கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2014.03

Page 1
www.viluthu.org
 


Page 2
ஆசிரிய வாண்மைக்காக புதிய பார்வைகளோடு
w.viluthu.org
 

Dம்பாட்டின் g, gasolign
Glana): 200/-

Page 3
1.O.
11.
12.
13.
புதிய கல்வி ஆலோசனைகளைத் தயாரிக்கும் பணி
எட்டாம் தர வகுப்பு தமிழ் மொழியும் இலக்கியமு இடம்பெற்றுள்ள அல்பேட் ஐன்ஸ்ரைனைப் பற்றிய அவமதிப்பானதுமான கருத்துக்கள்
மொழியறிவுப் பேறும் வாய்ப்புக்களும்
21ம் நூற்றாண்டில் அறிவுசார் சமூக மாற்றத்தில் கெ
மட்டக்களப்பு மாவட்ட கல்வி வளர்ச்சியும், தேசிய சித்திபெறச் செய்தலும் அதன் முக்கியத்துவங்களுட
மேலை நாடுகளில் தமிழாராய்ச்சி
மாணவர்களிடையே கற்றலின் ஒர் பகுதியாக உடற்
அமைய வேண்டியதன் அவசியம்
கலைத்திட்டத்தில் சூழலியல் கல்வியின் அவசியம்
பண்புக் கல்வி: நாம் செய்ய வேண்டியது என்ன?
கல்விப் பணியாளர் சபை
வாழ்வும் பிள்ளையும்
கல்விச் செயற்பாடுகளில் இரசின் வகிபங்கு
சிறவர் நேய அணுகு முறை உடல், உளத்தண்டை
AHAVIILI அகவிழியில் இ 3, Torrington Avenue பொறுப்
Colombo 07 Tel.: O 11 25O 6272
E-mail: ahavili.viluthu(agmail.com
 

யில் தேசிய கல்வி ஆணைக்குழு 4.
ம் என்னும் பாட நூலில்
தவறானதும்
b@@ 12
மட்டத்தில் உயர்தர மாணவர்களை b 15
2O
)பயிற்சி அல்லது விளையாட்டு
24
27
31
35
38
40
னகள் பற்றிய சிறுபார்வை 43
}டம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் "அகவிழி" யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ISSN 18
ஆக
-- ஆசிரியர்
மாத
ஆசிரிய ச. இந்திர நிர்வாக ஆ
சாந்தி சச்சித நிறைவேற்றுப் பணி
ஆசிரியர் க. சண்முக பத்மா சோப்
ஆலோச
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் தை. தனராஜ் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி
சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர்
கல்வி அமைச்சு
வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ஆசிரியரிடமிருந்து...
N அகவிழி | மார்ச் 2014
சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியின் பயனாக அதி சிறந்த பண்புசார் தரமிக்க கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தின் ஊடாகப் பாடசாலை மட்டத்தில் தீர்மானங்களை எடுப்பதற்காகப் பாடசாலைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்றும், இதங்கிணங்க கல்வியின் நோக்கங்களை அடைந்து

10-1246
வி6
துவ நோக்கு...
இதழ்
குமார்
சிரியர் ானந்தம் ப்பாளர்(விழுது)
குழு லிங்கம் மகாந்தன்
கர் குழு
கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்
எஸ்.கே. பிரபாகரன் விரிவுரையாளர், வணிகக்கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட முழு முகாமைத்துவத்துடனான வினைத்திறன் மிக்க பாடசாலையை ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகும் என்றும் கல்வி அமைச்சு பரிந்துரைக்கின்றது.
மேற்குறித்த விடயங்களில் கல்வி அமைச்சு வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை எதிர்பார்பதாயின் பாடசாலைக் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவது

Page 5
அவசியமானதொன்றாகும். இன்று உலகளாவிய ரீதியில் கல்வி மாற்றம் பற்றிய சிந்தனைகள் எடுத்துரைக்கப் படுகின்றன. கல்விமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச மாற்றுச் சக்திகள் பற்றி கவனம்செலுத்தப்படுகிறது. சர்வதேச தொழிற்புரட்சி, பாடசாலைக்கும் சமுதாயதிற்கு மிடையிலான உறவுமுறை, பாடசாலையும் எதிர்கால வேலைப்படையும், அறிவு அடிப்படையிலான பொருளியல் அரசுகள், பாடசாலையும் நவீன குடும்ப கட்டமைப்பும், சுயமுகாமைத்துவ பாடசாலை வெளிப்பாடு என சில மாற்றுச்சக்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சர்வதேச தொழிநுடப்புரட்சியின் விளைவால் உண்டான தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆசிரியர்கள், ஆசிரிய மைய வகுப்பறையின் வாயில் காப்போரல்லர் என்ற உண்மைத்தன்மையைத் வெளிச்சப்படுத்தியுள்ளது. தமது மாணவர்களின் கற்றலை முகாமை செய்ய ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவமும் அதை அடைதற்கான வழிகளும் தேவைப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் மாணவர் தகவல்களை அடையும் வழியை மாற்றுவது மட்டுமன்றி கற்றலுக்கான வழிமுறைகளையும் மாற்றி யமைக்கின்றது. எதிர்கால தகவல் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் பாடசாலைகள் மாணவர் களின் எதிர்காலத் தேவைக்கேற்ற நிகழ்ச்சித் திட்டங்களை விருத்தி செய்வதற்கு, மாணவரின் ஒப்பற்ற பகுதிகளின் சந்தர்ப்பங்களை விருத்தி செய்யும் இடத்திற்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரமும் பாடசாலை களுக்குத் தேவைப்படும்.
மாணவர் வாழ்வில் அவர்கள் வளர்ந்து விருத்தியுறும் போது, பாடசாலைகள் முக்கிய வகிபாகத்தைத் தொடர்ந்து வகிக்க வேண்டுமெனில், அவை தாம் அமைந்துள்ள சமுதாயத்தின் மிக மத்திய பகுதியில் இடம்பெறவேண்டியது அவசியமாகிறது. இருபத்தொராம் நூற்றாண்டின் பாடசாலைகள் தமது சமுதாயத்தின் சிக்கல்களுக்குப் பதிலளிக்கத் தக்கதாகவும் மாணவர் தாம் வாழும் அங்கமான விரிந்த சமூக, அரசியல்,கலாசார, பொருளியல் மாற்றங்களுக்கேற்ப அவர்களின் கற்றலுக்கு ஒற்றுமையுடன் கூடிய நடைபாதையை மிகச் சிறந்த நிலைக்கு விருத்தி செய்ய வேண்டியுள்ளது.
எதிர்கால வேலைப்படைக்குத் தேவைப்படும் திறன்களின் இயல்பு இன்றைய நிலையைவிட மிக வேறுபட்டதாக இருக்கும். உலக அரங்கில் நாடுகள் பொருளாதார ரீதியாகப் போட்டி மனப்பாங்குடன் செயற்

படவேண்டியுள்ளன. எனவே பாடசாலை பூர்த்தியாக்கும் மாணவரின் விகிதத்தை அதிகரித்து வேலைப்படையின் தராதரத் தகுதிகளின் போட்டி மட்டத்தை அடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இது பாடசாலை பங்குபற்றுதலின் வளர்ச்சிக்கும் பாடசாலைப் பின் தொழில்சார் கல்விக்கும் பயிற்சிக்கும் பங்களிப்புச் செய்யும்.
வேலைக்கான வழி, தனியாட்களின் ஆளிடைத் திறன்கள், வலைப்பின்னல், செயற்றிட்ட முகாமைத்துவ திறன்கள், நெகிழ்ச்சித்தன்மை கொண்ட வாழ்க்கையையும் தொழில்களையும் அமைத்துக் கொள்ளும் இயலுமை என்பனவற்றில் தங்கியுள்ளது. வாழ்நாள் கற்றலுக்கான அத்திபாரமிட்டு அதிதிறமை இயலுமையை அடைவதை உறுதிப்படுத்தும் அறிவுப் பொருளியலுக்காக, மாணவர் தமது திறன்களையும் அறிவையும் விருத்தி செய்வதற்குப் பாடசாலைகள் உதவவேண்டிய தேவையுள்ளது.
தற்போது நவீன குடும்பக் கட்டமைப்புக்கு நகரும் பல்வேறு உறவு முறைகள் அதிகரிப்பு இயல்புகளைக் கொண்டுள்ளன. இக்குடும்பக் கட்மைப்பிலும் இயல்பு களிலுமுள்ள மாற்றங்கள் பிள்ளைகளுக்குக் கூடியளவிலான சமூக உதவிகளை வழங்குவதற்கு பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது புதிய அழுத்தங்களை இட்டுள்ளன. பெற்றோரை மாணவர் கற்றலில் கூட்டு உரிமையாளர்களாக உருவாக்குவதிலும் அவர்களைப் பாடசாலை வாழ்வில் உட்படுத்துவதிலும் பாடசாலைகள் பெரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.
பாடசாலைகளின் ஆளுகை, முகாமைத்துவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றை மீள்கட்டமைத்தலால், கல்வி, சமூக சவால்களுக்கு உரியகால உபாயங்களினால், பாடசாலைகள் இன்னும் வினைத்திறனுடையனவாக விருத்தியடையுமென்ற நம்பிக்கையுள்ளது. பல நவீன சாவல்களின் (தொழில்நுட்பப் புரட்சி, சமுதாய இயலுமை விருத்தியில் நவீன பாடசாலைகளின் வகிபாகம் எதிர்கால வேலைப்படை மாறுகின்ற நவீன குடும்பக் கட்டமைப்பு விளைவுகள் பொதுக்கல்வித்துறை மாற்றங்கள்) என பலவிடயங்களில் எமது பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் எழுகின்ற சவால்களை எதிர்கொள்ள தயாரா இருக்கின்றனவா? கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் சர்வதேச சக்திகளில் எமது நாட்டுகல்விக்
கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்துவார்களா? 坐 எமது கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமா? என 5. பல கேள்விகள் எம் முன் எழுகிறது. ଧୃତ ச. இந்திரகுமார் 5
Q
N)
Ο
خص
ܠܛ

Page 6
སྒོ་ང་ wO CN
·也
s 으
3. 영
蚤
புதிய கல்வி ஆலோசனைகளைத்
தேசிய கல்வி ஆணைக்குழு
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
1991 இல் நிறுவப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழு மேதகு ஜனாதிபதிக்குக் கல்வி தொடர்பான சகல விடயங்களிலும் கொள்கைப் பரிந்துரைகளை வழங்கும் அதிகாரமுடையது. 2003 ஆம் ஆண்டில் இவ்வாணைக் குழுவானது இலங்கையின் பொதுக் கல்வி தொடர்பான ஒரு விரிவான அறிக்கையைக் சமர்ப்பித்திருந்தது. மனித விருத்திக்கான கல்வி பற்றிய தொலை நோக்கு என்ற தலைப்பிலான இவ்வறிக்கையின் பரிந்துரைகள் பல ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பேராசிரியர், லக்ஸ்மன் ஐயத்திலக்க தலைமையில் இயங்கும் இவ்வாணைக் குழு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடிய புதிய ஆலோசனைகளையும் பரிந்துரைகளும் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.
பரிந்துரைகள் 2003 இல் வழங்கப்பட்டு தற்போது பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய பரிந்துரைகள் பற்றி சிந்திப்பதற்கான காலம் வந்துவிட்டது என்பது ஆணைக்குழுவின் கருத்தாகும். பொதுக்கல்வி (பாடசாலைக் கல்வி), உயர்கல்வி, தொழிற்கல்வி என்பன பற்றிய புதிய கொள்கைகளும் பரிந்துரைகளும் தயாரிக்கப்பட்ட மூன்று நிலையியற் குழுக்களை ஆணைக்குழு நியமித்துள்ளது. பாடசாலைக் கல்விக்கான நிலையியற் குழுத்தலைவர் ஆரியரத்ன ஹேவகே தலைமையில் பாடசாலைக் கல்வி தொடர்பான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. கல்வி முறையானது பொது மக்களுடைய நேரடி கவனத்தைக் கவர்ந்துள்ள துறை என்றபடியால், பரிந்துரைகளை உருவாக்கும் செயற்பாட்டில் அவர்களுடைய ஆலோசனைகளும் பெறப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளும் விளம்பரங்களும் ஏற்கனவே ஊடகங்களினூடாக மும் மொழிகளிலும் வெளியிடப் பட்டுள்ளன. கல்வி முறையின் சகல அம்சங்கள் தொடர்பான தமது கருத்துக்களைப் பொதுமக்களும் சிவில் அமைப்புக்களும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி, வைக்கலாம். அதற்கு இம்மாத இறுதிவரை (31.06.2013) கால அவகாசம் தரப்பட்டுள்ளன. அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி: 126, நாவல வீதி, நுகேகொடை.
பொதுக்கல்விப் பாட ஏற்பாடு, கணிப்பீடு, கல்வித்தர உறுதிப்பாடு, ஆசிரியர் தெரிவு, அவர்களுடைய தொழில்
 
 

தயாரிக்கும் பணியில்
விருத்தி. கல்வி நிர்வாகிகளுக்கான பயிற்சி, கல்வித் திட்டமிடலும் முகாமைத்துவமும், பாடசாலை வகைப்பாடு. தனியார் பாடசாலைகளை ஒழுங்குபடுத்தல். கல்வியில் சமுதாயப் பங்கேற்பு, தேசியமொழி, இரண்டாம் மொழி, சர்வதேச மொழிக்கல்வி, பாடசாலைகளில் தொழிற்கல்வியும் விசேட கல்வியும், கல்விச்செலவு, தொழில் வழிகாட்டல், ஆலோசனை கூறல், முறைசாராக் கல்வி, புதிய கல்விச் சட்டத்துக்கான தேவை, கொள்கைகளை நடைமுறைப் படுத்தல், இவை போன்ற துறைகளில் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இவ்வாறான கலந்துரையாடலுக்கு முன்னோடியாக இம்மாதம் (ஜின்) 13ஆம் திகதியன்று பல்கலைக்கழகக் கல்வி அறிஞர்கள், கல்வி அமைச்சினதும் தேசியக்கல்வி நிறுவனத்தினதும் அதிகாரிகள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட செயலமர்வு ஒன்று ஜானகி ஹோட்டலில் நடை பெற்றது. அங்கு பங்கு கொண்ட உலக வங்கியின் தென்னாசியரீதியில் கல்வித் துறையின் போக்குகள் பற்றி உரையொன்றை நிகழ்த்தினார்:- உலகளாவிய ரீதியில், தொழில், வர்த்தகத் துறைகளில் தேவைப்படும் திறன்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன: தொழில் துறையினர் இன்று பல மொழித்திறன்களையே விரும்புகின்றனர். ஆரம்பக்கல்வித் துறையில் பல முன்னேற்றங்களைக் கண்டாலும் இடைநிலைக் கல்வியில் தொடர்ச்சியான விரிவும் தராதர மேம்பாடும் வலியுறுத்தப்படுகின்றன. பாடசாலை மட்டத்தில் புதிய தொழில் திறன்களை உள்ளடக்க வேண்டியது அவசியம். கற்பிக்கப்படும் அறிவுத் தொகுதியோடு திறன்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. எனவே கல்வி முறையானது பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான திறன்களுடன் தொடர்புபடுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தைக் கலாநிதி அத்துறுப்பான வலியுறுத்தினார்.
வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் அவை அறிவுப் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும்; உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் அறிவு உள்வாங்கப்படல் வேண்டும்: பொருள் உற்பத்திக்கு அவ்வறிவு பயன்படுத்தப்படல் வேண்டும், அதற்கு அறிவுப் பொருளாதாரத்தின் ஒரு பிரதான

Page 7
துறையான பொதுக்கல்வியும் உயர்கல்வியும் சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இளைஞர்களின் கல்விமுறையையும் மனங்கொள்ள வேண்டும் என இச்செயலமர்வில் வலியுறுத்தப்பட்டது.
மொத்தத்தில் கல்விச் சீர்திருத்தம் பற்றிய விரிவான நாடாளாவிய கலந்துரையாடலுக்கான ஓர் ஆரம்பக்கட்டம் ஒரு முன்னோடிக் கருத்தரங்காக இச்செயலமர்வு அமைந்தது. நூறு பேர்வரை கலந்துகொண்ட இச் செயலமர்வில் யாழ்ப்பாணப் பல்கலைகழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து தமிழ்க்கல்வியாளர்கள் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சமாகும். அவர்கள் வெவ்வேறு குழுச் செயலமர்வுகளில் பங்கு கொண்டு முக்கிய பங்களிப்பைச் செய்தனர். அவ்வாறே நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் அவர்கள் மத்தியில் இயங்கும் அமைப்புகளும் மேலே தரப்பட்டுள்ள கல்வி முறையின் அம்சங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுமென்று தே.க. ஆணைக் குழு எதிர்பார்க்கின்றது.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்
இன்று பாடசாலைக் கல்வியில் பாடங்களின் சுமை அதிகம் என்ற முறைப்பாடு உண்டு. ஒரு புறம் 1 - 13 வகுப்பு வரை நூற்றுக்கணக்கான பாடங்கள்; மறுபுறம் ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய விரிவான பாடத்திட்டம்: மாணவர்களைப் பொறுத்தவரையில் இத்தகைய சுமை உண்மையானதா? இவ்வளவு பாடங்களும் அவசிய மானவையா? பாடங்களை ஒருங்கிணைத்து தொகையைக்
 

குறைக்க வேண்டுமா? அல்லது பாட உள்ளடக்கத்தைக் குறைக்க வேண்டுமா? சேர்க்கப்பட வேண்டிய புதிய அறிவுத் தொகுதி உண்டா? இவை போன்ற விடயங்களில் புதிய ஆலோசனைகள் தேவை. இது போன்று ஏராளமான விடயங்களில் புதிய சிந்தனைகள் தேவைப்படுகின்றன.
மேற்படி செயலமர் வில் கலந்து கொண்ட
கல்வியியலாளர்களும் கல்வி அதிகரிகளும் இவ்வாறான பல கல்வித்துறைப் பிரச்சினைகளில் குழுக் கலந்துரை யாடல்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு அமைந்தன:
பயிற்று மொழி, தேசிய, சர்வதேச மொழி
பாட ஏற்பாட்டு விருத்தி
மதிப்பீடு, கணிப்பீடு, பரீட்சை முறைகள்
கல்வியில் தர உறுதிப்பாடு
கல்வித் திட்டமிடல், முகாமைத்துவம்
ஆசிரியர்கள், ஆசிரிய கல்வியாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரின் தொழில் விருத்தி
கற்றல் சூழலை ஏற்படுத்துதல்
தொழில் வழிகாட்டல்
கல்விச் செலவும் முதலீடும்
விசேட கல்வி, முறை சாராக் கல்வி என்பவற்றின் விருத்தி
புதிய கல்விச் சீர்திருத்தங்கள், பரிந்துரைகள் பற்றிய
ஆய்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் பின்பற்ற
ார்சன நூலகம்
ܓ݁ܬܨ ܗܝܗܝܗܝ ܡܐ ܘ ܘ ܘ ܐ ܒܗ ܕ ܕ ܐ ܐ ܬ

Page 8
வேண்டிய நடைமுறைகள் இச்செயலமர்வில் கைக் கொள் ளப்பட்டன. ஆலோசனைகளை வழங் கும் பொதுமக்களும் அமைப்புகளும் அவற்றைக் கருத்திற் கொள்ளும்போது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் தயாரிப்பது இலகுவாக இருக்கும்.
முதலில் ஒவ்வொரு விடயம் அல்லது கல்வி முறையின் அம்சத்தின் தற்போதைய நிலை என்ன? என்பதை வரையறை செய்தல் வேண்டும். அவ்விடயம் பற்றிய நிலை பற்றிய புரிந்துணர்வையும் விளக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலே தரப்பட்டுள்ள பத்து விடயங்களில் தற்போதைய நிலையை விளங்கிக் கொள்ளுதல் முதலாவது கட்டமாகும். இரண்டாவதாக, அத்தகைய தற்போதைய நிலைமையிலிருந்து இனங் காணக்கூடிய பிரச்சினைகளை வரையறை செய்தல் வேண்டும். அடுத்து அவ்வாறான பிரச்சினைகள் அல்லது எழுவினாக்களுக்கான (issues) தீர்வுகளைக் கலந்தரையாடி அவற்றைப் பட்டியல்படுத்தலாம். இவ்வாறான படிமுறையில் செயற்படும் போது பரிந்துரைகளையும் கொள்கை ஆக்கத்துக்கான ஆலோசனைகளையும் இலகுவாக வழங்கி விட முடியும். கொள்கையொன்றை உருவாக்கு வதற்கான படிமுறை அல்லது செயற்பாடு இதுவெனலாம். * தேசிய கல்வி ஆணைக்குழுவானது (1991 இல்
நிறுவப்பட்டது) கல்வி தொடர் பான தேசியக் கொள்கைகளை உருவாக்குகின்றது: காலத்துக்குக் காலம் மேதகு ஜனாதிபதிக்கு அவ்வாறான கொள்கை களைப் பரிந்துரை செய்கின்றது. தேசியக் கல்வி நிறுவகம் (1985 இல் நிறுவப்பட்டது) கல்வி அமைச்சின் தொழில் முறையான நிறுவகம். பாட ஏற்பாட்டு விருத்தி, கல்வித்துறை ஆராய்ச்சி, ஆசிரியர் தொழில்விருத்தி என்றும் பணிகளைக் செய்வது. கல்வி அமைச்சானது கல்விக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்கின்றது. கல்விமுறையை கண்காணித்தல், மேற்பார்வை செய்தல், மதிப்பீடு செய்தல் என்பன அதன் பணிகள். புதிய கொள்கையாக்கம் தொடர்பாக கேட்கப்படும் பிரதான கேள்வி எதற்காக அடிக்கடி கொள்கை ஆக்கங்கள் நடைபெறுகின்றன? ஏன் கல்வி முறையில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பதாகும். இதற்கான விடை ஒரு பரந்த கருத்தைக் கொண்டது. வரலாற்றுரீதியாகக் சமூக, பொருளாதார மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வந்தன. ஆனால் இன்று சமூகத்தில் மட்டு மன்றி அறிவுத்துறையிலும் கல்விச் சிந்தனைகளிலும் துரிதமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் காரணமாகவே அறிவுப் புரட்சி, தகவல் புரட்சி போன்ற சொல்லாட்சிகள்
2014 07 அகவிழி ( மார்ச்
+ - -

நடை முறைக்கு வந்துள்ளன. பாடசாலைக் கல்வித் துறையிலும் உலகளாவியரீதியில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று, புதிய கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பொருளாதாரத் துறையில் எழுச்சி பெற்று வரும் அறிவுப் பொருளாதாரம் கல்விச் செயற்பாடுகளையும் கல்வியின் இலக்குகளையும் மாற்றி வருகின்றது. இந்நிலையில் கல்வி முறையில் காணப்படும் ஏற்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து ஆராயப்பட வேண்டியுள்ளன. கல்விக் கொள்கைகளும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப் பட்டுக் செம்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளன.
1991 க்கு முற்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட கல்விக் குழுக்கள் கல்வி முறையை ஆராய்ந்து, பரிந்துரைகளைச் சமர்ப்பித்ததும் அவற்றின் பணிகள் நின்று போயின (உதாரணமாக கன்னங்கரா கல்விக் குழு 1943, ஜே. சி. ஜயசூரியா 1960 தலைமைதாங்கிய தேசிய கல்வி ஆணைக்குழு). ஆனால் 1991 இல் நியமிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழு கல்விக் கொள்கைபற்றித் தொடர்ச்சியாக ஆராய்ந்து வரும் ஒரு நிரந்தரமான குழு, இன்றைய காலத்தின் கல்வித் தேவைகளையொட்டி, இவ்வாறான ஆணைக் குழு தொடர்ச்சியாகப் பணியாற்றிப் பரிந்துரைகளை வழங்க வேண் டியுள் ளது. அவ் வாறே 1991 முதல் பல சந்தர்ப்பங்களில் (1991, 2003) ஆணைக் குழுவின் பரிந்துரைகள் வெளிவந்துள்ன. இன்று நடைமுறையில் உள்ள கல்விமுறையின் பல அம்சங்கள் இப்பரிந்துரைகளை
அடிப்படையாகக் கொண்டவை.
தேசிய கல்வி ஆணைக் குழுவின் கல்விக் கொள்கையாக்கச் செயற்பாட்டில், கல்விமுறையுடன் தொடர்புடைய பல தரப்பினருடனும் நடாத்தும் கலந்தாய்வு முக்கியமானது என மேலே கூறப்பட்டது. அவ்வாறே, பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கு வதற்கான முயற்சிகள் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டமைய வேண்டும் என்பது ஆணைக்குழுவின் கருத்தாகும். 2003 ஆண்டு ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் இவ்வாறு ஆராய்ச்சிகளின் துணை கொண்டே செய்யப்பட்டன. தற்போதைய கொள்கையாக்க முயற்சிக்கு உறுதுணையாக அமையும் வண்ணம் ஆணைக்குழு பல கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வுச் செயற் றிட்டங்களை வரைந்து வருகின்றது. சேவைக்கு முற்பட்ட ஆசிரியர் கல்வி, பாடசாலைகளில் இடம்பெறும் ஆசிரியர் விருத்திக்கான முயற்சிகள், ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் நடைமுறைகள், பாடசாலைகளில் பயன் படுத்தப்படும் கற்பித்தல் முறையியல், கல்விக்கான முதலீடு, கல்வித்திட்டமிடல், கல்வி முகாமைத்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளைத் தேசிய கல்வி ஆணைக்குழு செய்யவுள்ளதாகத் தெரிகின்றது.

Page 9
எட்டாம் தர வகுப்பு:தமிழ்மொழியும் இலக்
இடம்பெற்றுள்ள அல்பேட் ஐன்ஸ்ரைனை
தவறானதும் அவமதிப்பானதுமான கருத்து
கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை
B.E.D. Mathematics (1st Class Hons), M.A.; M.Sc. ED.D.; PH.D.
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பெற்று இலங்கைப் பாடசாலைகளில் பாட நூ லாக பயன்படுத்தப்பெறும் எட்டாம் தர “தமிழ் மொழியும் இலக்கியமும்” என்னும் பாடநூலில் அகில உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானியான அல்பேட் ஐன்ஸ்ரைனைப் பற்றிய பாடத்தில் இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ளது.
"படிப்பில் அவர் சரியான மக்கு ரகம். பரீட்சை என்றால் நடுக்கம்தான். கணிதம், இயற்பியல் இரண்டு பாடங்கள் தவிர மற்றப் பாடங்கள், குறிப்பாக மொழிப் பாடங்கள் எல்லாம் முடியாது”. (ப.59)
இவை மிகத் தவறான கூற்றுக்களாகும்.
அல்பேட் ஐன்ஸ்ரைனின் வாழ்கை வரலாற்றில் இருந்து அவரது கல்வி செயல்பாடுளை நோக்குவோம். ஜேர்மன் சாம்ராச்சியத்தில் இருந்த நகரான உல்ம் (Um) நகரில் இவர் பிறந்தார். இவரது தந்தையார் தனது குடும்பத்தோடு,
முனிக் (Munich) நகரத்துக்குச் சென்று தனது சகோதரரோடு சேர்ந்து மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் தாபனத்தை ஆரம்பித்தார்கள். அப்போது அல்பேட் ஐன்ஸ்ரைன் அந்த நகரில் அமைந்திருந்த கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் மூன்று ஆண்டுகள் கல்வி கற்றார். பின்னர் லுயிற்போல்ட் ஜிம்னேசியம் (Luitpold Gymnasium) 6T6öīGODILĎ UITLEFIT60)6Nou îl6ð SÐ LuujÜ ஆரம்பக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் பெற்றார். அந்தப் காலப்பகுதியில் இவருக்கு 10 வயதாய் இருக்கும்போது, மருத்துவக் கல்விபெற்றுக்கொண்டிருந்த மக்ஸ் ரல்மட் (MaxTalmud) என்னும் மாணவரின் உதவி கிடைத்தது. அவர் வார இறுதி நாட்களில் ஐன்ஸ்ரைனின் வீட்டுக்குச்சென்று அவருக்கு விஞ்ஞானம், கணிதம், தத்துவம் ஆகியன தொடர்பான நூல்களைக் கொடுத்து உதவினார். இந்த நூல்களைப் படித்த ஐன்ஸ்ரைனுக்கு விஞ்ஞ்ானம் கணிதம் தத்துவம் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில் இவரது தந்தையாரின் மின் உபகரண உற்பத்தி நிலையம் நட்டமடையத் தொடங்கியது. இதன் காரணமாக இவரது பெற்றார் ஜேமனியை விட்டு இத்தாலி நாட்டுக்குச் சென்றார்கள். ஆனால் ஐன்ஸ்ரைன் தனது உயர்நிலைக்
 

மும் என்னும் பாடநூலில்
ப் பற்றிய
sists
856ö6)î60)'u (Secondary Education) (p19ü Uğ5öET CE ஜேர்மனியிலேயே தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார். இவரது தந்தையார் தனது மகன் ஒரு மின்னியல் பொறியிலாளராக படித்து மேன்மையுற வேண்டுமென்று விரும்பினார். ஆனால் பாடசாலையில், கற்பித்தலில் பாடங்களை வலிந்து மனனம் செய்யும் முறையும் இறுக்கமான நிர்வாக நடைமுறைகளும் ஐன்ஸ்ரைனை இத்துறையில் கவனம் செலுத்த விடவில்லை. பாடங்களை வலிந்து மனனம் செய்வதால் ஆக்கத்திறன் அழிந்து விடுகிறது என்னும் ஐன்ஸ்ரைன் கருதினார். இதனால் பாடசாலை நிர்வாகத்தோடும் எதிர்த்துக்கொண்டார். இங்கு படித்துக் கொண்டிருக்கும்போது தன்னுடைய பெற்றாரோடு சில காலம் தங்கியிருப்பதற்காக இத்தாலி சென்றார். இத்தாலியில் தங்கியிருக்கும்போது “காந்தப் புலத்தில் Fg5 flair 560)6) upbpl)u 9, 6)" (On the Investigation of the State of the Ether in a Magnetic Field) 6T6örgo) b g606) Lilot) ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது 15. அடுத்த ஆண்டு தனது 16ஆவது வயதில் சுவிஸ்லாந்தில் g) 6irGT (Aargau Cantonal School) 9.j(335|T B6 (3y T600T6) பாடசாலையில் சேர்ந்து படித்து உயர்நிலை கல்வியை 17 ஆவது வயதில் முடித்தார். இங்கு நடைபெற்ற மற்றிக்குலேசன் பரீட்சையில் தோற்றிய அவரது பரீட்சை முடிபுகள் பின்வருமாறு:
Einstein's Matriculation Certificate issued by the Education Committee of the Canton of Aargau gives his result of the exam as follows: The result is given in 6-point rating scale where 6 is the maximum and 2 is the minimum.
Algebra 6 Physics 6 Descriptive Geometry 6 History 6 Geometry 6 Natural History 5 German 5 Italian 5
Chemistry 5
Technical Drawing 4 Geography 4. Art Drawing 4 French 3
6 = Excellent, 5 = Good, 4 = Sufficient, 3 = Poor, 2 = Very poor

Page 10
খা
Ο CN
·也 ob>N t Ց
Cas 영
$ କାଁ)
அதாவது ஐன்ஸ்ரைன் மற்றிக்குலேசன் பரீட்சையில் 13 பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றி 5 பாடங்களில் உச்சப் புள்ளிகளையும் 4 பாடங்களில் சிறப்புப் புள்ளிகளையும் 3 பாடங்களில் சித்திப் புள்ளிகளையும் ஒரு பாடத்தில் மாத்திரம் அதாவது பிரஞ் மொழிப் பாடத்தில் மாத்திரம் சித்தியற்ற புள்ளியையும் பெற்றுள்ளார். தனது தாய் மொழியாகிய ஜேர்மன் மொழியிலும் இரண்டாம் மொழியான இத்தாலியன் மொழியிலும் சிறப்புச் சித்தி பெற்றுள்ளர். ஒரு பாடத்திலும் இழிவுப் புள்ளியைப் பெறவில்லை. இவர் பரீட்சையில் பெற்ற புள்ளிகளைப் புள்ளியியல் அடிப்படையில் நோக்கினால், இடை(Mean) 5, இடையம்(Median) 5,ஆகாரம் (Mode) 6. நூற்று வீதத்தில் பரீட்சையில் பெற்ற பெறு பேறு 83.33.(83.33%) இவ்வாறான பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற ஒருவரை "படிப்பில் அவர் மக்கு ரகம்” என்று மாணவர்களுக்கு கற்பிக்கலாமா? இரு மொழிகளில் சிறப்புச்சித்தி பெற்று தனது தாய்மொழி அல்லாத பிரஞ் மொழியில் சித்தியடையாத காரணத்தால் “குறிப்பாக மொழிப்பாடம் எல்லாம் வராது" என்று கூறலாமா?
மேலும் இந்நூலில் கூறப்பெற்றுள்ளதாவது:
“தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பை ஒருவழியாக முடித்தார். தொழில் நுட்பத்துறையில் பட்டம் பெற்றார். ஸ்விச்சர்லாந்தில் அலையோ அலையென்று அலைந்து சுற்றி பின்பு எழுதுவினைஞர் வேலையொன்று கிடைத்தது”. (U.59)
இது சரியான கூற்றல்ல. மற்றிக்குலேசன் படிப்பை சிறப்பாக முடித்தபின் கணித, பெளதிக வியல் ஆசிரியர்களுக்கான நான்காண்டு டிப்புளோமா கற்கை நெறியில் சேர்ந்தார். 1900 ஆண்டு சுறிக் பொலிரெக்னிக்கல்சு கற்பித்தலுக்கான டிப்புளோமா பட்டம் வழங்கப்பெற்றது. இதன்பின் தன்னோடு படித்த மாணவனின் தந்தையின் உதவியால் அரசாங்க அலுவலகத்தில், புதிய கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கும் பிரிவில் உதவிப் பரிசோதராக நியமனம் பெற்றார். இங்கு மின் காந்த கருவிகளுக்கு காப்புரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து மதிப்பீடுசெய்யும் பணியில் ஈடுபட்டார். இங்கு பணியாற்றும்போது மின்கருவிகளுக்கும் இயந்திரக் கருவிகளுக்கும் இடையில் நேரத்தை இணைத்தல் தொடர்பான பிரச்சினை உருவெடுத்தது. இது தொடர்பான சிந்தனை ஆய்வுகள்தான், ஒளியின் தன்மை பற்றி அறிவதற்கும் விண்வெளிக்கும் நேரத்துக்கும் உள்ள அடிப் படைத் தொடர் பை ஆய்ந்தறிந்து தீவிர முடிவெடுப்பதற்கும் ஐன்ஸ்ரைனை வழிப்படுத்தின.
In September 1896 he passed the Swiss Matura with mostly good grades (including a top grade of 6 in physics and mathematical subjects, on a scale of 1-6) though only seventeen enrolled in the four-year mathematics and physics teaching
 

diploma course. In 1900, Einstein was awarded the Zurich Polytechnic teaching diploma.
A former classmate's father secured him a job in Bern, at the Federal Office for Intellectual Property, the patent office as an assistant examiner. He evaluated patent applications for electromagnetic devices. Much of his work at the patent office related to questions of electric signals and electrical-mechanical synchronization of time, the two technical problems that show up conspicuously in the thought experiments that eventually led Einstein to his radical conclusion about the nature of light and the fundamental connection between space and time.
மேலும் இவ்வாறும் இந்த நூலில் தரப்பெற்றுள்ளது:
“நாஜிப் படையினரால் ஐயன்ஸ்டீன் இருந்த வீடு அடித்து உடைக்கப்பட்டது. அவரது வங்கிக் கணக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அவருடைய தலைக்கு ஆயிரம் பவுண் விலை என்றும் அறிவிக்கப்பட்டது”.
ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் அவரது வீடு நாஸிஸ்ஸால் அதிரடிச்சோதனை செய்யப் பெற்றது என்றும் அவரது தலைக்கு ஐயாயிரம் டொலர் விலை என்றும் தரப்பெற்றுள்ளது.
He and his wife Elsa returned by ship to Belgium at the end of March. During the voyage, they were informed that their cottage was raided by the Nazis and his personal boat was confiscated. Einstein also learned that his name was in the list of assassination targets, with a "$5,000 bounty on his head".
விஞ்ஞானத்தின் வரலாற்றிலேயே முக்கிய இடம் பெற்றுள்ள மாபெரும் விஞ்ஞானியைப்பற்றி இவ்வாறான, முற்றிலும் பிழையான அவரை அவமதிக்கும் கூற்றுகளை இளம் மாணவர்களுக்குக் கற்பிப்பது அவர்களது சிந்தனை விருத்தியிலும் அறிகை விருத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பெற்ற தகவல் களை எடுத்தாளும்போது விடயம் அறிந்தவர்கள் இவற்றின் உண்மையை நன்கு பரிசோதிப்பது பிழைகளைத் தவிர்க்க உதவவேண்டும். இவ்வாறான பிழைகள் பாடநூலில் இடம்பெற்றதை பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கவனம் செலுத்தாதது வருந்தத்தகக்கது.
இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். -
Reference
Coleman, J.A. (1969). Relativity for the layman. Suffolk: The Chaucer Press
Folsing, A. (1997) Albert Einstein. New York: Penguin Books Ltd.
Herschbach, D.(1998) Einstein as a student. Cambridge: Harvard University Press
Isaacson, Walter. (2007) Einstein: His Life and Universe. New York: Simon &
Schuster

Page 11
மொழியறிவுப் பேறும் வாய்ப்புக்
ந. பார்த்திபன் வவுனியா, தேசிய கல்வியியற் கல்லூரி
யாரும் கற்பிக்காமல் தன்னுணர்வின்றி மொழியறிவு பெறுதல் "மொழியறிவுப் பேறு எனப்படும். இந்த மொழியறிவுப் பேறு என்பதற்கான அர்த்தத்தை நாம் பார்க்க வேண்டும். பேறு என்பதற்கு செல்வம், வாய்ப்பு, நல்லூழ் என்று அகராதி கருத்துரைக்கிறது. உண்மையில் மொழிவளம், மொழி, கேட்டுப் பேசுவதற்கான வாய்ப்பு, சிறந்த மொழிச்சூழலால் குழந்தைக்கு கிடைத்த வரம் (நல்லூழ்) என்று தான் குறிப்பிட வேண்டும். பொதுவாக தெளிவான உச்சரிப்பு, விரைவாக விளங்கிக் கொள்ளல், எழுத்துப் பிழையின்றி எழுதுதல் போன்றன சூழலினால் கிடைக்கின்றன. சிலர் வளர்ந்த பின்பும் எழுத்துப் பிழைகளை விடுவதும், தவறாக உச்சரிப்பதும், வரிவடிவங்களிற்கு ஏற்ப ஒலி வடிவங்களை இனங்காணாமல் போவதும் அவதானிக்கப்படுமிடத்து அந்தப் பேறு சிறு வயதிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இந்நிலையில் மொழியறிவுப்பேறு கிடைக்கப்பெறாத குழந்தைகள் தொடர்பாக ஆசிரியர்கள் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும்.
மொழியறிவுப் பேறிற்கும் மொழி கற்றலுக்கும் இடையே அதிக தொடர்புண்டு. மொழி கற்றல் என்பது தன் முயற்சியாலோ, பிறர் கற்பித்தோ தன்னுணர்வுடன் ஒருவர் மொழியறிவு பெறுதலாகும். யாரும் கற்பிக்காமல் தன்னுணர்வின்றி மொழியறிவு பெறுதல் என்னும் மொழியறிவுப்பேறிற்கும் தன் முயற்சியாலோ, பிறர் கற்பித்தோ தன்னுணர்வுடன் மொழியறிவு பெறுதலான மொழி கற்றலுக்கும் வேறுபாடும் உண்டு என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். இந்த வேறுபாட்டிற்குள்ளும் உள்ள தொடர்பு, மொழிகற்றலுக்கு மொழியறிவுப் பேறு இன்றியமையாதது என்பதுதான் மொழியறிவுப் பேறை அதிகம் பெற்ற குழந்தைக்கு மொழி கற்றல் என்பது மிக இலகுவாக நிகழும். இங்கு மொழியறிவுப் பேறை பாடசாலைக்கு வருமுன்பே குழந்தை பெற்றுவிடுகிறது. பெற்றோர், மூத்தோர் (சகோதரர்களாக, தாத்தா, பாட்டி) விளையாட்டுத் தோழர்கள், முன்பள்ளி, வீட்டுத் தகவல் தொழினுட்ப தொடர் பாடல் சாதனங்கள் போன்ற காரணிகளால் குழந்தையின் மொழியறிவுப் பேறு மிக உயர்ந்த நிலையில் காணப்படும். இந்நிலைமை
 

குழந்தையின் மொழி கற்றலை இலகுவாக்கும். குழந்தை பாடசாலைக்கு வரமுன்னர் பெற்றுள்ள மொழியறிவுப் பேறை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் பெற்ற செவிமடுத்தல், பேசுதல் தொடர்பான நன்மையினால் மொழியறிவுப்பேறு தீர்மானிக்கப்படுகிறது. பாடசாலையில் குழந்தை மொழி கற்றல் தொடர்பாக காட்டும் தனியாள் வேறுபாட்டிற்கு குழந்தை பெற்ற மொழியறிவுப்பேறு காரணமாகின்றது. இந்த மொழி கற்றலுக்கு உதவுகின்ற மொழியறிவுப்பேறு தொடர்பாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்திருந்தும் இன்றைய இயந்திரமயமான போக்குகளினால் அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஆனால் ஆசிரியர்கள் இதற்கு விதி விலக்கானவர்களாகத் திகழவேண்டும். பாடசாலைக்கு வர முன்னர் பெற்ற மொழியறிவுப்பேறு குறைவாக இருக்கின்ற நிலையில் பாடசாலையில் கொடுக்கக் கூடிய வாய்ப்புக்களை உருவாக்கி குழந்தையின் சந்தர்ப்பங்களை அதிகரிக்க வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொண்டு வந்திருக்கும் செவிமடுத்தல், பேசுதல் திறன்களை இனங்கான வேண்டும். அத்திறன்களை அடிப்படையாகக் கொண்டு தான் ஏனைய மொழித்திறன்களாலான வாசித்தலையும் எழுதுதலையும் வளர்க்க வேண்டும்.
மொழியறிவுப் பேறானது செவிமடுத்தலிலும் பேசுதலிலும் அதிகம் தங்கியுள்ளது. இந்த மொழியறிவுப் பேறு குறைந்தளவாயிருக்கும் குழந்தைக்கு மொழி கற்றல் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். இந்நிலைமை மொழி கற்பித்தலில் ஆசிரியருக்கு கடினமானதாயிருக்கும். அடுத்து, மொழியறிவுப் பேறு பெற்ற குழந்தைக்கு மொழி கற்பித்தலில் பிறிதொரு பிரச்சினையையும் ஆசிரியர் எதிர்நோக்க வேண்டியவராகின்றார். அது, குழந்தையின் பேச்சு மொழிக்கும் ஆசிரியர் கற்பிக்கும் எழுத்து மொழிக்குமான வேறுபாடு ஆகும். ஆக, மொழியறிவுப் பேறு குறைவாகவுள்ள குழந்தைக்கு மொழி பற்றல் குறைவாக இருப்பதால் மொழி கற்பித்தலின் போது ஆசிரியர் எதிர்கொள்வதும் பிரச்சினை. ஒரு புறம் மொழியறிவுப் பேறு பெற்ற குழந்தைக்கு மொழி கற்பிக்கும் போது பேச்சு மொழி எழுத்து மொழி என்ற பிரச்சினை
பொதுசன நூலகம்
** :is:ք 1ort

Page 12
རང་
O CN sb atSN - Ց
영 $ ab
முதலாவது பிரச்சினைக்கு மொழியறிவுப் பேறு பெற செயற்படும் ஆசிரியர் இரண்டாவது பிரச்சினைக்கு பேச்சு மொழியோடு அன்மித்த எழுத்து மொழியில் கற்றல் - கற்பித்தல் நிகழ செயற்பட வேண்டும். இவ்விரு பிரச்சினைக்குரிய குழந்தைகளும் ஒரே வகுப்பில் இருக்கின்றார்கள். இந்நிலைமை ஆசிரியர்களுக்கு மொழி கற்பித்தல் பிரச்சினையாகத் தோன்றுகின்றமையால் ஆசிரியர்கள் இவற்றில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
முதலில் மொழியறிவுப் பேறு பெற ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை எடுத்து நோக்குவோம். மொழியறிவுப் பேறு செவிமடுத்தலி னுாடாக கிடைக்கின்றது என முன்னர் குறிப்பிட்டதன் படி நோக்குவோம். செவிமடுத்தல் என்பது அவதானமாகக் கேட்டல் எனப்படும். நண்பர்களுடன் உரையாடும் போது தொடர்பாடல் விருத்திக்காக செவிமடுத்து துலங்க வேண்டும். எனவே ஆசிரியர் குழந்தைகளை ஒருவருடன் ஒருவர் நன்கு உரையாடும் செயற்பாட்டைக் கொடுக்க வேண்டும். நண்பருடைய பெயர்கள், குடும்ப விபரங்கள், பொழுது போக்குகள், விருப்பமான உணவு, உடை, மனிதர், வீட்டிலுள்ள வசதிகள், வாய்ப்புகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பற்றிக் கலந்துரையாட சந்தர்ப்பங்களை ஆசிரியர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் அவ்விடயங்களை மற்றவர்களுக்குக் கூறவும் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு இரசனைக்காகச் செவிமடுக்க உதவும் கதைகள், பாடல்கள், நிகழ்ச்சிகள் பற்றிய வர்ணனைகள் என்பவற்றின் மூலம் செவிமடுக்கவும் பேசவும் வாய்ப்புக்களை வழங்க மொழியறிவுப் பேற்றை விருத்தியாக்கலாம்.
செவிமடுத்தலும் பேசுதலும் ஒன்றிலொன்று தங்கியுள்ள அடிப்படை திறன்களாகும். உண்மையில் செவிமடுத்தலைச் செய்த குழந்தையால் தான் பேசவும் முடிகின்றது. இந்நிலையில் அதிகம் செவிமடுத்த குழந்தை பேசாமல் இருக்க முடியாது. எனவே குழந்தைக்கு செவிமடுக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்க அதிகரிக்க குழந்தை பேசும் வாய்ப்புக்களும் அதிகரிக்கும். இச்செயற்பாடு மொழி யறிவுப் பேறை விருத்தியடையச் செய்யும் . ஒலி வேறுபாடுகளை அனுசரித்து தெளிவாக உச்சரித்துப் பேசுதலுக்கான சந்தர்ப்பங்களை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். சகபாடிகளுடன் உரையாடல், தேவைகளை வெளிப்படுத்தல், கருத்துக்களை வெளிப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல், வினாக் கேட்டல் - விடை அளித்தல் போன்ற செயற்பாடுகளை குழந்தை இயல்பாக, யாரும் கற்பிக்காமல், தன்னுணர்வின்றி மேற்கொள்ளுமிடத்து மொழியறிவுப் பேறு சாத்தியமாகின்றது. விருத்தி அடைகின்றது. ஆசிரியர் இப்படிக் கேள்வி கேளுங்கள், இப்படிப் பதில் கொடுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்காமல்,
 

கட்டாயப்படுத்தாமல் அவர்கள் தங்களுக்குள் இயல்பாகச் சம்பாசிக்க வாய்ப்புக்களை வழங்க வேண்டும். வீடுகளில் சரளமாகப் பேசி உரையாடும் குழந்தைகள் பாடசாலையில் மெளனித்து விடுகின்றன.
ஆசிரியரின் கட்டளைக் கேற்ப குழந்தை இச் செயற்பாடுகளில் ஈடுபடுவதானது மொழி கற்றலில் சேர்த்துவிடும். மொழியறிவுப் பேறு பெற முன்னரே மொழி கற்றல் - கற்பித்தல் செயற்பாடு தொடங்குகின்றதால் குழந்தை சரியாகத் துலங்கவில்லை என்றும் செவிமடுக்கவும் பேசவும் தெரியாமலிருக்கிறார்கள் என்றும் ஆசிரியரைக் கூறவைக்கின்றது. பொதுவாக ஆசிரியர்களின் குற்றச் சாட்டு, தரம் 3, 4 இல் படிக்கின்ற மாணவர்கள் கூட செவிமடுத்தல், பேசுதல் என்ற அடிப்படை மொழித் திறன்களில் கூட பின் தங்கியவர்களாக காணப்படுகிறார்கள் என்பதே. இது குழந்தைகளின் மொழியறிவுப் பேறைப் பெறாமல் மொழி கற்றலில் ஈடுபடச் செய்வதால் ஏற்படுகின்றது. இந்நிலையில் மொழியறிவுப் பேறைப் பெற்றவர்களும் பெறாதவர்களும் ஒரே நிலையில் குறிப்பிட்ட வகுப்பில் வைத்துக் கற்பிப்பதால் அவர்களிற் கிடையே பலத்த வேறுபாடுகளும் சமனிலையற்ற போக்குகளும் நிகழ வாய்ப்பாகின்றது. இவ்வேறுபாடுகளை ஆசிரியர்கள் அவதானமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது பிரச்சினை: பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையேயான பிரச்சினையாகும். வீட்டுச் சூழலில் பேச்சு மொழியினுடாகக் செவிமடுத்து பேசித் துலங்கிய குழந்தை பாடசாலையில் எழுத்து மொழியில் செவிமடுத்து பேசித் துலங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது. இரண்டு மொழியும் தாய்மொழியாக இருந்த போதும் இரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளமையை குறிப்பிட வேண்டும். எழுத்து மொழியைக் கிட்டத்தட்ட இன்னொரு மொழியாகவே கருதலாம். என மொழியியல் துறைக் கலாநிதி ந.குமாரசாமி குறிப்பிடுகிறார். மேலும், முதலில் பேசப் பழகிய மொழியின் எழுத்து வடிவைக் கற்பித்தல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். குழந்தை பேசப் பழகிய தன் மொழியைப் பாடசாலையிலும் எதிர்பார்க்கும். வீடுகளில் பெற்றோருடனும், விளையாடும் இடங்களில் சகபாடிகளுடனும் பேசிய மொழி பாடசாலையில் இல்லாத போது மொழி கற்றல் சிரமமமானதாக இருக்கும். பாடசாலையில் ஆசிரியர்கள் எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான எழுத்து மொழியை - நியம மொழியைப் பயன்படுத்தும் போது குழந்தை ஆசிரியர் கூறுவதை விளங்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படும். இந்நிலையில் ஆசிரியர் குழந்தையின் பேச்சு மொழியில் தனது கற்பித்தலை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

Page 13
குழந்தை பேசப் பழகிய மொழியில் தான் மொழியறிவுப் பேறைப் பெற்றிருக்கும் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். மேலும் மொழியறிவுப் பேறு குழந்தைப் பருவத்திலிருந்தே நிகழ்கின்றது என்பதால் அது பேச்சு மொழியாகத் தான் இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதாகும். அத்துடன் யாரும் கற்பிக்காமல் தன்னுணர்வின்றி மொழியறிவு பெறுதல் என்பதால் பிள்ளையின் இயல்பான பேச்சு வழக்காக அம்மொழி காணப்படும். இவற்றையெல்லாம் ஆசிரியர் மனங்கோள்ளுதல் வேண்டும். அடுத்து ஆசிரியர் பயன்படுத்தும் எழுத்து மொழியானது குழந்தைக்கு இன்னொரு மொழியாக - வேற்றுமொழியாகத் தோன்று மென்பதால் ஆசிரியர் குழந்தையின் பேச்சு மொழியில் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக இஸ்லாமிய குழந்தையானது உம்மா, வாப்பா, தாத்தா, நானா, சாச்சி, சல்லி, (இவை முறையே அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, சின்னம்மா, காசு) போன்ற சொற்களைத் தனது பேச்சு மொழியில் நினைவு வைத்திருக்கும். இந்நிலையில் இந்தக் குழந்தைக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பேச்சு மொழியைத் தானும் பின்பற்ற வேண்டும். இவ்வாறான மலையகத்தைச் சேர்ந்த பிள்ளைக்குத் கற்பிக்கும் ஆசிரியர் அதன் பேச்சு மொழிச் சொற்களைப் பயன்படுத்தாத போது மொழி கற்றல் கடினமாகின்றது.
தரப்பட்ட படத்தின் துணையுடன் வாக்கியம்
ஒன்றை எழுதுவார்.
இலகு வாக்கியெ
தரப்பட்ட தலைப்பில் சரியான
9,585 JG DET60 பயனிலைத் வாக்கியங்களை (36 golf
எழுதுவார்.
சரியான வி
வருமா இடங் பூரணப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொழியியலாளர்கள் இதற்குத் தீர்வாக பின்வருமாறு கூறுகின்றனர். முதலில் பிள்ளையின் பேச்சு மொழியில் கற்பித்து காலப்போக்கில் நியமமான மொழியில் எழுத்து மொழியைப் பிரயோகிக்க வேண்டும். தனது பேச்சு மொழிக்கும் ஆசிரியரது பேச்சு மொழிக்கும் வேறுபாடு காணப்படுமிடத்து பிள்ளையும் தனக்கு மொழி புரியவில்லை, மொழி கற்றல் கடினமானது என்றும் ஆசிரியரும் இவர்களுக்கு மொழி கற்பித்தல் கடினமானது என்றும் கருத்துகளை முன்வைக்கின்றனர். இதற்குத் தீர்வாக ஆசிரியர் தனது மொழிப் பிரயோகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும். படிப்படியாக பிள்ளைகள் தமது மொழி கற்றலை ஏற்றுக்கொண்டு கற்பித்தலுக்கு இணங்குவார்கள். தான் பிழையான மொழிப் பிரயோகத்தில் ஈடுபடுவதாக ஆசிரியர் எண்ணத் தேவையில்லை. கற்பித்தல் விளைத்திறனாக அமைய ஆசிரியர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மொழிப் பிரயோகத்திற்கேற்ப ஆசிரியரது மொழிப் பிரயோகமும் அமைதல் வேண்டும். அப்போது தான் மொழி கற்றல்கற்பித்தல் என்பதும் முறையானதாக பயனுள்ளதாக அமையும். பிள்ளையின் மொழியறிவுப் பேறு, மொழி கற்றல், பேச்சு மொழி தொடர்பாக ஆசிரியர் அறிந்து கொள்ள வேண்டும்.
தரப்பட்ட வாக்கியங்கள்
சிலவற்றின் துணையுடன் உரிய காலத்தை
வேறுபடுத்துவார்.
66 மான்றைச்
கலந்து தரப்பட்ட
་་་་་་་་་་་་་་་་་་་་་་ சொற்களை பயன்படுத்திச் g5F LJ6OL சரியான வாக்கியத்தை 16 TB
ஒழுங்கமைத்துக்
வார். 司
காட்டுவார்.
ாத்தியங்கள் 3 géôu‘L. ளைபப் டுத்துவார்.
坐
9、
鸟
*ଞ
S
SR
VSe Gre N) O خلص ܠܛ

Page 14
21ம் நூற்றாண்டில் அறிவுசார் சமூ
ஜே.டீ. கரீம்தீன் விரிவுரையாளர், இடைநிலை, மூன்றாம் நிலைக் கல்வித்துறை கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
சென்ற இதழ்த்தொடர்ச்சி.....
உலகின் சமூக, பொரளாதார, அரசியல் தொழில்நுட்ப விஞ்ஞானத் துறைகளில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற ஒரு நிலையிலேயே இன்றைய இளம் சமுதாயத்தினர் நுழைகின்றனர் என 1998 யுனெஸ்கோ அறிக்கை குறிப்பிடுகின்றது. (Change, 2000) புதிய புத்தாயிரமாம் ஆண்டிற்கான சமூகச் சூழலில் மனிதர்கள் பல்கலாசாரம் மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பூகோளக் கிராமத்தினுள் கற்கும் மனிதர்களாக இருக்கின்ற அதேநேரம் இவர்கள் கலாசார மனிதர்களாக, அரசியல் மனிதர்களாக, சமூக மனிதர்களாக, பொருளாதார மனிதர்களாக, தொழில்நுட்ப மனிதர்களாக வாழ்வதற்குரிய பல்வேறுபட்ட திறமையுடையவர்களாகவும் இருக்க வேண்டுமெனக் குறிப்பிடுகின்றார். எனவே தனிமனிதர்களும் சமூகமும் தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சமூகத்திலும், அரசியலிலும், கலாசாரத்திலும் கற்றலிலும் பல்வேறுபட்ட விருத்திகளை அடைவதற்கு உரிய தேவையுடையவர்களாக இருக்கின்றனர். அறிவுமையச் சமூகத்தின் மேம்பட்ட மாறுபடும் சூழலில் இளம் சமூதாயத்தினர் மிக வேகமாகச் சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கான தன்நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கு வெறுமனே அறிவுரையை மாத்திரம் வழங்குகின்ற கல்விச்செயற்பாடுகள் போது மானதல்ல. இளம் சமுதாயத்தினருக்கு அறிவினையும் தகவல்களையும் கல்வியின் உள்ளடக்கத்தினையும் வழங்குவதற்குப் பதிலாக விமர்சன ரீதியாகவும் சுயமாகவும் ஆக்கத்திறனாகவும் எவ்வாறு கற்க வேண்டும் என்பதற்குத் தேவையான கற்றல் திறமைகளை (Learn How to Learn) மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்வதற்கு முன்னுரிமை
வழங்கப்படுதல் வேண்டும்.
கல்வியின் புதிய மாற்றம் என்பது மாணவர்களின் பல்வகைப்பட்ட சூழ்நிலை சார்ந்த நுண்ணறிவுகள் (Contextualize Multiple Intelligences) அதாவது "தொழில்நுட்ப, சமூகப், பொருளாதார, அரசியல், கற்றல் நுண்ணறிவு” என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. உலகமயமாக்கல், உள்ளூர்மயமாக்கல், தனிமனித மயமாக்கல் என்பன
ராக
அகவிழி | மார்ச் 2014

மூக மாற்றத்தில் கல்வி
கல்வியினுாடாக நடை பெறும் மூன்றுமயமாக்கல் (Tripilaization) செயன்முறைகளாக புதிய மிலேனியத்தில் பல்வேறுபட்ட சவால்களையும் எதிர் கொள்வதற்கு, பல்வகைச் சூழல் சார்ந்த நுண்ணறிவுகளில் குறிப்பிட்டதொரு அளவையாவது புதிய தலைமுறையினர் கொண்டிருத்தல் வேண்டும். எனவே எமது கல்வித்திட்டமானது பல்வகைச் சூழல் சார்ந்த நுண்ணறிவுகளை விருத்தி செய்யும் நோக்கில் அமைக்கப்படுதல் வேண்டும். மாணவர்களின் பல்வகைச் சூழல் சார்ந்த நுண்ணறிவுகளை மேம்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பதில் கல்வியின் உலக மயமாக்கல், உள்ளூர்மயமாக்கல், தனிமனித மயமாக்கல் செயன்முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மூன்றுமயமாக்கல் செயன் முறையில் பின் வருவன உள்ளடங்கும்.
1. உலகமயமாக்கல்
உலகமயமாக்கல் என்பது உலகின் பல பகுதிகளிலும் சமூகங்களுக்கு இடையிலும் நாடுகளுக்கிடையிலும் நடத்தை, தொழில்நுட்பம், அறிவு, விழுமியம், என்பவற்றில் ஏற்படும் மேம் பாடும் இசைவாக்கம் அடைதலும் பரிமாறுதலும் ஆகும். உலகமயமாக்கலின் அம்சங்களாக
உலகவலையமைப்பின் வளர்ச்சி (Internet, World
Wide E-Communication)
போக்குவரத்து கற்றல் துறைகள் கலாசாரம், அரசியல், சமூக, பொருளாதாரம், தொழில்நுட்பங் களின் உலகளாவிய பரிமாற்றங்கள்
* சர்வதேச கூட்டுக்களும் போட்டிகளும்
சர்வதேச பரிமாறுதல்களும் ஒத்துழைப்புகளும் பூகோள கிராமம்
பல்கலாசார இடைவினைகள்
சர்வதேசக் குறியீடுகள்
சர்வதேசத் தரங்களைப் பாவித்தல் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

Page 15
உலகளாவிய முன் னேற்றத்திற்கு பொருத்தமுடையதான போக்கினை அதிகரிக்கும் வகையில் கற்றல்-கற்பித்தல் ஆய்வு என்ப வற்றிக்காக உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் சிறந்த அறிவு சார்ந்த வளங்கள், உதவிகள் மற்றும் முயற்சிகளை ஒன்றுதிரட்டுதல் கல்விசார் உலக மயமாக்கலின் பிரதான பண்பாகும். நாடுகளுக்கிடையிலும் சமூகங் களுக்கிடையிலும் தனிநபர்களுக்கிடையிலும்
T,6
வலய அமைப்புக் கற்றல் Web based Learn
வழிவருகற்றல் E-Learning சர்வதேச விஜயங்கள் International ஏனையவை
44114 18t: 11Lாபரி 11ாக nெt
கற்றலிலும் ஆய்விலும் வலையமைப்புக் களைப் பயன்படுத்தல்
சமூக, பொருளாதார, அரசியல், கலாசார. தொழில் நுட்ப, கற்றல் உலகமயமாக்கலில் கலைத்திட்ட உள்ளடக்கம்.
தனிநபர்களுக்கு மத்தியிலும் நிறுவனங்களுக்கு இடையிலும் நாடுகளுக்கிடையிலும் Video conference ஊடாக இடைவினை கொள்ளுதல்
குழுவாகவும் தனிப்பட்டரீதியாகவும் கற்றலிலும் கற்பித்தலிலும் சர்வதேச பங்குதாரர்களை சர்வதேச ரீதியாகவும் பரிமாறும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்ப வற்றை கல்வியில் உலகமயமாக்கலுக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
ஹொங்கொங்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய கல்வி முறையில் கற்றல் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப உலகமயமாக்கலில் புதிய கலைத்திட்ட உள்ளடக்கவிருத்தியானது முக்கியத் துவம் பெறுகின்ற ஒன்றாகவும் தேவையுடையதாகவும் காணப்படுகின்றது.
2. உள்ளூர் மயமாக்கல் (Localization) உள்ளூர் நடத்தை நெறிகள் தொழில்நுட்ப அறிவு, விழுமியம், தொடர்பான மேம்பாடும் இசைவாக்கமும் பரிமாறுதலும் உள்ளூர் மயமாக்கம் எனப் படும். உள்ளூர்மயமாக்கலுக்கான சில உதாரணங்களாக:
* உள்ளூர் வலையமைப்பு
உள்ளூர் சமூகத்திற்கு ஏற்புடையதாக கற்றல் முயற்சிகள், கலாசாரம் அரசியல் சமூக பொருளாதார

Tாடிகாட் பாராட்டியர்கள்: ''1ாபு14-4-42====-
தொழினுட்பங்களை இசைவாக்கமடையச் செய்தல், சமூகங்களுக்கு வசதியான முறையில் பிரதேச மயமாக்கல் (Decentralization), உள்ளூர் கலாசார மேம்பாடு, சமூகத்தேவைகளையும் எதிர்பார்க்கைகளையும் நிறைவேற்றல், உள்ளக ஈடுபாடு, உள்ளக ஒத்துழைப்பு,
* சமூக ஒற்றுமை,
உள்ளகப் பொருத்தப்பாடும் சட்டபூர்வத்தன்மையும், சமூக நெறிகள் சமூகம் சார்ந்த தேவைகளில் அக்கறைகாட்டுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். உள்ளூர் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் பொருத்தமுடையதாக கல்வியினை மேம்படுத்தும் வகையில் கற்பதற்கும், கற்பிப்பதற்கும், ஆய்வுக்கும் உள்ளூர் சமூகத்தின் உதவியையும் உள்ளூர் வளங்களையும் கூட்டு முயற்சியையும் அதிகரித்தல் கல்வியின் உள்ளூர்மயமாக்கலின் விசேட அம்சமாகும்.
கல்வியின் உள்ளூர் மயமாக்கலுக்கான உதாரணங் களாக
*
கல்வியில் சமூக ஈடுபாடு
கல்வியைத் தனியார் மயமாக்கல்
பொது நிறுவன ஒத்துழைப்புக்கள் நிறுவன பொறுப்புக்களின் உத்தரவாதம்
நிறுவன சுய அதிகாரங்களை அமுல்ப்படுத்தல்.
பாடசாலை மட்ட முகாமைத்துவமும் சமூக மட்ட கலைத்திட்டமும்
அகவிழி ) மார்ச் 2014 (1)

Page 16
கல்வியில் உள்ளூர்மயமாக்கல் செயன்முறையானது வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி ஆசிய, பசுபிக் வலயங்களில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. ஒரு சமூகத்தின் சமூக, அரசியல், தொழில்நுட்ப, கலாசார அம்சங்களை உள்ளூர் மய மாக்கலுக்கு பொருத்தமுடையதாக புதிய கலைத்திட்ட உள்ளடக்கமானது தனது கவனத்தை அதிகரித்து
வருகின்றது.
3. தனிமனிதமயமாக்கல் (Invidulization) தனிமனித தேவைகளையும் நடத்தைகளையும் நிறைவு செய்து கொள்வதற்குத் தேவையான நடத்தை நெறிகள், தொழில்நுட்ப அறிவு, வெளியக விழுமியங்கள் தொடர்பான மேம்பாடு, இசைவாக்கம், பரிமாறல் என்பனவற்றை தனிமனிதமயமாக்கல் எனலாம் தனிமனிதமயமாக்கத்திற்கான சில உதாரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
* தனிமனித சேவைகளை வழங்குதல்.
தனிமனிதத் திறமைகளுக் கு முக்கியத்துவம் அளித்தல்,
*
தனிமனித முயற்சிகள், ஆக்கத்திறன்களுக்குப் பதவி உயர்வு அளித்தல்,
*
சுய இயக்கத்தினையும், சுய முகாமைத்துவத்தினையும், சுய ஆளுமையையும் உற்சாகப்படுத்தலும், தைரியப் படுத்தலும், விசேட தேவைகளில் கவனம் செலுத்தல். கல்வியின் தனிமனித மயமாக்கலின் பிரதான தாற்பரியம் கற்றலிலும் கற்பித்தலிலும் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் ஊக்கலையும் ஆக்கத்திறனையும் முனைப்பினையும் அதிகரித் தலாகும். இதற்கான சாத்தியமான நடவடிக்கைகளாக பின்வருவன உள்ளன. * தனி மனிதமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டங்கள்
தனி மனிதமயமாக்கல் கற்றல் இலக்கு முறைமைகள்
தொடர்ச்சியான தனியாள் வாழ்நாள் கற்றல்
சுய இயல்பாக்கம்
* சுய ஊக்கல்
சுய ஆசிரிய மாணவ முகாமைத்துவம் தனிமனிதனால் விசேட தேவைகளை நிறைவேற்றல் பல்வகைச் சூழலில் நுண்ணறிவுகளின் மேம்பாடு
அகவிழி (மார்ச் 2014

முடிவுரை
பாரம்பரிய முறையிலிருந்து புதிய மூன்று முறையாக்கல் செயன்முறையான உலகமயமாக்கல், உள்ளூர் யமாக்கல், தனிமனிதமயமாக்கல் என்பனவற்றை நோக்கி நகர்கின்ற போக்கானது புத்தாயிரமாம் ஆண்டில் ஏற்பட்ட வேகமான முன்னேற்றமாகும். கல்வி சமூக மாற்றத்தை ஏற்படுத்து கின்றது என்பதும் பின்னர் சமூகத்தில் ஏற்படும் மாற்றம் கல்விசார் நடவடிக்கைகளில் மாற்றத்தை எதிர்பாக்கின்றது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும். 21 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாரிய மாற்றங்கள் மிகவேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன, அறிவு மையச் சமூகத்திலும் அறிவுமையப் பொருளா தாரத்திலும் மாறும் சமூக, மற்றும் உலகமயமாக்கச் செயன்முறைகளினால் ஏழுகின்ற சவால்களை எதிர் கொள்வதற்கு ஏற்றவகையில் இளம் சந்ததியினரை தயார் படுத்துவது அவசியமாகும். இதன் பொருட்டு மாணவர்களில் பல்வகைச்சூழலுக்கான நுண்ணறிவுகள் மேம்படுத்தப்படுவதுடன் கல்வியில் மூன்று முறையாக்கல் மேம்படுத்தலுக்காக வழிகாட்டப்படுதல் வேண்டும் இல்லாவிடின் மாறிவரும் உலகின் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாது தடுமாறிக்கொண்டிருக்கவேண்டிய நிலை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்படலாம். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ உலகமயமாக்கல் செயன் முறையிலிருந்து விலக முடியாத நிலமை காணப்படுகின்றது. தனது நாட்டினதும், சமூகத்தினதும் மேம்பாட்டிற்காக உலகமயமாக்கல், உள்ளூர் மயமாக்கல், தனிமனிதமயமாக்கல் செயன் முறைகளை அநேக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பினும் உலகமயமாக்கல் செயன்முறையானது உள்ளூர் மயமாக்கல் தேசிய விருத்தியில் விபரிதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன என்ற ஒரு விமர்சனமும் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட சமூக நிறுவனங்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளன. எது எப்படியிருப்பினும் கல்வியில் ஒவ்வொருவரும் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருதல் வேண்டும் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடதக்க அம்சமாகும்.
2.
உசாத்துணைகள்
1. - Brown, P S Lauder, H(1996) Education, Globalization & Economic
Development, Journal of Education Policy, 11(1)-1-25. Cheng, Y.C. (2000) A CMI- Triplilization Paradigm for Reforming Education in the New Millennium, International Journal of Educational Management 14(4), 156-174. Namita P.Patil (2012), Role OfEducation In Social Change, International Educational E-Journal, {Quarterly}, ISSN 2277-2456, Volunne-I, Issue-II, Jan-Feb-Mar2012. கருணாநிதி.மா (2008) கல்விச்சமூகவியல் குமரன் புத்தக இல்லம் கொழும்பு - சென்னை.

Page 17
மட்டக்களப்பு மாவட்ட கல்வி வளர்ச்சியும் உயர்தர மாணவர்களை சித்திபெறச் செய்
அதன் முக்கியத்துவங்களும்
கலாநிதி தெ. திருச்செல்வம் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாள
சென்ற இதழ்த்தொடர்ச்சி....
இங்கிலாந்தில் நடமுறையிலுள்ளதுபோல் ஒரு மாணவனின் சாதாரண தர வகுப்பின்போதே அந்த மாணவ மாணவியின் எதிர்கால துறையை சுமூகமாக திட்டமிடப்படவேண்டும். இங்கு ஒழுங்கான தொடர்ச்சியான கணிப்பீட்டின் அடிப்படையில் அவர்களின் கணிதத்திறன், விஞ்ஞான திறன் மற்றும் உயர்தர பாடநெறிக்கு தேவையான பிற பாடங்களின் தரம் என்பவற்றின் அடிப்படையில் மாணவர் களை நான்கு பிரதான பாதைகளில் தெரிவுசெய்கின்றனர் (இதனை இங்கு Pathways என அழைக்கிறோம்). இந்த இறுதித் தெரிவின்போது மாணவ மாணவியுடன் அவர்களின் அனைத்து பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்த ஒரு திறந்த உரையாடலின் பின் அம்மாணவ மாணவியின் கடந்தகால பெறுபேறுகள் பெற்றோரிடம் தெளிவாக எடுத்துரைக்கட்டு அவர்களின் விருப்பத்துடன் துறைகள் தெரிவுசெய்யப்படுகின்றன. பின்னாளில் என் மகளோ அல்லது மகனோ ஒரு வைத்தியராக அல்லது ஒரு பொறியியலாளராகத்தான் வரவேண்டுமென்று விடாப்பிடியாக இருக்கும் தன்மை அற்றுப்போக என்னுடைய பிள்ளை இந்த துறைக்குத் தான் மிகப்பொருத்தமானவர் என்னும் ஒரு தெளிவு பெற்றோரிடத்தும் மாணவரிடத்தும் வர கற்றல் தெளிவாக நடைபெறுகிறது.
இந்த அடிப்படையில் கணிதம், மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் சிறந்து விளங்குபவர்களை பல்கலைக்கழகங்களின் உயர்ந்த துறைகளுக்கான பிரிவிலும் (Medicine, Engineering and Technologies), இதற்கு அடுத்தபடியான திறமையான மாணவர்களை பல்கலைக் கழகங்களின் பிறதுறைகளுக்கான நெறிக்கும் (Commerce, Arts and other courses), இதற்கும் கீழுள்ளவர்களை டிப்ளோமா கற்கை நெறிக்கான துறைகளுக்கும் (Diploma Courses) இறுதியாக உள்ளவர்களை அத்தாட்சிப் பத்திரம் பெறக் கூடிய துறைகளுக் கும் (Certificate Course) தெரிவுசெய்கின்றனர். ஆகவே ஒரு பிள்ளையின் எதிர்காலம் சிறப்பான, மிகத் தெளிவான முறையில் திட்டமிடப்படுகின்ற அதேவேளை தெரிவுசெய்யப்பட்டவர்கள் தத்தம் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் காரணம் அவர்கள் சகல

), தேசிய மட்டத்தில் தலும்
ர், துறைத் தலைவர், இங்கிலாந்து
பாடங்களிலும் தலையை நுழைத்து குழம்பிப்போகாமல் தத்தமது துறைகளில் மிக பாண்டித்தியம் பெற்றவர்களாக பின்னாளில் அத்துறை சார்ந்த தொழிலுக்கோ அன்றி மேற்படிப்புக்கோ செல்ல ஏதுவாக இருக்கின்றது.
இவ் வாறே பல் கலைக்கழகங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் செல்ல வாய்ப்பற்றவர்களான 3ம் 4ம் கூட்டத்தினரை அவர்களின் Diploma மற்றும் Certificate Course முடிவுற்றதும் அதன் பெறுபெறுகளின் அடிப்படையில் பல் கலைக் கழகங் களில் முதலாவது ஆண்டில் சேர்ந்துகொள்ளவும் வாய்பேற்படுத்தப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான திட்டமென்றே கூறலாம். ஆனால் இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் இவ்வகையானதொரு கல்வித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றதென்பதை நன்கு உணர்ந்தவன் என்பதால் பின்வரும் மாற்றீடுகளை ஒரு மாணவன் அல்லது மாணவி தனது உயர்தர கந்கைநெறியை தெரிவுசெய்து அந்த பாடசாலைக்கு செல்லும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை களாக சிலவற்றை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.
க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதும் நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல மாணவர்கள், ஆசிரியர்கள் பேற்றோர்கள் அடங்கலான ஒரு திறந்த கலந்துரையாடல் இடம்பெறவேண்டும். இவ்வேளையில் மாணவனின் துறைசார்ந்த திறமை (இதற்காக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களின் புலமை அடிப்படையாக கொள்ளப்படலாம்) அடிப்படையில் அந்த மாணவன் கற்கவேண்டிய உயர்தர துறை தீர்டமனிக்கப்படவேண்டும். இதில் மாணவனுக்கும் அவர் பெற்றோருக்கமிடையிலான புரிந்துணர்வும் ஒருமைப்பாடும் மிக அவசியமாகும். தனது பிள்ளை சுமக்ககூடிய பழு எது என்பதை அப்பிள்ளை உணராத விடத்து பெற்றோர் அதை உணர்த்துவதோடு தான் (கு விரும்பிக் கற்கப்போகும் துறையை பெற்றோர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருக்கவேண்டும். சமூகத்தில் வைத்தியர்களும், பொறியியலாளர்களும் மாத்திரமே மேலோங்கியவர்கள்
அகவிழி | மார்ச் 2014 2

Page 18
அல்லது அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் என்னும் மடமையை முதற்கண் துடைத்தெறிய வேண்டும். சமுகத்தில் ஒவ்வோருவரும் தத்தமது துறைகளில் சிறந்தவர்களே என்னும் சிந்தனை யாவருக்கும் வரவேண்டும் என்பதே எனது அவா. உதாரணமாக இன்று உலகிலுள்ள அதிசெல் வந் தர்களை 1 இலிருந் து 10 வரை வரிசைப்படுத்தினால் அதில் எவரும் வைத்தியரோ அன்றி பொறியியலாளரோ இல்லை. இவ்வாறே ஒரு சமூகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்கள் வைத்தியர்களும் பொறியியலாளர்களும் மாத்திரமல்ல என்னும் யதார்த்தமும் உணரப்படவேண்டும்.
ஆகவே மேற்கண்டவாறு நடாத்தப்பட்ட கலந் துரையாடலின் பின்னர் தத்தமது துறைகளைத் தெரிவுசெய்து மாணவர்களை உயர்தரத்துக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையே இத்திட்டத்தின் பிரதானமான காலப் பகுதியாகும். ஒரு பாடசாலையிலிருந்து க.பொ.த சாதாரண தரம் சித்தியெய்திய பின்னர் மாணவன் மற்றும் பெற்றோரின் இறுதியான கற்கைநெறி திெரிவுக்குப் பின்னர் அந்த மாணவன் அல்லது மாணவியை மாவட்டத்திலுள்ள உயர் தரத்தை கொண்ட எந்த பாடசாலையிலும் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் அதே நேரம் எமது திட்டத்திற்கான வேலைத் திட்டங்களாக பின்வருவனவற்றை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். a. எமது சிறப்புத் திட் டத்தில் பங் கெடுக்கும்
பாடசாலைகளின் தெரிவும் அதனுடன் தொடர்புடைய விடயங்களும் இத்தருணத்தில் முக்கியம் பெறுகின்றன. இவ்வேளையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் சிறப்பான பாடசாலையில் சிறப்பான மாணவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையின் முதற்கட்டமாக உயர்தர விஞ்ஞானப்பிரிவு மற்றும் கணிதப் பிரிவுக் கான சிறப்பு பாடசாலைகளை இனங்காணலும் அதனை மேம்படுத்தலும். உதாரணமாக புனித மைக்கல் கல்லூரி, வின்சென்ட் மகளிர் கல்லூரி, சிவாநந்தா சேசிய பாடசாலை போன்றவற்றை முதற்கட்டமாக தெரிவுசெய்யமுடியும். இது போன்று வர்த்தகம், கலை பிரிவுகளுக்காகவும் சிறப்பு பாடசாலைகள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறே மற்றைய இரண்டு கல்வி வலயங்களான பட்டிருப்பு மற்றும் வாழைச்சேனை பிராந்தியத்தில் தலா ஒரு பாடசாலையேனும் தெரிவுசெய்யப்பட்டு அதனை மேம்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.
DI D
- அகவிழி ( மார்ச் 2014
ஆரம்பத்தில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் மிகத்திறமையான பெறுபேறுகளைப் பெற்ற எந்த மாணவ மாணவியருக்கும் அவர்களால் முடியும் பட்சத்தில் எந்த சிறப்பான பாடசாலையிலும் அனுமதியளிப்பதில் முன்னுரிமையளிக்கப்படவேண்டும்.

நகர்ப்புற மாணவர்களுக்கு நகர்ப்புற பாடசாலையும் கிராமப்புற மாணவர்களுக்கு கிராமப்புற பாடசாலையும் என்ற போக்கினை முற்றாக மாற்றவேண்டும். புத்திசாலியான, திறமையான, சிறப்பான மாணவர் களுக்கே சிறப்பான பாடசாலைகளில் முன்னுரிமை என்னும் தீர்மானம் இனிவரும் காலங்களில் உருவாகவேண்டும்.
உயர்தரம் பயிலும் காலப்பகுதியான இரண்டு வருடங் களையும் முற்று முழுவதாக சிறந்த வினைத்திறனுள்ள காலப்பகுதியாக மாற்றி தெரிவு செய் யப்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் பாடத்திட்டங்கள் ஒழுங்காக பின்பற்றப் படுகின்றனவா அவற்றுக்கிடையே பாடத்திட்டத்தில் சமாந்தரமான போக்கு காணப்படுகின்றதா என்னும் கண்காணிப்பு இங்கு பிரதானமாக கொள்ளப்படவேண்டும். அவ்வாறே செயன்முறைகளிலுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு ஆய்வுகூடங்களின் தரமும் அதன் பயன்பாடும் அதிகரிக்கப்படவேண்டும். இபோல் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலுள்ள உயர்தர பாடங் களை கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம், போக்கு, ஈடுபாடு, அக்கறை மற்றும் பாடத் திட்டத்துடனான கற்பித்தலின் முக்கியத்துவம் என்பன தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறே இவர் களுக்கிடையிலான தொடர்பாடல், ஒருங்கிணைப்பு என்பன தொடர்ச்சியாகப் பேணப்படுகின்ற அதேவேளை இவர்களுக்கிடையிலான கற்பித்தலின் நுணுக்கங்கள் பரஸ்பரம் பரிமாறப்படுவதற்கான சந்தர்ப்பத்தை வலயக் கல்விப்பணிப்பாளர்கள் ஏற்படுத்த இதனை ஒரு இடைவிடாத நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
d.
இவ்வாறே திட்டத்தின் முக்கியத்துவத்தை சகல உயர்தர மாணவர்களிடையேயும் (மாவட்டத்தின் சகல உயர்தரப் பாடசாலைகளிலும்) தெளிவுபடுத்தி திட்டத்தின் உள்ளடக்கங்களையும் விளங்கவைத்து அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல். நான் ஏற்கனவே கூறியதுபோல் இத்திட்டத்திற்கான மாணவர்களைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையானது ஒரு தொடர்ச்சியானதாக இருக்கவேண்டியிருப்பதனால் ஆரம்பத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களிடையே அக்கறையற்ற மாணவர்கள் நீக்கப்பட திட்டத்தில் சேர்த்துள்கொள்ளப்படாத அக்கறையுள்ள மாணவர் கள் இத்திட்டத்திற்காக சேர்த்துக் கொள்ளப்படுதல் கற்கையாண்டின் முதலாவது வருட பூர்த்தியின்போது மேற்கொள்ளப்படவேண்டும். உதாரணமாக பிரபல்ய மான பாடசாலையில் சிறந்த மாணவனாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அக்கறையற்ற தன்மையை

Page 19
கொண்டிருக்கும் பட்சத்தில் மற்ற கல்வி வலயத்திலோ அன்றி திட்டத்தின்கீழ் வராத பாடசாலையிலிருந்தோ மிக அக்கறையுள்ள அல்லது சிறப்பாக கற்கும் மாணவ மாணவியருக்காக அந்த வாய்ப்பு வழங்கப் படல் வேண்டும்.
ஆகவே மாணவர்களின் அடைவு மட்டத்தையும், இத்திட்டததின்பால் அவர்கள் கொண்ட நாட்டத்தையும் கண்காணிக்கும் நடவடிக்கையாக சகல பாடத்திலும் நிறைவடைந்த பாடத்திட்த்தின் அடிப்படையில் ஒரு பொதுவான உயர்தர இறுதி பரீட்சைக்கு சற்றும் தரத்தில் குறையாத வகையில் பரீட்சை முதலாம் ஆண்டு நிறைவில் கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட்டு அப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களின் மிழாய்வு நடைபெறுவது அவசியம். இதுவே இறுதி வருடத்தில் மேற்கொள்ளப் படவிருக்கும் துரித, முடுக்கிவிடப்பட்ட கற்கை திட்டங்களுக்கான இறுதியான மாணவர்குழாத்தை பெற்றுத் தரும் என்பது எனது கருத்தாகும்.
ஆகவே கற்றலின் இராண்டாம் ஆண்டானது எமது திட்டத்தின் மிக முக்கியமானதும் அதிக சிரத்தை எடுக்கவேண்டிய காலப்பகுதியுமாகும். இவ்வேளையில் தான் மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பாடத்திட்ட மீளாய்வு, பிறநேரங்களில் அவர்கள் செல்லும் மேலதிக வகுப்புகள் (Tuition Classes) அவற்றின் தரம் என்பன ஆராயப்பட்டு திட்டத்திற்காக இறுதியாகத் தெரிவுசெய்யப்படுள்ள அனைத்து மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப் பகள் விடயத்தில் அக்கறைகொள்ளவேண்டும். இவ் வேளையில்தான் ஆளணி முகாமைத்துவம் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
மாவட்டத்தின் சிறந்த ஆசிரியர்களை இனங்கண்டு அல்லது ஏற்கனவே இனங்காணப்பட்டவர்களைக் கொண்டு சிறப்பான பிரத்தியேக வகுப்புக்களை திட்டத்தின் மாணவர்களுக்காக நடாத்துதல். இதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பரீட்சை மேற்பார்வையாளர்கள், வினாத்தாட்களை திருத்தும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படும். அவ்வாறே இவ்வகையானதொரு சிறப்பு நட வடிக்கையை மேற்பார்வை செய்து அதனது குறை நிறைகளைக் கண்டறிந்து சகல தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக திணைக்களத்தால் அங்கீ கரிக்கப்பட்ட ஒரு அர்ப்பண சிந்தையுள்ள குழு அமைக்கப்படுவதோடு தொடர்ச்சியான கண்காணிப்பும் இடம்பெறவேண்டும்.
 

இக்கால கட்டத்திலேதான் மாவட்ட கல்வி வளர்ச்சி, தேசிய மட்டத்தில் மாணவர்களை அனுப்புவது தொடர்பாக மாவட்டத்தில் மூலைமுடுக்கெல்லாம் கூறிக்கொண்டிருப்பவர்களின் பங்கு வேண்டப் படவேண்டியதன் முக்கியத்துவம் உணரப்படுகிறது. இது தொடர்பான சில விடயங்களை இக்கட்டுரையின் இறுதியில் தரவேண்டியது எனது கடமையாகும்.
கற்பித்தல், கற்றல், தொடர்ச்சியான மாதிரிப்பரீட்சைகள், ஒழுங்கான மேற்பார்வை என்பன தொடர்ச்சியாக பேணப்படுவதோடு இரண்டாம் ஆண்டு முழுவதுமாக சகல திட்டங்களும் முடுக்கிவிடப்படுகின்றன.
மாணவர்கள் ஏதாவதொரு பாடத்தின் பாடத்திட்டத்தில் பின்தங்கியுள்ளது அவதானிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக அதனை நிறைவேற்றுவதில் திட்ட மேற்பார்வைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக அக்குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்ககான விடுபட்டுப் போன பாடத்திட்டம் அனைத்தும் அவர்களின் பிரத்தியேக நேரங்களில் நிறை வேற்றப் படவேண்டும்.
இவ்வாறு ஒழுங்காக சிறப்பான முறையில் பாடத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவுசெய்த திட்டத்தின் மாணவர்களுக்காக பிரத்தியேகமாகவும் அனைத்து மாணவர்களுக்குமானதாகவும் மாவட்டந் தழுவிய வகையில் பரீட்சைக்குத் தோற்றுதல், பரீட்சைக்கு விடையளித்தலும் அதிலுள்ள நுட்பங் களுக்குமான கருத்தரங்குகள் சிறப்பான முறையில் நடாத்தப்படவேண்டும் (இது என்னுடைய காலப் பகுதியில் 3 வலயங்களிலும் மட்டக்களப்பு பட்டதாரி கள் ஒன்றியத்தால் மிகச் சிறப்பானமுறையில் நடைபெற்றதை நான் இங்கு ஏக்கத்துடன் நினைவுகூருகிறேன்). இவ்வகையானதொரு கருத் தரங்கிற்கு அண்மையில் தேசிய மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் நுட்பங்கள் அவர்கள் கையாண்ட முறைகள் என்பவற்றை அவர்களைக் கொண்டே நடாத்தப்படுதல் சாலச் சிறந்தது. அதேவேளை பரீட்சை வினாத்தாட்கள் திருத்துபவர்கள், மேற்பார்வையாளர்கள் போன்ற மிக அனுபவம் வாய்ந்தவர்களால் சகல பாடங்களுக்கும் நடாத்தப்படுவது மிக அவசியம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
இப்போது நாம் அறுவடைக்காக மிகச் சிறப்பான, தெளிவான, மிகவும் பண்பட்ட பயிர்களை தயார் செய்திருக்கிறோம் என மார்பு தட்டிக்கொள்கிறோம். இவர்கள் ஒவ்வொருவரும் தேசிய மட்டத்தில் தெரிவுசெய்யப்படவேணி டியவர்களே.
6
LD
Jbl
17

Page 20
སྒོ་ང་ ャー! O CN
·地〕 otS - Ց
3.
மேற்பார்வை, சிறப்பான பாடத்திட்டத்துக்கமைந்த கற்பித்தல், பாடத்திட்ட நிறைவு மற்றும் சிறப்பான அக்கறையுள்ள கற்றல், இவைகளுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும் பட்சத்தில் கொழும்பு, கண்டி போன்ற மாவட்டத்திலிருந்து தேசிய மட்டத்துக்கு தெரிவாகும் மாணவன் அல்லது மாணவி யுடன் ஒப்பிடுகையில் என்னுடைய மாணவர்களும் சளைத்தவர்களல்ல என்று நான் மார் தட்டிச்சொல்வேன்.
இத்திட்டத்தினுடைய பெறுபேறு எப்படி இருக்கும் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை ஒரு சிறிய விளக்கமூலம் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
புத்திகூர்மையும் அக்கறையும்கொண்ட மாணவர் சிறந்த குடும்ப பின்னணியும் அக்கறையும் கொண்ட பெற்றோர் சிறந்த பாடசாலையும் சிறந்த கற்பித்தல் நடவடிக்கையும் பயிற்சியும் முறையான மீட்டல் நடவடிக்கை களும முறையான தேர்வு தேசியமட்ட மாணவர்
இந்த பாதையிலுள்ள ஏதாவதொரு கூறு அல்லது படிவம் ஏதாவதொரு வழியில் பிழைக்குமேயானால் பெறுபேறு அல்லது விளைவும் பிழைக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
திட்டத்தின் வெற்றியும் பின் நடவடிக்கைகளும்
1. திட்டத்தின் ஆரம்பத்தில் சகல உயர்தர மாணவர் களுக்கும் அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பத்தி லிருந்தே இத்திட்டத்தின்மூலம் தேசிய மட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் சிறப்பான பரிசுத் தொகையும் மாவட்டந்தழுவிய கெளரவமும் வழங்கப்படும் என்பதை முற்கூட்டியே அறிவிப்பது தலையாய கடமையாகும். இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெறத் தூண்டுவதோடு அடுத்த தெரிவுக்காக சகலரும் ஆவலாய் இருப்பர் என்பதும் உறுதி.
2. தேசிய மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுத்தொகையும் பாராட்டும் வழங்கும் வைபவம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடாத்தப்படுவதோடு அந்த விழாவுக்கு அடுத்த கட்டத்திற்காக தெரிவுசெய்யப்படும் உயர்தர மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களைத் தூண்ட ஆவன செய்யவேண்டும். அத்தோடு கற்பித்த ஆசிரியர்கள், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அப்பாடசாலை அதிபர்கள் போன்றோர் கண்டிப்பாக அழைக்கப்பட்டு கெளவரவப்படுத்தப்பட வேண்டும்.
 

தெரிவாகிய அத்தனை மாணவ மாணவியர்களையும் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்தரப் பாடசாலைகளுக்கும் அழைத்துச்சென்று கெளரவப் படுத்தி கற்கும் அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தவேண்டும்.
இவ்வாறு எந்த கற்கை நெறியிலிருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவராயினும் அவர்களது விபரங்கள் மாவட்ட கல்வித்திணைக்களத்தால் பேணிப் பராமரிக் கப்படுவதோடு அவர்களை எவ்வாறேனும் எதிர்காலத் திட்டங்களில் பங்கெடுக்கச் செய்வதோடு முக்கியமான ஆளணியாளர்களாகவும் மாற்றுவது இத்திட்டத்தின் வேறோரு முனைப்பாகும்.
இனி இத்திட்டம் தொடர்பான வேறுசில முக்கிய
காரணிகளும் நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக UTitjG3UTib.
திட்டத்திற்கான நிதிவளம்
எந்தவொரு செயற்றிட்டமானாலும் அது நிதி, மனிதவளம் என்பன இன்றி நிறைவேறுவதென்பது கடினமானதென்பதை யாவரும் உணர்ந்துகொண்டு அதற்காக சிறிதளவேனும் தத்தமது பங்களிப்பை செய்யவேண்டுமென்பதுதான் எனது வேண்டுகோள். இந்த திட்டத்திற்கு மாத்திரமல்ல பொதுவான மாவட்ட கல்வி வளர்ச்சிக்கு பின்வருவோர் தத்தமது பங்களிப்பை வளங்கமுடியும்.
а.
மாவட்டத்திலுள்ள பெருமளவில் வருவாயை பெற்றுத்தரும் ஆலயங்கள் அனைத்திலும் ஒரு கல்வி 9tholic big 9 Dei, EL6061T (Educational Development Trust) ஆரம்பிக்கப்பட்டு அது நேர்மையான பிரதேச அக்கறையுள்ளவர்களால் சரியான முறையில் நிர்வகிக்கப்படவேண்டும். பிரதேச மக்களால் நிதியளித்து இலாபமீட்டும் எந்தவொரு ஆலயமும் ஒரு சிறியளவேனும் சமூகத்தின்பால் அக்கறை கொள்ளவேணி டுமென்பதே எனது வாதம் . உதாரணமாக இந்தியாவிலுள்ள திருப்பதி, பழனி, மதுரை மீனாட்சி போன்ற ஆலயங்களின் வருமானத்தில் ஒரு பகுதி கல்வி வளர்ச்சிக்காகவும் பிற சமூக நலன்களுக்காகவும் செலவிடப்படுவதை நீங்கள் கருத்திற்கொள்ளவேண்டும். இவ்வாறே இங்குள்ள மாமாங்கேஸ்வரர், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் போன்ற பிரபல்யமான ஆலயங் கள் இப்பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்பது எனது அவா.
மாவட்டத்திலுள்ள தன வந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கல்விக்காக சிறிதளவேனும் மனமுவந்து உதவியளிக்க முன்வரவேண்டும். ஒரு

Page 21
ஏழை மாணவனின் கல்விக்கு உதவிசெய்வது ஒரு ஆலயம் கட்டுவதைவிடவும் புண்ணியமானதென நான் கூறித் தெரியவேண்டியதென்பதில்லை. ஆகவே இவ்வாறான பாரிய கல்வி அபிவிருத்தி நடவடிக்கை களுக்காக தாமாகவே முன்வந்து உதவிசெய்யும் மனப்பக்குவம் இனி வரும் காலங்களில் இருக்கும் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.
C. வெளிநாடுகளிலுள்ள பிரதேசத்தின்பால் அக்கறையும் நாட்டமும்கொண்ட அன்பர்கள் இத்திட்டத்திற்கு பாரியளவில் உதவியளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக் குண்டு. நானறிந்தவரை நேர்மையாக முன்னெடுக்கும் எந்த திட்டத்துக்கும் வெளிநாடு களிலிருந்து நிதியுதவி கிடைத் தவணி ணம் இருக்கின்றதோடு இனிவரும் காலங்களிலும் உதவி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அவர்களால் இங்கிருந்து அனுப்பிவைக்கப்படும் நிதியுதவிகளுக்கு சரியாக கணக்கு காட்டப்படுவதோடு அந்த நிதியுதவி பரிசுத்தமாக செயற்றிட்டங்களுக்கே செலவிடப்படுகின்றதென்னும் உறுதியான நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்துவதோடு திட்டங்களின் முன்னேற்றங்கள் ஒழுங்கான முறையில் அனுப்பி வைக்கப்படுமேயானால் இங்கிருந்து நிதியுதவி பெறப்படுவதில் ஒரு தடையுமில்லை.
ஆகவே சரியாக திட்டத்தை வரையுங்கள், பொருத்தமான நேர்மையான சமூக அக்கறையே உயிர் மூச்சாயுள்ள, காசுக்கும் பெயருக்கும் ஆசைப்படாத நல்ல உள்ளங்களை பொறுப்பாகவும் மேற்பார்வையாளர் களாகவும் நியமியுங்கள் திட்டம் செவ்வனே நிறைவேறும்.
இனி இறுதியாக திட்டத்தில் பங்குபற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அப்பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருக்காக எனது பணிவான வேண்டுகோள்கள் சிலவற்றை தந்து எனது கட்டுரையை நிறைவுசெய்ய ஆசைப்படுகிறேன்.
1. LongOOTGhuria, Gir
உலகிலுள்ள இன்றைய சனத்தொகையில் பெரும்பகுதியினர் மாணவர்களாகவே இருப்பதோடு அவர்கள் சார்ந்த சமூகத்தின் ஆணிவேர்களாகவும், எதிர்காலத் தலைவர் களாகவும் இவர்களே திகழ்கின்றனர் என்பதும் உண்மை. ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எனது பணிவான வேண்டுகோள். இது உங்கள் உலகம், உங்கள் காலம், நீங்களே ஆதிக்கம் செலுத்தப்போகும் பிரதேசம் என்னும் எண்ணம் உங்களுக்கு முதற்கண் வரவேண்டும். பின்னர் குறிப்பாக உங்கள் பெற்றோர்கள் அல்லது

உங்களை வளர்த்து ஆளாக்கியவர்கள் உங்களை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்காக என்னென்ன பாடுபட்டிருப்பார்கள் என்கின்ற கடமையுணர்வு உங்களுக்கு வருவதோடு அதற்காக நீங்கள் என்ன கைமாறு செய்யக் காத்திருக்கின்றீர்கள். அதற்காக நீங்கள் வகுத்திருக்கும் திட்டம் என்ன என்பதில் உங்களுக்கு தெளிவு வரவேண்டும். ஒரே கைமாறு “ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை (மகளை) சான்றோர் எனக் கேட்ட தாய்” இதை மட்டும் செய்துவிடுங்கள் வேறொன்றும் வேண்டியதில்லை. ஆகவே கல்வியால்தான் நீங்கள் அறிவாளியாகின்றீர்கள், மேதைகளாகின்றீர்கள், நன்னடத்தையுள்ளவர்களாகின்றீர்கள், சமூகம் உங் களை மெச்சக் காத்திருக்கிறது ஈற்றில் நீங்கள் சான்றோராகின்றீர்கள்.
ஆகவே கற்றலுக்கு உங்கள் வாழ்க்கையில் அதிக நேரத்தையும், கவனத்தையும், ஈடுபாட்டையும் கொடுங்கள் காலம் உங்களைக் கெளரவிக்க மாலையுடன் காத்திருக்கிறது. நீங்கள் ஒரு கோயில் திருவிழாவையோ அல்லது ஒரு சினிமாவையோ அன்றி உங்கள் நண்பனுடைய அழைப்பையோ கல்விக்காக அல்லது பரீட்சைக்காக இழக்க நேரிட்டால் வாழ்வில் ஒரு அற்ப சந்தோசத்தை இழந்தவர்களாகின்றீர்கள் மாறாக இவைகளுக்காக உங்கள் கல்வியையோ அல்லது நடைபெற இருந்த பரீட்சையையோ இழக்க நேரிட்டால் உங்கள் வாழ்ககையையே இழந்தவர்களாகின்றீர்கள்.
கற்றலின் போது கடைப்பிடிக்கவேண்டிய சில யுக்திகளை நான் இங்கு உங்களுக்காக முன்வைக்கிறேன். இவைகள் நான் என்னுடைய காலத்தில் கடைப்பிடித்தவைகள் என்பதையும் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.
a. அன்றைக்கான பாட குறிப்புகளை அன்றைய தினமே ஒரு தடைவ மீட்டிவிடுங்கள். இது அப்பாடத்தை கிரகிப்பதற்கு 45 நிமிடங்கள் போதுமானதென கல்வி ஆய்வாளர்கள் கண்டிருக்கின்றனர். எவ்வளவு கடினமான பாடமாயினும் தினந்தோறம் மீட்டுவதால் அது இலகு வாகின்றதென்பதுே உண்மை. நாட்கள் செல்லச் செல்ல அப்பாடத்திலுள்ள தெளிவும் குறைந்து செல்ல வாய்ப்புண்டு. ஆகவே தினமும் வீட்டில் பாடங்களை மீட்பதற்கென ஒரு நேர அட்டவணையை தயார் செய்து அதன் படி மீட்டிக்கொள்ளுங்கள். இவ்வேளை எழுதிப் படிப்பது வெறுமனே வாசிப்பதைவிடவும் மேலாதென ஆய்வாளர்கள் கண்டிருக்கின்றனர். இவ்வேளையில்தான் அப்பாட குறிப்புக்கு தேவையான மேலதிக விபரங்களுக்காகவும், விளக்கங்களுக்காகவும் புத்தகங்கள், மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நாடலாம்.
தொடரும்.
坐 9圣 鸟 ଝଞ
S SR \Se Qga N) Ο طلصH Na

Page 22
மேலை நாடுகளில் தமிழாராய்ச்
பேராசிரியர் கி. நாச்சிமுத்து
தமிழியல் என்னும் சொல் மொழி இலக்கிய ஆய்வுகளை மட்டுமின்றி வரலாறு, புவியியல், பண்பாடு, சமூகம், மானுடவியல், நாட்டுப் புறவியல் எனப் பல்துறை ஆய்வுகளையும் உள்ளடக்கியது. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்னும் நூலை எழுதிய ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் தற்காலத் தமிழ் ஆராய்ச்சியின் வரலாற்றை கால்டுவெல் லின் ஒப்பிலக்கண நூல் வெளிவந்த 1856இலிருந்து தொடங்கி 25 ஆண்டுகளுக்கு ஒரு கட்டமாக நான்கு கட்டங்களைக் குறிப்பிடுவார். நான்காம் கட்டம் முடிகிற 1956 இலிருந்து தமிழ் ஆராய்ச்சி விரிவுபெறுகிறது. தமிழ் ஆராய்ச்சி என்பது வெறும் தமிழர்கள் செய்கிற ஆராய்ச்சியாக மட்டும் இல்லாமல் உலகளாவிய அறிஞர் கூட்டத்தின் கவனத்தைப் பெறுகிற பன்னாட்டு ஆராய்ச்சியாக வளர்ச்சிபெறுகிறது. இதன் வடிவம்தான் 1964 இல் உருவான உலகத் தமிழாராய்ச்சிக் கழகம். அதன் விளைவாகப் பல உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்தன. அதனால் உலகின் பல இடங்களில் தமிழ்ப் படிப்பும் ஆராய்ச்சியும் தொடங்கப்பெற்றன. இன்று உலகெங்கும் தமிழர் அல்லாத பிறர் வலுவான முறையில் தமிழாராய்ச்சி செய்துவருகின்றனர்.
அகவிழி ( மார்ச் 2014
கால்டுவெல் காலத்திலிருந்தே அதாவது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர்கள் தீவிரத் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். சென்னைக் கல்விச் சங்கம் போன்றவை நவீன முறையில் தமிழ்க் கல்வி மேலே நடந்தேற அடித்தளமிட்டன (அதற்கு முன்பு சீகன் பால்கு
20)

1EEE=பாக்க
4ti 1142
:4க்க2நாகபELE
1682 - 1719). பப்ரீஸியஸ், உவின்ஸ்லோ அகராதி போன்ற முயற்சிகள் தமிழ் மண்ணில் ஐரோப்பியப் புலமை மரபும் தமிழ்ப் புலமை மரபும் இணைந்து உருவாயின. இதன் விளைவாகக் கதிரைவேற் பிள்ளை போன்றோரின் அகராதிகள் வெளிவந்தன. காலப் போக்கில் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி போன்ற பெரும்பணிகளும் நிறைவேறின. மொழி, இலக்கியம் என்ற பல நிலைகளில் ஜி.யு. போப் தம் பணியைச் செய்து தமிழை உலகுக்கு ஆங்கிலம் வழி அறிமுகப்படுத்தினார். கிரால் போன்றோரின் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள் மேலைநாட்டினர் தமிழ் இலக்கியம், பண்பாடு, சமயம் பற்றிப் புரிந்து கொள்ளவும் மேல் ஆராய்ச்சிகள் செய்யவும் வழிவகுத்தன.
ஐரோப்பியரின் தமிழியல் ஆய்வுகளின் பெரும்பேறாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தமிழை - தமிழ்ப் பண்பாட்டை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி இந்தியவியலில் தமிழியலுக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. இன்னொன்று ஐரோப்பிய ஆய்வு முறைகள் புதிய அறிவியல் துறைகள் வழியாக இங்கு வந்து நாட்டுத் தமிழ் ஆராய்ச்சிக்கு மேல்வரிச் சட்டங்களாகவும் மாதிரி களாகவும் வழி காட்டியாகவும் அமைந்தது ஆகும்.
ஐரோப்பிய நாடுகளில் தமிழியலாய்வு 1950க்குப் பிறகு 1950க்கு முற்பட்ட காலத்தில் தமிழாய்வு நிகழ்த்தியவர்கள் பெரும்பாலும் மதப் பணியாளர்களாக இருந்தார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் ஐரோப்பியத் தமிழியலாளர்கள் பலரும் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் மதச் சார் பற்றவர் களாக ஆய்வாளர்களாக இருந்தார்கள். முன்னவர் தமிழ்க் கல்வி சமயப் பரப்புப் பணிக்காக அமைந்தது. பின்னவர்கள் வெளிநாட்டுத் துறை முதலியவற்றில் பணிபுரியவும் மொழிபெயர்ப்பாளர் களாக, செய்தியாளர் களாகப் பணியாற்றவும் தமிழ் கற்கிறார்கள்.
அதுபோலவே 1950க்கு முற்பட்ட காலத்தில் இலக்கணம், ஒப்பிலக்கணம், அகராதியியல், இலக்கிய மொழிபெயர்ப்பு, சமயம், தத்துவம், நீதிநூல் வரலாறு கல்வெட்டு நூலடைவுகள் (மர்டாக், கெர்) என்னும் நிலையில் தமிழாராய்ச்சிகள் நடந்தன. 1950 க்குப் பிற்பட்ட

Page 23
காலத்தில் தொல் இலக்கியம், நாட்டுப்புறவியல், மானிடவியல், தற்கால இலக்கியம், காவியம், ஒப்பிலக்கியம் என்னும் நிலையில் பல்வேறுபட்ட பரப்புகள் ஆய்வுகள் விரிவடைந்துள்ளன. இன்னொன்று தமிழ் போன்ற மொழிகளைப் பற்றியும் இலக்கியங்களைப் பற்றியும் அங்குள்ள சாதாரண மக்கள் புரிந்து கொள்ள இவ்வாய்வுகளும் மொழிபெயர்ப்புகளும் துணைசெய்கின்றன.
1950க்கு முற்பட்ட காலகட்டத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் வரலாற்றுக் காரணங்களால் தமிழாராய்ச்சி நடந்துவந்திருந்தது. 1950க்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ருஷ்யாவில் தமிழ் ஆய்வுகள் உட்பட்ட இந்தியவியல் ஆய்வுகள் சோவியத் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்தேறின. இது அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளிடம் காட்டிய புதிய அக்கறைக்குப் போட்டியாக நிகழ்ந்தது எனலாம். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் தமிழியல், இந்தியவியல் ஆய்வுகளின் முக்கியத்துவம் ருஷ்ய நாட்டிலும் குறைந்துள்ளது எனலாம். அமெரிக்காவிலும் முன்னர் காட்டிய ஆர்வம் இல்லை. எனினும் இன்னும் பல இடங் களில் தமிழ் அமைப்புகளின் அறக்கட்டளை ஆதரவுடன் தமிழ் இருக்கைகள் செயல்பட்டுவருகின்றன.
போருக்குப் பிந்திய இன்னொரு முக்கியச் செய்தி தமிழ்க் கல்விக்காக போலந்து, செக், ஸ்வீடன், பின்லாந்து, ஹாலந்து போன்ற நாடுகளில் புதிதாகத் தமிழ் இருக்கைகள் தொடங்கப்பட்டமையாகும். போலந்திலுள்ள தமிழ் இருக்கையை இந்தியப் பண்பாட்டுறவுக் கழகம் சுமார் முப்பதாண்டுகளாக நடத்தி வருகிறது. இதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தோற்றமும் தனிநாயக அடிகள் போன்றோரின் பணிகளும் உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்குகளும் முக்கிய காரணங்களாகும். இன்னொன்று ஜெர்மனி, ஹாலந்து போன்ற நாடுகளில் தமிழ்நாட்டிலிருந்து தாய்மொழி பேசும் ஆசிரியர்களை அழைத்து, தமிழ் கற்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டதைக் குறிப்பாகச் சொல்ல வேண்டியுள்ளது. ஜெர்மனியில் ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தில் டாக்டர் தாமோதரன், நெதர்லாந்தில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கோவிந்தன் குட்டி, பின்லாந்தில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பன்னீர்செல்வம், டென்மார்க்கில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழகத்திலும் டாக்டர் பா.ரா. சுப்பிரமணியன், பின் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில் அகராதி ஆய்வுத் திட்டத்தில் கி. நாச்சிமுத்து, போலந்தில் டாக்டர் இராம. சுந்தரம், செக் நாட்டில் பேரா. ச. வே. சுப்பிரமணியன் எனப் பலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தமிழ் கற்பித்துப் பிற்காலத்தில் வலுவான தமிழ் மாணவர் பரம்பரையையும் தமிழியலாளர்களையும் உருவாக்கினார்கள். அவ்வாறு சென்றவர்கள் அனைவரும்

கேரளப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பேராசிரியர் வ.ஐ.சுவின் மாணவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். மேல்நாட்டுப் புலமை மரபு எதிர்பார்க்கிற 1. தமிழோடு பிற திராவிட மொழி அறிவு, 2. தொன்மையான மொழி இலக்கியக் கூறுகளையும் இன்றைய வகைகளையும் கற்பிக்கிற இலக்கண மொழியியல் அறிவு, 3. இயன்றவரை ஆங்கிலத்தில் இவற்றை எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் போன்றவற்றை வ.ஐ.சு. திட்டமிட்டு உருவாக்கி யிருந்ததாலேயே அவர் மாணவர்கள் பலர் அங்கே செல்ல நேர்ந்தது. இத்தகைய முறையில் மாணவர்களை உருவாக்கியிருந்த தெ.பொ. மீ யிடம் பயின்றவர்களும் இவ்வாறு விரும்பப்பட்டார்கள்.
ஈழத் தமிழர் சிக்கலை நன்கு விளங்கிக்கொள்ளத் தமிழியல் ஆய்வுகள் துணைசெய்தன என்பதையும் அதற்குப்பின் தமிழியலில் புது ஆர்வம் பிறந்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஐரோப்பியத் தமிழியலாளர்கள் பல்வேறு துறைகளில் ஆய்வுகளை நடத்தி நூல்கள் வெளியிட்டு வருகிறார்கள். நாட்டுப்புறவியல், மானிடவியல் போன்ற துறைகளில் அவர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வுகளைப் போலவே இங்குள்ள ஆய்வாளர்களும் ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கல்விமுறை ஆய்வுமுறைகளி லிருந்து நாம் படித்துக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அவர்கள் பெற்றுள்ள பல மொழி அறிவு, பல்துறை அறிவு இவற்றுடன் அவர்களின் ஆழத்தையும் விரிவையும் அறிவியல் நெறிமுறைகளையும் நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் மேற்கோள் குறியீட்டை ஒர் அளவுகோலாகக் கொண்டால் தமிழ் பற்றி எழுதப்படும் உயர் ஆய்வுகளில் தமிழறிஞர்களைவிட மேல்நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வுகளே மேற்கோள் காட்டப்படுவதை நோக்கச் சிலவேளை தமிழாய்வு தமிழர்கள் கையைவிட்டு மேல்நாட்டவர் கைக்குப்போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும்.
இன்றைய நிலையில் இந்தியவியல் தமிழியல் ஆய்வுகள்
இன்றைய நிலையில் மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் தமிழியல் ஆய்வுகள் முன்னைப் போல அவ்வளவு விரும்பப்படுபவையாக இல்லை. அவற்றில் சேருவோர் எண்ணிக்கை ஒரளவு குறைவே. காரணம் மரபுவழி இந்தியவியல் வடமொழி இலக்கணம் , நூலாராய்ச்சி என்ற பழமை ஆராய்ச்சியாக இருந்தது. இன்றைய நிலையில் அது மாறி இந்தியவியலானது தற்கால மொழிகள், மக்கள்பால் அக்கறைகொண்டு நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், கலைவரலாறு என விரிவுபெற்றுத் தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறது. அது பற்றி 2000இன் இறுதிக் காலகட்டத்தில்
(2)

Page 24
খ ャー。 Ο CN
•ჭე སྤྱི་བྲོ་ Ց
போலந்தில் தமிழாசிரியர் டாக்டர் ஹெர்மன், இந்திப் பேராசிரியரும் இயக்குநருமாகிய பேராசிரியர் பிரிஸ்கி ஆகிய இருவருடன் நடத்திய உரையாடலில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்கள்.
2007 இல் கேம்பிரிட்ஜில் நிகழ்ந்த தமிழ் வடமொழி பற்றிய ஆய்வரங்கத்தில் பல மேலைநாடுகளிலிருந்து பங்கெடுத்தவர்கள் நடுவயதுடையவர்களும் இளம் ஆய்வாளர்களுமாக இருந்தார்கள். அவர்களிடம் கண்ட பல்துறைப் புலமையும் ஆர்வமும் உழைப்பும் வியப்பையும் நிறைவையும் தந்தன. தமிழியல் ஆய்வை நம்மவர் ஆழமாகச் செய்யாவிட்டாலும் மேற்கத்தியர் அதை ஈடுகட்டிவிடுவார்கள் எனத் தோன்றியது. அத்துடன் அவர்களுடைய கல்விப் பின்புலத்தையும் நம் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது மிகுந்த கவலையே தோன்றியது. முன்பெல்லாம் இந்தியாவிலிருந்து மரபு வழியிலும் புது முறையிலும் கற்ற தாய்மொழியாளர்களாகிய தமிழ் ஆய்வாளர்களை அவர்கள் அழைத்துப் பயன்படுத்தினர். இப்போது அந்நாட்டுத் தமிழ் ஆய்வாளர்களே தமிழைத் தமிழர்கள் எழுதிப் பேசுவது போன்ற புலமை பெற்றுத் தமிழ் பயிற்றுவிக்கும் வேலையில் அமர்ந்துவிடுகிறார்கள். கேம்பிரிட்ஜ் ஆய்வரங்கில் தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் மனப்பாடம் செய்து தெளிவான உச்சரிப்புடன் மேற்கோள் காட்டிப் பேசக்கூடிய மேற்கத்திய ஆய்வாளர்களைப் பார்த்து வியந்து போனேன்.
உலகமெங்கும் தமிழாராய்ச்சி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் என்ன ஆராய்ச்சி செய்கிறோம்? அதன் தன்மை என்ன? நாம் செய்கிற ஆராய்ச்சி, அதற்குக் கொடுக்கிற பின்புலப் பயிற்சி, உழைப்பு இவை மேலைநாட்டைப் போல மெச்சப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் மறுபடியும் கீழே போய்விடுவோம். வீரமாமுனிவர் நம் நாட்டுக் கல்வி முறையை நையாண்டி செய்யும் விதத்தில் எழுதிய பரமார்த்த குரு கதையில் வரும் பாமர குருவும் மடையச் சீடர்களும் இன்றைய தமிழியல் ஆய்விலும் தொடர்ந்தால் நாம் பழிப்புக்குத்தான் ஆளாவோம்.
நாம் மரபுவழிப் புலமையை நீர்த்துப்போகச் செய்து விட்டோம். பழைய தமிழ்க் கல்வியில் மூலப் பாடங்களைத் தெளிவாகப் பாடம் கேட்டல், தமிழ்க் கல்விக்குத் தேவையான நுட்பமான இலக்கண இலக்கிய அறிவு, தத்துவம், தர்க்கம் இவற்றில் பயிற்சி அத்துடன் வடமொழிப் படிப்பு என்றெல்லாம் சில வகைப் படிப்புகள் இருந்தன. இன்று இவற்றையெல்லாம் கற்பிக்க ஆள் இல்லை. 1950 களில் இருந்த அன்றைய புதுப் பாடத்திட்டத்தில் மொழியியல் போன்ற பாடங்கள் இருந்தன. அவற்றையும் தூக்கி எறிந்து தமிழ்ப் புலமையைத் தடம்புரட்டி விட்டு விட்டார்கள் தமிழாசிரியர்கள். இந்தப் புலமை குறைந்த
 

மொழி ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றினாலேயே தமிழ் வாழும் என்று பிறர் எள்ளி நகையாடும் நிலைக்கு யார் காரணம்?
இன்றைய நிலையில் தமிழ்க் கல்வித் துறையில்
குறைந்தது மூன்று விதத் தேவைகளும் அவற்றிற்கேற்ற திறமைகளின் தேவைகளும் வேண்டும் என்று உணர்கிறோம்.
1.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் (முதல் மொழிக் கல்வி) போன்றவற்றில் தமிழைப் பிழையறச் சொல்லிக்கொடுக்கக்கூடிய திறமை. மொழியைச் சொல்லிக்கொடுப்பதோடு இலக்கியச் சுவையையும் ஊட்டக்கூடிய பயிற்சி பெற்றமைவது. இதில் பழைய இலக்கிய மொழி இன்றைய இலக்கிய மொழி எல்லாவற்றிலும் பயிற்சி வேண்டும். இதில் தமிழ்க் குழந்தைகளுக்கு உலக அளவில் கற்றுக்கொடுக்கக் கூடிய திறன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் பாடத்திட்டம் இத்தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக அமைய வேண்டும். தொல் இலக்கண இலக்கியப் பயிற்சி, இன்றைய இலக்கியப் பயிற்சி, அதற்கேற்ற இலக்கியத் திறனாய்வு, கலை பண்பாட்டு வரலாறு போன்றவை இவற்றில் இடம்பெற வேண்டும். ஆங்கிலம் தமிழ் தவிர்த்த வேறொரு மொழியையும் கற்பிப்பது விரும்பத்தக்கது. மொழி கற்பித்தல் போன்ற பாடங்களை விருப்பப் பாடமாக வைக்க வேண்டும்.
இரண்டாவது உயர்கல்வி கற்பிக்கும் கல்லூரி, பல் கலைக்கழகங்களில் கற்பிக்கும் திறன் படைத்தவர்கள். இவர்கள் மேலே கண்ட பயிற்சிகளுடன் மொழியியல் தத்துவம் தர்க்கம் நாட்டுப்புறவியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும் செய்முறை அறிவும் படைத்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும். இவர்களுக்குக் கட்டாயமாக ஒரு திராவிட மொழியும் வடமொழியும் கற்பிக்க வேண்டும். இவர்களுடைய இலக்கியத் திறனாய்வுப் பயிற்சியில் தமிழ் இலக்கியக் கொள்கைகளுடன் வடமொழி இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகள், மேலை இலக்கியத் திறனாய்வுக்

Page 25
கொள்கைகள், ஒப்பிலக்கியக் கொள்கைகள் போன்றவை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர் களுக்கு ஆங்கிலப் புலமை போதிய அளவு
பெறத்தக்க பயிற்சியும் வேண்டும். மூன்றாம் நிலை தமிழ் நாட்டுக்கு வெளியே இந்தியாவுக்குள்ளும் பிற வெளிநாடுகளிலும் சென்று தமிழைக் கற்றுக்கொடுக்கிற திறன் படைத்தவர்கள். இவர்களுக்கு மேலே சொன்ன பாடமுறைகளை உயர் திறன் பெறத்தக்க முறையில் கற்பித்தும் செய்முறைப் பயிற்சி கொடுத்தும் உருவாக்க வேண்டும். இவர்கள் தமிழைப் பிற மொழியாளரிடம் எடுத்துச் சொல்லக்கூடிய அம்மொழிப் புலமை, அவை பற்றிய உயர் அறிவு, ஆங்கிலத் திறன் போன்றவை பெறத்தக்க விதத்தில் பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும் உருவாக்கப்பெற வேண்டும். மேலைநாட்டு இந்தியவியல் தமிழியல் படிக்கும் மாணவர்கள் தம் தாய் மொழியிலும் ஐரோப்பிய மொழி ஒன்றோ இரண்டிலுமோ புலமை பெற்றிருப்ப தோடு வடமொழி இன்னொரு இந்திய மொழி போன்ற வற்றிலும் அறிவும் பயிற்சியும் பெறத்தக்க விதத்தில் பாடத் திட்டங்களையும் கல்விமுறையையும் அமைத்துள்ளார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். தமிழை வெளியே எடுத்துச்செல்ல இத்தகைய மாணவர் அணியை நாம் உருவாக்க வேண்டும்.
தமிழியல் ஆய்வில் இத்தகைய மாணவர்களை உருவாக்கும் பாசறைகளாகத் தமிழ் உயர் கல்வி நிலையங்கள் விளங்க வேண்டும். அங்கே இருக்கும் பேராசிரியர்கள் எதிர்கால ஆய்வாளர்களை உருவாக்கும் தெ. பொ. மீ., வ. ஜி.சு. போன்று உண்மையான பேராசிரியர்களாக விளங்க வேண்டும். இன்று மேலே சொன்ன மூன்று நிலைகளிலும் நல்ல திறன் படைத்தோர் கிடைப்பது அரிதாக உள்ளது.
தமிழர்கள் தமிழை மற்றவர்கள் கற்க வேண்டும் என்று விரும்பும்போது நாமும் பிற மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய மொழிகளைக் கற்க, தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிற செம்மொழிகளைத் தமிழர்க்குக் கற்றுக்கொடுக்க உதவும் விதத்தில் கலைஞர் செம்மொழி மையம் ஒன்றைத் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார் அதன் துணைவேந்தர் முனைவர் மா. இராசேந்திரன். அது நடந்தால் நல்ல தொடக்கமாக இருக்கும். இன்னும் தமிழ் ஆசிரியர் கள் இசை நாடக ஆசிரியர் கள் போன்றவர்களையும் மாணவர்களையும் வெளிநாடுகளுக்கு

அனுப்பவும் பிறர் இங்கு வந்து தமிழ் படிக்கவும் தமிழ்ப் பண்பாட்டை ஆராயவும் தேசிய அளவில் உள்ள இந்தியப் பண்பாட்டுறவுக் கழகம் (ஐ. சி. சி. ஆர்.) போன்று தமிழக அளவில் தமிழகப் பண்பாட்டுறவுக் கழகம் (ஜி.சி.சி.ஸி.) ஒன்றை அமைக்கலாம். மேலும் தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற நடுவண் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் உலக மொழிகளைக் கற்கவும் ஏற்பாடுகளைச் செய்யலாம். குறிப்பாக அங்கு அமைக்கப்பெறும் தமிழ்ப் படிப்பு மேலே மூன்றாவதாகச் சொன்ன குறிக்கோளை அடையக்கூடிய விதத்தில் அமைக்கப்பெற வேண்டும். இதைத் தமிழன்பன். ஒளவை நடராசன், பொற்கோ போன்றோரும் வற்புறுத்தி வருவது நல்ல அறிகுறி.
நூலடைவு
இராசாராம், மொரிஷியசில் தமிழரும் தமிழும், தமிழ்ப் பல்கலைக்
கழகம், தஞ்சாவூர், 2001. கோதண்டராமன், பொன். உலகில் தமிழும் தமிழரும், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1976. கார்த்திகேயன், ஆ. அலைகடலுக் கப்பால் அருந்தமிழ், அகரம்,
தஞ்சாவூர், 2007. சோமலெ, வட மாநிலங்களில் தமிழர் ஆய்வு அறிக்கை, தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988. டிரவுட்மன் தாமஸ், திராவிடச் சான்று - எல்லீஸும் திராவிட மொழிகளும்,
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையம், சென்னை காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், (2007) தமிழில்: இராம. சுந்தரம்,
பக்: 344. தில்லித் தமிழ்ச் சங்கம், சுடர் 23 கடல் கடந்த தமிழ் மலர், 1978 நாச்சிமுத்து, கி., தமிழியல் ஆய்வு - நேற்று இன்று நாளை. தமிழ்
உலா - பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பனார் மணிவிழா
வெளியீடு, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம் பக்.94-103. இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு 'தமிழ் அல்லாத பிற
மொழிகளில் செய்யப் பட்டிருக்கும் தமிழியல் ஆய்வு குறித்த விவரணமும் ஆய்வுரையும்' இலக்கண ஆய்வுகள், உயராய்வு ஆய்விதழ், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
2007, பக்.397-410 பகவதி, கு., ஜான் லாரன்ஸ், செ., தாய்நாட்டிலும் மேலை நாடுகளிலும்
தமிழியல் ஆய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,
2000. யரோஸ்லாவ் வாசக், செக்கோஸ்லோவியாவில் தமிழ், உலகத்
தமிழ்க் கல்வி இயக்கக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: ஆவுடைநாயகம், உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை,
1985, பக்கம் 61-64. Bhate Saroja, Ed. Indology Past, Present, and Future, Sahitya Akademni, Delhi
2002. Caldwel, Robert, A comparative Grammar of the Dravidian South Indian Family
of Languages, University of Madras, 1976. Author's preface to the Second Edition. Dubianki Alexender, Teaching of Tamil in the USSR, உலகத் தமிழ்க் கல்வி இயக்கக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: (த ஆவுடைநாயகம், உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை,
1985, பக்.93-94. ICCR, Indian Studies Abroad, Asia Publishing House,1964. Thaninayagam, Tamil Studies Abroad, Asia Publishing House, 1968.------, A
Reference Guide for Tanmil Studies, 1966. IP
அகவிழி | மார்ச் 2014 இ

Page 26
24)
மாணவர்களிடையேகற்றலின்ஒர்ப
அல்லது விளையாட்டு அமையே
Mr. A.A. Azees
எமது தேசியக்கல்வித்திட்டம் கல்வியின் மூலம் வளர்க்க முற்படும் திறன்களை பின்வருமாறு வகைப்படுத்துகின்றது.
* தொடர்பாடற்றிறன்
ஆளுமை விருத்தி தொடர்பான திறன்கள்
சூழலுடன் தொடர்புடைய திறன்
தொழில் உலகிற்கு தயாராகும் திறன்
சமயம் மற்றும் ஒழுக்க விழுமியங்களுடன் சார்பான திறன்.
* விளையாட்டு மற்றும் ஒய்வு நேரத்தைப் பயன்படுத்தும்
திறன்
* கற்றலிற்குக் கற்றல் தொடர்பான திறன்
என்பனவாகும். இவற்றுள் தொழில்வாய்ப்பு முதலிடம் பெறுகின்றது. அனைவரும் கற்று தொழில் பெற்று ஏனைய ஆறு அம்சங்களையும் புறக்கணிப்பார்களாயின் சர்வதேச மொழிகள், கற்று தொழில் பெற்ற மனிதன் இயற்கையின் சீற்றத்திற்கும் உளத்தாக்கத்திற்கும் ஆளாவான். பல தசாப்தங்கள் பணியாற்ற வேண்டிய அவன் சில தசாப்தங்களில் வாழ்க்கை வட்டத்தை நிறைவு செய்து கொள்கிறான். அரசின் பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்ட அம்மனிதன் முதிர்ச்சியடையாத நிலை யில் உடல்நலம் குன்றிப்போவதை நிறுத்த வேண்டுமென்றால் தொழில் தவிர்ந்த ஏனைய ஆறு அம்சங்களும் கவனத்தில் கொண்டுவரப்படல் வேண்டும். ஊழியர்களின் உடல்நலம் மேலும் பல்லாண்டுகாலமாக அதிகரிக்கப்பட்டு முதலீட்டிற்கு ஈடான சேவை பெறப்படல் வேண்டும்.
அத்துடன் பாடசாலையில் திறமையாகக் கற்று நாடு போற்றும் நல்ல சட்டத்தரணியான ஒருவர் நாள்தோறும் வருவாயில் கவனமாயும் ஏனைய விடயங்களில் கவனயீனமாயும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரது உழைப்பு அவரின் உடல்நலக்கெடுதியினாலோ அல்லது அவரது பிள்ளைகளின் பொடுபோக்கான நடத்தையினாலோ ஒரு சில கணங்களில் இழந்துவிடலாம். எனவே கல்விமான்களின் அறிவிலிருந்து நெடுநாள் பயன் பெற உடற்பயிற்சியும் விளையாட்டுக்களும்
 

இன்றியமையாதவை. எனவே இப்பழக்கங்கள் சிறு பராயத்திலிருந்தே ஏற்படுத்தப்படல் வேண்டும். வளர்க்கும் போது தாய்தந்தையர் உடற்பயிற்சியை ஓர் அத்தியா வசியமான செயலாக உணர்த்துவதுடன் பாடசாலையில் ஆசிரியர்கள் போதியளவு வழிகாட்டலை மேற்கொள்ளலும் வேண்டும்.
அதிகரித்த உடல்எடை (OBESTY) என்பது உலக ளாவிய சுகாதாரப்பிரச்சினையாகும். ஐக்கிய இராச்சியத்தில் (UK) மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில்.
"வருடாந்த கார் விற்பனை அதிகரிப்பை நோக்குமிடத்து 2050ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய சனத்தொகையில 50% ஆனோர் அதிக உடல் எடையுடையோராகக் காணப்படுவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டிலும் வருவாய் அதிகரிக்க சொகுசாக வாழ்க்கையைத் தேடுவதால் நடத்தல் என்பது அருகி விட்டது. மோட்டார் வாகனங்களின் பாவனை அதிகரிப்பு உடல் எடையையும் அதிகரிக்கின்றது. கொழும்பு மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவன பணிப்பாளர், பேராசிரியா P Katulanda குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் நம் நாட்டிலும் அதிகரித்த உடல் எடை ஓர் தீவிர சுகாதாரப் பிரச்சினை யென்பதை உணர்த்தியுள்ளனர்.
எனவே இப்பிரச்சினையை முளையிலேயே கிள்ளி யெறிய பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களிலிருந்தே செயற்றிட்டங்கள் அமுலில் வரல் வேண்டும். உடற்பயிற்சி தொடர்பாக எழுதப்பட்ட சர்வதேச மருத்துவ நூல்கள் சிலவற்றின் கருத்துக்களை (எனது சொந்தக் கருத்தக்கள் எதுவுமில்லை) இங்கு தருகின்றேன்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவங்கள்
பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியத்துவ
முடையது என்பதை பின்வரும் காரணங்களை வாசிப்பதன் மூலம் பெற்றோர் நன்கு விளங்கிக்கொள்ளல் வேண்டும்.
பிள்ளைகளின் சிறந்த வளர்ச்சிக்கும் விருத்திக்கும் 955uT6) iduu(p60)Lug (Growth & Development)

Page 27
சக்தி உள்ளீடு (Input) வெளியீடு (Output) என்ப வற்றில் சமநிலையை ஏற்படுத்துவதுடன் பசியை ஏற்படுத்தும், உணவு உண்ண வைப்பதுடன் அளவுக் கதிகமான எடை அதிகரிப்பையும் கட்டுப்படுத்தும்.
எண்புகள், தசைகள் என்பவற்றை உறுதி யாக்குவதுடன் மூட்டுக்களின் இயக்கத்தையும் சிராகப் பேணும்.
உடலின் வடிவமைப்பை சீராகப்பேணுவதுடன் சிறந்த வளையும் தன்மை or நெகிழும் தன்மையை வழங்குதல்.
சிறந்த தூக்கத்தை வழங்குதல்
சிறுவர்களுக்கு நண்பர்கள், புதிய சங்க உறவுகள், இடைவினைத்திறன் என்பன ஏற்ப வாய்ப்பேற்படல்.
நெருக்கீட்டிற்கு முகங்கொடுக்க பழக்கப்படுவதால் பாடசாலையில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை தாங்கிக்கொள்ளல்.
வாழ்க்கை பூராகவும் சிறந்த ஆரோக்கியம் பழக்கங்கள் ஏற்பட வழியேற்படல்.
எதிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பளித்தல் இதய நோய்கள், நீரிழிவு, பருத்த உடல் என்பன
உடற்றொழிலியியல் (Phusiology) மற்றும் ஆன்மீக (Spiritual) நலம் ஏற்படுவதால் வாழ்க்கை சீரான பாதையில் கடந்து செல்லல்,
உடற் பயிற்சிக்குத் தடையாக அமைபவை
படிப்பில் ஏற்படும் போட்டியின் முன்னிலையில் உடற்பயிற்சியின் தேவை வலுவற்றுப் போதல்.
 

தொலைக்காட்சியும், கணினியும் சிறுவர்களை நீண்ட நேரம் அமரச்செய்து உடற்பயிற்சியின் காலத்தை வென்றிருத்தல்.
ா உடலைக் கஷ்டப்படுத்துவதில் விருப்பமின்மையும்
ஆர்வமின்மையும்
பாடசாலைத் தேவைகளை நிறைவுசெய்ய
அதாவது இரவில் கற்பதற்கு விழித்திருக்க போதி யளவு ஒய்வு தேவையெனக் கருதுதல்.
பெற்றோர் முயற்சியற்றிருத்தலும் பெறுமதி உணராதிருத்தலும்,
பாடசாலைகளில் உடற்பயிற்சிக்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருத்தலும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுதலும்.
உடற் பயிற்சியின் வகைகள்
பிள்ளைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் (Growth) விருத்திக்கும் (Development) அவசியமான உடற்பயிற்சிகள் மூன்று வகைப்படும்.
* சகிப்புத்தன்மை (ENDURANCE)
உடலிலுள்ள பெரிய தசைகளின் இயக்கத்துடன் தொடர்புடைய வன்மையான பயிற்சிகள் இதனுள் அடங்கும். நுரையிரல், இதயம் என்பவற்றின் இயக்கம் அதிகரிப்பதோடு அதிகளவு வியர்வையும் வெளியேறும்.
EX நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கள் மிதித்தல், பந்தடித்தல்.
sk Grsalgáál (FLEXIBILITY)
உடலை இழுத்தல், வளைத்தல், அசைத்தல் என்பன இதனுள் அடங்கும். மூட்டுக்களில் இறுக்கத்தைத் தவிர்த்து
坐 9、 鸟 ଝଞ
S SR ܘgܒܓܠ գ: N) O طH ܠܛ

Page 28
நெகிழ்தன்மையை அதிகரிக்கும். வேலையின் போது நோவைக் குறைக்கும். மூட்டுக்களில் ஏற்படும் பாதிப்புக் களைத் தவிர்த்தல்.
Ex: மைதானப் பயிற்சிகள், குனிந்து நிமிர்ந்து வளைதல், UsTugb6)
ik 61J 656OLD (STRENTH)
எதிர்ப்பை எதிர்க்கும் திறன் வளரும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும். சிறு காயங்களைத் தாங்கிக் கொள்ளும் திறனை வளர்க்கும்.
EX பாரம் தூக்குதல், படியேறுதல் பலபேர் சேர்ந்து தள்ளுதல்
அன்றாட உடற்பயிற்சிகளுக்கு சில மாற்று யோசனைகள்
மாலை வேளைகளில் வீட்டிற்கு வெளியில் விளையாடும் குழந்தையை உற்சாகமூட்டல். இங்கு குழுவாக விளையாடும் விளையாட்டாகவோ தனியே செய்யும் கயிறு பாய்தல் போன்ற விளை யாட்டாகவோ இது அமையலாம்.
விடுமுறைநாட்களில் நீச்சல் தடாகங்கள், நடனவகுப்புக்கள் என்பவற்றிக்கு அழைத்துச் செல்லல்.
இரவு உணவுண்டலின் பின் சிறிது நேரம் நடக்க எங்கேயாவது வெளியேறிச் செல்லல்.
பொருத்தமான துவிச்சக்கரவண்டிகளை வாங்கிக் கொடுத்து மிதிக்கத்துாண்டுதல். பாதுகாப்பை வலியுறுத்தல்.
வீட்டிற்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று அவர்களிடம் சிறு பொதியொன்றை ஒப்படைத்தல்.
வீடடில் நண்பர்களுடன் ஆடிப்பாட இடமளித்தல்
மாடிகளுக்கு ஏறிச்செல்ல படிக்கட்டுகளைப் பாவித்தலும் மின் உயர்த்திகளை பாவனை செய்யாது விடுதலும்.
பாடசாலைக்கான தூரத்தைப்பொறுத்து நடந்து செல்ல அனுமதித்தல்
சிறு பிரயாணங்களுக்கு மோட்டர் ஊர்த்திகளை உபயோகிக்காதிருத்தல்.
தொலைக்காட்சி, கணினி என்பற்றில் அதிக நேரம் செலவுடுவதிலிருந்து சிறுவர்களை ஒதுக்கி வைத்தல்.
 

பெற்றார் மாதிரிகைகளாக (Model) செயற்பட்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல்
நகரிற்குச் செல்லும் போது வாகனத்தை நிறுத்தி விட்டு வெவ்வேறு பொருட்களாக வாங்க விற்பனை நிலையங்களை நாடி நடந்து சென்றடைதல்.
வீட்டு வேலைகளில், தோட்டப் பராமரிப்பில், மலர்ச்செடி, புற்தரை என்பவற்றை கவனிப்பதற்கு சிறார்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளல்.
வெறுமனை பிரத்தியேக வகுப்பிற்கு (Tuition Class) மாத்திரம் அனுப்பாமல் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுப்புதல்.
பாடசாலை வேளைகளில் சில பாடவேளைகளை விளையாட்டிற்கென ஒதுக்குதல்
எதிர்காலத்திற்குத் தேவையான உடற்பயிற்சிப் பயிற்றுனர்கள் இன்றிலிருத்தே பயிற்றுவித்தலும் பாடசாலைகளுக்கு தேவையான வளங்கள். காலம், வழிகாட்டல் என்பவற்றை வழங்குதல்.
படிக்கும்போது சிறு இடைவேளைகளைப் பெற்று அவற்றில் TV பார்க்காமல் உடற்தசைகள் இழுபட சிறு அப்பியாசங்களைச் செய்தல்
போட்டி ஏற்படும் விளையாட்டுக்களிலும், சமய அனுஷ்டானங்களிலும் ஈடுபடல்
EX கோயிலுக்குச் செல்லல், ஐவேளை இறைவனை வணங்குதல்
வன்மையாக விளையாட்டுக்களை விளையாடும் போது உடலுறுப்பு கவசங்களை அணிந்துகொண்டு விளையாடுதல்
சிறுவர்களுக்கு சிறந்த நீர்ச் சமநிலையைப் பேணுவதற்கு இடைவேளைகளில் போதியளவு நீர் அருந்த பெரியோர் ஆர்வமூட்டல்.
எனவே எமது மாணவர்களிடையே உடற்பயிற்சி பற்றிய எண்ணக்கருவை விதைப்பதில் கண்ணும் கருத்துமாய் நின்று செயற்பட முற்படுவோம்.
பரிசீலனை செய்தவை
1.
Jayasinghe, A. (2009), Community Child Development Assesment (1st ed), Kandy, Tha-Ro Publications. Poleny, L. (1999), Manual of Community Paediatrics (2nded), Lonlon, Churchill Livingstone Publication. Tiwari, S.R., etal (2012), Health education (1st ed), New Delhi, APH Publication House.
Gupth, P. (2010), Essential Paediatric Nursing (2nded), Bangalore, CBS Publicaion.
Department of Hwalth Sciences (1994), Primary Health Care II (isted), Nugegoda, The Open University.

Page 29
கலைத்திட்டத்தில் சூழலியல்
சு. தியடோர் பாஸ்கரன்
இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அதைச் சொல்லித் தருவதுதான்.
- நோபல் பரிசு உயிரியலாளர் கான்ராட் 6) ITU66t). On Life and Living b|T656).
எங்கள் வீட்டில் உதவிசெய்யும் பெண்ணின் ஆறு வயதுக் குழந்தை ஒருமுறை நான் .பிரிட்ஜைத் திறந்தபோது, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகளைக் கண்டு முட்டை' எனக் கத்தினாள். பேச்சுக் கொடுப் பதற்காக 'முட்டையிலிருந்து என்ன வரும் தெரியுமா? என்றேன். 'தெரியுமே. ஆம்லெட்' என்றாள். குழந்தைகள் இயற்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று உணர்ந்தேன். அறுந்துபோன இப் பிணைப்பை மீண்டும் உருவாக்க முடியுமா? சூழலியல் கல்வி மூலம் முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டுப் பள்ளி களில் இயற்கை' என்று ஒரு பாடம் இருந்தது. செடி கொடிகள், உயிரினங்கள், விவசாயம்,
இடி, மின்னல் போன்ற இயற்கைச் செயல்பாடுகள் பற்றி வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களுக்கும் வேலைவாய்ப்புப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கிய போது முதல் பலியாக "இயற்கை பாடம் மறைந்தது. இப்போது சூழலியல் கல்வி பற்றிய சொல்லாடல் உருவாகியிருக்கின்றது.
எழுபதுகளின் தொடக்கத்தில் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து 1972 இல் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த பன்னாட்டு மாநாடு சுற்றுச்சூழல் இயக்கத்தின் பிள்ளையார் சுழியாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இயற்கையில் உள்ள நுண்ணிய பிணைப்புகளைப் புரிந்து கொள்ள, சுற்றுச்சூழல் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்க, பள்ளிகளில் சூழலியல் பற்றிய கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்ற உணர்வு பல நாடுகளில் உருவானது.
 
 

கல்வியின் அவசியம்
அதன் பலனாக 1977இல் ரஷியாவிலுள்ள பிலிசி (Tbisi) நகரில் சூழலியல் கல்வி பற்றிய பன்னாட்டு மாநாடு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து, மதுரை - காமராஜர் பல்கலைக்கழக உயிரியலாளர் எஸ். கிருஷ்ணசாமியும் பங்கேற்றார். இங்கே பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எல்லா நாடுகளிலும் பள்ளிகளில் சூழலியல் போதிக்கப்பட வேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. சூழலியல் பற்றிய ஒரு அடிப்படையான புரிதலையும் மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமுள்ள ஊடாட்டத்தையும் சூழலியல் பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றியும் எதிர்காலத்தில்

Page 30
ৎ 平O CN otib 宙 Ց
Cas
● 始
ஏற்படக் கூடிய சூழலியல் சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி, இவ்வுலகில் வாழும் உயிரினங்களை அழிந்து விடாமல் பேணுவது எவ்வாறு போன்றவையும் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென முடிவுசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மைய அரசின் மனிதவளத் துறையும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து, சூழலியலைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முயன்றன. (3961506 (National Council forEducational Research and Training) இதற்கு வேண்டிய புத்தகங்களைத் தயாரிப்பதிலும் ஆசிரியர்களை இந்தப் புதிய துறை பற்றிப் பயிற்றுவிப்பதிலும் ஈடுபட்டது. பட்டறைகள் நடத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பற்றிய ஒரு கரிசனத்தைச் சிறுவர்களுக்கு உருவாக்கும் எண்ணத்தில், மைய அரசு, பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் சூழலியல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீது அனுப்பியது. பள்ளிக் கல்வி மாநில அரசின் கையில்தானே இருக்கின்றது!
ஆனால் தமிழ்நாட்டில் இந்தத் தாக்கீதின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம்வரை சென்று, தமிழ்நாட்டின் முதன்மைச் செயலாளர் அந்த நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பராமரிப்பு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் போதிக் கப்படும் என்ற உறுதிமொழி கொடுக்க வேண்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஐந்தாம் வகுப்புவரை இந்தப் பொருள் பற்றித் தனியாகப் பாடப்புத்தகம் அச்சிடாமல் அறிவியல் , சமூகவியல் போன்ற ஏற்கனவே கற்பிக்கப்பட்டுவரும் பாடங்களின் புத்தகங்களில் இரண்டு அல்லது மூன்று பாடங்களைச் சேர்த்துவிட்டது தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பிரச்சினை தீர்ந்தது. இந்தப் புத்தகங் களைப் பார்க்கும்போது ஏதோ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுலாக்கிவிட்டோம் என்பதற்காக எடுத்த செயல்பாடு போலிருக்கின்றது. மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில், அட்டையில் சூழ்நிலையியல் சமூகவியல் என அச்சிடப்பட்டிருந்தாலும், இயற்கை சார்ந்த ஒரு பாடம் கூட அதில் கிடையாது. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை சூழலியலுக்குத் தனிப் பாடப் புத்தகங்களை 2005 இல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் சராசரி அறுபது பக்கங்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் எல்லாப் பாடங்களுமே ஏதோ ஒரு ஆங்கில மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டு 'அச்சுறுத்தப்பட்ட நிலையில் சிற்றினங்கள். அதாவது Threatened Species அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின், தமிழ் நாட்டின் சூழலியல் பிரச்சினைகளோ கருத்தாக்கங்களோ இவற்றில்
 

இல்லை. சூழலியல் என்னும் இப்பாடத்திலிருந்து சிறுவர்கள் அந்நியப்படுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது.
இக்கட்டுரையை எழுதுவதற்காகப் பள்ளிப் பாடப் புத்தகங்களை நான் பார்த்தபோது நம்ப முடியாத அளவு பிற்போக்கான கூறுகளைக் காண முடிந்தது. இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் ஒரு படம். ஒரு சிறிய வீட்டைச் சுற்றி ஒரு சிறுத்தை, ஒரு பாம்பு, ஒரு நரி இவற்றுடன் திருடன் ஒருவனும் இருக்கின்றான். தலைப்பு "தீங்கு விளைவிக்கக்கூடிய விலங்குகளிடமிருந்து வீடு நம்மைப் பாதுகாக்கின்றது”. சில பாடங்கள் ஐம்பதுகளில் வந்த வெகுசன இதழ்களில் 'சிறுவர் பகுதியில் வந்த கதை பாணியில் உள்ளன. நான்காம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தில் “வானத்தில் வட்டமிட்ட கழுகார் விர்ரென்று தரையில் இறங்கினார்! அமுதா அருகில் சென்றாள், உயரப் பறக்கும் கழுகாரே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டாள் என உள்ளது. சில பாடங்களின் தலைப்புகளைப் பாருங்கள் பயனுள்ள மிருகங்கள் - ஆடு, மாடு, குதிரை’. கடந்த நாற்பது வருடங்களில் மனிதர் சுற்றுச்சூழல் பற்றி அறிந்துகொண்ட புதிய புரிதல்கள் ஒன்று கூட இந்த நூல்களில் இல்லை. காலநிலை மாற்றம் பற்றிய அறிமுகம் இல்லை. உயிரினங்கள் அற்றுப்போவதைப் பற்றி ஏதும் இல்லை. காடுகள் அழிப்பு, நதிகள் வறண்டுபோதல், மண் அரிப்பு, வெள்ளம், கதிரியக்கமாசு. ஒன்றுமில்லை. நான்காம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் ஒசை அதிகமாவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு பாடத்தைப் பார்த்தது மகிழ்ச்சி அளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில், சுற்றுச்சூழல் போதிப்பது பற்றிப் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நாள் பயிலரங்கு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாம் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள். ஆசிரியர்கள் பலருடன் பேசினேன். ஒருவராவது குழந்தைகளைப் பள்ளி வளாகத்திற்கு வெளியே, ஆற்றங்கரைக்கோ கடற்கரைக்கோ கூட்டிச் சென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் அத்தகைய இடங்கள் உண்டு. வயல்வெளிகள், ஏரிக் கரைகள், பண்ணைகள்போல, வகுப்பறைக்கு வெளியில் வந்து அங்குள்ள மரத்தையும் அதிலுள்ள பறவை களையும்கூட யாரும் காண்பிப்பதில்லை. சூழலியல் மற்றொரு வகுப்பறைப் பாடமாக, எழுதி மதிப்பெண் வாங்க வேண்டிய மற்றொரு தேர்வாக உறைந்துவிட்டது.
ஆனால் சூழலியல் கரிசனம் ஒரு பாடமல்ல. அது ஒரு விழிப்பு. ஒரு பார்வைக்கோணம். நாம் வாழும் உலகைப் பற்றிய அடிப்படையான புரிதல். பாரம்பரிய வகுப்பறை போதனாமுறைகள் அறவே போதாது. இது

Page 31
நமது வாழ்வாதாரம் பற்றியது. நம்முடன் இந்த உலகில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றியும் அவற்றுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு பற்றியும் எப்படி எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று ஒரு பெரிய சிலந்திவலையைப் போல இணைப்பு கொண்டுள்ளன, என்பதைச் சிறுவர்களுக்கு உணர்த்தக் கூடிய ஒரு கருத்தாக்கம். அம்மாதிரியான விழிப்புணர்வு ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை மாணவர்கள் உணர்ந்து செயல்பட முடியும். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழை மக்கள்தாம் என்பதையும் அவர்கள் உணர்வார்கள். அதுதான் சூழலியல் பாடம் பள்ளிகளில் செய்ய வேண்டியது. சுற்றுச்சூழல் பற்றிய ஒரு பொறுப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும். காத்திருக்கக் காலமில்லை என்பதைக் கல்வியாளர்கள் உணர வேண்டும். வெகு சில... சென்னை யில் இரண்டு, மூன்று... தனியார் ஆங்கிலப் பள்ளிகள், சூழலியலுக்கு முன்னுரிமை அளித்து இயற்கை முகாம்கள் நடத்துகின்றார்கள். மற்றபடி, உலகமயமாக்கல் - சந்தைமயமாக்கல் எனும் ஆழிப் பேரலையில் சுற்றுச்சூழல் பற்றிய கரிசனம் அடிபட்டுப்போனது. கல்வியாளர்களாலும் பெற்றோர்களாலும் மற்ற பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஆசிரியர் கள் சுழலியல் கல் வியை, ஒரு முக்கியமில்லாத பாடமாகவும் புதிதாகச் சேர்க்கப்பட்டதால் வேண்டாத சுமையாகவும் கருதுகின்றார்கள். கற்பிக்கும் முறைகளில் யாருக்கும் எந்தப் பயிற்சியும் அளிக்கப் படவில்லை. ஆசிரியர் பயிற்சிக் கையேடு எதுவும் வெளியிடப்படவில்லை. பள்ளியில் கணக்கு ஆசிரியர் இருக்கின்றார். அறிவியல் ஆசிரியர் இருக்கின்றார். சூழலியல் கல்விதான் அனாதையாக இருக்கின்றது. அதேபோல் பெற்றோர்களும் இதை தேவையற்ற, மதிப் பெண் அதிகம் எடுக்க முடியாத பாடமாகப் பார்க்கிறார்கள். கணக்கு, அறிவியல் போன்ற பாரம்பரியப் பாடங்களுக்குப் போட்டியாகச் சூழலியல் வந்து விட்டதுபோல் இதை உதாசீனம் செய்கின்றனர்.
சூழலியல் கல்வியில் இன்னொரு முக்கியப் பரிமாணம் உண்டு. இக்கல்வி எல்லோருக்கும் இன்று தேவையாகின்றது. எழுத்தறிவுபோல இது ஒரு அடிப்படைத் தேவை. பல தன்னார்வ அமைப்புகள் - இயற்கைக்கான உலக நிதியம் (WWF) சூழலியல் கல்வி மையம் (Centre for Envorinmental Education) போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சூழலியல் கல்வியில்

HII )
கையாளப் பல உத்திகளை இவர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றார்கள். விளையாட்டுகள், சோதனைகள், புதிர்கள், முகாம்கள் என. ஆனால் இவையாவும் ஆங்கிலத்தில்தான் உருவாக் கப்பட்டுள்ளன. தமிழில் இம் மாதிரியான முயற்சிகளைக் காண்பது அரிதாக இருக்கின்றது. காலச்சுவடு பதிப்பகத்தின் இணை வெளியீடாக வெளியிட்ட மழைக்காலமும் குயிலோசையும் போன்ற வரிசை நூல் களும் இருக்கின்றன. காட்டுயிர், பூவுலகு, துளிர் போன்ற இதழ்களில் அருமையான கட்டுரைகளை எளிய தமிழில் வெளியிடுகின்றார்கள். ஆனால் இவற்றைப் பள்ளியில் பயன்படுத்துவது யார் ? பள் ளி நூல்களில் இவை சேர்க்கப்படலாமே? ஒன்றிணைந்து செயல்படுதல் நம் நாட்டில் அரிதாகவே காணப்படும் முயற்சி. ஒவ்வொரு துறையும் ஒரு சிறு தர்பார் போலவே இயங்குகிறது.
சூழலியல் கல்வியில் இன்னொரு பிரச் சினை இருக்கின்றது. எந்த ஒரு புதிய கரிசனத்திற்கும் மொழி முதலில் தயார்ப்படுத்தப்பட வேண்டும். மொழியின் மரணம் (Death of Language) எனும் நூலில் “மொழிக் கும் சூழலியலுக்கும் உள்ள இருவழி உறவு மேம்படுத்தப்பட வேண்டும். சூழலியல் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது - மொழி பற்றிய சொல்லாடல் அங்கே இடம்பெற்றாக
அகவிழி ) மார்ச் 2014 2

Page 32
வேண்டும்” என்கின்றார் மொழியியலாளர் டேவிட் கிறிஸ்டல். தமிழில் உள்ள உயிரினப் பெயர்கள்கூட மறைந்து வருகின்றன. உயிரினங்களின் பெயர்கள் மட்டுமல்ல... அவை சார்ந்த பழமொழிகள், சொற்றொடர்கள், உவமைகள் மறைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை காலனியாட்சியின் ஒரு விளைவு தான். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இயற்கை வரலாற்றுத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி, பல முக்கியமான பதிவுகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வசதிக்கேற்ப, அவர்கள் நோக்கில் இந்தியக் காட்டுயிர்களுக்கு ஆங்கிலப் பெயர்களைக் கொடுத்துவிட்டார்கள். Gaur எனப்படும் காட்டெருதை bison என்றனர். சூழலியல் பாடநூல்களில் பைசன் என்னும் பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. Bison என்றால் எருமை என்று பொருள். ஆனால் முதுமலை போன்ற நம்மூர்க் காடுகளில் வாழும் காட்டெருது எருமை இனத்தைச் சேர்ந்ததல்ல. இது ஒரு காட்டு மாடு. தமிழ்நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆங்கிலேயர் வருவதற்கு முன் தமிழில் பெயர்கள் இருந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலைமுகடுகளில் வாழும் காட்டு ஆட்டின் பெயர் வரையாடு. அதைப் பாடநூல்களில் நீலகிரி தார் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இன்று அந்த மூலப் பெயர்கள் மறக்கப்பட்டு, பிரித்தானியர்கள் நம் காட்டுயிர்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய பொருத்தமில்லாத பெயர் களை நாம் உயிரினங்களுக்குச் சூட்டிவிட்டோம். பள்ளிப் புத்தகங் களிலும் அரசு ஆவணங்களிலும் வனத் துறையின் வெளியீடுகளிலும் உயிர்க்காட்சிச் சாலைகளிலும் பத்திரிகைகளிலும் இந்த மொழிபெயர்ப்புப் பெயர்களே இடம்பெற்றுவிட்டன. எடுத்துக்காட்டாக , காட்டில் வசிக்கும் king cobra என்றறியப்படும் உருவிலும் நீளத்திலும் பெரிய பாம்பிற்குத் தமிழ்ப் பெயர் கருநாகம். இதை மறந்துவிட்டு, அண்மையில் வந்த ஆங்கிலப் பெயரைத் தமிழாக்கம் செய்து ராஜநாகம் என்று வைத்துள்ளனர். அருவி என்னும் அழகிய சொல் மறைந்து நீர்வீழ்ச்சி நிலைத்து விட்டது போல.
பெயர்கள் மட்டுமல்ல... சூழலியல் பற்றிய அடிப்படைக் கருதுகோள்களுக்கான தமிழ்ச் சொற்றொடர்கள் என்ன? அவை பற்றிச் சிறுவர்களுக்கு எப்படி விளக்குவது? பன்னாட்டு மக்களையும் உலுக்கிக்கொண்டிருக்கும் climatechange பற்றி ஏன் தமிழில் ஒரு சொல்லாடல் உருவாகவில்லை? Sustainable development? Carrying capacity? Terminator technology? Desertification? Bio-diversity? உலகிலேயே பல்லுயிரியம் மிகுந்திருக்கும் 18 இடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கின்றது என்று எத்தனை பள்ளி
அகவிழி ( மார்ச் 2014
(30)

ஆசிரியர்களுக்குத் தெரியும்? சோலைமந்தி (சிங்க வால் குரங்கு), வரையாடு போன்ற மிகவும் அரிதான சில காட்டுயிர்கள் தமிழ்நாட்டில் உள்ளதை நம் குழந்தைகள் அறிய வேண்டாமா? சிலப்பதிகாரம், மணிமேகலை மட்டும்தானா நம் பாரம்பரியச் சொத்து? நம் காட்டுயிர்? அந்தப் பொருளைச் சார்ந்த மொழிவளம்?
நமது நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள், பழமொழிகள் இவற்றை வைத்துச் சுவைபடச் சூழலியல் கருத்தாக்கங்களைச் சிறுவர்களுக்கு விளக்க முடியும். "நுணலும் தன் வாயால் கெடும்” என்னும் பழமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு எத்தனை இயற்கைக் கூறுகள் பற்றிப் பேசலாம்? நீர்நிலைகள், தவளைகள், நீர்-நிலம்வாழ் உயிரிகள், பாம்புகள், இரைகொல்லிகள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அண்மையில் பள்ளிச்சிறுவர்களுக்கான காட்டுயிர் பற்றிய ஒரு க்விஸ் போட்டிக்கு நடுவராகச் சென்றிருந்தேன். ஆயிரம் சிறுவர்கள் பங்கேற்றிருந் திருப்பார்கள். யாவரும் ஆங்கிலப் பள்ளியில் படிப்பவர்கள். நம்மூர்ப் புலி, யானை பற்றி ஆங்கிலத்தில் படிக்கின்றார்கள். அதாவது இந்த விலங்குகள் இல்லாத ஒரு நாட்டின் மொழியில் அவற்றைப் பற்றிப் படிக்கின்றார்கள். தமிழில் யானை, புலி பற்றிய பழமொழிகள், அவற்றுக்கு இருக்கும் பல பெயர்கள், கவிதைகள், கதைகள் இவற்றை அவர்களறியமாட்டார்கள். எத்தகைய மொழி சார்ந்த வறுமை இது? ஒரு பெரிய மொழிப் பாரம்பரியமே இங்கு அழிந்துபோய்க்கொண்டிருக்கின்றது.
சிறுவர் கல்வி பற்றிப் பேசும்போது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்: "பள்ளிகளில் வருங்காலத் தலைவர்கள், விஞ்ஞானிகள் மட்டுமல்ல... வருங்காலத் திருட்டு வேட்டையாடிகள், சுற்றுச்சூழலை அழிப்பவர்கள், கனிமக் கொள்ளையர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், போதைமருந்து விற்பவர்கள், இதயமற்றவர்கள், மகிழ் வற்றவர்கள் எல்லாரும் இருக்கின்றார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்” என்றார். சுற்றுச்சூழல் பற்றிய பாடத் திட்டத்தை வகுக்கும் கல்வியாளர்கள் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேற்குறித்த கட்டுரை இந்தியாவில் தமிழ்நாட்டில் (மாநில அரசின்) கல்விக் கொள்கை வகுப்பாளர்களுக்கு மட்டும் பொருத்தமானதல்ல.
எமது நாட்டின் கல்விக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் கலைத்திட்ட தயாரிப்பாளர்களுக்கும் நூறு வீதம் பொருந்தும். சுற்றுச் சூழல் கல்வி பற்றி கவனம் எடுப்பார்களா எமது கல்வியாளர்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் முயற்சித்தால் நாடு வளம் பெறும்.

Page 33
பண்புக் கல்வி
நாம் செய்ய வேண்டியது என்ன?
Jyoti Kumta
இந்தியாவில் பண்புக் கல்வி ( Value Education - VE) பற்றிய செயல் திட்டங்கள் பெரும்பாலும் மதம் சார்ந்த அமைப்புகளினாலேயே தொடங்கப்படுகிறது. இருந்தாலும் அவைகள் எல்லாம் இயல்பாக மதச்சார்பற்ற, பொதுப் படையான பண்புகளான நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு, இரக்கம் போன்றவைகளுக்குத்தான் பிரதான முக்கியத்துவம் தருகின்றன.
சத்ய சாய் அமைப்பு, ராமகிருஷ்ணா மிஷன், ஆனந்த சங்கா, ஆர்ட் ஆஃப் லிவிங், பிரம்ஹ குமாரிகள், தி சின் மயானந்தா மிஷன் மற்றும் பல அமைப்புகள் தங்களுடைய பள்ளிக்கூடங்களிலோ அல்லது முறைசாரா அல்லது முறைசார்ந்த வகுப்புகளிலோ பண்பு பற்றிய கல்வியை

| |-- |-- | | |--
ஊக்குவிக்கிறார்கள். அரிச்சுவடியை விட குணத்தின் உருவாக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார் காந்திஜி. மதம் பற்றிக் கற்றுக் கொடுப்பது கல்வியினுடைய அங்கமாக இருக்க வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தர், பண்புகளைக் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம் எனக் கருதினார். ஆனால் நீண்ட ஆண்டுகளாகவே பண்பு பற்றிய கல்வி பின் தங்கி விட்டது.
சமீபகாலத்தில், சிபிஎஸ், மற்றும் என்சி, ஆர்டி. பாடத் திட்டங்களில் மீண்டும் பண்புக் கல்வியை - அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. என்சி, ஆர்டி 'நேஷனல் ரிசோர்ஸ் செண்டர் ஃபார் வேல்யூ எஜுகேஷன் (National Resource Centre for Value Education - NRCVE) என்ற மையத்தை 2000-மாவது ஆண்டில் நிறுவியது. 2002ல் இது நேஷனல் புரோகிராம் ஃபார் ஸ்ட்ரென்தனிங் வேல்யூ எஜுகேஷன் (National Programme for Strengthening Valure Education) என்ற தேசிய திட்டத்தை தொடங்கியது. இதனுடைய கவனமெல்லாம் மனிதப் பண்புகள் பற்றிய கல்வி சம்பந்தமாக விழிப்புணர்வை உருவாக்குவது, பாடங்களை மேம்படுத்துவது, ஆசிரியர்களுடைய பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிப்பது தான். பள்ளிக்கூட வகைமுறையில் பண்புக் கல்விக்கான வழிகாட்டுதல் மேம்படுத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் சிபிஎஸ், வாழ்க்கைத் திறமைகள் (Life Skills) பற்றிய பாடங்களை ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தியது. அதற்குப்பிறகு 2005ல் இது பத்தாம் வகுப்பு வரை நீடிக்கப்பட்டது. இப்பொழுது அவர்களிடம் இந்தப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கான பாடத் தொகுப்புகள் மட்டுமல்லாமல் அவர்கள் 'வேல்யூ பேஸ்ட் இண்டெக்ரேட்டட் லேர்னிங் (Value Based Integrated Learning - VBIL) என்கிற கோட் பாட்டையும் அறிமுகப் படுத்தினார்கள். இதில் அனைத்துப் பாடங்களும் சில 'பண்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. NRCVE அறி
முகப்படுத்தி 12 ஆண்டுகள் ஆன பின்பும், பள்ளிக்கூடங்கள் 2 வாரத்திற்கு இரண்டு பிரீயட்கள் வாழ்க்கைத் திறமை 2 பற்றிச் சொல்லித்தர வேண்டுமென்று சிபிஎஸ், உத்தரவு 2 அனுப்பி 7 ஆண்டுகள் ஆன பின்பும் அவைகள் செயல்
ழி | மார்ச் 2014 0
ரெடகாதுசன நூலகம்
கோரிப்பாசனம்.

Page 34
படுத்தப்படாமல் இருக்கும் நிலைதான் உண்மையில் காணப்படுகிறது.
சில பள்ளிக்கூடங்களில் இதை பண்புக் கல்வி என்றும், வேறு சிலர் வாழ்க்கைத் திறமைகள் என்றும், இன்னும் சிலர் ஆளுமை மேம்பாடு என்றும் அழைக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்கள் இந்த பாடத்திற்கென்று புத்தகங் களைப் பரிந்துரைத்து இருக்கின்றன. ஆனால் இசை, நடனம் அல்லது உடற்பயிற்சிக் கல்விக்கு இருப்பது போன்று இந்தப் பாடத்திற்கென்று பிரத்யேகமாக பயிற்று விக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லை. நான் பார்த்த வரைக்கும் எந்தப் பள்ளிக்கூடத்திலும் பண்புக் கல்விக்கு வாரத்திற்கு ஒரு வகுப்பிற்கு மேல் இருந்ததில்லை. இதற்கென்று எந்த பயிற்சியும் எடுக்காத ஆசிரியர்கள் இதைக் கற்பிப்பதால் அவர்கள் அவ்வளவாக இதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் இந்தப் பாடத்தைக் கற்பிப்பதற்கு சிபிஎஸ், எடுத்த முயற்சிகள் எதுவும் பெரும்பாலனவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலான ஆசிரியர் இந்தப் பாடம் கற்பிக்க வேண்டிய நேரத்தில் வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள். இந்த நிலையில், பண்புக் கல்வி கற்பிக்கும் வகுப்பு எப்படி பயன் உள்ளதாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியும்?
வாழ்க்கைத் திறமைகள், கருத்துக்கள் மற்றும் பண்புகள் ஆகியவைகளை எளிதாக மதிப்பீடு செய்வதற்கு சிபிஎஸ், விரிவான, தொடர் மதிப்பீடு - (Comprehensive and Continuous Evaluation) - செய்வதற்கான வழிமுறைகளை வகுத்திருக்கிறது. இதனுடைய இன்னொரு பக்கம் என்னவெனில் இந்த மதிப்பீட்டு முறை சில ஆசிரியர் களிடமும், பெற்றரெர்களிடமும் கோபத்தையும், பள்ளிக் கூடங்களில் பெரும் எதிர்ப்பையும் உண்டாக்கியது. வகுப்பு ஆசிரியர்களுக்கு, பெரும்பாலும் பாடம் கற்பிக்கும் போது, குழந்தைகளுடைய எதிர்வினை, நடத்தை, மறுமொழி போன்றவற்றைக் கவனிக்கவே நேரம் கிடைப்பதில்லை. காரணம் அவர்களுடைய கவனம் அனைத்தும் "கல்வியியலை கற்பிப்பதில் தான் இருக்கும். ஆகவே மிகவும் விரிவான மதிப்பீட்டுத் தாளை நிரப்புவது மிகவும் பெரிய வேலை. மேலும், பெற்றரெர்கள் ஆசிரியர்களின் மதிப்பீட்டில் குறை கண்டு, மாணவர்களுடைய அறிக்கைகள் ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் இருப்பதாகவும் கேள்வி எழுப்புவதாகவும் தெரிகிறது.
வாழக்கைத் திறமைகள் அல்லது பண்புக் கல்வி பற்றி பிரத்யேகமாகப் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள் குழந்தைகளை ஒரு முறையான சூழ்நிலையில் கவனித்துத் தங்களுடைய கருத்துக்களைக் கூறினால் அதற்கு மதிப்பு இருக்கும். மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்சி யளிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருக்கும் போது இந்தப்
2014 மார்ச்
அகவிழி
32

பண்புக் கல்வி கற்பிப்பதற்கும் தகுந்த பயிற்சி பெற்ற
ஆசிரியர்கள் ஏன் இருக்கக்கூடாது?
பெரிய தலைவர்களும், தத்துவஞானிகளும் பல நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்த ஆலோசனையை நாம் ஏன் பின் பற்றி செயல்படக்கூடாது? கல்வியை விட குணத்தை உருவாக்குவதற்கு ஏன் முன்னுரிமை அளிக்கக் கூடாது? இந்த மாற்றத்திற்கு ஆண்டுகள் பல ஆகலாம். ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஆசிரியர் களுக்குப் பண்புக் கல்வி குறித்து பயிற்சியளிப்பது தற்போது உள்ள
இடைவெளியை நிரப்ப உதவக்கூடும்.
ராணுவ மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பண்புக் கல்வி வாழ்க்கைத் திறமை களுக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் (அல்லது முக்கியத்துவக் குறைவு) முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது.
பண்புக் கல்வி இசை
ஆங்கிலம்
வாழ்க்கைத் உடற்கல்வி
திறமைகள்
ஒரு வாரத்திற் கான வகுப்புகள்
1.2
அதிகபட்சம் 1
இல்லை
உண்டு
இல்லை
உண்டு
உண்டு
இல்லை
உண்டு
உண்டு
இல்லை
முறையான பாடத்திட்டம் ஆசிரியப் பயிற்சி பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆசிரியர் பாடத்தில் ஆசிரியருடைய ஈடுபாடு பள்ளிக்கூடத்தில் பரவல்
உண்டு
உண்டு
இல்லை
இல்லை
உண்டு
இல்லை
என்சீ, ஆர்டி மற்றும் சிபிஎஸ், இது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் முதல் கட்டமாகத் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்கள் பண்புக் கல்வி வாழ்க்கைத் திறமைகள் குறித்து கற்பிக்குமாறு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
பண்புகளைக் கற்று கொடுக்க முடியுமா?
நமது நாட்டின் இன்றைய பொது வாழ்க்கையில், ஊழல், வன்முறை மற்றும் சகிப்புத்தன்மையின்மை போன்றவைகள்

Page 35
அதிகரித்துக் கொண்டுவரும் நிலையில், பண்புகளைக் கற்பிப்பதற்குக் கல்வியாளர்கள் தீவிரமான முயற்சி எடுப்பதற்கு இது சரியான நேரமில்லையா? இதற்குப் பெரும்பாலோர், பண்புகளைக் கற்றுக் கொடுக்க முடியாது அது தன்னாலேயே வரவேண்டும் என முதல் எதிர்ப்புக் குரல் கொடுப்பார்கள். என்னுடைய கருத்து என்னவெனில், பெரும்பாலும் அது தன்னாலேயே வரக் கூடியதாக இருந்தாலும், அதைக் கற்பிப்பதும் அவசியம் என்பதுதான். பண்புகளைக் கற்பிப்பவர்கள் அவைகளைக் கடைப்பிடித்து அவர்களே உதாரணமாகத் திகழ்பவர்களாக இருப்பது சிறப்பானதாகும். அதிர்ஷ்டவசமாக, சிறந்த இந்தியக் கலாச்சாரத்தில் நமக்கு மத்தியிலேயே முன் மாதிரியாக இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் தேடிக் கண்டறிய வேண்டும்.
என்னுடைய நோக்கில் பண்புகளை எப்படி மூன்று வித்தியாசமான கண்ணோட்டங்களிலிருந்து தர்க்கரீதியாக, தத்துவரீதியாக, அறிவாற்றல் ரீதியாக - கற்றுக் கொடுக் கலாம் என்பதை இங்கு விளக்க முயற்சிக்கிறேன்
தர்க்கவியல் கண்ணோட்டம்: கற்றுக்கொடுத்தல் என்பது வழி முறையைச் சொல்வது அல்லது ஞானத்தை அல்லது திறமையைப் புகட்டுவதுதான் என்றால், அதைக் கலந்துரை யாடல், பரிசோதனைகள், சொற்பொழிவுகள், விளக்க முறைகள் மாதிரிகள், கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது போன்றவைகள் மூலம் ஏன் பண்புக்கல்வி வாழ்க்கைத் திறமைகளைச் சொல்லிக் கொடுக்க முடியாது? ஞானத்தின் உள்ளடக்கம் நேர்மை, மரியாதை, இரக்கம் போன்ற அனைத்திற்கும் பொதுவான கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் போது, அதைக் கற்பிக்கும் வகை முறைகளும் மற்ற பாடங்களைக் கற்பிப்பது போன்றே இருக்க வேண்டும்.
கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள். பண்புகள் உட்பட அனைத்துப் பாடங்களையும் சொற்பொழிவு முறையில் கற்றுக் கொடுக்க முடியுமா?
உரையாடல்கள் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்க பயன்படுமா?
பண்புகள் உட்பட அனைத்துப் பாடங்களையும் அனைத்து வகை முறைகளாலும் சொல்லிக் கொடுக்க முடியும். வகை முறையின் விகிதாச்சாரம் தான் மாறும். சமூகப் பாடங்களுடன் ஒப்பிடும் போது நடனம் அல்லது இசையை அதிக நேரம் விளக்கமுறையிலும், குறைந்த நேரம் கலந்துரையாடலிலும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆங்கிலப் பாட ஆசிரியர் பயனுள்ள வாராக இருக்க வேண்டுமெனில் தெளிவாகப் பேச வேண்டுமோ அது போலப் பண்புகள் பற்றிக் கற்றுக் கொடுப்பவர் ஒரு சிறந்த முன் மாதிரியாகச் சொல்வதைச்

செய்பவராக இருக்க வேண்டும். இதை வேறு வார்த்தை களில் சொல்வதானால், முன் மாதிரி எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டும்.
புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில், பரிசோதனை மற்றும் செய்முறைப் பயிற்சி அவசியம். அதே போல், வாழக்கையின் விதிகள் சோதனை முறையில் பயிற்சியாக கடைப்பிடிக்கப்பட்டால் ஒழிய, பண்புகளையும் மனதில் பதியும் படி கற்பிக்க முடியாது. எல்லாவகையான வகைமுறைகளை உபயோகித்தாலும் பண்புகளைக் கற்றுக் கொடுப்பதற்குச் செய்துகாட்டுதல், கலந்துரையாடல், பயிற்சி போன்றவைகள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும்.
ஆங் சமூகக் உடற் இசை பணிபு
கணககு e o கிலம் கல்வி கல்வி நடனம் கள்
சொற் - -
ஆம ஆம 39!, LD é993, LD <92!,LD <99!,LD பொழிவுகள்
செய்து - -
- e9!,LD 9%y,LD e9ğ, LD 99!, LD || 394,LD 39!,LD காட்டுதல்
கலந்துரை - - -
o 9, D eg94, LD ஆLD ՑԵԼՔ e94, LD es32,LD ULTL6)
விளையாட்டு
செயல் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
பாடுகள்
LJuilpbijl ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
தத்துவக் கண்ணோட்டம் கற்பிப்பது பற்றி பெரிய விஞ்ஞானி களும், தத்துவஞானிகளும் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்ப்போம்
பூர் அரவிந்தர் : கற்பித்தலின் முதல் கொள்கை என்ன
வெனில் எதையும் கற்பிக்க முடியாது
சுவாமி
விவேகானந்தர் : ஒருவருக்கு மற்றவர் உண்மையிலேயே கற்றுக் கொடுக்க முடியாது. ஒவ்வொரு வரும் அவர்களாகவே கற்றுக் கொள்ள வேண்டும். வெளியிலுள்ள ஆசிரியர் ஆலோசனையை மட்டும் தான் தருவார். அது உள்ளுக்குள் இருக்கக் கூடிய ஆசிரியரை வேலை செய்யத் தூண்டி விஷயங்களைப் புரிந்து கொள்ளச் செய்யும்
சாக்ரடீஸ் நான் யாருக்கும் எதுவும் கற்றுக் கொடுக்க முடியாது. நான் அவர்களை சிந்திக்க வைக்கத்தான் முடியும்
கலிலியோ நீங்கள் மக்களுக்கு எதையும் கற்பிக்க முடியாது. அதை அவர்கள் அவர்
坐 $ 鸟 Sせ。
S S NSR o } N) Ο خسH ܠܛ

Page 36
སྒོ་ང་
Ο CN olib བྲོ་ Ց
Ca
as
களாகவே கண்டுபிடித்துக் கொள்ள மட்டும் தான் உங்களால் உதவி செய்ய முடியும்
ஐன்ஸ்டீன் : நான் என் மாணவர்களுக்கு ஒருபோதும் கற்றுக் கொடுத்தது இல்லை. நான் நிலைமைகளை மட்டும் தானி அவர்களுக்கு அளிக்க முயல்கிறேன். அவர்கள் அதிலிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆக, இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் போன்ற பெரியவர்கள், எதையும் கற்றுக் கொடுக்க முடியாது கற்றுக் கொள்ளத்தான் முடியும் என்கிறார்கள். என்றாலும், கற்றுக் கொள்வதற்கான செயல்முறைகளை ஆசிரியர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். கணக்கு, அறிவியல், ஆங்கிலம், இசை அல்லது பண்புகள் எதுவாக இருந்தாலும் வகைமுறைகள் ஒன்றுதான். ஆசிரியகளுடைய பொறுப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் நல்ல முன்மாதிரியான ஆசிரியர்களின் தேவை மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
அறிவார்ந்த கண்ணோட்டம்; எதையும் கற்றுக் கொள்ளதா வரை அதைக் கற்பிக்க முடியாது என சொல்லப்பட்டது. ஆகையால் அறிவியல் விஞ்ஞானிகள், கற்பித்தல் என்பது எப்படி நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தினார்கள். நடைமுறையில பாரம்பரியமான சொற்பொழிவு முறை கற்பித்தலுக்கு பயனற்றது என்பதுடன், செய்துகாட்டுதல், கலந்துரையாடல் மற்றும் செய்தல் போன்றவைகள் தான் சிறப்பாக கற்றுக் கொள்வதற்கு சக்தி வாய்ந்த சாதனமாகும் என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்றல் பிரமிடு (Learning Pyramid) தெளிவாகக் காண்பிக்கிறது.
பண்புகளைக் கற்பிப்பதற்கு நான் கலந்துரையாடலைக் காட்டிலும் செய்து காட்டுதலைத்தான (ஒரு கதாபாத்திர மாகவே மாறி நடிப்பது) தேர்வு செய்வேன். இருப்பினும், அடுத்தவர்களுக்குக் கற்பிப்பதுதான் சிறந்த கற்றலாகக் கருதவேண்டும் என்பதையும் இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இது பண்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பாலனோர் பயன் பெற வழிவகுக்கும். ஆகையால் முறைப்படி விருப்பம் மற்றும் திறமை உள்ள ஆசிரியர்களை குறிப்பாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகு, அவர்கள் மூலம் பண்புகளை சிறந்த வழிமுறையில் கற்பித்தால், அது நிரந்தரமான நன்மைகளை ஏற்படுத்தும். மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பயன் பெறுவார்கள். இதனால் கூடுதலான தொடர் விளைவு (domino effect) ஏற்படக்கூடும்.
 

உண்மையில் பிரச்சினை என்பது பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி இருக்கக் கூடாது. நவீன கற்பித்தல் வகைமுறைகள் மூலம் பண்புகளைப் பற்றிக் கற்றுக் கொடுக்க நல்ல முன்மாதிரியாக உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில்தான் கவனமெல்லாம் இருக்கவேண்டும். இதனால் குழந்தைகள் வாழ்க் கையில் தங்களுக்கான சிறந்தவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வதற்கு உதவும்.
செய்முறைப் பயிற்சி
மற்றவர்களுக்கு கற்பிப்ப
Source: National Training laboratories, Bethel, Maine
நவீன வாழ்க்கையின் எதிர்மறையான செயல் விளைவுகளை எதிர்கொள்ளுவதைச் சமாளிப்பதற்காக பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து செயல் படுவதற்கும், குழப்பமான மற்றும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் கலந்துரையாடுவதற்கு சிறந்த ஆசிரியர்கள் அமைத்துக் கொடுப்பதற்கும், நாம் ஒப்புக்கொண்டால், அதுவே நாம் எடுத்து வைக்கும் முதல் அடியாகும். பண்புக் கல்விக்கு வாரத்திற்கு ஒரு வகுப்பு ஏற்கனவே அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளது. இதை மிகவும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு தற்சமயம் இருக்கக்கூடிய ஆசிரியர்களிலேயே அவர்களுடைய திறமை, விருப்பம் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களுக்கு நன்கு பயிற்சியளித்து, இருக்கும் திறமைகளை சிறந்த முறையில் ஏன் உபயோகிக்கக்கூடாது? பண்புக் கல்வி வகுப்புகளை ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் வகுப்புகளாக ஏன் நாம் உருவாக்கக்கூடாது?

Page 37
56ò6$ìỦ LJGơốìUITGIj GFGOL
கல்விக் கொள்கையை மிகுந்த செயற்றிடனுடன் மற்றும் பயன்மிக்கதாக அமுல்படுத்தி முன்னெடுப்பதற்காக தகைமைகள் மற்றும் அனுபவங்கள், திறமைகளைப் போன்று சிறந்த மக்கள் சேவைகளுக்காக அர்ப்பணிப்புச் செய்யும் பணியாளர் சேவைகளை முன்னெடுப்பதும் அத்தியவசியமான விழுமியங்கள் ஆகும். அவ்வாறிருந்த போதிலும் கடந்த காலங்களை நோக்கும் போது கல்வித் துறையின் பணியாளர் சபைகளின் தொழில்சார் விருத்தி மற்றும் தொழிலுக்கான பதவியுயர்வுகள், இடமாற்றங்களுக்காக தெளிவான மற்றும் விரிவான வேலைத்திட்டங்கள் இன்மையும், பன்முகப்படுத்தப்பட்ட அலுவலகங்களும், கல்வி முறைமையை அவ்வவ் மட்டங்களுக்கு ஒப்படைக்கும் பணிகள் மற்றும் அவ்வப் பதவிகளின் செயற்பாடுகளைச் சித்தரித்துக் காட்டுவது தொடர்பான தெளிவுகள் இன்மை நீண்டகாலமாக புதிய நியமனம் மற்றும் பதவியுயர்வுகள் உரியவாறு மேற்கொள்ளப்படாமை மிகவும் பாரிய மற்றும் வினைத்திறன், தகைமைகள் கொண்ட உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை போன்றவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது கொள்கை அடிப்படையிலான தேவையாகும்.
கல்விக் கொள்கை எம்முறையில் நவீனமயப்படுத்தப்பட்ட போதிலும் ஆசிரியரின் தரத்தினைக் கட்டியெழுப்பாது பயன்மிக்க மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெறுவது கடினமாகும் . இதனால் கட்டாயமாக ஆசிரியர்களின் தொழில்சார் விருத்தி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படல் வேண்டும். பட்டதாரிகளை மாத்திரம் இணைப்புச் செய்ய தொழில்சார் தகைமை கொண்ட திறமைமிக்க ஆசிரியர்களைக் கட்டியெழுப்புவது ஆசிரிய கொள்கையின் நோக்கமாகும். அத்துடன் இலங்கை ஆசிரியர்களுக்காக இது வரையில் கைநழுவிப்போன ஆசிரிய தொழில்சார் பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்ட விழுமிய முறைகள் வகுக்கப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கை ஆசிரிய சேவை, இலங்கை அதிபர் சேவை, கல்வி ஆசிரிய கல்வியியலாளர் சேவை, மற்றும் கல்வி கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து கல்விப் பணியாளர் சபையின் சேவையில் வினைத்திறன் மற்றும் திருப்திகரமான
 

சேவைகளாக மாற்றியமைக்கும் நோக்குடன் கீழ்க் குறிப்பிடப்பட்ட யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆசிரியர் கல்வி
உயர் செயற் சாதனை, தேர்ச்சி மற்றும் ஒழுக்க விழுமியங்கள், ஆக்கத்திறன், தொழில்சார் தரங்கள் ஊடாக ஆசிரியர்களைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு ஆசிரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரிய கல்வி வேலைத்திட்டங்களை திட்டமிடல், அபிவிருத்தி செய்தல், இணைப்பு, தகவல்களை வழங்குதல், மதிப்பீடுகளை மேற்கொள்ளல், மேற்பார்வை, தரச் சான்றிதழ் ஆகியவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஆசிரிய கல்விச் சபையை தேசிய கல்வி நிறுவகத்தில் உருவாக்கி முன்னெடுக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சகல ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற கொள்கைத் தீர்மானத்தை எட்டி அதனை எட்டுவதற்குத் தேவையான சகல செயற்பாட்டுத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். தற்போது பாட சாலை முறைமையில் உள்ள ஆசிரியர்கள் உரிய பட்டத்தைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். ஆரம்பப் பிரிவு உட்பட முழுமையான கல்விக்காக சேர்த்துக்கொள்ளும் சகல ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். விசேடமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பொருத்தமான டிப்ளோமாதாரர்களை ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ள இடமளிக்க வேண்டும். இருப்பினும் உரிய கால எல்லைக்குள் இவர்களை பட்டதாரி என்ற தரத்திற்கு மாற்றியமைப்பது தேசிய கல்வி நிறுவகத்தின் பொறுப்பாகும்.
தேசிய கல்விக் கல்லூரிகளின் பாடநெறிக் கால எல்லையை நான்கு வருடங்கள் வரை நீடித்து அதனை பட்டப் பாடநெறியாக மாற்றியமைக்க வேண்டும். நாட்டுக்குத்
தேவையான ஆசிரியர்களை தேசிய கல்விப் பீடங்கள் ஊடாக விருத்தி செய்ய வேண்டியதுடன் அப்பட்டப்
坐
9.
鸟
$ଞ
S
SAB
VSR» Qgo N) Ο ط ܠܛ

Page 38
རང་
O CN
•፥b 宙 S.
Cas 영
$
9.
பாடநெறிகளுக்கு சேர்த்துக் கொள்வது "இஸட் புள்ளிக்கமைய இருக்க வேண்டும். கல்விக் கல்லூ ரிகளுக்காக விசேட பட்டப் பாடநெறியை ஆரம்பித்து தேவையான ஆரம்பப் பிரிவுப் பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்.
நாட்டின் பாடசாலைகளில் உயர்தரம் வரை சகல பாடங்களையும் கற்பிப்பதற்காக பல்வேறுபட்ட தேவைகளையும் இனங்கண்டு அவற்றுக்கு ஏற்றவாறான பல்வேறு பிரிவு மற்றும் பாடங்கள் சார்ந்த பட்டதாரி நிபுணத்துவ ஆசிரியர்களை விருத்தி செய்யக் கூடியவாறு கல்விக் கல்லூரிகளின் பாடவிதானங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி விருத்தி செய்யப்படல் வேண்டும். ஆரம்பக் கல்விக்காக பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது எதிர்காலத் தேசிய பொறுப்பாகக் கருதித் திட்டங்களை வகுக்க வேண்டும்.
ஆங்கில ஆசிரியர்களுக்கு மேலதிகமாக ஏனைய சகல ஆசிரியர்களையும் ஆங்கில தேர்ச்சி கொண்டவர்களாக மாற்றியமைக்கும் கிரமமான வேலைத்திட்டங்களை வகுத்து அமுல்படுத்த வேண்டும். கல்விக் கல்லூரிகளின் சகல பாடநெறிகளுடனும் அதியுயரிய மட்டத்துக்கு ஆங்கிலப் பாடத்திட்டம் உள்ளடக்க வேண்டும்.
பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரிய தொழிலுக்குச் சேர்த்துக் கொள்ளும் போது
தேசிய கல்வி நிறுவகத்தினால் வகுக்கப்படும் மூன்று மாதங்களை விட மேற்பட்ட முழுநேரப் பயிற்சிப் பாடநெறியைத் தொடர்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஆசிரிய கல்வி மற்றும் தொடச்சியான ஆசிரிய அபிவிருத்திகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் தேவையான மானிட மற்றும் பெளதீக வளத்தினைக் குறைவின்றி வழங்க வேண்டும்.
தேசிய பல்கலைக்கழக முறைமை மூலம் ஏற்கனவே வழங்கப்படும் ஆசிரியர் கல்வி கெளரவிக்கப்பட வேண்டியதுடன் அது அமைச்சின் எல்லை மட்டத்துக்கு அப்பால் நிபுணத்துவ ஆசிரிய கல்வித் தகைமைகளை விருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
சகல ஆசிரியர்களுக்கும் சுய விருத்திக்காக பலமுடன் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக தமது அறிவினை இனங்கண்டு புதிய விடயங்கள் மற்றும் தற்போதைய புதிய முன்னேற்றங்களை ஆய்வுக்குட்படுத்தி வளம் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும். ஆங்கில அறிவு மற்றும் கணினி அறிவை ஆசிரியர்களுக்கு வழங்குவது அத்தியவசியமாகும்.
பாடசாலையில் தொடர்ச்சியான ஆசிரிய விருத்திக்காக கிரமமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
 

இதன் போது ஆசிரிய விருத்தி, பாடவிதான விருத்திகள் இணைக்கப்படல் வேண்டும். ஆசிரிய ஆலோசர்களுக்கு பாடசாலை சார்ந்த ஆசிரிய விருத்தி மற்றும் மேற் பார்வைகளுடன் தொடர்புபட்ட கணிசமான பணிகளை மேற்கொள்ள முடியும். பாடசாலை அனுபவம் மிக்க சிரேஷ்ட ஆசிரியர்கள், புதிய ஆசிரியர்களை விருத்தி செய்யக் கூடிய அனுசரணையாளர்கள் (Mentors) நியமிக்கப்படல் வேண்டும்.
வருடத்துக்கு இரு தடவையேனும் ஆசிரியர்கள் பாடசாலைக்குப் புறம்பான கட்டாய மீள் பயிற்சிகள் ஈடுபடுத்தப்படல் வேண்டும். இதற்காக ஆசிரிய கல்லூரிகள் மற்றும் ஆசிரிய மத்திய நிலையங்களைப் பயன்படுத்த முடியும்.
பாடசாலைக்கு வெளியே மேற்கொள்ளப்படும் மீள் பயிற்சிகள் பாடசாலைக் காலத்துக்குள் மேற்கொள்ளப்படாது இருக்க வேண்டும்.
இதன் மீள் பயிற்சி வேலைத்திட்டங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றை நடாத்துவது ஆசிரிய ஆலோசகர்களின் தொழில்சார் பொறுப்புக்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களின் விருத்தி மற்றும் பயிற்சிகளுக்கு இணைவாக தொடர்ச்சியான செயற்பாட்டு மதிப்பீடுகள் ஊடாக அவர்களின் தொழில்சார் தரம் மற்றும் சம்பள அதிகரிப்புக்கான முறைகளை வகுத்து அவர்களின் விருத்திக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.46
ஆசிரிய தொழிற்துறையில் சரியான முறையில் ஈடுபடாதவர்களை ஆசிரிய தொழில் இருந்து நீக்கி வேறு பொருத்தமான அரச துறையில் இணைப்புச் செய்யும் முறைகள் வகுக்கப்பட வேண்டும்.
ஆசிரிய ஒழுக்க விழுமிய முறைமைகள்
தாபிக்கப்படும் கல்வி கவுன்சிலின் ஏற்பாட்டில் அல்லது ஏனைய பொருத்தமான குழுவின் உதவியுடன் ஆசிரிய ஒழுக்க விழுமிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
இவ் ஆசிரியர்கள் ஒழுக்க முறைமையில் ஆசிரியரின் சகல செயற்பாடுகளையும் உள்ளடக்க வேண்டும். இதன் ஊடாக தொழில்சார் மட்டத்திற்கு மேம்படுத்தக் கூடியவாறு இருக்க வேண்டும்.
ஆசிரிய கல்வியியலாளர்களின் தொழில் சார் அபிவிருத்தி
எதிர்காலப் பட்டதாரிகளை தொழில்சார் ஆசிரியர் களாக உருவாக்குதல் மற்றும் பயிற்சியளிக்க பங்களிப்புச் செய்வோரக ஆசிரிய கல்வியியலாளர்களின்

Page 39
செயற்பாடுகளை மீள வரைவிலக் கணப் படுத்தி அந்நிலைமையினைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிரிய கல்வியியலாளர்களை அபிவிருத்தி செய்து தகைமைகளை வழங்கி பயிற்சிகளை வழங்க வேண்டும்.
ஆசிரிய கல்வியியலாளர்களின் ஆசிரிய தொழில்சார் மட்டம் மற்றும் தகைமையினை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழில்சார் மட்டத்திற்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரி மற்றும் தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றின் மூலம் கல்விமானி மட்டத்திற்கு விசேட பட்டப்பின் பட்டத்தை திட்டமிட்டு அமுல்படுத்த வேண்டும்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் தொழில்சார் அபிவிருத்தி அதிபர் சேவையின் பதவியுயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு உரிய தகைமை பயிற்சி மற்றும் அனுபவத்திற்கு அமைய உரிய முறைக்கு பகிர்ந்தளிக்க சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலை முகாமைத்துவத்தை பன்முகப்படுத்தக் கூடியவாறு அதிபர் தலைவரைப் போன்று முகாமை யாளராகவும் பலப்படுத்தப்பட வேண்டும்.
கொடுமை
வெவ்வேறு பிரச்சின் பண்பாடுகளைச் துவடிபி சேர்ந்த, வெவ்வேறு மொழிகள் பிரச்சினைகள் பேசுகின்ற, லிருந்து சகல வெவ்வேறு தேவைகளைக் களையும்
கொண்ட பிள்ளைகள் அடங்குவர்
பிள்ளையின் கற்றலில் குடும்பமும் சமுதாயமும்
ஆசிரியரும் செயல்ரீதியில்
தொடர்புறுவர்
ஆண்-பெண் என்ற பாலியல் காரணமாக எவ்வித
வேறுபாடு காட்டல்களுக்
கும் ஆளாவதில்லை.
கற்றல்-கற்பித்தல் செயன்முறை,
ஆசிரியரது விருத்திக்கு
பங்களிக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவையின் தகைமை மட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்கள் தாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமநிலைப்படுத்தி முகங்கொடுக்கக் கூடியவாறு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக மீபே தலைமைத்துவ பயிற்சி மத்திய நிலையத்தை உயர்ந்த பட்சம் பயன்படுத்த வேண்டும்.
மூன்று மாதத்துக்கு மேற்பட்ட காலம் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர்கள் பயிற்சிக்காக செலவாகும் நிதிக்கு அமைவாக சேவை உடன்படிக்கை அல்லது பிணையில் ஒப்பமிட வேண்டும்.
கல்வித் துறையின் மானிட விருத்திக் குரிய முழுமையான தகவல் முறைமை தாபிக்கப்பட வேண்டும்.
கல்விப் பணிப்பாளர் சபை தொடர்பான மேற்குறித்த விடய"கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது இதற்கு முன்பு இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்து நடைமுறைப்படுத்தப்படாமல் நின்று போனது போல் இதுவும் கிடப்பில் போடப்படுமா? என்பதை அகவிழி தனது பார்வையைச் செலுத்தும்.
நன்றி: கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழுவுக்கான அறிக்கை
>ப்படுத்தல் னைகள்,
ரயோக
ஆகியவற்றி பிள்ளைகளின் நாளாந்த பிள்ளை வாழ்க்கைத் பாதுகாக்கும் தேவைகளுக்கு ஏற்பக்
கற்றலை நடைமுறைப்படுத்தும்,
பங்குபற்றுகையும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் விருத்தி செய்யும்
ருத்தல்
ஆரோக்கியமான வாழ்க்கைத் திறன்களையும் வாழ்க்கைக் கோலங்களையும் விருத்தி
செய்யும்,
பிள்ளைகளின் பல்வகைமைக்கு மதிப்பளிக்கும், 6)66) aboup6 bus ஏற்று கற்றலுக்கு ஊக்கமளிக்கும்.
9、 鸟 SS
S SAR
Qg• N) Ο طH ܠܛ

Page 40
ৎ
H O CN
•tb
- S
3. 甲 $
வாழ்வும் பிள்ளையும்
அதிபரொருவரிடமிருந்து
நான் ஆசிரியராக இருபது வருடங்கள் கடமையாற்றினேன். அதிபராக பதினேழு (17) வருடங்கள் கடமையாற்றினேன். என்னிடம் 37 வருட கல்வித்துறை அனுபவமுண்டு. இவ் 37 வருடங்களினுள் புதுமை தரும் வகையில் என்னை அதிரவைத்த அனுபவமொன்றும் துண்டு. அவ் அனுபவம் எனது முன்னேற்றத்திற்கு அல்ல ஈடேற்றத்திற்கு காரணமாயமைந்துள்ளது. புதிய பெற்றோருக்கு இவற்றைக் கூறும்படி என்மனம் தூண்டுகின்றது.
நான் ஒருநாள் பிற்பகலில் எனது காரியாலயத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது பன்னிரண்டு வயது மதிப்பிடக் கூடிய ஒரு பிள்ளை என்னிடம் வந்தது. பொதுவாக சிறுபிள்ளையொன்று தனியே என் அலுவலகத்திற்கு வருவதில்லை அப்பிள்ளையின் முகம் வேதனையால் நிரம்பியிருந்தது கண்களில் கண்ணிர் நிறைந்த அச்சின்னஞ்சிறு முகம் எனது மூத்த மகனின் சிறு பராயத்தை ஞாபகப்படுத்தியது. நான் கதிரையிலிருந்து எழுந்தேன்.
"மகன், ஏதும் பிரச்சினையா? சிறுவன் அழத் தொடங்கினான். நான் அவனின் தலையைத் தடவினேன். அவன் ஏங்கித்தவிக்கும் போது அவனது சிறு உடல் நடுங்குவதைக் கண்டு கதிரையில் அமர வைத்தேன்.
"மகன் சாப்பிட்டீங்களா?”
"ஏன் இன்னும் வீடு செல்லவில்லை”
சிறுவன் பெரியதொரு பெருமூச்சை விட்டான். அதிர்ச்சி யடைந்து காரியாலத்தின் கதவின் பக்கம் பார்த்தான். பதில் அதிபர் காரியாலயத்தினுள் நுழைந்தார்.
பதில் அதிபர் ஓர் அம்மையார். உண்மையாகவே அம்மாவைப் போன்ற ஆசிரியையாக என் கெளரவத்திற்கு ஆளாயிருந்த அவ் அம்மையார் அச்சந்தர்ப்பத்தில் வருகை தந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். அந்நிகழ்வு அதிசயமாய் அமைவதற்கு"
"இந்தச் சிறுவனுடன் சற்று பேச முடியுமா டீச்சர்?"
"முடியும் சேர்"
 
 

"என் அருமை மகனே உன் மனதில் உள்ளவற்றை யெல்லாம் இந்த டீச்சரிடம் சொல், நாங்கள் உன்மீது மிகுந்த பாசம் உடையவர்கள். உனக்காக எதைச் செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்று கூறிவிட்டு நான் சற்று அப்பாற் சென்று சிறுவன் காணாதபடி ஒதுங்கி நின்றேன்
பதிலதிபர் சிறுவனருகே வர்ந்தார். சிறுவன் அவரின் பால் நோக்கிய பார்வை இன்றும் என்மனதில் அகவிழியில் தோன்றுகின்றது. அவ்வாறானதொரு அப்பாவித் தனமான பார்வையை இதற்கு முன்னர் ஒருபோதும் நான் பார்த்ததில்லை.
"மகன், ஏன் அழுகிறீர்?"
சிறுவனின் முகம் கலக்கமடைந்தது பதிலதிபர் சிறுவனை இன்னும் அண்மித்தார்.
"மகனுக்கு, யாரும், ஏதும் சொன்னார்களா?”
ஆம், தொடர்ந்து சொல்கிறார்கள்
“山町前?” வகுப்பு மாணவர்கள்
“என்ன சொல்கிறார்கள்"
எனது அப்பாவுக்கு மாற்றுமனைவி இருக்கிறாளாம்.
"அது உண்மையா?”
நான், சிறுவனும் பதிலதிபரும் அமர்ந்திருக்குமிடத்திற்குச் சென்றேன். சிறுவன் என்னை நோக்கியவாறு பேசத் தொடங்கியது பசிந்திருந்தவருக்குக் கிடைத்த சுவையான உணவை ஆர்வமாய் அருந்துவது போன்றதாகும்.
“எனது அப்பா மிகவும் மோசமானவராம், வேறோரு பொம்பள இருக்கிறாவாம். அவளின் பிள்ளைகள் மீது பாசமாம், அப்பா, அம்மாவை வீட்டிலிருந்து விரட்டப்போறாராம்."
"மகன், அக்கதையை நம்புகிறீரா"
நான் அக்கதையைக் கேட்க விரும்பவில்லை
"மகன், அப்பாவுடன் பாசமா?"

Page 41
ஆம் "மகன் அம்மாவுடன் பாசமா?”
ஆம்,
ஆனால் அம்மாவும் அப்பாவும் சண்டை பிடிப்பினம்.
"மகன், ஏன் அதிபரை சந்திக்க நினைத்தீர்?”
என் அப்பா கெட்டவரா? எங்களை விட்டுப் போய் விடுவாரா? பிள்ளைகள் கேலிபண்ணுவது உண்மையா?
நான் தனியானேன். பதிலதிபர் தனது (saree) சேலை ஓரத்தால் அவனின் கண்களைத் துடைக்கிறார். நான் மனதைப் பலப்படுத்திக்கொண்டேன். நான் (அதிபர்) சிறந்ததொருதகப்பன். மனதினுள் முனுமுணுத்தேன். சகல கடவுள்களினதும் ஆசியை வேண்டி நின்றேன்.
"மகன் ஒன்றுக்கும் பயப்படாதீர். ஒவ்வொருவரினதும் போலியான தகவல்களை நம்பவும் வேண்டாம். உன்ட அப்பா நல்ல மனிதர். நாங்கள் அப்பாவுடனும் அம்மாவுடனும் கதைக்கிறம். மகனுக்கு எம்மீது நம்பிக்கைதானே?
"ஆம். எனக்கு விசுவாசம்”
சிறுவனை வீட்டிற் கனுப் பினோம் . எந் தச் செயல்பாட்டையும் பிற்படுத்தும் (Procrastination) பண்பு என்னிடம் கிடையாது சிறுவனின் அப்பா பணிபுரியு மிடத்திற்குக் சென்றேன். எனது வருகையினால் அவர் மனம் மகிழ்ந்தார். மரியாதையாய் வரவேற்றார். நான் எனது வளர்ந்த மாணவருடன் கதைக்கும் பாணியில்
அவருடன் கதைத்தேன்.
அவரிற்கு கதைக்க இடம்கொடாமல் கதைத்தேன். மிகவும் கருணையுடனும் மனவெளுச்சியுடனும் (Emotion) கதைத்தேன். அவர் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து முடியுமானளவு ஆளுமை முதிர்வு பெற்ற,
அறிவாற்றற்படுத்தும் பாணியில் கதைத்தேன்.

“நீர் பிறிதோரு பெண்ணுடன் தொடர்புள்ளவரா?”
“நான் உம்மை மதிக்கிறேன். உமது உயர்நிலையை மதிக்கிறேன். நீர் எனது மகன் படிக்கும் பாடசாலையின் அதிபர் மாத்திரமே. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட உமக்கு எந்த உரிமையுமில்லை. தயவுசெய்து இவற்றில் தலையிடவும் வேண்டாம்.
நான் மௌனமானேன். சிறு பொழுது கரைந்தோடியது. அவரும் மௌனமாய் நிலத்தைப் பார்த்தவராய். நான் வேறு வழியில் அணுகினேன்.
"மகன் உம் மை ஒரு கெட்டவராக நான் நோக்கவில்லை. முக்கியமான ஒருவராகத்தான் நான் கருதுகின்றேன். நான் சந்திக்க வந்ததும் என் சுயதேவை காரணமாகவல்ல. உண்மையை சொல்லப்போபனால் உமது மகனின் வேன்டுகோள் கராணமாக. நீர் உமது பிள்ளைக்கு அன்பாயிருப்பீர் என நினைக்கிறேன். உமக்கு ஏதேனும் பிரச்சினைகளிருக்கலாம். அப்பாவாகவோ, அதிபராகவோ அல்ல, என்னால் முடியாதா உமக்கு உதவி செய்ய?”
அவர் மெளனம் சாதிக்கிறார். கதையே அற்றுப் போனவராய். நானும் சற்றுநோம் சிந்தித்தேன்.
"மகன் சற்று கவனமாயிரும். முடியுமானால் என்னை வந்து சந்தியுங்கள். எவ்வேளையிலும் எனது அலுவலக, வீட்டுக் கதவுகள் உமக்காகத் திறந்திருக்கும். ஒன்றேயொன்றை மனதில் வைத்துக் கொள்ளும் உமது பிள்ளையை அழித்துக் கொள்ள வேண்டாம். தாமதித்து கவலைப்படுவதில் அர்த்தமில்லை. உன் மகன் உன்னை நேசிக்கிறான். நம்புகிறீரா? உன் பிள்ளை தங்கமான பிள்ளை.
1க
Dான
அவர் அதனை உணர்ந்து செயற்பட்டார். புத்திரர் வைத்தியரானார்.
அகவிழி | மார்ச் 2014 2

Page 42
கல்விச் செயற்பாடுகளில் இரசி
Mr. Sarath Wijesooriya (2004 3rd ed)
Senior Lecturer, Department of Sinhala University of Colombo
கல்வி அரசின் மூலமாக வழங்கப்படுவது ஏன்?
இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் கல்வியானது அரசின் மூலமாக இலவசமாக அல்லது சலுகைக்கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றது. எமது நாடு உட்பட பல நாடுகளில் மூன்றாம் நிலை (பல்கலைக்கழகம், தொழிநுட்பக்கல்லூரி)வரை கல்வி இலவசமாக வழங்கப் படுகின்றது. சில நாடுகளில் பாடசாலைக்கல்வி மாத்திரம் இலவசமாக வழங்க்கப்படுகின்றது. இவ்வாறு அரசினால் கல்வி வழங்கப்படுவதற்கான ஓர் ஊக்குவித்தலாக அமைவது கல்வியியலாளர்கள், பொருளியலாளர்கள், மற்றும் சில சர்வதேச நிறுவனங்கள் கல்வி அரசினால் வழங்கப்பட்ட வேண்டுமென அங்கீகாரம் வழங்கி யிருப்பதாகும். முன்னர் குறிப்பிட்டது போன்று, பிரபல கல்வியியலாளரான தாஹா ஹீயேன் குறிப்பிடுவது
"கல்வி நாட்டினது சட்டத்துறை (Law), தேசிய பாதுகாப்பு (Defence) என்பன போன்று முக்கியத்துவம் பெறுவதால் அது அரசினால் வழங்கப்படல் வேண்டும்” என்பதாகும்.
பொருளியலிற்கான நோபல் விருந்து வென்ற இந்திய நாட்டு அமார்த்த குமார் சென் அவர்களும் கல்வி அரசினால் வழங்கப்படல் வேண்டுமெனும் தருக்கத்தை வடிவமைத்துள்ளார்.
உலக முன்னணி நிறுவனங்களில் ஒன்றான உலக வங்கி
"கல்வி மனிதனுள் முதலீடு” எனக் குறிப்பிடுகின்றது.
உலக வங்கி கல்வியை அடிப்படை சமூகசேவையாகவும் பெயரிட்டுள்ளது. இக்காரணங்களினால் ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடாகவே கல்வி வழங்கப்பட வேண்டுமென உலக வங்கி கூறுகின்றது.
இதனால் நாட்டின் அபிவிருத்திக்காக அரசு செய்ய வேண்டியவை எனும் அரச செயற்பனியில் கல்வியை வழங்குவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசினூடாக வழங்கப் பட வேண்டியதன் காரணங்கள் மூன்று முன்வைக்கப்பட்டுள்ளன.
5 அகவிழி ( மார்ச் 2014

ன் வகிபங்கு
- 1) கவனயீனமான பெற்றாரின் பிள்ளைகளைப் பாது
காத்தல்
முன்னர் குறிப்பிட்டது போன்று சில பெற்றார் தனது பிள்ளைகளின் நலம் (Health), கல்வி (Education) எனவற்றைக் கவனியாது அவர்களின் உழைப்பைப் பெற விரும்புவர். எமது நாட்டிலும் இந்நிலையைக் காணக் கூடியதாக உள்ளது. மேலும் நம் நாட்டுப் பிள்ளைகள் / சிறுவர்கள் பெற்றார் மற்றும் வளர்ந்தோரால் துஷ் பிரயோகங்களுக் கும் பாலியல் வல்லுறவிற் கும் உட்படுத்தப்படுதலும் அறியக்கிடைக்கின்றது.
சிறுவர் பாதகாப்பு, சிறுவர் சேவைச் திணைக்களத்தினால் நடாத்தப்படும் சிறுவர் இல்லங்களில் தனது தகப்பனால் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பல சிறமியர்களைக் காணலாம். பகல்நேரங்களில் கல்வி நிறுவனங்களினால் சிறவ்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதால் இவ்வாரான நிகழ்வுகள் இடம்பெறும் சந்தற்ப்பங்கள் குறைவு. மேலும் சில பெற்றோர் தனது சிறுவர்களுக்கு கல்வியை வழங்க கஞ்சப்படுகின்றனர். சிலவேளை அவர்களைக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்விக்க முயற்சிக்கின்றனர். அப்போது அச்சின்னஞ்சிறுசுகளின் ஆளுமை (Personality) யை வளர்த்தெடுக்க முடியாமல் போவது மட்டுமல்ல சிறுவர்களில் நலமும் பாதிப்படைகின்றது. கட்டாயக் கல்வி மூலம் இச்சிறுவர்களைப் பாதுகாக்கலாம்.
2) கல்வியின் மூலம் நேர்நிலைப்பாய்ச்சலை (Positive
Flow) பிறப்பித்தல்.
கல்வியின் மூலம் நேர்நிலைப் பாய்ச்சல் ஏற்படுத்தப்படும். ஒருவர் பொருளொன்றை or சேவையொன்றை உற்படுத்தி செய்யும். போது அதில் செவின்றிய இலாபம் ஏற்படுமாயின் அது பெறுமதிவாய்ந்தது. அப்போது பண்டத்தின் அல்லது சேவையின் விலையில் அதன் உண்மைப் பெறுமதி - வெளிக்காட்டப்படமாட்டாது. இதற்கு முன்னரும் நாம் இதுபற்றிக் கலந்துரையாடி பிள்ளைகள், சகோரர்கள், அயலிலுள்ளோர் என பெருந்தொகையானோருக்கு இலகுவாகப் பகிர்ந்தளிக்க முடியும்.

Page 43
இன்று உலகில் அனேகமானோர் தங்களது அறிவை செய்தித்தாள்கள், மின் ஊடகங்கள் மற்றும் இணையத் தினுாடாக ஏனையோருக்குப் பகிர்ந்தளிக்கின்றனர். இப்பண்பு காரணமாக கல்வியை ஒளிரும் மெழுகுவர்த்திக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அம்மெழுகுவர்த்தியினால் எத்தனை மெழகுர்த்திகள் எரியூட்டப்படினும் அதன் ஒளியில் சற்றேனும் குன்றவேற்படாது கல்வியின் இவ். பண்பு காரணமாக அதனை அரசின் மூலம் வழங்கப்படல் வேண்டுமென அனேகமான பொருளியல் ஆய்வாளர்கள் கூட சுட்டிக்காட்டுகின்றனர்.
3) கல்வியில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கல்
சமூகத்தின் விருத்திக்கு பல்வேறு சேவை வழங்கும், பல்வேறு தொழிற்பாடுகளை மேற்பொள்ளக் கூடிய பணியாளர்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகின்றனர். மருத்துவ சேவை, எந்திரவியல் சேவை மேசன், தச்சன், ஆசிரியர் நிர்பாகம், எழுதுவினைஞர், பொதுசன ஊடகம், வங்கி, பல்வேறு கைத்தொழில்களுக்கு உதவுவோர் என பல்வேறு பணிகளைச் செய்வோர் சமூகத்திற்கு அவசியப் படுகின்றனர். அதோேபன்று பலர் பல பிறப்புரிமைத் திறன்களைப் பெற்றவர்கள். இப்பிறப்புரிமைத் திறன்களை கல்வியின் மூலம் மேலும் மேலும் மேம்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு கைகொடுக்கும் வாய்ப்பு அவ் அங்கத்தவர்களுக்குத் கிடைக் கும். கல்வியில் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அறிவை, திறமைகளை பரீட்சையெனும் மதிப்பீட்டின் மூம் கறிப்பிட்ட அளவீட்டிற் குட்படுத்தப்பட்டு அவர்கள் தர அடிப்படையில் வரிசைப் படுத்தப்படுவர். அங்கு அறிவையும் ஆற்றலையும் போதி
 

யளவு பெற்றுக்கொண்டோர் சித்தியெய்துவதையும் ஏனையோர் சித்தியெய்தாமையையும் காணலாம். கல்வி யென்பது ஒர் போட்டியென இதன்மூலம் தெளிவாகின்றது. போட்டியில் அவர்களை அவர்களின் அறிவு, ஆற்றலிற்கேற்ப நியாயமான முறையில் பரிசைப்படுத்துவதாயின், அவர் களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.
குறிப்பிட்தொரு மாணவர் குழுவிற்கு ஆசிரியதோருவர் குழுவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், சமகால அளவில் ஒரே விடயத்தைக் கற்பித்து அனைவருக்கு ஒரே வினாத்தாள் வழங்கி ஒரேயளவு நேரம் வழங்கி விடையளிக்க வாய்ப்பளிக்கும் போது அனைவருக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கரதமுடியும். எமது நாட்டில் அதிகளவு போட்டி நிலவும் பரீட்சையாகிய க.பொ.த. உ/த பரீட்சையில் மாணவர்களை பல்கலைக் கழகத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு கற்றலில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க்படல் வேண்டும். அரசு அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்பொள்கின்றது.
தனியார் துறையில் பண்டயங்களும் சேலைகளும் சந்தையின் மூலமாக வழங்கப்படுகின்றது. சந்தை முறையானது வசதிவாய்ப்புடையோருக்கு சாதகமாக அமைகின்றது. அதாவது திறந்த நிலையிலுள்ளது. வசதிவாய்ப்பற்றோருக்கு அது திறந்த நிலையில் காணப் படுவதில்லை. இதற்கமை சந்தை நாட்டின் பண்டங்கள், சேவைகளை வழங்குவதில் சமவாய்ப்பை வழங்குவதில்லை. வேறுவிதமாகக் கூறுவதாயின் சந்தையானது அதிக வருமானமுடையோருக்கு பண்டங்கள், கோவைகள் சார்பாக அதிக பிரவேசமளிக்கிறது. அதனால் அரசின் மூலம் கல்வியில் நிலமும் தடைகள் அகற்றப்பட்டு
坐
9、
鸟
SE
S
SR
NSR
qge N) Ο طـH ܠܛ

Page 44
சமவாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும். பெற்றாரின் வருவாயும் இங்கு தடையாகக் கொள்ள முடியும். இலவசக் கல்வி மூலம் இவ்வாறு சமவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் கல்வியில் மாணவர்களை பேதமாக்கியவகைப்படுத்தக் கூடாது. சமயம், குலம், பால் வேறுபாடு, அரசியல்பட்சி என எவ்வித பேதங்களுமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியாக கல்வியின் வாயில் திறந்திருத்தல் வேண்டும். கல்வியில் மாணவர்களை பேதப்படுத்தி சிலரின் கல்விப் பிரவேசத்தை இல்லாமலாக்கும்போது ஆற்றலுடையோருக்க ஆற்றலை மேம்படுத்தும் வாய்ப்புக்ள அற்றுப்போகும். அப்போது அவர்களின் உழைப்பை நாட்டின் அபிவிருத்தியில் உபயோகிக்க முடியாமல் போகும்.
பொருளியலில் நோபல் விருது வென்ற அமார்த்த குமார் சென் பௌத்த சமூகத்தின் எழுத்தறிவு பொருத்தமற்ற சில நாடுகளின் எழுத்தறிவிலும் உயர்வானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணம் பௌத்த மதத்தில் ஆட்களிடையே சமடி அந்தஸ்து காக்கப்படுவது காரண மாயிருக்கலாம்.
இவ்விடயங் கள் மூன் றிட் கும் மேலதிகமாக இன்னுமொரு விடயம் குறிப்பிடப்படல் வேண்டும். அதாவது கல்வியின் மூலம் வருவாய்ப்பரம்பலின் வேறுபாடுகள் குறைக்கப்பட முடியுமென முன்னர் கூறினோம். வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது நாட்டினது அரசின் பொறுப்பாகும். அதனாலேயே கல்வி அரசின் மூலம் வழங்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது. இக்காரணங்களால் என்னவோ கல்வியில் அரசியல் கட்சி, பால்வேறுபாடு போன்ற வெவ்வேறு விடயங்களைக் கொண்டு வேறுபடுத்தாதிருத்தல் மனித உரிமையெனவும் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கல்வி எவ்வாறு வழங்கப்படல் வேண்டும்?
கல்வியின் விஷேட பண்புகளைக் கருத்திற்கொண்டு அமைத்து நாடுகளும் ஓரளவிற்கேனும் கல்வியை அரசின் மூலம் வழங்குகிறது என முன்னர் குறிப்பிட்டோம். அரசு கல்வியை வழங்க வேண்டிய முறையும் வழங்கக்கூடிய முறையையும் கவனத்திலெடுத்து செயற்படல் வேண்டும். இதற்கு முக்கிய காரணம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கல்விக்கெதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டிருப்பதாகும். நடுத்தர வருமானமுடைய நாடுகளில் கூட மாணவர்களுக்கு கல்வி புகட்டும் தரம், கல்வியின் வினைத்திறன் என்பன தாழ்நிலையில் இருக்கின்ற தென்பது ஆய்வாளர்களின் முடிவுகளாகும். மேலும் சில வேளைகளில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கல்விக்கான அரச செலவினம் தாழ்நிலையிலிருப்பதாகவும், அச்செலவினம் வினைத்திறனான முறையில் மேற்கொள்ளப்படாமையும்,
5 அகவிழி | மார்ச் 2014

அச்செயலவினம் கல்வியில் ஏற்படுத்தும் பங்களிப்பாகும், கல்விமட்டத்திற்கும் (ஆரம்பநிலை, இடைநிலை) - என்பவற்றிட்கேற்ப குறிப்பிட்டதொரு சமானத்தன்மையுடன் ஒதுக்கப்படுவதில்லையென்பது ஆய்வாளர்களின் கருத் தாகவுள்ளது. இவ்விடயங்களைக் கருத்திற்கொன்டு கல்வி அரசினால் எவ்வாறு வழங்கப்படல் வேண்டுமென்பதை கவனித்துப்பார்க்க வேண்டியுள்ளது.
அட்டவனை 1.4
பூகோள ரீதியான சமாதானச் சுட்டியை கணக்கிடுவதற்கு உற்படுத்திய நாடுகள் 121 இடையே தெரிவுசெய்யப்பட்ட சில நாடுகளுக்கு கிடைக்குமிடங்கள் - 2002
- சு - ம N -
29
நாடு
கிடைக்குமிடங்கள் 1. நோர்வே 2. நியுசீலாந்து 3. டென்மார்க் 4. அயர்லாந்து 5. ஜப்பான் 6. பூட்டான் 7. சிங்கப்பூர் 8. தென்கொரியா 9. மலேசியா 10. சீனா 11. இந்துனேசியா 12. பங்களாதேஷ் 13. அமெரிக்கா 14. இந்தியா 15. இலங்கை
111 16. பாகிஸ்தான்
115 17. இஸ்ரேல்
119 18. ஈராக்
121
சமாதானச் சுட்டியின் பெறுமானம் அதிகமாகவுள்ள நாடுகள் சனநாயகத்தை நன்கு பாதுகாப்பதாகவும், அந்நாட்டு அரசாங்கங்களின் தெளிவு (ஊடுகாட்டுமியல்பு) உயர்வானதாகவும், கல்விமட்டம் உயரளவானது எனவும் சுட்டியை உருவாக்கியவர்கள் கண்டறிந்துள்ளனர். அதற்கேற்ப கல்வியானது நாட்டுமக்களை சமாதானப் பாதையில் செலுத்துவதை காண முடிகிறது.
86
96
101
இதற்கேற்ப கல்வியின் மூலம் நாட்டு மக்களுக்கு பாரிய பிரதிபலன் களை ஏற்படுத்த முடியுமெனத் தோன்றுகின்றது. இதனாலேயே பொருளியலில் கல்வி அறிவுப்பண்டமாக (Ment sood) அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் கருதப்படுவது கல்வியை ஒருவருக்கு பலவந்தமாகப் புகட்டினும் அவருக்கு பிரதிபலன் கிடையாது

Page 45
சிறவர் நேய அணுகு முறை
உடல், உளத்தண்டனைகள் பற்றிய சிறுபார்
உடல், உளத்தண்டனைகள் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. பயமுறுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற வற்றைத் தடுப்பதற்கான செயல்முறைகளும் அவற்றுக்குத் துலங்கல் காட்டுதலும் உண்டு.
தண்டனை வழங்க வேண்டிய நிலைகளைத் தவிர்ப் பதற்காக எடுக்கத்தக்க நடவடிக்கைகள் பிள்ளைகளின் தவறான நடததைகளின் போது வளரந்தோராகிய நாம் பின்வருமாறு செயற்படுவோம்.
விளக்கம் பெற்றுத் திருந்துவதற்குப் பிள்ளைக்குச் சந்தர்ப்பமளித்தல். தவறை விளக்கி, திருந்திக் கொள்ளச் சந்தர்ப்பமளித்தல். தவறு எதிர்பாராத வகையில் நடந் துள்ளதாயின், அது செய்யத் தகாத ஒன்று என்பதையும், அதன்பாதகமான தன்மையையும் எடுத்துக் காட்டல்.
பிள்ளைகள் செய்த தவறை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதைத் தவிர்த்தலும், நிகழ்ந்தவற்றின் ஊடாகச் சரியானவற்றைக் கற்கத் தூண்டுதலும்,
பிள்ளைகளைத் திருத்தும்போது உங்களுக்குத் தண்டனை வழங்கிக் கொள்வதைத் தவிர்த்தல்.
பிள்ளையின் எதிரே சினத்தல், உரத்துப் பேசுவதால் நடப்பதெல்லாம் வளர்ந்தோரின் பிரதி உரு சீர்குலைவதாகும்.
பிள்ளையை அணுகி, பிள்ளைக்கு அன்பு, கருணை காட்டுகின்ற, உதவி புரிகின்ற, நம்பகமாக, செவிமடுக்கின்ற ஆசிரியர்களைப் பிள்ளைகள் நன்கு செவிமடுப்பர். எனவே நன்றாக நடந்தும் கொள்வர்.
அவ்வாறான ஆசிரியர்களுடன் செயற்படும் பிள்ளைகளிடத்தே நல்ல நடத்தைக் கோலங்கள் உருவாகும்.
1. நியாயமான கட்டுப்பாடுகளை விதித்தல்
2. கட்டுப்பாடுகளைத் தெளிவாக விளக்குதல்
3. செய்ய வேண்டியவற்றையும் செய்யத் தகாதவற்றையும்
எடுத்துக் கூறுதல்.
4. பாதகமான நடத்தைகளின் விளைவுகளை முன்
கூட்டியே பிள்ளைகளுக்குச் சொல்லி வைத்தல்.
 

5. பிள்ளைகளின் வயது மட்டத்தைக் கவனத்தில் எடுத்தல். பிள்ளையிடமிருந்து விந்தைகளை எதிர் பார்க்காதிருத்தல். அவர்களால் செய்யக் கூடிய வற்றையும் செய்ய முடியாதவற்றையும் விளங்கிக் கொள்ளல்.
”எவருக்கும் வகுப்பிலிருந்து வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் உங்களுடைய வகுப்பில் இருக்கும் ஆசிரியரிடம் அனுமதி பெற்றுச் செல்லுங்கள்."
"நாம் எமது பாடசாலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது எமக்குத் தெரியும். அதற்கமையச் செயற்பட்டால் சகலருக்கும் நன்மையே கிடைக்கும்."
"சுத்தமான வகுப்பு நல்ல அழகானது அல்லவா? வகுப்பைச் சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்”?
"வீட்டில் செய்து கொண்டு வருவதாக இணக்கம் தெரிவித்த வேலைகளைச் செய்துகொண்டு வராவிட்டால் பாடத்தை விளங்கிக் கொள்வது கடினமானதாக இருக்கும். இடைவேளையிலேனும் அவற்றைச் செய்ய வேண்டி யேற்படும்."
"நாளை காலையில் வரும்போது இந்த 20 ஆங்கிலச் சொற்களுள் இயலுமானவற்றை மனனம் செய்துகொண்டு வாருங்கள்."
சிறுவர் உரிமைகள் மற்றும் உட்படுத்தற் கல்வி எண்ணக் கரு பாதுகாக்கப்படுவதன் மூலம் பிள்ளை சமுதாயத்தை விருமபுகின்ற , சமூக நியமங்களை மதிக் கின்ற, ஒருவராக மாறும் சிறுவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிள்ளை உளரீதியில் அவதியுறுகின்ற, வளர்ந்த பின்னர் சமூகத்துக்கு எதிராகச் செயற்படுகின்ற, சமூக விரோதியாகவே உருவெடுக்கும். சமூக நியமங்களை மதிக்கின்ற, நல்ல பிரசையாக விருத்தியடைய வேண்டுமெனின், பாடசாலையும் வீடும், சிறுவர் உரிமைகள் மற்றும் உட்படுத்தல் எண்ணக்கரு பாதுகாக்கப்படும் வகையில் எப்போதும் செயற்படுவது அவசியமாகும்.
坐
9、
鸟
ଝଞ
S
SR
NSR e Qo N) O طH ܠܛ

Page 46
கல்விச் செயன்முறையில் திருப்திகரமாக ஈடு படுவதற்காகவும் அதன் செயல் ரீதியான பங்காளியாவதற்கும் தேவையான உள ஆயத்தம் பிள்ளையிடத்தே காணப்படுதல் வேண்டும்.
வகுப்பறையில் குறைந்த ஊக்கத்துடன் செயற்படும் பெரும்பாலான பிள்ளைகள் தொடர்பாகச் செய்யப்பட்ட ஆய்வுகளின் போது அவர்களுக்கு பிள்ளைகளாக வளர்வதற்குத் தேவையான, உளப் பௌதீக நிலைமைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றமை அறியப்பட்டுள்ளது. எனவே சிறுவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் நிலைமைக்கு மத்தியல் வளரும் பிள்ளை கல்வியில் உயரிய மட்டங்களை எளிதில் சென்றடையும்.
அவ்வாறான சூழலை உருவாக்கிக் கொடுப்பது வளர்ந்தோரின் பொறுப்பாகும். என்பதை விளங்கிக் கொள்வதும் அதற்காகச் செயற்படுவதும் அவசியமாகும்.
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தங்கியிருக்கும் பிரதானமான காரணி அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமாகும். சிறுவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதன் ஊடாகப் பிள்ளைக்குச் சரியான போசணை கிடைக்கும். பிள்ளையிடத்தே நல்ல சுகாதாரப் பழக்கங்கள் உருவாகும். அதன் மூலம் தேசிய
நடத்தையை அல்லது 'சந்தர்ப்பத்தை விவரியுங்கள். ''எல்லோரும் புத்தகங்களுக்கு
அட்டை போட்டுள்ளீர்கள்.
எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்”
உடல் (நேர் க
தொ
அகவிழி ( மார்ச் 2014
ஊக்கமளியுங்கள். 1-6 வரையிலான எல்லாக் கணிதப் பிரச்சினைகளையும் சரியாகச் செய்துள்ளீர்கள்.
இனி 7 ஆம், 9ஆம் பிரச்சினைகளையும் தீருங்கள்.

அபிவிருத்திக்கு தேவையான ஆரோக்கியமான ஆட்களாக உருவாக்கப்படுவர்.
எங்கள் வகுப்பில் ஒரு மாயாஜாலக் கண்ணாடி உள்ளது. நாம் சினக்கும்போது கண்ணாடியைப் பார்க்கு மாறு எங்கள் ஆசிரியை எங்களுக்குக் கூறியுள்ளார். அவ்வாறான வேளைகளில் எமது முகம் அலங்கோலமாக இருக்கும். கறுத்திருக்கும். வாய் கோணியிருக்கும். அப்போது நாம் மாயாஜாலக் கண்ணாடியைப் பார்த்துச் சிரிப்போம். பின் நாம் அழகாகக் காட்சியளிப்போம். சினமும் இல்லாமற் போகும். எமது ஆசிரியை சினக்கும் போது, அவருக்கு மாயாஜாலக் கண்ணாடியைப் பார்க்குமாறு நாம் கூறுவோம்.
அப்போது ஆசிரியை மாயாஜாலக் கண்ணாடியைப் பார்த்துச் சிரித்துச் சினத்தைத் தணித்துக் கொள்வார். இப்போது எங்கள் ஆசிரியை எமக்குக் கோபித்துப் பேசுவது கிடையாது. அடிப்பதுமில்லை.
சினப்பதுமில்லை. எனவே ஆசிரியையைச் சினக்கச் செய்யும் வேலைகளை நாம் செய்வதில்லை.
நன்றி: ஆரம்பக் கல்வி பிரிவு, கல்வி அமைச்சு, சிறுவர் நேய அணுகுமுறை தொடர்பான
ஆலோசனை வழிகாட்டி வழிகாட்டி
நேர்கணியமாக (+) அறிவுறுத்தல் வழங்குங்கள்.
"நல்ல பிள்ளைகள் போன்று
மண்டபத்தினுள் மெதுவாக அமைதியாக நடந்து செல்லுங்கள்”
ள்பாடான
ணியமான) டர்பாடல்
குறிப்பான செயல்களின்போது
பாராட்டுங்கள். பொருத்தமான நிறக்கலப்புக் காரணமாக உங்கள் சித்திரம் உயிரோட்டமானதாகக் காணப்படுகின்றது.

Page 47
2012 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் உடனடிய
 
 
 
 
 
 

قلوهيتوشيمية

Page 48
பூபாலசிங்கம் புத்தகக்கடை
02, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல. 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொ.பே.இல. 021-2226693 ---
யூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல. 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733
நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
1.பே.இல. 026-2236266
இஸ்லாமிக் புத்தக இல்லம்
77, தெமட்டக்கொட வீதி,
கொழும்பு - O9 தொ.பே.இல. 011-2688102
Tel.: 081-2220820
குமரன் புக் செண்டர்
18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா ಷ್ರ தொ.பே.இல. 052-2223416
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல.: 4515775, 2504266
அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே.இல. 052-2258437
அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல. O66-3662,228
அறிவுநதி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல. 077 6737535
எஸ்.எல். மண்சூர் அனாசமி டொட் கொம். அட்டாளைச்சேனை – 10 தொ.பே.இல. 0779059684, 0752929 150
Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai – 01. Tel: 077 3651138
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல. 077-1285749
அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல. 067-2229540
800-1246
ISSN
II, E O O
|
II, 근나 D] [] 도