லக் கூடிய சிறு பெட்டகம், அரும்பொருள் காட்சி அறையில் வைக்கக் கூடிய அரிய பொருள். தற்காலத்தில்
கிடைக்காது,
அக்காலத்தில் வீட்டுக்குவீடு இருக்கும். தட்டுமுட்டுச் சாமான்களுள் இதற்கு முதலிடம்.
எனது தாயிடமும் ஒரு ட்ரங்குப் பெட்டி 2 600TG.
மு.ச. அuல்ஆலன்
 
 

அதன் வயது எழுபத்தைந்திருக்கலாம். ஆக்கம் பெற்ற தெக்காலமென அளவிட முடியாது. பூச்சுப் பறந்தது பூட்ட முடியாதது: கொண்டி இல்லாத
ஒரு மூளி,
கள்ளரைக் கூடக்
கவராதது,
இது என் தாய்க்கு வழி வழி வந்த முதுசமோ? அல்லது விலைக்கு வாங்கினாளோ?
நான் அறியேன்.
இதனுள் பட்டுச் சேலையோ,
பனங் காசோ
இல்லை. ஒரு பொட்டுத் தங்கந்தானும் கிடையாது. பருத்திச் சேலைகள் இரண்டு மூன்று: பாவாடை இரண்டு;
சட்டைகள்
மூன்று நாலு: இரத்த அழுத்த
மு.ச. அuல்ஆலன்

Page 23
மாத்திரைகள் கொண்ட ஒரு டப்பா: சித்தாலேப குப்பி ஒன்று: ஒரு தஸ்பீஹற் மணிமாலை;
அவ்வளவுதான்.
இத்தனை பொருள்களும் அந்த ட்ரங்குப் பெட்டியின் அரைப் பங்கையே நிரப்பும். மீதி அரைப்பங்குக்கு நிரந்தர வெற்றிடம்.
எனது தாய், படுத்துறங்குவது ஒரு கயிற்றிக் கட்டிலில் அதுதான் அவளின் அம்ச துளிகா மஞ்சம் இதைவிட வேறுவசதியை அவள் விரும்பவில்லை.
ட்ரங்குப் பெட்டி, கட்டிலின் கீழ் உறங்கிக் கொண்டிருக்கும்.
இன்னுஞ் சில பொருள்கள் அவளுக்குச் சொந்தமான6ை வெற்றிலைவட்டா,
படிக்கம்,
மு.ச. அuல்ஆலன்
 

சிறிய உர லுலக்கை,
தானும்: தன்னைக் காண வருவோரும் வெற்றிலைபோட்டு மகிழ்வதற்காக வெளியே இருக்கும்.
"ஏழு பிள்ளைகளின் தாய்க்கு இப்படி ஒரு வாழ்வா? ஆண்பிள்ளைகளைப் பெற்றவள் அரசிபோலிருக்கணும் அவலம் நிறைந்தது; ஏற்றுக் கொள்ள முடியாது" என கேட்கத் தோன்றும், என் செய்வது?
பிள்ளைகள் பெறுமானம் மிக்கவர்கள், அரச உத்தியோகம்,
வருமானம் வாழ்வதற்குப் போதுமானது. ஆளுக்கு ஐந்நூறு கொடுத்தாலும் வெள்ளம்.
எந்த மருமகளும் இந்த மாமிக்குக் கொடுப்பதற்கு மணஞ் சுழிக்கமாட்டாள்; மாமி விரும்பாத குறைதான். அள்ளிச் சொரிவார்கள்
அருமை மருமகள்கள்.
மாமி மருமகள்களுக்கிடையில்
y " அபுல்ஆன்ை

Page 24
போதாமை வந்ததில்லை; சண்டை என்று குறிப்பிட்டால் அவர்களுறவைக் கொச்சைப் படுத்தியதாக முடியும். எனது தாய்
மருமகள்கள் மெச்சிய மாமியார்;
நல்லநாள் பெருநாள் வரும் புதுப்புடைவை வாங்கிக் கொடுப்போம். வாங்க மறுத்து விடுவாள். “புள்ளைக்குக் கொடுங்கோ எனக்கு என்னத்துக்கு,
நான் எங்கபோப்பறண்”
"புள்ளைக் கிருக்கு புடியுங்கோ இதை” போராடினால் எடுத்துக் கொள்வாள். அடுத்த நாள் தமர் பிறர் என்று பேதம் பாராமல் யாருக்கோ
கொடுத்து விடுவாள்.
கண்டுங்காணாததுபோல் இருந்து விடுவோம்.
ിബ8ഖങ്ങാണ്
மு.ச. அபுல்ஜகுலர்
 

இது வெளிச்சத்துக்கு வரும்.
இல்லாவிட்டால்
புதைந்து மறைந்துவிடும்.
எனது தாயின் முந்தானை முடிச்சு, அவளது வைப்பகம்! நூறு இருநூறுக்குமேல் அவன் வைப்பிலிடுவதில்லை. யார் அந்தரப்பட்டாலும் முடிச்சு
அவிழ்ந்து விடும்.
எங்கள் வீடு பிரதான வீதியில் அமைந்திருந்தது. மூன்று அறையும்
95 5Typ6)ITUcupLb ஒட்டினாற் போல நீட்டி நிமிர முடியாத
ஒரு சமைக்குங் குடில்.
அந்த வீட்டில் எனது தாயும் அவரது சகோதரியும்; எங்களுக்கு 'அந்தம்மா ஆண்துணையின்றி வாழ்ந்து வந்தனர்.
ଏ୬.୫. ଔjäତୁଣ୍ଡ ତଥ୍ୟ ନିର୍ଦ

Page 25
இந்த வீடு பிச்சைக்காரருக்கும் வழிப்போக்கருக்கும் ஒரு தங்குமிடமாக அல்லது ஒரு சத்திரமாகப் பயன்பட்டது.
இங்கு
தங்குபவருக்கு எதிலும் குறைச்சலில்லை. வாய்க்கு உருசியான உணவு வசதியான படுக்கை; குளிப்பு
மற்றெல்லாம் இலவசமாகக் கிடைக்கும், வீட்டின் முன்புறம் நினைத்த நேரம் போவதற்கும் வருவதற்கும் பொருத்தமான பஸ்தரிப்பு நிலையம்.
உண்ட உணவு செரிப்பதற்கு வெற்றிலை பாக்கும் கிடைக்கும்.
மு.ச. அuல்ஆலன்
 

தினந்தோறும் ஆண்களும் பெண்களுமாக மூவருக்குறையாமல் தாங்குவர். இந்தச் சகோதரிகளுக்கு இவர்களே
பிரதான துணை.
தாங்குபவர்களின் மூட்டை முடிச்சுகள் உள் வீட்டின்
36CJITULDITS5, ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும்.
ஊருக்குள் உழைத்த பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வேறோரிடமுண்டு.
ஒவ்வொருவராகக் குந்தி எடுக்கக் கூடியதையும் தள்ளக் கூடியதையும் தெரிவு செய்வர். தேர்வில் தோற்றுப் போன அழுகிய காய்கனிகள், காலங்கடந்த பண்டங்கள், உடுத்துக் கிழித்த கிழிசல்கள்
என்பன
குப்பைக்குழியை நிரவும்.
';', 4. ଔୟ୫୬ଣ୍ଡନଠଞf

Page 26
இங்கு தங்கவரும் ஆண்களுக்கு
தாழ்வாரமும்
LDITLDUg560TLQulf; பெண்களுக்கு
மூன்றறைகளுள்
ஒன்றும் ஒழித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் கண்ட கண்ட இடங்களில் துப்புவதோ பொருள்களை வைப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது,
தமக்குத் தேவையான துப்பக் களாசியை ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டும். இது
அந்தம்மாவின் கண்டிப்பான உத்தரவு. மீறுபவர் அடுத்த நாள் அனுமதிக்கப்படார். eigsLibLDIT மிகக் கறாரானவர்.
இந்த வீட்டி னிரவு விழித்துக் கொண்டே இருக்கும்
மு.ச. அuல்ஆலன்

குக்கலும்
முனகலும்
இருமலும் நெடுமூச்சும் என ஒன்றுடன் ஒன்று கலந்து இரவின் அமைதியைக் கலைக்கும். இதைக் கேட்டுக் கேட்டுப் பழகிப்போன அந்த உடன் பிறப்புகளுக்கு எந்தத் தொந்தரவு மில்லை. அவர்கள் மீது கழிவிரக்கப்படுவார்களே ஒழிய கடிய மாட்டார்கள்.
வறுமையின் கொடுமையால் கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் வயிற்றில் பற்றியெரியும் பசித் தீயை அணைப்பதற்கு, வீடு வீடாகப்
படியேறி
இரந்து வாழும்
இவர்கள்
க6ைாத்துப் போய்,
அகால வேளையானாலும்
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால்,
அவர்களின் தூக்கத்தைக் கலைப்பதோ
p.8. அuல்ஆலன்

Page 27
தொந்தரவு கொடுப்பதோ பாவத்திலும் பெரும்பாவம் இது அந்தச் சகோதரிகளின் அமுத வாக்கு.
இதற்கு அமைவது அச்சகோதரிகளுக்கு நாம் செய்யும் மரியாதை,
எல்லோர் வாழ்விலும் நல்லது கெட்டது நடக்கும். இதிலிருந்து விடுபட்டது யார்? நாங்களென்ன
விலக்கா?
ബടങ്ങണullb துன்பதுயரங்கள் சந்திக்கும். உள்ளம் பாதித்தால் முகங் காட்டிவிடும் துயரத்தின் சாயலைக் கண்ட எங்கள் தாய் என்ன? ஏது நடந்தது என்று துடித்துவிடுவாள். கேள்விமேல் கேள்வி கேட்டு து6ை:த்து விடுவாள். சமாதானப் - படுத்தவே முடியாது. 'சத்தம் போட்டு, அழுதுவிடுவாள் என்ற அச்சத்தினால் உள்ளதைச் சொல்லிவிடுவோம்.
மு.ச. அuல்ஆன்ை
 

அவ்வளவு தான், அருவிபோல் கண்களிலிருந்து கண்ணிர் ஒழுகும், ஆற்றொணாது புலம்புவாள்.
எங்களைப் பெற்ற பெருமாது தனக்காகக் கரையவில்லை; எங்களுக்காகக் கரைந்தாள்! கண்ணிர் உகுத்தாள்! உருகினாள்! உடல் வருந்தினாள்; நோன்பு நோற்றாள்; நொந்தவர்களுக்குதவினாள்; எங்களுக்கு
ஏதுங் கேடு வந்துவிடக் கூடாதென்று, 'ஆபத்து றொட்டி ‘அள்ளு காணிக்கை மிஸ்கீன் சோறு என்பவற்றைக் கரிசனையோடு காலந்தாழ்த்தாது நிறைவேற்றினாள். அவள் வேண்டுவதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான வாழ்வை பிரார்த்திப்பதெல்லாம்
மு.ச. அபுல்ஆலன்

Page 28
எங்கள் நல்வாழ்வுக்காக. இதைவிட வேறொன்றையுமவள்
விரும்பியதில்லை.
€9e0b LD8560D60T ஒரு நாளைக்கு 69e0b cLJD60DADuUrT6)lğ5] காணவேண்டும். தவறின் பதறிப்போவாள். முதல் வரும் மகன் எந்த மகனானாலும் "g(6 5 5 5 9GB என்ன நடந்தது என்று கேட்டுவா” போய்த்தான் தீரவேண்டும்.
செய்தியை அறியுமட்டும் ஆறுதல்
96.OLuuLDITLT6. இதுதான் அவளிடமிருக்கும் பலவீனம். ஆசை அற்றுப்போன அவளுக்கு பிள்ளைப் பாசம் அளவு கடந்திருந்தது இதைப்
மு.ச. அபுல்ஆலன்

"Gug,60)LD 6T6trap மலினப்படுத்த முடியாது: ஆத்மார்த்தமான உணர்வு: கல்மிகூடிம் இல்லாத உள்ளன்பு
பெறுமதிமிக்க
6,606Turig Lib;
புனிதமானது: போற்றுதற்குரியது.
உணர்வு நிரம்பி வழியும் போது அறிவுக்கு எங்கே இடம்?
அவ்வளவே,
இரண்டாயிரத்தொனிே செப்டம்பர் மாதம் பதினெட்டாந்திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நாலுமணி, தெருக் கதவைத் தட்டுஞ் சத்தங் கேட்கிறது.
திறந்து பார்க்கிறேன். தெரிந்த ஒருவர் நிற்கிறார். காரணம் கேட்பதற்கு முன்
35L60LD60dué
செய்யத் தொடங்குகிறார்,
1.ச. அயல்ஆலன்

Page 29
“உம்மாவுக்குச் சுகமில்லை. அவசரமாய் அந்தம்மா வரச் சொன்னா.
அடுத்த கேள்விக்கு இடம் வையாமல்
போய்விட்டார்.
தலைகிறங்கியது மனம் ஒப்பவில்லை; இரவுதான் சந்தித்தேன்; இரண்டு உடன் பிறப்புகள் என்னோடிருந்தனர், இதற்கிடையில் சிந்திக்க முடியவில்லை; சீக்கிரமாய்ப் புறப்பட்டோம் நானும் மனைவியும் போனோம்;
அறையுட் புகுந்தோம்.
9_LöLDT,
கிப்லாவுக்கு கால் நீட்டியவளாய் sell TLD60605ust D6) நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தாள்.
பக்கத்தே இரு துணைகள்
கண்கள் குளமாக 2 fLDT660
மு.ச. அபுல்ஆலன்
 

கால்களைச் சேர்த்துப் பிடித்துகொண்டிருந்தனர். பிச்சைக் காரர்கள் தமது பேருதவியினால் பெருந்துணைகளாக எனக்குப்பட்டனர். நாங்கள் செய்யவேண்டியவற்றை அவர்கள்
செய்தார்கள்.
“LD6ofsLib' இன்னுஞ் சாகவில்லை.
அந்தம்மாவின் கண்களிலிருந்து
தாரை தாரையாக கண்ணிர் கொட்டிக்கொண்டிருந்தது. விசும் பிக்கொண்டே
விபரித்தா.
“மூன்று மணியிருக்கும்
ராத்தா எனக்கு என்னமோமாதிரியாய் இருக்கு கீழிறங்கிப் படுக்கப்போறேன்” நானும் பெத்தாவும் கைத்தாங்கலாக இறக்கிப் படுக்கவைத்தோம், என் மடியில் தலை வைத்து நெஞ்சு வலிக்குதெண்டா நெஞ்சைத் தடவினேன்.
y, அல்ஆலஓர்

Page 30
நெடுமூச்செறிந்தா மூச்சுப் பேச்சில்லை; முடிந்துவிட்டதவர் வாழ்வு.”
2 LibLDT606). ஊர உருகப் பார்த்தேன். உடுத்திருந்த வெள்ளைச் சீலை 'கபன் போர்த்தியது போலிருந்தது.
வாசற் பெருக்கி, வகை வகையாச் சமைத்து, பாய் இழைத்து, பாத்திரந் தேய்த்து, காய்ச்சுப் போன கைகள்; பக்கவாட்டில் பல மிழந்து கிடந்தன.
உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த உடல், உணர்வற்றுக்கிடந்தது.
எனது தம்பியர்
குஞ்சுங் கூரானுமாய் இருந்த பருவத்தில், இறையடி சேர்ந்த, எனது தந்தையின் சுமையை, தானே சுமந்தவளின்
தலை, முகந்தெரிய முக்காடிட்டு, அந்தம்மாவின் மடியில் ஆடாமற் கிடந்தது.
மு.ச. அபுல்ஆஸள்
 

ஏழு பிள்ளைகளின் இரவு நேரப்படிப்புக்கும் காலங்கடந்த வருகைக்கும் கண்துஞ்சாது காத்திருந்து காத்திருந்து பூத்துப் போன கண்களை காட்டமாட்டோமென
S60LDuj600rCBLD இறுக மூடியிருந்தன.
சிந்தனைகள்
பின்னோக்கி
சிறகடித்துப் பறந்தன. ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ சம்பவங்கள்.
2 (fLDIT606).
அள்ளி எடுத்துக் கொண்டு எல்லை இல்லாத இடமொன்றுக்கு ஓடவேண்டும் போலிருந்தது. அடுத்து காரியங்களை முடிக்க அறுபட்டது சிந்தனை: பிறந்த இடத்திலிருந்து பயணித்த ஆத்மா கழாகத்ரின் கட்டளைப்படி பிறந்த இடம் போய்ச் சேர்ந்து விட்டது. இன்னலாலில்லாஹற்.
மு.ச. அபுல்ஆண்ை

Page 31
பாரிய நோய் நொடியில்லாமல் படுகிடக்கையாய்க் கிடக்காமல்; அங்குமிங்கும் அலைமோதித் திரியாமல்; அள்ளி அள்ளி இறைக்காமல்; மகன்களோ மருமகள்களோ உற்றரோ உடன் பிறப்போ பாடுதுணைபார்க்க: பங்கு போட்டுக் கொள்ள, எள்ளளவும் இடங்கொடமால்; 260Lurifoof LD56f உயர்ந்த மெய்ஞ்ஞானியின் பேர்த்தியின்
புனித ஆத்மா பொசுக் கெனப் போய்விட்டது.
கண்கள் அறையைச் சுற்றிவந்தன. கட்டிலின் அடியில் அந்த “ட்ரங்குப்பெட்டி" அகலத்திறந்து கிடந்தது. உள்ளே உள்ளவை ஒன்றுங்குறையாமலிருந்தன.
ஒரு பெண் துறவிக்குச் சொந்தமான அந்த ட்ராங்குப் பெட்டிக்கு, உரிமை கொண்டாட, எவருமிலர்.
மு.ச. அபுல்ஆள்ை

அது எனது தாய்வழிவந்த முதுசம்.
மறுமை நாளில் மகா சந்நிதானத்தில் இறைவனைக் காணச் செல்லும், எளிய நல்லடியாளுக்கு இந்த "ட்ரங்குப்பெட்டி
அதிகம்.
CSN22-e
உரிமுத்து - கடன்
கற்பதற்கு வழி செய்வது பெற்றோர் கடன், கருத்தூன்றிக் கற்பது
பிள்ளைகள் கடன்,
கசடறக் கற்பிப்பது
ஆசிரியர் கடன், கற்றபடி நடப்பது
கற்றோர் கடன், கற்றவரைப் போசிப்பது
உலகோர் கடன், காசினியை வாழவைப்பது
எல்லோர் கடன்.
{!}}.ජී . ඊlúñණු9ෆඝණී

Page 32
உஷட்டி வளர்த்த உத்தமிக்கு டிட்டி வைத்ததென்ன.
ஊட்டி வளர்த்த
உத்தமிக்கு ஈட்டிவைத்த தென்ன? உயர்த்தி வைத்த 9 Lib DIT635(5 சேர்த்து வைத்த தென்ன? நினைக்கிறேன், நினைக்கிறேன்; எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஏழு பிள்ளைகளின் தாய் ஏமாந்து போனாளா? தோற்று விட்டதா அவள் வாழ்வு? சுருண்டது எண்மனம் தம் மக்களைச் சான்றோ ரெனக்கேட்டு பெற்றவன்றினும் பெரிதுவந்தாளா? ஏங்கித் தவித்தது என்மனம் இல்லை" என்ற முடிவுக்கு வரும் வேளை ஒரு ஒளிக் கீற்று: பட்டென்று பளிச்சிட்டது பரவசமடைந்தேன்.
மு.ச. அயல்ஆலன்
 

உம்மா தோற்கவில்லை; உறுதியாகச் செல்வேன்; "நாமத்தும்மா பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்கா ஒற்றுமைக்கு உதாரண குடும்பம்; ஊரார் போற்றிய புகழ்மொழி: உண்மை மொழி.
நினைவுக்கு வந்தது; நிமிர்ந்தது நெஞ்சு நிம்மதியடைந்தேன்.
பெற்றவள் பெற்றவன்றினும் பெரி துவந்தாள்.
நாங்கள் தேடிக்கொடுத்த தேட்டம். இதை ஈட்டுவதற்கு அவளின் அர்ப்பணிப்புகள் அனந்தம். கொடுத்த விலை கோடி கோடி.
பற்றுக்கோடு
2-LöLDT
எங்கள் பற்றுக்கோடு ஏழு கொடிகள்
母Q
ஒன்றையொன்று அரவணைத்து
மு.ச. அபுல்ஆலன்

Page 33
பற்றிப்படர்ந்தன. கொடிகளுக்காக அவள் பட்டதுன்பம் கொஞ்ச நஞ்சமன்று. ஏழு முனைகளிலிருந்து தொடுக்கப்படும் எறிகணைகளுக்கு எதிர் நிற்பதுபோல்; ஏழு பிள்ளைகளின் தேவைகளுக்கு முகங்கொடுத்தாள்.
9|LibLDLDLDITl
எண்ணிப்பார்க்க
guj6OT.
பற்றுக்கோடு
ஒரு நாள்
அடிசாய்ந்தது. பற்றிகள் அறுந்தன; படர் கொடிகள் சரிந்தன. எற்றியது காற்று: இடம் மாறிச் சென்றன. கடந்து வந்த பாதை கடிதில் மறந்தது. திரும்பிப் பார்க்கவில்லை; சீர் குலைவு ஏற்பட்டது. பாவம்
விதி விளையாடுகிறது. காலம் பதிற் சொல்லும்; காத்திருப்போம் அதுவரை. தேற்றுவதைத் தவிர தேவை எதுவுமில்லை.
மு.ச. அuல்ஆலன்
 

செட்டைக்குள் வளர்த்த சின்னக் குஞ்சு
செட்டைக்குள் வளர்த்த சின்னக் குஞ்சு: பட்ட துயர்தனைப் பாடலிற் றந்தனன்.
என்தம்பி ஜிஃப்ரி:
எங்களுள் இளையோன்.
பழகுதற் கினியன் பண்புகள் நிறைந்தவன்.
அன்பு கொண்டாட
அருமையானவன்.
உள்ளதை உரியதை உவந்து கொடுப்பவன்.
மற்றவர் துயர் துடைக்கச் சற்றுந் தயங்காதவன்.
கையிலில்லா விட்டால்
கடன்பட்டுக் கொடுப்பவன்.
மு.ச. அபுல்ஆண்ை

Page 34
பையிலுள்ளதைப்
பாராது உதவுபவன்;
அன்பு நிலைப்பதற்கு அள்ளிச் சொரிபவன்;
ஹா.ய் என்ற முகமனுடன் அனைவரையு மழைப்பவன்
ஆசிரியர்த் தொழிலுக்கு அணிகலனானவன் அவனது பெண்டு பிள்ளைகளுக்குப்
பணியாளனானவன்.
இவன் என்தம்பி ஜிஃப்ரி
எங்களுள் இளையோன்.
என் தம்பி ஜிஃப்ரி என்தாயின் செல்லம். தம்பி செய்யும் தப்புகள் தவறுகள், தாயின் கண்களுக்குத் தட்டுப்ப்டா,
இவனுக்கு அகவை இரண்டாகு முன்பு: எங்கள் தந்தை
இறையடிசோர்ந்தார்.
மு.ச. அபுல்ஆலன்
 

தந்தையின் இழப்பால் தாக்க மேற்படாமல், பிஞ்சுக் குழந்தை பேதலித்துப் போகாமல் விஞ்சிய அண்பை நெஞ்சில் நிறைத்து 'செட்டைக்குள் வளர்த்த சின்னக் குஞ்சு. எல்லோரையும் விட
இளைய மகனிடம் சற்று அதிகந்தான்; சலிக்காது எங்கள் மனம். எங்களிலாபத்தில் எள்ளளவுங் குறைவு படா என்தம்பி ஜிஃப்ரி எங்களுள் இளையோன்.
அகால வேளையில்
அங்கிங் கெனாதபடி வேட்டுச் சத்தங்கள் வெடித்துச் சிதறிட பொது மக்கள் பொறிகலங்கி புகலிடந் தேடினர்.
பயங்கரவாதம் பந்த சொந்தம் பாராது. தலை விரித்தாடி சண்டப் பிரசண்டம்
செய்தது, காவல் துறையினர்
y.ச. அபுல்ஆலன்

Page 35
~46~
கடமையைப் புறந்தள்ளி: காவல் நிலையத்துள் கரந் துறைந்தனர்.
D85560)6T85 85TUL6)
தம்முயிர் காக்க காக்குந் துப்பாக்கியைத் கையில் பிடித்து шпЈп p_6әgпfl6ö பகலிரவாய் நின்றனர்.
வலியப் போவதில்லை; வந்தாலும் விடுவதில்லை. இந்த உணர்வுடன் இராணுவம், முகாமில் பற்றுறுதி யற்று பதுங்கிக் கிடந்தது.
தம்மைக் காக்கத் தலை கொடுப்பாரில்லாது. பொறி வாய்ப்பட்ட புள்ளினம் போல பொது மக்கள், வாழுமிடங்களில் வறிதாய் நின்றனர்.
ஆயுத தாரிகளிடம் அரசு தோற்றதால் தெற்கைக் காப்பாற்ற, வடக்கு கிழக்கை
வகை தொகையின்றி
તુp.F. 9uછઠ્ઠoજf
 

அடவு வைத்த தரசு வட்டிக்கு முதலுக்குமாய் உயிர்களு முடைமைகளும் கருணையற்ற காதகரினால் காவு கொள்ளப்பட்டன.
துப்பாக்கி ரவைகள் துளைத்த சடலங்கள், துண்டாடப் பட்ட முண்டங்கள் தலைகள், காடுகளில் கரைகளில் தேடுவாரற்றுக் கிடந்தன.
“ஊராளும் ராசா பொண்டிலைப்புடிச்சா ஆரிடம் முறையிடுவது?”
மண் புழுக்கள் மலைப் பாம்புகளாயின. மனித உயிர்கள் மதிப் பிழந்தன.
g505LDLib,
தூக்கில் தொங்கியது.
நீதி,
நெருப்புக்குண்டத்துள்
விழுந்தது.
பிஞ்சுப் பிள்ளைகள் கெஞ்சி அழ அழ ஏகே ஃபோர்ட்டி செவணைத்துக்க இழுத்துச் செல்லப்பட்டனர்.
மு.ச. அபுல்லுதலன்

Page 36
தாயின் மடியிற் றலைவைத்து கண்துஞ்சும் பிஞ்சுகள் காடுகளில் முகாம்களில் கட்டாந்தரை தன்னில் கடைக் கண்ணில் நீர்வழிய படுத்துக் கிடந்தனர்.
இந்த வக்கிரத்துள் என் தம்பி ஜிஃப்ரி அக்கிரமமொன்றினுள்
9gSurtu JLDITE அகப்பட்டுழன்ற கதை அடுத்து வருகிறது.
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத் தொன்பது, கார்த்திகை மாதம், நாலாந்திகதி நள்ளிரவு பயங்கரவாதிகள் பலர் என்தாயின் வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள்.
ஒருவன் முகட்டில் நிற்க மற்றொருவன் ஓட்டைப் பிரித்து உள்ளே குதிக்கிறான். தூங்கிக் கொண்டிருந்த தம்பியின் மார்பில் துப்பாக்கியை வைக்கிறான். “எழும்புடா!” அவனுடைய உரப்பல்
மு.ச. அuல்ஆலனர்
 

அடுத்த அறையில் படுத்த அன்னையரிருவரையும் அடித்து எழுப்பியது.
கண்விழித்தான் தம்பி; காதக னொருவன் கண்ணெதிரே நிற்கிறான். தெத்துக் கொறட்டை ஒன்று ஆயுத சன்னத்தாய் அவன் முன்னே நின்றது.
தம்பி
அஞ்சி நடுங்கினான் அலமலர்ந்து போனான். நெஞ்சு படபடத்தது: நினைவு தடுமாறியது: உடம்பு சில்லிட்டது: உறைந்து விட்டான். பேசுவதற்கு நா எழவில்லை பிரக்ஞை இழந்தவனானான். ஆசுவாசப்படுத்துவதற்கு அக்கிரமக் காரன், இடந் தரவில்லை. “எழும்புடா? மீண்டுங் காட்டுக்கத்தல் மிரள விழித்தான் தம்பி. அன்னையரிருவரை அறைக்குள் ளிழுத்தது. ஒடுங்கிப் போன
மகனைக் கண்டனர்;
மு.ச. அபுல்ஆலன்

Page 37
உள்ளம் உருகியது. “என்னம்மா இது? ஏன் இவர்கள் வந்தார்கள்?” வினா முடிவதற்கிடையில் தம்பியை தூக்கி நிறுத்தினான். தளர்ந்தன; அவனது கால்கள்: கைத் தாங்கலாய்ப் பிடித்தனர். தெத்துக் கொறட்டை கழுத்தில் கைபோட்டது.
“GBLUTLIT 666fGus”
பிடித்துத் தள்ளியது செய்வதறியாது திகைத்தன ரன்னையர்.
“என்ர புள்ளைய எங்கு கொண்டு போறாய்? அல்ல.லாஹற்.வே! அநியாயத்தைப் பார் றஹற்மான். என்ர புள்ளய
2 (Br65 6 T.ü.LT" காலில் விழுந்தனர்; கதறி அழுதனர்; LD600TLQ g|L60T): மன்றாடிக் கேட்டனர்.
கல்மனங் கசியவில்லை;
கற்பாறையாக இறுகியது. கிராதகன் கிஞ்சித்தும் இரங்கவில்லை.
g.*; *(്
 

எட்டி உதைத்தான். இருவரும் முட்டிகளுரைய மூலையில் விழுந்தனர். முதுமை தாங்கவில்லை முனகி எழுந்தனர்.
தம்பியை தரதரவென்று இழுத்துச் சென்றனர். வாலிபன் என்பதை மறந்தான் தம்பி தாயைப் பிரியும் கன்றுபோல், “g2 LbLDT. 9 LLöLDT” 6T6OT
கதறி அழுதான். அவனது அவலக்குரல் இற்று இறந்து இருளோடு இருளாய் ஈறு கரைந்து எங்கோ சென்றது. அன்னையரிருவரும் அலறிக் கொண்டு வெளியில் வந்தனர். வெறிச் சோடிருந்தது.
நினைவு தடுமாறினர்; நிலத்தில் விழுந்தனர். “என்ர அல்லாஹற்!
L66T 6Tril 5LibLDIT?
மு.ச. அபல்ஜநலன்

Page 38
F'60Lu5656) TLD
சண்டாளன்கள் கூட்டிப் போனான்களே! எங்கம்மா என்ரபுள்ள” நெக்குருகிற காட்சி, பக்கத்துணையின்றிப் பரி தவிக்கின்றனர். இராச் சத்தம் எங்கும் பரவியது.
கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்டது. எங்களூர் வெலிங்டன் தியேட்டர் ஈபிஆர்எல்எப்பின் முகாமாயிற்று.
இங்கு உயிர்கள் உருவப்பட்டன; உடல்கள் சிதைக்கப்பட்டன. LDJ600T 6) flies6ir LDCBGELD முகாமை விட்டு வெளியே செல்லும்!
சண்டாளர்கள் பலி பீடத்துக்கு பலிக் கடாவை
இழுத்து வருதல் போல
60855606T
பின்னால் பிணைத்து
ଓ୨.୫. ଔu୫୭ ଓ ବନ୍ଧେ?
 

கழுத்தில் சோங்கை வைத்து முகாமுள் தள்ளினர். முகங்குப்புற விழுந்தவன் அல்லாஹற் என்றான்; அருமைத் தம்பி வந்தகாலாறவில்லை; வதையைத் தொடங்கினர்.
“எங்கடா ஆயுதம்?”
“எனக்கிற்ற இல்ல”
“பொய்யா சொல்றாய்?"
அடி. உதை. கன்னத்தில் அறைகிறான்; கழுத்தை நெரிக்கிறான்
'2 LLöLDT....” “p LubLDT....”
உயிர் போய் வந்தது. 'சீவன் போறெண்டாலும் 26TL GUTSGSLB' உள்மனம் நினைக்கிறது. இம்சை தொடர்கிறது. இனியும் பொறுக்க இயலா. அடுத்த வினாடி, ஆயுத மிருக்கு வீட்டில் வேப்பமரத்தி னடியில் "அப்படியா?
வா போகலாம்”
வீடு வாசல் வீதியெலாம்
மக்கள் அலை.
மு.ச. அபுல்ஆலவர்

Page 39
அலையை ஊடறுத்து உள்ளே நுழைகிறார்கள்.
வேப்பமரத்தினருகே தெத்துக் கொறட்டை தம்பியை விளித்து “வெட்டுடா” என்றான். மந்திரத்தால் கட்டுண்டவன் போல் மண்வெட்டியால் வெட்டுகிறான். சிவந்த மேனியைச் செங்கதிரோன் சுட்டெரிக்க கண்கள் கண்ணிரைச் செந்நீராய் உகுக்க, கண்டவர் முகம் புதைத்துக் கண்ணிர் சொரிய, வெட்டுகிறான்; வெட்டுகிறான்; வெட்டிக் கொண்டே இருக்கிறான். புதைக்காத ஆயதம் பூமியிலிருந்து வருமா? 'விழல் வேலை வீணான முயற்சி தெத்துக் கொறட்டைக்குத் தெளிவாகி விட்டது.
சனக் கூட்டத்தில்
சல சலப் பேற்பட்டது.
மு.ச. அபுல்ஜநலன்
 

பொங்கி எழுந்தால் புயலாக மாறிவிடும். ஆயுதங்களெமக்குப் பாதுகாப்புத் தரா 2_6ïe675Jü ULULö உலுப்பியெடுத்தது. "மெல்லப் போவதே
மேலான வழியாகும்"
என்று துணிந்து:
“ஆயுதமில்லை
வா. போகலாம்.”
“எனக்கு ஏலா
இங்கேயே சுட்டு விடு!”
உணர்ச்சி பொங்க உரத்துக் கத்தினான். "இழுத்து வா அவனை” தெத்துக் கொறட்டை சீறிச் சினந்தது.
இறைவனிடம் Sufig5 (ELDIT60&uuf கதறிக் கதறி பதறியழுமோசையும் இரண்டறக் கலந்து எங்கும் பரவ, உடல் தளர்ந்து நடை மெலிந்து
ଓy.୫, ୬u୫୬୫ ଗ୍‌ନାଁ

Page 40
உணர்ச்சிகளற்ற நடைப் பிணமாய் நம்பிக்கை யிழந்து தம்பி நடந்து சென்றான்.
தம்பியின் விடுதலை தாமதிக்கக் கூடாது; ஒவ்வொரு விநாடியும் உயிருக் காபத்து: தளராது முயற்சித்தால் தப்ப வைக்கலாம்.
எனக்கு உதவ இரு நண்பர் வந்தனர். மட்டக் களப்பில் மாகாண அமைச்சர்கள் கண்டு கதைத்தேன். மாணவப் பருவத்தில், உம்மா படைத்த உருசியான விருந்தை உண்டு களித்தவர் ஓர் அமைச்சர்: ஒரு தம்பியின் பள்ளித் தோழன். இன்னோரமைச்சர் மற்றைத் தம்பியின் சகபாடி, இத்தனையுஞ் சேர்ந்து இலகு வாக்கியது. என் பணியை.
மு.ச. அuல்ஆலன்
 

656,origiLib DITSlugs.T6) விபரீதம் நடந்ததாம்; விசனப் பட்டார்கள். குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்த பின் விசனப் படுவதால் வேறுபய னேதுமில்லை. விண்டு சொல்ல முடியாத வேதனைதான் மிஞ்சும்.
கருணை வடிவான காருண்யன் அல்லாஹற் இருமையிலும் காக்கும் இரக்கமுள்ள யாரஹற்மான் கசிந்துருகிக்கேட்ட துஆவை கபூலாக்கி அருள்புரிந்தான். அல்ஹம்துலில்லாஹற் அவனுக்கே புகழனைத்தம்.
அழுகை இளிவரல் அச்சம் மருட்சி காட்சிக ளமைந்து கண்ணிருகவைத்த: அய்ந்தாந் திகதி அரங்கேறிய, சோக நாடகம் சுபத்தில் முடிந்தது.
என்தம்பி ஜிஃப்ரி
எங்களுள் இளையோன்
ଓ9.8F. ଔuତି ୭୫ ଗଠନିଆଁ

Page 41
அல்லாஹற் நாடியபடி அகவை நாற்பத்தெட்டில் மாரடைப்பால் மரணமாகும் வரை உம்மாவின் உள்ளன்பால் செட்டைக்குள் வளர்ந்த சின்னக் குஞ்சு.
அன்றே அறுத்தது தெய்வம்
அய்ந்தாந் திகதி ஆட்டத்தை முடித்துவிட்டு தெத்துக் கொறட்டையும் சேர்ந்திருந்தோரும் சற்று வேளையில் சம்ஹாரமாய்ப் போவதை அறியாது மதிமயங்கி ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாய்ப் படுத்தனர்.
பின் னிரவில் சுற்றி வளைத்த எல் ரி ரி ஈ சுதாகரிக்க விடாமல்
வேட்டுக்களைத் தீர்த்தது.
உண்ட மயக்கத்தில் உறங்கியவர்களின் உயிர்கள் உறிஞ்சப்பட்டன;
உடல்கள்
மு.ச. அuல்ஆலர்
 

சல்லடை யாகின:
அரைகுறை உயிர்களை ஆயுதத்தினால் அறுத் தெடுத்தனர். வாங்கிய மூச்சு வெளியே வருவதற்கிடையில் வாழ்வு
முடிந்து விட்டது.
அடுத்த நாள் ஆறாந் திகதி காலை பத்துமணி, சாலை நெடுகிலும் சனக்கூட்டம்.
இரவுச் சம்பவம் எல்லோருக்கும் பெரு விருந்து.
“ஒடமும் ஒருநாள் வண்டியிலேறும் வண்டியும் ஒருநாள் ஒடத்திலேறும்” "அடாது செய்தவன் படாது படுவான்.” "நாய்க்கொரு காலம் பூனைக்கொரு காலம்" பற்பல வாறு
மக்கள்
பகிர்ந்து கொண்டனர்.
மு.ச. அபுல்ஆலன்

Page 42
குருதி யாற்றில் மிதக்கும் பிணங்களைக் கொண்டு செல்ல வேண்டுவோர் வந்தனர்; விரைவாய் எடுத்துச் சென்றனர். தெத்துக் கொறட்டையின் செத்த பிணம் வடக்குநோக்கிச் சென்றது. வாசல்முன் நின்று வாழ்வின் நிலையாமையை நினைக்கிறேன். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியக்கிறேன்.
நேற்று ஆடிய ஆட்டமென்ன! அதட்டிய உரப்பலென்ன நினைத்துப் பார்க்கிறேன். தெய்வம் நின்றறுக்க வில்லை; அன்றே அறுத்துவிட்டது.
"அல்ஹம்துலில்லாஹற்”
மு.ச. அபுல்ஆஸள்
 
 

எந்தையே!
ീâീ ക്രിതങ്ങിങ്ങ ஏங்குகிறேன்.
மு.ச. அபுல்ஆஸர்

Page 43
எந்தையே! நீங்கள் இல்லையென ஏங்குகிறேன்!
எந்தை, ஏழு பிள்ளைகளின் தந்தை: மலர்ந்தும் மலராத மூன்றுக்கும் முதலாளி.
பத்து வாரிசுகள் முள்ளந்தண்டின் முத்துக்களாய் மண்ணில் மலர்வதற்கு முதலெழுத்தானவர்.
முந்தையோர் செய்த கடமைகளை முடிப்பாரென்று நினைக்கையிலே அந்தமில்லா அல்லாஹற்வின் அடிநிழலில்,
g565&LD60Lu
முந்துகிறேன், முழு முதலோனிடம், பிந்திவரு முங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன், பிர்தெளசில் இடங்கேட்டு: என்று சொல்லிவிட்டு இறையடி சேர்ந்தாரோ?
பேருக்காவது ஒரு பிள்ளையின் பெருவிழாவைக் காணாமல், “ஊருக்கு
ଏp.୫, ୬uff୭sନoନ୍ଧର୍ମ
 

உங்களை நான் உடைமை ஆக்குகிறேன்." என்று கூறிவிட்டா?
இரு கண்களை மூடிக்கொண்டார். எந்தையின் தலையெழுத்தை
எழுதிய எழுதுகோல் சிந்திய மை இவ்வளவு சீக்கிரமாய்க் காய்ந்த தென்ன?
முக்தி பெற்றோர் துதிக்கும் முழுமுதலானவனே அறிவான். எம்மைக் கையேற்று, எங்கள் வாப்பாவை
எடுத்துக் கொண்டானா?
எங்கள் வாப்பா
எங்களூர்ச் சந்தையில் எல்லோராலும் அறியப்பட்டவர்.
காலங் கழிப்பதற்கு கடையொன்று வைத்திருந்தார். பட்டோலைச் சாமான்களும் பாய் சுளகு தட்டுகளும், கொல்ல ருலையில் கொழுந்து விட்ட
மு.ச. அபுல்லுதலைர்

Page 44
செந்தீயில் காய்ச்சி வடித்த கலைவடிவப் பொருள்களும் கடையை நிரப்பி கண் கொள்ளும்
காட்சியவை.
கொல்லர் கை வண்ணக் கூரிய ஆயுதங்கள், கத்தி கோடரி கதிரறுக்கும் தாக்கத்தி, அரிவாள் அடிபூட்டு அத்தனையும் சந்தைக்கு அன்றாடம் வந்துவிடும்.
அலையாய் அலைந்து 6606)GuT85ITLD65, வேறு வழியின்றி வெட்கித் தலைகுனிந்து, கனத்த மழையால் கரையொதுங்கும் தோணிகள் போல் சரிபுக் காக்காவிடம் 565&LD60Lu வந்து விடும்.
தளராதே என்று தலையைத் தடவி உள்ளந் திருப்தியுறும்
மு.ச. அபுல்ஜலன்
 

உறுவிலையைக் கொடுத்து
வந்தவைக ளத்தனையும் வாங்கிக் குவித்திடுவார்.
மாதத்திற்கு ஒன்றிரண்டு மறவாமல் விற்று விடும். மற்றவையெலாம் மரப் பெட்டியில், தூங்கி வழிந்து துருப் பிடித்துக் கிடக்கும். சேதமாய்ப் போனாலும் சிரமப்படார் எங்கள் வாப்பா.
இந்த வியாபாரத்தால் எந்தச் சொத்தும் எங்களிடம்
சேரவில்லை. அன்றாட வருமானம் அளவோடிருக்கும். ஏழு பிள்ளைகளுக்கு “6J600TLö' DSTÜL மரணம் வரைக்கும் மானங்காத்த தெங்கள் கடை.
எங்கள் வாப்பா
விந்தையானவர்;
விகடமாய்ப் பேசுபவர்.
கூட்டாளிகள் வருவார்கள் கூடிநின்று கதைப்பார்கள். 4தை வாப்பாவின் வாயைக்
மு.ச. அபுல்ஆலன்

Page 45
வம்புக் கிழுத்துவிட்டு வாய்விட்டுச் சிரிப்பார்கள். அந்திப் பொழுது ஆனந்தமாய்க் கழிந்துவிடும்.
பாடசாலை விட்ட காலம்;
பகலுணவு நான் கொண்டு செல்வேன். வாப்பா உணர்டவுடன் உண்டகளைப்புத் தீர்வதற்கு பத்துப் பதினைந்து நிமிடம் படுத்துறங்குவது வழக்கம். கடையின் திண்ணை அவரின் படுக்கை.
பட்டப்பகலே, பலபேர் பார்ப்பார்களே, எட்ட நின்று எள்ளி நகை யாடுவரே, என்று நினையார். இதை யெல்லாம் பொருட்படுத்தார். மென்று சப்பிய வெற்றிலையுடன் மெலிந்த மேனியை வெளியே காட்டி பாயைவிரித்து படுத்துறங்கிடுவார்.
ஒரு நாட் பகல் ஒரு சம்பவம் நடந்தது.
மு.ச. அபுல்ஆலன்
 

வழக்கம் போல வாப்பா படுத்துறங்குவதற்குப் பாயை விரித்தார். அந்நேரம் பார்த்துச் சந்தையில் வாங்கிய
FITLDIT6of856floor 560LD6Du5 தலையில் சுமந்து கொண்டு வெற்றிலை மடித்து வெறும் வாயிற் றிணித்து செக்கச் சிவந்த செவ்வாயை உடைய மடமாது ஒருத்தி வாப்பாவை நோக்கி வந்தனள்.
வந்தவள், வந்தவழி செல்லாமல் வம்புக் கிழுத்தா ளவரை.
“என்ன சரிபுக் காக்கா பாய் விரிக்கயா?” என்றாள். “ஒண்டி!
ஒன்னக் கண்டுதான் விரிக்கன்;
6T'LJig?" வம்புக் கிழுப்பவளைச் effLDITsili TLD6s
சுள்ளென்று வார்த்தைகள் சுருக்கென்று பாய்ந்தன. ஏடா கூடமான பதிலைத்தான் எதிர்பார்த்தா ளவள்: இப்படி விழுமென்று
மு.ச. அபுல்ஆள்ை
~67~

Page 46
நினைக்கவில்லை. சுற்றி இருந்தவர்கள் கை கொட்டிச் சிரித்தார்கள்; பெண்மை வெளிப்பட்டது. வெட்கித் தலைகுனிந்தாள். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டாள். சிருங்காரமாய்ப் புன்னகைத்து, "இதுக்குத்தான் ஒண்ட வாய்க்குள்ள ஒட்டிறத்தில்ல” "அப்படியா? ஒன்றுமே நடக்காததுபோல ஒருக்களித்துப் படுத்துவிட்டார். இப்படி எத்தனையோ நகைச் சுவைகள், நையாண்டிகள் இன்றும் பலர்சொல்லக்
கேட்பதுண்டு.
ஊமையனைப் பேசவைத்த எங்களுர்ச் சந்தை
Guerl 660)
என்னதாஞ் செய்யும்
எங்கள் தந்தை இறுதிக் காலத்தில் இளைப்பு நோய்வாய்ப்பட்டு இறையடி சேரும்போது எனக்குவயது இருபத்திரண்டு,
மு.ச. அuல்ஆலன்
 

இளையோனுக் கிரண்டு இதற்கிடையில் மற்றைப் பிறவிகளைந்து சின்னக் குழந்தைகளைச் சீராக வளர்க்கவும்
பட்ட கடனால்
பழிச்சொல் வராமலும் பத்தேக்கர் காணியை விற்றுத் தீர்த்து வெறுங்கை யானோம்.
நொந்து நூலாகவுமில்லை; வெந்து வீணாகவும் மில்லை. மூடி இருந்த இருள் முடங்கி ஒடுங்கும் வரை: விடியலை நோக்கி விடா முயற்சியுடன் ஒற்றுமையாய் உழைத்தோம். வெற்றி கிடைத்தது. விரும்பிய வாழ்வும் அமைந்தது.
இதைப் பார்த்து மகிழ்ந்திட எந்தை இல்லாமற் போனாரே!
○エミ義ーエう
மு.ச. அபுல்ஆன்ை

Page 47
ஆஞ்சலி
30.03.1985இல் இவ்வுலகை நீத்த எனது ஆசிரியன் உயர்திரு. க.மு. ஞானப்பிரகாசம் தலைமை ஆசிரியர் அவர்கள் மீது பாடப்பட்ட
இரங்கற்பா
அறிவொளி பரப்பு மாசானாய் நின்று நெறிநிலை பிறழாது நீணிலம் புரக்க அறவழி நடந்து அரிய பிறப்பின் உண்மையை யுணர்ந்து உவமைக்காளான முதுபெரு மறிஞனாம் முத்துலிங்க மெனும் ஞானச் சுடரேற்றிய ஞானப் பிரகாசனே! பெற்றியர் போற்றிடும் பெரியோனே! உம்மிடம் கற்றவன் சமர்ப்பிக்கும் கவிதாஞ்சலி ஈது.
மடமையை நீக்கி மாபெரு ஞானக் கடலென நின்று கல்வியைத் தந்தீர். கடமை கண்ணியங் கட்டுப்பாடு மென்
உடைமைகளென்று உறுதிப் பொருளுரைத்தீர்.
ලේy.බී. ඊtuණිෂ්‍ය%ගණ්
 

உவ்வழி நின்று உயர்வினைப் பெற்றேன். அவ்வழி நல்வழி அரிய பொக்கிஷம் போல் என்றும் நான் காத்து இயைந்து வரும் வேளை இடியே றனையவுன் னிழவுச் செய்தி கேட்டு இதயந் தகர்ந்தேன்; என்னிலை மறந்தேன். அறிவுக்கண் திறந்த ஆசானே! நின் பிரிவால் அமைதி இழந்தேன் ஆறாத் துயரடைந்தேன். கற்றவர் போற்றிடும் கலை விளக்கே! பெற்றியர் மதித்திடும் பேரறிவே!
பெற்றவர் பெருமையைப் பேருலகின் கண்
முத்திரை பதித்திட்டு மூடினா யுன்விழியை முத்தி நிலைபெற்றிட்ட மூதறிஞனே! நினது
சத்திய வாழ்வு சாகாவரம் பெற்றதையா!
ஐயனே! நின்பிரிவை ஆற்றா துண்துணைவி அடிசாய்ந்து படி மீதில் அலறுவதைப் பார்த்தீரோ? ஊட்டி வளர்த்த உயிரனைய உன் மக்கள் காலடியிற் கிடந்து கதறுவதைக் காணிரோ? உற்றாரும் உறவினரும் உன்னிடங் கற்றவரும் செந்நீருகுத்து சிரந்தாழ்த்தி நிற்கையிலே சாந்தியைத் தேடி சற்குருவே சென்றனையோ?
SNŠTRS
மு.ச. அபுல்ஆலன்

Page 48
εξορίεύ. Θδίδου επές επιδιώξύ ανεύεύί
Şin - துஆ ရေးfi။ დ5რიცხეს சின்னஞ்சிறிய காகிதத் துண்டுகளில் பரீட்சை எழுதப்போகும் பரீட்சர்த்திகள் தமக்குத் தேவையான குறிப்புகளை மிகச் சுருக்கமாக நுணுக்கி நுணுக்கி
இலவல்கள் உவக்கும் இனிய “இசும்”
எழுதிச் சென்று எவர் கண்ணிலும் படாமல் பார்த்து எழுதுவதற்கு இதை உபயோகிப்பர் இக்குறிப்பு :
Notes மேற்கூறப்பட்ட இசும்போன்று நுணுக்கி 5. எழுதப்பட்டிருப் பதால் இதனை இசுரு என்ற குழுஉக்குறியால் இளவல்கள் அழைக்கிறார்கள்
மு.ச. அபுல்ஆண்ை
 
 
 
 
 
 
 

இவைல்கள் உவக்கும் இனிய “இசும்”
உடலைக் காப்பதற்கு ஒரிசும் - பிறர் உள்ளத்தைக் கவர்வதற்கு இன்னோ ரிசும். காதலியைக் கணிய வைக்கப் பிறிதோ ரிசும். கடும் பகையை ஒழித்துக்கட்ட வேறோ ரிசும். எத்தனையோ இசும்களுண்டு இவ்வுலகில்
அத்தனைக்கும் வேறுபட்டதிந்த இசும்.
மாந்திரீகரின் சுவடிகளில் இல்லாதது: மகிமையுள்ள கிதாபுகளில்
காணாதது; பிக்குகளின் வாகடத்தில்
வரையாதது; பிணிதீர்க்கும் வைத்தியரை அணுகாதது: கற்றறிந்த கல்விமானுங்
காணாதது; கணினியாலுங் கணித்தறிய
முடியாதது.
கன்னியரைக் காளையரைக்
கவர்ந்த இசும்:
மு.ச. அபுல்ஆலஓர்

Page 49
یہ 4 7بہ
560T85 LD600ft (356CD66CDU CSUT6) காக்கு மிசும்; எண்ணியதை எண்ணியவா gÓlu|LöL LÓkeilb; இளையோரின் நெஞ்சங்களை ஈர்க்கு மிசும்; புண்ணியவான் பலர்கையில் புரளுமிசும்; புதியவர்க்கும் பழையவர்க்கும் பொருந்து மிசும்.
நுண்ணியதாய் வரிவடிவம் பெற்றிருக்கும் - தாம் நுணுகியதை வரிக்கு வரி கொண்டிருக்கும்; பாவையரின் பர்தாக்குள் பதுங்கி நிற்கும்; பரீட்சையிலே மண்டபத்தில் பதவி கொள்ளும்; பூவையரின் பூங்கையில் பொதிந்திருக்கும்; பூங்கொடியார் சிற்றிடையில் துவண்டிருக்கும்; மங்கையரின் றவுக்கைக்குள் மறைந்திருக்கும்; மடித்துடுத்த சேலையினுள் ஒளிந்திருக்கும்; காளையரின் காற்சட்டைப் பைகளுள்ளும் கைமடித்த சட்டையிலும்
மு.ச. அபுல்லுதலர்

மேற்பையிலும் கால்மேசு மடிப்புள்ளும் கெளமீனத்துள்ளும்
கறங்குபுகா விடமெங்கும் கரந்துறையும்.
கார்காலம் வந்தவுடன் காளான்கள் முளைப்பதுபோல் தேர்வு காலம் வந்தவுடன் திருவுருவம் பெற்றுவிடும். தேர்வுக்குப் படியாது தெருசுற்றித் திரிந்தவர்க்குப் பார்த்தெழுதும் வாய்ப்புக்களை பவித்திரமாய்க் கொடுத்துவிடும். பரீட்சைக்குத் தோற்றுபவர் பரிதவிக்கும் நிலைக்கிரங்கி கைகொடுத்து உதவி செய்து கரைசேர்த்து வைத்துவிடும்.
பார்க்குமிடமெங்கும் பரீட்சை மண்டபமுழுதும் கைக்குக் கைம்மாறி கடும்வலசை வந்துவிடும். கண்களிலே எண்ணெய்விட்டு
85L60DLDuiGelo Fr(BL J(BLib
நோக்குநரின் பார்வைக்கு நொடிப்பொழுதில் நாமம்போடும். பார்ப்பவர்கள் பார்த்துவிட்டால் பாவமிவர்கள் வேப்பெண்ணெய் குடித்தவர்போல் மிரள விழித்துநிற்பர்.
તp.8. શ્રધર્ઝેન્નઇof

Page 50
அவ்வேளை அவர்முகத்தில் வழிந்துவரு மசடுகளை அள்ளி எடுப்பதற்கு ஆரேனும் முன்வாரார். 6T600rs IT600r LLDLLD இருசாணாய்க் குறுகியங்கு இளித்த பற்களத்தனையும் எட்டியெமைப் பார்த்துநிற்கும். தப்புச் செய்யாதார்போல் சாகஸங் காட்டிய இவ்விளவல்களின் நிலைகுறித்து இலக்கியமே படைத்திடலாம்.
இத்தனை சிறப்புக்களும் ஏற்றங்களும் பெற்றுநிதம் எத்தனையோ உள்ளங்களில் இடம்பிடித்த திந்தஇசும்: பரீட்சை நாள்களிலே பரீட்சார்த்திகள் கைகளிலே கொட்ட மடித்து கொடிகட்டிப் பறந்தஇசும்; பரீட்சை முடிந்தவுடன் பரிதாப நிலைக்காகி தூக்கி எறியப்பட்டு துவண்டு நிலைபுரண்டு காற்றால் எற்றப்பட்டுக் கழிப்பறைக்குள் வீசப்பட்டு கதியற்றுக் கிடந்த கண்ணராவிக் காட்சிதனை
மு.ச. அபுல்ஆலஓர்
 

ஒப்பாரி வைத்து ஓலமிட்ட அவலந்தனை தப்பாமல் நான்சொல்வேன் தயைகூர்ந்து கேண்மினோ!
ஒப்பாரி
உயிரைப்போல் என்னை உவந்தேற்றுக் கொண்டவர்காள்! மயிரைப்போல் நினைத்து மண்ணில் எறிந்தீரே தலையிலே ஏற்றிவைத்து தாளம்போட்ட வஞ்சகர்காள்! தரையிலே எறிந்துவிட்டு சடுதியாச் சென்றீரே! கதியென்று காலைக் கட்டிப்பிடித்த கழிசடைகாள்! குதியுயர்ந்த செருப்பால் குரல்வளையை நெரித்தீரே! மார்பக மிரண்டிடையே மறைத்துவைத்த மக்குகளே தேர்வு முடிந்ததும் திரும்பாது சென்றீரே! பசியைத் தீர்த்த பரத்தையரை விலக்குதல்போல், நொசிய வலம்வந்த இந்த நூறுமசாலாவை
கசியக் கசிய
கசக்கி எறிந்துவிட்டு
மு.ச. அபுல்ஆன்ை

Page 51
விசையைக் கூட்டி வெளியேறிப் போனிரே! ஏறெடுத்தும் பாராது என்னவென்றுங் கேளாது வீறு நடைபோடும் விழல்களே திரும்புங்கள்! தடுக்கி விழுந்தவன் மீது தயாளங் காட்டாமல் மிடுக்குடன் செல்லும் மிலேச்சர்களே நில்லுங்கள்! செய்ந்நன்றி கொன்றுவிட்டு செல்கின்ற பாவிகளே! அடுக்குமா உங்களுக்கு
ஆண்டவனும் பொறுப்பானோ?
என்று புலம்பி ஈனக்குரல் கொடுக்கும் இசும்பட்ட பாடுதனை இமைப் பொழுதும்
நான் மறவேன்.
ooziggs
தற்போதுள்ள இளவல்கள் இதனை பிற் 69
என அழைக்கிறார்கள்:
மு.ச. அபுல்ஆ90ள்
 
 

GonGQJulcò Cončấ6Ugo
- நேரிசை வெண்பா -
1) சாதி மதபேதஞ் சாக்காட்டிற் சேர்க்குமே
நீதி யெதிலுந் நிலைத்திடா - சாதி மொழிநாடு குலமென்ற மூர்க்கக் குணத்தால் அழியுமே இவ்வுலகென் றறி.
2) தருமந் தொலைத்து தனிமதங் காப்போர்
இருள்மன முள்ள இழிஞர் - பெருமகர் நிற்கும் நிலைமாறி நீள்புவி யொங்கணும் சற்குணம் நிற்காது போம்.
3) இறைவன் படைப்பான ஈடில்லா மானிடரைக்
குறைமதியார் கொண்று குவிப்பர் - கறைபடியா வாழ்வு நிலைத்திட வந்ததே வேதங்கள் பாழ்நரகில் வீழ்த்துதற் கன்று.
4) தம்மொழி மீதுள்ள தாளாத வேட்கையால்
எம்மொழியும் வாழ வியலாது - அம்மொழிகள் வாழ்வாங்கு வாழ வழிசமைப் போமாயின் தாழ்வுறுந் தன்மைநிங் கும்.
gp.a. clu-62.3506t

Page 52
Յ)
6)
ア)
8)
9)
1O)
தன்னின மாறினமென் னுந்தனியா வக்கிரத்தால் நன்னலங் கெட்டுநா சஞ்கழ்ந்து - அன்னியாயம் வானுற வோங்கி வறுமம் வளர்வதால் தானழிந்து போகு மினம் (அன்னியாயம் - அநியாயர்)
தங்க ளிருக்கை தளராமல் நிற்பதற்கு எங்கிலுங் கக்குவ ரீனத்தை - மங்கையே பாதகஞ் சூழ்ந்து பழிச்சொல் மிகுந்தாலும் ஈதெல்லா மீனர்க் கியல்பு.
அரக்கக் குணமு மசுர வியல்பும் இரக்கத்தன் மையற்ற வினோர் - பரந்துற்று வாழு மிடமெல்லாம் வன்முறைகள் பற்றிட ஏழு நரகா யெரிந்து.
பேதந் தலைக்கேறி பித்தராய் வாழ்பவரின் வாதக் குணத்தால் வழிபிறழும் - வேதம் அருளிய ஞானத்தை ஆழ்ந்து படியார் வெருவுவர் வாழ்வில் விழுந்து.
எத்தனை யோவுயிர்க ளெவ்வளவோ சொத்துக்கள் அத்தனையு மும்மால் நிருமூலம் - இத்தனைக்கும் பாதகரே யாம்செய்த பாவமோ யாமறியேம் காதகரே காரண 6D60s.
இனங்க ளிடையே இறுகு முறவை மனங்கொள்ள துவாழு மாந்தர் - இனவெறியை ஊட்டி வளர்த்து உலகைக் கெடுப்பதால் நாட்டின் நலமேநா சம்.
மு.ச. அபுல்ஆலன்
 

1) சினத்தை யவித்துச் சிறந்தவர் சொற்கேட்டு
இனத்தைக்காக் குமினிய பணப்பு - மனத்தினை மாசிலா வாக்கி மனநிறை வாழ்க்கையைக்
காசினியி லென்றுந் தரும்.
12) வேதியருஞ் ஞானியரும் வேரறுத்த வடியாரும்
ஓதி உணர்ந்த வுரவோரும் - வேத வழிநின்று வெற்றிகண் டாரேயல் லாது இழிந்தோரா யென்று மிலர்.
13) நாடு களுக்கிடையில் நல்லிணக்க முண்டாயின்
கேடுக ளென்றுமே கிட்டிடா - வாடிய நாடுகள் மீட்சிக்கு நல்லுதவி செய்கின்ற நாடுகள் நன்மை பெறும்.
14) நல்லிணக்கங் காண்பதுவும் நல்லார்சொற் கேட்பதுவும்
பல்லினமீ துபரிவு காட்டுவதும் - வல்ல இறையோ னருளை இருமையில் நல்குமென்று மறையோர் நவின்றார் மற்று.
15) ஒருவர்க் கொருவ ருறுபேரன் போடு
மருவிய வாழ்வை மனங்கொள்ளின் - வெருவுத லில்லா தொழிந்த இனியநல் வாழ்வுக்கு
வல்லான் வகுப்பான் வழி.
16) விதியின் வலியை வென்றவர் யாரோ
பதியிலுள் ளோர்பட்டே தீர்வர் - மதியினால் வெல்லலா மென்று வீண்கர்வங் கொள்ளாதே
வல்லோன் வகுத்த வழி.
s
மு.ச. அuல்ஜதல*

Page 53
17)
18)
19)
வெஞ்சமர் வேண்டா வெருவுதல் வென்றிடு நொங்சங் கனன்றிடு நீள்புண்மை - வஞ்சக் குரோதமும் வேண்டா குறைவறக் காப்போன் கருணையே வேண்டு மெமக்கு.
வாதங்கள் நீங்கினால் வையகஞ் சீராகும் பேதங்க ளென்றும் பெருகிடா - பேதமை இல்லா தொழிந்தா லிருப்பதே பேரின்பம் எல்லா வினமுமீ ஞம்.
இனமொழி பேதங்க ளென்றும் பயன்தரா மனநோய் பிடித்தவரே மாழ்குவர் - ஈனவர் இல்லாத நாடேற்ற முற்று வாழுமால் அல்லாத நாடழி யும்.
○エミ多イエや
உரிமுத்து - கல்வி
- 6geeds Gauaoum -
ஐந்தில் வளைந்து அருங்கல்வி கற்றார் புந்தி தெளிந்து புகழ்பூப்பர் - நிந்திக்கும் பாதகங்க ணிங்கிப் பரமனடி யெய்தற்கு ஏதமிலாக் கல்வியைக் கல்.
புந்தி - அறிவு, புத்தி, ஏதம் - குற்றம்
கற்றா ரறிவு கதிர்ச்சுடர் போலுமாம் மற்றார் குறைதீர்த்து மாண்சேர்க்கும் - முற்றிலும் கல்லாதா ரறிவு காரிருள் போலுமே பொல்லா வினையைத் தரும்.
கதிர் - சூரியன்
dp.8F, öiU$%5gyኟ
 

னிைந்த nைதல், விடுத்த aa
தலைவன் கூற்று :
கன்னத்தில் தடம் பதித்த கண்ணின் மணியே - தமிழ்க் கவிதையால் வடித்து வைத்த கன்னித் தமிழே
எண்ணத்தில் விரவிநிற்கும் ஏந்திழையே! - நீ வண்ண மயில் பெற்றெடுத்த
6IIT60 LD5GuIT?,
கன்னித் தமிழ் மொழியில் கவிதை தந்தாய் - அதில் காரிகையே உன் மனத்தின் உருவந் தந்தாய்.
விரகத்தால் நீ படும் வேதனையை - உன் வெட்கத்தால் மறைப்பதைக் கண்டு கொண்டேன்.
இத் தீயில் வேகாதோர் எவருமிலர் - இது
மு.ச. அuல்ஆலவர்

Page 54
என்னையும் வாட்டுவதை
எண்ணிப்பாராய்.
தலைவி கூற்று :
ஆடுந் தென்றல் அங்கு வந்ததோ? நான் அனுப்பி வைத்த சேதியினை உனக்குத் தந்ததோ?
வீசும் வெண்ணிலவு பின்னை வந்ததோ?- உன் பிரிவுத் துயரை யிட்டு என்ன சொன்னதோ?
ஒடும் மேகங்கள் என்ன தந்ததோ? - என் உள்ளத்தினை அனுப்பிவைத்தேன் உனக்குத் தந்ததோ?
மூடும் விண்மீன்கள் மூட்டிவைத்ததோ? அன்றி முகத்தில் முகம் பார்க்கும் ஜாலம் செய்ததோ?
அன்றொருநாள் வெண்ணிலவின்
முகம் பார்த்தேன். "அழகு முகம் வாடியது ஏன்?” என்றேன். பின்னொருநாள்
தென்றலை நான்
மு.ச. அuல்ஆலன்
 

தீண்டப் போனேன். "தீண்டியது தென்றல் தானோ! நெருப்போ? என்றேன்."
வெண்ணிலவும் வீசு தென்றலும் விசனத்துடன் :
மன்னவனே! உன் மனையாள்
உனை நினைந்து, வாட்டமுற்ற நிலைகண்டு
6TLDLD60TopLib கவல்கின்றோம் காய்கின்றோம்; கவனமில்லாக்
காவலனே; உனை நினைத்துப் பொருமுகின்றோம்.
தலைவன் தவிப்பு : என்றதுந் தான் எரிதழலை மிதித்துவிட்ட இளங் குழந்தை படுந்துயரை நானடைந்தேன். “ஐய்யய்யோ! வீண் பழியைச் சுமத்தாதீர்கள்! அடுக்குமா உங்களுக்கு? அபத்தம் என்றேன். பெண்ணென்று அவள் பக்கம் பேசாதீர்கள். பேயைவிட நீங்களென்ன இழிந்தவரோ? என்னிலையைப் புரிந்துங்கூட
மு.ச. அபுல்ஜநலன்

Page 55
இப்படியோர்
இழிந்தபழி என்மீது சுமத்தலாமோ?
2 60ór6oLDugi 2 bLDT60600 நம்பாவிட்டால் உள்ளத்தினைத் தருகின்றேன் எடுத்துச் சென்று: கள்ளமிலாக் காதலைக் காட்டிடுவீர்! "கனிமொழியே பார்ப்பாயே" என்று சொல்மின்!
கவிஞர் கூற்று
என்றவுடன் வெண்ணிலவும் வீசு தென்றலும் "ஏதுக்கடா இவர் மனத்தை நோக வைத்தோம்? பெண்மீது பரிதாபப் பட்டதனால் பெரும் பழிக்கு நாமின்று ஆளாகிற்றோம். இந்தவேலை ஒரு நாளும் எமக்கு வேண்டாம். எமக்குவேலை வேறிருக்கு 6IITs blf GUTC36)||TLf." என்று சொல்லி
SLLib 6i (6; நகர்ந்து சென்றதை நான் கண்டு நகைத்து நின்றேன்.
5$2
மு.சி. அபுல்ஆலன்
 

ഗങ്ങിgal (ഗ്രa) Uuഞ്ഞുഞ്ഞു
நி தொடங்கு .
மானிடனே உன் பிறப்பு மகத்தானது
மதிகெட்டு எங்கேயடா ஒடுகிறாய்? கானிடையே வாழுகின்ற மிருகத்தைப்போல்
கண்கெட்டு வாழ்வதென்ன நினைத்துப்பாராய்.
சோதியில்லா வாழ்வுக்குள் சுருண்டுகொண்டு சோம்பேறியாய்த் துவழிவதற்கா நீ பிறந்தாய்? சுடர்விட்டுப் பிரகாசிக்கும் வாழ்வுதன்னை சுக்குநூறாய்த் தகர்த்துவிட்டுத் துஞ்சுவதேன்.
எதுவுமே என்னாலே ஆகாதென்ற எளியபுத்தி ஏதுக்கடா உனக்குவேண்டும்? அரியசெயல் செய்வதற்கு வந்தநீயும் அறிவிழந்து தவிப்பதை எண்ணிப்பாராய்.
உலகத்தின் ஐசுவரியங்க ளத்தனையும் உனக்காகப் படைத்தளித்தா னிறைவனன்றோ! அளவோ டதைச்சுகிர்த்து எப்பொழுதும்
ஆண்டவனுக்கு நன்றிசொல்ல மறந்திடாதே.
ଧୂp.$. ଔu$୭ଣ୍ଡଳ,୪୫ff

Page 56
பகுத்தறிவுப் பொக்கிஷத்தை உனக்குத்தந்து படைப்புகளுள் உனை உயர்த்தி வைத்ததற்கு நிலத்தினிலே கொட்டிவிட்ட அமுதம்போல நீயு மதைத் தொலைத்துவிட் டழிகிறாயே.
வேதங்க ளாகமங்க ளேதுக்கடா? விழலுக்கா உன்னிறைவ னிவற்றைத்தந்தான். மானிடத்தின் பிறவிதனை உணர்ந்து நீயும் வந்தவழி மீள்வதற்கே வல்லோன் தந்தான்.
அறிஞர்களும் ஞானிகளும் என்றுஞ் சொல்லும் ஆத்ம சாந்தி வேண்டுமென நீ நினைத்தால் அமைதியுடன் உன்னையே எண்ணிப்பாராய்
அண்டவனை நீயுமுட னறிந்துகொள்வாய்.
கனவினிலே நீ காணுங் காட்சிகளைக் கணமேனும் சிந்தித்துப் பார்த்தாயாகில் உன் வாழ்க்கை உன் கனவு போன்றதென்ற
உத்தமர்கள் சொன்ன வுண்மை புலப்பட்டிடும்.
கானலை நீரென நம்பிய மான் கால்கடுக்க ஓடியோடிக் கரைவதுபோல் கனவான இவ்வுலகை நனவானதென்று
கற்பனையை வளர்த்துநீயும் கவல்வதேனோ?
ஆத்மாக்க ளென்றுமே அழிவதில்லை; அதுதாங்கு முடலுரு மாற்றம் பெறும்; மாற்றங்கள் பலபெற்றுச் செல்லு மேயன்றி
மாநிலத்தில் எப்பொருளு மழிவதில்லை.
மு.ச. அபுல்ஆலன்
 

அகிலத்தின் பொருள்களெல்லா மைம்பூதத்தால் ஆனதென்று ஆன்றோர்கள் சொன்னாரன்றோ பூதங்க ளிருக்கும்வரை யெவையு மழியா பூவுலகி லெல்லாமே மாற்றங்காணும்.
மறுமையொன்று வந்துவிட்டா லெல்லாப்பொருளும் LDTUJLDTUů LDGODDĚg5 6ÍOBUĎ ENDLb65ứu JITLD6ð இறைமை நிறை இறையவனே எஞ்சியிருப்பான்; ஏகமாய் நிறைந்து எங்கும் விஞ்சியிருப்பான்.
மாநபிக்கு வல்லோன் தந்த மணக்குங் கலிமா வையகத்திலுள்ளோரைக் கரைசேர்த்திடும்; திரிகரண சுத்தியோடதைத் தியானஞ் செய்தால்
திட்டமாய்ப் பரிபூரணனை யடைந்து விடுவாய்.
ஆத்மாவின் பயணத்தி லொருதங்குமிடம் ஆக வந்த இப்பூவுலகு வெனவறிந்து, செய்பவற்றை நல்லனவாய்ச் செய்து விட்டு
சீக்கிரமாய்ப் பயணத்தை நீ தொடங்கு.
5$శ్రీ
மு.ச. அபுல்துணை

Page 57
புத்திமuக்கிய புதிப்புன்னகை
அழகிய மலருள் சயனித்த புன்னகை அடிக்கடி தலைதூக்கி அண்ணாந்து பார்க்கிறது.
ஏன்? என்று கேட்பின் இழைக்கிறது புன்னகை; இரண்டு இதழ்களும் முரண்டு பிடிப்பதால் முழுமையாய் விரிவதில்லை; முத்து நகையை முழுமையாய் உதிர்ப்பதுபோல், சித்து விளையாட்டு செவ்விதழ் காட்டுகிறது. செந்தூர விதழின் சிருங்காரம் காட்டும் பாசாங்கால், கட்டுக் குலைகிற தென்மனம்; அதிலுள்ள மர்மம் ஆண்களையே அதிரவைக்கும் அம்மாடியோவ்! இதில் என்ன மயக்கம்! வேண்டாம் இந்த விபரீதம் விலகிச் செல்வதே புத்தி
G$23
மு.ச. அபுல்ஆலன்
 

அக்கரைப்பற்றுக் கல்வி வரலாற்றில் ஆழமாகத் தடம்
பதித்தவர் அல்-ஹாஜ் ரி. இப்றெலப்பை எமது முஸ்லிம் மகாவித்தியாலய முத்திய கல்லூரி), அதிபராக கல்வி அதிகாரியாக, கல்விப் பணிப்பாளராக பல பரிணா மங்களில் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. அன்னாருக்கு 10.10.1994 இல் அளிக்கப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவில், நான் இயற்றிப் பாடிய பாராட்டுப்பாக்கள் இந்நூலில் இடம் பெறுவது அக்கரைப்பற்றின் சிறப்புக்கு மெருகூட்டுவதாக அமையும் என நினைத்துச் சேர்த்துள்ளேன்.
கmவியத் தலைவனnய்க் nைண்ணுகின்ற திவ்வூ80
இறைதுதி - வெண்பா
ஆதிமுதலாய் அகமியங்க ளுள்ளோனாய் சோதியாய் நின்றிலங்கும் தூயோனாய் - மேதினியில் நல்லடியார் நாவு நயப்பவனே நற்பொருளின் சொல்லடி யாலுனைத்துதித் தோம்.
LT LOT6006)
அறிவுக்கண் டிறந்திடு மாற்றல்மிகு தேசிகர்கள் அறிவுக் குரமிட்டோ ரறிஞனின் சேவைகளைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துரைக்கக் கூடிய விவ்வவையினிலே செறிவுடனே யானுமிங்கு செந்தமிழிற் பாடவந்தேன்.
மு.ச. அபுல்ஆண்ை

Page 58
செந்நெற் பழனமும் செவ்விளநீர்த் தோப்பும் கன்னற்றமிழ் மிழற்றுங் கன்னியரும் காளையருந் தண்ணென்று தென்றல் தவழ்ந்துவரு மக்கரையுர் கண்ணென்று போற்றுங் கற்றவர்கள் வாழுமூரே.
வந்தவரை வரவேற்று வகைசெய்து வாழவைக்கும் பந்தமென்றுஞ் சொந்தமென்றும் பண்புடனே கொண்டாடும் முந்தநிலை தந்தவரை முழுமனதாய்க் காத்து நிற்கும் இந்தநிலை இவ்வூர்க்கு இயல்பாக அமைந்ததுவே.
பொன்னகர் பூமியாம் பொலன்னறுவையிலே ஒன்னவர் வாழாத ஒணகமைப் பதியிலே தன்னிகரில்லாத தலைமை யாசானாய்
மின்னிய தாவூது லெவ்வையின் மகனாம்.
ஆயிழை அன்னை ஆசியா உம்மா தன் சேயினை வளர்த்த செவ்வியைக்கேண்மின் பண்பினைச் சேர்த்துப் பாசத்தைக் குழைத்து அன்பினை வார்த்து ஆசையாய் வளர்த்தார்.
இவ்வாறு வளர்த்த இப்றாலெவ்வை - கள்வர் வவ்வாத கல்வியை வழுவறக் கற்றென்றும் ஒவ்வாத வழிகளிலே ஒன்றித் திடாமல் ஒவ்வாமை யில்லாத உயர்ந்தோனாய் வாழ்ந்தாரே.
மாசிலா நல்லறிவும் மாண்புள்ள நற்குணமும் காசிலா ஒழுக்கமும் கறைபடாத கைகளும் பூசிலா வாழ்வும் பூப்போன்ற மென்மனமும் மீசுளா ரிவரென்பேன் மிகையென்று சொல்வீரோ.
மு.ச. அபுல்ஆன்ை
 

தன்னைக் கடிந்தவர்க்குத் தாட்சண்யம் காட்டிடுவார் பென்னம் பெரிய பேருள்ளங் கொண்டமகான் சின்னஞ் சிறிய சிறுமைகளை அஞ்சிடுவார்
உண்ணவுண்ன உள்ள மெல்லா மகிழுதம்மா.
திட்டமிட்டுச் செயலாற்றுந் திறல்வீரர் இப்றாலெவ்வை முட்டுக்களெதுவரினும் முகாங்கோனா மூதறிஞர் சட்டங்கள் பாராது சால்பு நிலைதவறாது முட்டறுத்து முடித்திடுவார் முன்னோர்வழி நின்றிடுவார்.
அறிவைப் பெருக்குவோ ராசிரிய ரென்றும் அறிவிலா ரொருபோதும் ஆசிரியராகாரென இன்னபடி ஆசிரியர்க்கு இலக்கணம் விதித்திடுவார். சொன்னபடி அமையாவிடில் தூசாக மதித்திடுவார்.
பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திடுவார் வழமைக்கு மாறாக வசதிக்குச் செய்தறியார் புலமைக்குத் தலைசாய்த்துப் புகழ்மாலை சூட்டிடுவார். நிலமையை விளங்கி நிதம் நீதிவழி சென்றிடுவார்.
கற்றவர்கள் மனம் நிறைந்து கணம்படுத்தும் பெரியோனே மற்றவர்கள் மகழ்ந்தேற்றும் மாசில்லா மாமணியே பெற்றவர்கள் பெரிதுவக்கும் பெருமகனே எஞ்ஞான்றும் நற்றவாங்கள் செய்ததனால் பெற்றனையோ நனி சிறப்பு.
அக்கரைப்பற்று, கல்வியிலே அரசோச்சுங் காரணமென் அக்கரை கொண்டோர் பலர் ஆற்றிய சேவையம்மா இக்கணம்வரை எங்களிதயக்கனி இவ்வூருக்கு தக்க நற்சேவை செய்து தாரணி போற்ற வைத்தார்.
மு.ச. அuல்ஆலன்

Page 59
தாவுகின்ற ஆசையால் தட்டலைந்து போகாமல் வாவுகின்ற தீமனத்தின் வழியெதிலுஞ் செல்லாமல் மேவிய சிந்தனையால் விளங்குகின்ற மேதகையைக் காவியத் தலைவனாய்க் காணுகின்ற திவ்வூரே.
பெற்றவர்கள் செய்த பெருந் தவத்தாற் சீர்கல்வி கற்றவர்களவையிற் கண்ணியம் பெற்ற மகன் உற்றவரும் ஊராரும் உறவினருங் கொண்டாடும் பெற்றியைப் பெற்ற பெருமகனை வாழ்த்துவமே.
நாற்பத்து நாலாண்டு நற்சேவை செய்தவரை காற்காசு கரவாத கல்விப் பெரியோனை நூற்கேள்வியறிவை நுணுகி ஆய்வோனை நூற்றாண்டு வாழ நூலுரைப்போர் வாழ்த்துவமே
CSN22e
உதிர் முத்து - கெAடுழைவைக் கடினிரேடி
காமுகன் தொடர்பால்
கற்பழிந்த பெண்ணொருத்தி, பிள்ளையினுறவால்
பெரும்பழிகழுமென்றஞ்சி தாய்மையைக் கொன்று
தான்பெற்ற குலக்கொழுந்தை கொட்டிலில் போட்டிடுங்
கொடுமையைக் காணிரோ!
மு.ச. அபுல்ஜநலவர்
 

ஆன்யுள்ள மnணவனுைக்கு
蚤
வறுமையில் வாடிய எனது மாணவன், நோய்வாய்ப்பட்டு, மட்டக்களப்பு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்
கொண்டிருந்தபோது அவன் எழுதிய மடலுக்கு 161968இல் நான் அனுப்பிய பதில்
தி/பேராற்றுவெளி 3-cup.5, LITL3-1606 கந்தளாய் 16.11.68
韃
நெஞ்சிற் கனன்ற
நெருப்பைக் கொட்டி அஞ்சல் ஒன்று அனுப்பிய மகனே! Tổ
அஞ்சேல்; உன் துயரால் என் னுள்ளம்
உருகிக் கரைகிறது.
பொருளிலார்க்கு இவ் வுலகம்
இல்லை யெனும்
மு.ச. அuல்ஆலன்

Page 60
பொன் மொழியை
எண்ணிப் பார்!
அருளிலார்க்குப் பொருள் வந்துசேரின் அறமு மழியும் நினைத்துப் பார்!
6)gp60)LD
கொடிது கொடிது.
அது வாழ்வின் புதைகுழி. சிறுமை மிகுந்து சீரழிவை உண்டாக்கும். இருள்நிறை வாழ்க்கை இடர் மிகுங்காலம்
படர் நெருப்பன்ன
பற்றித் தொடரும்.
குடர் நிறையாது கும்பி சுருங்கிடும். குறையா வசையும் நிறையா தாசையும் கொடும்பிணி வருத்தக் கொள்கை தளரும்.
வலிமையும் வனப்பும்
வாய்மையும் நலியும். சொந்தமும் பந்தமும் தூர விலகும்.
மு.ச. அபுல்ஜநலன்
 

பாசமுந் நேசமும் பலனற்றுப் போகும்.
&ങ്ങഖ
ஒருகுடிப் பிறப்பாய் உடனின் றுழற்றும்.
நீடியது துன்பமென, நினைந்து நினைந்து தாழ்வு மனத்தால் தளர்ந்து விடாதே 260Tög
பெருமானாரின் வாழ்வு பெரும்பாடம் புகட்டும். சிறுவயது வாழ்க்கை செவ்வியதாய் வழிநடத்தும், உலகம் போற்றும்பலர் உன் போன்றவரே. நிலை குலையாது நிமிர்ந்து நில்!
வறியவர்க்குச் சொர்க்கம் குறுகிய தூரத்தில்: மறுமையை நேசிப்பவன்
இம்மைக் கடிபணியான்.
இருந்தும், “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்”
மு.ச. அபுல்ஆன்ை

Page 61
up6LDT.g. பொய்ப்பதில்லை பழஞ்சோறுஞ் சுடுவதில்லை.
எல்லாங் கலந்த கலவைதான் இவ்வுலக வாழ்க்கை. இதைத் தோற்கடிப்பதே நமது பணி.
உன் தாய் உரொட்டி சுடும்போது, ஒரு பாடு போடுவதில்லை. மறு பாடும் புரட்டுகிறாள். இதுவே வாழ்வு:
உரொட்டிப் பாடு.
ஒருநாளுனக்கு காலங் கனியும்;
அது. காலடியில் வந்துவிழும். ஞாலம் புரக்க நல்வழி திறக்கும். பொறுமையா யிரு பொற்காலம் பிறக்கும்.
அக்காலம்
மு.ச. அபுல்ஆலன்
 

"அன்புள்ள மாணவனுக்கு” எனினும் மடலைப் படித்த
வந்து விட்டால்; பட்ட துயரனைத்தும் பணிபோற் கரைந்துவிடும்.
அன்பு மகனே, உள்ளந் தளராதே உறுதியாய் இரு. அல்லாஹற் உனக்கு அருள் புரிவான்.
p_60ї நோய் நொடி அகல, நொந்தமனஞ் சாந்தி பெற, அல்லாஹற் விடத்து அருள் வேண்டி இரக்கின்றேன்.
இவ்வண்ணம் அன்பு ஆசிரியண் அபுல்ஹஸன்.
○ーミ%エや
முன்னீடு தந்தவரின் உள்ளத்தில் விளைந்த முத்து
"கவி உரைத்த அறம் நிலை காவியமாய் ஆனது காண்! உளம் தெளிந்தமொழி இறை நாட்டமதாய் ஆனதும் காண்”
மு.ச. அபுல்ஆலஓர்

Page 62
புதியதோத் உலகஞ் செய்வேnம்
புதியதோருலகஞ் செய்வோம் - நமது பூசலை மனதார ஒழித்து நடப்போம் கதியிலா மானிடராய் நாமிராமல் - நல்ல கலைகளைக் காலடியிற் கண்டுதெளிவோம்.
எட்டாத தூரத்தில் விரிந்த வுலகம் - இன்று இடநோக்கிச் சுருங்கியது கிராம வடிவில் கிட்டாத பொருளென்று நினைப்பதெல்லாம் - உடன் எட்டுகின்ற அதிசயத்தைக் கண்டுகளிப்போம்.
எழுதவும் வாசிக்கவு மெனக்கியலா - என்று எண்ணியெண்ணி துஞ்சவது வீணேயாகும் காலந்தான் மாறுவதை நின்று கவனி - உன் கண்முன்னே இருக்கிறது நல்ல கணினி.
வேண்டியதை வேண்டுமளவு முன்கணினி - ஏதும் விகற்பமின்றித் தந்துதவும் விரைவில் காண்பாய் எழுதுவதோ மணனிப்பதோ என்றும்வேண்டா - நமக்கு இருக்கவே இருக்கிறது இலத்திரனியல் கணினி.
உற்றாரும் உறவினரும் ஒருகா லுனக்கு - ஏதும் உதவாது வஞ்சித்து ஏமாற்றலாம் மாற்றாரைப் போலன்றி இக்கணினி - காலம் மறந்ததையுங் கொண்டுவரு மிக்கணத்தில்.
மு.ச. அபுல்ஆஸள்
 

இந்தியாவில் சன்ரீவியில் காட்டும்படத்தை - உன் இல்லத்தின் தொலைக்காட்சியில் காணவிரும்பின் உன்னகத்தே செய்ம்மதி யிருந்தாற் போதும் - எல்லா உலகக் காட்சி அத்தனையுமுன் வீட்டிலாகும்.
வெளிநாட்டில் வேலை பார்க்கு முன்தந்தைக்கு - மிக விருப்பமுட னொரு செய்தி விடுக்கநாடின் உள்ளங்கைத் தொலைபேசி இருக்கும் போது - நீ உழலுதல் அறிவீன மறிவீனமே.
சவுதியில் வேலைபார்க்குஞ் சகபாடிக்கு - ஒரு சங்கதியை அறிவிக்க நீ விரும்பின் இருக்கவே இருக்கு ஒரு மின்னஞ்சல் - செய்தி இக்கணமே போய்ச் சேரும் இடந்தேடியே.
எந்தச் செய்தியை எப்பொழுதுமானாலும் - உன் இதயத்தில் சுரப்பதை எள்ளளவுங் குறைக்காமல் சொந்தக் கையெழுத்து துக்குணியு மாறாமல் - மிகத் துரிதமாய் அனுப்பலாந் தொலைநகல் மூலம்.
அமெரிக்காவின் நூலகத்தி லோர் விடயம் - நீ அறிய வேண்டுமென்று அல்லாடாதே குறுகிய நேரத்திலும் மிகக்குறைவாய் - அதைக் கொண்டு வந்து தந்துவிடு மிணையத்தளம்.
இத்தனையும் மிலேனியத்திலிருக்கும் போது - நீ ஏதுக்கடா தயங்கவேண்டுங் கோழையைப்போல் அத்தனையு முனக்குத்தான் மறந்திடாதே - என்றும் அனுபவித்து அறிவை வளர் ஆழ்கடல் போல்.
வேண்டாத பழைமையெல்லாம் விரட்டியடி - நீ வீணான மனிதனா யாகிடாதே காணாத காட்சிகளைக் கண்டுகளி - உன் காலடிக்கு உலகம் வரும் நினைத்துப்படி.
1O.O2.2OOO
جم
རྗེ་
حا
ܣܘ
மு.ச. அபுல்ஆலன்

Page 63
அல்லnவூற்வின் ஜில் விலைாந்த
ஆணிமுத்3
தொகையறா யா ரகலல்லாஹற்! யா ஹபீபல்லாஹி யா கலீலல்லாஹற்! யா நபியல்லாஹற்!
பல்லவி
அகிலத்தின் அருட்கொடையே அண்ணல்நபியே! ஆகிறத்தின் அருட்பிளம்பே அண்ணல்நபியே!
FJ600TL5 இளமையிலே பெற்றோரை இழந்துநின்றீர் ஈரமற்ற பாலைதனில் வளர்ந்துவந்தீர் கோத்திரங்கள் போற்றுகின்ற குணக்குன்றானிர் நேத்திரத்தின் நன்மணியாய் நெஞ்சில்நிறைந்தீர்.
(அகிலத்தின்)
வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தநபியே வற்றாத அருள்மழையாய் விளங்கும்நபியே பொறுமையினைப் பொக்கிஷமாய்ப் போற்றும்நபியே புவியோர்கள் மீட்சிபெற உதவும்நபியே.
(அகிலத்தின்)
மு.ச. அபுல்ஆலஓர்
 

இருமையிலும் இறையோனின் கடாட்சம்பெற்றிர் அருமையிலும் அருமையான அரும்பொருளானிர் மறுமையிலே எங்களுக்கு உதவும்நபியே மறைபுர்கான் வழியினிலே வாழ்ந்தநபியே.
(அகிலத்தின்)
அல்லாஹவின்நூறில் விளைந்த ஆணிமுத்தே அணியணியாய் அமரர்கள் வாழ்த்துமழகே சொல்லிலே வடிக்கவொண்ணா தூயநபியே சொர்க்கத்தின் திறவுகோலே சொர்ணநபியே.
(அகிலத்தினி)
சிர்ருடைய அடியாராய்த் திகழும்நபியே தீர்க்க தரிசிகள் தலைமகனே செம்மல்நபியே பூசரிமாம் வாழ்த்திநின்ற புர்தாநபியே புவியோர்கள் போற்றுகின்ற பூமான் நபியே.
(அகிலத்தினி)
எங்களை இரட்சிக்கும் ஏக அல்லாஹற்வே எம்பெருமான் வழிநடக்க இன்னருள்வாயே
நல்லடியார் கூட்டத்துள் நாமுமிருக்க நபிபொருட்டால் நாயகனே அருள்புரிவாயே.
அகிலத்தின் அருட்கொடையே அண்ணல்நபியே ஆகிறத்தின் அருட்பிளம்பே அண்ணல்நபியே.
$శ్రీ
તુp.ક. ઠાઈશ્રgoજf
03.

Page 64
ინჭáსUnებU(ბ
- வரவேற்பு -
பல்லவி வண்ணத்துப் பூச்சிகளே வருக எங்கள் தோழர்களே, எண்ணத்தில் நிலைத்திருக்கும் இனிய நல்ல நண்பிகளே. èusगाub வெள்ளை நிற மல்லிகை போல் வெண்ணிற உடையுடுத்து: வித்தி யாரம்பஞ் செய்ய விரும்பிவந்த சிட்டுகளே.
- வண்ணத்து
ஆடியோடி மகிழ்ந்திடுவோம் ஆயகலைகள் கற்றிடுவோம் தேடித்தேடி ஆய்ந்திடுவோம் தெளிந்த அறிவைப் பெற்றிடுவோம்.
- வண்ணத்து
பாட்டுக்கள் பாடிடுவோம் பல்கதைகள் சொல்லிடுவோம் நாட்டுக்கு நலம்பயப்போம் நல்லபணி செய்திடுவோம்.
- வண்ணத்து
மு.ச. அபுல்ஆன்ை
 

பேதங்கள் மறந்திடுவோம் பெரும்பாவந் தவிர்த்திடுவோம் வாதவம்பு விலக்கிடுவோம் வன்முறையை ஒழித்திடுவோம்.
- வண்ணத்து
ஒன்றுபட்டுழைத்திடுவோம் ஒதும்வழி நின்றிடுவோம் செய்ந்நன்றி செய்திடுவோம் சிரோடு வாழ்ந்திடுவோம்.
வண்ணத்து
தொற்று நோயைத் தடுத்திடுவோம் தூயஉள்ளம் படைத்திடுவோம் கற்றவரைப் போற்றிடுவோம் கணினியறிவைப் பெற்றிடுவோம்.
- வண்ணத்து
விஞ்ஞானம் கற்றிடுவோம் விண்வெளியை ஆய்ந்திடுவோம் அஞ்ஞானம் அழித்திடுவோம் அறிவியலை வளர்த்திடுவோம்.
- வண்ணத்து
சற்குருவைப் போற்றிடுவோம் சான்றோரை மதித்திடுவோம்
பெற்றோரைப் பேணிடுவோம் பிறருக்காய் வாழ்ந்திடுவோம்.
- 6)
60or
ணத்து
மு.ச. அபுல்ஆலன்

Page 65
ஏழ்மையை ஒழித்திடுவோம் எளியோரைக் காத்திடுவோம் தாழ்வுமனம் போக்கிடுவோம் தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்.
- வண்ணத்து
தாய்மொழியை வளர்த்திடுவோம் தகைநூல்கள் படைத்திடுவோம் விதம் விதமா யறிந்திடுவோம் வேற்றுமொழி கற்றிடுவோம்.
- வண்ணத்து
காய்கறிகள் பயிரிடுவோம் கால்நடைகள் வளர்த்திடுவோம் நீர்நிலையில் மீன் வளர்ப்போம் நெற்காணி விதைத்திடுவோம்.
- வண்ணத்து
பல்தொழில்கள் செய்திடுவோம் பாரினை விளங்கச் செய்வோம் நங்கடன் இது வென்போம் நாளெல்லாம் உழைத்திடுவோம்.
- வண்ணத்து
மு.ச. அபுல்ஆலண்
 

இ0ங்ல்ை
கிழக்குக் கடலின்
கீழ்வானச் செங்கதிரோன்,
முழங்குங் கடலின் முழுநீளத் தோற்றத்தை, செந்நீராய் மாற்றச் சீறிநிற்கு மாகடல்
மீன் பிடிக்கச் சென்ற மீனவப் படகுகள்,
அலைமோதி வந்து கரைசேருங் காலம், கடிதில் வராதோவென கலங்கித் தவித்து, ஒலைக் குடிசையுள் ஊணுறக்க மின்றி வழிமேல் விழிவைத்து
வராரோ வராரோவென,
காத்துக்காத்துக் கண்கள் பூத்துப் போனர் பரதவப் பெண்கள்,
மு.ச. அயல்ஆலன்

Page 66
இயல்புநிலை தானழிந்து ‘இரங்கல் நிலைக்களாகி, இருப்புக் கொள்ளாது குடிசைக்குங் கரைக்குமாகி குழந்தைகளைச் சுமந்துகொண்டு ஒடித் திரிந்து, உள்ளம் பதைபதைத்து வாடிநிற்கும் வேளையிலே,
காலனின்
கண்ணிற் படாது. கரையொதுங்கும் மீனவரின், கட்டழகுத் தோற்றத்தை கண்டவுடன் மெய்ம்மறந்து, பட்டதுய ரத்தனையும் பஞ்சாய்ப் பறக்க உள்ளம் பூரித்து
ஓடோடிச்
சென்றனர் காண்.
ーミ傘や
உதிர் முத்து - ஓவுெநிலை எணர்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தும்
அறுபது வயது ஆர்வமா உழைத்திடும்
இறுதி நாளை யெண்ணி யேங்கிடும், மறதியின் பிடியில் மாய்ந்து சோர்ந்திடும்
பிறரின் கையைப் பார்த்து நின்றிடும் உடலு முள்ளமும் உடன்பட மறுத்திடும்
ஒதுங்கும் பருவமே ஒய்வு நிலையாம்.
ල්p.බී. ඊ{qණිණ්ණංඝණී
 

தரிலnட்டு
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிவரோ, ஊராரே வாழ்த்துகின்ற: உயிரே நீ கண்ணுறங்கு.
பத்து மாதங்களாய்ப் பகலிரவு பாராமல், கருவறையில் கண்ணயர்ந்த கண்மணியே கண்ணுறங்கு.
- ஆராரோ
கர்ப்பத்தில் குடியிருந்து காலா லுதைக்கையிலே, சொர்க்கமே சென்றுவந்தேன் சுந்தரமே நித்திரை செய்.
- ஆராரோ
பஞ்சுமெத்தை உனக்கெதற்கு பாய்படுக்கை தேவையில்லை, நெஞ்சணையிற் றலைசாய்த்து நிம்மதியாய்க் கண்ணுறங்கு.
மு.ச. அபுல்ஜதனிை

Page 67
பாலுக்கு நீ அழுதால் பால்சுரந்து நானுTட்ட, கடைவாயிற் பால்வழிய கண்மலரே கண்ணுறங்காய்.
e3bg
TGJ
பாசத்தில் பால்கலந்து பரிவுடனே நானுாட்டி, நேசமாய் வளர்த்திடுவேன் நிறைபிறையே நித்திரைசெய்.
2b[Jک
TG
JT
பச்சரிசி பல்முளைத்தால் பல்லுக்கொழுக் கட்டைசுட்டு அள்ளிப் பகிர்ந்திடுவேன் ஆராமுதே நித்திரை செய்.
eébJ
TGI.
பானை அடுக்குகளில் பாட்டிசுட்டு வைத்திருக்கும் பணியாரந் தந்திடுவேன் பசும்பொன்னே கண்ணுறங்கு.
(9)
TGJ
கண்ணேறு படராமல் காற்றுணர்வு ஆக்காமல், கன்னத்தில் பொட்டிருக்கு கண்மணியே நித்திரை செய்.
Jتک
п(8p.
வெள்ளிநிலாக் காட்டி வெள்ளமுது குழைத்தூட்டி பள்ளிக்கூட மனுப்பிவைப்பேன் பால்நிலவே கண்வளராய்
- ஆராரோ. கணினூறு, காத்தொணவு-நாட்டார் வழக்கு
●エミ多イエも
மு.ச. அபுல்ஆன்ை
 

ઢ6ળેઠળá6ીઢળà@
உலகை ஒறுத்து ஒற்றைக் காலில் நின்று: தவக்கோலம் பூண்டமுனி தவநிலையில் நிற்பதுபோல்:
வெண்டாமரைக் கயத்தில் வெண்ணிறக் கொக்கொன்று: ஒருகாலை ஒழித்துமற் றொருகாலைப் புதைத்து: ஓடும்நீரை உற்றுப்பார்த்து, உறுமீனொன்றை உணவாகக் கொள்ள:
கூரிய அலகால்
கொத்தி யெடுப்பதற்கு;
eLTLD6) eig08-uj TLD6), அங்கொங்கும் பாராமல், தண்ணிர்க் கரையில் தலைகவிழ்ந்து நிற்குமோர் வெள்ளைக் கொக்கு:
அது ஒரு
கள்ளக்கொக்கு.
மு.ச. அயல்ஆலன்

Page 68
நல்லதை மட்டுஞ் செப்தரில் ആഞ്ഞുങ്ങäക്ര? ?്തങ്ങബ6Uങ്ങ്
கள்ளக் காதலர் களவுசெய்யுந் திறனாளி உள்ளங்க ளொன்றித்த உயிருள்ள ஓவியங்கள்; உறவை வளர்க்க உரைபெருக்கு முற்றார்; காவல் துறையினர் கடின வுழைப்பாளிகள்; ஓய்விலா அரகழியர் உழைத்திடு மமைச்சர்கள்; ஆசிரிய மாணவர்கள் அனைத்துத் தரப்பினர்; உள்ளக் கிடக்கைகள் ஒன்றாய்க் கலந்திட பாகுபாடு காட்டாது பலனெதுவுங் கருதாது; எடுப்பார் கைப்பிள்ளையாய் எந்திரமாய் இயங்குகின்ற வையகத்தைச் சிறைவைக்குங் கையடக்கத் தொலைபேசியே நல்லதை மட்டுஞ் செய்தால் நானுக்குச் சிலைவைப்பேன்.
OSs22e)
மு.ச. அபுல்ஆலன்
 

“காற்செருப்Unல் செமத்தன்னும்”
தெருத் தெருவாய்ச் சுற்றிச்
சீரழியு மிளைஞனே:
கைத்தொலை பேசியுடன்
கடுகதியாய்ப் போவதெங்கே?
பெற்றவளுக் குதவாது
பெரும் பொய்யைச் சொல்லிவிட்டு,
நாகரிக மாய்உடுத்து
நாலுகாலிற் பாய்வதென்ன?
எங்குச்செல்கிறா யென்று
எனக்குத் தெரியுமப்பா!
விட்டில் பூச்சியாய்
விழுந்திடாதே காதல்தீயில்.
கல்வி நிலையங்கள்
கலையும் நேரமிது;
கற்பனைக் காதலியைக்
காணவோ செல்கிறாய்?
கருத்தைக் கவர்ந்தவள்
காதல் செய்ய வரவில்லை; கல்வியின் பயனறிந்து of
கற்பதற்கே வந்தாள்.
,8, 18:3്

Page 69
உனது நெருக்கு வாரம்
உள்ளத்தைப் பாதித்தால்:
கற்பதற்கு முடியாதென்ற
கருத்தினைக் கொண்டாளவள்.
உன்னை அடக்க
உதிர்த்தாள் ஒரு புன்னகையை
புன்னகையை நம்பி
பூரித்துப் போனாய் நீ
காதலென்று நம்பி
கற்பனையில் மிதந்து:
நாலுகாற் பாய்ச்சலில்
நாயாய் அலைகிறாயே.
ஒருத்தியி னுள்ளத்தை
ஊடுருவிப் பார்க்கத்
திராணியற்றுப் போனவுனக்கு
காதல் ஒரு கேடா?
உன்னை யொதுக்கி
உயர்ந்து செல்லத்துடிக்கும்:
ஊக்கமுள்ள பெண்ணாவாள்
ஒருக்காலும் மசியமாட்டாள்,
உன்னுடைய எண்ணங்கள்
ஒருபோதும் நிறைவேறா:
படிப்பதில் ஆர்வமுள்ள
பண்புள்ள்வளை விட்டுவிடு.
இந்தப் படுகுழியில்
இழுத்துப் போட்ட உன்காதலை:
கட்டி இழுத்து வந்து
காற்செருப்பால் செமத்தணும்
*。ド*ーや
மு.ச. அuல்ஆலன்

இந்த இழிதிலை எப்uேna மnறுமேn
விண்டொடர் ஈட்டிய விழுமிய புகழும்; விலை மதிக்கவெண்ணாவீரமும் பண்பும், மண்படர் சேனையும்மாசற்ற வாழ்வும்: கண்படா ஞானமும் காசுறா செல்வமும்; கொண்டிட விளங்கி குவலயத்தில் நிமிர்ந்து: அண்டிய பேர்களை ஆதரித்துக் காத்து, அன்பு நீர் பாய்ச்சி அறிவொளி பரப்பி; மன்பதைக்கு வழிகாட்டி வாழ்ந்திட்ட சமூகம் நாம்.
அருள் மறை வழியும் அண்ணலார் வாக்கும்; கண்களாய்ப் போற்றும் காவலர் நாமன்றோ? வேலியே பயிரை மேய்ந்துவிட்ட கதை போல; காலிலே போட்டுக் கழுத்தை நெரித்து விட்டோம். பாலிலே நஞ்சை பக்குவமாய்க் கலந்திட்ட பாதகர்களாகிப் பரிதவிக்க விட்டு விட்டோம். மண்குடத்து வாழ்வைப் பொன்குடமாய் நினைத்து: மதிமயங்கி வாழ்கிறோம் மயக்கம் மின்னுந் தெளியவில்லை.
எந்தையுந் தாயும் இத்தனை செல்வத்தை, என்ன துயர்ப்பட்டு எமக்காகச் சேர்த்து வைத்தார். என்று கூட நினையாது எழுந்த மனமாக; அள்ளி இறைத்து வாழும்அருமந்த புதல்வர் போல்; முந்தையோர் சேர்த்து வைத்த முழு நிறை பொக்கிஷத்தை, விந்தையாய், வீணாய் விரயமாய் அழித்து விட்டு: நிந்தைக்கு ஆளாகி நிலை குலைந்து மண்டியிட்டு: நீசராயென்றும் நெடுநாளாய் வாழ்கின்றோம்.
மு.ச. அபுல்ஜன்ை
fra

Page 70
அறிவுத் தீபம் 5rLġ 6iGB LD6o6oTu56ö; கறங்கு போல் ஆடி வந்தது ஆணவம்; அவிந்தது தீபம் சூழ்ந்தது அந்தகாரம்; ஆணவம் தழைத்தது அகங்காரம் குடிவந்தது. ஆசை படர்ந்ததுஅறியாமை மலிந்தது: பாசம் தொலைந்தது நீசம் நிலைத்தது: இல்லத்தில் இருந்தோர் மல்லுக்கு நின்றனர்; ஒருவரையொருவர் ஒழித்திட முனைந்தனர்.
ஒட்ட வந்தவனின் உதவியைக் கேட்டோம்; திட்டமிட்டு அவன் சிதைத்து விட்டான்; தெண்டனிட்டு எமது சிரங்களை மலராக்கி; அர்ச்சனை புரியும் அடிமைகளாய் ஆகிவிட்டோம். நஞ்சிலே அமுதை நளினமாய்ப் பூசியவன்; உண்ணத் தந்து எம்முயிரைப் பறித்தான். எண்ணெய்க் கிணறுகள் எமக்கென்று எங்கிருக்கு:
மண்ணைக் கொண்டு மயக்கத்தை வளர்த்தான்.
மங்கையும் மதுவும் மாளிகையும் மன்னவர்க்கு; பஞ்சமும் பசியும் பட்டினியும் மக்களுக்கு மிஞ்சிய செல்வமும் விலையிலாப் பொருளும்; நஞ்சையே தோய்த்த நாசகாரனவனுக்கு; நியாயத்தைச் செய்ய வந்த நீதிபதிப் பூனை, நமது பாகத்தை இப்படித்தான் பகிர்ந்து தந்ததுவே. ஒன்றுமே பேசாது ஊமையராய்ச் செவிடர்களாய்க், கொத்தடிமை செய்யும் கூலிகளாய் ஆனோம் நாம்.
威 இந்த இழிநிலை எப்போது மாறுமோ!
அந்தநாள்தான்; எமதான்றோர் வாழ்ந்த நாள்.
OSs2
மு.ச. அபுல்ஆ90ள்

இந்தியப்Uயணம்
"தாருல் கறம்" அக்கரைப்பற்று - O2. ලිංඛ0/Élරතඝ.
1Ο Ο7.1981.
அன்பு நண்பா, அழகிய கணேஷா, இறைவனருளால் இட ரேதுமின்றி இலங்கை வந்தேன்;
இல்லஞ் சேர்ந்தேன்.
இவண் நலம், அவண் நலமுடன் வாழ்க! தமிழ்நாடு வந்து தாய்நாடு சேர்ந்த சங்கதி சொல்வேன்
சற்றுக் கேளாய்.
தலைமன் னாரிலிருந்து தண்ணிர்க் கப்பலில், அலைமீது நகர்ந்த 338 Lib560p uu600TLib, கன்னியா குமரிக்
மு.ச. அபுல்ஆலன்

Page 71
கடலோரந் தட்டி, மணல்செறி இராமேஸ்வர மண்ணில் நான் கால்வைத்தேன்.
கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழாள்: களி நடம்புரியும் தமிழ்நாடு தன்னில் தீந்தமிழ் சுவைத்தேன்; திசைபல சென்றேன்.
எத்திறத்தார் போற்றும் இனிய நற்காட்சிகள், கண்ணாரக் கண்டு களிப்புற்று நின்றேன். கண்டவை சொற்பம் காணாதவை அதிகம். கடல் நீரைக் கமண்டலத்துள் அடக்கலாமோ? சென்னையின் சிறப்பு செப்பவும் எளிதோ? அண்ணாவின் SLDITg, அமைதி தந்தது. அணையா விளக்கு அவர்புகழ் கூறிற்று. அறிஞர்களை உயிர்த்த அற்புதச் சிலைகள், மெரினா பீச்சின்
ଓଁ୨.୫, ୬uତି ୭୫୫୪୪
 

வீதி நெடிகிலும் தமிழரைக் காத்த தக்கோ ரிவரெனத் தகவுரை கூறித் தலைநிமிர்ந்து நிற்கும்.
வண்ண மயிலன்ன
வனிதையர் கூட்டம்,
எண்ணிலடங்கா
இளையோர் முதியோர், எங்கொங்கு பார்க்கினும் நெருங்கிச் செல்வர்.
கண்ணேறு படவா அன்னப் பெடைகள்,
வண்ணப் புதுச்சேலை வாகா யுடுத்து, கடைவீதி செல்லக் காளையர் கூட்டம் அடிமோந்து சென்று அழகிய மொழியாம், கனிமொழி பேசிக் காதல் கொள்ளும்
காட்சிகள் பலவாய்க்
கண்டு களித்தேன். ஊரு மெறும்புபோல் ஊர்திகளாயிரம் ஒன்றை யொன்று
மிதித்துச் செல்லுமோ!
மு.ச. அபுல்ஆலஓர்

Page 72
அச்சங் கொள்ளும் அளவிற்கு அளவிலா, வீதி நெடிகிலும் விரைந்து செல்வதைப், பார்த்துப் பார்த்துப் பரவச மடைந்தேன்.
வானுயர் மலைபோல் தானுயர்ந்து நிற்கும், அழகிய அடுக்கு மாடிமனைத் தொடர், சென்னை நகருக்குச் சீர்கொண்டு சேர்க்கும்.
பட்டுச் சேலை பழவகை பிளாஸ்ரிக், எட்ட நிற்போரை ஈர்த்திடும் தங்கநகைகள் கட்டவிழ் குழலார் கவினுறச் சூடிடும், மொட்டவிழ் மல்லிகை மொய்ம்மலர் கனகு, ஆரந் தொடுக்கும் அங்காடிகள் பலவும், நேரந் தவறாது நினைத்த இடஞ்சேர, அவசரமாய்ச் செல்லும் அலுவல ரெத்தனைபேர்.
LD6ssoa53 frtLDIT60s
மங்கலப் பொருள்,
மு.ச. அபுல்ஆன்ை
 

தெளிந்த அறிஞர் தீட்டிய நூல்கள். வானொலி வகையும் காலணிக் கடையும், எண்ணி லடங்கா எவர் சில்வர் பாத்திரம் இன்னின்ன பலவாய் இயல்புகள் கூறிவிற்கும், கண்ணுக்கு விருந்தான
கடைகளோ வாயிரம்.
நாவில் நீர்சுரக்கும் நறுஞ்சுவைப் பண்டங்கள், மூக்கைத் துளைக்கும் முறுகிய சிற்றுண்டிகள், உண்டு உருசிக்காத உணவுகள் பல, கண்டு பசியாறும் சாலைக ளனந்தம்.
அல்லற் பட்டோருக்கு
9IUu LD6sfigsLib, அன்னை வேளாங்கண்ணி அழகுத் தேவாலயம், காற்றி லசையும் கதிர்கள் கவிழ்ந்த, கழனிகழ் தஞ்சை நிழலிலாக் கோயில்.
நலனிழந்தோர் குறைதீர்த்து நம்பினோர்க் கருள்சுரக்கும்
மு.ச. அபுல்ஆலன்

Page 73
பார் போற்றுந் தவச்செல்வர் பக்தர்கள் புடைசூழும் நாகூ ராண்டகையின் நற்றவத் தர்கா, ஆர்வலர் நோய்தீர்க்கும் அழகிய முத்துப்பேட்டை, காவலர் சேகு தாவது ஒலியுல்லாஹற். பொலிவிழந்து நிற்கும் புதுக்கோட்டை யரண்மனை, அத்தனையுங் கண்டு அணிநகர் மதுரைவந்தேன்.
கண்ணகி எரித்த கடிநகரிதுவோ? காவலன் பாண்டியன் கவிழ்ந்தமண் ணிதுவோ? இந்த விசாரம் இப்போ தெதற்கு? அந்த மதுரை அன்றே அழிந்தது.
எனறு எனமணம இடித் துரைத்தது.
மதராஸ் தமிழால் மறுகிய என்மனம், மதுரைத் தமிழால் மலர்ச்சி யடைந்தது.
கன்னித் தமிழ்மீது கரைகடந்த பற்றினால்,
மு.ச. அபுல்லுநலன்

எண்ணத்தி லுயர்ந்த எம்ஜிஆர் ஈட்டிவைத்த, புத்தம் புதிய புதுமைகளைக் கண்டு, வாழ்த்தியது என்மனம் வள்ளல் தான்
முதலமைச்சர்.
இந்துக்க ளென்றும் இதயத்தால் பூஜிக்கும், அம்மை மீனாட்சி
ஆரோகணிக்குங் கோயில் தமிழர் பெருமைக்கு தக்கதோர் சான்று.
கல்லில் வடித்தெடுத்த மல்லைச் சிற்பங்கள், கைகூப்பித் தொழுகின்ற மதுரைச் சிலைகள். ஒன்றையொன்று விஞ்சும் உயர்ந்த கலைப்படைப்பை, கண்டு களிக்க
56001600TпијJUD G6600(BGLD.
இங்ஙனம் அன்பு நண்பன்
அபுல் ஹஸன்
மு.ச. அuல்ஆலன்

Page 74
உதிர் முத்து - நலிலnசின் தேடித் தேடிக் கற்றிடுவான்; தெளிந்த அறிவைப் பெற்றிடுவான். நாடிவரும் மாணவர்க்கு நல்ல கல்வி ஊட்டிடுவான். கற்பித்தத் திறனுடையான்; கணினி அறிவைப் பெற்றிருப்பான். உண்மை வழி நின்றிடுவான்; உறுதிப்பொருளுரைத்திடுவான். செம்மைக் குணமுடையாண்; சீரான நாவுடையான். வறுமை வந்தாலும் வாழ்வு தாழ்ந்தாலும் நெறிநிலை பிறழாத தறுகண்ணுடையான். தயாளம் நிறைந்தோனாய், தாளாண்மை மிக்கோனாய்; நற்பண்புகள் நிறைந்தவனே! நல்லாசிரியனாம்.
உதிர் முத்து - (Pącycji
மாணவரீர் நும்வாழ்வு மகிமையுடன் விளங்குதற்கு மாண்புடைய சற்குருவை மனநோகச் செய்திடாதீர்! காசினியில் வாழ்ந்தசான்றோர் கடைப்பிடித்த ஒழுக்கமிது வீசுபுகழ் நுமக்குவரும் வீணாகத் தொலைத்திடாதீர்!
உதித் முத்து - அழசில் பிழைத்தவர்
அரசியல் பிழைத்தவர் ஆண்டு நிலைத்த தில்லை. ஆள விழைந்தாலும் ஆண்டவன் விடுவதில்லை. ஈண்டு நினைத்துப்பார் இவர்நிலை என்னாகுமென்று. சான்று பகர்வதற்குச் சாட்சிகளும் வேண்டுமோ?
மு.ச. அuல்ஆலன்
 


Page 75
றிதழ்கை 9¢5=e0cal II ാജി ട്ര G. UG பதவிகள் L.LGৱতো গুণ காலம் ந தவற்.
இன ஐக்கி EsiGseCODLE உண்டாக் நடாத்திய சிறுகதை பதினைய
ILGIO.
மரபுக்கவி
வற்றை
சான்றுக
நற்றமிழ்ப்
Diffe), ෆජ්
அவரது ভাঞ্জািত Luc0ে
- சுந்தரம்
ISBN: 978-955-53856-O-2
 
 

எம்.எஸ். அபுல்ஹசன் அவர்கள் சிறந்த மிழ் மொழி ஆசிரியர். அவரிடம் தமிழ்மொழி
எனக்கும் உண்டு. ஆசிரியர், ஆசிரிய 5ர், அதிபர், உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவிகளை வகித்து நாற்பத்திரண்டு வருட கல்விப்பணியாற்றியவர். சிறந்த பரீட்சைப் களைப் பெற மாணவர்களையும், ஆசிரியர்
ஊக்குவித்து வெற்றிகள் பல கண்டவர். சேவையின் பொருட்டு பல பாராட்டுச் சாண் ளப் பெற்றதுடன் இலங்கை கல்வி நிருவாக பரீட்சையிலும் சித்தி பெற்றவர். அதுமட்டு மூகப் பணிகளில் அதீத ஈடுபாடு கொண் மன்றங்களிலும் சபைகளிலும் பல்வேறு வகித்து சேவையாற்றியவர். அக்கரைப்பற்று ம்ஆப்பள்ளிவாசலில் இருபத்தைந்து வருட ம்பிக்கைளாளர் சபை உறுப்பினராக இருந்
யத்துக்காக அயராது உழைப்பவர் மாணவர் ப இன ஐக்கியம் பற்றிய விழிப்புணர்வை தமுகமாக தேசிய ரீதியில் சர்வோதயா சிறுகதைப் போட்டியில் “ஏணிப்படி எனும் த் தொகுதிக்கு இரண்டாம் இடத்தையும், ாயிரம் ரூபா பனப்பரிசையும் பெற்றுக்கொண்
குைகள், மரபல்லாக் கவிதைகள் எண்று இயற்றி அவற்றை முத்துச்சரம் ஆகத்
ü。 ' ஒப்பிட்டு ஒரு
கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
uscrfluð, வாழ்நாளும் தொடரவேண்டும்
ந்து நிற்கின்றேன்.
தெட்சணாமூர்த்தி -
NSP (akp) & Effke.com