கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2014.01

Page 1
> 50 (
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத
தை
வெல ஸ்ரீ துர்க்காதே
தெல்லிப்படை
20

- ஒலி
2 )
த்துமாரி அம்மன் திருக்கோவில் ரியீடு வி தேவஸ்தானம் ழ, இலங்கை 214

Page 2
ஸ்ரீதுர்க்காதே கும்பாபிஷேக தின மண
1-12:2'!???)

வி தேவஸ்தான வாளக்கோலத்திருவிழா

Page 3
வெளியீடு : முநீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
விதல்லிப்பழை, இலங்கை,
e-mail: thurkaiammantemple(a)gmail.com Facebook: tellidurga(0gmail.com
நோயற்ற வாழ்வுக்கு சைவ
வலிமைமிக்க யானை, குதிரை போ நீண்ட காலம் வாழும் தகுதி பெற்றை அசைவ உணவை உணர்டு அதனால் அவதியுறாதீர். இவ்வாறு வேணடுத வைத்தியசாலை வைத்திய நிபுணர்த, ே சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி, தங்க எணர் பத்தொன்பதாவது அகவை கு அறக்கொடை விழாவில் சிறப்பு அதிதியா போது இவ் வேண்டுகோளை விடுத்தா மேன்மையை உடல், உள நலத்துட6 கருத்துக்கள் மிகவும் ஆழமானை நடைமுறைகளைப் பின்பற்றுபவர்கள்தின் மூன்று முறை வீதியைச் சுற்றி, வீழ்ந்து ெ உணருங்கள். உடல், உள ஆரோக்கி வாழ்வைவிட மேலானது எதுவுமில்லை. 2 அலையாது எம் மூதாதையர் கா நேசிப்பீர்களாயின் துன்பமில்லை என அ
இன்னும் எம் யாழ் குடாநாட்டில் எ உணர்பவர்கள் தொகை அதிகரித்துக் கெ சந்திகள், தெருக்கள் தோறும் கொத்துெ
 

ருள் ஒளி நாந்த சஞ்சிகை)
ஆசிரியர் ஆறு. திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் ரு. கா. சிவபாலன் அவர்கள்
தை மாத மலர் 2014
ug56 660. : QD / 74/NEWS/2006Y
போசனமே சிறந்தது
ான்ற மிருகங்கள்தாவர போசனிகள், வ. பகுத்தறிவுடைய மனிதர்களே! ஏற்படும் கொடுர நோய்களால் 5ல விடுத்தவர் யாழ். போதனா பரானந்தராஜா அவர்கள். அன்னை ம்மா அப்பாக்குட்டி அவர்களினர் றித்து நடைபெற்ற பிறந்தநாள் கக் கலந்துகொண்டு உரையாற்றும் ர். மேலும் சைவசமய வழிபாட்டின் னி தொடர்புபடுத்தி அவர் கூறிய வை. தேகப் பயிற்சிக்காக பல னம் கோவில்களுக்கு நடந்து சென்று பணங்கி எழுவதால் பெறும் பயனை பத்துக்கு வழிபாட்டு முறை தரும் உடல் பருத்து நோய் உபாதைகளால் ட்டிய வாழ்க்கை முறைகளை வர் தனதுரையைத் தொடர்ந்தார்.
ன்றுமில்லாதவாறு அசைவ உணவு ாணர்டு செல்வதை யாம் அறிவோம். றாட்டிக் கடைகள், அக்கடைகளில்

Page 4
மாடு, ஆடு, கடல் உணவுகளில் : இளைஞர் கூட்டம். இவை மட்டு கொணர்டாட்ட வைபவங்களில் அை பூமி, சிவபூமி என்றெல்லாம் போற்றப் உடம்பை வளர்க்கும் பணிபாடு வளர் அரச தனியார் காரியாலங்களிலு கொண்டாட்டம், ஒன்றுகூடல், பிரியால் குடிவகையும் சர்வசாதாரணமாகப் யாழ்ப்பாணத்தவரின் உயர்ந்த பணி பணிபாட்டை பல மேலைநாட்டவர்க போற்றிய செய்திகள் பல நூல்களில் பல அறிஞர்களின் பயணக் கட்டு சைவபோசனம், எச்சில் பாதிக்காதத பெருமைகள் பேசப்பட்டுள்ளது. எல்ல எண் செய்வோம். கொழுப்புநிறைந்த இளம் வயதில் போராடும் சூழை முன்வரவேண்டும். தீமை நிறைந்த : அமைப்பதற்கு வைத்திய நிபுணர்கள் வாய்ப்பேற்படுத்த வேண்டும்.
எம் இளைய தலைமுறையிட வற்றிப் போவதற்கு அவர்களின் உ என்பதை பெற்றோர் உணரவேணர் ஆங்கிலேயர் எம்மணிணை பல மூதாதையர், தம் சமயப் பணிப போன்றவற்றில் மிகக் கவனமாக அந்நியராட்சியில் பாதுகாத்து தம் த இன்று குறுகிய காலத்தில் நம் சமூ வேடிக்கை வாழ்வு வாழ்வது வே. இவ்விடயம் தொடர்பாக சமய, சமூ எடுக்கவேணர்டும்.
அருள் ஒளி

உருவாக்கிய உணவை உணர்பதற்கு மனர்றி பல வீடுகளில் பிறந்தநாள் சவ விருந்து தொடர்கிறது. புணர்ணிய ாட்ட இம்மணர்ணில் உயிரைக் கொன்று வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல ம் என்றுமில்லாதவாறு புதுவருடக் விடை,விருந்துபசாரம், அசைவ உணவும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பாட்டை, குறிப்பாக விருந்தோம்பல் ள் அயல்நாட்டவர்கள் விதந்துரைத்து காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக ரைகளில் வாழையிலைச் சாப்பாடு, ணர்னிர் குடிக்கும் மூக்குப் பேணிபற்றிய 0ாம் இன்று பழங்கதைகளாகிவிட்டன. அசைவ உணவை உணர்டு நோயோடு ல மாற்றி அமைக்க அனைவரும் உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றி ரின் வேண்டுதல்களை மக்கள் உணர
ம் கருணை, இரக்கம், அன்பு என்பன ணவுப் பழக்கமும் முக்கிய காரணம் டும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், நுாறு வருடம் ஆணர்டபோதும் எம் ாட்டு நெறிமுறை விருந்தோம் பல இருந்தனர். தம் தூய பணி பாட்டை லைமுறைகளுக்குக் கையளித்தனர். கம் அனைத்தையும் போட்டுடைத்து தனை தருகிறது. எனி செய்வோம். க நிறுவனங்கள் ஒன்றுபட்டு முயற்சி
ஆசிரியர்
2 - தை மாத மலர் - 2O4

Page 5
தைப்பூசம் என்
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலேயே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும்நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தின மாகும். அன்றயை தினம் குழந்தை களுக்குக் காது குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திரு விழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடு களில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பாற்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். வரலாறு
ol
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே
ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம்
அருள் ஒளி - 3 -

றால் என்ன?
தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.
எனவே தங்களுக்குத் தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெரு மானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்றுத் தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப் பொறிகள் 6 அழகான குழந்தை களாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருக னாவார். சிவபெருமானின் தேவி யான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றி ருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர் களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலை வாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக் கடவுள்.
தை மாத மலர் - 2014

Page 6
எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்தச் சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கு கின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு
தைப்பூசம் உகந்த நாள்.
ஸ்ரீ துர்க்காதேவி வருடாந்த இலட்சார்
அருள் ஒளி

முருகப்பெருமானின் ஆறுபடை வீடு களிலும் முருகனடியார்கள் பலர் பாத் யாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனைத் தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்குக் காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்குக் காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப்பிடித் துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வு பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று. காவடி நேர்த்தியைச் செலுத்துகிறார்கள்.
தேவஸ்தானத்தில் ச்சனை விழா - 2014
தை மாத மலர் - 2014

Page 7
அறிவுப்பணியாற்றி
முகாமைய
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத் தில் நிலவிய அந்நிய ஆதிக்கச் சூழலும், அதனை எதிர்த்துச் 8 சுதேசியத்தை நிலை நிறுத்த வேணுமெனும் முனைப்பும் நல்லூர் ஆறுமுகநாவலரைத் தொடர்ந்து பல தமிழ், சைவப் பணியாளர்களை நாடெங்கிலும்
தோற்றுவித்தன. நாவலரைப் பின்பற்றி அவர் முன்னெடுத்த பணிகளுள் ஒன்றையோ பலவற்றையோ தொடர்ந்து கொண்டு சென்ற அறிஞர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் கோப்பாய் மு. சுவாமிநாதன் தலையாய் ஒருவர். அதுவும் நாவலர் வழியில் சைவ வித்தியாசாலைகள் பலவற்றை ஸ்தாபிப்பதில் அவர் பெரிதும் முன்னின்று உழைத்து வந்தார். அவருடைய ஸ்தாபனங்கள் இன்று பெரும் கல்லூரி களாக வளர்ந்து தொடர்ந்தும் கல்விப்பணி யாற்றி வருகின்றன.
ஆறுமுகநாவலரால் கோப்பாயில் தொடங்கப்பெற்ற பாடசாலையில் ஆண்கள் மட்டமே கல்வி கற்று வந்தனர். இதனைக் கண்ணுற்ற மு.சுவாமிநாதன் சைவசமயச் சூழலில் பெண்களும் கல்வி கற்கவேண்டும் என்னும் விருப்பில் ஒரு பெண்கள் பாட சாலையைத் தமது சொந்தக் காணியில் அமைத்து நடாத்தி வரலானார். இப்பாட சாலை 1910ஆம் அண்டு விஜயதசமி அன்று சரஸ்வதி வித்தியசாலை என்ற பெயரில் கோப்பாய் வெல்லம்பிட்டிக் காணியில் தொடங்கப் பெற்றது. இத் தொடக்க விழா
அருள் ஒளி - 5
 
 

as 'b-
فقه وكنيه
ملاقاتی الKa قة قوية آآل\\6
\b Bí: قy لا
uly 6036,61Jrfuji
ாளர் மு. சுவாமிநாதன்
சேர்.பொன். இராமநாதன் தலைமையில் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் சரஸ்வதி வித்தியாசாலை இரு வழிகளில் ஈழத்துக் கல்வி வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது எனலாம். அ) ஆண்கள் கற்கப் பல பாடசாலைகள் இருந்த நிலையில் சைவ சமயப் பெண்கள் பயிலவெனத் தொடங்கப் பெற்றமையால் மகளிர் கல்வி வளர்ச்சிக்கு உதவியமை.
ஆ) பன்னவேலை வகுப்புக்களையும் நடாத்தியமையால் தொழிற்கல்வி வரலாற்றில் முதன்மை பெறுகின்றமை,
நாவலரின் ஆண்கள் பாடசாலையை நடாத்தமுடியாத நிலை ஏற்பட்டபோது, அதை தமது பெண்கள் பாடசாலையோடு இணைத்து, கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் முகாமையாளராக இருந்து, பாடசாலை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட பெரு மைக்குரியவர். இவரது பணியைப்
பாராட்டி, இவரால் அமைக்கப் பெற்று
கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்பெற்ற மண்டபங்களில் ஒன்றுக்கு, பின்பு இவர் நினைவாக சுவாமிநாதன் மண்டபம் எனப் பெயரிடப்பெற்றது.
மலேசியாவில் பாடசாலை ஒன்றைத் தொடக்கிநடாத்திப் பின் அதை அந்நாட்டு அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு வந்த மு.சுவாமிநாதன் இந்துக் கல்லூரிச் சபை உறுப்பினராகஇருந்து, காரைநகர்இந்துக்
தை மாத மலர் = 2O14

Page 8
கல்லூரியின் வளர்ச்சிக்குப்பெரும் பணி யாற்றியவர். உரும்பிராய் இந்துக் கல்லூரியின் இணை நிறுவுநர்.
அரசால் சமாதான நீதிவானாக நியமிக்கப்பட்ட கெளரவத்துக்குரிய இவர்,
பதிவாளர் சுவாமி
செந்தமிழும் சிவ நெறியும் மேலோங் கிய கோப்பாய் சைவ மரபு காத்த பண்பு டையாளர் வாழ்ந்த பெரும் சிறப்புடையது. அங்கு சைவ மரபு பேணி அறநெறிதவறாது தமிழ் வளர்த்த முருகேசு சுவாமிநாதன் அவர்களின் மூத்த புதல்வரே சுப் பிரமணியம். இவர் 17.08.1910இல் அவதரித்தவர். இவரது தந்தையாரால் இவ்வாண்டில் (விஜயதசமி) தாபிக்கப்பட்ட
சரஸ்வதி பெண் பாடசாலை இவரை நினைவு கொள்ள வைக்கும்.
கூட்டத்து நடுநாயகன். இவர் பல்லாண்டு காலம் வலிகாமம் வடக்கு, கிழக்கு பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளராகவும் சமாதான நீதவானாகவும் விளங்கி கிராம மக்களுக்கு ஓயாது உதவியவர். எல்லோராலும் றிஜிஸ்ரார் ஐயா என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
"கைப் பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்துக்கீய்ந்து மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு வந்து வைப்பென இரப்போர்க்கீய்ந்து" சைவ மரபு வழி வாழ்ந்தவர். இவர் செய்த
அருள் ஒளி
 

கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகளிலும், விவசாயச் சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர். இவர் 04.08.1883இல் அவதரித்து 12.11.1969இல் இறையடி சேர்ந்தார்.
நாதன் சுப்பிரமணியம் அவர்கள்
தெய்வத் திருப் பணிகளின் சிகரமாக விளங்குவது கோப்பாய் வெள்ளருவைப் பிள்ளையார் கோவில் தேர்த் திருப்பணி யாகும். ஆலயத்திற்கு தேர் இல்லாத குறையை உணர்ந்து தேர்த் திருப்பணிச் சபையின் தலைவராகவும் இருந்து அழகிய சித்திரத் தேரை அமைப்பித்தவர்.
சமய நூல்களைத் தேடியெடுத்து தாம் வாசிப்பதோடு மற்றவர்களுக்கும் வாசிக்கக்
விளங்கியவர். சைவசமய நூல்கள் பல வற்றைப் பதிப்பித்து இலவசமாக வழங்கி யவர். இவ்வகையில் நமச்சிவாயமாலை முக்கிய நூலாகும்.
மேலும் பல யோகிகள், மகான்களோடு
போது உணவிடும் பெரும் வாய்ப்புப் பெற்றவர். இவ்வகையில் யோகள் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் முதலியோரின் அருட்கடாட்சம் பெற்றவர்.
சிறந்த சமூக சேவையாளராகவும், நல்ல கூட்டுறவாளராகவும் விளங்கிய இவர் தனது தந்தையின் சைவப் பணிகளுக்கும் துணை நின்றவர். இவர் தனது எண்பத்தாறாவது வயதில் (14.04.1996) இறையடி சேர்ந்தார்.
5 - தை மாத மலர் - 2O4

Page 9
முநீ அபிராமிப்ப
இந்தியாவிலே பொன்னி நன்னதி பொய்யாது பாயும் சோழ நாட்டிலே திருக் கடவுர் என்ற பதியிலே அன்னை அபிராமி அம்மனுக்கு ஓர் ஆலயம் இருக்கிறது.
ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் சரபோஜி மன்னர் ஆட்சி புரிந்த காலம். திருக்கடவூரிலே அந்தணர் மரபில் தோன்றிய "சுப்பிரமணியர்” என்னும் பெயருடைய பக்தர் இசைக் கலையிலே வல்லவராய் விளங்கினார். இவர் அரசவையிலே பஞ் சாங்க கணிப்புக்களைச் செய்வதில் பணி புரியும் ஒருவர். இவ்வடியார் அபிராமியை ஒளி வடிவமாகக் கண்டு பேரின்பத்தில் ஆழ்ந்து விடுவார். அவருடைய ஆழ்ந்த பக்தி நிலையை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் பித்தர் போல உலகப் பற்று அற்றவராய் விளங்கினார்.
அன்று அமாவாசை தினம். சரபோஜி மன்னர் திருக்கடவுர் அம்மனுடைய ஆலயத்துக்குள் வந்தார். சுப்பிரமணியர் அச் சந்நிதியில் தியான நிலையில் உலக நினைவே இன்றி அமர்ந்திருந்தார். அவருடைய முகத்தில் புத்தொளி வீசியது. மன்னர் "இவர் யார்? என அங்கிருந்த வர்களைக் கேட்டார்.
அரசவையிலே பணிபுரிபவர், இவர் ஒரு பித்தர் போன்றே நடந்து கொள்கிறார்” என்று அங்கிருந்தோர் கூறினார்கள்.
மன்னர் பட்டரின் பக்கத்தில் நின்று "இன்றைக்கு என்ன திதி" என்று கேட்டார். அம்மையை ஒளிவடிவமாகக் கண்ட பட்டர் "பெளர்ணமி என்று கூறினார்.
அருள் ஒளி - 7

ட்டரைப் பற்றி.
அரசன் இவர் பித்தர். மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணினார். மன்னர் அரண்மனைக்குத் திரும்பியபின் சுயநினைவு வந்த பட்டர் நடந்த சம்பவத்தை எண்ணி அழுதார்.
ஆலயத்திலே அக்கினிக் கிடங்கு அமைத்தார். நூறு இழைகளில் உறி அமைத் தார். அதில் அமர்ந்தார். அம்பிகையை நோக்கி "உதிக்கின்ற செங்கதிர்” என்று ஆரம்பித்துப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலாகப் பாடினார். ஒவ்வொரு பாடல் முடிவிலும் உறியின் ஒவ்வொரு இழை அறுக்கப்பட்டது.
சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டது. எழுபத்தொன்பதாவது பாடல் முடிந்துவிட்ட நேரம் அபிராமியின் காட்சி அன்னை தனது காதணியை வீசிப் பூரணைச் சந்திரனாய் வானத்தில் காட்சி அளித்தாள்.
அரசனும் அங்கிருந்தவர்களும் வியக்க வானத்தில் ஒளி தெரிந்தது. சுப்பிரமணியர் "அபிராமிப்பட்டர்" என்று அழைக்கப்பட்டார். பட்டர் நூறு பாடல்களையும் பாடினார். அபிராமி அந்தாதி அன்னை அபிராமியின் அருளால் பாடப்பெற்றது.
பக்தருக்குத் துன்பம் வராமற் காத்து அருள்பாலிக்கும் அன்னை அபிராம வல்லியின் பெருந்தகைமை போற்றப்பட வேண்டும். இவ்வந்தாதியை இடைவிடாமல் ஓதி உணர்பவர்கள் இம்மையில் அனைத்து நலன்களும் பெறுவர். மறுமையில் முத்தி பெற்று இன்புறுவீர்!
தை மாத மலர் - 2014

Page 10
உன்வயிற்றைப் புதைகு
நெஞ்சுயர்த்தி நாம்இந்து என்
நீண்டபெரும் சரித்திர நெஞ்சத்தில் துளியளவும் கரு
நிலம்விளையும் அத்த மஞ்சத்தில் படுத்தபடி கனவு க
மற்றவர்கள் படுந்துயன பஞ்சைகளாய் வாழும் கூட்டம்
பாதத்தைக் கைதொட்
சமயங்கள் அறநெறியைக் காட்ட
சத்தியத்தின் வழியினி சமயத்தின் பெருமைகளை மே
- சலிக்காமல் வாய்கிழிய அமைதியான வாழ்வுக்கு அரம்
அருந்துணையாய் இரு சுமையதனைத் தாளாத மக்கள்
துயர்துடைக்க மனமில்
மன்னுயிரைத் தன்னுயிர்போல்
மறையோரின் அறிவுரை தன்னுடலை வளர்ப்பதற்குப் பி
கொன்று பெரும் பாவத் இன்னுந்தான் இங்கிருக்கும் அ
இழிவான பன்றியினை தின்பதுடன் மலமுண்ணும் கே
தசையினையும் அமுத
கண்ணாடிப் பெட்டியிலே கவர்.
கணக்கின்றி கச்சிதமா எண்ணற்ற உடல்களையும் வி
எம்மகவு இறைச்சியினை மண்பிறந்தார் மன்னவராய் இற
- மண்தோண்டிப் புதைப்பு உண்பதற்காய் கொன்றவுடல் 1
உன்வயிற்றைப் புதைகு.
அருள் ஒளி
- 8

ழியாய்ஆக்கலாமோ? கலாபூஷணம் கே. வெள்ளைச்சாமி
னு சொல்வார் த்தான் உண்டு என்பார்
ணை இன்றி னையும் தமக்கே என்பார் காண்பார் -
மர சிறிதும் எண்ணார் - நாளும்
டு வணங்கும்காட்சி!
ட்டி நிற்க லே சென்றி டாது -டை தோறும் கப் பேசி நிற்பார் னே என்றும் ந்திடுவான் அறிவீர் என்பார் ர் கூட்டத்
லாச் சிறுமை யாளர்
மதிக்கச் சொன்ன ரயை மண்ணில் போட்டு றிதோர் உயிரை த்தைத் தேடிக்கொள்வார் பூட்டை மாட்டை
முயலை மானை காழிச் சேவல்
மென உண்ணுகின்றார்
ச்சி யாக ப் அடுக்கப் பட்ட நம்பி யுண்போர் -ன உண்ப துண்டோ? மந்திட் டாலும் பதுவே வழக்க மாகும் பிணம்பு தைக்க
ழியாய் ஆக்க லாமோ?
நன்றி - சைவநீதி
தை மாத மலர் - 2014

Page 11
நமசிவாய மந்திரத்தி
நமசிவாய மந்திரத்தின் மகிமை6 இயமனிதனையும் வென் எமதிடர்கள் தீர்க்கவல்ல இனிய
எழில்நமசி வாயவாழ்க 6
கடகவனம் தன்னிலுறை குச்சக மருத்துவதி அம்மையுமே உடனொரு மகவினையே வேணி
உத்தமனாம் மார்கணர்டே
ஆயுள்பதி னாறுடைய அன்புடை அரனடி பணிந்தவரும் ே தாயுள்ளம் படுகின்ற வேதனைக
தாழ்சடையோன் அடிபை
திருக்கடவூர் உறையுமீசன் அமி திருவடியை அடைந்தடை அருமருந்தாம் மந்திரத்தை ஓதிே ஐயனடி பணிந்து நின்ற (
காலமது தனைக்கணித்தே வந்த கடிதினிலே உயிர்கவரும் ஆலமெனும்பாசமதை வீசியெறி ஆலமுணர்ட பெருமானை
எருமையிலே வந்தகாலன் தன்ெ எந்தைலிங்கம் தனைப்பி உருத்திரனாய் உற்றகோபக் கன உதைத்ததிறம் பாடும்நம.
அருள் ஒளி -9

ன் மகிமை பாடுவோம்
சு. குகதேவன், தெல்லிப்பழை,
யைப் பாடு றபக்திக் கீதத்தைப் பாடு
மந்திரம்
ான்று பாடுவீர்
ரோடும் ) இல்லறம் பேணி டியே பெற்ற
உயர் புகழினைப் பாடு
மந்தனை வணர்டியே பெற்ற
5ணர்டே
னரிந்த திறத்தினைப்பாடு
ர்தகடேஸ்வரர் மந்தன் நமசிவாயநல் யோதியே
பெருமையைப் பாடும்
தகாலனும்
எணர்ணத்தினாலே
ந்திட
ாயும் கட்டியணைத்ததே.
சயல்கணர்டும்
ளந்து எழுந்தசிவனுமே லினைவீசி
சி வாயவாழ்கவே
தை மாத மலர் - 2O4

Page 12
என்றும்பதி னாறுடையாண் மார்
எந்தைசிவன் காத்ததிற
நன்றுநன்று என்றுவப்பர் கல்லி
கரைகாணச் செய்தநல்
இன்னும்ஞானக் குழந்தைகல்லு
இனிதுமுத்தி காணவிரு
என்றுமெங்கள் இடர்களைந்து
எழில்நமசி வாயவாழ்க 6
சுத்தசைவ சீலராகி தூய்மை டே
சுந்தரனாம் எந்தைசிவன
நித்தம் நித்தம் பாடிடுவீர் நமசிலி
சித்தம் குளிர்ந்துருகச் ே
கருரியனை வை
ஆயிரம் கரங்கள் நீட் அணைக்கின்றதாயே அருள் பொங்கும்முக இருள்நீக்கித் தந்தாய தாயினும் பரிந்து சால
தனயனை அணைப்ப
தழைத்தோங்கும் உயி துணைக் கரம் கொடு தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே ே தூரத்தே நெருப்பை ை சாரத்தைத் தணிப்பாய ஞாயிறே நலமே வாழ் நாயகன் வடிவே போற நானிலம் உளநாள் மட போற்றுவோம் போற்றி
அருள் ஒளி
- 10

க்கணர்டேயனை
ம் சொல்லும் மந்திரம் ல் மிதந்துமே ல அன்புமந்திரம்
ார்ப் பெருமணத்திலே ம்பிச் சொன்ன மந்திரம் அருளும் மந்திரம் என்று பாடுவீர்
JGយោfiGLI
ர் அருளைவேண்டியே
பாயவே
செய்திடுவீரே!
ணங்குவோம்
போற்றி த்தைக் காட்டி ப் போற்றி
த்
ாய் போற்றி
ர்கட்கெல்லாம்
ப்பாய் போற்றி
த் பாற்றி
வைத்து ப் போற்றி
ற்றி
ட்டும்
போற்றி
தை மாத மலர் = 2O4

Page 13
சிவத்தமிழ்ச்செல்வி அ
ॐ
ன்னையின் பிற
鄒
義 பேராசிரியர் செ. கிருவி வைத்திய கலாநிதி க. மாணிக்கம்
சங்கீதபூஷணம் திரு.சு. கணபதிப்பிள்
அருள் ஒளி - 11
 
 
 

ழ்ணராஜா அவர்கள் அவர்கட்கு விருது வழங்குகிறார்.
ாமசுந்தரம் அவர்கள் ளை அவர்கட்கு விருது வழங்குகிறார்
தை மாத மலர் - 2O4

Page 14
வைத்திய நிபுணர் த. மே திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை
கலாநிதி குமாரசாமி 36 திரு. நா. தவமணிநாயகம் அவ
கலாநிதி குமாரசாமி சே திரு. நா. நல்லதம்பி அவர்க
அருள் ஒளி - 12
 
 
 

ரானந்தராஜா அவர்கள்
அவர்கட்கு விருது வழங்குகிறார்.
சாமசுந்தரம் அவர்கள் வர்கட்கு விருது வழங்குகிறார்.
5 ܨܘܝܬܐ ܕ݁܇x Fாமசுந்தரம் அவர்கள் 5ட்கு விருது வழங்குகிறார்.
m. தை மாத மலர் - 2014

Page 15
யாழ். போதனா வைத்தியசாலை
அறக்கொடை வ வழங்குபவர் : தேசகீர்த்தி ச.ஆறுமுகந பெறுபவர்
: வைத்திய நிபுணர் த. பேரா
சிவத்தமிழ்ச்செல்வி கல்வி அ வழங்குபவர் : திரு. அ. சண்முகநாதன் அவ பெறுபவர் : திரு. செல்லத்துரை உதயகுமா
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக் வழங்குபவர் : :செல்வி. கனகம்மா அப்பாக் பெறுபவர்
:வைத்திய கலாநிதி உமாசா
அருள் ஒளி

இரத்த சுத்திகரிப்பு பிரிவுக்கான ழங்கப்படுகிறது. எதன் அவர்கள் (உபதலைவர்)
னந்தராஜா அவர்கள் (யாழ். போதனா வைத்தியசாலை)
றக்கொடை வழங்கப்படுகிறது. ர்கள் ( பொருளாளர் )
ர் அவர்கள் (கல்விப் பணிப்பாளர், யாழ். கல்வி வலயம்)
கோன அறக்கொடை வழங்கப்படுகிறது. ககுட்டி அவர்கள் ங்கர் அவர்கள் (அத்தியட்சகர் )
B - - -
தை மாத மலர் - 2014

Page 16
பிரார்த்திக்
நீதியரசர் அமரர் சுந்த அவர்
எங்கள் தேவஸ்தான பற்றுக்கொண்ட பெருமகள் மகளிர் இல்ல விழாவின் சிறப்பித்த பனர்பாளனர், கொண்ட உத்தமரினர் பி வேதனையடைகிறோம்.
சாந்திபெற துர்க்காதேவி
முநீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
அருள் ஒளி - 14
 

தரம் முறிநீஸ்கந்தராஜா கள்
த்தினர் மீது மிகுந்த ர், எங்கள் துர்க்காபுரம் ல் பிரதம அதிதியாகச் சமய சமூக ஆர்வம் ரிவு குறித்து மிகுந்த
அர்ைனாரின் ஆத்மா யைப் பிராத்திக்கிறோம்.
நிர்வாக சபை
- தை மாத மலர் = 2O4

Page 17
காசி யாத்திரை ெ
கே
பிதிரர் வழிபாடு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள். பல ஆயிரம் வருடங்களாக நமது பரம்பரை களில் சந்ததியினர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
நமக்கு முன்பாக நமது பரம்பரைகளில் எவ்வளவோ பேர் மரணம் அடைந்தார்கள். அவர்கள் பரலோகம் சென்றார்கள். அவர்களை நாம் பிதிரர்கள் என்று அழைக்கிறோம். (பித்ருக்கள் என்றும் குறிப்பிடலாம்).
பித்ருலோகம் என்று தனியாக ஓர் உலகம் இருக்கிறது. பித்ரு லோகத்திற்குத் தலைவர் யமன். பித்ருபதி என்றே யமனுக்குப் பெயர். இவ்வாறு வேதம் தெரிவிக்கிறது.
புண் ணியம் செய்தவர்கள் இறந்த வுடன் பித்ருலோகம் போவார்கள். பாவம் செய்தவர்கள் நரகலோகத்திற்குச் செல் வார்கள். பாவம் செய்பவர்கள் நரகம் சென்று துன்பப்படுவார்கள் என்று பண்டைய தமிழ் நூல்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளன.
நரகம்
திருவள்ளுவர் இயற்றிய திருக் குறளைப் புகழ்ந்து பேசாத தமிழர் இல்லை. அது ஒப்பற்ற உலகப் பொதுமறை என்று பெருமையுடன் கூறுகிறார்கள். திருக்குறள் நரகம் பற்றி எச்சரிக்கிறது.
அருள் ஒளி - 1

சய்வது எவ்வாறு?
35606) DITD600f . சி. லட்சுமிநாராயணன் அவர்கள்
"ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான் புக்கு அழுத்தும் அன்று” என்று திருக்குறளில் ஒரு பாட்டு கூறுகிறது. ஏழு வகைப் பிறப்புகளிலும் நரகத்தில் சென்று அழுந்துதற்குக் காரணமான தீய செயல்களை - பாவ காரியங்களை - அறிவு இல்லாதவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன் ஆவான் என்று இந்தப் பாட்டுக்கு அர்த்தம்.
நரகம் பற்றியும், பாவங்கள் செய்தால் நரகத்தில் உழலநேரிடும் என்பது குறித்தும் "நாலடியார்” என்ற சீரிய நூலும் பல பாடல்களில் குறிப்பிடுகிறது.
மாற்றிான் மனைவியை விரும்புவன் நரகத்திற்குச் செல் வான் என்பது நாலடியார் தரும் ஓர் எச்சரிக்கை.
பண்டைய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறும் நரகம் பற்றிப் பேசுகிறது. ஐம்பெரும் காப்பியங்களில் தலைசிறந்து விளங்குவது சிலப்பதிகாரம். புண்ணியம் செய்தால் நல்லன விளையும் என்றும், பாவம் புரிந்தால் தீயவை உண்டாகும்என்றும் சிலப்பதிகாரம் திரும்பத் திரும்பக் கூறுகிறது. நரக வாழ்க்கை உள்ளத்தை நடுங்க வைக்கும் துன்பத்தைத் தரும் என்றும் சிலம்பு எச்சரிக்கிறது.
பிரார்த்தனை
பாவம் செய்து இறக்கின்ற பிதிரர்கள்
நரகலோகத்திற்குச் சென்று கஷ்டங்களை
அனுபவிப் பார்கள். அவர்களில் சிலர்
5 - தை மாத மலர் = 2O4

Page 18
சரீரம் முழுமையாக இல்லாமல் முண்டங் களாகவும் கிடப்பார்கள். பாப பலனை அனுபவித்துவிட்டு, அவர்கள் மீண்டும் இந்த உலகில் உயிரினங்களாகப் பிறப் பார்கள். மீண்டும் இங்கே உழலுவார்கள். “புனரபி ஜனனம், புனரபி மரணம்” என்பதாக இது தொடரும் பாவங்களின் பலனை முற்றிலும் அனுபவித்த பிறகு அவர்கள் சூரிய தேவனால் சுத்தம் அடைவார்கள். பின்னர், அவர்களும் பித்ருலோகம் செல்வார்கள்.
ஒருவர் இறந்ததும், அவரது மகன் அவரது உடலுக்குத் தீ வைக்கிறான். அப்போது அவன் ஒரு மந்திரத்தைப் பக்தியுடன் சொல்ல வேண்டும். "நீ பித்ருலோகத்தை அடைந்து அங்கு உனக்கு விருப்பமான இடத்தில் இருப்பாயாக; சூரிய தேவன் உனக்கு உதவட்டும்” என்பது அந்த மந்திரத்தின் அர்த்தம்.
மகனின் இந்தப் பிரார்த்தனை தாயார் அல்லது தகப்பனார் பித்ருலோகம் செல்ல நிச்சயமாக உதவக்கூடும்.
சிராத்தம்
பித்ருலோகத்தில் வாழ்கின்ற பிதிரர்கள் தேவர்களுக்குச் சமம் ஆனவர்கள்.
ஆகவே, அவர்களது சந்ததியினர் அவர்களை வழிபட வேண்டும். வழி பட்டால் அவர்கள் அனுக்கிரகம் செய்வார்கள். தேவர்களுக்குச் செய்வதைப் போல பிதிரர்களுக்கும் யக்ஞங்கள் செய்ய வேண்டும் என்று வேதம் கட்டளையிடுகிறது.
அமாவாசை திதி தினத்தன்று தர்ப்பணம் செய்வதும் இறந்துபோன தினத்தன்று சிராத்தம்
அருள் ஒளி
- 16

செய்வதும் மிகவும் அவசியம். மாதப்பிறப்பு, கிரகண புண்ணிய காலம் போன்ற காலங்களிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சிராத்தம் என்ற சொல்லைச் சிலர் திவசம் என்று கூறுகிறார்கள். அது தவறு. சிரத்தையோடு செய்யப்பட வேண்டியது சிராத்தம். சிராத்தம் செய்யாமல் விட்டுவிடுவது பிதிரர்களுக்குச்செய்யும் துரோகம். அது மகாபாவம். திருமணம் போன்ற சுப காரியங்களின் போதும் பிதிரர்களை வழிபடவேண்டும். நாந்தி சிராத்தம் என்று அந்த வழிபாட்டுச் சடங்கைக் குறிப்பிடுவார்கள்.
- பிதிரர்களுக்கு - மறைந்த மூதாதை யருக்கு நாந்தி சிராத்தம் செய்த பிறகுதான் தேவ காரியத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தேவர்களைவிட முக்கியமானவர்கள் பிதிரர்கள்.
தலைமுறைகள்
பிதிரர்கள் எல்லோரும் முக்கிய மானவர்கள் எனினும், அவர்களில் பித்ரு (தந்தை), பிதாமகன் (பாட்டனார்), பிர பிதாமகன் (பாட்டனின் தந்தை) ஆகிய
வர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
மாதா (தாயார்), பிதாமஹி (தந்தை வழிப்பாட்டி) பிரபிதாமஹி (பாட்டனின் தந்தையின் மனைவி) ஆகியவர்களும்மிக முக்கியமானவர்கள். இவர்கள் தந்தை வழி மூதாதையர்கள்.
தாய் வழியில் மூன்று தலைமுறை யினரும் இவ் வாறே மிக முக்கிய மானவர்கள்.
D -
தை மாத மலர் - 2014

Page 19
ஒரு பரம்பரையில் உறவினர்களாக ஏராளமான பிதிரர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லோரையும் கூட வழிபட வேண்டும்.
"தென்புலத்தார், தெய்வம், விருந் தொக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை” என்பது திருக்குறள்.
பிதிரர்கள், தேவர்கள், புதிதாக விருந்தாளிகளாக வருபவர்கள், உறவினர், தான் என்னும்ஐந்து வகையினரையும் காப்பது இல்லறத்தானின் தலைசிறந்த கடமை ஆகும் என்று திருக்குறள் கூறுகிறது.
பிதிரர்கள் நித்தியமானவர்கள். அவர்கள் பித்ருலோகத்தில் உள்ளனர். அவர்களுடன் அவர்களது சந்ததியினர் தொடர்புகொள்ள முடியும்.
பிதிரர்களை வழிபடுவதற்கு உல கத்திலேயே மிகவும் சிறந்தது காசி என்ற
ஒப்பற்ற தலம்.
சொன்னாலும் புண்ணியம் பிதிரர்கள் என்று விளங்கும் தந்தை வழி, தாய் வழி முன்னோருக்கு உரிய வழிபாட்டுக் காரியங்களைச் செய்வதற்கு உலகத்திலேயே மிகவும் சிறந்த பூமி காசி என்று ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.
சிவபெருமான் அருளிய ஓர் உபதேசம் காசி நகரின் இந்த ஈடு இணையில்லாத சிறப்புக்குப் பிரமாணமாக விளங்குகிறது.
- ஆண்டவன் ஒரு மகா வாக்கியத்தை உபதேசித்திருக்கிறார். “காசியில் மரணம் அடைகின்ற ஒருவரது ஜீவன் பரமாத்ம
அருள் ஒளி

ஸ்வரூபத்தில் ஐக்கியமாகி விடுகிறது. அந்த ஜீவனுக்கு மறு பிறப்புக் கிடையாது” என்பதே அந்த மகா வாக்கியம்.
காசியில் இறக்கின்ற ஒருவரது உடல் இறைமைத்தன்மை பெற்று விடுகிறது. அதாவது சவம் சிவமாகிவிடுகிறது.
காசி நகரின் ஒப்பற்ற மகிமை இது. அங்கு பிணங்கள் தெய்வங்களாகி விடுகின்றன.
எனவே தான், காசியில் ஒரு பிணத்தைக் கண்டால் அதை நமஸ் கரிப்பது வழக்கம். இந்த வழக்கம் இன்று, நேற்று அல்ல, பல நூறு ஆண்டுகளாக இந்த வழக்கம் உள்ளது.
இப்போது கூட காசிக்குச் செல்பவர்கள் அங்கு தற்செயலாகப் பிணங்களைக் காண நேர்ந்தால், அவற்றை இறைவனின் வடிவங்களாகக் கருதி கும்பிடுகிறார்கள்.
காசியைக் கரையாக அமைத்துக் கொண்டு கங்கை நதி ஓடுகிறது. அதில் பிணங்களைப் போட்டு விடுவார்கள். பிணங்கள் நதியில் மிதந்து செல்லும். இது வழக்கமாகக் காணக்கூடிய ஒரு காட்சி. இவ்வாறு மிதக்கின்ற உடல்களை வணங்கி னால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.
“காசி மரண மோட்ச விசாரம்” என்ற அரிய நூல் சவம் சிவமாகும் செய்தியைத் தருகிறது.
யோகி ஸம்வர்த்தகர்
மருத்தன் என்ற பெயரில் ஒரு மன்னன் வாழ்ந்தான். ஸ்ம்வர்த்தர் என்ற
7 -
தை மாத மலர் - 2014

Page 20
மகா யோகியைத் தரிசனம் செய்து அருள் பெறவேண்டும் என்று அந்த மன்னன் விரும்பினான்.
அவன் நாரத முனிவரைச் சந்தித்து, ஸம்வர்த்தரைத் தரிசனம் செய்ய மார்க்கம் என்ன என்று கேட்டான். "ஸம் வர்த்தர் யோகிகளில் தலைசிறந்தர். அவர் உடலில் ஆடை எதுவும் அணியாமல் திகம்பரராகத் திரிந்து கொண்டிருப்பார். அவரை நீ தரிசனம் செய்ய ஒரு வழி உள்ளது" என்று நாரதர் சொன்னார்.
"நீ காசி நகர எல்லைக்குள் ஒரு பிணத்தை உனக்கு அருகில் வைத்துக் கொண்டு தயாராகக் காத்திரு. LOTT60D GUD நேரத்தில் ஸம்வர்த்தர் ருநீவிசுவேசுவரர் தரிசனத்திற்காக வருவார். வருகின்ற வழியில் நீ வைத்திருக்கும் பிணத்தை அவர் கண்டால், ருநீ விசுவேசுவர தரிசனம் ஆகிவிட்டது என்று நிறைவு கொண்டு திரும்பிப் போய் விடுவார். அவ்வாறு யார் செய்கிறாரோ, அவர்தான் மகா யோகியான ஸம்வர்த்தர் என்று நீ அறிந்து கொள்ளலாம்" என்று நாரதர் கூறினார்.
மன்னன் மருத்தன் மகிழ்ச்சி அடைந்தான். நாரத முனிவர் கூறிய யோசனைப்படியே ஸம்வர்த்தர் வரும் பாதையில் ஒரு பிணத்துடன் காத்துக் கொண்டிருந்தான். ஸம்வர்த்தர் வந்தார். பிணத்தை வணங்கினார். உடனே அவர்தான் ஸம்வர்த்தர் என்று மன்னன் தெரிந்து கொண்டான்.
ஸம்வர்த்தருடைய பெரும் உதவியுடன் ஒரு மகா யாகத்தை மன்னன் மருத்தன் செய்தான். அதன் பயனாக அந்த மன்னன் சரீரத்துடன் சுவர்க்க லோகத்துக்குச் சென்றான்.
அருள் ஒளி - 1

மகா பாரதத்தில் மன்னன் மருத்தனின் இந்த வரலாறு கூறப்பட்டிருக்கிறது. மகாயோகியான ஸம்வர்த்தர் காசியில் கண்ட பிணத்தை ஆண்டவனாகவே கருதி வழிபட்டார் என்பதை இந்த வரலாறு தெரிவிக்கிறது.
மயான பூமி
காசி நகரம் ஒரு மாபெரும் சுடுகாடு.
பிரளய காலத்தில் எல்லா உயிரினங் களும் அழிந்து விடும். அந்தக் காலத்தில் எல்லா உயிரினங்களும் பிணங்கள் ஆகின்றன. அவை காசியில் குவிந்து தங்குகின்றன. ஆகவே தான் காசி ஒரு மகா ஸ்மசானம் (மாபெரும் மயானம்) என்று விளங்குகிறது.
தர்ப்பணம், சிராத்தம் ஆகிய காரி யங்களின் போது, பிதிரர்களை முதலில் ஆவாஹனம் செய்வார்கள்; அதாவது தர்ப்பையில் அவர்களை எழுந்தருளச் செய்வார்கள்.
காசியில் தர்ப்பணம் அல்லது சிராத்தம் செய்தால் இவ்வாறு ஆவாஹனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் தெரியுமா? அங்கு பிதிரர்கள் நிலையாக இருக்கிறார்கள். அவர்களை அழைக்க வேண்டாம். அவர்கள் அங்கேயே உள்ளனர்.
காசி நகரில் மட்டும்தான் பிதிரர்கள் (முன்னோர்) ஸ்திரமாக இருக்கிறார்கள்.
காசி நகருக்கு மற்றொரு பெரும் மகிமை உண்டு. பஞ்சமகா பாவங்கள் என்று சொல்கிறோம் அல்லவா? இவை காசி நகருக்குள் நுழைவது இல்லை. ஆகவே பஞ்ச மகா பாவங்கள் செய்த
8 - தை மாத மலர் = 2O4

Page 21
வர்களும், காசிக்குச் சென்றால் அந்தப் பாவங்கள் அவர்களைவிட்டு ஓடிவிடும்.
பாவங்கள் தொலையவேண்டும் என்று விரும்புவர்களுக்குக் காசியைவிட வேறு கதி இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
கலி காலத்தில்
“ஸ்கந்த புராணம்” காசியின் மகிமையை விரிவாகவே கூறுகிறது.
காசி என்ற திருத்தலம் மூவுலகங் களிலும் மிகவும் சிறந்த புண்ணிய பூமி என்றும், காசியில் பாவங்கள் நெருங்காது என்றும் ஸ்கந்த புராணம் உறுதி கூறுகிறது.
காசி நகரில் 28 கோடி சிவலிங்கங்கள் பிரகாசிக்கின்றன என்றும் அது குறிப்பிடு கிறது.
கலி காலத்தில் பாவங்கள் மிகுந்து விட்டன. எல்லாத் துறைகளிலும் அக்கிர மங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தக் கலி காலத்தில் மக்களுக்குப் புகலிடம் காசிநகரமே என்று “பிரம்ம வைவர்த்த புராணம்” தெரிவிக்கிறது.
கலி காலத்தில் அருள் புரிபவர் விசுவேசுவரர், வாராணஸி என்ற காசியே புண்ணிய பூமி, கங்கையே உன்னதமான நதி, காசியில் முன்னோரை வழிபடுவதும் தானங்கள் அளிப்பதும்தான் உத்தமமான தர்மம். இவ்வாறு “பிரம்ம வைவர்த்த புராணம்” குறிப்பிடுகிறது.
காசியில் சகல தேவதைகளும், எல்லாப் புனித தீர்த்தங்களும் இருக்கின்றன என்றும், தீர்த்தங்களையும், தேவதைகளையும்
அருள் ஒளி

வழிபடுவதற்கு காசிக்கு வெளியே போகவேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்தப் புராணம் சுட்டிக் காட்டுகிறது.
மண்ணுக்கும் மகிமை
காசியின் மகிமையை “காசி கண்டம்” கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.
காசியில் மரணம் ஏற்படுவது மிகவும் மேலானது. காசியில் மரணம் அடைந்த வுடன் ஒரே ஜன்மத்தில் மோட்சம் அடைவது நிச்சயம்.
காசியில் இறப்பவர்களைத் தூஷிப்பது கூடத் தவறு. அது பாவம் என்றே கருதப்படும். காசியில் உயிர் துறப்பவர்களைப் பாராட்டு பவர்களும் புண்ணியம் அடைவார்கள். பின்னர் மோட்சத்தையும் பெறுவார்கள்.
காசி திருத்தலத்தின் மண்ணில் உள்ள துகள்கள் காற்றில் பறந்து ஒருவரது தலை மீது தற்செயலாக விழுந்தால்கூட அவர் பெரும்பயன் அடைவார். அவரது தலை சந்திரகலையுடன் கூடியதாக ஆகிவிடும். அதாவது சிவபெருமானின் அம்சம் கிடைத்துவிடும்.
சிவபெருமான் ஒரு நிமிடம் கூடக் காசியிலிருந்து விலகுவது இல்லை. எனவே இந்தத் தலத்திற்கு "அவிமுக்தம்” என்று பெயர் வழங்குகிறது.
சொன்னாலும் புண்ணியம்
கங்காநதி தீரத்தில் திகழும் காசி எல்லா மக்களுக்கும், பரமசிவத்திற்கும் ஆனந்தம் கொடுக்கிறது. எனவே சிவ பெருமான் இதற்கு “ஆனந்தவனம்” என்று பெயர் தந்து அருளினார்.
19 -
தை மாத மலர் - 2014

Page 22
காசியின் தென் பாகத்தில் அஸி என்ற நதியும், வடபாகத்தில் வரணா என்ற நதியும் எல்லைபோல் அமைந்து, கங்கை நதியில் சங்கமம் ஆகின்றன. எனவே இந்தத் திருத்தலத்திற்கு வாராணஸி என்ற பெயர் வழங்குகிறது.
காசி என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பலமுறை பக்தியுடன் உச்சரித் தாலும் பெரும் புண்ணியம் ஏற்படும். பாவங்கள் அழியும் நரகத்தில் உழல வேண்டிய நிலை வராது. இவ்வாறு “காசி கண்டம்” பல அரிய செய்திகளைத்
தெரிவிக்கிறது.
தங்கினால் புண்ணியம்
காசியில் நியமம் தவறாது, மூன்று தினங்கள் ஒருவர் தங்கியிருந்தால், அசுவமேத யாகம், ராஜஸுய யாகம் ஆகியவற்றைச் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தை அவர் அடைவார் என்று
ஸ்கந்த புராணம் உறுதி தருகிறது.
வேதத்தில் மிகவும் பிரசித்தமானது, அசுவமேத யாகம். இந்த யாகத்தைச் செய்பவன் சாம்ராஜ்யத்தை அடைவான். தசரதன், ஸ்ரீராமர், யுதிஷ்டிரர் முதலி யவர்கள் அசுவமேத யாகம் செய்தார்கள் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. இது சுமார் ஒரு வருடம் செய்யவேண்டிய யாகம்.
இராஜஸுய யாகம் இருபத்தி மூன்று ஸ்ரௌத யாகங்களில் ஒன்று. இதுவும் மிகவும் சிறப்பானது. பேரரசர்கள் மட்டுமே
இராஜஸுய யாகம் செய்ய முடியும்.
- தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இராஜஸுய யாகம் செய்த
அருள் ஒளி
-21

மாமன்னர்கள் இருந்தார்கள். சோழ மா மன்னர்களில் “இராஜஸூயம் வேட்ட பெரு நற்கிள்ளி” என்ற பெயருடன் ஒரு பேரரசன் விளங்கினான். அவன் இராஜஸுய வேள்வி நடத்திப் புகழ் பெற்றதைப் “புறநானூறு” நூலின் 10வது பாடல் தெரிவிக்கிறது.
இராஜஸூய யாகமும், அசுவமேத யாகமும் செய்வதற்கு அரிய பெரு யாகங்கள். இவற்றைச் செய்வது மிகவும் சிரமம். இவற்றைச் செய்து முடிப்பவர்கள் பெரும் புண்ணியம் அடைவார்கள் என்று வேதங்கள் தெரிவிக்கின்றன.
காசி திருத்தலத்தில் மூன்று தினங்கள் நியமத்துடன் ஒருவர் வாழ்ந்தால் போதும், அவருக்கு இந்த இரண்டு பெரும் யாகங்களைச் செய்தால் கிடைக்கக்கூடிய புண்ணியம் சுலபமாக வந்து சேரும் என்று | "ஸ்கந்த புராணம்” கூறுகிறது.
காசி என்ற புண்ணிய பூமியின் இத்தகைய மகிமையை முழுமை செய்வது, புனிதம் மிகுந்தகங்கை நதி.
கங்கையின் வரலாறு உலகத்தின் முதல் நூல் ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வேதம். இதை "முது நூல் என்று “புறநானூறு” குறிப்பிடுகிறது. மிகப் பழைய நூல் என்று இதற்கு அர்த்தம். ஹிந்து மதத்திற்கு அடிப்படையாக வேதம் விளங்குகிறது.
ரிக் வேதத்தில் கங்கை நதி பற்றிய குறிப்பு இருக்கிறது.
இந்தியாவில் ஓடும் நதிகளில் மிகவும் புனிதமானது கங்கை, புராணங்களும்
) -
தை மாத மலர் - 2014

Page 23
இலக்கியங்களும் கங்கையின் சிறப்பை விவரித்துள்ளன. மனித நாகரிகம் கங்கைக் கரையில் தோன்றிப் பரவியது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கங்கை நதிக்கரையில் காசி அமைந்து திகழ்கிறது. காசியின் தென் பாகத்தில் ஓடும்அஸி நதியும் வட பாகத்தில் ஓடும் வரணா நதியும் கங்கை மகா நதியில் சங்கமம் ஆகின்றன.
பகீரதன் தவம்
கங்கை நதிக்குப் பாகீரதி என்ற பெயர். அது உற்பத்தியாகும் இடத்தில் வழங்குகிறது. தேவ உலகத்திலிருந்து மண் உலகத்திற்குப் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தான். ஆகவே பாகீரதி என்ற பெயர் அமைந்தது.
கபிலர் என்ற மாமுனிவரின் சாபத்தினால் சகர புத்திரர்கள் எரிந்து சாம்பல் ஆனார்கள். அவர்கள் சுவர்க்க லோகம் செல்லவேண்டும் என்பதற்காகப் பகீரதன் கங்கை அன்னையை நோக்கித் தவம் புரிந்தான். கங்கை தேவி பிரத்தியட்சம் ஆனாள்.
"நான் பூலோகம் வருகிறேன். ஆனால் எனது வேகத்தைத் தாங்கக்கூடியவர்கள் பூமியில் எவரும் இல்லை; சிவபெருமான் ஒருவரே எனது வேகத்தைத்தாங்கக் கூடி யவர்; எனவே, அவரை முதலில் வேண்டிக் கொள் என்று கங்கை அன்னை பகீரத னுக்குக் கூறினாள். பிறகு அவள் மறைந்தாள்.
பகீரதன் சிபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். சிவபெருமான் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டு அருளினார்.
அருள் ஒளி - 2

"இறைவனே! எனது முன்னோராகிய சகர புத்திரர்கள் சாம்பல் ஆகிக் கிடக்கிறார்கள். கங்கை நீர் புனிதம் செய்தால், அவர்கள் சுவர்க்க லோகம் செல்ல இயலும். எனவே கங்கை பூலோ கத்திற்கு வரவேண்டும், அதற்கு தாங்கள் உதவிஅருளவேண்டும்" என்று பகீரதன் பிரார்த்தனை செய்தான்.
பெரிய திருமொழி
பகீரதன் கேட்ட வரத்தை இறைவன் அளித்து அருளினார். வானிலிருந்து பெரும் ஆரவாரத்துடன் கங்கை பூமியை நோக்கிப் பாய்ந்தாள். அவளது வேகம் கண்டு அனைவரும் அஞ்சினார்கள். ஆனால் சிவபெருமான் இலேசாகப் புன்னகை பரிந்தார். அவரது சடையில் கங்கையை எளிதில் தாங்கிக் கொண்டுவிட்டார். கங்கையின் வேகம் தணிந்தது; பிறகு அவள் தரையில் விடப்பட்டாள்.
சாம்பலாகிக் கிடந்த சகர புத்திரர்கள் இருந்த இடத்தில் கங்கை பாய்ந்தாள். அவரது மிக மேலான புனிதம், சகர புத்திரர்களைத் தூய்மை செய்தது. சகர புத்திரர்கள் சுவர்க்க லோகம் சென்று அடைந்தார்கள். இதுதான் கங்கை நதி பூலோகத்திற்கு வந்த வரலாறு.
திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழியில் கங்கையின் பெருமையைப் பல சொற்களில் அவர் விவரிக்கிறார்.
"வானவர் வணங்கும் கங்கை” என்றும் "முது நீர்க்கங்கை" என்றும் அவர் குறிப்பிட்டுப் பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றைத் தெரிவிக்கிறார்.
1 - தை மாத மலர் - 2O4

Page 24
பசுவின் முகம்
கங்கை இமய மலையில் உற்பத்தி ஆகிறது. கங்கோத்ரி என்ற இடத்திற்கு அருகில் இரண்டு மலைகளுக்கு நடுவி லிருந்து கங்கை தோன்றி வெளிவரும் பரப்பு, மனிதனின் செவி வடிவில் இருக்கிறது.
ஒரு மாமுனிவரின் செவி வழியே கங்கை வெளிவந்தாள் என்று கூறு கிறார்கள். அதை உறுதிப்படுத்துவதைப் போல இந்த இடம் உள்ளது.
பல ஆண்டுகள் பல முறை வெள்ளம் ஏற்பட்ட பிறகும், செவி வடிவம் இன்று வரையில் மாறவில்லை. விஞ்ஞானிகளும் வியந்து போற்றும் ஓர் அதிசயம் இது.
L
கங்கோத்ரிக்கு வடக்கில் கங்கை உற்பத்தித்தவம் உள்ளது. தெற்கே இரண்டு மைல் தொலைவில் பிந்துசாரம் என்ற இடம். இருக்கிறது. இதுவே பகீரதன் தவம் செய்த பூமி.
கங்கோத்ரி அருகே உற்பத்தியாகும் கங்கை சிறிது தூரத்திற்குப் பிறகு கோமுகி என்ற இடத்தில் ஒரு குகையின் வாயி லிருந்து குபு குபு என்று பிரவாகிக்கிறாள்.
இந்தக் குகை அமைந்துள்ள பகுதி பசுவின் முகம் போலக் காணப்படுகிறது. எனவே தான் கோமுகி என்ற பெயர் அமைந்துள்ளது. கோ என்றால் பசு. கோமுகி என்றால் பசு முகம் கொண்டவள் என்று அர்த்தம்.
இ
& CU
சங்க கால நூல்களில் ஒன்றான புறநானூற்றில் கங்கை பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது. அது குமணனைப் பெருஞ் க
அருள் ஒளி
- 22 -

சித்திரனார் என்ற புலவர் பாடியது. கங்கை நதியுடன் தொடர்பு தமிழக மக்களுக்கு இரண்டு ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே இருந்து வந்துள்ளது என்பதை இந்தக் குறிப்பிலிருந்து அறியலாம்.
பாவம் நீங்கும்
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவதரித்தவர் பெழியாழ்வார். “கங்கை” என்று வாயால் சொன்னாலே போதும். பாவங்கள் நீங்கும் என்று அவர் கூறியுள்ளார். கங்கையின் புனிதம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது.
“கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட நிற்கும்” என்பது பெரியாழ்வாரின் திருமொழி.
| “கங்கையில் முழுகி எழுந்தால்” பாவங்கள் போய்விடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். முழுகுதல் என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். தலையுடன் உடல் முழுவதும் நீருக்குள் அமிழ்ந்து எழுவதையே முழுகுதல் என்ற சொல் குறிக்கிறது.
கங்கையில் மூழ்கி எழுந்தவர்களை பம தூதர்களும் நெருங் குவதற்குப் பயப்படுவார்கள். கங்கை நீர் அத்தகைய ஆற்றல் வாய்ந்தது.
கங்கை நதி பாய்ந்து செல்லும் பிர தேசங்கள் எல்லாமே புண்ணியத் தலங்கள். இறப்பவர்களது உடல் எலும்புகளைக் ங்கை நதியில் பக்தியுடன் இட்டால், இறந்தவர்களுக்குச் சுவர்க்கம் கிடைக்கும். Hஸ்தி கரைப்பு என்று இதைக் கூறுகிறோம்.
தானம் சிறந்தது. ஒரு நதியின் ரையில் செய்கின்ற தானம் மிகச்
தை மாத மலர் - 2014

Page 25
சிறந்தது. கங்கை நதியின் கரையில் செய்கின்ற தானம் எல்லாவற்றுக்கும் மிக மேலான சிறப்பு உடையது.
தவம் செய்வதற்கு மிக உகந்த இடம் கங்கை நதியின் கரை. அங்குத் தவம் செய்து பெரும் பயன் அடைந்தவர் பலர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
கங்கைக் கரையில் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவை மனத்திற்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருபவை.
புனிதம் வாய்ந்த பெண்மணிக்குக் கங்கை நதியை உவமை கூறுவது வழக்கம்.
திரிவேணி சங்கமம்
கங்கைக் கரையில் உள்ள புண்ணியத் திருத்தலங்களில் தலையாய சிறப்புப் பெற்றவை காசி, பிரயாகை, ஹரித்துவார் ஆகியவை. இவற்றில் காசிக்கு முதலிடம்.
பிரயாகை அலகாபாத் என்று அழைக் கப் படுகிறது. ஹரித்துவாரம் என்ற சொல்லின் திரிபு ஹரித்துவார்.
பிரயாகை பெருஞ்சிறப்பு வாய்ந்தது. கங்கை நதிக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் யமுனை நதி, இங்கு கங்கையில் சேருகிறது. அலகாபாத் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வீக நதிகள் கூடுகின்றன. இந்த இடத்திற்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர்.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் தொழுனை என்ற பெயரில் யமுனை குறிப்பிடப்பட்டுள்ளது. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை, தூயப் பெரு நீர்
அருள் ஒளி

யமுனைத் துறைவனை” என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள். கண்ணன் அவதரித்த மதுரைப் பதியையும், யமுனை நதித் துறையையும் ஆண்டாள் இங்கே போற்று கிறாள்.
யமுனை நதியின் நீரைக் குடித்தாலே சோம் யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறுவார்கள். யமுனையின் கரையில் அமர்ந்து, காயத்திரி ஜபம் செய்வது விசேஷமான பலனைத் தரும்.
பிரயாகை
சரஸ்வதி என்ற நதி அந்தர் வாஹினியாக இருக்கிறது. அதாவது மறைவாக ஓடுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் கூடுகின்ற இடம் மிகவும் பவித்திரமானது. மூன்றும் கலந்த தீர்த்தத்திற்கு “தீர்த்த ராஜா” என்று பெயர்.
இங்கு பிரம்மா பல யாகங்களைச் செய்தார். அதனால் பிரயாகம் என்று பெயர் ஏற்பட்டது. அதுவே பிரயாகை என்று ஆயிற்று.
கங்கை நதியின் நிறம் வெண்மை; யமுனை கருமை நிறம் கொண்டது. திரிவேணி சங்கமத்தில் இந்த இரு வேறு நிறம் கொண்ட நதிகளின் சங்கமத்தை மிகவும் தெளிவாகப் பார்க்கலாம்.
திரிவேணி சங்கமத்தில் ஒருவர் தமது உடலைத் தியாகம் செய்தால், அவர் மோட்சம் அடைவார்; இது உறுதி.
பரம் "பவித்திரமான திரிவேணி - சங்கமத்தைத் தரிசித்தாலே கூடப் போதும் பாவங்கள் விலகும் என்று கூறுவார்கள்.
3 -
தை மாத மலர் - 2014

Page 26
ஹிந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் திரிவேணி சங்கமம் செல்லவேண்டும். அங்கு நியமப்படி சடங்குகளைச் செய்ய வேண்டும்.
காசி யாத்திரையில் பிரயாகையும் திரிவேணி சங்கமச் சடங்குகளும் மிக
முக்கியமான பங்கு வகிக்கின்றன.
தீர்த்த யாத்திரை ஏன்? இகலோக வாழ்க்கைக்கும், பரலோக வாழ்க்கைக்கும் சாதனமாக இருப்பது. தர்மம்.
=
தர்மம் எல்லாப் பாவங்களையும் அகற்றிக் கொள்ளவும், எல்லாப் புண்ணி யங்களையும் பெற்றுக் கொள்ளவும்
உதவும்.
“தர்மம் சர” என்று வேதம் ஆணை யிடுகிறது. “உயிரை விட்டாலும் விடுங்கள்; தர்மத்தை விடாதீர்கள்” என்று வியாசர் தெளிவாகக் கூறியுள்ளார்.
உலகப் பொதுமறை என்று எல்லோ ராலும் புகழப் படுவது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். அதில் தர்மத்தின் பெருஞ் சிறப்பை ஓர் அதிகாரமே எடுத்துக் கூறுகிறது. "அறன் வலியுறுத்தல்” என்பது அதன் தலைப்பு, "தர்மத்தைக் காட்டிலும் நன்மை தருவதும் இல்லை; தர்மத்தை மறப்பதைக் காட்டிலுமே கேடு தருவதும் இல்லை” என்று அதன் ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
தர்மம் பேண வேண்டும். அதர்மம் விலக்க வேண்டும் என்பது இந்து சமயத்தின் ஓர் அடிப்படைக் கோட்பாடு.
அருள் ஒளி
- 24

குளங்கள் வெட்டுவது, அன்ன சத்திரம் கட்டுவது, யாகங்கள் செய்வது, கோயில் களை எழுப்புவது, கல்வி கற்பிப் பது, குடிநீர் தொட்டிகளை வைப்பது, விலங்கு களுக்கு உணவு அளிப்பது.
இவ் வாறு ஏராளமான தர்ம காரி யங்களைச் செய்யுங்கள் என்று இந்து மத சாஸ்திரங்கள் போதிக்கின்றன.
“அனாதையாக ஒரு பிரேதம் கிடந்தால், அதை எடுத்து முறைப்படி அடக்கம் செய்யுங்கள்; இது உயர்ந்த தர்ம காரியம்; அசுவமேத யாகம் செய்வதால் கிடைக்கக் கூடிய புண்ணியம் அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வதால் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பிரதான தர்மம்
இவ்வாறு அநேக தர்ம காரியங்கள் பேசப்படுகின்றன. தீர்த்த யாத்திரை ஒரு பிரதான தர்மம். நாம் கலியுகத்தில் வாழ்கிறோம். கலியுகத்தில் தீர்த்த யாத்திரை என்றால் என்ன, அதை எவவாறு செய்வது என்று உரியவர்கள் மூலமாகத் தெளிவாக அறிந்து கொண்டு, பிறகு யாத்திரைகளை மேற்கொள்ளுவது நல்லது.
நமது பாரத நாடு மிகச் சிறந்த புண்ணிய பூமி. இது வெறும் பேச்சு
இல்லை. இது நிதரிசனமான உண்மை.
நமது நாட்டில் கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, காவிரி முதலிய பல புனிதமான நதிகள் ஓடுகின்றன. நமதுநாட்டில் இமயமலை முதல் திருப்பதி திருமலை, பழனி மலை வரை ஏராளமான புண்ணிய மலைகள் உள்ளன.
தை மாத மலர் - 2014

Page 27
நமது நாட்டில் துவாதசலிங்க கூேடித்தி ரங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரு முறை தரிசித்தால் பாவங்கள் ஓடிப்போகும். நமது நாட்டில் நூற்றி எட்டு வைணவத் திருப்பதிகள் விளங்குகின்றன.
நமது நாட்டில் அயோத்தி, வடமதுரை, ஹரித்துவாரம், காசி, காஞ்சிபுரம், அவந்திகா, துவாரகை ஆகிய ஏழு மோட்ச ஸ்தலங்கள் இருக்கின்றன.
துவாதச (பன்னிரண்டு) லிங்க ஸ்தலங்களில் முக்கியமானது காசி.
ஏழு மோட்ச புரிகளில் மிகவும் முக்கியமானது காசி. இந்த நதிகள், மலைகள், ஆலயங்கள், திருப்பதிகள் முதலியவற்றுக்கு உரிய முறையில் பயணம் செய்து, பக்தியுடன் வழிபடு வதுதான் தீர்த்த யாத்திரை.
பழைய காலம்
தீர்த்த யாத்திரை என்பது பிக்னிக்" போவதோ அல்லது உல்லாசப் பயணம் செய்வதோ அல்ல. எளிமையும், பக்தியும் தீர்த்த யாத்திரைக்கு மிகவும் அவசியம். எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு உடலையும் உணர்வுகளையும் வளர்த்துப் பக்குவப்படுத்திக் கொள்ளத் தீர்த்த யாத்திரைகள் உதவுகின்றன.
நாடு முழுவதும் திருத்தல யாத்திரை செய்யுங்கள் என்றும், அப்பொழுதுதான் ஞானம் காட்டும் ஆசிரியன் கிடைப்பான் என்றும் திருமூலர் கூறுகின்றார்.
தீர்த்த யாத்திரைகள் இன்றோ, நேற்றோ நமது தகப்பனார், பாட்டனார்
அருள் ஒளி - 2

காலத்திலோ ஏற்பட்டவை அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே உண்டானவை இவை.
ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்பட்ட தற்கு முன்பாக, இரயில் பாதைகள் போடப்பட்டு இரயில்கள் விடப்பட்டதற்கு முன்பாக, மோட்டார் கார் போன்ற வாகனங்களைப் பற்றிய சிந்தனைகள் கூடத் தோன்றியதற்கும் முன்பாக தீர்த்த யாத்திரைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன என்பதும், இந்தியாவின் வட கோடியிலிருந்த தென் கோடிக்கும், தெற்கிலிருந்து வட எல்லை வரையிலும், கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குக் கோடிக்கும், மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குக் கோடிக்கும் மக்கள் இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தி லேயே தீர்த்த யாத்திரை செய்தார்கள் என்பதும் ஆச்சரியம் அளிக்கும் செய்திகள்.
அக்காலத்தில் மக்கள் மாட்டு வண்டி களில் அல்லது கால்நடையாகச் சென் றார்கள். படகுகளில் பயணம் செய்தார்கள்; பாதுகாப்புக் கருதி யாத்ரீகர்கள் கூட்டமாகப் பயணங்களை மேற்கொண்டார்கள்.
தமிழகத்திலிருந்து கிளம்பியவர்கள் சுமார் ஒரு வருடம் போல யாத்திரை செய்து, காசியை அடைந்தார்கள். அதே போல வடக்கே இருந்து யாத்ரீகர்கள் இராமேசுவரத்திற்கும், காஞ்சிபுரத்திற்கும் வந்தார்கள்.
வழி நெடுக, ஆங்காங்கே சத்திரங்கள் கட்டப்பட்டிருந்தன. யாத்ரீகர்கள் அங்கு தங்கி, ஒய்வு எடுத்துக் கொண்டார்கள். சத்திரங்களில் இத்தகைய பயணிகளுக்கு
5 - தை மாத மலர் - 2O4

Page 28
அன்புடன் இலவசமாக உணவு படைக்கப் பட்டது. ஆடைகள் அளிக்கப்பட்டன. பயணி களின் பாதுகாப்புக்காக காவலர்களும், வழிகாட்டுவதற்காக வழிகாட்டிகளும் சத்திரங்களிலிருந்து அனுப்பபட்டார்கள்.
பரபரப்பு இல்லை
அது அமைதியான காலம். இன்றைய
நாகரீக உலகின் பரபரப்பும், தீய
இல்புகளும் தலைகாட்டாத காலம்.
இரயில் பயணத்திற்கு முன் பதிவு செய்துவிட்டுத்தான் யாத்திரைக்குத் திட்டமிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படாத காலம்.
காசியில் தங்குவதற்கு இடம் இருக் கிறதா, இராமேசுவரத்தில் வசதியான ஹோட்டல் உள்ளதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிட வேண்டும் என்ற அவசியமும்இல்லாத காலம்.
துரதிஷ்டவசமாக அந்த அமைதியும், சமுதாய சகோதர உணர்வும் இப்போது அருகிவிட்டன. எனினும், இப்போதும் தீர்த்த யாத்திரைகளை அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் மேற்கொள்ளக்கூடாது. இன்றைய வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதில் பிழை இல்லை. ஆனால் ஒழுங்கும், நிதானமும், பக்தியும், யாத்திரையின் உறுபயனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதலும் இருக்கவேண்டும்.
முரீ ஆதி சங்கர பகவத் பாதர் தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டு இந்து சமயத்தை வலிமைப்படுத்தி நிலை நிறுத்தி அருளியவர்.
அருள் ஒளி - 26

ருநீ ஆதிசங்கரர் துவாதச (பன்னி ரெண்டு) லிங்க ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து பகவானைத் தரிசித்தார். பிறகு அவர் "துவாதச லிங்க ஸ்தோத்திரம்" என்ற ஒப்பற்ற ஒரு நூலை இயற்றி அருளினார்.
ருநீ ஆதிசங்கரர் கயிலாய மலைக்குச் சென்று தரிசனம் செய்தார்.
கயிலாய மலை
ருநீ ஆதிசங்கரர் ஸ்தாபித்த ருநீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது பீடாதிபதியான ஜகத்குரு பூஜ்யருநீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்கள், நமது காலத்தில் துவாதச லிங்க ஸ்தலங்கள் எல்லாவற்றுக்கும் விஜயம் செய்தார்கள்
என்பது ஓர் அரிய செய்தி
நடமாடும் தெய்வமாகத் திகழும் பூஜ்யருநீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள், இந்தப் பன்னிரண்டு லிங்க ஸ்தலங்களிலும் ருரீ சங்கரர் பிரதிஷ்டை அல்லது ருநீ குரு பாதுகா பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
ஜகத்குரு பூஜ்யருீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கயிலாய மலைக்கும் சென்று வழிபட்டார்கள்.
ருநீ ஆதிசங்கர பகவத் பாதருக்குப் பிறகு 69-வது பீடாதிபதியான பூஜ்யருநீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் கயிலாய மலைக்குச் சென்று தரிசனம் செய்தார் என்பது வரலாறு.
இந்த நிகழ்ச்சியை இந்து சமய
வரலாற்றின் ஓர் இமாலய அத்தியாயம் என்றே குறிப்பிடலாம்.
5 - இதை மாத மலர் = 2O14

Page 29
தீர்த்த யாத்திரைகளுக்கு எல்லா வகைகளிலும் வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம் விளங்குவதைக் காண்கின்றோம்.
காசியுடன் தொடர்பு
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானத்துடன் காசி ஸ்தலம் நெருங்கிய தொடர்பு உடையது.
68-வது பீடாதிபதியான ஸ்ரீமகா பெரியவர் காசி யாத்திரை புரிந்தார்.
காசி மன்னர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அடியவர். காசியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கு ஒரு கிளை மடம் இருக்கிறது. காசி யாத்திரை செல்பவர்கள் அங்கு தங்க வசதி உள்ளது.
பிதிரர் காரியங்களைக் காசியில் எவ்வாறு செய்யண்ேடும் என்றும், காசியில் ஆலயங்களை எவ்வாறு வழிபட வேண்டும் என்றும் அங்கு வழிகாட்டப்படுகிறது.
காசி நகரில் ஸ்ரீ காமகோடீசுவரர் திருக்கோயிலை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கட்டியுள்ளது. 1974ம் ஆண்டு அந்த ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. 1998ஆம் வருடத்தில் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஐஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் கயிலாய யாத்திரைக்கு முன்பாக காசி விசுவநாதர் ஆலய கும்பாபிஷேகம் செய்து அருளினார்.
தர்மங்களில் மிகவும் முக்கியமானது தீர்த்த யாத்திரை என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். தீர்த்த யாத்திரை களில் மிகவும் முக்கியமானது காசியாத்திரை.
அருள் ஒளி

திருமண நிகழ்ச்சி
திருமண காலங்களில் மாப்பிள்ளை விரத சமாவர்த்தனம் செய்து முடித்த பிறகு “பரதேச கோலம்” கிளம்புவார். அப்போது பெண்ணின் தகப்பனார், மாப்பிள்ளை யின் கைகளைப் பற்றி கொள்ளுவார். "எனது பெண்ணைத் தங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கிறேன்; நீங்கள் காசி யாத்திரை செல்ல வேண் டாம். நீங்கள் திருமணம் செய்து கொண்டு தர்ம அனுஷ்டானங்கள் புரிந்து வாழ்க்கையை நடத்துங்கள்” என்று பெண்ணின் தகப்ப
னார் மாப்பிள்ளையிடம் கூறுவார்.
பிறகு, மாப்பிள்ளை காசி யாத்திரை உத்தேசத்தைக் கைவிட்டுத் திரும்பி வந்து திருமணம் செய்து கொள்ளுவார். இந்தச் சடங்கின்போது இதர மோட்ச ஸ்தலங்களில் எதுவும் குறிப்பிடப்படுவது இல்லை. "அயோத்தி யாத்திரை” என்றோ “துவராகை யாத்திரை” என்றோ "ஹரித்துவாரம் யாத்திரை” என்றோ திருமணச் சடங்கு கிடையாது.
காசிக்கு யாத்திரை செய்தால் மோட்சம் உறுதியாகக் கிடைத்துவிடும். எனவேதான், “இப்போதைக்குக் காசி யாத்திரையைத் தவிர்த்து விடுங்கள்; என் பெண்ணை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துங்கள். பிறகு தம்பதி சமேதரராகக் காசிக்குச் செல்லுங்கள்” என்று பெண்ணைப் பெற்றவர் மருமகனாக வர இருப்பவரிடம் சொல்கிறார்.
எனவே காசி யாத்திரை தீர்த்த யாத்திரைகளில் மிகவும் சிறந்தது - மிகவும் மேலானது - மோட்சத்தை அவசியம் அளிக்கக்கூடியது - என்று தெரிந்து கொள்ளலாம்.
27 -
தை மாத மலர் - 2014

Page 30
காசி யாத்திரை பத்ததி என்ன? அதை எவ்வாறு ஆரம்பித்து எவ்வாறு நடத்தி, எவ்வாறு முடிக்க வேண்டும்?
யாத்திரையின் 7 கட்டங்கள்
அதிகாலை நேரம்,வழக்கம் போல எழுதிக்கொண்டிருக்கிறேன். டெலிபோன் மணி ஒலிக்கிறது.
“ஹலோ! சட்சுமிநாராயணன் சார் இருக்கிறாரா?”
“நான்தான் பேசுகிறேன்”.
“நமஸ்காரம். என் பெயர் கோபாலன். நான் சென்னை வடபழனியிலிருந்து பேசுகிறேன்”.
“சொல்லுங்கள்”.
"நீங்கள் "ஞானமணி” பத்திரிகையில் “காசியின் மகிமை” பற்றி எழுதிய மூன்று கட்டுரைகளைப் படித்தேன். உடனடியாகக் காசிக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். பயணத்திற்கு டிக்கெட் எடுக்கப் போகிறேன். அதற்கு முன்பாக உங்களுடன் பேசி, உங்களது ஆசீர்.
வாதங்களைப் பெற விரும்புகிறேன்”.
“மிகவும் மகிழ்ச்சி எனது பரிபூரண மான ஆசீர்வாதங்கள்”.
“உங்களை நேரில் வந்து பார்க்கலாமா?" “தாராளமாக வரலாம். வாருங்கள்”. “காசிக்கு ரயில் மூலம் செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்யப்போகிறேன். இந்த வேலை முடிந்ததும் உங்களுக்கு டெலிபோன் செய்துவிட்டு, நேரில் வந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கிறேன்”.
“சற்றுப் பொறுங்கள். காசிக்கு டிக்கெட் வாங்கப்போவதாகத்தானே சொன்னீர்கள்?”
அருள் ஒளி
- 28

“ஆமாம்”. “அப்படியா... காசி யாத்திரை கிளம்ப விரும்புவதாகச் சொல்கிறீர்கள். உங்க ளுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லவேண்டும்”.
“என்ன?”
காசி யாத்திரை செல்வதற்கு ஒரு கிரமம் இருக்கிறது”.
“அப்படி என்றால்!” “காசி யாத்திரை செல்வது மிகவும் உத்தமம். நீங்கள் காசி யாத்திரை செல்ல விரும்புவதைக் கேட்டு மகிழ்ச்சி அடை கிறேன். ஆனால் காசி யாத்திரையை எங்கே இருந்து, எவ்வாறு ஆரம்பிப்பது, எவ்வாறு செய்வது என்பதைத் தயவு செய்து தெரிந்து கொண்டு, யாத்திரையை ஆரம்பியுங்கள்”.
“அப்படியானால், முதலில் நேராகக் காசிக்குப் போகக் கூடாதா?”
“இல்லை, முதலில் இராமேசுவரம் செல்ல வேண்டும். அங்கிருந்துதான் யாத்திரையை ஆரம்பிக்க வேண்டும்?”
நல்லவேளை உங்களுடன் டெலி போனில் பேசியதால் இந்தத் தகவல் தெரிந்தது. நான் உங்கள் வீட்டுக்கு நேரில் வர விரும்புகிறேன். எனக்குக் காசி யாத்திரைக் கிரமம் பற்றி விளக்கமாகச் சொல்கிறீர்களா? மிகவும் நன்றி உடை யவனாக இருப்பேன்”.
"தாராளமாக வாருங்கள். இன்று காலை பத்து மணிக்கு வந்துவிடுங்கள். எனது விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். நேரில் எல்லா விவரங்களும் தெரி விக்கிறேன்”.
“நன்றி சார்”.
தை மாத மலர் - 2014

Page 31
அந்த அன்பர் வந்தார். அவருக்குக் காசி யாத்திரை எவ்வாறு மேற்கொள்வது என்று விரிவாகத் தெரிவித்தேன். அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் விவரங்களை நான் சொல்லச் சொல்லக் குறித்துக் கொண்டார். பிறகு, அந்த அன்பர் மன நிறைவுடன் என் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார்.
ஐந்து கட்டளைகள்
காசி யாத்திரை செய்வது என்று முடிவு
எடுத்ததும் முதலில் ஒரு முக்கியமான
கடமையைச் செய்ய வேண்டும்.
வீட்டில் விநாயகர் பெருமானுக்கு வைதீகர்களின் துணையுடன் பூசை செய்ய வேண்டும். "பிள்ளையார் அப்பனே! எங் களது காசி யாத்திரை எந்தவிதமான விக்கி னமும் இல்லாமல் நிறைவேற வேண்டும். உனது பரிபூரண அருள் வேண்டும்” என்று ஆனை முகத்து அண்ணலிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு யாத்திரையைத் தொடங்கவேண்டும்.
காசி யாத்திரை செல்பவர்கள் ஐந்து கட்டளைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 1. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தான் யாத்திரை செய்ய வேண்டும். தனித்தனியாகச் சென்றால் பலன் கிடைக்காது. 2. யாத்திரை முழுவதும் பக்தி உணர்வு மட்டுமே மேலோங்கியிருக்க வேண்டும். வேறு உணர்வு அல்லது சிந்தனைக்கு இடம் தரக்கூடாது. 3. யாத்திரையின் போது கணவனும், மனைவியும் சேர்ந்து எல்லாச் சடங்கு
அருள் ஒளி -

გერს 'ê
களையும், வழிலேெேசய்ய வேண்டும். ”
4. யாத்திரையின் போது புலனடக்கம் மிகவும்முக்கியம்; கணவன் - மனைவி உடல் உறவு அறவே கூடாது.
5. காசி யாத்திரையின் பிரதான நோக்கம் பிதிரர் (நமது முன்னோர்) வழிபாடு. இராமேசுவரம், பிரயாகை, காசி, கயை ஆகிய எல்லா ஸ்தலங்களிலும் பிதிரர் வழிபாட்டுச் சடங்குகளையே முதலில் செய்ய வேண்டும். பிறகுதான் இறை வழிபாடு.
இராமேசுவரம் காசியாத்திரைக் கிரமம் - முறை - என்ன?
முதலாவதாக - இராமேசுவரம் செல்ல வேண்டும். அங்கு தாய் வழி முன்னோ ரையும், தந்தை வழி முன்னோரையும் வழிபடுவதற்கு உரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். அங்கு பிதிரர் சடங்கு களைச் செய்து முடித்த பிறகு, தனுஷ் கோடிக்குப் போக வேண்டும்.
தனுஷ்கோடி கடற்கரையில் மகா சங் கல்பம் செய்து கொண்டு மணலில் லிங்கம் உருவாக்கி, பூஜை செய்து, பிறகு அதி லிருந்து மணலை ஒரு சுத்தமான துணியில் முடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் இராமேசுவரத்தில் சில பிதிரர் சடங்குகளைச் செய்ய வேண்டும்.
பிதிரர் சடங்குகள் அனைத்தும் முடித்த பிறகு, இராமேசுவரத்தில் இறைவழிபாடு செய்ய வேண்டும்.
இரண்டாவதாக இராமேசுவரத்திலிருந்து சென்னை திரும்பிய பிறகு பிரயாகை (அலகாபாத்) செல்ல வேண்டும்
29 - தை மாத மலர் = 2O4
8-  ി

Page 32
(சென்னையிலிருந்து காசிக்கு நேராக ரயில் பயண வசதி இப்போது உள்ளது. ஆகவே சென்னையிலிரந்து காசிக்கு நேராகச் சென்று விடலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அங்கு முதலில் சடங்கு களைச் செய்யக்கூடாது. காசியிலிருந்து பிரயாகை சென்று,பிதிரர் வழிபாடு, இறை வழிபாடு முடித்துக்கொண்டு, மீண்டும் காசிக்குத் திரும்பலாம். அல்லது சென்னை யிலிருந்து முதலில் நேராகஅலகாபாத் (பிரயாகை) சென்று அங்கு வழிபாடுகளைச் செய்து பிறகு அங்கிருந்து காசிக்குப் போகலாம்)
பிரயாகையில் பல சடங்குகளைச் செய்ய வேண்டும். அங்கு திரிவேணி சங்கமம் உள்ளது. அங்கு சடங்குகளை முடித்த பிறகு, இராமேசுவரம் தனுஷ் கோடியில் சேகரித்துள்ள மணலைத் திரி வேணி சங்கமத்தில் கரைத்துவிட வேண்டும்
பிரயாகை திரிவேணி சங்கமத்தி லிருந்து கங்கை நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். காசியில் சொம்புகளில் கங்கை நீர் விற்பார்கள். அதை வாங்கக் கூடாது. கங்கை நீரைத் திரிவேணி சங்கமத்தி லிருந்து எடுத்தக்கொள்ளுவது தான் மிகவும் உத்தமம்.
பிறகு பிரயாகையில் பிதிரர் வழிபாடு, இறை வழிபாடு முதலியவை செய்ய வேண்டும்.
கயை நகரில்
மூன்றாவதாக, காசிக்குச் செல்ல வேண்டும். அங்கு முன்னோர் (பிதிரர்) சம்பந்தமான பல சடங்குகளைச் செய்ய வேண்டும்.
C
அருள் ஒளி 30 - ܓܡ -

நான்காவதாக - காசியிலிருந்து கயை செல்ல வேண்டும். கயை க்ஷேத்தி ரத்தில் முன்னோருக்குச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.
பிதிரர் காரியங்களைச் செய்ய இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த பூமி
5560) UL.
தாயாரும், தகப்பனாரும், மற்றும் முன்னோரும் நல்ல கதி அடைய வேண்டும் என்றும், அவர்களது ஆசீர் வாதங்கள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகின்ற வர்கள் அனைவரும் கயை என்ற புனிதத் தலத்தில் முன்னோருக்கு உரிய சடங்குகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
பிறகு கயையில் இறைவழிபாடு செய்ய வேண்டும்.
ஐந்தாவதாககாசி மாநகருக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அங்கு பிதிரருக்கு மேலும் சில சடங்குகளைச் செய்ய வேண்டும்.
காசியில், கயைக்குச் செல்வதற்கு முன்பாகச் சில சடங்குகள், கயையி லிருந்து திரும்பிய பிறகு சில சடங்குகள் என்று உண்டு. சாஸ்திர வழிப் படி இவற்றைச் செய்ய வேண்டும்.
காசியில் பிதிரர் சம்பந்தமான எல்லாச் சடங்குகளையும் முடித்த பிறகுதான் இறைவனைத் தரிசிக்க வேண்டும். பிறகு அவரவர் ஊருக்குத் திரும்பலாம்.
தை மாத மலர் = 2O4

Page 33
அபிஷேகம்
ஆறாவதாக, இரண்டாவது முறையாக இராமேசுவரம் செல்ல வேண்டும். அங்கு பிதிரருக்கு உரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். பிறகு, இறைவனை வழிபட வேண்டும்.
திரிவேணி சங்கமத்தில் சேகரித்த கங்கை நீரைக் கொண்டு இராமேசுவரத்து இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய் விக்க வேண்டும். பிறகு இதர பூஜைகளை முடித்துக் கொண்டு அவரவர் ஊருக்குச் செல்லலாம்.
ஏழாவதாக, காசி யாத்திரை நல்ல படியாக நிறைவுபெற்றதையொட்டி, வீட்டில் விசேஷ ஹோமம், பூஜை வைதீகர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.
அன்றைய தினம் உறவினர், நண் பர்கள், முதலியவர்களை அழைத்து அன்னதானம் செய்ய வேண்டும். திரி வேணி சங்கமத்திலிருந்து கொண்டு வந்துள்ள கங்கை நீரை அனைவருக்கும் பிரசாதமாக அளிக்கலாம்.
ஏழாவது கட்டத்துடன் காசி யாத்திரை முடிவுபெறும். இங்கு காசி யாத்திரைக் கிரமம் - முறை - பற்றி மட்டுமே விபரித் திருக்கிறேன்.
இது சுருக்கமான குறிப்பு. ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன செய்யவேண்டும், எவ்வாறு செய்ய வேண்டும், வைதீக காரியங்கள் எவை, இறைவனை வழி படுவது எவ்வாறு என்பவை பற்றிய விரிவான விளக்கங்கள் அடுத்துவரும் பக்கங்களில் தரப்படும்.
அருள் ஒளி -

ஒரே நாடு
இந்தியாவில் காசி வடக்கே உள்ளது. இராமேசுவரம் தெற்குக் கோடியில்
இருக்கிறது.
காசிக்கும் இராமேசுவரத்திற்கும் இடையே சுமார் 2000 மைல் தொலைவு.
எனினும் இவற்றைச் சேர்த்து "காசி இராமேசுவரம்” என்று சொல்லுவதுதான் நமது நாட்டு மரபு. இந்த மரபு இரண்டா யிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியம் தரும் ஓர் உண்மை.
சேது இமாசலம்" என்பது இந்திய நாட்டைக் குறிக்கும் தொடர். தென் கோடியில் உள்ள சேது தொடங்கி, வடகோடியில் இருக்கின்ற இமயமலை வரையில் என்பது இந்தத் தொடரின் அர்த்தம். இந்தத் தொடர் சரித்திர கால ஆரம்பத்திலிருந்து இந்திய மக்களால் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா ஒரே நாடு என்ற உண்மைக்கு வடக்கே இமயமலையும்தெற்கு இராமேசு வரமும் சாட்சிகள்.
பாஷைகள் வெவ்வேறு ஆடை வகைகள் வெவ்வேறு, உணவுப் பழக்கங்களும் வெவ்வேறு. எனினும், ஹிந்து சமயத்தின் தத்துவமும், பண்பாடும் காசியையும், ராமேசுவரத்தையும் இணைத்திருக்கின்றன.
ஆற்றங்கரையில் அமைந்திருப்பது காசி, கடற்கரையில் அமைந்திருப்பது இராமேசுவரம். வடக்கேயிருந்து கங்கை தீர்த்தத்துடன் இராமேசுவரத்திற்கு
51 - தை மாத மலர் - 204

Page 34
யாத்ரீகர்கள் வரு கிறார்கள். இராமேசு வரத்திலிருந்து கடற்கரை மண் எடுத்துக் கொண்டு யாத்ரீகர்கள் காசி செல் கிறார்கள்.
இந்தியா பண்பாட்டின் அடிப்படையில் ஒரே நாடாக இருந்து வந்துள்ளது என்பதற்குக் காசி - இராமேசுவரம் தொடர்பு ஓர் அற்புதமான சாட்சி.
அனும லிங்கம்
காசியில் எழுந்தருளி இருப்பது பாண லிங்கம். இராமேசுவரத்தில் எழுந்தருளி இருப்பது மணல்லிங்கம்.
காசியில் மரணம் அடைந்தால் முக்தி. இராமேசுவரத்தை தரிசித்தால் முக்தி.
இராமாயண காலத் தொடர்பு இரண்டு ஸ்தலங்களுக்கும் உண்டு.
காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம் “அனுமலிங்கம்” என்றும் "காசி லிங்கம்” என்றும் பிரசித்தியாக இராமேசுவரத்தில் முதல் மரியாதையுடன் விளங்குகிறது.
இராமபிரான்,
இராமேசுவரத்தில் சிவலிங்கத்தை எழுப்பிப் பூஜை செய்தார்.
காசியில் விசுவநாத சுவாமிக்கு சப்த ரிஷி பூஜை செய்கின்றபோது, வில்வங்களில் “ராமா” என்ற எழுதுவார்கள். பிறகுதான் வில்வங்களைச் சாத்துவார்கள்.
காசி - - இராமேசுவரம் போல இணைந்துள்ள இரு தலங்கள் வேறு எங்குமே கிடையாது.
அருள் ஒளி
- 32

புராணங்கள், இலக்கியங்கள், வரலாறு அனைத்தும் பேசும் இராமேசுவரத் திருத் தலத்தின்பெரும் சிறப்பு எத்தகையது?
இராமேசுவரத்தின் சிறப்பு -
இராமாயண காலத்தில் தோன்றியது இராமேசுவரம். இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமை மிகுந்தது இராமேசுவரம்.
இராமபிரானின் திருவவதார வரலாறு திரேதா யுகத்தில் நடந்தது. அந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் இராமேசுவரத்தின் தோற்றம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருஞ்சிறப்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற புண்ணியபூமி இராமேசுவரம். இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தி ஸ்ரீ இராமநாத சுவாமி சிவலிங்கத் திருமேனி உடையவராக அருள்பாலிக்கிறார்.
இந்த மூர்த்தி, சீதா பிராட்டியாரின் திருக்கரங்களால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கம். இந்தச் செய்தியைச் 'சேது புராணம்' தெரிவிக்கிறது.
இராமேசுவரத்தின் எல்லாப் பெருமை களையும் விரிவாக விளக்கிக் கூறும் "சேது புராணம் நிரம்ப அழகிய தேசிகர் என்ற மாபெரும் கவிஞரால் பாடப்பெற்றது. இவர் வேதாரண்யம் நகரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர். கமலை நானப்பிரகாசர் அவர்களின் மாணவர். இவர் சிறந்த உரையாசிரியர்ரும் கூட.
நிரம்ப அழகிய தேசிகர் கி.பி. 16-ம் பற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
தை மாத மலர் - 2014

Page 35
இராமேசுவரம் பற்றிய ஏராளமான அரிய செய் திகள் இவர் இயற்றிய “சேது புராணம்” மூலம் கிடைக்கின்றன.
"தெரிதர முத்தமிழ் வடிக்கும் முனி நிரம்ப அழகிய தேசிகனாம் செம்மல், வரிசை பேறு வடமொழியின் சேதுமாக் கதை தமிழால் வகுத்திட்டானே” என்ற பாடல் வரிகளிலிருந்து, சேது புராணம். சம்ஸ்கிருத மொழியில் ஏற்கனவே பாடப் பெற்றிருந்தது என்பதும், நிரம்ப அழகிய தேசிகர் அதைத் தமிழில் இயற்றினார் என்பதும் தெரிய வருகின்றன.
ஜோதி லிங்கம் - சேதுவைக் கட்டத் தொடங்கிய இராம பிரான், உலக நன்மைக்காக சிவலிங்க பூஜை செய்தார் என்ற செய்தியை “ஆனந்த இராமாயணம்”, “அத்யாத்ம இராமாயணம்” ஆகிய சம்ஸ்கிருத காவியங்கள் தெரி விக்கின்றன.. இராமேசுவரம் என்ற சொல் அத்யாத்ம இராமாயணத்தில் இடம்பெற்றி ருக்கிறது.
ஒரு லிங்கத்தை ஏழு வகைகளில் பிரதிஷ்டை செய்யலாம் என்று சிவா கமங்கள் விதித்துள்ளன. அவற்றில் ஸ்ரீமகா விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் பிரதிஷ்டை செய்து இராமநாத சுவாமி என்ற இந்த மூர்த்தி “திவ்விய லிங்கம்” என்ற வகையைச் சேர்ந்தது.
மோட்சம் தரக்கூடிய தலங்களில் முதலாவது இராமேசுவரம் என்று “சைவ பூஷணம்” குறிப்பிடுகிறது. அறுபத்து நான்கு பராசக்தி பீடங்களில் இராமேசுவரம் ஒன்று என்பதாக “தேவி பாகவதம்” கூறுகிறது.
அருள் ஒளி

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரையில் பன்னிரண்டு ஜோதி லிங்கத் தலங்கள் உள்ளன. சோமநாதம், மல்லி கார்ஜூனம், திரியம்பகம், மகாகாளம், ஓங்காரம், பீமசங்கரம், இராமேசுவரம், குஸ்ருணோசுவரம், நாதநாதம், வைத்திய நாதம், கேதாரேசுவரம், விச்வேசுவரம் (காசி) ஆகியவை அந்த 12 ஜோதி லிங்கத் தலங்கள். "ஸ்கந்த புராணம்” இந்த விவரங்களைத் தந்துள்ளது.
இராமேசுவரத்தில் உள்ள ஜோதி லிங்கத்தை விபீஷணன் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த ஜோதி லிங்கத்திற்குப்பின்புறம் கற்பூர ஹாரத்தி காட்டினால், முன்புறம் விளக்கு போல ஒளி தெரியும்.
இராமேசுவரத்தில் ஜோதி லிங்கத்திற்கு நான்கு கால பூஜைகளும், ஒரு கால் கோடி
தீர்த்த அபிஷேகமும் உண்டு.
இராமேசுவரம் செல்பவர்கள் அவசியம் ஜோதி லிங்க தரிசனம் செய்ய வேண்டும்.
பஞ்சாயதன பூஜை
ஹிந்து சமயத்தில் பிறக்கும் ஒவ்வொரு வரும் தங்களது வீடுகளில் பஞ்சாயதன பூஜை அவசியம் செய்ய வேண்டும்.
பீமரத சாந்தி போன்ற சுபநிகழ்ச்சி களின் போதும் பஞ்சாயதன பூஜை செய்யலாம்.
சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, சிவபெருமான்.
33 -
தை மாத மலர் - 2014

Page 36
இந்த ஐந்து மூர்த்தி வழிபாடே பஞ்சா யதன பூஜை என்பது “ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதஞ்ச மகேசுவரம்” என்பது விதி.
பணம்
பணமில்லாதவனைத் தாயே நிந்திப் பாள். தகப்பன் மகிழ்ச்சி அடைய மாட்டார். உடன் பிறந்தவர்கள் பேசமாட்டார்கள். பணி யாள்னோ கோபிப்பான். மகன் பின் செல்ல மாட்டான். மனைவி தழுவமாட்டாள். தன்னை பணம் கேட்பான் என்னும் பயத்தால் நண் பனும் நல்ல வார்த்தை சொல்ல மாட்டான். அதனால் பணத்தை சம்பாதித்தால்தான் அனை வரும் உரிமை கொண்டாடுவார்கள்.
பஞ்சாயதன பூஜை முறைக்கு உகந்தவாறு இராமேசுவரமும் அதைச் சுற்றிய தலங்களும் அமைந்திருக்கின்றன என்பது ஓர் அதிசயமான உண்மை.
சூரிய பூஜைக்கு நவ பாஷாணம் என்ற தேவிபட்டிணம். அம்பிகை வழி பாட்டுக்கு இராமேசுவரம், விஷ்ணு பூஜைக்கு தர்ப்ப சயனம் என்ற திருப் புல்லனை (திருப் புல்லாணி), விநாயகப் பெருமான் வழி பாட்டுக்கு உப்பூர், ஈசுவரன் பூஜைக்குத் திரு உத்தரகோச மங்கை ஆகியவை பஞ்சா யதன திருத் தலங்களாக விளங்குகின்றன.
இராமேசுவரம் செல்பவர்கள் இந்த இதர தலங்களுக்கும் சென்று பக்தியுடன் பூஜை செய்து, பஞ்சாயதன பூஜைகளின் பலனைப் பெறவேண்டும்.
நவபாஷாணம்
இராமபிரான் சேது பந்தனம் செய்ததற்கு முன்பாக, உப்பூர் விநாயகப் பெருமானைத் அருள் ஒளி
- 34

தரிசித்தார். அடுத்தபடியாக நவ பாஷாணம் என்ற தேவிபட்டினத்தில் இராமபிரான் நவக்கிரக பிரதிஷ்டை செய்து பூஜை நிகழ்த்தினார். பிறகு அவர்கடலில் பாலம் அமைக்கும் பெரும் பணியைத் தொடங் கினார். இவ்வாறு "சேது புராணம்” தெரி விக்கிறது.
தேவிபட்டினத்தில் கடலுக்கு மிக அருகில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளி யுள்ள பெருமாளுக்கு “கடல் அடைத்த பெருமாள்” என்ற திருப்பெயர் விளங்கு கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
- இந்தியாவில் கடற்கரையில் திகழும் நவக்கிரகத் திருத்தலம் இது ஒன்றுதான் என்கிறார்கள். இங்கு நவக்கிரகத் திரு மேனிகள் கடற்கரையோரமாகக் கடலுக்குள் நீரில் இருக்கின்றன. கடலுக்குள்சிறது தூரம் நடந்து சென்று நவக்கிரக தேவதை களைத் தரிசித்து வழிபட வேண்டும்.
சரணாகதித் தலம்
சீதா பிராட்டியாரை அக்கிரமமாகக் கொண்டுசென்ற மாபாவி இராவணனைத் தண்டிப்பதற்காக இராமபிரான் தெற்குக் கடற்கரையை வானரப் படைகளுடன் அடைந்தார். அவர்கள் கடலைக் கடந்து இலங்கையை அடையவேண்டும். வருண பகவானைப் பிரார்த்தித்தால் கடலைக் கடக்க வழி கிடைக்கும் என்று யோசனை கூறப்பட்டது.
எனவே, இராமபிரான் தர்ப்பைப் புல்லைச் சயனம் ஆக்கி, அதில் அமர்ந்து ஏழு நாட்கள் தவமிருந்தார். இராமபிரான் தர்ப்பையில் கிடந்தஇடம் சமஸ்கிருதத்தில் தர்ப்ப சயனம் என்று வழங்கப்படுகிறது. தமிழில்திருப்
தை மாத மலர் - 2014

Page 37
புல்லனை என்று கூறுகிறோம். திருப் புல்லணை நாள வட்டத்தில் திரிந்து திருப் புல்லாணி என்று இன்று அழைக்கப்படுகிறது.
உறவினர்கள் -
இது சரணாகதித் திருத்தலம் சமுத்தி ராஜனும அவனது மனைவியும் இங்கு தான் இராமபிரானிடம் சரண் அடைந் தார்கள்.
விபீஷண ஆழ்வார் என்றே வைணவ மரபில் போற்றப்படும் விபீஷணன் இங்குதான் சரணாகதி செய்தார்.
திருப்புல்லணையில் இலங்கைக்குச் செல்லச் சேது கட்டுவதற்குத் தீர்மானம் ஆயிற்று. ஆகவே இந்தத் தலம் "ஆதி சேது" என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்புல்லணை பெருமாளைத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
மண்ணின் புனிதம்
உலக அன்னை சீதாபிராட்டியார். அவரது திருக்கரங்களால் உருவாக் கப்பட்டது இரா மேசுவரத்தில் உளள மணல் லிங்கம் என்று ஏற்கனவே குறிப்பிட்டேன்.
இங்கு மணலால் லிங்கம் எழுப்பப் பட்டது என்பதால் இங்குள்ள மண் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
எனவே, இராமேசுவரத்தில் ஏர் கட்டி உழுதுவது கிடையாது. சிவலிங்கத் திருமேனி செக்கு போன்று இருப்பதால் இங்கு செக்கு ஆட்டுவதும் கிடையாது.
அருள் ஒளி

இந்த மரபை மீறி ஏர் உழுத குடும்பங் களும் செக்கு ஆட்டிய குடும்பங்களும் பல கேடுகளுக்கு உள்ளாயின என்று சொல் லப்படுகிறது. -
இராமேசுவரம் மண்ணின் புனிதத் தன்மையைக் கருதி, இந்த மண்ணை எடுத்துச் சட்டி, பானை செய்யும் தொழிலும், செங்கல் களை போடும் தொழிலும் நடத்தப்படுவது இல்லை.
மண்ணால் எழுப்பப்பட்ட லிங்கமாக இருப்பதால், இங்கு ஸ்தல விருட்சம் எதுவும் கிடையாது.
உலக மாதாவின் தெய்வக் கரங்களால் எழுப்பப்பட்ட மணல் லிங்கம் காலத்தி னாலும், அபிஷேகம் முதலியவற்றினாலும் கரையவில்லை. கல் போன்று கெட்டிப்பட்டு
திகழ்கிறது.
ஸ்பழக லிங்கம்
இராமேசுவரத்தில் ஏராளமான சிவ லிங்கங்கள் அமைந்து விளங்குகின்றன. இங்கு ஜோதி லிங்கம் இருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இராமநாதசுவாமி சந்நிதியின் உட் புறத்தில் ஸ்படிகலிங்கம் உள்ளது. தினசரி காலை வேளையில் ஸ்படிக லிங்கத்திற்கு நடைபெறும் பூஜையை அவசியம் தரிசிக்க வேண்டும்.
உண்மையான உபசரிப்பு
நமக்கு வேண்டியவர்களுக்கு விருந்து
அளிப்பதல்ல, அதிதி உபசாரம். பசியோடு
வருபவர்களுக்கு முன்பின் தெரியாத
35 - தை மாத மலர் - 2O14

Page 38
வர்களாக இருந்தாலும் உணவு அளிக்க வேண்டும். ஏழை, எளியவர்களிடம் அன்பு காட்டி கருணையோடு உதவி புரிய வேண்டும். பிறர் கேட்காமலே அவர்களின் கஷ்டம் அறிந்து, செய்வது தான் உதவி.
இராமநாதசுவாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் சகஸ்ரலிங்கம் இருக்கிறது. ஆயிரம் லிங்கங்களைக் கொண்டது என்பதால் சகஸ்ர லிங்கம் என்ற திருநாமம்.
உட்பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் இரண்டு நடராஜப் பெருமான் திருமேனிகள் இருக்கின்றன.
மூன்றாம் பிரகாரத்திலும் நடராஜர் சந்நிதி உள்ளது. நடராஜர் விக்கிர கங்கள் பெரிய உருவம் வாய்ந்தவை. இவற்றைத் தரிசித்தால் மனத்தில் அமைதி உண்டாகும்.
தட்சிணாமூர்த்தி சந்நிதி இந்த ஆலயத்தின் ஒரு தனிச்சிறப்பு.
உலக அதிசயம்
இராமேசுவரம் திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்திற்குச் "சொக்கட்டான் மண்டபம்" என்று பெயர். இந்தப் பிரகாரம் ஓர் உலக அதிசமய் என்று சொல்லலாம். இதைப் போல உலகத்திலேயே வேறு எங்கும் கிடையாது.
உலகத்திலேயே மிக நீண்ட "நடை" இது. மொத்த நீளம் சுமார் முக்கால் மைல். அதாவது 3850 அடி. ஹிந்து மதக் கட்டடக் கலையில் ஈடு இணையற்ற சிறப்புக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அருள் ஒளி - 36

இது இராமநாதபுரம் மன்னர் முத்து ராமலிங்கம் சேதுபதி என்பவரால் கட்டப்பட்டது. 1740ஆம் ஆண்டில் பிரகார வேலை தொடங்கியது. 30 ஆண்டுகள் வேலை நடந்தது. இதில் 1212 தூண்கள் வரிசையாக மிக அழகாக நிறுத்தப் பட்டிருக்கின்றன.
வரிசை இம்மியளவுகூட பிசகாமல் நேராக அமைந்திருப்பதைப் பார்த்தால் பிரமிப்பு ஏற்படும்.
இராமேசுவரம் ஒரு தனித்தீவு: கடலால் சூழப்பட்டிருப்பது. இந்தத் தீவில் பெரிய பாறைகளோ அல்லது கற்களோ கிடைக்காது. எனினும் இந்த ஸ்தலத்தில் 250 வருடங்களுக்கு முன்பாக, அதுவும் போக்குவரத்து வளர்ச்சி ஏற்பட்டிராத காலத்தில், இத்தகைய அற்புதமான ஒரு பிரகாரத்தை எவ்வாறு எழுப்ப முடிந்தது என்று எண்ணி எண்ணி வியக்கிறொம்.
இறைவன் அருள் இருந்ததால்தான் இந்த மாபெரும் பணி சாத்தியமாயிற்று என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
இராமேசுவரம் யாத்திரை போகிற வர்கள் இந்த மூன்றாம் பிராகாரத்தை நின்று நிதானமாகத் தரிசிக்க வேண்டும்.
இலக்கியங்களில்
ஸ்கந்த புராணம், சிவ மகா புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம்,பத்ம புராணத்தின் உத்திர காண்டம், நாரதீய புராணத்தின் உத்திர 5 Te00 LLô முதலியவை இராமேசுவரம் குறித்துப் பேசுகின்றன.
தை மாத மலர் - 2O4

Page 39
இராமாயண காவியங்களும் இதன் புனிதத் தன்மையை விவரிக்கின்றன.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இராமேசு வரம் விஜயம் செய்திருக்கிறார். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், தாயுமான சுவாமிகள், அருணகிரிநாத சுவாமிகள் ஆகியோர் இராமேசுவரத்தைப் பாடிப் போற்றியிருக்கிறார்கள். பிற்காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் இராமேசு வரத்தின் சிறப்பு விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஹிந்து சமயம் உயர்ந்த சமயம் - ஒப்பற்ற சமயம் - என்று, உலக அரங்கில் நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர் 27.1.1897 அன்று இராமேசுவரம் திருக் கோயிலில் தரிசனம் செய்தார் என்பது ஹிந்துக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற ஒரு செய்தி.
இராமேசுவரத்தின் மூர்த்தி, தலம் என்ற இரு பெரும் சிறப்புக்களை இங்கே ஒருவாறு விவரித்திருக்கின்றேன்.
மூன்றாவது பெரும் சிறப்பு, தீர்த்தம். இராமேசுவரத்தில் பல தீர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் ஒரு தனி வரலாறு உண்டு.
இராமேசுவரத்தீர்த்தங்கள்
இராமேசுவரம் திருக்கோயிலின் கிழக்குச் சந்நிதிக்கு எதிரில் அமைந்தி ருக்கும்கடல் “அக்னி தீர்த்தம்” என்ற பெயருடன் விளங்குகிறது. அன்னை சீதையின் கற்பை உலகியல் மரபுப்படி சோதிப்பதற்காக இராமபிரான் அவரை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னார்.
அருள் ஒளி

பொதுசன நூலகம் "ன் கட்ட யாழ்ப்பாணம்,
இராமபிரானின் கட்டளைப்படி அனுமன் மூட்டிய தீ குளிர்ந்து சீதாபிராட்டியாரின் கற்பு என்ற கனலைத் தாங்கமுடியாமல், அக்கினி தேவன் எழுந்து வந்து அன்னை யைப் பயபக்தியுடன் வணங்கினான். அந்த இடத்தில் அமைந்திருப்பதுதான் அக்னி தீர்த்தம்.
அக்னி தீர்த்தம், இராமேசுவரத்தின் தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது.
யாத்ரீகர்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடி பிதிரர் கடன்களைச் செய்ய வேண்டும்.
அக்னி தீர்த்தத்தில் முழுகி எழுந்தால் பாவங்கள். அகலும் என்று ஸ்கந்த புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
இராமேசுவரத்திற்குச் செல்பவர்கள் தீர்த்த ஸ்நானம் செய்யவேண்டிய முறை உண்டு. 1. முதலில் உப்பூர் விநாயகர் சந்நிதியில்
ஆரம்பிக்க வேண்டும். 2. பிறகு தேவிப்பட்டினத்தில் கடலில்
ஸ்நானம் செய்ய வேண்டும். 3. அடுத்தபடியாக, பாம்பன் சென்று
வயிரவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். தீர்த்த ஸ்நானங்களுக்கு அதிபதி வயிரவர். ஆகவே ஸ் நா னங்கள் விக்கினம் இல்லாமல் முடிய வேண்டும் என்று வயிரவரிடம் இங்கு
பிரார்த்தித்து அனுமதி பெறவேண்டும். - 4. பிறகு இராமேசுவரம் போக
வேண்டும். அங்கு ராம லட்சுமண தீர்த்தங்களில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அக்னி தீர்த்தம் முதல், சர்வ தீர்த்தம்
37 -
தை மாத மலர் - 2014

Page 40
வரையில் 64 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்ய வேண்டும். 5. தனுஷ்கோடிக்குப் போகவேண்டும். அங்கு கடலில் 36 முறை ஸ்நானம் செய்ய வேண்டும் அவை மோட்சத்திற்கு
வகை செய்யும்; அது மகா சமுத்திர
ஸ்நானம்.
இந்த ஸ்நானங்கள் அனைத்தும் முடிந்த பிறகு, தாயாருக்கும், தந்தையாருக்கும், தாய்வழி முன்னோருக்கும் தந்தை வழி முன்னோருக்கும் வழிபாடு செய்ய வேண்டும்.
கோழ தீர்த்தம்
6. பிறகு மறுபடியும் இராமேசுவரத்திற்கு வந்து கோடி தீர்த்த ஸ்நானம்செய்ய வேண்டும். இராமேசுவரத்தில் பிதிரர் வழிபாடு,
இராமநாதசுவாமி தரிசனம் ஆகிய
வற்றை முடிக்க வேண்டும்.
பிதிரர் கடன்களை அவசர கோலமாகச் செய்யக்கூடாது. நிதானமாக சாஸ்திரங் களில் விதித்துள்ள வண்ணம் செய்ய வேண்டும்.
பிதிரர் கடனும், சுவாமி தரிசனமும் முடிந்த பிறகு மீண்டும் ஒருமுறை கோடி தீர்த்த ஸ்நானம் செய்ய வேண்டும். 7. நிறைவாக, மேலவாசல் பிள்ளையாரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்ப வேண்டும் 8. திருப்புல்லணை (திருப்புல்லாணி) செல்ல வேண்டும். அங்குக் கடலில் ஸ்நானம் செய்து, ஆதி ஜகந்நாத பெருமானைத் தரிசனம் செய்ய வேண்டும்.
ର
அருள் ஒளி - 38 -

பிறகு, திருஉத்தரகோச மங்கை சென்று நடராஜப் பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறவேண்டும்.
நீது இராமேசுவர யாத்திரை முறை
காசி யாத்திரை என்ற பெரும் ாத்திரையில் முக்கிய பகுதி இந்த ராமேசுவர யாத்திரை. இதை முறைப்படி சய்து முடித்தால்தான், காசி யாத்தி >ரக்குத் தகுதி உண்டாகும்.
lவ அணுக்கள்
இராமேசுவரத்தில் ஆடி, தை மாத அமா ாசை தினங்களிலும் கிரகண புண்ணிய ாலங்களிலும் மகோதய அர்த்தோதய ண்ணிய காலங்களிலும் ஸ்நானம் செய்ப் ர்கள் மோட்சத்தை அடைவது உறுதி
சிராத்த கர்மம், தானங்கள் முதலியவை சய்வதற்கும் இந்தத் தினங்கள் மிகவும் கந்தவை.
அக்னி தீர்த்த ஸ்நானம் என்பது, ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு திரே சமுத்திர ஸ்நானம். -
இந்த ஆலயத்தின் மூன்றாம் பிரகா 3தில் தெப்பக்குளம் உள்ளது. அதுவே ஈது மாதவ தீர்த்தம் என்று அழைக்கப் டுகிறது.
ஆலயத்திற்குள் முதல் பிரகாரத்தில் * காசி விசுவநாதர் சந்நிதிக்கு வட த்தில் இருப்பது கோடி தீர்த்தம். இது டைசி ஸ்நானத்திற்கு உரியது.
"சேது ஸ்தல புராண வசன காவியம்” த்தங்கள் சம்பந்தமான ஆதார நூல். இந்தத்
தை மாத மலர் - 2O4

Page 41
தீர்த்தங்களில் ஜீவ அணுக்களும் ஏராளமான சத்துப் பொருட்களும் இருக்கின்றன. ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஒவ்வொரு விதமான சத்துப்பொருட்கள் உள்ளன. இவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும்
இந்தத் தீர்த்தங்கள் வற்றாத நீரோட் டத்துடன் விளங்குவது விஞ்ஞானிகளை ஆச்சரியம் அடைய வைக்கிறது.
ஸ்நான நேரம்
அதிகாலையில் 4 மணியிலிருந்து உதயம் 5 மணிக்குள் ஸ்நானம் செய்வது மிகவும் நல்லது. நீரில் உள்ள ஜீவ அணுக்கள் உடம்பைத் தீண்டி, ஊடுருவிப் புத்துணர்ச்சியை உண்டாக்குவதற்கு இதுவே ஏற்ற நேரம்.
காலை ஏழு மணிக்குப் பிறகு சூரிய வெப்பம் அதிகமாகி விடும். சூரிய உஷ்ணம் நீரின் ஜீவ அணுக்களைச் சிதைத்துவிடக்கூடும்.
எல்லா ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும், சேது ஸ்நானம் செய்து பயன் அடையலாம். தடை எதுவும் இல்லை.
மிக முக்கியமான ஒரு நிபந்தனையை இங்கே குறிப்பிட வேண்டும். தீட்டு உள்ளவர்கள் இந்தத் தீர்த்தங்களில் கண்டிப்பாக ஸ்நானம் செய்யக்கூடாது.
பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும், ஆண், பெண் உடல் உறவு கொண்டவர்கள் தங்களை முதலில் சுத்தப்படுத்திக் கொள் ளாமலும் இந்தப் புனிதத் தீர்த்தங்களில் அருகில் செல்வதுகூடத்தவறு.
அருள் ஒளி -

ஸ்நானம் செய்கின்றபோது, குளிக்கி றோம் என்ற உணர்வு கூடாது. சோப்பு முதலியவற்றால் உடலைத் தேய்த்துக் கொள்வதும் பிழை, வீடுகளில் குளிப்பது வேறு. இந்தத் தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது வேறு.
உடல் அழுக்கைப் போக்குவதற்காக அன்றாடம் குளிக்கிறோம். உள்ளத்தின் அழுக்கை அகற்றிக் கொள்வதற்காக இந்தப் புனித தீர்த்தங்களில் ஸ்நானம் செய்கிறோம்.
இந்த வேறுபாட்டை நன்றாகப் புரிந்து கொண்டு, பக்தி உணர்வுடன் இவற்றில் ஸ்நானம் செய்தால்தான் Luu J6ös கிடைக்கும்.
தனுஷ்கோழ
இராமேசுவரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் தனுஷ்கோடி இருக்கிறது. கங்கைக் கரையில் உயிரை விட்டால் புண்ணியம், நர்மதைக் கரையில் நோன்பு இருந்தால் புண்ணியம்; குரு ஷேத்திரத்தில் தானம் வழங்கினால் தனுஷ் கோடியில் இந்த மூன்று செயல் களில் எதைச் செய்தாலும் புண்ணியம்.
இராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பியதும் இங்குதான் நீராடினார் என்பது ஐதீகம்.
இராமபிரான் தமது வில்லின் நுனியை இங்கு ஊன்றியதால் தனுஷ்கோடி என்ற பெயர் அமைந்தது என்று வைணவ வல்லுநர்கள் கூறுவார்கள். தனுஷ் என்றால் வில் என்று அர்த்தம். கோடி என்றால் முனை என்று பொருள்.
9 - ஐத மாத மலர் = 2O4

Page 42
தனுஷ்கோடியில் கடலின் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சந்திக் கின்றன என்று கூறுவார்கள்.
“நீடு தனுஷ்கோடியினை நினைத் தாலும், புகழ்ந்தாலும், நேர் கண்டாலும் வீடு பெறல் எளிதாகும்” என்ற நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய “சேது புராணம்” குறிப்பிடுகிறது.
வைதிக அன்பர்கள்
1964-ம் ஆண்டில் வீசிய மாபெரும் புயலில் தனுஷ்கோடியின் கட்டடங்களும், ரயில் பாதைகளும் அழிந்தன. இடிபாடுகள் கொண்ட ஊராகத்தான் தனுஷ்கோடி இன்றைய தினம் உள்ளது.
இராமேசுவரத்திலிருந்து ஜீப் மூலமாக தனுஷ்கோடிக்குச் செல்லலாம். இப்போது யாத்ரீகர்கள் அவ்வாறு தான் செல்கி ( றார்கள்.
9 0 0 0
சேது தீர்த்த கட்டமாக தனுஷ்கோடி திகழ்கிறது. ஆகவே அங்கு செல்லாமல் இராமேசுவரம் யாத்திரையை நிறைவு செய்ய இயலாது.
ல் :
கூ 13
இராமேசுவரத்தில் வைதிக அன்பர்கள் பலர் உள்ளனர். அவர்கள் பணத்தில் அதிக ஆசை கொண்டவர்கள் இல்லை. யாத்ரீ கர்களுக்கு உதவுவதை ஒரு கடமையாகக் கொண்டு அவர்களில் பலர் சேவை | செய்கிறார்கள். அவர்களது உதவியுடன் ( இராமேசுவரத்திலிருந்து அனுபவம் வாய்ந்த 6 ஒரு டிரைவருடன் கூடிய ஒரு ஜீப் 4 வாகனத்தில் தனுஷ்கோடிக்குச் சென்று கிரமப்படி வழிபாடுகளை முடித்துக் கொண்டு இராமேசுவரம் திரும்பலாம்.
அருள் ஒளி .
- 40 -

தனுஷ்கோடியில் சாஸ்திரப்படி மகா சங்கல்பம் செய்து, கடலில் விதிப்படி நீராடி, பிறகு மணலினால் லிங்கம் செய்து, பூஜை நடத்தி, இறுதியில் அங்கிருந்து மணலைத் தூய்மையாக ஒரு வஸ்தி ரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மணலைத்தான் திருவேணியில் கரைக்க வேண்டும்.
இராமேசுவரத்தில் பிதிரர் (முன்னோர்) - கடன்களைச் செய்யவும், சுவாமி தரிசனம் முறைப்படி செய்யவும் அந்த வைதிகர் களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சங்கர மண்டபம் - இராமேசுவரத்தில் அக்னி தீர்த்தத்தின் கரையில் ஸ்ரீ சங்கர மண்டபம் நிர்மா கணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ காஞ்சி காம் கோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய ஈவாமிகள் அவர்களது ஆணைப்படி இது Tழுப்பபட்டுள்ளது.
ITம்
இராமேசுவரம் செல்பவர்கள் ஸ்ரீ சங்கர மண்டபத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.
இந்த மண்டபம் சுமார் ஐம்பது அடி உயரம் கொண்டது. மூலப்பகுதியான மேல் ளத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருவுருவமும், இரு பக்கங்களிலும் அவரது சிறப்பான த்மபாதர், சுரேசுவரர், ஹஸ்தமலகர், தாடகாசாரியர் ஆகியவர்களின் திருவுரு உங்களும் வெள்ளைச் சலவைக் கற்களால்
மைக்கப்பட்டுள்ளன.
அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ழுந்ததும் ஸ்ரீ ஆதிசங்கரரையும், அவரது
தை மாத மலர் - 2014

Page 43
நான்கு சீடர்களையும் தரிசிக்கும் பாக்கியம் இங்கே கிடைக்கிறது.
இந்த மண்டபத்தின் நடுத்தளம், அடித்தளம் ஆகியவற்றைச் சுற்றி மேலும் கீழுமாக ஒவ்வொன்றிலும் 14 என்ற அளவில் 28 சிற்பங்கள் உள்ளன. புராணங்களில் இடம்பெறும் குரு - சிஷ்ய உபதேச வரலாறுகளை இந்தச் சிற்பங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அடித்தளத்தில் சந்நிதி கடலை நோக்கி அமைந்திருக்கிறது. அதில் தட்சிணாமூர்த்தி யந்திரமும், ருநீ கிருஷ்ண விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுக்குத் தினசரி அபிஷேகம், பூஜையும் நடைபெறுகின்றன.
மேல் தளத்தில் எழுப்பப்பட்டுள்ள முரீ ஆதிசங்கரருக்கு வருடத்திற்கு ஒரு முறை, அவரது ஜெயந்தி தினத்தன்று அபிஷேக பூஜைகள் சிறப்பாக நடக்கின்றன.
துவாதச மண்டபம்
சங்கர மண்டபத்திற்கு எதிரில், பிரகாரத்தில் ஆஞ்சநேயர் விக்கிரகம் நிறுவப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர் சந்நிதிக்குப் பின்புறம் துவாதச மண்டபம் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த மண்டபத்தில் இந்தியாவில் உள் துவாதச (பன்னிரண்டு) ஜோதிர் லிங்கங் களும் மிக அழகாக அமைக்கப்பட்டி ருக்கின்றன.
(12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று காசியிலும் மற்றொன்று இராமேசு வரத்திலும் உள்ளன. என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்)
அருள் ஒளி - 4

இராமேசுவரம்ருரீ சங்கரர் மண்டபத்தில் 12 ஜோதிர் லிங்கங்களும் தனிச் சந்நிதி களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அந்தந்த ஸ்தலங்களில் காணப்படும் லிங்கங்களைப் போன்ற வடிவங்களிலேயே இவை நிறுவப்பெற்றிருப்பதும், அந்தந்த ஊர்களில் உள்ள ஆலய கோபுரங்களைப் போலவே இந்தச் சந்நிதிகளில் கோபுரங் களும் சிறிய அளவில் அமைக்கப்பட்டி ருப்பதும் குறிப்பிடவேண்டிய செய்திகள்
இராமேசுவரம் முரீ சங்கர மண்டபத்தில் இந்த துவாதச மண்டபத்தை நின்று நிதானமாகத் தரிசிக்க வேண்டும். பன்னி ரண்டு ஜோதி லிங்கங்களையும் ஒரு சேர தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
துளசிதாசரின் மொழி
துவாதச மண்டபத்தின் பின்பகுதி மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சைதன்ய மகாபிரபு பஜனை செய்யும் காட்சியையும் துளசிதாசர் இராமாயண காவியத்தை எழுதுகின்ற காட்சியையும் இங்கு சுவற்றில் கண்டு மகிழலாம்.
"யார் ஒருவர் காசி தலத்திலிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து, இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ள ருநீ இராம நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வைக்கின்றாரோ 36Jsi (8LDITL'FLib பெறுவார். அவருக்கு மறுபிறவி கிடை யாது" என்று துளசிதாசர் இராமா யணத்தில் உள்ள ஒரு சுலோகம் இங்கு எழுதப்பட்டிருக்கிறது.
சங்கர மண்டபத்திற்கும், பஜனை மண்டபத்திற்கும் நடுவில் குரு பாதுகை
1 - தை மாத மலர் = 2O4

Page 44
மண்டபம் இருக்கிறது.இங்கு யாத்ரீகர்கள் எல்லோரும் ருரீ ஆதிசங்கரரின் பாதுகை களை வழிபடலாம்.
இங்கு சோடச கணபதி தனிக்கோயில், வாக்குக்கு இறைவியான சரசுவதி தேவியின் ஆலயம் உள்ளன.
சங்கரமடத்தின் பக்கத்தில் மணி மண் டபம் அமைந்திருக்கிறது. நான்கு கால் மண்டபத்தின் உச்சியில் ஆலய மணி உள்ளது. காஞ்சி காமகோடி பீடம் ஜனத் குரு ருநீ சங்கராசாரிய சுவாமிகள் அருளைப் பெறுவதற்கு, இந்த மணி மண்டபத்து மணியை அடித்து, ஒலி எழுப்பி பிரார்த் தனை செய்து கொள்ளலாம்.
அபிராமிப்ப
3 O-O 1—2O14 6ốlu JITI LÎìLJ. 3.OO LD600fì GiG39-L |}6.
3.30 மணி அபிராமிப்பட்டர் அந்தாதி ஒதுதல்
* 4.30 மணி - பூரணை நிலவுத்
பட்டருக்கு அம்ப
* 5.30 மணி - அம்பாளுடன் அ
* 700 மணி - பிரசாதம் வழங்கு
அருள் ஒளி - 42 -

இராமேசுவர யாத்திரையின் ஒரு முக்கிய அம்சமாக யாத்ரீகர்கள் எல்லோரும் ருநீ சங்கர மண்டபம் சென்று தரிசனம் செய்து மன அமைதி பெறலாம்.
காசி யாத்திரை என்ற பெரும் யாத்திரையின் முதற்பகுதி இராமேசுவரம் யாத்திரை. இங்கு விவரித்தவாறு இரா மேசுவர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும்.
காசி யாத்திரையின் இரண்டாவது பகுதியை அடுத்தபடியாக ஆரம்பிக்க வேண்டும்.
ட்டர் விழா
ழக்கிழமை
D3F
உறியில் அமர்ந்து அபிராமி
தரிசனம் ள் காட்சி கொடுதுதல்.
ராமிப்பட்டர் திருவீதியுலா,
தல்
தை மாத மலர் = 2O4

Page 45
இறை வ முக்கிய இ.
அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப் படுபவை சங்கநிதி, பதுமநிதி என்னும் பெருநிதிகள், பல கோடிக்கணக்கான பொன் மதிப்புப் பெற்றவை. சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியோடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
இந்தப் பாடல் திருநாவுக்கரசர் பாடியது. "சங்கநிதி பதுமநிதியும் தந்து, நிலம் மட்டு மன்றி வான் முழுவதையும் ஆட்சி புரியத் தந்தாலும், அந்த தந்தவர்கள் “சிவனை ஒரே. தேவன், முடிவான தேவன் என்ற கொள்கை யில் இல்லாதவராக இருந்தால், மங்குபவர் களாகிய அவர்கள் கொடுக்கும் அந்த செல் வங்களை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அங்கமெல்லாம் குறைந்து அழுகிய நிலையில், முற்றிய தொழு நோயால் பீடிக்கப்பட்டவராகவும், மாட்டை உரித்து, உண்டு உழலும் புலையராக இருந்தாலும் கூட அவர்கள் கங்கையை அணிந்த எம்பிரா னார்க்கு அன்பராக இருந்தால் அவர்களே நாம் வணங்கும் கடவுளர்.
இடம்புரி வலம்புரி தன்மைகளை நாம் இயற்கையில் பல பொருட்களில் பார்க்க லாம். மலர்களில் இந்த இருவித தன்மை களும் உண்டு. அவற்றின் இதழ்களின்
அருள் ஒளி

ழிபாட்டில் சங்கு பம் பெறுவது ஏன்?
சென்ற இதழின் தொடர்ச்சி......
சுழற்சி இந்தவிதமாக இருக்கும். இலைகள் விடுவதிலும் கிளைகள் விடுவதிலும்கூட இதைக் காணலாம்.
கோமடி சங்கின் சிறப்புத் தெரியுமா?
ஒரு வலம்புரிச் சங்கு, கோடி இடம்புரிச் சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரிச் சங்குகளுக்குச் சமமானதாகக் கருதப்படும் கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடி யிலிருந்து நேரடியாகச் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். (கோ - பசு, மடி - பால் சுரக்குமிடம்) இந்த சங்கைப் பார்க்க வேண்டுமா? மேல்மருவத்தூர் அருகிலுள்ள பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். இங்குள்ள சிவலிங்கத்திற்கு கோமடி சங்கினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இந்த அபிஷேகம் நடக்கும்போது, அமிர்த வர்ஷினி ராகத்தில் பாட்டுப் பாடுகின்றனர். அம்பாளே இந்த அபிஷேகத்தை, சிவ னுக்குச் செய்வதாக ஐதீகம். தெட்சிணா மூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நால்வரும் நந்திவடிவில் சிவனின் திருமணக் காட்சியை இங்கிருந்து கண்டனர்.
ஸ்ரீமந் நாராயணர் ஒருகையில் வலம்புரிச்சங்கும் மறுகையில் சங்கரமும். தரித்தபடி காட்சி அளிப்பார்.
13 -
தை மாத மலர் - 2014

Page 46
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடையும் போது அமிர்தம் மகாலஷ்மி, வலம்புரிச்சங்கு, காமதேனு இப்படி பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதில் மகாவிஷ்ணு மகாலவுமியைத் தனது இருதயத்திலும், கையில் சங்கையும் வைத்துக்கொண்டார். காத்தல் கடவுளாக விளங்கும் மகாவிஷ்ணு மகாபாரத யுத்தம் நடைபெற ஆரம்பிக்கும்போது அர்ச்சுன னுக்குத் தேரோட்டியாகவும் வழிகாட்டி யாகவும் இருந்தார். கீதா உபதேசம் செய்து நிலைகுலையாது அர்ச்சுனனை போராட்டம் பற்றி வழிகாட்டினார். பாஞ்ச சன்னியம் என அழைக்கப்பட்ட தனது கையில் உள்ள வலம்புரிச் சங்கை வாயில் வைத்து ஊதி போர் ஆரம்பிக்கப்படு வதைத் தெரிவித்தார்.
பிறப்புக்கும் இறப்புக்கும் சங்கு முக்கிய இடம் வகிக்கிறது. தீய சக்திகள் இதனால் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் அரண்மனைகளில் அரசர் விழாக்களில் இச்சங்கு முக்கிய இடம் வகிக்கப்படுகிறது. விழா ஆரம்பிக்கும் முன் போருக்குத் தயாராகும்போது சங்கினை வாயில் வைத்து ஊதி ஒலிக்க வைப் பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும்சங்காக குழந்தைகளுக்கு பால்,
ந
அருள் ஒளி - 44 -
 
 

காரோசனை, கஸ்தூரி பருக்குவதற்கும் Hந்நாளில் பயன்படுத்தினர்.
மகாலஷமிக்கு ஒப்பான சங்கு ங் கெல்லாம் இருக்கிறதோ அங்கு ஷமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக பலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிச் ங்கில் நீர் விட்டு கும் பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால் புஷ்பங்களினால் ஜை ச்ெயது ஆராதனை செய்து அதன் ரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலை ளில் அபிஷேசிக்கும்போது அத்தீர்த்தம் காபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான ங்காக வலம்புரிச்சங்கு இடம்பெறும். H62(3LT5 UEF5 நூற்றியெட்டு எனவும், ஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தெட்டு எனவும் ங்குகள் இடம்புரிச்சங்குகளில் அடுக்கி )வக்கப்பட்டு பூஜித்த பின் சங்காபி ஷகம் செய்யப்படுகிறது. சங்குவால் பிஷேசிக்கும்போது மகா புண்ணியம் டைக்கப் பெறுகிறது. அதில் பிரதனா ங்காக விளங்கும் வலம்புரி தீர்த்தம் Tவங்களைப் போக்கி தீவினை களைந்து ன்மை அளிக்கிறது.
அருமையானதும், பெருமையானதும் க விளங்கும் சங்குகள் ஆழ்கடலில் ருந்து பெறப்படும். இதில் மிக அருமை ான வலம்புரி கிடைப்பது அரிதாகும். நவி பாகவத்தில் வலம்புரிச் சங்க பற்றி தையொன்று உண்டு. அக்காலத்தில் ருஷ்ண பகவானுக்கு மகனாக அவர் கத்தில் சுதர்மன் அவதரித்தார். சுதர்மன் தையால் ஏற்பட்ட சாபத்தின் காரண க சங்ககடனாக அசுரகுலத்தில் பிறந்து ன்பு சாபம் தீர பல தவங்கள் இயற்றி கங்கள் செய்து யாராலும் அழியாத
தை மாத மலர் = 2O4

Page 47
வரம் பெற்றதோடு, மந்திரகவசமும் கிடைக்கப்பெற்றனர். மூன்று யுகங்களிலும், கிருதயுகத்தில் வேதவதி, திரேதாயுகத்தில் சீதை, துவாபர யுகத்தில் பாஞ்சாலியான திரெளபதியாகப் பிறந்து திரிகாயினி எனப் பெயர் பெற்றுத் திகழ்ந்தாள் வேதவதி. இவள் லஸ்மியின் அம்சமாகையால் இலஸ்மியிடமே சேர்ந்தாள்.
லஸ்மி, சரஸ்வதி, கங்கை மூவருக் குள்ளும் ஏற்பட்ட கலகலப்பு பகையாக மாறி அவர்களே சாபமிட்டனர். அதன் விளைவே லஸ்மி அம்சமான துளசி தருமத்வஜனின் புத்திரி துளசியாக அவதரித்தாள். சாபங்கள் காரணமாக மானிடப்பிறவியாகிய சங்க கடனை மணம்புரிந்து பதிவிரதா தர்மத்தைக் கடைப்பிடித்து உலகம் போற்ற வாழ்ந்து வரும்போது சங்ககடன் மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி ஆட்சி புரிய நினைத்தான்.
அசுரருக்கும் தேவருக்கும் எப்போதும் தீராதபகை. அது போரில் முடிவுறுவது வழக்கம். அசுரனாகப் பிறந்து மூவுலகங் களையும் ஆட்டிவைத்து தேவலோகத்தைத் தன் கட்டுக்குள் கொண்டுவர சங்ககடன் போர் செய்தான். அசுரப் படைகளை ஏவி தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான். அதனால் தேவர்கள் அனைவரும் திரு மாலிடம் முறையிட "பிரம்மனிடம் பல வரங்கள் பெற்று அவன் அழியாது உள்ளான். அவனை சிவபெருமானால் மட்டுமே அழிக்க முடியும் அதிலும் மந்திரக்கவசமும் அவன் மனைவியின் பதிவிரதத் தன்மையும் இழக்கப்டாது சங்ககடனுடன் இருக்கும் வரை அவனுக்கு அழிவு கிடையாது. ஆகையால் அரிய சக்தியுள்ள சிவனிடம் தஞ்சம் அடையுங்கள்” என்று அவர் கூறியதும் தேவர்கள் சிவனிடம் முறையிட
அருள் ஒளி - 4

தேவர்கள் புடைசூழ சென்று சங்கரரும் சங்ககடனுக்கு தூது அனுப்பி தேவர்களுக்கு உரிய தேவலோகத்தின் மீது ஆசைப் படாதே என்றும் எதுவும் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டால் அழிவு நிச்சயம் என்று சமாதானமாகப் போகும்படி கூறினார். அவன் தலையில் கனமும் மனதில் வஞ்சமும் சிவனாரையே எதிர்த்துப் பேசினான். தேவர்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும். அசுரர் அழிந்து பட்டுப்போக வேண்டும் என நினைப்பது சரியா? என்றும் தேவ சபையை வென்று அரசாள்வேன் எனக்கூறி நெடுங்காலம் போரிட்டுக் கொண்டே இருந்தான்.
ஆக அவனை வெல்லுவது எளிதல்ல என நினைத்து, அவனது மந்திரக்க வசத்தைத் தந்திரமாக யாசித்து பெற்றுக் கொண்டும் சங்ககடனின் மனைவி துளசி யிடம் விஷ்ணு சென்று அவள் கணவனாக மாறி அவள் பதிவிரதத் தன்மையை இழக்கச் செய்யவும் கடும் போர் புரிந்த சங்ககடனை சிவபிரான் தன் சூலா யுதத்தால் பொடிப் பொடியாக்கினார். உயிர் இழந்த சங்ககடன் வைகுந்தம் சென்று மோட்சம் அடைந்தான். சங்க சூடனின் உடல் சாம்பலாகியது. எலும்புகள் பூவுலகில் சங்குகளாகி ஆழ்கடலில் பிறப் பெடுத்தன. அவை தேவார்ச்சனைக்குப் பயன்பட்டன. சங்கு தீர்த்தம் பூசைக்கு உகந்ததாய், மகாவிஸ்ணு, லஷ்மி உறை கின்ற பொருளாய் செல்வம் செழிக்க ஐஸ்வர்யம் கிடைக்க பூஜித்ததும் சங்கு தீர்த்தம் எம்மைப் புனிதம் அடைய வைக்கிறது. இந்நீரைத் தீர்த்தமாக அருந்த நோய்கள் நீங்கி ஆனந்தம் பெறலாம். சங்கின் மகத்தவத்தை உணர்ந்து என்றும் பூஜித்து அதன் பலனை அடைவோம்.
45 - தை மாத மலர் - 2014

Page 48
குதிகால்நோ/குதி 6
இது தற்போது சாதாரணமாக பெரும் பாலான மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையாக உள்ளது. அதாவது குதிக்கால் பகுதியில் காணப்படும் எலும்பு, தசைகளில் ஏற்படும் வேதனையினையே குதி வாதம் எனக் குறிப்பிடப்படும்.
மனிதனின் காலில் (foot) காணப்படும் எலும்புகளில் பெரிய எலும்பு குதி எலும்பு (Calcaneus) ஆகும். இதுவே உடல் நிறையைத் தாங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. -
இதன் அறிகுறிகளாக 1. நோ அனது வழமையாகப் படிப்படி
யாகவே குதிக்காலில் ஏற்படும். 2. ஒய்வாக இருந்த பின் நோ காணப்
LIGBLb. (Post static dyskinesia) உ-ம் : காலையில் நித்திரைவிட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, நீண்ட நேரம் இருந்தபின் எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, 3. நடக்கத் தொடங்கிய பின் நோவானது
படிப்படியாகக் குறைவடையும்.
காரணங்கள் 1. நீண்டநேரம் நிற்றல், நீண்ட தூரம் நடத்தல், ஓடுதல் என்பவற்றால் gs) LILGOTLb. 2. பெண்கள் குதி உயர்ந்த பாதணி
களைப் பயன்படுத்துவதால் 3. குதிக்காலானது கடினமாதல், குதிக் காலில் ஏற்படும் பித்த வெடிப்புகள்.
அருள் ஒளி
து
46

bJT85b (Heel pain)
Dr. S. டிசிஜந்தி அவர்கள்
ர்க்காதேவி ஆயுள்வேத வைத்தியசாலை,
தெல்லிப்பழை,
இவை பொதுவாகக் கடினமான தரைகளில் பாதணி இன்றி நடத்தல், கடினமான பாதணிகளின் அழுத்தத் தினால் ஏற்படும். குதிக்கால் எலும் புத் தசைகளில் ஏற்படும் தாபிதம் (Inflamation) - plantar fascitis) குதிக்காலிற்கு வரும் நரம்பில் பாதிப்பு (Tarsa tunnel syndrome) குதிக்கால் தசை நாரில் ஏற்படும் தாபிதம் (Degeneralive tendinopathy) வேறு நோய் நிலைகளினைத் தொடர்ந்தும் ஏற்படலாம். gD -Lb : GF6DC8UITG5lb (Diabeties)
elp' (B 6JTg5Lb (Rheeumasoid arthratis)
இதிலிருந்து விருபருவதற்குரிய அறிவுரைகள்
1.
நீண்ட நேரம் நிற்றல், நடத்தல், ஓடுதல் என்பவற்றைத் தவிர்த்தல் / குறைத்தல், கடினத் தரைகளில் பாதணி இன்றி நடத்தலைத் தவிர்த்தல். சரியான பாதணிகளை (குதி குறைந்த, மென்மையான இறப்பர், தோலினா லான பாதணிகள்) அணிதல். விளை யாடுபவர்கள் பயிற்சியாளர்களினால் கூறப்படும் பாதணிகளை (shoes) பயன்படுத்தல். உடல்பருனைக் குறைத்தல். போதியளவு ஓய்வினை கால்களிற்கு வழங்குதல். அத்துடன் முழங்காலின் diptóOT 5603356061T (calf muscle) அழுத்தி விடுதல்.
தை மாத மலர் = 2O4

Page 49
5. குதிக்காலினை புளியமிலை, அவித்த இளம் சூடான நீரிலோ அல்லது இளம் கடான நீரிலோ சிறிதளவு கறியுப்பு இட்டு 10-15 நிமிடங்கள் ஒரே சீரான கட்டில் அமிழ்த்தி வைத்திருந்து பின்னர் ஈரத்தன்மை அகற்றி நல் லெண்ணெய் / ஆமணக்கெண்ணெய் / இலுப்பெண்ணெய் பூசிவர நோ வானது குறைவடையும். 6. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது நன்றாகக் கால்களைக் கழுவுதல் இன்றியமையாதது. 7. காலில் வெடிப்பு காணப்படின் அதனை மென்மையான தூரிகையினால் (Bresh) கழுவி காலின் சுத்தம் பேணப்படுதல் வேண்டும். 8. கடினமான தரைகளில் குதிக் காலினைத் தேய்த்துக் கழுவுதலைத் தவிர்த்தல். 9. பிற நோய்களின் காரணமாக ஏற்படின் அந்நோய்களிற்கான சிகிச்சைகளைச்
6 DGIGO
ஒருவர் மெளனமாக இருப்பது மி தான். ஆனால், வாயை மட்டும் மூ கொண்டிருக்குமானால், அது மெளன வி இல்லை.
அருள் ஒளி - 4

சிறந்த முறையில் எடுத்து அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். eg - சலரோகம். 10. செங்கட்டியினைச் சூடாக்கி அதன் | G|pඨ 7 எருக்கம் இலைகளை வைத்து அதன் மேல் காலினை சில நிமிடம் வைத்திருத்தல் (5 - 10 நிமிடங்கள்) இதனைச் செய்யும்போது சூடானது மிக அவதானமாக இருத்தல் வேண்டும். சூடு அதிகரிக்கின் குதிக்கால் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும்
குதிக்கால் நோ உருவாகி ஆரம்பத்தில் மேற்படி முறைகளைக் கைக்கொண்டு இதிலிருந்து விடுபட முடியும். அவ்வாறு இல்லாது குதிக்கால் நோவைக் கவனத்தில் எடுக்காதுவிடின் இந்நோவின் தாக்கமானது அதிகரிக்கும்.
இவற்றிற்கு மேலாக நோவானது தீராதவிடத்து வைத்திய ஆலோசனை யைப் பெற்றுக் கொள்வது இன்றியமை யாதது.
விரதம்
கவும் நல்லது. அது ஒரு நல்ல விரதம் ழக்கொண்டு மனம் அலை பாய்ந்து பிரதம் ஆகாது. அதனால் எந்தப் பயனும்
- பகவான் முநீரமண மகரிஷி
7 - தை மாத மலர் - 2O4

Page 50
குற்றமும் கு
அனர்பான பிள்ளைகளே!
அன்பு வாழ்த்து! பொங்கல் திருநாள், பட்டிப்பொங்கல எல்லாம் இனிமையாய் இருந்தன அல்லவா! இதோ! ஒரு சுவையான கதையும் கேளுங்கள்.
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை உடையவர் நம் சிவபெருமானி என்றுபாடுகிறார் சுந்தரர். அதெப்படி? குற்றம் குணமாகும். என்பது சரியா என்று விளங்கவில்லைத்தானே! அதற்கு விளக்கம் பல சுந்தரர் கதையிலேயே உணர்டு. இதுவும் ஒரு கதைதான். இது குபேரனுடைய கதை.
வடக்குத் திசைக்குக் காவல் கடவுள் குபேரனர். அவனி தானி சங்கநிதி, பதுமநிதி எல்லாம் உடைய தனபதி, சிவபிரானுக்கு நணர்பனர் கூட. காசி காணர்டத்தில் உள்ள கதை இது. முன்னொரு காலத்தில் காம்பீலி என்ற நாட்டில் வேள்வி தத்தனி என்று ஒரு பிராமணர் இருந்தார். நன்கு வேதம் படித்தவர். செல்வாக்கும், செல்வமும் அதிகம் பெற்றவர். அவருக்குக் குணநிதி என்ற பெயரில் ஒரு மகன். பெயரில்தான் குணநிதி, செயலில் குணமிலியாகப் L IGNO பாவங்களைச் செய்து, ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டான். தகப்பனுக்குத் தெரியாமல் சொத்துக்களை வீணாக் கினான். அரசனிடத்தில் தங்கியிருந்த தகப்பனுக்குத் தெரியாமல் பல பாவங்களைச் செய்தான். தாயார் இதை அறிந்தும் கூட மகனிடம் வைத்த
அருள் ஒளி - 48
 

னமாகும்
சகோதரி யதீஸ்வரி அவர்கள்
பாசத்தால் மெளனமாக இருந்து விட்டாள். இந்தக் கொடுமைகளை அறிந்த வேள்வி தத்தனாகிய தகப்பன், மகனையும், மனைவியும் துறந்து, பொருள்களைத் தானம் செய்துவிட்டு எங்கேயோ காணாமற் போய்விட்டார். தாய் வருத்தத்தில் இறந்து போனாள். குணநிதியும், அவனி மனைவியும் வறுமையில் வாடினர். ஒரு சிவராத்திரி தினத்தில் பக்தர் கூட்டத்துடன் சிவன் கோவிலுக்குப் போன குணநிதி, கோயிலிலேயே திருடத் துணிந்தான். நல்லவனி போல நடித்துச் சில தொணர்டுகள் செய்தான். விளக்கு களைக் கவனித்து, நெய்யூற்றி, திரிதூண்டி ஒளிவீசச் செய்தான். சமயம் பார்த்துத் திரவியங்கள் சிலவற்றைத் திருடிக்கொணர்டு ஓடும்போது சிலர் கண்டுபிடித்துக் கொண்டனர். கோபங் கொணர்ட சிலர் நன்றாக அடித்து உதைத்தனர். மிகவும் இளைத்திருந்த குணநிதி தாங்கமுடியாமல் இறந்து போனானர். யமதூதர்கள் அவனர் உயிரைக் கொணர்டுபோக வந்தபோது சிவகணங்கள் தடுத்தன. சிவராத் திரியில், சிவசந்நிதியில் விளக்கு எரித்த புணர்ணியத்தால் கலிங்க நாட்டு அரசன் அரந்தமனி என்பவனுடைய செல்வ மகனாகப் பிறப்பெடுத்தான் குணநிதி.
தமனி என்ற பெயரைப் பெற்று வளர்ந்து பூர்வ புணர்ணியத்தால சிவபெருமானை நோக்கித் தவம் செய்தானர். அவனுக்கு இரங்கிய பெருமான உமையவளோடு அவனர்
தை மாத மலர் = 2O4

Page 51
முன் தோன்றினார். தவத்தால் மெலிந்து கண்ணொளிமங்கியிருந்த அவனுக்குத் தம்மை விளக்கமாக்கக் காணக் கண்களுக்கு ஒளிமிகக் கொடுத்தார். பேராவலுடன் பெருமனைத் தரிசித்த தமன் அருகில் நின்ற அன்னை உமையவளையும் தரிசித்தான். பழம் பிறப்பு வாசனையால் ஒரு சாதாரணப் பெண்ணின் அழகை இரசிப்பது போல் அம்பிகையின் அழகை இரசித்தான். கோபம் கொண்ட அன்னை, அவன் கண்கள் குருடாகிவிடும்படி செய்து
விட்டாள்!
கண்ணிழந்த தமன் தன் பிழையை உணர்ந்து அம்மை அப்பரிடம் மன்னிப்புக் கேட்டான். மறுபடி பல்லாண்டு அருந்தவம் செய்தான்.
சிவபூமி கன தானங்களில் சிறந்த தான வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங் இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்
தொடர்பு
கலாநிதி ஆறு. திருமுருகன் 021 : 222 6550
அருள் ஒளி

தவமுனிவர்கள் பலரை விசாரித்து அறிந்து பிராயச் சித்தங்களையும் செய்தான். சிவபிரான் கருணை கொண்டு, மீண்டும் காட்சி தந்தார். ஒரு கண்ணில் பார்வை வைத்து, மறு கண்ணைத் தங்கக் கண்ணாக்கி
விட்டார்.
திருத்தண்டிகைபுரம் என்ற சிவ தலத்தில் சனத்குமார ஈசன் என்ற திருப்பெயருடன் வீற்றிருக்கும் சிவ பிரானை பூசித்து வணங்கி, அவர் அருளால் எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான குபேர பதவி, வடதிசைக் காவல் பதவி, சிவனுடைய தோழனாக இருக்கும் தகுதி எல்லாம் பெற்றான் தமன். குற்றம் குணமானது எப்படி என்று இப்போ புரிகிறதல்லவா?
ன்தானசபை
மாக கண் தானத்தைச் செய்ய முன் குப் பின் பார்வையற்றிருக்கும் பகள் உதவுங்கள். வாழும் போதே
புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr ச. குகதாசன் 021 : 222 3645
49 -
தை மாத மலர் - 2014

Page 52
அருள் ஒளி தகவ
கீரிமலை நகுலேஸ்வரம்
மஹோற்சவமும் மஹாசிவராத்திரியும் ஆரம்பம்-14-02-2014 நிறைவு 28-02-2014 பல வருடங்களுக்குப்பின் கொடி யேற்றித்திருவிழா நடைபெறத்திருவருள் கூடியுள்ளது.
14-02-2014 கொடியேற்றம் 27-02-2014 தேர்த்திருவிழா 28-02-2014 கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம்
ஊரெழு மடத்துவாசல் வீரகத்தி விநாயகர் கோவில்
ஆலயம் புனருத்தாரணம் செய்யப் பட்டு 22-01-2014 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரதமகுரு வேதாகம மாணி சிவஸ்ரீ பால வைத்தியநாதக் குருக்கள்.
உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் மகா கும்பாபிஷேகம்
06-02-2014 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அன்பின் ஆற்றல் (ஆன்மீக அருளுரை)
இந்தியா சேலத்திலிருந்து வருகை தரும் சுவாமி கிருஷ்ணாத்மானந்தா (சின்மயா மிஷன்) அவர்களின் ஆன்மிக வுரை 06, 07, 08, 09 மாசி 2014.
அருள் ஒளி
- 50 -

பல் களஞ்சியம்
இடம் : இல. 09, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர்.
மாத்தளை முத்துமாரி அம்மன் மகோற்சவம் - இலங்காபுரியின் மத்திய ஸ்தானத் திலுள்ள இத் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் 24-01-2014 அன்று ஆரம்பமாகி 17-02-2014 நிறைவடைய வுள்ளது.
காரைநகரில் பாலஸ்தாபன தம்பாபிஷேகம்
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரியம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் 10-02-2014 அன்று நடைபெறவுள்ளது.
தெல்லிப்பழை காசி விநாயகர் கோவில் மகாகும்பாபிஷேகம்
(மிகப்பழமை வாய்ந்த தெல்லிப்பழை வீணாக்கடவை காசிவிநாயகர் தேவஸ் தானத்தின் மகா கும்பாபிஷேகம்19-03-2014 புதன்கிழமைகாலை9.42 தொடக்கம் 10.49 வரையுள்ள சுப வேளையில் நடை பெறவுள்ளது. ஆலயத்தில் பல புதிய திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு மகா தம்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறங்காவலர் கலாநிதி. முருகையாக முரளிதரன் அறிவித்துள்ளார்.
தை மாத மலர் - 2014

Page 53
துர்க்காதேவி
எங்கள் தேவஸ்தானத்தால் நிர்வு மகளிர் இல்லப் பிள்ளைகளின் எதிர். ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
• தெல்லிப்பழை கிழக்கில் அமரர் பொன் உத்தியோகத்தர்) குடும்பம் அம்பளிப்ப வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேல ஒவ்வொரு வீடும் இரு அறைகள், வ மலசலகூட வசதி, நீர்க்குழாய் வச ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் பதி உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டுத் திட்டத்துக்கு பொதுமக் தங்கள் குடும்பத்தின் சார்பாக இப்புண்ணிய கைங்கரியத்துக்கு உ உதவ விரும்புபவர்கள் தேவஸ்தான தங்கள் அன்பளிப்பை வழங்கலாம்
வங்கி விபரம்
• துர்க்காபுரம் மகளிர் இல்லம், தென் இலங்கை வங்கி, சுன்னாகம். வர்த்தகவங்கி, யாழ்ப்பாணம்.
கலாநிதி ஆறு
தை
திரு. நா. தவநாதன் திரு. மு. அருளையா இணைச் செயலாளர்கள்
நிர்வாகி ஸ்ரீ துர்க்காதே
தெல்ல
அருள் ஒளி

வீட்டுத்திட்டம்
கிக்கப்படும் தெல்லிப்பழை, துர்க்காபுரம், கால நன்மை கருதி இவ்வீட்டுத்திட்டம்
னையா (இளைப்பாறிய சுங்கத் திணைக்கள Tக வழங்கிய நிலத்தில் முதற்கட்டமாக ஆறு மலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரவேற்பு அறை, சமையல் அறை, நவீன தியுடன் அமைக்கப்படவுள்ளது.
னைந்து லட்சம் வரை செலவாகும் என
கள் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். பும், தங்கள் குடும்ப நினைவாகவும்
தவலாம். எ அலுவலகத்தில், அல்லது வங்கி மூலம்
ஸ்லிப்பழை. கணக்கு இலக்கம்
- 07471132
கணக்கு இலக்கம்
- 1060012977
. திருமுருகன் லவர்
திரு. அ. சண்முகநாதன்
பொருளாளர் திரு. சு. ஏமூர்நாயகம்
உப- பொருளாளர் 5 சபை, வி தேவஸ்தானம் ஒப்பழை.
51 -
தை மாத மலர் - 2014

Page 54
துர்க்காதேவி குடியிரு அடிக்கல்நாட்டு வைபவம் O2-O2 செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆ
அடிக்கல்நாட்டி ஆர
அருள் ஒளி ཀྱང་ཡི།།
 
 

ப்பு வீட்டுத்திட்டம் -2014 அன்று நடைபெற்றது. நறு. திருமுருகன் அவர்கள்
பித்து வைத்தார்
மார்கழி மாத மலர் - 2O4

Page 55
அன்னை சிவத்தமிழ்ச்செல்வி
பிறந்தநாள் அறக்:ெ
 
 

தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் காடை விழா - 07-01-2014
వ్లో
ܐܠ ܦܝ ܢ
விழாவில் விருந்தினர் அழைத்துவரப்படுகிறார்கள்.
is as
錢
ர் அறக்கொடை விழா 07-01-2014

Page 56
ஸ்ரீ துர்க்காதேவி | அபிராமிப்பட்டர் விழா
Aாயகராவா ---11

தேவஸ்தானத்தில் |-- 30-01-2014