கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2014.02

Page 1
உருக 1 Ci
1a
*ெ_Aாகூர்
3!": 4 .
பாட்E-1
- -நானா
*கா-
மாத்தளை ஸ்ரீ முத்துமாரி : விஜய வருடம்
அகில இலங்கை இந்து மாசி
Religious Journal of AI

இந்து ஒளி
HINDU OLI
தீபம் - 18 சுடர் - 02
அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்
மாமன்ற ஆன்மீக இதழ் 1 Ceylon Hindu Congress
February
2014

Page 2
இந்து ஒளி (தீபம் 18 சுடர் 1) 22.01.2014 அ
சிறப்பிதழாக வெ
மாமன்றத் தலைவர் கெளரவிக்கப்படுகின்றார்.
ஆன்மீகச் சுடரின் உரை, அருகில் செஞ்சொற்செல்வர்
ஆறு. திருமுருகனும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் க. சண்முகநாதனும்
செஞ்சொற்செல்வரின் உரை
க
திரு. புருடு
மாமன்றத் தலைமையகத்தி
நீத்தார் நினைவு 6
ச அதிபாங் தியானது
சடு ப
ALL CEYLON HINDE
ஆன்மீகச் சுடரின் உரை. அருகில் நீத்தார் நினைவு
படங்கள் |
மேடையில் கலாநிதி மு. கதிர்காமநாதன்,
திரு. வே. கந்தசாமி, திரு வி. கயிலாசபிள்ளை, திரு க. நீலகண்டன்,
திரு. மா. தவயோகராஜா

பன்று நடந்த ஊரெழு வீரகத்தி விநாயகர் ஆலய பளியிடப்பட்டபோது
திரு. திருமதி கயிலாசபிள்ளை தம்பதியினர் கெளரவிக்கப்படுகின்றனர்.
டிட சிற்பக்கலை வல்லுனர் ஷோத்மன் கெளரவிக்கப்படுகின்றார்.
ஊரெழு அ. கனகசூரியர் கௌரவிக்கப்படுகின்றார்.
தில் 2.2.2014 அன்று நடந்த
வைபவத்தன் போது
ஃலங்கை இந்து மாமன்றம்
அதறாம்தம் 9 காளர் உத்த
காலந் தாங்க
ON HINDU CONGRESS சகா தி க பா
நீத்தார் நினைவு வைபவத்தின்போது
சபையோர்
சக்தி இல்ல மாணவி ஒருவரின் நடனம்

Page 3
சிவமயம்
தீபம் - 18) இந்து
'விஜய வருடம் மாசித் திங்கள் மு KAARAARRRRRRRRRASA8%
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து . மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!
திருவாசகம் பாடவேண்டும் நான் போற்றி நின்னையே
பாடிநைந்து நைந்துருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடு நின்கழற் போது நாயினேன் கூடவேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி வீடுதந்து
அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே!
17 . ) அ டு யூ ஏ 9 வ டு A
கூ த தி சு
திருவிசைப்பா பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தரு திருநீறும் குவளைமா மலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல் திருச்சடையும் திவளமா ளிகை சூழ்தரு தில்லையுள்
திரு நடம் புரிகின்ற தவள வண்ணனை நினை தொறும் என்மனம்
தழல் மெழுகு ஒக்குமே!
திருப்பல்லாண்டு மன்னுக தில்லை வளர்க நம்
பக்தர்கள் வஞ்சகர் போய் அகல பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்ன நடை மடவாள் உமைகோன்
அடியோ ருக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே!
திருப்புராணம் நின்றும் மிருந்துங் கிடந்துநடந்து நினைப்பதுன்னை என்றும் வணங்குவதுன் மலர்த்தாளெழுதா மறையின் ஒன்று மரும்பொருளே யருளேயுமையே இமையத் தன்றும் பிறந்தவளே யழியாமுத்தி யானந்தமே!
திருச்சிற்றம்பலம்
இந்து ஒளி

பொதுசன நூல்
யாழ்ப்பாணம்,
ஒளி
சுடர் - 02
தலாம் நாள் (13.02.2014)
RSARRRRRRRRRRRRRRRRRRR நம்பிக்கைக்குரிய கலங்கரை விளக்கு
ஸ்ரீ முத்துமாரி அம்மன்
இலங்காபுரியின் மத்திய பகுதியில் மகிமைமிக்க திருக் காயிலாக விளங்குகின்றது மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயம் சைவத் தமிழர்களின் தலையாய சாத்தாகும். சைவத் தமிழ்ப் பண்பாட்டின் காவலர்களாக பிளங்குபவர்கள் செட்டியார்கள். பாரத தேசத்து செட்டியார்கள் ாதித்தவை ஏராளம். மடங்கள் சத்திரங்கள் திருக்கோயில்கள் நீர்த்தக்குளங்கள் என பலவற்றை தாம் வாழும் ஊர்களில் அமைத்தவர்கள் இப்பெரியவர்கள். இவர்களால் சைவசமயம் பற்ற பெருமைகள் சொல்லில் வடிக்க முடியாதவை. தலைநகர் கொழும்பில் சைவசமயம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு நாட்டுக் கோட்டை செட்டியார் நகரத்தார் ஆற்றிய வரலாற்றுப் பணிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் சோழ மன்னர் களுக்குப் பின் திருக்கோயில்களை சீராகப் பராமரித்த பெருமை செட்டியார்களை சேரும். பழமையையும் பாரம்பரியத்தையும் சைவப்பண்பாட்டின் அடையாளங்களையும் உயிராக மதிப்பவர்கள் இவர்கள்.
(தொடர்ச்சி மறுபக்கம்)
மாத்தளை அருள்மிகு முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்
இலங்கையின் மத்திய பகுதியான எழில்மிகு மலையகத்தின் மாத்தளை மாநகரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழா நிகழ்ந்து
கொண்டிருக்கும் காலப்பகுதி இது.
கடந்த மாதம் (ஜனவரி) 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகியது. இம்மாதம் 15ஆம் திகதி பஞ்சரத பவனியும் 17ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறுகிறது.
இதனையொட்டி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆன்மீக இதழான இந்து ஒளி, அருள்மிகு முத்துமாரி
அம்மன் மகோற்சவ சிறப்பிதழாக மலருகிறது.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 4
சிற்பம், ஓவியம், காவியம், கலைகள் இவர்களால் அன்றுப் வாழ்ந்தன. இன்றும் வாழ்கின்றன. உலகமே அதிசயத்தக்க * பழம்பெரும் இந்துப் பண்பாட்டு வீடுகள் இந்தியாவின் காரை குடியில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. காரைக்குபு ; செட்டியார்கள் இச் சொத்துக்களை கண்ணை இமை காப்பது s போல் பாதுகாத்து வருவதினால் சைவத் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் மதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம் எழுச்சியும் வளர்ச்சியும் பெறுவதற்கு மூலகாரணமாக விளங்கிய அப்பரம்பரையை போற்றவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
அவர்கள் இந்தியாவில் உள்ள பழம் பெரும் சக்தி பீடங்களுக்கு ஒப்பாக இத்திருக்கோயிலை கட்டி வளர்த்து வந்துள்ளார்கள். சகல * திருப்பணிகளையும் அம்பாளின் திருவருளால் நிறைவேற்றி வந்திருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் மதம் மாறாமல் பண்பாட்டிலிருந்து விலகாமல் பக்தியோடு வாழ் வதற்கு அத்திருக்கோயில் அரணாக அமைந்துள்ளது.
ஏழை மக்களின் கலங்கரை விளக்காக முத்துமாரி அம்மன் * விளங்குகின்றாள். இத்திருக்கோயில் உயர்ந்து நிற்பதால் நாம் ஆறுதலடைகின்றோம். பல்லாயிரக்கணக்கான மலையக மக்கள் காவடி எடுத்தும் கற்பூரச் சட்டி ஏந்தியும் உடுக்கு அடித்தும் * வேப்பங்குழை ஏந்தியும் ஆலயத்தை தேடி நாடி வந்து அம்மனை
வணங்கும் சிறப்பு தனித்துவமானது.
அறங்காவலர்களின் தூய வழிநடத்தலில் நடக்கும் ஆலய * பூசை ஒழுங்கு அனைத்தும் மெச்சத்தக்கவை. மாத்தளை மக்களின் மனங்களில் மட்டுமன்றி இலங்கை வாழ் சைவத்தமிழ் மக்களின் உள்ளங்களில் முத்துமாரி அம்பாள் உறைந்திருப்பது சிறப்புக்குரியது.
மாத்தளை முத்துமாரி அம்பாள் ஆலயச் சூழலில் சைவப் பண்பாட்டை நிலைநாட்டக்கூடிய அறிவியற் பீடங்கள் எதிர்காலத்தில் உருவாக வேண்டும். இந்து ஆராய்ச்சித்துறை அப்பிரதேசத்தில் வருவிக்கப்பட வேண்டும். எமது மதம் சார்ந்த விடயங்கள்
மலையகத்தில் மாண்பு பெற வேண்டும். மாத்தளை முத்துமாரி அம்பாள் அதற்கு வழிதர வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக!
மகாமகம்
மாசி மகம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை "மகா மகம்" என்ற பெயரில் கும்பகோணத்தில் மிகப் பெரியதாகக் கொண்டாடப்படுகின்றது. குரு பகவான் சிம்ம இராசியில் சஞ்சாரம் செய்யும் காலப்பகுதியில் வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திர தினமே மகாமகம் என்ற சிறப்பை பெறுகின்றது. இதனை மாமாங்கம் என்றும் சொல்வதுண்டு. இந்த நாளன்று தமிழ் நாடு கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமாரி, பயோஷில, சரயு ஆகிய புண்ணிய நதிகள் வந்து கலந்து கொள்வதாகவும், அவ்வேளையில் அங்கு நீராடும்போது பல நதிகளில் தீர்த்தமாடிய புண்ணியப் பலனை பெறலாம் என்பதுடன் முன் பிறவிப் பாவங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
ISSN: 2012 - 96.45
 

வாழதது வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க, மன்னன் கோன்முறை அரசு செய்க, குறைவிலா(து) உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடு மாத்தளை பூநீ முத்துமாரியம்மன் சிறப்பிதழ் 13.02.214. ஆசிரியர் குழு :
திரு. கந்தையா நீலகண்டன் சைவஞானபானு கலாநிதி ஆறு. திருமுருகன் கலாநிதி முத்தையா கதிர்காமநாதன் சிவபூநீ ம, பாலகைலாசநாத சர்மா திரு. த. மனோகரன் திரு. அ. கனகசூரியர் ஒரு பிரதியின் விலை e5UIT 50.00 வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 300.00
(தபாற் செலவு தனி) வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 15
அகில இலங்கை இந்து மாமன்றம் AC, H. C. கட்டிடம் 915, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு -2, இலங்கை,
யாழ் பணிமனை : 21/17, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
இணையத்தளம் : http:/WWW, hinduCongress. Ik மின்னஞ்சல் : hinduCongressCDgmail.Com தொலைபேசி 012434990, தொலைநகல் 012344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OLI
Issue of
ALL CEYLON HINDU CONGRESS
Shri Muthumariamman Temple Special Issue
13.02.2014 Editorial Board :
Mr. Kandiah Neelakan dan Dr. Aru. Thirumurugan Dr. Muthiah Kathirgamanathan Sivasri M. Balakailasanatha Sarma Mr. D. Man Oharan Mr. A. Kanagasooriar Price : RS. 50.00 Annual SubSCription (inland) RS. 300.00
(Excluding Postage) Annual Subscription (Foreign) U. S. $ 15
(including Postage)
ALL CEYLON HINDU CONGRESS A.C.H.C. Bldg. 9115, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Jaffna Office : 211/17, Temple Road, Nallur, Jaffna. Website: http://www.hindu Congress. Ik E-Mail : h inducongress(CDgmail.Com Telephone No.: 011 2434990, Fax No.: 011 2344720
Views expressed in the articles in Hindu Oli الم. .are those of the contributors ܢܠ
Next issue MASI - PANKUNI
2. பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 5
ஆன்மீகக்
அருள்.
அறச்சாலையாகத் திகழு
மலையும் மலைசார்ந்த இடமாகவும் திகழும் மாத்தளை மண்ணில் மகிமைமிக்க முத்துமாரி அம்பாள் ஆலயம் சிறப்புற்று விளங்குகிறது. இத்திருக்கோயிலின் திருவருள் சிறப்பை நேரில் அனுபவிக்கும் பேறு சமீபத்தில் யாம் பெற்றோம். அழகுப் பொலிவும் அற்புத ஈர்ப்பும் இத்திருக்கோயிலின் தனித்துவமாகும். அறங்காவலர்கள் சைவப்பாரம்பரிய நெறிமுறை தவறாதவகையில் ஆலயத்தை பேணிவருவது பெருமை தருகிறது. பாரத மண்ணில் நாம் காணும் ஆலயங்களுக்கு ஈடாக இலங்கை மண்ணில் மாத்தளை முத்துமாரி அம்பாள் ஆலயம் காட்சியளிக்கிறது. மாத்தளை நகரம் பழமை வாய்ந்தது. சித்தர்கள் யோகிகள் இச்சூழலில் ஆத்ம ஞானத்தை போதித்துள்ளார்கள். மலையக மக்களின் மானசீகமான ஆலயமாக முத்துமாரி அம்பாள் திருக்கோயில் எழுச்சிபெற்று விளங்குகிறது.
அம் பாளின் ஆலயம் ஓர் அறச்சாலையாகவும் காட்சியளிப் பதைக் கண் டு பெருமகிழ் வடைந்தேன். ஆலயத்திலே நுாற்றுக் கணக் கான பிள் ளைகளுக் கு
அறநெறிப் பாடசாலை நடை பெறுகிறது. அறங்காவலர்களின் ஏற் பாட் டில் ஆலயச் சூழலில் மூன்று மாடிக்கட்டிடமாக பாடசாலை யொன்று அமைக்கப்பட்டு வருவது போற்றுதலுக்குரியது. மாத்தளை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் எங்கும் இல்லாதவாறு பெரும் சேவையொன்றைக் கண்டு வியந்தேன். அது யாதெனில் அம்பாள் ஆலயத்தினரால் ஓர் இந்து மயானம் அமைக்கப்பட்டு அங்கு ஓர் அந்தியேஷ்டி மடத்தினையும்
இந்து ஒளி

சுடரின்
பிடல்
ம் அம்பாளின் ஆலயம்
ஸ்தாபித்து மாத்தளை வாழ் இந்து மக்களின் அந்திமக் கிரியைகளுக்கு வழிவகுத்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது.
- இன்னுமொரு சிறப்பையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாத்தளை நகர்வாழ் இந்து வர்த்தகப் பெருமக்கள் ஒன்றிணைந்து “சுபீட்சம்” என்ற பெயரில் அறக்கட்டளையொன்றை நிறுவி மலையகத் தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளும் நலிவுற்றோருக்கு பொருளாதார உதவிகளும் வழங்கிவருவது அம்பாளின் பெருங்கருணை என்றே யாம் கருதுகிறோம். "சுபீட்சம்” அறக்கட்டளையின் உறுப்பினர்களாகவுள்ள வர்த்தகப் பெருமக்கள் இளைய தலைமுறையினருக்கு கல்வியே அவர்களது எதிர்காலத்தின் திறவுகோல் என உணர்ந்து
ஆற்றிவரும் பணி பாராட்டுதற்குரியது.
இனம், மொழிகளைக் கடந்து முத்துமாரி அம்பாள் அனைவரையும் ஆட்கொண்டு வழிநடத்துகிறாள். மாரிபோல் மாரி அம்பாள் வாரி வழங் குகிறாள். வறுமையில் வாடியவர்களையும் வாழவைக்கும் சக்தி அம் பாளுக்கு உண் டு. ஆதலால் மாத்தளை முத்துமாரி அம்பாளின் பேரருள் பிரவாகித்து எம் மண்ணை காக்க வேண்டும். எங்கள் நாட்டில் அமைதியும் தர்மமும் நிலைக்க அம்பாளைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் நல்லாசி கூறி அமைகிறேன்.
ஓம் சாந்தி! சாந்தி!
தொண்டுநாதன் -
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்

Page 6
QUO
-
s
όπύυ ஆக்கும் தொழில் ஐங்கரன் ஆற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால் சேர்க்கும் நவரத்தினமாலையினைக் காக்கும் கனநாயக வாரணமே மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே!
வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண் மூடி நெடும் கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலை என்னில் அவர் பெருகும் பிழை என் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படை வாள் வயிரப்
பகைவர்க்(கு) எமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 1
நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம்! சரணம்!
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்(று) அளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 2
முத்து
முத்தே வரு முத்தொழில் ஆற்றிடவே
முன்னின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே! சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்(கு) இணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 3
பவளம்
அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ
தேம் பொழிலாம் இது செய்தவள் ஆரோ
எந்தை இடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுத்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 4.
Dយោfiចំច)
காணக் கிடையாக் கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத் தவளே
இந்
இந்து ஒளி
 
 

5 வரத்தினமாலை S.
འོང་r་སློང་
亨
83
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே! s மாணிக்க ஒளிக் கதிரே! வருவாய்!
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 5
மரகதம்
மரகத வடிவே! சரணம்! சரணம்
மதுரித பதமே! சரணம் சரணம்
சுர பதி பணியத் திகழ்வாய் சரணம்:
கதி ஜதி லயமே இசையே! சரணம்!
அர ஹர சிவ என்றடியவர் குழும
அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்!
வர நவ நிதியே! சரணம் சரணம்
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 6
83 ёónéuogóóф
பூ மேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றா பயனும் குன்றா வரமும் தீ மேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர் வான் நிலவே!
குழல் வாய் மொழியே தருவாய் தருவாய்! மா மேருவிலே வளர் கோகிலமே!
排
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 7
பதுமராகம் ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகவி காச வியாபினி அம்பா! 83 சஞ்சல ரோக நிவாரணி வாணி 83
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே! 8 料 வைடூரியம் 83
வலை ஒத்த வினை கலை ஒத்த மனம்
அருளப் பறை ஆற்(று) ஒளி ஒத்த இதால் நிலையற்(று) எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய் அலையற்(று) அசைவற்(று) அநுபூதி பெறும்
அடியார் முடி வாழ் வைடூரியமே! மலையத்துவசன் மகளே! வருவாய்
மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே!
2
நூற்பயன் எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் . சிவ ரத்தினமாய்த் திகழ்வாரே.
8
4. பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 7
மாத்தளை முத்துமாரி
இலங்கையின் வனப்புமிகு மலைய கத்தின் வடபகுதி மாத்தளை மாவட்டமாகும். இங்குள்ள 'லக்கல” என்னும் இடத்தில் இராவணனின் கோட்டை கொத்தளங்கள் இருந்ததாக ஆய்வியல் வரலாறுகள் உறுதிப் படுத்துகின்றன.
ஆதியில் வாழ்ந்த நாகர் குலத்தவர் மாத்தளை நகரில் உள்ள சக்தியை வழிபட்ட தாகவும் பல தலைகளை உடைய நாகம் இவ்வம்மனை பூசித்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. பலநாகங்கள் இங்கு வழிபட்டதால் (பன்னாகம்) என்னும் பெயரும் இந்த நகருக்கு உண்டு. இங்கு ஆதிகாலத்தில் இருந்தே உறைந்திருக்கும் முத்துமாரி அம்மாள் பல அற்புதங்களையும் காண்பித்துள்ளாள். அவ்வப் போது அடியார்களுக்கு தமது பல வடிவங்களில் காட்சி தந்துள்ளார் என கள்ன பரம்பரைக் கதைகளும் உண்டு.
இவ்வாலயம் அமைந்துள்ள இடம் இயற்கையாகவே குறிஞ்சி முல்லை, மருதம் என்னும் மூவகை நில அமைப்புக்களை கொண்டது. குற்றாலம் அருவி என்னும் ஏழு அருவிகள் கொட்டும் அழகுடன் மலைக்குன்றுகளும் மகாவலி கங்கையின் கிளைகளும் இந்த நகரினைச் சூழ்ந்து அணி செய்கின்றன. மேலும் இங்கு சிவநெறியின் சிறப்பிலான முத்துமாரி அம்பாள் ஆலயத்தைச் சூழ நாற்புறமும் பல இந்துக் கோயில்கள் அருள்பாலிக்கின்றன.
அந்தக் காலத்தில் இலங்கையின் வட பகுதியிலிருந்து மலையகத்திற்கு வருவோர் கால்நடையாகவும் பின்னர் LDாட்டுவண்டி மூலமும் வரும்போது மாத்தளையில் வந்து நீராடி அம்பாளை பூசித்து அங்கு அமைந்துள்ள சத்திரத்தில் தங்கி ஓய்வெடுப்பார்கள். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் மலையகத்தில் வேலை செய்வதற்கென தென்னிந்தியாவில் இருந்து கூலியாட்களை தருவித்தனர். சக்தி வழிபாடு செய்யும் இவர்கள் கடல் வழியே மன்னார் அரிப்புத்துறைகளில் இறங்கி மல்ையகத்தை நோக்கிவருவார்கள். வரும் பாதை கரடுமுரடான காடுமேடாக இருந்ததால் பல துன்பங்களுக்கு மத்தியிலும் நடந்து வரும் பாதையில் அமைந்துள்ள மாத்தளையில் தங்கி அம்பாளையும் வழிபட்டு மலையக நகள்களுக்குச் சென்றனர். இவ்விபரங்களை கர்ண பரம்பரைக்கதைகளில் இருந்து அறியலாம்.
ஆதியில் இங்கு வாழ்ந்த ஒப்பனைக் கலைஞர் ஒருவருக்கு முத்துமாரி அம்பாள் ஒரு வில்வமரத்தடியில் காட்சி கொடுத்து மறைந்தார் என்றும் சொல்லப்படுகின்றது.
மாத்தளையில் வந்து தங்கிச் செல்லும் இந்துக்களின் வருகையும் வழிபாட்டின் சிறப்பும் பெருகியது. நாட்டுக் கோட்டை வணிகர்கள் தமது இலாபத்தில் ஒரு பகுதியை அம்பாளின் திருப்பணிக்கு உதவி வந்தனர்.இவர்கள் இங்குள்ள சத்திரத்தில் தங்கியிருந்த போது ஒரு சிறுமி தென்பட்டாள் பின் மறைந்துவிட்டாள். மறுநாள் அவளின் சட்டை ஒன்று காணப்பட்டது. அன்றிரவு அம்பாள் நல்லமுத்து என்னும்
- بر 0
இந்து ஒளி
重
 

அம்மாள் திருத்தலம்
冕
பக்தனின் கனவில் தோன்றி முதல் நாள் அம்பாளே சிறுமியாக வந்ததாகவும் இவ்விடத்தில் ஒரு கல்லைக் காட்டி இங்கு அம்பாள் இருப்பதால் விளக்கேற்றுமாறும் தெரிவித்து மறைந்தார். இச்செய்தி பலரிடமும் பரவியது. அம்பாளின் அற்புதத்தை எண்ணி பலர் வியந்தனர்.
சிவகங்கை காளையர் கோயில் என்னும் இடத்தைச் சேர்ந்த கறுப்பனன்னன் சாமி என்னும் பக்தன்ஒருசிறுகுடில் அமைத்து வழிபடலானான். அவளின் சீடனான சுப்பண்பிள்ளை என்பவன் பூசை முறைகளை கிரமமாக செய்து வந்தார். ஒரு வைகாசி மாதத்தில் கறுப் பண்ணன் சாமி விழாக்களை ஆரம்பித்து வருடாவருடம் விழா சிறப்புற பணியாற்றினான். காலங்கள் செல்லவும் சுப்பண்பிள்ளை ஆயிரத்து எண்ணுாற்றி ஐம்பதில் தனக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட சபையை நிறுவி ஆலயம் சிறக்க ஏற்பாடு செய்தார். சுப்பண்பிள்ளை இரு வருடங்களின் பின் அயலில் உள்ள நிலத்தை வாங்கி சிறப்பாக கோயில் கட்டுவதற்குரிய நிதியுதவிக்கான ஏற்பாடுகளும் செய்தார். நொத்தாரிஸ் முருகேசு என்னும் பக்தர் நிர்வாகப் பணியை ஏற்றார். தென்னிந்திய வணிகச் செட்டிமார்களும் யாழ்ப்பான வர்த்தகர்களும் பெரிதும் உதவினர். முதலில் வரிச்சுக்களும் களிமண்ணும் கொண்டு சுவர்கள் எழுப்பி நாட்டு ஒட்டினால் கூரை வேயப்பட்டு வழிபாடு சிறக்க வைத்தார். அம்பாளின் திருவருளும் பக்தர்களின் ஆதரவும் நிதி உதவியும் கோயில் திருப்பணிகள் சிறக்க ஏதுவானது. கருவறை பிரதான மண்டபங்கள் வாயிற் கோபுரங்கள் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டன. விழாக்களும் சிறப்புற நடைபெற ஆலயம் சிறக்கவும் அடியார்களும் மேன்மேலும் திருப்பணிக்கென வாரி வாரி வழங்கிய பெருநிதியில் 1977 இல் அம்பாளுக்கு சிறப்பான சித்திரத்தேள் அமைக்கப்பட்டது. பூசைகளும் அபிஷே கங்களும் இதர விழாக்களும் பொது மக்களினால் பக்தி சிரத்தையுடன் செய்ய ஏற்பாடானது. 1983 இல் நடைபெற்ற வன்செயலின் போது இவ்வாலயத்தின் திருமண மண்டபம் உட்பட அநேக மண்டபங்கள் சேதப்படுத்தப்பட்டன. தேள் மற்றும் இரதங்கள் அழிக்கப்பட்டன. ஆலய வளர்ச்சி குன்றியது. மக்கள் வேறு இடங்களுக்குச் சென்றனர். 1992 இல் அறங்காவலர் குழுவின் தலைவராக இருந்த மாரிமுத்துச் செட்டியார் ஆலய வளர்ச்சிக்காகப் பல்லின மக்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் ஒத்துழைப்புடன் சகல திருப்பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றினார். ஆலயச் சிறப்புநன்கு பிரகாசிக்க இறையருள் கைகூடி அடியார்களின் மன இசைவுக்கேற்ப கொடித்தம்பம் சிதைவுற்ற மண்டபங்கள் நவீன மயப்படுத்தப்பட்டன.புதிய தேரும் வடிவமைக்கப்பட்டது.
தொடர்ந்து பரிவாரமூர்த்தங்களுக்கு தனித்தனிசந்நிதிகளும் அமைக்கப்பட்டன.காசியில் இருந்து அழகிய சிவலிங்கம் எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. மலையகத்தில் அருள் புரியும் திருத்தலங்களில் மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம் மிகச் சிறப்புடையது.
நன்றி ஈழத்து சத்தியின் அற்புதங்கள்)
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 8
அருள்மாரியம்மையே அன்னையே போற்றி ஆதிசிவன் தேவியே ஆரணி போற்றி மருள்நீக்கி ஆளுவாய் வல்லவி போற்றி மாதங்கி இங்குநீ வந்தருள் போற்றி
LDITUÍ LIDE5LDITUîl 56ÖTLDTLD6OOf (BUITIÖIÓ மணிமந்த்ர சேகரி மானினி போற்றி! ஆயிமகமாயி நீ அந்தரி போற்றி! ஆயன் சகோதரி அருளுவாய் போற்றி
வாராகி சூலினி வயிரவி போற்றி வல்லாண் மைக்காரிநீ வடுகிறீ போற்றி சீராகி விளங்குநின் திருவடி போற்றி தீராத வல்வினை தீர்த்தருள் போற்றி
கற்பூர நாயகி கெளமாரி போற்றி! கனகசிம் மாசனி காரணி போற்றி பொற்கோவில் கொண்ட சம்பூரணி போற்றி பொலிவோங்கு சுந்தரி பொன்னடி போற்றி
ஜமதக்னி பத்தினி தருணி நீ போற்றி ஜயவீரதீரி நீ சண்டிகே போற்றி அமரத்வ நாயகி அம்பிகே போற்றி! ஆனந்த ரூபிணி அடியினை போற்றி
வேப்பிலையின் மகிமைசேர் வித்தகி போற்றி விளையாடு மாரிநீவிமலையே போற்றி கூப்பிடுமிவ் வேளையில் கோதையே போற்றி குறைதீர்க்க வந்தருள் குரைகழல் போற்றி சீர்மைமிகு ரேணுகா தேவியே போற்றி! சிங்கார ரூபிணி சீலியே போற்றி கூர்மை விழிநாயகி குண்டலி போற்றி கொண்டாடி வாழ்த்துவேன் குளிர்பதம் போற்றி!
தாயே துரந்தரி சங்கரி போற்றி! சக்தி சிவகாமிநீசாம்பவி போற்றி நீயே நிரந்தரி நீலியே போற்றி! நித்தமுனைப் பாடுவேன் நின்பதம் போற்றி
காரணி சவுந்தரி காளியே போற்றி! கனகசபை மீதிலே காட்சிதா போற்றி! பூரணி புராந்தகி புங்கவி போற்றி பூங்குழலி நின்னிரு பொற்பதம் போற்றி
மங்கள மனோகரி வாருணி போற்றி மந்திர சொரூபிநீ மாதவி போற்றி எங்கும் நிறைதெய்வம் நீஈஸ்வரி போற்றி எந்நாளும் பாடுவேன் இணையடி போற்றி
கண்ணாயிரங் கொண்ட காரிகை போற்றி! கருகுமணிக் கைவளைக் காரி நீபோற்றி எண்ணாத எண்ணமே எண்ணினேன் போற்றி! எனையாளும் மாரிநின் இணைபதம் போற்றி
மணிமுத்து மாரி நன்மங்கையே போற்றி! மஞ்சுநிகள் கூந்தலார் வனிதையே போற்றி பணிவோடு நின்னையான் பாடுவேன் போற்றி! பக்தியொடு தாமரைப் பதமலர் போற்றி!
ஆங்காரக் காரிநீ அழகிநீ போற்றி ஆதிபர மேஸ்வரி ஆதரி போற்றி
ஓங்கார ரூபிணி உத்தமி போற்றி! ஒய்யார சுந்தரி உண்பதம் போற்றி
நித்திய கல்யாணிநீநீதிநீபோற்றி நிர்மல குணாகரி ரேணுகா போற்றி
இந்து ஒளி
 
 
 
 

சத்திய சொரூபிநீ சக்திநீ போற்றி சந்ததமும் பாடுவேன் தாளினை போற்றி
பகவதி புராதனி பைரவி போற்றி பக்தியொடு நித்தமும் பனிகுவேன் போற்றி ஜெகதலம் புகழ்ந்திடும் தேவியே போற்றி! சிந்தைமகிழ் வாகிநின் சீரடி போற்றி சூலினி கபாலிநீ துர்க்கைநீ போற்றி சூரர்குல நாசினி ஜோதியே போற்றி மாலினி சநாதனி மாயைநீபோற்றி மங்கள கல்யாணிநின் மலரடி போற்றி
உன்னுடைய மகிமையை உணர்ந்திலேன் போற்றி உலகத்து நாயகி உத்தமி போற்றி! மன்னுபகழ் பொங்கிடும் மாரியே போற்றி மரகத சொரூபிநின் மலரடி போற்றி
பூமாலை சூட்டியே புகழுவேன் போற்றி புண்ணிய குணாகரி புனிதையே போற்றி! பாமாலை சாற்றியே பாடுவேன் போற்றி பாரதி பவானி உண்பதமலர் போற்றி
வசந்தருது தன்னிலே வசந்திநீ போற்றி வனதுர்க்கை தேவிநீவாலைநீ போற்றி கசந்த இலை வேப்பிலைக் காரிநீ போற்றி காட்சிதர வேணும்நின் கழலினை போற்றி
சித்திரை வைகாசியில் செல்வியே போற்றி சீரோங்கு நின்விழா செய்குவேன் போற்றி நித்திரை யில்லாமலே நின்னையே போற்றி நியமமொடு பாடுவேன் நின்கழல் போற்றி
வானமழை யாகிடும் மஞ்சுநீ போற்றி வந்தென்னை யாளுவாய் மாரிநீபோற்றி கானமழை கேட்டுநீகாத்தருள் போற்றி கருணா கடாட்சிநின் கழலினை போற்றி!
கம்பத்தின் மேன்மையைக் காட்டுவாய் போற்றி கரகத்தின் தத்துவம் கழறுவாய் போற்றி! சம்பத்து நல்குவாய் செளந்தரி போற்றி சர்வபரிபூரணி தாளினை போற்றி
உருள்தண்ட தத்துவம் உண்மையே போற்றி ஒளிர்குண்ட மகிமையை உணர்த்தினாய் போற்றி பொருள்கொண்ட வானியல் புகட்டினாய் போற்றி! புகழ்பாடி வாழ்த்துவேன் பொற்கழல் போற்றி
பொற்கலச ரூபிணி பொன்னொளி போற்றி! பூஜித மகேஸ்வரி பூபாலி போற்றி சற்குண தயாபரி சங்கரி போற்றி சம்பூர்ணதேவி நின் தாளினை போற்றி
பச்சரிசி வெல்லமும் படைத்துளேன் போற்றி பச்சை இளநீரும்மா படைத்துளேன் போற்றி இச்சைமிகு பானகம் ஏற்கநீ போற்றி இச்சையோடு பாடுவேன் இணைகழல் போற்றி
மஞ்சளொடு குங்குமம் வழங்குவாய் போற்றி! மாங்கல்ய மங்கையர் மகிழவே போற்றி அஞ்சலி புரிந்து பாராட்டுவேன் போற்றி அந்தரி சுதந்தரி அடியினை போற்றி
வாழ்க! நிதம்நின்புகழ் வாழ்கவே போற்றி வானமொடு வையகம் வாழ்கவே போற்றி சூழ்கவளமெங்கனும் சூழ்கவே போற்றி துாமணி மனோன்மணி துாயதாள் போற்றி
எ ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 9
சக்தி விற
ஆல)வில்)ல்லவி)))
இல்ல்ல்ல்லம்
போக மோக்ஷப் பிரதாயினியாகிய அம்பிகை இகலோக இன்பங்களையும் ஈற்றில் முத்தியின்பத்தையும் ஒருசேர வழங்கக் கூடியவள் என்பதால் அவளை ஆராதித்து அத்தகைய பேறுகளைப் பெறுதற்கேற்ற விரதங்கள் பற்றி இங்கே எடுத்துரைக்கப் படுகின்றன.
கேதார கௌரி விரதம்
இவ்விரதம் புரட்டாதி மாத வளர்பிறை அட்டமி அல்லது நவமி அல்லது தசமித் திதியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் (14ஆம் நாள்) முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்களைக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும். உமாதேவியார் சிவபெருமானை நோக்கி சிவபூசை செய்து அர்த்த நாரீஸ்வரப் பேற்றினைப் பெற்ற விரதமாகையால் இது கேதார கௌரி விரதம் என்று சொல்லப்படுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்கலமாக இருக்க வேண்டும் என்றும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர்.
மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளர்க இடப்பட்டு, இறுதி நாளன்று அந்த நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.
நவராத்திரி விரதம்
புரட்டாதி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல், நவமி முடிய வரும் ஒன்பது நாளும் கும்பத்திலே பூசைசெய்து தேவியை அனுட்டிக்கும் விரதமாம். இதில் வரும் அட்டமிக்கு மகா அட்டமி என்றும் நவமிக்கு மகா நவமி என்றும் பெயர். இதனால் இதை மகாநோன்பு அல்லது மகர் நோன்பு என்று சொல்லிக் கொண்டாடுவர். இது தேவி உபாசகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விரதமாகும். இந்த ஒன்பது இரவுகளிலும், முதல் மூன்று நாட்களிலும் வீரத்தை வேண்டித் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்களிலும் செல்வத்தை வேண்டித் திருமகளையும், இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டிக் கலைமகளையும் நினைந்து பூசித்து விரதம் அனுட்டிப்பர். நோன்பு நோற்பவர்கள் பிரதமையில் எண்ணெய் முழுக்காடி நோன்பைத் தொடங்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்போர் முதல் எட்டுநாளும் ஒருபோது உணவு உட்கொண்டு, ஒன்பதாவது நாளான மகாநவமியில் உபவாசம் இருத்தல் உத்தமம். இந்நோன்பு நாட்களில் அபிராமி அந்தாதி, குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை போன்ற பாடல்கள் பாராயணம் செய்யத்தக்கன.
வரலக்ஷமி விரதம்
- பவிஷ்யோத்தர புராணத்திலே சிறப்பித்துக் கூறப்படும் இந்த வரலஷ்மி விரதம் ஆவணிமாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையிலே அனுஷ்டிக்கப்பட வேண்டியது.
(இந்து ஒளி

பொதுசன நூலகம் பாழ்ப்பாணம்.
ரது ரயிரோதகரொராரோராரிரோத ரெனகராடு "தங்கள்
இல்ல்ல்ல்ல்ல்ல்மல்மலைமலைமலமல்கல்லாலல் 22. : மிக வி..." - CNNEN': N2
ஒருசமயம் உமாதேவியார் சிவபெருமானை நோக்கி, ஐயனே பூவிலகில் சகல செல்வ போகங்களையும் செளக்கியங்களையும் புத்திர சம்பத்தையும் வழங்கக்கூடிய விரதம் எது? என்று வினாவியபோது அவர் உமாதேவியாருக்கு இந்த விரத மகிமையைக் கூறினார்.
முன்பு குண்டினம் என்ற நாட்டிலே சாருமதி என்ற சுமங்கலிப் பெண் இருந்தாள். அவள் நல்ல தெய்வ பக்தியும் தூய்மையும் ஆசார அனுஷ்டானமும் உடையவளாக இருந்தாள். ஒருநாள் அவள் கனவிலே வரலஷ்மிதேவி தோன்றி இந்த விரதத்தை உபதேசித்து மறைந்தாள். அவளும் உடனே சகல பெண்களையும் அழைத்து இப்புதுமையைக் கூறினாள்.
குறித்த விரத நாளிலே சகல பெண்களுமாக நகர் முழுவதும் அலங்கரித்து முறைப்படி இவ்விரதமனுஷ்டித்து வரலாயினர். என்றுமில்லாதவாறு அங்கு சகல செல்வமும் பொலிந்து விளங்கிற்று.
நன்கு தூய்மையாக்கி மாவிலை தோரணங்களாலே அலங்கரித்த மண்டப நடுவிலே மேடையொன்றில் நெல், அரிசி முதலியவற்றை முறைப்படி பரப்பித் தாமரைக் கோலத்தை அதன் மேல் இட்டுக் கும்பத்தை அதன்மீது வைக்க வேண்டும். ஏனைய பூஜைகளுக்கு நீர் நிரப்பிய கும்பம் வைப்பது வழக்கம். ஆனால் வரலக்ஷமி விரத பூஜைக்குப் பச்சரிசியால் நிரப்பப்பட்ட கும்பத்தை வைக்க வேண்டும்.
நல்ல கழிநூலிலே மஞ்சள் தோய்த்து ஒன்பது இழைகள் கொண்டதாக முறுக்கி எடுத்து ஒன்பது முடிச்சுக்கள் முடிந்து இந்தக் காப்பினைக் கும்பத்தில் வைத்துப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
வழக்கம்போல சங்கல்ப பூர்வமாக புண்யாகவாசன முதலிய பூர்வாங்க பூஜைகளுடன் விசேஷ உபசாரபூஜை, அங்கபூஜை முதலியன செய்து ஒன்பது நாமங்களால் நூலிலுள்ள ஒன்பது முடிச்சுக்களையும் பூஜித்து அதனை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பொதுவாக விரதங்களுக்குக் காப்புக் கட்டும்போது ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டுவது வழக்கம். ஆனால் வரலக்ஷமி பூஜைக்கு மட்டும்; இது பெண்களுக்குரிய விரதம் என்பதால் வலது கையிலேயே காப்புக் கட்டிக்கொள்ள வேண்டும். ஸ்லோகத்திலேயே இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது. காப்பினைக் கையிலே கட்டும்போது சொல்லும் ஸ்லோகம் இது.
ஸர்வ மங்கல மாங்கல்யே ஸத்வப்ரீதா ப்ரணாலினீ! தோரகம் ப்ரகி க்ருஹணாமி ஸமப்ரீதா பவ ஸர்வதா! பத்னாமி தக்ஷிணே ஹஸ்தே நவசூத்ரம் சுபப்ரதம் புத்ர பௌத்ரபி வருத்திம்ச ஸௌபாக்யம் தேஹிமேரேமே!
ஒன்பது முடிச்சுக்களுக்கும் உரிய நாமங்கள் வருமாறு. கமலா, ராம், லோகமாதா, விஸ்வஜனனீ, மஹாலக்ஷ்மி, ஷீராப்திதநயா, விஸ்வஸாக்ஷிணீ, சந்த்ரஸஹோதரீ, ஹரிவல்லபா இவை
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 10
ஒவ்வொன்றுக்கும் முன்னால் ஓங்காரமும் பின்னால் நம என்றும் சேர்த்துப் பூஜை செய்க.
விசேஷ நைவேத்தியமாக நெய்யுடன் கூடிய ஹவிஸ் (நெய்ச்சாதம்) சொல்லப்பட்டிருக்கின்றது. வரலசஷ்மி பூஜைக்குரிய விசேஷ அர்ச்சனைப் பொருள் அறுகு.
உபவாசம் போன்று கடுமையான விதிமுறைகள் இந்த விரதத்துக்கில்லை. மத்தியானம் ஒரு நேரம் போசனம் செய்யலாம். இரவு பலகாரபட்சணங்கள் ஏதாவது உட்கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுஷ்டித்தபின் விரதோத்யாபனம்
செய்யலாம்.
காரடை நோன்பு (காரடையா நோன்பு அல்லது காமாட்சி நோன்பு)
பார்வதிதேவி ஒரு சமயம் காஞ்சியில் ஏகாம்பர நாதரைப்பூஜை செய்து சிவசக்தியிடையே பிரிவு நேராதிருக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தாள். அந்தத் தினத்தையே காமாட்சி நோன்பு என்கின்றனர்.
சத்தியவான் மனைவி சாவித்திரி காட்டில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த கார் அரிசியைக் கொண்டு அடைதட்டி வைத்து அம்பிகையைப் பிரார்த்தித்துக் கணவனின் உயிரை மீட்ட தினமே காரடை நோன்பு என்கிறார்கள் சிலர். (சாவித்திரி கணவனை மீட்டதினம் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமியில் என்று கூறி அதனைச் சாவித்திரி நோன்பு என அனுஷ்டிப்பதும் உண்டு.)
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் கொள்ளப்படும் விரதமான காரடையா நோன்பு சுமங்கலிப் பெண்களுக்குரியது. "மாசிக்கயிறு பாசிபடியும்" என்பது பழமொழி. சுமங்கலிகள் தமது திருமாங்கல்யக் கயிற்றினை மாற்றிப் புதிய கயிற்றினைக் கட்டிக் கொள்வர். -
இவ்விரத நாளில் பகல் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். குத்துவிளக்கேற்றி வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், அடை, வெண்ணெய் என்பவற்றை நிவேதனம் செய்து பூஜித்து "உருகாத வெண்ணெய்யும் ஒரடையும் வைத்து நோன்பு நோற்கிறேன். ஒருநாளும் என் கணவர் பிரியாமல் இருக்க வரம் அருள்வாய்" என்று பிரார்த்திக்க வேண்டும்.
புதிய மாங்கல்யக் கயிற்றைப் பூஜையில் வைத்துப் பூஜித்த பின் அதனைக் கழுத்தில் கட்டிப் பழையதை நீக்க வேண்டும்.
கார் அரிசி எனப்படும் தவிட்டுப் பச்சரிசியை நீரில் நனைத்து, தேங்காய், உப்பு, சர்க்கரை என்பன சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி நீராவியில் வேகவைத்து எடுப்பதே காரடையாகும். துவரையும் சேர்த்து அரைக்க வேண்டுமெனச் சிலர் கூறுவர்.
இவற்றை ஆலம் இலையில் படைத்துப் பூஜை முடிவில் அடையும் வெண்ணெயும் மட்டும் உணவாக உண்டு மறுநாட்காலை பாரணை செய்ய வேண்டும். ஏனைய நாட்களில் கணவனை முதலில் உணவருந்தச் செய்யும் மனைவி இவ்விரத நாளில் மட்டும் முதலில் தான் உண்ண வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
கருடபஞ்சமி விரதம் (பணிகெளரி விரதம் அல்லது நாகசதுர்த்தி)
நாகதோஷம் முதலிய பல்வேறு காரணங்களால் உரிய காலத்தில் திருமணம் நடைபெறாது பெருமூச்சுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னியர்கள் நம்மிடையே ஏராளம். இவர்களது தோஷங்களை நீக்கி விரைவில் திருமணமாகி நல்வாழ்வு வாழ்வதற்கும் நன்மக்களைப் பெறுவதற்கும் ஒரு விரதத்தை வைத்திருக்கிறார்கள். அதுவே கருட பஞ்சமி விரதம்.
ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதியிலே இந்த விரதம் அனுஷ்டிக்க வேண்டும். காஸ்யப மகரிஷியின் புதல்வரான
இந்து ஒளி 匾

கருடரென்பார் தனது தாயினுடைய அடிமைத் தளையை நீக்குதற்காக மிகுந்த சிரமத்துடன் தேவலோகத்திலிருந்து அமிர்தகலசம் கொண்டு வந்த நாள்தான் இந்தக் கருடபஞ்சமி. பிரமாண்ட புராணத்திலே பிரம்மதேவர் நாரதருக்கு இவ்விரத மகிமையை உரைத்ததாக சூதபுராணிகர் செளனகர் முதலிய முனிவர்களுக்குக் கூறுகிறார். கருடரின் சிற்றன்னை பிள்ளை களான நாகங்களுக்காகவே அமிர்தம் கொண்டு வந்தார் என்பதால் நாகசதுர்த்தி என்றும் சொல்லப்படுகிறது.
சதுரமான மண்டபத்திலே பஞ்ச வர்ணக் கோலங்கள் இட்டு வெள்ளியினால் அல்லது செப்பினால் நாகப் பிரதிமையொன்று செய்து அரிசி பரப்பி அதன் மீது வைத்து நாக படத்தின் மத்தியில் மஞ்சளினால் கெளரி பிம்பம் செய்து ஸ்தாபித்து விரத சங்கல்பம் செய்து ஆவஹனாதி உபசார பூஜைகள் செய்ய வேண்டும். பத்து இழைகள் கொண்ட பட்டுநூலில் பத்து முடிச்சுகளிட்டு குங்குமம் பூசி அங்கு வைத்துப் பூஜிக்க வேண்டும்.
பூஜை முடிவில் "பத்து முடிச்சுகளுடையதும் குங்குமம் பூசப்பட்டதும் மங்களகரமானதும், உனக்கு மகிழ்ச்சி தரக் கூடியதுமான இந்தக் காப்பினைக் கட்டுகிறேன். நல்லருள் புரிவாய் தேவி" என்று பிரார்த்தித்து (தசகிரந்தி சமாயுத்தம் குங்குமாக்தம் ஸ9தோரகம, கரேபத்னாமிவரதே தவப் ரீகரம் சுபம்") மணிக்கட்டிலே காப்பினைக் கட்டிக்கொள்ள வேண்டும். பத்து வருடம் இவ்விதம் கைக்கொண்டபின் விரதோத்யாபனம் செய்யலாம்.
இதற்கு முதல்நாளாகிய சதுர்த்தியினை நாகசதுர்த்தி என்று கொண்டாடுவதுண்டு. நாகப் பிரதிஷ்டை, நாகபூஜை, நாகப்புற்றுக்குப் பால் வார்த்தல் முதலியவற்றை இந்நாளில் செய்வர். வாசல் நிலையின் இருபுறமும் பாம்புப் படங்களை குங்குமத்தால் வரைவர். புற்றுமண்ணுடன் அட்சதை சேர்த்து மூத்த சகோதரர்களைக் கொண்டு ஆசி பெறுவர்.
சாவித்திரி விரதம்
சாவித்திரி என்றும் புண்ணியவதி. தன் கணவன் சத்யவானை இயமனிடமிருந்து மீளப் பெற்றது இந்தச் சாவித்திரி விரதமே. பிரபத்தினியாகிய சாவித்திரியை நோக்கிக் கைக்கொள்ளப்படுவது இது. மாங்கல்ய விருத்தியையும், புத்திர சம்பத்தையும் வழங்கிக் குடும்ப நலத்திற்கு வளம் சேர்க்கும் இந்த விரதம் ஆவணி மாதப் பெளர்ணமி தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது. பெண்களுக்கேற்ற விரதம் இது.
சாவித்திரி கெளரி விரதம்
மார்க்கண்டேய முனிவர் தர்மநந்தனருக்கு உபதேசித்த விரதம் இது. தர்மவர்மன் என்கிற மன்னன் மனைவி தமது புரோகிதராகிய சோமயாஜியினுடைய தர்மபத்தினி இச் சாவித்திரி கெளரி விரதமனுஷ்டித்து வந்தது கண்டு அந்த விரத மகிமையைப் பரீட்சித்துப் பார்த்து அதிசயித்து தானும் அதனைக் கைக்கொண்டு பெரும்பேறடைந்தாள்.
தைமாதம் இரண்டாம் நாள் அதாவது தைப்பொங்கலுக்கு மறுநாள் ஆரம்பித்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து சாவித்திரி கெளரி தேவியை வழிபட்டுப் பூஜை செய்து ஒன்பது இழைகளும் ஒன்பது முடிச்சும் கொண்ட நூலினைப் பூஜையில் வைத்திருந்து ஒன்பதாம் நாள் அதனை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மத்தியானம் ஒரு நேரம் அன்னம் மட்டும் உண்பது நன்று. இயலாதவர்கள் இரவில் பால்பழம் அல்லது பலகாரம் சேர்க்கலாம்.
ஸ்கந்த புராணத்தில் கெளரி காண்டத்திலே சொல்லப் பட்டிருக்கும் இந்த விரதம் பெண்களுக்குரிய குடும்ப சுகத்தையும்
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 11
புத்திர லாபத்தையும் தரவல்லது, ஒன்பது வருடங்கள் கைக் கொண்டபின் விரதோத்யாபனம் செய்யலாம்.
மங்கள கெளரி விரதம்
மங்கள கெளரி விரதம் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டிய விரதம். திருமணமான பெண்கள் மாங்கல்ய பலத்திற்காகச் செய்யும் விரத பூஜையே மங்கள கெளரி விரத !!,ഞ്ജു.
அதிகாலையில் குத்து விளக்கில் பதினாறு திரிகள் இட்டு, நெய்விட்டுக் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். தட்டில் பூஜை சாமான்களுடன், ரவிக்கைத் துண்டு, மஞ்சள், குங்குமம், அரிசி, வெல்லம், தாம்பூலம், கடலை தட்சிணைப் பணம் ஆகியவற்றை வைத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.
இந்த மங்கள கெளரி விரதத்தைத் திருமணமான முதல் ஆண்டு தன்தாய் வீட்டிலும், மற்ற நான்கு ஆண்டுகள் கணவன் வீட்டிலும் செய்ய வேண்டும். ஆக ஐந்து ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் மஞ்சள் குங்குமம் மாங்கல்யத்தோடு மங்களகரமான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்வர்ண கெளரி விரதம்
விரைவில் திருமணமாக வேண்டியும் நல்ல கணவனை வேண்டியும்,தீர்க்கசுமங்கலியாகவாழ்வதற்குவேண்டியும்பெண்கள் அம்பிகையை வழிபட்டுக் கொள்ளும் விரதம் இது. ருக்மணி இந்த விரதம் இருந்து பகவான் பூீ கிருஷ்ணமூர்த்தியை அடைந்தாள். ஸ்கந்தபுராணத்தில் இவ்விரத மகிமை சொல்லப்பட்டுள்ளது.
ஆவணி மாதம் வளர்பிறைத் திருதியைத் தினத்தில் அதாவது விநாயக சதுர்த்திக்கு முதல் நாளில் இவ்விரதமிருக்க வேண்டும். கும்பத்திலே ஸ்வர்ணகெளரியை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜை நிகழ்த்த வேண்டும். பதினாறு இழை கொண்ட பட்டு நூலில் பதினாறு முடிச்சு இட்டு அந்தச் சரட்டினையும் கும்பத்தில் வைத்துப் பூஜித்த பின் வலது கையிலே அதனைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
பதினாறு வருடம் அல்லது எட்டு வருடம் இந்த விரதத்தைக் கைக்கொண்ட பின் விரதோத்யாபனம் செய்யலாம்.
யமுனா விரத பூஜை
இந்த யமுனா பூஜை பெண்கள் மட்டுமே செய்யும் பூஜை இந்தப் பூஜை செய்யும் பெண்கள் தொடர்ந்து ரிஷி பஞ்சமி என்ற பூஜையையும் செய்ய வேண்டும். இந்த இரண்டு பூஜைகளில் எந்த ஒரு பூஜைகயையும் தனியாகச் செய்யக் கூடாது என்பது சம்பிரதாயம்.
ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி மாதம் சுக்ல பகூடிபஞ்சமி திதியன்று நடுப்பகலில் இந்த யமுனா விரத பூஜையைச் செய்ய வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பு நாயுருவி வேரால் பல்துலக்க வேண்டும்.
குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விட்டு சிவப்பு நிற உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
உடன் பஞ்சகவ்வியம் சிறிதுசாப்பிடவேண்டும்.பஞ்சகவ்வியம் என்பது பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுஞ்சாணம், பசு மூத்திரம் ஆகியவற்றின் கலவை. தயங்குபவர்கள் பேருக்காகவாவது நாக்கில் இவற்றைத் தொட்டு வைத்துக் கொள்ளுகிறார்கள்.
பூஜை அறையிலோ நடுக் கூடத்திலோ மேடை அமைத்து ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி அஷ்டகள பத்மம் எனும் தாமரை மலரின் படத்தை வரைந்து அதன் மீது கலசத்தை அமைக்க வேண்டும்.
(இந்து ஒளி
重

எந்த ஒரு விரத பூசைகளுக்கும் பயன்படுத்தப்படும் விளக்குகள் பித்தளை அல்லது செம்பு பாத்திரமாகவே இருக்க வேண்டும். அதேபோல இந்த யமுனா விரத பூஜைக்குப் பித்தளை அல்லது செம்புப் பாத்திரத்தில் கலசம் வைத்து மேல் பகுதியில் தேங்காய் வைத்துச் சுற்றி மாவிலைகளை வைத்து அமைக்க வேண்டும்.
கலசத்தின் உள்ளே தண்ணீரோ அல்லது பச்சரிசியோ நிரப்பி வைக்கலாம். கலசச் செம்பிற்குச் சந்தனம் மற்றும் குங்குமத்தால் திலகம் இடவேண்டும்.
பிறகு தேங்காய், பழம், கற்பூரம், தாம்பூலம் இவற்றுடன் சித்திரான்னங்கள் செய்து வைத்து ராஜராஜேஸ்வரியின் படத்தைப் பின்னணியில் வைத்து நெய் விளக்கு ஏற்றி தேவியின் தோத்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும்.
இந்த பூஜையைக் கன்னிப் பெண்களும் சுமங்கலிப் பெண்களும் செய்யலாம். விதவைகளோ, ஆண்களோ இந்த விரத பூஜையை மேற்கொள்ள முடியாது.
இந்த யமுனா விரத பூஜையைச் செய்யும் எந்தப்பெண்ணிற்கும் ருதுவான காலத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி மாங்கல்ய பலம் ஏற்படும்.
திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். நவக்கிரக நாயகியான ராஜராஜேஸ்வரி கிரக தோஷங்களை நீக்கி, பாவங்களைப் போக்கி சகல சௌபாக்கியங்களையும் அருள்வாள்.
ரிஷி பஞ்சமி விரத பூஜை
யமுனா விரத பூஜையை நடுப் பகலில் செய்த பெண்கள் இரவில் ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும்.
யமுனா விரத பூஜைக்கு பயன்படுத்திய அதே கலசத்தைத் தொடர்ந்து இதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்து விடவேண்டும். புதிதாக மலர்ச் சரங்கள் சார்த்திக் கலசத்தை சப்தரிஷிகளாகப் பாவித்து இந்தப் பூஜை செய்யப்பட வேண்டும்.
பகலில் நிவேதனம் செய்த சித்ரான்னங்களைப் பிறருக்குப் பிரசாதமாக அளித்துவிட்டு உபவாசமாகவே இருந்து இரவில் ரிஷிபஞ்சமி விரத பூஜை செய்ய வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரத பூஜைக்கு நிவேதனமாக எல்லாவகைக் கனிகளும், தேன், பசும்பால் ஆகியவற்றையும் வைக்க வேண்டும். காலையிலிருந்து உபவாசமிருக்கும் பெண்கள், பகலில் யமுனா பூஜையில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பூசையை முதலில் செய்துவிட வேண்டும். பிறகு ராஜ ராஜேஸ்வரி தோத்திரத்தையும், சிவ தோத்திரங்களையும் சொல்லி, தூபதீபம் காட்டி, நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்தப் பூசை செய்யும் மந்திரங்களைத் தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று அப்படியே செய்யலாம்.
இப்படி யமுனா விரதபூசையையும், ரிஷி பஞ்சமி விரத பூசையையும் முறைப்படி கடைப்பிடிப்பவர்களுக்கு முன் ஜென்ம, இந்த ஜென்மப் பாவங்கள் நீக்கி மறு ஜென்மத்தில் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும் என்பது ரிஷி பஞ்சமி மூலம் எனும் நூலில் கூறப்பட்டிருக்கிறது.
சரஸ்வதி விரத பூஜை
வாரம் ஒருமுறை அந்த வெள்ளைத் தாமரை மலர்மீது
வீற்றிருக்கும் அன்னையைப் பூசிப்பதால் கல்வி, அறிவாற்றல்,
ஞானம் இவற்றைப் பெறமுடியும், கலைமகள் அருள் கிடைத்தால்
பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 12
அலைமகள், மலைமகள், அருள் விரைவில் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு புதன்கிழமை காலையிலும் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி ஆசி பெறவேண்டும்.
அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்றோ, வீட்டிலுள்ள கலைமகள் எனும் சரஸ்வதி தேவியின் படத்தின் முன்னின்றோ தேங்காய், பழம், அவல், பொரி கடலை, வெல்லம் ஆகியவற்றை நிவேதனப் பொருள்களாக வைத்துத் தூப தீபம் காட்டி, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் தாமரை மலரை அர்ச்சனை செய்து வழிபட்டுப் போற்ற வேண்டும். மனு தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துப் பின்வருமாறு:
இந்த விரதத்தை ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐம்பத்திரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடித்து விரதம் இருந்தால், சரஸ்வதியின் அருள்பெற்று கல்வியிலும் கலைகளிலும், புகழ்பெற்று முடிவில் பிரம்ம லோகத்தை அடைவர். இது மனுதர்ம சாஸ்திர நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தாகும்.
மகாலட்சுமி விரத பூஜை
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் பாதத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தேவியை வேண்டி இருக்கும் விரதமிது.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, காலை குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து, பட்டு தரித்து, விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.
அனந்த பத்மநாபனை வணங்க வேண்டும். மகாலட்சுமி தேவி படத்திற்கு மல்லிகை முல்லைச் சரங்களால் ஆன மலர்களை மாலையாகப் போட்டு அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், அவல், வெல்லம், கற்கண்டு ஆகியவற்றை நிவேதனப் பொருளாக வைத்துப் பொற்காசுகள் அல்லது வெள்ளி ரூபாய்கள் அல்லது நடைமுறையிலுள்ள நாணயங்களை தட்டில் வைக்க வேண்டும்.
மகாலட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி மூன்று முறை வணங்க வேண்டும். இப்படி இருபத்தொரு வெள்ளிக்கிழமை விரதமிருந்து அலைமகளை வணங்கினால் அஷ்டஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என அஷ்டலட்சுமி அருள் நூலில் கூறப்பட்டுள்ளது.
பராசக்தி விரத பூஜை
மலைமகள் எனும் பார்வதி தேவியை, பராசக்தியை வழிபடும் விரதமாகும் இது. இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் வரும் கடைசிச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள வேண்டும். அன்று அதிகாலை குளித்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்துவிட வேண்டும்.
விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில் பார்வதி தேவி அல்லது பராசக்தியின் படத்தை வைத்து, செந்நிற மலர்களால் அலங்கரித்து, இளநீர் கற்கண்டு கலந்த பால், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை நிவேதனப் பொருள்களாக வைத்து, தூப தீப ஆராதனை காட்டி வணங்க வேண்டும்.
அன்று பகல் உணவு மட்டுமே உண்டுவிட்டு உபவாசமிருக்க வேண்டும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.
இதனால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி குடும்ப நலம் ஏற்படும். பெண்களுக்கு மாங்கல்யபலம் கிடைக்கும். மகத்தான சக்தி வாய்ந்த விரதம் இதுவெனத் தட்சாசுரம்ஹாரம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்து ஒளி

ரோகிணி விரதம்
திங்கட்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் அது வளர்பிறையாக இருந்தால், அன்று அஷ்டமி திதி இருந்தால் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதனால் இலட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
லகங்ஷமி குபேர விரத பூஜை
லட்சுமி கடாட்சமும் குபேரகடாட்சமும் பெறுவதற்கும், நீண்ட காலத் தரித்திரம் நீங்குவதற்கும். இந்த லட்சுமி குபேர விரத பூசை செய்யப்படுகிறது.
ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை காலை குளித்து, மகாலட்சுமி மகாவிஷ்னுகோவிலுக்குச்சென்றுதாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் சித்ரான்னங்கள், இளநீர், கனிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து இந்த விரதத்தைச் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் அடுத்த பிறவியில் குபேரர்களாகச் செல்வச் செழிப்பு அடைகிறார்கள் என்கிறது கந்தபுராணம்
சப்தமி விரதம்
இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்தால் லக்ஷமிகடாக்ஷம் ஏற்படும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதை மாசி மாதம் வரும் சுத்த பஞ்சமியன்று ஆரம்பித்து ஐம்பத்தியிரண்டு நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
உமா சுக்கிரவார விரதம் (கெளரி வெள்ளி விரதம்)
பார்வதி தேவியைக் குறித்து வெள்ளிக்கிழமைதோறும் அநுஷ்டிக்கப்படும் இந்த விரதம் சித்திரை மாத வளர்பிறையின் முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்பட வேண்டும். பகல் ஒரு பொழுது போசனம் செய்யலாம்.
இமைய மீன்றெடுத்தளித்தவள் விரதமீதிழைத்தோர் அமைய நல்கிய பெருவளந் துய்ததன ராகி உமைதரும்பெருங் கருணையா வருங்கதியுவந்தார் தமையெடுத்தெடுத் துணர்ந்து தியாருழைத் தருமே.
ஐப்பசி உத்தர விரதம்
ஐப்பசி மாத உத்தர நட்சத்திரத்தில் கைக்கொள்ளப்படும் இந்தத் தேவி விரதத்துக்குப் பகல் ஒரு பொழுது போசனம் செய்தல் விதி.
பங்குனித் திங்கள்
பங்குனி மாதம் வரும் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து பொங்கிப் படைத்தல் சிறப்பு.
ஆடிப்பூரம்
அம்பிகை ருதுவாகிய நாள். விரதமிருந்து ருதுஷோபன விழா, ஊஞ்சல் காணுதல் சிறப்பு.
பங்குனி உத்தரம்
அம்பிகை திருமணநாள். விரதமிருந்து தேவியைத் தியானித்தல் சிறப்பு
தை அமாவாசை
அபிராமிப்பட்டருக்காக காதணியைக் கழற்றி பெளர்ணமி யாகக் காட்டிய தினம். விரதமிருந்து அபிராமி அந்தாதி ஒதுதல்
சிறப்பு.
(நன்றி: மயூரபதி முநீபத்திரகாளி அம்மன் g5 burr (36 gas LDGoff - 20OO)
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 13
ヌ அம்பாளின் அடியார்களே, பாழு போக்குங்கள் உங்
Dங்கள ரூபினி மதி அணி சூலினி
மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி செளந்தரியே!
கங்கண பாணியள் கனி முகம் கண்ட நல்
கற்பகக் காமினியே!
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி! 1
கானுறு மலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள் தான் உறு தவ ஒளி தார் ஒளி மதி ஒளி
தாங்கியே வீசிடுவாள் மான் உறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள் ஜெய! ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி 2
சங்கரி செளந்தரி சதுர் முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே பொங் கரி மாவினில் பொன் அடி வைத்துப்
பொருந்திட வந்தவளே எங்குலம் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே ஜெய! ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி! 3
தணதன தந்தண தவில் ஒலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய் கணகன கங்கண கதிர் ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய் பணபன பம்பண பறை ஒலி கூவிடப்
பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி - 4.
மாசிமகம் நl
இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்றுதான் மகம். மாதந்தே நட்சத்திரதினம் தனித்துவ சிறப்புடையது. சந்திர பகவான் சிம்ம இராக மாசி மகம் நாளன்று பூரணையும் சேர்ந்து வருவது வழக்கமாகுப் நடத்தப்படுகின்றன. மாசி மகம் நாளன்று விரதம் அனுஷ்டிப்பதும் வ
இந்து ஒளி 百
 

నోస్"
N
* ܐܠܼܨ هم” <టి
AR S
ଟ* ଏତ
ங்கள் இந்த அஷ்டகத்தை, நள் துக்கத்தை,
སྔོན་ན་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་()
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்ச நல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணம் மிகு வேலனைக்
கொடுத்த நல் குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்த நற்
சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி! 5
எண்ணியபடி நீ அருளிட வருவாய்
எம் குல தேவியளே பண்ணிய செயலின் பலன் அது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய் கண் ஒளி அதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே ஜெய! ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி 6
இடர் தரு தொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய் சுடர் தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகம் அதைத் தந்திடுவாய் படர் தரு இருளில் பரிதியாய்வந்து பழ வினை ஒட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி 7
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய பூீ தேவி ஜெய ஜெய துர்க்கா பூரீ பரமேஸ்வரி
ஜெய ஜெய பூரீ தேவி ஜெய ஜெய! ஜெயந்தி மங்கள காளி
ஜெய! ஜெய பூரீ தேவி ஜெய! ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி 8
O சத்திர மகிமை
றும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் யில் பிரவேசிக்கும் போது மகம் நட்சத்திரம் வருகின்றது. பொதுவாக இந்நாளில் இந்து ஆலயங்களிலே விசேட பூசை வழிபாடுகள்
ஐக்கமாகும். ノ
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 14
ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப் பூண் பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ வஞ்சனை இன்றிப் பகை இன்றிச் சூதின்றி வையக மாந்தர் எல்லாம், தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர், சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள் அல்லது நீங்கும் என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே! சொல்லத்தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே. அல்லல் கெடுத்(து) அமரர்க்கிணை ஆக்கிடும் ஓம் சக்தி ஓம் சக்தி ஒம்
நம்புவதே வழி என்ற மறை தன்னை நாம் இன்று நம்பி விட்டோம் கும்பிட்டெந்நேரமும் “சக்தி” என்றால் உனைக் கும்பிடுவேன் மனமே, அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஒம்
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கிசைத்தோம்; அன்னை பராசக்தி என்றுரைத்தோம், தளை அத்தனையும் களைந்தோம்; சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறில்லை காண்; இன்னும் அதே உரைப்போம், சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஒம்
நல்லதோர் வீணை
நல்லதோர் வினை செய்தே - அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லழ சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமைதாராயோ? - இந்த
மாநிலம் பயன் உற வாழ்வதற்கே? சொல்லழ சிவ சக்தி-நிலச்
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசை உறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய பழ செலும் உடல் கேட்டேன்;
சை அா) மனம் கேட்டேன் - /நித்தம் /5 று/ நித்த urg65
শ্ৰীকৄষ্ট
நவம் எனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத்தீசுழனும் - சிவ
சத்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன் 《
அசைவறு மதி கேட்டேன் - இவை శక్తి
அருள்வதில் உனக்கு) எதும் தடை உளதோ?
மோகத்தைக் கொன்றுவிடு
- அல்லால் என் தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு
- அல்லால் என் தன் சிந்தனை மாய்த்துவிடு; யோகத்(து) இருத்திவிடு o
- அல்லால் என்தன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத்(து) இருந்(து) உலகம்
- இங்(கு) உள்ளன யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு
- அல்லால் உயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு
- அல்லால் இதைச் செத்த உடலாக்கு;
இந்து ஒளி
 
 
 
 
 

காளி ஸ்தோத்திரம்
யாதும் ஆகி நின்றாய் - காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம் - நின் தன் - செயல்கள் அன்றி இல்லை
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்மை வாழ்க்கை எல்லாம் ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.
எந்த நாளும் நின் மேல் - தாயே! - இசைகள் பாடி வாழ்வேன் கந்தனைப் பயந்தாய் - தாயே - கருணை வெள்ளம் ஆனாய் மந்த மாருதத்தில் - வானில் - மலையின் உச்சி மீதில்
சிந்தை எங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே.
கர்ம யோகம் ஒன்றே - உலகில் காக்கும் என்னும் வேதம் தர்ம நீதி சிறிதும் - இங்கே தவறல் என்பது) இன்றி
மர்மம் ஆன பொருளாம் - நின் தன் - மலர் அடிக்கண் நெஞ்சம் செம்மை உற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.
என் தன் உள்ள வெளியில் - ஞானத்(து) இரவி ஏற வேண்டும் குன்றம் ஒத்த தோளும் - மேருக் - கோலம் ஒத்த வடிவும் நன்றை நாடு மனமும் -நீ எந் நாளும் ஈதல் வேண்டும் ஒன்றை விட்டு மற்றோர் - துயரில் உழலும் நெஞ்சம் உண்டோ.
νστανές
மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப்
பாரினிலே ஏதாயினும் வழி நீ சொல்வாய்; எமதுயிரே! வேதாவின் தாயே மிகப் பணிந்து வாழ்வோமே.
மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை
மாலையிட்டாள் உலையிலே ஊதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
மஹா காளியின் புகழ்
காலமாம் வனத்தில் அண்டக் கோலமாம் மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு fங்காரம் இட்டு உலவும் ஒரு வண்டு - தழல் காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறுடையது) எனக் கண்டு மறை காணுமுணிவோர் உரைத்தார் பண்டு.
INGGO
இந்தப் பதர்களையே
- நெல்லாம் என எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே
- உள்ளே நின்று இயங்கி இருப்பவளே.
உள்ளம் குளிராதோ?
- பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ?
- அம்மா! பக்திக் கண்ணிர் பெருகாதோ? வெள்ளக் கருணையிலே
- இந் நாய் சிறு வேட்கை தவிராதோ? விள்ளற்(கு) அரியவளே
- அனைத்திலும் மேவி இருப்பவளே.
2. பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 15
சக்தியின் நாமங்களும் அ
கண்ணகை அம்மன்
அக்கரைப்பற்று, அச்செழு, அமிர்தகழி, அல்வாய், ஆரையம்பதி, ஆனைக்கோட்டை, ஊரெழு, எருவில், எழுது மட்டுவாள், ஓமந்தை, கச்சாய், கன்னன்குடா, கரைச்சி, கல்முனை, சத்துருக்கொண்டான்,கற்குடா, காரைதீவு, குடத்தனை, கொக்கட்டிச் சோலை, கோப்பாய், கோணாவளை, செட்டிபாளையம், தம்பன் கடவை, தம்பிலுவில், நாகர்கோவில், நாவற்குழி, பளை, மட்டுவில், புங்குடுதீவு, புதுக்குடி யிருப்பு, போரதீவு, மகிழடித்தீவு, மந்திகை, மண்டுவில், மண்டைதீவு, மயிலிட்டி, மாதனை, மிருசுவில், முகத்துவாரம், முல்லைத்தீவு, முகமாலை, முனைக்காடு, வந்தாறுமூலை, வண்ணை, வற்றாப்பழை, வாழைச்சேனை, வீமன்காமம், வீரமுனை.
முத்துமாரி அம்பாள்
அச்சுவேலி, அல்வாய், அளவெட்டி, அமிர்தகழி, அனலை தீவு, இருபாலை, உடப்பு, உடையார்கட்டு, கசாத்துறை, கட்டுவன், கதிரவெளி, காரைநகர், காங்கேசன்துறை, கிளிவெட்டி, கீரிமலை, குஞ்சுக்குளம், குரும்ப சிட்டி, கொத்துக்குளம், கொழும்புத்துறை, கோட்டைக்கல்லாறு, சமயபுரம், சுட்டிபுரம், சாம்பல்தீவு, சித்தாண்டி, சூராவத்தை, தும்பளை, தொல்புரம், நாவலப்பிட்டி,நாவற்குடா,நானாட்டான்,நெடுந்தீவு,திருநெல்வேலி, பருத்திச்சேனை, பளை, பாகற்காய் குளம், புங்குடுதீவு, புதுக்குடியிருப்பு, புவக்பிட்டி, மந்துவில், மயிலிட்டி, மண்டைதீவு, மாத்தளை, முகத்துவாரம், முல்லைத்தீவு, வட்டுக்கோட்டை, வண்ணை, வல்லை, வஹரக்கா, வாழைச்சேனை, வேதாரணி, வேலணை, கோப்பாய், கொட்டாஞ்சேனை, கம்பளை.
பத்திரகாளி
மயூரபதி, அச்சுவேலி, இருபாலை, திருநெல்வேலி, திருமலை, தும்பளை, கல்முனை, சுழிபுரம், சங்கரத்தை மட்டக் களப்பு, வண்ணார்பண்ணை, இணுவில்.
அபிராமி அம்மன் - பிராண்டா பதி
அதிகை நாயகி - வீரட்டானம்
அல்லியம் பூங்கோதை திருவாரூர்
ஆதிமுத்துமாரி புளியங்குளம்
இராஜராஜேஸ்வரி அனலைதீவு, குருக்கடி, பலாலி, சிறுப்பிட்டி
தெல்லிப்பழை, நாயன்மார்கட்டு, புங்குடுதீவு, மந்துவில், மாவிட்டபுரம்
ஒப்பிலா நாயகி நெடுங்குளம்
ஒப்பிலா முலையம்மை ஆவடுதுறை
கடனாட்சி மட்டக்களப்பு
கருமாரி நீர்கொழும்பு, திருவேற்காடு
கருந்தார்க்குழலி திருப்புகலூர்
கனகாம்பிகை இரணைமடு
காமாட்சி கச்சியேகம்பம், நீர்வேலி, வண்ணை.
காளிகா பரமேஸ்வரி காளிகாதேவி காளியம்மாள்
புங்குடுதீவு களபூமி, கன்னாதிட்டி, புங்கை, மல்லாகம் கொக்குவில், சங்கானை, மாதனை, மானிப்பாய், வண்ணை
இந்து ஒளி -
 
 
 

ள்பாலிக்கும் பதிகளும்
கெளரியம்மை சண்டிகா பரமேஸ்வரி சல்லியம்மை சிங்காபுரியம்மை சிவகாமியம்மன் சிவகாமசுந்தரி சிவசக்தி சிவமுத்துமாரி சீதளாம்பிகை சுவர்ணாம்பிகை சொக்கநாயகி திருநிலைநாயகி திரெளபதை அம்பாள் துர்க்காதேவி
தேவரையாளி அம்பாள் நகுலாம்பிகை நாகம்மை
நாகபூஷணி
நாச்சியம்மன் பத்தினித்தெய்யோ பத்தினியம்மை
பண்மொழியம்மை பராசக்தி பருவதவர்த்தனி
பாலசுந்தரி பார்வதியம்மை புவனேசுவரி
பெண்ணினல்லாள் மகாமாரியம்மா
மகாமுத்துமாரி மாதுமையம்மாள் மகாகாளி மனோன்மணி மிந்திரன் அம்பாள் மீனாட்சி அம்மை
முதலியம்மன் வடிவாம்பிகை வாலாம்பிகை வாலாம்பிகை வாலையம்மை வராவரி அம்பாள் விசாலாட்சி வீரபராசக்தி வீரமகாகாளி
வெண்ணிற்றுமையம்மை
திருக்கேதீச்சரம்
பருத்தித்துறை
சாம்பல்தீவு
மட்டக்களப்பு இணுவில், கோண்டாவில், சிதம்பரம், திருமலை. திருநெல்வேலி
அச்சுவேலி
பழுகாமம்
வவுனிக்குளம்
சுன்னாகம்
திருப்புன்கூர்
பிரமபுரம் பழுகாமம், பாண்டிருப்பு, மட்டக்குளி, உடப்பு அளவெட்டி, புதுக்குடியிருப்பு திருமலை, தெல்லிப்பழை, நுணாவில், வன்கூவர் அல்வாய், ஏழாலை
நகுலேஸ்வரம்
கற்சிலைமடு, சீரணி அராலி, ஏழாலை, காரைநகர், கோண்டாவில், சரவணை, நயினாதீவு, பரந்தன், புங்கன்குளம் கிளான், நவாலி
கதிர்காமம்
ஈரளக்குளம், களுவன்கேணி, சம்புக்கழி, திருமலை.
பாண்டிக்கொடுமுடி
பூநகரி
ஆவரங்கால், இராமேச்சரம், உரும்பிராய், ஊரெழு, புலோலி பாச்சிலாச்சிராமம்
திருக்கயிலாயம் அச்சுவேலி, இடைக்காடு, கிளிவெட்டி, கீரிமலை, சுதுமலை, மணற்காடு, நாவற்குழி கழுக்குன்றம்
புளியங்கூடல், தொல்புரம், மட்டக்களப்பு, வரிசைப்புலம் கொழும்புத்துறை, வழக்கம்பரை திருகோணமலை
ஹல்ஸ்டோப் (கொழும்பு) நந்தாவில், நல்லூர், நாரந்தனை துன்னாலை அளவெட்டி, உடுவில், ஊரைதீவு, சங்கத்தானை, சரவணை, ஊரெழு புங்குடுதீவு, திருவாலவாய்.
புலோலி
முன்னேஸ்வரம்
முன்னேஸ்வரம் வண்ணார்பண்ணை, வல்வை திருநெல்வேலி
கொக்குவில்
காசியம்பதி, திருமலை வண்ணார் பண்ணை இணுவில், கெருடாவில், சரசாலை, புங்குடுதீவு, வண்ணார்பண்ணை, கொழும்பு நல்லூர்ப்பெருமணம்.
(நன்றி: மயூரபதி முநீ பத்திரகாளி அம்மன்
g5 buTSG36 gas LD6Dr - 20OO)
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 16
hmmhrhrror ്
திருவிளக்கின் தகைமைகள்:-
பூஜைக்கு ஏற்றப்படும் விளக்கு, பித்தளை, செம்பு, வெள்ளி என்னும் உலோகங்களில் ஒன்றினால் அமைய வேண்டும். எவர் சில்வர் இரும்பினால் ஆனது பயன்படுத்தக்கூடாது. இரும்பில் விளக்கேற்றினால் தரித்திரம், வறுமை உண்டாகும். இன்று பெரும்பாலான வீடுகளில் துருப்பிடிக்காத இரும்பினால் (Stainless Steel) 9,60T 656T6 (53,6061TGu பயன்படுத்துகின்றார்கள். இது தவிர்க்கப் பட வேண்டியதாகும். பித்தளை விளக்கு களை வாங்குவதற்குப் பொருள் வசதியற்ற வர்கள், மண் அகல்களைப் பயன்படுத்தலாம். அதில் தவறேதுமில்லை.
திருவிளக்கின் பயன்:-
திருவிளக்கில் ஐந்து சுடர்கள் இருக்க வேண்டும். ஐந்து சுடர்களையும் ஏற்றுவது சிறந்தது. நாள்தோறும் வழிபடும் வழிபாட்டில் ஒருமுகமே போதுமானது. தீபத்திற்குச் சிறந்தது நெய் - நெய் விளக்கேற்றி வழிபட்டால் குலம் தழைக்கும். நல்லெண்ணெய் விளக்கு மகாலக்ஷமி, மகாவிஷ்ணு, சனீஸ்வரனுக்குச் சிறப்பானது. தேங்காயெண்ணெய் விநாயகருக்குச் சிறப்பானது. இலுப்பை எண்ணெய் நெய்க்கு
சமமானது.
பஞ்சினாலே திரியிடலாம், தாமரைத் தண்டின் நூலால் திரியிடல் மிக மிகச் சிறப்பானது.
விளக்கின் பாதத்தில் பூவைக்கலாம். அல்லது தண்டின் பாகத்திலே பூச்சரமிடலாம். திருவிளக்கின் மேல் பூவைத்தால், வெப்பத்தினால் கருக வாய்ப்புண்டு.
தற்பொழுது எல்லா விழாக்களிலும் 'மங்கல விளக்கேற்றல்” என்ற ஒருநிகழ்ச்சிகட்டாயமான ஒருநிகழ்வாக ஆக்கப்பட்டுள்ளது. தேவையோ, தேவையில்லையோ விளக்கேற்ற ஒரு பட்டியலே வாசிக்கப்படுகிறது. தீபம் ஏற்றும் போது பாதணிகளைக் கழற்றி விட்டு ஏற்றவேண்டும். மெழுகு வர்த்தியைப் பயன்படுத்துவதையும், தலைவிரிகோலமாக நின்று ஏற்றுவதையும் தவிர்த்தல் வேண்டும். விளக்கைச் சுற்றிக் கோலம் போட்டு விளக்கிற்கு குங்குமத் திலகமிட்டுப் பூக்களால் அலங்கரித்து மங்களமாக அமைப்பதே சிறந்ததாகும்.
திருவிளக்கு மகாலசுஷ்மியின் அம்சம். மிகவும் புனிதமாகப் போற்ற வேண்டும். காலை, மாலை நேரங்களில் பெண்கள் தங்களைத் தூய்மை செய்து கொண்டு மாக்கோலமிட்டு அதில் திருவிளக்கை வைத்து சந்தன குங்குமத்தால் அலங்காரம் செய்து பாதத்திலே மலரை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பழைய சங்க நூல்களிலே மாலைக் காலத்திலே நெல்லும், மலரும் தூவி திரு விளக்கேற்றிஇல்லுறை தெய்வத்தைப்பெண்கள் வழிபாடுசெய்வது
இந்து ஒளி
 
 
 

சுட்டிக் காட்டப்படுகின்றது. தீப ஒளிபரவும் இடங்களிலே தரித்திரம், நோய் மன சஞ்சலம் முதலிய தீயவைகள் அண்டாது. செல்வமும், செழிப்பும் சௌபாக்கியமும் ஏற்படும். திருவிளக்கேற்றும் பொழுது தெரிந்த துதிகளைச் சொல்வது நல்லது.
1 இல்லக விளக்கதுஇருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே"
2 சீலத் திருவிளக்கே - சீதேவி லசுஷ்மியே
கோலத்திருவிளக்கே - கும்பிட்டேன்நின்னடியே தில்லை வனநாதனும் - சிவகாமி அம்மையையும் சிந்தையில் கொண்டிருக்க - செய்தவினை நீங்கிவிடும் தந்தை தமர் தாய் சார்ந்த குரு அரசும் - சிந்தை மகிழ்வாழ்வை தேவியே செய்தருள்வாய் தொட்டிலுக்குப்பிள்ளையும் - தொழுவிற்குப் பால் பசுவும் பட்டறைக்கு நெல்லும் - பதிந்த மரக்காலும் உனக்கெரிக்க எண்ணையும்- எனக்குண்ணச் சோறும் தட்டாமல் தாயே - தந்தருள்வாய்தகவுறவே அரியவினைதீர்க்கும் - ஆனைமுகத்தோனே அலரி சண்பகம் கதலி முக்கனி - ஆனபடி படைத்தேன் அன்பின் மணிவாசகத்தை - ஞானம் பெறவே நயந்தோதினேன்
அருள்வாய்
திருவிளக்கு அகவல்
3. விளக்கே - திருவிளக்கே - வேந்தன் உடன் பிறப்பே
ஜோதிமணிவிளக்கே - பூரீதேவிப் பெண்மணியே அந்தி விளக்கே-அலங்கார நாயகியே காந்தி விளக்கே - காமாகூகித் தாயாரே பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத்திரி போட்டு குளம்போல நெய்விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன். ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சைதாருமம்மா சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா பெட்டி நிறைய பூஷனங்கள் தாருமம்மா பட்டி நிறையப் பால்ப் பசுவைத் தாருமம்மா கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா புகழுடம்பைத் தாருமம்மா - பக்கத்தில் நில்லுமம்மா அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா.
தரிசனம் காணல்:-
4. சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக் கிfடங் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன் முத்துக் கொண்டை கண்டேன் முழுப் பச்சை மாலை கண்டேன் சவுரி முடிகண்டேன் தாழைமடல் குடக் கண்டேன்
பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)
Se

Page 17
பின்னழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன் சாந்துடன் நெற்றி கண்டேன்- தாயார் வடிவங் கண்டேன் கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன் தங்க ஒட்டியானம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன் காலிற் சிலம்பு கண்டேன் - காலாழி பீலி கண்டேன் மங்களநாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே! அருந்துணையே!அருகிலிருந்து காருமம்மா! வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா தாயாராம் உன்றன்தாளடியில் சரணம் என்றேன் மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.
இத்துதிப் பாடல்களை மனனம் செய்து ஒதினால் நன்மைகள் உண்டாகும். இல்லத்தின் செழிப்பு பெண்களிடமே தங்கியுள்ளது.
குத்துவிளக்கு ஏற்றும் முறைகளும், தத்துவங்களும் பெண் திருமணமாகி, புகுந்த வீடு செல்லும் போது, அந்த
வீட்டிற்கு விளக்கு ஏற்றச் செல்வதாகப் பேசப்படுகிறது.
விளக்கின் ஐந்து முகங்களும், பெண்ணுக்கான ஐந்து
இலக்கணங்களைக் குறிப்பிடுவதாகும்.
1. பொறுமை 2. சகிப்புத் தன்மை 3. விட்டுக் கொடுக்கும் தன்மை 4. சமயோசித புத்தி 5. வைராக்கியம் (நல்ல காரணங்களுக்காக) வாழ்வு இனிமையாக நடைபெறவும் வாழ்வில் முன்னேறவும்
இந்த ஐந்து குணங்களும் துணைபுரியும்.
* விளக்கு தானாக அணைய விடாமல் ஒரு பூவால் ஒற்றி
அணைக்க வேண்டும்.
: வாயால் ஊதியோ, கையால் விசிறியோ அணைக்கக்
கூடாது.
விளக்கை நிறுத்துவதற்கென்று மங்கலச் சொற்கள் சில உள்ளன. : “விளக்கை அணைச்சிடு” என்று சொல்லக் கூடாது. விளக்கை பெரிசுபடுத்து, விளக்கை அமர்த்து , விளக்கை குளிரவை போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். ; “விளக்கைத் தூக்கி வை” என்று சொல்வதற்குப் பதிலாக
“விளக்கை நகர்த்தி வை” என்று சொல்ல வேண்டும்.
வீட்டில் ஏற்றப்படும்திருவிளக்கே இலட்சுமியின்கடாட்சமாகும். மாலை ஆறு மணிக்கு வீட்டின் பின்கதவைச் சாத்திவிட்டு முன்கதவைத் திறந்து, வாசலில் நீர்தெளித்து, கோலமிட்டு, வீட்டில் விளக்கு ஏற்றப்படுகின்றது. இதன் பொருள் முன் வாசல் வழியாக வரும் இலட்சுமி பின் வாசல் வழியாகச் சென்று விடக்கூடாது என்பது தான். தீபம் ஏற்றிய பின், பின் கதவு திறக்கப்படலாம். அதாவது இலட்சுமி தீபஒளியாக வீட்டில் திகழ்கிறாள்.
தீபமும் திசைகளும்
கிழக்கு : துன்பம் நீங்கும், பீடைகள் அகலும் சகல சம்பத்தும்
உண்டாகும். மேற்கு கிரகதோஷம், பங்காளிப்பகையை நீங்கும். வடக்கு : திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். தெற்கு : தெற்குப் பார்த்துத் தீபம் ஏற்றக் கூடாது.
(இதனால்தான் வாஸ்து சாஸ்திரத்தில் தெற்கு நோக்கி பூஜை அறை வைக்க அனுமதி இல்லை.)
பூசை நேரங்களில் மட்டும் எரிவது - சாதாரண விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டு இருப்பது - நந்தா விளக்கு காலை, மாலை வேளைகளில் மட்டும் எரிவது - சந்தி விளக்கு
இந்து ஒளி

S.
”ܐܢ ܬܣܛܘܢ
لای۔۔۔ ふ*
్స్యూ3
விளக்குத் திரியின் பலன்கள் 1. தாமரைத் தண்டில் திரி போட்டால் ஜென்ம பாவங்கள்
நீங்கும். 2. வாழைத்தண்டு நூல்திரி போட்டால் குல தெய்வக் குற்றம்,
சாபம் நீங்கும். 3. புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்தியத்
தகராறு நீங்கும். 4. புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னிரை விட்டு உலர வைத்துப்
போட்டால் வீட்டில் இலட்சுமி கடாட்சம் வந்து சேரும். 5. சிவப்பு நிறத்துணியால் திரிபோட்டால் - திருமணத்தடை
நீங்கும் மகப்பேறு உண்டாகும்.
விளக்கு ஏற்ற உகந்த எண்ணை வகைகள்
1. நெய் - சகலசெல்வமும் பெருகும். நலனும் உண்டு. முருகன் சந்ததியில் நெய் விளக்கு ஏற்றுவது மரபு.
2. நல்லெண்ணை - நல்லெண்ணையில் விளக்கேற்றி னால் எல்லாப் பீடையும் விலகும். யமபயம் இருக்காது.
3. இலுப்பை எண்ணெய் - ஆரோக்கியம் உண்டாகும்.
4. ஆமணக்கு எண்ணெய்
விளக்கெண்னை - சகல சம்பத்தும் உண்டாகும்.
5. ஐந்துவகை எண்ணைகள் - நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, இலுப்பை எண்ணை தேங்காயெண்ணை ஆகிய ஐந்தும் விளக்கில் ஊற்றிஒரு மண்டலம் (45 நாட்கள்) பூஜை செய்தால் தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும். (கடலை எண்ணெயில் விளக்கு
ஏற்றக் கூடாது)
விளக்கு வகைகள் 1. வெங்கல விளக்கு - பாபம் போகும் 2. இரும்பு விளக்கு - சனிக்கிழமை இரும்பு அகலில் தீபம் ஏற்றுவது சனீஸ்வர பகவானுக்கு பிரீதியாகும். 3. மண் விளக்கு - வீரிய விருத்தியை அளிக்கும்
4. வெள்ளி அல்லது பஞ்சலோக (தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு) விளக்குகள் இவை பூஜைக்கு உகந்தவை, சிறப்பைத் தரும். (எவர் சில்வர் விளக்கு பூஜைக்கு உகந்தது அல்ல)
முகங்களுக்கு உரிய பலன்கள்
ஒரு முகம் ஏற்றுவதால் - மத்திய பலன்
1. 2. இரண்டு முகம் - குடும்ப ஒற்றுமை பெருகும் 3. மூன்று முகம் - புத்திரசுகம் தரும் 4. ஐந்து முகம் - செல்வம் பெருகும் சகல
செளபாக்கியமும் கிடைக்கும். (விசேட காலங்களில் ஐந்து முகங்களும் ஏற்றப்பட வேண்டும்.)
விளக்கு
1. நம் அக இருளை நீக்கும்
நற் சிந்தனை உண்டாக்கும் பரநலச் சிந்தனை மிளிரச் செய்யும் பண்பு நலன்கள் பெருகும் பாவங்களைப் போக்கும்.
பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 18
பண்டிதமணியின் பார்:
bல்லூர் கந்தசுவாமி கோயிலில் 1872ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. கந்தபுராண படனத்தின்போது சூரனமைச்சியலில் வரும் “வேதக்காட்சிக்கும்.” என்ற பாடலுக்கு ஆறுமுக நாவலர் பயன் சொன்னார். நாவலரின் மருகரும் மாணவருமான வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை செய்யுளை வாசித்தார். நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே சிவதீட்சைபெற்ற அந்தணர்களே புராண படனஞ் செய்து வருவது வழக்கம். இது பொது விதி. நாவலர் விஷயத்திலும் வித்துவசிரோமணி விஷயத்திலும் பொது விதியைக் கொள்ளவில்லை. கோயில் நிர்வாகத்தினர் இந்த இருவருக்கும் விசேட மதிப்புச் செய்து வந்தார்கள்.
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை இலக்கிய ரசனையில் - ரசனையை எடுத்துக் காட்டுவதில் - ஈடு எடுப்பு இல்லாதவர். அவருக்குப் பயன் சொல்லுவதன்றி வாசிக்கிற வழக்கம் கிடையாது. அவர் வாசிக்க விரும்பினாலும், அவர் வாசிக்கப் பயன் சொல்லுகிறவர் யார்? யாருக்குத் துணிவு வரும்? - இத்துணைச் சிறந்த வித்துவசிரோமணி அன்று அடங்கி ஒடுங்கி மிக்க அச்சத்துடன் வாசித்தார்; நாவலர் பயன் சொன்னார்.
மாமனார் முன்னிலையில் இந்த மருகரைக் காணுவது அபூர்வம். அன்று 'மருகர் வாசித்தார், மாமனார் பயன் சொன்னார்’ என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். கற்பனைக்கு எட்டாத அந்தக் காரியத்தை, எப்படியோ கோயில் முகாமையாளர் ஒழுங்கு செய்து விட்டார்.
கோவில் முகாமையாளர் செய்த இந்த ஒழுங்கு முன்னமே எங்கும் பரவிட்டது. மூலைமுடுக்குகளிலுள்ள வித்துவான்களும் வந்து விட்டார்கள். புராணம் கேட்கும் ஆர்வமுள்ள பெண், ஆண் அத்தனை பேரும் குழுமிவிட்டார்கள். எள்ளிட இடமின்றி எங்கும் நெருக்கம் மிக்கபோதும் அமைதி குடிகொண்டிருந்தது. யாவரும் மாமனையும் மருகரையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.
“காலத்துக்கும் விஷய குணபாவத்துக்கும் ஏற்ப, எச்சுதியில் எவ்விராகத்தில் வாசிக்கப்படுகிறதோ, அச்சுதியில் அவ்விராகத் திற்றானே பொருள் சொல்லவேண்டும்” என்பது நாவலர் எழுதிய சிவபுராண படனவிதி. அவ்விதிக்குப் பரிபூரண இலக்கியமாய் இருவரும் திகழ்ந்தார்கள்.
பதவுரை, பொழிப்புரை நடந்ததன்மேல் விரிவுரை நடந்தது. சரீரம் புளகங்கொள்ளக் கண்ணிர் ததும்ப மாமனார் முகத்தை நோக்கியது
எங்கள் குருநாதன்
என்னை எனக்(கு) அறிவித்தான் எங்கள் குருநாதன் இணையடி என் தலை வைத்தான் எங்கள் குருநாதன் அன்னை பிதா குரு ஆனான் எங்கள் குருநாதன்
அவனி எல்லாம் ஆள வைத்தான் எங்கள் குருநாதன் முன்னை வினை நீக்கி விட்டான் எங்கள் குருநாதன் மூவருக்கும் அறிய ஒண்ணா எங்கள் குருநாதன்
நன்மை தீமை அறியாதான் எங்கள் குருநாதன் SILITA
நான் தானாய் விளங்குகின்றான் எங்கள் குருநாதன் நற்
(இந்து ஒளி
 
 
 

வையில் நாவலர்
நர் சுவாமி ஈண்டு தந்த இனிய குருபர! சிந்தனை என்னை ஆண்டவ இங்கித சிங்கமே!
நோக்கியபடி சித்திரப் பாவைபோல ஆடாமல் அசையாமலிருந்தார் மருகர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை. மருகரின் நிலை சபையெங்கும் பரவியது. கல்லால் முனிவர்கள் போலக் காட்சியளித்தார்கள் கற்றவர் நிரம்பிய சபையினர்கள். ஒரு காலத்திலே தருமபுரத்தில் குமரகுருபரர் “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள என்று பெரிய புராணத்தில்வரும் அருமைச் செய்யுளுக்கு விரிவுரை நிகழ்த்தியருளினார். அதனை இந்த நிகழ்வு ஞாபகம் செய்வதாயிருந்தது.
ஒருமுறை தமது பிரசங்க முறையல்லாத ஒருநாளில், வண்ணை சிவன் கோயிலிலே தமக்கு அன்று ஆயத்தமில்லை என்று கூறி, "மரணத்துக்கு ஆயத்தமில்லை” என்று ஆயத்தம் செய்யாமலொரு பிரசங்கம் செய்தவர் நாவலர். அந்தப் பிரசங்கம் அவர் செய்த பிரசங்கங்களில் தலைசிறந்ததும் உருக்கம் நிறைந்ததும் ஆகும். அவ்வாறே அன்று நல்லூர் கந்தசுவாமி கோயிலில் கந்தபுராணப் பாடலுக்கு செய்த விரிவுரையும் சிறப்பானதாகும்.
பார்சிவல் பாதிரியார், மேன்மை பொருந்திய சைவநீதியை நாவலர்பாற் கண்டார். கண்ட மாத்திரமே, சற்றுந் தயங்காமல் நாவலரை “மமகுரு' என்று துதித்தார். 'மம' என்பது சமஸ்கிருத வார்த்தை எனது என்பது அதன் பொருள். பாதிரியார் நாவலர் பிரசங்கம் நடக்கும் இடங்களுக்குப் போய், நாவலர் எதிரில் எழுந்து நின்று “மமகுரு என்று வாயாரக் கூறிக் கைகூப்பி வணங்கி வருவதுண்டு. கைகூப்பி வணங்கும் வணக்கமே பூசை, மமகுருமந்திரம். பேர்சிவல் பாதிரியார் முன்னமே நாவலருக்கு நேரில் குருபூசை நடத்திவிட்டார். நாவலர் காலத்திலேயே பார்சிவல் என்கிற வெள்ளைக் குருக்கள் நடத்திய பூசையையே நாம் தொடர்ந்து நடத்துகின்றோம்.
பார்சிவல், பைபிளை நல்லதமிழில்திருத்தித்தரும்படிகேட்டபோது நாவலர் சற்றேனும் தயங்காது திருத்திக்கொடுத்தார். அதேசமயத்தில் மதமாற்றம் நடப்பதைக் காணுந்தோறும் பெரியதொரு எரிமலை யாய் வெடிப்பார் நாவலர்.
நாவலர் தாம் சிரமேற்கொண்ட நீதியை ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்தல் தொடக்கம் இலங்கைப் பிரதிநிதித் தெரிவுவரை பரவச் செய்தார். அதனாலே இன்று உலகம் பாகுபாடு காட்டாமல் நாவலரை மதிக்கிறது.
என் குருபர புங்கவ சிங்கமே!
மூன்றும் ஒன்றாய் முடிந்திட வேண்டுமே முனையின் வாசல் திறந்திட வேண்டுமே ஊன்று பாதத்(து) உறங்கிட வேண்டுமே உள்ளே ஆனந்தம் பொங்கிட வேண்டுமே தூண்டு சோதி விழுங்கிட வேண்டுமே தூய நிர்க்குண அற்புதப் பொற்பதம்
6 பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 19
அகில இலங்கை இந்து மாமன்றம் நடத்திய மாணவர்களுக்கான கட்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகம்
மாணவர் ஒளி
யா/ வடமரா
யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்த கந்தப்பர் சிவகாமிப்பிள்ளை தம்பதியின் ஐந்தாவது மகனாக ஆறுமுகநாவலர் 1822ஆம் ஆண்டு அவதரித்தார். இவரது பிள்ளைத் திருநாமம் ஆறுமுகம் என்பதாகும். ஒல்லாந்தரின் பின் வந்த ஆங்கிலேயர் மிஷனரிமார்கள் மூலம் கிறிஸ்தவத்தையும் ஆங்கில மொழியையும் சுதேசிகளிடையே பரப்பலாயினர். இந்நிலையில்தான் ஆறுமுகநாவலர் தோற்றம் பெற்றார். இவர் தம் சிறு வயதிலேயே இலக்கண, இலக்கியங்களை முறைப்படிகற்று புலமை எய்தினார். இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் பெற்றுக் கொண்ட புலமையினால் சைவ சமயத்தை மட்டுமன்றிப் பிற சமயங்களையும் அறிந்திருந்தார். பின் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாகிய கல்வியையும் வளர்க்க வேண்டும் என்னும் பேராசையால், 1848இல் ஆசிரியத் தொழிலைத் துறந்து நாட்டுப் பணிகளில் இறங்கினார். சமயப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி என்பன ஆறுமுகநாவலரால் ஆற்றிய பணிகளாகும். இவர் சிவபக்தி உடையவர். சிறந்த கல்விமான், பிரசங்கத்தில் வல்லவர், வாக்குச் சாமர்த்தியம் உள்ளவர், நல்லொழுக்கம் உடையவர், அப்பண்புகள் இளமைக் காலந் தொட்டுக் காணப்பட்டன. அவை, அவர் சமயப் பணியைச் திறம்படச் செய்ய உதவியாக அமைந்தன.
சமயப்பணி
இளமையிலே புலம் நலஞ் சிறக்கப் பெற்ற ஆறுமுகநாவலரை யாழ்ப்பாணத்து மக்களெல்லாம் தம் சமய குரவர் எனப் போற்றி வந்தனர். "தமிழ், சமயம் ஆகிய இரண்டும் என் இரு கண்கள். அவை இரண்டும் ஒளி குன்றாமல் இறுதி வரை காத்துப் பயன் கொள்வதே என் கடன். அவை வாழப் பணிபுரிதலே என் வாழ்வின் குறிக்கோள்” என்று வாழ்ந்து பணி செய்தவர். இவர் புரிந்த சமயப் பணிகள் பிரசங்கம் செய்தல், புராண படனஞ் செய்தல், கண்டனங்கள் செய்தல், பிரபந்தங்கள் இயற்றுதல் என்பனவாகும்.
பிரசங்கம் செய்தல்
அழிந்து கொண்டு குற்றுயிராய் இருந்த சைவத்தை வளர்க்க நாவலர் தம் சொல்லாற்றலைக் கையாண்டார். பிரசங்கம் மூலம் சைவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்த முயன்றார். 1847 இல் வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலில் நாவலர் அவர்களின் பிரசங்கங்கள் பொதுவாகக் கடவுள் வாழ்த்து, சிவபக்தி, வேதாகமங்கள், திருவிழா, யாக்கை நிலையாமை சிவதீட்சை, மகளிர் ஒழுக்கம்,
இந்து ஒளி

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவுதினத்தையொட்டி 2012 இல் டுரைப்போட்டியில் கீழ்பிரிவில் முதலாவது பரிசு பெற்ற கட்டுரை
நாவலரை நினைந்து போற்றுவோம்
செல்வி இரத்தினராசா இராகவி
ட்சி இந்து மகளிர் கல்லுாரி, பருத்தித்துறை
தருமம், செய்நன்றியறிதல், கல்வி கற்பித்தல், பிரபஞ்சம், மாயை, பேதமை, கொல்லாமை, போன்ற பொருள்களில் அமைந் திருந் தன. பிரசங் கத் தின் சிறப்புக் கருதி திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு "நாவலர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
புராண படனஞ் செய்தல்
கோயில்களில் புராண படனஞ் செய்யும் முறை ஈழத்தவர்க்கே உரிய தனிச் சிறப்புக்குரியதாகும். இந்த முறை ஆறுமுகநாவலரால் சமய பிரசார ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. புராணபடன முறை என்பது ஒருவர் புராணப் பாடல்களைப் பாட, இன்னொருவர் அதன் பொருள்களைக் கூறும் முறையாகும். இதில் பாடுபடுபவரும் சரி, பொருள் சொல்பவரும் சரி பாடல் போல இசைத்துத்தான் பாடுவர். இப்புராண படனம் மூலம் கல்வியையும் சமய பக்தியையும் வித்துவத்தையும்
ஆறுமுகநாவலர் மக்களிடத்தில் ஏற்படுத்தினார்.
கண்டனம் செய்தல்.
ஆறுமுகநாவலர் தம் சமயத்துக்கு எதிராகச் செயற் பட் ட வர் கள் மீது கண் ட னங் களை மேற் கொண்டார். இக் கண்டனங்களை இரு நிலைகளில் மேற் கொண்டார். ஒன்று, கிறிஸ்தவ சமயத்தின் மேல் தொடுத்த கண்டனங்கள்.
பிரபந்தங்கள் இயற்றுதல்
சைவத்தை வளர்க்கும் நோக்கில் நாவலர் சில பிரபந்தங்களை இயற்றியுள்ளார். அதாவது, புலோலி ஸ்ரீ பசுபதீஸ்வரப் பெருமான் திருவூஞ்சல். கதிர்காமக் கந்தன் மீது பாடிய கீர்த்தனைகளும் சில தனிப்பாடல்களும், அவற்றுள் அடங்குகின்றன.
சமூகப் பணி
ஆறுமுகநாவலர் சமயப் பணிகள் மட்டுமன்றிச் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அரசியலிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரின் சமூகப் பணிகளுக்கு எடுத்துக் காட்டாகக் கஞ்சித் தொட்டித் தருமம், மட்டக்களப்பு யாழ்ப்பாண வேளாண்மைச் சங்கம் என்பன குறிப்பிடத்தக்கவை. கஞ்சித் தொட்டித் தருமமானது 1876, 1877இல் இலங்கையில் வடபகுதி உட்பட பல இடங்களிலும் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தினால் மக்களுக்கு உண்டான பசி, பட்டினியைப் போக்குவதற்காக ஆறுமுகநாவலரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பணியாகும்.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 20
கல்விப் பணி
சைவ சமயக்கல்வியை வளர்ப்பதற்கு ஆறுமுகநாவலர் ஆற்றிய பணிகளை மேல்வருமாறு கூறலாம். 0 1848இல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில்
சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவியமை. 0 1864இல் தமிழகம் சிதம்பரத்தில் சைவப்பிரகாச
வித்தியாசாலையை நிறுவியமை. 0 1872இல் கோப்பாய் மற்றும் புலோலி ஆகிய
இடங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவியமை. 0 1849இல் நல்லூரில் வித்தியாநுபாலன இயந்திரசாலை
என்னும் அச்சியந்திரசாலையை நிறுவியமை. 0
இலக்கணச் சுருக்கம், இலங்கைப் பூமி சாஸ்திரம், சிவாலய தரிசன விதி, சிதம்பர மான்மியம் முதலான நூல்களை எழுதி வெளியிட்டமை.
பெரிய புராண வசனம் எழுதி வெளியிட்டமை. 0 ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்நெறி, நல்வழி
போன்ற நூல்களுக்கு உரையும் இன்னும் பல நூல்களுக்கும் உரை எழுதி வெளியிட்டமை.
ஆறுமுகநாவலர் இத்தகைய சைவப்பணிகளை ஆற்றியதோடு மாத்திரமன்றித் தனக்குப் பின்னர் தனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றி சிவசங்கரப் பண்டிதர்
அம்பிகை அவதரித்த
மாசி மாதத்தில் மகநட்சத்திரம் கூடிய புண்ணிய காலம் ம படுகின்றது. முன்பு ஒரு காலத்தில் வருணபகவானைப் பிடி கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெரும் அவனைக் காப்பாற்றியருளினார். அவனை விடுவித்த தினம் மா வருணன் சிவபெருமானிடம் அன்றைய தினத்தில் புண்ண பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீட்டுப்பேற்றை அருளும்படி அவ்வாறே வரமளித்தார்.
முன்பு ஒருகாலத்தில் சிவபெருமான் பார்வதி சமேதரராக ன இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி தத்துவ நிலையைச் சாற்றியருளும்படி கேட்டார். அதற்குப் பர குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் செயல்படுகின்றேன்” என்றார். அதனைக் கேட்ட பார்வதி ; நடைபெறுகின்றன என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவ எதுவும் இயங்காது என்ற கூறித் தனித்து நின்றார்.
இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக” என்று இறைஞ்சி வரத்தை நிறைவேற்றத் திருவுளங்கொண்டார். தேவியைப் சாரும். அப்பாவம் நீங்க நீபோய் யமுனா நதியில் வலம்புரி அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனாநதியில் கொண்டிருந்தார்.
ஒரு மாசிமக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேத அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கை கண்டு எடு சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ற் சென்றான். அம்பிக்ைகு தாட்சாயினி என்று நாமகரணஞ் சூட் அம்பிகை மாசிமக நட்சத்திரத்தில் அவதரித்ததினால் மாசி மக
(இந்து ஒளி

சி.வை. தமோதரம்பிள்ளை, காசி வாசி செந்திநாத ஐயர், சபாபதி நாவலர், சதாவதானி கதிரவேற்பிள்ளை முதலான சைவப்பெரியார்களை நெறிப்படுத்தி நாவலர் வளர்த்த நன்நெறி ஈழத்திலும், இந்தியாவிலும் தொடர் வழிவகுத்தார். இத்தகைய பணிகளால் நாவலர் ஈழத்து சைவசமயத்தின் மறுமலர்ச்சித் தந்தையாகவும், விடிவெள்ளியாகவும் கருதப்பட்டார். இவர் 1879ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21ஆம் திகதி இறையடி சேர்ந்தார். அவரது பூதவுடல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை கோம்பையன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது குருபூசைத் தினம் கார்த்திகை மாத மக நட்சத்திரத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
நாவலரது சைவசமயப் பணிகளை நினைவு கூருமுகமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கருகில் நாவலர் மணி மண்டபமும், நாவலர் வீதியிலுள்ள அவரது
இல்ல வளாகத்தில் இந்து கலாசார திணைக்களத்தினால் நாவலர் கலாசார மண்டபமும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணத்தில் தொல்பொருட் காட்சிசாலையும் நிறுவப்பட்டன. அவர்செய்த பணிகளை நாம் எல்லோரும் நினைந்து போற்றி அவரின் குருபூசைத் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் இன்னும் எமது மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருநாள் மாசி மகம்
மாசிமகம் என அழைக்கப் த்த பிரமகத்தி அவரைக் மானை வேண்ட, அவரும் 1சி மகமாகும். அப்போது ரிய தீர்த்தமாடுவோரின் வேண்டினான். அவரும்
மகயிலையில் எழுந்தருளி செய்து எம்பெருமானின் மசிவன் “தேவி, பேரும், அருளுருவங் கொண்டு தன்னால் தான் எல்லாம் பெருமான் தான் இன்றி
அரனடியை வணங்கி ""எம்பெருமானே எல்லாம் நீரே என்று னார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுக்குக் கொடுத்த பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே ச் சங்கு வடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய்து
வல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது கதான். எடுத்த மாத்திரத்தில் அது பெண்ணுருவாயிற்று. இது எது வேதவல்லியிடம் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. ம் மகிமை பெற்றது.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 21
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவத்தையொட்டி ம முதலாவது பரிசுெ
யா/வேம்படி
1ற்ம் சமயத்தின் அடையாளம் கோயில்கள். நம் திராவிட கலைகளின் சான்று ஆலயங்கள் ஆகும்.எமது கலை, இலக்கியம், ஆன்மீகம், விஞ்ஞானம், கருவூலம் ஆகியவற்றின் மொத்த ஊற்றாகத் திகழ்பவை கோயில்கள் ஆகும்.நமது வரலாற்றை எமது கோயில்களை வைத்தே இதுவரை அறிந்து வைத்திருக்கின்றோம். இப்படி எமது வாழ்வுடன் இரண்டறக் கலந்து விட்ட கோயில்களை நாம் பெருமைப்படுத்தத் தவறி வருகிறோம். பக்தியோடு கோயில்களுக்குச் செல்வோர் ஏதோ தங்கள் சுயநலனை முன்னிறுத்தி தங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று நீண்ட பட்டியலுடனே செல்கின்றனர்.
கோயில் என்பது கோ+இல் எனப் பிரிக்கப்படும் போது கோ என்றால் இறைவன் எனவும் இல் என்பது உறையும் இடமாகவும் பொருள்படுகிறது. எனவே கோயில் என்பது இறைவன் உறையுமிடமாகப் பொருள்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவர் ஆகையால் இறைவனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை என்று நமது முன்னோர் கூறினர். அப்படி எனின் நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்? என்ற எண்ணம் தோன்றலாம். “இறைவன் துாணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்ற போதிலும் அவரை வணங்குவதற்கு ஏற்ற இடம் ஆலயம் ஆகும். பசுவின் உடலெங்கும் பரந்திருக்கும் பாலினை அதன் மடியிலிருந்து கறந்து கொள்வதற்கு ஒப்பானதே ஆலய வழிபாடாகும். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற உலகநீதி வாக்கு மற்றும் நாவுக்கரசரின் “திருக்கோயில் இல்லாத திருவிலுாரும்’ என்ற தேவாரம் மற்றும் மூதுரை சொன்ன எமது குலத்தின் முதல் முதல் மக்களான ஒளவைப் பாட்டியின் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’போன்றன இதனை அர்த்தப்படுத்துகின்றன.
அப்படி என்னதான் சிறப்பு இந்த ஆலயங்களுக்கு? இவை பகுத்தறிவிற்கு விரோதமாக மூடத்தனமாக கல்லை வணங்கும் மையங்களாகத் தானே இருக்கின்றன என்று சிலர் எண்ணலாம். ஆனால் அவ்வாறு நாம் நினைக்க ஆலயங்கள் வடிவமைக்கப்படவில்லை. கோயில்களின் தனிச் சிறப்பே கோபுரங்கள் எனலாம். தொலைவில் இருந்து வருபவர்களுக்கு ஆலய கோபுரங்கள் அங்கே ஒரு சிறந்த கிராமம் அமைந்திருப்பதைப் பறைசாற்றும்
இந்து ஒளி
 
 

ாமன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கீழ்ப்பிரிவில் பற்ற கட்டுரை இது.
இல்லாத ஊரில்
ருத்தல் ஆகாது
செல்வி யதுசா ரகுநாதன்
மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம்
E.
பசியோடு வருபவர், வேலை தேடி வருபவர் என்று சகலருக்கும் வரவேற்கும் முகமாக கோபுரங்கள் அமைந்துள்ளன. மிக உயர்ந்த நீண்ட நெடிய கோபுரத்தை ஏன் கட்டினார்கள்? கோயில்கள் சிறியதாக இருந்தாலும் கோபுரங்களை நெடிதுயர்ந்ததாகவே அமைத்தார்கள் நம் மூதாதையர்கள்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மழை காலங்களில் இடிமின்னல்கள் ஏற்படுவது இயற்கை. அவை மிக உயர்ந்த கட்டிடங்கள் மரங்கள் மலைகள் என்பவற்றைத் தாக்கிப் பூமியை அடைந்து அமைதி பெறும்.அத்தகைய இடிகளின் இறங்குவாயாக கோபுரங்கள் திகழ்கின்றன.கோபுரங்களைத் தாக்கிய இடி தரையை அடைந்து சாந்தமடைந்து விடுவதால் அருகிலுள்ள வீடுகள் காக்கப்படுகின்றன. மக்களுக்கு ஏற்படும் பேராபத்து நீங்கி விடுகிறது.ஆகவே தான் கோயில்களைச் சுற்றி மக்கள் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். தனியே துாரத்தில் வீடுகளை அமைப்பதை அவர்கள் தவிர்தார்கள்.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.” இது உலகநீதிச் செய்யுள்களின் பகுதியில் ஒன்று. இதன் பொருள் அரசியல் இல்லாத ஒழுங்கு முறையமையாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்பதாகும்.
கோயில் என்பது அரசன், அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழந்தமிழ் நூல்கள் நன்றாக விளக்குகின்றன.
"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்? என்ற சிலப்பதிகார அடிகள் இதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்கு முறை ஒன்றை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.இவ்வாறு ஒழுங்குமுறை வகுக்கப்படாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதுதான் அரசியல் அற்ற இடம் என்பதாகும். அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லமுறையில் நடைபெறமாட்டாது. ஆதலால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அருளிச் செய்யப்பட்டது எனப் பழம் பெரும் புராணச்சுவடிகள் விளக்குகின்றன.
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 22
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமான எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாச்சட்டம் இருந்ததாம். இதற்கு என்ன காரணம்? கோபுரத்தின் உச்சியில் தங்கம் வெள்ளி செப்பு அல்லது ஐம்பொன்னினால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், கம்பு, திணை, வரகு, சோளம், சாமை, எள், கேழ்வரகு என்பவற்றைக் கொட்டும் போது குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள்.காரணத்தைத் தேடிப் போனால் வரகு மின்னலைத் தாங்கும் அதீத ஆற்றலைப் பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகின்றது.
இவ்வாறு தானா .............இல்லை பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை முடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகின்றது.” இதை இன்றைக்கு சம்பிரதாயமாக மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள். காரணத்தை ஆராய்ந்தால் அந்தத் தானியங்களுக்கு பன்னிரண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கின்றது. அதன் பின்பு அது செயலிழந்து விடுகின்றது. அன்று இதை எப்படி ஆராய்ந்தார்கள்? இதை விட இன்றைக்கு பெய்வதைப் போல மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? மூன்று மாதங்கள் மழை பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அமிழ்ந்து போனால் மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை.மீண்டும் இதையே எடுத்து விதைக்கலாமே!! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியோ அதுதான் முதலில் "புவித்தொடுப்பு” ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தை பொறுத்தது.
| கோயிலின் பிரதான வாசலாகிய கோபுரவாசலானது. ஊடுருவிக் கதிர் ஆய்வுக் கருவி போல் அமைக்கப் பட்டிருக்கின்றது. இதனால் நாம் கோபுர வாயிலினுாடாக செல்லும் போது கண்ணுக்குப் புலப்படாத ஊடுருவிக் கதிரானது காந்த அலைகளாக நம் உடல் மீது செல்கின்றது. இதனால் தான் நாம் கோயிலுக்குள் நுழையும் முன்பாக
12 பா 1ார் Un Firfinாம். பாபர் TLInா
சுயாதீன விசார
மாமன்றம் விடு; திருக்கேதீச்சர புண்ணிய பூமியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருந்த
தாகவும் மண்ணை அகழ்ந்த பொழுது (மர்மறைச்ரதை
எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்ட தாகவும் இப் பொழுது விசாரணைகளிலிருந்து அறிய வந்திருக்கிறது. நீதிமன்ற மேற்பார்வையில் விசாரனைகள் நடப்பதாகவும் ஊடகச் செய்திகளிலிருந்து அறிகின்றோம். நீதிமன்றம் நீதிப் படியும், நியாயப் படியும் முறையான விசாரனைகளை செய் து முடிவினை அறிவிக்கும் என நம்புகின்றோம்..
திருக்கேதீச்சரப் புண்ணிய பூமியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதைப்பற்றிய முழுமையான சுயாதீன விசாரணை நடக்க வேண்டும் எனப்பகிரங்க வேண்டுகோள் விடுவதுடன் அதற்கு ஆண்டவனருள் வேண்டிப் பிரார்த்திக் கின்றோம்.
(இந்து ஒளி

கை கால்களைச் சுத்தம் செய்வது வழக்கமாகும். குதிக்கால்களை மேலிருந்நு கழுவுவதால் ஏற்படும் விஞ்ஞான பூர்வமான காரணம் என்னவென்றால் குதிக்காலில் தான் நமது மூளையில் அமைந்துள்ள "பிட்யூட்டரி" சுரப்பியுடன் தொடர்புள்ள முக்கிய நரம்பு அமைந்துள்ளது. நாம் உட்பிரகாரத்தில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து நிதானமாக நடுவில் வைக்கப்பட்டிருக்கும் வாயில் படிகளை ஈரக்கால்களுடன் குனிந்து தொட்டுச் செல்லுதல் வேண்டும். அப்படிக் குனிந்து தொடும் போது ஏற்கனவே கோபுரக் கலசங்களின் ஊடாக சேர்க்கப்பட்டிருக்கும் மின்கதிர்களின் முழுப்பயனையும் அடையமுடியும். நாம் அண்டசராசரத்துடன் இணைய வேண்டும் என்பதற்காகவே விஞ்ஞான பூர்வமாகவும் இந்து
சமய வழிபாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில்கள் நம்நாட்டின் கலைப் பொக்கிஷமாகத் திகழ்பவை. ஆலய சிற்பங்களில் காணப்படாத சிறப்புக்களே இல்லை எனலாம். ஒரு குடும்பம் அமைதியாக சந்தோசமாக வாழ அவை அத்தனையும் ஆலயங்களில் சிற்பவடிவில் போதிக்கப்பட்டுள்ளன. ஆலயங்கள் பெரும்பாலும் கற்களும் மரங்களும் மட்டுமே வைத்துக் கட்டப்பட்டவை. ஒன்றன் மீது ஒன்றாக புவியீர்ப்பு சக்தியைமட்டும் ஆதாரமாக வைத்து அடுக்கப்பட்ட வேலைப்பாடு கொண்ட கற்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. சிறிய துவாரம் கூட இல்லாமல் அடுக்கப்பட்ட கற்கள் நம் கட்டிட நிபுணத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கோயில்கள் இயற்கை அரணாகத் திகழ்பவை.
அந்தப் பகுதியில் பெருநிதியாக, கலைக்கூடமாக, பசிப்பிணி போக்கும் மையமாக ஆலயங்கள் காணப் படுகின்றன. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நம் கோயில்கள் பல இன்னும் நம் பழம்பெருமையை பறைசாற்றிக் | கொண்டிருக்கின்றன. இத்தகைய கோயில்களை மக்கள் சார்ந்திருக்கும் பொழுது அவர்கள் வாழ்வை வறுமையும் | பேராபத்துக்களும் தாக்காது என்ற உயரிய நோக்கத்திலேயே | "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்று தீர்க்கமாக தீர்மானித்திருக்கிறார்கள் நமது அறிவுசார் முன்னோர்கள். நாம் அவர்கள் வழித்தோன்றல்கள் என்பது எத்தனை பெருமைக்குரியது. ணை நடத்தப்படவேண்டும் ந்த பகிரங்க வேண்டுக்கோள்
உரிய கட்டத்தில் பொருத்தமான ஆலோசனையைப் பெற்று அகில இலங்கை இந்து மாமன்றம் நடவடிக்கை எடுக்கும். நீதிமன்ற விசாரணைகள் நடக்கின்ற இக்கட்டத்தில் இது சம்பந்தமாக மேலும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. மனித உடல்களைப் புதைக்கும் (கொலைகளை மறைக்கச் செய்யப்பட்டவனவா என்ற சந்தேகத்துடன்) கொடுமை ஒரு புண்ணிய பூமியில் நடந்திருப்பது இந்நாட்டு இந்து மக்களுக்கு மட்டுமல்ல பாரெல்லாம் பரந்து வாழும் எங்களின் சகோதர சகோதரிகளுக்கும் நீதியையும் நியாயத்தையும் மதித்து போற்றுகின்ற சகல மதத்தினருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருகின்றது.
இந்த கொடுமையைச் செய்த பாவிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கவும், இப்படியான நிகழ்வுகள் இனிமேல் எங்கும் நிகழாது இருக்கவும் வேண்டுமென்று எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 23
பாடசாலைதோறும் சி
அகில இலங்கை இந்த
எமது இளைய சமுதாயம் ஆன்மீகத் துடன் கூடிய பண்புள்ள, ஆளுமைமிக்க சமுதாயமாக உருவாகுதல் காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் பாடசாலைகள்தோறும் சிவதொண்டர் அணியினை உருவாக்கி அவர்களுக்கு விஷேட பயிற்சி வழங்கி ஆலய, சமூக, நிறுவன விழாக்கள் போன்றவற்றில் தொண்டுப் பணிகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு மாமன்றம் ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த அணியில் இணைபவர்களுக்கான பண்பாட்டு உடை மற்றும் சிவதொண்டர் அமைப்பின் செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்பு, உதவி என்பவற்றை மாமன்றம் வழங்கும்.
பாடசாலையில் உருவாகும் சிவதொண்டர் அணியில் இரண்டுக்குக் குறையாத பொறுப்பாசிரியர்கள் அதிபரால் நியமிக்கப்படல் வேண்டும். 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருபாலாரும் இவ்வமைப்பில் இணைந்துகொள்ளலாம். ജ്ഞഖഖ് செயலாளர், பொருளாளர், உட்பட 11 பேர் அடங்கிய
அகில இலங்கை இந்து மாமன்றம் "தேர்” என்னும் ஆய்வுச் சஞ்சிகையை வெளியிட முன்வந்துள்ளது. இதனை வெளியிட
முன்வந்தமைக்கான நோக்கம்,
01. தமிழ்மொழியில் ஆய்வுச் சஞ்சிகை என்று சொல்லக் கூடிய ஒன்றும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதும்,
02. பல்கலைக்கழக சஞ்சிகைகள் பொதுப்பட எல்லாக் கல்விநெறிகளையும் அடிப்படையாகக் கொண்டு வெளி வருவதனால் சமயம் பண்பாடு பற்றிய ஆய்வுகள் முழுமை யாக இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிட்டுவதில்லை என்பதும்,
03. தமிழ்மொழியில் இந்துசமயம், இந்துப்பண்பாடு, நாட்டார் வழக்கியல் முதலான துறைகள் ஆய்வுக்குட்பட்டு புதிய நோக்குடனும் புதிய நாட்டு பிடிப்புக்களோடும் அவை வளர்ச்சியடைய வேண்டும் என்பதும்,
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பேரவாவாகும். பட்டதாரி ஆசிரியர்களும், பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கான மாணவர்களும், விரிவுரையாளர்களும், புறநிலை ஆய்வாளர் களும், ஆய்வில் ஆர்வமுடையவர்களும் பேராசிரியர்களும் கேட்டுக் கொண்டதன் பேரிலும் தேர் என்னும் இவ் ஆய்வுச் சஞ்சிகையை வெளியிட இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆய்வாளர்களை முக்கியமாகப் பல்கலைக்கழக இளம் மற்றும் முதுநிலை ஆய்வாளர்களை வேண்டிக் கொள்வது, தமிழ் மொழியில் ஆய்வு செய்து அதனை வெளியிடுவதற்கு நல்ல மலர்களோ சஞ்சிகைகளோ கிடைக்கவில்லை. அப்படி
இந்து ஒளி
 
 
 
 

வதொண்டர் அணி அமைக்க
மாமன்றம் வேண்டுகோள்
செயற்குழுவை அதிபரே தெரிவுசெய்து ஏனைய மாணவர்களை அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளலாம். ஒரு மாதத்தில் இரு கூட்டங்களாவது நடாத்தவேண்டும். கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நெறிகளுக்கு மாணவர்கள் தவறாது பங்கு பற்றுவதற்கு ஆசிரியர்களின் ஊக்குவிப்பு இவ்வணி சிறக்க உதவியாகவிருக்கும்.
சகல பாடசாலைகளிலும் சிவதொண்டர் அணியை அங்குரார்ப்பணம் செய்து அதன் விபரத்தை மாமன்றத்துக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றோம். சிவதொண்டர் அமைப்பை ஏற்படுத்திய பாடசாலைகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடுகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்ற யாழ் பணிமனையில் அமைந்துள்ள இந்து ஆராய்ச்சி நிலையத்தினை அல்லது மாமன்ற தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தலைமைப் பணிமனை தொலைபேசி :- 011 - 2434990 யாழ் பணிமனை தொலைபேசி :- 021 - 2221075
ஒரு சில சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அது அங்கீகரிக்கப்பட்ட தாபனத்திலிருந்து வெளிவருவதுமில்லை என்ற உரத்த குற்றச்சாட்டு எமது காதில் கேட்கின்றது.
ஆய்வாளன் தன்னில் நம்பிக்கை கொண்டு உழைக்க வேண்டும் என்பதற்காகவே மாமன்றம் உங்கள் முன் “தேர்” என்னும் ஆய்வுச் சஞ்சிகையை அல்லது மலரினை களமிறக்கியுள்ளது. அதில் உங்களுடைய உழைப்பைச் செலுத்தி அதில் நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைய முயற்சிக்கலாம்.
தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் முகவரி
நிர்வாக ஆசிரியர்கள் கந்தையா நீலகண்டன் - தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம் இல. 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. காடினர் மாவத்தை, கொழும்பு - O2 இலங்கை. தொலைபேசி தலைமைப் பணிமனை- 01-2434990, L1560T60T6536):- hindu CongreSSG)gmail.Com
கலாநிதி ஆறு. திருமுருகன் - உப தலைவர் கெளரவ இயக்குநர் - இந்து ஆராய்ச்சி நிலையம் மாமன்ற யாழ். பணிமனை, இல, 21/7 கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். தொ. பே. O21 - 2221O75
இணையாசிரியர்கள்
பேராசிரியர் இர7.வை. கனகரத்தினம் தொலைபேசி இல:- 01-2638477, O71-8620114
திருமதி நாச்சியார் செல்வநாயகம் தொலைபேசி- O77-6032152. O21-2250507
寻酸
e
பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 24
புண்ணிய பூ பாலாவியைப் ப விரைவில் உண்மை
முiறன்றுத்தில்தி
006வத்தமிழர்களின் வரலாற்றுத் திருக்கோயிலாக விளங்குவது திருக்கேதீஸ்வரம் பாடல்பெற்ற பழமை வாய்ந்த இத்திருத்தலத்தின் பெருமையை அறியாதவர்கள் இல்லை. பாவத்தைக் கழுவும் பாலாவி தீர்த்தத்தின் மகிமையை அனைவரும் உணர்வர். தமிழ் வேந்தர் காலத்தில் மாஞ்சோலைகள் சூழ்ந்த மாதோட்ட நன்நகர் என அழைக்கப்பட்ட புண்ணிய பூமி இது பால் பொழியும் பசுக்களும், தோகை மயில்களும், புள்ளிமான்களும், தேன் அருந்தும் வண்டுகளும் அழகு தரும் திருக்கேதீஸ்வரத்தில் மனிதர்களை மண்ணுக்குள் யார் புதைத்தார்கள்? இடர் களையும் இறை நிலத்தில் இரக்கம் இல்லாது மனிதர்களைப் புதைத்தவர்களை மன்னிக்க முடியாது. அருள்மழை பொழியும் ஆண்டவன் சந்நிதானத்திற்கு அருகில் அவலமான காரியம் நிகழ்ந்திருக்கிறது. இந்தச் செய்தி சைவ மக்களின் உள்ளத்தை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
பாவங்களையும் தோஷங்களையும் நீக்குகின்ற பாலாவி தீர்த்தக் கரையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டவர்கள், இராம கதாபாத்திரங்கள், ஏன் இராகுவும் கேதுவும் கூட தேடி வந்து வழிபாடு செய்தார்கள். பாரத நாட்டிலிருந்து தமிழ் வேந்தர்கள் மாதோட்ட நன்நகர் நாடிவந்து திருக்கோயில் திருப்பணிகளை செய்து மகிழ்ந்தனர். சிங்கள மன்னர்கள் கூட திருக்கேதீஸ்வர நாதனை சிந்தனையில் இருத்தி வழிபாடு செய்தார்கள். இன்றும் மொழிகளை கடந்து, மதங்களை கடந்து, இனங்களை கடந்து திருக்கேதீஸ்வரப் பெருமானை தரிசிப்பதற்கு அனைவரும் ஆர்வமாக வருகை தருகிறார்கள். பெருமைமிக்க இப்புண்ணிய ஷேத்திரத்திற்கு அருகில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை அச்சத்தையும் அதிர்ச்சியையும் அனைவருக்கும் தந்துள்ளது.
வாழப் பிறந்த மனிதர்கள் வதம் செய்யப்பட்டு அநாதரவாக மாதோட்ட மண்ணுக்கு இரையாகியுள்ளனர். பஞ்சமாபாதகங்களை மதங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. பாலாவிக் கரையில் பஞ்சமாபாதகத்தை செய்ய எவர் துணிந்தாரோ? மாதோட்ட மண்ணில் கோயில் கட்டுவதென்றால் கூட பலரிடம் அனுமதி பெறவேண்டும். இதற்கான காரணம் மாதோட்டம் வரலாற்றுப் பூமி
சுவாமி கோ
ஆறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை திருத்தலத்திலு மகன் முருகப்பெருமானிடம் சிஷ்யனாக இருந்து உபதேசம் பெற்றன நடத்தப்பெறுகிறது.
இந்து ஒளி
 

மியின் தீர்த்தக்கரை ாவழுமியாக்கியவர் யார்?
வெளிவரப் பிரார்த்திக்கிறோம்
என்றும் அகழ்வு ஆராய்ச்சிக்குரிய நிலம் என்றும், புராதன பொக்கிஷம் என்றும் பிரகடனப்பட்டிருப்பதேயாகும். இந்தப் புண்ணிய மண்ணில் பினங்களை வரிவரியாக அடக்கம் செய்ய எவர்தான் அனுமதித்தனரோ?
இறைவா! பிறப்பு இறப்பு-இவற்றைக் கடந்தவன் நீ. என்றோ எலும்புகளால் மாலை அணிந்து நிலையில்லாத உலகையும் பிறவியையும் நீக்கமற விளக்கினாய் காடுடைய சுடலைப் பொடி பூசி மாயை உலகின் மகத்துவத்தை விளக்கினாய் நிலையாமை தத்துவத்தை விளக்கிய தெய்வமே பாவ புண்ணியத்தை பலவாய் விளக்கி நின்றாய். அசுரர்களை, அரக்கர்களை அடக்குவதற்காக எத்தனையோ வடிவங்களில் தோன்றி நல்லவர்களை காத்தருளினாய். இப்பிறவியில் நாம் செய்யும் நல்வினை தீவினைப் பயனை ஏழேழு பிறப்புக்களிலும் தொடரும் என விளக்கினாய் கேதீஸ்வரப் பெருமானே! இக்கொடுமையை செய்தவரை நீ கேளாயோ?
மண் ணுக்குள் புதைக் கப் பட்டவர்கள் யார் பெற்றெடுத்த பிள்ளையோ யாமறியோம்! மண்ணுக்குள்ளே புதைத்தவர்களையும் யாமறியோம்! எல்லாம் அறிந்த இறைவா! யார் காணாவிட்டாலும் நீ கண்டிருப்பாய். உனக்குத் தெரியாதது ஒன்றுமேயில்லை. ஊர் உறங்கலாம், உறவுகளுக்கு மறைக்கப்படலாம், உனக்கு உண்மையை யார் மறைக்க முடியும்? மண்ணுக்குள் இருக்கும் உண்மையை, பஞ்சபூதங்களில் ஒன்றாகிய நீரை வழிபடுத்த முனைந்தவர்களுக்கு நீ வெளிப்படுத்தியிருப்பதும் அற்புதமே! இதுவும் உன் புதுமைதான். அறங்காத்த தெய்வமே இதனை நீ உலகம் அறிய வைத்துவிட்டாய். பாலாவிக் கரையை பாவ பூமியாகப் பரிதவிக்க நீ விடமாட்டாய். அல்லற்பட்டு, அழுது மாதோட்ட மண்ணுக்குள் இரண்டறக் கலந்தவர்களின் ஆத்மாவை நிச்சயம் நீ அணைத்திருப்பாய்.
இரக்கமுள்ள இறைவா! “இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனது கழல் தொழுது எழுவேன்’ என ஞானசம்பந்தரின் பாடல் வரிகளை சமர்ப்பித்து, புதை யலை வெளிப்படுத்திய கேதீஸ்வரநாதனே! தாய் கெளரி அம்பாளே! தர்மம் நிலைக்க வழிசொல்லுங்கள் என தாள் பணிந்து வேண்டுகிறோம்.
பில் மாசிமகம்
) மாசிமகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சிவபெருமான் தனது த நினைவுபூட்டும் வகையிலேயே இங்கு சிறப்புப் பூசை வழிபாடுகள்
பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 25
5۔ حسخچه~۔
බ්‍ර அடியாரை வழிபடுவே >>>>>>>>>>>>>>
திருமுருக கிருபானந்த வாரிய
後
ஒரு கிராமத்தில் ஒரு கிழவி இருந்தாள். சூதுவாது வஞ்சனை பொய் களவு முதலிய தீக் குணங்கள் அத்தனைக்கும் அவள் உறைவிடமாக இருந்தாள். தருமகுணம் ஒரு சிறிதும் இல்லாத பொல்லாத கிழவி. அவள் வீட்டில் வாழ்கின்ற எறும்புகளுக்கு நித்திய ஏகாதசி. ஒன்றையும் சிந்த மாட்டாள். எறும்பின் வாயில் ஒரு நொய்யைப் பார்த்தால் உடனே ஒடி அதை எடுத்துப் பானையில் போட்டுக் கொள்வாள். அவள் வீட்டில் சாப்பிட்ட இலை வெளியில் விழுந்தால் சாப்பிடாத இலை மாதிரி சுத்தமாக விழும். அதில் ஒரு துளிப் பசை கூட இராது. நாய்கள் வந்து பார்த்து ஏமாந்து போகும். நாம் செய்கின்ற வேலைகள் யாவும் இந்தக் கிழவியே செய்துவிட்டாள் போலும் என்று பேசிக் கொள்ளும்.
பழைய சோற்றைப் பிசைந்து வடகம் போட்டுத் தின்பாள். கந்தல்களையெல்லாம் மடித்து மடித்துத் தலையணையாக்கிப் போட்டுக் கொள்வாள். கோயிலுக்குப் போவாள். சுவாமி கும்பிடுவதற்கு அன்று; அங்கு யாராவது விட்டிருந்த பாதரட்சைகளைக் கவர்ந்து வரும் பொருட்டே யாராவது பிச்சைக்காரர் அவளுடைய வீட்டுக்குச் சென்றால் சீறி விழுந்து கடிக்க வருவாள். அவர்கள் அப்படியே நடுங்கி ஒடுங்கி ஓடி விடுவார்கள்.
அவள் வாயில் மறந்தும் தெய்வத் திருநாமம் வராது. அவள் சிந்தனையில் கருணைக்கு இடமே இல்லை. கருணைக்கிழங்காகத்தான் போகும் அவளை அந்த ஊரில் அனைவரும் வெறுத்து ஒறுத்தார்கள்.
ஒரு நாள் காலை, கிழவி அரிசி தீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிறந்த சிவனடியார் வந்து,
"அரஹர சிவசிவ அம்பல வாணா UATUD ØuU/7UM7 622MMJØ5 GØ5Ø77767777” என்று பாடிக் கொண்டு நின்றார். "பாட்டி ஒரு பிடி அரிசி போடு" என்றார்.
கிழவி, "ஏய் உனக்கென்ன மமதை? எனக்கு என்ன வயது? எண்பதுதானே ஆயிற்று? பாட்டி என்கின்றாய். பச்சை வெட்டுமருந்து சாப்பிட்டுப் பல் போய்விட்டது. தேன்பட்டு மயிர் நரைத்துவிட்டது. இது என்ன தரும சத்திரமா? உனக்கென்ன கேடு? செக்குலக்கை மாதிரி இருக்கின்றாய். போ போ" என்று விரட்டினாள்.
"பெரியம்மா, காதில் தங்கத்தால் செய்த பாம்புவடம் போட்டிருக்கின்றாயே! கழுத்து நிறையத் தங்கச் சங்கிலி இவையெல்லாம் ஏது? சிவன் தந்ததுதானே? நான் பொன்னையும் பொருளையும் கேட்க வில்லையே? ஒரு பிடி அரிசிதானே யாசிக்கின்றேன்? அண்டாத் தொண்டையால்
இந்து ஒளி
 

°كگی ”S_ܣܛ» * ඝණ්ඨික්‍ෂු
SY S
ாருக்கு இரட்டைப்பலன்
jjjj >>>>>>
ார் சுவாமிகள் - சொன்ன கதை
தகரத்தில் தட்டியது போல் கர்ச்சித்துப் பேசுகின்றனையே! பிறக்கும் பொழுது கொகுவாந்த தில்லை பிறந்துமண்மேன் இறக்கும் பொழுது கொருபோவதில்லை இடைநருவின் குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்தது என்று கொகுக்கறியாது இறக்கும் குாைமருக் கெண்சொல்லு வேண்கச்சிஏகம்Uனே.”
அவ்வளவுதான். கிழவிக்குப் பொங்கி எழுந்தது சீற்றம், ஆலகால விஷம் போல் கொதித்தாள். "பிச்சைக்காரப் பயலே! என் வீட்டிலே வந்து இந்தத் தரித்திரம் பிடித்த மரணத்தைக் குறிக்கின்ற பாட்டைப் பாடுகின்றாயே!” என்று வைது, அரிசி தீட்டுகின்ற உலக்கையால் பத்திரகாளி போல் அந்தச் சிவனடியாரை அடிக்க ஓங்கினாள்.
உலக்கையில் ஒட்டியிருந்த ஓர் அரிசி அவருடைய அட்சய பாத்திரத்தில் வீழ்ந்தது. அதனைக் கிழவி பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எல்லா அரிசியும் என்னது என்று எடுத்துக் கொண்டிருப்பாள். அடியார் பிடித்தார் ஒட்டம்.
மற்ற வீடுகளுக்குச் சென்றார். சிறிது அரிசி கிடைத்தது. ஒரு மண்டபத்தில் அதைப் பொங்கி, தாம் வழிபடும் சிவலிங்கத்துக்கு நிவேதித்தார். பசியாறினார். சிவயோகத்தில் அமர்ந்தார். சிவஞானிகள் இன்றிருந்த ஊரில் நாளை இரார். அவர் தலயாத்திரைக்குச் சென்றுவிட்டார்.
நாளடைவில் கிழவி கண்களை மூடி விட்டாள். காலதுாதர்கள் அவளைக் கட்டிப் பிடித்து யாதனா சரீரத்துடன் கொண்டுபோய் அறக்கடவுளுக்கு முன்னே நிறுத்தினார்கள். அறக்கடவுள் கடுகடுத்த முகத்துடன் "சித்திரகுப்தா, இவள் கணக்கை எடுத்துப் படி" என்று கட்டளையிட்டார்.
சித்திரகுப்தன் கிழவியின் கணக்கை எடுத்துப் படித்தான். "எல்லாம் பாவந்தான். புண்ணியமே இல்லை. எறும்பு வளையில் நெருப்பை இட்டாள். பெரியோரை நிந்தித்தாள். கோயில் உடைமைகளைக் கவர்ந்தாள். கண்ணில்லாதவர்களுக்கு காலணாப் போட்டு நாலனா எடுத்துக் கொண்டாள். சிவராத்திரி, சஷ்டி, ஏகாதசி முதலிய விரத நாள்களில் கூடத் தலையணைக்குப் பஞ்சடைகின்ற மாதிரி வயிறு புடைக்கத் தின்றாள். பேசிய யாவும் பொய். ஒரு நாள் ஒரு மகானை உலக்கையால் இடிக்கச் சென்றாள். உலக்கையில் ஒட்டிய ஓர் அரிசி அவருடைய கரத்தில் இருந்த அட்சய பாத்திரத்தில் விழுந்தது. அந்த ஓர்
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 26
அரிசி சிவநிவேதனமாகி அச்சிவயோகியார் திருவயிற்றில் சேர்ந்தது. இந்த ஒன்றுதான் இவள் வாழ்நாளில் செய்த புண்ணியம். இதுவும் அபுத்தி பூர்வமாகச் செய்தது." என்றான்.
அறக்கடவுள், "நல்வினை அபுத்தி பூர்வமாகச் செய்தாலும் நன்மை பயக்கும். 'தான் சிறிதேயாயிடினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும். நெருப்பை தெரியாமல் மிதித்தாலும் சுடுந்தானே? ஆதலால் இந்த ஓர் அரிசிக்கு என்ன நலத்தை நுகர வேண்டும், பார்த்துச் சொல்” என்றார்.
சித்திரகுப்தன் “அண்ணலே, அந்த ஒர் அரிசி அடியாரின் திருவுதரத்தில் வீழ்ந்தபடியால் திருக்கயிலாய மலையிற் சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும்” என்றான்.
அறக்கடவுள், "புண்ணியம் கடுகளவு; பாவம் மலையளவு. சூசீகடாக நியாயப்படி முதலில் புண்ணியத்தை நுகரட்டும். பிறகு பாவங்களை நுகரச் செய்யுங்கள். கிழவியின் பாவங்களுக்காக நரகத்தில் இட்டு வாட்டி வருத்துங்கள். கிழவியின் வாயிலே தீயை வைத்துச் சுடுங்கள். கொதிக்கின்ற எண்ணெய்யில் இட்டுப் பொரியுங்கள்.” என்றார்.
யமனுடைய தூதர்கள் கிழவியைப் பாசக் கயிற்றால் நன்றாகப் பிணித்துக் கொண்டு போய்த் திருக்கயிலாயத்தில் சிவ சந்நிதியில் நெடுந் தொலைவில் நிறுத்தினார்கள்.
"கிழவி, அதோ பார், சிவபெருமான்!" பவளக் குன்று போன்று கோடி சந்திரப் பிரகாசமாய் வேத மந்திர பீடத்தில் வீற்றிருக்கும் சிவ மூர்த்திகளையும் இடப்பாகத்தில் மரகதக் கொடிபோல் வீற்றிருக்கின்ற இமயவல்லி அம்மையையும், இடையில் கனகச் சிறு குன்றுபோல் களிநடம் புரியும் கந்த வேளையும் கண்டாள் கிழவி. அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது.
'அப்பா எமதூதர்களே, உங்களுக்கு ஒரு கோடி வணக்கங்கள். ஓர் அரிசிக்கு இத்துணைப் புண்ணியம் வரும் என்று பாவியாகிய எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அந்தோ! ஏன் வீட்டில் குதிர் நிறைய நெல்லும் பல மூடைகள் அரிசியும், நெய்யும் பாலும் முந்திரிப் பருப்பும் பாதாம் பருப்பும் டப்பா டப்பாவாக இருந்தன.
அத்தனையும் இப்போது எனக்கு உதவ வில்லை. பெட்டி நிறைய பணம் வைத்திருந்தேன். வட்டி மேல் வட்டி வாங்கினேன். பெட்டி மேல் பெட்டி அடுக்கினேன். எல்லாம் அங்கேயே நின்றுவிட்டன. அடியாரிடம் சேர்ந்த ஓர் அரிசிதான் இங்கு உதவுகின்றது. இத்துணைப் புண்ணியம் வரும் என்று யாரும் எனக்கு விவரமாகச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் வீடு தேடி வந்த அடியார்க்கு இரட்டையிலையிட்டுப் பாலும் நெய்யும் அன்னமும் சொர்ணமும் அள்ளி வழங்கியிருப்பேன். சண்டாளியாகிய நான் கிள்ளிக் கூடத் தந்தேன் இல்லை. வாழ்நாள் முழுவதும் வீழ்நாளாகக் கழித்தேன்! போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே! அப்பா, நீங்கள் நல்ல உத்தமர்கள். தேவருக்கும் மூவருக்கும் காணக் கிடைக்காத கண்ணுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். கடவுளைக் கண்டு
(இந்து ஒளி

மே ம் கொ. மிக மி.
கை கூப்பித் தொழவில்லையானால் மேலும் பாவந்தானே? உங்களைத் தலையினால் வணங்குகின்றேன். கட்டை அவிழ்த்து விடுங்கள். கைகூப்பிக் கும்பிடுகின்றேன். பிறகு என்னைக் கட்டிக்கொண்டு போய் எரிவாய் நரகில் இட்டு வருத்துங்கள்" என்று மிக மிக நடுங்கிய குரலுடன் கெஞ்கிக் கேட்டுக் கொண்டாள். - இரக்கமே அறியாத எமதூதர்களின் உள்ளம் சிறிது உருகிற்று. 'குடலறுந்த குறுநரி எங்கே போகும்?' என்று கருதிச் சிறிது கட்டை அவிழ்ந்து விட்டார்கள்.
கிழவி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து திருக்கோயிலுக்குள் சென்று, கருணைக் கடலாகிய சிவபெருமான் திருவடியைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டாள்.
"தேவதேவா! மஹாதேவா! தீன ரட்சகா! கருணைக் கடலே! ஏழை பங்காளா! அருட் பெருஞ்சோதி! அப்பனே! சிறியேன் அறியாமையால் வல்வினைகளைச் செய்து விட்டேன். அத்தனையும் பொறுத்து ஏழையைக் காத்தருள். காலதூதர்கள் இரும்புச் சம்மட்டியால் அடிப்பார்களாமே! கும்பீபாக நரகில் தள்ளிச் சித்திரவதை செய்வார்களாமே! தாண்டவம் புரியும் ஆண்டவனே! வேண்டியவர்களுக்கு அருளும் தயாநிதியே! என்னை விரட்டியடிக்காமல் காத்தருள். குழந்தைகள் செய்த குற்றங்களுக்கு அம்மையும் அப்பனும் தண்டிக்கலாம். தெருவில் போகும் பயில்வானை விட்டுத் தண்டிக்க மாட்டார்களே! எமனிடம் கொடுத்து என்னைத் தண்டிக்காதே!" என்று கூறி அழுதாள்; தொழுநாள்.
கருணாநிதியாகிய கண்ணுதற் பெருமான் அவள்மீது கருணை மழை பொழிந்தார். "அஞ்சேல்" என்று அபயம்
அளித்தார்.
கிழவி சிவபெருமான் திருவடியின் அருகில் நிமிர்ந்து அமர்ந்தாள்.
இத்தனையும் கண்ட காலதூதர்கள் ஆச்சரியம் அடைந்தர்கள். “கிழவி, வெளியே வா" என்று அழைத்தார்கள். கிழவி, "வர முடியாது, போங்கள்" என்றாள்.
காலதூதர்கள், “எம்பெருமானே! கிழவியைத் துரத்தி அனுப்புங்கள். இவள் கொடியபாவி, நரகில் தள்ளி இவளைத் தண்டிக்க வேண்டும்." என்றார்கள்.
சிவபெருமான், "காலதூதர்களே, விண் ணளவு அடுக்கிய பஞ்சப் பொறி நெருப்பினால் எரிந்து கரிந்து சாம்பரானாற்போல இவளுடைய பாவங்கள் யாவும் என்னைத் தீண்டியவுடனே நீறாகிவிட்டன. இவளை நாம் மன்னித்து அருள் புரிந்தோம் . நீங்கள் உங்கள் உலகுக்குச் செல்லுங்கள்" என்று அருளிச் செய்தார்.
காலதூதர்கள், "ஐயனே, எங்கள் தலைவனுக்கு என்ன சொல்வது?” என்றார்கள்.
சிவ பெருமான், மர்ர்க் கண் டேயர் வரலாற்றை நினைவுபடுத்துங்கள்" என்றார்.
காலதூதர்கள் மறைந்து நமனுலகம் போய் நடுங்கி அறக்கடவுளுக்கு முன் நின்றார்கள்.
அறக்கடவுள், "எங்கே கிழவி?” என்று கேட்டார். அவர்கள் நிகழ்ந்ததைக் கூறினார்கள்.
அறக்கடவுள் இறைவனுடைய கருணைத் திறத்தையும் அடியார் வட்டிலில் வீழ்ந்த ஓர் அரிசி செய்த விந்தையையும் நினைந்து அதிசயம் அடைந்தார்.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 27
GILDEFGANI LI
பெண்தெய்வ வழ
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று உலகுக்கு அறிவித்த சைவப் பண்பாட்டிலே நவராத்திரி விரதம் பள்ளிக்கூடம் தொட்டு பல்கலைக்கழகம் அடங்கலாய் வேலைத்தளம் என்று விரிந்து மக்களோடு ஒன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததொன்றே.
பெண் தெய்வ வழிபாடு சைவப் பணி பாட்டிலும் பண்டைய திராவிட சைவ வழிபாட்டு முறைகளிலும் எவ்வாறு உள்ளதென்பதை அடியேனின் அறிவுக்கு எட்டிய அளவு ஆராயவிளையலாம் என நினைக்கின்றேன்.
சிந்துவெளி கரப்பா நாகரீகம் (இன்றைய பாக்கிஸ்தான்) திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என்று அறிஞர்கள் உறுதியாய் நம்புகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சி முடிவுகளும் அவ்வாறே பறைசாற்றியுள்ளன. சிந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் கூட்டத்திடம் இலிங்க வழிபாட்டுடன் பெண் தெய்வ வழிபாடும் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். பெண்ணில் இருந்து முளைத்து வளரும் செடி உடைய வழிபாட்டுச் சின்னத்தையும் அவர்கள் அதற்கு ஆதாரமாக வைக்கின்றனர். பண்டைய எமது சிந்துவெளித் திராவிட மக்கள் உலக உயிர்களின் தோற்றத்திற்கு பெண்ணே மூலம் என்பதால், அந்தப் பெண்னை மதிக்கவும் வணங்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்த மக்கள் கூட்டத்திடம் இருந்த பெண்தெய்வ வழிபாடு, சாதாரண இலிங்க வழிபாடு என்பன சைவ சித்தாந்தமாக வளர்ச்சிகண்டபோது, பரம்பொருளாகிய சிவனின் சக்தி பெண் என்று சிறப்புப் பெற்றது.
சடம் சிவன், சக்தி உமை, சக்தி இல்லாது சடம் இல்லை. ஆகா என்னே அற்புதம். என்னே மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞானம் சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை. அர்த்த நாரீசுவரராய் அறுபத்தி நான்கு சிவ மூர்த்தங்களில் ஒன்றாய் ஆண் பாதி பெண்பாதி என்ற உயர்ந்த தத்துவத்தை சைவம் உலகுக்கு அறிவித்தது. வீரத்திற்கு துர்க்கையாகவும் செல்வத்துக்கு இலக்குமியாகவும் கல்விக்கு சரசுவதியாகவும் பெண்ணை போற்றியது எமது பண்பாடு.
(இந்து ஒளி
 
 

S تمامی శరీ ״لايو A 3.
ჯs!*
STUDIÍLIMIÜynaü
Sபாடும் பெண்ணும்
சைவத்தால் அகப்புறச் சமயங்களில் ஒன்றாக வகுக்கப்பட்ட சாக்த வழிபாட்டில் துர்க்கை வழிபாடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று கல்கத்தாவில் இவ் வழிபாட்டுமுறை பெரிதும் பின்பற்றப்படுகின்றது. இவ் வழிபாட்டில் தந்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு போகங்கள் முன்னிலைப் படுத்தப்படுவதால் அகப்புறச் சமயமாக வகுக்கப்பட்டுள்ளது.
சனாதன சைவத்தில் சக்தியானது பெண் ணாக உருவகிக்கப்பட்டு, உமையாக போற்றப்பட்டு பரம்பொருளின் ஒருபாதியாக அர்த்தநாரீசுவரராக உயர்த்தப்பட்டு பெண் வழிபாடு முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று மணி வாசகத்தால் அம்மையாகவே முதலில் அறியப்படுகின்றான் எம் பிரான். திருஞான சம்பந்தர் குளத்திலே மூழ்கி குளித்த தந்தையைக் காணாது அழுதபோது அம்மையே அப்பா என்று அழுததாக சிறப்பிக்கப்படுகின்றார். குழந்தை முதலில் சொல்வது "அம்மா" என்ற வார்த்தையைத் தான். எனவே அப்படிப்பட்ட அம்மையை சிவத்தோடு ஒருமித்து ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்கின்ற தத்துவத்தை சனாதன சைவம் உலகுக்கு அறிவிக்கின்றது.திருவிளையாடற் புராணங்களாகட்டும், பெரிய புராண நாயன்மார் வரலாறுகள் ஆகட்டும் இறைவன் இடப வாகனனாய் உமையோடு இணைந்தே எழுந்தருளி அருள் பாலிப்பதை அறியமுடியும். பெண்ணில்லாமல் செய்யும் இல்லறத்தோனின் தானம் செல்லுபடியற்றது என்பர். எனவே இல்லறத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பை வழங்குவதில் சைவநெறி ஆழமான பங்களிப்பை செய்துள்ளது என்பது வெள்ளிடைமலை,
சாதாரண அறிவற்றோர், எமது சமய வாழ்வியல் பண்பாடு பெண்களை வீட்டுக்குள் பூட்டி சுதந்திரத்தை பறித்துவிட்டதாக புலம்புவர். புழுகுவர். உண்மை அதுவல்ல என்பது சமயத்தை ஆழ அறிந்தவர்கள் அறிவர்.
s
பூரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 28
பாக
ஈசுடோரோஜோன் ஓமோன் புரோஜோஸ்டோரோன் ஆகிய ஒமோன்கள் பெண்களுக்கும், தெஸ்தெஸ்திரோன் ஒமோன், ஆண்களுக்கும் என்று வகுத்த இறைவன் நிச்சயம் பக்கசார்பானவன் என்று எப்படி அறியப்படமுடியும்? எதிலும் சமநிலை வேண்டும் என்று கூறுகின்ற அறிவற்றோர் ஆணின் ஓமோன்கள்களை பெண்களுக்கு தங்கள் மனைவிமாருக்கு... பிள்ளைகளுக்கு) வழங்குவார்களா என்ன? இயற்கை வகுத்த விதி இந்த ஓமோன்களின் செயற்பாடு. இயற்கையை உணர்ந்து ஒழுகுவதுதான் வளமான வாழ்க்கை. இதை உணர்ந்த எங்கள் பண்பாட்டு நெறி, மென்மையான பெண்களிடம் உள்ள சக்தி வன்மை உடையது என்று உணர்ந்து வழிபடத் தொடங்கினர். போற்றத் தொடங்கினர். சம உரிமை வழங்கப்படவிலை என்பது வெளித்தோற்றத்தில் இருந்து சமயத்தை நோக்குபவர்கள் கூறுகிற வதந்தி.பெண்ணிடம் அதிக கடமைகளை சைவம் ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. வீட்டுக்கு அரசியான பெண்ணிடம் இருந்த சுமைகள் ஏராளம். எனவே அவளிடம் சமூக கடமைகளை ஒதுக்கவிரும்பவில்லை.அவ்வளவே. ஆனால் சமூக கடமைகளில் ஈடுபடக்கூடாது என்று தடை விதிக்கவில்லை என் பதை உணர்க. அதனால் தான் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் காரைக்கால் அம்மையார், ஒளவையார் ஒளவையார் என்பது காலத்திற்கு காலம் தோன்றிய இலக்கிய பெண்களின் பொதுப்பெயர் என்க.), திலகவதியார் என்று சமூக, சமய பெண்கள் சரித்திரத்தில் தோன்ற முடிந்தது. ஏனைய நெறிகளில் அன்றைய காலத்தில் பெண்களுக்கு எமது பண்பாடு வழங்கிய சுதந்திரத்தின் எள்ளளவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு
மாணவர் விடுதி!
அகில இலங்கை இந்து மாமன்றம் சக்தி இல்லத்தில் நடத்தும் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர் விடுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு உணவு வழங்க விரும்பும் அன்பர்கள் நாளாந்த அடிப்படையில் பின்வருமாறு நன்கொடைகளைத்தந்து உதவலாம்.
காலை உணவு
ரூ. 15000/- மதிய உணவு
ரூ. 25000/- இரவு உணவு
ரூ. 25000/-
ரூ.5000/- மேலதிகமாக தந்தால் விசேட உணவு வழங் கலாம் .. இன்றைய காலகட்டத் தில் பல வயோதிபர்களுக்கு பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது அப்படியான தேவையை நாடும் ஒரு வயோதிபருக்கு அல்லது பிள்ளைக்கு மாதாந்தம் ரூ. 25000/- வீதம் நிதியுதவி செய்வது பெரும் புண்ணியம். மேலும் சிலருக்கு மருத்துவ உதவி அவசியம் தேவை. காலத்துக் காலம் விண்ணப்பதாரிகளின் தேவையை ஆராய்ந்து அவசிய தேவை இருப்பின் மாமன்றம் முடியுமானவரை உதவி செய்து வருகின்றது. (உதாரணமாக 2006ஆம் ஆண்டில் இருதயத்தில் ஒரு துளையுடன் ஆபத்தான நிலையில் இருந்த ஆறு வயதுச் சிறுமிக்கு இருதயச்சிகிச்சை செய்ய மாமன்றம் உதவி வழங்கியது. இன்று அக்குழந்தை சுகதேகியாக வளர்ந்ததுடன் படிப்பிலும் சிறப்பான சித்தியை பெற்று முன்னேறி வருவதைக் கண்டு மனநிறைவு காண்கிறோம்.)
இந்து ஒளி

கூறியே ஆகவேண்டும். இன்றுகூட ஐரோப்பாவில் வழங்கப்பட்டுள்ள பெண் சுதந்திரத்தை அவர்களின் சமயப் பண்பாடுகள் ஏற்கவில்லை. அரேபியாவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வருவதே அருமை.
ஆனால் மனித சுதந்திரத்தை...... வழிபாட்டு சுதந்திரத்தை அறிவுறுத்து கிற எமது பண்பாட்டில் ”கூடாது” என்று கூறப்படாததால் பெண் சமூகம் மூடநம் பிக்கைகளை உடைத் தெறிந்துள்ளது.
உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறல் என்பது மூட நம்பிக்கை. ஏதோ ஓர் ஊரில் கணவன் மீதுகொண்டிருந்த உயர்ந்த அன்பால் ஆழமான காதலால் உடன்கட்டை ஏறிய பெண்ணைக்கட்ட சிலர் உடன்கட்டை ஏறினாலேயே அவள் உண்மையாக கணவனை நேசித்தாள் என்று அர்த்தம் என்று பிதற்றியிருக்க அது பத்து ஊருக்குச் சென்று ஒரு பழக்கவழக்கமாக உருமாறியிருந்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு அர்த்தமற்ற கீழ்த்தரமான விடயங்களும் சைவத்தால் இம்மியளவும் அரவணைக்கப்பட்டதோ அன்றி அனுமதிக்கப்பட்டதோ அல்ல.
பெண்மையை போற்றுகின்ற எமது பண் பாட்டை மதிப்போம். பெண்ணை போற்றுவோம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
(நன்றி : இணையத்தளம்
க்கு உதவுங்கள்
இப்படியாக பலருக்கு நீங்களும் நாங்களும் உதவி செய்வது இறை பணியாகவே கருத வேண்டும். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவ மாணவிகளுக்கு வருடாந்தம் அப்பியாசப் புத்தகங்களை வழங்கிவருகிறோம்.
இளம் தலைமுறையின் நலனையும் மறவாது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவிசெய்து வருகிறோம். இவ்வாறாக மாமன்றம் பணிகளை மேலெடுத்துச் செல்லத் தாராளமாக - நிதி உதவி செய்து ஆதரவு தாருங்கள்.
எங்களின் வங்கிக் கணக்கு விபரங்களைக் கீழே தருகிறோம்.
Bank: Union Bank of Colombo PLC
Branch: Colombo Account No. 91190025 (பொதுக்கணக்கு)
or 911900023 (விடுதிக்கணக்கு)
Swift Code: UBCLLKLC
விடுதிப் பணிகளுக்கு உதவுபவர்கள் விடுதிக் கணக்கிற்கும் ஏனைய பணிகளுக்கு பொதுக்கணக்கிற்கும் பணம் அனுப்பலாம்.
முத்தையா கதிர்காமநாதன்
பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 29
கரண்ஸி நோட்டில் &
( பாக்டர் என
a ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியாவில் ஒரு கரன்ஸி நோட்டு வெளியிடப்பட்டது. இருபதினாயிரம் ரூப்பியா நோட்டு அது. அந்தச் சமயத்தில் அதன் மதிப்பு யூஎஸ் ஒரு டாலர் எண்பத்தைந்து காசுகள். இந்திய மதிப்பு எண்பத்து நான்கு ரூபாய்கள்.
அதில் உள்ள அதிசயம் என்னவென்றால் அதில் ஒரு விநாயகர் உருவம் இருப்பதுதான். ஏனெனில் இந்தோனேசியா முஸ்லிம் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு.
இதற்கு ஒரு நீண்ட பின்னணி உண்டு. ஆழமான பின்னணி மிகவும் சூட்சுமமான பின்னணி
ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பெளத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன. சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை. ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன் பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே.
ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயனமும் இருந்தது. "க்ரிஸ்னாயானா" என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு. ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா, ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும்
இந்து ஒளி
 

அதிசயப் பிள்ளையார்
ஸ். விஜயபாரதி)
குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன்
ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை.
அவர்களின் பெளத்தமும் தாந்த்ராயணா பெளத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது. வஜ்ரபோதி என்னும் தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள்
அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக் கொண்டார்கள். அந்த மரபில் வந்த கடைசி மன்னரின் காலத்தில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஜாவானியர் மந்திரதந்திரங்கள், ஜோதிடம் ஆகியவற்றில் வல்லவர்கள். அந்த சமயத்தில் சில சாபங்கள், ஆணைகள், சபதங்கள், தீர்க்கதரிசனங்கள் ஆகியவை பிறந்தன.
அதன்பின்னர் ஆட்சி பல கைகள் மாறி டச்சுக்காரர்களிடம் சென்றது.
அந்த சாபங்கள், சபதங்களை மக்கள் மிகவும் நம்பி யிருந்தனர். "ராத்து" எனப்படும் பெருவீரன் ஒருவன் பிற்காலத்தில் வரப்போவதாக நம்பப்பட்டது. அப்போது ஜாவா மீண்டும் பழைய க்ஷத்திரிய மரபினர் கைக்கே சென்றுவிடும் என்றும் நம்பினர்.
அந்த தீர்க்கதரிசனத்தை நடக்கவொட்டாமல் தடுக்க பலர் முயன்றும் வந்திருக்கின்றனர். ராத்துவின் வருகையால் ஜாவாவும், ஜாவாவின் தலைமைத்துவத்தில் இந்தோனேசியாவும் வல்லரசாக மாறிவிடுமோ என்று பயந்தனர். ராத்து என்னும் அந்த க்ஷத்திரிய வீரன் ஜாவாவின் முக்கிய நகரமாகிய பாண்டுங் என்னும் பிரதேசத்தில் தோன்றுவான் என்று ஏற்கனவே நம்பப்பட்டது.
பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 30
மாமன்றத்தி நீதியரசரின் ம
இந்த நாட்டின் மேல் முறை நீதியரசர் சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜா 9 கவலை அடைகின்றனர்.
மானிப்பாய் மற்றும் கொழும்பு மகன் நீதியரசராக உயர்ந்து இந்து சமூகத்திற்குப் பெரும் கலாசாரத்தையும் மறவாது என்றும் போற்றி இந்து மாமன் பல வைபவங்களில் ஆழ்ந்த கருத்துச்செறிந்த அறிவுரைக போற்றிய ஒரு சட்ட மேதை. அன்னாரின் இழப்பு ஈடிணை
அவரின் மறைவால் வருந்தும் குடும்பத்தினரின் துய அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரி பிரார்த்திகின்றோம்.
சொக் கார்ணோ தம்மை ஓர் அவதார புருஷனாக நினைத் திருந் தார் . விஷ் ணுவின் அவதாரமாகக் கருதிக்கொண்டார். ஒருமுறை வெட்டவெளியில் நிர்மலமான ஆகாயத்தில் மின்னல் தோன்றச் செய்து வெள்ளைகாரப் பத்திரிக்கையாளர்கள் சிலருக்குக் காட்டினார். அவரே அந்த ராத்துவாக இருக்கக்கூடும் என்றும் நினத்தார்கள்.
அந்தப் பழைய தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி சொக்கார் ணோவினால் உண்மையாகியது.
அவரைத் தள்ளிவிட்டு வந்த சுஹார்த்தோ, நாளடைவில் தம்மையே பழைய பாண்டுங் மன்னர் பரம்பரை என்று நினைக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் உண்டு. இப்போதைய யோக்ஜாக்கார்த்தா சுல்த்தானுக்கு அவர் சகோதர முறை ஆகிறார். ஏதோ ஒரு முறையில் என்று
வைத்துக்கொள்ளுங்கள்.
அவருடைய மகனுக்கு பாண்டுங் ராஜகுமாரி ஒருத்தியை மணம் முடித்துவைத்தார். அந்த திருமண பெர்ஸாண்டிங்க் சடங்கின்போது, மணமகளும் மணமகனும் பண்டைய க்ஷத்திரிய மரபையட்டி ஆடையணிகள் புனைந்து மணம் செய்துகொண்டனர்.
இந்தோனேஷியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தபோது, சுஹார்த்தோவின் தரப்பினர் பழைய தீர்க்க
தரிசனங்கள், சாபங்கள் போன்றவற்றையெல்லாம் கிளறிக் கிண்டிப் பார்த்தார்கள். பெரும்புலமை வாய்ந்த ஜோதிடர்கள், மாந்திரீகர்கள், தாந்திரீகர்கள் ஆகியோரையெல்லாம் வைத்து மிகவும் நுட்பமாக ஆராயச் செய்தனர்.
இந்து ஒளி

ன் அஞ்சலி றைவு இந்து மக்களுக்கு
பேரிழப்பு
யீட்டு மன்றின் தலைவராக இருந்த மாண்புமிகு வர்களின் மறைவு கேட்டு இந்நாட்டு இந்துமக்கள் ஆழ்ந்த
இந்துக் கல்லூரிகள் உருவாக்கிய ஒரு புகழ்பூத்த இந்து ம தேடித்தந்தார். அதேநேரம் அவர் தன் இனத்தையும் ற நிகழ்வுகளிலும் கலந்து எமக்கும் பெருமை சேர்த்தவர். ளை வழங்கிய திறமைசாலி. இந்த நாட்டுச் சட்டத்துறை செய்யமுடியாத பேரிழப்பாகும். ரத்தில் நாங்களும் பங்குகொண்டு அவர்களுக்கு எமது ர் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல எம்பெருமானைப்
அகில இலங்கை இந்து மாமன்றம்.
இந்தோனேஷியாவின் தற் சமய இடையூறுகள் , துன் பங் களை நீக்குவதற்குச் சில பரிகாரங் களைச் செய்ய வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று, கணேசரை வைத்துச் செய்யவேண்டிய பரிகாரம். பொருளாதாரம் சீரடையவும், இந்தோனேஷிய ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஊறுகள் நீங்குவதற்காகவும் செய்யப்பட்ட பரிகாரங்களின் ஓர் அங்கமாக கணேசரின் உருவத்தை கரன்ஸி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அவர்கள் பயன்படுத்தியது, பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த மூர்த்தம் மிகவும்
வீரியம் மிக்கது.
அந்த ரூப்யா நோட்டை வெளியிட்டு பதினெட்டு மாதங் களுக்குள்ளாக சுஹார்த்தோவின் ஆட்சிக்கு மோசம் நேரிட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? இந்தோனேஷியாவின் நல்வாழ்வுக்கு இடையூறுகள் இல்லாவண்ணம் அந்த ஜாவானிய தாந்திரீகர்கள் சடங்குகளைச் செய்து பரிகாரமும் கண்டனர்.
இந்தோனேஷிய நல்வாழ்வுக்குக் குந்தகமாக இருந்தது சுஹார்த்தோவின் ஆட்சிதான். ஆகவே அந்த ஆட்சி அகன்றது. அதை நடத்திவர் சுஹார்த்தோ என்பதாலும் அவரே இந்தோனேஷியாவின் பாழ்நிலைக்குக் காரணர் என்பதாலும் அந்த சூட்சும மர்மசக்தி அவரை அகற்றிவிட்டது. அவர்கள் நம்பியது வீண்போகவில்லை. ஆட்சியிலிருந்து சுஹார்த்தோவும் அவருடைய ஆட்களும் அகன்றனர்.
த ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நீங்கியது. இவ்வாறு அற்புதமான அதிசயமான விதத்தில் ப்ராம்பனான் கணேசர் தம்முடைய ஆற்றலை வெளிப்படுத்தி அரிய காரியத்தை சாதித்துவிட்டார்.
நன்றி : இணையத்தளம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 31
குழந்தை உர
மகத்தான ஆலயங்களு
目
喹
ബ
雛
சிவபுரம் என்றழைக்கப்படும் “திருச்சிவபுரம்"
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத்தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், "சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத்தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது
ஆதிகும்பேஸ்வரர் திருக் கோயில் “நவநீத கணபதி”
காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் "வெண்ணெய் கணபதி ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய "குர” தீர்த்தத்தில் நீராடி, இந்தநவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் "மந்திர பீடேஸ்வரியாய்" அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்த்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும். கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதி யிலேயே அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் கோயில் “நவ கன்னியர் வழிபாடு”
நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள் , எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர்
இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 

ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.
மகப்பேறு அருளும் “பாணபுரீஸ்வரர் திருக்கோயில்”
பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து. பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பானதுறையானது. தல நாயகன் "பாணபுரீஸ்வரரானார்." இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனைவி காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்டதால், தீராத தன் "குஷ்ட நோய்" நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான். இத்தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாபDகக் குளக் கரையில் அமைந்துள்ளது
ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள “குழந்தை கிருஷ்ணன்"
மூன்றாவது திவ்ய தேசமாக விளங்கும் சாரங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்டநாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப்பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து. பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.
கரு வளர்க்கும் “கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக் கோயில், கும்பகோணத்தில் இருந்து திருவாஷரூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கி.மீ. தொலைவில் மருதநல்லூர் என்ற கிராமத்தை அடுத்து உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாக புற்று மண்ணிலிருந்து தோன்றியதால், சாம்பிராணித் தைலமும், புனுகும் மட்டுமே சார்த்தப்படுகிறது. பல வருடங்களாக குழந்தை இல்லாதோர், இங்கு வந்து, அம்மனின் முன் உள்ள வாசற்படியை நெய் கொண்டு மெழுகி வழிபடவேண்டும். பிரசாதமாக தரப்படும் மஞ்சளை, பெண்கள் தினந்தோறும் பூசி
9. பூநீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 32
குளித்திட மகப் பேறு கிடைக்கும். கல்யாண வைபவங்கள் நடைபெறவும், இத் தல நாயகி அருளுகிறாள்.
நின்ற நிலையில் வீற்றிருக்கும் “திருமணஞ்சேரி ராகு பகவான்”
கும்பகோணத்தை அடுத்துள்ள மாயவரத்தை அடுத்துள்ளது “மண்வரம் அருளும் திருமணஞ்சேரி” கல்யாணப் பேறு அளிப்பது “கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர்” என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலையில், அருள்பாலிக்கும் “ராகு பகவான்.” அமாவாசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், திரும்ப தரப்படும் தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாட்டை மூன்று அல்லது ஐந்து அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.
மகப்பேறு தரும் “தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர்”
திருக்கடையூரிலிருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சங்கு வடிவில் உள்ள “தலைச்சங்காடு.” சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. திருமாலுக்கு சங்கு கொடுத்ததால் இந்த ஈசன் “சங்கரான்யேஸ்வரர்” ஆனார் - அம்பிகை “சௌந்தரநாயகி அம்மன்.” பௌர்ணமி தோறும், இந்த அம்மனுக்கு, குழந்தை வரம் வேண்டி. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சார்த்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தன பிரசாதத்தை சிறிது உண்ண குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், வழிபாட்டின்போது, பெளர்ணமி விரதம் இருப்பது நல்ல பயன் அளிக்கும்.
கரு தந்து காத்திடும் “திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகை”
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் இருபது கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து, கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் “கர்பரட்சாம்பிகை” திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும்
இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் “பசுநெய்” பிரசாதத்தை 48 நாட்கள்
இந்து ஒளி

தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் “விளக்கெண்ணெய்” பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர். புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள்.
கதிராமங்கலம் “வனதுர்க்கை”
கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற சிற்றூரின் அருகில் உள்ளது, கம்பரும் அகத்தியரும் வழிபட்ட வனதுர்க்கை குடிகொண்டுள்ள “கதிராமங்கலம்” ராகு கால வேளை என்பது, ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம். எனவே ராகு திசை வழிபாட்டிற்கான சிறந்த நேரம் ராகு காலமே. இந்த துர்க்கையை எலுமிச்சம்பழத் தோலில் நெய் விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலை சார்த்தி 9,11 அல்லது 21 வாரங்கள் வழிபட “புத்திர பாக்கியம்” கிட்டும் என்பது நிச்சயம்.
தஞ்சாவூர் மேல வீதி “சங்கர நாராயணன்”
கரிகால் சோழனின் வழி வந்த, பீம சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவது. வலப்புறம் பார்வதியையும், இடப் பக்கம் லஷ்மியையும் கொண்டு ஐந்து அடி உயரத்தில் காட்சியளிக்கும் இத் தல மூர்த்தியின் சிலை சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே கொண்டது. இத் தலம் “குழந்தைப் பேறு அருளும்” புண்ணிய ஷேத்திரமாக விளங்குகிறது.
குழந்தை செல்வம் பெற "திருவெண்காடு”
நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத தம்பதியர் இத் தலத்தில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் குழந்தைச் செல்வம் பெறுவர். இத் திருத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அச்சுதகளப்பாளர் என்னும் சிவனடியாருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
ஒரு நாள் அவர், திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு பதிகத்தை படிக்க, அதில் கூறியுள்ளவாறு திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள சூரிய, சோம மற்றும் அக்னி என்ற மூன்று குளங்களிலும் நீராடி பரம்பொருளை வழிபட, அவர் வேண்டுதலுக்கிணங்க பெருமானும் குழந்தைச் செல்வத்தை அளித்தார். அக் குழந்தைதான், “சிவஞானபோதம்” எனும் பன்னிரு சூத்திரத்தை தந்த “மெய்க்கண்டார்” என்ற சிவஞான சித்தர். குழந்தை செல்வம் பெற விரும்புபவர்கள், திருவெண்காடு சென்று அங்குள்ள முக்குளங்களிலும் நீராடி சிவபெருமானை வழிபட வேண்டும். தினமும் காலை வேளைகளில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளிப்பது மேலும் சிறப்பு
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 33
1
III
தைப்பொங்க
மாமன்றம்
மாமரமீது
தைப்பொங்கல் இந்துக்களின் நாட்காட்டியிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித நாள் ஆகும்.
இறைவன் தனது திருவருட் சக்தியை சூரியன் மூலம் வழங்குகிறார் எனவும் அவரது பக்தர்கள் அதன் மூலம் நன்மையைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் நாம்
அங்கீகரிக்கின்றோம்.
எனவே சூரியன் வடிவில் நாம் பார்த்த இறைவனுக்கு இத் தைப்பொங்கல் திருநாளன்று பாற்சோறு பொங்கிப் படைத்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே அனைத்து இந்துக்களும் இத் தைப்பொங்கல் திருநாளை இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக நினைவில் வைத்துப் பக்தியுடன் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.
அதேநேரம் எமது ஆதரவு மற்றும் உதவி தேவைப் படுகின்ற இறைவனின் குழந்தைகளான எமது சகோதர சகோதரிகளுக்கும் உதவ வேண்டும்.
"மனிதர்களுக்கு செய்யும் சேவை அவரவர் கடவுள் பிரார்த்தனை ஆகிறது” என்பதை இலட்சியமாகக் கொண்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகிய நாங்கள் எமது சேவையைத் தொடர்கின்றோம்.
அத்துடன் பல நன்கொடையாளர்களும் நலன் விரும்பிகளும் எமது செயல்முறைகளுக்கு உதவும் வகையில் நன்கொடையளித்துள்ளார்கள் என்பதையும் நன்றியுடன் ஒப்புக்கொள்கின்றோம்.
நிச்சயமாக நாம் எந்த அரசியல் பாரபட்சமுமில்லாமல் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள்ளிருந்து இந்துக்கள் சார்பாக எமது கவனத்தை செலுத்த ஒருபோதும் தயங்குவதில்லை.
அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கமும் எமது முறைப்பாடுகளுக்கு சாதகமாகவே பதிலளித்துள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கின்றோம். அண்மைக் காலங்களில், எமது மக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு, மத சுதந்திரம் மீறப்படுவதற்கான முயற்சி பெருங்கவலையைத் தரும் விடயமொன்றாக இருந்து வருகிறது.
சர்வதேச நாடுகளை இணைக்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தணையின் உறுப்புரை - 27இல், இன, மத அல்லது மொழிரீதியாக சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் அச் சிறுபான்மையைச் சேர்ந்த நபர் எவரதும், அவரது சொந்த கலாசாரத்தை அனுபவிக்கும் உரிமை, அவரது சொந்தக் கருத்தை தெரிவிக்கும் உரிமை, தாம் விரும்பிய மதத்தை கடைப்பிடிப்பதற்கான உரிமை, தமது சொந்த மொழியினை உபயோகிப்பதற்கான உரிமை என்பன
இந்து ஒளி

கல் திருநாளையொட்டி விடுத்திருந்த செய்தி
சமூகத்தில் உள்ள ஏனைய குழுவைச்சார்ந்த நபர்கள் மத்தியில் மறுக்கப்படலாகாது என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளிலுள்ள எல்லா உறுப்பினர்களையும் இணைக்கும் ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் உறுப்புரை 55 ஐக்கியநாடுகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை இனம், பால், மொழி மற்றும் மத வேறுபாடின்றி எல்லோரும் உலகளாவிய மரியாதையுடன் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் ஊக்குவிக்க வேண்டும் என கூறுகிறது.
மற்றும் உறுப்புரை 56 அனைத்து உறுப்பினர்களும் அமைப்பின் நோக்கங்களை அடைவதற்கு கூட்டு அல்லது தனியான நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறுகிறது.
மேலும் இலங்கை பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தணையில் கையெழுத்திட்டிருப்பதால், இப்பொருத்தணையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை எந்தவித இன, நிற, மொழி, மத, தேசியம் அல்லது சமூகத்தோற்றப்பாடு, பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து அடிப்படையில் வேறுபாடின்றி கடைப்பிடிப்பதற்கு உத்தரவாதமளிக்கின்றது (உறுப்புரை - 2(2)
வியன்னா பிரகடனமும், அரசாங்கங்களை நடவடிக்கை எடுக்க உபதேசிக்கும் திட்டமும், தேசிய இன, மத மற்றும் மொழி ரீதியிலான சிறுபான்மையினர், சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, மத மற்றும் கலாசாரத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு வசதியளிப்பதை உள்ளடக்கியுள்ளன.
மேலும் உலக மாநாடும் எல்லா அரசாங்கங்களையும் இனவாதம், இனவெறி மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட வெறுப்புக்களை தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், வலுவான கொள்கைகளை அபிவிருத்தி செய்யுமாறும் தேவையேற்படின் தண்டனைகளை உள்ளடக்கிய சட்டங்களை உருவாக்குமாறும், தேசிய நிறுவனங்களை தாபிக்குமாறும் வலியுறுத்துகின்றது.
- மேலும் அரசியலமைப்பின் உறுப்புரை 12(2) இல் எந்தவொரு பிரஜையும் இனம், மதம், மொழி,... அடிப்படையில் பாரபட்சப்படுத்தப்படலாகாது என கூறப்பட்டுள்ளது.
மேலும் எமது அரசியலமைப்பு புத்த சமயத்திற்கு முதலிடத்தை வழங்கியுள்ளதுடன் புத்தசாசனத்தை பாதுகாக்கும்படியும் வளர்க்கும்படியும் அரசை தேவைப் படுத்துவதுடன் ஏனைய சமயங்களின் மத சுதந்திரத்தையும் அவ்வுரிமையை கடைப்பிடிப்பதையும் அவர்களது நம்பிக்கைகளை பரப்புவதையும் உறுதிசெய்யும்படியும் தேவைப்படுத்துகிறது.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 34
ஒருமுறை எமது உயர்நீதிமன்றத்தின் அவதானம் பின்வருமாறு அமைந்தது:-
"சுதந்திரமாக மதத்தை வெளிப்படுத்தும் உரிமை எங்கள் வரலாற்றில் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும்."
ஒரு பன்முக சமூகத்தில் தனிப்பட்டோருடைய அல்லது குழுவினுடைய சுய வெளிப்பாட்டுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியமானதொன்றாகும்.
"வெவ்வேறு துணைக்கலாசாரங்கள் எமது தேசிய வாழ்வு என்னும் முக்கிய நீரோடையில் விழுந்து ஆழம் மற்றும் அழகைக் கெடுக்கிறது.''
இலங்கையில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்கள் தாக்குதல்களால் அழிவடைவதும், அச்சுறுத்தல்கள் நிறைந்தனவாகவும் காணப்படுகின்றன.
மேலும் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள அநேகமான இந்துக்கோவில்கள் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆயினும் பல சுற்றுலாப்பயணிகள் அரசின் பாதுகாப்பின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள புதிய விடுதிகளை அணுகக்கூடியதாக உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்திடம் அ). பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரசபைகளையும்
அதன் அலுவலர்களையும் இந்துக்களினதும் ஏனைய சிறுபான்மையினரின் சுதந்திரங்களையும், உரிமை களையும் உறுதிப்படுத்தும்படி வலியுறுத்தும்படியும் ஆ). அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பு
வழங்கும்படியும் இ). பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் அனைத்து
வழிபாட்டு தலங்களுக்குள்ளும் உள்நுழைய அனுமதி அளிக்குமாறும் (இது பொலிஸாரது முன்னிலையில்
கூட இருக்கலாம்) உ). அரசாங்கத்தினால் இனவாதிகளின் தேவைகளுக்காக
கைவிடப்பட்டவரும் தற்காலத்தில் மூத்த அமைச்சரு மான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆல் பரிந்துரைக் கப்பட்ட சமவாய்ப்பு வழங்கும் சட்டத்தை உருவாக்கும் படியும் முறைப்பாடுகள் செய்ய வேண்டுமென அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டிக் கொள்கின்றது.
மாத்தளை முத்துமாரியம்மன்
இராகம் : கல்யாணி
பல்லவி
செந்தமிழ்த் உதவளே மாத்த செந்தமிழ்.
செந்தமிழ்த் தாயே வந்தருள்வாய் - எங்கள் சிந்தை கவர்ந்தவளே மாத்தளை முத்துமாரி
(செந்தமிழ்.....)
இந்து ஒளி

இந்தச் சுடரில்.
மட்டுப்பாட் 3
* பஞ்ச புராணங்கள்
* ஆன்மீகச்சுடரின் அருள்மடல்
3
* லலிதாம்பிகை நவரத்தினமாலை
* மாத்தளை முத்துமாரி அம்பாள் திருத்தலம்
N 1 ) அ .
* மாரியம்மன் போற்றி
* சக்தி விரதங்கள்
* துக்க நிவாரண அஷ்டகம்
11
* சக்தியின் நாமங்களும் அருள்பாலிக்கும் பதிகளும் 13
* தீப வழிபாடு
14
* பண்டிதமணியின் பார்வையில் நாவலர்
16
* மாணவர் ஒளி
17
ஃ கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் ஆகாது 19
* புண்ணிய பூமியின் தீர்த்தக்கரை
பாலாவியைப் பாவபூமியாக்கியவர் யார்?
22
* அடியாரை வழிபடுவோருக்கு இரட்டைப்பலன்
23
* சைவப் பண்பாட்டில் பெண்தெய்வ
வழிபாடும் பெண்ணும்
25
* கரன்ஸி நோட்டில் அதிசயப் பிள்ளையார்
27
* குழந்தை வரம் பெற உதவும் மகத்தான
ஆலயங்களும், வழிபாட்டு முறைகளும்
29
தைப்பொங்கல் திருநாளையொட்டி மாமன்றம் விடுத்திருந்த செய்தி
31
அனுபல்லவி ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே! உந்தன் அருளை, நானும் உவந்து களித்தேனம்மா...
சரணம் அன்னை அபிராமி ஆனந்தி கல்யாணி முன்னை வேம்பிலாடிய முத்துமாரி வேணி என்னைத் தடுத்தாண்ட எழில் நிறை சூலபாணி மன்னிடும் மதித்திடும் மாத்தளை முத்துமாரி அம்மா....
சமயத் தொண்டன் : சு புண்ணியசீலன்.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவ சிறப்பிதழ்)

Page 35
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன்
யானையில் கொடிச்சீலை கொண்டுவரப்படும் காட்சி
கொடிச்
எடு
*ர :1
"EET பா.
திருவிழாவில் கொடியேற்றப்படுகின்றது.
அம்மனின் திருத்தோற்ற
மாமன்ற நிக
நல்லூர் கந்தன் கட்டுரைப் போட்டியில் கீழ் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணவி செல்வி அசோகனுக்கு ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் அவர்கள் பரிசில் வழங்குகிறார். அருகில் மாமன்றத் தலைவர்.
நல்லூர் கந்தன் கட்டுரை பிரிவில் முதல் பரிசு பெற்ற ! எஸ். சேந்தன் அவர்களுக்கு தொண்டுநாதன் அவர்கள் !
ச - 21 2' 5
செல்வி ஹம்சிக
துவிச்சக்க
அகில இலங்கை இந்து மாமன்ற வன்னிப்பிராந்திய
அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட அரச நிலத்தை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், முறிகண்டியில்
(06-02-2014) ஏற்றுக்கொண்டபொழுது.

( சுவாமி வீதி உலா காட்சிகள்
பக்தர் கூட்டம்
சீலை ஆலயத்துக்குள் தத்துவரப்படுகிறது.
கேபி
சுவாமி வீதி உலா
காவடி
6
கழ்வுகள்
ப போட்டியில் மேல்
விஷ்வமடு ஸ்ரீ நாச்சியார் அம்மன் ஆலய மாணவன் செல்வன் தர்மகர்த்தா சபைத் தலைவர் த. கனகரத்தினத்துக்கு 5 ஆன்மீகச்சுடர் ரிஷி
பன்னிரு திருமுறைத் தொகுதியை ஆன்மீகச் சுடர் பரிசில் வழங்குகிறார் ரிஷி தொண்டுநாதன் அவர்கள் மாமன்றம் சார்பில்
யாழ் பணி மனையில் அன்பளிக்கிறார்.
ாவுக்கு மாமன்றம் சார்பில், ர வண்டி அன்பளிப்பு
மாமன்றத்தின் சார்பில் திருமதி அ. கயிலாசபிள்ளை நல்லுார் ஆதீன அலுவலகத்திற்கு கணணி அன்பளிப்பு
செய்கின்றார்.

Page 36
HINDU OLI - REGISTERED IN THE DEPARTMENT OF மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழாவில்
அருளுரையும் மாமன்றத்
மாமன்றத் தலைவரின் உரை. அருகே ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன்
திரு புண்ணியசீலன், ஆலய அறங்காவலர்கள்
ஆன்மீகச் சுட
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழாவில் மாமன்றத் தலைவர் உரையாற்றுகிறார்.
அருகில் ஆன்மீகச்சுடர்
பக்தர் கூட்டம்
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் சுவாமி வீதியுலா
இவ்விதழ் இல. 486 புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13, யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட் லிமிட்டட்

PosTS OF SRI LANKA UNDER No. QDI52INEws/2014 1 03.02.2014 அன்று நிகழ்ந்த ஆன்மீகச்சுடரின்
தலைவரின் சொற்பொழிவும்
-ன் sYலகள்
!,
அறநெறிப்பாடசாலை அதிபருக்கு
ஆன்மீகச்சுடர் நூல் அன்பளிப்பு வழங்கும் காட்சி
திரு. புண்ணியசீலனுக்கு
ஆன்மீகச்சுடர் நூல் அன்பளிப்பு செய்கிறார்.
--ரின் உரை
பக்தர் கூட்டம்
வசந்த மண்டபம்
மாத்தளை ஸ்ரீ சிந்தாகட்டி குமரன் பெருமான் ஆலயத்திலிருந்து பார்க்கும் போது, மஸ்கெலியாவின் எழில்மிகு தோற்றம்.
5 வனத்தில் அச்சிடப்பட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்டது.
772 () 14